அப்பாத்துரையம் - 46 (110 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு) பொது  சமதர்ம விளக்கம்  வருங்காலத் தலைவர்களுக்கு ஆசிரியர் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற்குறிப்பு அப்பாத்துரையம் - 46 ஆசிரியர் முதுமுனைவர். இரா இளங்குமரனார் தொகுப்பாசி ரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2017 பக்கம் : 16+288 = 304 விலை : 380/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல் elavazhagantm@gmail.com  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 304 கட்டமைப்பு : இயல்பு  படிகள் : 500   நூலாக்கம் : கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  நுழைவுரை தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர். பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம். தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும். தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம். தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார். அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன. இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும். தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள் கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர் திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன், திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர். இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய `கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும் `சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி. நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். “ஆக்கத்தை எனக்கிந் நாட்டார் அளித்திட்ட அறிவை யெல்லாம் தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே செலவிடக் கடமைப் பட்டேன்.” - பாவேந்தர் கோ. இளவழகன் தொகுப்புரை மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்! இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின. “அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார். பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார். சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன. - தனித்தமிழ் இயக்கத் தோற்றம் - நீதிக் கட்சி தொடக்கம் - நாட்டு விடுதலை உணர்ச்சி - தமிழின உரிமை எழுச்சி - பகுத்தறிவு விழிப்புணர்ச்சி - இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர் - புதிய கல்வி முறைப் பயிற்சி - புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம் இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன. “தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது! அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்! பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, - உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல். - தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல். - தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல். - தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல். - திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல். - நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல். இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது. பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது. உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன. 1. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு 2. வரலாறு 3. ஆய்வுகள் 4. மொழிபெயர்ப்பு 5. இளையோர் கதைகள் 6. பொது நிலை பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும். இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின் உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன. கல்பனா சேக்கிழார் நூலாசிரியர் விவரம் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இயற்பெயர் : நல்ல சிவம் பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989 பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி) உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர் மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி பள்ளிக் கல்வி : நாகர்கோவில் கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம் : இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி `விசாரத்’, எல்.டி. கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி) நூல்கள் : 120 (ஆங்கிலம், 5) இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை. பணி : - 1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர். - 1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர். - பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு. - 1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி - 1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர். - 1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர் அறிஞர் தொடர்பு: - தொடக்கத்தில் காந்திய சிந்தனை. - 1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு விருதுகள்: - மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது, - 1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் `சான்றோர் பட்டம்’, `தமிழன்பர்’ பட்டம். - 1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் `கலைமாமணி’. - 1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய `திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம். - மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய `பேரவைச் செம்மல்’ விருது. - 1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர். - 1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார். - இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது `தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது. பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்: - அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005. - பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007. பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் `உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். தொகுப்பாசிரியர் விவரம் முனைவர் கல்பனா சேக்கிழார் பிறந்த நாள் : 5.6.1972 பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர் இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். ஆற்றியுள்ள கல்விப்பணிகள் - அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி. - திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு. - புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர். - பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். - பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார். - 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். - மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார். - இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார். - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார். நூலாக்கத்திற்கு உதவியோர் தொகுப்பாசிரியர்: முனைவர் கல்பனா சேக்கிழார் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திரு ஆனந்தன் திருமதி செல்வி திருமதி வ. மலர் திருமதி சு. கீதா திருமிகு ஜா. செயசீலி நூல் வடிவமைப்பு: திருமதி கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) திருத்தத்திற்கு உதவியோர்: பெரும்புலவர் பனசை அருணா, திரு. க. கருப்பையா, புலவர் மு. இராசவேலு திரு. நாக. சொக்கலிங்கம் செல்வி பு. கலைச்செல்வி முனைவர் அரு. அபிராமி முனைவர் அ. கோகிலா முனைவர் மா. வசந்தகுமாரி முனைவர் ஜா. கிரிசா திருமதி சுபா இராணி திரு. இளங்கோவன் நூலாக்கத்திற்கு உதவியோர்: திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன் அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14. பொருளடக்கம் சமதர்ம விளக்கம் பகுதி-1 சமதர்மக் கோட்பாடு ... 3 பகுதி-2 இந்தியாவுக்கான சமதர்மம் ... 86 வருங்காலத் தலைவர்களுக்கு 1. விளையாட்டு விழுச்செல்வருக்கு ... 157 2. ஏடு நாடும் இளைஞருக்கு ... 168 3. சான்றாண்மை விரும்பும் இளைஞருக்கு ... 178 4. நட்பு நாடும் இளைஞருக்கு ... 191 5. வாணிகம் விரும்பும் இளைஞருக்கு ... 208 6. முதலமைச்சராகும் இளைஞருக்கு ... 220 7. நகர் முதல்வராகும் இளைஞருக்கு ... 233 8. மூவாமுதல் நாடும் இளைஞருக்கு ... 241 9. வாழ்வு தொடங்கும் இளைஞருக்கு ... 252 சமதர்ம விளக்கம் முதற் பதிப்பு - 1947 இந்நூல் 2002இல் தமிழ்மண் பதிப்பகம், சென்னை - 17. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. பகுதி 1 சமதர்மக் கோட்பாடு வினா (1) : சமதர்மம் என்பது என்ன? விடை : பொதுவாகக் கூறுவதானால், சமதர்மம் என்பது மக்களனைவரையும் சரிசமமான நிலையில் வைத்து நடத்தும் ஒரு புதிய சமூகமுறை அமைப்பு. அது சமூகத்தில் வகுப்புக்களையும் சாதிகளையும் ஒழிக்க முனைகிறது. தன் வாழ்நாளில் செய்ய வேண்டிய அளவு வேலையைச் செய்தானபிறகு, வேலையிலிருந்து ஒதுங்கி ஓய்வுபெறும் தகுதியுடையவருக்கும் அது அத்தகைய பாதுகாப்பை நாடுகிறது. சமதர்மக் குறிக்கோளின் ஆக்கச்சார்பான கூறு இது. அதன் எதிர்மறைக் குறிக்கோளையும் அறிந்துகொள்ளல் நலம். அதாவது இப்புதிய வாழ்க்கை நிலையை உண்டுபண்ணுவதற்காக, அதற்கு முன்பு அது எதெதனை ஒழிக்க எண்ணுகிறது என்பதை அறிய வேண்டும். எவனொருவன் உழைத்து, உழைப்பால் பொருளுற்பத்தி செய்கிறானோ, அவன் ஒருவனுக்கே சமூக நலன்கள் உரியவை என்பது சமதர்மிகள் கருத்து. எவனாவது பொருளுற்பத்திக்கு உதவாமல் பிறர் உழைப்பால் வாழ முனைவானானால், அவன் உடலமைப்பின்படி தகுதி யற்றவனாய் இருந்தாலன்றி, அவனுக்குச் சமூகத்தில் எத்தகைய உரிமையும் இருக்கக் கூடாது. விளக்கத் தெளிவு : தற்காலச் சமூகத்தில் இரு வகுப்புகள் இருக்கின்றன. (1) முதல் வகுப்பு உற்பத்தி செய்யும் வகுப்பு. இதில் தொழிலாளிகள், உழவர், அறிவுழைப்பாளிகள், தொழில்துறை ஊழியர்கள் ஆகியவர்கள் உட்படுவர். அதாவது தன் வாழ்க்கைப் பிழைப்புக்கான ஊதியத்திற்காக வேண்டி உழைக்க வேண்டிய நிலையிலுள்ள எவனும் அவன் தானே உழைப்பவனாயினும் சரி, அல்லனாயினும் சரி, இவ்வுற்பத்தி செய்யும் வகுப்பைச் சேர்ந்தவன் ஆவான். (2) இரண்டாவது வகுப்பு முதலாளி வகுப்பு. உற்பத்திச் சாதனங்கள், அதாவது இயற்கையான உற்பத்திச் சாதனங்கள், மனிதனால் செய்யப்பட்ட செயற்கை உற்பத்திச் சாதனங்கள் ஆகியவற்றைச் சொந்தமாக உடையவர்கள் இவ்வகுப்பினர். செயற்கை உற்பத்திப் பொருள்களாவன: இயந்திரங்கள், நிலங்கள், காடுகள், சுரங்கங்கள் முதலியவை. இவ்வகுப்பினர் பிறரை இச்சாதனங்களை வைத்து உழைக்கும்படி செய்து, தாம் எதுவும் உழைக்காமலே பிழைப்புக்கு வழி செய்து கொள்பவர்கள் ஆவர். இந்நூலில் முதல் வகுப்பை உழைப்பு வகுப்பினர் என்றும் இரண்டாவது வகுப்பை முதலாளி வகுப்பினர் என்றும் கூறுவோம். வினா (2) : இவ்வகுப்புகளைப் பற்றி இன்னும் திட்டவட்டமாக விளக்குவீர்களா? விடை : முதலில் தொழிற்சாலைகளில் உழைக்கும் உழைப்பாளி வகுப்பு குறிக்கப்பட வேண்டும். இவ்வகுப்பினர் இயந்திரங்களின் உதவியாலேயே உற்பத்தி செய்வதால், இவ்வகுப்பை இயந்திர உழைப்பாளி வகுப்பு (ஞசடிடநவயசயைவ) என்று கூறுவதே பொருத்தமாகும். இவ்வியந்திர உழைப்பாளி வகுப்பு மிகப் புதியதோர் வகுப்பு ஆகும். ஒரு நூற்றாண்டுக்குச் சற்று முற்பட்டு நடைபெற்ற தொழில்முறைப் புரட்சியின் பயனாகவே இவ்வகுப்பு தோன்றிற்று. தற்கால (இயந்திர) முதலாளித்துவ வகுப்பும் இதனை யொத்த புது வகுப்பே ஆகும். இவ்வகுப்பினர் இயந்திரங்களை உடையவர்களாய், பிறரை அவற்றில் ஈடுபடுத்தி உழைக்கும்படி செய்கின்றனர். இயந்திரங்கள் ஏற்படு முன்பே தற்கால மாதிரியன்றி வேறுவகைப்பட்ட ஒரு முதலாளி வகுப்பு இருந்தது. உற்பத்திக்காக உழைப்பில் ஈடுபடாமல் அதற்கான விடுமுதல், அல்லது செல்வத்தை உடையவர்களே அவ்வகுப்பினர். செல்வம் என்பது: முன் உற்பத்தியான பொருள்களின் தொகுதி; அல்லது அதன் மதிப்புக்குச் சரியான பணம், தங்கம், வெள்ளி, தங்கமாற்றுக்கட்டி, பிணையப்பத்திரம், உரிமைப் பத்திரம் ஆகியவை. எனவே நிதியாளர், வணிகர், நிலச் சொந்தக்காரர் ஆகியவரும் முதலாளி வகுப்பில் அடங்குவர் என்பது தெளிவு. உழவர் வகுப்பு நிலத்தை உழுது பண்படுத்தி, உணவு, பணித்துறைக்கான மரங்கள், மலர்கள் உற்பத்தி செய்பவர்களும், முட்டை உற்பத்தி செய்பவர்களும், ஆவர். சில உழவர் வகுப்பினருக்கு அவர்கள் பிழைப்புக்கே பற்றுமளவு கொஞ்சநஞ்ச நிலமும் இருப்பதுண்டு. இத்தகைய நிலமில்லாத உழவர் வகுப்பினர் தங்கள் உழைப்பால் பிறருக்குக் கூலிவேலை செய்கின்றனர். இவர்கள் நிலத்துறை உழைப்பாளிகள் ஆவர். மனித இனம் உழைப்போர், உழைப்போர்க்கு உதவுவோர் முதலாளிகள், முதலாளிகளுக்கு உதவுவோர் நில முதலாளிகள் அல்லது பெருநிலக்கிழவர் (ஜமீன்தாரர்கள்) என்பவர்கள் தம்மாலும் பயிர்செய்ய முடியாது நில உழைப்பாளிகள் உதவியாலும் நேரடியாகப் பயிர் செய்ய முடியாத அளவு பெரும்பரப்பான நிலங்களை உடையவர்கள். இவர்கள் தம் நிலப்பரப்பைக் கூறுபடுத்தி, அக்கூறுகளைப் பணம் பெற்றுக் கொண்டோ, விளைச்சலின் ஒரு பகுதி பெற்றுக் கொண்டோ உழவர்கள் உழும்படி விட்டு விடுகின்றனர். திறனுழைப்பாளிகள் என்பவர்கள் திறமை வேண்டிய உழைப்பிலீடுபட்டவர்கள். இவர்கள் இயந்திரங்களின் உதவியில்லாமல், ஆனால் கைக்கருவிகளின் உதவியால் தனித்தோ கும்பலாகச் சேர்ந்தோ உழைப்பவர் ஆவார்கள். அறிவுழைப்பாளி வகுப்பினரும் தொழில்முறை ஊழியர் வகுப்பினரும் இலக்கிய, விஞ்ஞான முயற்சிகளோ நூல்களோ அல்லது இயந்திர அமைப்பில் புதிய முறைகளோ புதிய அறிவியல் ஆராய்ச்சியோ ஆகியவை நீங்கலாக வேறு எத்தகைய பொருளும் உற்பத்தி செய்வதில்லை. ஆயினும் பொருள்களின் உற்பத்திக்கு இந்த வகுப்பினர் செய்கிற உதவி மதிப்பேறியது. மேலும் சமூக வாழ்வையும் தொழில் வாழ்வையும் கட்டியாள்வதற்கு இவ்வகுப்பே பேருதவி புரிகிறது. உற்பத்தியான பொருள்களைப் பரப்பி வழங்குவது சமூகத்திற்கு அவசியமான மற்றொரு பணி. இதிலீடுபட்டவர்கள் வணிகர் அல்லது வர்த்தகர் ஆவர். தற்கால சமூகத்திலுள்ள வகுப்புகள் இவைகளே. வினா (3) : வகுப்புகள் ஏன் ஒழிக்கப்பட வேண்டும்? அவைகள் சமூக முறையில் பயனுடையவையாகத்தானே தோன்றுகின்றன! அவை ஒரு புறம் செல்வமும் மறுபுறம் வறுமையும் உண்டுபண்ணுகின்றன என்று கருதுகிறீர்களானால், எப்போதும் ஒரு சிலர் பிறரைவிட திறமையும் அறிவுத்திறனும் படைத்தவர்களாயிருக்கத்தானே செய்வர்? இத்தகையோர் தங்களைவிடக் குறைப்பட்ட தோழர்களைக் காட்டிலும் எப்போதும் செல்வமிக்கவர்களாக ஆய்க்கொண்டுதானே இருப்பார்கள்? இதனை நீங்கள் கவனிக்க வேண்டாமா? விடை : சிலர் பிறரைவிடத் திறமையுடைவர்களாயிருக்க நேருகிறது என்பது உண்மையே. முதலாளித்துவத்தின் கீழும் சரி, சமதர்மத்தின் கீழும் சரி, அவர்களுக்கு மிகுதி ஊதியம் கிடைக்கவே செய்யும். ஆனால் சமதர்மத்தின் கீழ் அவர்கள் மிகுதிபெறுவது அவர்கள் உரிமைப்படிக்கும், முதலாளித்துவத்தின் கீழ் கிடைப்பது தற்செயலாகவும் ஆகும். எனினும் சமதர்ம அமைப்பு வளர்ச்சியுற்று ஒரு தொலைப்பட்ட எல்லைக்கு வந்தபின் எவருமே பிறரைவிட மிகுதி நலன்களைக் கோர விரும்பாதபடி பொதுவாழ்வு அத்தனை செல்வவளமுடைய தாகிவிடக் கூடும். சமதர்ம வாழ்க்கைத் கோட்பாட்டின்படி முடிந்த முடிவான தத்துவம் யாதெனில் “ஒவ்வொருவரிட மிருந்தும் அவரவர் திறத்துக்கேற்ப உழைப்புப் பெறுக. ஆனால் ஒவ்வொரு வருக்கும் அவரவர் தேவைக்கு வேண்டிய நலன்கள் தருக” என்பதே. வினா (4) : “ஒவ்வொருவருக்கும் அவரவர் திறத்துக் கேற்றபடி, ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவைக்கு வேண்டியபடி” என்று கூறுவதன் பொருள் என்ன? விடை : முதலாளித்துவத்தின் கீழ் ஒரு திறமையுள்ள அல்லது படித்த ஆளுக்கு திறமையற்றவரை விட உயர்ந்த ஊதியம் கொடுக்கப் படுகிறது. ஆனால் அவன் தலைவனாகிய தொழில் முதலாளி ஆதாய உருவில் பெறும் தொகையை நோக்க அது ஒன்றும் அத்தனை உயர்வுடையதாக இராது. தவிரவும் திறமையுள்ள அல்லது படித்த ஆளுக்கு எப்போதுமே உயர் ஊதியம் கொடுக்கப்படும் என்பதில்லை. அவ்வூதியம் பெரும்பாலும் பொது வாழ்வுக் களத்தில் அவ்விடத்திற்கு வேறு எத்தனை திறமையுள்ள அல்லது படித்த ஆட்கள் கிடைப்பர் என்பதையே பொறுத்தது. ஏனெனில் அவ்வுயர்பணிகளின் தொகை குறிப்பிட்ட அளவிலேயே இருக்கக் கூடுமாதலால் அதனை நாடுபவர்கள் ஒருவரோ டொருவர் போட்டியிடுவர். இது தவிர, தனி உறவுமுறைச் சலுகை வேறு ஏற்படும். அம்முறையில் முதலாளி வகுப்பினரின் உறவினரும் நண்பருமாயுள்ளவர்கள் திறமை குறைந்தவராயிருந்தும், சில சமயம் திறமையே அற்றவரா யிருந்தும், அத்தகைய செல்வாக்கு அற்றவரான திறமையுடைய வர்களுக்கு மேற்பட்ட சலுகை பெறுவர். அடிக்கடி திறமையும் படிப்பும் உள்ள ஆட்களே வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு மிகுதி ஆளாகின்றனர். இதற்குக் காரணம் காண்பது எளிது. முதலாளித்துவத்தின் கீழ் உற்பத்தியை வரையறுப்பது முதலாளியேயாகும். எந்த உற்பத்தியால் தனக்கு ஆதாயம் ஏற்படக் கூடுமோ அதைத்தான் அவன் நாடுவானேயல்லாமல், அதனால் மொத்தத்தில் சமூகத்துக்கு ஆதாயமோ அதனை அவன் நாடமாட்டான். அடிக்கடி சமூகத்தின் நலனுக்கு உற்பத்தி மிகவும் இன்றியமை யாது தேவைப்படும்போது கூட, அவன் தன் சொந்த ஆதாயத்துக்கு வழியில்லை என்ற காரணத்தால் அவ் உற்பத்தியையே புறக்கணிப்பதும் உண்டு. உற்பத்தி அவன் ஆட்சியிலிருப்பது காரணமாகத் தொழிலுழைப்பும் அவன் கையிலேயே இருக்க நேரிடுகிறது ; அதாவது திறமையுள்ளவர் திறமையற்றவர் என்ற இருதிறத் தொழிலாளர் களையும் தொழிலில் அமர்த்தும் உரிமையும் தொழிலிலமர்த்தாதிருக்கும் உரிமையும் அவனிடமே இருக்கின்றன. இங்ஙனம் முதலாளித்துவ சமூக முறையில் திறமையும் கல்வியும் இருப்பது கூட உயர் ஊதியத்துக்கோ, பணியமர் வுக்கோ உத்தரவாத மளிப்பவையல்ல. சமதர்ம முறையின் நிலை இதற்கு முற்றிலும் மாறுபட்டது. இங்கே பொதுவாகச் சமூகத்திற்கு எது நன்மை எது இன்றியமையாதது என்ப வற்றைக் கொண்டே உற்பத்தியளவு வரையறுக்கப் பெறுகிறது. அளவு கோல் இதுவாயிருப்பதனால், குறிக்கோள் எப்போதும் மேன்மேலும் உற்பத்தியைப் பெருக்கிக் கொண்டிருப்பதேயாகும். எனவே திறமை யுள்ளவர், படித்தவர் உட்பட எல்லார்க்கும் எப்போதும் தொழில் இருக்கவே செய்யும். ஏனெனில் அவர்கள் உழைப்புக்கான தேவை என்றும் எல்லையற்றதாகவே அமையும். சமதர்மம் ஒரு கனவு அல்ல. ஆதலால், இப்புதிய அமைப்பு திடுமென ஒரே நாளில் வந்துவிடும் என்று நான் நம்பவில்லை. அது படிப்படியாகவே வர முடியும் - அப் படிமுறைகள் ஒன்றிரண்டு தலைமுறையோ அல்லது அதற்கு மேலோ பிடிக்கலாம். சமதர்மத்தின் தொடக்கப் படிகளில் ஒவ்வொருவருக்கும் அவரவர் திறமைக்குரிய உரிமைப்படி ஊதியம் தரப்படும். எடுத்துக்காட்டாக ஒரு மருத்துவமனையின் துணையாளைவிடத் திறமையுள்ள விஞ்ஞானிக்கு உயர்ந்த ஊதியமே கிடைக்கும். ஏனெனில் திறமையுள்ள விஞ்ஞானியினால் மனிதசமூகம் முழுவதுமே பயனடையும். சில வாடிக்கைக்காரருக்கு மட்டுமே உதவும் துணையாளரின் உழைப்பைவிட இது எவ்வளவோ மிகுதியானது. ஆனால் உற்பத்தி ஓர் உயர்ந்த எல்லைக்கோட்டை எட்டியபின், ஒவ்வொருவர் தேவையையும் நிறைவுப்படுத்தப் போதுமான அளவு ஏராளமான பொருள்களைச் சமூகம் அவர்கட்கு வழங்க முடியும். அச்சமயம் யாருமே மிகுதி நலன்கள் கோரமாட்டார்கள். இந்நிலை இன்று ஒரு கனவுலகக் காட்சியாகத் தோற்றக் கூடுமாயினும், இது நடைபெறக் கூடாத நிலைமையல்ல. அந்நிலை வந்தெய்தினால் ஒருவன் ஊதியம் எவ்வாறு வரையறுக்கப்படும்? அவனுக்குத் தேவைப்படுவ தெல்லாம் அவனுக்குத் தரப்படுவது ஒன்றுதானே வழி! அவன் பெருங்குடும்பத்தை உடையவனாயிருந்தால், அவனுக்குக் கூடுதல் கிடைக்கலாம். நோயாளிக்குச் சற்று மிகுதிப்படியான சேவை செய்யப்படும். ஒரு எழுத்தாளர் அல்லது அமைப்பாளர் (எஞ்சீனியர்)க்கு அமைதியும் சந்தடியின்மையும் தேவைப் படுவதை முன்னிட்டு ஒரு தனிமாளிகை அளிக்கப்படக் கூடும். “ஒவ்வொருவருக்கும் அவரவர் திறமைக்குத் தக்கபடி; ஒவ்வொரு வரும் அவரவர் தேவைக்கு வேண்டியபடி’ என்பதன் பொருள் இதுவே. இன்றைய சமூகத்திலுள்ள வகுப்புக்கள் அவ்வவ்வகுப்பினரின் அறிவு நிலை உயர்வு தாழ்வின் அடிப்படையில்தான் அமைந்துள்ளன என்று கூறமுடியாது. அவை பெரும்பாலும் அவர்கள் செல்வமுடைமை, செல்வமில்லாமை அடிப்படை யாகவே அமைந்துள்ளன. ஊதியப் பங்குமூலமோ, ஆதாய மூலமோ, பொறுப்பாளர் ஊதியமாகவோ முதலாளிக்குக் கிடைக்கிற ஊதிய உயர்வு அவர் வேலைக் கமர்த்தும் ஊழியர்களைவிட அவர் மிகுதி அறிவுடையவர் என்பதற்காக அன்று - உண்மையில் தமக்குப் பகரம் ஆராய்வதற்கும் திட்ட மமைப்பதற்குமாக அவர்கள் அமர்த்தும் நிர்வாகிகள், பொறியமைப்பாளர்கள் ஆகியவர்கள் அவர்களைவிட அறிவுத்திறமிக்கவர்களே. எனவே, தொழில் துறையில் தாம் பணத்தை முதலிட்டிருப்பதன் காரணமாகவே - அதாவது உற்பத்திக்கான கருவிகள் அவருக்கு உரியவை என்பதற்காகவே அவர்கள் அவ்வுயர்வு பெற்றுள்ளனர் என்பது உறுதி. வினா (5) : அவர் பணத்தை முதலிட்டிருக்கிறார் ; இம்முதலீட்டுப் பணம் அவர் மீத்துவைத்துள்ள பணமாயிருக்கலா மல்லவா? விடை : மீத்துவைத்த பணமாயிருக்கவும் கூடும். ஆனால் அப்படி எப்போதும் இருப்பதில்லை. அப்படியில்லாமலிருப்பதே நடைமுறையில் பெரும்பாலாகக் காணப்படுகிறது. மிகமிகப் பெரும்பான்மையாக, அவர் முதலீடு அவரே ஈட்டிய பொருளாயிருப்பதில்லை. பரம்பரைச் சொத்தாகவோ வேறு நேர்மையற்ற முறையில் வந்ததாகவோதான் இருக்கும். உழைப்பாளி, அவன் இயந்திர உழைப்பாளியாயிருந்தாலும் சரி, தொழில்துறை ஊழியனா யிருந்தாலும் சரி, முதலாளியுடன் நெடுந்தொலைவிலிருந்து போட்டியிடும் அளவுகூடத் தன் வாழ்நாளில் ஈட்ட முடியாது. எனவே முதலாளிக்கு அவனது மற்ற தோழர்களைவிட நேர்மையற்ற நலமேம்பாடு ஏற்பட்டுள்ளது. வினா (6) : முதலாளிகளை ஒவ்வொருவராகச் சீர்திருத்தஞ் செய்து மாற்றி அதன்மூலம் அவர்கள் தொகையைக் குறைத்தா லென்ன? விடை : சமதர்மத்தைத் தனிப்பட்ட முதலாளியிடம் பழிவாங்கும் எண்ணமுடைய முறை என்று கொள்வது சமதர்மத்தினைத் திரித்துக் காட்டும் கேலிச் சித்திரமாயமையும். அது முதலாளித்துவத்தை அதாவது முதலாளிகளின் வகுப்பையே எதிர்த்துப் போராடும் ஒரு புனிதப் போராட்ட மாகும். அதுவும் ஒரு நாட்டிலன்று, உலக முழுவதிலுமுள்ள முதலாளி வகுப்பையே எதிர்க்கும் போராட்டமாகும். இப் போராட்டமும் போதிய, பகுத்தறிவுக்கொத்த காரணத் துடனேயே யாகும். இன்று நமக்குத் தேவைப்படுவதெல்லாம் - உணவு, உடை, வீடு, மின்சாரம், தொடர் ஊர்திகள், கப்பல்கள், இசைப்பெட்டிகள் யாவும் அவர்களால் உற்பத்தி செய்யப் படுபவையே. உலகில் முதலாளிகள் இன்று விரும்பினால், மனித வகுப்பு முழுவதையும் பட்டினியிடவோ, வேறு வகையில் ஓட்டாண்டி யாக்கவோ செய்யலாம். இது அவர்களால் செய்ய முடியாத காரியமன்று. இன்றைய சமூக அமைப்பில் உற்பத்தியின் சாதனங்களை உடைய அவர்கள் கதவடைப்புக் காலங்களில் சிலசமயம் செய்வதுபோல், உற்பத்தி முழுவதையுமே நிறுத்தி வைக்க முடியும். இதனால்தான் உற்பத்திச் சாதனங்கள் முதலாளிகள் என்ற தனியாட்கள் உடைமையாக இருக்கக் கூடாதென்றும் பொதுவுடைமையாக வேண்டுமென்றும் சமதர்மம் வற்புறுத்திக் கோருகிறது. உற்பத்திச் சாதனங்கள் சமூகப் பொது உடைமையானால், அந்தக் கணமே சமூகத்திலிருந்துவரும் வகுப்புப் பிரிவினை தானாக மறைந்து விடும். வகுப்பு வேறுபாடற்ற சமூகமும் ஏற்பட்டுவிடும். வகுப்புகள் ஒழிக்கப்படுவது இங்ஙனம் சமூக நலனுக்கான ஒரு இன்றியமையாதச் செயலாகும். வினா (7) : முதலாளி வகுப்பு மனித இனத்துக்கு எந்த வகையில் தீங்கு செய்கிறது? விடை : முதலாளித்துவ அமைப்பு பசி, போர், வறுமை முதலிய எத்தனையோ தீங்குகளுக்குப் பிறப்பிடமாக உள்ளது. இங்கும் நம் முதலாளித்துவத் தோழர் எவரும் செய்யும் செயலையோ செய்யாது விடும் செயலையோ வைத்துக் கொண்டு முதலாளித்துவத்தை மதிப்பிடக் கூடாது. ஏனெனில் சமதர்மம் தனிப்பட்ட ஆட்கள் எவரைப்பற்றியும் எதுவும் குறிப்பிடவில்லை. மொத்தத்தில் சமூகமும், வகுப்பும் ஆகியவற்றைப் பற்றி மட்டுமே குறிக்கின்றது. வினா (8) : இதில் முதலாளித்துவம் தவறு செய்வது எங்கே? விடை : அது செல்வத்தை ஓரிடத்தில் குவிய வைக்கிறது. அதாவது உலகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் அத்தனையையும் அது ஒரு சிலர் கையில் சிக்க வைக்கிறது. ஒரு முதலாளி பலதரப்பட்ட தொழிலாளர்களாக 2000 பேர்களைத் தொழிலில் ஈடுபடுத்துகிறான் என்று வைத்துக் கொள்வோம். தொழிலுற்பத்திப் பொருள்களைப் பரக்க வழங்குவதில் இதன் மூலம் சுற்றுவகையில் ஈடுபடுபவர் பல்லாயிரம் பேர் இருக்கக் கூடும். இத்தனை பேர்களின் உழைப்பு மதிப்புக்கும், பண மதிப்பு மாற்று ஆக அவன் ஒரு திட்டமிடுகிறான் - இதுவே கூலி என்பது. தொழிலுக்குத் தொழில், இடத்துக் கிடம், கூலித்தரம் வேறுபடுகிறதாயினும் அவற்றின் பொழுதுப்போக்கு ஒன்றுதான். அது யாதெனில் உழைப்பாளிக்கு முதலாளி தருவது அவன் உணவு, உடை, பீடிச் செலவு, வீட்டு வாடகை முதலிய அவசியத் தேவை களுக்குரிய பணமே. முதலாளி கொடுப்பது தொழிலாளி உற்பத்தி செய்வதற்கு என்றும் சரிசமமாயிராது; குறைவாகவே இருக்கும். அது அவன் சாகாமல் பிழைத்திருக்கவும் வேலை செய்யத்தக்க மனநிலையிலும் உடல் நிலையிலும் இருக்கவும் மட்டுமே உதவும். தொழிலாளியின் மீந்த உற்பத்தி மதிப்பு அல்லது மிகுதிப்படி மதிப்பு அதாவது அவன் கூலியுருவில் பெறும் பண மதிப்புக்கு மேற்பட்டு அவன் உழைத்து உற்பத்தி செய்யும் பொருளின் மதிப்பு முழுவதும் முதலாளியின் பொருளாய்விடுகிறது. மேற்குறிப்பிட்ட தொழிற்சாலை வகையில் அதன் 2,000 தொழிலாளர்கள் உற்பத்தி செய்யும் மிகுதி மதிப்புச் சரக்கு அல்லது மிகுதி மதிப்புப் பொருள் முழுவதும் முதலாளியே பெற்றுக் கொள்கிறான். முதலாளித்துவ முறையின் கீழ் செல்வம் ஒரு சில கைகளில் குவியும் முறை இதுவே. இக்காலத்தில் விஞ்ஞானத்தினால் தொழில்துறைக்கு ஏற்பட்டுள்ள பேருதவியின் காரணமாக, முன்பு என்றுமிருந்ததை விட மிகுதியான உற்பத்தி பெருகியுள்ளது. இம்மிகுதியினால் பயனடைபவர் முதலாளி மட்டுமே. இங்ஙனம் கூறுவதனால் எல்லாத் தனிப்பட்ட முதலாளிகளும் தனித்தனியாகச் செல்வப் பெருக்குடையவராகிறார்கள் என்று கொள்ளக் கூடாது. ஏனெனில் முதலாளிகளிடையேயும் போட்டி இருந்தே வருகிறது. இதில் செல்வமிகுதியுடைய முதலாளிகளும் வலிமை மிகுதி யுடைய முதலாளிகளும் பின்னும் செல்வமுடையவர் களாகிறார்கள். வலுக்குறைந்த முதலாளிகளோ படிப்படியாக வறுமையுற்று முதலாளி வகுப்பிலிருந்தே தள்ளப்பட்டு விடுகிறார்கள். இவ்வகையாக உலகின் செல்வநிலை ஒருபுறம் உயர்ந்து கொண்டே போகிறது. ஆனால் அதே சமயம் முதலாளி வகுப்பிலுள்ள முதலாளிகள் தொகை குறுகிக்கொண்டும் அக்குறுகிய தொகையினர் செல்வமும் ஆற்றலும் பன்மடங்கு பெருகிக்கொண்டும் வருகிறது. வினா (9) : இதனால் மக்களிடையே பசியும் வறுமையும் பெருகுகிறது என்பது எங்ஙனம் பொருந்தும்? விடை : பெருவாரியான உற்பத்தியின் மூலமே இயந்திர சக்தி சிக்கன மிக்கதாக இருக்கக்கூடும். ஒரு முதலாளி விளக்கு ஒன்று நான்கணா வீதம் மாதம் 50,000 விளக்குகள் உற்பத்தி செய்து அவற்றை ஒன்று எட்டணா வீதம் விற்கிறான் என்று வைத்துக்கொள்வோம். விளக்கு ஒன்றுக்கு அவனுக்கு அணா நான்கு ஆதாயம் கிடைக்கும். இம் முதலாளியைவிட மேம்பட்ட உற்பத்திச் சாதனங்களை உடைய அதாவது, அவனுடைய இயந்திரத்தைவிடச் சிறந்த இயந்திரத்தையோ மிகுதி இயந்திரங் களையோ உடைய இன்னொரு முதலாளி இருக்கலாம். இவ்விரண்டாவது முதலாளி உருப்படி ஒன்று இரண்டணா வீதம் நூறாயிரம் விளக்குகள் உற்பத்தி செய்து ஒன்று ஆறணா வீதம் விற்கலாம். அப்போது அவனுக்குக் கிடைக்கும் ஆதாயம் முதல் முதலாளியின் ஆதாயத்தில் இரட்டிப்பு ஆகும். முதல் முதலாளியின் சரக்குகள் உயர் விலையில் விற்பதால் நிலைமை அவனுக்குப் பாதகமாகிறது. செல்வத்தில் அவனை மிஞ்சிய மற்ற முதலாளியுடன் சரிசமமாகப் போட்டிபோட வேண்டுமானால், அவன் தன் உற்பத்திச் செலவைக் குறைக்க வேண்டும். இதற்கு அவன் ஒன்று மூலப் பொருள்களைக் குறைந்த விலைக்கு வாங்க வேண்டும். (இது செய்வதானால் சுரங்கத் தொழிலாளி அல்லது மற்ற மூலப்பொருள்கள் உற்பத்தியாளர் குறைந்த பணமே கூலியாகப் பெற வேண்டி வரும்.) அல்லது தன் தொழிலாளரின் சம்பளத்தைக் குறைக்க வேண்டும். அல்லது இவ்விரண்டும் செய்ய வேண்டும். இவ்விரண்டும் செய்யமுடியவில்லையானால் அவன் தன் தொழில் துறையிலிருந்து ஒழிக்கப்படுவான். அவன் தொழிற்சாலை மூடப்பட்டோ அவனுடன் போட்டியிடுபவனால் வாங்கப்பட்டோ போகும். மேற்குறிப்பிட்ட வழிகள் எதனாலாவது அவன் வெற்றியடைந்தால், அதே உற்பத்திச் செலவுக் குறைவால் அவன் எதிரியும் நலம் பெறுவான். எதிரியின் சாதகநிலை முடிவடையாது; பின்னும் தொடர்ந்து நிற்கும். ஆயினும் இப்போட்டிக் கிடையில் யார் வென்றாலும் தோற்றாலும் கட்டாயம் நட்டப்பட்டாக வேண்டியவன் தொழிலாளி; சுரங்கத் தொழிலாளியானாலும் சரி, தொழிற்சாலை உழைப்பாளி யானாலும் சரி, அவன் கட்டப் பட்டுத் தீரவேண்டியவனே ஆவான். அவன் பெறுவது வரவரக் குறைந்து கொண்டுதான் செல்லும். முதலாளித்துவ முறை நடப்புக்கு வந்தது முதல் இப்போக்கு தொடர்ந்து கொண்டே யிருக்கிறது. இதன் பலனாக வரலாற் றில் இதற்குமுன் என்றுமிருந்ததைவிட இன்று உலகில் வறுமை மிகுதி. ஆனால் இதே சமயம் உலகத்தின் மொத்தச் செல்வம் தொழிற் புரட்சிக் காலமுதல் எவ்வளவோ மாபேரளவில் பெருக்க மடைந்துள்ளது. வினா (10) : முதலாளித்துவ முறை எப்படி போருக்குக் காரணமாகிறது? விடை : நாம் மேலே இரண்டு முதலாளிகளுக்கிடையே ஏற்படுவ தாகக் காட்டிய அதே போட்டி இருவேறு நாடுகளில் உள்ள முதலாளித்துவ வகுப்பு களுக்கிடையே நடைபெறுவ துண்டு. இது இறுதியில் போரி னாலேயே அதாவது படைவலிமையினாலேயே தீர்க்கப்படக் கூடியதா யிருக்கிறது. சமதர்மம் ஒரு தனித் தேசவாழ்வாகத் திட்டமிடப்படுவ தில்லை. உலக முழுவதற்குமாகவே திட்டமிப்படுகிறது. சமதர்ம சமூகம் ஒரு நாடு மட்டிலுமின்றி உலக நாடுகள் எல்லாவற்றிலுமே வகுப்பு வேறுபாடு களை ஒழிக்கும். இது முதலாளித்துவப் போட்டியை அகற்றிவிடும். போருக்குக் காரணமான முதலாளித்துவப் போட்டியும் அதன் பயனான பொறாமை யும் பூசலும் இருக்கமாட்டா. வினா (11) : சமதர்மம் மெய்யாகவே போரை ஒழித்து விடுமா? அல்லது அங்ஙனம் கூறுவது ஒரு பிரசாரக் கூச்சல் மட்டும் தானா? விடை : (சமதர்ம முறையில்) மக்கள் அதாவது சமூகமே உற்பத்திச் சாதனங்களின் சொந்தக்காரராயிருப்பதால், எல்லார் தேவைக்கும் போதிய அளவில் அவர்கள் உற்பத்தி செய்து விடுவர். மேலும் எல்லா உற்பத்திப் பொருள்களும் சரி நேர்மையுடன் பரப்பி வழங்கப்படுமாதலால் எவருக்கும் குறைபாட்டினால் இன்னல் ஏற்படாது. உலக முழுவதும் சமதர்ம முறையை ஏற்கும் காலம் வந்ததும், தேவை அடிப்படையில் உலகின் பல்வேறு பகுதிகளுக்கிடையிலும் மூலச்சரக்குகளும் உற்பத்திச் சரக்குகளும் இலவசமாகவே பரிமாறிக் கொள்ளப் படும். எடுத்துக்காட்டாக, ஐரோப்பாவில் குறைபாடும் ஆசியாவில் மிகைபாடும் இருக்குமானால், ஆசியா ஐரோப்பாவுக்கு அக்குறை பட்ட சரக்கைத் தருவித்துக் கொடுக்கும். அதன் குறைபாட்டை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளாது. தற்போது ஒரு நாடு குறைபாட்டால் நலிவுற்றால் வளப்பமிக்க மற்ற நாடு அதீத விலை வாங்கிக் கொண்டு அந்நாட்டுக்கு அப்பொருளை விற்க முயல்கிறது. இது மக்கள் குறைபாட்டை முதலாகக் கொண்டு ஆதாயம் பெறுவதாகும். அத்துடன் பொருள்கள் இலவசமாகப் பரிமாறிக் கொள்ளப் படுவதே யில்லை. ஜெர்மனி இரும்பும், இந்தியா பணிமரமும் உற்பத்தி செய்வதாக வைத்துக் கொள்வோம். ஒரு நாட்டை ஒரு நாடு சுரண்ட பார்க்காமலே இரு நாடுகளும் அவற்றைப் பரிமாறிக் கொள்ள முடியும். ஆனால் இது இன்று அரசியலார் கட்டுப்பாடு களினால், அதாவது சுங்கம், பாதுகாப்பு வரிகள் ஆகியவற்றால் தடைபடுகிறது. உலகநாடுகள் பரிமாற்றத்திலுள்ள இந்த வெளிப்படைச் சூறையாட்டு ஒழிக்கப்பட்டு விட்டால் போருக்கான காரணமும் ஒழிந்துபோகும். வினா : (12) ‘ஆதாயம்’ என்றும் ‘செல்வம்’ என்றும் நீங்களே கூறு கிறீர்கள். ஒரு தனி ஆளோ ஒரு வகுப்போ ஆதாயம் பெற்றுச் செல்வ மடைவதற்கு உரிமை கிடையாதா? விடை : மனிதன் தன் தேவைக்கு மேல் பெறப் படாதென்றில்லை. ஆனால் இது ஒரு அளவுவரை மட்டுமே. ஒருவனுக்கு மாதம் ரூ. 30 கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம் (பொதுவாகக் கல்கத்தாவிலும் பம்பாயிலும் சராசரித் தொழிலாளி பெறுவது இதுவே). இதனால் மாதம் ரூ. 300 அல்லது ரூ. 3000 கூடச் செலவு செய்ய அவனுக்கு வகை தெரியாது என்றில்லை. ஆனால் தொடர்ந்து மாதம் ரூ. 3,000 செலவு செய்வதானால் அது அவனுக்கு சிறு பிரச்சனையாகவே ஆகிவிடும். அப்போது அதன் ஒரு பெரும் பகுதி வீணாகவே செலவழிக்கப்படும். வீண் செலவு செய்யப்படா விட்டால் சொந்தச் செலவும் குடும்பச் செலவும் போக மிச்சத்தொகை ஏற்படும். ஒருவனுக்கு (முதலாளிகள் சிலருக்குக் கிடைப்பது போல்) மாதம் ரூ. 30,000 வருவாய் கிடைத்தால், அதில் ஒரு பெரும் பகுதி இத்தகைய மிகைப்பட்ட மிச்சமாகும். இவ்வளவு பெரிய வருவாய் இரண்டு வகைகளில் நேர்மையற்ற தாகும். ஒன்று, இவ்வளவு பெரிய வருவாயை அவன் பெறுவதனால் அதில் தனக்குத் தேவையில்லாத பகுதியைப் பிறர் பெற்றுப் பயனடைய முடியாமல் அவன் தடுக்கிறான். அதே சமயம் அவனுக்கு அதைத் தனக்காகவும் செலவு செய்ய முடியாது. இரண்டாவது அவன் அதை வைத்துக் கூடுதல் இயந்திரமோ நிலமோ வாங்கி அதில் வேலை செய்ய இன்னும் பலரை அமர்த்துகிறான். இது இன்னும் மிகுதியான ஆதாயம் தருகிறது. இங்ஙனமாக, பெருத்த ஆதாயம் கிட்டத்தட்ட எப்போதுமே மேலும் மேலும் ஆதாயத்தை வலியுறுத்திப் பெருக்குகிறது. இதனால் சமூக நலனுக்கு ஒவ்வாத வகையில் செல்வம் ஓரிடத்தில் சென்று குவிகிறது. எனவே ஒருவன் ஆதாயம் பெற உரிமையுடைய வனேயாயினும் மட்டற்ற அளவு பெறக்கூடாது. பெற்றால் அது சுரண்டலுக்கு வழி செய்வதுடன் பிறருக்குத் தீங்கு விளைவித்தே ஆதாயமாகக் கூடும். வினா (13) : ஆதாயம் என்றால் என்ன? செல்வம் என்றால் என்ன? விடை : ஒரு முதலாளி ரூ. 5,000 பெறுமானமுள்ள மூலப் பொருள்கள் வாங்குகிறான் என்று வைத்துக்கொள்வோம். அதை வைத்துத் தனக்குச் சரக்கு உண்டுபண்ணுவதற்காக ஒரு நூறு தொழிலாளிகளை அவன் அமர்த்திக்கொண்டு ஆளுக்கு மாதம் ரூ. 20 ஊதியமாகக் கொடுக்கிறதாகவும் கொள்வோம். அவனது மாதச் சம்பளப்பட்டியல் ரூ. 2,000 ஆகிறது. இப்போது பொருள்கள் அவனுக்கு ரூ. 7,000 கொள் மதிப்புடையதாகிறது. இதனுடன் வாடகை, வரிகள், விளக்குச் செலவு, சுமை கூலி, வர்த்தகக் கழிவுகள், இயந்திரத்தின் நாட்கழிவுக் குறைபாடு (இவற்றின் மதிப்பு ரூ. 3,000 என்று மதிப்பிடலாம்) ஆகியவற்றைச் சேர்ப்போம். இப்போது மொத்தக் கொள்மதிப்பு ரூ. 10,000 ஆகிறது. சரக்குகளை அவன் ரூ. 15,000க்கு விற்கலாம். இதில் அவனுக்குக் கிடைக்கும் ஆதாயம், ரூ. 5,000. அவன் வேலை யாட்கள் ஒவ்வொருவருக்கும் கிட்டும் தொகையைப் போல் 250 மடங்கு மிகுதியான இப்பெரும் பொருளை அவன் பெறு வதற்கான ஒரே தகுதி அவன் இயந்திரங்களின் சொந்தக்காரன் என்பதும் அவனிடம் ரொக்கமாகப் பணம் இருப்பதனால் தொழிலாளிகளுக்கு சம்பளம் கொடுக்க முடிகிறது என்பதுமே. இத்தனைக்கிடையிலும் நேரடியாக அவன் தானாகவே எதுவும் உண்டுபண்ணவில்லை. இதனால் உற்பத்தி செய்வதற்கு அவன் செலவு செய்ததைவிட மிகுதியான பொருள் பெற்றிருக் கிறான் என்பதும், அதுவும் தான் பெறும் உற்பத்திக்கு உழைக்காமல் பெற்றிருக்கிறான் என்பதும் தெளிவு. இத்தொகையை கார்ல் மார்க்ஸ் மிகுதி மதிப்பீடு அதாவது முதலிட்டதற்கு மேற்பட்டு அவனுக்குக் கிடைக்கும் விலைமதிப்பு என்று குறிப்பிட்டார். செல்வம் அல்லது சொத்து என்பதன் சொற்பொருள் இவ்வுலகில் கிடைக்கும் பொருள்களில் மனிதன் தன் தேவையை நிறைவேற்றிக் கொள்ளப் பயன்படுத்தக் கூடும் பொருள் என்பதே. அவை ஒரு வீடாகவோ, ஒரு மரமாகவோ, ஒரு இயந்திரமாகவோ, துணிக்கட்டுகளாகவோ இருக்கலாம். முடிவான ஆராய்ச்சி யின்படி பார்த்தால் அது இன்றோ சென்ற காலத்தில் என்றைக்கோ மனிதனால் உற்பத்தி செய்யப் பட்டதாகவே இருக்கும். ஆகவே உலகத்தின் பொருள்கள் யாவுமே மனிதன் உற்பத்தி செய்ததும் சென்ற சில பல காலங்களில் செய்து சேர்த்ததுமே யாகும். பயன்படும் இப்பொருள்களை அடிக்கடி ஒன்றுக்கொன்று மாற்ற வேண்டியதாயிருக்கிறது; காரணம் மனிதத் தேவைகள் உணவு, பருகுநீர், உடை, உறைவிடம், பயணம், வாசிப்பு, இன்பப் பொழுதுபோக்கு எனப் பல வகைப்பட்டன. முற்காலங்களில் உணவு உற்பத்தி செய்பவன் தான் உற்பத்தி செய்த உணவுப் பொருளைத் துணிகளுடன் பரிமாறிக் கொண்டான். அத்துணியை ஆடையாகத் தைத்த தையல்காரனுக்கும் அதுபோலச் சிறிது உணவுப்பொருள் கொடுத்தான். ஆனால் தையல் காரனுக்குச் சில சமயம் உணவுப் பொருள் வேண்டியிராமல், வீடு வேண்டி யிருந்ததென்று வைத்துக் கொள்வோம். அப்போது பண்டமாற்று நடைபெறுவது எவ்வாறு? ஆகவேதான் பண்டமாற்றை எளிதாக்கும் ஒரு பயனல்லாது, தனக்கென வேறு பயனற்ற ஒரு பொருளின் தேவை ஏற்பட்டது. அப்பொருளே பணம் ஆகும். இப்போது பணத்தின் பயன் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். அதற்கு இப்பண்டமாற்று தவிர, வேறு பயன் உண்டா? மனிதர் தாமாகப் பார்த்து அதற்குக் கொடுத்துள்ள மதிப்பினாலே அது பண்டமாற்றுக்கு மட்டும் பயன்படுகிறது. நாணயம் எனப்படும் உலோகத்தாலான துட்டு வடிவிலா யினும் சரி, செலாவணிச் சீட்டு (கரன்ஸி நோட்) எனப்படும் தாள் வடிவிலாயினும் சரி, பணம் எவருக்குமே பண்டமாற்றுக்குரிய குறியீடாய் விட்டது. ஒரு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு நாணயங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் உற்பத்தி பெருகி, ஏராளமான சரக்குகள் பண்டமாற்றப்பட வேண்டி வந்தபோது, நாணயங்களை வழங்குவது கூடப் பெருந்தொல்லையாகத் தோன்றிற்று. ஆகவே அரசியலார் தலையிட்டு உறுதிச்சீட்டுக்கள் (பிராமிசரி நோட்டுக்கள்) வழங்கினர். இவை பெருந்தொகை நாணயங் களில் அடையாளக் குறியீடுகள் ஆயின. இவையே செலாவணிச் சீட்டுக்கள் (கரன்சி நோட்டுக்கள்) ஆகும். ஆகவே செல்வமுள்ள மனிதன் என்று சொல்லும்போது நாம் என்ன பொருள் கொள்கிறோமென்றால், அவன் ஒரு பொருளையோ, அல்லது அதன் பண்டமாற்று மதிப்பு அதாவது பணத்தையோ, தன் தேவைக்கு மேற்பட மிகுதி உடையவன் என்பதே. ஆனால் இன்று செல்வமுள்ளவன் என்பதற்கு இன்னொரு பொருள், இதனிலும் முக்கியமாகக் குறிப்பிடத்தக்க பொருள் உண்டு. அதாவது அவன் பேரளவான செல்வத்தை உடையவனாயிருப்பதுடன் மட்டுமல்லாது, உற்பத்திச் சாதனங் களையும் தனதாக உடையவன் என்பதும் அதன் மூலம் அவன் பிறரை உழைக்கச் செய்து அதனால் தானே ஊதியம் பெறுபவனும் ஆவான் என்பதுமே. வினா (14) : தொழிலாளிகள் ஆதாயத்தைத் தமக்குள்ளேயே சரிசமமாகப் பங்கிட்டுக் கொள்ளும்படி தொழில் துறைகளை அவர்களே மேற்கொள்ள வேண்டும் என்று சமதர்மம் கோருகிறதா? விடை : இல்லை. சமதர்மம் அங்ஙனம் கோரவில்லை. தொழி லாளிகளை முதலாளிகளாக்கவும் அது எண்ணவில்லை. ஒரு குறிப்பிட்ட தொழிற் சாலையில் தொழில் புரிபவர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு உடனடியாகச் சொந்தக்காரர்கள் அல்லர். அதன் உடைமையுரிமை சமூக முழுமைக்குமாகும். மேலும் பொருள்களை உற்பத்தி செய்தால் போதாது. அது பரக்க வழங்கப்பட வேண்டும். அத்துடன் உற்பத்தி மனம் போன அளவில் நடைபெற முடியாது. அது சமூகத்தின் தேவையை யொட்டியே திட்டப் படுத்தப்பட வேண்டும். உலக மக்களால் பத்து நூறாயிரம் பாரம் (டன்) காப்பிக் கொட்டையே செலவு செய்யப்பட முடியும்போது ஐம்பது நூறாயிரம் பாரம் உற்பத்தி செய்வதில் பொருள் இல்லை. சமதர்மம் செய்ய வேண்டிய தெல்லாம் பொருளழிவுக்குத் தக்கவகையில் உற்பத்தியை ஒழுங்கு படுத்துவது மட்டுமே. இதுவே திட்டப்பட்ட பொருளியல் முறை எனப்படுவது. வினா (15) : திட்டப்பட்ட பொருளியல் முறையினால் நன்மைகள் என்ன? விடை: அதனால் நம் தேவைக்கு எவ்வளவு வேண்டப்படு கிறதோ அவ்வளவே உற்பத்தி செய்யப்படும். மேற்குறிப்பிட்ட மிகுதிப்படியான நாற்பது நூறாயிரம் பாரம் காப்பிக் கொட்டையையும் உற்பத்தி செய்வதில் ஈடுபட்டிருக்கக் கூடும் ஆள் திறத்தை வேறு வழியில் திருப்புவோம். அதாவது சவுக்காரம், வானொலிப் பொறிகள், உணவு, வீடுகள் முதலிய வற்றில் ஈடுபடுத்துவோம். உற்பத்தி வகையில் உயர்தரத் தொழில் நுட்பமுறைகளின் முன்னேற் றத்தின் பயனாக, உலகத்தின் ஓர் ஆண்டுத் தேவையை நாம் இப்போது ஆறு மாதத்தில் உண்டுபண்ண முடிதல் கூடும். அந்நிலையில் நாம் இங்ஙனம் மிச்சப்பட்ட ஆறு மாதத்தைத் தொழிலாளிகளுக்கு விடுமுறை நாட்களாக ஆண்டு முழுவதும் பரப்பி அளிக்கலாம். ஆதாயம் பொருள்கள் வடிவிலா யினும் சரி, ஓய்வு நேர வடிவிலாயினும் சரி, வசதிகள் வடிவிலாயினும் சரி, எல்லாருக்கும் அவற்றில் பங்கு கிடைக்கும்படி செய்யப்படும். வினா (16) : முதலாளித்துவ உற்பத்திமுறை குழப்ப நிலைமைக் கும் பொதுவாக வறுமைக்கும் வழி வகுப்பது ஏன்? விடை : மக்களின் தேவைக்கு ஏற்றபடி உற்பத்திக்குத் திட்டமிட வேண்டும்; சமதர்மம் அங்ஙனமே திட்டமிடும். ஆனால் ஆதாய நோக்கம் ஒன்றே கொண்டுள்ள முதலாளித்துவம் மனம் போனபடி உற்பத்தியைப் பெருக்குகிறது. உற்பத்தியின் போது முதலாளிகள் ஒருவரை ஒருவர் கலந்துகொள்வதில்லை. அவர்கள் உள்ளார்ந்த போட்டிப் பகைமை யிடையே அவர்கள் கலப்பதுதான் எங்ஙனம்? அவர்கள் எவ்வளவு உற்பத்தி செய்கிறார்கள் என்ற புள்ளிவிவரம் கூட மறைமூடாக்காகவே யிருக்க வேண்டியதாகிறது. ஏனெனில் அவர்கள் ஒரே பேரவா, தாம்தாம் எல்லாரையும்விடப் பேரளவில் உற்பத்தி செய்ய வேண்டும் என்பதே. அவ்வாறு செய்வதால்தான் உற்பத்தியில் மிகுந்த அளவு ஆதாயம் கிடைக்கும். இம்முறையில் சில சமயம் மக்கள் வாங்கும் அளவுக்கு அல்லது வாங்க முடியும் ஆற்றலுக்கு மேற்பட்டு அவர்கள் உற்பத்தி செய்து விடும்படி நேருகிறது. பொருள்கள் முடக்கமும் அதன் பயனாக விலைத் தவக்கமும் இதனால் தொடர்கின்றன. இந்நிலையில் பொருள்கள் மட்டுமீறி மலிந்த விலைக்கு விற்கப்படுகின்றன. ஆனால் ஆக்கப்பொருள் மலிவானால் மூலப் பொருள்கள் விலை குறைய வேண்டும், அல்லது தொழிலாளர் கூலியைக் குறைக்க வேண்டும். அத்துடன் முன்னமே பெரும் பொருள் திரட்டி அதன் பயனாக இந்நட்டத்தைத் தாங்கும் சக்தியுள்ள முதலாளிகள் மட்டுமே இக்குழப்பத்தி லிருந்து தப்பி வெளிவருவர். மற்றவர்கள் உற்பத்தியையே அடியோடு நிறுத்தித் தொழிலாளரையும் விலக்கிடுவர். இதனால் பொது வாழ்வில் வறுமை பெருகுகிறது. இன்றைய சமூக நிலையில் சராசரி பொதுமனிதன் மிக நல்ல காலங்களில் கூடத் தன் இன்றியமையாத் தேவைகளை நிறைவேற்றும் அளவுக்குப் போதுமான மட்டுமே பொருளீட்டு கிறான். இங்ஙனம் ஈட்டும் ஆற்றலில் ஏற்படும் எந்தக் குறைவும் வறுமையையே உண்டுபண்ணுகிறது. இம் முடிந்த முடிவுக்கு நிகழ்ச்சிகள் சென்று விடாமலிருக்க முதலாளித்துவமும் முயற்சிகள் எடுக்காமலில்லை. ஆனால் அம்முயற்சிகள் அறிவுக்கேற்ற முயற்சிகள் என்று கூற முடியாது. அது செய்வதெல்லாம் சிறு முதலாளிகளை ஒழித்து அவர்களினிடமாகச் செல்வ நிலையில் இன்னும் உயரிய ஒரு சிறு குறுகிய குழுவை உண்டுபண்ணுவதே. இக்குழுவினுக்குச் செல்வப் பொறுப்பாண்மைகள் (கூசரளவள), தனியுரிமை ஏகபோகங்கள் (ஆடிnடியீடிடநைள), கூட்டுக்குழுக்கள் (ஊடிஅbiநேள) என்ற பெயர்கள் வழங்குகின்றன. அதாவது ஒரு சில முதலாளிகள் சேர்ந்து தம் விடுமுதலை ஒருங்கு கூட்டிச் சேர்த்தும் (லெ யீடிடிடiபே) பல சமயம் அரசியல் பாதுகாப்பைப் பெற்றும் மின்சாரக் குமிழிகள் போன்ற பொருள்களை ஒவ்வொரு நாட்டிலும் செய்ய முற்படுகின்றனர். போட்டியென்பதே யில்லாத காரணத்தால் இம்முயற்சியில் மட்டுமீறிய அளவு ஆதாயம் உறுதிப்படுகிறது. இரண்டாவதாக, சில சமயம் அது பொருள்களின் அருந்தல் விலை நிலையைத் திட்டமிட்டு உண்டுபண்ண முடிகிறது. அதன்படி மக்கள் தேவையின் அளவுக்குக் குறைவாக அது உற்பத்தி செய்து விலை ஏற்றுகிறது. போதுமான அளவு கிடையாத பொருளுக்கு மக்கள் மிகுதி விலை கொடுக்க முன்வருவது இயல்பே. பொறுப்புக் குழுவின் ஆதாயம் இதனாலும் பெருகிறது. இச்சூழ்ச்சி முறைகள் எப்பொழுதும் வெற்றி பெறுவ தில்லை. உண்மையில் முடிவில் அவை யாவுமேதான் தோல்வியடைகின்றன. மக்களின் ஈட்டும் ஆற்றல் மொத்த உற்பத்தியாலேயே நிர்ணயிக்கப் படுவது. பல முதலாளிகள் இருக்கும் வரை தொழிலாளர்களுக்குத் தொழில் கிடைக்கும் வாய்ப்புகள் மிகுதி. முதலாளிகள் போட்டியும் ஓரளவில் தொழிலாளர்களுக்கு உதவுகின்றது. அவர்கள் உச்ச அளவு சம்பளம் கொடுப்பவரிடம் செல்ல முடியும். தனி யுரிமைக்குழு (ஏகபோக) முறையில் இதற்கு நேர்மாறாக முதலாளிகளே மனம்போனபடிச் சம்பளம் வகுக்க முடியும். உயர்தர இயந்திரங்களைப் பயன்படுத்தி அவர்கள் ‘தொழிலி லீடுபடும் தொழிலாளர் தொகையைக் குறைக்கவும் முடியும். உற்பத்தியில் உயர்தரத் தொழில்நுட்ப முன்னேற்றங்களை வழங்குவதில் சமதர்மத்திற்கு எத்தகைய பகைமையும் கிடையாது. நேர்மாறாக அது அச்செயலில் முனைந்து நிற்பதேயாகும். இதிலுள்ள வேற்றுமையெல்லாம் சமதர்மம் அம்முன்னேற்றத் தால் சமூகத்திற்குக் கூடுதல் செல்வமும் தொழிலூழியருக்கு மிகுதி ஓய்வு நேரமும் கிடைக்கவேண்டுமென்று விரும்புவதும்; பொறுப்பு முதலாளிக் குழுவினர் அதனால் தங்கள் செல்வம் பெருக வேண்டும் என்று நினைப்பதுமேயாகும். பிந்திய முறையில் பயனும் பெருஞ்செல்வமும் ஒரு சிலருக்கும், பொதுவாகப் பெரும்பாலருக்கு வறுமையுமே ஏற்படும். சமதர்மத்தின் திட்ட அமைப்புக்கும் முதலாளித்துவப் பொறுப்புக் குழு முறைக்கும் இங்ஙனம் பெருத்த வேறுபாடு உண்டு. முதலது பொது நலத்தையும் பின்னர் ஒரு சிறு குழு நலத்தையும் நாடியது. வினா (17) சமதர்மத்தின் கீழ் வேளாண்மையின் நிலை யாது? விடை : வேளாண்மையே உலகின் மிகப் பழமையான தொழில் முறையாகும். மனிதனின் முதல் தேவை உணவூட்டமே. இது பெரும்பாலும் நிலத்திலிருந்துதான் கிடைக்கிறது. நிலத்தில் வளரும் பயிர்கள் ஒருபுறம், நிலத்தின் மீது வளரப் பெறுபவை யாகிய கால்நடைகள், கோழி, பிற பறவைகள், வேட்டை விலங்குகள், காய்கறிகள் ஆகிய பண்ணை விளைவுகள் மற்றொரு புறம். இத்தேவையை நிறைவேற்றுகின்றன. வேளாண்மையில் உற்பத்தி பெருக்குவது இயற்கையே; மனிதன் செய்வது நிலத்தில் எது உற்பத்தியாவது என்பதை வரையறுப்பதும், திட்டமிடுவதும், இயக்குவதும் மட்டுமே. இயற்கையின் வளப்பத்துக்கு உண்மை யில் எல்லையே கிடையாது. ஏனெனில் உலகிலுள்ள நிலம் முழுவதும் உணவு உற்பத்தியிலீடுபடுத்தப்பட்டால், அவ்வளவை யும் உண்ணுவதற்கு இன்று உலகிலிருக்கும் மக்கள் போத மாட்டார்கள். ஆனால் பண்படுத்தப்படக் கூடிய உலக நிலப் பரப்பில் ஒரு பெரும் பகுதி என்றும் பண்படுத்தப் படாமலே இருந்து தீரும். ஆயினும் எக்காரணம் கொண்டும் உணவில் லாமை காரணமாக மனிதன் சாகவேண்டிய இயற்கை நிலைமை எதுவு மிருக்க வகையில்லை. இங்ஙனமிருந்தும் முதலாளித்துவத்தின் செயல் முறையின் விளை வாக உலகில் ஆண்டுதோறும் கோடிக்கணக்கானவர்கள் பட்டினியால் இறக்கின்றனர்! அது மட்டிலுமன்று. அவ்வுணவை உற்பத்தி செய்யும் உழவர்களுக்குக் கூட ஒரு நாளைக்கு ஒரு தடவை வயிறார உண்ண உணவு கிடைப்பதில்லை! இதன் காரணம் யாது? நிலமும் வேளாண்மையும் மனிதனுக்கு இயற்கை அளித்த பரிசுகள். ஆனால் இவ்வியற்கையின் பரிசுகளிலும் சில மக்கள் தனி உரிமை கொண்டாடினர். ஆதிகாலங்களில் இவ்வுரிமையை அவர்கள் தங்கள் மிருக பலத்தை வழங்கியே பெற்றனர். பின்னர் அது வரன்முறையாக மரபுரிமையாயிற்று. சமதர்மம் நிலத்தின் இத்தனியுரிமையை ஒழிக்கும். அவ்வுரிமை சமூகத்தின் உரிமையாயமையும், சமதர்மத்தின்படி பண்படுத்தும் வேளாளனுக்கும் அவன் ஆற்றலுக்கும் தேவைக்கும் தக்கபடி, நிலத்தைப் பயன்படுத்தும் உரிமையும் அளிக்கப்படும். சமதர்மத்தின் தொடக்கப்படியில், மிகப் பெரிய அளவில் நிலம் உடையவர்களாய், அதனைத் தாமே பண்படுத்தாம லிருப்பவர்களிட மிருந்து மட்டுமே நில உரிமை அகற்றப்படும். இங்ஙனம் உரிமைக் குட்பட்ட நிலம் நிலமில்லா உழவுத் தொழிலாளரிடையேயும் சிறு குடியாண்மைக்கார ரிடையேயும் பங்கிடப்படும். ஆனால் இவ்வேறுபாடு பொருளியல் முறைப் படியும் அறிவியல் முறைப்படியும் நிலையான நிறைவளிக்கக் கூடிய திட்டமாயிருக்க முடியாது. பொருளுற் பத்தியில் எப்படியோ, அப்படியே நிலவிளைவிலும் தனியுடைமை எங்கும் போட்டியையும் மிகுதி உற்பத்தி அல்லது உற்பத்திக் குறையையும் உண்டு பண்ணுகிறது. மேலும் சிறு சிறு உடைமைகளாக இருக்கும் நிலையில் கூட நிலத்தின் தனியுரிமை மூலம் சமூகத் திற்கு மொத்தத்தில் தீமையே ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக, நிலப்பண்ணைகளுக் கிடையிலுள்ள எல்லை வரப்புக்கள் விளைநிலத்தின் ஒரு பகுதியைக் குறைத்து விடுகின்றன. வரன் முறையாக உள்ள எல்லைப் பூசல்களும் வழக்குகளும் தரும் தொல்லைகள் வேறு. இவற்றால் குடியானவரிடையே பெருத்த மனக்கசப்பு உண்டாகிறது. மேலும், இயந்திர உழுபடை (டிராக்டர்கள்), இயந்திரச் சூட்ட டிப்புக் கருவிகள் (கூhசநளாநள), விதைக்கும் இயந்திரங்கள் ஆகியவற்றைப் பயன் படுத்துவதால் வேளாண்மையில் விளைவு மிகுதியாகும். இவ் வியந்திரங்கள் சிறு துண்டு நிலங்களில் பயன்படுத்தக் கூடாதவை. ஒரு தடவை உழுவதற்கே இவற்றுக்கு நூற்றுக்கணக்கான ‘ஏக்கர்’கள் தேவை. நிலம் பரந்திருப்பதன் நற்பயன் அறுவடையிலும் தானியச் சேமிப்பிலும் இது போலவே மிகுதியாகக் காணப்படுகிறது. இவற்றிலும், தற்காலப் புதுமுறை இயந்திரங்கள் காலத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்து பவையாயுள்ளன. வேளாண்மையோடு தொடர்புடைய கோழிப் பண்ணை, பால்பண்ணை, தோட்டப்பண்ணை முதலியவற்றிலும் இதே நிலைமை தான். விஞ்ஞானத் துறையின் முன்னேற்றம் வாய்ந்த முறைகளும் பெருவாரி உற்பத்தி முறைகளும் எவ்வளவு கடினமான உழைப்புடைய தனிப்பட்ட குடியானவர் முயற்சியை யும் விட பன்மடங்கு நற்பயன் தருபவையேயாகும். எனவே வேளாண்மை உச்ச அளவு விளைவு தருவதிலும் சமதர்மம் கூட்டுப்பண்ணை முறையை ஆதரிக்கிறது. இதன்படி பல ஊர்கள் தம் விளைநிலத்தைக் கூட்டாக ஒன்றுபடுத்தி இயந்திர உதவியுடன் பெருவாரியான உற்பத்தி செய்து பொது விளைவினால் வரும் ஆதாயத்தைப் பங்கிட்டுக் கொள்ளும். வினா (18) : வேளாண்மையின் விளைச்சலை நீங்கள் பெருக்கலாம். ஆனால் அதனை எவ்வகையில் பயன்படுத்துவீர்கள்? விடை : இன்று தொழில்துறை உற்பத்தியிலுள்ள அதே ஒழுங்கு தான் வேளாண்மைத் துறை உற்பத்தியிலும் உள்ளது. ஒவ்வொரு குடியானவனும் அவன் சிறிய அளவில் குடியானவனாயினும் பெரிய அளவில் குடியானவனாயினும் திட்டம் எதுவுமில்லாமலும் தொழில் நுட்பத் துறையைப் பற்றியோ வர்த்தகக் கள நிலவரம் பற்றியோ எத்தகைய அறிவுரையும் இல்லாமலும் தன் போக்கில் எதையானாலும் உற்பத்தி செய்துகொண்டே போகிறான். இதனால் சிலசமயம் தேவைக்கதிகமான விளைவும் சில சமயம் தேவைக்குப் போதா விளைவும் உண்டாகிறது. அதிக விளைவுக் காலத்தில் தானியங்கள் முடக்கம் அடைகின்றன. தேவையாளனிடம் அது சென்று சேருவதில்லை. சேரும்போதும் விலைகள் வீழ்ச்சி யடைவதால் குடியானவனுக்கு அவன் செலவு கூடக் கட்டுவ தில்லை. பெருத்த உடைமையாளர்கள் இவ்வகை நிலைஏற்படும் போது தானியங்களை அழித்து அதன் மூலம் போலியான செயற்கை அருந்தல் நிலையை உண்டு பண்ணுகின்றனர். தென் அமெரிக்காவில் எத்தனையோ தருணங்களில், நில முதலாளிகள் காப்பிக்கொட்டைகளுக்குத் தீ வைத்தும் கடலில் கொட்டியும் உள்ளனர். இதே செயல் அரிசி, கோதுமை, சோளம் முதலிய வற்றின் வகையிலும் நடை பெற்றுள்ளது. காய்கறிகள், பழங்கள் முட்டைகள், இறைச்சி முதலியவற்றில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் இந்நிலையைக் காணலாம். இதற்கு நேர்மாறாக மழை பொய்த்துப்போதல், மிகுதி பனி வீழ்ச்சி, பெருவெள்ளம் முதலியவற்றின் பயனாக அருந்தல் நிலையும் சில சமயம் பஞ்சமும் ஏற்படுவதுண்டு. கால்வாய்கள், குழாய்க் கிணறுகள் வெட்டுவதன் மூலம் இது தடுக்கப்படக் கூடியது. மேலும் மழை எங்கும் பொய்த்து விடுவதில்லை. எல்லாச் சமயத்திலும் பொய்த்து விடுவதில்லை. வானிலை யாராய்ச்சி நிலையங்கள் போன்ற விஞ்ஞான உதவிகள் இத்தருணங்களில் குடியானவனுக்கு எத்தனையோ ஒத்தாசைகள் செய்ய முடியும். பல்வேறு வானிலையாராய்ச்சி நிலையங்களின் உதவிகளும் குடியானவர்களுக்கு எளிதில் கிடைக்கும்படி செய்வதே சமதர்ம அரசியலின் முதன்முதல் கடமையாகும். மழை வறட்சிக் காலத்தில் அரசியலின் வேளாண்மைத் துறையினர் குடியானவர்களிடம் நீர்மிகுதி வேண்டாத பயிர்களை விளைவிக்கும்படி அறிவுரை நல்க வேண்டும். அத்துடன் உடனடி உதவியாக விளைவு வள முடைய மற்றப் பகுதிகளிலிருந்து தானியங்கள் வரவழைக்க வேண்டும். குடியானவன் தானே உணவு உற்பத்தி செய்கிறவனாத லால், தனக்கு வேண்டிய உணவை அவன் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக அவன் வைத்துக் கொள்ளவே செய்கிறான். மிகுதிப்படியான தானியத்தை அவன் பயிரிடாதவர் களுக்கு விற்கிறான். அவன் வாடிக்கையாளர்களில் பெரும் பாலோர் நகரங்களிலும் பட்டணங்களிலும் வாழ்கிறார்கள். கிராமவாசிகள் நகரவாசிகள் ஆகியவர்களிடையே உள்ள விகிதாச்சாரம் தேசத்துக்குத் தேசம் மாறுபடுகிறது. இந்தியாவில் மக்கள் தொகையில் நூற்றுக்கு 80 பேர் குடியானவர். ஆனால் பிரிட்டனின் நிலைமை இதற்கு நேர்மாறானது. இதனால் பிரிட்டனில் நூற்றுக்கு 60 பங்கு உணவு வெளிநாட்டிலிருந்தே வருகிறது. வேளாண்மை பற்றிய அடிப்படைப் பிரச்சினை யாதெனில் குடியான வனிடமிருந்து விளைச்சலை வாங்கிக்கொள்ளும் விலை அவன் வாழ்க்கைக்குப் போதியதாகவும் அதே சமயம் நேர்மையான விலைக்குப் பொதுமக்களுக்குக் கிடைக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். ஆனால் இந்த இடத்தில்தான் முதலாளித்துவத்தின் விதியாகிய “பொருள் தருவித்தல் - தேவை” (னுநஅயனே யனே ளரயீயீடல) செயலாற்றத் தொடங்குகிறது. ஆனால் செயலாற்ற வேண்டும் முறை முதலாளித்துவ விதிக்கு நேர்மாறாயிருக்க வேண்டும். அதாவது சில சமயங்களில் மக்கள் பொருள்களை மிகவும் மலிவான விலைக்குப் பெறுகிறார்கள். மற்ற சமயங்களில் வாங்க முடியாத அளவு அருந்தல் நிலை ஏற்படுகிறது. பின்னால் கூறப்பட்ட தருணத்தில் மக்கள் ஒன்று, உணவின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டி யிருக்கிறது; அல்லது அதன் தரத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டி யிருக்கிறது. கூர்ந்து கவனித்தால் பொதுமக்களுக்குள்ள இதே இன்னல் உழவனுக்கும்; உற்பத்திப் பொருள்களில், அதாவது நகரத்தில் உண்டாக்கப் படும் துணி, கட்டடச் சாதனங்கள், பேனா, மை, ஒலிபரப்பு முதலிய எண்ணற்ற பொருள்களின் உற்பத்தி யாளருக்கும் இருப்பது காணலாம். இவற்றை இன்னொரு வகையில் கூறுவதானால், வேளாண்மைப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பது என்றால் கிராம (வேளாண்மை)ப் பொருளியல் நிலவரத்தையும் நகர (தொழில்துறை)ப் பொருளியல் நிலவரத்தையும் நேர்மையான சரிநிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்பதே. முதலாளித்துவம் ஒவ்வொரு உற்பத்தியாளனையும் அவன் விரும்புவதை, விரும்பும் அளவில் உற்பத்தி செய்ய இணக்கமளிப்பதன் பயனாக, இப்பிரச்சினையைத் தீர்ப்பதில் அது என்றும் வெற்றியடைய முடியவில்லை. ஆனால் சமதர்மம் உற்பத்திச் சாதனங்களைச் சமூகத்தின் ஆதிக்கத்திலேயே விட்டு வைக்கிறது. உற்பத்தியையும் வினியோகத்தையும் அது திட்டமிடுகிறது. ஆகவே அது வேளாண்மையைக் கெடுத்துத் தொழிலோ, தொழிலைக் கெடுத்து வேளாண்மையோ வளரவிடாது. வேளாண்மையின் பொருளியல் நிலவரத்தைச் சீர்திருத்தி யமைப்பதே சமதர்மம் மனித இனத்துக்கு அளிக்கும் பரிசுகளில் முதன்மையானதாகும். (வேளாண்மை வகுப்பு உலக முழுவதிலுமே தொழில் வகுப்பைவிட வறுமையிலுள்ளது என்பது கவனிக்கத் தக்கது). வினா (19) : மருத்துவ அறிஞர், வழக்கறிஞர், அமைப்பியலார், எழுத்தாளர் முதலிய அறிவுத்துறை வகுப்பினர் நிலை யாது? விடை : அறிவு வகுப்பு உற்பத்தியாளர் வகுப்பான தொழிலாளர் வகுப்பின் ஒரு கூறேயாகும். அவர்கள் சேவை சமதர்ம சமூகத்தில் மிக உயர்வாக மதிக்கப்படுதல் இயல்பே. சிறப்புப் பயிற்சியும் உடையவர்கள் என்ற மிகுதிப்படித் தகுதி உடைய காரணத்தால் அவர்கள் இன்றியமையா உறுப்புக்கள் ஆவர். முதலாளித்துவ முறையின் கீழே கூட அவர்களில் சிலர் மிக உயர்தரச் சம்பளம் பெறுகின்றனர். பொதுப்படையாகத் தொழில் பற்றிய அறிவு முதலாளிக்கே இருப்பது கிடையாது. ஏனெனில் தொழிலில் அவன் கொள்ளும் பங்கு அவன் முதலீடே. ஆகவே அவன் தனக்குப் பகரம் தன் தொழிலை நடத்த நிபுணர்களை அமர்த்திக்கொள்கிறான். ஆனால் தொழிலில் பெருத்த ஆதாயம் வருகிறவரைதான் முதலாளி அவனுக்கு உயர்ந்த சம்பளம் கொடுக்க முடியும். ஆதாயம் உயர்ந்த அளவிலிருந்து குறைபடும்போது அறிவு வகுப்பினரின் நிலைமை உடனே பாதிக்கப்படு கிறது. பொருளியல் மந்தகாலத்தில் அதற்கேற்ற அளவில் தொழிலில்லாமை யும் துன்பமும் நேர்கின்றன. இவை இயந்திர உழைப்பு வகுப்பினரைவிட அறிவு வகுப்பையே மிகுதி தாக்குகின்றது. சமதர்மத்தில் தொழில் உற்பத்தி வளர்ச்சியும் வேளாண்மை வளர்ச்சியும் இரண்டும் ஒரே நிலையில் மக்கள் தேவையை ஒட்டி அமைக்கப்படுகின்றன. ஆதலால் அறிவு வகுப்புக்குத் தொடர்ச்சியான தொழில் சேவையும் வரவர மிகுதியான சேவையும் அதில் ஏற்படும். சமதர்மத்தைப் பற்றித் தெளிவற்ற, தவறான கருத்துக்களை யுடையவர்கள் அதன் பயனாக, ‘அது சம்பளத்தை ஒரே சரிமட்டமாக்கும் முறை’ என்று எண்ணுகின்றனர். இதைவிடத் தவறான செய்தி இருக்க முடியாது. நாம் மேற்குறிப்பிட்ட முறையில் ஊதியம் திறமைக்குத் தக்கபடி கொடுக்கப்படுவ தானால் தொழில், ரசாயனம், சட்டம், அறுவை மருத்துவம், கலை, சிற்பம் முதலிய தனித்துறைகளில் சிறப்பறிவுடைய வர்களுக்கு மிகுதியான ஊதியம் தரப்படும் என்பது கூறாமலே அமையும். சமதர்மத்தின் கீழ் இன்னும் ஒரு நன்மை இருக்கும். தற்போது கல்வி பொதுவாகவும் சிறப்பாக உயர்தரக் கல்வியும் மிகவும் செலவு பிடிப்பதா யுள்ளது. இக்காரணத்தினால்தான் அறிவு வகுப்பினரில் பெரும்பாலோர் செல்வ நிலையுள்ள வகுப்பிலிருந்தே பிறக்கின்றனர். தொழிலாளிகளின் பிள்ளை களுக்கு அக்கல்வி கிடைக்க முடிகிறதில்லை. சமதர்மத்தின் கீழோ, தொடக்க, உயர்தரக் கல்விகள் யாவும் இலவசமாகவே யிருக்கும். மாணவன் தன் கைச்செலவு பற்றிய கவலையினால் கல்வியடைய முடியாமல் திக்குமுக்காட வேண்டியதில்லை. இன்றுள்ள நிலையில் மருத்துவ அறிஞராவதற்குப் பல ஆண்டுகள் பெருஞ்செலவில் பயிலவேண்டு மென்பதற்காகப் பல மாணவர்கள் அதனை விடவேண்டியிருக்கிறது. இங்ஙனம் சமதர்மம் தற்போதைய அறிவு வகுப்புக்கு நலமாயிருப்பது டனன்றி உயர்தரக் கல்வியை இலவசமாக்குவதன் மூலம் அது அவ் வகுப்பினரின் தொகையையும் பெருக்கும். வினா (20) வணிக வகுப்பின் மதிப்பு என்னவாயிருக்கும்? விடை : இன்று வணிக வகுப்பு முதலாளித்துவ முறையின் ஒரு பகுதியாகிவிட்டது. ஏனெனில் அவ்வகுப்பினர் பொருள் களைப் பரப்பி வழங்குவதற்கான பணியாற்றுவதுடன் முதலாளி களைப் போலவே உற்பத்திச் செலவுக்கு மேற்பட்ட ஆதாயத்தில் ஒரு பங்கு கொள்கின்றனர். அதாவது முதலாளியும் வணிகனும் ஆதாயத்தைப் பங்கிட்டுக் கொள்கின்றனர். அவர்களிருவரும் ஒரே வகுப்பின் உள்ளுறுப்புக்களே. முதலாளி (தொழிலாளி யிடமிருந்து உச்ச அளவு பெற்றுக் குறைந்த அளவு கொடுப்பது) போலப் பெருத்த வணிகனும் (அதாவது மொத்த வர்த்தகனும்) அவனிடம் வாங்கி விற்பனை செய்யும் சிறுவர்த்தகர்களைச் சுரண்டுகிறான். இச்சிறு வர்த்தகனே தேவையாளராகிய பொதுமக்களிடம் நேரடியாக விற்பனை செய்கிறான். எனவே சிறுவர்த்தகன் எப்போதும் கையும் வாயுமாகச் சிறு வாழ்வு வாழ்கிறான். மொத்த வணிகனோ மட்டற்ற செல்வ முடைய வனாகிறான். இரண்டாவதாக வணிகன் தொழிலில் முதலிடப் பணம் உடையவனாயிருப்பதனால்தான் வணிகனா யிருக்கிறான். சிறு வர்த்தகன் இந்நிலை பெறுவதில்லை. எனவே பெரு வர்த்தகன் உண்மையில் முதலாளியுடன் சேர்த்து எண்ணத் தக்கவனே. சமதர்மத்தின் கீழும் வினியோக சாதனங்கள் வேண்டிய தாகவே இருக்கும். ஆனால் அவற்றிற்கான முதலீடு, அரசிய லாரால் போடப்படும். இது கூட்டுறவு இயக்கத்தின் வளர்ச்சிக்கு ஒரு நல்ல விளைநிலமாயிருக்கும். தேவையாளர் மொத்த விலைக்கு வாங்குவதற்கான தம் சொந்த அமைப்பைத் தாமே தொடங்குவர். முன்பு வணிகன் கைப்பற்றியிருந்த ஆதாயம் முழுவதையும் இங்ஙனம் அவர்கள் அவனிடமிருந்து அகற்றித் தமதாகப் பெறுவர். வணிக வகுப்பு மிகவும் பழங்காலத்திற்குரியது. பழைய நில உரிமை யாட்சிக் (குநரனயடளைஅ) காலத்திலேயே அது இருந்தது. வணிக வகுப்பும் நிதி நிலையத்தினரும் கூட்டாகச் சேர்ந்த வணிக முதலாளித்துவம் ஏற்பட்டது. வணிக முதலாளித்துவத்திற்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டு பிரிட்டீஷ் கிழக்கிந்திய வணிகர் கழகம் ஆகும். இது இந்தியாவில் பிரிட்டீஷ் பேரரசின் அடிப்படையை நிறுவியதுடன் தற்கால ஏகாதி பத்தியத்துக்கும் முன்னோடியாயிருந்தது. வணிக முதலாளிகள் வெளிநாடு களிலிருந்து சரக்குகளை மிகக் குறைந்த விலையில் வாங்கித் தங்கள் நாட்டில் மிக உயர்ந்த விலையில் விற்றனர். இதனால் மிகப் பேரளவில் ஆதாயம் அவர்கள் கையில் சேர்ந்தது. அவர்கள் விற்றல் வாங்குதல் செய்வது மட்டுமன்றிப் பெரும் செல்வமும் தொகுத்து மன்னர்களுக்கும் மன்னர் ஆட்சிகளுக்கும் கடன் கொடுத்து வந்தனர். அவர்கள் பெருத்த அரசியல் செல்வாக்கு பெற்றுச் சொந்தப் படைகளும் சொந்த அரசியல் நிர்வாகமும் உடையவர்களாயினர். அவர்கள் செல்வம் பின்னும் பெருகத் தொடங்கிய பின் முதலிடுவதற்கான இடம் கோரி அவர்கள் ஆரவாரம் செய்தனர். இச்செல்வம், கையால் ஓட்டப்படாமல் நீராவியால் ஓட்டப்பட்ட இயந்திரங்களில் விடுமுதலாக இடப்பட்டது. படிப்படியாக இந்நீராவி இயந்திரங்கள் தனிப்பட்ட சிறு கைத்தொழில்களைப் பின்தங்கிவிடச் செய்தன. தொழிற்புரட்சி ஏற்பட்ட வகை இதுவே. தற்கால முதலாளித் துவம் இவ்வகையில்தான் பிறந்தது. வணிக முதலாளித்துவம் உண்மையில் முதலாளித்துவத்தின் தந்தையே ஆகும். வினா (21) : நிதித்துறை, நிதித்துறையாளர் பற்றி பலப் பல பேசுகின்றீர்கள். முதலாளித்துவத்தில் அவர்கள் பங்கு யாது? விடை : தற்கால முதலாளித்துவம் பிறப்பதற்கு நெடுநாள் முன்பிருந்தே நிதியாளர் இருந்து வந்துள்ளனர். அவர்கள் ஒரு வகையில் நம் கடன் தொழிலாளரின் (வட்டிக்கடைக்காரரின்) ஒரு புதிய உயர் பதிப்பேயாவர். ஆயினும் இவ்விருதரப்பார் ஒற்றுமையும் இத்துடன் நின்று விடுகிறது. ஏனெனில் கடன் தொழிலாளர் தங்கள் சொந்தப் பணத்தைக் கொடுத்து அதில் வட்டி வாங்குகின்றனர்; நிதியாளரோ வேறு யாராவது பாதுகாப்புக்காகத் தம்மிடம் வைத்துள்ள நிதியைக் கடன் கொடுக்கின்றனர். இப்போது அவர்கள் தங்களால் கொண்டு செல்ல முடியாத அவ்வளவு பெரும் தொகைகளை வைத்துக் கொண்டு தொழில் செய்கின்றனர். ஆகவே அவர்கள் நம்பிக்கை யுள்ள ஒருவரிடம் அதைப் போட்டு வைத்து வேண்டிய சமயம் பெற்றுக் கொள்கின்றனர். இங்ஙனம் பணம் கையிருப்பில் பெற்றவர்கள் பணம் போடுபவர் எவரேனும் ஒரு சமயம் பணத்தைப் பெற்றுக் கொண்டாலும் எப்போதுமே பலர் பணம் பேரளவில் தம்மிடம் இருந்து வருவதைக் கண்டனர். ஆகவேதான் இந்நிதியாளர் வட்டிக்குப் பணம் தேவையானவர்களுக்கு அதனைக் கொடுத்து வாங்குவதில் எத்தகைய தீங்குமில்லை என்ற நிலை எய்தினர். பணத்தைத் திருப்பிப் பெறுவதற்குப் பதிலாக நிதியாளர் வழக்கமாக ஏதேனும் பிணையம் (ளுநஉரசவைல) பெற்றுக் கொள்வர். இங்ஙனமாக நிதியாளர் பிறர் செல்வத்தை வைத்துக் கொண்டே அதில் ஆதாயமுமடைகின்றனர். உலகில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது பணம் மிகுதி. இரு நூற்றாண்டுகளுக்கு முன்னிருந் ததைவிட அது இன்னும் பன்மடங்கு மிகுதியே. இந்நிலைக்குக் காரணம் தொழிற்துறைகள் எழுந்தபின் முன்னைவிடப் பெருத்த அளவில் இன்னும் உற்பத்தி நடக்கின்றது. அதன் ஒவ்வொரு பகுதியிலும் பண்டமாற்றுக்காக வரவர மிகுதியான பணம் தேவைப்படுகின்றது. ஆகவே பொதுமக்களிடமிருந்து பொருள் போட்டு வைக்கப் பெறுகிறவர்களும் சிறப்பிலும் பொருள் மிகுதியிலும் மேம்பட்டுள்ள னர். பழங்கால நிதியாளன் அல்லது நிதியாளர் கூட்டுறவுக்குப் பகரம் இப்போது நிதியகக் கழகங்கள் (பாங்கிங் கார்ப்ப ரேஷன்) ஏற்பட்டுள்ளன. அவை தொழி லாற்றும் வகை எதுவெனக் கவனித்துப் பாருங்கள். ஒருவன் நடப்புத்துறைக் கணக்கில் (கரண்ட் அக்கவுண்ட்) பணமிடுகிறான். இதில் போட்ட பணத்தை வேண்டும்போது திருப்பிப் பெறும் உரிமையை அவன் பெறுகிறான். இதற்காக அவனிடம் ஒரு பொருள் முறிப்புத்தகம் (செக்-புக்) தரப்படுகிறது. அவன் மாதம் ரூ. 400 போட்டு வைத்து வாரந்தோறும் ரூ. 100 அவன் செலவு களுக்காக எடுத்துக் கொள்கிறான் என்று வைத்துக் கொள்வோம். வேறு ஒருவர் அடுத்த வாரம் இதே தொகை போட்டு இதே அளவில் எடுக்கிறார். அதற்கடுத்த வாரமும் இதே போல இன்னொருவராக ஐந்து வாரத்தில் ஐந்து பேர் போடுகிறார்கள். இறுதியில் ஐந்துபேர் மாதம் ரூ.2000 நிதியகத்தில் போட்டு அதிலிருந்து (மாதத்துக்கு நான்கு வாரங்கள் மட்டுமே என்று வசதிக்காக இங்கே வைத்துக்கொள்வோம்) அப்பணம் முழுவதையும் வாரா வாரமாக எடுத்துக் கொண்டு விடுகின்றனர் என்று நிதியகத்தார் காண்கின்றனர். நிதியகத்தில் இப்போது தொடப்படாமலே ரூ. 1,250 முதலிருப்பு தங்கி யிருக்கிறது. இது இன்னலில்லாமல் கடன் கொடுக்கப்படலாம். அதிலிருந்து வரும் வட்டி நூற்றுக்கு 5 வரையிருக்கும் என்று கொள்ளலாம். இங்ஙன மாகத் தற்கால நிதியகம் ஆயிரக்கணக்கானவர்கள் பணம் போடுமிடமாகிறது. ஆகவே இத்தொழிலில் மொத்தத்தில் வரும் பணம் கோடிக்கணக்காய் விடுகிறது. இவ்வளவும் நடப்பு வைப்பீடுகள், நிலை வைப்பீடுகள் (ஃபிக்ஸட் டெபாஸிட்ஸ்) வேறு. இதில் போடும் பணத்தை ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்கு, பொதுவாக ஓராண்டுக் காலத்துக்கு எடுப்பதில்லை என்று உறுதி கூறுகிறோம். இப் பொருளில் நூற்றுக்கு 2 வரை வட்டி கிடைக்கிறது. நம்மைப் போல் இன்னும் பலர் பணம் போடுவர். ஆகவே, நிதியகத்தில் நெடுநாள் தொடப்படாமல் இருக்கும் தொகை பெரிதாகிறது. (குறிப்பிட்ட வரையறைக்குமுன் நாம் பணம் பெறப்படா தென்றில்லை. ஆனால் பெறுவதானால் போட்ட பணத்தில் குறைவாகவே பெறலாம்) இப்பணம் 5 முதல் 15 சதமானம் வரை வட்டியுடன் திரும்பவும் கடன் கொடுக்க உதவுகிறது. வட்டியின் அளவு கடன் கொடுக்கும் நிலையத்தின் மதிப்பையும் தவணைக் காலத்தையும் பொறுத்திருக்கும். இப்பணம் நம் நிலை வைப்பீட்டில் நமக்குக் கொடுத்த நூற்றுக்கு 2 வட்டியும் எச்செலவும் போகக் குறைந்த அளவு நிதியகத்துக்கு நூற்றுக்கு 3 கிடைக்கும். இது பணம் போட்ட நமக்குக் கிடைப்பதை விடக் கூடுதலாகும். சுருங்கச் சொல்வ தானால் நிதியாளர்கள் என்றும் உற்பத்தி செய்வதுமில்லை. தம் சொந்தப் பணத்தைப் பயன் படுத்திக் கொள்வதுமில்லை. ஆயினும் அவை ஆதாயமடை கின்றன. தற்போதைய சமூக முறைக்கு இவர்கள் உண்மையிலேயே ஒப்பற்ற தலைவர்கள்தான்! வினா (22) : நீங்கள் கூறுகிறபடி தொழில்துறைகளை வாங்கப் போதிய பணம் முதலாளியிடம் இருக்குமானால் நிதியகங்களிலிருந்து இங்ஙனம் பணம் வாங்கத் தேவை என்ன? விடை : முதலாளி (வசதியை முன்னிட்டு அவனை ஒரு தனிப்பட்ட மனிதனாகக் கருதுவோம்) தன் பொருளை ஒரு தொழிலில் முதலீடாக இடுகிறான் அதன்பின் அவனுக்கு நடப்பு முதலீடு அதாவது மூலப் பொருள்கள், சம்பளங்கள், இயந்திரப் பாதுகாப்புச் செலவு, தொழிற் சாலைச் செலவு ஆகிய உடனடிச் செலவுகளுக்கான பணம் வேண்டும். மேலும் உற்பத்தி செய்த பொருள்கள் விற்கச் சிறிது காலம் பிடிக்கும். அவனுக்கும் போதிய பண வசதியிருந்தால், இந்நடப்பு முதலீட்டையும் அவனே போட முடியும். அவனிடம் அது இல்லாவிட்டால் தன் தொழிற் சாலையைப் பிணையமாக வைத்துச் சிறு தவணைக்குப் பணம் கடன் பெறுகிறான். நிதியகங்களும் இதனை வரவேற் கின்றன. ஏனெனில் அந்நிதியகத்தவர்களுக்குத் தொழிற்சாலை நல்ல பிணையமாகிறது. தவிர சிறு தவணைக்கு வட்டியும் மிகுதி. இதற்கிடையில் கடன் கொடுக்குமுன், ‘தொழிற்சாலை நல்ல நிலையிலிருக்கிறது, அதாவது அது உற்பத்தி செய்யும் சரக்குகள் வர்த்தகத்துக் கள விற்பனைக் குரியவையே, விற்காது கிடப்பவை யல்ல’ என்று நிதியகத்தார் உறுதியறிந்து கொள்வர். பொதுவாக தொழில் நிலையம் நல்ல நிலை பெற்ற பின்னர் நிதியகங்கள் அவற்றுக்குக் கடன் கொடுக்கமாட்டா. வினா (23) : ஒரு முதலாளி தன் முதலீட்டைத் தானே போடாமல் கடன் வாங்குவது அறிவற்ற செயல் எனறு நீங்கள் நினைக்கவில்லையா? விடை : தொடக்க ஆண்டுகளில் ஒரு தொழில்நிலையம் கடன் பெறுவதற்கு முட்டுப்பாடடையும்; அச்சமயம் அது தன் முதலீட்டையே நம்ப வேண்டும். அவன் உற்பத்தி செய்யும் சரக்கு வர்த்தகக் களத்தில் எங்ஙனம் விற்பனையாகும் என்று உறுதியில்லாததால் எந்த நிதிநிலையமும் அதற்குக் கடன் கொடாது. ஆனால் நிச்சயம் ஒரு தடவை வர்த்தகக் களத்தில் விற்பனை நின்றுவிட்ட பின் அதாவது சரக்குகளுக்குத் தொடர்ச்சியான விற்பனை வசதியைப் பெற்றுவிட்டபின், நிதியகம் நம்பிக்கையுறுதி பெறுகிறது. இங்ஙனம் இத்தருணங் களில் பணம் கடன் வாங்குவதில் தீமையோ நட்டமோ எதுவும் ஏற்படப் போவதில்லை. ஏனெனில் அதனை எப்போதும் திருப்பிக் கொடுத்துவிட முடியும். வட்டி சிறிது உயர்வானாலும் சரக்கு விற்பனையின் ஆதாயம் அதனைச் சரிசெய்துவிடும். எடுத்துக் காட்டாக ஒரு சரக்கு நூற்றுக்கு 15 ஆதாயம் தருகிறதானால் நூற்றுக்கு 5 வட்டி கொடுப்பதில் என்ன கேடு வரக்கூடும்! நிலையத்தினருக்குச் சொந்தப்பணம் இருக்கும்போது நடப்பு முதலீட்டை நிதியகத்திலிருந்து வாங்கினால் கூட அது நல்ல தொழில் முறையேயாகும். அது இன்னும் மிகுதி இயந்திரம், தளவாடங்களில் இடப்படலாம். இவையெல்லாவற்றாலும் உற்பத்தி பெருகவே செய்யும். இங்கும் நிதியகத்திற்கு நூற்றுக்கு 5ம் தொழிலகத்துக்கு 10ம் என்ற ஒழுங்கு அமையும். இதில் முதலாளியின் நிலையே சிறந்தது. வினா (24) : நாம் சுற்றிவரக் காணும் எல்லாத் தொழில்களும் முதலாளிகளுக்குரியவைதானா? அவை அவர்கள் முதலீட்டிலிருந்து உண்டாகுபவைதானா? விடை : தொழில் துறையிலீடுபடுத்தப்பட்ட முதல் முழுவதும் தனிப்பட்ட முதலாளிகளுக்கும் உரியதல்ல, தனிப் பட்ட நிதி நிலையத் தாருக்கும் உரியதல்ல. ஏனெனில் அடிக்கடி முதலாளிகள் ஒருங்குகூடித் தொழில் நிலையங்கள் நிறுவு கின்றனர். இன்னும் பல தறுவாய்களில் அவர்கள் பங்குசேர்த்துப் பொதுமக்கள் பணத்தை வைத்துச் செயலாற்று கின்றனர். உண்மையில் தொழில் துறையின் பெரும்பகுதி சிறு முத லீட்டாளனுக்குரியதே. அதன் ஆதிக்கம் மட்டுமே முதலாளியின் கையிலுள்ளது. முதலாளி செய்வது இது; சரக்குகள் செய்ய, மின்சாரம் உண்டு பண்ண அல்லது இதுபோன்ற செயலுக்காக அவன் ஒரு நிலையத்தை இயக்கி விடுகிறான். இதற்கு வேண்டும் பொருள் ரூ. 