பேரின்பச் சோலை முதற் பதிப்பு - 1957 இந்நூல் 2003இல் பூம்புகார் பதிப்பகம், சென்னை - 108. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. தமிழ் வாழ்க! * நலமெனல் யாவதும் நம்மிடம்; அதுபெற வலமெனல் யாவதும் அறிவின் வளமே; இலமெனல் யாவதும் அறிவின் இன்மை- வளமெனல் யாவதும் நாடுவது அதுவே! * All Good is ever with us; men but want Wisdom to take it; they are poor and scant Only in lacking wisdom, that acquired, The good is found which they so long desired முதனூலாசிரியர் முன்மொழி பர்மா நாட்டின் நெடுஞ்சாலைகளில் இடையிடையே சரிசம தூரங்களில் புழுதியடர்ந்த பாதையிலிருந்து போதிய தொலை அருகே விலகி ‘வழித்தங்கல் மனைகள்’ அமைக்கப் பட்டுள்ளன. இவை சிறிய மரக்கட்டடங்கள். குளிர்மரப் பொதும்பரின் தண்ணறு நிழலில் அமர்ந்து வழிப்போக்கர் தங்கி இளைப்பாற இவை உதவுகின்றன. இது மட்டுமன்று. அவர்கள் பசியும் விடாயும் தணித்துக்கொள்ளும்படி மனிதப் பாசமிக்க அந்நாட்டு மக்கள் அங்கேயே உணவு நீர் வசதிகள் செய்து உதவுகின்றனர். இதனைத் தம் சமயச் சார்பான அருட் கடமை என்றே பர்மியர் கருதுகின்றனர். வாழ்க்கை என்னும் நெடுஞ்சாலையிலும் இதுபோன்ற தங்கல் மனைகள் இருக்கின்றன. இவை கோபதாப உணர்ச்சி களாகிய வெப்பத்திலிருந்தும், மனக்கசப்பு, தோல்வி மனப்பான்மை ஆகிய புழுதியிலிருந்தும் விலகி, பணிவார்ந்த மெய்யறிவென்னும் குளிர்நறுந் தண்ணிழலின் உயிர்மருங்கில் அமைந்துள்ளன. எளிய, பகட்டாரவாரமற்ற, அமைதியுருவான இத்தங்கல் மனைகள் பேரின்பத்தின் ஒதுங்கிய சோலைவனங்கள் ஆகும். நடந்தலுத்து நொந்த பாதங்கள் அவற்றிடையே வலிமை பெறுகின்றன. ஆனால் இத்தகையவர்கள் தவிர மற்றை யோர்களுக்கு அவை எளிதில் தென்படுவதேயில்லை. வழியின் மருங்கமர்ந்துள்ள தண்டலைகளாகிய இவற்றை அசட்டை செய்து புறக்கணிப்பவர் துன்பத்துக்கு ஆளாகாமல் இருப்பதில்லை. அவர்கள் வாழ்வென்னும் நெடுஞ்சாலையில் தொலைவிலுள்ள ஏதோ ஒரு மாய இலக்கை எட்டிப் பிடிக்கும் எண்ணத்துடன் பரபரப்பாகப் பறந்தோடுகின்றனர். அருகி லுள்ள வரை விலக்கித் தள்ளுகின்றனர். மருங்கிலுள்ள தண்டலைகள் மேலீடான பார்வைக்குக் கண்ணைப் பறிக்கும் பகட்டாரவார மற்றவையாதலால், அவற்றைச் சென்றடைவ தற்குரிய இடுங்கிய கிளைப் பாதைகளில் கவனம் செலுத்தாது மேற்செல்லுகின்றனர். அவை முக்கியமற்றவை என்று தள்ளிவிடு கின்றனர். ஆனால் நாழிகை கடந்து நாழிகையாகுந்தோறும், இத்தகைய மக்கள் சோர்வுற்றும் அயர்வுற்றும் விழ நேர்கிறது. இதயப் பசி, இதய வேட்கை, இதயச் சோர்வு ஆகியவற்றுக்கு ஆளாகி எண்ணற்றவர்கள் மடிகின்றனர். நேர்மாறாக, கோபதாப நெருக்கடிகளிலிருந்து விலகி, மருங்கிலுள்ள கிளை வழிகளில் கண்பார்வை செலுத்தி அவற்றின் வழியாகச் செல்பவனுக்கு வெம்புழுதியார்ந்த காலடிகள் வெப்பாறப் பதியும்படி ஈடும் எடுப்பும் அற்ற மென்மை வாய்ந்த அருள் மலர்ப்படுக்கைகள் காத்துக் கிடக்கின்றன. கால்கள் நோவகன்று அவற்றின் மென்மை நுகரும் அதே நேரத்தில், கண்கள்அவற்றின் பல்வண்ண வடிவழகு நுகரும். உள்ளம் அவற்றின் பண்பார்ந்த நறுமணம் துய்க்கும். இளைப் பாறிப் புதுவலுப் பெற்று, வாழ்க்கை நெருக்கடியின் சுழற்சியி னின்றும் அழற்சியினின்றும் விடுபட்டு, இன்ப அமைதியுடனும் உயிர் உரத்துடனும் அவன் முன்னேறிச் செல்வான். புழுதியில் அவன் உணர்விழந்து சாயமாட்டான். அவன் உயிர் நடுவழியில் சோர்வுற்று வீழ்ச்சியடையாது. அவன் வெற்றிகரமாகப் பயண முடித்து இன்பப் பேரிலக்கை அடைவான். அகல்பூங்காச்சாலை இல்ஃவ்ராக்கோம் இங்கிலாந்து ஜேம்ஸ் ஆலன் 1. நற்றொடக்கம் 1நாடும் எலாப்பொருளும் நல்லோரையில் தொடங்கி நாளில் முடியும் நிகழ்ச்சிகளும் கூடும் தனியின்ப துன்பங்கள் யாவுமே வீடு செலும்படிகள் போல்வனவே. 2ஆடும் சிறகில்லை பறந்துவான் ஏக, இரு தாளுண்டு அடிபெயர்த் தாடவே. - லாங்ஃபெலோ 3பொதுநிலை வாழ்வின் குறைகள் நெறிமுறைகள் பல்சாயல் வண்ணத்தில் தீட்ட விழைகின்றேன். - பிரௌனிங் வாழ்க்கை என்பது பல சிறு செயல்கள், பல சிறு செயல் களின் பல சிறு தொடக்கங்கள் நிரம்பியது. ஒவ்வொருவர் வாழ்விலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாழிகையும் இவை யில்லாமல் கழிவதில்லை. மிகப் பல வினைத் தொடக்கங்கள் சிறியனவாக, கவனித்தற்குரியனவல்ல என்று தள்ளத்தக்க அளவு அற்பமானவையாகவே தோற்றமளிக்கின்றன. ஆனால் உண்மையில் அத்தகைய சிறு தொடக்கங்களே வாழ்க்கையில் முதல்தர முக்கியத்துவம் உடையனவாகும். எல்லாப் பொருள்களும் மிகச்சிறிய தொடக்கங்களி லிருந்தே தோற்றுகின்றன என்பதை இயலுலகிலேயே காணலாம். ஆற்றல் மிக்க அகண்டமான பேராறுகளெல்லாம் முதலில் ஒரு வெட்டுக்கிளி தத்திக்கடக்கும் அளவு சிறிய ஓடையாகத்தான் பிறக்கின்றன. பெருவெள்ளங்கள் ஒரு சில மழைத்துளிகளாகத் தான் முதலுருப்பெறுகின்றன. ஆயிரம் புயல்கள் கண்டு உறுதியுடன் வானளாவி நிற்கும் தேக்குமரங்கள், ஒரு சிறு கொட்டைக்குள்தான் தொடக்கத்தில் அடங்கியிருந்தன. பல கால வளர்ச்சிகளாகிய நாடு நகரங்களையும் காடுகளையும் ஒரு நொடியில் எரிக்கும் பெருந்தீப் பிழம்புகள், கவனக்குறைவால் யாரோ எறிந்த ஒரு சிறு தீக்குச்சி அல்லது சிறு கொள்ளியி லிருந்து தான் பரவியுள்ளன. ஆன்மிக வாழ்விலும் இதுபோல மிக நுண் தொடக்கங் களிலிருந்தே மாபெரும் பண்பு வண்ணங்கள் பிறப்பது காணலாம். ஒரு சிறு கருத்தலை அல்லது வேடிக்கைக் கற்பனை வியத்தக்க பெரிய அறிவியற் புதுப்புனைவுக்கோ, அழியாப்புகழ் நிறுவும் கலைப்புடைப்புக்கோ கருவாகக் கூடும். காற்றிடையே காற்றாகப் பேசிவிடும் ஒரு வாசகம் மனித வரலாற்றின் போக்கையே மாற்றி விடும் பெரும் புரட்சியாகிவிட முடியும். செயலற்ற ஒருவனது சிந்தனை உலகுக்கே புத்துயிரளிக்கவல்ல பேராற்றலுக்கு வழிவகுப்பதுண்டு. புலனாசையால் ஏற்பட்ட ஒரு சிறு விருப்பம் மிகப் பயங்கரமான பெருங்குற்றங்களுக்கு மூலமாய்விடலாகும். தொடக்கம் காரணகாரியத் தொடரின் முகப்பு வெற்றி நாடுபவனே! நீ உன் வாழ்வில் தொடக்கங்களின் எல்லையற்ற அருஞ்சிறப்பாற்றலை உணர்ந்து கொண்டிருக்கி றாயா? தொடக்கங்களில் உள்ளீடாயுள்ள மறை நுட்பங்களை நீ அறிவாயா? நாளும் ஓரையும் கணமும் இடைவிடாது நீ ஈடுபடும் தொடக்கங்கள் எத்தனை? அவற்றின் உள்ளார்ந்த முழு வளம் எவ்வளவு என்பதை நீ மதித்துணர்கின்றாயா? - இவற்றை நீ இன்னும் நன்கு உணர்ந்து கொள்ளவில்லையானால், வாழ்க்கையின் நெடுஞ்சாலையில் என்னுடன் வா. வந்து அதன் கிளை வழிகளின் அருள் தங்கல்களைக் காண்பாயாக! அறிவோடு அவற்றை நீ ஆட்கொண்டால், நீ அருளாள்வாய்; பேரின்ப நிறைவு பெறுவாய்! அறிவார்ந்த உள்ளத்துக்கு அவைதரும் ஆறுதலும் புத்துரமும் புதுவாழ்வும் மிகமிகப் பெரிது. தொடக்கம் என்பது ஒரு மூலகாரணம். காரணம் என்ற முறையில் அதற்கு ஒரு காரியம், ஒரு தொடர் பயன் இருந்தாக வேண்டும். இத்தொடர் பயன்களும் காரணங்களேயாதலால், காரணத்தின்பின் காரியம், காரிய உருவாகிய காரணத்தின்பின் மறுகாரியம் என ஒரு நீளமான சங்கிலித் தொடர் தோன்றி விடுகிறது. ஏனெனில் காரணம் என்பது காரியத்தின் வேறன்று. காரியம் என்பதும் காரணத்தின் வேறன்று. நற்காரணம் நற் காரியம் உண்டுபண்ணும். தீக்காரணம் தீக்காரியம் உண்டு பண்ணும். தொடக்கம் நல்லதாக, நற்காரணமாக அமைந்தால், அதனைத் தொடரும் சங்கிலி தானாக நற்காரண காரியச் சங்கிலியாக அமைந்துவிடும். ஒரு நலன் பல நலன்களாக, ஒரு சிறு நலன் பல பெருநலன்களாகப் பல்கிப் பெருகும். வினைத் தொடக்கத்தில் அடங்கியுள்ள மறைஆற்றல் நுட்பம் இதுவே. நல்லவினைத் தொடக்கமூலம் ஒருவன் பெறும் ஆக்க ஆற்றல் ஆன்மிக ஆற்றல் ஆகும். அது உண்மையில் இயந்திர ஆற்றல் போன்றது. அதில் முயற்சி சிறிது. முயற்சியின் விளைவு பெரிது. எடுத்துக்காட்டாக, ஒரு யானையின் பளு மிகமிகப் பெரிது. ஒரு தனி மனிதன் முயற்சி மிகச் சிறிது. அவனால் அதைத் தூக்க முடியாது. ஆயினும் கப்பிகள் மூலம் ஒரு தனி மனிதன் முயற்சியாலேயே அப்பளுவைத் தூக்கிவிட முடியும். ஒரு யானைப் பளுவை மட்டுமல்ல; பல யானைப் பளுவைக்கூடத் தூக்கி விட முடியும். கப்பி மிகச்சிறிய இயந்திரமே. பெரிய இயந்திரங்கள் இன்னும் பேராற்றலுடையன. அவை மலைகளைப் பிளக்கும். காலமும் இடமும் வெல்லும். ஆயினும் அவற்றுள் பலவற்றை ஒரு தனி மனிதனே இயக்குகிறான். நல்வினைத் தொடக்க மூலம் நாம் பெறும் காரணகாரியச் சங்கிலித் தொடர் வாழ்க்கைத் துறையில் இத்தகைய இயந்திர ஆற்றல், அஃதாவது ஆன்மிக ஆற்றல் படைத்த ஒரு கருவி ஆகும். கருவி, காரணம், காரியம் என்ற சொற்கள் தமிழில் ‘கரு’ என்ற மூலச் சொல்லுடன் தொடர்புடையதாய் இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும். கரு என்பது தொடக்க நிலை. அதுவே காரணமாகி, காரியமாகி, காரண காரியத் தொடரான சங்கிலி மூலம் உயிர் வளர்ச்சி அல்லது இயந்திர ஆற்றலின் வளர்ச்சி அல்லது ஆன்மிக வளர்ச்சி பெறுகிறது. இத்தகைய கருவளத்தை யே உயிர்வளம், பொங்கல் வளம் என்றும் தமிழர் குறித்தனர். நல்ல தொடக்கம், பாதி முடிவு! தொடக்க முயற்சியின் தன்மை அல்லது இயல்பே அதன் காரணகாரியத் தொடர்பான பின்விளைவுகளின் போக்கையும் அறுதி செய்யும். தொடக்க முயற்சி தீதாயின், அதன் பின் விளைவுகளும் கேடாகும் என்பதில் ஐயமில்லை. ‘முதற்கோணல் முற்றும் கோணல்’ என்ற தமிழ்ப் பழமொழியும், ‘நல்ல தொடக்கம் பாதி முடிவு’ (றுநடட நெபரn ளை hயடக னடிநே) என்ற ஆங்கிலப் பழமொழியும் குறிக்கும் உண்மை இதுவே. ஆனால் பிந்திய பழமொழி நல்தொடக்கத்தின் இயல்பை விளக்குகிறது. அதன் சொற்பொருளைவிட அதன் உட்பொருளும் முழுப்பொருளும் பெரிது. மேலீடாக, நல்ல தொடக்கம் அதன் தொடர் விளைவு களில்லாமலே பாதி முடிவு ஆகும் என்று தோற்றுகிறது. ஆனால் தொடக்கம் தொடர்புறாமல் நின்றால் அது உண்மையில் பாதி முடிவு ஆய்விடமாட்டாது. ஆகவே தொடர்புடைய தொடக் கத்தில் அத்தொடக்கமே பாதி முடிவு என்பதே அப்பழமொழி யின் செம்பொருள். தொடக்க முயற்சிக்குப் பின் தொடர்பு முயற்சி மட்டும் இருந்தாலே முழுவெற்றி கிடைத்துவிடும். ஏனெனில் அத்தொடக்கமே கிட்டத்தட்ட முழுவிளைவாய்த் தானாகப் பெருகிவிடுகிறது. தொடக்க முயற்சியே தொடர்ந் தால், தொடங்குபவன் எதிர்பார்ப்பதைவிடப் பன்மடங்கு வளம் பொங்கும் என்பது தெளிவு. வினைத் தொடக்கம் வினைத்தொடர்பாகவே சென்று கொண்டிருக்க முடியாது. அதற்குத் தற்காலிகமாகவாவது ஒரு வினை முடிவு இருந்துதானாக வேண்டும். அதுவே, அதன் பயன், இலக்கு, அதன் செயல் கடந்த உரு. ஒவ்வொரு வாயிலும் ஒரு பாதையில் நம்மைச் செலுத்துகிறது. பாதை ஒரு கட்டடம், ஒரு பூங்கா, ஒரு கோயில் அல்லது இவை போன்ற ஓர் இலக்குக்கு நம்மை இட்டுச் சென்றாக வேண்டும். இல்லாவிட்டால் ‘வாயில்’ என்பதற்குப் பொருளே இல்லை. அதுபோலத் தொடக்கம் என்பதும் காரணம் என்பதும் வழி என்பதும் கட்டாயம் ஒரு முடிவு, காரியம் அல்லது இலக்குடன் தொடர்புடையவை ஆகும். பிந்தியவை இன்றி முந்தியவை பொருளற்றன ஆய்விடும். தொடக்கம் வினையின் உயிர்ப்பாதி அல்லது ஆன்மிகப் பாதி; விளைவு அதன் செயல் கடந்த உடற்பாதி அல்லது இயற்பாதி. இவ்விரண்டிற்கும் இடைப்பட்டதே செயற்படும் வினைக்கூறு என்னலாம். நற்றொடக்கம், அல்தொடக்கம்! தொடக்கங்களில் நற்றொடக்கமும் உண்டு. தீத்தொடக்கமும் உண்டு. வினையும் வினைவிளைவும் நன்மை தீமைப் பாகுபாடு பெறும்பகுதி இதுவேயாகும். தொடக்கக் கூறு உயிர்க்கூறு அல்லது அறிவுக்கூறு ஆதலால், அத்தொடக்கத்தில் நாம் நம் அறிவால் தீத்தொடக்கத்தை நற்றொடக்கமாக ஆக்கலாம். நம் அறியாமையால் நற்றொடக்கத்தைத் தீத்தொடக்கமாக்கி வினையும் விளைவும் கெடுத்துக்கொள்ளலும் ஆகும். ‘நற் றொடக்கம் பாதி முடிவு’ என்ற பழமொழி மிகையுரையல்ல, குறையுரையே என்பதை இது காட்டும். ஏனென்றால் முடிவின் முழுப்போக்கையும் - அதன் ஆக்கத்தையும் அழிவையும் - அறுதிப்படுத்தும் பகுதி அதுவேயாகும். ஆர்ந்தமர்ந்த சிந்தனையால் நாம் தீத்தொடக்கத்தை அறவே விலக்க முடியும். நற்றொடக்கத்தை உண்டு பண்ண இயலும். போதிய அறிவார்ந்த சிந்தனையால் - அஃதாவது திட்டப் பண்பால் - நாம் நற்றொடக்கத்தைப் பொங்கல் பெருவளமார்ந்த தொடக்கமாகவும் ஆக்கிவிடத் தகும். நம் உரிமைக்குப் புறம்பாக, நம்மால் கட்டுப்படுத்தி அடக்கி யாள முடியாத தொடக்கங்கள் உண்டு - இவை புறத்தே, இயற்கை உலகில் நம்மைச் சுற்றிலும் உள்ள சூழலிடையே அல்லது நம்மைப்போலவே தன்னுரிமையுடைய மற்ற மக்களிடையே உள்ளன. இந்த இருவகைத் தொடக்கங்களைப் பற்றி நீங்கள் கவலைப் பட வேண்டியதில்லை. உங்கள் ஆற்றலையும் கவனத்தையும் நீங்கள் முற்றிலும் உங்கள் கட்டுப்பாட்டுக்கும் உரிமை யாட்சிக்கும் உரிய தொடக்கங்களுக்கே பயன்படுத்தினால் போதுமானது. ஏனெனில் உங்கள் வாழ்க்கையின் சிக்கல் வாய்ந்த அமைப்பின் ஒவ்வொரு கூற்றையும் - அப்பின்னல் வலையின் ஒவ்வோர் இழையையும் - ஆக்குபவை இவையே. இவை உங்கள் எண்ணங்களில் உருவாகி, உங்கள் ஆர்வச் செயலில் வளர்ந்து, உங்கள் வாழ்க்கையுடன் வாழ்க்கையாகப் பயன் நிறைவு அளிப் பவையாகும். இவற்றின் தொடக்கம் எப்படி உங்கள் ஆட்சியி லிருக்கிறதோ, அதுபோலவே தொடர்சங்கிலியும் உங்கள் வசமே அமைகிறது. அதன் ஒவ்வொரு படியிலும் உங்கள் மனப்பாங்கு, ஆர்வம் செயலாற்றும். நாள்தோறும், ஓரைதோறும், கணம் தோறும் உங்கள் எண்ணம், நடையுடை தோற்றம், உங்கள் சொல்லும் செயலும், விருப்பு வெறுப்புக்களும், - உங்கள் வாழ்க்கை முழுவதும் - அதை ஆக்க அழிக்க வலிமையுடையன. அதே சமயம் இவற்றால் உங்கள் வாழ்க்கையும் வளமும் ஆக்கப்படுவன. இத்தகைய தொடக்கங்கள் மூலமே நீங்கள் புற உலகாகிய இயலுலகிலும் சரி, உங்களைப் போன்ற பிற மனிதரின் உலகாகிய புற உலகிலும் சரி, உங்களுக்கென ஓர் ஆட்சிச் சூழலை அமைத்துக்கொள்ள முடியும். வைகறைத் துயிலெழு! அருளார்ந்த பேரின்ப வாழ்வை நீங்கள் அடைய விழைந்தால், நீங்கள் கைக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான ஒரு நற் றொடக்கம் உண்டு. அதுவே ஒவ்வொரு நாள் வேலையின் தொடக்கமுமாகும். இதில் நன்கு கவனம் செலுத்திச் சரியான முறைகளைக் கையாள வேண்டும். ஒவ்வொரு நாளையும் நீ எப்படித் தொடங்குகிறாய்? எத்தனை மணிக்கு எழுந்திருக்கிறாய்? உன் கடமைகளை எவ்வாறு தொடங்குகிறாய்? என்ன உளப்பாங்குடன் நாளின் புதுப்பணியில் புகுகிறாய்? இந்தக் கேள்விகளை நீயே உன்னிடம் கேட்டுக்கொள்ள வேண்டும். இவை பற்றி உன் இதயத்துக்கு நீ தரும் விடைகளைப் பொறுத்தவை, அந்நாளிலும் அது தொடர்ந்த பல நாட்களிலும் நீ பெறும் உண்மையான இன்ப துன்பங்கள்! உன் நாள் வேலை அறிவுடன், அமைதியுடன், திட்டத்துடன் தொடங்கப் பெற்றால், அதனைத் தொடர்ந்து நிகழும் நிகழ்ச்சிக்கோவை முரணிலா நல்லிசையுடையதாகவும், இன்பகரமானதாகவும் இயங்கும். அது மட்டுமன்று, அப்பழக்கமே நாள் பழக்கமாகி வாழ்நாள் முழு வதையும் முழு நிறை பேரின்பத்துக்குப் பெரிதும் குறையாத நல்வாழ்வு ஆக்கிவிடும். வைகறையில் துயிலெழுவது நல்தொடக்க மட்டுமன்று; வலிமை தரும் நல்தொடக்கமுமாகும். உன் உலகியல் கடமை களுக்கு அப்படி எழுவது இன்றியமையாத் தேவையாய் இல்லாதிருந்தால்கூட, அதை ஒரு கடமையாக்கும் செயலில் தொலையறிவு மிகுதி உண்டு என்பதை நீ விரைவில் காண்பாய். சோம்பல் உன்னை ஆட்கொள்ளுமுன் நீ அதை ஆட்கொண்டு உதறித் தள்ளி உடல்வலிமையும் மனவலிமையும் சுறுசுறுப்பும் கொள்ள அது பேருதவியாகும். சோம்பலும் மடிமையும் உன்னை ஆட்கொள்ளாவிட்டால், தன் நெகிழ்வு என்னும் வலிமைக்கேடு உன்னைப் பற்றிக்கொள்ளும். நீ ஆக்க அறிவாற்றல் பெறுவதற்கு மாறாக ஆக்கப்படும் ஆற்றல், அஃதாவது அழிவாற்றலுக்கு நீ உட்பட்டு விடுவாய். விடிந்தும் நெடுநேரம் படுக்கையில் கிடந்து புரள்பவர் முகம் ஒருபோதும் களையும் பொலிவும் புத்தார்வமும் உடையதாகத் தோற்றமாட்டாது. சிறுசிறு தொல்லைகளால் அவர்கள் எளிதில் நச்சரிப்படைவார்கள். நரம்புத் தளர்ச்சி, நரம்பதிர்ச்சி ஆகியவை அவர்களுக்கு அடிக்கடி இடர்தரும். துயரார்ந்த எண்ணங்கள், முரண்பட்ட போலிச் சஞ்சலங்கள் அவர்களை அலைக்கழிக்கும். நாள்தோறும் தன்நெகிழ்வுக்கு இடம் தருவதனால் ஏற்படும் தீய விளைவுகள் இவை. தன்நெகிழ்வு, தற்சலுகை, மடிமை தன்நெகிழ்வும், தற்சலுகையும், மடிமையும் குடி போன்றவை, குடித்துப் பழகியவனும் சரி, முதன் முதலாகக் குடித்தவனும் சரி, குடி காரணமாக நரம்புத் தளர்ச்சிக்கு ஆளாகும் நேரத்திலேயே நரம்புக்குப் புதுமுறுக்கு ஏற்படுவதாக எண்ணுகிறான். மேலும் நரம்புக்கு முறுக்கேற்றும் எண்ணத்துடன், மேன்மேலும் குடித்துத் தளர்ச்சியை மேன்மேலும் பெருக்குகிறான். களிப்பும் இன்பமும் தருகிறது என்ற கருத்துடன், குடித்துக் களிப்பும் இன்பமும் பெற்று விட்டதாக நினைத்து, மேலும் குடித்து அவற்றை ஓயாது பெருக்க எண்ணுகிறான். ஆனால் இந்த எண்ணத்துக்கு நேர்மாறாக, களிப்பு அடையும் ஆற்றலையே, இன்பத்தை உணரும் திறத்தையே அவன் படிப்படியாக இழக் கிறான். தான் தள்ளாடிக் கொண்டு உலகம் தள்ளாடுவதாக, தான் சுழன்றுகொண்டு உலகம் சுழல்வதாக அவன் எண்ணு கிறான். தீ அவனுக்குக் குளிர்ச்சியாகத் தோற்றுகிறது. சேறும் சகதியும் அவனுக்கு மெத்தையாகத் தோற்றுகின்றன. இறுதியில் மாள்வே வாழ்வாக அவன் முடிவுறவும் நேர்கிறது. தன்நெகிழ்வும், மடிமையும், தற்சலுகையும் இதே நிலைக்கு மனிதனைத் தள்ளு கின்றன. மடிமை தற்சலுகையாகவும், தற்சலுகை மடிமையாகவும் மாறி மாறிப் பெருகுகின்றன. முதல் மடிமை தற்சலுகைக்கு இடம் தந்தபின், தற்சலுகை மடிமையை ஓர் இன்றியமையாத, எல்லை யற்று வளரும் பண்பாக மாற்றி விடுகிறது. மடிமையால் விளையும் பெரிய இன்னல்களைப் பொது வாக ஆடவர் பெண்டிர் எண்ணிப் பார்ப்பதில்லை. அது உடல்வலுவும் மன வலுவும் கெடுக்கிறது. பொருள் இழக்கச் செய்கிறது. அறிவு இழக்கச் செய்கிறது. இன்பம் இழக்கச் செய்கிறது. நாள் வேலையின் முதல் கட்டுப்பாடாக, முதல் வேலையாக, விடியுமுன் எழுந்திரு. எழுந்திருக்க அவசியமில்லாவிட்டாலும் எழுந்திரு. எழுந்தவுடன் வேறு வேலையில்லாதிருந்தால்கூட, அது காரணமாகச் சோம்பியிராதே. வெளியே சற்று உலவி உடலுக்குத் தெம்பு உண்டு பண்ணிக்கொள். அதனுடன் இயற்கைக் காட்சிகளின் அழகில் உன் பொறி புலன்களையும் உள்ளத்தையும் தோயவிடு. இதனால் ஏற்படும் மனஅமைதி, கிளர்ச்சி, புது விருவிருப்பு வாழ்வில் உனக்கு விலை மதிக்க முடியாத செல்வமாக வளரும். சும்மா இருக்க நேரும் நேரத்தை இப்பழக்கம் உனக்கு ஒரு சொத்தாக்கிவிடும். ஒரு நாள் முயற்சி அடுத்த நாள் முயற்சிகளைத் தானே பிறப்பித்துவிடும். காலையில் எழுந்திருக்கும்போது, அதனால் மனம் முதலில் கருதிய நோக்கம் எதுவும் இல்லாவிட்டால்கூட, இயல்பான பல இன்னலங்கள் விளைகின்றன. காலை நேரத்தின் மோன அமைதி உள்ளத் தெளிவையும் சிந்தனை அமைதியையும் ஊக்குகிறது. காலையுலாவோ தொடர்ந்த சிந்தனைப் பழக்கத்தை உண்டுபண்ணுகிறது. வாழ்க்கையையும் வாழ்க்கையின் சிக்கல் களையும், தானும் பிறரும் கண்டுணர வைக்கிறது. இப்பழக் கங்கள் தொடர்வதன் மூலம் வாழ்க்கையில் மனிதன் இயற்கைச் சூழலுடனும் சமுதாயச் சூழலுடனும் முற்றிலும் ஒத்திசைந்து வாழ முடிகிறது. சிக்கல்கள் யாவற்றையும் தெளிந்த உள்ளத் துடனும் தெளிந்த சிந்தனையுடனும் மெய்யறிவாலும் விடு வித்துப் புத்துரம் பெற இயலுகிறது. காலை வேளையின் ஆன்மிக வளம் காலைநேர அமைதி உண்மையில் ஓர் இயற்கைச் செல்வம், ஓர் ஆன்மிக வளம். அதன் தெய்வீக மோனம் கலங்கிய புண் பட்ட மனித உள்ளங்களுக்கு ஓர் இன்மருந்து. இன்னதென்று பொது அறிவுக்கு விளங்காத இந்த அமைதி உண்மையில் வாழ்க்கையின் நோக்கத்தில் கருத்தூன்றவைக்கும் மெய் யறிவமைதியாகும். துன்பத்தில் துவளவைக்கும் மடிமைக்கு இது நேர்மாறானது. ஏனெனில் துன்ப மலைகள் தாண்ட, இடையூறு என்னும் ஆழ்ந்த பள்ளங்கள் தாவ, கடுஞ்சிக்கல்களை விடு விக்கவல்ல மெய்யுரத்தை இது மனிதனுக்கு அளிக்கிறது. இவ்வமைதியை ஊடுருவிவரும் காலைக் கதிரவனொளி பனியும் இருளும் விலக்குவது மட்டுமன்று. அதுவே உடலூடாக உள்ளத் துக்கும், உள்ளத்தினூடாக உடலுக்கும் உயிர் ஆற்றல் தூண்டுவது. அதுவே பொறிபுலன்களூடாக நரம்பு மண்டலத் துக்கும், நரம்பு மண்டலத்தினூடாகப் பொறி புலன்களுக்கும் புதுவாழ்வின் துடிப்பும் புதுக்கிளர்ச்சியும் தருவதாகவும் அமைகிறது. காலைக் கதிரவனொளி உயிரொளி, தெய்வீக ஒளி. அத னூடாக மனிதன் உண்மை என்னும் ஒளிமலை ஏறி, பேரின்ப மென்னும் ஒண்முகில் வண்ணம் பெற்றுத் தன்னைச் சூழப் பேரின்ப ஒளிக்கதிர்கள் பரப்பும் ஆற்றல் எய்துகிறான். காலையின் நற்றொடக்கம் உள்ளத்துக்குக் களிப்பும் கிளர்ச்சியும், உடலுக்கு ஊட்டமும் சுறுசுறுப்பும் ஒருங்கே அளிக்கும். உணவு நேரத்திலே இவற்றின் முழுமணம் வீசும். இவற்றின் நல்லொளி குடும்பமெங்கும் பரவும். நாளின் கடமை களும் அலுவல்களும் இதே வகையில் தன்னம்பிக்கையுடனும் களியாட்ட எழுச்சியுடனும், ஒருவர்க்கொருவர் அன்புக் கனி வார்ந்த ஒத்துழைப்புடனும் விரைந்து நடைபெறும். நாள், நாட்படி அல்லது பஞ்சாங்கத்தின்படி எப்படியானாலும், வாழ்வின் ஆக்கப்பட்டியலில் நல்ல நாளாகவும், பல நல்ல நாள்களுக்குரிய தூண்டுதல் நாளாகவும் அமைவது உறுதி. உண்மையில் பஞ்சாங்கம் பார்ப்பவர் கவலையுடனே அதை அணுகுவதால், நாள் வேலை முழுவதும் இக்கவலை படராமல் இராது. நேரம் நல்லநேரம் என்ற மனநிறைவுகூட இந்தத் தொடக்க மன உலைவை முற்றிலும் சரி செய்ய முடியாது. ஆனால் காலையில் எழுந்து நல்லமைதியுடன் வேலை தொடங்குபவர் எந்தப் புறஉதவியுமில்லாமல் எல்லா நாட் களுமே நல்ல நாட்களாகப் பெறுவர். நல்ல நாள் கெட்ட நாள் எது? நாளில் நல்ல நாள், கெட்ட நாள் என்பது கிடையாது. அதுபோலவே வாழ்நாளிலே எந்த நாளும் மிக முந்திவிட்ட நாளோ, மிகப் பிந்திவிட்ட நாளோ ஆய்விட மாட்டாது. எந்த நாளில் அவன் நல்தொடக்கம் மேற்கொண்டாலும் அது அவன் நல்வாழ்வில் அல்லது புதுவாழ்வில் முதல் நாள் ஆகிவிடத்தகும். அதிலிருந்து அவன் புதிய சிந்தனை, புதிய வாய்மொழி, புதிய செயல் தொடங்கலாம். அதிலிருந்து அவன் மெய்யறிவொளி யில், இன்ப ஒளியின் செங்கதிரில் புதிதாகக் குளித்தெழலாம். அது அவன் இளமையில் புத்திளமையாக, முதுமையில்கூட மறு இளமையாகத் திகழும். 4ஒவ்வொரு நாளும் ஒரு புதுத் தொடக்கம் ஒவ்வொரு காலையும் புத்துல காக்கும் வெவ்விய பழிகள் விழுத்துய ரடைந்தோர்க்கு இவ்விடத் துண்டோர் எழில்ஞாயிற் றொளி அதுவே, எனக்கும் உனக்கும் விரும்பிய எவர்க்கும் ஈடில்பே ரின்ப வாயிலின் அழைப்பே! சென்ற நாளின் பழிகள், தவறுகளை ஆழ்ந்து நினைந்து உள்ளத்தில் தோயவிடாதே. அது இன்றைய நாளில் நேரான வழியில் வாழ்வதற்குத் தடங்கலாய்விடும். நேற்றைய பிழைகள் நேற்றோடு போகட்டும். அவை இன்று நீ புதிய தூய வாழ்வு வாழத் தொடங்குவதைத் தடுக்க முடியாது. இன்று தொடங்கு, புதிதாக, புத்தம் புதிதாகத் தொடங்கு! சென்ற நாட்களின் அனுபவங்கள் - வெற்றிகள் மட்டுமல்ல, தோல்விகள்கூட - உனக்கு இவ்வகையில் உதவிதரும். ஆனால் புதிய நற்றொடக்கத்தின் மூலம் பழைய வெற்றி முன்னிலும் நிறைநல் வெற்றியாவது திண்ணம். முன்னைய தோல்வியோ தன் அனுபவத்தை மட்டும் புதுமுயற்சிக்கு அளித்து அதை வெற்றி யாக்கும். இத்தகைய நல்தொடக்கமில்லாமல், நீ வேறெவ் வகையிலும் இவ்வாறு முன்னிலும் ஒளிபெற வாழ்வில் முன்னேற முடியாது. ஏனெனில் நாளின் முழுப்போக்கும் அந்நாளின் தொடக்கத்தைப் பொறுத்ததாகும். அத்தகைய நாளிலிருந்து தொடங்கும் புதுவாழ்வின் போக்கு முழுவதும் அந்நாளின் புத்தொளியைப் பொறுத்ததாகவே இயலும். பனியின் நற்றொடக்கம் திட்டமே வாழ்வில் நாளின் நற்றொடக்கத்துக்கு அடுத்தபடி மற்றொரு தொடக்கம் உண்டு. அதுவே தனிப்பட்ட வேலை, பொறுப்பு வாய்ந்த பணி ஆகியவற்றின் புதுத் தொடக்கம் ஆகும். ஒரு கட்டட வேலையை எடுத்துக்காட்டாகக் கொள்ளுவோம். புதிய கட்டடம் தொடங்குவதில் மிகச் சிறந்த முறை யாது? அது கட்டடத்தின் எப்பகுதியையும் உடனடியாகக் கட்டுவதன்று, கடைகாலிடுவது கூட அன்று. முழுக் கட்டடத்தின் மாதிரி யையும், திட்டமிட்டு அத்திட்டத்தின் எல்லாக் கூறுகளையும் நன்கு சிந்தித்து அமைப்பதாகும். இது பின்னுள்ள வேலை முழுவதையும் எளிதாகவும் விரைவாகவும் நிறைவேற்ற உதவும். கடைகாலிலிருந்து கட்டடத்தின் ஒவ்வொரு பகுதியையும் திட்டத்தில் கண்டபடியே அணுப்பிசகாமல் கட்டினால், திட்ட வெற்றியே கட்டட வெற்றியாய்விடும். தொடக்கத்தில் நன்கு கணிக்கப்பட்ட திட்டத்தை மேற் கொள்ளாதவரின் கட்டடவேலை உண்மையில் வீண் வேலை யாகவே முடியும். கட்டடத்தின் பகுதிகள் ஒன்றுடனொன்று பொருந்தாமல் கட்டும்போதோ, கட்டி முடிந்தவுடனோ, அதன் பின்னோ கட்டடம் நொறுங்கி விழுந்து விடும். நொறுங்காத நிலையிலும் எந்த நேரத்திலும் அதில் வாழ்பவருக்கு அச்சமும் கிலியும் இடையூறும் உண்டு பண்ணும், விரைந்து அழிவுக்கு உட்படும். திட்டம் இத்தகைய நிலையிலிருந்து கட்டடத்தை மட்டுமன்றி அதுபோன்ற எல்லாப் பெருவேலைகளையும் காக்கும். எந்த வேலைக்கும் உரிய சரியான முதல் தொடக்கம் அது பற்றி மனத்தில் அமையும் திட்டமே. இயற்கையான திட்ட மில்லாமல், ஒழுங்குமில்லாமல், எதையும் திறமையுடையவர் செய்வதுமில்லை, செய்ய விரும்புவதுமில்லை. ஒழுங்கு கேட்டையும் குளறுபடிகளையும் அதன் ஆற்றல் அழித்து விடுகிறது. ஒழுங்கு, வரையறை, நோக்கம் - இந்த மூன்றும் உடையவை எவை, அவை மட்டுமே எங்கும் எப்போதும் நீடித்து நிலைபெறுகின்றன. கணக்கியல் சார்ந்த இந்தப் பொதுத் திட்ட அமைதியைப் புறக்கணிப்பவர் மெய்மை, முழுமை, வெற்றி ஆகியவற்றிலிருந்து தம்மைத் தாமே அடைத்து வைத்துக் கொள்கிறார். 5திட்டம் இல்லா வாழ்க்கை - முற்றும் தொடங்கிடும் போது அவப்போது - அது தொடர்ந்திடும் வாழ்வும் அவ்வாறே! படர்ந்திடும் அழிவு அதன் பண்பே! முற்ற முற்றத் துயர் அதன் விளைவு, முழுதுறழ் ஏக்கம் ஏமாற்றம் பலவே! மற்றது பாதி கழியுமுன் அதன்பளு வற்றிய வன்புதர்ச் சுமையாய் விடுமே! அகத்தே திட்டமில்லாமல் ஒரு செயலில் இறங்குபவன் அச்செயலின் ஒவ்வொரு படியிலும் ஒவ்வொரு வகையாக விட்டு விட்டு, பொருந்தா முயற்சிகளில் ஈடுபடுவான். இஃது இறுதியில் தோல்வியடைவது மட்டுமல்ல, இடையிடையேயும் எண்ணற்ற தொல்லைகள், சிக்கல்கள் உண்டு பண்ணி, முயற்சியாளரை இடையறாக் கவலையில் ஆழ்த்தும். செயல் வீடு கட்டுவ தானாலும் தொழில் நடத்துவதானாலும், இந்த அடிப்படை மெய்ம்மை ஒரே மாறா மெய்ம்மையாகும். திட்டமும் வரை யறையும் உளத்திட்பத்திலிருந்து வினைத் திட்பத்துக்கும் வாழ்க்கைத் திட்பத்துக்கும் வழிவகுக்கும். செம்மை, ஒழுங்கு, முழுமை, வெற்றி, இன்பம் - இவை திட்ட வேரிலிருந்து தளிர்த் தெழுந்து மலரும் மலர்ச்சிகள் ஆகும். திட்டமே திட்பத்தின் மறைதிறவு திட்டமே திட்பத்தின் மறைதிறவு - இஃது இயற்கையின் மாறாச் சட்டம். தொழில் முறை வேலைகளில் மட்டுமல்ல, வாணிக முயற்சிகளிலும் அதன் செயலைக் காணலாம். இன்னும் நூலாசிரியரின் ஏடு, கலைஞன் ஓவியம், சமூகத் தொண்டு, இயல்துறைப் புதுமையாளன் புத்தியந்திரம், தானத் தலைவன் தண்டெழுச்சி - இவை யாவுமே புறச் செயல் நடவடிக்கைக்கு முன்னீடாக உள்ளத்தில் நன்கு திட்டமிடப்படத் தக்கவையே யாகும். அகத்திட்டத்தில் எந்த அளவு ஒருமை, திட்பம், நிறைவு ஆகிய பண்புகள் இடம் பெறுமோ, அந்த அளவுக்கே புறநடை முறையிலும் இறுதியில் முழுநிறை வெற்றி ஏற்படும். நற்றொடக்கம், திட்டம் ஆகியவை வெளிப்பார்வைக்கு முக்கியத்துவம் இல்லாத சின்னஞ்சிறு செயல்கள் என்றுதான் தோற்றுகின்றன. அறிவில்லாதவர்கள் அப்புறத் தோற்றத்தையே நம்பி அவற்றைப் புறக்கணித்துத் தோல்வியையே சுற்றிச் சுற்றி வருகின்றனர். நேர்மாறாக, வெற்றி வாணர், செல்வாக்குத் தேடிக் கொள்பவர், நல்லோர் பிற நற்பண்புகளிடையே இந்த நற் றொடக்கத் திட்டப் பண்புகளின் ஆற்றலையும் நன்கு உணர்ந்து, அவற்றைப் பயன்படுத்துகின்றனர். கருத்தின் உருவே கருஉரு, விதை! நற்றொடக்கங்களில் மிக முக்கியமானது, ஆனால் பெரிதும் கவனிக்கப்படாதது ஒன்று உண்டு. அதுவே உள்ளத்தின் உள் ளாழத்தில் புதைந்து கிடக்கும் கருத்தின் கருவாகிய காரணகாரிய மெய்ம்மை ஆகும். ஒருவன் வாழ்க்கை முழுவதும் - வாழ்வின் செயல்கள் அத்தனையும் - உண்மையில் கருத்தின் விளைவே. தொடர்ந்த அவ்விளைவுக் கோவையின் மூல காரணம், கரு, கருத்தே. உள்ளார்ந்த கருத்தின் கரு இக்காரணக் காரியத் தொடர்புக்குரிய அகத் தூண்டுதல் ஆகும். திட்டங்களை உரு வாக்கும் அக உள்ளக்கூறு இதுவேயாகும். எல்லா நடைமுறைச் செயல்களும் கருத்தால் உருவாகு பவையே - நல்ல செயல்கள், தீய செயல்கள் இரண்டும் நன்மை, தீமை வாய்ந்த கருத்துக்களின் புறடிவங்களே நிலத்திலிட்ட விதை செடியாக, மரமாக வானவெளியில் உருவாகின்றது. விதை முளைத்ததும் காற்றுடனும் ஒளியுடனும் உறவாடிச் செடி மரமாக வளர்கின்றது. ஆனால் நிலத்துக்கு மேல் முளைவிடுமுன் அது நிலத்தின் கீழே வேர்விடத் தொடங்கிவிடுகின்றது. இது போலவே ஒரு செயல் புறஉலகில் தொடங்குமுன் அது முதலில் கருத்துருவில் - உள்ளத்தில் உருவாகிறது. செயலுருவில் அது குருத்து விடுமுன், காரணகாரிய வடிவில் அது திட்டமாக வேர்விடுகிறது. வேர்போல இங்கே கருத்து விதை கருத்தின் விதைத்தளம் கடந்து உள்ளத்தின் ஆழ்தட நோக்கிச் சென்று திட்டமிடுகிறது. இந்த ஆழ வேர்வளர்ச்சி ஓரளவு முழுமை யடைந்த பின்பே செயல் முளைகுருத்துவிடத் தொடங்குகிறது. திட்டத்தால் வளம்பெறும் இந்தச் செயல் வளர்ச்சி தற்பண்பு என்னும் வளிமண்டலத்தினூடாகத் தற்குறிக்கோள் அல்லது ஊழ் என்னும் ஒளி மண்டலம் நோக்கி முன்னேறுகின்றது. கருத்துத் தளத்திலும் கருத்தின் கருவாகிய அக உள்ளத்தின் காரணகாரியத் தொடர்புத் தளத்திலும் நல்லெண்ணமும் அன்பொளியும் நிரம்பியிருந்தால்தான் வினைக்களமாகிய புறத் தளத்தில் வெற்றி ஏற்படும். ஏனெனில் இவையே புற வளர்ச்சிக்குரிய அக உரக் கூறுகள். பகைமை, வெறுப்பு, பொறாமை, கீழ்த்தர அவாக்கள் ஆகிய மாசடைந்த எண்ணங்கள் அகத்தளத்தில் உலவினால், வினைக்களத்தின் விளைவுகள் வருத்தம் தருபவையாகவே இருக்கும். இவற்றுக்கு நேர்மாறான, இவற்றின் மாசகற்றும் எண்ணப் பண்புகள் அன்பு, மென்னயம், பரிவு, தன்னல மறுப்பு ஆகியவை. இத் தூய எண்ணங்களே சிந்தனைக் களத்துக்குச் சிறப்பளிக்கும் நற்றொடக்கங்கள். அவை இன்ப விளைவுகளுக்கு நம்மை ஏற்றிவிடும் ஏணிப் படிகள். இவை நேரடியான, வெளிப்படையான, எளிதில் காணத் தக்க உண்மைகள்; நடைமுறையில் முழுதும் நிறைபயன் தரத் தக்கவை. இருந்தபோதிலும் இவற்றை அறிந்து கொள்ளாதவர், அறிந்துகொள்ள முற்படாது புறக்கணிப்பவர், அறிந்துகொள்ள விரும்பாது விலகியகல்பவர் எத்தனைபேர்? வாழ்க்கை, தோட்டம்: உள்ளம் விதைப்பண்ணை விதைகளை எங்கே, எப்போது, எவ்வாறு விதைக்க வேண்டும் என்பதில் கருத்துச் செலுத்தும் தோட்டக்காரனுக்குத் தோட்டம் தன் முழுவளமும் தரும். இவை அவன் நற்றொடக் கங்கள் - இவற்றின் குறைபடா நிறை விளைவே அவனுள்ளத்தை முழுவதும் மகிழ்விக்க வல்லது. இதுபோல, தன் உள்ளத்தில் உறுதி வாய்ந்த, நலந்தரும், அன்பு எண்ணங்களை எவ்வாறு விதைப்பது என்று ஆராய்பவன் வாழ்வில் மிகச் சிறந்த பயனைப் பெறுவான். இன்பத்தின் மெய்வடிவையும் அதை அடையும் மெய்வழிகளையும் அவனே எளிதில் எய்துவான். நல்லனவாகிய தூய, மேலான பண்புகளை உள்ளத்தில் நீராக உலவவிடுபவனை நாடியே பேரளவில் எல்லையிலாப் பேரின்ப வெள்ளம் வந்து பாயும். நேர்மையான கருத்துக்களைப் பின்பற்றித் தொடர்வன நேர்மையான செயல்களன்றி வேறு எவையும் அல்ல. நேர்மை வாய்ந்த செயல்களைப் பின்பற்றித் தொடர்வது நேரிய வாழ்க்கையன்றி வேறெதுவுமன்று. நேரிய வாழ்க்கையோ பேரின்பத்தின் வாயில் கடந்து ஒருவனை இட்டுச் சென்றுவிட வல்லது. எனவே நேர்மையான சிந்தனைகளை மேற்கொள்க. அதன்பின், பேரின்பத்தை நீ தேட வேண்டாம். அது உன்னை நாடிவரும். உன் கருத்துக்களின் நன்மை தீமைக் கூறுகளில் ஆராய்ச்சியை உள்முகமாகச் செலுத்து. கருத்துக்களின் கெட்ட கூறுகளையும் கெட்ட கருத்துக்களையும் படிப்படியாக விலக்கு. அவற்றினிட மாக நல்ல கருத்துக்களையும் கருத்துக் கூறுகளையும் தேர்ந் தெடுத்து நிரப்பு. இவ்வாறு செய்வாயானால், உன் உள்ளும் புறம்பும் ஒவ்வோர் அணுத்துகளும் வெற்றி ஒளியில் மின்னி மினுங்கிச் சுடரிடும். அவற்றின் கனிந்த செவ்வொளி உன் பாதையில் வெற்றி நிலவொளி வீசும். உன் சூழல்களனைத்தையும் வெற்றிச் சூழல்களாக்கும். பொங்கும் நிறைவளம் இந்தப் புறவெற்றி புறவெற்றியாகவே நின்றுவிடுவதன்று. அஃது உன் அகத்தை முன்னிலும் தூய்மைப்படுத்தி, மேலும் நேரிய நல்லெண்ணங்களை வளர்க்கும். உன் சமுதாயச் சூழலிலும் உன் துணைவரான ஆடவர் பெண்டிர், உறவினர், நண்பர் ஆகியவர் உள்ளங்களிலும் இது படிப்படியாக இதே வகை நல்லெண்ணங்களைப் பரப்பும். உன் பாதை மேன்மேலும் மலர்ப்பாதையாக, இன்பத்தினூடாகப் பேரின்பத்துக்கு, பேரின்பத்தினூடாகப் பெரும் பேரின்பத்து என்றும் இடையறாது வளர்ந்து வரும் பொங்கற் பேரின்பத்துக்கு இட்டுச் செல்லும் இன்னிலவுப் பாதையாக மிளிரும். உன் நற்றொடக்கம் நல்விளைவுகளைத் தருவதுடன் மேன் மேலும் நற்றொடக்கங்களைப் பெருக்கும். உன்னைச் சூழ உள்ள வர்கள் உள்ளத்திலும் அது நற்றொடக்கச் சிந்தனையலைகளைப் பரப்பும். இவை உன் வாழ்விலும் உன் சூழலிலும் பேரின்ப அமைதியை உலவவிடும். தீய கருத்துக்கள் பிறப்பில் துயர் தருபவை. வளர்ச்சியிலும் வேதனை உண்டு பண்ணுபவை. அவற்றின் விளைவுகளும் துன்ப மயமாகவே இருக்கும். இவற்றினுக்கெதிராக, நேரிய கருத்துக்கள் பிறப்பில் இன்பம் வழங்கும். வளர்ச்சியில் பேரின்பம் பரப்பும். அவற்றின் பயனும் நீடித்த இன்பமாகவே அமையும். மெய்யறிவை நாடும் ஒருவன் கண்டு பின் மேற்கொள்ள வேண்டிய நற்றொடக்கங்கள் இம் மூன்று மட்டுமல்ல, இன்னும் பல உண்டு. ஆயினும் அவற்றில் முதலாவதும் கடைசியாவதும், மிக முக்கியமானதும், மற்ற எல்லாவற்றையும் தன்னகத் தடக்கி யதும் ஒன்றே - உளத்தின் சிந்தனைகளில் நற்றொடக்கம் காண வேண்டும் என்பதே! நிலையான பேரின்பத்தின் தலையூற்றும் உயிர்முதலும் இதுவே. ஆனால் இந்த ஒன்று நிறைவேற, நாம் வளர்க்க வேண்டும் பண்புகள் பல. தன்னடக்கம், தன்னுறுதி, தற்கட்டுப்பாடு, வலிமை, தூய்மை, அன்புக்கனிவு, தொலை நோக்கு, முழுதுணர் ஆற்றல் ஆகியவை அதற்குத் தேவை. இவற்றைத் தமதாக்கியவர்கள் வாழ்வில் முழுநிறைவு அடை வார்கள். சிந்தனையில் முழுநிறைவாற்றல் பெறுவார்கள். இந்நிறை சிந்தனை எல்லாத் துயர்களையும் போக்கடிக்கும். ஒவ்வொரு கணத்தையும் அமைதியுடையதாக்கும். அதனை உடையவன் வாழ்நாள்கள் யாவும் இன்ப நிறைவுடையன ஆகும். உலப்பிலா நிலவரப் பேரின்பம் அவனைச் சுற்றி உலவும். அடிக்குறிப்புகள் 1. “ஹடட உடிஅஅடிn வாiபேள. நயஉh னயலள’ள நஎநவேள, கூhயவ றiவா வாந hடிரச நெபin யனே நனே; டீரச யீடநயளரசநள யனே டிரச னளைஉடிவேநவேள ஹசந சடிரனேள லெ றாiஉh றந அயல யளஉநனே. 2. “றுந hயஎந nடிவ றiபேள, றந உயnnடிவ ளடியச; க்ஷரவ றந hயஎந கநநவ வடி ளஉயடந யனே உடiஅb.” - டுடிபேகநடடடிறள. 3 “குடிச உடிஅஅடிn டகைந, வைள றயவேள ஹனே றயலள, றடிரடன ஐ ளநவ கடிசவா in நெயரவநடிரள hரநள.” - க்ஷசடிறniபே 4 “நுஎநசல னயல ளை ய கசநளா நெபinniபே; நுஎநசல அடிசn ளை வாந றடிசடன அயனந நேற. லுந றாடி யசந றநயசல டிக ளடிசசடிற யனே ளinniபே, ஹ hடியீந கடிச அந யனே ய hடியீந கடிச லடிர.” 5 “டுகைந றiவாடிரவ ய யீடயn, ஹள ரளநடநளள யள வாந அடிஅநவே வை நெபயn. ளுநசஎநள அநசநடல யள ய ளடிடை கடிச னளைஉடிவேநவே கூடி வாசiஎந in, யn நnஉரஅசெயnஉந நசந hயடக ளயீநவே.” 2. சிறு கடப்பாடுகளும் கடமைகளும் 1முன்னுள்ள கடமையிலே முழுதளவும் ஆழ்ந்து முனைவதுவே வானுலக வாயிலதன் திறவாம்! முந்துற் றுளையாமல், பிந்துற் றிழவாமல் வந்துற்றார் காண்பர் திரைநீத் ததனொளியே! தங்கித் தயங்காமல் தடங்கெட விரையாமல் மங்கா ஒளி தொலைவில் வீசும் விண்மீன்போல அன்றன்றாட அலுவலின் சிறிய ஆழியைத் தன்முழு ஆற்றலோ டியக்குக, என்றும் அமைதியில் இழைந்தே! - கவிஞர் கெதே சரியான நற்றொடக்கம் பேரின்பத்துடன் இணையறாத் தொடர்புடையது. தவறான தீத் தொடக்கமோ மாளாத் துய ருடன் இறுகப் பிணிப்புண் டிருப்பது. இத்தொடக்க விளைவு களுக்கிடையே எண்ணற்ற சிறு கடப்பாடுகளும் கடமைகளும் உள்ளன. இவையும் நற்றொடக்க நல்விளைவுகளுடனோ, தீத் தொடக்கத் தீவிளைவுகளுடனோ நீக்கமற்ற நெருங்கிய தொடர்புடையவையாகும். கடமையும் கடப்பாடும் தனிப்படத் தம்மளவில் நன்மையோ தீமையோ, இன்பமோ துன்பமோ விளைவிப்பவை அல்ல. அது அக்கடமையையோ, கடப்பாட்டையோ மேற்கொள்பவர் அவற்றின் வகையில் கொள்ளும் மனநிலையையும் மனப் போக்கையுமே பொறுத்ததாகும். செயலின் முடிவான விளைவு அச்செயலையோ, அதன் தற்காலிக வெற்றி தோல்விகளையோ கூடப் பொருளாகக் கொண்டதன்று. அதனை அணுகுபவர் மனப்பண்பை மட்டுமே சார்ந்தது. மெய்யறிவின் இயல்புகள் சிறு செயல்களைத் தன்னலமில்லாமல், உள்ளார்ந்த மெய் யறிவுடன், முழுநிறை பண்புடன் செய்வதால் செய்பவருக்குப் பேரின்ப மட்டுமன்றிப் பேராற்றலும் உண்டாகிறது. வாழ்க்கை என்பது இத்தகைய சிறு செயல்களின் முழுமொத்தமே யாதலால், இத்தகையவர் வாழ்வு பேரின்பப் பெருவாழ்வாக மிளிர்கிறது. தன்னலம் உடையவன் பொதுநலம் பேணுவதில்லை; தனிநலமே பேணுகிறான். ஆனால், அவன் விரும்பும் தனி நலத்தையும் அவன் உண்மையில் பெறுவதில்லை. ஏனெனில் தனிநலம் என்பது பொதுநலத்தின் மேல்நிலப்பகுதி மட்டுமே. அதன் உயிர்ப்பகுதி கீழ்நிலத்தில் புதைந்துள்ள பொதுநலப் பகுதியே. தாய்மைப் பருவத்திலும் பால்குடிப் பருவத்திலும் தாயைப் பேணாதவன் பிள்ளையைப் பேணுவதரிது. அதுபோல, மன்பதை வாழ்வின் அடிநிலப்பகுதியான பொதுநலம் பேணாதவன் அதன் கண்கண்ட மேல்நிலப் பகுதியாகிய தனி நலம் பேணாதவனேயாகிறான். மெய்யறிவு என்பது பொதுமையைப் பொதுமையாகவும், தனிமையைத் தனிமையாகவும் கருதும் பேதைமையிலிருந்து விடுபட்ட உணர்வு. அது மட்டுமன்று. பெருமையைப் பெருமை யென்றும் சிறுமையைச் சிறுமையென்றும் கருதுவதுகூட மற் றொரு பேதைமையே. சிறுமை பெருமையின் கூறு, சிறுமையின் திரளே பெருமை. மேலும் சிறுமையின் வளர்ச்சியே பெருமை யாகிறது. பல சமயம் சிறுமையின் நுண்ணயமே பெருமையின் பேரழகாகிறது. ஆகவே மெய்யறிவு என்பது பெருமையிலும் பருமையிலும் பரந்து செல்லும் அறிவு மட்டுமன்று. அது சிறப்பாகச் சிறுமையின் நுணுக்க நுட்பத்தில் கருத்துச் செலுத்துவது. நம் வாழ்வு நாள்முறைச் செயல்களாலும், நாள் முறைச் செயல்கள் இத்தகைய சின்னஞ்சிறு நுட்ப நுணுக்கங் களாலுமே கட்டமைக்கப் பெற்றுள்ளன. சிறு சினைகள் அல்லது சிற்றுப்புக்களாகிய இவற்றின் முழுநிறை நுண்ணயம் காண உழைப்பவன் மொத்தப் பெருவாழ்வில் எவரும் எளிதில் பெற முடியாத மாயப் பேரழகை, மாசு மறுவற்ற வண்ண வனப்பைக் காண்கிறான்; கண்டெய்துகிறான். பெருமை பெருமையன்று, சிறுமையின் ஆக்கமே பெருமை உலகில் எல்லாப் பொருள்களுமே சிறு கூறுகளால் ஆக்கப்பட்டவை. அச்சின்னஞ் சிறு கூறுகளின் முழுவனப்பே பொருளின் வனப்புக்கு அடிப்படையாய் அமைகிறது. சிறு கூறுகளில் ஒன்று ஊறுபட்டாலும் மொத்த முழுமையின் அழகமைதி முற்றிலும் கெட்டுவிடும். எந்தச் சிறு கூறுகளாவது விடுபட்டுவிட்டால் மொத்த முதல் ஆக்கம் பெறாமலே போய் விடும். மண்ணுலகம் சிறுசிறு துகள்களாலானது. சிறு துகள் இன்றேல், இம்மண்ணுலகம் இல்லையாகும். எனவே மண் ணுலகின் நேர்த்தியெல்லாம் இச் சிறு துகள்களின் நேர்த்தியே. சிறு கூறுகள்தானே என்று சிறு பொருள்களைப் புறக்கணிப் பவன் பெரும்பொருள்களில் அழகு காண முடியாது, அவலக் குளறுபடிகளையே காண முடியும். விண்மீனுக்கு எத்தனை சுடர்வண்ணம் உண்டோ அத்தனையையும் பனிமணியிலே காணலாம். கோளினங்களின் செவ்வொழுங்கினை நாம் அணுக்களிலும் காண இயலும். மனித உடலில் காணப்படும் அதே கணக்கியல் பிசகாத வியத்தக்க உறுப்பமைதியை நுண்ணுயிர்களும் மரங்களும் காட்டுகின்றன. இழைத்த கல்லை இசைத்தடுக்கியே எழிலார்ந்த சிற்ப வேலைப் பாடமைந்த கோயில்கள் கட்டப்படுகின்றன. இவ்வெல்லா நிலைகளிலும் சிறுபொருள் பெரும்பொருளுக்கு முன்னோடி யாகவே அமைகிறது. சிறுமை பெருமைக்குத் துணைக்கூறு மட்டுமன்று; பெருமையின் மூலத் தாயகமும் அதன் பண்புத் தலையூற்றும் அதுவேயாகும். பெருமையின் திசை பணிவு, பகட்டாரவாரமல்ல பகட்டை விரும்பும் வெற்றாரவார மனிதர்கள் பெருமையை நாடுவது இயல்பு. எளிதில் பெரியவராகும் எண்ணத்தில் அவர்கள் பெருங்காரியங்களையே விழைவார்கள். சிறு செய்திகளைப் பொருட்படுத்தாமல் புறக்கணிப்பார்கள். இச்சிறு செய்திகளில் ஆரவாரப் புகழ் கிடையாது. ஆகவே, அவை அற்பக் காரியங்கள், பெரியவர்கள் கவனத்துக்கு உரியன அல்ல என்று அவர்கள் கருதுவர். ஆனால் இப்புறக்கணிப்பின் பயனாக, அவர்கள் பெருங்காரியங்கள் எதையுமே செய்ய முடியாமல் போய்விடுகிறது. அவர்கள் பெரியவர்கள் ஆதலும் அரிதிலும் அரிதாகிவிடுகிறது. இதுமட்டுமன்று; அவர்கள் பெருமையின் திசையிலேயே செல்வதில்லை. பெருமையின் திசை பணிவு. அதன் பாதையிலுள்ள நாழிகைக் கற்களே பண்புகள். இவ்விரண்டும் எளிதில் பெருமை பெற்றுவிடக் கருதுபவர்களிடத்தில் ஒரு சிறிதும் இருக்க மாட்டாது. பணிவே மெய்யறிவின் தலையூற்றாதலால், அவர்கள் என்றும் மெய்யறிவு பெறமாட்டார்கள். பகட்டு விரும்புபவர் நாடும் பெருமை அதற்காக அவர்கள் மேற்கொள்ளும் தற்பெருமையுடன் நின்றுவிடும். அவர்கள் பெருமைப் பேச்சுப் பயனடைவதில்லை. பெருமையடைவ தில்லை. முடியாத கற்பனைக் காரியங்களைப் பற்றிப் பேசிப் பசப்பும் வெற்று வீம்புரையாகவே அஃது அமையும். இது காரணமாகச் சமுதாயத்தில் வெற்றுரை வீணருக்குரிய ஏளன மதிப்புமட்டுமே அவர்களுக்குக் கிட்டக்கூடும். உண்மையான மதிப்பு ஏற்பட முடியாது. பெரியவர்கள் என்பவர்கள் யாவரும் உண்மையில் தன்னலம், தற்பெருமை துறந்து, பணிவுடன் சிறுசெய்திகளில் நுணுகிக் கருத்துச் செலுத்துபவர்களே யாவர். இன்றியமையாத வாழ்க்கைப் பொதுச் செய்திகள் ஆரவாரப் புகழோ பெருமையோ அளிக்கமாட்டா. அவற்றுக்காக எத்தகைய பரிசுகளும் வழங்கப்படுவதில்லை. இதையறிந்தும் அவர்கள் எளிமையுடனும் தன்னல மறுத்தும் அவற்றில் ஈடுபடுகின்றனர். ஆனால் இச்செயல்களுக்குப் புறப்புகழும் புறப்பரிசும்தான் இல்லை. அகப்புகழ், அகப்பரிசு உண்டு. அதுவே இன அறிவாகிய மெய்யறிவும், இன ஆற்றலாகிய உயிராற்றல் அல்லது ஆன்மிக ஆற்றலும் ஆகும். இங்ஙனம் பெருமை நாடாமலே பெரியார் பெருமையடை கின்றனர். ஏனெனில் அவர்கள் பெருமைக்குரிய பண்புகளை நாடினர். மெய்யார்வ உறுதி, தன்னலமறுத்த பொதுநலப்பாசம், தன்மதிப்பார்ந்த நடுநிலை கோடா நேர்மை, வாய்மை ஆகியவை அவர்களுக்கு அகத்தூண்டுதல் தந்தன. சிறு கடப்பாடுகளிலும் கடமைகளிலும் இப்பண்புகளின் பயிற்சி மேற்கொண்டு அவர்கள் இப்பண்புகளை வளர்த்தனர். அவையே பெருமைக் குரிய படிகளாதலால், அவர்கள் வேறு முயற்சியில்லாமலே பெருமையின் உயர்தளத்தில் ஏறி உலவும் வாய்ப்புப் பெறு கின்றனர். சிறு செய்திகள், தெய்வீக அமைதிக் கூறுகள் கணங்களிலும் கணநேரச் சிறுசெயல்களிலும் உள்ளூரக் கருக்கொண்டுள்ள பாரிய ஆற்றலைப், பெருமைக்குரியவன், பெருமையின் திசையறிபவன் உணர்கிறான். சரியான சிறு சொற்கள், ஆளுக்கேற்ற வணக்க வழிபாடுகள், நேரத்துக்கேற்ற உணவு, உடை, எழுத்துப் போக்குவரவுகள், தேவைப்பட்ட அளவு ஓய்வு, உழைப்பு, சிறு முயற்சிகள், சிறுதிறத் தற்காலிகக் கடப்பாடுகள் - ஆயிரக்கணக்கில் இத்தகைய சிறு செய்திகள் வாழ்க்கையில் நாள்தோறும் வந்து குவிகின்றன. செயலை எதிர்நோக்கி நேரத்துக்கு நெருக்கடி விளைவிக்கின்றன. இத் தகையவற்றைச் சரிவரச் செய்ய அமைதி வேண்டும், பொறுமை வேண்டும். ஒரு சிறிது மன அலைவுடையவனுக்குக் கூட ‘இவற்றைச் செய்வது அரிது, செயலுக்கான போதிய பயனும் அற்றது’ என்று தோன்றும். ‘செய்யாது விடுவது எளிது, அதனால் பெருங்கேடு இல்லை’ என்றும் அத்தகையவர் கருது வார்கள். ஆனால் செய்யாது ஒதுக்க ஒதுக்க, அவை பெருந் தொல்லைகளாக வளர்ந்து எங்கும் மனக்கசப்பையும் வெறுப்பை யும் பரப்பும். பெருமைக்குரியவன் இவற்றில் பெருங் காரியங் களுக்குரிய முழுநிறை கவனம் செலுத்தித் தன்னைச் சுற்றிலும் இனிமைச் சூழலை வளர்க்கிறான். இச்சிறு செய்திகள் இயற்கையாய் அமைவன, தெய்வீக அமைதிக் கூறுகள் என்று பெருமைக்குரிய பண்பாளன் எண்ணுகிறான். ‘அவற்றைப் பேரின்பப் பாதையின் வளமாக்க வேறெதுவும் தேவையில்லை. தன்னலமோ, கோபதாபமோ, விருப்பு வெறுப்போ அற்ற அமைந்த சிந்தனையும், படபடப் பில்லாத பொறுமை வாய்ந்த செயலும் போதியவை’ என்று அவன் உணர்கிறான். ஆகவே அவன் அவசரப்படுவதில்லை. எதையும் செய்யாது விடுவதில்லை. தவறு, மடமை என்றறிந்த வற்றைத் தவிர, எதையும் அவன் விலக்க முயல்வதில்லை. பின்னால் செய்வோம் என்று அவன் எந்தச் செயலையும் ஒத்திப் போடுவதில்லை. அந்த அந்த நேரத்தில் அந்த அந்த வேலையைச் செய்து முடித்து விடுகிறான். செய்ய வேண்டாததைச் செய்து விட்டோமே என்றோ, செய்ய வேண்டுவதைச் செய்யாது விட்டோமே என்றோ என்றும் அவன் கழிவிரக்கம் கொள்வ தில்லை. ஏனெனில் இரு தவறுகளுக்கும் அவன் ஆளாவதே அரிது. ஆளானாலும், அத்தவற்றை மறுபடியும் செய்யாம லிருப்பதில் மட்டுமே அவன் கருத்துச் செலுத்துவான். சென்று விட்டது பற்றி வேறெவ்வகையிலும் எண்ண அவன் நேரமோ அறிவோ இடம் தர மாட்டாது. எளிமையில் புதைந்துள்ள பேராற்றலே பெருமை தொலைக் கடமைகளை அவன் தேடிக் காத்திருக்க மாட்டான். அருகிலுள்ள உடனடிக் கடமைகளைச் செய்து முடித்துக் கொண்டே போவான். அவற்றைச் செய்வதில் அவன் இன்பதுன்பங்களைப் பொருட்படுத்த மாட்டான். குழந்தை களின் கள்ளங்கபடமற்ற எளிமையுடன் அவன் செயலாற்று வான். ஆனால் அந்த எளிமையினுள்ளே அவனுமறியாத பேராற்றல் அடங்கியுள்ளது. எளிமையில் புதைந்துள்ள இப் பேராற்றலின் மறு பெயரே பெருமை. சிறு செய்திகளின் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தாத உலக முதல்வர் இல்லை. “அரசருடன் இருந்து உண்பவரைப் போல, உன் வீட்டிலும் இருந்து உண்பாயாக!” என்றார் அறிவர் கன்பூசியஸ். “செய்ய வேண்டுவது எதுவாயினும் அதை முழு ஊக்கத்துடன் திருந்தச் செய்க!” என்று மற்றொரு பேரருளாளர், புத்தர்பிரான் வகுத்துரைத்தார். இவ்வாசகங்கள் சிறு செயல்களின் அளக்கலாகா ஆற்றலைச் சுட்டிக் காட்டுகின்றன. சிறு காரியங் களைச் சிறுகாரியங்களென்று கருதிப் புறக்கணிப்பதோ, அவற்றை அரைகுறை மனதுடன் விட்டதொன்று தொட்ட தொன்றாக ஒழுங்கின்றிச் செய்வதோ அறிவற்ற பெருவழு ஆகும். கடமைகள், உயிர் வளர்ச்சியின் படிகள் ஒவ்வொரு கடமைக்கும் அததற்குரிய சரியான நேரத்திலும் இடத்திலும் மனிதன் தன் முழுக்கருத்தையும் தன்னலமற்ற சிந்தையையும் அளிக்க வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு கடமையும் நிறைவேறி வாழ்க்கை இயல்பான படிப்படியான உயிர் வளர்ச்சி பெறும். ஒவ்வொரு கடமையும் நிறைவேறுந் தோறும் அடுத்த கடமைகள் அடுக்கின்றன. பல கடமைகள் நிறைவேறும்போது புதிய கடமைகள் கூட்டுக் கடமைகளாக எல்லை விரிந்தும், உயர் கடமைகளாகப் பண்பில் உயர்ந்தும் மலர்ச்சியடைகின்றன. இவை மனிதனுக்குரிய ஆற்றலை வளர்க்கின்றன. அவற்றின் செயல் நிறைவேற்றம் ஒவ்வொன்றும் அவன் அறிவை, நுண்ணாற்றலை, நற்பண்பை வளர்க்கின்றது. கடமை நிறைவேற்றுதல் மூலம் மனிதன் படிப்படியாகத் தன்னையறியாமலே மேன்மேலும் உயர்படிக்கு வளர்கிறான். இவ்வளர்ச்சி செடியின் வளர்ச்சிக்கு ஒப்பாகும். உண்டுவாழும் ஒரு செயலையே செடி பலபடிகளில் செய்கிறது. ஆனால் இந்த ஒரு செயலின் படிகள் மூலமே அது உயர்ந்து பரந்து வளர்கிறது. இலை தளிர் தழைக்கிறது; பூக்கிறது. ஏனெனில் செடி மேற் கொள்ளும் ஒவ்வொரு செயலின் படிகளும் உயிர்வாழ்வை ஊக்குகின்றன. உயிர் வாழ்வு மற்றப் பல்வண்ண வளர்ச்சிகளைத் தானே தன் மரபில் நின்று செய்து விடுகிறது. கடமை நிறை வேற்றம் இதுபோலவே ஆன்மிக ஆற்றலைப் படைத்து உருவாக்கி வளர்த்துவிடுகிறது. அந்த ஆன்மிக ஆற்றல் மாய உயிராற்றலாதலால், முயல்பவன் அறியாமலே இயற்கை வழி நின்று மலர்ச்சியடைகிறது. மனிதன் சிறு செயல்கள் எல்லாம் உண்மையில் உயிர்க்கட்டடமாகிய இந்த ஆற்றலை எழுப்பும் ஒவ்வொரு படிகள் ஆகும். ஒவ்வொரு சிறு கடமையும் ஒரு கல்லாக அல்லது கட்டட உறுப்பாகத் தனித்தனி நயம்படச் செய்து ஒன்றுடன் ஒன்று இசைவித்து மனிதன் கட்டடத்தை முழுமையாக்குகிறான். இவ்வுயிர்க் கட்டடத்தில் உறுப்புக்கு உறுப்பு, பகுதிக்குப் பகுதி முரண்பாடும் சிக்கலும் இல்லாமல் அவன் நற்றொடக்கமும் அகத்தூண்டுதலும் பார்த்துக் கொண்டால், அவ்வுரியிர்க் கட்டடமே ஆன்மிக வாழ்வாகத் தன் உயிர்ச்செயல்களின் மூலம் இயல்பாக அமைந்துவிடும். ஆற்றல் பயிற்சி: இயற்கை முறையும் போலி முறைகளும் தன்னாற்றலையும் ஒருமுகச் சிந்தனை உறுதியையும் வளர்ப்பதற்கான வகைதுறைகள் எத்தனையோ நம்மிடம் தரப்படுவதுண்டு. அவற்றின் விளம்பரங்களை நாம் எங்கும் காணலாம். ஆனால் அவற்றில் ஒன்றில்கூட வாழ்க்கை அனுபவத்துக்குரிய ஒரு சிறு யோசனையையும் பார்க்க முடியாது. ‘மூச்சுப் பயிற்சி’, ‘இருக்கைப் பயிற்சி’, ‘காட்சிப் பயிற்சி’, ‘அகநோக்குப் பயிற்சி’ - இவையே பொதுவழக்காய் உள்ளன. வாழ்க்கையின் மெய்ந்நிலை நடைமுறைகளுடன் தொடர்பற்ற இப்பழக்கங்கள் யாவும் போலியான செயற்கை வகை துறைகளேயாகும். அருமுயற்சியுடன் இவற்றில் ஆற்றலும் நேரமும் முயற்சியும் ஈடுபடுத்துபவர் பலர். ஆனால் இவற்றைவிட நேரான பாதையை - ஒரே நேரான பாதையான கடமைப் பாதையைப் பின்பற்றுபவர் மிகச் சிலர். நாள்முறைக் கடமைகள் அனைத்திலும் முழு மூச்சாக ஒருமுகப்பட்டு உழைத்து இப் பாதையைப் பின்பற்றுவது ஒன்றே உண்மையில் தன் ஆற்றலை யும் ஒருமுகச் சிந்தனைத் திறத்தையும் வளர்க்கும் வழி ஆகும். இப்பாதை பெரும்பாலும் பலர் செல்லாத, பலர் காணக் கூட முனையாத, பலருக்குத் தெரியவராத பாதையாகவே இருக்கிறது. ஏனெனில் இஃது இயற்கைப் பாதை, உடனடி வளர்ச்சியைப் பகட்டாகக் காட்டாது, இயல்பாகப் படிப்படியாக மலர்ச்சியூட்டும் பாதை, வளர்பவர் அறியாமலே வளர்ச்சி உண்டு பண்ணும் பாதையாகும். ஆற்றல் பெறுவதற்காக வலிந்து கடுமுயற்சி செய்து பின்பற்றும் செயற்கை முறைகள் யாவும் வீணானவை, விலக்கத் தக்கவை, குழந்தை மனிதனாவதற்குக் காலத்தில் பரவிய படிப் படியான வளர்ச்சியன்றி வேறு குறுக்கு வழியோ சுருக்கு வழியோ இருக்க முடியாது. அதுபோலவேதான் அறியாமையிலிருந்து அறிவுக்கு, மயக்க அறிவிலிருந்து மெய்யறிவுக்கு, வலிமைக் கேட்டிலிருந்து வலிமைக்குச் செல்ல வளர்ச்சியன்றி வேறு வகைத் துறை தேடுவது வீண் முயற்சியாகும். நாளுக்கு நாள், சிறிது சிறிதாக, கருத்துடன் கருத்தும் முயற்சியுடன் முயற்சியும், செயலுடன் செயலும் இணைத்துத்தான் இவ்வளர்ச்சி ஏற்பட முடியும். இருக்கைப் பயிற்சி, இடக்குமுடக்குப் பயிற்சிகள் மூலம் நீடித்த விடாமுயற்சியால் ‘பக்கிரி’கள் அல்லது அடயோகிகள் சிலசில அருந்திறங்கள் அடைகின்றார்கள் என்பது உண்மையே. ஆனால் அவர்கள் பெறும் பலன் நோக்க, அவர்கள் மேற் கொள்ளும் தொல்லை மிகமிகப் பெரிது. அத்தொல்லைகளை நோக்கக் கிடைக்கும் பலன் மிக மிகச் சிறிது. அத்துடன் ஒரு திசையில் அவர்கள் பெறும் சிறு பயனுக்கெதிராக, மற்றத் திசைகளில் அவர்கள் அதற்கீடான, அதில் பன்மடங்கான இழப்புக்கும் ஆளாக நேர்கிறது. தவிர அடயோகிகள் எங்கும் பிறருக்கு வேடிக்கை காட்டும் படி சில அருந்திறங்களை வலிந்து மேற்கொண்ட கோமாளி களாக இருக்கிறார்களேயல்லாமல், உரமிக்க உடலோ, வலிமை வாய்ந்த உள்ளமோ உடையவர்களல்லர். அவர்கள் திறமை கூட முழுமனிதருக்குரிய சரிசம நிலைப்பட்ட திறமையன்று. உறுப்புக் குறைபட்டவர்க்குக் கிட்டும் சரியீட்டுத் திறமை, சரிசம நிலை கெட்ட திறமையேயாகும். பிறருக்குச் செப்படிவித்தை காட்டும் ஒரு சிறு நலனுக்காக, வாழ்நாள் முழுவதும் இத்தகு திறம் உடையவர்கள் உறுப்புக் குறைந்தவர் அல்லது நோயாளிகள் போல வாழ வேண்டியவர்கள் ஆகின்றனர். அகநிலை அமைதியே ஆன்மிக ஆற்றல் தளர்ந்த சமநிலையற்ற உணர்ச்சியுடையவர்கள் மிச் சிறு புறத்தூண்டுதலின்பேரில் அமைதியிழந்து ஆராயாத திடீர் செயலுக்கு ஆளாகிறார்கள். அவர்கள் நாள்முறைப் பொது வாழ்வில் நச்சரிப்புக்கள், தொல்லைகள், அறியாப் பிழைகள், ஒழுக்கக் கேடுகள் பெருக்கமுறுகின்றன. இவற்றை வென்று ஆட்கொள்வதே உண்மையான ஆன்மிக ஆற்றல் அல்லது தன்னடக்க ஆற்றல் ஆகும். இஃது அமைதியிலாது உலைவுறும் மக்கள் திரளிடையே ஒருவனுக்குச் சரிசமநிலை வாய்ந்த அமைதி தரும். உணர்ச்சிக் கொந்தளிப்புடையவர்களிடையே நன்மை தீமை ஆயும் ஆற்றலுடைய அறிவமைதி உண்டுபண்ணும். உலகியல் கடமைகளின் நெருக்கடி வாய்ந்த கொந்தளிப்பு களிடையே தன்னடக்கத்தின் விளைவாகிய ஆன்மிக அமைதி உவப்பு உவர்ப்பற்ற நடுநிலை, தன்னிறைவு, தன்னமைதியை வலுப்படுத்தும். அதுவே ஆன்மிக ஆற்றல். இவ்வாற்றலில் குறைந்த எதுவும் ஆற்றலாகமாட்டாது. அத்துடன் இந்த ஆற்றலை மற்ற ஆற்றல்களைப் போல் திடுமெனப் பெறவும் முடியாது. திடுமென இழந்துவிடுவதற்குரியதும் அன்று. அது பொது நிகழ்ச்சிகளின் படிப்படியான மலர்ச்சியாகவே பெறத்தக்கது. முயற்சி வெற்றி தரினும் தராவிட்டாலும் அம் முயற்சியால் ஏற்படும் ஒவ்வொரு வெற்றியின் பின்னும், ஒவ்வொரு தோல்வி யின் பின்னும் அது மேன்மேலும் ஆண்மையுடன் முதிர்வுறு கிறது. மேன்மேலும் தன்னலம் என்ற சறுக்குக் குழியி லிருந்து விலகிப் பொதுநலமென்னும் உறுதியான கல்மீது கட்டடமமைக்கப்படும். அவசியமிக்க பெருங்கடமைகளும் சரி, அவசியமிக்கதாகத் தோற்றாத சிறு கடமைகளும் சரி, இரண்டும் இத்தகைய நிறைவுக்குரியவையே. உள ஆற்றல் பெறும் வகைகளிலோ, உள ஆற்றலிலோ பிறர் மூக்கிற் கை வைத்து மருட்சி கொள்ள வைக்கும் மாய மந்திர இரகசியம் எதுவும் கிடையாது. ஏனெனில் மாய மந்திரங்கள் தரும் ஆற்றல் செயற்கையாற்றல்; நிலையான ஆற்றலுமன்று. செயற்கைச் சூழ்ச்சிகள் சிறிது மாறிவிட்டால் அது தோல்வி தருவது. அச்செயற்கை ஆற்றல்களைக் கையாளும் சமயம் வெற்றியை எதிர்பார்த்து வீம்பு முனைப்பாய் எழும். வெற்றி தவறி விட்டாலோ, உடனே சிடுசிடுப்பு, ஏமாற்றம், மனக்கசப்பு ஆகியவை உண்டாகும். மருட்சி கொள்ளவேண்டிய காட்சி யாளர் ஏளனம் செய்து சீற்றத்தையும் எரிச்சலையும் மிகுதி யாக்குவர். தன்னடக்கத்தின் ஆன்மிக ஆற்றலில் உள்ளுரமுண்டு; நம்பிக்கை அமைதி உண்டு. கோபதாபங்கள், மயக்க தயக்கங்கள், மருட்சி யச்சங்கள், கழிவிரக்கங்கள் கிடையா. அதில் படபடப்புக் கிடையாது. விடாமுயற்சியும் எல்லையற்ற பொறுமையும் மட்டுமே உண்டு. உண்மையான தன்னடக்க ஆற்றல் பெற்றவன் தன்னாண்மையுடையவன்; தன்னை அடக்கியாள்பவன். தன்னை யடக்காது மற்ற எதை அடக்க முயல்பவனும் ஆட்சியாற்ற லுடையவனாகான்; போலி ஆற்றல், மயக்க ஆற்றலே உடையவன் ஆவான். ஒருமுகச் சிந்தனைப் பயிற்சி தன் முன்னிலையில் வந்து நிற்கும் ஒவ்வொரு வினையையும் - அது சிறு வினையாயினும் பெருவினையாயினும் - அதைத் தன் முழு உள்ளத்தின் ஆற்றலுடன் செய்பவனே அவ்வவ் வினையின் அகப்பயன், ஆட்சிப்பயன் பெற்றவனாவான். அவன் தன் உயிருணர்ச்சி, ஊக்கம் முழுவதையுமே அவ்வொரு குறுகிய எல்லையிலேயே முற்றிலும் செலுத்த வேண்டும். அந்த எல்லைக்குப் புறம்பாக உள்ள எந்தச் செயலிலும் நிகழ்ச்சியிலும் எந்த வினையிலும் அவன் கருத்துச் செலுத்துதல் ஆகாது. அவ்வினையின் சிறுமை பெருமைகளில், வெற்றி தோல்விகளில் கவனம் செல்ல விடாமல், அதனை முற்ற முழுக்க வழுவறச் செய்து முற்றுவிக்க அவன் பாடுபட வேண்டும். ஒருமுகப்பட்ட கடமைப் பயிற்சியில் முனைபவன் வினையின் வெற்றி தோல்விகளுக்கு, சிறுமை பெருமைகளுக்கு அப்பாற்பட்ட உண்மைப்பயனை அடைவான். அப்பயன் உள்ளத்தை அடக்கியாளும் ஆற்றலுக்கான பயிற்சியின் ஒரு படியே யாகும். துணி தைப்பவன் கைப்பயிற்சி அத்துணியின் இயல்பும் வடிவும், விலையும் உரிமையும் கடந்து வளர்வதுபோல, அவ்வினையின் இயல்பும் தன்மையும் கடந்து அவன் தன் னடக்கப் பயிற்சியில் மேன்மேலும் முன்னேறுகிறான். ஒவ்வொரு வினையும் ஒரு படியாக, ஒருசில அல்லது பல வினைகளின் முடிவில், அவன் முற்றிலும் தன்னைத் தானாண்டமையால் வினைமுதல்வனாகிறான். ஒருமுகச் சிந்தனை காலத்தை ஒருமுகப்படுத்துவது. எல்லை யற்ற முக்காலப் பரப்பை ஒருகண எல்லையே உடைய நிகழ் காலத்துக்குள் அடக்குவது. அச் சிந்தனையில் பழக விரும்புபவன் இறந்த காலத்தைப் பற்றி எண்ணமாட்டான், முன்னே கழிந்த வினைகளில் கருத்துச் செலுத்தமாட்டான். அவன் எதிர் காலத்தைப் பற்றியும் கவலைப்படமாட்டான், மேல் வரும் வினைகள் பற்றியோ, தற்போதைய வினையின் பயன் பற்றியோகூட உள்ளத்தில் ஒரு சிறிதும் நினைவை ஓடவிட மாட்டான். இதனால் எல்லையற்ற இறந்த காலமும் எல்லையற்ற எதிர்காலமும் - தோற்றமற்ற சென்ற காலமும் முடிவற்ற வருங்காலமும் - குறுகிய ஒருகணப் போதாகிய நிகழ்காலத்தில் செறிவுற்று வலிமையுறுகின்றன. எனவே இந்நிகழ்கால வினையில் தன்னைத் தங்குதடையின்றி முற்றிலும் ஈடுபடுத்தி உழைப்பவன், உழைத்து அவ்வினையை முழுநிறைவுடைய திருந்திய செய் வினையாக்குபவன் ஒருமுக ஆற்றலில் வளர்ந்து தன்னடக்கம், தன்னாக்கம், தன்னாட்சி ஆகிய பேறுகளில் முந்துகிறான். புற ஆற்றல்கள் படிப்படியாக அவன் அக ஆற்றல் ஆகின்றன. செயற்கையான, வலிந்த, மாயமந்திரப் பொறிகளால் எட்ட முடியாத நிலையான வல்லமை அவனுக்குக் கை வருகின்றது. புறஆற்றல்கள் ஆற்றலைத் தூண்டும் கருவிகள் மட்டுமே. உண்மையான ஆற்றல் கூறுகள் யாவும் உன்னகமே உள்ளன. புறக்கருவிகளைப் பயன்படுத்தி நீ அவற்றுடன் இடையறாத் தொடர்புகொள்ள வேண்டியதொன்றே நீ மேற்கொள்ள வேண்டும் முயற்சி. இதை அறிவுடன் செய்வது எவ்வாறு என்பது மட்டுமே உன் திறமைக்குரியது. இது செய்யும்வரை, அக ஆற்றல்களைப் படிகளாகக் கொண்டு, மேன்மேல் உயர் தளங்களில் உனக்காகக் காத்துக் கிடக்கும் ஆற்றல்கள், இன்பங் களை நீ சென்றெட்ட முடியாது, உன்னுடையன ஆக்கிக்கொள்ள