தொல்காப்பிய உரைத்தொகை எழுத்ததிகாரம்- 2 நச்சினார்க்கினியம் - 1 சி. கணேசையர் உரைவிளக்கக் குறிப்புக்களுடன் - 1937 மீள்பதிப்பு - 2018 பதிப்பாசிரியர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் தமிழ்மண் பதிப்பகம் நூற்குறிப்பு தொல்காப்பிய உரைத்தொகை - 2 எழுத்ததிகாரம் - நச்சினார்க்கினியம் -1 முதற்பதிப்பு - 1937 சி. கணேசையர் (உரைவிளக்கக் குறிப்புக்களுடன்) மீள்பதிப்பு - 2018 முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பதிப்பாசிரியர்கள் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் பக்கம் : 32+360 = 392 விலை : 610/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017.7 bjh.ng.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்:  தாள் : 16.0 கி. மேப்லித்தோ  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி  பக்கம் : 392 f£lik¥ò : இயல்பு  படிகள் : 500   நூலாக்கம் : திருமதி ப. கயல்விழி & கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (Harrish)   அச்சு : மாணவர் நகலகம், பிராசசு இந்தியா, ரியல் இம்பேக்ட் சொல்யூசன்சு, தூரிகை பிரிண்டர், சென்னை.  தொல்காப்பிய உரைத்தொகை தொல்காப்பியம் நம் வாழ்வியல் ஆவணம்; நம் முந்தையர் கண்ட மொழியியல் வளங்கள் அனைத்தையும் திரட்டித் தந்த தேன் தேட்டு! அத்தேட்டைச் சுவைத்த கோத்தும்பிகள் பழைய உரையாசிரியர்கள். அவர்கள் உரைகளையெல்லாம் ஒன்று திரட்டி, வரிசையுறத் தமிழுலகம் கொள்ள வைத்த உரைத்தொகுதிகள் இவையாம்! முன்னைப் பதிப்பாசிரியர்கள் தெளிவுறுத்தும் மணிக்குவைகள் எல்லாமும், அவர்கள் வைத்த வைப்புப்படி வைத்த செப்பேடுகள் இத் தொல்காப்பிய உரைத் தொகையாம். மேலும், இவை கிடைத்தற்கு அரிய கருவூலமுமாம்! ***** ***** ***** இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், தெய்வச் சிலையார், கல்லாடர் ஆகிய பழைய உரையாசிரியர்கள், உரை விளக்கம் பல காலங்களில் எழுதியுளர். எழுத்து, சொல், பொருள் ஆகியவற்றின் பதிப்புகள் ஒரே காலத்தில் ஒருவரால் வெளியிடப்பட வில்லை. அவற்றையெல்லாம் ஓரிடத்தில் ஒரே வேளையில் ஒட்டு மொத்தமாக முன்னைப் பதிப்பாசிரியர்கள் உரை - விளக்கம் - குறிப்பு - இணைப்பு ஆகியவற்றுடன் பெற வெளியிடும் அரிய பெரிய முயற்சியில் வெளியிடப்படுவது தமிழ்மண் பதிப்பகத்தின் இப்பதிப்பாகும். தொல்காப்பியத்திற்குக் கிடைத்த உரைகள் அனைத்தையும் ஒருமொத்தமாகத் தருவதால் இது, தொல்காப்பிய உரைத்தொகை எனப்பட்டது. தொகையாவது தொகுக்கப்பட்டது. இரா. இளங்குமரன் வாழிய வாழியவே 1. வாழிய வாழியவே வாழிய வாழியவே எங்கள் இன்னுயிர் ஈழத் தமிழகம் - வாழிய 2. சூழும் கயடலகம் வாழும் வளநிலம் ஈழத் தமிழகம் இன்னுயிர்த் தாயகம்-வாழிய 3. ஏழெழு நாடுகள் ஆழியுள் தாழினும் ஊழையும் வென்றஎம் ஈழத் தமிழகம் - வாழிய 4. இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்தவள் மன்னுயிர் காத்துள மாண்புலிச் செவ்வியர் - வாழிய 5. செங்களம் செல்வதைப் பொங்கலாய்க் கொண்டெமைக் காந்தளம் பூவெனக் காக்கும் பெருமையர் - வாழிய 6. கொள்ளை கொள்ளையாய்த் துள்ளும் இயற்கையை அள்ளிக் கொழித்துயர் வள்ளல் தாயவள் - வாழிய 7. ஞாலப் பழமொழி சாலத் திகழ்மொழி மேனலத் தமிழ்மொழி மூலப் புகழ்நிலம் – வாழிய - இரா. இளங்குமரன் புன்னாலைக் கட்டுவன் சி. கணேசையர் ஈழநாட்டு யாழ்ப்பாணத்திற்கு அணித்தாகவுள்ள புன்னாலைக் கட்டுவன் என்னும் ஊரில், சின்னையர் - சின்னம்மையார் என்பார் மகனாக கி.பி. 1878 -இல் பிறந்தார். கதிர்காமர், பொன்னம்பலர், குமரசாமி என்பார்களிடம் கல்விகற்று, தொடக்கப் பள்ளி ஆசிரியராய்ப் பணி செய்தார். தம் 32 ஆம் அகவையில் அன்னலக்குமி என்பாரை மணந்தார். பின்னர் 1921 முதல், சுன்னாகம் பிராசீன பாடசாலை என்னும் கல்விக் கழகத்தில் தலைமைப் பேராசிரியராக விளங்கி ஓய்வு பெற்றபின் முழுதுறு தமிழ்ப் பணியில் ஊன்றினார். கற்பதும், கற்பிப்பதும், நூல் யாப்பதுமாக நாளெல்லாம் பணி செய்தார். `மகாவித்துவான், `வித்துவ சிரோமணி என்னும் உயரிய விருதுகளும் பாராட்டுகளும் பெற்றார். உரையும் பாட்டும் வல்ல இவர் இயற்றிய சிற்றிலக்கியங்கள் பல. இவர் இயற்றிய `புலவர் சரிதம் 101 புலவர் பெருமக்கள் வரலாறுகளைக் கொண்டதாகும். தம்மிடம் பயின்ற மாணவர்களுக்குத் தொல்காப்பியம் பயிற்றும்போது எழுதிய அரிய குறிப்புகளையும், சி.வை. தாமோதரனார் பதிப்பை அடிப்படையாகக் கொண்டு, பவானந்தர் பதிப்பு, வையாபுரியார் பதிப்பு, கனக சபையார் பதிப்பு ஆகிய முப்பதிப்புகளையும் கிடைத்த ஏட்டுப் படிகளையும் ஒப்பிட்டுத் திருத்திய குறிப்புகளையும் விளக்கங்களையும் கொண்டு ஈழகேசரி அதிபர் நா. பொன்னையா அவர்கள் தம் சுன்னாகம் திருமகள் அழுத்தகத்தில் பதிப்பிக்கப் பட்டவையே, புன்னாலைக் கட்டுவன் சி. கணேசையர் அவர்கள் பதிப்பாகும். நச்சினார்க்கினியர் - எழுத்ததிகார உரை, (1937) சேனாவரையர் - சொல்லதிகார உரை (1938) பேராசிரியர் - பொருளதிகாரப் பின்னான்கியல் உரை (1943) நச்சினார்க்கினியர் - பொருளதிகார முன்னைந்தியல் (1948) பதிப்பு உலகில், தனிப்பெருமை பெற்ற தொல்காப்பியப் பதிப்பு என்பது இந்நாள் வரை வெள்ளிடைமலையாக விளங்குவதாம் அவர் பதிப்பு. இவரியற்றிய கட்டுரைகள் சில மதுரைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ் இதழில் வெளிவந்தன. நிறைவில் துறவு வாழ்வு பூண்டவர் போல் வாழ்ந்து, தம் எண்பதாம் அகவையில் (1958) இயற்கை எய்தினார். சென்னைப் பல்கலைக் கழக வித்துவான் நிறைநிலைத் தேர்வுக்குப் பாடமாக இருந்த பேராசிரியம் தமிழகப் பரப்பில் கிட்டாத நிலையில் 1948 இல் ஈழத் திருமகள் அழுத்தகப் பதிப்பக வழியே பெற்று யான் கற்க வாய்த்தது. அதன் பெரும்பயன் கணேசனார் பதிப்புக் குறிப்பு, பதிப்பு அமைப்பு ஆயவற்றால் ஏற்பட்ட பூரிப்பினும் பன்மடங்கான பூரிப்பை ஏற்படுத்தியது பேராசிரியர் உரை. அவ்வுரையே, உரையாசிரியர்கள் கண்ட சொற்பொருள் நுண்மை விளக்கம் என்னும் அரியதோர் நூலைப் படைக்கத் தூண்டலாக அமைந்தது! முதற்கண் சை. சி. கழகத் தாமரைச் செல்வராலும் பின்னர்த் தமிழ்மண் பதிப்பகத்தாலும் பதிப்பிக்கப்பெற்றுத் தமிழ்வளம் ஆகியது. - இரா. இளங்குமரன் தொல்காப்பியம் அரிய பதிப்புகளும் தேவைகளும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் தமிழின் பண்டை இலக்கண/ இலக்கிய நூல்கள் அச்சிடப் பெற்றன. அவ்வகையில் தமிழில் அச்சடிக்கப்பட்ட முதல் இலக்கண நூலாக இன்று அறியப்படுவது நன்னூலே. காரணம் தமிழக மடங்கள் நன்னூலைப் பயிற்றிலக்கணமாகவும் பயன் பாட்டு இலக்கணமாகவும் கொண்டிருந்தன. 1835 -இல் திருத்தணிகை விசாகப் பெருமாளையர் தாமே உரையெழுதி நன்னூல் மூலமும் காண்டிகையுரையும் என்னும் தலைப்பில் வெளியிட்டார். தொடர்ந்து தாண்டவராய முதலியாரும், அ. முத்துச்சாமி பிள்ளையும் இணைந்து இலக்கணப் பஞ்சகம் என்னும் தலைப்பில் நன்னூல், நம்பியகப் பொருள், புறப்பொருள் வெண்பாமாலை ஆகியவற்றின் மூலங்களை வெளிக் கொணர்ந் தனர். இதன் தொடர்ச்சியாக 1838 -இல் வீரமா முனிவரின் தொன்னூல் விளக்கம் அச்சாக்கம் பெற்றது. 1847 -இல் தான் மழவை மகாலிங்கையரால் தமிழின் தொல் இலக்கணம் தொல்காப்பிய எழுத்ததிகாரம் உரையோடு அச்சிடப்பட்டது. தொடர்ந்து யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர், யாழ்ப்பாணத்து சி.வை. தாமோதரம் பிள்ளை, கோமளபுரம் இராசகோபாலபிள்ளை, சோடசாவதானம் சுப்பராய செட்டியார், போன்றோர் 19 -ஆம் நூற்றாண்டில், தொல்காப்பியத்தைக் கிடைத்த உரைகளோடு பதிப்பித்தனர். 1935 - இல் தொல்காப்பியத் திற்கு எழுதப்பட்ட உரைகள் (இன்று கிடைத்துள்ள அனைத்து உரைகளும்) பதிப்பிக்கப்பட்டு விட்டன. 1847 - 2003 வரை தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை எட்டுப் பதிப்புகளும், 1885-2003 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் முன்னைந்தியல் எட்டுப் பதிப்புகளும், செய்யுளியல் நச்சினார்க்கினியர் தனித்து மூன்று பதிப்புகளும் வெளிவந்துள்ளன. 1892 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை ஐந்து பதிப்புகளும், 1868 - 2006 வரை எழுத்து இளம்பூரணம் ஏழு பதிப்புகளும், 1920 - 2005 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணம் பத்துப் பதிப்புகளும், 1927 - 2005 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணம் ஆறு பதிப்புகளும், 1885 - 2003 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியம் ஏழு பதிப்புகளும், 1929 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் மூன்று பதிப்புகளும், 1964 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடம் மூன்று பதிப்புகளும் வெளிவந்துள்ளன என முனைவர் பா. மதுகேவரன் தமது தொல்காப்பியம் பதிப்பு ஆவணம் நூலில் குறிப்பிட்டுள்ளார். 2003 -இல் தமிழ்மண் பதிப்பகத்தின் வாயிலாகத் தொல்காப்பிய உரைகள் (இளம்பூரணம், நச்சினார்க்கினியம், பேராசிரியம், சேனாவரையம், கல்லாடம், தெய்வச்சிலையம்) பண்டித வித்வான் தி.வே. கோபாலையர், முனைவர் ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, முதுமுனைவர் இரா. இளங்குமரனாரின் வாழ்வியல் விளக்கத்துடன் வெளிவந்துள்ளன. இருப்பினும் அச்சில் இன்று கிடைக்காத அரிய பதிப்புகளை மீள் பதிப்பாகப் பதிப்பிக்க வேண்டும் என்னும் நோக்கத்தில், சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பு, கா. நமச்சிவாய முதலியார் பதிப்பு, வ.உ. சிதம்பரம் பிள்ளை பதிப்பு, இரா. வெங்கடாசலம் பிள்ளை பதிப்பு, சி. கணேசையர் பதிப்பு, தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் பதிப்பு ஆகியோரின் பதிப்புகளுடன் தொல்காப்பியம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகளும் இணைத்து தமிழ்மண் பதிப்பகத்தின் வழி மீள் பதிப்புகளாகப் பதிப்பிக்கப் படுகின்றன. மீள் பதிப்பில் பின்பற்றியுள்ள பொது நெறிகள் முதுமுனைவர் இரா. இளங்குமரனாரின் தொல்காப்பியம் குறித்த விளக்கம், ஒவ்வோர் அதிகாரம் பற்றிய வாழ்வியல் விளக்கம், உரையாசிரியர் விவரம் ஆகியவை நூலின் தொடக்கத் தில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்புகளின் முகப்புப் பக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்பாசிரியர் பற்றிய விவரங்கள் கால அடிப்படையில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. ஒவ்வோர் இயலின் தொடக்கத்தில், பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் தொல்காப்பியம் தொகுப்பில் எழுதி யுள்ள தொல்காப்பிய இயல் பற்றிய விளக்கம் தரப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்பில் அடிக்குறிப்புகள் அந்த அந்தப் பக்கத்தில் தரப்பட்டிருந்தன. இப்பதிப்பில் ஒவ்வோர் இயலுக்கும் தொடர் இலக்கமிட்டு, அந்தந்த இயலின் இறுதியில் தொகுத்து வழங்கப் பட்டுள்ளன. முன்னைப் பதிப்புகளில் நூற்பாக்களைக் கையாண்டுள்ள முறையையே இப் பதிப்பிலும் பின்பற்றப்பட்டுள்ளது. நூற்பாக் களுக்குத் தமிழ் எண் கொடுக்கப்பட்டிருப்பின் அவை நடை முறையில் இப்போது உள்ள எண்களாக மாற்றப்பட்டுள்ளன. நூற்பா அகரமுதலி, மேற்கோள் அகரமுதலி போன்றவற்றிற்குப் பக்க எண்கள் கொடுக்கப்பட்டிருப்பின் அவை நூற்பா எண்களாக மாற்றப்பட்டுள்ளன. பின்னிணைப்பாகத் தொல்காப்பியம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள கட்டுரைகள் இணைக்கப் பட்டுள்ளன. நூற்பா முதற் குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப் பட்டுள்ள பதிப்புகளில் அவற்றோடு, 2003 தமிழ்மண் பதிப்பகத்தின் வழியே பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர் முனைவர் ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியர்களாகக் கொண்டு வெளிவந்த இலக்கணப் பதிப்பில் இணைக்கப் பட்டிருந்த, - நூற்பா நிரல் - மேற்கோள் சொல் நிரல் - மேற்கோள் சொற்றொடர் நிரல் - செய்யுள் மேற்கோள் நிரல் - கலைச் சொல் நிரல்( நூற்பாவழி) - கலைச்சொல் நிரல் (உரைவழி) ஆகியவை எடுத்துப் பயன்படுத்தப்பட்டுள்ளன. - பாடவேறுபாடுகள் சுட்டப்பட்டுள்ளன. - முன்னைப் பதிப்பில் வடமொழிச் சொற்கள் பயன் படுத்தப்பட்டிருப்பின் அவை அப்படியே கையாளப் பட்டுள்ளன. - தொல்காப்பியப் பதிப்புகள் குறித்த விவரம் தொகுக்கப்பட்டுள்ளன. சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பு - 1892 சொல்லதிகாரம் - நச்சினார்க்கினியர் 1868 - இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரை யருரையைப் பதிப்பித்த சி.வை. தாமோதரம் பிள்ளை, 1892 ஆம் ஆண்டு சொல்லதிகாரம் நச்சினார்கினியர் உரையைப் பதிப்பித்தார். சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை தொடர்ச்சியாகப் பதிப்பிக்கப்பட்டாலும், முதலில் பதிப்பித்த சி.வை. தாமோதரம் பிள்ளையின் பதிப்பு இன்று அச்சுவடிவில் புழக்கத்தில் இல்லை. அப்பதிப்பினை வெளியிடும் நோக்கத்தில் இப்பதிப்பு மீள் பதிப்பாக வெளிவருகிறது. இப்பதிப்பில் நூற்பா முதற்குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் மற்ற இணைப்புகளும் இணைக்கப்பட்டு, முதுமுனைவர் இரா. இளங்குமரன் அவர்களின் வாழ்வியல் விளக்கமும், ஒவ்வோர் இயலின் தொடக்கத்தில் க. வெள்ளைவாரணனார் எழுதியுள்ள இயல் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் சொல்லதிகாரம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகள் பின்னிணைப்பாக இணைக்கப் பட்டுள்ளன. கா. நமச்சிவாய முதலியார் பதிப்பு - 1927 சொல்லதிகாரம் - இளம்பூரணம் இளம்பூரணம் எழுத்ததிகாரம் பொருளதிகாரம் உரைகள் முன்பே வெளிவந்தன. சொல்லதிகாரம் இளம்பூரணர் உரை 1927 - இல் காவேரிப்பாக்கம் நமச்சிவாய முதலியாரின் ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் சென்னை ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸால் வெளியிடப்பட்டது. இதுவே சொல்லதிகாரம் இளம்பூரணர் உரையின் முதற் பதிப்பாகும். இப் பதிப்பில் அடிக்குறிப்புகள் அந்தந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்தன. இப்பதிப்பில் தொடர் இலக்கமிட்டு, ஒவ்வோர் இயலின் முடிவில் அடிக் குறிப்புகள் தரப்பட்டுள்ளன. இப் பதிப்பில் நூற்பாக்களுக்குத் தமிழ் எண்வரிசையும் நடைமுறை எண் வரிசையும் கொடுக்கப்பட்டிருந்தன. இப்பதிப்பில் நடைமுறை எண் முறை மட்டும் பின்பற்றப்பட்டுள்ளது. வ.உ. சிதம்பரம்பிள்ளை பதிப்பு - 1928 , 1931, 1933, 1935 எழுத்ததிகாரம், பொருளதிகாரம் - இளம்பூரணம் 1868 இல் திரிசிரபுரம் சோடசாவதானம் சுப்பராய செட்டியாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு கன்னியப்ப முதலியாரால் பதிப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து 1928 -இல் தொல்காப்பியம் இளம்பூரணம் எழுத்ததிகாரம் பதவுரை என்னும் பெயரில் வ.உ. சிதம்பரம் பிள்ளை பதிப்பு வேலாயுதம் பிரிண்டிங் பிர, தூத்துக்குடியிலிருந்து வெளிவந்தது. அப்பதிப்பின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்த நூற்பா அகராதி இப்பதிப்பின் நூலின் இறுதியில் கொடுக்கப் பட்டுள்ளது. அத்துடன் சொல் நிரல் (மேற்கோள்), சொற்றொடர் நிரல் (மேற்கோள்), செய்யுள் நிரல் (மேற்கோள்) கலைச் சொல் நிரல் (நூற்பா வழி) கலைச் சொல் நிரல் (உரைவழி) தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. 1920 -இல் கா. நமச்சிவாய முதலியார் பொருளதிகாரம் இளம்பூரணம் உரை முதல் பகுதியாகக் களவியல், கற்பியல், பொருளியல் மூன்று இயல்களையும் ஸி. குமாரசாமி நாயுடு ஸன் நிறுவனத்தார் வெளியிட்டுள்ளார். மற்ற பகுதிகள் வெளிவந்ததாக அறிய இயலவில்லை. இப்பதிப்பிற்குப் பின் வ.உ. சிதம்பரம் பிள்ளை தொல்காப்பியம் இளம்பூரணம் பொருளதிகாரம் அகத்திணையியல், புறத்திணையியல் ஆகிய இரு இயல்கள் இணைந்த பதிப்பு, சென்னைப் பிரம்பூரில் இருந்து வெளிவந்தது. இப்பதிப்பில் ஆண்டு குறிப்பிடப்படவில்லை. ஆனால் 1921- இல் வெளிவந்த குறிப்பினை, தொல்காப்பியம் இளம்பூரணம் எழுத்திகாரம் பதவுரை பதிப்பில் குறிப்பிடுகிறார். களவியல், கற்பியல், பொருளியல் 1933 - இல் வாவிள்ள இராமவாமி சாட்ருலு அண்ட் ஸன் மூலம் வெளி வந்துள்ளது. 1935 - இல் மேற்கண்ட பதிப்பாளர்களைக் கொண்டு மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல், மரபியல் பதிப்பித்துள்ளார். மூன்று பகுதிகளாக வெளிவந்தாலும் அவற்றிற்கும் தொடர் எண் கொடுக்கப்பட்டுள்ளன. 1935 - இல் ஒருங்கிணைந்த பதிப்பாக வ.உ. சிதம்பரம் பிள்ளை எ. வையாபுரிப்பிள்ளை ஆகியோர் பதிப்பாசிரியர்களாக அமைந்து வெளிவந்துள்ளது. தனித்தனிப் பதிப்புகளாக மூன்று பகுதிகளாக வெளிவந்துள்ள பதிப்பினை அடிப்படையாகக் கொண்டு இம் மீள் பதிப்பு பதிப்பிக்கப்படுகின்றது. இரா. வெங்கடாசலம் பிள்ளை பதிப்பு - 1929 சொல்லதிகாரம் - தெய்வச் சிலையார் 1929 -இல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தால் முதன் முதலில் பதிப்பிக்கப்பட்டது. பதிப்பாசிரியர் ரா. வேங்கடாசலம் பிள்ளை. இதன் நிழற்படிவம் 1984 -இல் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இப் பதிப்பில் சூத்திர முதற் குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் சொல் நிரல் (மேற்கோள்), சொற்றொடர் நிரல் (மேற்கோள்), செய்யுள் நிரல் (மேற்கோள்) கலைச் சொல் நிரல் (நூற்பா வழி) கலைச் சொல் நிரல் ( உரைவழி) தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. சி. கணேசையர் பதிப்பு - 1937, 1938, 1943,1948 எழுத்து நச்சினார்க்கினார்கினியர், சொல்லதிகாரம் சேனாவரையர் பொருள் - நச்சினார்க்கினியர், பேராசிரியர் 1847 - இல் மழவை மகாலிங்கையரால் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியம் பதிப்பிக்கப்பட்டது. 1891 - இல் சி. வை. தாமோதரம் பிள்ளை பதிப்பும் 1923 - இல் த. கனகசுந்தரத்தின் பதிப்பும் கழகத்தின் மூலமும் வெளிவந்தன. 1937 - இல் நா. பொன்னையா அவர்களால் கணேசையர் எழுதிய உரைவிளக்கக் குறிப்புகளுடன் எழுத்ததிகாரம் மூலமும் நச்சினார்க்கினியருரையும் வெளியிடப்பட்டன. 1868 -இல் யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலர் பதிப்பு, சென்னபட்டணம் ஊ. புஷ்பரதச் செட்டியாரது கலாரத்நாகர அச்சுக்கூடத்தில் சி.வை. தாமோரதம் பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது. இதே ஆண்டு கோமளபுரம் இராசகோபால பிள்ளையின் பதிப்பும் தொல்காப்பியம் சேனாவரையம் என்ற பெயரில் வெளிவந்துள்ளது. 1923 - இல் கந்தசாமியார் திருத்திய திருத்தங்களோடும் குறிப்புரையோடும் கழகப் பதிப்பாக வெளிவந்தது. 1938 -இல் சி. கணேசையர் பதிப்பு அவர் எழுதிய உரைவிளக்கக் குறிப்புகளுடன் வெளியிடப்பட்டது. 1885 -இல் சி.வை. தாமோதரம் பிள்ளையால் தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் இயற்றிய உரையோடும் பலதேசப் பிரதிரூபங்களைக் கொண்டு பரிசோதித்து யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரரால் பதிப்பிக்கப்பட்டது என்னும் குறிப்புடன் பதிப்பு வெளிவந்தது. அப்பதிப்பில் உள்ள பின்னான்கியல் நச்சினார்க்கினியர் உரை அன்று என்று மறுத்து இரா. இராகவையங்கார் 1902 - 1905 வரையான செந்தமிழ் இதழில் ஆய்வுக்கட்டுரை எழுதித் தெளிவுபடுத்தினார். அதனைத் தொடர்ந்து பொருளதிகாரம் முழுதும் நான்கு பகுதியாக நச்சினார்க்கினியம், பேராசிரியம் எனப் பிரித்து 1916, 1917 - ஆம் ஆண்டுகளில் ச. பவனாந்தம் பிள்ளை பதிப்பித்தார். 1917 - இல் ரா. இராகவையங்கார் செய்யுளியலுக்கு நச்சினார்க்கியர் உரை இருப்பதை அறிந்து, நச்சினார்கினியர் உரை உரையாசிரியர் உரையுடன் என இரு உரைகளையும் இணைத்து வெளியிட்டார். 1934, 1935 -இல் எ. வையாபுரிப்பிள்ளை அவர்களால் ஓலைப் பிரதி பரிசோதிக்கப்பட்டு மா.நா. சோமசுந்தரம் பிள்ளை அவர்களது அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளுடனும் திருத்தங் களுடனும் தொல்காப்பியம் பொருளதிகாரம் முதற்பாகம் வெளிவந்தது. 1948 - இல் தொல்காப்பிய முனிவரால் இயற்றப் பட்ட தொல்காப்பியம் பொருளதிகாரம் (முதற்பாகம்) முன்னைந்தியலும் நச்சினார்க்கினியமும் என, சி. கணேசையர் எழுதிய ஆராய்ச்சிக் குறிப்புரையுடன் நா. பொன்னையா அவர்களால் பதிப்பிக்கப்பட்டது. 1943 -இல் தொல்காப்பியம் பொருளதிகாரம் (இரண்டாம் பாகம்) என்பதோடு பின்னான்கியலும் பேராசிரியமும் இவை புன்னாலைக் கட்டுவன் தமிழ் வித்துவான், பிரமரீ சி. கணேசையர் அவர்கள் ஏட்டுப் பிரதிகளோடு ஒப்புநோக்கித் திருத்திய திருத்தங்களோடும் எழுதிய உரை விளக்கக் குறிப்புகளோடும் ஈழகேசரி அதிபர் நா. பொன்னையா அவர்களால் தமது சுன்னாகம், திருமகள் அழுத்தகத்தில் பதிப்பிக்கபட்டன என வரையறுக்கப் பட்டிருந்தது. 2007-இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மறுபதிப்பாக சி. கணேசையரின் பதிப்பைப் பதித்துள்ளது. அப்பதிப்பினைப் பின்பற்றியே இப்பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சூத்திர அகராதி, சூத்திர அரும்பத விளக்கம் ஆகியவற்றிற்கு இப்பதிப்பில் பக்க எண் கொடுக்கப்பட்டிருந்தன. அவை இம் மீள்பதிப்பில் நூற்பா எண்களாக மாற்றப்பட்டுள்ளன. அனுபந்தமாக சி. கணேசைய்யர் சில கட்டுரைகளை அப்பதிப்பில் இணைத் திருந்தார் அவற்றோடு மேலும் அவருடைய சில கட்டுரைகள் இப்பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் பதிப்பு 1971 சொல்லதிகாரம் கல்லாடம் சி.வை. தாமோதரம் பிள்ளை தொல்காப்பியம் பொருளதி காரம் நச்சினார்க்கினியர் உரை பதிப்புரையில் (1885) கல்லாடர் உரை பற்றிய குறிப்பினைத் தருகிறார். டி.என் அப்பனையங்கார் செந்தமிழ் இதழில் (1920, தொகுதி-19, பகுதி-1, பக்கம்-20) கல்லாடருரை என்னும் கட்டுரையில் ரீமான் எம் சேக்ஷகிரி சாதிரியார் (1893) கல்லாடர் உரை குறித்து ஆராய்ந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார். சோழவந்தான் அரசஞ்சண்முகனார் (1905) ரா. இராகவையங்கார் (1917) பெயர் விழையான், கா. நமச்சிவாய முதலியார்(1920) நவநீதகிருஷ்ண பாரதி(1920) பி. சிதம்பர புன்னைவனநாத முதலியார்(1922) கந்தசாமியார் (1923) வ.உ. சிம்பரம் பிள்ளை (1928) மன்னார்குடி தமிழ்ப் பண்டிதர் ம.நா. சோமசுந்தரம் பிள்ளை (1929) அரங்க. வேங்கடாசலம் பிள்ளை (1929) ஆகியோர் கல்லாடர் உரை குறித்த குறிப்புகளைத் தமது கட்டுரைகளில் குறிப்பிடுகின்றனர். பின்னங்குடி சா. சுப்பிரமணிய சாதிரியார் கல்லாடர் உரை ஓரியண்டல் கையெழுத்துப் புத்தக சாலையில் உள்ளது என்றும், அவ்வுரை எவ்வியல் வரை உள்ளது என்னும் குறிப்புரையும் தருகிறார். 1950 - 1952 வரை தருமபுர ஆதீனம் வெளியிட்ட ஞான சம்பந்தம் இதழில் அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தின் இரண்டாம் பிரதியை ஒட்டிப் பதிப்பிக்கப்பட்டது. கிளவியாக்கம் தொடங்கி இடையியல் 10 - ஆவது நூற்பா வரை வெளிவந்தது. கல்லாடர் உரையைத் தம்முடைய திருத்தங்களுடன் வெளியிட்டவர் மகாவித்துவான் தண்டபாணி தேசிகர். 1963 -இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைக்கோவை என்னும் பெயரில் ஆபிரகாம் அருளப்பனும் வ.ஐ. சுப்பிரமணியமும் இணைந்து வெளியிட்டனர். இது நான்கு இயலுக்கான பதிப்பாக அமைந்திருந்தது. கழகப் பதிப்பாக 1964 -இல் கு. சுந்தரமூர்த்தி விளக்கவுரையுடன் கல்லாடம் வெளிவந்தது. 1971 -இல் தெ.பொ.மீ அவர்களால் ஒன்பது பிரதிகளைக் கொண்டு ஒப்பிட்டு அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகப் பதிப்பாக வெளிவந்தது. 2003 -இல் தி.வே. கோபாலையர், ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு தமிழ் மண் பதிப்பகம் கல்லாடனார் உரையைப் பதிப்பித் துள்ளது. 2007 -இல் தி.வே. கோபாலையரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, சரசுவதி மகால் நூலகம் தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைக்கொத்தில் கல்லாடர் உரையை வெளியிட்டுள்ளது. கல்லாடர் உரை முழுமையாக இதுவரை கிடைத்திலது. இம்மீள்பதிப்பில் செந்தமிழ் அந்தணர் அவர்களின் இலக்கண வாழ்வியல் விளக்கமும் கா. வெள்ளைவாரணனாரின் இயல் விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இவை தொல்காப்பியத்திற்குள் புகுவாருக்கு எளிதான மனநிலையை உருவாக்குவதுடன், ஆய்வாளர்களுக்கு மிகுந்த பயன் உடையதாக இருக்கும். பின்னிணைப்பாக இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகள், தொல்காப்பிய உரையாசிரியர், உரைகள் குறித்த நுட்பத்தைப் புலப்படுத்துவதுடன், தொல்காப்பியம் பற்றிய நுண்மையை அறியவும் துணை செய்யும். நூற்பா, உரை வழிக் கலைச்சொற்கள், உரையில் உள்ள மேற்கோள் அகராதி போன்றவை தொகுத்துத் தரப்பட்டுள்ளன. தொல்காப்பியத்தை அறிய விரும்புவாருக்கும், ஆய்வாளர்களுக்கும் இத் தொகுப்பு பயன் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியம் மூலமும், உரையோடும் பல பதிப்புகளைக் கண்டுள்ளது. இருப்பினும் தொடக்கத்தில் தமிழ் அறிஞர் பெருமக்களால் உரையோடு தொல்காப்பியத்தைப் பதிப்பித்த பதிப்புகள் இன்று கிடைக்கவில்லை. அந்நிலையைப் போக்கும் பொருட்டு, தமிழரின் பண்பாட்டை, மேன்மையை, உயர்வைப் பொதித்து வைத்துள்ள நூல்களைத் தேடித் தேடிப் பதிப்பிக்கும் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் ஐயா கோ. இளவழகனார் அவர்கள் பழம் பதிப்புகளைப் பதிப்பிக்க வேண்டும் என்று விரும்பியதன் காரணமாக இப்பதிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பதிப்பிற்கு, தமிழின் மூத்த அறிஞர், செந்தமிழ் அந்தணர் முதுமுனைவர் ஐயா இரா. இளங்குமரனார் அவர்கள் பதிப்பாசிரியராக அமைந்து என்னையும் இப்பணியில் இணைத்துக்கொண்டார்கள். பழந்தமிழ் நூல்களைப் பாதுகாத்து வைத்துள்ள புலவர் பல்லடம் மாணிக்கம் அவர்களிடம் இருந்து தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடர் உரை பெறப்பட்டுப் பதிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டது. மற்ற உரைகள் அனைத்தும் தமிழ் இணையப் பல்கலைக்கழக நூலகம், உலகத் தமிழாராய்ச்சி இணையப் பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு இம் மீள்பதிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. சி. கணேசையர் பதிப்பினை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வழி வெளிவந்த சி. கணேசைய்யரின் தொல்காப்பியப் பதிப்பிற்கு உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தின் மேனாள் இயக்குநர் (முழுகூடுதல் பொறுப்பு) முனைவர் திரு ம. இராசேந்திரன் அவர்கள் கணேசையர் பதிப்பிற்கு எழுதியுள்ள முகவுரை அவருடைய ஒப்புதலுடன் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. முனைவர் பா. மதுகேவரன் அவர்களின் தொல்காப்பியம் பதிப்பு ஆவணம் 7 என்னும் நூற்பகுதியில் இருந்து தொல் காப்பியப் பதிப்பு அடைவுகள் இப்பதிப்பில் இணைக்கப் பட்டுள்ளன. தொல்காப்பியம் தொடர்பான பல்வேறு அறிஞர் பெருமக்களின் ஆய்வுக் கட்டுரைகள் தொகுத்து வழங்கப் பட்டுள்ளன. தொல்காப்பியம் உரைகள் முழுதும் ஆய்வு செய்துள்ள பேராசிரியர் முனைவர் ச. குருசாமி அவர்களின் கட்டுரைகள் இப்பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. பதிப்பிற்குத் துணை செய்த மேற்கண்ட அனைவருக்கும் நன்றியினைப் புலப்படுத்திக் கொள்ளுகிறேன். முனைவர் ஸ்ரீ. பிரசாந்தன் அவர்கள் தொகுத்த இலக்கண வரம்பு நூலிலிருந்த கட்டுரைகள் கணேசையர் பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. செந்தமிழ், தமிழ்ப்பொழில், தமிழியல் முதலிய ஆய்விதழ்களிலிருந்து தொல்காப்பியம் தொடர்பான கட்டுரைகள் சேர்க்கப் பட்டுள்ளன. பதிப்புப் பணியில் ஈடுபடுத்திய ஐயா திரு கோ. இளவழகனார் அவர்களுக்கும் பதிப்பில் இணைந்து செயல்படப் பணித்த ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களுக்கும், பதிப்பிற்குத் துணைபுரிந்த புலவர் செந்தலை கௌதமன் ஐயா அவர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி. தட்டச்சுச் செய்து கொடுத்த திருமதி ப. கயல்விழி திருமதி கோ. சித்திரா. அட்டை வடிவமைத்த செல்வன் பா. அரி (ஹரிஷ்), மற்றும் பதிப்பகப் பணியாளர்கள் திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன், இப்பதிப்பிற்கு உதவிய என்னுடைய முனைவர் பட்ட மாணவர்கள் பா. மாலதி, கா. பாபு, சு. கோவிந்தராசு, கா. கயல்விழி ஆகிய அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப் பதிப்புப் பணியில் என்னை முழுவதாக ஈடுபடத் துணையாக நிற்கும் என் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார் அவர்களுக்கு என் நன்றியினை உரித்தாக்குகிறேன். கல்பனா சேக்கிழார் நுழைவுரை தமிழ்மண் பதிப்பகம் இதுகாறும் வெளியிட்டுள்ள அறிஞர் பெருமக்களின் உரைகள் யாவும் பழைய இலக்கிய இலக்கணக் கருவூலத்தின் வாயில்களைத் திறக்கின்ற திறவுகோல்கள்; தமிழரை ஏற்றிவிடும் ஏணிப்படிகள்; வரலாற்றுப் பாதையைக் கடக்க உதவும் ஊர்திகள். தமிழறிஞர்களின் அறிவுச்செல்வங்களை முழு முழு நூல் தொகுப்புகளாக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் பெரும் பங்களிப்பை எம் பதிப்பகம் செய்து வருவதை உலகத் தமிழர்கள் அனைவரும் அறிவர். தமிழகம் வேற்றினத்தவர் படையெடுப்பால் தாக்குண்டு அதிர்ந்து நிலைகுலைந்து தமிழ்மக்கள் தம் மரபுகளை மறந்தபோதெல்லாம் பழம்பெரும் இலக்கியச் செல்வங்களை எடுத்துக்காட்டி விளக்கித் தமிழ் மரபை வாழச் செய்த பெருமை உரையாசிரியர்களுக்கு உண்டு. தமிழ்மொழியின் நிலைத்த வாழ்விற்கும் வெற்றிக்கும் காரணமாக இருப்பவர்கள் உரையாசிரியர்களே ஆவர். இலக்கணக் கொள்கைகளை விளக்கி மொழிக்கு வரம்பு கட்டி இலக்கியக் கருத்துகளை விளக்கி காலந்தோறும் பண்பாட்டை வளர்த்து, தமிழ் இனத்திற்குத் தொண்டு செய்த பெருமை உரையாசிரியர்களையே சாரும். ஒவ்வொரு உரையாசிரியரும் தமிழினம் உறங்கிக் கொண்டிருந்தபோது விழித்தெழுந்து, எழுச்சிக்குரல் கொடுத்த முற்போக்குச் சிந்தனையாளர்கள். அவர்கள் எழுதியுள்ள உரைகள் யாவும் காலத்தின் குரல்கள்; சமுதாயத்தின் எதிர்பார்ப்புகள்; தமிழ் இன வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவைகள்; நெருக்கடியின் வெளிப்பாடுகள் ஆகும். - உரையாசிரியர்கள், (மு.வை. அரவிந்தன்). தொல்காப்பியம் இலக்கணநூல் மட்டுமன்று; தமிழரின் அறிவுமரபின் அடையாளம். தமிழரின் வாழ்வியலை, மெய்யியலைப் பாதுகாத்த காலப்பேழை. இதில் பொதிந்துள்ள தருக்கவியல் கூறுகள் இந்தியத் தருக்கவியல் வரலாற்றின் மூல வடிவங்கள் - அறிஞர்களின் பார்வையில் பேரறிஞர் அண்ணா, (முனைவர் க. நெடுஞ்செழியன்) மேற்கண்ட அறிஞர்களின் கூற்று, தொல்காப்பியத்தின் இன்றியமை யாமையையும், உரையாசிரியர்களின் கருத்துச் செறிவையும் உழைப்பையும் உணர்த்த வல்லவை. சி.வை. தாமோதரம் பிள்ளை, கா. நமச்சிவாய முதலியார், வ.உ. சிதம்பரனார், சி. கணேசையர், இரா. வேங்கடாசலம் பிள்ளை, தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் போன்ற பெருந்தமிழ் அறிஞர்களின் உழைப்பால் உருவான இவ் வாழ்வியல் கருவூலம் தொல்காப்பிய உரைத்தொகை எனும் பெயரில் தமிழ்மண் பதிப்பகம் மீள் பதிப்பு செய்துள்ளது. 2003 -ஆம் ஆண்டில் எம் பதிப்பகம் தொல்காப்பியத்தை (எழுத்து - சொல் - பொருள்) முழுமையாக வெளியிட்டுள்ளது. இதுகாறும் வெளிவந்துள்ள தொல்காப்பிய நூல் பதிப்புகளில் இடம் பெறாத அரிய பதிப்புச் செய்திகள் இவ்வுரைத் தொகையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வுரைத் தொகை எல்லா நிலையிலும் சிறப்பாக வெளிவருவதற்கு தோன்றாத் துணையாக இருந்தவர்களைப் பற்றி தனிப்பக்கத்தில் பதிவு செய்துள்ளோம். இவ்வாழ்வியல்நூல் பிழையற்ற செம்பதிப்பாக வெளிவருவதற்கு முதன்மைப் பதிப்பாசிரியர் முதுமுனைவர் ஐயா இரா. இளங்குமரனார், இணை பதிப்பாசிரியர் அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் ஆகியோரின் உழைப்பும் பங்களிப்பும் என்றும் மறக்க முடியாதவை. எம் தமிழ் நூல் பதிப்பிற்கு எல்லா நிலையிலும் தொடர்ந்து ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் இனிய நண்பர் புலவர் செந்தலை ந. கவுதமன் அவர்களின் தன்னலம் கருதா தமிழ்த் தொண்டிற்கு என்றும் நன்றி உடையேன். தமிழர்கள் தம் இல்லம்தோறும் பாதுகாத்து வைக்க வேண்டிய இவ்வருந்தமிழ்ப் புதையலைத் தமிழ் கூறும் உலகிற்கு வழங்குவதைப் பெருமையாகக் கருதி மகிழ்கிறோம். இப்பதிப்பைத் தமிழ்க்கூறும் நல்லுலகம் ஏற்றிப்போற்றும் என்று நம்புகிறோம். கோ. இளவழகன் தமிழீழறிஞர்கள் தாய்த்தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பை நன்றி உணர்வோடு நினைவுகூரும் வகையில் தொல்காப்பியச் செல்வர் சி. கணேசையர் எழுதிய அரும்பெரும் குறிப்புகளைத் தாங்கி வருகிறது இத்தொகை. கடந்த காலத்தில் தமிழீழம் தொடர்பான எம் பதிப்பகத்தின் வழி யாழ்ப்பாண அகராதி, ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம், யாழ்ப்பாண சரித்திரம், ஈழம் தந்த இனியத் தமிழ்க்கொடை, தமிழுக்குத் தொண்டு செய்த தமிழீழறிஞர்கள், பண்டைத் தமிழீழம் முதலிய நூல்களை வெளியிட்டு உள்ளதை மகிழ்வோடு நினைவு கூர்கிறோம். முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பிறப்பு : 30. 1. 1930 பெற்றோர் : இராமு - வாழவந்தம்மை (உழவர்குடி) ஊர் : சங்கரன்கோவில் வட்டம், வாழவந்தாள்புரம் கல்வி : தொடக்கக் கல்வி - உள்ளூரில் நடுநிலைக் கல்வி - பாவாணர் பயின்ற முறம்பு பள்ளி வித்துவான் - தமிழ்த் தேர்வு - தனித் தேர்வர் ஆசிரியர் பணி : தொடக்கப் பள்ளி - 16ஆம் அகவையில் தொடக்கம் உயர்நிலைப் பள்ளி - தமிழாசிரியப்பணி ஆய்வுப்பணி : பாவாணருடன் - செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டம், மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் - கலைச் சொல் விளக்கம் தொகுப்புப் பணி, தமிழக வட்டார வழக்குச் சொல் தொகுப்புப் பணி. தமிழ்ப்பணி : கட்டுரை, கவிதை, கதை, நாடகம், காப்பியம், இலக்கண - இலக்கிய உரை - தமிழ்ச் சொல்லாய்வு - பழந்தமிழ்நூல் பதிப்புகள் - தனிமனித - இலக்கண - இயக்க, இசை, வரலாறு. தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் - நாடகம். குழந்தைப் பாடல்கள் - ஆய்வுப் பொழிவு - தொகுப்பு நூல்கள் நாளொன்றுக்கு 18 மணிநேர எழுத்துப் பணி திருவள்ளுவர் தவச்சாலை நிறுவி இயக்குதல். செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் ... நூல்கள் : சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மணிவாசகர் பதிப்பகம், ஈரோடு குறளாயம், திருவள்ளுவர் தவச்சாலை, தமிழ்மண் பதிப்பகம் வழி 420க்கும் மேல் வெளிநாட்டுப் பயணம் : தமிழீழம், சிங்கப்பூர், மலேயா, அமெரிக்கா முதலிய நாடுகளில் தமிழைப்புகளில் பொழிவுகள். திருமணம் நிகழ்த்துதல் : தமிழகம், சிங்கப்பூர், மலேயாவில் 4000க்கும் மேற்பட்ட தமிழ்நெறித் திருமணங்கள் நிகழ்த்துநர். இயக்கப்பணி : தமிழகத் தமிழாசிரியர் கழகம், உலகத் தமிழ்க் கழகம், தமிழ்ப் பாதுகாப்புக் கழகம், திருக்குறள் பேரவை, ஈரோடு குறளாயம், தமிழ்ச்சான்றோர் பேரவை விருது : இலக்கியச் செம்மல், செந்தமிழ் அந்தணர், முதுமுனைவர் முதலியன. வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பு வாழ்நாள் சாதனையாளர் விருது. கனடா இலக்கியத் தோட்ட விருது. முனைவர் கல்பனா சேக்கிழார் பிறந்த நாள் : 5.6.1972 பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர் இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். ஆற்றியுள்ள கல்விப்பணிகள் - அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி. - திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு. - புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள், அப்பாத்துரையம் - 40 தொகுதிகள் (பதிப்பாசிரியர்) ஆகிய நூல்களின் ஆசிரியர். - பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். - பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (PDF) மேற்கொண்டு வருகிறார். - 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். - மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார். - இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார். - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார். கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம் எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம் என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் `உரத்தநாடு திட்டம் என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கைகளை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். பெற்ற விருதுகளும், பாராட்டுகளும்: - முறம்பு பாவாணர் கோட்டம், பாவாணர் பதிப்பர் - மலேசியத் தமிழ்நெறிக் கழகம், பதிப்பியல் வேந்தர் - திருச்சிராப்பள்ளி பாவாணர் தமிழியக்கம், பாராட்டுச் சான்றிதழ் - பெங்களூர் உலகத்தமிழ்க் கழகம், பாராட்டுப் பா - சென்னை சோமசுந்தரர் ஆகமத் தமிழ்ப்பண்பாட்டு ஆராய்ச்சி மன்றம், பதிப்புச் செம்மல் - அமெரிக்க உலகத் தமிழ் அமைப்பு, பாராட்டுச் சான்றிதழ் - நாகர்கோயில் பன்மொழிப் புலவர் நூற்றாண்டு விழா, பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் விருது - சென்னை திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம், தனித்தமிழ் பதிப்புச் செம்மல் - மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கனார் நூற்றாண்டு நினைவுக் குழு, பாராட்டுச் சான்றிதழ் - குவைத்து பொங்கு தமிழ் மன்றம், பதிப்பரசர் - குவைத்து தமிழ்நாடு பொறியாளர் குழுமம், பாராட்டுச் சான்றிதழ் நூலாக்கத்திற்கு உதவியோர் முதன்மைப்பதிப்பாசிரியர்: முதுமுனைவர் இரா. இளங்குமரனார் இணைப்பதிப்பாசிரியர்: முனைவர் கல்பனா சேக்கிழார் நூல் வடிவமைப்பு: திருமதி. கயல்விழி, கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (Harrish) திருத்தத்திற்கு உதவியோர்: புலவர் பனசை அருணா புலவர் மு. இராசவேலு முனைவர் அரு. அபிராமி முனைவர் ஜா. கிரிசா நூலாக்கத்திற்கு உதவியோர்: திருமிகு. இரா. பரமேசுவரன், திருமிகு. வே. தனசேகரன், திருமிகு. கு. மூர்த்தி, திருமிகு. வி. மதிமாறன் கணினியில் நூலாக்கம்:  மாணவர் நகலகம்,  பிராசசு இந்தியா,  ரியல் இம்பேக்ட் சொல்யூசன்,  தூரிகை பிரிண்ட் குறுக்க விளக்கம் அகம். அகநானூறு அரசி. அரசியல் சருக்கம் v., எழுத். எழுத்ததிகாரம் ஐங்குறு. ஐங்குறுநூறு கலி. கலித்தொகை களவழி. களவழி நாற்பது குறள். திருக்குறள் குறிஞ்சிப். குறிஞ்சிப்பாட்டு குறுந். குறுந்தொகை சிறுபாண். சிறுபாணாற்றுப்படை சிலம்பு. சிலப்பதிகாரம் Ótf., சிந்தா. சீவகசிந்தாமணி சூளா. சூளாமணி திணைமாலை. திணைமாலை நூற்றைம்பது திரிகடு. திரிகடுகம் தூதுவிடு. தூதுவிடு சருக்கம் தொ.எ. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் தொ.சொ. தொல்காப்பியம் சொல்லதிகாரம் தொ.பொ. தொல்காப்பியம் பொருளதிகாரம் நற். நற்றிணை நான்மணி. நான்மணிக்கடிகை நாலடி. நாலடியார் நெடுநல். நெடுநல்வாடை பட். பட்டினப்பாலை பதிற்று. பதிற்றுப்பத்து பரி. பரிபாடல் பு.வெ. புறப்பொருள் வெண்பாமாலை புறம். புறநானூறு பெரும்பா. பெரும்பாணாற்றுப்படை மணி. மணிமேகலை மதுரைக். மதுரைக்காஞ்சி முருகு. திருமுருகாற்றுப்படை முல்லைப். முல்லைப்பாட்டு உள்ளடக்கம் தொல்காப்பியம் ....... 1 இயலமைதி.......27 வாழ்வியல் விளக்கம் ....... 30 பொதுப் பாயிரம் ....... 83 சிறப்புப் பாயிரம் ....... 90 உரை விளக்கக் குறிப்பு ....... 99 1. நூன்மரபு ....... 116 2. மொழி மரபு ....... 160 3. பிறப்பியல் ....... 195 4. புணரியல் ....... 209 5. தொகை மரபு ....... 249 6. உருபியல் .......281 7. உயிர்மயங்கியல்.......302 தொல்காப்பியம் பழந்தமிழ் நூல்களின் வழியே நமக்குக் கிடைத்துள்ள முழு முதல் இலக்கண நூல் தொல்காப்பியமே. ஆசிரியர், தொல் காப்பியம் என்னும் நூலை இயற்றியமையால்தான் தொல் காப்பியன் எனத் தம் பெயர் தோன்றச் செய்தார் என்பதைப் பாயிரம் தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி என்று தெளிவாகக் கூறுகிறது. தொல்காப்பியம் பழமையான இலக்கண மரபுகளைக் காக்கும் நூல் என்பதற்குப் பலப்பல சான்றுகள் இருப்ப வும்,பழமையான காப்பியக்குடியில் தோன்றியவரால் செய்யப் பட்டது என்னும் கருத்தால், பழைய காப்பியக்குடியில் உள்ளான் என நச்சினார்க்கினியர் கூறினார். பழைய காப்பியக்குடி என்னும் ஆட்சியைக் கண்டு விருத்த காவ்யக்குடி என்பது ஒரு வடநாட்டுக்குடி என்றும், பிருகு முனிவர் மனைவி காவ்ய மாதா எனப்படுவாள் என்றும் கூறித் தொல்காப்பியரை வடநாட்டுக் குடி வழியாக்க ஆய்வாளர் சிலர் தலைப்படலாயினர். இம்முயற்சிக்கு நச்சினார்க்கினியர் உரையின் புனைவையன்றி நூற் சான்றின்மை எவரும் அறியத்தக்கதே. இவ்வாய்வுகளையும் இவற்றின் மறுப்புகளையும் தமிழ் வரலாறு முதற்றொகுதி1 (பக். 255 - 257) தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி2 (பக். 2, 3) தமிழிலக்கிய வரலாறு - தொல்காப்பியம்3 (பக். 17-23) என்பவற்றில் கண்டு கொள்க. காப்பியர் தொல்காப்பியர் சிறப்பால் அவர் வழிவந்தவரும், அவரை மதித்துப் போற்றியவரும் அவர் பெயரைத் தம் மக்கட்கு இட்டுப் பெருக வழங்கினராதல் வேண்டும். இதனால் காப்பியாற்றுக் 1. இரா. இராகவ ஐயங்கார் 2. மு. இராகவ ஐயங்கார் 3. க. வெள்ளைவாரணனார் காப்பியன், வெள்ளூர்க் காப்பியன் என ஊரொடு தொடர்ந்தும், காப்பியஞ் சேத்தன், காப்பியன் ஆதித்தன் எனக் காப்பியப் பெய ரொடு இயற்பெயர் தொடர்ந்தும் பிற்காலத்தோர் வழங்கலா யினர். இனிப் பல்காப்பியம் என்பதொரு நூல்என்றும் அதனை இயற்றியவர் பல்காப்பியனார் எனப்பட்டார் என்றும் கூறுவார் உளர். அப்பெயர்கள் பல்காயம் என்பதும் பல்காயனார் என்பதுமேயாம்; படியெடுத்தோர் அவ்வாறு வழுப்படச் செய் தனர் என்று மறுப்பாரும் உளர். தொல்காப்பியர் தமிழ் நாட்டாரே வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் ஆய்ந்து, தமிழியற்படி எழுத்தும் சொல்லும் பொருளும் ஆகிய முப்பகுப்பு இலக்கணம் செய்தவரும், போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவையும் (1006) வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெய ரெல்லை அகத்தவர் வழங்கும் யாப்பின் வழியையும் (1336) தமிழென் கிளவியும் அதனோ ரற்றே (385) எனத் தமிழமைதியையும், வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே (884) என வடவெழுத்துப் புகாது காத்தலையும் கூறிய தொல்காப்பியரை வலுவான அகச்சான்று வாய்த்தால் அன்றி வடநாட்டவர் என்பது வரிசை இல்லை என்க. இனி, சமதக்கினியார் மகனார் என்பதும் திரணதூமாக் கினியார் இவர் பெயர் என்பதும் பரசுராமர் உடன் பிறந்தார் என்பதும் நச்சினார்க்கினியர் இட்டுக் கட்டுதலை அன்றி எவரும் ஒப்பிய செய்தி இல்லையாம். தொல்காப்பியப் பழமை சங்க நூல்களுக்குத் தொல்காப்பியம் முற்பட்டதா? பிற் பட்டதா? ஆய்தல் இன்றியே வெளிப்பட விளங்குவது முற் பட்டது என்பது. எனினும் பிற்பட்டது என்றும் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு அளவினது என்றும் குறித்தாரும் உளராகலின் இவ்வாய்வும் வேண்டத் தக்கதாயிற்று. தொல்காப்பியர் பரிபாடல் இலக்கணத்தை விரிவாகக் கூறு கிறார். அவ்விலக்கணத்துள் ஒன்று, கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்து என்னும் நான்கு உறுப்புகளையுடையது அது என்பது. மற்றொன்று, காமப் பொருள் பற்றியதாக அது வரும் என்பது. இப்பொழுது கிடைத்துள்ள பரிபாடல்கள் இருபத்தி ரண்டனுள் ஆயிரம் விரித்த என்னும் ஒரே ஒரு பாடல் மட்டும் பல வுறுப்புகளை யுடையதாக உள்ளது. எஞ்சிய பாடல்கள் இருபத்து ஒன்றும் உறுப்பமைதி பெற்றனவாக இல்லை. பரிபாடல் திரட்டி லுள்ள இரண்டு பாடல்களுள் ஒரு பாடல் பலவுறுப்புகளை யுடைய தாக உள்ளது. மற்றது உறுப்பற்ற பாட்டு. பரிபாடல் காமப் பொருள் பற்றியே வரும் என்பது இலக்கணமாக இருக்கவும் கடவுள் வாழ்த்துப் பொருளிலேயே பதினைந்து பாடல்கள் வந்துள்ளன. பரிபாடல் உயர் எல்லை நானூறடி என்பார். கிடைத்துள்ள பரிபாடல்களில் ஒன்றுதானும் சான்றாக அமையவில்லை. இவற்றால் அறியப்படுவது என்ன? தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள இலக்கணங்களையுடைய பரி பாடல்கள் இவையில்லை. அவ்விலக்கணங்களையுடைய பரிபாடல்கள் இறந்தொழிந்தன. தலைச்சங்கத்தார் பாடியதாக வரும் எத்துணையோ பரிபாடல்களின் அமைதியைக் கொண்டது தொல்காப்பிய இலக்கணம். ஆதலால், பாடலமைதியாலும் பொருள் வகையாலும் இம்மாற் றங்களையடைய நெடிய பலகாலம் ஆகியிருக்க வேண்டும் என்பதே அது. தொல்காப்பியர் குறளடி சிந்தடி அளவடி நெடிலடி கழிநெடிலடி என்பவற்றை எழுத்தளவு வகையால் சுட்டுகிறார். அவ்வடிவகை கட்டளையடி எனப்படும். அவ்வாறாகவும் சங்கப் பாடல்கள் சீர்வகை அடியைக் கொண்டனவாக உள்ளனவே யன்றிக் கட்டளை யடிவழி யமைந்தவையாக இல்லை. முற்றாக இம்மாற்றம் அமைய வேண்டுமானால் நெட்ட நெடுங்கால இடைவெளி ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவு. தொல்காப்பியர் நேர், நிரை அசைகளுடன் நேர்பசை, நிரைபசை என்பவற்றையும் குறிக்கிறார். இந்நேர்பசை நிரைபசையை வேறு எவ் விலக்கண ஆசிரியரும் கொண்டிலர்; நேர் நிரை என்னும் இருவகை அசைகளையே கொண்டனர். கட்டளையடி பயிலாமை போலவே, இவ்வசைகளும் பயிலாமை தொல்காப்பியப் பழமையை விளக்குவதேயாம். யாப்பருங் கலத்திற்கு முற்பட்டது காக்கை பாடினியம். அந்நூலிலும் அவிநயம் முதலிய நூல்களிலும் இவ்விரு வகை அசைகளும் இடம் பெறாமையால் இவற்றுக்கு மிகமுற்பட்ட நூல் தொல்காப்பியம் என்பது விளங்கும். காக்கைபாடினிய வழிவந்ததே யாப்பருங்கலம் ஆதலின் அதன் பழமை புலப்படும். பாட்டுயாப்பு, உரையாப்பு, நூல்யாப்பு, வாய்மொழியாப்பு, பிசியாப்பு, அங்கதயாப்பு, முதுசொல்யாப்பு என எழுவகை யாப்புகளை எண்ணுகிறார் தொல்காப்பியர் (1336). இவற்றுள் பாட்டுயாப்பு நீங்கிய எஞ்சிய யாப்புகள் எவையும் சான்றாக அறியு மாறு நூல்கள் வாய்த்தில. ஆகலின் அந்நிலை தொல் காப்பியத்தின் மிகுபழமை காட்டும். பேர்த்தியரைத் தம் கண்ணெனக் காக்கும் பாட்டியரைச் சேமமட நடைப் பாட்டி என்கிறது பரிபாட்டு (10:36-7). பாட்டி என்பது பாண்குடிப் பெண்டிரைக் குறிப்பதைச் சங்கச் சான்றோர் குறிக்கின்றனர். ஆனால், தொல்காப்பியம் பாட்டி என்பது பன்றியும் நாயும் என்றும் நரியும் அற்றே நாடினர் கொளினே என்றும் (1565, 1566) கூறுகின்றது. பாட்டி என்னும் பெயரைப் பன்றி நாய் நரி என்பவை பெறும் என்பது இந் நூற்பாக்களின் பொருள். முறைப்பெயராகவோ, பாடினியர் பெயராகவோ பாட்டி என்பது ஆளப்படாத முதுபழமைக்குச் செல்லும் தொல்காப்பியம், மிகு நெட்டிடைவெளி முற்பட்டது என்பதை விளக்கும். இவ்வாறே பிறவும் உள. சங்கச் சான்றோர் நூல்களில் இருந்து சான்று காட்டக் கிடை யாமையால் உரையாசிரியர்கள் இலக்கணம் உண்மையால் இலக்கியம் அவர் காலத்திருந்தது; இப்பொழுது வழக்கிறந்தது என்னும் நடையில் பல இடங்களில் எழுதுவாராயினர். ஆதலால், சங்கச் சான்றோர் காலத்திற்குப் பன்னூற்றாண்டுகளுக்கு முற்பட்டவர் தொல்காப்பியர் என்பது வெள்ளிடை மலையாம்! கள் என்னும் ஈறு அஃறிணைக்கு மட்டுமே தொல்காப்பியர் காலத்தில் வழங்கியது. அது திருக்குறளில் பூரியர்கள் மற்றையவர்கள் எனவும் கலித்தொகையில் ஐவர்கள் எனவும் வழங்குகின்றது. அன் ஈறு ஆண்பாற் படர்க்கைக்கே உரியதாகத் தொல்காப்பியம் கூறுகின்றது. இரப்பன், உடையன், உளன், இலன், அளியன், இழந்தனன், வந்தனன் எனத் தன்மையில் பெருவரவாகச் சங்கநூல்களில் இடம் பெற்றுள்ளன. தொல்காப்பியத்தில் வழங்காத ஆல், ஏல், மல், மை, பாக்கு என்னும் இறுதியுடைய வினையெச்சங்கள் சங்கநூல்களில் பயில வழங்குகின்றன. தொல்காப்பியத்தில் வினையீறாக வழங்கப்பட்ட மார், தோழிமார் எனப் பெயர்மேல் ஈறாக வழங்கப்பட்டுள்ளது. வியங்கோள்வினை, முன்னிலையிலும் தன்மையிலும் வாராது என்பது தொல்காப்பிய விதி. அவற்றில் வருதலும் சங்கப் பாடல்களில் காணக்கூடியது. கோடி என்னும் எண்பற்றித் தொல்காப்பியத்தில் குறிப்பு இல்லை. தாமரை, வெள்ளம், ஆம்பல் என்பனபோல எண்ணுப் பெயர்கள் (ஐ, அம், பல் என்னும் இறுதியுடையவை) வழங்குவதைச் சுட்டும் அவர், கோடியைக் குறித்தார் அல்லர். சங்கப் பாடல்களில் கோடி, அடுக்கியகோடி என ஆளப் பெற்றுள்ளது. ஐ, அம், பல் ஈறுடைய எண்ணுப் பெயர்கள் அருகுதலும் சங்க நூல்களில் அறிய வருகின்றன. சமய விகற்பம் பற்றிய செய்திகள், சமணம் புத்தம் பற்றிய குறிப்புகள் தொல்காப்பியத்தில் இல்லை. ஆனால் சங்க நூல்களில் இவற்றைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. எழுத்து சொல் ஆகிய அளவில் நில்லாமல் வாழ்வியலாகிய பொருள் பற்றி விரித்துக் கூறும் தொல்காப்பியர் காலத்தில் இவை வழக்கில் இருந்திருந்தால் இவற்றைக் கட்டாயம் சுட்டியிருப்பார். ஆகலின் சமண, பௌத்தச் சமயங்களின் வரவுக்கு முற்பட்டவரே தொல்காப்பியர். ஆதலால், தொல்காப்பியர் காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதேயன்றிப் பிற்பட்ட தாகாது. இக்கருத்துகளைப் பேரா. க. வெள்ளைவாரணரும் (தமிழிலக்கிய வரலாறு - தொல்காப்பியம், பக். 87 - 96), பேரா.சி. இலக்குவனாரும் (தொல்காப்பிய ஆராய்ச்சி, பக். 12 - 14) விரித்துரைக்கின்றனர். சிலப்பதிகாரத்தால் இலங்கை வேந்தன் கயவாகு என்பான் அறியப்படுகிறான். அவன் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு என்பர். அச் சிலப்பதிகாரத்தில் திருக்குறள் எடுத்தாளப்பட்டுள்ளது. ஆகலின் திருக்குறள் சிலப்பதிகாரக் காலத்திற்கு முற்பட்டது என்பது வெளிப்படை. இளங்கோவடிகள் காலத்து வாழ்ந்தவரும், மணிமேகலை இயற்றியவரும், சேரன் செங்குட்டுவன் இளங்கோவடிகள் ஆகியோருடன் நட்புரிமை பூண்டவரும், தண்டமிழ் ஆசான் சாத்தன் என இளங்கோவடி களாரால் பாராட்டப் பட்டவருமாகிய கூலவாணிகன் சாத்தனார், திருவள்ளுவரைப் பொய்யில் புலவன் என்றும், திருக்குறளைப் பொருளுரை என்றும் குறித்துக் கூறிப் பாராட்டுகிறார். ஆகலின், சிலப்பதிகார மணிமேகலை நூல்களுக்குச் சில நூற்றாண்டுகளேனும் முற்பட்டது திருக்குறள் எனத் தெளியலாம். அத் திருக்குறளுக்கு முப்பால் கொள்கை அருளியது தொல்காப்பியம். அறமுதலாகிய மும்முதற் பொருள் என்பது தொல்காப்பியம். இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு என வருவதும் தொல்காப்பியம். அது வகுத்தவாறு அறம் பொருள் வழக்காறுகள் திருக்குறளில் இடம் பெற்றுள்ளதுடன், இன்பத்துப்பாலோ, புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் எனத் தொல்காப்பியர் சொல்லும் உரிப்பொருள் ஐந்தற்கும் முறையே ஐந்தைந்து அதிகாரங்களாக 25 அதிகாரங்கள் கொண்டு முற்றாகத் தொல்காப்பிய வழியில் விளங்க நூல் யாத்தவர் திருவள்ளுவர். ஆகலின் அத்திருக்குறளின் காலத்திற்குப் பன்னூற் றாண்டு முற்பட்ட பழமையுடையது தொல்காப்பியம் என்பது தெளிவுமிக்க செய்தியாம். திருக்குறள் அறம் என்று சுட்டப்பட்ட துடன், குறள் தொடர்களும் குறள் விளக்கங்களும் பாட்டு தொகை நூல்களில் இடம் பெற்ற தொன்மையது திருக்குறள். அதற்கும் முற்பட்டது தொல்காப்பியம். இனித் தொல்காப்பியத்தில் வரும் ஓரை என்னும் சொல்லைக் கொண்டு தொல்காப்பியர் காலத்தைப் பின்னுக்குத் தள்ள முயன்றவர் உளர். ஓரை அவர் கருதுமாப்போல ஹோரா என்னும் கிரேக்கச் சொல் வழிப்பட்டதன்று. அடிப்பொருள் பாராமல் ஒலி ஒப்புக் கொண்டு ஆய்ந்த ஆய்வின் முடிவே அஃதாம். யவனர் தந்த வினைமாண் நன்கலம் இவண் வந்ததும், அது பொன்னொடு வந்து கறியொடு (மிளகொடு) பெயர்ந்ததும், யவன வீரர் அரண்மனை காத்ததும் முதலாகிய பல செய்திகள் சங்க நூல்களில் பரவலாக உள. அக்காலத்தில் அவர்கள் தோகை அரி முதலிய சொற்களை அறிந்தது போல அறிந்து கொண்ட சொல் ஓரை என்பது. அச்சொல்லை அவர்கள் அங்கு ஹோரா என வழங்கினர். கிரேக்க மொழிச் சொற்கள் பல தமிழ்வழிச் சொற்களாக இருத்தலைப் பாவாணர் எடுத்துக் காட்டியுள்ளார். ஓரை என்பது ஒருமை பெற்ற - நிறைவு பெற்ற - பொழுது. âUkz¤ij KG¤j« v‹gJ«, âUkz ehŸ gh®¤jiy KG¤j« gh®¤jš v‹gJ«, âUkz¡ fhšnfhis ‘KG¤j¡fhš’ v‹gJ«, ‘v‹d ïªj X£l«; KG¤j« jt¿¥nghFkh? என்பதும் இன்றும் வழக்கில் உள்ளவை. முழுமதி நாளில் செய்யப்பட்ட திருமணமே முழுத்தம் ஆயிற்று. இன்றும் வளர்பிறை நோக்கியே நாள் பார்த்தலும் அறிக. ஆராய்ந்து பார்த்து - நாளும் கோளும் ஆராய்ந்து பார்த்து - நல்லவையெல்லாம் ஒன்றுபட்டு நிற்கும் பொழுதே நற்பொழுது என்னும் குறிப்பால் அதனை ஓரை என்றனர். இத்திறம் அந்நாள் தமிழர் உடையரோ எனின், செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் வளிதிரிதரு திசையும் வறிது நிலைஇய காயமும் என்றிவை சென்றளந் தறிந்தோர் போல, இனைத்தென்போரும் உளரே என்னும் புறப்பாடலை அறிவோர் ஓரையைப் பிறர்வழியே நம் முன்னோர் அறிந்தனர் என்னார். உண்கலத்தைச் சூழ வைத்திருந்த பக்கக் கலங்களை, நாள்மீன் விரவிய கோள்மீனுக்கு உவமை சொல்லும் அளவில் தெளிந்திருந்த அவர்கள், ஓரையைப் பிறர் வழியே அறிந்தனர் என்பது பொருந்தாப் புகற்சியாம். தொல்காப்பியர் சமயம் தொல்காப்பியனார் சமயம் பற்றியும் பலவகைக் கருத்துகள் உள. அவர் சைவர் என்பர். சைவம் என்னும் சொல் வடிவம் மணிமேகலையில்தான் முதற்கண் இடம் பெறுகிறது. பாட்டு தொகைகளில் இடம் பெற்றிலது. சேயோன், சிவன் வழிபாடு உண்டு என்பது வேறு. அது சைவ சமயமென உருப்பெற்றது என்பது வேறு. ஆதலால் தொல்காப்பியரைச் சைவரெனல் சாலாது. இனி, முல்லைக்கு முதன்மையும் மாயோனுக்குச் சிறப்பும் தருதல் குறித்து மாலியரோ எனின், குறிஞ்சி முதலா உரிப் பொருளும் காலமும் குறித்தல் கொண்டு அம் முதன்மைக் கூறும் பொருள்வழி முதன்மை எனக் கொள்ளலே முறை எனல் சாலும். தொல்காப்பியரை வேத வழிப்பட்டவர் என்னும் கருத்தும் உண்டு. அஃதுரையாசிரியர்கள் கருத்து. நூலொடுபட்ட செய்தி யன்றாம். சமயச் சால்பில் ஓங்கிய திருக்குறளை - வேத ஊழியைக் கண்டித்த திருக்குறளை - வேத வழியில் உரை கண்டவர் இலரா? அது போல் என்க. தொல்காப்பியரைச் சமணச் சமயத்தார் என்பது பெரு வழக்கு. அவ்வழக்கும் ஏற்கத்தக்கதன்று. அதன் சார்பான சான்று தொல்காப்பியத்தில் இல்லை. ஆனால் அச்சமயம் சார்ந்தார் அல்லர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. சமணச் சமய நூல்களாக வழங்குவன அருக வணக்கம் சித்த வணக்கம் உடையவை. அவ்வாறு பகுத்துக் கூறாவிடினும் அருக வணக்கம் உடையவை. சமணச் சமய நூல்களாகக் கிடைப்பவற்றை நோக்கவே புலப்படும். தொல்காப்பியர் காலத்தில் கடவுள் வாழ்த்து நூன் முகப்பில் பாடும் மரபில்லை எனின், அவர் சமணச் சமயத்தார் என்பதும் இல்லை என்பதே உண்மை. என்னெனின் சமணர் தம் சமயத்தில் அத்தகு அழுந்திய பற்றுதல் உடையவர் ஆதலால். சமணச் சமயத்தார் உயிர்களை ஐயறிவு எல்லை யளவிலேயே பகுத்துக் கொண்டனர். ஆறாம் அறிவு குறித்து அவர்கள் கொள்வது இல்லை. மாவும் மாக்களும் ஐயறிவினவே என்னும் தொல்காப்பியர், மக்கள் தாமே ஆறறி வுயிரே என்றும் கூறினார். நன்னூலார் சமணர் என்பதும் வெளிப்படை. அவர் ஐயறிவு வரம்பு காட்டும் அளவுடன் அமைந்ததும் வெளிப்படை. சமணச் சமயத்தார் இளமை, யாக்கை, செல்வ நிலையாமை களை அழுத்தமாக வலியுறுத்துவர். துறவுச் சிறப்புரைத்தலும் அத்தகையதே. ஆகவும் நிலையாமையையே கூறும் காஞ்சித் திணையைப் பாடுங்காலும், நில்லா உலகம் புல்லிய நெறித்தே என உலகம் நிலையாமை பொருந்தியது என்ற அளவிலேயே அமைகிறார். காமஞ் சான்ற கடைக்கோட் காலை ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே (1138) என அன்பு வாழ்வே, அருள் வாழ்வாம் தவவாழ்வாக வளர்நிலையில் கூறுகிறார். இல்லற முதிர்வில் தவமேற்கும் நிலை சமணம் சார்ந்ததன்று. அஃது இம்மண்ணில் தோன்றி வளர்ந்து பெருகிய தொல் பழந்தமிழ் நெறி. தொல்காப்பியர் சமணச் சமயத்தார் எனின், அகத்திணை யியல் களவியல் கற்பியல் பொருளியல் என அகப் பொருளுக்குத் தனியே நான்கு இயல்கள் வகுத்ததுடன், மெய்ப்பாட்டியல் செய்யுளியல் உவம இயல் என்பனவற்றிலும் அப்பொருள் சிறக்கும் இலக்கணக் குறிப்புகளைப் பயில வழங்கியிரார். காமத்தைப் புரைதீர்காமம் என்றும் (1027) காமப் பகுதி கடவுளும் வரையார் என்றும் (1029) கூறியிரார். ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது தேனது வாகும் என்பது போலும் இன்பியல் யாத்திரார். கிறித்தவத் துறவு நெறிசார் வீரமாமுனிவரின் தொன்னூல் விளக்கப் பொருளதி காரம் காண் பார் இதனை நன்கு அறிவார். சிந்தாமணியாம் பாவிகத்தை எடுத்துக்காட்டுவார் எனின் அவர், திருத்தக்கதேவர் பாடிய நரிவிருத்தத்தையும் கருதுதல் வேண்டும். பாட இயலாது என்பதை இயலுமெனக் காட்ட எழுந்தது அந்நூல் என்பதையும், காமத்தைச் சூடிக் கழித்த பூப்போல் காவிய முத்திப் பகுதியில் காட்டுவதையும் கருதுவாராக. கடவுள் நம்பிக்கை தொல்காப்பியர் கடவுள் வாழ்த்துக் கூறவில்லை எனினும், கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே என்றும் (1034), புறநிலை வாழ்த்து, வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமின் என்பது என்றும் ஆளும் இடங்களில் தெளிவாகக் கடவுள் வாழ்த்து என்பதையும் வழிபடு தெய்வம் என்பதையும் குறிக்கிறார். மேலும் கருப்பொருள் கூறுங்கால் தெய்வம் உணாவே என உணவுக்கு முற்படத் தெய்வத்தை வைக்கிறார். உலகெலாம் தழுவிய பொது நெறியாக இந்நாள் வழங்கும் இது, பழந்தமிழர் பயில்நெறி என்பது விளங்கும். ஆதலால் பழந்தமிழர் சமய நெறி எந்நெறியோ அந்நெறியே தொல்காப்பியர் நெறி எனல் சாலும். வாகைத் திணையில் வரும், கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை, அருளொடு புணர்ந்த அகற்சி, காமம் நீத்தபால் என்பனவும், காஞ்சித் திணையில் வரும் தபுதார நிலை, தாபத நிலை, பலர் செலச் செல்லாக் காடு வாழ்த்து என்பனவும் பழந்தமிழர் மெய்யுணர்வுக் கோட்பாடுகள் எனக் கொள்ளத் தக்கன. கொற்றவை நிலை, வேலன் வெறியாட்டு, பூவைநிலை, காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல், சீர்த்தகு சிறப்பில் பெரும்படை வாழ்த்தல் என வரும் வெட்சிப் பகுதிகள் பழந்தமிழர் வழிபாட்டியலைக் காட்டுவன. சேயோன் மாயோன் வேந்தன் வண்ணன் என்பார், குறிஞ்சி முதலாம் திணைநிலைத் தெய்வங்களெனப் போற்றி வழிபடப் பட்டவர் என்பதாம். ஆசிரியர் திருவள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பாடினாலும், அவர் இன்ன சமயத்தவர் என்பதற்குரிய திட்டவட்டமான அகச்சான்று இல்லாமை போலத் தொல்காப்பியர்க்கும் இல்லை. ஆகவே சமயக் கணக்கர் மதிவழிச் செல்லாத பொதுநெறிக் கொள்கையராம் வள்ளுவரைப் போன்றவரே தொல்காப்பியரும் என்க. தொல்காப்பியக் கட்டொழுங்கு தொல்காப்பியம் கட்டொழுங்கமைந்த நூல் என்பது மேலோட்டமாகப் பார்ப்பவர்க்கும் நன்கு விளங்கும். இன்ன பொருள் இத்தட்டில் என்று வைக்கப்பட்ட ஐந்தறைப் பெட்டியில் இருந்து வேண்டும் பொருளை எடுத்துக் கொள்வதுபோல் எடுத்துக்கொள்ள வாய்த்தது தொல் காப்பியம். அதனையே பாயிரம் முறைப்பட எண்ணிப் புலம் தொகுத்ததாகக் குறிக் கின்றது. எழுத்து - சொல் - பொருள் என்னும் மூன்றதிகாரங்களைக் கொண்ட தொல்காப்பியம் ஒவ்வோர் அதிகாரத்திற்கும் ஒன்பது ஒன்பது இயல்களைக் கொண்டிருத்தல் அதன் கட்டமைதிச் சிறப்புக் காட்டுவதாம். ஆயிரத்தின் மேலும் அறுநூற்றுப் பஃதென்ப பாயிரத்தொல் காப்பியங்கற் பார் என்பது தொல்காப்பிய நூற்பா அளவினைக் கூறுவதொரு வெண்பா. ஆனால் உரையாசிரியர்களின் அமைப்புப்படி 1595 முதல் 1611 நூற்பா வரை பல்வேறு எண்ணிக்கையுடையவாய் அமைந் துள்ளன. இக்கணக்கீடும், தொல்காப்பியர் சொல்லிய தோ, பனம்பாரனார் குறித்ததோ அன்று. உரையாசிரியர்களின் காலத்த வரோ அவர்களின் காலத்திற்கு முன்னே இருந்த மூல நூற்பா எல்லையில் கணக்கிட்டறிந்த ஒருவரோ கூறியதாகலாம். தொல்காப்பிய அடியளவு 3999 என்று அறிஞர் வ.சுப. மாணிக்கனார் (தொல்காப்பியக்கடல் பக். 95) எண்ணிக் கூறுவர். ஏறக்குறைய 5630 சொல் வடிவங்கள் தொல்காப்பியத்தில் உள்ளமையையும் கூறுவர். அவர் தொல்காப்பிய இலக்கணத்தைக் காண்பதற்குத் தொல்காப்பியத்தையே இலக்கியமாகக் கொள்ள லாம். தன்னைத் தானே விளக்கிக் காட்டுதற்குரிய அவ்வளவு பருமனுடையது தொல்காப்பியம் என்று வாய்மொழிகின்றார். முப்பகுப்பு தனியெழுத்துகள், சொல்லில் எழுத்தின் நிலை, எழுத்துப் பிறக்கும் வகை, புணர் நிலையில் எழுத்தமைதி என்பவற்றை விரித்துரைப்பது எழுத்ததிகாரம். நூன் மரபு, மொழி மரபு, பிறப்பியல், புணரியல், தொகை மரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என்பன எழுத்ததிகார இயல்கள். எழுத்துகள் சொல்லாம் வகை, பெயர்கள் வேற்றுமையுரு பேற்றல், விளிநிலை எய்தல், பெயர் வினை இடை உரி என்னும் சொல் வகைகள் இன்னவற்றைக் கூறுவது சொல்லதிகாரம். கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் என்பன சொல்லதிகார இயல்கள். இன்ப ஒழுக்க இயல்பு, பொருள், அற ஒழுக்க இயல்பு, களவு கற்பு என்னும் இன்பவியற் கூறுகள், பொருளியல் வாழ்வில் நேரும் மெய்ப்பாடுகள், பொருளியல் நூலுக்கு விளக்காம் உவமை, செய்யுளிலக்கணம், உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்பவற்றின் மரபுகள் ஆகியவற்றைக் கூறுவது பொருளதிகாரம். அகத்திணை யியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப் பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் என்பன பொருளதிகார இயல்கள். எடுத்துக்கொண்ட பொருளின் அடிக்கருத்தை முதற்கண் கூறி, பின்னர் வித்தில் இருந்து கிளரும் முளை இலை தண்டு கிளை கவடு பூ காய் கனி என்பவை போலப் பொருளைப் படிப்படியே வளர்த்து நிறைவிப்பது தொல்காப்பியர் நடைமுறை. எழுத்துகள் இவை, இவ்வெண்ணிக்கையுடையன என்று நூன் மரபைத் தொடங்கும் ஆசிரியர், குறில், நெடில், மாத்திரை, உயிர், மெய், வடிவு, உயிர்மெய், அவற்றின் ஒலிநிலைப்பகுப்பு, மெய்ம் மயக்கம், சுட்டு வினா எழுத்துகள் என்பவற்றைக் கூறும் அளவில் 33 நூற்பாக்களைக் கூறி அமைகிறார். முப்பத்து மூன்றாம் நூற் பாவை, அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர் என்கிறார். இயலிலக்கணம் கூறும் ஆசிரியர் இசையிலக்கணம் பற்றிய நூல்களில் இவ்வெழுத்துகளின் நிலை எவ்வாறாம் என்பதையும் சுட்டிச் செல்லுதல் அருமையுடையதாம். அவ்வாறே ஒவ்வோர் இயலின் நிறைவிலும் அவர் கூறும் புறனடை நூற்பா, மொழிவளர்ச்சியில் தொல்காப்பியனார் கொண்டிருந்த பேரார்வத்தையும், காலந்தோறும் மொழியில் உண்டாகும் வளர்நிலைகளை மரபுநிலை மாறாவண்ணம் அமைத்துக் கொள்வதற்கு வழிசெய்வதையும் காட்டுவனவாம். உணரக் கூறிய புணரியல் மருங்கின் கண்டுசெயற் குரியவை கண்ணினர் கொளலே (405) என்பது குற்றியலுகரப் புணரியல் புறனடை கிளந்த அல்ல செய்யுளுள் திரிநவும் வழங்கியல் மருங்கின் மருவொடு திரிநவும் விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின் வழங்கியல் மருங்கின் உணர்ந்தனர் ஒழுக்கல் நன்மதி நாட்டத்து என்மனார் புலவர் (483) என்பது எழுத்ததிகாரப் புறனடை. அன்ன பிறவும் கிளந்த அல்ல பன்முறை யானும் பரந்தன வரூஉம் உரிச்சொல் எல்லாம் பொருட்குறை கூட்ட இயன்ற மருங்கின் இனைத்தென அறியும் வரம்புதமக் கின்மையின் வழிநனி கடைப்பிடித் தோம்படை ஆணையிற் கிளந்தவற் றியலாற் பாங்குற உணர்தல் என்மனார் புலவர் (879) என்பது உரியியல் புறனடை. இன்னவற்றால் தொல்காப்பியர் தொன்மையைக் காக்கும் கடப்பாட்டை மேற்கொண்டிருந்தவர் என்பதுடன் நிகழ்கால எதிர்கால மொழிக் காப்புகளையும் மேற்கொண்டிருந்தவர் என்பது இவ்வாறு வரும் புறனடை நூற்பாக்களால் இனிதின் விளங்கும். தொல்காப்பியம் இலக்கணம் எனினும் இலக்கியமென விரும்பிக் கற்கும் வண்ணம் வனப்பு மிக்க உத்திகளைத் தொல்காப்பியர் கையாண்டு நூலை யாத்துள்ளார். இலக்கிய நயங்கள் எளிமை : சிக்கல் எதுவும் இல்லாமல் எளிமையாகச் சொல் கிடந்தவாறே பொருள் கொள்ளுமாறு நூற்பா அமைத்தலும், எளிய சொற்களையே பயன்படுத்துதலும் தொல்காப்பியர் வழக்கம். எழுத்தெனப் படுவ, அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப மழவும் குழவும் இளமைப் பொருள ஓதல் பகையே தூதிவை பிரிவே வண்ணந் தானே நாலைந் தென்ப ஓரியல் யாப்புரவு ஒன்றைக் கூறுங்கால் அதன் வகைகளுக்கெல்லாம் ஒரே யாப்புரவை மேற்கொள்ளல் என்பது தொல்காப்பியர் வழக்கம். வல்லெழுத் தென்ப கசட தபற மெல்லெழுத் தென்ப ஙஞண நமன இடையெழுத் தென்ப யரல வழள சொன்மீட்சியால் இன்பமும் எளிமையும் ஆக்கல் ஓரிலக்கணம் கூறுங்கால் சிக்கல் இல்லாமல் பொருள் காண்பதற்காக வேண்டும் சொல்லைச் சுருக்காமல் மீளவும் அவ்விடத்தே சொல்லிச் செல்லுதல் தொல்காப்பியர் வழக்கம். அவற்றுள், நிறுத்த சொல்லின் ஈறா கெழுத்தொடு குறித்துவரு கிளவி முதலெழுத் தியையப் பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும் பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலும் தொழிலொடு பெயரைப் புணர்க்குங் காலும் தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலும் மூன்றே திரிபிடன் ஒன்றே இயல்பென ஆங்கந் நான்கே மொழிபுணர் இயல்பே என்னும் நூற்பாவைக் காண்க. இவ்வியல்பில் அமைந்த நூற்பாக்கள் மிகப் பல என்பதைக் கண்டு கொள்க. நூற்பா மீட்சியால் இயைபுறுத்தல் ஓரிடத்துச் சொல்லப்பட்ட இலக்கணம் அம்முறையிலேயே சொல்லப்படத் தக்கதாயின் புதிதாக நூற்பா இயற்றாமல், முந்தமைந்த நூற்பாவையே மீளக்காட்டி அவ்வவ் விலக்கணங் களை அவ்வவ்விடங்களில் கொள்ளவைத்தல் தொல்காப்பிய ஆட்சி. இது தம் மொழியைத் தாமே எடுத்தாளலாம். அளபெடைப் பெயரே அளபெடை இயல தொழிற்பெய ரெல்லாம் தொழிற்பெய ரியல என்பவற்றைக் காண்க. எதுகை மோனை நயங்கள் எடுத்துக் கொண்டது இலக்கணமே எனினும் சுவைமிகு இலக்கிய மெனக் கற்குமாறு எதுகை நயம்பட நூற்பா யாத்தலில் வல்லார் தொல்காப்பியர். வஞ்சி தானே முல்லையது புறனே எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே ஏரோர் களவழி அன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றியும் இவை தொடை எதுகைகள். இவ்வாறே ஐந்தாறு அடி களுக்கு மேலும் தொடையாகப் பயில வருதல் தொல் காப்பியத்துக் கண்டு கொள்க. மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமையும் கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும் இவை அடி எதுகைகள். விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை முன்னதில் முழுவதும் எதுகைகளும், பின்னதில் முழுவதும் மோனைகளும் தொடைபடக் கிடந்து நடையழகு காட்டல் அறிக. முன்னது முற்றெதுகை; பின்னது முற்றுமோனை. வயவலி யாகும் வாள்ஒளி யாகும் உயாவே உயங்கல் உசாவே சூழ்ச்சி இவை மோனைச் சிறப்பால் அடுத்த தொடரைக் கொண்டு வந்து நிறுத்துகின்றன. இதனை எடுத்து வருமோனை எனலாம். அடைமொழி நடை மரம்பயில் கூகை, செவ்வாய்க் கிளி, வெவ்வாய் வெருகு, இருள்நிறப் பன்றி, மூவரி அணில், கோடுவாழ் குரங்கு, கடல்வாழ் சுறவு, வார்கோட்டி யானை என அடைமொழிகளால் சுவைப் படுத்துதல் தொல்காப்பியர் உத்திகளுள் ஒன்று. இழுமென் மொழியால் விழுமியது பயிலல் எண்ணு வண்ணம் எண்ணுப் பயிலும் இவ்வாறு ஒலி நயத்தால் கவர்ந்து பொருளை அறிந்துகொள்ளச் செய்வதும் தொல்காப்பியர் உத்திகளுள் ஒன்று. மாத்திரை முதலா அடிநிலை காறும் நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே ஒரூஉ வண்ணம் ஒரீஇத் தொடுக்கும் என எடுத்த இலக்கணத்தை அச்சொல்லாட்சியாலேயே விளக்கிக் காட்டுவதும் தொல்காப்பிய நெறி. மாற்றருஞ் சிறப்பின் மரபியல் என இயலின் பெயர் குறிக்கும் மாற்றானே இலக்கணமும் யாத்துக் காட்டியமை நூற்பாவுள் தனி நூற்பாவாகிய பெற்றிமையாம். வரம்பு இளமைப் பெயர், ஆண்மைப் பெயர், பெண்மைப் பெயர் என்பவற்றை முறையே கூறி விளக்கிய ஆசிரியர் பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே என நிறைவித்தல் நூல் வரம்புச் சான்றாம். செய்யுளியல் தொடக்கத்தில் செய்யுள் உறுப்புகள் மாத்திரை முதலாக முப்பத்து நான்கனை உரைத்து அவற்றை முறையே விளக்குதலும் பிறவும் திட்டமிட்ட நூற்கொள்கைச் சிறப்பாக அமைவனவாம். வகரக் கிளவி நான்மொழி ஈற்றது அம்மூன் றென்ப மன்னைச் சொல்லே இன்னவாறு வருவனவும் வரம்பே. விளங்க வைத்தல் விளங்கவைத்தல் என்பதொரு நூலழகாகும். அதனைத் தொல்காப்பியனார் போல விளங்க வைத்தவர் அரியர். தாமென் கிளவி பன்மைக் குரித்தே தானென் கிளவி ஒருமைக் குரித்தே ஒருவர் என்னும் பெயர்நிலைக் கிளவி இருபாற்கும் உரித்தே தெரியுங் காலை இவ்வளவு விளங்கச் சொன்னதையும் எத்தனை எழுத்தா ளர்கள் இந்நாளில் புரிந்துகொண்டுளர்? நயத்தகு நாகரிகம் சில எழுத்துகளின் பெயரைத்தானும் சொல்லாமல் உச் சகாரம் (சு), உப் பகாரம் (பு), ஈகார பகரம் (பீ) இடக்கர்ப் பெயர் என்பவற்றை எடுத்துச் சொல்லும் நாகரிகம் எத்தகு உயர்வு உடையது! இஃது உயர்வெனக் கருதும் உணர்வு ஒருவர்க்கு உண்டாகுமானால் அவர் தம் மனம்போன போக்கில் எண்ணிக்கை போன போக்கில் கிறுக்கிக் கதையெனவோ பாட்டெனவோ நஞ்சை இறக்கி இளையர் உளத்தைக் கெடுத்து எழுத்தால் பொருளீட்டும் சிறுமை உடையராவரா? தொல்காப்பிய நூனயம் தனியே ஆய்ந்து வெளிப்படுத்தற் குரிய அளவினது. தொல்காப்பியக் கொடை முந்து நூல் வளங்கள் அனைத்தும் ஒருங்கே பெறத்தக்க அரிய நூலாகத் தொல்காப்பியம் விளங்குவதுடன், அவர்கால வழக்கு களையும் அறிந்துகொள்ளும் வண்ணம் தொல்காப்பியர் தம் நூலை இயற்றியுள்ளார். அன்றியும் பின்வந்த இலக்கியப் படைப்பாளிகளுக்கும் இலக்கணப் படைப்பாளிகளுக்கும் அவர் வழங்கியுள்ள கொடைக்கு அளவே இல்லை. தொட்டனைத் தூறும் மணற்கேணியென அது சுரந்துகொண்டே உள்ளமை ஆய்வாளர் அறிந்ததே. பொருளதிகார முதல் நூற்பா கைக்கிளை முதலா எனத் தொடங்குகின்றது. அக் கைக்கிளைப் பொருளில் எழுந்த சிற்றிலக்கியம் உண்டு. முத்தொள்ளாயிரப் பாடல்களாகப் புறத் திரட்டு வழி அறியப் பெறுவன அனைத்தும் கைக்கிளைப் பாடல் களே. ஏறிய மடல் திறம் என்னும் துறைப்பெயர் பெரிய மடல், சிறியமடல் எனத் தனித்தனி நூலாதல் நாலாயிரப் பனுவலில் காணலாம். மறம் எனப்படும் துறையும் கண்ணப்பர் திருமறம் முதலாகிய நூல் வடிவுற்றது. கலம்பக உறுப்பும் ஆயது. உண்டாட்டு என்னும் புறத்துறை, கம்பரின் உண்டாட்டுப் படலத்திற்கு மூலவூற்று. தேரோர் களவழி களவழி நாற்பது கிளர்வதற்குத் தூண்டல். ஏரோர் களவழி என்பது பள்ளுப்பாடலாகவும், குழவி மருங்கினும் என்பது பிள்ளைத் தமிழாகவும் வளர்ந்தவையே. காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்த மரபின் பெரும்படை வாழ்த்தலென் றிருமூன்று மரபின்கல் என்னும் புறத்திணை இயல் நூற்பா தானே, சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்திற்கு வைப்பகம். பாடாண் திணைத் துறைகள் சிற்றிலக்கிய வளர்ச்சிக்கு வழங்கியுள்ள கொடை தனிச்சிறப்பினவாம். அறம் முதலாகிய மும்முதற் பொருட்கும் என நூற்பாச் செய்து முப்பாலுக்கு மூலவராகத் தொல்காப்பியனார் திகழ்வதைச் சுட்டுவதே அவர்தம் கொடைப் பெருமை நாட்டுவதாகலாம். இவை இலக்கியக் கொடை. இலக்கணக் கொடை எத் துணைக் கொடை? இலக்கண நூல்கள் அனைத்துக்கும் நற்றா யாயும், செவிலித் தாயாயும், நல்லாசானாயும் இருந்து வளர்த்து வந்த - வளர்த்து வருகின்ற சீர்மை தொல்காப்பியத்திற்கு உண்டு. இந்நாளில் வளர்ந்துவரும் ஒலியன் ஆய்வுக்கும் தொல்காப்பியர் வித்திட்டவர் எனின், அவர் வழி வழியே நூல் யாத்தவர்க்கு, அவர் பட்டுள்ள பயன்பாட்டுக்கு அளவேது? தொல்காப்பியன் ஆணை என்பதைத் தலைமேற் கொண்ட இலக்கணர், பின்னைப் பெயர்ச்சியும் முறை திறம்பலுமே மொழிச்சிதைவுக்கும் திரிபு களுக்கும் இடமாயின என்பதை நுணுகி நோக்குவார் அறிந்து கொள்ளக்கூடும். இலக்கணப் பகுப்பு விரிவு இனித் தொல்காப்பியம் பிற்கால இலக்கணப் பகுப்பு களுக்கும் இடந்தருவதாக அமைந்தமையும் எண்ணத் தக்கதே. தமிழ் இலக்கணம் ஐந்திலக்கணமாக அண்மைக் காலம் வரை இயன்றது. அறுவகை இலக்கணமென ஓரிலக்கணமாகவும் இது கால் விரிந்தது. இவ் விரிவுக்குத் தொல்காப்பியம் நாற்றங்காலாக இருப்பது அறிதற்குரியதே. எழுத்து சொல் பொருள் என முப்பகுப்பால் இயல்வது தொல்காப்பியம் ஆகலின் தமிழிலக்கணம் அவர் காலத்தில் முக் கூறுபட இயங்கியமை வெளி. அவர் கூறிய பொருளிலக்கணத்தைத் தனித்தனியே வாங்கிக் கொண்டு அகப்பொருள், புறப்பொருள் என இலக்கணங் கூறும் நூல்கள் கிளைத்தன. அது பொருளிலக்கணத்தைப் பகுத்துக் கொண்டதே. அவர் கூறிய செய்யுளியலை வாங்கிக் கொண்டு, யாப்பருங் கலம் முதலிய யாப்பு இலக்கண நூல்கள் தோன்றித் தமிழ் இலக்கணத்தை நாற்கூறுபடச் செய்தன. அவர் கூறிய உவமையியலையும் செய்யுளியலில் சில பகுதிகளையும் தழுவிக்கொண்டு வடமொழி இலக்கணத் துணையொடு அணியிலக்கணம் என ஒரு பகுதியுண்டாகித் தமிழ் இலக்கணம் ஐங்கூறுடையதாயிற்று. இவ்வைந்துடன் ஆறாவது இலக்கணமாகச் சொல்லப்படு வது புலமை இலக்கணம் என்பது. அது தமிழின் மாட்சி தமிழ்ப் புலவர் மாட்சி முதலியவற்றை விரிப்பது. தமிழ்மொழிக் குயர்மொழி தரணியில் உளதென வெகுளியற் றிருப்போன் வெறும்புல வோனே என்பது அவ்விலக்கணத்தில் ஒரு பாட்டு. ஆக மூன்றிலக்கணத்துள் ஆறிலக்கணக் கூறுகளையும் மேலும் உண்டாம் விரிவாக்கங்களையும் கொண்டிருக்கின்ற மொழிக் களஞ்சியம் தொல்காப்பியம் என்க. தொல்காப்பியரின் சிறப்பாகப் பாயிரம் சொல்வனவற்றுள் ஒன்று, ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்பது. ஐந்திரம் இந்திரனால் செய்யப்பட்டது என்றும், பாணினியத்திற்குக் காலத்தால் முற்பட்டது என்றும், வடமொழியில் அமைந்தது என்றும், பாணினியத்தின் காலம் கி.மு. 450 ஆதலால் அதற்கு முற்பட்ட ஐந்திரக் காலம் அதனின் முற்பட்ட தென்றும், அந் நூற்றேர்ச்சி தொல்காப்பியர் பெற்றிருந்தார் என்றும், அந்நூற் பொருளைத் தம் நூலுக்குப் பயன்படுத்திக் கொண்டார் என்றும் ஆய்வாளர் பலப்பல வகையால் விரிவுறக் கூறினர். சிலப்பதிகாரத்தில் வரும் விண்ணவர் கோமான் விழுநூல், கப்பத் திந்திரன் காட்டிய நூல் என்பவற்றையும் இந்திரன் எட்டாம் வேற்றுமை என்றனன் என்னும் ஒரு நூற்பாவையும் காட்டி அவ்வைந்திர நூலைச் சுட்டுவர். விண்ணவர் கோமான் இந்திரன் வடமொழியில் நூல் செய்தான் எனின், தேவருலக மொழி வடமொழி என்றும், விண்ணுலக மொழியே மண்ணில் வடமொழியாய் வழங்குகின்றது என்றும் மண்ணவர் மொழி யுடையாரை நம்பவைப்பதற்கு இட்டுக் கட்டப்பட்ட எளிய புனைவேயாம். அப்புனைவுப் பேச்சுக் கேட்டதால்தான் இளங்கோ தம் நூலுள்ளும் புனைந்தார். அவர் கூறும் புண்ணிய சரவணத்தில் மூழ்கி எழுந்தால் விண்ணவர் கோமான் விழுநூல் எய்துவர் என்பதே நடைமுறைக் கொவ்வாப் புனைவு என்பதை வெளிப் படுத்தும். அகத்திய நூற்பாக்களென உலவ விட்டவர்களுக்கு, இந்திரன் எட்டாம் வேற்றுமை சொன்னதாக உலவவிட முடியாதா? இவ்வாறு கூறப்பட்டனவே தொன்மங்களுக்குக் கைம் முதல். இதனைத் தெளிவாகத் தெரிந்தே தொல்காப்பியனார், தொன்மை தானே உரையொடு புணர்ந்த பழமை மேற்றே என்றார். தொன்மை என்பது வழிவழியாக உரைக்கப்பட்டு வந்த பழஞ்செய்தி பற்றியதாம் என்பது இந்நூற்பாவின் பொருள். இவ்வாறு தொல்காப்பியர் கேட்ட தொன்மச் செய்திகளைப் பனம்பாரனார் கேட்டிரார் என்ன இயலாதே. இந்திரனாற் செய்யப்பட்டதொரு நூல் உண்டு காண்; அது வடமொழியில் அமைந்தது காண்; அதன் வழிப்பட்டனவே வடமொழி இலக்கண நூல்கள் காண் என்று கூறப்பட்ட செய்தி யைப் பனம்பாரர் அறிந்தார். அறிந்தார் என்பது இட்டுக் கட்டுவ தோ எனின், அன்று என்பதை அவர் வாக்கே மெய்ப்பிப்பதை மேலே காண்க. திருவள்ளுவர் காலத்திலும், தாமரைக் கண்ணானின் உலக இன்பத் திலும் உயரின்பம் ஒன்று இல்லை என்று பேசப்பட்டது. இவ்வாறு பிறர் பிறர் காலத்தும் பிறபிற செய்திகள் பேசப்பட்டன என்பவற்றை விரிப்பின் பெருகுமென்பதால் வள்ளுவர் அளவில் அமைவாம். திருவள்ளுவர் கேட்ட செய்தி, அவரை உந்தியது. அதனால் தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல், தாமரைக் கண்ணான் உலகு? என்றோர் வினாவை எழுப்பி இவ்வுலகத் தெய்தும் இன்பங்களுள் தலையாய காதலின்பத்தைச் சுட்டினார். அடியளந்தான் கதையை மறுத்து, மடியில்லாத மன்னவன் தன் முயற்சியால் எய்துதல் கூடும் முயல்க; முயன்றால் தெய்வமும் மடிதற்று உன்முன் முந்து நிற்கும் என்று முயற்சிப் பெருமை யுரைத்தார். இன்னதோர் வாய்பாட்டால் பனம்பாரனார் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியரைச் சுட்டினார். ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்று வாளா கூறினார் அல்லர் பனம்பாரனார். மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்றார். mt® nfŸÉ í‰wJ ‘É©Qyf Iªâu«! அவ்விண்ணுலக ஐந்திரத்தினும் இம்மண்ணுலகத்துத் தொல்காப்பியமே சிறந்த ஐந்திரம் என்னும் எண்ணத்தை யூட்டிற்றுப் போலும்! ஆகாயப்பூ நாறிற்று என்றுழிச் சூடக் கருதுவாருடன்றி மயங்கக் கூறினான் என்னும் குற்றத்தின் பாற்படும் என்பதை அறியாதவர் அல்லரே பனம்பாரனார். அதனால் நீர்நிறைந்த கடல் சூழ்ந்த நிலவுலகின் கண் விளங்கும் ஐந்திரம் எனத்தக்க தொல்காப்பியத்தை முழுதுற நிரம்பத் தோற்றுவித்த தால் தன் பெயரைத் தொல்காப்பியன் எனத் தோன்றச் செய்தவன் என்று பாராட்டுகிறார். இனி ஐந்திரம் என்பது சமண சமயத்து ஐந்தொழுக்கக் கோட்பாடு. அவற்றை நிறைந்தவர் தொல்காப்பியர் என்றும் கூறுவர். ஒழுக்கக் கோட்பாடு படிமையோன் என்பதனுள் அடங்குதலால் மீட்டுக் கூற வேண்டுவதில்லையாம். அன்றியும் கட்டமை நோற்பு ஒழுக்கம் அவ்வாதனுக்கு உதவுதலன்றி, அவனியற்றும் இலக்கணச் சிறப்புக்குரிய தாகாது என்பதுமாம் ஆயினும், தொல்காப்பியர் சமண சமயச் சார்பினர் அல்லர் என்பது மெய்ம்மையால், அவ்வாய்வுக்கே இவண் இடமில்லை யாம். இனி ஐந்திறம் என்றாக்கி ஐங்கூறுபட்ட இலக்கணம் நிறைந்தவர் என்பர். அவர் தமிழ் இலக்கணக் கூறுபாடு அறியார். தமிழ் இலக்கணம் முக்கூறுபட்டது என்பதைத் தொல்காப்பியமே தெளிவித்தும் பின்னே வளர்ந்த ஐந்திலக்கணக் கொள்கையை முன்னே வாழ்ந்த ஆசிரியர் தலையில் சுமத்துவது அடாது எனத் தள்ளுக. ஐந்திரம் எனச் சொன்னடை கொண்டு பொருளிலாப் புதுநூல் புனைவு ஒன்று இந்நாளில் புகுந்து மயக்க முனைந்து மயங்கிப்போன நிலையைக் கண்ணுறுவார் ஏட்டுக் காலத்தில் எழுதியவர் ஏட்டைக் கெடுத்ததும் படித்தவர் பாட்டைக் கெடுத்ததும் ஆகிய செய்திகளைத் தெளிய அறிவார். எழுதி ஏட்டைக் காத்த - படித்துப் பாட்டைக் காத்த ஏந்தல்களுக்கு எவ்வளவு தலை வணங்குகிறோமோ, அவ்வளவு தலை நாணிப் பிணங்கவேண்டிய செயன்மையரை என் சொல்வது? தொல்காப்பிய நூற்பாக்கள் இடமாறிக் கிடத்தல் விளங்குகின்றது. தெய்வச்சிலையார் அத்தகையதொரு நூற்பாவைச் சுட்டுதலை அவர் பகுதியில் கண்டு கொள்க. மரபியலில் தவழ்பவை தாமும் அவற்றோ ரன்ன என்னும் நூற்பாவை அடுத்துப் பறழ்எனப் படினும் உறழாண் டில்லை என்னும் நூற்பா அமைந்திருத்தல் வேண்டும். அவ்வாறு அமைந்தால் எடுத்துக் காட்டு இல்லை என்பனவற்றுக்கு இலக்கியம் கிடைத்தல் இயல்பாக அமைகின்றது. இக்காலத்து இறந்தன என்னும் இடர்ப்பாடும் நீங்குகின்றது. இடப் பெயர்ச்சிக்கு இஃதொரு சான்று. இடையியலில் கொல்லே ஐயம் என்பதை அடுத்த நூற்பா எல்லே இலக்கம் என்பது. இவ்வாறே இருசீர் நடை நூற்பா நூற்கும் இடத்தெல்லாம் அடுத்தும் இருசீர் நடை நூற்பா நூற்றுச் செல்லலும் பெரிதும் எதுகை மோனைத் தொடர்பு இயைத்தலும் தொல்காப்பியர் வழக்காதலைக் கண்டு கொள்க. இத்தகு இருசீர் நடை நூற்பாக்கள் இரண்டனை இயைத்து ஒரு நூற்பாவாக்கலும் தொல்காப்பிய மரபே. உருவுட் காகும்; புரைஉயர் வாகும் மல்லல் வளனே; ஏபெற் றாகும் உகப்பே உயர்தல்; உவப்பே உவகை என்பவற்றைக் காண்க. இவ்விருவகை மரபும் இன்றி நன்று பெரிதாகும் என்னும் நூற்பா ஒன்றும் தனித்து நிற்றல் விடுபாட்டுச் சான்றாகும். அகத்திணையியல் இரண்டாம் நூற்பா, அவற்றுள் என்று சுட்டுதற்குத் தக்க சுட்டு முதற்கண் இன்மை காட்டி ஆங்கு விடுபாடுண்மை குறிப்பர். (தொல். அகத். உரைவளம். மு. அருணாசலம் பிள்ளை) இனி, இடைச் செருகல் உண்டென்பதற்குத் தக்க சான்று களும் உள. அவற்றுள் மிகவாகக் கிடப்பது மரபியலிலேயே யாம். தொல்காப்பியரின் மரபியல் கட்டொழுங்கு மரபியலி லேயே கட்டமைதி இழந்து கிடத்தல் திட்டமிட்ட திணிப்பு என்பதை உறுதிப்படுத்துகின்றது. மாற்றருஞ் சிறப்பின் மரபியல் என்று மரபிலக்கணம் கூறி மரபியலைத் தொடுக்கும் அவர் இளமைப் பெயர், ஆண்பாற் பெயர், பெண்பாற் பெயர் ஆகியவற்றைக் குறிக்கிறார். அக்குறிப் பொழுங்குப் படியே இளமைப் பெயர்கள் இவை இவை இவ்விவற்றுக்குரிய என்பதை விளக்கி முடித்து, சொல்லிய மரபின் இளமை தானே சொல்லுங் காலை அவையல திலவே என நிறைவிக்கிறார். அடுத்து ஓரறிவு உயிரி முதல் ஆறறிவுடைய மாந்தர் ஈறாக ஆண்பால் பெண்பால் பெயர்களை விளக்க வரும் அவர் ஓரறிவு தொடங்கி, வளர்நிலையில் கூறி எடுத்துக்காட்டும் சொல்லி, ஆண்பாற் பெயர்களையும் பெண்பாற் பெயர்களையும் இவை இவை இவற்றுக்குரிய என்பதை விளக்கி நிறைவிக்கிறார். ஆண்பால் தொகுதி நிறைவுக்கும் பெண்பால் தொகுதித் தொடக்கத்திற்கும் இடையே ஆண்பா லெல்லாம் ஆணெனற் குரிய பெண்பா லெல்லாம் பெண்ணெனற் குரிய காண்ப அவையவை அப்பா லான என்கிறார். பின்னர்ப் பெண்பாற் பெயர்களைத் தொடுத்து முடித்து, பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே என்று இயல் தொடக்கத்தில் கூறிய பொருளெல்லாம் நிறைந்த நிறைவைச் சுட்டுகிறார். ஆனால் இயல் நிறைவுறாமல் தொடர் நிலையைக் காண்கிறோம். எப்படி? நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய என்பது முதலாக வருணப் பாகுபாடுகளும் அவ்வவர்க் குரியவையும் 15 நூற்பாக்களில் தொடர்கின்றன. கூறப்போவது இவையென்று பகுத்த பகுப்பில் இல்லாத பொருள், கூற வேண்டுவ கூறி முடித்தபின் தொடரும் பொருள், மரபியல் செய்தியொடு தொடர்பிலாப் பொருள் என்பன திகைக்க வைக்கின்றன. நூலும் கரகமும் முக்கோலும் மணையும் படையும் கொடியும் குடையும் பிறவும் மாற்றருஞ்சிறப்பின் மரபினவோ? எனின் இல்லை என்பதே மறுமொழியாம். வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை என்னும் நூற்பா நடை தொல்காப்பியர் வழிப்பட்டதென அவர் நூற்பாவியலில் தோய்ந்தார் கூறார். வாணிகன் பெறுமே வாணிக வாழ்க்கை என நூற்கத் தெரியாரோ அவர்? இளமை, ஆண்மை, பெண்மை என்பன மாறா இயலவை. பிறவியொடு வழி வழி வருபவை. நூல், கரகம் முதலியன பிறவியொடு பட்டவை அல்ல. வேண்டுமாயின் கொள்ளவும், வேண்டாக்கால் தள்ளவும் உரியவை. முன்னை மரபுகள் தற்கிழமைப் பொருள; பிரிக்க முடியாதவை. பின்னைக் கூறப்பட்டவை பிறிதின் கிழமைப் பொருளவை. கையாம் தற்கிழமைப் பொருளும், கையில் உள்ளதாம் பிறிதின் கிழமைப் பொருளும் கிழமை என்னும் வகையால் ஒருமையுடையவை ஆயினும் இரண்டும் ஒருமையுடையவை என உணர்வுடை யோர் கொள்ளார். இவ்வொட்டு நூற்பாக்கள் வெளிப்படாதிருக்க ஒட்டியிருந்த புறக்காழ் அகக்காழ் இலை முறி காய்பழம் இன்னவை பற்றிய ஐந்து நூற்பாக்களைப் பின்னே பிரித்துத் தள்ளி ஒட்டாஒட்டாய் ஒட்டி வைத்தனர். இதனை மேலோட்ட மாகக் காண்பாரும் அறிவர். நிலம்தீ நீர்வளி விசும்போ டைந்தும் என்னும் நூற்பாவே மரபியல் முடிநிலை நூற்பாவாக இருத்தல் வேண்டும். பின்னுள்ள நூலின் மரபு பொதுப் பாயிரம் எனத்தக்கது. அது சிறப்புப் பாயிரத்தைத் தொடுத்தோ, நூன் முடிவில் தனிப்பட்டோ இருந்திருக்க வேண்டும். அதுவும் நூலாசிரியர் காலத்திற்குப் பிற்பட்டுச் சேர்த்ததாக இருத்தல் வேண்டும். அதிலும் சிதைவுகளும் செறிப்புகளும் பல உள. அவற்றுள், சூத்திரந்தானே என வரும் செய்யுளியல் நூற்பாவை யும் (1425) சூத்திரத்தியல்பென யாத்தனர் புலவர் என வரும் மரபியல் நூற்பாவையும் (1600) ஒப்பிட்டுக் காண்பார் ஒரு நூலில் ஒருவர் யாத்த தெனக் கொள்ளார். மரபியல் ஆய்வு தனியாய்வு எனக் கூறி அமைதல் சாலும். இவ்வியல் நூற்பாக்கள் அனைத்திற்கும் இளம்பூரணர் உரையும் பேராசிரியர் உரையும் கிடைத்திருத்தலால் அவர்கள் காலத்திற்கு முன்னரே இம் மாற்றங்கள் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது தெளிவான செய்தி. மேலும் சில குறிப்புகளும் செய்திகளும் வாழ்வியல் விளக்கத்தில் காணலாம். - இரா. இளங்குமரன் தமிழ்வளம் -19, தமிழர் வாழ்வியல் இலக்கணம் நூலிலிருந்து எடுக்கப்பட்டது எழுத்ததிகாரம் இயலமைதி தமிழ் முத்தலைவேல் போல முக்கூறுபட்டது. அது, இயல் இசை கூத்து (நாடகம்) என வழங்கப்பட்டது. ஆகலின், முத்தமிழ் எனப்படுவ தாயிற்று. தமிழின் முதற்பிரிவாம் இயலும் முக்கூறுபட்டு வழங்கியது. அம் முக்கூறும் எழுத்து சொல் பொருள் எனப்பட்டன. பின்னாளில் இலக்கணம் ஐந்தாகவும் ஆறாகவும் எண்ணப் பட்டவை இம் மூன்றன் விரிவாக்கமேயாகும். இன்னும் விரிவாக்கம் பெறவும் இடம்கொண்டவை இம்முப்பிரிவுகளும். ஆசிரியர் தொல்காப்பியர்க்கு முன்னரே, எண்ணிலாத் தமிழ் இலக்கண இலக்கிய நூல்கள் விளங்கின. பல்கியும், பலவாகவும் கிடந்த அவற்றைத் தொகுத்து முறைப்படுத்தித் தந்தவர் தொல்காப்பியரே. அச் செயலைக் குறிக்கும் வகையாலேயே தொன்மையான தமிழ் மரபுகளை யெல்லாம் காக்கும் நூல் என்னும் பெயரில் தம் நூலை யாத்து, அதனை யாத்தமையால் தாமும் அப்பெயர் கொண்டும் விளங்கினார். தொல் + காப்பு + இயம் = பழமையான மொழிமரபு காக்கும் நூல் தொல்காப்பியம் ஆயிற்று. உலகத் தோற்றத்தில் உயிர்களின் வாழ்விடமாக அமைந்தது மண். மண்வெளிப்பட்டு வாழும் வகைக்குத் தக அமைந்தபின் உயிர்கள் தோன்றின; ஆறாம் அறிவுடைய மாந்தனும் தோற்ற முற்றான். அவன் கூடிவாழும் இயல்புடையவனாக இருந்தமை யால் தன் கருத்தைப் பிறர்க்கு அறிவிக்க முயன்றான். அம்முயற்சி முகம் கை வாய் கண் குறிகளாக அமைந்தன. அக்குறிகளின் அளவு போதாமையால் வாய்ச்செய்கை ஒலிகளை மேற்கொண்டு பெருக்கினான். அதுவும் போதாமையால் எழுத்துக் குறிகளை உருவாக்கிப் பெருக்கினான். இவ்வகையால் பொருள், பொருளைக் குறிக்கும் சொல், சொல்லின் உறுப்பாகிய எழுத்து என்பவை முறைமுறையே தோன்றின. அவ்வகையில் பொருள், சொல், எழுத்து எனப் படிமுறையில் அமைந்தாலும் எழுத்து, சொல், பொருள் என்றே அமைந்தன - வழக்குற்றன. கருத்தை வெளிப்படுத்துதலில் முகத்தோற்றம் அசைவு முதலிய மெய்ப்பாடுகளே முதன்மை பெற்றன. பின்னர் இசை வழியாகவும் அதன் பின்னர் உரையாடல் வழியாகவும் அமைந்தன. எனினும் இயல் இசை கூத்து என்றே அமைந்தன. மண் தோன்றிய பின்னர் மக்கள் தோன்றி, மக்கள் தோன்றிய பின் மொழி தோன்றினாலும் அம்மொழியின் பெயரே, அதனைப் பேசிய மக்களுக்கும், அம்மக்கள் வாழ்ந்த மண்ணுக்கும் பெயராயின. அதனால் தமிழ், தமிழர், தமிழகம் என்னும் பெயரீடுகள் எழுந்தன. இனி மக்கள் வாழ்வியல் அடிப்படையில் துய்ப்பாகிய இன்பமும், இன்பத்திற்குத் தேவையாம் பொருளும், பொருளின் பயனாம் அறமும் என்னும் இன்பம், பொருள், அறம் என்பனவும் அறம் பொருள் இன்பம் எனவே வழக்குற்றன. இவையெல்லாம் அடிப்படையும் நிலைபேறும் பயனும் கருதிய அமைப்புகளாம். தொல்காப்பிய முதற்பகுதி எழுத்ததிகாரம் எனப்பட்டது. எழுத்து இலக்கணத்தைப் பகுத்தும் விரித்தும் கூறும் பகுதி ஆதலின் எழுத்து அதிகாரம் ஆயிற்று. அதிகாரம் என்பதற்கு விரிவு, ஆட்சி, ஆணைமொழி எனப் பொருள்கள் உள. இவ்வெல்லாப் பொருள்களும் அமைய அமைந்தது இவ்வதிகாரம். அதிகாரத்தின் உட்பிரிவு இயல் எனப்பட்டது. எழுத்திலக்க ணப் பகுதி ஒன்றன் இயல்பைக் கூறுவது ஆகலின் இயல் எனப் பட்டது. இயல் கூறுவது எதற்காக? செயற்பாட்டுக்காகவே இயல் கூறல் வழக்கம். ஆதலால் `இயல் செயல்' என இணைமொழி வழக்கில் உண்டாயிற்று. ஆதலால், ஒவ்வோர் இயலும் `இயல் செயல்' என்பவற்றை இணைத்தே கூறுகின்றன. ஒவ்வோர் அதிகாரமும் ஓர் ஒழுங்குபெற ஒன்பது ஒன்பது இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளன. அவ்வகையால் எழுத்ததிகாரம், நூன்மரபு, மொழி மரபு, பிறப்பியல், புணரியல், தொகைமரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என ஒன்பது இயல்களைக் கொண்டுளது. இவை திட்ட மிட்டுக் கோக்கப்பட்ட கோவை போல் சங்கிலித் தொடர்போல் அமைந்தவை. எழுத்து என்பதன் முதனிலை எழு என்பது. எழு என்பது தோற்றம், எழுச்சி, உயர்ச்சி, அழகு, மிகுதி, உறுதி முதலிய பலபொருள் தரும் அடிச்சொல்லாகும். ஒலி எழுதலும், வரி எழுதலும் ஆகிய வகையாலும் எழுத்து - ஒலி எழுத்து (ஒலி வடிவம்) வரி எழுத்து (வரி வடிவம்) என இருவகைக்கும் பொருந்தியது. அன்றியும் எழுத்தின் அளபு மிகுதற்கு அடையாளமாக வரும் அளபெடை என்பதையும் `எழூஉ'தல் என்பதற்கும் மூலமாயிற்று. எழுதுதல் பயன்பாடு எழுதலும் எழும்புதலும் எழுப்புதலும் ஆம் என்பதை விளக்கும் மூலமும் ஆயிற்று. இவ்வெழுத்து ஆராயப்பட்ட வகையை உரையாசிரியர் இளம்பூரணர் அருமையாக விளக்குவது இவண் அறியத்தக்கது. அதனை நூன்மரபு முதல்நூற்பாவின் தொடக்கத்தில் அவர் வரையும் உரையால் அறிக. - இரா. இளங்குமரன் தமிழ்வளம் -19, தமிழர் வாழ்வியல் இலக்கணம் நூலிலிருந்து எடுக்கப்பட்டது எழுத்ததிகாரம் வாழ்வியல் விளக்கம் பழந்தமிழர் மொழியியலை மட்டுமன்றி, நாகரிகம், பண்பாடு, கலை, வாழ்வியல் மரபுகளையும் தொகுத்து வைக்கப்பட்டுள்ள வைப்புப் பெட்டகம் தொல்காப்பிய மாகும். எழுவாய் முதல் இறுவாய் வரை வாழ்வியல் வார்ப்பாகவே அமைந்து, நம் முந்தையர் வாழ்வைக் காட்டுவதுடன், பிந்தை மாந்தர்க்கு வேண்டும் வாழ்வியல் கூறுகளையும் வகுத்துக் காட்டி உயிரோட்டமாகத் திகழ்வதும் தொல்காப்பியமாகும். தொல்காப்பியர் தம் நிலையைப் படம் பிடித்துக் காட்டுவது போல், மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயம் என்கிறார் (1021). செய்வன வெல்லாம் மாசுமறுவில்லாச் செயல்களாக இருத்தல் வேண்டும். இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் மூவகைக் காலமும் நுணுகி நோக்கிச் செய்வதாக இருக்க வேண்டும். அச்செயலையும் செய்யத் தக்க நெறிமுறை தவறாது செய்தல் வேண்டும். - இவற்றைத் தன்னகத்துக் கொண்டது எதுவோ அது, அறிவர் (சித்தர்) நிலை என்பது என்னும் பொருளது இந்நூற்பா. மேலும், வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல்நூல் ஆகும் என்னும் நூற்பாவிற்கு (594) எடுத்துக்காட்டாக விளங்குவதும் தொல்காப்பியமாகும். பிறரால் செய்தற்கு அரிய செயல்களைச் செய்தல் வேண்டும். அச்செயல்களை, யாம் செய்தேம் என்னும் எண்ணம் தானும் தோன்றாதவராக இருத்தல் வேண்டும். அத்தகு மெய் யுணர்வு மிக்கோரால் செய்யப் பட்டது எதுவோ, அதுவே முதல் நூல் எனப்படும் என்கிறார். முதல் முதல் என்பது பிற நூல்களுக்கு மூலமானது என்னும் பொருளது. மூலமாவது வித்து. ஒரு வித்து பல்வேறு வித்துகளுக்கு மூலமாவது போல் பல நூல்களுக்கு மூலமாக அமைந்த அருமையது அது. தொல்காப்பியம் தமிழ்ப்பரப்பில் முதல் நூல் அல்லது மூலநூல் அன்று. அதற்குரிய சான்று நூற்றுக்கணக்கில் அந்நூலி லேயே உண்டு. ஆனால், அந்நூல் வித்து நூல் எனப்படும் முதல் அல்லது மூலநூல் என்பதற்குரிய சான்றுகளோ அதனினும் மிகப்பலவாக உண்டு. என்ப, என்மனார் புலவர், என்மரும் உளரே என வருவன, தொல்காப்பியம் தனக்கு முற்படு நூல்களைத் தொகுத்துக் காட்டும் பிற்படு நூல் என்பதற்குச் சான்றாம். ஆனால், தொல்காப்பிய வழியிலே தோற்ற முற்ற நூல்களைத் தொல்காப்பியமாகிய அளவுகோல் கொண்டு அளந்து பார்க்கும் போதுதான், அதன் அளப்பரும் வளம் பெருங்காட்சி வெளிப்படும். முந்து நூல் தொல்காப்பியர்க்கு முந்துநூல்கள் மிகவுண்டு. இலக்கியம் இலக்கணம் துறைநூல் கலைநூல் என வகைவகையாய் உண்டு என்பதற்குச் சான்று தொல்காப்பியத்திலேயே உண்டு என்றோம். ஆனால், ‘அவற்றின் பெயர் என்ன? எனின் -தெரியாது என்பதே மறு மொழி. தொல்காப்பியம் அகத்தியத்தின் வழியது என்கின்றனரே; அஃது உண்மையா? உண்மை என்பதற்குச் சான்று தொல்காப்பியத்தில் இல்லை. ஆளும் வேந்தரைப் போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் (1006) என்று சுட்டும் தொல்காப்பியர், தம் நூலுக்கு அகத்தியமென ஒரு முன்னூல் இருந்திருப்பின் அதனைச் சுட்டத் தவறியிரார். தொல்காப்பியத்திற்குப் பாயிரம் பாடிய பனம்பாரனாரும் குறிக்கத் தவறியிரார். ஏனெனில், அகத்தியர் மாணவருள் ஒருவர் பனம்பாரனார் என்றும், தொல்காப்பியரின் ஒரு சாலை மாணவர் (உடன் பயின்றவர்) அவர் என்றும் சுட்டப்படுகிறார். ஆதலால், அவரேனும் பாயிரத்தில் சுட்டியிருப்பார். அரங்கேற்றிய அவையம் நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையம் என்றும், அதற்குத் தலைமை தாங்கியவர் அதங் கோட்டாசிரியர் என்றும் கூறும் அவர், அகத்தியர் பெயரைச் சுட்டிக் காட்டாமல் விட்டிரார். இனி, அகத்தியர் என்னும் பெயர் தொகை நூல் எதிலும் காணப்படாத ஒரு பெயர். அகத்தியர் என்னும் பெயர் மணிமேகலையில் ஒரு விண்மீன் பெயராக வருவதே முதல் வரவு. தொல்காப்பியர்க்கு ஏறத்தாழ ஓராயிரம் ஆண்டுக்குப் பிற்பட்டவர் சாத்தனார். அகத்தியர் புறப்பொருள் வெண்பாமாலை, நம்பி அகப்பொருள், பன்னிரு பாட்டியல் முதலிய பாட்டியல் நூல்கள், அகத்தியர் பெயரான் அமைந்த கணிய மருத்துவ நூல்கள், கம்பர் பரஞ்சோதி யார் முதலோர் பாடல்கள் எல்லாம் பிற்பட இருந்த அகத்தியர் என்னும் பெயரினர் பற்றியும் அவர் தோற்றம், செயல்பற்றியும் புனைவு வகையால் கூறுவனவேயாம். பேரகத்தியத் திரட்டு என்பதொரு நூல், முத்துவீரியம் என்னும் பத்தொன்பதாம் நூற்றாண்டு இலக்கண நூலுக்குப் பிற்பட அகத்தியர் பெயரில் கட்டி விடப்பட்ட நூல் என்பது வெளிப்படை. ஏனெனில் முத்து வீரியத்தில் காணப்படாத அளவு வடசொற்பெருக்கம் உடையது அது. ஆதலால், தொல்காப்பியம், அகத்தியம் என்னும் நூலின் வழிநூல் அன்று. தமிழ் முந்து நூற்பரப்பெல்லாம் ஒரு சேரத் திரட்டிச் செய்நேர்த்தி, செம்மை, மரபுக் காப்பு, புத்தாக்கம் என்பவற்றை முன்வைத்துத் தொகை யாக்கப்பட்டதும் நமக்குக் கிடைத்துள்ள நூல்களுள் எல்லாம் முந்து நூலாக இருப்பதும் தொல்காப்பிய மே ஆகும். பாயிரம் ஆயிர முகத்தான் அகன்ற தாயினும் பாயிரம் இல்லது பனுவல் அன்றே என்னும் பாயிர இலக்கணச் சிறப்புக்கு, முழு முதல் மூலச் சான்றாக அமைந்தது தொல்காப்பியப் பாயிரமேயாம். அப்பாயிரம், நூலுள் நூலாக ஆய்வுசெய்யப்பட்டது உண்டு. நூலின் வேறாக நூலொடு சார்த்திச் சிவஞான முனிவ ராலும், அரசஞ் சண்முகனாராலும் பாயிர விருத்தி எனச் சிறப் பொடு நுணுகி ஆயப்பெற்று நூலாயதும் உண்டு. அப்பாயிரம் ஒன்று மட்டுமேனும் தமிழ் மண்ணின் ஆள்வோர்க்கும் அறிவர்க்கும் ஊன்றியிருந்திருப்பின், பின் வந்துள்ள இழப்புகள் பற்பலவற்றை நேராமல் காத்திருக்க முடியும். நிலவரம்பு வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம் என்று அது கூறும் நிலவரம்பு, இன்று தமிழர்க்கு உண்டா? தமிழரால் அதனைக் காக்க முடிந்ததா? தோல் இருக்கச் சுளை விழுங்கிய சான்று அல்லவா அது! வடவேங்கடம் மலைதானே. தென்குமரியும் மலையாகத் தானே இருக்க வேண்டும். இப்பொழுதுள்ள தென்குமரி எல்லை இல்லையே அது. பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள என்று சிலப்பதிகாரத்தால் அறியப்படும் குமரிக்கோடு அல்லவோ அத் தென்குமரி. வடவேங்கடம் மொழித் திரிபால் நம்மை விட்டுப் போயது என்றால், கடல் கோளால் போயது அல்லவோ குமரிக்கோடு! (கோடு-மலை). எப்பொழுது ஒரு மண் தன்மொழியை இழக்கின்றதோ அப்பொழுதே தன் மண்ணையும் இழந்து போகின்றது. அதனால்தான் பரிபாடல் என்னும் தொகை நூல், தண்தமிழ் வேலித் தமிழ் நாட்டகம் என்றது. அதனையே முற்படக் கூறியது தொல்காப்பியப் பாயிரம். தமிழ் கூறு நல்லுலகம் என்பது அது. தமிழ் கூறுதல் இல்லாத மண் எப்படித் தமிழ் மண்ணாக இருக்கும்? தமிழ் கூறும் மண்ணாக இருந்ததன் தடமும் தெரியாமல் அழிக்க அண்டை மாநிலங்களாகிய ஆந்திரம் கருநாடகம் கேரளம் ஆய மூன்றும் முன்னரே திட்டமிட்டுச் செய்த மண்பறிப்பு, மேலும் தொடர்வதை அன்றி மீட்கப் பெற்றது உண்டா? அண்டை அயலார், எடுத்தவை எல்லாம் போகக் கிடைத்தவை எம்பேறு என்று கொள்ளப்பட்டதுதானே இத் தமிழ்நாடு? மொழியின் உயிர்ப்பு ஒரு மொழியின் வளர்ச்சியும் வாழ்வும் அதன் நூல்களிலே மட்டுமோ உள்ளது? அதன் உயிர்ப்பும் உரனும் பொதுமக்கள் வாயில் அல்லவோ உள்ளது. அதனைக் கருத்தில் கொள்ளாத மண், அம்மொழியின் மண்ணாக இராமல் நூலின் அகத்தும், நூலகத்தும் ஒடுங்கிப் போய் விடும் அல்லவோ! எத்தனை ஊர்ப் பெயர்களைத் தெலுங்காக மாற்றினர்! எத்தனை எத்தனைத் தமிழ் அலுவலர்களைச் சென்னை இராச்சியமாக இருந்த போதே திட்டமிட்டுத் தெலுங்கு அலுவலராக மாற்றினர்! எத்தனைத் தமிழ்ப் பள்ளிக் கூடங்களை ஒழித்துத் தெலுங்குப் பள்ளிகளை உண்டாக்கினர்! அப்பொழுது ஆட்சியில் இருந்தவர்கள், செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க செய்யாமை யானும் கெடும் என்னும் இருவகைக் கேட்டுக்கும் சான்றாகத் தாமே இருந்தார்கள்! இன்று வரை அத்தடம் மாறாமல் தானே ஆட்சிக் கட்டில் ஏறியவர்கள் நடை முறைகள் உள்ளன! ஆயினும், ஆட்சிக் கட்டில் ஏறப் பொதுமக்கள் வாக்குகள் கிட்டுகின்றனவே ஏன்? பொது மக்கள் வாழ்வுப் பொருளாக மொழி ஆக்கப் பட்டிலது. அதன் விளைவே இது என்பதை உணர்ந்து கடமை புரியாமல், வெறும் முழக்கத்தால் ஏதாவது பயன் உண்டா? ஆய்வு முறை தொல்காப்பியம், வழக்குச் செய்யுள் என்னும் இரண்டு அடிப்படைகளிலும் ஆய்ந்து செய்யப்பட்ட நூல் என்னும் பாயிரச் செய்தி, ஆயிரமுறை ஓதி உணர்ந்து செயற்படுத்த வேண்டிய செய்தி அல்லவா! தொல்காப்பியர் ஆய்ந்த முறையை, வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி என்கிறது பாயிரம். எழுத்தும் சொல்லும் சொற்றொடர் ஆக்கமும்தாம் இலக்கணமா? எழுத்தும் சொல்லும் ஆராய்வது பொருள் குறித்தது அல்லவோ! பொருள் இல்லாக்கால் எழுத்தும் சொல்லும் ஆராய்வது எதற்கோ? என்னும் இறையனார் களவியல் செய்தி பொருளின் மாண்பு காட்டும். பொருளிலக்கணமாவது வாழ்வியல் இலக்கணம்; தமிழ் மொழியில் மட்டுமே அமைந்த இலக்கணம்! பாயிரம் தொல்காப்பியர் எழுத்தும் சொல்லும் பொருளும் ஆராய்ந்தார். அவர் ஆய்ந்த வகை, 1. செந்தமிழ்நாட்டு மக்கள் வழக்கொடு ஆராய்ந்தார். 2. அவர்க்கு முன்னே ஆராய்ந்து நூலாக்கம் செய்த பெரு மக்களின் நூல்களை ஆராய்ந்தார். 3. முறைமுறையே அவை ஒவ்வொன்றற்கும் முரணாவகை யில் ஆராய்ந்தார். 4. புலமைத் திறத்தோடு ஆய்ந்து கொண்ட கருத்துகளை அடைவு செய்தார். 5. எவரும் குறை கூறா வகையில் யாத்தார். இவற்றைப் பனம்பாரனார் பாயிரம், எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச் செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலம்தொகுத் தோனே போக்கறு பனுவல் என்கிறது. செந்தமிழ் வழக்கு இதனால், செந்தமிழ் வழக்கே வழக்காகக் கொண்டு அச் செந்தமிழ் வழக்கைக் காக்குமாறே தொல்காப்பியம் செய்யப்பட்டது என்றும், அஃது அயல்வழக்குக் கொண்டு அமைக்கப்பட்டது அன்று என்றும், உரை காண்பாரும், உளங்கொண்டு வாழ்வாரும் அச் செந்தமிழ் வழக்குக் கொண்டே உரை காணவும் வாழ்வியல் நடை கொள்ளவும் வேண்டும் என்றும் தெளிவித்தாராம். ஆதலால், தொல்காப்பிய இலக்கணத்தையோ, வாழ்வியலையோ அயன்மைப் படுத்துவார், தமிழியல் கெடுத்துத் தாழச் செய்வார் என்றும், அவர்வழி நிற்பாரும் அவர் போல் கேடு செய்வாரே என்றும் கொள்ள வேண்டும் என்றும் தெளிவு ஏற்படுத்தினாராம். அரங்கேற்றம் ஒரு நாடு அயலாராலும் அயன்மையாலும் கெடாமல் இருக்க ஒருவழி, நூல் ஆக்கி வெளிப்படுத்துவாரைக் கண்ணும் கருத்துமாக நோக்கியிருக்க வேண்டும். கற்பவன் ஒருவன் செய்யும் தவற்றினும், கற்பிப்பவன் செய்யும் தவறு பன்னூறு மடங்கு கேடாம்; அவன் செய்யும் கேட்டினும், நூலாசிரியன் ஒருவன் செய்யும் கேடு பல்லாயிர மடங்கு கேடாம். அக்கேடு நாட்டுக்கு ஏற்படாமல் இருக்க வேண்டும் எனின், நூலாய்த லில் வல்ல தக்கோர் அவையத்தில் அந்நூல் அரங்கேற்றப் பட்டு, அவ்வவையோர் ஏற்புப் பெற்று, அரசின் இசைவுடன் வெளியிடப்பட வேண்டும் என்னும் கட்டாயத்திட்டத்தை வைத்தாக வேண்டும்! இல்லாக்கால், காப்பார் இல்லாக் கழனி என நாடு கேடுறும் என்று கூறி வழிகாட்டுகிறது அப் பாயிரம். அதுவுமன்றி அரங்கத் தலைவன், ஒருவனையோ ஒருவகைக் கருத்தையோ சாராமல் நடுவு நிலைபோற்றும் நயன் மிக்கோனாகத் திகழவும் வேண்டும் என்றும் கூறுகிறது. அதனை, அறங்கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி மல்குநீர் வரைப்பில் ஐந்திரம் நிறைந்த தொல்காப் பியன்எனத் தன்பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்த படிமை யோனே என்கிறது. ஒரு புலவரோ, சில புலவர்களோ கூடியமைத்த அமைப்பு அன்று; ஓரூர் அல்லது ஒரு வட்டார அமைப்பு மன்று; அது நாடளாவிய அமைப்பு என்பாராய், நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து என்கிறார். நூல் தணிக்கைக் குழு, என ஓர் அமைப்பு இக் குடியரசு நாளில் தானும் உண்டா? எல்லாரும் இந்நாட்டு மன்னர்; ஒத்த உரிமையர்; பிறப்பால் வேறுபாடு அற்றவர் என்னும் குடியரசு நாளில், பிறப்புவழி வேறுபாடு காட்டும் வருணாசிரம-மநுநெறி நூல்கள் நாட்டில் நடமாட விடலாமா? அந்நூல்களை நடையிட விட்டுவிட்டு, அத்தகு குலப்பிரிவு நூல்களை மறுத்து எழுதிய நூல்கள் நாட்டுக்குக் கேட்டு நூல்கள் என்று தடை செய்யப்படலாமா? தணிக்கை திரைப்படத் தணிக்கை என ஒரு துறை இருந்தும், குப்பை வாரிக் கொட்டியும் கோடரி கொண்டு வெட்டியும் அழிவு செய்யும் பண்பாட்டுக் கேட்டுப் படங்களையும் பளிச்சிட விடும் தணிக்கைத் துறைபோல் இல்லாமல், மெய்யான நூல் தணிக்கைத் துறை ஒன்று வேண்டும் என்பதைத் தொல்காப்பிய முகப்பே காட்டுவது தானே பனம்பாரனார் பாயிரம்! இவையெல்லாம் தொல்காப்பியம் வாழ்வியல் நூல் என்பதன் முத்திரைகள் அல்லவா! தீய நூல்களையும் வன்முறை நூல்களையும் வெறிநூல் களையும் உலாவவிட்டு விட்டு ஐயோ! உலகம் கெட்டுவிட்டது; மக்கள் கெட்டு விட்டனர் என்னும் போலி ஒப்பாரி செய்தலால் என்ன பயன்? பண்படுத்தம் செய்ய விரும்புவார் சிந்திக்க வேண்டும் செய்தி இஃதாம். எழுத்து தமிழ்மொழியில் எழுத்துகள் எவ்வளவு? உயிர்-12, மெய்-18; உயிர்மெய்-216; ஆய்தம்-1 என்று 247 காட்டுவாரும்; அதற்கு மேலும் நடையிடுவாரும் உளரே! தொல்காப்பியர் என்ன சொல்கிறார்? எழுத்தெனப் படுவ, அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே என எழுத்து 33 என்று தானே சொல்கிறார். இவ்வெழுத்து எண்ணிக்கை மிகையா? ஆங்கிலத்தைக் கொண்டு தானே தமிழ் எழுத்தின் எண்ணிக்கை கூடுதல் எனப்படுகிறது. தமிழில் உள்ள குறில் நெடில் என்னும் இருவகையுள் ஒருவகை போதுமென ஆங்கிலம் போல் கொண்டால், ஆங்கிலம் போல் உயிரும் மெய்யும் தனித்தனியே எழுதினால் ஆங்கில எழுத்தினும் தமிழ் எழுத்து எண்ணிக்கை குறைந்து தானே இருக்கும். அன்றியும் ஆங்கிலம் 26 எழுத்துத்தானா? பெரிய எழுத்து, சின்ன எழுத்து , கையெழுத்து பெரியது சின்னது என எண்ணினால்! எண்ண வேண்டும் தானே! குறில் நெடில் என்னும் பகுப்போ, உயிர்மெய் என்னும் இணைப்போ இல்லாமையால், மூன்றெழுத்து நான்கெழுத்து என முடிவனவும் ஆறெழுத்து ஏழெழுத்து ஆகும் அல்லவோ! தமிழ் - Tamil, Thamil, Thamizh முருகன் = Murugan நெட்டெழுத்தெல்லாம் சொற்கள் அல்லவா தமிழில்! ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ. கா, கீ, கூ, கே, கை,கோ. இவை பொருளமைந்த சொற்கள் அல்லவா! a, I என்னும் இரண்டையன்றி எழுத்துகள் சொல்லாதல் ஆங்கிலத்தில் உண்டா? எழுத்தைச் சொன்னால் சொல் வந்து நிற்குமே தமிழில்! எதனால்? ஓரெழுத்துக்கு ஓரொலியே உண்டு. எழுத்தொலிக் கூட்டே சொல்! அ-ம்-மா - அம்மா இந்நிலை ஆங்கிலத்தில் இல்லையே. எழுத்து வேறு; ஒலி வேறு; சொல் வேறு அல்லவா! F, X, Z இவற்றுக்கு, ஒலியெழுத்து இரண்டும் மூன்றும் நான்கும் அல்லவா! மெய்யியல் தமிழில் உள்ள எழுத்துகளின் பெயரே மெய்யியல் மேம்பாடு காட்டுவன! உயிர், மெய், உயிர்மெய், தனிநிலை, சுட்டு, வினா, குறில், நெடில், வல்லினம், மெல்லினம், இடையினம் - இவை எழுத்தின் பெயர்கள் மட்டுமா? மெய்யியல் பிழிவு தானே! இவற்றைக் குறிக்கும் பகுதிதானே நூன்மரபு என்னும் முதலியல். தமிழ், முத்தமிழ் எனப்படுமே. இசைப்பா வகைக்கு, இங்குச் சொல்லப்பட்ட இயல் இலக்கணம் மட்டும் போதுமா? இசை நூல் மரபு கொண்டே அதனை இசைக்க வேண்டும்; அதனை இந்நூலில் கூறவில்லை. அதனை இசைநூலில் காண்க என்கிறார் தொல்காப்பியர் நூன்மரபு நிறைவில். ஏன்? அந்நாளிலேயே இசைநூல்கள் இருந்தன; இசைக் கருவிகள் இருந்தன; இசை நூல்கள் நரம்பின் மறை எனப்பட்டன. அவற்றைக் காண்க என்பாராய், அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர் என்றார் (33). மொழி மரபில் குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் எனப்படும் சார்பு எழுத்துகள் நிற்கும் வகை, ஒலி நிலை என்பவற்றைக் கூறுகிறார். சொல்லுக்கு முதலாம் எழுத்து இறுதி எழுத்து என்பவற்றையும் கூறுகிறார். க்+அ = க. க் என்பதை இ சேராமல் சொல்ல முடியுமா? க என்பதை இசேராமல் சொல்ல ஏன் முடிகின்றது? க என்பதில் அ என்னும் உயிரொலி சேர்ந்திருத்தலால் முன்னே ஓர் உயிர்ஒலி இல்லாமல் - சேராமல் - ஒலிக்க முடிகிறது. மெய்-உடல் - தனியே இயங்குமா? செத்தாரைச் சாவார் சுமப்பார் என்பது வழங்குமொழி ஆயிற்றே. உயிர் நீங்கிய உடம்புக்குப் பிணம் என்பது பெயராயிற்றே. பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டு என்பது நம் மந்திரம் அல்லவோ! உயிர் - கூத்தன்; உடலை இயக்கும் கூத்தன்; அக் கூத்தன் போகிய உடல் இயக்கமிலா உடல். இம் மெய்யியல் விளக்கம் எழுத்தியக்கத்திலேயே காட்டுவது தொல்காப்பியம். மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும் என்பது அது (46). சிவணும் - பொருந்தும். மொழி மரபில் வரும் இயக்க இலக்கணம் இது. எழுத்துகளின் இயக்கம், இரண்டு புள்ளிகள் வருமிடம், ஒலி கூடுதல் குறைதல் என்பவற்றை மொழிமரபில் சுட்டிக் காட்டி எழுத்துகள் பிறக்கும் வகையைப் பிறப்பியலில் கூறுகிறார். நனிநாகரிகம் சகர உகரம் (சு) உசு, முசு என்னும் இரண்டிடங்களில் மட்டுமே சொல்லின் இறுதியாகவரும். பகர உகரம் (பு) தபு என்னும் ஓரிடத்து மட்டுமே சொல்லிறுதி யாக வரும்; ஆனால் தன்வினை பிறவினை என்னும் இருவினைக்கும் சொல் முறையால் இடம் தரும். தபு - சாவு (தன்வினை) அழுத்திச் சொன்னால் , தபு - சாவச் செய் (பிறவினை) என்கிறார். சு, பு என்னும் எழுத்துகளை உச் சகாரம், உப் பகாரம் என்று குறிப்பிடுவது நாகரிகம் அல்லவோ! பீ என்பதையும் ஈகார பகரம் என்பது இதனினும் நனிநாகரிகம் அல்லவோ! (234) பசு என்பது தமிழ்ச்சொல் அன்று என்றுணர, இடவரையறை செய்கிறாரே! மொழியியலாம் அசையழுத்தத்தைத் தபு என்பதன் வழியே காட்டுகிறாரே! எத்தகு நுண் செவியரும் நாகரிகருமாக நூல் செய்வார் விளங்கவேண்டும் என்பது குறிப்பாகும் அல்லவோ! (75,76; 79,80) உயிர்மெய் அல்லாத தனி மெய் எதுவும் எச்சொல்லின் முதலாகவும் வாராது என்பதை ஆணையிட்டுக் கூறுகிறார் தொல்காப்பியர்; ப்ரம்மரம் க்ரௌஞ்சம் - இச்சொற்கள் வேற்று மொழிச் சொற்கள். இவை தமிழியற்படி பிரமரம் கிரௌஞ்சம் என்றே அமைதல் வேண்டும். ப்ரான்சு ஷ்யாம் இன்னவாறு எழுதுவது மொழிக் கேடர் செயல் என மொழிக் காவல் கட்டளையர் ஆகிறார் தொல்காப்பியர். பன்னீ ருயிரும் மொழிமுத லாகும் உயிர்மெய் அல்லன மொழிமுத லாகா என்பவை அவர் ஆணை (59. 60). புள்ளி எழுத்துகள் எல்லாமும் சொல்லில் இறுதியாக வருமா? வாரா! ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் என்னும் பதினொன்றுமே வரும் (78). க், ச், ட், த், ப், ற், ங் என்னும் ஏழும் சொல்லின் இறுதியில் வாரா! ஏன்? சொல்லிப்பார்த்தால் மூச்சுத் தொல்லை தானே தெரியும். ஆதலால், நெடுவாழ்வுக்குத் தமிழியல் உதவும் என்று ஒலியாய்வாளர் குறித்தனர். மூச்சுச் சிக்கன மொழி தமிழ் என்பதை மெய்ப்பித்தவர் பா.வே.மாணிக்கர். தொல்காப்பியக் காதலர் மட்டுமல்லர் காவலரும் அவர். பாக் - பாக்கு பேச் - பேச்சு வேறுபாடு இல்லையா? நெல், எள் என்பனவற்றையே நெல்லு, எள்ளு என எளிமையாய் ஒலிக்கும் மண், வல்லின ஒற்றில் சொல்லை முடிக்குமா? மூல ஒலி தோன்றுமிடம் உந்தி. ஆங்கிருந்து கிளர்ந்த காற்று தலை, கழுத்து,நெஞ்சு ஆகிய இடங்களில் நின்று, பல், இதழ், நா, மூக்கு, மேல்வாய் என்னும் உறுப்புகளின் செயற்பாட்டால் வெவ்வேறு எழுத்தொலியாக வரும் என்று பிறப்பியலைத் தொடங்கியவர் (83) வெளிப்படும் இவ்வொலியையன்றி அகத்துள் அமையும் ஒலியும் உண்டு; அஃது அந்தணர் மறையின்கண் கூறப்படுவது. அதனைக் கூறினேம் அல்லேம் எனத் தமிழ்த் துறவிய ஓது நூன் முறையைக் கூறி அவண் கற்குமாறு ஏவுகிறார் (102). சொல்லின் முதலும் இறுதியும் இரண்டே என்பாராய், எல்லா மொழிக்கும் இறுதியும் முதலும் மெய்யே உயிரென்று ஆயீர் இயல என்கிறார் (103). அ, ஆ; க, கா என்பவற்றை அகரம் ஆகாரம், ககரம், ககர ஆகாரம் எனச் சாரியை (சார்ந்து இயைவது) இட்டு வழங்குவதும், அஃகான், ஐகான் எனக் கான் சேர்த்து வழங்குவதும் மரபு என்கிறார் (134, 135). மணி + அடித்தான் = மணியடித்தான் அற + ஆழி = அறவாழி - இவற்றில் ய், வ் என்னும் இரண்டு மெய்களும் ஏன் வந்தன? நிற்கும் சொல்லின் இறுதியும் வரும் சொல்லின் முதலும் உயிர் எழுத்துகள் அல்லவா! இரண்டு உயிர்கள் இணைதல் வேண்டுமானால் இணைக்க இடையே ஒரு மெய் வருதல் வேண்டும். அம்மெய் உடம்பட- உடம்படுத்த- வருமெய் ஆதலால் உடம்படு மெய் என்றனர். மெய்யியற் சீர்மை, மொழிச் சீர்மை ஆகின்றதே! எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே உடம்படு மெய்யின் உருவுகொளல் வரையார் என்கிறார் (140). பொருள்தெரி புணர்ச்சி மாடஞ் சிறக்கவே என்பதொரு வாழ்த்து. இது மாடம் சிறக்கவே என்பது. இதனை, மாடு அஞ்சு இறக்கவே என்று பிரித்து உரைத்தால் சாவிப்பு ஆகவில்லையா! இதனைக் கருத்தில் கொண்டு மறுதலைப் பொருள் வராவகையில் சொல்ல வேண்டும் என்பதற்காக, எழுத்தோ ரன்ன பொருள்தெரி புணர்ச்சி இசையில் திரிதல் நிலைஇய பண்பே என்கிறார் (141). எழுத்து ஒரு தன்மையதுதான்; ஆனால், சொல்லும் முறையால் வேறு பொருள் தருகின்றமையைக் குறிப்பிட்டுத் தெளிவிக்கிறார். பரிசாகப் பெற்றேன்; பரி சாகப் பெற்றேன் என்றான் ஒருவன். அவன், பரிசாகப் பெற்ற பரி, சாகப் பெற்றதில் சொல் மாற்றம் இல்லையே; பொருள் மாற்றம் பெருமாற்றம் இல்லையா? அது, நீர் விழும் இடம் என்றால் குறிப்பார் குறிப்புப் போல் இருபொருள் தரும் அல்லவோ! இதனையும் குறிக்கிறார் வாழ்வியல் வளம் கண்ட தொல்காப்பியர் (142). எழுத்து வரிசை கண்ணன் கண்டான் தென்னங் கன்று கண்ணன் என்பதில் ண் என்பதை அடுத்து அதே எழுத்து ண வந்தது. கண்டான் என்பதில் ண் என்பதை அடுத்து அதன் இன எழுத்து ட வந்தது. தென்னம் என்பதில் ன் என்பதை அடுத்து அதே எழுத்து ன வந்தது. கன்று என்பதில் ன் என்பதை அடுத்து அதன் இன எழுத்து று வந்தது. இவ்வாறே க,ங; ச,ஞ; ட,ண; த,ந; ப,ம; ற,ன ஒற்று வரும் இடங்களைக் காணுங்கள். அவ்வொற்று வரும்; அல்லது அதன் இன ஒற்று வரும். இத்தகு சொல்லமைதியைப் பொதுமக்கள் வாயில் இருந்து புலமக்கள் கண்டுதானே தமிழ் நெடுங்கணக்கும் குறுங்கணக்கும் வகுத்துளர். ஒரு வல்லினம், ஒரு மெல்லினம் என அடுத்தடுத்து வைத்தது ஏன்? வல்லினமாகவே மெல்லின மாகவே இடையினம் போல அடுக்கி வைக்காமை வாழ்வியல் வளம்தானே! கங, சஞ என அடங்கல் முறையில் வல்லினத்தின்பின் மெல்லினம் வரினும்,சொல் வகையில் மெல்லினத்தின் பின் வல்லினம் வருதல் மக்கள் வழக்குக் கண்ட மாட்சியின் அல்லது ஆட்சியின் விளைவே ஆகும். ங்க, ஞ்ச (தங்கம், மஞ்சள்) என வருதலை யன்றி, க்ங, ச்ஞ எனவரும் ஒரு சொல்தானும் இல்லையே! இன்றுவரை ஏற்படவில்லையே! எழுத்து முறையை ஙக ஞச ணட என மாற்றிச் சொல்ல எவ்வளவு இடர்? இது பழக்கமில்லாமை மட்டுமா? இல்லை! இயற்கை யல்லாமையும் ஆம். தமிழின் இயற்கை வளம் ஈது! (143) அளவை தொல்காப்பியர் நாளில் பனை என ஓர் அளவைப் பெயரும் கா என ஒரு நிறைப் பெயரும் வழக்கில் இருந்தன. அன்றியும் க ச த ப ந ம வ அ உ என்னும் எழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்களால் அளவைப் பெயரும் நிறைப் பெயரும் வழக்கில் இருந்தன. (169, 170) அவை: கலம், சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டில், அகல், உழக்கு எனவும், கழஞ்சி, சீரகம், தொடி, பலம், நிறை, மா, வரை, அந்தை எனவும் வழங்கின. இவையன்றி உரையாசிரியர்களின் காலத்தும் அதன் பின்னரும் வேறுவேறு அளவைகள் வழங்கியுள்ளன. இவை யெல்லாம் நம்முந்தையர் வாழ்வியல் சீர்மைகள்! அளவுக்குப் பயன்பட்டது கோல். அக் கோல் அளவுகோல் எனப்பட்டது. அக் கோல் மாறாமல் செங்கோல், நிறைகோல், சமன்கோல், ஞமன்கோல், நீட்டல்கோல், முகக்கோல், எழுதுகோல், தார்க்கோல் என வழக்கூன்றின. அண்மைக் காலம்வரை கலம், மரக்கால், நாழி, உரிஉழக்கு, தினையளவு, எள்ளளவு, செறு, வேலி முதலாகப் பலவகை அளவை வழக்குகள் இருந்தன. பொதி, சுமை, கல், வண்டி, துலாம், தூக்கு என்பனவும் வழங்கின. இவையெல்லாம் நம்மவர் பல்துறை வளர்வாழ்வு காட்டுவன வாம் (170). யாவர் யாவர் என்பது யார் எனவும்படும். யாவது என்பது யாது எனவும்படும். இன்னவை வழக்கில் உள்ளவை கொண்டு ஏற்றுக்கொள்ளத் தக்கவை என மக்கள் வழக்கை மதித்து மொழிவளர்க்கச் செய்கிறார் (172). உரு உரு என்பது என்ன? வடிவு; உருபு என்பது வடிவின் அடையாளம். அதன் விளக்கமாவது உருபியல். அதிலே, அழன் புழன் என்னும் சொற்கள் சாரியை பெறுதல் பற்றிக் கூறுகின்றது ஒரு நூற்பா (193). அழன், புழன் அழலூட்டப்படுவதும் புதைக்கப்படுவதுமாகிய பிணம் முறையே அழன், புழன் எனப்படுகின்றன. இடுக ஒன்றோ, சுடுக ஒன்றோ என்பது புறநானூறு. புறங்காடு எனப் பொதுப்பெயர் உண்டாயினும், இடுகாடு, சுடுகாடு என்னும் பெயர்கள் இன்றுவரை நடைமுறையில் உள்ளனவேயாம். இடுகாடு, புதைகாடு எனவும் சுடுகாடு, சுடலை எனவும் வழங்குதலும் உண்டு. அழன் புழன் என்பவற்றைச் சுட்டுகிறார் தொல்காப்பியர் (193). தொல்காப்பியர் உதி, ஒடு, சே என்னும் மரங்களைக் குறிக்கிறார். ஒன்றனைக் கூறி அதுபோல, அதுபோல எனத் தொடர் கிறார் (243, 262, 278). உதிமரக் கிளவி மெல்லெழுத்து மிகுமே ஒடுமரக் கிளவி உதிமர இயற்றே சேஎன் மரப்பெயர் ஒடுமர இயற்றே என்பவை அவை. உதிங்கிளை, ஒடுங்கிளை, சேங்கிளை எனவருதலைக் குறிக்கிறார். ஏன் இப்படித் தொடரவேண்டும்? உதி (இ), ஒடு (உ), சே (ஏ) என, சொல் ஈறு வேறுவேறு இல்லையா? ஆதலால் அவ்வவ் விடத்து வைத்துச் சொல்கிறார். அவர் கையாண்ட அரிய நூன்முறை இது. வைத்த இடத்தை மாற்றாமை வைப்புமுறை என நம் வீட்டிற்கும் அலுவலகத் திற்கும் உரிய பொருள்களையும் கோப்புகளையும் ஒழுங்குற வைக்க வழிகாட்டும் வழிகாட்டுதல் எனக் கொள்ளலாம் அல்லவா! உதிமரம் ஒதியாக வழங்குகிறது. ஒதி பருத்து உத்திரத்திற்கு ஆகுமா என்பது பழமொழி. ஒதியனேன் என வள்ளலார் தம்மைத் தாமே சுட்டிக் கொண்டார்! அவர்க்கா அது? ஒடு என்பது உடை என்னும் மரம்; முள்மரம். ஒட்டரங்காடு, ஒடங்காடு என்பது பாஞ்சாலங்குறிச்சிப் பாட்டு. சேங்கொட்டை செந்நிறத்தது. தேற்றாங் கொட்டை என்பதும் அது. தொல்காப்பியர் மரநூல் வல்லார் என்பது மரபியலில் பெருவிளக்கமாம். பனம்பாளையைச் சீவி வடித்த நீரைக் காய்ச்சிப் பாகாக்கிப் பனை வட்டு (வட்டமாக்கிய திரளை) எடுத்தனர். அதனை பனை + அட்டு = பனாட்டு என்றனர். அப்பனாட்டு இதுகால் பனை வட்டு என வழங்கப் படுதல் எவரும் அறிந்தது. அட்டு, வட்டு என்ற அளவில் நிற்கவில்லை. கட்டி எனவும் வழக்கூன்றியது. கருப்புக் கட்டி (கரும்பில் இருந்து எடுத்தது) சில்லுக் கருப்புக் கட்டி என்றும் ஆயிற்று. பனங்கட்டி,தென்னங்கட்டி இரண்டும் வெல்லக்கட்டி, சருக்கரைக் கட்டி என்றும் ஆயின. பனைக் கொடி சேரர் கொடி இல்லையா! ஏழ்பனை நாட்டையும் ஏழ்தெங்க நாட்டையும் இவை நினை வூட்ட வில்லையா! ஏழேழு நாடு என்பதன் எச்சமே ஈழ நாடு என்றும், ஏழ்பனை நாட்டின் சான்றே யாழ்ப்பாண நாடு என்றும் நம் வரலாற்றுப் பெருமக்களைத் தூண்டித் துலங்கச் செய்ததை நாம் அறியலாமே. கல்லாதவரும் புளிமரம் என்னார். புளியமரம் என்றே கூறுவார். புளியங்கொம்பு, புளியங்காய் என்றே வழங்குவார். புளிங்கறி, புளிங்குழம்பு, புளிஞ்சாறு என மெல்லெழுத்து வரக் கூறுவதும் வழக்கு. அன்றியும் புளிக்கறி, புளிக்குழம்பு, புளிச்சாறு என்பதும் வழக்கே. இவையெல்லாம் தொல்காப்பியர் காலம் தொட்டே வழங்கப்படுதல் வியப்பில்லையா? (244 - 246) குற்றியலுகர ஈற்று மரப்பெயர்ச் சொல்லுக்கு அம் என்பதே சாரியை என்று கூறும் ஆசிரியர் (கமுகங்காய், தெங்கங்காய்) மெல்லெழுத்து வல்லெழுத்தாகாத மரப்பெயரும் உண்டு என்கிறார் (416). வேப்பு வேம்பு கடம்பு என்பவை, வேப்பு கடப்பு என்று, வழக்கில் உண்மையை நாம் காண்கிறோம் (வேப்பங்காய், கடப்பங்கிளை). அதனால், உரையாசிரியர்கள், வலியா மரப் பெயரும் உள என்பதால், வலிக்கும் மரப் பெயரும் உண்டு என்று கொள்க என்கின்றனர். உரை கண்டார், நூல் கண்டார் நிலையை அடை யும் இடங்கள் இத்தகையவை. பூங்கொடி எனலாமா? பூக்கொடி எனலாமா? இரண்டும் சொல்லலாம் என்பது தொல்காப்பியம் (296). ஊனம் உடல் இருவகையாகக் கூறப்படும். ஊன் உடல்; ஒளி உடல் என்பவை அவை. ஊன் உடலில் ஏற்படும் குறை ஊனக் குறை எனப் பட்டது. இன்றும் ஊனம் உடற்குறைப் பொருளில் வழங்குவதனை நாம் அறிய முடிகின்றதே (270). ஊனம் பற்றித் தொல்காப்பியர் கூறுவதால், அது தமிழ்ச் சொல் என்பதற்கு ஐயமில்லையே! கோயில் கோயில் என்று சிலர் வழங்குகின்றனர். கோவில் என்றும் வழங்குகின்றனர். இவற்றுள் எது சரியானது? இரண்டும் சரியானவைதாமா? இல்லொடு கிளப்பின் இயற்கை யாகும் என நூற்பா அமைத்துளார் தொல்காப்பியர் (293). கோ என்பதன் முன் இல் என்னும் சொல் வந்தால் இயல்பாக அமையும் என்கிறார். முதல் உரையாசிரியர் இளம்பூரணர் கோயில் என்கிறார். நச்சினார்க்கினியர் கோவில் என்கிறார். அவ்வாறானால் இரண்டும் சரியா? நன்னூலார் உடம்படுமெய் வருவது பற்றிய நூற்பாவை, இ ஈ ஐவழி யவ்வும் ஏனை உயிர்வழி வவ்வும் ஏமுன் இருமையும் உயிர்வரின் உடம்படு மெய்யென் றாகும் என்று அமைத்துளார். இதன்படி ஏனை உயிர்வழி வவ்வும் என்பது கொண்டு கோவில் என்றனர். ய, வ இரண்டும் வருமென்றால் ஏ என்பதற்குக் கூறியது போல் ஏ, ஓ முன் இருமையும் என்று நன்னூலார் சொல்லியிருக்க வேண்டுமே! முடிவு செய்தற்கு வழக்குகளை நோக்குதல் வேண்டும். இருபதாம் நூற்றாண்டு உரைநடையில் கோவில் இடம் பெறுவதை அன்றி, அதற்கு முன்னை நூற்பெயர், செய்யுள் வழக்கு என்பவற்றில் ஓரிடத்துத் தானும் கோவில் இடம் பெறவில்லை. ஆதலால் ஆசிரியர் தொல்காப்பியர் ஆணைப்படி கோஇல் என இயற்கையாகவே எழுத வேண்டும். இல்லையேல் வழிவழி வந்தவாறு கோயில் என்றே எழுத வேண்டும். வாயில் வந்து கோயில் காட்ட கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி (சிலப்பதிகாரம்) கோயில் நான்மணிமாலை (நூற்பெயர்) இன்னவை கொண்டு தெளிக. யகர உடம்படுமெய் இயல்பாக வருதலும், வகர உடம்படுமெய் சற்றே முயன்று வருதலும் நோக்கின் விளக்கம் ஏற்படும். காயம் காயம் என்பது தொல்காப்பியத்தில் விண்ணைக் குறித்தது. விண் என வரூஉம் காயப் பெயர் என்றார் அவர் (305). இப்பொழுது ஆகாயம் என வழங்குகின்றது. அகம் அகம் என்னும் சொல்லின்முன் கை சேர்ந்தால் அகம் + கை = அங்கை ஆகும் என்கிறார். அவ்விதிப்படி அகம் + செவி = அஞ்செவி என்றும் அகம்+கண் = அங்கண் என்றும் வழங்குகின்றன (310). அங்கை என்பது பொதுமக்கள் வழக்கில் உள்ளங்கை என் றுள்ளது. உள்ளங்கால் எனவும் உள்ளகம் எனவும் வழங்கு கின்றன. முறைப்பெயர் இன்னார் மகன் இன்னார் என்னும் வழக்கம் என்றும் உண்டு. கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்று வெளிப் படுத்தியும் சேந்தங் கூத்தனார் என்று (சேந்தனுக்கு மகனாராகிய கூத்தனார்) தொகுத்தும் கூறுதல் வழக்கம். இன்னொரு வழக்கமும் தொல்காப்பியர் காலத்தில் பெருக வழங்கியது. அதற்கு விரிவாக இலக்கணம் கூறுகிறார் (347 - 350). பெரியவர்கள் பெயரைச் சொல்லுதல் ஆகாது என்பவர், இன்னார் தந்தை என மகன் அல்லது மகள் பெயரைச் சுட்டி அவர்க்குத் தந்தை அல்லது தாய் என முறை கூறல் இக்கால வழக்கம். மணி அப்பா, மணி அம்மா (மணிக்கு அப்பா, மணிக்கு அம்மா) என வழங்கும் வழக்கம் தொல்காப்பியர் நாள் பழமையது. ஆதன் தந்தை (ஆந்தை) பூதன் தந்தை (பூந்தை) என்பன போல வழங்கப்பட்டவை. ஆதன் பூதன் என்பவை அந்நாள் பெருந்தக்க பெயர்கள். பிசிராந்தையார், பூதனார், பூதத்தார், நல்லாதனார், நப்பூதனார் என்றெல்லாம் புகழ் வாய்ந்தோர் பலர் ஆவர். வல் இந்நாள் பரிசுச் சீட்டுக்கு முன்னோடியான சூதாட்டத்தின் அகவை மிகப் பெரியது. தொல்காப்பியர் நாளிலேயே சூதாட்டக் காய், ஆடும் அரங்கமைந்த பலகை என்பன இருந்தமை யால் அவற்றின் இலக்கணத்தையும் கூறுகிறார் (374 - 375). ஆடு, புலி, குதிரை வைத்து ஆடும் ஆட்டங்களைப் போல் நாய் வைத்து ஆடியுளர் என்பது நாயும் பலகையும் (கட்டமிட்ட அரங்கப் பலகை) என்பதால் தெரிகின்றது. சூதின் தன்மையை வள்ளுவம் ஒன்று எய்தி நூறு இழக்கும் சூது என்பதால் வெளிப் படுத்தும். அதன் கொடுமையை வெளிப்பட உணருமாறு வல் என்று பெயரிட்டிருந்த ஆழ்ந்த சிந்தனையர், எண்ணத் தக்கார் (374). தமிழ் கதவு, தாழ் என்பவை வீடு தோன்றிய பாதுகாப்பு உணர்வு ஏற்பட்ட நாள் முதலே உண்டாகி யிருக்கும். வழியடைக்கும் கல் என்பது பாதுகாப்புத் தானே. தாழ் கதவொடு கூடியது. பூட்டு என்பது தாழ்க் கதவொடு இணைந் திருப்பதனை அன்றித் தனியே எடுத்து மாட்டுவதாகவும் அமைந்துளது. பாதுகாப்பில் எத்தனையோ புதுமைகள் ஏற்பட்டுள்ளன. எனினும் தாழ்க்கோல், திறவுகோல், திறப்பான் குச்சி, திறவு என்னும் பழம் பெயராட்சிகள் வழக்கில் மறையாமல் வாழ்ந்து கொண்டுள்ளன. தாழைத் திறக்கும் கோல் தாழக் கோல் எனவும் தாழ்க் கோல் எனவும் வழங்கும் என்று கூறிய தொல்காப்பியர் தமிழ் என்பதை விட்டுவிடாமல், தமிழென் கிளவியும் அதனோர் அற்றே என்கிறார். தமிழ்த் தெரு, தமிழத் தெரு; தமிழ்க் கலை, தமிழக் கலை என வழங்கும் வகையை இதனால் காட்டுகிறார். திராவிடத்தில் இருந்து தமிழ் வந்தது என்பாரை இத் தொல்காப்பிய விளக்கம் தண்ணீர் தெளித்துக் கண் விழிக்கச் செய்ய வல்லதாம். எழுத்து எழுது, எழும்பு, எழுப்பு, எழூஉ, எழுச்சி என்பனவெல்லாம் எழு என்பதன் வழியாக வந்தவை. எழுத்து என்பதும் அவ்வாறு வந்ததே. எழூஉம் சீப்பும் உடைய அரணத்தைக் கொண்டிருந்தவர் தமிழர். அவர் எழுத்தழிவுக்கும் எழுத்துச் சிதைவுக்கும் இடந் தருதல் இன்றி மொழி காத்தல் கடமையாகும். மேலும், எழுத்தும் எண்ணும் இணைந்த மொழி தமிழ். எழுத்தே எண்ணாக இருந்தும் அவ்வெண்ணை ஏறத்தாழ மறந்தே போன மக்கள் தமிழ் மக்கள். தமிழெண் மீட்டெ டுப்புச் செய்தலைத் தாமே உணரார் எனினும், அண்டை மாநிலங்களை எண்ணினாலும் தமிழர் புரிந்து கொள்ள முடியும். க, உ, ங, ச,ரு, சா, எ, அ, கூ, க0 என்பவை பழந்தமிழெண்கள். இத் தமிழெண்களின் வழிப்பட்டவையே 1,2,3 என வழங்கப் பெறும் எண்கள். பழந்தமிழர் உலக வணிகத்திற்குப் பயன்படுத்திய பொது எண்கள் இவை. எண் எண்கள் எழுத்துகள் என்பவை வேறு வேறாக இல்லாமல், எண்களே எழுத்தாக இருந்தமையால் எண்ணும் எழுத்தும் இணைந்தே வழங்கின. எழுத்தறியத் தீரும் இழிதகைமை என்றும், எழுத்தறி வித்தவன் இறைவன் என்றும் வழக்கூன்றின. இவ்வெண்களைச் சொல்லிப் பாருங்கள்; நூறுவரை சொல்லுங்கள்; எல்லாமும் உகரங்களாக - குற்றியலுகரங் களாக - முடிவதைப்பாருங்கள். (ஏழு என்பது முற்றியலுகரம்). ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, நூறு. இவற்றுள் ஒரே ஓர் எண் (ஒன்பது) தப்பி வந்தது போல் தோற்றம் தரவில்லையா? ஒன்பது என்னும் இடத்திலே தொண்டு என்பதே இருந்தது. அது வழக்கு வீழ்ந்தும் வீழாமலும் இருந்த காலம் தொல்காப்பியர் காலம். அதனால் அவர் ஒன்பது என்பதுடன் தொண்டு என்பதையும் வழங்கி யுள்ளார் (445, 1358). அவ்வாறே பரிபாடலிலும் ஒன்பதும் தொண்டும் வழங்கப்பட்டுள. தொண்டு வழக்கிழந்து ஒன்பது வந்தமையால் தொண்ணூறு, தொள்ளாயிரம் என்பவையும் கீழே இறங்கி விட்டன. தொண்பது என்னும் இடத்தில் தொண்ணூறும், தொண்ணூறு என்னும் இடத்தில் தொள்ளாயிரமும் வந்து விட்டன. இந் நாளிலும் தொன்னாயிரம் முறை சொன்னேன் என்னும் பேச்சுமொழி உண்மை, பழமரபை உணர்த்துகின்றது. நூறுவரை உள்ள எண்கள் உகரத்தில் முடிதல் ஒலி எளிமை, ஒழுங்குறுத்தம் என்பவை கொண்டமையை உணரின் அவ்வமைப் பாளியரின் ஆழம் புலப்படும். ஆயிரம், இலக்கம், கோடி என்பவை வழங்கப்படவில்லையோ எனின் ஆயிரம் வழங்கப்பட்டது. அதனின் மேற்பட்டவை ஐ, அம், பல் என்னும் முடிபு கொண்ட சொற்களாக வழங்கப்பட்டன. தாமரை, வெள்ளம், ஆம்பல் முதலியவை அவை. ஆயிரம் அடுக்கிய ஆயிரம் என்பவை தாமரை எனவும் வெள்ளம் எனவும் ஆம்பல் எனவும் வழங்கப்பட்டன. திருவள்ளுவர், சங்கத்தார் ஆயோர் நாளிலேயே கோடி, அடுக்கிய கோடி என்பவை இடம் பெற லாயின. கோடி என்பது கடைசி என்னும் பொருளில் இன்றும் வழங்கப் படுவதே. கடைசி எண் கோடி எனினும், கோடி, கோடியை அடுக்கிய கோடி என்பதும் வழக்கில் இருந்துளது. கோடா கோடி, கோடானு கோடி என்பன அவை. ஊரறிய ஒளியுடைய செல்வர்கள் இருப்பின், அவர்கள் பெருமை யாகப் பேசப்பட்டனர். ஒளிக் கற்றையால் விளங்கும் கதிரவன் போலக் கருதப்பட்டனர். அதனால் அவர்கள் இலக்கர் களாகினர். எல்லே இலக்கம் என்பது தொல்காப்பியம் (754). விளங்கிய செல்வம் இலக்கம் ஆயது; எண்ணும் ஆயது. மக்கட்கை மக்கள் என்பதனுடன் கை சேர்ந்தால், மக்கள் கை என்னும் இடமும் உண்டு; மக்கட் கை என்னும் இடமும் உண்டு. உயிருடையவர் கை எனின் மக்கள் கை. உயிரற்றவர் கை எனின் மக்கட் கை. இதனைத் தொல்காப்பியர், மக்கள் என்னும் பெயர்ச்சொல் இறுதி தக்கவழி அறிந்து வலித்தலும் உரித்தே என்று கூறுகிறார் (405). மக்கள் என்பார் உயிருள்ளவர். அவர்தம் கை உயிரற்றால் - செயலற்றால் - தனித்துக் கிடந்தால் - மக்கட் கை என மாற்றம் பெறும் என்பது இப் பரபரப்பான - அமைந்து எண்ண முடியாத - உலகியலில் வியப்பூட்டுவதில்லையா? பெண்டு மக்கள் என்னும் பொதுப்பெயர் பெண், ஆண் எனப் பால் பிரிவுடைமை எவரும் அறிந்ததே. பெண் என்பது பெண்டு என்றும் வழங்கப்பட்டது (420, 421). பெண்டிர் என்பதில் அது விளங்கி நிற்கிறது. பெண்டு என்பதைப் பொண்டு ஆக்கி ஆட்டி சேர்த்துப் பொண்டாட்டி ஆக்கி மொழிக் கேட்டுடன் பண்பாட்டுக் கேடும் ஆக்கிவருதல் குறுந்திரை பெருந்திரைக் கொள்கையாகி விட்ட நிலையில், பெண்டு என்னும் பண்பாட்டுப் பெயர் தலை வணங்க வைக்கிறது. பெண்டன் கை, பெண்டின் கை என வழங்கப்படுதலை, வண்டும் பெண்டும் இன்னொடு சிவணும் என்றும், பெண்டென் கிளவிக்கு அன்னும் வரையார் என்றும் கூறுகிறார் (420, 421). திசை தெற்கு வடக்குத் தெரியாதவன் என்பது பழமொழி. தென்கிழக்கு, வடகிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு எனக் கோணத் திசைகளை வழங்குகிறோமே! முழுத்திசையில் சுருங்காத முன் திசையைக் கோணத் திசைக்குக் குறுக்குவது நம் வழக்கா? நம் முந்தைத் தொல்காப்பியர் காட்டும் வழக்கே யாம். அவர்க்கு முன்னரே அவ்வழக்கு இருந்ததை என்மனார் புலவர் என்பதால் தெளிவிக்கிறார் (432). பன்னிரண்டு பத்துடன் மூன்று பதின்மூன்று பத்துடன் ஐந்து பதினைந்து இவ்வாறுதானே வரும். பத்துடன் இரண்டைப் பன்னிரண்டு என்கிறோமே! எதனால்? பத்தன் ஒற்றுக்கெட னகரம் இரட்டல் ஒத்த தென்ப இரண்டுவரு காலை (434) என்கிறார். மேலும், ஆயிரம் வரினும் ஆயியல் திரியாது (435) என்பதால் பன்னீராயிரம் என்பதற்கு இலக்கணம் காட்டுகிறார். பன்னீரி யாண்டு வற்கடம் சென்றது என்பது களவியல் உரை. முந்நீர்ப் பழந் தீவு பன்னீராயிரம் என்பது கல்வெட்டு. மொழிக்காவல் தொல்காப்பிய எழுத்ததிகாரத்தின் வழியாக அறியப் பெறும் வாழ்வியல் வளங்களுள் சில இவை. இவ்வதிகாரத்தைச் சொல்லி முடிக்கும் ஆசிரியர் சொல்லிய அல்லாத திரிபுகள் செய்யுள் வழக்கிலோ மக்கள் வழக்கிலோ காணக் கிடப்பின் அவற்றையும் உரிய வகையால் அமைத்துப் போற்றிக் கொள்க என்கிறார். தமிழ்மொழி வழக்கழிந்து படாமல் என்றும் உயிருடைய மொழியாகத் திகழவேண்டும் என்னும் மொழிக் காவல் உள்ளத்தின் வெளிப்பாடே இஃதாம் (483). இவ்வாறு இயல்களிலும் அதிகாரங்களிலும் கூறுவன மொழியின் விரிவாக்கத்திற்கு உடன்பட்டு வழிவகுப்பதாகும். (குறிப்பு : தொல்காப்பிய நூற்பா எண்களாகக் குறிக்கப் பட்டவை எல்லாமும் சை.சி. கழகத் தொல்காப்பிய மூலப்பதிப்பு எண்களாகும்.) - இரா. இளங்குமரன் தமிழ்வளம் -19, தமிழர் வாழ்வியல் இலக்கணம் நூலிலிருந்து எடுக்கப்பட்டது எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியம் -1 சி. கணேசையர் - பதிப்பு (1937, 1952) முதற் பதிப்பு 1937லும், இரண்டாம் பதிப்பு 1952லும் சுன்னாகம் திருமகள் அழுத்தகத்திற் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளன. 2007இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்பதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு மீள் பதிப்பாக இந்நூல் வெளிவருகிறது. பதிப்புரை ஆதியிற் றமிழ்நூ லகத்தியற் குணர்த்திய மாதொரு பாகனை வழுத்துதும் போதமெய்ஞ் ஞான நலம்பெறற் பொருட்டே. செந்தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் எழுத்ததி காரம், சொல்லதிகாரம், பொருளதிகாரமென மூன்று அதிகாரங் களை உடையது. அவற்றுள், முன் ஐந்தியலும் நச்சினார்க்கினியர் உரையும், பின் நான்கியலும், பேராசிரியர் உரையுமாயுள்ள பொரு ளதிகாரத்தையும், சொல்லதிகாரம் நச்சினார்க்கினியார் உரையையும், பல ஏட்டுப் பிரதிகளை ஒப்புநோக்கி ஆராய்ந்து அச்சிற் பதிப்பித்து முதலில் வெளியிட்டவர்கள், யாழ்ப்பாணம் ராவ்பகதூர் சி.வை. தாமோதரம்பிள்ளை B.A., அவர்களே எழுத்ததிகாரம் நச்சினார்க் கினியர் உரை, மழவை மகா வித்துவான் ஸ்ரீமத் மகாலிங்கையர் அவர்களால் முன் அச்சிடப்பட்டதாயினும் பின், தென்னாட்டுப் பிரதிகளோடும், ஒப்பு நோக்கி அச்சிட்டு வெளிப்படுத்தினவர்களும் பிள்ளையவர்களே. இவைகளே யன்றி வீரசோழியம், இலக்கண விளக்கம் என்னும் இலக்கண நூல்களையும், தொகை நூல்களில் ஒன்றாகிய கலித்தொகையையும், சூளாமணி, தணிகைப்புராணம் முதலியவற்றையும், முதலில் அச்சிட்டு வெளிப்படுத்தியவர்களும் பிள்ளையவர்களே. இவைகள், இக்காலத்துப் பிறரால் அச்சிட்டு வெளிப்படுத்தப்படுதலின் பிள்ளையவர்கள் தமிழ் நாட்டிற்குச் செய்த அரும்பெருந் தொண்டு எவர்களாலும் மறக்கக் கூடிய நிலைமையை உடையதாயிற்று. ஆதலால் அந்நிலையை ஒழித்து, பிள்ளையவர்கள் தமிழ் உலகிற்குச் செய்த நன்றியையும், அவர்களையும் ஞாபகப்படுத்தற் பொருட்டே இத்தொல் - எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரையை முன்னர் அச்சிட்டு வெளிப்படுத்தினோம். இதனை யாம் அச்சிடுதற்கு முன், எமது எண்ணத்தை முற்று விப்பான் விழைந்து, தமிழ்வித்துவான், பிரமஸ்ரீ சி. கணேசையர் அவர்களிடஞ் சென்று, தொல் - எழுத்ததிகாரம் நச்சினார்க்கினி யார் உரையை யாம் பதிப்பதாகவும், அவ்வுரைக்கு மாணாக்கர்கள் இடர்ப்பாடின்றிப் படித்தற் பொருட்டு, ஓர் விரிவான விளக்கவுரை யைத் தாங்கள் எழுதி உதவின், அதனையும் அவ்வுரையோடு சேர்த் துப் பதிப்பேம் என்பதாகவும் தெரிவித்தோம். அதற்கு அவர்கள் தாம் உடல் நலமில்லாதிருப்பதால் அவ்வாறு செய்ய முடியாதென்றும், "யாம் படித்த காலத்தும், படிப்பித்த காலத்தும் குறித்து வைத்த குறிப்புக்களைத் தருகின்றேம்; அவற்றைக் கொண்டு சென்று, அவ் வுரையோடு சேர்த்துப் பதித்தத் தமிழ் உலகிற்குப் பயன்படுத்துக" என்றுஞ் சொல்லி, அவ்வுரைக் குறிப்புக்களை எமக்கு உதவினார்கள். அவ்வுரைக் குறிப்புக்களும், அவ்வுரையோடு சேர்த்துப் பதிப்பிக்கப் பட்டுள்ளன. அன்றியும் நூலாசிரியர் வரலாறு, உரையாசிரியர் வரலாறு, உதாரண அகராதி, அரும்பதவிளக்கம் முதலியவற்றின் அகராதி, மேற்கோள்விளக்கம் முதலியவற்றையும் தம் மாணவர்களைக் கொண்டு எழுதுவித்து அவர்களே உதவினார்கள். ஆதலால் இது கணேசையர் அவர்கள் பதிப்பாக எம்மால் வெளியிடப்படுகின்றது. "கைம்மா றுகவாமற் கற்றறிந்தோர் மெய்வருந்தித் தம்மாலிய லுதவி தாஞ்செய்வார்" என்றாங்கு ஐயர் அவர்கள் செய்தவுதவி எம்மாலன்றித் தமிழ் உலகத்துள்ளார் எவர்களாலும் பெரிதும் போற்றற் குரியதேயாம். உடலோம்பும் ஒன்றனையே குறிக்கேளாளாக் கொண்ட நமக்கும், பூவுடன் கூடிய நாரும் மணம் பெற்றவாறு போலப் பல பேரறிஞர் களின் சேர்க்கையால் இப்பெரும் பணியில் ஈடுபடுமாறு அருள் செய்த அருட் பெருஞ் சோதியை - ஆனந்த வாரியை உண்மைப் பொருளை - ஊக்கமளிப்பானை - எண்ணற்கரியானை - ஏறுடைய பெம்மானை - ஐயாறுடையானை - ஒப்பற்ற கண்ணுதலை - ஓங்காரத் துட்பொருளை - எப்பற்றுமின்றி இறைஞ்சுவதே கடனாம். "திருமகள் நிலையம்" மயிலிட்டி தெற்கு, நா. பொன்னையா தாது-தை-க-ஆம் நாள், (1937) கடவுள் வணக்கம் "நித்தியமாய் நிர்மலமாய் நிட்களமாய் நிராமயமாய் நிறைவாய் நீங்காச் சுத்தமுமாய்த் தூரமுமாய்ச் சமீபமுமாய்த் துரியநிறை சுடராய் எல்லாம் வைத்திருந்த தாரகமாய் ஆனந்த மயமாகி மனவாக் கெட்டாச் சித்துருவாய் நின்றவொன்றைச் சுகாரம்பப் பெருவெளியைச் áªij brŒth«." - தாயுமானசுவாமிகள் ராவ்பகதூர் சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் வரலாற்றுச் சுருக்கம் இவர், சிறுப்பிட்டி வைரவநாதபிள்ளை குமாரர் 1832ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆந் திகதி பிறந்தவர். தமது 12ஆம் வயதில் வட்டுக் கோட்டைச் செமினரி யென வழங்கிய பல்கலைக் கழகத்தில் படித்துச் சிறந்த மாணாக்கனாக விளங்கினார். தமிழ் நூல்களைக் கல்லூரியிற் படித்ததனோடமையாது முத்துக் குமாரக் கவிராயரிடமும் முறையே கற்றுணர்ந்தார். ஆங்கிலக் கல்வியறிவையும் வளர்த்து 1857ஆம் ஆண்டு முதன்முதல் சென்னைப் பல்கலைக்கழகத்தாரால் நடாத்தப்பட்ட பிரவேச பரீட்சையிற் றேறியதோடு, அடுத்த நான்கு திங்கள் கழித்து இக் கழகத்தினரால் நடாத்தப்பட்ட பி.ஏ. பரீட்சையிலும் சிறந்த சித்தி யடைந்தார். பிள்ளையவர்கள் முதலில் 1852ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ஆந் தேதி கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியராயும், பின்பு "தினவர்த்தமானி" எனும் தமிழ் வெளியீட்டின் ஆசிரியராயும், 1857ஆம் ஆண்டு கள்ளிக் கோட்டை அரசினர் கல்லூரித் தலைமை யாசிரியராயும், சென்னை அரசியல் வரவு செலவுக் கணக்கு நிலைய முதல்வராயும், சிறிது காலம் வழக்கறிஞராயும், 1887ஆம் ஆண்டு தொடக்கம் புதுக்கோட்டைப் பெருமன்றத்து நீதிபதியாயும் கடமை புரிந்துள்ளார்கள். பிள்ளையவர்கள் பல உத்தியோகங்களிலிருந்தும் இடர்ப் பாடு நோக்காது, தமது பிறப்புரிமைத் தமிழ்க் கல்வியைக் கைவிட்டாரில்லை. தமக்குள்ள ஓய்வு நேரம் தமிழுக்குழைக்கும் நேரமென முடிவு செய்து ஒழுகி வந்தார். தலைசிறந்த தமிழ் நூல்கள் பலவும் போற்றுவாரின்றி மறைந்து போவதைக் கண்ணுற்று அவலக் கண்ணீருகுத்தார். எங்ஙனமாயினும் தமிழ் நூல்களை அச்சூர்தி யேற்ற வேண்டுமெனத் துணிவு கொண்டார். பலவிடங்களில் முயன்று தேடியும் தேடுவித்தும் ஏடுகளைப் பெற்றார். அவை எடுக்கும்போதே ஓரந்தேய்ந்தும், கட்டு அவிழ்க்கும்போது இதழ் முரிந்தும், ஒற்றை புரட்டும் போது துண்டு துண்டாய்ப் பறந்தும், அறிஞர்கள் மிகவும் கவலுதற்குரிய நிலையிற் காணப்பட்டன. இத்தகைய நிலைமையினை யடைந்த ஏட்டுச் சுவடிகளைத் தம்முள் ஒப்புநோக்கி, அல்லும் பகலும் உழைத்துச் செப்பஞ் செய்து வெளிப்படுத்துக் காத்தோம்புதலே நோன்பென மேற்கொண்டார். இதன் பயனாக, முதலில் நீதிநெறி விளக்கவுரையும், பின்னர் 1881-ம் ஆண்டில் வீரசோழியமும், 1883இல் தணிகைப்புராணமும், 1885-இல் தொல்காப்பியம் பொருளதிகாரமும், 1887-இல் கலித்தொகையும், 1889இல் இலக்கண விளக்கமும், சூளாமணியும், 1901-இல் தொல் - எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியமும் அடுத்தவாண்டில் தொல் - சொல் - நச்சினார்க்கினியமும் அச்செழுத்துச் சுவடியாக நாம் கண்டின்புறக் கிடைத்தன. தொல்காப்பியம் முற்றும் பதிப்பித்த தனிச்சிறப்புப் பிள்ளையவர்கட்கே யுரித்தாதல் கண்டின்புறுக. எழுத்ததிகாரம் முன்னரே மழவை மகாலிங்கையர் அவர்களாற் பதிப்பிக்கப்பட்ட தெனினும், எஞ்சிய சிறந்த பாகங்கள் பிள்ளையவர்களாலேயே முதன்முதல் அச்சில் வெளிப் போந்தன. ஏட்டுச் சுவடிகளிலிருந்தும் அவற்றைப் பயின்ற புலவர்களிலிருந்தும் தங்கள் பட்டத்திற் கிழுக்குண்டாகு மென்றஞ்சி அழுத்தெழுத்திற் பொறித்து வெளியிடப் பின்னிட்டுக் கரந்திருந்தனர். தான்பெற்ற இன்பம் தமிழுலகம் பெறவேண்டுமென்ற தலைப்பெரு நோக் கொன்றேயுடைய வெற்றிவீரர் பிள்ளையவர்களே யன்றோ, யானென்று முன்வந்து தொல்காப்பியத்தைப் பதிப்பித்தலால் தமிழன்னைக்குத் தொன்மையான இயற்றமிழ்ப் பொன் முடியைச் சூட்டி மகிழ்வித்தாராயினர். நட்சத்திரமாலை, ஆதியாகம கீர்த்தனம், ஆறாம் ஏழாம் வாசக புத்தகங்கள், கட்டளைக் கலித்துறை, சூளாமணி வசனம், சைவ மகத்துவம் முதலிய நூல்கள் பிள்ளையவர்கள் தாமாகவெழுதி அச்சு இயற்றப் பட்டனவாம். பிள்ளையவர்கள் சென்னைப் பல்கலைக்கழகப் பரீட்சக ராகவும் கடமை புரிந்து வந்தார்கள். இவர் செய்த நன்மையைப் பாராட்டிச் சென்னை அரசாட்சியார் "ராவ் பகதூர்" எனும் பட்டத்தை யளித்துப் பெருமைப்படுத்தினர். `அகநானூறு' எனும் பனுவலை ஆராய்ந்து வந்தார்கள். ஆனால் தமிழ் மக்கள் இழைத்த தவக்குறையால் 1901ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி தமிழன்னை தலைகுனிய இவ்வுலக வாழ்வை நீத்து இறைவன் திருவடி நீழலிற் குளிர்ந்தனர். இவரை நீத்த கையாற்று மிகையான் தமிழ்ப் புலவர் பலர் இரங்கற் பாக்களால் தந்துயர் வெப்பத்தை ஒருவாறு ஆற்றுவாராயினர். அவற்றுள் இரு செய்யுளை மாத்திரம் இங்கே குறிப்பிடுகின்றாம். மகாமகோபாத்தியாய தக்ஷிணாத்திய கலாநிதி டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள் கூறியது: தொல்காப் பியமுதலாந் தொன்னூல்க ளைப்பதிப்பித் தொல்காப் புகழ்மேவி யுய்ந்தபண்பி - னல்காத தாமோ தரச்செல்வன் சட்டகநீத் திட்டதுன்பை யாமோ தரமியம்ப வே. பிள்ளையவர்களை நன்கறிந்தவரும் சிறந்த ஆராய்ச்சி வல்லுநருமாய திரு. வி. கோ. சூரியநாராயண சாதிரியார் அவர்கள் கூறியது: காமோதி வண்டர் கடிமலர்த்தேன் கூட்டுதல்போ னாமோது செந்தமிழி னன்னூல் பலதொகுத்த தாமோ தரம்பிள்ளை சால்பெடுத்துச் சாற்றவெவர் தாமோ தரமுடையார் தண்டமிழ்ச்செந் நாப்புலவீர். நா. பொன்னையா கணேசையர் பதிப்பு முதற்பதிப்பின் முகவுரை இந்நூற் பதிப்பாசிரியர் ஸ்ரீமாந் நா. பொன்னையா அவர்கள் சென்ற வைகாசித் திங்களில் எம்மிடம் வந்து, ராவ்பகதூர் சி.வை. தாமோதரம் பிள்ளையவர்கள் பதித்த நூல்களுட் சிலவற்றை அவர்கள் பெயரை ஞாபகப்படுத்தும் பொருட்டுத் தாம் பதிப்பதாகவும், அவைகளுள், தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியருரையே முன்னர்ப் பதிப்ப தாகவும், அந் நச்சினார்க்கினியருரைக்குத் தாங்கள் விரிவான ஒரு விளக்கவுரை எழுதி உதவினால் அதனை நச்சினார்க்கினியர் உரை யோடு சேர்த்து யாம் பதிப்பேமென்பதாகவுஞ் சொன்னார்கள். அப்பொழுது இதுவே, யாம் எழுதி வைத்த பழைய விளக்கவுரைக் குறிப்புக்கள் வெளிவந்து தமிழ் மக்களுக்கு மரபு மரபாகப் பயன்படுதற்கு ஏற்றகாலம் என்று கருதி, அவர்களை நோக்கி, `உடம்பு நலமில்லாமையால் தாங்கள் விரும்பியவாறு புதிதாகவும் விரிவாகவும் ஒரு விளக்கவுரை எழுதுதல் எமக்கு முடியாது; நச்சினார்க்கினியர் உரையில் விளங்காதவற்றிற்கு யாம் முன் எழுதி வைத்த சில குறிப்புக்களிருக்கின்றன; அவற்றைத் தருகின்றேம்; தாங்கள் கொண்டுபோய் அவ்வுரையோடு அச்சிட்டு வெளிப்படுத்தித் தமிழ் மக்களுக்குப் பயன்படுத்துக' என் கூறி, அவற்றை அவர்களிடம் கொடுத்தேம். அவையே இவையாம். இவ் விளக்கவுரைக் குறிப்புக்கள், யாம் படிக்குங் காலத்தில் எமது ஆசிரியர்களாகிய வித்துவசிரோமணி ந.ச. பொன்னம்பலம் பிள்ளை, சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர் என்பவர்களிடங் கேட்டுக் குறித்தனவும், யாம் படிப்பிக்குங் காலத்தில் பலமுறை யாராய்ந்து குறித்து வைத்தனவுமாகும். இவ் விளக்கவுரைக் குறிப்புக்கள் நச்சினார்க்கினியருரையில் அதிகம் புலப்படாதவற்றிற்கே எழுதப்பட்டுள்ளன. சில பகுதிகள் விளங்கற்கரியன வாயினு மவற்றை அவர் உதாரணமாகக் காட்டிய சூத்திரங்களையும், உதாரணங்களையும், அவருரைப் போக்கை யும் நன்கு ஆராய்ந்து விளக்கியுள்ளேம். குறிப்புள் விளக்காதன அரும்பதவிளக்க முதலியன என்பதன் கண்ணும் விளக்கப் பட்டுள்ளன. யாமெழுதிய இக்குறிப்புக்களெல்லாந் திருத்தமுடையன வென்று எம்மாற் சொல்லுதல் கூடாது. ஏனெனில், முற்கணத்து எமக்குச் சரியாகத் தோன்றியதே பிற்கணத்துப் பிழையாகத் தோன்றுகின்றதாகலின். ஆதலால் இவற்றுள் வரும் பிழையைப் பேரறிஞர் திருத்திக் கொள்வார்களாக. அன்றியும் இவற்றுள் தாங்கண்ட பிழைகளை நேரே எமக்கு அறிவிப்பின் அவற்றை நோக்கி உண்மையென்று கண்டவற்றை அவர்கள் பெயருடனே இரண்டாவது பதிப்பில் வெளியிடுவேம். அதற்கு ஒருபோதும் நாணமாட்டேம். ஏனெனில், சிற்றறிவையே இயற்கையாகவுடைய மக்களுள் யாமும் ஒருவேமாதலின். இன்னும் இக்குறிப்புக்களை யாராய்ந்து பிழைகளை எமக்கு அறிவிக்குங்கால், அடிப்பட்டு வந்தமையால் உண்மையாகத் தோன்றுந் தமது கருத்தினையே உண்மை எனக் கொண்டு, புதி தாகக் காணப்படும் எங் கருத்தினை இது பிழையென இகழாது எங்கருத்தினையும் நன்கு நோக்கி எதுவுண்மையென ஆராய்ந்து உண்மையான பிழைகளையே அறிவிப்பதும் பேரறிஞர் கடனாகும். அங்ஙனமறிவிக்குங்கால் இக்குறிப்புத் திருத்தமுற்றுத் தமிழ் மக்களுக்கு மரபு மரபாகப் பயன்படுமென்பதற் கையமே யில்லை. இவ்வுரைக் குறிப்பிலே சிற்சிலவிடங்களில் எமது அபிப் பிராயமான உரைகளும் உள்ளன. அவற்றை ஆராய்ந்து பொருத்த மாயிற் கொள்ளுமாறும், அன்றேற் றள்ளுமாறும் பேரறிஞர்களை வேண்டிக் கொள்ளுகின்றேம். எமக்கு உதவியாளரா யிருந்து யாமெழுதிய இக்குறிப்புக் களைப் பலமுறை படித்துப்பார்த்து, எமது மறதி முதலியவற்றால் நேர்ந்த பிழைகளை எமக்கு அறிவித்தும் சில திருத்தியும் பலவாறு துணை புரிந்த, திருநெல்வேலி ஆசிரியர் கலாசாலைத் தமிழாசிரி யரும், சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவரவர்களுக்கு மாணாக்கரும், பண்டிதருமாகிய ஸ்ரீமத் .சி கணபதிப்பிள்ளை அவர்களுக்கும் எமது பேரன்பு என்றும் உரியதாகுக. இன்னும் இக்குறிப்புக்களை அச்சிட்டு வெளிப்படுத்துமாறு பலமுறை ஊக்கப்படுத்தியவர்களும், அச்சிட்டபின் இக்குறிப்புக் களைப் படித்துப் பார்த்துச் சில திருத்தங்கூறி யுதவியவரும், சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவரவர் களுக்கு மாணாக்கரும், பண்டிதருமாகிய `வித்தக'ப் பத்திராதிபர் ச. சந்தையாபிள்ளை அவர்களுக்கும் எமது பேரன்பு உரியதாகுக. இவ்விளக்கவுரைக் குறிப்புக்களைப் பிழைகள் வாரா வண்ணம் அச்சிடுதற்கு ஏற்றவாறு நன்கிதாக எழுதியும், உதாரண அகராதி, அரும்பதவிளக்கம் முதலியன என்னுமிவற்றை எழுதியும் உதவிய எமது மாணவர் சிறுப்பிட்டி தி. சுப்பிரமணிய பிள்ளைக்கும் எமது அன்பு உரியதாகுக. இன்னும், தாமோதரம்பிள்ளை அவர்களது வரலாற்றுச் சுருக்கத்தை எழுதி உதவிய முதலியார் ஸ்ரீமாந் குல. சபாநாதன் அவர்களுக்கும் எமது நன்றி யுரியதாகுக. இன்னும், நூலாசிரியர் வரலாறு, உரையாசிரியர் வரலாறு என்பவற்றையும், மேற்கோள் விளக்கம் ஆகியவற்றையும் எழுதி உதவிய மற்றும் மாணவர்களுக்கும் எமது அன்பு உரியதாகுக. இன்னும், கதம்பமுகுள நியாயம், வீசிதரங்க நியாயம் என்பவைகளை, தருக்கசங்கிரகத்தின் உரைக்குரையாகிய நீலகண்டீயத்தின் உரைகளை நோக்கி, விளக்கமுற எழுதி உதவிய சுன்னாகம் பிராசீன பாடசாலைச் சம்கிருத வாசிரியரும், சம்கிருதவித்துவானுமாகிய பிரமஸ்ரீ வி. சிதம்பரசாதிரி யவர்களுக்கும் எமது வணக்கம் உரியதாகுக. இன்னும் இக்குறிப்புக்களை யச்சிட்டு வெளிப்படுத்திய இந் நூற் பதிப்பாசிரியருக்கும் எமது பேரன்பு உரியதாகுக. புன்னாலைக்கட்டுவன், சி. கணேசையர் தாது - தை - க. (1937) இரண்டாம் பதிப்பின் முகவுரை யாழ்ப்பாணம், ராவ்பகதூர், ஸ்ரீமாந் சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் பதித்த தொல் - எழுத்ததிகாரப் பதிப்பின்படி, 1937-ம் ஆண்டிலே யாமெழுதிய உரைவிளக்கக் குறிப்புக்க ளுடனும், ஏட்டுப் பிரதிகளை நோக்கி யாந் திருத்திய பல திருத்தங்களுடனும், இவ்வெழுத்ததிகாரத்தின் முதற்பதிப்பு. `ஈழகேசரி' அதிபர் ஸ்ரீமாந் நா. பொன்னையபிள்ளை அவர்களாற் பதிப்பிக்கப்பட்டது. பொன்னையபிள்ளை அவர்கள் விகிர்தி ஆண்டு பங்குனிமாதத்தில் தேக வியோகமடைந்த படியால், இதன் இரண்டாம் பதிப்பு, பொன்னையபிள்ளை மீனாட்சி யம்மையாரால் பதிப்பிக்கப்பட்டது. முதற் பதிப்பிலே நேர்ந்த பல பிழைகள் இப்பதிப்பிலே திருத்தப்பட்டுள்ளன. பெரும்பாலும் அச்சுப் பிழைகள் வாரா வண்ணம் அச்சுத் தாள்களைப் பார்த்து உதவிய பண்டிதர் ஸ்ரீமாந் வ. நடராச பிள்ளை அவர்களுக்கும், ஸ்ரீமாந் மு. சபாரத்தினம் பிள்ளை அவர்களுக்கும் எமது அன்பும் நன்றியும் உரியதாகுக. இவ்விரண்டாம் பதிப்பிலே முன் திருத்திய திருத்தங்களை விடப் பின்னும் சில திருத்தங்கள் கீழ்க் குறிப்பாகக் காட்டப் பட்டும், சில உரை விளக்கக் குறிப்புக்கள் புதிதாகச் சேர்க்கப் பட்டும் உள்ளன. அவற்றை அங்கங்கே கண்டுகொள்க. இந்நூல் தொல்காப்பியனாராற் செய்யப்பட்டு, இடைச் சங்கத்திலும் கடைச் சங்கத்திலும் நூலாக வழங்கியதென இறையனார் களவியலுரை கூறவும், அதனை விடுத்துச் சங்கஞ் சார்ந்த நூலென்றும், கிறிதுவுக்கு முன் 300 ஆண்டுவரையிற் செய்யப்பட்டதென்றும், கிறிதுவுக்குப் பின் 200 ஆண்டு வரையிற் செய்யப்பட்டதென்றும், ஆங்கிலங் கற்ற நிபுணர்களும், ஆங்கிலமும் ஆரியமுங் கற்ற *டாக்டர் P.S.R¥ãukÂa சாதிரியாரும் தத்தமாராய்ச்சியிற் கூறுகின்றனர். இராமாயண நூல்களானே ஸ்ரீராமன் காலத்திலே இடைச்சங்க மிருந்ததாக அறியப்படுதலினாலும், முத்தமிழ் நூல்களும், சங்கப் புலவர்கள் செய்தார்கள் என்பது, இறையனார் களவியலுரையானும், சிலப்பதிகார உரைமுதலியவற்றானும் அறியப்படுதலினாலும் கிறிதுவுக்குமுன் முந்நூறு ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்ட தென்பதும். பின் செய்யப்பட்டதென்பதும் எவ்வாறு பொருந்தும்? அன்றியும் "ஐந்திர நிறைந்த தொல்காப்பியனென"த் தொல்காப்பியப் பாயிரங் கூறலின், ஐந்திரம் வழங்கிய காலத்தி லேயே, வடமொழியிலேயே இசை நூல்களும் நாடக நூல்களும் இருந்து இறந்து பட்டிருக்கலாமாதலானும் பின்னுள்ள வடமொழி நூல்களைக் கொண்டு கால நிச்சயஞ் செய்தல் பொருந்துமோ என்பது ஆராயத்தக்கது. இனித் தொல்காப்பியத்திலும், அதனுரையிலும் காணப் படும் தான், பேன், கோன், அழான், புழான் முதலிய இயற் பெயர்களும், "சுட்டுச்சினை நீடிய இகரவிறுதிக்குரிய" அதோளி, இதோளி, உதோளி முதலிய உதாரணச் சொற்களும் பிற்காலத் தில் வீழ்ந்தமை கொண்டும், இது மிகப் பழைய நூலென்பதறியப் படும். கடைச்சங்க நூலாகிய கலித்தொகையிலே இதோளி என்னுஞ் சொன்மாத்திரம் ஈதோளி என நீட்டல் விகாரத்துடன் காணப்படுகின்றது. அதனாலும் இதன் தொன்மை யறியப்படும். புன்னாலைக்கட்டுவன், சி. கணேசையர் கர-தை-க *தொல் - எழுத்ததிகாரக் குறிப்புரை ஆசிரியர். முற்பதிப்புக்களில் விளக்கப்படாத மேற்கோள் விளக்கம் 6 -ம்சூ "தூஉஉத்தீம்புகைத் தொல்விசும்பு" (மலைபடு. இறுதி - வெண்பா) "இலா அர்க்கில்லைத்தமர்" (நாலடியார் - 283) "விராஅஅய்ச்செய்யாமை நன்று" (நாலடி - 246) "மரீஇஇப் பின்னைப் பிரிவு" (நாலடி - 220) 40 -ம்சூ "கண்ண்டண் ணெனக் கண்டுங் கேட்டும்" (மலைபடு - 352) 50 -ம்சூ "குரங்ங்குனைப் பொலிந்த கொய்கவற்புரவி" (அகம் - 4) 51 -ம்சூ "அந்நூலை முந்நூலாக் கொள்வானும் போன்ம்" (கலி - 103) "சிதையுங் கலத்தைப் பயினாற் றிருத்தித் திசையறி மீகானும் போன்ம்" (பரி - 10 - 55) 57 -ம்சூ "கெளவை நீர்வேலிகூற்று" (வெண்பா - IV -23) 64 -ம்சூ "ஞமலிதந்த மனவுச் சூலுடும்பு" (பெரும்பாண் - 132) 111 -ம்சூ "இரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பிற் பரலவ லடைய விரலை தெறிப்ப" (அகம் - 4) "கருங்கா லோமைக் காண்பின் பெருஞ்சினை" (அகம் - 3) "தெய்வமால்வரைத் திருமுனியருளால்" (சிலப் - 3 - காதை) 119 -ம்சூ "எடுத்த நறவின் குலையலங் காந்தள்" (கலி - 40) 131 -ம்சூ "அகடு சேர்பு பொருந்தி யளவினிற் றிரியாது" (மலைபடு - 33) 140 -ம்சூ "எஎ யிவனொருத்தி பேடியோ" (சீவக - 652) 157 -ம்சூ "மழல ரோட்டிய" (அகம் - 1) "வரைவாழ் வருடை" (மலைபடு - 503) 176 -ம்சூ "கண்ணாரக் காணக் கதவு" (முத்தொள் - 42) 180 -ம்சூ "ஒன்றாகநின்ற கோவினை யடர்க்கவந்த" (சிந்தா - ) 191 -ம்சூ "எல்லார்க்கு மெல்லா நிகழ்பவை" (குறள் - 582) 246 -ம்சூ "வெண்கூ தாளத்துத் தண்பூங் கோதையர்" (பட்டின - 85) "கணவிர மாலை யிடூஉக் கழிந்தன்ன" (அகம் - 31) 290 -ம்சூ "குன்றுறழந்த களிறென்கோ கொய்யுளை மாவென்கோ" (புறம் - 387) 300 -ம்சூ "வெயில்வெரி நிறுத்த பயிலிதழ்ப் பசுங்குடை" (அகம் - 37) 306 -ம்சூ "தாய்பெயல்கனைகுரல் கடுப்பப் பண்ணுப் பெயர்த்து" (மதுரை - 560) 316 -ம்சூ "இலம்படு புலவ ரேற்றகை நிறைய" (மலைபடு - 576) 327 -ம்சூ "தும்முச் செறுப்ப" (குறள் - 1318) 345 -ம்சூ "மின்னு நிமிர்ந்தன்ன" (புறம் - 57) 356 -ம்சூ "பொலம்படப் பொலிந்த கொய்கவற் புரவி" (மலைபடு - 574) "பொலமலராவிரை" (கலி - 138) 483 -ம்சூ "கைத்தில்லார் நல்லவர்" (நான்மணி - 69) "காரெதிர் கானம் பாடினே மாக" (புறம் - 144) "வேர்பிணி வெதிரத்துக் கால்பொரு நரலிசை" (நற்றி - 62) "நாவலந் தண்பொழில்" (பெரும்பாண் - 465) "கானலம் பெருந்துறை" (ஐங்குறு - 158) சிறப்பு முகவுரை வடவேங்கடம் தென்குமரிக்கு இடைப்பட்ட தமிழ்கூறு நல்லுலகின் வழக்கும் செய்யுளும் ஆயிருமுதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் ஆய்ந்து தொகுக்கப்பட்டது தொல் காப்பியம் என்று பனம்பாரனார் பாயிரம் கூறுகிறது. தமிழகத்தின் எல்லைகள் பற்றிய குறிப்புகளைத் தரும் தொன்மை மிக்க ஆதாரமாகவும் பனம்பாரனார் பாயிரம் திகழ்கிறது. ஒரு நாட்டின் எல்லைகளைக் கடந்துசெல்லும் வாய்ப்பினைப் பெற்றோர் அல்லது வரையறுக்கப்பட்ட எல்லை களுக்குள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாதோர் என்று வரலாற்றில் துறவிகள், புலவர்கள், வணிகர்கள் காணப்படு கின்றனர். துறவிக்கு வேந்தனும் துரும்பு; கற்றோர்க்குச் சென்றஇடம் எல்லாம் சிறப்பு. துறவியும் புலவரும் வணிகரால் போற்றப்படுகின்றனர். துறவிகளுக்குப் படுக்கைகளை வணிகர்களே அமைத்துக் கொடுத்துள்ளனர் என்பதைத் தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் சான்றுகள் தெரிவிக்கின்றன. புலவர்களுக்குப் புரவலராக அரசர்கள் இருந்துள்ளனர். இன்னொரு நாட்டிற்குள்ளும் சென்று மக்களைச் சந்திக்கும் உரிமை துறவிகளுக்கு உண்டு. அதியமானுக்காக ஔவையார் இன்னொரு நாட்டரசனிடம் தூது சென்றிருக்கின்றார். வணிகர்கள், வாணிகத்தின் பொருட்டுத் தம் நாட்டின் எல்லையைக் கடக்கிறார்கள். இன்னொரு நாட்டுடன் வாணிகத் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்வதற்குத் துறவிகளின் உதவியையும் புலவர்களின் அனுபவத்தையும் வணிகர்கள் பயன்படுத்திக் கொள்வர். வணிகத்திற்கு, வணிகர்களுக்கு இடம் தராமல் இடையூறாக இருக்கும் நாடுகளைக் கைப்பற்றித் தம் நாட்டு எல்லைகளை அரசுகள் விரிவுபடுத்திக் கொள்ளும் போலும். போர்களுக்குரிய காரணங்களில் வாணிகப்போட்டியும் ஒன்றாக இருந்துவருகிறது. கனகவிசயர் தமிழ் அரசர்களைக் குறைத்துக்கூறிய செய்தி புலவர்களாலேயே சேரன் செங்குட்டுவனுக்குத் தெரியவந்திருக் கிறது. எனவே நாடுகளும் ஆட்சி எல்லைகளும் வணிகத்திற்காகவும் செயற்கையாகவே கட்டமைக்கப்படுதலையும், செயற்கைக் கட்டமைப்புகள் அரசியல் வணிகக் காரணங்களாலேயே சிதைக்கப் பெறுவதையும் வரலாற்றில் காணலாம். ஆனால் மொழிவழி அமைவன இயற்கையான எல்லைகள். இயற்கையான எல்லைகளையும் அரசியல் வணிகக் காரணங்கள் மாற்றியமைக்கவே விரும்பும். அத்தகைய விருப்பம் நிறைவேற மேற்கொள்ளப்பெறும் நடவடிக்கைகள் மக்களிடம் மன அழுத்தத்தை உருவாக்கும் வரலாற்றின் பெரும்பகுதி மன அழுத்தம் மிக்க நிகழ்வுகளின் பதிவுகளே. பனம்பாரனார் குறிப்பிடும் எல்லைகள் மொழிவழியானவை. மக்களின் சடங்குகள், வழிபாடுகள், நம்பிக்கைகள், வாழ்க்கை முறைகள் ஆகியவற்றில் வணிக நோக்கச் செயற்பாடுகளின் வேர்களே வெளிப்படுகின்றன. அவற்றின் தொடர்ச்சிக்கும் நிலைபேற்றிற்கும் கூட வணிக நோக்கங்களே வாழ்வளித்துக் கொண்டிருக்கின்றன. எனவே தமிழ்கூறு நல்லுலகத்தின் எழுத்தும் சொல்லும் பொருளும் அடங்கிய வழக்கும் செய்யுளும் தொகுக்கப்பட்டு, ஆய்ந்து தமிழ் இலக்கணமாகத் தொல்காப்பியம் உருவாக்கப் பட்டுள்ளதிலும் இத்தகைய கூறுகளைக் காணும் ஆய்வுகள் வர வேண்டும். தெளிவு உணர்த்திட உரையாசிரியர்களும், கால மாற்றத் திற்கேற்பக் கைவரப்பெறும் ஊடகத்திற்கேற்பப் பதிப்பாசிரியர் களும் தொல்காப்பியம் தொடர்ந்து கற்கப்பட உதவிவருகின்றனர். தமிழின் தொன்மையும் சிறப்பும் பெருமையும் தெரிந்திடத் தொல்காப்பியம் உதவுகிறது. மேலும் இன்றைய மொழியியல் ஆய்வாளர்களுக்கும் வியப்பைத் தருகிற மொழிசார் கூறுகளை நுட்பமாகவும் கொண்டிருக்கிறது என்பதும் இலக்கியக் கொள்கைகளை உருவாக்கித் தந்திருக்கிறது என்பதும் இனியும் வரும் கொள்கைகளுக்கு இடம் தருகிற வகைப்பாடுகளைக் கொண்டிருக்கிறது என்பதும் தொல்காப்பியத்தின் தனிப் பெருமைகளாகும். ஏடுகளிலிருந்த தொல்காப்பியத்தை மீட்டெடுத்து அச்சிட்ட பெருமை மழவை மகாலிங்கையருக்கு உரியது. அவர் தொல்காப்பிய எழுத்ததிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையுடன் முதன்முதலில் வெளியிட்டுள்ளார். இப்பதிப்பு 1848இல் வெளிவந்துள்ளது. தொல்காப்பியத்தின் ஏனைய அதிகாரங்களும் அவற்றின் உரைகளும் இன்னும் பல ஆண்டுகள் கடந்தே வெளிவந்துள்ளன. சேனாவரையர் உரையுடன் சொல்லதிகாரத்தை 1868இல் சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பித்தார். 1882இல் நச்சினார்க்கினியர் உரையுடன் பதிப்பித்தார். தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கு முதல் ஐந்து இயல் களுக்கு நச்சினார்கினியர் உரையும். அதன் எஞ்சிய நான்கு இயல்களுக்குப் பேராசிரியர் உரையும் கிடைத்துள்ளன. இவற்றைக் கொண்டு 1885இல் தொல்காப்பியப் பொருளதிகாரத்தை இவர் பதிப்பித்துள்ளார். பின்னர், தொல்காப்பிய எழுத்ததிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையுடன் இவர் 1891இல் பதிப்பித்துள்ளார். அதன் பின்னர் மூலம் மட்டும் தனியாகவும் வந்துள்ளது. மூலமும் உரைகளும் தனித்தனியே வெளியிடப் பெற்றும் வந்துள்ளன. கையடக்க அளவிலும் தொல்காப்பியம் அச்சிடப் பெற்றுள்ளது. கூடவே தெளிவுரை, குறிப்புரை, எளிய உரை, மாணவர்க்கான உரை, பாடபேத ஆய்வு என இதுவரை நூற்றுக்கும் அதிகமான பதிப்புகள் தொல்காப்பியத்திற்கு வெளிவந்துள்ளன. இத்தகைய முயற்சிகளுக்குப் பின்பும் கூட, தொல்காப்பியத்தை முழுமையாக, முறையாக, இன்னும் அறிந்து கொள்வதில் இடர்ப்பாடுகள் இருந்து வருகின்றன. இவை தொல்காப்பியத்தின் சிறப்புப் பண்புகளாகவும் நோக்குதற்குரியன. தொல்காப்பியத்தின் நச்சினியார்க்கினியர் உரை மற்றும் அவருரை கிடைக்காத இயல்களுக்குப் பேராசிரியருரைகளை முழுமையாக வெளியிட்ட சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்களின் தமிழ்த் தொண்டினைப் பாராட்டும் பொருட்டு ஈழகேசரி அதிபர் நா. பொன்னையா பிள்ளை 1937இல் சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பித்த நச்சினார்க்கினியர் உரையுடன் கூடிய தொல்காப்பிய எழுத்ததிகாரத்தை மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் கொண்டுவர விரும்பினார். அப்பதிப்பிற்கு அப்போது தமிழ் இலக்கண அறிவு மிகவும் கைவரப்பெற்றவராக இருந்த யாழ்ப்பாணம் புன்னாலைக் கட்டுவனைச் சேர்ந்த சி. கணேசையர் உதவவேண்டும் என அவரை அணுகியுள்ளார். நச்சினார்க்கினியர் உரைக்கு மேலுமொரு விளக்கமாக உரையொன்றைச் செய்ய உடல் நலமின்மை காரணமாகச் சி. கணேசையரால் அப்போது இயலவில்லை. அந்நிலையில் அவர் கற்ற காலத்தும் கற்பித்த காலத்தும் குறித்தும் வைத்திருந்த குறிப்புகளை அப்பதிப்பில் சேர்க்க அனுமதித்துள்ளார். மேலும் அப்பதிப்பில் தொல்காப்பியர் வரலாறு, நச்சினார்க்கினியர் வரலாறு, உதாரண அகராதி, அரும்பத விளக்கம் முதலியவற்றின் அகராதி, தொல்காப்பிய முற்பதிப்புகளில் இடம் பெறாத மேற்கோள்விளக்கம், மற்றும் இணைப்பாக இடம் பெறக் கூடிய சில இலக்கணக் குறிப்புகள் போன்றவற்றைத் தாம் எழுதியும் தம் மாணவர்களைக்கொண்டு எழுதுவித்தும் சேர்த்துள்ளார். இப்பதிப்பில் தொல்காப்பியம் ஏட்டுப்பிரதிகளை ஒப்புநோக்கி சி. கணேசையர் திருத்திய பல திருத்தங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றால் இப்பதிப்பு "கணேசையர் பதிப்பு" என்றே சிறப்புடன் அழைக்கப்படுகிறது. உரையாசிரியர் காட்டியுள்ள மேற்கோள் பாடல்களின் அருஞ் சொற்களுக்கும் கணேசையர் பொருள் தந்துள்ளார். மூலபாடங்கள் கவனமாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றுள்ளன. இவற்றை மதிப்பிட்டும் இவர்தம் உரை விளக்கக் குறிப்புகளில் எழுதியுள்ளார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் கணேசையர் பதிப்புகளாகிய, தொல்காப்பிய எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகியவற்றின் மறுபதிப்புகளை இப்போது வெளியிடுகிறது. இந்நிறுவனத் தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இந்நிறுவனத்தின் தோற்றம் முதல் தொடர்ந்து ஆக்கமும் ஊக்கமும் அளித்து நிறுவனத்தை வளர்த்து வருகிறார்கள். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு இத்தகைய பணிகளால் நிறுவனம் நன்றி செலுத்துகிறது. நிறுவனப் பணிகள் விரைவாகவும் நிறைவாகவும் அமைய ஒல்லும் வகையான் உதவி நல்கி ஆற்றுப்படுத்தும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் செயலாளர், முனைவர் கி. இராச மாணிக்கம் (இ.ஆ.ப - ஓய்வு) அவர்களுக்கு நன்றி. நிறுவனச் செயல்பாட்டுக்கு உறுதுணையாக இருந்துவரும் சிறப்பு ஆணையர் மற்றும் தமிழ் வளர்ச்சி இந்து சமய அற நிலையத்துறை மற்றும் செய்தித் துறைச் செயலாளர் திருமிகு து. இராசேந்திரன் இ.ஆ.ப. அவர்களுக்கும், இவ்வெளியீட்டிற்கு அரிய நூல் நிதியுதவித் திட்டத்தின்கீழ் அச்சிட நிதி நல்கிய தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறைக்கும், இந்நூலின் ஒளி அச்சுக் கோப்பைச் செய்தும் அச்சிட்டும் அளித்த தி பார்க்கர் நிறுவனத் தார்க்கும் நன்றி. - முனைவர் ம. இராசேந்திரன் இயக்குநர் (முழுக்கூடுதல் பொறுப்பு) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (2007) தரமணி, சென்னை - 600 113 தொல்காப்பியர் வரலாறு தொல்காப்பியமென்னும் இப்பேரிலக்கண நூலைச் செய்த தொல்காப்பியர், சமதக்கினி முனிவர் புதல்வர் என்பதும், இவரியற் பெயர் திரணதூமாக்கினியார் என்பதும் இந்நூல் பாயிரத்துள் "சமதக்கினியாருழைச்சென்று அவர் மகனார் திரண தூமாக்கினி யாரை வாங்கிக் கொண்டு," என்று நச்சினார்க் கினியர் கூறுதலானே அறியக்கிடக்கின்றன. இன்னும், அப் பாயிரத்துள் `தொல்காப்பியன்' என்பதற்குப் `பழைய காப்பியக் குடியிற் பிறத்தலின் தொல்காப்பியன் என்று பெயராயிற்று' என்று கூறுதலானே காப்பியக் குடியிற் பிறந்தவரென்பதும், சமதக்கினி புதல்வ ரென்பதனானே அந்தண குலத்தவ ரென்பதும் அறியத் தக்கன. சமதக்கினி புதல்வரென்றத னானே பரசுராமர் இவர் சகோதரராவா ரென்பதும் பெறப்படும். இராமாயணத் துள்ளே பரசுராமர் இராமரோடு போரை விரும்பிச் சென்று தோற்றதாகவும், அவருக்கு மிக முந்தினவராகவும் அறியப் படுதலினாலும், இராமராற் சீதையைத் தேடும்படி அனுப்பப் பட்ட குரங்குப்படை இடைச்சங்க மிருந்த கபாடபுரத்தை யடைந்து சென்றாக அறியப்படுதலினாலும் இடைச்சங்கப் புலவர்களாயிருந்தோர் அகத்தியருந் தொல்காப்பியரும் முதலாயினோர் என்று இறையனாரகப் பொருளுரை முதலியவற்றா னறியப்படுத லினாலும், தொல்காப்பியரும் இராமர் காலத்துக்கு மிக முந்தியவரென்பதும், தொல்காப்பிய ரிருந்து பல்லாயிரம் யாண்டுகள் சென்றன வென்பதும் அறியத் தக்கன. ஆயினும் இக்காலத்துச் சரித்திர ஆராய்ச்சிக்காரருட் சிலர், மூவாயிரம் ஆண்டு என்றும், ஆறாயிரம் ஆண்டு என்றும் இப்படிப் பலவாறாகக் கூறுகின்றனர். தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்பாளர், ராவ்பகதூர் சி.வை. தாமோதரம் பிள்ளையவர்கள் அப் பொருளதிகாரப் பதிப்புரையில் பன்னீராயிரம் ஆண்டுகளுக்குக் குறையா தென்று கூறி யிருக்கின்றனர். தமிழ் இலக்கிய வரலாறு எழுதிய சுப்பிரமணிய பிள்ளையவர்கள் கி.