10,00,000 என்று வைத்துக் கொள்வோம். அவன் அதை 10,00,000 பங்குகளாகப் பிரிக்கிறான். பங்கு ரூ. 1 ஆக அதைப் பொதுமக்கள் வாங்கும்படி இணக்கமளிக்கிறான். நிலையம் தொடங்கு வோனாக அதாவது அதன் முதல்வனாக அவன் தனக்கு ரூ. 100க்கு 51 பங்கு வைத்துக் கொள்வதில் கருத்தாயிருந்துகொண்டு மீதி 100க்கு 49 பங்கைப் பொதுமக்கள் வாங்கும்படி செய்கிறான். நிலையத்தின் காரியங்கள் எல்லாம் பங்குக்காரர்களின் மொழித்திற மூலமே நடைபெறுவ தனால், அவன் பக்கம் எப்போதும் பெரும் பான்மை வலு இருக்கும் என்பது உறுதி. அவனே நிலையத்தின் நிர்வாகியாய் அதற்கான நிலையத்திலிருந்து ஊதியமும் பெறுகிறான். அவன் ஆதிக்கம் வகிக்கும் வகை இது. ஆயினும் காரியங்கள் எப்போதும் இவ்வண்ணம் நடை பெறுவதில்லை. ஒரே முதலாளியிடம் இதில் முதலிடுவதற் கான ரூ. 5,01,000ம் இருப்பதில்லை. அப்போது அவன் இன்னொரு முதலாளியையோ அல்லது இன்னும் சில பல முதலாளிகளையோ தன்னுடன் சேர்த்துக் கொண்டு அனைவருமாக 100க்கு 51 பங்கு எடுத்து அனைவருமாக அதில் ஆதிக்க நலம் பெறுவர். ஆனால் ஆதிக்கநலம் இதனிலும் குறைந்த பொறுப்புடன் கூடக் கிடைக்க முடியும். ஒரு மாதிரி எடுத்துக்காட்டுக் கூறுவோம். வெளியீட்டுப் பங்கு முதலீடு (ஐளளரநன ளுhயசந ஊயயீவையட) பொதுவாகத் தேவைக்கு இரட்டிப்பு மடங்கு பெருக்கப்படும். இதன்படி மேற்குறிப்பிட்ட நிலையத்தின் பங்கு முதலீடு ரூ. 10,00,000க்குப் பதிவு செய்யப்படும். ஆனால் ரூ. 5 லட்சமே செலுத்தப்பட்ட முதலீடாக (ளுரளெஉசiநென ஊயயீவையட) இணக்கமளிக்கப்படும். இதில் முதலாளி 100க்கு 51 வாங்குகிறான். அதாவது 2 லட்சத்துக்குச் சற்று மேற்பட வாங்குகிறான். இம்முயற்சி வெற்றி பெற்று அவனுக்கு 100க்கு 51 ஆதாயப் பங்கு கிடைத்த தென்று வைத்துக்கொள்வோம். நிதியகத்தில் போட்டு வைப்பதின் மேல் இது 7 பங்கு மிகுதி. ஆகவே இப்பங்குகளை வாங்க யாவரும் நெருக்கித்தள்ளி வருவர். இவை பொதுவிலைக் களத்தில் கிடைப்பதாத லால் போட்டி மிகுந்து விலையேறும். ஒரு ரூபாய் பங்கு அதன் முகப்பு விலையைப் போல் மூன்று நான்கு மடங்கு விலைதரும். ஆதிக்க உரிமையுடைய முதலாளி முகப்பு விலையிலேயே அத்தனைப் பங்கையும் வாங்கிவிடவும் செய்யலாம். இங்ஙனம் செய்தால் ஆண்டுதோறும் இவ்வுயர் ஆதாயப் பங்கைப் பெறுவான். அல்லது அவன் அதன் உயர்ந்த விலைக்கள மதிப்பின்படியே அதனைத் திரும்ப விற்றும் ஆதாயம் பெறுவான். இங்ஙனம் செய்வதால் அவன் இதற்குமுன் தொழிலிலிட்ட முதல் முழுவதையும் மீண்டும் பெற்றுக் கொண்டு அதன் மேலும் 100க்கு 51 பங்குக்கு உரிமையுடையவனாயிருப்பான்! இது மட்டுமோ? இந்த 100க்கு 51 பங்கைக்கூட - இதுவும் உண்மையில் மொத்தத்தில் 100க்கு 25 1/2 பங்கு தான் - அவன் பெற்றுத் தீரவேண்டு மென்பதில்லை. முதலாவதாக ஒரு நிலையத்தின் பொதுக் கூட்டத்திற்குப் பங்கு தாரர்கள் எல்லாரையும் வரவழைத்து விடுவதில்லை. அவர்களில் பொதுவாகப் பலர் வராமலே இருப்பர். இரண்டாவதாக எப்போதுமே பங்குதாரர்களில் சிலரை அவர்கள் தம்பக்கம் சேர்த்துக் கொள்ளவும் முடியும். பங்குதாரர்களுடைய மனப்பான்மையோ தம் முதலீடு பத்திரமாயிருக்க வேண்டும் என்பதும் போதிய ஆதாயப்பங்கு வரவேண்டும் என்பதும் தான். தொழிலில் யார் ஆதிக்கம் வகிக்கின்றனர் என்பதில் அவர் களுக்குப் பொதுவாகக் கவலை கிடையாது. எனவே சிறு பங்குக்காரர்கள் கிட்டத்தட்டப் பாதிப் பணத்தை முதலிட்டவர் களாயினும், முதலாளியே ஆதாயத்தில் பெரும்பகுதி கொள் பவனாகிறான். முயற்சி வெற்றியடைவதுபோலத் தோல்வியுறவும் கூடும். இங்கும் தொழில் நிலையச் சட்டம் முதலாளிக்குப் பாது காப்பளிக்கிறது. பங்குதாரர்களுக்கு அவர்கள் நட்டத்தை அவன் சரி செய்து கொடுக்க வேண்டிய தில்லை. முடிவாகக் கூறினால் இவை எல்லாவற்றின் முடிந்த சுருக்கம் இதுதான் முதலாளி தொடக்கத்திலேயே ஒரு சலுகையுடன் தொடங்குகிறான். அதாவது தொழில் நிலையம் தொடங்குவதற்குரிய ஒரு பெருந் தொகையுடன் அவன் செயலாற்ற முற்படுகிறான். அது அவன் முதலிடும் அளவைவிட நாலு மடங்காக மதிப்பிடப்படுகிறது என்று கூறலாம். அதன் மீத மதிப்பை அவன் மக்களிடமிருந்து பங்காகச் சேர்க்கிறான். தன் ஊழியர்களுக்கு அவன் குறைந்த அளவு தொகை கொடுத்தனுப்பி விட்டுத் தனக்கு அதை உற்பத்தி செய்யப்பிடித்த தொகையைவிட மிகுதியான விலையில் அதை விற்கிறான். வினா (25) : நடப்பு இதுவானால், நாமும் ஏன் முதலாளி ஆகக் கூடாது? அதில் ஒவ்வொரு படியிலும் ஆதாயமே யிருப்பதாகக் காணப்படுகிறதே. விடை : சிறியோராகிய உங்கட்கு இது எப்போதும் முடிவதன்று. உண்மையில் முடியாதது என்று கூடக் கூறலாம். நீ ஈட்டுவதிலிருந்து ஒரு செல்வனாகுமளவு நீ பணம் மீத்துவைப்ப தென்பது முடிகிற காரியமா. கணித்துப் பார்த்து அது முடியாதது என்பதைக் கவனிக்க, இரண்டாவது ஒரு சிறு அளவு செல்வத்தை நீ சேர்த்துவிட்டாலும் எப்போதும் உள்ள போட்டி அப்போதும் இருக்கும். அதில் வரும் இடையூறுகள் எப்போதுமே ஒரு பொது மனிதனால் தாங்கக் கூடியதல்ல. நீ ஒரு தொழில் நிலையம் நிறுவத் துணிந்தால், ஒரு போட்டி முதலாளி விலைவெட்டுப் போட்டியிலிறங்குவான். நீ உன் விலையைக் குறைக்கும்படி கட்டாயப் படுத்தப்படுவாய். இது முழு நட்டமாகும். மேலும் போட்டியினால் நீ சம்பளங் குறைக்க வேண்டிவரும். அதனால் உன் ஊழியரிடையே மனக்கசப்பு ஏற்பட்டு அவர்கள் உன் தொழிலை விட்டுப் போகாமலே ஒன்றுபட்டு வேலை நிறுத்தம் செய்து உன் தொழிலை அழிக்க முற்பட்டாலும் முற்படுவர். இப்படியாக உனக்குப் பெரிய, விலக்க முடியாத இடர்கள் உண்டாகும். அதற்கிடையே உன் போட்டியெதிரியிடம் கூடுதல் பணமும் கூடுதல் கடன் நம்பிக்கைப் பொறுப்பும் இருப்பதனால் உன் தோல்வியை அவன் தன் வெற்றி யாக்கிக் கொள்வான். பண நெருக்கடி யிலுள்ள மற்றவர்களைப் போல நீயும் வட்டிக்கார னிடம் போக வேண்டிவரும். உன்வகையில் இது நிதியகமாகவே யிருக்கும். நிதியகத்தார் உன் இடைஞ்சல் நிலையைக் கண்டு பிறரைவிட உன்னிடம் மிகுதி வட்டிவீதம் கோருவர். இதற்கு நீ ஒத்துக்கொண்டால் இதனால் தொழிலின் தடங்கல்கள் பெருகி நீ கடனை அடைக்க முடியாமல் போய்விடும். அதன்பின் நிதியகம் உனக்கெதிராக வழக்குமன்றத் தீர்ப்பு பெறும், அல்லது நிலையத்தில் ஆதிக்கப் பங்கு கோரும். அதன்பின் நிதியகம் உன்னை முற்றிலும் வெளியேற்றிவிடலாம் அல்லது உன்னை வைத்துக்கொண்டு ஆதாயத்தின் பெரும்பகுதியைத் தான் பெற்று வரலாம். அன்றி அது தன் பங்குகளை யெல்லாம் அவற்றை வாங்கத் துடித்துக்கொண்டிருக்கும் உன் எதிரிக்கே விற்றுவிடவும் செய்யக்கூடும். இவ்வாறு முதலாளியா யிருக்க வேண்டுமானால் தொடக்கத்திலிருந்து ஒரு கணிசமான அளவு செல்வம் உன்னிடமிருக்கவேண்டுவது இன்றியமையாத தாகும். இறுதியாக, ஆராய்ந்து பார்த்தால் தொழில்துறையின் ஆதிக்கம் நிதியகத்தின் நலன்களுக்குரியவன் அதாவது நிதியாளன் கையிலேயே உள்ளது. எனவே முதலாளியாக மட்டும் இருந்தால் போதாது - சற்று மிகுதி முதலுடைய முதலாளியாகவும் இருக்க வேண்டும். நிதியகத் தானாகவும் இருந்தால் இன்னும் நன்று. மற்ற முதலாளிகளுடன் சேர்ந்து ஒரு பொறுப்புக்குழு (ட்ரஸ்ட்) ஆயிருந்தால் இதனினும் சிறப்பு. மொத்தத்தில் முதலாளித்துவம் என்ற முறை மேன்மேலும் செல்வத்தை ஓரிடம் குவிக்கப் பயன்படும் முறையேயாகும். எனினும் இக் காரணத்தால் கூட முதலாளித்துவம் உறுதியும் பாதுகாப்பும் உடைய முறையன்று. உண்மையில் முதலாளித்துவம் இன்று செல்லும் போக்கு பித்தவெறி கொண்டலைபவன் போக்கேயாகும். இப் பொய்வாழ்வுக் ‘குமிழி’ ஒரு நாள் வெடித்தே தீரவேண்டும். முதலாளித்துவ முறை அழிவை நோக்கித் தலைகுப்புற விழுந்து கொண்டிருக்கும் ஒன்றேயாகும். வினா (26) : முதலாளியின் முதல் பெரிதாகுந்தோறும் அவன் முதலீட்டுக்குப் பாதுகாப்பு மிகுதி; அவன் ஆதாயம் மிகுதி. அப்படியிருக்க, முதலாளித்துவ முறை அழிவை நோக்கித் தலைகுப்புற விழுந்து கொண்டிருக்கிறது என்பது எங்ஙனம்? விடை : ஒரு சிலரிடத்தில் பணம் எவ்வளவு குவிகிறதோ, அவ்வளவுக்குப் பொதுமக்களிடையே வறுமை மிகும். மிகத் தீவிரத் தறுவாய்களில் மக்கள் கிளர்ந்தெழுந்து ரஷ்யாவில் நடைபெற்றது போல அதனை அழிக்க முற்படுவர். சென்ற உலகப் போருக்குப்பின் பல நாடுகளில் கிளர்ச்சிகள் ஏற்பட்டன; ஆனால் மக்கள் ஒன்றுபடாததினாலோ, வெளிநாட்டு முதலாளித்துவ ஆட்சியாளர்கள் உதவியினாலோ அவ்வவ் விடத்து முதலாளிகள் மக்களை அடக்கித் தம் வல்லமையை மீண்டும் நிலைநாட்டினர். இதற்கு நேர்மாறாக ரஷ்யாவில் முதலாளித்துவம் முற்றிலும் முறியடிக்கப்பட்டு, சமதர்மத்தையே குறிக்கோளாகக் கொண்ட உழைப்பாளிகள் ஆட்சி நிறுவப்பட்டது. வேறு வகைகளிலும் முதலாளித்துவம் விரைந்த இறக்கப் பாதையில் செல்வதுண்டு. இது வேலைநிறுத்தம், விலை மந்தம் ஆகியவைகளால் ஆகும். இவை தீவிரமாகும்போது நெருக்கடி ஏற்படும். நெருக்கடி நிலைமை என்பது தீவிர சமூகப் போராட்டம் ஏற்பட்டு அதன் பயனாகப் பொருளியல் முறையில் தடங்கலும் முட்டுக்கட்டை நிலையும் உண்டாவதாகும். இதன் எதிரொலிகள் அரசியலிலும் ஆட்சியாளரிடையிலும் காணப்படும். முட்டுக் கட்டை தீர்க்க முடியாததாகிச் சச்சரவுகள் பெருகும்போது சில சமயம் உள்நாட்டுப் போர் எழுகிறது. வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நாட்டின் முதலாளிகள் அடிக்கடி மற்ற நாடுகளின் முதலாளி களிடமிருந்து படை உதவி கோருவதும் உண்டு. சில சமயங்களில் வேறொரு நாட்டின்மீது போர் தொடுத்து அதன் மூலம் நெருக்கடி தீர்க்கவும் முயற்சி செய்யப் படும். எதிரி முதலாளி நாடுகளின் தொழிற் செல்வங்களை நட்ட ஈடாகப் பெறும் எண்ணத்துடன் இப்போர்கள் நடத்தப் பெறுகின்றன. அத்துடன் வெல்லப்பட்ட நாட்டு மக்கள் தங்கள் சரக்குகளின் எதிர்கால விற்பனைக் களத்தினராவர் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. அடிக்கடி தன் அக நெருக்கடியை தீர்க்க முதலாளித்துவம் போரையே நற்கருவியாக நாடுகிறது. போர்களும் வரவர அழிவுப் போர்களாய் வருகின்றன. ஏனெனில் இன்று ஏற்பட்டுள்ள நுணுக்கத் துறை மேம்பாடுகளால் மிகவும் அழிமதி செய்யும் படைக்கருவிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. வினா (27) : மிகமிக நன்று. பொருளியல்துறையை மட்டிலும் ஆராய்ந்தே நீங்கள் இம்முடிவுகளுக்கு வந்துள்ளீர்கள். ஆனால் அரசியலைப் பற்றி நீங்கள் கருத்துச் செலுத்தவில்லை. ஆனால் இன்றோ நம் வாழ்வில் அதுவே பெரும் பங்குடையதாயிருக்கிறது. விடை : மனிதனின் முக்கிய ஈடுபாடு தனி முறையிலும் சரி, குழு முறையிலும் சரி, பிழைப்புக்கு வழி தேடுவதுதான். ஆகவே சமதர்மம் பொருளியல் துறையையே நம் அரசியல் வாழ்வின் அடிப்படை என்று கொள்கின்றது. வினா (28) : அரசியல் துறை என்பதற்கு நீங்கள் தரும் விளக்கம் யாது? விடை : சமூகத்தில் குழப்பங்களுக்கு இடமில்லாமலும் மனிதன் மன நிறைவுடனும் இன்பத்துடனும் வாழும்படியும் நல்லொழுக்க உறவை நிலைநாட்டுவதனையே அரசியல் என்கிறோம். இந்நிலையை உறுதியாய் நிறுவுவதற்காகவே அரசாங்கம் என்ற ஓரமைப்பை உண்டுபண்ணி சட்டங்கள் எனப்படும் கட்டுப்பாடுகளை மக்கள் செயல் வாழ்க்கை மீது சுமத்தும் உரிமையையும் அதனிடம் தந்துள்ளோம். இச்சட்டங்கள் தனி மனிதருக்கும் உண்டு. குழுக்கள், வகுப்புகளுக்கும் உண்டு. சுருக்கமாகக் கூறினால், ஒரு குறிப்பிட்ட வரம்புவரை தனி மனிதன் தன் விருப்பம் போல் நடக்கலாம். அதற்கு மேற்பட அவன் நடத்தலாகாது; ஏனெனில் அது பிறருக்கு இன்னலுண்டாக்கும். வினா (29) : பொருளியலே அரசியலின் அடிப்படை என்று கூறினீர்களே : அது எப்படி? விடை : அரசியலின் முதன்மையான அடிப்படை பொருளியல் என்பது இன்னும் பொருத்தமாயிருக்கும். சில சட்டங்கள் முற்றிலும் சமூகத் தொடர்பு மட்டும் உடையதென்று தோற்றக்கூடும். ஆனால் இறுதி யாராய்ச்சியில் அவையும் பொருளியல் தொடர்புடையவை யாகவே காணப்படும். எடுத்துக்காட்டாக, பல முதலாளித்துவ நாடுகளில் கொலைக் குற்றத்துக்குத் தூக்குத் தண்டனை என்று சட்டம் விதிக்கப் பட்டுள்ளது. இது பார்வைக்கு ஒரு தண்டனை; ஒழுக்க முறையில் நேர்மையான ஒரு தீமையெதிர்ப்பு முறை என்றே தோற்றக் கூடும். ஆனால் உண்மை இது அன்று. ஒவ்வொரு குடியுரிமையாளனும் அரசியலின் தலைமைப் பேருரிமைக்கு உட்ப்பட்டவன். அதாவது, அவன் நிலை ஓர் அடிமையின் நிலை போன்றது. ஏனெனில் அவன் தொழிலாற்றலைப் பயன்படுத்தும் உரிமை அரசியலுக்கு உண்டு. ஆகவே கொலை என்பதன் மூலம் அரசியலின் உரிமைக்குப் பங்கம் ஏற்படுகிறது. ஒரு அடிமையின் தொழில் உரிமை கெடுகிறது. இங்ஙனம் அரசியலாருக்குரிய தொழிலடிமை களின் தொழிலுரிமைச் செல்வம் கெடாதபடி பாதுகாக்கப்படுவ தற்கே படுகொலைக்குத் தூக்குத் தண்டனை வகுக்கப்பட்டிருக் கிறது. நில உடைமை முறையிருந்த நாட்களில் தொழில்சக்தி இவ்வளவு அருமையாயில்லை. ஆகவே கொலையும் அவ்வளவு பெருத்த குற்றமாகக் கருதப்படவில்லை. கொலையாளிகள் பலசமயம் தண்டனையில்லாமலேயே செல்வதுமுண்டு. மற்போர்கள் போன்ற நிகழ்ச்சிகளில் கொலைகள் வகையில் சலுகைகள் கூடக் காட்டப்பட்டதுண்டு. முதலாளித்துவ சமூகத்திலோவெனில் தொழில்சக்தி மூலம் மனிதன் உயிருக்கு ஒரு பொருள் மதிப்பு ஏற்பட்டுவிடுகிறது. அதைப் பாதுகாப்பதற் கான தலைசிறந்த வழி அதற்கு மிகச் சிறந்த விலை - கொலைத்தண்டனை - கொடுத்து அதனை வாங்குவதே. தற்காலத்தில் முன்னேற்றமடைந்துள்ள முதலாளித்துவ நாடுகளில் கொலைத் தண்டனையை மாற்றி வாழ்நாள் சிறைத் தண்டனையாக்க வேண்டுமென்ற கூக்குரல் எழுந்துள்ளது. இது ஏன் தெரியுமா? வாழ்நாள் தண்டனையால் அரசியலார் சம்பளம் கொடுக் காமலே குற்றத்தண்டனை பெற்றவன் உழைப்பை அவன் மறைவுவரைப் பயன்படுத்தலாம் அன்றோ? நாம் முக்கியமாகக் குறிப்பிட்ட உண்மை, அரசியலும் பொருளிய லும் இணைபிரிக்க முடியாதபடி ஒன்றுடனொன்று பிணைக்கப்பட் டுள்ளது என்பதே. மேற்குறிப்பிட்டது இதன் சற்று மறைபட்ட ஓரினமேயாகும். இப்போது பிரிட்டனிலிருந்து நேரடியான எடுத்துக் காட்டு ஒன்று தருவோம். 18, 19ஆம் நூற்றாண்டுகளில் பிரிட்டனில் ஏற்பட்டிருந்த மிகப்பெரிய அரசியல் கிளர்ச்சி பாதுகாப்பு வாணிகம் வேண்டுமா, தங்குதடையற்ற வாணிகம் வேண்டுமா என்பதே. தொழில் உலகில் பிரிட்டனின் தொழிலே முதன்முதலில் வளர்ச்சி யுற்றதாதலால் சிறு கைத்தொழிலாளரையும், கலைத் தொழிலாளரையும் நம்பியிருந்த பிற நாடுகளைவிட மலிவான விலையிலும் மிகுதியான அளவிலும் பிரிட்ட னால் சரக்குகளை உண்டுபண்ண முடிந்தது. நாளடைவில் பிறர் இயந்திர உற்பத்தித் தொழிலில் இறங்கிய பின்னும் பிரிட்டனின் போட்டி அவர்கள் சக்திக்கு மேற்பட்டதாகவேயிருந்தது. இக்குறையைச் சரி செய்ய அவர்கள் பாதுகாப்பு வரிமுறையும் பிற தற்பாதுகாப்புக்கான முறைகளையும் பின்பற்றினர். எடுத்துக்காட்டாக, இதன்படி ஃபிரஞ்சு எல்லைக்குள் இறக்குமதியாகும் ஒவ்வொரு பிரிட்டிஷ் சரக்குக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் ஃபிரெஞ்சு அரசியலாருக்குச் செல்லும். இதன் மூலம் பிரிட்டிஷ் சரக்கின் விலை சரி செய்யப்படவே, அது ஃபிரஞ்சுச் சரக்குகளுடன் போட்டியிட்டு வெல்ல முடியாது போயிற்று. இதன் பயனாகவே சில பிரிட்டிஷ் அரசியல் துறையினர் உலகெங்கும் பாதுகாப்பு வரிகளும் இறக்குமதி வரிகளும் நீக்கப்படவேண்டும் என்று கிளர்ச்சி செய்யலாயினர். இது வரலாறு சார்ந்த செய்தியென்றும் ஒரு நாட்டின் அரசியல் துறை சார்ந்தது மட்டுமேயென்றும் கூறப்படலாம். ஆனால் உண்மை அதுவன்று. எந்த நாட்டின் இன்றைய அரசியலையும் கவனித்துப் பாருங்கள். அது கண்ணும் கருத்து மாய்க் கவனிக்கும் துறைகள் வாணிகம், ஏற்றுமதிகள், பாதுகாப்பு வரிகள், தொழில் பாதுகாப்பு, பங்கீடுகள், கட்டுப்பாடுகள் ஆகியவையே. போரைப் பற்றிப் பேசவோ எழுதவோ செய்யும்போது கூட, அதன் பொருளியல் நன்மை தீமைகளை ஒட்டியே அதுபற்றிப் பேசுவர். வினா (30) : இது வலிந்து கூறும் மிகைப்பட்ட உரையாகவே காண்கிறது. இதைத் தெளிவாக விளக்கிக் கூறுங்கள். விடை : முதலாளித்துவத்தின் தலைமையில் இயங்கும் தொழில் பெருக்கமாகிய ஒரே பிரச்சனையைச் சுற்றிச் சுற்றி உலகின் அரசியல் வளையமாடுகிறது. அதன் முழுச்சூழல் களையும் உணர அதன் வரலாற்றைச் சுருக்கமாகக் கண்டுணர வேண்டும். மேலே குறிப்பிட்டபடி தொழிற் புரட்சிக்கு ஆளான முதல் நாடு பிரிட்டனே. அதாவது சிறு கைத்தொழிலாளருக்குப் பதிலாக விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி சரக்குகளை உற்பத்தி செய்யத் தொடங்கியது பிரிட்டனே. நீராவி ஒரு சக்தி யென்பதை ஜோம்ஸ்வாட் ஒரு நாள் திடீரென்று கண்டு கொண்டான். ஏனெனில் அது தேயிலைக் கெண்டியின் மூடியை மேலே தள்ள முடிந்ததைக் கவனித்தான். பல சோதனைக் காட்சிகள் மூலம் விலங்குகளின் சக்தியோ மனித சக்தியோ தூக்குவதை விட எளிதாக இன்னும் பளுவான பொருள்களைத் தூக்கித் தள்ள அது பயன்படும் என்று அவன் கண்டான். சரக்குகள் உண்டுபண்ணவும், கொண்டு செல்லவும் முதன் முதல் ஈடுபடுத்தப்பட்ட சக்தி நீராவியே. நீராவியின் ஆற்றலைக் கண்டுபிடித்தவர்களுள் வாட் முதல்வனல்லன் என்பது உண்மையே. இயேசு பிறப்பதற்கு இரண்டு நூற்றாண்டுகட்குமுன் ஒரு கிரேக்கன் அதனைக் கவனித்திருந்த துண்டு. ஆனால் அந்நாட்களில் மனிதன் தேவைகள் மிகக் குறைவு. மக்கள் தொகையும் குறைவு. போக்குவரவு வாய்ப்புகளும் மிகச் சில; மிகவும் `கர்நாடக’மானவை. இவற்றால் பெருவாரி உற்பத்தி தடைப்பட்டிருந்தது. மேலும் நீராவியால் சரக்குகளை உற்பத்தி செய்வதற்கும் அப்பொருளுக்கு மாற்றாகப் பொருள் பெறுவதற்கும் போதிய முதற்பொருள் கிடையாது. அந் நாட்களில் இயந்திரங்கள் உற்பத்தி செய்வதும் பெருஞ்செலவு பிடிக்கும் செயல் ஆகும். ஏனெனில் அதற்கான இரும்பு சிறு சிறு அளவிலேயே எடுக்கப்பட்டது. திட்ப நுட்பம் வாய்ந்த இயந்திரங்கள் செய்யத் தொழிலாளர்களும் போதவில்லை. இக்காரணங்களினால் கிரேக்கக் கலைஞன் கண்ட மெய்மை பயன்படுத்தப் படாமலே இருந்தது. இருபது நூற்றாண்டுகளுக்குப் பின் நிலைமைகள் மாறின. உலகின் மக்கள் தொகை பெருகிற்று. போக்குவரவு வாய்ப்புகள் மிகுதியாயின. அத்துடன் உலகின் உற்பத்தி வளத்தில் முதன்மை வாய்ந்து, கலைத் தொழிலாளர் மூலம் உலகின் செல்வத்தில் ஒரு பெரும்பகுதியைத் தன்னிடம் குவித்து வைத்திருந்த இந்தியாவும் `கண்டுபிடிக்கப்பட்டு’ விட்டது. கை நெசவுத் துணிகளையும் பிற பொருள்களையும் மற்ற நாடுகளுக்குத் தருவித்து அதன் பயனாய் அவற்றுக் கீடாகப் பெற்ற தங்கம், வெள்ளி, பொற்கட்டி முதலிய பண்டமாற்றுக்குதவும் பொருள்கள் மூலம் இந்தியாவில் இச்செல்வம் குவிந்திருந்தது. பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கழகம் முதன்முதலில் இங்கே வந்தது வாணிகம் செய்வதற்காகவே. ஆனால் பிற்பட வாணிகம் செய்வதைவிடச் சூறையாடுவதும் அதன்பின் இந்நாட்டு மன்னர்களையும் இளங்கோக்களையும் வென்றாளுவதும் எளிதெனக்கண்டது. இச்சூறையாட்டுச் செல்வம் இங்கிலாந்தில் சென்று பாய்ந்து அங்கே ஒரு மாபெரிய வாணிகக் களத்தை உண்டுபண்ணிற்று. இங்ஙனமாக இந்தியாவி லிருந்து பெற்ற பருத்தியைக் கொண்டு நீராவியின் உதவியால் ஆடை உற்பத்தி செய்வதற்கான முதல்தர வாய்ப்பையும் சூழ்நிலையையும் அதே இந்தியாவின் ஆட்சியே அவர்கட்கு உண்டு பண்ணியது. அங்கே உற்பத்தி செய்த துணி அவ்விடத்துத் தேவையை நிறைவேற்றியபின் கோடிக்கணக்கான மக்கள் வளத்தையுடைய இந்தியாவுக்கே திரும்பவும் அனுப்பப்பட முடியும். மூலப்பொருள்களையும் ஏராளமாகத் தந்து அத்துடன் பெருவாரியான உற்பத்திப் பொருள்களுக்கும் விற்பனைக்களமா யமையும் ஒரு பெரிய நாடு அவர்கள் கையில் சிக்கியது. இவ்வகையிலேயே பொருளுற்பத்தியில் நீராவியை ஈடுபடுத்தித் தொழிற் புரட்சிக்கு வழி வகுப்பதில் பிரிட்டன் முதல் நாடாக முடிந்தது. ஆனால் இயந்திரத் தொழில் வரம்பற்ற அளவில் உற்பத்தி செய்யும் தன்மையுடையது. ஆகவே பிரிட்டன் பிரிட்டிஷார் தேவைகளுக்கும், இந்திய விற்பனைக் களத்தின் தேவைக்கும் பெரிதளவு அப்பாற்பட்டு மிகுதியாக உற்பத்தி செய்ய முடிந்தது. இதுவே இன்னும் மிகுதி நாடுகளை வென்றடக்கப் பிரிட்டனுக்குத் தூண்டுதல் தந்தது. இவ்விற்பனைக் களங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வண்ணம் இன்னும் மிகுதி போர் வலிவு வாய்ந்த பிற இடங்களை வென்றுபிடிக்க வேண்டியதாயிற்று. தன் வாணிகத்தில் வேறு எந்த வெளியாரும் தலையிடாமல் பாதுகாக்க இவை தேவையாயின. பழங்காலத்தில் இந்தியாவுக்கு வரும் கடல் வழி அட்லாண்டிக் மாகடல், இந்திய மாகடல் கடந்து நன்னம்பிக்கை முனை வழி வருவதாகும். நடுநிலக் கடலும் செங்கடலும் ஒரு கால்வாய் மூலம் இணைக்கப் படுமானால் இப்பாதை அரையளவு தொலைவு உடையதாகி விடும். சூயஸ் கால்வாய் வெட்டப்பட்டதன் காரணம் இதுவே. இக் கால்வாயைப் பாதுகாப்பதற்காக ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் நீண்ட கடற்கரைப் பகுதிகளை வெல்ல வேண்டி வந்தது. தொழில் முன்னேற்றமே இவ்வாறாக பிரிட்டனை நாடு வெல்லும் துறைக்கு இழுத்து வெளிநாட்டு அரசியல் சுழல்களிலும் அதை நடத்திச் செல்லலாயிற்று. இயந்திரங்களை உற்பத்தி செய்வதிலும் மற்ற நாடுகள் பிரிட்டனுக்குப் பிற்பட்டேயிருந்தன. ஆகவே பிரிட்டனால் அந்நாடுகளுக்கும் தன் உற்பத்திப் பொருள்களை விற்க முடிந்தது. ஆயினும் இது நெடுநாள் நடக்க முடிய வில்லை. ஏனெனில் ஐரோப்பிய விஞ்ஞானிகளும் நீராவி சக்தியைக் கொண்டு சோதனைகள் நடத்தத் தொடங்கி விட்டனர். அவர்களும் இயந்திரங்களைக் கண்டுபிடித்தனர். இயந்திரத் தொழில் ஐரோப்பிய நாடுகளிலும் பிறப்புற்றது. சிறப்பாக ஜெர்மனி பிரிட்டனுக்கு பெரும் போட்டியாயமைந்தது. பெருவாரியாகத் தொழில் வளமடையத்தக்க வகையில் நிலக்கரி வளமும் இரும்பு வளமும் ஜெர்மனியில் இருந்தது அதற்குச் சாதகமான நிலையை உண்டுபண்ணிற்று. இதே திசை நாடி மேற்கில் அட்லாண்டிக் கடலுக் கப்பால் மேல் கரையிலுள்ள அமெரிக்கா வும் முன்னேறத் தொடங்கிற்று. அமெரிக்காவும் கனிப்பொருள் வளமிக்க பெரிய நாடாயிருந்தது. ஆயினும் இங்கே மனித சக்தியில் குறைபாடு ஏற்பட்டிருந்தது. வெளிநாட்டினரைக் குடியேறும்படி அழைத்தது அமெரிக்கா. இவ்வாட்குறைபாட்டைச் சரி செய்து கொண்டது. இம்முயற்சி ஆள் வலுவை உயர்த்தியதுடன் மட்டுமன்றி விஞ்ஞான அறிவாற்றலையும் அத்துடன் கொண்டுவந்து சேர்த்தது. ஐரோப்பாவின் எல்லா நாடுகளிலிருந்தும், சிறப்பாக பிரிட்டனிலிருந்தும் ஜெர்மனியிலிருந்தும் விஞ்ஞான அறிஞர்கள் வந்து குடியேறினர். உலகின் ஒவ்வொரு நாட்டிலும் தொழில் வளர்ச்சியே அரசியல் வாழ்வின் உச்ச நோக்கமாக ஆன வகை இதுவே. இந் நூற்றாண்டின் தொடக்கத்திற்குள் ஜெர்மன் தொழில் பிரமாண்டமான அளவில் வளர்ச்சியடைந்து பிரிட்டிஷ் தொழிலுடன் வெற்றிகரமாகப் போட்டிபோடும் நிலையை அடைந்தது. தொழில் நுட்பத்தைப் பற்றிய மட்டில், ஜெர்மனி பிரிட்டனைவிட முன்னேற்ற மடைந்து வந்தது. அதாவது அந் நாடு குறைந்த தொழிலாளர் செலவில் கூடுதல் சரக்கு உற்பத்தி செய்யமுடிந்தது. ஆயினும் தொழிலுக்கு இன்றியமையாத இரண்டு கூறுகள் அங்கே குறைபட்டன; அவை மூலப் பொருள்களும் `பாதுகாப்பான விற்பனைக் களங்களும்’ ஆகும். பிரிட்டனுக்கு இத்தகைய விற்பனைக் களங்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் இருந்தன வென்பதையும் அவையே `குடியேற்ற நாடுகள்’ எனப்பட்டன என்பதையும் மேலே காட்டியுள்ளோம். இதற்கிடையில் பிரிட்டனுடன் கூடவே ஃபிரான்சு, ரஷ்யா, ஹாலந்து, இத்தாலி ஆகிய நாடுகளும் குடியேற்ற நாடுகள் பெறத் தொடங்கின. ஆயினும் இவை பிரிட்டனின் குடியேற்ற நாடுகளவ்வளவு வளப்பமுடையவையாயில்லை. எப்படியும் குடியேற்ற நாட்டுலகம் மேற்கூறிய இவ்வல்லரசுகள் ஒன்று அல்லது மற்றொன்றின் ஆட்சியிலேயே வந்தமைந்தது. ஜெர்மன் தொழிலைத் திக்குமுக்காடச் செய்யும் நோக்கத்துடன் இவ் வல்லரசுகள் தம் குடியேற்ற நாடுகள் அனுப்பும் மூலப்பொருள் களின் விலையை உயர்த்தியும் அங்கே வரும் ஜெர்மன் உற்பத்திப் பொருள்கள்மீது பாதுகாப்பு வரி விதித்தும் வந்தன. இவ்வாறு ஜெர்மனியின் தொழில் நுட்பத்துறை முன்னேற்றம் குடியேற்ற நாடுகள் இல்லாத காரணத்தினால் பயனற்றதாக்கப்பட்டது. ஜெர்மனி தன் நிலைமையைச் சரிசெய்துகொள்ள அதற்கு ஒரே ஒரு வழிதானிருந்தது. அவ்வழி போட்டி வல்லரசுகள் மீது போர் தொடுப்பதே. முதல் உலகப்போர் ஏற்பட்டதன் காரணம் இது. பொருளியல் பிரச்சினையே உலகின் அரசியல் வாழ்வுக்கு அடிப்படை என்பதற்கு இதுவே போதிய விளக்கம் ஆகும். இதனை இன்னும் சற்று விரிவாக விளக்குவோம். முதல் உலகப்போர் தொடங்கிய சமயம் அமெரிக்காவும் தொழில் நுட்பத் துறையில் முன்னேறி ஜெர்மனியின் நிலையைக்கூட எட்டி விட்டதானாலும், வல்லரசு என்ற முறையில் அது ஜெர்மனிக்கோ பிரிட்டனுக்கோ ஒப்பாயிருக்கவில்லை. இன்னும் அதன் முக்கிய குறைபாடு மனித சக்தி போதாமையாகவே இருந்தது. முதல் உலகப்போருக்குப்பின்கூட அமெரிக்கா தொடர்ந்து வெளி நாட்டார் குடியேறுவதை வரவேற்றது இதனாலேயே, தன்னிடம் இயல்பாகவே இருக்கும் மனித சக்தியையும் வீணாக்கவேண்டாம் என்பதனாலேயே அது முதல் உலகப் போரில் கலந்துகொள்ள மறுத்தது. போரில் கலந்த போதும் அது வெற்றிபெற்ற பக்கமே சேர்ந்தது. அதாவது பிரிட்டனுடனும் பிரிட்டனின் நேசநாடு களுடனும் அது கைகொடுத்தது. இதுமட்டுமின்றிப் போர் நடக்கும்போதுகூட அது இரு தரப்பினருக்கும் சரக்குகள் விற்றுப் பிரமாண்ட அளவில் ஊதியம் பெற்றது. இவ்வகையில் முதல் உலகப்போரிலிருந்து அமெரிக்கா முன்னிலும் செல்வமும் வலிவும் மிக்க வல்லரசாக வளர்ந்தது. முதல் உலகப்போரில் ஜெர்மனி அடைந்த தோல்வி அதன் தொழிலை நலிவுறுத்திய தாயினும் பிரிட்டிஷ் தொழிலுக்கும் ஜெர்மன் தொழிலுக்கும் உள்ள போட்டி தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஃபிரான்சு, இத்தாலி, ரஷ்யா முதலிய பிற ஐரோப்பிய வல்லரசுகளும் தம்மைத் தொழில் அரசாக்கிக் கொண்டன. தொழில் நுட்பத் துறையில் முன்னேற்ற மடைந்த துடன் செல்வ நிலையிலும் ஆள் பலத்திலும் வளம்பெற்ற அமெரிக்கா இப்போட்டியில் கலந்து கொண்டது. அதற்கிடையில் இன்னொரு புதிய போட்டியரசு, சிறப்பாக மலிந்த சரக்குகளில் போட்டி போடும் அரசு, ஜப்பான் மூலம் ஏற்பட்டது. இவ்வாறு வரலாற்றிலேயே முதன் முதல் தடவையாக உலகில் முதல் தொழில் வல்லரசு என்ற பிரிட்டனின் நிலைமைக்கு எதிர்ப்புகள் ஏற்பட்டன. அதன் நிலைமை வரவர நெருக்கடியாய்க் கொண்டிருந்தது. ஆகவே, அது தன் பழைய எதிரியான ஜெர்மனியுடன் நேச உறவு கொண்டாடத் தொடங்கிற்று. நீராவி சக்தியைக் கண்டுபிடித்த நாட்களுக்குப் பிற்பாடு வேறு இரண்டு தொழில்துறைச் சக்திகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவையே எண்ணெயும், மின்சாரமும். இவை (நீராவிக்கு வேண்டிய) நிலக்கரியைவிட எளிதாகப் பயன்படுத்தக்கூடியவை யாயிருந்தன. ஜெர்மனிக்கு இவ் விரண்டுமே இல்லை. இத் தடங்கலைச் சரிசெய்ய அது நிலக்கரியிலிருந்து எண்ணெய் எடுக்க முயன்றது. இம் முயற்சி மிகுந்த செலவு பிடித்ததுடன் போதிய பயனும் தரவில்லை. எண்ணெய் பெறவேண்டுமானால் பிற நாடுகளை வென்றாக வேண்டும். இது காரணமாகவே இரண்டாம் உலகப் போர் எழுந்தது. இச் சுருக்க வரலாறுகளிலிருந்து ஒரு நாட்டின் அரசியல் வாழ்வில் பொருளியல் எவ்வளவு தலைமையாட்சியுடையது என்பதையும் முதலாளித்துவ நாடுகளிடையேயுள்ள போட்டி எங்ஙனம் போர்களுக்கு வழிவகுக்கின்றது என்பதையும் தெளிவாகக் காணலாம். வினா (31) : வாணிகம், நிதிநிலை, தொழில் ஆகியவையே போர்களின் அடிப்படைக் காரணம் என்று கூறுகிறீர்கள். ஆனால் ஒரு நாட்டின் தன்மதிப்பைக் காக்க, விடுதலையைப் பாதுகாக்க, போர்கள் நடைபெறுவதில்லையா? போர்களுக்கான குறிக்கோள்களிடையே தேசியம், தேசிய விடுதலை போன்ற உயர் நோக்கங்களுக்கு இடமில்லையா? விடை : தற்காலப் போர்களைப் பற்றிய வரையில் அவற்றுக்கு `இவற்றினும் உயரிய’ நோக்கங்கள் கிடையாது. போரிலீடுபட்ட நாட்டினர் “தேசாபிமானம்” “ஜனநாயகம்” “மனித நாகரிகம்” முதலிய விழுமிய தொடர்களை மக்கள் உள்ளக்கிளர்ச்சியைக் கெடாது பார்த்துக் கொள்ளும் வகையில் ஏராளமாக வழங்குவது என்னவோ உண்மைதான். ஆனால், அவை வேறு எந்த முறையிலும் பொருளற்ற வெறுங்கூச்சல்களே. சென்ற (இரண்டாம்) உலகப் போரில் இரு தரப்பினருமே - அச்சுக் கட்சியினரும் நேசக் கட்சியினரும் - தாங்கள் நாட்டுப் பற்றுக் காரண மாகவும் உலகின் விடுதலை, மனித சமத்துவம், விடுதலை ஆகிய நோக்கங்களுக்காகவுமே போராடுவதாகப் பிரசாரம் செய்தனர் என்பது நினைவிலிருக்கலாம். அதுபோல இருசாராருமே `கடவுள்’ ஆதரவைப் பெற்றிருப்ப தாகக் கூறினர். இருதரப்பிலும் உள்ள சமய நிலையங்கள் தத்தம் நாட்டுத் தரப்பிலேயே நின்றதுடன் முழுமனதாகப் போர் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தன. இப்போது போர் முடிவடைந்துவிட்டது ; இவ் ஆரவார நோக்கங்களின் கூச்சல்களும் அடங்கிவிட்டன. பல நாட்டவரும் இப்போது தொடர்ச்சியாக ஆர்வத்துடன் பேசுவதெல்லாம் உலக வாணிகம், ஏற்றுமதிகள், குடியேற்ற நாடுகள், செல்வாக்கு மண்டலங்கள் ஆகியவை தான். இவையனைத்தும் பொருளியல் சார்ந்த தொடர்களே. ஆனால் மனிதனிடத்திலேயே இவை தவிர வேறு உயர்ந்த நோக்கங்கள் இல்லை யென்பதன்று இதன் பொருள்; முதலாளித்துவம் அக்கறை காட்டுவது முற்றிலும் தமக்கு ஆதாயம் தரும் அம்முறையின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் தான், வேறு எதிலும் இல்லை என்பதே. இதற்கு நேர்மாறாக, சமதர்மம் உண்மையாகவே உயர்நோக்கங்களில் அக்கறை கொண்டுள்ளது. இந்நோக்கங்கள் “சமத்துவம்”, “சுதந்திரம்”, “தேசாபிமானம்” முதலியவைபோன்ற தெளிவற்ற பண்புகள் அல்ல. ஒவ்வோருயர் குறிக்கோளின் மதிப்பும் சமூக நலனைத் தழுவியுள்ளதாகும். எல்லா மக்களும் தனிப்பட்ட விடுதலை துய்க்கும் உரிமையுடைய வர்களே; ஆனால் அவ்விடுதலை மனித வகுப்பின் நலத்துடன் மோதாததாயிருக்க வேண்டும். இதுவே சமதர்மத்தின் உயர் குறிக்கோள். இதுவே சர்வதேச மனப்பான்மை என்பதாகும். மேலும் பல முதலாளித்துவக் குழுக்களிடையே யுள்ள போட்டியினாலேயே போர்கள் நிகழ்கின்றன என்றும் சமதர்மம் கருதுகிறது. முதலாளித்துவத்தை ஒழிப்பதன் மூலம் முதலாளித் துவங்களுக்கிடையேயுள்ள இப்பூசல்களும் அகன்றுவிடும். சமதர்ம சமூகம் இயற்கையின் வளப்பங்களையே முழுவதும் ஈடுபடுத்தி எல்லாருக்கும் போதிய நிறைவளிக்க முனையும். இவ்வகையில் தான் மனித இனம் மனநிறைவுடனும் அமைதி யுடனும் வாழ முடியும். நமக்கு வேண்டிய தெல்லாம் பெறப் போதிய இயற்கைச் செல்வம் உலகத்தில் தாராளம் உண்டு. தேவைக்கு முட்டுப்பாடு இல்லாதபோது தனி மனிதனுக்காயி னும் சரி, தேசங்களுக்காயினும் சரி, சச்சரவிடுவதற்கான காரணம் இருக்கமாட்டாது. வினா (32) : அதென்ன, நாம் ஒரு தேசத்துக்கு உரியவர்க ளல்லவா? உலகின் மற்றப் பகுதியிலுள்ளவர்களைப் பார்க்கிலும் நம் நாட்டிலுள்ள மக்களிடம் நமக்கு மிகுந்த ஒத்துணர்வு இருப்பது இயல்பல்லவா? விடை : மனித வகுப்பின் வரலாறு எவ்வளவோ பழமை வாய்ந்தது; எத்தனையோ அகண்டமானது. மனிதன் எத்தனையோ தடவை இடம்விட்டு இடம்மாறி எவ்வளவோ இனங்களுடன் கலந்து ஒன்றுபட் டுள்ளான். இந்நிலையில் எந்த ஒரு வகுப்பும் தான் உலகில் இன்ன பகுதிக்கு உரிய தென்று கூறமுடியாது. மனித வகுப்பில் மேற்போக்காக நான்கு பேரினத்தார்கள் உள்ளனர். அவர்கள் ஆரியர் (வெள்ளை அல்லது தவிட்டு நிறத்தவர்), மங்கோலியர் (மஞ்சள் நிறமும் தட்டையான மூக்கும் உடையவர்), நீக்கிரோவர் (கருமை நிறமும் அகன்ற மூக்கும் உடையவர்), செவ்விந்தியர் (செந்நிறமும் கூர்மை வாய்ந்த உறுப்பமைதியும் உடையவர்) ஆகியவர்கள். ஆனால் இப்பாகு பாடு உடலமைப்பின் சிறப்பு வேறுபாடுகளடிப்படை யானதே. நம் மூக்கு வடிவம் வேறுபடினும் மேனிநிறமும் வேறுபடினும் நம் கை கால் முதலிய உறுப்புகள் ஒரே தொகையினவே; எலும்புகள் மூளை யாவும் ஒரே படியானவையே. தோல் நிறம், சில உறுப்புக் களின் அமைப்பு ஆகியவற்றின் வேறுபாடுகள் வேறுவேறு தட்ப வெப்ப நிலைகளில் வாழ்வதனாலும் வேறுவேறு வகை வாழ்க்கை முறைகளாலும் இருக்கவும் கூடும். எப்படியும் இது மக்கள் இனமரபாராய்ச்சிக்குரிய ஒரு செய்தி மட்டுமே ஆகும். ஆனால் இப்போது நாம் கவனிக்க வேண்டியது நம் சமூக வாழ்வை நாம் அறிந்தவரை மனிதன் ஒரே இடத்தில் கட்டுண்டிருப்ப வனாகக் காணவில்லை. அவன் இடத்துக்கிடம் திரிந்தவனாகவே, அதுவும் சிறப்பாக உணவு வாய்ப்புத் தேடித் திரிந்தவனாகவே தோன்றுகிறான். எடுத்துக் காட்டாக அறிவுக்கெட்டிய வரலாற்றிலேயே ஆரியர் தொடக்கத் தில் சைபீரியாவுக்குரியவராயிருந்தனர். அதன்பின் அவர்கள் அங்கிருந்து புடைபெயர்ந்தனர். சிலர் இன்று நாம் இந்தியா என்று குறிக்கும் நிலப்பரப்பில் குடியேறினர்; மற்றும் சிலர் அரேபியாவிலும் 1இன்னும் சிலர் ஐரோப்பாவிலும் குடியேறினர். இப்புதிய தங்கிடங்களிலும் அவர்கள் நிலையாயிருக்கவில்லை. இந்தியர்கள் அரேபியாவுக்கும், ஐரோப்பா வுக்கும், ஆப்பிரிக்காவுக்கும் சென்றனர். ஆப்பிரிக்கர், இந்தியாவுக்கு வந்தார்கள்; சிறு அளவிலன்றிப் பேரளவிலேயே ஐரோப்பியர் ஆசியாவிற்கு வந்தனர். பெருந்தொகையினரான இந்திய சமூகத்தினர் வெளிநாடுகளில் குடியிருப்புக்கள் அமைத் துள்ளனர். ஐரோப்பியர் ஆஸ்ட்ரேலியாவிலும் ஆப்பிரிக்கா விலும் குடியேறியுள்ளனர். ஆகவே எந்த மனிதனும் உலகப் பரப்பில் இன்ன பகுதி தனக்கு உரியது, வேறு யாருக்கும் உரியதன்று என்று கூறிவிட முடியாது. மனிதன் மொத்தத்தில் உரிமை கூறிகொள்ளக் கூடியதெல்லாம் உலகம் தங்களுடையது என்பதே. ஆனால் மனிதர் தனித்தனி குழுக்களாகத்தான் வசித்து வந்தனர் என்பது உண்மையே. ஆனால், இது அவர்கள் ஒருவருக்கொருவர் எதிரிகள் என்பதனாலன்று. வயிற்றுப் பிழைப்பை நாடி அவர்கள் பல்வேறு இடங்களுக்குப் பிரிந்து செல்ல வேண்டியிருந்தது என்பதே. அவ்வவ் விடத்து நில இயல் சூழ்நிலை அவரவர் வாழ்க்கை நிலையைப் பாதித்து அதற்கு ஒன்றுபட்ட ஒரு பொது உருவம் கொடுத்தது. ஒருவருக்கொருவர் கலந்து பேசுவதற்காக அவர்கள் ஒரு பொதுப் பேச்சு முறையையும் வகுத்துக் கொண்டனர். இதனையடுத்து இனம் பற்றிய எண்ணம் எழுந்தது. பிள்ளைகள் உண்டாக ஆடவரும் பெண்டிரும் உடல் தொடர்புகொள்ள வேண்டியிருந்தது. முற்காலங் களில் ஆடவன் தான் கண்ட எந்தப் பெண் ணுடனும் பிணைப்புக் கொண்டான். ஆனால் வாழ்க்கைக் குழு பெரிதாகவும் நிலையான குடி யிருப்புடையதாகவும் ஆனபிறகு ஆடவர் பெண்டிர் உறவு ஓர் ஒழுங்குபட்ட நிலையடைந்தது. மனிதன் தன் வாழ்க்கைத் தோழனாகப் பெண்ணைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கினான். அப்போது அவர்கட்குப் பிறந்த குழந்தை தாய் தந்தையர்களுக்கு மட்டுமன்றி அவர்கள் குழுவுக்கும் உரியதாயிருந்தது. தனி மனிதனுக்கும் குழுவுக்கும் அல்லது வகுப்புக்கும் உள்ள தொடர்பு இங்ஙனம் வலியுற்றுப் பின்னப்பட்டது. சுருக்கமாகக் கூறினால் மனிதன் தன் சொந்தத் தேவைகளை மட்டும் நிறைவுபடுத்திக் கொள்ளும் தனி மனிதன் நிலையை விட்டு நீங்கி, வரவர மிகுதியாகச் சமூகத்தில் ஓர் உறுப்பு ஆயினான். இதற்கு ஈடாகச் சமூகம் சுமத்திய கட்டுப்பாடுகளையும் அவன் ஏற்க வேண்டியவனா னான். இங்ஙனம் மனிதன் வாழ்க்கைப் போக்கில் ஒரு புதிய மாறுதல் ஏற்பட்டது - அவன் ஒரு சமூகச் சார்புடைய உயிரினமானான். உலகின் வெவ்வேறு பகுதிகளிலும் இத்தகைய சமூகக் குழுக்கள் ஏற்பட்டன. அவற்றிடையே எத்தகைய பெருவாரியான தொடர் பிணைப்பும் இல்லாதிருந்தது. ஒரு வளர்ச்சிப்படியில் தொடர்பிணைப்பு வெறுக்கப்படவும் செய்தது; இதனை அறிவதும் எளிது. ஒருவன் தன் சமூகத்தினரிடையே நடமாடும் வரை அவனுக்குத் தீமை எதுவும் ஏற்படாதிருந்தது. ஆனால், அவன் வேறொரு குழுவின் இட எல்லைக்குட் சென்றுவிட்டால் அவன் பகைவனென்ற ஐயுறவுக்காளானான். இதில் மொழி சார்ந்த தடங்கல் வேறு இருந்தது. காலம் செல்லச் செல்ல, குழுக்கள் அளவில் பெருகின. அவை ஒன்றையொன்று அணுகிக் கூடவும் தொடங்கின. இப்போதும் இது குறைந்த அளவில்தான் இருந்தது. தட்பவெப்ப நிலைகள், கடல், மலை, தொலைவு முதலிய நில இயல் சார்பான எல்லைக்கோடுகள் ஆகியவை இன்னும் மனிதரைப் பிரித்தே வைத்தன. கிடைக்கும் உணவுக்குத் தக்கவகையில் குழுக்கள் அளவில் பெருக்கமுற்றன. நிலம் செழிப்புடையதாயிருந்தால், குழுக்கள் இன்னும் மிகுதி விரிவுபெற்றன. இந்தியாவும், சீனாவும் அளவில் பெரியதாகவும் செழிப்பான நிலமுடையவையாகவும் இருந்த தனால், ஐரோப்பாவை விடப் பன்மடங்கு பெருக்கமும் விரிவும் அடைந்து முன்னேற்ற மடைந்தன. வரலாற்றில் இச் சமய முதல்தான் மனிதனிடம் தேசம் என்ற கருத்து வளரலாயிற்று. தேசம் என்பது ஒரு நிலஇயல் பரப்பு. அதில் ஒருவருக்கொருவர் சிறிது சிறிது வேற்றுமைப்படும் பல்வேறு குழுவினர் வாழ்ந்து வந்தனர். ஆனால் அவர்கள் யாவரும் தமக்குள் நேசமுடனும் அமைதியுடனும் வாழ்ந்து வந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பிணைப் புடையவராயிருந்த தோடன்றிக் குலபதிகள் என்னும் (அனுபவ அறிவுமிக்க) முதுமைவாய்ந்த அறிஞர் சிலரால் வலியுறுத்தப் பட்ட ஒரு சில கட்டுப்பாடுகளையும், சட்டதிட்டங்களையும் பின்பற்றினர். பிற்காலத்தில் குலபதியினிடமாக இந்தியாவில் அரசன் (ராஜா) என்றும் ஐரோப்பாவில் கோமகன் (னுரமந), கோமான் (ஊடிரவே) என்றும் பெயருடைய தலைவன் ஏற்பட்டான். அரசன் தன் ஆதிக்கத்தை உடல் வலிவினால் நிறுவினான். இது முற்றிலும் தனிப்பட்ட தன் உடல் வலிமையல்ல; அவனால் பயிற்று விக்கப்பட்ட ஒரு மக்கட்படையின் (ஆடைவையை) கூட்டுவலிமையே. அவன் ஆதிக்கம் எப்போதும் மக்கள்மேல் சுமத்தப்பட்டதாயிருக்க வில்லை; பாதுகாப்பு முறையில் குழுவினால் தம்மிச்சையாக அது அடிக்கடி மேற்கொள்ளப் பட்டதும் உண்டு. இக்காலத்தில் குழுக்களுக்கிடையே (குலங்களுக்கிடையே) போர்கள் எழத்தொடங்கியதனாலும் ஏழ்மை யுடைய குழுக்கள், சிறப்பாகக் குன்று மேடுகளிலுள் ளவர்கள் சமவெளியில் குடியேறியுள்ள செல்வமிக்க குழுக்களிட மிருந்து பொருள் திருடவும் கொள்ளையிடவும் தொடங்கிய தனால் இது அவசியமாயிற்று. அரசர்கள், கோமக்கள், கோமான்கள் இத்தகைய கொள்ளைகளிலிருந்து குழுக்களை (குலங்களை)க் காத்தனர். இவற்றிற்கு மாறாகக் குலம் அவர்கட்கும் அவர்கள் ஆட்களுக்கும் வாழ்க்கைச் சாதனம் உண்டுபண்ணித் தந்தது. பல இடங்களில் கோமகனே குலபதியாயும் இருந்தான். இங்ஙனம் மனிதனின் சமூக அமைப்பிற்கான கடைகால் இடப்பட்டது. ஒரே தேசத்தில் இத்தகைய பல கோமக்கள் இருந்து அவர்கள் கடமைகள் ஒன்றுடனொன்று மோதின என்பது கண்டுணரப்பட்டது. இது ஒரு பெருந்தொல்லையாயமைந்த துண்டு! ஏனெனில் அவர்கள் உள்நாட்டுப் போர்கள் அடிக்கடி பண்டமாற்றுக்குத் தடங்கலாயிருந்தன. ஒரு குழு அயலிலுள்ள மற்றொரு குழுவுடன் பண்டமாற்று செய்வதற்காகத் தன் சரக்குகளைக் கொண்டு செல்லும்போது, பிந்திய குழுவின் கோமகன் தலையிட்டு பண்டங்களில் ஒரு பங்கைத் தனக்கெனக் கோரினான். கோமக்கள் நிலங்களின் உரிமைகளைக் காலால் உதைத்துத் தள்ளித் தங்கள் சொந்தப் பொறுப்பில் பணம் பறிக்கும் காலமும் ஏற்பட்டதுண்டு. ஆகவே குலங்களும், சில சமயம் கோமக்கள் பலரும், சேர்ந்து ஒரு தலைமைக் கோமகன் அல்லது அரசனைத் தேர்ந்தெடுப்பதென்று ஒருங்கினர். அரசன் வேலை கோமக்களைத் தடுத்தாளுவதும் பண்டமாற்று தொந்தரவின்றி நடக்கும்படி பார்த்துக்கொள்ளுவதும் ஆகும். முடியரசாட்சி ஏற்பட்டவகை இது. ஆகவே தேசம் என்ற கருத்து பின்னும் மாறுபட்டது. சமூகக் கடமைகளுடன் அரசியல் கடமைகளும் ஏற்பட்டன. கோமக்களுள் வலிமை மிக்கவனான அரசனே நாட்டின் ஈடும் எடுப்பும் அற்ற தலைவனானான். அவனுக்குக் கீழிருந்து கோமக்கள் முன்போல் தங்கள் காரியங்களை நடத்தி வந்தனர். அவர்கள் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியைத் திறையாக அரசனுக்குத் செலுத்தினர். இந்தியாவில் அரசன் (ராஜா) தலைவனாகவும் (சர்தார்), பேரரசன் (மகாராஜா) மன்னனாகவும் (முiபே) மாறினர். தேசமும் இப்போது அரசு (ராஜ்யம்) எனப்பட்டது. நில இன முறையில் அது மன்னரின் கோமக்கள் ஆட்சி செலுத்தும் பகுதியைக் குறித்தது. நாளடைவில் அரசன் மக்களின் பாதுகாவலனாகவும் ஒழுங்கு வழங்குபவனாகவும் ஆயினான். மக்கள் அவன் `குடிகள்’ எனப்பட்டனர். இங்ஙனம் அரசியல் முறையிலும் சமூக முறையிலும் முடியரசு ஒரு வலிவுவாய்ந்த நிறுவனமாயிற்று. இச்சமூக முறையே நில உடைமை உரிமை முறை (குநரனயடளைஅ) எனப்படும். இதற்கிடையே பொருளுற்பத்தி முறைகளில் ஏற்பட்ட சில சாதக நிலைகளின் பயனாக மன்னர் இளங்கோக்கள் நிலைக்கெதிராகச் சமூகத்தின் நிலை சில வகைகளில் வலிவு பெற்றது. தொடக்கக் காலங்களில் ஒவ்வொரு மனிதனும் தனக்கு வேண்டியவை அனைத்தையுமே அல்லது கிட்டத்தட்ட அனைத்தையுமோ உண்டு பண்ணிக் கொண்டான். இத் தேவைகள் உணவு, உடை, உறைவிடம் முதலியவையே. மக்கள் மேன் மேலும் நெருங்கி உறவாடிய பின் ஒருவர்மீது ஒருவருக்கு உள்ள அச்சங் குறைந்து அவர்கள் தொகுதி முறையில் அல்லது கூட்டு முறையிலேயே உற்பத்தி செய்யத் தொடங்கினர். இதனால் தொழிலாண்மைப் பாகுபாடு ஏற்பட்டது. இதன்படி ஒருசில ஆட்கள் உணவு மட்டிலுமே உற்பத்தி செய்தனர் வேறு சிலர் ஆடையையும், சிலர் களிமண்ணாலான பொருள்களாகிய செங்கல்கள், பானை சட்டிகள் ஆகியவற்றையும் செய்தார்கள். இவர்களே சிறு கைத்தொழிலாளர்கள். வேறு சிலர் சமூகத்தின் காரியங்களை செவ்வனே ஒழுங்கமைத்து நடத்த மிகவும் அவசியமாகி விட்ட எண்ணும் எழுத்தும் கற்றனர். இவர்களே அறிவு வகுப்பு ஆயினர். இவர்களில் மிகப் பெரும்பாலோர் புரோகிதராயிருந்தனர். மனிதன் இன்னும் இயற்கையை முற்றிலும் தன்மயமாக்கி வென்றுவிடவில்லை. இயற்கை முதற்பொருள்கள் (பூதங்கள்) பற்றிய அச்சம் அவனிடம் இன்னும் இருந்தது. ஆகவே மனிதன் கற்பனை இம் முதற்பொருள்களைவிட ஆற்றல் வாய்ந்த ஒரு சக்தியைப் புனைந்து உருவாக்கிற்று. இந்தச் சக்திக்கு `கடவுள்’ என்று பெயர் தரப்பட்டது. இக் “கடவுளை” வழிபட்டு அவர் ஆற்றல்களைப் பயன்படுத்தியவர்கள் புரோகிதர் ஆயினர். அவர்களே சமூகத்தின் காரியங்களையும் நடத்தி வந்தனராதலால் அவர்கள் சமூகத்திற்கு ஒரு ஒழுங்குச் சட்டத் தொகுதி அமைத்து அதற்குக் “கடவுளின்” பெயருரிமையைக் கொடுத்தனர். இச்சட்டத் தொகுதியே `மதம்’ ஆகும். பிரிவுகளும் உட்பிரிவுகளும் இன்னும் பல எழுந்து முன் அமைப்புச் சிக்கல் வாய்ந்ததாயிற்று. ஆயினும் இவற்றால் சமூகத்தின் உற்பத்தியாற்றல் மிகவும் பெருகிற்று. மனிதனும் கலப்பை, கைராட்டை, சுத்தி, அரிவாள் முதலிய பல கருவிகளின் பயனையும் கண்டுணர்ந்தான். முதலில் கருவிகள் மரத்தாலும் சிக்கிமுக்கிக் கல்லாலும் அமைந்தன. இவை நிலப்பரப்பின் மீதே கிடைப்பவை யாதலால் எளிதில் எடுத்தாளப்பட்டன. உலோகங்கள் பிற்படக் கண்டுகொள்ளப் பட்டன. இவற்றில் செய்த கருவிகள் இன்னும் நீடித்துழைத்தன. உலோகங்கள் உருகிய நிலையில் குழைவுடையதாகவும் வேண்டிய உருவங்கள் பெறத் தக்கவையாகவும் இருந்ததால் உற்பத்தித் துறையில் பெரும் புரட்சியை உண்டுபண்ணின. தொழிற் பாகுபாடு, உலோகங்கள் கண்டுபிடிக்கப்படல் ஆகியவற்றுடன், மன்னரும் கோமக்களும் தந்த பாதுகாப்பு அமைதியும் சேர்ந்து இவ்வாறு சமூகத்தின் உற்பத்தியாற்றலைப் பெருக்கின. சமூகம் தன் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்குமேல் தன்னிடம் பொருள் உற்பத்தியாவது கண்டு அதில் வரும் மிகுதி உற்பத்தியை அண்டைச் சமூகங்களுடன் பண்டமாற்றத் தொடங்கியது. ஆனால் பண்டமாற்றுவது யார்? சிறு கைத் தொழிலாளன், வேளாளன், படைவீரன், புரோகிதன் யாவருக்கும் தத்தம் தொழிலைச் செய்யவே முடிந்தது. ஆகவே வாணிக வகுப்பு ஒன்று எழுந்தது. அவைகள் விடுமுதல் போக்குவரவுச் சாதனங்களே; அதாவது குதிரைகள், எருதுகள், எருமைகள், ஒட்டகைகள், கோவேறு கழுதைகள் முதலிய பொதிசுமக்கும் விலங்குகளே. இவற்றுடன் பண்டமாற்றை வசதிப்படுத்துவதற்கான ஏதேனும் ஒரு பண்டமாற்றுப் பொருளும் தேவையாயிற்று. அப்பொருள் எல்லாச் சமூகங்களுக்கும் ஏற்புடையதாகவும் எளிதில் கொண்டுசெல்லத் தக்கதாகவும் இருக்க வேண்டியிருந்தது. உலோகங்கள் இதுவரைக்கும் மிகவும் உயர்வாய்ப் புடைய பொருள்களாயமைந்தன. அவை கிடைத்தற்கருமையானவை. எங்கும் தேவைப்பட்ட வையும்கூட. பிற்காலங்களில் இரும்பு, செம்பு முதலிய உலோகங்கள் மிகுதியானபின், இவற்றினும் அருமையும் இவற்றினும் நீடித்த உழைப்பும் உடைய தங்கம், வெள்ளி போன்ற உயர்தர உலோகங்களை வழங்கினர். உலோகங்களைக் கண்டுபிடிப்பதற்கு முன்னரே பளபளப் பான கற்களும் கழலைக் கற்களும் மனிதன் பார்வையைக் கவர்ந்தன. அவற்றைக் கொண்டு அவன் கல்மாலை செய்து கழுத்திலணிந்து கொண்டான். நாளாவட்டத்தில் பின்னும் கடினம் வாய்ந்த ஒளிவீசிய கற்களை அவன் கண்டான். அவையே வைரம், மாணிக்கம், நீலம் ஆகியவை. இவையும் பண்டமாற்றுக் குரியவையாய் ‘செல்வமணி’ ஆயின. ஆயினும் எப்போதும் உலோகமே அளவை மதிப்புடைய பண்டமாற்றுப் பொருளா யிருந்தது. இன்றுவரை அதுவே அந்நிலையில் உள்ளது. வணிகத் தொழில் இடர் நிறைந்ததாகும். அதோடு அது கடுமையான விடா உழைப்பு வேண்டியதாகவும் இருந்ததால், வாணிக வகுப்பு எப்போதுமே துணிச்சலும் அறிவுக்கூர்மையும் உடையதாயிருக்கவேண்டி வந்தது. அத்துடன் அது இருவகைப் பட்ட ஆதாயங்களை ஒன்றன் மேலொன்றாகப் பெற்றது. அதாவது தம் சமூகத்தின் உற்பத்திப் பொருள்களை மற்றச் சமூகங்களுக்கு விற்பதுடன் மற்றச் சமூகங்களின் உற்பத்திப் பொருள்களைத் தம் சமூகத்திற்கும் விற்றனர். நாளடைவில் வணிகர் தொழில் திறம் தம் நாடுகளின் எல்லைகடந்து சென்றது. அவர்கள் பல்வேறு நாடுகளுக்கும் சென்றதோடன்றிக் கடல்களையும் கடந்து சென்றனர். வரவர அவர்களே சமூகத்தில் முதல்தரச் செல்வமிக்க வகுப்பு ஆயினர். மன்னரும் கோமக்களும் தங்கள் நிலைமையை ஏற்கெனவே அரண் செய்து கொண்டிருந்தனர். மன்னர் மக்களிடமிருந்து தொடக்கத்தில் இறைவரி பிரிக்கக் கோமக்களைத் தனக்குப் பகர ஆட்களாக அமர்த்தியதுபோலவே கோமக்களும் தம் சார்பில் பகர ஆட்கள் அமர்த்தி வரிப் பிரிவுக்கு ஏற்பாடு செய்தனர். ஏனெனில் ஒவ்வொரு குடியானவ னிடத்திலிருந்தும் சிறுகைத் தொழிலாளரிடமிருந்தும் வரி சேகரிப்பது கடினமான, நீடித்த உழைப்பு தேவையான வேலையாயிருந்தது. ஆட்சி, படைத் துறைக் காரியங்களில் முழு நேரமும் ஈடுபட்டிருந்த அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை. அவர்கள் பேரளவான நிலங்களைத் தமக்கெனப் பிரித்தெடுத்து வைத்துக் கொண்டு வரிபிரிக்கும் உரிமையைக் கைவிட்டுவிட்டனர். ஆனால் அவர்கள் நிலத்தைப் பயிரிடுவது யார்? குடியானவரே தம் நேரத்தின் ஒரு பகுதியைக் கூலியில்லாமல் கோமக்கள் நிலத்தைப் பயிரிடுவதில் செலவிடவேண்டுமென்றும், சிறு தொழிலாளரும் அதுபோல் அவர்கள் தேவைகளை நிறைவுபடுத்தத் தங்கள் நேரத்தில் ஒரு பகுதியை ஈடுபடுத்த வேண்டுமென்றும் மன்னர் ஆணை பிறப்பித்தனர். கோமக்களின் மேற்குறிப்பிட்ட பகர ஆட்களே நிலமுதலாளிகள் என்று அழைக்கப்படலாயினர். வேளாளர்களோ குடியானவர்கள் என்றழைக்கப் பட்டனர். நில முதலாளியின் நிலங்கள் பண்ணைகள் என்றழைக்கப் பட்டன. நிலமுதலாளிகள் தங்கள் நிலம் கோமக்கள் விருப்பத்திற்குட் பட்டு அதற்குரிய காலவரையறைப்பட்டு இருப்பதை விரும்ப வில்லை. நிலையாக, தலைமுறை தலைமுறையாக அவ்வுரிமை தம்மிடமே இருக்கவேண்டு மென்று விரும்பினர். இதுவும் மன்னரால் அளிக்கப்பட்டது. இங்ஙனம் நிலமுதலாளிகள் என்ற புது வகுப்பு சமூகத்தில் ஏற்பட்டது. அது புதுவகுப்பு எனப்படுவதன் காரணம் அது தன் உரிமையைக்கொண்டே வாழ்க்கைக்கு வழிவகுத்துக் கொண்டதனால் ஆகும். இதற்கிடையில் வாணிக வகுப்பு கோமக்களுடனும் மன்னருடனும் மோதத் தொடங்கிற்று. முதலாவதாக அது மன்னரையும் அவர் கோமக்களையும் விடச் செல்வமிக்கதா யிருந்தது. இரண்டாவதாக அவ்வகுப்பினர் வெளிநாடு புகுந்தபோது அங்குள்ள மன்னரின் ஆட்கள் அவர்கள் செயலில் தலையிட்டு அவர்கள் பொருளில் பங்கு கோரினர். துவக்கத்தில் வணிகர் தாமாகவே அதனை வழக்கமாக விட்டுக்கொடுத்தனர். (இதுவே சுங்கமாயிற்று. சுங்கத்திற்கான ஆங்கிலச்சொல் (ஊரளவடிஅ) வந்த வகை இதுவே) இத்துடன் அடிக்கடி எவ்வாட்சிக்கும் உரியதல்லாத புறம்போக்குப் பகுதிகளில் அவர்கள் பயணம் செய்யும்போது அவர்கள் தம் பாதுகாப்புக்குத் தனிப்பட்ட முறையில் படைகள் வைத்துக் கொண்டனர். ஆயினும் மன்னர், கோமான்கள் அவர்கள் மீது கோரிய கோரிக்கைகள் பெருக்க மடைந்து கொண்டே வந்தன. அவை தொல்லை தருபவை என்றும் கொடுமை வாய்ந்தவை என்றும் வணிகர் எண்ணலாயினர். சில வணிகர்கள், சிறப்பாக மேலை உலக வாணிகர்கள், உலகின் உற்பத்தி நடுக்களமாகிய கீழ்நாட்டையடையக் கடல் பாதைகள் வழியாக வாணிகம் செய்யவேண்டியிருந்தது. ஐரோப்பாவின் கடல் வழி வணிகர்களுக்கு இது சில சாதக நிலைகளைத் தந்தது. மன்னர் படைகள் நிலத்திலேயே செயலாற்றின. ஆனால் கடல் அவர்கள் தலையீடில்லாமல் தப்பியிருந்தது. மேலும் வணிகர்கள் தங்கள் ஆட்களைப் படைவீரர்களாகப் பயிற்றுவித்துக் கொண்டனர். நாளாக ஆக வாணிகத்துடன் கூட அவர்களிற் பலர் பிற வணிகக் கப்பல்களைச் சூறையாடவும் கொள்ளையடிக்கவும் தலைப்பட்டனர். கப்பல்கள் கரையை அணுகியவிடத்தில் அவர்கள் கரையேறியும் போரிட்டுக் கொள்ளையிட்டனர். இறுதியில் வணிகர்களின் கடற்படைகள் மன்னர்களின் நாட்டுப்படையளவு ஆற்றல் வாய்ந்தவையாயின. இதன்பின் மன்னர் படைகள் வணிகர் படைகள் ஆகியவற்றின் மோதல் ஏற்பட்டது. அது கிட்டத்தட்டச் சமவலுவுடை யவர் போராட்டமே. இதில் மன்னர், கோமக்கள் படைகள் தோற்று விடவே அவர்கள் தம் உரிமைகள் சிலவற்றைக் கட்டுப்படுத்திக் கொள்வதாக வாக்களித்தனர். முதலாவதாக மன்னன் தனிப்பட்டவர் உடைமைகளையும் தொழில் முயற்சிகளையும் மதிப்பதாக ஒப்புக் கொண்டான். இரண்டாவதாக வணிகர் பேராட்களை (சுநயீசநளநவேயவiஎநள) ஆட்சிப் பொறுப்பில் ஏற்று அவர்கள் அறிவுரைகளை மதித்து நடப்பதாக உறுதி கூறப்பட்டது. இப்பேராட்கள் மன்றமே அரசியல் மன்றம் (ஞயசடயைஅநவே) ஆகும். அரசியல் முறையிலும் சமூக முறையிலும் வணிகவகுப்பின் ஆற்றல் வளர்ந்த வகை இது. இவ்வளர்ச்சிப் படிகளெல்லாம் எல்லா நாடுகளிலும் ஒரே சமயத்தில் நடைபெறவில்லை. எடுத்துக்காட்டாக ஐரோப்பாவில் எழுந்த வணிக முதலாளி வகுப்பு கீழ்நாட்டிலோ அமெரிக்காவிலோ ஏற்பட வில்லை. ஆயினும் வரலாற்றுக்கெட்டாப் பழங்காலங் களில் வெளிநாடுகளி லும் கடல்கடந்த நாடுகளிலும் இந்திய வணிகரும் சீன வணிகரும் வாணிகம் செய்தனர் என்று மட்டும் ஐயமற அறிகிறோம். ஆயினும் எக்காரணத் தாலோ அவர்கள் ஓர் ஆற்றல்மிக்க வகுப்பு ஆகவில்லை. இந்தியாவும் சீனாவும் செயலளவில் சிறுகைத் தொழிலாளர், குடியானவர்கள், புரோகிதர், மன்னர் ஆகியவர்களின் நாடுகளாகவே அமைந்து நின்றன. ஐரோப்பிய வணிக வகுப்பு மிக விரைவாக வலுப்பெற்று வளர்ச்சி யடைந்தது. மன்னரும் தம் நாட்கள் குறுகிவிட்டன என்று கண்டு அவர்களுடன் தம் ஆட்சியுரிமையைப் பகிர்ந்து கொள்ள ஒப்புக் கொண்டனர். இருசாராரும் சேர்ந்து மக்களை அரை அடிமைகளாக்கினர். அதாவது ஒவ்வொரு மனிதனுடைய உழைப்புச் சக்தியை வாங்கி அதற்கு மாறாக அவனுக்கு வாழ்க்கைச் செலவுத் தொகையை மட்டும் கொடுத்தனர் - இத்தொகையே சம்பளம் ஆகும். ஒரு நாட்டு வர்த்தகர் மற்ற நாட்டு வர்த்தகருடன் மோதினர். இதனால் மன்னர் இணக்கம்பெற்று நாடுகளின் பேரால் போர்கள் நடைபெறலாயின. வணிகர்கள் நகரத்தார் (இங்கிலாந்தில் பர்க்கர், ஐரோப்பாவில் பூர்ஷ்வா) என்றழைக்கப்பட்டனர். இன்ப வகுப்பினர் என்ற தற்காலச் சொல் (ஐரோப்பிய மொழிகளில் பூர்ஷ்வா) முதலாளிகளுக்கு இவ்வகையிலேயே (ஐரோப்பிய மொழிகளில்) ஏற்பட்டது. 1வணிக வகுப்பு மிகமிகச் செல்வ முடைய தானதுடன் வரவரப் பெருக்கமும் சிக்கல் வாய்ந்த பல்வகைப் பெருக்க விரிவும் உடையதாயிற்று. எடுத்துக் காட்டாக, உலகின் முதன் முதல் வணிக முதலாளித்துவ அமைப்பாகிய பிரிட்டிஷ் கிழக்கிந்தியாக் கழகம் இங்கிலாந்து மன்னரைவிட மட்டுமின்றி உலகின் எம் மன்னர்களை விடவும் மிகப்பெரிய படைகளும் மிகப் பெருக்கமான செல்வமும் மிக விரிவான ஆட்சி அதிகாரிகளும் உடையதாயிருந்தது. நாளடைவில் கிழக்கிந்தியாக் கழகம் போர்கள் நடாத்திற்று; நாடுகளை வென்றது; தன் சார்பிலேயே ஆட்சி முறைகள் செய்தது. இவையனைத்தையும் பிரிட்டனின் மன்னன் ஒத்துக்கொள்ளவே வேண்டியதாயிற்று. இப்பெருங்குவைச் செல்வமனைத்தையும் வைத்துக் கொண்டு வணிகர் வகுப்பு என்ன செய்யமுடியும்? செல்வத்தைக் குவித்து வைப்பது பயனற்றது. அது பயன்படுத்தப்படவேண்டும். ஆனால் எவ்வகையில்? மிகச் சிறந்த வகை, செல்வ வகுப்பினர் தாமே உற்பத்தியாளர் ஆவதுதான். சிறு கைத்தொழிலாளர் மிகக் குறுகிய அளவில்தான் உற்பத்தி செய்யமுடியும். ஆனால் அதே சமயம் மிகப் பெரிய அளவு மக்கள் தொகுதியுள்ள நாடுகள்தான் இந்நிலையில் சாதகமடைய முடியும். இவ்வணிக முதலாளிகளோ சிறிய வறுமையற்ற நாடுகளில் இருந்தனர். எனவே மிகக் குறைந்த அளவு தொழிலாளர் சக்தியுடன். கூடியமட்டும் மிகுதியாக உற்பத்தி செய்தல் எவ்வாறு? இங்கேதான் விஞ்ஞானத்தின் உதவி பயன்பட்டது. ஏற்கெனவே மனிதன் தொழில் ஆற்றலை மிச்சப்படுத்தும் `சூச்சப் பொறிகள்’ பலவற்றைக் கண்டுபிடித்திருந்தான். ஆயினும் இப்பொறிகள் யாவும் மனித ஆற்றலாலேயே இயக்கப்பட்டி ருந்தன. இப்பொறிகளுக்கு இப்போது நீராவியாற்றல் பொருத்தப் பட்டது. இத்தகைய பொறி ஒரு இயக்கு பொறி (எஞ்சின் அல்லது இயந்திரம்) எனப்பட்டது. இவ் வியக்கு பொறி இரவுபகல் உழைக்கும் என்பது மட்டுமன்று; அது கூலியும் கேட்காது. ஆகவே நீராவி இயந்திரம் நிறைவுற உருவாக்கப்பட்டு நூற்கவும் ஆடை நெய்யவும் பயன்படுத்தப்பட்டது. இங்ஙனம் உலகின் முதல் இயந்திரம் தோற்ற மெடுத்தது. இது பத்துச் சிறுகைத் தொழிலாளர் உற்பத்தி செய்யும் அளவு உற்பத்தி செய்தது. வணிகன் இப்போது உற்பத்தியாளனானதுடன் பெருவாரி அளவான உற்பத்தியாளனுமானான். அவன் உற்பத்திச் சரக்குகளும் சிறு கைத்தொழிலாளன் சரக்குகளைவிட மலிவாயிருந்தது. கீழடக்கப்பட்டிருந்த நாடுகளிலிருந்து இவ்வணிகன் தனக்கு வேண்டிய மூலப்பொருள்களைப் பெற்றுக் கொண்டான். வணிக முதலாளியின் ஆற்றல் பெருகிக்கொண்டே சென்றது. அவர்களே மற்ற யாவரினும் ஆற்றல் மிக்க வகுப்பின ராயினர் என்பது மட்டுமின்றி, குடியானவரும் சிறு கைத்தொழி லாளரும் தங்கள் பிழைப்புக்கே அவர்களைச் சார்ந்து வாழவேண்டியவராயினர். மன்னரும் கோமக்களும் தங்கள் தாழ்வுற்ற நிலைமையை வாய்மூடி வாளா ஏற்றமைந்தனர். நாட்டின் ஆட்சி ஆதிக்கத்தையும் வணிக முதலாளிகளே நடத்தும்படி அவர்கள் விட்டுவிட்டனர். ஆட்சிக்குழுவும் இதுமுதல் அரசியல் அல்லது அரசாங்கம் என அழைக்கப்பட லாயிற்று. இராஜ்யம் (முiபேனடிஅ) என்ற சொல்லுக்குப் பகரம் அரசு (ளுவயவந) என்பது வழங்கலாயிற்று. அரசியல் வகையில் முன்னம் வழங்கிய நாடு (ஊடிரவேசல) என்ற சொல்லினிடமாகத் தேசம் (சூயவiடிn) என்ற சொல் வழங்கப்பட்டது. இங்ஙனம் நாடு, அரசு, தேசம் என்ற சொற்களெல்லாமே ஒரு பொருளியல் அமைப்பு முறையையும் அதன் செயல் விளைவாகிய ஆட்சியையும் குறிப்பாக உணர்த்த வந்தவையே என்பது விளங்கும் தேசப்பற்று, தேசியம் முதலிய குறிக்கோள் தன்மை வாய்ந்த மதிப்புக்கள் அவற்றுக்கு உயர்தரப் பெருமை கொடுக்கவே எழுந்தன. அவற்றின் முக்கிய நோக்கம் ஒரு நாட்டின் நில இயல் வரம்புக்குள் நிலவும் பொருளியல் அமைப்புக்குத் தொடர்ந்த நிலைபேறு உண்டுபண்ணுவதன்றி வேறெதுவும் இல்லை. மக்கள், அதாவது உற்பத்திச் சாதனங்களை உடையவர்க ளல்லாது பொருள்களை உற்பத்தி செய்பவர்கள் தாயகத்திலுள்ள சிறு கைத்தொழி லாளராயினும் சரி; குடியேற்ற நாடுகளிலுள்ள மூலப் பொருளுற்பத்தி யாளராயினும் சரி, அனைவருமே படிப்படியாகக் கூலிக்குழைப்பவ ராயினர். தொழில் முதலாளித்துவ வளர்ச்சி இடைவிடாது அவர்கள் நிலைமையைப் பாதித்து வந்தது. முதலாளிகள் மேன்மேலும் செல்வர்க ளாகவும் கூலியாளர்கள் மேன்மேலும் வறியோர்களாகவும் வளர்ந்து வந்தனர். படிப்படியாக உலகெங்கும் உள்ள கூலி நாடுவோர் நலன்கள் ஒன்றுபட்டவை என்பதும்; மனித இனத்தைச் சார்ந்தவர்கள் அனை வருமே நட்பும் அமைதிவாய்ந்த வாழ்வும் உடையவர்களாவது இயலுவதே என்பதும்; போர்கள் எழுவதற்கு இயல்பான காரணங்கள் எதுவுமே கிடையாது என்பதும் விளங்கத் தொடங்கின. இவையனைத்தையும் நனவாகக் காண ஒரே வழி முதலாளித்துவ வகுப்பை இல்லாமற் செய்வதும் மனிதனிடமிருந்து மனிதனைப் பிரித்து வைக்கும் செயற்கைத்தன்மை வாய்ந்த தேசிய எல்லைகளை அழிப்பதுமே யாகும். சமதர்ம வாழ்க்கைக் கோட்பாடு, உலக நாடுகளின் மனப்பான்மை ஆகியவற்றின் மூலவேர் இதனை உணர்வதிலேயே அடங்கியுள்ளது. அதாவது எல்லா மக்களும், அவர்கள் உலகின் எப்பகுதியிலிருப்பவர்களா யினும் சரி, ஒன்றுபட்டு முழு நிறைவான அளவில் ஒத்துழைக்க வேண்டும் என்பதே. வினா (33) : முதலாளித்துவம் ஒழிந்தே தீரும் என்று நீங்கள் உண்மையில் நம்புகிறீர்களா? அப்படி நம்புவதேன்? விடை : ஒரு முதலாளித்துவ நாட்டின் ஆற்றல் அதன் உற்பத்தி யாற்றலுக்கு ஏற்றபடியிருக்கும். நன்கு வளர்ச்சி பெற்ற முதலாளித்துவ அரசியல் மூலப்பொருள் வள மட்டுமே நிறைந்துள்ள ஓர் ஏகாதிபத்திய அரசியலை வென்றுவிட முடியும். இது சென்ற உலகப் போரில் நடைபெற்றது. முதலாளித்துவ நாடாகிய ஜெர்மனி ஏகாதிபத்திய நாடாகிய ஃபிரான்சை வென்றதுடன் கிட்டத்தட்ட இங்கிலாத்தையும் வெல்ல விருந்தது. ஆயினும் முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் ஆகிய இரண்டினை யும் தாக்கும் எதிர்ப்பு மக்களிடமிருந்தே, அதிலும், தொழில் வளர்ச்சிச் சமூகத்தில், இயந்திர உழைப்பு வகுப்பினரிடமிருந்தே வருகிறது. மற்றும் இவ்வெதிர்ப்பு வெறும் போட்டியினால் ஏற்படும் எதிர்ப்பன்று; நேர்மாறாக அது வரலாற்றுமுறைச் சூழ்நிலைகளில் ஏற்படும் எதிர்ப்பு. நேர்மையும் சமத்துவமும் உடையதாய், வறுமை, போர்கள் முதலியவற்றைத் தடமற ஒழிக்கக் கங்கணங்கட்டிய ஒரு சமூகத்தை அமைப்பதே அச் சூழ்நிலையின் நோக்கம். இக் கோட்பாட்டைப் பிரசாரம் செய்யும் கொள்கை முறைக்குச் சமதர்மம் என்று பெயர். இக்கோட்பாட்டை முதன் முதலில் கண்டு கூறியவர் கார்ல் மார்க்ஸ் என்ற ஜெர்மன் யூதர். முதலாளித்துவம் வளர்ந்து கொண்டிருந்த அந்தக் காலத்திலேயே அதற்கு ஏற்படவிருக்கும் நெருக்கடியைக் கார்ல் மார்க்ஸ் முன்கூட்டியறிந்தது வியப்புக் குரிய தாயினும் உண்மையே. இங்ஙனம் முன்கூட்டியறிந்தது எவ்வாறு எனில், முதலாளித்துவத்தின் சமூகச் சார்பான இயல்புகளையும் அதன் போக்கையும் அதனால் ஏற்படும் வறுமை, உற்பத்திக்கே ஏற்படும் முட்டுக்கட்டைநிலை ஆகிய விளைவு களையும் அவர் தீர விஞ்ஞான முறையில் ஆராய்ந்ததே யாகும். அவர் முடிவுகள் சரியான முன்னறிவிப்புக்கள் என்பதை இப்போது காலம் காட்டிவிட்டது. வினா (34) : சமதர்மிகளிடையே பொதுவுடைமையாளர், மார்க் ஸிஸ்டுகள், சமதர்மக் கட்சியினர் ஆகிய பல பிரிவினர் இருக்கின்றனர். அவர்களிடையே உள்ள வேற்றுமைகள் யாவை? விடை : சமதர்மிகள், பொதுவுடைமையாளர்கள், மார்க்ஸிஸ்டுகள் ஆகிய அனைவருமே சமதர்மம் என்ற ஒரே கோட்பாட்டைப் பின்பற்று பவர்களே. ஆதலால் உண்மையில் அவர்கள் ஒரே தன்மையுடையவர்களே. ஆயினும் அவர் களிடையே சில வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. இவ்வேறுபாடுகள் மரபும் நோக்கும் பற்றியவையேயன்றி, கோட்பாடும் கருத்துப்போக்கும் பற்றியவையல்ல. சென்ற நூற்றாண்டில் மார்க்ஸுடன்கூட அவரைப் போலவே சமதர்மம் பரப்ப முன்வந்த வேறு சில மெய்விளக்க அறிஞரும் எழுந்தனர். அவர்களுட் சிலர் சமதர்மம் படிப்படியாக வளர்ச்சிபெறும் என்றும் முதலாளித்துவம் அதுபோலத் தானாகவே படிப்படியாக மறைந்துவிடும் என்றும் கூறினர். ஆனால் இம்முடிவில் மார்க்ஸ் கருத்து வேறுபட்டார். பெருத்த அளவான அடிப்படை மாற்றங்கள் படிப்படியாக ஏற்படுவ தில்லை, பெரும்புயலெழுப்பிக் கிளர்ச்சியுடனேயே ஏற்படும் என்பது மார்க்ஸின் கருத்து. பிறப்பு இறப்பு ஆகியவை இதற்கான அவரது விளக்க எடுத்துக்காட்டுகள். முதலாளித்துவம் மங்கி மறைவதும் சமதர்மம் தானாக அதனிடமாக அமைவதும் இயல்பென நம்புவதிற்கில்லை நேர்மாறாக முதலாளித்துவத்தின் அணி வகுப்புக்களுக்கும் மக்கள் அணிவகுப்புக்கும் இடையே மோதுதல் ஏற்படுவது விலக்க முடியாதது. இப்போரில் மக்கள் வெற்றிபெற்ற பின்பே சமதர்மம் எழும். மார்க்ஸின் இக் கொள்கையை மற்ற கொள்கைகளிலிருந்து பிரித்துணரவே மார்க்சிசம் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. சென்ற நூற்றாண்டின் நடுவிலிருந்து ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் சமதர்ம இயக்கங்கள் பல தோன்றியுள்ளன. அவையனைத் துமே உலக நாடுகள் பான்மையை ஒத்துக் கொண்டனவாதலால் அவை சமதர்மக் குடியாட்சிக் கட்சி (ளுடிஉயைட னுநஅடிஉசயவiஉ ஞயசவல) என்ற ஒரே பெயரை வைத்துக்கொண்டன. இங்ஙனம் ஜெர்மன் சமதர்மக் குடியாட்சிக் கட்சி, ரஷ்ய சமதர்மக் குடியாட்சிக் கட்சி, ஃபிரஞ்சு சமதர்மக் குடியாட்சிக் கட்சி முதலிய கட்சிகள் எழுந்தன. அவர்கள் உலக மேடையொன்றும் அமைத்தனர். அதுவே இரண்டாம் உலக அவை (ளுநஉடினே ஐவேநசயேவiடியேட) ஆகும். (முதல் உலக அவை பிறந்தவுடன் கலைந்து விட்டது. ஆனால் இது கொள்கையடிப்படையான எந்த வேறுபாட்டாலும் அல்ல; உட்பூசல்களால் மட்டுமே) இவ் விரண்டாம் உலக அவையினரும் சமதர்மக் குடியாட்சிக் கட்சியினரும் ஒருங்கே சமதர்மக் கட்சியினர் என்று அழைக்கப் பட்டனர். சமதர்மக் குடியாட்சியாளரின் சோதனைக்குரிய காலம் முதல் உலகப் போரில் ஏற்பட்டது. அவர்கள் உலக நாடுகள் பான்மையில் ஊன்றியவர்களானால், அவர்கள் தெளிவான கடமை அப்போரையே எதிர்ப்பதாகும். இங்ஙனம் செய்வதற் கான தீரம் அவர்களிடம் காணப்பட வில்லை என்பது புரியக்கூடியதே. அவர்களில் சிலர் போர் முயற்சியில் தத்தம் முதலாளித்துவ அரசியல்களை ஆதரிக்கவும் முற்பட்டனர். இப்பிரச்சனைமீது ரஷ்யாவில் சமதர்மக் குடியாட்சிக் கட்சியிடையே இரு உட்பிரிவுகள் தோன்றின. அவற்றுள் மிதமான போக்குடையவர்கள் மென்ஷெவிக்கர்கள் என்றும், புரட்சிகரமான போக்குடையவர்கள் போல்ஷெவிக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். போல்ஷெவிக்கரின் கருத்தில் போர் முதலாளித்துவ ஏகாதிபத்தியச் சார்பானது. ஆகவே அது உழைப்பு வகுப்பின் ஆதரவு பெறுவதற்குரிய தன்று. அதுமட்டுமன்றி, போரை நிறுத்துவதற்கான வழியே முதலாளித் துவத்தைக் கவிழ்ப்பதுதான் என்று போல்ஷெவிக்கர் கருதினர். முடிவாக 1917-ல் அவர்கள் ரஷ்ய முதலாளித்துவ வகுப்பை முறியடிப்பதிலும் வெற்றி பெற்றனர். இவ்வெற்றியே ரஷ்யப் புரட்சி எனப்படுகிறது. புரட்சிக்குப்பின் சமூகக் குடியாட்சிக் கட்சிகளுக்கும் போல் ஷெவிக்கர்களுக்கும் இடையேயுள்ள பிளவு அகற்கியடைந்தது. அதன்பின் ரஷ்யாவில் புதிதாக நிறுவப் பெற்ற மூன்றாம் உலக அவை மூலம் போல் ஷெவிக்கர் தம் பொதுக் கருத்தையே கொண்ட கட்சிகளை மற்ற நாடுகளி லும் வளர்க்க முடிவுச் செய்தனர். இம்மூன்றாம் உலக அமைப்புடன் இணைக்கப் பட்ட கட்சிகளே பொதுவுடையைக் கட்சிகள் எனப் பெயர்பெற்றன. மூன்றாம் உலக அவையும் இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் தன்னிச்சையாகவே கலைந்து திடீர் முடிவு பெற்றது. அதன்பின் உழைப்பாளிகள் உலக அவை ஏற்படுத்த வேறு முயற்சிகள் எதுவும் செய்யப்படவில்லை. ஆகவே மேற்கூறப்பட்டதுபோல, பல்வேறு சமதர்மக் கட்சிகளிடையேயும் உள்ள வேறுபாடு வரன்முறை பற்றியதேயன்றிக் கொள்கை யடிப்படை பற்றியதல்ல. வினா (35): ரஷ்யப் புரட்சியின் தன்மை பற்றிப் பெருத்த கருத்து வேறுபாடு இருந்துவருகிறது. அது சமதர்மச் சார்பானதா? மனிதனின் சமூக வளர்ச்சி வரலாற்றில் அது ஒரு குறிப்பிடத்தக்க எல்லைக் கோடாகும் என்பது உண்மையா? விடை : வரலாற்றின் ஒவ்வொரு பெரிய கட்டத்தைப் பற்றியும் கருத்து வேறுபாடு எழுவது இயற்கையே. ரஷ்யப் புரட்சியும் இப்பொது அமைதிக்கு விலக்கன்று. `ரஷ்யப் புரட்சி உண்மையில் ஒரு புரட்சியே யன்று; ஒரே அமளிகுமளியும், திட்டமிட்ட கூட்டுக்கொள்ளையுமன்றி வேறன்று’ என்று கூறப்பட்ட காலம் ஒன்று உண்டு. ஆனால் அக்காலம் மலையேறி விட்டது. இப்போது அது நகையாடிப் புறக்கணிக்கத் தக்கதன்று; வரலாற்று முக்கியத்துவமுடைய ஓர் ஊழித்திருப்பக்கல்லே என்பது எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. உண்மையில் உலகெங்கும் முதலாளித்துவக் கட்சியினரே இதனை ஒத்துக் கொண்டுள்ளனர். அது இன்றைய நாகரிகத்தையே எதிர்த்துப் புதிதாக அமைக்கப் படும் மற்றொரு நாகரிகத்தின் பிறப்பு என்பதை அவர்கள் அறிகின்றனர். ஆனால் தம் நாகரிகத்திலும் அது கீழ்த்தரமானது என்று மட்டுமே கூறிக்கொள்கின்றனர். அடிப்படையியல்பில் ரஷ்யப் புரட்சி சமதர்மச் சார்பானதே. அது ரஷ்யாவில் முதலாளித்துவ முறைக்குச் சாவு மணியடித்ததுடன் ஒரு சமத்துவ சமூக முறைக்கு வழி வகுத்தது. இதை முதலாளித்துவச் சார்பான பொருளியலறிஞர்களே மறுக்கவில்லை. முக்கியமாக இப்புரட்சியைக் கண்டிப்பவர்கள் கண்டனம் புரட்சியின் கண்டனமன்று, புரட்சி நடந்த வகைமுறையின் கண்டனமேயாகும். புரட்சிக்குப் பிந்திய கால வாழ்வில் சோவியத்து ரஷ்யா சிலபல வரலாற்றுச் சார்பான, கால தேசச் சார்பான இடையூறுகளுக்கு உள்ளாக வேண்டி வந்தது. இவற்றின் பயனாக மார்க்ஸினால் கருதப்படாதவையும் மார்க்ஸின் கருத்துக்களுடன் முற்றிலும் பொருந்தாதவையுமான, சமதர்ம முடிவுகளுக்குப் புறம்பான போக்கை ரஷ்யா மேற்கொள்ள வேண்டியதாயிற்று. எடுத்துக்காட்டாக ரஷ்யாவின் அரசியல் சர்வாதிகாரத்தன்மை மிகவும் கடுமையுடையதாகவும் பல இடங்களில் கொடுமை யுடைய தாகவும் கூட அமைந்தது. சமதர்ம முன்னேற்றம் என்பது இதுதானா என்று பலர் மலைவடையும் நிலையையும், சமதர்மம் இந்த விலைகொடுத்து வாங்கத் தக்கதுதானா என்ற நிலையையும் அது உண்டுபண்ணிற்று. இத்துறையில் அனைவரும் ஏற்கத் தக்கதொரு விளக்கம் ஏற்பட முடியாதுதான். ஆயினும் வரலாற்றுச் சார்பான எம் மாறுபாட்டையும் அதன் பயனாய் ஏற்பட்ட சமூக முறையினால் மதிப்பிட வேண்டுமே யல்லாது, அதனுடன் நடைபெற்ற பலாத்கார முறை அல்லது பலாத்கார மற்ற முறைகளினால் அதனை மதிப்பிடக் கூடாது. முதலாவதாக, ரஷ்யப் புரட்சி அதுமாதிரியான புரட்சிகளில் முதன்முதல் புரட்சி ஆகும். அதற்கு வழிகாட்டியாயமையத்தக்க நிகழ்ச்சி முன்பு எதுவுமில்லை. ஆகவே புதிய சமூக அமைப்பை நிறுவும் முயற்சியில் ரஷ்யா விழுந்தெழுந்தது திருந்தும் பல சோதனை முறைகளைப் பின்பற்றிற்று. இத்தவறுகளைக் கைப்பற்றிக் கொண்டு முதலாளித்துவச் சார்பாளர்கள் அதைக் குறை கூறினர். தவறுகளைப் பெருக்கி வலியுறுத்தி அதன் சாதனைகளைப் புறக்கணித்தனர். இரண்டாவதாக இப் புரட்சி நிகழ்ந்த நாடு தொழில் முறையில் பிற்போக்கான நாடு. ஆகவே அது மக்கள் தொகையில் இயந்திர உழைப்பு வகுப்பின் ஒரு சிறுபான்மைப் பிரிவாக மட்டுமே இருந்தது. எனவே வகுப்புச் சர்வாதிகாரமென்பது இங்கே ஒரு கட்சிச் சர்வாதிகாரமாகவே இருக்கமுடிந்தது. இதிலும் நடைமுறை மார்க்ஸ் கருதிய நடைமுறைக்கு மாறாக இருந்தது. ஏனெனில் மார்க்ஸ் கருத்துப்படி புரட்சி தொழில் வளர்ச்சியுற்ற நாடுகளில் இயந்திர உழைப்பு வகுப்பின் சர்வாதிகாரம் நிறுவப்பட்டபின்னரே நடைபெற வேண்டும். கடைசியாக உலகில் வேறு எப்பகுதிகளிலும் புரட்சி ஏற்படாத நிலையில் ரஷ்யப்புரட்சி ஒரு தனிப்பட்ட துண்டுபட்ட நிகழ்ச்சியாகவே இயங்கிச் செல்ல முடிந்தது. ஆகவே இதில் சில தேசியப் பண்புகள் கலந்துநின்றன. இதுவும் மார்க்ஸின் முன்னறிவிப்புக்கு மாறாயிருந்தது. ஏனெனில் ஒரு நாட்டில் சமதர்மப் புரட்சி நடந்தால் அதனைத் தொடர்ந்து அடுத்த நாட்டில் புரட்சி நடைபெறும் என்று அவர் கூறியிருந்தார். இவ் வகைகளில் ரஷ்யப் புரட்சிக்கு ஏற்பட்ட இடையூறுக ளெல்லாம் அது வரலாற்றின் ஒரு தனிப்பட்ட தற்செயல் நிகழ்ச்சி என்பதனையே பெரிதும் சார்ந்ததாகும். (அதாவது, அது திட்ட மிட்ட உலகப் புரட்சியின் ஒரு பகுதியன்று என்பதே). ரஷ்யப் புரட்சி பற்றிய சரியான நோக்கும் மதிப்பீடும் அதன் தனி யியல்புகளை ஆராய்வதினால் பெறப்படுவதைவிட அதன் சாதனை களினாலேயே சரிவரப் பெறப்படும். அது உற்பத்திச் சாதனங்களில் தனிப்பட்டவர் உடைமை உரிமைகளை ஒழித்தது என்பதிலும், உழைப்பாளிகளே ஆட்சியாளர்களாகக்கூடிய ஒரு சமூக முறையை அமைத்தது என்பதிலும் சமதர்மத்தின் இரு அடிப்படைத் தத்துவங்கள் ரஷ்யப் புரட்சியில் வெற்றி பெற்றுள்ளன. இது மனித இனத்தின் சமூக இயல் வரலாற்றில் ஒரு நல்ல திரும்புகட்டமேயாகும். ரஷ்யப் புரட்சி பற்றிய நேர்மையான கண்டிப்புக்கள் பெரும்பாலும் அதன் சர்வதேசியப் பகுதி சார்ந்தவையல்ல. ரஷ்ய நாட்டிலேயே உருவான அதன் தேசியப்பகுதி பற்றியவையே. இங்கும் அது நடைபெற்ற கால உலக நிலைகளின் சூழ்நிலையில் வைத்தே அதன் பெரும்பகுதியும் உணரப்பட வேண்டும். பிற நாடுகளில் புரட்சி ஏற்படாத காரணத்தால் (இதற்கு ரஷ்யநாடு பொறுப்பாளி என்று கூறமுடியாது) ரஷ்யா மேன்மேலும் தம் நலங்களையும் தம் வலிவையுமே நம்பி நிற்கவேண்டியிருந்தது. ஒவ்வொரு காரியமும் `தம் கையே தமக்கு உதவி’ என்ற முறையில் தேசிய வரையறைக்குட்பட்டுச் செய்ய வேண்டியிருந்தது. இவற்றின் காரணமாகப் புரட்சியில் சில தேசியப் பண்புகள் விலக்க முடியாதவையாயிருந்தன. இதற்காகக் குறைகூறியாக வேண்டுமானால் ரஷ்யாவுக்கு வெளியேயுள்ள சமதர்ம இயக்கத்தைக் கூற முடியாது. மற்ற சமதர்மிகள் செய்ய முடியாததை அவர்கள் உதவியில்லாமலே செய்து முடித்ததற்காகவா ரஷ்யாவைக் குறைகூறுவது! என்றபோதிலும் சோவியத் கூட்டுறவின் நண்பர்களும் பகைவர்களும் இருவருமே ஒரு பெருந்தவறுக்கு ஆளாயுள்ளனர். அதாவது ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நுணுக்கத்திலும் ரஷ்யப் புரட்சியே முழுவதும் திருப்பித் திருப்பிப் படிக்கப்படும் என்று இருசாராரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது அறியாமை மட்டுமன்று முழு மடமையாகும். (வரலாறு திரும்பித் திரும்பி வரும் என்ற பொது உரைக்கு மாறாக) வரலாறு என்றும் படித்த பாடத்தைத் திருப்பிப் படிப்பதில்லை. ஒவ்வொரு மாறுபாடும் அவ்வவ் இட, காலச் சூழ்நிலைகளைச் சார்ந்தே இயல்கின்றது. ஒருபோதும் அவற்றுடன் தொடர்பற்று நிகழ்வதில்லை. உலகப் புரட்சி என்பது ரஷ்யப் புரட்சியின் ஒரு மாபெரும் உலகப் பதிப்பாகவே இருக்கும் என்று யாரேனும் எதிர்பார்த்தால் வரலாறு அந்நம்பிக்கையை முற்றிலும் பொய்யாக்குவது உறுதி. ரஷ்யப் புரட்சிபற்றியும் அதன் சமூகத்துறை நோக்கங்கள் பற்றியும் ஏற்பட்டுள்ள தப்பெண்ணங்களைப் போக்க இது உதவும். இன்றைய நிலைக்கு ஒத்த கேள்வியாவது, ரஷ்யப் புரட்சி எந்த அளவுக்கு மற்ற நாடுகளில் சமதர்மத்தின் வளர்ச்சிக்கு உதவும் என்பதே. முதலாவதும் முதன்மையானதுமான விளைவு ரஷ்யாவிலே சமதர்மத்தின் எதிர்காலம் பற்றிய செய்தி இனி வெறுங் கனவல்ல, முழு அளவில் நனவு என்பதே. அது அங்கே சோதனை நிலையில்கூட இல்லை; நிறைவேற்றப்பட்ட நிலையிலேயே உள்ளது. இரண்டாவதாக, தேசிய முறையிலேயே ரஷ்யா பிரம்மாண்டமான சக்தி பெற்றுள்ளது; இது சர்வதேச நிலையிலும் பயன்விளைவிப்பதே. சர்வதேச அரங்கத்தில் ரஷ்யாவை ஒரு முக்கியமான அங்கமாகக் கொள்ளாமல் எந்த மாறுபாடும் இனிச் செய்யமுடியாது. இச் சக்தியின் அளவு பெருகப்பெருக, உலக சமதர்ம முன்னேற்றமும் அந்த அளவுக்குப் பெருக்க மடையும். வினா (36) : ஆனால் ரஷ்யாவின் ஆற்றல் வளருந்தோறும் ரஷ்ய ஆணையாளர் (கமிஸ்ஸார்) ஆட்சி உலகை ஆட்டிப் படைக்கும் என்ற அச்சமும் மக்கள் உள்ளத்தில் எழாதா? விடை : உங்கள் சமதர்ம இயக்கம் எவ்வளவு ஆற்றல் வாய்ந்தது என்பதையே அது பொறுத்திருக்கும். அது சக்தி வாய்ந்ததாயிருப்பின் ரஷ்ய ஆணையாளர் ஆட்சி என்ன, எந்த ஆட்சிதான் உங்கள்மீது ஆதிக்கம் செலுத்தமுடியும்? தம் பலவீனத்துக்காக மற்றவர்களைக் குறைகூறுதல் கோழைத்தன மல்லவா? எனினும் இவ்வகையில் ஒரு எச்சரிக்கை தரவேண்டும். வளரும் மரத்தின் தன்மையை வெட்டு மரத்தின் தன்மையாக எண்ணிவிடக் கூடாது. முதலாவதாக, ரஷ்ய ஆணையாளர் ஆட்சி எனப்படுவது ரஷ்ய சமதர்மத்தின் மீது மக்களுக்கு அருவருப்பை உண்டுபண்ணும் நோக்கத்துடன் முதலாளிகளால் பரப்பப்பட்ட பொய்ப்புரளியாகும். இரண்டாவ தாக, சமதர்மம் வருவது மக்கள் விருப்பத்தாலேயேயன்றி, வெளியார் சக்தியின் தூண்டுதலால் அல்ல. சமதர்மம் என்பது சமூக முறையில் மாறுதலேயன்றி அரசியல் முறையிலன்று. ரஷ்ய ஆணையாளர் செய்யக் கூடிய உச்ச ஆட்சிகூட இதற்குமேற் செல்ல மாட்டாது. மூன்றாவதும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததுமான விளக்கமாவது; நாம் கவனிக்கவேண்டுவது ரஷ்யாவில் சமதர்மம் நிலவுகிறதா என்பதையே யன்றி, அங்கே ஆணை யாளர்களோ மாவட்டத் தலைவர்களோ இருக்கிறார்களா என்பதல்ல. நாம் மேற் காட்டியபடி ரஷ்யாவில் சமதர்மம் நிலவுகிறதானால், வரலாற்று முறைப்படியே ஆணையாளரின் முக்கியத்துவம் அங்கே வரையறுக்கப் பட்டதாகவும் புறக்கணிக்கத் தக்கதாகவுமே இருக்கும். மொத்தத்தில் ஆணையாளர்தான் அரசியல் சக்கரத்தின் ஒரு திருகாணியன்றி வேறு என்னவாய் இயங்க முடியும். மேலும் இங்ஙனம் ஆராய்வதில் நாம் அடிப்படைச் செய்திகளை விட்டுவிட்டுச் சிறு நுணுக்கங்களையே கவனிக்கிறோம். ரஷ்யப் புரட்சி சமதர்ம அடிப்படையில் உருவானதே. இவ்வடிப்படைச் செய்தியில் எந்த மாறுபாடும் இல்லை. இங்ஙனம் அது சமதர்மப் புரட்சியா யிருந்தால் அது உலகப் புரட்சிக்கு வழி வகுத்தே தீரவேண்டும். முடிவாக வற்புறுத்தவேண்டியது யாதெனில், சமதர்ம இயக்கம் எதுவும் சோவியத் ரஷ்யாவுடன் பகை வைத்துக் கொள்ள முடியாது. கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன, இருக்கலாம். ஆனால் ரஷ்யாவினுள்ளேயே கருத்து வேறுபாடுகள் இல்லாமலில்லை. இவ்வேறுபாடுகளைப் பெருக்கி மிகைப்படுத்திப் பகைமைக்கான காரணங்களாக்குவது என்பது சமதர்மத்தின் குறிக்கோளையே புறக்கணிப்பது, சிறப்பாக அதன் சர்வதேச மனப்பான்மையை மறுப்பது ஆகும். வினா (37) : தொழிற்சங்க இயக்கம் சமதர்மத்திலிருந்து எவ்வகையில் மாறுபடுகிறது? விடை : பலவகைகளில் உண்மையில் இவை இரண்டிற்கும் தொடர்பே கிடையாது. சமதர்மம் ஒரு முழுமை வாழ்க்கைக் கோட்பாடு. அது எல்லா வகுப்புகளுக்கும் திட்டம் அமைப்பது. அதன் குறிக்கோள் ஒரு புதிய சமூகமுறை யமைப்பை உருவாக்குவது. ஆனால் தொழிற்சங்க இயக்கத்தின் குறிக்கோள் இயந்திரத் தொழில்களிலீடுபட்ட உழைப்புத் தொழிலாளர் எல்லைக்குட்பட்டது. அது அவர்கள் நலங்களைப் பாது காப்பதற்கான அமைப்பு மட்டுமே. அதன் பிரச்சினைகள் அரசியலுடன் மோதிக்கொள்ளும் சமயத்திலன்றி, அதற்கு அரசியலுடன் யாதொரு தொடர்புமில்லை. வினா (38) : தொழிற் சங்க இயக்கம் தோன்றிய தெவ்வாறு? விடை : தொழிற் புரட்சியியக்கம் ஏற்பட்டபோது நகர்களிலேயே அமைந்திருந்த தொழிற்சாலைகளில் உழைப்பதற்குத் தொழிலாளர்கள் வேண்டியிருந்தது. சிறு கைத்தொழிலாளர் இயந்திரங்களால் தம் வாழ்க்கைப் பிழைப்புக்கு வழிகெட்டுவிடு மென்று கருதித் தொழிற்சாலைகளில் வேலை செய்ய ஒருப்படவில்லை. தொழில் முதலாளிகள் தொழில் துறைக்குப் பெரும்பாலும் குடியானவரையே நம்பவேண்டி யிருந்தது. முதலில் நகர் வாழ்விலும் இயந்திரத்திலும் பழகாத குடியானவரும் முணுமுணுக்கவே செய்தனர். ஆகவே அவர்கள் பலாத்காரமாகவோ வேறுசூழ்ச்சி முறைகளாலோ கொண்டுவரப்பட்டனர். இவ் வகையில் ஆசையூட்டுவதற்காகக் கிராமங்களில் அவர்கள் பழக்கப் பட்ட வாழ்க்கை ஊதியத்தை விட ஒரு சற்று மிகுதியான வாழ்க்கைத்தரந் தந்து அவர்கள் கொண்டு வரப்பட்டனர். இதனால் வரவர மிகுதியான குடியானவர்கள் கிராமங்களிலிருந்து நகரங்களுக்குக் குடியேறத் தொடங்கினர். தொழிலாளர் தொகை பெருகப் பெருக, மிகுந்த ஊதியந்தந்து வரவழைக்கவேண்டிய அவசியம் குறைவதை முதலாளிகள் உணர்ந்தனர். அத்துடன் தொடக்கத் தொழில் வளத்தைத் தொடர்ந்து தொழில் மந்தமும் ஏற்பட்டது. மூலப்பொருள்களைப் பெறுவதில் சிறு சிறு நெருக்கடி நிலைகள் எழுந்தன. உற்பத்திப் பொருள்கள் விற்பனையான விற்பனைக் களங்களில் ஏற்றத்தாழ்வுகள் உண்டாயின. போட்டி தலையெடுத்தது. ஆகவே சிக்கன முறைகளுள் ஒன்றாக முதலாளிகள் கூலியைக் குறைக்கத் தலைப்பட்டனர். இதற்கெதிராகத் தொழிலாளிகள் தங்களைக் காத்துக் கொள்வது எவ்வாறு? இன்னும் அவர்களுக்கு ஒரு சாதகமான வலு இருந்தது. அவர்கள் பெருந் தொகையினராகவே வேலை செய்தும் கிட்டத்தட்ட ஒரே இடத்தில் வசித்தும் வந்ததால், அவர்கள் அமைப்பு முறையில் ஒருங்குகூடித் தம் நிலைமையைச் சரிவரப் பாதுகாத்துக்கொள்ள வகையிருந்தது. முதலில் இத்தகைய அமைப்பு ஏற்படுத்தும் முயற்சிகள் முதலாளிகளால் எதிர்க்கப் பட்டன. ஆனால் இவ்வெதிர்ப்பு நெடுநாள் நடைபெறவில்லை. தொழில் வளர வளர, தொழிலாளர் தொகையும் பெருகிற்று. அவர்கள் சங்க அமைப்புக்களும் வளர்ச்சியுற்றன. வரவர முதலாளிகளும் தனிப்பட்ட தொழிலாளர்களுடன் பேரம் செய்வதை விடச் சங்க அமைப்புக்களுடன் பேரம் செய்வது எளிது என்று உணர்ந்தனர். தொழிலாளர் சங்கங்களின் நோக்கம் அவர்கள் ஊதியத் திட்டத்தையும் நேரத் திட்டத்தையும் வேலைச் சூழ்நிலைகளையும் பாதுகாப்பதே. அவர்கள் அமைப்புக்கள் யாவும் சுரங்கத் தொழில், நெசவு, இரும்புத் தொழில் ஆகிய தனித் தனித் துறைகள் பற்றியவை யாதலால், அவை தொழிற் சங்கங்கள் எனப்பட்டன. தொழில் உடைமையாளருக்கும் அதன் தொழிலாளருக்கும் இடையே வேற்றுமை ஏற்பட்ட போதும், கூட்டு முறையில் பேரம் செய்வது திருப்தி தருவதாகவும் காலச் சிக்கன முடையதாகவும் காணப்பட்டது. பெரும்பாலான நாடுகளில் இன்று ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கும் கூட்டுப்பேர முறையே தொழிற் சங்க இயக்கமாகும். இங்ஙனம் தொழிற் சங்க இயக்கம் இயந்திர ஊழியரின் நலன்களை மட்டுமே பாதுகாப்பது ஆகும். அது முதலாளித் துவத்தை அழிப்பதையோ, புதிய சமூக முறையை உண்டுபண்ணு வதையோ குறிக்கோளாகக் கொண்ட தன்று. ஆனால் இதுவே சமதர்மத்தின் பணி ஆகும். மேலும் சமதர்மம் உழைப்பு வகுப்பே நியாயமாக முதலாளித்துவ வகுப்பினும் முன்னுரிமை யுடையதாகக் கொள்ளினும், அது குடியானவர் வகுப்பு, அறிவுவகுப்பு முதலிய எல்லா வகுப்பின் நலன்களையும் கவனிக்க வேண்டியதாகிறது. ஆகவே சமதர்மமும் தொழிற்சங்க இயக்கமும் ஒன்றுக்கொன்று நிறைவு ஆன தொடர்புடைய இயக்கங்களே யாயினும் இரு வேறு நோக்கங்களைக் கொண்ட இரு வேறு இயக்கங்களே யாகும். வினா (39) : உழைப்புத் தொழிலாளிகள் தொழிற் சங்கங்கள் மூலம் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கக் கூடுமானால் அவர்களுக்குச் சமதர்மம் ஏன் தேவைப்படுகிறது? விடை : தொழிற் சங்கங்கள் மூலம் தொழிலாளர் எப்போதுமே தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க முடியாது. தொழிற் சங்கங்கள் பேரம் செய்ய முடியும். அவசியமானபோது முதலாளிகளுடன் போராடும் போராட்டத்தில் உதவவும் முடியும். ஆனால் அவர்கள் முயற்சி எப்போதும் வெற்றியில் முடிவதில்லை. சில சமயங்களில் முதலாளி தன் கட்டற்ற சக்திகொண்டே அவர்களை அடக்கி விடுகிறான். சில சமயம் முதலாளிகட்கே பெருத்த இடைஞ்சல்கள் இருப்பதன் காரணமாக அவர்களால் தொழிலாளர்களைத் திருப்திப்படுத்த முடிவதில்லை. அதாவது தொழிலாளர்கள் கோரிக்கை எவ்வளவு நேர்மையாயிருந்தாலும் அவர்களால் அதனை நிறைவேற்ற முடிவதில்லை. முதலாளிகளுடன் தங்கள் தொடர்பை சரி செய்துகொள்ள மட்டுமே தொழிற் சங்கங்கள் ஒரு கருவியாய் அமைய முடியும். சமதர்மக் கட்சியே மக்களுக்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்பைச் சரி செய்து வைக்கும் கருவியாகும். தொழிலாளர் வகுப்புக்கும் முதலாளித்துவ வகுப்பைப் போலவே அரசியல் துறையில் ஒரு நோக்கம் வேண்டும். இலவசக் கல்வி, மலிவான உணவு, போர்கள், வீட்டு வசதி, பேச்சுரிமை, ஆகியவை வேண்டும், வேண்டாம் என்பது பற்றியதே இந்நோக்கு. முதலாளி, இலவசத் தொடக்கக் கல்வியை நாடலாம். ஆனால் இலவச உயர்தரக் கல்வியை எதிர்க்கக்கூடும். அவர்கள் மலிவான உணவைக் கோராதிருக்கலாம். ஆனால் தொழிலாளர் அதனைக் கோருவர். போர் முதலாளிகளுக்கு நன்மையாகும். ஏனெனில் அதன் வெற்றி அவர்கட்கு இன்னும் மிகுதியான விற்பனைக் களங்களைக் கொண்டுவரும். தொழிலாளர்கட்கோ போர் அழிவுத் தன்மையுடையது. இச்செய்திகளில் தொழிற் சங்கங்களின் கருத்து ஒருமித்த முடிவுடையதாயிருக்க முடியாது. இதனாலேயே தொழிலாளர் தமக்கென அரசியல் கட்சியொன்றை வகுத்துக் கொள்கின்றனர். இது பொதுவாகச் சமதர்மக் கட்சியேயாகும். வினா (40) : முதலாளிகள் போக்கு எவ்வளவு பிற்போக்குடைய தானாலும், அவர்கள் எல்லையற்ற பலம் உடையவர்களாக இருப்பதை நோக்க, இச் சமதர்மக் கட்சி வெற்றிகரமானதாயிருக்க முடியுமா? விடை : முதலாளித்துவ வகுப்பின் வலுவைக் குறைவாக மதிப்பதில் பயன் எதுவுமில்லை. முதலாளிகளுக்கு மட்டற்ற பக்கபலம் இருப்பதும் அவர்களுக்கு அரசியலின் ஆட்சி பெரும்பாலும் துணையாயிருப்பதும் உண்மையே. ஆயினும் நாம் மேலே குறிப்பிட்டதுபோல முதலாளித்துவத்தின் வலு எப்போதும் ஒருநிலைப்பட்டது அல்ல. உழைப்பு வகுப்பும் பொது மக்களும் அவர்களுக்கு எதிர்ப்பாக உள்ளனர் என்பது மட்டுமல்ல; அவர்களுக்குள்ளே கூடப் போட்டி எதிர்ப்பு இருக்கிறது. மேலும் நுணுகி ஆராய்ந்து பார்த்தால் முதலாளித்துவத்தின் வலு இறுதியாகத் தொழிலாளர் அவர்களுக்குத் தரும் வலுவேயாகும். எனவே தொழிலாளர் அவ்வலுவைக் குறைக்க விரும்பினால், அவர்களால் குறைக்க முடியும். சமதர்மக் கட்சி ஒவ்வொரு தறுவாயிலும் புரட்சியைக் கிளப்பிவிட முயலுவதன்று. அது முயல்வதெல்லாம் இப்போதிருக்கும் அரசியல் சாதனங்களை கூடுமானபோதெல்லாம் தன் நோக்கத்தை ஈடேற்றும் முறையில் பயன்படுத்துவதேயாகும். இது காரணமாகவேதான் அது முதலாளித்துவ நிலையங்களான அரசியல் அன்று, நகரவைகள் முதலிய பொது நிர்வாகங்களில் புகுகின்றது. ஆனால் அதன் முக்கிய நோக்கம் ஒரு சிலரேயுள்ள முதலாளித்துவ ஆட்சி யினிடமாக, பெரும்பாலரான தொழிலாளரின் ஆட்சியை நிறுவுவதேயாகும். இதைப் புரட்சி மூலம் நிறைவேற்றிக் கொள்வதா அல்லது அரசியல் மன்ற முறையில் பெரும்பான்மை யாதிக்கத்தினுதவியால் நிறைவேற்றிக்கொள்வதா என்பது எத்தகைய கண்டிப்பான கோட்பாட்டமைதியையும் பொறுத்த தன்று; சூழ் நிலைகளையும் நிலைமைகளையும் மட்டும் பொறுத்தது. வினா (41) : தொழிலாளர்களையும் அவர்கள் சங்க அமைப்புக் களையும் விட முதலாளித்துவ அரசியல்களிடமுன்பே படைகளும் காவலர் படை(போலீஸ்)களும் எத்தனையோ மடங்கு வலுவுடையவையா யிருக்கையில் இது எவ்வாறு முடியக்கூடும்? விடை : மேலீடாகக் காண்பதுபோல நம் வேகம் அவ்வளவு எளிதானதல்ல என்பதை ஏற்றுக்கொள்கிறோம். சென்ற 25 ஆண்டு வரலாறே இதற்குச் சான்றாகும். தொழிலாளர் கூட்டுமுறையில் எதிர்த்து நின்று பொது வேலைநிறுத்த அறிவிப்புச் செய்து வேலை செய்ய மறுத்துவிட்டால் முதலாளித்துவம் நொறுங்கி வீழ்ச்சியடைந்து விடும் என்று தொடக்க நாட்களில் நம்பப்பட்டது. (கார்ல் மார்க்ஸ் கூட இதனை நூற்றுக்கு நூறு நம்பியவர்களில் ஒருவரே) ‘இதனால் தொழிற்சாலைகளிலிருந்து சரக்குகள் வராததுடன், புகை வண்டிகளும் பிற போக்குவரத்து வசதிகளும் இதனால் நிறுத்தப் பட்டுவிடும்! காவல் துறையும் படைக் கலந்தாங்கிய படை வீரரும் செயலற்றுப் பயனழிந்து போவர்!’ என்று கருதப்பட்டது. இவை அனைத்தும் கோட்பாட்டளவில் சரியே. ஆனால் செயலளவில் இதே முறையில் எதுவும் நடைபெறுவ தில்லை. ஏனெனில் நூற்றுக்கு நூறு என்ற அளவில் வேலை நிறுத்தம் என்பது நடைபெற முடியாத ஒன்று. ஆகவே லெனின் மார்க்ஸைப் பொதுவாகப் பின்பற்றினும் ஒரு திருத்தம் செய்துகொண்டார். இப்போராட்டத்தை முற்ற முடிக்க வேண்டுமானால் உழைப்பு வகுப்பின் தலைமையில் பொது மக்கள் போர்க்கருவி தாங்கிய கிளர்ச்சி ஒன்று தொடங்கி அரசியல் சாதனங்களைக் கைப்பற்றவேண்டும் என்றும் இவ்வழியில் மட்டுமே சமதர்ம அரசியல் உருவாக முடியும் என்றும் அவர் கூறினார். மேலும் முதலாளித்துவ முறையில் இன்னொரு பொறித் தடத்தையும் லெனின் கண்டு பயன்படுத்தினார். இது இதுவரை கவனிக்கப்படாதிருந்த தொன்று. காவற்படையும் போர்ப்படையும் முதலாளித்துவத்தைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டவை யாயினும் உண்மையில் குடியானவர்களிடையிலிருந்தும் தொழிலாளர் களிடையிலிருந்தும் திரட்டப்பட்டவையே - அவர்களும் உழைப்பூதியம் பெறுபவர்களே; அவர்கள் நலங்கள் உழைப்பாளர்கள் நலங்களுடனொத்தவையே. ஆகவே படை வீரர்களும் மக்கள் கிளர்ச்சியின் போது பொதுமக்கள் சார்பாகவே நிற்பர் என்று கொள்ளப் போதிய சாதக நிலை இருக்கவே செய்தது. வினா (42) : அரசியல் மன்றங்கள் இன்ப வாழ்க்கை வகுப்பினரே தோற்றுவித்ததாயினும் மக்களின் மொழியுரிமையாலேயே தேர்வுபெறப் படுகின்றன வாதலால், சமதர்ம கட்சி அவற்றில் பெரும்பான்மையிடம் பெற்றுச் சமதர்மச் சட்டங்களை ஏன் கொண்டுவரப்படாது? விடை : ஒவ்வொரு சமதர்மக் கட்சியும் செய்ய முயன்று வருவது இதுவே. ஆனால் இதுவும் கோட்பாட்டளவில் சரியே தவிர நடைமுறைச் சோதனையில் எப்போதும் வெற்றி பெறுவதில்லை. அரசியல் மன்றில் புகும் ஒவ்வொருவரும் நிலைபெற்றுள்ள அரசியலுக்கு அதாவது முதலாளித்துவ அரசியலுக்கு உண்மையுடையவனாயிருப்பதாக உறுதி எடுக்கவேண்டும். எனவே அதை அழிக்காதிருக்க அவன் உறுதிமொழி கொடுப்பவனாகிறான். இரண்டாவதாக, தேர்தல்களில் எல்லாரும் மொழியளிப்பதுமில்லை; அளிக்க முடியவும் செய்யாது. மொழியளிக்க முடியாத வகையில் மக்கள் வேலையிலீடு பட்டிருக்கலாம் களைத்துப் போயிருக்கலாம்; அதுபற்றித் தொந்தரவு எடுத்துக் கொள்ளவிரும்பாது அசட்டையாயிருக்கலாம். தேர்தல்களுக்கு மிகவும் செலவு பிடிக்கும். இதில் முதலாளிகளுக்குச் சமதர்மிகளுக்கு இருப்பதை விட என்றும் நிலைமை சாதகமாகவே இருக்கும். ஆயினும் அரசியல் மன்றில் பெரும்பான்மை பெறுவது ஒருநாளும் முடியாத காரியம் என்று கூற இயலாத ஒரு சில நாடுகளில் சமதர்மிகள் பெரும்பான்மையிடம் பெற்றுள்ளார்கள். ஆனால் சில சில ஆண்டுகளுக்கொரு முறை பொதுத்தேர்தல் நடைபெறுவதால் இப் பெரும்பான்மை நிலைபேறுடையதன்று. இது மட்டுமன்றிச் சில இடங்களில் சமதர்ம ஆட்பேர்கள் பெரும்பான்மை யிடங்கள் பெற்றுப் பதவி பெற்றபின் முதலாளி வகுப்பு கிளர்ச்சி செய்து அரசியலைப் பலாத்காரத்தினுதவியால் வீழ்த்தி முறியடித்ததுண்டு. இது ஸ்பெயினில் நடைபெற்றது. ஸ்பானிய முதலாளிகள் ஒரு கிளர்ச்சியை உருவாக்கி வெற்றி கரமாக ஒரு உள்நாட்டுப் போரை எழுப்பிச் சட்டப்படியமைந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியலை வீழ்த்தினர். இத்துடன், ஆட்சி யமைப்பே முதலாளித்துவத்திற்குச் சாதகமாயிருக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டு நீண்ட காலம் நடைபெற்றுவருவதனால், அதன் பணியாளர்கள் புதிய அமைப்பான சமதர்மத்தினிடம் பற்றில் லாமல் அதன் வேலையை அழிக்கும் எண்ணமுடையவர் களாகவே உள்ளனர். இன்ப வகுப்பினரின் அரசியல் மன்றைச் சமதர்ம நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் வகையில் உள்ள நடைமுறை இடையூறுகளில் இவை சில. ஆனால் பணியை மிகவும் கடினமாக்கும் அடிப்படைச் சிக்கல் யாதெனில், முதலாளித்துவங் காரணமான நெருக்கடிகளில் துன்ப நிலைமைகள் மிகவும் மோசமாகவும் தீர்க்க முடியாத சிக்கல்கள் நிறைந்ததாகவும் இருப்பதால் இடர் நீக்கும் உதவிகளை உடனடியாகச் செய்ய வேண்டி இருக்கிறது. தேர்தல்களும் மன்ற நடவடிக்கைகளும் சிக்கல் மிகுந்த வேலை முறைகளுடையவை. அவை அமைதிகால உழைப்புக் குரியனவே யன்றி நெருக்கடி செயல்களுக் கேற்றவை யல்ல. ஆகவே நெருக்கடி காலங்களில் அவை முட்டுப்பாடு உடையவையாகவும் போதாவையாகவும் இருக்கின்றன. வினா (43) : புரட்சி என்பது முற்றிலும் இன்றியமையாதபடி அவசியமா? விடை : முற்றிலும் இன்றியமையா அவசியமுடையதும் அல்ல; விரும்பத்தகுந்ததுகூட அல்ல. ஆயினும் அதனை எப்போதும் விலக்கிவிட முடியாது. வினா (44) : சமதர்மத்தை நனவாக்க மக்கள் யாது செய்தல் வேண்டும்? உடனடியாக, நடைமுறைவகையில் அதில் என்னென்ன முறைகள் எடுக்கப்படல் வேண்டும்? விடை : தொழிற் சங்கங்கள் (வரையறைக்குட்பட்ட ஆற்றல் எல்லையுடையவையே யாயினும்) வசப்படுத்தப்படல் வேண்டும்; சமதர்மக் கட்சியின் சக்தியைப் பெருக்க வேண்டும்; அதன் குறிக்கோள் என்ன, யாது செய்தல் வேண்டும் என்பவற்றைப் பரப்ப அதாவது கொள்கைப் பிரசாரம் செய்ய வேண்டும். தற்போதைய முதலாளித்துவ அரசியலினிடமாகச் சமதர்ம அரசியல் நிறுவதற்கேற்றபடி மக்கள் மனப்பான்மையை மாற்றியமைக்க வேண்டும். வினா (45) : கடவுள், மதம் ஆகியவற்றை பற்றிச் சமதர்மத்தின் நோக்கு யாது? விடை : சமதர்மம் பகுத்தறிவுக் கொத்த ஒரு வாழ்க்கைக் கோட்பாடு, பகுத்தறிவு மூலம் விளக்கப்பட்டிருக்கும் செய்திகளை மட்டுமே அது ஏற்கிறது. அந்தக் காரணத்தாலேயே அது கடவுள் உண்டு என்ற கொள்கையை ஏற்க முடியாதிருக்கிறது. ஏனெனில் நாம் மேலே காட்டியுள்ளபடி அது மனிதன் கற்பனையினால் உருவாகிய ஒரு கற்பனைக் கருத்தேயாகும். மனிதனின் பழங்கால வரலாற்றில் அவன் அறிவு எல்லை குறுகியதாயிருந்தது. தொழில்துறை வளர்ச்சியும் விஞ்ஞான முன்னேற்றமும் அப்போது ஏற்பட்டிருக்கவில்லை. இந்நிலை இயற்கை முதற் பொருள்கள் (ஐம்பெரும் பூதங்கள்) அடக்கமுடியாத ஆற்றல் வாய்ந்தவையாயும் மனிதனால் வசப்படுத்த முடியாதவை யாயும் இருந்தன. ஆக அவன் அம்முதற்பொருள்களினும் ஆற்றலுடைய தாக தன் மனத்திலேயே ஒரு பொருளைக் கற்பித்துக் கொண்டான். உதவியற்ற இடர்நிலைக் காலங்களில் அவன் அக் கற்பனைப் பொருள்களின் உதவியை வேண்டி இறைஞ்சலானான். முழு அறிவும் முழுப்பரப்பும் உடைய இக் கற்பனைச் சக்தியே கடவுள் எனப் பெயர்பெற்றது. மனித வரலாற்றில் முதன்முதல் அறியப்பட்ட `கடவுள்’ முதலையே யாகும். நீல ஆற்றின் இடைக்குறை நிலத்தவர்கள் அதனையே வணங்கினர். நீல ஆற்றின் கரை நிலமே உலகில் முதன்முதல் மக்கள் வாழ்ந்த நிலமென்று கருதப்படுவதும் இங்கே கவனிக்கத்தக்கது.1 அதன் கரையில் வண்டல் பேரளவில் படிந்து நிலத்தை வளப்படுத்திற்று. அதில் உணவுப் பயிர்கள் தாமாகவே வளர்ச்சியடைந்தன. மிகப் பெருந்தொகை மக்கட் குடியிருப்புக்கள் அதில் குவிவுற்று வாழ்ந்து அதைத் தம் தாயகமாக்கின. குடியமைப்பு உண்டுபண்ணியபின் மனிதன் பல காரியங்களை முன்னிட்டும் அடிக்கடி ஆற்றைக் கடக்க வேண்டியிருந்தது. இச்சமயங் களில் ஆறுகளிலுள்ள முதலைகள் உயிருக்கு இடையூறாயிருந்தன. தொடக்கத்தில் மனிதர் நீந்திச் சென்றனர். ஆனால் இது இடைஞ்ச லுடையதாகவும் அடிக்கடி உயிருக்கு இடையூறு விளைப்பதாகவும் இருந்தது. அவர்கள் மரக்கட்டைகளின்மீது மிதக்கவும் அதன் பின்னர் அதைத் தோண்டிப் படகுகளாக்கவும் தலைப்பட்டனர். இப்படகுகளை யும் முதலைகள் தாக்குவதுண்டு. ஆகவே அவர்கள் படகு முகப்பில் இறந்த முதலையின் தலையைப் பொருத்தி அதன் பக்கங்களை முதலைத் தோல்கொண்டு போர்த்தினர். இதன் கருத்து யாதெனில், முதலைகள் அதனையும் ஒரு முதலையென்று கருதித் துன்பம் செய்யாதிருக்கும் என்பதே. படிப்படியாக முதலையின் மெய்யான தலைக்குப்பகரம் மரத்திலேயே முதலையின் தலையின் உருவம் செதுக்கப்பட்டது. இதுவே மனிதன் முதற் கடவுளாய் அவன் வணக்க வழிபாட்டுக் குரியதாயிற்று. இதன் பின் மனிதன் உடல் நலத்துக்கும் அவன் பயிர்வளத்துக்கும் ஆதாரமாகக் கதிரவன் வணங்கப்பட்டான். இதன்பின் மழையும் நெருப்பும் காற்றும் வணக்கப் பொருள் களாயின. இறுதியாக அவன் அஞ்சிய பொருள்கள் யாவும், பெருநோய்கள் உட்பட, அவன் தெய்வங்கள் ஆயின. நாளாவட்டத்தில் மனிதன் அறிவுநிலை பெருகுந் தோறும் இப்பொருள்களும் முதற்பொருள்களும் பற்றிய அச்சமும் தணிந்தது. தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் முறைகளை அவன் அறியுந்தோறும் கதிரவன், மழை, காற்று, நோய்கள் ஆகியவைபற்றிய அச்சமும் குறைந்து வந்தது. அதன்பின் இவை கடவுள்களாக ஏற்படுவதும் நின்றுவிட்டது. வினா (46) : இவையனைத்தும் சரியே; இன்று எவரும் முதலையையோ கதிரவனையே வணங்குவதில்லை. ஆயினும் உலகை ஆட்டிப்படைக்கும் கண்காணாப் பேராற்றல் ஒன்று இல்லையா? இவ்வுலகப் படைப்பு யாரால் ஆனது? விடை : உலகப் பொருள்கள் எப்படித் தோன்றின என்பது பற்றிய முழுநிறைவு வாய்ந்த விஞ்ஞான விளக்கம் உள்ளது. அவை எதனிலும் உள்ளீடாக எவர் கையாற்றலையும் காணவில்லை. இயற்கையின் செயலையும் உயிர்களின் செயலையும் தவிர்த்து நடைபெறும் நடப்புக்கள் யாவும் மனிதன் வேலையேயாகும். ஆயினும் கடவுள் நம்பிக்கையைச் சமதர்மம் தண்டனைக்குரிய ஒரு குற்றமாக்கிவிட வில்லை. இவ்வாசகத்தில் நம்பிக்கை என்ற சொல்லைக் கீழ்க்கோடிட்டு வற்புறுத்திக் கொள்ளும்படி கோருகிறேன். ஏனெனில் அது ஓர் இயற்கை உணர்ச்சியேயன்றிப் பகுத்தறிவாராய்ச்சிக்கோ தர்க்கத்திற்கோ நிலை நிற்பதன்று. வினா (47) கோடிக்கணக்கான மக்கள் மதத்தைப் பின்பற்றிக் கடவுள் இருப்பதுபற்றி நம்பிக்கை உடையவராயுள்ளனர். இத்தனைபேர் நம்பும்போது அதில் உண்மை இருக்க முடியாதா? விடை : முதலாவது, கோடிக்கணக்கானவர் நம்புகிறார்கள் என்பதனால் மட்டுமே ஒரு செய்தி உண்மையாய்விட வேண்டும் என்ற கட்டாயமில்லை. கதிரவன் உலகைச் சுற்றிச் செல்கிறான் என்று மக்கள் நம்பிய காலம் ஒன்றிருந்தது. உண்மை இதற்கு நேர்மாறானதென்று விஞ்ஞானம் கண்டுகொண்டுள்ளது. அது போலவே அறிவுநிலை இன்னும் ஏற்படாத அளவில், இல்லாத ஒரு பொருளை இருப்பதாக அவர்கள் நம்பினர். இரண்டாவ தாகச் சமயத்துக்கும் கடவுளுக்கும் உள்ள தொடர்பு இயற்கை யானதன்று; மிகச் செயற்கையானது. கடவுளிருப்பதென்பது ஒரு நம்பிக்கை. ஆனால் மதமோ மக்கள் பின்பற்றுவதற்கான ஒரு வாழ்க்கை நெறி. இம்முறையிலேயே மதம் என்பது உண்மை யானது. மதம் கடவுள் உதவி கோருகின்றது என்பது உண்மையே. ஆயினும் மதத்தின் பெரும்பகுதி `நீ இது செய்க, நீ இது செய்யாதிருப்பாயாக’ என்ற நீதிகள் அடங்கியதே. வினா (48) : நீங்கள் கூறுகிறபடி மதம் அறிவாதார மற்றதென்றால், மனிதன் அக்கருத்துக்களை எப்படி ஏற்றான்? விடை : நம் சமுதாய வாழ்வில் உள்ளீடாகத் தொக்கி நிற்கும் அரசியல் சார்பான, அதாவது சமூக, பொருளியல் சார்பான தத்துவங்களை மக்கள் தெளிவாக உணர்ந்துகொள்ள முடியாத காலம் ஒன்றிருந்தது. இன்று அரசியல் கோட்பாடுகள் தரும் அதே உதவியை அன்று மதம் மனிதனுக்குத் தந்தது. அதாவது சில அடிப்படைச் செய்திகளையும் சில சமூக நடைமுறை விதிகளையும் அது வகுத்தது. இந்து மதத்தை எடுத்துக்காட்டாகக் கொள்ளுவோம். ஆரியர் இந்தியாவுக்கு வந்தபோது இங்கே திராவிடர் அதன் முதற்குடிகளாக வாழ்ந்துவந்தனர். திராவிடர்கள் தமக்கெனத் தனிவழி பாட்டு முறைகளையும் தனிப்பட்ட சமூக அமைப்பையும் உடையவரா யிருந்தனர். ஆரியர் இத் திராவிடர் மீது போர் தொடுத்துத் தாக்கி அவர்களை வென்றனர். ஆனால் வெற்றி பெற்றவர்கள் மீது திராவிடர்கள் உள்ளத்தில் தோய்ந்து கிடந்த உள்ளார்ந்த வெறுப்பை அகற்றுவது எங்ஙனம்? ஆகவே இந்துக்களான ஆரியர்கள் தம் மதத்தை அவர்கள் மீது வலியுறுத்தி ஏற்றினர். இங்ஙனம் பலாத்காரமாக அவர்கள் திராவிடர்களைத் தம் சமூகத்தில் ஒரு பகுதியாக்கினர். கிறிஸ்தவ மதத்தின் வரலாறு இதுபோன்றதே. இயேசு கிறிஸ்து அதனைத் தோற்றுவித்தார் என்பது உண்மையேயாயினும் ஒரு சில நூற்றாண்டுகள் கழித்து உரோமப் பேரரசு அதனைத் தன் அரசியல் சமயமாக ஏற்றுக் கொண்ட பின்பு அது பரவத் தொடங்கிற்று. உரோமகர் பிற நாடுகளை வென்று ஒரு பேரரசை அமைத்துக் கொண்டிருந்தனர். எல்லாப் போர்வெற்றியாளரையும் போல அவர்களுக்கும் தம் போர்வெற்றிகளுக்கான ஒழுக்கமுறை விளக்கக் காரணம் என்று தேவைப்பட்டது. தங்கள் படைவீரர்களின் பற்றைக்காக்கவும், வெல்லப்பட்ட மக்கள் வெற்றியாளரின் ஆட்சி தம் நலத்திற்காகவே ஒன்று நம்பவும் இது வேண்டப்பட்டது. உரோமகர் கிறிஸ்து மதத்தைப் பரப்பியது வாள் கொண்டுதான் - புரோகிதர்கள், தியாக முனிவர்கள் உதவியாலல்ல. வாளால் வெற்றியடைந்தபின் அதன் ஆட்சியை வலியுறுத்தும் அமைப்பின் ஒரு பகுதியாக வருவிக்கப் பட்டவர்களே மேற் குறிப்பிட்ட புரோகிதர்களும் தியாக முனிவர்களும் உரோமகப் பேரரசின் நலிவுடன் கிறிஸ்து மதத்தின் வாள் வெற்றியும் சிறிது மங்கலுற்றது. பல நூற்றாண்டுகளின் பின் ஸ்பானியர்கள் மீண்டும் சிலுவைக்குப் புத்துயிர் தந்து தம் பேரரசையும் பெருக்கினர். இஸ்லாத்தின் கதையும் இது போன்றதே. அது 1,200 ஆண்டுகட்குமுன் அரேபியாவில் தோன்றிற்று. அது யூதர்களின் அட்டூழியங் களுக்கும் சுரண்டல் வட்டி முறை வழக்கங்களுக்கும் எதிராக எழுந்தது. ஆயினும் அதனைத் தோற்றுவித்த தலைவர் முகம்மதுநபி தம் ஒழுக்க முறையைப் போதித்ததுடனன்றி அதைப் பரப்பக் கருவியாக வாளுக்கும் ஆதரவு காட்டினர்.1 ஆயினும் பாரசீக, எகிப்தியப் பகுதிமக்கள் அதனை ஏற்ற பின்பே உண்மையில் இஸ்லாம் நடுக்கிழக்கு உலகின் ஒரு சக்தியாய் விளங்கியதுடன் அட்லாண்டிக் வரை பரவவும் முடிந்தது. இங்ஙனமான மனிதனின் வரலாற்றில் அக்காலத்தில் மதம் ஓர் அரசியல் வாழ்க்கைக் கோட்பாடாகவே இயங்கிற்று என்பதைக் காணலாம். கடவுள் கொள்கையுடன் தொடர்பில்லாமல் நடைபெறும் சமயம் எதுவும் இல்லை. மதம் கடவுளின் உதவியை இரண்டு நோக்கங்களுடன் கோரவேண்டியதாயிற்று. முதலாவது இயற்கையிற் கண்ட பல பொருள்களுக்கு விஞ்ஞானம் அன்று விளக்கங்கள் காணவில்லை. ஆகவே பகுத்தறிவு முறையில் விளக்கப்படாதவை யனைத்தும் கேள்வி முறைக்கு அப்பாற்பட்ட கடவுள் என்ற தனிப்பெரும் சக்தியின் பேரால் நம்பப்பட வேண்டுமென்று கோரப்பட்டது. இரண்டாவது அது சமூகத் தொடர்புடைய கோட்பாடாதலால் அதன் விதிகள் எவராலும் எக்காரணத்தாலும் மீறக் கூடாதவை என்று வலியுறுத்தப்பட வேண்டியிருந்தது. அவற்றைத் தனிப்பட்டாயினும் கூட்டாக வாயினும் நம்ப மறுத்தவர்கள் நாஸ்திகர்கள், சமய விரோதிகள் எனப் பழித் தொதுக்கப்பட்டுத் தண்டனைகளுக்கும் வதைக்கும் ஆளாக்கப்பட்டனர். இடைப்பட்ட காலங்களில் (புராண காலங்களில்) நடைபெற்ற போர்களெல்லாம் மதங் காரணமாகவோ மதங்களுக்கிடையிலோ நடைபெற்றவையே யாகும். இன்று நிலைமை வேறுபட்டுள்ளதாயினும் ஒரு சிறிதே மாறுபட்டுள்ளது என்னலாம். போர்கள் எழும்போது இன்னும் நாடுகள் கடவுள் உதவியைக் கோரவே செய்கின்றன. வகுப்புப் போர்கள் மதம் தோன்றியபின்பே தோன்றின என்பதும் மிகையாகாது. வினா (49) : கடவுளிடத்தில் மெய்யாகவே பக்தி கொண்டவர்க ளாகவும் பிறருக்குத் துன்பம் விளைவிக்கும் எண்ணம் ஒரு சிறிது மில்லாதவர்களாகவும் உள்ளவர்களைப் பற்றி உங்கள் கருத்தென்ன? விடை : கடவுளிடத்தில் மெய்யாகப் பக்திகொண்டவர் களாய், ஆனால் பலாத்காரத்தின் மூலம் தம் நம்பிக்கையைப் பிறர்மீது சுமத்த விரும்பாத வர்களாயுள்ளவர்கள் எத்தகைய இடையூறுமின்றி அங்ஙனமே வாழலாம். சமதர்ம ஆட்சியில் நம்பிக்கைச் சுதந்தரம் தாராளமாக இருக்கும். ஆனால், சமதர்மம் ஏற்க ஒத்துக்கொள்ளாதது அரசியலின் மீது மதம் தன் செல்வாக்கைப் பயன்படுத்துவதே. மதம் நாம் மேலே கண்டுள்ளபடி அரசியலில் பெரும்பங்கு கொண்டிருப்பதுடன் பெருந் தீங்குகளும் விளைவித்துள்ளது. நல்ல சமூக அமைப்பு முறைக்கும் மனிதவகுப்பின் நட்பமைதிக்கும், இத்தகைய சமூக நலத்துக்கு மாறான சீரற்ற கூட்டுறவு ஒழிக்கப்பட வேண்டும். நடைமுறையில் சமதர்மம் இதுவகையில் முற்றிலும் நடுநிலையில் நிற்கும். அதாவது எந்தத் தனி மனிதனுக்கோ குழுவுக்கோ ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கை காரணமாகத் தனிச் சிறப்புரிமையும் தரப்படமாட்டாது. தனிப்பட்ட குறைபாடுகளும் சுமத்தப்பட மாட்டா. வினா (50) முதலாளித்துவம், மதம் முதலியவற்றுக் கெதிராக நல்ல விளக்கம் தந்துள்ளீர்கள். அவற்றின் பிற்போக்குத் தன்மையையும் காண்பித்துவிட்டீர்கள். இனி, சமதர்மம் எப்படி ஒழுங்கமைத்தாளும் என்பதையும், அது இப்போதுள்ளதைவிட எவ்வாறு மேற்பட்டதாயிருக்கு மென்பதையும் தெரிவிப்பீர்களா? விடை : இக்கேள்வி அவ்வளவு சரியாகக் கேட்கப்பட வில்லை. நான் இன்றிருக்கும் சமூக அமைப்பு முறையின் பிற்போக்குத் தன்மையைக் காட்டியது மட்டுமன்றி, அதே சமயம் சமதர்மம் அத்தறுவாய்களில் என்ன செய்யும் என்பதையும் விளக்க முயன்றேயுள்ளேன். ஆயினும் சமதர்மத்தைப்பற்றி இதுகாறும் சொன்னதில் பெரும்பகுதி அதன் கோட்பாடும் அறிவுத்துறை அமைதியும் பற்றியதே. சமதர்ம அரசியல் பற்றிய திட்டவட்ட மான விளக்கம் வகுக்கவில்லை என்பது உண்மையே. முதலாளித்துவம் நில உடைமை முறையை வென்று தன் முழுநிறை தனியாட்சியை நிறுவிற்றென்று கண்டோம். இன்று நில உடைமைமுறை கிட்டத்தட்ட முற்றிலும் மறைந்துவிட்டது. எங்கேனும் அது இருந்தால் முதலாளித்துவத்தின் இணக்கத்தின் மீதும் தயவின் மீதுமே - அதுவும் வெளி வடிவ அளவில் மட்டுமே இருக்கிறது. சோவியத் ரஷ்யா நீங்கலாக இன்று எல்லா நாடுகளிலும் அரசியல் முதலாளித்துவத்தின் சக்திக்குத் தலை வணங்குகிறது. தொடக்கக் காலங்களில் நில உடைமைமுறையை ஒழிப்பதில் மக்களே முதலாளித்துவத்துக்கு ஆதரவு தந்தனர். இது ஏனெனில், முதலாளித்துவம் அடிமை முறையைச் சட்ட விரோதமாக்கியதுடன், ஒவ்வொருவரும் கட்டுப்பாட்டின் மீதன்றித் தம்மிச்சையாகத் தம் உழைப்பினால் வந்த பொருளைச் சிறிய அளவிலேனும் விற்கும் உரிமையைத் தந்தது. அதுமட்டுமன்றி அது அவனுக்கு அல்லது அவளுக்குத் தனக்குப் பிடித்த தொழிலையும் அதற்குக் கிடைக்கும் ஊதியத்தையும் தேர்ந்துகொள்ளும் உரிமையையும் அளித்தது. நாகரிகத்தில் முன்னேறியுள்ள முதலாளித்துவ நாடுகளில் ஒவ்வொரு நாட்டு மகனும் மகளும் மொழியுரிமை பெற்று அரசியலை நடத்தும் உரிமையில் ஒரு பங்கு பெற்றுள்ளனர். இது மக்களுக்கு மன நிறைவு தருவது இயல்பே. ஆயினும் இந் நற்பேறு பெற்றவர்கள் முன்னேற்றமடைந்துள்ள நாடுகளின் மக்களே; குடியேற்ற நாடுகளின் மக்களல்ல. ஏனெனில் இவர்களுக்கு இவை தடை செய்யப்பட்டு அவர்கள் நிலை முன்னிலும் மோசமாயிற்று. முதலாளித்துவ நாடுகளில் நாளடைவில் இலவசக் கல்வியும் கிடைத்தது. ஏனெனில் தொழில் சரிவர நன்கு நடைபெற அடிப்படைக் கல்வி மிகவும் அவசிய மாயிற்று. தவிர, வயது வந்தவர் மொழியுரிமை, இலவசக் கல்வி முதலிய உரிமைகளும் ஏற்பட்டுள்ளனவாயினும் இவை சென்ற முப்பது நாற்பது ஆண்டுகட்கு உட்பட்டவையே. ஆனால் முதலாளித்துவத்தின் முன்னேற்ற மனப்பான்மை அல்லது சமரச மனப்பான்மை (டுiநெசயடளைஅ) பல செய்திகளால் தடைப்பட்டது. முதலாவதாக உலகில் முதலாளித்துவ நாடுகள் ஒன்றல்ல, பல. அவர்களிடையே இருந்த பொறாமைகளால் போர்கள் ஏற்பட்டன. போர்கள் உற்பத்தியைத் தடுத்து நிறுத்தி முட்டுப்பாட்டை உண்டுபண்ணின. இரண்டாவதாக முதலாளித்துவம் சுரண்டலை அடிப்படையாகக் கொண்டதாதலால் அது சில நாடுகளில் மெதுவாகவும் சில நாடுகளில் விரைவாகவும் வறுமையைப் பரப்பியது. அதாவது சமரச வளர்ச்சியுடன் மக்களுக்குச் சலுகைகள் அளிப்பதற்கு மாறாக, அது பின்னடைந்து சென்றது. முன்னர்த் தரப்பட்ட சில சலுகைகள் பின்வாங்கப் பட்டதுடன் நில்லாது, அவற்றினிட மாகப் பாசிசம் என்ற புதுமுறை வல்லாட்சி ஏற்பட்டு மக்களை மீண்டும் அடிமைத் தனத்துக்கு நிகரான நிலைக்குக் கொண்டு சென்றது. இதனை முற்போக்குக்காட்டி நடத்தப்பெறும் முற்போக் கெதிர்ப்பு இயக்கம் என்னலாம். இவ் எதிர்ப்பியக்கத்தில், தொழிற் சங்க இயக்கம் சட்ட விரோத மாக்கப்பட்டது. வேலை நேரம் தம் மனம் போன வாக்கில் வரையறுக்கப் பட்டது. ஒருவர் தம் வேலையையோ, தாம் வேலைசெய்யும் இடத்தையோ தெரிந்தெடுத்துக் கொள்ளும் உரிமையோ கூட மறுக்கப்பட்டது. அத்துடன் கருத்துக்களைத் தாராளமாய் வெளியிடும் உரிமை, சங்கமாகச் சேரும் உரிமை ஆகியவையும் போயின. சுருக்கமாக மனிதர்களனைவரும் முதலாளித்துவத்தின் சார்பாக, அரசியலால் இயக்கப்பட்ட வெறும் கருவியாயினர். முதலாளித்துவத்தின் போக்கு இதுவாதலால், அது நிறுத்தப்படல் வேண்டும். அது உலகின் உற்பத்திச் சக்திக்கும் மக்கள் நலத்துக்கும் எதிரான இடையூறு களின் ஊற்றாகிவிட்டது. அது தொடர்ந்து நிலைபெறுவதானால் மனித வகுப்பின் ஆற்றலும் முன்னேற்றமும் சீரழிந்துவிடவே செய்யும். ஒரு சமதர்ம அரசியலின் முதல் வேலை விஞ்ஞானத்தி னுதவியுடன் உலக நாட்டு மக்களின் உற்பத்திச் சக்தியை மீட்டு முன்னிலைக்குக் கொண்டு வருவதும் பெருக்குவதும், இவ்வுற்பத்திப் பொருள்கள் மக்களிடையே நேர்மையுடன் பரிமாறப்படுவதுமே ஆகும். அரசாங்கம் ஒரு சமூகத்தொண்டு ஆற்றுவதானால், மக்கள் பேராண்மை (பிரதிநிதித்துவம்) மூலமே அது மிகச் சிறப்புறும், ஒவ்வொரு மனிதனும் அவன் தொழில் எத்தகையதாயினும், சரிசம உரிமையுடையவனாய் யார் மீதும் எத்தகைய ஒருச்சார்பும் இல்லாதிருப்பதே அப்பேராண்மையின் அடிப்படை. சில முதலாளித்துவ நாடுகள் வயது வந்தவர் மொழியுரிமை வழங்கியுள்ளதன் மூலம் தம் மக்களுக்கு இவ்வுரிமை தந்துள்ளனர். ஆனால் வயதுவந்தவர் மொழியுரிமை எல்லாத் தீங்குகளுக்கும் ஏற்ற ஒரே சஞ்சீவியாய் விட மாட்டாது. அது பல இடங்களில் தவறான வழியில் பயன்படுத்தவும் படுகிறது. எந்த அரசியலுரிமையும், அதனுடன் சில தடையற்ற சமூக, பொருளியல் உரிமைகளும் தரப்பட்டாலல்லாமல் பொருளற்ற வீணுரிமைகளாகவே போய்விடும். சமதர்மம் நாடும் சமத்துவம் அரசியல் சமத்துவம் மட்டுமன்று; பொருளியல், சமூக சமத்துவமும் கூட. இந்நிலையை உண்டு பண்ணும் வகையில் சமதர்ம அரசியல் சில உரிமைகளை அளித்து வேறு சிலவற்றைப் பின்வாங்கிக் கொள்ளும். ஒட்டும் வழுவும் அறப் பின்வாங்கிக் கொள்ளக் கூடியது உற்பத்திச் சாதனங்களின் தனிப்பட்ட உடைமை யுரிமையே. நாம் மேலே கூறியபடி இவ்வுரிமை முன்பு முதலாளித்துவத்தினால் நில உடைமைப் பெருமக்களிடமிருந்து பறிக்கப்பட்டதேயாகும். “உற்பத்திச் சாதனங்களின் தனிப்பட்ட உடைமை உரிமை” என்ற இத்தொடரை நன்கு ஊன்றிக்கொள்க. இதன் பொருள் யாதெனில், தொழிற்சாலைகள், நிலம், கப்பல்கள் முதலியனயாவும் தனி மனிதர்கள் உடைமையாயிருக்க இணங்கப் பட மாட்டாது; ஆனால் தனிப்பட்டவர் பயன்படுத்தும் உடைமை யுரிமைக்கு இணக்கம் அளிக்கப்படும். வாழும் வீடு உடைமை யாகலாம்; நிலமும் அதனை உடையவனே பண்படுத்துவ தானால் உடைமையாகலாம். ஆடைகள், உந்து வண்டிகள் (மோட்டார்கள்), வானொலிப் பெட்டிகள் (ரேடியோக்கள்) ஆகியவற்றை உடைமையாகக் கொள்ளக் கட்டாயம் உரிமை உண்டு. ஒரு நாட்டின் குடியுரிமையாளனுக்குத் தடுக்கப்படும் உடைமைகள் ஆவன: தொழிலாளர் உழைப்புக்குத் தேவைப்படுபவையும், பெறுபவன் தானே பயன்படுத்தாதவையும் மட்டுமே. தொழிற்சாலைகள், நிலம், போக்குவரவுச் சாதனம், கப்பல்கள் முதலியன யாவும் கூட்டு முறையில் உடைமை யாகலாம். இரண்டாவதாக மக்கள் ஊதிய உழைப்புப் பணி ஒன்றைப் பெற உரிமையளிக்கப்படுவர். அதாவது ஊதிய இடம் தேடுவதற்கும் தேடிப் பெறுவதற்கும் உரிமை தரப்படும். ஊதிய இடம் கிட்டாததனால் இவ்வுரிமையை அவர்கள் நடைமுறையில் செயற்படுத்த முடியாவிட்டால், அவர்கள் அரசியலிடம் உதவித் தொகை (நெநேகவை) கோரலாம். மூன்றாவதாக, ஒவ்வொருவரும் உடல் வலிவிழப்பு மூலம் உழைக்க முடியாதபோது அவர் தம்மைப் பாதுகாக்கும் படி அரசியலைக் கோரும் உரிமை அவருக்கு உண்டு. அதாவது குழந்தைப்பருவம், நோய், கருப்பகாலம், முதுமை ஆகிய காலங்களில் அரசியலே வாழ்க்கைப் பாதுகாப்புக்குப் பொறுப்பு எடுத்துக் கொள்ளும். இலவசத் தொடக்கக் கல்வியும் இலவச உயர்தரக் கல்வியும் அளிக்கப்படும். மக்கள் அரசியலுக்கு ஊறு செய்யாதவரை எண்ணங்களின் சுதந்திரம், சங்கமாகக் கூடும் சுதந்திரம் ஆகியவை தரப்படும். சமூகத் துறையில் முழுச் சுதந்திரம் நிலவும். அதாவது எந்தத் தனி ஆளோ வகுப்போ மற்றவர்களை விட உயர்வாக மதிக்கப்படவோ, அல்லது மிகுதி உரிமைகள் வழங்கப்படவோ மாட்டாது. சமதர்மம் ஒத்துக்கொள்ளும் வேறுபாடுகள் இயற்கையினால் ஏற்படுபவை மட்டுமே. மிகுதி திறமையும் உழைப்பாற்றலும் உடையவர்கள் மற்றவர்களைவிட மிகுதி பெறுவர். இறுதியாக மனிதனிடமிருந்து மனிதனையும், வகுப்பினிடமிருந்து வகுப்பையும் பிரிக்கும் தேசியப் பிரிவினைத் திரைகள் யாவும் அகற்றப்படும். இதன் பயனாக மனித வகுப்பினரிடையே எண்ணங்களும் பொருள்களும் தங்குதடையற்ற முறையில் பரிமாறிக்கொள்ளப்படும். வினா (51) : இதிலிருந்து சமதர்மம் ஒரு தேசியக் கோட்பாடல்ல என்றாகிறது அல்லவா? விடை : அல்லதான். ஒருபோதும் அல்ல. சமதர்மம் ஒரு சர்வதேசக் கோட்பாடு. அதன் வெற்றி தேசத்துக்குத் தேசமாகப் பரவக்கூடுமாயினும் சமதர்மம் முழுப்பயனும் பெற அது உலகெங்கும் பரவியாக வேண்டும் என்ற அடிப்படையிலேயே சமதர்மக் கோட்பாடு அமைந்துள்ளது. ஒவ்வொரு சமதர்ம இயக்கத்தின் முக்கிய முயற்சியும் உலக ஒற்றுமை உண்டாக்கு வதும் ஒரே உலக அரசியலை உருவாக்குவதுமே யாகும். வினா (52) : ஒரே உலக சமதர்ம அரசியலை நிறுவுவதென்பது பிரமாண்டமான வேலையல்லவா? விடை : அது பிரமாண்டமானதே. ஆயின் ஓரளவில்தான் பிரமாண்டமானது. ஒவ்வொரு நாட்டு மக்களும் தத்தம் நாட்டில் ஒரு சமதர்ம அரசியலை நிறுவ முயற்சி செய்ய வேண்டும். வினா (53) : சமதர்ம முறையில் அரசியல் எவ்வாறிருக்கும்? விடை : சமதர்ம அரசியல் எந்த அடிப்படை உரிமைகளின் மீது அமைக்கப்படும் என்பதை நான் ஏற்கனவே விளக்கி யுள்ளேன். நடைமுறை அரசியலைப் பற்றிய மட்டில் அரசியலின் காரியங்களை ஆற்றும் ஆட்பேர்களைத் தேர்ந்தனுப்ப ஒவ்வொருவருக்கும் உண்மையான உரிமை இருக்க வேண்டும். இது தவிரச் சமதர்ம அரசியல் துறையில் வேறு திட்டவட்டமான விதிகள் எதுவுமில்லை. முதலாளித்துவ அரசியல்களிடையே கூட ஆட்சி அரசின் மாதிரிகள் வேறுபடவே செய்கின்றன. பிரிட்டனின் அரசியல் மன்றம் (ஞயசடயைஅநவே) அமெரிக்க சபையினின்றும் (ளுநயேவந), பொதுச் சபையினின்றும் (ஊடிபேசநளள), ஃபிரஞ்சு நாட்டு ஆட்பேரவையினின்றும் (ஊhயஅநெச டிக னுநயீரவநைள) வேறுபட்டுள்ளன. சமதர்ம அரசியல் களிடையேயும் இதே போன்ற வேறுபாடுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இதனைக் களையத் தேவையில்லை. எடுத்துக்காட்டாக ரஷ்ய சோவியத் முறையைத் தேர்ந்தெடுத்துள்ளது. இதன்படி மக்கள் நிலப்பகுதிவாரி யாகவோ தொழில்வாரியாகவோ குழுக்களைத் (ஊடிஅஅவைவநநள) தேர்ந்தெடுக்கின்றனர்; குழுக்கள் தம் மேற்குழுக்களைத் தேர்ந்தெடுக்கின்றன. முடிவாக உயர்நிலை மக்கள் மன்று, சோவியத் இயங்குகின்றது. வினா (54) : இன்னொரு கேள்வி : பார்வைக்கு இது ஒரு அறிவிலாக் கேள்வியாகத் தோற்றக்கூடுமாயினும் கேட்டே தீர வேண்டும். சமதர்ம அரசியல்களுக்கிடையே போர்கள் எவையும் நிகழ முடியாது? விடை : முடியாது. முன்னறிந்து கூறல் பொதுவாக அரிதாயினும், சமதர்ம உலகில் போர் ஏற்படவே செய்யாதென்று கூறலாம். நாம் கூறியுள்ளபடி சமதர்மக் கருத்தே சர்வதேசப் பான்மையுடையது. அதன் முக்கிய நோக்கம் நாடுகளின் மக்களிடையேயும் நாடுகளிடையேயும் நட்பையும் ஒத்துழைப்பையும் உண்டுபண்ணுவதும், வேற்றுமைகளை ஒருவர்க்கொருவர் கலந்து பேசுவதால் தீர்த்துக் கொள்ளுவதுமேயாகும். இது சிலர் கருதுவது போல வெறும் கனவியல் கற்பனையன்று. ஏனெனில் முதலாளித்துவ உலகில்கூட, சர்வதேசத் தொடர்பின் பெரும் பகுதியும் ஒருவர்க்கொருவர் ஆலோசிப்பதன் மூலமே காவல் படைத் தேவையின்றித் தீர்க்கப்படுகிறது. மேலும் போருக்கான தூண்டுதல் பெரும்பாலும் முதலாளித்துவ நாடுகளின் போட்டிகளால் ஏற்படுகிறது. சமதர்ம அரசியல்களிடையே அத்தகைய போட்டிக்கு இடமில்லை. ஏனெனில் விற்பனைக்களம் அவாவி அலையும் முதலாளியோ ஏகாதிபத்திய வெறிகொண்ட முதலாளி அரசியலோ இருக்கமாட்டாது. போர் என்பது ஒரு மனப்பான்மையே. மக்கள் படைவீரர்களைக் காணும்போது அவர்கள் போர் முறையில் சிந்திக்கின்றனர். ஆனால் போர்கள் என்பது படுகொலைபோன்ற தீயசெயல்கள் என்றும், அவற்றில் ஈடுபடக்கூடா தென்றும் குழந்தைகள் குழந்தைப் பருவத்திலிருந்தே கற்பிக்கப்பட்டால், ஒரு தலைமுறையிலில்லா விட்டாலும் அடுத்த தலைமுறையில் மக்கள் போர் என்றவுடன் வெறுப்படையத் தொடங்கி விடுவார்கள். இங்ஙனம் கூறும்போது சமதர்ம அரசியல் எல்லா வழியிலும் `அமைதியியக்க’ (ஞயஉகைளைவ) அரசியலாயிருக்கும் என்று எண்ணிவிடக் கூடாது. அமைதி யியக்கம் போரை எதிர்ப்பது அருளிரக்கம் காரண மாகவே. ஏனெனில் அமைதியியக்கத்தார் முதலாளித்துவத்தை எதிர்ப்ப தில்லை. மேலும் சமதர்ம அரசியல் எதுவும் முதலாளித்துவ உலக அமைப்பிற்குள் இருக்கும்வரை அது தன்னைப் பாதுகாக்கப் பெரிய படையை வைத்துக் காப்பதுடன் தற்காப்புக்காகப் போர்களில் கூட ஈடுபடவே செய்யும். ஆனால் மற்ற நாடுகளிலிருந்து முதலாளித்துவம் வெளியேற்றப்படுந்தோறும் போர்ப்படைகள் வைத்திருக்க வேண்டும் அவசியமும் குறைந்து கொண்டே வரும். உலகின் ஒரு பாதி சமதர்ம அரசியலாய் விட்டால்கூட, உலகிலிருந்து போர் மறைந்தே விடும் என்று எண்ணுகிறேன். பகுதி – 2 இந்தியாவுக்கான சமதர்மம் வினா (55) : இந்தியாவிலுள்ள நிலைமைகள் ஐரோப்பா விலுள்ள நிலைமைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை என்பதை நீங்கள் ஒத்துக் கொண்டாகவேண்டும். ஐரோப்பாவில் முதலாளித்துவம் முன்கூட்டி வந்தது. உழைப்பு வகுப்பும், அதுபோலவே சமதர்ம இயக்கமும் முன்கூட்டி வந்தன. இதைப் பார்க்க, இந்தியா சமதர்மத்திற்குப் பக்குவமடைந்துள்ள தென்று உங்களால் கூறமுடியுமா? விடை : ஐரோப்பாவில் முதலாளித்துவமும் உழைப்பு வகுப்பு இயக்கமும் முன்கூட்டியே வந்தன என்பது உண்மையே. ஆனால் ஐரோப்பாவிலேயே அவை சில நாடுகளில் மற்றநாடுகளைவிட முன்கூட்டி எழுந்தன. எடுத்துக்காட்டாக முதலாளித்துவமும் உழைப்பு வகுப்பும் ஜெர்மனிக்கு முன்பே இங்கிலாந்தில் தோன்றின. ஆயினும் பிரிட்டனில் அத்தகைய இயக்கம் ஏற்படுமுன்பே உழைப்பு வகுப்பியக்கம் ஜெர்மனியில் தோன்றிவிட்டது. எனவே ஒரு வகுப்பு முற்பட்டுத் தோன்றுவதும் பிற்பட்டுத் தோன்றுவதும் அதன் வளர்ச்சியின்போக்கில் உருப்படியான மாறுபாடு எதுவும் உண்டுபண்ணி விடாது என்று காணலாம். இந்தியாவில் முதலாளித்துவமும் உழைப்பு வகுப்பு இயக்கமும் ஐரோப்பிய நாடுகளிலுள்ள அவற்றின் தோழமை யியக்கங்களைப் பார்க்க மிகவும் இளமைநிலையிலுள்ளன என்பதில் ஐயமில்லை. ஆனால் இது காரணமாகச் சமதர்மம் தொலைதூர வருங்கால வளர்ச்சியாகித் தீர வேண்டும் என்ற கட்டாயமில்லை.. உண்மை நிலையைப் பார்க்கப் போனால் புறச் சூழ்நிலைகள் (நாட்டு நிலைமைகள்) இந்தியாவை ஐரோப்பாவை விட அதற்குப் பக்குவமான நிலைக்குக் கொண்டு வந்துள்ளன. வினா (56) : நீங்கள் எங்ஙனம் அவ்வாறு கூறமுடியும்? அது துணிச்சலான முன்னறிவிப்பாகவோ நம் வருங்காலப் பேரவாவை வெளிப்படுத்துவதாகவோ அமையவில்லையா? விடை : மாற்றங்கள் மனிதன் வேண்டும்போதே வரத்தக்கன. மனிதன் மாற்றம் வேண்டுவதோ அவனைச் சூழ்ந்துள்ள நிலைமைகளில் மனச்சலிப்புக் கொள்ளும்போது தான். இந்திய மக்கள் தங்கள் வாழ்க்கை முறையில் மாறுதல் ஏற்படவேண்டும் என்பதில் ஆர்வமுடைய வராயிருக்கின்றனர் என்பதை நீங்கள் மறுக்க முடியாது. ஆழ்ந்து ஒருமுகமாகக் கிளம்பியுள்ள அவர்கள் பெருவாரியான அரசியலெழுச்சி அதற்குச் சான்று ஆகும். உற்பத்திச் சாதனங்களில் பெரும் பான்மையை அடக்கி வைத்துக்கொண்டிருக்கும் முதலாளித்துவம் இங்கே வெறும் முதலாளித் துவமாயில்லை; பிரிட்டிஷ் முதலாளித்துவமாயுள்ளது. இருக்கும் இந்திய முதலாளித்துவம் அதன் மூத்தண்ணனாகிய பிரிட்டிஷ் முதலாளித்துவத்தின் தயவிலேயே வாழுகின்றது. எனவே இந்திய முதலாளிகள் பிரிட்டிஷ் முதலாளித்துவப் பிடியுணர்ந்து மனக்குறைவுபெற்றுத் தொடக்கத்தில் அதனை வீழ்த்த மக்களுடன் சேர்ந்து ஒன்றுபட்டுழைத்தனர். இதனையே நாம் சுதந்திரம், அதாவது ஏகாதிபத்தியக் கட்டிலிருந்து விடுபடும் விடுதலை என்று கூறினோம். மேலும் இந்தியா மிகப் பெரியதொரு நிலப்பரப்பு. இங்குள்ள மக்கள் பெரும்பாலோரும் ஏழைகள். ஆகவேதான் மக்கள் தொகையிலும் இந்திய இயக்கம் பேரளவு ஆதரவுடைய தாயிருந்தது. இந்திய மக்கள் மாறுபாட்டை விரும்புகின்றனர் என்பதிலும் ஐயமில்லை. இல்லாவிட்டால் தியாகங்கள், தொல்லைகள், இடைஞ்சல்கள் முதலிய இன்னல்கள் கொண்ட ஒரு இயக்கத்தைச் சார்ந்திருக்கமாட்டார்கள். ஆனால் அவர்கள் இதுவரை நன்கு உணர்ந்து கொள்ளாதது யாதெனில் தங்களுக்கு வேண்டும் மாற்றம் எது என்பதே. இதையே நாம் அவர்களுக்குக் கூறவேண்டும் அதாவது அவர்களிடையே இது பிரசாரம் செய்யப்பட வேண்டும். மக்கள் கைக்கு அதிகாரத்தைக் கொண்டு வருதல்; உற்பத்திச் சாதனங்களைச் சமூக உடைமையாக்குதல்; விஞ்ஞானத்தின் உதவியைக்கொண்டு தேசிய வளப்பங்களை உச்ச அளவு உற்பத்திக்குப் பயன்படுத்துதல் ஆகிய அடிப்படைத் தத்துவங்களைக் கொண்ட சமதர்மம் மட்டுமே அவர்கள் வறுமை நிலையைப் போக்கும். அதாவது அவர்கள் தம் எதிர்கால வாழ்க்கையின் ஆக்கம்பற்றித் தன்னுணர்வுடையவர் ஆக்கப்பட வேண்டும். இந்நாட்டு வறுமையின் கோரரூபம், அதன் காலடியில் துவண்டு மக்கள் அடையும் துயரம் ஆகியவை ஐரோப்பிய மக்களைவிட மிகுதியாக அவர்களைச் சமதர்மத்தில் ஆர்வம் கொள்ளும்படி செய்யத்தக்கவை. ஏனெனில் ஐரோப்பாவில் முதலாளித்துவத்தின் சுரண்டல் எவ்வளவானாலும் மக்கள் தம் நாடுகளின் ஏகாதிபத்திய ஆட்சியின் பயனாகச் சில நலன்கள், சிறிதளவு நலன்களேனும் பெற்றே உள்ளனர். எடுத்துக்காட்டாக ஐரோப்பிய உழைப்பாளிக்கு இந்திய உழைப்பாளியைவிட மிகுதி சம்பளம் தரப்படுகிறது. இந்நிலையினாலேயே ஐரோப்பாவில் மாற்ற ஆர்வம் சிறிது மழுங்கியுள்ளது. இத்தகைய உதவிகள் பெறாத இந்திய உழைப்பாளி உடனடியான, அடிப்படையான மாறுதலை விரும்புபவனாயிருக்கிறான். எனவேதான் சராசரி இந்தியனின் மனம் ஐரோப்பியரைவிட சமதர்மத்தை ஏற்க மிகுதியான பக்குவ நிலையிலுள்ளது என்று கூறினோம். மற்றும் ஒரு செய்தி இங்கே கவனிக்கப்படவேண்டும். நாமே மேலே கண்டுள்ளபடி முதலாளிகள் தம் தொழில்களையும் தொழிலாட்சிகளையும் கவனிக்க அறிவு வகுப்பினர் ஊழியத்தைப் பெற்றாகவேண்டும். ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகள் தம் அறிவு வகுப்பின் பெரும் பகுதியைத் தம் பொருளியல் அமைப்புக்களில் ஈர்த்துக் கொண்டுள்ளன. இதனால் அவர்கள் பொருள்துறையில் நல் நிலையுடையவராயிருக்கின்றனர். இது காரணமாகத் தான் இவ்வகுப்பு முதலாளித்துவ அமைப்பைப் பாதுகாப்பதில் அக்கறையுடைய தாயிருக்கிறது. இதற்கு மாறாக இந்தியாவின் அறிவு வகுப்பு மிகச் சிறு தொகையானது. அதில் இன்னும் மிகச் சிறு தொகுதியே நன்னிலையிலுள்ளது. இந்திய நடுத்தர வகுப்பினர் பொருளியல் துறையில் மிகவும் துன்ப மெய்துகின்றனர். இந்திய அரசியல் இயக்கத்தில் அவர்கள் முனைந்து காணப்படுவது இதனாலேயே. ஆகவே வகுப்பு வாரியாகப் பார்த்தாலும் இந்தியாவில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலுமுள்ள மற்ற நாடுகளைவிட மிகுதியான வகுப்புகள் தற்போதைய நிலையில் மாறுபாட்டில் அக்கறை யுடையவை யாயுள்ளன. கடைசியாக, ஐரோப்பா பல நாடுகளாக வகுக்கப்பட்டுள்ளது. இது அங்குள்ள சமதர்ம இயக்கங்களைப் பாதிக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் அதற்கென ஓர் இயக்கமும் ஒரு கட்சியும் அதற்கெனத் தனித்திட்டங்களும் உள்ளன. இதனால் இவ்வியக்கங்கள் பலவீன முடையவை. இதற்கு மாறாக இந்தியா ஐரோப்பாவின் எல்லா நாடுகளும் சேர்ந்தால் எவ்வளவோ அந்த அளவு பெரிதா யுள்ளது. மக்கள் தொகையோ, அதன் இரட்டியுடைய தாகும். ஆகவே ஐரோப்பாவுக்கு முற்பட்டுச் சமதர்மம் இந்தியாவிற்கு வருவதற்கான சாதக நிலைகள் மிகுதி. இதனை ஒரு சாதகநிலை என்று மட்டுமே பொதுவாகக் குறிப்பிட்டுள்ளோம்; அதற்கு மேற்பட்டதன்று. ஏனெனில் உண்மையில் சென்ற உலகப் போருக்குப்பின் ஐரோப்பாவும் எவ்வளவோ இன்னல்கள் அடைந்துள்ளது. அதன் வாழ்க்கைத் தரம் வீழ்ச்சியடைந்துவிட்ட தோடு இன்னும் வீழ்ச்சியடைந்துகொண்டே வருகிறது. இதனால் நடுத்தர வகுப்பினர் நிலை மோசமாகி வருகிறது. இந்நிலையில் அங்கும் சமதர்மம் ஒன்றே நெருக்கடியைச் சமாளிக்கும் வகையாயுள்ளது. ஆயினும் பல நாடுகளாகப் பிரிவுபட்டிருக்கும் தடங்கலை அவர்கள் இன்னும் கடந்தேயாகவேண்டும். வினா (57) : பிரிட்டன் இன்னும் (மறைவாகவேனும்) இந்தியாவை ஆளுகிறதென்பது உங்களுக்கு நன்கு தெரிய வரலாம். சமதர்மத்தைப் புகுத்துவதன் முன்பு, பிரிட்டிஷ் ஆதிக்கத்தை முழுவதும் அகற்றிவிட வேண்டியது இந்திய மக்களின் முதற் கடமையல்லவா? பிரிட்டிஷ் சக்தி முழுவதும் வெளியேற்றப் படுமுன் நம் இயக்கத்திற்குள் பிளவுகளையும் தனிப்பிரச்சனைகளையும் கொண்டு வருவதுதான் நலமாகுமா? விடை : மேற்போக்காக இது ஒரு நல்ல தர்க்க முறையென்று தோற்றலாம். ஆனால் உண்மையில் அப்படியன்று. மக்கள் முன்னிலையிலுள்ள முதல் கடமை தெளிவானதே. அது பிரிட்டிஷாரை அகற்றி இந்திய விடுதலையை மெய்யான விடுதலை ஆக்குவதேயாகும். ஆனால் அதற்காகச் சமதர்மத்தை ஒதுக்கிவைக்க வேண்டுவது எதனால் என்பதுதான் எனக்கு விளங்கவில்லை. சமதர்மம் என்பது பிரிட்டிஷாரை இந்தியாவில் நிலைநிறுத்துவதற்காக ஏற்பட்டதா என்ன? இது அதற்குத் தீங்குதரும் இயக்கமன்று; மாறாக, நலம் புரிவதேயாகும். சமதர்ம இயக்கம் பிளவுகளும் உட்கட்சிகளும் உண்டுபண்ணுமே எனப் படில், அதுவும் உண்மை நிலைக்கு மிகு தொலைவிலுள்ளதே. ஏனெனில் உண்மை இதற்கு நேர்மாறானது. சமதர்மம் வெளிநாட்டுக் கெதிராக உறுதிவாய்ந்த எதிர்ப்புச் செய்கிறது. ஆனால் தேசிய இயக்கத்திலுள்ள வேறு சக்திகள் சில அடிக்கடி எதிர்ப்பைப் பலவீனப்படுத்தி, பிரிட்டிஷ் சக்தியுடன் சமரசம் செய்யப் பார்க்கின்றன. எடுத்துக்காட்டாக, தேசிய காங்கிரஸ் மௌண்ட் பேட்டன் திட்டத்தை ஏற்றுக்கொண்டதைக் கவனியுங்கள்! இது இந்தியா பாகிஸ்தான் பிரிவினையைக் கொண்டுவந்தது மட்டுமல்ல; இந்திய தேசிய வாழ்வில் பிரிட்டிஷ் தொழிலையும் அரசியல் சூழ்ச்சி வாழ்வையும் (இராஜதந் திரத்தையும்) நன்கு வேரூன்ற உதவும் வகையில் இது அமைந்துள்ளது. தேசிய இயக்கத்தில் சமதர்ம இயக்கத்தின் பங்கு, உடலில் செந்நீருக்குள்ள பங்கு - அது வலிவு தந்து அரண் செய்யும் பண்பு ஆகும். மேலும் தேசிய அமைப்பிலுள்ள பிளவு சமதர்மக் கட்சி மட்டுமே என்று கூறமுடியாது. எடுத்துக்காட்டாக `இராமராஜ்யத்தில்’, அதாவது தொழில் இயக்கம் ஏற்படுவதற்கு முந்திய புராணகால நிலையில் நம்பிக்கையுடையவர்கள் ஒருபுறம் உள்ளனர்; வாணிகம், தொழில் நிதி ஆகிய துறைகளைச் சார்ந்த குழு நலன்களின் ஆட்பேர்கள் உள்ளனர். வகுப்பு மனப்பான்மை யுடையவர்கள், மத மனப்பான்மையுடையவர்கள் உள்ளனர். இன்னும் மாகாண வாரியாகச் சிந்தனை செய்பவர்கள் வேறு உள்ளனர். இந்தியத் தேசிய இயக்கம் இப்பல்வேறு குழுக்கள் இணைந்ததே. இவர்கள் அனைவரும் தனித்தனி வேறுபட்ட நோக்கங்களும் அவாவும் உடையவர்களாயினும் இவர்களில் பெரும்பாலாரும் பிரிட்டிஷ் செல்வாக்கை வேருடன் அழித் தொழிப்பதில் ஒன்றுபட்டவராகவே யுள்ளனர். சமதர்மச் சார்பில் தற்காலிகமான இக்காரணங்களைத் தவிர வேறு நல்ல காரணங்களும் உண்டு. சமதர்மத்தின் குரல் முதன்மையாகப் பொதுமக்கள் நலங்களின் சார்பானது. `இந்தியா’ என்பது இப் பொதுமக்களையே - குடியானவர், தொழிலாளிகள், நடுத்தர வகுப்பினர், சிறு கைத் தொழிலாளர்கள், அறிவூழியர்கள் ஆகிய பல்கோடி மக்களையே. இந்தியாவின் மிகப் பெரும் பான்மையினர் கருத்து என்பது பொதுமக்கள் கருத்தே. பெரும் பான்மை நலன்களும் பொதுமக்கள் நலன்களே. சமதர்மிகள் பேசுவது இத்தகையோர் சார்பிலேதான். எனவே சமதர்மம் தேசிய இயக்கத்தில் ஈடுபட வேண்டியது மட்டுமன்று; எந்த உரிமைப்படி பார்த்தாலும் அதில் தலைமை தாங்கும் நிலையே உடையது. இந்தியாவில் இயக்கத் தலைமை பெரும்பாலும் இன்ப வகுப்பினர் கையிலேயே - எப்படியும், இன்ப வகுப்பினர் ஆதரவை எதிர்பார்ப்பவர் கையிலேயே - இருப்பதைக் காண, இதன் அவசியம் இன்னும் மிகமிக முக்கியமானதாகும். முற்காலப் போராட்டங்கள் ஒவ்வொன்றிலும் போராட்டத்தில் முதல்முதல் சலிப்படைந்தது இவ்வின்பவகுப்பே. பிரிட்டிஷ் ஆட்சியுடன் சமரசத்துக்கு முன்வந்ததும் இந்த வகுப்பே. ஆகவேதான் சமதர்மம் தேசியத்தின் ஒரு உறுப்பாக மட்டுமன்றி இந்திய மக்களியக்கத்தின் முதுகெலும்பாகவே கருதத்தக்கது. அறிவுத் துறைச் சார்பில் இந்தியாவில் சமதர்மம் அவசியம் என்பதற்கான இன்னொரு காரணம் உண்டு. முற்றிலும் இன்ப வகுப்பினராலான நம் தேசியத் தலைவர் குழு விடுதலை பற்றித் தெளிவற்ற கருத்தே கொண்டுள்ளது என்பதை நம் தேசிய இயக்க வரலாறு முழுவதுமே காட்டுகிறது. தாம் என்ன செய்து முடிக்க எண்ணுகிறோம் என்பது பற்றிய தெளிந்த முடிவை நம் தலைவர்கள் என்றுமே நன்கு உணர்ந்து கொண்டதில்லை. இம் மனநிலை மிகவும் இடையூறு வாய்ந்ததாகும். அவர்கள் விரும்பியதெல்லாம் `இந்தியாவை விட்டு வெளியேறு’ என்ற கனவை நனவாக்குவதுமட்டுமே. இப்போதோ அது நனவாய் விட்டதென்று அவர்களே கூறுகின்றனர். கடைசி பிரிட்டிஷ் காரன் இவ்விடம் விட்டகன்றதுமே இந்தியா முழு விடுதலை பெற்றுவிடும் என்று கூறுவது நகைப்பிற்குரிய கூற்றாகும். இதனை இப்போது நாம் அனைவரும் உணர்ந்து கொண்டு விட்டோம். அத்துடன் கடைசி ஆங்கிலேயன் போவது என்பதும் முடியாத ஒரு காரியம். விடுதலை என்பது நாட்டில் வெளிநாட்டார் இல்லாம லிருப்பதென்பதன்று. அமெரிக்காவில் ஆங்கிலேயர் இருக்கின்றனர். அதனால் அமெரிக்கா விடுதலை யில்லாத நாடாய் விடவில்லை. அரசியல் பணிமனைகள் எல்லாவற்றிலும் முழுவதும் இந்தியரே அமர்ந்து விட்டால் அப்போது அதுவும் விடுதலையாய் விட மாட்டாது. பிரிட்டிஷ் ஆட்சியின்போது கூட இந்திய ஆட்சி நிலையங்களில் 100-க்கு 90 பங்கு இந்தியர் கையில்தான் இருந்தது. இதனால் இந்தியா 100-க்கு 90 பங்கு விடுதலைபெற்றிருந்த தென்று கூற முடியுமா? எடுத்துக் காட்டாக, இன்று நாம் காண்பதென்ன? இதுவும் பெயரளவான விடுதலை மட்டுமே. அரசியலரங்கங்கள் யாவுமே இன்று இந்தியர் கையில்தான். படைத் துறைகள்கூட இந்தியமயமாக்க ப்பட்டுவிட்டது. ஆயினும் நம் ஆட்சியில் யாவருக்கும் உண்மை ஆற்றல், திறம் படைத்த ஆற்றல் உண்டா? இல்லை. ஏனெனில் அதிகாரமாற்றம் என்பது ஏற்பட்டு விட்டதாயினும், இன்றும் இந்தியக் கூட்டுறவு என்றும் பாகிஸ்தான் என்றும் இந்தியா பிரிக்கப்பட்டு நாம் பலவீன மடைந்துள்ளோம். அத்துடன் நிதி உதவி உட்பட மிகப்பல செய்திகளிலும் நாம் இன்னும் வெளிநாட்டார் உதவியைச் சார்ந்தே நிற்கிறோம். ஒரு தனிநாடு என்ற முறையில் நாம் உதவியற்ற நிலையிலேயே இருக்கிறோம். முழுநிறை விடுதலை (பூரண சுதந்திரம்) என்ற நம் குறிக்கோளைக் கைவிட்டு, நம் இன்ப வகுப்பினர், சிறப்பாக நம் தேசியத் தலைவர்குழு, பிரிட்டனிடத்திலிருந்து கிடைப்பதைச் சுருட்டிக்கொள்ளுவதற்காகக் காட்டிய அவசர புத்தியின் விளைவுதான் இவையனைத்தும்! வினா (58) : நீங்கள் கூறுவதன் பொருள், இப்போது இந்திய இன்ப வகுப்பு ஒரு பகைச் சக்தி என்று கருதப்படத்தக்கது என்பதா? விடை : அப்படியே கட்டாயம் கொள்ள வேண்டுமென் றில்லை. ஆயினும் தேசிய வாழ்வில் அவர்கள் முக்கியத்துவம் குறைந்து கொண்டுதான் வருகிறது. எப் பக்கம் திரும்புவதென அவர்களும் தயக்க மடைந்த நிலையிலேயே உள்ளனர். அவர்கள் தற்போதைய ஆட்சியில் மனச்சலிப்படைந்தே யிருக்கின்றனர். இன்றைய அரசியலமைப்பின் பலவீனத்தையும் அவர்கள் உணர்ந்தேயிருக்கின்றனர். ஏனெனில் வெளிநாட்டு முதலாளித் துவம் இன்னும் பெரும்பங்கு ஆதிக்கம் வகிக்கவே செய்கின்றது. இன்றைய ஆட்சி அதற்கெதிராக வலிவுடன் செயலாற்றவும் முடியவில்லை. ஆனால் அதே சமயம் சமதர்மத்தைப் பற்றியும் அது வருங்காலத்தில் என்ன சாதித்து விடுமோ என்பது பற்றியும் அவர்கள் அச்சங் கொண்டுள்ளனர். இங்ஙனம் அவர்கள் இருதலைக் கொள்ளி யிடைப்பட்ட எறும்பு நிலையிலுள்ளனர். இது இந்தியக் கூட்டுறவின் நிலைமட்டுமன்று. பாகிஸ்தானி லுள்ள நிலையும் இதுதான். உண்மையில் பாகிஸ்தான் ஒரு தனியரசியலானதே மிக நொய்மைவாய்ந்த காரணத்தினால் - அதாவது வகுப்பு வாதத்தினால்! எனவே அது தனித் தன்மையுடன் இயங்கும் ஆற்றலுடையது என்பது பெரிதும் ஐயப்படத் தக்கதேயாகும். பொது முறையில் இந்தியா முழுவதையும் ஒன்றாக நடத்துவதே இயல்பும் எளிதும் ஆகும். இந்தியக் கூட்டுறவின் காரியங்களையும் பாகிஸ்தானின் காரியங் களையும் தனித்தனி கவனிப்பதென்பது அவ்வளவு எளிதும் இயல்பும் அல்ல. வினா (59) : அப்படியானால் இந்திய அரசியலியக்கத்திலும் வகுப்பு நலன்களில்லாமலில்லை என்றும், அது உண்மையில் தேசிய இயக்க மல்ல, அதாவது வகுப்பு நலன்களுக்கப்பாற்பட்ட இயக்கமல்ல என்று தான் நீங்கள் கருதுகிறீர்களா? விடை : உலகில் அரசியல், சமூக இயல், பொருளியல் சார்ந்த எந்த இயக்கத்திலுமே வகுப்புநல அடிப்படையில்லாம லில்லை. இந்திய இயக்கமும் இதற்கு விலக்கன்று. இந்திய மக்கள் சமூகத்தில் குடியானவர் வகுப்பு, உழைப்பாளி வகுப்பு, சிறு தொழிலாளர் வகுப்பு, தொழில் முதலாளிகள் வகுப்பு, நிதி நிலை வகுப்பு, வணிக வகுப்பு, பெருநிலக்கிழவர் (ஜமீன்தார்) வகுப்பு, சிறுநிலக் கிழவர் வகுப்பு ஆகியவை மட்டுமன்றி, மறக்க முடியாத மற்றொரு வகுப்பான ஏகாதிபத்திய வகுப்பும் அதன் ஆதரவாளர்களும், அதன் ஆட்பேர்களான நாட்டு மன்னரும் ஆகிய இத்தனை வகுப்புக்களும் உண்டு என்பதை மேலே கண்டோம். இவையனைத்திற்கும் அவரவர் தனி நோக்கு உண்டு; அவர்கள் அவரவர் தனிவழிகளையும் வகுத்துள்ளனர். வினா (60) ஆகஸ்டு 15 இவையனைத்தையும் மாற்றி யமைத்து விட்ட தென்பதையும் ஏகாதிபத்தியம் ஒழிந்து மறைந்து போயிற் றென்பதையும் நீங்கள் ஒத்துக்கொள்ளவில்லையா? விடை : நேரடியான ஏகாதிபத்திய ஆட்சி ஒழிந்துவிட்டது என்பதில் ஐயமேயில்லை. ஆயினும் நாட்டு வாழ்வில் அது இன்னும் மிகப்பெரும்படியான செல்வாக்குடையதாகவே இருக்கிறது. பிரிட்டனின் துணை சார்ந்து நிற்பது தவிர வேறு வழியற்ற நிலையிலேயே இந்தியா விட்டு வைக்கப்பட்டுள்ளது என்பதை நீங்களே காணலாம். இந்தியாவின் வசம் (அதாவது இந்தியாவின் வசமும் பாகிஸ்தான் வசமும்) உள்ள படை வலிமை மிக மோசமாகவே யிருப்பதால் வெளிநாட்டார் உதவி யில்லாமல் ஒரு போரின் தாக்குக்கு நாம் நிற்க முடியாது. மேலும் இப்படைத்துறையின் ஆட்கள், படை தாங்கியவரும் ஆட்சிப் பொறுப்பேற்றவர்களும் பிரிட்டிஷாராலேயே சேர்த்துக் கொள்ளப்பட்டனர்; தம்மை உயர்த்தியவர்கள் யாரென்பதை அவர்கள் எப்போதும் நினைவில் கொண்டவர்களாகவே இருப்பர். வினா (61) : வேறு வகையில் கூறுவதானால், இவ்வதிகார மாற்றம் கானல்நீர் போன்ற ஒரு போலித்தோற்றம் என்பது தானே உங்கள் கருத்து? விடை : கொள்கையளவில் ஏற்பட்டதே அம்மாற்றம். செயலளவில் அது உண்மையான மாற்றம்தானா என்பதை அதன் போக்குதான் தெளிவுபடுத்த வேண்டும். ஏகாதிபத்தியம் தானாக நேரடியாக ஆள்வதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். மறைமுக ஆட்சி என்ற கலைத்துறையை அது நன்கு பயிற்சி செய்து முழுநிறை கலைநுட்ப மாக்கியுள்ளது. கிழக்கு ஐரோப்பாவில் பெயரளவில் விடுதலையுடைய பல அரசியல்கள் உள்ளன. ஆனால் உண்மையில் அவையனைத்தும் வல்லரசுகள் ஏதாவதொன்றன் கைப்பிடியிலேயே உள்ளன. படைத்துறை, நிதித்துறை உதவிகட்கு இவ்வரசியல்கள் ஏதாவதொரு வல்லரசின் உதவியைச் சார்ந்தே நிலைபெறுகின்றன. இந்நிலையில் அவை தனிப்பட்ட முயற்சி எதுவும் தாமாகச் செய்யமுடியாது. இத்தகைய அரசியல்கள் கையாள் அரசியல்கள் (உடநைவே ளவயவநள) எனப்படும். வினா (61) : இந்தியா பிரிட்டனின் கையாள் அரசியலா? விடை : ஆம், குடியேற்றநாட்டுப் பிணைப்பிலிருந்து நீங்கித் தனி ஆதீன சுதந்தர அரசு என அறிவிக்கப்பட்டால்கூட அது அந்நிலை யுடையதே. வினா (62) இது பற்றிப் பல்வேறு வகுப்புக்களின் தனித்தனி நோக்குகள் யாவை? விடை : இத்தறுவாயில் இவை யனைத்தும் குழப்பமடைந் துள்ளன. எதிர் காலத்தில் தம் நிலை எவ்வாறு இருக்கும் என்பதை யாரும் உணரவில்லை. புதிய சூழ்நிலைகள்பற்றி அவை அச்ச முடையவையாயும் அடிக்கடி அவற்றை எதிர்ப்பவையாகவுமே இருக்கின்றன. முடிவாக அவை எந் நிலைகொள்ளும் என்பதை எதிர்காலம்தான் காட்ட வேண்டும். எனினும் இதுவரை அவை ஆற்றிய பங்கைத் தெரிந்து கொள்ளுதல் நலம். அப்போதுதான் இனி ஆற்றும் பணியின் போக்கு விளங்கும். பெருநிலக்கிழவரும் நாட்டுமன்னரும் பிரிட்டிஷ் ஆதிக்கத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்களாய்த் தம் வாழ்விற்கே அதனைச் சார்ந்து வந்துள்ளனர். மேலும் இவை பிரிட்டிஷாரால் படைக்கப்பட்ட வகுப்புக்கள் ஆகும். தனி வகுப்புக்கள் என்ற முறையில் இவை தப்பித் தவறிக்கூட விடுதலைச் சக்திகளுடன் கலந்துகொண்டதில்லை. நேர்மாறாக எப்போதுமே விடுதலைச் சக்திகளை எதிர்த்து பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு உண்மையில் உதவியுள்ளனர். மக்கள் இயக்கத்துக் கெதிராகப் பிரிட்டிஷார் அவசரச் சட்டங்களைப் பிறப்பித்த போதெல்லாம், இந்திய மன்னர் தம் பகுதிகளிலும் அவற்றைத் தவறாது பார்த்துப் பகர்ப்புச் செய்துவந்தனர். பிரிட்டன் போரறிவிப்புச் செய்தபோது, மக்கள் போக்கு எப்படி யிருந்த போதிலும் சரி, அவர்கள் போர்முயற்சிக்கு ஆதரவாகவே இருந்தார்கள். பெருநிலக்கிழவர் நிலையும் இதுவே. தேசிய எழுச்சியின் வேகத்தில் சில தனிப்பட்டவர்கள் கலந்து கொண்டதுண்டாயினும், ஒரு வகுப்பு என்ற முறையில் இவர்கள் தம் குழுநலன்களுக்கு மாறாக என்றும் நடந்துகொண்டதில்லை. ஏகாதிபத்திய, பொருளியல் அமைப்புமுறையின் வரம்புக்குப் புறம்பாகத் தோன்றிய வேறு வகுப்புக்கள் சில. தொழில் முதலாளிகளின் இன்பவகுப்பு இவற்றுள் ஒன்று. இவ் வகுப்பு பிரிட்டிஷ் தனிக் குழுநலன்களின் எதிர்ப்பு மீறிப் பிறந்தது. அவற்றின் முன்னேற்றத்தின் ஒவ்வொரு படியிலும் பிரிட்டிஷ் தனிநலன் அவற்றின் மீது சீற்றமும் பகையும் காட்டி அவற்றின் வளர்ச்சிப் பாதையில் முட்டுக்கட்டைகளிட்டது. இவற்றினிடையே இந்தியாவில் எழுந்த முதல் தொழில் ஆடைத்தொழிலேயாகும். லங்காஷயரால் இந்தியாவின் தேவைகள் முழுவதையும் நிறைவுபடுத்தவும் முடியவில்லை. நிறைவுபடுத்த முடிந்த அளவிலும் விலைகுறைந்த ஆடைவகைகளைச் செய்வதில் குறைந்த ஆதாயமே வரும் என்று கண்டனர். இத்துண்டுத் தேவையை நிறைவு படுத்தவே இந்தியாவில் தொழிற்சாலைகள் அமைக்க இணக்கமளிக்கப் பட்டது. முதல் துணியாலை (பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யும் பருத்தியைச் சுத்திசெய்து கட்டமைக்கவே தொடங்கப்பட்டது) சென்ற நூற்றாண்டின் கடைப்பகுதியில் பம்பாயையடுத்த குர்லாவில் நிறுவப் பட்டது. வாணிகச் சரக்குகளின் போக்குவரவை எண்ணியே, சிறப்பாகப் பிரிட்டனுக்கு ஏற்றுமதிக்கான சரக்குகளுக்காகவே, பிரிட்டன் புகை வண்டிப் பாதைகளை அமைத்தது. புகைவண்டி களுக்கு உடனடியான சிறு பழுதுகள் பார்க்கவேண்டிவந்தது. இதற்காகப் பழுதுபார்க்கும் பட்டறைகளும் தொழிற் சாலைகளும் அமைந்தன. வாணிகச் சரக்குகளை வைத்துக்கட்டச் சணற்பைகள் செய்யும்படி வங்காளத்தில் சணலாலைகள் தொடங்கப்பெற்றன. இதுவும் ஏற்றுமதி நோக்கத்திற்காகவே. இவை யனைத்தும் சிறு திறத் தொழில்கள். மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்வது, பிரிட்டிஷ் உற்பத்திச் சரக்குகளை இந்தியாவெங்கும் கொண்டு பரப்புவது ஆகிய ஏகாதிபத்தியப் பொருளியல் திட்டத்தின் முக்கிய கூறுகளுக்கு உதவியாகவே இச் சிறுதொழில்கள் வளர்க்கப்பட்டன. இவை பெரும்பாலும் இந்தியர் உடைமையிலேயே இருந்தன. இயந்திரங் களுக்குப் பழுதுபார்த்தலும் தனிப்பகுதிகள் பொருத்துக்கள் ஆகிய உலோகப் பொருள்களும் தேவைப்பட்டன. இவற்றை இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்வது மிகவும் விலையருந்தலாயிருந்தது. இதனால் சிறு திற இரும்புத்தொழில் தோன்றியது. இங்ஙனமாக இந்தியத் தொழில் எக்காலத்திலும் பிரிட்டிஷார் ஊக்கம் பெற்று வளர்ந்ததல்லவென்று காணலாம். நேர்மாறாகப் பிரிட்டன் எப்போதும் இந்தியத் தொழில்வளர்ச்சி பற்றி அஞ்சிற்று. இந்திய விற்பனைக் களத்திலிருந்து இந்தியத் தொழில் பிரிட்டிஷ் தொழிலை விரட்டிவிடும் என்று அது எண்ணிற்று. இவ்வச்சம் தவறானதுமன்று. ஏனெனில் பிரிட்டிஷ் தொழில் இந்தியாவிலிருந்தே மூலப்பொருள்களைக் கப்பலிலேற்றிச் சென்று தொழிலாளர் மதிப்பு உயர்ந்துள்ள இங்கிலாந்தில் உற்பத்திசெய்து மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டியிருந்தது. ஆனால் இந்தியத் தொழிலுக்கு அருகிலேயே மூலப்பொருள்களிருக்கும் சாதக நிலை இருந்தது. அத்துடன் போக்குவரவுச் செலவும் குறைவு. தொழிலாளர் கூலிச்செலவும் குறைவு. ஆனால் ஏகாதிபத்தியம் இத் தொழில் வளராமல் தடுக்கக் கண்டிப்பான ஏற்பாடுகள் செய்திருந்தது. அதன்படி தொழிற்சாலை தொடங்குவதற்கு இணக்காழி சீட்டுப் பெறவேண்டும். உற்பத்தித் தொழில் தொடங்குபவர் இயந்திரம் வாங்கித் தொழிலாளரையும் தொழில் நுட்ப அறிஞரையும் அமர்த்திக்கொண்டு தொழிற்சாலை நடத்திவிட முடியாது. இத்தனைக்கும் முன்கூட்டி அரசியலாரிடம் இணக்கம் பெற வேண்டும். இவ்வாறு இந்தியாவில் எந்தெந்தத் தொழில் வளரலாம் என்பதையும் எந்த அளவிற்கு அவை வளரலாம் என்பதையும் முடிவுபடுத்தும் உரிமையைப் பிரிட்டன் தன் தனி உரிமையாக வைத்துக் கொண்டது. இந்தியத் தொழில் முதலாளிகள் இதை எதிர்த்தனர். அவர்கள் தம்மிச்சையாக வளரவும் விடப்படவில்லை. அதனுடன் அவர்களுக்குத் தடங்கல்களும் முட்டுக் கட்டைகளும் இடப்பட்டன. அவர்கள் தங்களிடம் உள்ளதை வைத்துக் கொண்டிருப்பதற்கே ஓயாது போரிடவேண்டியதாயிற்று. அதாவது அவர்கள் வகுப்புநலன்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய நலனுக்கு எதிராயிருந்தது. வினா (64) : அவர்கள் (இந்தியத் தொழில் முதலாளிகள்) ஆதரவை நாடு எதிர்காலத்தில் நம்பலாமா? விடை : இதற்கு விடைகூறுவது எளிதன்று. இன்னும் தங்கள் இயந்திரம், செலாவணி மாற்றுவசதிகள், காப்பு நிலையங்கள் (ஐளேரசயnஉந), பொருளகங்கள், போக்குவரவு ஆகியவற்றில் அவர்கள் பிரிட்டனின் உதவியையே எதிர் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இந்திய மன்னர்களைப் போல அவர்களும் வெளிநாட்டு உதவியையே பெரிதும் நம்பியிருக்க வேண்டியவர் ஆவர். இது அவர்கள் தன்னாண்மையைப் பெரிதளவு குறைத்துவிடும். வினா (65) : உங்கள் விளக்கத்தில் `இருந்தால்’களும் `ஆனால்’ களும் எங்கும் நிரம்பியுள்ளன. அவர்கள் உதவியை நாம் எதிர்பார்க்க முடியுமா? முடியாதா? இரண்டிலொன்று தெளிவாகக் கூறுங்கள். விடை : நான் கூறியதிலிருந்தே தெளிவாக உணர்ந்து கொண் டிருக்கலாம், எதிர்பார்க்க முடியாது என்பதை. ஏனெனில் இந்திய இன்ப வகுப்பு உண்மையில் உதவியற்ற நிலையிலேயே இருக்கிறது. இன்றைய முதல் முதல் தேவை நாட்டின் உற்பத்தியளவு உடனடியாகப் பெருக்க மடைய வேண்டும் என்பதே. அதாவது நம் தொழில்சக்தியளவு மிகுதியாக வேண்டும். நம் முதலாளிகள் இதனைச் செய்ய முடியுமா? அதற்கு வேண்டிய நிதி இருக்கலாம்; வகைதுறை உண்டா? ஆகவே அவர்கள் வெளிநாட்டு உதவி பெற்றாக வேண்டும். இதற்காக வெளிநாட்டார் நலன்களைத் தழுவியாதரிக்கவும் வேண்டும். ஆனால் வெளிநாட்டு முதலீடு இந்தியாவுக்கு வரும் அளவுக்கு உள்நாட்டு முதலீட்டுக்குப் பாதகம் ஏற்படும். இந்திய முதலீடு குறைவாகவும் பிரிட்டிஷ் முதலீடே முக்கியமாகவும் கொண்டு பல இந்தியத் தொழிலகங்கள் கூட்டு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. எப்படியும் உலகமெங்குமே முதலாளித்துவம் தன் ஆட்டம் ஆடித்தீர்ந்து விட்டது. முதலீட்டுச் சரக்குகளில் பயங்கரமான அளவு முட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆகவே மேற்கூறிய முறையிலும் கூடப் பலன் ஏற்படுவது அரிது. இதன் மொத்த விளைவு யாதெனில், முதலாளித்துவம் தனிப்பட நின்று இந்தியத் தொழிலியக்கத்தை விரைவுபடுத்தவே முடியாது. அவர்கள் உச்ச அளவில் செய்ய முடிவதெல்லாம் பிழைக்கு மட்டும் பிழைக்கப் பார்ப்பதுதான். அவர்கள் தங்கள் எதிர்கால நலனை மக்கள் நலனுடன் ஒன்றுபடுத்திப் புதிய தொழில்களில் உற்பத்திச் சாதனங்களைச் சமூக உரிமையாக்கினார்களென்று வைத்துக் கொள்வோம். அப்போதும் அவர்கள் தங்கள் கல்லறைக்குத் தாங்களே குழி பறித்துக் கொண்டவர்கள் ஆவார்கள். இப்போதாவது அவர்கள் இரக்கப் படத்தக்க நிலையை நீங்கள் காணலாம். அவர்கள் சார்பில் உங்கள் கேள்விக்கு நேரிய விடையளிக்க நான் தயங்கிய தயக்கமும் உங்களக்கு இப்போது புரியலாம். வினா (66) நிதித்துறையாளர் முதலிய பிற வகுப்பினர்கள் நிலை யாது? விடை : எல்லா நாட்டிலும் போலவே இங்கும் நிதித்துறை யாளர் ஒரு பழங்காலத்து வகுப்பினர். மிக மிக முதன்மையாகச் சுரண்டலிலேயே பழகிய வகுப்பும்கூட. பழங்காலத்தில் அவர்கள் தனியாட்களுக்கும் வகுப்புக்களுக்கும் மன்னர்களுக்கும் பணங் கொடுத்துதவினர். ஆயினும் பிரிட்டிஷ் வரவின்பின் வகுப்புக்களின் பேராட்களான ஐம்பெருங் குழுவினர் (பஞ்சாயத்தார்கள்) நிலையழிந்தனர். ஆகவே அவர்கள் வாடிக்கைக்காரர்களில் ஒரு வகுப்புக் குறைந்துவிட்டது. (மன்னர்களும் இல்லாதுபோகவே) பணம் கொடுத்துத் தொழில் செய்யத் தனி மனிதர் மட்டுமே மீந்தனர். தனி மனிதரோ பொதுவாக வரவர ஏழையாகிக் கொண்டே வந்தனர். அவர்களுக்குப் பணம் கொடுப்பதும் தொழில் முறையில் பலன் தரவதாயில்லை. ஆயினும் புதிதாக வளர்ந்துவரும் தொழிலுக்கு அவர்கள் நிதியளிக்கக்கூடும். ஆனால் தொழிலுக்கோ தனிப்பட்ட தொல்லைகள் இருந்துவந்தன. தொழில் முயற்சிகள் அடிக்கடி அழிவுற்று (திவால் அல்லது தீவாளியாகி) வந்தன. புதிய அரசியலோ (அதாவது பிரிட்டிஷ் அரசோ)வெனில், இந்திய நிதித்துறையாளனிட மிருந்து கடன் வாங்குவதை விடப் பிரிட்டிஷ் நிதித்துறையாள னிடமிருந்து கடன் வாங்கவே விரும்பிற்று. இந்நிலையில் நன்றோ, தீதோ தனி மனிதன் தோளிலேயே அவர்கள் தம் முழுப்பளுவையும் சுமத்த வேண்டியவராயினர். பொதுவாக இந்தத் தனி மனிதன் குடியானவனாகவே வந்தமைந்தான். அவன் கட்ட நட்டங்கள் வரவர மிகுதியாகி அவன் கடன்களும் மீட்க முடியாதவையாயின. இறுதியாக நிதித்துறையாளனுக்குப் பயிர்த் தொழில் பற்றி எதுவுமே தெரியாதாயினும் வேறு வழியில்லாமல், அடிக்கடி தன் விருப்பத்திற்கு மாறாகவே நிலத்தைக் கைப்பற்ற வேண்டிய வனானான். இங்ஙனமாக இந்தியாவில் மற்ற நாடுகளை விடப் பெருத்த விழுக்காட்டில் முதலீடு நிலத்தில் சென்று சிக்கியது. இதன் பயன் யாது? மெய்யாக உழவர்களாயிருந்தவர் நிலமற்ற குடியான வராயினர். வறுமையும் பன்மடங்கு கொடியதாயிற்று. இவ்வகுப்பு நேரடியாகப் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கொடுமைக்காளாகாவிட்டாலும் மறைமுகமாக ஆயிற்றென்றே கூற வேண்டும். இதனால் அதன் போக்கும் இங்கும் அங்குமாக ஊசலாடித் தயங்கியதாகவே இருக்கிறது. ஒரு வகையில் தொழில் வளர்ச்சிக்கு அவர்கள் ஒரு பளுவாகவே உள்ளனர். ஏனெனில் நிலத்தைப் பற்றி ஒன்றும் அறியாமலே நிலமுதலாளிகளானது போலவே இன்று தொழில் பற்றி எதுவுமறி யாமலும் அதுபற்றி அக்கரையில்லாமலும் அவர்கள் தொழில் முதலாளிகளாகவும் ஆகியுள்ளனர். டால்மியாக்கள், பிர்லாக்கள், சாக்ஸெரியாக்கள் ஆகிய இவர்களனைவரும் உண்மையில் நிதித் துறையாளர்களே. அவர்களுக்கு உரிய துறை தொழில் துறையன்றா யினும் அவர்கள் இன்று தொழிலுக்கு உடைமையாளர்களாயுள்ளனர். தொழில் முன்னேறுகிறதா, தேக்கநிலை யடைகிறதா என்பதைப்பற்றிய அக்கறையற்று ஆதாயமொன்றிலேயே அவர்கள் குறியாயுள்ளனர். உலகெங்குமுள்ள நிதித்துறையாளர்களைப் போலவே அவர்கள் பண ஆசையுடையவர்களாகவும் தெளிந்த தொலைநோக்கற்றவர் களாகவும் கோழை களாகவுமே உள்ளனர். இனி தொழில் துறை வகுப்புக்கு வருவோம். இவையும் நடுத்தர வகுப்பையும் வேறு பிரித்தறிய வேண்டும். நடுத்தர வகுப்பு என்பது சிறு அளவான உடைமைகள் உடையது. தொழில் துறை வகுப்பு என்பது உண்மையில் ஊதியம் பெறும் வகுப்பேயாகும். ஆனால் அவர்கள் தம் தொழில் துறையறிவு காரணமாக உழைப்பாளிகளை விடப் பன்மடங்கு ஊதியம் பெற்றுத் தொழில் வாழ்வுக்கு இன்றியமையாதவர்களா யுள்ளனர். மேலும் வரன்முறையாக இவர்கள் தம்மைப் பொதுவான கூலி உழைப்பாளியைவிடச் சமூகத் துறையில் உயர்வுடையவர் களாகவே கருதிக் கொள்கின்றனர். அவர்கள் சமூக நிலைகளைக் காண இது ஓரளவு சரியே. முதலாளிகூட இந்நிலையை உயர்தர நிலையென்று ஒத்துக் கொள்கிறான். இந்தியாவில் இத்தொழில் துறை வகுப்பு மிகமிகச் சிறிய அளவினது. மேலும் அது நகர்களிலும் பட்டணங்களிலும் மட்டுமே இருக்கிறது. இந்நாட்டில் பெரிய தொழில் முயற்சியோ வாணிக முயற்சியோ இல்லாத காரணத்தால் இவ்வகுப்பு போதிய வாய்ப்புக்கள், வழிதுறைகள் இல்லாதிருக்கின்றது. இதனாலேயே இந்நாட்டில் சிற்றூதியத்தில் வாழும் ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள், மருத்துவ அறிஞர், பொறியமைப்பாளர், கணக்கர் ஆகியவர் களைக் காண முடிகிறது. சமதர்ம முறை வருவதானால் இவ்வகுப்புக்கு எல்லாவகையிலும் நலமே. ஏனெனில் அவர்கள் தங்கள் அறிவையும் திறத்தையும் அதில் மிக நன்கு பயன்படுத்த முடியும். அடுத்தபடியாகக் கவனிக்கவேண்டியது தாழ்ந்தபடி நடுத்தர வகுப்பினர். இவர்களே குமாஸ்தாக்கள், கடைக்காரர், ஆசிரியர் ஆகியவர்கள். இவ்வகுப்பும் சிறிதே. ஆனால் இது முக்கியமானதும் பொது வாழ்வில் பட்டாங்கமானதும் ஆகும். இவர்கள் தொடக்க நிலைக்கு மேற்பட்ட கல்வியறிவுடையவர்கள். ஆயினும் உழைப்பாளியை விடப் பொருள் முறையில் அவர்கள் தன்னிலை உடையவர்களாயில்லை. இதனாலேயே அவர்களிடம் தொழில்துறையாளரின் அறிவுடன் பொதுமக்களின் எதிர்ப்புக் குணமும் ஒருங்கே இணைந்து காணப்படுகிறது. அரசியல், பொருளியல் சமூகப் பிரச்சனைகளில் இவர்கள் எளிதில் ஈடுபட்டுக் கலக்கின்றனர். இவ்வகுப்பின் பிறப்பு வரலாறு மிகவும் சுவையுடையது. பிரிட்டிஷார் இந்நாட்டில் ஆட்சியாளராக வந்துசேர்ந்த போது, தமக்கு வேண்டும் குமாஸ்தாக்களை அவர்களால் இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்ய முடியவில்லை; ஏனெனில் அது அத்தனை செலவு பிடிக்கும். ஆகவே இவ்விடத்திலுள்ளவர்களை இவ்வகைக்குப் பயிற்றுவிக்க முற்பட்டனராம்! அவர்கள் இதற்காகவே பள்ளிகளும் பல்கலைக் கழகங்களும் தோற்றுவித்தனர். இவையே இந்தியாவின் புதிய குமாஸ்தா வகுப்பின் பிறப்பிடங்களாயின. இப்போதுகூட பி.