முடியாது. காலத்தின் முட்டை, கணம்; பெருமையின் உயிர்க்கரு, சிறுமை நிகழ்காலத்தின் நிகழ்கணத்தை உறுதியுடனும், அறிவுடனும் கடைப்பிடித்தொழுகுவதைப் போல உரமும் அறிவும் பெறும் வழி பிறிதில்லை. ஏனெனில் அந்த நிகழ்கணமே உனக்கு அக் கணத்துக்குரிய நிறைவினைக் காட்டும். ஒருகண எல்லையில் தோன்றுவதாகலின், இது பெரும்பாலும் சிறு வினையாகவே அமையும். முதல் நிகழ்கணத்தில் அதைக் கருதாது விட்ட பின்னரே அது கணந்தோறும் பெருவினையாக வளரும்; செயற் கருவினையாகவும் நம் கைப்பிடிவிட்டு மெல்ல மெல்ல நழுவத் தொடங்கும். ஆகவேதான் பெரியாரும் அறிவுக்குரியாரும் எப்போதும் சிறுவினையிலேயே, நிகழ்கணத்தின் நிகழ் வினையிலேயே கருத்து முற்றிலும் ஈடுபடுத்துவர். காலத்தின் முட்டையே கணம்; அதனுள் சிறுமையே பெருமையின் உயிர்க் கரு என்பதை அறிந்தவர்கள் அவர்கள். உண்மையில் நிகழ்கணத்தில் இன்றியமையாததாகத் தேரப் படும் எந்தச் சிறுவினையையும் பெரியாரும் அறிவுடையாரும் சிறுவினையாகக் கருதவேமாட்டார்கள். சிறு வினையைப் பெருவினையின் வித்தாக, முன்னோடியாகக் கருதியே செயல் செய்வர். ஆனால் வலிமையற்றவன், அறிவற்றவன், சிறியவன், சிறுவினைகளைச் சிறிதென்று ஒதுக்கவோ, சிறு மனத்துடன் அரைகுறை ஆர்வத்துடன் செய்யவோ முனைவான். அவன் தன் முழு ஆற்றலையும் ஆர்வத்தையும் பெருவினைகளுக்கென்று ஒதுக்கி வைத்துக் கொண்டிருப்பான். ஆனால் சிறு வினைகள் சிறுவினைகளாகக் கடந்து செல்லுந்தோறும் அவையே பெருவினைகளாக, செயற்கருவினைகளாக அவன் கண்முன் வளர்ந்து கொண்டே செல்லும். சிறுவினையில் தவறிய அவன் தகுதி மேன்மேலும் அதே அளவிலும் குறைந்த வண்ணமாகவே தேய்ந்துகொண்டு செல்லும். தன்னை ஆளச் சிறிதும் முயலாதவனே பெரும்பாலும் மற்றவர்களை ஆளும் பேரவாவுடையவனாயிருப்பான். சிறு செயல்களைத் தட்டிக் கழிப்பவனே பெரும் பொறுப்புக்களை ஏற்கும் பேராவலுடையவனாயிருப்பான். ஆனால் செயற்குரியன அல்ல என்று ஒதுக்கும் ஒவ்வொரு செயலிலும் அவன் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறான். அவை உண்மையில் அவன் தகுதிக்குச் சிறியன அல்ல, பெரியன. அவை மேன்மேலும் அவன் தகுதிக்குப் பெரியன ஆகிக் கொண்டே போகின்றன. அவனும் மேன்மேலும் எவ்வினைக்கும் தகுதியற்ற சிறியவனாகத் தேய்ந்து கொண்டே செல்கிறான். பெருமை அவாவிய அவன் செல்லும் வழி பெருமை நோக்கிய வழியன்று, சிறுமை நோக்கிய வழியே. உண்மையில் பெருமை நோக்கிய வழி சிறுமை அவாவிய வழியேயாகும். ‘நாடினோர் பெறார், நாடாதவர் பெற்றார்’, ‘வேண்டுவோர் எய்தார், வேண்டாதார் எய்துவர்’ என்று மறைநூல்கள் கூறும் ‘வேண்டாமை விழுச் செல்வ’த்தின் மறைதிறவு இதுவே. பண்பு உரம் சிறுவினைகளை வல்லமையுடனும் உறுதியுடனும் செய்து முடிப்பது ஆன்மீக ஆற்றலாகிய அகவல்லமையை வளர்க்கிறது. அதுபோலவே அவற்றை வலிமைக்கேட்டுடனும் தளர்வுடனும் செய்வது ஆன்மீக ஆற்றற்கேட்டை அல்லது அகத்தளர்வைப் பெருக்குகிறது. சிறுவினைகளில் மனிதன் காட்டும் தளர்ச்சி அவன் சிறு பண்புக் கூறுகளின் தளர்ச்சியாய் மட்டும் அமைவ தல்ல. அக்கூறுகளின் தொகை மொத்தமான அவன் வாழ்க்கை முழுவதின் தளர்ச்சியாய் முடிகிறது. தவறான வினைகள், தவறான பண்புகளை நாம் பழிகள் என்கிறோம். அவற்றால் கடுந்துயரம் விளைகிறது என்பதையும் எவரும் அறிவர். ஆனால் அகத் தளர்ச்சியின் பயன்கள் இந்தப் பழிகளின் பயன்களைவிடக் கொடியன. ஏனெனில் அகத்தளர்ச்சிதான் தோல்வியையும் துன்பங்களையும் தருவதுடன், இத்தவறான வினைகளையும் பழிகளையும் தவறான அகப் பண்புகளையும் வளர்த்து அவற்றின் மூலம் துயர்விளைவு பெருக்குகிறது. குருதி உரம் பெற்றதாயிருந்தால், அது நோயணுக்கள் பரவாமல் தடுத்து உடல் நலத்தைப் பேணும். அதுபோல, பண்பு உரம் பெற்றதாயிருந்தால் பழிகளுக்கு வித்தான அகத்தின் தீய பண்புகளை அகற்றி உளநலத்தைப் பேணும். சிறு வினைகளில் முழு ஆற்றல் செலுத்துபவர் அகவலிமை பேணிப் பண்பு உரம் பெறுபவர். ஆதலால் அவர்கள் உளநலமும் அதன் பயனான வாழ்க்கையின் வெற்றியும் உடையவர் ஆகின்றார்கள். உடல் வலிமைக் கேடும் உள வலிமைக் கேடும் உடையவர்கள்கூட, சிறுவினைகளில் கருத்துச் செலுத்துவதன் வாயிலாக, விரைவில் இதே உளநலத்தையும், உடல் நலத்தையும் மீட்டும் பெறும் வகை காண்பார்கள். சிறு வினைகளில் கருத்துச் செலுத்தாத எவரும் இவற்றை அடைந்து வாழ்க்கையின் மெய்யான மேம்பாடு பெறுதல் இல்லை. மிக உடலுரமும் உளவலிமையும் ஏற்கெனவே கொண்டவர்கள் சிறுவினைகளைப் புறக்கணித்து அவற்றில் தளர்வு காட்டினால் தொடக்கத்திலிருந்த நலன்களும் கெட்டுக் கேடடைதல் உறுதி. வளர்ச்சிக்குரிய எழுதாச் சட்டம் வளர்ச்சிக்குரிய எழுதாச் சட்டம், இயற்கை அமைதி ஒன்று உண்டு. “உடையவனுக்கு மேலும் தரப்படும். இல்லாதவனிடம் ஒட்டியிருக்கும் ஒரு சிறிதும் அகற்றி எடுத்துக் கொள்ளப்படும்.” விவிலிய ஏடு தரும் இந்த அறிவுரை சொல்லில் மிக எளிது. பொருளில் மிக ஆழமானது. அவ்வளவு எளிதில் உணர்தற் கரியது. இவ்வமைதியின் ஒரு கூறு வளர்ச்சிக்கு உதவுகிறது. எல்லா வளர்ச்சிகளையும் விளக்குகிறது. மற்றக் கூறு தளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. தளர்ச்சியை விளக்கி அதுபற்றிய எச்சரிக்கையும் தருகிறது. மனிதனின் ஒவ்வொரு கருத்தும், ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு செயலும் அவன் வாழ்வின் ஒரு சிறு கூறேயாகும். ஆனால் அந்தக் கூறு அவன் வளர்ச்சிக்கு உதவும் வளர்ச்சிக் கூறாகவோ அல்லது தளர்ச்சிக்கு உதவும் தளர்ச்சிக் கூறாகவோ அமைதல் கூடும். வாழ்வின் முதல் கருத்து அல்லது சொல் அல்லது செயல் வளர்ச்சிக் கூறானால், அதுவே அவ்வாழ்வின் ஆகூழாய், அடுத்த கருத்து, சொல், செயல்களை எளிதில் வளர்ச்சிக் கூறுகளாக்க உதவுகிறது. ஒவ்வொரு படியிலும் வாழ்வுக் கூறுகள், வளர்ச்சிக் கூறுகளாக வளர்வதுடன், வாழ்விலும் ஆகூழ் வளம்பெற்றுப் பெருக்கமுறுகிறது. ஆனால் வாழ்வின் முதல் கருத்து, சொல் அல்லது செயல் தளர்ச்சிக் கூறாய்விடின், ஒவ்வொரு படியிலும் வாழ்க்கைக் கூறுகள் தளர்ச்சிக் கூறுகளாக வளர்கின்றன. வாழ்வில் போகூழ் பெருக்கம் கூறுகிறது. வாழ்வின் நற்றொடக்கத்துக்குரிய முக்கியத்துவம் இதுவே. அதே சமயம், புதுத் தொடக்கம், புதுவாழ்வு புகுபவனை இது முற்றிலும் தடுத்துவிட முடியாது. ஏனெனில் புதுவாழ்வுத் தொடக்கமே புதிய ஆகூழ் அமைத்து, முந்திய போகூழின் செயலை நீடிக்கவிடாமல் செய்வதுடன், அதன் ஆற்றலையும் படிப்படியாகக் குறைத்தகற்றி விடுகின்றது. மனிதன் ஊழ் அவன் ஒவ்வொரு சிறு வினையிலும் ஈட்டிச் சேர்க்கும் பண்பே. அது உரமுடைய பண்பானால், அது ஆகூழ் ஆகிறது. அது உரமற்ற பண்பானால், அதுவே போகூழ் ஆகி விடுகிறது. பண்பே இங்ஙனம் மனித வாழ்வின் உயிராய் அமைகிறது. ஆனால் அது ஏற்ற இறக்க இயல்புகளுடையதாய் நல்வாழ்வும் அல்வாழ்வும் வகுத்தமைக்கின்றது. பண்புரம் நல்வாழ்வாகவும், பண்புரக் கேடு அல்வாழ்வாகவும் துளங்கு கின்றன. ‘உள்ளவனுக்கு மேலும் கொடுக்கப்படும். இல்லாதவனிட மிருந்து இருப்பதும் எடுக்கப்படும்’ என்பதன் ஆழ்ந்த மெய்ப்பொருள் இதுவே. நற்பண்புடைய, பண்புரமுடைய செயல் ஆகூழாய், மேலும் நற்பண்பும் வளமும் பெருக்கும். அற்பண்புடைய, பண்புரக் கேடுடைய செயல் போகூழாய், மேலும் அற்பண்பும் அழிவும் பெருக்கும் முயற்சியுடன் பொரு ளீட்டுபவன் அப்பொருளை முதலீடாகக் கொண்டு, மேலும் ஆதாயம் பெருக்குகிறான். அவன் புதிய முயற்சிகள் சிறி தானாலும், முதலீடான ஆகூழின் காரணமாக, மிகுதி பயன் அல்லது ஆதாயம் தருகிறது. முயற்சியில் குன்றியவன் வறுமை இதுபோல இல்லாமை அஃதாவது வறுமை முதலீடாகி, போகூழுருவில் புதிய முயற்சிகளைக் கெடுக்கிறது. பெரு முயற்சிகளும் சிறுபயன் தருகின்றன அல்லது பயன்தராமலே போகின்றன; பொருளியல் வாழ்வில் காணும் அதே ‘செல்வ - வறுமை’ப் பண்பை நாம் வாழ்க்கைத் துறைகள் எல்லாவற்றிலும், புறவாழ்விலன்றி அதன் அகத்தூண்டுதலான அகவாழ்விலும் ‘ஆகூழ்-போகூழ்’, வடிவில் காணலாம். செல்வத்துள் செல்வம்: அருள் முயற்சியின் உறுபெரும்பயன், உறுபெரு விளைவு செல்வம். அதன் வளர்ச்சிக்கு எல்லையில்லை. அவ்வெல்லையைக் ‘கடவுட் செல்வம்’ அழியாச் செல்வம், குறையா நிறை செல்வம், பொங்கற் செல்வம் என்று கூறலாம். இது போலவே முயற்சியின்மையின் உறுபெரு விளைவு, உறுபெருவறுமை, இன்மையுள் இன்மை ஆகிறது. வறுமையின் இவ்வெல்லையைக் கடவுட் செல்வத்தின் வித்தாகிய முயற்சியைத் தெய்வ அறிவாளர் அல்லது அறவோர், தெய்வக் கலைஞர் அல்லது அருளாளராகிய திருவள்ளுவர் போன்றோர் உச்சிமேற்கொண்டு புகழ்வது இதனாலேயே. ஆனால் நல்லகாலமாக, கடவுட் படைப்பில் கடவுட் பண்பே ஏற்றமுடையதாயமைந்துள்ளது. கடவுட் பண்புக்கு வித்தாக முயற்சி அமைந்துள்ளதுபோல, அழிவுப் பாழுக்கு வித்தாக எதுவும் கிடையாது. முயற்சியின்மை அத்திசையில் நம்மை இட்டுக் கொண்டு செல்லும். ஆனால் இது முயற்சியின் எதிர் மறை மட்டுமேயாதலால், முயற்சியின் நல்வினையைக் குறைக்க, தடுக்க உதவுமேயன்றி, புதுத் தீமை பெருக்கிவிட முடியாது. நற்பண்புகளின் நிறைவான ‘கடவுள்’ பற்றிக் கூறும் அறவோர், அருளாளர் பெரும்பாலும் அதற்கு நேரான எதிர் எல்லை எதுவும் கூறாததன் காரணம் இதுவே. பேய் மகன் (கிறித்தவர், யூதரின் சைத்தான், இஸ்லாமியரின் இப்லிஸ், பார்சிகளின் அஃரிமான், புத்தரின் தேவலன்) என்ற கருத்தை உருவாக்கியவர்கள்கூட, கடவுட் பண்புக்கு எதிரான பண்பாக இக்கருத்தைக் குறித்தனரன்றி, அதனைக் கடவுளாற்றலுக்கு இணையான ஆற்றலாகக் குறிக்கவில்லை. சிறுவினை மூலம் சிறுமையை ஆளக் கற்றுக்கொள்பவன் இவ்வாறு பெருவினையும் பெருமையும் ஆள்பவனாகிறான். அது மட்டுமன்று. அவனே உறுபெரும் பெருமை அல்லது தெய்வீக ஆற்றலையும் வளர்த்துக் கொள்பவன் ஆகிறான். சிறு வினைகளுக்கு அடிமைப்படுபவன் பெருவினைகளும் பெருமை யும் ஆள்வதில்லை. உறுபெரும் பெருமைக்கு அவனும் உரியவனே ஆயினும், அதனைத் தனதாகப் பெறுங் காலத்தை அவன் தானே மேலும் மேலும் நீட்டிப் போட்டுக் கொண்டே செல்கிறான். அவன் முழு அழிவை நோக்கியே செல்கிறான். முழு அழிவை அவன் உண்மையில் என்றும் அடையாவிட்டாலும் இந்நிலை அவன் தகுதியால் அமைவது அன்று. இயல்பான உலகின் நன்மை, அஃதாவது நல்உலகின் ஆகூழ் அவனை அவன் அற்பண்பின் முழுத் தகுதியையும் சென்றெட்டாமல் தடுக்கிறது. நம் உலகின் இந்த ஆகூழையே சமயவாணர் பொதுவாக இறையருள் என்றும், கிறித்தவர் சிறப்பாக இயேசுவின் தனியருள் என்றும் தனிப்பட விளக்க முற்பட்டுள்ளனர். ஊழுக்கு அப்பாற் பட்ட இறைவன் ஊழைப் பொதுவாகத் தகுதி அடிப்படையில், நேர்மை என்ற குறி நின்று இயக்கினும், நல்லூழை அதன் தகுதிக்கு மேற்பட நல்திறத்தின் பக்கமாகச் சாய்த்தும், போகூழை அதன் தகுதியில் குறைத்து, தீத்திறத்தின் எதிர்பக்கமாகச் சாய்த்துமே இயக்குகிறான் என்று கூறலாம். கடவுட் பண்பை நுணுகி நோக்கிய அருளாளர் ஊழ்கடந்த அருளுருவாகக் கடவுளைக் குறிப்பதன் உட்பொருள் இதுவேயாகும். ஆகூழ், போகூழ் வாழ்க்கையை ஒரு பெரிய கூட்டுறவு அமைப்பு, கூட்டுறவாக அமைந்த ஒரு பெரும் பொறுப்பகம் என்று வருணிக்கலாம். அதில் கூட்டுறவின் தன்மை அதன் ஒவ்வொரு தனியுறுப்பின் தன்மையையும் பொறுத்தது. ஆனால் ஒவ்வோர் தனி உறுப்பின் வளர்ச்சியும் இந்தக் கூட்டுறவின் வளர்ச்சியையே சார்ந்தது. தனி மனிதன் வளர்ச்சி தனி மனிதன் தன்மை கடந்தும், கூட்டுறவின் வளர்ச்சி கூட்டுறவின் தன்மை கடந்தும் செயலாற்றுவது காணலாம். இந்த நல்ல மாறுபாடு, கூட்டுறவு அமைப்பவர் அதன்மீது சுமத்தும் பொறுப்பாண்மை, ஒத்துழைப்புக் குறிக்கோளின் பயனேயாகும். வாழ்க்கையிலுள்ள இயல்பான தெய்வீகப் பண்பு இதுவே. அஃது அழிவுப் போட்டி கடந்த இனப்பற்றாக, உயிர்ப்பாசமாக, அன்பாகச் செயலாற்றுகிறது. ஒவ்வொரு சிறுவினையிலும் முழுக்கருத்துச் செலுத்து பவன் முதலில் அவ்வினை கடந்து தன் தனிவாழ்வில் ஆற்றல் பெருக்குகிறான். ஆனால் மனித வாழ்வாகிய இயற்கைக் கூட்டுறவில் அது தனிவாழ்வின் ஆற்றலாக நின்று விடுவதில்லை. அதுவே பரந்து சமுதாய ஆற்றலாக, இன ஆற்றலாக வளமுறு கிறது. சிறுவினை ஊக்கத்தின், முயற்சியின் முழுவிரிவாற்றல் தொடங்குமிடம் இதுவே. இது முயற்சியுடையவனை மட்டு மன்றி அவன் இனத்தையும் வளர்க்கிறது. முயற்சியற்றவன் தனிவளத்தை முயற்சியின்மை கெடுக்கும்போது, அவன் முழு அறிவு பெறாததன் இரகசியம் இதுவே. “நல்லார் ஒருவர் உளரேல், அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை. “பண்புடையார்ப் பட்டுஉண்டு உலகம், அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மன்.” என்ற அறவுரைகளின் மெய்ப்பொருள் இதுவே. முயற்சி யுடையவன் வாழும் இனத்தில் முயற்சியுடையவன் முயற்சி அம்முயற்சி மேற்பட பயன் தருகின்ற சமுதாய, இன ஆகூhழாகிறது. முயற்சியற்றவன் மடிமைகூட அவன் வளத்தை ஓரளவே கெடுக்கிறது. ஆயினும் முயற்சியற்றவர் பெருகினால், அந்நிலை தனி மனிதனை அழிக்காமல், அத்தகையவர்களை ஈன்ற இனத்தையே அழிக்கும் போகூழ், அழிவூழ் ஆகிவிடும். இன ஆகூழ், போகூழ் நன்மை செய்தவர் பலர் கேடடைவதையும், தீயன செய்தவர் பலர் வாழ்வதையும் கண்டு, கடவுட் பண்பில் நம்பிக்கை யிழந்தோ, நம்பிக்கை தளர்ந்தோ மறுகி மயங்குபவர் உண்டு. முயற்சி, முயற்சிக் கேடு ஆகியவற்றின் தனி உறுப்புக் கடந்த ஆகூழ், போகூழ்ப் பண்புகளை உற்று நோக்கினால், இங்ஙனம் மறுகத் தேவையில்லை. நல்லுறுப்புக்கள் புறத்தோற்றத்தில் அழிவதாகத் தோற்றுதல், இனவளர்ச்சியாக அவை மாறுபடும் மாற்றமே. தீயுறுப்புக்கள் தழைப்பதாகத் தோன்றுவதும் தற்காலிகமானதே - சில சமயம் அது தனி மனிதன் வாழ்வு முழுவதும் தழைக்க வைத்து விடவும் கூடும். ஆனால் அதன் முழு அழிவாற்றலுக்கும் அத்தனி மனிதன் இனம் ஆளாக நேரும். பண்டை உலகின் பேரினங்களான எகிப்தியர், சால்டியர், கிரேக்கர், உரோமர் ஆகியோரின் அழிவு இதற்குச் சான்று பகரும். நல்லோர் பலர் அவ்வினங்களுக்காக வாழ்ந்து அவற்றை வளப்படுத்தியிருந்தனர். அவை பண்டைப் பேரினங்களான வகை இதுவே. ஆனால் இனத்துக்காக வாழ்ந்தவர் கேடுற்றழிந்தனர். இனத்தைத் தன்னலத்துக்குப் பயன்படுத்தி விற்று வாழ்ந்தனர் பல்லோர். அதன் பயனாகவே மின்னல்போல் பேரொளி வீசிய அவ்வினங்கள், மின்னல் போலவே விரைவில் அழிவுற்றன. தமிழகம் தாழ்வுற்று ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நலிவுறுவதற்கும் இதுவே காரணம். இனத்துக்காகப் பாடு பட்டவர், பாடுபடுபவர் அழிந்து கொண்டேவர, இனத்தைக் காட்டிக் கொடுப்பவரே வாழ்ந்துவரும் நிலையைத் தமிழக வாழ்விலும் வரலாற்றிலும் நெடுகக் காணலாம். ஆயினும், இவ்வினத்தில் இனத்துக்காக அழிபவர் பேரெண்ணிக்கையே இன அழிவைத் தடுத்து இன்னும் இனத்தாழ்வு மட்டும், இன அவல நிலை மட்டும் நிலவும்படி செய்கிறது. மாண்ட இனங் களுடன் மாளாமல், வாழும் இனங்களுடனேயும் வாழாமல், அஃது ஊசலாடிக் கொண்டிருப்பதன் முழு விளக்கம் இதுவே. இனம் மட்டுமல்ல, தொழில்நிலையம், இயந்திரம், அழகும் வீறும் ஒருங்கே கொண்ட திருக்கோயில், இன்னலமுடையவர் வாழ்க்கை - இத்தனையும் இனத்தைப் போலவே கூட்டுறவின் கூட்டுப் பொறுப்புடைய அமைப்புக்களேயாகும். இவை ஒவ் வொன்றிலும் உறுப்புக்களின் தனி வாழ்வுமட்டுமன்றி அவற்றின் இணைவிசைவும் மொத்தத்தின் வாழ்வாக அமைகிறது. மொத்த முழுமுதலின் வாழ்வே உறுப்பின் தனி வாழ்வுக்குரிய அடிப் படையாகவும் திகழ்கின்றது. தீமையின் அளவுகடந்த அழிவாற்றல் சிறுபழிகள், சிறுகுற்றங்கள், தீமையின் பக்கமாகச் சாயும் சின்னஞ்சிறு சலுகைகள், இளக்காரங்கள் ஆகியவை சிறு சறுக்கல்கள்தான் என்று நினைப்பவன் அறிவற்றவன். பெரு வாழ்வில் பெருந்தீங்கு நேராதவரை, இச்சிறுவழுக்கள் அவ் வளவாக வெளிப்படையான பலன் தரமாட்டா என்று கருது வதும் மூடத்தனம் ஆகும். அத்துடன் பொதுவாக நற்செயல், நற்பண்புகள், உடைய வாழ்வில், பெரும்பான்மையான நற் பண்புகள், நற்செயல்களிடையே இச்சிறு வழுக்கள் பெருநலங் களில் புதையுண்டு மறைந்துவிடும் என்று பலர் எண்ணுவது இயல்பு. ஆனால் நன்மை தீமைக் கலப்பில் தீமையின் ஆற்றல் பெரிது; அது தீமையின் அளவைப் பொறுத்ததல்ல என்பதை இத்தகையோர் கவனிப்பதில்லை. ஒரு குடம் வேப்பெண்ணெயை மணப்படுத்த ஒரு துளி நெய்யும் போதாது. ஒரு குடம் நெய்கூடப் போதாது. ஆனால் ஒரு குடம் நெய்யைக் கெடுக்க ஒரு துளி வேப்பெண்ணெய் போதும். ஒரு பானை நஞ்சில் ஒரு துளியோ, பல துளியோ அமுதம் கலப்பதால் நஞ்சு அமுதமாய் விடாது. ஆனால் ஒரு பானை அமுதில் ஒரு துளி நஞ்சு போதும், அத்தனையையும் அது நஞ்சாக்கிவிடும்! நன்மையைப் பேணிவளர்க்கும் செயலைவிடத் தீமையைத் தடுத்துக் காக்கும் செயலே நன்மை பேணுபவருக்கு முக்கிய மானது. நன்மையின் குறைவு தீமையாய்விடாது. ஆனால் தீமை நன்மையையே அழித்துவிடும். ஆகவே நன்மையைப் பெருக்கும் முயற்சியைவிட, சிறிதளவு தீமையைக்கூட அணுக விடாமல் காப்பதே அறிவுடைய செயலாகும். சிறிதளவு தீமை பெரு முயற்சியால் ஈட்டித் திரட்டப்பட்ட பெரு நன்மையாகிய உன் செல்வத்தை ஒரு கணத்தில் இல்லாதாக்கிவிடும். ஏனெனில் நன்மை என்பது ஆயிரம் தேனீக்கள் ஆயிரங்காலமாகச் சிறுகச் சிறுகச் சேர்த்துத் திரட்டும் தேன் போன்றது. தீமை என்பது ஒருவன் கண்பட்டு அது ஒரு கணத்தில் அழிவது போன்றது. அறிவிற் சிறந்த அறிஞரிடையே ஒரு சிறு அறியாமை காணப்பட்டால், முற்றுத்துறந்த முனிவரிடையே ஒரு சிறு ஒழுக்கக் கேடு காணப்பட்டால், மக்கள் அவ்வறிஞரை, அம் முனிவரை மதிப்பதில்லை; பூசிப்பதில்லை. அன்புகூடச் செலுத்துவதில்லை. இரக்கம் காட்டுவதுமில்லை. புறக்கணித் தொதுக்கிச் செல்கின்றனர். நூறாயிரத்தில் ஒன்று குறைந்தால், அது நூறாயிரமல்ல; கோடியில் ஒன்று குறைந்தால், அது கோடியல்ல என்ற பழமொழிகள் இதனை நமக்குக் கணித்துக் காட்டுகின்றன. சிறு தீமைகளுக்கு இடங்கொடுப்பவனின் நிறைதவ வாழ்க்கை அவனுக்கும் நலம் செய்யாது போகின்றது. அவன் நன்மைகளுக்கு இருக்க வேண்டிய சமுதாயச் செல்வாக்கு, சமுதாயத்தில் பரவும் நல்வாய்ப்பு இல்லாது போகின்றது. இத்தகைய பலர் தம் சிறு வழுக்களைப் புறக்கணித்துவிட்டுத் தம்பெரு நலங்களை உலகில் பரப்ப, உலகில் ஒழுக்கம் நிறுவப் பாடுபடுவதுண்டு. ஆனால் தம் சிறு வழுக்களில் காட்டும் அவரது புறக்கணிப்பே அவர் ஆண்மையின் உரையாணி, அளவுகோல் ஆகிவிடுகிறது. அவர் நற்பண்புகள் முழுதும் அச்சிறுமையின் தோல்வியை அளவு கோலாகப் பெற்றுச் சிறுத்து நலிவுற்று விடுகின்றன. அவர் சிறியவராகி, சமுதாயத்தில் வெறுத்தொதுக்கப்பட்டவர் ஆகிறார். மாசு தீராதவர் ஞானியாகார் புரையிலாத் தேக்கும் தன்னகம் ஒரு பொறி தங்க விட்டால் புல்போல் பொசுங்கிவிடும். அதன் மீது ஏற்றப்பட்ட அரும் பெரும் பாரமுழுதும் புல்மேல் ஏற்றப்பட்ட பாரம்போல் பொன்றிக் கெடும். சிறு தீமைகளுக்கு இடந்தந்துவிட்டு அதைத் திருத்தாமல் உலகைத் திருத்த முற்படும் நல்லார், அறவோர் நிலை இதற்கீடாகும். அவர் பேசும் அறத்தைவிட அவர் வாழ்வில் காணப்படும் சிறு தீமையே எங்கும் தம்பட்டமடிக்கப்படும். அவர் உள்ளார்ந்த நலங்களின் மதிப்புக் கணிக்கப்படாமல் அச்சிறு தீமையின் நிழலே கருமுகில்போல் நின்று அவர் அறிவொளி பரவாமல் தடுத்துவிடும். அவரை யாரும் நாடுவதில்லை, தேடுவதில்லை - மடமையி னுள்ளே அறிவை யார் துருவிக்காண எண்ணுவர்? சமுதாயம் அவர்களை நம்புவதில்லை. புயலில் புல்மீது யாரே சாயக் கருதுவர்? அவர் சொற்கள் செவிடர் காதுகளில் விழும் கூக்குரல்களாய்விடும். அவர் தலைமைப்பதவி, பின்பற்ற ஆளில்லாத் தலைமைப் பதவியாய், கேலிக்கும் அவதூறுக்கும் உரியதாய்விடும்! செயல் விளைவற்ற அவர் அறிவு பொருளற்ற நிழலாக ஊசலாடும்! தன்னடக்கமற்ற அவர் அனுபவமெய்ம்மைகள் உள்ளே காற்று ஒழுகிப்போய்விட்ட தொய்வகக் குழாய்களாய்ச் சோர்வுற்று வீழும்! அவர் உள்ளுரமற்ற பாசம் ஒலியற்ற எதிரொலியாய், ஆவியுருவில் உலவும்! முன்கருதலின்றி, அடிக்கடி உணர்வின்றி மனிதர் வாழ்வில் இடம் பெற்றுவிடும் தனிமனித வழுக்கள் எண்ணற்றவை. காற்றில் பறக்கும் தூசுபோல, நன்னீரிலும் இடம்பெற்று மிதந்து திரியும் சிறு மாசுகள்போல, அவை தொகையில் பல - பொது நோக் குக்குப் புலப்படாதவை. அறிவை நாடுபவனுக்கு இவற்றால் நேரிடும் இடர்கள் மிகமிகப் பெரியன. அறிவுடையவன் இவ் விடர் கண்டு எச்சரிக்கையுடன் அதை விலக்கித் தன் உயிர்க்கு உறுதி தேடுகிறான். அத்துடன் பெரும்பாலோர் புறக்கணித் தொதுக்கும் சிறு நற்கருத்துக்களில், நற்செயல்களில் முழு மனதுடன் ஈடுபடுகிறான். இவற்றால் அவன் நாள்தோறும் தன் பண்புகள் மீதுதான் பெறும் சிறு வெற்றிகள்தான் அவனுக்கு மற்றவர்கள் கண்பார்வையிற்படாது மறைந்து உலவும் பேரின்பப் பெருவெளியில் பறந்து தவழும் ஆற்றல் தருகின்றன. சிறுவழுக்களைப் பேரிடர்களின் கருவிதைகள் என்று கருதுபவன் ஒரு ஞானியாய்விடுகிறான். அவனுக்குச் சிறு கருத்துக்கள், சிறு செயல்களின் தொலைப்பெரு விளைவுகள் உள்ளங்கை நெல்லிக்கனியாய் விளக்கமுறுகின்றன. நாள் தோறும் அவன் நடந்து கொள்ளும் முறைமைகளில் உள்ள மிகச்சிறு நுட்ப நுணுக்கங்களின் செம்மை அவன் வாழ்வையும் வாழ்வின் பண்பையும் எவ்வாறு செம்மைப்படுத்துகின்றன என்பதை அவன் காண்கிறான். அவற்றின் சிறு பொல்லாங்குகள் அவ்வாழ்வையும் பொல்லாங்குகளுக்கு இரையாக்குகின்றன என்று அவன் உணர்கிறான். இவற்றில் ஓயா விழிப்புடன் இருந்து அவன் தன்னைத் தற்காத்துக் கொள்கிறான். தன்னைத் தூய்மைப்படுத்திப் படிப்படியாக சிறிது சிறிதாகத் தன்னை முழுநிறைவு படுத்திக் கொள்கிறான். அணுவின் பண்பே, அண்டத்தின் பண்பு: கணத்தின் பண்பே காலத்தின் பண்பு: எல்லையற்ற ஆழ்பெருங் கடல்கூடச் சிறுதுளிகளால் ஆக்கப்பட்டதே. பரந்தகன்ற நிலவுலகம் சிறு தூசுகளின் தொகுதி. வானில் இயங்கும் பேரொளிக்கோளங்கள் நுண்ணொளி அணுக்களாலானவையே. இவற்றைப் போலவே உயிர் வாழ்க்கையும் சிறு நினைவு அலைகள், சிறு செயல்களால் ஆக்கப்படுவையே. மனிதன், அவன் உயிர், உயிர் வாழ்வு நாம் பொதுவாகக் கருதுவதுபோலக் கருத்திலிருந்தும் செயலிலிருந்தும் வேறுபட்ட, அவற்றுக்குப் புறம்பான ஒரு பொருளன்று. அதேசமயம் இக் கருத்துக்களும் வினைகளும் ஒன்றுடனொன்று தொடர்பற்ற தனி நிகழ்ச்சிகள் அல்ல. அவை ஒன்றுடனொன்று இணை விசைவுடையன. இணைந்து இசைந்து அவை யாவும் ஒரே பொருளின் கூறுகள், உறுப்புக்கள், சங்கிலிக் கண்ணிகள் ஆகின்றன. உன் வாழ்வு உன் உயிர், நீ அவற்றின் கோவையேயாவாய்! காலம் ஆண்டுகளின் தொடர்பாக; ஆண்டு மாதத்தின், மாதம் வாரத்தின், வாரம் நாளின் தொகுதியாக; நாள் ஓரையின், ஓரை கணத்தின், கணம் நொடிகளின் இணைவாக அமைவது போலவே, நீயும் உன் உயிரும் உன் வாழ்வும் யாவும் இவற்றின் கூட்டு மொத்தமாகவே செயல் பெறுகின்றன, வளர்ச்சி யுறுகின்றன. சினைகளின் பண்பே மொத்தமாதல்போல, கருத்துக்கள், வினைகளின் இயல்பே உன் இயல்பு ஆகும். 2‘எல்லா வகைப் பொருள்கள், சூழல்களும் ஒருங்கே இணைந்ததே ஓர் ஆண்டு; எழில் கோளமும் அதுவே!’ ஆண்டு, கோளம், வாழ்வு ஆகியவற்றைப் போலவே பண்பு களும், ஏனெனில் சிற்றுறுப்புக்களின், சிறு கூறுகளின் நன்மை தீமைப் பண்புகளே மொத்தத்தின் நன்மை தீமை இயல்புகளா கின்றன. சிறு கனிவுச் செயல்கள், அருட்பண்புகள், தன் மறுப்பு வினைகள் ஒருங்குசேர்ந்தே அருளாளரின் அருள் வாழ்வு ஆகின்றன. சிறு கைதுறப்புக்கள், விட்டுக்கொடுப்புக்கள், சகிப்புத் தன்மைகள், தன்னடக்க வெற்றிகள் கூடியே வீறுமிக்க உயர் உரவோரின் ஆற்றல் ஆகின்றன. வாழ்வின் சின்னஞ்சிறு செயல்களின் தனி நேர்மைகளே திரண்டு ஒரு மனிதனின் நேர்மை வாழ்வாகின்றன. பெருந்தன்மையுடைய மனிதனென்பவன் தன் ஒவ்வொரு நுண்ணிய இயக்கத்திலும், சிறு செயலிலும் சொல்லிலும் கருத்திலும் பெருந்தன்மையுடையவனே. பன்மையில் ஒருமை மெய்ம்மை - தெய்வப்பண்பு அதுவே! கணநேரக் கருத்துக்கள், செயல்கள் கணத்தில் மிதக்கின்றன அல்லது கணத்துடன் போய்விடுகின்றன என்று நினைப்பது போலப் பெருந்தவறு வேறில்லை. அவற்றிலிருந்து வாழ்வு தொடர்பற்றுத் துண்டுபட்டு ஓடுகிறது என்று நினைப்பதும் மடமையேயாகும். ஏனெனில் அவை வாழ்க்கையுடன் தொடர்புடையவை மட்டுமல்ல, அவையே வாழ்க்கையின் மூலமுதல் கூறும் அடிப்படையும் ஆகும். அது சரிவர உணரப்பட்டால், உலகின் ஒவ்வொரு பொருளும் திருநிலையுடையது என்பது தெரியவரும். ஏனெனில் அவை வாழ்வுடன் இன்றியமையாத் தொடர்புடையவை. வாழ்வின் ஒவ்வொரு செயலும் தெய்வத் தன்மையுடையது. ஏனெனில் அவை வாழ்வின் ஒளிக் கூறுகள். எல்லையற்ற சிறு நுண் பொருள்களின் மாயப்பன்மைக்குள்ளாகவே ஒரு தன்மை யுடைய மெய்ம்மை புதையுண்டு கிடக்கிறது. ஆகவேதான் பல நுட்பங்களைக் கையாளும் திறமே அறிவுப் பெருந்திறமாகக் கருதப்படுகிறது. 3உடைமைகள் மாறுவன; நம் உளங்கருதும் கருத்துத் திடமுற மாறும், தேரா உணர்ச்சிகள் இங்குமங்கும் இடமுறவே ஊசலாடும், இயங்கும் இந்தப் புயலில் கடமை ஒன்றே மிகை குறையின்றி எங்கும்நிலை/பெறுமே! முழுமொத்தமாக உன் வாழ்க்கையை நீ வாழ்ந்துவிட முடியாது. அணுவணுவாக, கணுக்கணுவாகத்தான் அதை நடத்த முடியும். ஆனால் இந்த அணுக்களிலிருந்தும் கணுக்களிலிருந்தும் முழுமொத்தம் எழுகிறது. அணுவணுவாக நீ உயர்ந்த, பெருமித வாழ்வு வாழமுடியும். முழுமொத்தமாக வாழ முடியாது. ஆனால் அணுவணுவாக நீ பெருமித வாழ்வு வாழ்ந்துவிட்டால், மொத்தமான பெருமித வாழ்வு தானாய் அமைந்துவிடும். அணுக்களில் நீ பெருமைக்கு இடம் கொடுக்கவில்லையானால், மொத்த வாழ்வில் பெருமை ஒருபோதும் தலைகாட்ட முடியாது. கணத்தில் ஊன்றிய கருத்தே காலத்தை ஆட்கொள்ளும் கருத்து! ‘செப்புக் காசுகள்பற்றி நீ கவனம் b சலுத்தினால் போதும், தங்கக்காசுகள் பற்றிக் கவனம் செலுத்தத் தேவையில்லை. அவை தாமாகவே தம்மைக் கவனித்துக் கொள்ளும்’ (கூயமந உயசந டிக வாந யீநnஉந, வாந யீடிரனேள றடைட வயமந உயசந டிக வாநஅளநடஎநள) என்ற ஆங்கிலப் பழமொழி பொருளியல் சார்ந்த பழமொழி மட்டுமல்ல. அகவாழ்வியல் அல்லது ஆன்மீக வாழ்விலும் அது முற்றிலும் உண்மையானதே. நிகழ்காலத்தின் சிறுகணம், உன்முன் ஒரு நொடி நின்று மறு நொடி அப்பாற் சென்றுவிடும். அதுவே செப்புக்காசு. நீ அதை முற்றிலும் வென்று ஆண்டால் போதும். அதுவே தொடக்கமற்ற நெடுநீளமான இறந்தகாலத் தொகுதிகளாய் வெள்ளிக் காசாகத் தானாகப் பெருகிவிடும். அதுமட்டுமன்று. அதுவே முடிவற்ற நெடுநீளமான எதிர்காலத் தொகுதிகளாய்ப் பொன்காசுகளாக உன் வருங்கால வாழ்வை உருவாக்கும். மெய்யறிவு அல்லது தெய்வீக அறிவு பெறும் வழி இதுவே. கணத்திலூன்றிய கருத்தே காலத்தை ஆட்கொள்ளும் கருத்தாக ஒளிரும். காலமும் இடமும் சூழலும் படைத்தளித்துத் துடைக்கும் ஆற்றல் சான்று ‘கருத்தன்’, ‘கருத்தா’ அதுவே! பெருங் காரியங்கள், புகழ்க்காரியங்கள் வருவதை எதிர் பார்த்துக் கணங்களைச் சிறு காரியங்களுக்குரியன என்று கழியவிடாதே. அப்படிச் செய்பவனிடம் பெருங் காரியங்கள், புகழ்க்காரியங்கள் அணுகமாட்டா - அணுகினும் அவன் கண்ணை மறைத்துக் கடுகி அப்பாற் கடந்து விடும். அவை கருத்தில் நிழலிட்டால்கூட, சிறு கணங்களை ஆட்கொள்ளாத நிலையில் அவற்றை வென்றாளும் ஆற்றல் அவனுக்கு இருக்கமாட்டாது. ஏனெனில் தடைகள், தடங்கல்கள் பெருங்காரியங்களிலும் உண்டு; சிறு காரியங்களிலும் உண்டு. சிறு காரியங்களின் சிறு தடங்கல்களைக் கண்டஞ்சுபவன் பெருங்காரியங்களின் பெருந் தடங்கல்களை எதிர்த்து நிற்க மாட்டான். நேர்மாறாகச் சிறு காரியங்களில் பெருந்தடங்கல் ஏற்பட்டாலும் அதை அஞ்சாது எதிர்த்துநின்று வெற்றி கண்டு விட்டவனுக்குப் பெருங் காரியங்களிலே தடங்கல்கள் சிறிதாகவே இருக்கும். அவன் வெற்றி இன்னும் உறுதி. மேலும் சிறு காரியங்களின் சிறு தடங்கல்களை எதிர்த்து வெற்றிபெறுந்தோறும், பெருங் காரியங்களை எதிர்த்து வெல்லும் ஆற்றல் மனிதனிடம் பெருகுகிறது. வெற்றி மந்திரம், பொதுநல ஆர்வம் உன் தற்போதைய சிறு கணத்தின் கடமைகள், கட்டுப் பாடுகள், சூழல்சார்ந்த இடர்களை வெல்வதில் உனக்கு உதவும் அரும்பண்பு ஒன்று உண்டு. அதுவே தன்னல மறுப்பு. ‘தடங்கல்கள் உனக்கெனத் தோன்றியவையல்ல. உலகுக்கு, வாழ்வுக்குப் பொதுவானவை’ என்ற எண்ணம் உன்னைத் தனக்கென முயலும் தன்னலச் சூழலிலிருந்து உயர்த்திவிட வேண்டும். இத்தன்னலமற்ற பொதுநல உள்ளம் உனக்கு ஏற்பட்டுவிட்டால், உன் உறுதி, உன் ஆற்றல் பன்மடங்காகும். அத்துடன் பொது நல ஆர்வம் எதிர்ப்பை மட்டுமன்றி, தோல்வியைக்கூடச் சட்டை பண்ணாது. இப்பண்பு உன் விடாமுயற்சியை, வெற்றி பெறும்வரை தளராது உழைக்கும் ஊக்க ஆற்றலை, ஆக்கத்தை வளப்படுத்தும். மனக்குறை, கவனக்கேடு, பேரவா, நப்பாசை ஆகிய பகைப் பண்புகளிலிருந்து இது உன்னைக் காக்கும். உன் முயற்சிக் கோட்டையை உரமிக்கதாக்கும். பெருமையை எதிர்பாராத உன் கண்முன், பெருமையும் - பிறர் ஏங்கி, ஏங்கி எய்த முடியாத வெற்றியும் - வந்து ஒளிவீசும். தன்னல அவாவில் தோன்றும் ஏக்கம், மனக்கசப்பு உன் பொதுநல அவாவை அடுக்காது. அதன் தளர்ச்சி உன் வெற்றியைத் தடுக்காது. மேலும் உன் பொதுநல அவா போலிப் பொதுநல அவாவாகிய புறப்புகழவாவாயிராமல், அகப் புகழவாவாக, உண்மைப் பொதுநலக் கனிவாக இருந்தால், நீ பிறர் புகழ் எதிர்பாராமல், பிறர் இகழ்கண்டுகூட அஞ்சாமல், பிறர் நலத் துக்குப் பாடுபட்டு, எதிர்த்த எதிர்ப்பாற்றல்கள் அத்தனையையும் தவிடுபொடியாக்குவாய்! மெய்ப்புகழின்முன், தகுதியின்முன், போலிப் புகழும் இகழும் ஒருங்கே தகர்ந்து மடியும். சில கடமைகள் கடுமையுடையவையாக, உனக்குக் கடுப்புத் தருபவையாகத் தோற்றலாம். ஆனால் இது தோற்றம் மட்டுமே. இஃது அக்கடமையிலில்லை. உன் கருத்திலேயே உள்ளது. தன்னல நோக்கைப் பொதுநல நோக்காக ஆக்கிய உடனே, மனக்கோட்டத்தால் ஏற்படும் இக்கடுப்பும் கடுமையும் நீங்கும். கடம், அஃதாவது உடல் சார்ந்ததாக, தனி மனிதன் சார்ந்ததாக நீ கருதும் கடமை, உயிர் சார்ந்ததாக, உலகப் பொதுநலம் சார்ந்ததாக மாறியவுடன் இக்கடுப்பும் கடுமையும் இருந்த இடமும் தடமும் தெரியாமல் நீங்கிவிடும். உன் முயற்சியின் துன்பங்கள் இன்பங்களாக மாறும். தோல்விகள் என்பவை வெற்றியென்னும் வெல்லத்தினிடையே செறிவுற்ற கற்கண்டுக் கட்டிகளாக மாறிவிடும். இனிக்கும் கரும்பின் இடையிடையே யுள்ள கணுவின் செறிவாகத் தோற்றமளித்துவிடும். செல்கணங்கள் உன் வாழ்வின் நோக்கத்தால் வலிமை யுறட்டும். பயனின்மை என்னும் மாசகன்று பயனுடையவையாக, தூய்மை பெறட்டும். செல்கணங்களின் சிறு கடமைகளில் உன் வாழ்க்கையார்வம் தோய்வித்துத் தன்னலமற்ற பொதுநல அவாவைச் செறிய வைப்பாயாக. உன் நினைவு, சொல், செயல் ஆகிய மூன்றிலும் வாழ்வின் வாய்மையொளியும் பொது நலத்தின் புத்தினிமையும் கமழட்டும். இம்முறையில் நீ பெறும் நீடித்த பயிற்சியும் பயிர்ப்பும், கல்வியும் கற்பும்; கலையும் களையும் உன் வாழ்வுக்குருதியான செல்கணங்களை உயிர்க் குருதிக் கணங்களாக்கும். செல்கணங்கள் செங்கணங்களாகி, குறையிலா நிறை வாழ்வாம் குருதியை உன்னுள் ஓடவைத்து உனக்கு எல்லையிலா இன்பப் பேறளிக்கும். அடிக்குறிப்புகள் 1 “டுமைந வாந ளவயச கூhயவ ளாiநேள யகயச, றுiவாடிரவ hயளவந ஹனே றiவாடிரவ சநளவ, டுநவ நயஉh அயn றாநநட றiவா ளவநயனல ளறயல சுடிரனே வாந வயளம வாயவ சரடநள வாந னயல, ஹனே னடி hளை நௌவ.” -ழுடிநவாந 2 “ஹடட ளடிசவள டிக வாiபேள யனே றநயவாநச ஆரளவ நெ வயமநn in வடிபநவாநச, கூடி அயமந ரயீ ய லநயச ஹனே ய ளயீhநசந.” 3 “ஞடிளளநளளiடிளே எயniளா யனே டியீiniடிளே உhயபேந, ஹனே யீயளளiடிளே hடிடன ய கடரஉவரயவiபே ளநயவ; க்ஷரவ லெ வாந ளவடிசஅள டிக உசைஉரஅளவயnஉந ரளோயமநn, ஹனே ளரதெநஉவ நேiவாநச வடி நஉடiயீளந nடிச றயநே, னுரவல நஒளைவள.” 3. இன்னல் இடர்தாண்டுதல் 1`மனிதன் மனிதன் ஆதல் வேண்டின் மன்மனப் பேரர சாளுதல் வேண்டும்; தனிப்பே ரரசைத் தன்னுள் கண்டு தன்மன உறுதி தனிச்செங் கோல்ஆக, தன்னடக் கமெனும் தவிசில் அமர்ந்து, தன்னவா ஏக்கத் தன்னலப் பகைமைகள் பின்னுற ஓட்டிப் பிறங்கொளி நாட்டித் தன்னுளே தன்னிறை வாக்குதல் வேண்டும்! - கவிஞர் ஷெல்லி 2குறியிழந் தனையோ? இழந்தே னென்று கருதி மறுகி நிற்பதென்? மீட்டும் அஃதுன் முனே ஒளிரும்! இறுதிப் பந்தயம் இழந்தனையோ, இழந்தாலென்? உறுதிகொள், மறுபந்தயத் துக்கது படியே! - எல்லா வீலர் வில்காக்ஸ் இடர்கள் இன்னல்களிலிருந்து இன்பம் பெறலாம் என்பது மேலீடாகப் பார்ப்பவருக்கு முதற்கண் முரண்பட்ட கூற்றாகவே தோன்றும். கல்லிலிருந்து நார் உரிக்கலாம், அனலிலிருந்து புனல் பெறலாம் - இரும்பிலிருந்து கரும்பின் சாறெடுக்கலாம் என்பது போன்ற பொருத்தமற்ற உரையாகவே அது காட்சியளிக்கக் கூடும். ஆனால் மூடர் மயங்குமிடமே அறிஞர் தெளியுமிடம் என்ற உண்மை இதில்தான் அடங்கியுள்ளது. இடர்கள், இன்னல்கள் அறிவும் உரமும் அற்றவர்களுக்கே இடர்களாகவும் இன்னல்களாகவும் தோற்றுபவை. அறிவும் உறுதியும் பெற்று விட்டால், அவையே இன்பம், ஆக்கம் ஆகியவற்றின் திருகு வாயில்களாக மலர்ச்சி பெற்றுவிடும். நேர்மையான, நேர்வழி செல்லும் வாழ்க்கையால், வாழ்வின் அறிவு பெருகுகிறது. அது இன்னல்களைக் குறைக்கிறது. இடர்கள் படிப்படியாகக் கரைந்து மறைய வைக்கிறது. கதிரவன்முன் பனிக்கணங்கள்போல அவை மாய்ந்து மடிகின்றன. கடுமையும் மலைப்பும் காண்பவன் காட்சியே! இடர்கள் சூழலின் சுற்றுச் சார்புகளிலிருந்து எழுவன போலத் தோற்றுகின்றன. இது இயல்பு. ஆனால் முதற்கண் அவை எழுவது சூழலிலோ சுற்றுச் சார்பிலோ அல்ல. அச்சூழல்கள், சுற்றுச் சார்புகள் வகையில் நீ கொள்ளும் கருத்தும், அச்சுற்றுச் சார்புகளுக்கெதிராக உன் உள்ளம் மேற்கொள்ளும் நிலையுமே உன் இடர்களுக்கு அடிப்படை ஆகும். இதனை நீயே சிந்தித்துப் பார்த்து எளிதில் காணலாம். ஒரு குழந்தைக்குக் கடத்தற்கரிய கடுமையுடையதாகத் தோற்றும் செய்தி அனுபவமுதிர்ந்த மனிதனுக்கு இடராகவோ கடுமையுடையதாகவோ தோற்றுவதில்லை. அதுபோலவே அறிவற்ற மூடனுக்கு மலைப்பைத் தருவதாகத் தோற்றும் ஒரு நிகழ்ச்சி அறிவுடையவனுக்கு எத்தகைய மலைப்பையும் தருவ தில்லை. கடுமையும் மலைப்பும் காண்பவன் உள்ளத்திலன்றிக் காட்சிப் பொருளில் இல்லை என்பதை இவ்விளக்கங்கள் தெள்ளத் தெளியக்காட்டும். மலைப்பு மனம் சார்ந்தது. கடுமை யும் அதுவே. இரண்டும் புறப்பண்புகள் அல்ல, அகப்பண்புகளே. எழுத்துக்களின் உருவங்கள், எண்களின் இயல்புகள் ஆகியவை பயிற்சிபெற்ற மனிதனுக்கு எவ்வளவு சிறிய, எளிய, அடிப்படை அறிவுக் கூறுகள் என்று கூறத் தேவையில்லை. ஆனால் அதுவே கல்லாதவனுக்குக் கற்பாறையாகவும், முதிராக் குழந்தை உள்ளத்துக்குக் கடத்தற்கரிய பெருமலையாகவும் தோற்றுகின்றன. எழுத்துக்கள் பயில, எண்மானம் கைவரக் குழந்தை எத்தனை நாழிகை, நாள், வாரம், மாதம் - சில சமயம் ஆண்டுகள் செலவு செய்ய வேண்டியிருக்கிறது! எத்தனை குழந்தைகள் ‘முடியாதன’ என்று கருதி அப்பாறையில் முட்டி அழுகண்ணீரில் மிதந்திருக்கின்றன! ஆனால் கைவந்தபின் அவை எவ்வளவு சிறுசெயல்களாகப் போய்விடுகின்றன! இவற்றை எளியன என்று கருதும் பெரும்புலவன்கூட, பிள்ளையின் பெருமுயற்சி கண்டு சீற்றமோ பொறுதியிழப்போ கொள்ளும் பெற்றோரும்கூட, குழந்தைப் பருவத்தில் அக்கடுமை கடந்தேயன்றோ அதை எளிதென்று கருதத் தொடங்கி யுள்ளனர்? கடுமை குழந்தையின் முதிரா அறியாமை உள்ளத் திலும், எளிமை பயிற்சி மூலம் அது கடந்து வளர்ந்துவிட்ட முதிர்ந்த அறிவிலும்தான் இருக்கின்றன என்பதில் எவருக்கும் ஐயமிருக்க முடியாது. கல்வியின் தொடக்கத்துக்குரிய இக்கடுமை எளிமைத் தொடர்பே வாழ்க்கையின் எல்லாக் காரியங்களுக்கும் பொருந்தும். கருத்தில் தோன்றிய கருமத்தின் கடுமையே நாளடைவில் காரிய நிறைவேற்றமானபின் கருத்தில் எளிமை யாகத் தோற்றுகின்றது. எளிமை என்பது மனம் படிப்படியாக அடைந்த கடும் பயிற்சியின் விளைவன்றி வேறன்று. அறிவு என்பதும் இக் கடுமை கடந்த எளிமை ஒளியே. குழந்தையின் வருங்கால நலனுக்கு, மனித குலத்தின் வளர்ச்சிக்கு இத்தொடக்கக் கடுமை இன்றியமையாத ஒரு படி ஆகும். கடுமை, இடர் - எளிமையின் படிகளே! எளிமையின் தொடக்கம் கடுமையே. எளிமையின் படிகளும் கடுமைகளே. கடுமையை மாற்றும் கருவியே மலைப்பு, இடர், இன்னல். ஒவ்வொரு கடுமையையும் ஒரு கடுமுடிச்சாகக் கடந்தே எளிமை என்னும் நேரிழை வழியாக வாழ்க்கை முன்னேறி வளம்பெற முடியும். கடுமுடிச்சுக்களைத் தாண்டும் முயற்சி மலைப்பு; அவற்றைப் புரியறிந்தவிழ்க்கும் முயற்சியே இடர்; அவற்றையே காலூன்றும் படியாகக் கொண்டு மேலேறிச் செல்லுதல் இன்னல். இவ்வாறு கடுமையின் பயிற்சி எளிமையின் பாதையை மேன்மேலும் எளிதாக்குகின்றது. ஏனெனில் ஒவ்வொரு இன்னலும் கடந்தபின் ஆற்றல் பெருக்கமுறுகிறது. அறிவு விரிவுறுகிறது. தன்னம்பிக்கையும் தற்பற்றும் குறைகின்றன. தொலைநோக்குடைய மெய்யறிவு ஒளிவீசி மிளிர்கிறது. ஒவ் வொன்றின் படிப்பினையும் இம்மெய்யறிவை வளர்க்கிறது, வாழ்க்கையின் நிறையின்பம் நோக்கி மனிதனை இட்டுச் செல்கிறது. கடுமை, இடர், இன்னல் என்றால் என்ன? அவற்றின் உண்மை இயல்பு யாது? சூழலின் தன்மையறியாத சிக்கல் நிலை, முதிரா உள்ளத்தின் வலிமைக்கேடு என்பவையன்றி அவை வேறெதுவும் அல்ல. அச்சூழலின் தன்மையை, சிக்கலை முறுகப் பிடித்து அச்சிக்கலவிழ்க்கும் முயற்சியையே நாம் கடுமை, இன்னல், இடர் எனக் கருதுகிறோம். பெரும்பாலும் அவற்றின் இயல்பறியாது வெறுக்கிறோம். ஏனெனில் அவற்றின் மெய் யியல்பு கடுமை தருவதன்று, கடுமை நீக்குவது - சிக்கல் விடு விப்பது, எளிமையாக்குவது என்பதே. இதை அறிய வொட் டாமல், கடுமை, இன்னல், இடர் என்ற பெயர்களே நம் கண்ணை மறைக்கின்றன, விரும்பத்தக்க அவற்றை வெறுக்கத் தூண்டு கின்றன. சொல் கடந்து, சொற்பொருள் கடந்து, அவற்றின் மெய்ப் பண்பு காண, ஆழ்ந்த உள்ளுணர்வும் தொலைநோக்கும் வேண்டும். ஆனால் இந்த உள்ளுணர்வையும் தொலை நோக்கையும்கூட அச்சிக்கல்களே தோற்றுவிக்கின்றன. இடரின் நெருக்கடி உள்ளத்தில் வழக்கத்துக்கு மீறிய பரபரப்பையும் விரைவையும் உண்டுபண்ணுகிறது. இதனால் பொதுவாக, பொதுச் சூழ்நிலைகளில் செயல்படாமல் தூங்கிக் கிடக்கும் ஆற்றல்கள், தேங்கிச் சேமவைப்பாக ஒதுங்கிக் கிடக்கும் மறைதிறங்கள் வெளிப்படுகின்றன. அவை சிக்கல் அகற்றுகின்றன. சிக்கலின் மெய்யியல்பு காணும் வழியும் வகுக்கின்றன. தோல்வியை வெற்றியாக்குகின்றன. அந்த வெற்றியின் படிப் பினைகளை நிலையான வாழ்வின் அறிவுச் சேமகலமாக்குகின்றன. கடுமை, இன்னல், இடர், சிக்கல்கள் இவ்வாறு உரு மாறிய, அவலப்போர்வை போர்த்த வாழ்வின் வழிகாட்டி களாக, நல்தெய்வங்களாக, ஆசிரியராக, நல்ல நண்பராகச் செயலாற்றுகின்றன. அவற்றின் குரல்களுக்குச் செவிசாய்ப்பவர் எல்லையற்ற நீளறிவும் இடையறா நீடின்பமும் பெறுவர். தடங்கல்களல்ல, தளர்வகற்றி ஊக்கும் பண்புகள் இன்னல்கள், இடர்களின்றி முன்னேற்றமில்லை, வளர்ச்சி யில்லை, உயிர் மலர்ச்சி இல்லை. அவை இன்றேல் உலகம் இயங்காது தேக்கமுற்று நலியும். மனித இனம் புதுமையின் உயிர்ப்பில்லாமல் அழிவுறும். புறநோக்கில் தடங்கல்கள் போலத் தோற்றினாலும் இடர்கள், இன்னல்கள் உண்மையில் உலகை இயக்கி ஊக்கும் அடிப்படைப் பண்புகளேயாகும். இடர்களைக் கண்ணுற்றபோது மனிதன் மறுகுகிறான். இது மடமை. அவற்றைக் கண்ணுற்றவுடன் அவன் மகிழ வேண்டும். இதுவே அறிவுடைமை. ஏனெனில் ஒவ்வோர் இடரும் உயிர்த் துடிப்பற்ற அவன் போக்குக்கு உயிர்த் துடிப்பு உண்டுபண்ணுவது ஆகும். ஆர்வத்தில் தொடங்கி ஆர்வக்கேட்டை அவன் வாழ்க்கை எட்டும் சமயமே - மெய்யறிவில் தொடங்கி அது இழந்து இயந்திரம்போல அவன் இயங்கத் தொடங்கிய வேளையிலே அவன் செல்லும் பாதை தவறவிட்டது என்று காட்டுபவையே தடங்கல்கள், இடர்கள். வாழ்க்கையின் ஒவ்வோர் உயிர்த்துடிப்பும், இங்ஙனம் ஓர் இடரிலிருந்தே தொடங்குகிறது. ஆனால் உயிர்ப் பண்பிலிருந்து பாதை விலகத் தொடங்கும் சமயமே, அடுத்த இடர்வந்து பாதையை மீட்டும் பண்பின் தடத்தில் திருப்புகிறது அல்லது புதிய ஆக்கப்பண்பின் திசையில் செலுத்துகிறது. வண்டிகள் திருப்பத்தில் வழக்க மீறிய மிகுதிப்படி ஆற்றலைப் பயன் படுத்துவதுபோல, இத்திருப்பு கட்டங்களிலும் உயிர் தன் மிகுதிப்படி ஆற்றலை ஈடுபடுத்துகிறது. இது பாதையைத் திருப்புவதற்கு மட்டுமல்ல, செயல்படாத் திறங்களைச் செயற்பட வைத்து முழு உயிராற்றல் பயிற்சியும் முழு உயிராற்றல் வளர்ச்சியும் தந்து அவ்வாற்றலைப் பெருக்கவும் பயன்படு கின்றது. பழக்கப்பட்ட பாதையிலேயே கண்மூடியாக இயந்திரம் போலச் செல்லும் வாழ்வை இவ்விடர்கள் மீண்டும் அறிவுப் பாதையில் செலுத்துகின்றன. அதுமட்டுமன்று. பழக்கம் என்ற கடுஞ்சிறையில் அடைபட்டுச் செயற்படாமல், செயற்பட முடியாமல் கிடந்து வாடிய திறங்களை அவை குமுறியெழுந்து புது விடுதலையுணர்வுடன் புது வாழ்வார்வத்தோடு இயங்கச் செய்கின்றன. சிந்தனை, அறிவு, உள்ளுணர்வு எந்தச் சூழலும் தன்னியல்பில் கடுமையுடையதன்று. சிக்க லுடையதன்று. சூழலின் சிக்கலை உயிர்ப்பண்புடன், உள்ளுணர் வுடன் காணும் ஆற்றல் இல்லாத் தன்மையே கடுமையாக இயல்கிறது. சிக்கலை விடுவிக்கும் உள்ளுணர்வின்மையே சிக்கலாகக் காட்சியளிக்கிறது. தன்னடக்கமுடையவன், பொறுமையுடையவனிடம் இச் சிக்கல் சிந்தனையைத் தூண்ட, உள்ளுணர்வு செயலாற்றுகிறது. அது சிக்கலகற்றப் புது வழி நாடுகிறது. புது வழி புதுமையார்வமாகிய உயிரார்வம் எழுப்பு கிறது. சிக்கல் அகன்றுவிட்ட பின், உயிர் மீண்டும் எளிய பாதையில் செல்கிறது. இது உள்ளுணர்வின் வழி செயலாற்றும் அறிவுப்பாதை, ஆனால் உள்ளுணர்வுப்பாதை அன்று. ஏனெனில் உள்ளுணர்வு சிந்தனையைத் தூண்டும் உயிரறிவு. அதன் பயன், சிந்தனையின் பயனே அறிவு. இந்தப் பொதுநிலை அறிவு தான் சென்ற வழியேதான் செல்லும்; ஏனெனில் அது இயந்திரம் போன்றது. சிந்தனையில்லாத இந்த அறிவு சிந்தனையறிவின் பயன், சிந்தனையன்று. உள்ளத்தின் முழு ஆற்றலையும் அது ஈடுபடுத்துவதில்லை. அதன் பெரும் பகுதியைச் செயற்படாமல் தூங்க வைத்து, ஒரு சிறு பகுதியை மட்டும் செயற்பட வைக்கிறது. செயற்படும் இப்பகுதி இயங்குவதை இயங்கும் திசையில் இயங்க வைக்கும் ஆற்றல் மட்டுமே உடையது. சூழலுக்கிசைய நெறியமைத்துப் புதுநெறி காணும் ஆற்றல் அதற்குக் கிடையாது. இவ்வாற்றல் சிந்தனைக்கு, மெய்யுணர்வுக்கு மட்டுமே உண்டு. அது மறுபடியும் இடர்வந்த போதன்றிச் செயலாற்றாது. இடர்வந்த போதும் அதில் தளராது எதிர்த்து நிற்கும் உயிர் ஆற்றல் உடையவரிடத்தில் மட்டுமே அது செயலாற்றும். இடர்கள் தாமாக, தற்செயலாக எழுந்து விடுவதில்லை. அவற்றுக்கும் ஒரு முறை உண்டு, ஒரு காரணம் அல்லது தூண்டுதல் உண்டு. வாழ்வின் உயிர் மலர்ச்சியையே அது முறையாக, நெறியாகக் கொண்டது - அதையே காரணமாக உடையது. உயிர் மலர்ச்சியின் ஒவ்வொரு படியின் இன்றி யமையாத் தேவையும் இடரைத் தூண்டுகிறது. இடர்கள் இரண்டு வகையில் அறிவுக்கு, சிந்தனைக்கு, உள்ளுணர்வுக்குத் தூண்டுதல் தருகின்றன. இடர்கள் வந்தபின் அவற்றைக் கடப்பதற்குச் சிந்தனை தேவை. ஆனால் முன் னறிவுடையவர்க்கு இடர்கள் வந்தபின் அவற்றைக் கடப்பதற்குச் சிந்தனை தேவை. ஆனால் முன்னறிவுடையவர்க்கு இடர்கள் வராமல் தடுப்பதற்கே சிந்தனை தேவைப்படுகிறது. இடர்கள் தரும் படிப்பினைகளில் பின்னதே தொலை நோக்குடையது, நிலையான சிந்தனையை வளர்ப்பது அதுவே. இடர்களுக்கு, சிக்கல்களுக்குக் காரணமான வாழ்க்கைப் பண்புகள் உண்டு. அவற்றை உணர்ந்தவர்களே தொலை நோக்குடனும் முன்கருதுதலுடனும் அவற்றை விலக்க முடியும் தொலைநோக்கிலும் முன் கருதலிலும் சற்றுக் குறைந்தவர் களுக்கும் இதே பாதையை அவ்வறிவினின்றும் விடுபட உதவுகிறது. இப்பாதையை எளிதில் காண ஒருவன் தன்னறிவே அவனுக்குத் துணையாக வேண்டும். இடர்களுக்குக் காரணம் புறச் சூழலிலில்லை, தன்னிடமே உள்ளது என்ற மெய்ம்மையே இத்தன்னறிவின் முதற்படி. ஏனெனில் தான் கட்டிய கட்டை ஒருவன் தானே அவிழ்க்க முடியும். இடர்கள் யாவும் தன் செயலால், தன் பிழையால் நேர்ந்தவை என்று கண்டவன்தான், அதைத் தன் செயலால் திருத்திக்கொள்ள முடியும். இடர்கள் புறச்சூழலால் நேர்ந்தவையென்று கருதுபவன் என்றும் ‘ஊழ்வலி’யைக் குறை கூறிக் கொண்டு தலையிலடித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும். தன் பிழை என்றும் கருதாமல், புறச்சூழலான இயற்கையின் செயலென்றும் கருதாமல், அது வாழ்வுடனும் இயற்கையுடனும் தொடர்பற்ற ஒரு சக்தியால், அத்தகைய ஒரு ‘தேவன்’, அல்லது ‘கடவுளி’ன் கட்டற்ற விருப்பால் நடைபெறுகிறது என்று கருதுவன் நிலை இன்னும் மோசமானது - கடவுட் பண்பை விடுத்துக் கடவுளை வேண்டிக் கொள்ளும் கீழ்த்தர மூட நம்பிக்கை நிலைக்கு அது மனிதனைத் தாழ்த்திவிடுகிறது. இது ஏறத்தாழ விலங்கு நிலைக்கு மிகவும் ஒப்பான நிலையேயாகும். சிக்கல் பாதையிலன்று, உள்ளத்திலேயே! இடர்கள் எவ்வளவு பெரிதாய் இருந்தாலும், கடக்கக் கூடாதன அல்ல. கடக்கக்கூடாத இடர் என்று எதுவும் உண்மை யில் ஆழ்ந்த கடுஞ் சிக்கல்களானாலும் விடுவிக்க முடியாதன அல்ல. விடுவிக்க முடியாத சிக்கல் என்று எதுவும் இருக்க முடியாது. ஏனென்றால் எல்லாச் சிக்கல்களும் இடர்களும் மனிதன் செயல்களே. மனிதன் தன் அறியாமையால் தானே ஏற்படுத்திக்கொண்ட இச்சிக்கல்களையும் இடர்களையும் மனிதனே முயன்றால் அறிவின் துணை கொண்டு கட்டாயம் விடுவிக்க முடியும், அகற்ற முடியும். அதற்குரிய சிந்தனையாற்றல் கீழின விலங்குகளுக்கு இல்லாமலிருக்கலாம், அவனுக்குக் கட்டாயம் உண்டு. அவனுக்கு அணிமையான உயர் விலங்கு களுக்குக்கூட ஓரளவு உண்டு. பாதையிலிருந்து தவறிச் சென்று ஒருவன் எத்தகைய சேற்றுக் குட்டையில், முட்காட்டில் சிக்கினாலும், வந்திருப்பது சேற்றுக் குட்டைக்கு, முட்காட்டுக்கு என்று தெரிந்துகொண் டால், நேர்பாதைக்கு வர ஒரு வழி உண்டு. அது குட்டைக்கு, முட்காட்டுக்கு வந்தவழியே திரும்பி வந்து, பின் வேறு திசையில் நேர்வழி தேடுவதுதான். அதுபோல எத்தனை சிக்கலில், இடரில் மனிதன் விழுந்தாலும், மீள வழியுண்டு. தானே வந்து மாட்டிக் கொண்ட சிக்கலை மீண்டும் தானே விடுவித்துப் பின்பு சிக்கலற்ற நேர்வழியை அவன் எளிதில் காணக்கூடும். உண்மையில் சிக்கலை அல்லது சிக்கலின் திசையை அல்லது பண்பைத் தேடியன்றி அவன் அதில் சிக்கியிருக்க முடியாது. தவிர, சிக்கலான பாதையை அவன் தேர்ந்தெடுத்தற்குக் காரணம் நேர்பாதை யறிவதில் அவனுக்குச் சிக்கல் ஏற்பட்டது என்பதல்ல. நேர்பாதை எப்போதும் சிக்கலற்ற பாதையேயாகும். அதைக் கண்டுணர்வதும் எளிது. ஆனால் அவன் சிக்கலை நாடியதற்குக் காரணம் பாதையின் சிக்கல் தன்மையன்று, அவன் உள்ளத்தின் சிக்கல் தன்மையே யாகும். சிக்கல் தவிர்க்கும் வழி இவ்வுள்ளத்தின் சிக்கல் அகற்றிவிடுவதே. நேர்வழி இதன்பின் அவனுக்கு இயல்பாகத் தோற்றமளித்துவிடும். இன்பத்துக்குச் செல்லும் நேர்வழி ஆன்றோர் சென்ற வழி, அறிவொளி நிறைந்தது. அது வளைந்து வளைந்து செல்வதல்ல, தடமற்ற வழியல்ல. அது ஆன்றோரின் நேரான பைந்தடங்கள் பதிந்தது நன்கு துவைந்த சுவடுகளுடையது. அது சேற்றுக் குட்டைக்கோ, முட்காட்டுக்கோ இட்டுச் செல்வதில்லை. அவை கடந்து அவற்றின் வழியாகக் கூடச் செல்வதில்லை. அது பசுங்கழனிகளினூடாக, பகலொளியில் நெடுந்தொலைவி லிருந்தே காணக்கூடும் பளபளப்பான சலவைக்கல் மாளிகை களும்கூட கோபுரங்களும் நிரம்பிய மாநகருக்குச் செல்வது - அந்த மாநகரமே இன்பம், இனநலம், முழுநிறை வெற்றி! சிந்தனைப் படிகள் - பண்புகள் இடையூற்றில் சிக்கியபின் அதினின்றும் மீள விரையாமல் அங்கேயே குந்திக் கொண்டு அழுபவன் நேர்வழியில் விரைய வேண்டும். அரிய நேரத்தை வீணாக்குகிறான். அது மட்டுமன்று, அவன் இடரின் படிப்பினையையும் பெறாது போகிறான் - தூங்கிக் கிடக்கும் உயிராற்றல்களைத் தட்டி எழுப்பி வளர்க்கும் அதன் அரிய வாய்ப்பையும் இழந்து விடுகிறான். இடர்மேல் இடரை அவன் வரவழைக்கிறான். தன்னை விலங்கு நிலைக்கு இழிவுபடுத்திக் கொள்கிறான். ஏனென்றால் உடலளவில் விலங்குகளில் ஒரு விலங்காகவேயுள்ள மனிதனை அவ்விலங்கு நிலையிலிருந்தும் உயர்த்துவது சிந்தனையாற்றல் ஒன்றே. இயல்பாகச் சிந்தனையுடையவன் முன்னறிவுடையவன், மனித நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு உயர்பவன் அவனே. சிக்கல்களில் மாட்டியபின் சிந்திப்பவன் அறிவுடையவன். அவன் ஓயாது சிந்திக்காவிட்டாலும் அடிக்கடி சிந்தனையால் தூண்டப்படும் அறிவுடையவன். சிக்கல்வந்த பின்னும் சிந்திக் காதவன் அறிவிருந்தும் அதை இழப்பவன், அதை உயர் அறிவாகப் பேணி வளர்க்காதவன் அல்லது அறிவற்றவன் ஆகிறான். அவன் நிலை மனித நிலையிலிருந்து உயர் விலங்கு நிலைக்கும், உயர் விலங்கு நிலையிலிருந்து கீழின விலங்கு நிலைக்கும் படிப்படியாக இழிகின்றது. தன்னடக்கம், தன்னுணர்வு, விழிப்புடைமை, முன்கருதல், ஆய்வமைதி, சிந்தனை - இவை இடர்கள், சிக்கல்கள் அகற்றத் தேவைப்படுகின்றன. வளமான வாழ்வில் அவையே அப் பண்புகளை வளர்க்கின்றன. சிக்கல்களையும் இடர்களையும் இவ்வகையில் சரிவரப் பயன்படுத்தியவன் தன்னை முற்றிலும் ஆள, தன்னுள்ளே தன் அகநோக்கைச் செலுத்தித் தன்னைத் தூய்மைப்படுத்திக்கொள்ள, தன்னையே தான் ஊக்கி ஆற்றல் பெருக்கிக்கொள்ள, தளரா முயற்சியிலேயே வாழ்வைத் தட்டின்றி வளமார்ந்த பாதையில் இயங்கச் செய்யப் பழகிக் கொள்கிறான். வாழ்வின் மிகப்பெரும் பகைப்பண்புகள் கவலையும் நச்சரிப்புமே. இவை இடர்களை அகற்றுவதற்குப் பதிலாக, அவற்றை மிகைப்படுத்திக் காட்டி மனிதனை அவற்றைச் சுற்றியே ஓடத் தூண்டுகின்றன. அவற்றை வளர்க்கின்றன. புலியின் அச்சத் தால் புலிவாயில் சென்று விழுபவனைப் போல, தடுமாற்றக் கிலியால் தடுமாறி விழுபவன்போல, இடர் அச்ச மூலமே அவை இடர் பெருக்குகின்றன. கவலைக்குப் பதில் அமைதி, நச்சரிப்புக்குப் பதில் சிந்தனை செயலாற்றுவதே சால்பு. அடைந்துவிட்ட இடரிலிருந்து அகல, சிக்கிக்கொண்ட சிக்கலிலிருந்து விடுபட உதவும் பண்புகள் இவையே. கவலையும் நச்சரிப்பும் கவலை பற்றிய சிந்தனைகளே. கவலையற்றவன், நச்சரிப்பற்றவன் அதே சிந்தனைகளை இடரின் காரணம், சிக்கல் வந்தவகை பற்றிச் சிந்திக்க விடுகிறான். பின்பற்றிய தவறான பாதையில் திரும்பிச் சென்று எங்கே தவறு தொடங்கிற்றென்று காணவும், சிக்குற்ற இடத்தில் சிக்கல் எவ்வாறு நிகழ்ந்ததென்று கண்டு அதனைச் சிக்கியபடியே விடுவிக்கவும் இஃது அவனுக்கு உதவுகிறது. விழிப்புணர்வு: ஓர் அறிவியல் சிந்தாமணி சிக்கலிலிருந்து விடுபட உதவிய அறிவே, அடுத்தபடியிலும் முன்னேற அவனுக்கு உதவுகிறது. - அதுவே விழிப்புடைமை. சிக்கலின் திசையிலிருந்து, இடரின் நெறியிலிருந்து அவன் விழிப்புடன் விலகிப் புதுநெறி செல்கிறான். சிந்தனையின்மை அல்லது தவறான சிந்தனையே தன்னைத் தவறான நெறியில் தூண்டிற்றென்று அறிவுடையவன் காண் கிறான். அது சிந்தனை நெறியிலும் ஒரு படிப்பினையாகிறது. அவன் சிந்தனை ஆற்றல் பெருகுகிறது - சரியான சிந்தனை, தவறான சிந்தனையறிந்து அவன் சிந்தனைக்கே நெறி வகுக்கிறான். அறிவமைதி, அறிவுச் சிக்கனம், அறிவின் தன் மறுப்பாற்றல் ஆகியவை அவன் சிந்தனைகளில் வளர்ந்து சிந்தனையை நேர்வழி செலுத்துகின்றன. அறிவமைதி என்பது தூய அறிவுச் சிந்தனைக்கான சூழல். உணர்ச்சிகளென்னும் ஊதைக்காற்றால் சிந்தனையின் போக்குத் தவறாமல் இது தடுக்கிறது. அறிவுச் சிக்கனம் என்பது அறிவுத் துறை அமைதிகளில் ஒன்று நேர்வழி என்பது குறுக்குவழியும் அன்று, சுற்று வழியும் அன்று. இயல்பான, இயற்கையோ டொட்டிய எளிய வழியே அது. இதனையறியத் தடையாய் இருப்பவையும் உணர்ச்சிகளே. அறிவமைதி இதனைக் காண உதவி செய்கிறது. அறிவுத் தன்மறுப்பு என்பது நேர்வழி காண்பதற்குள்ள மற்றொரு தடையை நீக்குகிறது. குறுக்குவழியாகத் தோற்றும் பாதை நேர்பாதையாய் எப்போதும் அமையவேண்டு மென்பதில்லை; எளிய வழியாகத் தோற்றும் பாதையும் எப் போதும் எளிய பாதையாய் அமையவேண்டுமென்பதில்லை. போலிக் குறுக்கு வழியிலோ, போலி எளிய வழியிலோ உணர்ச்சிவழி நின்று திரும்பாமல் காப்பது இவ்வறிவுத் தன்மறுப்பேயாகும். இன்னல்களையும் இடர்களையும் விலக்கும் முன்னறிவுகூட உண்மையில் முன்னைய இன்னல்கள், இடர்கள் தந்த நீடித்த படிப்பினையேயாகும். இவ்வறிவு மெய்யறிவு மட்டுமல்ல, பொன்னறிவு, தொட்டதெல்லாம் பொன்னாக்கும் சிந்தாமணி யறிவென்று கூறலாம். ஏனெனில் அதன் ஒளிப்பட்டவுடனே மிகக் கடுமையான இடர்களும் கடுமை தளர்ந்துவிடும். மிகக் கடுஞ் சிக்கல்களும் சிக்கல் தகர்ந்துவிடும். இத்தகைய மணி யறிவின் துணைகொண்டு ஒருவன் உணர்ச்சிவசப்படாமல் நடுநிலையமைதி பெற முடியும். காரண காரியங்களையும் அவற்றின் சின்னஞ்சிறு நுணுக்க விளக்கங்களையும் தெள்ளத் தெளியக் காண இயலும். நேர்வழி காணுதல் இப்போது அவனுக்கு ஒரு பெரிய காரியமன்று. அவன் வாழ்க்கை நிலையான மெய்யுணர்வும் தொலைநோக்கும் உடையதாய் அமைகின்றது. இடரின் திசையில் மீண்டும் திரும்பாத நீடின்பப் பாதையில் அது விரைகின்றது. அறியாமை, தன்னலம், மடமை, தெளிந்த நோக்கற்ற கண்மூடித்தனம் ஆகிய பாதைகள் இடருக்கும் சிக்கலுக்கும் இட்டுச் செல்வன. இவற்றைப் போலவே நீடின்பத்துக்கும் அமைதிக்கும் இட்டுச் செல்லும் பாதைகளும் உண்டு. அவையே மேற்கூறப்பட்ட அறிவு, மெய்யுணர்வு, தன்மறுப்பு ஆகிய நெறிகள் ஆகும். இந்நெறிகள் கண்டவன் இடர்களையும் இன்னல்களையும் நிமிர்ந்து நேர்நின்று எதிர்க்கிறான். அவற்றை வெல்வதன் மூலம் வழுக்களிலிருந்து வாய்மையும், துன்பத்தி லிருந்து இன்பமும், சிக்கல்களிலிருந்து அமைதியும் மலரச் செய்கிறான். இடர்தரும் இடர் - மடமை! மனிதனுக்கு நேரும் எந்த இடரும் இன்னலும் மனிதனால் வென்றடக்க முடியாததாய் இருக்க முடியாது. ஏனெனில் இடரின் ஆற்றல் இடருக்குக் காரணமான மனிதன் ஆற்றலுக்கு உட்பட்ட தாகவே இருக்க இயலும். மேலும் இடர்கள் மனிதன் தன்னறிவற்ற தவற்றின் விளைவு மட்டுமே. தன்னுணர்வுடன் அறிவாற்றல் கொண்டு எதிர்க்கும் அவன் எதிர்ப்பாற்றலுக்கு அஃது ஒரு சிறிதும் ஈடுசெலுத்தமாட்டாது. ஆனால் இந்த ஆற்றல் செயலாற்ற வொட்டாமல், இந்த ஆற்றலையே அரித்துத் தின்னும் தீய பண்புகள் உண்டு - அவையே கவலையும் நச்சரிப்பும் ஆகும். கவலையும் நச்சரிப்பும் இடரை எதிர்க்கும் எதிர்ப் பாற்றலைக் குறைத்து இடரையே பெருக்கிவிடுகின்றன. சிக்கலகற்றும் அமைதியைக் குலைத்து, சிக்கலை மேலும் வலுப்படுத்திவிடுகின்றன. ஆகவே இடரும் சிக்கலும் தவிர்க்க விரும்புபவன் கவலையையும் நச்சரிப்பையும் தன் வாயிலருகே கூட அண்டவிடக் கூடாது. அவை தேவையற்ற பண்புகள், தீங்கான பண்புகள் ஆகும். இடர் கடக்கக்கூடிய, கடக்க வேண்டிய ஒன்று. அது கடக்க முடியாதது என்று கருதுவது, அதனை எண்ணி எண்ணி இரங்கிக் கவலைப்படுவது ஆகிய இரண்டுமே மடமைகள் ஆகும். கடக்க முடியாத ஓர் இடர் உண்டு என்றே வாதத்துக்காக வைத்துக்கொள்வோம். அப்போதும் அதை நாம் இடர் என்று கூறமாட்டோம். ஏலாமை, நடவாமை என்றே கூறுவோம். இடர் வகையில் பயன்படாத கவலையும் நச்சரிப்பும் அப்போதும் பயன்படாதவையேயாகும். நடவாத செய்தியை நினைத்துக் கவலைப்படுவது, பயனற்றது மட்டுமல்ல; வீணாக அமைதி யையும் இன்னலத்தையும் கெடுப்பது ஆகும். ‘ஏலாத காரியம் ஏலாமலே இருந்துவிடட்டும். நடவாதது நடவாமலே போகட்டும். நடந்து தீர வேண்டியதானால் நடக் கட்டும்’ என்று இருப்பதே அறிவுடைமையாகும். ‘விதி’ நம்பிக்கை ஒரு நன்னம்பிக்கையாய் அமைவது இவ்வகையி லேயே. 3‘அரைத் தெய்வ மாகும் தெய்விக ஆற்றல்கள் போயின், அவை போகட்டும்! அதன்மீது வருவது தெய்வமே, அது வரட்டும்!’ குடும்ப வாழ்வில், சமுதாயத்தில், பொருளியல் வாழ்வில் இடர்கள் நேர்வது அறியாமையாலேயே. ஆனால் அவ் விடர்களே அறியாமை அகற்றி இன்னும் அரிய முதிர் அறிவுக்கு வழி வகுக்கின்றன. பொதுத்திற வாழ்வின் நிலை இதுவானால், சமயத்துறை, உயர் ஆன்மிகத் துறையின் நிலை இதற்கு வேறு பட்டதாய் இருக்க முடியாது. ஒவ்வொரு சமயத்துறைக் குழப்பமும் இதயமீது துயர்ப்படலங்களைப் படியவைக்கும் இன்னல்கள் - இன்னும் உயர் அறிவுத் தளத்துக்குக் கொண்டு செல்லும் ஆன்மிகப் படிக்குரிய திருத்தங்கள் - அத்தகு திருத் தங்களுக்கான அறிகுறிகளேயன்றி வேறல்ல! அவ்விடர்கள் எய்தும் வாய்ப்புப் பெற்றவனுக்கு அவை அறிவார்ந்த புதுப் பகலொளிக்கு முன்னீடான விடிவெள்ளியாகக் கொள்ளத் தக்கனவேயாகும். புதுப்பிறப்புத் துன்பம்: வாய்மையின் வாயிற்படி சிற்றிடர், சிறுசிக்கல்கள் கடந்த ஒரு மனித உள்ளம் என்றேனும் வாழ்க்கையின் உட்பொருள், மறைந்த மெய்ம்மை பற்றிய சிந்தனையால் புதிய பெரியதொரு சிக்கலில், சுழலில்பட்டு மறுகுமானால், தற்காலிகமாக அம்மனித உள்ளம் அடைவது அருந்துயரேயானாலும், அத்துயர் புதியதொரு மறுபிறப்புக் குரிய பிறப்புத் துன்பமாகவே அமையவல்லது. அம்மனிதன் அச்சமயம் அத்துன்பத்தையன்றி வேறெதுவும் நினைக்கா விட்டாலும், உண்மையில் அத்துன்பத்தினும் இன்பம் பொதிந்த மறையுணர்வு வேறில்லை என்னலாம். சிந்தனையற்ற செடிகொடி வாழ்வின்நிலை, தற்சிந்தனையற்ற விலங்குநிலை, தற்காலிக வாழ்வு கடந்து சிந்திக்காத மனித நிலை ஆகிய படிகள் கடந்துவிட்டன; உயர் தெய்வீகப் படிக்கு அம்மனிதன் மேம்படத் தொடங்கி விட்டான் என்பதற்கு இக்குழப்பமே ஒரு புரட்சிகரமான அறிகுறி ஆகும். இனி அவன் நிலமீது தவழாது பறந்து, தன் மலர்ச்சிக்குத் தானே தன்னைத் தூண்டும் நிலை பெறுவது உறுதி. பாதி விலங்கு, பாதி மனிதப் பண்புடைய மனிதப்படி கடந்து முழு மனிதப்படி, அஃதாவது தெய்வப்படியில் அவன் வாழத் தொடங்கி விட்டான். உள்ளத்தின் எல்லையற்ற ஆற்றலையெல்லாம் சின்னஞ்சிறு புறச் செய்திகளில் சிதறவிடும் நிலைமாறி, அவ்வுள்ளத்தின் ஆற்றலை உணர்வதிலேயே அவன் அவற்றை இதுமுதல் செலவிடத் தொடங்குகிறான் என்னலாம். வாழ்க்கையின் எல்லாப் புதிர்களுக்கும் - சமயவாதிகள், ஞானிகள், அறிவர் உள்ளங்களையே குழப்பிய உயிர்ப்புதிர் களுக்கும் - இனி அவன் விடை காண்பது உறுதி. இப்புதிர்களே மெய்யுணர்வுக் கோயிலின் வாயில்காப்போராகிய வாய்மைத் திறங்கள். இப்புதிர்களுக்கு விடை காண்பவரே அவ்வாயில் கடந்து செல்லுதற்குரியோர் ஆவர். 