மு.700 ஆண்டுகளுக்குப் பிற்படாதென் கின்றனர். எவ்வாறு கூறினும் இவர் காலம் 12,000 ஆண்டுகளுக்கு மிக முற்படுமன்றிப் பிற்படாது. இனி, இடைச்சங்கத்தார்க்கு இந்நூல் இலக்கணமாக இருந்ததாக அறியப்படுதலானே முதற்சங்கத் திறுதியில் இத் தொல்காப்பியம் இயற்றப்பட்டிருத்தல் வேண்டும் என்பது ஆராய்ந்துணரத்தக்கது. இவர் வடமொழியையும் நன்கு கற்றவர் என்பது `ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்' என்பதனா னறியத் தக்கது. இவர் அகத்தியரோடு தென்னாடு புக்கபின் அவர்பாற் செந்தமிழ் இலக்கிய விலக்கணங்களைக் கற்று அவருடைய முதன் மாணாக்க ராய் விளங்கினர். அகத்தியர்பால் இவருடன் கற்றவர்கள் அதங் கோட்டாசிரியர், பனம்பாரனார், செம்பூட்சேய், வையாபிகர், அவிநயனார், காக்கைபாடினியார், துராலிங்கர், வாய்ப்பியர், கழாரம்பர், நற்றத்தர், வாமனர் என்னும் பதினொருவரு மாவர். தொல்காப்பியர் முதலாகப் பன்னிருவர் அகத்தியர் பால் ஒருங்கு கற்றனர் என்பது. மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத் தென்மலை யிருந்த சீர்சான் முனிவரன் தன்பாற் றண்டமிழ் தாவின் றுணர்ந்த துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன்முதற் பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த என்னும் புறப்பொருள் வெண்பாமாலைச் செய்யுளாலும், வீங்குகட லுடுத்த வியன்கண்ஞா லத்துத் தாங்கா நல்லிசைத் தமிழ்க்குவிளக் காகென வானோ ரேத்தும் வாய்மொழிப் பல்புக ழானாப் பெருமை அகத்திய னென்னு மருந்தவ முனிவ னாக்கிய முதனூல் பொருந்தக் கற்றுப் புரைதப வுணர்ந்தோர் நல்லிசை நிறுத்த தொல்காப் பியனும் என்னும் பன்னிரு படலச் செய்யுளானு மறியப்படும். இவராலியற்றப்பட்ட இத் தொல்காப்பியமென்னும் நூலுக்கு உரை செய் தோராகத் தெரியப்பட்டவர் இளம்பூரணர், கல்லாடர், பேராசிரியர், சேனாவரையர், நச்சினார்க் கினியர், தெய்வச் சிலையாரும் சொல்லதிகாரத்திற்கு மாத்திரமே உரை செய்தனர். இத் தொல்காப்பிய மொன்றே முன்னோரால் எமக்கு கிடைத்த மிகப் பழையதொரு நிதியாம். இதன்கண் சில சூத்திரங் களுக்குக் கடைச்சங்க நூல்களிற்கூட உதாரணமில்லாமையை நோக்கும்போது இதன் பழைமை எத்துணை என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். பன்னிரு படலத்துள் ஒரு படலமும் இவராற் செய்யப்பட்டதென்பர். இவரைப் பற்றிய பழைய உண்மைச் சரிதங்கள் கிடையாமையால் இஃது மிகச் சுருக்கி எழுதப்பட்டது என்க. சி. கணேசையர் நச்சினார்க்கினியர் வரலாறு செந்தமிழ்ப் புலமையிற் சிறந்து விளங்கிய உரையாசிரிய ராகிய நச்சினார்க்கினியர் பாண்டிவளநாட்டிலே மதுராபுரி யிலே பிறந்தவர். அஃது "கரைபெற்றதோர் பஞ்சலட்சணமான" என்னும் பாண்டி மண்டல சதகச் செய்யுளானும், "வண்டிமிர் சோலை மதுரா புரிதனி லெண்டிசை விளங்க வந்த ஆசான்" என்னும் உரைப்பாயிரச் செய்யுளடிகளானுந் தெளிவாகும். இவர் பாரத்துவாச கோத்திரவர். பார்ப்பன மரபினர். அஃது, இவர் எழுதிய உரைகளின் இறுதியில், "பாரத்துவாசி நச்சினார்க் கினியர் மாமறையோன்" என்னும் உரைப்பாயிரச் செய்யுட் பகுதியானும் உணரப்படும். இவர் சமயம் சைவமாகும். "ஓரெழுத்தொருமொழி" (தொல். மொழிமரபு-12) என்னுஞ் சூத்திர வுரைக்கண், "திருச்சிற்றம்பலம்", "பெரும்பற்றப்புலியூர்" என்னுஞ் சிவ தலங்களின், பெயரைக் குறிப்பிடலானும், தம் உரையகத்துத் திருவாசகம். திருக்கோவையார் முதலிய சைவநூல்களிலிருந்து மேற்கோள் காட்டலானும், திருமுருகாற்றுப்படை உரையகத்துக் கூறிய சிலபகுதி களானும் அது துணிதலாகும். இவர் தந்தையார் பெயர் இதுவெனத் துணிதற்குத் தக்க ஆதாரம் யாதுமில்லை. இவர் பெயர் நச்சினார்க்கினியர் என்பதாகும். அது சிவபெருமானுக்குரிய திருநாமங்களு ளொன்றாகக் கருதப்படு கிறது. அக்கூற்றிற்கு, "இச்சையான் மலர்கடூவி யிரவொடு பகலுந் தம்மை - நச்சுவார்க் கினியர் போலு நாகவீச் சுரவனாரே" (திருநாகேச்சுரம்-தே) "நச்சினார்க்கினியாய் போற்றி யெனத்துதி நவிலுங் காலை" (காஞ்சிபுராணம் - சத்ததான - 11) என்பன ஆதாரமாம். இவர் தமிழ்மொழியை நன்கு கற்றுத் தேறிப் புலமை வாய்க்கப் பெற்றவர். இலக்கண இலக்கியங்களிலன்றி யேனைய கலைகளிலும் நிரம்பியஅறிவு படைத்தவர். ஆரியமொழிப் பயிற்சியுமுடையவர். அது, தொல்காப்பிய முதலியவற்றிற்கு இவர் எழுதியவுரைகளிடையே ஏனைக் கலைகள் சம்பந்தமாக வரும் பகுதிகட்கு எழுதியுள்ள விசேட வுரைகளானும், இன்னும் அவ் வுரையகத்து வேத வேதாங்கங்களிலிருந்து பல பொருள்களை யெடுத்துக் காட்டிச் சேறலானும் நன்கு தெளிவாகும். இவரைக் கற்பித்தவாசிரியர் யாவரெனத் தெரிந்து கொள்ள முடியவில்லை. இவர் புதுவதாகத் தாமோர் நூலியற்றியிருப்பதாகத் தெரிய வில்லை. இவரின் வாணாள் முழுவதும் பண்டைத்தமிழ் நூல்கட்கு உரையெழுதுவதிலேயே கழிவதாயிற்று. இவராலுரை காணப் பட்டன தொல்காப்பியம், பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவக சிந்தாமணி, குறுந்தொகை யிருபது செய்யுள் என்பனவாம் அது. "பாரத்தொல்காப்பியமும் பத்துப்பாட் டுங்கலியு-மாரக் குறுந் தொகையுளைந் நான்குஞ் - சாரத் - திருத்தகு மாமுனிசெய் சிந்தாமணியும் - விருத்தி நச் சினார்க்கினியமே" என்னு முரைப் பாயிரச் செய்யுளாலறிய லாகும். இவர் பதசார மெழுதுவதினும், முடிபு காட்டுவதினும், விளங்காத பகுதிகளை நன்கு விளக்குவதினும், போதிய மேற் கோள்களை யெடுத்தாளுவதினும், நூலாசிரியரின் கருத்தை யுணர்ந்து உரைகாண்டலினும் எனையுரையாசிரியர்களைக் காட்டினும் மிக்க திறமை படைத்தவர். உரையெழுதுவதில் இவரை வடமொழிப் புலவராகிய மல்லிநாதசூரியோடு ஒப்பிட்டுக் கூறுவது மிகவும் பொருத்தமாகும். இவர் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டாகும். அது நச்சினார்க்கினிய ருரையகத்துப் பேராசிரியர் கூற்றை மறுக்கும் பகுதி காணப்படலானும், பேராசிரியருரையகத்து திருநாவுக்கரசு நாயனார் தேவாரமொன்று மேற்கோளாகக் காணப்படலானும், நாயனார் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியெனச் சிலாசாஸனங்களாற் றுணியப்பட்டிருத்த லானும், திருமுருகாற் றுப்படை திருமுறைகளுளொன்றாகச் சேர்க்கப் பெற்றகாலம் கி.பி. பத்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதியாமாகலானும், அந்நூலு ரையகத்து இவ் விசேடசெய்தி யாதொன்றுங் கூறப்படா மையானும், எட்டாம் நூற்றாண்டிற்கும் பத்தாம் நூற்றாண்டிற்கு மிடைப்பட்டகாலமே இவர் காலமாதல் கூடுமெனக் கருதப்பட லானு மொருவாறு புலனாகும். சி. கணேசையர் நச்சினார்க்கினியம் பொதுப் பாயிரம் வடவேங்கடந் தென்குமரி யாயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலி னெழுத்துஞ் சொல்லும் பொருளு நாடிச் செந்தமி ழியற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட வெண்ணிப் புலந்தொகுத் தோனே போக்கறு பனுவ னிலந்தரு திருவிற் பாண்டிய னவையத் தறங்கரை நாவி னான்மறை முற்றிய வதங்கோட் டாசாற் கரிறபத் தெரிந்து மயங்கா மரபி னெழுத்துமுறை காட்டி மல்குநீர் வரைப்பி னைந்திர நிறைந்த தொல்காப் பியனெனத் தன்பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்த படிமை யோனே. என்பது பாயிரம். எந்நூல் உரைப்பினும் அந்நூற்குப் பாயிரம் உரைத்து உரைக்க என்பது இலக்கணம். என்னை? ஆயிர முகத்தா னகன்ற தாயினும் பாயிர மில்லது பனுவ லன்றே என்றாராகலின். பாயிரமென்றது புறவுரையை. நூல் கேட்கின்றான் புறவுரை கேட்கிற் கொழுச்சென்றவழித் துன்னூசி இனிது செல்லுமாறு போல அந்நூல் இனிது விளங்குதலிற் புறவுரை கேட்டல் வேண்டும். என்னை? பருப்பொருட் டாகிய பாயிரங் கேட்டார்க்கு நுண்பொருட் டாகிய நூல் இனிது விளங்கும் என்றாராகலின். அப்பாயிரந்தான் தலையமைந்த யானைக்கு வினை யமைந்த பாகன் போலவும், அளப்பரிய ஆகாயத்திற்கு விளக்க மாகிய திங்களும் ஞாயிறும் போலவும், நூற்கு இன்றியமையாச் சிறப்பிற்றாயிருத்தலின், அது கேளாக்காற் குன்று முட்டிய குரீஇப் போலவும், குறிச்சிபுக்க மான்போலவும் மாணாக்கன் இடர்ப்படு மென்க. அப்பாயிரம் பொதுவுஞ் சிறப்புமென இருவகைத்து. அவற்றுட் பொதுப் பாயிரம் எல்லாநூன்முகத்தும் உரைக்கப் படும். அதுதான் நான்கு வகைத்து. ஈவோன் றன்மை யீத லியற்கை கொள்வோன் தன்மை கோடன் மரபென வீரிரண் டென்ப பொதுவின் றொகையே. என்னும் இதனான் அறிக. ஈவோர் - கற்கப்படுவோருங் கற்கப்படாதோருமென இருவகையர். அவருட் கற்கப்படுவோர் நான்கு திறத்தார். மலைநிலம் பூவே துலாக்கோலென் றின்ன ருலைவி லுணர்வுடை யோர். இதனுள், மலையே, அளக்க லாகாப் பெருமையு மருமையு மருங்ககல முடைமையு மேறற் கருமையும் பொருந்தக் கூறுப பொச்சாப் பின்றி நிலத்தி னியல்பே நினைக்குங் காலைப் பொறையு டைமையொடு செய்பாங் கமைந்தபின் விளைதல் வண்மையும் போய்ச்சார்ந் தோரை யிடுதலு மெடுத்தலு மின்னண மாக வியையக் கூறுப வியல்புணர்ந் தோரே. பூவின தியல்பே பொருந்தக் கூறின் மங்கல மாதலுங் நாற்ற முடைமையு காலத்தின் மலர்தலும் வண்டிற்கு ஞெகிழ்தலும் கண்டோ ருவத்தலும் விழையப் படுதலு முவமத் தியல்பி னுணரக் காட்டுப. துலாக்கோ லியல்பே தூக்குங் காலை மிகினுங் குறையினு நில்லா தாகலு மையந் தீர்த்தலு நடுவு நிலைமையோ டெய்தக் கூறுப வியல்புணர்ந் தோரே. என நான்குங் கண்டுகொள்க. இனிக் கற்கப்படாதோரும் நான்கு திறத்தார். கழற்பெய் குடமே மடற்பனை முடத்தெங்கு குண்டிகைப் பருத்தியோ டிவையென மொழிப. இதனுட் 1கழற்பெய்குடமாவது கொள்வோனுணர்வு சிறிதா யினுந் தான் கற்றதெல்லாம் ஒருங்குரைத்தல். 2மடற்பனை யென்பது பிறராற் கிட்டுதற்கு அரிதாகி இனிதாகிய பயன்களைக் கொண்டிருத்தல். 3முடத்தெங் கென்பது ஒருவர் நீர்வார்க்கப் பிறர்க்குப் பயன்படுவது போல ஒருவர் வழிபடப் பிறர்க்கு உரைத்தல். 4குண்டிகைப் பருத்தியென்பது சொரியினும் வீழாது சிறிதுசிறிதாக வாங்கக் கொடுக்குமது போலக் கொள்வோ னுணர்வு பெரிதாயினுஞ் சிறிது சிறிதாகக் கூறுதல்.. இனி, ஈத லியல்பே யியல்புறக் கிளப்பிற் பொழிப்பே யகல நுட்ப மெச்சமெனப் பழிப்பில் பல்லுரை பயின்ற நாவினன் புகழ்ந்த மதியிற் பொருந்து மோரையிற் றிகழ்ந்த வறிவினன் றெய்வம் வாழ்த்திக் கொள்வோ னுணர்வதை யறிந்தவன் கொள்வரக் கொடுத்தன் மரபெனக் கூறினர் புலவர் இதனான் அறிக. இனிக் கொள்வோருங் கற்பிக்கப்படுவோருங் கற்பிக்கப் படாதோரு மென இருவகையர். அவருட் கற்பிக்கப்படுவோர் அறுவகையர். அவர்தாம், தன்மக னாசான் மகனே மன்மகன் பொருணனி கொடுப்போன் வழிபடு வோனே யுரைகோ ளாளனோ டிவரென மொழிப. இவர் தன்மை, 5அன்னங் கிளியே நன்னிற நெய்யரி யானை யானே றென்றிவை போலக் கூறிக் கொள்ப குணமாண் டோரே. இதனான் அறிக. இனிக் கற்பிக்கப்படாதோர் எண்வகையர். மடிமானி பொச்சாப்பன் காமுகன் கள்வ னடுநோய்ப் பிணியாள னாறாச் சினத்தன் றடுமாறு நெஞ்சத் தவனுள்ளிட் டெண்மர் நெடுநூலைக் கற்கலா தார். என இவர். இவர் தன்மை, 6குரங்கெறி விளங்கா யெருமை யாடே தோணி யென்றாங் கிவையென மொழிப. இதனான் அறிக. இவருட் களங்கடியப்பட்டார். மொழிவ துணராதார் முன்னிருந்து காய்வார் படிறு பலவுரைப்பார் பல்கா னகுவார் திரிதரு நெஞ்சத்தார் தீயவை யோர்ப்பார் கடியப்பட் டாரவையின் கண். இனிக் கோடன் மரபு. கோடன் மரபு கூறுங் காலைப் பொழுதொடு சென்று வழிபடன் முனியான் முன்னும் பின்னு மிரவினும் பகலினு மகலா னாகி யன்பொடு கெழீஇக் குணத்தொடு பழகிக் குறிப்பின் வழிநின் றாசற வுணர்ந்தோன் வாவென வந்தாங் கிருவென விருந்தே டவிழென வவிழ்த்துச் சொல்லெனச் சொல்லிச் செல்லெனச் சென்று பருகுவ னன்ன வார்வத்த னாகிச் சித்திரப் பாவையி னத்தக வடங்கிச் செவிவா யாக நெஞ்சுகள னாகக் கேட்டவை கேட்டவை வல்ல னாகிப் போற்றிக் கோட லதனது பண்பே. எத்திற மாசா னுவக்கு மத்திற மறத்திற் றிரியாப் படர்ச்சிவழி பாடே. செவ்வன் றெரிகிற்பான் மெய்நோக்கிக் காண்கிற்பான் பல்லுரையுங் கேட்பான் மிகப்பெரிதுங் காதலான் றெய்வத்தைப் போல மதிப்பான் றிரிபில்லா னிவ்வாறு மாண்பு முடையாற் குரைப்பவே செவ்விதி னூலைத் தெரிந்து. வழக்கி னிலக்கண மிழுக்கின் றறிதல் பாடம் போற்றல் கேட்டவை நினைத்த லாசாற் சார்ந்தவை அமைவரக் கேட்ட லம்மாண் புடையோர் தம்மொடு பயிறல் வினாதல் வினாயவை விடுத்தலென் றின்னவை கடனாக் கொளினே மடம்நனி யிகக்கும். அனைய னல்லோன் கேட்குவ னாயின் வினையி னுழப்பொடு பயன்றலைப்ப படாஅன். அனைய னல்லோ னம்மர பில்லோன் கேட்குவ னாயிற் கொள்வோ னல்லன். இவற்றான் உணர்க. இம்மாணாக்கன் முற்ற உணர்ந்தானாமாறு: ஒருகுறி கேட்போ னிருகாற் கேட்பிற் பெருக நூலிற் பிழைபா டிலனே. முக்காற் கேட்பின் முறையறிந் துரைக்கும். ஆசா னுரைத்த தமைவரக் கொளினுங் காற்கூ றல்லது பற்றல னாகும். அவ்வினை யாளரொடு பயில்வகை யொருபாற் செவ்விதி னுரைப்ப அவ்விரு பாலு மையறு புலமை மாண்புநனி யுடைத்தே. பிறர்க்குரை யிடத்தே நூற்கலப் பாகுந் திறப்பட வுணருந் தெளிவி னோர்க்கே. இவற்றான் அறிக. பொதுப் பாயிரம் முற்றிற்று. கணேசய்யர் அடிக்குறிப்புகள் 1. 'பெய்தமுறை யன்றிப் பிறழ வுடன்றருஞ் - செய்தி கழற்பெய்குடத்தின் சீரே.' 2. `தானே தரக்கொளி னன்றித் தன்பான் - மேவிக் கொளக்கொடா விடத்தது மடற்பனை.' 3. `பல்வகை யுதவி வழிபடு பண்பி - னல்லோ ரொழித் தல்லோர்க் களிக்குமுடத் தெங்கே.' 4. `அரிதிற் பெயக்கொண் டப்பொரு டான்பிறர்க் - கெளிதீ வில்லது பருத்திக் குண்டிகை.' 5. `பாலு நீரும் பாற்படப் பிரித்தலன்னத் தியல்பென வறிந்தனர் கொளலே.' `கிளந்தவா கிளத்தல் கிளியின தியல்வே.' எந்நிறந் தோய்தற்கு மேற்ப தாத - னன்னிறத் தியல்பென நாடினர் கொளலே. `நல்லவை யகத்திட்டு நவைபுறத் திடுவது - நெய்யரி மாண்பென நினைதல் வேண்டும்.' `குழுவுபடூஉப் புறந்தருதல் குஞ்சரத் தியல்பே.' `பிறந்த வொலியின் பெற்றியோர்ந் துணர்தல் - சிறந்த வானேற்றின் செய்தி யென்ப.' 6. `கல்லா லெறிந்து கருதுபயன் கொள்வோன் - குரங்கெறி விளங்கா யாமெனக் கூறுப.' `விலங்கி வீழ்ந்து வெண்ணீ ருழக்கிக் - கலங்கல்செய் தருந்தல் காரா மேற்றே.' `ஒன்றிடை யார வுறினுங் குளகு - சென்றுசென் றருந்தல் யாட்டின் சீரே.' `நீரிடை யன்றி நிலத்திடை யோடாச் - சீருடை யதுவே தோணி யென்ப.' நச்சினார்க்கினியர் சிறப்புப் பாயிரம் இனிச் சிறப்புப்பாயிரமாவது தன்னால் உரைக்கப்படும் நூற்கு இன்றியமையாதது. அது பதினொரு வகையாம். ஆக்கியோன் பெயரே வழியே யெல்லை நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே கேட்போர் பயனோ டாயெண் பொருளும் வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே. காலங் களனே காரண மென்றிம் மூவகை யேற்றி மொழிநருமு உளரே. இப்பதினொன்றும் இப்பாயிரத்துள்ளே பெறப்பட்டன. இனிச் சிறப்புப்பாயிரத் திலக்கணஞ் செப்புமாறு: பாயிரத் திலக்கணம் பகருங் காலை நூனுதல் பொருளைத் தன்னகத் தடக்கி யாசிரிய மானும் வெண்பா வானு மருவிய வகையா னுவறல் வேண்டும். இதனான் அறிக. நூல்செய்தான் பாயிரஞ். செய்தானாயிற் றன்னைப் புகழ்ந்தானாம். தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினுந் தான்றற் புகழ்த றகுதி யன்றே என்பவாகலின். பாயிரஞ் செய்வார் தன் ஆசிரியருந் தன்னோடு ஒருங்குகற்ற ஒருசாலை மாணாக்கருற் தன் மாணாக்கருமென இவர். அவருள் இந்நூற்குப் பாயிரஞ் செய்தார் தமக்கு ஒருசாலை மாணாக்கராகிய பனம்பாரனார். இதன் பொருள்: வடவேங்கடந் தென் குமரி ஆயிடை - வடக்கின்கண் வேங்கடமுந் தெற்கின்கட் குமரியுமாகிய அவ் விரண் டெல்லைக் குள்ளிருந்து, தமிழ் கூறும் நல் உலகத்து வழக்குஞ் செய்யுளும் ஆ இரு முதலின் - தமிழைச் சொல்லும் நல்லாசிரியரது 1வழக்குஞ் செய்யுளுமாகிய அவ்விரண்டையும் அடியாகக் கொள்ளுகையினாலே, செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்து நூல் கண்டு - அவர் கூறுஞ் செந்தமிழ் இயல்பாகப் பொருந்திய செந்தமிழ் நாட்டிற்கு இயைந்த வழக்கோடே முன்னை யிலக்கணங்கள் இயைந்தபடியை முற்றக் கண்டு, முறைப்பட எண்ணி - அவ்விலக்கணங்க ளெல்லாஞ் சில்வாழ்நாட் பல்பிணிச் சிற்றறிவி னோர்க்கு அறியலாகாமையின் யான் இத்துணை வரையறுத்து உணர்த்துவலென்று அந்நூல் களிற் கிடந்தவாறன்றி அதிகார முறையான் முறைமைப்படச் செய்தலை எண்ணி, எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி - அவ்விலக்கணங்களுள் எழுத்தினையுஞ் சொல்லினையும் பொருளினையும் ஆராய்ந்து, போக்கு அறு பனுவல் - பத்துவகைக் குற்றமுந் தீர்ந்து முப்பத்திரண்டுவகை உத்தியொடு புணர்ந்த இந்நூலுள்ளே, மயங்கா மரபின் எழுத்து முறை காட்டிப் புலந் தொகுத்தோனே - அம்மூவகை இலக்கணமும் மயங்காமுறைமை யாற் செய்கின்றமையின் எழுத்திலக் கணத்தை முன்னர்க் காட்டிப் பின்னர் ஏனை யிலக்கணங்களையுந் தொகுத்துக் கூறினான்; நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து - மாற்றாரது நிலத்தைக் கொள்ளும் போர்த் திருவினையுடைய பாண்டியன் மாகீர்த்தி அவையின் கண்ணே, அறங்கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட்டாசாற்கு அரில் தபத் தெரிந்து - அறமே கூறும் நாவினையுடைய நான்கு வேதத்தினையும் முற்ற அறிந்த அதங்கோடென்கிற ஊரின் ஆசிரியனுக்குக் குற்றமற ஆராய்ந்து கூறி, மல்குநீர் வரைப்பின் ஐந்திரம்நிறைந்த தொல்காப்பிய னெனத் தன் பெயர் தோற்றி - கடல் சூழ்ந்த உலகின் கண்ணே ஐந்திர வியாகரணத்தை நிறைய அறிந்த பழைய காப்பியக் குடியினுள்ளோனெனத் தன் பெயரை மாயாமல் நிறுத்தி, பல்புகழ் நிறுத்த படிமையோனே - பல புகழ்களையும் இவ்வுலகின்கண்ணே மாயாமல் நிறுத்திய தவவேடத்தை யுடையோன் என்றவாறு. இருந்து தமிழைச் சொல்லும் என்க; கொள்ளுகையினாலே பொருந்திய நாடு என்க; கண்டு எண்ணி ஆராய்ந்து தன்னூலுள்ளே தொகுத்தான்; அவன் யாரெனின் அவையின் கண்ணே கூறி உலகின் கண்ணே தன் பெயரை நிறுத்திப் புகழை நிறுத்திய படிமையோன் என்க. இப்பாயிரமுஞ் செய்யுளாதலின் இங்ஙனம் மாட்டுறுப்பு நிகழக் கூறினார். இதற்கு இங்ஙனங் கண்ணழித்தல் 2உரையாசிரியர் கருத்தென்பது அவருரையான் உணர்க. இனி மங்கலமரபிற் காரியஞ்செய்வார் வடக்குங் கிழக்கும் நோக்கியுஞ் சிந்தித்தும் நற்கருமங்கள் செய்வாராதலின் மங்கல மாகிய வடதிசையை முற்கூறினார், இந்நூல் நின்று நிலவுதல் வேண்டி. தென்புலத்தார்க்கு வேண்டுவன செய்வார் தெற்கும் மேற்கும் நோக்கியுங் கருமங்கள் செய்வாராதலின் தென் திசையைப் பிற்கூறினார். நிலங்கடந்த நெடுமுடியண்ணலை நோக்கி உலகந் தவஞ்செய்து வீடு பெற்ற மலையாதலானும், எல்லாரானும் அறியப்படுதலானும் வேங்கடத்தை எல்லையாகக் கூறினார். குமரியுந் தீர்த்தமாகலின் எல்லையாகக் கூறினார். இவ்விரண்டனையுங் காலையே ஓதுவார்க்கு நல்வினை யுண்டாமென்று கருதி இவற்றையே கூறினார். இவையிரண்டும் அகப்பாட்டெல்லை யாயின. என்னை? குமரியாற்றின் தெற்கு நாற்பத்தொன்பது நாடு கடல் கொண்டதாகலின். கிழக்கும் மேற்குங் கடலெல்லையாக முடிதலின் வேறெல்லை கூறாரா யினார். வேங்கடமுங் குமரியும் யாண்டைய என்றால் வடவேங்கடந் தென்குமரியென வேண்டுதலின் அதனை விளங்கக் கூறினார். உலகமென்றது பல பொருளொருசொல்லாதலின் ஈண்டு உயர்ந்தோரை உணர்த்திற்று, உலகம் அவரையே கண்ணாக வுடைமையின்; என்னை? வழக்கெனப் படுவ துயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி யவர்கட் டாக லான (மரபியல். 92) என மரபியலுட் கூறுதலின். அவ்வுயர்ந்தோராவார், அகத்திய னாரும் மார்க்கண்டேயனாருந் தலைச்சங்கத்தாரும் முதலாயி னோர். உலகத்து - உலகத்தினுடைய என விரிக்க. வழக்காவது, சிலசொற் பிறந்த அக்காலத்து இஃது அறத்தை உணர்த்திற்று, இது பொருளை உணர்த்திற்று, இஃது இன்பத்தை உணர்த்திற்று, இது வீட்டை உணர்த்திற்று என்று உணர்விப்பது. செய்யுளாவது, பாட்டுரை நூலே (செய்யு. 78) என்னுஞ் செய்யுளியற் சூத்திரத்தாற் கூறிய ஏழு நிலமும் அறமுதலிய மூன்று பொருளும் பயப்ப நிகழ்வது. முதலின் என்றது முதலுகை யினாலே என்றவாறு. எழுத்தென்றது யாதனையெனின், கட்புலனாகா உருவுங் கட்புலனாகிய வடிவுமுடைத்தாக வேறு வேறு வகுத்துக்கொண்டு தன்னையே உணர்த்தியுஞ் சொற்கு இயைந்தும் நிற்கும் ஓசை யையாம். கடலொலி சங்கொலி முதலிய ஓசைகள் பொருளு ணர்த்தாமையானும் முற்குவீளை இலதை முதலியன பொருளு ணர்த்தின வேனும் எழுத்தாகாமையானும் அவை ஈண்டுக் கொள்ளாராயினர். ஈண்டு உருவென்றது மனனுணர்வாய் நிற்கும் கருத்துப் பொருளை. அது செறிப்பச்சேறலானுஞ், செறிப்ப வருதலானும், இடையெறியப்படுதலானு, இன்பதுன்பத்தை யாக்கலானும், உருவு முருவுங்கூடிப் பிறத்தலானும், உந்தி முதலாகத் தோன்றி எண்வகை நிலத்தும் பிறந்து கட்புலனாந் தன்மையின்றிச் செவிக்கட்சென்று உறும் ஊறுடைமையானும், விசும்பிற் பிறந்து இயங்குவதோர் தன்மையுடைமையானும் காற்றின் குணமாவதோர் உருவாம். வன்மை மென்மை இடைமை கோடலானும் உருவேயாயிற்று. இதனைக் காற்றின் குணமே யென்றல் இவ்வாசிரியர் கருத்து. இதனை விசும்பின் குணமென் பாரும் உளர். இவ்வுரு, உரு வுருவாகி (எழு. 47) எனவும், உட்பெறு புள்ளி உருவாகும்மே (எழு. 14) எனவும் காட்சிப் பொருட்குஞ் சிறுபான்மை வரும். வடிவாவது கட்புலனாகியே நிற்கும். அது வட்டஞ் சதுரம் முதலிய முப்பத்திரண்டனுள் ஒன்றை உணர்த்தும். மனத்தான் உணரும் நுண்ணுணர்வில் லோரும் உணர்தற்கு எழுத்துகட்கு வேறு வேறு வடிவங் காட்டி எழுதப்பட்டு நடத்தலிற் கட்புலனாகிய வரிவடிவும் உடையவாயின. இதற்கு விதி உட்பெறுபுள்ளி யுருவா கும்மே (எழு. 14) என்னுஞ் சூத்திரம் முதலியனவாம். இவற்றாற் பெரும்பான்மை மெய்க்கே வடிவு கூறினார். எகர ஒகரத் தியற்கையு மற்றே (எழு. 16) என உயிர்க்குஞ் சிறுபான்மை வடிவு கூறினார். இனித் தன்னை உணர்த்தும் ஓசையாவது, தன் பிறப்பையும் மாத்திரையையுமே அறிவித்துத் தன்னைப் பெற நிகழும் ஓசை. சொற்கு இயையும் ஓசையாவது, ஓரெழுத்தொருமொழி முதலியவாய் வரும் ஓசை. இனிச் சொலென்றது யாதனையெனின், எழுத்தினான் ஆக்கப்பட்டு இருதிணைப்பொருட்டன்மையையும் ஒருவன் உணர்தற்கு நிமித்தமாம் ஓசையை. இவ்வுரைக்குப்பொருள் சொல்லதிகாரத்துட் கூறுதும். ஈண்டு டறலள (எழு. 23) என்னுஞ் சூத்திர முதலியவற்றான் மொழியாக மயங்குகின்றனவும் அவ் வாக்கத்தின்கண் அடங்குமென்று உணர்க. எழுத்துச் சொற்கு அவயவமாதலின் அதனை முற்கூறி அவயவியாகிய சொல்லைப் பிற்கூறினார். இனிப் பொரு ளென்றது யாதனையெனின், சொற்றொடர் கருவியாக உணரப்படும் அறம் பொருளின்பமும் அவற்றது நிலையும் நிலையாமையுமாகிய அறுவகைப்பொருளுமாம். அவை பொருளதிகாரத்துட் கூறுதும். வீடு கூறாரே வெனின், அகத்தியனாருந் தொல்காப்பியனா ரும் வீடு பேற்றிற்கு நிமித்தங் கூறுதலன்றி வீட்டின்தன்மை இலக்கணத்தாற் கூறாரென்றுணர்க. அஃது, அந்நிலை மருங்கி னறமுத லாகிய மும்முதற் பொருட்கு முரிய வென்ப (செய்யு. 106) என்பதனான் உணர்க. இக்கருத்தானே வள்ளுவனாரும் முப்பா லாகக் கூறி. மெய்யுணர்தலான் வீடுபேற்றிற்கு நிமித்தங் கூறினார். செந்தமிழ் - செவ்விய தமிழ். முந்துநூல் - அகத்தியமும் மா புராணமும் பூதபுராண மும் இசைநுணுக்கமும். அவற்றுட் கூறிய இலக்கணங்க ளாவன எழுத்துச் சொற் பொருள் யாப்பும் சந்தமும் வழக்கியலும் அரசியலும் அமைச்சியலும் பார்ப்பன வியலுஞ் சோதிடமும் காந்தருவமுங் கூத்தும் பிறவுமாம். புலமென்றது, இலக்கணங்களை. பனுவ லென்றது, அவ்விலக்கணங்களெல்லாம் அகப்படச் செய்கின்ற தொர் குறியை. அதனை இதனுட் கூறுகின்ற உரைச்சூத்திரங்களானும் மரபிய லானும் உணர்க. பாண்டியன் மாகீர்த்தி இருபத்துநாலாயிரம் யாண்டு வீற்றிருந்தானாதலின் அவனும் அவன் அவையிலுள்ளோரும் அறிவுமிக்கிருத்தலின் அவர்கள் கேட்டிருப்ப அதங்கோட்டா சிரியர் கூறிய கடாவிற்கெல்லாங் குற்றந்தீர விடைகூறுதலின் அரிறப என்றார். அகத்தியனார் அதங்கோட்டாசிரியரை நோக்கி. நீ தொல் காப்பியன் செய்த நூலைக் கேளற்க வென்று கூறுதலானும், தொல்காப்பியனாரும் பல்காலுஞ்சென்று யான் செய்த நூலை நீர் கேட்டல் வேண்டும் என்று கூறுதலானும், இவ்விருவரும் வெகுளாமல் இந்நூற்குக் குற்றங் கூறிவிடுவனெக் கருதி அவர் கூறிய கடாவிற்கெல்லாம் விடை கூறுதலின், அரிறபத் தெரிந்து என்றார். அவர் கேளன்மி னென்றற்குக் காரண மென்னையெனின், தேவரெல்லாருங் கூடி யாஞ் சேரவிருத்தலின் மேருத் தாழ்ந்து தென்றிசை உயர்ந்தது; இதற்கு அகத்தியனாரே ஆண்டிருத்தற் குரியரென்று அவரை வேண்டிக்கொள்ள, அவருந் தென்றிசைக்கட் போதுகின்றவர் கங்கையாருழைச் சென்று காவிரியாரை வாங்கிக் கொண்டு, யமதக்கினியாருழைச் சென்று அவர் மகனார் திரணதூமாக்கினியாரை வாங்கிக் கொண்டு, புலத்தியனாருழைச் சென்று அவருடன்பிறந்த குமரியார் உலோபா முத்திரையாரை அவர் கொடுப்ப நீரேற்று இரீஇப் பெயர்ந்து, துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண் மரையும் பதினெண்குடி வேளிருள்ளிட்டாரையும் அருவாளரையுங் கொண்டு போந்து, காடு கெடுத்து நாடாக்கிப் பொதியின் கணிருந்து, இராவணனைக் கந்தருவத்தாற் பிணித்து, இராக்கதரை ஆண்டு இயங்காமை விலக்கித் திரண தூமாக்கினியாராகிய தொல்காப்பியனாரை நோக்கி, நீ சென்று குமரியாரைக் கொண்டு வருக வெனக்கூற, அவரும் எம்பெருமாட்டியை எங்ஙனங் கொண்டு வருவ லென்றார்க்கு, முன்னாகப் பின்னாக நாற்கோல் நீளம் அகல நின்று கொண்டுவருக வென அவரும் அங்ஙனங் கொண்டு வருவழி, வையை நீர் கடுகிக் குமரியாரை ஈர்த்துக் கொண்டு போகத், தொல்காப்பியனார் கட்டளையிறந்துசென்று ஓர் வெதிர்ங் கோலை முறித்து நீட்ட, அதுபற்றி யேறினார்; அது குற்றமென்று அகத்தியனார் குமரியாரையும் தொல்காப்பிய னாரையுஞ் சுவர்க்கம் புகாப்பீர் எனச் சபித்தார். யாங்கள் ஒரு குற்றமுஞ் செய்யாதிருக்க எங்களைச் சபித்தமையான் எம்பெரு மானுஞ் சுவர்க்கம் புகாப்பீர் என அவர் அகத்தியனாரைச் சபித்தார். அதனான் அவர் வெகுண்டாராதலின் அவன் செய்த நூலைக் கேளற்க வென்றா ரென்க. நான்கு கூறுமாய் மறைந்த பொருளும் உடைமையான் நான் மறை என்றார். அவை தைந்திரியமும் பௌடிகமுந் தலவகாரமுஞ் சாமவேதமுமாம். இனி இருக்கும் யசுவும் சாமமும் அதர்வணமு மென்பாருமுளர். அது பொருந்தாது; இவர் இந்நூல் செய்த பின்னர் வேதவியாதர் சின்னாட் பல்பிணிச் சிற்றறிவினோர் உணர்தற்கு நான்கு கூறாக இவற்றைச் செய்தாராதலின். முற்கூறிய நூல்கள்போல எழுத்திலக்கணமுஞ் சொல்லிலக் கணமும் மயங்கக் கூறாது வேறோர் அதிகாரமாகக் கூறினா ரென்றற்கு எழுத்து முறைகாட்டி என்றார். வரைப்பின்கண்ணே தோற்றி நிறுத்த வென்க. இந்திரனாற் செய்யப்பட்டது ஐந்திர மென்றாயிற்று. பல்புகழாவன - ஐந்திரநிறைதலும் அகத்தியத்தின்பின் இந் நூல் வழங்கச் செய்தலும் அகத்தியனாரைச் சபித்த பெருந் தன்மையும், ஐந்தீ நாப்பண் நிற்றலும், நீர்நிலை நிற்றலும் பிறவுமாகிய தவத்தான் மிகுதலும் பிறவுமாம். படிமை - தவவேடம். `வடவேங்கடந் தென்குமரி' என்பது கட்டுரை வகையான் எண்ணொடு புணர்ந்த சொற்சீரடி. ஆயிடை என்பது வழியசை புணர்ந்த சொற்சீரடி. தமிழ்கூறு நல்லுலகத்து என்பது முட்டடி யின்றிக் குறைவு தீர்த்தாய சொற்சீரடி. இங்ஙனம் சொற்சீரடியை முற்கூறினார், சூத்திர யாப்பிற்கு இன்னோசை பிறத்தற்கு; என்னை? பாஅ வண்ணஞ், சொற்சீர்த் தாகி நூற்பாற் பயிலும் (செய்யுளியல். 214) என்றலின். ஏனையடிகளெல்லாஞ் செந்தூக்கு. வடவேங்கடந் தென்குமரியெனவே எல்லையும் எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி யெனவே நுதலிய பொருளும் பயனும் யாப்பும், முந்துநூல் கண்டெனவே வழியும், முறைப்பட வெண்ணி யெனவே காரணமும், பாண்டிய யவையத்தெனவே காலமுங் களனும், அரிறபத்தெரிந்தெனவே கேட்டோரும், தன்பெயர் தோற்றியெனவே ஆக்கியோன்பெயரும் நூற் பெயரும் பெறப் பட்டன. தொல்காப்பிய மென்பது மூன்று உறுப்படக்கிய பிண்டம். பொருள் கூறவே அப்பொருளைப் பொதிந்த யாப்பிலக்கணமும் அடங்கிற்று; நூறு3காணங் கொணர்ந்தானென்றால் அவை பொதிந்த கூறையும் அவையென அடங்குமாறுபோல. இனி, இவ்வாறன்றிப் பிறவாறு கண்ணழிவு கூறுவாரும் உளராலெனின், வேங்கடமுங் குமரியும் எல்லையாகவுடைய நிலத் திடத்து வழங்குந் தமிழ்மொழியினைக் கூறும் நன்மக்கள் வழக்குஞ் செய்யுளுமென்றாற் செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்த கொடுந்தமிழ் நாடு பன்னிரண்டினும் வழங்குந் தமிழ்மொழி யினைக் கூறுவாரை நன்மக்க ளென்றா ரென்று பொருருத லானும், அவர் கூறும் வழக்குஞ் செய்யுளுங் கொண்டு எழுத்துஞ் சொல்லும் பொருளும் ஆராய்தல் பொருந்தாமை யானும், அவர் கூறும் வழக்குஞ் செய்யுளுமாகிய இருகாரணத்தானும் எழுத்துஞ் சொல்லும் ஆராய்ந்தாரெனின் அகத்தியர்க்கு மாறாகத் தாமும் முதனூல் செய்தாரென்னும் பொருருதலானும், அங்ஙனம் கொடுந்தமிழ் கொண்டு இலக்கணஞ் செய்யக் கருதிய ஆசிரியர் குறைபாடுடைய வற்றிற்குச் செந்தமிழ் வழக்கையும் முந்து நூலையும் ஆராய்ந்து முறைப்பட எண்ணினாரெனப் பொருருத லானும் அது பொருளன்மை உணர்க. இன்னும், முந்துநூல் கண்டு முறைப்பட வெண்ணி யென்றதனானே, முதல்வன் வழிநூல் செய்யுமாற்றிற்கு இலக்கணங் கூறிற்றிலனேனும் அவன் நூல்செய்த முறைமை தானே பின்பு வழிநூல் செய்வார்க்கு இலக்கண மென்பது கருதி, இவ்வாசிரியர் செய்யுளியலிலும் மரபியலிலும் அந்நூல் செய்யும் இலக்கணமும் அதற்கு உரையுங் காண்டிகையுங் கூறும் இலக்கணமுங் கூறிய அதனையே ஈண்டுங் கூறினாரென்று உணர்க. அவை அவ் வோத்துக்களான் உணர்க. யாற்ற தொழுக்கே தேரைப் பாய்வே சீய நோக்கே பருந்தின் வீழ்வென் றாவகை நான்கே கிடக்கை முறையே. பொழிப்பே யகல நுட்ப மெச்ச மெனப் பழிப்பில் சூத்திரம் பன்ன னான்கே. அவற்றுள் பாடங் கண்ணழி வுதாரண மென்றிவை நாடித் திரிபில வாகுதல் பொழிப்பே. தன்னூன் மருங்கினும் பிறநூன் மருங்கினுந் துன்னிய கடாவின் புறந்தோன்றும் விகற்பம் பன்னிய வகல மென்மனார் புலவர். ஏதுவி னாங்கவை துடைத்த னுட்பம். துடைத்துக் கொள்பொரு ளெச்ச மாகும். அப்புல மரிறப வறிந்து முதனூற் பக்கம் போற்றும் பயன்றெரிந் துலகந் திட்ப முடைய தெளிவர வுடையோ னப்புலம் படைத்தற் கமையு மென்ப. சூத்திர முரையென் றாயிரு திறத்தினும் பாற்படத் தோற்றல் படைத்த லென்ப நூற்பய னுணர்ந்த நுண்ணி யோரே. இவற்றை விரித்து உரைக்க. சிறப்புப் பாயிரம் முற்றிற்று. கணேசய்யர் அடிக்குறிப்புகள்: 1. சிவஞானமுனிவர், `வழக்கினையுஞ் செய்யுளினையும் ஆராய்ந்த பெரிய காரணத்தானே' என உரைகூறி `நச்சினார்க்கினியார் முதலென்பதனைப் பெயரடியாற் பிறந்த முதனிலைவினைப் பெயராகக் கொண்டு முதலுதலினாலென உரைப்பர்; இருமுதலென்னுந் தொகைச் சொல் அங்ஙனம் பக்கிசைத்தல் பொருந்தாமை அறிக' எனத் தொல்காப்பியச் சூத்திர விருத்தியுட் கூறியது காண்க. 2. உரையாசிரியரென்றது தொல்காப்பியத்திற்கு முதன்முதல் உரை செய்த இளம்பூரண அடிகளை. அன்றி, வேறொருவர் என்பாருமுளர். அதுவே எமது கருத்தும். 3. காணம் - பொற்காசு. பொதுப்பாயிரம் உரை விளக்கக் குறிப்பு முகம்-உறுப்பு. பனுவல்-நூல். கொழு-கலப்பைக் கொழு. துன்னூசி-அக்கொழுவை அகப்படுத்திக்கொண்டு அதன் கீழிடத்தே கூராகவிருக்கும் மரம். உழும்பொழுது முன்னுள்ள கொழு வயலை உழுது செல்லத் துன்னூசியு மக்கொழுச் சென்றவழியே இடர்ப் படாது செல்லும். அதுபோல முன்னுள்ள புறவுரை சென்ற வுள்ளத்திலே நூலுமினிது செல்லும். இக்கருத்துக் கொண்டே நூல் கேட் கின்றான் புறவுரை கேட்கின் `கொழுச்சென்றவழித் துன்னூசி யினிது செல்லுமாறு போல' அந்நூலினிது விளங்குமென்றார். எனவே கொழுப் பாயிரத் திற்கும், துன்னூசி நூலிற்கும், வயல் ஒருவனுள்ளத்திற்கும் உவமையாகும். இக்கருத்தமையவே, திருவாவடு துறை ஆதீனத்து மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள், இசைபடும் பருப்பொ ருட்டா மிலக்கியம் சென்ற வாறே வசைதவிர் நுண்பொ ருட்டா மிலக்கணம் வயங்கிச் செல்லும் நசையுண ரொருவன் மாட்டு நறும்புனல் வயலின் மாட்டு மசைவிறிண் கொழுச்செல் லாறே துன்னூசி யழகிற் செல்லும். என்று கூறியுள்ளார்கள். கொழுவைப் பாயிரத்திற்கும், துன்னூசியை மாணாக்கன் அறிவுக்கும், வயலை நூலுக்கும் உவமையாகக் கொள்ளுமாறு இவ்வாக்கியம் எழுதப்பட்டிருப்பின் மிகப்பொருத்தமாகும். ஏனெனில், நூலுட்புகுவோன் மாணாக்கனாதலானும், பின்னும், பாயிரம் கேளாக்கால் குன்று முட்டிய குரீஇப் போலவும் குறிச்சிபுக்க மான் போலவும் மாணாக்கன் இடர்ப்படுமென நூலுட் புகுதலை மாணாக்கனுக்கே கூறுதலானும் என்க. எனவே, பாயிரங்கேட்ட மாணாக்கன் அவ் வறிவோடு நூலுட்புக்கால் அவ்வறிவு, நூலை விளக்க அவற்கு நூலினிது விளங்கும் என்பது அதன் கருத்தாம். புறவுரை யேயது கேட்டென்னை பயனெனின் மாயிரு ஞாலத் தவர்மதித் தமைத்த பாயிர மில்லாப் பனுவல் கேட்கிற் காணாக் கடலிடைக் கலைஞரில் கலத்தரின் மாணாக் கன்றன் மதிபெரி திடர்ப்படும் என மாணாக்கனறிவே நூலுட் புகுவதாக மாறனலங்காரச் சூத்திரங் கூறுமாற்றானும் இக்கருத்துப் பொருத்தமாதல் காண்க. பருப்பொருளென்பதும் நுண்பொருளென்பதும் முறையே பாயிரம் நூல் என்பவற்றி னியல்பை யுணர்த்தி அவற்றிக் கடையாய் நின்றன. இனி, பாயிரம் யாப்பருங்கல விருத்திப்பாயிர வுரையுட் போல நூற் பொருளைச் சுருக்கிப் பருப்பொருட்டாக விளக்குதல் பற்றியே; பருப்பொருட் டாகிய பாயிரங் கேட்டார்க்கு நுண்பொருட் டாகிய நூலினிது விளங்கும் என்றாரெனினு மமையும். அங்ஙனேல் புறவுரையாகிய பாயிரம் நூற் பொருளைச் சுருக்கிப் பருப்பொருட்டாக எங்ஙனம் விளக்கு மெனின்? பொதுப்பாயிரம்; "ஈவோன் றன்மை யீத லியற்கை கொள்வோன் றன்மை கோடன் மரபு" ஆகி, எல்லா நூன்முகத்து முரைக்கப்படுதலின் அஃதொழித்தேனைச் சிறப்புப்பாயிரமே தன்னா லுரைக்கப்படு நூற்கின்றியமையாச் சிறப்பிற்றாய் நிற்றலின், அதுவே பருப்பொருட்டாய் நூற் பொருளைச் சுருக்கி விளக்குமெனக் கோடும். அவற்றுள்ளும் நுதலிய பொருளே நூற்பொருளைச் சுருக்கிப் பருப்பொருட்டாய்ப் பெரிதும் விளக்கி நிற்குமென்க. நுதலிய பொருளென்றதனால் நூனுதலியதேயன்றி அதிகார நுதலியதூஉம், ஓத்து நுதலியதூஉம், சூத்திர நுதலியதூஉம் நுதலிய பொருளாயடங்கிப் பாயிரமாகக் கொள்ளப்படுமென்க. இப்பாயிரங்கள் நூற்பொருளை நன்கு விளக்குமென்க. பேராசிரியர், "மேற்கிளந் தெடுத்த" (மர-100) என்னும் மரபியற் சூத்திரவுரையுள், "இனி மேற் கிளந்தெடுத்த பாயிரவிலக்கணஞ் சூத்திரத்தோடு பொருந்துங்காற் பொதுப்பாயிர விலக்கணம் பொருந்தா; சிறப்புப்பாயிர விலக்கண மெட்டுமே பொருந்துவன" வென்று கூறுதலானே சிறப்புப்பாயிரம் நூற்கின்றியமையாத தென்பதூஉம், அவர், "ஒத்த சூத்திர முரைப்பிற் காண்டிகை (மர-98) என்னுஞ் சூத்திரவுரையுள்ளே, "சூத்திரவுரையுட் பாயிரவுரை மயங்கி வருவன உள. *அங்ஙனம் மயங்கி வருவன எவையெனின்? `எழுத்தெனப் படுப' என்னுஞ் (எழு-1) சூத்திரத்தினை (முதலில் எடுத்து) நிறுவி என்பது சூத்திரம் எனக் கூறி, பின் இவ்வதிகார மென்ன பெயர்த்தோவெனவும், இவ்வதிகார மென்னுதலிற்றோ வெனவும், வினாவிப் பின் இன்ன பெயர்த்தெனவும், இவை நுதலிற்றெனவும், அவற்றிற்கு விடை கூறுவனவும், இவ்வதிகார மெனைத்துப் பகுதியாலுணர்த்தினானோ வெனவினாவி இனைத்துப் பகுதியால் உணர்த்தினானென விடை கூறுவதூஉம், ஓத்து முதற் கண்ணே இவ்வாறு வினாவி விடை கூறுவதூஉம், சூத்திரமுதற்கண் இச்சூத்திர மென்னுதலிற்றோவென வினாவி விடைகூறுவதூஉம் போல்வன வென்க" என்று உரைத்தலி னாலே சிறப்புப்பாயிரம் நூற்பொருளைச் சுருக்கி விளக்கற்குரிய தென்பதூஉம் பெறப்படுதல் காண்க. பேராசிரியர் கருத்தைத் தழுவிச் சிவஞான முனிவரும் "இனி, வாய்ப்பக் காட்டல்" என்றதனாலே இத்துணைச் சிறப்பிலவாய் அவ்வவற்றிற் கினமாய்க் கூறப்படுவனவு முளவென்பது பெற்றாம். அவைதாநூனுதலிய பொருளேயன்றிப் படல நுதலியதூஉம் ஓத்துநுதலியதூஉஞ் சூத்திரநுதலியதூஉங் கூறுதலும் என்றும், இவை நூன்முகத்துக் காட்டப்படுதலே யன்றிப் படல முகத்தும் ஓத்துமுகத்தும் சூத்திர முகத்தும் காட்டவும்படும் என்றும் தொல்காப்பியச் சூத்திரவிருத்தியுட் கூறுதலுங் காண்க. நூற் பொருளைச் சுருக்கிப் (பதிகம்-) பாயிரங் கூறுதலைச் சிந்தாமணி, மணிகேலை முதலிய நூல்களுள்ளுங் காண்க. இனிக் கொழு என்பதற்குத் துன்னூசி செல்லுதற்கு முதலிற் குத்தி வழியாக்குவதொரு கருவி என்றும், துன்னூசி தையலூசி என்றும், இவை தோற்கருவி செய்வோர் வைத்திருப்பவை என்றும், கலப்பையும் கொழுவும் போல் ஒருங்கு சேர்ந்திருப்பன வன்றி, இவை வேறு வேறாக இருப்பனவாதலின் இவையே பொருந்துவன என்றும் கூறுவாருமுளர். பொருந்துவது கொள்க. தலையமைந்தயானை - யூதநாதன். வினையமைந்தபாகன் - அதனைச் செலுத்துந்தொழிலமைந்த பாகன். இனி, தலையமைந்த யானை என்பதற்கு அரசுவா எனினுமாம். அது அசனிவேகம், நள கிரி என்பன போன்றது. வினையமைந்த பாகன் - சீவகன், உதயணன் போன்றான். இன்றியமையாத - வேண்டியதான. அப்பாயிரம் இன்றியமையாச் சிறப்பிற்று எனக்கூட்டுக. ஒரு தலையமைந்த யானையை அடக்கிச் செலுத்தற்குப் பாகன் அதனினுமிறப்பச் சிறியவனாயிருந்தாலும் அவனே வேண்டும்; ஒரு பெரிய ஆகாயத்தை விளக்குதற்கு ஞாயிறுந்திங்களும் அதனினுமிறப்பச் சிறியனவாயினும் அவையே வேண்டும். அதுபோலவே ஒரு பெரிய இலக்கண நூலை விளக்கற்குப் பாயிரம் அதனினுமிறப்பச் சிறிதாயினும் அதுவே வேண்டும். ஏனெனில்; நூற்பொருளைத் தன்னுளடக்கி விளக்குமாற்றல் அதன்கணமைந்திருத்தலின். அதுபற்றியே இன்றியமையாச் சிறப்பிற்று என்றார். குன்று - மலை. பறந்து செல்கின்ற ஒரு குருவியை அது செல்லுந் திசைக்கண், நீண்டு உயர்ந்த ஒரு மலையிருக்குமாயின் அது, அதன் செலவைத் தடுக்கும். அதனால் அது இடர்ப்படும். அதுபோலவும், ஒருமான் தான் வசிக்கும் காட்டைவிட்டு ஒரு குறிச்சிக்குட் புகுமாயின் அங்குள் ளார் அதைத் தடைப்படுத்த அது அப்பாற் போக முடியாது இடர்ப் படும். அதுபோலவும், பாயிரங்கேளாது ஒருமாணாக்கன் ஒரு நூலின்கட் புகுவானாயின் அந்நூலின்கட் பல ஐயங்களிடையே தோன்றி அவனை அப்பாற்செல்லவிடாது தடுப்ப அவன் இடர்ப் படுவான். ஆதலாற் பாயிரங் கேட்க வேண்டுமென்பது கருத்து. கற்கப்படுவோர் கற்கப்படுவோர் - கற்கப்படத்தக்க நல்லாசிரியர். உலைவி லுணர்வுடையோர் - அசைவற்ற உணர்ச்சியுடையோர் என்றது ஐயந்திரி பின்றிக் கற்றவரை. மலை அளக்கலாகாப் பெருமை - அளக்கப்படாத உருவின் பெருமை. அருமை - அரிய பொருள்களைத் தன்னிடத் துடைமை. மருங்ககலமுடைமை - பக்கம் விதாரமுடைமை. இனி, அளவிடப் படாத கல்வியறிவின் பெருமையும், நூல்களினரிய பொருளை ஆராய்ந்து தன்னிடத்தே கொண்டிருத்தலும், பக்கத்திலுள்ளவர்களாலுந் தெரியப்பட்ட கல்விப் புகழுடை மையும், தருக்கஞ்செய்து பிறரால் நெருங்குதற்கருமையுமென ஆசிரியனுக்குப் பொருந்த உரைத்துக் கொள்க. நிலம் செய்பாங்கு - செய்தற்குரிய தொழிற்பகுதிகள் என்றது எரு விடல், உழுதல் முதலியன. விளைதல் வண்மை - விளைந்து பயன் படுதற்கேற்ற தன்மையுடைமை. போய்ச்சார்ந்தோர் - உழவர். இடுதல் - தன் பயனைக் கொடுத்தல். எடுத்தல் - அதனாலவரை யுயர்த்தல். இனி, மாணாக்கன் செய்த குற்றத்தைப் பொறுத்தலும், மாணாக்கன் செய்தற்குரிய வழிபாட்டின் பகுதி யமைந்தபின்பு, அவனுக்குத் தான் பயன்படுதற்கேற்ற தன்மையுடைய னாதலும், மாணாக்கனுக்கறிவைக் கொடுத்தலும், அதனால் அவனை உயர்த்தலுமென ஆசிரிய னுக்குப் பொருந்த வுரைத்துக்கொள்க. வண்மை - வளத்தன்மை என்றது நிலவளத்தையுமறிவின் வளத்தையும். பூ சுபகருமங்களுக் கேற்றதாதலும், உரியகாலத்திலே மலர்தலும், வண்டு சென்றூத அதற்குத் தேனை உண்ணும்படி நெகிழ்ந்து கொடுத்தலுமென வுரைக்க. விழையப்படுதல் - பிறரால் விரும்பப் படுதல். இனிக் கற்பிக்குங் காலத்தே முகமலர்ந்து கற்பித்தலும், மனம் நெகிழ்ந்து கற்பித்தலுமென ஆசிரியனுக்குப் பொருந்த வுரைத்துக் கொள்க. ஏனைய வெளி. துலாக்கோல் மிகினும் குறையினும் நில்லாதாகலும் - தன்கணிட்ட பொருள் துலாம் என்னும் அளவிலும் மிக்காலும் குறைந்தாலும் தன் சமநிலையினில்லாமையுடையதாகலும் என்றது துலாம் என்னும் அளவுக்கு மேற்படின் உயர்ந்துகாட்டும்; குறையிற் றாழ்ந்து காட்டும். எனவே பொருளின் குறைவையும் நிறைவையுங் காட்டும் என்றபடி. ஐயந்தீர்த்தல் - பொருளினளவைக்காட்டி ஐயந் தீர்த்தல். நடுநிலை - கொள்வோனுக்குங் கொடுப்போனுக்கும் நடுநின்று அளவினுண்மையை உணர்த்தல். மெய்ந் நடுநிலை - மெய்யை உணர்த்தி நடுநிற்றலென்க. இனி ஒரு நூலிலேனும் வினாவப்பட்ட பொருளிலேனும் குற்றம் மிகுந்தாலும் குறைந்தாலும், அம்மிகுதி குறைவை யுணர்ந்தவளவில் நில்லாமல் உணர்த்திவிடுதலும், தன்பால் வினாவப்பட்ட பொருளினையத் தைத் தீர்த்தலும், வாரம்படாமற் சமமாய் நிற்றலுமென ஆசிரியனுக்குப் பொருந்த வுரைத்துக்கொள்க. கற்கப்படாதோர் கற்கப்படாதோர் - கற்கப்படத்தகாத ஆசிரியர். கழல் - கழற் காய். பெய்தல் - இடுதல். குண்டிகை - குடுக்கை. பொழிப்பு:- பாடங் கண்ணழி வுதாரண மென்றிவை நாடித் திரிபில வாகுதல் பொழிப்பே. பாடம் - மூலபாடம். கண்ணழிவு - பதப்பொருள் கூறல். மூலபாடமும், கண்ணழிவும், உதாரணமுமாகிய இவற்றைத் திரிபிலவாக ஆராய்ந்து செய்வது பொழிப்புரையாம். திரிபிலவாகச்செய்தல் - மூலபாடம் முதலாகிய மூன்றும் ஒன்றோடொன்று மாறுபடாமற் செய்தல். விபரீதப் பொரு ளின்றி யெனினுமாம். நாடின் எனவும் பாடம். அதற்கேற்பவும் பொருள் உரைத்துக் கொள்க. பொழிப்புரைத்தல் இருவகைப் படும். ஒன்று பிண்டமாகக் கூறல்; ஒன்று மூலபாடம் கூறியும் அதற்குப் பதப் பொருள் உரைத்தும் அதனை உதாரணத்தால் விளக்கியுஞ் செய்தல். அவற்றுட் பின்னையதே இச்சூத்திரத்தாற் கூறிய இலக்கணம். சிவஞானபோதத்துக்குரைக்கப்பட்ட பொழிப்புரையும் பின்னையதே. அதனை அச்சூத்திர உரை யானறிக. அகலம்:- தன்னூன் மருங்கினும் பிறநூன் மருங்கினும் துன்னிய கடாவின் புறந்தோன்று விகற்பம் பன்னிய வகல மென்மனார் புலவர். இதன் கருத்து:- தன்னூலிடத்தும் பிறநூலிடத்துமுள்ள பொருள் விகற்பங்களை ஆக்கேபஞ் செய்து அதனாற் புறத்தே தோன்றும்படி அவ்விகற்பத்தைத் தெரித்துக் காட்டுவது அகலவுரை யென்பராசிரிய ரென்பது. நுட்பம்:- ஏதுவி னாங்கவை துடைத்தல் நுட்பம். இதன் கருத்து:- அங்ஙன மாக்கேபித்துத் தெரித்த விகற்பப் பொருளுட் பொருந்தாத பொருளைக் காரணங்காட்டி மறுத்து நீக்கிவிடுவது நுட்பவுரை என்பது. எச்சம்:- துடைத்துக் கொள்பொரு ளெச்ச மாகும். இதன் கருத்து:- அங்ஙனம் மறுத்து இதுதான் பொருத்த மென்று கொள்ளப்பட்ட பொரு ளெச்சமாகும் என்பது. புகழ்ந்தமதி - கல்வி தொடங்குதற்கு நல்லதென்று புகழப்பட்ட மாதம். ஓரை - இலக்கினம். கொள்வோர் - மாணாக்கர். கற்பிக்கப்படுவோர் - கற்பிக்கப்படத் தகுந்த மாணாக்கர். இவர் தன்மை:- நன்னிறம்: எவ்வகைப்பட்ட நிறங்களுந் தன்னிடத்திலே கலத்தற்குரியது. அதுபோல, நன் மாணாக்கனும் ஆசிரியர் கூறும் எவ்வகைப் பட்ட வுரைகளையுந் தன் கருத்தில் ஏற்றுக்கொள்ளத் தகுந்தவனாயிருப்பன் என்றபடி. `பல்லுரையுங் கேட்பான்' என்று பின்னுங் கூறுதல் காண்க. பன்னாடைப்புறமென்றது: பன்னாடையின் மேற்புறத்தை. குஞ்சரம் - யானை. யானை தன்னினத்தோடு கூடி அவற்றிற் கிடை யூறு வாராமற் காப்பதுபோல, நன்மாணாக்கனும் தன்னோடு உடன் கற்கும் மாணாக்கர்களோடுங்கூடி அவர்களையங்களை நீக்கிக் கல்வியில் அவர்களைப் பாதுகாத்தலுடையவன் என்றபடி. ஆனேறு: ஆனேறு காட்டுள் மேய்வழி அங்குத் தோன்றிய வொலியை இன்னதனொலி இதுவென வோர்ந்து அதன் நன்மை தீமைகளை நிச்சயித் தறிதல்போல, மாணாக்கனும் ஆசிரியர் கூறிய சொற் பொருள்களை ஆராய்ந்து அப்பொருள்களின் குணாகுணங் களை நிச்சயித்தறிவன் என்றபடி. குரங்கெறி விளங்காயாவது: குரங்குக்குக் கல்லெறிந்து தான் கருதிய விளங்காயைப் பெற்றுக்கொள்வோனுடைய அவ்வியல்பு. அது போலக் கடைமாணாக்கனும் ஆசிரியனிடம் வழிபட்டு முறைப்படி கேளாமற் சில கடாக்களை நிகழ்த்தித் தான் கருதிய பொருளைப் பெற்றுக்கொள்வன் என்றபடி. எறிவிளங்கா யென்பது - எறிந்து விளங்காயைக் கொள்பவன் எனக் கொள்பவன்மேல் நின்றது. இக்கருத்தை விளக்கவே, `கல்லால் எறிந்து கருது பயன் கொள்வோன் குரங்கெறி விளங்காயாமென மொழிப' எனக் கூறினார். இங்கே "கல்லா லெறிந்து கருதுபயன் கொள்வோன்" என்பது கல்லா லெறிந்து தான் கருதிய பயனாகிய விளங்காயைக் கொள்பவ னென அவனை யுணர்த்தலோடு உடம்பொடு புணர்த்தலால் அவன்றன்மையையு முணர்த்திநின்றது. நிற்கவே அவன் றன்மை யாவது கல்லாலெறிந்து கருதுபயன் கோடல் என்பது பெறப்படும். கல்லாலெறிந்து கருதுபயன் கோடலே கொள்பவ னுடைய இயல்பு. காரா - எருமை. அதனியல்பாவது: பெருகிவரும் நீரிலே அதனைத் தடுத்து வீழ்ந்து அந்நீரை யுழக்கிக் கலக்கி உண்ணுத லாம். அது போலக் கடைமாணாக்கனும் ஆசிரியனைச் சொல்லவிடாது தடுத்து அவனுடைய அறிவைத் தர்க்கித்துக் கலக்கி யறிவன் என்றபடி. அருந்தல் காராமேற்று என முடிக்க. அருந்தல் - அருந்து மியல்பு. ஆட்டின் சீர் - ஆட்டிறன்மை. ஆரஉறினும் - நிறையப் பொருதினாலும். குளகு - விலங்கிற்குரிய உணவு. தோணி நீரிடையின்றி நிலத்திற் செல்லமாட்டாதது போலக் கடை மாணாக்கனும் தான் பயின்ற நூலினன்றிப் பயிலாத நூலின் கட் செல்லமாட்டான். களம் - கலாசாலை. முன்னும் பின்னும் அகலானாகி என்றது ஆசிரிய னிருக்கும் போது அவன் முன்னிடத்தையும், செல்லும்போது அவன் பின்னி டத்தையும் அகலானாகிப் படித்தலை. ஆசு - குற்றம் என்றது ஐயந் திரிபுகளை. எத்திறம் - எவ்வகையான வழிபாடு. அத்திறன் - அவ் வகையான வழிபாடு. அறத்திற் றிரியாப் படர்ச்சி - அறநூலிற் சொன்ன முறையிற் றவறாத வழிபாட்டொழுக்கம். வழிபாடு - எழுவாய். படர்ச்சி - பயனிலை. வழக்கு - உலகவழக்கு. அவை யென்றது - முன்கேட்கப்பட்ட வற்றை. அமைவரக்கேட்டல் - மனத் தில் நன்றாய்ப் படியக்கேட்டல். அனையன் அல்லோன் - மாணாக்கனுக்குரிய இலக்கண மில்லாதவன். வினையினுழப் பொடு - கற்றற்றொழிலினால்வரும் வருத்தத்தோடு (பொருந்துவ தன்றி), பயன்தலைப்படான் - பயனையுமடைய மாட்டான். (பொருந்துத லன்றியென்பது இசையெச்சம்) படான் என்பதில் படாமையு முடையன் என உடைமை விரித்து அதனோடு ஒடுவை முடிப்பினுமமையும். வினையினுழப்பு என்பதை `வினையிலுழப்பு' என்று பாட மோதித் தொழிலற்றமுயற்சி எனப் பொருள் கொண்டு, தாற்பரிய மாகப் `பயனற்ற முயற்சி' என்பாருமுளர். அம்மரபில்லோன் - அக் கோடன்மரபில்லாதவன். செவ்விதினு ரைத்தல் - நன்கு கற்பித்தல். சிறப்புப்பாயிரம் அவ்விரண்டெல்லைக்குளிருந்து தமிழைச் சொல்லும் நல்லாசிரியரது வழக்கையுஞ் செய்யுளையும் அடியாகக் கொள்ளுதலி னாலே செந்தமிழியல்பாகப் பொருந்திய செந்தமிழ் நாடென்க இருந்து சொல்லும் என்றதனாலே. செந்தமிழ் மொழியினைக் கூறுவாரையே நல்லாசிரிய ரென்றாரென்றாகும். நல்லாசிரியரது வழக்கையுஞ் செய்யுளையும் அடியாகக் கொள்ளுகையினாலே செந்தமிழ் இயல்பாகப் பொருந்திய வென்றது, செந்தமிழாசிரியரது வழக்கையுஞ் செய்யுணூல் களையும் அடியாகக்கொண்டே செந் தமிழ் செந்தமிழ் நாட்டில் வழங்கி வருகின்றதென்றபடி. எனவே தொல்காப்பியரும் செந்தமிழ் நாட்டு வழக்கோடு முன்னை யிலக்கணங்களையு மராய்ந்து இந்நூல் செய்தாரென்பது கருத்தாம். நல்லாசிரியர் வழக்கை யடியாகக் கொள்ளுகை யினாலே செந்தமிழி யல்பாகப் பொருந்திய, செந்தமிழ்நாட்டு வழக்கெனவே, நல்லாசிரியரது மரபு தவறாது வந்த செந்தமிழ் வழக்கு என்பது போதரும். செய்யுளை விதவாது செந்தமிழ் வழக்கெனப் பொதுவாகக் கூறினமையின் இரண்டுங் கொள்ளப்படும். ஏழு நிலமாவன:- பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்பன. இவற்றைச் செய்யுளியலில் 79ஆம் சூத்திரம் நோக்கியுணர்க. இவற்றுட் பாட்டென்றது செய்யுளை; உரையென்றது உரை நடையை; அது நான்குவகை. 173ஆம் சூத்திரம் (தொல்-செய்) பார்க்க. நூல் என்றது இலக்கணநூலை. இது பெரும்பாலும் சூத்திர யாப்பாற் செய்யப்படுவது. வாய்மொழி - உண்மைமொழி - என்றது நிறைமொழி மாந்தராற் கிளக்கப்பட்டுப் புறத்தார்க்குப் புலனாகாமை மறைத்துக் கூறப்படும் தொடர்மொழிகளை. இவையே மந்திரம் எனப்படும். பிசி என்றது நொடியான சொற்றொடர்களை. இதனைச் செய்யுளியல் 176-ம் சூத்திரத்துட் பார்க்க. அங்கதம் - வசைச் செய்யுள். முதுசொல் பழமொழி. செய்யுளியல் 177-ம் சூத்திரம் நோக்கியுணர்க. இவை உரையாசிரியர் கருத்து. முற்கு - கர்ச்சனை; வீரர் போர்க்கழைக்கும் ஒருவகையொலி. இதனை அறைகூவலென்ப. வீளை - சீழ்க்கை. இது வேட்டுவ சாதிக்குள் வழங்கியது. இலதை - இதுவுமோர் குறிப்பொலி; இன்ன தென்று புலப்படவில்லை; வழக்கிறந்ததுபோலும். எனினுஞ் செருமல் போன்ற ஓரொலியா யிருக்கவேண்டுமென்று இக்கால வழக்காற் கருதப்படுகின்றது. முற்கு, வீளை, இலதை என்பன அடி நாவடியிற் காட்டப்படும் ஒலிக்குறிப்பென்பர் இராமாநுச கவி ராயர். முற்கு - முக்கு என்பாருமுளர். செறிப்பச்சேறல் என்பதற்கு ஒருவன் சொல்லச் செல்லுதல் என்றும், செறிப்பவருதல் என்பதற்கு மற்றொருவன் சொல்லத் தன்கண் வருதலென்றும் பலரும் சாதாரணமாகக் கூறுவதுண்டு. மற் றொருவன் சொல்ல வருதல் என்பது அவனுக்குச் செறிப்பச் சேறலேயாகலானும், செறிப்பச் சென்ற உருவே மீண்டு வராமை யானும், சொல்லச் செல்லலே கருத்தாயின் செறிப்பச்சேற லென்னாது பின் "சொல்லப் பிறந்து சொற் குறுப்பாமோசையை இவர் எழுத்தென்று வேண்டுவர்" எனக் கூறியதுபோல ஈண்டும் சொல்லச் செல்லல் என வெளிப்படையாகக் கூறுவராகலானும், ஆசிரியரும் "எல்லா வெழுத்துஞ் சொல்லுங் காலை" யென்றே கூறுதலானும், செறிப்ப என்பதற்குச் சொல்ல என்பது நேர் பொருளன்றாகலானும் அவ்வாறு பொருள் கூறல் பொருந்துமோ என்பது ஆராயத்தக்கது. பின் வடிவு கூறியதற் கியைய ஈண்டும் செறிப்பச் சேறல் என்பதற்கு குழல் போன்ற ஒன்றனுட் புகுத்த அதனுள்ளே சேறல் என்றும், செறிப்பவருதல் என்பதற்குக் குடம்போன்ற ஒன்றனுட் புகுத்த அதனுள்ளே புகுந்து உட்புறத்தே தாக்குண்டு மீண்டுவருதல் என்றும் பொருள் கூறலே பொருத்தமாகும் என்பது எமது கருத்து. புகுத்தல் (அகத்தே சொல்லிப்) புகச்செய்தல். இதுபற்றியே பின்னரும் அகத்துக்கூறல் என்றார். செல்லுதல், வருதல் என்பன உள்ளே செல்லுதலையும் வெளியே வருதலையும் குறித்துநின்றன. இவற்றால் எழுத்திற்குரு வுடைமை எங்ஙனம் பெறப்படு மெனின், குழல்போன்றவற்றினுட் புக்கு அவற்றுளடங்கிச் செல்லுதலானும் குடம் போன்ற வற்றினுட்புக்கு அவற்றினடி யிற்றாக் குண்டு மீளுதலானும் பெறப்படும். என்னை? உருவுடையதே ஒன்றனுட் புக்குச் செல்வதும் புக்குத் தாக்குண்டு மீளுவது முடைமையின். குழலானும் குடத்தானும் எழுத்துருவின் வரம்பு பட்ட பரிணாம முடைமை பெறப்படுதலான் அதன் வடிவுடைமையும் பெறப்படும். செறித்தல் - உட்புகுத்தல். "கேள்விச்செவியிற் கிழித்து கிற் பஞ்சி - பன்னிச் செறித்து" (பெரு-உஞ்-மரு-136) என்னுமடிகளை நோக்கியுணர்க. இனிச் சேறல் வருதலாகிய வினையுடைமையானும் உருவு டைமை பெறப்படுமென்க. பின்னர் (க சூ+ம்) "எழுத்துக்களி னுருவிற்கு வடிவு கூறாராயி னார்............ அவ்வடிவாராயுமிடத்துப் பெற்ற பெற்ற வடிவே தமக்கு வடிவாம். குழலகத்திற் கூறிற் குழல்வடிவும், குடத்தகத்திற் கூறிற் குட வடிவும் வெள்ளிடையிற் கூறினெல்லாத்திசையு நீர்த்தரங்கமும் போல" என்று குழல் முதலிய மூன்றிலு மமைந்த உருவிற்கே வடிவமும் காட்டினா ராதலின் அம்மூன்றிலும் வைத்தே முன்னர் அவ்வுருவை உணர்த்திப் பின்னர் வடிவிற்கும் அவற்றையே எடுத்துக் காட்டினாரென்பது சாலப் பொருத்தமாதலின் நச்சினார்க்கினி யர்க்கும் இதுவே கருத்தாதல் துணிபாம். என்னை? உருவின் கண்ணதே வடிவ மாகலின் செறித்தல் (உட்புகுத்தல்) என்ற சொல்லே குழலுங் குடமும் போல்வனவற்றை உணர்த்தும் என்க. அன்றியும் இடையென்பது வெளியிடத்தை உணர்த்தலானும் முன்னைய விரண்டும் வெளியிட மல்லாத குழலுங் குடமும் போல்வன வற்றையே உணர்த்தி வந்தனவென்பது துணிபாகும். நூலாசிரிய உரையாசிரியர்கள் கருத்துக்களைப் பின்முன் நோக்கிக் கொள்ளும் பொருளே பொருத்தமாம் என்க. குழல், குடம் போல்வனவற்றில் வைத்து உருவுவடிவுகளை விளக்கின் மாணாக்கர்க்கு அவை இனிது விளங்குமென்பது கருதியே அவற்றை ஈண்டு நச்சினார்க்கினியர் எடுத்துக்காட்டினார் என்க. சிறுவர் நீண்ட குழல் முதலியவற்றுட் பேசும் வழக்கம் இக்காலத்தும் உண்டு. இடையெறியப்படுதலானும் என்பதில் இடையென்பது இடத்தை யுணர்த்திநின்றது. இடம் ஈண்டு வெளியிடம். அது பின் `வெள்ளிடையிற் கூறின்' என்பதனானும் உணரப்படும். எறியப் படுதல் - வீசப்படுதல். எனவே வெள்ளிடையிற் கூறின் அவ்வெள்ளி டைக்கண் எல்லாத் திசையும் நீர்த்தரங்கமும்போல வீசப்பட்டுச் சேறலானும் என்பது பொருளாம். திரைவீசுங்கால் ஒன்றா லொன்று வீசி எழுப்பப்படுதல் போல, எழுத்தொலியும் ஒன்றா லொன்று வீசி எழுப்பப்படுதலின் "எறியப்பட்டு" என்றார். அதனை "உட்கப்பட்டார்" என்பது போலச் செய்வினையாகக் கொள்ளினு மமையும். ஒன்றாலொன்று வீசியெழுப்பப் படுதலின் உருவுடைமை பெறப்படும். அவ்வொலி நீர்த்தரங்கம் போல வட்ட வடிவாய்ச் சேறலின் அதன் வடிவுடைமையும் பெறப்படும். எல்லாத் திசையு மென்பது கதம்பமுகுள நியாயத்தையும், நீர்த்தரங்கமென்பது வீசிதரங்க நியாயத்தையும் குறித்து வந்தன. கதம்பமுகுளநியாயமாவது: கடப்பம்பூவில் முதலாவ துண்டான மொட்டு ஒரேகாலத்தில் நான்குபக்கமும் பல மொட்டுக்களை உண்டாக்கிக்கொண்டு தோன்றுவது போல்வ தொருமுறை. அது போல முதலாவதுண்டான எழுத்தொலி தன் நாற்பக்கமும் ஒரே நேரத்திற் பல ஒலிகளை உண்டாக்கிக் கொண்டு தோன்றும். கடம்பு பூக்குங்கால் தன் பூவைக் கதிராகப் பூக்கும். அக்கதிரின் தலையில் ஒரு சிறு மொட்டிருக்கும். அதன் மேற்பக்கங்களிற் பல மொட்டிருக்கும். வீசிதரங்கநியாயமாவது: ஒரு குளத்தில் நீரிடையே ஒரு கல்லை இட அந்த இடத்தில் முதலாவதுண்டான திரை, தன்னைச் சூழப் பின்னுமோர் திரையை எழுப்ப, அது தன்னைச் சூழப் பின்னு மோர் திரையையெழுப்ப, இப்படியே கரை சாரும் வரையும் வேறு வேறு திரைகளை எழுப்பிச் சேறல்போல்வ தொருமுறை. அது போலவே முதலாவதுண்டான எழுத்தொலி, தன் நாற்புறமும் ஒன்றையொன்று சூழ வேறு வேறு ஒலிகளை எழுப்பிச் செல்லும் என்க. இவை முறையே தருக்க சங்கிரகத்தி னுரைக்குரையாகிய நீலகண்டீய உரையின் வியாக்கியானங் களாகிய நிருதமப்பிரகாசிகையிலும், இராமருத்திரீயத்திலும் கூறப்பட்டுள்ளன. இன்பதுன்பத்தையாக்கல்: வல்லோசையாற் றுன்பத்தை யும் மெல்லோசையா லின்பத்தையு மாக்கல். உருவுமுருவுங் கூடிப்பிறத்தல்: உயிர்வடிவும் மெய்வடிவுங் கூடிப் பிறத்தல், உருவுமுருவுங் கூடுமன்றி உருவமில்லாதன கூட மாட்டா. அதனானும் உருவுடைமை பெறப்படும். நாமுதலிய உரு வங்கூடிப் பிறத்தல் என்றுகொள்ளின் பின்னர்த் "தலையு மிடறும் நெஞ்சு மென்னும் மூன்றிடத்தும் நிலைபெற்றுப் பல்லு மிதழும் நாவும் அண்ணமு முறப்பிறக்கும்" எனக்கூறுதலான் அது பொருந் தாது. கூடிப் பிறத்தல் என்பதன்கண் கூடுதல் என்னுஞ் சொல்லி லேயே பொருள் சிறந்து நின்றது. பிறந்தபின்பே அவற்றின் கூட்டமறியப்படுதலின் பிறத்தலானும் என்றார். "உந்திமுதலாகத் தோன்றி எண்வகை நிலத்தும் பிறந்து கட் புலனாந் தன்மையின்றிச் செவிக்கட் சென்றுறும் ஊறுடைமை யானும்" என்றதனாற் பிறப்புடைமையானும் பரிசமுடைமை யானும் உருவுடைய தெழுத்தென்பது கூறப்பட்டது. எண்வகை நிலம்: எழுத்துக்களுக்குப் பிறப்பிடமாகச் சொல்லப் பட்ட எண்வகை இடம். அவை: தலை, மிடறு, நெஞ்சு, பல், இதழ், நா, மூக்கு, அண்ணம் என்பன. இவற்றை நன்னூலார் இடமும் முயற்சி யுமென இருவகையாகப் பகுப்பர். இடம்: தலை மிடறு நெஞ்சு மூக்கு என்பன. முயற்சி: பல் இதழ் நா அண்ணம் என்பன. விசும்பிற் பிறந்தியங்குவதோர் தன்மை உடைமையானும் என்றதனாற் காற்று விசும்பின்கட் பிறந்து இயங்குவது போல இவ்வெழுத்தோசையும் விசும்பின்கட் பிறந்து இயங்கும் இயல்புடைய தென்பது நச்சினார்க்கினியர் கருத்துப்போலும். கடையிற்கூறிய இவ்வேதுக்களிரண்டையும் எழுத்துக் களுக்கும் காற்றுக்கும் முறையே தனித்தனிச் சிறப்பாகவும் ஏனைய ஏதுக்களைப் பொதுவாகவும் நச்சினார்க்கினியர் கூறியிருக்கலா மென்பதும் எமது கருத்து. இனிக் காற்றிற் கேற்பவும் குழல்போன்றவற்றிற் புகுத்தப் புகுத லானும், குடம்போன்றவற்றிற் புகுத்த அடிப்புறத்தே தாக்குண்டு மீண்டு வருதலானும், வெளிநிலத்தே வீசிச்சேற லானும், மென்மை யாக வீசலானே இன்பத்தையும் வன்மையாக வீசலானே துன்பத்தையு மாக்கலானும், இருதிசைகளான் வருங் காற்று ஒன்றுகூடித் தோன்றலானும் உருவுடைமை அறியப்படும் எனக்கொள்க. கந்தருவம் - இசைநூல். குறி - பெயர். இதனுட் கூறுகின்ற உரைச் சூத்திரங்களென்றது இப்பாயிரத்திற் கூறுகின்ற "யாற்ற தொழுக்கே" என்பது முதலிய சூத்திரங்களை. அரில்தப என்பது குற்றந்தீர்தலையும் தெரிந்து என்பது - விடை கூறுதலையும் உணர்த்தின. சொற்சீரடி - சொற் சீராலாகிய வடி என்றது அசையாற் சீர் செய்து சீராலடியாக்காது, சொற்களையே சீராகவைத்து அடி யாக்குவது. கட்டுரைவகையா னெண்ணொடு புணர்ந்த சொற்சீரடி யாவது, கட்டுரைக்கண் வருமாறுபோல எண்ணோடு பொருந்தி வருஞ் சொற் சீரடி. வடவேங்கடமும் தென்குமரியுமென்பது உம்மை தொக்குச் செவ்வெண்ணாய் வடவேங்கடந் தென்குமரி என நின்றது. வழியசைபுணர்ந்த சொற்சீரடியாவது - `தனியசையன்றிப் பல வசைபுணர்க்கப்பட்டு வருஞ்சொற்சீரடி' யென்பர் நச்சினார்க் கினியர். ஆயிடையென்பது தனியசையன்றிப் பின்னுமோரசை புணர்க்கப்பட்டவாறு காண்க. ஒருசீர்க்கண்ணே பிறிதுமொரு சீர் வரத் தொடர்வதோர் அசையைத் தொடுப்பதென்பர் இளம் பூரணர். முட்டடியின்றிக் குறைவு சீர்த்தாய சொற்சீரடியென்றது தூக்குப் பட்டு முடியுமடியின்றிச் சீர்குறைந்து வருவதை. "தமிழ் கூறு நல்லுலகத்து" என்பது நாற்சீரடியாய் முடியாது குறைவு சீர்த்தாய் முடிதல் காண்க. இவற்றைக் "கட்டுரைவகையா னெண்ணொடு புணர்ந்தும்" என்ற செய்யுளியல் 122-ம் சூத்திரத்திற்கு நச்சினார்க்கினியர் முதலியோர் உரைத்த உரைநோக்கி உணர்க. செந்தூக்காவது - நான்கு சீரும் நிரம்பிவரும் அடி. மூன்றுறுப்படக்கிய பிண்டம் - சூத்திரம், ஒத்து, படலம் என்னும் மூன்றுறுப்பையும் அடக்கிய நூல். பிண்டம் - திரட்டப்பட்டது. இன்னும் பாயிரத்துள் "முந்துநூல் கண்டு முறைப்பட வெண்ணி" என்று பாயிரம் செய்தார் கூறுதலானே உணர்கவென இயைக்க. எப்படி உணர்தலெனின்? இவ்வாசிரியர் கூறிய அதனையே ஈண்டும் (பாயிரத்துள்) "முந்துநூல்கண்டு முறைப்பட வெண்ணி" எனப் பாயிரகாரர் கூறினாரென உணர்தல். முந்து நூல் கண்டு முறைப்பட வெண்ணித் தொகுத்தான் என வழிநூல் இலக்கணமும் பெறப்பட பாயிரகாரர் கூறியதற்குவிதி செய்யுளியலிலும் மரபியலிலும் தொல்காப்பியர் கூறிய விதியே யென்பதாம். இந்நூலாசிரியர் வழிநூல்செய்தற்கு விதியாண்டுப் பெற்றா ரெனின் முதல்வன் கூறிற்றிலனேனும் அவன் நூல் செய்த முறையே தமக்கிலக்கணமாமென்று கருதிச் செய்தாரென்க. முதல்வன் செய்த முறையே தமக்கும் இலக்கணமாகக் கொண்டு நூல் செய்தாரெனி னும் ஒருவன் செய்ததை மீளவுஞ் செய்தலாற் பயனின்றே யென்னு மாக்கேபத்தை நீக்கும் பொருட்டே முறைப்பட எண்ணி யென்றா ரென்க. பாயிரம் முற்றிற்று. கணேசய்யர் அடிக்குறிப்புகள்: 1. அங்ஙனம் `மயங்கிவருவன எவையெனின்? என்பது முதல்.... என்க,' என்பது வரையும் உள்ள வாக்கியம் மாணாக்கன் விளங்கும் பொருட்டுப் பேராசிரியர் கருத்தைத் தழுவி யாமெழுதிய வாக்கியமாகும். எழுத்ததிகாரம் எழுத்தினது அதிகாரத்தையுடையது எழுத்ததிகாரம் எனக் காரணப்பெயராயிற்று. அதிகாரம்-முறைமை. எழுத்துக்களின் இலக்கணத்தை முறைமைப்பட விரித்துரைக்கும் படலம் எழுத்ததிகாரம் என வழங்கப் பெறுவதாயிற்று. எழுத்தாவது மக்களாற் பேசப்படும் மொழிக்கு முதற்காரணமாகிய ஒலியாகும். தொல்காப்பியனாரால் எழுத்தெனச் சொல்லப்பட்டவை அகர முதல் னகர மீறாகவுள்ள முப்பதும் குற்றியலிகரம், குற்றியலுகாம், ஆய்தம் என்னும் மூன்றும் ஆக முப்பத்து மூன்றாகும். இவற்றிற்கு எழுத்தென்னும் பெயர் தமக்கு நெடுங்காலத்திற்கு முன்னே தோன்றி வழங்கியதென்பதனை எழுத்தெனப்படுப, அகர முதல் னகர இறுவாய் முப்பஃது என்ப எனவரும் சூத்திரத்தால் தொல்காப்பியனார் குறிப்பிடுகின்றார். விலங்கு முதலிய அஃறிணையுயிர்களின்றும் மக்களை வேறு பிரித்து உயர்திணை மாந்தராக உயர்த்தும் அறிதற் கருவியாக விளங்குவது மொழி. அத்தகைய மொழிகளுள் பேச்சு வழக்கொன்றே பெற்று எழுத்துருப் பெறாதனவும் உள்ளன. பேச்சு மொழி ஓரிடத்தும் ஒருகாலத்துமே பயன்படும். எழுத்துமொழியோ தன்மை, முன்னிலை, படர்க்கையாகிய மூவிடத்தும் இறப்பு, நிகழ்வு, எதிர்வு ஆகிய முக்காலத்தும் ஒப்பப் பயன் தருவதாகும். பனையோலைகளிலும் கல்லிலும் பிற பொருள்களிலும் எண்ணங்களை எழுத்தாற் பொறித்துவைக்கும் வழக்கம் பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னரே நம் தமிழ் மக்களால் கைக்கொள்ளப்பெற்று வருகின்றது. செல்லுந் தேஎத்துப் பெயர்மருங் கறிமார், கல்லேறிந் தெழுதிய நல்லரை மராஅத்த, கடவுளோங்கிய காடேசு கவலை (மலைபடு - 394-395) எனவும், பெயரும் பிடும் எழுதி யதர்தொறும், பீலிசூட்டிய பிறங்குநிலை நடுகல் (அகம் - 131) எனவும் பெறிகண்டழிக்கும் ஆவணமாக்களின் (அகம் - 77) எனவும் வரும் சங்க இலக்கியத் தொடர்களால் இச்செய்தி புலனாதல் காணலாம். மக்கள் தம்மாற் பேசப்படும் மொழியிலமைந்த ஒலிகளைத் தனித்தனியாகப் பிரித்தறியும் உணர்வுபெற்ற பின்னர்த்தான் கருத்துருவாகிய அவ்வொலிகளைக் கட்புலனாக வரிவடிவில் எழுதுதல்கூடும். அறிஞர்களது நன்முயற்சியால் ஒலிகளுக்குரிய வரிவடிவங்க ளமைந்த பின்புதான் அவ்வொலிகளுக்கு எழுத் தென்னுங் காரணப்பெயர் வழங்கியிருத்தல் வேண்டும். இவ் வுண்மை எழுதப்படுதலின் எழுத்தே1 எனவரும் பழைய சூத்திரத் தொடரால் அறிவுறுத்தப்பட்டமை காண்க. மெய்யெழுத்துக்கள் புள்ளிபெறுதலும் எகர ஒகரக் குறில்கள் புள்ளிபெறுதலும் குற்றியலுகரம் புள்ளிபெறுதலும் மகரக்குறுக்கம் மெய்க்குரிய மேற்புள்ளியோடு உள்ளேயொரு புள்ளிபெறுதலும் ஆகிய எழுத்து வடிவங்களிற் சிலவற்றைத் தொல்காப்பியனார் தம் நூலகத்து விளக்கியுள்ளார். ஆகவே தொல்காப்பியனார்க்கு நெடுங்காலத்திற்கு முன்பே தமிழ் முன்னோர் அகர முதல் னகர விறுவாயுள்ள எழுத்துக்களுக்குரிய வரிவடிவங்களை யமைத்துத் தமிழ் நெடுங்கணக்கினை ஒழுங்கு செய்துள்ளமை நன்கு தெளியப்படும். - வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 162-164 நூன்மரபு இவ்வதிகாரத்தாற் சொல்லப்படும் எழுத்திலக்கணத்தினை ஓராற்றாற் றொகுத்துணர்த்துதலின் நூன்மரபென்னும் பெயர்த்து என இளம்பூரணரும், இத்தொல்காப்பியமெனும் நூற்கு மரபாந் துணைக்கு வேண்டுவனவற்றைத் தொகுத் துணர்த்துதலின் நூன் மரபென்னும் பெயர்த்தாயிற்று என நச்சினார்க்கினியரும், அஃதாவது நூலினது மரபு பற்றிய பெயர் கூறுதல்..................... மலைகடல்யாறு என்றற் றொடக்கத்து உலகமரபு பற்றிய பெயர் போலாது ஈண்டுக் கூறப்படும் எழுத்து, குறில், நெடில், உயிர், மெய் என்றற் றொடக்கத்துப் பெயர்கள் நூலின்கண் ஆளுதற்பொருட்டு முதனூலாசிரியனாற் செய்துகொள்ளப் பட்டமையின் இவை நூன்மரபு பற்றிய பெயராயின எனச் சிவஞானமுனிவரும் இவ்வியலின் பெயர்க் காரணம் கூறினார். இவ்வியலுட் கூறப்படும் எழுத்துக்களின் பெயர் முதலியன அனைத்துல் தொல்காப்பியனார்க்கு முற்காலத்தவரான பண்டைத் தமிழ்ச் சான்றோர் நூல்களிற் சொல்லப்பட்ட எழுத்தியல் மரபுகளாய் இந்நூலில் ஆசிரியரால் எடுத்தாளப் பட்டனவாம். என்ப, புலவர், மொழிப, என்மனார் புலவர் என்றாங்கு முன்னையோர் கருத்தாக இவ்வியலில் வருங் குறியீடுகளை ஆசிரியர் எடுத்துரைத்தலால் இவ்வுண்மை விளங்கும். இவ்வியலிற் கூறப்படும் இலக்கணம் மொழியிடை எழுத்திற்கன்றித் தனிநின்ற எழுத்திற்குரியதாகும். குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்ற மூன்றும் யாதாயினும் ஒரு சொல்லைச் சார்ந்துவரினல்லது தனி யெழுத்தாக ஒலித்து நிற்கும் இயல்புடையன அல்ல. இவற்றின் இயல்பினை நன்கறிந்த தமிழ் முன்னோர் இம்மூன்றினையும் சார்பெழுத்தெனப் பெயரிட்டு வழங்கினார்கள். சார்ந்துவரன் மரபின்மூன்று எனவும், சார்ந்து வரினல்லது தமக்கியல்பில வெனத் தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும் எனவும் வருந் தொடர்களால் தொல்காப்பியனார் இவற்றின் இயல்பினைத் தெளிவாக விளக்குகின்றார். தனித்தியங்கும் இயல்புடையது உயிர். அவ்வியல்பின்றி உயிரினால் இயக்கப்படுவது மெய். அகர முதல் ஔகார மீறாக வுள்ள பன்னிரண்டெழுத்தும் தனித்தியங்கும் ஆற்றலுடைமை யால் உயிரெனப்பட்டன. ககர முதல் னகர மீறாகவுள்ள பதினெட் டெழுத்துக்களும் தனித்தியங்கு மியல்பின்றி அகர முதலிய உயிர்களால் இயக்கப்படுதலின் மெய்யெனப்பட்டன. உயிர்வழி யாயடங்கி அதனது விளக்கம் பெற்று நிற்கும் உடம்பைப் போன்று மெய்யெழுத்துக்களும் தம்மேல் ஏறிய உயிரெழுத்தின் மாத்திரைக்குள் அடங்கி அதன் ஒலியோடு ஒத்திசைப்பனவாகும். இங்ஙனம் மெய்யும் உயிரும் கூடியொலிக்கும் எழுத்தொலியினை உயிர்மெய் என்ற நிறையுவமப் பெயரால் வழங்குதல் பழைய தமிழ் மரபாகும். இவ்வியலில் 33 சூத்திரங்கள் உள்ளன. எழுத்தின்ன தென்பதும், அதன் வகையும், எழுத்துக்கள் பெறும் மாத்திரையும், அவற்றுட் சிலவற்றின் வடிவம், குற்றெழுத்து, நெட்டெழுத்து, உயிர், மெய், உயிர்மெய், வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து, என அவை பெறும் பெயர்களும், மெய் தன்னொடும் பிறிதொடும் கூடியொலிக்கும் மெய்மயக்கமும், குற்றெழுத்துக்களுள் அ இ உ என்பவற்றுக்குச் சுட்டென்னுங் குறியும் நெட்டெழுத்துக்களுள் ஆ ஏ ஓ என்பவற்றுக்கு வினாவென்னுங் குறியும், எழுத்துக்கள் முற்கூறிய மாத்திரையின் நீண்டொலிக்கு மிடமும் இவ்வியலில் உணர்த்தப்பட்டன. - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 162-166 முதலாவது நூன்மரபு 1. எழுத்தெனப்படுப அகரமுத னகர விறுவாய் முப்பஃ தென்ப சார்ந்துவரன் மரபின் மூன்றலங் கடையே என்பது சூத்திரம். இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோவெனின், எழுத்திலக் கணம் உணர்த்தினமை காரணத்தான் எழுத்ததிகாரமென்னும் பெயர்த்து. எழுத்தை உணர்த்திய அதிகாரம் என விரிக்க. அதிகாரம்-முறைமை. எழுத்து உணர்த்துமிடத்து எனைத்து வகையான் உணர்த்தி னாரோ வெனின், எட்டுவகையானும், எட்டிறந்த பலவகையானும் உணர்த்தினாரென்க. 1எட்டுவகைய என்பார் கூறுமாறு:- எழுத்து இனைத் தென்றலும், இன்ன பெயரின வென்றலும், இன்ன முறையின வென்றலும், இன்ன அளவின வென்றலும், இன்ன பிறப்பின வென்றலும், இன்ன புணர்ச்சியின வென்றலும், இன்ன வடிவின வென்றலும், இன்ன தன்மையின வென்றலுமாம். இவற்றுள் தன்மையும் வடிவும் நமக்கு உணர்த்தலாகாமையின் ஆசிரியர் ஈண்டு உரைத்திலர். ஏனைய இதனுட் பெறுதும். எழுத்து இனைத்தென்றலைத் தொகை வகை விரியான் உணர்க. முப்பத்துமூன் றென்பது தொகை. உயிர் பன்னிரண்டும், உடம்பு பதினெட்டுஞ், சார்பிற்றோற்றம் மூன்றும் அதன் வகை. அளபெடை யேழும், உயிர்மெய் இருநூற்றொருபத்தாறும் அவற் றோடுங் கூட்டி இருநூற்றைம்பத்தாறெனல் விரி. இனி, எழுத்துக்களின் பெயரும் முறையுந் தொகையும் இச் சூத்திரத்தாற் பெற்றாம். வகை: ஔகார இறுவாய் (எழு. 8) என்பத னானும், னகார இறுவாய் (எழு. 9) என்பதனானும், அவைதாங், குற்றியலிகரங்குற்றியலுகரம்’(எழு. 2) என்பதனானும் பெற்றாம். விரி: குன்றிசை மொழிவயின் (எழு. 4) என்பதனானும், புள்ளி யில்லா (எழு. 17)vன்பதனானும்bபற்றாம்.msî, அவற்றுள், அ இ உ (எழு. 3) என்பதனானும், ஆ ஈ ஊ (எழு. 4) என்பதனானும், மெய்யினளவே (எழு. 11) என்பதனானும், அவ்வியனிலையும் (எழு. 12) என்பதனானும் பெற்றாம். பிறப்பு, பிறப்பியலுட் பெற்றாம். புணர்ச்சி, உயிரிறு சொன்முன் (எழு. 107) என்பதனானும், அவற்று ணிறுத்தசொல்லின் (எழு. 108) என்பதனானும், பிறவாற் றானும் பெற்றாம். ïனி, 2எட்டிறந்த பல்வகைய என்பார் கூறுமாறு:- எழுத்துக்களது குறைவுங், கூட்டமும், பிரிவும், மயக்கமும், மொழியாக்கமும், நிலையும், இனமும், ஒன்றுபல வாதலுந், திரிந்ததன்றிரிபு அதுவென்றலும், பிறிதென்றலும், அதுவும் பிறிதுமென்றலும், நிலையிற் றென்றலும், நிலையாதென்றலும், நிலையிற்றும் நிலையாதுமென்றலும், இன்னோரன்ன பலவுமாம். குறைவு, அரையளபு குறுகல் (எழுத். 13), ஓரளபாகும் (எழுத். 57) என்பனவற்றாற் பெற்றாம். கூட்டம், மெய்யோ டியையினும் (எழுத். 10), புள்ளியில்லா (எழுத். 17) என்பனவற்றாற் பெற்றாம். பிரிவு, மெய்யுயிர் நீங்கின் (எழுத். 139) என்பதனாற் பெற்றாம். மயக்கம், ட ற ல ள (எழு. 23) என்பது முதலாக மெய்ந்நிலை சுட்டின் (எழுத். 30) என்பது ஈறாகக் கிடந்தன வற்றாற் பெற்றாம். மொழியாக்கம், ஓரெழுத்தொருமொழி (எழு. 45) என்பத னாற் பெற்றாம், அவ்வெழுத்துக்களை மொழியாக்கலின். நிலை, பன்னீருயிரும் (எழு. 59), உயிர்மெய்யல்லன (எழு. 60), உயிர் ஔ (எழு. 69), ஞணநமன (எழு. 78) என்பன. இவற்றான் மொழிக்கு முதலாம் எழுத்தும் ஈறாமெழுத்தும் பெற்றாம். இனம், வல்லெழுத்தென்ப (எழு. 19), மெல்லெழுத் தென்ப (எழுத். 20), இடையெழுத்தென்ப (எழு. 21), ஔகார இறுவாய் (எழுத். 8), னகார இறுவாய் (எழுத். 9) என்பன வற்றாற் பெற்றாம். இவற்றானே எழுத்துகள் உருவாதலும் பெற்றாம். இவ்வுருவாகிய ஓசைக்கு ஆசிரியர் வடிவு கூறாமை உணர்க. இனி வரிவடிவு கூறுங்கால் மெய்க்கே பெரும்பான்மை யும் வடிவு கூறுமாறு உணர்க. ஒன்று பலவாதல், எழுத்தோரன்ன (எழுத். 141) என்பதனாற் பெற்றாம். திரிந்ததன்றிரிபதுவென்றல், தகரம் வருவழி (எழுத். 369) என்பதனானும், பிறாண்டும் பெற்றாம். பிறிதென்றல், மகர இறுதி (எழுத். 310), னகார இறுதி . 332) என்பனவற்றாற் பெற்றாம். அதுவும் பிறிதுமென்றல், ஆறனுருபி னகரக் கிளவி (எழுத். 115) என்பதனாற்பெற்றாம். நிலையிற்றென்றல், நிறுத்த சொல்லி னீறாகு (எழுத். 108) என்பதனாற் பெற்றாம். நிலையாதென்றல், நிலைமொழியது ஈற்றுக்கண்ணின்றும் வருமொழியது முதற்கண்ணின்றும் புணர்ச்சி தம்முள் இலவாதல். அது மருவின் றொகுதி (எழுத். 111) என்பதனாற் பெற்றாம். நிலையிற்றும் நிலையாது மென்றல், குறியதன் முன்னரும் (எழுத். 226) என்பதனாற் கூறிய அகரம் இராவென் கிளவிக்ககரமில்லை (எழுத். 227) என்பதனாற் பெற்றாம். இக்கூறிய இலக்கணங்கள் கருவியுஞ் செய்கையு மென இரு வகைய. அவற்றுட் கருவி, புறப்புறக் கருவியும், புறக் கருவியும், அகப்புறக் கருவியும், அகக்கருவியு மென நால்வகைத்து. நூன்மரபும் பிறப்பியலும் புறப்புறக் கருவி. மொழிமரபு புறக்கருவி. புணரியல் அகப்புறக் கருவி. எகர ஒகரம் பெயர்க் கீறாகா (எழுத். 272) என்றாற் போல்வன அகக்கருவி. இனிச் செய்கையும், புறப்புறச்செய்கையும், புறச்செய்கை யும், அகப்புறச்செய்கையும், அகச்செய்கையுமென நால்வகைத்து. எல்லா மொழிக்கு முயிர்வரு வழியே (எழுத். 140) என்றாற் போல்வன புறப்புறச் செய்கை. லனவென வரூஉம் புள்ளி முன்னர் (எழுத். 149) என்றாற்போல்வன புறச்செய்கை. உகரமொடு புணரும் புள்ளி யிறுதி (எழுத். 163) என்றாற் போல்வன அகப்புறச் செய்கை. தொகைமரபு முதலிய ஓத்தினுள் இன்ன ஈறு இன்னவாறு முடியுமெனச் செய்கை கூறுவன வெல்லாம் அகச் செய்கை. இவ்விகற்ப மெல்லாந் தொகையாக உணர்க. இவ்வோத் தென்னுதலிற்றோ எனின், அதுவும் அதன் பெயர் உரைப்பவே அடங்கும். இவ்வோத் தென்ன பெயர்த்தோ வெனின், இத்தொல் காப்பியமென்னும் நூற்கு மரபாந் துணைக்கு வேண்டுவன வற்றைத் தொகுத்து உணர்த்தினமையின் நூன்மரபென்னும் பெயர்த்தாயிற்று. நூலென்றது நூல்போறலின் ஒப்பினாயதோர் ஆகுபெய ராம். அவ்வொப்பாயவா றென்னை யெனின், குற்றங் களைந்து எஃகிய பன்னுனைப் பஞ்சிகளையெல்லாங் கைவன் மகடூஉத் தூய்மையும் நுண்மையு முடையவாக ஓரிழைப் படுத்தினாற் போல . னீங்கி விளங்கிய வறிவ னாலே (மரபு. 94) வழுக்களைந்து எஃகிய இலக்கணங்களை யெல்லாம் முதலும் முடிவும் மாறு கோளின்றாகவுந் தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி யும், உரையுங் காண்டிகையும் உள்நின்று அகலவும், ஈரைங் குற்றமுமின்றி ஈரைந்தழகு பெற முப்பத்தி ரண்டு தந்திரவுத்தியொடு புணரவும், xருபொரு ணுதலிய சூத்திரத் தானு மிdbkhÊ கிளந்த வோத்தி னானும் பொதுமொழி கிளந்த படலத் தானு மூன்றுறுப் படக்கிய பிண்டத் தானும் (செய். 166) ஒரு நெறிப்படப் புணர்க்கப்படூஉந் தன்மை யுடைமையா னென்க. மரபு, இலக்கணம், முறைமை, தன்மை என்பன ஒரு பொருட் கிளவி. ஆயின் நூலென்றது ஈண்டு மூன்றதிகாரத்தினையு மன்றே? இவ்வோத்து மூன்றதிகாரத்திற்கும் இலக்கணமாயவா றென்னை யெனின், எழுத்துக்களது பெயரும் முறையும் இவ்வதிகாரத் திற்குஞ் செய்யுளியற்கும் ஒப்பக் கூறியது. ஈண்டுக் கூறிய முப்பத்து மூன்றனைப் பதினைந்தாக்கி ஆண்டுத் தொகை கோடலில் தொகை வேறாம். அளவு, செய்யுளியற்கும் இவ்வதிகாரத்திற்கும் ஒத்த அளவும் ஒவ்வா அளவு முளவாகக் கூறியது. குறிற்கும் நெடிற்குங் கூறிய மாத்திரை இரண்டிடத்திற்கும் ஒத்த அளவு. ஆண்டுக் கூறுஞ் செய்யுட்கு அளபு கோடற்கு ஈண்டைக்குப் பயன் தாராத அளபெடை கூறியது ஒவ்வா அளவு. அஃது, அளபிறந் துயிர்த்தலும் (எழுத்.33) என்னுஞ் சூத்திரத்தோடு ஆண்டு மாட்டெறியுமாற்றான் உணர்க. இன்னுங் குறிலும் நெடிலும் மூவகையினமும் ஆய்தமும் வண்ணத்திற்கும் இவ்வதிகாரத் திற்கும் ஒப்பக் கூறியன. குறைவும் இரண்டற்கும் ஒக்கும். கூட்டமும் பிரிவும் மயக்கமும் இவ்வதிகாரத்திற்கே உரியனவாகக் கூறியன. அம்மூவாறும் (எழுத். 22) என்னுஞ் சூத்திரம் முதலியனவற்றான் எழுத்துக்கள் கூடிச் சொல்லாமாறு கூறுகின்றமையிற் சொல்லதிகாரத்திற்கும் இலக்கணம் ஈண்டுக் கூறினாராயிற்று. இங்ஙனம் மூன்றதிகாரத்திற்கும் இலக்கணங் கூறுதலின் இவ்வோத்து நூலினது இலக்கணங் கூறியதாயிற்று. நூலென்றது தொல்காப்பிய மென்னும் பிண்டத்தை. இவ் வோத்திலக்கணங்கங்கடாம் எழுத்துக்களது பெயரும் முறையுந் தொகையும் அளவுங் குறைவுங் கூட்டமும் பிரிவும் மயக்கமும் ஆம். ஏனைய இவ்வதிகாரத்துள் ஏனையோத்துக்களுள் உணர்த்துப. அற்றேல் அஃதாக; இத்தலைச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், எழுத்துகளது பெயரும் முறையும் தொகையும் உணர்த்துத னுதலிற்று. இதன் பொருள்: எழுத்தெனப்படுப - எழுத்தென்று சிறப்பித்துச் சொல்லப்படுவன, அகரமுதல் னகரஇறுவாய் முப்பஃ தென்ப - அகரம் முதல் னகரம் ஈறாகக் கிடந்த முப்பதென்று சொல்லுவர் ஆசிரியர்; சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே - சார்ந்து வருதலைத் தமக்கு இலக்கணமாக வுடைய மூன்றும் அல்லாத இடத்து என்றவாறு. எனவே, அம்மூன்றுங் கூடியவழி முப்பத்து மூன்றென்ப. அ - ஆ - இ - ஈ - உ - ஊ - எ - ஏ - ஐ - ஒ - ஓ - ஔ - க் - ங் - ச் - ஞ் - ட் - ண் - த் - ந் - ப் - ம் - ய் - ர் - ல் - வ் - ழ் - ள் - ற் - ன் எனவரும். எனப்படுப வென்று சிறப்பித்துணர்த்துதலான் அளபெடையும் உயிர்மெய்யும் இத்துணைச் சிறப்பில. ஓசையுணர்வார்க்குக் கருவியாகிய வரிவடிவுஞ் சிறப்பிலா எழுத்தாகக் கொள்ளப்படும். அகரம் முதலாதல் ஆரியத்திற்கும் ஒக்குமேனும் ஈண்டுத் தமிழெழுத்தே கூறுகின்றாரென்பது உணர்தற்கு னகர விறுவாய் யென்றார். படுப, படுவ; படுப வென்பது படுத்தலோசையால் தொழிற் பெயராகக் கூறப்படும். பகரமும் வகரமும் ஈண்டு நிற்றற்குத் தம்முள் ஒத்த உரிமையவேனும் எழுத்தெனப்படுவ வெனத் தூக்கற்று நிற்குஞ் சொற்சீரடிக்குப் படுபவென்பது இன்னோசைத்தாய் நிற்றலின் ஈண்டுப் படுப வென்றே பாடம் ஓதுக. இஃது அன் பெறாத அகரவீற்றுப் பலவறிசொல். அகர னகர மெனவே பெயருங் கூறினார். எழுத்துகட் கெல்லாம் அகரம் முதலாதற்குக் காரணம் மெய்யி னியக்க மகரமொடு சிவணும் (எழுத். 46) என்பதனாற் கூறுப. வீடுபேற்றிற்கு உரிய ஆண்மகனை உணர்த்துஞ் சிறப்பான் னகரம் பின் வைத்தார். இனி எழுத்துகட்குக் கிடக்கைமுறை யாயினவாறு கூறுதும். குற்றெழுத்துகளை முன்னாகக் கூறி அவற்றிற்கு இன மொத்த நெட்டெழுத்துகளை அவற்றின் பின்னாகக் கூறினார், ஒரு மாத்திரை கூறியே இரண்டு மாத்திரை கூறவேண்டுதலின். அன்றி இரண்டை முற்கூறினாலோ வெனின், ஆகாது; ஒன்று நின்று அதனோடு பின்னரும் ஒன்று கூடியே இரண்டாவதன்றி இரண்டென்ப தொன்று இன்றாதலின். இதனான் ஒன்றுதான் பல கூடியே எண் விரிந்ததென்று உணர்க. இனி, அகரத்தின் பின்னர் இகரம் எண்ணும் பிறப்பும் பொருளும் ஒத்தலின் வைத்தார். இகரத்தின் பின்னர் உகரம் வைத்தார், பிறப்பு ஒவ்வாதேனும் அ - இ - உ அம்மூன்றுஞ் சுட்டு (எழுத். 31) எனச் சுட்டுப் பொருட்டாய் நிற்கின்ற இனங் கருதி. அவை ஐம்பாற் கண்ணும் பெரும்பான்மை வருமாறு உணர்க. எகரம் அதன்பின் வைத்தார், அகர இகரங்க ளொடு பிறப்பு ஒப்புமை பற்றி. ஐகார ஔகாரங்கட்கு இனமாகிய குற்றெழுத்து இலவேனும் பிறப்பு ஒப்புமை பற்றி ஏகார ஓகாரங்களின் பின்னர் ஐகார ஔகாரம் வைத்தார். ஒகரம் நொ என மெய்யொடு கூடி நின்றல்லது தானாக ஓரெழுத்தொரு மொழி யாகாத சிறப்பின்மை நோக்கி ஐகாரத்தின் பின் வைத்தார். அ இ உ எ என்னும் நான்கும் அக்கொற்றன் இக்கொற்றன் உக்கொற்றன் எக்கொற்றன் என, மெய்யொடு கூடாமல் தாம் இடைச்சொல்லாய் நின்றாயினும் மேல் வரும் பெயர்களோடு கூடிச் சுட்டுப் பொருளும் வினாப்பொருளும் உணர்த்தும். ஒகரம் மெய்யொடு கூடியே தன் பொருள் உணர்த்துவதல்லது தானாகப் பொருளுணர்த்தா தென்று உணர்க. இன்னும் அ - ஆ - உ - ஊ - எ - ஏ - ஒ - ஓ - ஔ என்பன தம்முள் வடிவு ஒக்கும். இ ஈ ஐ தம்முள் வடிவு ஒவ்வா. இன்னும் இவை அளபெடுக்குங்கால் நெட்டெழுத்தோடு குற்றெழுத்துக்கு ஓசை இயையுமாற்றானும் உணர்க. இனிச் சுட்டு நீண்டு ஆகார ஈகார ஊகாரங்களாத லானும் பொருள் ஒக்கும். புணர்ச்சி ஒப்புமை உயிர் மயங்கியலுட் பெறுதும். இம்முறை வழுவாமல் மேல் ஆளுமாறு உணர்க. இனிக் ககார ஙகாரமுஞ் சகார ஞகாரமும் டகார ணகாரமுந் தகார நகாரமும் பகார மகாரமுந் தமக்குப் பிறப்புஞ் செய்கையும் ஒத்தலின், வல்லொற்றிடையே மெல்லொற்றுக் கலந்து வைத்தார். முதனாவும் முதலண்ணமும் இடைநாவும் இடையண்ணமும் நுனிநாவும் நுனியண்ணமும் இதழியைதலு மாகிப் பிறக்கின்ற இடத்தின் முறைமை நோக்கி அவ் வெழுத்துக்களைக் க ச ட த ப, ங ஞ ண ந ம வென இம்முறையே வைத்தார். பிறப்பு ஒப்புமையானும் னகாரம் றகாரமாய்த் திரித லானும் றகாரமும் னகாரமுஞ் சேரவைத்தார். இவை தமிழெழுத் தென்பது அறிவித்தற்குப் பின்னர் வைத்தார். இனி இடை யெழுத்துக்களில் யகாரம் முன்வைத்தார், அதுவும் உயிர்கள் போல மிடற்றுப் பிறந்த வளி அண்ணங்கண்ணுற்று அடையப் பிறத்தலின். ரகாரம் அதனொடு பிறப்பு ஒவ்வாதேனுஞ் செய்கை ஒத்தலின் அதன் பின் வைத்தார். லகாரமும் வகாரமுந் தம்மிற் பிறப்புஞ் செய்கையும் ஒவ்வாவேனுங், கல் வலிது சொல் வலிது என்றாற் போலத் தம்மிற் சேர்ந்துவருஞ் சொற்கள் பெரும்பான்மை யென்பது பற்றி லகாரமும் வகாரமுஞ் சேர வைத்தார். ழகாரமும் ளகாரமும் ஒன்றானும் இயைபிலவேனும் இடையெழுத் தென்ப யரல வழள (எழுத். 21) என்றாற் சந்த வின்பத்திற்கு இயைபுடைமை கருதிச் சேர வைத்தார் போலும். அகரம் உயிரகரமும் உயிர்மெய்யகரமு மென இரண்டு. இஃது ஏனை யுயிர்கட்கும் ஒக்கும். எனவே, ஓருயிர் பதினெட்டா யிற்று. இவ்வெழுத்தெனப்பட்ட ஓசையை அருவென்பார் அறியா தார். அதனை உருவென்றே கோடும். அது செறிப்பச் சேற லானுஞ், செறிப்ப வருதலானும், இடை யெறியப்படுதலானுஞ், செவிக்கட் சென்று உறுத லானும், இன்பதுன்பத்தை ஆக்குத லானும், உருவும் உருவுங்கூடிப் பிறத்தலானுந், தலையும் மிடறும் நெஞ்சுமென்னும் மூன்றிடத்தும் நிலைபெற்றுப் பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் உறப்பிறக்கு மென்றமையானும் உருவேயாம். அருவே யாயின் இவ்விடத்திற் கூறியன இன்மை உணர்க. அல்லதூஉம், வன்மை மென்மை இடைமை யென்று ஓதினமையானும் உணர்க. உடம்பொடு புணர்த்தலென்னும் இலக்கணத்தான் இவ்வோசை உருவாதல் நிலைபெற்றதென்று உணர்க. அதற்குக் காரணமும் முன்னர்க் கூறினாம். இவ்வெழுத்துக்களின் உருவிற்கு வடிவு கூறாராயினர், அது முப்பத்திரண்டு வடிவினுள் இன்ன எழுத்திற்கு இன்ன வடிவெனப் பிறர்க்கு உணர்த்துதற்கு அரிதென்பது கருதி. அவ்வடிவு ஆராயு மிடத்துப் பெற்றபெற்ற வடிவே தமக்கு வடிவாம்; குழலகத்திற் கூறிற் குழல்வடிவுங், குடத்தகத்திற் கூறிற் குடவடிவும், வெள்ளிடையிற் கூறின் எல்லாத் திசையும் நீர்த்தரங்கமும் போல. எல்லா மெய்யு முருவுரு வாகி (எழுத். 17) எனவும், உட் பெறு புள்ளி யுருவா கும்மே (எழுத். 14) எனவும், மெய்யினியற்கை புள்ளியொடு நிலையல் (எழுத். 15) எனவுஞ் சிறுபான்மை வடிவுங் கூறுவர். அது வட்டஞ் சதுரம் முதலிய முப்பத்திரண்டனுள் ஒன்றை உணர்த்தும். மனத்தான் உணரும் நுண்ணுணர்வு இல் லோரும் உணர்தற்கு எழுத்துக்கட்கு வேறு வேறு வடிவங்காட்டி எழுதப்பட்டு நடத்தலிற் கட்புலனாகிய வரிவடிவும் உடைய வாயின. பெரும்பான்மை மெய்க்கே வடிவு கூறினார். உயிர்க்கு வடிவின்மையின் எகரவெகரத் தியற்கையு மற்றே (எழுத். 