ஏ. தேர்வில் தேறுபவன் தகுதி ஒரு குமாஸ்தாவாகும் தகுதி மட்டுமே என்பதை யாவரும் அறிவர். இந்தியாவின் நாட்டுப்புறத் தொழில்களிலும் உழவுத் தொழிலிலும் சீர்கேடு பெருகப்பெருகப் பெருந்தொகையினர் குமாஸ்தாத் தொழிலில் வந்து குவிந்தனர். ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியிலும் தொழில் சங்கங்களிலும் வேண்டப்படும் குமாஸ்தாக்களுக்கு ஒரு வரம்பில்லாமலிருக்க முடியாது. இதனால்போட்டி ஏற்பட்டு, சம்பளக் குறைவும் தொழிலில் லாமையும் பெருகின. சிலர் ஆசிரியர்களாகவும் பிறர் கடைக்காரர்களாகவும் மாறினராயினும் பெருந்தொகையினர் எதிலும் இடம் பெறமுடியாத வர்களாயினர். நாம் மேலே கூறியபடி வளர்ச்சித் தன்மையுடைய தொழிலோ வாணிகமோ இருந்தால் இவர்களனைவரும் அவற்றில் ஈடுபடுத்தப்பட்டிருப்பர். ஆனால் இது நடைபெற இடமில்லாது போயிற்று. மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நம் நாட்டுத் தொழில்கள் வளர்ச்சியடையாமல் நிலையாகவே உள்ளன. இதன் பயனாக அறிவும் அறிவு வளர்ச்சிக்குரிய அறிவாற்றலும் உடைய இவ்வகுப்பு தன் நிலையை உயர்த்திக்கொள்ள அரசியலில் புக நேர்ந்தது. இவர்களுக்குச் சமதர்ம அமைப்பு ஒரு பெரும் புதையல். ஏனெனில் இவர்கள் உண்மையில் முதிர்ச்சிபெற முடியாத தொழில் துறை வகுப்பினரே. சாதகமான வகை துறைகள் இல்லாத காரணத்தாலேயே அவர்கள் தொழில்துறை யாளராகா திருக்கின்றனர். அடுத்த வகுப்பு உழைப்பு வகுப்பு ஆகும். இது தொழிற் சாலைத் தொழிலாளி, அணுக்க ஊழியர் (அநவேயட றடிசமநசள) சிறு தொழிலாளர், திறமை யற்ற உழைப்பாளி ஆகியவர்களடங்கியது. நம் தொழில் மிகுதி வளர்ச்சியடையாத நிலையில், தொழில் இயந்திர உழைப்பு வகுப்பு மிகச் சிறியதே மக்கள் தொகையில் இது 100-க்கு 2 விழுக்காடு அளவானதே. இவர்களும் முக்கியமாக ஆடை, சணல், இரும்பு, அச்சுவார்ப்பு, பழுதுபார்த்தல், சுரங்கம், போக்குவரவு ஆகிய தொழில்களையே சார்ந்துள்ளனர். இவர்களிலும் திறம்பெற்ற தொழிலாளர் அதாவது இயந்திரங் களைக் கையாள வல்லவர் இன்னும் மிகமிகக் குறைவே. இவர்களிலும் பெரும்பாலோர் உற்பத்தித் தொழிலிலீடுபட்ட வரல்லர்; புகைவண்டிப் பாதைகள், வாணிகக் கப்பல்கள் ஆகியவற்றிலும் அணிமையில் உந்து வண்டிகளிலும் ஈடுபட்டவர்கள் இன்னும் பலர் கொள்கை யளவிலேயே தொழிற்சாலை வேலையாட்கள். இவர்களே பீடித் தொழிலாளி, சிப்பங் கட்டுபவர், தட்டுமுட்டுச் சாமான் செய்பவர், தாள் பை செய்பவர் ஆகியவர்கள். இவர்கள் தொழில்செய்யும் சாலைகளில் வேலைபார்ப்பவராயினும் இயந்திரங்களில் வேலைசெய்பவரல்லர். இவர்களன்றிப் புள்ளி விவரக் கணக்கில் வராத வீட்டுவேலையாட்கள், பாத்திரம் துலக்குபவர்கள், பெருக்குபவர்கள், நகரவை ஊழியர் முதலிய வகையினர் உள்ளனர். இந்தியாவில் சிறுதொழிலாளர் வகுப்பே முற்காலங்களில் நாட்டின் முதுகெலும்பாயிருந்தது. சில நூற்றாண்டுகளுக்கு முன்வரை இவர்களே நாட்டுமக்களில் 100-க்கு 50 பேராயிருந்தனர். இவ் வகுப்பினர் இப்போது தொழிலிலிருந்து துரத்தப்பட்டு உழவுத் தொழிலுக்கே செல்ல நேர்ந்தது. இதனால் உழவுத்தொழிலில் பெருத்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இவ்வகுப்பு சில இடங்களில் இன்னும் பிழைத்திருக்கிறதாயினும் தொழில்களில் துணை வேலையாட்களாகவும், வேலைகளில் அச்சடிப்பவர்களாகவும் கம்பளம், கம்பளி ஆடை நெய்பவர் களாகவும் மரவேலை செய்பவர்களாகவும் மற்றும் இதுபோன்ற சிறு தொழில்களில் ஈடுபட்டவர்களாகவுமே யுள்ளனர். இவர்களையும் மற்றெல்லாரையும் சேர்த்து மொத்தம் தொழிலாளர்கள் மக்கள் தொகையில் 100-க்கு 10 விழுக்காட்டுக்கு மேலில்லையாயினும் அவர்கள் வறுமைநிலை சொல்லித் தொலையாது. அவர்கள் உடனடியாக உதவி பெறவேண்டிய நிலையில் உள்ளனர். இவ்வகுப்பை நலிவித்துக்கொண்டே யிருக்கும் சக்திகள் பிற்போக்குத் தன்மை, கல்வியில்லாமை, அமைப்பு ஒற்றுமையின்மை ஆகியவையே. அரசியல், சமூக முன்னேற்ற எழுச்சிகளிலும் இக்காரணத்தினால் இதன் உள்ளுணர்ச்சிகள் உச்சநிலையிலிருப்பினும் போதுமான அளவு பயன்தரா திருக்கின்றன. இறுதியாகக் கவனிக்கவேண்டுவது குடியானவர் வகுப்பு. முற்காலங்களில் நிலம் இந்தியாவில் கூட்டு முறையில் ஊரின்பொது உடைமையாகவே இருந்தது. ஒவ்வொரு ஊரைச் சுற்றிலும் உள்ள நிலத்திற்கு ஊரே உரிமையுடை யதாயிருந்தது. அது நேர்மையடிப்படையாக ஊராரிடையே அவரவர் தேவைக்கும் நிலத்தின் தன்மைக்கும் ஏற்பப் பங்கீடு செய்யப் பட்டிருந்தது. பல இடங்களில் ஊர் என்பது ஒரே குடும்பமாகவே இருந்தது. கூட்டுக் குடும்பமுறை (தரவாடு) உடைமையுரிமையின் தொடர்ச்சியைக் காத்தது. உழவுத் தொழிலுக்கு பெருத்த தடைக்கல்லாக விளங்கும் துண்டாடல் நிகழ்வதையும் இது தடுத்தது. வரிமுறையும் நில விளைச்சலின் அடிப்படையில் பெறப்பட்ட தேயன்றி நிலையாக வரையறுக்கப்படவில்லை. வரி அளவு ஆட்சி யெல்லைக்கு ஆட்சி யெல்லை மாறுபட்டிருந்தது. சில இடங்களில் அது ஆண்டு வருமானத்தில் 10-இல் ஒரு பங்களவு குறைந்தும் சில இடங்களில் அதில் 4-இல் ஒரு பங்களவு உயர்ந்தும் இருந்தது. குறிப்பிடத்தக்கது அக்காலப் பண்பு பெரிய நில முதலாளி எதுவும் இல்லாததே. நிலத்தின் விளைவு முழுவதும் பண்படுத்தி யவனையே சேர்ந்தது. அவ்வப்போது சிறப்புமிக்க யாருக்காவது அரசன் ஓர் ஊரையோ சில பல ஊர்களையோ பரிசில் (ஜாகீர் அல்லது இனாம்) நிலமாகக் கொடுப்பதுண்டு. ஆனால் பெரும்பாலும் இப்பிரிவுகள் பரிசில் பெறுபவர் வாழ்க்கைக்கால அளவுக்குட்பட்டதே. மேலும் இதனாலும் உழவர் மீது மிகுதிப்படிச் சுமை ஏற்படுவதில்லை. பரிசிலன் அவ்வூர் அல்லது ஊர்களிலிருந்து பெற்றது, அவை முன்பு அரசனுக்குக் கொடுத்த அதே வரிப்பணத்தை மட்டுமே. மன்னன் யாராயிருந்தாலும் சரி, அவன் மரபு யாதாயினும் சரி, இந்தியாவின் அடிப்படை ஊர்த்திற ஆட்சி முறையில் அவன் எவ்வகை மாறுதலும் ஏற்படுத்தியதில்லை. பிரிட்டிஷார் இம்முறையைத் தலைகீழாக்கினார்கள். அவர்கள் மேன்மேலும் நாட்டுப் பகுதிகளைப் பிடிக்குந்தோறும் ஊர்களிலிருந்து வரிகளைப் பிரித்து அனுப்பப் போதிய ஆட்சிப் பணியாளர் தம்மிட மில்லை என்பதை உணர்ந்தனர். ஆகவே அவர்கள் சில முதலாளிகள் அல்லது பெருநிலக் கிழவர்களை ஏற்படுத்தி அவர்களிடம் பத்து, நூறு, சில சமயம் ஆயிரக் கணக்கான ஊர்களை விட்டனர். ஊர்களிலுள்ள நிலங்களின் உடைமையுரிமை அவர்களுக்குத் தரப்பட்டது. அவற்றிலிருந்து அவர்கள் விரும்பிய எந்த அளவு வரியையும் பெறும் உரிமையும் இத்துடன் அவர்கட்குக் கிடைத்தது. ஆனால் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கழகத்தாருக்கு அவர்கள் கொடுக்கவேண்டும் தொகை வரையறுக்கப் பட்டது. இந்திய உழவர் வகுப்பிற்குள் இது இங்ஙனம் ஒரு புதிய வகுப்பைப் படைத்தது. இதன் பொருளியல் தாக்கு எதிர்தாக்குப் பேரளவாயிருந்தது. இவ் வகுப்பு நிலத்தி லிருந்து கூடிய மட்டும் மிகுதி அளவான பொருள் பெறுவதையே நோக்கமாகக் கொண்டிருந்தது. உழவுத் தொழிலுக்கு என்ன நேருகிறது என்பது பற்றிய கவலை அவர்களுக்குக் குறைவே. மேலும் முன்பு நிலத்துக்கு உரிமையுடையவர்கள் இப்போது குடியுரிமையாளராயினர். மற்றும் சில உரிமையாளர் இப்போது கூலிக்கு உழைப்பவர் ஆயினர். பெருநிலக் கிழவர் பெரும்பாலும் தாமே உழவராயில்லாதிருந்தவராதலால், உழவுத் தொழில் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. இத்துடன் உழவர் படிப்படியாக அடிமை நிலையுடையவரானதால் உழவுத்தொழில் சீர்கேட டைந்தது. நம் நாட்டு உழவுத் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள தீங்குகளில் மிகப் பெரியதொரு தீங்கு பெருநிலக்கிழமை முறையே ஆகும். இந்தியாவில் கிட்டத்தட்ட ஒரு பாதிப் பகுதியில் பெருநிலக்கிழமை முறை இன்னும் இருக்கிறது. மற்ற பாதியில், சிறப்பாகத் தென்னாட்டில், சிறு தனிக்கிழமை (ரயத்துவாரி முறை) நடப்பிலிருக்கிறது. இதுவும் இங்கிலாந்திலுள்ள நில உடைமை முறையைப் பின்பற்றி இந்தியாவில் ஏற்பட்ட புது முறையேயாகும். இங்கும் பகுதி விளைவு, பகுதி பணமா யிருந்த வரி முறை தவிர்க்கப்பட்டு, முழுதும் பணமாக வரி வரையறுக்கப் பட்டது. இவற்றின் பலனாகக் கூட்டுக் குடும்ப முறை அழிவுற்றது. ஒவ்வொரு தலைமுறையிலும் நிலம் வரவரத் துண்டுபட்டுக் கொண்டே வந்தது. இத் துண்டாட்டத்தின் கோரவிளைவுகளால் பல நிலங்கள் பொருளியல் முறையில் பண்படுத்தக் கூடாத சிறு அளவுகளாய் உள்ளன. அதாவது பயிரிடுபவனுக்கு அது வாழ்க்கை செலவுக்குக் கூட உதவுவதில்லை. நிலவரி முறையும் பயிரிடுபவனுக்குப் பாதகமாகவே நிலவிற்று. ஏனெனில் பயிர் விளைச்சல் எவ்வாறாயினும் அவன் வரிக்கடனைக் கொடுத்தாக வேண்டிய நிலைமை ஏற்பட்டது. மூன்றாவதாகப் பிரிட்டனின் ஏகாதிபத்திய பொருளிய லமைப்பு காரணமாகத் தாழ்ந்த பண்புடைய பருத்தி, சணல், எண்ணெய் விதைகள் ஆகிய மூலப் பொருள்கள் பிரிட்டனின் தொழில்களுக்குத் தேவைப்பட்டதன் காரணமாக இப்புதிய சரக்குகளுக்கு இந்தியாவில் தேவை பெருக்கப்பட்டது. இதனால் முன்பு உணவுப் பயிர்களும் கால் நடைத் தீனிப் பயிர்களும் விளைவித்த நிலங்கள் வரவர மிகுதியாக இப் புதுப்பயிர்களை விளைவிக்கும் நிலங்களாக மாறின. இவை உடனடி பணம் தந்ததாயினும் நாட்டின் உணவுப் பொருள் உற்பத்தி இதனால் குறைவுற்றது. அத்துடன் இப்புதுப் பயிர்களின் தன்மையால் நிலமும் உரமிழந்து கேடுற்றது. இது மட்டுமோ? மூலப் பொருள்களுக்கான தேவை எப்போதும் ஒரு நிலையாய் இருப்பதில்லை. அது ஏற்றத் தாழ்வடைந்து வந்தது. அத்துடனே குடியானவர் வகுப்பின் வாழ்வும் உயர்ந்து தாழ்ந்து அல்லற்பட்டது. பெருநிலக்கிழமை முறை, புதிய வரி முறை, நிலத் துண்டாடல், பயிர்த்தொழிலின் புதிய பொருளியல் மாறுபாடு ஆகிய இத்தனை மாறுபாடுகளும் சேர்ந்து குடியானவர் வகுப்பின் அழிவை விரைவுபடுத்தின. நாம் மேலே குறித்துள்ளபடி சிறு தொழிலாளர் வகுப்பு தொழிலிலிருந்து தள்ளப்பட்டு நிலத்திலே வந்து சேர்ந்து அதிலுள்ள நெருக்கடியை மிகுதிப் படுத்திற்று. 1860 முதல் உழவுத் தொழிலிலீடுபட்ட மக்கள் தொகை தொடர்ந்து பெருக்க மடைந்து வந்து இன்று இந்தியாவின் நாட்டுப்புறம் உலகில் வறுமைக்கான முதல்தர எடுத்துக் காட்டாய்விட்டது. இந்தியாவில் புள்ளிவிவரக் கணக்குகள் விரும்பத்தக்க அளவில் இல்லாது போயினும் உழவையே சார்ந்துள்ள மக்கள் நூற்றுக்கு இத்தனை விழுக்காடு என்று காட்டும் கீழ்க்கண்ட புள்ளிகள் நிலைமையின் போக்கை உணர்த்தும். 1881 - (நூற்றுக்கு) 51 1891 - ” 66.5 1911 - ” 72.2 1921 - ” 73 1931 - ” 65.6 1941 - (விவரம் கிட்டவில்லை) 1931-இல் கண்ட குறைபாடுகூட உண்மையில் போலியே. ஏனெனில் பயிர்த்தொழில் வகுப்பினர் பற்றிய தவறான பாகுபாட்டின்பேரின் அது கணக்கிடப்பட்டுள்ளது. மக்கள் அண்மைக்காலங்களில் ஊர்ப்புறங்களிலிருந்து நகரங்களுக்கும் பட்டணங்களுக்கும் சென்று வந்துள்ள நிலையிலும்கூட நூற்றுக்கு 75 விழுக்காடு மக்கள் இன்னும் தங்கள் வாழ்க்கைக்கு நிலத்தையே சார்ந்துள்ளனர். ஆகவே இந்திய உழவுத் தொழிலின் அழிவும் உழவு வகுப்பினரின் சீர்கேடும் நேரடியாகப் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் விளைவுகளேயாகும். அத்துடன் நில உடைமை முறையில் அவர்கள் செய்த தலைகீழான மாறுபாடு இன்னும் நடை முறையில் மாற்ற முடியாத கண்கலங்க வைக்கும் நிலையாகவே இருக்கிறது. பேரளவில் இந்திய சமூகத்திலுள்ள வகுப்புக்கள் இவை. இவற்றுள் பிரிட்டிஷ் ஆட்சியால் நலம்பெற்ற வகுப்புக்கள் சில. மற்றவை அதனால் பாதகமடைந்து இன்னலுற்றவை. ஒவ்வொரு அரசியல் இயக்கத்திலும் சில வகுப்புக்கள் தனித்தனியே நின்றும் சேர்ந்தும் பங்கு கொள்கின்றன வாயினும் தத்தம் வகுப்பு நலனைக் குறியாகக் கொண்டே செயல், எதிர்ச்செயலாற்று கின்றன. இந்தியாவின் அரசியல் இயக்கம் இவ்வகையில் அடிப்படை வகுப்புச் சார்புடையதே. பகுத்தறிவு முறையில் அதை உணர்ந்து வழிகாட்டுவதற்கும் அதன் வகுப்பமைதியை அறிவது அவசியமாகும். வினா (67) : சமதர்மம் உழைப்பாளிகள் அரசு பற்றிப் பிரசாரம் செய்துவருகிறது. அனால் பிற மக்களின் தொகையைப் பார்க்க உழைப்பாளி வகுப்பு மிகவும் சிறியதும் பிற்போக்கானதும் கல்வியறி வற்றதுமாயுள்ளது என்பதனை நீங்கள் கவனிக்க வேண்டும். இந் நிலைமையில் அவர்களால் அரசியல் காரியங்களை எங்ஙனம் பொறுப் பேற்று நடத்த முடியும்? வெறும் கொள்கைகளை அளக்காமல் காரியச் சார்பில் நின்று விடை தாருங்கள். விடை : பொதுவில் `உழைப்பாளி’யைப்பற்றி ஒவ்வொரு வரும் ஒவ்வொரு வகையான கருத்து கொண்டுள்ளனர். சிலர் உழைப்பாளி என்னும்போது விட்டு வேலைக்காரனை எண்ணுவர்; சிலர் உடலுழைப்பாளியை, சிலர் தோட்ட வேலைக்காரனை, இங்ஙனமாகப் பலர் பலவாறாக எண்ணுவர். உழைப்பாளிகள் அரசு என்று கேட்கும் போதெல்லாம் ஒவ்வொருவர் மனத்திலும் இதற்கேற்ப வீட்டு வேலைக்கார னாட்சி, உடலுழைப்பாளனாட்சி, தோட்ட வேலைக்காரனாட்சி ஆகிய கற்பனைக ளெழுந்து உடலுழைப்பாளியோ அல்லது தோட்டக்காரனோ முதன் மந்திரியாக அல்லது வேறு உயர் பணியாளனாக இருக்கும் ஆட்சி பற்றிய தோற்றங்களே முன் வந்து தோற்றுகின்றன. இக்கற்பனை இயல்பாகவே அவர்களுக்குப் பொருத்தமற்றதாகவும் அருவருப்பாகவும் கேலிக்கூத்தாகவும் படுகிறது. ஆனால் இந்நிலைக்குக் காரணம் நம் கற்பனையேயன்றிச் சமதர்மமன்று. செயல்முறையில் சமதர்மத்தைப் பற்றி எண்ணும்போது நாம் கவனிக்க வேண்டுவது தனிப்பட்ட தொழிலாளியைப் பற்றியோ அல்லது தொழிலாளி வகுப்பையோ கூட அன்று. தொழிலாளி வகுப்பியக்கத்தை மட்டுமே. இவ்வியக்கத்தின் நோக்கம் ஒவ்வொரு தனிப்பட்ட உழைப் பாளியையும் ஒரு அரசனாகவோ மண்டலத் தலைவனாகவோ ஆக்குவதன்று; அது சிறு பிள்ளைத்தனமான செயலாகிவிடும். சமதர்மத்தின் முக்கிய நடைமுறை வேலை சமூகத்தைச் சீர்திருத்தி யமைத்து அதன்மூலம் சுரண்டல், வறுமை, கல்வி யில்லாமை, பிற்போக்குத்தன்மை இல்லாமல் செய்வதும், செல்வம் காரணமாகவோ, பிறப்புக் காரணமாகவோ உயர்வு தாழ்வுக்கு இடமில்லாமல் செய்வதும் ஆகும். இக்கொள்கையை வலியுறுத்துவது உழைப்பு வகுப்பின் இயக்கம் மட்டுமே. அது ஒன்றே இது பற்றிப் பேசியும் பிரசாரம் செய்தும் வந்துள்ளது. அதனால் அதை நடைமுறைக்குக் கொண்டுவருவதிலும் அதனைச் சார்ந்தவர்களே அக்கறை யுடையவர்களாவர். இந்த முன்னணி வேலையைச் செய்பவர் களில் பெரும்பாலானவர்கள் அவ்வுழைப்பு வகுப்பிலிருந்தே வருகின்றனர். ஆனால் இதே முறையில் இத்துறையில் உழைப்பவர்கள் அனைவருமே தொழிற்சாலையிலிருந்து வெளிவந்து இன்றும் அதன் கந்தலாடைகளை உடுத்திக் கொண்டிருக்கும் உழைப்பாளிகள் என்று கூறிவிடுவதற்கில்லை. இவர்கள் ஒரு காலத்தில் உழைப்பாளிகளாய் இருந்தவர்கள் ஆகலாம்; சில சமயம் அவர்கள் உழைப்பாளி வகுப்பினுக்கே உரியவர்க ளல்லாமல் அறிவு வகுப்புக்கோ, தொழில்துறை ஊழியர் வகுப்புக்கோ உரியவராயிருக்கக்கூடும். நாம் கருத வேண்டியது அவர்கள் யார், எந்த வகுப்பிலிருந்து வந்தவர்கள் என்பதல்ல; அவர்கள் சமதர்ம நோக்கத்தை முந்துறச் செய்பவர்களா என்பதே; லெனின் தெளிவுபட விளக்கியபடி “தனிமனிதர் வகுப்புக்கு வகுப்பு மாறலாம்; ஆயினும் வகுப்புக்கள் தனித்தனி வேறாகவே இயங்குகின்றன.” இக்கொள்கை விளக்கம் வெறும் ஏட்டுக் கூற்றாகத் தோன்றலாம். ஆனால் இந்தியாவில் சமதர்மம் நனவாகும்வரை இக்கேள்விக்கான மறுமொழி ஏட்டு விளக்கமாகவேயிருக்க முடியும். எனினும் உழைப்பு வகுப்பு மக்கள் தொகையின் ஒரு சிறு பகுதியேயன்றோ என்ற அணுகிய வினாவுக்கு விடைதந்தாக வேண்டும்; ஏனெனில் சமதர்மம் இந்திய நிலைமைகளுக்கு ஒவ்வாதது, அதனிடையே வெற்றியடைய முடியாதது என்று நாட்டுவதற்கு அது எப்போதும் மீண்டும் மீண்டும் கூறப்படும் ஒரு தடையுமேயாகும். கொள்கையடிப்படையில் ஒரு வகுப்பின் தொகையே அவ் வகுப்பினத்தை அது ஆளுவதற்கான உரிமை தருவது. செயலில் இது பெரும்பாலும் நடைபெறுவ தில்லை. எடுத்துக்காட்டாக, பெரும்பாலான நாடுகளில் ஆளும் வகுப்பு முதலாளித்துவ வகுப்பே. இது மக்கள் தொகையில் நூற்றுக்கு ஒன்று விழுக்காடுகூடத் தேறாது. ஆகவே இந்தியாவில் உழைப்பு வகுப்புச் சிறிதென்பதை அது அரசியலை நடாத்தும் தகுதியுடைய தென்பதற்குக் காரணமாகக் கூறமுடியாது. ஆனால் தப்பெண்ணம் ஏற்படுத்துவதற்கான முக்கியமான காரணம் வேறொன்றுள்ளது. உழைப்பு வகுப்பு என்பது முற்றிலும் தொழிற்சாலை உழைப்பாளிகளையோ உடலுழைப்பாளி களையோ மட்டிலும் குறிப்பதன்று. உழைப்பினால் ஊதியம் பெறும் எல்லா வகுப்பினரும் அதில் அடங்கியவர்களே. பேராசிரியர்களும் ஆசிரியர்களும் மருத்துவர்களும் பொறியாளர்களுமான எத்தனையோ பேர் திறமையுடையவர் களாகவும் (நல்ல உடைகூட உடையவர்களாகவும்) உள்ளனர். ஆட்சிப் பொறுப்பை வகிக்க அவர்கள் திறமையுடையவர்களே என்பதை நீங்களேகூட மறுக்க மாட்டீர்கள். இவர்களை உள்ளிட்டதாக உழைப்பு வகுப்பு உணரப் பட்டால், அரசியல் துறையில் சமதர்மக் கோட்பாடுகளைப் புகுத்துவது பொருந்தாக்கூற்று என்ற எண்ணம் ஏற்பட இடமில்லை. இந்திய உழைப்பாளி வகுப்பு மிகப் பிற்போக்கடைந் துள்ளது என்பது மறக்க முடியாதது. இப் பிற்போக்குத்தன்மை உழைப்பு வகுப்பியக்கமில்லாமல் அகற்றப்படக் கூடியதன்று என்பது எண்பிக்கப் பட்டுள்ளது. சமதர்மம் இப்பிற்போக்கை அகற்றுவதென்று கங்கணம் கட்டிக் கொண்டுள்ளது. அதுவும் ஒரு சீர்திருத்த முறையாக அல்ல, அடிப்படைக் கோட்பாட்டு முறையில், கொள்கை முறையில், பிற வகுப்புக்களைவிடத் தம் வகுப்பு பிற்போக்காகவுள்ளது என்பதை உழைப்பு வகுப்பே அறிந்துள்ளதனால் அத்தன்மையை அகற்றுவதில் அது மற்ற எவரையும் விட மிகுதியான அக்கறை காட்டுவது உறுதி. வினா (68) : உங்களைக் கண்கூடான செய்தி பற்றிய ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். இந்தியாவின் புகைவண்டித் துறைப்பற்றிய பிரச்சினையைச் சமதர்மம் எப்படித் தீர்க்கும்? இன்றைய நிலைமைகளை விட நல்ல நிலைமைகளைக் கொண்டு வர அது என்னென்ன செய்யும்? விடை : இது ஒரு நல்ல கேள்வியே; ஏனெனில் இது பொதுச் செய்திகளைப்பற்றிக் குழப்பாமல் குறிப்பிட்ட வரையறையுடன் மறுமொழி கோருகிறது. மறுமொழியும் ஒரு தனிப்பட்ட புகைவண்டிப் பாதைகள் முக்கியமாக இந்திய மூலப்பொருள்களைப் பிரிட்டனுக்கு அனுப்புவதற்காகவும் இரண்டாவதாக நாட்டுப் பாதுகாப்புக்கான தள இணைப்புச் செய்வதற்காகவும் ஏற்பட்டன. ஆனால் போக்குவரவு பெருகப் பெருக அவை வாணிக முறையிலும் ஆதாயம் தரும் தொழில் முதலீடுகள் ஆயின. இதற்கான முதலீடு இங்கிலாந்தில் திரட்டப் பட்டது. அதில் நல்ல அளவு ஆதாயப் பங்கும் கிடைத்தது. அத்துடன் எப்படியும் ஒரு குறைந்த எல்லை ஆதாயப் பங்கும் அரசியலால் உறுதி கூறப்பட்டது. இங்ஙனம் பிரிட்டிஷ் முதலீட்டாளருக்கு அது இன்னலற்ற பாதுகாப்பான முதலீட்டுக் களமாயமைந்தது. நூறு ஆண்டுகளுக்குப் பின் புகைவண்டிப் பாதைகளனைத்தும் அரசியலுக்குரிய அனைத்தும் ஆகும் என்று திட்டம் செய்யப்பட்டிருந்தது. இப்பொழுது இந்தியப் புகைவண்டிப் பாதைகள் பலவும் அரசியலுக் குரியவையாகி விட்டன. இந்திய அரசியல் புகைவண்டித் துறையின் விளம்பரங்களை நீங்கள் அடிக்கடி கவனித்திருக்கலாம். உலகின் சுற்றளவைப்போல் மூன்றுமடங்கு நீளமுள்ள புகைவண்டிப் பாதைகள் நாட்டில் உள்ளன என அவை குறிப்பிடுகின்றன. இது அத்துறையின் முயற்சி எவ்வளவு பிரமாண்ட அளவினது என்பதைக் காட்டுவதற் காகவே. ஆனால் உண்மையில் நாட்டின் பரப்பளவை நோக்கப் புகைவண்டிப் பாதைகள் எத்தனையோ மடங்கு போதாதவையே யாகும். இங்கிலாந்தில் ஒவ்வொரு 100 சதுர மைல் பரப்புக்கும் 20 மைல் புகைவண்டிப் பாதைகள் உண்டு. ஃபிரான்சில் இது 12 மைல்; அமெரிக்காவில் 8 மைல்; ஆனால் இந்தியாவிலோ 2 மைல்தான். இந்தியாவில் மக்கள் புகைவண்டி நிலையத்துக்குப் போக மைல் கணக்கில் நடக்க வேண்டும். புகைவண்டியிலேறவோ மணிக் கணக்காக, நாள் கணக்காகக் காத்திருக்க வேண்டும். புகைவண்டிப் பாதைகளிலிருந்து கிடைக்கும் வருவாயில் பெரும்பகுதி சரக்குக் கட்டணம். இதன் கட்டண வீதம் மிகமிக உயர்வுடையது. இந்திய வாணிகத்துக்கும் தொழிலுக்கும் இது பெருத்த பளுவும் தடைக்கல்லும் ஆகும். வருவாயின் இன்னொரு பெரும்பகுதி மூன்றாம் வகுப்பு வழிப்போக்க ருடையது. அவர்களுக்குச் செய்யப்படும் வசதிகளோ இரங்கத்தக்க நிலையுடையவை. உண்மையில் மூன்றாம் வகுப்புக்குச் செய்யப்படும் வசதி என்று எதுவும் கிடையாது; புகைவண்டிகள் அவர்களை ஏற்றிச் செல்கின்றனவே, அது ஒன்றுதான் அவர்கள் வசதி! இரண்டாம் வகுப்பு வண்டியில் ஓரளவு வசதியுண்டு. ஆனால் அது மட்டாகவாவது செல்ல வசதியுள்ளவர்களுக்கு மட்டுமே கிட்டுவது. முதல் வகுப்போ மிகப் பெரும்பான்மையாக ஐரோப்பியர்களாலும் பணக்கார இந்தியர்களாலுமே - சிறப்பாக ஐரோப்பியர் களாலேயே பயன்படுத்தப்படுகிறது. இவ் இந்தியர்களும் பெரும்பாலும் அரசியற் பணியாளர்களே. இவர்கள் செலவு செய்யும் பணமும் அரசியற் பணமே. நல்ல உணவும் உடல் நலப் பாதுகாப்பும் ஐரோப்பிய மரபிலேயே தரப்படுகின்றன. ஐரோப்பியர்களுக்குக் காட்டப்படும் ஒருதலைச் சார்பு எவ்வளவு வெட்ட வெளிச்சமானதெனில், ஒரு சமயம் ஐரோப்பிய ஊழியன் செய்யும் அதே வேலையிலீடுபட்ட இந்திய ஊழியனுக்கு ஐரோப்பிய ஊழியனின் ஊதியத்தில் பத்தில் ஒரு பங்கே கொடுக்கப்பட்டது. இதுவும் ஐரோப்பியர்களுக்கான சிறப்பு வசதிகள், உரிமைகள் நீங்கலாக! இந்திய அதிகாரிகளுக்கும் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கும் உள்ள சம்பளத்திலும் பெருத்த வேறுபாடு இருக்கத்தான் செய்தது. ஆனால் அனைத்தும் இது ஒரு பெரும் செய்தியன்று. ஐரோப்பிய முதலீட்டுப் பங்காளர்களுக்கு ஊதியப் பங்காகக் கிடைத்த தொகைக்கும் இந்திய ஊழியர்களுக்கு ஊதியமாகக் கிடைத்த தொகைக்கும் உள்ள வேறுபாடு கற்பனைக்கும் எட்டாதது. இந்தியர்கள் பயணம் செய்ததும் உழைத்ததும் பொருள்களை அனுப்பிக் கொடுத்ததும் எல்லாம் பிரிட்டிஷ் முதலீட்டுப் பங்காளிகளின் நலத்திற்காகவே. புகைவண்டித்துறை ஊழியர்களின் வேலை நிறுத்தங்கள் எத்தனையோ ஏற்பட்டுள்ளன. பயணம் செய்பவர்களுக்கு வசதிகள் இல்லை யென்பதுபற்றிச் சட்ட சபைகளிலும் பத்திரிகைகளிலும் எவ்வளவோ இடை விடாத கிளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. இவை எதுவும் பயனளிக்க வில்லை. இன்று புகைவண்டிப் பாதைகளில் பெரும் பாலானவை அரசியலுக் குரியவையாய் விட்டனவாயினும்கூட, பிரிட்டிஷ் ஊழியர்களில் பெரும் பகுதியினர் விலகிவிட்டபின்பும்கூட, இன்றும் புகைவண்டித் துறை அதன் பழைய போக்கில்தான் சென்று கொண் டிருக்கிறது. ஆகவே எந்த வகையாகப் பார்த்தாலும் இந்தியப் புகை வண்டித் துறையின் அமைப்பு சீருடையதாயில்லை; அது அடிப்படை யிலேயே சீர்திருத்தப்பட வேண்டியது என்பதில் ஐயமில்லை. இன்று புகைவண்டித்துறை அமைப்பை எவ்வாறு சீர்திருத்துவது என்பது எவ்வளவு முக்கியமானதோ அதே அளவுக்கு இச்சீர்கேடுகள் யாவும் எப்படி ஏற்பட்டன என்று காண்பதும் முக்கியமானதேயாகும். முதலாவதாக, புகைவண்டிப் பாதைகள் பிரிட்டிஷ் வாணிகத்துக்காகவும், பிரிட்டிஷ் ஏகாதி பத்தியப் பாதுகாப்புக்காகவும், பிரிட்டிஷ் பங்காளிகள் ஆதாயத்துக்காகவுமே நடத்தப்பட்டன. ஆகவேதான் பயணம் செய் வோரின் வசதிகளுக்கோ இந்திய வாணிகத்தின் நலனுக்கோ இரண்டாந்தர மதிப்புத் தரப்பட்டது. இரண்டாவதாக, புகைவண்டிப் பாதைகளின் மொத்த நீளத்தில் எவ்வகை வளர்ச்சியும் ஏற்பட்டதில்லை. புகைவண்டித் துறைக்குரிய வாணிகக் கழகங்களும் சரி, அவற்றின்பின் உரிமை பெற்ற அரசியல்களும் சரி, அதன் பயனை இந்தியாவின் எல்லாப் பகுதியினருக்கும் பரப்புவதில் மிகக் குறைவான அக்கறை யுடையவர்களாகவே இருந்து வந்துள்ளனர். அவர்கள் முக்கியமான அக்கறை இப்போதிருக்கும் மொத்த நீளத்தை வைத்துக் கொண்டே உச்ச அளவு ஆதாயம் பெருக்குவதே. மொத்தத்தில் அன்றும் இன்றும் புகைவண்டித் துறை ஆதாயம் தரத்தக்க ஒரு வாணிக முயற்சியாகக் கருதப்படுகிறதே தவிர நாட்டுக்கோ நாட்டுமக்களுக்கோ முழுநிறைவாழ்வளிக்கும் ஒரு சாதனமாகக் கருதப்படவேயில்லை. வினா (69) புகைவண்டித்துறையின் பிரச்சினைகளைச் சமதர்மம் எவ்வாறு தீர்த்து நடாத்தும்? விடை : முதலாவதாகச் சமதர்ம அரசியல் புகைவண்டிப் பாதை யமைப்புக்களனைத்தையும் போக்குவரவுத் துறைகளில் ஒன்றாகவே கருதும். அது முக்கியமான துறையானாலும் அத்தகைய துறைகளில் ஒன்று மட்டுமே. அதனோடிணைந்த மற்றத் துறைகள் பிற நிலப்பாதைகள், வான்வழிகள், நீர்த்துறைப் போக்குவழிகள் ஆகியவை. இவற்றினிடையே ஒருமுக இணைப்பு ஏற்படுத்தி அவற்றினுள்ளாகப் போட்டியில்லாமல் செய்வதே முதல் வேலை யாகும். இரண்டாவதாக நம் புகைவண்டிப் பாதைகளின் மொத்த நீள அளவு மிகுதியாக்கப்பட்டு நம் நகரங்களனைத்துக்கும் மட்டுமின்றி ஊர்ப் புறங்களுக்கும் கூடிய மட்டும் அவை பயன்படும்படி செய்யப்படும். இது மிகவும் முக்கியமானது; ஏனெனில் நாட்டில் தொழில்துறை வளப்பம் இதனையே பொறுத்தது. தொழில் வளர்ச்சிக்கு உதவும் முறையில் சரக்குகளின் கட்டணம் கூடியமட்டும் குறைந்த அளவெல்லைக்குக் குறைக்கப்படும். இங்ஙனம் செய்யாவிட்டால் அவை தொழிலுக்கு ஒரு சுமையாகி இறுதிக்கட்டத்தில் மிகுதி விலை உண்டுபண்ணிப் பொதுமக்களுக்கே நட்டம் விளைவிக்கும். மூன்றாவதாக, பயணம் செய்பவர்களை முதலாவது, இரண்டாவது, மூன்றாவது வகுப்புக்களாகப் பிரிக்கும் பிரிவினை முறை ஒழிக்கப்படும், குடும்பங்களுக்கும் சில கூட்டுக் குழுக்களுக்கும் தனி வசதி நீங்கலாக, எல்லாம் ஒரு வகுப்பாகவே இருக்கும். இவ்வகுப்புக்கள் ஒழிவதைப் பற்றி யாரும் வருந்த வேண்டுவதில்லை. ஏனெனில் இயங்கூர்தி (பஸ், மின் ஊர்தி (டிராம்) முதலிய பிற போக்குவரவு முறைகளில் இத்தகைய வகுப்பு வேறுபாடு எதுவும் இல்லை. தவிர எல்லோருக்குமே உச்ச அளவு வசதிகளும் நலன்களும் செய்யப்படும். நான்காவதாக, புகைவண்டித் துறை அரசாங்கத் துக்குரியதாகவும், அரசியல் சமதர்ம மயமாகவும் இருக்குமாதலால் ஊழியர்களுக்குப் போதிய சம்பளமும் மற்ற நலன்களும் வசதிகளும் ஏற்படும். ஐந்தாவதாக, புகைவண்டி யூழியர்களின் தொழிற்சங்கங்கள் (சிறப்பு வகைப் புகைவண்டிக் குழுவின் மூலம் பேராண்மை பெற்று அரசியல் போக்குவரவுத் துறையில் ஒரு உறுப்பாக) அரசியலுடன் நெருங்கிய தொடர்பும் ஒத்துழைப்பும் உடையதாய் முன்னேற்ற வளர்ச்சிகளுக்கு உரிய தொண்டாற்றும். இவையனைத்திலும் ஆதாய நோக்கம் என்பதற்கே இடமிராது. பெரிய ஆதாயப் பங்கு கோரும் முதலீட்டுப் பங்காளிகள் யாரும் இருக்கமாட்டார்கள். செல்வ வளமிக்க ஊற்றாக அதனைப் பயன்படுத்தும் குழுநலன்கள் எதுவும் இருக்கமாட்டா. அக் குழுநலன்களின் சார்பில் தகுதிக்கு மேற்பட்ட கொழுத்த சம்பளம் வாங்கும் அவர்கள் கையாட்களும் இருக்கமாட்டார்கள். சமதர்ம அரசியலில் புகைவண்டித்துறை பொதுத் தொண்டாற்றும் ஓர் ஊழியக் குழுவாகி அதற்கு உண்மையில் உடைமையாளராகிய பொது மக்களுக்கே தொண்டாற்றும். ஆராயப்படும் பொருள் புகைவண்டித்துறை பற்றியதாத லால் கூடியமட்டும் அதன் எல்லைக்குட்பட்டே இவ்விளக்கம் தரப்பட்டிருக்கிறது. ஆனால், இதுவே தொழில்வகையில் சமதர்மத்தின் நோக்கையும் விளக்குகிறது. தொழில்கள் அனைத்துக்குமே உடைமையுரிமையும் நடைமுறையும் இதுபோன்றதா யிருந்துவரும். முடிவாக: ஒவ்வொரு தொழில் முயற்சியும் சமூகத்தின் முழுநிறை நலத்தைக் குறியாகக்கொண்டு நடத்தப்படும். (இதனைச் சாதிப்பதற்காகவே சமதர்மம் தனிப்பட்டவர் ஆதிக்கத்தினிடமாகச் சமூக ஆதிக்கத்தை உண்டு பண்ணி அதன்மூலம் உற்பத்திச் சாதனங்களைப் பொது உடைமை யாக்குகின்றது.) இரண்டாவதாக இந் நடைமுறை மக்களின் தேவைகளுக்கான உற்பத்தித் திட்டமிடுமேயன்றி ஆதாயப் பித்தையே குறிக்கோளாகக் கொண்டிராது. மூன்றாவதாக, இச்செயலிலீடுபட்டவர்களுக்கு அவர்கள் உழைப்புக்கான போதிய ஊதியமும், அத்துடன் அதனை நடத்தும் பொறுப்பில் ஒரு இடமும் தரப்படும். கடைசியாக ஒவ்வொரு தொழில் முயற்சியும் நாட்டின் பொதுத்தொழில் திட்டத்தில் பொருத்தப் படுவதனால் அது மற்றவற்றுக்கு நிறைவு தருவதாயிருக்குமே யல்லாது எவற்றுக்கும் போட்டியாயிராது. வினா (70) : புகைவண்டி நிறுவனங்கள் தேசியமயமாக்கப்படுவது நல்லது என்று நீங்கள் கருதவில்லையா? விடை : சமதர்ம மயமாக்கப்படுதலே அதனினும் சிறந்த தென்று நான் கூறுவேன். இந்தியப் புகைவண்டி நிறுவனங்களில் பெரும்பாலானவை ஏற்கெனவே தேசியமயமாக்கப்பட்டு விட்டன. ஆயின் இதனால் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா? தேசியமயம் என்பதன் பொருள் அரசியல் உடைமை என்பது. அரசியலுடைமையின் தன்மை எவ்வகுப்பு அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதைப் பொறுத்தது. ஏகாதிபத்திய வகுப்பினர் ஆதிக்கத்திலிருந்தபொழுது அவர்கள் புகைவண்டி நிறுவனங்களைத் தம் நலனுக்குப் பயன்படுத்தினர். அவர்கள் ஆட்சி, ஊழியர்களுக்கும் அதிருப்தி தந்தது. பயணம் செய்வோருக்கும் அதிருப்தி தந்தது. இப்போது முதலாளிகள் அரசியலை இயக்குகிறார்கள். பல முன்னேற்றங்கள் செய்வதாக அவர்கள் உறுதி கூறினாலும் எதுவும் உருவாகவில்லை. உருவாகும் என்று கருதுவதற்கு மில்லை. இங்ஙனம் தேசிய மயமாக்குதல் என்பது ஒரு முடிந்த முடிபு அன்று; ஆராய்ச்சியிறுதியில் அதன் முடிவான பயன் யார் அரசியலை இயக்குகின்றார்கள் என்பதையே சார்ந்ததா யிருக்கும். வினா (71) : அப்படியானால் நீங்கள் தேசியமய மாக்குதலை எதிர்க்கிறீர்களா? விடை : அல்ல; இது எதிர்ப்பதும் ஆதரிப்பதும் ஆகிய வேறுபாடு அன்று. தற்கால சமூக அமைப்பு முறையின் சூழ்நிலையில் தேசிய மயமாக்குதல் என்பது ஒரு பொருளற்ற கூச்சல் மட்டுமே. ஏனெனில் அதனால் சமூகத்திற்கு நன்மை செய்யும் ஆற்றல் எதுவுமில்லை. தேசிய மயமாக்குவதால் உண்மையான நன்மை இருக்க வேண்டுமானால், ஒரு சமதர்ம அரசியல் ஏற்பட வேண்டும். வினா (72) : சமதர்ம அரசியல் எப்போது ஏற்படும்? விடை : தற்போதைய தேக்க நிலையிலிருந்து மீள அது ஒன்றே வழியென்று மக்கள் காணும்போதுதான். நம் அரசியல் வாழ்வில் சமதர்ம நோக்கத்தின் அவசியத்தை வளர்க்கவேண்டும் நிலைமை அப்போதுதான் ஏற்படும். அதன்பயனாக இறுதியில் அவர்களுக்கு அதன் வெற்றித் திறம்பற்றிய உறுதி ஏற்படும். வினா (73) : பயிர்த்தொழில், உழவர் பிரச்சினைகள் ஆகியவற்றை நீங்கள் எங்ஙனம் தீர்த்துவைப்பீர்கள்? விடை : இக்கேள்வி மிக முக்கியமானதே. ஏனெனில் நம் நாட்டு மக்கள் தொகையில் அத்தனை பெரும்பான்மை யானவர்கள் அதனையே நம்பி வாழ்கின்றனர். இதற்கும் மக்கள் நலன்களையும் உழவர் நலன்களையும் அடிப்படையாகக் கொண்டே பிரச்சினை ஆராயப்படவேண்டும். இவ்விரு சாராருக்கும் திருப்தி ஏற்படாதபோது பிரச்சினை தீர்ந்து விட்டதாகக் கருதப்பட முடியாது. இது பிரச்சினையின் வேர் முதல். ஆயினும் நம் பயிர்த்தொழிலின் நிலப்பரப்பு மிகப் பெரியதாயினும், நிலம் மிகவும் செழிப்பானதாயினும் இப்பிரச்சினை இவ்வளவு கடுமையானதாகவும் தொடர்ந்து சிக்கலானதாகவும் இருப்பதுடன், மக்களுக்கும் போதிய அளவு கிடைக்காமல், உழவனுக்கும் போதிய அளவு கிடைக்காமல் இருப்பானேன்? இதன் காரணம் யாதெனில் நிலம் இவ்விரு சாராரும் நீங்கலாக மூன்றாம் பேர்வழிகளை அதாவது நில முதலாளியையும் வட்டிக்கடைக்காரனையும் (சௌக்கார்) தாங்க வேண்டியிருக்கிறது. இவ்விரு வகுப்பினரும் உழவன் நலத்தின் மீதாகவும், நிலத்தின் மீதாகவும் ஈட்டி மிகக்கொழுத்த வாழ்க்கை நடாத்துகின்றனர். ஆனால் இவர்கள் தங்கள் தேவைகளையே தடையாணியாக்கிவைத்துப் பயிர்த் தொழிலின் வளர்ச்சியைத் தடைப்படுத்திக் குறுக்குகின்றனர். அறுவடையாகிப் பயிர் விளைவை விற்றதும் உழவன் முதன் முதலில் நில முதலாளிக்கு இறையிறுத்து அதன்பின் வட்டிக்கடைக்காரனுக்குக் கொட்டிக்கொடுத்து இவற்றின் பிறகே விதைகளைப் பற்றியும், பயிரைப் பற்றியும், எருதுகளைப் பற்றியும் இறுதியில் தன்னைப் பற்றியும் எண்ண முடிகிறது. இந்நிலையில் பயிர் தொழில் வளமுறுவது எவ்வாறு? ஆகவே உழவுத் தொழில் துறையின் மிக மிக முதன்மையான தேவை நிலத்தின் மீதுள்ள நில முதலாளித்துவத்தின் தாங்கமுடியாச் சுமையையும் அநீதக் கடன் சுமையையும் அகற்றி அதனை அரசியலின் உடைமைக்குக் கொண்டு வருவதேயாம். உழுபவன் மட்டுமே அதனைப் பயன்படுத்தும் உரிமை பெறவேண்டும். சமதர்மத்தின்கீழ் நில முழுவதும் அரசியலுக்கு உரியதாயினும் உழவன் ஒரு கீழ்க் குடியானவனாய் இருக்காமல் சமூகத்தின் ஒரு உறுப்பினனாகவே இருப்பானாதலால் அவன் உண்மையில் அதன் உடையவனாகவே இருப்பான் என்பது இங்கே நினைவில் வைக்கத்தக்கது. அவன் விளைவிப்பது அவனுக்கு உரியதாகும். அதன் ஒரு பகுதி மட்டுமே அரசியலுக்குச் செல்லும். அப்பகுதிக்கும் ஈடாக அவனுக்குப் பயிர்த் தொழில் கருவிகளின் உபயோகம், உரம், கடனுதவி, வாணிகக்கள வசதிகள், பாசன வசதிகள், புகைவண்டி, மற்றப் போக்குவரவுப் பாதை வசதிகள் ஆகிய பல நல உதவிகள் கிடைக்கும். நில முதலாளித்துவத்தின் கீழ்ப்பட்ட குடியானவனும் தன் வருவாயில் ஒரு பகுதியைக் கொடுக்கிறான். ஆனால் அதற்கீடாக அவனுக்கு ஒன்றும் கிடைப்பதில்லை. கிடைப்பது நிலத்தைப் பயன்படுத்தும் உரிமை மட்டுமே. அது கூட ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள்ளாகத் தான். திட்டமான புள்ளி விவரங்கள் கிடைக்கவில்லை யாயினும் இந்தியாவின் நிலங்களில் ஒரு பாதி நில முதலாளிகளுக்கு உரியதாயிருக்கிறது. இந்நில விளைவில் பாதி இவ் `ஓட்டுயிர்’ வகுப்பைக் கொழுக்க வைக்க மட்டுமே உதவுகிறது. அவர்கள் வேலைத் துறையில் ஒரு சுண்டுவிரல்கூட அசைப்பதில்லை. அவர்களால் நிலத்துக்கு எவ்வகைப் பயனும் கிடையாது. ஆகவே சமதர்மத்தின்மூலம் நிலத்திலிருந்து அகற்றப்படும் வீண் சுமையின் அளவு எவ்வளவு பெரிதென்றுகூறத் தேவையில்லை. நில உடைமையில் மாற்றம் ஏற்படுத்துவதே சமதர்ம அரசியலின் முதல் வேலையாயிருக்கும். ஆயினும் இந் நடைமுறைகூட இவ்வகையில் ஒரு தொடக்க நடைமுறை மட்டுமே. அடுத்த படிமுறை தேசத்தின் உணவுத் தேவை, மூலப்பொருள் தேவைகளை மதிப்பிட்டுக் குறைந்த அளவு மக்கள் தேவையையும் தொழில்துறையின் தேவையையுமாவது நிறைவு படுத்துமளவு உற்பத்தியைப் பெருக்குவது ஆகும். இதனால் பெரும்பசியுடனிருக்கவோ, மூலப்பொருள் வரவுக் குறைவால் எந்தத் தொழிலும் முடக்கப்படவோ நேரமாட்டாது. இந்நிலையை எளிதாக்கும்படி இவ்வுணவையும் இம்மூலப் பொருள்களையும் உழவன் விளைவிப்பதற்கு வேண்டிய உரம், உழவுக் கருவிகள், சேமிப்பு வசதிகள், வர்த்தகக் கள வசதிகள் முதலிய சாதனங்களை உழவன் பெறுவதற்கான பொறுப்பை அரசியல் ஏற்றுக்கொள்கிறது. இவையனைத்தும் அவற்றிற்கான செலவு மட்டும் கட்டும்படியான குறைந்த அளவு விலையிலோ, அல்லது முடியுமானால் விலையில்லாமலோ அவனுக்கு அளிக்கப்படும். உரத்தை இதற்கோர் எடுத்துக்காட்டாகக் கொள்வோம். இந்தியா முழுவதும் பசுவின் சாணம் முக்கியமான உரமாகப் பயன்படுத்தப் பெறுகிறது. இதைச் சேர்ப்பது முசிவான அட்டுப்பிடித்தசெயல், சமதர்ம அரசியல் இவ்வுரத்தை வலியுறுத்தாது. எலும்புரம் இதைவிட எளிதாக உற்பத்தி செய்யக்கூடியது. அது மலிவானதும்கூட. இயந்திரக் கலப்பை களுக்கே ஆதரவு அளிக்கப்படும். அவை எருதுகளை விட விரைவாகவும் திறம்படவும் உழைக்கின்றன நாளாவட்டத்தில் அவை குறைந்த செலவும் உடையவை. ஓர் இயந்திர ஓட்டியும் இரண்டு இயந்திர வேலையாட்களும் சேர்ந்து ஓர் இயந்திரக் கலப்பையை இயக்கி 28 கோடி எருதுகளின் வேலையைச் செய்துவிடுவர். இவை இன்றுள்ள உற்பத்தியை விரைவுபடுத்திப் பெருக்குவதற்கான முறைகள். இதே சமயம் நிலத்தின் செழுதகைமையைப் பெருக்கி அது இழந்த உரத்தை மீட்டும் அளித்து நிலப்பண்பாட்டை வளர்க்கும் முயற்சிகளிலும் கவனம் செலுத்தப்படும். இந்தியாவில் ஆண்டுக்கு 6 மாதங்கள் நிலம் வறிதே கிடக்கின்றது. பருவமழைக் காலத்திலும் அதனைத் தொடர்ந்து இரண்டு மூன்று மாதங்களிலும் நிலத்தில் ஈரம் உலராதிருக்கின்றது. அப்போதுதான் நிலத்தில் பயிர் விளைகிறது. வேனில் அணுகியதும் பயிர்தொழில் நின்று விடுகிறது. பாசன வசதிகளின் குறைபாடே இவ்வீணான செயலற்ற தன்மைக்குக் காரணம். சமதர்ம அரசியல் அணைகள், கால்வாய்கள் கட்டுவதன் மூலம் நீர்ப்பாசன முறைகளை மேம்பாடு செய்வதற்கு முதற் சலுகை தரும். இந்தியாவைப்போல இத்தனை பேராறுகளும் சிற்றாறுகளும் நிறைய உடைய வேறுநாடு உலகில் இல்லை. பருவமழைக்காலத்தில் இங்கே மழை மிகுதி. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது. இந்நீர் முழுவதும் கடலில்சென்று கலந்து விடுவதனால் அதில் பத்தில் ஒரு பகுதிகூட நிலத்தின் நன்மைக்காகச் சேமிக்கப்படுவதில்லை. அணைகள் கட்டுவதன்மூலம் இந்நீர் சேமித்து வைக்கப்பட்டு வேனிற்க hலத்துக்குப் பயன்படுத்தப்படக் கூடும். ஆகவே, இந்தியப் பயிர்த்தொழில் மேம்படுத்தப்படவேண்டுமானால் அணை கட்டுவதற்கு முதலுரிமை தரப்படவேண்டும். அது நம் நிலத்தின் விளைவை இரட்டிப்பு மடங்காக்கும். அணைகட்டித் தடுத்த நீரைக் கால்வாய்களில் கொண்டுசெல்லக் கால்வாய்களின் பாதுகாப்புச் செலவல்லாமல் வேறு செலவு எதுவும் ஆகாது. அத்துடன் தொழிலுக்கும் வீட்டு வாழ்வுக்கும் மிக அவசியமான மலிந்த மின்சார ஆற்றலுற்பத்தி செய்வதற்கும் இவ்வணைகள் காரணமாகின்றன. இது செய்துமுடிக்கப்பட்டதும் பயிர் விளைவின் பண்பையும் இன உயர்வையும் மேம்படுத்தும் வகையில் அரசியல் விஞ்ஞானத்தின் வண்மை முழுவதையும் கையாளும். பயிர்த் தொழில் துறையில் உலகெங்கும் எத்தனையோ புத்தாராய்ச்சிகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இவற்றிலிருந்து உச்ச அளவு நற்பலன்கள் பெறப்படும். இன்று அரசியலின் வரிவருமானத் துறையின் உறுப்பினருக்குத் தரப்படும் உயர்ந்த சம்பளங்கள் அப்படியே அதே துறையிலுள்ள புத்தாராய்ச்சியாளருக்குத் தரப்படும். அதனால் நாட்டுக்கு எவ்வளவோ நலம் ஏற்படும். சுருங்கச் சொன்னால் இந்தியப் பயிர்த்தொழிலின் உள்ளார்ந்த செழித்த வளப்பத்தைக்காண அது எளிதாக ஆசியாக் கண்டத்தின் தானியக் களஞ்சியமாகக்கூடும் என்று கூறலாம். இப்பிரச்சினையில் இதுவரை விளைவுத்துறை பற்றிய செய்தியையே கூறினோம். இதேபோல அதன் பரிமாற்றம் பற்றியும் ஆராயவேண்டும். ஏனெனில் இதனைச் சரிவரச் செய்யா விட்டால் எடுத்துக்கொள்ளும் முயற்சியில் பெரும்பகுதியும் வீணாகிவிடும். இன்று விலையின் சமநிலையின்மையினாலும் (உறுதியற்ற வாணிகக் கள நிலையினாலும்), போக்குவரவு வசதிக் குறைபாட்டினாலும் இந்தியப் பயிர்த்தொழில் அல்லற்படுகிறது. நாட்டுப்புற இந்தியாவில் பத்தில் ஒன்பது பகுதியில் பருவமழைக்காலத்தில் போக்குவரவு தேக்கநிலையடைகிறது. நாட்டுப் புறப் பாதைகளெல்லாம் சேறு நிரம்பப் பெறுவதனால் போக்குவரவு தேக்கமடைவதுடன் இயந்திர சாதனப் போக்குவரவு வசதிகளும் எருத்து வண்டிகளும் ஒருங்கே தடைபடுகின்றன. இதனால் வாணிக நடைமுறைக ளெல்லாமே நிலையாக நின்றுவிடுகின்றன. ஆகவே இந்தியாவில் நல்ல பாதைகளின் அவசியத்தைப் பற்றி எவ்வளவு வற்புறுத்தினாலும் மிகையாகாது. தானியங்கள் பருவமழைக் காலத்தில் விளைபவையல்ல என்பது உண்மையே. ஆயினும் காய்கறிகளுக்கும் தோட்டப் பழங்களுக்கும் இது சிறந்த காலமே. இவற்றுக்கு நாடெங்கும் நல்ல தேவையும் இருக்கிறது. மேலும் காய்கறிகளில் விளைவு மிகுதியாய்விட்டால்கூட அதனை ஈரமுலர்த்தல் முறைகளின் பதனம் செய்து வைத்துக்கொள்ள முடியும். எனவே இந்தியாவின் பாதைகளைச் சீர்திருத்தல் எப்படியும் நலம் செய்வதே. ஒவ்வொரு ஊருக்கும் குறைந்தது ஒரு பாதையாவது ஆண்டு முழுவதும் சரக்கேற்றி யனுப்பப் பயன்படவேண்டும். உழவர்களின் கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் விற்பனைக் கான வசதிகள் மிகச் சிறந்த முறையில் அமைக்கப்படக்கூடும். ஒவ்வொரு ஊரும் தனக்கென ஒரு கூட்டுறவுச் சங்கம் அமைத்துத் தன் விளைவைச் சேகரித்து அதனை மிகவும் அருகாமையிலுள்ள நகருக்குக் கொண்டு சென்று விற்பனை செய்கிறது. ஊர்கள் சில சேர்ந்து ஒரு குழு சற்று உயர்நிலைக் கூட்டுறவு அமைப்பு, அதாவது கூற்ற(தாலுக்கா)க் கூட்டுறவுச் சங்கம் அமைத்துக் கொள்ளலாம். ஒருவரிடத்திலிருந்து மற்றவரிடத்தில் விற்று அதன்மூலம் ஆதாயம்பெற்று ஒட்டுயிர்போல வாழும் தரகருக்கு இடமில்லாதுபோகும். கூற்றக்குழு தான் பெற்ற சரக்கு முழுவதையும் கோட்ட (ஜில்லாக் கூட்டுறவு)க் குழுவிற்கும், அது அதுபோல் இன்னும் உயர்நிலையானவற்றுக்கும் விற்கும். இவ்வகையில் உழவனுக்கு நேர்மையான விலையுறுதி கிடைக்கும். இதுதவிர, இதைவிட முக்கியத்துவம் வாய்ந்த வசதி யாதெனில், சரக்குகளைப் பரப்புதல் செலவற்றதாகவும் சரிசமத்துவம் பொருந்தியதாகவும் இருக்கும். பொருள்களைப் பயன்படுத்துவோர் திறத்திலிருந்து பார்த்தாலும் இது நலநிறைந்ததே. அவர்கள் தமக்கு வேண்டிய உணவுத் தேவைகளை மலிவாகவும் நேரடியாக உழவர் கூட்டுறவுச் சங்கத்திலிருந்தும் பெறுவர். இதை எளிதாக்க அவர்களும் பயனீட்டாளர் (ஊடிளேரஅநசள) கூட்டுறவுச் சங்கம் அமைத்துக் கொள்வர். இத்தகைய சங்கங்கள் ஏற்கெனவே பல ஐரோப்பிய நாடுகளிலிருக்கின்றன; அவை பெரும்பாலான மக்கள் ஆதரவையும் பெற்றுள்ளன. சமதர்ம அரசியல் கூட்டுறவுச் சங்கங்களின் வளர்ச்சிக்கு வசதிகள் செய்து ஆதரவளிப்பதுடன் அவற்றில் மிகுதி அக்கறையும் காட்டும். ஆயினும் கூடியமட்டும் அது அவற்றின் வேலையில் தலையிடாமலே இருக்கும். சேமிப்பு வசதிகள் இல்லாத காரணத்தினால் விளைவின் ஒரு பெரும்பகுதி ஆண்டுதோறும் பாழாக்கப்படுகிறது. எலிகளின் தொல்லையால் காய்கறிகள் சந்தை சாவடிகளிலும் புகைவண்டி நிலையங்களிலும் கிடங்குகளிலும் சீரழிவதைப் பார்த்திருப் பீர்கள். சேமிப்பு வசதிகள் இவ்வழிவைத் தடுக்கும். இங்ஙனம் எல்லாவகைகளிலும் சமதர்மத்தின் கீழ் பயிர்த்தொழில் ஆதரவுபெறும். அத்துடன் மக்களும் போதிய நல்ல உணவைப்பெறுவர். அதுவும் தமக்கும் உழவருக்கும் ஒருங்கே நலம் பயக்கத்தக்க விலையிலேயே பெறுவர். வினா (74) : இதனால் உழவன் எவ்வகையில் நலம் பெறுவான்? பொருளியல் முறையில் அவன் நன்னிலை யிலிருப்பான் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவன் வாழ்க்கையில் இன்பம் மிகுதியாக இருக்கக் கூடுமா? விடை : இதுவும் ஒரு சிறந்த கேள்வியே. ஏனெனில் உழவர் பிரச்சினையில் ஒரு சமூகக்கூறும் உண்டு. இந்தியாவில் கிராமங்கள் மிக மிகப் பல; அவையனைத்தும் வேறுபாடின்றி ஒரேபடியாக எவ்வளவோ பிற்போக்கானவையாகவே இருக்கின்றன. ஒரு நல்ல வீட்டில் வாழ்வது எப்படியிருக்கும் என்பதை உழவன் மறந்துவிடும் அளவு அவ்வளவு நீண்டநாளாகக் குச்சுக்குடிசைகளில் வாழ்ந்து வருகிறான். நல்ல வீட்டில் வாழ்வது என்பதே அவனுக்கு அரச போகங்களுள் ஒன்றாக ஆகிவிடுகிறது. இது நம் சீரழிவின் ஒரு பகுதி. மிகப் பொதுவான வாழ்க்கை வசதிகள் கூட அவனுக்கு எட்டாதவை. அவன் பெரும்பாலும் சவுக்காரம் (சோப்) பயன்படுத்துவதில்லை; உடல்நலச் சாதனங்கள் அவனுக்குக் கிடைப்ப தில்லை. அணிமணிகள், மணப் பொருள்கள் முதலிய சிறுதிற இன்பப் பொருள்கள் - வாழ்க்கையில் சற்று மகிழ்ச்சியும் ஒரு சிறு கிளர்ச்சியும் உண்டுபண்ணத்தக்க நுண்பொருள்கள் - அவன் வாழ்க்கைக்கு அயலா கின்றன. கிராமங்களில் பெரும்பாலும் பள்ளிகளே இருப்பதில்லை. கல்வி நம் கிராமங்களுக்கு எட்டாக் கிளையின் கிட்டாக்கனி யாயுள்ளது. கிராமத்தானுக்குச் சமூகத் தொடர்பும் சமூக வாழ்வும் மிக மிகக் குறைவு. அவன் தனித்து, ஒதுங்கிய வாழ்வு வாழ்கிறான். இக்குறைபாடுகள் உழவனிடத்தில் மட்டுமன்று, பொதுவாகக் கிராமவாசிகள் அனைவரிடத் திலுமே உள்ளன. இந்தியாவின் உழவர் பிரச்சினையுடன் கிராமவாசிகள் பிரச்சினையையும் தீர்க்க முற்பட்டு அவற்றை ஆழ்ந்து ஆராய்ந்தாலன்றி, உழவர் பிரச்சினையை நாம் தெளிவு படுத்தியவர்களாக மாட்டோம். இந்தியாவின் கிராமப் பிரச்சினை ஒதுங்கிய வாழ்வு, பிற்போக்குத்தன்மை, ஆதிகாலப் பிற்போக்கு நிலைமைகள் ஆகியவை செறிந்ததாகும். இங்கே தெளிவான முதல் தேவை போக்குவரவு, செய்தி இணைப்பு வசதிகள் அதாவது பாதைகள் வகுப்பது முதலியன ஆகும். நல்ல பாதைகள் மட்டுமன்றித் தற்காலப் போக்குவரவு சாதனங்களான உந்து வண்டிகள், புகைவண்டிகள் ஆகியவையும் வேண்டும்; மாட்டு வண்டிகள் படிப்படி யாக மறையவேண்டும். மாட்டுவண்டிகள் இதுகாறும் நற்பயன் தந்துள்ளன. ஆனால் அவற்றின் காலம் செல்லாதாகிவிட்டது. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு அஞ்சல் நிலையம் (யீடிளவ டிககiஉந) ஏற்படவேண்டும். முதற்படியாக ஐந்து கிராமங்களுக்கு ஒன்றாவது எழவேண்டும். அஞ்சல் நிலையம் என்பது அவர்களுக்கு நகர்களில் வாழும் புதல்வர் புதல்வியர்க்கு எழுதும் கடிதவசதி மட்டுமன்று; அதுவே அவர்களுக்கு மிகுதி நல்வாழ்வு, மிகுதி தொழில், மிகுதி உலகத் தகவல்கள் ஆகியவற்றுக்கும் வழி வகுப்பது ஆகும். இவ்வசதிகளின் உடனடிப் பயன் இந்தியாவில் நகரங்கள் மிகுதியாவதே யாகும். இது மிகவும் முக்கியமான, அவசியமான முன்னேற்றம் ஆகும். இந்தியாவில் ஒவ்வொரு கோடி மக்களுக்கும் 4 நகரங்களே (50,000 மக்களும் அதற்கு மேலும் உள்ளவை) இருக்கின்றன. அமெரிக்காவில் இத்தொகை 14; பிரிட்டனில் 27. கிராம வாழ்வு வளர்ச்சி யடையவேண்டும் என்றால் அதிக நகரங்கள் ஏற்படவேண்டும். அத்துடன் நகரங்களில் வாணிகம் மிகுதியாகி அவற்றின் தொழில் வளர்ச்சியடையவேண்டும். இவ்வளர்ச்சியினால் இன்னும் பலருக்குத் தொழில் கிடைக்கும். இந்தியாவில் இது அவசியமானது; ஏனெனில் கிராமங்களின் வறுமைக்கு உழவுத்தொழிலில் ஏற்பட்டுள்ள ஆள் நெருக்கடியே காரணம். மேலும் இன்று பல மூலப்பொருள்கள் உற்பத்தித் தொழிலுக்காகப் பல நூறு மைல்கள் கடந்து பெரு நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டியவையாயுள்ளன. இவற்றுள் பலவற்றைப் புதிதாக ஏற்படும் நகரத்தின் தொழில்களே உற்பத்தி செய்துவிட முடியும். இவை சரக்குக் கொண்டு செல்லும் செலவையும் ஏற்ற இறக்கச் செலவையும் குறைக்கவும் உதவும். உற்பத்தி யாவும் பெரு நகரங்களிலேயே வந்து குவிகின்ற போக்கு பொருளியல் முறையில் சிக்கன வாழ்வுக்கு உகந்ததன்று. சிறு நகர்த் தொழில்களுக்கு ஊக்கந் தருவதன் மூலம் இது சரி செய்யப்படலாகும். கிராமத் தொழில்களை வளர்ப்பதுபற்றிப் பல பசப்புரைகள் எழுப்பப்படுவது குறித்து இங்கே சில கூறவேண்டும். இவற்றைப் பசப்புரைகள் என்று நாம் கூறுவதற்குக் காரணம் இவற்றின் நோக்கம் அறச் சிந்தனையே, சிக்கனம் அன்று என்பதே. `ஏழைக் கிராமவாசிக்குக் கொஞ்சம் உதவி செய்ய’வே இவர்கள் முன் வருகின்றனர். தொழில் காரியங்களுக்குக் கிராமம் செயல்முறையில் உருவான ஒரு தொகுதி ஆகாது. ஏனெனில் அதற்குத் தொழிலாண்மை, இயந்திரங்கள், மின்சார ஆற்றல் உற்பத்தி ஆகியவை தேவை. போதிய தொழிலாளர் வசதி வேறு வேண்டும். கிராமங்களின் தனித் துறை உழவே. அவற்றின்மீது தொழில் துறைகளை, எவ்வளவு சிறு தொழில் துறைகளைச் சுமத்தினாலும் அவற்றின் இத் தனிப் பண்புக்கு ஊறு ஏற்படும். கிராமத்தில் வளர்ச்சியடையும் முறையில் ஊக்கக்கூடிய தொழில்கள் அவ்வவ்விடத்துக்குத் தேவையான செருப்புப் பழுதுபார்த்தல், கொல்லுலை வேலை, தையல் ஆகிய சிறுதிறத் தொழில்களேயாகும். இவை அவ்வவ்விடத்து மக்கள் தேவைக்கு உதவுபவை. மண் குடிசைகள் இந்தியாவின் எல்லையிலிருந்தே அகற்றப்பட வேண்டியவையாகும். ஒவ்வொரு உழவனும் தனக்கென வீடு கட்டிக் கொள்வதற்குப் போதுமான பணத்தை ஈட்டுவதுவரை நாம் இதுவகையில் காத்திருக்கவும் கூடாது. வீட்டு வசதி என்பது ஒரு தனி மனிதன் கவனிக்கவேண்டிய பிரச்சினையாக விடப்படக்கூடாது; அது தேசத்தின் பிரச்சினை யாகக் கருதப்படவேண்டும். சமதர்ம அரசியல் இதில் தன் முழு ஊக்கத்தையும் திரட்டி வேலை செய்வதுடன் கட்டடத் தொழிலுக்கு அரசியலுதவி கொடுத்துக் கட்டடத் தொழிலைச் சமதர்ம மயமாக்கும். இன்றைய கட்டடத் தொழில் மக்கள் வீட்டுத் தேவையை முதலாகக் கொண்டு மட்டுக்குமிஞ்சிய ஆதாயம் பெறுகிறது. அவ்வவ் விடத்தில் கிடைக்கக்கூடிய மூலப்பொருள்களில் சிறந்தவற்றைத் துணைக் கொண்டு கிராம மக்களுக்கு ஒழுங்காகத் திட்டமமைக்கப்பட்ட வீடுகள் கட்டமைக்கப்படவேண்டும். தவிர, ஒவ்வொரு கிராமத்திற்கும் உடல்நல, நோய்நீக்க வசதிகளும் கூடுமான போதெல்லாம் மின்சார வசதியும் அளிக்கப்படவேண்டும். கேட்பதற்கு இது கனவுக் காட்சி வர்ணனையாகத் தோற்றினும் உண்மையில் கனவியல் தன்மையுடையதன்று. இந்தியாவுக்குப் பிரமாண்டமான அளவில் நீர்மின்சார வளம் இருக்கிறது. இவ்வகையில் அது உலகில் அமெரிக்கா ஒன்றுக்கே அடுத்த இரண்டாமிடம் வகிக்கிறது. பள்ளிகளைப் பற்றியமட்டில் ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு பள்ளி இருக்கும்படி செய்யமுடியும் என்று முதலாளிகள் கூட ஒத்துக்கொள்கின்றனர். இது உடனடியாகச் செய்யவேண்டியது. இது முடியாத இடங்களில் ஐந்து கிராமங்களுக்கு ஒரு தொடக்கநிலைப் பள்ளியாவது முதற்படியாக ஏற்படுத்தலாம். கல்வியறிவு பெற்ற நாட்டு மக்களே திறமான தொழிலாளராகவும் திறம்பட்ட உற்பத்தியாண்மை யுடையவர்களாகவும் இருப்பர். இது தவிரப் பத்தாண்டுக் கால அளவிற்கு முதியோர் கல்வித் திட்டத்திற்கான ஏற்பாடுகளும் செய்யவேண்டும். இதன் மூலம் சிறுவர், சிறுமியர் அனைவரும் கல்வி பெறும் அதே காலத்திற் குள்ளாக, முதியவர்களின் கல்வியறி வில்லாமையும் அகற்றப்படும். இவர்கள் தம் வறுமை காரணமாக இளமையில் கல்விபெற முடியாது போனவர்கள் ஆவர். இங்ஙனம் 10 ஆண்டுகளுக்குள் இந்தியா முழுவதும் கல்வியறிவு பெற்ற தேசம் ஆய்விடும். கடைசியாகக் கவனிக்கவேண்டியது பொழுதுபோக்கு. பார்வைக்கு இது ஏதோ தேவையற்ற அல்லது தேவைக்கு மேற்பட்ட ஒன்றாகத் தோன்றும். ஆனால் இது தவறு. மிகப் பழமையான காலத்திலிருந்தே கேளிக்கைகளின் பலன் உணரப்பட்டு வந்துள்ளது. நம் நாட்டில் மற்போர்ப் போட்டி முதலிய பல கேளிக்கைகள் இருந்தன. நம் புராண ஏடுகளில் அவற்றைப் பற்றிய குறிப்புக்கள் காணப் பெறுகின்றன. தேரோட்டப் பந்தயம் கௌதம புத்தர் காலத்தில் (அவர் `புத்தர்’ ஆகுமுன்) இருந்தது. கிரீசிலும் ரோமிலும் இருந்து வந்த கேளிக்கைகள் நன்கறியப் பட்டவை. கேளிக்கைகளில் மனிதன் எப்போதும் களித் தீடுபட்டுள்ளான்; ஏனெனில், அவற்றால் உடல் வலுவும் பொழுதுபோக்கும் கிடைக்கின்றன. திரைக்காட்சி, நாடகமேடை, பேருரை மண்டபம் ஆகியவை வெட்டிவேலை யிடமோ வீண் பொழுது போக்கிடமோ அல்ல. அவை முழுவதும் இன்ப நாட்டம் கொண்ட இடமுமல்ல. நாடகம் எப்போதுமே ஒரு தேசத்தின் செயல்துறைப் பண்பாட்டின் சின்னமாகவே இயங்கி வந்துள்ளது. திரைக்காட்சி நாடகம் போன்றதுதான். அதன் வேறுபா டெல்லாம் அது நிழற்பட நுணுக்கத்துறையைப் பயன்படுத்துவதே. ஆக, அதுவும் பண்பாட்டின் ஒரு தோழனே. ஒரு ஊர்க் குழுவுக்கு ஒரு மேடை அமைந்து அதை மேற்பார்வை செய்ய ஒரு குடிமக்கள் பொழுதுபோக்குக் குழு ஏற்படுவது முடியக்கூடியதே. திரைப்பட, நாடகமேடை முதலாளிகள் நடப்பில் நுழைவுச் சீட்டுப் பெட்டியறையிலேயே நாட்டமாக இருந்து, ஆதாயத்துக் காகச் செய்யும் தொழிலை நாட்டு நலத்தை முன்னிட்டு இக்குழு மேற்கொண்டு நடத்தும். வாசிப்பகங்களும் நூல் நிலையங்களும் இதுபோலவே இன்றியமையாதவை. இந்தியாவின் கிராமப் பிரச்சினைகளைக் கவனிக்கும்போது மருத்துவ உதவி ஏற்பாடுகளைப் புறக்கணித்தலாகாது. இவ்வகையில் நாட்டுப்புறங்கள் முற்றிலும் கவனிக்கப்படாம லிருந்து வருகின்றன. கவனிக்கப்பட்டால் பல இறப்புக்கள் தவிர்க்கப்படக்கூடும்; பலரின் வாழ்நாள் நீட்டிக்கப்படலாகும். மருத்துவ உதவி என்பது நோயாளியை மருந்துப் புட்டியுடன் சென்று பார்க்க உதவும் ஒரு மருத்துவ நிபுணர் என்பது மட்டுமன்று. மருத்துவ விடுதிகளும் அறுவை மருத்துவக் கூடங்களும் தூக்கு கட்டில் உதவியாளரும் (ஆம்புலன்ஸ்) செவிலியரும் அமைதல் வேண்டும். நோய், கொள்ளைநோய் ஆகியவற்றைத் தடுத்து நிறுத்தத்தக்க வாய்ப்புக்களுக்கு ஏற்பாடாக வேண்டும். மருத்துவப் பணி நோய்களைக் குணப்படுத்தும் நடைமுறை களுடன் நின்றுவிடக்கூடாது. முக்கியமாக நோய் தடுப்பதிலேயே கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவில் பல உயிர்கள் கழிச்சல், அம்மை முதலிய பெருவாரி நோய்களால் மாள்கின்றன. முன்கூட்டித் தடை முறைகள் கையாளப்பட்டால் இது தவிர்க்கப்படக் கூடும். பிள்ளைப் பேற்றுப் பிரச்சினையும் இதுபோன்றதே. பேற்றுக்கு முன்னும் பின்னும் வேண்டிய பாதுகாப்புக்களுக்கு வகையில்லாமல் பெருந் தொகைத் தாய்மார்களும் குழந்தைகளும் மடிகின்றனர். அவர்களுக்கு வேண்டுவதெல்லாம் பேற்றுக்கு முன்னும் பின்னும் கவனிப்புப் பெறுவதுதான். இது மருத்துவ விடுதியிலேயே சிறப்பாகச் செய்யக்கூடியது. ஆயினும், கிராமக்குழு அடிப்படையில்தான் இத்தகைய மருத்துவ விடுதிகளும், செவிலியர் இல்லங்களும் அமைக்கப்படமுடியும். இங்ஙனமாக, சமதர்ம அரசியல் கிராமங்களின் வாழ்க்கையை முன்னேற்றுவிக்கும் பொறுப்பைக் கடமையாக ஏற்கும். அது கிராமங்களிலுள்ள வாழ்க்கையை எளிதாக்கு வதுடன் இன்பமய மாக்கும். கிராமங்களில் பெரும்பாலோரான உழவர்கள் இதனால் நலம் பெறுவர். வினா (75) : நீங்கள் மேலே எடுத்துரைத்த சீர்திருத்தங்கள் எல்லாவற்றையும் பற்றி முதலாளிகளுந்தான் பிரசாரம் செய்கிறார்கள்? விடை : ஆம். பிரசாரம் செய்கிறார்கள். ஆனால், செயலில் காட்டுவது அருமையாய் விடுகிறது. வினா (76) : அங்ஙனம் கூறுவதேன்? விடை : நில உடைமைமுறை முற்றிலும் மாற்றப்பட்டாலல் லாமல் - பெருநிலக்கிழமை முறையின் ஒழிப்பு இதில் ஒரு பகுதி - இச் சீர்திருத்தங்கள் நடைபெறக் கூடியவையல்ல. எந்த முதலாளித்துவ அரசியலாவது பெருநிலக் கிழமை முறையை ஒழிக்கத் துணிவு கொள்ளுமா? அதிலும் முதலாளித்துவ இந்தியாவில் அதற்கு இடமேது? இந்நாட்டில் ஆட்சிக் குழுநலன்களின் ஆட்சி நீடிக்கும்வரை கிராமச் சீர்திருத்தம் என்பது என்றும் நடைபெறக் கூடியதன்று. நாட்டின் ஆட்சிக் குழு நலன்களை ஒழிக்கும் கண்டிப்பான திறமும் துணிவும் சமதர்ம அரசியலுக்கு மட்டுமே இருக்க முடியும். வினா (77) : ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பள்ளி என்று சொன் னீர்கள். நாட்டுப்புற மக்களுக்கு மட்டுமன்றித்தேச மக்கள் அனைவருக்கும் சமதர்ம அரசியல் கல்விப் பிரச்சினையின் சிக்கலை எவ்வாறு தீர்க்கும்? நமது தற்போதைய கல்விமுறை மிகச் சீர்கெட்ட தென்பது மிகத் தெளிவு. ஆனால், இதனிடமாகச் சமதர்ம அரசியல் என்ன அமைக்கும்? எங்களுக்கு இது பற்றிய நீண்ட அறிவாராய்ச்சியுரை வேண்டுவதில்லை, ஒரு கருத்து விளக்கம் போதும். விடை : கல்வி என்பது ஒரு தனித் தலைப்புக்குரிய செய்தி. அதுபற்றி விரிவாக விளக்க ஒரு முழுநூல் வேண்டும். சுருக்கமாக, கல்வியின் உண்மை நோக்கமாவது; முதலில் தொடக்கக் கல்வி அளிக்கப்பட வேண்டும்; இது பொது அறிவு தரும். அதாவது வாழ்க்கையை வாழ்ந்து நுகர்வதற்கான குறைந்த அளவு அறிவை இது தரும் (வாசிப்பதாலும் தானே ஆராய்ந் துணர்வதாலும் இதனை மனிதன் பிற்படச் சற்றுப் பெருக்கி நிறைவு படுத்திக் கொள்ளலாம்). இரண்டாவதாக உயர்தரக் கல்வி வேண்டும்; இது மருத்துவம், பொறியமைப்பாண்மை (எஞ்சினீயரிங்), சிற்பம், பத்திரிகைத் தொழில் முதலிய சிறப்பறிவுத் துறைகளுக்கான பயிற்சி தரும். இவை இரண்டும் முக்கியமானவையே. ஆயினும் அவற்றைத் தனித்தனியாக எடுத்துக் கொள்வோம். முதலாவதாக: நாம் கல்வி கற்பது எதற்காக? வாழ்க்கைச் சூழ் நிலையை எதிர்த்துச் சமாளித்துக்கொள்ள அது உதவுகிறது என்பதனாலேயே. இது தனி மனிதனுக்கு மட்டுமன்று, சமூகத்துக்கும் பொருந்தும். பிற்போக்கான, கல்வியறிவில்லாத சமூகம் முன்னேற்றமுள்ள, கல்வியறிவு பெற்ற சமூகத்துக்குத் தாக்குப்பிடிக்க முடியாது. முன்னது தொகையில் மிகுதியா யிருந்தால்கூட அது பலவீனமானதாகவே இருக்கும். தன் பொருளை எண்ணத்தெரிந்தவன் அதை எண்ணத் தெரியாத வனை விடச் செவ்வையான கருத்துடையவனாகவே இருப்பான். இது யாவரும் அறிந்ததே. மெய்யாக, இன்றைய வாழ்வில் முற்காலத்தைவிட வாழ்வதற்கான பொது அறிவே நமக்கு மிகுதி வேண்டப்படுகிறது. இது ஒரு மனிதன் வளர்ந்தபின் தரப்படக் கூடியதன்று. இளமையாயிருக்கும் சமயத்திலிருந்தே அவன் வளர்ச்சியுடன் வளர்ச்சியாக அது அறிவிக்கப்பட வேண்டியதாகும். இக் காரியத்துக்குக் குழந்தைப் பருவமே மிகவும் தகுதி வாய்ந்தது. ஒரு கல்விமுறையின் முதல் கட்டுப்பாடு எழுத்தறிவு உண்டு பண்ணுவதாகும். அதாவது வாசிப்பு, எழுத்து, எண்ணுதல் ஆகிய திறங்களை முன்னேற்றுவது ஆகும். இது 8 அல்லது 9 வயதுக்கு முன் நடைபெறவேண்டும். இது முடிவுற்ற பின் இதே துறையில் உயர்தரப் பயிற்சி பெறுவர். அதாவது சிறிது சிக்கலான கணக்குகள், இன்னும் சிக்கல் வாய்ந்த சொற்றொடர்களைச் சேர்த்து விரிவான வாசிப்பு, எழுதுதல் ஆகியவற்றில் பழகுவர். கல்வியின் கொள்கைச் சார்பான பகுதி இது. மனம் கருத்துக்களைச் சில அளவையுட்பட்ட எழுத்துக்களாகவும் இலக்கங்களாகவும் மாற்றியமைக்க இப்பகுதி பயன்படுகிறது. இதுவே எழுத்தறிவு எனப்படும். ஆனால் கல்வி என்பது இதனிலும் சற்று மேம்பட்டது. அது வாழ்க்கையையும் இயற்கையையும் அவற்றின் அமைதிகளையும் நடை முறைகளையும் அறிவுணர்வுடன் அறிவது ஆகும். ஆகவே குழந்தையின் கவனத்தை இவற்றின் மீது திருப்புவது கல்வியின் அடுத்தபடியாயமைகிறது. குழந்தைக்குத் தன் சமூகத்தைப் பற்றியும் அது சென்ற காலத்தில் செய்த செயல்கள் (நாட்டு வரலாறு) பற்றியும், அதன் தற்காலிகக் கருத்துக்கள் (இலக்கியம்), உயர்தரப் பெருந்தொகைக் கணக்குகள் (கணக்கியல்), கனிப் பொருள்கள், அவற்றின் பண்புகள் (இயைபியல் அல்லது ரஸாயனம்), செடியியல் (க்ஷடிவயலே), நிலவுலகும் அதன் ஆக்கப் பொருளும் (மண்ணியல்), வான ஒளிப்பிழம்புகள், அவற்றின் இயக்கங்கள் (வான நூல்) ஆகியவை பற்றியும் அறிவு தரப்படுகிறது. ஆண்டுக்காண்டு மிகுதியான அதன் அறிவாற்றலுக் கேற்பக் குழந்தைக்கு அறிவு கற்பிக்கப்பட்டு வருகிறது. அதன் 16-வது வயதுக்குள் அது அறியவேண்டிய பொருள்களைக் காரியத்துக் கேற்ற அளவில் கிட்டத்தட்ட அறிந்து விடுகிறது. இதன் பின்னரே உயர்தரக் கல்வி தொடங்குகிறது. இதனை மாணவர்களுள் ஒரு சிறு பகுதியினர் மட்டுமே தொடர்ந்து பெறுகின்றனர். மற்றவர்கள் ஏற்கெனவே அடைந்துள்ள காரியத்துறைக்கான அளவிலுள்ள கல்வியுடன் அமைகின்றனர். உயர்தரக் கல்வி கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் தரப்படுகிறது. அதன் பெயருக்கொத்த வகையில் அது உண்மையிலேயே உயர்கல்விதான் - அதாவது ஆழ்ந்த, நுண்ணிய அறிவு அதில் பெறப்படுகிறது. பள்ளிக்கூடத்தில் அறிவுத் தொகுதி அப்படியே மனத்தில் படியவைக்கப்படுவதில்லை. துறைதுறையாகப் பிரித்துத் தனித்தனியாகவும் சிறப்பாகவும் ஆராயப் பெறுகின்றன. சிறப்புப் பயிற்சிமுறை தொடங்கு வதும் இப்போதுதான். தொழில் நுணுக்கத் தகுதிகளுக்கான தனிப் பயிற்சிகள் தொடங்குவதும் இதிலிருந்துதான். அமைப்பாண்மை (நுபேiநேநசiபே), மருத்துவம், உயிரின நூல் (ணடிடிடடிபல) முதலியவை இத்தகைய தனிப்பயிற்சித் துறைகள். வேறு வகையில் கூறுவதானால் பல்கலைக் கழகத்தில் தரப்படும் அறிவு உயர்தர அறிவு. தன் அறிவுத் துறையில் தானே தன்னிச்சையாய் முன்னேறு வதற்குப் போதிய அளவு அறிவுத்தகுதி பெறும்படியான நிலையை இவ்வுயர்தர அறிவு தருகிறது என்னலாம். ஆயினும் அறிவு இவ்வுயர்தரக் கல்வியுடனும் முடிவுபெறுகிறது என்ப தில்லை. ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் அதை நாடிச் செலவிடலாம். பல விஞ்ஞானிகள், அமைப்பாளர்கள், மருத்துவர்கள் அங்ஙனம் செய்வதும் கண்கூடு. கல்வியின் நூல்துறைப் பகுதி இவ்வளவினது. ஆனால் இன்று பள்ளிக் கூடம் என்பது முற்றிலும் தூய எளிய அறிவை மட்டும் திரட்டித்தந்தூட்டும் நிலையம் என்று கருதப்படுவ தில்லை. மாணவர்களை அறிவுடையவர்களாக மட்டுமின்றிச் சமூக முறையில் பயன்படுபவர் களாகவும் முன் மாதிரியான தகுதியுடையவர்களாகவும் செய்யும்படி புத்தாராய்ச்சிகளும் சோதனை முறைகளும் நடத்தப்படுகின்றன. முடிவாக உணரப்பட்ட முக்கியமான முடிவு யாதெனில், பள்ளி வாழ்வின் தொடக்கத்திலிருந்து குழந்தை வாழ்க்கையின் அறிவு (அதாவது முன்னோர் திரட்டிய அனுபவங்களின் தொகுப்பு) பற்றிய சில செய்திகளை மட்டுமன்றி, அவன் உடலும் உள்ளமும் வளர்ச்சியடைந்து கொண்டிருப்பதனால், இவ்வழியில் அவை வளர்ச்சி பெறுவதற்கான எல்லா உதவிகளும் செய்ய வேண்டும் என்பதே. பெரும்பாலான பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் விளையாட்டுகளும் களியாட்டங்களும் ஒழுங்கமைக்கப்பட் டிருப்பதன் நோக்கம் இதுதான். இத்துறையில் மாணவர் பங்குகொள்ளும் படி ஊக்கப்படுத்தப்படுகிறது. உடல் நலமும் அறிவுத் திறமையுமுடைய தலைமுறை சமூகத்தில் ஒரு மூலதனம் ஆகும். வெறும் அறிவு மட்டும் உடைய பலவீனமான தலைமுறை அதன்மேல் சுமத்தப்பட்ட கடன் பொறுப்பு ஆகும். கல்வி நிலையங்களின் சமூகச் சார்பான கடமைகள் பற்றிய மட்டில், இத்துறையின் பயிற்சியில் சோவியத் கூட்டுறவு ஒன்றிலன்றி வேறெங்கும் போதிய வற்புறுத்தல் செய்யப்படவில்லை. சோவியத் கூட்டுறவில் குழந்தைப் பருவம் முதலே சமூகம் பற்றிய கருத்துக்களும் கூட்டுறவு முயற்சி பற்றிய எண்ணங்களும் உள்ளத்தில் ஊன்றி வளர்க்கப்படுகின்றன. குழந்தைகள் விளையாடும் விளையாட்டுக்களை ஒருங்கே விளையாடப் பழக்கம் தரப்படுகின்றது. பிள்ளைகள் வீடுகட்டி விளையாடு வதற்குப் பயன்படுத்தும் செங்கல்கள் குறைந்தது இருவரா லேயே தூக்கப்படும் அளவு பளுவுடையதாகச் செய்யப்படுகின்றன. இவை எல்லாவற்றின் நோக்கம் கூட்டுறவின் மூலமே வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் என்ற கருத்தைப் பிள்ளைகளின் மனத்தில் எழுப்புவதாகும். உலகெங்கும் கல்வி நிலையங்கள் பணியாற்றும் பணியின் பொதுத்தன்மை இது. இந்தியாவிலுள்ள கல்விநிலையங்கள் இதில் எவ்வளவோ தொலைவு குறைபடுகின்றன. நம் கல்வியமைப்புமுறை நம் அனைவரையுமே குமாஸ்தாக்களாக்கு வதற்கென அமைக்கப்பட்டது. ஆண்டுதோறும் நம் பட்டதாரிகள் ஆயிரப் பத்தாயிரக் கணக்கில் வெளியே அனுப்பப்படுகின்றனர். அவர்கள் வாழ்க்கையில் குமாஸ்தா வேலையைத் தவிர வேறு எதற்கும் தகுதியுடையவர் களாயில்லை. சில வேளை வழக்கறிஞர், மருத்துவ நிபுணர்; ஒரு வேளை அமைப்பாளர், நுணுக்கத் துறையாளர் நிலைகளுக்கு அவர்கள் செல்லலாமாயினும், மிக மிகச் சிலரே இத்தகைய பயிற்சிகளுக்குச் செல்ல முடியும் - அவை அவ்வளவு செலவு பிடிக்கின்றன. தவிர இங்கும் அறிவுத்திறம் அவ்வளவு மட்டமாகவே உள்ளது. சமதர்ம அரசியல் செய்யும் முதற்செயல் இந்தியாவின் கல்வித்துறை முழுவதையுமே முற்றிலும் மாற்றி யமைப்பது ஆகும். அது தனி மனிதன் வளர்ச்சிக்கு உதவி, அதன் மூலம் நாட்டு வளர்ச்சிக்கு உதவும் முறையில் அச் சீரமைப்பு திட்டமிட்டுத் தொடங்கப்பெறும். இவ்வளவு பட்டதாரிகள் நமக்குத் தேவையில்லை என்பதும் இன்னும் மிகுதியான வழக்கறிஞர்களை வைத்துச் செரிக்கவைக்க நம்மால் இயலாது என்பதும் எல்லாருக்கும் தெளிவாக விளங்கக்கூடும். இந்தியா தொழில் முறையில், பயிர்த்தொழில் துறையில், நுணுக்கத் துறையில் முன்னேற வேண்டி யிருக்கிறது. இத்துறைகளிலேயே கல்விக்கு உடனடியாக ஊக்கம் அளிக்கப்படும். மேன்மேலும் மிகுதியான அமைப்பாளர்கள், விமானிகள், மின்சார வல்லுநர்கள், பயிர்த்தொழில் வல்லுநர்கள், விஞ்ஞானிகள், புதுநிலக் கண்டுபிடிப்பாளர் (நுஒயீடடிசநசள), ஆசிரியர்கள் ஏற்படவேண்டும். இவ் ஆண் பெண் ஊழியர்கள் நாட்டில் மிக மிக அவசரமாகத் தேவைப்படுகின்றனர். நம் கல்வித்துறை நிலையங்களின் இலக்கு இதுவாக, இதுமட்டுமே, ஆகவேண்டும். ஏனெனில், நம் நாட்டின் முன்னேற்றமும் வளமும் இத்தேவையை நிறைவேற்றுவதைப் பொறுத்தவை. பயிர்த் தொழில் கவனிப்பில்லாமல் சீர்கெட்டுக் கொண்டிருக்கும்போதும், நம் தொழில்களுக்கு விஞ்ஞான ஆலோசகரில்லாமல் வெளிநாட்டு அறிஞரை நாம் நம்பவேண்டிய நிலையிலிருக்கும்போதும், ஷேக்ஸ்பியர் கவிதை யாராய்ச்சித் திறமோ, உரோம நாட்டுச் சட்ட விற்பனமோ உடைய வல்லுநர்களை உற்பத்தி செய்வதில் என்ன பயன்! உயர்தரக் கல்வியிலும், அடிப்படை மாறுதல்கள் செய்தாக வேண்டும். ஆனால், தொடக்கநிலை, இடைநிலைக் கல்வி நிலையங்களின் அமைப்புக்களைச் சீர்திருத்திப் பின் அந்த உறுதியான அடிப்படை மீதே உயர்தரக் கல்வி சீர்திருத்த வேலை தொடங்கப்பட முடியும். நம் தற்காலத் தொடக்க, இடைநிலைக் கல்வியமைப்பு எல்லா வகையிலுமே அதிருப்தி தருவதாயுள்ளது. குழந்தைகள் வகுப்புகளில் மந்தைகள் போல் அடைக்கப் படுகிறார்கள். கற்றுக் கொடுக்கும் பாடமோ பொருட்சார்பற்ற கருத்துக்கள். கற்பிக்கும் முறை கருத்தைக் கவராத முறை. பிள்ளைகளைக் கல்வியில் கருத்துச் செலுத்தும்படி செய்யா விட்டால் அக்கல்வியால் என்ன பயன்? எடுத்துக் காட்டாக, இந்தியச் சிறுவனுக்கோ சிறுமிக்கோ இங்கிலாந்தின் வரலாறு கற்பிப்பதேன்? அந்நாடு அவர்களுக்கு அறிமுக மற்றது. சமூகத்தொடர்பு பற்றியவரை அதன் மக்கள் அவர்களுக்குத் தொடர்பற்ற அயலார்கள். இயற்கைப் பாடத்தில் கற்றுக் கொடுக்கும் செடிகொடியைப் பையனுக்குக் காட்டாமல் அப்பாடத்தை அவனுக்குக் கற்பிப்பதால் நன்மை யாது? நம்மைப் `புத்தகப் பூச்சிகள்’ என்று பிறர் குறை கூறினால், அதில் வியப்புக்கு என்ன இடம் இருக்கமுடியும்? வாழ்க்கைத் தொடர்பில்லாத அறிவைத்தானே நாம் பெறுகிறோம்! அதுமட்டுமா? நிலைமை உண்மையில் அதைவிட மோசமானது. நச்சுத்தன்மை வாய்ந்த அடிமை மனப்பான்மை யுணர்ச்சி நம் கல்விமுறை முழுவதும் பரவியுள்ளது. நான்காம் வகுப்புத் தாய்மொழிப் பாடத்தில் (எழுத்தறிவு ஓரளவு முற்றும் பெற்றுப் பொருளறிவு தொடங்கும் வகுப்பில்) முதல் பாடமே இராஜ - சக்கரவர்த்தியையும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையும் பற்றிய தாயிருக்கிறதே! நம் நாட்டு வரலாற்று ஏடுகளைப் பார்த்தால் அவை யனைத்தும் பிரிட்டிஷார் வருவதன்முன் இந்தியாவில் எல்லாம் ஒரே குழப்பம் என்றும், பிரிட்டிஷாரே இங்கே ஒழுங்கமைதியைக் கொண்டு வந்தவர்கள் என்றும், ஆதலால் அவர்கள் வரவு ஒரு தெய்வச் செயலே என்றும் நம் கருத்தில் பதியும் முறையிலேயே அது எழுதப்பட்டுள்ளது என்று தோற்றவில்லையா? நம் கல்வி நூல்துறையில் மட்டுமல்ல விரும்பத்தகாத தாயிருப்பது. அது குழந்தையின் உடல்வளர்ச்சி, உளவளர்ச்சிகளில் கவனம் செலுத்த வில்லை. பல கல்விக்கூடங்களிலும் கல்லூரி களிலும் விளையாட்டுக் களியாட்ட அரங்கங்களிருக்கின்றன என்பது உண்மையே. ஆனால் மிகப் பலவற்றில் இவ்வசதிகள் இல்லாமலும் உள்ளன. கல்வியின் இப்பகுதி முற்றிலும் ஒவ்வொரு நிலையத்தின் விருப்பு வெறுப்பிற்கும் செல்வ ஆற்றல் நிலைக்குமே விடப்பட்டுள்ளது. அவற்றைப் பாடத் திட்டத்தினுள் ஒரு பகுதியாகச் சேர்க்கும்படி கல்வியமைப்பு வற்புறுத்தவில்லை. இத்தவறு எத்தனை தலைமுறைகளுக்கு எத்தனை கேடு உண்டுபண்ணியுள்ளது? நம் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் செய்யப்படும் இப் பெருந் தீங்கைச் சமதர்ம அரசியல் உடனடியாக அகற்றும். அத்துடன் அது ஒவ்வொரு குழந்தையின் உள்ளத்திலும் சமூக மனப்பான்மை ஊறும்படி செய்யும். அவன் அல்லது அவள் இந்நாட்டின் சிறுவர்களில் ஒருவர் என்றும், இந்நாடு மொத்தத்தில் மனித இனத்தின் ஒரு பகுதி என்றும் அவர்களுக்குக் கற்பிக்கப்படும். மேலும் உடல் வளர்ச்சியும் சமூகவளர்ச்சி போன்றே முக்கியத்துவம் வாய்ந்ததாதலால், மலிவான செலவில் உணவூட்டும் முறைகளும் செய்து தரப்படும். இந்தியாவில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு நாளைக்கு ஒரு கோப்பை பால் கொடுத்தால் அதன் பலன் எவ்வளவு இருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்! ஒரு நேர நல்ல உணவேனும் கொடுத்தால் பயன் இன்னும் எவ்வளவு மிகுதியாகும்!! உடல்நல ஏற்பாடுகள், தண்ணீர் வசதி ஏற்பாடுகள் முதலியவற்றைப் போலவே கல்வியும் செலவில்லாமல் இலவசமாக்கப் படவேண்டும் என்பதும், அரசியலே அச்செலவை முழுவதும் ஏற்கவேண்டும் என்பதும், இக்காலத்தில் எங்கும் எல்லாராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட செய்தியே யாகும். சமதர்ம அரசியலின் குறிக்கோள் எல்லாக் கல்விப்படிகளையும் இலவசமாக்குவதே. இன்று நன்னிலையிலுள்ள தாய் தந்தையரை யுடைய மாணவனும் வேறு வகையில் அத்தகைய வசதி பெற்ற மாணவனும் மட்டுமன்றி அதனை வேறு யாரும் பயன்படுத்து வதற்கில்லை. இது இயற்கை யறிவுக்குப் பங்கம் விளைப்பது. இறுதியில் சமூகத்திற்கு அழிவு தருவதும் ஆகும். முடிவில் சுருக்கிக் கூறுவதானால், சமதர்மத்தின் மூலம் பிள்ளைகளுக்கு உடல் வளர்ச்சிக்கும் அறிவு வளர்ச்சிக்கும் வேண்டிய வசதிகள் யாவும் அரசியலாலேயே இலவசமாகச் செய்து கொடுக்கப்படும். ஏனெனில் இவ்வளர்ச்சிக்கு உதவுவதன்மூலம் இறுதியாக நலமடைவது சமூகமே. கல்வி ஒரு சமூகத்தின் உயர்நிலையான காரியமாதலால் அது நன்னிலை யுடையவர்கள் மட்டுமே பெறட்டும் என்று விட்டுவைக்கக் கூடியதன்று. அங்ஙனம் விட்டு வைத்தால் இந்தியா பிற்போக்கான, வலிவற்ற, ஏழ்மை மிகுந்த நாடாகவே இருக்கும். இலவசப் பொதுக் கல்விக்குப் பெருஞ்செலவு பிடிக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் யார் வலிவின்மீதும் ஆற்றலின் மீதும் தேசத்தின் ஆற்றல் சார்ந்துள்ளதோ, அவர்களுக்காகச் செலவிடாத அச்செலவு வேறு யாருக்குத்தான் செலவிடப்பட முடியும்? அது உண்மையில் ஒரு செலவு அன்று; விலையேறிய ஒரு மூலதனச் சேமிப்பேயாகும். அதைச் செய்து முடிக்க எத்தனை தியாகங்கள் செய்தாலும் தகும். வினா (78) : கல்வி பற்றி நீங்கள் விளக்கிக் கூறிய உயர் கருத்துக்கள் யாவும் தாமே இயல்பாக ஆராய்ந்தறியும் ஆற்றலும் மனித இனத்துக்குத் தொண்டாற்றும் தன்மையும் உடைய அறிவு நலமும் உடல் நலமும் வாய்ந்த ஆண் பெண்பாலாரைக் கட்டாயம் உண்டுபண்ணக் கூடியவையே. ஆயினும் சமதர்மம் எல்லாரையும் ஒரே வகை அறிவுச் சட்டத்தில் போட்டு நெருக்குமென்றும், தமக்கென யாரையும் சிந்திக்க விடுவதில்லை யென்றும் கேள்விப்படுகிறோம். அத்துடன் ஒவ்வொரு வனும் அரசியலார் என்ன சொல்கிறார்களோ அதன்படிதான் செய்ய வேண்டுமாமே! வேறு வகையாகக் கூறினால் தனிப்பட்டவர் சுதந்திரம் என்பதே கிடையாதாம். சமதர்மம் இவ்வாறு செய்யுமானால், நல்ல கல்வி முறையிருந்துதான் என்ன பயன்? முதலாளித்துவ அரசியலின் கீழோ நாம் விரும்பிய எதையும் படிக்கலாம்; விரும்பும் எதையும் பற்றி எண்ண மிடலாம். விடை : இது முற்றிலும் பிரசாரப் புரளி. இதில் இம்மியளவு கூட உண்மை கிடையாது. சமதர்மம் தனிப்பட்டவர் அறிவுக்கு முழுநிறை விடுதலை கொடுக்கவில்லையானால், அது தன் இளைஞர்க்கு இத்தனை பிரமாண்டமான செலவு செய்து இலவசக்கல்வி தர முன்வருமா? இது பொது அறிவினால் கூட உணரக்கூடியதே. சமதர்மத்தின் செயல்முறைகள் பற்றி அதன் எதிரிகள் அசம்பாவிதமான செய்திகளைப் பரப்பிக் கொண்டே, வேண்டுமென்று பரப்பிக் கொண்டே இருக்கிறார்கள். அவற்றில் இது ஒன்று. ஒரே ஒரு வகை அறிவுத் திறத்தை மட்டும் சமதர்மம் அடக்கி வைக்கிறது என்பதை ஒத்துக்கொள்கிறோம். தன்னல நோக்க மொன்றே ஊறிப்போனதாய், தன் சமூகத்தைக் கெடுத்தாயினும் ஆதாயம் பெற முயலும் அறிவுத்திறம் ஒன்றே அது. இக்கட்டுப்பாட்டைக் கண்டு சீறுபவர் சிலர் இருக்கலாம். அவர்கள் தங்குதடையற்ற தனிப்பட்டவர் விடுதலையுரிமை கோரக்கூடும். ஆனால் அவர்கள் தொகை மிகமிகக் குறைவாகவே இருக்கும். எங்கும் எல்லா இடத்திலும் குழு வாழ்வின் அவசியத்தை மக்கள் ஒப்புக்கொண்டே உள்ளனர். அவ்வப்போது பொது அமைதியினின்றும் வழுவக் கூடுமாயினும், யாவரும் “வாழுவேன், பிறரையும் வாழவிடுவேன்” என்ற பொது அமைதி முறையையே பின்பற்றுகின்றனர். அவர்கள் தம் தனிப்பட்ட நலனைச் சமூக நலனுடன் ஒன்றுபடுத்தவே செய்கின்றனர். இது முதலாளித்துவ மனப்பான்மைக்கு நேர்மாறானது. அது தனி மனிதன் முன்னேற்றத்தைச் சமூக முன்னேற்றத்துக்கு மேம்பட்ட தாக்குகிறது. கோடிக்கணக்கானவர் வறுமைக் குழியில் அவதிப்படும் போது ஒருவன் இன்ப வாழ்க்கையில் புரளுவது முதலாளித்துவத்தின் கீழ் ஒரு குற்றமாகாது. இந்நிலைக்குச் சமதர்மம் என்றும் இணக்கமளிக்க முடியாது. ஆனால் சமதர்மத்தின் கீழ் நுகர்வதைவிட முதலாளித் துவத்தின் கீழ் தனி மனிதன் மிகுதி சுதந்திரம் நுகர்வது எவ்வாறு முடிகிறது என்றும், அவன் விரும்பியதை வாசிக்கவும் எழுதவும் அவன் எப்படி இணக்கமளிக்கப் பெறுகிறான் என்றும் நீங்கள் கேட்கக் கூடும். இது ஒன்று எப்படியும் சமதர்ம முறையைவிட முதலாளித்துவ முறைக்குள்ள உயர்வு என்று கூட உங்களுக்குத் தோற்றக்கூடும். ஆனால் இது தோற்றம் மட்டுமே. உண்மை யாதெனில் இன்று தனி மனிதன் வாசிப்பது முழுவதும் முதலாளித்துவத்துக்காதரவானவைகளே. சமதர்மச் சார்பில் நீங்கள் எழுதினால், உங்கள் பிழைப்புக்குரிய வழி குறைக்கப்படத் தான் செய்யும். இதற்கு ஒரு விளக்கம் தருவோம். இன்று, நீங்கள் விரும்பியதை நீங்கள் உண்ணலாம். ஆனால் உண்மையில் பெரும்பாலான மக்களுக்குத் தாங்கள் விரும்பிய உணவை உண்ண முடியாது என்பது நமக்குத் தெரியும். ஏனெனில் அதற்கான பணம் அவர்களிடம் கிடையாது. கல்விவகையிலோ நாம் பள்ளிக்கும் செல்லலாம்; கல்லூரிக்கும் செல்லலாம். வெளிநாட்டுக்குக் கூடச் செல்லலாம். ஆனால் எத்தனை பேருக்கு இச் சுதந்திரத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்? இச்சுதந்திரம் நம் கைப்பொருளின் அளவினால் கட்டுப்படுத்தப்படுகிறதே! மக்கள் தொகையில் பெரும்பாலானவர்களைப் பற்றிய வரையில் முதலாளித்துவத்தின் கீழிருக்கும் தனிப்பட்டவர் சுதந்திரம் ஒரு `ஏட்டுச் சுரைக்காய்’; காரியத்துக்குதவுவ தன்று. அது `உள’தாயிருக்கலாம்; ஆனால் நாம் அதைத் துய்க்க முடியாது. ஒரே ஒரு வகுப்புக்கு மட்டும் அச் சுதந்திரம் மிகமிக உண்மை யானது. அதுதான் கையில் பணமுடைய வகுப்பு, நம் முதலாளித்துவ வகுப்பு. மேலும் இந்த (ஏட்டுச் சுரைக்காய்) உரிமையைக்கூட முதலாளித்துவம் குறுகத் தறிக்கிறது. சில சமயம் உங்களுக்குத் தரப்பட்ட உணவைத்தான் நீங்கள் உண்ணலாம் (பங்கீடு அல்லது ரேஷன்); வெளியிட இணக்கமளிக்கப் பட்டதைத்தான் எழுதவோ வாசிக்கவோ செய்யலாம் (செய்தித் தணிக்கை - ஸென்ஸார்ஷிப்); அரசியல் படிக்கச் சொன்னதைத் தான் படிக்க வேண்டும் (கல்விக்கான திறமை வாய்ந்த பாடத்திட்டம்) முதலாளித்துவத்தின் கீழ் மெய்யான தனிப்பட்டவர் சுதந்திரம் என்ற ஒன்று உண்மையில் இல்லவே இல்லை. அது இருப்பதாகத் தோன்றும்போ தெல்லாம் அது உண்மையில் ஒரு இணக்கமளிக்கப்பட்ட (வேண்டும் போது எடுத்துக்கொள்ளப்படக் கூடும்) சிறப்புரிமை மட்டுமே. அது ஒரு (என்றும் நிலையாயுள்ள) அடிப்படை உரிமையாயிராது. சமதர்மத்தின் செய்தி இதற்கு நேர்மாறானது. இங்கே சமூக சுதந்திரம் என்ற சட்டத்துக்கு உட்பட்டுத் தனிப்பட்டவர் சுதந்திரம் என்பதற்கு இணக்கமளிக்கப்படுவது மட்டுமல்ல, அது ஊக்கவும்படுகிறது. சாதனங்க ளில்லாத ஒரு காரணத்துக்காக ஒருவர் முன்னேற்றம் என்றுமே தடைப்படாது. இயற்கையறிவு எப்போதும் வளர்க்கப்படவே செய்யும். ஆயினும் அடிக்கடி பணவடிவில் தரப்படும் ஊதியத்தைக்கொண்டு முன்னேற்றம் அளக்கப்படுவ துண்டு. இது தவறானது. எடுத்துக்காட்டாக, ஒருவன் இசையில் ஈடுபட்டுப் பயில்வது முற்றிலும் அவன் பணம் சம்பாதித்து; உந்து வண்டி, மாளிகை, வேலைக்காரர்கள், ஆகிய ஆரவார வாழ்வுடன்; தன் அலமாரி நிறைய ஆடையணிகள் அடையவேண்டும் மென்பதற்காகவே என்று கூறமுடியுமா? அவனுக்குப் பாடும் ஆற்றலும் அக்கலையில் ஆவலும் இருப்பதனால் மட்டும் தானே அவன் இசை பயில்வதைத் தேர்ந்துகொண்டிருக்கக் கூடும்? மில்ட்டன் `துறக்க நீக்கம்’ என்ற காப்பியத்தை நானூறு ஆண்டுகட்கு முன்னர் இயற்றினார். ஆயிர நூறாயிரக்கணக்கில் அதன் படிகள் விற்கப்பட்டுள்ளன. இன்றும் விற்கின்றன. ஆயினும் அப் புகழ்பெற்ற கவிஞன் வறுமையிலேயே மாண்டான். எனவே அவன் எழுதியது பணத்துக்காக அன்று என்பது தெளிவு. சமூகம் அவனை அவ்வாறு நடத்தியது தவறு என்றும் கூறலாம். ஆனால் சமதர்ம சமுதாயம் இத்தகைய செய்திகள் நிகழும்படி விடாது. அறிவுத்திறமுடைய மனிதன் ஒரு கோடி கட்டியாள்பவனாக முடியா திருக்கலாம். உண்மையில் (சமதர்ம சமூகத்தில்) யாருமே அதை விரும்ப மாட்டார்கள். ஆனால் அவன் தனிச்சிறப்பு வாய்ந்த பண்புக்குப் பரிசாக அவன் போதிய வசதிகளுடன் வாழவும், இன்னும் அதுபோன்ற பெருங் காவியங்கள் செய்யவும் வேண்டிய சாதனங்கள் அவனுக்குச் செய்து தரப்படுவது உறுதி. இங்ஙனம் ஓர் உயர் ஒழுக்க நிலையிலிருந்து பார்த்தால்கூட சமதர்மத்தின் கீழ்த் தனிப்பட்ட ஒருவன் துய்க்கும் சுதந்திரம் முதலாளித்துவத்தின் கீழ் அவன் நுகரும் சுதந்திரத்தைவிட மிக உயர்தன்மை யுடையதாகும். அத்துடன் மக்களில் பெரும்பான்மையினரைப் பொறுத்த வரை முதலாளித்துவத்தின் கீழுள்ள அச் சுதந்திரம் வெறும் பெயரளவி லுள்ள சுதந்திரமே. வேறுவகையில் கூறினால் அது தனிப்பட்டவர் சுதந்திரமேயன்று; ஒரு வகுப்பின் சுதந்திரம் மட்டுமே. பணம் படைத்தவரான அவ்வகுப்பினர் மட்டுமே அதனை நுகர முடியும். வினா (79) சமதர்மத்தின் கீழ் பத்திரிகை உலகத்துக்கு எவ்வளவு சுதந்தரம் அளிக்கப்படும்? அது கட்டுப்படுத்தப்பட்ட ஒரு பத்திரிகை உலகாய்த்தானே இருக்கும்? விடை : இதற்கும் மறுமொழி காரிய அளவில் மேற் கூறியதை ஒத்ததே. ஆனால் பத்திரிகைச் சுதந்திரம் என்பது எது என்பதை உணர இன்று பத்திரிகைகள் செய்து வரும் பணி யாது, அவை இனிச் செய்யவேண்டுமென நாம் கருதும் பணி யாது என்பனவற்றை நாம் உணர வேண்டும். முதல் முதல் பத்திரிகை இங்கிலாந்தில் 400 ஆண்டுகட்குமுன் தொடங்கப்பட்டது. அதன் முக்கிய வேலை பிரிட்டிஷ் மன்னரவை பிறப்பித்த ஆணைகளை எங்கும் பரப்பி அறிவிப்பது ஆகும். இதற்குமுன் அவ்வாணைகளை மன்னர் செய்தியறிவிப்பாளன் எங்கும் அறிவிப்பது வழக்கம். பிற்காலங்களில் அவை சுவர்கள் மீது ஒட்டப்பட்டன. நாளடைவில் ஆணைகள் மட்டுமன்றி அவையின் நடப்புக்களும் பத்திரிகையி லிடம்பெற்றன. இப்போது அது மன்னர் அவைக்கு வெளியே தனிப்பட்டவர்கள் முயற்சியால் தன்னிச்சையாக வெளியிடப்படத் தொடங்கிற்று. அதன் ஆசிரியரும் மன்னர் பணியாளல்லாத ஒரு பொது மனிதரானார். பின்னும் நாட்செல்லச் செல்ல, மன்னர் செயல்களும், பெருமக்கள் செயல்களும் மட்டுமன்றி, வாணிகக் கழகங்களின் செய்திகளும் அதன் பத்திகளில் இடம்பெற்றன. அதன்பின் அரசியல்மன்ற அவைகளின் வாதங்களும் குறிக்கப்பட்டன. தற்காலப் பத்திரிகையின் தோற்றம் இது. இதே சமயத்தில் இன்னொரு நிகழ்ச்சி ஏற்பட்டது. ஒன்றன்று, பல பத்திரிகைகள் தோன்றின. பத்திகளில் மன்னர் பெருமக்கள் செய்திகள் இப்போதும் காணப்பட்டன. ஆனால், அச் செய்திகள் மட்டுமன்று; அச்செய்திகளும் பழைய கீழ்ப்படிதல் தொனியுடனன்று. பத்திரிகைகள் மன்னர் அவையின் செயல்களைக் குறை காணவும், மக்கள் உரிமைகளை வற்புறுத்தவும் தொடங்கின. மன்னர் மரபுக்குப் போட்டியாக எழுந்த வாணிகக் கழகங்களையே அவை மிகுதியாகத் தாக்கின. மன்னருக்கும் பெருமக்களுக்கும் இது தொல்லையாயிற்று. அவர்கள் மனத்தாங்கல் காரணமாகப் பல அடக்கு முறைகள் எழுந்தன. பத்திரிகை ஆசிரியர் பலர் சிறைக்கும் சென்றனர். இறுதியில் பத்திரிகைகள் ஆட்சியுரிமையிலிருக்கும் குழுவையும் சரி, மற்ற எவரையும் சரி, பொதுநலத்தை அவை ஆதரிக்கும்வரை குறைகூறலாம் என்ற உரிமை பெறும் அளவு வெற்றி பெற்றன. இவ்வுரிமையே இன்று பத்திரிகைச் சுதந்திரம் எனப்படுகிறது. இதன் பின்னாக, உலகில் பத்திரிகைகளின் நிலை எவ்வளவோ மாறுதலடைந்துள்ளது. மன்னரவையுடன் பத்திரிகைகள் நடத்திவந்த போராட்டத்தின்போது, அதே சமயத்திலேயே முதலாளித்துவம் பழைய நிலவுடைமை ஆட்சியுடன் அரசியலில் ஆதிக்கத்துக்காக மல்லாடிக் கொண் டிருந்தது. இதனால் ஒரு சில தறுவாய்கள் தவிர மற்ற சமயங்களி லெல்லாம் பத்திரிகைத் துறை முதலாளித்துவ வகுப்புடன் ஒன்றுபட்டு அதன் ஆர்வங்களிலும் பங்குகொண்டது. உண்மையில் அது அவ் வகுப்பின் பிரசார `வாய்’ ஆயிற்று. இரண்டாவதாக வெளியீடுகள் பெருத்த அளவில் பரவி வாணிக முறையில் நல்ல தொழிலாயின. இதன் பயனாகப் பத்திரிகை இதுவரை தன் ஆசிரியர் மூலம் கொண்டிருந்த தனிப்பட்ட தன்மை இழந்து, மற்றத் தொழில்களிலுள்ள உற்பத்திப் பொருள்கள்போல ஒரு உற்பத்திப் பொருளாயிற்று. அதாவது பத்திரிகை ஒரு தொழிலாய் அதன் உடைமையாளர் `பத்திரிகைப் பெருமாள்’களாயினர். அவர்கள் முதலாளித்துவத்தின் ஆதரவாளர்கள் மட்டுமல்லர், தாமே ஆயிரக்கணக்கான தொழிலாளரை வைத்து வேலை வாங்குவதுடன் பெரு முதலீட்டுத் தொழில் செய்யும் பெரிய முதலாளிகளாயினர். இத்தகைய பத்திரிகை முதலாளித்துவத்தை ஆதரிப்பதும், முதலாளித்துவத்துக்கு எதிராகப் பிரசாரம் செய்யும் எந்தக் கொள்கையையும் மும்முரமாக எதிர்ப்பதும் இயல்பே. இதன் பொருள் யாதெனில், எந்தப் பத்திரிகைச் சுதந்திரத்துக்காக அவர்கள் முன்பு போராடினரோ அதே சுதந்திரம் இப்போது அவர்களுக்கு எட்டிக்காயாகியுள்ளது. மூன்றாவதாக, பத்திரிகை மிகப் பெருந்தொகையாக மக்களிடையே பரவியதனால், அது மிகவும் செல்வாக்கு மிக்கதொரு நிலையமாயிற்று. அரசியல் மன்றத்தைவிட அன்றாயினும், அதனோ டொத்த ஆற்றலை அது பெற்றது. கடைசியாக, பத்திரிகைத்துறை எல்லா நாடுகளிலும் பரந்தது. இதன்பின் அது ஒரு உலக சக்தி ஆயிற்று. எங்கும் அதன் முதல் குறி நிலைபெற்ற அமைப்புக்கு ஆதரவு தருவதே. இந்தியப் பத்திரிகைத்துறை வளர்ச்சி சற்று வேறுபட்டது. 19-ஆம் நூற்றாண்டுவரை பத்திரிகைத் துறை இந்தியாவிலில்லா திருந்தது. அது இங்கே பிரிட்டிஷாரால் நுழைவு பெற்றது. பம்பாயிலும் கல்கத்தாவிலும் அவ்வவ்விடத்துக்குரிய பத்திரிகைகள் நூறு ஆண்டுகட்கு முன் தொடங்கப் பெற்றன. இவை மாகாண ஆட்சியாளர் (ழுடிஎநசnடிச), ஆட்சி முதல்வர் (ஏiஉநசடில) அரசவைகளின் நடவடிக்கைகளையும் பிரிட்டிஷ் அரசியல் பணியாளரின் செய்திகளையும் அறிக்கையிட்டுத் தெரிவித்தன. தாய் மொழிப் பத்திரிகைகள் இன்னும் பிற்பட்டே எழுந்தன. இத் தாய்மொழிப் பத்திரிகைகள் இந்திய மக்களிடையே மட்டுமே பரவின. இந்தியர் ஆட்சியாளர் செய்திகளில் அவர்கள் மிகுதி அக்கறை காட்டுவர் என்று கூறமுடியாது. அத்துடன் மக்கள் பிரிட்டிஷ் ஆட்சியை வெறுத்தார்கள். இந்தியப் பத்திரிகைகள் மக்களின் இவ்வுள்ளார்ந்த உணர்ச்சியின் நிழலாகித் தமது மனச்சான்றுக்கு உருக்கொடுத்தன. அந்த அளவுக்கு அவை அதற்கான விலையையும் கொடுக்கவேண்டி வந்தது. முன்னணி முயற்சி யாளரின் உலைவிலா உழைப்பின் பயனாக அது எஞ்சி நின்றுள்ளது. அத்துடன் அது தேசத்தின் விடுதலைப் போராட்டத்திற்கும் அரும்பணி ஆற்றியுள்ளது. ஆனால் மேனாட்டுப் பத்திரிகைகள் வகையில் பொதுவாக ஏற்பட்ட அதே நிலைமை இன்று இந்தியப் பத்திரிகை உலகையும் கௌவி வருகிறது. தேசமெங்கும் பத்திரிகைகள் செல்வ ஆற்றல்மிக்கவர் கைப்பட்டு முதலாளித்துவ வகுப்பின் கைப்பாவையாய் வருகிறது. ஏற்கெனவே, உழைப்புவகுப்பு இயக்கத்துக்கும் குடியானவரியக்கத் துக்கும் அவை எதிர்ப்புக்காட்டி வருகின்றன. சமதர்மக் குறிக்கோள் பற்றியோ அவை நேர்மையில்கூடத் தவறி விடுகின்றன. சமதர்மம் பேச்சுச் சுதந்திரத்தை மிகவும் விரும்பினாலும், அதனால் முதலாளித்துவம் பத்திரிகைத் துறையில் முழு ஆதிக்கம்பெற விடமுடியாது; மக்களிடையே தப்பெண்ணத்தைப் பரப்பிவரும் அதன் பணியைச் சும்மா விட்டிருக்கவும் முடியாது. பொது மக்கள் நலனைக் கவனிக்கச் சமதர்மப் பத்திரிகைத்துறை ஏற்படவேண்டிய அவசியம் மிகுதி. வினா (80) : ஒரு பத்திரிகைக்குத் தான் விரும்பிய எதையும் அச்சிட்டுவிட முடியுமா? விடை : கட்டாயம் முடியும். அதன் நோக்கங்கள் சமூக விரோதமா யிராதவரை அப்படிச் செய்ய முடியவே செய்யும். வினா (81) : பத்திரிகைகள் சமதர்ம அரசியல் பற்றிக் குறைகூற முடியுமா? விடை : அவர்கள் யாரை வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சமதர்ம அரசியல் உட்படக் குறைகூற உரிமையுண்டு. சமதர்ம அரசியல் உண்மையில் அத்தகைய எதிர்ப்புரைகளை வரவேற்கும். ஏனெனில் திறம்பட்ட செயலாற்றல் ஏற்பட்டுக் கைக்கூலி முதலிய ஊழல்கள் ஒழிந்து முன்னேற்றம் உண்டாவது அவ்வழியில்தான். வினா (82) வகுப்புவாதப் பிரச்சினையைச் சமதர்ம அரசியல் எவ்வாறு தீர்க்கும்? தேசியவாதிகள் கூறும் வாதமாவது, பிரிட்டிஷார் மக்களைப் பிளவுபடுத்திப் பலவீனப்படுத்துவதற்காக வகுப்புவாதத்தை வளர்த்து விட்டனர் என்பதே. சமதர்ம அரசியலுக்கு அதைத் தீர்த்துவைக்க ஏதாவது சிறப்பான திட்டம் இருக்கிறதா? விடை : ஆம். இருக்கிறது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மக்களிடையே பிரிவினை மனப்பான்மையை வளர்த்ததுடன் மட்டுமன்றி இப்போது தேசத்தையே இந்துஸ்தான் என்றும் பாகிஸ்தான் என்றும் பிரிப்பதிலும் வெற்றியடைந்துள்ளது. இங்ஙனம் அது விதைத்த பிரிவினைப் பூசல் அதன் முழுநிறை விளைவையும் தந்து விட்டது. வகுப்புப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தேசப்பிரிவினை ஒரு வழியன்று. அண்மைக்கால நிகழ்ச்சிகள் இதனைத் தெளிவுபடுத்திக் காட்டி விட்டன. ஆகவே, தேசியவாதிகளின் வாதம் தவறானதன்று. ஆயினும் பாகிஸ்தான் தோன்றுவதற்கு இணங்கியதன் மூலம் அவர்கள் தங்கள் குறிக்கோளினின்று பின்னடைந்து சென்று அதன் அழிவுநிறைந்த பயனையும் பெற்றுவிட்டார்கள். ஒரு தேசம் என்பது ஒரு நிலஉடைமைபோலப் பிரிக்கக் கூடியதன்று. அது ஊறு படுத்தக்கூடாத இயற்கையான உயர்நிலை மரபுச் செல்வம். சமதர்ம அரசியல் தேசம் வகுப்புவாத அடிப்படையில் பிரிக்கப்படுவதை ஒருபோதும் ஒப்புக் கொண்டிராது. நேர்மாறாக அது அப்பிரிவினைச் செயலை மட்டும் ஒழிக்கவே பாடுபடும். கொள்கையடிப்படையிலேயே சமதர்மம் எல்லா வகுப்புவாத அமைப்புக்களையும் எதிர்க்க உறுதி கொண்டுள்ளது. ஏனெனில் அது மனித இனத்தின் சமத்துவத்தில் நம்பிக்கை கொண்டுள்ளது. மதங்கள், சாதிகள் ஆகியவற்றில் அதற்கு வேண்டுதல் வேண்டாமை என்பது கிடையாது. வினா (83) : முஸ்லீம் பிரச்சினை ஒரு வகுப்புவாதப் பிரச்சினையா? விடை : கூடிப்போனால் ஒருவேளை அதை முஸ்லீம் சிறுபான்மைப் பிரச்சினை என்று கூறலாம். ஆனால் உண்மையில் அந்தப் பிரச்சினைக்குத் தானும் இடமுண்டா? அரசியல் முறையில் சிறுபான்மை வகுப்பு என்றால் தங்கள் தொகையின் சிறுமை காரணமாகப் பல முட்டுப்பாடுகள் உடைய இனம் என்று பொருள். ஆனால் `சிறுபான்மை’ என்பதாலேயே இன்னல்கள் நேரவேண்டும் என்பதில்லை. முதலாளிகளும் ஒரு சிறுபான்மை யினரே. ஆனால் எந்த அளவு கற்பனையையும் மிகையுரையையும் கலந்தாலும் அவர்கள் இன்னல்கள் அடைபவர் என்று கூறமுடியாது. அதுபோலவேதான் முஸ்லீம்கள் சிறுபான்மை யினர் என்றும் உண்மையில் கூறமுடியாது. அவர்கள் இந்தியாவின் பெரும்பான்மைச் சமூகத்தில் ஒன்றைச் சார்ந்தவர். அவர்கள் தொகை 10 கோடி. அதாவது ஒவ்வொரு நான்கு பேரிலும் ஒருவர் முஸ்லீம். 3,867 பேரில் ஒருவர்தான் பார்ஸி; 64-இல் ஒருவர்தான் கிறிஸ்தவர்; 68-இல் ஒருவர்தான் சீக்கியர். உண்மையிலேயே சிறுபான்மையினரான இவர்களுள் எவரும் முஸ்லீம் வகுப்புவாதிகளைப் போலத் தங்கள் தனித்தன்மையை வற்புறுத்த வில்லை. பிரிட்டிஷ் அதிகாரிகள் அவர்களுக்கு ஆதரவு கொடுத்ததினாலேயே முஸ்லிம் வகுப்புவாதிகள் அவ்வாறு வற்புறுத்தினர். உண்மையில் பிரிட்டிஷார் வருவதுவரை வந்த முஸ்லீம்களும் எந்த வகையான அரசியல் இன்னல்களும் அடைந்தது கிடையாது. அவர்கள் ஆட்சியாளர் களாயிருந்த போது எங்ஙனம் அடைந்திருக்க முடியும்? 1909இல் `மார்லி-மிண்டோ’ சீர்திருத்தத்தின்போது பொதுவான இந்திய சமூகத்திலிருந்து முஸ்லீம் சமூகம் பலவந்தமாய்ப் பிரிக்கப்பட்டு ஒரு தனி அரசியல் மதிப்பு கொடுக்கப்பட்டதுவரை வகுப்புவாதம் இந்தியாவில் தலைகாட்ட வில்லை. அவர்கள் அப்போது தமக்கென ஆட்பேர்கள் தேர்ந்தனுப்பும்படி கோரப்பட்டனர். ஒரு முஸ்லீமுக்கு மொழிதர எண்ணிய ஹிந்து அவன் எத்தனை நல்லவனாயினும் அங்ஙனம் மொழிதரவோ, நேர்மாறாக முஸ்லீம் ஹிந்துக்கு மொழிதரவோ இணக்கமளிக்கப்படவில்லை. இவ் வேற்பாடு உண்மையில் முஸ்லீம்களுக்கு ஒரு குறைபாட்டையே உண்டுபண்ணிற்று. அவர்கள் இயற்கைக்கு மாறாக, நிலையாக ஒரு சிறுபான்மையாக ஆக்கப்பட்டனர். இதன் பலனாக ஹிந்துக்கள் வகுப்புவாதத்துடனோ, தனித்தொகுதி யுடனோ எத்தகைய தொடர்பு மில்லாதவர்களாய் உண்மையில் அவற்றை எதிர்த்தே வந்த போதிலும், முஸ்லீம்கள் மட்டும் இந்துக்களுக்கெதிராக அரசியலில் செயலாற்றும்படி தூண்டப் பட்டனர். இத்தூண்டிலில், முஸ்லீம்கள் விழுவானேன்? தனித்தொகுதிமுறை அன்று சட்டசபையிலுள்ள மக்களைப் பாதிக்கவில்லை. ஏனெனில் அந்நாளில் அவை உண்மை அதிகாரமற்ற பெயரளவான சபைகளாகவே இருந்தன. முஸ்லீம் பொதுமக்களைப் பற்றியவரை தனித்தொகுதி அவர்களைத் தாண்டிச் சென்றதேயன்றித் தீண்டவில்லை. முஸ்லீம் மக்களுக்கு இந்துக்களை விடத் தாராளமான மொழியுரிமைத் தகுதி யெல்லை தரப்பட்டபோதிலும் அவர்களுக்கு மொழிதரும் உரிமைகூட அதனாலும் கிட்டவில்லை. ஆனால் பிரிட்டிஷ் அரசியலார் வகுப்புவாத நச்சு மருந்தை இன்னொரு பக்கத்தில் திறம்படக் குத்திச் செலுத்தினர். ஒவ்வொரு ஆண்டும் நிரப்பப்பட வேண்டும் பதவியிடங்கள் சில (அந்நாட்களில் பலவாகவேயிருந்தன) எழுந்தன; அவற்றுக்கான அமர்வுகளில் திறமையைக் கவனியாது வகுப்புவாரி எண்மானம் புகுத்தப்பட்டது. அதாவது முஸ்லீம்களில் ஒரு வரையறுக்கப் பட்ட தொகையினர் தாங்கள் முஸ்லீம் வகுப்பினர் என்ற காரணத்திற்காகவே அமர்வு பெற்றனர். இங்ஙனம் வகுப்பு வாதத்திற்கு ஒரு கையுறை தரப்பட்டது. இதிலிருந்து கல்வி கற்ற முஸ்லீம்களுக்கு இதனினும் தங்களுக்குச் சாதகமான எண்மானம் வேண்டும் என்ற கூச்சல் கிளப்பும் அவா உண்டாயிற்று. அதன்பின் 1919-இல் ஏற்பட்ட மாண்டேகு செம்ஸ்போர்டுச் சீர்த்திருத்தத்தின்போது இரட்டையாட்சி அதாவது பிரிவினை யாட்சி புகுத்தப்பட்டது. மாகாண அமைச்சர்களுக்குச் சில்லறைப் பதவிகளுக்கு ஆள் அமர்த்தும் உரிமை தரப்பட்டது. அமைச்சர்கள் தங்கள் பதவிகளைக் காத்துக் கொள்ளச் சட்டசபைப்பொது உறுப்பினர்கள் ஆதரவைப் பெறவேண்டியிருந்தது. இந்நிலையில் முஸ்லீம் அமைச்சர் ஒருவர் எவ்வாறு பதவிகோரும் ஒரு முஸ்லீமுக்குச் சலுகை காட்ட முடியும்? அவர் நிலைமை அச்சமயம் யாவரும் இரங்கத்தக்க நிலையன்றோ? தேர்தல்களில் அவர் முஸ்லீம் மொழியாளர்கள் மொழி பெற்று வந்தவர். ஏனெனில் தேர்தல் தனித்தொகுதி முறையில் நடைபெற்றது. அதே சமயம் அமைச்சர் என்ற முறையில் அவர் மற்ற சமூகங்களின் ஆதரவையும் நாடவேண்டியவரா யிருந்தார். ஆகவே முஸ்லீம் சமூகவாதிகள் தங்களுக்குத் தனிச்சலுகைகள் வேண்டுமென்று கூக்குரல் கிளப்பினர். அதாவது மற்றச் சிறுபான்மை வகுப்பினர் சேர்ந்து பெரும்பான்மை வகுப்பினருக்கெதிராகக் கூட்டெதிர்ப் பமைப்பதற்கு வேண்டிய அளவு போதிய பேராண்மை கோரினர். 1933ஆம் ஆண்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் இவ்வுரிமை தரப்பட்டது. இப்போதும் அதன் விளைவு அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாகவே இருந்தது. அது இந்துக்களை அவ்வளவு கோபமூட்டவில்லை. ஆனால் மற்ற சிறுபான்மை யினர்களை அது சீற்றமடையச் செய்தது. முஸ்லீம்களுக்குத் தங்களைக் காட்டிலும் சாதகமான பேரம் கிடைத்துள்ளதென அவர்கள் கண்டனர். அவர்கள் முஸ்லீம்களை எதிர்த்ததுடன் தனித்தொகுதி முறையையும் எதிர்த்தனர். பார்ஸிகள் இந்தியாவில் மிகச்சிறிய சிறுபான்மை வகுப்பினராயிருந்த போதிலும் தனித்தொகுதி கோராமலிருந்து பிறரை விட நன்னிலையிலிருந்தனர். அவர்கள் பிரதிநிதிகள் பொதுத் தொகுதியில் நின்று மொழிகள் பெற்றே சட்டசபைக்குள் நுழைவு பெற்றதோடன்றி அமைச்சரவைப் பதவிகளும் பெற்றனர். மற்ற சிறுபான்மை வகுப்பினரிடையே முஸ்லீம்களுக்கு எதிரான உணர்ச்சி கண்டு முஸ்லீம் வகுப்புவாதிகளுக்குக் கிலி பிடித்துக் கொண்டது. இதனால் அவர்கள் ‘சரிசமநிலை’க் கோரிக்கையை யெழுப்பினர்; அதாவது அவர்கள் இந்துக்களுடன் சரிசமமான ஆட்பேர்கள் வேண்டு மென்று உரிமை கோரினர். இக்கோரிக்கையிலும் ஒரு ‘புதைமுள்’ அடங்கி யிருந்தது. முஸ்லிம்களுக்குச் சரிசமநிலை தரப்பட்டால் மற்ற சிறுபான்மையினருக்கு இன்னும் மிகுதி கசப்பு ஏற்படுவதும் அதன் பயனாக அவர்கள் வேண்டுமென்றே கூட இந்துக்களுடன் சேர்ந்துகொண்டு முஸ்லிம்களின் சாதக நிலைமையை இன்னும் குறைப்பதும் உறுதி. இங்ஙனம் ஒவ்வொரு துறையிலும் முஸ்லிம் வகுப்புவாத நோக்கம் மன முறிவே கண்டது. மக்கள் தொகுதியில் மற்ற வகுப்பினர் நல்லெண்ணத்தையே அவர்கள் இழந்தனர். இச்சூழ்நிலையில் முஸ்லிம் வகுப்புவாதி என்ன செய்வான்? அவன் மிகவும் கற்பனாகாரமான, ஆனால் புதுமைத் திறங்கொண்ட புதிய கருத்தொன்றைத் தோற்றுவித்தான். அவன் தானே தனித்தலைமை யுரிமை பெறத்தக்க பாகிஸ்தான் என்ற தனி முஸ்லீம் நாட்டு கோரிக்கையைக் கொண்டுவந்தான். ஏனெனில் அவன் ஒரே அவா மக்கள் தொகையில் பிறருடன் ஒத்துழைப்பது என்பதன்று; தானே தலைமை நிலை வகிக்க வேண்டுமென்பதே. இப்போது முஸ்லீம் வகுப்புவாதிக்குப் பாகிஸ்தான் கிடைத்துவிட்டது. ஆனால் அதனால் வகுப்புவாதப் பிரச்சினை தீர்ந்து விட்டதா? பாக்கிஸ்தானில் ஒரு முஸ்லீமல்லாத சிறுபான்மையும் இந்தியாவில் ஒரு முஸ்லீம் சிறுபான்மையும் ஏற்பட்டுள்ளன. இவற்றை என் செய்வது? அவர்கள் மனம் நிறைவடைந்துவிடவில்லை. நேர்மாறாக இப்போது அவர்கள் தம் மீது தாமே அச்சங் கொள்கின்றனர். இத்தனை யாலும் ஏற்பட்டுள்ள படிப்பினை யாதெனில், வகுப்புவாதம் செயற்கை யாக உருவாக்கப்பட்ட ஒரு பிரச்சினை; எனவே அதற்குத் திருப்திகரமான முடிவு ஏற்பட முடியாது என்பதே. வினா (84) : அது தீர்க்க முடியாத பிரச்சினையானால் நாம்அதுபற்றி என்ன செய்வது? விடை : ஒரு ஆளுக்கு மூளைக்கோளாறு ஏற்பட்டால் என்ன செய்கிறோம்? அவன் மருட்சியை அப்படியே உண்மையாகக் கொண்டு அதன்மீதா செயலாற்றுகிறோம்! முதலில் அவன் மருட்சியை அகற்ற முயல்கிறோம். அது முடியாவிட்டால் அவனைப் பைத்தியக்காரர் மருத்துவ விடுதிக்கு அனுப்பி வைக்கிறோம். அது போலவே இப்போது வகுப்பு வாதத்தைத் தர்க்கமிட்டுச் சரிசெய்ய முடியாது என்று கண்டு கொண்டோம். சமதர்ம அரசியல் இதுவகையில் செய்யத்தகும் ஒரே சிகிச்சை முறை வகுப்புவாதத்தைச் சட்டப்படி தண்டிக்கப்படும் குற்றமாக்கிவிடுவதே. வினா (85) ; வகுப்புவாத வேற்றுமை மனப்பான்மை நம்மிடம் மட்டுமீறி வேரூன்றியிருப்பதால் அதனை வேரோடு அகற்றப் பல தலைமுறைகள் ஆகுமென்று நீங்கள் கருதவில்லையா? விடை : வகுப்புவாதம் இந்தியாவில் இருந்து வருகிறது. அந்நஞ்சு மிக ஆழமாக வேரூன்றிவிட்டது என்பதும் உண்மையே. ஆயினும் அது பெரும்பான்மையும் ஒரு வகுப்புச் சார்பான மருட்சி மனப்பான்மையே. எப்படியானாலும் பிரிவினை மனப்பான்மையும் பண்பாட்டிலேயே ஊறிப்போனது என்று கூறுவது மிகையுரையேயாகும். வகுப்பு வாதத்தை வரவேற்காமலே நடைபெற்று வரும் பல நிலையங்கள், கட்சிகள், அமைப்புகள் முதலியவை தேசத்திலுள்ளன. அவை வலிவுவாய்ந்தவையாகவும் வெற்றிகரமாகவும் அமைதியாகவுமே நடைபெற்று வருகின்றன. தொழிற்சங்க இயக்கம், குடியானவர் இயக்கம்., நம் பல்கலைக் கழகங்கள், நம் வழக்கறிஞர் அவைகள், மருத்துவ வல்லுநர் சங்கங்கள், வணிகர் மண்டலங்கள் ஆகியவை யாவுமே வகுப்புவாதத் தொடர்பற்றவை. ஆயினும் பிரிட்டிஷ் ஆட்சியில் வகுப்புவாதத்திற்குத் தனிப்பட்ட உயர் சலுகைகள் தரப்பட்டன. இதன் பயனாக வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியும் அதனால் சீர்கேடடைந்தது. அச்சலுகையை அகற்றி விடுங்கள்; வகுப்புவாதப் பிரச்சினையும் தானே கரைந்து போகும். ஏற்கனவே மாறுபட்டுவரும் பொருளியல் வாழ்விடையே, வகுப்பு வாதம் ஒரு சாபக்கேடாயிருந்து வருகிறது. அது முக்கியமாகப் படித்த மக்களிடையே தான் மிகுதியாயுள்ளது என்றும், பட்டம் பதவிகளுக்கான போட்டிக்காகவே அது பரப்பப்படுகிறது என்றும் காணலாம். இந்தியாவின் தொழில் முன்னேற்றமடைந்தவுடன், கல்வி கற்றவரை முற்றிலும் ஈடுபடுத்திக் கொள்ள ஒரு புதிய துறை ஏற்பட்டுவிடும். மேலும் தொழில் துறையில் முதலாளித்துவத்தின் கீழேகூட வகுப்பு வாதத்தின் மீது தாக்குதல் காட்டப்படுகிறது. ஏனெனில் தொழிலின் தேவை திறமையே யன்றி, ஒரு கொள்கைப்பற்று அன்று. வகுப்புவாதத்தை ஒரு நாளில் வேருடன் களைந்தெறிய முடியாத தாயினும் கூடிய அளவில் அது ஒரு தலைமுறைக்குள் அகற்றப்பட முடியும். வினா (86) : அந்த நிலை ஏற்படும் வரை நமக்குள் வகுப்பு ஒற்றுமை வேண்டும் என்று நீங்கள் கருதவில்லையா? விடை : ஒற்றுமை இருக்க வேண்டியதுதான். ஆனால் அது வகுப்பு ஒற்றுமையாய் இருக்கக்கூடாது. ஏனெனில் வகுப்பு ஒற்றுமை என்ற கருத்தே நம் சமூகத்தில் வகுப்புகள் என்ற பிரிவினைகள் இருந்து வருகின்றன என்று ஒத்துக்கொள்வதாகும். சமதர்ம இயக்கம் இத்தகைய பிரிவுகளை மறுப்பதையே குறியாகக் கொண்டது. அதனிடமாக அது புதியதோர் வகுப்பு வேறுபாடற்ற, பிரிவினையற்ற சமூக அமைப்பைக் கோருகிறது. அத்துடன் புதியதொரு பற்றுக்குரிய சாதனத்தை அதாவது தேசத்தையும் முடிவாக மனித வகுப்பையும் அது மேற்கொள்ளு கிறது. மக்கள் தம் வாழ்வின் அச்சாக இயங்கும் இவ்விரு அடிப்படைப் பண்புகளையும் உணரும் படியாக அவர்கள் அறிவு விழிப்படையச் செய்ய வேண்டும். அவற்றுள் முதலாவதாகிய, தேசம் நம் வாழ்க்கைப் பிழைப்புக்கு வகை செய்கிறது. இரண்டாவதாகிய உலகம் மனித இனத்தை முழுவதும் இணைக்கிறது. ஒரே இனத்தைச் சேர்ந்த மனித வகுப்பிடையே வேற்றுமைகள் இருக்க முடியாது. சமதர்மத்தின் உயிர்நிலைத் தத்துவங்கள் சர்வ தேசியமும் பரஸ்பர ஒத்துழைப்புமே. வினா (87) : இந்திய மன்னர் நாடுகள் பற்றிச் சமதர்மவாதிகள் கருத்து யாது? விடை : சமதர்மம் மனித வகுப்பின் சமத்துவப் பிரச்சாரம் செய்வது. அப்படியிருக்க எந்த உருவிலும் சரி, வடிவிலும் சரி, மன்னராட்சியை எப்படி ஏற்க முடியும்? ஒரு வகையில் மன்னரிளங்கோக்களை விட முதலாளி கூட ஏற்கத் தக்கவனாவான். ஏனெனில் முதலாளியின் செல்வம் ஓரளவு அவன் அறிவுடன் அதைப் பயன்படுத்துவதனால் வருவது. மேலும் இன்றைய முதலாளி நாளைய இரவலன் ஆகலாம். மன்னர் இளங்கோக்கள் அங்ஙனம் ஆவதில்லை. அவன் செல்வம் வழிவழி யுரிமைப்படி வருவதாகும். சமதர்மம் வகுப்பு வேற்றுமைகளையும், வழி வழி வரும் சிறப்புரிமைகளையும் ஒழித்துக்கட்ட விரும்புகிறது. ஆகவே சமதர்மம் எப்போதும் இந்திய மன்னர் நாடுகள் தனி வாழ்வை எதிர்க்கவே செய்யும். வினா (88) : “இணைப்புச் சட்டத்”தின்படி மன்னர்களின் அதிகாரத்தில் பெரும்பகுதியும் மறைந்துகொண்டே வருவதால் நாளடை வில் அவர்கள் வெறும் பெயரளவிலேதான் மன்னர்களாயிருப்பார்கள்? விடை : இது தவறான கருத்து ஆகும். இணைப்புச் சட்டத்தின்கீழ் மன்னர் அதிகாரங்கள் குறைக்கப்படவில்லை. நேர்மாறாக அவை பெருக்கப்பட்டுள்ளன. அவர்கள் விரும்பினால் அவர்கள் தாங்கள் சுதந்திர உரிமையுடையவர்கள் என்று அறிவித்துவிட முடியும். ஆயினும் ஏனைய இந்தியப் பகுதிகளுடன் ஒத்துழைக்காவிட்டால் தங்கள் வாழ்வு முற்றுப் பெறும் என்று அவர்கள் உணர்ந்துள்ளார்கள். அவர்கள் பிரிட்டிஷ் சக்தியை இப்போது நம்ப முடியாது. நுண்ணிய அறிவுத் திறமையுடையவ ராதலால்தான் இனிப் பிழைத்து வாழ்வது முதலாளித்துவத்துடன் சமரசம் செய்வதைப் பொறுத்தது என்பதையும் அவர்கள் அறிகின்றனர். தற்போது இவர்கள் செய்து வருவது இச்சமரசம்தான். முதலாளித்துவ இந்தியாவும் மன்னர் இந்தியாவும் மக்கள் குடியாட்சி யுரிமைக்கெதிரான பொது முன்னணி அமைக்கக் கூடும் என்ற இடையூற்றுக்கு இன்னும் இடமுண்டு. வினா (89) : மன்னர் அரசியல்கள் தங்கள் ஆட்சியைக் குடியாட்சி யியலாக்கினால், அது போதாதா? விடை : குடியாட்சியியலாக்குவது என்று நீங்கள் கூறுவதன் பொருளென்னவோ? மன்னராட்சியின் குடிகளுக்கு பொறுப் புரிமை தரப்படுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களே அமைச்சர்களைத் தேர்ந்தெடுக்க இணக்க மளிக்கப்படுவதும் குடியாட்சி யென்று நீங்கள் கொண்டால், உங்கள் விளக்கம் தவறானதென நான் எச்சரிக்க வேண்டிய தாகும். குடியாட்சி என்பது மக்கள் கையிலேயே மாறுதலற்ற நிலையில் முழு அதிகாரமும் ஆற்றலும் இருப்பது என்பதாகும். ஒரு குடியாட்சியில் அக்குடியாட்சிக்கு மேம்பட்டு அதனிடையே முடியாட்சி போன்ற ஒரு ஆளோ ஒரு நிலையமோ இருக்க முடியாது. அது குடியாட்சிக்கு நேர்மாறுபட்ட தன்மையாகவே இருக்கும். வினா (90) : ஆனால் பிரிட்டனில் ஒரு முடியாட்சியிருக்கிறதே? விடை : பிரிட்டன் ஒரு குடியாட்சி நாடென்று யார் சொன் னார்கள்? அது ஒரு ஏகாதிபத்தியம். வினா (91) : மன்னர் நாடுகளின் ஒழிப்பால் இந்தியா எவ்வகை களில் நலமடையும்? விடை : முதன் முதலாக அது தேசத்தை ஒன்றுபடுத்தும். மன்னர் நாடுகளை ஒழிப்பது அவற்றுக்கு வெளியேயுள்ள இந்தியருக்கு மட்டுமன்றி அம்மன்னர் நாட்டுக் குடிகளுக்கும் நலமானதே. தேசமக்கள் ஒரே இணைப்பில் இணைக்கப்பட்டு, ஒரே அரசியல் பெற்று ஒரே மாதிரி அவாக்கள், ஒரே தனிமுறை அரசியலமைப்பு ஆகியவற்றை உடையரா யிருப்பர். பிரிட்டிஷார் நம்மை நில இயல்வாரியாகவும் மக்கள் குழு வாரியாகவும் மிக நெடுங்காலமாகப் பிரித்து வைத்திருந்தார்கள். சமதர்மிகள் முயற்சி சமூக முறையிலும் நில இயல் முறையிலும் நம் நாட்டிலுள்ள பிரிவினைச் சுவர்களை யெல்லாம் தகர்த்தெறிந்து ஒற்றுமையை வலிவுபடுத்துவதாயிருக்கும். இந்தியா கட்டமைப் பற்ற பல பகுதிகளின் கூட்டாயிராமல் ஒரு நாடாக வாழ முடியும். மன்னர்களை வைத்துக்கொண்டு மக்கள் என்ன நலன்களை அடையப் போகின்றனர்? அரசியல் என்பது உயிரினங்களின் பாதுகாப்புக் கழகம் போன்ற ஒரு கழகமல்லவே! ஒரு அரசியலில் முதல் நிலையான கடமை மக்கள் நலனைக் கவனிப்பதும், அவர்கள் முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் ஊக்க மளிப்பதுமே. ஒட்டுயிர் போன்றதென்று தூற்றப்படுவதற் குரியதும் மக்களுக்குப் பலவீனமும் ஆபத்தும் உண்டாவதற்கிட மானதுமான எந்த மக்கட் பிரிவும், வகுப்பும் ஒழிக்கப்பட்டே யாகவேண்டும். அறிவமைதி யற்ற, ஆண்மையற்ற, பலவிடங்களில் தெளிவாக வரம்புமீறிய ஊதாரித்தனம் வாய்ந்த ஒழுக்க நிலையுடைய இவ்வகுப்பை மக்கள் மீது ஆட்சியாளராகச் சுமத்துவதென்பது அவர்களை அவமதிப்பதாகும். சமதர்ம அரசியல் மக்களுக்கு உழைப்பதாக, அவர்கள் நலன்களைப் பாதுகாப்பதாக உறுதி கொண்டுள்ளது; இதை நிறைவேற்றுவதில் அது சுரண்டி வாழும் தனி மனிதர்களையும் வகுப்புகளையும் ஒழித்தே தீரும். இந்தியாவின் மன்னர்கள் தொடர்ந்து வாழ்வு பெறுவதற்குரிய வரலாற்றுச் சார்பான நியாயமோ நடைமுறை அனுபவச்சார்பான நியாயமோ கிடையாது. மன்னரும் பேரரசரும் உலகமெங்கும் விரைவாக மறைந்து வருகின்றனர்; இது உலகில் புதிய ஊழி பிறப்பதின் அறிகுறியாகும். இந்தியாவில் மட்டும் அவர்கள் நீடித்து வாழ இணக்கமளிப்பதேன்? வினா (92) : சமதர்ம அரசியல் எப்படி நடத்தப்படும்? யார் நடத்துவர்? அது ஒரு சர்வாதிகாரியின் கீழ் இருக்குமா? விடை : மக்கள் தங்கள் ஆட்பேர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் நாட்டை ஆள்வர் என்று கூறும்போதே அம்மறுமொழி குடியாட்சிச் சார்பான திருப்திகரமான மறுமொழியாகவே இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஆயினும் அது தெளிவற்ற விளக்கமற்ற மறுமொழி என்பதை நான் ஓரளவு காண்கிறேன். தேர்தல்கள் மட்டுமே ஒரு குடியாட்சியின் மெய்ம்மைக்கும் ஆற்றலுக்கும், உத்தரவாதமாக மாட்டாது தான். நாஜியரும் தேர்தல் நடத்தினர்; அது ஒரு கேலிக்கூத்து என்பதை யாவரும் உணர்வர். மக்கட் சார்பான அமைச்சரவையாட்சி எப்போதும் குடியாட்சியாய் இருந்துதீர வேண்டும் என்பதில்லை. இவற்றைவிட அடிப்படையானதொரு கேள்வி இத்தேர்தல்கள் நடத்தப்படுவதன் நோக்கம் யாது, அதனால் மக்கள் என்ன நலமடைகின்றனர் என்பதே. நாம் அனைவரும் ஒரு அரசியலின் உறுப்பினர்கள். இவ்வரசியலை ஆதரிப்பதன் மூலம் ஒரு குடியுரிமையாளன் அதனிடம் உள்ள தன் கடப்பாட்டை நிறைவேற்றுகிறான். ஆனால் அரசியலுக்கு உரியவனாதலால் குடியுரிமைகள் என்ற அடிப்படை உரிமைகளை நுகர்கிறான். நம் கேள்வியின் மறுமொழி இம்முக்கியமான செய்தியிலேயே உள்ளது. முதலாளித்துவ அரசியலில் நமக்கு எப்போதும் உரியதாகச் சில பிறப்புரிமைகள் தரப்படினும் நாம் எவ்வுரிமையையும் நுகருகிறோம் என்பதில்லை. உரிமைக்கும் சிறப்புரிமைக்கும் உள்ள வேறுபாடு மிகுதி. பின்னது தயவு நாடிச் செய்யப்படுவது; அது பின்வாங்கிக் கொள்ளக் கூடிய ஒரு சலுகை மட்டுமே. ஆனால் உரிமை அடிப்படையானது, மாற்ற முடியாதது. இந்தியாவைப் பாருங்கள்; நமக்கு எத்தனையோ அரசியலமைப்புகள், சட்டமன்றங்கள் ஆகியவற்றுடன் குடியாட்சிக்குரிய அடையாளச் சின்னங்கள் பலவும் தரப்பட்டுள்ளன. ஆனால் முடிவான நிலையில் ஆட்சி முதல்வரின் சட்டநிறுத்த உரிமை மூலம் அதிகாரம் அரசியலார் கையிலேயே இருக்கும்படி செய்யப்பட்டது. தேர்ந்தெடுக்கப் பட்ட ஆட்பேர்களின் விருப்பங்களுக்கு நேரெதிராக எதையும் அவர்கள் மாற்றியமைக்க முடியும். இது மட்டுமன்று. அரசியலமைப்பின்மூலம் தரப்பட்டுள்ள உரிமைகள் யாவுமே ஒத்திப்போடலாகும். அப்படியானால் மொழியுரிமைக்கு என்னதான் பொருள்! ஆகவே குடியாட்சியின் மெய்யான உரைகள் தேர்தல்களும், மக்கட் சார்பான அமைச்சரவைகளும் அல்ல; குடிமக்களால் நுகரப்படும் அடிப்படை யுரிமைகளே. அடிப்படையுரிமை வடிவில் சமதர்ம அரசியல் உத்தரவாதமளிக்கும் முதல் உரிமை, சமூகத்தின் உறுப்பினராகப் பாதுகாப்புடனும் அமைதியுடனும் வாழும் உரிமையாகும். இது பிரிட்டீஷ் அரசியலமைப்பில் கூட உத்தரவாத மளிக்கப்பட வில்லை. அங்கே குடியுரிமையாளன் மன்னனின் குடியாள் என்றே கருதப்படுகிறான். அவன் மீது அல்லது அவள் மீது வாழ்வு மாள்வுரிமை மன்னனுக்கு உண்டு. இரண்டாவதாக, வாழும் உரிமையுடன் உடலுழைப்பு அல்லது அறிவுழைப்பு மூலம் வாழ்க்கை ஊதியம் பெறும் உரிமையில்லா விட்டால் வாழும் உரிமை என்பது பொருளற்ற ஒன்றாகும். பிழைப்புக்கான ஊதியம் ஈட்டும் உரிமை பெற ஒருவன் உழைத்தல் வேண்டும். ஈட்டாத வருவாய் மீது வாழும் வாழ்வுக்கு இதனால் இடமில்லை யென்றாகிறது. அதாவது முதலாளித்துவ சமூகத்தின் அடிப்படையான வழிமரபுரிமை, சுரண்டல் ஆகியவை இருக்க முடியாது. மூன்றாவதாக: உடல் நலநிலையுடன் வாழும் உரிமையும் எல்லா வகை சமூக வசதிகளையும் நுகரும் உரிமையும் வேண்டும். குடியுரிமையாளன் உடல்நலம் இங்ஙனமாகத் தனிமனிதன் காரியமாயிராமல் அரசியல் காரியமாய்விடுகிறது. நான்காவது: நோய், முதுமையடைந்தவர்கள் ஆகிய இரு துறையாளர் நல உதவிகள் மட்டிலும் தொடர்ந்து நிலை பேறுடையவை யாயிருக்கும். ஐந்தாவது: எல்லாவகைப்பட்ட கல்விகளும் இலவசமா யிருக்கும்; தனி மனிதன் முன்னேற்றம் தகுதியடிப்படையானதா யிருக்கும். ஆறாவது: சமூகத்தின் நன்னிலையுடன் முரண்படாதவரை, பண்பாட்டுச் சார்பிலும், உடல் சார்பிலும், அரசியல் சார்பிலும் குடியுரிமையாளனின் வளர்ச்சிக்கு முழு வாய்ப்பு இருக்கும். ஏழாவது: சமூகத்தின் உறுப்பினன் என்ற முறையில் குடியுரிமையாளன் எல்லா அரசியலின் உடைமைகளுக்கும் சமூகத்தின் உடைமைகளுக்கும் உரிய கூட்டுடைமையாள னாவான் (இது தனிப்பட்ட உபயோகத்திற்கோ அல்லது குடும்ப உபயோகத்திற்கோ உரிய உடைமையிலிருந்து மாறுபட்டது). அத்துடன் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பேராள் மூலம் அவ்வுடைமையின் நடைமுறை ஆட்சியில் அவன் தன் முழுப்பங் குரிமையும் உடையவனாவான். அப்பேராள் தகுதியற்றவ னானால் அவனைப் பின்வாங்கிக் கொள்ளும் உரிமையும் அவனுக்கு உண்டு. கடைசியாக நிலத்தின் மீதும் கடலின் மீதும் வானத்தின் மீதும் உள்ள நாட்டின் எல்லாச் செல்வ உடைமைகளும் சமூக முறையிலேயே உடைமையாகிக் குடியுரிமையாளரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பேராட்கள் மூலமே நடைமுறையில் ஆட்சி செய்யப்படும். சமதர்ம அரசியலில் குடியாண்மைக்குரிய அடிப்படை உரிமைகள் இவை. அரசியல் இவ்வுரிமைகளின் பொறுப் பாளியாய் இருந்து அவை சரிவர நிறைவேற்றப்படுகின்றனவா என்று கவனிக்கும். இவ்வரசியலின் செயல்துறைகள் எவையாயிருக்கும், அவற்றின் கடமைகள் யாவை என்பன போன்ற செய்திகள் அவ்வவ்விடத்தின் நிலைமைக்கேற்ப முடிவு செய்யப்பட வேண்டியவை. இச்செயல் துறைகள் அரசியலின் முடிவுகளை நடைமுறைப்படுத்தும்; இவ்வரசியலும் மக்கள் பேராட்கள் அடங்கிய தனியுயர் சட்டமன்றத்தின் முடிவுகளை நிறை வேற்றும். சட்டமன்றங்களின் தேர்தல்களும் வசதிக்குத் தகுந்தவையா யிருக்கும். அவை நிலப்பரப்பு அடிப்படையிலோ மக்கள் தொகை யடிப்படையிலோ அமைதல் கூடும். தனியுயர் சட்டமன்றத்துக்கு நேரடிப் பேராண்மையும் இருக்கலாம்; அல்லது அவ்வவ்விடத்தின் நடைமுறைகளுக்காக அமைக்கப்பட்ட மன்றங்கள் வாயிலான சுற்றுமுறைப் பேராண்மையாகவும் இருக்கலாம். இச்சட்ட மன்றங்கள் மக்கள் கருத்தை நிழற்படுத்திக் காட்ட வேண்டும் என்பதே அடிப்படையான தத்துவம். இங்ஙனம் அரசியலை நடத்தும் மக்கள் நாட்டுமக்களே யாவர். மக்கள் அரசியலை நடாத்தவும், அரசியல் மக்களுக்கு உதவுவதையே மூல தத்துவமாகக் கொள்ளவும் செய்கின்ற இடத்தில் சர்வாதிகாரியின் பேச்சு எங்கிருந்து வரும்? வினா (93) : இயந்திர உழைப்பு வகுப்பின் சர்வாதிகாரத்தைப் பற்றிய செய்தி யாது? சமதர்மம் அது பற்றிப் பிரச்சாரம் செய்வதில்லையா? விடை : கோட்பாட்டுக் குறிக்கோள் முறையிலன்று அத்தகைய பிரச்சாரம் செய்வது. முதலாளித்துவ வீழ்ச்சிக்கும் சமதர்ம அரசியல் முழுநிறைவுடன் தொடங்கப்படுவதற்கும் இடைப்பட்ட இடையீட்டு மாற்றக் காலத்தில் எங்கும் குழப்ப நிலைமை இருக்கக்கூடுமாதலால், ஒரு வலிமைவாய்ந்த ஆட்சி விலக்க முடியாத அவசியமாகிறது. போர்க் காலத்தில் எங்குமே வலிமையான ஆட்சி தென்படவே செய்கிறது. இச்சமயங்களில் சில வசதிகள் கட்டுப்படுத்தப்படுவதுடன் சமூக வாழ்வில் இடைஞ்சலேற்படும்படி நேருகிறது. எடுத்துக்காட்டு முறையாக, கட்டாயப் படைத்திரட்டைப் பாருங்கள். படையில் சேர்வது என்பதன் பொருள் கொலை செய்பவர் ஆதல் என்பதே. யாரும் இதனை விரும்புவ தில்லை. மேலும் படைவீரன் வாழ்வு மிகவும் கடுமை வாய்ந்தது; அதில் வரும் ஊதியமும் மிகக் குறைவு. மக்கள் விருப்பத்திற்கு விடுவதானால் பெரும்பாலோர் அத்துறையில் சேரவே மாட்டார்கள். ஆயினும் போர்கள் செய்தேயாக வேண்டியவையாயுள்ளன. ஆகவே மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கட்டாயப்படுத்தி அரசியல் அவர்களைச் சேர்க்க வேண்டியதாகிறது. இதுபோலவே முதலாளித்துவ ஆட்சி முடிவுற்றபின், (இதனையே நாம் புரட்சி என்கிறோம்) சமூக வாழ்வும் அரசியலும் புதிதாக அமைக்கப்பட வேண்டும். இந்த அமைதியற்ற நிலையில் வலிமை வாய்ந்த ஆட்சி அவசியமாகிறது? இதை யார் தொடங்கி வைப்பது? ஒரு தனி மனிதனா? இது நினைக்கப்படாத ஒன்று. மக்களா? அப்படியானால் எந்த மக்கள்? நாட்டு மக்கள் என்பவர்கள் நாம் மேலே கண்டபடி எத்தனையோ பல வகுப்பினர் சேர்ந்தவர்கள். புரட்சிக் காலத்தில் முதலாளித்துவ வகுப்பு அகற்றப்படுகிறது. அதன்பின் இருக்கும் வகுப்புக்கள் குடியானவர் வகுப்பு, உழைப்பு வகுப்பு, அறிவு வகுப்பு முதலிய பல்வேறு வகுப்புக்களே. இவ்வகுப்புக்களின் போராட்கள் புரட்சிக் காலத்தில் ஒன்றுபட்டு ஆட்சிக்கு வழிகாட்ட வேண்டும். ஆனால் இன்றைய சமூகம் முக்கியமாகத் தொழில் சார்பானது. ஆகவே நேர்மையாகத் தொழில் முன்னேற்றத்தைப் பாதுகாத்து முனைந்து செல்லும் வகுப்பு இயந்திர உழைப்பு வகுப்புத்தான். எனவேதான் இயந்திர உழைப்பு வகுப்பு இம்மாறுபாட்டுக் காலத்தில் அரசியல் காரியங்களுக்குப் பொறுப்பு வகித்துச் செல்லும் தகுதியுடைய வகுப்பு ஆகிறது. அத்துடன் ஆட்சி யொழிந்த வகுப்பின் சக்தியில் கடைசிக் கூற்றின் தடத்தையும் ஒழிப்பதற்காகக் கண்டிப்பான ஆட்சியை அவர்கள் மேற்கொள்ள வேண்டியிருப்பதனால் அவ் ஆட்சியை சர்வாதிகார ஆட்சி என்று கூறவேண்டியதாயுள்ளது. ஆயினும் ஒரு தனிமனிதனன்றி ஒரு வகுப்பினால் நடத்தப்படுவ தாயினும் சர்வாதிகாரம் விரும்பத்தக்கதன்று. மட்டூமீறி நீண்டகாலம் அது தொடர்ந்தால் ஆட்சியாளர் தங்களைச் சர்வ வல்லமையுடையவர் களென்றே கருதிக் கொள்ளக்கூடும். இது மக்கள் மனப்பண்புக்குக் கேடானதும் இடர்நிறைந்ததும் ஆகும். ஏனெனில் மக்கள் தம் பகுத்தறிவில் ஊன்றுவதில் தவறுவதுடன் செயல்துறையில் அக்கறையும் இல்லாது போவர். இவ்வகைச் சர்வாதிகாரம் ஆபத்தான அரசியல் முறை; அதனைக் கூடியவரை இல்லாமற் செய்ய வேண்டியதே. இது முடியாத இடத்தில் அது கட்டுப்பாட்டுக் குட்படவாவது செய்ய வேண்டும் என்றும் மிக நீடிக்கும்படி விடக்கூடாது. கூடிப்போனால் இயந்திர உழைப்புச் சர்வாதிகாரம் சில நிலைமைகளில் விலக்க முடியாத ஒரு தீமை என்று மட்டுமே கூறலாம். வினா (94) : ஒரு கட்சி சர்வாதிகாரம் எத்தகையது? அது விரும்பத்தக்கதா? விடை : சர்வாதிகாரம் என்றும் விரும்பத்தக்கதல்ல, ஆனால் அதை ஏற்கத் தகுந்ததாகக் கூறும் முதலாளித்துவத்தின் கீழாயினும் சரி, சமதர்மத்தின் கீழாயினும் சரி, ஒரு கட்சி என்பது மக்களின் செயல்துறை அவாவை நிழற்படுத்திக் காட்டுகிறது. நாம் மேற்குறிப்பிட்ட மாதிரியான சர்வாதிகாரத்திற்குக் குடியாட்சி முறையில் ஒரு கட்சிதான் உத்தரவாத மளிக்க முடியும். இங்கும் கட்சி என்பது ஒரு நிலவரமான அமைப்பு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. அது ஒரு வகுப்பு அல்லது வகுப்புக்களுக்குப் பணியாற்றுவதற்காக அமைந்துள்ளது. ஆகவே “வகுப்புக்கள்” அதாவது சமூகத்திலுள்ள உறுப்பினர்களிடையே ஏற்படும் உயர்வு தாழ்வுடைய குழுக்கள் அகற்றப்பட்டபின் ஒரு கட்சி இருக்க வேண்டிய தேவை முடிவுற்று விடுகிறது. வருங்காலத் தலைவர்கட்கு முதற் பதிப்பு - 1952 இந்நூல் 2002இல் தமிழ்மண் பதிப்பகம், சென்னை - 17. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. 1. விளையாட்டு விழுச்செல்வருக்கு விளையாட்டில் ஆர்வமுடைய விழுத்தகு செல்வ! நீ விளையாட்டில் ஆர்வங்கொண்டுள்ளாய். உன் நாட்டின் நற்பண்புகள் பலவற்றுக்கும் நல்ல விளையாட்டுத்தான் காரணம் என்று நீயும் பிறரும் கூறுவதை நானும் ஒத்துக்கொள்கிறேன். விளையாட்டு வீண் நேரப் போக்கு என்றோ, அது சிறுவர்க்கும் வேலையற்றவர்க்கும் மட்டும் உரியது என்றோ நானும் கொள்ள வில்லை. உன் நாடும் பொதுவாக நாகரிக நாடுகள் எதுவுங் கொள்ளவில்லை. அந்த மட்டும் மகிழ்ச்சியே. ஆனால் இந்நாட்டின் இக்காலக் குறைபாடு யாதெனில் விளையாட்டை வரம்பின்றிப் புகழ்வதும்; விளையாட்டில் நல் விளையாட்டு, பயனில் விளையாட்டு, நல் விளையாட்டுமுறை, தீயவிளையாட்டு முறை ஆகியவற்றின் வேறுபாட்டைப் போதுமான அளவு வற்புறுத்தாததுமே. விளையாட்டுப் பற்றிய மிகைநவிற்சியுரை ஒன்று உண்டு. பிரிட்டன் வாட்டர்லூச் சண்டையை வென்றது ஈட்டன் விளையாட்டு வெளியில்தான் என்று வெற்றி வீரப் படைத்தலைவராகிய வில்லிங்டன் கோமான் குறிப்பிட்டார். இதில் விளையாட்டின் உயர் பண்பு பற்றிய விளக்கம் டங்கியுள்ளது என்பது உண்மையே. விளையாட்டு வெளியில் வளர்த்தக் கூட்டு முயற்சிப் பண்பும் கடமையுணர்ச்சியும் கட்டுப்பாடுமே போர் வெற்றிக்குப் பெரிதும் காரணமாயிருந்தன என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. ஆனால் எல்லா மெய்யுரைகளும் போல இதுவும் சொல்லளவில் மிகையுரையே யாகும். விளையாட்டு வெளியில் இப் பண்புகள் தோன்றிப் பண்பட்டு வளம் ஆகின்றனவாயினும் அவை அங்கே மட்டும் வளமாவன அல்ல. இரண்டாவது அவை விளையாட்டு வகையையும் விளையாடுவோர் தன்மையையும் கட்டுப்பாட்டை யுணரும் தன்மையையும் பொறுத்தவை. விளையாட்டுக்களில் சோம்பேறி விளையாட்டுக்களும் உண்டு, நேரப் போக்கு விளையாட்டுக்களும் உண்டு. வாழ்க்கைப் பண்புகளை வளர்க்கும் விளையாட்டுக்களும் உண்டு. பார்வைக்கு விளையாட்டுப்போலத் தோன்றும் நச்சுப் பழக்கங்கள் கூட உண்டு. வீட்டுக்குள் விளையாடும் விளையாட்டுக்களில் சிறு குழந்தைகளின் விளையாட்டுக்களே நேரப்போக்கு விளையாட்டுக்கள். அவை மனத்திற்கு எழுச்சியும் உடலுக்குச் சுறுசுறுப்பும், தோழர்களிடம் அன்புப் போட்டியும், அளவளாவும் பண்பும், விட்டுக் கொடுப்புப் பண்பும் வளர உதவுகின்றன. ஆனால் இதே விளையாட்டுக்களை இளைஞரும், மங்கையரும், முதியோரும் ஆடினால் அது சோம்பேறி விளையாட்டாகி விடுகிறது. விளையாட்டு வெளிகளில் ஆடும் விளையாட்டுக்களே இளைஞருக்கும் மங்கையருக்கும் தூயகாற்று, ஓட்டசாட்டம், உடற்பயிற்சி, மன எழுச்சி, சமூகக் கூட்டுறவு, அன்புணர்ச்சி, விட்டுக்கொடுப்பு மனப்பான்மை ஆகியவற்றை வளர்க்கும் தன்மை உடையவை. இவ்வெல்லா விளையாட்டுக்களிலுமே விளையாட்டின் நோக்கம் விளையாட்டாயிருந்தால் மட்டுமே அது விளையாட்டின் பண்புக்குரியதாயிருக்கும். பொருள் வருவாயை நோக்கி விளையாடப்படும் விளையாட்டுக்களும், பொருள் வருவாயுடைய பிற நேரப்போக்கு முயற்சிகளும் விளையாட்டில் சேரமாட்டா, சூதாட்டத்தில் சேர்பவை என்பதை வலியுறுத்தியே ஆகவேண்டும். மேலீடாகப் பார்ப்பவருக்கு இதில் வலியுறுத்துவதற்கு என்ன இருக்கிறது, யாரும் ஒப்புக்கொள்ளக் கூடிய உண்மை தானே என்று தோற்றும். யாரும் ஒப்புக்கொண்டால்கூட, யாரும் அப்படி நடக்கிறார்கள் என்பதில்லை, நடந்தால் அவ்வகை விளையாட்டுக்கள் மனித சமூகத்தில் இடம் பெற்றிருக்கவே மாட்டா. விளையாட்டுக்கள் என்று அவை கூறப்படவும் மாட்டா. ஆகவே வற்புறுத்தலின் நோக்கம் இங்கே அறிவுறுத்தும் முறையில் மட்டுமன்று, செயலுறுத்தும் முறையிலும் ஆகும். சீட்டாட்டம், கோலியாட்டம், வட்டாட்டம், காசாட்டம் ஆகிய யாவுமே சோம்பேறியாட்டங்கள். வேலையில்லாத நேரத்தில் இவற்றை ஆடினால் என்ன என்று இத்துறை அடியார்கள் வழக்குப் பேசக்கூடும். ஆனால் வேலையில்லாத நேரத்தில் ஆடும் ஆட்டம் மக்களிடையே வேலைக்குத் தக்க சூழ்நிலையை வளர்க்க வேண்டும். இவையோ திரும்ப வேலையில்நாட்டமே ஏற்படாமல் செய்பவை. உழைப்பவர் உழைப்பைச் சுரண்டி உண்டு தாம் உழைக்காத சழக்கர் வகுப்பு என்று உலகில் ஒன்று இல்லையானால், இவ்விளையாட்டுக்கள் ஏற்பட்டேயிருக்க மாட்டா. ஆனால் அச் சுரண்டல் மனப்பான்மை அவ் விளையாட்டில் சோம்பேறித் தனத்தை வளர்த்துச் சுரண்டற் குழுவுக்கு நிலையான ஆதரவு தருவதுடன் நில்லாமல், அக்குழுவினுள்ளும் சுரண்டல் வேலை தொடங்குவதற்கே பண வருவாயைப் புகுத்தியுள்ளது. வீட்டுக்குள் விளையாடும் மனையக விளையாட்டுக்களைக் கெடுத்த சூதாட்டம், சீட்டாட்டமென்றால்; அதுபோல் புறவெளி ஆட்டங்களைக் கெடுத்த சூதாட்டங்களும் உண்டு. சீட்டாட்டத்தையாவது சூதாட்டம் என்ற பெயருடனேயே நன்மக்கள், உயர்மக்களிடையே இடம்பெறுபவர் ஆடிக் கெடுக்கின்றனர். புறவெளி யாட்டங்களைக் கெடுத்த பெருஞ் சூதாட்டமாகிய குதிரைப் பந்தயம் சூதாட்டமென்ற பெயரில்லாமலும், பெருமக்களுக்குரியது என்ற தகுதியற்ற பெருமையுடனும் ஆடப்படுகிறது. தவிர மற்றச் சூதாட்டங்களில் விளையாட்டில் முனைந்தவர் மட்டுமே சூதாடுவர். இங்கோ விளையாட்டில் முனைந்தவர் மட்டுமன்றிப் பார்ப்பவரும் சூதாடுவர். தவிர மனிதர் சூதாட்டத்திற்காக இங்கே குதிரைகள் பலியிடப்படுகின்றன. குடிமக்களுக்கு எத்தனையோ நன்மைகளுக்குப் பயன் படக்கூடும் நற்பணம் இங்கே வீணில், தீமைகளை மலியவைக்கும் இச் சூதாட்டத் துறையில் தண்ணீர்பட்ட பாடாய்ச் செலவு செய்யப்படுகின்றது. தற்கால நாகரிக முறைகளில் மன்னிக்கத்தகாத பெருங் குறை ஒன்று உண்டென்றால், அது இக் குதிரைப் பந்தயமே யாகும். அதிலும் இக்கால நாகரிகம் தொடங்குமுன்னுள்ள ஓட்டப் பந்தயத்தில் இச் சூதாட்டம் சிறிதுமில்லை என்பதை நோக்க, இத்துறையில் சூதாட்டத்தைப் புகுத்திய மேனாட்டு நாகரிகம் வெட்கித் தலைகுனிய வேண்டும். குதிரைப் பயிற்சி, குதிரை வேக வளர்ச்சி, தொழில் ஆதரவு ஆகிய நலங்களைக் காட்டி இத்துறைச் சூதாட்ட அடியார் பலர் வாய்வாதம் கூறுவர். இவை யாவும் சூதாட்டமில்லாத பழங்கால நல்ல ஓட்டப் பந்தயத்திலுள்ளவையே. இவை பழங்கால மனித சமூக நாகரிகத்துக்குப் பெருமை தரவல்ல சமூகக் கேளிக்கைகள். விழாக்கள் ஆகியவற்றின் பண்புகள்; தற்கால முதலாளித்தனமான நாகரிகம் அவற்றில் புகுத்திய பெருமையல்ல. மேனாட்டு நாகரிகம் இவ்வகையில் பழைய அமுதத்தில் தன் புதிய நஞ்சைச் செலுத்தி மறைத்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை ஆகும். சூதாட்ட மனப்பான்மை மனையக விளையாட்டுக் களையும் புறவெளி விளையாட்டுக்களையும் கெடுத்ததுடன் நிற்கவில்லை. கலைகளையும் கூடப் பிடிக்கத் தொடங்கியுள்ளது. சில பல இடங்களில் அதுவே கலப்பற்ற ஒரு நச்சுக் கலையாகவும் வளர்ந்து வருகிறது. வாணிகத்துடன் வாணிகமாய் அது தொழிலுருவிலும் காட்சியளிக்கிறது. இனி ஆட்சியுடன் ஆட்சியாய் அரசியலையும் கைப்பற்றி நாகரிகத்தையே அழிக்கவும் முற்படாதென்று கூறுவதற்கில்லை. தற்கால நாகரிகத்தில் பெருமை கொண்டு அதனைப் பேணுபவர் அதனுடன் இவற்றையும் பேணினால், தெரிந்தோ தெரியாமலோ அந் நாகரிகத்தை அழிக்க உதவியவரே யாவர். பாலுக்குக் காவலிருந்தவன் பூனைக்கும் தோழனான கதையையே இது நினைப்பூட்டவல்லதாகும். தற்காலப் பத்திரிகைகளிற் பல சூதாட்டத்திற்குக் குறுக்கெழுத்துப் போட்டி, நெடுக்கெழுத்துப் போட்டி, அறிவுப் போட்டி, பகுத்தறிவுப் போட்டி என அழகான பெயர்களைக் கொடுத்து அறிவுவகுப்பினிடையிலும் சூதாட்டத்தையும் சூதாட்ட மனப்பான்மையையும் வளர்த்துவருகின்றன. அறிவு வகுப்பாரே ஆட்சி செலுத்தும் தற்கால அரசாங்கங்களும் இவற்றைச் சில பல சமயம் கடைக்கணித்து வருகின்றன. சூதாட்டத்தை ஆதரித்துப் பேசுபவர் கூறும் வாதங்கள் போன்ற வாதங்களை இதற்குங் கெட்ட பண்பும் இதில் இல்லை என்று யாரும் கூற முடியாது. நாலு துட்டுக் கொடுத்துவிட்டு நாலாயிரம் பொன் வரும் என்று இச் சூதாடி எண்ணுவது போலவே, குதிரைச் சூதாடியும் மற்றெந்தச் சூதாடியும் எண்ணுகிறான். இந்நாலாயிரம் பொன்னை ஒருவன் பெறுவதானால், பல நாலாயிரம்பேர் இழந்துதானே பெற வேண்டும். ஒருவனிழந்த பணந்தான் மற்றொருவனுக்கு வரவாக முடியும். அதுவும் பலர் இழந்த பணந்தான் ஒருவனுக்கு வரவாக முடியும் என்ற மனப்பான்மை தானே சூதாட்ட மனப்பான்மை! அதனை இச் சூதாட்டம் வளர்ப்பதுபோல் உலகில் வேறு எச் சூதாட்டமும் வளர்க்க வில்லை என்னலாம். இவைதவிரக் கடைத்தெருவழியே போகும்போது ஆங்காங்கே நாகரிகமற்ற சிறு இடங்களிலும் நாகரிகமுள்ளதாகத் தோற்றும் பேரிடங்களிலும் சிறிய பெரிய கடைகளிலும் கடையோரங்களிலும் வட்டு, கட்டம், படம் ஆகியவற்றை வைத்துக்கொண்டு போவார் வருவாரை எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் நல்லோரைக் காணலாம். நீ நல்லவனானால் அவர்களைக் கண்டும் காணாமல் சென்று விடுவதே நலம். அறிவுடைய நல்லவர் எவரும் இவற்றை நோக்கவும் மாட்டார்கள்; இவற்றுக்கு ஆதரவு தரவும் மாட்டார்கள். பெரும்பாலும் செல்வர்கள் கூட இத்துறையில் மிகுதியாகச் சென்று கெட மாட்டார்கள். பணத்தின் அருமையை அவர்கள் அவ்வளவு அறியாதவர்கள் அல்லர். ஆனால் அறிவற்ற ஏழை நல்லோர்கள், உலக அநுபவமில்லா நல்லிளைஞர்கள் சிலந்தி வலையில் அகப்படும் சிறு பூச்சிகள் போல இதில் சிக்கிக் கொள்வர். செல்வர், அறிஞர் ஆகியவர்களைக் கெடுக்கும் பிற சூதாட்டங்களை விட, ஏழைகளைச் சுரண்டும் இது மிகமிகக் கொடிது. உலகின் நல்லரசாங்கங்கள் பல இதைத் தடுத்தொழித்தே வருகின்றன. ஆனால் ஏழைகளின் அறியாமையிலிருந்து ஏழைகளைக் காப்பாற்றும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு அவ் ஏழைகளின் அறியாமையே தடையாயிருக்கின்றது. எல்லோருக்கும் கல்விக் கான வசதிகள் செய்து, கல்வியின்மை ஒரு குற்றமாகத் தண்டிக்கப் பட்டுக் கல்வியில் இவைபற்றிய எச்சரிக்கை விளக்கமும் ஒரு பகுதியாகக் கொள்ளப்பட்டாலன்றிச் சட்டங்களால் மட்டும்கூட இத் தீமையை முற்றிலும் ஒழிக்க முடியாது. தன்னையும் பிற மதுப் பொருள்களையும் சூதாட்டத்தின் உடன்பிறப்புக்கள் என்று கூறலாம். சூதாட்டத்திற்கு முதற் காரணமான சோம்பலே அவற்றிற்கும் முதற் காரணம். சுரண்டலே சூதாட்டத்திற்கு நிமித்த காரணமாயிருப்பதுபோலப் பிறரை எளிதில் மயங்க வைத்து ஏமாற்றும் வாய்ப்பை இவை உண்டுபண்ணுவது கண்டு சுரண்டல் வகுப்பினரே இவற்றையும் பரப்பி வாழ்கின்றனர். வெப்புள்ள குடிவகைகளில்லாமல் வாழ முடியாத மேனாட்டுச் சூழ்நிலையில் இவை தழைத்தோங்க இடமேற்பட்டது. ஆனால் உணவாக மேனாட்டினர் அருந்து வதற்கும் உணவிலா நிலையை உண்டு பண்ணுவதற்காக இவற்றை எல்லா நாட்டிலும் தீயோர் தூண்டுதலுடன் அறிவிலிகள் அருந்துவதற்கும் மிகுதியான வேற்றுமை உண்டு. ஒருபுறம் சோம்பலும் மறுபுறம் சுரண்டலுமே இவ்வேறுபட்ட சூழ்நிலையை உண்டுபண்ணுகின்றன. வெப்பம் தேவைப்படும் சூழ்நிலைகளில் குடி வளர்ந்தாலும் வெப்புக்கு மாறான ஒரு சூழ்நிலையிலேயே பிற போதைப் பொருள்கள் தோன்றின. புகையிலை, அபின் முதலியவை இத்தகையன. இவை கீழ்நாட்டில் இழி மக்களிடையே தோன்றின. மேனாட்டார் இவற்றை மேன்மக்கள் பழக்கமாக ஆக்கி அவற்றின் கேட்டைப் பெருக்கினர். சூதாட்டத்தில் முனைபவரே இதிலும் முனைந்திருப்பதும், சூதாட்டத்தை ஆதரிக்கும் வகுப்பினரே இதனையும் பரப்பியுள்ளதும் கண்கூடு. மேனாடுகள் இவற்றுக்கு மிகுதி அடிமைப்பட்டு விட்டன. இவற்றுக்குத் தாயகமான கீழ் நாடுகளிலும் இவற்றைப் பரப்பும் திருப்பணியை மேனாடுகளே நடத்தி வருகின்றன. ஆனால் உலகின் அறிவுடை நன்மக்கள் எதிர்த்துப் போராட வேண்டிய துறைகளுள் இது ஒன்று. தொழில் வகையில் இது உலக வணிகருக்குத் தரும் பெருத்த ஆதாயமே இதனை ஒடுக்கும் வகையில் பெருந்தடங்கலாயுள்ளது. மேற்கூறிய இத்தனை தீமைகளும் விளையாட்டினால் ஏற்பட்டவை யல்லவாயினும் விளையாட்டாளர்கள் ஒத்துழைப் பினால், விளையாட்டு மனப்பான்மை அடிப்படையிலேயே தோன்றி வளர்வனவாதலால், விளையாட்டுப் பற்றிக் கூறுமிடத்தில் இவற்றைச் சுட்டிக் காட்ட வேண்டியதாகிறது. ஆனால் இவற்றைச் சுட்டிக்காட்ட இன்னொரு காரணமும் உண்டு. சூதாட்ட மனப்பான்மையையும் பொருள் வருவாய் மனப்பான்மையையும் அகற்றிய பின்பு கூட, சூதாடிகளின் மற்றோர் அடிப்படைப் பண்பு விளையாட்டாளர்களைப் பற்றுவதுண்டு. அது விளையாட்டின் ஒரு முக்கிய குறிக்கோளாகப் பலரால் கொள்ளப்படுவதனால் அதன் இடர் இன்னும் மிகுதி. அதுவே வெற்றியை நோக்கமாகக் கொண்டு விளையாட்டி லிறங்குவது ஆகும். விளையாட்டில் வெற்றியடைந்தவருக்குப் பரிசு கொடுக் கிறோம். முதல் வெற்றிக்குப் பொற் பதக்கமும் அடுத்ததற்கு வெள்ளிப் பதக்கமும் என இவ்வாறு வெற்றிப் படிகளும் வகுத்திருக்கிறோம். நல்ல விளையாட்டாளனை இக்கால வீரனாக அல்லது தெய்வமாகக் கொண்டாடுகிறோம். நாட்டின் வல்லான், உலகின் மிக்கான் (ஊhயஅயீiடிn) எனச் சிறப்புப் பெற ஒவ்வொரு விளையாட்டாளனும் நாடுகிறான். அப்படியிருக்க வெற்றி நாடுவது ஒரு குறையாகுமா என்று எண்ணலாம். வெற்றி நாடுவது கெடுதல் என்பதல்ல. சூதாட்டத்தின் அடிப்படைப் பண்பினையே நான் கண்டித்தது. ஆனால் நாடும் வெற்றி உன் வெற்றியன்று, தனி மனிதன் தன்னல வெற்றியன்று; உன் குழுவின் வெற்றியும், உன் நாட்டின் வெற்றியும் மனித உலகின் வெற்றியுமேயாகும். உன் வெற்றி யார்வம் உன் குழுவிற்கு வெற்றி தரும்; உன் குழுவின் வெற்றி யார்வம் உன் நாட்டுக்கு வெற்றி தரும்; உன் நாட்டின் வெற்றி யார்வம் உலக வெற்றிக்கு உதவும். வெற்றிகள் எதுவும் மனித சமூகத்தின் வெற்றியாகும் வகை இதுவே. மனித சமூக வெற்றியை அடிப்படையாகக் கொண்ட இவ் வெற்றி யார்வத்துக்கும் தன்னல வெற்றி யார்வத்துக்கும் உள்ள வேறுபாடு யாது என்பதை நீ ஊன்றிக் கவனிக்க வேண்டும். ஒருவன் வெற்றி வேறொருவன் தோல்வி அல்லது வேறு பலர் தோல்வி என்றெண்ணும் எண்ணம் தன்னல வெற்றி யார்வத்தால் ஏற்படும். ஆனால் உலக வெற்றி யார்வமுடைய நல் விளையாட்டுப் பண்பாளன் தனி வெற்றியில் கொள்ளும் களிப்பையே தன் குழுவின் வெற்றியிலும் தன் எதிரியின் வெற்றியிலும் கொள்வான். அதுபோலவே தன் குழுவின் வெற்றிக்கு ஒப்பாக எதிர்க் குழுவின் வெற்றியையும், தன் நாட்ட வெற்றிக்கு ஒப்பாக மற்ற நாட்டு வெற்றிகளையும் உலக வெற்றியையும் கருதி மகிழ்தல் வேண்டும். இவ்வெல்லா இடங்களிலும் போட்டி என்பது ஒருவரை ஒருவர் ஊக்கும் போட்டியாக இருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் வென்று மகிழும் போட்டியாக யிருத்தலாகாது. இவ்வெண்ணத்தை அடிப்படையாகக் கொண்டே ஆங்கில மொழியில் விளையாட்டுப் பண்பாடு என்பதற்கான சொல் (ளுயீடிசவளஅயளோiயீ) மற்றெம் மொழியின் சொல்லையும் விட உயர்வுடையதாய் நயத்தக்க நாகரிக நிலையின் உச்ச எல்லையைக் காட்டுவதா யமைந்துள்ளது. எதிர் தரப்பாளர் வெற்றி யடைந்தனர் என்பது தெரிந்தவுடனே ஆங்கில விளையாட்டாளர் தம் தோல்வியை உடனே மறந்து மற்ற யாவருக்கும் முற்பட்டு வெற்றியாளரைச் சென்று பாராட்டும் மரபு எந்நாட்டவராலும் உச்சிமேற் கொள்ளத் தக்க உயர்வடையது ஆகும். அது உலக நாகரிகத்தையே ஒரு படி உயர்த்தியுள்ளது என்று கூறலாம். ஏனெனில் இவ் விளையாட்டுப் பண்பு இல்லாத ஒரு காரணத்தால்தான் கீழ்நாடுகள் இன்னும் முற்றிலும் மேனாடுகளை எட்டிப் பிடிக்காதிருக்கிறது என்று கூறத்தகும். கீழ்க்குறிப்பிடும் நிகழ்ச்சி இதனை வலியுறுத்தும். ஓர் ஆங்கில நகரப் பல்கலைக் கழத்திற்குக் கீழ் நாடுகளிலிருந்து ஒருவர் பயிற்சி மேற்கொள்ள வந்திருந்தார். அவர் நாகரிகமிக்க உயர் குடியினர். உயரிய தோற்றமும் நடையும் நாகரிகமும் உடையவர். கல்வியிலும் சரி, பிறருடன் அளவளாவுவதிலும் சரி, அவர் இணையற்றவராகவே இருந்தார். மேனாட்டினரும், கீழ் நாட்டினரும் எத்தகைய குறையும் காண முடியாத அளவு கிட்டத்தட்ட முழுநிறை மனிதராகவே அவரைக் கருத இடமிருந்தது. அவர் விளையாட்டு மேடையிற் கலப்பதில்லை. ஆனால் இவ்வளவு நிறைவுடையவரிடத்தில் இது ஒரு குறையாக மாட்டாது என்றே எவரும் கருதுவது இயல்பு அங்ஙனமே கருதினர். ஆங்கிலேய ரிடையேயும் ஒவ்வொரு சிறப்புக் குறைந்தவர் இருக்கக் கூடுமன்றோ? ஆனால் அவருடன் நெருங்கித் தோழமை கொண்ட சிலர் ஆங்கிலேயர் எவருக்கும் அதிர்ச்சி தரத்தக்க, எவருக்கும் வெறுப்பும் அருவருப்பும் உண்டு பண்ணத்தக்க ஒரு குறையை அவரிடம் கண்டனர். அதுவே அவர் பொறுப்புணர்ச்சியின் ஒழுங்கு முறைகளை (டுயறள டிக ழடிnடிரச) அறியாதவர் என்பது. ஆங்கில நாட்டின் நன்மகனாக நடமாடும் உரிமை பெற்ற எவரும், பொது மக்களும்கூட, இக்குறை யுடையவராக இருக்க முடியாது. ஏனெனில் ஆங்கில நாட்டின் விளையாட்டிலேயே இது தோன்றி, விளையாட் டாளர்களிடம் மட்டுமன்றி ஏனையோரிடமும் பரவிவிட்டது. கீழ்நாட்டில் ஆங்கில விளையாட்டாளர்களுடன் போட்டியிடத் தக்க விளையாட்டாளர்கள் தோன்றியுள்ளாராயினும், இவ் விளையாட்டுப் பண்பு எல்லா மக்களிடையேயும் பரவுமளவு நேர்மையான விளையாட்டுணர்ச்சி அங்கே வளர்ச்சி யடையவில்லை என்பதை இது காட்டுகிறது. ஒரு நாட்டின் நாகரிகப் பண்பை வளர்ப்பதில் விளையாட்டாளர் பண்பு எவ்வளவு தொலை பொறுப்புடையது என்பதை மேலீடாக எவரும் காண முடியாது. இங்கிலாந்திலும் மேனாடுகளிலும் விளையாட்டில் வெற்றிக்கு மட்டுமன்றி விளையாட்டு நேர்மைக்கும்’ பெரிதும் மதிப்புத் தரப்படுகிறது. ஒத்த வயதுடையவர்கள், ஒத்த எடையுடையவர்கள், ஓரளவு ஒத்த நிலையும் வாய்ப்பும் உடையவர்கள், ஒத்த கருவிகளைக் கொண்டே, ஒத்த ஒரே ஒழுங்கினடிப்படையில் மட்டுமே போட்டியிட இடமளிக்கப்படுவர். வாட்போரிடு முன் வாளொடு வாள் அளக்கும் (ஆநயளரசiபே ளறடிசனள) பண்டைக் காலப் பண்பு இதனடிப்படையாகவே ஏற்பட்டது. இதே அடிப்படையில்தான் இன்றும் போட்டி ஆட்டங்களில் மூன்று ஆட்டம் ஏற்பட்டுள்ளன. ஆட்ட அழைப்பாளர் இடத்தில் ஒன்றும், ஆட்டக்காரர் இடத்தில் ஒன்றுமாக ஆட்டம் மாற்றப்படுகிறது. வழக்கமல்லாத இடவசதிக் குறைவால் தகாப் போட்டி நிலவப்படாது என்பதில் அத்தனை அக்கரை! ஒரே இடத்திலும் காற்றோட்டம், நில ஏற்றத்தாழ்வு ஆகியவை போட்டியைப் பாதிக்காதிருக்க ஆட்டக் குழுவிடையேயும் இட மாற்றம் செய்யப்படுகிறது. விளையாட்டில் தோற்றிய இந் நேர்மையைப் பிள்ளைகளின் பள்ளி வாழ்வில் நன்கு காணலாம். இரண்டு பேர் சண்டை யிட்டால் அவர்களில் ஒருவர் கை கீழாவது வரை யாவரும் தலையிடாது பார்த்துக் கொண்டிருப்பர். அதன் பின் வலிவு குறைந்தவர்க்கு ஊறு வராதபடி பிரித்து, அத்துடன் அவர்கள் மீண்டும் சண்டை பிடிக்காதும், பகைமை பாராட்டாதும் இருக்கும்படி நட்பாடச் செய்வர். வயதிலோ திறத்திலோ ஒவ்வாதவர் என்று தெளிவாகக் கண்டால், சண்டை செய்ய விடுவதில்லை. பெரியவன் சிறியவனை, அல்லது வலியவன் மெலியவனைத் தாக்குவது கண்டால் அவ்வலியானுடன் ஒப்பான ஒருவன் மெலியவனுக்கு ஆதரவாளனாக (ஊhயஅயீiடிn) நின்று எதிர்ப்பை மேற்கொள்வான். இதுபோலவே ஆணை ஆண், பெண்ணைப் பெண் தாக்குவதன்றிப் பெண்ணை ஆண் தாக்குவது என்பதுஆங்கிலப் பள்ளிகளிலும் நடவாது, மற்றும் இது ஆங்கில நாட்டிலோ ஆங்கிலேயர் மதிக்கும் வேறு எந் நாட்டிலோ நடைபெற முடியாத செய்தியாகும். குடி வெறியில் ஒருவன் இச் செயலுக்காளானால்கூட, அவன் பின்னால் அதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும். இவ்வொரு செயலுக்காக அவன் என்றென்றும் மிகவும் வெட்கித் தலை குனியவும் வேண்டி வரும். விளையாட்டின் இன்னோரரிய பண்பு, தொகுதி மனப்பான்மை. ஒருவன் தன்வெற்றியை மட்டும் நாடினால் இம் மனப்பான்மை ஏற்பட முடியாது. படகுப் போட்டியில் ஒருவன் தன் வலுவை மிகுதி காட்டினாலும் படகின் ஓட்டம் தடைப்படும். வலுக் குறைந்தாலும் படகின் வேகம் தடைப்படும். தன் தளர்ச்சியைப் பெருக்கும் போதே தொகுதியின் உறுப்பினர் ஒவ்வொருவருடனும் எல்லாருடனும் ஒத்து வளர்ச்சியடைய வேண்டும். தனி மனிதன் தொகுதிக்காக, தொகுதி தனி மனிதனுக்காக (ஞயசவ கடிச றாடிடந, றாடிடந கடிச யீயசவ) என்ற இப்பண்பே விரிந்த ஒரு நாட்டின் தசியப் பண்பு ஆகிறது. தனி மனிதன் தேசத்துக்காக, தேசம் தனி மனிதனுக்காக’ என்ற ஆங்கில மக்கள் தேசியப் பண்பைப் பிற நாடுகள் எளிதாகப் பின்பற்ற முடியாததன் காரணம் இதுவே. இப் பண்பு ஏற்படாதவரையில் இந் நாட்டுச் சட்டம், அரசியல் மன்ற முறை. மரபுகள் யாவும் பார்த்துப் பகர்ந்திடப்பட்டாலும் பொருளில்லாமல் போய்விடுகிறது. கலை கலைக்காகவே; வாழ்க்கை வாழ்வதற்கே என்று கூறப்படுவது போல விளையாட்டு விளையாடுவதற்கே என்று கூறலாம். ஆனல் கலை கலைக்காக என்று கூறுபவரும் அது வாழ்க்கையில் பயனற்றது என்று கூற முடியாது. நெருப்பு எரிகிறது. நமக்குச் சோறாக்குவதற்காக அது எரிவதில்லை. எரிவதற்காகவே எரிகிறது. ஆனால் அது நமக்குச் சோறாக்கவும் ஒளி தரவும் தவறுவதில்லை. அது போலவே விளையாட்டும் விளையாட்டுக்காகவே விளையாடத்தக்கது. ஆனால் அவ் விளையாட்டின் பண்பே விளையாடுவோர் நாட்டின் பண்பாய் வளரும். நீ விளையாட்டில் கருத்துச் செலுத்து. அதன் வெற்றியிலும் கருத்துச் செலுத்து. ஆனால் உன் வெற்றி உன் நாட்டு வெற்றியில் ஒரு பகுதியென்பதையும், உன் நாட்டு வெற்றியிலும் உலக வெற்றியிலும் உனக்கு ஒரு பகுதி உண்டு என்பதையும் நீ மறந்து விடாதே. நாட்டில் உன் பங்கை ஆற்றத் தவறாதே. ஆனால் பிறர் பங்காற்ற இடம் விடவும் தவறாதே. ஏனெனில் நீ எவ்வளவு வளர்ச்சி பெற்றாலும், நீ நாடாக மாட்டாய். நாடு வாழாமல் நீ மட்டும் வாழ, நீ நாடுகள் ஏற்படாத காலத்திய பழங்கால மனிதனுமல்ல. தன்னடக்கம், தன் கடனுணர்ச்சி ஆகியவற்றுடன் தன் மதிப்பும், தன் முயற்சியும் உடையவனாய் இருப்பவன் தன்னையும் உயர்த்தித் தன் நாட்டையும் உயர்த்துகிறான். விளையாட்டின் விளைவாக நீ நாட்டிற்குப் பல்லாற்றானும் நலம் விளைவிப்பாயாக! 2. ஏடு நாடும் இளைஞருக்கு ஏட்டில் நாட்டஞ் செலுத்தும் எழிலார் கனவாள! ஏட்டில் கருட்தூன்றி நீ கனவார்ந்து வருகிறாய். செங்கோல் கையில் பிடிக்காமல், அதன் பொறுப்புக்களையும் கவலைகளையும் ஏற்காமல், உலகில் கருத்தியல் செங்கோலாட்சி நடாத்தும் கருத்தியல் வேந்தர்களாகிய நூலாசிரியர்களுள் நீயும் ஒருவனாகலாம்; அல்லது அவ்வேந்தர்களுடன் மறையுறவாடி மாந்தரிடையே அவற்றறிவையும் அவ்வறிவாட்சியையும் பரப்ப உதவும் கருத்தமைச்சனாகலாம். அல்லது வாழ்க்கைத் துறையில் உன் தொண்டுகளிடையே ஓய்வுற்ற நேரத்தை அவ்வறிவாட்சி யாளர் தொடர்பில் விட்டு வைத்து, உன் வாழ்க்கைப் பணிக்கும் உனக்கும் உயர்வும், இன்பமும், பயனும் தேடிக் கொள்ளலாம். இம் மூன்று பகுதிகளில் நீ எதைத் தேர்ந்தெடுத்தாலும் நன்றே; ஏனெனில் மூன்றும் ஒரே துறையின் மூன்று படிகள்தாம். நூலை எழுதுவது ஆசிரியர்; ஆனால் எழுதப்படுவது வாசகர்கட்காகவே. அதைப் பயன்படுத்துவது உலகம். இம் மூன்று படிகளில் எந்தப் படியில் நீ நின்றாலும், அடுத்த படிக்கு அஃது ஒரு முன்வீடே. அத்துடன், அஃது அதற்கடுத்த படிக்கு உதவியாகவும், அதன் நிறைவாகவும் அமைந்துள்ளது. மூன்றாம் படியாகிய ஆசிரியர் திறம் அருமையானதே. ஆனால் அதன் வேரும் ஆதாரமும் நோக்கமும் முதற்படிநிலையே. இம் முத்திறத்திற்குரிய எல்லா ஏட்டுக் காதலருக்கும் நோக்கமும் தகுதியும் ஒன்றே. ஒரே ஆர்வம் அவர்களை இணைக்கிறது. அவ் ஆர்வத்துட்படாதவன் பொழுது அவப்பொழுதேயாகும். ஏட்டுக் காதலருள் தலைசிறந்த ஒருவர் ஜான் ரஸ்கின். அவர் ஒரு சிறுமிக்கு எழுதிய கடிதம் ஒன்றில் குறித்த வாசகம், ஏட்டின் பக்கம் நாட்டம் செலுத்தாது அவப்பொழுது போக்கும் பலருக்குச் சிறப்பாகப் பெண்டிருக்கு ஒரு நற்றூண்டுதல் ஆகும். “மன்னருடன் மன்னராகப் பேசவல்ல மாபெருங் கவிஞர் ஷேக்ஸ்பியர் போன்றவர்கள் உன்னண்டை வந்து பேசக் காத்திருக்கும் போது, நீ சிறு திறத்தாருடன் சிற்றுரையாட்டில் நேரங் கழிக்கலாமா?” என்ற கேள்வியே அவ்வாசகம். கனிந்த இனிய பழங்களைச் செவ்வனே வெட்டி முன்னே குவித்திருக்கையில், அதைவிட்டுமுள்போர்த்த கொடுங் காய்களைத் தேடி யலையபவர் உண்டோ? ஆங்கிலச் சிறுவர் சிறுமியர் இவ்வகையில் தலைசிறந்த நற்பேறுடையவர். நாட்டின் சிறந்த கவிஞர்களாகிய மில்ட்டன், வோட்ஸ்வொர்ட் போன்றவர்கள் நூல்களை மட்டுமன்றி, உலகின் சிறந்த கவிஞர்களான ஷேக்ஸ்பியர், ஷெல்லி, கீட்ஸ் ஆகியவர்கள் நூல்களையும் அவர்கள் தங்கள் தாய் மொழியிலே எளிதாக வாசிக்க முடியும். அவற்றை மொழிபெயர்த்து இரண்டாந்தர இடையீட்டாளர் திரையூடே வாசிக்க வேண்டியதில்லை. ஸ்பென்ஸர், சாஸர் போன்ற இலக்கிய ஊற்றுக்களும் கவிஞரின் கவிஞர்களும் ஆங்கில மொழியிலேயே எழுதியுள்ளனர். உலகில் மனிதன் தோற்றுவித்துள்ள புதுமைகளுள் புத்தகங்கள் போன்ற புதுமை எதுவும் கிடையாது. *எழுத்தும் புத்தகமும் ஏற்பட்ட வரலாறு மிகவும் விந்தையானது. அக்கால மக்களும் இதனை நன்கு உணர்ந்திருந்தனர். அக்காலத்திலுள்ள வர்கள் செல்வத்தைப் பங்கு வைக்கும்போது, உடைமை முழுவதையும் ஒரு பங்காளிக்குக் கொடுத்து ஒன்றிரண்டு புத்தகங்களை மட்டும் மறு பங்காளிக்குக் கொடுப்பாராம். இம் மூன்றும் அளவில் எவ்வாறாயினும், அக்காலத்தில் தன்மையில் ஒன்றாகக் கருதப்பட்டன என்பதனை இது காட்டுகிறது. இதனை இன்னொரு வகையாகவும் தெளிவாகக் காணலாம். முன் நாளைய ஆங்கில அரசர்களில் ஆல்பிரட் பெரியார். வெற்றியாளர் முதல் வில்லியம் ஆகியோர் கல்வியில் அக்கரை காட்டினார்கள். ஆனால் அவர்கள் கூட அக்காலத்தில் அச்சடித்த புத்தகம் எதனையும் வாசித்ததில்லை என்பதை நீ அறிய மாட்டாய். உலகில் அச்சு தோன்றியதே அவர்களுக்கு ஐந்நூறு அறுநூறு ஆண்டுகளுக்குப் பின்னர் தான்! அன்று மன்னர்களுக்குக் கிட்டாத செல்வம் இன்று ஏழை வீட்டிலும் வந்து காத்திருக்கிறது! இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு முன் சென்றால் ஆல்பிரடுக்கும் வில்லியமுக்கும் கிடைத்திருக்கக்கூடிய விலையேறிய கையெழுத்துப்படிகள் கூடக் கிடைத்திருக்க முடியாது. ஏனெனில் உலகில் எழுத்தே கண்டுபிடிக்கப்படாம லிருந்தது. முதலெழுத்தும் முதல் புத்தகமும் வானத்திலிருந்து வந்தவை என அந்நாளைய மக்கள் நம்பினர். நாம் இன்று அங்ஙனம் நம்புவதில்லை. ஆனாலும் அவர்கள் அன்று அதை நம்பியதில் வியப்பொன்றும் இருக்க வேண்டியதில்லை. அது அவ்வளவு அருமையான நிகழ்ச்சியே என்பதில் ஐயம் வேண்டாம். ஏனெனில் அப்பழைய நாள் முதல் இன்றுவரை எத்தனையோ ஆசிரியர்களால் எழுதப்படும் நூறாயிரக்கணக்கான நூல்கள் யாவும் அம் முதலேட்டிலிருந்து, அதனைத் தொகுத்து விரித்துப் பகுத்தும் அதனை, முதலடிப்படையாகக் கொண்டும் எழுதப்பட்டவைகளே. அம் முதல் நூலில்லாவிட்டால் இன்றைய மனித நாகரிகமும் இல்லையாதல் வேண்டும்! எந்த நல்ல புத்தகத்தையும் நிலத்தில் எறியாதே. ஆழ்ந்து உள்ளார்வத்துடன் சிந்திக்காமல் விளையாட்டாகக் கையாடாதே. ஏனெனில் உன் வாழ்வையும் உன் தலைமுறையின் வாழ்வையும் கடந்து நிலைபெறும் உண்மைகள் அதில் அடங்கியுள்ளன. அதன் தாளும் மையும் அவை பழைய மூலப் பொருள்களுக்குக் கிட்டாத உயர் வாழ்வைப் பெற்றுள்ளன. அதுபோல வாசிக்கும் உன்போன்றவர்களையும் கடந்து அதன் கருத்துக்கள் நிலவும், வளர்ச்சியுறும் என்பது உறுதி, உன் பெருமையாவதெல்லாம் அவ் வளர்ச்சியில் பங்கு கொள்வதும், அதுபோன்ற பிற நூல்களை ஆக்குவதும் அல்லது ஆக்க உதவுவதும் அல்லது ஆக்கத்திற்கு ஆதரவு தருவதும்தான். உன் கைக்கு ஒரு புத்தகம் வந்ததென்றால் இயற்கையின் மறை புதையல்களைத் திறந்து காட்டும் திறவு கோல்களுள் ஒன்று உன்னிடம் வந்து சிக்கியுள்ளது என்று பொருள். நீ அதை நன்கு பயன்படுத்தினால், அச் செல்வத்தில் பங்கு பெறலாம். இல்லாவிட்டால் பங்கு பெறுபவர்க்கு உதவி செய்து, நின்று பயனும் இன்பமும் பெறலாம். அதை எறிவது போன்ற அறியாச் செயல் வேறு இருக்க முடியாது. தொடர் வண்டியின் இலவசப் பயணச் சீட்டு ஒன்று உனக்குக் கிடைத்தது என்று வைத்துக்கொள். அதைக் கொண்டு உலகெலாம் சுற்றிப் பார்க்கலாம் எனத் தெரிந்தும் அதனை எறிந்து விடுவாயா? உன்னால் பயன்படுத்த முடியா விட்டாலும் கூட, அதனை வீணாக்காமல் யாருக்காவது பயன்படும் படி கொடுக்கவோ பாதுகாத்து வைக்கவோ செய்வாயல்லவா? நூல்களும் அப்படித்தான்! நூல்களைப் படியாது காலத்தை அவ்வப்பொழு தாக்குவது எங்ஙனம் தவறோ, அங்ஙனமே நிலையான பயனுடை நன்னூல்களையும், பயனுடன் இன்பமும் தரும் நிறை நூல்களையும் விடுத்துப் பொழுதுபோக்கு மட்டும் தரும் தற்காலிக ஏடுகளையோ, பயனில் இனபந் தந்து உள ஆற்றல் தளர்விக்கும் சிறு நூல்களையோ படித்தலும் தவறேயாகும். கற்றலின் பயன் அறிவூட்டி அறிவார்வத்தைத் தூண்டுவது மட்டுமன்று. இன்பூட்டிச் சிந்தனை யார்வத்தையும் புனைவாற்றலையும் பெருக்குவதும் அதன் குறிக்கோளாகும். இவை தவிர வேறு பல சிறு பயன்களும் உண்டு. ஆனால் நற் பண்பாளர் குறிக்கொண்டு கற்கும் பயன்கள் இவையே. ஒருநூல் இந் நோக்கங்களில்லாதது என்று காணப்பட்டால், அதனைப் படிப்பதினும் படியாதிருப்பதனாலேயே உனக்கு நலன் மிகுதியாகக் கூடும். ஏனெனில் அதனால் நேரமும் உழைப் பூக்கமும் உனக்கு மிச்சமாகும். பயனில் நூலில் ஆர்வம் ஏற்பட்டு விட்டால், பின் அது மாறி, நல்லார்வம் ஏற்படல் அரிது. தவிரப் பல நூல்கள் வாழ்க்கை பற்றிய தவறான கருத்துக்களை ஊட்டி, உன் வாழ்க்கைக்குக் கேடு பயக்கவும் கூடும். பெரியவனாவதென்பது எல்லோருக்குமே முடியாத காரியமாயிருக்கலாம். ஆனால் பெரியவர் சொல்லும் வழி செல்லுதல் எவருக்கும் முடியாததன்று. பெருநூல்களும் நல்ல நூல்களும் ஒருவரைப் பெரியவராக்கக் கட்டாயம் உதவும்; அதில் தடை ஏற்பட நேரினும், அவ்வழியில் அவை நம்மை இட்டுச் செல்லுதல் உறுதி. உண்மையில் பல பெரியார் தம்மையு மறியாமலே பெரியார்களான வகை இதுதான். பெரிய நூல்களில் முழுக்க ஈடுபட முடியாமல் அதன் நயத்தில் சிறிது துய்ப்பவரும், அவரைச் சார்ந்தவரும், ஊர்க்காவலர், குற்ற மன்றத்தார் பக்கம் கருத்துச் செலுத்தவோ, ஐம்பெரும்பழிகள் புரிவார் கூட்டுறவை அணுகவோ என்றும் இடம்பெறார் என்பதை எவரும் குறிப்பிட வேண்டியதில்லை. நல்லேடுகள் செல்லும் வழியே நல் வீடும் நல் நாடும் செல்லும். புல்லேடுகளோ குற்றச் சிறைக்கூடுகள், காடுகள். அவை பொல்லாங்கு மேடுகளுக்கு இழுத்துச் செல்லும். மேற்கூறிய அறிவுரையை மேலீடாகக் கேட்டுப் புனைகதைகள், மயிர்க்கூச்சிடும் அரு நிகழ்ச்சிக் கட்டுரைகள், கற்பனைக் கவிதை ஆகியவற்றைப் படிக்க வேண்டா; வரலாறும் வேதாந்தமும் மட்டுமே படி என்று நான் கூறுவதாக எண்ணி விடாதே. உண்மையில் ஆங்கில அரசனான எட்டாம் ஹென்றி ஏழு மனைவியரை மணந்தான்; மார்ல் பரோக் கோமகன் பிளென்ஹீம் வெற்றி பெற்றான்; கார்டிஃவ், கார்னார்லன் இரண்டும் வேல்ஸ்நாட்டின் தலை நகராகி இருந்ததாக உரிமைப் போட்டி இடுகின்றன என்ற இறந்தகாலச் செய்திகளினும், சிறப்பாகப் புனைகதைகள் நம் எதிர்கால வாழ்க்கைச் செய்திகள் பற்றி நல்ல தூண்டுதல் தருபவையே. வாழ்க்கைத் தொடர்பற்ற போலி வேதாந்தங்களினும், வாழ்க்கை நிலத்துக்கப்பால் முகில் கிழித்து மேலும், கடலாழம் அகழ்ந்து கீழும் செல்லும் புனைவிலக்கியங்கள் எத்துணையோ மடங்கு வளம் தருபவையே. ஆனால் செய்தியும் சரி, கற்பனையும் சரி, இரண்டின் பயனும், அவை உன் ஆர்வத்தை வாழ்க்கை நோக்கி, வாழ்க்கையின் முன்னேற்றம் நோக்கி, அதற்கான நற்றகுதி நோக்கித் தூண்டும் அளவுக்குத்தான்! ஆகவே எதை வாசிப்பினும் உன் அவாவைத் தூண்டும் ஆற்றல் நோக்கி, அவ்வவாவை வாழ்க்கை ஆர்வம் நோக்கிச் செலுத்துக. உன் வாழ்நாள் வீழ்நாள் படாது! உன் உள்ளத்தின் எட்டு மெய்ப்பாடுகளையும் எழுப்பி, வியக்க வேண்டுவனவற்றை வியந்து, மகிழ வேண்டுவனவற்றில் மகிழ்ந்து, சினக்கவேண்டுமவற்றில் சினந்தும் வெறுக்க வேண்டுவனவற்றுள் வெறுத்தும், இழிக்க வேண்டுவனவற்றை இழித்தும் உன் உள்ளம் பெருகிடல் வேண்டும். அதன் பெருக்கம் உன் நோக்கத்தை உருவாக்கும். நோக்கம் செயலார்வமூட்டும். செயலார்வம் உன் தனி எல்லை கடந்தால், நீ உலக வாழ்வில் ஈடுபட்டுப் புது நாடு காண்டல், புதுத்துறை பழகல், புத்தறிவில் முனைதல் ஆகிய பொதுமக்கட்கான நிறைசெயலில் முனைவாய். உன் அவா பொதுப்பண்பு கடந்து கால வரம்பற்று வருங்கால உலகை அவாவினால், நீயும் ஒரு செயலார்வம் பொங்கும் கற்பனையாளனாய், நூல்களைப் படைக்கும் கலைஞனாவாய். நான் ஒரு நூலாசிரியனாக வேண்டும். நூலின் காதலனாக வேண்டும், நூலின் தோழனாக வேண்டும்’’ என்று நீ கண்ட கனவின் தன்மையை இப்போது உனக்கு விளக்கி விட்டேன்.