4‘ஆடரிடர்கள் வரும்போது, அவை சென்றணையான், விலகிச் செல்லாது அமைதியுடன் அமர்புரிவான் அவனே அருமெய்ம்மைக் கோயிலுக்குள் நுழை தகுதி உடையோன்!’ இருவகைக் கவலா நிலைகள்: பெருமடமை, அறிதுயில்நிலை கவலை முற்போக்குக்கு, வளர்ச்சிக்குத் தடை என்று மேலே கூறினோம். ஆனால் அஃது எல்லையற்ற பிற்போக்குக்கும் தடையேயாகும். ஏனெனில் கவலையுடையவன் என்றும் எப்போதும் கவலையுடையவனாய் இருக்க முடியாது. கவலை பெருக்கும் இடர்களே இறுதியில் மனிதனைக் கவலையினின்றும் இடரினின்றும் விடுவிக்கத் தூண்டிவிடும். கவலையின் இந்த இருதிசைச் செயலைக் கவலையற்ற நிலையின் இரு தளங்கள் மெய்ப்பிக்கின்றன. அறிவின் எல்லை கடந்த மெய்யுணர்வுப் படியிலும் மனிதன் கவலையற்றவனாக வாழ்கிறான். இது கவலையற்ற முழு வளர்ச்சிப்படி. ஆனால் அறிவற்ற நிலையில், விலங்கு நிலை யினும் கீழ்ப்பட்ட மடமைப்பிடியிலும் கவலையற்றநிலை உண்டு. இது தன்னலம் பற்றிக்கூடச் சிந்திக்காத மடமைத் தன்னலநிலை, இருளார்ந்த, சிந்தனை நிழலற்ற அறியாமைப்படி இப்படியி லுள்ளவன் எது கொண்டு வயிறு நிரப்பி, நேற்றும் இன்றும் நாளையும் எண்ணாது வாழும் பன்றி போல்பவன் ஆகிறான். அவன் உள்ளத்தில் ஐயங்கள் கிடையா; கேள்விகள் எழுவ தில்லை. இன்பத்தில் அவன் மிதந்து செல்கிறான், இன்பத்தைப் பற்றிக் கூடச் சிந்திப்பதில்லை. துன்பத்தில் அவன் துவள்கிறான் - துன்பத்தைப் பற்றியோ, துன்ப நீக்கத்தைப் பற்றியோகூட அவன் கருதுவதில்லை. மடமையின் கவலையற்ற நிலைக்கு நேர்மாறானது மெய் யுணர்வின் கவலையற்ற நிலை. முன்னது விழிப்பற்ற ஓயாத்துயில் நிலையானால், இது துயிலற்ற ஓயா விழிப்புநிலை அல்லது அறிதுயில் நிலையாகும். அஃது அறிவற்ற அமைதியன்று, அறிவு இடையறாது உள்நின்று உயிர்க்கும் அமைதி ஆகும். இந்நிலையடைந்தவன் திரும்ப என்றும் சிந்தனையற்ற அமைதியாகிய மடமை நிலையையும் அடைவதில்லை. இடையிடையே சிந்தனை தூண்டப்பெற்று, இடையிடையே அதன் பயனாக துயில்நிலையறிவு இயங்கப்பெறும் வெற்று அறிவு நிலையையும் அடைவதில்லை. எப்போதும் சிந்தித்து, எப்போதும் அமைதியிழவாது நிலவும் நிலையே அவன் நிலை. கேள்விகள் அவன் உள்ளத்தில் ஓயாது எழுந்து கொண்டே யிருக்கும். ஆனால் அக்கேள்விகளுக்கு விடை காண விரும்பாமல் அவன் ஒளிப்பதுமில்லை. விடைகாணத் தத்தளிப்பதுமில்லை. கேள்வி எழுந்தால் விடை தோன்றுவது உறுதி என்ற நம்பிக்கை யுடன் அவன் மெய்யறிவொளியில் விடையை நாடிக் கொண்டே யிருப்பான். அறிவு உடலாகவும் அமைதி உயிராகவும் கொண்ட தெய்வ உரு அவன் விழிப்படைந்த உள்ளத்தில் ஓயாது அறிதுயில் கொள்கின்றது. அது கனவு நிலையில் அவனுக்குப் புதுப்புது மெய்ம்மைகளை உணர்த்திக்கொண்டே இருக்கிறது. மெய்யுணர்வுநிலையே மீளாஉயிர் இன்பநிலை இக்கனவுநிலை அல்லது அறிதுயில் நிலையிலிருந்து அவன் விழிக்க முயல்வதேயில்லை. ஏனெனில் அவன் விழிக்கும் சமயம் அவன் கண்கள் திரும்பத் துயில வேண்டாத நிறையின்பப் பேரொளிமீதே தவழும். பிறவா நிலை, இறவா நிலை என்று சமயவாணர் குறித்தநிலை இதுவே. மெய்யுணர்வு நிலை யடைந்த இத்தகைய மனிதன் தன் உயர் அவாக்களை, உயர்தளத் திட்டங்களை என்றும் தாலாட்டி உறங்கவிடுவதில்லை. அவை அவன் உள்ளத்தளத்தில் விழிப்புற்ற நாள்முதல் அவன் மெய்யுணர்வொளியில் ஓயாது கனிவுற்றுச் செயல்நிறைவு நோக்கி முன்னேறிக் கொண்டே இருக்கும். ஓயாது சிக்கல்களகற்ற, இடர்கள் நீக்க முயன்றுகொண்டே இருக்கும். ஏனெனில் மெய்யுணர்வு என்பது அவன் தனி உயிரை, தனி உள்ளத்தை எப்போதும் அகல் உலகப் பொது உயிருடன், மனித இனப் பொது உள்ளத்துடன் இணைத்தே நிற்கும். தான் காணும் இன்பம் உலகு காணும்வரை, தன் கனவு உலகக் கனவாய், தன் செயல் மனித இனத்தின் செயலாகும்வரை அவன் அறிவுகடந்த அமைதிநிலை பெற முடியாது. ஆகவே அவ்வறிவு எல்லையற்ற இன்ப நோக்கி இடையறாது செயலாற்றிக் கொண்டே இருக்கும். பிறப்பால் மனிதனானாலும், தன்மையால் அவன் பிறப்பு இறப்பற்ற கடவுட் கூறாய் இயங்கத் தொடங்குகிறான். அவன் உயிர் மெய்யுணர்வின் உடற்கூறாக, மெய்யுணர்வு கடவுளின் உடற்கூறாக இடையறா ஒளிபெற்று இயங்கும். மெய்யுணர்வுநிலை பெற்றவனே வாழ்பவருள் வாழ்பவன், வாழ்வின் உச்ச உயர்கனவின்பம் எய்துபவன். ஏனெனில் அந் நிலையிலேயே எல்லையிலா வாய்மையின் பேரொளி இனிய நிலவொளியாய் எங்கும் இடையறா இன்பம் வழங்குகிறது. ஐயங்கள், இடர்கள் அவன் வாழ்வில் இல்லாமலில்லை. ஆனால் அவை அவனுக்குக் கற்பாறைகளாகத் தோற்றுவதில்லை. வெண்ணிலவொளியில் பொன்னொளி பெற்றுத் திகழும் மென்முகிற் படலங்களாகவே ஒளி வீசுகின்றன. ஏனெனில் அவை அவன் தன்னலம் பற்றிய, தனி வாழ்வு பற்றிய ஐயங்கள், சிக்கல்கள் அல்ல; உலகப் பொது வாழ்வு பற்றியன. அவற்றின் விளக்கம் அவன் மெய்யுணர்வொளி விளக்கத்துக்கு மேன் மேலும் எழிலூட்டுகின்றன. பகலொளியான வாய்மையை அவையே அவனுக்கு இன்னில வொளியாக்கி விடுகின்றன. அஃது இருளையகற்றி ஒளி தருவதுடன் நிற்கவில்லை. பகலொளிபோல இருள் தொடர்பையே அகற்றிவிடாமல் அஃது உலகின் துயர்களுடன் தொடர்பு கொண்டு, உலகின் ஐயங்கள் இடர்களைத் தன் மீது படரும் முகிலாக் கொண்டு, உலக நலத்திலே தன் நலமும் இன்பமும் காண்கிறது. நெடுநேரம் தொல்லை தந்த பாடத்தைக் கற்று விளங்கிக் கொண்ட பள்ளிச் சிறுவர்போல, உலகின் தனிநல வாழ்வின் துயர்கள் கடந்து பொதுநல வாழ்வின் துயர்களடைந்த மெய் யுணர்வாளன் இன்னல அமைதியுறுகிறான். சிறுவர் படிக்க வேண்டிய பாடங்கள் இன்னும் உண்டு. ஆனால் முதல்பாட வெற்றி மற்றப் பாடங்களின் வெற்றிக்கு ஒரு முன்னறிகுறி, நம்பிக்கைக் குறி ஆகிறது. அது போல, மெய்யுணர்வு வாழ்விலும் இடர்கள், இன்னல்கள், சிக்கல்கள் உண்டு. ஆனால் மெய் யுணர்வாளன் அவற்றை முன் கருதலுடன் பல சமயம் அகற்றி விடுகிறவன் மட்டுமல்ல. அவை அவன் செயல்மீறி வந்தபோதும் அதனை உலகநலம் கருதி எதிரேற்று, அதனுடன் போராடு வதிலேயே சிலம்பக்காரன் சிலம்ப ஆட்டத்திலடையும் மகிழ்ச்சி பெறுகிறான். தனி வாழ்வின் பொருளற்ற இன்பமோ, இரு ளார்ந்த துயரோ, அவனை நாடுவதில்லை. இடர்கள் இன்னல்களின் பெயர்களைக் கொண்டு அவற்றைத் தீங்குகள், பொல்லாங்குகளின் முன்னோடிகள் என்று கருதிவிடாதே. அவற்றை அவ்வாறாக்குவது அந்த எண்ணமே அவற்றை நலங்கள், இன்னல்களின் முன்னோடிகள் என்றே கருதுக. உண்மை நிலையும் இதுவே. இவ்விடர்கள், பொல்லாங்கு களை விட்டகலவோ, அவற்றைத் தட்டிக் கழிக்கவோ, அவற்றி னின்றும் ஒதுங்கவோ, பதுங்கவோ எண்ணாதே. ஏனெனில் நீ எண்ணினாலும் அது முடியாத செயலாகும். அவை உன் பண்புகளின், செயல்களின், தவறுகளின் பயன்கள் - உன்னை அவை நிழல்போலத் தொடராமல் விடமாட்டா. அவற்றை விலக்கும் ஒரே வழி அவற்றைப் பயன்படுத்துவதே - அமைதி யுடன் எதிர்த்து நின்று போராடி வென்று, அவ்வெற்றியின் வீறு நலம் பேணுவதே! அவற்றின் மீது உன் முழு ஆற்றலையும் முழு அறிவொளி யையும் செலுத்து. அவற்றுக்குத் தலை குனியாமல் உன் முழு வீறுடன் நிமிர்ந்து நின்று போராடு. அவற்றை ஆராய்ச்சிக் கண்ணோட்டத்தால் கூறுபடுத்தி, வகைப்படுத்தி, காரணகாரியத் தொடர்புபடுத்திக் கண்டபின், நீ அவற்றை வென்றுவிடுவது எளிது. அதுமட்டுமல்ல. வென்றபின் அவற்றையே நண்பனாகக் கொண்டு, நீ உன் வெற்றியின் பயனை இரட்டிப்பாக்கலாம். ஓரிடர் நீத்தவன் வெற்றிப் பயன் அடுத்த இடரை அவன் தாக்கும் சமயம் அவனுக்கு இரட்டிப்பாற்றலை உண்டு பண்ணுகிறது. ஆற்றலும் அறிவும் பெற்று மெய்யுணர்வின்பம் பெறும் துணைவழிகளில் இஃது ஒன்று. பேரின்பப் பெருவழி அருகே அஃது உன்னைக் கொண்டு சேர்ப்பது உறுதி. அடிக்குறிப்புகள் 1. “ஆயn றாடி அயn றடிரடன நெ ஆரளவ சரடந வாந நஅயீசைந டிக hiஅளநடக; in வை ஆரளவ நெ ளரயீசநஅந, நளவயடெiளாiபே hளை வாசடிநே டீn எயnளூரiளாநன றடைட, ளூரநடடiபே வாந யயேசஉhல டீக hடியீநள யனே கநயசள, நெiபே hiஅளநடக யடடிநே.” - ளுhநடடநல 2. “ழயஎந லடிர அளைளநன in லடிரச யiஅ? றநடட, வாந அயசம ஐவ ளவடைட ளாiniபே. னுனை லடிர கயiவே in வாந சயஉந? றநடட, வயமந செநயவா குடிச வாந நேஒவ.” - நுடடய றுhநநடநச றுhடைஉடிஒஉ. 3. “ழநயசவடைல மnடிற, றாநn hயடக-படினள படி கூhந படினள யசசiஎந.” 4. “ழந வை ளை றாடி, றாநn பசநயவ வசயைடள உடிஅந, சூடிச ளநநமள nடிச ளாரளே வாநஅ, ரெவ னடிவா உயடஅடல ளவயல.” 4. சுமை நீக்கம் 1‘என்மனம் வாழ்க்கை எனக்கொள்வ திதுவே: வாழ்வொரு சுமைஎனில் இன்சுமை யாகுக! விடாப்பிடி யாமெனில் வீணைநா தத்தின் விடாப்பிடி யாகிய பல்லவி யாகுக!’ - பேய்லி 2ஆர்க்கும் போர்க்களம் அதிரும் வெற்றியைப் பார்க்கொரு புகழாய்ப் பாடுதி யோநீ? அம்முறை வெம்முனை வீழ்பவர் வீழ்ச்சியும் செம்முறைப் புகழாய்ப் பாடுவன் யானே!’ - வால்ட் விட்மன். உலக வாழ்வின் பெரும்பாரம் பற்றி நாம் அடிக்கடி வாசிக்கிறோம், கேட்கிறோம். ஆனால் அதனினும் முக்கியத்துவம் வாய்ந்த அச்சுமை நீக்கம் பற்றி அறிபவர், கேட்பவர் மிகச் சிலரே! தலைதடுமாற முதுகு வளைந்து வேதனையுறப் பாரத்தைச் சுமக்காமலே, மனிதரிடையே மனிதராகக் கை வீசிச் செல்ல வழி இருக்கும்போது, அதுபற்றி அறியாமல், கேளாமல், மனித இனம் அப்பாரத்தைச் சுமந்து செல்வது பற்றியே அறிவது, கேட்பது ஏன்? அதிலும் சுமைகொண்டு செல்பவர் சுமையை ஓரிடத்தி லிருந்து அதற்குரிய நேரிடம்வரை கொண்டுசென்று பின் இளைப்பாறுவதல்லது, எப்போதும் கொண்டு செல்வரா? செல்ல இணங்குவரா? வாழ்க்கைப் பயணம் செய்பவர் மட்டும் அப்படி ஏன் ஓய்வொழிவில்லாமல் சுமையைத் தாங்கியவாறு ஓயாப் பயணம் செய்ய வேண்டும்? அப்பாவிப் பிரயாணி அப்பாவிப் பிரயாணியே! சுமைநீக்க வழியிருக்கும்போது அதையறியாமல் சுமந்து, ஓயாது சுமந்து செல்கிறாயே - அங்கமெலாம் நோகிறாயே! அதுமட்டுமோ? சுமையைத்தான் சுமக்கிறாய்! இடையிடையே சுமைதாங்கியில் இறக்கி வைத்து இளைப்பாறியாவது செல்லப்படாதா, அப்பனே? கடுவெயி லிலும் இளைப்பாறாமல் சுமக்கிறாய்! வெயிலின் வெப்பால் சுமையும் வெப்பேறி உன் முதுகு கொப்புளிக்கிறதே! அந்த வேதனையும் தாங்க வேண்டுமா? மழை பெய்யும் போதாவது ஓய்வு கொள்ளாமல், மழையில் நீயும் நனைந்து, சுமையையும் நனையவிட்டு, உன் சுமையுடன் மழையின் சுமையையும் தூக்கிச் சுமக்க வேண்டுமா? எத்தனை நாள் உன் சுமைக்கு மட்டுமன்றி உன் அறியாமைக்கும், அறியாக் கண்மூடிப் பிடிவாதத்துக்கும் ஆட்பட்டு அழிமதிக்கு உள்ளாகப் போகிறாய்? அப்பாவிப் பிரயாணியே! பயனுடைய சுமையை அதன் பயன் நாடிச் சிறிது நேரம், சிறிது தூரம் தூக்கிச் செல்வர். நீயோ பயனற்ற சுமையை என்றும், எங்கும், இடைவிடாது எல்லை யின்றிச் சுமந்து செல்கிறாய்! உன் செயலில் நீதியில்லை, நியாய மில்லை - காரணகாரியப் பொருத்தம் இல்லை! அறிவில்லை, உணர்வில்லை - உணர்ச்சியுமில்லை! உன் துன்பம் காண்பவர்க்கு இரக்கமாயிருக்கிறது. ஆனால் உனக்கு உன்மீதே இரக்கம் இல்லையா? பிறர்மீது இரங்காதவர் கூடத் தன்மீது இரங்குவார்களே? உனக்குத் தன்னிரக்கம்கூடக் கிடையாதா? உலகை இன்பமயமாகக் காண்பதற்கு ஒரு முதற்படியாக நீயாவது உன் சுமையையும் துயரத்தையும் ஒருங்கே இறக்கி வைத்துவிட்டு உலவக் கூடாதா? மாயச்சுமையின் சுமைமாயம் புறஉலகில் சுமை என்பது இன்றியமையாப் பயனுடைய, அவசியமான பொருளைத் தூக்கிச் செல்வதற்குரிய பெயரே யாகும். ஆனால் அஃது ஒரு குறிப்பிட்ட நேரம், ஒரு குறிப்பிட்ட தூரம், அதுவும் இடை ஓய்வுடன் கொண்டு செல்லும் பொரு ளாகவே அமையும். கொண்டு செல்லும் சுமைகலம் கிடைத்தால் யாரும் அதைத் தாமே கொண்டு செல்வதில்லை. சுமை கலத்தில் அனுப்புவர் அல்லது செல்கலத்தில் தம்முடனே கொண்டு செல்வர். அதுபோலவேதான் ஆன்மீக அக உலகிலும், வாழ்வில் சுவையற்ற பயனற்ற சுமைகளை யாரும் சுமந்து கொண்டு செல்ல விரும்பமாட்டார்கள். இன்றியமையாப் பயனும் தேவையும் கருதியே எவரும் எப்பொருளையும் சுமக்க எண்ணுவர். சுமக்காது கொண்டு செல்லும் கருவி கிடைத்தால் அவ்வாறு சுமந்து கொண்டு செல்வதையும் கட்டாயம் தவிர்ப்பர். மொத்தத்தில் எப்படிக் கொண்டு சென்றாலும் இன்பத்துக்குரிய சுமையைத் தான் சுமையாக்க இணங்குவரேயன்றித் துன்பத்துக்குரிய எதனையும் அவ்வாறு கொள்ள எவரும் இணங்க மாட்டார்கள். அடயோகிகள், வைராகிகள் போன்ற கடுந்துறவிகள் தம் உடலைத் தாமே பலவகையில் ஒறுத்துத் துன்புறுத்திக் கொள்வ துண்டு. இதுவே தேவையற்றது, வீணானது என்று கூறுவர் பலர். ஆனால் வாழ்க்கையைத் தமக்குச் சுமையாக்கி அதனால் தம் உள்ளத்தின்மீது தாமே சுமத்தும் வேதனைகள் இவற்றைவிட எந்த வகையில் குறைந்தவை? துன்பத்தில் அவை குறைந்தவை யல்ல, பயனில் கூடியவையுமல்ல. வாழ்வு சுமை, கடும்பாரம் என்று கருதுபவர்கள் அதை இன்பமென்று கொள்கின்றனரென்றோ, தள்ளி விட்டுச் செல்ல விரும்பவில்லையென்றோ கூறமுடியாது. அதன் சுமை பற்றி அவர்கள் அழாத குறையாக அழுகின்றனர். ஆனால் அழுதும் அவர்கள் அதைக் கீழே போட்டுச் செல்ல எண்ணவில்லை. அவ்வாறு செய்ய அவர்கள் விரும்பாதவர்கள் அல்லர். ஆனால் அது வீழ்த்தத்தக்க சுமையன்று, விரும்பியோ விரும்பாமலோ தூக்கிச் சுமந்துதானாக வேண்டும் என்று கருதுகிறார்கள் என்பது தெளிவு. அதை இடையே சிறிது நேரம் இறக்கி வைக்கக் கூட முடியாது, அஃது உடலுடன் உடலாக, உயிருடன் உயிராக ஒட்டிக் கொண்டிருப்பது என்றே அவர்கள் கருதுகிறார்கள் என்னலாம். வேண்டியதை, இன்பத்துக்குரியதை, பயனுடையதைத்தான் எவரும் சுமப்பார்கள். பயனற்றதென்றால் அது சுமத்தற்குரியது, சுமை என்று எவரும் கருதமாட்டார்கள். தூர எறிந்துவிட்டுச் செல்வார்கள். ஆனால் வாழ்க்கை சுமை என்று கருதுகிறவர்கள் நிலை இங்கே விசித்திரமானது. அவர்கள் அதைத் துன்பம், தீராத் துன்பமென்கின்றனர்; அதே சமயம் சுமை என்று கருதுகின்றனர், சுமக்கின்றனர். வேண்டா வெறுப்பாகச் சுமந்து சென்று, அதுபற்றி நொந்து, நொந்து அலமருகின்றனர். அப்படியும் சுமைநீக்க எண்ணுவதில்லை. அறிவுக்கொவ்வாத புதிர் இது! ஒரு செயல் இன்றியமையாச் செயலானால், அதை அழுது கொண்டு செய்வானேன்? ஒரு செயல் இடையறா முடிவற்ற செயலானால், அதை உள்ளூரக் கதறிக்கொண்டே செய்வா னேன்? அதையே சிரித்துக்கொண்டு, பாடியாடிக் கொண்டு செய்வதல்லவா அறிவுடைமை? அஃது உண்மையில் துன்ப முடைய செயலானால்கூட, இதுவல்லவா துன்பம் குறைக்கும், இன்பம் எளிதாக்கும் செயல்? இங்கும் அறிவுக்கொவ்வாத மடமையே காணப்படுகிறது! மடமையுள் மடமை இன்றியமையாமையை ஒரு நண்பனாக, வழிகாட்டியாகக் கொள்வதே நேர்மை, பயனுடையது, அறிவுடையது. அதை ஒரு பகைவனாகக் கருதிச் சீறுவது மடமையுள் மடமை ஆகும். வாழ்க்கையில் இன்றியமையாத் திறங்கள் ஒவ்வொரு திருப்பத் திலும் நம் கண்முன் தென்படுகின்றன. பசி, விடாய், பிணி, சாக்காடு, முதுமை - இவை யாவும் விலக்க முடியாதவை, இன்றியமையாதவைகளே. அவற்றை நாம் பகைப் பண்பாகச் சாடி வீண்துயர் எய்துவதில்லை, ஓயாத் துயர் அடைந்தாலும் தற்காலிகத் துயராகவே கொண்டு அவற்றை ஏற்றே வாழ் கிறோம். மனித இனம் நாளடைவில் பசியையும் விடாயையும் இயல் பாகக் கொண்டதுடன் நிற்கவில்லை. நண்பனாக, வழிகாட்டி யாகக் கொண்டே வாழ்கிறது, பயனடைகிறது. அவற்றை உணவு குடிக்குரிய தூண்டுதலாக்கி, உணவிலும் குடியிலும் பயனும் இன்பமும் காண்கிறது. சாவிலும் முதுமையிலும் இதுபோலவே தான் மனித இனம் மாளாத்துயர் காணவில்லை; புதுப் பிறப்பைப் பேணும் இன்பம் காண்கிறது. மற்றும் இதுபோன்றே பிணியை மனிதர் உடல்நலம் பேணுவதற்கான தூண்டுதலாக்கு கின்றனர். வாழ்வின் ஒவ்வொரு கடமையும் ஓர் இன்றியமை யாமையே. ஆனால் அதற்கெதிரான ஒவ்வோர் உரிமையும் அதன் பயன், அதன் இன்பம் ஆகும். கடமைகளை உரிமைகளின் மறுபுறமாகக் கருதி, நண்பராக அணைத்துக் கொள்ளாத இடத்தில், அவை சுமைகள் ஆகின்றன. இன்றியமையாப் பொருள்களின் நிலையும் இதுவே. அவை கடமைகள், உரிமை களின் பொது அடிப்படை, அவற்றின் நிலைக்களங்கள். கடமைகள் இன்றியமையாச் செயல்களே; அவற்றை இன்ப அடிப்படை என்றறிந்து மனமகிழ்வுடன், ஆர்வத்துடன் ஏற்றுச் செயல் செய்யாமல், வேண்டா வெறுப்புடனும் மனக்குறை யுடனும் முணுமுணுத்துக் கொண்டு செய்பவன் தன்னைத்தான் எண்ணற்ற தேள் கொடுக்குகளுக்கும் நச்சுப் பாம்புகளின் கடிகளுக்கும் உரியவனாக்கிக் கொள்கிறான். அத்துடன் உண்மையின்பத்திலிருந்தும் அவன் தன்னை ஒட்டறுத்துக் கொள்கிறான். ஏனெனில் கடமைக்கும் உரிமைக்குமே அடிப் படையான இன்றியமையாச் செய்திகளை ஒதுக்கிவிட்டபின், அவன் இன்றியமைகின்ற, அஃதாவது அவசியமற்ற போலி இன்பங்களிலேயே இழைகிறான். இந்த இன்பங்களும் அவனுக்குத் துன்பமாகவே முடிவதனால், அவன் தன்னை இரட்டிப்புத் தண்டனைக்கு ஆளாக்கிக் கொள்கிறான். வாழ்வில் இன்பம் நாடுபவன், உரிமை விரும்புபவன், கடமை யுணர்வுடையவன் இன்றியமையாச் செய்திகளையே தன் இன்ப வேர்முதலாக, வாழ்க்கை முதலீடாகக் கொள்ள வேண்டும். 3‘தூக்க மொழித்திடுவாய், உயிரே! துளங்கொளியின் ஆக்க வெளியில் அளாவிப் பறந்திடுவாய்! புதுவாழ்வுக் கீத மமைத்து நலம் பாடு! மதுகையுடன் வாய்மை மலரும் இசை பாடு! பொல்லாங் கெலாம் வென்ற பொன்னார்ப்புகழ் வெற்றிக்கு எல்லா வளமும் இனிமையும் தோன்றிடப் பாடு! ஐயம்விடு, கவலை, ஆரிடர்கள் சாயவிடு! மெய்யான இன்பம், அறிவு பா, ஊடாக வண்ணப் பூவாடை அணிந்து மகிழ்ந்தாடு! மண்ணார்ந்த முள்முடி பொன்முடியாக் கொண்டு விண்ணார் ஒளியில் மிளிர்ந்து. வாழ்க்கை ஓர் ஒப்பந்தம் வாழ்க்கையின் அடிப்படை, அதன் எலும்புக் கூடு - பல இன்றியமையாக் கட்டாயச் செய்திகளின் கோவையே. வாழ விரும்புபவன், வாழ்பவன் அவற்றுடன் ஓர் ஒப்பந்தம் செய்தாக வேண்டும்! இன்றியமையாச் செய்திகளின் கோவையை ஏற்பது ஒப்பந்தத்தின் ஒரு பகுதி; அஃது ஏற்பவன் விருப்பத் தேர்வுக்குரிய பகுதியன்று, கட்டாய ஏற்புக்குரிய பகுதியே. ஆனால் இதற்கு நேர்மாறாக, ஒப்பந்தத்தின் மறுபகுதி முற்றிலும் விருப்பத் தேர்வுக்குரிய பகுதி. ஏற்பதை விரும்பி ஏற்று மகிழலாம், வெறுத்து ஏற்றுத் துன்புறலாம். வேண்டா வெறுப்புடன் ஏற்றுத் தொல்லை களைப் பெருக்கிக் கொள்ளலாம், வேண்டி விரும்பி மேற் கொண்டு விண்ணாரமுதம் பெறலாம். அறிவுடையவன் செயலுக்குரிய பகுதி இவ்விருப்பத் தேர்வுக்குரிய பகுதியே. வாழ்க்கையில் துன்பத்தை வரவழைத்துக்கொள்ள விரும்பாதவன், அதைச் சுமையாக்கிக்கொள்ள எண்ணாதவன், இன்பமாக்க விரும்புபவன் இன்றியமையாச் செய்திகளின் கோவையை அப்படியே ஏற்றமைவான். அவை மாபெரும் சுமையாகக் காணப்பட்டால்கூட, அவற்றை அவ்வாறு கருதாமல், சுமையற்றவன் நடப்பதுபோல அவற்றை மறந்து நடப்பான். அவை முள் முடிகளாகத் தோற்றினால்கூட, அவற்றை அவ்வாறு கருதாமல், ஒரு மணி முடியை மகிழ்வுடனும் வீறுடனும் சூடிச் செல்பவன்போல அவற்றை மேற்கொண்டு செல்வான். ஒரு பொருள், அஃதாவது ஒரு கடமை, ஒரு தோழமை, அல்லது ஒரு சமுதாயக் கடப்பாடு உனக்கு மிகவும் வெறுப் பூட்டுவதாக அமைகிறது என்று வைத்துக்கொள். அதை நீ ஒரு அலமரல் உறுகின்றாய்! அகத்தின் பண்பு காட்டும் பளிங்கே புறம், புற உலகு! உலகின் புறப்பொருள்கள் தனிப்பொருள்களுமல்ல, உன்னுடன் தொடர்பற்ற பொருள்களும் அல்ல. அவை ஒவ்வொன்றும் உன் அகத்தின் ஒரு கூறினை நிழலிட்டுக் காட்டும் பளிங்குகளே. பொருள்களில் நீ கொள்ளும் விருப்புக்களும் வெறுப்புக்களும் பளிங்கில் தோற்றுபவை போல அவற்றில் தோற்றுபவைகளே. அவை உண்மையில் அப்பொருள்களுக் குரியனவல்ல; உன் உள்ளப் பண்புக்கே உரியன. உன் உளப்பண்பு களின் உரு நிழல்களே அவை. தன்னலமற்ற, சரியான மனப் பாங்குடன் அவற்றை அணுகினால் அவற்றின் உருவும் பண்பும் முற்றிலும் மாறுபடக் காண்பாய். மன உரத்துடனும் இன்ப நோக்குடனும் அவற்றை நோக்கினால், அவை அப்பண்புக்கியைய உருக்கொள்ளும். சீறுமுகத்துடன் அவற்றை நோக்கினால், அவை வெறுப்புக் குரியவையாகவே புலப்படும். உன் முகத்தின் மகிழ்வை, துன்பத்தைக் காட்டும் பளிங்கை நீ குறைகூற முடியுமா? அது காட்டும் முகநிலையைத்தான் நீ குறைகூற முடியும். அதுபோலவே புறப்பொருள்களின் விருப்பு, வெறுப்புக்கள், உன் விருப்பு வெறுப்புக்களே. அவற்றைப் பற்றிக் குறைபட்டுக் கொள்ளுதல் தவறு. கட்டாயம் செய்து தீர வேண்டிய செய்தி சரியான செய்தியாகவே இருக்க வேண்டும். ஏனெனில் சரியான செய்தியைச் செய்யாவிட்டால் ஏற்படும் தவறு, அதைச் செய்யாவிட்டாலே ஏற்பட்டுவிடுகிறது! கட்டாயச் செய்திக்கும் சரியான செய்திக்கும் உள்ள வேறுபாடு ஒன்றே ஒன்றுதான். முன்னதைச் செய்தே தீர வேண்டும். ஆனால் அதைச் சரியாகவும் செய்யலாம், தவறாகவும் செய்யலாம். பிந்தியதையோ செய்யலாம், அப்போது அது சரியான செயலாயிருக்கும். செய்யாமலிருக்கலாம், அப்போது அது தவறாயிருக்கும். ஆகவே கட்டாயச் செயலைச் சரியான செயலாக்குவதும் தவறான செயலாக்குவதும் முற்றிலும் நம் பண்பிலேயே அமைந்துள்ளது. கட்டாயச் செய்திகளே இவ்வகையில் நேர் பளிங்கு போன்றவை. அவை நம் நன்மை தீமைப் பண்பை அப்படியே எடுத்துக்காட்ட உதவுகின்றன. ஆனால் சரியான செயல்கள், தவறான செயல்கள் இரண்டுமே வளைமுகக் கண்ணாடிகள் போன்றவை. சரியான செயல்கள் நம் நன்மையைச் சிறிது பெருக்கிக் காட்டுகின்றன. தவறான செய்திகள் இதுபோல நம் தீங்கைச் சற்றுப் பெருக்கிக் காட்டிவிடுகின்றன. கட்டாயச் செய்திகளைக் கடமைகளாக, இனிய கடமை களாக விருப்புடன் செய்வதே அவற்றால் நற்பயனும் இன்பமும் பெறும்வகை ஆகும். அவற்றைச் செய்ய விரும்பாமையோ, வேண்டாவெறுப்புடன் சுமைகளாக எண்ணிச் செய்வதோதான் அவற்றைத் தீங்காக்கி விடுகின்றன. கடுஞ்சுமையாக்கி, தாங்க மாட்டாப் பாரமாக்கிவிடுகின்றன. அத்துடன் தன்னலமற்ற உள்ளம் அவற்றின் கட்டாயத் தன்மையையே விருப்பார்வ மாக்கிவிடுகிறது. தன்னல உள்ளமோ அவற்றைத் துன்பத்துக் குரிய தீங்குகளாக்கிவிடுகிறது. கடமைகள் நட்புப் பண்புகள், தெய்வீகப் பண்புகள் மனிதன் ஓடி ஓடிப் பின்பற்றும் புற இன்பங்கள் உண்மையில் அவனைப் பசப்பி ஏய்க்கும் பகைப் பண்புகளேயாகும். அவன் கடமைகளோ, நண்பர்கள் - செய்யாது கைவிடும் சமயத்தில்கூட அவை கடிந்துகொண்டு இடித்துரைக்கும் நண்பர்களே! ஆனால் விருப்புடன் மேற்கொள்ளப்படும் கட்டாயச் செய்திகள் நண்பர்க்கும் மேற்பட்ட தெய்வீகப் பண்புகள். இச்செய்திகளே புற உலகில் நிரம்பியிருப்பது, வாழ்க்கை இவற்றின் கோவையாகவே அமைந்திருப்பது - இவை உலகின் தெய்வீகத் தன்மைக்கும், வாழ்வின் தெய்வீகத் தன்மைக்கும் சான்று பகர்வன ஆகும். இயற்கையின் இத்தெய்வீகப் பண்பு எங்கும் எல்லாச் சமயத்திலும் உயிர்களின் செயலைத் தூண்டி, அவ்வுயிர்கள் அறிந்தும் அறியா மலும் வாழ்க்கையின் தெய்வீகக் கூறுகளைத் தூண்டுகிறது. இயற்கையின் தெய்வப் பண்பில் நின்று வாழ்க்கையின் தெய்வப் பண்புவழி தன் உள்ளத்தைப் பதப்படுத்திச் செல்பவன் மெய்யுணர்வும் மெய்யின்பமும் அடைகிறான். இரண்டுக்கும் எதிராக நின்று அவ்வப் பண்பு பேணுபவன்தான் பின்னும் தீம்பு வலையில் தானே சிக்கை மேன்மேலும் அழுந்துகிறான். தெய்வப் பண்பின் வழி நில்லாது தீமை சூழ்பவருக்குக் கூடத் தெய்வப் பண்புகள் உண்மையில் தீங்கு சூழ்வதில்லை. ஏனெனில் அவர்கள் தவறான வழியில் சென்று அடையும் தீங்குகள் அவர்களுக்குத் தண்டனையாகவும், திருத்தமாகவும் மட்டுமே அமைவன. மேலும் அவை தண்டனையாகத் தரும் தீங்குகள் உயிரற்றவையல்ல, எல்லையற்றவையுமல்ல. அவை உயிர்வளர்ச்சி யுடையவையாய், மேன்மேலும் வளர்ந்து கொண்டே செல்வதால், எப்படியும் உயிர்களை நல்வழிக்கே திருப்பும் இயல்புடையவை. தீயன என்பன உண்மையில் நன்மை நோக்கிச் சுற்று வழியில் செல்பவையன்றி வேறல்ல. அத்துடன் தீயன தன்னலமுடையன வாதலால், தன்னைக் கடந்து தீமை பரப்புவதில்லை. நல்லனவோ பொதுநலச் சார்பானவையாதலால் தம்மைக் கடந்து நலம் பரப்புபவை. தீயவர் நாடும் நன்மை தமக்குரிய நன்மை. அது கைவராத நன்மை ஆகும். அவர்கள் நாடும் தீமையோ பிறருக்குரிய தீமை. இது தோல்வியே காண்பது. ஆனால் நல்லவர் நலமே நாடுவர். அதுவும் பிறர் நலமே. அவர்கள் தீங்குக்கு ஆளாவதாகத் தோற்றும்போதும் அது பொதுநலத்தின் மாறிய உருவாகிய மறை தீமையே. இவ்வாறாக இயற்கையிலும் சரி, வாழ்விலும் சரி - தீமையின் ஆற்றல் சிறிது, எல்லையுட்பட்டது; நன்மையின் ஆற்றல் பெரிது, எல்லையற்றது. தெய்வப் பண்பின்வழி நிற்பவர் இவ்வாற்றலை வாழ்வில், இனத்தில் பெருக்குகின்றனர். இனத்தில் தெய்வப்பண்பு பரப்புகின்றனர். நலந்தரும் இயலுலகின் ஆற்றல்: துன்ப நுட்பம் நலந்தரும் இயலுலகின் நல்லாற்றல் எங்கும் பரவியுள்ளது, எப்போதும் நிரம்பியுள்ளது. அணுக்கள் தம் அகத்தேயுள்ள இசைவமைதியை எங்கும் இயல்பாகப் பரப்புவதுபோல, இந்நல்லாற்றலும் இயற்கையிலும் இயற்கை கடந்து உயிர்ப் பரப்பிலும் இயல்பாக நல்லமைதி பரப்பி வருகிறது. இந் நல்லமைதியே மெய்யறிவு, தன்னலம் போலவே சூழ்நலம் அல்லது பொதுநலமும் பேணும் ஒப்புரவமைதி. இவ்வழிப்படாத நிலை மடமை, தன்னல நிலை ஆகும். அது நிலவரமான நிலையன்று, ஏனெனில் சரிசம நிலையழிந்த அந்த இடத்தின் மீது சூழ்நிலையாற்றல் சுழல் காற்றாக, புயலாகச் சீறிவந்து, அதனை அழித்துச் சமநிலை பேண விரைகிறது. இந் நிலையையே நாம் துன்பம் என்கிறோம். தன்னலம் பெருகப்பெருக, இயல்பாகத் தற்காலிகமான இந்தத் துன்பநிலை மேன்மேலும் வளர்கிறது. அஃது இயற்கையை அழிப்பதில்லை. அதனைச் செப்பம் செய்து சமநிலைக்குக் கொணரவே விரைகிறது. அம்முயற்சியைத் தடுக்கும் மனிதனுக்கும் அஃது உண்மையில் துன்பம் தர எண்ணவில்லை. ஆனால் சமநிலை நோக்கி விரையும் இயற்கையின் செயலைத் துன்பமாகக் கொண்டு, துன்ப காரணமான தன்னலத்தை விடாததன் மூலம் தன்னலவாணன் தானே இயற்கையமைதி மீறித் தன் துன்பத்தைப் பெருக்கிக்கொள்கிறான். அகத்தே நிகழும் இம்மடமைத் துன்பமன்றி, உலகில் உண்மைத் துன்பம் எதுவும் கிடையாது. துன்பமென்று கூறப்படும் நிகழ்ச்சிகளெல்லாம் உண்மையில் நலம்பேணும் ஆற்றற் கூறுகளே, மெய்யறிவை மனிதனுக்குச் சுட்டிக் காட்டும் இயற்கையின் தூதுரைகளே யாகும். நோவென்பது என்ன? துயர் தருவது எது? வீண்சுமை என்பது யாது? நோவென்பது கொந்தளிக்கும் உணர்ச்சியேயன்றி வேறன்று. துயர் தருவது மடமையே. வீண்சுமையாவது தன்னலம் மட்டுமே. இம்மூன்றும் தவிர்த்தவன் துன்பமற்றவன், இன்பமுற்றவன். 4‘இருளார்ந்த தன்னலம் என்னும் கொடுந்தெய்வம் அருளார்ந்த எண்ணம் செயல்க ளெலாம் மருளாக்கித் தெருளாத மக்களையே தேம்பியழ, ஏங்கி நிற்க பொருளற்ற துயராரப் புன்கண ராக்கிடுமே.’ துன்ப நீக்கம், சுமை ஒழிப்பு வெறியுணர்ச்சிகளையும் மடமையையும் குறுகிய தன்னலத்தையும் உன்னுள்ளத்திலிருந்து தவிர்த்துவிட்டால், உன் வாழ்விலிருந்து துன்பம் அகன்றுவிடும். சுமை வீழ்ந்துவிடும். அகத்தில் தற்பற்று இருந்த இடத்திலே அன்புக்கு, தூய பொதுநல அன்புக்கு இடங்கொடுத்து விட்டால், இன்ப ஒளி தானாக உன் உள்ளத்தில் சுடர் வீசும். அகத்தே அன்பொளியும் இன்பகீதமும் கொண்டு வாழ்க்கைக் களத்தில் நடப்பவன் சுமையில்லாமல் வலிமை வாய்ந்த கால்களுடன் தட்டி நடந்து செல்பவன் ஆகிறான். சுமையற்ற உள்ளத்துடனும் சுமையற்ற உடலுடனும் அவன் தன் குறிக்கோள் நோக்கி விரைகிறான். மனித உள்ளம் மடமையால் தானே தனக்குச் சுமை உண்டு பண்ணிக் கொண்டு, தானே தன் தண்டனைகளைப் பெருக்கிக் கொள்கிறது. வாழ்க்கையைச் சுமையாக்கிக் கொள்ள வேண்டுமென்ற நியதி, வீண் சுமையுடன் செல்ல வேண்டுமென்ற கட்டாயம் எவர் வாழ்விலும் கிடையாது. துன்பத்தையும் நோவையும் எவரும் மனித வாழ்வின்மீது சுமத்துவதில்லை. தானாக வலிந்து மேற்கொண்டாலன்றி, விரும்பி, வருந்தி அழைத்துக்கொண்டாலன்றி அவை வாரா. மெய்யறிவொளி இயல்பாக உள்ளத்தில் வீசுவது. அஃது உட்புக முடியாமல் மறைத்துத் தன்னல, தற்பற்றுச் சார்ந்த உணர்ச்சி வெறிகளைச் சுவராக எழுப்பினாலன்றி, மடமையும் துன்பமும் அதில் இடம் பெறமாட்டா. இந்த மடமையும் துன்பமும், இந்த வெறி உணர்ச்சிகளும் கூட, இன்பநாட்டமுடைய இடத்தில், இன்பமுகம் காட்டி, போலி இன்பங்களின் வடிவிலேயே வருகின்றன. மெய்யான இன்பம் எது, பொய்யான இன்பம் அஃதாவது துன்பம் எது என்று வகை செய்துணரும் பகுத்துணர்வு இல்லாத இடத்திலன்றி அவை அணுகமாட்டா. மனிதன் உண்மையில் கட்டற்றவன். தங்குதடையற்ற தன்னுரிமை உடையவன். நன்மை தீமைகளில், இன்ப துன்பங்களாகிய மெய்யின்ப, போலி இன்பங்களில் அவன் எதை வேண்டுமானாலும் கண்டு மேற்கொள்ளும் உரிமையும் வாய்ப்பும் உடையவன். அதுமட்டுமன்று. அவற்றைக் காணமுடியாமல் உணர்ச்சி வெறிகள் மறைத்தபோதுகூட, இத்தன்னுரிமை அவனை விட்டு நீங்குவதில்லை. ஏனெனில் உணர்ச்சிகளால் அவனைத் தளைப்படுத்திய கையே, பின் அவனை அவற்றிலிருந்து விடுவிக்கவும் உதவுவதாகும். மேலும், எவரும் தம்மைத் திடுமெனத் தளைப்படுத்திக் கொள்வதில்லை, தளைப்படுவதில்லை. மெள்ள மெள்ள, படிப்படியாகவே மனிதன் தளைப்படுகிறான். தளை நீக்கும் போதும் இவ்வாறு மெள்ள மெள்ள, படிப்படியாகவே அவன் எளிதில் செயலாற்ற முடியும். அத்துடன் உள்ளத்தை ஆட்கொண்டுள்ள வெறி உணர்ச்சிகள் சிறிது சிறிதாக அகலுந்தோறும், மெய்யறிவு தானாகவே சிறிது சிறிதாக வளர்ந்து வரும். இதனால் விடுபடும் முயற்சி தொடங்கியவனுக்கு, முதற்படி முயற்சியினும் அடுத்தபடி முயற்சி எளிதாகிக் கொண்டே வருகிறது. ஒவ்வொரு படியிலும் முந்திய படியில் பெற்ற மெய்யறிவு அவனுக்குத் துணை செய்கிறது. இடுக்கண் வருங்கால், நகுக! போலி இன்பங்களை நாடியவன் எந்தப் படியிலும் தன்னை அவற்றுக்குரிய உணர்ச்சிகளிலிருந்து தடுத்துக்கொள்ள முடியும். மெய்யறிவு அவனுக்கு இதில் உதவும். ஆனால், போதிய மெய்யறிவு பெறா நிலையில், போலி இன்பங்கள் துன்பந் தரும். எனினும் அறிவற்ற அந்நிலை கூடத் துன்பந் தந்து, அத் துன்பத்துடன் நின்றுவிடும். அது தானாகத் துன்பப் பயிர் வளர்ப்பதில்லை. அதை இன்பமாகக் கருதி மேலும் மடமை தொடர்ந்தால்தான் அதன் காரணகாரியத் தொடர்பான சங்கிலி பின் தொடரும். இந்நிலை எய்துமுன் நன்மை தீமை வேறுபா டறியும் மெய்யறிவு ஏற்படாவிட்டாலும், போலி இன்பத் தொடர் முழுவதும் பட்டாக வேண்டும். முக்கல் முனகலுடன் தொடங்கிக் கலுழ்தல், கதறல், ஏங்குதல், வீங்குதல் ஆகிய படிகளெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக வந்து தீரும். மடமையினால் மேற்கொண்டு விட்ட இவற்றின் பொறுப்பறிந்து பொறுமை யுடன் இவற்றைத் தாண்டுவதொன்றே மீண்டும் இவற்றினின்று விடுபடுவதற்கும் அவற்றின் சுமையை எளிதாக்குவதற்கும் உள்ள வழியாகும். ‘இடுக்கண் வருங்கால் நகுக, அதனை அடுத்தூர்வது அஃதொப்ப தில்.’ என்ற வாய்மொழியின் மெய்ம்மை இதுவே. நகை பொறுமை வருவிக்கிறது. பொறுமையில் அன்பும், அன்பில் அறிவும், இரண்டிலும் மெய்யுணர்வும் மெல்ல மலர்கின்றன. சிந்தனையின் தளர்ச்சி: தளர்வகற்றும் ஒளி மனிதன் மடமையால் சுமக்க வேண்டிவரும் சுமைகள் பல. பல பளுவுடையவை. ஆனால் தளர்வுற்ற சிந்தை, தன்னல அவாக்களே இவற்றைப் பெருக்குபவை, இன்னும் பலவாக்கி, இன்னும் மிகுந்த பளுவுடையவையாக்குபவை. நெருக்கடியான நிலைமைகளில் நீ உன் சூழல்களில்தான் அந்த நெருக்கடி காண்கிறாய் ஆனால் சூழல்களின் நெருக்கடி நீ அந்நெருக்கடியை நாடி வரவழைத்ததன் பயனேயன்றி வேறன்று. அவற்றைத் தாங்கும் வலு உன்னிடத்தில் இல்லாவிட்டால், அவற்றிலிருந்து விடுபடும் ஆற்றல் உன்னகம் நிலவாவிட்டால், நீ நாடியிருக்கவே மாட்டாய். அப்பம் தின்னும் மனிதன் பற்கள் அப்பத்தைக் கடிக்கவே அவாவ முடியும். எலும்பைக் கடிக்கவோ இரும்பைக் கடிக்கவோ அவாவ முடியாது. எலும்பைக் கடித்துடைக்கும் ஆற்றலுடைய நாயின் பற்களே எலும்பைப் பற்ற நாட்டங் கொள்ள முடியும். ஆனால் ஆற்றலும் வலிவும் இருக்கும் போதும், மனிதன் நெருக்கடியை வெல்ல முடியா நெருக்கடி என்று கருதுவதுண்டு. இஃது அவன் தளர்ந்த சிந்தனையின் பயன், அகவலிமை கேட்டின் விளைவு ஆகும். நெருக்கடிகளை நாடிய உள்ளம் அந்நெருக்கடிகளைத் தாங்கும் ஆற்றலுடையது மட்டுமன்று; அதனால் ஆற்றல் பெருக்கும் வாய்ப்பும் உடையது ஆகும். ஒவ்வொரு புத்தவாவும் வெறியுணர்ச்சியாய் இருந்தால்கூட, ஒரு புது நெருக்கடியை உண்டு பண்ணுவதன் மூலம் உனக்கு ஒரு புது ஆற்றல் தருவதற் குரியதே. துன்ப மூலம் அது தரும் படிப்பினையான மெய்யுணர்வு, இன்பம் பற்றிய உறுதியுணர்வு ஆகியவற்றுடன் இப் புது ஆற்றலும் சேர்ந்துதான் புது வாழ்வு தர வேண்டும். ஆகவே, எத்தகைய நெருக்கடியிலும், அந்நெருக்கடி கடத்தற்கரியது என்று தளர்வுறாதே, சோர்வடையாதே! அதை வென்று கடக்க வீறுடன் எழு! நெருக்கடியை நெருக்கடியாகக் கருதித் துன்பச் சூழலில் மிதந்துழலாதே, உணர்ச்சி வெறிகளில் உறங்கி விழாதே! தன்னலந் தரும் மடிமையுணர்வால் தன் கையைத் தானே கட்டிக்கொண்டு பொங்கும் வெள்ளத்தில் புரளாதே! நெருக்கடி உன் செயலென்றறிந்து அதை எதிர்த்துப் போராடி வெல்ல முடியுமென்ற நம்பிக்கையுடன் நிமிர்ந்து நிற்பாயாக! உன் வலங்கொண்ட மட்டும் மல்லாடுவாயாக! உன் வலிமை உள்ளூர அம்முயற்சியால் வளர்வதை நீயே அறிவாய். துன்பத்தில் தூங்கும் சமயம், துவளும் சமயம் உன்னிட மில்லாத ஆற்றல் இம்முயற்சிகளால் ஊற்றெடுத்துப் பெருக்கமுறும். அன்புத் துறவற நெறி தன்னலம்விட்டு, பொதுநல அவாவாகிய அன்பு உன்னைத் தீண்டுமானால், அந்த அன்பு உன் நெருக்கடியின் ஆற்றலையே தகர்த்துவிடும். ஏனெனில் அன்பின் வழிவரும் மெய்யுணர்வின் முன் எந்த நெருக்கடியும், எந்தச் சூழலும் தாக்குப் பிடிக்க மாட்டாது. ‘துக்கத்துள் தூங்கித் துறவின்கண் சேர்கலா மக்கட் பிணத்த சுடுகாடு.’ என நாலடியார் அடிகள் சுட்டிக்காட்டும் உண்மை இதுவே. துன்பத்தில் தூங்குபவன் அடைவது சுடுகாடு. அஃது உடலுக் குரிய அழிவுக் களமான சுடுகாடு மட்டுமன்று. அறிவுக்கும் புதுவாழ்வுக்கும் தடையிட்டு, ஆன்மிக அழிவும் தரும் சுடுகாடு ஆகும். அதிலிருந்து விடுபட உதவும் துறவு உலக வாழ்க்கையே துறந்த துறவன்று - குறுகிய தன்னல, தற்பற்றுந் துறந்து, அகன்ற பொதுநல, கடவுட்பற்று மேற்கொண்ட துறவேயாகும். உண்மை யில், உடல் பற்றிய மட்டில் தன்னலவாணனும் சரி, துறவியும் சரி, ஒரே வகைச் சுடுகாட்டுக்கே இரையாகின்றனர். ஆனால் தன்னலவாணன் உடல் தீயிலிட்டெரிக்கப்பட்ட கரும்பு போலச் சாறும் சக்கையும் ஒருங்கே கெட அழிகின்றது. மாறாகத் தன்னலம் துறந்த துறவியின் உடலோ, உடலின் பயன் முற்றும் பெற்றபின் அழிகிறது. அவ்வழிவு சாறெடுத்துப் பேணப்பட்ட பின் எரிக்கப்படும் சக்கை போன்றது. சக்கையை எரிக்கமட்டுமே உதவும் தீ அச்சாற்றைக் காய்ச்சி வெல்லமாக்க, கற்கண்டு, மணிக்கண்டு ஆக்கவும் உதவுகிறது. துன்பத்தில் இன்பம் கண்ட மாது சுமை வீழ்ச்சிக்கு, துன்பத்தில் இன்பங் காணும் தூய வாழ்வுக்கு ஏழை மக்களிடமே போதிய சான்றுகள் காணலாம். பெருங்குடும்பப் பொறுப்பைத் தனியாகத்தானே நின்று ஒரு மாது ஏற்கிறாள். அவள் வருவாய் வாரத்துக்கு ஒரு பொன்னுக்கு மேலில்லை. ஆனால் அலுவலகத்தின் வருவாய்க்குரிய அந்த வேலையுடன் அவள் அமைவதில்லை. வீட்டு வேலையை முற்றிலும் ஒழுங்காக மீந்த நேரத்தில் செய்கிறாள். உணவு சமைப்பது, உடை துவைப்பது முதலிய இன்றியமையாச் செயல் களை மட்டுமன்றி, வீடு துப்புரவாக்குதல், ஒழுங்கமைதி காத்தல், பிள்ளைகள் வளர்ப்பு முதலிய நீண்டகால நலப்பாதுகாப்புக் களையும் அவள் முட்டின்றி முடிக்கிறாள். இவற்றைத் தொடர்ந்து செய்வதன் மூலமே அவளுக்கு உடல் வலிவு, நல் அறிவு, ஓய்வு ஆகிய மூன்றும் கிடைக்கின்றன. இச் செல்வங்கள் அவளுக்கு மேலும் ஒரு செல்வம் அளிக்கின்றன. அவள் கருத்துத் தன்னைப்போல் வாழத் தெரியாத ஏலமாட்டா எளியவர்கள் பக்கம் சாய்கிறது. நோயுற்ற அயலார்களுக்கு அவள் அறிவுரையும், ஆதரவும் நல்குகிறாள். முற்றிலும் கையிழந்தவர்கள், வருவாயற்றவர்களுக்கு, ஊக்கம் தரும் சிறு கையுதவி, பொருளுதவி அளித்து அவர்களுக்கும் புதுப்பாதை வகுக்கிறாள். இத்தகு இருமைச் செல்வ வாழ்வுகளின் மூலம் அவள் வறுமைக்குரிய இரு தீமைகளை, இரு அளறுகளை, தன் வாயிலருகே வரவிடாமல் தடுத்துவிடுகிறாள். அவை கடன், ஏக்கம் ஆகியவைகளே. காலை முதல் மாலை வரை, இரவில்கூட, அவள் வேலை செய்கிறாள். குறிக்கோளற்ற சோம்பல் தரும் தீங்குகள், துயரங்கள், வேதனைகளுக்கு அவள் வாழ்வில் இடமிருக்க முடியாது. அவள் துயில் அமைந்த துயில், ஏனெனில் வேலையி லிருந்து சற்று விலகிய நேரம்கூட, அவளுக்குச் சோம்பியிருக்கும் நேரமல்ல, சோர்வகற்றும் ஓய்வு நேரம்; புதிய முயற்சிகளுக்குப் புத்தூக்கம் தரும் இடையின்ப வேளை. சூழலைப் பற்றி அவள் குறைப்படுவதில்லை, முனகுவ தில்லை - சூழலின் பொல்லாங்குகள் அவள் முயற்சியாலேயே தளர்ந்தகலுகின்றன. அவை பொல்லாங்குகளுக்குரிய பொல்லாப்பு இழந்து அவளுக்குப் புத்துரம் அளிக்கும் பொலிவு உண்டுபண்ணுகின்றன. அவள் இன்ப துன்பச் சூழல் இரண்டிலும் மகிழ்வுடனேயே, கிளர்ச்சியுடனேயே இருக்க முடிகிறது - ஏனென்றால் குறுகிய தன்னலத்தில் அடைபடாத அவள் உள்ளம் தானே தன் துயர் துடைத்துப் பிறர் துயர் துடைக்க விரைந்துவிடுகிறது. தன் துயர் துடைத்து முடிந்தபின் பிறர் துயர் அகற்றலாம் என்றுகூட அவள் காத்திருப்பதில்லை. ஏனெனில் அது போலிப் பொதுநலவாணர் சாக்குப்போக்கு. பிறர் துயர் துடைக்க எண்ணாதவனுக்குத் தன் துயர் அகலுவதேயில்லை. இதனை யுணர்ந்து வறுமையிடையே தன் தேவைகளைக் குறைத்துக் கொண்டு அவள் பிறர் தேவைகளைக் கவனிக்கிறாள். பிறர்நலம் பேணுபவர்களுக்குத் தேவைகள் தேவை களாயமையாமலே அகலுகின்றன. பிறர் துயரகற்றவும், பிறர் தேவை நிறைவேற்றவும் பயன்படுகிறோம் என்ற எண்ணமே ‘வறுமையிற் செம்மை’ காணும் அம்மாதுக்குப் பெருஞ் செல்வர் காணா அருஞ்செல்வம் ஆகின்றது. வறுமையிற் ‘செம்மை’ச் செல்வம் தன் முயற்சியுடன் பிறர் சேவையிலீடுபட்ட மேற்கூறிய அணங்குக்கு நேர்மாறானவர்களும் உண்டு. அவர்கள் உழைக்கும் நாட்களில் ஓய்வு நாட்களை எண்ணி ஏங்குவர். இன்றியமையாத் தேவைகளுக்காக உழைக்கும் நேரத்திலேயே உல்லாசப் பொருள்களுக்கு அங்கலாய்ப்பர்! செல்வர் எளிதாகப் பெறும் இனிய தின்பண்டங்களை நினைத்துக் கஞ்சிக்கற்ற எத்தனையோ ஏழைகள் ஏங்குகின்றனர்! செல்வர் துய்க்கும் மின்னொளி, வானொலி, இசைத்தட்டு ஆகியவற்றை எண்ணி, தாம் பெறாத வேறு உயர் வாய்ப்புக்களை அவாவி அமைதி கெடுகின்றனர். தம்மால் கலந்துகொள்ள வாய்ப்பற்ற விருந்துக் குழாங்களையும், நாடகத் திரைப்படக் காட்சிகளையும், உயர்தரப் பகட்டாரவார உடைகளையும், ஊர்திகளையும் நினைந்து நினைந்து எத்தனை பேர்கள் தம்மிடம் இருப்பவற்றையும் துய்க்காதவர்களாகி வாணாளை வீணாளாக்கி உழல்கின்றனர்! இத்தகையோர் இன்பத்துள் இன்பம் தேடுவதற்கு மாறாக, துன்பத்துள் துன்பம் தேடுபவர் ஆவர். வறுமையிற் செம்மை நாடிய மாது இங்ஙனம் கருத்தை ஓடாவிட்டாளென்று வைத்துக்கொள்வோம். அவள் வாழ்வில் பொங்கி வளரும் நிறைவு மங்கித் தேயும் குறைவாகிவிடும் என்று கூறத் தேவையில்லை. ஏழையர் ஏக்கத்திற்குரிய செல்வர் வாழ்வுகூட அவ் வணங்கின் செல்வம் உடையதல்ல என்பது காணும்போது, ஏங்கும் ஏழைகள் அவாவும் இன்பத்தின் போலித் தன்மை நமக்கு நன்கு விளங்கும். அவர்கள் தேடுவது விளக்கல்ல, மின்மினி; நீரல்ல, கானல்! பெறுவதோ மின்மினியன்று, நச்சுவளி; வெறுங் கானலல்ல, வெப்பு! வறுமையிற் செம்மையுடையவரே உண்மை இன்பம் பெறும் செல்வர். செல்வரும் அச்செல்வம் பெறமுடியா தென்றில்லை. ஆனால் அஃது அச்செல்வத்தைத் தாமே துய்ப்பத னாலன்று. பிறரையும் துய்க்கவிடுவதனாலேயே, ஊக்குவதா லேயே பெறத்தக்கது. ஏனெனில் இன்பத்தின் மறைதிறவு தன்னலத்திலில்லை, பொதுநலத்திலேயே பொதிந்துள்ளது. ஏழைகளின் ஏக்கத்திலே, பொறாமையிலே - அவர்கள் வறுமை காரணமாக அவர்களை வலிந்து ஆட்கொள்வதிலே, அவர்கள் உழைப்பை விலைகொடுத்து வாங்குவதிலே இன்பமோ, ஆற்றலோ நாடும் செல்வர் உண்டு. ஆனால் இஃது உண்மையில் இரட்டைத் தீமையை இன்பமென்றும், எல்லை யிலா வலிமைக் கேட்டை ஆற்றலென்றும் கொள்ளும் முழு மடைமையே யாகும். ஏழைகள் ஏக்கமும் பொறாமையும் அவர்கள் அடிமைப் பணிவும் ஆற்றலாகவோ பகைமையாகவோ தோன்றாதிருக்கலாம். ஆனால் ஏலா ஆற்றல் ஆற்றல் கேடல்ல, ஆற்றல் பெருக்கமே. ஓட்டம் தடுக்கப்பட்ட நீரின் அமைதிபோல், அது தேக்க அமைதியாய், செல்வர் செல்வம் அழிக்கும் பகை யாற்றலாகவே முடியும். தவிர, பிறர் ஏழ்மையில் மகிழும் அல்லது உழைப்பால் பயன்பெறும் செல்வர், உழைப்பும் பயிற்சியும் இழந்து நலிவர். அவர்கள் செல்வத்தின் மெய்ப்பயனான பிறர் நலச் செல்வமும் அன்புச் சேமநிதியும் ஒருங்கே இழப்பவர் ஆவர். உழையாமை, உழைப்புப் பயிற்சியின்மை அவர்களறியாமலே அவர்கள் தனி வறுமை ஆகிறது! வறுமையிற் செம்மை நாடிய மாது வீட்டுக் கடமைகளைப் புறக்கணிப்பவளாயிருந்தால், ஒவ்வொரு நாளும் அக்கடமை அவள் கழுத்தில் தொங்கவிடப்பட்ட ஒரு கல்லுருளையாய் அவளை அழுத்தாதிராது. வறுமை பெருகி அவள் சாவு நோக்கித் துன்பப் பாதையிலே விரைவாள். தன்னலத்தின் பயன் சாவு என்ற மேற்காட்டப்பட்ட நாலடிப் பாடலின் மெய்ம்மைக்கு அவள் சான்றாய்விடுவாள். ஆனால் தன்னலமற்ற சேவை ஒன்றின் மூலமே அவ்வணங்கு சுமைகளனைத்தையும் கைவிட்டு எளிய, சுமையற்ற நல்வாழ்வு வாழ்ந்து, இன்ப நோக்கிப் படிப் படியாக, முன்னேறுகிறாள். தன்னல மறுப்புக் உடன்பிறப்புப் பண்புகளாக மகிழ்வும் உளக்கிளர்ச்சியும் இயல்கின்றன. ஏனெனில் தன்னல மறுப்பு உழைப்புக்கு ஒரு நோக்கம் அல்லது குறிக்கோள் தந்து அதைக் கசப்பான கடமை என்ற நிலையி லிருந்து உயர்த்தி ஓர் இனிய இன்பப் பயிற்சியாக்கிவிடுகிறது. செல்வத்துள் வறுமைத்துயர் மேற்கொள்பவர் மேலே குறிப்பிட்ட வறுமையிற் செம்மைநெறி பின்பற்றிய மாதினுக்கு மாறான மற்றொரு மாதின் வாழ்வையும் நாம் காண்டல் பயன்தருவதாகும். அவள் வறுமைச் சூழலுக்குரிய வளல்லள், மட்டான செல்வ வாழ்வுடையவளே. தேவைக்குப் போதிய வாய்ப்பு மட்டுமன்றி, ஓய்வுச் செல்வமும் இன்ப வாய்ப்புக்களும்கூட அவளுக்கு மட்டான அளவில் உண்டு. ஆனால் அவளால் செய்யப்பட வேண்டியதாக அமைந்துள்ள சில சமுதாயக் கடமைகளை அவள் செய்ய விரும்பாது வெறுக் கிறாள். அக்கடமைகள் அவள் உள்ளத்தை உறுத்துகின்றன. அவள் சில சமயம் அவற்றைச் செய்யாது விடுகிறாள். ஆகவே அவை அவளை எப்போதும் ஓய்வொழிவின்றி உறுத்து கின்றன. நாள் செல்லச் செல்ல உறுத்தல் மிகுதியாகவும் வளர்கிறது. சிலவற்றை அவள் வேண்டா வெறுப்புடன் செய் கிறாள். செய்யும்போதும் அவள் மனக் கசப்புடன் செய்கிறாள், செய்து முடிந்த பின்னும் அவள் மனக்கசப்பும் அதனால் விளைந்த சூழல் மாறுதல்களும் அவளை உறுத்தாமல் விட வில்லை. வேறுசில செயல்களை அவள் செய்யாமலே நாட் கடத்தி, இனி நாட்கடத்த முடியாது என்ற நிலை ஏற்பட்ட பின்பே செய்கிறாள். இதனால் நாட்கடத்தும் சமயத்திலும் சரி, இறுதியில் செய்யும் சமயத்திலும் சரி, அவள் மனக்கசப்பு மாறுவதில்லை. செய்து முடிந்த பின்னும் மனக்கசப்பும் மற்றச் சூழல் விளைவுகளும் பெருக்கமுறுவதன்றி மாய்வதில்லை, தேய்வதில்லை. பணமிருந்தும் செலவு செய்ய வேண்டிய சில இன்றி யமையாக் கடமைகளில் செலவு செய்ய மனமில்லாமல், பணமில்லா ஏழையைப் போலவே அவள் செலவு செய்யாமல் இன்னலுக்கு ஆட்படுகிறாள். செலவு செய்ய நேர்ந்துவிட்டாலும் அவள் மனக்கசப்பு இரட்டிக்கவே செய்கிறது. இவ்விடங்களில் அன்பற்ற நெஞ்சம் நாமறியாமல் நமக்கே பகையாகிவிடுவது காணலாம். சில சமயம் தன்னிடம் இருக்கும் பணத்தாலோ அல்லது அதற்கு இரட்டி மூவிரட்டி பணத்தாலோ - உண்மையில் எந்த அளவான பணத்தினாலுமோ - கிட்ட முடியாத பொருள்களில் அவாக் கொண்டு, அவற்றுக்காகப் பணம் செலவிட்டு அவள் உளமாழ்குகிறாள். அந்த எட்டாப் பொருள் கிட்டாவிட்டாலும் அவள் துன்பம் பெரிது. கிட்டினால்கூட அது குறைவதில்லை. ஏனென்றால் அது அவாப் பெருக்குமேயன்றி அவாநிறைவு அல்லது உளநிறைவு உண்டுபண்ண முடியாது. பொதுநல அவாத் தோன்றும்வரை அத்தகைய நிறைவு எவருக்கும் ஏற்பட முடியாது என்பதை இது காட்டும். மேற்கூறப்பட்ட இரு அணங்குகளின் வாழ்வே கிட்டத் தட்ட எல்லா வாழ்வுகளுக்கும் உரிய மூல வகை மாதிரிகள் ஆகும். நெருக்கடிகள் முன்னைய வாழ்வில் தாமாகத் தளர்ந்து போவதையும், பிந்திய வாழ்வில் அவை எல்லையற்றுப் பெருகுவதையும் நாம் தெளிவாகக் காணலாம். இரண்டு இடங்களிலும் நெருக்கடி என்பது புறச்சூழலைப் பொறுத்த தன்று, அகச் சூழலைப் பொறுத்ததே யென்றும்; அந்த அகச் சூழல்கள் தன்னலம், பொதுநலம் ஆகிய இரண்டுவகை வேறு பாடுகளினாலேயே அமைவன என்றும் உணர்தல் அரிதன்று. தன்னலம் நெருக்கடிகளை வரவழைத்து வளர்க்கிறது. பொது நலம் நெருக்கடிகளை அகற்றவும் தளர்த்தவும் பயன்படுகிறது. நெருக்கடிகளின் கடுமை, எளிமை, வாழ்வின் வெற்றி தோல்வி, இன்ப துன்பம், புகழ் இகழ் ஆகிய யாவும் தன்னல அவா, பொதுநல அவா ஆகிய இரண்டன் வேறுபாடுகளேயன்றி வேறல்ல. பண்பு, அருள், சான்றாண்மை சமயவாணர் பலர் - சிறப்பாகச் சமய அறிவு நூலாராய்ச்சி யிலோ, மறைநூற் சிந்தனையின் நுட்பநுணுக்கங்களிலோ பயின்ற சமயவாணர் - எளிதில் கண்டுணராத மெய்ம்மை இது. இத் தகையவர் தம் வாழ்நாளின் பெரும் பகுதியையே இவ்வாறான ஆராய்ச்சிகளில் செலுத்துவர். அதனால் பாரிய அறிவுக்கடல் களாகவும் விளங்குவர். ஆனால் அப்போதும் அவர்கள் அறிவு அவர்களுக்குத் தங்கள் வாழ்வு பற்றிய கழிவிரக்கத்துக்கே வகை செய்துவிடுகிறது! “அந்தோ! நான் ஒரு மனைவியை மணந்து ஒரு குடும்பத்தை வளர்த்துக் கால்கட்டாகக் கட்டிக் கொண்டேனே! இப்போதிருக்கும் அறிவு பல ஆண்டுகளுக்கு முன்பே இருந் திருந்தால், நான் மாயையில் சிக்கி ஒரு பெண்ணை மணந்து கொண்டிருக்கமாட்டேனே! இப்போது என்ன செய்வது?” என்று அவர்கள் அங்கலாய்த்துக் கொள்வதைக் காண்கிறோம். உலகமெலாம் தன் குடும்பம் என்று கருதும் மெய்த்துறவு நிலை பூண்ட அகச்சமயவாதிகள் அல்லது உண்மைச் சமய வாதிகள் எங்கே, ஒரு குடும்பத்தின் பொறுப்புக்கே கலங்கும் இந்தப் போலித்துறவு பற்றிய சழக்குரைகள் பயின்ற புறச் சமயவாதிகள் அல்லது பொய்ச்சமயவாதிகள் எங்கே? கழிவிரக்கத்தில் செல்லும் நேரத்தையும் செயலற்ற அவச் சிந்தனையையும் புதிய மெய்யுணர்விலும் புது முயற்சியிலும் புத்தாக்கத்திலும் செலுத்தும் கருமவீரர் எங்கே, வாழ்வின் முடிவிலும் ஆராய்ச்சியின் முடிவிலும் கூடக் கழிவிரக்கமன்றி வேறு ஏதும் கல்லாத இத்தகைய கோழை வேதாந்திகளெங்கே? கடவுள் பெயர் கூறக்கூட நேரமில்லாது கடவுட் பண்பை வளர்க்கும் கடவுட் பெரியார் எங்கே, கடவுட் பெயர் கூறி மனிதப் பற்றிலும் மனிதப் பண்பிலும் குறைவுறும் இக் ‘கல்விக் கற்றுக் கற்றுக் கருத்தறியா’ மாக்கள் எங்கே? கழிவிரக்கம் கொள்பவர் பெருஞ்செயல் தகுதியற்றவர். வாழ்வில் எல்லாருக்கும் உரிய இனக்கடமையின் பொறுப்பையே தேவையற்ற சுமையாகக் கருதுபவர். பொதுநிலை மனிதத் தன்மையில்கூடக் குறைந்த கோழைகள். இத்தகையவர்கள் துறவிகளல்லர், போலித் துறவிகள் - அருளாளரல்லர், பண்பாளர் அல்லர், மருளாளர்கள்! தன் பொறுப்புடன் தன் குடும்பப் பொறுப்பையும் ஏற்று நடத்துபவனே நல்லான்; தன் குடும்பத்துடன் பிறர் குடும்பப் பொறுப்புடன் ஏற்று நடத்துவிப்பவனே பெரியான்; தன் இனத்தின் பொறுப்புடன் எல்லா இனத்தின் பொறுப்பும் தனதாகக் கொண்டு, துன்பங்களை ஆர்வத்துடன் வரவேற்று இன்பம் பரப்புபவனே கடவுள் பெயரைச் சொல்ல, அவர் அருகே நின்று அவர் பண்பை உலகுக்கு எடுத்துரைக்கத் தகுதி யுடையவன். இம்மூன்று படிகளையுமே நாம் பண்பு, அருள், சான்றாண்மை என்று வகுத்துணர்கிறோம். பெரியாரும் ஏனைச் சிறியாரும் மனிதன் பண்பும் பெருமையும், ஆற்றலும் அறிவும், வெற்றி யும் வீறும், புகழும் பொலிவும் யாவும் அவன் அன்பின் பரப்பு, அவன் தொண்டின் உறுதி ஆகியவற்றைப் பொறுத்தவையே யாகும். பெரிய செயல் என்பது இவ்விரண்டு எல்லைகளிலும் - அன்பின் பரப்பிலும் உறுதியின் ஆழத்திலும் - மிகுந்த செயல் களே. அன்பின் பரப்பிலும் உறுதியின் ஆழத்திலும் - மிகுந்த செயல்களே. அன்பின் விரிவுக்கேற்பவே அறிவும் மெய்யுணர்வும் ஏற்படும். அதன் ஆழத்துக் கேற்பவே துன்பந்தாங்கும் உறுதி உண்டாகும். அன்புக்கு நேர்மாறான பண்பு வெறுப்பன்று. பகைமைகூட அன்று. குறுகிய தன்னலம் அல்லது தற்பற்றே. வெறுப்பும் பகைமையும் மட்டுமன்றி, கீழ்த்தர விருப்புக்களும் அவாவுங்கூட இதினின்று பிறப்பவையே. பெருங்காரியம் செய்வேன் என்று கிளர்ந்தெழும் பெரியார் யாவரும் உண்மையில் தெரிந்தோ, தெரியாமலோ உலக முழுமைக்கும் - மனித இனத்துக்கே - நலஞ்செய்யும் அகத் தூண்டுதல் உடையவராவர். ஏனெனில் இதுவே பெரியாருக் குரிய பெரும் பண்பு. இத்தகையவர் வெற்றி கண்டாலும் பெரியார்களே! தோல்வி கண்டாற்கூடப் பெரியாராகவே போற்றப்படுவர். ஏனெனில் பெருமையும் சிறுமையும் வெற்றி தோல்விகளைப் பொறுத்தவையல்ல, பண்பையே பொறுத்தவை. பெரியார் உள்ளத்தில் நிலவும் இப்பேரன்பு அவரைச் சுற்றி எப்போதும் அன்பலை வீசிக் கொண்டேயிருக்கும். அவர் பெயர் கேட்கப்படும் இடங்களிலெல்லாம் அது நுண்ணலைகளாகப் பரவாமலிராது. அது அவர் குடும்ப எல்லையிலடங்காமல் சமுதாயத்திலும், சமுதாயத்திலடங்காமல் இனத்திலும் பொங்கிப் பொலிவுறும். அது எங்கும் துயரகற்றும், ஆறுதலளிக்கும். அது எங்கும் அழகும் இன்பமும், மெய் யுணர்வும் அறிவும், இனிமையும் இன்னலமும் பரப்பி ஒளிவீசும். சுமையகற்றுவது பண்பு, அன்பிற் பிறந்த பயிர்ப்பு. அந்த அன்பு தன்னலத்திலிருந்தே பிறக்கிறது. ஆனால், உயிரற்ற, குறுகிய தற்பற்றாக நின்றழியாமல், எல்லையற்ற இனநல நோக்கி இடையறாது விரிவுற்று வளர்கிறது. இவ் அன்பு எல்லை யில்லாதது, இடையறாதது மட்டுமல்ல. அது எந்தப் படியையும் புறக்கணிக்கத் தூண்டுவதன்று. குடும்ப நலனுக்காக ஒருவன் தன்னல மறுக்கலாம். சமுதாயத்துக்காகக் குடும்பநல மறுக்கலாம். இனத்துக்காகச் சமுதாய நலனே மறுக்கலாம். ஆனால் இது பொங்கல் நிறைவின் மலர்ச்சியேயன்றி வேறன்று. தற்பண்பு பேணாமல் குடும்பப் பண்போ, குடும்பப் பண்பு பேணாமல் சமுதாயப் பண்போ, சமுதாயப் பண்பு பேணாமல் இனப் பண்போ அமைதல் சாலாது. இதனால்தான் தன் கடமை பேணாதவன் குடும்பம் பேணுவதோ, குடும்பப் பொறுப்பைத் தட்டிக் கழிப்பவன் சமுதாயத்துக்கு உழைப்பதோ, சமுதாயத் துக்கு உழையாதவன் இனத்துக்கு அஃதாவது கடவுளுக்கு உண்மைத் தொண்டாற்றுவதோ போலிச் செயல் ஆகும். அவை ‘ஆகுல நீர பிற’, ‘புறத்த புகழுமில’ என்று கூறத்தக்கவை ஆகும். எத்தனையோ சமயவாணர், சமயப் பரப்பாளர் இல்லங் களில் உள்ளக் கிளர்ச்சியற்ற சோர்வுற்ற குழந்தைகளின் முகங் களை, துயரத்தின் தடமும் கவலையும் தோய்ந்த பெண்டிரின் முகங்களை, மாசற்ற ஆடை, அழுக்கடைந்த அறைகள் ஆகிய வற்றை நாம் காண்கிறோம். வீட்டைத் திருத்த முடியாமல், சமுதாயத்தைத் திருத்த நேரமில்லாமல், உலகையும் மனித இனத்தையும் திருத்தப் புறப்பட்ட இந்த உத்தமர்களைக் காணும்போது, ‘அந்தோ சமயமே!’ என்று இக்காலப் புறச் சமயங்களை எண்ணி ஏங்க வேண்டியதாகவே இருக்கிறது. இத்தகையவர் வாழ்க்கையிலே நாம் பலபடியான தியாகங் களைக் காண்கிறோம், வியப்பூட்டத்தக்க தன் மறுப்பை காண் கிறோம் என்பது உண்மையே. ஆனால் இத்தியாகம், தன் மறுப்பு, தன்னை, தன்னலத்தைத் துறந்ததுமட்டுமே. குறுகிய தன்னலத் தின் எல்லை விரிவாகிய பொதுநலமன்று, அன்பன்று; அருளன்று, கடவுட் பண்பன்று. இந்நிலையில் நாம் அதை உண்மையான தியாகமென்றோ, தன்மறுப்பென்றோ கூற முடியாது - தற்கொலை என்றுதான் கூற வேண்டும். அறிவின் தடமகன்ற வீரத் தற்கொலை என்றுகூட அதைக் கூறலாம். அருளாளர் குறிக்கொண்ட தன்மறுப்போ, தியாகமோ; துறவோ சான்றாண்மையோ; மெய்ம்மைச் சமயமோ கடவுட் பண்போ இதுவன்று. அரங்கிலாடியன்றி அம்பலத்திலாட முடியாது பெருஞ் செயல்களைப் பெரியார் மட்டுமே ஆற்ற முடியும். ஆனால் பெரியாருக்கும் பெருஞ் செயலுக்கும் உரிய பெருமைப் பண்பு சூழலிலுமில்லை; செயலிலும், செயலின் தன்மையிலும் இல்லை. அது செய்பவர் அகப் பண்பையும் அதன் பயனான செயல்வகைப் பண்பையுமே பொறுத்தது. பெரியார் எங் கிருந்தாலும் பெரியவரே; வாழ்வின் எந்தப் படியிலிருந்தாலும் பெரியவரே. அவர் எந்த நாட்டினர், இனத்தினர், சமயத்தவர், மொழியினர், எந்தக் கொள்கையினராயிருந்தாலும் பெரியவரே யாவர். அதுபோல அவர் செயலின் சூழலோ, புகழோ, இகழோ, வெற்றியோ தோல்வியோ அவர் பெருமைப் பண்பை அல்லது அவர் செயலின் பெருமைப் பண்பை ஒரு சிறிதும் பாதிக்காது. அவர் செயல் தொடங்கும் சமயம், சூழல் எதுவாயினும் அவர் அகப்பண்பும் சொற்பண்புமே சூழலைத் தமக்கிசைவாக மாற்றி யமைத்துக் கொள்ளும். பெரியாரின் பண்பு சூழற் பண்பாக மாறி, செயலையும், பெருஞ் செயலாக்கிவிடும். பெருமை நாடுபவன், புகழ் நாடுபவன் உலகத்துக்கு, மனித இனத்துக்குரிய பெருஞ் செயல்கள் செய்ய விரும்புபவனாக நீ அமைந்தால், அதற்குரிய பண்புகளை முதலில் உன் அகத்தில், பின் உன் வாழ்வின் அகமாகிய குடும்பத்தில் காட்டு. தனக்குத் தானே உதவி என்ற நிலையை, பிற சார்பற்ற தற்சார்பு நிலையை முதலில் அடைந்து, பின் உன் மனைவி, உன் பிள்ளை, உன் பெற்றோர், உன் உடன்பிறந்தார், சுற்றத்தார் ஆகியோர்க்கு உதவி செய் அவர்கள் நலம் பேணு. பெருமை பெரும்பரப்பில் மட்டும் தான் என்ற மயக்கில் ஆழ்ந்துவிடாதே. சிறிய பரப்பில் பயின்று முதிர்வுற்ற பண்பன்றி வேறெதுவும் பெரும்பரப்பில் செயலாற்ற முடியாது. ஒரு மையத்தில் தொடங்கிச் சிறிய பரப்பில் தோய்ந்தன்றி அன்பலைகள் அகல்வெளியில் பரவமாட்டா. பல ஆண்டுகள் இடையறாது தன்னல இன்பங்களில் உழன்றவன் இயல்பாகப் பெரும் பழிச்சுமைகளைச் சுமக்க வேண்டியவன் என்பது உண்மையே. இவற்றைச் சமயவாணர் வலியுறுத்தத் தயங்குவதுமில்லை. ஆனால் சமயப் பெரியாராகக் கருதப்படும் பலரே - தம்மைச் சமயத்திற்குச் சிறப்புரிமை யுடையவரென்று தாமே கருதிக் கொள்ளுபவர்களே, இவற்றி லிருந்து விடுபட, பிறரை விடுவிக்க முயல்வதற்கு மாறாக, அடிக்கடி இவற்றிலேயே ஆழ்ந்து, இவற்றையே இருவேறு வகைகளில் தம்மை உண்மை விடுதலையிலிருந்து பிரித்து வைக்கும் இரட்டைச் சிறைக் கோட்டமாக்கிக் கொள்கின்றனர். உண்மைப் பெருமையைத் தாம் அடையாததுடன், இத் தகையவர்கள் பிறரையும் அத்திசையில் செல்லவிடாமல் தடுப்பவர்களாய் விடுகிறார்கள். இத்தகையவர்களில் ஒருசாரார் தாமே தம்மீது சுமத்திக் கொண்டுவிட்ட இச்சுமைகளைப் பரமன் தமக்கருளிய “சிலுவைத் தியாகங்கள்” என்றோ, சோதனைகள் என்றோ பெருமைப்படுத்திக் கொள்கின்றனர். இத்தண்டனைகளைத் தம்மீது சுமத்தியதன் மூலம் தம்மை இறைவன் தனிச் சிறப்புக் குரியவர்களாகத் தேர்ந்தெடுத்துவிட்டதாகவும் அவர்கள் தருக்கிக் கொள்கின்றனர். இதற்கு நேர்மாறாக இன்னொரு சாரார் இன்னொரு வகைத் தற்செருக்கை மேற்கொள்கின்றனர். இச்சுமைகள் தம் செயலால் வந்தவை என்று அவர்கள் கருதுவ தில்லை. அவை ஊழ்வயத்தால், அல்லது சூழல் காரணமாக அல்லது சமுதாயத்தின் செயலால் விளைந்தவை என்று கருதி விடுகின்றனர். சுமைகளுக்குரிய காரணங்களை புறப்பண்புக ளாக்குவதன் மூலம் இவர்கள் தாம் அநீதி செய்தவர்கள் என்பதை மறைத்து, அநீதிக்கு ஆளானவர்கள் தாங்கள் என்று கருதுகின்றனர். தாம் குற்றவாளிகள் என்று கண்டு தம்மைத் திருத்த முனையாமல், தம்மைக் குற்றத்துக்கு ஆளானவர்கள் என்று கருதிப் பிறரை அல்லது சூழலை அல்லது ஊழைக் குறை கூறுகின்றனர். தம் குற்றத்தை மறைக்கும் இவ்விரண்டு நிலைகளுமே குற்றத்தை வளர்க்கும் செயல்கள் என்று கூறத் தேவையில்லை. தன் வாழ்க்கைக் கட்டடத்தின் ஒவ்வொரு செங்கலும், ஒவ்வொரு கூறும் - தன் வலுவும் தளர்வும் இரண்டுமே தானே இயற்றியவை என்று மனிதன் கொள்ளும்வரை, அவ்வாழ்க்கைக் கட்டடம் அவனுக்குரியதாக அமைவதும் அரிது. அது ஆக்கம் பெறுவதும் அரிது. தற்செருக்கும் தன்னைத்தானே அநீதிக்கு ஆட்பட்டவனாகக் கருதி இரங்கும் தனிரக்கமும் இந்த நேர்மை யான வாழ்க்கை நோக்கத்தைத் தடுத்து நிறுத்திவிடும். வாழ்க்கையின் பிழையறிந்து அதைத் திருத்திப் புதிதாக, புது வலிமையுடன் ஆக்கும் வாய்ப்பும் அவனுக்கு இல்லாது போய் விடும். சில சுமைகள், கடமைகள் கட்டாயமானவையாக மட்டு மல்ல, கடுமையானவையாகக்கூட அமையலாம். ஆனால் அவற்றின் கடுமை அன்பும் மெய்யுணர்வும் உள்ளத்தில் இடம் பெறும் வரையிலும்தான் கடுமையாய் அமையும். அன்பொளி யும் மெய்யுணர்வொளியும் அவற்றை எளியனவாகவும் இன்பகரமானவையாகவும் மாற்றவல்லவை. புறவாரப் புயல்கடந்த அகவார அமைதி துன்பமும் தன்னுளைவும் பேரின்பக் கோயில்களின் புறவாரங்களில் மட்டுமே உலவுபவை. கோயிலின் அகவாரம் அவை கடந்தே உள்ளது. ஆகவே ஓரளவு தொடக்கத்தில் துன்பமும் உளைச்சலும் இல்லாமல் ஒருவன் பேரின்பக் கோயிலை அணுக மாட்டான். ஆனால் இத்துன்பமும் உளைச்சலும் புறவாரத்தை அவன் அகவாரம் என்று நினைக்கும் வரைதான் இருக்கும். இதுவே புறவாரத்துக்குரிய பொல்லா மயக்கம். இம்மயக்கத்தின் பயனாகவே அவன் துன்பக் காரணத்தைப் புறத்தே நோக்குகிறான். தன் பிழையைப் புறப்பிழையாகக் கருதுகிறான். இந்தப் படி கடிந்து அக நோக்குடன் பிழைகளை அகநிலைக் குறைபாடு களாகக் காணவும், இன்பக் காரணங்களைக் கண்டுணரும் மெய்யுணர்வுப் படிகளாக உணரவும் தொடங்கியதே ஒருவன் பேரின்பக் கோயிலின் அகவாரத்தில் உலவத் தொடங்குகிறான். ஏனெனில் அவன் அகத்தே காணும் இன்பக் காரணமே அவனுக்குப் புறச்சூழலாகவும் அமைந்துவிடுகிறது. துன்பம் முழுநிறைவமைதியில் தோன்றுவதில்லை. அதன் குறைபாடுகளிலிருந்தே தோற்றுகிறது. ஆகவேதான் அது நிறைவமைதிக்கும் இன்பத்துக்கும் வழிகாட்டியாகிறது. துன்பத்தின் இப்படிப்பினை அறிந்து, குறைபாடுகளில் கருத்துச் செலுத்தித் துருவி ஆராய்ந்து விலக்குந்தோறும் அவன் இன்பக் காரணங்களைத் தானே அறிந்தவனாகிறான். துன்பத்துக்குக் காரணமான குறை காணுந்தோறும் பேரின்பத்துக்குரிய நிறையமைதி ஆகிய கலைநிறை முழுமதி அவன் வாழ்க்கை என்னும் அகல்வானில் படிப்படியாக வளர்கிறது. துன்பங்கடந்து இன்பம், அல்லல் கடந்து ஓய்வமைதி, தனிமை கடந்து நிறையமைதி - இதுவே பேரின்பவாணன் செல்லும் திசை. ஆனால் இது செல்லும் திசையேயன்றி வேறன்று. முழு அமைதி காணும் வரை அவன் தன் பயணம் முடிந்து விட்டதாக எண்ணுதல் கூடாது. இடையே வரும் துன்பங்கள் நிலையான துன்பங்களல்ல, - நேர்திசையின் கோட்டம் காட்டும் எச்சரிக்கைக் கற்கள், அவ்வளவுதான். இடையே வரும் இன்பங்களும் நேர்வழி காட்டும் நாழிகைக் கற்களேயன்றி, நிலையான தங்கிடங்கள் ஆகா. அதுபோலத் தனிமையும் ஓர் இலக்கல்ல, ஒரு பாதை. அது சிந்தனைக்குரிய நெறி, திசை மட்டுமே. அவ்வழி செல்பவன் சிந்தனையின் செல்வமான பேரின்பத்தை எளிதில் அடைகிறான். சிறு கடமைகளை நிறைவேற்றுவதால் சுமைகள் குறைந்து கொண்டே வருகின்றன. இன்ப வாய்ப்பும் இன்பமும் பெருகிக் கொண்டே செல்கின்றன. நேர்மாறாகச் சிறு கடமைகளைப் புறக்கணிப்பவன், கடத்திப் போடுபவன் சுமைகளை மேன்மேலும் பெருக்கிக் கொண்டே போகிறான். துன்ப வாய்ப்பும் துன்பமும் அவனிடம் வளர்ந்து கொண்டே வருகின்றன. சுமை பெருகப் பெருகச் சிந்தனை குறைகிறது. சிந்தனையற்ற உணர்ச்சிகளில் மிதந்து, அவன் தன்னல அவாச் சென்றவழி செயல் செய்கிறான். சிந்தனையற்ற குருட்டுணர்ச்சி துன்பத்தின்மேல் துன்பம் சுமத்தும். அது மட்டுமன்று. குருட்டுணர்ச்சி மட்டுமீறி வளர்ந்துவிட்டால், சிந்தனை ஏற்பட்டாலும் அதை அவ் வுணர்ச்சியே இயக்கத் தொடங்கிவிடுகிறது. அத்தகு சிந்தனை குருட்டு உணர்ச்சிகள், கீழ்த்தர அவாக்களையே வளர்த்துச் சுமை பெருக்குகின்றன. வாழ்க்கை அச்சுமைகளின் கீழே தற்செயலற்ற தாக, இன்பமற்றதாக, அமைதியும் ஓய்வும் அற்றதாக உழல் கின்றது. இன்ப வழி என்பது பெரிதும் சுமை வீழ்ச்சிக்குரிய வழியே. அது தன்னலமகற்றித் தூய உயர்வெளியில் மனிதனை உலவ வைக்கிறது. வாழ்வின் உயர்தளங்களில், இனவானில், இன்ப ஒளிக் கோளங்களிடையே இன்ப ஒளிக்கோளமாக அவனைச் சுழல வைக்கிறது. தன் ஒளியால் சூழ் ஒளிகளையும் உயர்தளப் பேரின்ப ஒளியையும் தன்னூடாக உலகில் ஒளிவிட வைக்கிறது. சுமைகள் தன் ஒளி கெடுத்து, சூழொளிகளையும் உயர்தளப் பேரின்ப ஒளியையும் மறைக்க மட்டுமே உதவக் கூடும். 