16) எனச் சிறுபான்மை உயிர்க்கும் வடிவு கூறினார். (1) கணேசய்யர் குறிப்பு: இனைத்து - இவ்வளவிற்று. வடிவு என்றது ஒலிவடிவை. குறைவு என்றது மாத்திரைக் குறுக்கத்தை. கூட்டம் - உயிரும் மெய்யும் கூடல். பிரிவு - கூடிய உயிரும் மெய்யும் பிரிந்து நிற்றல். ஒன்று பலவாதல் - ஓரெழுத்தாய் நின்றன பிரிந்து பலவாதல். அஃதாவது, `குன்றேறாமா' என்புழி மாவின் முன் நின்ற `றா' என்னும் ஓரெழுத்தே. `குன்றேறு ஆமா' எனப் பிரிப்புழி `று-ஆ' எனப் பலவாதல். இதனை, இவ்வதிகாரத்து 141ஆம் சூத்திரத்தா லறிக. திரிந்ததன் றிரிபு அதுவென்றலாவது நிலைமொழி வரு மொழிகளில் யாங்காயினும் ஓரெழுத்திற்குத் திரிபு கூறி அம்மொழிகளுள் ஒன்றற்கு, மீளவுந் திரிபு கூறுங்கால் அத்திரிபெழுத்து (திரியப்பட்ட எழுத்து) மொழியை யெடுத்துக் கூறாமல் திரியப்பட்டவெழுத்து மொழி அத் திரிந்த எழுத்து மொழியுமாம் என்னும் நயம்பற்றி அத் திரிந்த எழுத்து மொழி யையே யெடுத்துப் புணர்ச்சிகூறல். உதாரணம் உருபியலில், `நீயெ னொருபெயர் நெடுமுதல் குறுகும் ஆவயி னகர மொற்றாகும்மே' என்னுஞ் சூத்திரத்தால் `நீ' `நின்' எனத் திரியுமெனக் கூறி, மீளவும் அந்த `நீ' என்பதற்குப் பொருட் புணர்ச்சி விதி கூறுங்கால், முற்கூறிய `நின்' என்னும் திரிபு மொழியை யெடுத்துக் கூறாமல், `நின்' எனத் திரிந்ததும் `நீயே' என்பது பற்றி அதனையேயெடுத்து `நீயெ னொருபெய ருருபிய னிலையும்' எனக் கூறல் காண்க. இன்னும் குற்றியலுகரப் புணரியலில் `மூன்று மாறும் நெடுமுதல் குறுகும்' என்ற ஆசிரியர். `மூன்றனொற்றே பகாரமாகும்' எனக் கூறுதலும், `ஆறென் கிளவி முதனீடும்மே, எனக் கூறுதலும் அன்ன வாதல் உணர்க. இன்னும், புள்ளிமயங்கியலில், லகரவீற்று மொழிகட்குத் திரிபு கூறுங்கால்' `அல்வழி யெல்லா முறழென மொழிப' எனக் கூறி லகரம் றகரமாகுமெனக் கூறிய ஆசிரியர் மீளவும் அவற்றிற்குத் திரிபு கூறுங்கால், `தகரம் வரும்வழி யாய்தம் நிலையலும்' என்னுஞ் சூத்திரத்தால் லகரம் ஆய்தமாகத் திரியுமென்று திரிந்த மொழி யீற்றையே (லகரத்தையே) எடுத்துக் கூறலுமதுவாம். இனி ல னவென வரூஉம் புள்ளி முன்னர்த் தநவெனவரிற் றனவாகும்மே', என்பதனால் தகரம் றகரமாகத் திரியுமென்று கூறிய ஆசிரியர், மீள லகரத்திற்குத் திரிபு கூறுங்கால் றகரமெனத் திரிபெழுத்து மொழியை எடுத்துக் கூறாமல் `தகரம் வரும்வழி' எனத் திரிந்த எழுத்து மொழியை யெடுத்துக் கூறலும் அதுவேயாம். நன்னூலுரையுள் மயிலைநாதர் `திரிந்ததன் றிரிபு மதுவுமா மொரோவழி' என்று கூறலின் இத் திரிந்ததன் றிரிபு அதுவென்றன் முதலியன முன் யாதோ ஒரு நூலிலே சூத்திரங்களா யிருந்தனபோலும். திரிந்ததன் றிரிபு பிறிதென்றலாவது ஓரீறு பிறிதோரீறாகத் திரிந்து அவ்வாறே (பிறிதீறாகவே) நின்று புணருமென்றல். அது மரமென்பதனோடு அடியென்னும் வருமொழி புணருங்கால் மகரங்கெட்டு அகரவீறாகவே (பிறிதீறாகவே) நின்று புணருதல் போல்வது. இங்ஙனமே `னகரவீறு'ம் றகரமாகத் திரிந்து பிறி தீறாகவே நின்று புணர்தல் காண்க. திரிந்ததன் திரிபு அதுவும் பிறிதுமென்றலாவது - ஓரீறுவே றோரெழுத்துப் பெற்று பிறிதீறாக நின்று புணருமெனக் கூறி, அத்திரிபீற்றிற்காயினும் அத்திரிபீற்றோடு புணரும் வருமொழிக் காயினும் மீளவும் ஒன்று விதிக்கவேண்டி, அத்திரிபீற்றை எடுத்துப் புணர்க்குங்கால், அத்திரிபீறு திரிந்த ஈற்றோடுங் (இயல் பீற்றோடும்) கூடி நிற்றலின், அதுவும் (இயல்பீறும்) பிறிதும் (விதியீறும்) ஆயே நின்று புணருமென்றல். அது, ஆறனுருபோடும் நான்கனுரு போடும் புணருங்கால் நெடுமுதல் குறுகிநின்ற தம், நம், எம், தன், நின், என் என்னும் மொழிகளின் ஈற்றிலுள்ள மெய்கள் ஓரகரம் பெற்றுப் புணருமென, "ஆறனுருபினு நான்க னுருபினுங் - கூறிய குற்றொற் றிரட்டலில்லை - யீறாகு புள்ளி யகரமொடு நிலையு - நெடுமுதல் குறுகு மொழிமுன் னான" என்னுஞ் சூத்திரத்தால் விதித்த ஆசிரியர் மீள அவ்வகரம் பெற்ற தம் முதலிய மொழிகளோடு அது உருபை வைத்துப் புணர்த்துங் கால், அம்மொழிகளை மகரம் முதலிய புள்ளி யீறும் (அதுவும்) அகரவீறும் (பிறிதும்) ஆகிய இரண்டீறுமாயே, "ஆறனுருபி னகரக் கிளவி யீறாககர முனைக் கெடுதல் வேண்டும்" என்னுஞ் சூத்திரத்துள், ஈறாககரம் என வைத்துப் புணர்த்தல் காண்க. ஈறாககரம் - புள்ளியீற்றுக்களுக்கு ஈறாகிய அகரம் என்பது பொருள். தம் முதலிய என்னாது தாமுதலிய புள்ளியீற்றகர மென்று புள்ளியீறு கூறினமை யினானே அதுவும். அவற்றின் ஈறாகிய அகரம் என்றதனானே பிறிதுந் தோன்றக் கூறினமே காண்க. இன்னும் `வெரிநெ னிறுதி முழுதுங் கெடுவழி - வருமிட னுடைத்தே மெல்லெழுத் தியற்கை' என்னுஞ் சூத்திரத்து `வெரிநு' என்று சொல்லவேண்டியதை `வெரிந்' என்றதனானே திரிந்ததன் றிரிபு அது வென்பதும். `முழுதும் கெடுவழி' என்றதனாலே பிறி தென்பதும் தோன்றக் கூறியமையானே அதுவும் திரிந்ததன்திரிபு அதுவும் பிறிதும் என்றலாம். இன்னும், இத் திரிபுகள் பிறவாறு வருவன வுளவேனு மறிந்துகொள்க. நிலையிற்றென்றல் என்றது - நிலைமொழியும் வருமொழி யும் பொருட்பொருத்தமுறப் புணரும் தழுவுதொடர்ப் புணர்ச்சி விதிகளை. `பொற்குடம்' என்பதுபோல வருந் தொடர் மொழி களில் நிலை மொழியும் வருமொழியும் பொருட் பொருத்தமுற ஒன்றை ஒன்று தழுவிப் புணர்ந்து நிற்றலின் ஆண்டுக் கூறுஞ் செய்கை என்றும் நிலையுடைமையின் நிலையிற்றென்றல் என்றார். பதச்சேத காலத்துந் நிலைத்தலானே நிலையிற்றென்றார். நிலையாதென்றல் என்றது - நிலைமொழியும் வருமொழி யும் பொருட்பொருத்தமுறப் புணராத தழாஅத் தொடர்ப் புணர்ச்சி விதிகளை. முன்றில் என்பதுபோல வரும் தொடர் மொழிகளில் நிலைமொழியும் வருமொழியும் பொருட் பொருத்தமுற ஒன்றை ஒன்று தழுவிப் புணர்ந்து நில்லாமையின் (முன்றில் என்பது இல் முன் எனப் பொருள் கொள்ளுங்கால் நிலைமொழியும் வருமொழி யுந் தம்முள் இயையாமையின்) ஆண்டுக் கூறுஞ் செய்கை என்றும் நிலையாமையின் நிலையா தென்றல் என்றார். "மாயிரு மருப்பிற் பரலவ லடைய இரலை தெறிப்ப" என்பதிலும் மருப்பின் என்பது பரலோடியை யாது இரலையோடியைதலின் அங்ஙனம் இயையுங் கால் ஆண்டு னகரம் றகரமாய்த் திரிந்த செய்கை நிலை பெறா மையின் (இலவாதலின்) அதுபோல்வனவும் அன்னவே யாம். இதனை "மருவின் றொகுதி மயங்கியன் மொழியு - முரியவை யுளவே புணர் நிலைச் சுட்டே" என்னும் (எழு - 111) சூத்திர உரை நோக்கி உணர்க. பதச்சேத காலத்தும் அந்நுவய காலத்தும் நிலையா மையானே நிலையாதென்றார். நிலையிற்றும் நிலையாதுமென்றல் - ஓரிடத்தில் பெற்ற புணர்ச்சி நிலை அதுபோன்ற வேறோரிடத்தில் நிலைபெறா தென்றல். அது `பலாஅக்கோடு' எனக் குறியதன் முன்னர் நின்ற ஆகாரவீறு பெற்ற அகரத்தை அதுபோன்ற இராவென்கிளவி பெறாதென விலக்கல் போல்வன. குறியதன் முன்னர் நின்ற ஆகார வீறு அகரம் பெறும் என்ற இப்புணர்ச்சி விதி பலா முதலிய ஆகார வீற்றில் நிலைபெற்றும் அதுவே ஈறாய இராவென் கிளவியில் நிலைபெறாதும் வருதலின் நிலையிற்றும் நிலையாதுமென்றல் என்றார். கருவி கருவி - செய்கைக்குரிய கருவி. இக்கருவி செய்கைக்கு நேரே கருவியாவதும் பரம்பரையாற் கருவியாவதும் என இருவகைத்து. அகக் கருவியும் அகப்புறக்கருவியும் நேரே கருவியாவன. ஏனைய பரம்பரையாற் கருவியாவன. நூன்மரபு பிறப்பியல்களிற் கூறும் இலக்கணங்களும் சொற்குக் கருவியாகுமுகத்தால் செய்கைக்குக் கருவியாதலின் பரம்பரையாற் கருவியாயின. அகக்கருவியாவது - செய்கைப்படுதற்குரிய நிலைமொழி யீற்றெழுத்துப் பற்றி வரும் விதிகளைக் கூறுவது. அஃது "எகர வொகரம் பெயர்க்கீ றாகா" என்றாற் போல்வது. இது செய்கைக் குரிய ஈற்றெழுத்துப்பற்றிய விதியாதலின் அகக்கருவியாயிற்று. "அளவிற்கு நிறையிற்கு மொழிமுதலாகி - யுளவெனப்பட்ட வொன்பதிற் றெழுத்தே - யவைதாங் - க ச த ப வென்றா ந ம வ வென்றா - அகர உகரமோ டவையென மொழிப" என்பதும் அகக் கருவியாகும்; செய்கைக்கு அண்ணிய கருவியாதலின், முதனிலை இறுதிநிலைகளும் அகக்கருவியாகும்; மொழிக்கு முதனிற்கும் எழுத்துக்களும் ஈற்றினிற்கு மெழுத்துக்களுஞ் செய்கைக்கு பகாரப்படுதலின். அகப்புறக்கருவியாவது -புணர்ச்சி இலக்கணமும் புணர்ச்சிக் குரிய திரிபுகள் இவையென்பதும், இயல்பும். புணர்ச்சி வகையும், நிலைமொழிகள் செய்கை விதியிற் பெறுஞ் சாரியைகள் வருமொழியொடு புணருங்கா லடையுந் திரிபுகளு மாகி இருமொழிகளும் செய்கைப்படுதற் கேற்றவாய்வரும் விதிகளைக் கூறுவது. புறக்கருவியாவது - செய்கைக்குரிய நிலைமொழி வருமொழிகளாய் நிற்குமொழிகளின் மரபு கூறுவது. அது மொழிமரபு. அது செய்கைக்குரிய கருவி விதி கூறாது செய்கைப் படுதற்குரிய மொழிகளின் மரபு கூறுதலின் புறக்கருவியாயிற்று. புறப்புறக்கருவியாவது - மொழிகளாதற்குரிய எழுத்துக்களது இலக்கணமும் பிறப்புங் கூறுவது. அது நூன்மரபும் பிறப்பியலுமாம். அவை செய்கைக்குரிய புறக்கருவி யாகிய மொழிகளாதற்குரிய எழுத்துக்களின் இலக்கணமும் பிறப்புங் கூறுதலின் புறப்புறக் கருவி யாயின. இங்ஙனமே நால்வகைக் கருவியின் இலக்கணமுமறிந்து கொள்க. எழுத்துக்கள் மொழியாகி நின்று பின் செய்கை அடைதலின் அவற்றினிலக்கணங்களைச் செய்கைக்குப் புறப்புறக் கருவி யென்றும். அம்மொழிகளே, நிலைமொழி வருமொழியாக நின்று செய்கை பெறுதலின் மொழிகளினி லக்கணங்களைப் புறக்கருவி யென்றும், அங்ஙனம் மொழிகள் புணருங்கால் நிலை மொழியீறும் வருமொழி முதலுமடைகின்ற திரிபிலக்கணங் களையும் இயல்பையும், நிலைமொழி பெறுஞ் சாரியைகள் இவை என்பதையும். அவற்றின் திரிபு முதலியவற்றை யும் கூறுதலின் புணரியலை அகப் புறக் கருவியென்றும், நிலைமொழியீற்றில் நிற்றற்குரிய எழுத்து விதி முதலியவைகளைக் கூறும் விதிகளை அகக்கருவியென்றும் வகுத்தனர் என்க. இவற்றுள் எழுத்துக் களின் இலக்கணமும் மொழி யினிலக்கண மும் பரம்பரையாற் கருவியாதல் காண்க. கருவி யொன்றே அகம், அகப்புறம், புறம், புறப்புறம் எனச் செய்கை நோக்கி நான்காக வகுக்கப்பட்டது. செய்கை இனிச் செய்கை நான்கனுள் அகச்செய்கையாவது - நிலை மொழியீறு இன்ன இன்னவாறு முடியுமெனக் கூறுவது. அது பொற்குடம் என்றாற்போல்வது. இது ஈற்றெழுத்துக்கள் படுஞ் செய்கை விதியாதலின் அகமாயிற்று. இதுபற்றியே தொகை மரபு முதலிய ஓத்தினுள் இன்னஈறு இன்னவாறு முடியுமெனச் செய்கை கூறுவன வெல்லாமகச்செய்கையென்றார் உரைகாரர். செய்கை யோத்துக்களை அகத்தோத்தென்பதும் இதுபற்றியே யாம். அகப்புறச்செய்கையாவது நிலைமொழியீறு பெறும் முடி பன்றி நிலைமொழியீறு பெற்று வரும் எழுத்து முதலியவற்றின் முடிபு கூறுவது. அது புள்ளியீற்றுள் உகரம் பெறுமென விதித்த புள்ளியீறுகள் பின் அவ்வுகரம் பெறாவென விலக்குதல் போல்வன. இது ஈற்றெழுத்தின் விதியன்றி ஈற்றெழுத்துப்பெற்று வரும் எழுத்தைப் பற்றிய விதியாதலின் அகப்புறமாயிற்று. இதுபற்றியே "உகரமொடு புணரும் புள்ளி யிறுதி - எகரமு முயிரும் வருவழி யியற்கை" என்றாற் போல்வன. அகப்புறச் செய்கை என்றார் உரைகாரர். "வேற்றுமைக் குக்கெட வகரம் நிலையும்" எனவும் "இராவென்கிளவிக் ககர மில்லை" எனவும் வருவனவுமவை. புறச்செய்கையாவது வருமொழிச்செய்கை கூறுவது. இது நிலைமொழிச் செய்கையன்றி வருமொழிச் செய்கையாதலின் புறச் செய்கையாயிற்று. அது பொன்னரிது. பொன்றீது என்றாற்போல வருவது இதுபற்றியே "லனவென வரூஉம் புள்ளி முன்னர்த் - தநவென வரிற் றனவா கும்மே" என்றாற்போல்வன புறச்செய்கை யென்றார் உரைகாரர். புறப்புறச்செய்கையாவது - நிலைமொழியீறும் வருமொழி முதலும் செய்கை பெறாது நிற்ப அவ்விரண்டையும் பொருந்துதற்கு இடையில் உடம்படுமெய் போன்ற ஓரெழுத்து வருவது போல்வது. அது `தீயழகிது' என்றாற் போல்வது. இதுபற்றியே "எல்லா மொழிக்கு முயிர்வரு வழியே யுடம்படு மெய்யி னுருவு கொளல் வரையார்" என்றாற் போல்வன புறப்புறச்செய்கை யென்றாருரை காரர். நிலைமொழி யீறுபற்றி வருவதை அகச் செய்கை யென்றும், அவ்வீறுபற்றாது அவ்வீறு பெற்றுவரும் எழுத்தைப் பற்றி வருவது அவ்வீற்றுக்குப் புறமாதலின் அதனை அகப் புறமென்றும். வரு மொழிச் செய்கைபற்றி வருஞ்செய்கை நிலைமொழியீறும். அது பெற்றுவரும் எழுத்தும் பற்றிவருஞ் செய்கையன்றி, அவற்றிற்குப் புறமாதலின் அதனைப் புறச் செய்கை யென்றும், நிலைமொழி யீறும் வருமொழி முதலும் பற்றாது வருஞ் செய்கை அவ்விரண்டற்கும் புறமாதலின் அதனைப் புறப்புறமென்றும் கூறினர் என்க. கு-பு: இங்கே கூறிய கருவியுஞ் செய்கையும் எழுத்திகாரத் துக்கு மாத்திரமே உரையாசிரியராலும் நச்சினார்க்கினியராலும் உரைக்கப்பட்டமையை அவ்விருவருரையும்நோக்கித் தெளிந்து கொள்க. எஃகுதல் - பஞ்சினை நொய்தாக்கல். மூன்றுறுப்பு - சூத்திரம். ஒத்து, படலம். ஆண்டு என்றது - செய்யுளியலை. வண்ணம் என்றது செய்யுளுக்குரிய வண்ணங்களை. அவை பாவண்ணம் முதலியன. அதனைப் பொருளதிகாரம் 526-ம் சூத்திரம் முதலியவற்றானு ணர்ந்துகொள்க. உடம்பொடு புணர்த்தலென்னு மிலக்கணத்தாலிவ் வோசை யுருவாத னிலைபெற்றதென்பது - பழனிமலையிலி ருக்குங் குமரன் திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் முதலிய இடங்களிலு மிருப்பா னென்றால், பழனிமலையும் அவனுக்கு ஓரிடமாதல் தோன்றுதல் போல, எழுத்துக்களுக்குப் பிறப்பிடங் களும் வன்மை மென்மைகளுஞ் சொல்லி அதன்கண் உருவுடைய வென்பதையும் பெற வைத்த மையை. 2. அவைதாங் குற்றிய லிகரங் குற்றிய லுகர மாய்தமென்ற முப்பாற் புள்ளியு மெழுத்தோ ரன்ன. இது, மேற் சார்ந்துவருமென்ற மூன்றிற்கும் பெயரும் முறை யும் உணர்த்துத னுதலிற்று. இதன் பொருள்: அவைதாம் - மேற் சார்ந்து வருமெனப் பட்டவைதாம், குற்றியலிகரங் குற்றியலுகரம் ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் - குற்றியலிகரமுங் குற்றியலுகரமும் ஆய்தமு மென்று சொல்லப்பட்ட மூன்று கூற்றதாகிய புள்ளி வடிவுமாம்; எழுத்தோரன்ன - அவையும் முற்கூறிய முப்பதெழுத் தோடு ஒரு தன்மையவாய் வழங்கும் எ -று. முற்கூறிய 3இரண்டும் உம்மை தொக்குநின்றன. இகர உகரங் குறுகி நின்றன, விகாரவகையாற் புணர்ச்சி வேறுபடுதலின். இவற்றை இங்ஙனங் குறியிட்டாளுதல் எல்லார்க்கும் ஒப்ப முடிந்தது. சந்தனக்கோல் குறுகினாற் பிரப்பங்கோலாகாது அது போல உயிரது குறுக்கமும் உயிரேயாம். இவற்றைப் புணர்ச்சி வேற்றுமையும் பொருள் வேற்றுமையும் பற்றி வேறோர் எழுத்தாக வேண்டினார். இவற்றுட் குற்றியலுகரம் நேர்பசையும் நிரைபசையுமாகச் சீர்களைப் பலவாக்குமாறு செய்யுளியலுள் உணர்க. ஆய்தமென்ற ஓசைதான் அடுப்புக்கூட்டுப் போல மூன்று புள்ளி வடிவிற்றென்பது உணர்த்தற்கு ஆய்தமென்ற முப்பாற் புள்ளியு மென்றார். அதனை இக்காலத்தார் நடுவு வாங்கியிட் டெழுதுப. இதற்கு வடிவு கூறினார். ஏனை ஒற்றுக்கள் போல உயிரேறாது ஓசைவிகாரமாய் நிற்பதொன்றாகலின், எழுத்தியல் தழா ஓசைகள் போலக் கொள்ளினுங் கொள்ளற்க என்றற்கு எழுத்தேயா மென்றார். இதனைப் புள்ளி வடிவிற்றெனவே, ஏனை எழுத்துக்களெல்லாம் வரிவடிவினவாதல் பெற்றாம். முன்னின்ற சூத்திரத்தாற் சார்ந்துவரன் மரபின் மூன்றலங் கடையே எழுத்தெனப்படுப முப்பஃதென்ப எனவே, சார்ந்து வரன் மரபின் மூன்றுமே சிறந்தன, ஏனைய முப்பதும் அவ்வாறு சிறந்தில வெனவும் பொருடந்து நிற்றலின், அதனை விலக்கிச் சிறந்த முப்பது எழுத்தோடு இவையும் ஒப்ப வழங்குமென்றற்கு எழுத்தோ ரன்ன என்றார். இப்பெயர்களே பெயர். இம்முறையே முறை. தொகையும் மூன்றே. இம்மூன்று பெயரும் பண்புத்தொகை. அவைதாம், ஆய்த மென்ற என்பன சொற்சீரடி. (2) 3. அவற்றுள், அ இ உ எ ஒ என்னு மப்பா லைந்து மோரள பிசைக்குங் குற்றெழுத் தென்ப. இது, முற்கூறியவற்றுட் சிலவற்றிற்கு அளவுங் குறியும் உணர்த்துத னுதலிற்று. இதன் பொருள்: அவற்றுள் - முற்கூறிய முப்ப தெழுத்தினுள், அ இ உ எ ஒ என்னும் அப்பாலைந்தும் - அகர இகர உகர எகர ஒகரம் என்று கூறப்படும் அப்பகுதிகளைந்தும், ஓரளபு இசைக்குங் குற்றெழுத்தென்ப - ஒரோவொன்று ஓரளபாக ஒலிக்குங் குற்றெழுத்து என்னுங் குறியினையுடைய என்று கூறுவர் புலவர் என்றவாறு. இக்காரணப்பெயர் மேல் ஆளுமாறு ஆண்டு உணர்க. 4தமக்கு இனமாயவற்றின்கணல்லது குறுமை நெடுமை கொள்ளப் படாமையின், அளவிற்பட்டு அமைந்தன வாங் குற்றெழுத்திற் குறுகி மெய் அரைமாத்திரை பெற்றதேனுங் குற்றெழுத்து எனப் பெயர் பெறாதாயிற்று, ஒரு மாத்திரை பெற்ற மெய் தனக்கு இனமாக இன்மையின். குற்றெழுத் தென்பது பண்புத் தொகை. 5இனி இசைப்பதும் இசையும் வேறாக உணரற்க, அது பொருட் டன்மை. அவற்றுள், அ இ உ என்பன சொற்சீரடி. (3) 4. ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என்னு மப்பா லேழு மீரள பிசைக்கும் நெட்டெழுத் தென்ப. இதுவும் அது. இதன் பொருள்: ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என்னும் அப்பால் ஏழும் - ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என்று சொல்லப்படும் அக்கூற்றேழும், ஈரளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப - ஒரோவொன்று இரண்டு மாத்திரையாக ஒலிக்கும் நெட் டெழுத்து என்னுங் குறியினை யுடைய என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. எனவே, அளவுங் 6காரணக்குறியும் இங்ஙனம் உணர்த்தி மேல் ஆளுப. ஐகார ஔகாரங்கள் குறிய எழுத்தின் நெடிய வாதற்குக் குற் றெழுத்தாகிய இனந் தமக்கின்றேனும் மாத்திரை யொப்புமையான் நெட்டெழுத் தென்றார். ஆ ஈ ஊ, ஏ ஐ என்பனவற்றைச் சொற்சீரடி யாக்குக. (4) 5. மூவள பிசைத்த லோரெழுத் தின்றே. இஃது - ஐயம் அகற்றியது; ஓரெழுத்து மூவளபாயும் இசைக் குங் கொல்லோ வென்று ஐயப்படுதலின். இதன் பொருள்: ஓரெழுத்து மூவளபு இசைத்தலின்று - ஓரெழுத்தே நின்று மூன்று மாத்திரையாக இசைத்தலின்று என்றவாறு. எனவே, பல எழுத்துக் கூடிய இடத்து மூன்று மாத்திரையும் நான்கு மாத்திரையும் இசைக்கு மென்றவாறு. எனவே, பெரும்பான்மை மூன்று மாத்திரையே பெறும் என்றார் புலவர். பல எழுத்தெனவே, நான்கு மாத்திரையும் பெறுதல் பெற்றாம். (5) 6. நீட்டம் வேண்டி னவ்வள புடைய கூட்டி யெழூஉத லென்மனார் புலவர். இது, மாத்திரை நீளுமாறு கூறுகின்றது. இதன் பொருள்: நீட்டம் வேண்டின் - வழக்கிடத்துஞ் செய்யுளி டத்தும் ஓசையும் பொருளும் பெறுதல் காரணமாக இரண்டு மாத்திரை பெற்ற எழுத்து அம்மாத்திரையின் மிக்கு ஒலித்தலை விரும்புவராயின், அவ்வளபு உடைய கூட்டி எழூஉதல் என்மனார் புலவர் - தாங் கருதிய மாத்திரையைத் தருதற்கு உரிய எழுத்துக்களைக் கூட்டி அம்மாத்திரைகளை எழுப்புக என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. கூட்டி யெழுப்புமாறு, குன்றிசைமொழி (எழுத். 41) ஐ ஔ வென்னும் (எழுத். 42) என்பனவற்றான் எழுவகைத்தெனக் கூறுப. உதாரணம்: ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஐஇ, ஓஒ, ஔஉ என வரும். இவை மூன்று மாத்திரை பெற்றன. 7இவைதாம் நெட்டெழுத் தேழே ஓரெழுத் தொருமொழி (எழுத். 43) என்ற அந்நெட்டெழுத்துக்களே அளபெடுத்தலிற் சொல்லாதல் எய்தின. இனி அளபெடை யசைநிலை யாகலு முரித்தே (செய். 17) என்னுஞ் செய்யுளியற் சூத்திரத்தான் எழுத்தாந் தன்மையும் எய்திற்று. இதுதான், 8இயற்கையளபெடையுஞ் செய்யுட்குப் புலவர் செய்து கொண்ட 9செயற்கை யளபெடையுமாய்ச் சொற்றன்மை எய்தி நின்று அலகு பெறுமாறுங் குற்றியலிகர குற்றியலுகரங்கள் போல எழுத்தாந்தன்மை எய்தி அலகு பெறாது நிற்குமாறும் அச் சூத்திரத்தான் உணர்க. எனவே, எழுத்தாந் தன்மையும் உடைமை யின் அளபெடையொடு கூடி எழுத்து நாற்பது என்றலும் பொருந் திற்று. ஒற்றளபெடை செய்யுட்கே வருதலின் ஈண்டுக் கூறாராயினர். அவ்வளபுடைய எனப் பன்மையாகக் கூறியவதனான் இவரும் நான்கு மாத்திரையுங் கொண்டார்; என்னை? இவ்வாசிரி யரை முந்துநூல் கண்டு என்றாராகலின். மாபுராணத்து, செய்யுட்க ளோசை சிதையுங்கா லீரளபு மையப்பா டின்றி யணையுமா மைதீரொற்று றின்றியுஞ் செய்யுட் கெடினொற்றை யுண்டாக்கு குன்றுமே லொற்றளபுங் கொள். என்ற சூத்திரத்தான் அவர் கொண்ட நான்கு மாத்திரையும் இவ் வாசிரியர்க்கு நேர்தல் வேண்டுதலின். அது செறாஅஅய் வாழிய நெஞ்சு (குறள். 1200) தூஉஉத் தீம்புகை தொல்விசும்பு பேஎஎர்த்தது கொல் (மலைபடு. இறுதிவெண்பா) இலாஅஅர்க் கில்லை தமர் (நாலடி. 283) விராஅஅய்ச் செய்யாமை நன்று (நாலடி. 246) மரீஇ இப் பின்னைப் பிரிவு (நாலடி. 220) எனச் சான்றோர் செய்யுட் கெல்லாம் நான்கு மாத்திரை பெற்று நின்றன. அன்றி மூன்று மாத்திரை பெற்றனவேல் ஆசிரியத்தளை தட்டுச் 10செப்ப லோசை கெடுமாயிற்று. இங்ஙனம் அளபெடாது நின்று ஆசிரியத்தளை தட்டு நிற்பன கலிக்கு உறுப்பாகிய கொச்சக வெண்பாக்கள்; இவை அன்னவன்றென உணர்க. 11கோட்டுநூறும் மஞ்சளுங் கூடியவழிப் பிறந்த செவ் வண்ணம்போல நெடிலுங் குறிலுங் கூடிய கூட்டத்துப் பிறந்த பின்னர்ப் பிளவுபடா வோசையை அளபெடையென்று ஆசிரியர் வேண்டி னார். இவை கூட்டிச் சொல்லிய காலத்தல்லது புலப்படா, எள்ளாட்டியவழி யல்லது எண்ணெய் புலப்படா வாறு போல என்று உணர்க. இனி அளபெடையல்லாத ஓசைகளெல்லாம் 12இசையோசை யாதலின் அவற்றை அளபிறந் துயிர்த்தலும் (எழுத். 33) என்னுஞ் சூத்திரத்தாற் கூறுப. (6) 7. கண்ணிமை நொடியென வவ்வே மாத்திரை நுண்ணிதி னுணர்ந்தோர் கண்ட வாறே. இது, மாத்திரைக்கு அளவு கூறுகின்றது. இதன் பொருள்: கண்ணிமை நொடி என அவ்வே மாத்திரை - கண்ணி மையெனவும் நொடியெனவும் அவ்விரண்டே எழுத்தின் மாத்திரைக்கு அளவு; நுண்ணிதின் உணர்ந்தோர் கண்டவாறே - நுண்ணி தாக நூலிலக்கணத்தை உணர்ந்த ஆசிரியர் கண்ட நெறி என்றவாறு. 13என எண்ணிற் பிரிந்து இரண்டிடத்துங் கூடிற்று. கண்ணிமை, நொடி என்னும் பலபொருளொரு சொற்கள் ஈண்டுத் தொழின்மேலும் ஓசைமேலும் முறையே நின்றன. ஆசிரியர் எல்லாரும் எழுத்திற்கு இவையே அளவாகக் கூறலின் இவருங் கூறினார். இயற்கைமகன் தன்குறிப்பினன்றி இரண்டிமை யும் ஒருகாற் கூடி நீங்கின காலக்கழிவும், அ எனப் பிறந்த ஓசையது தோற்றக் கேட்டுக் காலக்கழிவும் ஒக்கும். இக்கண்ணிமை யினது பாகம், மெய்க்குஞ் சார்பிற் றோற்றத் திற்கும் இதன் பாகம் மகரக் குறுக்கத்திற்கும் கொள்க. இக்கண்ணிமை இரட்டித்து வருதல் நெடிற்கும் அது மூன்றும் நான்குமாய் வருதல் அளபெடைக்குங் கொள்க. அது போலவே நொடித்தற் றொழிலிற் பிறந்த ஓசையது தோற்றக் கேட்டுக் காலக்கழிவும் அ எனப் பிறந்த ஓசையது தோற்றக் கேட்டுக் காலக்கழிவும் ஒக்கும். ஏனையவற்றிற்குங் கூறிய வாறே கொள்க. 14இனி அவ்வளவைதான் நிறுத்தளத்தல், பெய்தளத்தல், சார்த்தியளத்தல், நீட்டியளத்தல், தெறித்தளத்தல், தேங்கமுகந் தளத்தல், எண்ணியளத்தல் என எழுவகைத்து. அவற்றுள் இது சார்த்தியளத்தலாம். கண்ணிமைக்கும் நொடிக்கும் அளவு ஆராயின் வரம்பின்றி ஓடுமென்று கருதி நுண்ணிதி னுணர்ந்தோர் கண்டவாறு என்று முடிந்தது காட்டலென்னும் உத்தியான் கூறினார். இஃது ஆணை கூறுதலுமாம். (எனவே, எழுத்திற்கே அளவு கூறி மாத்தி ரைக்கு அளவு கூறிற்றிலர்.) நொடியிற் கண்ணிமை சிறப்புடைத்து, உள்ளத்தான் நினைத்து 15நிகழாமையின். (7) 8. ஔகார விறுவாய்ப் பன்னீ ரெழுத்து முயிரென மொழிப. இது, குறிலையும் நெடிலையுந் தொகுத்து வேறொர் குறியீடு கூறுகின்றது. இதன் பொருள்: ஔகார இறுவாய்ப் பன்னீரெழுத்தும் - அகரம் முதலாக ஔகாரம் ஈறாகக் கிடந்த பன்னிரண் டெழுத்தும், உயிரென மொழிப - உயிரென்னுங் குறியினை யுடைய என்று கூறுவர் புலவர் என்றவாறு. இதுவும் ஆட்சியும் காரணமும் நோக்கியதொரு குறி. மெய் பதினெட்டினையும் இயக்கித் தான் அருவாய் வரிவடிவின்றி நிற்றலின் உயிராயிற்று. இவை மெய்க்கு உயிராய் நின்று மெய்களை இயக்குமேல் உயிரென வேறோர் எழுத்தின்றாம் பிறவெனின், மெய்யினிற்கும் உயிருந் தனியே நிற்கும் உயிரும் வேறென உணர்க. என்னை? அகர முதல (குறள்.1) என்புழி வகரந் தனியுயிருமாய்க் ககர வொற்று முதலியவற்றிற்கு உயிருமாய் வேறு நிற்றலின். அவ் அகரந் தனியே நிற்றலானும் பல மெய்க்கண் நின்று அவ்வம் மெய் கட்கு இசைந்த ஓசைகளைப் பயந்தே நிற்றலானும் வேறுபட்ட தாகலின், ஒன்றேயாயும் பலவேயாயும் நிற்பதொர் தன்மையை யுடைத்தென்று கோடும்; இறைவன் ஒன்றேயாய் நிற்குந் தன்மையும் பல்லுயிர்க்கும் தானேயாய் அவற்றின் அளவாய் நிற்குந் தன்மையும் போல. அது அ என்றவழியும், ஊர என விளியேற்றவழியும், அகர முதல என்றவழி மூவினங்களில் ஏறினவழியும், ஓசை வேறு பட்டவாற்றான் உணர்க. இங்ஙனம் இசைத்துழியும் மாத்திரை ஒன்றேயாம். இஃது ஏனை யுயிர்கட்கும் ஒக்கும். ஔகார இறுவாய் என்பது பண்புத்தொகை. உம்மை முற்றும்மை. 16அகரமுதல் என முற்கூறிப் போந்தமையின் ஈண்டு ஈறே கூறினார். (8) 9. 17னகார விறுவாய்ப் பதினெண் ணெழுத்து மெய்யென மொழிப. இஃது - உயிரல்லனவற்றைத் தொகுத்து ஒரு குறியீடு கூறு கின்றது. இதன் பொருள்: னகார விறுவாய்ப் பதினெண் ணெழுத்து - ககாரம் முதல் னகாரம் ஈறாய்க் கிடந்த பதினெட்டு எழுத்தும், மெய்யென மொழிப - மெய் யென்னுங் குறியினையுடைய என்று கூறுவர் புலவர் என்றவாறு. இதுவும் ஆட்சியுங் காரணமும் நோக்கிய குறி. என்னை? பன்னீருயிர்க்குந் தான் இடங்கொடுத்து அவற்றான் இயங்குந் தன்மை பெற்ற உடம்பாய் நிற்றலின். னகாரவிறுவாய் என்பது பண்புத்தொகை. உம்மை முற்றும்மை. 18முன்னர் னகாரவிறுவா யென்புழி முப்பதெழுத் திற்கும் ஈறா மென்றார், ஈண்டுப் பதினெட்டெழுத்திற்கும் ஈறா மென்றா ராதலிற் கூறியது கூறிற்றன்று. (9) 10. மெய்யோ டியையினு முயிரிய றிரியா. இஃது உயிர்மெய்க்கு அளபு கூறுகின்றது. இதன் பொருள்: உயிர் மெய்யோடு இயையினும் - பன்னீருயிரும் பதினெட்டு மெய்யோடுங் கூடி நின்றனவாயினும், இயல் திரியா - தம் அளபுங் குறியும் எண்ணுந் திரிந்து நில்லா என்றவாறு. இது புள்ளி யில்லா (எழுத். 17) என்பதனை நோக்கி நிற்றலின் எதிரது போற்றலாம். உயிரும் மெய்யும் அதிகாரப்படுத லின் ஈண்டு வைத்தார். அ என்புழி நின்ற அளவுங் குறியும் ஒன்றென்னும் எண்ணுங், க என நின்ற இடத்தும் ஒக்கும். ஆ என்புழி நின்ற அளவுங் குறியும் ஒன்றென்னும் எண்ணும், கா என நின்ற இடத்தும் ஒக்கும் என்பது இதன் கருத்து. பிறவும் அன்ன. ஆயின் ஒன்றரை மாத்திரையும் இரண்டரை மாத்திரையும் உடையன ஒரு மாத்திரையும் இரண்டு மாத்திரையும் ஆயவாறு என்னையெனின், நீர் தனித்து அளந்துழியும் நாழியாய் அரை நாழியுப்பிற் கலந்துழியுங் கூடி ஒன்றரை நாழியாய் மிகாதவாறு போல்வதோர் பொருட்பெற்றி யென்று கொள்வதல்லது காரணங் கூறலாகாமை உணர்க. ஆசிரியன் ஆணை என்பாரும் உளர். 19விளங்காய் திரட்டினா ரில்லைக் களங்கனியை காரெனச் செய்தாரு மில் (நாலடி.யார் 103) என்பதே காட்டினார் உரையாசிரியரும். (10) 11. மெய்யி னளவே யரையென மொழிப. இது, தனிமெய்க்கு அளபு கூறுகின்றது. இதன் பொருள்: மெய்யின் அளபே அரையென மொழிப - மெய்யினது மாத்திரையினை ஒரோவொன்று அரைமாத்திரை யுடையது என்று கூறுவர் புலவர் என்றவாறு. அவ்வரை மாத்திரையுந் தனித்துக் கூறிக்காட்டலாகாது, நாச் சிறிது புடைபெயருந் தன்மையாய் நிற்றலின். இனி அதனைச் சில மொழிமேற் பெய்து, காக்கை கோங்கு கவ்வை யெனக் காட்டுப. 20மெய்யென்பது அஃறிணை யியற்பெயராதலின் மெய்யென்னும் ஒற்றுமை பற்றி அரை யென்றார். (11) 12. அவ்விய னிலையு மேனை மூன்றே. இது, சார்பிற் றோற்றத்து மூன்றற்கும் அளபு கூறுகின்றது. இதன் பொருள்: ஏனை மூன்று - சார்பிற் றோற்றத்து மூன்றும், அவ் வியல் நிலையும் முற்கூறிய அரை மாத்திரையாகிய இயல்பின் கண்ணே நிற்கும் என்றவாறு. கேண்மியா, நாகு, எஃகு என வரும். (12) 13. அரையளவு குறுகன் மகர முடைத்தே யிசையிட னருகுந் தெரியுங் காலை. இது, மெய்களுள் ஒன்றற்கு எய்தியது விலக்குதல் நுதலிற்று. இதன் பொருள்: இசை இடன் மகரம் அரையளபு குறுகலுடைத்து - வேறோர் எழுத்தினது ஓசையின்கண் மகரவொற்றுத் தன் அரை மாத்திரையிற் குறுகிக் கால்மாத்திரை பெறுதலையுடைத்து, தெரியுங்காலை அருகும் - ஆராயுங் காலத்துத் தான் சிறுபான்மை யாய் வரும் என்றவாறு. உதாரணம்: போன்ம், வரும்வண்ணக்கன் என ஒரு மொழிக் கண்ணும் இருமொழிக்கண்ணுங் கொள்க. 21இது பிறன் கோட் கூறலென்னும் உத்தி. (13) 14. 22உட்பெறு புள்ளி யுருவா கும்மே. இது பகரத்தோடு மகரத்திடை வரிவடிவு வேற்றுமை செய் கின்றது. மகரம் அதிகாரப்பட்டு நிற்றலின் ஈண்டுக் கூறினார். இதன் பொருள்: உட்பெறுபுள்ளி - புறத்துப் பெறும் புள்ளியோடு உள்ளாற் பெறும் புள்ளி, உருவாகும் - மகரத்திற்கு வடிவாம் என்றவாறு. எனவே புறத்துப் பெறும் புள்ளியாவது மேற்சூத்திரத்தான் மெய்கட்குக் கூறும் புள்ளி. ஈண்டு 23உரு என்றது காட்சிப் பொருளை உணர்த்திநின்றது. உதாரணம்: கப்பி (கம்மி) எனவரும். இஃது எதிரது போற்றல். (14) 15. மெய்யி னியற்கை புள்ளியொடு நிலையல். இது, தனிமெய்க்கும் உயிர்மெய்க்கும் ஒப்புமைமேல் வேற்றுமை செய்தல் கூறுகின்றது; என்னை? உயிர்மெய்யான ககர ஙகரங்கட்குந் தனி மெய்யான ககர ஙகரங்கட்கும் வடிவு ஒன்றாக எழுதினவற்றை ஒற்றாக்குவதற்குப் பின்பு புள்ளி பெறுக வென்றலின். இதன் பொருள்: மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல் - பதினெட்டு மெய்களின் தன்மையானது புள்ளிபெற்று நிற்றலாம் என்றவாறு. எனவே, உயிர்மெய்கட்குப் புள்ளியின்றாயிற்று. க் ங் ...... ற் ன் என வரும். இவற்றைப் புள்ளியிட்டுக் காட்டவே, புள்ளி பெறுவதற்கு முன்னர் அகரம் உடனின்றதோர் மெய்வடிவே பெற்று நின்றன வற்றை, பின்னர் அப்புள்ளியிட்டுத் தனிமெய் யாக்கினாரென்ப தூஉம் பெறுதும். இதனானே ககரம் ஙகரம் முதலியன புள்ளி பெறுவதற்கு முன்னர் இயல்பாக அகரம் பெற்றே நிற்கும் என்ப தூஉம், புள்ளி பெறுங்காலத்து அவ்வகரம் நீங்குமென்பதூஉம், பின்னர் அப்புள்ளி நீங்கி உயிரேறுமிடத்துத் தன்கண் 24அகரம் நீங்கியேபோக, வருகின்றதோர் உயிர் யாதாயினும் ஒன்று ஏறி நிற்குமென்பதூஉம் பெற்றாம். மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும் (எழுத். 46) என்னுஞ் சூத்திரத் தானும் இதுவே இதற்குக் கருத்தாதல் உணர்க.(15) 16. எகர ஒகரத் தியற்கையு மற்றே. இதுவும் அது. இதன் பொருள்: எகர ஒகரத்து இயற்கையும் அற்றே - எகர ஒகரங்களினது நிலையும் மெய்போலப் புள்ளிபெறும் இயல்பிற்று என்றவாறு. எனவே, ஏகார ஓகாரங்கட்குப் புள்ளி யின்றாயிற்று. எ- ஒ - என வரும். இஃது உயிர்மெய்க்கும் ஒக்கும். மகரம் ஆராய்ச்சிப்பட்டது கண்டு, மகரத்திற்கு வடிவு வேற்றுமை செய்து, அதிகாரத்தான் மெய்யின் தன்மை கூறி, அதன் பின் 25மாட்டேற்றலின் எகர ஒகரத்தையுங் கூறினார். (16) 17. புள்ளி யில்லா வெல்லா மெய்யு முருவுரு வாகி யகரமோ டுயிர்த்தலு மேனை யுயிரோ டுருவுதிரிந் துயிர்த்தலு மாயீ ரியல வுயிர்த்த லாறே. இது, மெய்யும் உயிருங் கூடிப் புணருமாறும் ஆண்டு அவை திரியாதுந் திரிந்தும் நிற்குமாறுங் கூறுகின்றது. இதன் பொருள்: புள்ளி இல்லா எல்லா மெய்யும் - உயிரைப் பெறு தற்குப் புள்ளியைப் போக்கின எல்லா மெய்களும், உரு உருவாகி அகரமோடு உயிர்த்தலும் - புள்ளி பெறுகின்ற காலத்து இயல் பாகிய அகரம் நீங்கிய வடிவே தமக்கு வடிவாகி நின்று பின்னர் ஏறிய அகரத்தொடு கூடி ஒலித்தலும், ஏனை உயிரோடு உருவு திரிந்து உயிர்த்தலும் - ஒழிந்த பதினோருயிருங் கூடி அவ்வடிவு திரிந்து ஒலித்தலும், ஆயீரியல உயிர்த்தலாறே - என அவ் விரண்டு இயல்பினையுடைய, அவை ஒலிக்கும் முறைமை என்றவாறு. புள்ளியில்லா மெய் யெனவே, முன் பெற்றுநின்ற புள்ளியை உயிரேற்றுதற்குப் போக்கினமை பெறுதும். உருவுருவாகி யெனவே புள்ளி பெறுதற்காக இயல்பாகிய அகரம் நீங்கிய வடிவே பின்னர் அகரம் பெறுதற்கு வடிவாமென்பது கூறினார். க - ங - ய என வரும். உருவு திரிந்து உயிர்த்தலாவது மேலுங் கீழும் விலங்கு பெற்றும், கோடு பெற்றும், 26புள்ளி பெற்றும், புள்ளியுங் கோடும் உடன் பெற்றும் உயிர்த்தலாம். கி கீ முதலியன மேல்விலங்கு பெற்றன. கு கூ முதலியன கீழ் விலங்கு பெற்றன. கெ கே முதலியன கோடு பெற்றன. கா ஙா முதலியன புள்ளி பெற்றன. அருகே பெற்ற புள்ளியை இக்காலத்தார் காலாக எழுதினார். மகரம் உட்பெறு புள்ளியை வளைத்தெழுதினார். கொ கொ ஙொ ஙொ முதலியன புள்ளியுங் கோடும் உடன் பெற்றன. இங்ஙனந் திரிந்து ஒலிப்பவே உயிர்மெய் பன்னிரு பதினெட்டு இருநூற் றொருபத்தாறாயிற்று. ஆகவே உயிர்மெய்க்கு வடிவும் ஒருவாற்றாற் கூறினாராயிற்று. இதனானே, மெய் தனக்கு இயல்பாகிய அகரத்தை நீங்கி நிற்பதொரு தன்மையும், பிறிதோருயிரை ஏற்குந் தன்மையும் உடைய தென்பதூஉம், உயிர், மெய்க்கண் புலப்படாது இயல்பாகிய அகரமாய் நிற்குந் தன்மையும் மெய் புள்ளிபெற் றழிந்தவழி அவற்றிற்குத் தக்க உயிராய்ப் புலப்பட்டு வருந் தன்மையும் உடைய தென்பதூஉம் பெற்றாம். உயிர்மெய் என்பது உம்மைத் தொகை. (17) 18. மெய்யின் வழிய துயிர்தோன்று நிலையே. இது மெய்யும் உயிருங் கூடியவழி அவற்றின் ஓசை நிற்கும் முறைமை கூறுகின்றது. இதன் பொருள்: மெய்யின் 27வழியது - மெய்யினது ஓசை தோன்றிய பின்னதாம், உயிர் தோன்று நிலையே - உயிரினது ஓசை தோன்று நிலை என்றவாறு. முன்னின்ற சூத்திரத்தான் மெய் முன்னர் நிற்ப உயிர் பின் வந்து ஏறுமென்றார். அம்முறையே ஓசையும் பிறக்குமென்றார். இதனானே மாத்திரை கொள்ளுங்கால் உப்பும் நீரும் போல ஒன்றே யாய் நிற்றலும், வேறுபடுத்துக் காணுங்கால் விரலும் விரலுஞ் சேர நின்றாற் போல வேறாய் நிற்றலும் பெற்றாம். நீர் உப்பின் குணமே யாயவாறு போல, உயிரும் மெய்யின் குணமேயாய் வன்மை மென்மை இடைமை எய்தி நிற்றல் கொள்க. உதாரணம்: க - ங - ய எனக் கூட்டமும் பிரிவும் மூவகையோசையுங் காண்க. (18) 19. வல்லெழுத் தென்ப கசட தபற. இது, தனிமெய்களுட் சிலவற்றிற்கு வேறொர் குறியீடு கூறு கின்றது. இதன் பொருள்: க ச ட த ப ற - க ச ட த ப ற என்னுந் தனி மெய்களை, வல்லெழுத்தென்ப - வல்லெழுத்தென்னுங் 28குறியினை யுடைய என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. இஃது ஆட்சியுங் காரணமும் நோக்கிய குறி. ஒழிந்த மெல்லெழுத்தையும் இடையெழுத்தையும் நோக்கத் தாம் வல்லென்றிசைத்தலானும், வல்லெனத் தலைவளியாற் பிறத்தலானும் வல்லெழுத்தாயின. (19) 20. மெல்லெழுத் தென்ப ஙஞண நமன. இதுவும் அது. இதன் பொருள்: ங ஞ ண ந ம ன - ங ஞ ண ந ம ன என்னுந் தனி மெய்களை, மெல்லெழுத்தென்ப - மெல்லெழுத் தென்னுங் குறியினை யுடைய என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. இதுவும் ஆட்சியும் காரணமும் நோக்கிய குறி. மெல்லென்றி சைத்தலானும், மெல்லென்ற மூக்கின் வளியாற் பிறத்தலானும் மெல்லெழுத்தாயிற்று. (20) 21. இடையெழுத் தென்ப ய ர ல வ ழ ள. இதுவும் அது. இதன் பொருள்: ய ர ல வ ழ ள - ய ர ல வ ழ ள என்னுந் தனி மெய்களை, இடையெழுத்தென்ப - இடையெழுத்தென்னுங் குறியினை யுடைய என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. இதுவும் ஆட்சியுங் காரணமும் நோக்கிய குறி. இடை நிகர வாய் ஒலித்தலானும், இடைநிகர்த்தாய மிடற்றுவளியாற் பிறத்த லானும் இடை யெழுத்தாயிற்று. வல்லினத்துக் க - ச - த - ப என்னும் நான்கும், மெல்லினத்து ஞ - ந - ம என்னும் மூன்றும், இடையினத்து ய - வ என்னும் இரண்டும் மொழிக்கு முதலாதல் நோக்கி இம்முறையே வைத்தார். 29இப்பெயரானே எழுத்தென்னும் ஓசைகள் உருவாயின. உயிர்க்குங் குறுமை நெடுமை கூறலின் அவையும் உருவாயின. இது சார்பிற் றோற்றத் திற்கும் ஒக்கும். (21) 22. 30அம்மூ வாறும் வழங்கியன் மருங்கின் மெய்ம்மயங் குடனிலை தெரியுங் காலை. இது, தனிமெய், பிறமெய்யோடுந் தன் மெய்யோடும் மயங்கும் மயக்கமும், உயிர்மெய் - உயிர்மெய்யோடுந் தனிமெய் யோடும் மயங்கும் மயக்கமுங் கூறுகின்றது. இதன் பொருள்: அம்மூவாறும் - அங்ஙனம் மூன்று கூறாகப் பகுத்த பதினெட்டு மெய்யும், வழங்கியன் மருங்கின் - வழக்கிடத்துஞ் செய்யுளிடத்தும் எழுத்துக்களைக் கூட்டி மொழிப்படுத்து வழங்குதல் உளதாமிடத்து, மெய் மயங்கும் நிலை - தனி மெய் தன் முன்னர் நின்ற பிற மெய்யோடுந் தன்மெய்யோடும் மயங்கும் நிலையும், உடன் மயங்கும் நிலை - அப் பதினெட்டும் உயிருடனே நின்று தன் முன்னர் நின்ற உயிர்மெய்யோடுந் தனி மெய்யோடும் மயங்கும் நிலையுமென இரண்டாம்; தெரியுங்காலை - அவை மயங்கும் மொழியாந் தன்மை ஆராயுங் காலத்து என்றவாறு. எனவே, தனித்து நின்ற எழுத்துடன் முன்னின்ற எழுத்துக்கள் தாங் கூடுமாறு கூறினாராயிற்று. கட்க என்றால் இடை நின்ற டகர மெய் முன்னர் நின்ற தன்னின் வேறாய ககர வொற்றோடு மயங்கிற்று. காக்கை என்றால், இடைநின்ற ககரவொற்று முன்னர் நின்ற தன்னொற்றோடு மயங்கிற்று. கரு என ஈரெழுத்தொரு மொழியுங் கருது என மூவெழுத்தொரு மொழியும் உயிர்மெய் நின்று தம் முன்னர் நின்ற உயிர்மெய் யோடு மயங்கின. துணங்கை என உயிர்மெய் நின்று தன்முன்னர் நின்ற தனிமெய்யோடு மயங்கிற்று. கல் வில் என உயிர்மெய் நின்று தனிமெய்யோடு மயங்கிற்று. தெரியுங்காலை என்றதனான், உயிர் முன்னர் உயிர்மெய்ம் மயக்கமும் உயிர் முன்னர்த் தனிமெய்ம் மயக்கமும் கொள்க. அவை அளை, ஆம்பல் என்றாற் போல்வன. இம் மயக்கங்களுள் தனிமெய்முன்னர்ப் பிறமெய் நின்று மயங்குதல் பலவாதலிற் பல சூத்திரத்தாற் கூறித் தன் முன்னர்த் தான் வந்து மயங்குதலை ஒரு சூத்திரத்தாற் கூறுப. அவை மயங்குங்கால் வல்லினத்தில் டகரமும் றகரமும், மெல்லினமாறும், இடையின மாறும் பிற மெய்யோடு மயங்குமென்றும், வல்லினத்திற் கசதபக்கள் தம் மெய்யோடன்றிப் பிறமெய்யோடு மயங்கா வென்றும் உய்த்துணரக் கூறுமாறு உணர்க. மூவாறு மென்னும் உம்மை - முற்றும்மை. இச்சூத்திரம் முதலாக மெய்ந்நிலை சுட்டின் (எழுத். 30) 31ஈறாக மேற்கூறும் மொழிமரபிற்குப் பொருந்திய கருவி கூறுகின்ற தென்றுணர்க; எழுத்துக்கள் தம்மிற் கூடிப் புணருமாறு கூறுகின்றதாதலின். (22) 23. ட ற ல ள வென்னும் புள்ளி முன்னர்க் க ச ப வென்னு மூவெழுத் துரிய. இது தனிமெய் பிறமெய்யோடு மயங்கும் மயக்கம் உணர்த்து கின்றது. இதன் பொருள்: ட ற ல ள என்னும் புள்ளி முன்னர் - மொழியிடை நின்ற ட ற ல ள என்று கூறப்படும் நான்கு புள்ளிகளின் முன்னர், க ச ப என்னும் மூவெழுத்து உரிய - க ச ப என்று கூறப்படும் மூன்றெழுத்தும் வந்து மயங்குதற்கு உரிய என்றவாறு. உதாரணம்: கட்க கட்சி கட்ப எனவுங், கற்க முயற்சி கற்ப எனவுஞ், செல்க வல்சி செல்ப எனவுங், கொள்க நீள்சினை கொள்ப எனவுற் தனிமெய் பிறமெய்யோடு மயங்கிய வாறு காண்க. கட்சிறார் கற்சிறார் என்பன இருமொழிப் புணர்ச்சி யாகலின் ஈண்டைக்காகா. (23) 24. அவற்றுள் லளஃகான் முன்னர் யவவுந் தோன்றும். இதுவும் அது. இதன் பொருள்: அவற்றுள் - முற்கூறிய நான்கனுள், லளஃகான் முன்னர் - லகார ளகாரமாகிய புள்ளிகளின் முன்னர், யவவுந் தோன்றும் - கசபக்களே யன்றி யகர வகரங்களும் வந்து மயங்கும் என்றவாறு. கொல்யானை, செல்வம், வெள்யாறு, கள்வன் என வரும். இவற்றுட் கொல்யானை என வினைத்தொகையும், வெள் யாறு எனப் பண்புத்தொகையும் நிலைமொழி வருமொழி செய்வதற்கு இயையாமையின் 32மருவின் பாத்திய (எழுத். 482) என்று கூறுவாராதலின் இவ்வாசிரியர் இவற்றை ஒருமொழி யாகக் கொள்வரென்று உணர்க. இக்கருத்தானே மேலும் வினைத் தொகையும் பண்புத்தொகையும் ஒரு மொழியாகக் கொண்டு உதாரணங் காட்டுதும். அன்றி இவ்வாசிரியர் நூல் செய்கின்ற காலத்து வினைத்தொகைக் கண்ணும் பண்புத்தொகைக்கண்ணு மன்றி ஒரு மொழிக்கண்ணே மயங்குவனவும் உளவாதலின், அவற்றைக் கண்டு இலக்கணங் கூறினார்; அவை பின்னர் இறந்தன வென்று ஒழித்து உதாரணமில்லனவற்றிற்கு உதாரணங் காட்டாமற் போதலே நன்றென்று கூறலுமொன்று. (24) 25. ஙஞண நமன வெனும்புள்ளி முன்னர்த் தத்த மிசைக ளொத்தன நிலையே. இதுவும் அது. இதன் பொருள்: ங ஞ ண ந ம ன எனும் புள்ளி முன்னர் - ங ஞ ண ந ம ன என்று கூறப்படும் புள்ளிகளின் முன்னர், தத்தம் மிசைகள் - தமக்கினமாய் முன்னின்ற க ச ட த ப ற க்கள், ஒத்தன நிலையே - பின்னிற்றற்குப் பொருந்தின மயங்கி நிற்றற்கண் என்றவாறு.. உதாரணம்: கங்கன், கஞ்சன், கண்டன், கந்தன், கம்பன், மன்றன் என வரும். தெங்கு, பிஞ்சு, வண்டு, பந்து, கம்பு, கன்று எனக் குற்றுகரமுங் காட்டுப. (25) 26. அவற்றுள், ணனஃகான் முன்னர்க் க ச ஞ ப ம ய வவ் வேழு முரிய. இதுவும் அது. இதன் பொருள்: அவற்றுள் - மேற்கூறிய மெல்லொற்று ஆறனுள், ண னஃகான் முன்னர் - ணகார னகாரங்களின் முன்னர், க ச ஞ ப ம ய வ ஏழும் உரிய - டறக்களே யன்றிக் க ச ஞ ப ம ய வ என்னும் ஏழெழுத்தும் வந்து மயங்குதற்கு உரிய என்றவாறு. உதாரணம்: 33எண்கு வெண்சாந்து வெண்ஞாண் பண்பு வெண்மை மண்யாறு எண்வட்டு எனவும், புன்கு புன்செய் மென் ஞாண் அன்பு வன்மை இன்யாழ் புன்வரகு எனவும் வரும். எண்வட்டு - வினைத்தொகை. எண்கு, புன்கு - பெயர். (26) 27. ஞ ந ம வ வென்னும் புள்ளி முன்னர் யஃகா னிற்றன் மெய்பெற் றன்றே. இதுவும் அது. இதன் பொருள்:ஞ ந ம வ என்னும் புள்ளி முன்னர் - ஞ ந ம வ என்று கூறப்படும் புள்ளிகளின் முன்னர், யஃகான் நிற்றல் மெய் பெற்றன்றே - யஃகான் நிற்றல் பொருண்மை பெற்றது என்றவாறு.. இங்ஙனம் ஆசிரியர் சூத்திரஞ் செய்தலின், அக்காலத்து ஒரு மொழியாக வழங்கிய சொற்கள் உளவென்பது பெற்றாம். அவை இக்காலத்து இறந்தன. இனி, 34உரையாசிரியர் உரிஞ்யாது பொருந்யாது திரும்யாது தெவ்யாது என இருமொழிக்கண் வருவன உதாரணமாகக் காட்டினாரா லெனின், ஆசிரியர் ஒருமொழி யாமாறு ஈண்டுக் கூறி, இருமொழி புணர்த்தற்குப் புணரியலென்று வேறோர் இயலுங்கூறி, அதன்கண் மெய்யிறு சொன்முன் மெய்வரு வழியும் (எழுத். 107) என்று கூறினார். கூறிப் பின்னும் உகர மொடு புணரும் புள்ளி யிறுதி (எழுத். 163) என்றும், பிறாண்டும் ஈறுகடோறும் எடுத்தோதிப் புணர்ப்பர். ஆதலின் ஈண்டு இரு மொழிப் புணர்ச்சி காட்டிற் கூறியது கூறலென்னுங் குற்றமாம். அதனால் அவை காட்டுதல் பொருந்தாமை உணர்க. (27) 28. மஃகான் புள்ளிமுன் வவ்வுந் தோன்றும். இதுவும் அது. இதன் பொருள்: மஃகான் புள்ளிமுன் - முற் கூறியவற்றுள் மகர மாகிய புள்ளி முன்னர், வவ்வுந் தோன்றும் - பகர யகரமே யன்றி வகரமும் வந்து மயங்கும் என்றவாறு. இதற்கும் உதாரணம் இக்காலத்து இறந்தது. அன்றி, வரும் வண்ணக்கன் என்றாற் போல்வன காட்டின் வகார மிசையு மகாரங் குறுகும் (எழுத். 330) என்ற விதி வேண்டாவாம். (28) 29. யரழ வென்னும் புள்ளி முன்னர் முதலா கெழுத்து ஙகரமொடு தோன்றும். இதுவும் அது. இதன் பொருள்: யரழ வென்னும் புள்ளி முன்னர் - யரழ என்று கூறப் படும் மூன்று புள்ளிகளின் முன்னர், முதலா கெழுத்தும் - மொழிக்கு முதலாமென மேற்கூறும் ஒன்பதெழுத்துக்களும், உம்மையான் மொழிக்கு முதலாகாத பிற எழுத்துக்களும், ஙகரமொடு தோன்றும் - ஙகாரமும் வந்து மயங்கும் என்றவாறு. உதாரணம்: ஆய்க ஆர்க ஆழ்க, ஆய்தல் ஆர்தல் ஆழ்தல், ஆய்நர் ஆர்நர் ஆழ்நர், ஆய்பவை ஆர்பவை ஆழ்பவை, வாய்மை நேர்மை கீழ்மை, எய்சிலை வார்சிலை வாழ்சேரி, தெய்வம் சேர்வது வாழ்வது, பாய்ஞெகிழி நேர்ஞெகிழி வாழ்ஞெண்டு, செய்யாறு போர்யானை வீழ்யானை என மொழிக்கு முதலாம் ஒன்பதும் வந்து மயங்கின. செய்யாறு என யகரத்தின் முன்னர் யகரம் வந்தது தன்முன்னர்த் தான் வந்ததாம். இனி, உம்மையாற்கொண்ட மொழிக்கு முதலாகாதவற்றின் கண்ணுஞ் சில காட்டுதும்: 35ஓய்வு சோர்வு வாழ்வு, ஓய்வோர் சோர்வோர் வாழ்வோர், ஆய்ஞர் சேர்ஞர் ஆழ்ஞர் என வரும். பிற எழுத்துக்களோடு வருவன உளவேனும் வழக்குஞ் செய்யுளும் நோக்கிக் கூறிக்கொள்க. இங்கு, வேய்ங்ஙனம் வேர்ங்ஙனம் வீழ்ங்ஙனம் என மொழிக்கு முதலாகாத ஙகரம் இடைவந்த சொற்கள் அக்காலத்து வழங்கின என்றுணர்க, ஆசிரியர் ஓதுதலின். இதனை ஙகரமொடு தோன்றும் எனப் பிரித்தோதினார், அக்காலத்தும் அரிதாக வழங்கலின். இனி வேய்கடிது வேர்கடிது வீழ்கடிது சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது யாது வலிது என்பன காட்டின் அவை இரு மொழியாக நிலைமொழி வருமொழி செய்து மேற்புணர்க்கின்றன ஈண்டைக்காகா என மறுக்க. (29) 30. மெய்ந்நிலை சுட்டி னெல்லா வெழுத்துந் தம்முற் றாம்வரூஉம் ரழவலங் கடையே. இது, நிறுத்தமுறையானே தனிமெய் தன்னொற்றொடு, மயங்குமாறு கூறுகின்றது. இதன் பொருள்: மெய்ந்நிலை சுட்டின் - பொருணிலை மையைக் கருதின், எல்லா எழுத்தும் - பதினெட்டு மெய்யும், தம்முன் தாம் வரூஉம் - தம் முன்னே தாம் வந்து மயங்கும், ரழ அலங்கடையே - ரகார ழகாரங்க ளல்லாத இடத்து என்றவாறு. உதாரணம்: காக்கை, எங்ஙனம், பச்சை, மஞ்ஞை, பட்டை, மண்ணை, தத்தை, வெந்நெய், அப்பு, அம்மை, வெய்யர், எல்லி, எவ்வி, கள்ளி, கொற்றி, கன்னி என வரும். மெய்ந்நிலை சுட்டினென்றதனால் தனிமெய் முன்னர் உயிர் மெய் வருமென்று கொள்க. எல்லாமென்றது ரகார ழகாரங்கள் ஒழிந்தனவற்றைத் தழுவிற்று. (30) 31. அ இ உ அம் மூன்றுஞ் சுட்டு. இது, குற்றெழுத் தென்றவற்றுட் சிலவற்றிற்கு வேறோர் குறியீடு கூறுகின்றது. இதன் பொருள்: அ இ உ அம் மூன்றுஞ் சுட்டு - அ இ உ என்று கூறிய அம்மூன்றுஞ் சுட்டென்னும் குறியினையுடைய என்றவாறு. இதுவும் ஆட்சியுங் காரணமும் நோக்கியதோர் குறி, சுட்டி அறியப்படும் பொருளை உணர்த்தலின். தன்னின முடித்தல் என்பதனான் எகரம் வினாப்பொருள் உணர்த்தலுங் கொள்க. உதாரணம்: அக்கொற்றன், இக்கொற்றன், உக்கொற்றன், எப்பொருள் என வரும். இவை பெயரைச் சார்ந்து தத்தங் குறிப்பிற் பொருள் செய்த இடைச்சொல். இச்சூத்திரம் 36ஒருதலைமொழிதல் என்னும் உத்தி. இதுவும் மேலைச் சூத்திரமும் எழுத்தாந் தன்மையன்றி மொழி நிலைமைப்பட்டு வேறொரு குறிபெற்று நிற்றலின் மொழி மரபினைச் சேர வைத்தார். (31) 32. ஆ ஏ ஓ அம் மூன்றும் வினா. இது, நெட்டெழுத்தென்றவற்றுட் சிலவற்றிற்கு வேறோர் குறியீடு கூறுகின்றது. இதன் பொருள்: ஆ ஏ ஓ அம்மூன்றும் வினா ஆ ஏ ஓ என்று கூறப்பட்ட அம்மூன்றும் வினா என்னுங் குறியினை யுடைய என்றவாறு. இதுவும் ஆட்சியுங் காரணமும் நோக்கிய குறி, வினாப் பொருள் உணர்த்தலின். உதாரணம்: 37உண்கா, உண்கே, உண்கோ என வரும். இவற்றுள் 38ஆகாரம் இக்காலத்து வினாவாய் வருதலரிது. நீயே நீயோ என்பன இக்காலத்து வரும். இவற்றுள் ஏ ஓ என்பன இடைச்சொல் லோத்தினுள்ளுங் கூறினார், ஏகார ஓகாரங்கள் தரும் பொருட்டொகைபற்றி. 39இது மொழிந்த பொருளோ டொன்ற வவ்வயின் மொழி யாததனை முட்டின்று முடித்தல் என்னும் உத்திக்கு இனமாம், யகர ஆகாரமும் வினாவாய் வருதலின். (32) 33. அளபிறந் துயிர்த்தலு மொற்றிசை நீடலு முளவென மொழிப விசையொடு சிவணிய நரம்பின் மறைய வென்மனார் புலவர். இது, பிறன்கோட் கூறலென்னும் உத்தி பற்றி இசைநூற்கு வருவதோர் இலக்கணமாமாறுகூறி, அவ்விலக்கணம் இந்நூற்குங் கொள்கின்றது. இதன் பொருள்: அளபிறந்து உயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் நரம்பின் மறைய என்மனார் புலவர் - முற்கூறிய உயிரும் உயிர்மெய்யும் மாத்திரையை இறந்தொலித்தலும், ஒற்றெழுத் துக்கள் அரைமாத்திரையின் நீண்டொலித்தலும், யாழ் நூலிடத்தன என்று கூறுவர் புலவர்; இசையொடு சிவணிய உளவென மொழிப - அங்ஙனம் அளபிறந்தும் நீண்டும் இசைத்தல் ஓசையோடு பொருந்திய நால்வகைச் செய்யுள் களுக்கும் உளவென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. எழுத்துகள் முற்கூறிய மாத்திரையை 40இறந்தொலிக்கு மாறு கண்டு, அவை இறந்தொலிக்கும் இடங்கூறினார், எழுத்துஞ் சொல்லும் பொருளுங் கிடக்கும் இடஞ் செய்யுளிடமாதலின். அது மிக்கு ஒலித்தலைச் செய்யுளியலின்கண் மாத்திரை யெழுத்திய லசைவகை யெனாஅ (செய். 1) என இருபத்தாறு உறுப்பிற்குஞ் சிறப்புறுப்பாக முற்கூறிப் பின்னர், மாத்திரை யளவு மெழுத்தியல் வகையு மேற்கிளந் தன்ன வென்மனார் புலவர் (செய்-2) என இச்சூத்திரத்தொடு மாட்டெறிந்து, பின்னும், எழுத்தள வெஞ்சினுஞ் சீர்நிலை தானே குன்றலு மிகுதலு மில்லென மொழிப (செய்-43) என்றுங் கூறினார். 41இது எதிரது போற்றலென்னும் உத்தியுங் கூறிற்று. உதாரணம்: வருவர்கொல் வயங்கிழாஅய் வலிப்பன்யான் கேஎளினி (கலி. 11) என்புழி ழகர ஆகாரமும் ககர ஏகாரமும் மாத்திரை இறந்தொலித்தவாறு உணர்க. பிடியூட்டிப் பின்னுண்ணுங்ங் களிறெனவும் உரைத்தனரே (கலி . 11) என்புழி ஙகரவொற்று அளவிறந்தவாறு காண்க. ஒழிந்த மூவகைச் செய்யுள்கட்கும் இவ்வாறே தத்தமக்குரிய பா என்னும் உறுப்பினை நடாத்தி அளவு மிகுமாறு காண்க. சிவணிய என்பது 42தொழிற்பெயர். இசையொடு சிவணிய எனவே செய்யுளாதல் பெற்றாம். நரம்பு என்றது ஆகுபெயராய் யாழினை உணர்த்திற்று. மறையென்றது நூலை. மொழிப வென்றும், என்மனார் புலவரென்றும் இருகாற் கூறியவதனால், இங்ஙனம் பொருள் கூறலே ஆசிரியர்க்குக் கருத்தா யிற்று; என்னை? செய்யுளியலுட் கூறிய மாத்திரை யளவும் (செய்.2) என்னுஞ் சூத்திரத்தின் மேற்கிளந்தன்ன (செய்.2) என்னும் மாட்டேற்றிற்கு *இவ்வோத்தினுள் வேறோர் சூத்திரம் இன்மையின். இவ்விலக்கணங் கூறாக்காற் செய்யுட்குப் பாவென்னும் உறுப்பு நிகழாது, அவை உரைச்செய்யுட் போல நிற்றலின் இவ் விலக்கணங் கூறவே வேண்டுமென்று உணர்க. சூத்திரத் துட்பொரு ளன்றியும் யாப்புற வின்றி யமையா தியைபவை யெல்லா மொன்ற வுரைப்ப துரையெனப் படுமே (மரபியல். 103) என்னும் மரபியற் சூத்திரத்தானே இவ்வாறே சூத்திரங்களை நலிந்து பொருளுரைப்பன வெல்லாங் கொள்க. (33) நூன்மரபு முற்றிற்று. கணேசய்யர் அடிக்குறிப்புகள்: 1. எட்டு வகையாவன எனவும் பாடம் அப்பாடமே நலம். என்னை? முன் எட்டுவகையானும் என்று நச்சினார்க்கினியரே வகுத்துக் கூறி யிருத்தலின். 2. எட்டிறந்த பல வகையாவன எனவும் பாடம். அப் பாடமே நலம். என்னை? முன் எட்டிறந்த பலவகையானும் என நச்சினார்க்கினியரே வகுத்துக் கூறியிருத்தலின். 3. இரண்டும் என்றது குற்றியலுகர குற்றியலிகரங்களை. அவை உம்மை தொக்குநின்றன என்றது குற்றியலுகரமும் குற்றியலிகரமும் என உம்மை பெற்று நிற்கவேண்டியன அவ்வும்மைகள் தொக்குக் குற்றியலுகரம் குற்றியலிகரம் என நின்றன என்றபடி. குற்றியலுகரம் உயிரேற இடங் கொடுத்து நிற்றலும் முற்றியலுகரம் உயிரேற இடங்கொடாமையும் அவ்விரண்டற்கு முள்ள வேறுபாடென்பது நச்சினார்க்கினியர் கருத்து. இதனால் குற்றியலுகரத்துக்கு முன்னும் முற்றியலுகரத்துக்கு முன்னும் உயிர்முதன்மொழி வருங்கால் அவை அடையும் புணர்ச்சி வேற்றுமை அறியப்படும். ஏனைக் கணம் வருங்காலும் அவை அடையும் புணர்ச்சி வேற்றுமைகளை அறிந்து கொள்க. வரகியாது என்புழி வரகு என்பதன் முன் யகர முதன்மொழி வந்தவிடத்து வரகு என்பதிலுள்ள உகரங் கெட்டு இகரம் விரிந்து குறுகி நின்றதாகலின் அவ்விகரம் குற்றியலிகரம் எனப்படுமன்றி முற்றிய லிகரம் எனப்படாது. அதனால் இயல்பான இகரவீற்றுப் புணர்ச்சிக்கும் குற்றியலிகரப் புணர்ச்சிக்கும் உள்ள வேறுபாடறியப்படும். காது என்னுஞ் சொல்லை இதழ் குவித்துச் சொல்லுமிடத்து முற்றியலு கரமாம். அதற்குப் பொருள் கொல் என்பது. அதனை இதழ் குவியாமற் சொல்லுமிடத்துக் குற்றியலுகரமாம். அதற்குப் பொருள் காது என்னும் உறுப்பு. முருக்கு என்னுஞ் சொல் இதழ் குவித்துச் சொல்லுமிடத்து அழி எனவும். இதழ்குவியாமற் சொல்லுமிடத்து முருக்காகிய மரமெனவும் பொருள் தரும். பிறவும் இவ்வாறே பொருள் வேற்றுமை உடையவாதல் அறிந்து கொள்க. குற்றியலுகரத்துக்கும் முற்றியலுகரத்துக்குமுள்ள பொருள் வேற்றுமை இவையே. அரசியாது என்புழி அரசி என்பதி லுள்ள இகரத்தை முற்றிய விகரமாகக் கொள்ளின் அதனை ஓர் இகரவீற்று உயர்திணைப் பெயராகக் கொள்ள வேண்டும். அங்ஙனங் கொள்ளுங்கால் அது யாது என்பதனோடு இயையாது. ஆதலின் அரசு என்பதே சொல்லும் பொருளும் என்பதும் அதிலுள்ள இகரங் குற்றியலிகர மென்பதும் பெறப்படும். படவே அரசி என்பதிலுள்ள இகரத்தை இயல்பாகக் கொள்ளுங்கால் இது பொருளாகுமெனவும் குற்றியலிகரமாகக் கொள்ளுங்கால் இது பொருளாகு மெனவும் அவ்விரண்டற்குமுள்ள பொருள் வேற்றுமையறியப்பட்டவாறு காண்க. இன்னும் "சங்கந் தருமுத்தி யாம்பெற" என்னுந் திருக்கோவையார்ச் செய்யுளடிக்குச் சிலேடைப் பொருள் கொள்ளும்பொழுது முத்து என்றும் முத்தி என்றும் பொருள் கொள்ளப்படும். கொள்ளுங்கால் முத்தி என்பதிலுள்ள இகரத்தைக் குற்றியலிகரமாகக் கொண்டு முத்து என்றும், முற்றியலிகரமாகக் கொண்டு முத்தி என்றும் பொருள் கொள்ளப்படுதலினாலே குற்றியலிகரம் முற்றியலிகரம் என்னும் இரண்டற்கும் உள்ள பொருள் வேற்றுமை நன்கறியப்படுதல் காண்க. காது - நேர்பு அசை. வரகு - நிரைபுஅசை. நடுவுவாங்கி யிட்டெழுதல் ஃ இப்படிப் புள்ளியிடாமல் ஃ இப்படி உள்வளைத்திட்டெழுதல். நடுவு - உள். வாங்கல் - வளைத்தல். எழுத்தியல் தழாஅஓசை - கடலொலி சங்கொலி போல்வன. முன்னின்ற சூத்திரமென்றது முதலாஞ் சூத்திரத்தை. இச்சூத்திரத்துக்கு இவ்வாறு பொருள்கொள்ளாது பேராசிரியர் குற்றிய லுகரமும் குற்றியலிகரமும் ஆய்தமுமென்ற முப்பாற் புள்ளி யெழுத்துக் களும் என்று பொருள் கூறுவர். அதனை, வாராததனால் வந்தது முடித்தல் என்னும் உத்தி உரையுள் இச்சூத்திரத்தை எடுத்துக்காட்டி இம்மூன்றும் புள்ளியெழுத்துக்களென்று அவர் கூறுதலானறிந்து கொள்க. இவரைத் தழுவிச் சிவஞான முனிவரும் தொல் - சூத்திர விருத்தியுள் இவ்வாறு கூறுவர். குற்றியலுகரமும் குற்றியலிகரமும் அக்காலத்துப் புள்ளி பெற்று வழங்கியதென்பது "குற்றிய லிகரமுங் குற்றியலுகரம் மற்றவை தாமே புள்ளி பெறுமே" என்னும் சங்க யாப்புச் சூத்திரத்தானு மறியப்படும். (யாப் - விருத்தி 27ம் பக்கம்). 4. இரண்டு மாத்திரை பெற்ற எழுத்தை நோக்கி ஒரு மாத்திரை பெற்ற எழுத்துக் குற்றெழுத் தெனப்பட்டாற்போல, ஒரு மாத்திரை பெற்ற குற் றெழுத்தை நோக்கி அரைமாத்திரை பெற்ற மெய்யெழுத்தும் குற்றெ ழுத்தெனப்படலாமேயெனின்? தமக்கினமாயவற்றின் கண்ணன்றே குறுமை நெடுமை கொள்வது; அக்குற்றெழுத்துக் தமக் கினமல்லா மையின் அங்ஙனம் கூறப்படாதாயிற்று. அன்றியும் ஒரு மாத்திரை பெற்ற மெய்கள் தமக்கினமாக இருப்பினும் அரை மாத்திரை பெற்ற மெய்களாகிய தாம் குற்றெழுத்தெனப்படலாம். அதுவு மின்மையின் குற்றெழுத்தெனப் படாவாயின என்றபடி. 5. இசைப்பது - எழுத்து. இசை - ஒலி. அது பொருட்டன்மையென்றது அந்த இசை பொருளின் குணமென்றபடி. இங்கே பொருள் எழுத்து. அதன் குணம் ஒலி என்பதாம். எனவே எழுத்து வேறு இசை வேறு என்று உணரற்க என்றபடி. ஏன் அவ்வாறு கூறினாரெனின் ஓரளபிசைக்குங் குற்றெழுத்தென இசையை வேறாகவும் எழுத்தை வேறாகவும் ஆசிரியர் கூறியதனால் என்க. 6. காரணக்குறி - காரணப்பெயர்; என்றது குற்றெழுத்து நெட்டெழுத்து என்னும் பெயரை. குறிய இசையையுடையதாகிய எழுத்து; நெடிய இசையையுடையதாகிய எழுத்து என்பது கருத்து. குற்றெழுத்து, நெட்டெ ழுத்து என்பன பண்புத்தொகை. மேலாளுப என்றது நெட்டெழுத்தென மேலும் எடுத்தாளுதலை. 7. ஆ அ என்புழி ஆ என்னும் ஓரெழுத் தொருமொழியாகிய நெட்டெ ழுத்தே அளபெடுத்தலின் அவ்வளபெடை யெழுத்தும் அந்நெட்டெ ழுத்தோடு சேர்ந்து மொழியாமென்பார். ஓரெழுத்தொரு மொழியாகிய நெட்டெழுத்தே அளபெடுத்தலிற் சொல்லாதல் எய்திற்றென்றார். எனவே அளபெடை எழுத்துக்குப் பொருளில்லை யாயினும் அதற்கு முன் னுள்ள நெட்டெழுத்துக்குப் பொருளுண்மையின் அதன் பொருளே தனக்கும் பொருளாய்ச் சொல்லாந் தன்மை எய்தி நிற்குமென்றபடி. சொல்லாந் தன்மை யெய்தி நிற்றலாவது; தானு மம்மொழிக் குறுப்பெ ழுத்துப்போல நின்று அசையாகி அலகுபெறுதல். எழுத்தாந் தன்மை யெய்தலாவது அங்ஙனஞ் சொற்குறுப்புப்போல நின்ற அளபெடை யெழுத்து. தமக்கு முன்னுள்ள நெட்டெழுத்தே அலகுபெறத் தாம் அலகு பெறாது (m~jhtJ ஆ அ என்புழி அளடையெழுத்தாகிய அகரம் தனக்கு முன்னுள்ள நெட்டெழுத்தோடு சேர்ந்து அலகுபெற்று நேர்நேர் என நில்லாமல் அந் நெட்டெழுத்தே தனித்து அலகுபெற்று நேர் என நிற்பத் தான் அலகு bgwhJ) அளபெடை யெழுத்தென்று கொள்ளப்பட்டு நிற்றல். எனவே அது அளபெடை எழுத்தென்று நீக்கப்படுவதன்றி அசைக்குரிய எழுத்தாக வைத்து எண்ணப்படாது என்பது கருத்து. அளபெடை யசைநிலையாகலாவது அளபெடையெழுத்து, தானுமோரசையாகிச் சீர்நிலை யடையாது. தமக்கு முன்னுள்ள நெட் டெழுத்தோடு சேர்ந்து ஓரசையாகவே கொள்ளப்பட்டு நிற்றல். 8. இயற்கை யளபெடை குரீஇ, தோழீஇ என்பன போல்வன. இவை வழக்கிற்குஞ் செய்யுட்கும் பொதுவாகலின் இயற்கையெனப்பட்டன. தோழீஇ என்பதைத் தொழீஇ என்றுகொள்வாரு முளர். (கலி - 103-ம் செய்யுட் குறிப்புப் பார்க்க.) 9. செயற்கை யளபெடை புலவன் செய்யுளோசை நிறைத்தற் பொருட்டுத் தானே செய்துகொண்ட அளபெடை. அது ஓஒதல்வேண்டும் என்பது போல்வன. சொற்றன்மை யெய்தி நிற்றலும் எழுத்தாந் தன்மை யெய்திநிற்றலும் முன் விளக்கப்பட்டன. அலகுபெறுதல் - அசைக்குரிய எழுத்தாக எண்ணப்பெறுதல். இயற்கையளபெடை செயற்கையள பெடைகளின் இயல்பைச் செய்யுளியல் 17-ம் சூத்திரம் நோக்கி உணர்க. 10. செப்பலோசை - வெண்பாவுக்குரிய ஓசை. அளபெடைக்கு நான்கு மாத்திரையுங் கொள்ளாக்கால் ஆன்றோரியற்றிய வெண்பாக்களில் நான்கு மாத்திரை பெறுவன ஆசிரியத்தளை தட்டுச் செப்பலோசை கெடும். ஆதலால் நான்கு மாத்திரையுங் கொள்ள வேண்டுமென்பதாம். கலிக்குறுப்பாகிய கொச்சக வெண்பாக்கள் ஆசிரியத்தளை தட்டும் நிற்கலாம். `செறாஅஅய் வாழிய நெஞ்சு' முதலிய அவ்வாறு நிற்றல் கூடா என்க. 11. கோட்டுநூறு - சங்குநூறு - சுண்ணாம்பு. 12. இசை ஓசை என்றது - பாட்டின் இசையை நிறைக்கும் ஓசையை என்பது ஈண்டு நச்சினார்க்கினியர் கருத்து. ஏனெனில் "அளபிறந் துயிர்த்தலும்" என்னுஞ் சூத்திரத்தாற் கூறுப என்று கூறலின். 13. என என்னும் இடைச்சொல் எண்ணுப் பொருட்கண் வருதலின் அது கண்ணிமையோடுங் கூட்டப்பட்டு கண்ணிமையென நொடியென நிற்குமென்பார் என எண்ணிற் பிரிந்து இரண்டிடத்துங் கூடிற்றென்றார். கண்ணிமை தொழின்மேலும் நொடி ஓசை மேலும் நின்றன என்க. இயற்கை மகன் என்றது இமைத்தற்றொழிலில் விகாரமில்லாத மகன் என்றபடி. குறிப்பு - நினைவு. பாகம் - சரிபங்கு. 14. நிறுத்தளத்தல் - துலா முதலிய நிறையளவைகளால் நிறுத்தளத்தல். பெய் தளத்தல் - ஒன்றினுட் பெய்தளத்தல் என்றது கலமுதலியற்றிற் பெய்தளத் தலை. சார்த்தியளத்தல் - ஒன்றனளவோடு மற்றொன் றனளவை ஒப்பிட்டு நோக்கியளத்தல். தெறித்தளத்தல் - ஒன்றனைப் புடைத்து ஒலியை யுண்டாக்கி அதனைச் செவியாற் கேட்டு நிதானித்து அளந்துகோடல். அது மத்தளம் வீணை முதலியவற்றைப் புடைத்து அவற்றொலியைச் செவி கருவியாக அளந்து கோடல். தேங்கமுகந் தளத்தல் - நாழி முதலிய வற்றானளத்தல். 15. நிகழ்த்தாமையின் என்றிருப்பது நலம். 16. `அகரமுதல்' என முற்கூறிப் போந்தமையின் என்றது முதற் சூத்திரத்தில் `அகரமுதல்' எனக் கூறியமையை. எனவே, ஆண்டுக் கூறிய அதனை ஈண்டுக் கூறிய `ஔகார விறுவாய்' என்பதனோடு சேர்த்து `அகரமுதல் ஔகாரவிறுவாய்ப் பன்னீரெழுத்து முயிரென மொழிப' எனக் கூறுக என்றபடி. 17. இதன்கண் "ககரமுதல் னகரவிறுவாய்" எனக் கூறப்பட வில்லையே யெனின்? அது முதற்சூத்திரத்து முப்பது என்றதனாலும் இதன்கண் `பதினெண்' எழுத்தும் என்றதனாலும் பின்வரும் "வல்லெழுத்தென்ப க ச ட த ப ற" என்னுஞ் சூத்திரம் முதலியவற்றானும் உய்த்துணர்ந்து கொள்ளப்படும். இச்சூத்திரமும் முதற்சூத்திரமும் நெடுங்கணக்கை அநுவதித்துக் கூறியனவாகும். 18. முன்னர் என்றது 1-ம் சூத்திரத்தை. 19. விளங்காய்க்குத் திரட்சியும். களங்கனிக்குக் கருநிறமும் இயற்கையாதல் போல. உயிர்மெய்க் குறில்கள் ஒருமாத்திரை பெறுதலும், உயிர்மெய் நெடில்கள் இரண்டுமாத்திரை பெறுதலும் இயற்கையென்று கொள்வ தல்லது அவற்றிற்குக் காரணங்கூறலாகா தென்றபடி. 20. மெய்கள் எனக் கூறவேண்டியதை மெய்யென ஒருமையாகக் கூறின மையின் அதற்கியைய அரையென ஒருமையாற் கூறினாரென்பார் மெய்யென்னும் ஒற்றுமைபற்றி அரையென்றார் என்றார். 21. சார்பெழுத்து மூன்றென்பவர்க் கிது கூறல்வேண்டாவாகலின் பிறன் கோட் கூறல் என்றும் உத்தி என்றார். 22. இதனை மகரக்குறுக்கம் புள்ளிபெறுதலை விதிக்கவந்த சூத்திரமென் பாருமுளர். 23. வரிவடிவைக் குறித்து நின்றது. 24. அகரம் நீங்கியே போக என்றது - அகரம் மீளவும் வந்து ஏறாது நீங்கிப் போக என்றபடி. எனவே வாராதொழிய என்பதாம். 25. அற்று என்பது - மாட்டேறு. 26. புள்ளிபெறுதல் என்றது - கா ஙா என்பன அக்காலத்து க. ங. எனப் புள்ளி பெற்று வழங்கினமையை. உயிர் தன்மையும், தன்மையுமுடைய தென்பது பெற்றாம் என முடிக்க. புலப்படாது நிற்றல் இயல்பாகிய அகரமும், புலப்பட்டு நிற்றல் ஏறிய உயிரும் என்க. உயிர் நிற்குந்தன்மை யும், உயிர் வருந்தன்மையுமுடையது எனக் கூட்டிக்கொள்க. 27. வழி - பின். 28. குறி - பெயர். 29. இப்பெயரானே என்றது, வன்மை மென்மை இடைமை என்னும் பெயர் களை. உரைகாரர் தாம் எழுத்து அருவன்று உருவென்பதை இதனாலும் வலியுறுத்தமாறு உருவாயின என ஈண்டுங் கூறினாரென்க. 30. இச் சூத்திரத்துக்கு உரையாசிரியர் மேற்சொல்லிய பதினெட்டு மெய்யும் தம்மை மொழிப்படுத்தி வழங்குதலுளதாமிடத்து மெய்ம்மயக்க மென்றும் உடனிலை மயக்கமென்றும் இருவகைய; அவை மயங்கு முறை யாராயுங் காலத்து என்று கூறி மெய்ம்மயக்க மென்பதற்கு வேற்றுநிலை மெய்ம்மயக்கமென்றும், உடனிலை மயக்க மென்பதற்குத் தன்னொடுதான் மயங்குதலென்றும் பொருள் கொண்டனர். நச்சினார்க்கினியர் `மெய்ம்மயங் குடனிலை' என்பதை மெய்ம்மயங்கு நிலை உடன்மயங்கு நிலை எனக்கொண்டு, உடன்மயங்கு நிலை என்பதற்கு மெய்கள் உயிருடன் கூடிநின்று உயிர்மெய்யோடும் தனிமெய்யோடும் மயங்கும் மயக்கமென்று பொருள் கூறினர். உடனிலை மெய்ம்மயக்கத்திற்கு அவர் கூறிய பொருளின்படி உயிர்மெய் உயிர்மெய்யோடு மயங்குமிடத்துக் கரு என மயங்கும். ஆண்டு ககரத்திலுள்ள அகரமும் ரு என்னும் எழுத்திலுள்ள ரகரமும் மயங்கியதன்றிக் ககர அகரமும் ரகர உகரமும் மயங்கியதின்றாம். ஏனெனின் `மெய்யின் வழிய துயிர்தோன்று நிலையே' என்பது விதி யாகலின். ஆதலின், உரையாசிரியர் கருத்தே பொருத்தமா மென்க. நன்னூலார் கருத்து மிதுவேயாம். 31. ஈறாகக் கூறுகின்றதென் றுணர்க என முடிக்க. 32. `மருவின்பாத்திய' என்பது 76-ம் சூத்திரத்தின் ஓரடி. அச்சூத்திரத்து வினைத் தொகையையும் பண்புத்தொகையையும் பிரித்து வழங்கப்படா தென்று கூறுவாராகலின் ஒரு மொழியாகக் கொள்ளப்படுமென்பது கருத்து. 33. எண்கு - கரடி. ஞாண் - கயிறு. எண்வட்டு என்பதற்கு - எண்ணப்படும் வட்டு எனப் பொருள் கொள்க. 34. இருமொழிப்புணர்ச்சி காட்டின் கூறியது கூறலென்னும் குற்றமாமென்று நச்சினார்க்கினியர் கூறுதல் பொருந்தாது. ஏனெனில் மயக்கம் வேறு புணர்ச்சி வேறாகலின். வேறாமாற்றை, மயக்கமுள்ளனவும் இயல்பாதலன்றித் திரிந்தும் மயக்கமில்லாதன மயக்க முள்ளனவாகத் திரிந்தும் புணர்தலானறிக. பொன்குடம் - பொற்குடம். இது மயக்கமுள்ளன திரிந்தன. கல்தீது - கற்றீது இது மயக்கமில்லாதன திரிந்து புணர்ந்தன. 35. ஓய்வு, ஓர்வு என்பனவற்றின் வகர உகரமும், ஒவ்வோர் என்பதில் வகர ஓகாரமும், ஆய்ஞர் என்பதில் ஞகர அகரமும் மொழிக்கு முதலாகா எழுத்துக்கள். அவை ய ர ழ என்னும் மூன்றோடும் மயங்கி வந்தமைக்கு ஈண்டு உதாரணமாகக் காட்டப்பட்டன. 36. ஒருதலைமொழிதலென்னு முத்தியாவது ஓரதிகாரத்திற் சொல்லற் பாலதனை வேறோரதிகாரத்திற் சொல்லி அவ்விலக்கணமே ஆண்டும் பெறவைத்தல். சொல்லதிகாரத்திற் சொல்லற் பாலதாய சுட்டை எழுத்திற் கூறி அதனையே சொல்லிற்கும் பெறவைத்தல். 37. உண்கா - உண்பேனா? 38. ஆகாரமும் ஏகாரமும் எனவும் பாடம். மகாலிங்கையர் பதிப்பு நோக்குக. 39. மொழிந்த பொருளோடொன்ற வவ்வயின் மொழியாததனையு முட் டின்று முடித்தலென்னு முத்தியாவது எடுத்தோதிய பொருண்மைக் கேற்ற வகையானப் பொருண்மைக்குச் சொல்லாததொன்று கொள்ள வைத்தல். இங்கே எடுத்தோதிய பொருள் வினா ஆ ஏ ஓ அம்மூன்றும் என்பது. அவற்றோ டெடுத்தோதாத பொருள் யா என்பது. அதனையும் வினாவென்று இவ்வுத்தியாற் கொள்க என்றபடி. இனமென்றது உயிர் மெய்யாதலிற் போலும். 40. இறந்து - கடந்து. 41. இது - இச் சூத்திரம். 42. தொழிற்பெயர் - வினையாலணையும் பெயர். மொழிமரபு மொழிகளுக்கு எழுத்தான்வரும் மரபுணர்த்தினமையின் மொழிமரபெனப்பட்டது என இளம்பூரணரும் எழுத்தானாம் மொழியது மரபுணர்த்தினமையின் இவ்வோத்து மொழிமரபெனக் காரணப்பெயர்த்தாயிற்று என நச்சினார்க்கினியரும் இவ்வியலின் பெயர்க்காரணங் கூறினர். இவ்வியலுட் கூறுகின்ற இலக்கணம் தனிநின்ற எழுத்திற்கன்றி மொழியிடை யெழுத்திற்கு என இளம்பூரணர் கூறுவர். எனவே எழுத்துக்களை மொழிப்படுத் திசைக்குங்கால் மொழியில் நின்ற எழுத்துக்களுக்கு உளவாம் இயல்பினை யுணர்த்துவது இவ்வியலென்பது பெறப்படும். இவ்வியலின் சூத்திரங்கள் 49. மொழியினைச் சார்ந்து ஒலித்தலையே இயல்பாகவுடைய சார்பெழுத்து மூன்றிற்கும் அவைதாம் குற்றியலிகரம் குற்றிய லுகரம் ஆய்தம் என முன்னருரைத்த முறையே இவ்வியலில் இலக்கணம் கூறுகின்றார். அம்மூன்றும் ஒரு மொழி புணர்மொழி ஆகிய ஈரிடத்தும் வருமெனக்கொண்டு அவற்றை ஒருமொழிக் குற்றியலிகரம், புணர்மொழிக் குற்றியலிகரம், ஒருமொழிக் குற்றியலுகரம், புணர்மொழிக் குற்றியலுகரம், ஒரு மொழியாய்தம், புணர் மொழியாய்தம் என ஆறாகப்பிரித்து முறையே 1-முதல் 6-வரை யுள்ள சூத்திரங்களில் உணர்த்தி 7-ஆம் சூத்திரத்தில் அவ்வொரு மொழி யாய்தத்திற்கு ஓர் இலக்கணமுங் கூறியுள்ளார். இவை மொழியிடைச் சார்த்தியுணரப்படுவன ஆகலானும் ஒருவாற்றான் எழுத்தெனக் கொள்ளப்படுவன ஆகலானும் நூன் மரபையடுத்து மொழிமரபின் முதற்கண் விளக்கப்பட்டன. இவற்றையடுத்து உயிரளபெடை, மொழி யாக்கம், மெய்களின் இயக்கம், ஈரொற் றுடனிலை, மகரக் குறுக்கம், எழுத்துப்போலி, ஐகாரக் குறுக்கம், மொழி முதலெழுத்துக்கள், மொழிக்கீறா மெழுத்துக்கள், என்பன உணர்த்தப்பட்டன. இவையெல்லாம் தனி யெழுத்துக்களிலன்றி மொழிகளில் வைத்து அறிந்துகொள்ளுதற் குரியனவாதலின் இவ்வியலிற் கூறப்பட்டன. - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை - 10, பக். 167-168 இரண்டாவது மொழிமரபு 34. குற்றிய லிகர நிற்றல் வேண்டும் யாவென் சினைமிசை யுரையசைக் கிளவிக் காவயின் வரூஉ மகர மூர்ந்தே என்பது சூத்திரம். மேல் எழுத்து உணர்த்திப் பின்னர், அவை தம்முட் தொடரு மாறும் உணர்த்தி, அவ்வெழுத்தானாம் மொழியது மரபு உணர்த்து கின்றமையின், இவ்வோத்து மொழிமரபு எனக் காரணப் பெயர்த்தாயிற்று. இச்சூத்திரம் - முன்னர்ச் சார்ந்து வருமென்ற மூன்றனுட் ஒருமொழிக் குற்றியலிகரத்திற்கு இடனும் பற்றுக்கோடுங் கூறுகின்றது. இதன் பொருள் கிளவிக்கு வரூஉம் - தான் கூறும் பொருளைக் கோடற்கு ஒருவனை எதிர்முகமாக்குஞ் சொல்லிற்குப் பொருந்தவரும், ஆவயின் - அம் மியா என்னும் இடைச்சொல்லைச் சொல்லுமிடத்து, யாவென் சினைமிசை மகரம் ஊர்ந்து - யா வென்னும் உறுப்பின் மேலதாய் முதலாய் நின்ற மகரவொற்றினை யேறி, குற்றியலிகரம் நிற்றல் வேண்டும் - குற்றியலிகரம் நிற்றலை விரும்பும் ஆசிரியன் என்றவாறு. உதாரணம்: கேண்மியா, சென்மியா என வரும். கேளென்றது உரையசைக் கிளவி. அதனைச் சார்ந்து தனக்கு இயல்பின்றி நின்றது மியாவென்னும் இடைச் சொல். அவ்விடைச் சொல் முதலும், அதனிற் பிரியும் யா அதற்கு உறுப்புமா மென்று கருதி யாவென் சினை என்றார். மியா இடம்; மகரம் பற்றுக்கோடு. யாவும், இகரம் அரை மாத்திரையாதற்குச் சார்பு. இவ்விடைச் சொல் தனித்து நிற்றல் ஆற்றாமையிற் கேளென்பதனோடு சார்ந்து ஒரு சொல்லாயே நின்றுழி இடைநின்ற இகரம் ஒருமொழி யிடத்துக் குற்றியலிகரமாய் வருதலானும் ஆண்டு உணர்த்தற்குச் சிறப்பின்மையானும் ஈண்டுப் போத்தந்து கூறினார். ஊர்ந்தெனவே குற்றியலிகரமும் உயிரென்பது பெற்றாம், உயிர்க்கல்லது ஏறுதலின்மையின். (1) 35. புணரியல் நிலையிடைக் குறுகலுமு ரித்தே யுணரக் கூறின் 2முன்னர்த் தோன்றும். இது, குற்றியலிகரம் புணர்மொழியகத்தும் வருமென் கின்றது. இதன் பொருள்: புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்தே - அக் குற்றியலிகரம் ஒரு மொழிக்கண்ணன்றி இரு மொழி தம்மிற் புணர்தலியன்ற நிலைமைக்கண்ணுங் குறுகுதலுரித்து; உணரக்கூறின் முன்னர்த் தோன்றும் - அதற்கு இடமும் பற்றுக் கோடும் உணரக் கூறத் தொடங்கின் அவை குற்றியலுகரப் புணரிய லுள்ளே கூறப்படும் என்றவாறு. குறுகலுமென்னுமிடத்து உம்மையை நிலையிடையுமென மாறிக் கூட்டுக. யகரம் வருவழி (எழுத். 410) என்னுஞ் சூத் திரத்து யகரம் - இடம்; உகரஞ் சார்ந்த வல்லெழுத்துப் பற்றுக்கோடு. உதாரணம்: நாகியாது, வரகியாது, தெள்கியாது, எஃகியாது, கொக்கி யாது, குரங்கியாது என வரும். இது மொழிவாம் என்னும் உத்தி. (2) 36. நெட்டெழுத் திம்பருந் தொடர்மொழி யீற்றுங் குற்றிய லுகரம் வல்லா றூர்ந்தே. இஃது, ஒருமொழிக் குற்றியலுகரத்திற்கு இடமும் பற்றுக்கோடும் உணர்த்துகின்றது. இதன் பொருள்: குற்றியலுகரம் வல்லாறு ஊர்ந்தே - குற்றியலுகரம் வல்லெழுத்துக்கள் ஆறினையும் ஊர்ந்து, நெட்டெழுத்திம்பருந் தொடர் மொழி ஈற்றும் - நெட்டெழுத்தின் பின்னும் ஐவகைத் தொடர்மொழியின் இறுதியினும் நிற்றல் வேண்டும் ஆசிரியன் என்றவாறு. 3நெட்டெழுத்தினது பின், தொடர்மொழியினது ஈறென நிலத்த தகலம்போல ஒன்றியற்கிழமைப்பட்டு நின்றன, அம் மொழியிற் றீர்ந்து குற்றியலுகரம் நில்லாமையின். வல்லாறு பண்புத்தொகை. முற்றும்மை தொக்குநின்றது. அதிகார முறைமையென்னும் உத்தியான் நிற்றல்வேண்டுமென்பது வருவிக்க. உதாரணம்: நாகு, வரகு, தெள்கு, எஃகு, கொக்கு, குரங்கு என வரும். இவ்வறுவகையும் இடம்; வல்லெழுத்துப் பற்றுக்கோடு. எனவே, மொழிக்கு ஈறாதலும் பெற்றாம். பெருமுரசு திருமுரசு என்பன இரு மொழிக்கண் வந்த முற்றுகரம். பரசு, 4இங்கு, ஏது என்பன முற்றுகரவீறாகிய வடமொழிச் சிதைவு. தருக்கு, அணுக்கு என்பன வினைக்கண் வந்த முற்றுகரம். குற்றுகரத்திற்கு முன்னர் வந்த உயிரேறிமுடிய அரை மாத்திரை யாய் நிற்றலும், முற்றுகரத்திற்கு முன்னர் வந்த உயிரேறி முடியாமையுந் தம்முள் வேற்றுமை. (3) 37. இடைப்படிற் குறுகு மிடனுமா ருண்டே கடப்பா டறிந்த புணரிய லான. இது, குற்றியலுகரம் புணர்மொழிக்கண் தன் அரை மாத்திரையிற் குறுகி வரும் என்கின்றது. இதன் பொருள்: இடைப்படிற் குறுகும் இடனுமார் உண்டே - அவ் வுகரம் ஒருமொழியுளன்றிப் புணர்மொழி யிடைப்படின் தன் அரை மாத்திரையினுங் குறுகும் இடனும் உண்டு; கடப்பாடு அறிந்த புணரியலான - அதற்கு இடனும் பற்றுக்கோடும் யாண்டுப் பெறுவ தெனின், அதன் புணர்ச்சி முறைமை அறியுங் குற்றியலுகரப் புணரியலுள் என்றவாறு. வல்லொற்றுத் தொடர்மொழி (எழுத். 409) என்பதனுள் வல் லெழுத்துத் தொடர்மொழியும் வல்லெழுத்து வரும் வழியும் இடம்; ஈற்று வல்லெழுத்துப் பற்றுக்கோடு. உதாரணம்: செக்குக்கணை, சுக்குக்கொடு என வரும். இவை அரைமாத்திரையிற் குறுகியவாறு ஏனையவற்றொடு படுத்து உணர்க. இடனுமெனவே இது சிறுபான்மை யாயிற்று. (4) 38. குறியதன் முன்ன ராய்தப் புள்ளி யுயிரொடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே. இது, நிறுத்தமுறையானே ஆய்தம் ஒருமொழியுள் வருமாறு கூறுகின்றது. இதன் பொருள்:ஆய்தப் புள்ளி - ஆய்தமாகிய ஒற்று, குறியதன் முன்னர் உயிரொடு புணர்ந்த வல்லாறன் மிசைத்து - குற்றெழுத்தின் முன்னதாய் உயிரொடு கூடிய வல்லெழுத்தாறின் மேலிடத்த தாய் வரும் என்றவாறு. 5வல்லாறன் மிசைத் தென்றதனானும், ஈண்டுப் புள்ளி யென்றதனானும், ஆய்தத் தொடர்மொழி (எழுத். 409) என மேற் கூறுதலானும், உயிரென்றது ஈண்டுப் பெரும்பான்மையுங் குற்றுகரமேயாம்; சிறுபான்மை ஏனை உயிர்களையுங் கொள்க. உதாரணம்: எஃகு, கஃசு, 6கஃடு, கஃது, கஃபு, கஃறு, அஃது, இஃது, உஃது என வரும். கஃறீது முஃடீது என்பனவற்றை மெய்பிறிதாகிய புணர்ச்சி யென்றதனாலும், ஈண்டுப் புள்ளி என்றதனானும் ஆய்தமும் மெய்யாயிற்று. அஃகாமை வெஃகாமை அஃகி வெஃகி அஃகம் எனப் பிறவுயிர்களோடும் வந்தது. கஃசியா தெனத் திரிந்ததுவுங் குற்றியலு கரத்தோடு புணர்ந்ததாம். (5) 39. ஈறியன் மருங்கினு மிசைமை தோன்றும். இஃது - அவ்வாய்தம் புணர்மொழியகத்தும் வருமாறு கூறுகின்றது. இதன் பொருள்: ஈறியன் மருங்கினும் - நிலைமொழியீறு வருமொழி முதலொடு புணர்ந்து நடக்கும் இடத்தும், இசைமை தோன்றும் - தன் அரைமாத்திரையே இசைக்குந் தன்மை தோன்றும் என்றவாறு. உதாரணம்: கஃறீது, முஃடீது எனவரும். இவ்வீறு இயலுமாறு புள்ளி மயங்கியலுட் பெறுதும். ஈண்டும் இடம், குற்றெழுத்துமேல் வரும் வல்லெழுத்து. (6) 40. உருவினு மிசையினு மருகித் தோன்று மொழிக்குறிப் பெல்லா மெழுத்தி னியலா வாய்த மஃகாக் காலை யான. இஃது எதிரதுபோற்றல் என்னும் உத்தியாற் செய்யுளியலை நோக்கி ஆய்தத்திற்கு எய்தியதோர் இலக்கணம் உணர்த்துகின்றது. இதன் பொருள்: 7உருவினும் இசையினும் அருகித் தோன்றுங் குறிப்பு மொழியும் - நிறத்தின்கண்ணும் ஓசையின் கண்ணும் சிறுபான்மை ஆய்தந் தோன்றும் பொருள் குறித் தலையுடைய சொல்லும், எல்லாமொழியும் - அவையொழிந்த எல்லா மொழிகளும், எழுத்தினியலா - ஒற்றெழுத்துக்கள் போல அரைமாத்திரையின் கண்ணும் சிறுபான்மை மிக்கு நடந்து, ஆய்தம் அஃகாக் காலையான - ஆய்தஞ் சுருங்காத இடத்தான சொற்களாம் என்றவாறு. எனவே, ஈண்டு ஆராய்ச்சியின்றேனுஞ் செய்யுளியலிற் கூறும், ஒற்றள பெடுப்பினு மற்றென மொழிப (செய். 18) என்னுஞ் சூத்திரத்துக் கண்ண் டண்ணெனக் கண்டுங் கேட்டும் என்புழிக் கண்ண்ணென்பது சீர்நிலை எய்தினாற் போலக் கஃஃ றென்னுங் கல்லத ரத்தம் என நிறத்தின்கண்ணும், சுஃஃ றென்னுந் தண்டோட்டுப் பெண்ணை என இசையின் கண்ணும் வந்த ஆய்தம் ஒரு மாத்திரை பெற்றுச் சீர்நிலை யெய்துங்கால், ஆண்டுப் பெறுகின்ற ஒரு மாத்திரைக்கு ஈண்டு எதிரது போற்றி விதி கூறினார், ஆய்தம் அதிகாரப்பட்டமை கண்டு. எஃஃ கிலங்கிய கையரா யின்னுயிர், வெஃஃகு வார்க்கில்லை வீடு என்று ஏனையிடத்தும் வந்தன. ஒற்றள பெடுக்குமாறு இவ்வதிகாரத்துக் கூறிற்றிலர், அஃது உயிரள பெடைபோலச் சீர்நிலை யெய்துதலும் அசைநிலையாந் தன்மையுமுடையதாய்ச் செய்யுட்கே வருதலின். இதனானே ஒற்றளபெடையும் ஒரு மாத்திரை பெறுமென்பது பெற்றாம். எழுத்தினென்ற இன் உவமப்பொருள். இயலாவென்றது செய்யா வென்னும் வினையெச்சம். இவ்வாறன்றி இக்குறிப்புச்சொற்கள் ஆய்தம் இரண்டிட்டு எழுதப்படாவென்று பொருள் கூறிற் செய்யுளியலொடு மாறுபட்டு மாறு கொளக் கூறல் என்னுங் குற்றந் தங்குமென்று உணர்க. (7) 41. குன்றிசை மொழிவயி னின்றிசை நிறைக்கு நெட்டெழுத் திம்ப ரொத்தகுற் றெழுத்தே. இஃது - எதிரது போற்றல் என்னும் உத்தி பற்றிச் செய்யுளியலை நோக்கி நீட்டம் வேண்டின் (எழுத். 6) என முற்கூறிய அளபெடையாமாறு கூறுகின்றது. இதன் பொருள்: குன்றிசை மொழிவயின் நின்று இசை நிறைக்கும் - அளபெடுத்துக் கூறாக்காற் குன்றுவதான ஓசையையுடைய அவ்வளபெடைச் சொற்கண்ணே நின்று அவ்வோசையை நிறைக்கும்; அவை யாவையொனின், நெட்டெழுத்திம்பர் ஒத்த குற்றெழுத்தே - நெட்டெழுத்துக்களின் பின்னாகத் தமக்கு இனமொத்த குற்றெழுத்துக்கள் என்றவாறு. உதாரணம்: ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஓஒ என வரும். குன்றிசை மொழி என்றதற்கு இசைகுன்று மொழி என்றுமாம். இனமொத்தலாவது பிறப்பும் புணர்ச்சியும் ஓசையும் வடிவும் ஒத்தல். ஈண்டு மொழியென்றது அளபெடையசை நிலை (செய்யுளியல் 17) என்னுஞ் செய்யுளியற் சூத்திரத்து எட்டு இயற் சீரின்பாற் படுகின்ற எண்வகை அளபெடைச் சொற்களையும். அவை ஆஅ, கடாஅ, ஆஅழி, படாஅகை, ஆஅங்கு, ஆஅவது, புகாஅர்த்து, விராஅயது என்பனவாம். 8கட்டளை கொள்ளா ஆசிரியர் இவற்றைத் தனிநிலை முதனிலை இடைநிலை இறுதி நிலை யென்றும் அடக்குப. இனி மொழி யென்றதற்குத் தனி நிலை ஏழனையுமே கொள்ளின், ஒழிந்த இயற்சீர்ப்பாற் படும் அளபெடை கோடற்கு இடமின்மை உணர்க. (8) 42. ஐஔ என்னு மாயீ ரெழுத்திற் கிகர வுகர மிசைநிறை வாகும். இஃது ஒத்த குற்றெழுத்து இல்லாதன அளபெடுக்குமாறு கூறுகின்றது. இதுவும் எதிரது போற்றல். இதன் பொருள்: ஐ ஔ என்னும் ஆயீரெழுத்திற்கு - தமக்கு இனமில்லாத ஐகார ஔகாரமென்று கூறப்படும் அவ்விரண்டெழுத்திற்கும் இகர உகரம் இசைநிறைவாகும் - ஈகார ஊகாரங்கட்கு இனமாகிய இகர உகரங்களைச் சார்த்திக்கூற, அவை அக்குன்றிசை மொழிக்கண் நின்று ஓசையை நிறைப்பனவாம் என்றவாறு. ஐஇ, ஔஉ என நிரனிறையாகக் கொள்க. இவற்றை முற்கூறிய இயற்சீரெட்டிற்கும் ஏற்பனவற்றோடு உதாரணங் காட்டிக்கொள்க. இத்துணையும் நூன்மரபின் ஒழிபு. (9) 43. நெட்டெழுத் தேழே யோரெழுத் தொருமொழி. இஃது ஓரெழுத்தொருமொழி உணர்த்துதல் நுதலிய வற்றுள் நெட்டெழுத்தானாம் மொழியாக்கங் கூறுகின்றது. இதன் பொருள்: நெட்டெழுத்து ஏழே - நெட்டெழுத் தாகிய உயிர்களேழும், ஓரெழுத்தொருமொழி - ஓரெழுத் தானாகும் ஒரு மொழி யாம் என்றவாறு. முற்றும்மை தொகுத்து ஈற்றசை ஏகாரம் விரித்தார். உதாரணம்: ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ என வரும். ஔகாரம் உயிர்மெய்க்கண்ணல்லது வாராது. ஊ என்பது தசை. இஃது உயிர்க்கும் உயிர் மெய்க்கும் விதி. கா தீ பூ சே தை கோ கௌ என வரும். 9இவை தம்மையுணரநின்ற வழி எழுத்தாம்; இடைநின்று பொருளுணர்த்தியவழிச் சொல்லாம். நெட்டெழுத் தேறிய மெய் நெட்டெழுத்தாயுங் குற்றெழுத்தேறிய மெய் குற்றெழுத்தாயும் நிற்றலேயன்றி மெய்க்கு நெடுமையும் குறுமையும் இன்மை உணர்க. (10) 44. குற்றெழுத் தைந்து மொழிநிறை பிலவே. இது குற்றெழுத்து ஐந்தும் மொழியாகா; அவற்றுட் சில மொழி யாகுமென்பது உணர்த்துகின்றது. இதன் பொருள்: குற்றெழுத்து ஐந்தும் - குற்றெழுத்தாகிய உயிரைந்தும், மொழிநிறைபு இலவே - தாமே நிறைந்து நின்று மொழியாதல் இல; சில மெய்யொடுகூடி நிறைந்து நின்று மொழியாம் என்றவாறு. உதாரணம்: து, நொ என வரும். இவை உயிர்மெய்க் கண்ணல்லது வாராமையானும், உயிர்க்கண்ணும், ஏனை அகரமும் எகரமும் அக் கொற்றன் எப்பொருள் எனத் தனித்து நின்று உணர்த்தலாற்றாது இடைச்சொல்லாய்ப் பெயரைச் சார்ந்து நின்று சுட்டுப் பொருளும் வினாப் பொருளும் உணர்த்துதலானும், நிறைபில வென்றார். 10முற்றும்மை ஈண்டு எச்சப்பட்டு நின்றதென்று உணர்க. (11) 45. ஓரெழுத் தொருமொழி யீரெழுத் தொருமொழி யிரண்டிறந் திசைக்குந் தொடர்மொழி யுளப்பட மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே. இது, முன்னர் மெய்ம்மயக்கம் உடனிலைமயக்கங் கூற லானும், ஈண்டு நெட்டெழுத்தேழே (எழுத். 43) என்பதனானும், எழுத்தினான் மொழியாமாறு கூறினார். அம்மொழிக்கு இச் சூத்திரத்தாற் பெயரும் முறையுந் தொகையுங் கூறுகின்றார். இதன் பொருள்: ஓரெழுத்தொருமொழி ஈரெழுத்தொரு மொழி இரண்டிறந்து இசைக்குந் தொடர்மொழி உளப்பட - ஓரெழுத் தானாகும்; ஒரு மொழியும் இரண்டெழுத்தானாகும்; ஒருமொழியும் இரண்டனை இறந்து பலவாற்றான் இசைக்குந் தொடர்மொழி யுடனே கூட, மொழி நிலை மூன்றே - மொழிகளின் நிலைமை மூன்றேயாம், தோன்றிய நெறியே - அவை தோன்றிய வழக்குநெறிக் கண் என்றவாறு. உதாரணம்: ஆ கா நா: ஓரெழுத்தொருமொழி. மணி வரகு கொற்றன்: ஈரெழுத்தொருமொழி. குரவு அரவு: மூவெழுத் தொரு மொழி. கணவிரி: நாலெழுத் தொரு மொழி. அகத்தியனார்: ஐயெழுத்தொரு மொழி. திருச்சிற்றம்பலம்: ஆறெழுத்தொரு மொழி. பெரும் பற்றப்புலியூர்: ஏழெழுத்தொருமொழி. 11ஓரெழுத்தொருமொழியுந் தொடர்மொழியு மென்னாது ஈரெழுத்தொருமொழியும் ஓதினார், சில பல என்னுந் தமிழ் வழக்கு நோக்கி. ஆசிரிய ஒற்றுங் குற்றுகரமும் எழுத்தென்று கொண்டனரா தலின், மா கா என நின்ற சொற்கள் மால் கால் என ஒற்றடுத்துழி ஒற்றினான் வேறுபொருள் தந்து நிற்றலின் இவற்றை ஈரெழுத் தொருமொழி யென்றும், நாகு வரகு என்னுங் குற்றுகர ஈற்றுச் சொற்களிற் குற்றுகரங்கள் சொல்லொடுகூடிப் பொருள் தந்து நிற்றலின் இவற்றை, ஈரெழுத்தொருமொழி மூவெழுத்தொரு மொழி யென்றுங் கோடும் என்பார்க்கு, ஆசிரியர் பொருளைக் கருதாது மாத்திரை குறைந்தமை பற்றி உயிரில்லெழுத்து மெண்ணப் படாஅ (செய்யுளியல். 44) குறிலே நெடிலே குறிலிணை (செய்யுளியல். 3) என்னுஞ் செய்யுளியற் சூத்திரங்களால் இவற்றை எழுத் தெண்ணவும் அலகிடவும் பெறா என்று விலக்குவராதலின், அவற்றால் ஈண்டு ஈரெழுத் தொருமொழியும் மூவெழுத்தொரு மொழியும் கொள்ளின் மாறுகொளக் கூறலென்னுங் குற்றந் தங்குமென்று மறுக்க. இனி நெட்டெழுத் தேழே யோரெழுத் தொருமொழி (எழுத். 43) குற்றெழுத் தைந்து மொழிநிறை பிலவே (எழுத். 44) என்பனவற்றான் மெய்க்குக் குறுமை நெடுமை யின்மையான் உயிரும் உயிர்மெய்யுமாகிய நெடிலுங் குறிலுமே மொழியா மென்று கூறி, மீட்டும் அதனையே இச்சூத்திரத்தான் ஓரெழுத் தொருமொழி யென்றெடுத்து, அதனோடே ஈரெழுத்தையும் இரண்டிறந்தனையுங் கூட்டி மொழியாகக் கோடலின், ஒற்றினைக் கூட்டி எழுத்தாகக் கோடல் ஆசிரியர்க்குக் கருத்தன்மை யுணர்க. அன்றியும் மொழிப்படுத் திசைப்பினும் (எழுத். 63) என்னுஞ் சூத்திரத்திற் கூறுகின்ற வாற்றானும் உணர்க. அகரமுதல் னகர விறுவாய் முப்பஃ தென்ப (எழுத். 1) என ஒற்றினையும் எழுத் தென்றது எழுத்தின் தன்மை கூறிற்று. ஈண்டு மொழியாந் தன்மை கூறிற்று. (12) 46. மெய்யி னியக்க மகரமொடு சிவணும். இது, தனிமெய்களை அகரம் இயக்குமாறு கூறுகின்றது. இதன் பொருள்: மெய்யினியக்கம் - தனிமெய்களினது நடப்பு, அகர மொடு சிவணும் - அகரத்தோடு பொருந்தி நடக்கும் என்றவாறு. எனவே ஒருவன் தனிமெய்களை நாவாற் கருத்துப் பொருளாகிய உருவாக இயக்கும் இயக்கமும், கையாற் காட்சிப் பொருளாகிய வடிவாக இயக்கும் இயக்கமும் அகரத்தொடு பொருந்தி நடக்கும் என்றவாறு. உதாரணம்: வல்லெழுத் தென்ப கசட தபற (எழுத். 19) ககார ஙகார முதனா வண்ணம் (எழுத். 89) என்றாற் போல்வன நாவால் இயக்கியவாறு காண்க. எழுதிக் காட்டு மிடத்துக் ககரம் முதலியன உயிர் பெற்று நின்ற வடிவாக எழுதிப் பின்னர்த் தனி மெய்யாக்குதற்குப் புள்ளியிட்டுக் காட்டு கின்றவாற்றான் வடிவை இயக்கு மிடத்தும் அகரம் கலந்து நின்றவாறு காண்க. இங்ஙனம் மெய்க்கண் அகரங் கலந்து நிற்குமாறு கூறினாற் போலப் பதினோருயிர்க்கண்ணும் அகரங் கலந்து நிற்கு மென்பது ஆசிரியர் கூறாராயினார், அந்நிலைமை தமக்கே புலப்படுத லானும் பிறர்க்கு இவ்வாறு உணர்த்துதல் அரிதாகலானு மென்று உணர்க. இறைவன் இயங்குதிணைக்கண்ணும் நிலைத்திணைக் கண்ணும் பிறவற்றின்கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்கு மாறு எல்லார்க்கும் ஒப்ப முடிந்தாற்போல, அகரமும் உயிர்க் கண்ணுந் தனிமெய்க்கண்ணுங் கலந்து அவற்றின் தன்மையாயே நிற்குமென்பது சான்றோர்க்கெல்லாம் ஒப்ப முடிந்தது. அகரமுதல என்னுங் குறளான் அகரமாகிய முதலை யுடைய எழுத்துகளெல்லாம்; அதுபோல இறைவனாகிய முதலை யுடைத்து உலகமென வள்ளுவனார் உவமை கூறியவாற்றானும், கண்ணன் எழுத்துகளில் அகரமாகின்றேன் யானே யெனக் கூறியவாற்றானும், பிறநூல் களானும் உணர்க. இதனான் உண்மைத்தன்மையுஞ் சிறிது கூறினாராயிற்று. இதனை நூன்மரபிற் கூறாது ஈண்டுக் கூறினார், வல்லெழுத் தென்ப கசட தபற (எழுத். 19) என்ற இடத்துத் தான் இடைநின்று ஒற்றென்பதோர் பொருளை உணர்த்தி மொழியாந்தன்மை எய்தி நிற்றலின். (13) 47. தம்மியல் கிளப்பி னெல்லா வெழுத்து மெய்ந்நிலை மயக்க மான மில்லை. 12இது, முன்னர் மெய்க்கண் உயிர் நின்றவாறு கூறி அவ்வுயிர் மெய்க்கண் ஏறி உயிர்மெய்யாய் நின்றகாலத்து அம்மெய்யாற் பெயர் பெறுமாறு கூறுகின்றது. இதன் பொருள்: எல்லா எழுத்தும் - பன்னீருயிரும், மெய்ந்நிலை தம் இயல் மயக்கங் கிளப்பின் - மெய்யின் தன்மையிலே தம்முடைய தன்மை மயங்கிற்றாகப் பெயர் கூறின், 13மானமில்லை - குற்றமில்லை என்றவாறு. மெய்யின் தன்மையாவது வன்மை மென்மை இடைமை. தம்மியலாவது உயிர்த்தன்மை என்றது, வல்லெழுத்து மெல்லெ ழுத்து இடையெழுத்தென உயிர்மெய்க்கும் பெயரிட்டாளுதல் கூறிற்று. அவை வல்லெழுத் தியையி னவ்வெழுத்து மிகுமே (எழுத். 296) எனவும், மெல்லெழுத் தியையி னிறுதியொ டுறழும் (எழுத். 342) எனவும், `இடையெழுத் தென்ப யரலவழள' (எழு-21) எனவும், பிறாண்டும் ஆள்ப. எழுத்தை வன்மை மென்மை இடைமை யென விசேடித்த சிறப்பான் இப்பெயர் கூறினார். இஃதன்றிப் பதினெட்டு மெய்யின் தம்மைக் கூறுமிடத்து மெய்ம்மயக்கங் கூறிய வகையானன்றி வேண்டியவாறு மயங்கு மென்று கூறி அவற்றுள் லளஃகான் முன்னர் (எழுத். 24) என்ப தனைக் காட்டில், அஃது இருமொழிக்கண்ணதென மறுக்க. (14) 48. ய ர ழ வென்னு மூன்று மொற்றக் க ச த ப ங ஞ ந ம வீரொற் றாகும். இஃது - ஈரொற்றுடனிலையாமாறு கூறுகின்றது. இதன் பொருள்: யரழ என்னும் மூன்றும் ஒற்ற - ய ர ழ வென்று கூறப் படும் மூன்று புள்ளியும் ஒற்றாய் நிற்ப, க ச த ப ங ஞ ந ம ஈரொற்றாகும் - க ச த ப க் களும் ங ஞ ந ம க்களும் வந்து ஈரொற்றாய் நிற்கும் என்றவாறு. உதாரணம்: வேய்க்க வாய்ச்சி பாய்த்தல் வாய்ப்பு எனவும், பீர்க்கு நேர்ச்சி வார்த்தல் ஆர்ப்பு எனவும், வாழ்க்கை தாழ்ச்சி தாழ்த்தல் தாழ்ப்பு எனவும், காய்ங்கனி தேய்ஞ்சது காய்ந்தனம் காய்ம்புறம் எனவும், நேர்ங்கல் நேர்ஞ்சிலை நேர்ந்திலை நேர்ம்புறம் எனவும் வரும். ழகாரத்திற்கு வாழ்ந்தனம் என இக்காலத்து ஙகரவொற்று வரும். ஏனைய மூன்றும் இக்காலத்து வழங்குமெனின் உணர்க. இனித் தாழ்ங்குலை தாழ்ஞ்சினை தாழ்ந்திரள் வீழ்ம்படை என அக்காலத்து வழங்குமென்று இத்தொகைச் சொற்கள் காட்டலும் ஒன்று. உரையாசிரியர் இருமொழிக்கட் காட்டிய வற்றிற்கு அவ்வீறுகடோறுங் கூறுகின்ற சூத்திரங்கள் பின்னர் வேண்டாமை உணர்க. இஃது ஈரொற்றுடனிலையாதலின் ஈண்டு வைத்தார். இனி, நெடிற்கீழே யன்றிப் பல வெழுத்துந் தொடர்ந்து நின்றதன் பின்னும் ஈரொற்று வருதல் கொள்க. அவை வேந்தர்க்கு அன்னாய்க்கு என்றாற் போல்வனவாம். (15) 49. அவற்றுள், ரகார ழகாரங் குற்றொற் றாகா. இஃது - எய்தியது ஒருமருங்கு மறுத்தல் கூறுகின்றது. இதன் பொருள்: அவற்றுள் - முற்கூறிய மூன்றனுள், ரகார ழகாரம் - ரகாரமும் ழகாரமும், குற்றொற்றாகா - குறிற்கீழ் ஒற்றாகா, நெடிற்கீழ் ஒற்றாம், குறிற்கீழ் உயிர்மெய்யாம் என்றவாறு. கீழென்னும் உருபு தொகுத்துக் கூறினார். ஆகாதனவற்றிற்கு உதாரண மின்று. உதாரணம்: கார் வீழ் என நெடிற்கீழ் ஒற்றாய் வந்தன. கரு மழு எனக் குறிற்கீழ் உயிர்மெய்யாய் வந்தன. இவற்றை விலக்கவே, யகரம் பொய் எனவும் நோய் எனவும் இரண்டிடத்தும் ஒற்றாய் வருதல் பெற்றாம். புகர் புகழ் புலவர் என்றாற் போல்வனவோ வெனின், 14மொழிக்கு முதலாம் எழுத்தினைச் சேர்வனவற்றிற்கே ஈண்டு ஆராய்ச்சி யாதலால் அவை வேண்டியவாறே வருமென்று உணர்க. அன்றியுங் குற்றொற் றென்றே சூத்திரஞ் செய்தலிற் குறிலிணை யொற்றினைக் காட்டிக் கடாவலாகாமை உணர்க. இது வரையறையின்றி உயிர்மெய்யொடு தனிமெய் மயங்குவனவற்றில் சிலவொற்றிற்கு வரையறை ஈண்டுக் கூறியது. (16) 50. குறுமையு நெடுமையு மளவிற் கோடலிற் றொடர்மொழி யெல்லா நெட்டெழுத் தியல. இஃது - அளபிறந் துயிர்த்தலும் (எழுத். 