ஆம், கனவுகாணும் நீ, அத்தனையையும் ஒருவேளை எண்ணிப் பார்த்திருக்க மாட்டாய். ஆனால் உன் மரபிலுள்ள முன்னோர்கள் உன் சமூகம், இறந்தகாலத்தில் கடந்த படிகளின் விளைவாகவே அவற்றின் சூழல் நிலைகளை நீ நன்கு பயன்படுத்திக் கொண்டதன் விளைவாகவே, இக் கனவுகள் உன்னிடம் தோன்றியுள்ளன. உன் உடலின் தன்மையை அறியாமலே நீ பிறந்தவனாயினும், அதனை அறிந்தால் நீ அதனைப் பின்னும் நன்கு பேணலாமல்லவா? அதுபோல, இக்கனவுகள் உன்னைமறியாமலே தோன்றி வளர்பவையாயினும், அவற்றின் தன்மைகளை அறிந்தால், அவற்றை நீ இன்னும் திறம்படச் செயல் நிறைவுறுத்தலாகும். மனிதன் முதலில் இயற்கையில் உயிரிலாப் பொருள்கள் சார்ந்து உயிரினங்களுள் ஓர் உயிரினமாய் வாழ்ந்தான். பின் அவன் படிப்படியாக உயிரிலாப் பொருள்களையும் உயிரினப் பொருள்களையும், இறுதியில் தன்னினத்தராகிய மனிதரையும் பயன்படுத்தக் கற்றுக் கொண்டான். புராண கால மனிதன் நிலை இந்த அளவிலேயே நின்றது. ஆனால் இன்றோ அவன் மீட்டும் உயிரில்லாப் பொருள்களிடையே மறைந்து புதைந்துள்ள செல்வங்களையும் ஆற்றல்களையும் கண்டு, உயிரினங்களுக்கு மாற்றாகவும், ஓரளவு மனித உழைப்புக்கு மாற்றாகவும் அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளான். விலங்குகள் தூக்கிச் சென்ற பொருளைச் சக்கரங்கள் ஈர்த்தும் இயந்திரங்கள் உகைத்தும் செல்கின்றன. மாடுகள் இழுத்த செக்குகளையும் கவலை ஏற்றங்களையும் சக்கரங்களும் வார்களும் ஆணிகளும் கம்பிகளும் பெரிதும் இயக்குகின்றன. அணிமை வருங்காலத்தில் விலங்காற்றல் மட்டுமன்றி, மனித உழைப்பாற்றலும் முற்றிலும் விலக்கப்பட்டு விடக்கூடும். ஆனால் மனிதன் அறிவு வளர்ச்சியடையுந்தோறும் இந்த உயிரியல் ஆற்றல்களின் பயன்களும் குறைதல் உறுதி. கம்பி இல்லாத தந்தி போலவே சக்கரம் இல்லாத வண்டி, விறகில்லாத நெருப்பு ஒளி, மருந்தில்லா உடல் நலம், பணச் செலவில்லாத வாழ்வு ஆகியவை நாள் முறை வாழ்வில் வந்துவிடலாம். ஏன் கூடாது? ராபின்ஸன் குருஸோ புதுத் தீவுகளைக் கனவு கண்டான். ஜேம்ஸ் வாட் இயந்திரங்களைக் கனவு கண்டான். வில்லியம் வில்பர்ஃவோர்ஸ் அடிமை இல்லா வாழ்வை உள்ளத்தடத்தில் வரைந்தான். இவையெல்லாம் இன்று கனவார்வமில்லை. அது போல இன்று உன்போன்ற கனவறிஞர் காணும் கனவும், நெடுங்காலம் கனவார்வமாயிராது. உன்னைப் பின்பற்றி அதைக் கனவு காண்பவர் வரிசை ஏற்படும். ஒவ்வொரு கனவாளரும் கனவை ஒருபடி நனவுலகுக்குக் கொண்டுவருவர். கனவார்வம் நனவார்வமாய் நனவாய் விடும். அதன்பின் உன்போன்றவர் புதிய கனவார்வத்தில் இறங்குவர். இங்ஙனம் கனவு காண்பவர் நனவுலகச் செயலாளர்கட்கும் பின்னோடிகளல்லர்; நனவார்வமுடைய அறிவியலாருக்கும் பின்னோடிகளல்லர்; அனைவருக்கும் முன்னோடிகளேயாவர். இக் கனவுலகுக்கு நீர் வார்த்து அதில் பழகிப் பழகி மக்கள் உள ஆர்வம் உவப்பும் புளிப்பும் பெற்று விடாமல் பார்க்கும் பொறுப்பு உன்துறை சார்ந்ததாகும் நூல் படைப்போர், நூல் நுகர்வோர், நூல் வாசிப்போர் துறையாகும். ஆகவே புதுமை நோக்கியும், புதுமையின் வேராகிய உண்மைப் பழமை நோக்கியும் கனவார்வத்தில் துணிந்து முனைக. துணிந்து பொதுமக்கள் அறிவு நிலத்தின் வான விளிம்பெல்லை கடந்தும், அவர்கள் பார்வையைத் தடை செய்யும் முகில்திரளைக் கிழித்து மேற்சென்றும், அவர்கள் எண்ண அலைப் பரப்புக் கடந்து ஆழ்ந்த கடலாழத்திலும், அப்பாலும் துருவியும் உன் எண்ணக் கலையம்பை விடுக்க. இன்று செங்கல்லால் கட்டடம் கட்டுவோர் கட்டுக, நீ செங்கல்லின்றிக் கட்டும் கலையில் முன்னேறி வருங்காலத்தில் செங்கல்லின் தேவையை இல்லாத தாக்குக. இன்று புறச் செயலில் விரைவோர் விரைக. நீ புறச் செயலின்றியே உலகை இயக்கும் அவ் இயக்க ஆழி உருட்டுக. கனவின் எல்லை விளிம்பில் நடமாடும் உன்னை உலகம் பின்பற்றல் உறுதி. நூல் படைப்பவனைவிட நூல் நுகர்பவன் ஒரு படி தாழ்வு என்று எண்ணுவது கூடத் தவறு. அதுபோல நூலை நன்கு பயன்படுத்துபவர் அதனினும் தாழ்வு என்று தோற்றக் கூடும். ஆனால் உண்மையில் உயர்வின் எல்லையிலுள்ள இம்முத்திறத் துறைகளுள் அவற்றைப் பயன்படுத்தும் திறம் தவிர வேறு உயர்வு தாழ்வு இருக்க முடியாது. நூலை வாசிப்பவன் தேர்ந்தெடுத்து வாசிப்பதன் மூலம் நல்ல நூல்களின் படைப்பை விரைவு படுத்துகிறான். அத்துடன் அவனே நேரடியாக நல்ல கருத்துக்களை உண்டுபண்ணி நூல்களை ஆக்கவும் கூடும். நூலை நுகர்பவனோ மக்கட் சமூகத்திலே அதன் அறிவைப் பரப்பி இன்னும் பெருக்கமாக அப்படைப்பை ஆற்றுவிக்கிறான். ஆகவே இம் முத்துறையிலுமே நல்ல புத்தகங்களைத் தேர்ந்தெடுத்தல், நல்லவை அல்லாதன அறிந்தொதுக்கல் ஆகிய இரண்டுமே அடிப்படையான நலங்கள் ஆகும். நல்லவற்றைத் தேர்ந்தெடுத்தல் என்பது தீயவற்றை ஒதுக்குதல் என்பதேயாகும். இது வெளிப்பார்வைக்குட் தோற்றுவதுபோல் அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் எல்லா ஏடுகளும் நல்லவை என்ற கருத்துடன் தான் எழுதப்படுகின்றன. அச்சிடப்படுகின்றன, வெளியீட்டகங்களில் விற்கப்படுகின்றன. அவற்றிடையே தேரும் தேர்வு பொதுத்தேர்வாயிருக்க முடியாது உன் தேர்வாய் இருக்க வேண்டும். அத்தேர்வாற்றல் உன் கனவையே, உன் குறிக்கோளையே, வாழ்க்கையில் நீ கண்ட அக்கரையையே பொறுத்தது. நூல் படைப்பவனைவிட, நுகர்பவனைவிடக்கூட, அதனைப் பயன்படுத்துபவன், தேர்பவன், தேர்வதற்கு வழிகாட்டுபவன் உயர் கனவாளனாக இருக்க வேண்டிய இன்றியமையாமை ஏற்படுகிறது. சிறு பருவத்திலிருந்தே இத் தேர்வில் குழந்தைகள் பழக வேண்டுமென்பதற்காகவே சிறுவர் கலைக்களஞ்சியங்கள் அவர்கள் கையில் கொடுக்கப்படுகின்றன. நல்ல நூல் நிலையங்களில் அவர்கள் விடப்படுகின்றனர். முன்பே ஓரளவு தேர்ந்தெடுத்துப் பல்சுவைப் பட அமைந்த அவற்றில் தாம் விரும்பியவற்றைத் தேர்ந்தெடுப்பதால் அவர்கள் கனவு உருவாகும்; வளரும். இது நாட்டின் அடிப்படைச் சமூகப் பணியாகும். நல்ல நூல்களைத் தேர்வதில் நேரம் செல்கிறதே; படைப்போர் நல்லவை அல்லாத நூல்களை ஏன் படைக்கின்றனர் என்று நீ வினா எழுப்பக்கூடும். ஆனால் நல்லது கெட்டது என்பது ஏற்றத்தாழ்வு, சூழ்நிலைகளைப் பொறுத்ததே. தேர்ந்தெடுத்ததன் பயனாகவே ஒன்று நல்லதாகும். ஒருவர் தேராததை மற்றொருவர் தேரக்கூடும். ஆனால் நல்லது கெட்டது என்பது பொருளின் தன்மை சார்ந்ததன்று; அதை நுகர்பவர் தன்மை சார்ந்தது. நுகர்பவருக்கு நுகரத்தக்கன எதுவும் இல்லை என்று காணப்பட்ட பின்னரே அது தீயது ஆகும். கனவு காண்பவர், தேர்ந்து பழகியவர், பயனற்றவற்றை மேற்கொள்ளவும் மாட்டார்; படைக்கவும் மாட்டார். ஆனால் கனவற்றவர் வாழ்க்கையின் அறிவு விளிம்பு தாண்டிப் பண்பைச் செலுத்தாதவர் பயனற்ற இன்பத்திலேயே நாட் போக்கிவிடுவர். இது எவருக்கும் கனவார்வத்தைக் குறைத்து உலக நாகரிகத்துக்கே சீரழிவு ஏற்படுத்தும். உலகில் அழிவுற்ற நாகரிகங்களை ஆராய்ந்து பார்த்தால் அவை வலிமை யில்லாததனால் மட்டுமே அழிந்தன என்று கூற முடியாது. உடல் வலிவு மிக்க உரோம நாடும் அழிந்தது. அறிவு வலிவும் கலை வலிவும் மிக்க கிரீஸ் நாடும் அழிந்தது. உலகுக்கே வழிகாட்டிய நடு உலகு (நடுக்கடல் சூழ்ந்த) நாகரிகங்களும் வீழ்ச்சியடைந்தன. இவ்வழிவுகளுக்குக் காரணம் யாது? அவை இற்றை மேலுலகம் போற்றும் பெருஞ்சிறப்பு வாய்ந்தவையாய் இருந்தன. ஆயினும் கனவார்வம் குன்றியதனாலேயே அவை அழிந்தன என்று கூறலாம். எனவே நல்ல புத்தகங்களைக் கண்டு தேர வழி யாதெனில் பயன்தரும் புத்தகங்களைப் பொறுக்கி எடு. அவற்றிலும் உனக்குப் பிடித்தவற்றையே வாசி என்பதேயாகும். உன் ஆர்வ அளவிலே உன் அறிவு உன் செயல் விரிவாக வளர்க. பயனிருக்கக் கூடுமென்று எண்ணும் நூல்களில் மிகுவிருப்பமில்லாவிட்டால் முதலில் விட்டு விட்டு மேலீடாக வாசி. உன் அறிவு பெருகப் பெருக ஆர்வம் பெருகக் கூடும். அல்லது அது உன் நல்லார்வத்திற்கு வழி காட்டக் கூடும். ஆனால் விரும்பாத எதையும் ஊன்றி வாசித்து வெறுப்புடன் வாசிக்கும் பழக்கத்தை மேற்கொண்டு விடாதே; வெறுப்பிலிருந்து வளர்ச்சி ஏற்படாது வேண்டா வெறுப்ப அறிவை மரத்துப் போகச் செய்துவிடும். நண்பர்களை, தோழர்களைத் தேர்ந்தெடுப்பது போல் நூல்களைத் தேர்ந்தெடு. நற்பண்புகளைப் பார்த்துக் காதல் துணைவியைத் தேர்ந்துகொள்வதுபோல, நற்கருத்துக்களைட் தேர்ந்து குறிக்கோளை வளர்த்து வா. நன்மக்களையும் செல்வத்தையும் உலகுக்கீவதுபோல் உன் குறிக்கோள் வழி உருவாகிய கலைப் படைப்பையும் உலகுக்கு உன் வாழ்க்கைச் செல்வமாகக் கொடு. உலகம் உன்னை உடனே புகழலாம். அல்லது நின்று புகழலாம். ஒருவேளை புகழாமலே இருக்கலாம். ஆனால் உண்மைப் புகழ் உலகின் புகழ்ச்சி கடந்தது. உலக வளர்ச்சியே உன் புகழாகும். முதலில் நெருப்பைக் கண்டவர், முதலில் எழுத்து உருவாக்கியவர், சக்கரங்கண்டவர், முதலில் நாயையும் குதிரையையும் பழக்கியவர், முதலில் படம் வரைந்தவர் ஆகியவர்களை உலகம் அறியாவிடினும் அவர்கள் செயல்வழி உலகம் என்றும் நிற்பதுபோல், புகழ்ந்தும் புகழாமலும், அறிந்தும் அறியாமலும் உலகம் உன்வழி நிற்கும். 3. சான்றாண்மை விரும்பும் இளைஞருக்கு சீரியர் வாழ்க்கைப்பண்பில் சிந்தை செலுத்தும் செம்மலே! பிள்ளைப் போதில் கதைகேட்பதில் நீ ஆர்வம் காட்டிய நாள்முதல் பீடுடைய பெருஞ் செயல் வீரர் கதைகளில் நீ ஈடு பட்டுள்ளாய். செயற்கரிய செயலில் துணிந்திறங்கி வெற்றி பெற்று வாழ்ந்தவர் கதையாயினும் சரி, செயற்கரிய செயல்களில் தம் உயிரைப் பிணையமாக வைக்க முனைந்து மாண்ட மரபுடையவர் கதையாயினும் சரி, உன் மனத்தை இரண்டும் ஒரே நிலையில் கவர்ந்துள்ளன என்பதை உனக்கு நினைப்பூட்ட வேண்டுவ தில்லை. வெற்றி யுடையதாயினும் சிறு செயலில் உன் நாட்டம் சென்ற தில்லை. உன் கனவார்வம் செயலின் அருமையும் வீறுடைமையும் பற்றியதே யன்றி வெற்றி குறித்தன்று. உன் வீரர்களின் வாழ்வின் உயர்வு சாவை விலை கொடுத்து வாங்கி அதன் மேலும் சாவாப் புகழ் நாட்டப் போதியதாயிருந்து வந்துள்ளது. ஆனால் அவ் வீரரோ தம் வாழ்வை எல்லையற்ற கவினுடைய இவ்வுலகின் நலத்தை யெண்ணி வீசியெறிந்து விடவும் ஒருங்கியிருந்தனர். உன் வீரர்களும் வீரர்களின் வீரரும் சென்ற வழி இதுவாயின், உன் வழி வேறு எதுவாக இருக்க முடியும்? உன் இளமைப்போதின் தொடக்கத்திலேயே உன் நாட்டின் இளைஞர்கள் உள்ளத்தையும், எந் நாட்டின் இளைஞர்கள் உள்ளத்தையும் என்றென்றைக்கும் ஈர்த்து அதில் ஒளி வீசவல்ல உயர் ஒளி விளக்கம் ஒன்றின் புகழ் உன்னை வந்து எட்டியிருக்கக் கூடும். நிலமீது நடந்த மாந்தர் யாவருள்ளும் நெஞ்சுரத்தில் விஞ்சிய அந்நீள் புகழாளனைப்பற்றிய உருக்க மிக்க வரலாற்றை நீ கட்டாயம் கேட்டு மனமுருகியிருக்க வேண்டும். ஏனெனில் அதனால் உள்ளமுருகாதவர் உலகில் எவரும் இலர். அவர் எழிலுடை இளைஞர், வாழ்க்கை மறுமலரின் அரும்பு போன்றவர்; அவர் முன்பு வருங்காலப் புகழின் அழைப்புப் புன்முறுவலுடன் நின்றிருந்தது. வீரமாகத் தொடங்கி எத்தனையோ வீரச் செயல்களை ஆற்றியிருக்க வேண்டிய, ஆற்றியிருக்கக் கூடிய அவ்வாழ்வு அவ் வீரர்களை யெல்லாம் திரட்டித் தொகுத்து ஒரு தூசாக்கி ஒரு சிறு காலவரையறைக் குள்ளாகவே என்றென்றும் எவராலும் மறக்க முடியாதபடி கால எல்லையின் உச்சத்தில் சென்று தன் பெயர் பொறித்து விட்டது! மீகாமன் ஓட்ஸும் அவர் ஒப்பற்ற தோழர் ஐவரும் உலகின் தென் துருவ மையத்தை நாடிச் சென்ற பயணத்தைப் பற்றியே நான் இங்கே குறிப்பிட்டேன் என்று உனக்குட் தெரியலாம். இதற்கு ஒரு திங்களுக்கு முன்வரை மனித உலகில் எவரும் அவ்வளவு தொலை தெற்கே சென்றதும் கிடையாது. அத் தென்கோடியை அணுகியதும் கிடையாது. அட் தென்துருவ மையத்தில் உலகின் முழுக் குளிர்கால மாகிய ஆறு மாதம் இரவாகவும், உலகின் முழுக் குளிர்காலமாகிய ஆறு மாதம் பகலாகவும் உள்ள அந்தப் பகுதியில் முதல் முதல் காலடி யெடுத்து வைத்து நின்ற பெருமையும் தன் புகழ்க் கொடியையும், நாட்டின் வெற்றிக் கொடியையும் அதில் வேறெந் நாட்டினர்க்கும் முந்தி நாட்டிய பெருமையும் இவ் வீரனுக்கும் அவன் தோழர் ஐவருக்குமே உரியது. ஆனால் அவர்கள் புகழ்வெற்றியின் சிகரம் இவ் வெற்றியல்ல; அதன் தொடக்கமேயாகும். தாம் செய்து முடிக்க வேண்டித் தமக்கு உலகில் ஒப்புயர்வற்ற புகழ்தரப் போதிய இச் செயலைச் செய்த பின்னரே மனத்தை நடுங்க வைக்கும் அவர்கள் புகழ் வரலாறு தொடங்குகிறது. வெற்றி நோக்கி அவர்கள் ஆர்வத்துடன் சென்ற பயணத்தை விட, அவர்களுக்காக அவர்கள் கப்பல் காத்துக் கொண்டிருந்த இடத்துக்கு வெற்றிச் செய்தியுடன், வெற்றி எக்களிப்புடன் அவர்கள் மீண்டுவரும் பயணமே மிகமிகப் பொல்லாங்கான இடர்களை உடையதா யிருந்தது. உலகின் மிகு குளிர் மண்டலத்தின் கோடி மையத்தி லுள்ள அப்பகுதியில் அச்சமயம்தான் குளிர் ஊதைக் காற்றும் பனியும் பனிக்கட்டியும் சோனைமாரியாகப் பொழியத்தக்க சமயமாயிருந்தது. நெருப்பும் சுட அஞ்சத்தக்க அக்கடுங்குளிர்க் கோடையில் ஒரு காலை ஊன்றி ஒரு காலை எடுத்து வைக்கவும் முடியாதபடி நரம்பு நாடிகள் செயலாற்ற மறுத்தன. உடலின் செந்நீர் இறுகிப் பாய்ந்தோட மறுத்தது. கால் வைத்த இடமெல்லாம் பனிக்கட்டியின் சறுக்கல், பனி இறுகிக் கட்டியாகும் சலசலப்பொலி, பனிப் படலங்கள் ஒன்றன் மீது ஒன்று படிந்து நொறுங்கும் ஒரே பேயரவம்! வழுக்கி விழுந்தால் திரும்ப எழுந்திருக்க முடியாது; எழ முயன்றாலும் முயலுமுன் வானத்தின் புயற்கரங்கள், கடலகத்தின் பனிக்கரங்கள் இரண்டும் சேர்ந்து விழுந்தவரை ஆரத் தழுவி அடக்கிக் கொள்ளும்! அவர்கள் வெற்றி நோக்கிச் செய்த நீண்ட பயணம் வெற்றியின் ஆர்வத்தாலும் புகழின் வேட்கையாலும் தூண்டப்பெற்று அடுக்கிய பல்கோடி இடையூறுகளை மன உரத்துடன் தாங்கிக் கொண்டு செய்த எல்லையிலா நெடும் பயணம் முடிந்து விட்டது. ஆனால் இப்போது அவ் வெற்றிக்காக உயிரை விலை கொடுத்து மாள வேண்டிய பயணம் தொடங்கியுள்ளது. வெற்றி நோக்கிய பயணத்தினும் கொடிது சாவை நோக்கிப் பயணம் செய்வது. ஆனால் அவர்கள் புறப்பட்டனர் தயங்கவுமில்லை, தயங்கவுமிடமில்லை. அவர்கள் வாழவிரும்பினும் மாளவிரும்பினும் அவ்விடத்தில் அந் நேரத்தில் அவர்கள் செய்யக்கூடியது ஒன்றுதான் கூடிய மட்டும் விரைந்து மனிதர் வாழும் உலகு நோக்கி, உயிரினங்கள் வாழும் உலகு நோக்கிச் சென்று தப்பிப் பிழைப்பதே. குறைந்த அளவில், கப்பல் காத்திருக்கும் குளிர் மண்டலத்துறைவரை சென்று எட்டின பின்தான் அவர்கள் இளைப்பாற முடியும், உணவு கொள்ள முடியும். அவ்விடத்தில் சென்றெய்திய பின்தான், அங்கே எவரும் பருகத்தக்க ஒரே பொருளாகிய ஆற்றல் தரும் இன்தேறலைப் பருகி விடாய் தீர முடியும். ஆகவே அவர்கள் விரைந்தனர். அவர்கள் உயிருக்கு விரைந்தோடினர் மணிக்கு ஆறு கல், ஏழுகல் ஓடத்தக்க அவர்கள், குதிரைமீதும் இரும்பொன்மா (பொறியூர்தி) மீதும் வானூர்தியிவர்ந்தும் காற்றினும் கடுகிமணிக்கு இருநூறு முந்நூறு கல் செல்லக்கூடிய அவர்கள் அங்கே உயிருக்குத் துடித்தோடும் நிலையில் மணிக்கு ஒரு சில அடிகள் வீதம் விரைந்தோடினர்! ஆனால் அந்தோ, அவர்கள் மீகாமன் அவர்கள் வெற்றிக் கொடிப்படையின் வெற்றிக்கொடி அவர்கள் வெற்றியுடலின் உள்ளார்ந்த புகழ்வடிவான இன்னுயிர் போன்ற மீகாமன் ஓட்ஸ் முதற் பயணத்திலேயே தம் உடலின் வலுவனைத்தும் இழந்து, தாம் வெற்றிக் கொடி நாட்டிய இடத்தை விட்டு அகல முடியாத அவல நிலை எய்தியவர் ஆயினார். அவர் தோழர்கள் அப்போது அவரையும் தம்மையும் பிணைத்திருந்த உயிர்த் தொடர்பைச் சற்றுத் தளர்த்தியிருக்கக் கூடுமானால் அவரவர் வாழ்வு அவரவர்க் கென்னும் இவ்வுலக பொது நெறியை அவ்வுயிர்ப் போராட்ட நேரத்தில் சிறிது மேற்கொண்டு தம் உயிரையேனும் பாதுகாக்க விரைந்திருக்கக் கூடுமானால் அவர்கள் தம் மீகாமனை மட்டும் புகழுலகுக்கு விடைகொடுத்தனுப்பிவிட்டு அவர் கதை கூற மீண்டு மனித உலகுக்கு வந்தெட்டி யிருக்கக் கூடும். ஆனால் அன்பின் பிணைப்பை யாரே அகற்றுவார்! மீகாமன் எவ்வளவு வற்புறுத்தியும் உயிர் பிரியாமுன் உயிரை விட்டு நீங்க மறுக்கும் உடலுறுப்புக்கள் போல, அவர்கள் அவருடன் ஒத்து நடக்கும் இம்முயற்சியில் முன்வைத்த காலைப் பின்னிடைந்து தயங்க விட்டு நடந்தனர். பனியும் பனிப்பும் பனிப்புயலு மன்றி மனித உலகின் வாடையோ உயிரினங்களின் படிவமோ அற்ற அப் பனிமூடிய உலகில் மாந்தர் கனவிலும் கருதியிருக்க முடியாத அவ் எல்லையற்ற உறைபனிப் பாலைப்பரப்பில் அச் சின்னஞ் சிறு குழுவினர் எவர் உதவியுமின்றி நாகரிக மக்கள் தொடர்பு எதுவுமின்றி இயற்கையின் கோர நடன சாலையில் அவள் காலடிக்கும் அவன் ஆள்களின் கைப்பிடிக்கும் தப்பி வர முயன்று பட்ட பாட்டினை யாரே அறிய வல்லார்! ஆனால் அக்காட்சியினும் கற்பனை கடந்த நிலையுடையனவாயிருந்தன அவர்கள் உள்ளங்கள். உயிருக்குப் போராட வேண்டிய அந் நேரத்தில், தாய் பிள்ளையை விட்டும், பிள்ளை தாயைவிட்டும் ஓடித் தீரும் அக்கட்டத்தில், அவர்கள் சிந்தனை, அவர்கள் உள்ளத்தின் போராட்டம் எதுவும் உயிர் பற்றியதாயில்லை. உயிரும் இன்னலும் அவர்களைச் சூழ்ந்து நின்று போராடின. ஆனால் அவர்கள் உள்ளத்தின் போராட்டம், வீரம், அன்பு ஆகியவற்றின் போராட்டமே. சாவை விரும்பி ஏற்றது வீரம். ஆனால் அவ் வீரத்தை மறைத்தது அன்பு. தம் மீகாமனுக்காகத் தாம் செய்யும் தியாகத்தை அம் மீகாமனறியாமல் தடுத்து, அவர் மாள்வுடன் தம் மாள்வையும் இணைக்கவே அவ்வைம்பெரும் புகழுறுப்புக்களும் முயன்றன. ஆனால் அதே சமயம் மீகாமன் தன்னுயிருக்காக மட்டுமன்றி, அவர்கள் உயிருக்காகவும் போராடினான் தன்மேலூர்ந்து வரும் சாவுடன் உடலில் அணு அணுவாக, கணுக்கணுவாகத் தன்னைப் பற்றி வரும் காலன் பிடிப்புடன் அவன் போராடினான். அறிவின் ஆற்றலிலும் அன்பின் ஆற்றலே பெரியது. அவ் வன்பின் ஆற்றலை அன்பின் ஆற்றல் மட்டுமே அறிய வல்லதா கும். தம் தோழர், தம் இன்னுயிருடன் அவர்கள் இன்னுயிரையும் உடனிறப்புத்தோழமை யுரிமையில் விடுக்க எண்ணியுள்ளனர் என்னும் கோர உண்மை மீகாமன் ஓட்ஸின் செயலற்ற நெஞ்சத்திலும் சென்று எட்டி விட்டது. உயிருக்கு உயிர் கொடுக்க முனைந்த அவ்வுயிர்த் தோழர்களுக்கு. ஓருயிர்க்கு ஐந்துயிர் கோரமிக்க சாவிலும் துணை கொடுக்க முனைந்த அவ்வொப்பற்ற துணைவர்களுக்கு, அவன் ஆற்றக்கூடும் கைம்மாறு என்ன இருக்க முடியும்? அவன் உயிரோ இன்னும் ஒரு சில வினாடிகளுக்கு மேல் நீடிக்க முடியாது. சாகும் அவ்வுயிருக்காக அவர்கள் சாவினின்றும் மீட்கக் கூடிய தம்முயிர்களைச் சாகடிப்பதா என்ற எண்ணம் அவன் இதயத்தை ஈர்த்தது. பிழைத்திருக்கத்தக்க தம் உயிரைக் கட்டாயம் சாவை நோக்கிச் செல்லும் அவன் உயிருக்காக அவர்கள் விட இருக்கின்றனர். அப்படியானால் சிறிது பின்னின்று சாகத்தகும் தன் உயிரை அவர்கள் உயிர் பிழைக்கும் வகையில் முன்கூட்டி இழத்தலே சால்புடையது என அவன் துணிந்தான். தான் உயிருடன் இருக்கும் வரை சாகும் தறுவாயிலும் அவர்கள் தம்மை விட்டுப் பிரிந்து அச்சாவுக் களத்தினின்று தப்பியோட மாட்டார்கள் என்பதை அறிந்த அவன், அவர்கள் தன்னைவிட்டுச் செல்லும்படி தூண்டுவதற் காகத் தன் உடலைப் பிணமாக்கித் தீர்க்க முனைந்தான். அதுவும் அப்பிணத்தை அவர்கள் தூக்கிச் செல்ல நேர்ந்துவிடக் கூடாதே! உயிருடன் உடலும் அவர்களை விட்டகலும்படி செய்வதே சிறந்ததென எண்ணிற்று அவ்வன்பு நிறைந்த வீர உள்ளம்! அவர்கள் விரைந்து ஓர் அடியினின்றும் மறு அடிக்கு விரைவுடன் செல்வதுபோன்ற விரைவுடைய பயணத்தின் கடைநாள் இடைத்தங்கலில் அவர்கள் அனைவரும் தாம் பனிப்பாறை மீது நாட்டிய கூடாரத்தில் தோளொடு தோளிணைத்து மூச்சுடன் மூச்சு அளையக் களையாற அமர்ந்து கிடந்தனர். அச்சமயம் பனிப்புயற் சூறாவளி நாற்புறமும் பனிக்கல் மாரியை வீசி இறைத்துக் கொண்டிருந்தது. கூடாரத்தின் வாயிலில் சென்று அச்சமயம் முகங் கொடுத்தால் போதும். சாவின் விரைந்த முத்தம் பெற! இப்புயல்மாரி ஓய்ந்ததும் தம் தோழர் மீண்டும் பயணம் தொடங்குவர். அதற்குள் தாம் எப்படியாவது இறந்து விட்டால் நலம் என அவன் எண்ணியிருந்தான். கண்ணை மூடும்போது அவன் ஒரே சிந்தனை இறைவனை நோக்கி அவன் வேண்டிக் கொண்ட ஒரே வேண்டுகோள் மூடிய கண்கள் மீண்டும் திறவாது போய்விட வேண்டும் என்பதே. ஆனால் இயற்கையின் திரு உள்ளத்தை யாரே அறிவார்? பிறர் கண் விழிக்குமுன் அவன் விழித்துக் கொண்டான். புயல் அப்போதும் கடுமையாக வீசிக் கொண்டுதான் இருந்தது. மிதக்கும் உறைபனிக்கட்டிகளுடன் உறைகின்ற பனிப்புயல் வெள்ளமும் சேர்ந்து அவர்கள் கூடாரத்தினண்டை கானாறெனக் கடுகிச் சென்றது. அதன் பேரரவம் மீகாமன் காதுகளைத் துளைத்தது. அவன் தன் தோழர்கள் பக்கம் பார்வையை மெல்லச் செலுத்தினான். அவர்கள் கண் விழித்தாயிற்று. ஆனால் அவர்கள் தம் உடல் சோர்வகற்றி இன்னும் எழுந்திருக்கவில்லை. அவன் தன் இறுதி உடல் வலுவை முற்றிலும் ஒரே மூச்சில் வாங்கிக் கொண்டு எழுந்தான். ஏன் என்று தோழர்கள் சைகை காட்டிக் கேட்குமுன் இதோ சற்று வெளியே சென்று வருவேன். வரச் சிறிது செல்லும்’’ என்று குறிப்புக் காட்டிக் கொண்டு வாயில்கடந்து சென்றான். தோழர்கள் பின்தொடருமுன் அவன் பனிப்புயல் மாரியினூடாக விரைந்து பனிவெள்ளம் ஆரவாரித்து ஆழ்கெவியில் பாயுமிடமடைந்து அதனுள் தன் உயிரையும் உடலையும் ஒப்படைத்து விட்டான்! ஆம். பிரிட்டனின் படைத் துறையில் ஒரு மீகாமனாயிருந்த திரு. ஓட்ஸ் அப்பனிப்புயல் வெள்ளத்தை ஆவலுடன் எட்டிப் பிடிப்பவன் போல் அதில் பாய்ந்து மறைந்துவிட்டான்! என்னே அவனது துணிவு! என்னே அத்துணிவின் அமைதி!! காண்பது இன்னது. செய்வது இன்னது என்றுணராது திகைத்து நின்ற அவன் தோழர்கள் அவன் சென்றது கண்டனர்; மறைந்திட்டதை உய்த்தறிந்தனர். அதன் பின்னரே அவர்கள் உற்றதுணர முடிந்தது. அப்போதுதான் அவர்களுக்கு அவன் செயலின் பொருளும், அவன் கொண்ட துணிவுக்கான காரணங்களும் மெள்ள மெள்ள விளங்கலாயின. போக இருந்த தம் உயிர்களையும் அச்சமயத்தில் அவர்கள் மறந்து, உடலுடன் மனித உலகுக்கு அப்பாற் சென்றுவிட்ட அவன் உயிரை எண்ணித் துடிதுடித்தனர். அவன் வீரத்தை எண்ணி இறுமாப் பெய்தினர். அவன் அன்பின் ஆற்றலை யெண்ணிப் புன்கணீர் பனித்தனர். வீரன் புகழ்க்கொடி ஏற்றியாய்விட்டது. இனி வீரர் தம் கொடியேற்ற முனைந்தனர்; வீரன் தியாகத்தை எண்ணி எண்ணி அவர்கள் ஏங்கினர். ஆனால் அத்தியாகங்கூடத் தம் தியாகத்தை இனித் தடுக்க முடியாதென்பதையும் அவர்கள் உணர்ந்தனர். ஆயினும் அத்தியாகத்தினூடாக அவர்களுக்கு இன்னும் ஓர் பொறுப்பு மீந்திருந்தது. மீகாமன் உயிரை அவர்கள் மனித உலகுக்குக் கொண்டு செல்ல முடியாது. மீகாமன் உடலைக் கொண்டு செல்லும் வேலையைக்கூட அவன் அவர்களுக்கு விட்டு வைக்கவில்லை. அவர்கள் இப்போது கொண்டு செல்லத்தக்கது அல்லது கொண்டு செல்ல முயலத்தக்கது அவர் புகழ், அவர் மாண்ட புகழ்வரலாறு ஒன்றே. அதுவும் சென்றெட்டும் வரை தாம் உயிருடனிருப்போம் என்று யாரும் உறுதி கூறுவதற்கில்லை. ஆகவே அவர்கள் தம் இறுதி நேரத்திலும் அதற்கான முன்னெச்சரிக்கையில் முனைந்தனர். நாட்குறிப்பில் அவர்கள் விட்ட இடத்திலிருந்து மீகாமன் உயிர் விட்ட இடம் வரையுள்ள குறிப்புக்களை எழுதி முடித்தனர். தாம் இனிச் செய்யவிருக்கும் கடைசி முயற்சித் திட்டமும் குறித்தனர். அதன்பின் கடமையாற்றிய காவல் வீரரின் உணர்ச்சியுடன் தம்மாலியன்றவரை தம் உயிருலகத்தோழரை நோக்கி தம்மை அவர்கள் தேடியேனும் கண்ட கதையைக்கூடிய உலகின் எல்லையரு கிடம் நோக்கிவிரைந்தனர். இக் கடைசி வேலையை மட்டும் அவர்கள் எப்படியோ நிறைவேற்றி விட்டனர் என்னலாம். அவர்கள் கப்பலுக்கு ஒரு சில கூப்பிடு தொலைகள் வரை சென்றுவிட்டனர். அதற்குள் அவர்கள் ஒவ்வொருவராகத் தத்தம் நாட்குறிப்பைக் கையில் பற்றியவண்ணம் பனியில் சாய்ந்தனர். இறுதி ஆளும் சாய்ந்து நெடுநேரம் சென்ற பின்னரே அவர்களைத் தேடியலைந்த கப்பல் தோழர்கள் அவர்களில் ஒருவர் உடல் பனி மூடாக்கில் புதையுமுன் கண்டெடுக்க முடிந்தது. அதன்பின் மற்றத் தோழர்களும் வந்து தடந்தேடி மீந்த வீரர் உடல்களையும் தேடிக் கண்டெடுத்தனர். அவர்கள் உடல்கள் பனியிலேயே அடக்கம் செய்யப்பட்டன. அவர்கள் நாட்குறிப்புக்களை மட்டுமே மீட்டுக்கொண்டு வர முடிந்தது. மீகாமன் உடலுடன் உடல் போக்காத தோழர்களின் வரலாறுகள் அவர்கள் எழுதிய மீகாமன் வரலாறுடன் சேர்த்து எழுதப்பட்டு உலகுக்கு அனுப்பப் பட்டன. மீகாமனை வழியனுப்பிவந்த தோழர்களின் உடலங்களைத் தாமும் வழியனுப்பி மீண்ட கப்பலிலுள்ள துணைவர்களே உலகுக்கு இவ் வான்புகழ்த் தோழர்களின் என்புநெக்குருக்கும் வீரக்கதையைக் கொண்டுவர மீந்திருந்தனர். பனியிற் புதையுண்ட வீரர்களின் வரலாறு மீண்டும் மீண்டும் உலகின் இளைஞர்களின் வெவ்விழி நீரால் ஆட்டப்பெற்றுள்ளது. இவ்வீரர்களுக்கான உலகின் இன்பங்களைத் துறந்து துணை சென்றவர்களே கப்பலில் அவர்களுடன் சென்ற துணைவர்கள். ஆனால் வீரரோ அவர்களினும் ஒருபடி கடந்து வீரமீகாமனுக்கு உயிர்த் துணைவராய்ச் சென்றனர். அம் மீகாமனோ தன் உயிரையும் உடலையும் வாழ்க்கை முழுப் பணியையும் அவர்கள் அன்புரிமையையும் சேர்த்து, உலகுக்காக, நாட்டுக்காகத் துறந்தான். இத்தனை தியாகங்களாலும் பெருமை யடைந்துள்ள இவ்வுலகில்தான், இந்நாட்டில்தான் நீ பிறந்து வளர்கிறாய். இதே உலகுக்காகத்தான், இதே நாட்டுக்காகத்தான் நீ பிறந்ததும் வாழ்வதும், வாழ்க்கைப் பணியாற்றப்போவதும், உயிர்துறக்க ஒருங்கியிருப்பதும், அவர்கள் மாபெருந் தியாகத்துக்குரிய உலகும் நாடும் உன் தியாகத்துக்கும் உரிமையுடையவையே அத்தியாகம் ஒன்றே அவர்கள் தியாகத் தைப் பெருமைப்படுத்தவல்லது. அவர்கள் தியாகத்துக்குரிய கைம்மாறு; உன் தியாகத்துக்குரிய கைம்மாறும் அவர்கள் புகழுடன் புகழைச் சேர்ப்பதே. இத்தகைய தியாகங்களைச் செய்த நாடு இன்னும் செய்ய இருக்கும் நாடு உலகில் புகழ் உச்சியில் நின்று உலகின் தரத்தையும் உயர்த்தும் என்பதில் ஐயமில்லை. இங்கிலாந்தின் செல்வம் மிகமிகப் பெரிதே; அதன் ஆட்சிப் புகழ் அதனினும் பெரிது; ஆனால் இவற்றையும் பொய்யாக்கவல்ல கலைச் செல்வம் ஆங்கில மொழியில் உண்டு. ஷேக்ஸ்பியர் கைப்பட எழுதிய ஒரு ஹாம்லெட்’ ஏட்டுக்கு இவையனைத்தும் ஈடல்ல. ஆனால், ஆங்கிலநாட்டிளைஞர் களிடம் ஷேக்ஸ்பியரின் கைப்பட எழுதிய ஹாம்லெட்’ ஏட்டுச் சுவடியை ஒரு கையிலும், மீகாமன் ஓட்ஸ் இறுதியாகக் கையொப்பமிட்ட ஏட்டின் ஒரு தாளை மற்றொரு கையிலும் வைத்து, இரண்டில் எது தேர்ந்துகொள்ளத் தக்கது என்று வினவுவோமாயின், அவர்கள் ஹாம்லெட் ஏட்டைக் கூட விட்டுவிட்டு மீகாமன் ஓட்ஸின் கை ஒப்பத்தாளைத் தேர்வர் என்பது உறுதி, உறுதி, முக்காலும் உறுதி! ஷேக்ஸ்பியர் கலையினும், அவர் கலைக்கே இலக்கியமாகத்தக்க இவ்வீரச் செயல் பெரிதல்லவா? நீ ஒரு ஷேக்ஸ்பியராயிருப்பதினும் ஷேக்ஸ்பியர் கலைக்கே இலக்கியமாவது எவ்வளவோ மேலல்லவா? நாட்டு வீரர் துறையிலிருந்து இலக்கியத் துறைக்குச் சென்றால், இதேபோன்ற வீரமும் தூய்மையும் நிறைந்த கலஹாட் பெருந்தகை போன்ற வீரர் பண்போவியம் உன் முன் காட்சியளிக்கும். கதையுலகிலும் கவிதையுலகிலும் இதனினும் சிறந்த குறிக்கோள் வீரம் காண முடியாது. கலஹாட் பெருந்தகையிடம் இளைஞரின் புகழார்வத்தையும் வீரச் செயலார்வத்தையும் நிறைவுறக் காணலாம். ஆனால் இத்துடன் பொதுப்பட இளைஞர்களிடத்தில் காணுதற்கரிய மற்றொரு பண்பும் அவரிடம் சிறந்துள்ளது. சிற்றின்பத்திலும் சிறுதிற இன்பங்களிலும் உழலாது உள்ளத்தை உயர் குறிக்கோளில் உய்க்குந் திறத்தில், கலஹாத் எல்லா வீரருக்கும் ஓர் உயர் குறிக்கோள் விளக்கமாய்ட் திகழ்கிறார். ஆண்களின் வீரத்துடன் பெண்களின் எழிலும், நிறையும், இருவருக்கும் அரிய தூய்மையும் வாய்ந்த இத்தகைய மனித நிறைபண் போவியத்தை நாம் வாழ்க்கையில் எளிதில் காண முடியாது. அவர் வாழ்க்கை செந்நெறியினின்றும் துன்பத்தால் வழுக்காதது மட்டுமன்றி இன்பத்தாலும் வழுவாத செம்மை யுடையவராயிருந்தார். உலக மேம்பாட்டிலும் உலக மக்கள் வாழ்க்கை மேம்பாட்டிலும் அக்கரை உடையவராயிருத்தலே வீரர் வீர வாழ்வின் பொதுக் குறிக்கோள். அக் குறிக்கோளை நாடி உயிரைத் துறக்க ஒருக்கமாயிருப்பதும், அதற்கு வாய்ப்பளிக்கும் வீரர் செயல்களில் ஆர்வ முடையவராயிருப்பதும், அதில் துணிச்சலுடன் எதிர்விளை வெண்ணாமல் குதிப்பதும் வீரர்களின் பண்பு ஆகும். ஏனெனில் இப்பண்பு புகழையும் கடக்க வேண்டிய பண்பு. வீரருள் சிறந்த வீரர்கள் வெற்றி தோல்வி பற்றிச் சிந்திக்க மாட்டார்கள்; வாழ்வு மாள்வுபற்றியும் கருதிப் பார்க்க மாட்டார்கள். நன்மை தீமை ஒன்றனையே கணித்து நன்மையென்று தோன்றிய உடனே தயங்காது கடனாற்ற விரைவார்கள். ஆனால் இவ்வெல்லாச் செயல்களிலும் அவர்கள் புகழையே நோக்கமாகக் கொள்வது இயல்பு. பொதுவாகப் பார்த்தால் இதில் தவறு ஒன்றும் இல்லை. ஏனெனில் புகழ்தரும் செயலே உலகிற்கு நலந்தரும் செயலாகவும் பெரும்பாலும் அமையும். ஆகவே, புகழுக்கு உழைப்பதென்பதும் உலக நன்மைக்கு உழைப்பதென்பதும் வேற்றுமைப்பட்ட பண்புகளல்ல. ஆனால் உலகுக்கு நன்மை செய்வதால் எப்போதும் எல்லாவிடத்திலும் புகழ் கிடைக்கும் என்று கூற முடியாது. உலகமறியா நன்மைகளில் நாட்டம் செலுத்தியவர்கள், உலகையே அடிப்படையில் திருத்த முனைபவர்கள், புகழை விரும்பாதது மட்டுமன்று. இகழ் பெற்றும் நலம் செய்ய முனைவதுண்டு. இத்தகையோர் உலகிற்கு நலம் பயக்கும் ஒரு குறிக்கோளே கொண்டு, அதனால் வருப்பயன் புகழோ இகழோ என்றுகூடக் கவலை யெடுத்துக் கொள்ளாது கடனாற்றுபவராவர். சில சமயம் நற்செயலின் விளைவு இகழோடுகூட நிற்பதில்லை. உலகின் இகழினும் கடுமையான செய்திகளும் உண்டு. அதனினும் பொறுக்க ஒண்ணாத செய்திகளும் உண்டு. தாம் நல்லார் பெரியார் எனக் கொண்டவர்கள் பழிப்பு, தமக்கினியார் உற்றார் இகழ்வு, உயிர் நண்பர் மாறுபாடு, தம் செயலால் தம்மைச் சார்ந்தோர் நல்லோர் தீய எண்ணமற்றோர் ஆகியவர்க்கு வரும் கேடுகள் ஆகியவை இத்தகையவை. இவை யனைத்தையும் தாங்கி நன்மை செய்துஅன்று இகழும் தீங்கும் வசவும் பெற்றும் நின்று புகழ்நாட்டிய பெரியாரே செயற்கரிய செய்த பெரியாருள் பெரியார் வரிசையில் வைத்தெண்ணத் தக்கவர். இத்தகையோர் மிகச் சிலராயினும் அச்சிலராலேயே பீடுற்றது இவ்வுலகு எனக் கூறத்தகும். புலவர் கற்பனைத்திரையில் தீட்டியுள்ள வானுலகப் பண்புகளை இவர்கள் மண்ணுலகிலேயே தீட்டிக் காட்ட முனைபவராவர். தான் நஞ்சு உண்டு உலக மக்களுக்கு எல்லாப் பழங்கருத்துக்களின் தன்மைகளையும் நன்மை தீமைகளையும் அவற்றின் காரண காரியங்களையும் ஆராயும் பண்பை ஊட்டிய ஸாக்ரடீஸ்; சமயத்தலைவர் முதல் அறிவிற் கடைப்பட்ட ருசடர்வரை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் அனைவருமே உறுதியாக நம்பியிருந்த மெய்ம்மைகளைப் பொய்ம்மை எனக்கூறி எண்பிக்கத் துணிந்த கலிலியோ; குலஎல்லை, வகுப்பெல்லை, இன எல்லை, நாட்டெல்லை, புண்ணிய பாவ எல்லை ஆகிய பல வரம்பு வேலிகளுக்குள் அடைபட்டுச் சிறைப்பட்டுக் கிடந்த கடவுளை அவ் வேலிகளை யெல்லாங் கடந்து மக்களுலகில் நடமாட விட்டவரும், அன்பினால் அக் கடவுளையும் பிணைக்கும் வழிகளைக் காட்டிய வரும், மக்கட்பணியே உயர் கடவுட்பணி எனவும், உலக நலத்துக் காக எத்தகைய தியாகமும் செய்வதற்குரியதே எனவும், கருத்தாலும் சொல்லாலும் செயலாலும் காட்டி அதற்காகவே வாழ்ந்து மாண்டவருமான பெத்தெலெகம் தந்த பிள்ளைப் பெருமான் இயேசு ஆகியவர்கள் இளைஞர்க் கனவுகளையும் அக்கனவுகளுக் குரிய கனாவீரர்களையும் கடந்த மாபெரும் செயல் வீரர்களாவர். பிற வீரர்களைப் பின்பற்றுவதனால் நாம் பெருமை யடைவோம். ஆனால், இம்முதற்படி வீரர்களைப் பற்றிச் சிறிது சிந்தனை செலுத்தினாற்கூட நாம் அதனைவிடப் பெருமையடைவது உறுதி. அவர்கள் செயல்களுக்கும் நம் கனவுலக வீரர்களின் கனவுலகுக்கும் எட்டாதவை என்பதில் ஐயமில்லை. எடுத்துக்காட்டாக, இயேசு பெருமானின் ஒரு வாசகம், அவர் கூறிய வாசகம் மட்டுமல்ல, அவர் தம் வாழ்க்கையில் மெய்ப்பித்துக் காட்டிய ஒரு வாசகத்தைக் கூறலாம். நண்பரை நேசித்தல், தாய்தந்தையரை, ஆசிரியரை நேசித்தல் இவையே பெரியார் நமக்கு அறிவுறுத்த வேண்டிய செயல்களாக உள்ளன. அண்டை யலாரை நேசிக்கும்படி ஒருவர் கூறினால், அது இன்னும் ஒருபடி உயரிய ஒழுக்கமுறை என்று கூறுவோம். ஆல் பகைவரை, நம்மையோ, நமக்கு இன்னும் யாரையோ கொன்றொழிப்பவரை நேசியுங்கள் என்று கூறிய இயேசுவின் வாசகம் நம்மால் எளிதில் உணரக்கூடியது மன்று; ஏற்றுக் கொள்ளக்கூடியதுமன்று; பலரால் சரியெனக் கொள்ளக் கூடியதுமன்று. அது முடியாத ஒரு செயல் என்று மட்டிலும் எவரும் கூறிவிடலாகும். ஆனால் இயேசுபிரான் அங்ஙனம் செய்தே காட்டினார். தம்மைப் பின்பற்றிய சீடர் தம்மைப் பகைத்தழிக்க முற்பட்ட புரோகிதக் குருமார் (பரிசேயர்கள்), தம்மைக் காட்டிக் கொடுக்கத் துணிந்த யூதாஸ் ஆகிய எல்லாரையும் அவர் ஒரே கண்கொண்டு பார்த்து ஒரே நிலையில் சாகுந் தறுவாயிலும் நேசித்தார். அவர் நெஞ்சகம், அத்தனை விரிவுடையது. அவர் அறிவு அதற்கிணையான உயர்வும், அலமும், நுண்மையும் உடையது என்று கட்டாயம் நம்பலாம்! நம் நாட்டிலும் பிற நாடுகளிலும் ஆண்ட மன்னர் எத்தனையோ பேர், அவர்களில் போர்வெற்றியால் புகழ் படைத்தோர், தோலாவறிவீரர் எத்தனையோ பேர். ஸீஸர், அலெக்ஸாண்டர், நெப்போலியன் முதலியோர் இவர்களினும் தலைசிறந்தவர்கள். ஆனால் இப்பேரரசரை விட உலகம் ஒரு ஆல்ஃபிரடை, ஒரு கிராம்வெலை, ஒரு வாய்விடா வில்லிய’த்தை (றுடைடயைஅ வாந ளுடைநவே) எவ்வளவு உயர்வுடையவராகக் கொண்டுள்ளது! இது ஏன் தெரியுமா? இவர்கள் வெற்றி தம் புகழ், தம் ஆற்றல் பெருக்கிய வெற்றிகள் அல்ல; தம் நாட்டவ் நல்வாழ்வில்அக்கரை கொண்டு பெறப்பட்ட அன்பு வெற்றிகள் ஆகும். மன்னரே யல்லாது மன் மக்களிடையே கூட ஒரு ஜோன் ஆவ் ஆர்க், ஒரு காதரீன் மோம்பஸான், ஒரு பிளாரென்ஸ் நைட்டிங்கேல், ஒரு பால், ஒரு நெல்ஸன், ஒரு மீகாமன் ஓட்ஸ் ஆகியவர்கள் மக்களின் மனத்தில் எத்தனை ஆழமாகப் பதிந்துள்ளனர்? மன்னரை மறந்தபோதும் உலகம் அவர்களை மறவாது. அத்துடன் மன்னராளும் அரசெல்லையாயினும் இவ் வருண்மன்னர் புகழாட்சியின் எல்லை எத்தனையோ பரப்பும் இனிமையும் நீடித்த நிலையும் உடையது. இயேசு பிரானொத்த அருள்நிறை பெரியார்களே இவ்வருண் மன்னரின் மன்னராவர். உலகில் பொது மனிதர் வாழ்வின் பரப்பைட் தடைப்படுத்தும் வகுப்பு. இன நாட்டு எல்லை கடந்து ஒரு தனிப் பேருலகம் அமையும் காலம் வருமானால், அன்றைய உலகம் இந்நாளைய உலகத்தைவிட இப் பீடுசால் பெரியாரின் தொலை நோக்கினை முழுதுற உணரக்கூடும். வலிமையால் சிறுதிறப் பேரரசமைத்துப் பேரரசர் பலர் எழுந்து எழுந்து நலியும் இவ்வுலகில், அன்புப் படையால் உலகெலாம் ஒன்றுபடுத்த முடியும் என்று இப் பெரியார்கள் காட்டி வழிவகுத்துள்ளனர். இன்றைய மக்களுலகம் அவர்களைப் போற்ற மட்டுமே ஆற்றலுடையது. அவ்வழி நின்ற உலகை அன்பாற் பிணைத்து ஓருலகாக்கும் நிலை வர நாம் இன்னும் பன்னூறாண்டு காத்திருக்க வேண்டி வரலாம்! உன்போன்ற வீரவாழ்க்கைக் கனவார்வலர் கனவார்வங்கள் உயர உயர உங்கள் கற்பனைகளும் கற்பனை வீரரும் உயர உயர, அத்தொலைநாளைய கனவுலகம் நம்மை அணுகி வருவது உறுதி. 4. நட்பு நாடும் இளைஞருக்கு நயமிகு நண்பர் நட்புப்பற்றிக் கனவுகாணும் நற்பண்பாள! இன்பத்தில் இன்பந்தந்து, இன்பம் பெருக்கித் துன்பத்தில் துன்பந்தணித்து, இனிமை பயக்கும் அரும்பண் உலகில் உண்டென்றால், அது நட்பு ஒன்றே. அதனினும் உறுதிபயக்கும் பொருள் ஒன்றுதான் உண்டு. அது, மனிதன் அந்நட்புக் கனவின் முழுநிறை பேருருவாகத் தன்னுள்ளே காணும் கடவுள் மட்டுமே! கடவுள் செயல்துறைக்கு வராத கண்காணா முழுநிறை. கனவுப் பிழம்பு. நட்போ அந்நிறைகனவின் குறைநனவுருவம். இத்தகைய குறைநிறை கனவுகண்டு அதன் நிறைகுறை நனவு நாடும் நின் ஆர்வம் போற்றற்குரியதே. நாம் உலகுக்குத் தனித்து வருகிறோம். இதை விட்டுத் தனித்துத்தான் போகிறோம். ஆயினும் இவ்விரு கோடிகளுக்கும் இடைப்பட்ட உலக வாழ்வில் யாரும் தனித்துவாழ முடியாது; தனித்துவாழ யாரும் விரும்பவும் மாட்டார்கள். தனி வாழ்வை விரும்புவதாகக் கூறிக் கொள்பவர்கள் கூடப் பிறர் அதனைத் தனி வாழ்வு என்று அருமையாய்ப் போற்றுகின்றனர் என்ற எண்ணத் துடனேயே அதில் ஈடுபடுகின்றனர். அவ்வப்போது அருமையாக வந்து கிட்டிய தோழரிடம் அவர்கள் தம் தனிவாழ்வு பற்றிப் பெருமை கொண்டு பேசாமலிருப்பதில்லை! மேலும் தனி வாழ்வில் நாட்டங் கொள்வோர் உள்ளத்தில் தான் உலக வாழ்வின் அனுபவ அறிவு முழுவதும் உலக வாழ்வின் கனவார்வம் முழுவதும் ஒரே தொகுதியாய்த் திரண்டு கடவுள் என்ற பெயருடன் இடம் நிறைக்கின்ற தென்னலாம். எப்படியும் கண்காணாக் கடவுளோ, கண்கண்ட நட்போ இவற்றுள் ஒன்றிலேனும் இரண்டிலுமேனும் ஈடுபடாதவர் உலகில் எவருமிருக்க மாட்டார்கள்! நண்பரின் நேசத்தினும் இனியது எதுவுமில்லை. எவ்வளவு இன்பப் பேறுடையவனும் இவ்வின்பத்தை வெறுத்துவிட முடியாது. எவ்வளவு துன்பமுடையவனும் இவ்வின்பத்தை நாடாமலிருக்க முடியாது. இன்பத்திலும் துன்பத்திலும் அது மனிதரின் இன்றியமையாத் தேவையாகிறது. நீ உலகில் வெற்றிபெற விரும்புகிறாய். உலகின் செல்வ நலங்களிலும் புகழ் நலங்களிலும் நீ உரிய பங்கைப் பெறவிருக் கிறாய். ஆனால் எந்த நலங்களிலும் முதன்மையுடைய நலம் நண்பரின் நேசம். நண்பரின் இன்சொல் சில சமயங்களில் நண்பரின் முன் துவர்க்கும் பின் இனிக்கும்’ கடுஞ் சொல்தான். நலங்கள் நலிவுற்ற காலையிலோ, கேட்க வேண்டியதில்லை. நண்பன் சொல்லினும் ஆறுதல் மிக்க சொல் இல்லை. நண்பன் ஒத்துணர் வினும் வலிமையாவது வேறில்லை நண்பன் கையினும் உறதுணை தருவது எதுவும் கிடையாது. வாழ்விலும், தாழ்விலும், வாழ்க்கையின் விடியற்போதிலும், நண்பகலினும், மாலையினும், எக்காலத்தும் நீ இன்று கனவு காணும் நண்பர் நட்பு உனக்கு நனவாகக் கிட்டுமாயின், அது உனக்கு ஒரு தோன்றாத் துணையாக, தோலாவெற்றியாகவே இருக்கும் என்பது உறுதி. நண்பர்கள் வாழ்க்கையின் நன்மை தீமைகளில் துணை தருபவர் மட்டுமல்லர்; நன்மை தீமைகளை ஆக்குபவர்களும் அவர்களே. ஒருவன் நல்லவனாயிருப்பதற்கும் கெட்டவனாவ தற்கும் அவன் நட்பும் தொடர்பும் காரணமாகும். இதனாலேயே உன் நண்பர்கள் யாரெனக் கூறு, உன் குண இயல்புகள் பற்றிப் பின் கூறவேண்டி வராது’’ என்ற பழஞ்சொல் எழுந்துள்ளது. மேலீடாகப் பார்ப்பதற்கு இப்பழஞ் சொல் ஒரு அணிந்துரை போல் தோற்றும். ஆனால் உண்மையில் அது முழுவாய்மையிற் குறைந்த உரையே. ஏனெனில், நண்பன் என்பவன் உண்மையில் வாழ்க்கையின் உயிர் போன்றவனே. நட்பு பிறப்புக்குப் பின் பிறப்பினும் இறப்பிற்குப் பின்னும் நிலவுவதாகும். அது இடையிலே தொடங்கி இடையிலே முடிவதன்று. ஒரு நாள் ஒரு பொழுது நிலவுவதன்று. ஒரு வாழ்விடையே தோன்றி என்றென்றும் நிலவுவதாகும். நல்ல கனவார்வங்களுடைய நற்பண்பாளனே நட்பின் வகைமையறிந்து ஒரு நல் நண்பனைத் தேர்ந்தெடுக்க முடியும். ஆனால், அத்தகைய நண்பனைத் தேர்ந்தெடுக்குமளவு ஒருவனுக்கு நற்பண்பு இருந்துவிட்டால் போதும்! அதற்குப் பின் அவன் தீய பண்புகள் நலிவதும், நற்பண்புகள் வளர்வதும் உறுதி. அதற்கு அந்நண்பன் பொறுப்பாளியாய் விடுகிறான். இன்னல்களை நலிவித்து, இனிமை பெருக்குவது மட்டுமன்று நட்பின் திறம்; இன்னாப் பண்புகளை நலிய வைத்து, இனிய பண்புகளை வளர்ப்பதே அதன் தனிச்சிறப்பு ஆகும். ஒருவன் ஒரு நல்லாசிரியனைத் தேடியடைந்தால் அதன்பின்அவன் அறிவு வளர்வது எவ்வளவு உறுதியோ, உயர்கடவுள் பண்பறிந்து வழிபடத் தொடங்கினால் அவன் உலகப் பற்றாளனாகவும், மக்கள் தொண்டனாகவும் விளங்குதல் எவ்வளவு உறுதியோ, அவ்வளவு நட்புரிமை நாடிப் பெற்றவன் நன்னெறி நிற்றலும் உறுதியாகும். நண்பரை நல்ல நண்பர், தீய நண்பர் எனச் சிலர் பாகுபாடு செய்வதுண்டு. இது ஒரு வகையில் தவறேயாகும். கடவுளை நல்ல கடவுள், தீய கடவுள் என்றோ, ஆசிரியனை நல்ல ஆசிரியன், தீய ஆசிரியன் என்றோ பகுத்தல் கூடுமா? நல்ல பண்பற்ற கடவுள் தீய கடவுளன்று. கடவுள் என்ற சொல்லுக்குக் களங்கம் தம் தீமையே யாகும். அறிவுப்பண்பற்ற ஆசிரியன் தீய ஆசிரியனல்லன். ஆசிரியன் என்ற பெயருக்குத் தகுதியற்ற கசடன்ஆவான். அதுபோலவே நட்பினுக்குரிய உயர் பண்பற்றவர் தீய நண்பரல்லர். அவர்கள் தீயவர் மட்டுமே. அவர்கள் தொடர்பு நட்பு என்ற சொல்லுக்கு உரியதன்று, தோழமை என்ற சொல்லுக்கு மட்டுமே உரிமையுடையது. தோழமை நேரப் போக்கையும் இன்பத்தையும் நோக்கமாகக் கொண்டு நாடப்பெறுவது. தோழமை இடையே வந்து இடையே அகல்வது. நட்பு வந்தபின் என்றும் நிலை பெறுவது. இவ்வேறுபாடுகளை உணராதவரே தீய தோழரை நண்பர் எனக்கருதி இடருறுவர். மனித வாழ்க்கை மயக்கங்கள் பல நிறைந்தது. அதனிடையே மெய்போன்ற பொய்ம்மை, இன்பம் போன்ற துன்பம், நிலையுடைமை போன்ற நிலையாமை, உயர்தகைமை போன்று தோற்றும் இழிதகைமை, நட்புப்போலத் தோற்றும் தீய தோழமை ஆகியவை மிகுதி. நண்பனின் ஓர் உயர்ந்த கடமை ஒரு இன்றியமையாப் பொறுப்பு இம் மயக்கங்களை வேருடன் அறுப்பதாகும். இவற்றை நண்பன் சொல்லால் செய்யலாம் இன் சொல்லாலும் வன் சொல்லாலும் செய்யலாகும். சில சமயம் அவன் சொல்லினும் திறம்வாய்ந்த செயலாலேயே இம்மயக்கங் களை ஒழிக்கலாம், அல்லது ஒழிக்க வகைசெய்யலாம். இன்னும் சில சமயம் சொல்லும் செயலும் கடந்த புத்துணர்வினாலேயே நண்பன் அரும்பெரு வெற்றி காணக் கூடும். பிறரைத் திருத்துவதற்கான வழிகளில் மிகச் சிறந்த ஒப்புயர்வற்ற தனிவழி, அவர்கள் தீமையின் பயனைத் தன் மேற்கொண்டு காட்டுவதேயாகும். ஒருவருக்கு நண்பராக அமையாமல் உலக மக்கள் அனைவருக்கும் நண்பராகத் துணிந்த அருட் பெரியார் வாழ்வில் இப்பண்பின் உலகப் பெருக்கத்தைக் காணலாம். ஆனால் இவ் உயர் பண்பு சிறு அளவிலேனும் உண்மை நண்பர் யாவரிடமும் உண்டு. நட்பில் முதற் செயலும் முடிவான பயனுடைய நிறை செயலும் நட்பிற்குரியாரைத் தேர்ந்தெடுப்பதே யாகும். குடும்ப நலம் நாடி ஒருவன் வாழ்க்கைத் துணைவியைத் தேர்ந்தெடுப்பதிலும் இது எவ்வகையிலும் குறைந்ததன்று. வாழ்க்கைத் துணைவியின் சிறப்பே ஒருவன் வாழ்க்கையின் சிறப்பாதல் போல, ஒருவன் தேர்ந்தெடுக்கும் நட்பின் சிறப்பே அவன் வாழ்வின் சிறப்பாய் இலங்கும். உன் குடும்ப வாழ்வையும் உன் புதல்வர் புதல்வியர் வருங்கால நலன்களையும் உட்கொண்ட பெட்டகத்தின் திறவு கோலைத் தர நீ வாழ்க்கைத் துணைவியைத் தேர்ந்தெடுக்கிறாய். அது போலவே உன் பொது வாழ்வுப் பண்புகளடங்கிய உன் புகழ்ப் பெட்டகத்தின் திறவைத் தரவே நீ வாழ்க்கைத் துணைவனான நண்பனைத் தேர்ந்தெடுக்கிறாய் என்பது உன் நினைவிலிருக்கட்டும். உன் பொற்குவை வைத்துள்ள பெட்டித் திறவுகோலை நம்பகமானவன் என்று உன்னால் நன்கு தேரப்படாத ஒருவனிடம் நீ ஒருபோதும் கொடுக்க மாட்டாய் அல்லவா? அப் பொற்குவையினும் அரிய உன் வாழ்க்கை நலங்களை, உன் உயிரை, உன் புகழை அல்லது நற்பெயரை ஒப்படைக்கிற இத்துணைவர்களை இன்னும் எத்துணை விழிப்புடன் நீ தேர்ந்தெடுக்க வேண்டும்? பொழுது போக்கும் இன்பமும் நாடுவோர் இன்பங்கள் நலங்கள் எனக் கொண்டுவிடுதல் எளிது. அது போல தற்காலிகமான தோழர்களை அவர்கள் நல்ல தோழர்களைக் கெட்ட தோழர்களா என்று கூடப் பாராமல் நண்பர்களாக கொண்டு விடுதல் எளிது. ஆனால் இச் செயல்கள் எவ்ளவவு எளியவையோ அவ்வளவு மீளாத் துன்பமும் தருபவை தோழர்கள் தீயவர்களா நல்லவர்களா என்று தேர்ந்து தீயவர்களானால் தீயினும் அஞ்சி விலக வேண்டும். நல்லவர்கள் என்று தேர்ந்தபின் உயர் பண்பாளரா இழிபண்பாளரா என்று ஆய்தல் வேண்டும். இழிபண்பாளர் என்றாகி ஒதுக்கி உயர் பண்பாளரிடமே உறவு கொள்ளல் தகும். இவ்வுயர் பண்பாள ருள்ளும் நீ அவர்மாட்டு அன்புடையவனாயிருப்பதுடன் உன் மாட்டு அன்புடையாரா யிருப்பவரிடம் அவ்வன்புரிமையை நட்புரிமையாக வளரவிட்டு, இருபாலும் ஒத்த விருப்பத்தின் அடிப்படையில் நண்பராகக் கொள்ள வேண்டும். இத்தகைய தேர்வு உனக்குக் கிட்டினால், காதல் வாழ்வின்பின் நீ ஓருடல், ஈருயிர் பெற்ற ஒரு முழு மகன் ஆதல் போலவே, இரு வாழ்வு பெற்ற ஒரு மகனாவாய். நட்பின் இன்பம் பெருகுவதும் துன்பம் குறைவதும் இதனாலேயே ஏனெனில் இன்ப நுகர்ச்சியிலும் ஓருயிருக்கு ஈருயிர்கள் இருந்து நுகர்கின்றன. துன்பத்தின் எதிர்ப்பிலும் தடுப்பிலும் ஓர் உயிர்ப் பண்புக்கு இரண்டு உயிர்ப் பண்புகள் இருந்து போராடுகின்றன. தன்னினும் தனக்கு இனியார் இலர் என்பது பொது உண்மை. ஆனால் நட்புடையார்க்குத் தம்மினும் தம் நண்பர் இனியார். ஆதலால் நண்பர் வாழ்க்கைப்பேறுகள் நட்புக் காரணமாகப் பெரிதும் வலிவு பெறுகின்றன. வீரமுடையான் நட்புமுடையவனாதல், வாளுடை யான் கைத்திறமும் உடையவனாதல் போன்றது. மனிதன் குறைபாடுகளின் மிக மிகப் பொதுப்படையான, யாவர்க்குமுரிய குறைபாடு, மனிதன் என்னும் ஆறுதலும் தேறுதலும் கோரி நிற்பதேயாகும். துன்ப நேரத்தில் ஒருவனுக்கு அத் துன்பத்தைவிட ஆறுதலின்மைதான் துன்பமாகத் தோற்று மியல்புடையது. அதுபோல அத் துன்ப ஒழிப்பைவிட அதன் காரணமாக ஆறுதல் பெறுவதையே அவன் மிகுதி விரும்பு கிறான் என்னலாம். பிரிவு வருந்திக்கண் கலங்கும் மனைவியின் ஒரு துளி கண்ணீர், குழந்தை முகத்தில் இன்னதென்றறிய முடியாது தோற்றும் ஒரு சிறுவாட்டம், நண்பர் உணர்ச்சி யார்வமிக்க ஒரு நரம்புத் துடிப்பு ஆகிய இவற்றிடையே சாகும் பேறுகிடைத்தால், எவர்தான் சாவையும் விரும்பி அணைக்க மாட்டார்? துன்பத்தில் கூட ஆறுதலுக்கு இவ்வளவு ஏங்கும் இயல்புடைய மனித உள்ளம் இன்பத்தினிடையில் ஒத்துணர்வையும் பாராட்டையும் புகழையும் விரும்புவதில் வியப்பில்லை. ஆனால் இவ்வார்வம் காரணமாக மனிதர் இனிதெனத் தோன்றும் எதனையும் ஆராயாது ஏற்று அல்லலுறுகின்றனர். மின்னுவதெல்லாம் பொன்னல்ல; அதுபோல இனிப்புத் தட்டுபவை யெல்லாம் இன்பமல்ல; இனிப்பு நிலையற்றது; முன் இனித்துப் பின் துவர்ப்பும் உவர்ப்பும் புளிப்பும் தரத்தக்கது. இன்பமோ முன் துவர்த்தாலும் பின் நிலையான இனிப்புடையது. நிலையற்ற இவ் வின்பங்களை நாடி நிலையான இன்பத்தை இழப்பவர் எத்தனை பேர்? இத்தகையோர் வாழ்க்கையை ஆராய்ந்தால் அவர்கள் முதல் முதல் இழந்த இன்பம் நட்பின்பமே என்றும்; அவர்கள் முதல் முதல் செய்த தவறு தீய தோழரை நண்பர் எனக் கொண்டதே என்றும் காணலாம். இம் முதல் தவறு வாழ்க்கை முழுவதும் ஒரே முழுத்தவறாக வளரும் இயல்புடையது. ஏனெனில் நல்ல நண்பர் ஒருவர் கிட்டினாலும் அதன்பின் தீய தோழமை ஏற்படுவதை அவர் தடுத்து நிறுத்தப் போராடுவது உறுதி. அதேபோலத் தீய தோழர் ஒருவர் ஏற்பட்டால் அவர் தீமைகளைப் பெருக்குவதுடன் தீய தோழர்களையும் பெருக்குவர். நல்ல நண்பர் இதன்பின் ஏற்படுவது அரிது. ஏனெனில் அவரைக் காண அவாவும் கனவார்வமும் அச்சமயம் அற்றுப் போம். அத்தகையோர் உள்ளத்தை ஈர்க்கத்தக்க நற் பண்புகளும் இல்லாதொழியும். நீ உன் வாழ்வில் தீமைகளையும் தீய தோழர்களையும் விலக்குதல் வேண்டும். நன்மைகளை வளர்ப்பதுடன் நற்பண்புடைய நண்பர்களின் நட்பையும் நாடி வளர்க்க வேண்டும். ஆனால் சொல்வதற்கு இது எவ்வளவு எளிதோ அவ்வளவு செய்வதற்கு எளிதன்று. நல்ல பண்புடையாளர்களைத் தேடினும் கிடைப்பது உலகில் அரிது. தீய தோழமைப் பண்போ எங்கும் மலிந்துள்ளது. நீ உன் வாழ்க்கையில் செந்நெறி எதுவெனத் துணிய முடியாது திகைக்கும் நேரத்தில், அத்தகைய திகைப்பு எதுவுமின்றி எளிதில் அதை அறிந்தவர்’ பலர் உனக்கு வழிகாட்டக் காத்திருப்பர். அவர்களின் தோழமை பெறலும் எளிது. அவர் காட்டும் வழியும் எளிது. அதற்கு நீ தரும் உன் முயற்சியும் விலையும் குறைவே. ஆனால் அவற்றால் நீ பெறும் இன்பமும் மலிவான இன்பமே. அந் நண்பர்களும் எவ்வளவு எளிதாகக் கிடைத்தார்களோ, அதனினும் எளிதாக அகன்றுவிடுவர். முகநகப் பேசி அணைவர்; முகந் திருப்பிக் கொண்டு பேசாது அகன்றுவிடுவர். அவர்கள் நட்பு இன்பத்தில் வளரும். அவ்வின்பத்தைத் துன்பமாக்கி, அத் துன்பப் பயிர் விளைவுதருங் காலத்தில் அதில் பங்குகொள்ளக் காத்திராது மறையும். இத்தகைய தோழமைகள் தரும் போலி இன்பத்தைப் பார்க்க, அவ்வின்பங்களால் வரும் துன்பமே இனிதென்னலாம். ஏனெனில் அத்துன்பம் அவர்கள் நட்பின் போலித் தன்மையை நன்கு எடுத்துக்காட்டி நம்மைத் திருத்தக்கூடும்! மேலும் இத் துன்பங்களிடையே தான் உண்மை நண்பர்கள் வலியவந்து தம் இயல்பை உனக்குக் காட்டிச் செல்லக்கூடும். நீ அச்சமயம் அவர்களை அறிந்து கொண்டால், உன் வாழ்க்கையில் அது ஒரு நல்ல திருப்புமுகமாய் அமையும். தீய தோழமை நீக்கி நல்ல தோழமையும் நட்பும் பெருக்க வழி யாதெனில், இவ் இரண்டு திறங்களுக்கும் இடைப்பட்ட அடிப்படைப் பண்புகளின் வேறுபாட்டை உள்ளத்தில் வலியுறுத்திக் கொள்வதே. தீய தோழரும் தீயவரும் தத்தமக்கே இன்பம் தேடுபவர். நீ உனக்கின்பம் தேடித் தோழரைத் தேர்ந்தெடுத்தால், அவர்களும் தமக்கின்பம் தேடித் தாமே உன்னை வந்தடுப்பர். இதில் தவறும் இல்லையல்லவா? ஆனால் நட்பை நாடுவோர் தேடுவது தமக் கின்பமன்று; மன்னுலகுக் கின்பம்; அதாவது நற்பண்பு. நீ தன்னலமட்டுமே கருதாது மன்னலத்துக்கேற்ற பொதுத் தன்னலம் அல்லது தற்பண்பு நாடினால், அதனால் ஈர்க்கப்படும் உன் நண்பரும் அத் தற்பண்பினூடாகவே உன் நலத்தில் நாட்டம் செலுத்துவர். இருவரும் மன்னலம் பேணுபவராதலால், உங்கள் நட்பு, நட்புப் பண்பை வளர்க்கும். தீய தோழர் நாடும் இன்பத்துக்கும் நண்பர் நாடும் இன்பத்துக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு யாதெனில், முன்னது குடிப் பெருமையை அவமதிப்பது; பின்னது குடிப் பெருமையை அடிப்படையாகக் கொண்டது என்பதே. குடிப் பெருமை என்பது பெரும்பாலும் பெண்மையின் பெருமையே யாகும். உன் வாழ்க்கையையே நீ எடுத்துக் கொண்டால், அதில் ஆண்களின் பங்கை ஒதுக்கினாலும் ஒதுக்கி வாழலாம்; பெண்களின் பங்கை ஒதுக்கி வாழ்தல் முடியாது என்பதை நீ காணலாம். உன்னை மனித இனத்துள் ஒருவனாகச் செய்த பெருமை ஒரு பெண்ணுக்கே உரியது நீ அவரைத் தாய் என்ற தெய்வீகப் பெயரால் அழைக்கிறாய். அவரை நீ தெய்வம் என்று கூறுவதுகூடத் தெய்வத்தைப் பெருமைப் படுத்துவதேயன்றி அவரைப் பெருமைப்படுத்துவ தாகாது. ஏனெனில் கடவுள் அன்புக்கே தாயின் அன்புதான் மேற்கோள் காட்டும் உவமை ஆகும். உன் வாழ்வின் போக்குக்கு உன் உடல்நலம், உன் அறிவுநலம், உன் உணர்ச்சி நலம், உன் ஒழுக்கம் ஆகிய இத்தனை துறையினுக்கும் உன் தாய் எவ்வளவு தொலை பொறுப்புடையவர் என்பதனை நீ அறியாதவனல்ல. ஆனால் நீயும் சரி, எவரும் சரி, அதனை முற்ற அளந்தறிதல் கூடாதது. கற்பனை கடந்ததாகக் கொள்ளப்படும் கடவுள் அன்புக்கே அது அக் காரணத்தால் தான் அருளாளரால் மேற்கோளாக எடுத்துக் காட்டப் பட்டது. தாய்க்கு அடுத்துத் தமக்கை தங்கையர் உன் வாழ்க்கைப் போக்கை மாற்ற உதவிய பெண்டிர். இவர்கள் பங்கும் பெரும்பாலும் அளந்தறியப்படாத ஒன்றே. உடன் பிறந்த பெண்டிர் இல்லா ஒருவன் வாழ்க்கையையும் உடன் பிறந்த பெண்டிர் உடையான் வாழ்க்கையினையும் ஒப்பிட்டுப் பார்த்தால், பெண் உடன்பிறந்தும் வாழ்க்கைக்கு உயர்வு கொடுப்பவள் என்பது விளங்கும். தாய், மனைவி ஆகிய இரு பெண்மைத் தொடர்பும் கிட்டத்தட்ட எல்லாருக்கும் உண்டு. ஆகவே அவர்கள் செம்மைப் பண்பு முற்றிலும் எதிர்மறையாகக் காணப்படுவது குறைவு. ஆனால் உடன்பிறந்த பெண்டிர், பெண்மக்கள் ஆகியவர்கள் தொடர்பால் ஒருவன் உயர்பண்பு பெறுவதை எளிதில் காணலாம். இறுதியாகக் கவனிக்கப்பட வேண்டியது மனைவியர் தொடர்பு. மனைவியரை நடுநாயகமாகக் கொண்டே எல்லா மனித உறவுகளும், எல்லா வாழ்க்கைப் பயன்களும் அமைந் துள்ளன என்று கூறுவது மிகையாகாது. இத்தகைய முத்திற உயர்பண்புக்குரிய பெண்மையைப் போற்றுதல் நற்பண்பு; தூற்றுதல், புறக்கணித்தல், ஒதுக்குதல் இவை யாவுமே இழிபண்பின் குறிகள். இவ்வழுக்கள் தொடர்பு அல்லது சாயல், அல்லது அதற்கான சிறு முன் குறிகள் தோற்றுமானால் கூட, அவற்றிற்குறியார் இழிபடுபாளர்; அவர்கள் தொடர்பு தீய தோழமையின் பாற்படும் எனத் தேர்ந்துகொள்ளலாம். பிரிட்டனின் உயர்பண்பு, பிரிட்டனைப் போன்ற பிற நன்னாடுகளின் நற்பண்பு, பிரிட்டானியர்கள் தம் பண்பின் தாயகங்களெனக் கருதும் உரோம, கிரேக்க, பாலஸ்தீன நாடுகளின் பண்புகள் ஆகியவற்றைச் சீர்தூக்கிப் பார்த்தால், அவை யாவும் பெண்மைக்கும் நற்குடி வாழ்வுக்குப் பெருமை கொடுத்த அளவில்தான் பெருமையுடையன என்பதை நீ காணலாம். உலக நாகரிகம் பெண்கள் ஆட்சி செய்யும் வீட்டுப் பண்பில் விதையூன்றி முளைத்து, நல்லறிஞர் ஏட்டுப்பண்பில் தவழ்ந்து கொடியாகப் படர்ந்து, நாட்டுப் பண்பில் நறுமலராகப் பூத்து மணம்வீசி, உலக நாகரிகப் பண்பாய்க் கனிந்து கனி தருகிறது என்று காண்பாய். மனிதர் எவருமே தம் தாய், தம் தமக்கை, தங்கையர், தம் துணைவியர், தம் புதல்வியர் ஆகியோரைப்பற்றி இழுக்காக கருதார் என்று நீ எண்ணலாம். பேரளவில் இது உண்மையும் ஆகும். ஆனால் தீமைகள் மனிதர்மீது தெளிவாகத் தீமையுருவில் வந்து படர்வதில்லை. தாய், தமக்கை, தங்கை, மனைவி, புதல்வி என்ற நற்பெயர்களைப் பெண் என்ற பொதுப் பெயரில் நாம் சில சமயம் மறப்பதுண்டு. அத்துடன் என்னுடைய, உன்னுடைய என்ற தன்மை முன்னிலைப் பெயர் சாராது. அவனுடைய, அவருடைய என்ற படர்க்கை பெயர்கள் சார்ந்து, கண்காணாதவர், தம் குடிசாராதவர், தம் இனம் சாராதவர், தம் நாடு சாராதவர் ஆகியவர்களுடன் சார்ந்து வருமிடத்தில் மனித இனம் பெண்மையின் பெருமையை மறக்கத் தொடங்குகிறது. தீயோர் இவ்வியல்பைக் கையாண்டு, தொலைத் தொடர்புடைய பெண்டிர், அப் பெண்டிர் தொடர்பு ஆகியவற்றை நையாண்டி செய்யப்பழகி, அதன்பின் அத் தொலைப்பண்பைப் பொதுப் பண்பாக்கி, இறுதியில் தம்மைத் தாமே இழிவுபடுத்திக் கொள்ள வைக்கின்றனர். தாய்மை, துணைமை, காதன்மை ஆகிய முப்பெருந் தெய்வப் பண்புகளுக்குரிய பொன்மையை மனிதரின் அவலப் பொழுது போக்குப் பொருள்களுள் ஒன்றாக்கித் தீயோர் எவ்வுருவில் பேசுவது கேட்டாலும், அத் தீயோர் தொடர்பை மனித உலகில் வளரவிடாது மாய்விக்க உன்னாலியன்ற யாவும் செய்யக் கடவாய்! ஆனால் இதற்காக நீ வேறு எதுவும் செய்ய வேண்டுவதில்லை. அவர்கள் தொடர்பை உன் வாழ்விலிருந்து எவ்வளவு கூடுமோ அவ்வளவும் விலக்கி விடுவதே சாலும். குடிமைப்பண்பைக் கெடுக்கும் பண்புகளுள் முதன்மையானது குடிக்கும் பண்பேயாகும். மாட்டாகக் குடித்தல் வாழ்க்கையின் இன்றியமையாக் கூறு என்று சிலரும் கருதுவதுண்டு. ஆனால் மாட்டான குடியில்கூட ஆடவரும் பெண்டிரும் தம் குடிப்பிறப்பை மறக்கத் தொடங்கித் தாறுமாறாகப் பேசவும் செயலாற்றவும் தொடங்குகின்றனர் என்பதும். அக்குடி யில்லாதவேளை அவற்றைக் கேட்கவே அருவருக்கின்றனர் என்பதும் கவனிக்கத் தக்கது. மதுகைதராக் குடிவகை உணவின் பகுதி; மதுகை யுடையது மட்டாக வழங்கினும் எச்சரிக்கையுடன் வழங்கத் தக்கது என்பதில் தடையில்லை. ஏனெனில் அதன் நோக்கம் வேறு எதுவும் அன்று வெறும் இன்பநோக்கே; அதுவும் நேரப் போக்கின்பம் மட்டுமே; நிலையான வாழ்க்கையின்பமன்று தன் இன்பமன்றிப் பிறர்க்கான பொதுநல இன்பமுமன்று. மேலும் இன்பத்துக்காக நாடும் குடி (காப்பி, தேயிலை முதலிய) இனிய நறுநீர்ச் சிறு குடிவகைகளாயி னும் அதனை ஒத்த (புகையிலை, சுருட்டு, பொடி முதலிய) பிற பழக்கங்களாயினும் இவை யாவும் இன்பப் பொழுது போக்கை வளர்த்து, அதுவே வேலையாகத் திரியும் மக்கள் வகுப்பையும் வளர்த்து வருவது காணலாம். பொதுநலம் நாடாத இந்த இன்ப வகுப்பினரே தம்மையல்லாத பிறர் எவரையும் சில சமயம் தம் இன்ப வகுப்பினரையும் இழிவுபடுத்திப் பேசவும் நையாண்டி செய்யவும் அலைக்கழிக்கவும் முற்படுகின்றனர். இப் பழக்கங்களி லிருந்து சூதும் அதிலிருந்து திருட்டும், கொள்ளையும், கொலையும் ஏணிப் படிகள் போல் ஒன்றையொன்று தழுவி நிற்கின்றன. இவற்றுள் எப்படியில் நிற்போரும் தம்மை யறியாமலே அடுத்த படிகளை நோக்கி முன்னேறிச் செல்லக்கூடும். இவற்றுள் முதற்படியாகிய தற்புகழ்ச்சி, பிறர் பழிப்பு, பெண்பழிப்பு, சிறு மதுகை பொருள்கள், இன்ப நாட்டம் ஆகியவற்றைக் கருவியாகக் காட்டியே தீய தோழர்கள் உரமற்ற பல நற்பண்பாளர்களைப் படிப்படியாகத் தீமை அளற்றுள் ஆழ்த்திவிடுகின்றனர். தீயோர் தீமையை ஏற்கும் உரமற்ற பண்பு, உன்னிடம் இருத்தல் தகாது. அதேசமயம் அப்பண்பு இல்லை என்ற பெருமை உன்னிடம் இருந்துவிட்டால், அதுவே எச்சரிக்கையின்றி அவற்றுக்கு நீ இரையாகவும் உதவிடக் கூடும். தீமையைப் பழித்தே பலர் தீமைக்காளாகி யுள்ளனர். நான் நல்லன். உரமுடையவன் என்ற எண்ணத்துக்கு ஆளாகிப் பலர் தீமை யடைந்துள்ளனர். மன உரமற்றவர் நல ஆர்வங்கள் கூடத் தீமைக்குக் காரணமாவதுண்டு. நகரத்தின் வழி நிறைவேறா நல்லெண்ணங்கள் நிறைந்தது’’ என்ற பழமொழி இதனாலேயே ஏற்பட்டது. தீயவற்றைக் கனவிலும் கருதாமல், அதே சமயம் தீயவற்றைத் தீயினும் அஞ்சி விழிப்பாக வும் இருந்தாலன்றி, எவனும் தீநெறியினின்று தப்ப முடியாது. ஆனால் தீமையச்சத்தினும் நல்லகாவல் தீமை இது என்ற அறிவும், நன்மையின் நெறி இது என்ற உணர்வும், நன்மை ஆர்வமுமே யாகும். நல்ல நட்பார்வம் நட்பினைத் தருவதுடன் இவற்றையும் தரும்; நட்பு இவ்வகையில் ஒரு வாழ்க்கைக் கோட்டையாய் உதவும். மனிதத் தகுதி இது என்று நீ உன் குறிக்கோள்களை வரையறுத்துக் கொள். இறப்பினும் நான் இதில் தவறேன் என்பது உன் வாழ்க்கை உறுதியாயிருக்கட்டும். உரைக்கும் உரைகள் யாவும் இது பற்றிய நல்லுரையாகவும், செயல்கள் யாவும் இதற்கான சான்றுகளாகவும், உன் செல்வாக்கு யாவும் இக்கோட்பாடுகளைப் பரப்பும் சமயப் பரப்பாகவும் இருக்கட்டும். உன்னால் நண்பர்கள் எனக் கொள்ளப்படுபவர் என்றும் இந்நெறி பிறழாதவர்கள் என்ற உறுதி உனக்கு இருக்க வேண்டும். அவர்களும் உன்னைப்பற்றி அவ்வுறுதி கொள்ளச் செய். அப்போது உன் நண்பர் சூழல் ஒரு தனி மனிதர் சூழலாயிராது. உலகில் தீமையுடன் போராடி நன்மையை நிலை நாட்டிப் பல நாடுகளிலும் பல இனங்களிலும் பல சூழ்நிலைகளிலும் உலக நாகரிகத்தை உயர்த்தப் பாடுபடும் பல சிறு குழுக்களில் ஒரு உயர்நிலைக் குழுவாக அது இடம்பெறும். அக்குழுக்களை வலுப்படுத்தி அது உலகில் நாகரிகமுள்ளளவும் தன் ஆற்றலைத் தொடர்ந்து வளரச் செய்யும். தீய தோழமை எளிதானால், அதுபோலவே தீய எண்ணங்களும் எண்ணமற்ற செயல்களும் செயலார்வமற்ற வழக்கங்களும் பழகி ஊறிப்போன பழக்கங்களும் நம்பிக்கைகளும் கருத்துக்களும் எளியவையாகவே இருக்கும். ஒரு சிறு செயலால், ஒரு சிறு சொல்லால், ஒரு சிறு கருத்தால் வாழ்க்கை முழுவதும் தவறிய மனிதர் வரலாறுகள் பல. அதுபோல ஒரு சிறு செய்தியால் முழுதும் உயர்வு பெற்றவரும் உண்டாயினும் இது அரிதினும் அரிதே. யாரோ ஒருவன் கூறிய சமய உரையால், ஜான்பனியனின் சமய வாழ்வு முற்றிலும் மாறி, அவர் புண்ணிய வழிப்போக்கு’ (ஞடைபசiஅள ஞசடிபசநளள) என்ற நூலை எழுதும்போது தூண்டுதல் ஏற்பட்டது. ஆனால் இவ்வொரு நற்சான்றுக்கு மாறாகத் தீவழிச் சான்றுகள் பல. இவற்றுள் ஸ்காட்லந்தின் அருங்கவிஞர் ராபர்ட் பர்ன்ஸ் ஒரு குன்றின் மேலிட்ட விளக்கனைய எச்சரிக்கையாகும். அவர் இளமையின் களியார்வம் கொண்ட ஒரு தோழர் கவர்ச்சியி லீடுபட்டுப் பல தீய பழக்க வழக்கங்களுக்காளான பின்பே அவர் போக்கு அருவருக்கத்தக்க போக்கு என்பதை அவர் காண முடிந்தது. ஆனால் இவ்வறிவின் பயனாக, பர்ன்ஸின் கருத்து மாறி அவர் கவிதை உயர்ந்ததேயன்றி, அவர் வாழ்க்கைப் போக்கு மாறவில்லை. அவர் கவிதையுஞ் செல்வமும் முழு வளர்ச்சி பெறாமலே இளமையில் துண்டிக்கப்பட்டுப் போயிற்று. அத்தீய பழக்கங்களுக்கு அத் தலைசிறந்த ஸ்காட்லந்துக் கவிஞர் இரையாயினார். நீ தீயவற்றை எண்ணாமலும் செய்யாமலும் இருக்கலாம். ஆனால் கூட்டத்தில் ஒருவனாக நீ தீயவைக் கேட்டுத் தீயவை கூறாமலிருத்தல் அரிதினும் அரிது. அதையும் நீ காத்துக் கொண்டிருந்தாலும் கூட, அக்கூட்டத்தில் இருப்பதனாலேயே உன் மனம் கறைப்படுவது உறுதி. இன்பத்தில் ஒன்றுபட்டு உரையாடும் கூட்டம், அக்கூட்டத்திலுள்ள தனி மனிதர் எவரும் செய்யத் துணியாச் செயலைச் செய்ய வல்லது என்பதை நீ ஒருவேளை கவனித்திருக்க மாட்டாய். பல நல்ல பிளளைகள் சேர்ந்தவழி ஒரு தீய குழு அமையக்கூடும் என்பதையும் நீ கவனிக்கலாகும். இதனையே அறிஞர் கும்பலுணர்ச்சி (ஆடிb.