5‘பசிய புல்வெளி அழகிது, தண்மை அளிப்பதே எனினும் அதில் படர்ந்து நசிதல் புல்லிது; சேறொடு மாசு செறியும் அத்தளம் விடுத்தே ஒசிந்த பூங்கொடி மணங்கமழ் மலரும் ஓங்கு பொன்கிளைத் தூங்குறு கனியும் பசிக் கயின்றுபின் பனிவெளிப் பறந்து பாலொளிக் கதிர் பயின்றிடு வாயே! அடிக்குறிப்புகள் 1. “கூhளை வடி அந ளை டகைந; கூhயவ கை டகைந நெ ய ரெசனநn, ஐ றடைட துடிin கூடி அயமந வை ரெவ வாந ரெசனநn டிக ய ளடிபே.” - க்ஷயடைநல 2. “ழயஎந லடிர hநயசன வாயவ வை றயள படிடின வடி பயin வாந னயல? ஐ யடளடி ளயல வை ளை படிடின வடி கயடட, யெவவடநள யசந டடிளவ in வாந ளயஅந ளயீசைவை in றாiஉh வாநல யசந றடிn.” - றுயடவ றுhவைஅயn 3. “றுயமந வாடிர. டீ ளநடக, வடி நெவவநச வாiபேள, கூடி லடினேநச hநiபாவள ரயீடகைவ வால றiபேள, கூயமந ரயீ வாந யீளயடஅ டிக டகைந நேற! ளுiபே டிக வாந படிடின, ளiபே டிக வாந வசரந; ளுiபே டிக கரடட எiஉவடிசல டி’நச றசடிபே! ஆயமந வாடிர ய சiஉhநச, ளறநநவநச ளடிபே; டீரவ டிக வால னடிரவெiபே, உயசந யனே யீயin றநயஎந வாடிர ய தடிலடிரள, படயன சநகசயin டீரவ டிக வால வாடிசளே ய உசடிறn றநயஎந வாடிர டீக சயவந சநதடிiஉiபே! ளுiபே வாடிர, nடிற!” 4. “ஐவ ளை வாந னயசம னைடிடயவசல டிக ளநடக றுhiஉh. றாநn டிரச வாடிரபாவள யனே யஉவiடிளே டிnஉந யசந னடிநே, னுநஅயனேள வாயவ அயn ளாடிரடன றநநயீ யனே டெநநன யனே பசடியn.” 5. “ஊடிஅந டிரவ டிக வாந றடிசடன - உடிஅந யbடிஎந வை - ருயீ டிஎநச வைள உசடிளளநள யனே பசயஎநள; கூhடிரபா வாந பசநநn நயசவா ளை கயசை யனே ஐ டiஎந வை, றுந அரளவ டடிஎந வை யள அயளவநசள, nடிவ ளடயஎநள. ஊடிஅந ரயீ றாநசந வாந னரளவ நேஎநச சளைநள- க்ஷரவ டிடேல வாந யீநசகரஅந டிக கடடிறநசள - ஹனே லடிரச டகைந ளாயடட நெ படயன றiவா ளரசயீசளைநள டீக நெயரவகைரட hடிரசள.” 5. புறந்தெரியாச் சிறு தியாகங்கள் 1‘துறக்க நீக்கமும் தொடரும்பொன் னுலகதன்வரவும் குறித்து நெஞ்சம் குமுறுவ தென்உனைச் சூழ இறப்பி லாப்புகழ் இன்பொளி இலங்குதல் காண்நீ! .................................................................................... நல முலாவுநற் பண்புகள் எவை எவை அவையே நில வுலாவிய நீள்கவி னார்ந்திடும் இன்பம் நில மளாவுற அகழ்ந்துகட் டடமெழுப் பிடுவோர் நில வுலாவுநீள் மாடத்தில் உலவிடு வாரே!” - பெய்லி 2வாய்மை உன் அகத்துலவுது; அதனை நீ புறத்தே சேய்மை யாகக் கொண்டு ஐயமுற்று அயர்த்திடல் வேண்டா - பிரௌனிங் வேண்டுவார் வேண்டும் செல்வம் வேண்டாமையால் வரும் செல்வமேயாகும். வாய்மைபற்றிய முரண்பாடான வாய்மை இது. வாய்மையை, இன்பத்தை அடங்கா ஆர்வத்துடன், ஆத்திரத்துடன் எட்டிப்பிடிக்க விரும்புபவர் அதனைக் கைநழுவ விட்டு ஏமாறுவர். அமைதியுடனிருந்து அதைத் துறக்கும் உர முடையாரையோ, அது சுற்றி உலவும்! தன்னலத்துடன் தனக்கெனப் பின்பற்றும் போது அது அப்பால் சென்று சென்று எட்டாத தொலைக்கு ஏய்த்துச் செல்லும். பொதுநல அவாவுடன் பொறுமையாகக் காத்திருப்பவர் கையில் அது தானாக வந்து அமரும். ஒவ்வொரு நற்பண்பின் பேறும் அதற்குரிய, அதற்கு மாறான ஓர் அல்பண்பின் களைவைத் தொடர்ந்து வரும் பண்பு. ஒவ் வொரு தூய இன்பமும் அதற்குரிய ஒரு தன்னல அவாவின் அழிவிலிருந்தே பிறப்பது. அதுபோல வாய்மை நோக்கி முன்னேறும் ஒவ்வொரு படியும் அதன் நெறிபிறழ்ந்து செல்லும் ஒவ்வொரு படியின் பின்னேற்றத்தின் விளைவேயாகும். களை நீக்கமே பயிரின் ஆக்கம் புதிய ஆடை விரும்புபவன் பழைய கந்தலாடையை நீக்கி யாக வேண்டும். மெய்மை நாடுபவன் பொய்மை விலக்கியாக வேண்டும். நற்பயிர் வளர்க்கும் தோட்டக்காரன் முதலில் அவப்பயிர் அல்லது களையகற்றாமலிருக்க முடியாது. அறிவுடைய தோட்டக்காரன் பறித்த களைகளை எறிந்துவிட மாட்டான். அவையே நற்பயிருக்கு உரம் என்பதை அவன் அறிவான். களையின் மக்கிய அழிவு பயிருக்கு நல்லுரமாவது போல, பொய்மைகளின் பயனான அனுபவ அறிவே மெய் யுணர்வை வளர்க்கும் திறமுடையதாகும். வளர்ச்சி - ஊக்கம் இங்ஙனம் தளர்ச்சி - நீக்கம் ஆகியவற்றின் விளைவாகின்றன. மெய்யான வாழ்வு, இன்பம், உணர்ச்சி வேகங்களுக்கும் துன்பங்களுக்கும் ஆளாகாத நல்லமைதியின் பயனாக வருவது. இதனை அடையத் தியாகம், துறவு மிக மிக அவசியம். புறப் பொருள்களைத் துறக்கும் துறவு இவ்வகையில் பயன்பட மாட்டாது. ஏனெனில் அது போலித் துறவு ஆகும். சோற்றைத் துறந்தவன் பசியைத் துறந்தவனென்றோ, தண்ணீரைத் துறந்தவன் விடாயைத் துறந்தவனென்றோ கூறுவது மடமை. அத்துறவுகள் பசியையும் விடாயையும் வளர்க்குமேயன்றித் தணிக்க மாட்டா. புறப்பொருளுக்குச் சரியான அகக் கூறுகளான அவாக்களைத் துறப்பதே, அடக்கியாள்வதே உண்மைத் துறவு, உண்மைத் தியாகம் ஆகும். அக அவா ஒவ்வொன்றும் ஓர் அகப் பிழையாக, ‘மனத்துக்கண் நிலவும் மா’சாக இயலுவது. வாழ்வில் துன்பம் உண்டுபண்ணுபவை இந்த அக அவாக்களே. துறக்க வேண்டுபவை மெய்யான நலங்களோ வாய்மை களோ அல்ல தீங்குகள், பொய்மைகள் - மெய்யானவை போலத் தோன்றும் போலி நலங்கள், போலி வாய்மைகளையே. வாய்மை துறப்பவன் வாய்மை பெறுவான், நலந் துறப்பவன் நலம் பெறுவான் என்ற முரணுரை வாய்மையின் திறவு இதுவே. தன்னலமுடைய எதுவும் துறக்கப்படும்போது, துறக்கப்படுபவை இத்தகைய போலி நலங்களும் தீங்குகளுமேயாதலால், துறப்பவன் இழப்பது உண்மையில் எதுவும் இல்லை. பெறுவதோ ஈடற்ற செல்வம். ஆயினும் துறப்பவர் பார்வையில் முதலிலே பெறுவது பெரிதாகத் தோற்றாது; இழப்பதே, துறப்பதே பெரிதாகத் தெரிய முடியும். அவர்கள் கடந்து செல்ல, தாண்ட இருக்கும் தன்னலத் தளத்தின் இயல்பு அது. அத்தளத்தின் தன்னல மயக்கம், ஆன்மீக இருள் நீக்க இருக்கும் தீங்குகளை நலங்களாகக் காட்டி மருட்சியூட்டும். அந்நீக்கத்திற்குரிய துன்பமே முதலில் இன்னாததுபோலத் தோன்றிப் பின் இனிமைக்கு வழிகாட்டுவது ஆகும். தீமை நீக்கத்தின் போது, துன்பத்தின்போது, அகத்தே தன்னலத்தின் ஒரு பகுதியும் நீங்கிப் பொதுநல ஆர்வத்துக்கு வழி வகுக்கிறது. வேண்டாமை விழுச் செல்வம் குடியின் வெறிக்கு உதவி செய்து வெறியை வளர்க்கும் குடிவகைகளை நீக்கும்போது ஒருவன் அடையும் துன்பம் சிறிதன்று. ஆனால் அவன் நீக்குவது குடிவகைகளையல்ல, அவற்றை விரும்பும் விருப்பத்தை - அவ்விருப்பத்தை வளர்க்கும் ஏக்கத்தையே! அந்த நாட்டம் நீக்கிவிட்டால், அவன் பெறும் அமைதி குடிவகையின் இழப்பல்ல, அது வேண்டாத நிறைவு. அதன் ஏக்கம், நாட்டம் அவனை விட்டகன்றது. அதனுடன் வெறியும் வெறி பெருக்கும் கருவியின் தேவையும் உடனழிந்தன. இழந்தது கைக்காப்பையல்ல, விலங்கை; அந்த விலங்கைக் கைக்காப்பென்று மயங்கும் மயக்கத்தை; அம்மயக்கத்தால் ஏற்படும் ஏக்கத்தை - அத்தனையையுமே! இந்த இழப்புக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் அகப்பேறு, அவற்றின் பயனாக வரும் அமைதி, அவற்றின் மணிமகுடமான அரும்பேறு! வேண்டாமையை விழுச் செல்வம், செல்வத்துட் செல்வம் என அறவோரும் அறிஞரும் போற்றுவதன் காரணம் இதுவே. துறப்பதால்தான் பெறமுடியும் என்பதை அறியாத மயக்கம் உலகெங்கும் பரந்துள்ளது. துறவு என்ற சொல்லும், அதனை மக்கள் பொதுவாக வாழ்க்கை சாராத, வாழ்க்கை துறந்த எதிர்செயல் என்று கருதும் கருத்தும் இதற்குச் சான்றுகளாவன. துறவு துன்பந் தருவதென்று கருதி மக்கள் அதை வெறுக் கின்றனர்; விலக்குகின்றனர். துறவை அவர்கள் அருஞ்செயல் என்று மதிக்கும்போதுகூட, அது தரும் பேரின்பம் அல்லது துறக்கம் (பொன்னுலக இன்பம்) இவ்வுலகத்துக்குரியதன்று, வேறோர் உலகத்தது என்று போலிச் சமயவாதிகள் கூறுவதை நம்பி ஏமாறுகின்றனர். ஆனால் துறவினால் பெறத்தகும் இன்பம் இவ்வுலகிலேயே பெறும் இன்பம், இந்த வாழ்விலேயே பெறும் இன்பம், இந்த வாழ்விலேயே பெறும் இன்பம். அதன் உயர்தளம் கருதியே கவிஞர் அதை மேலுலகம், பொன்னுலகம் எனப் புனைந்துரைத்தனர். போலிச் சமயவாதிகளும் அவர்களைப் பின்பற்றிய பாமரரும் அப்புனைந்துரையின் மேலீடான சொற் பொருள் கொண்டு உணர்ந்து தடுமாறுகின்றனர். தன்னல இன்ப நுகர்வில் ஈடுபட்டவர்கள் அதையே இன்பமாகக் கருதுகின்றனர். அதைப் பேறென்று கருதி அதற்காக உழைப்பது அறிவுடைமை என்றும் எண்ணுகின்றனர். அதனைத் துறப்பது மடமை, பயனற்ற அல்லது விரும்பத்தகாத செயல் என்று கொள்கின்றனர். இனிய பழத்தைத் துறப்பதால் இனிமை நுகர்வை இழந்து விடுவதாக, இன்பப் பொருளை இழப்பதால் இன்ப நுகர்வையே இழப்பதாக அவர்கள் முடிவுகட்டி விடு கின்றனர். துறவு என்பது துன்பத்தை வருந்தி அழைத்து மேற்கொள்ளப்படும் செயலென்று அவர்கள் கருதுவதன் காரணம் இதுவே. ஆயினும் உணவைத் துறப்பவன் பசியைத் துறப்பதில்லை. அதன் மூலம் பசி மிகுந்து உணவின் சுவையும், அதைச் செரிமானம் செய்து உடலாற்றல் பெருக்கும் இயல்பும் வளர்கின்றன என்பதை அறியாதார் இல்லை. சுவை கருதி உண்ணாமல் பசி கருதி உண்ணுபவனுக்குப் பசி தீர்ந்து உணவின் சுவை நுகர்வும் மிகுதியாவது போல, தன்னல இன்பப் பொருள்களை விலக்கி, இன்ப அவாவைக் குறைப்பவன், அந்த அவாக்களிலிருந்து விடுபட்டு, உயர் இன்பமும் பெறு கிறான். தன்னை மறுத்துப் பிறருக்கென அவன் செய்யும் செயல் களெல்லாம் பிறர்க்கு மட்டுமன்றி அவனுக்கும் எதிர்பாராப் பெரும்பயன் தருகின்றன. ஏனெனில் பிறருக்குச் செய்யும் செயலே பிறரும் அவனும் உள்ளிட்ட இனம் வளர்த்து, அவன் அடிப்படை நலம் ஆகிறது. தன்னலத்தளத்துக்கும் கீழ்ப்பட்ட போலிப் பொதுநலத் தளங்கள் தன்னல மறுப்பு என்பது உண்மையில் எளிதல்ல. தன்னல மறுப்பால் பொதுநலமும், பொதுநல மூலம் தனக்கே மிகுநலமும் விளையும் என்ற அறிவுகூட உண்மையில் தன்னல மறுப்புக்கு உதவாது. ஏனெனில் இவ்வறிவும் தன்னல அறிவேயாகும். தன்னலத்தை நீக்கிப் பொதுநலமாக்கும் பண்பு பயன்படும் அளவு, பொதுநலத்தையே தன்னலமாக்கும் இப்பண்பு பயன் படாது. ஏனெனில், பொதுநல நோக்கிய தன்னலம் தன்னலத் தளத்தைவிட எவ்வளவோ உயர்ந்தது. ஆனால் தன்னல நோக்கிய பொதுநலமோ தன்னலத் தளத்தினும் எவ்வளவோ தாழ்ந்தது. தன்னலத்தை அகத்தே கரந்து, பொதுநலம் பேசிப் பிழைக்கும் போலிப் பொதுநலவாதிகள் பலர் இதனாலேயே தன்னலத் தளமாகிய உயர்விலங்கு அல்லது மனித தளத்துக்கும் கீழ்ப்பட்ட கீழின விலங்குத் தளத்துக்கு உரியவராய்விடுகிறார்கள். போலி அறவோர்கள் நிலையும் இதுவே. தன்னலத்துடன் அறியாமையும் மேற்கொண்ட சிலர் வேறோர் உலகில் தமக்குப் பெருநலம் கிடைக்க வேண்டுமென்று எண்ணி இங்கே நற்செயல் விதைக்க எண்ணுகின்றனர். இன்னும் சிலர் தன்னலத்துடன் அறிவும் மேற்கொண்டவராய்ப் புற உலகில் புகழும் அப்புகழுடன் பெருமையும் பெரும்பேறுகளும் பெற எண்ணி நற்செயல்களில் ஈடுபடுகின்றனர். இவர்கள் நிலை எதுவும் சிந்தியாத பொதுமனிதன் நிலையைவிட உயர்ந்ததாகத் தோற்றினாலும், உண்மையில் உயர்ந்ததன்று, தாழ்ந்ததேயாகும். ஏனெனில் பொதுவாக மக்கள் தன்னலமே உடையவர். இவர் களோ தன்னல நோக்குடன் பொதுநலம் பாவித்துத் தன்னலமே பெருக்குபவராவர். தன்மறுப்பு, தன்னடக்கம், அன்பு தன்னலத் தளத்திலிருந்து பேரின்பத்துக்குரிய பொதுநலத் தளத்துக்குச் செல்லக் குறுக்கு வழிகள் எதுவும் கிடையாது. பயனை எதிர்பாராது துறத்தல், தன்னல அவாவையும் அதனால் எதிர்பார்க்கப்படும் பயனையும் ஒருங்கே இழத்தல் ஒன்றே அவ்வழியில் மனிதனைச் செலுத்தவல்லது. இதில் அறிவு உடனடியாக மிகுதி செயலாற்ற முடியாது. ஏனெனில் தன்னலத் தளத்தில் அறிவு தன்னலம் சார்ந்ததாகவே இருக்கும்.அறிவுக்குப் பதிலாக இங்கே செயலாற்ற வேண்டுவது தன்மறுப்பு, தன்னடக்கம் முதலிய பண்புகளும் அன்பும் மட்டுமே - தன் மறுப்பு, தன்னடக்கம் முதலிய பண்புகளே அன்புக்கு வழி வகுக்கின்றன. அன்பு பொதுநலச் சார்பான பிற பண்புகளை உருவாக்குகின்றது. அறிவு இதன் பின்பே மெய்யறிவாக, மெய் யுணர்வாக உயர்வடைகின்றது. தன்னல அவாக்கள், தன்னல அவாக்கள் வழி செய லாற்றும் தன்னல அறிவு, தன்னல உணர்ச்சிகள், தன்னலப் பழக்கவழக்கங்கள் ஆகியவை மனிதனால் பணிவுடனும் தன் மறுப்புணர்வுடனும் ஒதுக்கித் தள்ளத் தக்கவை. ஏனெனில் அவை வாய்மையை அணுகும் தகுதியற்றவை. தன்னைச் சூழ உள்ளவர்கள் இன்பமொன்றே நாடி, வேறு பயன் கருதாமல் இவற்றை மனிதன் வேரறுக்க வேண்டும். உலக நலனுக்காக, உலகில் அழகும் இன்பமும் நிலைபெற்று ஓங்குவதற்காக, இவற்றையும் இவற்றை ஒட்டி அவர்கள் எதிர்பார்க்கும் இன்பங்களையும், உயிரையும்கூட ஒருவன் தத்தம் செய்யச் சித்தமாக வேண்டும். இவற்றை அவன் இழக்க ஒருப்பட்டால், மனமுவந்து இழக்க ஒருப்பட்டால், அந்த இழப்பே அவன்பெற்ற புதுவாழ்வுச் செல்வமாய் அமையும். வேறு நலம் அவனுக்கு வேண்டியதேயில்லை. இவறன்மை யுடையவன் அப் பண்பைக் கைவிடுவதனால் என்ன இழப்பான்? பணத்தின் பயனற்ற சேமிப்பை இழந்து பணத்தின் பயன் முழுதும் பெறுவான். திருடன் தன் திருட்டுத் தொழிலைக் கைவிடுவதால் எதனை இழந்தவனாகக் கூடும்? தண்டனையையும் மனச்சான்றின் ஓயா வதைப்பையும் மட்டுமே இழக்க நேரிடும். தனக்கென அவன் பொருள் ஈட்டுவதற்கு, மனிதனாவதற்கே அது முதற்படியாகும். இன்ப வேடன் தன் வேட்டையை ஒழித்துவிடத் துணிந்தால் இழக்க வேண்டியது ஏதேனும் இருக்கக் கூடுமா? இன்பம் நுகர்வதற்குரிய உடல்நலம், சூழ்நிலை அதன் பின்னர்தான் அவனுக்குக் கிடைக்கிறது. பணிவும் பண்பும் தன் முனைப்பின் ஒரு பகுதியை இழப்பதால் - தன் முனைப்பையே, தன் தனி நலத்தையே, தன்னையே மறப்பதால், துறப்பதால்கூட - ஒருவன் உண்மையில் இழப்பது எதுவும் கிடையாது. ஆயினும் பழுதை என்று நினைத்துப் பாம்பைப் பிடித்துத் தொங்குபவன் அதைக் கைவிடத் தயங்குவதுபோல, இத்துறவுக்கு மனிதர் மயங்கித் தயங்குகின்றனர். துறக்க வருந்து கின்றனர். துறப்பவன் துறக்க வேண்டுவது இம்மயக்கத்தையே - துன்பத்தை இன்பத் தோற்றமென்றும், துன்பத் தோற்றத்தில் புதையுண்ட இன்பத்தைத் துன்பமென்றும் கருதி மயங்கும் மயக்கத்தையே! ஆயினும் தன்னல நோக்கமில்லாமலே இதைச் செய்தாலன்றிப் பயன் ஏற்படாததாலேயே, அறிவு வழியாக இந்நிலையை எவரும் அடைய முடிவதில்லை. பண்புவழி, அன்பு வழி, நீடித்த பயிர்ப்பின் வழியாக மட்டுமே அத்துறவு நிலை அடைதற்குரியதாகும். எல்லாத் துறவும், உண்மைத் துறவு என்ற முறையில், அகத் துறவே, அதற்கு அடிப்படையான தூண்டுதல், அறிவன்று, அறிவுக்கு உயிர் மூலமான பண்பு, பண்பட்ட உள்ளத்தின் இயல்பான பணிவு. இந்தப் பணிவே தன் மறுப்புக்கு வழி வகுத்துப் பொதுநலத்துக்கு வாயிலாயமைகிறது. மனிதரின் அகவளர்ச்சி எப்படியும் எல்லா மனிதரையும் முன்னோ பின்னோ இந்தப் பணிவு நிலைக்குக் கொண்டு வந்தாக வேண்டும். ஆன்மிக வளர்ச்சியின் முதற்பெருந் திரும்புகட்டம் இதுவே. இதனை அடையுமுன் மனிதன் பல சிறுசிறு தன் மறுப்புக்களில் பயின்று தேர்ச்சியடைகிறான். பல சிறு சிறு தன்முனைப்புக் கருத்துக்களிலும் எண்ணங்களிலும் ஈடுபட்டு ஈடுபட்டு உழல்கிறான். துன்பம் அவனுக்குத் தரும் படிப்பினை யால், அவன் தன்முனைப்பு மழுங்குகிறது. நீடித்த இப் பயிற்சியால் படிப்படியாகப் பணிவும், அன்பும், அவற்றின் நீடித்த பயிர்ப்பால் பண்பும் உள்ளீடான விளைவு களாக முதிர்கின்றன. ஒவ்வொரு துன்பப் படியிலும், அவாக் களால் ஏற்படும் ஒவ்வொரு கொந்தளிப்பும் இத்திசையில் மனிதனை, உயிர்களைக் கொண்டுசெல்ல அமைந்த சுழி எதிர் சுழிகளன்றி வேறல்ல. இத்துன்பங்களே மனிதனையும் உயிர்களையும் குடும்பம் குடும்பமாக, சமுதாயம் சமுதாயமாக, இனம் இனமாகத் திரண்டு வாழச் செய்கின்றன. அழிவையும் அழித்தலையும் இயல்பாகக் கொண்ட உயிரின வாழ்வைத் துன்பத்தின் பிள்ளையாகிய இந்த அன்பே பண்பு நோக்கி, நாகரிக நோக்கி, படிப்படியாக வளர்க்கிறது. புறம் தெரியாச் சிறு தன்மறுப்புகள் தன்மறுப்புக்களில் தலைசிறந்த தன்மறுப்புப் புறந்தெரியா மறை தன்மறுப்புக்களே. இவை அகநிலைத் தன்மறுப்புக்கள், நெஞ்சத்தினுள்ளாக, உள்ளத்தின் ஆழ்தடத்தில் நிகழ்பவை. ஓசையற்ற, சந்தடியற்ற இத் தன்மறுப்புக்களின் ஆற்றலும் பண்பும் அளவிடற்கரியன. ஏனெனில் இவை செய்தவர்க்கும் ஆக்கம் தருபவை. செயலுக்கு ஆளானவர்க்கும் ஆக்கம் தருபவை. எல்லையற்ற இப்பயனை நோக்க, இத் தன்மறுப்புக்கள் சிறியவையே. ஆனால் அதே சமயம் இத் தன்மறுப்புக்குரியவர் முயற்சியும் பெரிது. தற்காலிகமாகவேனும், அதனால் அவர்கள் விரும்பி மேற்கொள்ளும் துன்பமும் பெரிதேயாகும். பெருமை யுடைய தன்மறுப்புக்களை விடுத்து, இச்சின்னஞ்சிறு தன் மறுப்புக்களைத் தேர்ந்தெடுத்து, தற்காலிகமாக அவர்கள் இன்பத்தை மட்டுமன்றி, தன்மறுப்பின் பெருமையையும் மறுக்க வேண்டியவர்களாகின்றனர்! தன்மறுப்பிலீடுபட்டு அதை மேற்கொள்ளத் துணியும் மக்கள்கூடப் பெரும்பாலும் தம் இன்றியமையா நாள்முறை வாழ்வின் சிறிய எல்லைக்குட்பட்ட சிறு செய்திகளில் தன் மறுப்பு மேற்கொள்ள எண்ணுவதில்லை. இன்றியமையா நாள்முறை வாழ்வுக்கு எட்டாத பேரெல்லை சென்று அதன் பெருந் தன்மறுப்புகளிலேயே அவர்கள் பேராற்றல் ஆர்வத் துடன் செல்லும். அருகே இருக்கும் வாழ்வு அவர்கள் கண் களுக்குப் புலப்படுவதில்லை. அதன் இன்றியமையாமையும் புலனாவதில்லை. ஏனெனில் தன்னலம் விடுக்க எண்ணிய போதும் அவர்கள் தன்முனைப்பை விடுவதில்லை. உணர்ச்சி களுக்கு அடிமைப்படாமல் இருப்பதுமில்லை. பெருமை நாடி, தம் சூழலின் சிறுமை கடக்கின்றனர், அவாத் தூண்டுதலால் தம் இன்றியமையாச் சூழல் விலக்கித் தம் அவா எல்லை கடந்து தன்மறுப்புக் களம் நாடுகின்றனர். தம்மை மறுப்பதைவிடத் தம் சூழலை மறுப்பது அவர்களுக்கு எளிதாகவும் பயனுடைய தாகவும் தோற்றுகிறது. முதல் தொடக்கத் துறவு உன் பழிகளில், பிழைகளில் மிக மோசமானது எது? உன் உள்ளத்தின் உரங்குன்றிய, தளர்ச்சி மிகுந்த கூறு எது? உன் பண்புகளில் மயக்க மருட்சிகளுக்கு மிகுதி ஆளாகும் பகுதி எது? உன் முதல் தன்மறுப்பை அதில் தொடங்கு, அதுவே உன்னை முழு அமைதிக்கு இட்டுச் செல்லும் தன்மறுப்பாய் இருக்கும். சில சமயம், சிலரிடம் அது கோபமாய் இருக்கலாம். சில சமயம் சிலரிடம் அது அன்பிலாக் கடுகடுப்பாய் இருக்கலாம். அப்படி யானால், அந்தக் கோப உணர்ச்சியைத் தடுத்து நிறுத்த, படிப்படியாகவேனும் கைவிட நீ துணிவாயா? உள்ளத்தின் அன்பின்மையால் ஏற்படும் கடுகடுப்பான தோற்றத்தை, சொல்லைத் தடுத்தாண்டு ஒழிக்க, அந்த அன்பின்மையையே படிப்படியாக அன்புக் கனிவாக்க முனைவாயா? அவ்வழியில் உனக்குத் தடையாக, உன் தளர் பண்பு களுக்குத் துணையாகத் தோற்றும் சூழல்களை எல்லாம் பொறுமையுடன் தடுத்தாள்வாயா? உன் கோபத்தை, கடு கடுப்பைக் கிளற, வசை, எதிர்ப்பு, குற்றச்சாட்டு, சுடுசொற்கள் வீசப்படலாம். இவற்றுக்குப் பதிலுக்குப் பதில், சரிக்குச் சரி செய்யும் எண்ணத்தில் உன் வழக்கமான, உனக்குச் செய்தற் கெளிதான, விடுத்தற்கரிதான செயல்களில், பண்புகளில் நீ சறுக்கிவிடாமல் விழிப்பாய் இருக்க முடியுமா? சால்பு இவை மட்டுமல்ல! சுடுமொழிகளை எதிர்த்து நீ சுடு மொழிகள் கூறாமலிருந்தால் போதாது. அத்தகைய சுடுமொழி களுக்குரிய எண்ணங்கள், உணர்ச்சிகள் இல்லாமலிருந்தால் கூடப் போதாது. சுடு சொற்களுக்கு எதிராகக் கனிந்த அன்புச் சொற்கள் கூற உன் நா உவந்தெழ வேண்டும். அப்போதுதான் உன் துறவு முழுநிறை துறவாகும், நிலையான துறவாகும். பகைமைக்கெதிராக நீ பகைமை காட்டாதே, எண்ணாதே. அன்பு காட்டு, நட்புத் திகழ வை. பகைமை காட்டுபவர்களுக்குக் கேடு வராமல் பாதுகாக்க விரை. உன் பண்பு நிறைவு, சால்பு அதுவே. “இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு.” கோபமும் கடுகடுப்பும் உன் பண்பு கேடுகளில் மிக மோசமான பண்பு கேடு கோபம், கடுகடுப்புத்தானா? அப்படியானால் பண்புடைமை நோக்கிய உன் பயணம் எளிது. ஏனென்றால் பண்பு கேடுகளில் மிகவும் கேடு பயக்கும் பண்பு கேடுகள் இவையானாலும், அக் காரணத்தாலேயே அவற்றை நீ அகற்ற எண்ணுதல் எளிது ஆகும். கோபத்துக்கு நீ இடந்தரும் ஒவ்வொரு தடவையும் நீ அதனால் துன்பப்படுதல் உறுதி. அதை உன் அறிவின் துணைகொண்டே நீ திருத்த முயலுதல் எளிது. கடுகடுப்புக்கு நீ இடந்தரும் சமயங்களிலோ, கேடு இன்னும் வெளிப்படையானது. ஏனெனில் கோபம் நின்று நின்றே வரும். கடுகடுப்பு நிலையாய்த் தீங்கு தரும். கோபத்தைப் பிறர் வெறுப்பதைவிட, கடுகடுப்பை மிகுதியாக வெறுப்பர். உன் வாழ்வில் கோபம் தரும் தோல்வியை விடப் பாரிய இடை யூறுகளைக் கடுகடுப்பு விளைவிப்பதை நீ எளிதில் காண்பாய். ஆயினும் உன் நலம் கருதி மட்டுமே நீ கோபமும் கடுகடுப்பும் நீக்க நினைக்கும்போது, உன் செயல்தான் நன்று. உன் பண்பு பின்னும் தன்னலப்படி கடவாது. பொதுநலம் அவாவி அவற்றை விட்டால்தான் தீமைக்கு நலம், கடுமைக்கு இனிமை என்ற சால்புப்படி உனக்கு எளிதாகும், இயல்பாகும். கோபமும் கடுகடுப்பும் உனக்குப் புறத்தீமை விளைவிப்பன மட்டுமல்ல. அவை உன் அக அமைதியைக் குலைக்கும். உன் இடர்களைப் பெருக்கும். உன் உள்ளத்தின் அறிவுக் கண்களை மூடி உன்னைப் பண்புக் குருடனாக்கும். அதே சமயம் பிறர்க்கு, பல சமயம் உன் அன்புக்குரிய, உயிருக்கு உயிரான பேருக்கு அதனால் ஏற்படும் கேடுகள் அளவற்றன. கோப நேரத்தில் ஒருவேளை நீ சொல்லலாம். ‘அவன் என்னை முதலில் வைதான், அவமதித்தான், புண்படுத்தினான்’ என்று! அவ்வாதங்கள் சரியாக, நேர்மையானவையாகவும் இருக்கலாம். ஆயினும் அது உன் நலனையே, ஆண்மையையே, தன்மதிப்பையே குறைத்து விடுவதை நீ எளிதில் காண்பாய். எந்த வாதமும் உன்னிடம் அப் பண்புகேட்டின் வித்து, அகப்பண்பு இருப்பதைச் சரிசெய்ய முடியாது. கோபத்தை அடக்கியபின், கடுகடுப்பை அடக்கியபின், அதே வாதங்களைக் கூறிப் பார்! அதே வாதங்கள் அதன்பின் உன்னைச் சால்பு வழியில் ஊக்குதல் உறுதி. ஏனெனில் பிறர் தவறுகள் உன் பண்பு கேட்டைப் பெருக்கியதுபோல், உன் தவறுகளால் பிறர் பண்பு கேடுகள் பெருகாமல் நீ பார்த்துக்கொள்வாய். குற்றஞ் சாட்டுவதைவிட, திருத்தி விடுதல் பெருவெற்றி யல்லவா? பகைவனை அடக்குவதைவிட, அவனை நண்பனாக்கி விடுதல் பெருஞ்செயலன்றோ? பிறர் அன்பின்மை உனக்குப் பொல்லாங்கு என்று கருதும் நீ, அதே பொல்லாங்கை அவர்களுக்கு இழைக்கலாமா? பிறர் கடுஞ்சொல்லால், கடுமொழியால் கோபப்படும் நீ, பிறரிடம் கடுஞ்சொல் கூறுவானேன்? அத்துடன் கொடு நெருப்பை நெருப்பால், பெருவெள்ளத்தைப் பெரு வெள்ளத்தால் பெருக்க முடியுமேயன்றி வெல்ல முடியுமா? அவற்றின் நேர் எதிர் பண்பால் அல்லவா அவற்றை வெல்ல வேண்டும்? மற்றும், பண்புடையவருடன் நீ பழகினால், உன் கோபத்தை அவர்கள் பொறுமையால், உன் பகைமையை, கடுகடுப்பை அவர்கள் நட்பால், இன்மொழிகளால் மாற்றுவதை நீயே பார்த்திருக்கலாம். அறிவுடையவர்கள் மட்டுமன்றி, அறிவற்ற வர்கள் கூட இந்த ஒன்றை எளிதில் மதிப்பதையும் நீ காண்பாய். இவை உன்னைப் பண்பினின்று சால்புக்கு இட்டுச் செல்ல உதவுபவை ஆகும். ஆற்றல்மிக்க பண்பு வெறுப்பல்ல, நட்பு கோபம், வெறுப்பு, பகைமை, கடுஞ்சொல் ஆகியவை அழிவியக்கங்கள். அதுமட்டுமன்று. மேலீடாகக் காண்பவர்க்கு அவை ஆற்றல் வாய்ந்தவை போலத் தோற்றினும் உண்மையில் அவை ஆற்றலில் மிகமிகக் குறைந்தவை, வலிமை கேட்டின் பயனாகத் தோற்றுபவையே. ஏனெனில் அவை அறிவுசாராப் பண்புகள்; அறிவு இயங்காத நேரத்திலே, இடத்திலே மட்டும் இயங்குபவை. அத்துடன் அவை இரு திசையினின்றும் இயக்கப் பட்டாலன்றி இயங்கமாட்டாதவை. கோபத்துக்கு எதிராகக் கோபம், கடுஞ்சொல்லுக்கு எதிராகக் கடுஞ்சொல் இல்லாத இடத்தில், அவை அழியும் பண்புகளாய்விடும். கடுமரத்தை வெட்டும் கோடரி பஞ்சில் பட்டு முனை மழுங்குவதுபோல, பொறுமை, இன்சொல் ஆகிய நற்பண்புகளின்முன் அவை செயலாற்றமாட்டா. எதிர்திசையிலும் கோபமும் கடுஞ் சொல்லும் இருக்கும் இடத்தில்கூட அவை இருதிசைகளில் அழிவு செய்வதுடன் தாமே அழியும். அவை நிலையான அழிவுப் பண்புகள்கூட அல்ல. இவற்றுக்கு நேர்மாறான நட்பு, இன்சொல் முதலிய நற்பண்புகள் இவற்றை நோக்க ஆற்றல் சான்றவை. ஏனெனில் அறிவு சாராத தீய பண்புகளுக்கெதிராக, அவை அறிவு கடந்த, உணர்ச்சி கடந்த உயர் பண்புகள். உண்மையில் பண்புகள் என்ற பெயருக்கு உரியவை, அறிவுத்தளம், உணர்ச்சித்தளம் கடந்த பண்புத்தளக் கூறுகள் அவையே. அவை இயங்குவதற்கு இரு திசைகள் வேண்டுமென்றில்லை, ஒரு திசையிலிருந்தே அவை இயங்கவல்லன. அவற்றின் ஆற்றலோ தீய பண்புகளைப்போல் இயக்குபவர், எதிர்நிற்பவர் என்ற இருதிசைகளில் மட்டுமன்றிச் சூழல் முழுவதும் எல்லாத் திசைகளிலும் சுற்றி விரிவுற்று, எல்லையின்றிப் பரவிச் செல்பவை. அழிவாற்றல்களைப் போல் அவை மின்னலாகக் கணநேரத்துக்குள் மாயும் தன்மை யுடையவையல்ல. இயக்குபவரைச் சுற்றிலும் ஓயாது அலைவீசிக் கொண்டே எல்லையற்ற கால இடவெளிகளில் நிலையாகச் செல்பவை. கோபம், கடுஞ்சொல் ஆகியவற்றையே மிக மோசமான பண்புக்கேடாகக் கொண்டவர்களுக்கு இருக்கும் வாய்ப்பு அவை எளிதில் திருத்தக்கூடும் பண்புக் கேடுகள் என்பது மட்டுமல்ல. அவற்றின் எதிர் பண்புகளே ஆற்றலின் எல்லைகடந்த கடவுட் பேராற்றல்கள் ஆகவும் அமைகின்றன. கோபம், கடுஞ்சொல் ஆகிய பண்புக்கேடுகளைத் துறப்பவன் இவ்வகையில் விலங்கு நிலையின் அடிஅகட்டுப்படியிலிருந்து, மனித நிலையின் உச்ச முகட்டுப் படியைச் சென்று எட்டிவிடுகிறான். அருள், தவம் கோபம், கடுகடுப்பு ஆகியவற்றைத் துறத்தல் பண்பு. அவற்றின் எதிரான பண்பை இயக்குதல் சால்பு. ஆனால் இவை இரண்டுக்கும் மேம்பட்ட பண்புக்கூறு ஒன்று உண்டு, அதனை அருள் அல்லது அந்தண்மைப்படி என்னலாம். அதுவே பிறர் கோபத்துக்கு, கடுகடுப்புக்கான காரணங்களை ஆராய்ந்து நீக்குதல் ஆகும். இதனையே அறவோர், ஆன்றோர் தவம் என்று குறித்தனர். “உற்றநோய் நோன்றல் உயிர்க்கு உறுகண்செய்யாமை அற்றே தவத்திற் குரு.” பிறர் கோபத்துக்கு, கடுகடுப்புக்குக் காரணமான சூழ் நிலைகளில், உன் பங்கு, உன் செயல், உன் பண்பு ஏதேனும் உண்டா? உண்டென்றால், அதை நீ திருத்திக்கொள். அச் சூழ்நிலைகளை நீ உன் செயலால் மாற்ற முடியுமா? அப்படி யானால் எப்பாடு பட்டும், எதை மறுத்தும் அதை மாற்ற முனைந்து செயலாற்று. நீ தெரிந்தும் தெரியாமலும், உன் சிறு செயல், சிறு கருத்து, சின்னஞ்சிறு அகப்பண்புகேடு அதற்கு நேரடிக் காரணமா யிருக்கக்கூடும். அல்லது அதற்குக் காரணமான சூழ்நிலைகளை உண்டுபண்ணியிருக்கக்கூடும். இவற்றைத் தேடிக் களைதல் எளிதல்லவாகலாம். ஆனால் அது உன்னால் இயலக்கூடியதே. அதுமட்டுமன்று. நீ முயன்றால், உன் சிறு செயல், சிறு கருத்து, சிறு பண்புகளை இயக்கி, சூழலை மாற்றியமைப்பதுகூட முடியாததல்ல. சூழல் பண்புகளின் முனைமழுக்கி முனிந்து, சூழலை மாற்றியமைப்பவரே முனிவர். அவர் தவத்தின் பெருமை அது. செயலிலே, சொல்லிலே, கருத்திலே நீ அமைதியை நிலை நாட்டு. உன் அக அமைதியே படிப்படியாகச் செயலாற்றி உன் சூழலை மாற்றியமைப்பது காண்பாய். உன் சூழலே உன் சூழலில் இருப்பவர் சூழலாகவும் அமைவதாதலால், நீ கோபம், கடுகடுப்பு ஆகியவற்றைக் கடிந்து, நல் அமைதியை உன் உள்ளத்தில் நிலைநாட்டி அதில் அமைதல் மூலமே பிறர் கோபம், கடுகடுப்பு முதலிய அல்பண்புகளையும் அகற்றிவிடுதல், பண்பாட்சி செய்து சால்பு நிறுத்துதல் கூடும். தொடர்ந்து நற்செயல் செய்து நற்பண்பு வளர்ப்பவன், தொடர்ந்து அன்புவழி நின்று அது பரப்புபவன் ஒரு தனிமனிதனாயினும், அவன் ஆற்றல் தனி மனிதன் எல்லையிலா அவன் சூழல் எல்லையிலோ கூட நிற்ப தன்று. அது கடவுட் பண்பாற்றல், கால இடம் கடந்து செல்வது ஆகும். பொறுதியின்மை, சிடுசிடுப்பு பொறுதியின்மை, எதையும் தாங்கமுடியாத சிடுசிடுப்பு, உன் வாடிக்கையான பண்பு கேடாயிருத்தல்கூடும். அப்படி யானால் நீ செய்ய வேண்டும் முதல் தன்மறுப்பும் முதன்மைத் தன்மறுப்பும் இப் பண்புக் கேடுகளை ஒழிப்பதே. இவற்றைக் கைவிட்டுவிடு, துறந்துவிடு. முதலில் அவை யார் யாரிடத்தில், எத்தகையவரிடத்தில், எந்த எந்த இடத்தில், காலத்தில், எந்த எந்தத் துறைகளில் செயலாற்றுகின்றன என்று ஆராய்ந்துபார். பின் அவரவரிடத்தில், அந்த அந்த இடத்தில், காலத்தில், துறையில் அவற்றை அகற்றிவிட முனை. அவற்றின் ‘கொடுங் கோலாட்சிக்கு இனிப் பணியமாட்டேன், அவற்றை வென்றடக்கி, அவற்றை வேரொடு பிடுங்கி எறிவேன்’ என்று சூளுரை எடுத்துக்கொள். பொறுதியின்மையையும் சிடுசிடுப்பையும் வெல்வதற்கான எளிய வழி, முதற்படி ஒன்று உண்டு. அவை பிறரால், புறச் சூழலால் உன்னிடம் ஏற்பட்டதென்ற மயக்கம் தவிர். அவை உன் வலிமை கேடு, உன் பிழை என்று உறுதியாக உணர். வேறு எவர் முரண்பாட்டாலும் அவை விளைபவையல்ல, அவை உன் முரண்பாடு என்பதைக் காண். அடுத்த கணமே அவை உன்னை விட்டு அகலாமலிருக்கமாட்டா. இரண்டாவதாகப் பொறுதியின்மையாலோ, சிடுசிடுப் பாலோ உனக்கு மேலீடாகக் கூட எத்தகைய நலனும் இருக்க மாட்டாது. அவை எந்தவகையிலும் உனக்கு அவசியமான பண்புகளும் அல்ல. அவைகள் மற்ற நலங்களைக் கெடுக்கும், தீமைகளைப் பெருக்கும். மேலும் அவற்றைக் கைவிடுவதால் யாரும் உன்னை எதிர்க்கவோ வெறுக்கவோ, இகழவோ, ஏளனம் செய்யவோ மாட்டார்கள். அவ்வாறு செய்தால்கூட, அவற்றைத் தாங்கிக் கொண்டேனும் நீ அவற்றைக் கட்டாயம் விலக்குவது நலம். ஏனென்றால் கோபத்தைவிட கடுகடுப்பைவிட அவை உன் வலிமைக்கேட்டை வெளிக்காட்டுபவை; அவ்வலிமைக்கேட்டை மேன்மேலும் வளர்ப்பவை. அவற்றைக் கைவிடுவதால் உள்ள பல நன்மைகளில் முதலாவது நன்மை உன் வலிமையே. அமைதியைவிட விரைபண்பில்லை, ஆத்திரத்தைவிட விரைவுகேடுமில்லை! அமைதியான, உறுதிவாய்ந்த, மனமார்ந்த செயலே பயனிறைவுடையது. பொறுதியின்மை இவ்வெல்லாப் பண்பு களுக்கும் மாறானது, எல்லாவற்றையும் கெடுப்பது. அது செயலை மட்டின்றி விரைவுபடுத்துவது போலத் தோன்றி அச்செயலை முற்றும் உருக்குலைத்துவிடுவதாகும். உண்மையில் அமைதியை விட விரைந்த பண்பு எதுவும் கிடையாது. விரைவு அமைதியின் வலுவைக் கெடுத்தே காலமிச்சம் உண்டுபண்ணும். ஆனால் விரைவு அவசரமாய், அவசரம் ஆத்திரமானால் - வலுவும் கெடும், விரைவும் கெடும்! அடிக்கடி செயலே மீண்டும் திருத்த முடியாத அளவுக்கு உருக்குலைவுறும்! பொறுதியின்மை ஆத்திரத்தினும் கேடானது, ஏனெனில் பொறுதியின்மை என்பது ஓய்வு ஒழிவற்ற ஆத்திரமேயாகும். பால் ஆறப்பொறாதவன் பாலையே குடிக்கமாட்டான். அது பிறகு குடிப்பதற்கோ, பிறர் குடிப்பதற்கோகூட முடியாமல் அதைக் கொட்டிவிடுவான். பிள்ளைகள் தவறு செய்யப் பொறாதவன் தவற்றையல்ல, பிள்ளையையே ஒழித்து விடுவ துண்டு. சிறு தொல்லை தருவதற்குத் தண்டனையாகப் பிள்ளையின் கண்களில் மிளகாய் அரைத்துப் போட்டு, பிள்ளை துடிதுடித்து மாள்வது கண்டு துடிதுடித்த அன்னைமாரைக் கண்டும் கேட்டும் இருக்கிறோம். பொறுதியின்மையின் ஓய்வொழிவற்ற நிலவர நீட்டிப்பே சிடுசிடுப்பு. அதன் தீங்கு அளவிட்டுணர்தற்குரியதன்று. பொறுதியற்றவர், படபடப்பவர், சிடுசிடுப்பாவர் நாடுவது தான் என்ன? அவர்கள் நாடுவது அமைதி, விரைந்த வெற்றி, எளிய வெற்றி என்பதில் ஐயமில்லை. ஆனால் அவர்கள் அடைவ தென்ன? இவை ஒன்றையும் அவர்கள் அடைவதில்லை. இவற் றுக்கு நேர்மாறான பண்புகளையே காண்கின்றனர். அவர்களுக்கு என்றும் ஓய்வு கிடைப்பதில்லை, அமைதி கிட்டுவதில்லை. இன்பம் அவர்கட்கு என்றும் கிட்டாப் பொருள் மட்டுமன்று, எட்டாப்பொருள். ஏனெனில் இன்பம் தானாக அவர்களுக்குக் கிட்டிவந்தாலும் அவர்கள் பொறுதியின்மையும் சிடுசிடுப்பும் அவற்றை எட்டாமல், கிட்டாமல் செய்துவிடும். இப்பண்புடையவர்கள் தம்மைச் சுற்றிலும் உள்ளவர் களுக்கும் அமைதி உண்டுபண்ணுவதில்லை, தம் அமைதியையும் கெடுக்கின்றனர். அவர்கள் தம் சூழலிலேயே எல்லையில்லாத் துன்பம் பரப்புகின்றனர். தாமும் தமக்கே எல்லையில்லாத் துன்பம் பெருக்கிக்கொள்கின்றனர். அவர்கள் வாழ்க்கை பிறருக்கும் ஓயா வேதனை, அவர்களுக்கும் ஓயா வாதனை! ஒளிபரப்பும் ஒரு கதிரவன்போல, இருள் பரப்பும் ஒரு கதிரவன் உண்டென்றால், அதனையே அவர்கள் பண்புக்கு உவமை கூறலாம். பொறுமையினும் ஆற்றல் வாய்ந்தது பொறுதி பலர் இன்பவடிவான துன்பத்தை, தற்காலப் போலி இன்பத்தைத் தாமும் நுகர்ந்து பிறரையும் நுகரவைத்துத் தீமை விளைவிக்கக்கூடும். வேறு பலர் பிறருக்குத் துன்பமூட்டியே தாம் அத்தகைய இன்பம் நுகர்வர். ஆனால் பொறுதியற்றவர் இவ்விரு வகையினரையும் விஞ்சிய தீமையுடையவர். அவர்கள் தம்மைச் சூழ்ந்தவர்க்கும் வெளிப்படையான துன்பம் தந்து, தமக்கும் வெளிப்படையான துன்பம் உண்டுபண்ணிக் கொள்கின்றனர். அறியாமையின் எல்லை இது. கடந்துசெல்ல முடியாது. அதே சமயம் பொறுதியின்மை, சிடுசிடுப்பு ஆகிய இக்கெடு பண்புகளுக்கு மாறான நற்பண்புகள் பொறுமை, இன்னல் அமைதி என்பவைகளே. அறியாமையின் ஆழத்திலிருந்து அறிவு நிலையின் உச்சத் தளத்துக்கு இவை மனிதனை இட்டுச் செல்வன. இவற்றின் செல்வ வளத்தை, ஆற்றலை, இன்ப வளத்தை எல்லையிட்டுரைத்தலரிது. ‘பொறுத்தார் பூமி ஆள்வார்’ என்ற பழமொழியும், ‘ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம், பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ்.’ என்னும் அறவுரையும் பொறுமைப் பண்பைச் சிறப் பிப்பவை ஆகும். இன்னல அமைதியோ பண்புகள் யாவற் றுக்கும், இன்பத்தும் உரிய அடித்தளம் ஆகும். பொறுதியின்மைக்கு நேர் எதிர்பண்பு பொறுமையன்று, பொறுதி. பொறுமை கோபத்தின் எதிர்பண்பு. பொறுதி அதனினும் ஆற்றல் வாய்ந்தது. அது புடமிட்ட பொறுமை, பண்பார்ந்த பொறுமை ஆகும். பொறுமை திடீர் எதிர்ப்பையே தாங்கும். பொறுதி ஓயாத நச்சரிப்பையும் இன்முகத்துடன் தாங்கி மகிழும் இன்னலம் வாய்ந்தது. இதனால் பொறுமை பண்புத் தளத்தின் உயர்பண்பு என்றால், பொறுதி சால்புத் தளத்தின் உயர்பண்பு என்னலாம். இன்னல அமைதியும் அதுபோல சால்புத் தளத்தின் பாற்பட்ட பண்பமைதி ஆகும். பொறுதியும் இன்னல அமைதியும் நீடித்த பொறுமை, அமைதி ஆகியவற்றின் பயிர்ப்பு விளைவுகள் ஆகும். அவை கைவரப் பெற்றவன் உள்ளம் ஓயாது இன்ப அலை பாய்ந்து கொண்டிருக்கும். அந்த இன்ப அலைகள் அவனறிந்தும், அறியா மலும் அவன் சூழலை, சூழலிலுள்ளவர்களை இன்ப அமைதிக்குக் கொண்டு வந்துகொண்டேயிருக்கும். பொறுதி யின்மையும் சிடுசிடுப்பும் உடையவன் அவற்றைப் பொதுநல மேடையின்மீது பலியிடுவதன் மூலம் இவ்வருளார்ந்த, ஆற்றல்வாய்ந்த பண்புகளை எய்துகிறான். * ‘தன்னுறு கருத்தே மன்னுறு கருத்தாய்ப் பின்னுறும் ஒவ்வோர் ஓரையும் மன்னும் உயிர்க ளெத்தனை அத்தனை ஓரையாச் செயிரற விளங்கும்அச் சீருடை யவற்கே! மன்னலம் எண்ணி மறுத்திடும் சிறுசிறு தன்னலம் ஒவ்வொன் றதுவும் மன்னுயிர் அத்தனை தனிநலத் தொகுதியாய் வளரும்! நித்தநீ ளின்பப் பெருவெளி செல்ல இவ்விரு பண்பு களும்இரு திசையில் செவ்விதில் திறந்த சிறுபுழை வாயில்கள் ஆகும், அவ்வழி சென்றே சாகா இன்பஞ் சாருதிர் விரைந்தே! தற்சலுகைகள், மடிமைப் பண்புகள் பரவலான இப் பண்புக்கேடுகளன்றி வேறு பல சின்னஞ் சிறு தன்னல மடிமைப் பண்புகளும் உள. இவை தற்கட்டுப் பாடின்மையால் நிகழும் தளர்ச்சிக் கூறுகள், தன் நெகிழ்வுக் கூறுகள் ஆகும். முந்திய பண்புக்கேடுகளைப் போல இவை தீமைகளாக, தீங்கு உண்டு பண்ணுபவைகளாகத் தோன்றுவ தில்லை. தீங்கற்ற சிறு வழுக்களாகவே தோன்றுகின்றன. ஆயினும் அவை தரும் தீங்கு சிறிதன்று. ஏனென்றால் அவை வலிமைக்கேட்டின் பயன்களல்ல, வலிமைக்கேட்டை உண்டு பண்ணுபவை, வளர்ப்பவை. வழக்கமாக அவற்றுக்கு ஆளாகும் மனிதன் படிப்படியாக விலங்கு நிலைக்கும், அதற்குக் கீழ்ப்பட்ட சிறுவிலங்கு நிலைக்கும் சிற்றுயிர் நிலைக்கும் தாழ்த்தப்படு கிறான். தவிர, இத் தன்னெகிழ்வுப் பண்புகளில் பல தனி மனிதன் தன்னல உணர்ச்சித் தளத்தில் எழுந்து, அதற்கும் கீழ்ப்பட்ட ஐம்புலத் தளத்துக்கு இன்பமளிப்பவையாகத் தோன்றுவதால், எளிதில் சலுகை பெற்றுப் பேணப்படுகின்றன. ஒவ்வொரு சலுகை மீதும் அது ஒன்று பத்தாக வளர்ந்து பேணப்படுவ தனால், உள்ளத்தின் ஆழத்திலும் உயிரின் கருவகத்திலும் வேரூன்றி வளம் பெற்று விடுகின்றது. வாய்மை நோக்கிய உயிரின் பயணம் இவற்றின் மூலம் நெடுந்தொலை, கிட்டத்தட்ட நிலையாகப் பின்னிடைந்து விடுகிறது. ஐம்புலச் சார்பான தற்சலுகைகளில் ஏதாவதொன்றைத் துறக்கும் சமயத்திலேயே மனிதன் தனக்குள் எவ்வளவு உள்ளார்ந்த வலு, உள்ளார்ந்த இன்ப வளம், சேமவலு, பண்பாற்றல், செல்வாக்கு வளம் இருக்கிறது என்பதை அறிய முடியும். தற்சலுகைகளுக்கு இடம் கொடுப்பதனால், அவற்றை அடக்காததனால், கைவிடாததனால், அந்த ஆற்றல் எந்த அளவு பயன்படாமல் போகிறது, எந்த அளவு குறைகிறது என்பதையும் அப்போதுதான் அவன் மதிப்பிட்டுணர முடியும். தற்சலுகை களை எதிர்த்தடக்குந்தோறும், கைவிடுந்தோறும் இந்த உள்ளார்ந்த ஆற்றல் எல்லையற்று வளர்கிறது. பயிற்சிபெற உடல்போல அவன் உளம் உறுதியும் நெகிழ்வாற்றலும் வளமும் அடைகின்றது. தற்சலுகைகளின் மூலம் மனிதன் தன்னைத்தானே தாழ்த்திக் கொள்கிறான். அவற்றுக்கு இடங் கொடுத்து வளர்க்கும் அவாவில் அவன் தன்மதிப்பு அவனை விட்டு அகல்கிறது. சூழலின் நற்பண்பலைகளின் செல்வாக்கிலிருந்தும், சான்றோர், பெரியோர் பண்பாட்டுச் செல்வாக்கிலிருந்தும் இது அவனைத் துண்டுபடுத்தித் தடைச் சுவர் வளர்க்கிறது. உலகில் அவன் செய்ய வேண்டிய, செய்யத்தக்க, செய்யக்கூடிய நற்செயல்களைச் செய்து முடிக்கும் ஆற்றலை அது உருக்குலைந்து விடுகிறது. தவிர, குருட்டு அவாக்கள், குருட்டு உணர்ச்சிகளின் பிடியில் அவன் எளிதில் சிக்கி, அவன் உள்ளமே சிந்தனையற்ற குருட்டுப் போக்கை மேற்கொள்கிறது. ஓயாத போலி இன்ப நுகர்வால் அவன் உள்ளமும் உடலும், பொறி புலன்களும் இன்ப நுகர்வாற்றலையே இழக்கின்றன. நாளடைவில் துன்ப உணர்வு கூட அற்று அவன் மரத்துப் போகிறான். விலங்குகளிலும் கீழ்நிலைப்பட்ட நடைப்பிணமாக, கிட்டத்தட்ட நிலையாகவே நீளின்ப அமைதியிலிருந்து துண்டிக்கப்படுகிறான். வாய்மையின் நிழலை, திசையைக்கூட அவன் திரும்பிப் பார்க்க முடிவதில்லை. அவன் கண் பார்வையும் காலடியும் மறந்தோ, தவறியோகூட அத்திசையில் திரும்ப முடியாத நிலையை அவன் அடைகிறான். தற்சலுகைகளின் மறுப்பால் மனிதன் தன்னலத்தளத்தி லிருந்து விடுபடுகிறான். சிந்தனைக் குழப்பம் ஓய்ந்து தெளிவு பெறுகிறான். அது மட்டுமோ? மிகக் கீழ்ப்படியிலுள்ள இந்தப் பண்புக்கேட்டை விலக்குவதன் மூலமே அவன் மெய்யுணர் வுறுதியும் உள்ளுணர்வும் பெற்றுவிடுகிறான். தன்முனைப்பு, வீம்புரை உலப்பிலா இன்பம், பொங்கல் பெருவாழ்வு, உறுதியான கடைப்பிடி ஆகிய மூன்றையும் ஒரே எட்டில்பெற நீ விரும்பு கிறாயா? உன் உயிருக்கு உயிராக நீ கருதும் தற்சலுகைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை ஒவ்வொன்றாகக் கைவிடு. உன் உள்ளத்தை அவற்றுக்கு எட்டாத் தொலைவிலுள்ள உயர்குறிக் கோளில் பதிய விடு. நிலையற்ற போலி இன்பங்களை, ஐம்புல நுகர்வுகளைத் தொடக்கற அகற்று. இவற்றின்பின் நீ செய்ய வேண்டியதாக எதுவும் இராது. வாய்மையை நீ காண்பதுடன், அதனை எல்லாருக்கும் காட்டி, எல்லாரையும் அதன்வழி நிற்கச் செய்ய நீ விரும்பு கிறாயா? அப்படியானால் நீ செய்ய வேண்டுவது வேறொன்று மில்லை. உன் தன்முனைப்பை, தன்முனைப்புரையை, பிறர் கொள்கை கோட்பாடுகளின்மீது உன் தலையீட்டை முற்றிலும் அகற்றிவிடு. உன் கருத்தை எவருக்கும் நீ உரைக்க வலிந்து முயல வேண்டாம். பிறர் கருத்தை ஆராயக்கூட நீ முற்பட வேண்டிய தில்லை. ஒத்துணர்வுடன் பிறர் உள்ளத்தின் போக்கறிந்து அவர்கள் கருத்துக்களை, கொள்கை கோட்பாடு பாடுகளை, சமய உணர்வுகளை உணர முயற்சி செய். அன்பும் ஒத்துணர்வும் உன்னைச் சுற்றிலும் முதல் தரமான ஒன்றுபட்ட உள்ளங்களையும், ஒருமுகப்பட்ட கருத்துக் களையும், ஓரினக் குறிக்கோளையும் உண்டு பண்ணிவிடும். அது உனக்கும் வாய்மை காட்டி, உன்னைச் சூழ்ந்தவர்களுக்கும் வாய்மையை உணர்த்திவிடும். தன்முனைப்புரையும் தற்கோள் நிறுவும் முயற்சியும்தான் தன்னலம், தன்முனைப்பு ஆகியவற்றின் மிக மோசமான வடிவங்கள் ஆகும். அறிவற்றவர்களை மற்றப் பண்புக்கேடுகள் பாதிக்கின்றனவென்றால், அது அறிவுத் திறமுடையவர்களையும் வாத எதிர்வாத ஆற்றலுடையவர்களையும் பெரிதும் பீடிக் கின்றது. அது மட்டுமீறித் தன் குறைகளிலும் பிறர் குணங்களிலும் குருடாயிருக்கிறது. இப்பண்புடையவர் அதனைப் பண்புக் கேடாகக்கூட ஒரு போதும் கருதுவதில்லை. சிறந்த பண்பாகவே கருதித் தருக்குகின்றனர். வாதத்தைத் தருக்கம் என்று கூறுவது இதனாலேயேயாகும். உள்ளம் பண்பட்டபின் தற்பெருமை தரும் இப்பண்பே அறிவற்றவர்க்குக்கூடத் தகாத பண்பிலா முறைகேடாகத் தோற்றமளிக்கும். அறியாமை, கோபம் ஆகியவற்றைவிடப் பண்புடையாளருக்கு அருவருப்பு உண்டு பண்ணும் பண்பு இது. தன்மறுப்பு, மெல்லிணக்க நயம் ஆகிய உயிர்ப்பண்புகளுக்கும் உயர்பண்புகளுக்கும் இது நேர்மாறானது. தருக்கு: வாதமும், பிடிவாதமும் தற்கோள் நிறுவலுக்கு ஆளானவர்கள் தம் கருத்து, தாம் பிடித்த பிடியே சரியானது என்று கூறிப் போர்க்கொடி நாட்டுகிறார்கள். அவர்களுக்கு மாறான கருத்துடையவர்கள், அவர்கள் கருத்தை ஏற்காதவர்கள் யாவரும் தவறான நோக்குடையவர்கள் என்று அவர்கள் தம்மீது தாமே ஒருதலைத் தீர்ப்பு அளித்துவிடுகின்றனர். அது மட்டுமோ? தமக்குத் தோன்றிய கருத்தைத் தாம் கொள்வதுடன் நில்லாது, பிறரையும் தம் கருத்துக்குத் திருப்புவதைத் தம் கட்டாயக் கடமையாகக் கொண்டு பிறரை அல்லற்படுத்தித் தாமும் அல்லற்படுகின்றனர். இவர்கள் தம் பிழையை என்றுமே திருத்திக்கொள்ள முடியாதவர்கள். ஏனென்றால் தம்மிடம் பிழை இருக்கும் என்றோ, இருக்கக்கூடும் என்றோகூட அவர்கள் என்றும் ஐயுறுவதில்லை, ஒப்புக்கு ஏற்பதுகூட இல்லை. வாத, பிடிவாத மூலமாக அவர்கள் தம்மைச் சுற்றிலும் ஓயாத எதிர்ப்பும் வாத எதிர்வாதமும் உண்டுபண்ணி, வாய்மையையே உலகில் ஒரு கேலிக்கூத்தாக்குகின்றனர். பிறரைத் திருத்தும் உரிமை தனக்கு மட்டும் உண்டு என்று இத்தகையவன் தருக்குகிறான். ஆனால் பிறரும் தன்னைத் திருத்த உரிமை உண்டு என்பதை மறுக்கிறான். அவ்வகையில் முயற்சி செய்பவர் மீது சீறி விழுகிறான். பிறர் தற்பெருமையை, தன் மதிப்பை, தன்னமைதியை அவன் ஓயாது புண்படுத்துகிறான். இதனால் அவன் தற்பெருமைக்கும் தன்மதிப்புக்கும் தன் அமைதிக்கும் ஓயாது பங்கம் விளைகின்றது. ஓயாத உணர்ச்சி வெறிகளுக்கிடையில், வெறுப்புக்கள், கோபதாபங்களுக் கிடையில் அவன் வாணாள் வீணாள் ஆகின்றது. உண்மை அறிவிலிருந்தும் அமைதியிலிருந்தும் அவன் தன்னை என்றும் ஒட்டறுத்துக் கொள்கிறான். பிறரைத் தன்வயப்படுத்தி பல்வந்தமாக அடக்கியாளும் இந்த வெறியார்வத்தை அவன் கைவிட்டாலல்லாமல், அவன் பிறர்மீது அணுவளவும் செல்வாக்குப் பெற முடியாது. தானும் ஒரு சிறிதளவுகூட அமைதி பெறவோ, சிந்திக்கவோ, அறிவு முன்னேற்றம் அடையவோ முடியாது. பிறர் இதயங்களின் உணர்ச்சிகளை உணரவோ, பிறர் நேசத்தால் தன் மனிதப் பண்பை வளர்த்து வாழ்வில் பங்கு கொள்ளவோ அவனுக்கு என்றும் வாய்ப்பில்லாது போய்விடும். மனித அவா, ஆர்வங்கள், பாசங்கள், உணர்ச்சிகள் அற்ற நிலையில், அவன் வாதமே அவன் உள்ளத்தைக் குறுக்கிக் குள்ளமாக்கி அவன் வளர்ச்சியைத் தடைப்படுத்தும். வேறு எந்த மனிதனுக்கு இல்லாத முறையில் அவன் உலகத் தொடர்பி லிருந்து அறிவு, அன்பு, மனித உணர்ச்சிகள் ஆகிய மூவகையிலும் துண்டுபட்ட ஒரு கொடுஞ்சிறையில் தன்னைத்தானே இட்டடைத்துக்கொள்கிறான், தனக்குத்தானே விலங்கிட்டுக் கொள்கிறான்! தங்குதடையற்ற கருத்துப் பரிமாற்றமே தப்பெண்ணம், தனிமுனைப்பகற்றும் தன்முனைப்பையும், தற்கோள் நிறுவலையும் விட்டவனே மற்ற மனிதர்களுடன் நாள்முறை வாழ்வில் தொடர்பு கொண்டு தன் தனிமுனைப்புக்கள், தப்பெண்ணங்களைக் களைகிறான். அவன் தன் கருத்தைப் பிறரிடம் இயல்பாக உலவவிடுவதுடன், பிறர் கருத்துக்களுடனும் எளிதாக ஊடாடுகிறான். பிறர் அவனையும் அவன் கருத்துக்களையும் உணர்வது போலவே, அவனும் பிறர் கருத்துக்களை உணர்கிறான். கருத்துப் பரிமாற்றத்தால் அவனிடத்திலும் சரி, அவன் சூழலிலும் சரி, தனிப்பட்ட தப்பெண்ணங்கள் அகன்று சுமூகமான சரிநிலை அறிவும் ஒத்துணர்வும் வளர்கின்றன. அவன் தன் கருத்துச் சுதந்திரத்தைத் தான் மதிப்பது போலவே, பிறர் கருத்துச் சுதந்திரத்தையும் மதிக்கிறான். ஆழ்ந்த கூரிய உள்ளுணர்வுநோக்கும் பரந்த ஒப்புரவும் நிறைஇன்ப அமைதியும் எங்கும் நிலவவிட்டு, அவன் சமுதாய வாழ்வை உயர்த்தித் தானும் அதில் பங்குகொள்கிறான். முன்பு அவன் அடைபட்டுக் கிடந்த சிறையை விட்டு வெளிவந்து, பேரின்பப் பூங்காவில் தனக்கென ஒரு கிளை அரங்கம் அமைத்துக் கொள்கிறான். தன்முனைப்பு அகலுவதால் ஏற்படும் மற்றோர் ஆதாயம் கருத்துத் துறையில் தன்னலப் பேரவாவின் அழிவு ஆகும். எல்லாச் செல்வமும் தனக்கே என்று பேராவற்பேயர் எண்ணு வதுபோல, தன்முனைப்பாளரும் எல்லாக் கருத்தாட்சியும் தமதாக வேண்டுமென்ற தவறான எண்ணம் உடையவர் ஆவர். இந்நிலை மாறி, எல்லாரிடமும் சரிசம உரிமையுடன் உலவும் கருத்துக்கு அவன் மதிப்புக் கொடுக்கத் தொடங்குகிறான். தேங்கி நிற்கும் நீர் சாக்கடையாவதுபோல, தேங்கி நிற்கும் கருத்தும் தவறாகிவிடும். தங்குதடையின்றி உலவும் நீர் தூய்மைபெற்று விடுவது போல, தடையற்று உலவும் கருத்து தூய உயர் கருத்து ஆகும். தன்முனைப்பகற்றியவன் இத்தூய கருத்தில் பங்கு கொள்வதுடன் தன் தனிவாழ்வின் சிறைதகர்த்துச் சமுதாய வாழ்விலும் பங்குகொள்கிறான். சிடுசிடுப்பும் முசிவும் அகல்கின்றன. பகைமையும் வெறுப்பும் மறைகின்றன. இச்சூழ்நிலையில் அமைதியும் தன்னுரமும் தற்சிந்தனையும் வளமுறுகின்றன. தன் முனைப்பின் துறவால் அவன் தன்னலத்தினும் கேடானதற் பற்றியிருந்து, பொதுநலப் பற்றார்வமென்னும் தூவெளியில் உயரப் பறக்கிறான். இனப்பெருவாழ்வு புறப்பொருள் செல்வங்கள் உயிரற்றவை - உயிருடன் நீடித்த தொடர்பற்றவை. இம்முறையில் அவை தற்காலிக உடைமைக ளாக மட்டுமே இயங்கும். வாழ்நாள் முழுதும் - தனிவாழ்வு கடந்து சமுதாய வாழ்விலும் இனவாழ்விலும் தொடர்ந்து நின்று நிலவும் இயல்புடையது அகச்செல்வம். தன்னலம், தற்பற்று, தன்முனைப்பு, தற்செருக்கு உடையவர்களுக்கு அது கிட்டுவ தில்லை. பொதுநல ஆர்வம், தன்மறுப்பு உடையவர்களுக்கு மட்டுமே கைவரும் வேண்டாமை விழுச்செல்வம் அது. புறஉலகில் பிறர் உடைமைகளை விரும்பாதவர், தற்பேரவா அற்றவர்கள், பிறர்நலம் பரப்புவதிலே முனைந்த ஆர்வம் உடையவர்கள் ஆகியவர்களுக்கே இப்பொதுநலச் செல்வம் எளிதாக வந்தெய்தும். வாழ்க்கை தனக்கென்ற எண்ணம் மறைந்து, வாழ்க்கை வாழும் மக்கள் அனைவருக்குமே என்ற எண்ணம் மேலிட்டால், அவர்கள் அப்பொதுவாழ்வார்வத்தில் தம் வாழ்க்கையையே மறந்து விடுவர். அந்தப் பொதுவாழ்வே அவர்கள் பெருவாழ்வாக அமையும். தன்னலம், தற்பற்று, தன்னவா வுடையவன் செல்வ வள முடையவனானாலும் அதை அமைதியுடன் அனுபவிக்க முடிவ தில்லை. அதுபற்றிய கவலை, அதைப் பிறர் கைப்பற்றி விடுவார் களே, பங்கிட்டுக்கொள்வார்களே என்ற சிறுமை எண்ணம் அவனை ஓயாது நச்சரிக்கும். ஆனால் பொதுநல ஆர்வமுடையவ னுக்கு இத்தகைய கவலை எதுவும் இருப்பதில்லை. அவன் தன் செல்வவளத்திலும் மகிழ்கிறான். பிறர் செல்வ வளத்திலும் உலகை கொள்கிறான். இரண்டிலும் ஒருப்போல அவன் இன்ப வெள்ளத்தில் மிதக்கிறான். தன் புறப்பொருள்கள் எதனையும் இழக்க நேர்ந்தால் அவன் சிறிதும் வருந்த நேர்வதில்லை. தன்னைவிட்டகலாமல் அவன் விழிப்புடன் காப்பது ஒன்றே ஒன்றுதான் - தன் பொது நல ஆர்வம் உலகத்துக்கே உரியது, விலைமதிப்பற்றது, மனித இனத்துக்கே உரியது என்று கொண்டு, அவன் அதையே ஒருகணமும் இழந்துவிட ஒருப்படாதவன் ஆகிறான். பேரின்பவாணன் என்பவன் யாவன்? தனக்கெனப் பேராவலுடையவனா, உலகுக்கென வாழ்பவனா? எப்போதும் தனக்கென மேன்மேலும் உடைமைகளைப் பெறுவதையே குறிக்கோளாகக் கொண்டு, அவற்றிலிருந்து தனக்கு மட்டும் இன்பம் தேட ஆலாப் பறப்பவனா - தன்னிடம் உள்ளவை எதனையும் மற்றவர் இன்பத்துக்காக விட்டுக் கொடுத்துத் துறக்க என்றும் சித்தமாயிருப்பவனா? பேராவலால் பேரின்பமென்ன, இன்பமே எளிதில் கிட்டுவதில்லை. அதற்கெதிரான பொதுநல ஆர்வத்தால் துன்பங்களே இன்பங்களாக, பேரின்பங்களாகத் துளங்கும் என்பது வெளிப்படை. வெறுப்பைத் துறக்கும் துறவு மறை தன்மறுப்புக்களில் இன்னொன்று வெறுப்பைத் துறப்பதாகும். அதைப்போல அகத்துன்பம் ஆற்றுகிற, அகஅழகு பெருக்குகிற பண்பு வேறு கிடையாது. பிறரைப் பற்றிய மனக்கசப்பு, வன்மம், காழ்ப்பு, வெறுப்பு, கடுப்பு ஆகியவை பண்பு கெடுக்கும் திறங்கள். கடுகடுப்புக்குரிய இம் மன நிலையுடன் இன்பமும் அமைதியும் ஒருங்கே இயலுதல் அரிது. சிறப்பாக வெறுப்பு வெறுப்பவன் உள்ளத்தின் பண்புகளனைத்தையும் சுட்டெரிக்கும் தீ. அமைதி, இன்பம் ஆகிய எல்லா அகநிலை நறுமலர்களையும் பொசுக்கி, உள்ளத்தில் நிலவும் பொன் னுலகை இருளுலகாக்கும் தன்மையுடையது அது. பல பெயர்களுடனும் பல வடிவங்களுடனும் வெறுப்பு இயல்கின்றது. ஆனால் அதன் பொருண்மை ஒன்றே. பிறர்மீது எரிந்து விழுவதே அவ்வெல்லாப் பண்புகளின் பொது உயிர்க்குறை. வெறுப்பை ஒரு தெய்வமாக்கி அதன் பக்தர்களாய் இயங்கும் வெறுப்பு வேதாந்திகள் உண்டு. அவர்கள் அதற்கு மதம் என்ற பெயர் கொடுத்து மனித இனத்தைப் பழிக்க, அதன் வாழ்வை வெறுக்கக் கற்றுக் கொடுக்கின்றனர். அதன் பெயரால் ஒருவரை ஒருவர் எதிர்க்க, பழிதூற்ற, அடக்குமுறை அழிமதிகள் செய்யத் தூண்டுகின்றனர். ஒருவர் கருத்தை ஒருவர் ஏற்கா விட்டால், அதற்காக ஒருவரை ஒருவர் கொன்றொழிக்கவும், கண்ணீராறும் குருதிக் குளங்களும் பெருக்கி உலகைத் துன்ப மயமாக்கவும் அவர்கள் அரும்பாடுபடுகின்றனர். ஒருவர்மீது ஒருவர் சீறிவிழுவது, வெறுத்துப் பேசுவது, உள்ளத்தில் கடுப்புடன் தவறான எண்ணங்களைத் தண்ணீர் விட்டு வளர்ப்பது - இவை யாவுமே வெறுப்பின் பல வடிவங்கள் தான். பிறரைப் பற்றிய சீற்ற எண்ணங்களுக்கு மனத்தில் இடம் கொடுப்பவர் வெறுப்பை வென்றவர், கைவிட்டவர் ஆக மாட்டார். ஆனால் சீற்றத்தைக் கைவிட்டுவிட்டோம் என்று எண்ணுபவர் கூட உண்மையில் அதனின்றும் எளிதில் விடுபட முடியாது. சீற்றத்தின் விதை அவர்கள் உள்ளத்தின் அடித் தளத்தில் புதையுண்டு கிடந்து, எதிர்பாராத எதிர்பாராத நேரத்தில் தலைகாட்டியே தீரும். அவ்விதை கெட, சீற்ற எண்ணங்கள் மீளாதகல வேண்டுமானால், எவரைப் பற்றிச் சீற்ற எண்ணங்களை வளர்த்து வந்தோமோ, அவரைப் பற்றிய நல்லெண்ணங்களை, அன்புக் கருத்துக்களைப் பேணி வளர்க்க வேண்டும். உண்மையில் தீங்கு செய்தவர்களுக்கெதிராக நலம் செய்பவர்களுக்கு, பகைத்தவர்களைப் பாசத்துடன் அரவணைக்கும் பழக்கமுடையவர்களுக்கே வெறுப்பு விதையழிக்கும் சால்பு எளிதாகும். இப்பண்பு வளர்ந்த பின்னரே, அதன் மூலம் வெறுப்பின் தடமும் வாடையும் கழுவித் துடைத்தகற்றப்பட்ட பின்னரே, மெய்யான பேரின்பத் தென்றல் உள்ளத்தில் உலக முடியும். மெல்லிய நூலிழை வேலிகூடத் தாண்ட விரும்பாத பேரின்ப எழிலுருவம் வெறுப்பென்னும் இரும்புக் கோட்டையின் முள் வேலியையும் எஃகுக் கதவையும் கண்டு தொலைவிலேயே திரும்பிச் சென்றுவிடும். அவ்வேலியின் முறிந்து விழுந்த துண்டுகள், கோட்டை கதவுகளின் தடங்கள் உள்ளளவும் அவ்வுரு உள்ளே நுழைய, நுழைவாயில் இருந்த இடத்தில் அணுக எண்ணாது. வெறுப்பின் தடமுழுதும் அகன்று அமைதியின் தடம் பதிந்த பின்னரே அது வாயிலை அணுகும். இன்பவாணன் பின்பற்ற வேண்டும் திருவாசகம் பேரின்பவாணன் பின்பற்ற வேண்டும் அமைதியை ஒரே வாசகத்தில் கூறுவதானால், அது இதுவே - யார் எது செய்தாலும் சொன்னாலும் எண்ணினாலும், அவர்கள் மீது சீற்றம் கொள்ளாதே என்பதே. வெறுப்புக்கு எதிராக வெறுப்புக் காட்டாதே, அன்பு காட்டு. அதுமட்டுமன்று. அவர்கள் வெறுப்புக்குக் காரணமான உன் செயலை, சொல்லை, கருத்தை - அதற்குக் காரணமான சூழலையே மாற்று, சூழலுக்குக் காரணமாயிருக்கக்கூடும் சிறு வழுக்களைத் திருத்து. சிறு குறைகளை நிரப்பு. அத்தகைய எதுவும் உன் கருத்துக்கு எட்டாவிட்டால், அப்போதும் சூழலைமாற்றும் சிறுசெயல்களை, சொற்களை, கருத்துக்களை - சிறுநடை நயம், சொல்நயம், கருத்து நயங்களை இயங்க விடு. இது அவர் பிழை, அது இவர் பிழை என்று கூறாதே. எல்லார் நலங்களையும் உன் நலமாக ஏற்கும் நீ, எல்லார் பிழைகளையும் உன் பிழையாக ஏற்று, எல்லார் சார்பிலும் நீயே கழுவாய் தேடு. எல்லார் பிழைகளுக்கும் நீயே ஈடு செய்து நலம் பெருக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள். பெருஞ் செயல்களால், சொற்களால், கருத்துக்களால் திருத்த முடியாத சூழல்களைச் சிறுசெயல்களால், சொல் நயங்களால், கருத்து நுட்பங்களால் திருத்த முடியும். அத்துடன் எல்லாச் சூழல்களிலும் பொதுமைச் சின்னமாகிய கடவுட் கருத்து - பொது உள்ளத்தின் குறியீடு - தனி உள்ளங்களை எளிதில் இயக்குவதாகும். தனி உள்ளத்தைத் தனி உள்ளத்துக்குத் தெள்ளத் தெளிய எடுத்துக் காட்டும் கண்ணாடி அதுவே. அன்பிலாப் பகைவர் பகைச் செயலுக்கிடையே இயேசு பிரான் கூறிய வாசகத்தை இதற்குச் சான்றாக எடுத்துக் காட்டலாம். ‘அவர்களுக்கு மன்னிப்பளிப்பீராக, தந்தையே!’ என்று அவர் கடவுளை நோக்கி வணங்கினார். இது உண்மையில் கால இடம் கடந்த பொறுமை உள்ளத்துக்கும் அதன் வாயிலாகத் தீமை செய்தவர்க்கும் விடுத்த அன்பழைப்பேயாகும். கடவுள் பெயரை இங்கே இயேசுபிரான் வழங்கியதுபோல அன்பொற்றுமைக்கு, தீமைக்கு மாறாக நன்மை செய்யும் பண்புக்கே வழங்குதல் முறைமை. மற்றச் சமயவாதிகள் வழங்குவதுபோல வெறுப்புக்கு, எதிர்ப்புக்குப் பயன்படுத்துதல் தகாது. அது கடவுட் பண்பற்றவர், கடவுட் பகைவர் செயலே யாகும். அள்ள அள்ளக் குறையாத நிறைசெல்வம் வெறுப்புச் சிறிது, சிறுமையுடையது. அது அறிவுக் கண்திறவாத குருட்டுப் பண்பு, துன்பம் பெருக்கும் பண்பு. அன்போ அழியாப் பெருஞ்செல்வம், அள்ள அள்ளக் குறையாத நிறை நிதியம். அது தொலை நோக்கும் நுண்நோக்கும் உடையது. இன்பம் பெருக்குவது. வெறுப்பு ஒரு திசையில் செல்வது, எல்லையுடையது. அதன் ஆற்றல் வரையறைப்பட்டது. ஆனால் அன்பு பத்துத் திசையிலுந் எல்லையற்று ஓயாது அலை அலையாக, சிற்றலை பேரலைகளாகப் பரவிக்கொண்டே யிருப்பது. 