33) என்னுஞ் செய்யுளியலை நோக்கிய நூன்மரபிற் சூத்திரத்திற்குப் புறனடை யாய் அதன்கண் நிகழ்வதோர் ஐயம் அகற்றுகின்றது; என்னை? உயிரும் மெய்யும் அளபிறந்து இசைக்குங்காற் குறிலோ நெடிலோ இசைப்பதென மாணாக்கர்க்கு நிகழ்வதோர் ஐயம் அறுத்தலின். இதன் பொருள்: குறுமையும் நெடுமையும் - 15எழுத்துக் களது குறிய தன்மையும் நெடிய தன்மையும், அளவிற் கோடலின் - மாத்திரையென்னும் உறுப்பினைச் செவி கருவியாக அளக்கின்ற அளவு தொழிலாலே செய்யுட்குக் கொள்ளப்படுதலின், தொடர் மொழி யெல்லாம் - அம்மாத்திரை தம்முள் தொடர்ந்து நிற்கின்ற சொற்க ளெல்லாம், நெட்டெழுத்தியல - நெட்டெழுத்து மாத்திரை மிக்கு நடக்கும்படியாகத் தொடர்ந்த சொல்லாம் என்றவாறு. உதாரணம்: வருவர்கொல் வயங்கிழாஅய் (கலி. 11) எனவும், கடியவே கனங்குழாஅய் (கலி. 11) எனவுங் குற்றெ ழுத்துக்களெல்லாம் நெட்டெழுத்தினை மாத்திரை மிகுத் தற்குக் கூடியவாறு உணர்க. ஏனைச் செய்யுட் களையும் இவ்வாறே காண்க. எனவே, மாத்திரை அளக்குங்கால் நெட்டெழுத்தே மாத்திரை பெற்று மிக்கு நிற்கும் என்றமையான், எதிரது போற்றலென்னும் உத்தி பற்றிச் செய்யுளியலை நோக்கிக் கூறிய தாயிற்று. ஈண்டுக் கூறினார், நெட்டெழுத்து இரண்டு மாத்திரையின் இகந்து வரும் என்பது அறிவித்தற்கு. அளபென்று மாத்திரையைக் கூறாது அளவெனச் சூத்திரஞ் செய்தமையான் அளவு தொழின் மேனின்றது. அது செய்யுளிய லுள் மாத்திரையளவும் (செய்யுளியல் 2) என்பதனானும் உணர்க. இயல வென்றதனைச் செயவெனெச்சமாக்கிப் படுத்தலோசை யாற் கூறுக. இனித் தன்னின முடித்தலென்பதனான், ஒற்றிற்கும் இவ்வாறே கொள்க. குரங்ங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி (அகம். 4) என்ற குறுஞ்சீர்வண்ணத்திற்கு உரிய குற்றெழுத்துக ளெல்லாம் இடையினின்ற ஒற்றெழுத்தை மாத்திரை மிகுத்தற்குக் கூடிநின்றவாறு உணர்க. எனவே, குற்றெழுத்துகளெல்லாம் ஒற்றெழுத்துகளோடும் நெட்டெழுத்துகளோடுங் கூடி அவற்றையே ஓசை மிகுத்துநிற்கும் என்றவாறாயிற்று. இதனானே, ஒற்றிசை நீடலும் (எழுத். 33) என்ற ஒற்றிசை நீளுங்காற் குற்றெழுத்தாய் நீளுமென்றார். ïÅ, ciuaháÇa® òf® òfœ vd¡ F¿Èiz¡Ñœ ufhu Hfhu§fŸ tªj bjhl®bkhÊ fbsšyhª jh® jhœ v‹wh‰ nghy Xirbah¤J be£blG¤â‹ j‹ikath« v‹whuh byÅ‹, òf® òfœ v‹gdt‰iw be£blG¤ bj‹nw v›Él¤J« Mshik ahD«, be£blG¤jhf¡ T¿a ïy¡ fz¤jhš xU ga‹ bfhŸshikahDŠ, brŒíËaYŸ ït‰iw¡ F¿Èiz x‰wL¤j Ãiuair ahfîª jh® jhœ v‹gdt‰iw be£blG¤J x‰wL¤j neuirahfî§ nfhlyhD« mJ bghUs‹ik cz®f.(17) 51. செய்யு ளிறுதிப் 16போலி மொழிவயி னகார மகார மீரொற் றாகும். இது, செய்யுட்கண் ஈரொற்றிலக்கணமாமாறு கூறுகின்றது. இதன் பொருள்: 17செய்யுட் போலி மொழி இறுதிவயின் - செய்யுட் கட் போலுமென்னுஞ் சொல்லின் இறுதிக்கண், னகாரம் மகாரம் ஈரொற்றாகும் - னகாரமும் மகாரமும் வந்து ஈரொற்று உடனிலை யாய் நிற்கும் என்றவாறு. உதாரணம்: அந்நூலை, முந்நூலாக் கொள்வானும் போன்ம் (கலி. 103), சிதையுங் கலத்தைப் பயினாற்றிருத்தித், திசையறி மீகானும் போன்ம் (பரி. 10) என வரும். போலும் என்னுஞ் செய்யுமென்னும் முற்று ஈற்றுமிசை யுகரம் மெய்யொழித்துக் கெட்டு லகாரந் திரிந்து நின்றது. இஃது இறுதியில் முற்று; இடையிற் பெயரெச்சமாகிய உவமவுருபு. ஈண்டு முற்றென்பார் 18இறுதி மொழி என்றார். (18) 52. னகாரை முன்னர் மகாரங் குறுகும். இஃது - அரையளபு குறுகுமென்ற மகரத்திற்குக் குறுகும் இடம் இது வென்கின்றது. இதன் பொருள்: னகாரை முன்னர் மகாரங் குறுகும் - முற்கூறிய னகரத்தின் முன்னர் வந்த மகரந்தன் அரைமாத்திரை யிற் குறுகி நிற்கும் என்றவாறு. உதாரணம்: போன்ம் என முன்னர்க் காட்டினாம். னகாரையென இடைச்சொல் ஈறு திரிந்து நின்றது. இனித் தன்னின முடித்த லென்பதனான், ணகாரவொற்றின் முன்னும் மகாரங் குறுகுதல் கொள்க. மருளினு மெல்லா மருண்ம் என வரும். (19) 53. மொழிப்படுத் திசைப்பினுந் தெரிந்துவே றிசைப்பினு மெழுத்திய றிரியா வென்மனார் புலவர். இஃது - ஒற்றுங் குற்றுகரமும் ஈண்டு எழுத்துக்களோடு கூட்டி எண்ணப்பட்டு நிற்குமென்பதூஉஞ் செய்யுளியலுள் எண்ணப் படாது நிற்கு மென்பதூஉங் கூறுகின்றது. இதன் பொருள்: 19தெரிந்து - ஒற்றுங் குற்றுகரமும் பொருள் தரு நிலைமையை ஆராய்ந்து, மொழிப்படுத்து இசைப்பினும் - சொல்லாகச் சேர்த்துச் சொல்லினும், வேறு இசைப்பினும் - செய்யுளியலுள் ஒற்றுங் குற்றுகரமும் பொருள் தருமேனும் மாத்திரை குறைந்து நிற்கும் நிலைமையை நோக்கி எழுத்தெண்ணப் படா வென்று ஆண்டைக்கு வேறாகக் கூறினும், எழுத்தியல் திரியா என்மனார் புலவர் - அவ்விரண்டிடத்தும் அரைமாத்திரை பெற்று நிற்கும் ஒற்றுங் குற்றுகரமும் முற்கூறிய எழுத்தாந்தன்மை திரியா வென்று கூறுவர் புலவர் என்றவாறு. இதனான் ஒற்றும் ஆய்தமுங் குற்றுகரமும் எழுத்தாகி நின்று பொருள் தந்தும், எழுத்தெண்ணவும் அலகிடவும் பெறா வென்பது கூறினாராயிற்று. 20தெரிந்து வேறிசைத்தல் குற்றுகரத்திற்கு இன்றா தலின் ஏற்புழிக் கோடலான் ஒற்றிற்கும் ஆய்தத்திற்குங் கொள்க. உதாரணம்: அல் இல் உண் எண் ஒல் எனவும், கல் வில் முள் செல் சொல் எனவும், ஆல் ஈர் ஊர் ஏர் ஓர் எனவும், கால் சீர் சூல் தேன் கோன் எனவும் உயிரும் உயிர்மெய்யுமாகிய 21குற்றெழுத்தையும் நெட்டெழுத்தையும் ஒற்றெழுத்துக்கள் அடுத்து நின்று பொருள்தந்தவாறு காண்க. கடம், கடாம், உடையான், திருவாரூர், அகத்தியனார் என ஈரெழுத்தை யும் மூவெழுத்தையும் நாலெழுத்தையும் ஐயெழுத்தையும் இறுதியிலும் இடையிலும் ஒற்றடுத்து நின்று பொருள் தந்தவாறு காண்க. எஃகு, தெள்கு, கொக்கு, குரங்கு என்பனவும் எழுத்தெண்ணவும் அலகிடவும் பெறாத குற்றுகரமும் அடுத்து நின்று பொருள் தந்தவாறு காண்க. உயிரில் லெழுத்து மெண்ணப் படாஅ உயிர்த்திற மியக்க மின்மையான (செய். 44) என்பது எழுத்து எண்ணப் பெறாமைக்கு விதி. இனி, இச்சூத்திரத்திற்கு எழுத்துக்களைச் சொல்லாக்கிக் கூறினும் பிறிதாகக் கூறினும் மாத்திரை திரியாதென்று பொருள் கூறி, அகரம் என்புழியும் அ என்புழியும், ஆலம் என்புழியும் ஆ என்புழியும், ககரம் என்புழியும் க என்புழியும், காலம் என்புழியும் கா என்புழியும் ஓசை ஒத்து நிற்கு மென்றால் அது முன்னர்க் கூறிய இலக்கணங்களாற் பெறப்படுதலிற் பயனில் கூற்றாமென்க. (20) 54. அகர இகர மைகார மாகும். இது, சிலவெழுத்துக்கள் கூடிச் சிலவெழுத்துக்கள் போல இசைக்குமென எழுத்துப்போலி கூறுகின்றது. இதன் பொருள்: அகர இகரம் ஐகாரம் ஆகும் - அகரமும் இகரமுங் கூட்டிச் சொல்ல, ஐகாரம் போல இசைக்கும், அது 22கொள்ளற்க என்றவாறு. போல என்றது தொக்கது. உதாரணம்: ஐவனம், அஇவனம் என வரும். ஆகுமென்றதனால் இஃது இலக்கணமன்றாயிற்று. (21) 55. அகர உகர மௌகார மாகும். இதுவும் அது. இதன் பொருள்:அகர உகரம் ஔகாரம் ஆகும் - அகரமும் உகரமும் கூட்டிச் சொல்ல ஔகாரம்போல இசைக்கும், அது கொள்ளற்க என்றவாறு. போல என்றது தொக்கது. உதாரணம்: ஔவை, அஉவை என வரும். (22) 56. அகரத் திம்பர் யகரப் புள்ளியு மையெ னெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும். இதுவும் அது. இதன் பொருள்: அகரத்திம்பர் யகரப் புள்ளியும் - அகரத்தின்பின் இகரமேயன்றி யகரமாகிய புள்ளி வந்தாலும், ஐயென் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும் - ஐயெனப்பட்ட நெட்டெழுத்தின் வடிவு பெறத் தோன்றும் என்றவாறு. உதாரணம்: ஐவனம், அய்வனம் என வரும். மெய்பெற என்றதனான் அகரத்தின் பின்னர் உகரமே யன்றி வகரப்புள்ளியும் ஔகாரம் போல வருமென்று கொள்க. ஔவை, அவ்வை என வரும். (23) 57. ஓரள பாகு மிடனுமா ருண்டே தேருங் காலை மொழிவயி னான. இஃது - அதிகாரத்தான் ஐகாரத்திற்கும் ஔகாரத்திற்கும் எதிரது போற்ற லென்பதனாத செய்யுளியலை நோக்கி மாத்திரைச் சுருக்கங் கூறுகின்றது. இதன் பொருள்: மொழிவயினான - ஒரு சொல்லிடத்தே நின்ற ஐகார ஔகாரங்கள், தேருங்காலை - ஆராயுமிடத்து, ஓரளபாகும் இடனு மாருண்டே - ஒரு மாத்திரையாய் நிற்கும் இடமும் உண்டு என்றவாறு. உம்மையான் இரண்டு மாத்திரை பெறுதலே வலியுடைத் தாயிற்று. இடனு மென்றது, ஒரு சொல்லின் முதலிடைகடை யென்னும் மூன்றிடத்துங் குறுகும், அது செய்யுட்கண் ஓசை இடர்ப் பட்டொலிக்குமிடத்துக் குறுகுமென்றற்கு. உரையிற் கோடல் என்பதனால் ஐகாரம் முதலிடை கடையென்னும் மூன்றிடத்துங் குறுகும்; ஔகாரம் முதற்கண் குறுகுமெனக் கொள்க. உதாரணம்: ஐப்பசி, கைப்பை, இடையன், குவளை என வரும். அடைப்பையாய் கோ எனவும், புனை யிளங் கொங்கையாய் வரும் எனவும் பிறவாறும் வருவன செய்யுளியலுட் காண்க. ஔவை, கெளவை என வரும். ஔகாரம் கெளவைநீர் வேலி கூற்று (வெண்பா-23) எனத் தொடை நோக்கிக் குறுகினவாறுங் காண்க. தேருங் காலை யென்றதனான் ஓரெழுத்தொருமொழியுங் குறுகும். கை, பை என வரும். (24) 58. இகர யகர மிறுதி விரவும். இதுவும் போலி கூறுகின்றது. இதன் பொருள்: 23இகர யகரம் இறுதி விரவும் - இகரமும் யகரமும் ஒருமொழியின் இறுதிக்கண் ஓசை விரவி வரும், அவ்விகரங் கொள்ளற்க என்றவாறு. உதாரணம்: நாய், நாஇ என வரும். (25) 59. பன்னீ ருயிரு மொழிமுத லாகும். இது, மேல் எழுத்தினான் மொழியாமாறு உணர்த்தி அம் மொழிக்கு முதலா மெழுத்து இவையென்பது உணர்த்துகின்றது. இதன் பொருள்: பன்னீருயிரும் - பன்னிரண்டு உயிரெழுத்தும், மொழி முதல் ஆகும் - மொழிக்கு முதலாம் என்றவாறு. உதாரணம்: அடை, ஆடை, இலை, ஈயம், உளை, ஊர்தி, எழு, ஏணி, ஐவனம், ஒளி, ஓடம், ஒளவியம் என வரும்.(26)60. உயிர்மெய் யல்லன மொழிமுத லாகா. இஃது - உயிர்மெய் மொழிக்கு முதலாம் என்கின்றது. இதன் பொருள்: உயிர்மெய் யல்லன மொழிமுதல் ஆகா - உயிரோடு கூடிய மெய்யல்லாதனவாகிய தனிமெய்கள் மொழிக்கு முதலாகா என்றவாறு. எனவே, உயிரோடு கூடிய மெய்களே மொழிக்கு முதலாவன என்றவாறாம். 24ஈண்டு உயிர்மெய் யென்றது, வேற்றுமை நயங் கருதிற்று; ஒற்றுமை நயங்கருதின் மேலைச் சூத்திரத்து உயிரோடுங் கூடி ஆமென்றல் பயனின்றாம். (27) 61. கதந பமவெனு மாவைந் தெழுத்து மெல்லா வுயிரொடுஞ் செல்லுமார் முதலே. இது, மேற் பொதுவகையான் எய்துவித்த இருநூற்றொரு பத்தாறு எழுத்துக்களைச் சிறப்புவகையான் வரையறுத்து எய்து விக்கின்றது. இதன் பொருள்: கதநபம எனும் ஆவைந்தெழுத்தும் - க த ந ப ம என்று கூறப்பட்ட அவ்வைந்து தனிமெய்யும், எல்லா உயிரொடுஞ் செல்லுமார் முதலே - பன்னிரண்டு உயிரோடும் மொழிக்கு முதலாதற்குச் செல்லும் என்றவாறு. உதாரணம்: கலை, கார், கிளி, கீரி, குடி, கூடு, கெண்டை, கேழல், கைதை, கொண்டல், கோடை, கெளவை எனவும்; தந்தை, தாய், தித்தி, தீமை, துணி, தூணி, தெற்றி, தேன், தையல், தொண்டை, தோடு, தெளவை எனவும்; நந்து, நாரை, நிலம், நீலம், நுகம், நூல், நெய்தல், நேமி, நைவளம், நொச்சி, நோக்கம், நௌவி எனவும்; படை, பால், பிடி, பீடு, புகழ், பூமி, பெடை, பேடை, பைதல், பொன், போது, பௌவம் எனவும்; மடி, மாலை, மிடறு, மீளி, முகம், மூப்பு, மெலிவு, மேனி, மையல், மொழி, மோத்தை, மௌவல் எனவும் வரும். (28) 62. சகரக் கிளவியு மவற்றோ ரற்றே 25அ ஐ ஔவெனு மூன்றலங் கடையே. இதுவும் அது. இதன் பொருள்: சகரக் கிளவியும் அவற்றோரற்றே - சகரமாகிய தனி மெய்யும் முற்கூறியவை போல எல்லா உயிரோடுங் கூடி மொழிக்கு முதலாம்; அ ஐ ஔ எனும் மூன்றலங்கடையே - அகர ஐகார ஔகார மென்று சொல்லப் பட்ட மூன்று உயிரும் அல்லாத இடத்து என்றவாறு. உதாரணம்: சாந்து, சிற்றில், சீற்றம், சுரை, சூரல், செக்கு, சேவல், சொல், சோறு என வரும். சட்டி, சகடம், சமழ்ப்பு என்றாற் போல்வன கடிசொல் இல்லை (சொல். 452) என்பதனாற் கொள்க. சையம் சௌரியம் என்பவற்றை வடசொல்லென மறுக்க. (29) 63. உஊ ஒஓ வென்னு நான்குயிர் வஎன் னெழுத்தொடு வருத லில்லை. இதுவும் அது. இதன் பொருள்: உ ஊ ஒ ஓ என்னும் நான்குயிர் - உ ஊ ஒ ஓ என்று சொல்லப்பட்ட நான்கு உயிரும், வ என் எழுத்தொடு வருதலில்லை - வ என்று சொல்லப்படுந் தனிமெய்யெழுத்தொடு கூடி மொழிக்கு முதலாய் வருதலில்லை என்றவாறு. எனவே, ஒழிந்தன மொழிக்கு முதலாம் என்றவாறாயிற்று. உதாரணம்: வளை, வாளி, விளரி, வீடு, வெள்ளி, வேட்கை, வையம், வௌவுதல் என வரும். (30) 64. ஆ எ ஒஎனு மூவுயிர் ஞகாரத் துரிய. இதுவும் அது. இதன் பொருள்: ஆ எ ஒ எனும் மூவுயிர் - ஆ எ ஒ என்று கூறப்படும் மூன்று உயிரும், ஞகாரத்து உரிய - ஞகார ஒற்றொடு கூடி மொழிக்கு முதலாதற்கு உரிய என்றவாறு. எனவே, ஏனைய உரியவல்ல என்பதாம். உதாரணம்: ஞாலம், ஞெண்டு, ஞொள்கிற்று எனவரும். ஞமலி தந்த மனவுச்சூ லுடும்பு (பெரும்பாண். 132) என்பது திசைச்சொல். ஞழியிற்று என்றாற் போல்வன இழிவழக்கு. (31) 65. ஆவோ டல்லது யகர முதலாது. இதுவும் அது. இதன் பொருள்: ஆவோடு அல்லது யகரம் முதலாது - ஆகாரத்தோடு கூடியல்லது யகரவொற்று மொழிக்கு முதலாகாது என்றவாறு. உதாரணம்: யானை, யாடு, யாமம் என வரும். யவனர், யுத்தி, யூபம், யௌவனம் என்பன வடசொல்லென மறுக்க. (32) 66. முதலா வேன தம்பெயர் முதலும். இது, மொழிக்கு முதலாகாதனவும் ஒரோவழி ஆமென்கின்றது. இதன் பொருள்:முதலாவும் - மொழிக்கு முதலாகா என்ற ஒன்பது மெய்யும், ஏனவும்- மொழிக்கு முமலாமென்ற ஒன்பதுமெய்யும் பன்னிரண்டுயிரும், தம்பெயர் முதலும்- தத்தம் பெயர் கூறுதற்கு முதலாம் என்றவாறு. முதலாவும் ஏனவும் என்ற உம்மைகள் தொக்கு நின்றன. உதாரணம்: ஙகரமும் டகரமும் ணகரமும் ரகரமும் லகரமும் ழகரமும் ளகரமும் றகரமும் னகரமும் என மொழிக்கு முதலாகாத ஒன்பதும் முதலாமாறு, ஙக்களைந்தார், டப்பெரிது, ணந்நன்று எனவரும், இவ்வாறே ஏனைய வற்றையும் ஒட்டுக. இனி எனவென்றதனான் கக்களைந்தார் தப்பெரிது அக் குறிது ஆநெடிது என மொழிக்கு முதலாமவற்றையும் தம் பெயர் கூறுதற்கு முதலாமாறு ஒட்டிக்கொள்க. வரையறுக்கப்பட்டு மொழிக்கு முதலாகாது நின்ற மெய்க்கும் இவ்விதி கொள்க. அவை சகரத்து மூன்றும், வகரத்து நான்கும், ஞகரத்தொன்பதும், யகரத்துப் பதினொன்றுமாம். (33) 67. குற்றிய லுகர முறைப்பெயர் மருங்கி னொற்றிய நகரமிசை நகரமொடு முதலும். இஃது, எழுத்துக்களை மொழிக்கு முதலாமாறு கூறி முறையே குற்றியலுகரம் மொழிக்கு முதலாமாறு கூறுகின்றது. இதன் பொருள்: குற்றியலுகரம் முறைப்பெயர் மருங்கின் - குற்றியலுகரமானது முன்னிலை முறைப்பெயரிடத்து, ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும் - தனிமெய்யாய் நின்ற நகரத்து மேனின்ற நகரத்தொடு கூடி மொழிக்கு முதலாம் என்றவாறு. உதாரணம்: நுந்தை என வரும். இதனானே முறைப்பெயர் இடமும், நகரம் பற்றுக்கோடுமாயிற்று. ஈண்டுக் குற்றியலுகரம் மெய்ப்பின்னர் நின்றதேனும் ஒற்றுமை நயத்தான் மொழிக்கு முதலென்றார். இது செய்யுளியலை நோக்கிக் கூறியதாயிற்று.(34) 68. முற்றிய லுகரமொடு பொருள்வேறு படாஅ தப்பெயர் மருங்கி னிலையிய லான. இது, மேலதற்கோர் புறனடை கூறுகின்றது. இதன் பொருள்: அப்பெயர் மருங்கின் நிலையியலான - அம்முறைப் பெயரிடத்தே நிற்றலிலக்கணமான குற்றியலுகரம், முற்றியலுகர மொடு பொருள் வேறுபடாஅது - இதழ் குவித்துக் கூறும்வழி வரும் முற்றுகரத்தோடு அவ்விடத்துக் குற்றுகரம் பொருள் வேறு படுமாறு போல ஈண்டுப் பொருள் வேறுபட்டு நில்லாது என்றவாறு. உதாரணம்: காது, கட்டு, கத்து, முருக்கு, தெருட்டு என்பன முற்றுகரமும் குற்றுகரமுமாய்ப் பொருள் வேறுபட்டு நின்றாற் போல வேறுபடாது நுந்தை யென்று இதழ் குவித்து முற்றக் கூறியவிடத்தும், இதழ் குவியாமற் குறையக் கூறியவிடத்தும் ஒரு பொருளே தந்தவாறு காண்க. நுந்தாயென்பதோ வெனின், அஃது இதழ் குவித்தே கூற வேண்டுதலிற் குற்றுகரமன்று. இயலேன்றதனான் இடமும் பற்றுக்கோடும் இரண்டற்கும் வேறுபாடின்றென்று கொள்க. இதனானே, மொழிக்கு முதலாமெழுத்துத் தொண்ணூற்று நான்கென்று உணர்க. (35) 69. உயிர்ஔ வெஞ்சிய விறுதி யாகும். இஃது, உயிர் மொழிக்கு ஈறாமாறு கூறுகின்றது. இதன் பொருள்: உயிர்ஔ எஞ்சிய இறுதி யாகும் - உயிர்களுள் ஔகாரம் ஒழிந்தன வெல்லாம் மொழிக்கு ஈறாம் என்றவாறு. எனவே ஔகாரவுயிர் ஈறாகாதாயிற்று. இஃது உயிர்க்கும் உயிர் மெய்க்கும் பொது. ஆ ஈ ஊ ஏ ஐ ஓ என இவை தாமே ஈறாயின. ஆஅ ஈஇ ஊஉ ஏஎ ஓஒ எனக் குறிலைந்தும் அளபெடைக்கண் ஈறாயின. கா தீ பூ சே கை கோ எனவும், விள கிளி மழு எனவும் வரும். எகர ஒகரம் மேலே (71, 72) விலக்குப. அளபெடை மிகூஉ மிகர விறுபெயர் (சொல். 127) என்பராதலின், 26அளபெடைப் பின் வந்த குற்றெழுத்துங் கொள்வர் ஆசிரியரென்று உணர்க. நெட் டெழுத்தேழும் முதன்மொழியா மென்னுந் துணையே முன்னுணர்த்துதலின் ஈண்டு அவை ஈறாமென்றும் உணர்த்தினார். (36) 70. கவவோ டியையி னௌவு மாகும். இஃது, ஈறாகாதென்ற ஔகாரம் இன்னுழியாமென் கின்றது. இதன் பொருள்: ஔவும் - முன் ஈறாகாதென்ற ஔகாரமும், கவவோடு இயையின் ஆகும் - ககர வகரத்தோடு இயைந்தவழி ஈறாம் என்றவாறு. உதாரணம்: கௌ, வௌ என வரும். எனவே, ஒழிந்த உயிரெல்லாந் தாமே நின்றும், மெய்களோடுங் கூடி நின்றும் ஈறாதல் இதனாற் பெற்றாம். இதனானே, ஔகாரம் ஏனை மெய்க்கண் வாராதென விலக்குதலும் பெற்றாம். உயிர் ஙகரத்தொடு கூடி மொழிக்கு ஈறா மென்பது இதனான் எய்திற்றேனும், அது மொழிக்கு ஈறாகாமை 27தந்துபுணர்ந் துரைத்தலான் உணர்க. இது வரையறை கூறிற்று. (37) 71. எ என வருமுயிர் மெய்யீ றாகாது. இஃது, எகரந் தானே நின்றவழி யன்றி மெய்யொடு கூடினால் ஈறாகா தென விலக்குகின்றது. இதன் பொருள்: எ என வரும் உயிர் மெய் ஈறாகாது - எ என்று கூறப் படும் உயிர் தானே ஈறாவதன்றி யாண்டும் மெய்களொடு இயைந்து ஈறாகாது என்றவாறு. (38) 72. ஒவ்வு மற்றே நவ்வலங் கடையே. இது, விலக்கும் வரையறையுங் கூறுகின்றது. இதன் பொருள்: ஒவ்வும் அற்று - ஒகரமும் முன் சொன்ன எகரம் போலத் தானே ஈறாவதன்றி மெய்களோடு இயைந்து ஈறாகாது, நவ்வலங்கடையே - நகரவொற்றோடு அல்லாத இடத்தில் என்றவாறு. உதாரணம்: நொ கொற்றா, நொஅலைய னின்னாட்டை நீ என வரும். (39) 73. ஏ ஓ எனுமுயிர் ஞகாரத் தில்லை. இது, சில உயிர் சில உடலோடேறி முடியாவென விலக்கு கின்றது. இதன் பொருள்: ஏ ஓ எனும் உயிர் ஞகாரத்தில்லை - ஏ ஓ என்று கூறப்பட்ட இரண்டுயிருந் தாமே நின்றும் பிற மெய்களொடு நின்றும் ஈறாதலன்றி ஞகாரத்தோடு ஈறாத லில்லை என்றவாறு. எனவே, ஏனையுயிர்கள் ஞகாரத்தோடு ஈறாமென்றாரா யிற்று. உதாரணம்: உரிஞ, உரிஞா, உரிஞி, உரிஞீ, உரிஞு, உரிஞூ இவை எச்சமும் 28வினைப்பெயரும் பற்றி வரும். 29அஞ்ஞை மஞ்ஞை இவை பெயர். ஏனையைந்தும் விலக்கப் பட்டன. உரிஞோ என்பது கடிசொல்லில்லை என்பதனாற் கொள்க. (40) 74. உ ஊ கார நவவொடு நவிலா. இதுவும் அது. இதன் பொருள்: உ ஊகாரம் - உகர ஊகாரங்கள் தாமே நின்றும் பிற மெய்களொடு நின்றும் பயில்வதன்றி, நவவொடு நவிலா - நகர வொற்றொடும் வகர வொற்றொடும் பயிலா என்றவாறு. எனவே, ஏனை யுயிர்கள் நகர வகரங்களோடு வருமாயின. உதாரணம்: நகரம், பொருந என வினைப்பெயராகியும், நா நீ நே எனப் பெயராகியும், நை நொ நோ என 30வியங்கோளாகியும் வரும். பொருநை என்றுங் காட்டுப. வகரம், உவ வே என வியங்கோளாயும், உவா செவ்வி வீ வை எனப் பெயராயும் வரும். ஒருவ ஒருவா ஒருவி ஒருவீ ஔவை என்றுங் காட்டுப. ஈண்டு விலக்காத ஏனை யுயிர்களோடு வந்த நகரவகரங்கள் அக்காலத்து வழங்கினவென்று கோடும் இவ்விதியால். இனி நவிலா வென்றதனானே, வகரவுகரம் கதவு, துரவு, குவவு, புணர்வு, நுகர்வு, நொவ்வு, கவ்வு எனப் பயின்று வருதலுங் கொள்க. (41) 75. உச்ச கார மிருமொழிக் குரித்தே. இது, சகார உகாரம் பலசொற்கு ஈறாய் வாராது. இருசொற்கு ஈறாமென்று வரையறை கூறுகின்றது. இதன் பொருள்: உச்சகாரம் - உகரத்தோடு கூடிய சகாரம், இரு மொழிக்கே உரித்து - இரண்டு மொழிக்கே ஈறாம் என்றவாறு. எனவே, பன்மொழிக்கு ஈறாகா தென்றவாறாயிற்று. உரித்தே யென்னும் ஏகாரம் மொழிக்கே யெனக் கூட்டுக. உதாரணம்: உசு; இஃது உளுவின் பெயர். முசு - இது குரங்கினுள் ஒரு சாதி. பசு என்பதோவெனின், அஃது ஆரியச் சிதைவு. கச்சு குச்சு என்றாற் போல்வன குற்றுகரம். உகரம் ஏறிய சகரம் இரு மொழிக்கு ஈறாமெனவே ஏனை உயிர்கள் ஏறிய சகரம் பன்மொழிக்கு ஈறாமா யிற்று. உச, உசா, விசி, சே, கச்சை, சோ எனப் பெயராயும்; துஞ்ச, எஞ்சா, எஞ்சி, மூசி, மூசூ என எச்சமாயும் வரும். அச்சோ என வியப்பாயும் வரும். இன்னும் இவை வழக்கின்கட் பலவாமாறும் உணர்க. (42) 76. உப்ப கார மொன்றென மொழிப 31விருவயி னிலையும் பொருட்டா கும்மே. இஃது ஒரு சொல் வரையறையும், அஃது ஓசை வேற்றுமை யான் இரு பொருள் தருமெனவுங் கூறுகின்றது. இதன் பொருள்:உப்பகாரம் ஒன்றென மொழிப - உகரத்தோடு கூடிய பகரம் ஒருமொழிக்கல்லது பன்மொழிக்கு ஈறாகாதென்று கூறுவர் புலவர்; இருவயினிலையும் பொருட்டாகும்மே - அதுதான் தன் வினை பிறவினை யென்னும் இரண்டிடத்தும் நிலைபெறும் பொருண்மைத்தாம் என்றவாறு. உதாரணம்: தபு என வரும். இது படுத்துக் கூற, நீ சா எனத் தன்வினையாம். எடுத்துக் கூற, நீ ஒன்றனைச் சாவப்பண் ணெனப் பிறவினையாம். உப்பு கப்பு என்றாற் போல்வன குற்றுகரம். உகரத்தோடு கூடிய பகரம் ஒன்றெனவே, ஏனை உயிர்களோடு கூடிய பகரம் பன்மொழிக்கு ஈறாய்ப் பல பொருள் தருமென்றாராயிற்று. மறந்தப துப்பா என எச்சமாயும், நம்பி செம்பூ பே பெதும்பை எனப் பெயராயும், போ என ஏவலாயும் வரும். இவற்றைப் பிற சொற்க ளோடும் ஒட்டுக. ஏனை ஈகார பகரம் இடக்கராய் வழங்கும். (43) 77. எஞ்சிய வெல்லா மெஞ்சுத லிலவே. இது, முன்னர் மொழிக்கு ஈறா மென்றவற்றுள் எஞ்சி நின்றன மொழிக்கு ஈறாமாறும், மொழிக்கு ஈறாகாவென்றவை தம்பெயர் கூறுங்கான் மொழிக்கு ஈறாமாறுங் கூறுகின்றது. இதன் பொருள்:எஞ்சியவும் எஞ்சுதலில் - கவவோ டியையின் (எழு. 70) என்னுஞ் சூத்திரத்தாற் பதினோருயிரும் பதினெட்டு மெய்க்கண்ணும் வந்து மொழிக்கு ஈறாமென்ற பொதுவிதியிற் பின்னை விசேடித்துக் கூறியவற்றை ஒழிந்தனவும் மொழிக்கு ஈறாதற்கு ஒழிவில, எல்லாம் எஞ்சுதலில - மொழிக்கு ஈறாகாதென்ற உயிர்மெய்களுந் தம்பெயர் கூறும்வழி ஈறாதற்கு ஒழிவில என்றவாறு. எல்லாமென்றது சொல்லினெச்சஞ் சொல்லியாங் குணர்த்த லென்னும் உத்தி. உம்மை விரிக்க. ஈண்டு எஞ்சிய வென்றது - முன்னர் உதாரணங்காட்டிய ஞகரமும் நகரமும் வகரமும் சகரமும் பகரமும் ஒரு மொழிக்கும் ஈறாகாத ஙகரமும் ஒழிந்த பன்னிரண்டு மெய்க்கண்ணும், எகரமும் ஒகரமும் ஔகார மும் ஒழிந்த ஒன்பதுயிரும் ஏறி, மொழிக்கு ஈறாய் வருவனவற்றை யென்று உணர்க. உதாரணம்: வருக புகா வீக்கி புகீ செகு புகூ ஈங்கே மங்கை எங்கோ எனவும், கட்ட கடா மடி மடீ மடு படூ படை எனவும் இதற்கு ஏகார ஓகாரங்கள் ஏறி வருவன உளவேற் கொள்க, மண்ண எண்ணா கண்ணி உணீ கணு நண்ணூ பண்ணை எனவும் இதற்கு ஏகார ஓகாரங்கள் ஏறி வருவன உளவேற் கொள்க, அத புதா பதி வதீ அது கைதூ தந்தை அந்தோ எனவும் (இதற்கு ஏகாரம் ஏறி வருவன உளவேற் கொள்க), கம நென்மா அம்மி மீ செம்மு கொண்மூ யாமை காத்தும்வம்மோ எனவும் இதற்கு ஏகாரம் ஏறி வருவன உளவேற் கொள்க, செய காயா கொய்யூ ஐயை ஐயோ எனவும் இதற்கு இகர ஈகார உகர ஏகாரங்கள் ஏறி வருவன உளவேற் கொள்க, வர தாரா பரி குரீ கரு வெரூ நாரை எனவும் இதற்கு ஏகார ஓகாரங்கள் ஏறி வருவன உளவேற் கொள்க, சில பலா வலி வலீ வலு கொல்லூ வல்லே கலை எனவும் இதற்கு ஓகாரம் ஏறி வருவன உளவேற் கொள்க, தொழ விழா நாழி வழீ மழு எழூ தாழை எனவும் இதற்கு ஏகார ஓகாரங்கள் ஏறி வருவன உளவேற் கொள்க, உள உள்ளா வெள்ளி குளீ உளு எள்ளூ களை எனவும் இதற்கு ஏகார ஓகாரங்கள் ஏறி வருவன உளவேற் கொள்க, கற்ற கற்றா உறி உறீ மறு உறூ கற்றை எற்றோ எனவும் இதற்கு ஏகாரம் ஏறி வருவன உளவேற் கொள்க, நன கனா வன்னி துனீ முன்னு துன்னூ என்னே அன்னை அன்னோ எனவும் வரும். இவற்றுட் பெயராயும் வினையாயும் வருவன உணர்க. இவற்றுட் ககர னகரங்கள் விலக்காத ஒன்பதும் வந்தன. ஆக ஈறு, நூற்று நாற்பத்து மூன்றும், உதாரண மில்லாத பதினெட்டும் ஆக நூற்றறுபத்தொன்று. ஙகரம் மொழிக்கு ஈறாகாதென்பது பெரும்பான்மை யாதலிற் கூறிற்றிலர். இனி ஙகரமும், ஔகாரம் ஏறாத மெய் பதினைந்தும், எகரமும் ஒகரமும் ஏகாரமும் ஓகாரமும் உகரமும் ஊகாரமும் ஏறாத மெய்களுந், தம் பெயர் கூறுங்கான் மொழிக்கு ஈறாமாறு: ஙப் பெரிது, சப் பெரிது, சௌ அழகிது, ஞௌதீது என வரும். ஏனையவற்றோடும் இவ்வாறே ஒட்டுக. கெக்குறைந்தது, கொத்தீது, ஞெவ்வழகிது, ஞொத்தீது, நுந்நன்று, நூப்பெரிது, வுச்சிறிது, வூப்பெரிது என எல்லாவற்றையும் இவ்வாறே ஒட்டுக. இன்னும் எல்லா மென்றதனானே, கந்நன்று ஆநன்று என மொழிக்கு ஈறாவனவுந் தம்பெயர் கூறும்வழி ஆமென்று கொள்க. (44) 78. ஞணநம னயரல வழள வென்னு மப்பதி னொன்றே புள்ளி யிறுதி. இது, முன்னர் உயிர் ஈறாமாறு உணர்த்திப் புள்ளிகளுள் ஈறாவன இவை யென்கின்றது. இதன் பொருள்: ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்னும் அப்பதினொன்றே புள்ளியிறுதி - ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள வென்று கூறப்பட்ட பதினொன்றுமே புள்ளிகளில் மொழிக்கு ஈறாவன என்றவாறு. உதாரணம்: உரிஞ், மண், பொருந், திரும், பொன், வேய், வேர், வேல், தெவ், வீழ், வேள் என வரும். னகரம் ஈற்று வையாது மகரத்தோடு வைத்தது வழக்குப் பயிற்சியும் மயக்க இயைபும் நோக்கி. (45) 79. உச்ச காரமொடு நகாரஞ் சிவணும். இது மேற் பொதுவகையான் ஈறாவனவற்றுள் வரையறைப் படுவது இது வென்கின்றது. (இ-ள்.) உச்சகாரமொடு நகாரஞ் சிவணும் - உகரத்தோடு கூடிய சகரம் இருமொழிக் கீறாயவாறு போல (75) நகரவொற்றும் இறுமொழிக்கல்லது ஈறாகாது என்றவாறு. உதாரணம்: பொருந், வெரிந் என வரும். (46) 80. உப்ப காரமொடு ஞகாரையு மற்றே யப்பொரு ளிரட்டா திவணை யான. இதுவும் அது. இதன் பொருள்: உப்பகாரமொடு ஞகாரையும் அற்றே - உகாரத்தோடு கூடிய பகரத்தோடு ஞகரமும் ஒத்து ஒரு மொழிக்கு ஈறாம்; இவணையான அப்பொருள் இரட்டாது - இவ்விடத்து ஞகாரத்தின்கண்ணான அப்பொருள் பகரம்போல இருபொருட் படாது என்றவாறு. உதாரணம்: உரிஞ் என வரும். ஞகாரம் ஒரு மொழிக்கு ஈறாதலின் நகரத்தின் பின் கூறினார். இவணை என்னும் ஐகாரம் அசை. (47) 81. வகரக் கிளவி நான்மொழி யீற்றது. இதுவும் அது. இதன் பொருள்:வகரக்கிளவி நான்மொழி யீற்றது - வகரமாகிய எழுத்து நான்கு மொழியின் ஈற்றதாம் என்றவாறு. உதாரணம்: அவ், இவ், உவ், தெவ் என வரும். ‘கிளவி’ ஆகுபெயர், எழுத்துக் கிளவியாதற்கு உரித்தாமாதலின்.(48) 82. 32மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த னகரத் தொடர்மொழி யொன்பஃ தென்ப புகரறக் கிளந்த வஃறிணை மேன. இதுவும் அது, வரையறை கூறுதலின். இதன் பொருள்: புகரறக் கிளந்த அஃறிணை மேன - குற்றமறச் சொல்லப் பட்ட அஃறிணைப் பெயரிடத்து, மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த னகரத் தொடர்மொழி ஒன்பஃது என்ப - மகர ஈற்றுத் தொடர் மொழியோடு மயங்கா தென்று வரையறைப்பட்ட னகர ஈற்றுத் தொடர்மொழி ஒன்பதென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. ஆய்தம் விகாரம். உதாரணம்: எகின், செகின், விழன், பயின், குயின், அழன், புழன், கடான், வயான் என வரும். எகின் எகினம் என்றாற்போல வேறோர் பெயராய்த் திரிவனவுஞ் சந்தியாற் திரிவனவுமாய் ஈவற்றுட், திரிபுடையன களைந்து ஒன்பதும் வரும்; மேற்கண்டு கொள்க. நிலம் நிலன், பிலம் பிலன், கலம் கலன், வலம் வலன், உலம் உலன், குலம் குலன், கடம் கடன், பொலம் பொலன், புலம் புலன், நலம் நலன், குளம் குளன், வளம் வளன் என இத்தொடக்கத்தன தம்முள் மயங்குவன. வட்டம், குட்டம், ஓடம், பாடம் இவை போல்வன மயங்காதன. வரையறை னகரத்தின்மேற் செல்லும். மயங்காவெனவே மயக்கமும் பெற்றாம். (49) மொழிமரபு முற்றிற்று. கணேசய்யர் அடிக்குறிப்புகள்: 1. உரையசைக் கிளவி என்பதற்குத் தான் கூறும் பொருளைக் கோடற்கு ஒருவனை எதிர்முகமாக்குஞ் சொல் என்றும். அது கேள் என்றும் நச்சினார்க்கினியர் கூறுகின்றார். அசைத்தல் - எதிர்முகமாக்கல். அங்ஙனமாயின் சென்மியா என்புழிச் செல் என்பதற்கு அது பொருந்தாமல் வருகின்றது. ஆதலின் உரையசைக்கிளவி என்பதற்கு உரையசைச் சொல்லாகிய மியா என்று உரையாசிரியர் கொள்ளும் பொருளே பொருத்தமாகின்றது. நன்னூலாரும் இவ்வாறே கொள்வர். உரையசை - கட்டுரைக் கண் அசைநிலையாய் வருவது. கட்டுரை - வாக்கியம். `ஆங்க உரையசை' யென்பர் பின்னும். அச்சூத்திரத்திலே உரை என்பதற்கு நச்சினார்க்கினியர் கட்டுரை என்பர். ஆண்டு என்றது நூன்மரபை. 2. முன்னர் என்றது குற்றியலுகரப் புணரியலை. ஆண்டு 5ஆம் சூத்திரம் நோக்குக. சிறப்பின்மை - சிறந்த எழுத்தல்லாமை. 3. நெட்டெழுத்தினது இம்பர் தொடர்மொழியினது ஈறு என்பவைகள் நிலத்த தகலம்போல ஒன்றியற் கிழமைப்பட்டு நின்றன என்றது நிலத்த தகலம் என்புழி நிலத்தைவிட அகலம் வேறன்றாகி நிலத்துளடங்கும். அதுபோல நெட்டெழுத்தின் பின்னும் தொடர்மொழியீற்றும் வல்லா றூர்ந்துவருமுகரம் நெட்டெழுத்தையும் தொடர்மொழியையும் விட்டுத் தான் வேறாய் நின்று குற்றியலுகரமாவதன்று; அவற்றோடு ஒன்றுபட்டு நின்றே குற்றியலுகரமாகு மென்றபடி. அதிகார முறையாவது. அதிகாரப்பட்டு வருமுறைமையாற் கொள்வது. அதனாற் கோடலாவது. ஈண்டுச் சார்பெழுத்தின் இலக்கணமே அதிகாரப்பட்டு வந்தமையின் சார்பெழுத்தாகிய குற்றியலிகரத்துக்குக் கூறிய `நிற்றல் வேண்டும்' என்பதை இதற்கும் வருவித்துக் கொள்ளல். இதழ் குவித்துச் சொல்வது முற்றுகரம் என்பது நச்சினார்க்கினியர் கருத்து. அதுபற்றிப் பெருமுரசு முதலியவற்றை முற்றுகரமென்றார். பெருமுரசு, திருமுரசு என்பன இரு மொழிக்கண் வந்த குற்றுகரமென்பது மஹாலிங்கையர் பதிப்பு. 4. இங்கு - பெருங்காயம். 5. வல்லாறன்மிசைத் தென்றதனானும் ஈண்டுப் புள்ளி என்றதனானும், ஆய்தத் தொடர்மொழியென மேற்கூறுதலானும். உயிர் என்றது ஈண்டுப் பெரும்பான்மையும் குற்றுகரமேயா மென்றதன் விளக்கமாவது:- முன் குற்றியலுகர விலக்கணங் கூறுமிடத்து உகரம் வல்லாறூர்ந்து வரு மென்று கூறியதுபோல ஈண்டும் வல்லாறன் மிசைத்தென்று கூறியத னானும், ஈண்டுப் புள்ளி (வல்லாறன்மிசைத்து வரும் புள்ளி) யென்று ஆய்தத்தொடரைக் கருதுமாறு கூறியதனானும், உகரமூர்ந்த வல்லாறன் மிசைவரும் ஆய்தத்தையே ஆய்தத் தொடர் மொழியென மேற்கூறுத லானும், உயிர் என்றது பெரும்பான்மையும் குற்றுகரத்தையே யுணர்த்து மென்றபடி. ஈண்டென்பது `வல்லாறன் மிசைத்து' என வந்த முன் வாக்கியத்தைச் சுட்டி நின்றது. இனி, ஈண்டுப் புள்ளி என்றதனானும் என்பதற்கு இச்சூத்திரத்துள் ஆய்தத்தைப் புள்ளியென்று. மெய்யு ளடக்கினமையானே குற்றியலுகரத்தை உயிருளடக்கி உயிரென்று கூறினாரென்று கருத்துக் கோடலுமாம். கஃசியாது என்புழி கஃக என்னும் குற்றியலுரகவீறே அங்ஙனம் புணர்ந்ததாகலின் அதுவும் குற்றுகரமே யாம். அதனை `யகரம் வரும்வழி யிகரங் குறுகு முகரக் கிளவி துவரத் தோன்றாது' (குற் - புண - சூ - 5) என்னும் சூத்திரம் நோக்கியறிக. 6. கஃடு, கஃது, கஃபு என்பன அக்காலத்து வழங்கி இறந்தன போலும். 7. `உருவினு மிசையினு மருகித் தோன்றும் மொழிக்குறிப்பெல்லாம்' என்பதற்குக் குறிப்பு மொழியெல்லாம் என்று பொருள் கூறலன்றி, உம்மைத் தொகையாகக் கோடல் சிறப்பின்றாம். உரையாசிரியர் அவ்வாறே கொள்வர். இனி எழுத்தினியலா என்பதற்கு ஆய்தவெழுத் தானிட்டு எழுதப்பட்டு நடவா என இளம்பூரணர் கூறுவது வழக்கோ என்பது ஆராயத்தக்கது. எழுத்தினியலா என்பதற்கு தனியெழுத்தான் நடவா என்று பொருள் கூறி, இரண்டெழுத்தாடைக்குமென்று பொருள் கூறுதலும் பொருத்தம் போலும். எழுத்தெனவே தனியெழுத்தென்பது பெறுதும். `ஆய்தம் இரண்டிட்டெழுதப் படா' என்று பொருள் கூறில் என்றது, இளம்பூரணர் கருத்தை நோக்கி நின்றது போலும். 8. கட்டளைகொள்ளா ஆசிரியர் என்றது. கட்டளை யடிகொள்ளாத ஆசிரியர் என்றபடி. கட்டளை யடியென்றது - எழுத்தெண்ணி வகுக்கு மடியை. ஒழிந்த இயற்சீர் என்றது - நேர்நேர் அல்லாத இயற்சீர்களை. அவை நிரைநேர் முதலிய ஏழு. 9. இவை என்றது - நெட்டெழுத்துக்களை. தம்மை என்றது. எழுத்தாகிய தம்மை என்றபடி. தம்மை - தம்மியல்பை. இடைநிற்றல் - தன்னை யுணர்த்தி எழுத்தாதற்கும் பொருளையுணர்த்திச் சொல்லாதற்கும் இடையாக நிற்றல். எனவே, எழுத்துகள் சொல்லாயவிடத்துந் தம்மை யுணர்த்தி எழுத்தாதலுமுடைய வென்பதாம். 10. முற்றும்மை என்றது - ஐந்தும் என்றதிலுள்ள உம்மையை. அது எச்சப்பட்டு நின்றதென்றது. சில மொழியாம் என்னும் பொருள் பயந்து நின்றமையை. எல்லாரும் வந்திலர் என்புழிச் சிலர் வந்தார் எனப் பொருள்படுதல்போல. (சொல் - இடை - சூ - 37). 11. இங்கே ஈரெழுத்தொருமொழி தொடர்மொழி என்று வகுத்தது சில பல என்னும் தமிழ் வழக்கு நோக்கி யென்று கூறுவதிலும், வடமொழி வழக்கு நோக்கியென்று கூறுதலே பொருத்தமாகும். நன்னூல் விருத்திகாரர் அங்ஙனமே கூறுவர். இங்கே நச்சினார்க்கினியர் செய்யுளியலோடு மாறு படா வண்ணம் ஓரெழுத்து மொழி ஈரெழுத்து மொழி தொடர் மொழிகளை ஒற்றெழுத்துத் தள்ளிக்கொள்ள வேண்டுமென்றல் பொருந்தாது. ஏனெனில் மாத்திரை பற்றி அசை வகுத்தலாற் செய்யுளியலில் ஒற்றெ ழுத்து முதலியவற்றை ஆசிரியர் தள்ளுகின்றாராதலானும், ஈண்டு எழுத்துப்பற்றி ஆசிரியர் ஓரெழுத்துமொழி முதலியவற்றை வகுத்துக் கூறுகிறாராதலானு மென்பது. அன்றியும் புணர்ச்சி கூறும் இயல்களின் கண்ணும் ஆசிரியர் குற்றியலுகரப் புணரியலில் நெடிற்றொடர்க் குற்றியலுகரத்தை ஈரெழுத்தொருமொழி (சூ - 16) என்றும், ஆய்தந் தொடர்ந்தனவற்றை ஆய்தத் தொடர்மொழியென்றும், மற்றும் ஈரொற்றுத் தொடர்மொழி யென்றும், வல்லொற்றுத் தொடர்மொழியென்றும் கூறுவதை நோக்கும்போது ஒற்றையும் குற்றியலுகரத்தையும் கூட்டி மொழி வகுத்தலே அவர் கருத்தாதல் நன்கு புலப்படும். அன்றியும் நச்சினார்க்கினியர்க்கும் எழுத்து நோக்கி மொழிவகுத்துக் கோடலே கருத்தாதல் 145ஆம் சூத்திர உரையில் மெய் முதலியவற்றை ஈரெழுத்து மொழியேன்றே கூறலானறியப்படும். எழுத்தாற் சொல்லாதலே கூறலின் கொல் என்புழி லகரமுஞ் சேர்ந்து இரண்டெழுத்தாலாய மொழியென்று கூறுவதேயன்றி, லகரத்தைத் தள்ளிக் ககர ஒகரத்தாற் றனியேயான தென்று கூறமுடியாதாகலானும் அது பொருந்தாமை யறியப்படும். உரையாசிரியர்க்கு மிதுவே கருத்தாத லவருரையா னுணர்க. அன்றியும் `அகரமுதனகர விறுவாய்' என்புழி ஆசிரியர் ஒற்றினையும் எழுத்தென்று கருதினாரெனின் ஆண்டு எழுத்தின் தன்மை கூறிற்றென்ற நச்சினார்க் கினியர்க்கு ஈண்டு (எழுத்தான் மொழியாதற் கண்ணும்) எழுத்தின் தன்மை கூறல் உடன்பாடேயாதல் காண்க. 12. நச்சினார்க்கினியர் இச்சூத்திரத்திற்கு இது உயிர் மெய்க்கண் ஏறி உயிர்மெய்யாய் நின்றவிடத்து அம்மெய்யாற் பெயர் பெறுமாறு கூறுகிறதென்று கருத்துரைத்துப், பின் பன்னீருயிரும் மெய்யின் றன்மையிலே தம்முடைய தன்மை மயங்கிற்றாகப் பெயர் கூறிற் குற்றமில்லை என்று பதவுரையும் கூறி, மெய்யின் தன்மையாவது, மெய்யோடு கூடிய உயிரும் வன்மை மென்மை இடைமை என்று பெயர் பெறுதலென்று விரிவுரையுங் கூறி, மூவினத்தாற் பெயர் பெறு மாற்றிற்கு உதாரணமுங் காட்டினர். ஆயின் இங்ஙனம் வலிந்து மாற்றிப் பொருள் கோடலாற் போந்த பயனின்மையின், உரையாசிரியர் கூறிய வாறு இடைநிலை மயக்கப் புறனடையாகக் கொண்டு, தம் வடிவினி யல்பைச் சொல்லுமிடத்து எல்லா மெய்யெழுத்தும் மெய்ம்மயக்க நிலையில் மயங்கல் குற்றமில்லையென்று கோடலே பொருத்தமாம். நன்னூலாரும் இவ்வாறே `தம்பெயர்.............. இயலுமென்ப' எனக் கூறுதல் காண்க. அன்றியும் வல்லெழுத் தியையி னவ்வெழுத்து மிகுமே என்றது. மெய்யெழுத்து முன்னும் உயிர் பின்னுமாக ஒலித்து நின்ற முறைபற்றி யன்றி, உயிரையுங் கூட்டியன்று ஆதலானும் நச்சினார்க்கினியர் கருத்துப் பொருந்தாதென்க. 13. ஆனம் என்று பிரிப்பது நலம். ஆனம் - குற்றம். ஹாநம் என்னும் வடசொற்றிரிபு. 14. மொழிக்கு முதலா மெழுத்தைச் சொல்வனவற்றிற்கேயென்றது. மொழிக்கு முதலில் நிற்கும் எழுத்துக் குறிலாயின் அதன் கீழ் வருவன வற்றிற்கே ஈண்டு ஆராய்ச்சியென்றபடி. எனவே புகர் புகழ் என்பன வற்றில் இரண்டெழுத்துக்குப் பின் வருதலின் ஆண்டாராய்ச்சி இல்லை யென்பது கருத்து. 15. இதற்கு நச்சினார்க்கினியர் எழுத்துக்களது குறியதன்மையும் நெடியதன்மையும், மாத்திரை என்னும் உறுப்பினைச் செவிகருவியாக அளக்கின்ற அளவு தொழிலாலே செய்யுட்குக் கொள்ளப்படுதலின். அம்மாத்திரை தம்முட்டொடர்ந்து நிற்கின்ற சொற்களெல்லாம், நெட்டெழுத்தை மாத்திரை மிகுதற்குத் தொடர்ந்த சொல்லாம், என்று பொருள் கூறி நெட்டெழுத்துகளை மாத்திரை மிகுதற்குக் குற்றெழுத்துக்கள் அவற்றோடு கூடிநிற்குமென்று கருத்துக் கொள்கின்றனர். இதற்கு முன்னுள்ள சூத்திரங்கள் மொழிக்கண் எழுத்துகள் மயங்குமாறு கூறி அதிகாரப் பட்டு நிற்றலானும் பின்னுள்ள சூத்திரமும் மயக்கமே கூறலானும், நச்சினார்க்கினியர் கூறியவாறு செய்யுள்கள் தத்தம் இசைபெறும் பொருட்டுக் குற்றெழுத்துக்கள் நெட்டெழுத்துக்களோடு கூடி, அவற்றி னோசையை மிகுத்துநிற்கும் என்று பொருள்பட வந்ததாகக் கோடலினும் மயக்கம் பற்றி வந்ததோர் ஐயமறுக்க வந்ததாகக் கோடலே பொருத்தமாதலின் இச்சூத்திரத்திற்கு உரையாசிரியர் உரையே பொருத்தமாகும். உயிரெழுத்துக்குக் குறுமையும் நெடுமையும் அளவிற் கொள்ளப்படுதலின், தொடர் மொழிக்கீழ் (அஃதாவது புகர் புகழ் என்பனவற்றின் கீழ்) நின்ற ரகர ழகரங்களெல்லாம் நெடிற்கீழ் நின்ற ரகர ழகரங்களின் இயல்பை யுடையனவென்று கொள்ளப்படுமென்பது உரையாசிரியர் உரை. இங்கே நெட்டெழுத்தின் இயல்புடைய என்றது - புகர் புகழ் என்பன குறிலிணைக் கீழ் நிற்பினும், கார் காழ் என்னும் இரண்டு மாத்திரையையுடைய நெட்டெழுத்துக்குக் கீழ் நின்றனபோல ஈண்டுக் கொள்ளப்படு மியல்பை. இக்கருத்தை ஓராது புகர் புகழ் என்பவற்றை நெட்டெழுத்து மொழியாக உரையாசிரியர் கொண்டாரென்று நச்சினார்க் கினியர் மறுத்தல் பொருந்தாதென்க. 16. போலும் மொழிவயின் என்றும் பாடம். 17. செய்யுளிறுதிக்கண், போலும் என்னுஞ் சொல்லின்கண் என்றிருப்பது நலம். 18. பெயரெச்சம் பெயர்கொண்டன்றி நில்லாதாதலின் இறுதிச் சொல்லாய் நில்லாது; முற்றே இறுதிச் சொல்லாய் நிற்கும் என்பது கருத்து. 19. இதற்கு நச்சினார்க்கினியர் தெரிந்து என்பதை மொழிப்படுத் திசைப் பினும் என்பதோடும் கூட்டி, ஒற்றும் குற்றியலுகரமும் பொருடரு நிலையை யாராய்ந்து மொழிப்படுத்துச் சொன்னாலும், செய்யுளியலின் மாத்திரை குறைந்து நிற்கும் நிலை நோக்கி எழுத்தெனப்படாவென்று வேறாகக் கூறினும். அவ்விரண்டிடத்தும் எழுத்தாந்தன்மை திரியா வென்று பொருள் கூறுவர். ஈண்டு மெய்யெழுத்தென்றும் குற்றியலுகர மென்றும் ஆசிரியர் விதந்து கூறாமையானும், தெரிந்து என்பதற்கு இன்னதைத் தெரிந்து என்று தெரித்துக் கூறாமையானும் அது பொருளன்றாகலின் உரையாசிரியர் கருத்தே இதற்குப் பொருத்தமாம். நன்னூலாரும் இதைத் தழுவியே `மொழியாய்த் தொடரினு முன்னனைத் தெழுத்தே' என்றார். 20. குற்றுகரத்தை நேர்பும் நிரைபுமாகக் கோடலாற் போலும் வேறிசைத்தல் குற்றுகரத்திற்கின்மையின் என்றார். இவ்வாக்கியம் முன்னும் பின்னும் கூறிய பொருள்களுக்கு முரணாகக் காணப்படலின் இடையில் எழுதப் பட்டது போலும். 21. குற்றெழுத்தைந்தும் நெட்டெழுத்தைந்துமெனவும் பாடம். 22. கொள்ளற்க என்றது பொருந்தாது. இது அக்காலத்துக் கொள்ளப்பட்டு வழங்கி வந்தமையின். இதனை நன்னூல் விருத்தியுரைகாரர் சந்தியக்கரம் மென்றல் பொருந்தாது. இதனை யாம் `செந்தமி'ழில் வெளிப்படுத்திய `போலி எழுத்து' என்னும் கட்டுரையை நோக்கித் தெளிக. 23. இகர யகரம் இறுதி விரவி நடந்த மொழிவழக்கு அக்காலத் துண் டென்பது இதனா லறியப்படும். 24. உயிர்மெய் என்றது - உயிரோடு கூடிய மெய்யை அது வருஞ் சூத்திரத்து `உயிரொடுஞ் செல்லும்' என்றதனாலு மறியப்படும். 25. அவை ஔவென்னும் ஒன்றலங் கடையே. (பாட வேறுபாடு) 26. அளபெடைப் பின்வந்த குற்றெழுத்துங் கொள்வரென்றது. `அளபெடை மிகூஉ மிகர விறுபெயர்' என்ற சூத்திரத்துள் அளபெடை யெழுத்தாக வரும் இகரத்தை, இகர விறுபெயரென்று ஆசிரியர் கொண்டமையை. 27. தந்து புணர்ந்துரைத்தலான் என்றது - உள்பொருளல்லாததனை உள் பொருள்போலத் தந்து கூட்டி உரைத்தலை. இங்கே உயிர் ஙகரத்தோடு கூடி ஈறாவதுபோலக் கூறியது தந்து புணர்த்தல். இஃது ஒருத்தி. 28. வினைப்பெயரென்றது - தொழிற்பெயரை. 29. அஞ்ஞை என்றது தாயை. அகநானூற்றில் "என் அஞ்ஞை சென்றவாறே" என வருதலா னுணர்க. ஈண்டு மகளைத் தாய் என்றது உவப்புப் பற்றி. 30. வியங்கோள் - ஏவல். 31. இச்சூத்திரத்தால் ஓசைபற்றிய பொருள் வேறுபடுமென்பது பெறப்படும். `தொனி' என்பது மிக் கருத்து. 32. இது மொழியிறுதிப்போலி கூறிற்று. னகரத்தோடு மகரம் ஒத்து நடவாது. மகரத்தோடு னகரம் ஒத்து நடக்குமென்பது கருத்து. பிறப்பியல் அகர முதல் னகரவிறுதியாகவுள்ள முதலெழுத்துக்கள் முப்பதையும் நூன்மரபிலும் சார்பெழுத்து மூன்றையும் மொழி மரபிலும் வைத்துணர்த்திய ஆசிரியர். அம்முப்பத்து மூன்றெழுத்துக்களின் பிறப்பு முறையினை இவ்வியலால் உணர்த்துகின்றார். அதனால் இவ்வியல் பிறப்பியலென்னும் பெயர்த்தாயிற்று. உந்தியிலிருந்தெழுகின்ற காற்றானது தலை, மிடறு, நெஞ்சு என்னும் மூன்றடங்களிலும் நிலைபெற்று அவற்றுடன் பல், உதடு, நா, மூக்கு, அண்ணம் (மேல்வாய்) ஆகிய உறுப்புக்கள் தம்மிற் பொருந்தி அமைதிபெற வேறுவேறுருவாகிய எழுத்துக்களாய்ப் பிறந்து புலப்பட வழங்குதலே எழுத்துக்களுக் குரிய பொதுவாகிய பிறப்பு முறையாகும் இதனை இவ்வியலின் முதற் சூத்திரத்து ஆசிரியர் விரித்துரைக்கின்றார். உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும் தத்தம் நிலைதிரியாது மிடற்று வளியாற் பிறக்கும். எனவே உயிரெழுத்துக்களின் பிறப்பிடம் மிடறு என்பது புலனாம். ஓரிடத்தே ஒரு முயற்சியாற் பலவெழுத்துக்கள் பிறக்குமெனப் பொதுவகையாற் கூறினும் அவ்வெழுத்துக்களிடையே நுண்ணிய வேறுபாடுகள் உள்ளனவென ஆசிரியர் தெளிவுபடுத்துகின்றார். இவ்வியலின்கண் 7-முதல் 11-வரையுள்ள சூத்திரங்களில் கங, சஞ, டண, தந, ஆகிய மெய்யெழுத்துக்களுக்கு நெடுங் கணக்கு முறை பற்றிப் பிறப்புக் கூறுகின்றார். 12 முதல் நாவதிகாரம் பற்றிப் பிறப்புக்கூறத் தொடங்கி றன, ரழ, லள, பம, வய, என்னும் மெய்யெழுத்துக்களுக்குப் பிறப்புக் கூறியுள்ளார். இங்குப் பிறப்புக்கூறிய மெய்யெழுத்துக்களுள் மெல்லெழுத்தாறும் தத்தம் பிறப்பினது ஆக்கஞ் சொல்லிய இடத்தே நிலை பெற்றன வாயினும் அவை மூக்கின்கண் உளதாகிய காற்றோசையால் இயைபு பெறத்தோன்றியொலிப்பனவாம். இவ்வாறு மெல்லெழுத்தாறுக்கும் மூக்குவளியின் தொடர்புடைமை யினைச் சொல்லவே இடையெழுத்தாறும் மிடற்றுவளியையும் வல்லெழுத்தாறும் தலைவளியையும் பெற்று ஒலிப்பனவெனக் கொண்டார் இளம்பூரணர். முதலெழுத்துக்களைச் சார்ந்துதோற்றினல்லது தனித் தொலிக்கும் இயல்பில்லாதன என ஆராய்ந்து வெளிப்படுத்தப் பட்ட சார்பெழுத்துக்கள் மூன்றும் தத்தமக்குச் சார்பாகிய முத லெழுத்துக்களின் பிறப்பிடத்தையே தமக்குரிய பிறப்பிடமாகப் பொருந்தி இசைப்பனவாம். இவ்வாறு எழுத்துக்களின் பிறப் புணர்த்திய தொல்காப்பியனார் அவ்வெழுத்துக்கள் பெறும் மாத்திரையினைக் குறித்துக்கூறும் விளக்கம் இவண் கருதத்தகுவ தாகும். எல்லாவெழுத்துக்களையும் வெளிப்படச் சொல்லப் பட்ட இடத்தின்கண் எழுங்காற்றினாலே ஒலிக்குமிடத்து அவ்வெழுத்துக்கள் யாவும் கொப்பூழடியிலிருந்தெழுங் காற்றானது தலையளவுஞ் சென்று மீண்டும் நெஞ்சின்கண் நிலைபெறுதலாகிய திரிதருங் கூறு பாட்டினையுடையன. இவ்வெழுத்துக்களுக்கு இங்ஙனம் உறழ்ச்சி வாரத்தினால் உளதாம் அகத்தெழுவளியிசையினை நுட்பமாக ஆராய்ந்து மாத்திரை வரையறையால் அளந்து கொள்ளுதல் அந்தணரது மறைநூற் கண்ணதாகிய முறையாகும். அம்முறையினை இந்நூலிற் சொல்லாது எல்லார்க்கும் புலனாகப் புறத்தே வெளிப்பட்டிசைக்கும் மெய்தெரிவளியிசையாகிய எழுத்துக் களுக்கே யான் இங்கு மாத்திரை கூறினேன் என்பது ஆசிரியர் கூறிய விளக்கமாகும். உந்தியில் எழுந்தகாற்று முன்னர்த் தலைக்கட் சென்று பின்னர் மிடற்றிலேவந்து அதன்பின்னர் நெஞ்சிலே நிற்றல் உறழ்ச்சிவாரம் எனப்படும். மூலாதாரத்திலிருந் தெழுங் காற்றோசை அகத்தெழுவளியிசை யெனப்பட்டது. எல்லார்க்கும் எழுத்துருவம் நன்கு புலனாக வாயிலிருந்து புறத்தே வெளிப்பட் டிசைக்கும் காற்றினாலாகிய எழுத்தோசையே மெய்தெரிவளி யிசை யெனப்படும். அந்தணர் மறையிற் கூறுமாறு அகத் தெழுவளியிசையாகிய எழுத்துக்களுக்கு அளபுகூறின் அஃது எல்லார்க்கும் நன்றாக விளங்காதெனக் கருதிய தொல்காப்பியனார் புறத்தெழுந்திசைக்கும் மெய்தெரிவளி யிசையாகிய எழுத்துக்களுக்கே மாத்திரை கூறுவாராயினர். உந்துயிலெழுந்த காற்றினைக் கூறுபடுத்தி மாத்திரை கூட்டிக்கொள்ளுதலும், மூலாதாரம் முதலாகக் காற்றெழுமாறு கூறுதலும், அந்தணர் மறைக்கு உளதென்று கூறிய இவ்வாசிரியர், அவர் மதம் பற்றிப் பெறுவதோர் பயனின்றென இச் சூத்திரத்தால் உய்த்துணர வைத்தலின், இச்சூத்திரம் பிறன் கோட்கூறல் என்னும் உத்திக்கினம் என்றார் நச்சினார்க்கினியர். - வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 168-170 மூன்றாவது பிறப்பியல் 83. உந்தி முதலா முந்துவளி தோன்றித் தலையினு மிடற்றினு நெஞ்சினு நிலைஇப் பல்லு மிதழு நாவு மூக்கு மண்ணமு முளப்பட வெண்முறை நிலையா னுறுப்புற் றமைய நெறிப்பட நாடி யெல்லா வெழுத்துஞ் சொல்லுங் காலைப் பிறப்பி னாக்கம் வேறுவே றியல திறப்படத் தெரியுங் காட்சி யான என்பது சூத்திரம். இவ்வோத்து - எழுத்துக்களினது பிறப்பு உணர்த்துதலிற் பிறப்பியலென்னும் பெயர்த்தாயிற்று. சார்பிற் றோற்றத்து எழுத்துந் தனிமெய்யும் மொழியினன்றி உணர்த்தலா காமையின், அவை பிறக்கும் மொழியை மொழிமரபிடை உணர்த்திப் பிறப்பு உணர்த்த வேண்டுதலின், நூன்மரபின் பின்னர் வையாது இதனை மொழிமரபின் பின்னர் வைத்தார். இச் சூத்திரம் - எழுத்துக்களினது பொதுப்பிறவி இத்துணை நிலைக்களத்து நின்று புலப்படுமென்கின்றது. இதன் பொருள்: எல்லா எழுத்தும் பிறப்பின் ஆக்கஞ் சொல்லுங் காலை - தமிழெழுத்து எல்லாவற்றிற்கும் ஆசிரியன் கூறிய பிறப்பினது தோற்றரவை யாங் கூறுமிடத்து, உந்தி முதலாத் தோன்றி முந்துவளி - கொப்பூழடியாகத் தோன்றி முந்துகின்ற உதான னென்னுங் காற்று, தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ - தலையின்கண்ணும் மிடற்றின்கண்ணும் நெஞ்சின் கண்ணும் நிலை பெற்று, பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான் உறுப்புற்று - பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமுமென்ற ஐந்துடனே அக்காற்று, நின்ற தலையும் மிடறும் நெஞ்சுங் கூட எட்டாகிய முறைமையையுடைய தன்மையொடு கூடிய உறுப்புக்களோடு ஒன்றுற்று, அமைய - இங்ஙனம் அமைத லானே, வேறு வேறு இயல - அவ்வெழுத்துக்களது தோற்றரவு வேறுவேறு புலப்பட வழங்குதலை யுடைய, காட்சியான நாடி நெறிப்பட - அதனை அறிவான் ஆராய்ந்து அவற்றின் வழியிலே மனம்பட, திறப்படத் தெரியும் - அப்பிறப்பு வேறுபாடுகளெல் லாங் கூறுபட விளங்கும் என்றவாறு. 1சொல்லுங்காலை வளி நிலைபெற்று உறுப்புக்களுற்று இங்ஙனம் அமைதலானே அவை வழங்குதலையுடைய; அவற்றின் வழக்கம் அவற்றின் வழியிலே மனந் திறப்படத் தெரியுமெனக் கூட்டி உரைத்துக் கொள்க. இங்ஙனம் கூறவே, 2முயற்சியும் முயலுங் கருத்தாவும் உண்மை பெற்றாம். (1) 84. அவ்வழிப் பன்னீ ருயிருந் தந்நிலை திரியா மிடற்றுப் பிறந்த வளியி னிசைக்கும். இஃது - உயிரெழுத்திற்குப் பொதுப் பிறவி கூறுகின்றது. இதன் பொருள்: பன்னீருயிருந் தந்நிலை திரியா - பன்னிரண்டு உயிருந் தத்தம் மாத்திரை திரியாவாய், அவ்வழிப் பிறந்த - அவ்வுந்தி யிடத்துப் பிறந்த, மிடற்று வளியின் இசைக்கும் - மிடற்றின்கண் நிலைபெற்ற காற்றான் ஒலிக்கும் என்றவாறு. எனவே, குற்றியலிகரமுங் குற்றியலுகரமுந் தந்நிலை திரியு மென்றாராயிற்று. அவ்வெழுத்துக்களைக் கூறி உணர்க. (2) 85. அவற்றுள் அஆ ஆயிரண் டங்காந் தியலும். இஃது - அவ்வுயிர்களுட் சிலவற்றிற்குச் சிறப்புப் பிறவி கூறுகின்றது. இதன் பொருள்: அவற்றுள் - முற்கூறிய பன்னிரண்டு உயிர் களுள், அ ஆ ஆயிரண்டு - அகர ஆகாரங்களாகிய அவ்விரண்டும், அங்காந்து இயலும் - அங்காந்து கூறும் முயற்சியாற் பிறக்கும் என்றவாறு. முயற்சி உயிர்க்கிழவன் கண்ணது. அ ஆ என இவற்றின் வேறுபாடு உணர்க. (3) 86. இ ஈ எ ஏ ஐயென விசைக்கு மப்பா லைந்து மவற்றோ ரன்ன வவைதா மண்பன் முதனா விளிம்புற லுடைய. இதுவும் அது. இதன் பொருள்: இ ஈ எ ஏ ஐ என இசைக்கும் அப்பாலைந்தும் - இ ஈ எ ஏ ஐ என்று கூறப்படும் அக்கூற்று ஐந்தும், அவற்றோரன்ன - அகர ஆகாரங்கள் போல அங்காந்து கூறும் முயற்சியாற் பிறக்கும்; அவைதாம் அண்பல் முதல் நா விளிம்பு உறல் உடைய - அவைதாம் அங்ஙனம் பிறக்குமாயினும் அண்பல்லும் அடிநா விளிம்பும் உறப் பிறக்கும் வேறுபாடுடைய என்றவாறு. அண்பல்: வினைத்தொகை. எனவே, நாவிளிம்பு அணுகு தற்குக் காரணமான பல்லென்று அதற்கோர் பெயராயிற்று. இ ஈ எ ஏ ஐ என இவற்றின் வேறுபாடு உணர்க. (4) 87. உ ஊ ஒ ஓ ஔவென விசைக்கும் மப்பா லைந்து மிதழ்குவிந் தியலும். இதுவும் அது. இதன் பொருள்: உ ஊ ஒ ஓ ஔ என இசைக்கும் அப்பா லைந்தும் - உ ஊ ஒ ஓ ஔ என்று சொல்லப்படும் அக்கூற்று ஐந்தும், இதழ் குவிந்து இயலும் - இதழ் குவித்துக் கூறப் பிறக்கும் என்றவாறு. உ, ஊ, ஒ, ஓ, ஔ என இவற்றின் வேறுபாடு உணர்க. (5) 88. தத்தந் திரிபே சிறிய வென்ப. இது, முற்கூறிய உயிர்க்கும் மேற்கூறும் மெய்க்கும் பொது விதி கூறிச் சிங்கநோக்காகக் கிடந்தது. இதன் பொருள்: தத்தந் திரிபே சிறிய என்ப - உயிர்களும் மெய்களும் ஒவ்வொரு தானங்களுட் பிறப்பனவற்றைக் கூட்டிக் கூறினேமாயினும் நுண்ணுணர்வான் ஆராயுமிடத்துத் தம்முடைய வேறுபாடுகள் சிறியவாக உடைய என்று கூறுவர் புலவர் என்றவாறு. அவை எடுத்தல் படுத்தல் நலிதல் விலங்கல் என்றவாற்றா னுந் தலைவளி நெஞ்சுவளி மிடற்றுவளி மூக்குவளி என்றவாற்றா னும் பிறவாற்றானும் வேறுபடுமாறு நுண்ணுணர் வுடையோர் கூறி உணர்க. ஐ விலங்கலுடையது. வல்லினந் தலைவளியுடை யது. மெல்லினம் - மூக்குவளி யுடையது. இடையினம் - மிடற்றுவளி யுடையது. ஏனையவுங் கூறிக் கண்டு உணர்க. (6) 89. ககார ஙகார முதனா வண்ணம். இது, மெய்களுட் சிலவற்றிற்குப் பிறப்புக் கூறுகின்றது. இதன் பொருள்: ககார ஙகாரம் முதல் நா அண்ணம் - ககாரமும் ஙகாரமும் முதல்நாவும் முதல்அண்ணமும் உறப் பிறக்கும் என்றவாறு. உயிர்மெய்யாகச் சூத்திரத்துக் கூறினுந் தனிமெய்யாகக் கூறிக் காண்க. முதலை இரண்டற்குங் கூட்டுக. க ங என இவற்றின் வேறுபாடு உணர்க. (7) 90. சகார ஞகார மிடைநா வண்ணம். இதுவும் அது. இதன் பொருள்: சகார ஞகாரம் இடைநா அண்ணம் - சகாரமும் ஞகாரமும் இடைநாவும் இடையண்ணமும் உறப் பிறக்கும் என்றவாறு. இடையை இரண்டற்குங் கூட்டுக. ச ஞ என இவற்றின் வேறுபாடு உணர்க. (8) 91. டகார ணகார நுனிநா வண்ணம். இதுவும் அது. இதன் பொருள்: டகார ணகாரமும் நுனி நா அண்ணம் - டகாரமும் ணகாரமும் நுனிநாவும் நுனியண்ணமும் உறப் பிறக்கும் என்றவாறு. நுனியை இரண்டற்கும் கூட்டுக. ட ண என இவற்றின் வேறுபாடு உணர்க. (9) 92. அவ்வா றெழுத்து மூவகைப் பிறப்பின. இது, மேலனவற்றிற்கோர் ஐயம் அகற்றியது. இதன் பொருள்: அவ்வாறெழுத்தும் மூவகைப் பிறப்பின - அக்கூறப்பட்ட ஆறெழுத்தும் மூவகையாகிய பிறப்பினை உடைய என்றவாறு. எனவே, அவை ககாரம் முதல் நாவினும், ஙகாரம் முதல் அண்ணத்தினும் பிறக்குமென்று இவ்வாறே 3நிரனிறைவகையான் அறுவகைப் பிறப்பின அல்ல என்றார். (10) 93. அண்ண நண்ணிய பன்முதன் மருங்கி னாநுனி பரந்து மெய்யுற வொற்றத் தாமினிது பிறக்குந் தகார நகாரம். இது, மெய்களுட் சிலவற்றிற்குப் பிறவி கூறுகின்றது. இதன் பொருள்: அண்ணம் நண்ணிய பல்முதல் மருங்கில் - அண்ணத்தைச் சேர்ந்த பல்லினதடியாகிய இடத்தே, நாநுனி பரந்து 4மெய்யுற ஒற்ற - நாவினது நுனி பரந்து சென்று தன் வடிவு மிகவும் உறும்படி சேர, தகார நகாரந் தாம் இனிது பிறக்கும் - தகார நகாரம் என்றவைதாம் இனிதாகப் பிறக்கும் என்றவாறு. த ந என இவற்றின் வேறுபாடு உணர்க. முன்னர் உறுப்புற்று அமைய என்று கூறி, ஈண்டு மெய்யுற ஒற்ற என்றார், 5சிறிது ஒற்றவும் வருடவும் பிறப்பன உளவாகலின். (11) 94. அணரி நுனிநா வண்ண மொற்ற றஃகா னஃகா னாயிரண்டும் பிறக்கும். இதுவும் அது. இதன் பொருள்: நுனி நா 6அணரி அண்ணம் ஒற்ற - நாவினது நுனி மே னோக்கிச் சென்று அண்ணத்தை தீண்ட, றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும் - றகார னகாரமாகிய அவ்விரண்டும் பிறக்கும் என்றவாறு. இது முதலாக நெடுங்கணக்கு முறையன்றி நாவதிகாரம் பற்றிக் கூறுகின்றார். ற ன என இவற்றின் வேறுபாடு உணர்க. (12) 95. நுனிநா வணரி யண்ணம் வருட ரகார ழகார மாயிரண்டும் பிறக்கும். இதுவும் அது. இதன் பொருள்: நுனி நா அணரி அண்ணம் வருட நாவினது நுனி மேனோக்கிச் சென்று அண்ணத்தைத் தடவ, ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும் - ரகார ழகாரமாகிய அவ்விரண்டும் பிறக்கும் என்றவாறு. ர ழ என இவற்றின் வேறுபாடு உணர்க. (13) 96. நாவிளிம்பு வீங்கி யண்பன் முதலுற வாவயி னண்ண மொற்றவும் வருடவும் லகார ளகார7மா யிரண்டும் பிறக்கும். இதுவும் அது. இதன் பொருள்: நா வீங்கி விளிம்பு அண்பல் முதலுற - நா மே னோக்கிச் சென்று தன் விளிம்பு அண்பல்லினடியிலே உறா நிற்க, ஆவயின் அண்ணம் ஒற்ற லகாரமாய் - அவ்விடத்து அவ் வண்ணத்தை அந்நாத் தீண்ட லகாரமாயும், ஆவயின் அண்ணம் வருட ளகாரமாய் - அவ்விடத்து அவ்வண்ணத்தை அந் நாத் தடவ ளகாரமாயும், இரண்டும் பிறக்கும் - இவ்விரண்டெ ழுத்தும் பிறக்கும் என்றவாறு. ல ள என இவற்றின் வேறுபாடு உணர்க. 8இத்துணையும் நாவதிகாரம் கூறிற்று. (14) 97. இதழியைந்து பிறக்கும் பகார மகாரம். இதுவும் அது. இதன் பொருள்: இதழ் இயைந்து பிறக்கும் பகார மகாரம் - மேலிதழுங் கீழிதழுங் தம்மிற் கூடப் பகாரமும் மகாரமும் பிறக்கும் என்றவாறு. ப ம என இவற்றின் வேறுபாடு உணர்க. (15) 98. பல்லித ழியைய வகாரம் பிறக்கும். இது, வகாரம் பிறக்குமாறு கூறுகின்றது. இதன் பொருள்: பல் இதழ் இயைய வகாரம் பிறக்கும் - மேற்பல்லுங் கீழிதழுங் கூட வகாரமானது பிறக்கும் என்றவாறு. வ என வரும். இதற்கும் இதழ் இயைதலின் மகரத்தின் பின்னர் வைத்தார். (16) 99. அண்ணஞ் சேர்ந்த மிடற்றெழு வளியிசை கண்ணுற் றடைய யகாரம் பிறக்கும். இது, யகாரம் பிறக்குமாறு கூறுகின்றது. இதன் பொருள்: எழுவளி மிடற்றுச் சேர்ந்த இசை - உந்தியிலெழுந்த காற்று மிடற்றிடத்துச் சேர்ந்த அதனாற் பிறந்த ஓசை, அண்ணங் கண்ணுற்று அடைய - அண்ணத்தை அணைந்து உரலாணி இட்டாற்போலச் செறிய, யகாரம் பிறக்கும் - யகார வொற்றுப் பிறக்கும் என்றவாறு. 9ஆணி - மரம். ய என வரும். (17) 100. மெல்லெழுத் தாறும் பிறப்பி னாக்கஞ் சொல்லிய பள்ளி நிலையின வாயினு மூக்கின் வளியிசை யாப்புறத் தோன்றும். இது, மெல்லெழுத்திற்குச் சிறப்புவிதி கூறுகின்றது. இதன் பொருள்: மெல்லெழுத்து ஆறும் பிறப்பின் ஆக்கஞ் சொல்லிய 10பள்ளி நிலையின ஆயினும் - மெல்லெழுத்துக்கள் ஆறுந் தத்தம் பிறப்பினது ஆக்கஞ் சொல்லிய இடத்தே நிலைபெற்றன வாயினும், மூக்கின் வளியிசை யாப்புறத் தோன்றும் - ஓசை கூறுங்கால் மூக்கின்கண் உளதாகிய வளியின் இசையான் யாப்புறத் தோன்றும் என்றவாறு. அவை அங்ஙனமாதல் கூறிக்காண்க. யாப்புற என்றதனான் இடையினத்திற்கு மிடற்றுவளியும் வல்லினத்திற்குத் தலைவளியுங் கொள்க. (18) 101. சார்ந்துவரி னல்லது தமக்கியல் பிலவெனத் தேர்ந்து வெளிப் படுத்த வேனை மூன்றுந் தத்தஞ் சார்பிற் பிறப்பொடு சிவணி யொத்த காட்சியிற் றம்மியல் பியலும். இது, சார்பிறோற்றங்கள் பிறக்குமாறு கூறுகின்றது. இதன் பொருள்: சார்ந்துவரின் அல்லது - சில எழுத்துக்களைச் சார்ந்து தோன்றினல்லது, தமக்கு இயல்பு இல என - தமக்கெனத் தோன்றுதற்கு ஓரியல்பிலவென்று, தேர்ந்து வெளிப்படுத்த தம் மியல்பு மூன்றும் - ஆராய்ந்து வெளிப்படுத்தப் பட்ட எழுத்துக்கள் தம்முடைய பிறப்பியல்பு மூன்றனையுங் கூறுங்கால், தத்தம் சார்பிற் பிறப்பொடு சிவணி இயலும் - தத்தமக்கு உரிய சார்பாகிய மெய்களது சிறப்புப் பிறப்பிடத்தே பிறத்தலோடு பொருந்தி நடக்கும்; ஏனை ஒத்த காட்சியின் இயலும் - ஒழிந்த ஆய்தந் தனக்குப் பொருந்தின நெஞ்சுவளியாற் பிறக்கும் என்றவாறு. காட்சியென்றது நெஞ்சினை. கேண்மியா நாகு நுந்தை எனவும், எஃகு எனவும் வரும். ஆய்தத்திற்குச் சார்பிடங் குறியதன் முன்னர் (எழு. 38) என்பதனாற் கூறினார். இனி ஆய்தந் தலைவளியானும் மிடற்று வளியானும் பிறக்குமென்பாரும் உளர். மொழிந்த பொருளோ டொன்ற அவ்வயின் மொழியாததனை முட்டின்று முடித்தலென்பதனான், அளபெடையும் உயிர்மெய்யுந் தம்மை ஆக்கிய எழுத்துக்களது பிறப்பிடமே இடமாக வருமென்று உணர்க. (19) 102. எல்லா வெழுத்தும் வெளிப்படக் கிளந்து சொல்லிய பள்ளி யெழுதரு வளியிற் பிறப்பொடு விடுவழி யுறழ்ச்சி வாரத் தகத்தெழு வளியிசை யரிறப நாடி யளபிற் கோட லந்தணர் மறைத்தே யஃதிவ ணுவலா தெழுந்துபுறத் திசைக்கு மெய்தெரி வளியிசை யளவுநுவன் றிசினே. இஃது - எழுத்துக்கடம் பிறப்பிற்குப் புறனடை கூறுகின்றது. இதன் பொருள்: எல்லாவெழுத்துங் கிளந்து வெளிப்பட - ஆசிரியன் எல்லாவெழுத்துக்களும் பிறக்குமாறு முந்துநூற் கண்ணே கூறி வெளிப்படுக்கையி னாலே, சொல்லிய பள்ளி பிறப்பொடு விடுவழி - யானும் அவ்வாறே கூறிய எண்வகை நிலத்தும் பிறக்கின்ற பிறப்போடே அவ்வெழுத்துக்களைக் கூறுமிடத்து, எழுதரு வளியின் உறழ்ச்சிவாரத்தின் அளபு கோடல் - யான் கூறியவாறு அன்றி உந்தியில் தோன்றுங் காற்றினது திரிதருங்கூற்றின்கண்ணே மாத்திரை கூறிக்கோடலும், அகத்து எழு வளியிசை அரில்தப நாடிக் கோடல் - மூலாதாரத் தில் எழுகின்ற காற்றினோசையைக் குற்றமற நாடிக்கோடலும், அந்தணர் மறைத்தே - பார்ப்பாரது வேதத்து உளவே; அந்நிலைமை ஆண்டு உணர்க; அஃது இவண் நுவலாது - அங்ஙனம் கோடலை ஈண்டுக் கூறலாகாமையின் இந் நூற்கட் கூறாதே, எழுந்து புறத்து இசைக்கும் - உந்தியிற் றோன்றிப் புறத்தே 11புலப்பட்டு ஒலிக்கும், மெய்தெரி வளியிசை அளபு நுவன்றிசினே - பொருடெரியுங் காற்றினது துணிவிற்கே யான் மாத்திரை கூறினேன்; அவற்றினது மாத்திரையை உணர்க என்றவாறு. இதனை இரண்டு சூத்திரமாக்கியும் உரைப்ப. இது பிறன்கோட் கூறலென்னும் உத்திக்கு இனம், என்னை? உந்தியில் எழுந்த காற்றினைக் கூறுபடுத்தி மாத்திரை கூட்டிக் கோடலும், மூலதாரம் முதலாகக் காற்றெழுமாறு கூறலும், வேதத்திற்கு உளதென்று இவ்வாசிரியர் கூறி அம்மதம் பற்றி அவர் கொள்வதோர் பயன் இன்றென்றலின். உந்தியில் எழுந்த காற்று முன்னர்த் தலைக்கட் சென்று, பின்னர் மிடற்றிலே வந்து, பின்னர் நெஞ்சிலே நிற்றலை உறழ்ச்சிவாரத்து என்றார். அகத் தெழுவளி யெனவே மூலாதார மென்பது பெற்றாம். இன்சாரியையை அத்துச்சாரியையோடு கூட்டுக. ஏகாரந் தேற்றம். மெய்தெரிவளியெனவே, 12பொரு டெரியா முற்கும் வீளையும் முயற்சியானாமெனினும் பொரு டெரியாமையின் அவை கடியப் பட்டன. எனவே, சொல்லப் பிறந்து சொற்கு உறுப்பாம் ஓசையை இவர் எழுத்தென்று வேண்டுவரென உணர்க. 13நிலையும் வளியும் முயற்சியு மூன்று மியல நடப்ப தெழுத்தெனப் படுமே என்றாராகலின். (20) பிறப்பியல் முற்றிற்று. கணேசய்யர் அடிக்குறிப்புகள்: 1. சொல்லுங்காலை என்பதை எழுத்துக்களைக் கூறுபவனுடைய வினை யாக்கி உரையாசிரியர் கூறுவர். அதுவே சிறந்த உரையாதல் காண்க. 2. வளிதோன்றி நிலைபெற்று உறுப்புற்று அமைய என்றதனானே அங்ஙனம் அமைதற்கு உயிர்க்கிழவனது முயற்சியும் அவனும் வேண்டு மென்பது பெறப்படும். உயிர்க்கிழவன் - கருத்தா. 3. நிரனிறை வகையா னறுவகைப் பிறப்பின அல்ல என்றது. `சகர ஞகாரம் இடைநா வண்ணம்' என்புழிச் சகரமிடைநாவிலும் ஞகரமிடை யண்ணத்திலும் என்று நிரனிறையாகக் கொள்ள அறுவகைப் பிறப்பின வாம். அங்ஙனம் அல்ல என்றபடி. 4. மெய்யுற ஒற்ற என்றது - அழுந்த ஒற்ற என்றபடி. 5. சிறிது ஒற்றப் பிறப்பன - றகரம் னகரம் லகரம் என்பன. சிறிது வருடப் பிறப்பன - ளகார ரகார ழகாரங்கள். 6. அணருதல் - மேனோக்கிச் சேறல். அணரி - மேனோக்கிச் சென்று. 7. அவ்விரண்டும் என முன்போற் கூறலே பொருத்தம். 8. இத்துணையும் நாவதிகாரம் கூறிற்றென்றது. 8-ம் சூத்திரத்தில் நாவிற் பிறக்கும் எழுத்தை அதிகாரப்பட வைத்து அது முதலாக நாவிற் பிறக்கும் எழுத்துக்களையே கூறிவந்தமையை. அதிகாரம் - தலைமை. முறைமை என்பர் நச்சினார்க்கினியர். 9. ஆணி என்றது - உரலின் அடித்துவாரத்தை மறைக்கும்படி இடும் மரத்தை. 10. பள்ளி - இடம். 11. புலப்படல் - செவிக்குப் புலப்படல். 12. பொருள் தெரியா என்பதற்கு எழுத்தாகிய பொருள் தெரியாத என்பது பொருள். இன்றேல், முற்கும் வீளையும் பொருளுணர்த்துமேனும் என்று இவர் முற்கூறியதோடு மாறுபடும். 13. நிலை என்றது - இடத்தை. வளி என்றது - காற்றை. முயற்சி என்றது - முயற்சிப் பிறப்பை. புணரியல் மொழிகள் தம்மிற் புணர்தற்குரிய கருவியின் இயல்பினைக் கூறுதலின் இது புணரியல் என்னும் பெயர்த்தாயிற்று. இவ்வியலிற் கூறப்படும் விதிகள் பின்வரும் இயல்களிற் கூறப்படும் செய்கைபற்றிய விதிகளுக்குப் பயன்படுதலின் கருவிகளெனப் பட்டன. தமிழ் நெடுங்கணக்கிலுள்ள முப்பத்து மூன்றெழுத்துக்களுள் இருபத்திரண்டெழுத்துக்கள் மொழிக்கு முதலாமெனவும், இருபத்து நான்கெழுத்துக்கள் மொழிக்கு ஈறாமெனவும், எல்லா மொழிகளுக்கும் இறுதியும் முதலுமாவன மெய், உயிர் என்னும் இவ்விருவகை யெழுத்துக்களெனவும், மொழியிறுதியில் நின்ற மெய்யெல்லாம் புள்ளிபெற்று நிற்குமெனவும், மொழியிறுதியி லுள்ள குற்றியலுகரமும் மெய்யின் தன்மையையுடையதா மெனவும், மொழியீறாய் நின்ற உயிர்மெய் உயிரீற்றின் தன்மையையுடையதா மெனவும் இவ்வியலில் 1-முதல் 4-வரையுள்ள சூத்திரங்கள் கூறுகின்றன. நிலைமொழியை நிறுத்தசொல் என்றும் வருமொழியைக் குறித்துவருகிளவியென்றும் தொல்காப்பியனார் வழங்குவர். நிறுத்த சொல்லின் ஈற்றெழுத்தோடு குறித்துவருகிளவியின் முதலலெழுத்துப் பொருந்த அவ்விருமொழிகளும் இயைந்து வருதலே புணர்ச்சியெனப்படும். அப்புணர்ச்சி உயிரீற்றுச் சொல் முன் உயிர் வருமிடம், உயிரீற்றுச் சொல்முன் மெய்வருமிடம், மெய்யீற்றுச் சொல்முன் உயிர் வருமிடம், மெய்யீற்றுச் சொல்முன் மெய் வருமிடம் என எழுத்துவகையால் நான்கு வகைப்படும்; பெயரொடு பெயர், பெயரொடு தொழில், தொழிலொடு பெயர், தொழிலொடு தொழில் எனச் சொல் வகையால் நான்காகும். மொழிகள் புணருங்கால் இடைநின்ற எழுத்துக்கள் ஒன்று மற்றென்றாகத் திரிதலை மெய்பிறிதாதல் என்றும், அவ்விடத்துப் புதியவெழுத்துத் தொன்றுதலை மிகுதல் என்றும், அங்கு முன்னிருந்த எழுத்துக் கெடுதலைக் குன்றல் என்றும், இவ்வேறு பாடெதுவுமின்றி அவ்விருமொழிகளும் முன்னுள்ளவாறு புணர்ந்து நிற்றலை இயல்பென்றும், இந்நான்கினையும் மொழிபுணரியல்பு என்றும் ஆசிரியர் குறியிட்டு வழங்கியுள்ளார். நிறுத்தசொல்லும் குறித்து வருகிளவியும் தனித்தனியே அடைமொழி பெற்றுவரினும் நிலைமொழி வருமொழியாகப் புணர்தற்கு உரியனவாம். முன் பின்னாக மாறி நின்ற மரூஉ மொழிகளும் நிலைமொழி வருமொழியாகப் புணர்க்கப்படுதலுண்டு. மொழிப்புணர்ச்சி வேற்றுமைப் புணர்ச்சியெனவும் அல்வழிப் புணர்ச்சியெனவும் பொருள் வகையால் இருதிறப்படும் இவற்றுள் வேற்றுமைப் புணர்ச்சியை வேற்றுமை குறித்த புணர்மொழி நிலையென்றும் அல்வழிப் புணர்ச்சியை வேற்றுமையல்வழிப் புணர்மொழி நிலையென்று ஆசிரியர் வழங்கியுள்ளார். இவ்விருவகைப் புணர்மொழிகளும் எழுத்து மிகுதலும் சாரியை மிகுதலும் ஆகிய இருதிறத்தாலும் நடப்பன. வேற்றுமை யுருபாவன ஐ, ஒடு, கு, இன், அது, கண் என்னும் ஆறாம் எனத் தொல்காப்பியனர்க்கு முற்பட்ட தமிழிய னூலார் வகைப்படுத்தியுள்ளார்கள். வேற்றுமையுருபுகள் புணரும் நிலைமைக்கண் பெயரின் பின்னிடத்தே நிற்றற்குரியன. உருபேற்கும் பெயர்கள் உயர்திணைப் பெயர், அஃறிணைப் பெயர் என இருவகைப்படும். அவை வேற்றுமையுருபோடு பொருந்துங்கால் பெயர்க்கும் வேற்றுமையுருபிற்குமிடையே சாரியை மிகும். சாரியைகளாவன இன், வற்று, அத்து, அம், ஒன், ஆன், அக்கு, இக்கு, அன் எனவரும் இவ்வொன்பதும் இவைபோல்வன பிறவும் ஆம். இன் சாரியை இகரங்கெட்டு னகரமெய் மட்டும் நிற்றலும், னகரங் கெட்டு இகரவுயிர் மட்டும் நிற்றலும், னகரம் றகரமாகத் திரிந்து நிற்றலும் ஆகிய மூன்று திரிபுடையதென்றும், வற்றுச் சாரியை முதற்கணுள்ள வகரமெய் கெட அற்று எனத்திரியுமென்றும், இன், ஒன், ஆன், அன் என்னும் இச்சாரியைகளின் னகரம் றகரமாய்த் திரிதலுண்டென்றும், அகரவீற்றுச் சொல்முன் வரும் அத்துச்சாரியை அகரங்கெட த்து என நிற்குமென்றும், இகர ஐகார வீற்றுச் சொல்முன்வரும் இக்குச் சாரியை இகரங்கெட க்கு என நிற்குமென்றும், வல்லெழுத்து முதன்மொழி வருங்கால் அக்குச் சாரியை இறுதிக் குற்றியலுகரமும் அதனுலூரப்பட்ட ககரமெய்யும் அக்ககர மெய்யின்மேல் நின்ற ககரமெய்யும் ஒருசேரக்கெட அ எனத் திரிந்து நிற்குமென்றும், கசத வரு மொழியாய் வருங்காலத்து அம் சாரியையின் மகரம் முறையே ங ஞ ந எனத் திரிதலும், மெல்லெழுத்தும் இடையெழுத்தும் வருமொழியாய் வருங் காலத்துக் கெடுதலுமாகிய நிலைமைத் தென்றும், சொற்கள் பெயருந் தொழிலுமாய்ப் பிரிந்தும் பெயரும் பெயருமாய்க் கூடியும் இசைப்ப வேற்றுமையுருபு விரிந்து நிற்கு மிடத்தும் மறைந்து நிற்குமிடத்தும் மொழிகளைப் பிரித்துக் காணுங்கால் பெயர்க்கும் வேற்றுமையுருபிற்கு மிடையே வந்து நிற்றல் சாரியையின் இயல்பென்றும் சாரியையின் இலக்கணத் தினை ஆசிரியர் தெளிவாக வரையறுத்துக் காட்டியுள்ளர். சொற்களை நிலைமொழி வருமொழியாகப் பிரித்துக் காணும் முறையினைத் சொற்சிதர் மருங்கு எனவும் பெயர் சாரியை உருபு முதலிய சொல்லுறுப்புக்கள் ஒன்றன்பின்னொன்றாக ஒட்டி நடத்தற்குரிய மொழிவழக்கினை ஒட்டுதற்கொழுகிய வழக்கு எனவும் ஆசிரியர் குறியிட்டு வழங்கியுள்ளார். நிறுத்த சொல்லுங் குறித்து வருகிளவியுமாகப் பிரித்தற்கேற்றவாறு ஒட்டி நில்லாது, நிலாக்கதிர் நிலாமுற்றம் என்றாற் போல உடங்கியைந்து நிற்கும் புணர்மொழிகள் ஒட்டுதற்கொழுகிய வழக்கின அல்லவெனவுங் ஆகவே அவை சாரியை பெறா வெனவும் இளம்பூரணர் கூறிய விளக்கம் இவண் சிந்தித்துணரத் தகுவதாம். காரம், கரம், கான் என்பன எழுத்தின் சாரியைகளாம். அவற்றுள் கரம், கான் என்னும் இரு சாரியைகளையும் நெட்டெழுத்துப் பெறுதலில்லை. குற்றெழுத்து மேற்கூறிய மூன்று சாரியைகளையும் பெறும். நெட்டெழுத்துக்களில் ஐ, ஔ என்னுமிரண்டும் கான் சாரியையும் பெறும். என இவ்வியலில் இயைபுடைமை கருதி எழுத்துச் சாரியைகளும் உடன் கூறப்பட்டன. மெய்யீற்றின்முன் உயிர்முதன் மொழி வருங்கால் வருமொழி முதலிலுள்ள உயிர் தனித்து நில்லாது; மெய்களுக்குரிய புள்ளி பெறுதலாகிய அவ்வியல்பினைக் கெடுத்து நிலைமொழி யீற்றிலுள்ள அம்மெய்யுடன் கூடி நிற்கும். இங்ஙனம் கூடிய உயிர் பிரிந்து நீங்கியவழி நிலைமொழியீற்றிலுள்ள மெய் மீண்டும் தன் பழைய வடிவாகிய புள்ளியைப் பெறும். இவ்வியல்பினை இவ்வியலின் 36, 37-ஆம் சூத்திரங்களால் ஆசிரியர் குறிப்பிடுவர். குற்றியலுகரமும் மெய்யீறுபோலுந் தன்மையத்து என இவ்வியலின் மூன்றாம் சூத்திரத்தால் ஆசிரியர் மாட்டேற்றிக் கூறியுள்ளார். இம்மாட்டேறு புள்ளி பெறுதலும் உயிரேற இடங்கொடுத்தலுமாகிய மெய்யின் தன்மைகளுள் புள்ளி பெறுதலை விலக்கி உயிரேற இடங்கொடுத்தலாகிய அவ்வளவுக்குச் செல்லுதலின் இம்மாட்டேறு ஒருபுடைச்சேற லெனவுணர்க என உரையாசிரியர் விளக்கங் கூறுவர். குற்றியலுகரமும் அற்றென மொழிப என முன்னர் மாட்டேறு கூறினமையால் மெய்யீற்றின்முன் உயிர் தனித்து நில்லாதவாறு போன்று குற்றியலுகரவீற்றின் முன்னும் உயிர் தனித்து நில்லாது அக்குற்றியலுகரத்தோடு பொருந்தி நிற்கும் எனத் தொல் காப்பியனார் உய்த்துணர வைத்தமை பெறப்படும். உயிரீற்றின்முன் உயிர்முதன்மொழி வருமிடத்து உயிரோடு உயிர்க்குக் கலந்து நிற்கும் இயல்பின்மையால் இரு மொழிகளும் ஒட்டி நில்லாது விட்டிசைப்பனவாம். நிலைமொழியீற்றிலும் வரு மொழி முதலிலும் நிற்கும் அவ்விரண்டுயிர்களும் உடம்படுதற் பொருட்டு அவற்றிடையே யகர வகரங்களுள் ஒன்று உடம்படு மெய்யாய் வரும். உடம்படாத இரண்டுயிர்களும் உடம்படுதற் பொருட்டு இடையே தோன்றும் மெய் உடம்படுமெய் என வழங் கப்படும். உடன்பாடு, உடம்பாடு என மருவி வழங்கியது வருமுயிர்க்கு உடம்பாக அடுக்கும் மெய் உடம்படுமெய் எனப்பொருள் கோடலுமுண்டு. எல்லா மொழிக்கும் இறுதியும் முதலும் உயிர் வரும்வழி அவற்றிடையே உடம்படுமெய் பெறுதலை விலக்கார் எனத் தொல்காப்பியனார் கூறுதலால் அவர் காலத்து உயிரீற்றின் முன் உயிர்முதன்மொழி வந்து புணருங்கால் உடம்படுமெய் பெற்றே வரவேண்டுமென்னும் வரையறையில்லை யென்பது நன்கு புலனாகும். உடம்படுமெய்யாக வருதற்குரிய எழுத்துக்கள் இவையெனத் தொல்காப்பியனார் கூறாது போயினும் அவரியற்றிய இயற்றமிழ் நூலாகிய இத் தொல்காப்பியத்திலும் இதற்குப்பின் தோன்றிய தமிழ் நூல்க ளெல்லா வற்றிலும் யகர வகரங்களே உடம்படுமெய்யாக ஆளப்பெற்றுள்ளமை காணலாம். உடம்படு மெய்யே யகார வகாரம், உயிர் முதன் மொழி வரூஉங்காலையான என நச்சினார்க்கினியர் காட்டிய பழஞ்சூத்திரம் யகர வகரங்களே உடம்படுமெய்யாய் வருதற்குரியன என்பதைத் தெளிவாக விளக்குதல் காண்க. உயிர்களுள் இகர ஈகார ஐகார வீறுகள் யகர வுடம்படுமெய் கொள்ளும் எனவும், ஏகாரவீறு யகர வகரங்களுள் ஒன்றை உடம்படுமெய்யாகப் பெற்றுவரும் எனவும், ஏனைய வுயிரீறுகள் யாவும் வகர வுடம்படு மெய்யே பெறும் எனவும் இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் வகைபெற விளக்கியுள்ளார்கள். எழுத்தால் ஒன்றுபோலத் தோன்றிச் சொல்லால் வேறு பட்டுப் பொருள் விளங்கி நிற்கும் புணர்மொழிகள் ஓசை வேறு பாட்டற் பிரிந்து புணர்ச்சி வேறுபடுதல் சொல்நடையின் நிலை பெற்ற பண்பாகும். இவ்வாறு வரும் புணர்மொழிகள் குறிப்பினாலுணரும் பொருளையுடையன. எழுத்து வகையால் இத்தன்மைய எனத் தெளிவாக வுணரும் முறைமையை யுடையன அல்ல. எடுத்துக்காட்டாகச் செம்பொன் பதின்றொடி என்னும் புணர் மொழி பொன்னைப்பற்றிப் பேச்சின்கண் எடுத்தாளப் பட்டால் செம்பொன் + பதின்றொடி எனப் பிரிந்தும், செம்பைக் குறித்து நிகழும் பேச்சில் எடுத்தாளப்பட்டால் செம்பு + ஒன்பதின்றொடி எனப் பிரிந்தும் ஓசை வேறுபட்டு வேறுவேறு பொருளுணர்த்தி நிற்றல் காணலாம். இவற்றின் இயல்பினை இவ்வியலின் ஈற்றிலுள்ள இரண்டு சூத்திரங்களாலும் ஆசிரியர் அறிவுறுத்துகின்றார். எனவே அவர் காலத்து இங்ஙனம் நுண்ணிதாகப் பொருளுணர்த்தும் புணர்மொழிகள் பெருக வழங்கினமை நன்கு புலனாகும். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 170-174 நான்காவது புணரியல் 103. மூன்றுதலை யிட்ட முப்பதிற் றெழுத்தி னிரண்டுதலை யிட்ட முதலா கிருபஃ தறுநான் கீறொடு நெறிநின் றியலு மெல்லா மொழிக்கு மிறுதியு முதலு மெய்யே யுயிரென் றாயீ ரியல என்பது சூத்திரம். மொழிமரபிற் கூறிய மொழிகளைப் பொது வகையாற் புணர்க்கும் முறைமை உணர்த்தினமையிற் புணரியல் என்பது இவ்வோத்திற்குப் பெயராயிற்று. ஈண்டு முறைமை யென்றது மேற் 1செய்கை யோத்துக்களுட் புணர்தற்கு உரியவாக ஈண்டுக் கூறிய கருவிகளை. இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், மொழிமரபிற் கூறிய மொழிக்கு முதலா மெழுத்தும் மொழிக்கு ஈறாமெழுத்தும் இத்துணை யென்றலும், எல்லா மொழிக்கும் ஈறும் முதலும், மெய்யும் உயிருமல்லது இல்லையென்று வரையறுத்தலும், 2ஈறும் முதலு மாக எழுத்து நாற்பத்தாறு உளவோ என்று ஐயுற்றார்க்கு, எழுத்து முப்பத்து மூன்றுமே அங்ஙனம் ஈறும் முதலுமாய் நிற்பதென்று ஐயமறுத்தலும் நுதலிற்று. இதன் பொருள்: முதல் இரண்டு தலையிட்ட இருபஃது ஈறு அறு நான்காகும் மூன்று தலையிட்ட முப்பதிற்றெழுத்தி னொடு - மொழிக்கு முதலா மெழுத்து, இரண்டை முடியிலே யிட்ட இருபஃதும், மொழிக்கு ஈறாமெழுத்து, இருபத்து நான்குமாகின்ற மூன்றை முடியிலேயிட்ட முப்பதாகிய எழுத்துக்களோடே, நெறிநின்று இயலும் எல்லா மொழிக்கும் - வழக்குநெறிக்கணின்று நடக்கும் 3மூவகை மொழிக்கும், மெய்யே உயிரென்று ஆயீரியல இறுதியும் முதலும் - மெய்யும் உயிருமென்று கூறப்பட்ட அவ்விரண்டு இயல்பினையுடைய எழுத்துக்களே ஈறும் முதலும் ஆவன என்றவாறு. இருபத்திரண்டு முதலாவன பன்னீருயிரும் ஒன்பது உயிர் மெய்யும் 4மொழிமுதற் குற்றியலுகரமுமாம். இருபத்துநான்கு ஈறாவன பன்னீருயிரும் பதினொரு புள்ளியும் ஈற்றுக் குற்றியலுகர முமாம். மெய்யை முற்கூறினார் நால்வகைப் புணர்ச்சியும் மெய்க்கண் நிகழுமாறு உயிர்க்கண் நிகழா வென்றற்கு. உதாரணம்: மரம் என மெய்முதலும் மெய்யீறும், இலை என உயிர்முதலும் உயிரீறும், ஆல் என உயிர்முதலும் மெய் யீறும், விள என மெய்முதலும் உயிரீறுமாம். மொழி யாக்கம், இயல்பும் விகாரமுமென இரண்டாம். உயிர் தாமே நின்று முதலும் ஈறுமாதல் இயல்பு. அவை மெய்யோடு கூடி நின்று அங்ஙனமாதல் விகாரம். (1) 104. அவற்றுள் 5மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையல். இது, முற்கூறியவாற்றால் தனிமெய் முதலாவான் சென்ற தனை விலக்கலின் எய்தியது விலக்கிற்று. இதன் பொருள்: அவற்றுள் - முற்கூறிய மெய்யும் உயிருமென்ற இரண் டனுள், மெய்யீறு எல்லாம் புள்ளியொடு நிலையல் - மெய் மொழிக்கு ஈறாயவை யெல்லாம் புள்ளி பெற்று நிற்கும் என்றவாறு. எனவே, மொழிக்கு முதலாயினவை யெல்லாம் புள்ளி யிழந்து உயிரேறி நிற்குமென்றாராயிற்று. இன்னும் ஈற்றுமெய் புள்ளி பெற்று நிற்கு மென்றதனானே, உயிர்முதன் மொழி தம்மேல் வந்தால் அவை உயிரேற இடங்கொடுத்து நிற்கு மென்பதூஉங் கூறினாராயிற்று. இவ்விதி முற்கூறியதன்றோ வெனின், ஆண்டுத் தனி மெய் பதினெட்டும் புள்ளி பெற்று நிற்குமென்றும், அவைதாம் உயிரே றுங்காற் புள்ளியிழந்து நிற்குமென்றுங் கூறினார்; ஈண்டு மெய் முதல் மெய்யீறெனப் பொருளுரைக்க வேண்டினமையின் மொழிமுதன் மெய்களும் புள்ளி பெறுமோ வென்று ஐயுற்ற ஐயம் அகற்றக் கூறினாரென்று உணர்க. மரம் என புள்ளி பெற்று நின்றது, அரிதென வந்துழி, மரமரிதென்று ஏறி முடிந்தவாறு காண்க. (2) 105. 6குற்றிய லுகரமு மற்றென மொழிப. இது, முன்னர்ப் புள்ளி யீற்றுமுன் உயிர்தனித் தியலா தென்று மெய்க்கு எய்துவிக்கின்ற கருவியை எதிரது போற்றி, உயிர்க்கும் எய்துவிக்கின்ற கருவிச் சூத்திரம். இதன் பொருள்: குற்றியலுகரமும் அற்றென மொழிப - ஈற்றுக் குற்றியலுகரமும் புள்ளியீறுபோல உயிரேற இடங் கொடுக்கு மென்று கூறுவர் புலவர் என்றவாறு. இம்மாட்டேறு ஒருபுடைச் சேறல், புள்ளி பெறாமையின். அங்ஙனம் உயிரேறுங்காற் குற்றுகரம் கெட்டுப்போக நின்ற ஒற்றின்மேல் உயிரேறிற்றென்று கொள்ளற்க. நாகரிதென்புழி முன்னர்க் குற்றுகர வோசையும் பின்னர் உயிரோசையும் பெற்று அவ்விரண்டுங் கூடி நின்றல்லது அப்பொரு ளுணர்த்தலாகா மையின், இஃது உயிரோடுங் கூடி நிற்குமென்றார்.(3) 106. உயிர்மெய் யீறு 7முயிரீற் றியற்றே. இது, மெய்யே யுயிரென் றாயீ ரியல (எழுத். 103) என்ற உயிர்க் கண் நிகழ்வதோர் ஐயம் அகற்றியது; உயிர்மெய் யென்பதோர் ஈறு உண்டேனும் அது புணர்க்கப்படாது, அதுவும் உயிராயே அடங்கு மென்றலின். இதன் பொருள்: உயிர் மெய்யீறும் - உயிர்மெய் மொழி யினது ஈற்றின் கண் நின்றதும், உயிரீற்றியற்றே - உயிரீற்றின் இயல்பை யுடைத்து என்றவாறு. உம்மையான் இடைநின்ற உயிர்மெய்யும் உயிர் இயல்பை யுடைத்து என்றாராயிற்று. உம்மை எச்சவும்மை. ஈற்றினும் இடை யினும் நின்றன உயிருள் அடங்குமெனவே முதல் நின்றன மெய்யுள் அடங்கு மென்றார். இதனானே மேல் விள என்றாற் போலும் உயிர் மெய்களெல்லாம் அகரவீறென்று புணர்க்குமாறு உணர்க. வரகு: இதனை மேல் உயிர்த்தொடர் மொழி யென்ப. முன்னர் மெய்யின் வழியது (எழுத். 18) என்றது ஓரெழுத்திற் கென்று உணர்க. இத்துணையும் மொழிமரபின் ஒழிபு கூறிற்று.(4) 107. உயிரிறு சொன்மு னுயிர்வரு வழியு முயிரிறு சொன்முன் மெய்வரு வழியு மெய்யிறு சொன்மு னுயிர்வரு வழியு மெய்யிறு சொன்முன் மெய்வரு வழியுமென் றிவ்வென வறியக் கிளக்குங் காலை நிறுத்த சொல்லே குறித்துவரு கிளவியென் றாயீ ரியல புணர்நிலைச் சுட்டே. இது, மேற்கூறும் புணர்ச்சிகளெல்லாம் இருமொழிப் புணர்ச்சி யல்லது இல்லை என்பதூஉம், அஃது எழுத்து வகையான் நான்காமென்ப தூஉம் உணர்த்துகின்றது. இதன் பொருள்: உயிரிறு சொன்முன் உயிர் வருவழியும் - உயிர் தனக்கு ஈறாக இறுஞ் சொல்லின் முன் உயிர் முதலாகிய மொழிவரும் இடமும், உயிரிறு சொன்முன் மெய்வரு வழியும் - உயிர் தனக்கு ஈறாக இறுஞ் சொல்லின் முன்னர் மெய் முதலாகிய மொழி வரும் இடமும், மெய்யிறு சொன்முன் உயிர்வரு வழியும் - மெய் தனக்கு ஈறாக இறுஞ் சொல்லின் முன்னர் உயிர் முதலாகிய மொழி வரும் இடமும், மெய்யிறு சொன்முன் மெய்வரு வழியும் - மெய் தனக்கு ஈறாக இறுஞ் சொல்லின் முன்னர் மெய்முதலாகிய மொழி வரும் இடமும், என்று புணர்நிலைச் சுட்டு - என்று சொல்லப்பட்ட ஒன்றினோ டொன்று கூடும் நிலைமையாகிய கருத்தின்கண், இவ்வென அறியக் கிளக்குங் காலை - அவற்றை இத்துணையென வரையறையை எல்லாரும் அறிய யாங் கூறுங் காலத்து, நிறுத்த சொல்லே குறித்துவருகிளவி யென்று ஆயீரியல - முன்னர் நிறுத்தப் பட்ட சொல்லும் அதனை முடித்தலைக் குறித்து வருஞ் சொல்லும் என்று சொல்லப்பட்ட அவ்விரண்டு இயல்பினை யுடைய என்றவாறு. எனவே, நான்கு வகையானுங் கூடுங்கால் இருமொழி யல்லது புணர்ச்சியின்று என்றாராயிற்று. உதாரணம்: ஆவுண்டு, ஆவலிது, ஆலிலை, ஆல்வீழ்ந்தது என முறையே காண்க. விளவினைக் குறைத்தான் என்றவழிச் சாரியையும் உருபும் நிலை மொழியாயே நிற்குமென்பது நோக்கி அதனை நிறுத்த சொல்லென்றும், முடிக்குஞ் சொல்லைக் குறித்துவருகிளவி யென்றும் கூறினார். இதனானே நிலைமொழியும் வருமொழியுங் கூறினார். 8முன்னர் மெய்யே யுயிர் (எழுத். 103) என்றது ஒரு மொழிக்கு; இஃது இருமொழிக்கென்று உணர்க. (5) 108. அவற்றுள் நிறுத்த சொல்லி னீறா கெழுத்தொடு குறித்துவரு கிளவி முதலெழுத் தியையப் பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும் பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலுந் தொழிலொடு பெயரைப் புணர்க்குங் காலுந் தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலு மூன்றே திரிபிட னொன்றே யியல்பென வாங்கந் நான்கே மொழிபுண ரியல்பே. இது முன்னர் எழுத்துவகையான் நான்கு புணர்ச்சி எய்திய ïருவகைச்bசால்லுஞ்bசால்வகையானும்eன்காகுமென்பöஉம்,mங்ஙனம்òணர்வதுbசால்லுஞ்bசால்லும்mன்றுvழுத்தும்vழுத்துbமன்பதூஉம்cணர்த்துகின்றது. இதன் பொருள்: அவற்றுள் - நிலைமொழி வருமொழி யென்றவற்றுள், நிறுத்த சொல்லின் ஈறாகு எழுத்தொடு குறித்துவரு கிளவி முதலெழுத்து இயைய - முன்னர் நிறுத்தப் பட்ட சொல்லினது ஈறாகின்ற எழுத்தோடு அதனை முடிக்கக் கருதி வருகின்ற சொல்லினது முதலெழுத்துப் பொருந்த, பெய ரொடு பெயரைப் புணர்க்குங் காலும் - பெயர்ச் சொல்லோடு பெயர்ச் சொல்லைக் கூட்டும் இடத்தும், பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலும் - பெயர்ச் சொல்லோடு தொழிற் சொல்லைக் கூட்டும் இடத்தும், தொழிலொடு பெயரைப் புணர்க்குங்காலும் - தொழிற் சொல்லோடு பெயர்ச்சொல்லைக் கூட்டும் இடத்தும், தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலும் - தொழிற் சொல்லொடு தொழிற் சொல்லைக் கூட்டும் இடத்தும், மூன்றே திரிபு இடன் ஒன்றே இயல்பென ஆங்கு அந்நான்கே - திரியும் இடம் மூன்று இயல்பு ஒன்று என்று முந்துநூலிற் கூறிய அந் நான்கு இலக்கணமுமே, மொழி புணர் இயல்பு - ஈண்டு மொழிகள் தம்முட் கூடும் இலக்கணம் என்றவாறு. உதாரணம்: சாத்தன்கை, சாத்தனுண்டான், வந்தான் சாத்தன், வந்தான் போயினான் சாத்தன் என முறையே காண்க. இவை நான்கு இனத்தோடுங் கூடப் பதினாறாம். இடையும் உரியுந் தாமாக நில்லாமையிற் பெயர்வினையே கூறினார், இடைச் சொல்லும் உரிச்சொல்லும் புணர்க்குஞ் செய்கைப் பட்டுழிப் புணர்ப்புச் சிறுபான்மை. 9பெயர்ப் பெயரும் ஒட்டுப் பெயருமென இரண்டு வகைப்படும் பெயர். தெரிநிலைவினையுங் குறிப்பு வினையுமென இரண்டு வகைப்படுந் தொழில். நிலைமொழியது ஈற்றெழுத்து முன்னர்ப் பிறந்து கெட்டுப்போக வருமொழியின் முதலெழுத்துப் பின்பிறந்து கெட்டமையான் முறையை பிறந்து கெடுவன ஒருங்கு நின்று புணரு மாற்றின்மையின் புணர்ச்கியென்பது ஒன்றின்றாம் பிறவெனின், அச்சொற்களைக் கூறுகின்றோருங் கேட்கின்றோரும் .சய இடையறவு படாமல் உள்ளத்தின் கண்ண உணர்வராதலின் அவ்வோசை கேடின்றி உள்ளத்தின் கண்நிலைபெற்றுப் புணர்ந்தனவேயாம். ஆகவே, பின்னர்க் 10கண் கூடாகப் புணர்கின்ற புணர்ச்சியும் முடிந்தனவேயா மென்று உணர்க. இனி, முயற்கோடு உண்டென்றால் அது, குறித்து வருகிளவியன்மையிற் . 11இது தான் இன்றென்றாற் புணர்க்கப்படுமென்று உணர்க. (6) 109. அவைதாம் மெய்பிறி தாதன் மிகுதல் குன்றலென் நிவ்வென மொழிப திரியு மாறே. இது, முற்கூறிய மூன்று திரிபும் ஆமாறு கூறுகின்றது. இதன் பொருள்: அவைதாந் திரியுமாறு - முன்னர்த் திரிபென்று கூறிய அவைதாந் திரிந்து புணரும் நெறியை, மெய் பிறிதாதல் மிகுதல் குன்ற லென்று இவ்வென மொழிப - மெய் வேறுபடுதல் மிகுதல் குன்றலென்று கூறப்படும் இம்மூன்று கூற்றையுடைய வென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. இம்மூன்றும் அல்லாதது இயல்பாமென்று உணர்க. இவை 12விகற்பிக்கப் பதினாறு உதாரணமாம். மட்குடம், மலைத்தலை, மரவேர் இவை பெயரொடு பெயர் புணர்ந்த மூன்று திரிபு. மண்மலை என்பது இயல்பு. சொற்கேட்டான், பலாக்குறைத்தான், மரநட்டான் இவை பெயரொடு தொழில் புணர்ந்த மூன்று திரிபு. கொற்றன் வந்தான்: இஃது இயல்பு. வந்தானாற் சாத்தன், கொடாப் பொருள், ஓடுநாகம் இவை தொழிலொடு பெயர் புணர்ந்த மூன்று திரிபு. வந்தான் சாத்தான்: இஃது இயல்பு. வந்தாற்கொள்ளும், பாடப்போயினான், சாஞான்றான் இவை தொழிலொடு தொழில் புணர்ந்த மூன்று திரிபு. வந்தான் கொண்டான், இஃது இயல்பு. மூன்று திரிபென்னாது இடனென்றதனான் ஒரு புணர்ச்சிக்கண் மூன்றும் ஒருங்கேயும் வரப்பெறு மென்று உணர்க. மகத்தாற் கொண்டான்: இஃது அங்ஙனம் வந்தவாறு மகர ஈற்று நாட்பெயர்க்கிளவி (எழுத். 