ஆiனே) என்பர். கும்பல்களில் ஆய்ந்தோய்ந்து பாராத தனி மனிதர் இன்பம் மட்டும் நாடிச்சேர்வதால், அவர்களின் உள்ளார்ந்த தீமைகள் மட்டும் ஒருங்கிணைகின்றன. இதனாலேயே இக் கும்பலுணர்ச்சி வளர்கிறது. ஆய்ந்தோய்ந்து உரையாடும் நண்பர் குழுக் கூடுகிற இடத்தில் இதற்கு நேர்மாறான தொகுதி மனப்பான்மை (ழுசடிரயீ டிச கூநயஅ ளுயீசைவை) ஏற்படும் நிலையான தொகுதிகளில் அது ஒப்பற்ற ஒற்றுமைப் பாட்டுணர்ச்சி (நுளயீசைவை னந ஊடிசயீள) ஆக இயங்கிச் செயற்கரிய காரியங்களைச் செய்து வெற்றிகாண வைக்கும். இவ்விருவகைக் குழுவமைப்புக்களின் வேறுபாடறிந்து பின்னதன் வகையை வளர்க்க வேண்டினால் நட்புப் பேணுக. நற்பண்பு பேணுக; பயனுடைய இன்பமே. மன்னலத்துக்கு உறுப்பாகிய தன்னலமே வளர்க்க. குழு அத்தகையது அன்றென உணர்ந்தால், அல்லது அத்தகைய குழுவினுக்கு உதவாத சொற்கள் பயின்றால், அதற்கு நீ கூடிய மட்டும் ஆதரவு காட்டாது ஒதுங்குவாய்! இவை மேன்மேலும் பயின்றால், அக்குழுவையே புறக்கணிக்கக் கடவாய்! இது ஒன்றே உலகில் நீ நற்பண்பாளனா யிருப்பதற்கும், உலகில் தீய பண்புகளை நலிவித்து நற்பண்புகளைப் பேணுவதற்கும் உன்னால் செய்யக் கூடும் பணி. இன்ப நாட்டம் கூடாது என்பதனால் இன்பக் கேளிக்கைகள் தவறு என்று கொண்டுவிடாதே. உண்மையில் உழைப்போர்க்கு இன்பத்தினும் பயன்தரும் பொருள் வேறு எதுவுமில்லை. நாள் முழுதும் உழைப்போர்க்கு மாலையில் கேளிக்கையும் முன்னிரவில் நாடகமும் படக் காட்சியும்போல உயர்ந்த இன்பமும் உயர் பயன்தரும் இன்பமும் வேறு காண்டலரிது. நல்விழாக்களும் பொருட் காட்சிகளும் நாடு சூழ்வரல்களும் இத்தகையவையே. ஆனால் இவை எவையும் தீய தோழமையையோ தீய தோழமைப் பண்புகளையோ வளர்ப்பவையாயிருந்தால் இவற்றினும் கேடு வேறில்லை. கலையும் இலக்கியமும்கூடத் தீய தோழமைக் குழுவினரால் கைக்கொள்ளப்பட்டு இந்நிலை யடைவதுண்டு. மில்ட்டனைப் போன்ற நாட்டுக் கவிஞரும் கெதேயைப் போன்ற உலகக் கவிஞரும் தம் கலைக் குறிக்கோளின் உயர்வின் பயனாக இவற்றினின்று விலகி நின்றனராயினும், உலகக் கவிஞரான தாந்தேயும் ஷேக்ஸ்பியரும் நன்மையின் எல்லைக்கோட்டில் தீமைக்கும் நன்மைக்கு மிடையிலுள்ள நுண்ணிய வாள் முனையில் நடந்தனர் என்பதும், சில சமயம் தீமையின் பக்கம் அவர்கள் சாயாது தப்ப முடிந்ததில்லை என்பதும் எச்சரிக்கையாகக் கவனிக்கத் தக்கது. உலகப் பெருங் கவிஞர் கவிதையெல்லையிலேயே வந்து அச்சுறுத்தும் இந்நச்சுக் கலைப்பண்பு அதிற் குறைந்த மதிப்புடைய கலைக்கு எத்தகைய தீமை என்று கூறத் தேவையில்லை. மனிதப் பண்பை உயர்த்தப் பயன்படுத்தாமல் இழிவுபடுத்தியே இன்பம் பயக்கும் கலைப் பண்புகளும், மக்களிடையே குறுகிய நாட்டு வேற்றுமை, இன வேற்றுமை, வகுப்பு வேற்றுமை, ஆண் பெண் வேறுபாடு, சமய வேற்றுமை ஆகியவைகளைத் தகா முறையிலும் உயர்வு தாழ்வும் கசப்பும் தரும் வகையிலும் வளர்க்கும் கலைப் பண்புகளும் கனிவோ, இரக்கமோ இன்றி ஒழிக்கத் தக்கவை. அவற்றின் கலை குடிகாரன், கொள்ளைக்காரன், கொலைகாரன் ஆகியோர் பாட்டுக்களிலுள்ள கலை போன்றதுதான். மனிதப் பண்புடைய கலைஞர் எவரும் இத்தகைய கலையைத் தீண்ட மாட்டார். வாழ்விலும், கலையிலும், அரசியலிலும் நீ வேறுபடுத்தும் பண்புகளையும், உயர்வு தாழ்வுப் பண்புகளையும், மக்கள் அறிவு வளர்ச்சியைத் தடுக்கும் பண்புகளையும் எதிர்ப்பதையே உன் வாழ்க்கைப் போராட்டமாகக் கொள்வாய். இதற்கான ஒப்பற்ற கருவியாகவே நீ நட்பினை நாடுகிறாய். நீ வெறுப்பதை உன் நண்பரும், நண்பரின் நண்பரும், அவர் நண்பரும் என உன்னுடன் தொடர்புள்ள உலக முழுவதுமே எதிர்க்கும். உன்னை எதிர்ப்பவர்களும் இதுபோலவே தாமும் தம் தோழர்களும் தோழர்களின் தோழர்களும் அவர்கள் தோழர்களுமாக எதிர்ப்பர். உலகம் இரண்டுபட்டு நடைபெறும் இந் நன்மை தீமைப் போராட்டத்தில் தீயோர் திறத்துக்கு ஒற்றுமை தேவைப்படாது. தீமை ஒற்றுமை யில்லாமலே செயலாற்றத் தக்கது; இன்னும் தெளிவாகக் கூறப் போனால், வேற்றுமைகளை வளர்ப்பதே அதன் வெற்றியின் மறைதிறவுகோல். வேற்றுமை வளர்க்கத் தீயவர் கையாளும் முறைகள் எண்ணற்றன. நீ உயர்வாகக் கொள்ளும் குறிக்கோள்களின் பெயர்கள் யாவற்றையும் நீ உன் கொடியில் காண்பது போலவே, அவர்கள் கொடியிலும் காணலாம் அவர்கள் தரப்பையும் உன் தரப்பையும் வேறு பிரித்தறியக் கூடியவை புறத் தோற்றமல்ல. அடிப்படைப் பண்புகளே. நீ ஒரு உலகக் குறிக்கோளுடையவனாய், உலக மக்கள் அனைவரின் நலமும் பேணுபவனாய், உன் நாடு, இனம், வகுப்பு ஆகியவற்றுக்கு உழைக்கும்போதும் ஓருலகை மறவாது, உயர்வு தாழ்வு பேணாது செயலாற்றுபவனாய் இருந்தால் எந்தப் பெயரிட்டு எவ்வுருவில் தீமை வந்தாலும் அதனை நீ உணர்ந்து விலக்கி எதிர்த்தழிப்பாய். உனது இப்பணியில் உதவுபவர் எதிர் தரப்பினர் போல் சில சில கூறுகளில் செயலாற்றுபவராயினும், மொத்தத்தில் உன் அடிப்படைப் பணியில் உதவுபவர் உன் நண்பர், அல்லது நண்பரின் நண்பர். அல்லது நண்பர் தொடர்புடையார் என்று அறிக. உன் பணிக்கு ஊறு செய்பவர் உன் நாட்டினராயினும் உன் குடியினராயினும் உன்னைப் பெற்ற தந்தையாயினும், அவர்கள் உன் தரப்பினர்போல் சில பல கூறுகளில் தோற்றினும், அவர்களை உணர்ந்து உன் உலகினுக்கும் உணர்த்துதல் உன் வாழ்க்கைக் கடன். உலகப் போரில் நேச நாட்டினர், பகை நாட்டினர் என்ற வேறுபாடு தலைமையானது. நொதுமலர் பகைவருக்கு உதவாதபோது நண்பராகவும், உதவியபோது பகைவராகவும் கணிக்கப் படுவர். உலக வாழ்க்கைப் போராட்டத்திலும் நாகரிகப் போராட்டத்திலும் அதுபோலவே உலகத்தில் இரு ஆற்றல்கள் உள்ளன. அவற்றுக்கிடையே நன்மை தீமை உணர்வின்றி நொதுமலராகப் பலர் உள்ளனர். நண்பர் மூலம் நட்புலகை வலிவடையச் செய்து நொதுமலர்களை நட்புலகின் வயமாக்கிப் பகையுலகில் தவறிச் சென்றோரை மீட்கும் அரும்பணியில் ஈடுபடுவாயாக. நட்பெனும் அரிய புணை இவ்வளப்பரும் கடலகத்து உன்னை நன்னெறிப் படுத்தி உய்க்குமாக. நட்புலகின் இவ்வொற்றுமைக்குப் பெரிதும் உதவுவது உயிர் மறுப்பு (தியாகம்), தகுதி (ழடிnடிரச) என்ற ஒன்றினுக்காகவும், நண்பர் நலம் என்ற ஒன்றினுக்காகவும், நண்பர் என்றும் உயிர்விட ஒருக்கமா யிருத்தல் வேண்டும். தகுதி என்பதே நட்புலகின் பொதுநலம் ஆதலால், ஒவ்வொருவர் தன்மறுப்பும் உயிர் மறுப்பும் அனைவரையும் பேணுகின்றது. அதேசமயம் நட்புத்தளை மூலம் ஒவ்வொரு வரும் தனித்தனியாகவும் பிணைக்கப் படுகின்றனர். எனவே இந் நட்புலகத்தளை ஒருவருக்காக யாவரும், யாவருக்குமாக ஒவ்வொருவரும் என்ற நீக்கமற்ற நிறை ஒற்றுமயை விளைவிப்பதாகும். நண்பர் நலத்தில் கருட்தூன்றிய நண்பர் அறிவு ஒன்றே. தன்னலம், பொதுநலம்; அன்பு, கண்டிப்பு; விட்டுக்கொடுப்பு, எதிர்ப்பு; இன்பம், கேடு ஆகிய முரண்படும் கடமையுணர்ச்சி யினிடையே, நட்புக் கலத்தை நடுநிலை வழியில் செலுத்தவல்லது. வடவானில் வடமீன் இது என இடஞ் சுட்டிக் காட்டவல்ல கைகாட்டி மீன்கள் போல நண்பர் நலம், பொதுநலம் ஆகிய இரு பண்புகளும் நன்னட்புக்கு நல்ல வழிகாட்டிகளாயமையத் தக்கவை. பொதுநலத்தூன்றிய நண்பர்தம் தன் மறுப்பினும் இறும்பூது தருவது எதுவுமில்லை. கள்ளங்கபடற அவர்கள் ஒளிவு மறைவில்லாமல் உரையாடும் உரையாடலினும் இனிது உலகில் வேறு எதுவுமிருக்க முடியாது. பிரிவு ஒன்றன்றி, அவர்களறியும் துன்பமும் வேறில்லை. ஆனால் நட்பு இப்பிரிவுத் துன்பத்தையும் இறுதியான மறைவுத் துன்பத்தையும் கடந்து ஒளி வீச வல்லது. இடத்தின் எல்லையற்ற பரப்பையும் காலத்தின் எல்லையற்ற பரப்பையும் இரண்டையும் அது தாண்டவும் வல்லது. ஹெராக்ளிட்டஸ் என்ற பண்டைக் கிரேக்க கவிஞன் இறந்தபோது அவர் நண்பர் ஒருவர் பாடிய கவிதை இதனைக் காட்டுகின்றது. கிறிஸ்து பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகள் முன்னிருந்த இக் கவிஞர் பெருமான் பல இனிய கவிதைகள் எழுதிப் புகழ் பெற்றனராயினும், அக் கவிஞர் மறைவால் அந்நண்பர் வாய்விட்டுக் கூறிய இக் கவிதை அவற்றுடன் சேர்க்கப்பட்டு, அவற்றினும் பன்மடங்கு சிறப்புடைய தாய் நட்பின் இலக்கியப் பாட்டாய் இலங்குகின்றது. இயம்பினர் நீ இறந்தனை’யென்று; என்னரிய ஹெராக்கிளிட்டஸ்! இறந்தாய்’ என்றே மயங்கினன்யா னும்; மயங்கி மலையருவி என எழுந்த விழுந்தழன்றே கலங்கினன், நின் னோடிருதுக ளித்துதவும் உரைத்ததுவும் கருத்திற் கொண்டே; விலங்கலிடைக் கதிரெழுந்து விழுந்தும்உரை வீயாதேம் வீவேம் கொல்லோ! வீயவல்லாய் நீயல்லை; நின்நட்பும் அன்று’ என நான் கண்டுகொண்டேன்! மாயவல்ல மண்ணுளொரு பிடிமண்ணாய் உன்உடலம் ஓய்வுற் றாலும், ஓயவல்ல அல்லதினது ஒண்முகமும் இன்குரலும் ஒளிர் கருத்தும்: சேயவல்லிநீ! இந்தச் சிறுகாலன் பலகொல்லும், நம்மைக் கொல்லான் ஆம் சிறுகாலன் பல கொல்லும். ஆனால் உன் கனவார்வத்தில் தங்கிய நட்பையும் அதன் தளையுட்பட்ட உன் நண்பர் குழுவையும் அவர்கள் கனவார்வங்களையும் காலன் தொட முடியாது. ஏனெனில் அவை காலமட்டுமன்றி இடமும் கடந்து ஒளி வீசவல்லன. அவற்றின் ஒளி உலகின் ஒரு பகுதியாக உலகின் புகழின் ஒரு கூறாய் இயங்கும். 5. வாணிகம் விரும்பும் இளைஞருக்கு வாணிக முனைவராக வரவிருக்கும் செல்வச் சீராள! நீ வாணிகத்தில் கருத்துச் செலுத்தி வாணிக முனைவராக வேண்டும் என்று கனாக் காண்கிறாய். வாணிகத்தைப் பற்றி நீ என்ன கருத்துக் கொண்டிருக்கிறாய் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நீ என்ன கருத்துக் கொண்டிருந்தாலும், உன் கனவை நான் வரவேற்கிறேன். காரணம், உழவு, தொழில், வாணிகம் என்ற மூன்றின் கூட்டுறவை அடிப்படையாகக் கொண்டே உலகம் செயலாற்றுகிறது. அவற்றுள், உழவு மிகப் பழமையான செயல் துறை. அதிலும் கனவு காண்பது பயன்தருவதே யாயினும், கனவு காணாமலே அதனைப் பலர் நடத்தக்கூடும். தொழிலும் மூலமே கனவு பெரிதும் வளர்ச்சி அடையக்கூடும். ஆயினும் கனவு காண்பவர் அதனை வளர்ப்பதற்கு மட்டுமே மிகவும் இன்றியமையாதவர். அதனைச் செயற்படுத்துபவர்க்கு உழைப்பே மிகவும் தேவைப்படுகிறது. ஆனால் வாணிகம் இம் மூன்றையும் வளர்ப்பது. பல நாடுகளின் தொடர்புகொள்ள முதல் முதல் உதவிய துறை வாணிகமே. அத் தொடர்பு ஏற்பட்ட பின்புதான் மனித நாகரிகம், தொழில், உழவு யாவும் நாட்டெல்லை கடந்து நில எல்லை கடந்து வளர்ச்சியடையத் தொடங்கின. மேலும் வணிகத்துறை ஒன்றில்தான் தொடக்க முதல் கடைசி வரை கனவு காண்பவரின் உழைப்பு இன்றியமையாத தாகிறது. வெறும் நூலறிவு உடையவரால் நன்கு ஆற்றப்பட முடியாத துறை இது ஒன்றே. சூட்டிப்பு உடைய சிறுவர் சிறுமியர் மட்டுமே கடைக்கு அல்லது சந்தைக்குப் போய்ப் பொருள்கள் வாங்குவதில், திறமுடையவராயிருக்க முடியும். குடும்ப வாழ்வின் அடிப்படையிலுள்ள சிறு தேவைகளை நிறைவேற்றக்கூட இத்திறமை பெரிதும் வேண்டும். ஆடவர்களுக்கு மிகுதி கவலையில்லாமல் இத்துறையில் பெண்டிர் எளிதாகச் செயலாற்றிவிடுவதனாலேயே, இத்துறை பற்றி எதுவும் அறியாத ஆடவர் அத்திறனை மதியாமலும், அது எவ்வளவு அறிவாற்றல் வேண்டிய செயல் என்பதை உணராமலும் உள்ளனர். ஒரு குடும்பத்தின் தேவைகள், நிறைவுகள், வரவு செலவு நீடித்த உழைப்புத்திறம் ஆகியவற்றை யாராவது, திறம்பட நடத்திவிட்டு அரசியலில் புகுந்தால், அவர்கள் இன்று உலகை ஆள்பவரைவிட நன்கு ஆளவல்லவராவார்கள் என்பது உறுதி. வாணிகத்தைப் பற்றிய ஒரு செய்தியை மட்டும் உனக்குத் தனிப்பட இங்கே நினைவூட்ட விரும்புகிறேன். உன்போன்ற சிறுவர் சிறுமியர் உலகைப் பற்றிக் கனவு காண்பது போல, உங்கள் தாய் தந்தையர் உங்களைப் பற்றியே கனவு காண்கிறார்கள் என்பதை நீங்கள் கவனித்திருக்கக் கூடும். உங்கள் கனவுகளை நீங்கள் (தோழரிடமோ ஆசிரியரிடமோ) குறிப்பாக அல்லது வெளிப்படக் கூறுவதுபோல, யாரிடமாவது (அல்லது உங்களிடமாவது) உங்கள் தாய் தந்தையர் உங்களைப் பற்றிய தம் கனவுகளை வெளியிட்டுக் கூறினர் என்று வைத்துக் கொள்வோம். அப்போது எத்தனையோ தந்தையர் தாயார் தம் பிள்ளைகளை நாட்டு முதல்வராக வேண்டும், அமைச்சராக வேண்டும், உயர் பணியாளராக வேண்டும் என்று, கனவு காண்பவராக விளங்கக் காண்போம். இன்னும் சிலர் சமயப் பணியாளராக வேண்டும் அறிஞராக வேண்டும்... மருத்துவப் பணியாளராக வேண்டும் என்றுகூடக் கனவு காண்பர். ஆனால் தங்கள் பிள்ளைகள் வணிகத்துறையாளராக வேண்டுமென்றோ, உழவராக வேண்டுமென்றோ கனவு காண்பவர் இருக்க மாட்டார்; இருந்தாலும் மிகவும் குறைவான தொகையினராகவே இருப்பர் எனலாம். இது ஏன் தெரியுமா? உழவுத் துறையைப் பற்றி ஏன் தாய் தந்தயர் கனவு காண்பதில்லை என்று கூறுவது எளிது. அத்துறையில் கனவு காண்பவர் இன்னும் மிகுதியாகப் புகவில்லை; உலகில் பிற துறைகளளவு உழவு இன்னும் இதனால் முன்னேறவும் இல்லை. ஆனால் வாணிகத் துறை பற்றி ஏன் தந்தையர் கனவு காண்பதில்லை? வாணிக மன்னர் நெடுநில மன்னரையும் சமயத் துறையினரையும் திறைகொண்டு வாழ்வதை அவர்கள் காணவில்லையா? வாணிகத்திற்காகவே நாடுகள் ஒப்பந்தம் செய்வதும், கூட்டுறவு நாடுவதும், பகைத்துப் படு கொலைப் போர்களிடுவதும் அவர்கள் முற்றிலும் அறியாதவையா? அவர்கள் அவாவுறும் செல்வமும், செல்வப் பொருள்களும், நாகரிகப் பொருள்களும் வாணிகம் தரும் பொருள்களாயிற்றே! இவ்வளவு சிறப்புக்களையும் அவர்கள் கண்டும் கேட்டும் உணர்ந்தும் உள்ளனராயினும், அத்துறையைப் பற்றிக் கனவு காணாததன் காரணம் என்ன? அத்துறை அவ்வளவு உயர்பண்புடைய துறையல்ல என்று அவர்கள் உள்ளூர எண்ணுவதனால்தான். இதை அவர்கள் நேரிடையாகக் கூற மாட்டார்கள். தம் பிள்ளைகளைப் பற்றிக் கருதாத இடத்தில், அவர்கள் வணிகரை மதியாமலிருப்ப தில்லை. முதல் மதிப்பு அவர்களுக்குத்தான் என்றுகூடக் கூறலாம். ஆனால் தங்கள் பிள்ளைகள், தங்கள் கண்போன்று தாம் வளர்க்கும் பிள்ளைகள் வகையில் அச்சிறப்புப் போதாது; அது பணம் பெருக்கும் சிறப்பு ஒன்று மட்டுமே; பண்பாட்டில், ஒழுக்க முறையில், ஆன்மிக முறையில் தாழ்ந்த தரம் சார்ந்தது என்ற எண்ணம் மட்டுமே அவர்களிடையேயும், வணிகர்களிடையேயும் கூடப் பரவியுள்ளது. உண்மையில் இதைவிடத் தவறான கருத்து இருக்க முடியாது. சிறப்பாகச் சமயப்பற்று மிக்க தாய் தந்தையர் கனவுகள் இவ்வகையில் நல்ல பிடிப்பினையாகும். தம் பிள்ளை சமயப் பணியாளனாக, சமய அறிஞனாக, சமய முதல்வனாக வரவேண்டும் என்று அவர்கள் கனவு காணின், அது இயல்பே. ஆல் பெரும்பாலோர் அத்துடன் அமைவதில்லை. அரசியல் துறை, மருத்துவத்துறை, அமைப்பியல் துறை (எஞ்சினியரிங்) ஆகியவற்றில் தம் கனாத்தேர் செல்வதை அவர்கள் சமயப்பற்றுத் தடுப்பதில்லை. அவையெல்லாம் சமயத்துறைக ளல்லவாயினும் அதனினும் பயனுடைய, மதிப்புடைய நாகரிக வாழ்வில் பேரளவு மதிப்பு வாய்ந்த துறைகள் என்பதனாலேயே அவற்றில் அவர்கள் நாட்டம் செல்கிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் அதே சமயம் அவர்கள், அவை சமயத்துக்கு மாறல்ல; உலகியல் மதிப்புடனும், நாகரிகத்துடனும் அவற்றிலிருந்து கொண்டே சமயப் பற்றுடனும் வாய்மையுடனும் வாழ வகையுண்டு’ என்று கருதுகின்றனர். ஆனால் வாணிகம் சமயத்திற்கு மாறானது, இவ்வடிப்படைப் பண்புகளுக்கு இடமற்றது’ என்பது அவர்கள் கருத்து. அதனாலேயே அவர்கள் வணிகரையும் வாணிகத் துறையையும் மதித்தாலும் தங்கள் கனவுகளில், அதுவும் தம் வாழ்வைக் குறிக்கோளான தம் பிள்ளைகள் பற்றிய கனவுகளில், அதற்கு இடம்தரா திருக்கின்றனர். வணிகரும் இவ் உள்ளார்ந்த தப்பெண்ணத்தை ஏற்றுக் கொண்டவர்களாய், வாணிகத்தில் சமயமேது, ஒழுக்கமேது, வாய்மையேது என்று அடிக்கடி கூறுவதுண்டு. பல நாடுகளிலும் வணிகர் மனித வகுப்பின் இவ்வுள்ளார்ந்த வெறுப்பிலிருந்து, தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவே சமயத் தலைவர்கள் உறவைப் பெரிதும் நாடுவதுடன், சமய நிலையங்களுக்கும் அறநிலையங்களுக்கும் மிகுதுணை தந்து வலிவுதேட முனைகின்றனர். வாணிகத்துறை ஆன்மிக, ஒழுக்க உயர்வுடையதன்று என்பதும் சரியன்று; சமயத்துறையே அதற்கு உகந்ததென்பதும் சரியன்று. உண்மையில் வாணிகத்துறைக்குரியதாகக் கருதப்படும் குறுகிய தன்னலம், அதனினும் மிகுதியாகச் சமயத் துறை யாளரிடம் இல்லாமலில்லை. சமயப் பற்றுடையவரிடையே கூடச் சமயத் துறையாளரின் மதிப்பு இதனாலேயே குறைந்து வருகிறது. ஆன்மிகத் துறை, ஒழுக்க நிலை இவற்றின் அடிப்படைச் சமயமே என்று பெரும்பாலான மக்கள் கருதி வருவதனாலேயே, அத்துறையாளர் மதிப்புக் குறைந்தும், அத்துறையின் மதிப்பும், சமயத்தின் மதிப்பும் குறையாதிருக் கின்றன. சமயத் துறையினர் உண்மையான ஒழுக்க உயர்வுடையராயிருந்தால் சமயம் இன்றைவிட மிகுதி மதிப்புப் பெறும் என்பதை உணர்பவர், அதே உயர்விருந்தால் வேறு எத்துறையிலும் அதேபோல மதிப்பு மிகும் என்பதையும் ஒப்புக் கொள்வர். பொருட் பெருக்கத்திற்கு வழியான வாணிகத் துறையில் இவ்வாய்மை இருந்தால், அது சமயத் துறையில் அவ்வொழுக்கம் இருப்பதினும் உயர்ந்தது என்பதையும் யாவரும் ஒப்புக் கொள்வர். சமயத்துறையில் இன்று புகுபவரிடம் வாணிக நோக்கம் மிகுதி உண்டு. வாணிகத்துறை புகுபவரிடம் சமய நோக்கு குறைவு என்பதும் உண்மை. ஆனால் இரு துறைகளில் இருப்பவருமே கனவாளராயிருந்தாலல்லாமல், மக்கட் பணியாளராயிருந்தாலல் லாமல், ஒழுக்க உயர்வுடையவராயிருக்க முடியாது. அது மட்டுமன்று, மக்கட் பணியாளருக்குச் சமயத்துறையில் இருக்கும் வாய்ப்பைவிடப் பிற துறைகளில் வாய்ப்பு மிகுதி. சமய நிலையங்கள் கல்வியிலும் மருத்துவத்திலும் பிற பணிகளிலும் ஈடுபடுவதும் இதனாலேயே. இந்நோக்கமுடையவர் வாணிகத் துறையில் புகுந்தால், அவர்கள் உயர்வும் பெரும் பயனும் போற்றுதலும் பெறுவர்; வாணிகமும் உண்மையான வாணிகமாக, பரந்த மக்கள் தொண்டாக மாறும். வாணிகரினும் மேம்பட்ட உயர் பணியாளர் எத்துறையிலும் இருக்க மாட்டார்கள். தவிர, சமயத் துறையிலிருந்து கொண்டு ஒருவன் தன் வாய்மையின்மையை எளிதில் மறைக்க முடியும். மருத்துவம், அமைப்பாண்மை, கல்வித்துறையில் கூட மறைந்தொழுக முடியும். நேரிடை மக்கட் பணித்துறையான வாணிகத்தில் மறைப்பே’’ நெறியாக இன்று போல் கொள்ளப்பட்டாலன்றி, மறைந்தொழுக முடியாது. மறைப்பு இத்துறையில் அவ்வளவு வெற்றியும் பெறாது. ஏனெனில் தங்கு தடையற்ற போட்டியும், கண்கூடான உயர்வு தாழ்வு வேறுபாடுகளை விளக்கமாக எடுத்துக் காட்டும் திறனும் உடைய துறை இதுவே. வாணிகத்தின் அடிப்படைப் பண்பு பற்றியும் மக்கள் தவறான கருத்துக் கொண்டிருப்பதன் காரணம் அத்துறை யிலுள்ளோர் வெளிப்படையாகத் தந்நலம் கருதியவர்களாகக் காட்சியளிப்பதே. ஆயினும் அத்துறையின் உயர்வும் இதுவே. வெளிப்படையாக அன்றி, மறைத்து வாழ முடியாத துறை அது. வாய்மை யில்லாதவனால்கூட அதில் எவ்வளவோ நன்மை செய்ய முடிகிறது. வாய்மையுடையவரால் இன்னும் எவ்வளவோ முடியும். வாணிகம் உண்மையில் ஒரு மக்கட் பணி; ஓர் உலகப் பணி. அதனால்தான் அது நாகரிகத்தின் அடிப்படையாயுள்ளது. அதன் போட்டியிடையே நேர்மையுடையவன் வெற்றி பெறுவான்; நாணய முடையவன் வெற்றி பெறுவான். ஒற்றுமையுடையவன் குழு வெற்றியடையும். ஆனால் போர் வலுக்கும் வரை எல்லாத் துறைகளையும் போல, பலமுடையவர்க்கும் அதில் இடமுண்டு. உன்போன்ற கனவாளர், அதிலும் வாணிகம் ஒரு மக்கட் பணிக்கான துறை என்று கருதக்கூடிய ஒரு கனவாளர் அத்துறையை அணுகினால்தான், அணுகுபவர் வெற்றி பெறுவார். புகழும் அடைவர். அதுமட்டுமன்று; வாணிக முறை சமயத்துறையை விட ஆன்மிக முறையிலும் தாழ்ந்ததன்று; உயர்ந்ததே’ என உலகு எளிதில் அறிந்து கொள்ளும். அம்முறையில் சில கூறுவோம். மைக்கேல் ஏஞ்ஜெலோ 14ஆம் நூற்றாண்டில் இத்தாலி நாட்டில் இருந்த உலகக் கலைஞன். அவனை ஒத்த சீனக் கலைஞனை எந் நூற்றாண்டும், எந்நாடும் கண்டதில்லை. அவ் ஓவியங்களை வாங்கித் தம் இல்லங்களை, கோயில்களை, கலைக் கூடங்களை அணி செய்ய விரும்பாத செல்வர், மன்னர், தேசத் தலைவர் இல்லை. ஆனால் இத்தகைய கலைஞன்கூடமாக விளங்கிய கலை நகரமாக, ஃவிளாரன்ஸில் தானும் ஒரு பகுதி சுவர் கட்ட வேண்டுமென்னும் ஆவலால், தன் கலையை விட்டுக் கொத்தனாய்ச் சென்றானாம். கோயில்களுக்கு சிறப்புத் தருவதாகக் கொள்ளப்படும் கலையின் படைப்பாளன் மக்கள்வாழ் நகரக்குச் சுவரெழுப்புவதில் கொண்ட பெருமையைக் காண்க! வாழ்க்கையில் பயன்படும் அளவுக்குத்தானே சமயமும், கலையும், ஒழுக்கமும் உயர்வு பெறக்கூடும்? அவ் வாழ்க்கைக்க நேரிடையாகப் பயன்பெறும் பொருள்கள் யாவும், சமயத்துறை யாளர்க்கு, கலைஞர்க்கு, அரசியலார்க்குப் பயன்படும் பொருள்கள் யாவுமே வாணிகத்தால் பெறப்பட்டவைதானே? உலகில் வாணிகம் குறைந்தால் கூட சிறிது தடைப்பட்டால் கூட இப் பொருள்கள் யாவற்றிலும் முட்டுப்பாடு ஏற்பட்டு, நாகரிகம் வளர்ச்சியற்றுப் போகுமன்றோ! இத்தகைய வாணிகத்தை உலக நலன் கோரிச் செய்வதிலும் உயரிய பணி இருக்க முடியுமா? “வாணிகத் துறைக்கு நான் செல்லப் போவதில்லை! நான் என்ன அவ்வளவு தன்னலவாதியா? வேறு திறங்கள் அற்றவனா?” என்று உன் தோழர் சிலர் கூறுவதை நீ கேட்டிருக்கலாம். இது எவ்வளவு பேதைமை! வாணிகத்துக்கு வேண்டும் திறனிலும், திறத்திலும் உயர் திறனும், திறமும் எங்கே இருக்க முடியும்? வாணிகமின்றேல் கலைஞருக்குத்தூரிகையும் சாயமுமிராது. அவர்கள் கலைப் பொருள்களுக்கு விலை இராது. கோயில்களில் வழிபாடிராது. மக்களுக்கு உணவு முட்டுப்படும்; உடை தட்டுப்பாடு ஏற்படும். புகைவண்டி, கப்பல், வானூர்தி மட்டுமன்று, குதிரை வண்டியும், பொதிமாடும் கூட இராது. அவ்வவ்விடத்தார் அவ்வவ் விடத்துப் பொருள்களைக் கொண்டு வாழவேண்டி வரும். கல்வித் துறையில் நூல்கள் இரா; விவிலியநூல் அறிவுகூடப் பரவாது. இந்நிலையை யார்தாம், எந்தச் சிறுவன்தான் விரும்ப முடியும்? இந்த நிலையை மாற்றும் வாணிகமா தாழ்ந்த துறை? ஆகவே வாணிகம் வாணிகம் செய்வார்க்கு’ நல்ல வாணிகம் மட்டுமன்று; உலகிற்கும் நல்ல வாணிகமே. உலக நோக்குடையவர் அதனை நடத்தினால், அது அரசியற் பணியிலும் சமயப் பணியிலும் சிறந்ததாகும் என்ற கருத்துடன் நீ வாணிகக்களம் புகுக. இன்று உலகின் தொலைவெல்லை மிகமிகக் குறுகிக்கொண்டு வருகிறது. இது வாணிகத்தின் செயல், அரசியலின் செயலன்று. அரசியல் அதனைப் பயன்படுத்திக் கொள்கிறது, அவ்வளவுதான். வாணிகம் ஓருலகு’ உண்டுபண்ணப் பெரிதும் உதவுகிறது. சமயம் இதனைச் செய்து முடிக்கவில்லை; முடிக்க உதவியதாகக் கூட யாரும் கூற முடியாது. அதை விரும்புவதாக மட்டுமே வாய் வேதாந்தம் கூறி வந்துள்ளது. வாணிகம் இந்நிலையை எவ்வளவு தொலைவு வற்புறுத்தி வருகிறது இன்றைய வணிகர்களின் தன்னலத்திடையே கூட, அத்தன்னலத்தைக் கடந்து இதனை வற்புறுத்தி வருகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். கென்ட் மாவட்டத்திலுள்ள மருந்துக் கடைக்காரனுடைய புட்டிகள் ஒருநாள் வெறும் புட்டிகளாய் விடுகின்றன. அதை நிரப்பும் மருந்து கிடைக்க வழியில்லை. ஏன்? நடுநிலக் கடலில் போர். துருக்கிய நாட்டவர் மருதும் பூண்டு வளர்க்கவும் முடியவில்லை. இருப்பதை நடுநிலக் கடல்வழி அனுப்பவும் முடிய வில்லை! லங்காஷயர் வட்டத்தில் தொழிலாளர் அவதியுறு கின்றனர். ஏன்? இந்தியாவில் பருவமழை தவறிப் பெய்துவிட்டது. பருத்திப்பயிர் சேதமடைந்துவிட்டது! சிலசமயம் எங்கோ உலகின் கோடியில் ஒரு துறைமுக ஆட்சியில் சிறிது சச்சரவு. மறுகோடியில் அதன் வாணிகக்கள எதிர் அலைகள் காணப்படு கின்றன. இங்ஙனம் உலகை ஒன்றுபடுத்தும் ஆற்றலுடைய கருவியை, தொலையை மட்டுமன்று, இனம், மொழி, நாடு ஆகிய எல்லைகளைத் தாண்டிக் கடலும் நிலமும் மலையும் கடக்கும் ஆற்றலுடைய சாதனத்தை, வேறு எத்துறையில் காண முடியும்? பிரிட்டனை ஆளும் பொறுப்பில் ஒரு பங்கு கொள்ளும் அரசியல் மன்ற உறுப்பினர் பணி உயர்வானதே. ஆனால் அவருக்குத் தலைவலி உண்டானால், பிரிட்டனுக்கு அது தலைவலியாய் விடாது. நேர்மாறாக, ஒரு தொழிலாளி ஓரிடம் வேலை நிறுத்தினால் அதன் அளவில் நாடெங்குமன்று, உலகெங்கும் விலை ஏற்றத் தாழ்வு ஏற்படும். சில இடங்களில் இதன் பேரளவு விளைவைக் காணலாம். ஒரு தொடர்வண்டி யோட்டி நோய்ப்பட்டால் எத்தனை பேர் பயணம் அன்று நின்றுபோகும். அதன் தொலைவிளைவுகள் எத்தனை பேரைப் பாதிக்கும்? தொழிலைவிட இவ்வகையில் வாணிகத் தொடர்பு முக்கியமானது. ஏனெனில், பல இயற்கைப் பொருள்களும் செயற்கைப் பொருள்களும் உலகின் ஒவ்வொரு பகுதிக்குள் கட்டுப்பட்டுள்ளன. வாணிகத் தொடர்பு அறுந்தால் தொழில் வளமாய் இருந்தும் பயனில்லை. விளைவு மிகுதியாயிருந்தும் பயனில்லை. ஆனால் வாணிகம் ஒப்பற்ற மக்கட்பணியாக வேண்டுமானால், மக்கட்பணியென்ற கருத்துடனே நீ அதில் இறங்க வேண்டும். உன் ஆதாயத்தை அத்தொழிலின் வளர்ச்சிக்கு ஊக்கம் தரும் ஊதியமாக மட்டுமேநீ கருத வேண்டும். இம் முறையில் ஒருவன் வாணிகம் நடத்தினால் போதும். அவனைப் பிறரது போலி வாணிகம் வெல்ல முடியாது. அம் மரபு உலகில் பரவினால், தன்னல வாணிகம் ஒழியும். வாய்மைக்குச் சமயம் ஒரு சான்றுச் சொல்லாயிராது, வாணிகம் அதற்குத் தலைசிறந்த மேற்கோள் சொல்லாய்விடும். சமய வாய்’ என்ற தொடர் போய், வாணிக வாய்மை’ என்ற தொடர் வழக்கில் வந்துவிடும். இது பகற் கனவன்று. நல்ல நனவாகக் கூடிய கனவே நாணயமான வாணிகம்’ என்று வணிகர் விளம்பரம் செய்வது காண்க. நாணயம் விளம்பரப்படுத்தி ஆதாயமடையத்தக்க சரக்கானால், அதனை உண்மையாகவே பின்பற்றினால் எவ்வளவு ஆதரவு கைவரக்கூடும். படைத்துறை ஒருவனுக்கு, ஒரு குழுவுக்கு ஒற்றுமை, கீழ்ப்படிதல், ஒழுங்காட்சி ஆகியவற்றைக் கற்பிக்குமென்றனர். ஆனால் இப்படைத்துறையின் ஒற்றுமை உயிரற்ற கட்டுப்பாட்டு ஒற்றுமை; அடிமைத்தனம் அச்சம் பேணும் ஒற்றுமை; அன்புநெறி ஒற்றுமை, சமத்துவ ஒற்றுமை அன்று. வாணிகமோ ஆதாயம் என்ற இனிய நோக்கை மட்டும் காட்டி, அதன் வாயிலாகவே வகுப்பு ஒற்றுமை, சமய ஒற்றுமை, கருத்து வேறுபாடற்ற தன்மை, ஒப்புரவு நெறி, நய நாகரிக நடத்தை, முன்னறிவு ஆராய்ச்சி, துணிவு, பொறுப்பு, குறித்தகாலம் தவறாமை ஆகிய பல நல்ல பண்புகளை வளர்க்கிறது. நீ வாணிகத்துறையில் முனைவராக வரக் கனவு காண்கிறாய். மிக நன்று. உன் கனவால் அத்துறையை நீ உயர்த்தலாம். ஆனால் அத்துறையில் அப்பணிக்கு மட்டும் நீ உன்னைத் தகுதி செய்து கொண்டால் போதாது. நீ ஆட்சி செய்யும் துறையில் மிகத் தாழ்ந்த முதற்படி முதல் இறுதிப்படி வரை யாவற்றிலும் நீ தகுதி பெற வேண்டும். அவ்வத் துறையின் முதற்படியிலுள்ளவன் அறிவதை நீ அறியாமலிருந்துவிடக் கூடாது. உலகில் முதல்நிலை பெற்ற பலர் தம் துறையில் மேல்தரப் படிக்குக் குதித்து வந்தவர்களும் அல்லர்; இடைப்பகுதியில் தொடங்கியவர்களும் அல்ல; கீழ்க் கோடியி லிருந்து முனைந்து சென்றவரே முனைவர் ஆகியுள்ளனர் என்பதை நீ காணலாம். அத்துடன் எப்படியினரையும், எத்துறையினரையும், எப் புதிய கொள்கை உடையவரையும் புறக்கணிக்காத பண்பு உன்னிடம் இருக்க வேண்டும். உலகெலாம் வெல்ல இருந்த கிட்டத்தட்ட வென்ற நெப்போலியனிடம் ராபர்ட் ஃவுல்ட்டன் என்ற அறிவு நூல் துறையாளர் சென்று (அன்று உலகில் ஏற்பட்டிராத) இயங்கு கோட்டை செய்து தருவதாகக் கூறினாராம். நெப்போலியன் தன் படைத் துறை முனைப்பறிவு காரணமாகத் தருக்கினால், அதை அசட்டை செய்தான். அதுபோலவே பெஸ்ட்டலாஸிதன் அரிய கல்வித் துறைச் சீர்திருத்தக் கருத்துக்களை அவனிடம் கூறிய போதும், அவன் செவி சாய்க்கவில்லை. தன் துறையில் தான் ஒப்பற்ற முதல் அறிஞனாயும், முனைப்பறிஞனாயு மிருந்தும், பிற துறைகளைப் புறக்கணித்ததால் கடற்படைச் சிறப்புடைய பிரிட்டனிடம் அவன் தோல்வியுற்றான். கல்வித் துறையிலும் பிற நாடுகள் ஃபிரான்சைத் தாண்டிச் சென்றுவிட அவன் காலமானான். இவ்விரு தவறுகளும் அவன் செய்திராவிட்டால், இன்று உலகில் ஃபிரான்சு முதல் வரிசையிலுள்ள நாடாய் மட்டுமிராது! முதல் வரிசையென ஒன்றில்லாத முதல் நாடாகவே இருந்திருக்கும். உலகும் இன்று இன்னும் நெடுந்தொலை முன்னேறி இருக்கும். நெப்போலியனிடமிருந்து நீ படிக்க வேண்டிய பாடம் இது; நீ நெப்போலியனைப்போல் உன் துறையில் ஒருமுகப்பட்டுக் கருத்து முனைந்துநின்று, அதன் முனைப்பான கருத்துக்களைக் கைக்கொள்; ஆனால் அதே சமயம் அவனைப்போலப் பிற துறைகளை அசட்டை செய்யாதே! சிறப்பாக வாணிகத் துறையில்தான் குறுகிய செயல் வெற்றிக்கு மிகவும் அடாதது என்னல் வேண்டும். உணர்ச்சியை அறிவுடன் பயன்படுத்து.அறிவுத் துணையற்ற உணர்ச்சி வாழ்க்கையில் நன்றன்று. வாணிகத்தையோ அது அழித்தேவிடும். நல்லவனாகவே இரு. ஆனால் திறமை யுடையவ னாயிரு. ஏமாற்றாதே; ஆனால் ஏமாறாதே. தீமை செய்யற்க; ஆனால் எக்காரணத்தாலும் தீமைக்கு உடந்தை யாகவும் இராதே. தீமையை எதிர்க்காவிட்டால், உடந்தையாய் இருந்ததாகத்தான் பொருள். களவு, கொலை, கள், சூது, வஞ்சகம் ஆகியவை பொது வாழ்க்கையிலேயே தீமை கொடுப்பவை. ஆனால் வாணிபத்தில் அவை தொழிலை யழிப்பதுடன் நிற்கமாட்டா. சுற்றத்தாரையும், சூழ்ந்தாரையும் அழித்து மீளாப் பழி உண்டாக்கி விடும். உலகில் எதற்கும் விலையிடுபவன் வணிகன். அவன் நினைத்தால் புகழுக்கும் விலை தர முடியும். ஆனால் அவன் புகழ்பெற முடியுமானால், அவன் பொருள்களில் மிக விலை உயர்ந்த பொருள்; அவன் முதலீட்டில் அழிவற்ற, ஆக்க மிக்க முதலீடு அப்புகழல்லாது வேறு எதுவாயிருக்க முடியும்! வாணிகத்துக்கு வளர்ச்சி விளம்பரம் என்பதன் முழு உண்மை இதுவே. இன்று விளம்பரம் என்பது போலிப் புகழ் நாட்டமாகவே செயலாற்றுகிறது. அது உண்மை வாய்ந்த புகழாய்விடின், விளம்பரம் சிறு அளவிருந்தாலும் போதும் இல்லாவிட்டால் கூடக் கேடில்லை. அவ்வாய்மையே ஒரு விளம்பரமாய்விடும். வணிகன் தொண்டு செய்வதனால் உலகு அவன் உலகாய்விடும். அவன் வைத்தது சமயம். அவன் வகுத்தது அரசியல் என்ற நிலை ஏற்படும். நேரத்தைப் பயன்படுத்துவதைப்பற்றி உனக்குக் கூற வேண்டி இராது. வாணிகக் கனவு காண்பவன் அதனைப் புறக்கணித்திருக்க முடியாது. சொல் தவறாமை, வாய்மை தவறாமை, இன்சொற் கூறல், நயநாகரிகம் ஆகியவை பொதுவான ஒழுக்க முறையாயினும், பரந்த நற்றொடர்புக்குரிய வாணிகத்துறையில் இன்றியமையாச் சிறப்பொழுக்கம் என்பதனை அறிக. துறவியரிடம் தீயுணர்ச்சியிருப்பது எவ்வளவு பொல்லாங்கானதென்று கருதப்படுகிறதோ, அதனினும் பன்மடங்கு வணிகரிடம் அது இருத்தல் தீது என்பதை ஓர்க. உன்கடன் ஆற்றுவதினின்றும் என்றும் பிறழற்க; உன் பொறுப்பு எல்லையுள் வந்து, உன்மீது குறை சுமத்தப்பட்டாலன்றிப் பிறர் கடமையைப் பற்றிக் குறை கூறாதே. அதே சமயம் பொதுக் கடமைகளில் உன் நடை மூலமும், கூடியமட்டும் அன்புரை மூலமும் தேவைப்பட்டால் அன்புடன் கூடிய கண்டிப்பின் மூலமும் தவறுகளைக் காட்டவும் தயங்காதே. உன் உயர்வுக்கு முனைக; ஆனால் அதில் பிறர் உரிமை, பிறர் உயர்வு குறுக்கிட்டால், அவர்கள் நலன் உன்னுடைய நலனைத் தகையும்வரை முனையாது பொறுத்திருக்க. பிறர் நலத்துக்கு வழி விட்டுத் தந்நலமும் கருதிக் கொள்ளும் அறிவுத் தகைமையே வாணிகத் துறையினர் அறிவறிந்த முன்னேற்றத்தின் மறைதிறவு. வாணிக உயர் கனவுத்துறை (ளுயீநஉரடயவiடிn) பொதுமக்கள் பார்வையில் சூதாட்டமாகத் தோன்றும். உண்மையில் இன்று தந்நலங்கருதும் சூதாடிகளே அத்துறையிலிறங்கி, அதை முழுக்க முழுக்கச் சூதாட்டமாக்கியுள்ளனர். ஆனால் பொதுநலக் கருத்துடன் இது செய்யப்பட்டால், அதன் நன்மை பெரிது. அந்நிலையில் அது சூதாட்டமன்று, அறிவாட்டம். அதிலிடும் முதலீடு இழத்தற்கு ஒருக்கமான மேற்படையான உன் சிறு செலவாய் இருக்க வேண்டும் வாழ்க்கையின் இன்றியமையாத் தேவை போக, மீந்ததன் ஒரு பகுதியிலேயே இவ்வறிவாட்டம் நடைபெற வேண்டும். இதில் இழப்பு வந்தால் சோர்பவர் எல்லோரும் முன்கூட்டி ஆராயாது தேவைப் பொருளை அதிலிட்டவர், அல்லது தந்நல அவாவினர் ஆவர். அதிலிடும் பொருள் பொதுப் பொருள். அதன் வரவு பொது வரவு என்று கொள்பவன் உயர்விளையாட்டு மனப்பான்மையில் அதில் அறிவாட்டமாடுகிறான். கனவாளர் தனித்துறையாகிய வாணிகத்துறையில் உன்கனவு நனவார்க. 6. முதலமைச்சராகும் இளைஞருக்கு முதலமைச்சராக வரவிருக்கும் சீராள! வானக நிறை அரசு எங்கிருக்கிறது என்பது உனக்குத் தெரியுமா? நீ சின்னஞ் சிறு குழந்தையா யிருந்தபோது, அது உச்சிக்கு மேல் உயர இருக்கும் நீலவானில் எங்கோ இருப்பதாகத்தான் எண்ணி யிருப்பாய். நீ பள்ளிக்குச் சென்று பல செய்திகளை உணர்ந்து அறிவு பெறுந்தோறும், எத்தகைய அரசும் அப்படி வான வெளியில் இருக்க முடியாதென்பதை நீயாக அறிந்து கொண்டிருப்பாய். மேலும் வாய் அசையாமல், பிறருக்குத் தெரியாமல், மனத்திற்குள்ளாகவே நாம் வணக்கம் கூறுவதை நீ அறியக்கூடும். கடவுள் அவ்வளவு எட்டாத தொலைவில் இருப்பார் என்று நினைப்பதும் பொருத்தமற்றது என்பதை நீ எண்ணிப் பார்த்திருக்கலாம். கடவுள் உனக்குள்ளேயே இருக்கிறார் என்று உன் தாய் நீ சிறு பிள்ளையாயிருக்கும்போதே உன்னிடம் கூறியிருப்பதும் உன் நினைவுக்கு வரலாம். ஆம்! வானக நிறை அரசும் உனக்குள்ளேயே இருக்கிறது; இதுதான் மெய்யான உண்மை! அவ்வரசு இருக்கும் வானகம் தலைக்கு மேல் உள்ள புறவானகம் அன்று; உன் நெஞ்சகத்திற்குள்ளேயே இருக்கும் அகவானகம். நீ ஏன் வெளிக்குத் தெரியாமல் மனத்திற்குள்ளாகக் கடவுளை வணங்குகிறாய் என்பது இப்போது உனக்குத் தெரிகிறதல்லவா? “கடவுள் உனக்குள்ளேயே இருக்கிறார்... வானக நிறையரசும் உனக்குள்ளேயே இருக்கிறது’’ இவை `மறைநூல்’ உரைகள். அட்தெய்விக வாய்மொழி’ ஏட்டில்கூட, இதனினும் சீரிய வாசகம் கிடையாது. எதிர்காலத்தை நோக்கி முன்னேற விரும்பும் சிறுவனே! சீரும் புகழும் சிறப்பும் நாடும் இளைஞனே! இவ்வாசகம் உனக்கான நிறைமொழி! உனக்கான மந்திரம்! இதன் பொருள் கண்டால், ஆற்றலை அறிந்து பயன்படுத்தினால், உன்னுடைய இன்றைய அவாக்கள் செயல்களாகும்! உன்னுடைய இன்றைய கனவுகள் நனவுகள் ஆகும். ஏனெனில் உன் அவாக்களும் கனவுகளும் வானக அரசுக்கு உட்பட்டவையே. உன்னுடைய அவாக்கள் கனவுகள் மட்டுமல்ல. எல்லாச் சிறுவர், சிறுமியர் அவாக்களும் அதன் ஒரு பகுதிதான். எல்லா மனிதரும், பெரியவர், சிறியவர் யாவரும் சிறுவராயிருந்தபோது கண்ட கனாக்களும் அவாவிய அவாக்களும் அவ்வரசு பற்றியவையே. எனவே வானக அரசு கைவரப் பெற்றால், உன் கனவுகளும் எல்லா மக்கள் கனவுகளும் நனவாகும். எதிர்காலத்தில் உன் நனவு வாழ்க்கையின் அளவு, இன்றைய உன் கனவு வாழ்க்கையின் எல்லையைப் பொறுத்ததாகவே இருக்கும். நீயோ இன்று முதலமைச்சராக வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறாய். ஆகவே அதை நனவாக்குவதற்கான முதற் படியை நீ அடைந்துவிட்டாய். அதை நனவாக்குவதற்கான ஆற்றலும் உனக்கு வெளியேயிருந்து வளர மாட்டாது. அது உன் கனவைப் போல உனக்குள்ளிருந்தே வளர வேண்டும். எது நண்பராகிய ஒரு சீமாட்டி அடிக்கடி கூறுவதுண்டு. உலகில் மூன்று வகையான உயர் குடிகள் உண்டு என்று. அவை எவை தெரியுமா? பிறப்பு உயர்குடி, செல்வ உயர்குடி, பண்பாட்டு உயர்குடி என்பவை. இம்மூன்று வகைக் குடிகளுமே இருந்தால் நல்லதுதான். ஆனால் மூன்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டி வந்தால், அறிவுடைய எவரும் தயங்காமல் தெரிந்தெடுக்கக் கூடியது எது? இறுதியாகக் கூறப்பட்ட பண்பாட்டுக் குடிமையைத்தான். ஏனெனில் மற்ற இரண்டு வகைக் குடிமை உயர்வுகளும் அதனால் பெறப் படுபவையே. பெற்ற பின்னும் அவை அதற்கு ஈடல்ல. பிறப்பும் செல்வமும் பண்பாட்டுடன் இணைந்திருந்தால் மட்டுமே மதிப்புத் தரும். இல்லாவிட்டால் அவை உலக மக்களின் பழிப்புக்கே இடமாகும். நேர்மாறாக, பண்பாட்டுக் குடிமை மற்ற இரண்டையும் தரக்கூடியது; தராத இடத்திலும் அவற்றின் தொடர்பில்லாததனால், அது பின்னும் சிறப்படையுமே தவிரக் குறைவுபடாது. பண்பாடு என்றால் என்ன? பண்பாடு பண்பு அடிப்படையானது. நீ பண்பாடு உடையவனாக வேண்டுமென்றால், நீ பண்புடையவனாயிருக்க வேண்டும். அத்துடன் பண்புடையவர்களுடனே பழக வேண்டும். உன் பண்பு பிறர் பண்புகளை வளர்க்க வேண்டும். பிறர் பண்புகள் உன்னிடம் படியவிட வேண்டும். இங்ஙனம் பண்பிற் பழகிப் பரிமாறும் குடி அல்லது குழுவே பண்பாட்டு உயர்குடி. இத்தகைய குடிகளின் கூட்டுறவே பண்பாட்ட உயர்குழு. அதாவது உயர்வகுப்பு ஆகும். இத்தகைய பண்பாட்டிற் பண்பட்ட’ குடியிற் பிறப்பதே உயர்குடிப் பிறப்பு. ஆயினும் பண்பாடு இல்லாத இடத்தில், இக் குடிப்பிறப்பு கீறலுற்ற அழகிய யாழ்போல் பயனற்றதாய் விடும். இக் குடிப்பிறப்பு இல்லாவிட்டாலும், ஒருவன் பண்புடையவனாய் விட்டால், அக் குடிப்பிறப்புரிமை அவனிடம் வந்து சேரும். செல்வமும் பண்புடையோர் முயற்சியால் வருவதே. பண்பிலார் ஈட்டிய செல்வமும், பண்பிலாது துய்க்கும் செல்வமும் பழி சூழ்ந்து வீழ்ச்சியுறும். எனவே பண்பினால் யாவும் பெறலாம்; பண்பில்லாத விடத்தில் எதுவும் பேறாகாது என்பதை நீ உணரலாம். நீ வரலாற்றில் படிக்கும் உரோமகப் பேரரசு இன்றில்லை. அப்பேரரசர் வெற்றிகளும் வீரங்களும் மண்ணுடன் மண்ணாய் மடிந்து போயின. ஆனால் பண்படைப் பேரரசனான மார்க்கஸ் அரீலியஸின் பெயர்2 இன்றும் மங்காப் புகழுடன் வைகி நிலவுகின்றது. அறிவும் முதிர்ந்து வயதும் முதிர்ந்த ஒருவரை அணுகி, நீங்கள் யார் வாழ்க்கையைப் போல் வாழ்ந்திருந்தால் நன்றாயிருக்கும் எனக் கருதுகிறீர்கள் என்று கேட்டுப் பார்! அவர்கள் என்ன கூறுவார்கள்? அலக்ஃஜாண்டர், ஸீஸர், ஆல்ஃபிரட், நெப்போலியன் ஆகியவர்கள் போல இருந்திருக்க வேண்டும் என்றா கூறுவார்கள்? ஒருபோதும் கூற மாட்டார்கள்! ஸர் ஐஸாக் நியூட்டனா யிருந்திருக்க வேண்டும். ஷேக்ஸ்பியரா யிருந்திருக்க வேண்டும், மில்ட்டனாயிருந்திருக்க வேண்டும்3 என்றுதான் கூறுவார்கள். அல்லது இவர்கள் பெயரையும் கடந்து சாக்ரட்டீஸ், இயேசு முதலிய அறிவு, அருட்செல்வர் களாக இருந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். ஏனெனில் இவர்கள் ஆற்றிய வெற்றிகள் அன்று நின்றழியும் போர் வெற்றிகளல்ல; நின்று பயன்தரும் நிறை புரட்சிகள் ஆகும். நீ முதல் அமைச்சராகக் கனாக் காண்பதும் ஆட்சி யாளனா யிருப்பதற்காக மட்டிலுமன்று. அது சிறப்புத் தராது. எவனும் ஆட்சியாளரா யிருப்பதற்குக் கூட அதைவிடச் சற்று உயர்வான கனாக் காண வேண்டும்; அதை விடச் சற்று உயர்வான தகுதி பெற வேண்டும். ஏனெனில் நாட்டில் கோடிக் கணக்கான மக்கள் உள்ளனர். ஒருவர் தாம் முதலமைச்சராக முடியும். சிறப்பில்லாமல் வெறும் ஆட்சியாளரா யிருந்தவர் களெல்லாம், சிறப்பான தகுதியிருந்தும் முழு வெற்றிபெறாது தோல்வியுற்ற வர்களே. ஆகவே உன் தகுதி பெரிதாயிருக்க வேண்டும்; அது வெற்றி பெற நிறைவேறுவதற்கான வகை துறைகளையும் நீ நாடல் வேண்டும். உன் கனாவின் ஆர்வம் முன் தள்ள, உன் தகுதி உனக்குத் துணை தர, உன் தளரா முயற்சி உன்னை முன்சென்றீர்க்க, நீ நாலரைக் கோடி மக்களிடையே முனைந்து முனைந்து சென்று, நாலரைக் கோடியையும் தாண்டிச் சிறிது காலம் முதல்வனா யிருக்க வேண்டும். அச் சிறிதளவு காலத்தில் நீ செய்யும் அருஞ் செயல்கள், காட்டும் அரிய பண்புகள் நாலரைக்கோடி மக்கள் வாழ்வை உயர்த்துவதுடன் உன் வழியில் பின்னால் வரும் பிற பல முதல்வர்களுக்கும் வழிகாட்டியாக அமைய வேண்டும். உன் கனா மிகப் பெரிதாய் விட்டதே என்று மலைக்கிறாயா? மலைக்க வேண்டியதில்லை. நாலரைக் கோடி மக்கள் இந்நாட்டில் இருக்கிறார்கள். இதற்கு முன்பும் கிட்டத் தட்ட இதே அளவு மக்கள் எப்போதும் இருந்து வந்துள்ளார்கள்; இனிமேலும் இத்தொகைக்குக் குறையாமல் இருப்பார்கள். முதலமைச்சர் ஆகிறவர்கள் இவர்களிடையிலிருந்துதான் வரவேண்டும். அதன் கனா இவர்களனை வருக்கும் உரியது. அதனை நிறைவேற்றி முதலமைச்சராக ஒருவரை ஆக்குவதும் இவர்களே. முதலமைச்சருடன் ஒத்துழைத்து, மற்ற எல்லாப் பணிகளும் ஆற்றுபவர்களும் இவர்களே. ஆகவே முதலமைச்சராக வேண்டும் என்று கருத வேண்டியவர்கள் எல்லைக்குள்ளேயே நீயிருக்கிறாய். அந் நாலரைக் கோடி மக்களும் கருதும் ஒன்றைக் கருத வேண்டும் ஒன்றை நீ ஏன் கருதக்கூடாது? அந் நாலரைக் கோடியில் ஒருவன் பெறுவதை நீ ஏன் பெறக் கூடாது? மேலும் அது வேறு யாராயிருப்பதையும் விட, அதுபற்றிக் கனவுகாணும் நீயாயிருப்பது நலன்றல்லவா? அது உனக்கும் நன்று, உன் நாட்டு மக்களாகிய நாலரைக்கோடி மக்களுக்கும் நன்று. ஏனெனில் நீ அதில் சிறப்படைந்து, நாட்டு மக்களுக்கு வாழ்வில் சிறப்பும் நிலையான புகழும் அளிக்கலா மல்லவா? பிரிட்டன் உலகை ஆளுகிறது. பிரிட்டனின் நாலரைக் கோடி மக்களும் உலகை ஆட்டிப் படைக்கிறவர்கள். அத்தகைய பிரிட்டனை ஆளவிருக்கிறாய். உலகை ஆளும் பிரிட்டீஷ் மக்களை ஆள நீ கனவு காண்கிறாய். இது உயரிய கனவே. இக் கனவார்வமே உன்னை மற்றவர்களை விட முந்திக் கொள்ளச் செய்யும். நீ நாட்டு மக்களுக்குப் பணி செய்து அவர்கள் உள்ளங்கவர்ந்து, அவர்கட்கு நல்வழி காட்டி, அவர்களால் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படக் கூடுமானால், இந்நாட்டின் எந்தச் சக்தியும் நீ முதலமைச்சராவதி லிருந்து உன்னைத் தடுக்க முடியாது. முதலமைச்சராவதற்கு உனக்குத் தகுதி இல்லையா? ஏன் இல்லை! அடிப்படையான தகுதிகள் பல உன்னிடம் உள்ளன. ஆனால் முதல் முதல் தகுதி இதுதான் நீ மனத்தில் எண்ணியதை வெளியில் உரைக்கிறாய்; உன் மொழிகள் வாய்மையுடையன என்பதே. சாக்ரட்டீஸ், இயேசு முதலிய உலகப் பேரறிஞர் தனிப்பெரும் சிறப்புக்கள் கூட இவைதான்; வேறு எவையும் அல்ல. அத்துடன் நீ வீரமும் துணிவும் உடையவன். எந்த இன்னலுக்கும் இடையூற்றுக்கும் அஞ்சி நீ உன் செயலில் தயங்கப் போவதில்லை. நீ தன் மதிப்புடையவன். சிறுமைத்தனமான செயல் செய்ய உன் மான உணர்ச்சி இடங்கொடாது. நீ வாய்மையும் நேர்மையும் உடையவன்; பொய் பேசும் கோழைமைத் தன்மையை நீ வெறுக்கிறாய். வெற்றி பெற்றபின் எண்ணிப்பார்த்துக் கழிவிரக்கங் கொள்ளத்தக்க எதுவும் உன் முன்னேற்றப் பாதையில் குறுக்கிடாது. தவிர, முதலமைச்சராக வேண்டும் என்ற கனவு காண்பதற்கு முன்னிருந்தே நீ அக்கனவு காணத் துணிந்துவிட்ட காரணத்தினாலேயே உன் வாழ்க்கையில் பல சிறுதிறப் பண்புகளைப் பெற்று விட்டாய். அவற்றைப்பற்றி உன்போன்றவர் கட்குக் கூற வேண்டியிராது. அவை சொல்லாமலே நீ உறுதியாகக் கொண்டுள்ள பண்புகள் (மடியின்மை, முயற்சி, நாட்டுப்பற்று ஆகியவை இத்தகையவை). ஆனால் உனக்கு முன்னேற்றப் பாதையில் உதவக்கூடும் வேறு பல செய்திகளைப்பற்றி நான் இங்கே கூறுதல் நலம். குறுகிய மனப்பான்மையும் தப்பெண்ணங்களும் உன் உள்ளத்தில் இடம் பெறப்படாது. உன் நோக்குத் தொலை நோக்காகவும் நாற்புறமும் பார்வையைச் செலுத்தி நோக்கும் அகன்ற நோக்காகவும் இருக்க வேண்டும் எந்தச் செய்தியிலும் நீ முதலில் பலதிறக் கருத்துக்களையும் அறிய வேண்டும். அதன் பின்புதான் நீ உனக்கென ஒரு கருத்து வகுத்துக் கொள்ளலாம். அப்போதுதான், ஒரு கருத்தை நீ மேற்கொள்ளுமுன், ஒரு கட்சி, ஒருதரப்பு, ஒரு குழு, ஒரு மன்றம், ஒரு திட்டம் ஆகியவற்றுக்கு நீ ஆதரவு கொடுப்பதற்கு முன், உன்நிலை, உன் துணைவர் நிலை, உருக் கருத்துக்களின் பின்னணி வண்ணங்கள் ஆகியவை உனக்கு விளக்கமாகும். உனக்குப் பிடிக்காத கருத்தை நீ ஆதரிக்கவும் கூடாது; எதிர்க்கவும் கூடாது. புரியாத இடத்தில் உன் நிலை ஆம்’ என்பதும் அன்று; இல்லை’ என்பதும் அன்று; இவற்றுக்கு இடைப்பட்ட நடுநிலை அல்லது நொதுமல் நிலையே என்பதை நீ உன் பள்ளியிலேயே அறிவிக்கப் பட்டிருக்கிறாய். எந்தச் செயலையும் விளையாட்டு மனப்பான்மையுடன், ஏனோ தானோ என்ற அசட்டை மனப்பான்மையுடன் செய்யாதே. உன் செயல்கள் வினைத்திட்பமும் மனத்திட்பமும் வாய்ந்தவையாயிருக்க வேண்டும். செயலிலும் சொல்லிலும் திட்பம் பெற வேண்டுமானால் அவை இரண்டிற்கும் முன்கூட்டி உன்னிடம் கருத்துத் திட்பம் இருக்க வேண்டும். உன் செயலும் சொல்லும் உன் நண்பர் செயலும் சொல்லுமாய், உன் நாட்டு மக்கள் செயலும் சொல்லுமாய் விடக்கூடுமாதலால், செய்யு முன்னும் சொல்லு முன்னும் அவற்றால் நாடு முழுமைக்கும் வகுப்பு, கட்சி, கோட்பாடு, பால் வேறுபாடு ஆகிய வேற்றுமை களின்றி மக்கள் அனைவருக்கும் ஏற்படக் கூடும் நலன் தீங்குச் சார்புகளை நன்கு சிந்தித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். உன் கட்சி எப்போதும் நேர்மையுடையதாயிருக்கும் என்று நம்பு; நேர்மையுடையதாயிருக்கும்படி பார்த்துக் கொள்; அதுபோலவே உன் கட்சியே எப்போதும் வெல்லும் கட்சி யென்று நம்பு; வெல்லும் படி பார்த்துக்கொள். இதன் பொருள் நீ என்றும் ஒரு கட்சியைச் சார்ந்திருக்க வேண்டும் என்பதும் அல்ல, உன் கட்சி எப்போதும் வெல்லும் என்பது அல்ல. உன் கட்சி தவறு செய்யலாம், எதிர்க்கட்சி நேர்மையாயிருக்கலாம். உன் கட்சி தோற்கலாம். எதிர்க்கட்சி வெல்லலாம். ஆனால் நீ எப்போதும் நேர்மையுடைய வனாயிருந்தால், நீ சாரும் கட்சி எப்போதும் நேர்மை யுடையதாயிருக்கும். நேர்மைக்கே இறுதி வெற்றி கிடைப்பது உறுதி. ஆகவே நீ சார்ந்து ஆதரவு செய்யும் கட்சிக்குக் கட்டாயம் வெற்றி கிடைக்கும். அதன் தோல்வியும் அதன் வெற்றிக்கு, அதாவது நேர்மையின் இறுதி வெற்றிக்கு வழிவகுத்தே தீரும். கருத்து மாறுபாட்டின் அடிப்படையிலன்றி உன்னிடம் எந்தக் கட்சி மாறுபாடும் செயல் மாறுபாடும் சொல்மாறுபாடும் இருக்கக் கூடாது. எத்தனை தடவையோ என் கருத்து மாறிய துண்டு. ஒரு தடவைகூட என் மொழி ஆதரவு (எடிவந) மாறிய தில்லை’’ என்று கூறிய அரசியல் மன்றப் பெரியார் உரையை நீ மனத்துள் பதிய வைத்துக் கொள். உன் நலனைவிட உன் கட்சி நலன் பெரிது. உன் கட்சி நலனை விட உன் நாட்டு நலன் பெரிது. நாட்டின் மிகப் பெரும்பாலான மக்கள் நலனே நாட்டுச் செல்வமும், வீரமும், வெற்றியும் தருபவர்கள் நலனே எப்போதும் நீ கருதும் நாட்டு நலனாய் இருக்க வேண்டும். அந்நலனுக்கு எதிராக உன் ஆற்றல் பயன்பட விருப்பதாக இருந்தால், நீ அவ்வாற்றலைக் கைவிட, முதலமைச்சர் இடத்தையே துறக்க, தயங்கக் கூடாது. நாட்டுக்கு அடிப்படைத் தேவைகளான பெருநெறி களிலேயே உன் கவனம் செல்லட்டும்; சிறு செய்திகளில் மனம் செல்ல வேண்டா. சிறு ஒற்றுமை வேற்றுமைகளுக்காகவும் நீ ஆதரவு, எதிர்ப்புச் செய்யக் கூடாது. அடிப்படை ஒற்றுமை வேற்றுமை காரணமாகவே நீ கட்சிகளுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் செயலாற்ற வேண்டும். கூடிய மட்டும் நீ யாரையும் புண்படுத்தக் கூடாது. ஆனால் பிறரைப் புண்படுத்த வேண்டுமே யென்பதற்காக நீ நேர்மையைக் கைவிடவும் கூடாது. நேர்மையைக் காக்கும் பணியில் உன்னவரையோ பிறரையோ புண்படுத்த நேர்ந்தால், அதனைச் செய்யும் உரமும் துணிவும் உனக்கு வேண்டும். கட்சியின் குறிக்கோளுக்காக நாட்டின் குறிக்கோளைக் கைவிடப்படாது. அதுபோலவே நாட்டின் குறிக்கோளுக்காக உலகின் குறிக்கோளை, மனித இனத்தின் குறிக்கோளை, அதற்கும் அப்பாற்பட்ட தெய்விகக் குறிக்கோளை விட்டுவிடக் கூடாது. தெய்விகக் குறிக்கோள் என்பது யாது? வகுப்பு, நாடு, இனம் முதலிய இடப்பரப்பு, மக்கட்பரப்பு யாவற்றையும் கடந்து, முற்காலம், இக்காலம், வருங்காலம் என்ற காலச் சூழ்நிலைக்குரிய தற்காலிகப் பண்புகளையும் கடந்து, எங்கும் எக்காலத்துக்கும் உரிய அடிப்படைக் குறிக்கோளாக அறிஞரால் வகுக்கப்பட்டு, ஆழ்ந்து நுணுகிய ஆராய்ச்சியால் காணவும் வளர்க்கவும் படும் குறிக்கோளே தெய்வீகக் குறிக்கோளாகும். தொலைநோக்கும் பரந்தநோக்கும் உடையவன், தன் பகுத்தறிவையும் மனச்சான்றையும் ஆராய்ச்சித் திறனையும் பயன்படுத்தி இக் குறிக்கோளை அணுகலாகும். உன் திறம் வளர வேண்டுமானால், அறிவு வளர வேண்டும். அறிவு வளர வேண்டுமானால், நீ அறிய வேண்டும் செய்திகள் உலகத்திலுள்ள பொருள்கள் யாவுமே, வளர்ச்சி யுடையன என்பதை உணர்தல் இன்றியமையாதது. வளர்ச்சி யுடைய பொருள்களை வரலாற்றுணர்ச்சி யுடனேயே உள்ள வாறறிய முடியும். வளரும் பொருள்களை அறியும் அறிவும் நிலையாயிருக்க முடியாது; வளர்ந்து கொண்டேதானிருக்க முடியும். ஆகவேதான் அறிவுக்கு ஓர் எல்லையோ, உருவோ, முடிவோ செய்துவிடக் கூடாது; கருத்துக்களுக்கும் அப்படியே. மாற முடியா தென்றிருக்கும் கருத்துக்கள், கருத்துக்களல்ல; பிடிவாதங்கள், கோட்பாடுகளல்ல; தன்னலக் குழு வாதங்கள், நம்பிக்கைகளல்ல; மூட நம்பிக்கைகள், வழக்கங்களல்ல; குருட்டுப் பழக்கங்கள், இவற்றை விலக்க விரும்புபவன் அறிவை நிலையான அறிவாக, பொது அறிவாக, விட்டு வைக்கக் கூடாது. புத்தறிவாக, மெய்யறிவாக, பகுத்தறிவாகிய அரத்தினுதவியால் தீட்டிக் கொண்டேயிருக்க வேண்டும். இப்பகுத்தறிவையே நாம் அறிவின் அறிவு என்று கூறுகிறோம். முற்காலங்களில் பள்ளிகளில் செய்திகள் பற்றிய அறிவே கற்பிக்கப்பட்டது. ஆனால் இப்போது பகுத்தறிவு அதாவது சிந்திக்கும் அறிவு காரண காரியம், ஒற்றுமை வேற்றுமை ஆராயும் அறிவே தூண்டிவிடப்படுகிறது. மக்கள் எவ்வளவு அறிந்துள்ளார்கள் என்பதைவிட, எவ்வளவு சிந்திக்கிறார்கள் என்பதே முக்கியமானது. அரசியல் வாழ்விலும் சரி, கல்வித் துறையிலும் சரி, நீ பரப்பும் அறிவும் நீ பெறும் அறிவு இதுவே ஆக வேண்டம். அறிவு வகையில் கூறப்பட்ட இதே உண்மை செல்வத்தின் வகையிலும் பொருந்தும். ஒரு மனிதன் செல்வம் பெறுவதும், நாடு செல்வம் பெறுவதும் மரம் காய்கனி வளரப் பெறுவதுபோலவே. ஒரு மரம் காய்ப்பதென்றால் அதில் காய்களைக் கொண்டு ஒட்ட வைப்பதல்ல. அது தானாக வளர்வதற்கான சூழ்நிலைகளை உண்டு பண்ண வேண்டும் என்பதே. அதுபோலப் பொருளீட்டு பவனும் தானாகவே ஈட்டும் திறன் பெற்றாக வேண்டும். வெளியாரோ, அரசியலோ செய்வதெல்லாம் மரத்திற்கு நீரும் உரமும் இட்டுக் களையெறிந்து பாதுகாப்பதுபோல, செல்வம் ஈட்டும் தொழிலா ளனுக்கு நல் உடல்நலமும் அறிவு நலமும் தக்க சூழ்நிலையும் தருவதேயாகும். முதலமைச்சனென்ற முறையில் நீயும், உன்வழியில் நிற்கும் அரசும் மக்களுக்குச் செய்ய வேண்டுவது இதுவே. நீ நாடாள்பவனாய் விட்டாலும், உன் நாட்டாட்சியின் தொடக்கம் உன் வீட்டாட்சியிலிருந்து தோன்றிற்று என்பதை நீ மறக்கக் கூடாது. நாட்டுக்கு உழைப்பது வீட்டை வெறுப்பதற் கன்று. வீட்டின் நலன் பெருக்கவே. ஆகவே தனி மனிதன் நலனையோ, உணர்ச்சிகளையோ, குடும்ப நலனையோ, குடும்ப உணர்ச்சிகளையோ நீயும் விட்டுவிடக் கூடாது; பிறரிடமும் அவ்வுணர்ச்சிகள் புண்பட நடக்கக் கூடாது. அரசியல் ஆற்றல் தனி மனிதன் ஆற்றலுக்கும் குடும்ப ஆற்றலுக்கும் மேற்பட்டதா யிருப்பது உண்மையே. ஆனால் அதன் உரிமைகள் அவற்றின் உரிமைகளுக்கு மேற்பட்டவையல்ல. உண்மையில் தனிமனித, குடும்ப உரிமைகளைப் பாதுகாப்பதற்கே அரசியல் அமைந்துள்ளது. அவற்றின் பாதுகாப்புக்காக, அவற்றின் ஆற்றல்களில் பெரும்பகுதியை அவற்றின் இணக்கத்துடன் பெற்றே அரசியல் இவ்வளவு பேராற்றல் வாய்ந்ததாயிருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டால் நீ மனித உணர்ச்சி, குடும்ப உணர்ச்சிகளைப் பேணுவதுடன் பிறர் தன்னலங்களைப் பேணவே தற்காலிகமாக நீ உன் தனி நலனை விட்டிருக்கிறாய் என்ற உணர்வும் பெறுவாய். இதுவே அரசியற் பணியாளனின் நடுநிலை உணர்ச்சிக்கும் நேர்மைக்கும் சரி ஒப்பான நடுநிலை ஆகும். நாட்டின் தாயகமான வீடு கடந்தும் வீட்டு உணர்ச்சியை நீ விடாதவாறு போலவே, நாட்டின் முதலமைச்சனென்ற முறையில் நீ நாடு கடந்து நாட்டினம், நேசநாட்டுக்குழு, நேச நாட்டுக்குழுக் கடந்து உலகு ஆகிய மிகப் பரந்த எல்லைகளை அடைந்தாலும் அவற்றிற்கு அடிப்படைத் தாயகமாக நமக்குதவும் நாட்டுணர்ச் சியையும், நாட்டு நலனையும் நீ புக்கணித்தலாகாது. உலக வாழ்வின் தாயகம் நாடு. நாட்டு வாழ்வின் தாயகம் வீடு என்பதை உணரும் உனக்கு, உலக வாழ்வில் நீ பங்கு கொள்ளும் படியான நிலையை உன் நாடும், நாட்டு வாழ்வில் பங்கு கொள்ளும் நிலைமையை உன் வீடும் தாம் அளித்துள்ளன என்பது நன்கு புலனாகக்கூடும். அத்தகைய நாட்டையும் வீட்டையும் பெற்றிருப்பதை நீ எண்ணிப் பார்த்தால் நீ அந்நாட்டுக்கும் வீட்டுக்கும் கட்டாயம் உண்மை உள்ளவனா யிருப்பாய். அத்துடன் அத்தகைய நாட்டையும் வீட்டையும் தந்ததற்குக் கடவுளிடம் நன்றியுடையவனாயும் இருப்பாய். ஆனால் அறிவுடையவன் என்ற முறையில் உன் கடமைகள் இவற்றுடன் தீர்ந்துவிடுமா? உனது நாட்டை ஒத்த நாடில்லாதவர் களிடம் நீ பரிவும் ஒத்துணர்வும் காட்ட வேண்டாவா? பிற நாட்டு நலன்களுக்கும் உழைத்து எல்லா நாடுகளும் உன் நாடு அடையும் நன்னிலையை அடைய உதவாவிட்டால் நீ இத்தகைய நாட்டில் பிறந்து என்ன பயன்? அதுபோலவே, உன் நாட்டினும் உன் வீட்டை ஒத்த வீடுகள் மிகப் பலவாய் இருக்க முடியாதென்பதை நீ எண்ணிப் பார்க்க வேண்டும். இருந்தால் அவ்வீட்டிலுள்ள பிள்ளைகளனை வருக்கும் உன்னைப்போல முதலமைச்சராகும் கனவு தோன்றி யிருக்கும். இக்கனவு தானாக எங்கும் தோன்றுவதன்று. இக்கனவு தானாக எங்கும் தோன்றுவதன்று. அதற்குத் தகுந்த சூழ்நிலையும் தகுதியும், தூண்டுதலும் ஊக்கமும் வீட்டிலிருக்க வேண்டும் என்பதை நீ உய்த்தறியலாம். இந்நாட்டின் பல குடும்பங்களில் பிள்ளைகளுக்கு மூன்று நேரம் வயிறார உண்ண வேண்டும் என்ற கனவுகூட இராது என்பது உனக்குத் தெரியுமா? தெரிந்திருந்தால் நீ வருந்தாமலிருக்க முடியுமா? உலகில் முதன்மைபெற்ற நாடு என் நாடு என்று கூறும் நீ, உன் நாட்டில் இத்தகைய வீடுகள் இருப்பதை அறிந்தால் வெட்கப்பட வேண்டாவா? ஆம். உன் நாட்டில் எல்லோருக்கும் உன் வீடு போன்ற வீடுகள், எல்லோருக்கும் உன் கனவுகள் போன்ற கனவுகள், உன் (முதலமைச்சர்) பணி போன்ற பணிகள் பெறுவதற்கான வசதிகள் ஏற்படும்படி பாடு படுவதும், அது போலவே உன் நாடு உலக அரங்கில் பெற்றிருக்கும் தலைமைப் பதவியை அதே உலகில் வாழும் பிற நாடுகளும் பெறப் பாடுபடுவதும் உன் அரசியல் கடமைகளுள் ஒன்றேயாகும். உலகம் இன்னும் எவ்வளவோ முன்னேற வேண்டும். ஏனெனில் உன் நாட்டைப் போலாகாத பிற நாடுகள் இருக்கின்றன. ஆனால் உன் நாடும் இன்னும் எவ்வளவோ முன்னேற வேண்டும். ஏனெனில் உன் வீட்டளவு வாய்ப்பில்லாத வீடுகளும், உன் கனவளவு கனவு காணாத மக்களும் அந்நாட்டில் உள்ளனர். இது மட்டுமன்று. நீ காணும் கனவு பெரிதானாலும் நீ வகிக்க இருக்கும் பதவி அதனிலும் எவ்வளவோ பெரிது. ஏனெனில் உன்னைப்போல் கனவு காண்பவர் பலர் உண்டு. கனவு கண்டு நீ வெற்றிபெற அவர்களைவிட உனக்குத் தகுதி மிகுதி வேண்டும். பெற்ற பின்பும் அதன் தகுதி உனக்கு இன்னும் தொலைவானதே. உனக்கு முன்னிருந்த முதலமைச்சர் புகழ் எல்லைக்கோடு உன் புகழ்க் கனவின் இலக்காகவே இருக்கும். இவற்றையும் கடந்துவிட்டால் உன் புகழ் வருங்கால முதலமைச்சர் புகழின் இலக்காயிருக்கும். இறுதியாக ஆற்றலின் முடிந்த முடிபு பணி என்பதையும், அறிவின் முடிந்த முடிபு அடக்கம் என்பதையும், அவாவின் முடிந்த முடிபு பிறருக்கும் பயன்படுவது என்பதையும் நீ என்றும் மறந்துவிடக் கூடாது. முதலமைச்சராயிருக்க வேண்டும் என்ற கனவு உயரிய கனவுதான்; அப்பதவியும் மிக உயர்ந்த பதவிதான். ஆனால் அதன் வெற்றி உன் வெற்றியை மட்டும் பொறுத்ததல்ல. நாட்டு மக்கள் அனைவர் வெற்றியையும் பொறுத்தது. அவர்கள் வெற்றிபெற அவர்களுக்கும் நீ மிக உயர்ந்த கனவுகள் காணும் பண்பாட்டை அடைய வேண்டும். அக்கனவுகள், நிறைவேறும்படி செய்யும் தகுதிகளையும், திறங்களையும், அதற்கான சூழ்நிலைகளையும் நீ அமைக்க வேண்டும். அதற்காக நீ எல்லாருடைய ஒத்துழைப்பையும், ஒத்த வளர்ச்சியையும் பெற்றாக வேண்டும். பிறருடன் சரிநிகராக நடந்து, சரிநிகராக நினைந்து, யாவரையும் சரிநிகராக்க முனைந்தாலன்றி, நீ இதனைச் செய்ய முடியாது. எல்லாருடைய திறமைகளையும் பெரியார் சிறியார், ஆண் பெண், அறிஞர் உழைப்பாளிகள் முதலிய யாவரின் திறமைகளையும் நீ ஊக்க வேண்டும். இது நல்ல பணி கோரும் பணியேயன்றோ? மேலும், உன் கனவும் பணியும் எத்துணை உயர்வானாலும் உலகில், உன் நாட்டு மக்களிடையேகூட, இதனினும் உயர்ந்த கனவு காண்பவர், தகுதியுடையவர், உயர்பதவிக்கு உரியவர் உண்டு என்பதும் நினைவிற் கொள்ளத்தக்கது. அறிவைவிட அறிவூட்டும் பண்பு பெரிதன்றோ? செல்வத்தை விடச் செல்வத்தைப் பெருக்கு மாற்றல் பெரிதன்றோ? அதைப்போலவே முதலமைச்சராவதைவிட முதலமைச்சரை ஆக்க உதவும் உன் ஆசிரியர், உன் கல்வித் துறையில் உனக்காக நூல்கள், கவிதைகள், அறிவுநூல்கள் இயற்றிய அறிஞர்கள் இன்னும் உயரியவரன்றோ? அந்நூல்களுக் காதாரமான புத்தாராய்ச்சியிலும், கண்டுபிடிப்புக் களிலும், கற்பனைத் திறன்களிலும், அறிவு வளர்ச்சியிலும் முனைபவர் பணி எத்துணைச் சீரியது! உன்பணியின் உயர் மதிப்புக்குக் காரணம் அவர்கள் உன் மரபை ஆக்குவதுபோல், நீ அவர்கள் மரபையும் பெருக்க உதவுபவன் என்பதே. முதலமைச்சராக, அறிஞராக, கவிஞராக எவரும் பிறப்ப தில்லை. கவிஞன் பிறக்கிறான், ஆக்கப்படுவதில்லை என்ற பழமொழியை நீ கேட்டிருக்கலாம். இது ஒரு முழு உண்மையல்ல. அதன் பொருள் கவிஞனும் தக்க குடும்ப, சமூக நாட்டுச் சூழ்நிலை களில் அருமையாகப் பிறக்கிறான் என்பதே. அச்சூழ்நிலைகளை நாம் உடனடியாக ஆக்க முடியாதது போல. ஆனால் சில தலைமுறைகளில் விரும்பிய செடியைக் காய்க்கவைக்க முடியும்; நன்றாக அதன் இயல்புக்கு, மேற்படக்கூடக் காய்க்க வைக்க முடியும். அதுபோல, முயன்றால் கவிஞர், அறிஞர்களைத் தோற்றுவிக்கும் சூழ்நிலைகளை ஒரு சில தலைமுறைகளுக்குள் ஆக்கலாம். அதை ஆக்கும் பணியே உன் பணி. நல்லகாலமாக, உன் பணிக்கு உன்னை முழுதும் புதிதாகப் படைத்து ஆக்க வேண்டும் என்பதில்லை. நீ பிறந்த வீட்டுச் சூழ்நிலை உன்னை அதனை அவாவு அளவுக்கும், கனவு காணும் அளவுக்கும் தகுதியாக்கியுள்ளது. இனி நீ முதலமைச்சனாக ஆக்கப்பட வேண்டியதில்லை. முதலச்சனாக வளர்க்கப்படவே அதாவது தகுதிபெற்று வளரவே வேண்டும். இது உன் முயற்சி, உன் விடா முயற்சியையே பொறுத்தது. அதை விரைந்து செய். உன் நாடு உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. பிற நாடுகள் கூட எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றன. ஆடையற்ற பல மனிதர், உணர்வற்ற மனிதர், வீடற்ற மனிதர், வாழ வகையற்ற மனிதர், தங்கள் தத்தளிப்பிடையே உன் பெயர் வருங்கால முதலமைச்சர் பெயர் கேட்க ஆலவுடையவராயுள்ளனர். ஆகவே ஒரு கணமும் வீண் போக்காதே. உன் வீட்டு வாழ்வை, ஏட்டு வாழ்வை, உன் நாட்டு வாழ்வை நன்கு பயன்படுத்தி விரைந்து கனவை நனவாக்க முனைவாயாக!! 7. நகர் முதல்வராகும் இளைஞருக்கு நகர் முதல்வராக வரவிருக்கும் நற்பண்பாள! நீ நாட்டுப்பற்று மிக்கவன்; நாடு கடந்து உலகப்பற்றும் மனிதப்பற்றும் உடையவன். ஆனால் நீ நகர் முதல்வனாக வேண்டும் என்று கனவு கொள்கிறாய் நன்று. மிக நன்று அறிவாற்றல் மிக்க உன் துணிவை நான் பாராட்டுகின்றேன். நீ இயற்கை உணர்ச்சியால் தேர்ந்தெடுத்துக் கொண்ட தேர்வுக்கு ஏன் இத்தனை பாராட்டு என்று கருதலாம். இது ஒருமாதிரி முகமன் புகழ்ச்சி என்றும் நீ எண்ணக்கூடும். அல்லது உன் கனவின் குறுகிய எல்லையை மறைத்துப் பெருந்தன்மை யுடன் கவிதை புனைகிறேன் என்றுகூட நீ கருதலாம். ஆனால் மெய்ம்மை அதுவன்று. நீ இயற்கை உணர்ச்சி என்று கொள்வது முற்றிலும் இயற்கை உணர்ச்சியன்று; உன் சூழ்நிலைகளின், உன் பண்பாட்டின் பயன் இதே சூழ்நிலை மற்றச் சிறுவர் சிறுமியர் களுக்கும் உண்டு. ஆனால் ஒவ்வொருவரும் அதைத் தத்தம் இயல்புகளுக்கேற்ப, தத்தம் பொதுச் சிறப்புப் பண்புகளுக்கேற்ப, ஒவ்வொரு வகையில் பயன்படுத்தி ஒவ்வொரு வகை இயற்கை உணர்சியையும் கனவையும் வகுத்துக் கொண்டுள் ளனர். ஒரே நிலத்தில் இட்ட பல விதைகள் பலவகைச் செடி கொடிகள் தருவது போலவேதான் இது. நிலத்தின் இயல்பும் விதையின் இயல்பும் சேர்ந்தே செடியாவது போல. உன் இயல்பும் உன் சூழ்நிலையின் இயல்பும் சேர்ந்தே உன் வாழ்க்கை யுணர்ச்சி யாகிறது. இவ்விருவகை இயல்புகளில் எது மாறினாலும் வாழ்க்கை நிலை மாறும். ஒரேவிதை பல நிலங்களில் பல்வாறாகவும், ஒரே நிலத்தில் பலவிதை பலவாறாகவும் ஆவது உண்டல்லவா? உன் பண்பாட்டு நில இயல்பு, உன்னை நாட்டுப்பற்றாள னாக, உலகப் பற்றாளனாகச் செய்துள்ளது. ஆனால் உன் இயல்பு, உன் தனிப்பட்ட வித்தியல்பு உன்னை நகர்த்தொண்டில் ஈடுபடுத்தி யுள்ளது. இது உன் குறுகிய பற்றன்று; உன் ஆழ்ந்த பற்று. நாடும் உலகும் நினைப்பவர், பரந்து செல்பவர். பரப்பில் ஆழம் கிடையாது. நீ எல்லை குறுக்குவதன் மூலம் ஆழத்தில் கருத்தைச் செலுத்துகிறாய்; உன் ஆழ்ந்த சிந்தனை இயல்புக்கு இது ஒரு வாய்விடாப் பாராட்டு ஆகும். பரப்பில் செல்பவன் ஆழத்தைக் காண மாட்டான். ஆழத்தில் செல்பவன் பரப்பைக் கட்டாயம் எட்டுவான். இது எப்படி என்ற கேள்விக்குறி உன் நெற்றியில் காணப்படுகிற தல்லவா? ஒருவன் பிறரைத் திருத்த முனைகிறான் என்றும், மற்றொருவன் பிறரைத் திருத்துவதில் முனையாமல், தன்னையே திருத்திக் கொள்கிறான் என்றும் வைத்துக் கொள். முன்னவன் பதினாயிரம் சொல்லினாலும், அதனால் பிறரும் திருந்த மனங் கொள்ளார்; அவனும் மனக் கசப்படைவானே தவிர, திருந்துவானென்று கூற முடியாது. பின்னவனோ வாய் பேசாமல் தன்னையே முதலில் திருத்திக் கொண்டு விடுகிறான். அவன் வாய்விட்டுப் பேச வேண்டிய நிலை ஏற்படாமலே, அண்மையிலுள்ளவர்கள் அவனைப் பார்த்தும், தொலைவிலும் அப்பாலும் உள்ளவர்கள், அண்மையிலுள்ளவர்களைப் பார்த்தும் திருந்தி விடுகின்றனர். இதனால் பரப்பை நினையாது ஆழத்தை, செறிவை எண்ணுபவன், ஆழத்தை மட்டுமின்றிப் பரப்பையும் விரைவில் எட்டி விடுகிறான் என்பது விளங்க வில்லையா? ஒரு தனி மனிதன் வாழ்வைத் தனி மனிதன் வாழ்வு மட்டும்தான் என்று கருதுவதைப் போன்ற அறியாமை வேறொன்று மில்லை. ஏனெனில் நாம் அறிந்தாலும் அறியாவிட்டாலும், எண்ணிப் பார்த்தாலும் பார்க்கா விட்டாலும், நம் வாழ்வு தாழ்வுகள், நல்லெண்ண தீயெண்ணங்கள், பழக்க வழக்கங்கள் தம் ஆற்றலை நம் குடியிலும் தெருவிலும், நம் ஊரிலும், நாட்டிலும், இறுதியில் நாம் வாழும் உலகிலும் பரப்பியே தீரும். யாரும் எவ்வளவு விரும்பினாலும் தனிப்பட்ட வாழ்வு வாழவே முடியாது. நாம் தனிப்பட்ட வாழ்வு என்று கூறுவ தெல்லாம் பொது வாழ்வில் தனி மனிதனுக்குரிய ஒரு பகுதியை மட்டுமே. உலக வாழ்வு ஓர் உடலானால், நாடு, ஊர், தனி மனிதன் யாவும் அதன் பேருறுப்பு சிற்றுறுப்பு அல்லது நுண்ணுறுப்புக் களாகவே கணிக்கத் தக்கன. உடல் நலம், நோய், நோவுகள் யாவும் ஓர் உறுப்பிலிருந்து தொடங்கலாம். ஆனால் அஃது எல்லா உறுப்புக்களுக்கும் உடலுக்கும் பரவுவது உறுதி. பொது வாழ்வைப் பாதிக்காமல், ஒரு மனிதன் தனி வாழ்வு வாழ முடியுமென்பது, உடலைப் பாதிக்காமல் ஒர் உறுப்பு வாழ்வது போன்றதும், இயந்திரத்தைப் பாதிக்காமல் அதன் ஒரு சக்கரம் வேலை செய்யுமென்பதும் போன்றதே. இதனால் உலகைத் திருத்த ஒருவன் வேறு எதுவும் செய்ய வேண்டுவதில்லை. தான் வாழ்வாங்கு’’ வாழ்ந்தால் போதும்! உன் நகர்வாழ்வில் முதல்வராய் இருந்து செயலாற்ற நீ கனவு காண்கிறாய். ஆனால் இப்போதும் நீ நகர்வாழ்வில் ஓர் உறுப்பாகவே இருக்கிறாய். உன் நகர்வாழ்வை மாற்றியமைக்க, நீ அதன் முதல்வராய்த்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. இப்போதே நீ அங்ஙனம் செய்யலாம் ஓரளவு நீ செய்து கொண்டு தான் இருக்கிறாய். இன்னும் அக்கரை எடுத்துக் கொண்டால் இன்னும் திறம்படச் செய்ய வகையில்லாமல் இல்லை. நீயும் உன்னைப்போன்ற எத்தனையோ சிறுவரும் வீட்டின் பல கணியிலிருந்து வெளியே எத்தனையோ தடவை பார்த்திருப்பீர்கள். எத்தனையோ தடவை இது நன்றாய் இல்லை. அது நன்றாய் இல்லை’’ என்று எண்ணியுமிருப்பீர்கள்; இவ் வெண்ணங்கள் கனவுநிலை கூட அடைந்திருக்காது. ஆனால் ஒருகால் ஒரு சிறுவன் எல்லா வீட்டின் முன்னும் உள்ளது போன்ற தன் வீட்டுச் சிறு தளவரிசையில் தாறுமாறாய்ச் செடி கொடிகள் வளர்ந்திருப்பதைக் கண்டான். அப்போது அவனுக்குத் தன் விளையாட்டுச் சேகரப் பெட்டியில் தோட்ட விதைகளடங்கிய ஒரு முடிச்சு இருப்பது நினைவுக்கு வந்தது. உடனே ஒரு சிறு மண்வெட்டியைஎடுத்துச் சென்று அப்பழஞ் செடிகளை அகற்றிச் செப்பனிட்டு விதைகளைத் தூவினான். அத்துடன் கூடுமான போதெல்லாம் ஓய்வு நேர விளையாட்டாக, அவன் அத்தோட்டப் பண்ணைக்கு நீர்வார்த்துப் பேணினான். அவன் உள்ளத்தின் புதுக் கருத்தொழுங்கை நிழற்படுத்திக் காட்டுவதுபோல, அத்தோட்டமும் புது வனப்புடன் கொடி, தழை, பூக்கள் கொழித்து விளங்கியது. அயல் வீட்டவரும் தெருவில் போவார் வருவாரும் அப்பகுதியின் தனியழகைக் கண்டு, தம் இல்லங்களிலும் நண்பர் இல்லங்களிலும் அதுபோல் முன்தளவரிசைப் பகுதியை அழகிய பூந்தோட்டமாக மாற்றினர். நகர் முதல்வர், அரசியல் முதல்வர் கட்டளைகளாலோ சட்டங்களாலோ கூட அந்நகர் அவ்வளவு விரைவில் இத்திட்டத்தைப் பின்பற்றி நிறைவேற்றி இருக்க முடியாது! சிறுவன் அச்சிறு செயலைச் செய்த நாளே இன்று பல நகரங்களிலும் தோட்டவிழா நாள் (ஹசbடிரச னுயல) ஆகக் கொண்டாடப் படுகிறது. அது அந்த நாளின் தனிச் சிறப்பாகவும் மாறியது!! வீட்டு முன்றிலைப் பற்றி இச்சிறுவன் கனவு கண்டதுபோல, தாய்நாடு பற்றியே ஒருவன் கனவு கண்டால் எப்படி இருக்கும்? ஒரு பையனுக்கு மாறாக எல்லாப் பையன்களுமே கனவு கண்டால் எப்படியிருக்கும்? ஒருவனே கனவு கண்டால்கூடத் தன் நகரம் அல்லது சிற்றூர் பற்றிய கனவு இப்பணியில் ஒரு நற்றொடக்கமாகு மல்லவா? ஆகையால்தான் உன் கனவைச் சிறப்பித்துக் கூறினேன். அழகிய தோட்டமுன்றில் பற்றிக் கனவு கண்ட பையனைப் போல், நீ நகர்பற்றிப் பல கனவுகள் காணக் கூடும். நம் ஏழைச் சேரிகள், அழுக்கடைந்து தாறுமாறாகக் கிடக்கும் சேரி இல்லங்கள் பிரித்தழிக்கப்பட்டு அவ்விடங்களில் அகன்ற சாலைகளும், அவற்றின் இரு வரிசைகளிலும் மரங்களும், அவற்றின் சூழலுள் அமைப்பான காற்றோட்டத்திற் கேற்ற பலகணிகள் அமைத்த இல்லங்களும் கட்டப்பட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்! இன்று சேற்றிலும் மண்ணிலும் புரளும் சிறுவர்கள், அப்போது மரத் திடர்களில் பூக்கொய்து விளையாடுவர். இன்று கந்தலாடையுடன் இருக்கும் சிறுவர் எல்லாரும், ஒரேவகைப் பன்னிற வேறுபாடுடைய தூய ஆடையுடன் இருப்பர். தவிர சில வேலைகட்கு ஆட்கள் கிடைப்பதில்லை. அதே சமயம் பலர் வேலை இல்லாமல் திரிகின்றனர். கல்வி கற்றவர் பலருக்கு வேலை கிடைக்கவில்லை. அதே சமயத்தில் வேலைக்குத் திறமையான கல்வி கற்ற ஆட்களில்லை. பலருக்குப் போதிய கல்வி இல்லை. பணத்தைக் கட்டி வைத்துக்கொண்டு சோம்பல் வாழ்வு வாழ்பவர் ஒருபுறம் இருக்கிறார்கள். மூன்று நேரம் ஒழுங்காய் உண்ண உணவு கூட இல்லாமல் பலர் அவதிப்படுகின்றனர். பொழுது போக்கே வேலையாக வீண்காலம் போக்குபவர் சிலர் உள்ளனர். அதே சமயம் பெரும்பாலோர்க்கு உடற்களை தீர ஓய்வும் உளக்களைத் தீரச் சிறிதளவு நற்பொழுதுபோக்கும் கூட இல்லை. இவற்றை யெல்லாம் திட்டமிட்டுச் சீரமைப்பதனால், திருத்த முடியாதா? கட்டாயம் முடியும். நகர் அளவில், சிற்றூர் அளவில், இங்ஙனம் கனவு காணும் சிறுவர் ஒரு சிலர் இருந்தாலும்கூட இது முடியக் கூடியதே. சிறுகத் திட்டமிட்டு ஒரு மூலையில் இதனைத் தொடங்கி விட்டால் கூடப் போதும். அதன் வெற்றியே அதைப் பரப்பும் வேலையைச் செய்துவிடும். இவற்றையெல்லாம் செய்யப் பணம் வேண்டும், ஆள் வேண்டும், ஆதரவு வேண்டும் என்று நினைக்கிறாயல்லவா? ஆம். ஆனால் நீ கனவு காண்பவன். ஆகவே, நீ ஆதரவுகளுக்காகக் காத்துக் கொண்டிருக்க வேண்டுவதில்லை. மேற்குறிப்பிட்ட பையனைப் போல், நீயே முதல் ஆளாய் இறங்கு. உன் உழைப்பே பணம், உன் வெற்றியே ஆதரவைக் கொண்டுவரும். நீ கனவு காணும் நிலை நனவான பின், உன் செயலே நகரின் செல், உன் ஆர்வமே நகர மக்களின் ஆர்வமாய்ப் பிற நகர மக்களாகிய உன் நாட்டினரையும் ஊக்கும். உன் நகரம், உன் ஊரே, உலக அறிவை உனக்கு ஊட்டும் பள்ளியாய் இருக்கட்டும்! உன்னைச் சுற்றிலும் ஒரு சிறு உலகு. ஒரு சிறு மனித இனப் பகுதி இருப்பதாக வைத்துக் கொள். அது ஒரு சிற்றரசு அல்லது ஒரு பெருங்குடம்பம் என்று கூறலாம். குடும்பத்தை விட அது சற்றுப் பெரிது. ஆனால் அதே சமயம் உலகத்திலுள்ள மக்கள் நிலைகள், அவாக்கள், குறையுடன் வெற்றிக்கான உள்ளார்ந்த ஆற்றல்கள் யாவும் அதில் உண்டு. அவற்றை நீ செயற்படுத்த முயன்றால், அதனால் இச் சிறு உலகு நலம்பெறுவதுடன் பேருலகுக்கு அது வழிகாட்டியாகவும் அமையும். உன் நகர்த் தெருக்கள் அகலமாயும், அழுக்கடை வில்லாமலும், ஒழுங்குநிலை குன்றாமலும் இருக்கும்படி நீ பார்த்துக் கொள்ள வேண்டும். அதை நீ ஒரு நகர் மரபாக்கி விட்டால், அம்மரபே உன் முயற்சியின் பயன் கெடாது போற்றிவிடும். சிறிதளவு முயற்சியிலேயே தெருக்களும் வீடுகளும் ஒழுங்கு பட்டபின், மக்கள் மனநிறைவுக்கான செய்திகளைக் கவனித்துத் தெருக்களில் நடமாடும் மக்களும் மனக் கிளர்ச்சி யுடையவர்களா யிருக்கும்படி செய்யலாகும். நகரின் ஏழை மக்களுக்கு உணவும் உடையும் குறைவில்லா திருக்கப் பாடுபடுவதே இதற்கான வழி. ஏழை மக்கள் உன்னுடன் ஒத்துழைத்தால்தான், நீ நகர் வாழ்வை உயர்த்த முடியும். ஆகவே இதற்கு என்ன செலவானாலும், அதுவே நகரின் பொருள் முதலீடு என்பதை நீ உணர்வாயாக. சேரிகள் எச் செலவானாலும் முதலில் ஒழிக்கப்பட வேண்டும். குழந்தைகள் நிலையே மக்கள் வாழ்நாளின் வருங்கால நிறைவுக்குரிய வித்தாதலின், அது பாதுகாக்கப்பட வேண்டும். குழந்தை வளர்ப்பது, நோய் தடுத்தும் நீக்கியும் அவர்களைப் பாதுகாப்பது ஆகியவை பற்றிய செய்திகளைத் தாய்மாருக்கு அறிவிக்க ஏற்பாடுகள் செய்யப்படுவதுடன், அதற்கு உதவியாக நோய் நீக்க மருத்துவம், நோய்த்தடை மருத்துவம், அல்லது உடல்நல வசதிகள் ஆகியவற்றிற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். பிரிட்டனில் ஹேட்டர்ஸ்ஃவீல்டு நகரின் முதல்வர் இவ்வகையில் பிறருக்கு வழிகாட்டும் ஓர் அரிய செயல் செய்துள்ளார். குழந்தைகளின் நோயைத் தடுக்கும் முதல் தர மருந்து குழந்தைகளுக்குத் தவறாமல் தூய பால் தருவதே என்பதை அவர் அனுபவ மூலம் நடத்திக் காட்டியுள்ளார். இவ்வொரு செயலால், அவர் புகழ் அவர் நாடாகிய இங்கிலாந்து கடந்து பரவியுள்ளது. இதுபோன்ற பிற சிறு செய்திகளையும் பெருஞ் செய்திகளையும் நுண்ணறிவால், அனுபவத்தால், கண்டு பிள்ளைகட்கு மட்டுமின்றி முதிர் வயதுடைய பெண்டிருக்கும் ஆடவருக்கும் கூட கற்றுக் கொடுக்க நீ தயங்கக் கூடாது. உடல் நல்வழி பார்வைக்கு இடுக்கமான வழியாகத் தோற்றலாம். உடல் சீர்கெடும் வழி அகன்று கவர்ச்சியாகக் கூட இருக்கலாம். முன்னதன் இன்றியமையாச் சிறப்பையும், பின்னதன் தீமைகளையும் விளக்கமாக எடுத்தறிவித்தா லன்றி முதியவர்கள் கூட இவ்வகைகளில் போதிய அக்கரை எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஹெஃவ்வீல்டு நகரில் குடி ஒழிப்பு விளம்பரங்களை நகரவையினரே எங்கும் ஒட்டிப் பிரசாரம் செய்தனர். இதன்மூலம் பிற்காலத்தில் நகரமக்கள் வாழ்விலும் நகரவை வருவாயிலும் எத்தனையோ மிச்சம் ஏற்பட்டது கண்டனர். தனிமனிதர் தொழிலிடும் முதலைவிட, மக்கட் பணியாளர் பொதுவாழ்வில் இடும் இவ்வறிவு முதலீடு எத்தனையோ பரந்த அளவு மக்களுக்கு நாமும் வருவாயும் பெருக்குவதாகும். ஆனால் தனி முதலாளிகளின் முதலீடு அவர்கட்கு மட்டும் பயன் தரும். இதுவோ செய்தவருக்குப் புகழ்மட்டும் தரும்; ஆனால் பேரளவிலும் நிலையாகவும் உலகனைத்துக்குமே நன்மை தரும். உன் கனவில், உழைப்பில், அதற்கான தொல்லைகளில் பிறர் ஆர்வங் காட்டுவார்கள் என்றும் நீ எதிர்பார்க்கலாகாது. உலகில் வாழ்க்கையைப் பற்றிச் சிந்திப்பவரும் பொது வாழ்விலோ தம் வாழ்விலோ கூட ஆர்வம் காட்டுபவரும் மிகச் சிலரே. அவர்களில் ஒருவராக இருப்பது எளிது. அவர்களைக் குறை கூறுவதோ பயனற்றது; உண்மையில் தீமை தருவதுகூட என்னலாம். ஏனெனில் பொதுப்பணியாளர்களை மக்கள் அறிந்து பாராட்டுவதற்கு இது தடை கல் ஆகலாம். பிறரிடம் ஆர்வத்தை ஊட்ட வழி ஆர்வமுடைய ஒரு சிலரையேனும் உண்டு பண்ணுவதும், அவர்களின் வெற்றி மூலம் ஆர்வலர் பணிகளுக்கு ஆதரவு தேடவதும் மட்டுமே. இவ்வகையில் பிறர் ஆதரவையும் ஒத்துழைப்பையும் பாராமல், சில சமயம் பழிப்பைப் பெற்றும், நற்செயல் செய்து மன நிறைவுடன் மாண்ட தியாகிகள் வரலாறு உனக்கு வழிகாட்டியாகவும் ஊக்க மூட்டுவதாகவும் இருக்கட்டும். கென்ட் மாவட்டத்தில் ஒரு சிறு சீர்திருத்த மூலம் பத்து நூறாயிரக் கணக்கான மக்கள் எவ்வளவோ பொருள் சேமித்து வைத்துப் பணம் திரட்ட வழி கண்டுள்ளனர். ஆண்டுதோறும் இவ்வகையில் மாவட்டத்திற்கு மிச்சமாகும் தொகை 30,000 பொன் என்று கூறப் படுகிறது. ஆனால் இவ்வளவு