3‘பண்பின் முகடு பழிசொல் லாமையே! கண்பெறு திருத்த வாதி என்பவன் பிறரிடம் தகுதியும் அழகும் காண்பவன், பிறர்பிழை தன்பிழை யாகக் கொண்டு தன்பிழை திருத்தித் தன்னை ஒறுத்தே அன்பினைப் பெருக்கும் ஆண்டகை தானே! மன்பதையையே தெய்வமாகக் கொண்டு, மன்பதைப் பற்றாகிய அத்தெய்வப் பற்றின் பலி பீடத்திலே வெறுப்பைப் பலிதந்து ஒழிப்பாயாக. அம் மன்பதைப் பற்றிலேயே அமிழ்ந்து அம் மன்பதைக்காகவே வாழ். அப் பொது வாழ்வின்போது, உனக்கு உன் சிறுவாழ்வுக்கு நேரிடும் இன்னல்களைப் பொருட் படுத்தாதே. அவற்றைச் சிறுசிறு தூசுகளாக மதி. உனக்கு நேரிடும் இன்னல் வேறு எவரையும் பாதிக்காமல், வேறு எவரையும் சாராமல் மட்டும் விழிப்பாகப் பார்த்துக்கொள். உலகில் ஒருவர்கூட, கடைப்பட்டவர்கூட, உன் பகைவர் கூட விலக்கப்படாமல், ஓர் உயிர்கூட விடப்படாமல், மன்பதை முழுவதையும் உன் உயிராகக் கொண்டு நேசித்துப் பேணு. அதுவே தெய்வம். அந்நேசமே தெய்வ பக்தி. அந்தப் பக்தி வெள்ளத்தின், பரந்தகன்றாழ்ந்த அன்புப் பெருக்கின் நேர் வழியில் உன் உள்ளத்தின் அன்பு வாயிலை அகலத் திறந்து வை. எந்த உயிரும், எத்தனை வெறுக்கத்தக்க உயிரும், உன் உள்ளத்தில் புகவிடாமல் தடுப்பதன் மூலம் அந்தத் திறந்த வாயிலில் ஒரு சிறு தடைகல்லை உண்டுபண்ணி விடாதே. ஏனெனில் அதில் பங்கு கொள்ளாத ஒவ்வொரு உயிரும், அந்த வெள்ளத்தில் தான் திளையாமல் நிற்பது மட்டுமல்ல; பால் கிண்ணத்தில் தங்கிய உப்பு பால் முழுவதையும் திரைய விடுவது போல, அந்த வெள்ளத்தின் தூய இனிமையைக் கெடுப்பது ஆகும். கீழ்த்தர அவா, தற்புகழ்ச்சி தூய்மையற்ற அவாக்கள், தன் தளர்ச்சி பற்றித் தானே இரங்கும் படுகோழைமை, தற்புகழ்ச்சி என்னும் தன்மதிப்புக் கேடு, தற்பெருமை, செருக்கு - இவை உள்ளத்தின் அருவருப்பான பண்புருக் கேடுகள் ஆகும். இவற்றுள் ஒன்று அல்லது ஒவ் வொன்றாக அனைத்தும் தன்னை யடக்கி அடிமைகொள்ள விட்ட ஒருவன் மற்ற எல்லாப் பண்பு கேடருக்கும் கீழான நிலைமையை அடைவது திண்ணம். ஏனென்றால் இவை தன்னலப் படியிலுள்ள மனிதரால்கூட மதிக்கப் பெறாதவை. இவற்றை ஒவ்வொன்றாக அடக்கி வெல்பவனோ, அச்செயல்கள் மூலமே வலுப்பெற்றுத் தன்னலப் படிதாண்டும் தகுதி அடைகிறான். வலிமை கேடு, துன்பம் ஆகியவற்றை அவனால் எதிர்த்துப் போராட முடிகிறது. அழியா நிறை இன்பத்தின் ஒளியைத் தொலைவிலிருந்தே கண்டுணர, அதை நோக்கி முன்னேற அவனுக்கு ஊக்கம் பிறக்கிறது. பேரம்பலத்திற்கு வழி திறக்கும் சிற்றம்பலம் மேற்கூறப்பட்ட இத்தனை தன்மறுப்புக்களும் தனி மனிதன் சிறுவாழ்வில் இலைமறைகாயாய்ப் புதைந்து கிடக்கும் ஆற்றல்களே. ஆனால் அவை மனிதனைப் பொதுப் பெரு வாழ்வின் உச்சிக்குக் கொண்டு செல்லத்தக்க உயிர்க் கருவிகள். அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் அவன் உச்ச உயர்நிலைக்கு உயர முடிகிறது. அவ்வுச்ச உயர் நிலையின் ஆட்சிக்குரிய தூய அன்புத் தெய்வத்தின் எளிய பூசனைகளாக, அன்புக் காணிக்கைகளாக அவை மதிக்கத்தக்கவை. இவை வெளிப்படையாகச் செய்யப்படும் பகட்டாரவாரப் புறப் பூசனையல்ல. தன் அகத்தே, தன்னுட் கோயில் கொண் டுள்ள உயிர்த் தெய்வத்துக்குச் செய்யப்படுகின்ற பூசனைகளே! ஆயினும், இவ் உயிர்க்கோயில் சிறிதானாலும், அதுவே பேரின்பப் பொதுவெளி என்னும் பெருங்கோயிலுக்கு ஒருவனை இட்டுச் செல்லும் குறுகிய நேர்வழியின் நுழைவாயிலாய் அமைகிறது. இந்தப் பூசனைகள் அனைத்துக்கும், தன்மறுப்புக்கள் அனைத்துக்கும் உரிய பூர்வபீடிகை, அவற்றின் ஆணித்திறவு தன் குற்றத்தைத் தான் அறிந்து, அது தன் செயலின் விளைவு என்று உணர்வதே. இதுவே உலகின் குற்றமுழுவதையும் தன் குற்றமாகக் காணும் அருள்நிலையின் முனிமுகம் ஆகும். ‘இது என் பிழை, நான் பிழை செய்தேன்’ என்ற முதலுணர்வு தான், ‘நான் பிழை செய்திருக்கக் கூடும்’ என்ற மேலுணர்வாகவும், ‘எல்லாப் பிழையும் என் பிழைதான்’ என்றும் மெய்யுணர்வாகவும் முதிர்ச்சியுறுகின்றன. தன் பிழை காணாதான் இங்ஙனம் வாய்மையின் திசையி லேயே நாட முடியாது. பிழையைப் பிறரிடம், சமுதாயத்தினிடம், ஊழினிடம், தெய்வத்தினிடம் ஒப்படைக்கும் பண்பே வாய்மை ஒளியை நம் கண்ணிலிருந்து நிலையாக மறைக்கும் கண்கட்டு ஆகும். ‘தெய்வீக அரசு’, ‘பேரின்ப அமைதி’ கூரறிவினால் மட்டும் வந்தெய்துவதல்ல. அன்புள்ளத்தின் தன்மறுப்புக்களால், பணி வுடையவன் நாள்முறை வாழ்வின் செருக்கறுப்புச் செயலால் வருவதே. உலகின் பெருஞ்செயல்களுக்குரிய ஆரவாரப் புகழ் எல்லாம் குருடர் பலர் கூடி வன்குருடர்க்குச் செய்யும் வெறும் பூசனையேயன்றி வேறன்று. உண்மைப் பூசனை உலகின் கண் காணாதது. அடுத்திருப்பவர்கூட உணராத மறைபூசனையே. ஏனெனில் இவ்வகப் பூசனை அக அழகு காணும் அக நோக்க முடையார்க்கன்றி எளிதன்று. ஆனால் உலகு காணாத காரணத்தால், உலகு அதை மதிப்பதில்லை என்று கூறிவிட முடியாது. ஏனெனில் அதன் பலன் கண்கண்டது. புறநோக்குடையவர் அதன் வழி காணாது, திசை காணாது பயனைமட்டும் கண்டு மருட்சியுறுவர். தம் புறக்கண், ஊனக்கண் கடந்த அக்காட்சியைத் தெய்வீக அருங்காட்சி என்று கூறி அமைவர். சிறு தன்மறுப்புக்களின் ஆற்றல் அவை என்று எண்ணாது, கடவுட் செயல், இயற்கை மீறிய தற்செயல்பேறு என்று கூறி ஏமாறுவர். புறம்தோன்றாப் போர்க்கள வெற்றிகள் பண்புநிலை, சால்புநிலை, அருள்நிலை அடைந்தவன் உலகில் பெறும் நல்லாற்றல் அளவிடற்கரியது. அது எல்லையற்ற நெடுந்தொலை செல்லவல்லது. மனிதர் அதனைக் காணாமலே, அதை உணராமலே, அதன் நற்செயலுக்கு ஆளாகின்றனர். பண்பாளர், சால்பாளர் அதற்காகச் சிறுசிறு போர்க்களங் களிலே, எவர்கண்களுக்கும் படாமலே, அரவமில்லாமலே எத்தனை போர்களாற்றியுள்ளனர் என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். அச்சிறு போர்க்களங்களின் வெற்றிகள் மனித இனமுழுதும் அளாவிய எத்தகுமாபெருஞ் செயல்களை ஆக்கி வருகின்றன, எவ்வளவு பேரெல்லையில் பண்பாட்சி செய்து வருகின்றன என்பதையும் அவர்கள் உணரமாட்டார்கள். ஆனால் அந்நிலையிலும், அப்போர்க்கள வீரர் நோக்கு தம் நோக்கல்ல, புதுநோக்கு; தமக்குத் தீங்கற்ற, யாருக்கும் தீங்கற்ற, தமக்கும் எல்லாருக்கும் நலஞ்செய்ய வல்ல நோக்கு என்பதை மட்டும் அவர்கள் உணர்ந்து கொள்கின்றனர். உணர்ந்து அவர்கள், தம்மையுமறியாமல் பண்பாளர், சான்றோர்களுடன் ஒத்துழைத்து, தம்மையறியாமலே பேரின்ப ஆலயம் எழுப்பும் பணியில் பங்கு கொண்டு வருகின்றனர்! பண்பாளர், சான்றோர் அமைக்கும் அன்புக் கோயிலின் திருப்பணியில் இங்ஙனம் தமக்கெனப் பண்பையும் சால்பையும் வகுத்துக் கொள்ளாதவர்களும் ஈடுபடுகிறார்கள். பிறர்க்கே வாழ்ந்து போராடிய அவர்கள் வாழ்வின் முதிர்ந்த பகுதி இங்ஙனம் பிறரையும் தம்முடன் ஈடுபடுத்திய வாழ்வு ஆகிறது. பண்பாளர் தமக்காக ஆற்றிய, இன்னும் ஆற்றி வருகிற போரின் விழுப்புண்களை புறஉலகத்தவர்கள் அறிவதில்லை. அதில் பங்குகொள்ள வேண்டும். கடமையையும் உணர்வதில்லை. அதை அறிந்து அவ்வழியில் ஒவ்வொருவரும் நிற்கும்நாளே அவரவர்க்குரிய புதுவாழ்வுப் பெருநாள், பெருவாழ்வுப் புது நாள்! போரின் பண்பு காணாமலே, அதன் வெற்றி வீரரின் பண்பில் ஈடுபடும் பொதுமக்கள் அவரைப் போற்றுகின்றனர். அவர் புதுவாழ்வில் திடுமெனப் புதிய இனிமையும் மென்மையும், உறுதியும் தன்னம்பிக்கையும், பொறுமையும் ஏற்பட்டு விட்டதைக் காண்கின்றனர். தங்கள் துன்பங்களில் அவர்கள் துணை பெருநலம் தருவது என்றும் உணர்கின்றனர். அவர் களிடம் ஆறுதலும், அவர்கள் மூலம் ஓய்வும் பெறுகின்றனர். இதற்கு ஈடான பரிசு யாது? ஆனால் இவ்வளவு அவர்களைப் போற்றியும் அவர்கள் பண்புக்குக் காரணமான போராட்டங் களை - சிறு தன்மறுப்புக்களை - காணாததாலேயே அவர்கள் அதில் ஈடுபடுவதில்லை. செல்லல் நீக்கும் இன்ப இளவேனிலகம் அன்பின் மணத்துக்குமுன் புகழ் எம்மாத்திரம்? ஆர்வத்தின் ஆற்றலுக்குப்பின் மற்றப் பெருமைகள் எம்மட்டு? தன்னலமற்ற சேவையின்முன் பெருமையுடையவர்கள் அறிவும் திறமும் ஆற்றலும் எத்தகையவை? அன்புக்கு ஏற்ற விலை, பரிசு அன்பன்றி வேறில்லை. கொடுப்பவரும் கொள்பவரும் சரிநிலைப்படுத்தும் பண்பு, இருவருக்கும் சரிசமமாகப் பயன்படும் பண்பு, இரு திசையும் ஒருங்கே ஆதாயம் பெருக்கும் பண்பு வேறில்லை. அதனால் பெறும் இன்பம் கரையற்றது, களங்கமற்றது. அது பேரின்ப ஒளி; ஏனெனில் மற்ற இன்பங்களைப் போல், ஒளிகளைப் போல் அது எல்லையுடையதல்ல. மற்றவற்றைப் போல துயரளாவும் இன்பமல்ல, நிழலளாவும் ஒளியல்ல, அது. உணர்ச்சிப் புயல்களின் கொந்தளிப்பில் அல்லலுற்ற உயிர்களின் செல்லல் நீக்கும் இன்ப இளவேனிலகம் அதுவே! தன்னை மறுக்கும் பண்பு உச்ச உயர்நிலையான மெய் யறிவும் எல்லையிலா மெய்யின்பமும் அளிப்பது. ஆனால் எத்தனை பெருஞ்செயல், புகழ்ச் செயலானாலும் ஒரே செயல் கொண்டு அதனை ஒரேயடியில் பெற்றுவிட முடியாது. ஏனென்றால் அது அக வளர்ச்சியால் மட்டுமே பெறத்தக்க அக இன்பம். அவ்வக வளர்ச்சியைப் படிப்படியாகவே தூண்ட முடியும். பயிர்கள்போல அது காலத்தில் நீடித்துப் பயில வேண்டிய, பயிர்ப்பிக்க வேண்டிய நீள் செயலாகும். படிப்படியாக அவ்வக வளர்ச்சியை, அகப் பயிர்ப்பைத் தூண்டும் செயல்கள் பெருஞ்செயல்களல்ல, சிறு செயல்களே. அதுமட்டுமன்று. செயல்களைவிடச் செயல் மறுப்புக்களே அவ்வகப் பண்புகளை, அகத் தன்மறுப்புக்களைத் தூண்ட வல்லன. அத் தன்மறுப்புக்களும் பெருந் தன்மறுப்புக்களல்ல. ஆரவாரத் தன்மறுப்புக்களல்ல; ஓசைபடாத சின்னஞ்சிறு தன்மறுப்புக்களே! இச் சிறு செயல்கள் பல. அவை காலங் கடந்து நீடித்துப் பயில்வதனாலேயே பயிர்ப்பு என்றும், அவற்றின் பயனாக ஏற்படும் விளைவுகளும் காலங் கடந்த நீடித்த பயன்களாதலாலே பண்புகள் என்றும் அழைக்கப் பெறுகின்றன. பண்பு, சால்பு ஆகியவற்றின் எல்லையற்ற விரிவே அருள் - கடவுளின் - பேரின்பத்தின் கால இடம் கடந்த இனப் பேரகற் சிக்கு மிகவும் அணித்தான பண்பு அதுவே! பொய்மை தன்னலப்பண்பு, வாய்மை தெய்விகப் பொதுமைப்பண்பு வாய்மை - தன்னலம்! வாய்மைக்கெதிரான பண்பு பொய்ம்மை. ஆனால் உண்மையில் பொய்ம்மை என்பது பொதுவாக உணரப்படுவதுபோல இல்லாத தன்மை என்ற பொருளுடையதன்று. போலித்தன்மை என்பதே அதன் குறிப்பு. இப் போலித் தன்மை தன்னலத்தாலேயே ஏற்படுகிறது. உலகு ஒன்று, உயிர்கள் பல. உலகம் உயிர்களுக்குரியது. ஆனால் ஒவ்வோர் உயிரும் உலகைத் தன் காட்சி கொண்டு ஒரு தனி உலகாகக் காண்கின்றது. அவ்வாறே செயலாற்றவும் செய்கிறது. எல்லா உயிர்களுக்கும் உரிய ஓருலகு இங்ஙனம் உயிர்களின் போலி அனுபவத்தால் ஒவ்வோர் உயிருக்கும் உரிய பல்வேறுபட்ட உலகமாகக் காட்சியளிக்கிறது. இக்காட்சியின் விளைவே பொய் வாழ்வு, போலி வாழ்வு - தன்னலத் தனிவாழ்வு. இது கடந்து செயலாற்றும் தனி உயிரே பொது உணர்வில் ஈடுபட்டு உலகு வளர்த்து உயிரும் வளர்க்கிறது. பொதுஉணர்வு கண்ட தனி உயிரே மற்ற உயிர்களை அதில் ஈடுபட வைக்கும் எண்ணத்துடன் அதனைக் ‘கடவுள்’ எனக் கற்பித்தது. பொதுமை யுணர்வற்ற சமயவாணர் கடவுளை எளிதில் உணர முடியாமலும், தாம் உணரும் கடவுளை, கடவுட் கருத்தை, வாழ்வுடனும் உலகுடனும் பொருத்திக் காண முடியாமலும் இடர்ப்படுவது இதனாலேயே யாகும். வாழ்க்கை என்பது வாழ்வின்வழி அறிந்தவனுக்கு ஒரு போராட்டமே. ஆனால் அது புறப் போராட்டமல்ல, அகப் போராட்டம். அதில் வெற்றி இறுதியாக வருவதல்ல. வெற்றி தோல்விகளின் பின்வரும் இறுதிநாள் வெற்றியல்ல. அது தொடர்ச்சியான வெற்றி, நாள்தோறும் பெறும் சிறுமணி வெற்றிகளின் தொகுப்பான வெற்றி மணிமாலை. ஒவ்வொரு நாளும் மனிதன் தன்னுள் ஒவ்வொரு தீய சிறு பண்புடன் போராடுகிறான். ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஓர் அன்பிலாக் கருத்தை, ஒரு தூய்மையற்ற தன்னல அவாவை, ஒரு சிறு பழிசார்ந்த பழக்கத்தை எதிர்த்துப் போராடி வெற்றி கண்டு கொண்டே செல்கிறான். அவன் வெற்றிகள் ஒரே பெரு வெற்றி யாக, மொத்த வெற்றியாகத் திரளவில்லை. ஒவ்வொரு வெற்றியும் அவனை, அவன் சூழலை, அவன் வாழும் உலகை, இனத்தை ஒரு படி முன்னேற்றி வளர்க்கிறது. இறுதியில் அஃது அவனை மாசற்ற தூய பேராற்றல், பேருணர்வு, பேரின்ப ஒளியாம் வாய்மையின் வாயிலில் கொண்டு விடுகிறது. ஒவ்வொரு சிறு வெற்றியும் உண்மையில் அவ்வாயில் கோபுரத்துக்கு அவனை இட்டுச் செல்லும் ஒரு படியாக உதவுவதே ஆகும். வாய்மையின் பேரொளி - நீடின்பத்தின் நிலைபெற்ற நிலவுகாண நீ புறம் நோக்காதே, அகம் நோக்கி நாட்டம் செலுத்து. உரிமைக்கு ஏங்காதே, கடமையாற்று. பேறு எண்ணாதே, தன் மறுப்பு நாடு. இன்பம் வரவேற்காதே, துன்பம் எதிர்த்து நில். பெருமை பாராட்டாதே, பணிவுடன் செல். காலம் கடத்தாதே, கணத்தே கடனாற்று. இவை செய்தால் இன்பத்தை நீ நாட வேண்டாம், அஃது உன்னை நாடிவரும். அடிக்குறிப்புகள் 1. “றுhயவ நேநன hயவா அயn டீக நுனநn யீயளளநன டிச ஞயசயனளைந வடி உடிஅந, றுhநn hநயஎநn ளை சடிரனே ரள யனே றiவாin டிரசளநடஎநள? ..................................................................... டுடிறடiநேளள ளை வாந யௌந டிக நஎநசல எசைவரந: றுhடி படிநள hந டடிறநளவ, ரெடைனள, னடிரவெ nடிவ, வாந ளயகநளவ.” - க்ஷயடைநல. 2. “கூசரவா ளை றiவாin டிரசளநடஎநள; வை வயமநள nடி சளைந குசடிஅ டிரவறயசன வாiபேள, றாயவந’நச லடிர அயல நெடநைஎந.” - க்ஷசடிறniபே. 3. “நுயஉh hடிரச றந வாiமே டீக டிவாநசள அடிசந வாயn ளநடக, வாயவ hடிரச றந டiஎந யபயin, ஹனே நஎநசல டடிறடல ளயஉசகைiஉந றந அயமந குடிச டிவாநச’ள படிடின ளாயடட அயமந டகைந அடிசந வாயn ளநடக, ஹனே டியீநn வாந றiனேடிறள டிக வால ளடிரட வடி டiபாவ குசடிஅ hiபாநச ளயீhநசநள. ளுடி hயடை வால டடிவ றiவா தடில.” 4. “கூhந hiபாநளவ உரடவரசந ளை வடி ளயீநயம nடி டைட; கூhந நௌவ சநகடிசஅநச ளை வாந அயn றாடிளந நலநள ஹசந ளூரiஉம வடி ளநந யடட நெயரவல யனே யடட றடிசவா; ஹனே லெ hளை டிறn னளைஉசநநவ, றநடட-டிசனநசநன டகைந ஹடடிநே சநயீசடிஎநள வாந நசசiபே.” 6. ஒத்துணர்வு 1இனிமை ஏந்துக ஏனைய உயிர்களி னிடமே; கடுமை காட்டுக தன்னுளே, தன்னுயி ரிடமே; கனிவிலாச் சிறு மாந்தரின், சிறுகடுஞ் சொற்கள் இனிதின் ஏற்க! வன்மருநிலக் களைகளே யெனினும், மடுப்பர் இன்னுரமெனப் பயிர்க் கறிவுடை உழவோர்! - எல்லா வீலர் வில்காக்ஸ் 2‘புண்பட்டவர் புன்கண் உசாவலேன் புண்பட்டவன் ஆயினன் யானுமே!’ - வால்ட் விட்மன் நம்மை நாம் வெல்லும் அளவிலேயே பிறருடன் நாம் ஒத்துணர்வு கொள்ள முடியும். நம்மீது நாமே இரக்கம் கொள்ளும் வேளையில், நாம் பிறருக்காகச் சிந்தித்துப் பிறருக்காகப் பரிந்துணர முடியாது. நம் பெருமை, தலைமை பற்றிய கவலையோ, நம்மைப் பேணிக் காக்கும் கருத்தோ நம்மிடம் இருக்கும்வரை, நாம் பிறரிடம் கனிவாக, நேசமாகப் பரிமாறுவது எளிதன்று. நம் கருத்துக்களை, நம் இன்பங்களை நாம் வலியுறுத்தும்வரை, பிறர் கருத்துக்களில் ஒத்துணர்வு காட்ட வோ, பிறர் இன்பம் பற்றிக் கரிசனை காட்டவோ இயலாது. ஒத்துணர்வு என்பது பிறர்பற்றிய கருத்துமட்டுமன்று, அது தன்னைப்பற்றிய மறப்பும் ஆகும். தன்மறுப்பு மட்டுமன்று, தன் மறப்பும் அதற்குத் தேவை. பிறரை ஒத்துணர்ந்து பார்க்க வேண்டுமானால் நாம் அவர்களை முதலில் நன்கு அறிந்துகொள்ள வேண்டும். இதுவே ஒத்துணர்வின் முதற்படி. ஆனால் இந்த முதற்படி அடைவதற்கு, பிறரை நன்கு உணர்வதற்கே, நாம் அவர்களைப் பற்றிய அளவிலேனும் நம் தன்முனைப்பான தற்கருத்துக்களை ஒதுக்கிவைத்து, அவர்களை அவர்கள் நிலையில் உள்ளபடி அறிந்தாக வேண்டும். அவர்கள் புற இயல்பு உணர்ந்தால் போதாது. அகஇயல்பைத் துருவிக் காண்டல் வேண்டும். இஃது அவர்களுடன் ஒன்றுபட்டு, ஓரளவு ‘அவர்க’ளானாலன்றி முடியாது. அவர்கள் கண்கொண்டு அவர்களையும், அவர்கள் கண் கொண்டு உலகையும் அறிவதே அவர்களை உண்மையில் அறிவதாக அமைய முடியும். அதேசமயம் இன்னொருவர் வாழ்வை இவ்வளவு துருவி ஆராய்பவர் ஆராய்ச்சிக்கு உட்பட்ட வரைவிட அனுபவத்திலும் அறிவிலும் மிக்கவராயிருத்தலும் இன்றியமையாததாகும். அகநோக்கு ஒன்றே இத்தகைய மேம்பட்ட அனுபவத்தையும் அறிவையும் ஒருவருக்கு ஒருங்கே அளிக்க முடியும். ஒத்துணர்வு நோக்கு அகநோக்கே! ஒத்துணர்பவர் அகநோக்குடையவராயிருந்தால் ஒத் துணர்வுக்குரியவர் அவரைவிட அனுபவத்திலும் அறிவிலும் மேம்பட்டவராயிருந்தால்கூட ஒத்துணர்வுக்குக் கேடு வராது. ஏனென்றால் அகநோக்குடையவரினும் மேம்பட்ட அனுபவமும் அறிவும் உடையவர் கட்டாயம் அகநோக்குடையவராகவே இருக்க முடியும். இருவரும் அகநோக்குடையவரானால் அவர்களிடையே ஒத்துணர்வு வகையில் உயர்வு தாழ்வு இருக்க முடியாது. இருவரும் ஒருவருடன் ஒருவர் ஒத்துணர்வுடையவ ராகவே எளிதில் அமைவர். பிறரிடம் ஒருவர் ஒத்துணர்வு காட்டுவதற்குரிய தகுதி தன்மறுப்பும் பொதுநல அவாவும் அகநோக்கும் ஆகும் என்பதை இச்செய்திகள் தெளிவுபடுத்துகின்றன. இவற்றில் எது குறைந் தாலும் ஒத்துணர்வு செயலாற்ற முடியாது. பிறரிடம் ஒத்துணர்வு காட்டும் வகையில் தப்பெண்ணங் களும் வன்மமும் தீராத் தடைகள் ஆகும். ஆனால் தற் பெருமையும் செருக்கும் அவ்வுணர்வு தோற்றுவதற்கே இடம் தராதவை. மேலும் நீ வெறுக்கும் ஒருவனிடம் உன்னால் ஒத்துணர்வு காட்டல் இயலாது. உனக்குப் பிடிக்காத மனிதனை நீ அறிய முயல்வதும் அரிது. கீழ்த்தர இன்பங் காரணமாக நீ யாரிடமேனும் பற்றுக் கொண்டிருந்தால், அத்தகைய மனிதனைக்கூட நீ சரிவர அறிந்து கொள்ளலாகாது. ஏனெனில் உன்னிடமுள்ள குறையை நீ அவனிடம் காணப்போவதில்லை. பிறரை உள்ளவாறு அறிந்துகொள்ளுவதற்குள்ள இந்தத் தடங்கல்களை எல்லாம் விலக்கினால்தான் ஒத்துணர்வு கைவரத் தக்கது. அப்போதுதான் மனிதரைச் சரியானபடி அறியும் அறிவின் மீது அந்த ஒத்துணர்வு அமைய முடியும். அவ்வறிவு தவறாயிருந்தால், மனிதர் இயல்பான பண்புகள் உருத்திரிந்து விகற்பமுற்றால், ஒத்துணர்வுக்கு இடமிராது. மற்றவர்களை உள்ளவாறறிய வேண்டுமானால் நீ உன் விருப்பு வெறுப்புக்கள் சார்ந்த உணர்ச்சிகளிலிருந்து விடுபட வேண்டும். தப்பெண்ணங்கள், தற்பெருமைக் கருத்துக்கள் உனக்கும் அவர்களுக்கும் இடையே வந்து மறைக்கும்படி விடக்கூடாது. அவர்கள் செயல்கள்மீது சீற்றமோ, அவர்கள் நம்பிக்கைகள், கொள்கை கோட்பாடுகள்மீது கண்டனமோ கொள்ளும் உரிமை உனக்குக் கிடையாது. தற்காலிகமாகவாவது நீயெனும் தன்மையை ஒதுக்கிவைத்துவிட்டு, அவர்களின் நிலையை மேற்கொண்டு அவர்களை மதிப்பிட்டுணர வேண்டும். இம்முறையிலேயே நீ அவர்களுடன் நேருக்குநேர் உறவு கொண்டு அவர்கள் வாழ்க்கை, அனுபவங்கள், நோக்கம் ஆகிய வற்றை உணர்ந்துகொள்ள முடியும். எந்த மனிதனையும் இவ்வாறு உணர்ந்தபின் யாரும் கண்டிக்க முடியாது. மனிதர் ஒருவர்பற்றி ஒருவர் தவறான முடிவு கொள்வதும், கண்டிப்பதும், வெறுப்புடன் ஒருவரிடமிருந்து ஒருவர் ஒதுங்கி வாழ்வதும் யாவும் இத்தகைய முழுநேரறிவு இல்லாததால்தான்! தன்னடக்கமும் தன் தூய்மையும் அற்ற எவரும் இந் நேரறிவு இல்லாதவரே. வேற்றுமைகள் பண்புசார்ந்தவையல்ல, அளவு சார்ந்தவையே உயிர்வாழ்க்கை என்பது ஒரு வளர்ச்சி, உள்முதிர்ச்சி, மலர்ச்சி. ஆகவே ஒரு பழிகாரனுக்கும் நிறைஞானிக்கும் அடிப் படையில், பண்பில், வேற்றுமை கிடையாது. இன்றைய ஞானி முன் ஒரு பழிகாரனாயிருந்தவனே. இன்றைய பழிகாரன் நாளை ஒரு ஞானி ஆகக்கூடியவனே. அவர்களிடையேயுள்ள வேற்றுமை பண்புசார்ந்தது அன்று, அளவு சார்ந்ததே பழி காரனை மனித இனக் குழந்தை என்றும், ஞானியை மனித இன முதியவன் என்றும்கூடக் கூறலாம். சிலர் பழிகாரர் ஒரு தனிப்பண்புடையவர், தனி இனத்தவர் என்று கருதி, அவர்களை அறவே வெறுக்கின்றனர், ஒதுக்கு கின்றனர். சற்றே வழிதவறிய, சறுக்கிய மனிதர் என்று எண்ணாமல், இயல்பாகவே கெட்டவர்கள், பொல்லாதவர்கள் என்று மதிக்கின்றனர். இவ் ஒதுக்கீடு குழந்தைகளை ஒதுக்கி வைத்து வாழ்வது போன்ற மடமையேயாகும். குழந்தைகள் அறிவு குன்றியவர்கள், பணிவிணக்க மில்லாமல் குறும்பு செய்பவர்கள், சிறுபொருள்களை வைத்து விளையாடுபவர்கள். இக்காரணங்களுக்காக அவர்களை நாம் விலக்கி வாழ்வதில்லை. ஏனெனில் அவர்கள் நம் எதிர்கால மக்கள். அவர்களிடம் நம் பாசம் செல்கிறது. நம்மிடம் அவர்கள் மதிப்பு வைத்து அறிவிலும் அனுபவத்திலும் நம்மைப் பின் பற்றுகிறார்கள். பழிகாரர், உலகுக்கு இக்குழந்தைகள் போன்ற வர்கள். ஞானிகள் குழந்தைகளின் தாய் தந்தையர் போன்ற வர்கள். பிந்தியவர்கள் உலக மக்களின் மதிப்புக்குரிய வழிகாட்டிகள் என்றால், முந்தியவர்கள் அவர்கள் பாசத்துக்குரிய பின் தோன்றல்கள் போன்றவர்கள். வாழ்க்கை ஒன்றே. அதன் தோற்றங்கள், மாறுதல்கள் பல. இவை உண்மையில் வாழ்க்கையின் பகுதிகளே, கால மலர்ச்சி களே. தளிர், இலை, அரும்பு, மலர், காய், கனி என்பவை மரத்திலிருந்து முழுதும் வேறானவையல்ல. அவை அதன் பகுதிகள், கால முதிர்ச்சிக்கேற்ப மாறுபட்ட உறுப்புக்கள். காய்கள் பூக்களின் மற்றொரு வடிவம், பூக்கள் இலைகளின் புது உருவமே! வாழ்க்கையின் உருமாற்றங்களுக்கு மற்றும் ஓர் உவமை நீர், நீராவி, பனிக்கட்டி ஆகியவை. இவை பொருளாலும் அடிப் படைப் பண்பாலும் ஒன்று. ஆனால் உருவாலும் தோற்றப் பண்புகளாலும் பல. வாழ்க்கையில் பழிகாரன் நிலையும் ஞானி நிலையும், நன்மை தீமையும் இவைபோன்ற தோற்ற மாறுபாடுகளே. பழிகாரன் அனுபவமற்ற குழந்தை, ஞானி அறிவார்ந்த தந்தை பழிகாரன் என்பவன் உணர்வு முதிர்ச்சி பெறாதவன். அறியாமை காரணமான அவன் தவறான முறையில் செயல்கள் செய்கிறான். இது பேசத் தெரியாத குழந்தை மழலையாடு வதையும் புலம்புவதையும், எழுத வாசிக்கத் தெரியாத குழந்தை கிறுக்குவதையும் மைக்கோலை மாறிப்பிடித்தெழுதுவதையும், ஏட்டைத் தலைகீழாகப் பிடித்து வாசிப்பதையும் போன்றதே. இதற்கு மாறாக ஞானியோ அறிவு அனுபவமுதிர்ச்சியுடையவன். அவன் சரியான செயல்முறைகள் அறிந்து நடக்கிறான். அறியாக் குழந்தையின் அறிவற்ற பெற்றோர் அவ் அறியாக் குழந்தையைத் திட்டுவது போலவும் அடிப்பது போலவும் பழிகாரர் பழிகாரரை வைகின்றனர், எதிர்க்கின்றனர், அவ்வளவே! ஆனால் ஞானி ஞானியையும் கடிவதில்லை, எதிர்ப்பதில்லை. பழிகாரனையும் கண்டிப்பதில்லை, பகைப்ப தில்லை. தானும் ஒரு காலத்தில் அறியாப்பருவத்தில் பழி காரனாயிருந்தது அவனுக்குத் தெரியும். திட்டுதல், வெறுத்தல், எதிர்த்தல், ஒதுக்குதல் அப்பருவத்தின் அறியாமைக்கு உரியது என்பதை அவன் அறிவான். இதுமட்டுமன்று. அறியாக் குழந்தைகளிடம் உள்ள முதிரா அறிவின் இளந்துடிப்புக் கண்டு நாம் மகிழ்ந்து கனிவும் பாசமும் காட்டுவதுபோல, ஞானியும் பழிகாரனிடம் வருங்கால ஞான விதை கண்டு கனிவார்வமும் பரிவார்வமும் கொள்வான். அவனிடம் கனிந்த ஒத்துணர்வுகொண்டு, அவனைத் தன் குழந்தையாக, பின்னோனாக, நண்பனாகக் கருதி உரிமையுடன் சலுகைகள் காட்டுவான் அவன் போக்கில் நின்றே அவனை அவனறியாமலே மெல்லத் தூக்கி விட்டு மகிழ்வூட்டி மகிழ்வான். இந்த ஒத்துணர்வே பழிகாரனிடம் ஞானிக்குரிய நேரிய நடை முறை ஆகும். முழுநிறை அறிவு முதிர்ச்சி பெற்ற ஞானி எல்லாரிடமும் ஒத்துணர்வு காட்டுவான். அதேசமயம் எவரிடமிருந்தும் அவன் ஒத்துணர்வு எதிர்பார்ப்பதில்லை. உண்மையில் அஃது அவ னுக்குத் தேவைப்படுவதுமில்லை. ஏனெனில் அவன் பழிகள், துன்பங்கள் ஆகிய எல்லாவற்றையும் கடந்துவிட்டவன் ஆகிறான். பேரின்ப வெள்ளத்தில் மிதக்கும் அவன் விருப்பம் ஒன்றே ஒன்றுதான் - ஒத்துணர்வு வேண்டியவர்களுக்கெல்லாம் ஒத்துணர்வுகாட்டி, துன்புற்றவர்களுக்குத் தன்னாலியன்ற மட்டும் ஆறுதலளித்துத் துன்பம் துடைத்து, தான் நுகரும் பேரின்பக்கரைக்கு அவர்களையும் மெல்ல இட்டுக் கொண்டு செல்வதேயாகும். பழிகாரர் பழியின் பயனான துன்பம் அடைவது இயல் பானாலும், ஞானி தன் ஒத்துணர்வின் மூலம் அவர்களை மெல்ல உயர்தளங்களுக்கு உயர்த்தி, அத்துன்பங்களினின்று விடுபடும் வழியைக் காட்டி உதவுகிறான். கண்டிப்பதில்லை, பரிவு கொள்கிறான் ஒவ்வொரு பழியும் - அது செயல் சார்ந்ததானாலும் கருத்துச் சார்ந்ததானாலும் - அதற்குரிய துன்பம் தராமல் போவதில்லை. இதை அறிந்த எவனும் பழிகாரனைக் கண்டிப்ப தில்லை. அவனிடம் பரிவே கொள்கிறான், ஒத்துணர்வு கொள்கிறான். தன் உள்ளத்தின் தூய்மை காரணமாக, பழி கண்டவுடனே அதைத் தொடரும் துன்பம் கருதி இரக்கம் கொள்கிறான். இரக்கமும் ஒத்துணர்வும் துன்பமுறுபவனுக்குத் துன்பத்தைத் தாங்கும் உரம் தந்து அதன் படிப்பினைகளைப் பயன்படுத்த வழி வகுக்கிறது. தன் உணர்ச்சிகளைத் துப்புறத் துடைத்தவனே ஞானி. அவன் தன்னல அவாக்களைப் பொதுநலமாக மாற்றியவன். தன் முனைப்பான உள்ளப் போக்குகளைக் காலடியிலிட்டுத் துவைத்தவன். இந்நிலையில் அவனால் மனிதனின் பழிகள், துயர்கள், ஆகிய அனைத்தையும் அடிமுதல் முடிவரை அறிய முடிகிறது. செயலையும் செயலின் பின்நின்ற கருத்துக்களையும் அதைத் தூண்டிய நோக்கங்களையும் அவன் ஆய்ந்துணர்கிறான். அவன் உள்ளத்தில் பழிகாரன் உருவும் செயலும் பண்பும் நிழலாடுகின்றன. ஆனால் அவ்வுருவை அவன் தனக்குப் புறம்பான ஒன்றாக, தன் இயல்புக்கு முற்றிலும் அயலான ஒன்றாகக் காணவில்லை. தன் புது வாழ்வின் ஆழத்திலிருந்து மேலெழுந்த ஒரு பகுதியாக, தன் அறியாமைப் பருவ வாழ்நாளின் ஒரு நிழலாக அதை நோக்குகிறான். பழிகாரன் பழியில் அவன் தன் பழி காண்கிறான். அவன் துன்பத்தைத் தன் துயராகக் கொள்கிறான். பழியும் துன்பமும் கடந்து தான் அடைந்த அமைதியை அவனும் அடைவான் என்று நம்புகிறான், அடையும் நாளை எதிர்நோக்கி, அவ்வழி அவனைத் திருப்ப முயல்கிறான். இதுவே அவன் காட்டும் ஒத்துணர்வு. போலித் தன்மை கடந்த மெய்யான நற்பண்பாளன், மெய் யுணர்வாளன் எத்தகைய ஒருதலைச் சார்பும் அற்றவன். அவன் ஒத்துணர்வு, ஆதரவு ஒரு திசையில் இல்லை, இரு திசையி லில்லை - எல்லாத் திசைகளிலும் ஒருங்கே பரவியுள்ளன. பிறர் பழிக்குமிடங்களிலும், கண்டிக்கும் இடங்களிலும், எதிர்க்கும் இடங்களிலும் அவன் பழியோ, கண்டனமோ, எதிர்ப்போ கொள்ள எண்ணுவதில்லை. அவன் வருந்துவதெல்லாம் ஒரே ஒரு செய்திக்குத்தான் - பழிகாரன் பழியை இன்பமென்று அணைக்கிறானே, அதனால் துன்பத்தை வரவழைத்துக் கொள்கி றானே என்று மட்டுமே அவன் கவலைப்படுகிறான். ஒத்துணர்வின் அளவே இன்பம் ஒருவன் ஒத்துணர்வின் அளவு அவன் மெய்யுணர்வின் அளவு. அது கடந்து ஒத்துணர்வு செல்வதில்லை. அதே சமயம் அவன் எந்த அளவு மனக்கனிவும் பரிவிரக்கமும் உடையவனோ, அந்த அளவே அவன் மெய்யுணர்வு பெற முடியும். எனவே குறுகிய உணர்வுடையவர்களிடம் ஒத்துணர்வின் பரப்பும் மிகக் குறுகியதே. அஃது அவர்கள் வாழ்வில் துன்ப இருளும் கசப்பும் உண்டு பண்ணாமலிராது. ஒத்துணர்வு பெரிதாகுந்தோறும் ஒருவனுக்கு உள்ளம் அகற்சியுடையதாகும். மகிழ்ச்சி பெருகும். அவன் தானே பேரின்ப ஒளிகண்டு பிறருக்கும் அதைத் தெள்ளத் தெளியக் காட்டும் ஆற்றல் பெறுகிறான். மற்றவர்களைத் தன் ஒத்துணர்விலிருந்து ஒருவன் தடை செய்து இதயத்தின் வாயிலை அடைக்குந்தோறும் பேரின்பம், அமைதி, வாய்மை ஆகியவற்றின் வாயிலும் அவனுக்கு அடைக்கப்பட்டு விடுகிறது. ஒத்துணர்வு முடியும் இடம், இருளும் துன்பமும் ஆரிடரும் தொடங்கும் இடம். இதனாலேயே தம்மை அறிந்தும் அறியாமலும் அன்பின் கதவைப் பிறர்மீது அடைப் பவர் தாமே தம் இன்ப வாழ்வின் கதவை அடைத்து, தம் குறுகிய தன்னலமாகிய இருட் குகையில் தம்மைத் தாமே தள்ளிக் கொள்கின்றனர். 3‘ஒத்துணர் வின்றி ஒருசிறு தொலைவும் தத்தம் வாழ்வில் தத்தி நடப்பவர் தத்தி நடப்பவர் அல்லர்கல் லறைக்கே செத்த பிணமெனச் செல்பவர் ஆவர்.’ ஒத்துணர்வு வரம்பற்றதாகும் நிலையே வாய்மையின் தோற்ற முடிவற்ற பேரொளி தோன்றும் நிலை. கட்டற்ற அன்பு நிலையே பேரின்பம் நிலவும் இடம் ஆகும். ஒத்துணர்வே பேரின்பம். அஃது அப்பழுக்கற்ற, தூய, உச்ச உயர் அன்பு நிலையிலேயே திகழ்ந்தொளி வீசுவது. கட்டற்ற பாச நிலையிலேயே அதை ஒருவன் நுகர முடியும். அது தொட்டதை யெல்லாம் தன்வயமாக்குவது. நான், நீ என்ற வேற்றுமை யற்று, கொள்பவன், கொடுப்பவன் இருவரும் ஒருநிலையடைய வழிவகுக்கும் அவ்வொளி தெய்வத்தன்மையுடையது. ஏனெனில் அது கதிரவனொளிக்குக்கூட இல்லாத பண்புடையது. கதிரவன் ஒளி ஏற்ற பொருள்களெல்லாம் கதிரவனாய் ஒளி வீசுவதில்லை. அவை நிழலுண்டு பண்ணுவதன் காரணம் அதுவே. ஆனால் வரம்பற்ற அன்பென்னும் பேரொளி தொட்ட தெல்லாம் வரம்பற்ற பேரொளி, கதிரவனொளி ஆகிறது. அஃது எல்லாப் பொருள்களையும் ஊடுருவி எல்லாம் கடந்தும் ஆற்றல் குன்றாது நிலவுகின்றது. ஒத்துணர்வின் உயிர்வளம் மற்றவர்களைப் பற்றிய நம் கருத்துக்களில் நம் தன்னலம் கலக்காமலிருந்தால்தான் நாம் அவர்களிடம் உண்மையான ஒத்துணர்வு கொள்ள முடியும். இந்த நிலை அடைந்துவிட்டபின் நாம் அவர்களை அவர்கள் நிலையிலேயே காணலாம். அவர்கள் பழிகள், மருட்சிகள், துயர்கள் ஆகியவற்றையும் அவர்கள் நம்பிக்கைகள், கருத்துக்கள், தனிமனக் கோட்டங்கள் ஆகிய வற்றையும் கண்டுணரலாம். அவர்கள் அகமலர்ச்சியின் படியை உணர்ந்து, அவர்கள் அனுபவங்களின் முழுப் போக்கையும் தெரிந்து செயலாற்றலாம். இன்ன கணத்தில் அவர்கள் செயல் இன்னபடிதான், இன்ன அளவில்தான் இருக்கும் என்று முன்னறிதல்கூட இதன்பின் அரிதன்று. அவர்கள் செயலுக்குப் பின்னணியாக உள்ள தூண்டுதல் அவர்கள் அறிவின் அளவும் அறியாமையின் அளவுமே. அறிவு அவர்கள் சரியாகச் செயலாற்ற உதவும். அறியாமை அல்லது அறிவுக்குறைவு தவறாகச் செயலாற்றும்படி செய்யும். நம் ஒத்துணர்வு அவர்கள் அறிவுடன் செயலாற்றுகிற இடத்தில் அவ்வழி அவர்களை மேன்மேலும் ஊக்கும். அறியாமையோ அறிவுக் குறைவோ உள்ள இடங்களில் அவர்களைத் திடுமென மாற்ற முடியாது. ஏனெனில் வலுக்கட்டாயமான வலிந்த வளர்ச்சி உயிர் வளர்ச்சியாக, அகமலர்ச்சியாக இராது. ஆகவே ஒத்துணர்வு மூலமாக நாம் அவர்கள் சூழலை மாற்றி அதன்பின் இயல்பை மெல்ல மாறுபடச் செய்ய வேண்டும். உயிர் மலர்ச்சியைத் தூண்டும் சிறு செயல்களை நாம் தக்க பருவமறிந்து செய்ய வேண்டும். நம் முன்மாதிரி, நம் செயலின் சந்தடியற்ற செல்வாக்கும் நம் சொல்லமைதி நயங்களும் நம் கருத்தலைகளுமே, இவ்வகையில் மற்றவர்களை மெல்ல மெல்ல மாற்றியமைக்கும். அத்துடன் காலமறிந்து இடச் சூழலறிந்து சரியான தருணத்தில் தரப்படும் சிறு தூண்டுதல், சிறு சொற்கள், செயல்கள், நடைநயம், உணர்ச்சி நயங்கள் செயல் செய்பவனைச் சரியான திசையில் மெல்ல மெல்ல ஊக்கும். இங்ஙனம் புறத் தூண்டுதல் மூலமே அவர்கள் அகப்பண்புகள் தாமாகத் தம்மையறியாமல் மாறிச் செயலாற்றும். வெறுப்பு, மடமை ஆகிய கிளைகள் அவர்கள் உயிர் மரத்தின் தொடக்கற்று வாடிவிடும். அன்பு, அறிவுக்கிளைகள் புதிது புதிதாகத் தளிர்த்து அவர்களிடம் புது மலர்ச்சியை உண்டுபண்ணும். அகவாழ்வுலகம் ஒரு பூங்கா ஒத்துணர்வு மூலம் மனிதன் புறவாழ்வுப் புதர்க்காட்டி லிருந்து அகவாழ்வுப் பூங்காவுக்குள் மெல்ல நுழைகிறான். அகவாழ்வின் அமைதி யடைந்தவர்களுடன் தொடர்புகொண்டு அவர்களுடன் நடந்தும், அவர்கள் வழிகாட்டப் பின்பற்றியும் அகப் பண்புகளின் சூழல்களில் உலவுகிறான். புனிதமாகிய இப் பூங்காவின் தென்றலில் திளைத்தபின், புயலும் தூசியும் அவனை அணுகுவதில்லை. நாற்றமும் வெப்பும் மறந்த செய்திகளா கின்றன. அவன் எதையும் மறுப்பதில்லை, வெறுப்பதில்லை, கண்டிப்பதில்லை, தடுப்பதில்லை. அவன் அன்பு எல்லாவற்றை யும் அணைக்கிறது. தீய புறச் செயல்களின் நிழல் கண்டால்கூட, அவன் அகன்ற நெஞ்சம் பொறுமையும் அருளிரக்கமும் கொண்டு, அன்புக் கனிவிலேயே அதைக் கரைத்து விடுகிறது. அகவாழ்வின் ஒளி கண்டவன் மற்ற அகவாழ்வுச் செல்வர் களைத் தமக்குப் புறம்பான அயலவர்களாகக் கொள்வதில்லை. ஏனெனில் அவர்கள் பண்பு அவன் பண்பே. அப் பண்பின் மலர்ச்சிப் படியில் அவர்கள் சற்று முன் பின்னாக இருக்கலாம். ஆனால் இஃது அவர்கள் ஒற்றுமைக்கு, ஒருவருடன் ஒருவர் ஒத்துழைப்பு உதவிக்கு உரியதேயன்றி வேறன்று. அவர்கள் நலங்கள் ஒன்று. அவன் பண்பு அவர்கள் பண்பின் ஒரு துணைக் கூறு, துணைப்பகுதி. அவன் செயலில் அவர்கள் தங்கள் செயலைக் காண் கின்றனர். அவர்கள் செயலில் அவன் தன் செயலைக் காண் கிறான். ஒருவர் குறையில், பண்பில் அவர்கள் ஒவ்வொரு வரும் தத்தம் குறையை, தத்தம் பண்பைக் காண்கின்றனர். எனவே ஒவ்வொருவர் செயலிலும் அனைவர் பண்பும் ஒத்துச் செய லாற்றுகிறது. அகவாழ்வில் புதிது புகுந்தவன் பண்பாற்றல் இவ்வாறு அகவாழ்வுலகத்தின் முழு ஆற்றலாக, கடவுளாற்ற லாகச் செயற்படுகிறது. 4‘இயற்கையின் பொன் ஆற்றலின்ஓர் இனிய துகள் உலகம் யாவும் ஒரு பொன்னுலகம் ஆக்கி விடு மன்றே! உலகம் ஒன்றே - பண்பும் ஒன்றே! உலகம் ஒன்று. ஒரே சங்கிலிக்கோவை. ஒவ்வோர் இனமரபும் - பெரிய இனமரபும் சிறிய இனமரபும் - அதன் ஒரு சங்கிலி அல்லது கிளைச் சங்கிலி. தனி மனிதன் அச்சங்கிலியின் ஒரு கண்ணி மட்டுமன்று, சங்கிலியைச் சங்கிலியுடன் பிணைத்து, சங்கிலிக் கோவையிலும் ஒரு கண்ணியாய் அமைகிறான். எனவே தான் தனி மனிதன் பழி தன் மனிதன் பழியாய் நின்று விடுவ தில்லை. அது தனி மனிதன் கடந்து பழியலை எழுப்பி இனப் பழியாகவும், இனப் பழியலை எழுப்பி உலகப் பழியலையாகவும் பரவிக்கொண்டேயிருக்கின்றது. இதுபோலவே தான் தனி மனிதன் பண்புகளும் - அவையும் தனி மனிதன் பண்புகளாய் நின்று விடாமல், தனி மனித உள்ளம் கடந்து இனப் பண் பலைகளாகவும், இன எல்லை கடந்து உலகப் பண்பலை களாகவும் பரவிக் கொண்டே இருக்கின்றன. தனி உயிர்களெல்லாவற்றிலும், இனப் பரப்பெங்கும், உலகப் பரப்பெங்கும் சரிசமநிலை வளர்க்கும் இந்தப் பண்பலைகளில் ஏற்றத் தாழ்வுகள் உண்டு - அதை வளர்ப்பவர் அகவாழ்வொளி காணாது புறவாழ்வு வாழும் பெரும்பாலான மக்களே. அகப் புறத் தொடர்பு காணாத அவர்கள், அக வாழ்வில் அனைத்துலகமும் ஒன்று என்பதை உணராத அவர்கள், புறத்தே தம்மைச் சுற்றித் தனித்தனி தன்னலச் சுவர்கள் வளர்த்து, அதிலே தனித் தனியாக அகம் சாராப் புறவாழ்வு வாழ்கின்றனர். அகத்தே நிலவும் அடிப்படைச் சமத்துவத்தின்மீது புறத்தே மேலீடான உயர்வு தாழ்வுகள் உலகில் நிலவுவதன் காரணம் இதுவே. பிறரைவிடத் தான் உயர்ந்தவன், தெய்வத்தன்மை, புனிதப் பண்புமிக்கவன் என்று நினைப்பவன் உண்மையில் தெய்வத் தன்மை, புனிதப்பண்பு உடையவனல்லன். அதைப் பரவ வொட்டாமல் தடுக்கும் இருளின் ஒரு பிரதிநிதியாக மட்டுமே, இருளைப் பரப்பும் ஓர் இருண் மகனாக மட்டுமே அவன் வாழ்கிறான். மனித இனம் அனைத்தும் ஒன்று - பழிகாரனும் ஞானியும், பக்தனும் உலகியலாளனும், ஆத்திகனும் நாத்திகனும் ஒரே தெய்வப் பண்பின் பொறிகள் என்று கருதுபவனே தெய்வப் பண்புடையவன். அவனே உலகை வாழவைத்துத் தானும் வாழ்பவன், ‘வாழ்வாங்கு வாழ்’பவன். அவனைச் சுற்றியே தெய்வ ஒளி உலவும். பழிகாரரைப் பழிப்பவரே பழிகாரர்கள்! உலகின் பழிகள், மனித இனத்தின் பழிகள் அத்தனை யையும் தம் தலைமீது தாங்கிக் கொண்டார் இயேசு பெருமான் என்று கூறப்படுவதுண்டு. இஃது உவமை வடிவில், அழகிய உருவக வடிவில் தரப்படும் அக வாழ்வின் ஒரு பேருண்மையே யாகும். அருள்நிலை யடைந்தவர் அப்பெருமான். பழிகாரரிட மிருந்து தம்மை வேறு பிரித்துணராமல், அவர் பழிகாரருடன் தம்மைப் பழிகாரராக்கிக் கொண்டு, அவர்கள் அனைவர் பழியையும் தம் பழியாக மேற்கொண்டு, அவற்றின் தண்டனை களனைத்தையும் தாமே ஏற்றார். மனித இன முழுவதனுடனும் இயேசுபிரான் காட்டிய இவ்ஒத்துணர்வே அவர் வாழ்வைத் தெய்வீக வாழ்வு ஆக்கிற்று. ஆனால் அத்தகைய ஆழ்ந்த ஒத்துணர்வு அற்றவர்கள் அவரையே விலக்கினர், அவரையே தண்டனைக்கு ஒப்படைத்துத் தாம் ஒதுங்கி நின்றனர். உண்மையில் அவ்வாறு அவரை விலக்கி, அவர் தண்டனைகளிலிருந்தும் ஒதுங்கி வாழ்பவர் அவர் காலத்தில் வாழ்ந்த அவர் பகைவர்கள் மட்டுமல்லர்; அக்காலத் திலும் இக்காலத்திலும் அவர் பெயர் கூறுபவரிடையேகூட மிகப் பலர் உண்டு. பழிகாரர்களையும் பாவிகளையும் பழிகாரர், பாவிகள் என்று ஒதுக்கி வைப்பவர்களெல்லாம் ஆன்மிக வாழ்வில் இயேசுபிரானைக் காட்டிக் கொடுப்பவர்களே - கடவுட் பகைவர்களே! அப்பகைவர்களையும் பகைக்காதவர்களே இயேசு வழி நிற்பவராவர். ‘பழிகாரர்களா? அப்படி ஒருவரும் உலகில் இருக்க முடியாது. வேண்டுமானால், ஒருவனைப் பழிகாரன் என்று கூறுபவன்தான் பழிகாரனாய் இருக்க முடியும்!’ என்றார் விவேகானந்த அடிகள். பழிகளிலெல்லாம் தலையான பழி ஒத்துணர்வின்மைதான். அதனுள்ளும் மிக மோசமான பழி பழிகாரனிடம் ஒத்துணர் வில்லாமையே. ஏனெனில் மனித இனத்திலே முதன்மை நிலை யில் ஒத்துணர்வுக்கு உரியவர்கள் அவர்களே - ஞானிகளல்லர், முழு நிறைவுடைய மனிதரல்லர்; பழியுடன் பண்பும் கலந்து செயலாற்றும் பொதுநிலை மாந்தர்கூட அல்லர். சங்கிலிக் கோவையின் வலு வலிமை மிக்க இந்தக் கண்ணிகளின் வலு வன்று. அதன் கடைநிலைக் கண்ணியான பழிகாரன் வலுவே. அவன் முன்னேறினால் அனைவரும் முன்னேறுவர். நேர்மாறாக அனைவரும் முன்னேறினால் அவன் முன்னேறுவான் என்று கூற முடியாது. ‘பழிகாரருக்காகவே நான் பிறப்புற்றேன் - அவர் களுக்காகவே என் வாழ்வு’ என்று இயேசுபிரான் கூறியதன் பொருள் இதுவே. பழிகாரர் திருத்தத்திலேயே உலகின் திருத்தம் அடங்கியுள்ளது. பழிகாரன் பழி மிகுந்தோறும், பெரிதாகுந்தோறும், அவனிடம் உள்ள இனத் தேவை, அவனிடம் ஞானிக்குள்ள இனக் கடமை பெரிதாகிறது. ‘நேர்மையாளரை, பண்பாளரைத் தன்னிரக்கப்படும்படி அழைக்க நான் வரவில்லை; பழிகாரரை அவ்வழி கூவியழைக்கவே நான் வந்தேன்’ என்றார், மனித இனத் தேவை முழுவதையுந் தன்கடனாகக் கொண்ட தண்ணளியாளர்! அன்பு எல்லாருக்கும் பொது உரிமையுடையதே. ஆயினும் சிறப்பு வகையில் அதைத் தீயவர், வலிமை குறைந்தவர், பழிகாரர் ஆகியோருக்கே காட்டும் கடப்பாடு நமக்கு உண்டு. நேர்மை யாளர்களிடம் அன்பு செலுத்த நேர வாய்ப்பு இல்லாவிட்டால் கூட, அவர்களை விடுத்து, அவர்களுக்கு மேம்பட்ட முத லுரிமையையும் முன்னுரிமையையும் பழிகாரருக்கே அளித்தல் தவறன்று; அதுவே பொருத்தமான செய்தி ஆகும். பழிகளுக்கெல்லாம் அடிப்படையான பழி, பழிகாரனைப் பழிப்பதே! பழிகாரரிலும் முரண்பட்ட மோசமான பழிகாரனை மற்றப் பழிகாரர்கள் கண்டிப்பர், வெறுத்தொதுக்குவர். தாமும் அவன் நிலையிலேயே இருப்பதைக்கூட அவர்கள் மறந்து, அவனுடன் ஒத்துணர்வுகொள்ள மறுப்பர். தம்மைப் பழிகாரர் என்று மற்றவர்கள் கண்டிப்பதை ஆதரிப்பவர்கள் போலவே, அவர் களும் அவனைத் தம்மிடையே ஒரு பழிகாரன் எனக் கண்டிப்பர். ஆனால் பழிகாரனை வெறுத்து ஒதுக்குவதுதான் பழிக் கெல்லாம் தலையூற்றான பழி என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். ஒரு பழிகாரனை ஒதுக்குவதன் மூலமே தாங்கள் பழிகாரர் என்பதை வலியுறுத்திக்கொள்வதையும் அவர்கள் கவனிப்பதில்லை ஏனெனில் உண்மையில் மற்றவர்களைக் கண்டிக்கும் அளவிலேயே ஒருவன் பழி பழிகேடு ஆகிறது. கண்டிப்பின் கடுமையே பழியின் கடுமை ஆகும். மற் றொருவன் பழிக்கு வருந்தத் தொடங்கிவிட்டால், பழிகாரன்கூட ஒத்துணர்வின் முதல் படியில், புறப்படியிலேனும் காலடி எடுத்து வைத்துவிட்டவன் ஆகிறான். அவன் பழிகள் அதன்பின் அவனைவிட்டு மெல்ல மெல்ல அகல்வது உறுதி. அதே சமயம் பிறர் கண்டிப்புக்கும் பழிப்புக்கும் ஆளாகும் ஒருவன் பழி காரனானாலும், பழிப்பையும் கண்டிப்புக்களையும் பொறுமை யுடன் ஏற்றமைவானானால், அவன் பழிப்பவர்களை விட, கண்டிப்பவர்களைவிட, அகவாழ்வின்பத்துக்கு அருகாமை யுடையவனாய் விடுவான். ஞானியின் ஒத்துணர்வின் இயல்பு நல்லவர்கள், மெய்யறிவுடையவர்கள் எவரையும் கண்டிப்ப தில்லை. குருட்டு உணர்ச்சி வெறிகளையும் தன்நலங்களையும் துறந்த காரணத்தால் அவர்கள் அன்பும் அமைதியும் உலவும் இன்பவெளியில் குளித்தெழுகின்றனர். எனவே அவர்கள் பழிகாரர் பழிகண்டு அஞ்சுவதில்லை. அதன் இயல்பறிந்து, அதனால் அவர்களுக்குத் தீமை வருவதை முன்னரே அறிந்து எச்சரிக்கவே விரும்புகின்றனர். மடமைத் துயிலொழித்து அறிவொளி கண்ட அவர்கள் தன்னல ஒருச்சார்பு நிலைகளி னின்றும் நீங்கியதனால் பழிகாரனுடன் ஒத்துணர்கின்றனர். அவனை யார் பழித்தாலும் தூற்றினாலும் அவர்கள் பழிப்பவர் பக்கமோ, தூற்றுபவர் பக்கமோ சாராமல் அவனருகே சென்று அவனுக்குப் பாதுகாப்பு அளிக்க விரைகின்றனர். அவர்கள் பழிகாரனை அணைப்பர், ஆனால் அதே சமயம் அவர்கள் பழிகாரனைப் பழிப்பவரையும் எதிர்ப்பதில்லை. அவர்களையும் அணைக்கவே முயல்கின்றனர். பழிப்பை அவர்களால் விலக்க முடியாவிட்டால் அப்பழிப்பைத் தாம் ஏற்றுப் பழிப்பவர், பழிப்புக்களானவர் ஆகிய இருவர் உள்ளங் களிலும் அன்பொளி பரப்ப முயலுகின்றனர். துன்புறுத்துபவர், துன்பத்துக்குரியவர் ஆகிய இரு சாராரிடமுமிருந்து துன்பத்தைத் தாம் ஏற்பதன் மூலம் அவர்கள் இருவர் பகைகளின்மீதும் நட்பொளி வீசுகின்றனர். அதே சமயம் துன்பத்தை வரவேற்கும் முறையையும் இரு சாராருக்கும் கற்பிக்கும் வழிகாட்டிகளாய் அவர்கள் அமைகின்றனர். தன்னடக்கம், மெய்யறிவு உடையவன் முதலில் தான் கண்டிக்கும் இடத்தில் ஒத்துணர்ந்து தவம் பயில்கிறான். அதன்பின் தன்னைப் பழிப்பவருடனேயே ஒத்துணர்வு காட்ட முனைகிறான். பிறர் தன்னைப் பழிக்கும்போது, அவன் கவனம் அப்பழிப்பின் மீதே செல்வதில்லை. நேர் மாறாக அவன் அகக் கண்ணும் அகச் செவியும் உள்ளமும் தனக்குள் தானே செல்லு கின்றன. பிறர் செயலுக்குக் காரணமாக ஏதாவது அறிந்து அறியாக் கடுஞ்செயல், கடுஞ் சொல்லின் வித்து, கடுமைப் பண்பு, கருத்துத் தன்னுள் இடம் பெற்றுள்ளதா என்று துருவி ஆராய் கின்றான். அவ்வாறு ஏதேனும் காணப்பட்டால், அவன் கண்டிப்பவருடன் சேர்ந்து தானும் தன்னையே கண்டிப்பான். கண்டிப்பவருடன் அவன் கொள்ளும் ஒத்துணர்வை இது வலிமைப்படுத்தும். ஆனால் எக்காரணத்தாலும் அவன் கண்டிப் பவரை எதிர்க்கவோ, அக்கண்டிப்பினால் புண்படவோ மாட்டான். நேசிக்காதவரிடம், பகைவரிடம் நேசம் - இதுவே சால்பு ஒத்துணர்வு என்ற பெயரால் உலகில் அடிக்கடி செல்லு படியாகும் உணர்ச்சி உண்மையில் தனிப்பட்ட நேசபாசமே. ஆனால் இஃது இயல்பான ஒத்துணர்வு, உடலுறவு உடையவர் களிடமும் நம் விருப்பத்துக்கு உகந்தவர்களிடமும் மட்டுமே கொள்ளும் ஒத்துணர்வு. நம் நலத்துடன் தொடர்புடையவரைத் தான் நாம் இங்கே நேசிக்கிறோம். நம்மை நேசிப்பவரைத்தான் நேசிக்கிறோம். ஆனால் உண்மையான ஒத்துணர்வு, தெய்வீக ஒத்துணர்வு இது போன்றதன்று. அது நம்மை நேசிக்காத வர்களிடம் காட்டும் நேசம், நம்மைப் பகைப்பவர்களிடமும் காட்டும் நேசம் ஆகும். பொதுவான நேசபாசம் தன்னலத்தையும் தன்னுணர்ச்சி யையும் அடிப்படையாகக் கொண்டது. உண்மையான ஒத்துணர்வோ பொதுநலத்தையும் உலக நலத்தையும் அடிப் படையாகக் கொண்டது. அஃது உலகின் துன்ப நீக்கத்தையே நோக்கமாக உடையது. அஃது உலகளாவப் பரந்தது. ஏனெனில் உலகில் துன்பத்துக்காளாகாத மனிதர், உயிர் இல்லை. அவ் வுயிர்களில் பெரும்பாலானவை, மனிதர்களில் பெரும்பாலானவர் துன்பத்தினால் பண்பட்டவர்கள் அல்லர். துன்பத்தை இன்ப மாகக் கொண்டு, அதன் படிப்பினைகளால் இன்பம் வளர்க்கும் வகைகளை யறிந்தவர்களல்லர். அப் படிப்பினைகளும் ஓர் ஆண்டில், ஒரு வாழ்வில், ஓர் ஊழியில்கூட எப்போதும் கைவந்து விடுபவையல்ல. அவை பல தலைமுறை வாழ்வுகள் கடந்தே இனப் பண்பாக வளர்பவை. இனத்தின் வாழ்வு தாழ்வுகளிடையே பலவகையில் அல்லல் பட்டு, அவ்வனுபவத்தின் மீதே அவை இனத்தில் உருவாகி, இனப் பண்பில் முதிர்ந்த உயிர்களில், தனி மனிதர் வாழ்வில் தழைக்கின்றன. இனத்தில் தோன்றி, இனத்தின் செல்வர்களாகிய தனி மனிதர் வாழ்வில் படர்ந்து மீண்டும் இனம் வளர்க்கின்றன. இனவாழ்வு என்னும் பயிரில் தோன்றிய பொன்னிற மணிகளின் அறுவடை இது. இனத்தின் முற்றிய வளமார்ந்த அன்பு, அறிவுக் கதிர்களாக மணியுருப்பெற்று, அது மீண்டும் இனம் வளர்க்கும் புத்துயிர் வாழ்வின் கருமணிகள், விதைகள் விளைக்கின்றது. இக் கதிர்களைத் தன் அகவாழ்வில் கொண்ட மனிதனின் ஒத்துணர்வு இன முழுவதும் பரவி இன உயிரலைகளை மேலும் ஊக்குகிறது. அறியாமை காரணமாக, மனிதன் இயற்கையின் அமைதியை மீறுவதனாலேயே துன்பங்கள் உண்டாகின்றன. ஒரேவகையான அமைதிகள் மீறப்படும்போது துன்பங்களும் ஒரே வகையாக அமைகின்றன. மீண்டும் மீண்டும் ஒரே அமைதி மீறப்பட்டு, ஒரே துன்பம் மறுபடியும் மறுபடியும் ஏற்படுவதனால், அத்துன்பத்தின் அனுபவம் அக அமைதியுடையவன் சிந்தனையைத் தூண்டி, துன்ப காரணமான ஒழுங்கமைதியின் ஒரு கூற்றை அவனுக்கு அறிவிக்கிறது. ஒழுங்கமைதி பற்றிய இவ்வறிவு, அதைப் பின் பற்றும் வகை ஆகிய இவையே மெய்யறிவு, அன்பு ஆகின்றன. ஒத்துணர்வு இவற்றின் இணைவால் மலர்கின்ற மலர்ச்சியே யாகும். ஒத்துணர்வின் படிகள்: இரக்கம் ஒத்துணர்வின் வகைகள், படிகள் பல. அவற்றுள் முதல் வகை, முதற்படியே இரக்கம் என்பது. அறியாமையை, துன்பத்தை, ஏலாமையைக் கண்டவுடன் பெரும்பாலாக எல்லா நாகரிக மக்களுக்கும் ஏற்படும் உணர்ச்சியே இது. ஆயினும் இதுவே நாகரிகத்தின், பண்பாட்டின் தெய்வீகக் கூறு. இஃது உலகில் எவ்வளவு இருந்தாலும் கேடில்லை, அஃது எவ்வளவு மிகுதியோ அவ்வளவு நலம்; அவ்வளவும் இனம் வளர்ச்சியுறும். உலகில் இஃது இன்னும் பேரளவில் வளரவேண்டிய ஒரு பண்பு என்பதில் ஐயமில்லை. 5‘ஏலாதவர்க்கு வலிமை அளிப்பது,இவ் வையகத்தே மேலாம் உரம் உடையார்க்கு மெலிவின் நெகிழ்வளித்து மாலாகிய மேடுபள்ளம் தவிர்ப்ப திரக்கமதே!’ ஆனால் கண்டிப்பும் சீற்றமும் அற்ற, கடுமையும் வெறுப்பும் அகன்ற இடத்திலேயே இரக்கம் பண்பட்ட குணமாக முடியும். தன் பழிகள் காரணமாகத் துன்பப்படும் ஒருவனைக் கண்டு, ‘இஃது இவனுக்குச் சரி, இவன் குற்றத்துக்கேற்ற தண்டனை’ என்று கூறுகிறவர் அல்லது கருதுகிறவர் உண்டு. இத்தகைய வர்கள் இரக்கமுடையவர்களல்லர், அவர்கள் செயலில் இரக்கம் காட்டினாலும் அது இரக்கப் பண்பன்று, பண்பட்ட இரக்க மன்று. அது கடுப்பான உள்ளத்தின் அறிகுறி. துன்பத்தைக் காண விரும்பாமல் விலகுவது, கண்டும் காணாததுபோல் செல்வது, கண்டு இரக்க உணர்வு பெறினும் அதன் வயப்பட்டுச் செயலில் முனையாது வாளா வருத்தத்துடன் செல்வது ஆகியவை யாவும் இத்தகைய கடுப்பான உள்ளப்பண்பினை பலபடிகளே. இத்தகையவர் ஆன்மிக நிலையில் மனித இனத்தில் தம்மைத்தாமே பண்பிற் பிற்பட்டவர், பண்புக்குள்ளர் ஆக்கிக் கொள்கின்றனர். அவர்கள் இரக்கமின்மையே அல்லது இரக்கப் பண்பின்மையே அவர்கள் பழியாகிறது. அவர்கள் இன இன்பத்தில் பங்கு பெறாமல் தம்மை இன்பநெறியிலிருந்து விலக்கிக் கொள்கின்றனர். தம்மை அறிந்தோ, அறியாமலோ துன்பப் பயிருக்கு வித்திட்டு விடுகின்றனர். பழிகளின் நச்சுக்கனி - பொறாமை ஒத்துணர்வு இன்னொரு திசையிலும் செயலாற்றக்கூடும். துன்பத்தில் அது துணையாவதுபோல, இன்பத்திலும் பங்கு கொள்ள முடியும். நம்மைவிட வாழ்க்கைப் படியில் உயர்ந் துள்ளவர், இன்பவாழ்வு கைவரப் பெற்றவரிடம் காட்டும் ஒத்துணர்வு இன்பவாணரை இன்பத்தில் ஊக்குவதாகவே அமையும். ஆனால் அகப் பண்புடையவர் பிறர் துன்பத்தைத் தம் துன்பமாக எண்ணுவதுபோல, இங்கும் பிறர் இன்பத்தைத் தம் இன்பமாகக் கொண்டு மகிழ்கின்றனர். இஃது இயல்பே. ஆனால் இதே இடத்தில் அக அமைதி அடையாதவன் நிலையை எண்ணிப் பார்த்தால், இதன் முழு அருமையும் விளங்கும். அத்தகையவன் பழிகாரன் துன்பத்தில் ஒத்துணர்வு காட்டாமல் அவனை வெறுத்து ஒதுக்க முற்படுகிறானென்றால், இன்ப வாழ்விலும் அது போலவே வெறுப்பைப் பொறாமையாக்கிக் கொள்கிறான். பொறாமை சில சமயம் பகைமையாக, தீராப் பகைமை யாகிய வன்மமாக உருவெடுக்கிறது. பழிகாரனை வெறுத் தொதுக்குவது பழிக்கு வித்து என்றால், இது பழியின் கனியாகும். பழிகாரனை மட்டுமே பழித்து, பழிகாரனைப் பழித்து ஒதுக்குபவரைக் கண்டிக்காத அறவோர் கூடப் பொறாமை, பகைமை, வன்மம் ஆகிய தீப்பண்புகளை வன்மையாகக் கண்டிக்கத் தயங்கவில்லை. ஏனென்றால் அவை உடனடியாக, மேலீடாகவே காணத்தக்க பெருந்தீமைகள் ஆகும். அக அமைதி யற்றவனின் இக்கீழ்த்தரப் பண்புகளை நோக்க, அக அமைதி யாளனின் ஒத்துணர்வு எவ்வளவு உச்ச உயர்பண்பு என்பது வெளிப்படும். இன இழிவின் சின்னமே பொறாமை பொறாமை தானே கெடுபண்புமட்டுமன்று, அது பல கெடு பண்புகளின் முதிர்ச்சி - அதைப் பழிகளின் நச்சுக்கனி என்று நாம் கூறுவதன் காரணம் இதுவே. பொறாமையுடையவன் பிறர் இன்பம் பொறாதவன், அதனுடன் போட்டியிட்டு மேம்படுவதை எண்ணுபவன்கூட அல்லன் - அதை அழிக்கத் துணிபவன். எனவே அவன் பொறாமை அப்பொறாமை உணர்ச்சிக்கு ஆளான வனுக்கு எதிரான பகைமை உணர்ச்சி மட்டுமன்று, அது சமுதாய அழிவுதேடும் சமுதாயப் பகைமை உணர்ச்சி ஆகும். மற்றப் பண்புக்கேடுகள் இன வளர்ச்சியை மட்டுமே தடுக்கும். இதுவோ வளர்ந்துவிட்ட சமுதாயங்களை, இனங் களையே கெடுக்க, அழிக்கவல்லது. இப்பழியின் இத்தனை கேடுகளும் கூடப் பெரிதல்ல. இவற்றினும் பெரிய அகப்பண்புக் கேடொன்றை அது வளர்க்கிறது. பொறாமையுடையவன் மட்டுமன்று, பொறாமையுடையவன் தோற்றிய சமுதாயமே இன்பத்தைப் பற்றி, செல்வம், ஆற்றல், அறிவு ஆகியவற்றைப் பற்றித் தவறான ஒரு கருத்தைக் கொண்டு வாழ்கின்றது - பொறாமைப் பண்பு அந்தச் சமுதாய அகநோயின் புறச்சின்னம் மட்டுமே. ஆற்றல் ஆற்றலுடையவன் நலத்துக்கும் பிறர் அழிவுக்கும் உரியது என்று கீழ்த்தரச் சமுதாயம் எண்ணுகிறது. அஃது ஆற்றலற்றவர் பாதுகாப்புக்குரியது என்று அச்சமுதாயத்தினர் எண்ணுவதில்லை. அறிவு, செல்வம் ஆகியவற்றையும் அவர்கள் இவ்வாறே சமுதாயப் பகைப் பண்புகளாகக் கொண்டு போற்று கின்றனர். இன்பத்தையும் அவர்கள் வாணிகமுறையிலே ஒருவர் இன்பம் - மற்றவர் துன்பம் எனக் கருதுகின்றனர். வாழ்க்கை ஒரு கூட்டுழைப்பு என்று கருதாமல் பல கீழ்த்தர மனிதர் - பல கீழ்த்தரச் சமுதாயத்தினர் - பல கீழ்த்தர இனத்த வர்கள் அதை ஒரு பகைமைப் போராட்டக்களம், ஒரு வாணிகப் போட்டிக்களம் என்று நினைக்கின்றனர். நம் தற்கால மனித நாகரிக சமுதாயத்தின் அடிப்படை கூட்டுழைப்புப் பண்பு சார்ந்ததேயானாலும், போராட்டப் பண்பு, வாணிகப் பண்பு ஆகிய இரு திசைகளிலுமே அது சென்று கொண்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை. தற்கால உலகின் ஆட்சியாளர் மட்டுமன்றி, அதன் அறிஞர், கலைஞர் தலைவர்கள் பலர் கூட இந்நச்சுப் போக்குக்கு இரையாகியே யுள்ளனர் - தெரிந்தோ தெரியாமலோ, இதை வளர்க்கவே செய்கின்றனர். இந்நிலை ஏற்படாத சமுதாயத்தில், இனத்தில், ‘பொறாமை’ என்ற ஒரு பண்புக்கேடு தோற்றவே இடமிராது. அத்தகைய சமுதாயம் உருவாக்கும் மொழியில் அதற்கு ஒரு சொல் இருக்க முடியும் என்றுகூட நாம் எதிர்பார்க்க முடியாது. நாகரிக வாழ்வின் அடிப்படை வலிமையன்று, இனவலிமை, அன்புக் கூட்டுறவு. உயிர்வாழ்வு என்பது வலிமையின் வளர்ச்சி, வலிமை கேட்டின் அழிவு என்று பலர் - அறிஞர் - இயல் நூலறிஞர் கூட எண்ணுகின்றனர். வலிமை என்பதன் பொருள் இனவலிமை ஆயின் இது தவறன்று, சரியே. ஏனெனில் இனத்திலுள்ள இனவலிமைப் பண்பையே நாம் தனி மனிதரிடத்தில் அல்லது தனியுயிரிடத்தில் நற்பண்பு என்கிறோம். இனத்திலுள்ள இனவலிமை கேடுதான் அற்பண்பு அல்லது தீயபண்பு அல்லது தீமை. ஆனால் வலிமை என்பது இனவாழ்வுடன் தொடர்பற்ற தனி மனிதன், தனி உயிர் வலுவானால், செல்வம், இன்பம், அறிவு என்பவற்றின் வகையிலும் இதே பொருள் கொள்ளப்பட்டால், இன வாழ்வு அஃதாவது நாகரிகம் என்ற சொல்லே பொருளற்ற சொல்லாய்விடும். வலிமையின் பயன் போட்டியில் வெல்லுதலானால், தாய் தந்தையர் தம் சேய்களை வளர்ப்பதற்கு மாறாக அழிக்கவே செய்தல் இயல்பு. இளைஞர் இளநங்கையர் முதியோர்களைப் பேணுவதற்கு மாறாக அவர்களைப் புறக்கணிப்பது அல்லது அழியவிடுவதே பொருந்தும். உண்மை என்னவெனில், மனித சமுதாயம் போராட்டப் பண்பின் அடிப்படையாகவோ, வாணிகப்பண்பின் அடிப்படையாகவோ வளரவில்லை. ஆனால் அந்த அடிப்படை அதில் உண்டு, அதுவே அதன் விலங்கியல் அடிப்படை. அதைத் தாண்டி, அதை எதிர்த்தே அது வளர்கிறது. அதன் மூல அறியாமைப்படி போராட்ட, போட்டிப் பண்புகள். அதன் வளர்ச்சியின் வித்தும் வளர்ச்சிப் போக்கும் திசையும் வளர்ச்சிக் குறிக்கோளும் அகவாழ்வு, இன்பவாழ்வு, அன்பு, மெய்யுணர்வு நோக்கியது. இவ்வளர்ச்சிப் பண்பு கூட்டுறவை அடிப்படையாகவும் முறையாகவும் உயிரிலக்காகவும் கொண்டதேயாகும். 