331) என்னுஞ் சூத்திரத்தான் உணர்க. இரண்டு வருவனவுங் காண்க, (7) 110. நிறுத்த சொல்லுங் குறித்துவரு கிளவியு மடையொடு தோன்றினும் புணர்நிலைக் குரிய. இது, நிலைமொழி அடையடுத்தும் வருமொழி அடை யடுத்தும் அவ்விருமொழியும் அடையடுத்தும் புணருமென எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது. இதன் பொருள்: நிறுத்தசொல்லுங் குறித்துவருகிளவியும் - நிலை மொழியாக நிறுத்தின சொல்லும் அதனைக் குறித்து வருஞ் சொல்லும், அடையொடு தோன்றினும் புணர்நிலைக்கு உரிய - தாமே புணராது ஒரோவொரு சொல் அடையடுத்து வரினும் இரண்டும் அடையடுத்து வரினும் புணர் நிலைமைக்கு உரிய என்றவாறு. 13அடையாவன - உம்மைத்தொகையும் இருபெயரொட்டுப் பண்புத் தொகையுமாம். உதாரணம்: பதினாயிரத்தொன்று, ஆயிரத்தொருபஃது, பதினாயிரத் திருபஃது என வரும். இவ்வடைகள் ஒரு சொல்லேயாம். 14வேற்றுமைத் தொகையும் உவமத் தொகையும் முடியப் பண்புத் தொகையும் வினைத் தொகையும் பிளந்து முடியாமையின் ஒரு சொல்லேயாம். அன் மொழித்தொகையுந் தனக்கு வேறோர் முடிபின்மை யின் ஒரு சொல்லேயாம். இத்தொகைச் சொற்களெல்லாம் அடையாய் வருங்காலத்து ஒருசொல்லாய் வருமென்று உணர்க. உண்டசாத்தன் வந்தான், உண்டுவந்தான் சாத்தன் என்பனவும் ஒரு சொல்லே யாம். (8) 111. 15மருவின் றொகுதி மயங்கியன் மொழியு முரியவை யுளவே புணர்நிலைச் சுட்டே. இது, மரூஉச் சொற்களும் புணர்ச்சிபெறு மென்பதூஉம், நிறுத்த சொல்லுங் குறித்துவரு கிளவியுமாய்ப் பொருளியை பில்லனவும் புணர்ச்சி பெற்றாற்போல நிற்குமென்பதூஉம் உணர்த்துகின்றது. இதன் பொருள்: மரு மொழியும் - இருவகையாகி மருவிய சொற்களும், இன்றொகுதி மயங்கியன் மொழியும் - செவிக்கினி தாகச் சொற்றிர ளிடத்து நிறுத்த சொல்லுங் குறித்துவரு கிளவியுமாய் ஒட்டினாற் போல நின்று பொருளுணர்த்தாது பிரிந்து பின்னர்ச் சென்று ஒட்டிப் பொருளுணர்த்த மயங்குதல் இயன்ற சொற்களும், புணர் நிலைச் சுட்டு உரியவை உள - புணரும் நிலைமைக் கருத்தின்கண் உரியன உள என்றவாறு. மொழியுமென்பதனை மரு என்பதனோடுங் கூட்டுக. இன் றொகுதி என்றார், பாவென்னும் உறுப்பு நிகழப் பொருளொட்டா மற் சான்றோர் சொற்களைச் சேர்த்தலின். உதாரணம்: முன்றில், மீகண் இவை இலக்கணத்தொடு பொருந்திய மரு. இலக்கணம் அல்லா மரு வழங்கியன் மருங்கின் மருவொடு திரிநவும் (எழுத். 483) என்புழிக் காட்டுதும். இனி, இரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பிற் பரலவ லடைய விரலை தெறிப்ப என்புழி மருப்பினிரலை யென்று ஒட்டி இரண்டாவதன் தொகை யாய்ப் பொருடந்து புள்ளி யீற்றுமுன் னுயிர்தனித் தியலா (எழுத். 138) என்று உயிரேறி முடிந்து மயங்கிநின்றது. ஆயின் மருப்பிற்பர லென்று மெய் பிறிதாய் ஒட்டி நின்றவா றென்னை யெனின், மருப்பினை யுடைய பரலென வேற்றுமைத்தொகைப் பொருள் உணர்த்தாமையின், அஃது அச்செய்யுட்கு இன்னோசை நிகழ்தற்குப் பகரத்தின் முன்னர் நின்ற னகரம் நகரமாய்த் திரிந்து நின்ற துணையேயாய்ப் புணர்ச்சிப் பயனின்றி நின்றது. இங்ஙனம் புணர்ச்சி யெய்தினாற்போல, மாட்டிலக் கணத்தின்கண்ணும் மொழி மாற்றின்கண்ணும் நிற்றல் சொற்கு இயல்பென்றற்கு அன்றே ஆசிரியர் இன்றொகுதி யென்ற தென்று உணர்க. கருங்கா லோமைக் காண்பின் பெருஞ்சினை (அகம். 3) என்புழி ஓமைச்சினை யென்று ஒட்டி ஓமையினது சினையெனப் பொருள் தருகின்றது, இன்னோசை தருதற்குக் ககரவொற்று மிக்குக் காண்பி னென்பதனோடும் ஒட்டினாற் போல நின்றது. தெய்வ மால்வரைத் திருமுனி யருளால் (சிலப். 3 : 1) என்புழித் தெய்வ வரையென்று ஒட்டித் தெய்வத் தன்மையுடைய வரை யெனப் பொருள் தருகின்றது, இன்னோசை தருதற்கு மாலென்பதனோடும் ஒட்டினாற்போலக் குறைந்து நின்றது. மூன்று திரிபும் வந்தவாறு காண்க. இனி எச்சத்தின்கண்ணும், பொன்னோடைப் புகரணிநுதற் றுன்னருந்திறற் கமழ்கடா அத்து எயிறுபடை யாக வெயிற்கத விடாஅக் கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கிற் பெருங்கை யானை யிரும்பிடர்த் தலையிருந்து மருந்தில் கூற்றத் தருந்தொழில் சாயா (புறம். 3) என மாட்டாய் ஒட்டிநின்றது, கயிறு பிணிக்கொண்ட என்பத னோடும் ஒட்டினாற்போல நின்று ஒற்றடுத்தது, இன்னோசை பெறு தற்கு. பிற சான்றோர் செய்யுட்கண் இவ்வாறும் பிறவாறும் புணர்ச்சியில்வழிப் புணர்ச்சி பெற்றாற்போல நிற்பன எல்லா வற்றிற்கும் இதுவே ஓத்தாகக் கொள்க. (9) 112. வேற்றுமை குறித்த புணர்மொழி நிலையும் வேற்றுமை யல்வழிப் புணர்மொழி நிலையு மெழுத்தே சாரியை யாயிரு பண்பி னொழுக்கல் வலிய புணருங் காலை. இது மூவகைத் திரிபினுள் மிக்குப்புணரும் புணர்ச்சி இரு வகைய என்கின்றது. இதன் பொருள்: புணருங்காலை - நால்வகைப் புணர்ச்சியுள் மிக்க புணர்ச்சி புணருங் காலத்து, வேற்றுமை குறித்த புணர்மொழி நிலையும் - வேற்றுமைப் பொருண்மையினைக் குறித்த புணர் மொழியினது தன்மையும், வேற்றுமை அல்வழிப் புணர்மொழி நிலையும் - வேற்றுமையல்லாத அல்வழியிடத்துப் புணரும் மொழியினது தன்மையும், எழுத்தே சாரியை ஆயிரு பண்பின் ஒழுக்கல் வலிய - எழுத்து மிகுதலுஞ் சாரியை மிகுதலுமாகிய அவ்விரண்டு குணத்தினானுஞ் செல்லுதலைத் தமக்கு வலியாக வுடைய என்றவாறு. எனவே, ஏனைப் புணர்ச்சிகளுக்கு இத்துணை வேறுபாடு இன்றென உணர்க. உதாரணம்: விளங்கோடு: இஃது எழுத்துப் பெற்றது. மகவின்கை: இது சாரியை பெற்றது. இனி அல்வழிக்கண் விளக் குறிது: இஃது எழுத்துப் பெற்றது. பனையின்குறை: இது சாரியை பெற்றது. இதற்குப் பனை குறைந்ததென்பது பொருளாம். இஃது அளவுப்பெயர். ஒழுக்கல் வலிய வென்றதனான், இக்கூறிய இரண்டும் எழுத்துஞ் சாரியை யும் உடன்பெறுதலுங் கொள்க. அவற்றுக் கோடென்பது வேற்றுமைக்கண் இரண்டும் பெற்றது. கலத்துக்குறை யென்பது அல்வழிக்கண் இரண்டும் பெற்றது. இதற்குக் கலங்குறைந்ததுதென்பது பொருளாம். இயல்பு கணத்துக் கண் இவ்விரண்டும் உடன்பெறுதலின்று. அல்வழி முற்கூறாதது வேற்றுமை யல்லாதது அல்வழியென வேண்டுதலின். எழுத்துப்பேறு 16யாப்புடைமையானும் எழுத்தினாற் சாரியை யாதலானும் எழுத்து முற் கூறினார். வேற்றுமை மேலைச் சூத்திரத்தே கூறுகின்றார். அல்வழியாவன - அவ்வுருபுகள் தொக்கும் விரிந்தும் நில்லாது புணர்வன. அவை எழுவாய்வேற்றுமை 17ஆறு பயனிலையோடும் புணர்ந்த புணர்ச்சியும், விளிவேற்றுமை தன் பொருளோடு புணர்ந்த புணர்ச்சியும், முற்று பெயரோடும் வினையோடும் புணர்ந்த புணர்ச்சியும், பெயரெச்சமும் வினையெச்சமும் பெயரோடும் வினையோடும் புணர்ந்த புணர்ச்சியும், உவமத் தொகையும், உம்மைத்தொகையும், இருபெயரொட்டுப் பண்புத்தொகை யும், இடைச்சொல்லும் உரிச்சொல்லும் பெயரோடும் வினையோடும் புணர்ந்த புணர்ச்சியும், அன்மொழித்தொகை பொருளோடு புணர்ந்த புணர்ச்சியும், பண்புத்தொகையும் வினைத் தொகையும் விரிந்து நின்றவழிப் புணர்ந்த புணர்ச்சியுமென உணர்க. (10) 113. ஐஒடு குஇன் அதுகண் ணென்னு மவ்வா றென்ப வேற்றுமை யுருபே. இது, மேல் வேற்றுமை யெனப்பட்ட அவற்றின் பெயரும் முறையுந் தொகையும் உணர்த்துகின்றது. இதன் பொருள்: வேற்றுமையுருபு - முற்கூறிய வேற்றுமைச் சொற் களை, ஐ ஒடு கு இன் அது கண் என்னும் அவ்வாறென்ப - ஐ ஒடு கு இன் அது கண் என்று சொல்லப்படும் அவ்வாறு உருபுமென்று சொல்வர் ஆசிரியர் என்றவாறு. 18மேற் சொல்லதிகாரத்து எழுவாயையும் விளியையுங் கூட்டி வேற்றுமை எட்டென்பாராலெனின், ஐ முதலிய வேற்றுமை யாறுந் தொக்கும் விரிந்தும் பெரும்பான்மையும் புலப்பட்டு நின்று பெயர்ப் பொருளைச் செயப்படுபொருள் முதலியனவாக வேறுபாடு செய்து புணர்ச்சி யெய்துவிக்கு மென்றற்கு ஈண்டு ஆறென்றார். ஆண்டு 19எழுவாயும் விளியுஞ் செயப்படுபொருள் முதலியவற்றினின்று தம்மை வேறுபடுத்துப் பொருள் மாத்திரம் உணர்த்திநின்றும் விளியாய் எதிர்முக மாக்கி நின்றும் இங்ஙனஞ் சிறுபான்மையாய்ப் புலப்பட நில்லா வேறுபாடு உடையவேனும், அவையும் ஒருவாற் றான் வேற்றுமையாயின வென்றற்கு ஆண்டு எட்டு என்றாரென உணர்க. (11) 114. வல்லெழுத்து முதலிய வேற்றுமை யுருபிற் கொல்வழி யொற்றிடை மிகுதல் வேண்டும். இது, நான்காவதற்கும் ஏழாவதற்கும் உருபியலை நோக்கிய தொரு கருவி கூறுகின்றது. இதன் பொருள்:வல்லெழுத்து முதலிய வேற்றுமை யுருபிற்கு வல்லெழுத்து அடியாய் நின்ற நான்காவதற்கும் ஏழாவதற்கும், ஒல்வழி ஒற்று இடை மிகுதல் வேண்டும் - பொருந்தியவழி வல்லொற்றாயினும் மெல்லொற்றாயினும் இடைக்கண் மிக்குப் புணர்தலை விரும்பும் ஆசிரியன் என்றவாறு. வரையாது ஒற்றெனவே, வல்லொற்றும் மெல்லொற்றும் பெற்றாம். உதாரணம்: மணிக்கு மணிக்கண், தீக்கு தீக்கண், மனைக்கு மனைக் கண் எனவும், வேய்க்கு வேய்க்கண், ஊர்க்கு, ஊர்க்கண், பூழ்க்கு பூழ்க்கண் எனவும், உயிரீறு மூன்றினும் புள்ளியீறு மூன்றினும் பெரும்பான்மை வல்லொற்று மிக்கு வரும். தங்கண் நங்கண் நுங்கண் எங்கண் என மெல் லொற்று மிக்கது. இவற்றிற்கு நிலைமொழி மகரக்கேடு 20உருபியலிற் கூறுப. 21ஆங்கண் ஈங்கண் ஊங்கண் என்பன சுட்டெழுத்து நீண்டு நின்றன. இவற்றிற்கு ஒற்றுக்கேடு கூறுதற்கு ஒற்றின்று. இனி, நான்கனுருபிற்கு மெல்லொற்று மிகாதென்று உணர்க. இனி, ஒல்வழி யென்பதனான் ஏழாமுருபின்கண் நம்பிகண் என இகர ஈற்றின்கண்ணும், நங்கைகண் என ஐகார ஈற்றின் கண்ணுந் தாய்கண் என யகர ஈற்றின்கண்ணும், அரசர்கண் என ரகர ஈற்றின்கண்ணும், ஒற்று மிகாமை கொள்க. இனி, மெய்பிறிதாதலை முன்னே கூறாது மிகுதலை முற் கூறிய அதனானே, பொற்கு பொற்கண், வேற்கு வேற்கண், வாட்கு வாட்கண் எனத் திரிந்து முடிவனவுங் கொள்க. இதனானே, அவன் கண் அவள்கண் என உயர்திணைப் பெயர்க்கண் ஏழனுருபு இயல் பாய் வருதலுங் கொள்க. இவற்றிற்குக் குன்றிய புணர்ச்சி வருமேனுங் கொள்க. கொற்றிக்கு கொற்றிகண், கோதைக்கு கோதைகண் என விரவுப்பெயர்க்கும் இதனானே கொள்க. (12) 115. ஆற னுருபி னகரக் கிளவி யீறா ககரமுனைக் கெடுதல் வேண்டும். இஃது ஆறாவதற்குத் தொகைமரபை நோக்கியதொரு கருவி கூறுகின்றது. இதன் பொருள்:ஆறனுருபின் அகரக்கிளவி - அதுவென் னும் ஆறனுரு பின்கணின்ற அகரமாகிய எழுத்து, ஈறாகு அகரமுனைக் கெடுதல் வேண்டும் - நெடுமுதல் குறுகும் மொழிகட்கு ஈறாகு புள்ளி யகரமொடு நிலையும் (எழுத். 161) என விதித்ததனால் உளதாகிய அகரத்தின் முன்னர்த் தான் கெடுதலை விரும்பும் ஆசிரியன் என்றவாறு. தமது, நமது, எமது, நுமது, தனது, எனது, நினது எனவரும். இது நிலைமொழிக்கு ஓர் அகரம் பெறுமென விதியாது உருபு அகரம் ஏறி முடியுமென விதித்தால் வருங் குற்றம் உண்டோ வெனின், 22நினவ கூறுவ லெனவ கேண்மதி (புறம். 35) என்றாற் போல ஆறாவதற்கு உரிய அகர உருபின் முன்னரும் ஓர் அகர எழுத்துப்பேறு நிலை மொழிக்கண் வருதலுளதாகக் கருதினா ராதலின், ஆறனுருபிற்கும் நான்கனுருபிற்கும் பொதுவாக நிலை மொழிக்கண் அகரப்பேறு விதித்து, அதுவென்னும், ஒருமையுருபு வந்தால் ஆண்டுப் பெற்று நின்ற அகரத்தின் முன்னர் அது வென்பதன்கண் அகரங் கெடுக வென்று ஈண்டுக் கூறினா ராதலின் அதற்குக் குற்றம் உண்டென்று உணர்க. (13) 116. வேற்றுமை வழிய பெயர்புணர் நிலையே. இது, வேற்றுமை பெயர்க்கண் நிற்குமாறு கூறுகின்றது. இதன் பொருள்:வேற்றுமை பெயர்வழிய - வேற்றுமைகள் பெயரின் பின்னிடத்தனவாம், புணர்நிலை - அவற்றொடு புணரும் நிலைமைக் கண் என்றவாறு. உதாரணம்: சாத்தனை, சாத்தனொடு, சாத்தற்கு, சாத்தனின், சாத்தனது, சாத்தன்கண் என வரும். மற்று இது கூறியமுறையின் (சொல். 69) என்னும் வேற்றுமை யோத்திற் சூத்திரத்தாற் பெறுது மெனின், பெயரொடு பெயரைப் புணர்த்தல் முதலிய நால்வகைப் புணர்ச்சியினை யும் வேற்றுமை அல்வழி என இரண்டாக அடக்குதலின், தொழிற்பின்னும் உருபு வருமென எய்தியதனை விலக்கு தற்கு ஈண்டுக் கூறினாரென்க. ஆயின் இவ்விலக்குதல் வினையியல் முதற் சூத்திரத்தாற் பெறுது மெனின், அது 23முதனிலையைக் கூறிற்றென்பது ஆண்டு உணர்க. (14) 117. உயர்திணைப் பெயரே அஃறிணைப் பெயரென் றாயிரண் டென்ப பெயர்நிலைச் சுட்டே. இது, முற்கூறிய பெயர்கட்குப் பெயரும் முறையுந் தொகையுங் கூறுகின்றது. இதன் பொருள்: சுட்டு நிலைப்பெயர் - பொருளை ஒருவர் கருதுதற்குக் காரணமான நிலைமையையுடைய பெயர்களை, உயர்திணைப் பெயரே அஃறிணைப் பெயரென்று ஆயிரண் டென்ப - உயர் திணைப் பொருளை ஒருவன் கருதுதற்குக் காரணமான பெயரும், அஃறிணைப் பொருளை ஒருவன் கருதுதற்குக் காரணமான பெயரும் என்னும் அவ்விரண்டென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. பெயரியலுள், அவன் இவன் உவன் என்பன முதலாக உயர் திணைப் பெயரும், அது இது உது என்பன முதலாக அஃறிணைப் பெயரும் ஆமாறு அவற்றிற்கு இலக்கணங் கூறுகின்றார், ஈண்டுக் குறியிட்டாளுதல் மாத்திரையே கூறினாரென்று உணர்க. இனிக் கொற்றன் கொற்றி என்றாற்போலும் விரவுப் பெயருங், கொற்றன்குறியன் கொற்றிகுறியள் கொற்றன் குளம்பு கொற்றி குறிது எனப் பின்வருவனவற்றாற் றிணைதெரிதலின், இருதிணைப் பெயரின்கண் அடங்கும். 24கொற்றன்செவி கொற்றிசெவி என்பனவும் பின்னர் வருகின்ற வினைகளாற் திணை விளங்கி அடங்குமாறு உணர்க. இனி, அஃறிணை விரவுப்பெய ரியல்புமா ருளவே (எழு.155) என்றாற் போலப் பிறாண்டும் ஓதுதல்பற்றி நிலையென்றதனான், விரவுப் பெயர் கோடலும் ஒன்று. (15) 118. அவற்றுவழி மருங்கிற் சாரியை வருமே. இது, சாரியை வருமிடங் கூறுகின்றது. இதன் பொருள்: அவற்றுவழி மருங்கின் - அச்சொல்லப் பட்ட இரு வகைப் பெயர்களின் பின்னாகிய இடத்தே, சாரியை வரும் - சாரியைச் சொற்கள் வரும் என்றவாறு. உதாரணம்: ஆடூஉவின்கை, மகடூஉவின்கை, பலவற்றுக் கோடு எனப் 25புணரியனிலையிடைப் பொருணிலைக்கு உதவி வந்தன. சாரியை யென்றதன் பொருள், வேறாகி நின்ற இருமொழியுந் தம்மிற் சார்தற் பொருட்டு இயைந்து நின்றது என்றவாறு. (16) 119. அவைதாம் இன்னே வற்றே யத்தே யம்மே யொன்னே யானே யக்கே யிக்கே யன்னென் கிளவி யுளப்படப் பிறவு மன்ன வென்ப சாரியை மொழியே. இஃது - அச்சாரியைகட்குப் பெயரும் முறையும் உணர்த்து கின்றது. இதன் பொருள்: அவைதாம் - முன்னர்ச் சாரியை யெனப்பட்ட அவை தாம், இன்னே வற்றே அத்தே அம்மே ஒன்னே ஆனே அக்கே இக்கே அன்னென் கிளவி உளப்பட அன்ன என்ப - இன்னும் வற்றும் அத்தும் அம்மும் ஒன்னும் ஆனும் அக்கும் இக்கும் அன்னென்னுஞ் சொல்லோடு கூட ஒன்பதாகிய அத்தன்மையுடையனவும், பிறவுஞ் சாரியை மொழி என்ப - அவை யொழிந்தனவுஞ் சாரியைச் சொல்லாமென்பர் ஆசிரியர் என்றவாறு. பிறவாவன: தம், நம், நும், உம், ஞான்று, கெழு, ஏ, ஐ என்பன வாம். இவற்றுள் ஞான்று ஒழிந்தன எடுத்தோதுவர் ஆசிரியர். எடுத்த நறவின் 26குலையலங் காந்தள் (கலி. 40) இது வினைத் தொகை; சாரியை யன்று. இன் சாரியை வழக்குப்பயிற்சியும் பலகால் எடுத்தோதப் படுதலும் 27பொதுவகையான் ஓதியவழித் தானே சேறலுமாகிய சிறப்பு நோக்கி முன் வைத்தார். வற்றும் அத்தும் இன் போல முதல் திரியுமாகலானுஞ் செய்கை யொப்புமையானும் அதன் பின் வைத்தார். அம் ஈறு திரியு மாதலின் திரிபு பற்றி அதன்பின் வைத்தார். ஒன் ஈறு திரியு மேனும் வழக்குப்பயிற்சி யின்றி நான்கா முருபின்கண் திரிதலின் அதன்பின் வைத்தார். ஆன் பொருட் புணர்ச்சிக்கும் உருபு புணர்ச்சிக்கும் வரு மென்று அதன் பின் வைத்தார். அக்கு ஈறு திரியுமேனும் உருபு புணர்ச்சிக் கண் வாரா மையின் அதன்பின் வைத்தார். இக்கு முதல் திரியுமேனுஞ் சிறுபான்மைபற்றி அதன்பின் வைத்தார். அன் இன் போலச் சிறத்தலிற் பின் வைத்தார். ஆனுருபிற்கும் ஆன்சாரியைக்கும், இன்னுருபிற்கும் இன்சாரி யைக்கும் வேற்றுமை யாதெனின், அவை சாரியையான இடத்து யாதானும் ஓர் உருபேற்று முடியும்; உருபாயின இடத்து வேறோர் உருபினை ஏலாவென்று உணர்க. இனி மகத்துக்கை என்புழித் தகரவொற்றுந் தகர வுகரமும் வருமென்று கோடு மெனின், இருளத்துக் கொண்டானென்றால் அத்து எனவே வேண்டுதலின் ஆண்டும் அத்துநின்றே கெட்ட தென்று கோடும். அக்கு இக்கு என்பனவும் பிரித்துக் கூட்டக் கிடக்கும். தாழக்கோ லென அக்குப் பெற்று நிற்றலானும், 28ஆடிக்கு என்புழிக் குகரம் நான்கனுருபாகாமை யானும் இவை சாரியை யாமாறு உணர்க. (17) 120. அவற்றுள் இன்னி னிகர மாவி னிறுதி முன்னர்க் கெடுத லுரித்து மாகும். இது, முற்கூறியவற்றுள் இன்சாரியை முதல் திரியுமாறு கூறுகின்றது. இதன் பொருள்: அவற்றுள் - முற்கூறிய சாரியைகளுள், இன்னின் இகரம்-இன்சாரியையது இகரம், ஆவின் இறுதி முன்னர் - ஆ என்னும் ஓரெழுத் தொருமொழி முன்னர், கெடுதல் உரித்துமாகும்-கெட்டுமுடியவும்பெறும்என்றவாறு. ‘உரித்துமாகும்’ என்றதனாற் கெடாது முடியவும் பெறும் என்றவாறு. இஃது ஒப்பக்கூறல் என்னும் உத்தி. உதாரணம்: ஆனை ஆவினை, ஆனொடு ஆவினொடு, ஆற்கு ஆவிற்கு, ஆனின் ஆவினின், ஆனது ஆவினது, ஆன் கண் ஆவின்கண் என வரும். இனி, முன்னர் என்றதனானே, 29மாவிற்கும் இவ்வாறே கொள்க. மானை மாவினை, மானொடு மாவினொடு, மாற்கு மா விற்கு என ஒட்டுக. ஆகார ஈறென்னறாது ஆவினிறுதியென்று ஓதினமையின் மா இலெசினாற் கொள்ளப்பட்டது. இனி, ஆன்கோடு ஆவின்கோடு, மான்கோடு மாவின்கோடு என உருபிற்குச் சென்றசாரியை பொருட்கட் சென்றுழியுங்கொள்f. (18) 121. அளவாகு மொழிமுத னிலைஇய வுயிர்மிசை னஃகான் றஃகா னாகிய நிலைத்தே. இஃது - அவ்வின் சாரியை ஈறுதிரியுமாறு கூறுகின்றது. இதன் பொருள்: அளவாகும் மொழி - அளவுப் பெயராய்ப் பின்னிற்கும் மொழிக்கு, முதல் நிலைஇய உயிர்மிசை னஃகான் - முன்னர் நின்ற எண்ணுப் பெயர்களின் ஈற்று நின்ற குற்றுகரத்தின் மேல் வந்த இன்சாரியையது னகரம், றஃகானாகிய நிலைத்து - றகரமாய்த் திரியும் நிலைமையை யுடைத்து என்றவாறு. உதாரணம்: பதிற்றகல், பதிற்றுழக்கு என வரும். இவற்றைப் பத்தென நிறுத்தி நிறையுமளவும் (எழு. 436) என்னுஞ் சூத்திரத்தால் இன்சாரியை கொடுத்துக், குற்றிய லுகரம் மெய்யோடுங் கெடுமே (எழு. 433) என்றதனாற் குற்றுகரம் மெய் யொடுங் கெடுத்து, 30வேண்டுஞ் செய்க செய்து முற்றவின்வரூஉம்’ (எழு. 433) என்பதனான் ஒற்றிரட்டித்து முடிக்க. நிலைஇய என்றதனாற், 31பிறவழியும் இன்னின் னகரம் றகர மாதல் கொள்க. பதிற்றெழுத்து, பதிற்றடுக்கு, ஒன்பதிற் றெழுத்து, பதிற்றொன்று, பதிற்றிரண்டு, பதிற்றொன்பது என எல்லாவற்றோடும் ஒட்டிக்கொள்க. அச்சூத்திரத்திற் குறையாதாகும் (எழு. 436) என்றதனாற் பொருட் பெயர்க்கும் எண்ணுப் பெயர்க்கும் இன் கொடுக்க. (19) 122. வஃகான் மெய்கெடச் சுட்டுமுத லைம்மு னஃகா னிற்ற லாகிய பண்பே. இது, வற்று முதல் திரியுமாறு கூறுகின்றது. இதன் பொருள்: சுட்டுமுதல் ஐம்முன் - சுட்டெழுத்தினை முதலாகவுடைய ஐகார ஈற்றுச் சொன்முன் வற்று வருங்காலை, வஃகான் மெய் கெட அஃகான்நிற்றலாகிaபண்ò –அவ்வற்றுச் சாரியையினது வகரமாகிய ஒற்றுக்கெட் ஆண்டு ஏறிய அகரம் நிற்றல் அதற்கு உளதாகிய குணம் என்றவாறு. உதாரணம்: அவையற்றை, இவையற்றை, உவையற்றை என வரும். இன்னும் இவற்றை, அவை இவை உவை என நிறுத்திச் சுட்டு முதலாகிய வையெ னிறுதி (எழுத். 177) என்றதனான் வற்றும் உருபுங் கொடுத்து வேண்டுஞ் செய்கை செய்க. இவ்வாறே எல்லா உருபிற்கும் ஒட்டுக. அவையற்றுக் கோடு என உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்ற வழியுங் கொள்க. ஆகிய பண்பு என்றதனானே, 32எவனென்பது படுத்த லோசையாற் பெயராயவழி எவன் என நிறுத்தி, வற்றும் உருபுங் கொடுத்து, வற்றுமிசை யொற்றென்று னகரங் கெடுத்து, அகரவுயிர் முன்னர் வற்றின் வகரங் கெடுமெனக் கெடுத்து, எவற்றை எவற்றொடு என முடிக்க. (20) 123. னஃகான் றஃகா னான்க னுருபிற்கு. இஃது இன் ஒன் ஆன் அன்னென்னும் னகர ஈறு நான்குந் - திரியுமாறு கூறுகின்றது. இதன் பொருள்: னஃகான் நான்கனுருபிற்கு றஃகான் - னகார ஈற்று நான்கு சாரியையின் னகரமும் நான்காமுருபிற்கு றகாரமாய்த் திரியும் என்றவாறு. உதாரணம்: விளவிற்கு, கோஒற்கு, ஒருபாற்கு, அதற்கு என வரும். இதனை அளவாகு மொழிமுதல் (எழு. 121) என்பதன் பின் வையாது ஈண்டு வைத்தது, னகர ஈறுகளெல்லாம் உடன் திரியு மென்றற்கு. ஆண்டு வைப்பின் இன் சாரியையே திரியுமென்பது படும். ஒன்று முதலாகப் பத்தூர்ந்து வரூஉ, மெல்லா வெண்ணும் (எழு. 199) என்பதனான், ஒருபாற்கு என்பதனை முடிக்க.(21) 124. ஆனி னகரமு மதனோ ரற்றே நாண்முன் வரூஉம் வன்முதற் றொழிற்கே. இஃது - ஆனின் ஈறு பொருட்புணர்ச்சிக்கண் திரியுமென் கின்றது. இதன் பொருள்: நாள்முன் வரூஉம் வன்முதற் தொழிற்கு - நாட்பெயர் முன்னர் வரும் வல்லெழுத்தை முதலாக உடைய தொழிற்சொற்கு இடையே வரும், ஆனின் னகரமும் அதனோ ரற்று - ஆன் சாரியை யின் னகரமும் நான்க னுருபின்கண் வரும் ஆன்சாரியை போல றகரமாய்த் திரியும் என்றவாறு. உதாரணம்: பரணியாற் கொண்டான், சென்றான், தந்தான், போயினான் என வரும். நாண்முற் றோன்றுந் தொழினிலைக் கிளவிக்கு (எழு. 247) என்றதனான் ஆன் சாரியை கொடுத்துச் செய்கை செய்க. இனி, உம்மையை இறந்தது தழீஇயதாக்கி, நாளல்லவற்றுமுன் வரும் வன்முதற்றொழிற்கண் இன்னின் னகரமும் அதனோடு ஒக்குமெனப் பொருளுரைத்துப், பனியிற்கொண்டான், வளியிற் கொண்டான் என இன்னின் னகரமும் றகரமாதல் கொள்க. இனி, 33ஞாபகத்தால் தொழிற்கண் இன்னின் னகரந் திரியு மெனவே, பெயர்க்கண் இன்னின் னகரந் திரிதலுந் திரியாமையுங் கொள்க. குறும்பிற்கொற்றன், பறம்பிற்பாரி எனத் திரிந்து வந்தன. குருகின்கால், எருத்தின்புறம் எனத் திரியாது வந்தன. (22) 125. அத்தி னகர மகரமுனை யில்லை. இஃது - அத்து முதல் திரியுமாறு கூறுகின்றது. இதன் பொருள்:அத்தின் அகரம் - அத்துச் சாரியையின் அகரம், அகர முனை இல்லை - அகர ஈற்றுச் சொன் முன்னர் இல்லையாம் என்றவாறு. அத்தவண் வரினும் வரைநிலை யின்றே (எழு. 219) என்பதனான், மகப்பெயர் அத்துப்பெற்று நின்றது, மகத்துக்கை யென அகரங்கெட்டு நின்றது. விளவத்துக்கணென்புழிக் கெடாது நிற்றல் அத்தேவற்றே (எழுத். 133) என்பதனுள் தெற்றென் றற்றே என்பதனாற் கூறுக. (23) 126. இக்கி னிகர மிகரமுனை யற்றே. இஃது - இக்கு முதல் திரியுமாறு கூறுகின்றது. இதன் பொருள்: இக்கின் இகரம் - இக்குச் சாரியையினது இகரம். இகரமுனை அற்று - இகர ஈற்றுச் சொன் முன்னர் முற்கூறிய அத்துப் போலக் கெடும் என்றவாறு. திங்கள் முன்வரின் (எழு. 248) என்பதனாற் பெற்ற இக்கு, ஆடிக்குக் கொண்டான், சென்றான், தந்தான், போயினான் என இகரங்கெட்டு நின்றது. இஃது இடப்பொருட்டு. (24) 127. ஐயின் முன்னரு மவ்விய னிலையும். இதுவும் அது. இதன் பொருள்: ஐயின் முன்னரும் அவ்வியல் நிலையும் - இக்கின் இகரம் இகர ஈற்றுச்சொன் முன்னரன்றி ஐகார ஈற்றுச் சொன் முன்னரும் மேற்கூறிய கெடுதலியல்பிலே நிற்கும் என்றவாறு. திங்களு நாளு முந்துகிளந் தன்ன (எழுத். 286) என்பதனாற், சித்திரைக்குக் கொண்டான் என்புழிப் பெற்ற இக்கு ஐகாரத்தின் முன்னர்க் கெட்டவாறு காண்க. (25) 128. எப்பெயர் முன்னரும் வல்லெழுத்து வருவழி 34யக்கி னிறுதிமெய்ம் மிசையொடுங் கெடுமே குற்றிய லுகர முற்றத் தோன்றாது. இஃது அக்கு முதல் ஒழிய ஏனைய கெடுமாறு கூறுகின்றது. இதன் பொருள்: எப்பெயர் முன்னரும் - எவ்வகைப்பட்ட பெயர்ச்சொன் முன்னரும், வல்லெழுத்து வருவழி - வல்லெழுத்து வரு மொழியாய் வருமிடத்து, அக்கின் இறுதிக் குற்றியலுகரம் முற்றத் தோன்றாது - இடை நின்ற அக்குச் சாரியையின் இறுதி நின்ற குற்றியலுகரம் முடியத் தோன்றாது, மெய்ம்மிசையொடுங் கெடும் - அக்குற்றுகரம் ஏறி நின்ற வல்லொற்றுத் தனக்குமேல் நின்ற வல்லொற்றோடுங் கெடும் என்றவாறு. ஒற்றுநிலை திரியா தக்கொடு வரூஉம் (எழு. 418) என்றத னான், அக்குப்பெற்ற 35குன்றக்கூகை மன்றப்பெண்ணை என்பன வும், வேற்றுமை யாயி னேனை யிரண்டும் (எழு. 329) என்பத னான், அக்குப்பெற்ற ஈமக்குடம் கம்மக்குடம் என்பனவும், தமிழென் கிளவியும் (எழு. 385) என்பதனான், அக்குப் பெற்ற தமிழக் கூத்து என்பதுவும், அக்கு ஈறும் ஈற்றயலும் கெட்டவாறு காண்க. இங் ஙனம் வருதலின் எப்பெயர் என்றார். முற்ற வென்பதனான், வன்கணமன்றி ஏனையவற்றிற்கும் இவ்விதி கொள்க. தமிழ்நூல், தமிழயாழ், தமிழவரையர் என வரும். இன்னும் இதனானே, தமக்கேற்ற இயைபு வல்லெழுத்துக் கொடுத்து முடித்துக் கொள்க. அன்றிக் கேடோதிய ககரவொற்று நிற்குமெனின், சகரந் தகரம் பகரம் வந்தவற்றிற்குக் ககர வொற்றா காமை உணர்க. (26) 129. அம்மி னிறுதி கசதக் காலைத் தன்மெய் திரிந்து ஙஞந வாகும். இஃது அம் ஈறு திரியுமாறு கூறுகின்றது. இதன் பொருள்: அம்மின் இறுதி - அம்முச் சாரியையின் இறுதியாகிய மகரவொற்று, கசதக் காலை - கசதக்கள் வருமொழியாய் வருங் காலத்து, தன்மெய் திரிந்து ஙஞந ஆகும் - தன் வடிவு திரிந்து ஙஞநக்களாம் என்றவாறு. உதாரணம்: புளியங்கோடு, செதிள், தோல் எனவரும். இது புளிமரக் கிளவிக்கு (எழு. 244) என்பதனான் அம்முப் பெற்றது. கசதக்காலைத் திரியுமெனவே பகரத்தின்கண் திரிபின்றா யிற்று. மெய்திரிந்தென்னாது தன்மெய் என்றதனான், அம்மின் மகரமேயன்றித் தம் நம் நும் உம் என்னுஞ் சாரியை மகரமுந் திரிதல் கொள்க. எல்லார் தங்கையும், எல்லா நங்கையும், எல்லீர் நுங்கையும், வானவரி வில்லுந் திங்களும் என வரும். (துறைகேழூரன், வளங்கேழூரன் எனக்கெழுவென்னுஞ் சாரியையது உகரக்கேடும்,எகரநீட்சியுஞ்செய்யுண்முடிபு என்று கொள்க.) (27) 130. மென்மையு மிடைமையும் வரூஉம் காலை யின்மை வேண்டு மென்மனார் புலவர். இஃது - அம்மீறு இயல்புகணத்து முன்னர்க் கெடு மென்கின்றது. இதன் பொருள்: மென்மையும் இடைமையும் வரூஉங்காலை - மென் கணமும் இடைக்கணமும் வருமொழியாய் வருங்காலத்து, 36இன்மை வேண்டும் என்மனார் புலவர் - அம்முச் சாரியை இறுதி மகரமின்றி முடிதலை வேண்டுமென்று கூறுவர் புலவர் என்றவாறு. உதாரணம்: புளியஞெரி நுனி முரி யாழ் வட்டு என வரும். உரையிற்கோடலென்பதனாற், புளியவிலையென உயிர் வருவழி ஈறு கெடுதலும், புளியிலையென அம்மு முழுவதுங் கெடுதலுங் கொள்க. புளியவிலை யென்றது 37ஒட்டுதற் கொழுகிய வழக்கு (எழுத். 132) அன்று. மென் கணமும் இடைக் கணமும் உயிர்க் கணமுந் தம்முளொக்கு மேனும் அம்மு முழுவதுங் கெட்டு வருதலும் உடைமையின் உயிரை எடுத்தோதாராயினர். புளிங்காய் என்பது மரூஉ முடிபு. (28) 131. இன்னென வரூஉம் வேற்றுமை யுருபிற் கின்னென் சாரியை யின்மை வேண்டும். இஃது - இன்சாரியை ஐந்தாமுருபின்கண் முழுவதுங் கெடு மென்கின்றது. இதன் பொருள்: இன்னென வரூஉம் வேற்றுமை யுருபிற்கு - இன் னென்று சொல்ல வருகின்ற வேற்றுமை யுருபிற்கு, இன்னென் சாரியை இன்மை வேண்டும் - இன் என்னுஞ் சாரியை தான் இன்றி முடிதலை விரும்பும் ஆசிரியன் என்றவாறு. உதாரணம்: விளவின் பலாவின் கடுவின் தழுவின் சேவின் வௌவின் என வரும். இவற்றிற்கு வீழ்பழ மெனவும், நீங்கினா னெனவுங் கொடுத்து முடிவு உணர்க. ஊரினீங்கி னான் என ஏனையவற்றோடும் ஒட்டுக. இனி, அவற்றுள் இன்னி னிகரம் (எழு. 120) என்றதன் பின் இதனை வையாத முறையன்றிக் கூற்றினான், இன்சாரியை கெடாது வழக்கின்கண்ணுஞ் செய்யுட்கண்ணும் நிற்றல் கொள்க. பாம்பினிற் கடிது தேள், கற்பினின் வழாஅ நற்பல வுதவி, அகடுசேர்பு பொருந்தி யளவினி றிரியாது என வரும். இனி, இன்மையும் வேண்டு மென்னும் உம்மை தொக்கு நின்றதாக்கி அதனான் இவை கோடலும் ஒன்று. (29) 132. 38பெயருந் தொழிலும் பிரிந்தொருங் கிசைப்ப வேற்றுமை யுருபு நிலைபெறு வழியுந் தோற்றம் வேண்டாத் தொகுதிக் கண்ணு மொட்டுதற் கொழுகிய வழக்கொடு சிவணிச் சொற்சிதர் மருங்கின் வழிவந்து விளங்கா திடைநின் றியலுஞ் சாரியை யியற்கை யுடைமையு மின்மையு மொடுவயி னொக்கும். இது, முற்கூறிய சாரியைகளெல்லாம் புணர்மொழியுள்ளே வருமென்பதூஉம், அம்மொழிதாம் இவை யென்பதூஉம், அவை வாராத மொழிகளும் உளவென்பதூஉம் கூறுகின்றது. இதன் பொருள்: பெயருந் தொழிலும் - பெயர்ச் சொல்லுந் தொழிற் சொல்லும், பிரிந்து இசைப்ப ஒருங்கு இசைப்ப - பெயருந் தொழிலு மாய்ப் பிரிந்திசைப்ப, பெயரும் பெயருமாய்க் கூடியிசைப்ப, வேற்றுமை யுருபு நிலைபெறு வழியும் - வேற்றுமை செய்யும் உருபுகள் தொகாது நிலைபெற்ற இடத்தும், தோற்றம் வேண்டாத் தொகுதிக் கண்ணும் - அவ்வேற்றுமை யுருபுகள் தோற்றுதல் வேண்டாது தொக்க இடத்தும், ஒட்டுதற்கு ஒழுகிய வழக்கொடு சிவணி - தாம் பொருந்துதற்கேற்ப நடந்த வழக்கொடு பொருந்தி, சொற்சிதர் மருங்கின் - சாரியை பெறும் புணர்மொழி களைப் பிரித்துக் காணுமிடத்து, சாரியை இயற்கை வழிவந்து விளங்காது இடை நின்று இயலும் - அச்சாரியையினது தன்மை அச்சொற்களின் பின்னே வந்து விளங்காது நடுவே நின்று நடக்கும், உடைமை யும் இன்மையும் ஒடு வயின் ஒக்கும் - அச்சாரியை உண்டாதலும் இல்லையாதலும் ஒடுவுருபி னிடத்து ஒத்துவரும் என்றவாறு. ஒடுவிற் கொக்கும் எனவே, ஏனையவற்றிற்கு ஒவ்வாவாயின. உதாரணம்: விளவினைக் குறைத்தான், கூழிற்குக் குற்றேவல் செய்யும். இவை பிரிந்திசைத்து உருபு நிலை பெற்றன. அன்னென் சாரியை (எழு. 194) என்பதனெக் குற்றிய லுகரத் திறுதி (எழு. 195) என்பதனைச் சேர வைத்ததனால், இன் சாரியை வருதல் கொள்க. இவ்விரண்டுருபுஞ் சாரியை நிற்பப் பெரும்பான்மையுந் தொகாவென்றுணர்க. விளவினைக் குறைத்தவன், கடிசூத்திரத்திற்குப் பொன் - இவை ஒருங்கிசைப்ப உருபு நிலை பெற்றன. வானத்தின் வழுக்கி, வானத்து வழுக்கி எனச் சாரியை பெற்றுப் பிரிந்திசைத்து ஐந்தாமுருபு நிலைபெற்றும், நிலை பெறாதும் வந்தன. வானத்தின் வழுக்கல், வானத்து வழுக்கல் எனச் சாரியை பெற்று ஒருங்கு இசைத்து ஐந்தாம் உருபுநிலை பெற்றும் நிலைபெறாதும் வந்தன. வானத்தின் வழுக்கல், வானத்து வழுக்கல் இவை மெல்லெழுத் துறழும் (எழு. 312) என்னுஞ் சூத்திரத்து வழக்கத்தான என்பதனான் அத்துக் கொடுத்து மகரங் கெடுக்க ஒருங்கிசைத்தன. விளவினது கோடு, விளவின் கோடு என ஒருங்கிசைத்துச் சாரியை பெற்றவழி ஆறனுருபு தொகாதுந்தொக்கும் நின்றது. இதற்குப் பிரிந்திசைத்த லின்று. மரத்துக்கட் கட்டினான், மரத்துக் கட்டினான் எனப் பிரிந்திசைத்தவழியும், மரத்துக்கட் குரங்கு, மரத்துக் குரங்கு என ஒருங்கிசைத்தவழியுஞ் சாரியை நின்றவழி ஏழனுருபு தொகாதுந் தொக்கும் நின்றது. கிளைப் பெயரெல்லாம் (எழு. 307) என்றதனுட் கொள என்றதனான் ணகாரம் டகாரமாயிற்று. நிலாவென் கிளவி யத்தொடு சிவணும் (எழு. 228) என விதித்த அத்து, நிலாக்கதிர் நிலாமுற்றம் என்றவழி பெறா தாயிற்று, அஃது ஒட்டுதற் கொழுகிய வழக்கு அன்மையின். நிலாத்துக் கொண் டான், நிலாத்துக் கொண்டவன் என்பன உருபு தொக்குழி இருவழியும் பெற்றன. 39எல்லார் தம்மையும் எனச் சாரியை ஈற்றின் கண்ணும் வருதலின் இடைநிற்றல் பெரும்பான்மை யென்றற்கு இயலும் என்றார். பூவினொடு விரிந்த கூந்தல், பூவொடு விரிந்த கூந்தல் என உடைமையும் இன்மையும் ஒடுவயின் ஒத்தன. இனி இயற்கையென்றதனான், ஒடு உருபின்கட் பெற்றும் பெறாமையும் வருதலன்றிப், பெற்றே வருதலுங் கொள்க. பலவற்றொடு என வரும். (30) 133. அத்தே வற்றே யாயிரு மொழிமே லொற்றுமெய் கெடுத றெற்றென் றற்றே யவற்றுமுன் வரூஉம் வல்லெழுத்து மிகுமே. இஃது - அத்து வற்று என்பனவற்றிற்கு நிலைமொழியது ஒற்றுக் கேடும், வருமொழி வன்கணத்துக்கண் ஒற்றுப்பேறு மாகிய செய்கை கூறுகின்றது. இதன் பொருள்: அத்தேவற்றே ஆயிரு மொழிமேல் ஒற்று - அத்தும் வற்றுமாகிய அவ்விரண்டு சாரியைமேல் நின்ற ஒற்று, மெய் கெடுதல் தெற்றென்றற்று - தன் வடிவு கெடுதல் தெளியப் பட்டது; அவற்றுமுன் வரூஉம் வல்லெழுத்து மிகுமே - அவ்விரு சாரியை முன்னும் வரும் வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. உதாரணம்: கலத்துக்குறை, அவற்றுக்கோடு என வரும். அத்திடை வரூஉங் கலமென் அளவே (எழு. 168) சுட்டு முதல் வகர மையு மெய்யும் (எழு. 183) என்பனவற்றான் அத்தும் வற்றும் பெற்றுவரும் மகர வகர ஈறுகட்கு 40ஈற்று வல்லெ ழுத்துவிதி இன்மையின், அவற்றுமுன் வரூஉம் வல்லெழுத்து மிகுமென்று சாரியை வல்லெழுத்து விதித்தார். வல்லெழுத்து இன்றித் திரிந்து முடிவன ணகாரமும், னகாரமும், லகாரமும், ளகாரமுமாம். மகர ஈற்றிற்கு அத்தும், வகர ஈற்றிற்கு வற்றும் வருமென்பது அவ்வச் சூத்திரங்களாற் பெற்றாம். வற்றே அத்தே என்னாத முறையன்றிக் கூற்றினான், புள்ளி யீற்றின் முன்னர் அத்தின்மிசை யொற்றுக் கெடாது நிற்றலுங் கொள்க. உதாரணம்: விண்ணத்துக் கொட்கும், வெயிலத்துச் சென்றான், இருளத்துக் கொண்டான் என வரும். மெய்யென்றதனான், அத்தின் அகரம் அகர முன்னரே யன்றிப் பிற உயிர் முன்னருங் கெடும் ஒரோவிடத் தென்று கொள்க. 41அண்ணாத்தேரி, திட்டாத்துக்குளம் என ஆகாரத்தின் முன்னரும் வரும் அத்தின் அகரங் கெட்டது. இவற்றை அகர ஈறாக்கியும் முடிப்ப. இனித் தெற்றென்றற்றே என்றதனான், அத்தின் அகரந் தெற்றெனக் கெடாது நிற்கும் இடமுங் கொள்க. அதவத்துக்கண், விளவத்துக்கண் என வரும். (31) 134. காரமுங் கரமுங் கானொடு சிவணி நேரத் தோன்று மெழுத்தின் சாரியை. இது, மொழிச்சாரியை விட்டு, எழுத்துக்கட்கு வருஞ் சாரியைகளின் பெயரும் முறையுந் தொகையும் உணர்த்துகின்றது. இதன் பொருள்: காரமுங் கரமுங் கானொடு சிவணி - காரமுங் கர முங் கானொடு பொருந்தி, எழுத்தின் சாரியை நேரத் தோன்றும் - எழுத்தின்கண் வருஞ் சாரியையாதற்கு எல்லா ஆசிரியரானும் உடம்படத் தோன்றும் என்றவாறு. காரமுங் கரமும் 42அடுத்துச் சொல்லியவழி இனிதிசைத்த லானும், வழக்குப்பயிற்சி யுடைமையானும், வடவெழுத்திற்கும் உரியவா தலானுஞ் சேரக் கூறினார். கான் அத்தன்மை யின்மையினாற் பின் வைத்தார். நேரத்தோன்றுமெனவே நேரத்தோன்றாதனவும் உள வாயின. அவை, ஆனம் ஏனம் ஓனம் என்க. இவை சிதைந்த வழக்கேனுங் கடிய லாகாவாயின. (32) 135. அவற்றுள் கரமுங் கானு நெட்டெழுத் திலவே. இஃது, அவற்றுட் சில சாரியை சிலவெழுத்தோடு வாரா வென எய்தியது விலக்கிற்று. இதன் பொருள்: அவற்றுள் - முற்கூறியவற்றுள், கரமுங் கானும் நெட் டெழுத் தில - கரமுங் கானும் நெட்டெழுத்திற்கு வருதலில என்றவாறு. எனவே, நெட்டெழுத்திற்குக் காரம் வருமாயிற்று. ஆகாரம் ஈகாரம் என ஒட்டுக. ஐகாரம் ஔகாரமெனச் சூத்திரங்களுள் வருமாறு காண்க. (33) 136. வரன்முறை மூன்றுங் குற்றெழுத் துடைய. இஃது ஐயம் அகற்றியது; என்னை? நெட்டெழுத்திற்குச் சில சாரியை விலக்கினாற் போலக் குற்றெழுத்திற்கும் விலக்கற்பாடு உண்டோ வென ஐயம் நிகழ்தலின். இதன் பொருள்: வரன்முறை மூன்றும் - 43வரலாற்று முறைமையை யுடைய மூன்று சாரியையும், குற்றெழுத்துடைய - குற்றெழுத்துப் பெற்று வருதலையுடைய எ-று. அகாரம் அகரம் மஃகான் என ஒட்டுக. வகார மிசையும் அகர இகரம் வஃகான் மெய்கெட எனவும் பிறவுஞ் சூத்திரங் களுட் காண்க. இஃகான் ஒஃகான் என்பன பெருவழக்கன்று. வரன்முறை யென்றதனான், அஃகான் என்புழி ஆய்தம் பெறுதல் கொள்க. இது குறியதன் முன்னராய்தப் புள்ளி (எழுத். 38) என்பதனாற் பெறாதாயிற்று, மொழியாய் நில்லாமையின். (34) 137. ஐகார ஔகாரங் கானொடுந் தோன்றும். இஃது - அவற்றுட் கரமுங் கானும் என்பதற்கோர் புறனடை கூறுகின்றது. இதன் பொருள்: ஐகார ஔகாரங் கானொடுந் தோன்றும் - நெட்டெழுத்துக்களுள் ஐகார ஔகாரங்கள் முன் விலக்கப்பட்ட கானொடுந் தோன்றும் என்றவாறு. ஐகான், ஔகான் என வரும். உம்மை இறந்தது தழீஇயிற்று, காரத்தைக் கருதலின். (35) 138. 44புள்ளி யீற்றுமுன் னுயிர்தனித் தியலாது மெய்யொடுஞ் சிவணு மவ்வியல் கெடுத்தே. இது, புள்ளி யீற்றுமுன் உயிர்முதன்மொழி வந்த காலத்துப் புணரும் முறைமை கூறுகின்றது. இதன் பொருள்: புள்ளி யீற்றுமுன் உயிர் தனித்து இயலாது - புள்ளி யீற்றுச் சொன்முன்னர் வந்த உயிர்முதன் மொழியின் உயிர் தனித்து நடவாது, மெய்யொடுஞ் சிவணும் - அப்புள்ளியொடும் கூடும், அவ் வியல் கெடுத்து - தான் தனித்து நின்ற அவ்வியல்பினைக் கெடுத்து என்றவாறு. எனவே, நீரோடு கூடிய பால்போல நின்றதென்று ஒற்றுமை கூறினார், ஈண்டு. இதனானே உயிர்மெய்யெனப் பெயர் பெற்றது. உதாரணம்: பாலரிது, பாலாழி, ஆலிலை, பொருளீட்டம், வானு லகு, வானூடு, வேலெறிந்தான், வேலேற்றான், பொரு ளையம், பொருளொன்று, நாணோடிற்று, சொல் லௌவியம் என வரும். ஒன்றென முடித்தலென்பதனான் இயல்பல்லாத புள்ளி முன்னர் உயிர்வந்தாலும் இவ்விதி கொள்க. அதனை அதனொடு நாடுரி என வரும். இவற்றைச் சுட்டுமுத லுகர மன்னொடு (எழுத். 176), உரிவரு காலை நாழிக் கிளவி (எழு. 240) என்பனவற்றான் முடிக்க. புள்ளியீற்று முன்னுமென உம்மையை மாற்றி எச்சவும்மை யாக்கிக் குற்றியலுகரத்தின் முன்னரும் என அவ்விதி கொள்க. எனவே, குற்றியலுகரமு மற்று (எழு. 105) என்றதனோடும் பொருந்திற்றாம். நாகரிது, வரகரிது எனவரும். (36) 139. 45மெய்யுயிர் நீங்கிற் றன்னுரு வாகும். இஃது - உயிர்மெய், புணர்ச்சிக்கண் உயிர் நீங்கியவழிப் படுவ தொரு விதி கூறுகின்றது. இதன் பொருள்: மெய் உயிர் நீங்கின் - மெய் தன்னோடு கூடி நின்ற உயிர் புணர்ச்சியிடத்துப் பிரிந்து வேறு நின்றதாயின், தன் உருவாகும் - தான் முன்னர்ப் பெற்று நின்ற புள்ளிவடிவு பெறும் என்றவாறு. ஆல் இலை, அதன் ஐ என வரும். உயிர் என்ன வடிவிற்றென்று ஆசிரியர் கூறாமையின், உயிர்க் கண் ஆராய்ச்சி யின்று. இனி, எகர ஒகரங்களைப் புள்ளியான் வேற்றுமை செய்தலின், தொன்று தொட்டு வழங்கின வடிவுடைய வென்று கோடலுமாம். புணர்ச்சியுள் உயிர்மெய்யினைப் பிரிப்பாராத லின், இது கூறாக்காற் குன்றக் கூறலாமென்று உணர்க. (37) 140. எல்லா மொழிக்கு முயிர்வரு வழியே யுடம்படு மெய்யி னுருவுகொளல் வரையார். இஃது - உயிரீறும் உயிர்முதன்மொழியும் புணரும்வழி நிகழ்வ தொரு கருவி கூறுகின்றது. இதன் பொருள்: எல்லா மொழிக்கும் - நிலைமொழியும் வருமொழியு மாய்ப் புணரும் எவ்வகை மொழிக்கும், உயிர் வருவழி - உயிர் முதன் மொழி வருமிடத்து, உடம்படு மெய்யின் உருவு கொளல் வரையார் - உடம்படு மெய்யினது வடிவை உயிரீறு கோடலை நீக்கார், கொள்வர் ஆசிரியர் என்றவாறு. அவை யகரமும் வகரமும் என்பது முதனூல் பற்றிக் கோடும்; உடம்படு மெய்யே யகார வகார முயிர்முதன் மொழிவரூஉங் காலை யான எனவும், இறுதியு முதலு முயிர்நிலை வரினே யுறுமென மொழிப வுடம்படு மெய்யே எனவுங் கூறினாராகலின். உயிர்களுள் இகர ஈகார ஐகார ஈறு, யகர உடம்படுமெய் கொள்ளும். ஏகாரம், யகாரமும் வகாரமுங் கொள்ளும். அல்லனவெல்லாம் வகர உடம்படுமெய்யே கொள்ளு மென்று உணர்க. உதாரணம்: கிளியழகிது, குரீஇயோப்புவாள் வரையர மகளிர் எனவும்; விளவழகிது, பலாவழகிது, பூவழகிது, கோவழகிது, கௌவடைந்தது எனவும் ஒட்டுக. ஏஏ யிவளொருத்தி பேடியோ வென்றார் (சீவக. 612) ஏவாடல் காண்க என ஏகாரத் திற்கு இரண்டும் வந்தன. ஒன்றென முடித்தலென்பதனான், 46விகாரப்பட்ட மொழிக்கண்ணும் உடம்படுமெய் கொள்க. மரவடி, ஆயிருதிணை எனவரும். வரையாரென்றதனான் உடம்படுமெய் கோடல் ஒருதலை யன்று. கிளி அரிது, மூங்கா இல்லை எனவும் வரும். ஒன்றென முடித்தலென்பதனான், விண்வத்துக் கொட் கும் எனச் சிறுபான்மை புள்ளியீற்றினும் வரும். செல்வுழி உண்புழி என்பன வினைத் தொகை யென மறுக்க. (38) 141. எழுத்தோ ரன்ன பொருடெரி புணர்ச்சி யிசையிற் றிரித னிலைஇய பண்பே. இஃது - எழுத்துக்கள் ஒன்று பலவாமென எய்தாதது தெய்துவிக்கின்றது. இதன் பொருள்: எழுத்தோரன்ன பொருள் தெரி புணர்ச்சி - எழுத்து ஒரு தன்மைத்தான பொருள் விளங்க நிற்கும் புணர்மொழிகள், இசையிற் றிரிதல் நிலைஇய பண்பு - எடுத்தல் படுத்தல் நலித லென் கின்ற ஓசை வேற்றுமையாற் புணர்ச்சி வேறுபடுதல் நிலைபெற்ற குணம் எ-று. உதாரணம்: செம்பொன்பதின்றொடி, 47செம்பருத்தி, குறும்பரம்பு, நாகன்றேவன்போத்து, தாமரைக்கணியார், குன்றே றாமா என இசையிற் றிரிந்தன. (39) 142. அவைதாம் முன்னப் பொருள புணர்ச்சி வாயி னின்ன வென்னு மெழுத்துக்கட னிலவே. இது, மேலதற்கோர் புறனடை கூறுகின்றது. இதன் பொருள்: அவைதாம் - பலபொருட்குப் பொது வென்ற புணர்மொழிகள்தாம், முன்னப்பொருள - குறிப்பான் உணரும் பொருண்மை யினையுடைய, புணர்ச்சிவாயின் இன்ன வென்னும் எழுத்துக்கடன் இல - புணர்ச்சியிடத்து இத்தன்மையவென்னும் எழுத்து முறைமையை உடையவல்ல என்றவாறு. செம்பொன்பதின்றொடி என்புழிப் பொன்னாராய்ச்சி உள் வழிப் பொன்னெனவுஞ், செம்பாராய்ச்சி உள்வழிச் செம்பென வுங் குறிப்பான் உணரப்பட்டது. இசையின் திரிதலென்றது ஒலி யெழுத்திற்கெனவும், எழுத்துக் கடனில என்றது வரிவடிவிற் கெனவுங் கொள்க. (40) புணரியல் முற்றிற்று. கணேசய்யர் அடிக்குறிப்புகள்: 1. செய்கை ஒத்தென்றது பின்வரும் தொகைமரபினையும் உயிர் மயங்கியன் முதலிய மூன்றியல்களையும், நூன்மரபு 1-ம் சூத்திர விரிவுரை நோக்கி யறிக. ஈண்டு - இப் புணரியலில். 2. ஈறு - மொழிக்கு ஈற்றில் வருமெழுத்து. முதல் - முதலில் வருமெழுத்து. 3. மூவகைமொழி - ஓரெழுத்தொருமொழி, ஈரெழுத்தொருமொழி, இரண்டிறந்திசைக்கும் தொடர்மொழி. 4. மொழிமுதற் குற்றியலுகரம் - நுந்தை. 5. முதற் சூத்திரத்திலே `இறுதியு முதலு மெய்யே யுயிரென் றாயீரியல' என்றமையான் மொழிக்கு மெய் முதலாயும் வரும் ஈறாயும் வரும் என்பது பெறப்படுதலின், அவ்விரு மொழிகளுள் ஈற்றில் நிற்கும் மெய் எப்படி நிற்குமென இச்சூத்திரத்தால் விதிக்கின்றார். ஈற்றில் வரும் மெய்கள் புள்ளி பெற்று நிற்குமெனவே முதலில் நிற்கும் மெய்கள் உயிரோடுகூடிப் புள்ளி பெறாது நிற்குமென்பது பெறப்படும். ஈற்றில் மெய்கள் புள்ளிபெற்று நிற்குமென்றமையானே. உயிர் வருங்கால் தன்மேலேறி முடியவும் இடங்கொடுக்குமென்பதும், ஏனைய மெய்வருங்கால் திரிந்தும் இயல்பாயும் முடியுமென்பதும் பெறப்படு மென்பதும் உரைகாரர் கருத்து. 6. இச்சூத்திரத்திற்குக் குற்றியலுகரமும் புள்ளிபெறாது உயிரேற இடங் கொடுக்குமென்று இளம்பூரணர் பொருள் கூறினர். நச்சினார்க் கினியரும் அங்ஙனமே கூறினார். அற்று என்பது முதற் சூத்திரத்திற் கூறிய புள்ளி பெறுதலையே சுட்டுமன்றி அதிற் கூறாத உயிரேற இடங்கொடுக்கு மென்பதைச் சுட்டாது; ஆதலின், அவ்வுரைகள் மாட்டேற்றிலக்கணத்தோடு பொருந்துமோ என்பது ஆராயத்தக்கது. முன்னும், `மெய்யி னியற்கை புள்ளியொடு நிலையல்' என மெய்கள் புள்ளி பெறுதலை விதித்த ஆசிரியர், அம் மெய்கள்போலவே எகர ஒகரமும் புள்ளிபெறு மெனப் புள்ளிபெறுதலோடு மாட்டி, `எகர ஒகரத் தியற்கையு மற்றே' எனக் கூறுதலி னாசிரியர் கூறும் மாட்டினிலக்கணம் இஃதென்பது உணரத்தக்கது. பேராசிரியர்க்கும் சிவஞான முனிவர்க்கும் சங்க யாப்பென்னும் நூலுடையார்க்கும் குற்றிய லுகரமும் புள்ளிபெறுமென்பது கருத்தாதல் நூன்மரபு 2-ம் சூத்திரக் குறிப்பில் உணர்த்தப்பட்டது. ஆங்குக் காண்க. 7. இச் சூத்திரத்து உயிரீற்றியற்றே என விதித்தமையானும் இதற்கு முதற் சூத்திரத்துக் குற்றியலுகரமும் மெய்யீறுபோலப் புள்ளிபெறுமென்று விதித்தாரென்றே துணியப்படுதல் காண்க. 8. முன்னர் என்றது, நூன்மரபு 18ஆம் சூத்திரத்தை. 9. பெயர்ப்பெயர் - பெயர்ச்சொல்லால் வந்த பெயர். ஒட்டுப் பெயர் - வினை யாலணையும் பெயர். 10. கண்கூடாக என்றது - வரிவடிவைநோக்கி. 11. இது என்றது - முயற்கோட்டை. முயற்கோடு இன்று என்றாற் புணர்க்கப் படும். என்னை? பொருளியைதலின். 12. விகற்பிக்கப் பதினாறு வருமாறு: மெய்பிறிதாதல், மிகுதல், குன்றல், இயல்பாதல் என்னு நான்கையும், பெயரொடு பெயரையும், பெயரொடு தொழிலையும், தொழிலொடு பெயரையும், தொழிலொடு தொழிலையும் புணர்ப்பதனோடு உறழ நன்னான்கு பதினாறாதல் காண்க. 13. பதினாயிரத்தொன்று. இதில் பதினாயிரம் என்புழி ஆயிரம் பத்தென்னும் அடையொடு தோன்றிற்று; இதுபண்புத்தொகை. பன்னிரண்டு கை. இதில் இரண்டு பத்தென்னும் அடையொடு வந்தது. பன்னிரண்டு - பத்தும் இரண்டும் என உம்மைத்தொகை. இதுபற்றியே அடையாவன இருபெய ரொட்டுப் பண்புத்தொகையும் உம்மைத்தொகையும் என்றார். 14. வேற்றுமைத்தொகையும் உவமைத் தொகையும் முடிய என்றது - பிளந்து முடிவுபெற என்றபடி. என்றது - குன்றக்கூகை, புலிப்பாய்த்துள் என்புழி குன்றம் - கூகை எனவும். புலி - பாய்த்துள் எனவும் பிளந்து புணர்ச்சி பெற. வினைத்தொகையும் பண்புத் தொகையும் பிளந்து முடிவுபெறாது ஒரு சொல்லாயே நிற்றலின் அவை அடையெனப்படும். அன்மொழித் தொகையும் தனக்கு வேறோர் முடிபின்மையின் ஒரு சொல்லேயாம் என்றது. ஏனைய தொகைகளின் ஈற்றிற் பிறத்தலின். அவற்றின் முடிபே தனக்கு முடிபன்றி வேறோர் முடிபின்மையின் ஒரு சொல்லேயாம். எனவேதான் பிளந்து நின்று முடிவு பெறாது. பெறின் அன்மொழி பொருளுணர்த்தாது என்றபடி. 15. மருவின் தொகுதியும் மயங்கியன்மொழியும் எனப் பிரித்துப் பொருள் கூறினும், நச்சினார்க்கினியர் கருத்தின்படி பொருள் கூறலாம். அவர் இன்றொகுதியெனப் பிரித்துப் பொருள் கோடல் சிறப்பின்று. உரையா சிரியர் கருத்தே ஈண்டுப் பொருத்தமாம். ஏனெனின்? ஆசிரியர் இலக் கணத்தோடு பொருந்திய மரூஉச் சொற்களைப் பிரித்துப் புணர்த்தலின். 16. யாப்பு - வலி. 17. ஆறுபயனிலை என்றது: `பொருண்மை சுட்டல் - வியங்கொளவருதல் - வினைநிலை யுரைத்தல் - வினாவிற்கேற்றல் - பண்பு கொள வருதல் பெயர்கொள வருதல் என்றன்றி யனைத்தும் பெயர்ப் பயனிலையே' என்னுஞ் சொல்லதிகாரச் சூத்திரத்தாற் கூறிய ஆறு பயனிலையையும். அவற்றிற்கு உதாரணம் முறையே ஆவுண்டு. ஆவாழ்க. ஆவந்தது, ஆயாது, ஆகரிது, ஆபல என்பனவாம். பண்புத்தொகை விரிவுழி ஐம்பாலீறாக விரியும். வினைத்தொகை விரிவுழிச் செய்த செய்யும் என்னும் பெயரெச்ச வீறாக விரியும். இத்தொகைகள் பிரித்துப் புணர்க்கப் படா ஒரு சொல்லாய் நிற்கும். இங்ஙனம் பிரித்துப் புணர்க்கப்படாவென ஆசிரியர் கூறுவதைப் பலவிடத்துங் கூறுகின்ற நச்சினார்க்கினியர் ஈண்டுப் பண்புத்தொகையையும் வினைத் தொகையையும் விரிந்து நின்றவழிப் புணர்ந்த புணர்ச்சியுமெனக் கூறியது பொருந்துமோ என்பது ஆராயத்தக்கது. 18. பொருள் நோக்கி ஆண்டு எட்டு என்றார். வருமொழியாய் நின்று புணரும் உருபுநோக்கி ஈண்டு ஆறு என்றார் என்க. 19. எழுவாய் பொருள் மாத்திரமுணர்த்தி நின்றும், விளி எதிர்முகமாக்கி நின்றும் என நிரனிறையாகக் கொள்க. 20. உருபியலிற் கூறுபவென்றது - உருபியல் 16-ம் சூத்திரத்திற் கூறுப என்ற படி. இதில் மெய்யென்பதனாற் பிறவயின் மெய்யும் கெடுக்க எனக் கூறுதல் காண்க. 21. அங்கண் இங்கண் உங்கண் என்பன ஆங்கண் ஈங்கண் ஊங்கண் என நீண்டு நின்றன என்றபடி. உயிரே நிலைமொழியாதலின் ஒற்று இன்று என்றார். 22. நினவ எனவ என்புழி நின் என் என்பன அகர உருபு வருங்கால் இடையில் ஓரகரம் பெற்று நின என என்று நின்று பின் அகர வுருபோடு சேர்ந்து நினவ எனவ என நிற்றல் காண்க. அதுபற்றியே `ஈறாகுபுள்ளி அகரமொடு நிலையும்' என்றார் என்பது கருத்து. 23. முதனிலையென்றது - பகுதியை. பகுதிக்கன்று வினைச்சொற்கே கூறினாரென்றலே பொருத்தமாம். ஏனெனின்? இலக்கணம் கூறும் வழிக் கூறாதொழியின் ஐயம்வருமென்று. வினையியலில் `வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது' என்று கூறினார்; உய்த்துணர்ந்திடர்ப் படாமல் ஈண்டுக் கூறினாரென்று கோடலே பொருத்தமாதலின். 24. கொற்றன் செவிநல்லன் என்புழி உயர்திணையென்பதும் கொற்றன் செவி நீண்டது என்புழி அஃறிணை என்பதும் விளங்கும். 25. புணரியனிலையிடைப் பொருணிலைக் குதவிவந்தன என்பது. அவற்றுட் புணரியனிலையிடைப் பொருணிலைக் குதநவும், என்னும் (சொல் - 250) சூத்திரக் கருத்தை நோக்கி நின்றது. பெயர்கூறி "அவற்று வழிமருங்கிற் சாரியை வருமே" எனவே முன்பெயர்வழி வேற்றுமை வருமென்றா ரேனும் சாரியை வருங்கால் சாரியைக்குப் பின்னேயே வேற்றுமையுருபு வருமென்பது இச்சூத்திரத்து "அவற்றுவழி" என்பதனாற் பெறப்பட்டது. 26. குலையலங்காந்தள் என்புழி அலங்குகாந்தள் என்பது அலங்காந்தள் என நின்றதாதலின் அம்சாரியையென்று கொள்ளற்க என்பது கருத்து. 27. பொதுவகையானோதியவழித் தானே சேறல் என்றது. இச்சொல் இச் சாரியை பெறுமென விதியாது பொதுவாகச் சாரியைப் பேறு கூறிய விடத்து தானே சாரியையாகச் செல்லுதல். 28. ஆடிக்கு என்புழி இக்கு சாரியை. இவ்வியல் 24-ம் சூத்திரம் நோக்கியறிக. 29. ஆகாரவீறாயின் மாவுங் கொள்ளப்படும். இங்கே ஆவினிறுதி என்று ஆவையே கூறினமையின் மா இலேசினாற் கொள்ளப்பட்டது. இதனை ஒப்பக் கூறல் என்னும் உத்தியால் ஆவும் மாவும் என்பர் பேராசிரியர். ஆன் என்பதில் னகரம் சாரியை யென்பர் நன்னூலார். 30. வேண்டும் செய்கை என்றது, மெய்யில் உயிரேற்றி முடிப்பதை. பதிற்றகல் என்பதில் இற்று சாரியையென்பர் நன்னூலார். 31. பிறவழி - அளவாகு மொழி முதலல்லாத வழி. 32. எவன் என்பது - எடுத்தலோசையாற் கூறின் வினாவினைக் குறிப்பாகும். படுத்தலோசையாற்கூறின் வினாப்பெயராம் என்றபடி. வற்றுச்சாரியையை அற்றுச்சாரியையென்பர் நன்னூலார். 33. ஞாபகம் கூறல் என்னும் உத்தியாவது - சூத்திரஞ் செய்யுங்காற் சிலவகை எழுத்தினாலாகியதாகவும் பொருணனி விளங்கவுஞ் செய்யாது. அரிதும் பெரிதுமாக நலிந்து செய்து அதனானே வேறு பல பொருளு ணர்த்தல். ஞாபகத்தாற் கொள்க என ஒட்டுக. 34. அக்கினிறுதி மெய்ம்மிசையொடும் என்பதற்கு இறுதிமெய் (உகரம் ஏறிநின்ற மெய்) தன்மேலுள்ள ககரவொற்றோடும் கெடும் என்று பொருள் கொள்ளல் சிறப்பாம். இதற்கு மெய் எழுவாயாய் நிற்றலின் மெய்ம்மிசையொடுங் கெடும் என்று பாடமிருத்தல் வேண்டும். ககரவொற்றி லேறி நின்ற குற்றியலுகரமும் கெடும் என்றவாறு. 35. குன்றக்கூகை என்புழி. அக்கு மெய்ம்மிசையொடுங் கெடாது, அக்கி லுள்ள ககரவொற்று நிற்குமென்றால் என்னையெனின்? அங்ஙனம் கொள்ளின் கசதப முதன்மொழி வருங்கால் ககரத்துக்கன்றி ஏனைய வற்றிற்குப் பொருந்தாமையின் வல்லினம் மிகுமென்றலே பொருத்த மாமென்க. 36. இன்மை வேண்டும் என்றது - இறுதி கெடுதல் வேண்டும் என்றபடி. 37. ஒட்டுதற் கொழுகிய வழக்கன்று - சாரியைகள் வருதற்குரிய மொழி வழக்கன்று. அடுத்த 30-ம் சூத்திரம் பார்க்க. 38. இச்சூத்திரத்திற்கு உரையாசிரியரும் நச்சினார்க்கினியரும் கொண்ட பொருளை மறுத்துச் சேனாவரையர் "பெயரும் பெயரும், பெயரும் தொழிலும் பிரிந்திசைப்பவும் ஒருங்கிசைப்பவும் முறையே வேற்றுமை உருபு நிலை பெற்றவிடத்தும் மறைந்துநிற்கும் தொகைக்கண்ணும்" என்று பொருள் கூறுவர். அவர் கருத்து "பெயரும் பெயரும், பெயரும் தொழிலும் வேற்றுமையுருயு நிலைபெற்றவழி (விரிந்தவழி) பிரிந் திசைக்குமென்பதும், தொக்கவழி ஒருங்கிசைக்கு மென்பதுமாகும். இதுவே நன்னூலார்க்குங் கருத்தாதல் பொதுவியலிற் கூறிய தொகை நிலைச் சூத்திரம் நோக்கி உணர்க." 39. எல்லார் தம்மையும் என்புழி - உம்மை முற்றும்மை என்பர் நன்னூலார். 40. ஈற்று வல்லெழுத்து விதியில்லாதது என்றது கலம். அவ் என்னும் நிலை மொழிகளின் ஈற்றெழுத்துக்கள் ஒற்றாதலினாலே வல்லினம் மிகா; உயிராயின் மிகும். ஆதலின் விதியில்லை என்றபடி. 41. அண்ணா, திட்டா என்பன ஊர்போலும். 42. எடுத்துச் சொல்லல் - எழுப்பிச் சொல்லல்; முயற்சி. 43. வரலாற்று முறைமை - வழங்கிவந்த முறைமை. 44. இச்சூத்திரத்து `அவ்வியல்கெடுத்து' என்பதற்குத் தான் தனித்து நிற்குமியல்பினைக் கெடுத்து என்று பொருள் கொள்ளாது. புள்ளியீறாக நிற்குமவ்வியல்பினைக்கெடுத்து என்று மெய்க்கும். குற்றியலுகர வீறாகநிற்குமவ்வியல்பினைக் கெடுத்து என்று குற்றியலுகர வீற்றிற்கு மேற்பப் பொருள்கொள்ளின், நன்னூலார் குற்றியலுகரங் கெட்டுப் புணருமெனக் கூறியது தொல்காப்பியர்க்குங் கருத்தாகும். கெட்டுப் புணருமென்பதே தொல்காப்பியர்க்குங் கருத்தாதல் "யகரம் வரும் வழி இகரங் குறுகு - முகரக் கிளவி துவரத் தோன்றாது" என்னுஞ் சூத்திரத்தை உற்றுநோக்கின் அறியப்படும். இனி, "புள்ளியீற்றின்முன் னுயிர் தனித்தியலாது" என்புழி. ஈற்றும் என உம்மையை விரித்துக் குற்றியலுகர வீற்றிற்கு வலிந்து விதி கொள்வதினும் "புள்ளியீறு" என்பதை இருமுறை ஓதி இரு தொடராகக் கொண்டு மெய்யீறு என்றும், புள்ளி பெறுங் குற்றியலுகர வீறென்றும் பொருள் கொள்ளலாமென்பது எமது கருத்து. அங்ஙனம் கொள்ளின், "குற்றியலுகரமு மற்றெனமொழிப" என ஆசிரியர் ஓதிய விதிக்குமோர் பயனுண்டாம். இடையியல் "வேற்றுமை பொருள்வயி னுருபா குநவும் என்பதையும். வேற்றுமை யியல் ஐந்தாம் வேற்றுமைச் சூத்திரத்து இதனினிற்றிது" என்பதையும் இரு தொடராக வைத்துச் சேனாவரையரும் பொருள் கூறல் காண்க. அன்றி ஒரு சூத்திரத்திற்கு இரு பொருளுங் கொள்வர். அவ்வாறே கோடலுமாம். இதுபோல்வனவற்றை ஒப்பக் கூறல் என்பர் பேராசிரியர். உத்தி பேராசிரியருரை பார்க்க. இச் சூத்திரத்திற்கு யான் கூறிய புதுக் கருத்தை அங்கீகரித்துத் தாமெழுதிய எழுத்ததிகாரக் குறிப்புரையில். டாக்டர் P.S. சுப்பிரமணிய சாதிரிகளும் இச் சூத்திரத்துக்குக் குறிப்புரை எழுதியுள்ளார். அந்நூல் நோக்கியறிக. (அந்நூல் திருப்பனந்தாள் மட வெளியீடு.) 45. மெய்யுயிர் நீங்கிற் றன்னுரு வாகும் என்று மெய்யீற்றிற்கே கூறினாரா யினும், குற்றியலுகரத்திற்கும் ஒன்றென முடித்தலாற் கொள்ளப்படும். 46. விகாரப்பட்டமொழி என்றது விதியீற்றை. செல்வுழி உண்புழி என்பவற்றை வினைத்தொகையென மறுக்கவென்று இவர் கூறலின். செல்லுழி உண்ணுழி என்பன பிரித்துப் புணர்க்கப்படாத மரூஉ மொழிகளாய் முறையே வகரமும் பகரமும் பெற்று இவ்வாறு நின்றன வென்பது கருத்துப் போலும். 47. செம்பு + அருத்தி. அருத்தி - விருப்பம். செம் + பருத்தி எனவும் பிரியும். தாமரை + கணியார். கண்ணி - மாலை. தாம் + அரைக்கு + அணியார். தா + மரைக்கு + அண்ணியார். தா - தாவல். இவ்வுதாரணம் மகாலிங்கையர் பதிப்பிலில்லை. தொகை மரபு உயிரையும் மெய்யையும் இறுதியாகவுடைய சொற்களைப் பின்வரும் இயல்களில் ஈறுகள்தோறும் தனித்தனியே விரித்தோதி முடிக்கக் கருதிய ஆசிரியர், பல வீறுகளுக்கும் பொதுவான விதிகளை இவ்வியலில் ஒவ்வோர் சூத்திரங்களால் தொகுத்து முடிபு கூறுகின்றார். அதனால் இவ்வியல் தொகைமரபு என்னும் பெயர்த்தாயிற்று. நிலைமொழி வருமொழிப் புணர்ச்சிகட்படும் இலக்கணங்களாய்த் தொன்று தொட்டு வரும் இலக்கண மரபுகளைத் தொகுத்துணர்த்துதலின் தொகைமர பெனப் பட்டது எனினுமமையும். நிலைமொழியும் வருமொழியும் மேல் புணரியலிற் கூறிய கருவிகளால் தொக்குப்புணரும் செய்கை கூறுவது இவ்வியலாதலின் இது புணரியலோடு இயைபுடைத் தாயிற்று. இவ்வியல் முப்பது சூத்திரங்களையுடையது. இதன்கண் அல்வழியும் வேற்றுமையுமாகிய இருவழியிலும் கசதப என்னும் வல்லெழுத்து முதன்மொழி வருங்கால் மிகுதற்குரிய மெல்லெழுத்துக்கள் முறையே ங ஞ ந ம என்பனவாம் என்னும் வருமொழிக் கருவியும், இருபத்துநான்கீற்றின் முன்னும் வன்கண மொழிந்த கணங்களுக்கு இருவழியும் வருமொழிமுடிபும், ணகர னகர வீற்றுச் சொற்களுக்கு இருவழியும் நிலைமொழி முடிபும், லகர, னகர வீறுகளின் முன்னும் ணகர ளகர வீறுகளின் முன்னும் வரும் தகர நகரங்கள் முறையே றகர னகரங்களாகவும் டகர ணகரங்களாகவும் திரியு மென்னும் வருமொழிக் கருவியும், உயிரையும் மெய்யையும் இறுதியாகவுடைய முன்னிலை வினைச் சொற்கள் வல்லின முதன்மொழி வருங்கால் இயல்பும் உறழ்ச்சியு மாகிய இருநிலைமையையுடையன வென்பதும், ஔகாரத்தையும் ஞநமவ என்னும் மெய்களையும் குற்றியலுகரத்தையும் ஈறாகவுடைய முன்னிலை வினைச்சொற்கள் முற்கூறிய முடிபிற்கு முற்றும் பொருந்துவன அல்ல என்பதும், உயிரையும் மெய்யையும் ஈறாகவுடைய உயர் திணைப் பெயர்கள் நான்குகணத்தும் இருவழியும் இயல்பாய் முடியுமென்பதும், அவற்றுள் இகரவீற்று உயர்திணைப் பெயர் திரிந்து முடியுமிடனுமுண் டென்பதும், அஃறிணை விரவு பெயர் இயல்பாய் முடிவனவுமுள வென்பதும், மூன்றாம் வேற்றுமைப் புணர்ச்சியிலும் இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சியிலும் உளவாகுந் திரிபுகளும், இகர ஐகாரவீற்றுப் பெயர்களுக்கு அல்வழி முடிபும், இகர ஐகாரவீற்றுள் ஏழாம் வேற்றுமையிடப் பொருளுணர நின்ற இடைச்சொல் முடிபும், நெட்டெழுத்தின் பின்னின்ற மெய்யீறு கெடுதல் குற்றெழுத்தின் பின்னின்ற இறுதிமெய் இரட்டித்தல் ஆகிய நிலைமொழிக்கரு வியும், இவற்றிற்கு உருபியலை நோக்கியதோர், வருமொழிக் கருவியும், உகரமொடு புணரும் மெய்யீற்றுச் சொற்கள் யகரமும் உயிரும் வருமொழியாய் வரின் அவ்வுகரம் பெறாது இயல்பாம் என்னும் வருமொழிச் செய்கையும் அளவுப்பெயரும் நிறைப்பெயரும் எண்ணுப்பெயரும் தம்மிற் புணருமாறும், அளவுப்பெயர்க்கும் நிறைப்பெயர்க்கும் முதலாதற்குரிய வெழுத்துக்கள் க ச த ப ந ம வ அ உ என்னுமிவ் வொன்பதுமே யென்னம் வரையறையும், மேலே கூறப்பட்டன வற்றிற்குப் புறனடையும், யாவர் என்பது யார் எனவும் யாது என்பது யாவது எனவும் வரும் மரூஉ முடிபும் இவ்வியலில் உணர்த்தப்பட்டன. - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 174-176 ஐந்தாவது தொகைமரபு 143. கசதப முதலிய மொழிமேற் றோன்று மெல்லெழுத் தியற்கை சொல்லிய முறையான் ஙஞநம வென்னு மொற்றா கும்மே யன்ன மரபின் மொழிவயி னான என்பது சூத்திரம். உயிரீறும் புள்ளியீறும் மேலை அகத்தோத்தினுள் முடிக்கும் வழி ஈறுகடோறும் விரித்து முடிப்பனவற்றை ஈண்டு ஒரோவோர் சூத்திரங்களாற் றொகுத்து முடிபு கூறினமையின், இவ்வோத்துத் தொகைமரபென்னும் பெயர்த்தாயிற்று. மேல் மூவகை மொழியும் நால்வகையாற் புணர்வுழி, மூன்று திரிபும் ஓரியல்பும் எய்தி, வேற்றுமை அல்வழி யென இருபகுதியவாகி, எழுத்துஞ் சாரியையும் மிக்குப் புணருமாறு இதுவென்று உணர்த்தி, அவைதாம் விரிந்த சூத்திரப் பொருளவன்றியுந் தொக்குப் புணருமாறு கூறுதலின், இவ்வோத்துப் புணரியலோடு இயைபுடைத் தாயிற்று. இத்தலைச்சூத்திரம் உயிர்மயங்கியலை யும், புள்ளிமயங்கிய லையும் நோக்கியதோர் வருமொழிக் கருவி கூறுகின்றது. இதன் பொருள்: 1கசதப முதலிய மொழிமேற்றோன்றும் இயற்கை மெல்லெழுத்து - உயிரீறும் புள்ளியீறும் முன்னர் நிற்பக் க - ச - த- ப -க்களை முதலாகவுடைய மொழிகள் வந்தால் அவற்றிற்கு மேலே தோன்றி நிற்கும் இயல்பாகிய மெல்லெழுத்துக்கள், யாவையெனின் சொல்லிய முறையான் ஙஞநம என்னும் ஒற்றாகும் - நெடுங்கணக்கிற் பொருந்தக் கூறிய முறையானே கசதபக்களுக்கு ஙஞநம வென்னும் ஒற்றுக்கள் நிரனிறை வகையானாம்: அன்ன மரபின் மொழிவயினான - அத் தன்மைத்தாகிய முறைமையினை யுடைய மொழிகளிடத்து என்றவாறு. உதாரணம்: விளங்கோடு செதிள் தோல் பூ என வரும். இது, மரப்பெயர்க்கிளவி (எழு. 217) என்பதனான் மெல் லெழுத்துப் பெற்றது. மரங் குறிது சிறிது தீது பெரிது என அல்வழிக் கட் டிரியுமாறு அல்வழியெல்லாம் (எழு. 314) என்பதனாற் பெறு துமேனும், ஈண்டுத் தோன்றுமென்றதனால், நிலைமொழிக்கட் டோன்றி நின்ற ஒற்றுத்திரிதல் கொள்க. அன்ன மரபின் மொழி யன்மையின், 2விளக்குறுமை விளக் குறைத்தான் என்புழி மெல்லெழுத்துப் பெறாவாயின; இவை ஏழா வதும் இரண்டாவதுந் திரிதலின். இங்ஙனம் எழுத்துப் பெறுவனவுந் திரிவனவுமெல்லாம் வருமொழியேபற்றி வருமென்று உணர்க. (1) 144. ஞநம யவவெனு முதலாகு மொழியு முயிர்முத லாகிய மொழியு முளப்பட வன்றி யனைத்து மெல்லா வழியு நின்ற சொன்மு னியல்பா கும்மே. இது, முற்கூறிய நால்வகைப் புணர்ச்சியுள் இயல்பு புணருங் கால், இக்கூறிய பதினேழெழுத்தும் வருமொழியாய் வந்த இடத்து, இருபத்து நான்கீற்றின் முன்னரும் வேற்றுமையிலும் அல்வழியிலும் வருமொழி இயல்பாய் முடிகவென்கின்றது. இதன் பொருள்: ஞநமயவ எனும் முதலாகு மொழியும் - ஞ - ந - ம - ய - வ என்று சொல்லப்படும் எழுத்துக்கள் முதலாய் நிற்குஞ் சொற்களும், உயிர் முதலாகிய மொழியும் உளப்பட - உயிரெழுத்து முதலாய் நின்ற சொற்களுந் தம்மிற்கூட, அன்றியனைத்தும் - அப்பதினேழாகிய வருமொழிகளும், எல்லாவழியும் - வேற்றுமையும் அல்வழியுமாகிய எல்லா இடத்தும், நின்ற சொன்முன் - இருபத்துநான்கு ஈற்றவாய் நின்ற பெயர்ச்சொன்முன்னர், இயல்பாகும் - திரிபின்றி இயல்பு புணர்ச்சியாய் நிற்கும் என்றவாறு. உயிரீற்றின்கண் எகர ஒகரம் ஒழிந்தன கொள்க. உதாரணம்: விள பலா கிளி குரீ கடு பூ சே கை சோ கௌ என நிறுத்தி, ஞான்றது நீண்டது மாண்டது யாது வலிது நுந்தையது என மெய்ம்முதன்மொழி வருவித்து, பொருள் தருதற்கு ஏற்பன அறிந்து கூட்டுக. சோ என்பது அரண். அதற்குச் சோஞொள்கிற்று எனக் கொள்க. கௌ வென்பதற்குக் கெளஞெகிழ்ந்தது, நீடிற்று என்க. இனி இவற்றின் முன்னர் உயிர்முதன்மொழி வருங்கால் அழகிது ஆயிற்று இல்லை ஈண்டிற்று உண்டு ஊறிற்று எழுந்தது ஏய்ந்தது ஐது ஒன்று ஓங்கிற்று ஔவியத்தது என வரும். இவற்றுட் சோவுக்கு - இடிந்தது ஈண்டையது உள்ளது ஊறிற்று என்பன வற்றோடு முற்கூறியவற்றையு மொட்டுக. இனி வேற்றுமைக்கண் விள முதலியவற்றை நிறுத்தி, ஞாற்சி நீட்சி மாட்சி யாப்பு வன்மை அழகு ஆக்கம் இளமை ஈட்டம் உயர்வு ஊற்றம் எழுச்சி ஏற்றம் ஐயம் ஒழிவு ஓக்கம் ஔவியம் என ஒட்டுக. ஏலாதனவற்றிற்கு முற்கூறியவாறு போல ஏற்பன கொணர்ந்து ஒட்டுக. இனிப் புள்ளியீற்று ணகாரமும் னகாரமும் மேற்கூறுப. ஏனைய ஈண்டுக் கூறுதும். உதாரணம்: உரிஞ் வெரிந் என நிறுத்தி, ஞெகிழ்ந்தது நீடிற்று அழகிது ஆயிற்று எனவும், ஞெகிழ்ச்சி நீட்டிப்பு அடைவு ஆக்கம் எனவும் வருவித்து, எல்லாவற்றோடும் ஒட்டுக. மரம் வேய் வேர் யாழ் என நிறுத்தி, ஞான்றது நீண்டது மாண்டது யாது வலிது நுந்தையது அழகிது ஆயிற்று எனவும், ஞாற்சி நீட்சி மாட்சி யாப்பு வன்மை அடைவு ஆக்கம் எனவும் வருவித்து, எல்லாவற்றோடும் ஒட்டுக. இவற்றுள், மகர ஈறு வேற்றுமைக்கட் கெடுதல் துவர (எழு. 310) என்றதனாற் கொள்க. அல்வழிக்கட் கெடுதல் அல்வழி யெல்லாம் (எழு. 314) என்றதனாற் கொள்க. நிலைமொழித் திரிபு ஈண்டுக் கொள்ளாமை உணர்க. யகர ஈறு யகரத்தின் முன்னர் இரண்டிடத்துங் கெடுதல் ஈண்டு எல்லாமென்றதனாற் கொள்க. வேல் தெவ் கோள் என நிறுத்தி, ஏற்பன கொணர்ந்து இருவழியும் ஒட்டுக. ணகார லகார ளகார னகாரங்களின் முன்னர் நகரம் வரு மொழியாக வந்துழி அந்நகரந் திரிதலின் அத்திரிந்த உதாரணங்கள் ஈண்டுக் கொள்ளற்க. இவற்றுள் திரிந்து வருவனவுள; அவை 3எடுத்தோத்தானும் இலேசானும் ஏனையோத்துக்களுள் முடிகின்ற வாற்றான் உணர்க. இனி, எல்லாமென்றதனான் உயிர்க்கணமாயின் ஒற்றிரட்டி யும் உடம்படுமெய் பெற்றும் உயிரேறியும் முடியுங் கருவித்திரிபுகள் திரிபெனப்படா, இவ்வியல்பின்கண்ணென்று உணர்க. வரகு ஞான்றது, வரகு ஞாற்சி எனக் குற்றுகரத்தின்கண்ணும் இவ்வாறே கொள்க. இருபத்துநான்கு ஈற்றிற்கும் வேற்றுமைக்கும் அல்வழிக்கும் அகத்தோத்தினுள் நாற்பத்தெட்டுச் சூத்திரங்களான் முடிவன வற்றை ஒரு சூத்திரத்தாற் றொகுத்து முடித்தார். மேலும் இவ்வாறே கூறுப. இவ்வியல்பு வருமொழி நோக்கிக் கூறிய தென்று உணர்க. இவ்வியல்பு புணர்ச்சி மெய்க்கண் நிகழுமாறு, உயிர்க்கண் நிகழாமையின் மெய் முற்கூறினார். (2) 145. அவற்றுள் மெல்லெழுத் தியற்கை யுறழினும் வரையார் சொல்லிய தொடர்மொழி யிறுதி யான. இது, முற்கூறிய முடிபிற் சிலவற்றிற்கு அம்முடிபு விலக்கிப் பிறிது விதி எய்துவித்தது. இதன் பொருள்: அவற்றுள் - முற்கூறிய மூன்று கணத்தினுள், மெல்லெழுத் தியற்கை உறழினும் வரையார் - மெல்லெழுத்து இயல்பாத லேயன்றி உறழ்ந்து முடியினும் நீக்கார்; சொல்லிய தொடர் மொழி இறுதியான - சொல்லப்பட்ட தொடர்மொழி யீற்றுக்கண் என்றவாறு. உம்மை - எதிர்மறை. எனவே, உறழாமை வலியுடைத் தாயிற்று. கதிர்ஞெரி கதிர்ஞ்ஞெரி நுனிமுரி எனவும், இதழ்ஞெரி இதழ்ஞ்ஞெரி நுனிமுரி எனவும் வரும். வருமொழி முற்கூறியவதனால், ஓரெழுத்தொருமொழி ஈரெழுத்தொரு மொழிகளுள்ளுஞ் சில உறழ்ச்சிபெற்று முடிதல் கொள்க. பூஞெரி பூஞ்ஞெரி நுனிமுரி, 4காய்ஞெரி காய்ஞ்ஞெரி நுனி முரி என வரும். சொல்லியவெஎன்றதனான், ஓரெழுத்தொரு மொழிகளுட் சில மிக்கு முடிதல் கொள்க. கைஞ்ஞெரித்தார், நீட்டினார் மறித்தார் என வரும். இன்னும் இதனானே, ஈரெழுத்தொருமொழிக்கண் மெய்ஞ் ஞானம் நூல் மறந்தோர் எனவரும். இவற்றை நலிந்து கூறப் பிறத்தலின் இயல்பென் பாரும் உளர். பூஞாற்றினார் என்றாற் போல்வன மிகாதன. (3) 146. ணனவென் புள்ளிமுன் யாவு ஞாவும் வினையோ ரனைய வென்மனார் புலவர். இது, யகர ஞகர முதன்மொழி வந்த இடத்து நிகழ்வதோர் தன்மை கூறுகின்றது. இதுவும் புணரியலொழிபாய்க் கருவிப் பாற்படும். இதன் பொருள்: ணனவென் புள்ளிமுன் யாவும் ஞாவும் - ணகார னகாரமென்று கூறப்படும் புள்ளிகளின் முன்னர்வந்த யாவும் ஞாவும் முதலாகிய வினைச்சொற்கள், வினையோரனைய என்மனார் புலவர் - ஒரு வினை வந்த தன்மையை ஒக்குமென்று சொல்லுவர் புலவர் என்றவாறு. உதாரணம்: மண்யாத்த கோட்ட மழகளிறு தோன்றுமே மண் ஞாத்த கோட்ட மழகளிறு தோன்றுமே எனவும், பொன்யாத்த தார்ப் புரவி பரிக்குமே பொன்ஞாத்த தார்ப் புரவி பரிக்குமே எனவும் வரும். வினைக்கண்ணெனவே, மண்யாமை மண்ஞாமை எனப் பெயர்க்கண் வாராவாயின. ஞாமுற்கூறாது யா முற்கூறியவத னான் ஞாச் சென்றவழி யாச் செல்லாது, யாச் சென்றவழி ஞாச் செல்லுமென்று கொள்க. மண்ஞான்றது என்றவழி மண்யான்றது என்று வாராமை உணர்க. (4) 147. மொழிமுத லாகு மெல்லா வெழுத்தும் வருவழி நின்ற வாயிரு புள்ளியும் வேற்றுமை யல்வழித் திரிபிட னிலவே. இது, ணகார ஈறும், னகார ஈறும் அல்வழிக்கண் இயல்பாய் முடியுமென்கின்றது. இதன் பொருள்: மொழி முதலாகும் எல்லா வெழுத்தும் வருவழி - மொழிக்கு முதலாமெனப்பட்ட இருபத்திரண் டெழுத்தும் வருமொழியாய் வருமிடத்து, நின்ற ஆயிரு புள்ளியும் - முன்னர்க் கூறிநின்ற ணகாரமும் னகாரமும், வேற்றுமை யல்வழித் திரிபிடன் இலவே - வேற்றுமை யல்லாத இடத்துத் திரியுமிடம் இல என்றவாறு. மண் பொன் என நிறுத்திக், கடிது சிறிது தீது பெரிது ஞெகிழ்ந்தது நீண்டது மாண்டது யாது வலிது நுந்தை யது அடைந்தது ஆயிற்று இல்லை ஈண்டிற்று உண்டு ஊட்டிற்று எவ்விடத்தது ஏறிற்று ஐது ஒழுகிற்று ஓங்கிற்று ஔவையது என ஒட்டுக. வருமொழி முற்கூறியவதனால், ணகாரத்திற்குச் சிறுபான்மை திரிபும் உண்டென்று கொள்க. சாட்கோல் என வரும். இதற்குச் சாணாகிய கோலென்க. இவை நின்றசொன் முனியல்பாகும் (எழு. 144) என்றவழி அடங்காவாயின, அது வருமொழிபற்றித் திரியாமை கூறியதாதலின். இது - நிலை மொழி பற்றித் திரியாமை கூறியது. (5) 148. வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத் தல்வழி மேற்கூ றியற்கை யாவயி னான. இது, முற்கூறியவாற்றான் வேற்றுமைக்கண் திரிபு எய்தி நின்றவற்றை, ஈண்டு வேற்றுமைக்கண்ணும் வல்லெழுத்து அல்வழித் திரியாவென எய்தியது விலக்கிற்று. இதன் பொருள்: ஆவயினான - அல்வழிக்கண் அங்ஙனந் திரியாது நின்ற அவ்வொற்றுக்கள், வேற்றுமைக்கண்ணும் - வேற்றுமைப் பொருட் புணர்ச்சி யிடத்தும், வல்லெழுத் தல்வழி மேற் கூறியற்கை - வல்லெழுத்தல்லாத இடத்து மேற்கூறிய இயல்பு முடிபாம் என்றவாறு. எனவே, வல்லெழுத்து வந்துழித் திரியு மென்றாராயிற்று. உதாரணம்: மண் பொன் என நிறுத்தி, ஞெகிழ்ச்சி நீட்சி மாட்சி யாப்பு வன்மை நுந்தையது அழகு ஆக்கம் இன்மை என ஏற்பன கொணர்ந்து ஒட்டுக. இதுவுஞ் 5செய்கைச் சூத்திரம். மேல் நான்கு சூத்திரத்தாற் கூறியன வல்லெழுத்து வந்துழித் திரியுமாறு தத்தம் ஈற்றுட் கூறுப. (6) 149. லனவென வரூஉம் புள்ளி முன்னர்த் தநவென வரிற் றனவா கும்மே. இது புள்ளிமயங்கியலை நோக்கிய தோர் வருமொழிக் கருவி கூறுகின்றது. இதன் பொருள்: ல ன என வரூஉம் புள்ளி முன்னர் - லகார னகார மென்று சொல்ல வருகின்ற புள்ளிகளின் முன்னர், த ந எனவரின் - தகாரமும் நகாரமும் முதலென்று சொல்லும் படியாகச் சிலசொற்கள்வரின், றனவாகும் - நிரனிறையானே அவை றகார னகாரங் களாகத் திரியும் என்றவாறு. உதாரணம்: கஃறீது கன்னன்று, பொன்றீது பொன்னன்று என வரும். நிலைமொழித்திரிபு தத்தம் ஈற்றுட் கூறுப. (7) 150. ணளவென் புள்ளிமுன் டணவெனத் தோன்றும். இதுவும் அது. இதன் பொருள்: ணளவென் புள்ளிமுன் - ணகார ளகார மென்று சொல்லப் படும் புள்ளிகளின் முன்னர் அதிகாரத்தால் தகார நகாரங்கள் வருமெனின், டண வெனத் தோன்றும் - அவை நிரனிறையானே டகார ணகாரங்களாய்த் திரிந்து தோன்றும் என்றவாறு. உதாரணம்: மண்டீது, மண்ணன்று, முஃடீது முண்ணன்று என வரும். நிலைமொழித் திரிபு தத்தம் ஈற்றுட் கூறுப. (8) 151. உயிரீ றாகிய முன்னிலைக் கிளவியும் புள்ளி யிறுதி முன்னிலைக் கிளவியு மியல்பா குநவு முறழா குநவுமென் றாயீ ரியல வல்லெழுத்து வரினே. இது, முன்னிலை வினைச்சொல் வன்கணத்துக்கண் முடியு மாறு கூறுகின்றது. இதன் பொருள்: உயிரீறாகிய முன்னிலைக் கிளவியும் - உயிரீறாய் வந்த முன்னிலை வினைச்சொற்களும், புள்ளியிறுதி முன்னிலைக் கிளவியும் - புள்ளியீறாய் வந்த முன்னிலை வினைச்சொற்களும், வல்லெழுத்து வரின் - வல்லெழுத்து முதலாகிய மொழிவரின், இயல்பாகுநவும் உறழாகுநவு மென்று ஆயீரியல - இயல்பாய் முடிவனவும் உறழ்ந்து முடிவனவுமென அவ்விரண்டு இயல்பினையுடைய என்றவாறு. உதாரணம்: எறிகொற்றா கொணாகொற்றா உண்கொற்றா தின்கொற்றா சாத்தா தேவா பூதா என இவை இயல்பு. நடகொற்றா நடக்கொற்றா, ஈர்கொற்றா ஈர்க்கொற்றா சாத்தா தேவா பூதா என இவை உறழ்ச்சி. ஈறுறென்று ஓதினமையின் வினைச்சொல்லே கொள்க. இவை 6முன்னின்றான் தொழி லுணர்த்துவனவும், அவனைத் தொழிற்படுத்துவனவுமென இருவகைய. இ ஐ ஆய் முதலியன தொழிலுணர்த்துவன. நட, வா, உண், தின் முதலியன உயிரீறும் புள்ளியீறுந் தொழிற்படுத்துவன. நில்கொற்றா நிற்கொற்றா எனத் திரிந்து உறழ்ந்தனவும், உறழா குநவும் என்னும் பொதுவகையான் முடிக்க. இயல்பு முறழ்வுமென் றிரண்டியல்பின என்னாது ஆகுநவும் என்றதனான், துக்கொற்றா நொக்கொற்றா ஞெள்ளா நாகா மாடா வடுகா என ஓரெழுத்தொருமொழி முன்னிலை வினைச் சொல் மிக்கே முடிதல் கொள்க. (9) 152. ஔவென வரூஉம் முயிரிறு சொல்லும் ஞநமவ என்னும் புள்ளி யிறுதியுங் குற்றிய லுகரத் திறுதியு முளப்பட முற்றத் தோன்றா முன்னிலை மொழிக்கே. இஃது - எய்தியது விலக்கிற்று; முற்கூறியவற்றுட் சில ஆகாதன வற்றை வரைந்து உணர்த்தலின். இதன் பொருள்: ஔவென வரூஉம் உயிரிறு சொல்லும் - ஔவென வருகின்ற உயிரீற்றுச் சொல்லும், ஞநமவ என்னும் புள்ளியிறுதியும் - ஞநமவ என்று சொல்லப்படும் புள்ளியீற்றுச் சொல்லும், குற்றியலுகரத்து இறுதியும் - குற்றியலுகரத்தை இறுதியிலேயுடைய சொல்லும், முன்னிலை மொழிக்கு உளப்பட முற்றத் தோன்றா - முன்னர் முன்னிலை மொழிக்குப் பொருந்தக் கூறிய இயல்பும் உறழ்ச்சியுமாகிய முடிபிற்கு முற்றத் தோன்றா என்றவாறு. முற்றவென்றதனான் நிலைமொழி உகரம் பெற்று உறழ்ந்து முடிதல் கொள்க. உதாரணம்: கௌவுகொற்றா கௌவுக்கொற்றா, வௌவு கொற்றா வௌவுக்கொற்றா, உரிஞுகொற்றா, உரிஞுக் கொற்றா, பொருநு கொற்றா பொருநுக்கொற்றா, திருமு கொற்றா திருமுக்கொற்றா, தெவ்வுகொற்றா தெவ்வுக் கொற்றா எனவும் 7கூட்டுகொற்றா கூட்டுக்கொற்றா எனவும் வரும். (10) 153. உயிரீ றாகிய வுயர்திணைப் பெயரும் புள்ளி யிறுதி யுயர்திணைப் பெயரு மெல்லா வழியு மியல்பென மொழிப. இஃது - உயர்திணைப்பெயர் வன்கணம், மென்கணம், இடைக் கணம், உயிர்க்கணமென்னும் நான்கு கணத்திலும் இருவழியும் முடியுமாறு கூறுகின்றது. இதன் பொருள்: உயிரீறாகிய உயர்திணைப் பெயரும் - உயிரீறாய் வந்த உயர்திணைப் பெயர்களும், புள்ளி யிறுதி உயர்திணைப் பெயரும் - புள்ளியீற்றினையுடைய உயர்திணைப் பெயர்களும், எல்லா வழியும் - நான்கு கணத்து அல்வழியும் வேற்றுமையுமாகிய எல்லா இடத்தும், இயல்பென மொழிப - இயல்பாய் முடியுமென்று கூறுவர் புலவர் என்றவாறு. வன்கணம் ஒழிந்த கணங்களை ஞ ந ம ய வ (எழு. 144) என்பதனான் முடிப்பாரும் உளர். அது பொருந்தாது; இவ்வாசிரியர் உயர்திணைப் பெயரும் விரவுப் பெயரும் எடுத்தோதியே முடிப்பா ராதலின். உதாரணம்: நம்பி அவன் எனவும், நங்கை அவள் எனவும் நிறுத்தி, அல்வழிக்கட் குறியன் சிறியன் தீயன் பெரியன் எனவும்; குறியள் சிறியள் தீயள் பெரியள் எனவும்; ஞான்றான் நீண்டான் மாண்டான் எனவும்; ஞான் றாள் நீண்டாள் மாண்டாள் எனவும்; யாவன் வலியன் எனவும்; யாவள் வலியள் எனவும்; அடைந்தான் ஆயி னான் ஔவியத்தான் எனவும்; அழகியள் ஆடினாள் ஔவியத் தாள் எனவும் ஒட்டுக. இனி வேற்றுமைக்கட் கை செவி தலை புறம் எனவும்; ஞாற்சி நீட்சி மாட்சி எனவும்; யாப்பு வன்மை எனவும்; அழகு --- ஔவியம் எனவும் எல்லாவற்றோடும் ஒட்டுக. ஒருவேன் எனத் தன்மைப் பெயர்க்கண்ணுங் குறியேன் சிறியேன் தீயேன் பெரியேன் எனவும், கை செவி தலை புறம் எனவும் ஒட்டுக. நீ முன்னிலை விரவுப்பெயராதலின் ஈண்டைக் காகா. இனி உயிரீறு புள்ளியிறுதி என்ற மிகையானே, உயர் திணைப் பெயர் 8திரிந்து முடிவனவுங் கொள்க. கபிலபரணர், இறைவநெடுவேட்டுவர், மருத்துவ மாணிக்கர் என னகர ஈறு கெட்டு இயல்பாய் முடிந்தன. ஆசீவகப்பள்ளி, நிக்கந்தக்கோட்டம் என இவை அவ்வீறு கெட்டு ஒற்று மிக்கு முடிந்தன. ஈழவக்கத்தி, வாணிகத்தெரு, அரசக்கன்னி, கோலிகக்கருவி என இவை ஒருமை யீறும் பன்மை யீறுங் கெட்டு மிக்கு முடிந்தன. குமரகோட்டம் குமரக் கோட்டம், பிரம கோட்டம் பிரமக்கோட்டம் என இவை ஈறுகெட்டு வல்லெழுத்து உறழ்ந்தன. வண்ணாரப்பெண்டிர்: இஃது மிக்கு முடிந்தது. பல்சங்கத்தார், பல் சான்றோர், பல்லரசர் என்றாற் போல்வன ரகரவீறும் அதன் முன்னின்ற அகரமுங் கெட்டுப் பிற செய்கை களும் பெற்று முடிந்தன. இனி, எல்லா வழியு மென்றதனான், உயர்திணை வினைச் சொல் இயல்பாயுந் திரிந்தும் முடிவன எல்லாங் கொள்க. உண்கு உண்டு வருது சேறு உண்பல் உண்டேன் உண்பேன் என்னுந் தன்மை வினைகளைக் கொற்றா சாத்தா தேவா பூதா என்பனவற்றோடு ஒட்டுக. உண்டீர் சான்றீர் பார்ப்பீர் என முன்னிலைக் கண்ணும், உண்ப உண்டார் - சான்றோர் பார்ப்பார் எனப் படர்க்கைக்கண்ணும் ஒட்டுக. இவை இயல்பு. உண்டனெஞ் சான்றேம் உண்டேநாம் என்றாற் போல்வன திரிந்து முடிந்தன. பிறவும் அன்ன. (11) 154. அவற்றுள் இகர விறுபெயர் திரிபிட னுடைத்தே. இஃது - உயர்திணைப் பெயருட் சிலவற்றிற்கு எய்தாத தெய்துவித்தது. இதன் பொருள்: அவற்றுள் இகர இறுபெயர் - முற்கூறிய உயர்திணைப் பெயர்களுள் இகர ஈற்றுப்பெயர், திரிபிடனு டைத்து - இருவழியுந் திரிந்து முடியும் இடனுடைத்து என்றவாறு. எட்டிப்பூ, காவிதிப்பூ, நம்பிப்பேறு என இவ்வுயர் திணைப் பெயர்கள் வேற்றுமைக்கண் மிக்கு முடிந்தன. 9எட்டி, காவிதி என்பன தேயவழக்காகிய சிறப்புப் பெயர். எட்டி மரம் அன்று. அஃது எட்டி குமர னிருந்தோன் றன்னை (மணி. 4 : 58) என்றதனான் உணர்க. இவை எட்டியதுபூ எட்டிக்குப்பூ என விரியும். இனி, நம்பிக்கொல்லன் நம்பிச்சான்றான் நம்பித்துணை நம்பிப் பிள்ளை எனவும், செட்டிக்கூத்தன் சாத்தன் தேவன் பூதன் எனவும் அல்வழிக்கண் உயர்திணைப்பெயர் மிக்கு முடிந்தன. இடனுடைத் தென்றதனான் இகர ஈறல்லாதனவும் ஈறு திரியாது நின்று வல்லெழுத்துப் பெறுதல் கொள்க. நங்கைப்பெண் நங்கைச்சாணி என அல்வழிக்கட் சிறுபான்மை ஐகார ஈறு மிக்கன. இவ்வீற் றஃறிணைப் பெயர் மிக்கு முடிதல் உயிர் மயங்கியலுட் கூறுப. (12) 155. அஃறிணை விரவுப்பெய ரியல்புமா ருளவே. இது விரவுப்பெயருள் இயல்பாய் முடிவனவும் உளவென் கின்றது. இதன் பொருள்: அஃறிணை விரவுப்பெயர் - உயர்திணைப் பெயரோடு அஃறிணை விரவிய விரவுப்பெயர், இயல்புமாருள - இயல்பாய் முடிவனவும் உள, உம்மையான் இயல்பின்றி முடிவன வும் உள என்றவாறு. உயர்திணைப் பெயரோடு அஃறிணை சென்று விரவிற் றென்ற தென்னை? சொல்லதிகாரத்து இருதிணைச் சொற்குமோ ரன்ன வுரிமையின் (சொல். 174) என்று சூத்திரஞ் செய்வாரா லெனின், அதுவும் பொருந்துமாறு கூறுதும். சாத்தன் சாத்தி, முடவன் முடத்தி என வரும் விரவுப் பெயர்க்கண் உயர்திணைக்கு உரியவாக ஓதிய ஆண்பாலும் பெண்பாலும் உணர்த்தி நின்ற ஈற்றெ ழுத்துக்களே அஃறிணை யாண்பாலும் பெண்பாலும் உணர்த்திற் றென்றல் வேண்டும்; என்னை? அஃறிணைக்கு ஒருமைப்பாலும் பன்மைப்பாலும் உணர்த்தும் ஈறன்றி ஆண்பாலும் பெண்பாலும் உணர்த்தும் ஈறுகள் உளவாக ஆசிரியர் ஓதாமையின். அங்ஙனம் உயர்திணை இருபாலும் உணர்த்தும் ஈறுகள் நின்றே அஃறிணை யாண் பாலையும் பெண்பாலையும் உணர்த்துதலின், அஃறிணை உயர்திணை யோடு சென்று விரவிற்றென்று அவற்றின் உண்மைத் தன்மைத் தோற்றங் கூறுவான் ஈண்டுக் கூறினார். இவ்வாறே விளிமரபின்கட் 10கிளந்த விறுதி யஃறிணை விரவுப்பெயர் (சொல். 152) என்புழியும் ஆசிரியர் உயர்திணையோடு அஃறிணை விரவிய விரவுப்பெயரென ஆண்டும் உண்மைத் தன்மைத் தோற்றங் கூறுவார். மாணாக்கன் இனிது உணர்தற்கு இவ்வாறு விரவுப் பெயரினது உண்மைத் தன்மைத் தோற்றம் இரண்டு அதிகாரத்துங் கூறி, அவ்விரவுப்பெயர் வழக்கின்கண் இருதிணைப் பொருளும் உணர்த்தி இருதிணைச் சொல்லாய் நிற்றற்கும் ஒத்த உரிமையவா மெனப் புலப்பட நிற்குமாறு காட்டினாரென்று உணர்க. இனி, அவை அல்வழிக்கண் இயல்பாய் நிற்குமாறு:- சாத்தன் கொற்றன், சாத்தி கொற்றி என நிறுத்திக், குறியன் சிறியன் தீயன் பெரியன், குறியள் சிறியள் தீயள் பெரியள் எனவும்; ஞான்றான் நீண்டான் மாண்டான் யாவன் வலியன், ஞான்றாள் நீண்டாள் மாண்டாள் யாவள் வலியள் எனவும்; அடைந்தான் ஔவித்தான், அடைந்தாள் ஔவித்தாள் எனவும், நான்கு கணத்தோடும் ஒட்டி உணர்க. இனி, வேற்றுமைக்கண் கை செவி தலை புறம் எனவும், ஞாற்சி நீட்சி மாட்சி யாப்பு வன்மை அழகு ஔவியம் எனவும் ஒட்டுக. இவற்றுள் னகாரம் நிற்பத் தகார நகாரம் வந்துழித் திரியும் உதாரணம் ஈண்டுக் கொள்ளற்க. இனிச் சாத்தன்குறிது, சாத்திகுறிது என அஃறிணை முடிபேற் பனவுங் கொள்க. இவற்றொடு வினைச்சொல் தலைப்பெய்ய இவை இருதிணைக்கும் உரியவாம். ஆண்டு நாற்பத்தெட்டுச் சூத்திரங் களான் முடிவதனை ஈண்டுத் தொகுத்தார். இஃது உயர் திணைக்கும் ஒக்கும். உண்மையான், இயல்பின்றி முடிவன னகார ஈற்றுட் காட்டுதும். (13) 156. 11புள்ளி யிறுதியு முயிரிறு கிளவியும் வல்லெழுத்து மிகுதி சொல்லிய முறையாற் 12றம்மி னாகிய தொழிற்சொன் முன்வரின் மெய்ம்மை யாகலு முறழத் தோன்றலு மம்முறை யிரண்டு முரியவை யுளவே வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும். இது, மேல் உயிரீற்றிற்கும் புள்ளியீற்றிற்கும் வேற்றுமைக்கட் கூறும் முடிபு பெறாது நிற்கும் மூன்றாம் வேற்றுமை முடிபு கூறு கின்றது. இதன் பொருள்: தம்மினாகிய தொழிற் சொல் - மூன்றாவதற்கு உரிய வினை முதற் பொருளானுளவாகிய தொழிற்சொல், புள்ளியிறுதி முன்னும் உயிரிறு கிளவி முன்னும் வரின் - புள்ளியீற்றுச் சொன் முன்னரும் உயிரீற்றுச் சொன் முன்னரும் வருமாயின், மெய்ம்மை யாகலும் உறழத் தோன்றலும் அம்முறையிரண்டும் உரியவை உள - அவற்றுள் இயல்பாகலும் உறழத்தோன்றலுமாகிய அம் முறை யிரண்டும் பெறுதற்கு உரிய உளவாதலால், வேற்றுமை மருங்கிற் சொல்லிய முறையான் வேண்டும் வல்லெழுத்து மிகுதி - உயிர் மயங்கியலுள்ளும் புள்ளிமயங்கியலுள்ளும் வேற்றுமைப் புணர்ச்சிக்குச் சொல்லிய முறையான் விரும்பும் வல்லெழுத்து மிகுதியை, போற்றல் - ஈண்டுக் கொள்ளற்க என்றவாறு. மெய்ம்மை 13பட்டாங்காதலின் இயல்பாம். உதாரணம்: நாய் புலி என நிறுத்திக் கோட்பட்டான் சாரப் பட்டான் தீண்டப்பட்டான் பாயப்பட்டான் என வருவித்து இயல்பாயவாறு காண்க. சூர்கோட்பட்டான் சூர்க்கோட் பட்டான், வளிகோட்பட்டான் வளிக் கோட்பட்டான், சாரப்பட்டான், தீண்டப்பட்டான், பாயப்பட்டான் என இவை உறழ்ந்தன. இவை நாற்பத்தெட்டுச் சூத்திரங்களான் முடிவனவற்றைத் தொகுத்தார். புள்ளியிறுதி உயிரிறுகிளவி என்றதனாற் பேஎய்கோட் பட்டான் பேஎய்க்கோட்பட்டான் என எகரப்பேறும் உறழ்ச்சிக்குக் கொடுக்க. `அம்முறை யிரண்டு முரியவை யுளவே என்றதனாற் பாம்பு கோட்பட்டான் பாப்புக்கோட்பட்டான் என்னும் உறழ்ச்சியுள் நிலை மொழி யொற்றுத் திரிதலுங் கொள்க. இவ்வீறுகள் நாய்க்கால் தேர்க்கால் கிளிக்கால் என ஆண்டு வேற்றுமைக்கண் வல்லெழுத்து மிகுமாறு காண்க. (14) 157. மெல்லெழுத்து மிகுவழி வலிப்பொடு தோன்றலும் வல்லெழுத்து மிகுவழி மெலிப்பொடு தோன்றலு மியற்கை மருங்கின் மிகற்கை தோன்றலு முயிர்மிக வருவழி யுயிர்கெட வருதலுஞ் சாரியை யுள்வழிச் சாரியை கெடுதலுஞ் சாரியை யுள்வழித் தன்னுருபு நிலையலுஞ் சாரியை யியற்கை யுறழத் தோன்றலு முயர்திணை மருங்கி னொழியாது வருதலு மஃறிணை விரவுப்பெயர்க் கவ்விய னிலையலு மெய்பிறி தாகிடத் தியற்கை யாதலு மன்ன பிறவுந் தன்னியன் மருங்கின் மெய்பெறக் கிளந்து பொருள்வரைந் திசைக்கு மைகார வேற்றுமைத் திரிபென மொழிப. இஃது - இரண்டாம் வேற்றுமைத் 14திரிபு தொகுத்து உணர்த்து கின்றது. இதன் பொருள்: மெல்லெழுத்து மிகுவழி வலிப்பொடு தோன்றலும் - மரப்பெயர்க் கிளவி மெல்லெழுத்து மிகுமே (எழு. 217) என்றத னான் விளங்குறைத்தானென மெல்லெழுத்து மிகுமிடத்து விளக்குறைத்தானென வல்லெழுத்துத் தோன்றுத லும், வல்லெழுத்து மிகுவழி மெலிப்பொடு தோன்றலும் - மகர விறுதி (எழு. 310) என்பதனான் மரக்குறைத்தான் என வல்லெ ழுத்து மிகுமிடத்து மரங்குறைத்தான் என மெல்லெழுத்துத் தோன்றுதலும், இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும் - தாயென் கிளவி யியற்கை யாகும் (எழு. 358) என்றவழித் தாய்கொலை என இயல்பாய் வருமிடத்துத் தாய்க்கொலை என மிகுதி தோன்றுதலும், உயிர்மிக வருவழி உயிர்கெட வருதலும் - குறியதன் முன்னரும் (எழு. 226) எனவுங், குற்றெழுத் திம்பரும் (எழு. 267) எனவும், ஏயெ னிறுதிக்கு (எழு. 277) எனவுங் கூறியவற்றான் உயிர்மிக்கு வருமிடத்துப் பலாக்குறைத்தான் கழுக்கொணர்ந் தான் ஏக்கட்டினான் என உயிர் கெட வருதலும், சாரியை உள்வழிச் சாரியைகெடுதலும் - வண்டும் பெண்டும் (எழு. 420) என்பதனாற் சாரியைப்பேறு உள்ள இடத்து வண்டு கொணர்ந்தான் எனச் சாரியை கெட்டு நிற்றலும், சாரியை உள்வழித் தன்னுருபு நிலையலும் - வண்டும் பெண்டும் என்பதனாற் சாரியைப்பேறு உள்ள இடத்து வண்டி னைக் கொணர்ந்தான் எனத் தன்னுருபு நிற்றலும் (இதற்கு வல்லெ ழுத்துப்பேறு ஈற்று வகையாற் கொள்க), சாரியை இயற்கை உறழத் தோன்றலும் - புளிமரக் கிளவிக்கு (எழு. 244) எனவும், பனையுமரையும் (எழு. 283) எனவும், பூல்வே லென்றா (எழு. 375) எனவும், பெற்ற சாரியை பெறாது இயல்பாய் நின்று புளிகுறைத்தான் புளிக்குறைத்தான், பனைதடிந்தான், பனைத் தடிந்தான், பூல்குறைத்தான் பூற்குறைத்தான் என மிக்குந் திரிந்தும் உறழ்ச்சியாகத் தோன்றுதலும், உயர்திணை மருங்கின் ஒழியாது வருதலும் - உயிரீறாகிய உயர் திணைப் பெயரும் (எழு. 153) என்பதனான், வேற்றுமைக்கண் இயல்பாய் வருமென்றவை நம்பியைக் கொணர்ந்தான் நங்கையைக் கொணர்ந்தான் என்றவழி இரண்டனுருபு தொகாதே வல்லொற்று மிக்கு நிற்றலும், ஒழியாது என்றதனான், மகற்பெற்றான் மகட்பெற்றான் எனவும், ஆடூஉவறிசொல் (சொல். 2) மழவரோட்டிய அவற்கண் டெம்முள் எனவும் ஒழிந்தும் வருமென்று கொள்க. அஃறிணை விரவுப்பெயர்க்கு அவ்வியல் நிலையலும் - உயர்திணை யோடு அஃறிணை விரவும் பெயர்க்குக் கொற்றனைக் கொணர்ந்தானென உருபு தொகாதே நிற்றலும், அவ்வியல் நிலை யலும் என்றதனானே, மகப்பெற்றே னென விரவுப்பெயர்க் கண்ணுந் தொகுதல் கொள்க. உருபியலுட், தேருங் காலை (எழு. 