ஆதயத்தைப் பெறும் மக்களில் ஒரு சிலர் கூட முதலில் இச்சீர் திருத்தத்தைப் பற்றிச் சிந்திக்க வில்லை. அதுமட்டுமோ? கிட்டத்தட்ட அத்தனைபேருமே அதனைத் தொடக்கத்தில் வெறுத்தனர். எதிர்த்தனர்; அதற்காகப் பாடுபட்ட வரைட் தூற்றினர். இத்தூற்றுதல்களுக்கும் வெறுப்புக்கும் புறக்கணிப்புக்கு மிடையே, அவர் சந்தடியின்றி ஒதுங்கிப் பணி செய்து வாழ்ந்து வந்தார். அவர் சுட்டிக் காட்டிய கைக்கூலி, திறமையின்மை, வீண் செலவு முதலிய ஊழல்கள் படிப்படியாக அகன்ற பின்பும், அதன் நலனைத் துய்ப்பவர்களின் நன்றிக் குரலைவிட, அதனால் சிற்றூதியம் இழந்தவர்களின் தூற்றலே உரத்து முழங்கிற்று. ஆனால் இன்று தூற்றல் ஓய்ந்த பின் அதன் முழுப்பயனும் பெருமையும் உணரப் படுகிறது. எனினும், இப்புறப்புகழ் ஒளிகாணுமுன் தன்பணி வெற்றியடைந்த தென்பதை அறிந்ததாலேயே மன நிறைவடைந்தவராய், அவர் இயற்கை யெய்திவிட்டார்! மக்கள் ஆரவாரப் புகழினும் மனச்சான்று அளிக்கும் மனநிறைவாகிய புகழே நல்லம் யாம்’’ என்னும் மனமறிந்த நடுவுநிலைமையே சிறப்புடையதென்பதை ஈண்டு நீ காணலாம். உன் வாழ்க்கை கடந்து புகழும், புகழ் கடந்து பணி வெற்றியும் மக்கட் பயனும் பெறத்தக்க வண்ணம் உன் கனவு நனவாகுமாக. 8. மூவாமுதல் நாடும் இளைஞருக்கு கனவியல் கடந்த கடவுளகத்துக் கருத்துச் செலுத்திய காளையே! உலகப் பற்றாளரும், உலக மக்கள் வாழ்வு, அரசியல் ஆகிய துறைகளில் கருத்துச் செலுத்திக் கனவு காண்பவர்களும், தனி மனிதன் குறுகிய எல்லையையும், அவனைச் சூழ்ந்த இட எல்லை களையும் தம்மாலானவரை கடந்து அப்பால் செல்ல முனை கின்றனர். ஆனால் அவர்கள் கனவில் கடப்பதுகூட இட எல்லையை மட்டுமே. கால எல்லையைக் கடப்பதில் அவர்கள் கருத்துச் செலுத்துவதில்லை. நீ கனவு காணும் உயர் குறிக்கோளாகிய கடவுள் இடமும் காலமும் அவற்றுடன், கருத்தும் கடந்த கனவியல் மெய்ம்மை ஆகும். ஆகவே அது இட எல்லையில் வரம் பற்று மக்கள் அனைவரையும் உயிரினமனைத்தையும் அளாவு வதுடன், அப்பேருலகின் நிகழ்கால மட்டுமின்றி அதன் எல்லை யற்ற இறந்த காலம், எல்லையிருக்க முடியாத எதிர் காலம் ஆகியவற்றையும் அவை பற்றிய கனவுகளையும் கடந்தது. இத்தகைய முழு நிறைவான நிலைபேறுடைய மெய்ம்மையில் நீ கருத்தூன்றியுள்ளாய்! எல்லையற்றுப் பரந்த பல நாடுகளையும் கண்டங்களையும் மாகடல்களையும் உட்கொண்ட உலகில் நீ ஒரு சிற்றணுப் போன்ற வனே. அதுபோலவே எல்லையற்ற கால முழுமையுள் இவ்வுலகம் வாழுங்காலமாகிய நிகழ்காலமும் ஒரு சின்னஞ்சிறு அணுவே. இச்சிற்றணுவிலும் ஒரு நுண்ணணுவாகிய நீ, பரந்து சென்று அணுவளவாகக் கொள்ளத்தகும் நிகழ்கால உலகையும் அளாவலாம். அகன்று நின்று முக்கால மெய்ம்மையிலும் கருத்தூன்றலாம். அந்த அளவு எல்லையற்ற முக்காலப் பண்பின் கருவிதை உன்னிடத்திலும் முதிராத நிலையில் உள்ளது. இன்றிருக்கும் உலகமும் உயிர்களும் முன்பும் இருந்தன; இனியும் இருக்கும். ஆனால் இன்றிருக்கும் வடிவிலேயே என்றும் இருந்தது என்றோ, இருக்கும் என்றோ கூற முடியாது. உலகில் மனிதன் நாகரிக மடையாத காலமும் இருந்தது; மனிதனே இல்லாத காலமும் இருந்தது. அதற்கும் முன்பு உயிரினங்களே தோற்றாத காலமும் உண்டு. மண்ணுலகனைத்தும் நீர்பரந்து கடலாகவும், பனி மூடியும் இருந்ததுண்டு; இன்னும் தொல்பழங் காலத்தில் அது நெருப்புப் பிழம்பாய், கதிரவன் பிழம்பில் ஒரு கூறாக இயங்கியதென நூலோர் கூறுவர். இங்ஙனம் மாறுபட்ட உலக வடிவுகளினூடாக, உயிரின்மை, உயிர், மனிதன் என்ற வளர்ச்சியினூடாக என்றும் நின்று நிலவும் அடிப்படை மெய்ம்மைப் பொருண்மையே மாறுபடுந் தோற்றமெல்லாம் கடந்து நின்ற மாறாத கடவுண்மை’ ஆகும். உலகின் பரந்த கடவுண்மை’ போலவே உனக்கும் ஒரு குறுகிய கடவுண்மை’ உண்டு. உன் கருத்துக் கெட்டிய இறந்த காலம் உன் சிறுமைப் பருவமாகவோ அல்லது அதற்குப் பிற்பட்ட காலமாகவோ இருக்கலாம். எதிர்காலமோ உன்னால் கனவு காணத்தக்க ஒரு காலமேயன்றிக் காணத்தக்கதும் வருமுன் உணரத்தக்கதும் அல்ல. ஆனால் பல்வகை மாற்று வடிவினூடாகவும் உலகம் என்றும் இருந்திருக்க வேண்டுமன்றோ? அதுபோலவே, நீயும் எத்தகைய மாற்றத்தினூடாகவும் இருந்திருக்க வேண்டியவனே. உன் குறுகிய கால அனுபவத்தில்கூட நீ எல்லாவற்றையும் அறிவதில்லை. உறங்கும் வேளையிலுள்ள உலகு உனக்குத் தற்காலிகமாக இல்லாத உலகே. மற்றும் நினைவூட்டிப் பார்க்க நினைவுக்கு வருபவையும் மறப்பவையும் ஆன செய்திகளும், வேண்டும்போது நினைவுக்கு வருபவையும் பல. எனவே, கால எல்லையில் நீ காண்பது சிறிதளவு; காணாதது பேரளவு. கண்டது கொண்டே காணாததை உணரவேண்டு மென்றாலும், காணாதது என்பதெல்லாம் இல்லாதது என்று கூறிவிடல் முடியாது. ஆராய்ச்சி முடிபோ கண்டதிலிருந்தே காணாததைப் பற்றி அறுதி கூறத்தக்கதா யுள்ளது. இத்தகைய ஆராய்ச்சியின் மூலம் உலகியல் ஆராய்ச்சியாளரும் சரி, கடவுள்நிலை ஆராய்ச்சியாளரும் சரி, கண்டனவாகிய தொடர்புடைய தற்காலிக மெய்ம்மைகளிலிருந்து அத்தொடர்பு கடந்த நிலையான அல்லது நீடித்த தொடர்பில்லாத் தனி மெய்ம்மை களைக் கண்டுள்ளனர். அறிவியலாளரின் கோட்பாட்டுத் துணிபுகளும் மெய்விளக்க அறிஞரின் விளக்க மெய்ம்மைகளும் இத்தகையவையே. இம் மெய்ம்மைகளின் அடிப்படை அமைதி யைக் குறிப்பதே கடவுள் என்ற சொல். அது எல்லையற்ற தாயினும், அவ்வக்காலத்தில் மனிதர் ஆராய்ந்த ஆராய்ச்சி எல்லையின் முடிவையுங் காட்டுவதாகும். நாம் தனித்தே பெரும்பாலும் வாழ விரும்புகிறோ மாயினும் நம் வாழ்வு தனி வாழ்வன்று; உலக வாழ்வின் ஒரு சிறு கூறே. அதுபோல உலக வாழ்வு ஒரு தனி வாழ்வாகத் தோற்றினும் உண்மையில் எல்லையற்ற காலத்தில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையான இயற்கையின் வாழ்வில் அது ஒரு சிறு நொடியே யாகும். நாம் நின்று கரைக்குக் கரை ஆற்றைப் பார்க்கிறோ மாயினும் அங்ஙனம் பார்ப்பது ஆற்றின் அகலத்தை மட்டுமே, நீளத்தையன்று. ஆற்றின் தலைவாயிலில் உள்ள சுனைகள், அதனிடையே ஓயாது பொழிந்து நீர் தேக்கும் முகில், அம்முகில்களை உருவாக்க உதவும் கடல்நீர் ஆகியவற்றையும் ஆற்றுடன் சேர்த்துப் பார்த்தால் ஆற்றின் முழு வடிவம் விளங்கும். அது கடலினின்று எழுந்து வானில் முகிலாய்ப் படர்ந்து மலையில் பொழிந்து ஆறாய் ஓடி மீண்டும் கடல் சென்று கூடும் நீர்ப்பெருக்கின் ஒழுக்கேயாகும். அதுபோலவே மனிதர் காணும் உலக வாழ்வு கடவுள் என்ற ஒரே தடங்கடலில் நின்று தோன்றி அதனுள்ளே மீண்டும் சென்று ஒடுங்கி வரும் ஒரே ஓயாத ஒழுக்கு என்னலாம். உலகில் கடவுளைப் பற்றியோ கடவுள் கருத்துக்களைப் பற்றியோ கவலை கொள்பவர் என்றும் மிகமிகக் குறைவாகவே இருக்க முடியும். இது இயல்பு. கண்கண்ட பொருள்களெனக் கொள்ளத்தகும் நாட்டையும், கண்டத்தையும், ஆட்சியையும் பற்றிக் கூட எத்தனைபேர் நினையாதிருக்கிறார்கள்? தம் வாழ்வின் அடிப்படையாகிய உடலையும், அதன் உள்ளுறுப்புக் களையும் அது செய்யும் ஓயாத வேலைகளையும் பற்றிக்கூட யார் நினைக்கிறார்கள்? உறக்கத்தில் நம் கருத்துக்கள் எங்கேபோயின என்றுகூட யாராவது நினைப்பதுண்டா? ஆகவே இட எல்லையையும் கால எல்லையையும் கடந்து அக்கடந்த நிலைதான் மெய்ம்மையின் உண்மை உருவம் என்று மக்கள் எண்ணிப் பாராததில் வியப்பு இல்லை. ஆற்றைப் பார்த்து முகிலையும் கடலையும் யாராவது நினைக்கின்றனரா? நீரைப் பார்த்து நீராவியையும் பனிக்கட்டியையும் எண்ணுகின்றனரா? மனிதனைப் பார்த்து உயிரினங்களையும், மரஞ் செடி கொடிகளையும் மண்ணையும், கல்லையும் யாராவது கருத்திற் கொண்டு அவற்றின் அடிப்படைத் தொடர்புகளைக் கவனிக்கின்றனர் என்று கூற முடியுமா? ஆனால் வியத்தகு செய்தி யாதெனில், கடவுளைப்பற்றி யாரும் கருதாததன்று; கடவுளைப் பற்றி இத்தனைபேர் கருதுகின்றனர் என்பதே! எனினும் அறிஞரும் கவிஞரும் அருளாளரும் கருதும் கடவுண்மை வேறு; உலக மக்களில் பெரும்பாலோர் கருதும் கடவுண்மை வேறு. அறிஞர் மாறும் பொருள்களிடையே மாறாத தன்மையினைக் கடவுண்மை எனக் கொண்டனர். கவிஞர் வடிவுகளிடையேயும் வண்ணங்களிடையே யும் உள்ளத்தைக் கவரும் ஆற்றலுடைய அழகுக் கூறுகளின் முழுநிறை திரட்டைக் கடவுண்மை எனக் கொண்டனர். அருளாளர் வாழ்க்கையின் உள்ளார்ந்த அன்பு நிறைவைக் கடவுண்மை எனக் கொண்டனர். இம்மூன்று கருத்தும் மனித வாழ்வை உயர்த்துவதுடன், மனிதன் பண்பையும் உயர்த்துபவையே. இவை இம்முத்திறங்களிலும் கனவியலாளரின் கனவு வானவிளிம் பெல்லைகளே யாகும். எனவே மூன்றும் சேர்ந்த தொகுதி மனிதன் கடந்த கனவுகளையும் கடந்த கடவுள் நிலை’ என்பதில் ஐயமில்லை. ஆனால் பொது மக்களில் பெரும்பாலோர் கொள்ளும் கடவுள் கருத்து அவரவர் வாழ்க்கை நிலையின் சிறிய அனுபவ அறிவு, உணர்ச்சி, ஆர்வம் ஆகியவற்றின் எல்லைகளே. அச்சமுடையார் தம் அச்சத்தின் எல்லைக்கோடி உணர்வையும், வியப்புடையாரும் வீர வணக்கப் பண்புடையாரும் தம் வியப்பு. வீரம் ஆகியவற்றின் உயர்கோடியையும், அவாவுடையார் தம் அவாக்களின் உச்ச எல்லையையும் கடவுள் கருத்திலேற்றினர். வல்லார் பலருக்கு மனிதர் அடிமைப்பட்ட காலத்தில் அவர்கள் பல கடவுளரையும், இயற்கை யாற்றல்களுக்கு அஞ்சிய காலத்தில் இயற்கைக் கடவுளரையும், ஓரரசனுக்கு அல்லது பேரரசனுக்கு அடங்கியும், அஞ்சியும், அன்பு செலுத்தியும் வாழ்ந்த காலத்தில் அத்தேவகை உணர்ச்சிகட்குரிய பண்புகள் வாய்ந்த நாட்டுக் கடவுளரையும் உலகக் கடவுளையும் வழிபட்டனர். இவ் வழிபாட்டுடன் சில பழக்க வழக்கங்களும் சில நம்பிக்கைகளும் சில குழு நலன்களும் இணைந்தன. இவையனைத்தும் சேர்ந்தே கடவுள் கொள்கையுடைய சமயங்களாக இயலுகின்றன. இச்சமயங்களின் அனுபவச் சூழ்நிலைகளைக் கடந்து உலக நாகரிரகம் வளருந்தோறும், கடவுள் நம்பிக்கையுடைய ஆத்திகர் தொகையும் அதனை எதிர்க்க முனையும் நாத்திகர் தொகையும் உலகில் மிகவும் குறைந்தே வருகின்றன. பெரும்பாலான மக்கள் மீண்டும் ஆதிகால விலங்கு மனிதனைப் போலவே கடவுளைப் பற்றிக் கவலையில்லாத நிலையை அடைந்து வருகின்றனர் இத்தறுவாயில் உன் போன்று அறிவுத்துறை, அன்புத்துறை, கலைத்துறை ஆகிய மூன்றின் கனவாற்றல்களையும் உயிர்ப்பித்து, மனிதரை மனித எண்ணங்களின் வான விளிம்புக்கு மீண்டும் கொண்டு செல்லத்தக்க கடவுள் கருத்தாளர் மிகவும் வரவேற்கத் தக்கவர்களேயாவர். உன் கனவுகளால் கடவுளைப் பற்றிய கவலையற்ற நிலையும், அது பற்றிய போலிப் பசப்பு நிலையும் மாறி, மனித வாழ்வு வளர்ச்சிக்கு உயிர்ப்பூட்டவல்ல கடவுள் கருத்து அல்லது உயர் வாழ்க்கைக் குறிக்கோள் மீண்டும் வளர்தல் வேண்டும். கடவுளைப்பற்றிக் கவலையில்லாதவர்களைவிடக் கடவுளைப் பற்றிய தவறான கருத்தும் பற்றும் கொண்டவர் நிலையே பெரிதும் இரங்கத்தக்கது, வெறுக்கத்தக்கது. ஏனெனில் அது ஒருபுறம் அக்கருத்தின் எதிர்ப்பையும், மற்றும் ஒருபுறம் அதுபற்றிய அசட்டை மனப்பான்மையையும், மற்றொருபுறம் அப்போலிக் கருத்தால் வரும் நச்சு விளைவுகளையும் வளர்த்து, மனித சமூகத்திற்குக் கேடு செய்கிறது. ஆனால் அதேசமயம் மனித வாழ்வுடன் உன் கனவியல் கடவுண்மை சாராவிடில், வாழ்க்கை குறிக்கோளற்றதாகவோ அல்லது மிக மட்டமான குறிக்கோ ளுள்ளதாகவோ போய்விடும். ஆகவே, நீ உன் கனவில் விரைந்து முனைந்து, உன் கருத்தால், சொல்லால், செயலால் எல்லாத் துறையாளர்க்கும் கடவுள் கருத்தின் உயர்வு பற்றியும், நயம் பற்றியும் விளங்கக் காட்டல் வேண்டும். இயேசுபெருமானின் வாழ்க்கையில் நாம் காணத்தகும் கடவுள் தன்மை இன்று பெரும்பாலும் பொது மக்கள் மனத்துட் கொண்ட கடவுள் கருத்து அன்று. ஆயினும் அது இயற்கை யாகவே அவர்கள் உள்ளத்தில் மெய்யான கடவுள் தன்மை பற்றிய எண்ணங்களை அல்லது பண்புகளை வளர்க்கும் தன்மை யுடையதே. வஞ்சகமற்ற குழந்தை வருங்கால மனிதப் பண்புகளின் விளைநிலம்; அது கடவுளுக்கு அருகாமையிலுள்ளது என்று அவர் கூறினார். தற்பெருமையற்ற ஏழை எளியவர் வாழ்க்கை யிலும் இன்பக் கலப்பற்ற துன்பமுற்ற பாவிகள்’ வாழ்க்கையும் உயர்ந்தோரினும் கடவுளருக்கு நெருங்கிய உரிமை உடையவை என்பதை அவர் உணர்த்தினார். அறிவுத் திறமோ, கலைத் திறமோ அற்றவர்களும் அன்புத் திறம் உடையவராய் மக்கள் பணியில் ஈடுபட்டால், கடவுண்மை அவர்கட்கு அணிமையுடையது என்று அவர் சொல்லாலும் செயலாலும் உணர்த்தினார். குலம், வகுப்பு, இனம், நாடு ஆகிய எல்லா எல்லைகளும் கடந்து கடவுள் தன்மையின் அகல் விரிவை உலகுக்கு உணர்த்திய அருளாளர் களுள் இயேசு பெருமானே தலைசிறந்தவர் என்னலாம். கடவுள் கருத்தும் கடவுள் பண்பும் வாழ்வில் வளர இன்ன சமயத்தைத்தான், அல்லது இன்ன சமயத்தின் இன்ன கிளையைத்தான் ஒருவன் பின்பற்ற வேண்டும் என்று கூற முடியாது. உண்மையில் அக்கிளைகளையும் அச்சமயங்களையும் கடந்து செல்லும் கருத்துத்தான் உண்மையான மனித சமயக் கருத்தாயிருக்கும். இயேசுபெருமான் நெறிக்கு ஓர் உயர்வு உண்டென்றால் கூட, அது அவர் அவாவிய கடவுள் உலகளாவிய கடவுள் என்பதே. இன எல்லை, நாட்டெல்லை, வகுப்பெல்லை கடக்க முடியாத கடவுள் கருத்தும், அவ்வெல்லைகளுள்ளும் ஒற்றுமை விளைவிக்க முடியாத கடவுள் கருத்தும் தற்கால மனித நாகரிகத்துக்கு ஒவ்வாத, காலங்கடந்த கடவுள் கருத்தே என்பதில் ஐயமில்லை. கடவுள் கருத்தும், சமயமும் இன்பத்தை வெறுப்பது. துன்பத்தை அணைப்பது என்று பலர் எண்ணுகின்றனர். அது வெற்றின்பமல்ல வென்பது உண்மையே. ஆனால் அது துன்ப உணர்வுமல்ல. வெறுப்புணர்ச்சியுமல்ல. தன் இன்பத்தினும் உலகின் இன்பத்தையும், தற்காலிக இன்பத்தினும் நிலையான பயனுடைய வளர்ச்சி தரும் இன்பத்தையுமே அது நாடவல்லது. தூங்குமூஞ்சியுடையோர், வெறுப்பு வேதாந்தம் பேசுபவர் வாழ்க்கைக்கு எவ்வளவு தகாதவரோ, அதனினும், மிகுதியாகச் சமயத்துறைக்குத் தகாதவரேயாவர். ஏனெனில் உண்மைச் சமயம் இயற்கை அன்பு; துன்பந்துடைத்து இன்பம் வளர்ப்பதற்கேதான் அது சில காலங்களில் துன்பத்தை மேற்கொள்ள எண்ணுகிறது. நண்பனுக்காகப் பாடுபடுபவன், உணர்ச்சியுடன், நாட்டுக்காக உயிர் விடுபவன் உணர்ச்சியுடன் உலகின் எதிர்காலத்தை நோக்கி நிகழ்கால இகழையும் ஏற்று உழைப்பவனே சமயத்துறை அருளாளன் ஆவான். இத்தகைய பண்பு உடையவன் கடவுளை வழிபடாதிருக்கலாம்; கடவுள் நம்பிக்கையேகூட இல்லாதிருக்க லாம். ஆனால் அவனிடம் கடவுள் பண்பு உண்டு என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். கடவுள் வழிபாட்டின் நோக்கம் கடவுள் பண்பேயாதலால், அப்பண்புடையார் நிலை,வழிபடுவோர் நிலையினும் உயரியது என்பதில் ஐயமில்லை. இயேசுவை நாம் போற்றுவது அவர் கடவுளை வழிபட்டார் என்பதற்கன்று; கடவுள் பண்பு அவர் வாழ்க்கையில் விளங்கிற்று என்பதற்காகவே. வெறுப்பாளனுக்குச் சமயத்திலிடமில்லாதது போலவே கோழைக்கும் சமயத்தில் இடமிருக்க முடியாது. வாழ்க்கையில் தோற்றோடியவர், வெறுப்புற்றவர், வாழ்க்கைக்குத் தகுதியற்றவர் சமயத்துறையில் தஞ்சங் கொள்ளுவதுண்டு. ஆனால் இதனால் சமயம்பற்றி மக்கள் தப்பான கருத்துக் கொள்ளத்தான் முடிந்ததே தவிர, இக்கோழைமை சமயத்தை வளர்த்தது கிடையாது. சமயத் துறைக்குரியவன் போர்த்துறைக்குரிய வீரனினும் உயரிய வீரப்பண் புடையவனே. தன் வீரம் காட்டிப் பிறர் குருதி சிந்தும் போர்வீரன் போலன்றி, சமயப்பணியாளன் பிறர் போலி வீரத்துக் கஞ்சாது தன் குருதி சிந்தவேண்டியவனாகவே உள்ளான். இயேசுபெருமான் சிந்திய குருதி இக்காரணத் தாலேயே போற்றுதல் பெறுகிறது. நல்லவனாயிருப்பது என்பது எளிது என்று பலர் எண்ணுகிறார்கள். தீயவனாயிருக்கத் திறம் வேண்டும். அத் திறமில்லாததால் நல்லவன் போலத் தோற்றுகிறவன், திறமுடைய தீயவனைவிடக் கீழ்த்தர மனிதனே யென்பதில் ஐயமில்லை. உலகோர் அவனை நல்லவன் என்பதெல்லாம், அவனால் தீமைவிளைய வகையில்லை என்பதனாலேயன்றி அவன் உயர்வுடையவன் என்பதனாலல்ல. ஆனால் அத்தகையோனால் தீமைவிளையாது என்பதுகூட உண்மையல்ல. திறமையற்ற இத்தகைய நல்லோர்கள்’ உலகில் மிகுதியா யிருப்பதனாலேயே, தீயோருக்கு உலகம் ஒரு வேட்டைக்களமாய் உதவ முடிகிறது. வீரநல்லோர் தீயோரை எதிர்த்துப் போராடும் போராட்டங்கள் பெரிதும் வீண் போவது அறிவிலிகளாகிய பெரும்பாலான இந்தக் கோழைகளால்தான். அவர்கள் அறிவை நாடாததால், உலகில் அறியாமை வளர்கிறது. அவர்கள் ஏமாறுவதால், உலகில் ஏமாற்றுத் தழைக்கிறது. அவர்கள் மயக்கத்தால் தீயோர்க்குத் தற்காலிகமாகவேனும் புகழும் வெற்றியும், நல்லோர்க்குப் பலகால் தோல்வியும் இன்னலும் நேருகின்றன. தீயோரினும் இங்ஙனம் இப் போலி நல்லோர்’ உலகுக்குச் செய்யும் தீமை மிகுதி யென்னலாம். “கடவுளை நம்பு!’’ கடவுளை நம்பினோர் கைவிடப் படார்’’ கடவுள் வணக்கம் கல்லையும் பிளக்கும்’’ என்றெல்லாம் பல சமயவாதிகள் கூறுவதுண்டு. கடவுடள் பண்பிலூறாதவர் இத்தகைய கூற்றுக்களைக் கூறுவதால் எப்பயனும் விளைவ தில்லை. இவை முற்றிலும் தத்தம் கட்சிக்கு ஆட்சேர்க்கும் முயற்சியாக மட்டுமே நிலவுகின்றன. கடவுள் பண்பை ஏற்காத வரையும் ஏற்கச் செய்யும் வலிமையும், சமயம்பற்றி இன்று உலகில் பரவி வரும் அசட்டை மனப்பான்மையை அகற்றும் ஆற்றலு முடையவை இச்சொற்களும் விளமபரங்களும் அல்ல; அருளாளர் அருட்செயல்களும், தன் மறுப்புக்களும், அவ்வழியே பிற மக்கள் வாழ்விலும் இயற்கையாகக் காணப்படும் அன்புப் பண்புகளுமே. கடவுள் என்ற ஒன்று, கடவுள் பண்பு என ஒன்று இருக்க முடியாது எனக் கூறுபவருக்குச் சரியான விடை வேண்டின், இயேசு, ஸென்ட் பிரான்ஸிஸ், லூதர் முதலிய அருளாளர் வரலாறு மட்டிலுமின்றி, உலக வரலாற்றிலேயே எத்தனை செய்திகளைக் கூறலாம்? அரசியலை எதிர்த்த காரணத்துக்காகப் புரூட்டஸ் தன் புதல்வர்களையே கொன்றழிக்கத் துணிந்தான்! இச்செயல் பொதுவான மனித உணர்ச்சி. மனித ஆற்றல் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டதன்றோ? ஏயம்நகர் மக்கள் தம்மைத் தாமே தம் நகருக்குள் அடைத்து வைத்துக்கொண்டு இறந்தனர்! ஏன்? தம்முள் பரவிவிட்ட கொள்ளைநோய் வெளி உலகில் பரவாது தடுக்க, தம்மைக் காத்துப் பின் உலகைக் காக்க முனையும் உலகின் பொதுநெறி மீறி உலகு காக்கத் தம்மை மாய்த்துக் கொள்ளும் உயர் நெறி அவர்கட்கு எவ்வாறு வந்தது? கிரேக்க வரலாற்றில் தன்னகரிலிருந்து தன்னைத் துரத்தும்படி வேண்டிக்கொள்ளும் குடியானவன் எழுத்தறிவற்றவன் என்ற காரணத்தினால், அரிஸ்டைடிஸ் தானே அதற்குக் கையொப்ப மிட்டனுப்பித் தன்னைத் தானே துரத்திக் கொண்டான்! இத்தகைய வரலாற்றின் அருநிகழ்ச்சிகளையும் பிள்ளைக்காகத் தாய் மனைவிக்காகக் கணவன், உடன்பிறந்தாளுக்காக உடன்பிறந்தான் காட்டும் தன் மறுப்பு வீரநிகழ்ச்சிகளையும் விடுத்துக் கடவுண்மைக்குச் சமயவாதிகள் வீணே தெய்வீகக் கதை திரித்துத் திரிகின்றனர்! அவர்கள் கைப்பட்ட சமயம் மனித நாகரிகத்திலிருந்தும் வாழ்விலிருந்தும் ஒதுங்கி வருவதில் வியப்பு என்ன? சமயத் துறையை வாழ்க்கைப் பிழைப்பாக்கி விட்டவர் கடவுள் தன்மையை மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டதாகச் சித்திரித்துக் காட்டுகின்றன ராயினும், சமயத்தின் உள்ளார்ந்த போக்கு மனிதத் தன்மையை ஒட்டியதேயென்று காண்டல் எளிது. உலகில் மதிப்புக் குரியவருள் முதன்மையானவர்கள் செல்வர் அல்லது அரசர் அல்லது தண்டத்தலைவர், நாகரிகமற்ற பழங்காலச் சமயங்களுள் பல கடவுளையும் ஓர் அடிமை முதலாளிபோல, ஓர் அகத்தை மிக்க செல்வர் போல தண்டத் தலைவர்போல அரசன் போல உருவகித்தன. ஆனால் புண்டைச் சமயங்கள் கடவுளைத் தந்தை போன்றவர் என்றே கூறுகின்றன. இன்னும் சில சமயம் தாய் போன்றவர் என்றும் குறிக்கின்றன, அன்பு முறையில் தாய் எனக் கூறுவதே சிறப்பாயினும், தாய் தன் அன்பில் தனிநிலை முற்றிலும் அழிந்து அன்புக்கு ஆட்பட்டு விடுகிறாள். தந்தையோ அன்பிலீடு படினும் தன் தனிநிலை யழிவதில்லை. கிறிஸ்தவ சமயம் கடவுளைத் தந்தை எனக்கூறியது இதனாலேயே என்று கூறலாகும். ஆனால் எப்படியும் தந்தை, தாய் ஆகக் கடவுளை உருவகிப்பதால் கடவுள் மனிதத் தொடர்பு முற்றிலும் நெருங்கிய அன்புத் தொடர்பாய் விடுகிறது. கடவுள் பண்பும் மனிதப் பண்பை மிகுதி அணுகுகிறது. மனிதப் பண்பின் முழுநிறைவான கடவுள் கருத்தே மிக உயரிய கடவுள் கருத்து எனச் சமய உணர்ச்சியிலீடு பட்ட நண்பர்கள் துணிவர். கடவுள் கருத்து மனிதப் பண்புக்கு மிக நெருக்கமானது என்பதை இன்னொரு வகையிலும் காட்டலாம். ஓர் அரசனை அல்லது ஓர் அரசியற் பணியாளனைப் பார்ப்பதுகூட உலகில் எளிதல்ல. பார்த்தாலும் முற்றிலும் சரி சம உரிமையுடன் உறவாட முடியாது. காத்திருந்தது கண்டு அஞ்சி அஞ்சிப் பேசவேண்டும். ஆனால் கடவுளை எந்த இடத்திலும் எவரும் வணங்கலாம் என்றும், அதனை அவர் ஏற்பர் என்றும், அவர் கவனத்தைத் திருப்புவதற்கான நம் தகுதி அன்பு ஒன்றே என்றும் கருதப் படுகிறது. பிள்ளை, தாய், தந்தையிடம் பேசுவதுபோல அவரிடம் பேசித் தாய் தந்தையர் அன்பினால் பிள்ளைகளுக்குக் கிட்டும் வெற்றியை அவரிடமும் பெறலாம் என்றும் மக்கள் நம்புகின்றனர். மனிதர் உள்ளார்ந்த உணர்ச்சியின்படி அவர்கள் அரசர், பெரியார், அறிஞரினும், தாய், தந்தையரிடத்திலும் அவர்கள் அன்பிலுமே கடவுள் தன்மையைக் கண்டுள்ளனர் என்பதற்கு இது சான்று. கடவுளைத் தந்தை தாய் என்று கூறுவதினும் அவருக்கே பெருமை தருவது வேறு இல்லை. தாயும் தந்தையுமே மனிதன் கண்கண்ட கடவுளர் என்றால் மிகையாகாது. கடவுள்பற்றில் இன்னும் ஒருபடி முன் சென்றவர்கள் கடவுளன்பை இன்னும்கூட ஒரு படி உயர்த்தியுள்ளனர். தாயிடம் அன்பின் எல்லையை நாம் கண்டாலும் தாய் பிள்ளை அன்பு இருபுறமும் ஒத்திருக்கவில்லை. தாயின் அன்பைப் பிள்ளை நுகர்ந்தறியுமேயன்றி அளந்தறியவும் மாட்டாது; அதனைத் திருப்பித் தரவும் மாட்டாது. ஆனால் காதலன் காதலி அன்பில் அக்காதலைப் பெற்றோர் முற்றிலும் திருப்பித்தர முடியும். எல்லா உயர்வு தாழ்வுகளும் காதலின் முன் தீய்ந்து சரிமட்டமாய்விடும். கடவுளையும் மனிதனையும் கவிதைப்பண்பு மிக்க கடவுள் பற்றாளர் காதலன் காதலி அல்லது காதலி காதலன் என வருணித்துள்ளனர். தாய் அன்பிலும் அது உயர்வுடையதன் றெனினும், அதனினும் மக்கட் பண்புக்கு நெருங்கி வருவதே யாகும். அதனினும் முழு நிறைவுடையதேயாகும். மேற்கூறியவற்றால் கடவுள் என்பது மனிதன் பொது அறிவெல்லை தாண்டிய அவன் கற்பனைகளின் தொகுதி என்பதும், மனித சமூகத்தின் நாகரிக வளர்ச்சிக்குத் தக்கபடி கடவுள் பண்பும் உயர்வும் பெறும் என்பதும் நாகரிகம் மிக உயர்நிலை யடைந்த காலத்தில் மனிதன் கனவாகிய கடவுள் பண்பு அவன் நனவாகிய மக்கள் பண்புக்கு மிக நெருங்கிவரும் என்பதும் விளங்கும். பிற கனவுகளுக்கும் கடவுட் பண்புகளுக்கும் உள்ள வேற்றுமை யாவதெல்லாம், இது காலங் கடந்தது; மாறுபாடு கடந்தது; அறிவெல்லையாகிய வரையறையை மட்டுமன்றி, அறியாமை எல்லையாகிய வரையறையின்மையை யும் உடையது என்பதே. அரசியற் கனவாளர்களின் கனவையும் அறிவியற் கனவாளர்களின் கனவையும், கலைப்பண்பாளர்கள் கனவையும் தாண்டிய உன் கடவுட் கனவு அவர்கள் கனவுகட்கெல்லாம் உயிராய் நின்று உலகை ஊட்டவல்லது. ஆகவே, கண்காணாக் கடவுள்பற்றிக் கவலை காட்டல் வீண் எனக் கூறும் உலகியலார் ஏளனத்தையும், கடவுள் பெயரால் தன்னலம் பேணி வேற்றுமை வளர்த்து வாழும் கயவர்கள் வெறுப்பையும் ஒருங்கே புறக்கணித்து உன் உயர் கனவால் உலகை ஒளிப்படுத்துவாயாக. வாழ்க உன் மனிதப் பண்பின் முழு நிறையாகிய கடவுட் பண்பு. 9. வாழ்வு தொடங்கும் இளைஞருக்கு வாழ்க்கைப் பயிற்சி முற்றி வாழ்க்கைக் களம்புகவிருக்கும் மைந்த! உன் கல்வி நிலையப் பயிற்சி முடிவடைந்து விட்டது. நிலையம் உன்னைத் தன் தேர்வுகளில் தேர்ந்தெடுத்து விட்டது. இனி உன் பள்ளியை, பள்ளியின் பயிற்சியினை உலகு தேர்ந்தெடுக்க வேண்டும். அப்பெரும் பொறுப்பின் ஒரு பகுதி உன் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. உன் வெற்றி தோல்விகளே இனி உன் பள்ளியின் பெயருக்கும் உன் கல்லூரியின் பெயருக்கும் உயர்வு தாழ்வு அளிக்கும். உன்னைத் தேர்ந்தெடுத்த நிலையம் அல்லது நிலையங்களை உலகு தேர்ந்தெடுத்துப் புகழச் செய்வதே நீ அவற்றுக்குச் செய்யும் கைம்மாறு. இதுவரை நீ உலகுபற்றிக் கனவு காண்பவர்களுள் ஒருவனாயிருந்து வந்தாய். இப்போது உலகு உன்னைப்பற்றி ஆவலுடன் கனவு காண்கிறது. நீ முதல் அமைச்சனாக வருவாயோ, அமைச்சனாக வருவாயோ; சீர்திருத்தவாதியாக, கவிஞனாக, அறிஞனாக, சமயத் தலைவனாக வருவாயோ என்று உலக மக்கள் பலவாறாகக் கற்பனை யிட்டவண்ணம் இருக்கின்றனர். இவை அவர்கள் கனவாயினும், உன்னைப் பற்றிய கனவாதலால், இக் கனவை நனவாக்கி வெற்றி தோல்வியடையச் செய்வது அவர்களல்ல, நீயே. அவர்கள் கனவின் நிறைவேற்றம் உன் கனவையே பொறுத்தது. நீ நிறைவு படுத்தாது விடுவதை, உன்னையொத்த பிற தோழர்கள்தாம் நிறைவு படுத்த வேண்டும். ஆனால் நீ தேர்ந்தெடுக்கும் கனவுத்துறை உனக்கு உகந்ததா யிருந்தால் நீ அதில் அடையும் வெற்றி அவர்கள் கனவுகளையும் திருத்தவல்லதாயிருக்கும் என்பது உறுதி. நான் கல்வி நிலையத்தில் பயிற்சி முற்றி வெளிவந்து சில நாட்கள்தாம் ஆகின்றன. உன் கல்வி நிலைய ஆசிரியர் போன்றே எனக்கும் திறமை மிக்க ஆசிரியர் இருந்தனர், ஆயினும் இன்று நான் பள்ளிவிட்ட காலத்தை நினைத்துக் கழிவிரக்கம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. அச்சமயம் எனக்கிருந்த வாய்ப்புக்கள் பெரிது. ஆனால் அவற்றைப் பயன்படுத்தும் வகையினை நான் அன்று அறிந்ததினும், இன்று நன்கு அறிகிறேன். பள்ளியாசிரியரி னும் போதனா முறையில் கைவந்த வேறொரு ஆசிரியர், எனக்கு இன்று நல்ல படிப்பினைகள் தந்துள்ளார். அவர் பெயர் அனுபவம்’ என்பதே. ஆனால் இவ்வனுபவம் பெற்ற இக்காலத்தில் என் வாய்ப்புக்கள் அன்றைவிடக் குறைவு. கல்விப் பயிற்சி என்பது என்ன என்பதை நான் இப்போதுதான் உணருகிறேன். அனுபவம் பெற்று, வழி தெரிந்தவர்கட்கு அதனைச் செயற்படுத்தும் வாய்ப்புக் குறைவா யிருப்பதால், வழி தெரியாது வாய்ப்பு நிறைய உடைய இளைஞர் கட்கு அவர்கள் அதை வழங்கிச் செயற்படுத்த முனைகின்றனர். இதையே நாம் கல்விப்பயிற்சி என்கிறோம். எனது இன்றைய அனுபவ அறிவு அன்றிருந்தால் நான் என் முயற்சி மூலம் உலகுக்குத் தந்திருக்கக் கூடும் நிறை பயனை. இன்று உன் போன்றவர் அடையச் செய்ய முடியுமானால் அதன்மூலமும் நிறைவேற்றலாமல்லவா? ஆனால் இதனை நீ செய்து முடிக்க, உன் நிலைமையிலுள்ள வாய்ப்பின் அருமையை நீ நன்கு உணர்தல் வேண்டும். உனக்கு இன்றிருக்கும் வாய்ப்பு, நீ எங்கள் நிலையை அடையும்போது குறைந்துவிடும். வாய்ப்பு நிறைய உள்ள இந் நேரமே விலை மதிப்பேறிய நேரம். இதனை வீண் போக்காது பயன்படுத்துவதிலேயே உன் கனவின் வெற்றியும், எங்கள் கனவின் வெற்றியும் அடங்கியுள்ளது. உலகில் பெருவெற்றி கண்டவர்கள் கூட உங்கள் நேரத்தை மீட்டும் பெறத் தங்கள் வாழ்வைப் பிணையம் வைக்கத் தயங்க மாட்டார்கள். எனவே காலத்தின் அருமையறிந்து, இச்சமயத்தைப் பிறர் அனுபவ அறிவின் படிப்பினைகளை அறிவதிலும், அறிந்து திட்டமமைப்பதிலும் செலவிடுவதே இன்று நீ செய்ய வேண்டும். இன்றியமையாச் செயலாகும். வேறு எந்த வாழ்க்கைப் பருவத்திலும், நீ நேரத்தைச் சிறிது புறக்கணிக்கலாம். இன்று நீ அதன் ஒவ்வொரு நொடியையும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். காலம் பொன்னினும் பொலிவுடையது, செல்வத்திலும் செம்மையுடையது, சோம்பியிருப்பவர்களின் செல்வத்தையும் வாழ்வையும் சூறையாடுவது காலம். இருந்தவன் எழுந்திருக்குமுன் நடந்தவன் காதவழி’ என்பதுபோல அது சுறுசுறுப்பாளனை நெடுந்தொலை முன்னேற்றவல்லது. மருந்தால் ஆறாதகாயங்களை ஆற்றுவிப்பது காலம். மறக்க முடியாத துன்பங்களை மறக்க வைப்பதும் காலமே. பயனில்லா வாழ்க்கையை மறதி எனும் பாலைவனத்தில் புதைப்பதும், பயனுடைய வாழ்வினைப் புகழெனும் பூஞ்சோலையில் ஒரு வாடா மலராக்கி, மணம் பெறச் செய்வதும் அதே காலம்தான். உன் வாழ்வில் நீ எதனுடனும் விளையாடலாம்; காலத்துடன் மட்டும் விளையாடாதே. உலகில், நாட்டு வாழ்வில், சமூகத்தில் புகழ்தரும் பெரும் பதவிகள் யாவற்றினுக்கும் செல்லும் பாதைகள் அனைத்தும் இப்போது உன் காலடியிலிருந்தே புறப்பட்டுச் செல்கின்றன. பாதை தேர்ந்தெடுக்கும் நேரம் இது. உன் முழுக்கவனமும் அத்தேர்வில் செலுத்தப்பட வேண்டும். பாதை நல்ல பாதை என்பதற்காகவோ, அது சென்றடையும் இலக்கு உயர் இலக்கு என்பதற்காகவோ நீ எதனையும் தேர்ந்தெடுக்கக் கூடாது. அத்துறையில் வேறு யாரையும் விட நான் வெற்றிபெறக் கூடியவன், அது என் கனவு’ என்ற காரணத்துக்காகவே நீ அதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மக்கள் உன்னை வருங்காலத்தில் மதிப்பிடுவது உன் பாதையின் அல்லது இலக்கின் உயர்வு தாழ்வு குறித்தன்று; அதில் நீ அடையும் வெற்றி தோல்வி, அதன்மூலம் உலகுக்கு நீ தரும் நிறைவு குறைவு ஆகியவை குறித்தே என்பதை நினைவில் கொள். வாழ்க்கையின் வெற்றி குறிக்கோளுடன் வாழ்வதையும், குறிப்பிட்ட நோக்கத்துடன் வாழ்வதையும், அக்குறிக்கோள் அடிப்படையாகத் திட்டமிடுவதையும் பொறுத்தது. குறிக்கோளற்றவன் காற்றடிக்கும் திசையிலெல்லாம் திரிவான். இன்பக் கவர்ச்சியுள்ள இடமெல்லாம். எளிதாக முயற்சி செய்யக்கூடிய முயற்சிகளிலெல்லாம் மாறிமாறி ஈடுபட்டுத் தன் ஊக்கத்தைச் சிதறடிப்பான். குறிக்கோளும் திட்டமும் உடையவன் ஒருமுகப்பட்டுத் தன் ஆற்றல்களனைத்தையும் தான் எடுத்துக் கொண்ட பணியில் செலுத்துவான்’ செயற்கரிய செய்யும் திறம் இதனாலேயே பெறப்படுகிறது. கடுமைகளையும் தடங்கல்களையும் இத் தகையவன் கண்டு தயக்கமடையான், அதற்கான உறுதியையும் இக்குறிக்கோள் நோக்கும், ஒருமுக முயற்சியுமே அவனுக்குத் தருகிறது, ஒரு குறிக்கோளைத் தேர்ந்தெடுத்து முயல்பவனுக்கு, அவ்வழியில் செல்வத்தைத் தடுக்கும் தடங்கலெதுவும் கிடையாது, செய்து முடிக்க முடியாத செயல் என எதுவும் இருக்க முடியாது. நீராவி இயந்திரம், தந்தி, வானொலி, வானூர்தி இவற்றுள் யாவுமே பழங்கால உலகம் கைகூடாதவை என எண்ணியவைதான். ஆனால் இவை யாவும் இன்று கண்கூடாகக் கைகூடியவையே. அவை கைகூடுபவை எனக் கண்டவர்கள் கனவு கண்டவர்களே, அவற்றை வெறுங் கனவுகள் என ஏளனம் செய்தவர் உண்டு. அவர்களைக் கானல் நீர்வேட்டையாடுபவர் என நகையாடியவர் உண்டு. ஆனால் அவர்கள் குறிக்கோள், மன உறுதி, தன்மறுப்பு, உழைப்பு ஆகியவற்றாலேயே இவை நனவுலகப் பொதுநலச் செய்திகளாகியுள்ளன. உலகின் சிறந்த எழுத்தாளருள் ஒருவரான ஸர் வால்ட்டர் ஸ்காட்கூட கரிவளி (ஊடியபடயள) மூலம் நகர்களுக்கு விளக்கி எண்ணுதல் பித்துக் கொள்ளித்தனம் என்று எண்ணினாராம்! ஆனால் உலகில் மிகப் பொதுப்படையான மனிதன்கூட இன்று அவ்வறிஞர் கூற்றைத் தான் ஏளனம் செய்வான்! அறிஞர் நண்பர் ஆகிய எத்தனை பேர்களின் ஏளனம், வெறுப்பு, அன்பு கலந்த கண்டனம் ஆகியவற்றை எதிர்த்து மக்கள் துன்பம் நீக்கும் பணியில் லிஸ்டர் ஈடுபட்டுச் சலியா உழைப்பால் வெற்றி கண்டார்? இத்தகைய பேறு உனக்குக் கிட்டினாலும் சரி, கிட்டாவிடினும் சரி! கிட்டக்கூடு மாதலால், உன் குறிக்கோளில் நீ உறுதியாய் நிற்கக் கடவாய்; தடங்கல், கடுமை வெற்றி தோல்வி, புகழ் இகழ், ஆதரவு வெறுப்பு எவையும் உன் முயற்சியில் உன் நம்பிக்கை உறுதியைக் குலைக்காதிருக்குமாக. உன் கல்விப் பயிற்சியும், அதற்கு உன்னைத் தகுதிப் படுத்திய உன் வீட்டுப் பயிற்சியும் உனக்கு ஒப்பற்ற ஒரு மூலதனம் என்பதை நீ மறக்கக் கூடாது. ஆனால் மூலதனம் உடையவர்கள் எல்லாரும் தொழில் முதலாளிகளாய் விட முடியாது. தொழில் முதலாளிகளின் வெற்றியும் முற்றிலும் மூலதனத்தின் அளவில் நிற்பதல்ல. இம் மூலதனத்தை நீ எவ்வாறு பயன்படுத்துகிறாய் என்பதைப் பொறுத்தே அது நிறைவுபெறும். முதலமைச்ச ராகவும் அமைச்சராகவும் கவிஞராகவும் வருவோர் பலருக்கு உன் கல்விப் பயிற்சியோ, உன் வீட்டுப் பயிற்சியோ இல்லாமலிருந்து வந்துள்ளது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். இம் மூலதனங்களில்லாமலே, அவர்கள் தொழிலாற்றி வெற்றி பெற்றுக் காட்டியுள்ளனர். அவர்களுக்கிராத மூலதனத்தகுதி உனக்கு இருக்கிறது. அவர்கள் திறமும் உனக்கு இருந்துவிட்டால், உன் வெற்றி அவர்களின் வெற்றியையும் கடந்து செல்லக்கூடும். அது பொன்மலர் மணமும் பெற்றது போலாய்விடும். இலண்டன் நகர்த் தெருக்களில் நடந்து சென்று தம் தாயாருக்குப் பழைய மாற்றுடை வாங்கப்பாடுபட்ட ஒருவர், இங்கிலாந்தின் ஆடவர் பெண்டிர் யாவருக்கும் உடைகளைப் பெருக்கும் பணியை நன்கு செய்த முதலமைச்சராய் இருந்து வந்துள்ளார். வீட்டில் அடுப்பெரிக்கத் தெருவில் சுள்ளி பொறுக்கித் திரிந்த ஓர் ஏழைச் சிறுவர், பின்னாளில் இங்கிலாந்தில் செல்வர் ஏழை ஆகிய அனைவரின் பொருளியல் வாழ்வையும் ஒழுங்குபடுத்தும் பொருளமைச்சராகச் செயலாற்றி யுள்ளார். கல்வி நாடி அரும்பாடு பட்டுக் கற்ற பலர் கல்வித் திட்டமமைத்துத் தரும் கல்வியமைச்சராயிருந்துள்ளனர். வீட்டுப் பயிற்சியாலும் ஏட்டுப் பயிற்சியாலும் அவர்களினும் மேம்பட்ட நிலையிலுள்ள உன்னிடமிருந்து உன் நாடு என்ன எதிர் பார்க்காது? உன் நாடு ஷேக்ஸ்பியரையும், மில்ட்டனையும், வேர்ட்ஸ் வொர்த்தையும், ஷெல்லியையும், கீட்ஸையும் ஈன்ற நாடு. ஆல்ஃபிரடும் எலிஜபெத்தும் விக்டோரியாவும் ஆண்ட நாடு, நியூட்டனும் வாட்ஸும், ஹாப்ஸும் லாக்கும் ஆராய்ச்சியால் உலகின் கண்களைத் திறக்க உதவிய நாடு. இத்தகைய நாட்டின் முழு நிறை பயிற்சிபெற்ற உன்னிடமிருந்து உலகு என்ன எதிர்பார்க்காது? உன் நாடு இன்று பெற்றுப் பெருகி உலகின் பல நாடுகளைத் தன் பிள்ளைகளாகக் கொண்டது. பல பிள்ளைகள் தந்தையுடன் போட்டி வாழ்வு வாழத் தொடங்கி விட்டனர். அப்போட்டியாலும் அதன் புகழ் பெருகிற்று என்பதனை உணர்வாய். உன் நாடு உலகின் நான்கிலொரு பங்கு மக்கள் மீது ஆட்சி செலுத்துகிறது, ஆனால் அவ்வாட்சி வெறும் அரசாட்சியன்று. அது அறிவாட்சியாய், கலையாட்சியாய்த் திகழ்கின்றது. உன் நாட்டின் விடுதலை யார்வம், மக்கள் பணியார்வம் அவற்றிலும் வேரூன்றிக் கிளைத்துத் தளிர்த்துள்ளன. பிரிட்டனின் பிள்ளைகளாகக் கருதத்தக்க நாடுகளுடனும், பிரிட்டனைப் போன்ற நிலையினையுடைய அதன் உடன்பிறந்த நாடுகளான பிற வெள்ளையர் நாடுகளுடனும், பிரிட்டனின் சீடப்பிள்ளைகளான இந்நாடுகள் போட்டியிடத் தயங்கவில்லை ஆனால் பிரிட்டனின் அறிவாட்சியும் நாகரிக ஆட்சியும் இவ்வெல்லையையும் கடந்து உலகில் ஒளி வீசுகிறது. வெள்ளிப் பனிக்கடலில் பதித்த மரகத மணி போன்று விளங்கும் உன் நாட்டின் நேர்புகழையும் விஞ்சியுள்ளது அதன் தொலைபுகழ். அதன் பயனாக இன்று இந்தப் பிரிட்டனைக் கடலகத்துள் எந்தச் சக்தியாவது அமிழ்த்திவிட்டாலும் கூட, உலகில் அதன் புகழ் பின்னும் குறைவுறாது. இத்தகைய நாட்டின் புகழைப் பெருக்குவது மட்டுமன்று, அதனைப் புகுத்துவது, காப்பதுகூடப் பெரும் பொறுப்பேயாகும். நம் இறந்தகாலச் சாதனையின் புகழே நம் வருங்காலப் புகழ்மீது பெரிதளவு தன் நிழலை வீசத்தக்கதாகும். ஆகவே உன் நாட்டின் மூலதனமும் உன் பொறுப்பும் அந்த அளவுக்குப் பெரிதேயாகும். ஆகவே வரிந்து கட்டிக் கொண்டு உன் மாபெரும் பணியில் இறங்கு. உன் வாழ்க்கையின் மதிப்பு உன் தன்மதிப்பையே பொறுத்தது. நீ மேற்கொள்ளும் தொழில், உலகுக்கு உயர் தொழிலாகத் தோற்றலாம். சிறு தொழிலாகத் தோற்றலாம். ஆனால் உனக்கு அது என்றும் உயர்வுடையதாகவே இருக்க வேண்டும். உன் தகுதியைப் பிறர் உயர்வாகக் கொள்ளலாம். மட்டமாகக் கொள்ளலாம். ஆனால் நீ உன் தகுதியை உயர் வுடையதாகக் கருதுவதுடன் அவ்வுயர்வைப் பேண வேண்டும். உன் தொழிலை, உன் தகுதியைப் பற்றிப் பிறர் அவமதிப்பாகக் கருதுவது பற்றி நீ கவலைப்பட வேண்டா. ஆனால் அங்ஙனம் அவர் கருத இடமேற்பட்டதென உன் மனச்சான்று என்றும் எண்ணாமல் பார்த்துக்கொள். பிறர் அவமதிப்பை உன் மனச்சான்று பிற்காலத்தில் திருத்திவிடும். உன் மனச்சான்றும் நேர்மையும் அவர்கள் மனச்சான்றையும் நேர்மையுணர்ச்சியையும் தட்டி எழுப்பிவிடும். ஆனால் உன் மனச்சான்றே உன்னைக் குறை கூறினால், உன்னைப் பற்றிப் பிறர் எண்ணம் மாறுவதரிது. உன் முயற்சியில் உனக்கு ஊக்கமும் ஏற்படாது. தவறு என்ற எதனையும் நான் என்றும் செய்ய முடியாது’ என்ற உன் உறுதியே உன் தன்மதிப்பு உறுதி. தவறு என்று தெரியாமல் நீ செய்து பின் வருந்தலாம். திருந்தலாம். ஆனால் தவறு என்று தெரிந்து அதனை நீ செய்வது ஒருபோதும் கூடாது. அதனினும் கோழைமை, மனிதப் பண்புக்கு அடுக்காதது வேறு இருக்க முடியாது. இதுபோலவேஅச்சங் காரணமாக, தன்னலங் காரணமாக, அன்பு, நட்பு, காரியக்காரமதி என்ற தகாத சாக்குப் போக்குகளினால் மறைக்கப்படும் ஒருசார்பு காரணமாக, நீ தவறு எனக் கண்டதைச் செய்யவோ, அது தவறு அன்றென வாதிட்டு உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளவோ கூடாது. அத்தகைய செயல்கள் செய்வதே கயவர் பண்பு என்பதை மனத்திலிருத்திக் கொள். அத்தகு செயல் செய்வோர் எவ்வளவு பெரியவர்கள் ஆனாலும் புகழுடையவர்கள் ஆனாலும் உள்ளத்தில் நீ அவர்களைக் கயவர் என மதித்து, அவர்களை விட்டொதுங்கி வாழ்வாயாக. உன் சொற்கள் வேதமொழி உரைகளுக்குக் கற்பிக்கப் படும் உறுதி உடையவையாயிருக்க வேண்டும். நான் சொல்லிய சொல்தானே, நான் மாற்றிக்கொள்ள முடியாதா என்று நீயே நினைத்தால், பிறர் உன் சொல்லை நம்பி எப்படிச் செயலாற்ற முடியும்! உன் சொல்லை நீ மதிப்பதுபோல், உன்போன்ற மனிதர் சொல்லையும் நீ மதிப்பவன் என்று தெரியும் எவனும் உன்னிடம் பொறுப்பற்ற சொல் கூற மாட்டான். கூறினாலும் அச் சொல்லின் மதிப்பை அவன் கெடுத்துக் கொள்பவன் என்று தெரிந்தகணமே. மனிதப் பண்புடைய மனிதர் பட்டியலிலிருந்து நீ அவனை விலக்கிவிடுதல் வேண்டும். அத்தகையோன் எவ்வளவு பெரியவ னானாலும் உன் நண்பனாக, உன் தோழனாக, உன் பணியிலும் உரிமையிலும் சரிசமப் பங்காளனாகத் தகுதியற்றவன் என்று நீ காட்டிவிடல் வேண்டும். இத்துணிவு உனக்கு இருந்தால், நீ நாளடைவில் உலகையே உயர்த்திவிடக் கூடும் என்பதை மனத்திற் கொள்வாயாக. நல்லார் வாழும் உலகு. நல்லுலகாய் இருந்து தீரும் என்பது இத்தகைய திட்பமுடைய நல்லாரை மட்டும் குறித்த உரை ஆகும். தன்மதிப்புடைய நீ, உன்னைத் தகாதவனென்றோ, இழிவுடையவன் என்றோ கருதுபவனை உன் அறிஞருலகம், உன் அனுபவ உலகம் ஆகிய இரண்டினின்றும் விலக்கியாக வேண்டும். அதுபோலவே உன்னால் மனிதப்பண்புடைய மனிதனாகக் கொள்ளும் எவர் தன்மதிப்பையும் நீ ஊறுசெய்யக் கூடாது. உன்னை அவமதிப்பவரை ஒதுக்கி விடுவது போல் அவரை ஊறு செய்பவரையும் நீ ஒதுக்கிவிடுதல் வேண்டும். நல்லார் பலர் இவ் வுறுதியில் குன்றுவதனாலேயே உலகில் இன்று இன வேறுபாடு வகுப்பு வேறுபாடு, சமய வேறுபாடு, நாட்டு வேறுபாடு ஆகிய ஒரு சார்பு அநீதிகளும் கொடுமைகளும் நீடிக்கின்றன. பிறமனிதர் பலர் பெறாத பள்ளிப்பயிற்சியும் கல்லூரிப் பயிற்சியும் பெற்ற உன்போன்ற இளைஞரின் பெரும் பொறுப்பு உலகில் தகுதி, திறம் ஆகிய இரண்டையன்றி வேறில்லா. இதுவே பல தோல்விகளிடையிலும் இறுதியாக நிறைவெற்றி தரவல்லது. இந்நெறி சென்றவர் தயங்கியதில்லை. தயங்க நேர்ந்தது மில்லை. ஏனெனில் அதன் ஒவ்வொரு தோல்வியும் ஒரு வெற்றியேயாகும். உன் நடுநிலையின் மூலம் உலகில் ஒற்றுமையும் சமத்துவமும் அவ்வடிப்படையிலேயே ஒரே குறிக்கோள் அடிப்படையில் அன்புப் போட்டியும் நிகழுமாக. உன் வெற்றியும் உன் நாட்டு வெற்றியும் இவ்வன்புப் போட்டிக்கே வழிகாட்டுமாக. உறுப்புக்கு ஊறின்றி ஆதாயமும் தரும் உடலொற்றுமை; எதிரிக்கு நட்டமின்றி ஆதாயம் தரும் கூட்டாதாய முறை ஆகியவற்றைக் கண்டு உன் அன்பு வெற்றியால் உலகில் அன்பாட்சிக்கு வழி வகுப்பாயாக. வாழ்க உன் வருங்கால நாட்டுப்பணி! பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் (24.7.1907-26-5-1989) `அறிவுச் சுரங்கம் அப்பாத்துரையார்’ என்று பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரை `முகம் மாமணி குறிப்பிடுவது எவ்வளவு பொருத்தமானது என்பது அவருடன் பழகியவர் களுக்கு, அவருடைய பேச்சுக்களைக் கேட்டவர்களுக்கு, அவருடைய புத்தகங்களைப் படித்தவர்களுக்கு நன்றாகத் தெறியும். அப்பாத்துரையார் பேசும்பொழுது, உலக வரலாறுகள் அணிவகுத்து நடைபோடும் அரிய செய்திகள், ஆய்வுச் சிந்தனைகள், ஒப்பீடுகள் நிரம்பிய அவருடைய பேச்சைக் கேட்டவர்கள் மூளை கனத்துவிடும். ஒரு சிறு மூளைக்குள் இவ்வளவு செய்திகளை எப்படி அடைத்து வைத்திருக்கிறார் என்று வியக்க வைக்கும். அவரைத் தமிழகம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்னும் ஏக்கம் அறிஞர் களிடையே இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி என்னும் சிற்றூரில் திருவாளர் காசிநாதப்பிள்ளை - திருவாட்டி முத்து இலக்குமி அம்மையாருக்கு மூத்த மகனாக 1907 ஆம் ஆண்டு, ஆனி மாதம் ஏழாம் நாள் (சூன் 24) பிறந்தவர் அப்பாத்துரையார். குடும்ப மரபையொட்டிப் பாட்டனார் பெயரான நல்லசிவன் என்னும் பெயரே இவருக்குச் சூட்டப்பட்டது. ஆயினும் பெரியோர் களால் செல்லப் பெயராக அழைக்கப்பட்ட `அப்பாத்துரை’ என்னும் பெயரே இவருக்கு இயற்பெயர் போல் அமைந்து விட்டது. இவருடன் பிறந்த இளையவர்கள் செல்லம்மாள், சுப்பிரமணி, குட்டியம்மாள், கணபதி ஆகியோர். இரு தம்பிகள். இரு தங்கைகள், நல்லசிவன், காசிநாதன் என மாறி மாறி வரும் குடும்ப மரபில் அப்பாத்துரையாரின் பாட்டனாரின் பாட்டனார், அவர் பாட்டனாரின் பாட்டனார் ஆகிய ஏழாம் தலைமுறையினரான நல்லசிவன் என்பவர், கல்வி கற்ற, வேலையற்ற இளைஞராய்ச் சாத்தான்குளம் என்னும் ஊரிலிருந்து ஆரல்வாய்மொழி என்னும் ஊருக்கு வந்து, அக்கால (மதுரை நாயக்கர் காலத்தில்) அரசியல் பெரும் பணியில் இருந்த ஊரின் பெருஞ்செல்வரான தம்பிரான் தோழப்பிள்ளையிடம் கணக்காயராக அமர்ந்தார். ஆண் மரபு இல்லாத தம்பிரானுக்கு நல்லசிவன் மருமகன் ஆனார். சதுப்பு நிலமாயிருந்த புறம்போக்குப் பகுதி ஒன்றைத் திருத்திப் புதிய உழவு முறையில் பெருஞ்செல்வம் ஈட்டிய அவரே அப்பாத்துரையார் குடும்ப மரபின் முதல்வர். அவருக்கு நாற்பது மொழிகள் தெரியுமாம். குடும்ப மரபினர் வழியில் தன் பிள்ளையும் எல்லா மொழிகளும் பயில வேண்டும் என்னும் வேட்கையில் காசிநாதப் பிள்ளை அப்பாத்துரையாரிடம், `குறைந்தது ஏழு மொழிகளில் நீ எம்.ஏ. பட்டம் பெற வேண்டும். ஆங்கிலம் முதலில் தொடங்கி, பதினைந்தாம் வயதில் எம்.ஏ., முற்றுப் பெற வேண்டும். இருபத்து மூன்று வயதிற்குள் இயலும் மட்டும் மற்றவை படிக்க வேண்டும்’ என்று கூறினார். அவருடைய எண்ணத்தைத் தம் வாழ்நாளில் நிறைவேற்றி முடித்தவர் அப்பாத்துரையார். பழைய - புதிய மொழிகள் என ஆப்பிரிக்க மொழிகள் உட்பட நாற்பது மொழிகள் (ஏழாம் தலைமுறை பாட்டனார் போல்) அப்பாத்துரையாருக்குத் தெரியும். எழுத, பேச, படிக்க என அய்ந்து மொழிகள் தெரியும். அவை: தமிழ், ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம், மலையாளம் ஆகியன. இனி அப்பாத்துரை யாரின் வாய்மொழி யாகவே அவரது வரலாற்றுச் சுருக்கத்தைக் கேட்போம். `ஆரல்வாய்மொழி ஊரில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்து வந்தபோது, புதிதாக அரசினர் பள்ளி தொடங்கப் பட்டது. அப்போது, கன்னியாகுமரி மாவட்டம் திருவாங்கூர் தனி அரசில் சேர்ந்திருந்த நிலையில் அப்புதிய பள்ளியில் தமிழுக்கு இடம் இல்லாதிருந்தது. தமிழ்க்கல்வி நாடி, குலசேகரப்பட்டினத்திலிருந்த என் பெரியன்னை வீட்டில் தங்கிப் படித்தேன். பின், குடும்பத்தினர் அனைவரும் எனக்காக நாகர்கோவிலில் குடியேறி, வாடகை வீட்டில் இருந்து வந்தனர். இந்நிலையில் என் பெற்றோர் என்னை நான்காம் வகுப்பிலிருந்து கல்லூரி முதலிரண்டு ஆண்டு படிப்பு வரை பயிற்றுவித்தனர். 1927இல் எனது பி.ஏ., ஆனர்ஸ் (ஆங்கில இலக்கியம்) படிப்புக்காகத் திருவனந்தபுரம் சென்றேன். நண்பர்கள் வீடுகளில் தங்கி, 1930இல் அத்தேர்வு முடித்து பணி நாடி சென்னைக்கு வந்தேன். சென்னையில் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்தேன். கூட்டுறவுத் துறையில் ஆறு மாதங்களும், `திராவிடன்’, ஜஸ்டிஸ்’ பத்திரிகைகளில் ஒவ்வொன்றிலும் ஆறு மாதங்களும், பச்சையப்பன் கல்லூரியில் இரண்டு மாதங்களும் பணியாற்றினேன். அதன்பின், `பாரத தேவி’, `சினிமா உலகம்’, `லோகோபகாரி’, `தாருல் இஸ்லாம்’ ஆகிய பத்திரிகைகளின் விற்பனைக்களம் அமைத்ததோடு, அவற்றில் பாடல், கட்டுரைகள் எழுதி வந்தேன். இச்சமயம், புகழ்வாய்ந்த சேரன்மாதேவி `காந்தி ஆசிரமம்’ என்ற குருகுலம் அரசியல் புயல்களால் அலைப்புற்று, கடைசியில் காரைக்குடி முத்துப் பட்டிணத்தில் சா.சு. சுப்பிரமணியம் செட்டியார் குருகுலம் என்ற பெயரால் நடைபெற்று வந்தது. இதில் நான் தோழர் ஜீவானந்தத்திற்கு அடுத்த தலைமை ஆசிரியராக ஓராண்டும், `குமரன்’ பத்திரிகைகளில் சில மாதங்களும் பணியாற்றினேன். நாகர்கோவில் திரும்பி மீண்டும் சில மாதங்கள் கழித்த பின், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நாசரேத், சாத்தான்குளம் ஆகிய ஊர்களில் காந்தியடிகளின் ஆக்கத் திட்டங்களில் ஒன்றாகிய இந்தி மொழி பரப்புதலை நன்கு நடத்தி வந்தேன். அதன் முத்தாய்ப்பாக ராஜாஜி முதல் அமைச்சரவையின் ஆட்சியின் போது, திருநெல்வேலி, எம்.டி.டி. இந்துக் கல்லூரி பள்ளியில் 1937 முதல் 1939 வரை இந்தி ஆசிரியராகப் பணியாற்றினேன். இங்கிருக்கும்போதுதான் இந்தி விசாரத் தேர்வையும் முடித்துக் கொண்டேன். நாச்சியாரை நான் திருமணம் செய்து, இரண்டாண்டு வாழ்க்கைக்குப் பின் அவளையும், என் தந்தையும் ஒருங்கே இழந்தேன். அரசியல் சூழல்களால் இந்தி கட்டாயக் கல்வி நிறுத்தப்பட்டதனாலும், என் சொந்த வாழ்க்கையில் நேரில் துயரங்களாலும் நான் திருநெல்வேலியை விட்டு வெளியேறி னேன். இதே ஆண்டில் ஆங்கில எம்.ஏ. பட்டம் பெற்றதுடன், தமிழ் எம்.ஏ.வையும் தனிமுறையில் திருவனந்தபுரத்தில் எழுதித் தேறினேன். அத்துடன் ஆசிரியப் பயிற்சிக்காக ஓராண்டு சென்னை சைதாப்பேட்டை ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் படித்தேன். இதே ஆண்டில்தான் காந்தியடிகளை, இந்திப் பிரச்சார சபையில் கண்டு பழகவும், மறைமலையடிகளுடன் தொடர்பு கொள்ளவும், சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகத்தில் என் தமிழ் நூலாசிரியப் பணி தொடங்கவும் வழி ஏற்பட்டது. 1941இல் பழைய காந்தி ஆசிரமத்தின் புது விரிவாக செட்டிநாடு அமராவதிப் புதூரில் அமைக்கப்பட்டிருந்த சா.சு. சுப்பிரமணியம் செட்டியார் குருகுலப் பள்ளியில் ஆறு மாதங்களுக்கு மேல் தலைமை யாசிரியராகப் பணியாற்றினேன். கவிஞர் கண்ணதாசன் இப்பள்ளியில் என் மாணவராய்ப் பயிலும்போது தான் தன் இலக்கிய வாழ்வைத் தொடங்கினேன். அப்பாத்துரையாரின் முதல் மனைவி நாச்சியார் அம்மையார் மறைவுக்குப் பின், செட்டிநாடு அமராவதிப்புதூரில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த போது அலர்மேலு அம்மையாரின் தொடர்பு கிடைத்தது. காதலாக மாறியது. திருச்சி திராவிடர் கழகத் தலைவராக இருந்த வழக்கறிஞர் தொ.பொ. வேதாசலம் தலைமையில், திருக்குறளார் வீ. முனுசாமி முன்னிலையில் அப்பாத்துரையாரின் திருமணம் திருச்சியில் நடைபெற்றது. இதனையடுத்து, செட்டிநாடு கோனாப்பட்டில் சரசுவதி உயர்நிலைப் பள்ளியில் இரண்டாண்டுக்காலம் பணியாற்றினார். இந்த ஊருக்கு அறிஞர் அண்ணாவும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் வந்திருந்தபோது அவர்களுடன் இவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. பின்னர், பாவேந்தர் உதவியோடு 1943 இல் துணைவியார் அலர்மேலுவுடன் சென்னைக்குக் குடிவந்தார். பாவேந்தரின் உதவியால் ஆங்கில நாளேடான `லிபரேட்டரில்’ உதவியாசிரியராகப் பத்து மாதங்கள் பணியாற்றினார். பின்னர், `விடுதலை’ நாளேட்டில் ஆறு மாதங்களும், முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளியல் இரண்டு ஆண்டுகளும் பணியாற்றினார். இக்காலங்களில் தான் பெரியாரின் தொடர்பும், திராவிடர் கழகக் தொடர்பும் இவருக்கும் அலர்மேலு அம்மையாருக்கும் ஏற்பட்டது. பின்னர், 1947 முதல் 1949 முடிய நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றினார். இச்சமயம் சைதாப்பேட்டையில் ஓராண்டுக்காலம் தங்கியிருந்த போது, `இந்தியாவில் மொழிச் சிக்கல்’ என்னும் ஆங்கில நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலை அடிகள் நாற்பது பக்கத்தில் முன்னுரை வழங்கி யுள்ளார் என்பது தனிச்சிறப்பு. இந்த நூலே, அப்பாத்துரையாரின் அரசுப் பணிக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டது. 1949 முதல் 1959 வரை பதினோரு ஆண்டுகள் வேலையில்லாமல் இருந்தார். ஆயினும், இந்த ஓய்வே நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுத வாய்ப்பாக இருந்தது. வருவாய்க்கும் உதவியது. ஆங்கில மொழிக்கு ஜான்சன் தந்த ஆங்கில அகராதியைப் போல் தமிழுக்கு ஒரு அகராதி எழுத வேண்டும் என்ற விரைவு அப்பாத்துரையாரின் நெஞ்சில் ஊடாடியதால், முதலில் ஒரு சிறு அகராதியைத் தொகுத்தார். பிறகு அது விரிவு செய்யப்பட்டது. தற்கால வளர்ச்சிக்கேற்ப பெரியதொரு அகராதியைத் தொகுக்க வேண்டுமென்று எண்ணிச் சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகக் காவலர் சுப்பையாபிள்ளை சென்னைப் பல்கலைக்கழகத்தின் அனுமதியையும், பண உதவியையும் நாடியபோது, பல்கலைக்கழகமே அம்முயற்சியில் ஈடுபடப் போவதாகக் கூறியது. அப்பணிக்கு அப்பாத்துரையாரை சென்னைப் பல்கலைக் கழகம் பயன்படுத்திக் கொண்டது. 1959லிருந்து 1965 வரை சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலத் தமிழ் அகராதித் துறையில் டாக்டர் அ. சிதம்பரம் செட்டியாருடன் இணையாசிரியராகப் பணியாற்றி `ஆங்கிலத் தமிழ் அகராதியை’ உருவாக்கினார். 1971 ஆம் ஆண்டு, தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் ஈடுபட்டு அதன் தலைவராகவும் தொண்டாற்றி யுள்ளார். இயக்கத் தொடர்பு அப்பாத்துரையாரின் முன்னோர் `பிரம்மஞான சபை’ என்னும் தேசிய விடுதலை இயக்கத்துடன் தொடர்புடையவர்கள். அப்பாத்துரையாருக்கும் அவ்வியக்கத்தில் ஈடுபாடு இருந்தது. டாக்டர் அன்னிபெசன்ட், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. லாலா லஜபதிராய், லோகமானிய பாலகங்காதர திலகர் ஆகியோரின் தேசிய இயக்கத்தின் தீவிர செயல்பாடுகளில் பற்று வைத்தார். அக்காலம் காந்தியார் இந்தியாவிற்கு வராத காலம். தேசிய விடுதலை இயக்கத்தைப் பரப்பும் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டவர் அப்பாத்துரையார். தெருவில் தேசிய பஜனைக் குழுக்களுடன் பாடிச் சென்று இயக்கம் வளர்த்தவர். தன் சேமிப்புப் பணத்தில் மூடி போட்ட காலணா புட்டிகளை நிறைய வாங்கி, அதற்குள் துண்டுக் காகிதங்களில் தேசிய முழக்கங்களை எழுதிப் போட்டு, அப்புட்டிகளை குளம், அருவிகள், கடற்கரைகள் எங்கும் மிதக்கவிட்டவர். அதன் மூலம் தேசியச் சிந்தனைகள் பரப்பியவர். ஓர் ஆங்கிலப் புத்தகத்தில் வெளியான சிப்பாய்க் கலகம் பற்றிய ஆங்கிலப் பாடலை ஆங்கிலத்திலும், தமிழிலுமாக நிறைய படிகள் எழுதி, ஆசிரியர் சட்டைப் பைகளிலும் மாணவ நண்பர்களின் புத்தகங்களிலும் வைத்து நாட்டு விடுதலை எழுச்சியைப் பரப்பியவர். இத்தகைய தேசியவாதி, திராவிட இயக்கவாதியாக மாறியதற்கு எண்ணற்ற காரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்று, திருவனந்தபுரம் பிரம்மஞான சபையின் சமபந்தி போஜனம். ஆதி திராவிடர் பரிமாற, பார்ப்பனரும் வேளாளரும் உட்பட அனைத்து வகுப்பினரும் கலந்து உண்ண வேண்டுமென்று வேளாளராகிய பி.டி.சுப்பிரமணியப் பிள்ளையும், கல்யாணராம ஐயரும் ஏற்பாடு செய்திருந்தனர். பந்தி வேளையில் எல்லாப் பார்ப்பனரும், வேளாளரும் எழுந்து சென்றுவிட்டனர். அதனால் இவ்விருவருக்கும் பெருத்த அவமானமாயிற்று. அதுமட்டுமன்றி, இவ்விருவரையும் தத்தம் அமைப்புகள் மூலம் சாதி நீக்கம் செய்துவிட்டனர். இந்நிகழ்ச்சி அப்பாத்துரையாரை மிகவும் பாதித்தது. தேசிய இயக்கத்தில் அப்பாத்துரையார் இருந்தபோதும் இளம் வயதிலேயே முற்போக்குச் சிந்தனையாளராக இருந்தவர். தேசியத் தலைவர்களான காந்தியடிகள், திலகர், லாலா லஜபதிராய் போன்றோரின் படங்களை வைத்து பூசை செய்வது அப்பாத்துரையாரின் வழக்கம். இச்செயலை தந்தையாரைத் தவிர மற்ற அனைவரும் கண்டித்தனர். அதற்கு அவர், `பெண்கள் சேலையை ஒளித்து வைத்த காமுகன், யானையை ஏவிப் பெண்ணை ஏமாற்றி வசப்படுத்திய காம வேடன் ஆகியோரை நீங்கள் கடவுளாக வணங்குகிறீர்கள். அவர்களைவிட இந்தத் தலைவர்கள் எவ்வளவோ மேலானவர்கள்’ என்று எதிர்மொழி தொடுத்துள்ளார். மேலும், எட்டாம் வகுப்பில் சேரும்பொழுது, பார்ப்பனத் தலைமையாசிரியர் நடந்து கொண்ட முறை ஆகியவை இவருடைய உள்ளத்தில் ஆழப் பதிந்துவிட்டது. இவையெல்லாம் இவரை திராவிட இயக்கத்தின் பால் பற்றுகொள்ள வைத்துள்ளது. பெரியார் தொடங்கிய திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளராகும்படி, சென்னைக்குப் பாவேந்தரால் அழைத்து வரப்பட்ட அப்பாத்துரையார், `விடுதலை’ இதழில் குத்தூசி குருசாமி அவர்களுடன் துணையாசிரியராகப் பணியாற்றினார். தென் சென்னையில் திராவிட இயக்கத்தை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கிளைக் கழகங்கள் அமைப்பதிலும், துணை மன்றங்கள் அமைப்பதிலும் முழு மூச்சாக ஈடுபட்டு திராவிட இயக்கத்தை வளர்த்தார். சென்னையில் பெரியார் வீடு வாங்கத் தயங்கியபோது, பெரியாரின் தயக்கத்தைப் போக்கி மீர்சாகிப் பேட்டையில் வீடு வாங்கத் துணை நின்றவர் அப்பாத்துரையார். இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின்போது முன்னணிப் பேச்சாளர்களில் ஒருவராக விளங்கியவர். இந்தி ஆசிரியராக இருந்த இவரை இந்தி எதிர்ப்புக் களத்தில் முன் நிறுத்தப்பட்டதற்குக் காரணம். அவரைக் கொண்டே இந்தியின் தன்மையைச் சொல்ல வைப்பதற்கே. பெரியார் நடத்திய முதல் திருக்குறள் மாநாட்டில் இவருடைய பங்களிப்பும் உண்டு. தம் பேச்சாலும், எழுத்தாலும் திராவிட இயக்கத்திற்குத் தொண்டாற்றிய அப்பாத்துரையாரை இயக்க மேடைகள் நிறைவாகப் பயன்படுத்திக் கொண்டன. இலக்கிய மேடைகளும் அலங்கரித்துக் கொண்டன. தமிழ்மொழி, தமிழ் இன முன்னேற்றத்தின் போராளியாகத் திகழ்ந்த அப்பாத்துரையார் தம் இறுதிக் காலங்களில் `தலைநகர்த் தமிழ்ச் சங்கம்’ நடத்திய மொழிப் போராட்டங்களிலும் பங்கேற்றுள்ளார். அப்பாத்துரையார் கவிதை எழுதுவதிலும் ஆற்றல் பெற்றவர். 1935க்கு முன் அவருடைய படைப்புகள் அனைத்தும் கவிதைகளாகவே இருந்தன. இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டக் காலங்களிலும் இவருடைய கவிதைகள் `திராவிட நாடு’ இதழில் வெளியாயின. இவருடைய பெயரில் வந்த முதல் புத்தகம், சிறை சீர்திருத்தம் செய்த திருமதி ஃபிரை ஆகியோரின் வரலாறுகளைத் தமிழாக்கம் செய்ததுதான். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக சுமார் 170க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் `தென்னாட்டுப் போர்க்களங்கள்’, `கொங்குத் தமிழக வரலாறு’, `ஆங்கிலத் தமிழ்முத்து அகராததி’, `திருக்குறள் மணிவிளக்கஉரை’ `காரல் மார்க்சின் தாஸ் காபிடல் (மூலதனம்)’ மொழிப் பெயர்ப்பு ஆகியவை அறிஞர்கள் மனத்தைவிட்டு அகலா நூல்கள். திருக்குறள் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களுக்கு 2132 பக்கங்களில் உரை எழுதியுள்ளார். கால்டுவெல்லின் ஒப்பிலக்கணத்தைத் தமிழில் மொழி பெயர்த்துத் தந்தவர். அப்பாத்துரையார் 82 ஆண்டுகள் வாழ்ந்து பல அறிஞர்களோடு பழகி கணக்கற்ற அறிவுச் செல்வங்களை வழங்கி, 26.9.89 இல் புகழுடம்பு எய்தினார். பள்ளி ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி, எழுத்துத் துறையில் கவிஞராக ஆய்வறிஞராக, எழுத்தாளராக, மொழி பெயர்ப்பாளராக ஒப்பிலக்கியவாதியாக பத்திரிகையாளராக விழுதுகள் பரப்பி ஆலமரமாகத் திகழ்கிறார். இந்த ஆலமரத்தின் விழுதுகளைப் பிடித்து விளையாடியவர்களெல்லாம் பெரிய மனிதர்களாக உயர்ந்துள்ளார்கள். ஒரு பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த அப்பாத்துரையார் தமிழர்கள் நெஞ்சில் என்றும் நிலைப்பார். -முனைவர் இளமாறன் யாதும் ஊரே மாத இதழ், வைகாசி 2037, சூன் 2006, பக். 18-22 ஊசியின் காதுக்குள் தாம்புக் கயிறு...? வினா: இக்கால படைப்பாளிகளுக்கு நீங்கள் கூறும் அறிவுரை? விடை: நிறைய படிக்க வேண்டும். `இலக்கியம்’ என்றால் என்ன? ஓர் இலக்கை உடையது. என்ன இலக்கு? மனிதனுக்குப் பொழுது போக ஏதாவது படிக்க வேண்டும். அதற்காக ஏற்பட்டதுதான் இலக்கியம். பிறகு தான் `இலக்கியம்’ வெறும் பொழுதுபோக்காக இருக்கக் கூடாது என்று ஆயிற்று. பன்னிரண்டாம் நூற்றாண்டில்தான் உலகமெங்கும் இலக்கிய உணர்வு ஏற்பட்டு, இலக்கியங்கள் தோன்றின. இலக்கியத்திற்கு முன்பே சயின்ஸ் - அறிவியல் தோன்றியது. அறிவியல்தான் மனிதனைப் படிப்படியாக உயர்த்தியது. பிறகுதான் இலக்கியம் தோன்றியது. இந்த இலக்கியங்கள் தோன்றிய பிறகுதான் அறிவியல் துறை குன்றிவிட்டது. இலக்கியத்தைவிட அறிவியல்தான் மனிதனுக்கு வேண்டும். `நீதி நூல்கள்’ இலக்கியங்கள் அல்ல என்று சொல்கிறார்கள். நான் சொல்வேன், திருக்குறள் ஓர் ஒப்பற்ற இலக்கியம்; அருமையான நீதி நூல்; இணையற்ற, தத்துவ நூல்! அதற்கு ஈடான நூல் உலகத்தில் கிடையாது! திருக்குறளுக்கு அடுத்து; திருக்குர்ரானைக் கூறலாம். அது ஒரு நீதி நூல்! அதில் கற்பனை குறைவு. முகம்மது நபியின் நேரடி அனுபவங்களே - உண்மைகளே, இவர் சொல்லச் சொல்ல எழுதப்பட்ட நீதி நூல்! பைபிளை அப்படிச் சொல்ல முடியாது. அதை யேசுநாதர் மட்டும் எழுதவில்லை! பலர் எழுதியிருக் கிறார்கள். பல கற்பனைகள் உள்ளன. ஆனால், யேசுவின் வாசகங்கள் உயர்ந்த நீதிகள்! `ஊசியின் காதுக்குள் ஒட்டகம் நுழைய முடியாது!’ என்று ஒரு பொன்மொழி இருப்பது தவறு! யேசு அப்படிச் சொல்லியிருக்க முடியாது! அவர் பேசிய மொழியில் `ஒட்டகம்’ என்பதையும், `தாம்புக்கயிறு’ என்பதையும் குறிக்க ஒரே சொல் தான் உண்டு. ஆகவே, `ஊசியின் காதுக்குள் தாம்புக்கயிறு நுழைந்தாலும் நுழையலாம்; பரலோக ராஜ்யத்திற்குள் பணக்காரன் நுழைய முடியாது!’ என்றுதான் அவர் சொல்லி இருக்கவேண்டும்! காதல் திருமணம் செட்டி நாடு அமராவதிப் புதூரில் அப்பாத்துரையார் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருக்கும்போதுதான் அலமேலுவைச் சந்தித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து திருச்சிராப்பள்ளிக்குச் சென்றார்கள். திருச்சி திராவிடர் கழகத் தலைவராக இருந்த வழக்கறிஞர் தொ.பொ. வேதாசலம் அவர்கள் தலைமையில் திருக்குறளார் வீ. முனுசாமி அவர்கள் முன்னிலையில் இவர்கள் திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணம் கலப்புத் திருமணம் மட்டுமன்று, இருவருக்குமே மறுமணமுமாகும்! தமிழுக்காக மயக்கம் ஆங்கிலத் தமிழ் அகராதியைத் தொகுக்கும் பணியில் அப்பாத்துரையார் முழு ஈடுபாட்டோடு பகல் நேரம் மட்டுமல்லாமல் பின்னிரவு வரை உழைத்து மயங்கி விழுந்த நாள்கள் பலவாம். அப்படி மயங்கி விழுந்த போது, மண்டையில் இரத்தக் காயம் ஏற்பட்டு, தலையின் முன் பகுதியில் ஒரு கறுப்பு வடு ஏற்பட்டுள்ளது. சைவ சித்தாந்தத்தில் ஈடுபாடு பத்தாம் வகுப்பில் படிக்கும்போது பிரமு அத்தையாருக்கு என்னை மருமகனாகக்கிக் கொள்ளும் ஆர்வம் இருந்தது. தந்தை விருப்பமின்மையால், இது தடைபட்டது. இச்சமயம் சைவ சித்தாந்தத்தில் வல்லுனரான ஒரு முதலியார் அவர்கள் குடும்பத்திலும் ஊரிலும் கோயிலிலும் சைவ போதகராக இருந்தார். அவரிடம் அத்தையார் என் ஆங்கிலக் கல்வி, தமிழ்க் கல்வி பற்றிப் புகழ்ந்துரைத்தார். முதலியார், “ஒரு தமிழ்ப் பாட்டுப் பாடு” என்றார். நான் அன்று படித்த தமிழ் புத்தகங்களில் மிகப் பெரும்பாலும் வேதாந்தப் புத்தகங்களே. `ஞான வாசிட்டம்’, `கைவல்ய நவநீதம்’, `நிட்டானுபூதி’ முதலிய புத்தகங்களின் பாடல்களை ஒப்புவித்தேன்; விளக்கமும் கூறினேன். முதலியாருக்கு என் தமிழ் அறிவில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும், வேதாந்த அறிவில் கசப்பு ஏற்பட்டது. ஆயினும் அவர் உடல்நலமில்லாதபோது, அவருக்குப் பதிலாகக் கோவிலில் சொற்பொழிவாற்றும் வேலையை எனக்கு அளித்தார். அச்சிட்ட அவர் சொற்பொழிவுகளையே படித்து நான் பேசினேன். பிற்காலத்தில் சைவ சித்தாந்தத்தில் பேரளவில் ஈடுபட இது எனக்கு உதவிற்று. இந்தி ஆசிரியராக இந்தி எதிர்ப்பு `முகம்’ மாமணி: நீங்கள் இந்தி ஆசிரியராக இருந்து கொண்டே இந்தியை எதிர்த்திருக்கிறீர்களே, உங்கள் செயல் மக்களைக் குழப்பியிருக்குமே! விடை: `சிலருக்குக் குழப்பமாக இருந்திருக்கலாம். ஆனால், இந்தி எதிர்ப்பின் முன்னோடிகளான பெரியாரும் - அண்ணாவும் என் செயலைப் புரிந்து கொண்டு, இந்தி எதிர்ப்பு மாநாடுகளில், கூட்டங்களில் எனக்கு முதன்மை கொடுத்தனர். `இந்தி மொழியே தெரியாதவர்கள், இந்தியை எதிர்ப்பதை விட இந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற பன்மொழிகளில் புலமை பெற்ற அப்பாத்துஐரயார் எதிர்ப்பது தான் சரி. ஏனென்றால் அவருக்குத் தான் தெரியும். இந்தியில் ஒன்றும் இல்லை; அரசியல் ஆதிக்கத்துக்காக அதைப் புகுத்துகிறார்கள் - என்று நம்மைவிட அப்பாத்துரையார் சென்னால்தான் மக்களுக்கு உண்மை புரியும்” என்னும் பொருள்பட பெரியாரும் அண்ணாவும் எனக்கு ஆதரவு கொடுத்தனர். (குறிப்பு: அப்பாத்துரையார் 250 பக்கங்களில் ஐனேயை’ள டுயபேரயபந ஞசடிடெநஅ எனும் நூலை மறைமலையடிகளாரின் 40 பக்கங்கள் கொண்ட முன்னுரையோடு 1948இல் வெளியிட்டார். இந் நூல் வெளியிட்டதால் தமிழக அரசின் மொழி பெயர்ப்புத் துறையில் பணியாற்றி வந்த அப்பாத்துரையார் வேலை பறிக்கப்பட்டது. அண்ணா முதல் அமைச்சரானதும் முறையிடப்பட்டது. ஆனால், அப்பாத்துரையாரின் பத்தாண்டுகாலப் பணிக்குச் சேர வேண்டிய பணம் கொடுக்கப்படவில்லை.) - நேர்க்காணல் `முகம்’ மாமணி யாதும் ஊரே மாத இதழ், வைகாசி 2037, சூன் 2006, பக். 30-31 கா. அப்பாத்துரையார் தமிழ்ப்பணி பன்மொழிப் புலமை தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் முதுகலைப் புலமைப் பெற்றவர். தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி போன்ற இந்திய மொழிகளிலும் அரபு, சப்பான், ஹீப்ரு மற்றும் மலேயா முதலிய ஆசிய மொழிகளிலும் பிரஞ்சு, செர்மன், ரஷ்யா, இத்தாலி போன்ற ஐரோப்பிய மொழிகளிலும் சுவாசிலி என்ற ஆப்பிரிக்க மொழியிலும் மூல அறிவு பெற்றவர். இம்மொழிப் புலமை பல்வேறு மொழிகளில் நூல்களை எழுதவும், மொழி பெயர்ப்பு செய்யவும் பெரிதும் துணை செய்தது. திருக்குறள் உரை அப்பாத்துரையார் பெரிதும் மதித்த தலைவர்களுள் ஒருவரான பெரியார், சமய சார்பற்ற முறையில் ஓர் உரையினைத் திருக்குறளுக்கு எழுதுமாறு அவரைக் கேட்டுக் கொண்டார். அவர் தன் மாணவராகிய கவிஞர் கண்ணதாசன் நடத்திய `தென்றல்’ என்னும் இலக்கிய வார ஏட்டில் இருநூறு குறட்பாக்களுக்கு உரை எழுதினார். 1965ஆம் ஆண்டு `முப்பால் ஒளி’ என்னும் பெயரில் திங்கள் இதழ் ஒன்றைத் தொடங்கி அவ்விதழில் திருக்குறளுக்குத் தொடர்ந்து உரை எழுதலானார். 1965 முதல் 1971 வரை `முப்பால் ஒளி’ இதழில் வெளிவந்த திருக்குறள் உரையினை விரிவுபடுத்தி ஒவ்வொன்றும் ஏறத்தாழ ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆறு தொகுதிகளாகத் திருக்குறள் மணி விளக்கவுரையென்னும் பெயரிட்டு வெளியிட்டார். இந்த ஆறு தொகுதிகளிலும் இருபது அதிகாரங்களிலுள்ள இருநூறு திருக்குறட்பாக்களுக்கு விரிவான விளக்கவுரைஅமைந்துள்ளது. எஞ்சிய 1130 குறட்பாக்களுக்கு அவர் எழுதிய உரை இன்னும் அச்சேறாமல் உள்ளது. ஆங்கிலத்திலும் திருக்குறளுக்கு மணி விளக்கவுரை 1980இல் திருக்குறள் அறத்துப்பாலின் முதல் 19 அதிகாரங்கள் வரை ஆங்கிலத்தில் விரிவான உரை வரைந்து அதற்கு அவரது ஆதரவுடன் தட்டச்சு வடிவம் தந்தார். அறத்துப் பாலின் எஞ்சிய 19 அதிகாரங்களுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நிதியுதவியுடன் ஆங்கிலத்தில் விரிவான உரை வரைந்து அதற்கும் தட்டச்சு வடிவம் தந்துள்ளார். இவ்வாறு அறத்துப்பால் முழுமைக்கும் தட்டச்சில் 2132 பக்கங்கள் அளவிற்கு அவரது ஆங்கில உரை எழுதப்பட்டுள்ளது. எனினும் இந்த ஆங்கில உரையும் இன்னும் அச்சேறாமல் உள்ளது. தென்னாடு முழுவதும் ஒரே மொழி, தமிழ்! திராவிட மொழிகள் பற்பலவாயினும் அவற்றுள் பண்பட்டவை ஐந்து. அவை தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் துளு. இவ்வைந்தனுள் இலக்கியம் கண்ட மொழிகள் நான்கு. அவை தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம். பண்பட்ட ஐந்து மொழிகளும் ஒரே இலக்கியம் உடையதாய் ஒரே எழுத்து வடிவம் உடையதாயிருந்த காலம் உண்டு. ஆனால், இலக்கியம் ஒன்றானதால் ஐந்து மொழிகளும் ஒரே பெயருடன் `தமிழ்’ என்றே அழைக்கப்பட்டது. சங்க இலக்கியங்கள், தேவாரத் திருவாசகங்கள் ஆழ்வார்களின் நாலாயிரப் பிரபந்தங்கள் எழுதப்பட்ட காலத்தில் தொன்னாடு முழுவதும் ஒரு மொழிதான் இருந்தது. வள்ளுவர் “தமிழ் மொழியையே மொழியாகக் கண்டார். தமிழ் நாட்டையே உலகமாகக் கண்டார். தமிழ்ப் பண்பையே மனிதப் பண்பாகத் தீட்டினார். அவர் தனிச் சிறப்புக்குக் காரணம் இந்தப் பொதுமைதான்” என்றும் வள்ளுவர் நாளில் தமிழ்ப் பண்புடன் போட்டியிடும் பண்பு இல்லை. அதுவே உச்சநிலையில் இருந்தது என்றும் கூறுகிறார். அப்பாத்துரையார். “தமிழ்ப் பண்பு நிறைந்த பகுதியையே அக்காலத்தவர்கள் தமிழகம் அல்லது செந்தமிழ்நாடு என்றார்கள். `தமிழ் கூறும் நல் உலகு’ எனத் தொல்காப்பியம் கூறுவது இதையே” எனவும் சமற்கிருதம் அன்று பிறக்கவில்லை. ஆரிய மொழியில் எழுத்தில்லை. இலக்கணமில்லை. இலக்கியம் என்ற கருத்தின் நிழல்கூட அன்று கிடையாது. சமற்கிருதம் இலக்கிய மொழி ஆன காலம் திருவள்ளுவருக்குப் பல நூறு ஆண்டுகளுக்குப் பின் சங்க இலக்கியத்துக்குப் பின்னரே” என்பதும் அப்பாத்துஐரயாரின் கருத்தாகும். தீண்டாமையை ஒழிக்கும் நோக்கில் தீண்டாதோருக்காக ஆலயங்கள் திறந்த போது தன் மகிழ்வை வெளிக்காட்டி அச்செயலைப் பாராட்டிக் கூறும்போது- பிறையெனத் தேய்ந்து நின்ற ........ ............ ........... பயிரது காக்கும் வேலி படர்ந்ததை அழித்ததே போல் செயிருறு சமய வாழ்வு சீருற அமைந்த பேதம் அயர்வுறு மனித வாழ்வை அழித்த தீங்கிதனை நீக்கி உயிருறச் செய்த கீர்த்தி ஓங்கு சித்திரைக் கோ மாற்கே! என்று கூறுகிறார். வேலியே பயிரை மேய்ந்தது போல், சீர்படுத்த வந்த சமயம் தீண்டாமை எனும் பேதத்தை ஏற்படுத்தியது. இத் தீங்கை நீக்கிக் கீர்த்தி பெறச் செய்த செயலைப் பாராட்டுகிறார். `தமிழ்ப் பண்பு’ என்னும் நாடகத்தில் தமிழர் விழா பற்றி இருவர் விவாதம் மூலம் விவரித்துள்ளார். கிறிஸ்துமஸ், ஈதுப் பண்டிகைகளைச் சிறப்பாக் கிருத்துவரும், முசுலீம்களும் கொண்டாடினாலும் அது தமிழர்களை எவ்வகையிலும் அவமதிக்கவோ, புண்படுத்தவோ செய்வதில்லை. தமிழ் விழாக்களுடன் தமிழ் விழாக்களாக அவற்றை ஏற்ற கிருத்தவ, இஸ்லாமிய நண்பர்களுடன் அவற்றை நாம் கொண்டாடுவதன் காரணம் எல்லாத் தமிழரும் சேர்ந்து முழு நிறை தமிழ்த் தேசியம் பேண அது உதவுகிறது. ஆனால், தீபாவளி போன்ற வடவர் பண்டிகைகள் தமிழரை அவமதிக்கும் புராணக் கதைகளைக் கொண்டாடுபவை. தமிழரைப் புண்படுத்துபவை. அத்துடன் அவை தமிழ்ப பண்புக்கு மாறுபட்டவை என்ற கருத்தை விதைப்பதோடு `மலையாளிகள் கொண்டாடும் ஓணம் விழா தமிழ்ப் பண்புடைய விழா மட்டுமல்ல, தமிழின விழா. மலையாளிகளும் இனத்தால் தமிழ்க் குழுவான திராவிடம் சார்ந்தவர்களே. பண்பில் அது பொங்கலைவிட குறைந்த விழாவல்ல. மேலும் பண்டு தமிழகத்திலும் அவ்விழா எங்கும் கொண்டாடப் பட்டதாகப் பத்துப்பட்டுப் பறைசாற்றுகிறது எனத் தமிழ்ப் பண்புடைய தமிழர் விழாக்கள் பற்றி இந்நாடகத்தின் மூலம் ஒரு சிறு ஆய்வே செய்துள்ளார், அப்பாத்துரையார். வங்க தேசத்திற்கு இணையான சிறப்புடையது தமிழகத் தேசியம். இச் சிறப்பிற்குக் காரணமாக விளங்கிய தலைவர் வ.உ.சி. அவர்களின் சிறப்பை எடுத்து உணர்த்துகிறார். “கப்பலோட்டிய தமிழரான வ.உ.சிதம்பரனார் தமிழகத்தின் முடிசூடா மன்னராகவும், தொழிலாளரியக்கத்தின் முதல் அனைத்திந்தியத் தலைவராயும் விளங்கினார். அத்துடன் இந்தியத் தலைவர்களிடையே காலங்கடந்த தொலை நோக்குடைய தலைவராகவும் விளங்குகிறார். அவருக்குப் பின் வந்த தீவிரவாதத் தலைவர்களுள் செயல்பாட்டில் அவருக்கு ஒப்பான செயற்கரியன செய்த பெரியாராகப் போஸ் நீங்கலாக எவரையும் கூற முடியாது. இவ்விருவருக்குமிடையே காந்தியடிகள் தலைமை இவர்களைத் தாண்டி ஒளி வீசிற்றாயினும், அது நாடு கடந்த உலக எல்லையும், அரசியல் கடந்த ஆன்மிக எல்லையையும் என்று கூற முடியாது”. 1906 ஆம் ஆண்டு சூரத்தில் கூடிய பேரவையில் தீவிரவாதி யான திலகரை மிதவாதிகள் தாக்குதலிலிருந்து வ.உ.சி. தலைமையில் தமிழகத்திலிருந்து சென்றவர்கள் காத்தார்கள் என்ற சூழலை அப்பாத்துரையார் விரிவாக விளக்குகிறார். வான்புகழ் மணிமேகலை மணிமேகலையும் சிலப்பதிகாரமுமே பழமைமிக்க சிறப்பு வாய்ந்த காவியங்களாகத் திகழ்கின்றன. இளங்கோவடிகளால் சிலப்பதிகாரம் இயற்றப்படு முன்பே மதுரைக் கூலவாணிகரால் இயற்றப்பப்டட மணிமேகலையே புத்த உலகில் தலைசிறந்த காப்பியமாகக் காணப்படுகிறது. இலக்கியப் பண்பில் உயர்ந்த இம் மணிமேகலை பற்றி `மணிமேகலை’, `வான்புகழ் மேகலை’ என்ற கட்டுரையில் ஆய்ந்துள்ளார், அப்பாத்துரையார். இலக்கியத்தில் காப்பியங்களை இயற்கைக் காப்பியங்கள், செயற்கைக் காப்பியங்கள் என இரண்டாகப் பிரித்து இயற்கைக் காப்பியமாவது மக்களிடையே வழங்கி மக்கட் பாடங்களைக் காப்பிய உணர்வுடைய ஒரு கலைஞன் தொகுப்பால் ஏற்படுவது. செயற்கைக் காப்பியமாவது ஒரு கலைஞனையே கட்டமைக்கப்படுவது என விளக்கும் அப்பாத்துரையார் ஹோமரின் `இலியட்’ இயற்கைக் காப்பியம் என்றும் மில்டனின் `துறக்க நீக்கம்’ செயற்கைக் காப்பியம் என்றும் கூறி மணிமேகலையை இரண்டுக்கும் இடைப்பட்டதாகக் கூறியுள்ளார். உயர்காப்பியப் பண்புகள் முற்றிலும் அமைந்த மணிமேகலை புத்த சமய இலக்கியமாகக் காணப்படுவது பற்றி `புத்த சமயம் சார்ந்த ஏடுகள் உலகில் பல மொழிகளில் இருக்கின்றன. ஆனால், புத்த சமயச் சார்பான இத்தகைய நல் இலக்கியம் சமற்கிருதத்திலோ பாலியிலோ வேறு எந்த உலக மொழிகளிலோ கிட்டத்தட்ட 50 கோடி புத்த சமயத்தினர் பேசும் சீன மொழியிலோ 8 கோடி புத்த சமயத்தினர் பேசும் சப்பான் மொழியிலோ கூடக் கிடையாது” என இலக்கியப் பண்பாலும் காலத்தாலும்கூட புத்த சமய உலகில் மணிமேகலைக்கு ஈடு வேறு எதுவும் இல்லை எனக் கூறியுள்ளார். யாதும் ஊரே மாத இதழ், வைகாசி 2037, சூன் 2006, பக். 40-42