6“வாழ்வெல்லாம் ஒன்று, ஓர் இணைப்பு ஓரினமாக இயங்கும் ஓர் உறவு” ஊழ் - இனமளாவிய தெய்விகப் பெருங்கோவை மனித வாழ்வு மட்டுமன்று, உயிர்வாழ்வும் - உயிர் வாழ்வு மட்டுமன்று, இயற்கையும் - மூன்றும் ஒரே மாபேரினக் கோவையுள், கடவுட் கோவையுட்பட்டவை. தொடக்கப் பள்ளி, இடைத்தரப் பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழக நிலையங்கள் என்பதுபோல, இயற்கை, உயிர், மனித இனம் என்பன அம்மாபேரினத்தின் - தெய்விகப் பெருங் கோவையின் முப் பெரும் படிகள், அவ்வளவே; மூன்றையும் ஒரே அடிப்படை அமைதி - ஊழ் - இயக்குகிறது. ஆனால் அவை ஒன்றிலிருந்து ஒன்று, புறமிருந்து தொடங்கிப் படிப்படியாக அகநோக்கிச் செல்கின்றன. - இதுவே அவற்றின் வேறுபாடு. அவற்றின் ஒவ்வொரு படியிலும் அன்பும் அறிவும் பெருகி, தன்னலங் கடந்த பொது நலமும் மெய்யுணர்வும் வளர்கின்றன. உள்ளம் விரிவுற்று மலர்ச்சியடைந்து, இன உள்ளமாக, தெய்விகப் பேரின்ப வெளியில் உலவும் ஆற்றலுடையதாகிறது. முன்கருதலில்லாமலும் ஒத்துணர்வில்லாமலும் பிற உயிர் களுக்கு நாம் தெரிந்தோ தெரியாமலோ ஊறுவிளைக்கும் போது அல்லது உயிர்க்கொலை நிகழ்த்தும்போது பேரின்ப ஒளி நம் அகக் கண்களிலிருந்து மறைக்கப்படுகிறது. வாழ்வில் இன்பங்கள் நலிந்து கெடுகின்றன. துன்பங்கள் மலிகின்றன. இந்நிலையிலேயே உடல் உடலை மாய்க்கின்றது. உயிர் மீது திண்ணிய அறியாமைத் திரையிடுகிறது. உணர்ச்சி வெறிகள் உணர்ச்சி வெறிகளுக்கு இரையாகின்றன. அறிவு மழுங்குகிறது. தன்னலம் தன்னலத்தை விழுங்குகிறது. அன்பு கனிய முடியாமல் உணர்வு மறுகுகிறது. மனிதனின் உள்ளார்ந்த தெய்வீக இயல்பை அழிப்பவை இவையே. அவ்வியல்பை ஊட்டி வளர்ப்பவை, ஊக்கி ஆக்கு பவை அன்பு, நேசம், ஒத்துணர்வு ஆகியவைகளே - தூய தன்னலந் துறந்த கருத்துக்கள், சொற்கள், செயல்களே! மனித இனம் கடந்த பேசாமொழி -அன்பு மற்றவரை நாம் ஒத்துணருந்தோறும், நம்மீதும் பிறர் ஒத்துணர்வு பெருகுகிறது. எனவே ஒத்துணர்வு என்றும் வீண் போவதில்லை, நேர்மாறாக, கணந்தோறும் ஒன்று பத்து, பத்து நூறாகப் பெருகிக்கொண்டே செல்கிறது. அத் தெய்வீகத் தொடர்புக்கு அதிர்வுறாத உயிர் இல்லை. மிகக் கீழின உயிர்கள் கூட அதன் ஆற்றலால் விதிர்விதிர்ப்புற்று ஊக்கம் பெறுகின்றன. செயலுக்கு மூவிரட்டி நாலிரட்டியாக, பன்மடங்காக, தம் படிநிலைக்கு ஏற்றபடி எதுவும் எவரும் இதன் உயிர்விளைவு காட்டாமல் இருப்பதில்லை. உண்மையில் மொழி எல்லை, மனித இனத்தின் பேச்சு எல்லை கடந்த உயிரளாவிய பேசா மொழி இதுவே. இயல்பாக எவ்வுயிரும் அதை உணர்ந்து செயலாற்றுகின்றது. குற்றவாளியைத் திருத்திய சுண்டெலி ஒத்துணர்வு மிக மோசமான சூழலிலும் எவ்வாறு பண்பாற்றுகிறது என்பதற்குப் பல சான்றுகள் கூறலாம். பல குற்றத் தீர்ப்புகளுக்கு ஒருங்கே ஆளாய், ஒருசேர நாற்பது ஆண்டுத் தண்டனைகளுக்கு உள்ளான கடுங் குற்றவாளி ஒருவன் கதை அவற்றுள் ஒன்று: அவனை எல்லாரும் உணர்ச்சி முற்றிலும் மழுங்கியவன், திருந்த முடியாதவன் என்று கைவிட்டு விட்டனர். காவலர், ஏவலர்கள் அவனை எப்படி வைத்துச் சமாளிப்பது என்றே தெரியாமல் திகைத்தனர். ஆனால் ஒரு நாள் அவன் எவ்வாறோ ஒரு சுண்டெலியைக் கண்டு அதை வைத்து விளையாடத் தொடங்கினான். எல்லாரும் எதிர்பார்த்தபடி அவன் அதைத் துன்புறுத்தி வதைத்து விளையாடவில்லை. அதை அன்புடன் தட்டிக் கொடுத்துப் பேணிப் பாதுகாக்கத் தொடங்கினான். இதற்குக் காரணம் அவன் உள்ளம் அந்தச் சுண்டெலியின் வாழ்வில் தன் வாழ்வுடன் இணைந்த ஓர் ஒத்துணர்வு கண்டதே. அது நலிந்த சிற்றுயிர். அவனைப் போலவே தன்னிலும் வலிமைமிக்க உயிர் களால் வேட்டையாடப் பெற்றுத் திக்குமுக்காடித் திணறி அலைக்கழிவுற்றது. துணையற்ற அதன் துன்பம் தன் நிலை மையை ஒத்திருந்ததாலேயே அதற்குத் துணையாவதில் அவன் தன் உள்ளார்ந்த அவா ஆர்வத்தின் செயல்நிறைவைக் காண முடிந்தது. சுண்டெலி மூலம் ஏற்பட்ட இந்த ஒத்துணர்வே அவன் வாழ்வில் முதல் தெய்வீகக் கனலின் பொறியை உலவவிட்டது. குற்றங்கள் பலவற்றின் தொகுதியால், அவற்றுக்குரிய தண்டனை யால் மரமரப்புற்று இறுகிப்போன அவன் உள்ளம் இப் பொறியால் மெல்லக் கனிவுற்று இளகத் தொடங்கிற்று. காவலரும் ஏவலரும் மட்டுமன்றி, சட்ட அறிஞரும் கண்டு இறும்பூதெய்தும் வகையில் அவன் மற்றக் குற்றவாளிகளைத் திருத்தி நல்வழிப்படுத்தும் அறவோனாகப் படிப்படியாக மாறினான். அவனைத் திருத்த முடியாது, அவனை வைத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த குற்றத் துறையாளர் மற்றவர்களைத் திருத்துவதற்கே அவன் ஒரு சிறந்த கருவி என்று கண்டனர். சுண்டெலிமீது அந்தப் பரிவிரக்கம் அவனிடம் தோன்றி யிராவிட்டால் குற்றத்தில் ஊறிய அவன் உள்ளத்தில் மறைந் திருந்த தெய்விக ஆற்றல் வெளிப்படாமலே போயிருக்கும். குற்ற மனப்பான்மை என்பது என்ன? குற்ற மனப்பான்மை என்பது என்ன? அஃது எத்தகைய மாந்தரை ஆட்கொள்கிறது? தம்மினும் வலிமையுடையவர் தம்மை அடக்க, கொடுமைப் படுத்த முற்படுகின்றனர். ஆகவே தம்மினும் மெலிவுடைய வர்களைத் தாம் அடக்குவது, கொடுமைப்படுத்துவது தவறல்ல என்ற எண்ணமே குற்றவாளியிடம் குற்ற மனப்பான்மையாக ஊன்றுகிறது. சிறு குழந்தைகளிலிருந்து பெரிய மனிதர் வரை இந்த எண்ணத்துக்கு ஆளாகாதவர்களே இல்லை என்னலாம். ஆனால் எல்லாரும் குற்றவாளிகள் ஆவதில்லை. ஏனெனில் தன்னலம் பெரும்பாலோரைச் சமுதாய ஆற்றலுக்கு அடங்கி நடக்கத் தூண்டுகிறது. சமுதாய ஆற்றல் வெல்ல முடியாத ஆற்றல் என்று கருதுவதனாலேயே பெரும்பாலோர் இவ்வாறு அடங்கி நடக்கின்றனர் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் சமுதாயத்தை எதிர்க்காமல், மறைந்து செய்யும் செயல்களைச் செய்து, நேரடியான தண்டனைக்குத் தப்பி வாழ்பவர் மிக மிகப் பலர். சமுதாயம் அறிந்து ஒப்பி, ஆனால் தனிமனிதர் முற்றிலும் அறியாமல் பொய் கூறி ஆதாயம் பெறும் வணிகர் முறை நாம் அறியாததன்று. சமுதாயத்தில் ஆற்றல்மிக்க மன்னர் தம் மனம்போல் நடப்பதும், பிற மன்னரை எதிர்த்துப் ‘போர்’ என்ற பெயரால் பட்டப்பகல் படுகொலைகள் செய்து, குற்றச்சாட்டுக்கோ தண்டனைக்கோ இலக்காகாமல் இருப்பதும் யாவரும் அறிந்ததே. அலக்ஸாண்டர் கைப்பட்ட கொள்ளைக்காரன் இந்த உலக நியாயத்தைத் துணிவுடன் அப்பேரரசன் முன் எடுத்துக் கூறியே பேரரசன் மதிப்புக்கு ஆளாகி, விடுதலையும் ஆதரவும் பெற்றான். “நான் சிறு கொள்ளைக்காரன். பெருங் கொள்ளைக் காரனாகிய உன்னிடம் தோற்றுவிட்டதனால், நான் பிறரை நடத்தியபடி நீ என்னை நடத்துகிறாய். என்னிடம் பிடிபட்ட வர்க்கு என் விருப்பமே சட்டம். அதுபோல இப்போது உன்னிடம் பிடிபட்ட எனக்கு உன் விருப்பமே சட்டம். அதைச் செய். ஆனால் நினைவில் வைத்துக்கொள். நீயும் ஒரு கொள்ளைக் காரன்தான் என்பதை மறந்து விடாதே. உன்னிலும் பெரிய கொள்ளைக்காரரிடம் நீ அகப்பட்டால், உன் நிலை என் நிலைதான்” என்று அரசியலார் அறிந்து எண்ணிப் பாராத அரசியல் வேதாந்தம் அளந்தான் கொள்ளைக்காரன். அதன் உண்மை கண்ட பேரரசன் அவன் அறிவுக்கும் துணிவுக்கும் மதிப்பளித்து அவனை விடுவித்தான். சமுதாயத்தில் பெரும்பாலான தீயவர்களுக்கும் திருடர், கொள்ளைக்காரர் முதலிய கொடியவர்களுக்கும் உள்ள வேற்றுமை ஒன்றே ஒன்றுதான். தீயவர் கோழைகள், கொடிய வீரர்கள். கொடியவர்கள், குற்றவாளிகள் என்று கூறப்படுவோர், தீயவரைவிட உயிர்த்துடிப்புடையவர்கள். அவர்கள் அறிவாற்றல் கூட மற்றத் தீயவர்களைவிட மேம்பட்டதே. இதனால் தீயவர்கள் தண்டனை பெறப்பெறச் செயலிலடங்கி, உள்ளத்தில் வஞ்சனை யுடன் புற நீர்மை போர்த்து உலகை ஏய்த்து வாழ்கின்றனர். ஆனால் குற்றவாளிகளோ, தண்டனையை ஏற்காமல் சமுதாயத்தையே எதிர்த்துப் போராட, அதன் நீதி நேர்மையை எதிர்த்துச் சிந்தனை செலுத்த, பேச, செயலாட முற்படுகின்றனர். மேற்கண்ட அலக்ஸாண்டர் கதையில் வரும் கொள்ளைக் காரன் இதைக் கூர்ந்துணரும் உணர்வும், அதைத் திறம்பட எடுத்துரைக்கும் வாய்மொழி ஆற்றலும், உள்ளத் துணிவும், சாவுக்கஞ்சாத் தறுகண்மையும் உடையவனாயிருந்தான். உலகின் பெரும்பாலான குற்றவாளிகளுக்கு இம்மூன்றும் இவ்வளவு நிறைவாய் இருப்பதில்லை. ஆனால் அவர்கள் உள்ளத்தில் முதிர்ந்து உருவாகாத உணர்ச்சிகள் கிட்டத்தட்ட அவன் கூறியவை. குற்றவாளிகளின் பொதுவான உள்ள மனப் பான்மையை அது படம்பிடித்துக் காட்டுகிறது. அலக்ஸாண்டர் கதையில் வரும் கொள்ளைக்காரனிடம் ஒரு சிறு சாக்ரட்டீஸை, ஒரு குட்டிக் கார்ல்மாக்ஸை நாம் காணலாம். மற்ற உலகக் குற்றவாளிகள் இந்த நிலையில் குறைந்தவர்களாயிருப்பதனாலேயே, குற்றவாளிகளின் உலகை, அவர்கள் மனப்பான்மையை உலகம் அறிந்து செயலாற்ற முடியவில்லை. அவர்களிடமுள்ள அறிவு, ஆற்றல் திறமை களையும் உலகம் பயன்படுத்த முடியாமல் இழக்கிறது. அதுமட்டுமன்று, அதை அழிவுச் சக்தியாக விட்டு அல்லல் படுகிறது. அதைச் சமாளிக்கச் சட்டமும் குற்றத்துறை சார்ந்த எவ்வளவோ சக்திகளும் வைத்துப் பேணி மேலும் பொருளழிவு, ஆற்றலழிவு உண்டு பண்ணுகிறது. குற்றவாளிகள் பெரிதும் குற்றத்துக்கு ஆளானவர்கள் சமுதாயத்தில் இடம்பெற்றுக் குற்றவாளிகளைக் குற்றஞ் சாட்டும் பல தீயவர்களைத் திருத்துவதைவிட, குற்றவாளிகளைத் திருத்துதல் எளிது. உண்மையில் அவர்கள் குற்றவாளிகளல்லர், குற்றத்துக்கு ஆளானவர்கள். தண்டனைக்கு உரியவர்கள்கூட உண்மையில் அவர்களல்லர், அக் குற்றமுறை இயந்திரத்தை ஓட வைத்து, அதன் நன்மைகளைத் தாம் நுகர எண்ணித் தமக்குரிய தண்டனையை அந்த அப்பாவிகளிடம் தள்ளும் சமூகத் தீய வர்கள், நயவஞ்சகர்களே. குற்றவாளிகளில் பெரும்பாலார் நயவஞ்சகர்களல்லர், புறநீர்மை போர்த்த வேடதாரிகளல்லர். நயவஞ்சகம் காணப் படுமிடத்திலும், மற்ற நயவஞ்சகர்களிடமிருப்பது போல அப் பண்பு தன்னலத்தால் தூண்டப்படுவதன்று. குற்றவாளிகளைக் குற்றத்துறையில் கொண்டு தள்ளும் தீங்குகள் மிகப் பெரும்பாலும் வறுமை, மனக்கசப்பு, துன்ப உணர்ச்சியைப் பொருட்படுத்தாத மனக்காழ்ப்பு, கோபம், பகைமை ஆகியவைகளே. அதே சமயம் மிகப் பலரிடம் நல்ல வழியில் பயன்பட முடியாத நிலையில் பல உயர்பண்புகள் இல்லாமலில்லை. தன்மானம், அநீதிக்கு அடிமைப்படாத தறுகண்மை, வீரம், ஆற்றல், திறமை இவற்றுட் சில. சமூகத் தீயவர்களை, சமூகத் தீமைகளைக் குறைத்தக் குற்றவாளிகளுக்குச் சமுதாய வாழ்வில் நேரிய இடம் கொடுத்தால், தவறான திசையில் செல்லும் அவர்கள் நற்பண்புகள் அவர்களை இன்று பயன்படுத்தும் தீயவர்களைத் திருத்தவும் சமுதாயம் வளர்க்கவும் பயன்படும். ஒத்துணர்வின் முழுநலனை நாம் குற்றத்துறையின் திருத்தத் திசையிலேயே காணலாம். போர்க்காலத்தில் குற்றத்துறையின் சுமை குறைகிறது. ஏனெனில் குற்றத்துறையில் ஈடுபடும் பண்பு களில் பல போர்த்துறையில் முறையாக ஈடுபடுத்தப்பட்டு விடுகின்றன. அமைதிக் காலங்களிலும் குற்றப் பண்புகளில் சில குற்றத்துறை ஆட்சிக் குழுவிலேயே ஈடுபடுத்தப்பட முடிகிறது. திருடனின் திறம், திருட்டைக் கண்டுபிடிப்பதிலும், கொள்ளைக் காரன் வீரமும் துணிச்சலும் கொள்ளைக்காரரை வேட்டை யாடி அடக்குவதிலும் பயன்படுகின்றன. அருளாளர் பலர் இவ் விருதிசைப் பண்பு கண்டபின், ஒத்துணர்வு மூலம் குற்றவாளிகள் பலரின் பண்புகளைத் திசைமாற்றி நற்பண்புகளாக்கியுள்ளனர். சுண்டெலி ஒன்றிடம் ஒத்துணர்வு கொள்வதன் மூலம் திருந்திய குற்றவாளியின் வாழ்க்கை கண்டு, காவலர் ஏவலர் அடைந்த வியப்பு சமயத்துறை அருள்நிகழ்ச்சிகளில் ஒருவர் கொள்ளத்தகும் வியப்பிற் குறைந்ததன்று. ஏனென்றால் கண் கூடாகக் கண்டிராவிட்டால் அவர்கள் அது கைகூடும் செய்தி என்று ஒத்துக்கொண்டிருக்க மாட்டார்கள். யாராவது கூறினால் நம்பிக்கைகொண்டிருக்க மாட்டார்கள். கடுங் குற்றவாளிகளிலும் குற்றந்தோய்வுற்று உறைந்துபோன முதல்தரக் குற்றவாளி அவ்வளவு திடுமெனக் குற்றமற்ற குழந்தைகளளவு தூய்மையும் மென்மை வாய்ந்த உள்ளக்கனிவும் கொள்வதென்பது உண்மையில் தெய்வச் செயல் என்று கூறத்தக்க ஒன்று என்பதில் ஐயமில்லை. இம் மாறுபாடு அகமாறுபாடாக மட்டும் நிகழவில்லை. குற்றவாளியின் அகமாறுபாடு மனமார்ந்த அகமாறுபாடா தலால் அது புறத்தேயும் செயலாற்றிற்று. வெறுப்புக்கும் அச்சத் துக்கும் உரியதாயிருந்த அவன் கோர உருவம் விருப்புக்கும் பாசத்துக்கும் உரிய சுமுகமான தோற்றமாக மாறிற்று. சீறிச் சினங் கொண்டு எப்போதும் சிடுசிடுப்புடன் இருந்த அவன் முகம் எப் போதும் நிலையான புன்சிரிப்பொளி ஏந்திற்று. கண்ணின் கடுங் கூர்மை கனிந்தகன்ற அருட்பார்வையின் மெல்லொளியாக மாறிற்று. எல்லா உயிரும் உள்ளார்ந்த அருளுருவுடையவையே அவனைக் குற்றவாளி, திருந்திய குற்றவாளி என்று காண்போர், பழகுவோர் ஒருபோதும் கூறமுடியாது. அந்த அளவு அவன் அகமாற்றமும் புறமாற்றமும் அடைந்தான். அவன் உள்ளத்தின் கடுந்தோ டகன்றது. அதனூடாக அகத்தின் உள்ளார்ந்த ஒளி புறம்போந்து தோற்றம், சொல், செயல், சூழல் ஆகிய யாவற்றையும் மாற்றிற்று. துணையற்ற சின்னஞ்சிறு சுண்டெலியிடம் கொண்ட அருளிரக்கம் உயிரினம், மனித இனம் முழுதும் அளாவிய நிறை அருள் ஒளியாயிற்று. காவலரும் அஞ்சும் குற்றவாளியாகச் சிறைவாயிலில் நுழைந்த அவன் காவலர் முதல் நாடாள்பவர் வரை மக்களனைவரும் தலை வணங்கும் தெய்வமாய் வெளியே வந்தான். சிறையிலிருந்து அவன் வெளியுலகுக்குக் கொண்டு வந்த பெருஞ்செல்வம், அவன் வாழ்நாள் முழுதும் எச் செல்வத்தினும் அருமையாக அவன் போற்றி வளர்த்த அருஞ்செல்வம் அந்தச் சின்னஞ்சிறு சுண்டெலிதான். அதை அவன் பேணி வளர்த்து ஒரு சிறு சுண்டெலிப் பண்ணையாகப் பெருக்கினான். பெரிய, சிறிய சுண்டெலித் தெய்வங்கள் நடமாடும் கோயிலாக அவன் வீடு மாறிற்று. சமூக சேவையில் குளித்த அந்த அன்புத் தெய்வத் தின் தெய்வங்களாக அச்சிற்றுயிர்களை அனைவரும் பேணினர். வியப்பார்வத்துடன் அச்சுண்டெலிகளை மக்கள் நோக்கினர் - அப்படி என்ன தெய்விகசக்தி அந்தச் சுண்டெலிகளிடம் இருக்கக்கூடும் என்று மலைப்புற்றனர்! ஆனால் தெய்விக ஆற்றல் சுண்டெலியிடம் மட்டுமன்று, எல்லா உயிர்களிடத்திலும் எல்லா இயற்கைப் பெருள்க ளிடத்திலும் உண்டு. ஏதேனும் ஒரு திசையில், ஓர் உயிரின் உள்ளத்தில் அவ்வொளியை மறைக்கும் திரைவாயில் திறக்கப் பட்டால், அவ்வொளியே மற்ற உயிர்களின் உள்ளத் திரைகளை அகற்றும். கடுங் குற்றவாளியின் உள்ளத்தில் அவ்வக வொளி சுண்டெலியிடமிருந்து வரவில்லை. அவன் உள்ளகத்திலிருந்தே வந்தது. ஆனால் சுண்டெலி தக்க தருணத்தில், அதைத் திறக்க வல்ல பிற தூண்டுதல்களுக்கு இடமில்லாத ஒரு சூழ்நிலையில், அதைத் திறக்கவும் தூண்டுதலா யுதவிற்று, அவ்வளவே! ஒத்துணர்வு தோன்றும் உள்ளத்திலே, ஒத்துணர்வு இடை யறாத, தங்குடையற்ற, முடிவிலாப் பேரூற்றாகச் சுரந்து பெருகிக் கொண்டே இருக்கிறது. அந்த உள்ளத்தின் வாழ்வில் பொங்கல் வளம் உண்டுபண்ணுகிறது. வாழ்வின் பயனெலாம் அளிக்கிறது. கொடுப் பதன் மூலமே அஃது அகமுதிர்வுற்றுச் செறிந்து விளைவுறுகிறது. அத்துடன் ஒத்துணர்வு சென்று தீண்டிய இடமெல்லாம் புறப்பட்ட இடத்தின் உயிர்வளங்களை மீண்டும் எழுப்பிக்கொண்டே, படைத்துக்கொண்டே அலையலையாகச் செல்கிறது. ஒத்துணர்வு இத்தகைய இன்ப அலைகளைப் பரப்புவது போல, ஒத்துணர்வின்மை துன்ப அலைகளைப் பரப்பி விடுகிறது. ஒத் துணர்வை வளர்க்குந்தோறும் தனி மனிதன் வாழ்வும் அவன் வாழும் குடும்ப, சமுதாய, நாட்டு வாழ்வுகளும் இன வாழ்வு, உலக வாழ்வுகளுடன் இணைந்து எங்கும் பேரின்ப வெள்ளம் பெருக்கும். கடுமை, கசப்பு, கொடுமை அவனை அணுகமாட்டா. அணுகினும் எதிர்நிலையான நற்பண்புகளாகி விடும். அடிக்குறிப்புகள் 1. “றுhநn வால பயணந கூரசளே வை டிn வாiநே டிறn ளடிரட, நெ அடிளவ ளநஎநசந: க்ஷரவ றாநn வை கயடடள ரயீடிn ய கநடடடிற-அயn டுநவ மiனேடiநேளள உடிவேசடிட வை; யனே சநகசயin குசடிஅ வாயவ நெடவைவடiபே உநளேரசந வாயவ ளயீசiபேள கடிசவா குசடிஅ உடிஅஅடிn டiயீள டமைந றநநனள கசடிஅ அயசளால ளடிடை.” - நுடடய றுhநநடநச றுhடைஉடிஒ 2. “ஐ னடி nடிவ யளம வாந றடிரனேநன யீநசளடிn hடிற hந கநநடள, ஐ அலளநடக நெஉடிஅந வாந றடிரனேநன யீநசளடிn.” - றுயடவ றுhவைஅயn 3. “றுhடிநஎநச றயடமள ய கரசடடிபே றiவாடிரவ ளலஅயீயவால, றயடமள கூடி hளை டிறn கரநேசயட னசநளளநன in ய ளாசடிரன.” 4. “டீநே வடிரஉh டிக யேவரசந அயமநள வாந றாடிடந றடிசடன மin.” 5. “குடிச யீவைல அயமநள வாந றடிசடன ளுடிகவ வடி வாந றநயம யனே nடிடெந கடிச வாந ளவசடிபே.” 6. “ஹடட டகைந ஐள டiமேநன யனே மin.” 7. மன்னிக்கும் பண்பு 1கண்டிப்பீர்! கண்டிக்கும் உள்ளம் உணர்திரோ? தூங்கி விழுந்தும் துன்பம் உழந்தும் ஏங்கும் பாழுயிர் ஏக்கம் அகற்றாத (கண்டிப்பீர்) வீங்கும் உள்ளத்து ஏக்கம் காணாமல் தாங்கற் கரும்கடுஞ் சொற்களை வீசிக் (கண்டிப்பீர்) கண்டிப்பீர்! கண்டிக்கும் உள்ளம் உணர்திரேல் பாங்கிற் பயின்ற பண்புடை இன்சொல் நீங்காத் துயர் நீக்கும் அருமருந் தஃதன்றோ? (கண்டிப்பீர்) பழிக்குப் பழியினும் மேலான பண்பே பாசங் கலந்த மெய்யன்பே, மெய்யன்பே! (கண்டிப்பீர்) -ஷேக்ஸ்பியர். தமக்கு இழைக்கப்பட்ட தீங்குகளை மறவாது நினைவில் வைத்துக்கொண்டிருத்தல் ஆன்மிக இருளின் சின்னமாகும். அதனால் வேரூன்றி வளர்ந்துவரும் காழ்ப்பு ஆன்மிகத் தற்கொலைக்கு ஒப்பானது. இதை விடுத்து, மன்னிக்கும் இயல்பு பேணி அதில் செயல்முறையில் பயிற்சி பெறுவதே இன்ப அமைதிக்குரிய முதற்படி ஆகும். தீங்குகளை நினைந்து நினைந்து இரங்குபவனுக்கு உள்ள அமைதி என்றும் ஏற்பட முடியாது. ஓய்வில்லாமல் இடையறாது தீங்கையே நினைப்பதால், இழைக்கப்பட்ட தீங்கைவிடப் பன் மடங்கான தீங்கு உருவாகின்றது. தவிர, ‘நாம் அநீதிக்கு ஆளாய் விட்டோம்’ என்று ஒருவன் எண்ணுந்தோறும், அநீதிக்கான தூண்டுதலும் அகத்தே பன்மடங்காகப் பெருகும். அநீதிக்குப் பதில் அநீதி செய்வதே நீதி என்ற தன்மயக்கக் கருத்தும் உள்ளத்தில் ஆழ்ந்து வேரூன்றும். அநீதியை வளமான பயிராக வளர்க்கத்தக்க விதை இதுவே. அநீதிக்குப் பதில் அநீதி என்பது நீதியன்று அநீதிக்குப் பதில் அநீதி செய்வதே நீதி என்பது உண்மையானால், கொலைக்குப் பதில் கொலை செய்வது உயிராக்கம் என்பதுவும் உண்மை என்று கூற வேண்டும். ஆனால் கொலைக்குப் பதில் கொலை இரு கொலை ஆகுமேயன்றி உயிராக்கம் ஆகாது. இரண்டாவது இறந்த உயிரால் முதலில் இறந்த உயிர் திரும்ப வரப்போவதில்லை. அதுபோலவே இரண்டாவது அநீதியால் முதல் அநீதி நீதியாய் விடப் போவதில்லை. அநீதி இரட்டிப்பாயிற்று என்று மட்டுமே கூறலாம். இதுமட்டுமன்று. தொடங்கிவிட்ட அநீதிச் சங்கிலி இத்துடன் முடிந்து விடுவதில்லை. இரண்டாவது அநீதியை மாற்ற மூன்றாவது, மூன்றாவதை மாற்ற நான்காவது என்று இப்படிப் போய்க்கொண்டே இருக்கும். தொடக்க அநீதி மறக்கப்பட்டே போகும். ஆனால் அநீதிக் கோவை மட்டும் மரபறாது நீண்டு கொண்டே, வளர்ந்துகொண்டே செல்லும். உலகில் பல இனமாற்சரியங்கள், பழமை வாய்ந்த இனப் பகைமைகள், அரசியல் குளறுபடிகள் இவ்வாறு சிறு அநீதி களிலிருந்து தொடங்கிச் செயலெதிர் செயலாய்ப் பெருகி, முதல் நிகழ்ச்சியின் நினைவு கடந்து நிலையாக வளர்பவையே. மன்னிக்கும் பண்பு இல்லாதவன் உள்ளம் ஓயாது பகைமை யிலும் வெறுப்பிலும் கிடந்து உழலும். இத்தகைய உள்ளத்தில் அமைதியோ இன்பமோ எப்படித் தலைகாட்ட முடியும்? புகைந்தெரியும் மரத்தில் கூடுகட்டி வாழும் பறவைகள் பெறும் அவதி எத்தகையதோ, அத்தகையதே அவர்கள் அவதியும்! பகைமை அவ்வப்போது சீற்றமாகக் கிளர்ந்தெழும். பகைமை புகைந்தெரியும் மரத்துக்கு ஒப்பானால், சீற்றம் கொழுந்துவிட்டு ஓங்கி எரியும் மரத்துக்கு ஒப்பாகும். இன்பமட்டுமன்றி, இன்பத்துக்குக் காரணமான அறிவும், அதற்குரிய முன்னீடான அமைதியும் இப் பண்புகள் நிலவும் உள்ளத்தை அணுக முடியாது. மன்னிப்புப் பண்பின் அமைந்த இன்பமறியாத உள்ளங்கள் தான் பழிக்குப் பழி என்ற மின்னல் புயலின்பத்துக்கு இரையாக முடியும். அப்போதும் அது பல்வண்ணங்களுடன் மின்வெட்டுப் போல் வெட்டிக் கவர்ச்சியுடன் அசைந்தாடிக் கொண்டு சீறி வரும் நாகப்பாம்பினைக் காணும்போது ஏற்படும் இன்பம் போன்றதே. அது கணநேரப் போலி இன்பம் தந்து அதற்கு விலையாக மாளாத் துன்பம் உண்டுபண்ணும். பழிக்குப் பழி செய்பவர் படிப்படியாகவே துன்ப வெள்ளத்தில் மேன்மேலும் ஆழந்து தோய்வதனால், அத்துன்பத்தின் முழு அளவை ஒரே மொத்தமாக அறிய முடிவதில்லை. ஆனால் மன்னிப்புப் பண்பின் அறிவாரொளியில் மூழ்கியபின், அவர்கள் பெறும் இன்பத்தின் நிறைவே அத்துன்பத்தின் அளவைக் காட்ட வல்லது. நிறை ஒளியாகிய அந்த இன்பத்துக்கு எதிராக, ஒப்பாக, அது நிறை இருளாய் அமையும். பழிக்குப் பழி செய்பவனது பகைமையின் வெறியும் சீற்றமும் சிறிது ஓய்வுறும் நேரத்தில், அவன் நாடி நரம்புகள், உடல் உள உயிர்கள் யாவும் முற்றிலும் தளர்வுற்றுச் சோர்ந்து விடுவது காணலாம். பழிக்குப் பழி தரும் துன்பங்களில் இது ஒரு சிறு பகுதியே. அது வாழ்வில் துன்பமும் விரைவில் மாள்வும் ஒருங்கே அளிக்கிறது. மன்னிப்புப் பண்போ வாழ்வில் அமைதியும் இன்பமும் வளமுடன் தருவது மட்டுமன்று. அது வாழ்வையும் மாளா வாழ்வாக்கி, என்றும் வளர்ந்துகொண்டே செல்லும் இன்பப் பொங்கல் வாழ்வாக்கி வளமளிக்கும் தன்மையுடையது. ஆன்மிக நஞ்சு பழிக்குப் பழி என்ற உணர்ச்சி மனித உள்ளத்தை நின்றரித்துத் தின்னும் ஒரு புழு - அவன் ஆன்மிக வாழ்வையே கொல்லும் ஒரு நஞ்சு. சீற்றம் சாவுடன் சாவாக, சாவின் முன் கொந்தளிக்கும் காய்ச்சல் புயலின் ஆன்மாவையிட்டுbஅலைக் கழிக்கும். உயிராற்றல் அழியுமுன் அறிவாற்றல் அழித்து, அறிவாற்றல் அழியுமுன் உணர்வாற்றல் அழித்து அது சாவுக்கு இயற்கையாய் இல்லாத சாத்துன்பத்தை வாழும் உயிர்க்கு அளிக்கிறது. அஃது இழைக்கப்பட்ட தீங்கை மறவாது உள்ளத்தே ஏற்று வைத்துக் காழ்ப்பும் வன்மமும் காட்டுவது. அதுவே உடல் கடந்து மனத்தை, மனங்கடந்து சித்தத்தை, சித்தம் கடந்து உள்ளத்தையே உருக்கி வாட்டும் ஓர் அகக் காய்ச்சலாகும். உடலில் நாடி நரம்புகளின் ஓட்டத்தைத் தடுத்துக் குருதியைப் புறக்காய்ச்சல் நச்சுப்படுத்துகிறதென்றால், இவ் அகக்காய்ச்சல் அகநாடி நரம்புகளான அன்பு, தயவு, நல்லெண்ணம், பாசம், பரிவு ஆகியவற்றின் ஓட்டம் தடுத்து உள்ளத்தையே - வாழ்வின் ஊற்றையே - நச்சுப்படுத்துகிறது. சமுதாயத்தில் பிறந்து, சமுதாயத்தில் வாழ்ந்து, சமுதாயத்தை வாழ்வித்து, அதிலேயே தன் வாழ்வின் வளங் காணும் உயிரை இக் காழ்ப்பும் வன்மமும் அச்சமுதாய வாழ் வென்னும் காற்றோட்ட உயிர்ப்பிலிருந்து துண்டிக்கும் தன்மை யுடையன ஆகும். மன்னித்து மறந்துவிடும் பண்பு இல்லாமையும் சீற்ற மனப்பான்மையும் கடுந்துன்பங்கள், துயரங்களின் தலையூற்று ஆகும். இவற்றுக்கு உள்ளத்தில் இடந்தந்து பேணி, இவற்றை ஊக்கி வளர்ப்பவன் பேரின்பந் துறக்கிறான். அதன் திசையில் திரும்பாமல் எதிர்திசையில் திரும்பி விரைந்து நடக்கிறான். நேர்மாறாகக் கனிந்த இதயமுடையவன், பிறர் செய்த தீங்கை எளிதில் மன்னித்து மறந்துவிடும் பண்புடையவன் ஒளியும் எல்லையற்ற ஆறுதலமைதியும் பெறுகிறான். புயலிடையே தாக்குறாத மணிவிளக்குப் போல, துன்பங்களால் பாதிக்கப் படாத - அசைக்கப்படாத - இன்பக் கோட்டையில் அவன் உலவுகிறான். கடுமையான நெஞ்சத்தின் இவ்வுறுதி கேடும், மென்மை யான நெஞ்சத்தின் உறுதியும் மேலீடாகக் காண்பவர்களுக்கு ஒன்றுடனொன்று ஒவ்வாத முரண்பாடுகளாகத் தோற்றக்கூடும். இயற்கையில் இது ஒரு புதிர் என்று கூடப் பலர் இம்முரண்பாடு கண்டு மலைக்கக்கூடும். ஆனால் இப் புதிர் இயற்கையின் ஆழ் பண்புகளை உணர்ந்தோருக்குப் புதிரன்று. அஃது இயற்கையின் உள்ளார்ந்த மெய்ம்மைகளுள் ஒன்று. இயற்கையின் அமைதிக் கட்டங்களின்மீதே அஃது அமைந்துள்ளது ஆகும். இயற்கையின் கவர்ச்சிச் சட்டம் (டுயற ஹவவசயஉவiடிn) அல்லது மைய ஈர்ப்பமைதியின்படி நன்மை, ஒத்துணர்வு முதலிய நற் பண்புகள் தம்மைச் சுற்றிலும் உள்ள அதே பண்புகளைத் தம்மை நோக்கி ஈர்த்து, அப்பண்புகளை வளப்படுத்தித் தாமும் வளமடையும். அதுபோலவே கடுமை, கொடுமை, தன் முனைப்பு ஆகிய தீப்பண்புகளும் தம்மைச் சுற்றியுள்ள அதே வகைப் பண்புகளைத் தம்மை நோக்கி ஈர்த்து, அப்பண்புகளைத் திரட்டித் தாமும் வலிமையுறும். இம்முறையிலேயே இதயத்தில் கடுமையுடையவர்கள் தம்மை நோக்கி கடும் பண்புகளை ஈர்த்து, தம் துன்பத்துடன் அவற்றின் துன்பங்களையும் சேர்த்து நுகரு வார்கள். கடுமை, உறுதிக் கேட்டையும் மென்மை உறுதியையும் உண்டுபண்ணும் வகை இதுவே. ஐம்மடங்கான ஐவகைத் துயர்கள்: ஐவகை இன்பங்கள் இதயக் கடுமையால் விளையும் துன்பம் ஐந்து வகையில் மேன்மேல் அடுக்கித் துயர்விளைக்கின்றது. தன் இன உயிருக் கெதிராக இதயக் கதவடைத்து உள்ளத்தில் கடுமை வளர்த்துக் கொள்ளும் ஒவ்வொருவனும் இந்த ஐந்து வகை இன்னல் களுக்கும் ஆளாகிறான். முதலாவதாக, உள்ளத்தில் இன்ப வாழ்வுக்குரிய அன்பு இல்லாமையினால் துன்பம் ஏற்படுகிறது. அத்துடன் பிற உயிர் களின் தொடர்பும் கூட்டுறவுத் தோழமையின் ஆறுதலும் அவனுக்கு இல்லாமல் போகின்றன. மூன்றாவதாக, அகத்தே வளரும் வெறுப்பு முழுவதுமே செயற்பட்டுப் பிறர்மீது செல்ல முடியாமல், தன் மீது தானே மோதி உள்ளத்தில் புயலாகச் சுழித்தடித்தார்த்துக் குழப்பம் உண்டு பண்ணுகிறது. நான்காவ தாக, உணர்ச்சிக் கொந்தளிப்பிடையே பிற உயிரும் சூழலும் தனக்கெதிராவதன் காரணமாகத் தன் பெருமை புண்பட்டு வேதனை பெருக்குகிறது. கடைசியாக, பிறருக்குச் செய்த தீங்கின் பயனாக அவர்கள் பழிக்குப் பழியாக இழைக்கும் இன்னல் அவனைத் தாக்குகிறது. மன்னித்து மறந்துவிடும் மாண்பில்லாதவர் செய்கை ஒவ் வொன்றும் இவ்வாறு ஐம்மடங்கான ஆற்றாத் துயரைச் செயல் செய்தவன்மீது பொழிகின்றது. மன்னித்து மறக்கும் மன்பேரருள் வாய்ந்த நல்லோருக்கோ இந்த ஐந்து பொல்லாங்குகளும் இல்லாதன ஆகின்றன. அத் துடன் இவற்றிற்கு எதிராக ஐவகையான இன்ப வளங்கள் அவனைச் சுற்றித் தென்றலாக, நிலவொளியாக வீசுகின்றன. ஐவகை மணங்களாக அவை அவன் உள்ளத்தில் கமழ் கின்றன. அவற்றில் முதன்மையான மணம் அன்பின் மணமே. அது தரும் இன்பம் அவனிடம் நிலையான அமைதி உண்டு பண்ணுகிறது. அவன் உள்ளக்கனிவு அவனை எளிதில் சுற்றிலு முள்ள பிற உயிர்களுடன் தோழமை கொள்ளத் தூண்டுகின்றது. இத் தோழமை இன்பம் அவனுக்கு இன்பம் பெருக்குகிறது. மூன்றாவதாக அன்பினால் ஏற்படும் அமைதி அவனுக்குத் தெளிவும் மெய்யுணர்வும் அளிக்கிறது. நான்காவதாக, தற் பெருமை, உணர்ச்சி வெறிகள் அவனைத் தாக்குவதில்லை. பண்பும், பணிவும் அவன் சூழலை முழுதும் அவன் வயமாக்கு கின்றன. கடைசியாக, அவன் அன்பும் பாசமும் மற்ற உயிர்க ளிடமிருந்து அன்பையும், பாசத்தையும் தூண்டுகின்றன. இது அவன் இன்பச் சூழல் பெருக்குகிறது. மீளா நரகமும் இங்கே, மாளாத் துறக்கமும் இங்கேதான்! பொறுத்தருளும் பொற்பண்பு இல்லாத காரணத்தினால் இன்றைய உலகில் மிகப் பலர் வெந்துயருக்கு ஆளாகி அவதி யுறுகிறார்கள். மற்றத் துயரங்களைவிட இது மிகவும் நச்சுத் தன்மை உடையது. ஏனெனில் துயருக்கு ஆளாவோர் துன்புறினும் தாம் துன்புறுவதாக எண்ணுவதற்கே நேரமில்லாமல் அவர்கள் துன்பத்தில் உழல்கிறார்கள். துன்பப் புயலிலிருந்து துன்பப் புயலுக்கு இழுத்து அடித்துச் செல்லப்படும் அவர்களுக்குத் துன்பத்தைப் பற்றி எண்ணுவதற்குக்கூட இடை ஓய்வோ, சிறு பொழுது அமைதியோ ஏற்படுவதில்லை. உண்மையில் பொறுதி யின்மையால் தமக்கு விளையும் துன்பத்தின் அளவை அவர்கள் மதிப்பிட்டறிவதுகூட அப்பொறுதியின்மைப் பண்பை வென் றடக்கிய பின்தான் கைகூடுகிறது. மீளா நரகம் என்று ஒன்று இருக்கக்கூடுமானால், அது இப்பொறுதியில்லாப் பண்பே. இதன் கொடுங்கோன்மையி லிருந்து தப்பிப் பிழைத்து, பொறுத்தருளும் பொற்பின் செங்கோன்மையை அணுகியவன் உண்மையில் கண்காணாத் துன்பவலையின் சிக்கல்களிலிருந்து விடுபட்டு, கண்காணா இன்பப் பாயலில் திளைக்கத் தொடங்குகிறான். துன்பத்தை நினைக்க நேரமில்லாத் துன்பத்திலிருந்து, இன்பந் தவிர எதுவும் நினைக்க நேரமில்லா இடையறா இன்பத்தை அவன் அடைகிறான். நம் உலகின் தன்னலப் போட்டிகள் பொறுதி என்னும் பொன்னார்ந்த செல்வத்தின் அருமையை அறிய விரும்புபவன் அதற்காக வேறெங்கும் செல்ல வேண்டுவ தில்லை. அந்த ஒரு செல்வம் இல்லாமல் மற்ற எல்லா வகைச் செல்வங்களும் திரட்டி வருகிற நம் கால உலகைக் கண்டால் போதும். தனி மனிதருக்குத் தனி மனிதர், சமுதாயத்துக்குச் சமுதாயம், நாட்டுக்கு நாடு இன்று எங்கும் எப்போதும் ஓயாத போட்டியும் பழி எதிர்பழிச் செயல்களும் செய்த வண்ணம் இருக்கின்றன. இதனால் தனி மனிதரிடையேயும், சமுதாயங்கள், நாடுகளிடை யேயும் எத்தனை எத்தனை இதய வேதனைகள், எவ்வளவு வெந்துயர்க் கண்ணீர்கள், எவ்வளவு வேற்றுமைகள், பூசல்கள், தப்பெண்ணங்கள்? எவ்வளவு குருதியாறுகளையும் குருதிக் குளங்களையும் இவை பரப்பி உலகைப் போர்களுக்கு இரையாக்குகின்றன? இவற்றை ஒழிக்க, இத் தீங்குகளை விலக்க அல்லது அவற்றி னின்று விலக வழி உண்டா? உண்டு. அவற்றை நீக்க விரும்பினாலும் அவற்றிலிருந்து நீங்க விரும்பினாலும், இரண்டுக்கும் வழி ஒன்றுதான்! அது விலக்கு பவனை அச்சூழலிலிருந்து விலகி அமைதி பெற மட்டும் வழி வகுப்ப தன்று, அச்சூழலை மாற்றியமைக்கவும் வகை செய்வது. அவ்வழி வேறு எதுவுமன்று - அப் பூசல்களுக்கு, குருதி யாறுகளுக்கு மூல காரணமான போட்டியுணர்ச்சிகளை, பழி எதிர்பழி உணர்ச்சிகளைத் தனி மனிதன் அளவிலேனும் விலக்குவதே! இது செய்வதற்குக் கால இட வாய்ப்புப் பார்க்க வேண்டுவதில்லை. சூழல் மாற்ற, பிறருக்குப் போதிக்கத் தேவை யில்லை மாற அல்லது மாற்ற விரும்புபவன் தன்னளவில் மாறினால் போதும். உடனே அவன் தன் வாழ்வில் மட்டுமன்று, உலகப் பொது வாழ்விலேயே மாறுதலைக் காண முடியும். முழுமாறுதல் அதன்பின் எளிது. அது காலத்தின் செயல், இயற்கையின் அமைதி ஆய்விடும். தன்னலப் போட்டியின் விளைவு அழிவு. பழி எதிர் பழி யாருக்கும் நலம் தருவதில்லை. இவற்றை நீ உணர்ந்து உன் மனத்தில் கோபதாபம், தன்னலப்போட்டி, ஆதிக்க வெறி அகற்று. தீமைக்கு எதிராகத் தீமை செய்யாதே. நன்மை செய். தீமையை மிதித்தழித்துவிடு. மன்னித்ததுடன் அமையாமல் மறந்துவிடு. மறந்ததுடன் அமையாமல் அதன்மீது அன்புப் பயிர் வளர். இது செய்தபின் உன் உலகம் மாறும். உலகம் அதன்பின் உன் உலகமாக மிளிரத் தொடங்குவதைக் காண்பாய். புயலில் கொந்தளிக்கும் நீர் மீது எண்ணெய்போல், அது படிப்படியாகப் போட்டியின் அழிவாற்றலை வென்று, உலகை ஓர் உலகமாக்கிவிடும். 2‘வாழும் உயிர்கள் மீதெலாம் சூழ்க உன்றன் உயிர்ப்பாசம்! ஆழ்க உள்ளக்கடுமை சினம் வீழ்க பெரும்பேரவா வெறிகள்! மாழ்கும் உனது வாழ்வு உலகச் சூழலதுவும் விரைந்து அதன்பின், ஏழ்கொள் இசையின் இனிமையுடன் தாழ்வில் தென்றல் எனமிளிரும்! அறிவு குருடாக்கும் பண்புக்கேடு பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற உணர்ச்சியிலிருந்து எதையும் பொறுத்தருளும் பண்புக்குச் செல்லும் பயணம் இருளிலிருந்து ஒளிக்கு, அறியாமையிலிருந்து அறிவுக்குச் செல்லும் பயணம் ஆகும். அறிவின் தடம், அறிவின் நிழல் படிந்த எந்த உள்ளமும் பழிக்குப் பழி வாங்கும் எண்ணம் உடையதாய் இருக்க முடியாது. செறிந்த அறியாமை இருளில் உழலும் உள்ளமே அந்த எண்ணத்துக்கு இடம்தரும். ஆனால் இவ் வறியாமை உண்மை அறியாமை, திண்ணிய அறியாமை. ஏனெனில் அதில் உழலும் உயிருக்குத் தன் அறியாமை தெரியாது. தன்னைச் சூழ்ந்துள்ள அறியாமை இருள் எவ்வளவு செறிவுடையது என்பதும் அதற்குத் தெரியாது. இருளைவிட்டு ஒளிக்கு, அறியாமைச் செறிவைவிட்டு நிறையறிவுக்கு வந்தபின் தான் அஃது அதனை மதிப்பிட்டுணர முடியும். ஏனெனில் அறியாமையை அறிவதே அறிவின் தொடக்கமாகும். அறியாமையை மதிப்பிட்டறிவது அறிவின் நிறை பருவத்தி லேயே முடிவது. அறிவொளியில் மனிதன் உலவுந்தோறும், அதில் முன்னேறுந்தோறுமே அவன் தன் பழைய அறியாமை இருளின் செறிவை உணர்கிறான். இதை உணர உணர, தன் பழைய நிலையில் அறியாமையில் உழலும் உயிர்கள் மீது அவன் ஒத்துணர்வும் இரக்கமும் வளர்கின்றன. பிறருடன் ஒத்துணர்வு காட்டுவதன் மூலம் அவன் அறிவு வளர்கிறது. அறிவு வளர்வதன் மூலம் ஒத்துணர்வும் பெருகுகிறது. மனிதன் இயற்கையாகக் குருடனல்ல, அதை ஒரு நோயாக அவன் வருவித்துக்கொண்ட பின்னரே குருடனாகிறான். இது போலவே அக குருட்டுத்தனமாகிய மடமையும் மருட்சியும் இயல்பானவையல்ல. மனிதன் தன்னுடைய இருளார்ந்த, பழி சார்ந்த போக்குகளாலேயே அவற்றை வரவழைத்துக் கொள் கிறான். வந்தபின்னும் அதை விட்டொழிக்க முடியாதென் றில்லை. அது எளிது. மன்னித்தருளாக் கடுமையை விட் டொழிப்பது ஒன்றினாலேயே அது கைகூடும். ஏனெனில் அத்தீமையுடன் சேர்ந்தே தற்பெருமையும் வேறுபிற உணர்ச்சி வெறிகளும் இயங்குகின்றன. பழிகளைப் பெற்ற தாய் தந்தை உலகில் தானே முக்கியமானவன், தனக்காகவே உலகம் இயங்குதல் வேண்டும் என்று தற்பெருமையுடையவன் எண்ணு கிறான். உலகத்துக்கெதிராக, உலகத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துப் பேணிவிட அவன் திட்டமிடுகிறான். அவன் மன்னித்தருள இணங்காததன் காரணம் இதுவே. இத் தற் பெருமையிலிருந்தே பொறாமை, சீற்றம், பகைமை, வன்மம் முதலிய மற்ற உணர்ச்சி வெறிகள் தோன்றுகின்றன. மன்னித் தருளும் பண்பால் இவையும் மெல்லக் கட்டவிழ்கின்றன. உயர் அறிவு, உயிர் இன்பம் ஆகியவற்றின் முழு அழகும் முழு அளிவும் அவன் வாழ்வில் பரவுகின்றன! பழி எதிர்பழி மனப்பான்மை, தற்பெருமை ஆகிய இவையே மற்றப் பழிகளுக்கெல்லாம் தாய், தந்தை போல்வன. பழி எதிர் பழி மனப்பான்மையுடையவன், தற்பெருமையுடையவன் பெரும் பழிகள் வகையில்தான் எதிர்பழி செய்கிறானென்பதில்லை. பெரும் பழிகளைவிட, சிறு பழிகள், சிறு பகைமைகள், தற் செயலான ஏளன அவமதிப்புக்கள் ஆகியவை அவன் சிடு சிடுப்பையும் கடுப்பையும் வளர்த்து, இச்சிறுபழிகளுக்கு எதிராகப் பெரும்பழிகளே செய்யத் தூண்டுகின்றன. இச் செயல் பொதுநிலையான பழி எதிர்பழி மனப்பான்மையை விட மோச மானது. ஏனெனில் இங்கே பழிச் செயலுடன் நேர்மைக் கேடு, கோழைமை கலக்கின்றன. பழிச் செயலுடன் நேர்மைக் கேடு, கோழைமை கலக்கின்றன. பழி எதிர்பழியால் வரும் அமைதிக் கேட்டை விட, சீற்றத்தைவிட, இச் செயல் செய்பவனிடம் மிகுதியான அமைதிக் கேடும் சீற்றமும் வளர்கின்றன. அவன் உள்ளம் மிக விரைவில் தன்னம்பிக்கையிழந்து குள்ளத்தனம் உடையதாகிறது. தன்னம்பிக்கைக்கேடும் குள்ளத்தனமும் தீமையில்கூட ஒரு கீழ்ப்படித்தீமைக்கு மனிதனை இட்டுச் செல்கின்றன. மற்ற உணர்ச்சி வெறிகள் அறிவாற்றல் குன்றியவை, ஆனால் உணர்ச்சி யாற்றல் உடையவை. இந்தப் படியடைந்த மனிதன் பண்பு களிலோ இரண்டு ஆற்றல்களும் கிடையா. இதன் பயனாக, தீமையில் தீமை அல்லது இரட்டிப்புத் தீமையான புறங்கூறல், பொய்ம்மை, வஞ்சகம், போலி நடிப்பு ஆகிய பண்புகளை அவன் கையாண்டு அவற்றின் குள்ளத்தன்மைக்கு மேலும் மேலும் ஆளாகிறான். மனிதப் படியிலிருந்து விலங்குப்படிக்கு மட்டு மன்றி, விலங்குப் படியினின்றும் இன்னும் இழிபடிகளுக்கு இது அவனை இட்டுச் செல்கிறது. தற்பெருமையும் செருக்கும் தற்செருக்கால் மருட்சியுற்று விழிக்குருடானவனுக்கு மற்றவர்கள் செயல்கள், நிலைகள் யாவுமே குற்றத்துக் குரியனவாக, பகை வெறுப்புச் செயல்களாகத் தோற்றும். அவன் செருக்கின் அளவில் அக்கற்பனைப் பகைமை பெரிதாக உரு வெடுக்கும். கடுஞ்சீற்றங்கள் தளர்ச்சியை உண்டு பண்ணும். ஓயாத சிறு சீற்றங்கள் நிலையான கடுகடுப்பை ஏற்படுத்தும். இவை மேன்மேலும் ஒருவனை இருளில் தள்ளித் துன்பம், தன்மயக்கம் ஆகியவற்றுக்கு ஆளாக்கும். பழி சூழ்பழிகளாகிய இவற்றால் புண்படாதே. உன் உணர்ச்சிகள் இவற்றால் அமைதி குலையும்படி விடாதே. அதே சமயம் பிறரையும் இவ்வுணர்ச்சிகளுக்கு ஆளாக்கிப் புண் படுத்தாதே. அவர்கள் உணர்ச்சிகள் குலையும்படி விடாதே. அதே சமயம் பிறரையும் இவ்வுணர்ச்சிகளுக்கு ஆளாக்கிப் புண் படுத்தாதே. அவர்கள் உணர்ச்சிகள் குலையும்படி செய்யாதே. தற்பெருமையை யும் செருக்கையும் நீ அகற்றியிருந்தால் இவை உனக்கு எளிய செயல்கள். ஏனெனில் புண்படுவதற்கும் புண்படுத்துவதற்கும் உரிய தூண்டுதல்கள் இத்தீயபண்புகளே. செருக்கையும் தற்பெருமையையும் நீக்கி வெற்றி கண்டவன் இத் தீய பண்புகளுக்கு இடம் தரமாட்டான். அத்துடன் அவற்றி னிடமாக அவற்றின் தடமகற்றி, மன்னிக்கும் பண்பு, அன்புக் கனிவு, துணையாதரவு ஆகிய நற்பண்புகளை வளர்ப்பான். தற்பெருமையையும் செருக்கையும் வேரோடு அகற்றி எறிவது எளிதன்று. அதனை நீடித்த பயிற்சியினாலேயே செய்ய முடியும். அவை தீங்குகளுக்கெல்லாம் காரணமான அகத் தீமைகள். மற்றத் தீமைகளைப் போல அவற்றின் வடிவத்தை, பிறப்பைக் கூட எளிதில் காண முடியாது. அவை அகத்திலும், அகஞ்சார்ந்த வேர்ப்பண்புகள் - கோபம், சீற்றம், கடுகடுப்பு ஆகியவற்றின் வேர் அவையே. கோபம், சீற்றம், கடுகடுப்பு ஆகிய பண்புகளை அடக்கி ஒடுக்குவதன் மூலமே வேர்ப்பண்பாகிய அவற்றின் ஆற்றலை அடக்க முடியும். ஒரு மரத்தில் தளையும் கிளையும் வெட்டிக்கொண்டே இருந்தால், நாளடைவில் வேரும் பட்டழியவே நேரும். இம் முறையிலே கோபம், சீற்றம் ஆகிய பண்புகள் செயலாற்றாதபடி நீடித்துத் தடுப்பதன் மூலமே அவற்றின் புறந்தோன்றா வேர்ப் பண்புகளாகிய தற்பெருமையையும், செருக்கையும் படிப் படியாகக் குறைக்க முடியும். அவ்வழியிலேயே அவை படிப் படியாக ஆற்றலும் உயிர்ப்பும் இழந்து அகச் சிந்தனைக்கு வழிவிடும். நம் கருத்து, செயல் ஆகியவற்றின் காரணகாரியத் தொடர்புகளில் நாட்டம் செலுத்தும் இந்த அகமுகச் சிந்தனையே நம் உள்ளத்தின் உள்ளமைதியை வளர்த்து, இவ் வேர்ப் பண்புகளைத் தடமறக் கெடவைத்துவிடும். கருத்தும் செயலும் இதன்பின் தூய்மை வாய்ந்தவையாகவே இருக்கு மாதலால், சீற்றமோ, கடுகடுப்போ, பேரவாவோ, பகைமையோ, இவற்றின் வேர்ப்பண்புகளாகிய தற்பெருமையோ, செருக்கோ மீண்டும் தலைகாட்டவே மாட்டா. அச்சமும் வீரமும் புண்படுவதும் புண்படுத்துவதும், துன்புறுவதும், துன் புறுத்துவதும் ஒருங்கே நிகழும் செயல்கள் - ஒரே செயற் பண்பின் இருமுகங்கள், இருதிசைகள். எனவே ஒருவன் பிறர் செயல் களால் புண்படாத உள அமைதி பெற்ற அன்றே, அவன் பிறரைப் புண்படுத்தாத நிலையை, பிறரிடம் அன்புக் கனிவு காட்டும் நிலையை அடைகிறான். பிறரைப் புண்படுத்தத் தயங்கும் அவன் செயலே அவன் தன்னையும் தன்னலத்தையும் மறந்து, பிறரையும், பிறர் நலத்தையும் பேணும் செயலாகி விடுகிறது. அவன் தோற்றமும் சொல்லும் செயலும் பிறரிடம் அன்பையும், அருளிரக்கத்தையும் தூண்டுகின்றன. பகைமை, பூசல் பண்புகள் நிலவும் சூழலில்கூட அஃது அவற்றின் அழிவாற்றலைத் தணித்து, மெல்ல நற்பண்புகளைப் பரப்புகிறது. பகைமையற்ற அவனிடம் பிறந்த அன்பலையே புதியதாக வீரம் என்ற நல்லாற்றலையும் தோற்றுவிக்கிறது. தற்பெருமை, தற்செருக்ககற்றி மன அமைதியை அடைந்தவன் பிறர் செயலால் புண்படாதது போலவே, அச்செயல்கள் கண்டோ, செயற்பண்புகள் கண்டோ அஞ்சுவதில்லை. ஏனெனில் அச்சம் என்பது தன்னைப் பற்றிய எண்ணம். அது தற்பெருமை, தற்செருக்கின் அடிமை வடிவமேயாகும். அச்சமும் அடிமையும் அகன்ற அன்பு வீறுதான் உண்மை வீர உணர்ச்சி ஆகும். அன்பில் பிறந்த வீரப்பண்பு பொதுவாக வீரம் என்ற சொல் தவறாகக் குறிக்கும் அழிவுப் பண்பு அன்று. பகைமையிலிருந்து, சீற்றத்திலிருந்து தோற்றும் அப்போலி வீரம் உயிர்ப்பண்பன்று. அது நேர் எதிரியிடம், ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே எதிர் செயல் தூண்டும். அதுவும் பகைமை சார்ந்த அழிவாற்றலே! அன்பு வீரமே, அன்புக்குரியாரிடம் மட்டுமன்றி, சூழ்திசைகள் எங்கும் அலை பரப்பிச் செயலாற்றும். அது நிலையானது, அமைதியுடையது. கோப ஆற்றலைப் போலக் கண நேரம் அழிவாற்றலாகிப் பின் தானே அழிவதன்று. அஃது என்றும் அமைதியுடன் நின்று செயலாற்றுவது. ஆற்றலைச் சேமித்து வைத்து வளர்த்து, வேண்டிய இடத்தில் வேண்டிய அளவில் மட்டுமே பயன்படுத்துவது. அது பெரும்பகைமை தூண்டுவதில்லை. வன்மம் கிளறுவதில்லை. நட்பும் பாராட்டும் ஆர்வப் பாசமுமே பரப்பும் இன்னலமுடையது. எவருக்கும் தீங்கு செய்யாதவன் எவருக்கும் அஞ்ச வேண்டுவதில்லை. மறைந்து செயலாற்றக்கூடும் பகைவரை, வஞ்சகரை எண்ணி ஓயாது அஞ்சி அஞ்சிச் சாக வேண்டியது மில்லை. ஆனால் மன்னிக்கும் மாண்பில்லாதவன் தனக்கு இழைக்கப்பட்ட அல்லது இழைக்கப்பட்டதாக அவன் கருதுகிற தீங்குக்குச் சரியான எதிர் செயல் செய்யத் துடிக்கிறான். அவன் பிறரிடம் அன்பு காட்டுவதில்லை. பிறர் பற்றிக் கவலைப் படுவதுமில்லை. அவன் கவலை முழுதும் தன்னைப்பற்றியதே. இக்காரணத்தால் அவன் எப்போதும் பகைமைப் பண்பையும், பகைவர்களையும் பெருக்கிக் கொண்டிருப்பதுடன் நிற்பதில்லை. பகைவர்கள் பற்றிய ஓயா அச்சமும் அவனை வாட்டுகிறது. தான் பிறருக்குச் செய்வதையே, செய்ய எண்ணுவதையே, செய்யத் திட்டமிடுவதையே பிறரும் தனக்குச் செய்வார்கள், செய்ய எண்ணுவார்கள், செய்யத் திட்டமிடுவார்கள் என்பது அவனுக்குத் தெரியும். அதுவே அவன் வாழ்க்கையின் ஓயா அமைதிக் கேடு ஆகிறது. அவன் தீங்குகள் அச்சங்களைப் பெருக்க, அச்சங்கள் தீங்குகளைப் பெருக்க, இம்முறையே தீமை, அச்சம், கவலை ஆகிய முடிவிலாத, ஓயாச்சூழலில் சிக்கி அவன் அலைகிறான். புத்தர்பிரான் போதனை; தீர்க்காயுவின் கதை வெறுப்பை வெறுப்பு என்றுமே வெல்ல முடியாது. ஆனால் அன்பு அதனை ஒரு நொடியில் வென்றுவிடும். இது புத்தர் பெருமான் போதனை. இதை அவர் ஓயாமல் தன் சீடர்கள் உள்ளத்தில் வலியுறுத்தி வலியுறுத்திப் புகட்டி வந்தார். அதை அவர்கள் உள்ளத்தில் பதிய வைக்கும்படி அவர் ஓர் அழகிய கதை கூறினார். இளவரசர் தீர்க்காயுவின் கதையே அது. பிரமதத்தன் என்பவன் வாரணாசி ஆண்ட வலிமை வாய்ந்த பேரரசன், தீர்க்கேதி வாரணாசியை அடுத்துள்ள கோசல நாட்டின் சிற்றரசன். எல்லையில் தன் பேரரசை விடச் சிறிதான கோசலத்தையும் தன் பேரரசுடன் இணைத்து அப்பேரரசை இன்னும் பெரிதாக்கிவிட விரும்பினான் பிரமதத்தன். இந் நோக்கத்துடன் அவன் தீர்க்கேதி மீது போருக்கெழுந்தான். தன்னினும் எவ்வளவோ ஆற்றல் மிக்க பேரரசனான பிரமதத் தனை எதிர்த்து நிற்பதில் நம்பிக்கையிழந்தவனாய், தீர்த்கேதி நாட்டைவிட்டே ஓடினான். அவன் ஆட்சி எளிதில் பகைப் பேரரசன் கைப்பட்டது. தீர்க்கேதி இதன்பின் மாற்றுருவில் இடத்துக்கிடமாகப் பலநாள் அலைந்து, இறுதியில் ஒரு தொழிலாளனின் குடிசை யில் தன் அரசியுடன் சென்று வாழ்ந்தான். இங்கே அரசி தீர்க்காயு என்ற ஒரு புதல்வனை ஈன்றெடுத்தாள். “தீர்க்கேதியின் நாட்டைப் பறித்துக்கொண்டவன் நான். அவன் உயிருடன் இருக்கும்வரை அவன் சும்மா இருக்க மாட்டான். என்ன சூழ்ச்சிகள் செய்தாவது என்னைக் கொல்லவே வகை தேடுவான். அவனை நானாகச் சென்று கொல்லாவிட்டால், அவனால் என் உயிருக்குக் கேடு நேர்வது உறுதி” என்று பிரம தத்தன் எண்ணினான். அவன் தீர்க்கேதியின் இருப்பிடம் அறிய முயன்றான். ஆண்டுகள் பல சென்றன. தீர்க்கேதி தன் கவனமுழு வதையும் ஒருமுகப்படுத்தித் தன் புதல்வன் கல்விப் பயிற்சியில் ஈடுபட்டான். அவனும் மிகவும் சுறுசுறுப்புடன் கற்றுத் தேறிப் புலமையும் திறமையும் நுண்ணறிவும் பெரிது கைவரப் பெற்றான். தீர்க்கேதியின் மறைவிடம் கடைசியாகப் பிரமதத்தனுக்குத் தெரிந்துவிட்டது. தீர்க்கேதியும் இதை உணர்ந்து கொண்டான். பிரமதத்தன் கைப்பட நேர்ந்தால் தானும் தன் மனைவியும் குழந்தையும் மூவருமே உயிரிழக்க வேண்டிவரும் என்று அவன் கண்டான். ஆயினும் தன் உயிரைவிட அவன் தன் கான் முளையின் உயிரையே பெரிதாக நினைத்தான். ஆகவே அவனை மட்டும் அப்புறப்படுத்தி அனுப்பிவிட்டான். சில நாட்களில் தீர்க்கேதியும் அவன் அரசியும் பிரமதத்தன் பிடியுட்பட்டு உயிரிழந்தனர். இருவர் தலைகளும் ஒருங்கே நிலத்தில் உருண்டன. தந்தையின் அருளார்ந்த அறிவுரை பிரமதத்தன் கவலையும் அச்சமும் இப்போதும் விட வில்லை. “தீர்க்கேதியையும் அவன் அரசியையுந்தான் நான் கொன்றொழித்தேன். அவர்கள் பிள்ளையான இளவரசன் தீர்க்காயு இன்னும் உயிருடன்தான் இருக்கிறான். என்னைக் கொல்வதற்கு அவன் ஏதாவது வழிதேடாமல் இருக்கமாட்டான். அவனையும் நான் கொன்றொழித்தேயாக வேண்டும். ஆனால் அவன் சென்ற இடம், இருக்குமிடம் தெரியாமல் நான் என்ன செய்ய முடியும்?” என்று அவன் எண்ணமிட்டான். அவன் உள்ளத்தில் அச்சமும் திகிலும் இடையறாது குடி கொண்டிருந்தன. தாய் தந்தையர் கொலையுண்டதன் பின்னர் தீர்க்காயு தன் பெயரையே மாற்றிக் கொண்டான் பிரமதத்தன் யானைப் பந்தியிலேயே ஒரு பணியேற்று, நாளடைவில் யானைத் தலைவனானான். தன் நற்பண்புகளால் தீர்க்காயு எல்லார் உள்ளங்களையும் கவர்ந்து புகழ்பெற்றான். அவன் தனிப்பெருந் திறமை காரணமாக பேரரசன் மதிப்பும் அவனுக்குக் கிடைத்தது. அவனைப் பற்றிக் கேள்விப்பட்டு அவனை வரவழைத்துப் பார்த்த அன்று முதலே, பேரரசனுக்கு அவன்மீது பெருங்கவர்ச்சி ஏற்பட்டது. அவ னுக்குப் பேரரசன் தன் அரண்மனையிலேயே பணி தந்தான். அதிலும் அவன் திறமையும் புகழும் பெருகவே, அவனைப் பேரரசன் நேராகத் தன் அருகிலேயே அமர்த்திக்கொண்டான். பேரரசன் கீழ் அவனே மிக பொறுப்புடைய, மிகவும் நம்பிக்கைக் குரிய பணியாளானான். ஒரு நாள் பேரரசன் வேட்டையாடச் சென்றான். அவன் பரிவாரத்தைவிட்டு நெடுந்தொலை முன்னே விரைந்து சென்று விட்டான். அச்சமயம் தீர்க்காயு ஒருவனே அவனுடன் இருந்தான். வேட்டையால் களைப்புற்ற பேரரசன் தீர்க்காயுவின் மடியிலேயே தலையை வைத்துப் படுத்து உறங்கினான். தீர்க்காயுவின் உள்ளம் இச்சமயம் சிந்தனையில் ஆழ்ந்தது. ‘இந்தப் பேரரசன் எனக்கிழைத்த தீங்கு மிகப் பெரிது. என் தந்தையிடமிருந்து நாட்டைக் கைப்பற்றிக் கொண்டதுடன், தந்தை தாய் இருவரையுமே கொன்றிருக்கிறான். இத்தகையவன் இப்போது முழுவதும் என் கைவசமாய் இருக்கிறான்.’ என்று தனக்குள் கூறியவாறே அவன் வாளை உருவினான். பிரம தத்தனைக் கொன்று விடவே அவன் அக்கணம் எண்ணியிருந் தான். ஆனால் அதே சமயம் தன் தந்தை கூறிய அறிவுரைகள் அவனுக்கு நினைவுக்கு வந்தன. “என்றும் பழிக்கு எதிராகப் பழி நாடாதே! உன்னால் இயன்றவரை பழிகளை மன்னித்துவிட முயற்சி செய்” என்று அவர் அறிவுறுத்தியிருந்தார். இதை நினைத்ததும் அவன் வாளை மீண்டும் உறையில் சேர்த்தான். மன்னிப்புப் பண்பின் முழுநிறை இன்னலம் இதே சமயம் பேரரசன் தூக்கமும் அமைதியாயில்லை. அது பலவகைக் கனவுகளால் அலைக்கழிக்கப்பட்டிருந்தது. ஆயினும் நேடுநேரம் உறங்கி அவன் இறுதியில் எழுந்தான். அவன் முகத்தி லுள்ள திகில் கண்டு இளவரன் செய்தி என்ன என்று உசாவி னான். பேரரசன் மனந்திறந்து பேசினான். “என் துயில் எப்போதுமே அமைதியுடையதா யிருப்பதில்லை. கனவிலே நான் இளைஞன் தீர்க்காயுவின் கைப்பட்டிருப்பதாக அடிக்கடி காண்பதுண்டு. அவன் என்னைக் கொல்ல முனைந்ததாகவும் தோற்றுவதுண்டு. இப்போதோ நான் இங்கே படுத்துக்கொண்டிருந்த நேரத்துக்குள் இதே கனவை எப்போதையும்விடத் தெளிவாகவும் விளக்கமாகவும் பார்க்க நேர்ந்தது. இதனாலேயே அச்சமும் திகிலும் என் உள்ளத்தில் குடிகொண்டுள்ளன.” என்றான் அவன். இளைஞன் இப்போது உண்மையிலேயே வாளை உருவி னான். “நான்தான் இளவரசன் தீர்க்காயு. இப்போது நீ என் கைப்பட்டிருக்கிறாய். பழிக்குப் பழி வாங்க இதுவே சமயம்”, என்று கூறிக் கிளர்ந்தெழுந்தான். பேரரசன் இப்போது இளவரசன் தீர்க்காயுவின்முன் மண்டி யிட்டு நின்று தன் உயிரைக் காக்கும்படி மன்றாடினான். ஆனால் தீர்க்காயு அவன் எதிர்பாராவகையில் பேசினான், தந்தையின் அறவுரை அவன் உணர்ச்சி வேகத்தை அடக்கி அவனை மீட்டும் மாற்றியிருந்தது. “பேரரசே, உயிர்காக்கும்படி மன்றாட வேண்டியவன் நானே. என்னைத் தேடிக் கொல்வதற்காக நீங்கள் பல ஆண்டுகள் அரும்பாடுபட்டிருக்கிறீர்கள். இப்போது நீங்கள் என்னைக் கண்டு கொண்டீர்கள். என் உயிரைக் காக்கும்படி நான் தங்கள் முன் மன்றாடுகிறேன்.” என்றான் அவன். அந்தக் கணமே பிரமதத்தனும் தீர்க்காயுவும் ஒருவர் உயிரை ஒருவர் காப்பதாக வாக்களித்தனர். அந்தக் கணமே இருவரும் கைகோத்து ஒரு நாளும் ஒருவருக்கு ஒருவர் எவ்வகைத் தீங்கும் செய்வதில்லை என்று உறுதி மேற்கொண்டனர். தீர்க்காயு காட்டிய பெருமித மன்னிப்புப் பண்பு கண்டு பேரரசன் அவன் மீது பெருமதிப்புக் கொண்டான். அதன் பயனாக, அவன் தீர்க்காயுவுக்குத் தன் புதல்வியையே மணஞ் செய்து கொடுத்து, அவன் தந்தை அரசையும் அவனுக்கே வழங்கினான். ‘வெறுப்பை வெல்வது வெறுப்பன்று, மன்னித்தருளும் பண்பே’ என்பதையும் அந்த மன்னிப்பே ஒப்புயர்வற்ற அழகு வாய்ந்த பண்பு என்பதையும், பழிக்குப் பழி வாங்கும் செயலை விட அதுவே பன்மடங்கு நிறைவெற்றி தருவது, இனியது என்பதையும் இவ்வரலாற்று நிகழ்ச்சி காட்டுகிறது. தெய்விக அன்புக் கடலின் நிலவார்ந்த கரை மன்னிப்புப் பண்பே அன்பின் வாயில் - கைம்மாறு நாடாத தெய்விக அன்புக் கடலின் நிலவார்ந்த கரை அது. அதை மேற்கொள்பவன், அதில் நீடித்துப் பழகிப் பயிர்ப்புப் பெறுபவன், அதன்மூலம் தன்னிறைவு நாடுபவன் பேரின்ப ஒளியைத் தன்னுள் பாய விடுகிறான். தற்பெருமையும் பொறுப்பும் பழி எதிர் பழியார்வமும் சென்று தீண்டாத ஓர் உச்ச உயர்தளத்தில் அவன் செம்மாந்து மிதக்கிறான். மாறாத அமைதி என்னும் தென்றல் நுகர்ந்து, எல்லையற்ற பெருவெளி எங்கும் பரவவல்ல அன்பு என்னும் தண்ணிலாக் கதிர் பரப்புகிறான். நீடித்த பயிர்ப்பினால் பெற்ற மன்னிப்புப் பண்பு கூட இத்தளத்தில் அவனுக்குத் தேவைப்படாததாகிவிடுகிறது. ஏனென்றால் அவன் அன்பு ஒளி பரவிய இடத்தில் மன்னிப்ப தற்குரிய பழி எதுவும் அணுகுவதில்லை. அவன் அன்பலைகளுக்கு ஆட்பட்டவர்கள் எதையும் பழியாகக் காண்பதுமில்லை. அவன் செயலின்றியே, அவன் அருளொளிக் கதிர்கள் கடவுட் பண் பலைகளாக உலவிப் பழிகளுக்கு மூலமான அறியாமை அகற்றும். அறியாமை அகற்றிப் பழி விலக்கும் மன்னிப்புப் பண்பைப் பரப்பும். அன்பு, சரி சம அன்பு, எல்லையற்ற அன்பு - இதுவே இயற்கையின் இன்ப அமைதி. இது முழுநிறை அமைதி, இதன் தங்குதடையற்ற ஒளி இயக்கமே வாழ்வு. இதிற் குறைந்த எல்லா நிலைகளும் இதைநோக்கி முன்னேறும் நிலைகளே. பண்புகள் என்பவை இம் முன்னேற்றத்துக்கு உதவும் கருவி கலங்கள், வழிகாட்டிகள் - பழிகள் என்பவை அம் முன்னேற்றத்துக்கு இடையே ஏற்படும் தயக்க மயக்கங்கள், தடைகள், தவறான பாதைகள், தவறான வழிகாட்டிகள் - அவ்வளவே! மன்னிப்புப் பண்பு இப்பேரமைதியின் எல்லையில் நேரே செல்ல வழிகாட்டும் ஒரு திறந்த வாயில் ஆகும். அடிக்குறிப்புகள் 1. “ஐக அநn டிடேல ரனேநசளவடிடின ஹடட வாந நஅயீவiநேளள யனே யஉhiபே டீக வாந ளடநநயீiபே யனே வாந றயமiபே டீக வாந ளடிரடள வாநல தரனபந ளடி biனேடல, கூhநல, றiவா பநவேடநச றடிசனள யனே கநநடiபே, றுடிரடன யயீயீடல வாந யெடஅ டிக hநயடiபே- ஐவ வாநல டிடேல ரனேநசளவடிடின முiனேநேளள, nடிடெநச நஎநச வாயn சநஎநபேந. - ளுhயமநளயீநயசந 2. “ழயஎந படிடின-றடைட கூடி யடட வாயவ டiஎநள, டநவவiபே ரமiனேநேளள னநை ஹனே பசநநன யனே றசயவா; ளடி வாயவ லடிரச டiஎநள நெ அயனந டுமைந ளடிகவ யசைள யீயளளiபே லெ.” 8. தீங்கு நாடாமை 1திண்ணியது, திண்ணியது பேருலகம், ஊனக் கண்களுக்கே, ஆயிடினும் அத்திண்மை தானும் நுண்ணியது, நுண்ணியது நல்லன்பின் ஒளிக்கே; நூறுகட்டுக் கட்டிடினும் கீழ்மேலும் எங்கும் கண்ணியது, கண்ணியது; காணவல்ல ததுவே; கடவுளது நன்மரபும், கருமகன் தீமரபும் தண்ணியது தண்ணியதாம் தன்மாயத்தாலே தானிழைத்தொன் றாக்குகின்ற தரமுடைய ததுவே. - எமர்சன் 2கருதுவது தீமையெனில் செயலது வேறாமோ? உருநிழலாம் தீமையதே உருவாகும், ஐயமில்லை! கருதுவது நிறைநலமே ஆமாயின், செயலதுவும் திருநிறையும் வாய்மையொடு திளைப்பதுவென்றே தேர்வாய்! - கன்ஃபூசியஸுக்குப்பின். மன்னிப்புப் பண்பின் பயிர்ப்பில் ஓரளவு முன்னேறி விட்ட வனுக்குப் புதிய உணர்வு உதயமாகின்றது. நன்மை தீமைகளின் இயல்பு இப்போது அவனுக்கு விளங்குகிறது. மனித இதயத்தில் கருத்துக்கள், செயல் நோக்கங்கள் எவ்வாறு உருவாகின்றன; எவ்வகைகளில் வளர்கின்றன; எங்ஙனம் செயலாக நிறை வுறுகின்றன என்பவற்றை இந்நிலை அடைந்த மனிதன் தெள்ளத் தெளியக் காண்கிறான். புறக்காட்சி கடந்து அகக்காட்சி, பொறிபுலனறிவு கடந்து உள்ளுணர்வு பெறுகிற படி இதுவே. உள்ளத்தின் நோக்கு அதாவது சித்தத்தின் அக உணர்வுப் படி அடைந்தவன் வாழ்க்கையை உயர்ந்தகன்ற, மேம்பட்ட தளத்தில் நின்று முழுமையாகப் பார்க்கிறான். அப்பார்வையில் தான் பிறர் என்னும் வேற்றுமையோ, நலம் தீங்கு என்னும் வேறுபாடோ, இன்பதுன்பம் என்னும் இருமை நிலையோ கிடையாது. தனக்குப் பிறர் செய்யும் செய்கை எதுவாயினும், எத்தகையதாயினும் அதற்கு எதிர்செயல் என்று எதுவும் தான் செய்ய வேண்டியதில்லை என்பது இப்போது அவன் காணும் வாய்மை ஆகும். சீற்றம் என்பது சீறுபவனின் அறியாமையின் புற உருவேயன்றி வேறன்று. மனக்கடுப்பு என்பதும் அந்த அறியாமை யின் புற உருவேயன்றி வேறன்று. மனக்கடுப்பு என்பதும் அந்த அறியாமையின் வற்புறுத்தே, நீட்டிப்பே. கேள்விகளும் விடைகளும்: வளர்ச்சிப் படிகளும் தளங்களும் தீமைகளை அடக்கி ஆட்கொண்டு அகற்றும்படி நன்மை யில் முனைந்து ஆக்கம் தேடும்படி இந்த இரண்டும் பயிற்சிப் படிகள், பயிர்ப்புப்படிகளே. இவை கடந்தது தீமை காணாப்படி! இந்தத் தளத்தை மனிதன் அணுகுமுன் அவன் தீமை பற்றியும் நன்மை பற்றியும், தீய பண்புகள் பற்றியும் நல்ல பண்புகள் பற்றியும் பலதிறப்பட்ட கேள்விகளை உள்ளத்தில் எழுப்பி, மறுமொழி காண்கிறான், அவனிடம் எழும் கேள்விகள் அவன் அகவளர்ச்சிப் படிகளாகவும், அவற்றுக்கு அவன் காணும் மறுமொழிகள் அவன் அடைந்துள்ள வளர்ச்சித் தளங்களாகவும் அமைகின்றன. இக் கேள்விகள் வழியே சென்று அவ் வளர்ச்சிப் படிகளை நாம் காணலாம். தொல்லைப்படுத்தும் சீற்றம் என்ற ஒன்று உள்ளத்தில் எழுவானேன்? எழுந்து தொல்லை தந்தபின், அதற்காகக் கழி விரக்கம் கொள்வானேன்? மீண்டும் மன்னிப்பை மேற்கொண்டு அதில் பயில்வானேன்? மன்னிப்பு என்பதே சீற்றத்தின் எதிர் பண்பு, எழுந்த சீற்றத்தைப் பின்வாங்கும் செயலாகத்தானே அது அமைகிறது? கோபம், சீற்றம் நல்ல, இனிய பண்புகளா? அழகிய, அமைதி வாய்ந்த பண்புகளா? - அல்ல, அல்ல! அல்லவே அல்ல! அவை அத்தகையவையானால், அவற்றுக்காகக் கழிவிரக்கம் கொள்ள, மன்னிப்பின் மூலம் அவற்றைப் பின்வாங்க இடம் ஏற்படாது. நல்லன, இனியன அல்லவானால் அவற்றை ஏன் முதலில் உள்ளம் மேற்கொள்கிறது? அவை தீயன, இன்றியமையாதன என்ன லாமா? - அப்படியும் கூறவதற்கில்லை. இன்றியமையாதன வானால் அவற்றுக்காக யாராவது கழிவிரக்கம் கொள்வார் களா? முதலில் மேற்கொண்டு பின்பு பின் வாங்குவார்களா? இப் பண்புகள் நல்லன, இனியனவல்ல, தீயன இன்றி யமையாதனவுமல்ல. அவை விலக்க முடியாதனவுமல்ல. இயல் பாகத் தாமாக நிகழ்பவையுமல்ல. அவை அறியாமையின் பயன், ஆனால் இந்த அறியாமையும் இயல்பானதன்று. இயல்பானது என்றும் நீங்காது. இயல்பல்லாதது ஒரு கூறாகக் கருதாமல் இயற்கையின் வேறான தனிப்பொருளாகத் தன்னைக் கருதும் தன்னலத்திலிருந்தே இப் பண்புகள் தோன்றுகின்றன. எனவே அவை இயல்பான தீங்குகளல்ல. தீங்கான போக்கின் விளைவுகள், அதன் அறிகுறிகள் மட்டுமே. கேள்விகளுக்கு நல்லுணர்வுப்படியிலுள்ள உள்ளம் காணும் மறுமொழி இதுவே. சீற்றம், கடுகடுப்பு ஆகிய உணர்ச்சிகளை அகற்றுவதே அழகிது, இனிது, அமைதி தருவதானால், பழி எதிர்பழியின் பண்புகளை ஒழிப்பதே மன்னிப்பின் மாண்புடைய இன்பம் அளிக்குமானால் - கோபத்தின் அடிப்படையான தன்முனைப்பு நாடாமல், பழிக்கு அடிப்படையான தீங்கையே தீங்காக நோக்காமல், எதிர் பண்பற்ற இயல்பான அன்பும் பாசமும் மேற்கொண்டால் - அது எவ்வளவு அழகிது, இனிது, அமைதி தருவதாக இராது! சீற்றம் அடக்கும்போதே அமைதியும், உணர்ச்சிகளை அகற்றும்போதே இன்பமும், தன்னலத்தை அகற்றும்போதே ஒளியும் உண்டாகுமானால், நிலையாக இவற்றின் தடமில்லாமல், அன்பும் அமைதியும் இன்பமும் பேணினால் அது எவ்வளவு ஆற்றல் தராது! உயர்தளச் சிந்தனை, ஒத்துணர்வு பிறர் உனக்குச் செய்யும் தீங்கு தீமையானால், அதற்காக நீ அவர்களை வெறுப்பதும் தீங்குதானே? ஒரு தீமை இன்னொரு தீமையைச் சரிசெய்யுமா? இரண்டும் சேர்ந்து இரண்டு தீங் காவதன்றித் தீங்கு அழிவதெவ்வாறு? அவன் செய்யும் தீமை அவனுக்கேயன்றி உனக்கன்று. அதில் நீ காட்டும் கோபம்தானே நீ செய்யும் தீமை அதுதானே உன்னைச் சாரும்? அப்படியிருக்க, நீ கோபப்படுவானேன், கடுகடுத்துக்கொள்வானேன்? பழி எதிர்பழி செய்வானேன்? அவன் செய்யும் தீங்கு அறியாமையால் விளைவதென்றால், நீ செய்யும் தீங்கு அதைவிட மோசமான அகப் பண்புக்கேட்டால், தற்பெருமையால் நேர்வது அல்லவா? உன் குறுகிய தன்னல உள்ளத்தால், மடமையின் திரையால், குருடான விலங்குணர்ச்சிகளால் அல்லவா? பிறர் உனக்குச் செய்யும் தீங்கு உன் தற்பெருமையால் அல்லது செருக்கால் உனக்குத் துன்பமூட்டுவது போல, நீ செய்யும் தீங்கும், பழி எதிர் பழியும், கோபதாபச் செயல்களும் மற்றவர்களுக்குத் துன்ப மூட்டுமல்லவா? நீ உன் தீங்கை நாடி, அதன் காரணமறிந்து தற்செருக்ககற்றி விட்டால், அடுத்தபடி மற்றவர் தீங்கின் காரணமும் அறிந்து ஒத்துணர்வுகாட்டி அவர்கள் தீங்கும் அகற்றலாமல்லவா? நீ முன்பு தீங்கின் இயல்பறியாது தீங்கிழைத்தது போலத்தான் பிறரும் அவ்வியல் பறியாது உழல்கின்றனரென்று நீ அறிந்தால், அதன்பின் கோபதாபத்துக்கு இடம் ஏது? மன்னிப்புக்குத்தான் இடமேது? தீங்குகாணாது அறியாமை மட்டுமே கண்டு ஒத்துணர்வுடன் அமைதியாகச் செயலாற்றும் பண்பு ஒன்றே உன்னிடம் தங்க வேண்டும், அது ஒன்றே தங்கட்டும்! உயர்தளப் பண்பின் உரு தன்னிடமே இவ்வாறு கேள்விகள் எழுப்பித் தன் னாராய்வில் இறங்குபவன் உணர்ச்சி நீங்கிய அமைந்த சிந்தனை மூலம் உணர்ச்சிகளைப் படிப்படியாக வெல்கிறான். உணர்ச்சி களைத் தூண்டுகிற மடமையும் அவனைவிட்டு அகலுகிறது. அவன் பேரின்ப எல்லையடைகிறான். அடைந்ததும் பிறரிடம் தீமை காணும் பண்பையே ஒழித்துவிடுகிறான். உலகெங்கும் அவன் ஒரே அன்பும் நேசமும் அமைதியும் காண்கிறான். அவன் கண்ணுக்கு இப்போது தெரியும் வேறுபாடு அறியாமை, அறிவு, நேர்வழி, சுற்றுவழி என்பவைதான். உலகம் முழுவதும் இன்பப் பாதையிலேயே செல்வதாக அவன் உணர்கிறான். துன்பம் என்பது இன்பத்துக்கான வழி காட்டி என்பதையும், இன்பப் பாதையிலிருந்து மனிதன் விலகிச் செல்வது பற்றி எச்சரிக்கும் அறிவுக்கல் என்பதையும் அவன் தெரிந்துகொள்கிறான். தூய்மை, தூய்மைக்கேடு, சரி, தவறு - இவற்றை இன்னும் அவன் திரித்தறியாமலில்லை. ஆனால் எதிலும் தீமை என்ற ஒரு தனிப்பண்பு இல்லை என்னும் உண்மை அவனுக்கு வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. அவ்வெளிச் சத்தில் அவன் எல்லாப் பொருள்களையும் அவற்றின் மெய் வடிவில் மெய்ப்பண்பாகக் காண்கிறான். தன்னைத் தவிரத் தனக்குத் தீங்கிழைக்கும் புறப்பொருள் இல்லை என்பது அவன் உறுதி. புற உலகின் நிகழ்ச்சிகள் எதற்கும், மற்றவர்கள் செயல்கள் எதற்கும் தான் எத்தகைய எதிர் செயலும் செய்யத் தேவையில்லை என்பது அவன் அமைதிநிலை. தீமை செய்யாதிரு என்பதைவிட நன்மை செய் என்பதே அவன் குறிக்கோள். ஏனெனில் தீமை என்பது நன்மையின் இன்மை, நன்மைக்குத் தடை என்பது தவிர வேறன்று. இது செய்வதால் அவன் தீமைக்கு எதிரான நலமன்று, இயல்பான நேரான நலமே பெறுகிறான். தீமை மீதும் அவன் தீமை ஏவுவதில்லை. கோபத்தின் மீதும் அவன் கோபம் கொள்வதில்லை. கவிஞர் பெருமான் ஷேக்ஸ்பியர் தம் நாடகப் பாத்திரங் களில் ஒருவர் மூலம் ஓர் உண்மை தெரிவிக்கிறார். அறியாமை யன்றி வேறு இருள் இல்லை என்பதே அது. தீமை யாவும் அறியாமையே, மனஇருளே. மனத்தகத்தே பழிநீக்கம் என்பது இருள் நீக்கம், மறைவு நீக்கம் என்பது மட்டுமே. இருள் நீக்கம் வேறு, ஒளி வருகை வேறல்ல. ஒளியின் மறைவான நிழலே இருள். இருள் நீங்குவது என்பது ஒளியின் வருகையே. இருள் என்ற பொருள் ஒன்று இல்லை. ஒளியின் இன்மையே இருள். ஆகவே மறைப்பகன்றதே எங்கும் உள்ள ஒளி அங்கும் இடம் கொள் கிறது. இதுபோலவே தீமையின் எதிர்பண்பல்ல நன்மை. நன்மை யின் இன்மையே தீமையாவதுபோல, தீமையின் இன்மையே, நீக்கமே நன்மையின் தோற்றமாகிறது. உலகின் இரவின் இருள் வரும்போது, அந்த இருளை யாரும் பழிப்பதில்லை. பழிப்பவனை அறிவிலி, மூடன் என்போம். வானில் இந்த இருள் போன்றதே உள்ளத்தின் தீமை, பழி. அதை நாம் கண்டிக்கவேண்டியதில்லை. தற்பெருமை, செருக்கு, தன்னலம், தனி நலம் விட்ட அன்றே அது தானாக அகலும். கண்டிக்கவேண்டியவை தற்பெருமை, தன்னலமே யன்றி வேறு தீமை, பழிகள் அல்ல. இருவகைத் தீமைகள் தீமைக்கு மூலமான அறியாமை இருவகைப்படும். ஒன்று நன்மை தீமைகளின் இயல்புபற்றிய அறியாமை. தீய செயல் களுக்குக் காரணமான அறியாமை இதுவே. இது இயல்பானது, செய்பவன் செய்வதறியாது, வேறு வழியில்லாமல் தெரிந்த அளவில் செய்யப்பட்ட இதனைத் தெரியாது செய்யப்பட்ட தீமைச் செயல், அஃதாவது தவறான செயல் என்னலாம். ஆனால் இன்னொரு வகையான தீமை, தீய செயலும் உண்டு. செய்யத் தகாதது என்று தெரிந்தும் செய்யப்படும் செயலே அது. இதனை நாம் தெரிந்து செய்யப்படும் தீமை அல்லது மனமார்ந்த தீமை என்னலாம். ஆனால் அடிப்படையில் இரண்டுமே அறியாமை யின் பயனான செயல்கள்தான் - தவறான செயல்களின் நீடித்த பயன் பற்றிய உண்மையான இயல்பை அறியாத மடமையே இரண்டுக்கும் அடிப்படைக் காரணமாகும். செய்யக்கூடாது என்று கருதுகிற செயல்களை மனிதன் தொடர்ந்து செய்வானேன்? செயல் தவறு என்று தெரிந்தே செய்யும்போது, அச் செயலில் எப்படி அறியாமை இருக்க முடியும்? இவை விடை காண வேண்டிய கேள்விகளே. தவறு என்று அறிந்தவற்றை மனிதன் தொடர்ந்து செய் வதற்குக் காரணம் அவன் அறிவின் குறைபாடே. செய்யக் கூடாது என்று அவன் கருதியதற்குப் புற உலகில் அவன் எவரிட மிருந்தோ, எந்த ஏட்டிலிருந்தோ கற்ற நீதி அடிப்படையாக அவன் உள்ளத்தின் உள்ளே ஏற்பட்ட மனச்சான்றின் தளர்ந்த குரலாக இருக்கலாம். எப்படியும் செய்ய இருக்கும் செயல் பற்றிய அறிவு குறைபட்டதாகவே அமையக்கூடும். அச்செயல்கள் உடனடியாக இன்பம் தருபவை என்று கருதியே சமுதாயக் கட்டளையையோ, மனச்சான்றின் எச்சரிக்கையையோ மீறிக்கூட அவன் அவற்றைச் செய்ய முற்படு கிறான். இது தெளிவு. இவ்வெண்ணம் மேலும் மேலும் அவற்றை மீறி அச் செயல்களைத் தொடர்ந்து செய்யவே அவனைத் தூண்டிவிட முடியும். மனச்சான்றின் அமைதியைவிட, சமுதாய இணக்கத்தைவிட அந்த இன்பம் பெரிது என்ற அவனது மதிப்பு அவன் மனமார்ந்த தீமைச் செயலுக்குக் காரணம் என்பதில் ஐயமில்லை. இருவகை மடமைகள் இன்னொரு வகையில் சொல்லப்போனால், தீமை செய்பவர் பெரும்பாலார் கருத்தில் இன்பம் நல்லது, விரும்பத் தக்கது என்ற எண்ணம் நிலவுவது காணலாம். சமுதாய நீதிக்கு மேலாக, மனச்சான்று நீதிக்கு மேலாக, அவன் ஒரு நீதி வகுத்துக் கொள்கிறான். இன்பம் நல்லது, விரும்பத்தக்கது, ஆகவே அதனை நுகர்க என்பதே அந்த நீதி. அவன் அறியாமையின் வடிவம் இதுவே. ஏனெனில் புற உலகின் இன்பமும் துன்பமும் வேறல்ல, ஒன்றே என்பதை அவன் அறியமாட்டான். ஆகவே, இன்பமில்லாமல் துன்பத்தையோ, துன்பமில்லாமல் இன்பத் தையோ அடைய முடியும் என்று அவன் கருதுகிறான். இது மடமையாகும். இன்பத்தின் மறுதிசை துன்பம். துன்பத்தின் மறுதிசை இன்பம். ஒன்று வரின் மற்றது தொடராமலிராது. இரண்டாவதாக, செயல்கள்பற்றிய மெய்ம்மையின் அமைதியும் அவனுக்குத் தெரியவராது. செயல்களால் துன்பம் நேரும்போது, தன் தவறுகளினால் மட்டுமே தனக்குத் துன்பம் வர முடியும் என்ற செயல் மெய்ம்மை அவனுக்குத் தெரியாது. அது தன் தவறுகளால் வந்தது என்றும் அவன் என்றும் கருதுவ தில்லை. அது மற்றவர்களின் தவறுதலாலேயே வந்திருக்க வேண்டும் என்று அவன் முடிவுகட்டுகிறான். மற்றவர் எவர் தவறுதலையும் கட்டிக்காட்ட முடியாத போதுகூட, அவன் சூழ்நிலைகளைத் துருவி அதிலோ அல்லது அது கடந்த ஊழ், விதி என்பன போன்ற மாயத் தெய்விக ஆற்றல்களிலோ அத்தவற்றின் பொறுப்பைச் சுமத்தவே முனை கிறான். தன்னை மட்டுமே அவன் இதில் தொடர்பு படுத்திக் கொள்ள முனைவதில்லை. ஒருவன் துன்பத்துக்கு அவன் தீமையே, அவன் தவறே காரணம் என்ற செயல் பற்றிய அடிப்படை உண்மையை அறியா மடமை காரணமாகவே இன்பம் நாடும் மனிதன் உண்மை இன்ப வழியில் செல்லாமல் போகிறான். தான் நாடும் இன்பம் போலி இன்பமென்பதோ, தன் தவறுகள்தான் துன்பந்தருகின்றன என்பதோ, அந்தப் போலி இன்பம் நாடியதுதான் தன் தவறு என்பதோ அவனுக்குத் தெரியாமலே இருக்கிறது. இந்த மறை தெய்விக அமைதி காணும் வரை அவன் இன்ப நாட்டம் அவனைத் துன்பங்களிலேயே மேன்மேலும் சுழலவிடும். இன்பத்தின் திசையில் செல்லவிடாது. மடமையின் போலிவாதப் போர்வை: முதற் சான்று செயல் மடமைக்கு ஒரு சான்று கூறலாம். தீய பழக்கம் ஒன்றுக்கு ஆளான ஒருவன் ஒரு பெரியாரை அடுத்து அது பற்றிய விளக்கம் கூற முனைந்தான். ‘அது கெட்ட வழக்கம் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அதனால் எனக்கு நலமே கிடையாது. தீமைதான் ஏற்படுகிறது - இதையும் அறிவேன்’ என்றான். ‘அது கெட்டது என்றும் தீமை தருவது என்றும் தெரிந்தால், அதன் பின்னும் ஏன் தொடர்ந்து அதைப் பின்பற்றுகிறீர்கள்’ என்று கேட்டார் பெரியார். அவன் மறுமொழி விசித்திரமானது, மேற்கூறிய உண்மையை விளக்குவது. ‘அது செய்வதற்கு இன்பகரமாயிருக்கிறது. அது எனக்குப் பிடிக்கிறது’ என்றான் அவன். இந்த மனிதன் விளக்கத்தில் ஒரு சொல் தவறானது, அவன் மடமையைக் குறிப்பது. அது கெட்ட வழக்கம் என்பது எனக்குத் தெரியும் என்று சொன்னான். தெரியும் என்பது போலிக்கூற்று. அது கெட்டது என்று உண்மையில் அவன் அறியவில்லை. தெரியும் என்று அவன் கூறியதற்குப் பொருள், தான் கருதிய பொருள் கெட்டது என்று பிறர் கூறுகிறார்கள் என்பதே. கெட்டது என்று பிறர் கூறுகிறார்கள் என்பதே. கெட்டது என்று அவன் தானாகக் கருதவுமில்லை; தன்னளவில் அது கெட்டது என்பது