202) என்ற இலேசான், இதற்கும் முன்னையதற்கும் வல்லெழுத்துப் பேறுங் கொள்க. மெய் பிறிதாகிடத்து இயற்கை யாதலும் - புள்ளி மயங்கி யலுள் ணகார னகார இறுதி வல்லெழுத்தியையின் மெய்பிறிதா மென்ற இடத்து மெய்பிறிதா காது, மண்கொணர்ந்தான் பொன் கொணர்ந்தான் என இயற்கையாய் வருதலும், அன்ன பிறவும் - அவைபோல்வன பிறவும், அவை எற்கண்டு பெயருங்காலை யாழநின் கற்கெழு சிறுகுடி எனவும், நப்புணர் வில்லா நயனில்லோர் நட்பு எனவும் வருவழி, எற்கண்டு நப்புணர்வு என்னுந் தொடக்கங் குறுகும் உயர் திணைப் பெயர்கள் மெல்லெழுத்துப் பெறுதற்கு உரியன வல்லெழுத்துப் பெறுதல் கொள்க. இன்னுந் தினைபிளந்தான் மயிர்குறைத்தான் தற்கொண்டான் செறுத்தான் புகழ்ந்தான் என வரும். தன் இயல் மருங்கின் - தன்னையே நோக்கித் திரிபு நடக்கு மிடத்து, மெய்பெறக் கிளந்து பொருள் வரைந்து இசைக்கும் - பொருள்பெற எடுத்தோதப்பட்டு ஏனை வேற்றுமைப் பொருட் புணர்ச்சியது பொது முடிபினைத் தான் நீக்கி வேறு முடிபிற்றாய் நின்று ஒலிக்கும், ஐகார வேற்றுமைத் திரிபென மொழிப - இரண்டாம் வேற்றுமையது வேறுபட்ட புணர்ச்சி என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. மெய்பெற என்றதனானே சாரியையுள்வழித் தன்னுருபு நிலையாது செய்யுட்கண் வருவனவும், பிறவற்றின்கண் 15உறழ்ந்து முடிவனவுங் கொள்க. மறங்கடிந்த வருங்கற்பின் எனவும், சில் சொல்லிற் பல்கூந்தல் (புறம். 166) எனவும், ஆயிரு திணையினி சைக்குமன் (சொல். 1) எனவும், பிறாண்டும் பெரும்பான்மையும் வருமென்று கொள்க. மைகொணர்ந்தான் மைக் கொணர்ந்தான், வில்கோல் விற்கோள் என உறழ்ந்தும் வரும். இனி, இவ்வாறு திரியாது அகத்தோத்திற் கூறிய பொது முடிபே தமக்கு முடிபாக வருவனவும் கொள்க. அவை கடுக்குறைத் தான், செப்புக் கொணர்ந்தான் என்றாற் போல்வன. தம்மினாகிய தொழிற் சொன் முன்வரின் (எழு. 156) என்ற அதிகாரத்தான், வினை வந்துழியே இங்ஙனம் பெரும்பான்மை திரிவதென்று உணர்க. இனித் தன்னின முடித்த லென்பதனான் ஏழாவதற்கும் வினை யோடு முடிவுழித் திரிதல் கொள்க. அது வரைபாய் வருடை, புலம்புக் கனனே புல்லணற் காளை (புறம். 258) என்றாற்போல் வரும். (15) 158. வேற்றுமை யல்வழி இஐ என்னு மீற்றுப்பெயர்க் கிளவி மூவகை நிலைய வவைதா மியல்பா குநவும் வல்லெழுத்து மிகுநவு முறழா குநவு மென்மனார் புலவர். இஃது - இகர ஈற்றுப் பெயர்க்கும் ஐகார ஈற்றுப் பெயர்க்கும் அல்வழி முடிபு கூறுகின்றது. இதன் பொருள்: வேற்றுமை யல்வழி - வேற்றுமை யல்லா இடத்து, இ ஐ என்னும் ஈற்றுப்பெயர்க்கிளவி மூவகை நிலைய - இ ஐ என்னும் ஈற்றை யுடைய பெயர்ச்சொற்கள் மூவகையாகிய முடிபு நிலையையுடைய; அவைதாம் - அம்முடிபுகடாம், இயல்பாகுநவும் - இயல்பாய் முடிவனவும், வல்லெழுத்து மிகுநவும் - வல்லெழுத்து மிக்கு முடிவனவும், உறழாகுநவும் - உறழ்ச்சியாய் முடிவனவும், என்மனார் புலவர் - என இவையென்று கூறுவர் புலவர் என்றவாறு. உதாரணம்: பருத்தி குறிது, காரை குறிது சிறிது தீது பெரிது என இவை இயல்பு. மாசித்திங்கள், சித்திரைத்திங்கள், அலிக்கொற்றன், புலைக்கொற்றன், காவிக்கண், குவளைக்கண் என இவை மிகுதி. கிளிகுறிது கிளிக் குறிது, தினைகுறிது தினைக்குறிது என இவை உறழ்ச்சி. பெயர்க் கிளவி மூவகை நிலைய வெனவே பெயரல்லாத 16இரண்டீற்று வினைச்சொல்லும் இடைச்சொல்லும் உரிச் சொல்லும் இயல்பும் மிகுதியுமாகிய இருவகை நிலையவாம். ஒல்லைக்கொண்டான் என்பது ஐகார ஈற்று வினைச்சொன் மிகுதி. இனி யணி (எழுத். 236) யென்பதன்கண் இகரஈற்று வினையெச்சம் எடுத்தோதுப. இவற்றிற்கு இயல்பு வந்துழிக் காண்க. சென்மதி பாக இஃது இகர ஈற்று இடைச்சொல்லியல்பு. மிகுதி வந்துழிக் காண்க. தில்லைச் சொல்லே (சொல். 253) இஃது ஐகார ஈற்று இடைச் சொன்மிகுதி. இயல்பு வந்துழிக் காண்க. கடிகா இஃது இகர ஈற்று உரிச்சொல்லியல்பு. மிகுதி வந்துழிக் காண்க. பணைத்தோள் இஃது ஐகார ஈற்று உரிச்சொன் மிகுதி. இயல்பு வந்துழிக் காண்க. (16) 159. சுட்டுமுத லாகிய விகர விறுதியு மெகரமுதல் வினாவி னிகர விறுதியுஞ் சுட்டுச்சினை நீடிய வையெ னிறுதியும் யாவென் வினாவி னையெ னிறுதியும் வல்லெழுத்து மிகுநவு முறழா குநவுஞ் சொல்லியன் மருங்கி னுளவென மொழிப. இஃது - ஏழாம் வேற்றுமை இடப்பொருளுணர்த்தி நின்ற இகர ஐகார ஈற்று இடைச்சொன் முடிபு கூறுகின்றது. இதன் பொருள்: சொல்லியல் மருங்கின் - இகர ஐகாரங்கட்கு முன்னர்க் கூறிய மூவகை இலக்கணங்களுள் இயல்பை நீக்கிச் சுட்டு முதலாகிய இகர இறுதியும் - சுட்டெழுத் தினை முதலாகவுடைய அவ்விகர ஈற்று இடைச்சொல்லும், எகர வினாவின் முதல் இகர இறுதியும் - எகரமாகிய வினாவினை முதலாகவுடைய அவ்விகர ஈற்று இடைச் சொல்லும், சுட்டுச்சினை நீடிய ஐயென் இறுதியும் - சுட்டாகிய உறுப் பெழுத்து நீண்ட அவ்வைகார ஈற்று இடைச்சொல்லும், யாவென் வினாவின் ஐயென் இறுதியும் - யாவென் வினாவினை முதற்கணுடைய அவ்வைகார ஈற்று இடைச்சொல்லும், வல்லெழுத்து மிகுநவும் - வல்லெழுத்து மிக்கு முடிவனவும், உறழாகுநவும் - உறழ்ச்சியாய் முடி வனவும், உளவென மொழிப - உளவென்று கூறுவர் புலவர் என்றவாறு. உதாரணம்:அதோளிக்கொண்டான், இதோளிக் கொண்டான், உதோளிக்கொண்டான், எதோளிக் கொண்டான், சென்றான் தந்தான் போயினான் எனவும்; ஆண்டைக் கொண்டான், ஈண்டைக் கொண்டான் ஊண்டைக் கொண்டான், யாண்டைக்கொண்டான் எனவும் இவை மிக்கன. அதோளி அவ்விடமென்னும் பொருட்டு. அவ்வழி கொண்டான் அவ்வழிக் கொண்டான், இவ்வழி கொண்டான் இவ்வழிக் கொண்டான், உவ்வழி கொண்டான் உவ்வழிக் கொண்டான், எவ்வழி கொண்டான் எவ்வழிக் கொண்டான் என உறழ்ந்தன. சுட்டுச்சினை நீண்டதற்கும் யா வினாவிற்கும் வரும் ஐகார ஈற்றுக்கு உதாரணம், அக்காலத்து, ஆயிடைகொண்டான் ஆயிடைக் கொண்டான் என்றாற்போல ஏனையவற்றிற்கும் வழங் கிற்றுப்போலும். இனி 17ஆங்கவைகொண்டான் ஆங்கவைக் கொண்டான் என்பன காட்டுவாரும் உளர். அவை திரிபுடையனவாம். சொல்லியல் என்றதனாலே பிற ஐகார ஈறு மிக்கு முடிவன கொள்க. அன்றைக் கூத்தர், பண்டைச் சான்றோரெனவும், ஒருதிங் களைக்குழவி, ஒருநாளைக்குழவி எனவும் வரும். (17) 160. நெடியதன் முன்ன ரொற்றுமெய் கெடுதலுங் குறியதன் முன்னர்த் தன்னுரு விரட்டலு மறியத் தோன்றிய நெறியிய லென்ப. இது, புள்ளிமயங்கியலை நோக்கியதொரு நிலைமொழிக் கருவி கூறுகின்றது. இதன் பொருள்: நெடியதன் முன்னர் ஒற்று மெய் கெடுதலும் - நெட் டெழுத்தின் முன் நின்ற ஒற்றுத் தன் வடிவு கெடுதலும், குறியதன் முன்னர்த் தன் உரு இரட்டலும் - குற்றெழுத்தின் முன் நின்ற ஒற்றுத்தன் வடிவு இரட்டித்தலும், அறியத் தோன்றிய நெறியியல் என்ப - அறியும்படி வந்த அடிப்பாட்டிய லென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. இங்ஙனம், நெடியதன் முன்னர் ஒற்றுக்கெடுவன: ணகாரமும், னகாரமும், மகாரமும், லகாரமும், ளகாரமும் என ஐவகையவாம். உதாரணம்: கோணிமிர்ந்தது, தானல்லன், தாநல்லர், வேனன்று, தோணன்று என நகரம் வருமொழியாதற்கண் நெடி யதன் முன்னர் ஒற்றுக்கெட்டது. கோறீது, வேறீது எனத் தகரம் வருமொழியாதற்கண் லகாரவொற்றுக் கெட்டது. ஏனைய வந்துழிக் காண்க. இவற்றை லனவென வரூஉம் (எழுத். 149) ணளவென் புள்ளி முன் (எழுத். 150) என்பனவற்றான் முடித்துக் கெடுமாறு காண்க. ஒற்றிரட்டுவன, ஞகார நகார ரகார ழகாரம் ஒழிந்தன. கண்ண ழகிது, பொன்னகல், தம்மாடை, சொல்லழகிது, எள்ளழகிது, நெய்ய கல், தெவ்வலன் எனக் குறியதன் முன்னர்த் தன்னுரு இரட்டின. மேலைச் சூத்திரத்து நான்கனுருபு பிற்கூறியதனான், ஒற்றிரட்டுதல் உயிர் முதன்மொழிக்கண்ணதென்று உணர்க. குறியது பிற்கூறிய முறையன்றிக் கூற்றினால் தம்மை எம்மை நின்னை என நெடியன குறுகி நின்றவழியுங் குறியதன் முன்னர் ஒற்றாய் இரட்டுதலும், விரனன்று குறணிமிர்ந்தது எனக் குறி லிணையின் முன்னர் வந்த ஒற்றுக்கெடுதலும், வராறீது நன்று எனக் குறினெடிற்கண் நின்ற ஒற்றுக்கெடுதலும், அதுகொறோழி எனவுங் குரிசிறீயன் எனவுந் தொடர்மொழியீற்று நின்ற ஒற்றுக் கெடுதலும், 18இடைச்சொல்லோடு ஒட்டுப்பட்டு நிற்றலுங், காற்றீது எனவும் விரற்றீது எனவும் ஒற்று நிற்றலுங் கொள்க. இனி அறிய என்றதனாற் தேன்றீது நாண்டீது, என்றாற்போல்வன கெடாமை நிற்றலுங் கெடுதலும் தகர நகரங்கள் வந்துழி யென்பதூஉங் கொள்க. நெறியிய லென்றதனாற், சுட்டின்முன் உயிர் முதன்மொழி வந்துழி அவ்வடை அவ்வாடை என, இடை வகரவொற்று இல் வழியும் இரட்டுதல் கொள்க. (18) 161. ஆற னுருபினு நான்க னுருபினுங் கூறிய குற்றொற் றிரட்ட லில்லை யீறாகு புள்ளி யகரமொடு நிலையு நெடுமுதல் குறுகு மொழிமுன் னான. இஃது உருபியலை நோக்கியதோர் நிலைமொழிக்கருவி கூறுகின்றது. இதன் பொருள்: நெடுமுதல் குறுகும் மொழிமுன் ஆன - நெடிதாகிய முதலெழுத்துக் குறுகி முடியும் அறுவகைப்பட்ட மொழிகளின் முன்னர் வந்த, ஆறனுருபினும் நான்கனுருபினும் - ஆறாம் வேற்றுமைக்கண்ணும் நான்காம் வேற்றுமைக்கண்ணும், கூறிய குற்றொற்று இரட்டலில்லை - முன்னர் நிலைமொழிக்கு இரட்டு மென்ற குற்றொற்று இரட்டி வருதலில்லை; ஈறாகுபுள்ளி அகர மொடு நிலையும் - நிலைமொழி யீற்றுக்கண் நின்ற ஒற்றுக்கள் அகரம்பெற்று நிற்கும் என்றவாறு. உருபியலில், நீயெனொருபெயர் (எழுத். 179) எனவுந், தாம்நா மென்னும் (எழுத். 188) எனவும், தான்யானென்னும் (எழு. 192) எனவுங் கூறியவற்றாற் குறுகி ஒற்றிரட்டித் தம்மை நம்மை எம்மை தன்னை நின்னை என்னை என வருவன, இதனானே தமது நமது எமது தனது நினது எனது எனவும்; தமக்கு நமக்கு எமக்கு தனக்கு நினக்கு எனக்கு எனவும் ஒற்றிரட்டாது அகரம் பெற்று வந்தன. நான்காவதற்கு ஒற்றுமிகுதல் வல்லெழுத்து முதலிய (எழு. 114) என்பதனாற் கொள்க. ஆறனுருபாகிய அகரம் ஏறி முடியாமைக்குக் காரணம் ஆறனுருபி னகரக்கிளவி (எழு. 115) என்புழிக் கூறினாம். ஒற்றிரட்டாமையும் அகரப்பேறும், 19இரண்டற்கும் ஒத்த விதி யென்று உணர்க. கூறிய என்றதனான் நெடுமுதல் குறுகாத தம் நம் நும் என வருஞ் சாரியைகட்கும் இவ்விரு விதியுங் கொள்க. எல்லார் தமக்கும், எல்லா நமக்கும், எல்லீர் நுமக்கும், எல்லார் தமதும், எல்லா நமதும், எல்லீர் நுமதும் என வரும். (19) 162. நும்மெ னிறுதியு மந்நிலை திரியாது. இது, நெடுமுதல் குறுகாத நும்மென்கின்றதும் அவ்விதி பெறுமென் கின்றது. இதன் பொருள்: நும்மென் இறுதியும் - நெடுமுதல் குறுகா நும்மென் னும் மகரவீறும், அந்நிலை திரியாது - முற்கூறிய குற்றொற்று இரட்டாமையும் ஈறாகுபுள்ளி அகரமொடு நிலையலும் எய்தும் என்றவாறு. உதாரணம்: நுமது நுமக்கு என வரும். (20) 163. உகரமொடு புணரும் புள்ளி யிறுதி யகரமு முயிரும் வருவழி யியற்கை. இது, புள்ளி மயங்கியலை நோக்கியதோர் நிலைமொழிச் செய்கை கூறுகின்றது. இதன் பொருள்: உகரமொடு புணரும் புள்ளி யிறுதி - உகரப் பேற்றோடு புணரும் புள்ளியீறுகள், யகரமும் உயிரும் வருவழி இயற்கை - யகரமும் உயிரும் வருமொழியாய் வருமிடத்து அவ்வுகரம் பெறாது இயல்பாய் முடியும் என்றவாறு. அவ்வீறுகளாவன, புள்ளி மயங்கியலுள் உகரம் பெறு மென்று விதிக்கும் பல ஈறுகளுமென்று கொள்க. உரிஞ் யானா அனந்தா ஆதா இலகா ஈந்தா உழுந்தா ஊரா எயினா ஏறா ஐயா ஒழுக்கா ஓதா ஔவியா எனவும், உரிஞ்யாது அழகு எனவும் ஒட்டுக. ஏனைப் புள்ளிகளோடும் ஏற்பன அறிந்து ஒட்டுக. ஞகாரையொற்றிய (எழு. 296) என்பதனானும், ஞநமவ வியையினும் (எழு. 297) என்பதனானும் யகரமும் உயிரும் வந்தால் உகரம் பெறாது இயல்பாமென்பது பெறுதலின் ஈண்டு விலக்கல் வேண்டா வெனின், எடுத்தோத்தின்வழியதே உய்த்துணர்ச்சி யென்று கொள்க. இது முதலாக அல்வழி கூறுகின்றார். (21) 164. உயிரும் புள்ளியு மிறுதி யாகி யளவு நிறையு மெண்ணுஞ் சுட்டி யுளவெனப் பட்ட வெல்லாச் சொல்லுந் தத்தங் கிளவி தம்மகப் பட்ட முத்தை வரூஉங் காலந் தோன்றி னொத்த தென்ப வேயென் சாரியை. இஃது - அளவும் நிறையும் எண்ணுமாகிய பெயர்கள் தம்மிற் புணருமாறு கூறுகின்றது. இதன் பொருள்: உயிரும் புள்ளியும் இறுதியாகி - உயிரும் 20புள்ளியுந் தமக்கு ஈறாய், அளவும் நிறையும் எண்ணுஞ் சுட்டி வுளவெனப்பட்ட எல்லாச் சொல்லும் - அளவையும் நிறையையும் எண்ணையுங் கருதி வருவன உளவென்று ஆசிரியர் கூறப்பட்ட எல்லாச் சொற்களும், தத்தங் கிளவி தம்மகப்பட்ட - தத்தமக்கு இனமாகிய சொற்களாய்த் தம்மிற் குறைந்த சொற்கள், முத்தை வரூஉங் காலந் தோன்றின் - தம் முன்னே வருங் காலந் தோன்று மாயின், ஏயென் சாரியை ஒத்தது என்ப - தாம் ஏயென் சாரியை பெற்று முடிதல் பொருந்திற்றென்பர் ஆசிரியர் என்றவாறு. முந்தை முத்தை யென விகாரம். நாழியேயாழாக்கு, உழக்கேயாழாக்கு, கலனேபதக்கு என அளவுப்பெயர் ஏகாரம் பெற்றுத் தம்முன்னர்த் தம்மிற் குறைந்தன வந்தன. தொடியேகஃசு, கழஞ்சே குன்றி, கொள்ளேயையவி என நிறைப்பெயர் ஏகாரம் பெற்றுத் தம்முன்னர்த் தம்மிற் குறைந்தன வந்தன. ஒன்றேகால், காலேகாணி, காணியேமுந்திரிகை என எண்ணுப்பெயர் ஏகாரம் பெற்றுத் தம்முன்னர்த் தம்மிற் குறைந்தன வந்தன. அதிகாரம்பட்ட புள்ளியீறு முற்கூறாத தனானே குறுணி நானாழி, ஐந்நாழியுழக்கு என ஏகாரமின்றி வருவனவுங் கொள்க. (22) 165. அரையென வரூஉம் பால்வரை கிளவிக்குப் புரைவ தன்றாற் சாரியை யியற்கை. இஃது - எய்தியது விலக்கிற்று. இதன் பொருள்: அரையென வரூஉம் பால்வரை கிளவிக்கு - அம் மூவகைச் சொன் முன்னர் வரும் அரை யென்று சொல்ல வருகின்ற பொருட்கூற்றை உணரநின்ற சொல்லிற்கு, சாரியையியற்கை புரைவதன்று - ஏயென் சாரியை பெறுந்தன்மை பொருந்துவதன்று என்றவாறு. ஆல் - அசை. உதாரணம்: உழக்கரை, செவிட்டரை, மூவுழக்கரை எனவும்; கஃசரை, கழஞ்சரை, தொடியரை, கொள்ளரை எனவும்; ஒன்றரை, பத்தரை எனவும் இவை ஏயென் சாரியை பெறாவாய் வந்தன. புரைவதன் றென்றதனாற் கலவரை யென்பதனை ஒற்றுக் கெடுத்துச் செய்கை செய்து முடிக்க. இதனானே 21செவிட்டரை யென்புழி டகரவொற்று மிகுதலுங் கொள்க. ஒட்டுதற் கொழுகிய வழக்கு (எழு. 132) அன்மையிற் சாரியை பெறாவாயின வென்றாலோ வெனின், அவை பெற்றும் பெறாதும் வருவனவற்றிற்குக் கூறியதாகலானும், இது தம்மகப் பட்ட (எழு. 164) என வரைந்தோதினமையானும் விலக்கல் வேண்டிற்று. (23) 166. குறையென் கிளவி முன்வரு காலை நிறையத் தோன்றும் வேற்றுமை யியற்கை. இஃது - எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது; ஏயென் சாரியை விலக்கி வேற்றுமை முடிபினோடு மாட்டெறிதலின். இதன் பொருள்: குறையென் கிளவி முன்வரு காலை - குறையென்னுஞ் சொல் அளவுப்பெயர் முதலியவற்றின்முன் வருங்காலத்திற்கு, வேற்றுமை யியற்கை - வேற்றுமைப் புணர்ச்சி முடிபிற்கு உரித்தாகக் கூறுந்தன்மை, நிறையத் தோன்றும் - நிரம்பத் தோன்றும் என்றவாறு. உதாரணம்: உரிக்குறை கலக்குறை எனவும், தொடிக்குறை கொட் குறை எனவும், காணிக்குறை காற்குறை எனவும் வரும். உரிய நெல்லுங் குறைநெல்லு மென்க. வேற்றுமை யியற்கை யெனவே இவை வேற்றுமை யன்றா யின. எனவே, உரிக்குறை யென்பதற்கு உரியும் உழக்குமெனப் பொருளாயிற்று. ஏனையவும் அன்ன. முன்வரு காலை யென்றத னானே கலப்பயறு, கலப்பாகு என்றாற்போலப் பொருட்பெயரோடு புணரும்வழியும் இவ்வேற்றுமை முடிபு எய்துவிக்க. 22பாகென்றது பாக்கினை. நிறைய வென்றதனானே உரிக்கூறு, தொடிக்கூறு, காணிக்கூறு எனக் கூறென்றதற்கும் இம்முடிபு எய்துவிக்க. (24) 167. குற்றிய லுகரக் கின்னே சாரியை. இது வேற்றுமை முடிபு விலக்கி இன் வகுத்தலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுகின்றது. இதன் பொருள்: குற்றியலுகரக்குச் சாரியை - குற்றியலுகர ஈற்று அளவுப் பெயர் முதலியவற்றிற்குக் குறையென்பதனோடு புணரும் வழி வருஞ் சாரியை, இன்னே - இன் சாரியையேயாம் என்றவாறு. குற்றியலுகரக்கு இதற்கு அத்து 23விதித்து முடிக்க. குற்றிய லுகரக் கின்னே யென்பதும் பாடம். உதாரணம்: உழக்கின்குறை ஆழாக்கின்குறை எனவும், கழஞ்சின் குறை கஃசின்குறை எனவும், ஒன்றின்குறை பத்தின்குறை எனவும் வரும். இதற்கு உழக்குங்குறையு மென்பது பொருள். இது வேற்றுமைக் கண்ணாயின் உழக்கிற்குறையென நிற்கும். (25) 168. அத்திடை வரூஉங் கலமெ னளவே. இதுவும் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது, வேற்றுமை விதிவிலக்கி அத்து வகுத்தலின். இதன் பொருள்: கலமென் அளவே - கலமென்னும் அளவுப்பெயர் குறையோடு புணருமிடத்து, அத்து இடை வரூஉம் - அத்துச் சாரியை இடை வந்து புணரும் என்றவாறு. கலத்துக் குறை. இதனை அத்தே வற்றே (எழுத். 33) என்பதனான் முடிக்க. இதற்கு கலமுங் குறையும் என்பது பொருள். சாரியை முற்கூறியவதனானே, முன் இன்சாரியை கலம் பெற்ற வழி வல்லெழுத்து வீழ்க்க. (26) 169. பனையெ னளவுங் காவெ னிறையு நினையுங் காலை யின்னொடு சிவணும். இதுவும் அது; வேற்றுமைவிதி விலக்கி இன் வகுத்தலின். இதன் பொருள்: பனையென் அளவுங் காவென் நிறையும் - பனை யென்னும் அளவுப்பெயரும் காவென்னும் நிறைப்பெயருங் குறை யென்பதனொடு புணருமிடத்து, நினையுங்காலை இன்னொடு சிவணும் - ஆராயுங்காலத்து இன்சாரியை பெற்றுப் புணரும் என்றவாறு. 24பனையின்குறை, காவின்குறை என வரும். இவையும் உம்மைத்தொகை. நினையுங்காலை என்பதனான் வேற்றுமைக்கு உரிய விதி யெய்தி வல்லெழுத்துப் பெறுதலுஞ் சிறுபான்மை கொள்க. பனைக்குறை, காக்குறை என வரும். இத்துணையும் அல்வழி முடிபு. இவற்றை வேற்றுமை யல்வழி இஐ (எழு. 158) என்னுஞ் சூத்திரத்திற் கூறாது வேறோதி னார், இவை அளவும், நிறையும் எண்ணுமாதலின். (27) 170. அளவிற்கு நிறையிற்கு மொழிமுத லாகி யுளவெனப் பட்ட வொன்பதிற் றெழுத்தே யவைதாங் கசதப வென்றா நமவ வென்றா வகர வுகரமோ டவையென மொழிப. இது, முற்கூறிய மூன்றனுள், அளவிற்கும் நிறைக்கும் மொழிக்கு முதலாமெழுத்து இனைத் தென்கின்றது. இதன் பொருள்: அளவிற்கும் நிறையிற்கும் மொழி முதலாகி உள வெனப் பட்ட ஒன்பதிற் றெழுத்தே - அளவுப் பெயர்க்கும் நிறைப் பெயர்க்கும் மொழிக்கு முதலாயுள்ளன வென்று கூறப்பட்டன ஒன்பதெழுத்துக்கள்; அவைதாம் கசதப என்றா நமவ என்றா அகரவுகரமோடு அவையென மொழிப-அவ்வெழுத்துக்கள்தாம் க - ச - த - ப - க்களும் ந - ம- வ - க்களும் அகர உகரமுமாகிய அவையென்று கூறுவர் புலவர் என்றவாறு. உதாரணம்: கலம், சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி, அகல், உழக்கு: இவை அளவு. கழஞ்சு, சீரகம், தொடி, பலம், நிறை, மா, வரை, அந்தை: இவை நிறை. நிறைக்கு உகர முதற்பெயர் வந்துழிக் காண்க. இனி, உளவெனப்பட்ட என்றதனானே உளவெனப்படாத னவும் உள. அவை, இம்மி ஓரடை இடா என வரையறை கூறாத னவுங் கொள்க. இன்னும் இதனானே, தேயவழக்காய் ஒருஞார், ஒருதுவலி என்பனவுங் கொள்க. 25இங்ஙனம் வரையறை கூறினார், அகத்தோத்தினுள் முடிபு கூறியவழி அதிகாரத்தான் வன்கணத்தின்மேற் செல்லாது ஒழிந்த கணத்தினுஞ் செல்லுமென்றற்கு. எண்ணுப்பெயர் வரையறை யின்மையிற் கூறாராயினார். (28) 171. ஈறியன் மருங்கி னிவையிவற் றியல்பெனக் கூறிய கிளவிப் பல்லா றெல்லா மெய்த்தலைப் பட்ட வழக்கொடு சிவணி யொத்தவை யுரிய புணர்மொழி நிலையே. இஃது - இவ்வோத்திற்குப் புறனடை; எடுத்தோத்தானும் இலேசானும் முடியாதனவற்றிற்கு இதுவே ஓத்தாகலின். இதன் பொருள்: ஈறு இயல் மருங்கின்- உயிரும் புள்ளியும் இறுதி யாகிய சொற்கள் வருமொழியொடு கூடி நடக்குமிடத்து, இவற்று இயல்பு இவையெனக் கூறிய கிளவிப் பல்லாறெல்லாம் - இம் மொழிகளின் முடிபு இவையெனக் கூறி முடிக்கப்பட்ட சொற்களி னுடைய அவ்வாற்றான் முடியாதுநின்ற பலவகை முடிபுகளெல்லாம், மெய்த் தலைப்பட்ட வழக்கொடு சிவணி-உண்மையைத் தலைப்பட்ட வழக்கொடு கூடி, புணர்மொழிநிலை ஒத்தவை உரிய - புணரும் மொழிகளின் நிலைமைக்கட் பொருந்தினவை உரியவாம் என்றவாறு. உதாரணம்: நடஞெள்ளா என உயிரீறாகிய முன்னிலைக் கிளவி மென்கணத்தோடு இயல்பாய் முடிந்தது. மண்ணு கொற்றா மண்ணுக்கொற்றா, மன்னுகொற்றா மன்னுக் கொற்றா, உள்ளுகொற்றா உள்ளுக்கொற்றா, கொல்லு கொற்றா கொல்லுக்கொற்றா என்பன புள்ளியிறுதி முன்னிலைக்கிளவி உகரம் பெற்றும் உறழ்ந்தும் முடிந்தன. உரிஞுஞெள்ளா : இஃது ஔவென வரூஉம் (எழு. 152) என்பதன் ஒழிபு. பதக்கநானாழி, பதக்கமுந்நாழி என இவை ஏயென் சாரியை பெறாது அக்குப் பெற்று அதன் இறுதி மெய்ம்மிசை யொடுங் கெட்டுப் புணர்ந்தன. வாட்டானை தோற்றண்டை என்பன தகரம் வந்துழித் திரிந்து நெடியதன் முன்னர் ஒற்றுக் கெடாது நின்றன. சீரகரை என்பதனைச் சீரகம் அரையென நிறுத்திக் ககர வொற்றின் மேலேறின அகரத்தையும் மகரவொற்றை யுங் கெடுத்து அரை யென்பதன் அகரத்தை யேற்றி முடிக்க. இது நிறைப் பெயர். ஒரு மாவரை யென்பதனை ஒரு மாவரை என நிறுத்தி, வருமொழி அகரங் கெடுத்து ஒருமாரையென முடிக்க. கலவரை யென்பதனைக் கலரை என முடிக்க. 26அகர மகரங் கெடுத்து நாகணை யெனப் பிறவும் வருவனவெல்லாம் இச் சூத்திரத்தான் முடிக்க. (29) 172. பலரறி சொன்முன் யாவ ரென்னும் பெயரிடை வகரங் கெடுதலு மேனை யொன்றறி சொன்முன் யாதென் வினாவிடை யொன்றிய வகரம் வருதலு மிரண்டு மருவின் பாத்தியிற் றிரியுமன் பயின்றே. இது, மரூஉச்சொன் முடிபு கூறுகின்றது. இதன் பொருள்: பலரறி சொன்முன் யாவரென்னும் பெயரிடை வகரங் கெடுதலும் - பலரை யறியும் அவர் முதலிய சொல்லின் முன்னர் வருகின்ற யாவரென்னும் பெயர் இடையில் வகரங் கெடுதலும், ஏனை ஒன்றறி சொன்முன் யாதென் வினா இடை ஒன்றிய வகரம் வருதலும் - ஒழிந்த ஒன்றனை அறியும் அது முதலிய சொல்லின் முன்னர் வருகின்ற யாதென்னும் வினாச்சொல் இடையிலே உயிரொடு பொருந்திய வகரம் வருதலும், இரண்டும் - ஆகிய அவை யிரண்டும், மருவின் பாத்தியின் மன் பயின்று திரியும் - மரு முடிபின் பகுதியிடத்து மிகவும் பயின்று திரியும் என்றவாறு. உதாரணம்: அவர் யார் எனவும், அது யாவது எனவும் வரும். அவர் யாவரென்பது வகரங் கெட்டு அவர் யாரென நின்ற வழி, யாஅ ரென்னும் வினாவின் கிளவி (சொ. 210) என்ற வினை யியலுட் கூறும் வினைக்குறிப்புச் சொல்லாம் பிறவெனின், ஆகாது; அவ்வகரங் கெட்டா லும் ஈண்டு யாவரென்னும் பெயர்த் தன்மை யாயே நிற்றலின். அது பெற்றவா றென்னை யெனின், ஈண்டுப் பலரறி சொன்முன் வந்த யாவரென்பதன் வகரம் கெடுமெனவே, ஏனை அவன் அவள் என்னும் இருபால் முன்னும் யாவரென்பது வாராதென்றும் அது திரிந்து மருவாய் நிற்குமென்றுங் கூறுதலானும், யாவரென்னும் பெயரிடை என்பதனானும் பெற்றாம். இதனானே அவன்யாவர், அவள் யாவர் என்றாற் பால்வழுவா மென்பது பெற்றாம். இதனை யாவன் யாவள் யாவரென்னு, மாவயின் மூன்றோடு (சொ. 162) எனப் பெயராக ஓதியவாற்றான் உணர்க. அன்றியும் யாரென்னும் வினாவின் கிளவி முப்பாற்கும் உரித் தென்று யாரென்னும் வினா வினைக்குறிப்பினை அவன்யார், அவள்யார், அவர்யார் என முப்பாற்கும் ஒப்ப உரிமை கூறுத லானும் அது வேறென்பது பெற்றாம். அது வினையியலுள் ஓதினமையானும் வினாவிற் கேற்றல் (சொ. 66) எனப் பயனிலையாக ஓதினமையானும் வேறாயிற்று. இனி யார்யார்க் கண்டே யுவப்பர் எனப் பலரறி சொன் முன்னரன்றி இயல்பாக வந்த யாரென்பது யாண்டு அடங்கு மெனின், அதுவும் யாரை யாரைக்கண்டென உருபு விரிதலின் யாவரை என்னும் வகரங்கெட்ட பெயரேயாம். அங்ஙனம் நிலை மொழி வருமொழியாய் நிற்றல் பயின்று என்றதனாற் கொள்க. இதனானே, யாவது நன்றென வுணரார் மாட்டும் (குறுந். 78) என ஏனை ஒன்றறிசொல்லும் நிலைமொழியாய் நிற்றல் கொள்க. இன்னும் இதனானே, யாரவர், யாவதது என இவ்விரு சொல்லும் நிலைமொழியாய் வருதல் கொள்க. (30) தொகைமரபு முற்றிற்று. கணேசயர் அடிக்குறிப்புகள்: 1. க ச த ப முதலிய மொழிமேற்றோன்றும் மெல்லெழுத்தென்றது. விள + கோடு என்பன புணருங்கால் வருமொழிக் ககரம்நோக்கி விளங்கோடு என மெல்லெழுத்து மிகுதற்கேயன்றி, மரம் குறிது என்பன புணருங்கால் ககரம் முதலிய நோக்கி மெல்லெழுத்துத் திரிதற்கும் விதி என்க. இச் சூத்திரத்தின் கருத்து உயிரீற்றின்முன் க ச த ப வருங்கால் அவ்வவற்றின் இனம் மிகும் என்பதும் நிலைமொழி யீற்றிலுள்ள மெல்லெழுத்துக்கள் அந்நான்கும் வருங்கால் அவ்வவ்வினமாகத் திரியும் என்பதுமே. 2. விளக்குறுமை ஏழாவது; விளக்குறைத்தான் இரண்டாவது. 3. எடுத்தோத்து என்றது - சூத்திரத்தை. விதிகளை எடுத்தோதுவது என்பது கருத்து. இலேசு என்றது - மிகை முதலியவற்றை. இனி எல்லாம் என்ற தனால் உயிர்க்கணமாயி னொற்றிரட்டியும் உடம்படுமெய் பெற்றும் உயிரேறியும் முடியுங் கருவித் திரிபுகள் திரிபெனப்படா இவ்வியல்பின்கண் என்று உணர்க என ஓதினமையானே கருவித் திரிபினதும், செய்கையினதும் வேறுபாடு இனிது அறியப்படும். 4. காய் மெய் என்னுமொழிகளை இங்கே ஈரெழுத்தொரு மொழியென்று கொண்ட நச்சினார்க்கினியர் `ஓரெழுத்தொரு மொழி ஈரெழுத்தொரு மொழி' என்னுஞ் சூத்திரத்து இவை முதலியவற்றை ஒற்றுத் தள்ளிக் கொள்ள வேண்டுமென்றது அவருக்கே யுடன்பாடன்மையைக் காட்டும். எழுத்தியல்பு நோக்கி ஈண்டுக் கூறினாரெனின்? ஆண்டும் அவ்வாறே கூறிவிடுதல் பொருத்தமென்பது அவர்க்கு முடன்பாடாதல் காண்க. 5. செய்கை - புணர்ச்சி; கருவிச் சூத்திரமன்று என்றபடி. 6. முன்னின்றான் தொழிலுணர்த்துவன முன்னிலை வினைமுற்று. முன்னின்றானைத் தொழிற்படுத்துவன ஏவல் வினைமுற்று. இவை அவ் விரண்டற்கும் வேறுபாடு. 7. குற்றியலுகரத்திறுதி. 8. திரிபு - விகாரம். 9. எட்டி காவிதி என்பன அரசரளிக்கும் சிறப்புப் பெயர் (பட்டப் பெயர்). 10. சேனாவரையர்க்கும் இதுவே கருத்தாதல் அச் சூத்திரைவுரை யானுணர்க. 11. புள்ளியிறுதியுள் குற்றியலுகரவீறும் அடங்கும். பாம்பு முதலிய குற்றிய லுகர வீறு. 12. நாய்கோட்பட்டான் என்புழி. தந்தொழில். கொள்ளுதல். தம்மினாகிய தொழில் - கொள்ளப்படுதல். 13. பட்டாங்கு - உண்மை. உண்மையாவது - விகாரமின்றி இயல்பாய் நிற்றல் ஆதலின் மெய்ம்மை இயல்பு என்றபடி. 14. திரிபு - விகாரம். 15. உறழ்ந்து முடிந்தது. 16. இரண்டீறு - இ, ஐ. 17. ஆங்கவை - அங்கவை என்பதன் திரிபுபோலும். 18. இடைச்சொல்லோடு ஒட்டுப்பட்டுநிற்றலும் என்ற வாக்கியம் ஈண்டுப் பொருத்தமாகக் காணவில்லை. அதுகொல் என்பதைத் தொடர்மொழி என்றமையால் அதற்கேற்ப அதுகொறோழி என்பது இடைச்சொல் லோடு ஒட்டுப்பட்டு நின்றது என்று கூறியிருக்கலாம் போலும். ஆய்க. 19. இரண்டற்கும் - ஆறனுருபிற்கும் நான்கனுருபிற்கும். 20. புள்ளி என்றதனால் புள்ளி பெறும் மெய்யீறும், குற்றியலுகரவீறுங் கொள்ளப்படும். இது எமது கருத்து. 21. செவிட்டரை என்பது - `தம்மகப்பட்ட முத்தை வருங்காலந் தோன்றின் ஒத்ததென்ப... ஏயென்சாரியை' என்பதனால் செவிட்டேயரை என ஏ என்சாரியை பெற்று வரவேண்டும். அங்ஙனம் பெறவேண்டிய இடத்துப் பெறாது செவிட்டரை என நிற்றலின், இதற்கு இச்சூத்திர விதி வேண்டிய தாயிற்று. பெறாமல் வருவனவற்றிற்கே ஒட்டுதற்கொழுகிய வழக்கன்று என்னும் விதி கொள்ளப்படும். ஆதலின் இது, அதனாற் கொள்ளப்படா தென்க. 22. பாகு என்றது - பாக்கினை என்றார். `குற்றபாகு கொழிப்பவர்' என்பது போன்ற இலக்கிய வழக்கு நோக்கி. 23. விதித்து என்பது விரித்து என்றிருந்திருக்க வேண்டும். 24. இன்னும் ஒரு பனைப் பொழுது நிற்கிறது என்பதனான், பனை அளவுப் பெயராதல் பெறப்படும். 25. இங்ஙனம் வரையறை கூறினார், அகத்தோத்தினுள் முடிவு கூறியவழி அதிகாரத்தான் வன்கணத்தின்மேற் செல்லாது ஒழிந்த கணத்தினுஞ் செல்லுமென்றற்கு, என்பதற்கு. "அளவும் நிறையும்" என எடுத்துக் கூறுஞ் சூத்திரங்களுள், வன்கணத்தின் மாத்திரம் செல்லாமல் ஏனைய கணத்தினும் அச் சூத்திரவிதி செல்லுமென்றற்கு என்பது கருத்து. 26. நாகம் என்பதன் அகரமகரங் கெடுத்து என்க. உருபியல் வேற்றுமையுருபுகள் பெயர்களோடு பொருந்தும் முறைமை யினை யுணர்த்துவது உருபியலாகும். இதன்கண் முப்பது சூத்திரங்கள் உள்ளன. பெயரும் அதனால் ஏற்கப்படும் வேற்றுமையுருபும் ஆகிய அவ்விரண்டிற்கும் இடையே வரும் சாரியைகள் இவையென்பதும், வேற்றுமையுருபினை யேற்குங்கால் பெயர்கள் பெறும் இயல்பும் திரிபுமாவன இவை யென்பதும் இவ்வியலில் வகுத்து விளக்கப்பெற்றுள்ளன. உயிர்களுள் அ ஆ உ ஊ ஏ ஔ என்னும் ஆறினையும் ஈறாகவுடைய பெயர்களும், மெய்களுள் ஞகர நகரவீற்றுப் பெயர்களும், தெவ் என்னும் வகரவீற்றுப் பெயரும், மகரவீற்றுப் பெயர்கள் சிலவும், குற்றியலுகர வீற்றுப் பெயர்களும் உருபேற் குங்கால் இடையே இன்சாரியை பெறுவன. பன்மைப் பொருளைக் கருதின அகர வீற்றுப் பெயர்களும், யா என்னும் ஆகாரவீற்று வினாப்பெயரும், அவை, இவை, உவை, யாவை, அவ், இவ், உவ் என்பனவும் வற்றுச்சாரியை பெற்று உருபேற்பன. யாவை என்னும் வினாப்பெயர் வற்றுச் சாரியை பெறுங்கால் அப்பெயரின் ஈற்றில் நின்ற ஐகாரமும் அதனாலூரப்பட்ட வகரமெய்யும் கெட்டு முடியும். எல்லாம் என்னும் பொதுப்பெயர் அஃறிணைக்கண்வரின் வற்றுச்சாரியையும், உயர் திணைக்கண்வரின் நம் சாரியையும் பெறுவதுடன் வேற்றுமை யுருபின் இறுதியில் உம் சாரியையும் பெற்றுமுடியும். அது, இது, உது எனவரும் உகரவீற்றுச் சுட்டுப்பெயரும், ஏழ் என்னும் ழகரவீற்று எண்ணுப்பெயரும், குற்றியலுகரவீற்றுள் வரும் எல்லா எண்ணுப்பெயர்களும், யாது என்னும் வினாப் பெயரும், அஃது, இஃது, உஃது எனவரும் சுட்டுப் பெயர்களும் அன்சாரியை பெற்று உருபேற்பனவாம். அன்சாரியை பெறுங்கால் அது, இது, உது என்பன இறுதியுகரங் கெட்டு முடிவன; அஃது, இஃது, உஃது என்பன ஆய்தங்கெட்டு முடிவன. பஃதென்பதனை யிறுதியாகவுடைய ஒருபதுமுதல் எண்பது வரையுள்ள எண்ணுப்பெயர்கள் எட்டும், அன்சாரியையேயன்றி ஆன்சாரியை பெறுதலும் உண்டு. ஆன்சாரியை பெறுங்கால் நிலைமொழியிலுள்ள பஃதென்பதன் கண் பகரமெய்மட்டும் நிற்க அஃதென்பது கெடும். ஓகார வீற்றுப்பெயர் உருபேற்குங்கால் ஒன்சாரியை பெறும். அகர ஆகார வீற்று மரப்பெயர்கள் ஏழாமுருபு பெறும்வழி அத்துச்சாரியைபெறும். மகரவீற்றுப் பெயர்கள் உருபேற்குங்கால் அத்துச்சாரியை பெறுவன. அழன், புழன் என்பன அத்தும் இன்னும் பெற்று உறழ்வன. நீ என்னும் பெயர் நின் எனத்திரிந்து உருபேற்கும். மகர வீற்றுள் நும் என்பதும் தாம், நாம், யாம் என்பனவும் அத்தும் இன்னும் பெறாது இயல்பாய் முடிவன. யாம் என்னும் பெயரில் யகரத்தின்மேலேறிய ஆகாரம் எகரமாகத் திரிய அங்கு நின்ற யகரம் கெடும். தாம், நாம் என்பன முதல்குறுகி முறையே தம் நம் என நிற்கும். எல்லாரும் என்னும் படர்க்கைச் சொல்லிடத்தும் எல்லீரும் என்னும் முன்னிலைச் சொல்லிடத்தும் இறுதியில் நின்ற உம் என்பது கெட, அவ்விருபெயரும் முறையே தம் சாரியையும் நம் சாரியையும் பெற்று உருபேற்கும். அவைபெறும் உருபின் பின்னர் உம் சாரியை வந்து பொருந்தும் னகர வீற்றுள் தான் என்பது முதல்குறுகித் தன் என்றும் யான் என்பது முதற்கண் நின்ற யகரங்கெட்டு அதனையூர்ந்து நின்ற ஆகாரம் எகரமாகி என் என்றும் திரிந்து உருபேற்கும். நெடிற்றொடர்க் குற்றியலுகரங்களுள் (டற) ஒற்றி ரட்டிக்குஞ் சொற்கள் உருபேற்குங்கால் இன்சாரியைபெறாது இயல்பாவன. குற்றுகரவீற்றுத் திசைப்பெயர்கள் கண்ணுருபினை ஏற்குங் கால் இன்சாரியை பெறாது இயல்பாதலுமுண்டு. இவ்வாறு இயல்பாயவழி இறுதியிலுள்ள குற்றியலுகரம் தான் ஊர்ந்து நின்ற மெய்யோடு சேரக்கெடும். இங்கு எடுத்துரைக்கப்பட்ட பெயர்களல்லாத ஏனைய பெயர்கள் சாரியை பெற்றே உருபேற்றல் வேண்டுமென்னும் வரையறையில்லாதனவாம். அவை சாரியை பெற்றும் பெறாதும் முடிவனவாம். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 176-178 ஆறாவது உருபியல் 173. அஆ உஊ ஏஔ வென்னு மப்பா லாற னிலைமொழி முன்னர் வேற்றுமை யுருபிற் கின்னே சாரியை என்பது சூத்திரம். உருபுகளோடு பெயர் புணரும் இயல்பு உணர்த்தினமையின், இவ்வோத்து உருபிய லென்னும் பெயர்த்தாயிற்று. மேல் தொகுத் துப் புணர்த்ததனை ஈண்டு விரித்துப் புணர்க்கின்றாரா கலின், இவ்வோத்துத் தொகைமரபோடு இயைபுடைத்தாயிற்று. இச்சூத்திரம் - அகர முதலிய ஈற்றான் வரும் ஆறு ஈற்றுச் சொற்கள் நின்று இன் பெற்று உருபினோடு புணருமாறு கூறு கின்றது. உருபின் பொருள்பட வரும் புணர்ச்சி மேற்கூறுப. இதன் பொருள்: அ ஆ உ ஊ ஏ ஔ என்னும் அப்பால் ஆறன் நிலை மொழி முன்னர் - அ ஆ உ ஊ ஏ ஔ என்று சொல்லப்படுகின்ற அக்கூற்று ஆறனையும் ஈறாகவுடைய நிலைமொழிகளின் முன்னர் வருகின்ற, வேற்றுமை யுருபிற்கு இன்னே சாரியை - வேற்றுமை யுருபுகட்கு இடையே வருஞ் சாரியை இன் சாரியையே என்றவாறு. உதாரணம்: விளவினை விளவினொடு விளவிற்கு விளவினது விளவின்கண் எனவும், பலாவினை பலாவினொடு பலாவிற்கு பலாவினது பலாவின்கண் எனவும், கடுவினை கடுவினொடு கடுவிற்கு கடுவினது கடுவின்கண் எனவும், தழூஉவினை தழூஉவினொடு தழூஉவிற்கு தழூஉவினது தழூஉவின்கண் எனவும், சேவினை சேவினொடு சேவிற்கு சேவினது சேவின்கண் எனவும், வௌவினை வௌவினொடு வௌவிற்கு வௌவினது வௌவின் கண் எனவும் வரும். இவ்வாறே செய்கை யறிந்து ஒட்டுக. இன்னென வரூஉம் வேற்றுமை யுருபிற் கின்னென் சாரியை யின்மை வேண்டும் (எழுத். 131) எனவே, ஏனைய இன் பெறுமென்றலின், 1ஞநமயவ (எழுத். 144) என்பதனான் இயல்பென்றது விலக்கிற்றாம். (1) 174. பல்லவை நுதலிய வகர விறுபெயர் வற்றொடு சிவண லெச்ச மின்றே. இஃது இன்சாரியை விலக்கி வற்று வகுத்தலின், எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது. இதன் பொருள்: பல்லவை நுதலிய பெயரிறு அகரம்-பன்மைப் பொருளைக் கருதின பெயர்களின் இறுதி நின்ற அகரம், வற்றொடு சிவணல் எச்சமின்று-வற்றுச் சாரியையோடு பொருந்துதலை ஒழிதலில்லை என்றவாறு. உதாரணம்: பல்லவற்றை பல்லவற்றொடு, பலவற்றை பலவற் றொடு, சில்லவற்றை சில்லவற்றொடு, சிலவற்றை சிலவற்றொடு, உள்ளவற்றை உள்ளவற்றொடு, இல்லவற்றை இல்லவற் றொடு என ஒட்டுக. எச்சமின்றி என்றதனானே, 2மேல் இன் பெற்றன பிற சாரி யையும் பெறுதல் கொள்க. நிலாத்தை, துலாத்தை, மகத்தை என வரும். இன்னும் இதனானே, பல்லவை நுதலியவற்றின்கண் மூன்றா முருபு வற்றுப் பெற்றே முடிதல் கொள்க. (2) 175. யாவென் வினாவு மாயிய றிரியாது. இஃது - ஆகார ஈற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது. இதன் பொருள்: யாவென் வினாவும் - யாவென்று சொல்லப்படும் ஆகார ஈற்று வினாப்பெயரும், ஆயியல் திரியாது - முற்கூறிய வற்றுப் பேற்றிற் றிரியாது என்றவாறு. யாவற்றை யாவற்றொடு என வரும். (3) 176. சுட்டுமுத லுகர மன்னொடு சிவணி யொட்டிய மெய்யொழித் துகரங் கெடுமே. இஃது உகர ஈற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. இதன் பொருள்: சுட்டு முதல் உகரம் அன்னொடு சிவணி - சுட்டெழுத்தினை முதலாகவுடைய உகர ஈற்றுச்சொல் அன் சாரியை யொடு பொருந்தி, ஒட்டிய மெய் ஒழித்து உகரங் கெடும் - தான் பொருந்திய மெய்யை நிறுத்தி உகரங் கெடும் என்றவாறு. அதனை அதனொடு, இதனை இதனொடு, உதனை உதனொடு என வரும். 3அதினை அதினொடு என்றாற் போல்வன மரூஉ முடிப்புழி முடிந்தன. ஒட்டிய என்றதனாற், சுட்டுமுதல் உகரமன்றிப் பிற உகரமும் உயிர் வருவழிக் கெடுவன கொள்க. அவை கதவு, களவு, கனவு என நிறுத்தி, அழகிது இல்லை என வருவித்து உகரங் கெடுத்து முடிக்க. இவற்றை வகர ஈறாக்கி உகரம் பெற்றனவென்று கோடு மெனின், வழக்கின்கண்ணுஞ் செய்யுட்கண்ணும் பயின்று வரும் வகர ஈறுகளை ஒழித்து ஆசிரியர் வகரக் கிளவி நான்மொழி யீற்றது (எழு. 81) என்றாற் போல வரைந்தோதல் குன்றக் கூறலாம். ஆதலின், அவை உகர ஈறென்றே கொள்க. அவை, செலவு வரவு தரவு உணவு கனவு என வழக்கின்கண்ணும், புன்க ணுடைத்தாற் புணர்வு (குறள். 1152), பாடறியா தானை யிரவு, கண்ணாரக் காணக் கதவு (முத்தொள். 42) எனச் செய்யுட்கண்ணும் பயின்று வருமாறு உணர்க. (4) 177. சுட்டுமுத லாகிய வையெ னிறுதி வற்றொடு சிவணி நிற்றலு முரித்தே. இஃது - ஐகார ஈற்றிற்கு முடிபு கூறுகின்றது. இதன் பொருள்: சுட்டு முதலாகிய ஐயெ னிறுதி - சுட்டெழுத்தினை முதலாக வுடைய ஐகார ஈற்றுச்சொல், வற்றொடு சிவணி நிற்றலும் உரித்து - வற்றுச் சாரியையொடு பொருந்தி நிற்றலும் உரித்து என்றவாறு. உம்மையான் வற்றொடு சில உருபின்கண் இன் சாரியை பெற்று நிற்றலும் உரித்து என்றவாறு. அவையற்றை அவையற்றொடு, இவையற்றை இவையற் றொடு, உவையற்றை உவையற்றொடு என ஒட்டுக. இங்ஙனம் ஐகாரம் நிற்க, வற்று வந்துழி வஃகான் மெய்கெட (எழுத். 122) என்பதனான் முடிக்க. இனி, உம்மையான் அவையற்றிற்கு, அவையற்றின்கண் என நான்காவதும் ஏழாவதும், வற்றும் இன்னும் பெற்று வந்தவாறு காண்க. இனி, ஒன்றென முடித்தல் என்பதனாற் பல்லவை நுதலிய அகர ஈற்றிற்கும் இவ்விரண்டு உருபின்கண் வற்றும் இன்னும் கொடுத்துப் பலவற்றிற்கு, பலவற்றின்கண் என முடிக்க. இதுமேல் வருவன வற்றிற்கும் ஒக்கும். (5) 178. யாவென் வினாவி னையெ னிறுதியு மாயிய றிரியா தென்மனார் புலவ ராவயின் வகர மையொடுங் கெடுமே. இதுவும் அது. இதன் பொருள்: 4யாவென் வினாவின் ஐயென் இறுதியும் - யாவென்னும் வினாவினையுடைய ஐகார ஈற்றுச் சொல்லும், ஆயியல் திரியாது என்மனார் புலவர்-முற்கூறிய சுட்டு முதல் ஐகாரம் போல் வற்றுப்பெறும் அவ்வியல்பின் திரியாதென்று சொல்லுவர் ஆசிரியர்; ஆவயின் வகரம் ஐயொடுங் கெடும்-அவ்வீற்றிடத்து வகரம் ஐகாரத்தொடு கூடக் கெடும் என்றவாறு. யாவற்றை, யாவற்றொடு என ஒட்டுக. வகரம் வற்றுமிசை யொற்றென்று கெடுவதனைக் கேடு ஓதிய மிகையானே, பிற ஐகாரமும் வற்றுப்பெறுதல் கொள்க. கரியவற்றை கரியவற்றொடு, நெடியவற்றை நெடியவற்றொடு, குறியவற்றை குறியவற்றொடு என எல்லாவற்றோடும் ஒட்டுக. இவை கருமை நெடுமை குறுமை என்னும் பண்புப்பெயரன்றிக் கரியவை நெடியவை குறியவை எனப் பண்புகொள் பெயராய் நிற்றலின், வகர ஐகாரம் கெடுத்து வற்றுச்சாரியை கொடுத்து முடிக்கப்பட்டன. இவை ஐம்பாலறியும் பண்பு தொகுமொழி அன்மை உணர்க. (6) 179. நீயெ னொருபெயர் நெடுமுதல் குறுகு மாவயி னகர மொற்றா கும்மே. இஃது ஈகார ஈறு இன்னவாறு புணருமென்கின்றது. இதன் பொருள்: நீ என் ஒரு பெயர் நெடு முதல் குறுகும் - நீயென்னும் ஒரு பெயர் தன்மேல் நின்ற நெடியதாகிய ஈகாரங் குறுகி இகரமாம்; ஆவயின் னகரம் ஒற்றாகும் - அவ்விடத்து வரும் னகரம் ஒற்றாய் நிற்கும் என்றவாறு. உதாரணம்: நின்னை நின்னொடு நினக்கு எனச் செய்கையறிந்து ஒட்டுக. நினக்கு என்பதற்கு, ஆற னுருபினும் நான்க னுருபினும் (எழு. 161) வல்லெழுத்து முதலிய (எழு. 114) என்பன கொணர்ந்து முடிக்க. நினது என்பதற்கு, ஆற னுருபி னகரக் கிளவி (எழு. 115) என்பதனான் முடிக்க. நின் என்பது நீ என்பதன் வேறொரு பெயரோ எனக் கருதுதலை விலக்குதற்கு ஒரு பெயர் என்றார். பெயர் குறுகும் என்னாது முதல் குறுகும் என்றது, அப்பெயரின் 5எழுத்தின்கண்ணது குறுக்க மென்றற்கு. நெடுமுதல் எனவே நகரங் குறுகுதலை விலக்கிற்று. 6உயிர்மெய் யொற்றுமை பற்றி நெடியது முதலாயிற்று. உடைமையு மின்மையு மொடுவயி னொக்கும் (எழு. 123) என்றதனை நோக்கி ஒடுவிடத்துச் சாரியை பெற்றே வந்த அதிகாரத்தை மாற்றுதற்குச் சாரியைப் பேற்றிடை 7எழுத்துப் பேறு கூறினார். (7) 180. ஓகார விறுதிக் கொன்னே சாரியை. இஃது - ஓகார ஈறு இன்னவாறு புணருமென்கின்றது. இதன் பொருள்: ஓகார இறுதிக்கு ஒன்னே சாரியை-ஓகார ஈற்றிற்கு இடைவருஞ் சாரியை ஒன்சாரியை என்றவாறு. கோஒனை, கோஒனொடு என ஒட்டுக. ஒன்னே என்ற ஏகாரத்தாற் பெரும்பான்மையாக வருஞ் சாரியை ஒன்னே; சிறுபான்மை இன் சாரியை வருமென்று கொள்க. ஒன்றாது நின்ற கோவினை யடர்க்க வந்த (சீவக. 316) எனவும், கோவினை கோவினொடு, சோவினை சோவினொடு, ஓவினை ஓவினொடு எனவும் வரும். ஓவென்பது மதகுநீர் தாங்கும் பலகை. (8) 181. அஆ என்னும் மரப்பெயர்க் கிளவிக் கத்தொடுஞ் சிவணு மேழ னுருபே. இஃது - அகர ஆகார ஈற்றிற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. இதன் பொருள்: அ ஆ என்னும் மரப்பெயர்க் கிளவிக்கு - அ ஆ வென்று சொல்லப்படும் மரத்தை உணர்த்துகின்ற பெயராகிய சொல்லிற்கு, ஏழனுருபு அத்தொடுஞ் சிவணும் - ஏழாமுருபு இன்னோடன்றி அத்தோடும் பொருந்தும் என்றவாறு. உதாரணம்: விளவத்துக்கண், பலாவத்துக்கண் எனவரும். வல்லெழுத்து முதலிய (எழு. 114) என்பதனான் வல்லெ ழுத்துக் கொடுத்துத் தெற்றென் றற்றே (எழு. 133) என்பதனான் அத்தினகர மகரமுனைக் (எழு. 125) கெடாமைச் செய்கை செய்து முடிக்க. (9) 182. ஞநவென் புள்ளிக் கின்னே சாரியை. இது, புள்ளியீற்றுள் ஞகர ஈறும் நகர ஈறும் முடியுமாறு கூறுகின்றது. இதன் பொருள்: ஞந என் புள்ளிக்கு இன்னே சாரியை - ஞ ந வென்று சொல்லப்படுகின்ற புள்ளியீறுகட்கு வருஞ்சாரியை இன் சாரியை என்றவாறு. உதாரணம்: உரிஞினை உரிஞினொடு, பொருநினை பொருநி னொடு என ஒட்டுக. (10) 183. சுட்டுமுதல் வகர மையு மெய்யுங் கெட்ட விறுதி யியற்றிரி பின்றே. இது, நான்கு மொழிக்கு ஈறாம் வகர ஈற்றுட் சுட்டுமுதல் வகர ஈற்றிற்கு முடிபு கூறுகின்றது. இதன் பொருள்: சுட்டு முதல் வகரம்-அவ் இவ் உவ் என்னுஞ் சுட்டெழுத்தினை முதலாகவுடைய வகர ஈற்றுச் சொல், ஐயும் மெய்யுங் கெட்ட இறுதியியல் திரிபின்று-ஐகாரமும் ஐகாரத்தான் ஊரப்பட்ட மெய்யுங் கெட்டு வற்றுப் பெற்று முடிந்த யாவை (எழு. 178) என்னும் ஐகார ஈற்றுச் சொல்லியல்பில் திரிபின்றி வற்றுப்பெற்று முடியும் என்றவாறு. உதாரணம்: அவற்றை அவற்றொடு, இவற்றை இவற்றொடு, உவற்றை உவற்றொடு என ஒட்டுக. (11) 184. ஏனை வகர மின்னொடு சிவணும். இஃது - எய்தாத தெய்துவித்தது; பெயர்க்கே யன்றி உரிச் சொல் வகரத்திற்கு முடிபு கூறுதலின். இதன் பொருள்: ஏனை வகரம் இன்னொடு சிவணும் - ஒழிந்த உரிச் சொல் வகரம் இன்சாரியையோடு பொருந்தி முடியும் என்றவாறு. 8தெவ்வினை, தெவ்வினொடு என ஒட்டுக. இஃது உரிச் சொல்லாயினும் 9படுத்தலோசையாற் பெயரா யிற்று. (12) 185. மஃகான் புள்ளிமு னத்தே சாரியை. இது, மகர ஈறு புணருமாறு கூறுகின்றது. இதன் பொருள்: மஃகான் புள்ளிமுன் அத்தே சாரியை - மகரமாகிய புள்ளியீற்றுச் சொன்முன் வருஞ் சாரியை அத்துச் சாரியை என்றவாறு. உதாரணம்: மரத்தை மரத்தொடு, நுகத்தை நுகத்தொடு என ஒட்டுக. அத்தே வற்றே (எழு. 133) அத்தி னகரம் (எழுத். 125) என்பனவற்றான் முடிக்க. (13) 186. இன்னிடை வரூஉ மொழியுமா ருளவே. இது, மகர ஈற்றிற் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுக்கின்றது. இதன் பொருள்: இன்னிடை வரூஉம் மொழியுமா ருள - மகர ஈற்றுச் சொற்களுள் அத்தே யன்றி இன்சாரியை இடையே வந்து முடியுஞ் சொற்களும் உள என்றவாறு. மார் அசை. உதாரணம்: உருமினை உருமினொடு, திருமினை திருமினொடு என வொட்டுக. (14) 187. நும்மெ னிறுதி யியற்கை யாகும். இது, மகர ஈற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது. இதன் பொருள்: நும்மென் இறுதி இயற்கை யாகும் - நும்மென்னும் மகர ஈறு மேற்கூறிய அத்தும் இன்னும் பெறாது இயல்பாக முடியும் என்றவாறு. உதாரணம்: நும்மை, நும்மொடு, நுமக்கு, நும்மின், நுமது, நுங்கண் எனவரும். நுமக்கு நுமது என்பனவற்றிற்கு ஆற னுருபினும் நான்க னுருபினும் (எழு. 161) நும்மென் இறுதியு மந்நிலை (எழு. 162) வல்லெழுத்து முதலிய (எழு. 114) ஆற னுருபி னகரக் கிளவி (எழுத். 115) என்பன கொணர்ந்து முடிக்க. நுங்கணென்பதற்கு 10மேலைச் சூத்திரத்து மெய் என்றத னான் மகர வொற்றுக் கெடுத்து, வல்லெழுத்து முதலிய (எழு. 114) என்பதனான் மெல்லொற்றுக் கொடுக்க. இயற்கை யென்றார் சாரியை பெறாமை கருதி. (15) 188. தாநா மென்னு மகர விறுதியும் யாமெ னிறுதியு மதனோ ரன்ன ஆஏ ஆகும் யாமெ னிறுதி யாவயின் யகரமெய் கெடுதல் வேண்டு மேனை யிரண்டு நெடுமுதல் குறுகும். இது, மகர ஈற்றில் முற்கூறிய முடிபு ஒவ்வாதனவற்றிற்கு முடிபு கூறுகின்றது. இதன் பொருள்: தாம் நாம் என்னும் மகர இறுதியும் யாமென் இறுதியும் அதனோரன்ன - தாம் நாம் என்று கூறப்படும் மகர ஈறும் யாம் என்னும் மகர ஈறும் நும் என்னும் மகர ஈறு போல அத்தும் இன்னும் பெறாது முடிதலையுடைய; யாமென் இறுதி ஆ எ ஆகும் - யா மென்னும் மகர ஈற்றுச் சொல்லின் ஆகாரம் எகாரமாம்; ஆ வயின் யகரமெய் கெடுதல் வேண்டும் - அவ்விடத்து நின்ற யகர மாகிய மெய் கெடுதலை விரும்பும் ஆசிரியன்; ஏனை இரண்டும் நெடுமுதல் குறுகும் - ஒழிந்த தாம் நாம் என்னும் இரண்டும் நெடிய வாகிய முதல் குறுகித் தம் நம் என நிற்கும் என்றவாறு. உதாரணம்: தம்மை தம்மொடு, நம்மை நம்மொடு, எம்மை எம் மொடு என ஆறு உருபோடும் ஒட்டுக. ஆறனுருபிற்கும் நான்க னுருபிற்குங் கருவி யறிந்து முடிக்க. மெய் யென்றதனாற் பிறவயின் மெய்யும் கெடுக்க. தங்கண் நங்கண் எங்கண் என ஏழனுருபின்கண் மகரங் கெடுத்து வல்லெழுத்து முதலிய (எழு. 114) என்பதனான் மெல்லெழுத்துக் கொடுக்க. (16) 189. எல்லா மென்னு மிறுதி முன்னர் வற்றென் சாரியை முற்றத் தோன்று மும்மை நிலையு மிறுதி யான. இது, மகர ஈற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது. இதன் பொருள்: எல்லா மென்னும் இறுதி முன்னர் வற்றென் சாரியை முற்றத் தோன்றும் - எல்லா மென்னும் மகர ஈற்றுச் சொன் முன்னர் அத்தும் இன்னும் அன்றி வற்றென்னுஞ் சாரியை முடியத் தோன்றி முடியும்; உம்மைநிலையும் இறுதியான - ஆண்டு உம்மென்னுஞ் சாரியை இறுதிக்கண் நிலைபெறும் என்றவாறு. மகரம் வற்றின்மிசை யொற்றெனக் கெடுக்க. எல்லாவற்றையும், எல்லாவற்றினும், எல்லாவற்றுக் கண்ணும் எனவரும். முற்ற வென்றதனான் 11ஏனை முற்றுகரத் திற்கும் உம்மின் உகரங் கெடுத்துக் கொள்க. எல்லாவற்றொடும், எல்லாவற்றுக்கும் எல்லாவற்றதும் என வரும். முற்றுகரமாதலின் ஏறி முடியா. (17) 190. உயர்திணை யாயி னம்மிடை வருமே. இஃது எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது. இதன் பொருள்: உயர்திணையாயின் - எல்லாமென நின்ற மகர ஈற்று விரவுப் பெயர் உயர்திணைப் பெயராமெனின், நம் இடைவரும் - நம் மென்னுஞ் சாரியை இடை நின்று புணரும் என்றவாறு. மகர ஈற்றினை மேல் வற்றின்மிசை யொற்றெனக் கெடுத்த அதிகாரத் தாற் கெடுக்க. 12எல்லா நம்மையும், எல்லா நம்மினும், எல்லா நங் கணும் என உகரம் பெற்றும்; எல்லாநம்மொடும், எல்லா நமக்கும், எல்லா நமதும் என உகரங் கெட்டும் மகரம் நிற்கும். இவற்றிற்கு நம் எல்லாரையும் நம் எல்லாரொடும் என்பது பொருளாக ஒட்டுக. இதற்கு நம்மு வகுத்ததே வேறுபாடு. ஈறாகு புள்ளி அகரமொடு நிற்றல் (எழு. 161) நான்காவதற்கும் ஆறாவதற் குங் கொள்க. (18) 191. எல்லாரு மென்னும் படர்க்கை யிறுதியு மெல்லீரு மென்னு முன்னிலை யிறுதியு மொற்று முகரமுங் கெடுமென மொழிப நிற்றல் வேண்டும் ரகரப் புள்ளி யும்மை நிலையு மிறுதி யான தம்மிடை வரூஉம் படர்க்கை மேன நும்மிடை வரூஉ முன்னிலை மொழிக்கே. இது மகரஈற்று உயர்திணைப் பெயர்க்கு முடிபு கூறுகின்றது. இதன் பொருள்: எல்லாரு மென்னும் படர்க்கை யிறுதியும் - எல்லாரு மென்னும் மகர ஈற்று உயர்திணைப் படர்க்கைப் பெயரும், எல்லீரு மென்னும் முன்னிலை யிறுதியும் - எல்லீரு மென்னும் மகர ஈற்று உயர்திணை முன்னிலைப்பெயரும், ஒற்றும் உகரமுங்கெடுமென மொழிப - மகர வொற்றும் அதன்முன்னின்ற உகரமுங்கெட்டு முடியுமென்று சொல்லுவர் புலவர்; ரகரப் புள்ளி நிற்றல் வேண்டும் - அவ்வுகரம் ஏறி நின்ற ரகர ஒற்றுக்கெடாது நிற்றலை விரும்பும் ஆசிரியன்; இறுதியான உம்மை நிலையும்-அவ்விரு மொழியினி றுதிக்கண்ணும் உம்மென்னுஞ் சாரியை நிலைபெறும்; படர்க்கை மேன தம் இடை வரூஉம் - படர்க்கைச் சொல் லிடத்துத் தம்முச் சாரியை இடைவரும்; முன்னிலை மொழிக்கு நும் இடை வரூஉம் - முன்னிலைச் சொற்கு நும்முச் சாரியை இடை வரும் என்றவாறு. உதாரணம்: எல்லார்தம்மையும், எல்லார் தம்மினும், எல்லார் தங்கணும் என உகரம் பெற்றும், எல்லார்தம்மொடும், எல்லார்தமக்கும், எல்லார் தமதும் என உகரங் கெட்டும், மகரம் நிற்கும். எல்லீர்நும்மையும், எல்லீர் நும்மினும், எல்லீர்நுங்கணும் என உகரம் பெற்றும், எல்லீர்நும்மொடும், எல்லீர்நுமக்கும், எல்லீர்நுமதும் என உகரங் கெட்டும் மகரம் நிற்கும். 13முன்னர் மெய் (எழு. 188) என்ற இலேசாற் கொண்ட மகரக்கேடு இவற்றிற்கும் மேல்வருவனவற்றிற்குங் கொள்க. படர்க்கைப் பெயர் முற்கூறிய வதனானே, ரகர ஈற்றுப் படர்க் கைப் பெயரும் முன்னிலைப்பெயரும், மகரஈற்றுத் தன்மைப் பெயரும், தம் நும் நம் என்னுஞ் சாரியை இடையே பெற்று இறுதி உம்முச்சாரியையும் பெற்று முடிவன கொள்க. கரியார்தம்மையும் சான்றார்தம்மையும் எனவும், கரியீர் நும்மையும் சான்றீர்நும்மையும் எனவும், கரியேம்நம்மையும் இருவேம் நம்மையும் எனவும் எல்லா வுருபொடுஞ் செய்கை யறிந்து ஒட்டுக. உகரமும் ஒற்றும் என்னாததனான், இக்காட்டியவற்றிற் கெல்லாம் மூன்று உருபின்கண்ணும் உம்மின் உகரங்கெடுதல் கொள்க. நிற்றல் வேண்டும் ரகரப் புள்ளி என்றதனானே, தம்முப் பெறாமை வருமவையும் கொள்க. எல்லார்க்கு மெல்லா நிகழ்பவை (குறள். 582) எனவரும். (19) 192. தான்யா னென்னு மாயீ ரிறுதியு மேன்முப் பெயரொடும் வேறுபா டிலவே. இது - னகர ஈற்றுட் சிலவற்றிற்கு முடிபு கூறுகின்றது. இதன் பொருள்: தான் யான் என்னும் ஆயீ ரிறுதியும் - தான் யான் என்று சொல்லப்பட்ட அவ்விரண்டு னகர ஈறும், மேல் முப்பெயரோடும் வேறுபாடு இலவே-மேல் மகர ஈற்றுட் கூறிய மூன்று பெயரோடும் வேறுபாடின்றித் தானென்பது குறுகியும் யானென்பதன் கண் ஆகாரம் எகரமாய் யகர வொற்றுக் கெட்டும் முடியும் என்றவாறு. தன்னை என்னை என எல்லாவுருபோடும் ஒட்டுக; செய்கை யறிந்து. ஒற்றிரட்டுதல் நெடியதன் முன்னர் என்பதனுள் இலேசாற் கொள்க. (20) 193. அழனே புழனே யாயிரு மொழிக்கு மத்து மின்னு முழறத் தோன்ற லொத்த தென்ப வுணரு மோரே. இதுவும் அது. இதன் பொருள்: அழனே புழனே ஆயிரு மொழிக்கும் - அழன் புழன் ஆகிய அவ்விரு மொழிக்கும், அத்தும் இன்னும் உறழத்தோன்றல் ஒத்த தென்ப - அத்துச் சாரியையும் இன்சாரியையும் மாறி வரத் தோன்றுதலைப் பொருந்திற் றென்பர், உணருமோர் - அறிவோர் என்றவாறு. அழத்தை அழனினை, புழத்தை புழனினை எனச் செய் கை யறிந்து எல்லாவுருபினோடும் ஒட்டுக. னகரத்தை அத்தின் மிசை ஒற்றென்று கெடுத்து அத்தி னகரம் (எழு. 125) என்பதனான் முடிக்க. 14தோன்ற லென்றதனான், எவன் என நிறுத்தி வற்றுக் கொடுத்து வேண்டுஞ்செய்கை செய்து எவற்றை, எவற்றொடு என முடிக்க எல்லாவுருபினோடும் ஒட்டுக. 15எற்றை என்புழி நிலை மொழி வகரம் இதனாற் கெடுக்க. இனி ஒத்த தென்றதனால் எகின் என நிறுத்தி, அத்தும் இன்னுங் கொடுத்துச் செய்கை செய்து எகினத்தை, எகினினை என ஒட்டுக. அத்து இனிது இசைத்தலின் முற்கூறினார். (21) 194. அன்னென் சாரியை யேழ னிறுதி முன்னர்த் தோன்று மியற்கைத் தென்ப. இஃது - ஏழென்னும் எண்ணுப் பெயர் அன்சாரியை பெற்றுப் புணர்க என்றது. இதன் பொருள்: அன்னென் சாரியை ஏழுனிறுதி முன்னர்த் தோன்றும் இயற்கைத் தென்ப - அன்னென்னுஞ் சாரியை ஏழென் னும் எண்ணுப் பெயரின் முன்னே தோன்றும் இயல்பினை யுடைத் தென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. உதாரணம்: ஏழனை, ஏழற்கு, ஏழனின் என்க. ஏனை யுருபுகளோடுஞ் செய்கை யறிந்து ஒட்டுக. சாரியை முற்கூறியவதனாற், பிறவும் அன்பெறுவன கொள்க. பூழனை, யாழனை என ஏனையவற்றோடும் ஒட்டுக. மேல் வருகின்ற இன்சாரியையைச் சேரவைத்தமையான், அவை யெல்லாம் இன்சாரியை பெற்று வருதலுங் கொள்க. ஏழினை, பூழினை, யாழினை என வரும். (22) 195. குற்றிய லுகரத் திறுதி முன்னர் முற்றத் தோன்று மின்னென் சாரியை. இது, குற்றுகர ஈற்றிற்கு முடிபு கூறுகின்றது. இதன் பொருள்: குற்றியலுகரத்து இறுதி முன்னர் - குற்றியலுகர மாகிய ஈற்றின் முன்னர், முற்றத்தோன்றும் இன்னென் சாரியை - முடியத் தோன்றும் இன்னென்னுஞ் சாரியை என்றவாறு. உதாரணம்: நாகினை நாகினொடு, வரகினை வரகினொடு என வரும். ஏனையவற்றொடுஞ் செய்கை யறிந்து ஒட்டுக. முற்ற என்றதனானே பிற சாரியை பெறுவனவுங் கொள்க. 16வழக்கத்தாற் பாட்டாராய்ந்தான் எனவும், கரியதனை எனவும் வரும். (23) 196. நெட்டெழுத் திம்ப ரொற்றுமிகத் தோன்று மப்பான் மொழிக ளல்வழி யான. இஃது அக்குற்றிய லுகரங்களுட் சிலவற்றிற்கு இனவொற்று மிகுமென்கின்றது. இதன் பொருள்: நெட்டெழுத்திம்பர் ஒற்று மிகத் தோன்றும் - நெட் டெழுத்தின் பின்னர் வருகின்ற குற்றுகரங்கட்கு இனவொற்று மிகத் தோன்றா நிற்கும்; அப்பால் மொழிகள் அல்வழி ஆன - ஒற்று மிகத் தோன்றாத கசதபக்கள் ஈறாகிய மொழிகள் அல்லாத இடத்து என்றவாறு. எனவே, டகார றகாரங்கள் ஈறான சொல்லிடைத் தோன்றுமாயிற்று. உதாரணம்: யாட்டை யாட்டொடு யாட்டுக்கு யாட்டின் யாட்டது யாட்டுக்கண் எனவும், யாற்றை சோற்றை எனவும் இன வொற்று மிக்கன. இவை அப்பால் மொழிகள் அல்லன. நாகு, காசு, போது, காபு என்றாற் போல்வன அப்பால் மொழிகள்; அவை இனவொற்று மிகாவாயின. (24) 197. அவைதாம் இயற்கைய வாகுஞ் செயற்கைய வென்ப. இஃது எய்தியது விலக்கிற்று. இதன் பொருள்: அவைதாம் இயற்கைய ஆகுஞ் செயற்கைய என்ப - அங்ஙனம் இனவொற்று மிகுவனதாம் இன்சாரியை பெறாது இயல்பாக முடியுஞ் செய்தியையுடைய வென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. உதாரணம்: முன்னர்க் காட்டியனவே கொள்க. செயற்கைய என்ற மிகையானே, உயிர்த்தொடர் மொழி களில் ஏற்பனவற்றிற்கும் ஒற்று மிகத்தோன்றுதல் கொள்க. முயிற்றை முயிற்றொடு முயிற்றுக்கு முயிற்றின் முயிற்றது முயிற்றுக்கண் என வரும். இன்னும் இதனானே யாட்டினை முயிற்றினை என விலக்கிய இன்பெறுதலுங் கொள்க. (25) 198. எண்ணி னிறுதி யன்னொடு சிவணும். இது, குற்றுகர ஈற்று எண்ணுப்பெயர் முடிபு கூறுகின்றது. இதன் பொருள்: எண்ணின் இறுதி அன்னொடு சிவணும் - எண்ணுப் பெயர்களினது குற்றுகர ஈறு அன்சாரியையோடு பொருந்தும் என்றவாறு. உதாரணம்: ஒன்றனை இரண்டனை என எல்லா எண்ணி னையும், எல்லா உருபினோடுஞ் செய்கை யறிந்து ஒட்டுக. முன்னர்ச் செயற்கைய என்ற இலேசானே, ஒன்றினை இரண்டினை என இன் சாரியையுங் கொடுக்க. (26) 199. ஒன்றுமுத லாகப் பத்தூர்ந்து வரூஉ மெல்லா வெண்ணுஞ் சொல்லுங் காலை யானிடை வரினு மான மில்லை யஃதென் கிளவி யாவயிற் கெடுமே யுய்தல் வேண்டும் பஃகான் மெய்யே. இஃது ஒன்று முதலாக எட்டு இறுதியாக நின்ற குற்றுகர ஈற்று எண்ணுப்பெயர் ஏழினோடும், பத்தென்னும் எண்ணுப் பெயர் வந்து புணர்ந்து ஒன்றாய் நின்ற சொற்கள் சாரியை பெற்றுத் திரியுமாறு கூறுகின்றது. இதன் பொருள்: ஒன்று முதலாகப் பத்து ஊர்ந்து வரூஉம் எல்லா எண்ணும் - ஒன்றுமுதலாக எட்டீறாக நின்ற எண்களின் மேலே பத்தென்னும் எண்ணுப்பெயர் ஏறி வருகின்ற ஒருபது முதலான எல்லா எண்களையும், சொல்லுங்காலை - முடிபு கூறுங் காலத்து, ஆன் இடைவரினும் மான மில்லை - முற்கூறிய அன் சாரியையே யன்றி ஆன் சாரியை இடையே வரினுங் குற்றமில்லை; ஆவயின் அஃதென் கிளவி கெடும் - அவ் ஆன் பெற்றுழிப் பஃதென்னும் எண்ணிடத்து அஃதென்னுஞ் சொற் கெட்டுப் போம்; பஃகான் மெய் உய்தல் வேண்டும் - அவ்வகரத்தான் ஊரப்பட்ட பகரமாகிய ஒற்றுக் கெடாது நிற்றலை ஆசிரியன் விரும்பும் என்றவாறு. நின்ற பத்த னொற்றுக்கெட வாய்தம், வந்திடை நிலையும் (எழு. 437) என்பதனான் ஆய்தம் பெற்றது. உதாரணம்: ஒருபஃது இருபஃது முப்பஃது நாற்பஃது ஐம்பஃது அறுபஃது எண்பஃது எனக் குற்றியலுகரப் புணரியலுள் விதிக்குமாறே நிறுத்தி, அஃதென்ப தனைக் கெடுத்துப் பகரவொற்றை நிறுத்தி, ஆன் சாரியை கொடுத்து, ஒருபானை இருபானை என எல்லா எண்ணொடும் எல்லா உருபினையுஞ் செய்கை யறிந்து ஒட்டுக. உம்மை எதிர்மறையாதலின் ஒரு பஃதனை இருபஃதனை என எல்லாவற்றோடும் ஒட்டுக. சொல்லுங் காலை என்றதனான், பத்தூர் கிளவியே யன்றி 17ஒன்பான் முதனிலை (எழு. 463) ஒன்பாற் கொற்றிடை மிகுமே (எழு. 475) என்றாற்போல வருவனவற்றின்கண்ணும் பகரத்துள் அகரம் பிரித்து அஃதென்பது கெடுத்து ஆன் கொடுக்க. (27) 200. யாதெ னிறுதியுஞ் சுட்டுமுத லாகிய வாய்த விறுதியு மன்னொடு சிவணு மாய்தங் கெடுத லாவயி னான. இஃது எண்ணுப்பெயரல்லாத குற்றுகர ஈற்றுட் சிலவற்றிற்கு முடிபு கூறுகின்றது. இதன் பொருள்: யாது என் இறுதியும் - யாதென வருங் குற்றுகர ஈறும், சுட்டு முதலாகிய ஆய்த இறுதியும் - சுட்டெழுத்தினை முதலாக வுடைய ஆய்தத் தொடர்மொழிக் குற்றுகர ஈறும், அன்னொடு சிவணும் - அன்சாரியை யொடு பொருந்தும்; ஆவயின் ஆன ஆய்தங் கெடுதல் - அவ்விடத்து வந்த ஆய்தங் கெடும் என்றவாறு. யாதனை யாதனொடு எனவும், அதனை அதனொடு, இதனை இதனொடு, உதனை உதனொடு எனவும் வரும். (28) 201. ஏழ னுருபிற்குத் திசைப்பெயர் முன்னர்ச் சாரியைக் கிளவி யியற்கையு மாகு மாவயி னிறுதி மெய்யொடுங் கெடுமே. இதுவுங் குற்றுகர ஈற்றுட் சிலவற்றிற்கு ஏழனுருபொடு முடிபு கூறுகின்றது. இதன் பொருள்: திசைப் பெயர் முன்னர் ஏழனுருபிற்கு - திசைப் பெயர்களின் முன்னர் வந்த கண்ணென்னும் உருபிற்கு முடிபு கூறுங்கால், சாரியைக் கிளவி இயற்கையுமாகும் - முன்கூறிய இன் சாரியை யாகிய சொல் நின்று முடிதலே யன்றி நில்லாது இயல்பாயும் முடியும்; ஆவயின் இறுதி மெய்யொடுங் கெடும் - அங்ஙனம் இயல் பாயவழித் திசைப்பெயரிறுதிக் குற்றுகரந் தன்னான் ஊரப்பட்ட மெய்யொடுங் கெடும் என்றவாறு. உதாரணம்: வடக்கின்கண் கிழக்கின்கண் தெற்கின்கண் மேற்கின் கண் எனவும், வடக்கண் கிழக்கண் தெற்கண் மேற்கண் எனவும் வரும். இன்பெறுவழி உகரங் கெடாதென்று உணர்க. ஆவயி னென்றதனாற் கீழ்சார் கீழ்புடை, மேல்சார் மேல் புடை, தென்சார் தென்புடை, வடசார் வடபுடை எனச் சாரியை யின்றிப் பல விகாரப்பட்டு நிற்பனவுங் கொள்க. இன்னும் இதனானே, கீழைக்குளம் மேலைக்குளம் கீழைச்சேரி மேலைச் சேரி என ஐகாரம் பெறுதலுங் கொள்க. (29) 202. புள்ளி யிறுதியு முயிரிறு கிளவியுஞ் சொல்லிய வல்ல வேனைய வெல்லாந் தேருங் காலை யுருபொடு சிவணிச் சாரியை நிலையுங் கடப்பா டிலவே. இஃது இவ்வோத்தினுள் எடுத்தோத்தானும் இலேசானும் முடியாது நின்றவற்றிற்கெல்லாம், இதுவே ஓத்தாயதோர் புறனடை கூறுகின்றது. இதன் பொருள்: சொல்லிய அல்ல புள்ளியிறுதியும் உயிரிறு கிளவியும் - முற்கூறிய புள்ளியீறும் உயிரீறும் அல்லாத புள்ளியீற்றுச் சொல்லும் உயிரீற்றுச் சொல்லும், ஏனையவு மெல்லாம் - முற்கூறிய ஈறுகள் தம்மு ளொழிந்து நின்றனவு மெல்லாம், தேருங் காலை உருபொடு சிவணிச் சாரியை நிலையுங் கடப்பாடு இல - ஆராயுங் காலத்து உருபுகளொடு பொருந்திச் சாரியை நின்று முடியும் முறை மையை உடையவல்ல, நின்றும் நில்லாதும் முடியும் என்றவாறு. ஏனையவுமென உம்மை விரிக்க. கூறாத புள்ளி யீறுகள் ஐந்து. அவை ணகர, யகர, ரகர, லகர, ளகரங்களாம். மண்ணினை மண்ணை, வேயினை வேயை, நாரினை நாரை, கல்லினை கல்லை, முள்ளினை முள்ளை என வரும். உயிரீற்றுள் ஒழிந்தது 18இகரம் ஒன்றுமேயாதலின், அதனைப் பிற்கூறினார். கிளியினை கிளியை என வரும். இனித் தான் யான் அழன் புழன் என்னும் னகர ஈற்றினும், ஏழென்னும் ழகர ஈற்றினும் ஒழிந்தன, பொன்னினை பொன்னை, தாழினை தாழை என்றாற்போல வருவன பிறவுமாம். இனி, ஈகார ஈற்றுள் ஒழிந்தன தீயினை தீயை, ஈயினை ஈயை, வீயினை வீயை என்றாற்போல்வன பிறவுமாம். ஐகார ஈற்றுள் ஒழிந்தன, தினை யினை தினையை, கழையினை கழையை என்றாற் போல்வன பிறவு மாம். ஏனை ஈறுகளினும் வருவன உணர்ந்து கொள்க. 19மேலே பெயரீற்றுச் செய்கையெல்லாந் தத்தம் ஈற்றின்கண் முடிப்பாராதலின் அவை ஈண்டுக் கூறல் வேண்டா. இனித் தேருங்காலை என்றதனானே, உருபுகள் நிலை மொழியாக நின்று தம்பொருளோடு புணரும்வழி வேறுபடும் உருபீற்றுச் செய்கை யெல்லாம் ஈண்டு முடித்துக் கொள்க. உதாரணம்: நம்பியைக் கொணர்ந்தான், மண்ணினைக் கொணர்ந்தான், கொற்றனைக் கொணர்ந்தான் என 20மூவகைப் பொருளோடுங் கூடி நின்ற உருபிற்கு ஒற்றுக்கொடுக்க. மலையொடு பொருதது, மத்திகையாற் புடைத்தான், சாத்தற்குக் கொடுத்தான், ஊர்க்குச் சென்றான், காக்கையிற் கரிது, காக்கையது பலி, மடியுட் பழுக்காய், தடாவினுட் கொண்டான் என்னுந் தொடக்கத்தன உருபு காரணமாகப் பொருளோடு புணரும் வழி இயல்பாயும் ஈறுதிரிந்தும் ஒற்றுமிக்கும் வந்தன கொள்க. இனிக், கண் கால் புறம் முதலியன பெயராயும் உருபாயும் நிற்குமாதலின், அவை உருபாகக் கொள்ளும்வழி வேறுபடுஞ் செய்கைகளெல்லாம் இவ்விலேசான் முடிக்க. இஃது உருபியலாதலின் உருபொடு சிவணி என வேண்டா, அம்மிகை யானே உருபுபுணர்ச்சிக்கட் சென்ற சாரியைகளெல்லாம் 21ஈற்றுப் பொது முடிபு உள்வழிப் பொருட்புணர்ச்சிக்குங் கொள்க. விளவின்கோடு, கிளியின்கால் என எல்லா ஈற்றினுங் கொள்க. நம்பியை, கொற்றனை என உயிரீறும் புள்ளியீறுஞ் சாரியை பெறாது இயல்பாய் முடிவனவும் ஈண்டே கொள்க. (30) உருபியல் முற்றிற்று. கணேசய்யர் அடிக்குறிப்புகள்: 1. ஞ ந ம ய வ என்னுந் தொகைமரபு 2-ம் சூத்திரத்தால் இயல்பென்றதை விலக்கிற்றென்றது. உருபுகள் நிலைமொழிமுன் இயல்பாகாது இன்பெறு மென்றதை. 2. மேல் என்றது உருபியல் 1-ஞ் சூத்திரத்தை. 3. அதினை அதினொடு என்பன மருமுடிப்புழி முடிந்தன என்றது. `வழங்கியன் மருங்கின் மருவொடு திரிநவும்' என்னும் அதிகாரப் புறன டையான் முடிந்தமையை. இதனால் அதன் அதின் எனப் பிற்காலத்து மருவியதென்பது கருத்துப்போலும். 4. யாவென் வினாவின் ஐயெனிறுதி யாவை என்பது. 5. எழுத்து என்றது ஈகார உயிரை. 6. உயிர்மெய் - நீ. 7. எழுத்துப்பேறு என்றது - இச் சூத்திரத்தாற் கூறிய னகரத்தை. 8. தெவ் - பகை; உரிச்சொல். தெவ்வுப் பகையாகும் என்பது உரியியல் 18-ஞ் சூத்திரம். 9. படுத்தலோசையாற் பெயராயிற்று என்றது பகைவனை யுணர்த்தலின். 10. மேலைச்சூத்திரமென்றது வருஞ்சூத்திரத்தை. 11. ஏனை முற்றுகரம் என்றது - ஒடு, கு, இது என்பவற்றை. 12. நம்மையும் என்ற இடத்தில் உம்மில் உகரங் கெடாது பெற்று நின்றது. நம்மொடும் என்ற இடத்தில் உம்மில் உகரங் கெட்டு மகரம் நின்றது என்பது கருத்து. 13. முன்னர் `மெய்' என்றது 16-ம் சூத்திரத்துள் வரும் மெய் என்பதை. தங்கண் என்புழி தம் என்ற நிலைமொழியின்மகரக் கேட்டுக்குவிதி `மெய்' என்றது. 14. இச்சூத்திரத்தால் எவன் என்பதற்கு வற்றுக் கொடுத்து, வற்றுமிசை யொற்றென்று னகரங் கெடுத்து `வஃகான் மெய்கெட' என்னுஞ் சூத்திரத்து `ஆகியபண்பு' என்றமையால் ஐகாரத்தின் முன்னன்றி, அகரத்தின் முன்னும் வற்றின் வகரங் கெடுமென வகர அகரத்தைக் கெடுத்து எவற்றை என முடிக்க. 15. எற்றை என்பதில் நிலைமொழி வகரங் கெட்டதற்கு விதியும் `தோன்றல்' என்பது. 16. வழக்கு, கறியது என்பன குற்றுகரங்கள்; அத்தும் அன்னும் பெற்றன. 17. `ஒன்பான் முதனிலை' என்பது. ஒன்பஃது ஆன் பெற்றதற்கு உதாரணம். ஏனையவுமன்ன. 18. இகர வீற்றிற்கு தாரணம் கிளியினை. கிளியை என்பன. 19. பெயரீறு என்றது உருபேற்கும் பெயரீற்றை, நிலைமொழியாய் நின்று உருபேற்பன பெயராதலின் பெயரீறென்றார். பெயரீறாகிய நிலை மொழி யீற்றின் செய்கை ஈறுகடோறுங் கூறப்படுமென்றபடி. 20. மூவகைப் பொருள் என்றது மூவகைப் பெயரை. அவை உயர்திணைப் பெயர். அஃறிணைப் பெயர். பொதுப்பெயர். 21. பொருள் என்றது - உருபல்லாத வருமொழியை. ஈற்றுப் பொருள் - வருமொழிப் பொருள். உயிர் மயங்கியல் உயிரீறு நின்று வல்லெழுத்தோடும் சிறுபான்மை ஏனை யெழுத்துக்களோடும் புணருமாறு கூறுவது உயிர் மயங்கிய லாகும். மயங்குதல் - கலத்தல். உயிரும் புள்ளியும் இறுதியாகிய உயர்திணைப் பெயர்கள் அல்வழி வேற்றுமையாகிய இரு வழியிலும் இயல்பாமெனவும், ஒரு சில விடங்களில் அஃறிணை விரவுப் பெயர் இயல்பாதலுமுண்டெனவும் தொகை மரபில் விதந்து கூறிய ஆசிரியர், அவையொழிந்த உயிரீற்று அஃறிணைப் பெயர்களையும் ஏனை வினைமுற்று வினையெச்சம் பெயரெச் சங்களையும் அகரவீறுமுதல் ஔகாரவீறுமுடிய நெடுங்கணக்கு முறையில் வைத்து உணர்த்துகின்றார். இவ்வியலில் 93-சூத்திரங்கள் உள்ளன. அவற்றுட் பல மாட்டேற்று முறையில் அமைந்தனவாகும். இவ்வியலிற் கூறப்பட்ட விதிகள் யாவும் வல்லெழுத்து மிகுவன, இயல்பாவன, மெல்லெழுத்து மிகுவன, உயிர்மிக வருவன, நீடவருவன குறுகிவருவன, சாரியைபெறுவன, பிறவாறு திரிவன என்னும் இவ்வகையுள் அடங்குவனவாகும். அ, இ, உ. என்னும் மூன்று சுட்டின் முன்னும் உயிரும் யகரமும்வரின் வகரவொற்றும் கசதபஞநமவ என்பனவரின் வந்த ஒற்றெழுத்துக்களும் மிகுமென்பதும் செய்யுளுள் சுட்டு நீண்டு முடியுமென்பதும் 3-6, 34, 35, 53-ஆம் சூத்திரங்களிற் சொல்லப் பட்டன. ஆ, ஆ, ஈ, உ, ஊ, ஏ, ஓ, ஓள என்பவற்றை ஈறாகவுடைய பெயர்கள் அல்வழி வேற்றுமையாகிய ஈரிடத்தும் வல்லெழுத்து மிகப்பெறுமென்றும், இகர ஐகார வீற்றுப் பெயர்கள் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் வல்லெழுத்து மிகப்பெறு மென்றும் 1, 14, 19, 22, 33, 47, 57, 62, 64, 72, 74, 78, 87, 90, 93-ஆம், சூத்திரங்களில் ஆசிரியர் விரித்துக்கூறியுள்ளார். அல்வழிக்கண் அகரவீற்றுள் அன்னவென்னும் உவமவுருபும், அண்மைசுட்டிய உயர்திணை விளிப்பெயரும், செய்ம்மன என்னும் வினைச்சொல்லும், ஏவலைக் கருதிய வியங்கோள் வினையும், செய்த என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சமும், செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சமும், அம்ம என்னும் உரையசையும், அகர வீற்றுப் பலவறிசொல்லும், ஆகாரவீற்றுள் ஆ, மா என்னும் பெயர்ச் சொல்லும், உயர்திணை விளிப் பெயரும், யா வினாவும் முற்றுவினையும், மியா என்னும் அசைச் சொல்லும், தன் தொழிலைக் குறித்துவரும் ஆகார வினாவை யுடைய வினைச்சொல்லும், ஈகார வீற்றுள் நீ, மீ என்பனவும் பகரவீகாரமும், உகரவீற்றுச் சுட்டுப் பெயர்களும், தேற்றப் பொருளில் வரும் எகரவீறும், சிறப்புப் பொருளில் வரும் ஒகரவீறும், மாறுகோளெச்சப் பொருளிலும் வினாப் பொருண்மையிலும் எண்ணுப்பொருண்மையிலும் ஐயப் பொருண்மையிலும் வரும் ஏகார ஓகார வீற்றிடைச் சொற்களும் வல்லெழுத்து மிகாது இயல்பாவன. அகரவீற்று மரப்பெயரும் ஆ, இ, உ, ஏ, ஐ ஆகிய ஈறுகளில் எடுத்தோதிய பிடா, தளா, மா (மரம்) ஆ, மா, (விலங்கு) உதி, ஒடு, சே, விசை, ஞெமை, நமை என்னும் பெயர்களும் வல்லெழுத்து முதன்மொழிவரின் மெல்லெழுத்து மிக்கு முடிவனவாம். யா, பிடா, தளா, புளி (சுவை) என்பன வல்லெழுத்துப் பெறுதலுமுண்டு. உம்மைத்தொகைக்கண்வரும் ஆகாரவீற்றுப்பெயரும் வேற்றுமைக்கண் குறிற்கீழ் நின்ற ஆகாரவீற்றுப்பெயரும் ஓரெழுத்தொரு மொழியாகிய ஆகார வீற்றுப்பெயரும் அகரம் மிக்கு முடியும். இரா என்னுஞ் சொல்லுக்கு அகரமிகுதல் இல்லை. குறிற்கீழ் நின்ற ஊகாரவீறும் ஓரெழுத்துத்தொரு மொழியாகிய ஊகார வீறும் வேற்றுமைக்கண் உகரம் மிக்குமுடியும். ஏ யென்னும் பெயர் வேற்றுமைக்கண் எகரம் மிக்கு முடியும். ஓகாரவீறு வேற்றுமைக் கண் ஒகரம் மிகும். ஔகாரவீற்றுப் பெயர் இருவழியிலும் உகரம்மிகும். செய்யுட்கண்வரும் அகரச்சுட்டும், அம்ம என்னும் இடைச் சொல்லிறுதியும், பல சில என்னுஞ் சொற்களின் இறுதி அகரமும், ழகரமெய்யையூர்ந்த இறுதி உகரமும் நீண்டு முடிவனவாம். ஆ முன்வரும் பகர வீகாரம் குறுகும். குறிற்கீழ் நின்ற இறுதி ஆகாரம் குறுகி உகரம் பெறும். மக, ஆடூஉ, மகடூஉ சே என்பன இன்சாரியைபெறும். நிலா அத்துச்சாரியைபெறும். பனி (காலம்), வளி (பூதம்), மழை என்பன அத்துச்சாரியையும் இன்சாரியையும் பெறுவன. புளி, எரு, செரு, பனை, அரை, ஆவிரை என்பன அம்சாரியைபெறுவன. இகர ஐகார வீற்று நாட் பெயர்முன் தொழிற்சொல்வரின் இடையே ஆன்சாரியை வரும். அவ்விரண்டீற்றுத் திங்கட் பெயர் முன் தொழிற்சொல்வரின் இடையே இக்குச்சாரியை வரும். ஊவென்னும் ஓரெழுத்தொருமொழி னகரவொற்றும் அக்குச் சாரியையும் பெறும். அ, ஈ, உ, ஐ, ஓ என்னும் ஈறுகளுக்கு உருபியலிற் கூறப்பட்ட சாரியைகளை இவ்வியலிலுள்ள 18, 51, 61, 79, 92-ஆம் சூத்திரங்களால் அவ்வீற்றுப் பொருட் புணர்ச்சிக்கும் மாட்டெறிந்து விதி கூறுவர் ஆசிரியர். சாவ என்பதன் வகரவுயிர்மெய்யும் வாழிய என்பதன் யகரவுயிர்மெய்யும் கெட்டு முடியும். நாழி என்பதன்முன் உரி யென்னுஞ்சொல் வந்துபுணரின் நிலைமொழியீற்றின் இகரம் தான் ஏறிய ழகர மெய்யுடன்கெட அவ்விடத்து டகரமெய் தோன்றி முடியும். செரு என்பதன் முன்வரும் அம்சாரியையின் மகரங்கெட வருமொழி வல்லெழுத்து மிக்கு முடியும். பனை, ஆவிரை என்பன அம்சாரியை பெறுங்கால் இறுதி ஐகாரங் கெட்டு முடிவன. பனை என்னுஞ்சொல்முன் அட்டு என்பது வருமொழியாய்வரின் நிலை மொழியிறுதி ஐகாரங்கெட அவ்விடத்து ஆகாரம் தோன்றும். பல சில என்பவை தம் முன்னர்த் தாம்வரின் இறுதி நின்ற லகர வுயிர்மெய் லகரவொற்றாகத் திரியும். இன்றியென்பதன் இறுதியிகரம் செய்யுளுள் உகரமாகத்திரியும். சுட்டுப் பெயரீற்று உகரம் அன்று என்பதனோடு புணருங்கால் ஆகாரமாகத் திரிதலும் ஐயென்பதனோடு புணருங்கால் கெடுதலும் செய்யுளிடத் துண் டாகுந் திரிபுகளாம். வேட்கை யென்னுஞ்சொல்முன் அவா என்பது வந்து புணரின் நிலைமொழியீற்றிலுள்ள ஐகாரம் தான் ஊர்ந்து நின்ற ககரமெய்யொடுங்கெட அங்குள்ள டகரம் ணகர மாய்த் திரிதல் செய்யுட்கண்வருந் திரிபாகும். -க.வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 178-181 ஏழாவது உயிர்மயங்கியல் 203. அகர விறுதிப் பெயர்நிலை முன்னர் வேற்றுமை யல்வழிக் கசதபத் தோன்றிற் றத்த மொத்த வொற்றிடை மிகுமே என்பது சூத்திரம். உயிரீறு நின்று வன்கணத்தோடுஞ் சிறுபான்மை ஏனைக் கணங்களொடும் மயங்கிப் புணரும் இயல்பு உணர்த்தினமையின், இவ்வோத்து உயிர்மயங்கிய லென்னும் பெயர்த்தாயிற்று. மேற் பெயரோடு உருபு புணருமாறு கூறிப் பெயர்வருவழி உருபு தொக்கு நின்ற பொருட் புணர்ச்சி கூறுகின்றமையின் உருபியலோடு இயைபுடைத் தாயிற்று. இச்சூத்திரம், அகர ஈற்றுப்பெயர் அல்வழிக்கண் வன்கணத் தோடு புணருமாறு கூறுகின்றது. இதன் பொருள்: அகர இறுதிப் பெயர்நிலை முன்னர் - அகரமாகிய இறுதியை யுடைய பெயர்ச்சொன் முன்னர், வேற்றுமை யல்வழிக் கசதபத் தோன்றின் - வேற்றுமையல்லாத விடத்துக் கசதப முதன் மொழிகள் வருமொழியாய்த் தோன்று மாயின், தத்தம் ஒத்த ஒற்று இடை மிகும் - தத்தமக்குப் பொருந்திய அக் கசதபக்களாகிய ஒற்று இடைக்கண் மிகும் என்றவாறு. உதாரணம்: விளக்குறிது, நுணக்குறிது, அதக்குறிது, சிறிது, தீது, பெரிது என ஒட்டுக. இவை அஃறிணை இயற்பெய ராகிய எழுவாய் வினைக் குறிப்புப் பண்பாகிய பயனிலையோடு முடிந்தன. ஒத்த வென்றமையாது 1`தத்த மொத்த என்றதனான், அகர ஈற்று உரிச்சொல் வல்லெழுத்து மிக்கும், மெல்லெழுத்து மிக்கும் முடியும் முடிபும், அகரந் 2தன்னை உணர நின்றவழி வன்கணத் தோடு மிக்கு முடியும் முடிபும் கொள்க. தடக்கை தவக் கொண்டான் வயக்களிறு (புறம். 100) வயப்புலி (அகம். 22) குழக்கன்று எனவும், தடஞ்செவி கமஞ்சூல் (முருகு. 7) எனவும், அக்குறிது சிறிது தீது பெரிது எனவும் வரும். இனி, இடைச்சொல் வல்லொற்றுப் பெற்று வருவன உளவேல் அவற்றையும் இவ்விலேசினான் முடித்துக் கொள்க. (1) 204. வினையெஞ்சு கிளவியு முவமக் கிளவியு மெனவெ னெச்சமுஞ் சுட்டி னிறுதியு மாங்க வென்னு முரையசைக் கிளவியு ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகுமே. இஃது அகர ஈற்று வினைச்சொல்லும் இடைச்சொல்லும் புணருமாறு கூறுகின்றது. இதன் பொருள்: வினையெஞ்சு கிளவியும் - வினையை ஒழிபாக வுடைய அகர ஈற்று வினைச்சொல்லும், உவமக் கிளவியும் - உவம வுருபாய் நின்ற அகர ஈற்று இடைச்சொல்லும், எனவென் எச்சமும் - எனவென்னும் வாய்பாட்டான் நின்ற அகர ஈற்று இடைச் சொல்லும், சுட்டின் இறுதியும் - சுட்டாகிய அகர ஈற்று இடைச் சொல்லும், ஆங்க என்னும் உரையசைக் கிளவியும் - ஆங்க வென்னும் அகர ஈற்று உரையசை யிடைச்சொல்லும், ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகும் - முன்னர்க் கூறிய வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. உதாரணம்: உண தாவ சாவ என நிறுத்திக், கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என வல்லெழுத்துக் கொடுத்து முடிக்க. இவ்வினையெச்சம் ஒழிந்தன எல்லாம் இடைச்சொல் லென்று உணர்க. புலிபோலக் கொன்றான் சென்றான் தாவினான் போயினான் எனவும், கொள்ளெனக் கொண்டான் சென்றான் தந்தான் போயினான் எனவும், அக்கொற்றன் சாத்தன் தேவன் பூதன் எனவும், ஆங்கக் கொண்டான் சென்றான் தந்தான் போயினான், ஆங்கக் குயிலு மயிலுங் காட்டிக், கேசவனை விடுத்துப் போகி யோளே எனவும் வரும். 3உவமம் வினையெச்ச வினைக்குறிப்பேனும், ஒன்றனொடு பொருவப்படுதல் நோக்கி உவமவியலின்கண் ஆசிரியர் வேறுபடுத்திக் கூறினார். எனவென்னும் எச்சமும், இருசொல்லையும் இயைவிக்கின்ற நிலைமையான் இடைச்சொல்லோத்தினுள் வேறோதினார். ஆங்க என்பது, ஏழனுருபின் பொருள்பட வந்ததல்லாமை ஆங்க வென்னு முரையசை என்றதனானும் ஆங்க வுரையசை (சொ. 279) என்னும் இடையியற் சூத்திரத்தானும் உணர்க. இவை இயல்புகணத்துக்கண் முடியும் முடிபு ஞநமயவ (எழுத். 144) என்புழிக் கூறியதேயாம். அவை, தாவ புலிபோல கொள்ளென ஆங்க என நிறுத்தி, ஞ ந ம ய வ முதலிய மொழி ஏற்பன கொணர்ந்து புணர்த்து இயல்பாமாறு ஒட்டிக் கொள்க. சுட்டு மேற்கூறுப. (2) 205. சுட்டின்முன்னர் ஞநமத் தோன்றி னொட்டிய வொற்றிடை மிகுதல் வேண்டும். இது, ஞநமயவ (எழு. 144) என்னுஞ் சூத்திரத்தான் மென் கணம் இயல்பாகும் என முற்கூறியதனை விலக்கி மிக்கு முடிக என்றலின், எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது. இதன் பொருள்: சுட்டின் முன்னர் ஞநமத் தோன்றின் - அகரச்சுட்டின் முன்னர் ஞ ந ம க்கள் முதலாகிய மொழிவரின், ஒட்டிய ஒற்று இடை மிகுதல் வேண்டும் - தத்தமக்குப் பொருந்தின ஒற்று இடைமிகுதலை விரும்பும் ஆசிரியன் என்றவாறு. அஞ்ஞாண், அந்நூல், அம்மணி என வரும். ஒட்டிய வென்றதனான் அஞ்ஞெளிந்தது, அந்நன்று, அம் மாண்டது என அகரந் தன்னை யுணர நின்றவழியும் மிகுதல் கொள்க. (3) 206. யவமுன் வரினே வகர மொற்றும். இதுவும் அது. இதன் பொருள்: யவ முன் வரின் - யகர வகர முதன்மொழி அகரச் சுட்டின் முன்னே வரின், வகரம் ஒற்றும் - இடைக்கண் வகரம் ஒற்றாம் என்றவாறு. உதாரணம்: அவ்யாழ், அவ்வளை என வரும். வருமொழி முற்கூறியவதனால், அகரந் தன்னை யுணர நின்ற வழியும் வகரம் மிகுதல் கொள்க. அவ்வளைந்தது என வரும். (4) 207. உயிர்முன் வரினு மாயிய றிரியாது. இதுவும் அது. இதன் பொருள்: உயிர் முன் வரினும் ஆயியல் திரியாது - உயிர்கள் அகரச் சுட்டின் முன் வரினும் முற்கூறிய வகரம் மிக்கு வரும் இயல்பின் திரியாது என்றவாறு. அ என நின்ற சுட்டின் முன்னர் அடை என வருவித்து வகரம் ஒற்றித் தன்னுரு இரட்டி உயிரேற்றி, அவ்வடை அவ்வாடை அவ்விலை அவ்வீயம் அவ் வுரல் அவ்வூர்தி அவ் வெழு அவ்வேணி அவ்வையம் அவ்வொழுக்கம் அவ்வோடை அவ்வௌவியம் என ஒட்டுக. நெடியதன் முன்னர் (எழு. 160) என்பதனுள் நெறியியல் என்றதனான் இரட்டுதல் கூறினமையின், அது நிலைமொழித் தொழிலென்பது பெறப்பட்டது. வருமொழி முற்கூறியவதனான், அகரந் தன்னை உணர நின்ற வழியும் வகரம் மிகுதல் கொள்க. அவ்வழகிது என வரும். திரியா தென்றதனான், மேற் சுட்டு நீண்டவழி வகரக்கேடு கொள்க. (5) 208. நீட வருதல் செய்யுளு ளுரித்தே. இஃது எய்தியது விலக்கிச் செய்யுட்கு ஆவதோர் விதி கூறுகின்றது. இதன் பொருள்: நீட வருதல் செய்யுளுள் உரித்து - அகரச்சுட்டு நீட வருதல் செய்யுளிடத்து உரித்து என்றவாறு. உதாரணம்: ஆயிரு திணையி னிசைக்குமன சொல்லே (சொல். 1), ஆயிருபாற்சொல் (சொல். 3) என வரும். இது, 4வருமொழி வரையாது கூறலின் வன்கணம் ஒழிந்த கணம் எல்லாவற்றோடுஞ் சென்றது. அவற்றிற்கு உதாரணம் வந்த வழிக் காண்க. இந்நீட்சி இருமொழிப் புணர்ச்சிக்கண் வருதலின் நீட்டும்வழி நீட்டல் ஆகாமை உணர்க. (6) 209. சாவ வென்னுஞ் செயவெ னெச்சத் திறுதி வகரங் கெடுதலு முரித்தே. இது, மேல் வினையெஞ்சு கிளவி என்ற எச்சத்திற்கு எய்தா தது எய்துவித்தது. இதன் பொருள்: சாவ என்னுஞ் செயவென் எச்சத்து இறுதி வகரம் - சாவ வென்று சொல்லப்படுஞ் செயவெ னெச்சத்து இறுதிக்கண் நின்ற அகரமும் அதனாற் பற்றப்பட்ட வகரமும், கெடுதலும் உரித்து - கெட்டு நிற்றலுங் கெடாது நிற்றலும் உரிய என்றவாறு. உதாரணம்: கோட்டிடைச் சாக்குத்தினான் என வரும். சீறினான் தகர்த்தான் புடைத்தான் என ஒட்டுக. 5கெடாதது முன்னர் முடித்தாம். இதனை வினையெஞ்சு கிளவி (எழு. 204) என்றதன்பின் வையாததனான், இயல்புகணத்தும் இந்நிலைமொழிக்கேடு கொள்க. சாஞான்றான் நீண்டான் மாண்டான் யாத்தான் வீழ்ந் தான் அடைந்தான் என ஒட்டுக. (7) 210. அன்ன வென்னு முவமக் கிளவியு மண்மை சுட்டிய விளிநிலைக் கிளவியுஞ் செய்ம்மன வென்னுந் தொழிலிறு சொல்லு மேவல் கண்ணிய வியங்கோட் கிளவியுஞ் செய்த வென்னும் பெயரெஞ்சு கிளவியுஞ் செய்யிய வென்னும் வினையெஞ்சு கிளவியு மம்ம வென்னு முரைப்பொருட் கிளவியும் பலவற் றிறுதிப் பெயர்க்கொடை யுளப்பட வன்றி யனைத்து மியல்பென மொழிப. இஃது அகர ஈற்றுள் ஒருசார் பெயர்க்கும் வினைக்கும் இடைக்கும் முன்னெய்தியது விலக்கியும், 6எய்தாததெய்து வித்தும் இலக்கணங் கூறுகின்றது. இதன் பொருள்: அன்ன என்னும் உவமக் கிளவியும் - அன்ன என்று சொல்லப் படும் உவமவுருபாகிய அகர ஈற்று இடைச்சொல்லும், அண்மை சுட்டிய விளிநிலைக் கிளவியும் - அணியாரைக் கருதின விளியாகிய நிலைமை யினையுடைய அகர ஈற்று உயர்திணைப் பெயர்ச்சொல்லும், செய்ம்மன என்னுந் தொழிலிறு சொல்லும் - செய்ம்மன என்று சொல்லப்படுந் தொழிற்சொல் பொருள் தருங் கால் உம் ஈற்றான் இறுஞ் சொல்லும், ஏவல் கண்ணிய வியங்கோட் கிளவியும் - ஒருவரான் ஏவற்றொழின்மை கருதிக் கூறப்பட்ட ஏவற் பொருண்மையை முற்ற முடித்தலை உணர்த்தும் அகர ஈற்று வினைச்சொல்லும், செய்த என்னும் பெயரெஞ்சு கிளவியும் - செய்த என்று சொல்லப்படும் பெயரெச்சமாகிய அகர ஈற்று வினைச் சொல்லும், செய்யிய என்னும் வினையெஞ்சு கிளவியும் - செய்யிய என்று சொல்லப்படும் வினையெச்சமாகிய அகர ஈற்று வினைச்சொல்லும், அம்ம என்னும் உரைப்பொருட் கிளவியும் - அம்ம என்று சொல்லப்படும் எதிர்முகமாக்கிய அகர ஈற்று இடைச் சொல்லும், பலவற்று இறுதிப் பெயர்க்கொடை உளப்பட - பன்மைப் பொருளை உணர்த்தும் அகர ஈற்றுப் பெயர்கள் ஐந்தனையும் முற்கூறியவற்றொடு கூட்டிக் கொடுத்தல் உள்ளிட்டு, அன்றி அனைத்தும் இயல்பென மொழிப - அவ் வெட்டுச் சொல்லும் இயல்பாய் முடியுமென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.. உதாரணம்: பொன்னன்ன குதிரை, செந்நாய், தகர், பன்றி என, இது வினையெஞ்சு கிளவியும் உவமக் கிளவியும் (எழு. 204) என்பதனான் மிக்கு முடிதலை விலக்கிற்று. ஊர கேள், செல், தா, போ என உயிரீறாகிய வுயர்திணை (எழு. 153) என்னுஞ் சூத்திரத்தான் இயல்பாய் முடிவது ஈண்டு னகரங் கெட்டு அகர ஈறாய் விளியேற்று முடிந்தமையின் எய்தாததெய்துவித்தது. உண்மன குதிரை செந்நாய் தகர் பன்றி என்பனவற்றிற்கு உண்ணுமென விரித்தும், யானுண்மன நீயுண்மன அவனுண்மன என நிறுத்திக், கூழ் சோறு தேன் பால் என வருவித்தும் முடிக்க. இவற்றிற்கும் அவ்வாறே விரித்துக் கொள்க. இங்ஙனஞ் செய்யு மென்பதன் எச்சப் பொருட்டாகிய மனவென் இறுதிச் சொல் அக் காலம் வழங்கியதாதலின் ஆசிரியர் அதனையும் வேறாக எடுத்தோதினார். யானும் நின்னோடுடன் வருக, அவன் செல்க, அவள் செல்க, அவர் செல்க என நிறுத்திக், காட்டின்கண் செருவின்கண் தானைக் கண் போரின்கண் என வருவித்து முடிக்க. இவை ஏவற் பொருண்மையை முற்ற முடித்தன. ஏவல் கண்ணிய எனவே ஏவல் கண்ணாதனவும் உளவாயின; அவை நீ செல்க 7அது செல்க அவை செல்க என நிறுத்தி, முற்கூறிய காடு முதலியவற்றை வருவித்து முடிக்க. இவை ஏவற் பொருண்மையை முற்ற முடியாதன. அஃறிணை ஏவற் பொருண்மையை முற்ற முடியாமை, வினையியலுள் (சொல். 228) வியங்கோட்கண்ணே பொருளியலுஞ் செய்யுளியலும் பற்றிக் கூறுதும். மனவும் வியங்கோளும் எய்தாததெய்துவித்தது. உண்ட குதிரை செந்நாய் தகர் பன்றி - இதுவும் அது. இதற்கு உரிய உண்ணாத குதிரை யென்னும் எதிர்மறையும், நல்ல குதிரை யென்னும் குறிப்புங் கொள்க. உண்ணிய கொண்டான் சென்றான் தந்தான் போயினான்; இது முன்னர் வினையெச்சம் வல்லெழுத்துப் பெறுக என்றலின் எய்தியது விலக்கிற்று. அம்ம கொற்றா சாத்தா தேவா பூதா என்பது இடைச் சொல்லாதலின் எய்தாத தெய்துவித்தது. இது கேளாய் கொற்றனே என எதிர்முக மாக்கியவாறு காண்க. பல்லகுதிரை, பலகுதிரை, சில்லகுதிரை, சிலகுதிரை, உள்ள குதிரை, இல்ல குதிரை, செந்நாய் தகர் பன்றி என ஒட்டுக. இக் காலத்துப் பல்ல சில்ல என்பன வழங்கா. இதுவும் விளக்குறிது என்றாற் போலப் பலக்குதிரையென வல்லெழுத்து எய்தியதனை விலக்கிற்று. விளிநிலைக் கிளவியாகிய பெயர் முற்கூறாததனானே, செய்யுமென்பதன் மறையாகிய செய்யாத வென்பதற்கும் இவ் வியல்பு முடிபு கொள்க. அது வாராத கொற்றன் என வரும். இவ் வியல்பு முடிபிற்குச் செய்ம்மன சிறத்தலின், வியங்கோட்கு முன் வைத்தார். ஏவல் கண்ணிய என்பதனான் ஏவல் கண்ணாததும் உள தென்று கூறி மன்னிய பெரும நீ (புறம். 91) என உதாரணங் காட்டுக வெனின், அது பொருந்தாது; கூறுகின்றான் அவன் நிலைபெற்றிருத்தல் வேண்டுமென்றே கருதிக் கூறுதலின் அதுவும் ஏவல் கண் ணிற்றேயாம். எல்லாவற்றினுஞ் சிறந்த பலவற்றிறுதி முற்கூறுகவெனின், அது வழக்கிற்குஞ் செய்யுட்கும் வேறு வேறு முடிபுடைத் தென்றற்குஞ், செய்யுண் முடிபு இவ்வியல்புபோற் சிறப்பின் றென்றற்கும், அகர ஈற்றுள் முடிபு கூறாது நின்ற முற்றுவினையும் வினைக்குறிப்பும் இவ்வியல்பு முடிபு பெறுமென்றற்கும் பின் வைத்தார். உண்டன குதிரை - இது முற்றுவினை. கரியன குதிரை - இது முற்று வினைக்குறிப்பு. இஃது இயல்புகணத்து முடிபு. ஞநமயவ (எழு. 144) என்புழிப் பொருந்துவன வெல்லாங் கொள்க. (8) 211. வாழிய வென்னுஞ் செயவென் கிளவி யிறுதி யகரங் கெடுதலு முரித்தே. இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி வகுத்தது. இதன் பொருள்: 8வாழிய என்னுஞ் செய என் கிளவி - வாழுங்காலம் நெடுங் காலமாகுக என்னும் பொருளைத் தரும் வாழிய வென்று சொல்லப்படுஞ் செயவெனெச்சக்கிளவி, இறுதி யகரங் கெடுதலும் உரித்து - இறுதிக்கண் அகரமும் அதனாற் பற்றப்பட்ட யகர வொற்றுங் கெட்டு முடிதலும் உரித்து என்றவாறு. கெடுதலு மெனவே, கெடாது முடிதலே பெரும்பான்மை யென்றவாறு. வாழி கொற்றா, சாத்தா, தேவா, பூதா என வரும். வாழிய என்பதே பெரும்பான்மை. வாழிய யான் நீ அவன் அவள் அவர் அது அவை என இது மூன்றிடத்துஞ் சேறலின் உயிரீ றாகிய முன்னிலைக் கிளவியும் (எழு. 