அவனுக்குத் தெரியவும் தெரியாது. பிறர் கெட்டது என்று கூறியதை அறிந்ததனாலேயே, அது கெட்டது என்பதைத் தான் அறிந்ததாகவோ அல்லது அவ்வாறு நம்பியதாகவோ அவன் கருதியிருக்கக் கூடும். ஆனால் உள்ளூர அதை நல்லது என்று அவன் கருதியதனாலேயே, துன்பந் தருவது என்று கூறப்பட்டாலும் அதைச் செய்வதிலேயே இன்பம் உண்டு என்று அவன் உறுதி கொண்டான். இதை அவன் கடைசி வாசகம் பச்சையாகக் காட்டுகிறது. தன் இன்ப வாழ்வுக்கும் நலத்திற்கும் உகந்தது அது என்று கருதியதனாலேயே பிறர் உரையையும் அது தரும் தீமையையும் மீறி அது செய்வதில் அவன் மகிழ்வு கொள்ள முடிந்தது. அறிவு அனுபவத்தின் பயன் ஒரு செயல் கெட்டதென்று ஒருவன் உண்மையிலேயே அறிவது எப்போது? அவன் அதை அனுபவத்தால் அறிந்தவனாதல் வேண்டும். தீய செயலைச் செய்யும் ஒவ்வொரு தடவையும் அவன் தன் உடலையோ உளத்தையோ அல்லது இரண்டையுமோ கேட்டுக்கு உள்ளாக்கிக்கொள்ள நேருமென்பதை அவன் நீடித்த முன் அனுபவத்தால் அறிந்திருக்க வேண்டும். இக் கேடுகள் ஒவ்வொன்றும் தனிக்கேடுகளல்ல, தனித்தனி சங்கிலித்தொடர் போன்ற தீமையின் கோவைகளுக்குரிய தொடக்கத் தலைப்பே என்பதையும் அவன் நடைமுறையில் கண்டிருத்தல் அவசியம். இத்தகைய அனுபவ அறிவு பெற்றவன் அவற்றைத் திரும்பச் செய்ய எண்ணாதது மட்டுமல்ல. செய்யவிரும்பவும் மாட்டான். அவற்றின் மீது முன்பு இருந்த விருப்பம் அனுபவ அறிவினாலும் துன்பம் பற்றிய நீடித்த சிந்தனையினாலும் சுட்டெரிக்கப் பட்டிருக்கும். உண்மையில் சிந்தனையின் பயனாக, முன்பு அதில் இருப்பதாக அவன் கருதிய துன்பம்கூட, அதன் உண்மை உருவில், துன்பமாகக் காட்சியளிக்கும். அழகான பல்வண்ணப்புரி இழை என்று கருதிச் சிறு பிள்ளையாயிருக்கும்போது ஒருவன் எடுத்து விளையாடக் கருதிய சங்கிலிக்கருப்பன் பாம்பை எண்ணி, வளர்ந்தபின் அவன் எத்தகைய உணர்வு பெறுவானோ - அதையே அப்போலி இன்பத்தை எண்ணும்போது அனுபவ அறிவுடையவன் அடையான். சிறுகுழந்தை விரும்புவதுபோல நச்சுப் பாம்மை எடுத்துச் சட்டைப்பையில் போட்டுக்கொள்ள எந்த வளர்ந்த மனிதனும் விரும்பமாட்டான். தீயசெயலால் விளையும் தற்காலிக இன்பங்கள் குழந்தை சங்கிலிக்கருப்பனைச் சங்கிலி என்று கருதி விளையாட எண்ணும் மடமை இன்பம் போன்றதே. அந்த அழகுத் தோற்றத் துக்குள் சாகடிக்கும் கொடிய ஆற்றலுடைய நச்சுப்பல் மறைந் திருக்கிறது என்பதை வளர்ந்த மனிதன் அறிவதுபோல், அனுபவ அறிவாளன் அப்போலி இன்பத்துக்குள் மறைந்துள்ள துன்ப விளைவை உணர்வான். தீய செயல்கள் மட்டுமல்ல, தீய கருத்துக்கள், தீய அவாக் களின் பகட்டான பல்வண்ணங்களுக்கிடையே மறைந்திருக்கும் கொடுநஞ்சை அனுபவ வாயிலாக அறிந்தவன் மீண்டும் அதைச் செய்ய விரும்ப மாட்டான். ஏனெனில் முன் அவன் காட்டிய விருப்பமே, முன் அதில் அவன் எதிர்பார்த்த இன்பமே இப் போது தன் மெய்யான முழுமையான கோர வடிவம் காட்டி அவனை எச்சரித்து அதிலிருந்து துரத்திவிடப் போதியது. இரண்டக வாழ்வு: இரண்டாவது சான்று வாணிக முயற்சியிலீடு பட்டிருந்த இளைஞனொருவன் ஒரு வழிபாட்டுக் கூடத்திலும் உறுப்பினனாய் இருந்தான். அக் கூடத்தில் அவனே சமயக்கருத்து விளக்கம் அளிக்கும் போதக னாகவும் உயர்வு பெற்றான். அவன் சமய அறிவும் சமய வாழ்வும் அந்த அளவுக்கு உயர்வுடையதாயிருந்தது. அவை அவனை உயர்த்தின. ஆனால் வாணிக முயற்சியை அவன் முன்போலவே செய்து கொண்டிருந்தான். சமய வாழ்வில் அவன் மேற்கொண்ட ஒழுக்க முறைக் கட்டுப்பாட்டை, வாய்மையை, அருளிரக்கத்தை அவன் இந்த வாணிகக் களத்தின் எல்லைக்குள் கொண்டுவரவில்லை. கொண்டுவர எண்ணவும் இல்லை. சமய உடுப்பைக் கழற்றி வைத்துவிட்டு வாணிக உடுப்பைப் போட்டுக் கொள்ளும் முறையிலேயே, அவன் வழிபாட்டுக் கூடத்தில் வாய்மையை மேற்கொண்டு, அதை விட்டு வாணிகக் களத்துக்கு வந்தவுடன் வாய்மையைக் கைவிட்டுப் பழைய சூழ்ச்சி முறைகளை எளிதில் மேற்கொண்டான். அதுபோலவே வாணிகக் களத்தில் சூழ்ச்சி முறைகளை மேற்கொண்டு, அதைவிட்டு வழிபாட்டுக் கூடத் துக்குப் போனவுடனே அம்முறைகளைக் கைவிட்ட வாய்மையை மேற்கொண்டான். இதை அவன் இயற்கையானது, இயல் பானது, நேர்மையானது என்று கருதினான். சூழ்ச்சியும் பொய்ம்மையும் வஞ்சகமும் வாணிக முயற்சிக்கு மட்டும் இன்றியமையாதவை, அவை இராவிட்டால் வாணிகம் கட்டாயமாக அழிவுற்றுவிடும் என்றும் அவன் நம்பினான். ‘பொய்ம்மை தவறான பண்புதான். இது எனக்குத் தெரியும். ஆனால் வாணிகத் துறையில் நான் இருக்குமளவும் அதைத் தொடர்ந்து கட்டாயமாக மேற்கொள்ளத்தான் வேண்டியிருக் கிறது. அதை விட்டுவிட வழியேயில்லை’ என்று அவன் ஒரு பெரியவரிடம் கூறினான். பெரியவர் புன்முறுவலுடன் அவ னிடம் குறுக்குக் கேள்விகள் கேட்டார். பெரியவர்:- வாழ்விலே பொய்ம்மையில்லாமல் வெற்றி காண முடியாது, வாழ முடியாது என்று பலர் கருதுகிறார்களே! அது பற்றி உங்கள் கருத்து என்னவோ? இளைஞர்:- வாய்மையுடன் வாழ்ந்து நான் வெற்றி கண்டு விட்டேன். ஆகவே அனுபவ பூர்வமாகவே அறிவேன். வாய்மை யுடன் வாழமுடியுமென்பதில் அதன் மூலம் வெற்றி பெற முடியுமென்பதில் எனக்கு அசைக்க முடியாத உறுதி உண்டு. பெரியவர்:- மகிழ்ச்சி வாய்மையுடன் வாழ்ந்து பழகி அனுபவமடைந்ததுபோல, வாய்மையுடன் வாணிகம் செய்து பழகியதுண்டா? இளைஞர் மௌனம் சாதித்தார். ‘ஒரு தடவையாவது வாய்மையுடன் வாணிக நடவடிக்கை மேற்கொண்டு அதன் நன்மை தீமைகளைப் பார்த்ததுண்டா?” என்று பெரியவர் மீண்டும் கேட்டார். இளைஞர் மௌனம் கலையவில்லை. முகம் சுண்டிற்று. ‘வாய்மையை வாணிகத்தில் பயன்படுத்தித் தேர்வு முறையாகவாவது செய்து பார்க்க வேண்டுமென்று நீங்கள் எண்ணியதுண்டா? இளைஞர் மௌனம் இப்போது ஒருவாறு கலைந்தது. ‘இல்லை. முயன்றதுகூட இல்லை’ என்றார். வேறு வழியைத் தேர்வுமுறையில் தேர்ந்து பார்க்கக்கூட எண்ணாமல், அது தவறான வழி என்று பலர் ஆராயாமலே உறுதிகொண்டு, ‘தெரியும்’ என்று கூறும் இந்த மடமையிலும் தலை சிறந்த மடமை வேறு கிடையாது. அதைவிட அழிவுதரும் பண்பு வேறில்லை. ஆராயா முடிபு அறிவு, அனுபவ முடிவல்ல, அக உள்ளத்தின் முடிவல்ல ஆராயா முடிவு என்பது உள்ளத்தின் ஆழத்தில் ஏற்பட்ட முடிவு என்பதில் ஐயமில்லை. ஆனால் அது அறிவுள்ளத்தின் ஆழத்தில் எழுந்த முடிவன்று. மடமையுள்ளத்தின் ஆழத்தில், அதன் அனுபவத்தில் ஏற்பட்ட முடிவேயாகும். ஆகவே இளைஞன் வாய்மை நன்று என்று கருதுவது அவன் புற உள்ளத்தின் பசப்பே. அவன் அக உள்ளம் பொய்ம்மையே சரியானது, உண்மையான வெற்றி தருவது என்றும்; வாய்மை தவறானது, தோல்வி தருவது என்றும் நிலையாக நம்பியிருந்தது - ‘தெரியும்’ என்ற அவன் சொல்லில் பொதிந்துள்ள மறை மெய்ம்மை இதுவே. இளைஞன் வாணிகத்தில் பொய்ம்மை அவசியம் என்று கருதியவன் மட்டுமல்ல, வாழ்வில் பொய்ம்மை அவசியம் அல்ல என்று கண்டவன்கூட அல்ல. வாழ்வில் வாய்ம்மையைப் பின் பற்றி வெற்றிகள் கண்டதாக அவன் கூறியது, எண்ணியது முற்றிலும் போலிக் கூற்று,போலி எண்ணமேயாகும். ஏனெனில் வாழ்க்கை என்பது கூறு கூறாகப் பிரித்துக் காணத்தக்க ஒன்றேயன்றி, கூறுகூறான ஒன்றல்ல. அது ஒரே முழுமொத்தம். அதில் ஒரு கூற்றில் வாய்மையும் மறுகூற்றில் பொய்ம்மையும் வெற்றி தரும் என்று கூறுவது பொருந்தாக்கூற்று. ஒரு கூற்றில் அவ்வெற்றியை அவன் உண்மையாகக் கண்டிருந்தால், மற்றக் கூறுகளில் அதைத் தேர்ந்து பார்க்கக்கூட எண்ணாதவனாக அவன் இருந்திருக்க முடியாது. மேலும் தவறு என்பதை இளைஞன் உணர்ந்ததுகூடக் கேள்வி முறையாலேயே, அவன் அனுபவ வாயிலாக அன்று! உண்மையான, ஆழ்ந்த பொருளில் தீமை தவறானதென் பதையோ, வாய்மையே இன்பம் பொங்கும் பண்பு என்பதையோ அவன் ஒரு சிறிதும் அறிந்ததில்லை. பொய்ம்மை தவறானது என்ற நீதி போதனையை அவன் புற மனம் வாங்கி அதை மனச்சான்றாகப் புறமனத்தின் புறத்தே கொண்டிருந்தது; வாய்மை, பொய்ம்மை பற்றிய நீதிக்கும் அவனுக்கும் உள்ள தொடர்பு அவ்வளவுதான். அவன் வாழ்வு அம் மனச்சான்றைக்கூடத் தனக்கேற்பத் திரித்துக் கொண்டது. வாய்மை நன்று என்பதை அவன் தன் பண்புச் சூழலுக்கேற்ப மொழிபெயர்த்துக் கொண்டான். வாய்மை ஆதாயம் தருவது, செல்வ வளமும் சமுதாய உயர்வும் தருவது. ஆகவே நன்று என்பதே அவன் உளங்கொண்ட பொருள். அதன்படியேதான் வாய்மையைப் பகட்டாக மேற்கொண்டு, அதனால் மதிப்பும் வருவாயும் வரும் துறைகளில் அதைப் பின்பற்றி, அவ்வளவு மதிப்பும் வருவாயும் தராமல், இழப்புத் தருவதாக அவன் கருதிய துறைகளில் அதை ஒதுக்கி வைத்தான். இத்தகைய கீழ்த்தரமான தன்னலச் சிறைக்குள் இருந்து கொண்டு, வாய்மையின் பேரொளியை ஒருவன் கனவு காண்பதுகூட முடியாது. ஏனெனில் வாய்மை நலந்தருவது என்றால் அது பின்பற்றுபவனுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே. இந்த உண்மையான பொதுநல வாய்மையை உணராமலே தன்னலவாணன் வாழ்கிறான். அவன் மடமை பொதுநிலை அறியாமை மட்டுமல்ல, அதைவிட இருண்ட தன்மயக்க மடமை ஆகும். அவன் வாய்மையின் திசை திரும்பாதவன் மட்டுமல்ல, வாய்மையின் திசையில் திரும்ப முடியாத தட்டி ஒன்றை வைத்து அதை மறித்தவன் ஆவான். வழிமறைக்கும் தட்டிகள், ஒளிபரவாச் சந்துபொந்துகள் தீய பழக்கத்துக்கு ஆளாய், அது தீமையென்று தெரிந்தும் விரும்பி மேலும் பின் தொடர்ந்த மனிதனைப் பற்றி மேலே பார்த்தோம். வாய்மையின் உயர்வு தெரிந்தும் அது இன்றி யமையாததன்று என்று கருதி அதை மேற்கொண்ட இளைஞனைப் பார்த்தோம். தெரிந்து மடமையை ஏற்கும் இரட்டை மடமைக்கு இவ்விரண்டு சான்றுகளும் போதியவை. வாய்மையைத் தேடி அதை அடையும் வழி நாடி மயக்கம் தயக்கம், ஐயம், குழப்பம் அடைபவர்களுக்கு இவ் விரு சான்றுகளும் எச்சரிக்கைக் கற்கள் ஆகும். தீய பழக்கங்கள், பொய்ம்மை ஆகியவை பற்றிய இதே விளக்கங்கள் எல்லாப் பழிகளுக்கும் பொருந்தும் - சிற்றின்ப வேட்கை, வெறுப்பு, பகைமை, பொறாமை தற்பெருமை, செருக்கு, தன்நெகிழ்வு ஆகிய எல்லாத் தீங்குகளுக்கும் தன்னலத்தின் எல்லா உருவங்களுக்கும் பொருந்தும். எல்லாப் பழிகளும் உள்ளத்தில் நிலவும் ஆன்மிக இருளின், மடமையின் அறியாமை யின் பரவவொட்டாமல் தடுக்கும் ஒவ்வொரு சந்து பொந்து, மூலை முடுக்குகளே. இந்த இருள் பொதுவாக அறியாமை வடிவிலும், சிறப்பாகச் செறிவுற்ற இடங்களில், ஆராயா நம்பிக்கைகளாகவும் காட்சியளிக்கிறது. இன்ப துன்ப அனுபவங்களில் புத்தறிவு நாடுவதன் மூலமும், ஆராயா நம்பிக்கைகளை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி அக உணர்வு கொளுத்துவதன் மூலமுமே ஒருவன் தன் இதயத்தில் நிலவும் தீமையின் இயல்பை உள்ளவாறு உணர முடியும். நம்பிக்கை சார்ந்த அறிவு, கேள்வி முறை சார்ந்த அறிவு ஆகிய இரண்டும் அனுபவ அடிப்படையான அறிவு, ஆராய்ச்சி அடிப்படையான அறிவு ஆனபின், ஒருவன் புறத்தீமைகளைக் கண்டிக்க முற்பட மாட்டான். அவற்றைத் தீமை என்று கருதவே ஒருப்படமாட்டான். தீமை செய்பவனையும் தீயவன் என்னாது அனுபவ அறிவற்றவன் என்ற முறையில் அவனை உயிர் மலர்ச்சியில் பிள்ளைப் பருவத்தினனாகக் கருதி அவன்மீது அன்பிரக்கமும் அருட்பாசமும் கனிவும் மட்டுமே கொள்வான். உரிமை, கடமை: பண்பின் பொங்கல் வளம் தீமையின் கடைசிக் கூறாக ஒன்றை நாம் இப்போது ஆராய வேண்டும். அதுவே தனிப்பட்டவன் உரிமை என்பது. ஒவ்வொரு மனிதனுக்கும் தான் செய்வதற்குரிய செயலைத் தேர்ந்துகொள்ளும் உரிமை உண்டு. அதுபோல அந்தச் செயலின் பயனை, தன் தேர்வின் பயனை, முழுதும் தானே பொறுப்புடன் ஏற்று, அவற்றின் அடிப்படையில் அடுத்த தேர்வை அமைத்துக் கொள்ளும் கடமையும் அவ்வுரிமையாலேயே ஏற்படுகிறது. இது அகப் பண்புகளை உருவாக்கும் அகக்கடமை, அக உரிமை வளர்ப்பதும் இதுவே. இந்த அக உரிமை, அகக்கடமை இரண்டும் சேர்ந்தே புற உலகில் தன்னுரிமை ஆகின்றன. இதற்கேற்ப ஒரு புறக் கடமையும் உண்டு. தன் செயலைத் தானே தேர்ந்துகொள்ளும் உரிமை, தன் அகப் பண்பைத் தானே ஆக்கிக்கொள்ளும் உரிமை தனக்கிருப்பதுபோல, பிறருக்கும் உண்டு என்பதை அவன் உணர வேண்டும். அதில் அவன் தலையிடக் கூடாது. தலையிட்டால், அதுவே தவறு, தீமை, பழி ஆகிய எல்லாமாகும். இவற்றிலிருந்து விலகிய அளவே அவன் தன்னுரிமை பயன்படும். அதுமட்டுமன்று, அத்தன்னுரிமையின் முழுநிறை பயனையும் அவன் நுகர வேண்டுமானால், தன் உரிமையைத் தான் பயன்படுத்துவதுடன், பிறர் உரிமையை ஊக்கும் வகையில் அவ்வுரிமையைக் கையாளவும் வேண்டும். இதுவே தற்பண்பு ஆகும். தன்னுரிமையை மன்னுரிமையாக்கி வளம் பெருக்கும் பொங்கற் கூறு இதுவே. பிறரிடம் தீமை காண்பது தவறு. அது மன்னுரிமையில், பிறர் தன்னுரிமையில் தலையிடுவது ஆகும். அதுபோலவேதான் பிறர் கருத்துக்களை மாற்றவோ பிறரைத் தன் கருத்துக்குக் கொண்டு வரவோ முயற்சி செய்வதும் தவறு, மன்னுரிமையில் தலை யிடுவது, அதைச் சிதைக்க முற்படுவது ஆகும். தாம் நம்புவதைப் பிறரும் நம்ப வேண்டும், நாம் கருதுவதே பிறரும் கருத வேண்டும் என்று விரும்புவது போன்ற அநீதி வேறில்லை. தாம் நல்லன என்று நம்புபவற்றைப் பிறரும் அவ் வாறு நம்ப வேண்டுமென்று கருதுவது அநீதி முறைப்பட்ட அநீதி ஆகும். இது இரட்டை அநீதி. கண்டிக்க வேண்டிய ஒன்று உலகில் உண்டெனில் அஃது இதுவே! கடவுட் பண்புக்கு எதிரான கருமகன் பண்பு ஒன்று உண்டானால் அது இதுவே! ஆயினும் இதுவே பல இடங்களில் மிகப் பெரும்பாலாரால் பண்பாகக் கருதப்படுகிறது. ஆத்திக நாத்திக வாத எதிர்வாதக் கேடுகள் தாம் நம்புவதைப் பிறர் நம்பாததற்காக அவர்களைத் தீயர் என்பதுடன், கண்டிப்பதுடன் நில்லாமல், அவர்களை அழிக்கவே முற்படுகின்றனர், பல கிறித்தவர்! கிறித்து பெருமானின் பெயரால், அதையே கிறித்து பெருமான் பண்பு என்று கூறிக் கொள்கிறார்கள். தம்மிடமிருந்து ஒரு சிறிது மாறுபட்டவர் களையும் அவர்கள் நாத்திகர்கள், முழுப் பழிகாரர்கள், கடவுட் படைப்புக்கு மாறான கருமகன் படைப்பாளர்கள் என்றே கூறித் தாக்கத் துணிந்துவிடுகிறார்கள். இவர்களைப்போலவே பல நாத்திகர்களும் உள்ளனர் - அவர்களும், ‘கிறித்தவர்களால்தான் உலகம் கெடுகிறது, பல மூட நம்பிக்கைகளையும், போலிக் கோட்பாடுகளையும், குருட்டுப் பழக்க வழக்கங்களையும் கிறித்தவர்கள்தாம் பரப்பி மனித இனத்தைக் கெடுக்கிறார்கள்’ என்று நம்புகின்றனர். நம்பி ஓலமிடுகிறார்கள். இவ்வாறு இரு கோடிகளிலுமிருந்து ஓலமிடும் இவ்விரு சாராரும் - அருளாளரென்று தருக்கிக்கொள்ளுபவர்களும், அறிவாளிகளென்று செருக்கிக் கொள்ளுபவர்களும் - இருவருமே வாய்மைவழி, பண்புவழி வாழக் கற்றுக் கொண்ட வர்களல்ல. இருவருமே தாக்குதலால் தாம் குறிக்கொண்ட பண்புகளின் எதிர்ப் பண்புகளை வளர்ப்பது ஒன்றே அவர்கள் தருக்கம் செருக்கம் பயனற்றவை என்பதைக் காட்டும். கிறித்தவ வெறியர்கள் ஓலத்தினால், நாத்திகர்கள் குறைய வில்லை. பெருகுகிறார்கள். நாத்திகர்கள் கூக்குரலால் கிறித்தவ வெறியர்கள் குறைபடவில்லை, பெருக்கமடைகிறார்கள். இரு சாராரும் பண்பு வளர்த்திருந்தால், இருவரிடமும் உள்ள நற்பண்புகள் பரவியிருக்கும். ஏனெனில் இரு சாராரிடத்திலும் உள்ள தீய பண்புகளையே. கிறித்தவ ஆத்திகரும் நாத்திகரும் மட்டுமல்ல, ஆத்தி கருக்குள்ளேயே ஒவ்வொரு சமயத்தவரும் மற்றச் சமயங்களைத் தீமை வழிகள் என்றும் நாத்திக வழிகள் என்றும் கூறிப்பழித்தே வருகின்றனர். அதே சமயம் ஒவ்வொரு சமயமும் தன் வழியே வாய்மை வழி, உண்மை ஆத்திக வழி என்றும் தருக்கிக் கொள்கின்றது. இவ்வெதிர்ப்புகளால் சில பழங்காலச் சமயங்கள் அழிந்தனவென்றால், அவற்றின் இனங்கள், நாகரிகங்களும் அழிந்தன. நாகரிக சமுதாயத்தில், நாகரிகம் சமநிலையடையுந் தோறும், இச்சமயங்களைப் பின்பற்றுபவர் நாகரிக மேம்பாடு, ஆட்சி ஆதிக்கம், இன ஆதிக்கம், செல்வம், ஆற்றல் ஆகியவை யன்றி, இச்சமயங்களின் வெற்றிக்கோ பரப்புக்கோ வேறு காரணம் கூற முடியாது. கடவுள் உலகுக்கெலாம், மன்னுயிர்க்கெலாம், இயற்கை முழுவதற்கும் உரியவர் என்பதை ஏற்றுக்கொண்டு, கூக்குர லிட்டுக் கூவிக்கொண்டு, அக்கடவுட் பண்புடைய உலக முதல்வரின் பெயரையே சுட்டிக்கொண்டு, உலகைப் பிரித்தும், உலகில் அழிவு பரப்பியும், போட்டி பரப்பியும் வரும் இச் சமயவாதிகள் பின்பற்றும் முறைகள் கேலிக்குரியவையாகும். ஏனெனில் அவர்கள் உரத்துக் கூவும் ஒரு கடவுள், ஓருலகக் கொள்கைக்கே அவை முரண்பட்டவை. தம்மை நல்லவர் என்றும், உயர்ந்தவர் என்றும் பிறரைத் தீயவர்கள் என்றும் தாழ்ந்தவர்கள் என்றும் கூறும் ஒவ்வொரு சமயத்தாரையும் மற்றச் சமயத்தார் தீயவர் என்றும் தாழ்ந்தவர் என்றுமே கருதுகிறார்கள். இதிலிருந்தே தம்மை நல்லவர் என்று முடிவு செய்வதும், பிறரைத் தீயவர் என்று முடிவு செய்வதும் அறியாமைக்குரிய இழிந்த செயல்கள் என்று காணலாம். உண்மையில் அறியாமை தவிர ஆன்மிக இருள், தீமை வேறு இல்லை. அறியாமை எங்கிருக்கிறதோ அங்கேதான், தாம் நல்லவர், பிறர் தீயவர் என்ற எண்ணம் எளிதில் உண்டாகும். அறியாமை யுடையவனே அகத்தே எல்லாம் நல்லனவாகக் கண்டு, புறத்தே எல்லாம் தீயனவாகக் காண்பான். அறிவின் வழி இதற்கு மாறானது. அது தீமையை அகத்தே தேடும். புறத்தே யாவும் நல்லன என்று கருதும். புறத்தே உள்ள தீமையைத் தீமை என்றே கருதாததனால், அது தீமைகள் யாவற்றையும் தனதெனக் கொண்டு திருத்திவிடும் தன்மையுடையது. இந்த இயல்பை அன்பு, அறச்சிந்தனை, நுண்ணோக்கு, அருள், அகல மனப் பான்மை ஆகிய பண்புகள் வளர்ப்பதனாலேயே நாம் அவற்றைத் தெய்வீகம் என்று கூறுகிறோம். தனி மனிதன் தன்னுரிமையே காரணகாரியத் தொடர்பின் அடிப்படை மெய்யறிவாளன், நல்லான் எல்லாவற்றிலும் நன்மை காண் கிறான். நாடுகிறான். தீமை காண்பதில்லை. நாடுவதில்லை. பிறர் தான் எண்ணுவதுபோல எண்ண வேண்டுமென்றோ, செய்வது போலச் செய்ய வேண்டுமென்றோ அவன் கருதுவதில்லை. ஏனெனில் உடற்கட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் ஆக்கப்பட்டிருப்பதுபோலவே, உள அமைதியிலும் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு படிமுறையில் உள்ளவர்கள் ஆவார்கள். அவரவர்கள் உடலாக்க உள ஆக்கத்தின்படி, அவரவர்கள் உயிர் மலர்ச்சிப்படி ஆகியவற்றை யடுத்தே ஒவ்வொருவரும் ஒவ் வொரு வகையில் எண்ண முடியும், செயலாற்ற முடியும் என்பதை அவன் அறிவான். வெறுப்பு, கண்டனம், தற்செருக்கு, தற்கோட்டம் ஆகிய வற்றை விடுத்து, அக உணர்வொளியுடையவன் புறத்தே ஒளி காண்பான். ஒளிபரப்புவான். அகத்தீமையின் கூறுகளாகிய தூய்மைக்கேடு, வெறுப்பு, கொடுமை, உணர்ச்சி வெறி, சீற்றம், தற்பெருமை, தன்னலம் ஆகியன அவனுள் அகன்று அவனைச் சூழப் புறத்தேயும் தீமைகள் அகற்றும். அதே சமயம் அகத்தில் உலவும் அவன் அகப் பண்புகளாகிய தூய்மை, அன்பு, அரு ளிரக்கம், மெல்லியல்பு, பொறுமை, தற்பணிவு, தன்னலத்துறப்பு ஆகியவை உலகில் அறிவொளியும் இன்ப ஒளியும் பரப்பும். மற்ற மனிதர் செயலைப் பற்றி அவன் கருத்துச் செலுத்த மாட்டான். ஏனெனில் அவரவர் உள்ளப் பண்புக்கேற்றபடி, அவரவர் உள்ளத்தின் அறிவொளி, அறியாமை இருளுக் கேற்பவே அவர்கள் செயல் சூழ்வர். அவன் செய்யக் கூடிய தெல்லாம், செய்வதெல்லாம், அவர்கள் புறச் சூழல்களைத் தன் அகச் சூழலால் மாற்றுவதால், அவர்களும் தம்மையறியாமல் ஒளி நோக்கிப் படிப்படியாக விரைய உதவுவதேயாகும். நேர்மை, நேர்மைக்கேடு, நன்மை, தீமை ஆகியவற்றின் வேறுபாடுகள், அளவுகள், ஒவ்வொரு மனிதர் வகையிலும் அவரவர் படிகளுக்கேற்ப ஒவ்வொரு வகைப்படும். அவ்வப் படிகள், வகைகள், அளவுகள் அவரவர் நிலைக்கேற்ற பயன்களே தரும். அனுபவத்தாலேயே ஒவ்வொருவரும் வாய்மை வழி நோக்கி ஒவ்வொரு படியும் முன்னேற முடியும். ஆனால் எல்லாருக்குமுரிய பொது நேர்மை ஒன்று உண்டு. அதுவே தன்னுரிமை. தான் விரும்பியபடி எண்ணும் உரிமையும் செயல் செய்யும் உரிமையும் ஒவ்வொருவருக்கும் உண்டு. அதை அடிப்படையாகக் கொண்டதே உலகின் காரணகாரிய நிகழ்ச்சி. தன்னுரிமையை ஒருவன் தன்னலப் படிகளில் நின்று, பிறர் இன்பம் நாடாமல் தன் இன்பம் மட்டுமே நாடிப் பயன்படுத்தினால், இந்தக் காரண காரியப் பேரமைதியின் தண்டனையை அவன் தன் தலைமீது தானே இழுத்துக் கொள்கிறான். ஆனால் அத்தண்டனைகள் துன்ப வடிவாகவே வருவதால், அவை அக் காரணகாரியப் பேரமை பற்றிச் சிந்திக்க அவனுக்கு ஓய்வும் வாய்ப்பும் தருகிறது. இவ் ஓய்வும் வாய்ப்புமே அனுபவத்தின் அடிப்படை. அது அவனுக்கு உயிர் மலர்ச்சியில் முன்னேறுவதற்குரிய படிப்பினைத் தருகிறது. துன்பம், ஓய்வின் வாய்ப்பு, சிந்தனை, சிந்தனையின் படிப்பினை - இந்த வரிசையில் அமையும் அனுபவ அறிவைப் போன்ற ஆன்மிக நல்லாசான் வேறு கிடையாது. மனிதர் அறியாமையால் தம்மீது சுமத்திக் கொள்ளும் தண்டனையையே இயற்கை இவ்வாறு அவர்களைத் திருத்தித் தூய்மைப்படுத்தி ஒளிகாட்டும் நல்லாசான், நல்லறிவுப் போதகர் ஆக்கிவிடுகிறது. எல்லாம் வல்ல கடவுள் முழுநிறை அருளாளராகவும் இருந்து, தீமையகற்றி நலம் செய்கிறார் என்ற சமயப் பேருண்மையின் உட்பொருள், மறைதிறவு இதுவே. அறிவின் இன்மையாகிய அறியாமையன்றித் தீய பண்பாக அறியாமை என்ற ஒன்று கிடையாது. ஏனெனில் அறியாமை என்பதெல்லாம் உண்மையில் தன்னலத்தாலும் அதன் விளைவு களாலும் ஏற்படும் இயற்கை அமைதி பற்றிய தற்காலிக அறியாமையே. அறியாமை வளர்ந்து செல்லும்போதுகூட, அது அறிவை விட்டு நெடுந்தொலை செல்வதில்லை. ஏனெனில் அது அறிவைவிட்டுச் செல்லுந் தொலைக்கேற்பத் துன்பமும் பெரிதாகிறது. துன்பம் பெரிதாவது விரை திருத்தம் நோக்கியே. தன்னலவாணன் பிறர்பற்றிக் கவலைப்படாததுபோல, இயற்கை பற்றியும் கவலைப்படாது துன்பம் பெருக்கிக் கொள் கிறான். எந்த நேரத்தில் துன்ப காரணம் தன்னலம் என்று அவன் கண்டு கொண்டானோ, அந்தக் கணமுதல் அறிவு நோக்கிய அவன் பயணம் விரைவாகி விடுகிறது. ஏனெனில் துன்பத்தினளவு அதன் விரைவை ஊக்கும் அனுபவத்தின் அளவாகிறது. உண்மையான தீர்ப்பு உணர்ச்சியின் தீர்ப்பல்ல, அறிவின் தீர்ப்பல்ல - அன்பின் தீர்ப்பே! துன்பத்தால் பண்பட்டுத் தன்னலமிழந்த மனிதனே நல்ல மனிதன். அவனே மெய்யுணர்வாளன், மெய்யறிவுடையவன். அவனும் எல்லாரும் ஒப்பத் தன் வழியைத் தானே தேர்ந்து கொள்பவனே. ஆனால் அவன் வழி அறிவுக் கண் திறந்து கொண்டு செல்பவன் வழி. அறியாமையின் வழியும் அதன் பயனான துன்பத்தின் வழியும் கடந்து அவன் அறிவொளிக்கு இலக்காகிறான். பிறரைப் பற்றிய தன் கருத்துக்களிலே தன் தனிப்பட்ட அவாக்களை விலக்கி, அவர்களைத் தன் நிலையிலன்றி, அவர்கள் வழி நின்றே அறிந்து அவர்கள் படியில் நின்றே அவர்கள் செயலை ஒருவன் உணரும்போதுதான் தீமை பாராமை என்ற பண்பை அவன் மேற்கொள்ளத் தொடங்குகிறான். இவ்வாறு செய்யாமல் தானே இது சரி, இது தவறு என்று நன்மை தீமைக் கூறுபாடு அமைத்துக்கொள்வதனாலும், அந்தத் தன் முனைப் பான செயற்கைக் கூறுபாடுகளின் அடிப்படையில் மற்றவர் களைப் பற்றிய அவசர முடிவுகள் செய்து கொள்வதனாலும், மனிதன் தீமை என்ற ஒன்றைக் காண முடிகிறது. இது நீர் என்று எண்ணியவனுக்குக் கானல் கனலாகத் தோற்றாமல் நீராகத் தோற்றுவது போன்றதே என்னலாம். இவ்வகையில் கானல், நீர் என்ற இவற்றினும் சிறந்த உவமை பேய், மரம் என்பதே. பயந்தவன் உள்ளத்திலுள்ள பேயச்சம் இருட்டில் மரத்தின் வடிவசைவைக் கண்டு பேயென எண்ணி அலமருகிறது. இங்கே பேய் என்று புறத்தே எதுவும் கிடையாது. அதுபோலத் தீமை என்ற ஒன்று எதுவும் புற உலகில் இல்லை. அகத்தே உருவான அச்சப் பேய் புறத்தே மரத்தைப் பேயாக்கிக் காட்டுவது போல, உள்ளத்தில் உள்ள நச்சுப் பண்புகளே புற உலகில் தீமையல்லாதவற்றையும் தீமைகளாகக் காணச் செய்கின்றன. ஒருவரைப் பற்றிய உண்மையான தீர்ப்பு அறிவின் தீர்ப் பல்ல, அன்பின் தீர்ப்பே! தான் வகுத்த நன்மை தீமை வகுப்பு முறையின்படி, தன் திட்டப்படியே அறிவின் தீர்ப்பு பிறரை மதிப்பிடுகிறது. அம்முறையில் அது தம்மிடம் உள்ள நன்மை தீமைகளை அவர்களிடம் காண முடியும். ஆனால் அன்புத் தீர்ப்பு அவர்கள் நன்மை தீமை வகுப்பு முறையிலிருந்தே, அவர்கள் மனப்பாங்கிலிருந்தே அவர்களை உணர்கிறது. இத் தீர்ப்பில் அவர்களிடம் தீமையே காண முடியாது. உயிர் மலர்ச்சியில் அவர்கள் அடைந்துள்ள படியையே காண முடியும். அதிலிருந்து அவர்கள் உயர உயர, அவர்கள் அறியாமையின் புற நிழல் அகலும். இது வரையிலும் அன்புத் தீர்ப்பு ஒன்றே அவர்கட்கு உதவ முடியும். அது அவர்கள் படியை, தளத்தை உயர்த்தி, அவர்கள் சூழலை மாற்றி, அவர்கள் அகப்பண்பை உயர்த்த முயலும். அன்புத் தீர்ப்புக்குரிய அன்பு குறுகிய தன்னலச் சார்பான அன்பன்று. அது உறவு, நட்பு, இனம், நாடு ஆகிய எல்லையில் நிற்பதல்ல. கைம்மாறு கருதுவதல்ல. அது உலகளாவிய பொது நல அன்பு. இந்தத் தற்சார்பற்ற, நடுநிலைகோடாத அன்புதான் மெய்யறிவு. அதனடிப்படையில், அதன் ஒளியூடாக நாம் உலகையும் பிறரையும் உள்ளவாறு காண்கிறோம். பிறரைப் பற்றிய ஒரு முடிவுக்கு நாம் வருமுன் அது நம் காதுகளில் அம்முடிவு பற்றி நம்மை எச்சரிக்கிறது. ‘உன்னைப்போல ஒரு மனிதன்தான் அவனும்! அவனைப் பற்றி மதிப்பிட்டு முடிவு செய்ய நீ யார்? உனக்கேது அந்த உரிமை? பிறர் தீமைகளைக் காணும் உரிமை உனக்கு ஏற்படுமுன், நீ உன் தீமைகளைக் களைந்து விட்டாயா? பழிதுடைத்துத் தூய்மை யாய் விட்டாயா? தற்செருக்குடன் அவனைத் திருத்த முற்படு முன், நீ முதலில் தற்பணிவு மேற்கொள். உன் பிழைகளை முதலில் அகற்று. அதன்பின் நீ மற்றவர்களை மதிப்பிடத்தக்கவன் ஆதல் எளிது. ஏனென்றால் அவர்களிடம் பிழை இல்லை. அறியாமை மட்டும்தான் உண்டு என்று அப்போதுதான் நீ அறிவாய்!’ - இவ்வாறு அது கூறுகிறது. உண்மை மனமாற்றம்: பழிகாரிக்குப் பெரியார் காட்டிய நெறி முன்னாட்களில் பழிகேடுகளில் படுமோசமான பழி கேடுகளைச் செய்த ஒரு பெண்ணைப் பலர் சூழ்ந்து கல்லெறிந்து கொல்ல முற்பட்டு நின்றனர். அருகிலிருந்த ஒரு பெரியார் அவர்களை நோக்கிப் புன்முறுவலுடன் ஓர் அறிவுரை கூறினார். ‘இவள் பழி செய்ததற்காகத்தானே கல்லெறிகிறீர்கள்?’ என்று அவர் கேட்டார். ‘ஆம்’ என்றனர் அவர்கள்! ‘மெத்தச் சரி, உங்களிடையிலும் பழி செய்தவர்கள் இருக்கலாம். ஆயினும் தன் வாழ்வில் ஒரு பழியும் செய்யாதவனான ஒருவனே முதல் கல் எறியட்டும். அதன்பின் மற்றவர்கள் எறியலாம்’ என்றார் பெரியார். கல்லெறிய முனைந்தவர் இதை ஏற்றுக்கொண்டவர்கள் போல நின்றனர். ஆனால் எவரும் முதல் கல் எறிய முன் வர வில்லை. நெடுநேரமானபின் பெரியவர் பேசினார்: ‘உங்களில் ஒருவர்கூட ஒரு பழியும் செய்யாதவர் என்று தன்னைக் கருத முடியவில்லை. அப்படியிருக்கப் பழி செய்த இந்த அபலைமீது மட்டும் இவ்வளவு கோபம் ஏன்? கல்லெறிய முனைவது ஏன்?’ என்று கேட்டார். அவர்கள் அனைவரும் வெட்கி அப்பெண்ணை விட்டு விட்டுப் பேசாதகன்றனர். பெரியவர் பழி செய்யாதவர், தூயவர் என்பதைப் பெண் அறிந்துகொண்டாள். அவள் தன் பழிகள் நினைந்து அஞ்சி நடுநடுங்கி அவர் தாளில் விழுந்து வணங்கினாள். ‘பழியறியாத தூயவராகிய நீங்கள் எனக்கு என்ன தண்டனை வேண்டு மானாலும் கொடுங்கள். என் பிழை பொறுங்கள்!’ என்றாள். ‘பழி செய்தவர்கள்தானம்மா பழி செய்தவர்களைக் கண்டிப்பார்கள். தன் பழி அறியாததனால் அவர்கள் உள்ளத்தில் எழும் ஆத்திரம் அது. அதுமட்டுமன்று. தம் பழிக்குத் தண்டனை கோர, திருத்தம் வேண்டக்கூட அவர்கள் மனங் கொள்ள வில்லை. ஆனால் தம்பழி அறிந்தபின் அவர்கள் உன்னைக் கண்டிக்கவில்லை. அதுபோல, நானும் உன்னைக் கண்டிக்க மாட்டேன், தண்டிக்கவும் விரும்பவில்லை. உனக்கு நான் கூறுவதெல்லாம், “இனிப் பழி செய்யாதே. அமைதியுடன் போ” என்பதே” என்றார். எந்தத் தண்டனையாலும் மாறாத அளவு அப்பெண்ணின் உள்ளம் மாறுதலடைந்தது. பெரியவர் தெய்விக அன்பின் அமைதி அவள் உள்ளத்திலும் தெய்விக அன்பு கனிய வைத்தது. பிறரைப் பற்றிய அல்லது உலகைப் பற்றிய தனிப்பட்ட முடிவுகளுக்கோ, விருப்பு வெறுப்புக்களுக்கோ, தூய உள்ளத்தில் இடம் இருப்பதில்லை. ஏனெனில் அன்பும் பாசக் கனிவும் அதில் நிரம்பித் ததும்பிப் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது. அவர்கள் தூய பார்வையில் பழி எதுவுமே தெரிவதில்லை புறத்தே பழிகாணாத அத்தகைய உள்ளங்களில், பழியின் தடங்கள் பதிவதில்லை. துன்ப வேதனைகள் அதைத் தீண்டுவதும் கிடையாது. ஏனெனில் அகவுள்ளத்தின் ஒளி எல்லையிலேயே அவை இன்பமாக மாறுகின்றன. அறிவற்றவனே புறத்தே தீமை காண்கிறானென்றால், அறிவுடையவனே அகத்தே தீமை காண முடிகிறது. தன் செயலில் அவன் தன் உள்ளத்தின் தீமை காண முடிகிறது. ஏனெனில் அவன் தீமை காணும் இடம் அது ஒன்றே! தீமை வேர்க்கொண்டு வளரும் - இடம் - இயற்கைக்கு முரண்பாடான பண்புகள் தங்கும் இடம் - அது ஒன்றே. அதை அகற்றுவதன் மூலம் புறத்தே தீமை காணாமலே அவன் தீமைகள் அகன்று விடுகின்றன. மரத்தைப் பற்றிய கவலையில்லாமலே, அது நச்சுமரமென்று தெரியாமலே, நச்சுவேரறிந்து அழித்து அவன் அதை இல்லாதாக்குகிறான். நீரளவே ஆகுமாம் நீராம்பல்! மெய்யறிவடைந்தவனைத் தவிர உலகில் மற்ற எல்லாரும் தம்மிடம் தவறாது நன்மையே காண்கின்றார்கள். தாம் எது செய்தாலும், எது கூறினாலும், எது கருதினாலும் அதுவே சரியென்று கருதாதவர்களோ, அதற்கேற்ற விளக்கம் காண்பதில் வெற்றி எய்தாதவர்களோ இல்லை. அவன் நடத்தை எவ்வளவு தவறானது, அவ்வளவு அவசியமற்றது, நேர்மையற்றது என்று பிறர் கருதினாலும், அது தன்னைப் பற்றிய ஒருவன் தீர்ப்பை ஒரு சிறிதும் அசைப்பதில்லை. அது நன்று என்று மட்டுமல்ல, நேர்மையானது, அவசியமானது, இன்றியமையாதது என்ற அவன் உறுதி குலைவதில்லை. எந்தப் பண்பும் இந்த நிலையை மாற்றுவதில்லை. கோபமுடையவன் எப்போதும் தன் கோபத்துக்குச் சரியான காரணம் காட்டி, அது நேர்மையான கோபமே என்று நாட்ட முனைகிறான். அவ்வாறே பேராவலுடையவன் பேராவலையும், தூய்மைக் கேடுடையவன் அப்பண்பையும் நேர்மையானவை என்று காண்பிக்கத் தவறுவதில்லை. பொய்யன் தன் பொய் இன்றியமையாத செயல், நற்செயல் என்றுகூடக் கருதுகிறான். வசைகாரனோ தான் வெறுப்பவர் களை வைது தூற்றுவதன் மூலம் அவர்கள் வகையில் பொது மக்களுக்கு எச்சரிக்கை தரும் சமுதாயக் கடமையையே ஆற்றுவதாகப் பெருமை அடித்துக் கொள்கிறான். திருடன் செல்வமும் வளமும் இன்பமும் பெறத்தான் கண்டு பின்பற்றும் சுருக்குவழி, தான் திறம்பட ஆற்றும் அரும்பணியே திருட்டு என்று இறுமாப்புடன் கூறுகிறான். கொலைகாரன்கூடத் தன் செயல் நேர்மையானது, அறிவுக்குப் பொருந்துவது என்றே வாதாடுகிறான். ஆம்பலின் உயரம் எப்போதும் நீர்மட்டத்தின் உயரமாகவே இருக்கும். அதுபோல ஒவ்வொரு மனிதன் செயலின் பண்பும் அவன் உள்ளத்திலே இருக்கும் உளி, இருள் ஆகியவற்றின் அளவிலேயே நிற்கும். தன் அகப்பண்பு கடந்தோ, அறிவு கடந்தோ எவனும் செயலாற்றிவிட முடியாது. ஆயினும் அவன் தன்னைத் தான் திருத்திக்கொள்ள முடியும். தன் உள் இருள் குறுக்கி, உள்ளொளி பெருக்கி, தன் அறிவின் பரப்பை விரிவு படுத்தி, அதன் மூலம் செயலையும் உயர்த்திக்கொள்ள முடியும். கோபக்காரன் தன் கோபத்தளவு செயல் பெருக்கத்தான் எண்ணுகிறான். ஆனால் முடிவதில்லை. இது கோபத்தின் இயல்பு. பொறுமையுடனும் அமைதியுடனும் இருந்தால், அவன் மிகுதி செயல் செய்ய முடியும். ஆனால் கோபத்தில் அவன் செய்ய நினைத்த செயல்கள் எதனையும் பொறுமை மேற் கொண்டபின் அவன் செய்யமாட்டான். இங்ஙனம் கோபத்தில் செயலும் தவறானது. ஆற்றலும் பெரிதுபோலத் தோற்றினாலும் உண்மையில் குறைவே. அது பெரிதளவு வசையிலும் ஆத்திரத்தி லுமே சிதறி விடுகிறது. கோபத்தை அடக்குமளவு நல்லாற்றலோ, பொறுமை மேற்கொள்ளும் அளவு அறிவோ அவனிடம் இருப்பதில்லை. மெல்லியல்புகளில் பயிற்சி பெறாததனால், பொறுமை, அமைதி ஆகிய பண்புகளின் அருமையை அவன் உணர மாட்டான். அவற்றைத் தேர்ந்தெடுக்க முடியாது. அத் துடன் அவற்றின் ஒளியுடன் ஒப்பிட்டுச் சீற்ற முதலிய பண்பு களின் காரிருள் தன்மையையும் அவன் ஒரு சிறிதும் காண்ப தில்லை. சீற்றமுடையவனுக்குரிய இதே நிலையே பொய்ம்மை, வசை, திருட்டு ஆகிய பண்புகளில் பழகுபவனுக்கும் உரியது. அத் தகையவன் அனுபவக் குறைவிலும் அறிவு முதிர்ச்சியின்மை யிலும் கட்டுண்டு கிடக்கிறான், ஒளியின்றி இருளில் உழலு கிறான். இருள் இருளைக் காண்பதில்லை உயர் ஒளி வாழ்வை என்றும் காணாத, கண்டிராத நிலை யில், இருளில் வாழ்பவனுக்கு ஒளி ஓர் இன்மைப் பொருள் போன்றதாகி விடுகிறது. ‘இருளில் ஒளி நடமிடுகின்றது. ஆனால் இருள் அதைக் காண்பதில்லை’ என்று கூறப்படுவது இதனா லேயே. இருள் இருட்டைக்கூடக் காண்பதில்லை. ஏனெனில் ஒளியே காட்சி. இருளில் இருப்பவன் ஒளியின் இயல்பை மட்டுமல்ல, இருளின் தன்மையைக்கூட உணர முடியாது. மீண்டும் மீண்டும் துன்பத்தின் கசையடிக்கு ஆளான பின், இறுதியிலேயே மனிதன், தன் செயல் பற்றிய காரணகாரியச் சிந்தனையின் திசையில் தள்ளப்படுகிறான். தன்னிடம் எழும் சீற்றம், தன்னுள் கரந்தியலும் பிற பழிப்பண்புகள் அழிக்கப் படாமலிருக்கும்வரை, துன்பமும் வேதனையும் வந்தே தீரும் என்ற காட்சியறிவு அப்போதுதான் அவனுக்கு ஏற்படுகிறது. பழிப் பண்புகளிலிருந்து திரும்பி அவற்றுக்கெதிரான பண்புகளில் அவன் நாட்டம் அப்போதுதான் பதியத் தொடங்குகிறது. அவற்றைப் பயின்று, அந்நன்மை நெறியில் காலூன்றத் தொடங்கிய பின்னரே அவன் நன்மை தீமை பற்றிய அறிவு பெறுகிறான். அவ்வறிவு முழுநிறைவானபோதுதான் முன் தான் அழுந்தியிருந்த அறியாமை இருளின் செறிவையும் அளவையும் அவன் மதிப்பிட்டுக் காண்கிறான். இந்த நன்மை தீமை அறிவே உள்ளுணர்வு. பிறர் விழிவழி அவர்கள் வாழ்வை ஒருவன் மதிப்பிடும் போது, அவன் நன்மை தீமை அறிவின் முதற்படி அடைகிறான். ஏனெனில் நிலவரமான தனி நன்மை தீமை அறிவின் முதற்படி அடைகிறான். ஏனெனில் நிலவரமான தனி நன்மை தீமை எதுவும் புறஉலகில் கிடையாது. ஒரு மனிதனின் நன்மை மற்றவன் தீமையாகலாம். ஒரு மனிதனின் தீமை மற்றவன் தீமையாகலாம். ஒரு மனிதனின் தீமை மற்றவன் நன்மையாகலாம். ஒவ்வொருவருக்கும் அவரவர் படிக்கேற்ப, பண்பு ஒளிக்கு, அறியாமை இருளுக்கு ஏற்ப, அனுபவத்துக்கு ஏற்ப, ஒவ்வொரு வகை நன்மை தீமை வேறுபாடு உண்டு. எவ்வளவு மோசமான பழியையும் நலம் என்று நினைப்பவர் உண்டு. அதுபோல எவ்வளவு உயர்ந்த பண்பையும் பழியாகக் கருதுபவர் இல்லாமல் இல்லை. ஆகவே அவனவன் படிக்குரிய நன்மையே அவனவன் நன்மை. அதனாலேயே அவன் மதிப் பிடப்பட வேண்டும். அவனவன் படிக்குரிய தீமையே அவன் தீமை. அதனாலேயே அவன் கண்டிக்கப்பட முடியும். ஆனால் எவரும் தன் படிக்குரிய நன்மையின்படியே நடப்பர். தன் படிக்குரிய தீமையைப் பின்பற்றுபவர் யாரும் கிடையாது. இதனால் ஒத்துணர்வுடன் பிறர் படிகண்டு பிறர் செயலை மதிப்பிடுதல் என்பது அவர்கள் தீமை காணாது நன்மை கண்டு, அவர்களிடம் அருளிரக்கம் கொள்வதன்றி வேறு எதுவும் ஆக முடியாது. தூய்மை கைவந்த மனிதன் பிறரிடம் தீமை காணாதவன் மட்டுமல்ல. தன் கருத்துக்கு அல்லது தன் போக்குக்குப் பிறரைக் கொண்டு வரவும் அவன் முனையமாட்டான். அத்தகைய முயற்சிகள் வலிந்த முயற்சிகள், செயற்கை முயற்சிகள். அவை முயற்சிக்கு ஆளானவர்களுக்கும் நலம் தர மாட்டா. முயற்சி செய்பவனுக்கும் நலந்தர மாட்டா. அவரவர்கள் படியில் நின்றே, அவரவர்கள் அனுபவப் போக்கின்படி, அவரவர்கள் அனுபவ அறிவை விரிவுபடுத்தி அவரவர்கள் முன்னேறவே அவன் உதவுவான். விரிந்த அனுபவ அறிவுதான் ஒருவரை உயர்படிக்கு உயர்த்துமேயன்றி, கருத்து மாறுபாடு உயர்த்தாது. தன் செயலே எவருக்கும் தன்னறிவு தரத்தக்கதாகும். ‘பகைவரை நேசிப்பாயாக’ - இதுவே அன்பின் உரைகல்! பொதுநிலைமாந்தர் தம் கருத்தைப் பிறரிடம் காணும் போது அதை நன்மை என்பர். தம் கருத்துடன் அது முரண் படும்போது அதைத் தீமையென்று கொள்வர். தன் கருத்தில் தகாக் காதல் கொண்டு அதையே அணைப்பவன், அதை மேற்கொண்டவரிடமெல்லாம் தகா அன்பும், அதை மேற் கொள்ளாதவரிடமெல்லாம் தகாப் பகைமையும் கொள்வான். இந்நிலை கண்டே நண்பர் நேசத்திலும் பகைவர் நேசம் ஆன்மிக நிலையில் உயர்வு படப் போற்றப்பட்டுள்ளது. ‘உன்னை நேசிப்பவரை நீ நேசித்தால் அதில் போற்றுதலுக்கு என்ன இருக்கிறது? உன்னை நேசியாதவரை, வெறுப்பவரை, பகைவரை, நேசிப்பாயாக. வெறுப்புக்கு மாறாக நன்மை செய்து, அன்பு காட்டுவாயாக’ என்ற அருள்நெறிக் கட்டளையின் பொருள் இதுவே. சமயவாதிகளும் கட்சிவாதிகளும் தத்தம் அளவைகளின் படியே எல்லா மனிதரையும் மதிப்பிடுகின்றனர். தம் பக்கமே நேர்மையானது என்பதிலும் எதிர்ப்பக்கம் தவறானதென்பதிலும் அவர்கள் விடாப்பிடி உறுதி உடையவர்களாயிருப்பதனால், அவர்கள் ஒவ்வொருவருமே எதிர்தரப்பார் எல்லாரையும் வெறுக்கின்றனர், எதிர்த்துப் போராடுகின்றனர். கண்டிக் கின்றனர், தண்டிக்கவும் கொடுமைப்படுத்தவும் முற்படுகின்றனர். ஒருவரை ஒருவர் வதைப்பதையும் கொடுமைப்படுத்துவதையும் அவர்கள் மிக நல்ல செயல்களாகவும், கட்டாயம் செய்து தீர வேண்டிய தங்கள் சமயக் கடமைகளாகவும் கொள்கின்றனர். தம் அறிவின் உரிமையால் பிறர் அறிவுக்கெதிராக அவர் களைக் கட்டாயப்படுத்தி அவர்களையும் தம் அறிவுக்குக் கொண்டுவரும் போலித் தெய்விகப் பணியில் அவர்கள் மனித உயிரை, மனித இனத்தின் ஒரு பெரும் பகுதியைக் கொன் றழிப்பதைக்கூடத் தவறாக எண்ணவில்லை - அவ்வழிவு கண்டு இரங்காமல், வருந்தாமல், இறுமாந்து மகிழ்கின்றனர். மனிதர் இவ்வாறு ஒருவரை ஒருவர் வெறுத்துக், கண்டித்து, எதிர்த்துத் துன்பவாதைகளை உண்டு பண்ணினாலும், இத் தனையும் அவர்கள் தீயவர்கள் என்பதாலன்று, படுபழிகாரர் என்பதனாலும் அன்று! ஏனெனில் அவர்கள் வாய்மையின் முழு ஒளி கண்டு இவை தவறென்று உணர்ந்து செய்யவில்லை. இவையனைத்தும் சரியானவை, அவசியக் கடமைகள் என் றெண்ணியே செய்கின்றனர். ஆகவேதான் நல்லார் தீயார் என்ற பாகுபாடு இயற்கையில் இல்லாத ஒன்று ஆகிறது. எல்லா மனிதரும் உள்ளூர நல்லவர்களே. அவர்களிடையே உள்ள வேற்றுமை எல்லாம், அவர்களில் சிலர் நல்லவர்கள் மட்டுமல்ல, மெய்யறிவுடையவர்கள் என்பதும், மற்றும் சிலர் நல்லவர்கள், ஆனால் அறியாமையுடையவர்கள் என்பதுவுமே. பெரியாரும் அரசியல்வாதியும்: ஓர் உரையாடல் இவ்வேறுபாட்டின் நுட்பத்தைப் பெரியார் ஒருவருடன் அரசியல்வாதி ஒருவன் எதிர்க்கட்சியாளன் ஒருவனைப் பற்றி நடத்திய கீழ்வரும் உரையாடல் காட்டும். (பெரியாரை நாம் இங்கே பெ. என்றும், அரசியல்வாதியை அ. என்றும், அவர்கள் உரையாடலிடையே சுட்டுவோம். எதிர்க்கட்சியாளனை எ. என்றும் குறிப்பிடுவோம்.) ‘ஒவ்வொரு மனிதனும் அவனவன் கருத்துக்களின் பயனை யும் செயல்களின் பயனையுமே நுகர்கிறான், அவனடையும் துன்பம் அவன் செய்யும் தவறுகளினாலேயே. அத்தவறுகளின் பயனை அவன் நுகராமல் போவதில்லை’ என்று பெரியார் பொதுவாக அறிவுரை கூறிக் கொண்டிருந்தார். அ: அப்படிச் சொல்லுங்கள், பெரியவரே! தன் தீய செயல்களுக்குச் சரியான தீமைகளை எவரும் அனுபவித்தே தீர வேண்டுமென்பது உண்மையானால், அப்பப்ப, ஆட்சி யதிகாரத்திலிருக்கும் பலர் தமக்கென எத்தகைய நரக வேதனை களைத் தம் வருங்காலச் சொத்தாகக் குவித்துத் திரட்டிக் கொண்டிருக்க வேண்டும்! ஆகாகா! ஆகா, இதை மட்டும் அவர்கள் அறிந்தால்...? பெ: ஆட்சி அதிகாரத்திலிருந்தாலும் சரி, இல்லாவிட் டாலும் சரி! மெய்யுணர்வு பெறாமல் அறியாமையிலும் இருளார்ந்த பழியிலும் உழல்பவர் யாவரும் துன்பப் பயிரின் அறுவடையை அடைந்தே தீர வேண்டும். அ: ஆமாம், ஆமாம்! முற்றிலும் உண்மை! எடுத்துக் காட்டாக இதோ பாருங்கள், நமது ‘எ’. இருக்கிறார்! அவர் முற்றிலும் ஒளிகாணாத செறிந்த இருளில் இருந்துகொண்டு பழியே பெருக்கும் வன்பழிகாரர். தன்னலமும் பேரவாவும் அவரைப் பிடித்தாட்டுகின்றன. அவருக்குத் தகுதியான போதிய தண்டனை நரகத்தில்கூட இருக்குமா என்பதில்தான் ஐயப்பாடு. அல்லவா?...... பெ: ஆ, அவர் அவ்வளவு தீயவர் என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்? அது உங்களுக்கு எப்படித் தெரிந்தது? அ: ஏன், ஆளின் தீமை அவர் ஒவ்வொரு செயலிலும் தெரியாதா? செயலின் தீமைகள் நாடெங்கும் தெரிகிறதே! மேலும் தீமையைக் கண்டால் எனக்கு அது உடனே தீமை என்று தெரிந்து விடும். இந்த ‘எ’யின் தீமைகளை நினைத்தாலே, நேர்மை வாய்ந்த உள்ளக் கொதிப்பு எனக்கு ஏற்படுகிறது. உலகிலுள்ள மக்கள் எத்தனையோ பேர்மீது அழிவுச் செயல் நடத்தும் ஆற்றல் வாய்ந்த பதவியில் இருந்துகொண்டு, அவ்வளவு பெருமதிப்புடன் இவர் வாழ்வதைப் பார்க்க, எனக்குத் தயாபரனாகிய ஓர் ஆண்டவன் இருக்க முடியும் என்பதிலேயே நம்பிக்கை குறைந்து வருகிறது. பெ: அப்படி அவர் செய்யும் பெரும் பழி என்னவோ? அ: அவர் கொள்கையே, குறிக்கோளே தீமை. அவர் செய்யும் செயல் எதுவும் நன்மையாகவே இருக்க முடியாது. கலப்பற்ற தீமையாகவே இருக்க முடியும். இன்னும் சிலநாள் அவர் இந்தப் பதவியிலிருந்தால் போதும், இந்த நாடே குட்டிச் சுவர்தான், சுடுகாடுதான்! அரசியல்வாதியின் சுழல்வட்ட வாதம் பெ: ஆம். உங்களைப் போல் இவ்வாறு நினைப்பவர்கள் பலர் இருக்கிறார்களென்பதை நான் அறிவேன். ஆனால் உங்களைப் போலவே பலர் - அறிவுடைய பலர் அவரை நல்லவர் - திறமை வாய்ந்தவர் என்றும், அவர் கோட்பாடு, நலம் பயப்பது, நாட்டு வாழ்வை வளப்படுத்தி முன்னேற்றம் காண்பது என்றும் கருதி, அவர் உயர் பண்பு நலங்களைப் பாராட்டுகிறார் களல்லவா? இங்ஙனம் பாராட்டுபவர்களின் ஆதரவால்தானே அவர் பதவியேற்று அதில் நீடித்திருக்கிறார். அவர்கள் அத்தனை பேருமே தீயவர்களென்றாக் கருதுகிறீர்கள்? அ: இல்லை. அவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் வஞ்சிக்கப்பட்டவர்கள். மயக்கத்துக்கு ஆளானவர்கள். அவரால் தவறான வழியில் திருப்பப்பட்டவர்கள். தம் தனி நலங்களுக்காக, தாம் ஆதாயம் பெறுவதற்காகத் திறமையாக அவர் மற்றவர்களை ஏமாற்றி வெற்றி காண்பதனால்தான், அவர் நம்மால் இன்னும் மிகுதியாக வெறுக்கப்பட வேண்டியவராகிறார். அவரை நான் என் மனமார வெறுக்கிறேன். பெ: ஏன் நீங்களும் ஏமாற்றத்துக்கும் மயக்கத்துக்கும் ஆட்பட்டவராயிருத்தல் கூடாதா? அ: அது எப்படி? பெ: வெறுப்பு என்பதே தன் மயக்கம். அன்புதான் தன்னறிவின் ஒளி. வெறுப்பிலிருந்து விடுபட்டு அன்புப் பயிற்சி பெறாத ஒருவன் தன்னையோ, பிறரையோ தெளிவாக உணர முடியாது. அ: நீங்கள் கூறுவது கொள்கை அளவில் அழகாகத்தான் இருக்கிறது. ஆனால் அது நடைமுறைக்கு ஒத்து வராதது. என்னளவில், ஒருவன் பிறருக்குத் தீங்கு செய்வதை, வஞ்சிப்பதை, தவறான வழியில் இட்டுச் செல்வதைக் கண்டால் என்னால் அவனை வெறுக்காமல் இருக்க முடியாது. இவ்வாறு நான் செய்வது சரியே. உண்மையில் ‘எ’ ஒரு சிறிது மனச்சான்றின் நிழல் கூட அற்றவர். பெ: ‘எ’யைப் பற்றி நீங்கள் கூறுவதெல்லாமே அவருக்குப் பொருந்தலாம், பொருந்தாமலிருக்கலாம். ஆனால் அத்தனையுமே பொருந்துவதாக இருந்தால்கூட, உங்கள் வாசகப்படியே பார்த்தால், அவர் கண்டிக்கப்படத் தக்கவரல்லர், இரக்கப்படத் தக்கவரே என்று நினைக்க வேண்டும். அ: ஏன் அப்படி? பெ: அவருக்கு மனச்சான்றே கிடையாது என்று நீங்கள் தானே சொன்னீர்கள். அ: ஆம். அதனாலென்ன? பெ: மனச்சான்றில்லாதவன் என்பவன் மூளையில் உறுப்புக் குறைபட்டவன், ஆன்மிகமுடம். கண்குருடானவர், பார்வை யற்றவர் என்பதற்காக நாம் ஒருவரை வெறுக்கவா செய்கிறோம்? அல்லது ஊமை பேச முடியவில்லை என்பதற்காக, செவிடர் கேட்க முடியவில்லை என்பதற்காக அவரைக் கண்டனத்துக் குரியவர்களென்றா கருதுகிறோம்? பயின் அல்லது சுக்கான் முறிவுற்ற கலத்தைச் சரிவர ஓட்ட முடியவில்லை என்பதற்காக அத்தகைய கப்பலின் மீகானிடம் குறைகாணலாமா? அத் தவற்றால் அவன் கப்பல் பாறையில் மோதினாலும், உயிர்ச் சேதம் ஏற்பட்டாலும், அதற்காக வருந்தலாமேயன்றி, அவனைக் குற்றவாளியாக்க எண்ணலாமா? இதுபோலவே, நன்மை தீமையறிவால் வழிகாட்டக்கூடிய உயிருறுப்பாகிய மனச்சான்று ஒருவனிடம் முழுதுமே இல்லா விட்டால், அவன் தன்னலத்துக்காக மட்டும்தானே செயலாற்ற முடியும்? அதுதானே அவனுக்குச் சரியாகவும் நேர்மையாகவும் தோற்றக்கூடும். அப்படியிருக்க, அவன் செயலுக்கு அவனைக் குறை கூறுவது எப்படி? இந்நிலையில், எ. உங்களுக்குத் தீயவராகத் தோற்றக்கூடுமானாலும், அவர் தம் மனச்சான்றுக்குக் கேடு செய்யும் தீயவராக முடியுமா? தான் செய்வது தீமை என்று தெரிந்து அவர் செய்கிறாரா? அ: அவர் தம்மைப் பற்றி எது நினைத்தாலும் அவர் தீயவர் என்பதை அது எப்படி மாற்ற முடியும்? பெ: அப்படியா? நீங்கள் அவரைத் தீயவர் என்று கூறியதன் காரணமாக நீங்களே தீயவர் என்று நான் கூறினால் அது சரியாகுமா? அ: ஆகாது. பெ: ஏன் ஆகாது? அ: ஏனெனில் என் வெறுப்பு சமுதாயத்துக்கு அவசிய மானது, நியாயமானது, நேர்மையானது. சீற்றத்தில் நேர்மை வாய்ந்த சீற்றம் இல்லையா? வெறுப்பிலும் நேர்மை வாய்ந்த வெறுப்பு இல்லையா? பெரியவர் விளக்கம் பெ: ஏன்? தன்னலத்தில் நேர்மையான தன்னலம், பேராவலில் நேர்மையான பேராவல், தீமையில் நேர்மையான தீமை என்றெல்லாம் உண்டா? நீங்கள் எ.யைத் தீயவர் என்று நினைப்பதற்காக உங்களை நான் தீயவர் என்று கண்டிப்பது தவறு என்பதை நான் ஒத்துக் கொள்ள முடியும். ஏனென்றால் நீங்கள் நினைப்பது சரி என்று நீங்கள் உறுதியாய் நம்புகிறீர்கள். மனிதன் என்ற முறையிலும் குடியுரிமையாளன் என்ற முறையிலும் அது உங்கள் கடமை என்று நீங்கள் கருதுகிறீர்கள். என் நிலையில் நின்று நான் பாராமல், உங்கள் நிலையில் நின்று பார்த்தால் உங்களைப் பற்றி நீங்கள் கருதுவது போலவே நானும் கருத முடியும். அது சரியே. ஏனென்றால், வெறுப்பைவிட உயர்ந்த ஒரு முறையை நான் இத்தகைய இடங்களின் பின்பற்றுகிறேன். ஆனால், இதே உயர்ந்த முறைதான் எ.யை நீங்கள் வெறுப்பது போலவே வெறுக்க முடியாமல் என்னைத் தடுக்கிறது. அவர் நடத்தை உங்களுக்கோ எனக்கோ எவ்வளவு தவறாக வேண்டுமானாலும் தோற்றலாம். ஆனால் அவருக்கோ, அவர் ஆதரவாளருக்கோ அவ்வாறு தோற்றவில்லை. அத்துடன் எல்லா மனிதரும் தாம் விதைப்பதைத் தாமே அறுப்பவர்கள். அதைச் சரி, தப்பு என்று கூறும் பொறுப்பு அவர்களுக்கே, நமக்கல்ல. அ: நீங்கள் கூறும் உயர்ந்த முறை எது என்று எனக்கு விளங்கவில்லை. பெ: அதுதான் அன்புமுறை. பிறரைத் தீயவர் என்று காண்பதை விடப் பிறரிடம் தீமை காண்பதையே ஒழித்துவிடும் முறை அது. அது உளத்துக்கு அமைதி தருவது. பேரின்ப நலம் உடையது. அ: மக்கள் தீமை செய்வதைக் காணும்போது ஒருவன் கோபப் படாமலிருந்தால், அதுதான் உயர்முறை என்று நீங்கள் கருதுகிறீர்களா? பெ: ஆம், அதுமட்டுமல்ல. பிறர் செய்வது தீமை, அவர்கள் தீயவர்கள் என்று கருதும்வரை ஒருவன் மற்றொருவன்மீது தொடர்ந்து உள்ளத்தில் கோபமோ, வெறுப்போ கொள்ளாம லிருக்க முடியாது. செயலுக்குத் தூண்டுதலான உணர்ச்சி களின்படி அவர்கள் செயல்செய்து, அக்கருத்துக்கள், செயல் களின் பயனை அவர்களே அனுபவிப்பதால், துன்பங்களையனுப விக்கிறார்களே என்று கவலையும் இரக்கமும் கொள்ளவோ, இன்பப்பயிர் அறுவடை செய்கிறானென்று மகிழவோ செய்வானானால், அது மிக உயர்ந்த உள்ளுணர்வுநிலை, அப்பழுக்கற்ற அன்பமைதி நிலை ஆகும். அதனை மனிதன் அடைதல் கூடாததன்று என்று எண்ணுகிறேன். அந்த நிலையை அடைய வேண்டுமானால், எல்லா மக்களிடத்திலும் ஒத்த அன்பும் கனிவும் காட்ட வேண்டும். அ: நீங்கள் சித்தரித்துக் காட்டும் நிலை மிக உயர்ந்த நிலை என்பதில் ஐயமில்லை. மிக அழகிய புனிதமான நிலைதான். ஆனால் அதைச் சென்றடைய நான் விரும்பவில்லை. ஏனெனில் அந்த நிலையிலிருந்து நான் எ.யை வெறுக்க முடியாது. என் மனதாரப் பழிக்க முடியாது. வேண்டாம் அந்த நிலையிலிருந்து கடவுள் என்னைக் காப்பாற்றட்டும். தற்குருட்டுப் பண்பு இந்த உரையாடலின் முடிவிலிருந்தே அ. என்னும் இவ் வரசியல்வாதி கருத்தில் வெறுப்பு மிக நல்ல பண்பு என்பதும், விரும்பத்தக்க பண்பு என்பதும், கைவிடத்தகாத, இழக்கத்தகாத கடும்பண்பு என்பதும் எளிதில் புலனாகின்றது. இந்தப் பேர்வழியைப் போலத்தான் உலகில் பெரும்பாலாரும் தாம்தாம் செய்வதை இன்றியமையா அவசியச் செயலாகக் கருதுகின்றனர். குடிப்பவன் குடி அவசியமென்று கருதுகிறான். வஞ்சிப்பவன் வஞ்சிப்பது தனக்கு அவசியம், நலந்தருவது என்றுதான் கருதுகிறான். மனிதர் தாம் வழக்கமாகச் செய்ய விரும்புவதையே நம்புகிறார்கள். நம்புவதையே வழக்கமாகச் செய்கிறார்கள். ஒரு பொருளில் விருப்பமோ, நம்பிக்கையோ அற்றுவிட்டால், அந்தக் கணமே அவ்வழக்கமும் நின்றுவிடுகிறது. மேற்குறிப்பிட்ட அ. அரசியல்வாதிக்கும் எல்லாருக்குமே தனி மனித உரிமை - தாம் விரும்புவதை, நம்புவதைச் செய்வ தற்குள்ள உரிமை - உண்டு. அவன் விரும்பினால் மற்றொருவனை வெறுப்பதற்குள்ள உரிமை கூட அவனுக்கு உண்டு. அதை யார் பழித்தாலும் அவன் விடப்போவதில்லை. அச்செயலால் வரும் வேதனையையும் அமைதிக்கேட்டையும் கண்டு, அச்செயல் எவ்வளவு அறிவுக் குருடானது, மடமை வாய்ந்தது, தவறானது என்று அவன் உணர்ந்தால் மட்டுமே - வெறுப்பிற் பழகுவதால், தனக்கு ஏற்படும் தீங்கை அவன் அளவிட்டறிந்தால் மட்டுமே - அவ்வெறுப்பை அவன் கைவிட முனைவான். நன்மைக்கும் தீமைக்கும் என்ன வேறுபாடு? உலகப் பெரியார் ஒருவரை அவர் சீடர்கள் ஒருகால் அணுகினர். ‘நன்மைக்கும் தீமைக்கும் என்ன வேறுபாடு? இதை விளக்க வேண்டும்’ என்று கேட்டனர். அறிவிற் சிறந்த அவ் ஆண்டகை, கை விரல்களைக் கீழ் நோக்கிக் குவித்து நீட்டிய வண்ணம் கையைக் காட்டினார். ‘இப்போது என் விரல்கள் எந்தத் திசையைக் காட்டுகின்றன?’ என்று கேட்டார். ‘கீழ்நோக்குகின்றன’ என்றனர் சீடர். பின் ஆண்டகை தம் விரல்களை மேல்நோக்கிக் குவித்து நீட்டிய வண்ணம் கையைக் காட்டினார். ‘இப்போது விரல்கள் எந்தப் பக்கம் காட்டுகின்றன?’ என்று கேட்டார். ‘மேல் நோக்குகின்றன’ என்றனர் சீடர். ‘தீமை, நன்மை ஆகியவற்றின் வேறுபாடு இதுவே’ என்றார் ஆண்டகை. இச்சிறு காட்சிச் சான்று மூலம் தீமையும் நன்மையும் திசையில்தான் எதிர் எதிரானது, பண்பில் ஒன்றே என்று ஆண்டகை விளக்கினார். தீமை தவறான திசையில் செல்லும் ஆற்றல், நன்மை நேரான திசையில் செல்லும் ஆற்றல். தன் நடத்தையின் திசையை - தன்னை நோக்கித் தன்னலத் தீமையி லிருந்து, பிறரை நோக்கிய பொதுநல நன்மைக்கு மாற்றினால், தீமை நன்மையாகிவிடும். நன்மையில் வாழத் தொடங்கியவன் தீமையை உணர் கிறான். பிறரிடம் தீமை காண்பதே தீமை என்று அறிகிறான். நன்மை இதற்கு நேர்மாறானது, பிறரிடம் தீமை காணாதிருக்கும் தன்மையே என்ற விளக்கம் அவனுக்கு உண்டாகிறது. பிறரிடம் தீமை காண்பதற்குப் பதில், தன்னிடம் அதன் தடங்களைக் கண்டு அகற்றித் தன்னைத் தூய்மைப்படுத்த, தன் உள்ளத்தைத் திருநிலைப்படுத்த அவன் முனைகிறான். இப் பயிற்சியின் முடிவில் பிறரிடம் தீமை காணாத, காண இயலாத, காண எண்ணாத அளவுக்கு அவன் அறிவுக் கண்கள் தெளிவடைகின்றன. தீமையின் இயல்பைக் கண்டபின் மனிதன் யாது செய்தல் வேண்டும்? அவன் தீமை அகற்றுவதுடன் நில்லாது, மறந்து, நலமே செய்தல் வேண்டும். இன்னொருவன் நம்மைக் கண்டித்தால், அதைக் கண்டனமாகக் காணாது, நலமே செய்வதன் மனவுறுதி, மறைதிறவு இதுவே. ஏனெனில் அவனைக் கண்டிப்பது தீமை. அவன் கண்டனத்தைக் கண்டனமாகக் கருதுவதே தீமை. வைபவனை வாழ்த்த வேண்டும், பழி தூற்றுபவன் புகழை உரைத்தல் வேண்டும். வெறுப்பவனிடம் தனிப்பட்ட அன்பு சொரிதல் வேண்டும். பொறுமையற்றவனிடம் மிகுதியும் பொறுமை, பேராவற்காரனிடம் பெருந்தன்மை, பூசல் விளைவிப்பவரிடம் அமைதி நலம் காட்ட வேண்டும். தீமை காணாத நெஞ்சமைந்தபின், யாரை அல்லது எதைத்தான் வெறுக்க முடியும், பகையாகக் கருத முடியும்? நமக்கல்ல, பிறருக்குப் பிறர் தீங்கு செய்தால்கூட நம் நிலை இதுவாகவே இருக்க முடியும். தீங்கை ஏற்று நாம் நன்மை செய்வதன்றி, தீங்கு செய்தவன்மீதே திரும்பலாகாது. 3‘கொலையே பொறாமை உனை அச்சுறுத்துமாகில் என்றன் தம்பீ! தங்காய்! அலைபாயும் என்றன் உளம், இலையே என் மீதவைகள் என்றெண்ணுவேன்! நிலையான மெல்லமைதி சூழ்ந்ததெனை, நீள்துயரம் கணிப்பேனலேன். உலையாத உளத்தேது கவலைக்கிடம்? உனக்கும் விழைவேன் அதே! உலகம் ஒரு பெருங் குடும்பம் மனிதரைத் தீயவராகவும் அவர்கள் செயல்களைத் தீமை களாகவும் காண்பவர்கள் அம் மனிதருக்கும் அச் செயலுக்கும் பின்னணியில் ஏதோ பழியின் பண்புருவம் தனி ஓர் ஆற்றலாக நின்று அப் பழிச்செயல்களையும் பழிகாரரையும் இயக்குவதாகக் கருதுகிறார்கள். ஆனால் கறையற்ற காட்சியுடையோர் எச் செயலிலும் அறியாமையின் நிழலன்றித் தீமை காண்பதில்லை. செயல்கடந்து மனிதரிடமோ, செயலும் மனிதரும் கடந்து இயற்கையின் பின்னணியிலோ எத்தகைய தீய ஆற்றலும் இருக்க முடியாதென்பதும் அவர்கட்குத் தெரியும். தீமை ஒரு பொருளாக, ஓர் ஆற்றலாக, ஒரு பண்புருவாக எங்குமே கிடையாது. நன்மை ஒன்றே மெய்ப்பொருள், அது ஒன்றே நிலையானது; என்றும் நின்று நிலவுவது, அழியாதது. அது போன்ற மெய்ப்பொருளாக, நிலையானதாக, அழியாததாகத் தீமை என்ற ஒரு பண்போ, பொருளோ, ஆற்றலோ, தெய்வ உருவோ எதுவும் இல்லை. ஒரே தாய் தந்தையரின் பிள்ளைகளான உடன்பிறந்த நம்பியர், நங்கையர்கள் ஒரே குடும்பத்தின் உறுப்பினர்கள் என்ற முறையில் வாழ்வு தாழ்விலும் நன்மை தீமைகளிலும் ஒருவரை ஒருவர் நேசிப்பது காண்கிறோம். அவர்கள் ஒருவர்மீது ஒருவர் குறைகாண்பதில்லை. குறை கடந்து, அன்பு ஆதரவு காட்டு கின்றனர். ஒரே பாசம் அவர்களைப் பிணைக்கிறது. நல்லவன் உள்ளத்தில் உலக முழுவதுமே இத்தகைய ஒரே குடும்பமாகக் காட்சியளிக்கிறது. ஒரே தந்தை இறைவனாக! ஒரே தாய் இயற்கையாக அக்குடும்பம் ஒரே வாழ்வு வாழ்கிறது. ஒரே குறிக்கோளுடன் நீடித்து நின்று நிலவுகிறது. மனிதரனைவரும், இந்தப் பொதுத் தாய்தந்தைப் பாசத்தால், பொதுக்குறிக்கோளால், பொது உடன்பிறப்பு உரிமையால் பிணைக்கப்பட்டவர்கள். வேறுபாடு உணருமிடத்தில்கூட அவர்கள் வேறுபாடு காட்டுவதில்லை. தீமை காணப்படு மிடத்தில் கூட அவர்கள் அதை நன்மையாகப் பொதிகின்றனர். உலகம் இந்த நிலையடைந்துள்ளதாகக் காண்பவனே பேரின்பவாணன், பேரின்ப ஒளி வெள்ளத்தில் ஒன்றுபட்டுத் தன்னிலையிழந்து மிதப்பவன் ஆவான். அடிக்குறிப்புகள் 1. கூhந ளடிடனை, ளடிடனை ரniஎநசளந ஐள யீநசஎiடிரள வடி டுடிஎந; றiவா யெனேயபநன நலநள hந நேஎநச நசசள, ஹசடிரனே; நெடடிற, யbடிஎந ழளை டெiனேiபே டiபாவ ழந கடiபேநவா றாவைந டீn ழுடின’ள யனே ளுயவயn’ள செடிடின, ஹனே சநஉடிnஉடைநள க்ஷல அலளவiஉ றடைநள கூhந நஎடை யனே வாந படிடின.” - நுஅநசளடிn 2. “ஐக வாடிர வாiமேநளவ நஎடை, நெ வாடிர ளரசந கூhiநே யஉவள றடைட நெயச வாந ளாயனடிற டிக வாந ளவயin; ஹனே கை வால வாடிரபாவ நெ யீநசகநஉவ, வாநn வால னநநன றுடைட நெ யள டிக வாந யீநசகநஉவ, வசரந யனே யீரசந.” - ஹகவநச ஊடிகேரஉரைள 3. “றுநசந அயமேiனே அரசனநசடிரள டிச தநயடடிரள ரயீடிn லடிர, அல க்ஷசடிவாநச! அல ளளைவநச! ஐ’அ ளடி ளடிசசல கடிச லடிர. கூhநல யசந nடிவ அரசனநசடிரள டிச துநயடடிரள ரயீடிn அந; ஹடட hயள நெநn பநவேடந றiவா அந, ஐ மநநயீ nடி யஉஉடிரவே றiவா டயஅநவேயவiடிn; றுhயவ hயஎந ஐ னடி றiவா டயஅநவேயவiடிn?” 9. நீடின்பம் 1மாடுயர் நெஞ்சத்து இசையேந்திச் செல்லும் மதிவலவர் நீடிருள் சந்து நெருங்கும் வணிகக்களங் களிலே நாடொறும் நைய உழைப்பினும் நோகார், படிவிரைவார் பீடுதரும்பண் இயைந்தாடும் பெண்டிர் இயல்புறவே! -கெபிள். 