151) என்புழி முன்னிலை யியல்பாம் என்றதன்கண் அடங்காதாயிற்று. இது குறிப்பு வியங்கோள். ஒன்றென முடித்தலான் இஃது இயல்புகணத்துங் கொள்க. வாழி ஞெள்ளா எனவரும். இது, வாழ்த்தப்படும் பொருள் வாழவேண்டு மென்னுங் கருத்தினனாகக் கூறுதலின் ஏவல் கண்ணிற்றேயாம். அல்லாக்கால் வாழ்த்தியல் வகையே நாற்பாக்கு முரித்தே (செய்யுளியல். 109) என்பதற்கும், வாழ்த்தியலாகச் சான்றோர் கூறிய செய்யுள்களுக்கும் பயனின்றாமென்று உணர்க. (9) 212. உரைப்பொருட் கிளவி நீட்டமும் வரையார். இஃது - அம்ம வென்பதற்கு எய்தாததெய்துவித்தது. இதன் பொருள்: உரைப்பொருட் கிளவி - 9எதிர்முகமாக்கும் பொருளை யுடைய அம்மவென்னுஞ் சொல், நீட்டமும் வரையார் - அகரமாகி நிற்றலேயன்றி ஆகாரமாய் நீண்டு முடிதலையும் நீக்கார் என்றவாறு. அம்மா கொற்றா, சாத்தா, தேவா, பூதா என வரும். உம்மையான், நீளாமையே பெரும்பான்மையாம். வரையாது கூறினமையின் இந் நீட்சி இயல்பு கணத்துங் கொள்க. அம்மா ஞெள்ளா, நாகா, மாடா, வடுகா, ஆதா என ஒட்டுக. (10) 213. பலவற் றிறுதி நீடுமொழி யுளவே செய்யுள் கண்ணிய தொடர்மொழி யான. இது, முற்கூறிய பலவற்றிறுதிக்கண் சிலவற்றிற்குச் செய்யுண் முடிபு கூறுகின்றது. இதன் பொருள்: பலவற்று இறுதி நீடும் மொழி உள - பலவற்றை உணர்த்தும் ஐவகைச் சொல்லின் இறுதி அகரம் நீண்டு முடியு மொழிகளுஞ் சில உள; செய்யுள் கண்ணிய தொடர் மொழி ஆன - யாண்டுளவெனிற் செய்யுளாதலைக் கருதிய ஒன்றோடொன்று தொடர்ச்சிப்படுஞ் செய்யுண்முடிபுடைய மொழிகளின்கண் என்றவாறு. உடைத்தென்னாது உளவென்ற பன்மையான், வரு மொழிக்கட் சில என்பது வந்து நீடுமென்று கொள்க. செய்யுளான என்னாது செய்யுள் கண்ணிய தொடர் மொழியான என்றதனான், பல என்பதன் இறுதி அகரம் நீண்டுழி நிலைமொழி அகரப் பேறும் வருமொழி ஞகரமாகிய மெல்லெ ழுத்துப் பேறும், வருமொழி யிறுதி நீண்டவழி அகரப்பேறும் மகர மாகிய மெல்லெழுத்துப் பேறுங் கொள்க. உதாரணம்: பலாஅஞ் சிலாஅ மென்மனார் புலவர். இதன் சொன்னிலை பல சில என்னுஞ் 10செவ்வெண். (11) 214. தொடர லிறுதி தம்முற் றாம்வரின் லகரம் றகரவொற் றாகலு முரித்தே. இது, பல சில என்பனவற்றிற்கு இயல்பேயன்றித் திரிபும் உண்டென, எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. இதன் பொருள்: தொடர் அல் இறுதி - தொடர்மொழி யல்லாத ஈரெழுத் தொருமொழியாகிய பல சில என்னும் அகர ஈற்றுச் சொல், தம்முன் தாம்வரின் - தம்முன்னே தாம் வருமாயின், லகரம் றகர வொற்று ஆகலும் உரித்து - தம் ஈற்றினின்ற லகர வொற்று றகரவொற்றாகத் திரிந்து முடிதலும் உரித்து என்றவாறு. உம்மையாற் றிரியாமையும் உரித்தென்றார். உதாரணம்: பற்பல கொண்டார், சிற்சில வித்தி என வரும். அகர ஈற்றுச் சுட்டல்லாத குற்றெழுத்து ஓரெழுத்தொரு மொழியாகுவன இன்மையின் தொடரலிறுதி யெனவே ஈரெழுத் தொரு மொழியே உணர்த்திற்று. தன்முனென் னாது தம்முன் என்ற பன்மையாற் பல சில என நின்ற இரண்டுந் தழுவப்பட்டன. தம்முன்வரி னென்னாது தா மென்றதனாற் பலவின்முன் பல வருதலுஞ் சிலவின் முன் சில வருதலுங் கொள்க. லகரம் றகர வொற்றா மென ஒற்றிற்குத் திரிபு கூறி அகரங் கெடுதல் கூறிற்றில ரெனின், அது 11வாராததனான் வந்தது முடித்தலென்னும் உத்தி பெற வைத்ததென்று உணர்க. இதனை ஞாபகமென்பாரும் உளர். அருத்தாபத்தியான் தம்முன் தாம்வரின் லகரம் றகர ஒற்றாம். எனவே, தம்முன் பிறவரின் லகரம் றகரவொற்றாகாது அகரங் கெடுமென்று கொள்ளப்படும். உதாரணம்: பல்கடல் சேனை தானை பறை எனவும், பல்யானை (புறம். 63) பல்வேள்வி எனவும், சில்காடு சேனை தானை பறை எனவும், சில்யானை சில்வேள்வி எனவும் வரும். உரித்து என்றது அகர ஈற்றொருமை பற்றி. (12) 215. வல்லெழுத் தியற்கை யுறழத் தோன்றும். இது, முற்கூறிய இரண்டற்கும் உள்ளதோர் முடிபு வேற்றுமை கூறுகின்றது. இதன் பொருள்: வல்லெழுத்து இயற்கை - முற்கூறிய பல சில வென்னும் இரண்டற்கும் அகர ஈற்றுப் பொதுவிதியிற் கூறிய வல் லெழுத்துமிகும் இயல்பு, உறழத்தோன்றும் - மிகுதலும் மிகா மையுமாய் உறழ்ந்துவரத் தோன்றும் என்றவாறு. உதாரணம்: பலப்பல பலபல, சிலச்சில சிலசில என வரும். ஈண்டுந் தம்முன் தாம் வருதல் கொள்க. இயற்கை யென்றதனான், அகரங் கெட லகரம் திரிந்துந் திரி யாதும் உறழ்ந்து முடிதலுங் கொள்க. பற்பல பல்பல, சிற்சில சில்சில எனவரும். தோன்றும் மென்றதனான், அகரங் கெட லகரம் மெல்லெழுத்தும் ஆய்தமுமாகத் திரிந்து முடிதலுங் கொள்க. பன்மீன் வேட்டத்து, பன்மலர், பஃறாலி, பஃறாழிசை, சின்னூல், சிஃறாழிசை என வரும். இது முன்னர்த் தோன்றுமென்று எடுத்தோதிய சிறப்பு விதியால் அகரங் கெட நின்ற லகரவொற்றின் முடிபாகலின் தகரம் வரு வழி ஆய்த மென்பதனான் முடியாது. (13) 216. வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே. இஃது - அகர ஈற்றிற்கு அல்வழி முடிபு கூறி, வன்கணத் தோடு வேற்றுமை தொக்கு நின்ற முடிபு கூறுகின்றது. இதன் பொருள்: வேற்றுமைக் கண்ணும் அதனோ ரற்று - அகர ஈற்றுப் பெயர் வேற்றுமைப்பொருட் புணர்ச்சிக்கண்ணும் முற்கூறிய அல்வழியோடு ஒரு தன்மைத்தாய்க், கசதப முதன் மொழி வந்துழித் தத்தம் ஒத்த வொற்று இடைமிக்கு முடியும் என்றவாறு. உதாரணம்: இருவிளக்கொற்றன், சாத்தன், தேவன், பூதன் என வரும். இருவிளக்குறுமை சிறுமை தீமை பெருமை எனக் குண வேற்றுமைக் கண்ணுங் கொள்க. இருவிள வென்பது ஓலை; வேணாட்டகத்து ஓரூர்; கருவூரி னகத்து ஒரு சேரியு மென்ப. இருவிளவிற் கொற்றன் என விரிக்க. (14) 217. மரப்பெயர்க் கிளவி மெல்லெழுத்து மிகுமே. இஃது - அகர ஈற்று மரப் பெயர்க்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது. இதன் பொருள்: மரப் பெயர்க்கிளவி மெல்லெழுத்து மிகும் - அகர ஈற்று மரப் பெயராய சொல் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் மெல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. உதாரணம்: அதங்கோடு விளங்கோடு செதிள் தோல் பூ என வரும். இது கசதப முதலிய (எழு. 143) என்பதனான் முடியும். (15) 218. மகப்பெயர்க் கிளவிக் கின்னே சாரியை. இஃது - அகர ஈற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது. இதன் பொருள்: மகப்பெயர்க் கிளவிக்கு இன்னே சாரியை - அகர ஈற்று மக என்னும் பெயர்ச்சொல்லிற்கு வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் வருஞ்சாரியை இன் சாரியை என்றவாறு. உதாரணம்: மகவின்கை, செவி, தலை, புறம் என வரும். சாரியைப்பேறு வரையாது கூறியவழி நான்கு கணத்துக் கண்ணுஞ் செல்லுமென்பது ஆசிரியர்க்குக் கருத்தாகலின், மகவின் ஞாண், நூல், மணி, யாழ், வட்டு, அடை என ஒட்டுக. மேல் அவண் என்றதனான், இன்சாரியை பெற்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. (16) 219. அத்தவண் வரினும் வரைநிலை யின்றே. இஃது ஈற்று வல்லெழுத்து அத்தும் வகுத்தலின், எய்தியதன் மேற் சிறப்பு விதி கூறுகின்றது. இதன் பொருள்: அவண் - முற்கூறிய மகவிடத்து, அத்து வரினும் வரை நிலை இன்று - இன்னேயன்றி அத்துச் சாரியையும் ஈற்று வல்லெ ழுத்தும் வந்து முடியினும் நீக்கும் நிலைமையின்று என்றவாறு. உதாரணம்: மகத்துக் கை செவி தலை புறம் என வரும். அவண் என்றதனால், மகப்பால்யாடு என வல்லெழுத்துப் பேறும், மகவின்கை என மேல் இன்சாரியை பெற்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்வும், விளவின்கோடு என உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்வுங் கொள்க. நிலை யென்றதனால், மகம்பால்யாடு என மெல்லெ ழுத்துப் பேறுங் கொள்க. (17) 220. பலவற் றிறுதி யுருபிய னிலையும். இஃது வல்லெழுத்தும் வற்றும் வகுத்தலின், எய்தியதன் மேற் சிறப்பு விதி கூறுகின்றது. இதன் பொருள்: பலவற்றிறுதி - பல்ல பல சில உள்ள இல்ல என்னும் பலவற்றை யுணர்த்தும் அகர ஈற்றுச் சொற்களின் இறுதி, உருபியல் நிலையும் - உருபியற்கண் வற்றுப் பெற்றுப் புணர்ந்தாற் போல உருபினது பொருட் புணர்ச்சிக்கண்ணும் வற்றுப் பெற்றுப் புணரும் என்றவாறு. ஈற்று வல்லெழுத்து அதிகாரத்தாற் கொள்க. உதாரணம்: பல்லவற்றுக்கோடு பலவற்றுக்கோடு சிலவற்றுக் கோடு உள்ளவற்றுக்கோடு இல்லவற்றுக்கோடு, செதிள் தோல் பூ என ஒட்டுக. உருபு விரிந்துழி நிற்குமாறு போலன்றி, அவ்வுருபு தொக்கு 12அதன் பொருள் நின்று புணருங்கால் வேறுபாடு உடைமையின், அவ்வேறு பாடுகள் ஈண்டு ஓதினார் இத்துணையுமென்று உணர்க. (18) 221. ஆகார விறுதி யகர வியற்றே. இஃது - ஆகார ஈற்றுப் பெயர் அல்வழிக்கண் முடியுமாறு கூறுகின்றது. இதன் பொருள்: ஆகார இறுதி அகர இயற்று - ஆகார ஈற்றுப் பெயர் அல் வழிக்கண் அகர ஈற்று அல்வழியது இயல்பிற்றாய் வல்லெழுத்து வந்துழித் தத்தம் ஒத்த ஒற்று இடைமிகும் என்றவாறு. உதாரணம்: மூங்காக்கடிது, தாராக்கடிது, சிறிது, தீது, பெரிது என ஒட்டுக. (19) 222. செய்யா வென்னும் வினையெஞ்சு கிளவியு மவ்விய றிரியா தென்மனார் புலவர். இஃது - ஆகார ஈற்று வினைச்சொன் முடிபு கூறுகின்றது. இதன் பொருள்: செய்யா என்னும் வினையெஞ்சு கிளவியும் - செய்யா வென்னும் வினையெச்சமாகிய சொல்லும் உம்மையாற் பெயரெச்ச மறையாகிய சொல்லும், அவ்வியல் திரியாது என்மனார் புலவர் - வல்லெழுத்து மிக்கு முடியும் அவ்வியல்பு திரியாதென்று சொல்லுவர் புலவர் என்றவாறு. உதாரணம்: உண்ணாக்கொண்டான் சென்றான் தந்தான் போயினான் எனவும், உண்ணாக்கொற்றன் சாத்தன் தேவன் பூதன் எனவும் வரும். (20) 223. உம்மை யெஞ்சிய விருபெயர்த் தொகைமொழி மெய்ம்மை யாக வகர மிகுமே. இஃது - ஆகார ஈற்று அல்வழிக்கண் உம்மைத்தொகை முடிபு கூறுகின்றது. இதன் பொருள்: உம்மை எஞ்சிய இருபெயர்த் தொகை மொழி - உம்மை தொக்கு நின்ற இருபெயராகிய தொகைச் சொற்கள்; மெய்ம்மையாக அகரம் மிகும் - மெய்யாக நிலைமொழி யீற்றகரம் மிக்கு முடியும் என்றவாறு. உதாரணம்: உவாஅப்பதினான்கு, இராஅப்பகல் என வரும். மெய்ம்மையாக என்பதனான், வல்லெழுத்துக் கொடுக்க. இஃது எழுவாயும் பயனிலையுமன்றி உம்மைத் தொகையாதலின் 13மாட்டேற்றான் வல்லெழுத்துப் பெறாதாயிற்று. உம்மை தொக்க என்னாது எஞ்சிய என்ற வாய்பாட்டு வேற்றுமை யான், அராஅப்பாம்பு எனப் பண்புத்தொகைக்கும், இராஅக்கொடிது என எழுவாய் முடிபிற்கும், இராஅக்காக்கை எனப் பெயரெச்ச மறைக்கும் அகரப்பேறு கொள்க. வருமொழி வரையாது கூறினமையின், இயல்புகணத்துக் கண்ணும் அகரப்பேறு கொள்க. இறாஅவழுதுணங்காய் எனவரும். இஃது உம்மைத் தொகை. அராஅக்குட்டி என்பது பண்புத் தொகையும் வேற்றுமைத் தொகையுமாம். உவாஅப் பட்டினி என்பது வேற்றுமைத் தொகை. (21) 224. ஆவு மாவும் விளிப்பெயர்க் கிளவியும் யாவென் வினாவும் பலவற் றிறுதியு மேவல் குறித்த வுரையசை மியாவுந் தன்றொழி லுரைக்கும் வினாவின் கிளவியோ டன்றி யனைத்து மியல்பென மொழிப. இஃது எய்தியது விலக்கலும் எய்தாத தெய்துவித்தலும் உணர்த்துகின்றது. இதன் பொருள்: ஆவும் - ஆவென்னும் பெயரும், மாவும் - மா வென்னும் பெயரும், விளிப்பெயர்க் கிளவியும் - விளித்தலை யுடைய பெயராகிய உயர்திணைச் சொல்லும், யாவென் வினாவும் - யாவென்னும் வினாப் பெயரும், பலவற்று இறுதியும் - பன்மைப் பொருளை உணர்த்தும் ஆகார ஈற்றுப் பெயரெச்ச மறையாகிய முற்றுவினைச்சொல்லும், 14ஏவல் குறித்த உரையசை மியாவும் - முன்னிலை யேவல் வினையைக் கருதிவரும் எதிர்முகமாக்குஞ் சொல்லினைச் சேர்ந்த மியாவென்னும் ஆகார ஈற்று இடைச் சொல்லும், தன் தொழில் உரைக்கும் வினாவின் கிளவியோடு - தனது தொழிலினைச் சொல்லும் ஆகார ஈற்றுத் தன்மையாகிய வினாச் சொல்லொடு கூட, அன்றியனைத்தும் - அவ்வெழுவகை யாகிய சொல்லும், இயல்பென மொழிப - இயல்பாய் முடியு மென்று சொல்லுவர் புலவர் என்றவாறு. உதாரணம்: ஆகுறிது மாகுறிது சிறிது தீது பெரிது; குறிய சிறிய தீய பெரிய என ஒட்டுக. இஃது ஆகார ஈற்றுப் பெயராகலின், மிக்கு முடிவன மிகா வென எய்தியது விலக்கிற்று. ஊராகேள் செல் தா போ என இஃது இயல்பா மென்ற உயர்திணைப் படர்க்கைப் பெயர் திரிந்து முன்னிலையாய் விளி யேற்றலின் எய்தாத தெய்துவித்தது. யா குறிய சிறிய தீய பெரிய என இதுவும் பெயராகலின், எய்திய இயைபு வல்லெழுத்து விலக்கியதாம். உண்ணா குதிரைகள் செந்நாய்கள் தகர்கள் பன்றிகள் என இஃது எய்தியது விலக்கிற்று; செய்யா வென்னுஞ் சூத்திரத்துப் பெற்ற வல்லெழுத்தினை விலக்கலின். கேண்மியா கொற்றா சாத்தா தேவா பூதா எனவும், உண்கா கொற்றா சாத்தா தேவா பூதா எனவும், இவ்விடைச் சொற்கள் முடியாமை யின் எய்தாத தெய்துவித்ததுமாம். உண்கா என்பது, யானுண்பேனோ என்னும் பொருட்டு. இயல்பு கணத்துக்கண்ணாயின் ஞ ந ம ய வ (எழுத். 144) என்பத னான் முடிபெய்தும். (22) 225. வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே. இஃது ஆகார ஈறு வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் முடியுமாறு கூறுகின்றது. இதன் பொருள்: வேற்றுமைக் கண்ணும் - ஆகார ஈற்றுப் பெயர் அல்வழிக்கண்ணேயன்றி வேற்றுமைப்பொருட் புணர்ச்சிக் கண்ணும், அதனோரற்று - அகர ஈற்று அல்வழியோடு ஒருதன்மைத்தாய் வல்லெழுத்து வந்துழி அவ்வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. உதாரணம்: தாரா மூங்கா வங்கா என நிறுத்திக், கால் செவி தலைபுறம் என வருவித்து வல்லெழுத்துக் கொடுத்து ஒட்டுக. (23) 226. குறியதன் முன்னரு மோரெழுத்து மொழிக்கு மறியத் தோன்று மகரக் கிளவி. இஃது அவ்வீற்றிற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது; அகரமும் வல்லெழுத்தொடு பெறுதலின். இதன் பொருள்: குறியதன் முன்னரும் - குற்றெழுத்தின் முன்னின்ற ஆகார ஈற்றிற்கும், ஓரெழுத்து மொழிக்கும் - ஓரெழுத் தொருமொழியாகிய ஆகார ஈற்றிற்கும், அகரக்கிளவி அறியத் தோன்றும் - நிலைமொழிக்கண் அகரமாகிய எழுத்து விளங்கத் தோன்றும் என்றவாறு. உதாரணம்: பலாஅக்கோடு செதிள் தோல் பூ எனவும் காஅக்குறை செய்கை தலை புறம் எனவும் வரும். ஓரெழுத்தொரு மொழி அகரம்பெறுதல் சிறுபான்மை யென்றற்கு அதனைப் பிற்கூறினார். இது நிலைமொழிச் செய்கை யாதலிற் பலாஅ விலை பலாஅநார் என இயல்புகணத்துங் கொள்க. அறிய என்றதனான் அவ்வகரம் ஈரிடத்தும் பொருந்தின வழிக் கொள்க. இன்னும் இதனானே, அண்ணாஅத்தேரி திட்டா அத்துக்குளம் என அத்துக் கொடுத்தும், உவாஅத்து ஞான்று கொண்டான் என அத்தும் ஞான்றுங் கொடுத்தும், உவாஅத்தாற் கொண்டான் என அத்தும் ஆனுங் கொடுத்தும், 15இடாவினுட் (இறைகூடை) கொண்டான் என இன்னும் ஏழுனு ருபுங் கொடுத்துஞ் செய்கை செய்து முடிக்க. இன்னும் இதனானே, மூங்காவின்கால் மூங்காவின்றலை என உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி இயைபுவல்லெழுத்துக் கேடுங் கொள்க. (24) 227. இராவென் கிளவிக் ககர மில்லை. இஃது ஆகார ஈற்றுப் பெயர்க்கு ஒருவழி எய்தியது விலக்குகின்றது. இதன் பொருள்: இராவென் கிளவிக்கு - இராவென்னும் ஆகார ஈற்றுச் சொல்லிற்கு, அகரம் இல்லை - முற்கூறிய அகரம் பெறுத லின்றி வல்லெழுத்துப் பெற்று முடியும் என்றவாறு. உதாரணம்: இராக்கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என வரும். 16இராஅக்காக்கை இராஅக்கூத்து எனப் பெயரெச்ச மறைப் பொருள் தாராது, இராவிடத்துக் காக்கை இராவிடத்துக் கூத்து என வேற்றுமை கருதியவழி, இராக்காக்கை இராக்கூத்து என அகரம் பெறாதென்று உணர்க. (25) 228. நிலாவென் கிளவி யத்தொடு சிவணும். இஃது - அகரம் விலக்கி அதிகார வல்லெழுத்தினோடு அத்து வகுத்தலின் எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. இதன் பொருள்: நிலாவென் கிளவி அத்தொடு சிவணும் - நிலா வென்னுஞ்சொல் அத்துச்சாரியையோடு பொருந்தி முடியும் என்றவாறு. உதாரணம்: நிலாஅத்துக்கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என வரும். நிலைமொழித்தொழிலை விலக்கு மாதலின், அத்து வகுப்ப அகரம் வீழ்ந்தது. இதற்கு ஏழனுருபு விரிக்க. நிலாஅக்கதிர் என்பது வேற்றுமைக் கண்ணும் (எழு. 225) என்பத னான் ஈற்று வல்லெழுத்துப் பெற்றது. நிலாஅ முற்றம் என்பது ஒட்டுதற் கொழுகிய வழக்கு அன்மையின் அத்துப் பெறாதாயிற்று. ஈண்டு வருமொழி வரையாது கூறினமையின், நிலாஅத்து ஞான் றான் என இயல்பு கணத்துக் கண்ணும் ஏற்பன கொள்க. (26) 229. யாமரக் கிளவியும் பிடாவுந் தளாவு மாமுப் பெயரு மெல்லெழுத்து மிகுமே. இது வருமொழி வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து வகுத்தலின், எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது. இதன் பொருள்: யாமரக் கிளவியும் - யாவென்னும் மரத்தை உணர நின்ற சொல்லும், பிடாவும்- பிடாவென்னுஞ் சொல்லும், தளாவும் - தளாவென்னுஞ் சொல்லும், ஆம் முப்பெயரும் மெல்லெழுத்து மிகும் - ஆகிய மூன்று பெயரும் வல்லெழுத்து மிகாது மெல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. உதாரணம்: யாஅங்கோடு, பிடாஅங்கோடு, தளாஅங் கோடு, செதிள் தோல் பூ என வரும். வருமொழித் தொழிலாகிய மெல்லெழுத்து வகுப்பவே, வல்லெழுத்து விலக்கிற்றாம். இதற்கு விலக்காமையின் அகரம் பெற்றது. (27) 230. வல்லெழுத்து மிகினு மான மில்லை. இஃது - எய்தியது இகந்துபடாமற் காத்தது, அகரத்தோடு மெல்லெழுத்தேயன்றி வல்லெழுத்தும் பெறுமென்றலின். இதன் பொருள்: வல்லெழுத்து மிகினும் மானம் இல்லை - முற்கூறிய மூன்று பெயர்க்கும் மெல்லெழுத்தேயன்றி வல்லெழுத்து மிக்கு முடியினுங் குற்றமில்லை என்றவாறு. உதாரணம்: யாஅக்கோடு, பிடாஅக்கோடு, தளா அக்கோடு, செதிள் தோல் பூ என வரும். மானமில்லை என்றதனால், இம்மூன்றற்கும் உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி, இயைபு வல்லெழுத்து வீழ்க்க. யாவின் கோடு, பிடாவின்கோடு, தளாவின்கோடு என வரும். சாரியை பெறவே அகரம் வீழ்ந்தது. இன்னும் இதனானே, யா அத்துக்கோடு, பிடாஅத்துக் கோடு, தளாஅத்துக்கோடு என அத்துப் பெறுதலுங் கொள்க. 18அகரமும் வல்லெழுத்தும் பெறுதலின், யாமரக் கிளவி (எழு. 229) என்பதனைக் குறியதன் முன்னரும் (எழு. 226) என்பதன்பின் வையாதவதனான், இராவிற் கொண்டான் நிலாவிற் கொண்டான் என உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. (28) 231. மாமரக் கிளவியு மாவு மாவு மாமுப் பெயரு மவற்றோ ரன்ன வகரம் வல்லெழுத் தவையவ ணிலையா னகர மொற்று மாவு மாவும். இஃது - எய்தியது விலக்கி எய்தாதது எய்துவித்தது. இம் மூன்றும் வல்லெழுத்துப் பெறா என்றலின் எய்தியது விலக்கிற்று. மாமரத்துக்கு அகரமும் ஙஞநம ஒற்றும், ஏனையவற்றிற்கு னகர ஒற்றும் எய்தாத தெய்துவித்தது. இதன் பொருள்:மாமரக் கிளவியும் ஆவும்மாவும் ஆம் முப்பெயரும் அவற்றோரன்ன - மாமரமாகிய சொல்லும் ஆவென்னுஞ் சொல்லும் மாவென்னுஞ் சொல்லுமாகிய மூன்று பெயரும் யாமரம் முதலிய மூன்றோடும் ஒரு தன்மையவாய் மெல்லெழுத்துப் பெற்று முடியும், ஆவும் மாவும் அகரம் அவண் நிலையா னகரம் ஒற்றும் - அவற்றுள் ஆவும் மாவும் புணர்ச்சியிடத்து அகரம் நிலை பெறாவாய் னகர ஒற்றுப் பெற்று முடியும், எனவே அருத்தாபத்தி யான் மாமரத்திற்கு அகரம் நிலைபெற்று ஙஞநம ஒற்றும் பெறுமாயிற்று, அவை வல்லெழுத்து அவண் நிலையா - அம்மூன்று பெயரும் முற்கூறிய வல்லெழுத்துப் புணர்ச்சியிடத்து நிலைபெறாவாய் வரும் என்றவாறு.. அவ ணிலையா என்றதனை இரண்டிடத்துங் கூட்டுக. உதாரணம்: மாஅங்கோடு செதிள் தோல் பூ, ஆன்கோடு மான் கோடு செவி தலை புறம் என வரும். ஆவும் மாவும் அவற்றோரன்ன என்று 19ஞாபகமாகக் கூறியவதனால், மாங்கோடென அகரமின்றியும் வரும். இனி, அவண் என்றதனாற் காயாங்கோடு நுணாங்கோடு ஆணங் கோடு என்றாற் போலப் பிறவும் மெல்லெழுத்துப் பெறு தலும், அங்காக் கொண்டான் இங்காக்கொண்டான் உங்காக் கொண்டான் எங்காக் கொண்டான் என இவற்றுள் ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணர நின்று இடைச்சொற்கள் வல்லெழுத்துப் பெறுதலும், ஆவின்கோடு மாவின்கோடு எனச் சிறுபான்மை இன் பெறுதலும், பெற்றுழி வல்லெழுத்து வீழ்வுங் கொள்க. மாட்டேற்றான் மூன்று பெயரும் வல்லெழுத்துப் பெறாது மெல்லெழுத்துப் பெற்றவாறும், மாமரம் அகரம் பெற்றவாறும் இச் சூத்திரத்தின் 20கண்ணழிவான் உணர்க. (29) 232. ஆனொற் றகரமொடு நிலையிட னுடைத்தே. இஃது - அவற்றுள் ஆன் என்றதற்கு எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது. இதன் பொருள்: ஆனொற்று - ஆவென்னுஞ் சொன் முன்னர்ப் பெற்று னகரவொற்று, அகரமொடும் நிலையிடன் உடைத்து - அகரத்தோடு கூடி நிற்கும் இடனும் உடைத்து என்றவாறு. இடனுடைத்து என்றவதனான், வன்கண மொழிந்த கணத்தது இம்முடிபெனக் கொள்க. உதாரணம்: ஆனநெய் தெளித்து நான நீவி, ஆனமணி கறங்கும் கானத் தாங்கண் என வரும். அகரமொடும் என்ற உம்மையால், அகரமின்றி வருதலே பெரும்பான்மை. ஆனெய் தெளித்து, ஆன்மணி, ஆன்வால் என வரும். (30) 233. ஆன்முன் வரூஉ மீகார பகரந் தான்மிகத் தோன்றிக் குறுகலு முரித்தே. இஃது - ஆன் என்பதற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுகின்றது. இதன் பொருள்: ஆன்முன் வரூஉம் ஈகார பகரம் - ஆனென்னுஞ் சொன் முன்னர் வருமொழியாய் வருகின்ற ஈகாரத்தோடு கூடிய பகரமாகிய மொழி, தான் மிகத் 21தோன்றி - அப் பகரமாகிய தான் மிக்கு நிற்ப நிலைமொழி னகரத்திற்குக் கேடு தோன்றி, குறுகலும் உரித்து - ஈகாரம் இகரமாகக் குறுகி நிற்றலும் உரித்து என்றவாறு. உதாரணம்: ஆப்பி என வரும். உம்மை எதிர்மறை யாகலான், ஆன்பீ என்றுமாம். (31) 234. குறியத னிறுதிச் சினைகெட வுகர மறிய வருதல் செய்யுளு ளுரித்தே. இஃது - ஆகார ஈற்றுட் சிலவற்றிற்குச் செய்யுண் முடிபு கூறு கின்றது. இதன் பொருள்: குறியதன் இறுதிச் சினைகெட - குற்றெழுத்தின் இறுதிக்கண் நின்ற ஆகாரத்தினது இரண்டு மாத்திரையின் ஒரு மாத்திரை கெட்டு அஃது அகரமாய் நிற்ப, உகரம் அறிய வருதல் செய்யுளுள் உரித்து - ஆண்டு உகரம் புலப்பட வருதல் செய்யுளிடத்து உரித்து என்றவாறு. எ-டு: இறவுப்புறத் தன்ன பிணர்ப்படு தடவுமுதற் சுறவுக்கோட் டன்ன முள்ளிலைத் தாழை (நற் -19) புறவுப்புறத் தன்ன புன்காயுகாய் (குறுந் - 274) என வரும். உகரம் வகுப்பவே நிலைமொழி அகரங் கெட்டது. அதிகார வல்லெழுத்து விலக்காமையின் நின்று முடிந்தது. இனி, நிலைமொழித்தொழில் வரையாது கூறினமையின், இயல்பு கணத்திற்கும் இவ்விதி எய்திற்றாகலின், ஆண்டுவரும் உகரம் புலப்பட வாராமையும் உணர்க. சுறவுயர்கொடி, அரவுயர் கொடி, முழவுறழ்தோள் என இவை குறியதனிறுதிச் சினை கெட்டு, வருமொழி உயிர் முதன் மொழியாய் வருதலின் வகர உடம்படு மெய் பெற்று, உகரம் பெறாது முடிந்தன. 22இவற்றிற்கு இரண்டா முருபு விரிக்க; மூன்றாவதுமாம். (32) 235. இகர விறுதிப் பெயர்நிலை முன்னர் வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகுமே. இஃது இகர ஈற்றுப் பெயர்க்கு அல்வழி முடிபு தொகைமரபிற் கூறி ஈண்டு வேற்றுமை முடிபு கூறுகின்றது. இதன் பொருள்: இகர இறுதிப் பெயர்நிலை முன்னர் - இகர ஈற்றுப் பெயர்ச்சொன் முன்னர் அதிகாரத்தாற் கசதப முதன் மொழி வந்துழி, வேற்றுமையாயின் வல்லெழுத்து மிகும் - வேற்றுமைப் பொருட்புணர்ச்சி யாயின் தமக்குப் பொருந்தின வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. உதாரணம்: கிளிக்கால் சிறகு தலை புறம் என வரும். புலி நரி என்றார் போல்வனவும் அவை. இனி, கிளிகுறுமை கிளிக்குறுமை எனக் குணம்பற்றி வந்த உறழ்ச்சி முடிபு மேல் வல்லெழுத்து மிகினும் (எழுத். 246) என்னும் சூத்திரத்து ஒல்வழி யறிதல் என்பதனாற் கொள்க. (33) 236. இனியணி யென்னுங் காலையு மிடனும் வினையெஞ்சு கிளவியுஞ் சுட்டு மன்ன. இஃது எய்தாத தெய்துவித்தது, இவ்வீற்று இடைச் சொற்கும் வினைச்சொற்கும் முடிபு கூறுதலின். இதன் பொருள்: இனிஅணி என்னுங் காலையும் இடனும் - இனி யென்றும் அணியென்றுஞ் சொல்லப்படுகின்ற காலத்தையும் இடத்தையும் உணரநின்ற இடைச்சொல்லும், வினையெஞ்சு கிளவியும் - இவ்வீற்று வினையெச்சமாகிய சொல்லும், சுட்டும் - இவ்வீற்றுச் சுட்டாகிய இடைச் சொல்லும், அன்ன - முற்கூறியவாறே வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. உதாரணம்: இனிக்கொண்டான் அணிக்கொண்டான் தேடிக் கொண்டான் சென்றான் தந்தான் போயினான் எனவும், இக் கொற்றன் சாத்தன் தேவன் பூதன் எனவும் வரும். இவ்விடைச் சொல் மூன்றும் இப்பொழுது கொண்டான், அணிய இடத்தே கொண்டான், இவ்விடத்துக் கொற்றன் என உருபின் பொருள்பட வந்த வேற்றுமையாதலின் வேறோதி முடித்தார். (34) 237. இன்றி யென்னும் வினையெஞ் சிறுதி நின்ற விகர முகர மாத றொன்றியன் மருங்கிற் செய்யுளு ளுரித்தே. இஃது - இவ்வீற்று வினையெச்சத்துள் ஒன்றற்குச் செய்யுண் முடிபு கூறுகின்றது. இதன் பொருள்: இன்றி என்னும் வினையெஞ்சு இறுதி நின்ற இகரம் உகரம் ஆதல் - இன்றியென்று சொல்லப்படும் வினையெச்சக் குறிப்பின் இறுதிக்கண் நின்ற இகரம் உகரமாகத் திரிந்து முடிதல், தொன்றியல் மருங்கின் செய்யுளுள் உரித்து - பழக நடந்த கூற்றை யுடைய செய்யுளுள் உரித்து என்றவாறு. உதாரணம்: உப்பின்று புற்கை யுண்கமா கொற்கையோனே நின்ற என்றதனால், வினையெச்சத்திற்கு முன் எய்திய வல்லெழுத்து வீழ்க்க. தொன்றியன் மருங்கின் என்றதனான், அன்றி என்பதூஉஞ் செய்யுளில் இம்முடிபு எய்துதல் கொள்க. இடனன்று துறத்தல் வல்லி யோரே, வாளன்று பிடியா வன்கணாடவர், நாளன்றுபோகி (புறம். 124) என வரும். முற்றியலிகரந் திரிந்து குற்றியலுகரமாய் நின்றது. (35) 238. சுட்டி னியற்கை முற்கிளந் தற்றே. இஃது இகர ஈற்றுச் சுட்டுப் பெயர் இயல்பு கணத்தொடு முடியுமாறு கூறுதலின் எய்தாதது எய்துவித்தது. இதன் பொருள்: சுட்டின் இயற்கை - இகர ஈற்றுச் சுட்டின் இயல்பு, முன் கிளந்தற்று - முன் அகர ஈற்றுச் சுட்டிற்குக் கூறிய தன்மைத்தாம் என்றவாறு. என்றது, சுட்டின் முன்னர் ஞநமத் தோன்றின் (எழு. 205) என்பது முதலிய நான்கு சூத்திரத்தானுங் கூறிய இலக்கணங் களை; அவை மென்கணத்து மெல்லெழுத்து மிகுதலும், இடைக் கணத்தும் உயிர்க்கணத்தும் வகரம் பெறுதலுஞ், செய்யுட் கண் வகரங் கெட்டுச் சுட்டு நீடலுமாம். இஞ்ஞாண் நூல் மணி எனவும், இவ்யாழ் இவ்வட்டு எனவும், இவ்வடை இவ்வாடை இவ்விலை இவ்வீயம் இவ்வுரல் இவ்வூர்தி இவ்வெழு இவ்வேணி இவ்வையம் இவ்வொடு இவ்வோக்கம் இவ்வௌவியம் எனவும், ஈவயினான எனவும் வரும். 23ஈகாண் டோன்றுமெஞ் சிறுநல் லூரே என்றதும் கள்வனோ வல்லன் கணவனென் காற்சிலம்பு, கொள்ளும்விலைப் பொருட்டாற் கொன்றாரே யீதொன்று (சிலப். ஊர்சூழ்வரி -7) என்றதும் இதுவென்னுஞ் சுட்டுமுதல் உகர ஈறாதலின், அது செய்யுளகத்தது; புறனடையான் முடியுமென உணர்க. (36) 239. பதக்குமுன் வரினே தூணிக் கிளவி முதற்கிளந் தெடுத்த வேற்றுமை யியற்றே. இஃது இவ்வீற்று அல்வழிகளுள் அளவுப் பெயருள் ஒன்றற்குத் தொகைமரபினுள் எய்திய ஏயென் சாரியை விலக்கி வேறு முடிபு கூறுகின்றது. இதன் பொருள்: தூணிக் கிளவி முன் பதக்கு வரின் - தூணியாகிய அளவுப் பெயரின் முன்னர்ப் பதக்கு என்னும் அளவுப்பெயர் வருமாயின், முதற் கிளந்து எடுத்த வேற்றுமை இயற்று - முன்பு விதந்தெடுத்த வேற்றுமை முடிபின் இயல் பிற்றாய் வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. உதாரணம்: தூணிப்பதக்கு என வரும். இஃது உம்மைத் தொகை. வருமொழி முற்கூறியவதனான் அடையொடு வந்துழியும் இவ்விதி கொள்க. இருதூணிப் பதக்கு முத்தூணிப் பதக்கு என ஒட்டுக. கிளந்தெடுத்த வென்றதனால் 24தூணிக்கொள் சாமை தோரை பாளிதம் எனப் பொருட்பெயர் முன் வந்துழியும், இரு தூணிக் கொள் என அதுதான் அடையடுத்துழியுந், தூணித்தூணி தொடித் தொடி காணிக்காணி பூணிப் பூணி எனத் தன் முன்னர்த் தான் வந்துழியும் இவ்விதி கொள்க. இன்னும் இதனானே தன் முன்னர்த் தான் வந்துழியும் அதுதான் அடை யடுத்து வந்துழியும் இக்குச் சாரியை பெறுதலுங்கொள்க. தூணிக்குத் தூணி இருதூணிக்குத் தூணி எனவரும். இவற்றுட் பண்புத் தொகையும் உள. (37) 240. உரிவரு காலை நாழிக் கிளவி இறுதி இகர மெய்யொடுங் கெடுமே டகர மொற்று மாவயி னான. இதுவும் அது. இதன் பொருள்: உரிவருகாலை - நாழி முன்னர் உரி வருமொழியாய் வருங்காலத்து, நாழிக் கிளவி - அந்நாழி யென்னுஞ் சொல், இறுதி இகரம் மெய் யொடுங் கெடும் - தன் இறுதியினின்ற இகரந் தானேறிய மெய்யொடுங் கெடும், ஆவயினான் டகரம் ஒற்றும் - அவ்விடத்து டகரம் ஒற்றாய் வரும் என்றவாறு. உதாரணம்: நாடுரி என வரும். இதனான் யகாரமும் விலக்குண்டது. வருமொழி முற்கூறிய வதனான், இருநாடுரி முந்நாடுரி எனவும் ஒட்டுக. இறுதி யிகர மென 25முன்னும் ஓர் இகரம் உள்ளது போலக் கூறியவதனான், ஈண்டை நிலைமொழியும் வருமொழியும் நிலை மொழிகளாய் நின்று பிறபொருட்பெயரொடு வல்லெழுத்து மிக்கு முடிதலுங் கொள்க. நாழிக்காயம் உரிக்காயம், சுக்கு தோரை பாளிதம் எனவரும். (38) 241. பனியென வரூஉங் கால வேற்றுமைக் கத்து மின்னுஞ் சாரியை யாகும். இஃது - இகர ஈற்று வேற்றுமையுள் ஒன்றற்கு வல்லெழுத்தி னோடு சாரியை பெறுமென எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறு கின்றது. இதன் பொருள்: பனியென வரூஉங் கால வேற்றுமைக்கு - பனியென்று சொல்ல வருகின்ற நோயன்றிக் காலத்தை உணர நின்ற வேற்றுமை முடிபுடைய பெயர்க்கு, அத்தும் இன்னும் சாரியை ஆகும் - அத்தும் இன்னுஞ் சாரியையாக வரும் என்றவாறு. உதாரணம்: பனியத்துக் கொண்டான், பனியிற் கொண்டான், சென் றான் தந்தான் போயினான் என வரும். வேற்றுமை யென்றதனான், இன்பெற்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. (39) 242. வளியென வரூஉம் பூதக் கிளவியு மவ்விய னிலையல் செவ்வி தென்ப. இதுவும் அது. இதன் பொருள்: வளியென வரூஉம் பூதக் கிளவியும் - வளியென்று சொல்ல வருகின்ற 26இடக்கரல்லாத ஐம்பெரும் பூதங்களில் ஒன்றை உணர நின்ற சொல்லும், அவ்வியல் நிலையல் செவ்வி தென்ப - முன்னர்க் கூறிய அத்தும் இன்னும் பெறும் அவ்வியல்பின்கண் நிற்றல் செவ்விதென்று கூறுவர் புலவர் என்றவாறு. உதாரணம்: வளியத்துக்கொண்டான், வளியிற் கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என வரும். செவ்வி தென்றதனான், இன் பெற்றுழி இயைபு வல்லெ ழுத்து வீழ்க்க. (40) 243. உதிமரக் கிளவி மெல்லெழுத்து மிகுமே. இது, மரப்பெயரில் ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதிக்கின்றது. இதன் பொருள்:உதிமரக் கிளவி - உதித்த லென்னுந் தொழிலன்றி உதி என்னும் மரத்தினை உணர நின்ற சொல், மெல்லெழுத்து மிகும் - வல்லெழுத்து மிகாது மெல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. உதாரணம்: உதிங்கோடு செதிள் தோல் பூ என வரும். அம்முச்சாரியை விதிக்கின்ற புளிமரத்தினை 27இதன்பின் வைத்தமையான், உதியங்கோடு என இதற்கும் அம்முப்பெறுதல் கொள்க. இஃது இக்காலத்து ஒதியென மருவிற்று. (41) 244. புளிமரக் கிளவிக் கம்மே சாரியை. இது, வல்லெழுத்து விலக்கி அம்மு வகுத்தலின், எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. இதன் பொருள்: புளிமரக் கிளவிக்கு அம்மே சாரியை - சுவையன்றிப் புளியென்னும் மரத்தினை உணர நின்ற சொல்லிற்கு அம்மென் னுஞ் சாரியை வரும் என்றவாறு. உதாரணம்: புளியங்கோடு செதிள் தோல் பூ என வரும். சாரியைப் பேற்றிடை முன்னர்ச் சூத்திரத்து 28எழுத்துப் பேறு கூறியவதனால், அம்முப்பெற்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. (42) 245. ஏனைப் புளிப்பெயர் மெல்லெழுத்து மிகுமே. இது, வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதித்தலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. இதன் பொருள்: ஏனைப் புளிப்பெயர் மெல்லெழுத்து மிகும் - அம் மரப் பெயரன்றிச் சுவைப்புளி உணர நின்ற பெயர் வல்லெழுத்து மிகாது மெல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. உதாரணம்:புளிங்கூழ் சாறு தயிர் பாளிதம் என வரும். பாளிதம் - பாற்சோறு. இவற்றிற்கு இரண்டாமுருபு விரிக்க. (43) 246. வல்லெழுத்து மிகினு மான மில்லை யொல்வழி யறிதல் வழக்கத் தான. இஃது - எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. இதன் பொருள்: வல்லெழுத்து மிகினும் மானமில்லை - சுவைப்புளி மெல்லெழுத்தே யன்றி வல்லெழுத்து மிக்கு முடியினும் குற்ற மில்லை, ஒல்வழி அறிதல் வழக்கத்து ஆன - பொருந்தும் இடம் அறிக வழக்கிடத்து என்றவாறு. உதாரணம்: புளிக்கூழ் சாறு தயிர் பாளிதம் என வரும். ஒல்வழி என்றதனாற், புளிச்சாறு போல ஏனைய வழக்குப் பயிற்சி இலவென்று கொள்க. வழக்கத்தான என்றதனான், இவ்வீற்றுக்கண் எடுத் தோத்தும் இலேசுமின்றி வருவன எல்லாவற்றிற்கும் ஏற்குமாறு செய்கையறிந்து முடித்துக்கொள்க. அவை, இன்னினிக் கொண் டான் அண்ணணிக் கொண்டான் என்பன அடையடுத்தலின் இனியணி (எழு. 236) என்றவழி முடியாவாய் வல்லெழுத்துப் பெற்றன. கப்பிதந்தை சென்னிதந்தை என்பன, அஃறிணை விரவுப் பெயர் (எழு. 155) என்பதனுள் இயல்பெய்தாது, ஈண்டு வரு மொழித் தகர அகரங் கெட்டுக் கப்பிந்தை சென்னிந்தை என முடிந்தது. கூதாளி கணவிரி என்பனவற்றிற்கு அம்முக் கொடுத்து இகரங் கெடுத்துக் கூதாளங்கோடு கணவிரங்கோடு செதிள் தோல் பூ என முடிக்க. கூதள நறும்பூ எனக் குறைந்தும் வரும். இனி, இவை மகர ஈறாயும் வழங்கும். அது வெண்கூ தாளத்துத் தண்பூங் கோதையர் என அத்துப் பெற்று மகரங் கெட்டும், கணவிர மாலை யிடூஉக் கழிந்தன்ன (அகம். 31) என மகரங் கெட்டும், கணவிரங்கோடு என மெல்லெழுத்துப் பெற்றும் நிற்கும். கட்டி என நிறுத்தி, இடி அகல் எனத் தந்து டகரத்தில் இகரங் கெடுத்துக் கட்டிடி கட்டகல் என முடிக்க. பருத்திக்குச் சென்றா னென ஈற்று வல்லெழுத்தும் இக்குங் கொடுத்து முடிக்க. துளி யத்துக் கொண்டான் துளியிற் கொண்டான் என அத்தும் இன்னும் கொடுத்து முடிக்க. புளிங்காய் வேட்கைத் தன்று (ஐங்குறு. 51) எனவும், புளிம்பழம் எனவும் அம்முப்பெறாது மெல்லெழுத்துப் பெற்று முடிதலுங் கொள்க. இன்னும் இதனானே, உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி இயைபு வல்லெழுத்துக் கெடுத்துக் கிளியின் கால், புளியின் கோடு, உதியின் கோடு என முடிக்க. (44) 247. நாண்முற் றோன்றுந் தொழினிலைக் கிளவிக் கானிடை வருத லைய மின்றே. இஃது ஈற்று வல்லெழுத்து விலக்கி, ஆன் சாரியை விதிக் கின்றது. இதன் பொருள்: நாண் முன் தோன்றுந் தொழினிலைக் கிளவிக்கு - இகர ஈற்று நாட்பெயர்களின் முன்னர்த் தோன்றுந் தொழிற் சொற்கு, ஆன் இடை வருதல் ஐயமின்று - ஆன் சாரியை இடை வந்து முடிதல் ஐயமின்று என்றவாறு. உதாரணம்: பரணியாற் கொண்டான், சோதியாற் கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என வரும். ஐயமின் றென்றதனால் இயைபு வல்லெழுத்து வீழ்க்க. இதற்குக் கண்ணென் உருபு விரிக்க. (45) 248. திங்கண் முன்வரி னிக்கே சாரியை. இஃது இயைபு வல்லெழுத்தினோடு இக்கு வகுத்தலின், எய்தியதன் மேற் சிறப்பு விதி வகுத்தது. இதன் பொருள்: 29 திங்கள் முன்வரின் இக்கே சாரியை - திங்களை உணர நின்ற இகர ஈற்றுப் பெயர்களின் முன்னர்த் தொழினிலைக் கிளவி வரின் வருஞ் சாரியை இக்குச் சாரியையாம் என்றவாறு. உதாரணம்: ஆடிக்குக்கொண்டான், சென்றான் தந்தான் போயினான் என இயைபு வல்லெழுத்துக் கொடுத்து முடிக்க. இதற்கும் கண்ணென் உருபு விரிக்க. (46) 249. ஈகார விறுதி யாகார வியற்றே. இஃது - ஈகார ஈற்றுப் பெயர் அல்வழிக்கண் முடியுமாறு கூறு கின்றது. இதன் பொருள்: ஈகார இறுதி ஆகார இயற்று - ஈகார ஈற்றுப் பெயர் அல் வழிக்கண் ஆகார ஈற்று அல்வழியின் இயல்பிற்றாய் வல்லெழுத்து வந்துழி அவ்வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. உதாரணம்: ஈக்கடிது, தீக்கடிது, சிறிது, தீது, பெரிது என வரும். (47) 250. நீயென் பெயரு மிடக்கர்ப் பெயரு மீயென மரீஇய விடம்வரை கிளவியு மாவயின் வல்லெழுத் தியற்கை யாகும். இஃது எய்தியது விலக்கலும், எய்தாதது எய்துவித்தலுங் கூறுகின்றது. இதன் பொருள்: நீ என் பெயரும் இடக்கர்ப்பெயரும் - நீ யென்னும் பெயரும் இடக்கர்ப் பெயராகிய ஈகார ஈற்றுப் பெயரும், மீ என மரீ இய இடம்வரை கிளவியும் - மீ என்று சொல்ல மருவாய் வழங்கின ஓரிடத்தை வரைந்து உணர்த்துஞ் சொல்லும், ஆவயின் வல்லெழுத்து இயற்கையாகும் - புணரு மிடத்து முற்கூறிய வல்லெழுத்துப் பெறாது இயல்பாய் முடியும் என்றவாறு. உதாரணம்: நீ குறியை சிறியை தீயை பெரியை எனவும், பீகுறிது சிறிது தீது பெரிது எனவும் இவையிற்றுக்குப் பொது வான் எய்திய வல்லெழுத்து விலக்குண்டன. மீகண் செவி தலை புறம்; இஃது இலக்கணத்தொடு பொருந்திய மருவாதலின் எய்தாத தெய்துவித்தது. நீ யென்பது அஃறிணை விரவுப்பெயருள் அடங் காதோ வெனின், மேல் நின்கை யெனத் திரிந்து முடிதலின் அடங்காதாயிற்று. 30மீகண் என்பது மேலிடத்துக் கண்ணென வேற்றுமை எனினும், இயல்பு பற்றி உடன் கூறினார். (48) 251. இடம்வரை கிளவிமுன் வல்லெழுத்து மிகூஉ முடனிலை மொழியு முளவென மொழிப. இது, வல்லெழுத்து மிகுக என்றலின் எய்தியது இகந்து படாமற் காத்தது. இதன் பொருள்: இடம் வரை கிளவிமுன் வல்லெழுத்து மிகூஉம் - இடத்தை வரைந்து உணர்த்தும் மீயென்னுஞ் சொல்லின் முன்னர் இயல்பாய் முடிதலே யன்றி வல்லெழுத்து மிக்கும் முடியும், உடனிலை மொழியும் உள என மொழிப - தம்மில் ஓசையியைந்து நிற்றலையுடைய மொழிகளும் உளவென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. உதாரணம்: மீக்கோள், மீப்பல் என வரும். உடனிலையென்றதனான் மீங்குழி மீந்தோல் என மெல்லெ ழுத்துப் பெற்று முடிவனவுங் கொள்க. (49) 252. வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே. இஃது ஈகார ஈற்றுப்பெயர் வேற்றுமைக்கண் முடியுமாறு கூறுகின்றது. இதன் பொருள்: வேற்றுமைக்கண்ணும் அதனோரற்று - ஈகார ஈற்றுப் பெயர் வேற்றுமைப்பொருட் புணர்ச்சிக்கண்ணும் ஆகார ஈற்று அல்வழிபோல வல்லெழுத்து வந்துழி அவ்வல் லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. உதாரணம்: ஈக்கால் சிறகு தலை புறம், தீக்கடுமை சிறுமை தீமை பெருமை என வரும். (50) 253. நீயெ னொருபெய ருருபிய னிலையு மாவயின் வல்லெழுத் தியற்கை யாகும். இஃது எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது; வல்லெ ழுத்து விலக்கி னகரவொற்றே பெறுக என்றலின். இதன் பொருள்: நீ யென் ஒரு பெயர் உருபியல் நிலையும் - நீயென்னும் ஓரெழுத்தொருமொழி உருபு புணர்ச்சிக்கண் நெடுமுதல் குறுகி னகரம் ஒற்றி நின்றாற்போல ஈண்டுப் பொருட்புணர்ச்சிக் கண்ணும் முடியும், ஆவயின் வல்லெழுத்து இயற்கையாகும் - அவ்வாறு முடிபுழி இயைபு வல்லெழுத்து மிகாது என்றவாறு. உதாரணம்: நின்கை செவி தலை புறம் என வரும். இஃது ஈகார ஈறு இகர ஈறாய், இகர ஈறு னகர ஈறாய் நின்று ழியும் நீயெனொருபெயர் என்றலிறி 31றிரிந்ததன் றிரிபதுவேயாயிற்று. இயற்கையாகு மெனவே நிலைமொழித் தொழில் அதிகார வல்லெழுத்தை விலக்காதாயிற்று. (51) 254. உகர விறுதி யகர வியற்றே. இஃது உகர ஈற்றுப்பெயர் அல்வழிக்கண் முடியுமாறு கூறு கின்றது. இதன் பொருள்:உகர இறுதி அகர இயற்று - உகர ஈற்றுப் பெயர் அல் வழிக்கண் அகர ஈற்று இயல்பிற்றாய் வல்லெழுத்து வந்துழி அவ்வல் லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. உதாரணம்: கடுக்குறிது சிறிது தீது பெரிது என வரும். (52) 255. சுட்டின் முன்னரு மத்தொழிற் றாகும். இஃது உகர ஈற்றுச் சுட்டு வன்கணத்தொடு முடியுமாறு கூறுகின்றது. இதன் பொருள்: சுட்டின் முன்னரும் அத்தொழிற்று ஆகும் - உகர ஈற்றுச் சுட்டின் முன்னும் வல்லெழுத்து வந்துழி அவ்வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. உதாரணம்: உக்கொற்றன் சாத்தன் தேவன் பூதன் என வரும். (53) 256. ஏனவை வரினே மேனிலை யியல. இஃது உகர ஈற்றுச் சுட்டு ஒழிந்த கணங்களொடு முடியுமாறு கூறுகின்றது. இதன் பொருள்: ஏனவை வரின் - உகர ஈற்றுச் சுட்டின்முன் வல்லெழுத்தல்லாத மென்கணம் முதலிய மூன்றும் வரின், மேல்நிலை இயல - அகர ஈற்றுச் சுட்டு முடிந்தாற்போல ஞநமத் தோன்றின் ஒற்றுமிக்கும் யவ்வரினும் உயிர்வரினும் வகரம் ஒற்றியுஞ் செய்யுளில் நீண்டும் முடியும் என்றவாறு. உதாரணம்: உஞ்ஞாண் நூல் மணி எனவும், உவ்யாழ் உவ்வட்டு எனவும், உவ்வடை உவ்வாடை எனவும், ஊவயினான எனவும் வரும். (54) 257. சுட்டுமுத லிறுதி யியல்பா கும்மே. இஃது இவ்வீற்றுட் சிலவற்றிற்கு வல்லெழுத்து விலக்கி இயல்பு கூறுகின்றது. இதன் பொருள்: சுட்டு முதல் இறுதி - சுட்டெழுத்தினை முதலாக வுடைய உகர ஈற்றுப் பெயர், இயல்பாகும் - முற்கூறிய வல்லெழுத்து மிகாது இயல்பாய் முடியும் என்றவாறு. உதாரணம்: அது குறிது, இது குறிது, உது குறிது, சிறிது தீது பெரிது எனவரும். முற்கூறியவை சுட்டுமாத்திரை, இவை சுட்டுப்பெயராக உணர்க. (55) 258. அன்றுவரு காலை யாவா குதலு மைவரு காலை மெய்வரைந்து கெடுதலுஞ் செய்யுண் மருங்கி னுரித்தெனமொழிப. இஃது இவ்வீற்றுச் சுட்டுமுதற்பெயர்க்கு ஒரு செய்யுண் முடிபு கூறுகின்றது. இதன் பொருள்: அன்று வருகாலை ஆ வாகுதலும் - அதிகாரத்தால் நின்ற சுட்டுமுதல் உகர ஈற்றின் முன்னர் அன்றென்னும் வினைக் குறிப்புச் சொல் வருங்காலத்து அத்தகர வொற்றின்மேல் ஏறி நின்ற உகரம் ஆகாரமாய்த் திரிந்து முடிதலும், ஐவருகாலை மெய்வரைந்து கெடுதலும் - அதன் முன்னர் ஐயென்னுஞ் சாரியை வருங்காலத்து அத்தகரவொற்று நிற்க அதன் மேல் ஏறிய உகரங் கெடுதலும், செய்யுண் மருங்கின் உரித்தென மொழிப - செய்யுட்கண் உரித்தென்று சொல்லுவர் ஆசிரியர் என்றவாறு. உதாரணம்: அதாஅன்றம்ம, இதாஅன்றம்ம, உதா அன்றம்ம, அதா அன்றென்ப வெண்பா யாப்பே (செய். 82) எனவும், அதை மற்றம்ம, இதைமற்றம்ம, உதைமற்றம்ம எனவும் வரும். மொழிந்த பொருளோடொன்ற வவ்வயின் மொழி யாததனை முட்டின்றி முடித்தல் என்பதனான், அதன்று இதன்று உதன்று என உகரங் கெட்டுத் தகரவொற்று நிற்றல் கொள்க. (56) 259. வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே. இஃது இவ்வீற்றுப் பெயர் வேற்றுமைக்கண் முடியுமாறு கூறுகின்றது. இதன் பொருள்: வேற்றுமைக்கண்ணும் - உகர ஈற்றுப்பெயர் வேற்று மைப் பொருட் புணர்ச்சிக்கண்ணும், அதனோரற்று - அகர ஈற்று அல்வழியோடு ஒருதன்மைத்தாய் வல்லெழுத்து வந்துழி அவ் வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. உதாரணம்: கடுக்காய் செதிள் தோல் பூ எனவும், கடுக் கடுமை எனவும் வரும். (57) 260. எருவுஞ் செருவு மம்மொடு சிவணித் திரிபிட னுடைய தெரியுங் காலை யம்மின் மகரஞ் செருவயிற் கெடுமே தம்மொற்று மிகூஉம் வல்லெழுத் தியற்கை. இஃது அவ்வீற்றுள் ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கிச் சாரியை விதியும், ஒன்றற்கு வல்லெழுத்தினோடு சாரியை விதியும், சாரியை பெறாதவழி வல்லெழுத்து மெல்லெழுத்துப் பேறுங் கூறுகின்றது. இதன் பொருள்: எருவுஞ் செருவும் அம்மொடு சிவணி - எருவென்னுஞ் சொல்லும் செருவென்னுஞ் சொல்லும் அம்முச் சாரியையோடு பொருந்தி, திரிபு இடனுடைய தெரியுங் காலை - அதிகார வல்லெழுத்துப் பெறாமல் திரியும் இடனுடைய ஆராயுங்காலத்து; அம் மின் மகரஞ் செருவயிற் கெடும் - ஆண்டு அம்முச்சாரியையினது ஈற்றின் மகரஞ் செருவென்னுஞ் சொல்லிடத்துக் கெட்டு முடியும்; வல்லெழுத்து மிகூஉம் - ஆண்டு செருவின்கண் வல்லெழுத்து மிக்கு முடியும்; இயற்கைத் தம் ஒற்று மிகூஉம் - அம்முப் பெறாதவழி இரண்டற்குந் தமக்கு இயற்கை யாகிய வல்லொற்றும் மெல் லொற்றும் மிக்கு முடியும் என்றவாறு. உதாரணம்: எருவென நிறுத்திக், குழி சேறு தாது பூழி எனத் தந்து, அம்முக்கொடுத்து அம்மினிறுதி கசதக் காலை (எழு. 129) என்பதனால், எருவங்குழி சேறு தாது பூழி என முடிக்க. செருவென நிறுத்திக் களம் சேனை தானை பறை எனத் தந்து இடை அம்முக்கொடுத்து மகரங் கெடுத்து வல்லெழுத்துக் கொடுத்துச் செருவக்களம் சேனைதானை பறையென முடிக்க. இனி அம்முப் பெறாதவழி எருக்குழி எருங்குழி என வல்லெழுத்தும் மெல்லெழுத்துங் கொடுத்து முடிக்க. இனிச் செருவிற்கு ஏற்புழிக் கோடல் என்பதனான்செருக்களமென வல்லெழுத்தே கொடுத்து முடிக்க. தெரியுங் காலை என்றதனான், எருவின்குறுமை செருவின் கடுமை என உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி வல்லெழுத்து வீழ்தலும், எருவஞாற்சி செருவஞாற்சி என இயல்பு கணத்துக்கண் அம்முப் பெறுதலும் கொள்க. மகரம், மென்மையு மிடைமையும் (எழு. 130) என்பதனாற் கெடுக்க. தம்மொற்றி மிகூஉம் என உடம்பொடு புணர்த்துச் சூத்திரஞ் செய்தலின், உகரம் நீடவருதலுங் கொள்க. வரூஉம், தரூஉம், படூஉம் என வரும். (58) 261. ழகர வுகர நீடிட னுடைத்தே யுகரம் வருத லாவயி னான. இஃது - எய்தியதன்மேற் சிறப்புவிதி வகுத்தது; வல்லெழுத் தினோடு உகரம் பெறுதலின். இதன் பொருள்: ழகர உகரம் நீடிடன் உடைத்து - உகர ஈற்றுச் சொற்களுள் ழகரத்தொடு கூடிய உகர ஈற்றுச்சொல் நீண்டு முடியும் இடனுடைத்து; ஆவயினான் உகரம் வருதல் - அவ்விடத்து உகரம் வந்து முடியும் என்றவாறு. உதாரணம்: எழூஉக்கதவு சிறை தானை படை எனவரும். நீடிடனுடைத்து என்றதனான், நீளாதும் உகரம் பெறாதும் வருமாயிற்று. குழுத்தோற்றம் என வரும். இன்னும் இதனாற் பழுக்காய் என அல்வழிக்கண்ணும் இவ் விதியின்றி வருதல் கொள்க. ஆவயினான என்றதனாற், பெரும்பான்மை செய்யுட்கண் நீண்டு உகரம் பெற்று, எழூஉத் தாங்கிய கதவு மலைத்தவர் குழூஉக் களிற்றுக் குறும் புடைத்தலின் (புறம் - 97) எனவும், `பழூஉப்பல் லன்ன பருவுகிர்ப் பாவடி' (குறுந். 180) எனவும் வருதல் கொள்க. (59) 262. ஒடுமரக் கிளவி யுதிமர வியற்றே. இஃது அவ்வீற்று மரப்பெயருள் ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதித்தது. இதன் பொருள்: ஒடு மரக் கிளவி - ஒடுவென்னும் மரத்தினை உணர நின்ற சொல், உதிமர இயற்று - உதியென்னும் மரத்தின் இயல்பிற்றாய் மெல்லெழுத்துப் பெற்று முடியும் என்றவாறு. உதாரணம்: ஒடுங்கோடு செதிள் தோல் பூ என வரும். மரம் என்றார், ஒடு வென்னும் நோயை நீக்குதற்கு. முன்னர் உதிமரத்தின் பின்னர் அம்முப் பெறுகின்ற புளிமரம் வைத்த இயை பான், இதற்கும் அம்முப் பேறு கொள்க. ஒடுவங்கோடு எனவரும். (60) 263. சுட்டுமுத லிறுதி யுருபிய னிலையு மொற்றிடை மிகாஅ வல்லெழுத் தியற்கை. இது, சுட்டுப் பெயர்க்கு வல்லெழுத்து விலக்கிச் சாரியை வகுத்தது. இதன் பொருள்: சுட்டு முதல் இறுதி உருபியல் நிலையும் - சுட்டெழுத்தினை முதலாகவுடைய உகர ஈற்றுச் சொற்கள் பொருட் புணர்ச்சிக் கண்ணும் உருபு புணர்ச்சியிற் கூறிய இயல்பிலே நின்று அன்சாரி யை பெற்று உகரங்கெட்டு முடியும், வல்லெழுத்து இயற்கை ஒற்று இடை மிகாஅ-வல்லெழுத்து இயற்கையாகிய ஒற்று இடைக்கண் மிகா என்றவாறு. உதாரணம்: அதன்கோடு, இதன்கோடு, உதன்கோடு, செதிள் தோல் பூ என வரும். ஒற்றிடை மிகா எனவே, சாரியை வகுப்ப வல்லெழுத்து வீழா வென்பது பெற்றாம். வல்லெழுத்தியற்கை என்றதனான், உகர ஈற்றுள் எருவுஞ்செருவும் ஒழித்து ஏனையவற்றிற்கும் உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. கடுவின்குறை, ஒடுவின்குறை, எழுவின்புறம், கொழு வின் கூர்மை என வரும். இன்னும் இதனானே, உதுக்காண் என்ற வழி வல்லெழுத்து மிகுதலும் கொள்க. (61) 264. ஊகார விறுதி யாகார வியற்றே. இது நிறுத்த முறையானே ஊகார ஈறு அல்வழிக்கண் புணரு மாறு கூறுகின்றது. இதன் பொருள்: ஊகார இறுதி ஆகார இயற்று - ஊகார ஈற்றுப் பெயர் அல்வழிக்கண் ஆகார ஈற்று அல்வழியின் இயல்பிற்றாய் வல்லெழுத்து வந்துழி அவ்வல்லெழுத்து மிக்குமுடியும் என்றவாறு. உதாரணம்: கழூஉக்கடிது, கொண்மூக்கடிது சிறிது தீது பெரிது எனவரும். (62) 265. வினையெஞ்சு கிளவிக்கு முன்னிலை மொழிக்கு நினையுங் காலை யவ்வகை வரையார். இஃது - இவ்வீற்று வினையெச்சத்திற்கு மிக்கு முடியும் என்ற லின், எய்தாதது எய்துவித்ததூஉம், முன்னிலை வினைக்கு இயல்பும் உறழ்பும் (151) மாற்றுதலின் எய்தியது விலக்கியதூஉம் நுதலிற்று. இதன் பொருள்: வினையெஞ்சு கிளவிக்கும் - ஊகார ஈற்று வினை யெச்ச மாகிய சொற்கும், முன்னிலை மொழிக்கும் - முன்னிலை வினைச்சொற்கும், நினையுங்காலை அவ்வகை வரையார் - ஆராயுங் காலத்து அவ்வல் லெழுத்து மிக்கு முடியுங் கூற்றினை நீக்கார் என்றவாறு. உதாரணம்: உண்ணூக் கொண்டான் சென்றான் தந்தான் போயினான் எனவும், கைதூக்கொற்றா சாத்தா தேவா பூதா எனவும் வரும். நினையுங்காலை என்றதனான், இவ்வீற்று உயர்திணைப் பெயர்க்கும் அல்வழிக்கண் வல்லெழுத்துக் கொடுத்து முடிக்க. ஆடூஉக் குறியன் மகடூஉக் குறியள் என வரும். உயர்திணைப்பெயர் எடுத்தோதி முடிப்பாராதலின் அம்முடிபு பெறாமையின், 32ஈற்றுப் பொதுவிதியான் முடியாது இலேசான் முடித்தாம். (63) 266. வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே. இஃது - ஊகார ஈறு வேற்றுமைக்கண் முடியுமாறு கூறுகின்றது. இதன் பொருள்: வேற்றுமைக் கண்ணும் அதனோரற்று - ஊகார ஈறு வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்ணும் ஆகார ஈற்று அல்வழி போல வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. உதாரணம்: தழூஉக் கடுமை சிறுமை தீமை பெருமை, கொண்மூக் குழாம் செலவு தோற்றம் மறைவு என வரும். (64) 267. குற்றெழுத் திம்பரு மோரெழுத்து மொழிக்கு நிற்றல் வேண்டு முகரக் கிளவி. இஃது - இயைபு வல்லெழுத்தினோடு உகரம் வகுத்தலின், எய்தியதன் மேற் சிறப்பு விதி கூறுகின்றது. இதன் பொருள்: குற்றெழுத்து இம்பரும் - குற்றெழுத்தின் பின் வந்த ஊகார ஈற்று மொழிக்கும், ஓரெழுத்து மொழிக்கும் - ஓரெழுத்தொருமொழியாகிய ஊகார ஈற்று மொழிக்கும், உகரக்கிளவி நிற்றல் வேண்டும் - உகரமாகிய எழுத்து நிற்றலை விரும்பும் ஆசிரியன் என்றவாறு. உதாரணம்: உடூஉக்குறை செய்கை தலை புறம் எனவும், தூஉக் குறை செய்கை தலை புறம் எனவும் வரும். நிற்றல் என்பதனான், உயர்திணைப் பெயர்க்கும் வல்லெ ழுத்தும் உகரமும் கொடுக்க. ஆடூஉக்கை மகடூஉக்கை செவி தலை புறம் என வரும். இவை தொகைமரபினுள் 33இயல்பாதல் எய்திய வற்றை ஈண்டு இருவழிக்கண்ணும் முடித்தார்; ஈற்றுப் பொது ஒப்புமை கண்டு. (65) 268. பூவெ னொருபெய ராயியல் பின்றே யாவயின் வல்லெழுத்து மிகுதலு முரித்தே. இஃது - ஊகார ஈற்றுள் ஒன்றற்கு உகரமும் இயைபு வல்லெ ழுத்தும் விலக்கிப், பெரும்பான்மை மெல்லெழுத்துஞ் சிறுபான்மை வல்லெழுத்தும் பெறுமென (எய்தியது விலக்கி)ப் பிறிதுவிதி வகுத்தது. இதன் பொருள்: பூவென் ஒரு பெயர் அ இயல்பு இன்று - பூவென்னும் ஊகார ஈற்றையுடைய ஒரு பெயர் மேற்கூறிய உகரமும் வல்லெழுத்தும் பெற்று முடியும் அவ்வியல் இன்மையை உடைத்து, ஆ வயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்து - அவ்விடத்து மெல்லெழுத்து மிக்கு முடிதலேயன்றி வல்லெழுத்து மிக்கு முடிதலும் உரித்து என்றவாறு. உதாரணம்: பூங்கொடி சோலை தாமம் பந்து எனவும், பூக்கொடி செய்கை தாமம் பந்து எனவும் வரும். பூவென்பது, பொலிவென்னும் வினைக்குறிப்பை உணர்த்தாது நிற்றற்கு ஒரு பெயரென்றார். (66) 269. ஊவெ னொருபெய ராவொடு சிவணும். இஃது - எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது, உகரமும் வல்லெழுத்தும் விலக்கி னகரம் விதித்தலின். இதன் பொருள்: ஊவென் ஒரு பெயர் - ஊவெனத் தசையை உணர்த்தி நின்ற ஓரெழுத்தொருமொழி, ஆவொடு சிவணும் - ஆகார ஈற்றில் ஆவென்னுஞ் சொல் வல்லெழுத்துப் பெறாது னகர ஒற்றுப் பெற்று முடிந்தாற்போல னகர ஒற்றுப் பெற்று முடியும் என்றவாறு. உதாரணம்: ஊவென நிறுத்தி னகர ஒற்றக் கொடுத்து, ஊன் குறை செய்கை தலை புறம் என முடிக்க. 34ஊ வென்பது தசையை உணர்த்தி நின்ற வழக்கு, ஆசிரியர் நூல் செய்த காலத்து வழக்கு. அன்றித் தேய வழக்கேனும் உணர்க. (67) 270. அக்கென் சாரியை பெறுதலு முரித்தே தக்கவழி யறிதல் வழக்கத் தான. இஃது - எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது. இதன் பொருள்: அக்கென் சாரியை பெறுதலும் உரித்து - அதிகாரத் தான் நின்ற ஊ வென்னும் பெயர் முற்கூறிய னகரத்தோடு அக்கென் னுஞ் சாரியை பெற்று முடிதலும் உரித்து, வழக்கத்தான தக்கவழி அறிதல் - அம்முடிபு வழக்கிடத்துத் தக்க இடம் அறிக என்றவாறு. தக்கவழி யறிதல் என்றதனாற், சாரியை பெற்றுழி னகரம் விலக்குண்ணாது நிற்றலும், முன் மாட்டேற்றால் விலக்குண்ட வல்லெழுத்துக் கெடாது நிற்றலுங் கொள்க. உதாரணம்: ஊனக்குறை செய்கை தலைபுறம் என வரும். வழக்கத்தான என்றதனான், ஊகார ஈற்றுச் சொல்லிற்கு உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி இயைபு வல்லெழுத்துக் கெடுக்க. கொண்மூவின் குழாம், உடூஉவின்றலை, ஊவின்குறை என வரும். (68) 271. ஆடூஉ மகடூஉ வாயிரு பெயர்க்கு மின்னிடை வரினு மான மில்லை. இது, குற்றெழுத்திம்பரும் (எழு. ) என்பதனுள் நிற்றல் என்ற இலேசான் எய்திய வல்லெழுத்தேயன்றிச் சாரியையும் வகுத் தலின் எய்தியதன்மேல் சிறப்பு விதி உணர்த்தியது. இதன் பொருள்: ஆடூஉ மகடூஉ ஆயிரு பெயர்க்கும் - ஆடூஉ மகடூஉவா கிய உயர் திணைப்பெயர் இரண்டற்கும், இன்இடை வரினும் மானம் இல்லை - முன்னெய்திய வல் லெழுத்தே யன்றி இன் சாரி யை இடையே வரினும் குற்றமில்லை என்றவாறு. உதாரணம்: ஆடூஉவின்கை, மகடூஉவின்கை, செவி தலை புறம் என வரும். மானமில்லை என்றதனான், இன்பெற்றுழி மேல் எய்திய வல்லெழுத்து வீழ்க்க. (69) 272. எகர வொகரம் பெயர்க்கீ றாகா முன்னிலை மொழிய வென்மனார் புலவர் தேற்றமுஞ் சிறப்பு மல்வழி யான. இஃது - எகர ஒகரம் ஈறாம் இடம் உணர்த்துகின்றது. இதன் பொருள்:தேற்றமும் சிறப்பும் அல்வழி ஆன - தெளிவுப் பொருளுஞ் சிறப்புப் பொருளும் அல்லாத வேற்றுமைப் பொருண்மை யிடத்து அளபெடுத்துக் கூறுதலின் உளவாகிய, எகர ஒகரம் பெயர்க்கு ஈறாகா - எகர ஒகரங்கள் பெயர்க்கு ஈறாய் வாரா, வினைக்கு ஈறாய் வரும், முன்னிலை மொழிப என்மனார் புலவர் - அவைதாந் தன்மையினும் படர்க்கையினும் வாரா, முன்னிலைச் சொல்லிடத்தனவா மென்று கூறுவர் புலவர் என்றவாறு. எனவே, தெளிவுப் பொருளினுஞ் சிறப்புப் பொருளினும் முறையே வந்து பெயர்க்கு ஈறாம் இடைச்சொல்லாகிய எகர ஒகரம் மூன்றிடத்திற்கும் உரியவாமென்று பொருளாயிற்று. என, இங்ஙனம் 35அருத்தாபத்தியாற் கொண்டதற்கு இலக்கணம் மேலைச் சூத்திரத்தாற் கூறுப. உதாரணம்: ஏஎக்கொற்றா, ஓஒக்கொற்றா, சாத்தா தேவா பூதா என வரும். 36இவை, எனக்கு ஒரு கருமப்பணி எனவும், இங்ஙனஞ் செய்கின்ற தனை ஒழியெனவும் முன்னிலையேவற் பொருட்டாய் வந்தன. இதற்கு வல்லெழுத்துப் பெறுமாறு மேலே கூறுப. (70) 273. தேற்ற வெகரமுஞ் சிறப்பி னொவ்வு மேற்கூ றியற்கை வல்லெழுத்து மிகா. இஃது - எய்தியது இகந்துபடாமற் காத்து எய்தாதது எய்து வித்தது. இதன் பொருள்: தேற்ற எகரமுஞ் சிறப்பின் ஒவ்வும் மேற்கூறு இயற்கை - முன்னர் அருத்தாபத்தியாற் பெயர்க்கண் வருமென்ற தேற்றப் பொருண்மையின் எகரமுஞ் சிறப்புப்பொருண்மையின் ஒகரமும் மூன்றிடத்தும் வருமென்ற இலக்கணத்தனவாம்; வல்லெழுத்து மிகா - அவை வல்லெழுத்து மிக்கு முடியா; எனவே முன்னிலைக் கண் வருமென்ற எகர ஒகரங்கள் வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. உதாரணம்: யானேஎகொண்டேன், நீயேஎகொண்டாய், அவனேஎ கொண்டான் எனவும்; யானோஒகொடியேன், நீயோஒ கொடியை, அவனோஒகொடியன் எனவும் பெயர்க் கண் ஈறாய் இயல்பாய் வந்தவாறு காண்க. இது, முன்னர் எய்திய இலக்கணம் இகவாமற்காத்தார். முன் நின்ற சூத்திரத்தின் முன்னிலைக்கும் வல்லெழுத்து மிகுத்து எய்தாத தெய்துவித்தார். இச்சூத்திரத்திற்கு அளபெடுத்தல் தெளிவி னேயும் (சொல். 261) என்னுஞ் சூத்திரத்தாற் கொள்க. எனவே, முடிவு பெற்றுழி இங்ஙனம் இடைச் சொல்லும் எடுத்தோதிப் புணர்ப்ப ரென்பதூஉம் பெற்றாம். (71) 274. ஏகார விறுதி யூகார வியற்றே. இது நிறுத்தமுறையானே ஏகார ஈறு அல்வழிக்கட் புணரு மாறு கூறுகின்றது. இதன் பொருள்: ஏகார இறுதி - ஏகார ஈற்றுப்பெயர் அல்வழிக் கண், ஊகார இயற்று - ஊகார ஈற்று அல்வழியின் இயல்பிற்றாய் வல்லெழுத்து வந்துழி அவ்வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. உதாரணம்:ஏக்கடிது, சேக்கடிது சிறிது தீது பெரிது என வரும் .(72) 275. மாறுகோ ளெச்சமும் வினாவு மெண்ணுங் கூறிய வல்லெழுத் தியற்கை யாகும். இஃது - இடைச்சொற்கள் இயல்பாய்ப் புணர்கவென எய்தாதது எய்துவித்தது. இதன் பொருள்: மாறுகோள் எச்சமும் - மாறுகோடலை யுடைய எச்சப் பொருண்மைக்கண் வரும் ஏகார ஈற்று இடைச் சொல்லும், வினாவும் - வினாப் பொருண்மைக்கண் வரும் ஏகார ஈற்று இடைச் சொல்லும், எண்ணும் - எண்ணுப் பொருண்மைக் கண் வரும் ஏகார வீற்று இடைச் சொல்லும், கூறிய வல்லெழுத்து இயற்கையாகும் - முற்கூறிய வல்லெழுத்துப் பெறாது இயல்பாய் முடியும் என்றவாறு. உதாரணம்: யானேகொண்டேன் சென்றேன் தந்தேன் போயினேன் என்புழி, யான்கொண்டிலேனென மாறு கொண்ட ஒழிவுபட நின்றது. நீயே கொண்டாய் சென்றாய் தந்தாய் போயினாய் எனவும், நிலனே நீரே தீயே வளியே, கொற்றனே சாத்தனே எனவும் வரும். கூறிய என்றதனாற், பிரிநிலை ஏகாரமும் ஈற்றசை ஏகாரமும் இயல்பாய் முடிதல் கொள்க. அவருள் இவனே கொண்டான் எனவும், கழியே, சிறுகுர னெய்தலொடு பாடோ வாதே; கடலே, பாடெழுந் தொலிக்கும் (அகம். 150) எனவும் வரும். (73) 276. வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே. இஃது இவ்வீற்று வேற்றுமை முடிபு கூறுகின்றது. இதன் பொருள்: வேற்றுமைக்கண்ணும் - ஏகார ஈற்று வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்ணும், அதனோரற்று - ஊகார ஈற்று அல்வழி போல வல்லெழுத்து வந்துழி அவ்வல் லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. உதாரணம்: ஏக்கடுமை சிறுமை தீமை பெருமை எனவும், வேக்குடம் சாடி தூதை பானை எனவும் வரும். வேக்குடம் - வேதலையுடைய குடமென விரியும். (74) 277. ஏயெ னிறுதிக் கெகரம் வருமே. இது, வல்லெழுத்தினோடு எகரம் விதித்தலின், எய்தியதன் மேற் சிறப்பு விதி கூறுகின்றது. இதன் பொருள்: ஏயென் இறுதிக்கு எகரம் வரும் - அவ்வேற்றுமைக் கண் ஏயென்னும் இறுதிக்கு எகரம் வரும் என்றவாறு. உதாரணம்: 37ஏஎக்கொட்டில் சாலை துளை புழை என வரும். வருமொழி வரையாது கூறினமையின், இயல்பு கணத்துக் கண்ணும் வருமெனக் கொள்க. ஏஎஞெகிழ்ச்சி நேர்மை என வரும். உரையிற் கோடலான் எகரம் ஏற்புழிக் கொள்க. (75) 278. சேவென் மரப்பெய ரொடுமர வியற்றே. இஃது - அவ்வீற்றுள் ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கி மெல்லெ ழுத்து விதித்தது. இதன் பொருள்: சே என் மரப்பெயர் - பெற்றமன்றிச் சேவென்னும் மரத்தினை உணரநின்ற பெயர், ஒடுமர இயற்று - ஒடுமரம் போல மெல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. உதாரணம்: சேங்கோடு செதிள் தோல் பூ என வரும். (76) 279. பெற்ற மாயின் முற்றவின் வேண்டும். இஃது - இயைபு வல்லெழுத்து விலக்கி இன் வகுத்தது. இதன் பொருள்: பெற்றம் ஆயின் - முற்கூறிய சேவென்பது பெற்றத் தினை உணர்த்திய பொழுதாயின், முற்ற இன் வேண்டும் - முடிய இன் சாரியை பெற்று முடியவேண்டும் என்றவாறு. உதாரணம்:சேவின்கோடு செவி தலை புறம் என வரும். முற்ற என்றதனானே, முற்கூறிய சேவென்னும் மரப் பெயர்க்கும் ஏவென்பதற்கும் உருபிற்கு எய்திய சாரியை பொருட் கண் சென்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்தல் கொள்க. சேவின்கோடு செதிள் தோல் பூ எனவும், ஏவின் கடுமை சிறுமை தீமை பெருமை எனவும் வரும். சாரியைப்பேறு வருமொழி வரையாது கூறினமையின், இயல்பு கணத்தும் இன்பெறுதல் கொள்க. சேவினலம் மணி வால், சேவினிமில், சேவினடை, சேவினாட்டம் என வரும். இன்னும் இதனானே, இயல்புகணத்துக்கண் இன் பெறாது வருதலுங் கொள்க. செய்யுட்கண் தென்றற்கு வீணைக்குச் 38சேமணிக்குக் கோகிலத்திற்கு, அன்றிற்கு என வரும். (77) 280. ஐகார விறுதிப் பெயர்நிலை முன்னர் வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகுமே. இஃது - ஐகார ஈறு வேற்றுமைக்கண் முடியுமாறு கூறுகின்றது. தொகைமரபினுள் வேற்றுமையல்வழி இஐ யென்னும் (எழுத். 158) என்பதன்கண் அல்வழி முடித்தார். இதன் பொருள்: ஐகார இறுதிப் பெயர்நிலை முன்னர் - ஐகார ஈற்றுப் பெயர்ச்சொன் முன்னர் அதிகாரத்தாற் க ச த ப முதன்மொழி வந்துழி, வேற்றுமையாயின் வல்லெழுத்து மிகும் - வேற்றுமைப் பொருட்புணர்ச்சியாயின் தமக்குப் பொருந்தின வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. உதாரணம்: யானைக்கோடு செவி தலை புறம் என வரும். வேற்றுமையாயின் என்றதனான், உருபுபுணர்ச்சிக் கண்ணும் யானையைக் கொணர்ந்தானென வல்லெழுத்து மிகுதல் கொள்க. (78) 281. சுட்டுமுத லிறுதி யுருபிய னிலையும். இது, வல்லெழுத்தினொடு வற்று வகுத்தலின், எய்தியதன் மேற் சிறப்பு விதி கூறுகின்றது. இதன் பொருள்: சுட்டு முதல் இறுதி - சுட்டெழுத்தினை முதலாக வுடைய ஐகார ஈற்றுப்பெயர், உருபியல் நிலையும் - உருபு புணர்ச்சியிற் கூறிய இயல்பு போலப் பொருட்புணர்ச்சிக்கண் வற்றுப்பெற்று முடியும் என்றவாறு. உதாரணம்: அவையற்றுக்கோடு, இவையற்றுக்கோடு, உவையற்றுக் கோடு செவி தலை புறம் என வரும். இதனை வஃகான் மெய்கெட (எழு. 122) என்பதனான் முடிக்க. (79) 282. விசைமரக் கிளவியு ஞெமையு நமையு மாமுப் பெயருஞ் சேமர வியல. இது, வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதித்தலின், எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. இதன் பொருள்: விசைமரக் கிளவியும் - விசைத்தற்றொழி லன்றி விசை யென்னும் மரத்தை உணரநின்ற சொல்லும், ஞெமையும் - ஞெமை யென்னும் மரத்தினை உணரநின்ற சொல்லும், நமையும் - நமை என்னும் மரத்தினை உணர நின்ற சொல்லும் ஆமுப் பெயரும் - ஆகிய அம்மூன்று பெயரும், சேமர இயல - வல்லெழுத்து மிகாது சேமரம் போல மெல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. உதாரணம்: விசைங்கோடு, ஞெமைங்கோடு, நமைங் கோடு, செதிள் தோல் பூ என வரும். இவை, 39கசதப முதலிய மொழிமேல் தோன்றும் மெல்லெழுத்து (எழு. 143) என்று உணர்க. (80) 283. பனையு மரையு மாவிரைக் கிளவியு நினையுங் காலை யம்மொடு சிவணு மையெ னிறுதி யரைவரைந்து கெடுமே மெய்யவ ணொழிய வென்மனார் புலவர். இஃது - இயைபு வல்லெழுத்து விலக்கி அம்மு வகுத்தது. இதன் பொருள்: பனையும் அரையும் ஆவிரைக் கிளவியும் - பனை யென்னும் பெயரும் அரையென்னும் பெயரும் ஆவிரை யென்னும் பெயரும், நினையுங்காலை அம்மொடு சிவணும் - ஆராயுங் காலத்து வல்லெழுத்து மிகாது அம்முச் சாரியையொடு பொருந்தி முடியும்; ஐயென் இறுதி அரை வரைந்து கெடும் - அவ்விடத்து ஐ யென்னும் ஈறு அரையென்னுஞ் சொல்லை நீக்கி ஏனை இரண்டற்குங்கெடும்; மெய் அவண் ஒழிய என்மனார் புலவர் - தன்னான் ஊரப்பட்ட மெய் கெடாது அச்சொல் லிடத்தே நிற்க என்று கூறுவர் புலவர் என்றவாறு. உதாரணம்: பனை ஆவிரை என நிறுத்தி, அம்மு வருவித்து ஐகாரங் கெடுத்து ஒற்றின்மேலே அம்மின் அகரமேற்றிப், பனங்காய் ஆவிரங்கோடு செதிள் தோல் பூ எனவரும். அரையென நிறுத்தி அம்முக் கொடுத்து ஐகாரங் கெடாது, அரையங் கோடு செதிள் தோல் பூ என முடிக்க. வல்லெழுத்துக் கேடு மேலே கடிநிலையின்று (எழு. 285) என்றத னாற் கூறுதும். நினையுங்காலை யென்றதனான், தூதுணை வழுதுணை தில்லை ஓலை தாழை என நிறுத்தி, அம்முக்கொடுத்து ஐகாரங் கெடுத்துத் தூதுணங்காய் வழுதுணங்காய் தில்லங்காய் ஓலம் போழ் தாழங்காய் என முடிக்க. (81) 284. பனையின் முன்ன ரட்டுவரு காலை நிலையின் றாகு மையெ னுயிரே யாகாரம் வருத லாவயி னான. இது, நிலைமொழிச் செய்கை நோக்கி எய்தாதது எய்து வித்தது. இதன் பொருள்: பனையின் முன்னர் அட்டுவரு காலை - முற்கூறிய வாறன்றிப் பனையென்னும் சொன்முன்னர் அட்டென்னுஞ் சொல் வருமொழியாய் வருங்காலத்து, நிலை யின்று ஆகும் ஐயென் உயிர் - நிற்றலில்லையாகும் ஐயென்னும் உயிர்; ஆவயினான் ஆகாரம் வருதல் - அவ்விடத்து ஆகாரம் வந்து அம்மெய்ம்மேலேறி முடிக என்றவாறு. உதாரணம்: பனாஅட்டு என வரும். இதற்கு மூன்றாவதும் ஆறாவதும் விரியும். ஆவயினான என்றதனால், ஓராநயம் விச்சாவாதி என்னும் வேற்றுமை முடிபும், கேட்டாமூலம் பாறாங்கல் என்னும் அல்வழி முடிபுங் கொள்க. இவற்றுள் 40வடமொழிகளை மறுத்தலும் ஒன்று. (82) 285. கொடிமுன் வரினே யையவ ணிற்பக் கடிநிலை யின்றே வல்லெழுத்து மிகுதி. இது, மேல் ஐகாரங் கெடுத்து அம்முப்பெறுக என்றார்; ஈண்டு அது கெடாது நிற்க வல்லெழுத்துப் பெறுக என்றலின் எய்தியது இகந்து படாமற் காத்தது. அம்மு விலக்கி வல்லெழுத்து விதித்தலின் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்ததுமாம். இதன் பொருள்: பனைமுன் கொடி வரின் - பனையென்னுஞ் சொன் முன்னர்க் கொடியென்னுஞ் சொல் வரின், ஐ அவண் நிற்ப - கேடு ஓதிய ஐகாரம் ஆண்டுக் கெடாது நிற்ப, வல்லெழுத்து மிகுதி கடிநிலையின்று - வல்லெழுத்து மிக்கு முடிதல் நீக்கு நிலைமை யின்று என்றவாறு. உதாரணம்: பனைக்கொடி என வரும். இதற்கு இரண்டாவதும் மூன்றாவதும் விரியும். கடிநிலையின்று என்றதனான், ஐகார ஈற்றுப்பெயர் களெல்லாம் எடுத்தோத்தானும் இலேசானும் அம்முச்சாரியை யும் பிறசாரியையும் பெற்றுழி அதிகார வல்லெழுத்துக் கெடுத்துக் கொள்க. இன்னும் இதனானே, உருபிற்குச்சென்ற சாரியை பொருட் கண் சென்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. பனையின் குறை அரையின் கோடு ஆவிரையின் கோடு விசையின் கோடு ஞெமை யின் கோடு நமையின் கோடு எனவும், தூதுணையின் காய் வழு துணையின் காய் உழையின் கோடு வழையின் கோடு எனவும் வரும். பனைதிரள், பனைந்திரள், என்னும் உறழ்ச்சிமுடிபு தொகை மரபினுட் புறனடையாற் கொள்க; அல்வழியு மாதலின். அன்றி, ஈண்டு அவணென்றதனாற் கொள்வாரும் உளர். (83) 286. திங்களு நாளு முந்துகிளந் தன்ன. இஃது - இயைபு வல்லெழுத்தினோடு இக்குச் சாரியையும், வல்லெழுத்து விலக்கி ஆன் சாரியையும் வகுத்தலின், எய்தியதன் மேற் சிறப்புவிதியும், எய்தியது விலக்கிப் பிறிதுவிதியுங் கூறுகின்றது. இதன் பொருள்: திங்களும் நாளும் - ஐகார ஈற்றுத் திங்களை உணர நின்ற பெயரும் நாளை உணரநின்ற பெயரும், முந்து கிளந்தன்ன - இகர ஈற்றுத் திங்களும் நாளும்போல இக்கும் ஆனும் பெற்று முடியும் என்றவாறு. உதாரணம்: சித்திரைக்குக் கொண்டான், கேட்டையாற் கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என வரும். சித்திரை 41நாளாயின் ஆன் சாரியை கொடுக்க. வல்லெ ழுத்துக்கேடு முன்னர்க் கடிநிலையின்று (எழு. 285) என்றதனாற் கொள்க. திங்கள் முற்கூறிய முறையன்றிக் கூற்றினான், உழைங்கோடு அமைங்கோடு உடைங்கோடு என மெல்லெழுத்துக் கொடுத்தும், கலைங்கோடு கலைக்கோடு என உறழ்ச்சி எய்துவித்துங், கரிய வற்றுக்கோடு குறியவற்றுக்கோடு நெடியவற்றுக்கோடு என ஐகார ஈற்றுப் பண்புகொள் பெயர்க்கு வற்றுக்கொடுத்து ஐகாரங் கெடுத்து வற்றுமிசை யொற்றென்று ஒற்றுக் கெடுத்தும், அவை யத்துக் கொண்டான் அவையிற் கொண்டான் என அத்தும் இன்னுங் கொடுத்தும், பனையின்மாண்பு கேட்டையி னாட்டினா னென இயல்புகணத்துக்கண் இன் சாரியை கொடுத்தும் முடிக்க. ஐகார ஈறு இன்சாரியை பெறுதல் தொகை மரபினுட் கூறாமை யின் ஈண்டுக் கொண்டாம்.(84) 287. மழையென் கிளவி வளியிய னிலையும். இது, வல்லெழுத்தினோடு அத்து வகுத்தலின் எய்தியதன் மேற் சிறப்பு விதியும், இயைபு வல்லெழுத்து விலக்கி இன் வகுத் தலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதியுங் கூறுகின்றது. இதன் பொருள்: மழையென் கிளவி - மழையென்னும் ஐகார ஈற்றுச் சொல், வளியியல் நிலையும் - வளியென்னுஞ் சொல் அத்தும் இன்னும் பெற்று முடிந்த இயல்பின்கண்ணே நின்று முடியும் என்றவாறு. உதாரணம்: மழையத்துக்கொண்டான், மழையிற் கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என வரும். ஈண்டு இன்பெற்றுழி வல்லெழுத்துக்கேடு கடிநிலை யின்று (எழு. 285) என்றதனாற் கொள்க. சாரியைப்பேறு வருமொழி வரையாது கூறினமையின் இயல்புகணத்துக்கண்ணுங் கொள்க. மழையத்து ஞான்றான், மழையின் ஞான்றான் நிறுத்தினான் மாட்டினான் வந்தான் அடைந்தான் என ஒட்டுக.(85) 288. செய்யுண் மருங்கின் வேட்கை யென்னு மையெ னிறுதி யவாமுன் வரினே மெய்யொடுங் கெடுத லென்மனார் புலவர் டகார ணகார மாதல் வேண்டும். இது, வேற்றுமைக்கட் செய்யுண் முடிபு கூறுகின்றது. இதன் பொருள்: செய்யுண் மருங்கின் வேட்கை என்னும் ஐயென் இறுதி - செய்யுளிடத்து வேட்கையென்னும் ஐகார ஈற்றுச் சொல், அவா முன்வரின் - அவா வென்னுஞ் சொற்கு முன்னர் வரின், மெய்யொடுங் கெடுதல் என்மனார் புலவர் - அவ்வைகாரந் தான் ஊர்ந்த மெய்யோடுங்கூடக் கெடுமென்று கூறுவர் புலவர், டகாரம் ணகாரம் ஆதல் வேண்டும் - அவ்விடத்து நின்ற டகார ஒற்றுணகார ஒற்றாய்த் திரிதல் வேண்டும் என்றவாறு. உதாரணம்: வேணவா நலிய வெய்ய வுயிரா (நற். 61) என வரும். வேட்கையாவது பொருள்கள்மேல் தோன்றும் பற்றுள்ளம். அவாவாவது, அப்பொருள்களைப் பெறவேண்டுமென்று மேன்மேல் நிகழும் ஆசை, எனவே, வேட்கையா லுண்டாகிய அவாவென மூன்றனுருபு விரிந்தது. இதனை வேட்கையும் அவாவுமென அல்வழி யென்பாரும் உளர். இங்ஙனங் கூறுவார் 42பாறங்கல் என்பதனை அம்முக் கொடுத்து ஈண்டு முடிப்பர். (86) 289. ஓகார விறுதி யேகார வியற்றே. இஃது - ஓகார ஈற்று அல்வழி முடிபு கூறுகின்றது. இதன் பொருள்: ஓகார இறுதி ஏகார இயற்று - ஓகார ஈற்றுப் பெயர்ச் சொல் ஏகார ஈற்று அல்வழியின் இயல்பிற்றாய் வல்லெழுத்து வந்துழி அவ்வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. உதாரணம்: ஓக்கடிது, சோக்கடிது சிறிது தீது பெரிது என வரும். (87) 290. மாறுகொ ளெச்சமும் வினாவு மையமுங் கூறிய வல்லெழுத் தியற்கை யாகும். இஃது - இடைச்சொல் முடிபு கூறலின், எய்தாத தெய்து வித்தது. இதன் பொருள்: மாறுகொள் எச்சமும் - மாறுபாட்டினைக் கொண்ட எச்சப் பொருண்மையை ஒழிபாக வுடைய ஓகாரமும், வினாவும் - வினாப் பொருண்மையையுடைய ஓகாரமும், ஐயமும் - ஐயப் பொருண்மையை யுடைய ஓகாரமும், கூறிய வல்லெழுத்து இயற்கையாகும் - முற்கூறிய வல்லெழுத் தின்றி இயல்பாய் முடியும் என்றவாறு. உதாரணம்: யானோ கொண்டேன் எனவும், நீயோ கொண்டாய் எனவும், பத்தோபதினொன்றோ, புற்றோபுத லோ எனவும் வரும். கூறிய என்றதனான், யானோ தேறே னவர்பொய் வழங்கலரே (குறுந். 21) எனப் பிரிநிலையும், நன்றோ தீதோ கண்டது எனத் தெரிநிலை யும், ஓஒகொண்டான் எனச் சிறப்பும், குன்றுறழ்ந்த களிறென்கோ கொய்யுளைய மாவென்கோ (புறம். 387) என எண்ணு நிலையும் வல் லெழுத்து மிகாது இயல்பாய் முடிதல் கொள்க. இதனானே ஈற்றசை வருமேனும் உணர்க. (88) 291. ஒழிந்தத னிலையு மொழிந்தவற் றியற்றே. இதுவும் அது. இதன் பொருள்: ஒழிந்ததன் நிலையும் மொழிந்தவற்று இயற்று - ஒழியிசை ஓகாரத்தினது நிலையும் முற்கூறிய ஓகாரங்களின் இயல்பிற்றாய் இயல்பாய் முடியும் என்றவாறு. உதாரணம்: 43கொளலோ கொண்டான், செலலோ சென்றான், தரலோ தந்தான், போதலோ போயினான் என ஓசை வேற்றுமையான் ஒருசொல் தோன்றப் பொருள் தந்து நிற்கும்.(89) 292. வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே யொகரம் வருத லாவயி னான. இஃது - ஓகார ஈற்று வேற்றுமை முடிபு கூறுகின்றது. இதன் பொருள்: வேற்றுமைக்கண்ணும் அதனோரற்று - ஓகார ஈறு வேற்றுமைக்கண்ணும் அவ்வோகார ஈற்று அல்வழியோடு ஒத்து வல்லெழுத்து மிக்கு முடியும்; ஆவயினான் ஒகரம் வருதல் - அவ்விடத்து ஒகரம் வருக என்றவாறு. உதாரணம்: ஓஒக்கடுமை, கோஒக்கடுமை சிறுமை தீமை பெருமை என வரும். (90) 293. இல்லொடு கிளப்பி னியற்கை யாகும். இஃது எய்தியது விலக்கிற்று; என்னை? முன்னர் வன்கணம் வந்துழி ஒகரம் பெறுக என வரைந்து கூறாதும், நிலைமொழித் தொழில் வரையாதுங் கூறலின் நான்கு கணத்துக்கண்ணுஞ் சேறலின். இதன் பொருள்: இல்லொடு கிளப்பின் இயற்கையாகும் - ஓகார ஈற்றுக் கோவென்னும் மொழியினை இல்லென்னும் வருமொழியோடு சொல்லின் ஒகரம் மிகாது இயல்பாய் முடியும் என்றவாறு. உதாரணம்: 44கோவில் என வரும். கோவென்றது உயர்திணைப் பெயரன்றோ வெனின், கோ வந்த தென்று அஃறிணையாய் முடிதலின் அஃறிணைப் பாற்பட்ட தென்க. (91) 294. உருபிய னிலையு மொழியுமா ருளவே யாவயின் வல்லெழுத் தியற்கை யாகும். இது, வல்லெழுத்து விலக்கிச் சாரியை வகுத்தலின், எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. இதன் பொருள்: உருபியல் நிலையும் மொழியுமாருள - ஓகார ஈற்றுச் சில பொருட்புணர்ச்சிக்கண் உருபு புணர்ச்சியது இயல்பிலே நின்று ஒன் சாரியை பெற்று முடியும் மொழிகளும் உள, ஆவயின் வல்லெழுத்து இயற்கையாகும் - அவ்விடத்து வல்லெழுத்தின்றி இயல்பாய் முடியும் என்றவாறு. உதாரணம்: கோஒன்கை செவி தலை புறம் என வரும். 45சாரியைப்பேறு வருமொழி வல்லெழுத்தை விலக்காமை இதனானும் பெற்றாம். (92) 295. ஔகார விறுதிப் பெயர்நிலை முன்னர் ரல்வழி யானும் வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத்து மிகுதல் வரைநிலை யின்றே யவ்விரு வீற்று முகரம் வருதல் செவ்வி தென்ப சிறந்திசி னோரே. இஃது ஔகார ஈறு இருவழியும் முடியுமாறு கூறுகின்றது. இதன் பொருள்: ஔகார இறுதிப் பெயர்நிலை முன்னர் - ஔகாரம் இறுதியாகிய பெயர்ச்சொன்முன்னர் வல்லெழுத்து முதன்மொழி வருமொழியாய் வரின், அல்வழியானும் வேற்றுமைக் கண்ணும் - அல் வழிக்கண்ணும் வேற்றுமைக் கண்ணும், வல்லெழுத்து மிகுதல் வரைநிலை யின்று - வல்லெழுத்து மிக்குமுடிதல் நீக்கு நிலைமையின்று, அவ்விரு ஈற்றும் உகரம் வருதல் செவ்வி தென்ப சிறந்த சினோர் - அவ்விரு கூற்று முடிபின்கண்ணும் நிலைமொழிக்கண் உகரம் வந்து முடிதல் செவ்வி தென்று சொல்லுவர் சிறந்தோர் என்றவாறு. உதாரணம்: கௌவுக்கடிது சிறிது தீது பெரிது எனவும், கடுமை சிறுமை தீமை பெருமை எனவும் வரும். செவ்வி தென்றதனான், மென்கணத்தும் இடைக் கணத்தும் உகரம் பெறுதல் கொள்க. கௌவுஞெமிர்ந்தது ஞெமிர்ச்சி எனவும், வௌவுவலிது வலிமை எனவும் வரும். நிலைமொழி யென்றதனாற், கௌவின் கடுமை என உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட்சென்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்வுங் கொள்க. இன்னும் இதனானே, ஐகாரமும் இகரமும் வேற்றுமைக் கண் 46உருபு தொகையாயுழி இயல்பாதல் கொள்க. (93) உயிர் மயங்கியல் முற்றிற்று. கணேசயர் அடிக்குறிப்புகள்: 1. தத்தம் ஒற்றெனின் வல்லினத்திற் கினமாகிய மெல்லெழுத்துக்களையுங் குறிக்கும். அவ்வாறு கருதாமல் தத்தம் ஒத்த ஒற்றென்றாரென்று பொருள் கோடல் சிறப்பாகும். 2. தன்னை - எழுத்தாகிய தன்னை என்க. அஃறிணை இயற்பெயரென்றது. பால்பகா வஃறிணைப் பெயரை. விள, நுண என்பன பால்பகா அஃறி ணைப்பெயர். அவை எழுவாயாய் நின்று குறிது, சிறிது முதலிய வினைக் குறிப்புப் பண்போடு முடியுமென்றபடி. வினைக் குறிப்புப் பண்பென்றது. பண்படியாகப் பிறந்த குறிப்பு வினைமுற்றுக்களை. 3. போல முதலிய உவமச்சொல் வினையெச்சவினைக் குறிப்பாகவுங் கொள்ளப்படுமாயினும் உவமப் பொருள் தந்தும் நிற்றலின் ஈண்டு உவமக் கிளவியுமென்றார். வேறுபடுத்தல் - உவமை இடைச்சொல் லாகக் கோடல். போல முதலிய வினையெச்ச வினைக் குறிப்பென்பது நச்சினார்க்கினியர் கருத்து. சேனாவரையர் முதலியோர் கருத்து அன்னதன்று. 4. வருமொழி வரையாது கூறியதென்றது - சூத்திரத்தில் நீடவருதற்கு வருமொழி வரையறை கூறாமையை. நீட்டும் வழி நீட்டல் ஒருமொழிக் கண் வரும். 5. முன்னர் முடித்தாம் என்றது - `வினையெஞ்சு கிளவியும்' என்னும் சூத்திரத்துள் முடித்தமையை. 6. எய்தாத தெய்துவித்தது என்றது - `வினையெஞ்சு கிளவியும்' என்னுஞ் சூத்திரத்தால் எய்தாதை எய்துவித்தது. (204) 7. அது செல்க என்புழி, அது என்று சுட்டிய அஃறிணைப் பொருள். செல்க என்னும் ஏவலை உணர்ந்து செல்லமாட்டாமையின் அஃறிணைக்கண் வரும் வியங்கோளை ஏவல் கண்ணாதன என்றார். 8. `வாழிய வென்னுஞ் சேயவென்கிளவி' எனச் சூத்திரத்தைத் திருத்துக. இஃது ஒன்றை ஒன்று விசேடித்து முற்றாதலை உணர்த்தும். சேய என்ப தற்கு நீண்டகாலமாகுக என்பது பொருள். இஃது உரையாசிரியருரை யானும் நன்கு விளங்கும். சேய என்பது முற்று மொழியாய் அஃறிணைப் பன்மையில் வருமாயினும் ஈண்டு வாழிய வென்பதனால் விசேடிக்கப் பட்டமையின் வியங்கோள் முற்றாதலை உணர்த்துமென்க. சேயென் கிளவி என்று மகாலிங்கையர் பதிப்பிலுள்ளது. அதனுரையும் அதற் கேற்ப வாழுங்காலம் நெடுங்காலம் என்று எழுதப்பட்டுளது. ஆயின் சி.வை. தாமோதரம்பிள்ளை பதிப்பில் வாழுங்காலம் நெடுங் காலமாகுக என்று வியங்கோட் பொருள்பட எழுதப்பட்டுளது. சைவ சித்தாந்தக் கழகப் பதிப்பிலும் அங்ஙனே உளது. ஆதலின் சேயவென் கிளவி என்று கோடலே பொருத்த மென்பது உற்று நோக்கினார்க்குப் புலப்படும். `வாழ்த்தியல் வகையே நாற்பாற்கு முரித்தே' (செ - 209). 9. உரையசைப் பொருளையுடைய என்றல் சிறப்பு. 10. செவ்வெண் - உம்மை தொக்கு வருவது. 11. வாராததனால் வந்தது முடித்தலாவது - ஒரு பொருண்மைக்கு வேண்டும் இலக்கணம் நிரம்ப வராததோர் சூத்திரத்தானே அங்ஙனம் வந்த பொருண்மைக்கு வேண்டும் முடிபு கொள்ளச்செய்தல். இங்கே நிரம்ப வராதது - அகரக்கேடு சொல்லாமை. லகரம் றகரமாகத் திரியும். எனவே அதில் ஏறி நின்ற அகரக்கேடு ஈண்டு சொல்லப்படாததாயினும் அஃதும் இவ்வுத்தியாற் கொள்ளப்படுமென்பது கருத்து. ஞாபகம் என்றது - ஞாபகம் என்னும் உத்தியை. அது முன் விளக்கப்பெற்றது. அருத்தா பத்தியாற் கொள்ளப்படுமென முடிக்க. உரித்தென்றது - சூத்திரத்திலுள்ள உரித்தென்னுஞ் சொல்லை. 12. அதன் பொருள் - உருபின் பொருள். பொருள் என்றது வருமொழியை. வருமாழி பற்றியே பொருளுணரப்படும். 13. மாட்டேறு என்றது - `ஆகார விறுதி யகர வியற்றே' என்றதை. எனவே அகரவீற்றுவிதி எழுவாய்த் தொடருக்கேயாதலின் அதனோடு மாட்டிய ஆகாரவீற்றுவிதி எழுவாய்த் தொடருக்கேயுரியது. ஆதலின் உம்மைத் தொகை அம்மாட்டேற்றான் வல்லெழுத்துப் பெறாதாயிற்றென்க. 14. `ஏவல் குறித்த உரையசை மியாவும்' என்பதற்கு இவருரை பொருந்தாது. உரையாசிரியர் உரையே பொருத்தமாம். என்னை? எதிர்முகமாக்குஞ் சொல் என்னும் பொருளுக்குச் சென்மியா பொருந்தாமையின். 15. இடாஅ - இறைகூடை. 16. இராஅக் காக்கை - இராதகாக்கை. இராவிடத்துக் காக்கை எனின் அகரம் பெறாது இராக்காக்கை எனவரும். ஏனையவுமன்ன. 17. இச்சூத்திரம் நிலைமொழித் தொழிலை விலக்கும். நிலைமொழித் தொழிலை விலக்கல் 24ஆம் சூத்திரத்து அகரப்பேற்றை விலக்கல். 18. அகரமும் வல்லெழுத்தும் பெறுதலின் என்றது. யா முதலிய இவைகள் உயிர் 24-ஞ் சூத்திரத்தானே அகரமும். இச்சூத்திரத்தால் வல்லெழுத்தும் பெறுதலின். அத்துப் பெறுதலுங் கொள்க என்றபடி. என்னை? அகரமும் வல்லெழுத்தும் பெறுவன அத்தும் பெறுமாதலின் (சூத். 24 நோக்குக). இனி, அத்தின் முதலெழுத்தும் அகரமாதலானும், அத்து வல்லெழுத்தும் பெறுதலானும் என்பது கருத்தாகக் கொள்ளினுமாம். 19. ஞாபகம் என்றது - ஞாபகம் என்னும் உத்தியை. இதன் விளக்கத்தைப் புணரியல் 22-ம் சூத்திரம் பார்க்க. ஞாபகமாகக் கூறியதென்றது. `ஆவும் மாவும் அவற்றோரன்ன' என்ற விதியைப் பெறாது வரவும், பெற்றன போல அரிதும் பெரிதுமாகச் சூத்திரித்தமையை. 20. கண்ணழிவு - பதம் பிரித்துப் பொருள் கூறல். 21. தோன்றி என்பதை இலேசாகக் கொண்டு னகரத்திற்குக் கேடு கூறுவர் உரையாசிரியர். அதுவே பொருத்தமாம். 22. சுறவுயர்கொடி - சுறவை உயர்த்தியகொடி இரண்டாவது. சுறவால் உயர்த்தியகொடி மூன்றாவது. 23. இதுதான் என்பது ஈகான் என்றாயிற்று. ஈது என்பதும் இது என்பதன் திரிபு. 24. தூணிக்கொள் முதலியன பண்புத்தொகை. 25. முன்னும் ஒரு இகரம் இருந்தாற்றான் இறுதி இகரமெனல் வேண்டும். அங்ஙன மின்றாகவும் கூறியதனால் என்பது கருத்து. 26. இடக்கர் என்பது அபானவாயுவைக் குறித்தது. 27. இதன்பின் என்றது வருஞ் சூத்திரத்தை. 28. எழுத்துப்பேறு என்றது மெல்லெழுத்துப் பெறுமென முன்னர்ச் சூத்திரத்து விதித்ததை. 29. திங்கள் என்றது மாதத்தை. 30. கண்மீ என்பது மீகண் என நிற்றலின் அல்வழியன்று என்றார் உரையா சிரியர். இவர் அதனை மேலிடத்துக்கண் என விரித்தல் பொருந்துமோ என்பது ஆராயத்தக்கது. 31. இது நூன்மரபில் விளக்கப்பட்டுளது. 32. ஈற்றுப் பொதுவிதி என்றது - `ஊகார விறுதி யாகார வியற்றே' என்றதை. 33. இயல்பாத லெய்தியதென்றது - தொகைமரபினுள் 11-ம் சூத்திரத்துச் சொல்லிய விதியால் இயல்பானமையை. 34. இக்காலத்து ஊன் என்றே வழங்கலின் ஊ நூல் செய்த காலத்து வழக்கென்றார். 35. அருத்தாபத்தியாற் கொண்டது என்றது - தேற்றமுஞ் சிறப்பு மல்லாத வழி. `எகர வொகரம் பெயர்க்கீறாகா' எனவே தேற்றத்தும் சிறப்பினும் பெயர்க்கீறாய் வருமென்று கொண்டதை. 36. ஏ - பணி. ஒ - ஒழி. 37. ஏ - அம்பு. 38. சேமணி இன்பெறாது வந்தது. 39. `கசதப முதலிய' என்பது எழு. 143-ம் சூத்திரம். 40. வடமொழிகள் என்றது - ஓரா, விச்சா, கேட்டா என்பவைகளை. 41. நாள் - நட்சத்திரம். 42. பாறங்கல் என 82-ஞ் சூத்திரத்து இலேசினான் முடித்த அல்வழி முடிபை. இதனோடு அம்சாரியை கொடுத்துப் பாறங்கல் என முடிப்பாருமுளர் என்பது கருத்து. 43. கொளலோகொண்டான் - கொன்னுதலையோ செய்தான் - ஏனையவு மன்ன. 44. கோ - அரசன். இல் - அரண்மனை. கோ வந்தது என அஃறிணை வினை யோடு முடிதலின் கோ என்னுஞ் சொல் பொருளாலுயர் திணையாயினும் சொல்லா லஃறிணை யென்றபடி. 45. இதன்கண் வல்லெழுத்து இயற்கையாகுமென்று ஆசிரியர் கூறலின். சாரியைப்பேறு வல்லெழுத்தை விலக்காமை இதனானும் பெற்றாம் என்றார். 46. உருபு தொகையாயுழி - உருபு தொக்கவிடத்து. பாயிர மேற்கோள் நிரல் (பக்க எண்) அப்புலம் அரில்தப 98 அவ்வினை யாளரொடு 88 அவற்றுள், பாடம் கண்ணழிவு 98 அன்னம் கிளியே 86 அனையன் அல்லோன் 88 அனையன் நல்லோன் 88 ஆக்கியோன் பெயரே 90 ஆசான் உரைத்தது 88 ஆயிர முகத்தான் 83 ஈதல் இயல்பே 85 ஈவோன் தன்மை 84 எத்திறம் ஆசான் 87 ஏதுவின் ஆங்கவை 98 ஒருகுறி கேட்போன் 88 கழற்பெய் குடமே 85 காலங் களனே 90 குரங்கெறி விளங்காய் 86 கோடன் மரபு 87 சூத்திரம் உரையென 98 செவ்வன் தெரிகிற்பான் 87 தன்மகன் ஆசான் 86 தன்னூல் மருங்கினும் 98 துடைத்துக் கொள்பொருள் 98 துலாக்கோல் இயல்பே 85 தோன்றாதோற்றி 90 நிலத்தின் இயல்பே 84 பருப்பொருட் டாகிய 84 பாயிரத் திலக்கணம் 90 பிறர்க்குஉரை இடத்தே 88 பூவினதியல்பே 85 பொழிப்பே அகலம் 85 மடிமானி பொச்சாப்பன் 86 மலைநிலம் பூவே 84 மலையே, அளக்கலாகா 84 முக்கால் கேட்பின் 88 மொழிவது உணராதார் 86 யாற்றது ஒழுக்கே 97 வழக்கின் இலக்கணம் 87