2அன்புநந்தா விளக்காக, இன்பம் சேமவைப்பாக மன்பேர் உவகை கொள்வோம் யாம்; மகிழ்ந்தெந்நாளும் மிதப்போம் யாம். - வேர்ட்ஸ்வொர்த் நிலையான இன்பம், நிலையான நீடின்பம்! அப்படி ஒன்று உண்டா? எங்கிருக்கிறது? யாரிடம் இருக்கிறது? ஆம். நிலையான இன்பம், நீடின்பம் உண்டு. அது பழியற்ற விடத்தில் இருப்பது. தூய நெஞ்சுடையவரிடம் தங்கியிருக்கிறது. எங்குமுள்ள பொருள் இருளல்ல, ஒளி! இருளென்பது அதன் சிறு மறைவால் இடைநிகழும் ஒரு நிழலே. அது போலவே துன்பமென்பது என்றுமுள்ள, எங்குமுள்ள பொருளன்று. இன்பமே என்றுமுள்ளது. எங்கும் நீக்கமற நிறைவது. காற்றுப் போன்று தங்குதடையற்று நிலவுவது, உலவுவது. துன்பம் அதன் தற்காலிகச் சிறுமறைப்பால் இடைநிகழும் தோற்றம் மட்டுமே - ஏனெனில் இன்பம் மெய்ப்பொருள்; துன்பம் பொய்த்தோற்றம், போலிப் பொருள்! மெய்ப்பொருள் எதுவும் தோற்றுவதன்று. மாறுவதன்று, அழிவதன்று. பொய்ப்பொருளோ, புலப்படுவதன்றித் தோற்றுவ தில்லை. அது மாறுவது, அழிவது. நிழலின் போலித் தோற்றத்தில் ஒளி சிறிது மறைந்திருப்பது போல, துன்பத்தின் போலித் தோற்றத்தில் இன்பம் தற்காலிகமாகச் சிறிது மறைந்திருக்க மட்டுமே கூடும். போலித் தோற்றம் தரும் துயர் என்றும் தோற்றந் தந்து கொண்டே, புலப்பட்டுக்கொண்டே இருக்க முடியாது. இன்ப மாக மாறி இன்பத்தில் கரைந்து கலந்து ஒன்றுபட்டு இன்ப மாகியே தீரும்! மறைந்திருக்கும் இன்பமும் நெடிது மறைந்திருக்க முடியாது. மறைப்புக் கிழித்துத் தடை நீக்கி வந்தே தீரும்! உன் ஊழைப் படைப்பவன் நீயே! துன்பங்கள் தமக்கெனத் தங்கி நிலவும் தளம் உடையன வல்ல மெய்ம்மைத் தளம் சார்ந்தனவல்ல. கதிரவன் போல் தன்னியல்பாய் நிலவரமாக நிலவுவனவல்ல முகில்கள் போல உணர்ச்சி வேகங்களால் ஈர்த்தடிக்கப்பட்டு விரைந்து செல்பவை. அவை செல்லமாட்டா என்று அஞ்சற்க. நீ பழியில் பிறந்தவன், பழிசார்ந்தவன் என்று நம்பாதே. பழி உன் உயிரல்ல. உடல்கூட அல்ல. ஆடை அணிமணிகூட அல்ல. நீ இறுகப் போர்த்திக்கொள்ளும் முட்போர்வை, நீ விடாப் பிடியாய், உடும்புபோல் மடமையுடன் பற்றிக் கொண்டிருக்கும் பொறிவிலங்குகள். உன் பிடி விட்டால் அவை தாமே கழன் றழிபவை. நீ அறிவுக்கண்ணை மூடிக்கொண்டிருக்கும்போது உன் அகவிழியின் முன் பேயாக ஆடுபவை அவை. அவையே நீ துயிலும் சமயம் பேய்க்கனவாக வந்து உன்னை அலைக்கழித்து ஆட்டிப்படைப்பவை. அவற்றின் மறைதிரையைக் கிழி, அவற்றைப் பிடித்த பிடியை விடு. மூடிய கண்ணைத் திற. துயிலொழித்து எழுந்து அறிவின் ஒளி காண். தூய்மையும் துயரற்ற மகிழ்வும் கொள். உன் வாழ்வை ஆக்குபவனும் நீயே, அதனை மறைக்கும் இருள் திரைகளைப் படைப்பவனும் நீயே. உன் ஊழ் முதல்வன் நீ நீயாக அவாக்கொள்கிறாய். அந்த அவாக்களை நீ அடக்கி யாண்டு இயக்குவதற்கு மாறாக, அவை உன்னை அடக்கியாண்டு இயக்கும்படி விட்டுவிடுகிறாய். அவை உன்னைத் துன்பச் சேற்றிலும், ஆரிடர் இடக்குகளிலும் இழுத்துச் சென்று கலக்க மளிக்கின்றன, நீ கலங்குகிறாய். அந்த அவாக்களை நீ அடக்கி யாண்டு இயக்குவதற்கு மாறாக, அவை உன்னை அடக்கியாண்டு இயக்கும்படி விட்டுவிடுகிறாய். அவை உன்னைத் துன்பச் சேற்றிலும், ஆரிடர் இடக்குகளிலும் இழுத்துச் சென்று கலக்கமளிக்கின்றன, நீ கலங்குகிறாய். அந்த அவாக்களை அடக்கு, விட்டுவிடு. நீ மகிழ்வின் எல்லை காண்பாய். நீ துயரத்தின் ஏலமாட்டா அடிமையல்ல. எல்லையற்ற உவகையென்னும் மணப்பெண் உன்னை அரவணைக்கத் துடிதுடித்துக் காத்துக் கொண்டிருக்கிறாள். உன் வருகைக்காக இமை கொட்டாது வாயிலிலிருந்து வைத்த கண் வாங்காது துயிலொழித்திருக்கிறாள். இருளுருக்களின், பழிசேர் பேய்க் கனவுகளின் சிறையாளனல்லை. நீ உன்னை யறியாமல் உன் உறக்கத்தினிடையே தூய திருவார்ந்த நிறையொளிக் கதிர்கள் உன் கண்ணிமைகளில் வந்தாடுகின்றன. நீ எக்கணம் துயி லொழித்து, அதனைக் காண்பாயோ என்று அவை காத்துக் கலங்கி நிற்கின்றன. துயிலிடை இதனை அணுகி உணர்ந்தால், நீ துணிவுடன் கண் திறந்து துயரெலாம் தீர்வாய். திக்குத்திசையற்ற கடலில் நெளியும் பாம்புகளிடையே உழல்வதாகக் கருதும் நீ கண்திறந்தால் கடலலைகள் மெத்தை தலையணைகளே என்றும், நெளியும் பாம்பு உன் காதற் பசுங் கொடியே யென்றும் காண்பாய். ஆகவே துணிந்து கண் விழித்துப்பார். அக்காதுகளில் வந்து மோதும் கடலின் இரைச்சலாக நீ கருதுவது உன்னை எழுப்ப அவள் இனிய பண்ணிசைத்துப் பாடும் திருப்பள்ளியெழுச்சியே என்பதை விழிப்புணர்வுபெற்ற உன் காதுகள் அறியும். மடமையை உதறித் தள்ளி அறிவில் விழித்தெழுவாய். தூய்மை கணவன், கற்புடைப் பெண்மை இன்பம் மறதியில் ஆழ்ந்த துயிலில், அதே சமயம் பேய்க்கனவுகள் ஆட்டிப்படைக்கும் துயிலில் பழியின்பழி, மடமை, அறியாமை உன்னைக் கிடத்தியுள்ளது. எல்லையிலா நீடின்பத்தை நீ பாரா திருக்க, மறைக்க அது வழிவகுக்கின்றது. அந்த இனிய பண்ணிசை கேளாதிருக்கும்படி அதையே ஆரவாரக் கம்பலையாக்கி உன் செவிகளை அடைக்கின்றது. கனவிலும் அதன் அழகொளி வந்தெட்டி விடாவண்ணம் மடமை உன் கண்ணுக்கு முன் கவர்ச்சிகரமான மேற்பூச்சு வண்ணங்கள் கொண்ட பேயுருக்களை அனுப்புகின்றது. அதன் நறுமணம் நீ செல்லும் பாதையெல்லாம் சூழ்ந்து கிடந்தாலும் அதை நீ முகர மாட்டாமல் துயர்சேர் வாடைகளை நீயே சுமந்து செல்லும்படி அஃது உன்னைத் தூண்டுகிறது. சோர்வும் துயரும் போக்கும் நறுமணத்தை நீயாகத் தடுத்து நிறுத்துகிறாய். பழியும் தன்முனைப்பாகிய ஆணவமும் அகன்று, தற்பற்றுச் சார்ந்த அவா ஒழிந்தபின் துயரமேகங்கள் மறைகின்றன. அழிவிலா இன்பம் இதயஞ் சூழ்ந்து பரவி அதற்கு ஒளியூட்டு கிறது. துயர இருள் மண்டிக் கிடந்த இடங்களிலெல்லாம் இன்ப நிலவு ஒளிகாலுகின்றது. கொந்தளித்துக் குலைவுற்ற இடத்திலே குறையற்ற நிறையமைதி படிகின்றது. தூய்மை உயிர்த்துடிப்புடன் மூச்சுவிடத் தொடங்குகிறது. இன்பம் தன்னலத்தின் வாடைபட்டால் ஓடுவது. அது பூசலிருக்கும் இடம் நாடாது. தூய்மைக் கேட்டின் நிழல் பட்டால், அஃது உள்ளத்தடத்தில் ஆழ்ந்து மறையும், அதைச் சூழ்ந்து ஒட்டாது சுற்றியோடும். கணவனிடமன்றி வேறு எவரிடமும் தங்கு தடையின்றி வெளிப்படாக் கற்புடைப் பெண்மை போன்றது இன்பம். அதன் கணவன் அன்பு. அன்பின் பகையாகிய தன்னலம் உலவுமிடத்தருகே அது நாடாது. தன்னல அவாக்களை ஒழித்த அளவிலேயே இன்பம் இன்முகம் காட்டும். அதன் முழுநலமும் நுகர்பவர் அதன் எல்லையிலா, ஓய்விலா நிறை இன்பம் துய்ப்பவர். கணத்துக்குக் கணம் புதிதுபுதிதாகப் பொங்கும் அதன் வரம்பிலா வளத்தில் தோய்பவர் தூய்மையில் குளித்தெழுந்து அதனுடன் பழகி முழுத் தூய்மை பெற்றவரே. ஆயினும் தன்னலமற்ற உயர்நிலையை ஒரு கணம் எட்டிப் பார்த்தவர்மீது கூட அதன் இளநகை முகிழாமலிராது. இதனால் வரும் இன்ப அமைதி, உணர்ச்சியில் கொந்தளிக்கும் வெந்துயர் கலந்ததன்று. துயரின் உருக்கரந்த ஆரவாரப் பகட்டின்பம் அன்று. துன்பத்தொடக்கற்ற, கண்ணீர் கரவாத இந்த இன்பம் தன்னலமற்ற ஒவ்வொரு வாய்மைக் கருத்திலும் செயலிலும் ததும்பி நிற்கின்றது. தன்னலம் அற்ற அளவே இன்பம் உற்ற அளவு ஒவ்வொருவனும் தன்னலமற்ற அளவிலே, பொதுநலப் பாசங்களிலேதான் உண்மை இன்பம் அடைகிறான். தன்னல அளவிலன்றி அதற்கு மேம்படத் துன்பம் அவனை அணுகுவ தில்லை. எல்லா நல்லோர்களும், தன் முனைப்பு அல்லது ஆணவத்தை எதிர்த்து வெற்றி கிட்டும்வரை, போரிட்ட வீரர் களான நல்லவர் ஒவ்வொருவரும் இன்பவாணரே. அப்படி யானால் பெருவீரரான அறிஞர், ஞானிகளின் இன்பத்தை யாரே அளந்து காணவல்லார்? எல்லா உலக ஆசாரியர்களும் இந்த இன்பத்தைத்தான் சுட்டிக் காட்டுகிறார்கள், இதை நோக்கியே மக்களை அழைக்கி றார்கள். உண்மையான எந்த உலக ஆசானும் துன்பத்தைச் சுட்டிக்காட்டி, அதைக் குறிக்கோளாக்கி, அதை நோக்கி மக்களை அழைக்கமாட்டான். அழைக்கவுமில்லை. அழைத்தால் கூட, மக்கள் அவர்களை உலக ஆசாரியர்கள் என்று ஏற்றிருப் பார்கள் என்று நம்ப முடியாது. உலக ஆசாரியர்கள் இங்ஙனம் ஒரே இன்பக் குறிக்கோளைச் சுட்டிக்காட்டி அதை நோக்கியே மக்களை அழைத்தாலும் முற்றிலும் ஒரே வகைப்பட்ட வழியையும் காட்டவில்லை, முற்றிலும் ஒன்றுபட்ட கருத்தையும் மேற்கொள்ளவில்லை. உலக மக்கள் அவர்களைப் பின்பற்றும் வகையில், போலி அறிஞர், போலிச் சமயவாதிகள் இவ்வேறுபாட்டைப் பயன்படுத்தித் தான், அந்த ஆசாரியர் அரும்பணிகளை விழலுக்கிறைத்த நீராக்கியுள்ளனர். அந்த ஆசாரியர்கள் அனைவரும் ஒன்றுபட்ட இடம்தான் அவர்கள் அறிவுரையின், அறிவுரைக் கோட்பாட்டின் உயிர்நிலைக்கூறு. இதைப் போலிச் சமயவாதிகள் தாமும் கைநெகிழ விட்டனர். மக்களும் அவற்றைக் கைநெகிழ விடும்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்! ஒன்று பட்டு எல்லா ஆசாரியரும் கூறும் அவ்வுயிர்ப் பகுதியைத் திறம்பட மக்கள் கண்களிலிருந்து மறைக்க, அவர்களிடையே யுள்ள சில்லறை வேறுபாடுகளை, உயிரற்ற சக்கைவாதங்களை, புறச்சின்னங்களை வலியுறுத்தி அவற்றினடிப்படையிலே சமயப் போரும் கலாமும் விளைவித்து, உண்மைச் சமயப் பண்பிலிருந்து, உண்மைச் சமயத்துறையிலிருந்து மக்களை விலக்கி வைத்தனர். ஆசாரியர்களின் அறவுரையின் உயிர்க்கூறு மக்கள் கண்களி லிருந்து, அறிவிலிருந்து, சிந்தனையிலிருந்து மறைக்கப்பட்டே, மறக்கடிக்கப்பட்டே, இருட்டடிக்கப்பட்டே வந்துள்ளது, வருகிறது. உலக ஆசாரியர் இன்பத்தைக் குறிக்கோளாகக் காட்டி னாலும், பெரிதும் துன்பத்தைப் பற்றியே அடிக்கடி பேசி யுள்ளனர். ஆனால் அவர்கள் துன்பத்தை ஒரு பாதையாக, ஓர் இடைவழியாகவே கருதினார்கள் என்பது தெளிவு. அவர்கள் காட்டிய இன்பப் பாதையில் துன்பம் இன்பமாக மாறும் கட்டம் வரும்வரை அது மக்களுக்கு துன்பப் பாதையாகவே காட்சி யளிக்கக்கூடும். துன்பத்தைப் பற்றியே அவர்கள் மிகுதியாகப் பேசியதன் காரணம் இதுவே. தவிர, துன்பம் இன்பமாவதன் மறைதிறவு, தற்பற்றின் துறவிலேயே உள்ளது. தற்பற்று விட்ட இடம் துன்பம் அற்ற இடம். ஆனால் உயிர் மலர்ச்சியின் முதற்படிகளில் தற்பற்றுத் துறவு இன்ப அவாவில் தோன்றுவ தில்லை. துன்பச் சிந்தனையிலேயே தோன்றும். இன்பம் நாடுபவன் தனக்காகவே இன்பத்தை விரும்பு கிறான். ஆனால் துன்பமனுபவிப்பவன் தன்னைவிட்டு வெளியேதான் ஆறுதல் தேடுகிறான். துன்பத்தைக் காண்பவன் இயல்பாக மற்றவர்கட்கு ஆறுதல் தருகிறான். மற்றவருடன் ஒத்துணர்வு கொள்கிறான். தன்னையறியாமலே மற்றவர் துன்பத்தைத் தன் துன்பமாக ஏற்றுப் பங்கு கொள்கிறான். துன்பத்தின் இத்தற்பற்றுத் துறப்பின் ஆற்றல் கருதியே உலக ஆசாரியர்கள் துன்பச் சிந்தனைக்கு முதலிடம் அளித்தனர். அறிவுகலவா உணர்ச்சிப் பித்தன், உணர்ச்சி கலவா அறிவுப் பித்தன் இன்பம் நேர்மையின் பிள்ளை. நேர்மையோ பொது நலத்தின் தோழன். நேர்மையூடாகப் பொதுநலமே இன்பம் துய்க்கும் தகுதிபெறும். பொதுநலவாணன் உள்ளத்தில் பரவி யூடாடும் அன்புக் கனிவும் அருளிரக்கமும் நேர்மையுடன் கலந்து இன்பமாகப் பரிமளிக்கும். பொதுநலத்திலிருந்து இன்பத்துக்குச் செல்லும் வழி இவ்வாறு எளிதான, கவர்ச்சிகரமான வழியே யாகும். ஆனால் அந்தப் பொதுநலம் அவ்வளவு எளிதாகத் தோன்றிவிடுவதன்று. துன்பத்தின் நீடித்த பயிற்சியின்றி அது கைகூடாது. தன்னலம் பொதுநலமாக ‘ஆவது’ நீடித்த துன்பத்தின் செயலேயாகும். ஏனெனில் ‘ஆவது’ என்பது பிறப்பது போன்றது. அப்புத்தாக்கத் துன்பம் இவ்வாறு புத் துயிரின் பேறுகாலத்தில் உண்டாவது; பேறுகாலத்தில் தாய்க்கு ஏற்படும் வேதனையுடன் அது பெரிதும் தொடர்புடையது. தாய் எத்தனை உயிர்வேதனையடைந்தாலும், பிள்ளை முகம் கண்டவுடன் அது எப்படி அகன்றுவிடுகிறதோ, அது போலத் தன்னலம் பொதுநலமாக மாறும் காலத்திற்குள் எத்தனை துன்பங்கள் உயிரை வாட்டினாலும், பொதுநலப் படி கிட்டியபின் அத்துன்பமெல்லாம் இன்பமாக மாறும். துன்பமே தன்னலமென்னும் கீழ்த்தரக் கலவை உலோகத்தின் களிம்புகள் அகற்றி, மாசுகள் சுட்டெரித்து, கலவைகளைக் களைந்து, அதனைப் பொதுநலமாகும் மாசுமறுவற்ற பத்தரை மாற்றுச் சொக்கத் தங்கம் ஆக்கிவிடுகிறது. இந்நிலையடைந்தவன் முழுநிறை மனிதனாகிறான். உலகை முழுநிறை இன்ப உலகாக, இன்பமிளிரும் இயற்கையின் புத் துருவாக, இன்ப உருவினனான கடவுளாக, பேரருளின் பிறங்கொளியாகக் காண்கிறான். அறிவு கலவாத உணர்ச்சிப் பித்தன் நிலைக்கெதிராக, அவன் உணர்ச்சி கலவாத அறிவுப் பித்தனாகிறான். இந்நிலையையே, 3‘அழகின் ஆரொளி ஆற்றலின் பேரொலி அன்பில் பழகும் இன்ப அலை தவழ் மாகடல் ............. ............................................... பண்பு நிலைகள் சூழல்கள் உணர்ச்சிகள் கருத்துகள் செயல்கள் கலைகள் ஆகும் தன்னாட்சியின் அரும்பரப்பு அதுவே. அழகின் சிரிப்பு, இன்பம் செடியின் வாழ்வு அழகு மலரின் வாழ்வே. அது வித்தி லிருந்து தோன்றி வித்துக்குச் செல்கிறது. ஆனால் மலர்ச்சியே செடிவாழ்வின் மையப்பகுதி, உயிர்நிலைப்பகுதி. செடியின் ஒவ்வொரு தலைமுறையும் அதை நோக்கியே வளர்கிறது. மலர்ச்சியின் பின்னுள்ள வாழ்வு செடியின் வாழ்வன்று, அடுத்த தலைமுறை சார்ந்தது. நிலத்தின் அடியில், வித்தினகத்தே முதலில் இருளிடையே வேர்முதலாகத் தடவியே உயிரின் கரு வளர்கிறது. பின் இருள் நிலம் கிழித்து முளை ஒளிநோக்கி மேலே முகிழ்த்துத் தளிர்த்து, தழைத்துக் கிளைத்து, அரும்பாகி மொக்குவிட்டு, இறுதியில் மலர்ச்சி அல்லது முழுவாழ்வு அடைகிறது. அழகிய இம்மலரின் பல்வண்ணத் தோற்றத்துக்கு முற்பட அஃது இலை மேல் இலையாக, கிளை மேல் கிளையாக பல்கித் தழைத்தது. ஒவ்வோர் இலையும், கிளையும் வாழ்வின் ஒவ்வொரு துன்பத்தைப் போல்வன. கிளையின் புதுவடிவாகப் பூங்குலையும், இலையின் புத் துருவாக மலரும் முழு வளர்ச்சியின் இனமலர்ச்சியில் மாறுவது போல, தன்னலப்படி கடந்த பொதுநலப்படியில் இனநலமாகிய அன்பு மலர்ச்சி ஏற்படுகிறது. செடிவாழ்வின் மலர்ச்சியில் நாம் காணும் எல்லாப் படிகளையும் இவ்வாறு மனித வாழ்விலும் பார்க்கிறோம். அனுபவ அறிவில்லாத அறியாமை நிலையில் முதலில் உயிர் தட்டித் தடவிச் செல்கிறது. தன்னலம், மடமை ஆகிய கருநில இருளில் அது விழைவு சென்றவழிக் குழைந்து செல்கிறது. ஆனால் அனுபவமென்னும் நிலப்பரப்பின் திரைகிழித்து அது விரைவில் இன்பவான் நோக்கி உயர்கிறது. பலவகை மயக்க தயக்க இன்னல்கள் இடர்களாக வாழ்வு கிளைத்துத் தழைத்த பின், அறிவின் தளிராக, தூய்மையின் கொழுந்தாக, அழகின் சிரிப்பாக, இன்பஒளி அவர்கள் உள்ளத்தில் மலர்கிறது. உண்மை வானவர் யார், வானுலகம் எது? நன்மையின் நிறைவும் தூய்மையின் முகடும்தான் இன்பம், இதனை வாத எதிர்வாதங்களால் மறுக்கமுயல்பவர், மட்டுப் படுத்திவிட முனைபவர் உண்டு. ஆனால் மனிதர் இயற்கை உணர்ச்சியே இதனை எளிதில் உணர்த்திவிடுவதாய் உள்ளது. அவர்கள் மேலீடான புற உணர்ச்சிகள் கடந்த ஓர் உள்ளுணர்வு இதன் உண்மையை அவர்கட்குத் தெரிவித்துவிடுகிறது. குழந்தைகளிலிருந்து, குழந்தைப் பருவத்திலுள்ள மனித இனத்திலிருந்து, முதிர்வயதுடைய நாகரிக மனிதர்வரை யாவருமே தூய உடலும் உளமும் கொண்டவர்களையே தெய்வங்களாக, இன்ப எழிலுருக்களாக உருவகம் செய்து காண்கின்றனர். ஆயினும் பழங்கதைகள் கூறுவது போலவும் மக்கள் நினைப்பது போலவும் இந்த இன்பத் தெய்வங்கள் நீவேறு உலகத் தவையல்ல. பகுத்தறிவாளர் கருதுவதுபோல முழுவதும் பொய்யான கற்பனையுமல்ல. அவர்கள் சூழல் தன்னல உலகின் சூழலன்று, பொதுநலத்தின் சூழல் என்பது கருதியே அவர்கள் வேறுலகத்தவர் என்று உருவகிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் எல்லா மனிதரையும்போல ஊனுடல் தாங்கியவர்களே. நாள்தோறும் நாம் அத்தகையவரைக் காணலாம். அவர் களுடன் பழகலாம். ஊடாடக் கூடச் செய்யலாம். உண்மையில் அவ்வாறே பழகுகிறோம், ஊடாடுகிறோம். அத்துடன் அவர்கள் நம்மையறியாமல் நம் சூழலையும் நம்மையும் மாற்றிக் கொண் டிருப்பவர்கள் ஆவர். ஆயினும் அவர்கள் நிலையை அணுகியவர் தவிர வேறு யாரும் அவர்கள் தன்மையை அறிவதில்லை. நாமும் அந்நிலையை, அணுகினாலன்றி, அவர்கள் உயர்வை உணர முடியாது. மனிதர் இயல்பான உணர்வில் எழுந்து பழங்கதை மரபு களிலும் சமயமரபுகளிலும் இடம்பெற்றுள்ள எழில் தெய்வ உருக்கள் இவர்கள்தாம் என்றும் நாம் எண்ணுவதில்லை. ஆயினும் அவர்கள் ஆன்மிகச் செல்வாக்கு அத்தெய்வங்களுக்கு இருப்பதாகச் சொல்லப்படும் தெய்விக ஆற்றலில் குறைந்ததன்று. அந்நிலையடைந்த மனிதன் பிறரால் எவ்வாறு கருதப்பட்டாலும் மக்களிடையே ஒரு தெய்வமாகத்தான் உலவுகிறான். தற் பற்றில்லாத காரணத்தால், அவன் ஊனுடலில் இருந்தாலும், அவ்வுடற் பற்றற்றவனாய் இன்பவெளியில் உலவுகிறான். அவனைப் போலத் தூய்மையடைந்தவரே அவன் நிலையும் அவன் அகத்துறவு நிலையும் கண்டு, அவன் அக உலகாகிய மேலுலகில் சென்று அவ் அகவாழ்வு அல்லது வானுலக வாழ்வில் பங்கு பெற முடியும். துயரில் இன்பங்கண்ட நிறை இன்ப மனிதர்: இயேசு, புத்தர் ஊனுடலில் வாழ்ந்துகொண்டே வானுலகில் உலவும் இத்தெய்வ உருவங்களை உள்ளபடி காணமாட்டார், அகத் தூய்மையற்ற தற்பற்றுலகின் மக்கள்! 4 ‘காணாதவர் புறத்துக் கண் தடவுமே, கேளாதவர் புறத்துச்செவி யுமுடையார்; பேணார் புறப்பொறிகள் உள்ளுணர்வினால் காணாதன, கேளாதன தாமுணர்வரே.” தூய்மையுடையவர் கலப்பற்ற இன்பமுடையவர். துயரின் சின்னத்தை அவர்கள் வாழ்வில் காண்பது அரிதிலும் அரிது. துயரார்ந்த மனிதர் என இயேசுபெருமானைக் குறிப்பதுண்டு. ஆனால் இது அவர் புற வாழ்வு குறித்த தொடர் - அவர் துயரங்கள் யாவும் பிறருக்காக அவர் இன்முகத்துடன் ஏற்றுக் கொண்ட துயரே. ஆனால் அவர் வாய்மொழிகள் எதிலும் துயரத்தின் தடத்தைக் காண முடியாது. துயரையே இன்பமாகக் கொண்ட, துயரில் இன்பங்கண்ட நிறை இன்ப மனிதர் அவர். இதே வகையான மற்றொரு பெரியார் புத்தர் பெருமான். தமது இந்த அனுபவத்தை அவர்தம் வாய்மொழியிலேயே பதிவு செய்துள்ளார். 5‘அழுதேன் உடன்பிறந்த மனிதர் துயர்க்கெல்லாம், நான் இழுதாய் உருகினேன் எலா உலகுக்கும்; அதனால் முழுதாம் விடுதலையில் மூழ்கி மகிழ்கின்றேன்.” பழியிலும் பழியை எதிர்த்துப் போராடும் போராட்டத் திலும் இரண்டிலுமே அமைதிக் கேடு உண்டு, துன்பம் உண்டு. ஆனால் பின்னதன் பயனாக வந்தெய்தும் நிறை வாய்மையில், நேர்மைப்பாதையில் என்றுமழியா இன்பமன்றி வேறெதுவும் கிடையாது. 6‘மெய்வழியே செல்லுவீர், வெய்ய விடாயகற்றும் விரிந்த நீரோடையங்கே திரிதருதல் காண்பீர்! தெய்வமணங்கமழும் செம்மலர்கள் எங்கும் மெல்லியபட்டாடை விரித்ததெனவிளங்கும்! நெய்வா ரிழைபோல் விரைந்தோடும் இன்பநிறை நாள் ஓரை, ஓரைகணமாக நின் நல்வாழ்வே! போலி அகப்பண்பு, தற்பற்று, ஆணவம் நெற்பயிர் நெல்லே விளைவிக்கிறது. ஆனால் அந்த நெல்லில் பயனுடைய அரிசியும் உண்டு. அதனைப் பாதுகாத்துத் தருவதன்றி வேறு பயனற்ற உமியும் அதில் உண்டு. அதுமட்டு மன்று, உமியற்ற அரிசியில்லையானாலும், அரிசியற்ற உமி அஃதாவது பதர் நெல்லுடன் கலந்தே காணப்பெறுகிறது. பதரும் அகற்றி, அதனுடன் நெல்லிலிருந்து பிரித்த உமியும் அகற்றிய பின்பே அரிசி உணவாகப் பயன்பட முடியும். இதுபோன்றதுதான் வாழ்வு. வாழ்வில் பண்புகள் விளை கின்றன. அவை உளத்துக்கு நிலையான இன்பம் தருதற்குரியன. ஆனால் உமிபோன்ற புறப்பண்புகளுடனே அரிசி போன்ற அகப்பண்பும் கலந்து காணப்படுகிறது. அதுமட்டுமன்று. புறப் பண்பற்ற அகப்பண்பு இல்லையாயினும், அகப்பண்பற்ற புறப்பண்பு, போலி அகப்பண்பு உண்டு. இதுவே தற்பற்று. புறப்பண்புகள் கடந்து அகப்பண்பு வளர்ந்தபின்கூட இப் போலிப் பண்பு, பதரான தற்பற்று அல்லது ஆணவம் நீடித்துத் தங்கியே நிற்கும். புறப்பண்புடன் இப்போலிப் பதர்ப்பண்பும் அகன்றபின்பே அகப்பண்புகளின் ஒளியாகிய இன்பம் மிளிரும். நெல்லிலிருந்து சாவி அல்லது பதரும் உமியும் அகற்றும் செயலை நாம் சலித்தல் என்கிறோம். அகப்பண்புகளிலிருந்து புறப்பண்புகளையும் இப்போலிப் பண்பையும் அகற்றும் செயலே துன்பம். தற்பற்றகலும்வரை துன்பம் அதை அகற்றும் கருவியாகவே இயல்கின்றது. புறப்பண்பும் தற்பற்றும் அகன்ற பின், துன்பத்தின் தேவை நீங்குகிறது. துன்பத்துக்கு இடமும் இல்லாமல் போகிறது. நிழலற்ற ஒளிபோல, களிம்பு நீக்கிய செம்புபோல, மாசு தீர்ந்த பொன்போலத் துன்பத்தின் தொடர்பற்ற, ஆணவத்தின் பற்றற்ற இடத்தில் தூய நீடின்பம் நிலவுகிறது. பேரருட்பகவர் நற்செய்தி உலக ஆசாரியர்கள், ஞானியர், அருளாளர், பகவர்கள் யாவரும் உலகுக்களித்த நல்லுரை, தெய்வமொழி இதுவே. அருமறை என்றும் வாய்மொழி என்றும் வழங்கப்பெறும் திருமறைகள் கூறுவது இதனையே. துன்புற்றவர்க்கு இன்பமுண்டு. ஏழையர்க்கு வாழ்வுண்டு. நோயுற்றவர் சீர்ப்படுவர். தொழில் செய்பவர்கள் எழில் காண்பர். பழிக்காட்பட்டவர் பண்பு காண்பர். சேயகம் சென்றவர் தாயகம் மீள்வர் - இவையே அந்நன்மொழிகளின் சாரம். சிறு துன்புற்றவர் துன்ப நீக்கமே நாடுவர். இவர்களோ துன்பமே நீங்கிய நிலைகாட்டி நிறை இன்ப உறுதி கூறுகின்றனர். அதற்கு வழிகாட்டுகின்றனர். ஆனால் அந்த வழி முதலில் துன்ப வழியாகத் தொடங்குகிறது. பின் அவாத்துறத்தல் வழியாக உயர்கின்றது. அதன் பின்னரே கண்ணும் கருத்தும் முழுதுறழ ஈர்க்கும் இன்ப வழி மிளிர்கின்றது. நோய் உற்றவர்கள் நோய் நீக்கமே நாடுவர். அருளாளரோ எந்நோயும் அகற்றி முழுநல உறுதி கூறுகின்றனர். அத்துடன் நிறை இன்பமும் காணும் ஆர்வம் அளிக்கின்றனர். ஆனால் நோய்க் காரணம் அறியும் சிந்தனை, மருந்து, நோன்புணவு ஆகியவை பிறர் நோய் தன் நோயாகக் கருதிப் பிறர்க்குச் செய்யும் தொண்டுதான். அதன் வழியேதான் அந்த நீடின்பம் கைவரப் பெறும். உலகின் மற்ற நற்செய்திகளெல்லாம் ‘ஒரு தீமை அகன்றது, ஒரு நன்மை அணுகுகின்றது’ என்பதுடன் நிற்கும். அகன்ற தீமைக்குப்பின் தீமை வராமலிராது. அணுகிய நன்மை தங்காது. ஆனால் உலக ஆசாரியர் அல்லது பகவர் கூறும் நற்செய்தி தீமையே அகற்றி நன்மையே பெருக்கும் நன்மொழி ஆகும். அத்துடன் மேலீடாகப் பார்ப்பவருக்குத் தோற்றுவதுபோல, அவர்கள் நற்செய்தி கூறும் தீமை நீக்கம், நல்வளம் ஏதோ ஒரு வருங்கால வாழ்விலல்ல, வேறோர் கற்பனை உலகிலல்ல - தற்பற்றறுத்த அன்றே, அவ்விடத்தே, அவை எய்தப் பெறுவன. பொதுநல அவாத் தோன்றிய அன்றே துய்க்கப் பெறுவன. அவற்றைப் பெறுவதற்கு வேறு எத்தகைய பிறப்புத் தகுதியோ, சிறப்புத் தகுதியோ கிடையாது. தோட்டி முதல் தொண்டைமான்வரை, பெரும்புலவன் முதல் சிறுவர் சிறுமியர் வரை யாரும் அதற்கு விலக்கானவர்கள் அல்லர். அவ்வாயில் நுழையும் உரிமையற்றவர்களல்லர். தூய தன்னலமறுப்பு ஒன்றே அதன் தகுதி. உச்ச உயர்நலத்தை நாடு, நாடிப் பெறு! பெற்றபின் அதைப் பயில், அதை உன்னுள் படிய வை! நீ அப்போது நுகரும் இன்பம் அடியற்ற ஆழமுடையது. எல்லையற்ற பரப்புடையது. வானளா வியது. எங்கும் நிறைந்தது. அதில் நீந்தித் திளைக்கும் அளவு, நீ உன் தற்பற்றார்ந்த அவாக்களை விட்ட அளவு, பிறர் பற்றிய உன் கருத்துக்களின் இசைவு ஆகியவை பிறருக்கு நீ செய்யும் ஆர்வத் தொண்டினளவாயிருக்கும். நீயாக வகுக்கும் இந்த எல்லையன்றி அதற்கு வேறு எல்லை கிடையாது. தன்னலத்துறவு என்னும் வாயில் கடந்ததும் நீடின்ப அழகுக் கோயிலின் முகப்பு நேர்படும். வாயில் கடந்த எவரும் அதனுள் நேராக வேறு எவ்வகைத் தடையுமின்றிச் செல்லலாம். எங்கும் திரிந்து எல்லாவகை அழகு நலங்களும் துய்க்கலாம். ஐயங்கள், தயக்கங்கள், மயக்கங்கள் இதன்பின் அவர்கள் பாதையில் நிழலாட மாட்டா. பொதுநலம் தரும் பொங்கல் வளம் தன்னலம் ஒருவன் நலத்தை உண்மையில் வளர்ப்பதல்ல. தீங்கையே பெருக்குவது. பொதுநலமே அவனுக்குப் பொங்கல் வளம் உண்டுபண்ணுவது. ஆனால் பொதுநலவாணன் இந்த அறிவால், இந்த அடிப்படையில் செயலாற்றுவதில்லை. செய லாற்றினால் அது பொதுநல ஆர்வமாகாது. பொதுநலத்துக் குரிய உயர்தகுதியையும் அது பெறாது. அத்துடன் பொதுநலம் தன்னலத் தற்பற்றுடையவன் எதிர்பார்க்கும், கனவு காணும் தற்பற்றவாக்களின் நிறைவன்று. முதன் முதலிலே உலக நலனார்வமே அவனுக்கு அக இன்பமும் அமைதியும் தந்துவிடுகிறது. அந்த ஆர்வத்தின் பயனான அகப்பண்பும், சொல்லும் செயலும், வாழ்க்கைப் பண்பும் அவனைச் சுற்றிலும் நலம் பரப்புகிறது. இந்நலம் எல்லையற்று உலகெங்கும் அலை அலையாகப் பரந்து கொண்டேயிருப்பது. அலைகள் ஒவ்வொரு படியிலும் எதிரலை யாக வந்து, பொதுநலவாணன் சூழலையும் வாழ்வையும் அவனறி யாமலே, அவன் எதிர்பாராமலே பேணி வளர்த்துக்கொண் டிருக்கிறது. இவ்வாறு பொதுநலத் தொண்டால் அவன் அடையும் இன்பமும் நலனும், தற்பற்றாளன் இன்பத்தைப் போன்றதும் அன்று, அவன் பொதுநல ஆர்வத்தால் முதலில் பெற்ற இன்ப அமைதியும் அன்று. ஆனால் தற்பற்றாளன் இன்பமோ அவன் எதிர்பார்த்த, அவாவில் கனவுகண்ட இன்பம் மட்டுமே. அதுவும் பெரும்பாலும் நிறைவேறுவதில்லை. ஒருவேளை நிறைவேறி னாலும் தற்காலிக இன்பமாகவே, துன்பக் கலப்புடையதாகவே இருக்கும். அது உண்மையின்பமாகவும் அமைவதில்லை. பொதுநலவாணன் முதன் முதல் பெறும் அமைதி நலமே இதைக் காட்டிலும் பன்மடங்கு இன்பமளிப்பது. அவன் தொண்டு மூலம் பெறும் இன்பமோ இதைவிட மாபெரிது. ஏனெனில் அது எல்லையற்றது. பொதுநலவாணனின் இன்பம் அவனையறியாமல், அவன் முயற்சியின்றியே வருவது. அஃது அவனை மட்டுமன்றி அவன் சூழலை, இனத்தை, உலகை அவனுடனே உயர்த்தி, அதில் அவனை அலை எதிர் அலைகளின் மையமாக்கி, அவன் ஆற்றலை வளர்ப்பது. பொதுநல ஆர்வம் இங்ஙனம் தற்பற்றாளன் கனவு காணாத எல்லையில், கனவு காணாத அளவில் மனித வாழ்வில் இடை யறாது வளரும் பொங்கல் இன்பத்தை, நீடுநிறை இன்பத்தை உண்டு பண்ணுகிறது. பொதுநலவாணன் வாழ்வின் வெற்றி அவ்வாழ்வுடன் தொடர்புடையவரையெல்லாம் வெற்றியடையச் செய்யும் விசையார்ந்த வெற்றி ஆகும். அது நிலையான வெற்றிமட்டு மன்று, மேன்மேலும் வளர்ந்துகொண்டேயிருப்பது. அது அவன் துன்பம் முற்றிலும் ஒழிப்பது. உலகின் துயர் அகற்றுவது. அதுவே உண்மை இன்பம். மற்ற இன்பங்களத்தனையும் மாயத் தோற்றம், கானல்நீர் போன்ற போலி இன்பங்களேயாகும். மனித இனம் ஒரே தொடர்புடைய முழுப்பொருள், ஒரே நீர்ப்பரப்பு! தனி மனிதன் அதன் ஒரு துகள், ஒரு துளி! நீர் சூடு பெறாமல் ஒரு துளி சூடடைவதென்பதோ, ஒரு துளி சூடடையாமல் நீர் சூடடைவதென்பதோ எண்ணமுடியாத செய்தி. அதுபோலவே உலக நலமடையாமல், மனித இனம் நலமடையாமல், எந்தத் தனி மனிதனும் நலமடைய முடியாது. தற்பற்றவா வுடையவன் படுதோல்விக்கும். பொதுநல அவா வுடையவன் எல்லையிலா வெற்றிக்கும் அடிப்படையான மறை திறவு இதுவே. பிறர் செல்லும் பாதையில், உலக மக்கள் செல்லும் பாதையிலெல்லாம் மலர்கள் தூவு, முள் தூவிவிடாதே! பகைவர் என்பதற்காகக்கூட எவர் பாதையிலும் முள் பரப்பாதே, மலரே பரப்பு. இவற்றைப் பிறர் நலத்துக்காகவே, உலக நலத்துக்காகவே செய். ஏனெனில் அவர்கள் வாழ்வு உன் வாழ்வே! உன் வாழ்வின் ஒரு பெரும்பகுதியேயாகும். அவர்கள் காலடியில் தைக்கும் முள் நேரடியாகவே உன் காலடியையும் தைக்கும். அத்துடன் அவர்கள் காலடியில் தைக்கும் முள்ளின் துன்பம் உன் சூழலைத் துன்ப மயமாக்கி, உனக்கும் துன்பமாக விளையாமல் இராது. ஆனால் பிறர் காலடியில் நீ தூவும் மலர்கள் பிறர் காலடி களுக்கும் உன் காலடிக்கும் மெல்லினிமை தருவதுடன், எங்கும் மணமும் பரப்பும். இதனால் உன் வாழ்வில் ஒரு சிறு பகுதியாகிய நீயும், அதன் மிகப் பெரும் பகுதியாகிய பிறரும், உன் சூழலும் பிறர் சூழல்களும் யாவும் நலமாய் அமையும். அடிக்குறிப்புகள் 1. “றுhடி உயசசல அரளiஉ in வாநசை hநயசவ கூhசடிரபா னரளமல டயநே யனே றசயபேடiபே அயசவ, ஞடலiபே வாநசை னயடைல வடிடை றiவா ரௌநைச கநநவ, க்ஷநஉயரளந வாநசை ளநஉசநவ ளடிரட ய hடிடநைச ளவசயin சநயீநயவ.” - முநடெந. 2. “ளுநசநநே றடைட நெ டிரச னயலள யனே செiபாவ ஹனே hயயீயீல றடைட டிரச யேவரசந நெ, றுhநn டடிஎந ளை யn ரநேசசiபே டiபாவ, ஹனே தடில வைள டிறn ளநஉரசவைல.” - றுடிசனளறடிசவா. 3. “ஹ ளவயவந றுhநசந யடட ளை டடிஎநடiநேளள, யனே யீடிறநச யனே டடிஎந, றுiவா யடட ளரடெiஅநளவ ளூரயடவைநைள டிக அiனே .....................................................றுhநசந யடட நுதேடில நவேசைந னடிஅiniடிn டி’நச வாநஅளநடஎநள ஹஉவள, கநநடiபேள, வாடிரபாவள, உடினேவைiடிளே, ளூரயடவைநைள.” 4. “கூhநல நேநனள அரளவ பசடியீந றாடி உயnnடிவ ளநந கூhந டெயனந நெகடிசந வாந நயச அரளவ நெ; கூhந டிரவறயசன ளலஅbடிடள னளையயீயீநயச குசடிஅ hiஅ றாடிளந iறேயசன ளiபாவ ளை உடநயச.” 5. “ஐ, க்ஷரனனா, றாடி றநயீவ றiவா யடட அல செடிவாநசள’ வநயசள, றுhடிளந hநயசவ றயள செடிமநn லெ ய றாடிடந றடிசடன’ள றடிந, டுயரபா யனே யஅ படயன, கடிச வாநசந ளை டiநெசவல!” 6. “நுவேநச வாந ஞயவா! கூhநசந ளயீசiபே hநயடiபே ளவசநயஅள ணுரநnஉhiபே யடட வாசைளவ! கூhநசந டெடிடிஅ வா’iஅஅடிசவயட கடடிறநசள ஊயசயீநவiபே யடட வாந றயல றiவா தடில! கூhநசந வாசடிபே ளுறகைவநளவ யனே ளறநநவநளவ hடிரசள!” 10. மோனநிலை 1சும்மா இரு, வாழ்வின் மணி மகுடம் துய்தாகிய மோனம்; உன் நீள் நாளில் பொய் மாய, ஓரோரை ஒதுக்கிடுவாய் பொன்னார் அமைதிக்கென; வீணுரையே நம் வாழ்வினரும் பெருங்கூறு, நலம் நாடுத லரிதிது ஓர்ந்திடுவாய்! பேசாதிரு, பேசும் தகையார்ந்த பீடார்தரு பொன்னுரை நாடிடில்நீ கூசா தொழி வம்புரை கட்டுரையே குறைநேர மதேனும்; அதன்பயனாய் காசார்தரு பொன்மொழியாம் மோனம் கருத்தாழ்தர ஆய்ந்துணர் வதுபெறுவாய். - ஏ.எல். சால்மன். 2சும்மா இரு மனமே! வெம்மாய உலக வாழ்வினில் மென்மே லழன்றுழலா தொரு புன்மா கணமதுவாகிலும், விம்மாது வெய்துயிரா திரு! சும்மா இருமனமே! நன்மாகண மொன்றாகிலும், தன்னோ டொருதனி யாகலின் பொன்மாண்பினுக் கஞ்சாதிரு! சும்மாஇரு மனமே! - ஏர்னெஸ்ட் கிராஸ்பி மெய்யுணர்வுடையவன் சொற்கள் ஆற்றல்வாய்ந்தவை. ஆனால் அவன் சொல்லாடாமோனம் இன்னும் ஆற்றல்மிக்கது. மிகப் பெரிய உலக ஆசான்களெல்லாம் முனைத்த மோனநிலை மூலமே மிகச் சிறந்த முறையில் படிப்பினைகளை வலியுறுத்திச் சென்றுள்ளனர். அவர்கள் மோனநிலையை ஒருவேளை அவர்கள் மாணாக்கர்களுள் ஒன்றிரண்டு பேரே முற்றிலும் புரிந்து கொண்டிருக்கக்கூடும். ஆயினும் அவர்கள் மூலமே அது ஊழிகடந்து நமக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மோனத்தின் இக்காலங் கடந்த பண்பு, மதிப்பு மிகுந்த வாய்த்திற மிக்கவர் பேச்சுக்களுக்குக்கூட இல்லாதது. வாய்த்திற மிக்கவர் சொற்களை ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கேட்கக்கூடும், உடனடியாக மக்களிடையே அவை கிளர்ச்சி யூட்டக்கூடும், ஆனால் ஒரு சில நாட்களில் அல்லது ஆண்டு களில் - உச்ச அளவில், ஒரு சில தலைமுறைகளுக்குள் - அது மறக்கப்பட்டே போய்விடும். ஆனால் இயேசுபிரான், புத்தர் பெருமான் ஆகியவர்களின் அறிவார்ந்த சொற்களல்ல - அறிவார்ந்த மோனமே பல்லூழி கடந்து நமக்குப் பதிவு செய்யப் பட்டு நிலவரமான மெய்ம்மைகளாகக் காட்டப்பட்டுள்ளது. இயேசு, புத்தர் பொருள் நிறை மோனம் “உண்மை யென்றால் என்ன?” என்று பைலட் என்பான் இயேசு பெருமானை நோக்கிக் கேட்டபோது, அவர் மறுமொழி ஆழ்ந்த நிறைமோனமன்றி வேறெதுவுமில்லை. ஆனால் அம்மோனமே கேள்வி கேட்பவன் இறுமாப்புக்கு ஒரு தகுதி வாய்ந்த மறுப்பாகவும், இயேசுவின் தற்பணிவுக்கு ஓர் அரும் பெருஞ் சான்றாகவும் அமைந்தது. அறிவாழமற்றவர்கள் புன்மை வாய்ந்த கேள்விகளுக்கெல்லாம் அஃது ஊழூழிகாலம் மறு மொழி கூறிக் கொண்டேயிருக்கிறது. ‘தேவர்கள் அடியெடுத்து வைக்க அஞ்சுமிடங்களிலே மூடர்கள் அஞ்சாது அடிவைத்துச் செல்வர்’ என்ற பழமொழிக்கு அஃது ஓர் இலக்கியமாக உள்ளது. மெய்யுணர்வாளருக்கு உலகம் கூறுபடுத்த முடியாத ஒரு முழுமை. அதை அவர்கள் அறிவிலிகளைப்போலக் கூறுபடுத்தி அளக்க முனைந்துவிட மாட்டார்கள். அதுபோலவே இயற்கை யின் அடிமுடியற்ற ஆழ்ந்த அடிப்படை உண்மையையும் அவர்கள் மிக எளிதாக ஒரு கோட்பாட்டுக் கட்டுக்குள் அல்லது வேதாந்த வாய்ப்பாட்டுக்குள் அடக்க அஞ்சுவர். மூடரோ இதையே தருக்குடன், ஆரவாரத்துடன் செய்வர்! வாத எதிர்வாதங்களில் நேரம் கழித்த பார்ப்பன அறிஞர் கடவுளைப் பற்றிய பற்பல கேள்விகளைப் புத்தர் பெருமானிடம் சென்று அடுக்கினர். புத்தர்பிரான் அவற்றுள் எதற்கும் எதி ருரையாடவில்லை. முழுமோனமே சாதித்தார். ஆழ்ந்த அறிவற்ற அப்பார்ப்பனர்கள் இதன் குறிப்பை உணர்ந்திருக்க முடியா தாயினும், உண்மையில் அவர்கட்கு அவர்கள் அறிவு கடந்த ஓர் உயர் படிப்பினையையே அவர் இந்த மோனத்தின் மூலம் அளித்தார். மூடர்கள் இம்மோனத்தை உணரவில்லை என்பது அதன் நிறைவுக்கு ஒரு சிறிதும் கேடுதருவதன்று. ஏனெனில் எத்தகைய விளக்கத்தையும் அவர்கள் உணர்பவர்களல்லர், உணரும் தகுதியுடையவர்களுமல்லர். ஆனால் அறிவாளருக்கு எத்தகைய விளக்கத்தையும் விட இந்த மோனம் ஆழ்ந்த அறிவுரை தந்துள்ளது. கடவுளைப் பற்றி இடைவிடாது பேசிப் படபடப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். எதற்காக இப்படி அவர்கள் கடவுளைப் பற்றியே பேசுகிறார்கள் என்று கூறுவது எளிதன்று. ஏனென்றால் கடவுள் எல்லாருக்கும் உரியவரானாலும், எளியவருக்கும் எளியவரானாலும், அவர்களுக்குத் தொலைவானவர், அவர் களுக்கு அரிதினும் அரியர். கடவுட் பேச்சுடன்கூட இணைவாக அவர்களிடம் கடவுட் பண்புக்கு நேர்மாறான சகிப்பின்மை தாண்டவமாடுகிறது. ஒரு சிறிதளவு அன்பும் உள்ளக் கனிவும் நல்லெண்ணமும் உடையவர்கள் கடவுளின் பக்கமாக முகம் திருப்பக்கூடும். கடவுளுணர்வாகிய மெய்யுணர்வின் முதற் சுவடியையேனும் பயில முடியும். ஆனால் கடவுளின் தன்மை பற்றிக் குறுக்கும் நெடுக்கும் தறித்த மயிர்பிளப்பாராய்ச்சிகள் செய்யும் இந்த வாதங்களெல்லாம் என்ன பயன்தரும்? - கடவுளின் திசையில் திரும்பாமல் தடுத்து நிறுத்தும் தடைச் சுவர்களாக மட்டுமே அவை இயங்க முடியும்! சீன அருளாளர் லயோட்சேயின் போதனை இன்பம் விரும்புபவர், அறிவு நாடுபவர் முதலில் தம்மைப் பற்றி ஒரு சிறிதேனும் அறிந்துகொள்ளுதல் வேண்டும். இதற்கு வழி அறிவுடையோம் என்னும் தருக்கல்ல. கடவுளைப் பற்றித் தருக்குடன் பேசும் இறுமாந்த அவமதிப்பு மனப்பான்மையல்ல. இவை ஆன்மிக முதிர்ச்சியற்ற மடமை நிலையின் சின்னங்கள். ஆன்மிக முழுமலர்ச்சிக்குரிய சின்னங்கள் இவையல்ல, பணிவு. அவமதிப்பு இறுமாப்பு அல்ல, பயபக்தியும் அன்பு மதிப்பும் ஆகும். இதனைச் சீன அருளாளர் லயோட்சே தம் வாழ்வுமுறை மூலமும் போதனை மூலமும் வலியுறுத்திச் சென்றார். லயோட்சேயின் வாழ்வில் பணிவும் எளிமையும் இடங் கொண்டிருந்தன. அதையே அவர் போதித்தார். மெய்யுணர் வுடையவன் பேசாமலே போதிக்கிறான் என்றும் அவர் விளக்கினார். அவர் மோனத்தால் வளர்த்த அறிவுத் தேகத்தின் ஆற்றல் கண்டு, நாலா திசையிலிருந்து சீடர்கள் அவர்பால் ஈர்க்கப்பட்டு வந்து மொய்த்தனர். அவர் மக்கள் மன்றம் வந்து பேசவில்லை. வாய் பேசாது ஒதுங்கி விலகியே வாழ்ந்தார். ஆனால் அவர் இருக்குமிடம் மக்கள் மன்றமாயிற்று. போதனை செய்ய அவர் எங்கும் சென்றதில்லை. ஆனால் போதனைபெற அவர் இருக்குமிடம் தேடி மக்கள் சென்றுசென்று குழுமினர். பேரருளாளரின் மோனப் பண்புவாய்ந்த செயல்கள் மெய் யுணர்வாளர்களுக்கு வழிகாட்டும் பேரொளிகள், கலங்கரை விளக்கங்கள். அஃது அவர்கள் செல்லும் பாதையெங்கும் ஒளி வெள்ளம் பாய்ச்சி, மயக்கதயக்கமின்றி அவர்களை நேர்வழியில் இட்டுச் செல்கிறது. அம்மோனமே அவர்கட்குப் பலவகைப் படிப்பினைகளை அளிக்கிறது. மெய்யொழுக்கமும், மெய்யறிவும் அடைய விரும்புபவன் எந்த நேரத்தில் மோனம் கடைப்பிடிக்க வேண்டும், எது பேசக் கூடாது என்பதையும் தெரிந்துகொள்ளல் இன்றியமையாதது. ஏனெனில் சரியான நாவின் அடக்கமே மெய்யறிவின் தொடக்கம். சரியான மனத்தின் அடக்கமே மெய்யறிவின் நிறைவிடம். நாவடக்கத்தால் ஒருவன் தன் உள்ளம் தனதாகப் பெறு கிறான். அந்த உள்ளத்தையும் இறுதியில் தன் வயப்படுத்தி யவனே மோனத்தின் முதல்வனாகிறான். மூடன் வம்பன் ஆகிறான். பிதற்றுகிறான். வாதிடுகிறான், சொற்களை வளரவிடுகிறான். தன் எதிரியை வாயடைத்துக் கடைசிச்சொல் தன் சொல் ஆக்கிவிட்டதாக அவன் இறுமாப் படைகிறான். இத்தகையவன் மடமையாகிய தற்செருக்கில் தானே உழல்பவனாகிறான். அத்துடன் எந்நேரமும் அவன் தாக்குதலை எதிர்பார்த்து, அதை விரும்பி, செருக்கையும், இறுமாப்பையும் தாக்குதல் எதிர் தாக்குதல் மூலமே புதுப்பிக்கத் துடித்த வண்ணம் இருக்கிறான். தன் ஆற்றல் திறங்களை அவன் இவ்வகையாகப் பயன் தராத வழிகளில் வீணாக்கிக்கொண்டே செல்கிறான். பயன்தராப் பாழ்நிலத்திலே ஓயாது வருந்திக் கொத்திக் கொண்டு சாவியை விதைத்து வெந்நீரை வருந்திக் கொதிக்க வைத்து வளர்க்கும் பயிர்த் தொழிலாளனையே அவன் நினை வூட்டுகிறான். தோல்வி ஏற்பின் துணைநலம் அறிவுடையவன் பயனற்ற வீண் சொற்களை, வம்பளப் புக்களை, தன் முனைப்பான தருக்கங்களை, தாக்கு எதிர் தாக்குகளை விலக்கி வாழ்கிறான். தோல்வியை ஏற்றுக் கொள்வதில் அவன் எத்தகைய குறையையும் உணர்வதில்லை. உண்மையில் தன் தோல்வியிலேயே அவன் மகிழ்கிறான். ஏனெனில் தோல்வியின் மூலமே தன்னிடமுள்ள பிழையைக் காணவும், அதை நீக்க வழிகோலவும் அவனுக்கு வாய்ப்பு ஏற்படுகிறது. அவன் அறிவுடையவனாகும் வழியும் இதுவே. இதனாலேயே கடைசிச் சொல் தனதாக வேண்டும் என்று முயலாதவன் மெய்யின்பத்துக்கு உரியவனாகிறான். 3‘வெயர்த்து விருவிருத்துச் சொல்லாய்வு, சொற்போர் நிகழ்த்தியஅந் நாளெல்லாம் பின்சென்று காணின், மதர்த்த உறைபனியின் மூடாக்கெனத் தோன்றும்; பெயர்த்தும் அவை வாராமல் காத்தமைதல் கடனன்றே!’ மோசமான புறத்தூண்டுதலின்போதும் மோனம் காத்தல் என்பதே பண்புடைய ஒத்துணர்வுமிக்க உள்ளத்திற்குரிய பண்பு ஆகும். கருத்துச் சிந்தனையற்றவர்களும் அன்புக் கனிவற்றர் களுமே மிகச்சிறு தூண்டுதலின்மீது கொந்தளித்துக் குமுறு வார்கள். அவர்கள் மனத்தின் சமநிலை இழந்து, ஏதோ தம்மையே இழந்து விட்டவர்கள் போலக் கிளர்ந்தாடுவார்கள். இத்தகைய தறுவாய்களில் இயேசு பெருமானிடம் கண்ட மோனம், சந்தடியற்ற தன்னடக்க அமைதி, இயற்கை மீறிய ஒரு தெய்விக அருஞ் செயலாகக் கருதப்பட்டு வருகிறது. அது தெய்விகச் செயலே, ஆனால் இயற்கை மீறிய அருஞ் செயலன்று. அது அவர் உள்ளப் பண்பின் மலர்ச்சி, அவர் மெய்யுணர்வின் மகுடம். வாசிப்பவர்கள் உள்ளம் கொந்தளிக்கும் சூழ்நிலை களிடையிலும் இயேசுபிரான் எதுவும் வாய்திறவாதிருந்தார் என்று கூறப்படுகிறது. அதே வகைத் தறுவாய்களிலேயே புத்தர் பெருமானும் வாளா அமைந்திருந்தார் என்று படிக்கிறோம். இவ்வாசகங்கள் அவர்களிடம் கண்ட மோன ஆற்றலை, அவர்கள் மெய்ப்பெருமையின் வீறமைதியை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன. மோனம் காக்கும் மனிதனே ஆற்றல் மிக்கவன். ஓயாது வாயாடும் பழக்கத்துக்கு ஆட்பட்டவன் ஆற்றலும் செல்வாக்கும் இழப்பவன் ஆகிறான். அவன் ஆன்மிக சக்திகள் சிதறடிக்கப் படுகின்றன. இந்த உண்மையை இயந்திர நுணுக்கத்துறையாளர் நன்கறிவர். சக்தியைக் குறிப்பிட்ட திசைகளில் செலுத்திப் பயன்படுத்த வேண்டுமானால், முதலில் அதைத் தேக்கிச் சேமிக்க வேண்டும். இதைச் செய்பவனே பொறிகளை இயக்க முடியும். மெய்யுணர்வுடையவன் இத்தகையதோர் ஆன்மிக இயந்திரத் தின் இயக்குநன் அல்லது இயக்கமுதல்வன் ஆவான். மெய்யுணர்வாளன் தன்னை எப்போதும் ஆற்றல்மிக்க சம நிலையில் செயலற்றவனாக, ஆனால் செயலுக்கு எந்தக் கணமும் ஆயத்தமாக வைத்துப் பேணிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு ஒரு தெளிந்த அமைதி, ஒரு குறிப்பிட்ட நோக்கம், அதன் அடிப்படையில் ஒரு திட்டவட்டமான முன்னேற்பாடு ஆகிய யாவும் அமைந்திருக்கின்றன. திறம்பட்ட வேலைக்குரிய முன் னீடுகள் இவையேயாகும். குரைக்கிற நாய் கடிக்காது உண்மை வலிமை மோனத்திலேயே தங்கியுள்ளது. குரைக் கிற நாய் கடிக்காது என்ற பழமொழி இதனைச் சுட்டிக் காட்டுகிறது. அரிதில் குரைக்கும் வேட்டை நாயின் பயங்கர மோனம் அதன் ஒருமுகப்பட்ட விடாப்பிடிக்கும் இறுதி வெற்றிக்கு உரிய முன்னிணைவு நிலையேயாகும். இந்த ஆற்றலாலேயே அந்நாய் வேட்டைக்குச் சிறந்ததாகப் புகழ் பெற்றுள்ளது. வேட்டை நாய் உவமை இதன்மிகக் கீழ்ப்படியி லுள்ள தகாத்தளத்திலுள்ள ஓர் உவமை என்பதில் ஐயமில்லை. ஆனால் எல்லாப் படியிலும் இயற்கையின் தத்துவம் ஒன்றே. வீம்புரை பகர்பவன் என்றும் வெற்றி காண்பதில்லை. அவன் கருத்து வெற்றிக்குரிய செயலின் நோக்கத்தில் நிற்காமல் வேறு திசையில் முதலிலேயே திரும்பி விடுகிறது. அவன் ஆற்றல் திறங்களும் முற்றிலும் தன் பெருமையைத் தான் நிலை நாட்டுவதிலேயே சிதறி விடுகிறது. தன்னல அவாக்களுடையவன் நிலையும் இதுவே. செய்ய வேண்டும் செயலில் ஒரு பகுதியும், அவன் ஆவலை நிறை வேற்றும் உணர்ச்சிகளில் ஒரு பகுதியுமாகச் சக்திகள் பிரிவுற்று விடும். போரில் திறமையற்ற படைத்தலைவன் படையை ஓரிடத்தில் ஒருமுகப்படுத்தாமல் பிளவுபடுத்தி அடையும் தோல்வி போன்றதே இது. ஆற்றலைப் பிளவுபடுத்துவதில் எவ்வளவு கேடோ, அதில் குறைந்ததன்று, தேக்கப்பட்ட ஆற்றல் வெளிச்செல்ல ஒரு சிறு வாயில் திறந்து வைத்திருப்பது. மிகத் தேர்ந்த ஆற்றலுடைய வர்கட்கும் அவாக்கள் இத்தகைய வாயில்களாய் அமைகின்றன. நீராவியைத் தேக்கிவைக்கும் இயந்திரத்தில் வெளிச்செல்லும் புழைவாய் அடைபடாதிருந்தால், இயந்திரத்தின் ஆற்றல் ஒரு சிறிதும் பயன்படாது, தற்பெருமை, சிறுமை, தற்புகழ்ச்சி, வீம்புரை, அவாக்கள் ஆகிய இவைகளை அடக்கி, பணிவு, மோனம், அறிவுக் கூர்மை முன் கருத்துடைமை ஆகிய பண்பு களை மேற்கொண்டவன் அடையும் வெற்றி போக்குபுழை அற்ற செறிந்த நீராவியடக்கிய இயந்திரத்தின் செயல்வெற்றி போன்றதாகும். ஏனெனில் அத்தகையவன் உள்ளமும் உணர்வும், அறிவும் ஆற்றலும், முயற்சியும் ஓய்வும் எல்லாம் செயல் வெற்றியும் ஒருமுகப்பட்டு ஒன்றுபட்டுச் செயலாற்றும். இருந்தவன் எழுந்திருப்பதற்குள் நடந்தவன் காதவழி என்பது பழமொழி. வீம்புரையாளன் தன்னைப் பற்றிப் புகழ் பாடிக் கொண்டிருக்கும் நேரத்திலே, அமைதியாளன் செயல் செய்யத் தொடங்கிவிடுவான். வீம்புரையாளன் செயல் தொடங்கிய பின்னும் அவன் உள்ளம் தன்புகழ் மீதே பெரிதும் சுற்றிக் கொண்டிருக்குமாதலால், அமைதியாளன் அவனை விஞ்சி வெற்றியில் நெடுந்தொலை சென்றுவிடுவான். இவ் வாறாக அமைதியாளர் உணர்ச்சியாற்றலையும் அறிவாற்றலை யும் முழுதும் தேக்கிவைத்துக் கொள்வதால், அவற்றைச் சிதறடிக்கும் உணர்ச்சி வெறியர்களைக் கடந்து, அவர்களையே எளிதில் ஆட்கொண்டு விடுகிறார்கள். கவிஞர் செகசிற்பியர் நாடகங்களில் இயற்கையோ டொட்டிய இந்த வாழ்க்கைப் பண்பு கலையில் நேர்மையுடன் பதிவாவதைக் காணலாம். சார்லஸ் போன்ற ஆரவார வீம்புரையாளர்களை ஆர்லண்டோ போன்று அமைதியும் பணிவும் வாய்ந்தவர்கள் எளிதில் வென்றுவிடுகிறார்கள். அமைதியே வெற்றிதரும் வலு அமைதியே வலிமை என்பது எல்லா இடத்துக்கும் காலத் துக்கும் பொருந்துவதான ஓர் இயற்கை அமைதி. இதனை உலக வாழ்வின் ஒவ்வொரு துறையிலுமே காண்டலாகும். வாணிகத் தில் ஈடுபட்டவர்கள் தம் திட்டங்கள், முறைகள், சூழ் நிகழ்ச்சிகள் ஆகியவற்றைப் பற்றி வம்பளக்காமலிருந்தால்தான், அவர்கள் வெற்றியடைவார்கள். அவற்றைப் பற்றி ஓயாது பேசினால் அவர்கள் தோல்வியடைவது உறுதி. இது போலவே ஆன்மிக ஆற்றலும் செல்வாக்கும் வேண்டுபவன் தன்னைப் பற்றியோ தன் ஆன்மிக வெற்றிகளைப் பற்றியோகூட வாயாட மாட்டான். அவ்வாறு பேசினால், பேசுகிற நேரத்திலேயே அவன் ஆன்மிக ஆற்றல் குறையத் தொடங்கிவிடும். மில்ட்டனின் நாடகத்தில் தலைமுடி வெட்டியவுடன் ஆற்றலிழந்துவிடும் சாம்ஸனைப் போல அவன் வலிமை இழந்து விடுவான். உலகியலிலும் சரி, ஆன்மிகத் துறையிலும் சரி - வெற்றி என்பது வலிமை, மோனம், அமைதி, உறுதியான நோக்கம் ஆகிய பண்புகளின் பணியாளேயாகும். இயற்கையின் மிக ஆற்றல்வாய்ந்த அழிவுச் சக்திகள் சந்தடி யற்ற செயல்களே. வெற்றியாற்றல் மிக்க உள்ளமும் அதுபோலச் சந்தடியற்ற மோன நிலையிலிருந்து செயலாற்றுவதேயாகும். நீ ஆற்றலுடையவனாக, பயனுடையவனாக, தற்சார்பு, தன்னம்பிக்கை உடையவனாக இருக்க விரும்பினால் மோனத் தின் அருமையையும் ஆற்றலையும் உணர்ந்துகொள். உணர்ந்து செயலாற்று. உன்னைப் பற்றியே பேசாதே. தற்பெருமை யுடையவன் உள்ளீடற்ற வெற்றுப் பேர்வழி, வலிமைக் கேடுடையவன் என்று உலகம் மிக இயல்பாகவே உணர்ந்து கொண்டுள்ளது. தற்பெருமையுடையவனுடன் எவரும் ஒத்துழைப்பதில்லை. இயல்பாக ஒத்துணர்வதில்லை. அவன் தற்பெருமையே அவனுக்கு உதவட்டும் என்று விட்டுவிடு கிறார்கள். இது அவன் சூழலை அவனுக்கு எதிராக மாற்றி விடுகிறது. சொல்லாதே, செய்! குறைகூறாதே, முன்மாதிரி காட்டு! என்னென்ன செய்யப் போகிறேன் என்று நீ பேசிக் கொண்டிராதே. செய், செய்து காட்டு. உன் செயலே செயல் பற்றிப் பேசட்டும். பிறர் செயல்களை, பண்புகளை மதிப்பிட் டாய்ந்து அல்லது குறைகூறி உன் வலிமைத் திறங்களை எதிர்த்துக் கொள்ளாதே. உன் செயலையே நீ கருத்தாழ்ந்து திருந்தச் செய்ய முயற்சிசெய். மனமார்ந்த செயல், உள்ளத்தில் இனிமை நலத்துடன் செய்யப்படும் செயலில் மிக மோசமான, மட்டமான ஒன்றுகூட, பிறர் செயல் கண்டு குறையுரைப்பதை விட எவ்வளவோ மேலானது. ஏனெனில் பிறர் செயலைக் குறைகாணும் நேரத்தில் நீ உன் செயலை உன் மனத்திலிருந்து மறக்கடித்துக் கொள்கிறாய். பிறரையும் ஊக்கி உன் செயலுக்கும் நீ ஆக்கம் தேடுவ தானால், பிறர் செயலுக்கு உதவக்கூடாதென்றில்லை. அவர்கள் மோசமாகச் செயல் செய்தால், நீ அதைத் திருத்தலாம். ஆனால் இங்கேகூட அவர்களைவிடச் சிறப்பாக நீ செயல் செய்து காட்டலாம். அப்படிக் காட்டுவதைவிடச் சிறந்த உதவி முறை வேறு இல்லை. பிறர் மீது வசைபாடாதே. பிறர் உன் மீது வசை பாடினால் அதைப் பொருட்படுத்தாதே. அதற்கு எத்தகைய மதிப்பும் அளிக்காதே. தாக்குதலுக்கு ஆளானால் மோனமாயிரு. இவ்வழியில் நீ முதலில் தன்னை வெல்வாய். அதுவே பிறரையும் வென்றதாக முடியும். சொற்கள், செயல்கள் இல்லாமலே இந்த மோனம் பிறருக்குச் சரியான திருத்தத்தையும் சரியான படிப்பினையையும் தந்துவிடும். உயிர்மோனம் மோனம் மிகவும் விலையற்றது, மதிப்பேறியது. ஆனால் உண்மை மோனம், உயிர்மோனம் நாவின் மோனமன்று, உள்ளத்தின் மோனம். இஃது இன்னும் விலையேறியது. பேராற்றலுடையது. மதிப்பேறியது. நாவை மட்டும் அடக்கி, அதன் பின்னணியில் அகநாவைத் தூண்டிக் கொண்டேயிருக்கும் உள்ளக் குமுறலைப் பேணிக்கொண்டிருப்பது நாவமைதியும் ஆகாது, உள்ள அமைதியும் ஆகாது. அது வாயாடும் வலிமைக் குறைவை ஒழித்ததும் ஆய்விடாது. அது ஆற்றலின் தலைப் பீடமாகவும் அமைய முடியாது. உண்மை ஆற்றல் நிறைந்த மோனம் அகநாக் கடந்து உள்ளத்தின் அமைதி பேணும். இத்தகைய மோன அமைதி உள்ளத்தை நிரப்ப வேண்டும். இதயத்தின் ஒவ்வொரு கண்ணறை, ஒவ்வோர் அணுத்தோறும் அதுசென்று செறிய வேண்டும். அது மோனத்தின் அமைதி, அமைதியின் மோனமாக நிலவல் வேண்டும். தன்னை வெல்லும் அளவிலேயே, வென் றடக்கும் அளவிலேயே இஃது ஒருவனுக்குக் கை கூடுவது. வெறியுணர்ச்சிகள், அவா மருட்சிகள், துயர்கள் மோனத்தின் தடத்தை, அஃதாவது உள்ளத்தின் ஆழ் தடத்தை அலைக்குங் காறும் மோனம் முழுநிறை மோனமாயியங்காது. அதன் அமைதி மேலீடானதாகவும், ஆழ்தட அலைகளால் அவ்வப்போது தாக்கப்படுவதாகவுமே இருக்கும். பிறர் செயல்கள், சொற்கள் மூலம் மனம் நைவுறுபவன் எவ்வளவு பொறுமையும் அமைதியும் புறத்தே பேணினாலும், உள்ளூர அந்த அகவேதனை அவன் ஆற்றலைக் குறைத்துக்கொண்டேயிருக்கும்; அவன் தன் னடக்கத்தை, தன்னமைதியைக் கலைத்துக்கொண்டேயிருக்கும். அவன் அகத்தூய்மையில் கறையுண்டு பண்ணி, அகத் தூய்மை யிடையேயும் தூசு பரப்பி மாசு வளர்த்துக்கொண்டே இருக்கும். தருக்கு, தற்பெருமை, தற்பற்று ஆகியவைகளை அகற்றுந் தோறும் உள்ளத்தடத்தின் ஆழத்தில் சென்று மறைந்திருக்கும் மனநைவின் தடமும் மாறாமலிருந்து கொண்டேவரும். ஆனால் அவை மறைய மறைய, சிறு பகைமைகள், வெறுப்பு விருப்புக்கள், உன்னை எளிதில் பாதிக்கமாட்டா. காழ்ப்புரையும், வசை யுரையும், பழி மொழியும் அத்தகைய ஆழ்ந்த அமைதியை அசைக்கமாட்டா. ஆழ்ந்த அடித்தளமுடைய கல்வீட்டின்மீது புயல் எவ்வளவு கொந்தளித்து ஆரவாரித்தாலும் வீட்டை எப்படி அசைப்பதில்லையோ, அப்படியே மெய்யுணர்வால் அரண் செய்யப்பட்ட அந்த அமைதியைத் தீமை ஒன்றும் செய்ய முடியாது. புறப்புயலிலும் குளிரிலும் வீட்டுக்குரியவன் கதகதப்பான தணலடுப்பருகே யிருந்து வெதுவெதுப்பும் அமைந்த குடும்ப இன்பமும் அடைவதுபோல, அக அமைதியுடையவன் உலகின் கொந்தளிப்பூழிகளில் கூடத் தன் அமைதி மனையில் அயர்ந்து இன்பம் நுகர்கிறான். தன்னையாளா ஆற்றல்களே அகப் புயல்கள். இயற்கையில் சமநிலைக் கேட்டால் புயல் ஆட்டும் போதும், அவன் உள்ளே தன்னாட்சி, சரிசமநிலையின் சின்ன மான அமைதி இன்பம் நிலவும். ஆரவாரப் பாலையிடையே அவன் ஒரு மோனத் தண்டலையில் தங்கி மகிழ்கிறான். தன்னை வென்றவன் மாறா அமைதி இது. 4‘அழுக்காறும் வன்பழியும் அடல்வெறுப்பும் நோவும் இழுக்கான இன்பமெனும் அமைதிக் குலைவு மவன் விழுப்பம் அடுப்பதில்லை, வீண்துயரும் தொடுப்பதில்லை! பேச்சும் செயலும் அழுத்தந்திருத்தமான பேச்சும் ஆரவாரமான விளம் பரமும் இல்லாமல் எந்தக் காரியமும் நிறைவேற முடியாதென்று நம்புகிறவர்கள் உண்டு. இது முழுவதும் தவறு. மிகுதியாகப் பேசுபவர் ஆழ்ந்த சிந்தனையுடையவராக இருக்க முடியாது. சிந்தனையாளர் அமைதியும் மோனமும் பேணுபவராக மட்டுமே இருக்க முடியும். ஆனால் ஆரவாரப் பேச்சாளர் இதை உணர்வதில்லை. மோனச் சிந்தனையாளன் எதுவும் செய்யாதவன், செய்ய மாட்டாதவன், ஏலமாட்டாதவன் என்றுகூட அவர்கள் எண்ணு வதுண்டு. ஏனெனில் அவர்கள் அறிந்த செயல் விரைவது, படபடப்பது, இடைவிடாத கொக்கரிப்பு ஆகியவைகளே. அவற்றைச் செய்துவிட்டாலே பெருஞ் செயல் செய்துவிட்ட தாகக் கருதிவிடுகிறார்கள். அத்துடன் அவர்கள் மக்கள் பேராதரவையே ஆற்றல் என்று கருதுகிறார்கள். ஆனால் உண்மை உழைப்பாளி என்பவன் - திறம்பட்ட செயலாளன் என்பவன் - சிந்தித்துச் செயலாற்றுபவன் மட்டுமே. அவன் உழைப்பே எல்லா வெற்றிகளுக்குமுரிய வெற்றியின் உயிர்க் கருவாகும். இயற்கை எப்படி நிலத்திலும் வானிலும் பரவிய உயிரற்ற பொருட் கூறுகளைத் தன் சந்தடியற்ற, ஆரவாரமற்ற, மறைவான ஆற்றலால் இலைகளாகவும், மலர்களாகவும், கனிகளாகவும் மாற்றிவிடுகிறதோ - அழகும் பயனும் ஆற்றலும் மிக்கன ஆக்கி விடுகிறதோ - அதுபோலவே வாய்பேசாத மோன உழைப்பாளி மனிதர் உள்ளத்தையும் இயற்கையின் பரப்பையுமே தன் மாய மோன ஆற்றலால் முற்றிலும் மாற்றியமைத்து விடுகிறான். பொருள்களின் மேற்பரப்பை மாற்றியமைக்கும் சிறு திற விளையாட்டுக்களில் உண்மை உழைப்பாளி தன் நேரத்தை வீணாக்குவதேயில்லை. நேரே அவற்றின் உன்ளுயிர்க் கருத் தளத்துக்குச் சென்று அதன் உறுதியான அடிநிலத்திலிருந்து யாவும் கட்டமைக்கிறான். உண்மையில், அவன் இயற்கையில் ஒன்றுபட்டு மறைந்தபின்னும் அவன் செயல் உயிர்ப்புடன் நின்று செயலாற்றும் ஆற்றல் கொண்டது. செயலில் ஈடுபட்டிருந்த காலத்தில் எவர் கருத்தையும் கவராத அவன் செயற் கூறுகளே உண்மையில் அவனது அழியாச் செயல்கள். உலக முழுவதையும் - அவன் செயலருமை அறிந்தவர்களும் சரி, அறியாதவர்களும் சரி, இரு சாராரும் உட்பட்ட உலக முழுவதையும் - அவை இன்புறுத்தி நலம் வழங்குகின்றன. பேச்சாளன் செயலான பேச்சு இதற்கு நேர்மாறாக அவன் பேசும் சமயம் செல்வாக்கும் ஆற்றலும் அளிப்பது போலக் காட்சியளித்து, உண்மையில் காற்றுடன் காற்றாகக் கலந்து அழிந்து விடுகின்றது. ஒலியை விதையாகக் கொண்டு உலகம் வளரவில்லை - செயலை விதையாகக் கொண்டே வளர்கிறது. ஜார்ஜ் பாக்ஸ் சமயக்குழுவின் சாதனை உள ஆற்றல்களைச் சேமித்துத் தேக்குபவன் உடலாற்றல் களையுந் சேமித்துத் தேக்குபவனேயாகிறான். ஏனெனில் மன அமைதியும் மன ஆற்றலுமே உடலமைதிக்கும் உடலாற்றலுக்கும் அடிப்படை. அவன் நிறைஉள நலனுடன் நிறைஉடல் நலமும் பெற்று, நீடித்தகாலம் உடலுடனே வாழும் பேறுபெறுகிறான். உடற்கூறுகளும், உளக்கூறுகளும் முற்றிலும் தமக்குள்ளும் ஒன்றுக்கொன்றும் ஒத்திசைவதால், அவனாக விருப்புடன் ஓய்வு மேற்கொண்டாலன்றி, அவன் உடல் அமைதி உள அமைதி யினின்று விலகித் தளர்வுறுவதில்லை. ஓசையாரவாரம் இந் நலங்கள் தரமாட்டா. கிறித்தவ சமயத்தில் மோனத்தின் பெருமையை வலி யுறுத்தி, மோன வழிபாடு, மோன வாழ்வு பேணியவர் ஜார்ஜ் பாக்ஸ் பிரிட்டனில் வாழும் மக்களிடையே அவர் சமய மரபினரே நீடித்த வாழ்விலும் உடல்நல உறுதியிலும் முதன்மை யுடையவராய் இருக்கின்றனர். வாழ்விலும் வளத்திலும்கூட அவர்கள் வெற்றி பிறர் கண்டு வியக்கத்தக்கதாகவே உள்ளது. இதற்குக் காரணம் சமயப் பெயராலேயே அவர்கள் மேற் கொள்ளும் பண்புகளே. அவர்கள் வாயாடுவதில்லை, நேரம் வீண்போக்குவதில்லை. அமைதியான, எளிமையான வாழ்வுகள் வாழ்கின்றனர். எப்போதும் அவர்கள் தங்கள் குறிக்கோளை முன்வைத்து, அதிலிருந்து கண்மறையாமல், அதை ஆரவாரத்தில் மறக்காமல், மறைக்காமல் வாழ்கின்றனர். மோனம் கடவுளாற்றல் என்ற தத்துவத்தைப் பின்பற்றி வகுக்கப்பட்ட வாழ்வு, சமயநெறி, அவர்களுக்குக் கிட்டியுள்ள விலைமதிக்க ஒண்ணாகப் பெரும்பேறு! மோனம் ஆற்றல் வாய்ந்தது. ஏனெனில் அது தன்னடக் கக்கத்தின் விளைவு. எவ்வளவு முழுநிறைவாக ஒருவன் தன்னை அடக்குகிறானோ, அந்த அளவு முழுநிறைவாக மோனம் அவனுக்குக் கைகூடுகிறது. ஆரவாரப் போலி இன்பங்களில், புற இன்பங்களில் மனம் செல்லாமல் இந்த மோனமே தடுக்கிறது. வாழ்க்கைக் குறிக்கோளில் அஃது உள்ளத்தை இருத்துகிறது. இந்த இரண்டும் சேர்ந்து உள்ளத்தின் அமைதியை, பண் பமைதியாக்குகிறது; மாறுபாடும் வேறுபாடும், முரண்பாடும் இல்லாத ஒத்திசை பண்ணுடைய இன்ப அமைதியாக்குகிறது. புறக்கோளாறுகள் இவ்வக இசையைக் கெடுப்பதில்லை. இந்த மோனத்தின் ஆழத்திலிருந்து, இந்த அக அமைதியிலிருந்து, என்றேனும் சொற்கள் எழுந்தால், அவை உயிர் நோக்கமுடைய, தெய்விக ஆற்றலுடைய சொற்களாய், அந்த மோனத் தேக்கத்தின் முழு ஆற்றலும் உடையனவாக இயங்குகின்றன. நினைத்ததை ஆக்கும் அவர்கள் ஆற்றல் சொன்னதையும் நாட்டும் ஆற்றல் ஆகிவிடுகிறது. மோனப் பயிர்ப்பு சொல்லாற்றலை வளர்க்க, சொல்லாற்றலே மீண்டும் மோனம் வளர்க்க - அவர்கள் மோன ஆற்றலில் சொல்லாற்றலும், சொல்லாற்றலில் மோன ஆற்றலும் புக்கிணைத்துப் பேராற்றலாகின்றன. அவன் சிந்தனை இன்பமே பயக்கிறது. துன்பத்தை அவன் உளத்தால்கூடத் தீண்டுவதில்லை. அத்துடன் அவன் உள்ளம் தீண்டுபவை யாவும் இன்பமாய் விடுகின்றன. அவன் சொற்கள் இன்பமே பயக்கின்றன. இன்பமே பரப்புகின்றன. அவன் செயல்களோ அவனோடு உலகையும், உலகோடு அவனையும் இணைத்து இன்பத்துக்கே இட்டுச் செல்கின்றன. துன்பமும் கண்ணீரும் அவன் எல்லையிலிருந்தே தொலைவாக அகன்று விடுகின்றன; அவன் உலகிலேயே இடமில்லாமல் அவை மேன்மேலும் தொலைவாகத் துரத்தப்பட்டுக் கொண்டே செல்கின்றன. முதிர்ந்த சிந்தனையின் பயனாகவே கருத்தெழுச்சி கொண்டு சொல்லிலும் செயலிலும் இறங்கும் அவனுக்குக் கழிவிரக்கமோ, மனச்சான்றின் குத்தல் என்பதோ இருக்க முடியாது. உண்மையில் உள்ளம்வேறு மனச்சான்று வேறு என்னும் நிலையோ, உணர்ச்சி வேறு அறிவு வேறு என்ற நிலையோ, அவா வேறு மதி வேறு என்ற நிலையோ அவனிடம் இருக்க முடியாது. யாவும் ஒன்றாம் அமைதிநலம் அவன் வாழ்வில் மலர்வுற்று மணம் கமழ்கின்றது. அடிக்குறிப்புகள் 1. “க்ஷந ளவடைட! கூhந உசடிறn டிக டகைந ளை ளடைநவேநேளள. ழுiஎந வாடிர ய ளூரநைவ hடிரச வடி நயஉh டடிபே னயல, கூடிடி அரஉh டிக வiஅந றந ளயீநனே in யீசடிகவைடநள ஹனே கடிடிடiளா வயடம. கூடிடி டவைவடந னடி றந ளயல! ஐக வாடிர றடிரடனளவ பயவாநச றடிசனள வாயவ ளாயடட யஎயடை, டுநயசniபே ய றளைனடிஅ றடிசவால வடி நஒயீசநளள, டுநயஎந கடிச ய றாடைந வால உhயவ யனே நஅயீவல வயடந- ளுவரனல வாந படிடனநn ளயீநநஉh டிக ளடைநவேநேளள.” - ஹ.டு. ளுயடஅடிn 2. “க்ஷந ளவடைட. அல ளடிரட, சுநளவ யறாடைந கசடிஅ வாந கநஎநசiளா யஉவiஎவைநைள in றுhiஉh லடிர டடிளந லடிரசளநடக. க்ஷந nடிவ யகசயனை வடி நெ டநகவ யடடிநே றiவா லடிரசளநடக கடிச டிநே ளாடிசவ hடிரச.” - நுசநேளவ ஊசடிளலெ 3. “க்ஷயஉமறயசன ஐ ளநந in அல டிறn னயலள றாநசந ஐ ளறநயவநன வாசடிரபா கடிப றiவா டiபேரளைவள யனே உடிவேநனேநசள; ஐ hயஎந nடி அடிஉமiபேள டிச யசபரஅநவேள, ஐ றவைநேளள யனே றயவை.” 4. “நுnஎல யனே உயடரஅலே, யனே hயவந யனே யீயin ஹனே வாயவ ரசேநளவ றாiஉh அநn அளைஉயடட னநடiபாவ, ஊயn வடிரஉh hiஅ nடிவ, nடிச வடிசவரசந hiஅ யபயin.” 11. தனிமை 1அகமிருக்க மோனத்தின் அமைதி தரும்சேதி புறஞ்சென்று தேடுவதேன் பொழுதவமதாக? அருகிருக்கத் தாழ்நிலத்தே பேரின்பச்சோலை பெருமலையின் பேருச்சி ஏறி இறங்குவதேன்? சிறுகுடியில் மோனமுனி சிந்தனையின் வானத்து உறு பகலும் ஓவாவிண்மீன் ஒளிகண்காட்டக் காத்திருந்தும் இராத்தேடி மாளிகையைநாடி ஆத்திரங்கொண்டோடோடி அலைந்திடுதல் ஏனோ? - விட்டியர். 2உணர்வலைகள் பாயாத ஓய்வமைதி நேரம் கணத்தறிந்து நெஞ்சணவு கருத்தெழுப்பி ஆள்க! - வேர்ட்ஸ்வொர்த். மனிதன் உயிர்நிலை அகநோக்கியது, புலங்கடந்தது, காட்சிக் கெட்டாத ஆன்மிகத் தன்மை வாய்ந்தது. ஆகவே அதன் உயிராற்றலும் உயிர் வலிமையும் புறமிருந்து தோன்றுவதன்று, அகநின்றெழுவதே. புறப்பொருள்கள் யாவும் அதன் ஆற்றல்கள் பொங்கி வழிந்தோடும் கால்கள், பொறிகலங்கள் மட்டுமே. அதன் உயிரூற்று, புதுவரவுக்குரிய உயிர் மூலதனம் புறத்தேயில்லை. அதை மீண்டும் அகம்சென்று, அகத்தின் மோனச் சேமவைப்பில் சென்றுதான் பெற முடியும். ஒலிகளுக்கெல்லாம் மூலமான மோன ஒலி, ஒளிகளுக்கெல்லாம் மூலமான நிழலற்ற நிலவொளி அதுவே! புலனுணர் வின்பங்களின் கம்பலையிலே அமைதியின் மோனத்தை அமிழ்த்தி மறையவிடுந்தோறும், ஒருவன் புற உலகின் பூசலிலே தன்னை இழந்துவிடுகிறான். அகத்தே நிலவும் இன்பந் தொலைவாக விட்டு, துன்பத்தின் புயலும் துயரின் அலைக்கழிப்பும் வாழ்வில் தோய விடுகிறான். இன்ப அறுவடைக் குரிய வாழ்வு இங்ஙனம் துன்ப அறுவடையைப் பெருக்கி, அந்த இன்ப அறுவடைநாளை இன்னும் நெடிதாக ஒத்திப் போடுகிறது. துன்பம் மேன்மேலும் பெருகி, அந்தச் சுமை பொறுக்கமாட்டாத நிலை வருமளவும், அத்துன்பவாணன் தன்னுள்ளே ஆழ மறைந்து கிடக்கும் அக ஆறுதலை நாடாமல் அழுந்துகிறான். அகப்பசி, அகவிடாய், துன்பம் உடலைக் கூலங்களின் அகப்பருப்பாகிய அரிசிதான் பேணும். புறத்தோடு, உமி பேணமாட்டாது. அதுபோல உயிர் நிலை புறப்பொருள்களின் இன்பத்தால் பயன்பெறாது. அவற்றின் அகப்பண்புகளே, அக இன்பக் கூறுகளே அதற்கு உயிரூட்டம் தரும். அகப்பண்புகளால் இவ்வுயிரூட்டம் பெறாத உளமும் உடலும் உயிர்ச்சத்துக் குன்றித் தளர்கின்றன. உடற்பசி கடந்த இந்த உள்ளுயிர்ப்பசி, உடல் விடாய் கடந்த இந்த உள்ளுயிர் விடாய்தான் துன்பம். அது தீர்க்கும் உணவாகிய அக இன்பம் பெறாவிட்டால், உள ஆற்றலும், உடலாற்றலும் இரண்டுமே சீர்குலையும். உயிர் மேன்மேலும் தளரும். உயிரின் தளர்ச்சியை நீக்க முயலுபவன் அக இன்பத்தை மோனத்தால், மோனத்தைத் தனிமையால் பெருக்க வேண்டும். மோனத்தை விரும்பும் முனிவர்கள் ஆரவார உலக வாழ்வை முனிந்து தனிமை நாடுவதன் காரணம் இதுவே. அவர்கள் வாழ்வை வெறுத்தோ, வாழ்வின் இன்பம் வெறுத்தோ செல்வ தாகப் பலர் எண்ணுகின்றனர். வாழ்வை, வாழ்வின் இன்பம் நாடியே செல்கின்றனர். பசியின் மிகுதி சுவையின் தொடக்கம். துன்பத்தின் மிகுதி இன்பத்தின் தொடக்கம். குற்றத்தின் மிகுதி திருத்தத்தின் தொடக்கம். ஆனால் இம்மிகுதிகள் திசை திரும்பும் மிகுதிகள் ஆக வேண்டும். கிறிஸ்தவர்களல்ல, இயேசு பெருமான் குறிப் பிட்ட கழிவிரக்கம் இது. அவர் தம்மை நோக்கி அழைத்த ஏழையர், பழிகாரர் உண்மையில் இத்திசை திருப்பம் அடைந்த பழிகாரர், ஏழையரே. பழிநாடும், ஏழ்மைநாடும் ஏழையரல்ல - பழிபோக்க விரும்புகிற, ஏழ்மை அகற்ற விரும்புகிற பழிகாரர் ஏழையர்களே. கெட்டலைந்து மீண்ட புதல்வன் கதை இதற்குச் சான்றளிக் கிறது. கெடுமட்டும் அவன் கெட்டான். அலையுமட்டும் அவன் அலைந்தான். ஆனால் அவன் திரும்புகிறான், அகநோக்குகிறான். புற உலகத் தந்தையும்சரி, அக உலகத் தந்தையும் சரி, இங்ஙனம் திரும்புபவனுக்காகவே ஆர்வமாகக் காத்திருக்கின்றனர். உணவின்றிப் பசித்தலைந் தலுத்தவனுக்குப் புத்துணர்வு காத்திருக்கிறது. நீரின்றித் தவித்தலைந் திளைத்தவனுக்கு நறுநீரமுதம் பதமுடன் செவ்விநோக்கி யிருக்கின்றது! ‘தட்டு, திறக்கப்படும்! கேள், தரப்படும்!’ என்ற வாய் மொழியுரைகளின் வளமும் இதுவே. துன்ப இருளில் தோய்ந்த முந்திய உயிர் ஒளியின் திசை நோக்கி இரங்கும் ஏக்கமே துன்பத்தில் இன்ப நிழல் காட்டும் திருப்பம். மோனத்தின், தனிமையின் இன்றியமையாமை உயிரின் துடிப்பைப் புற உலகுக்குக் கொண்டு வந்து உலகின் துடிப்பில் பங்கு கொள்ள வைப்பவை புலன்கள். ஆனால் அவ்வுயிர்த் துடிப்பின் தொடர்பைப் புலன்கள் புற உலகின் ஆரவாரத்திலிருந்து, அப்புயலில் மிதக்கத் தொடங்கிவிட்டால், துன்பத்தின் முதற்பகுதி, தண்டனைத் துன்பம் தொடங்கி விடுகிறது. இந்தப் படியிலேயே புலன்களை இன்னும் புறநோக்கி, கீழ்நோக்கி இழுக்கும் இழிந்த அவாக்கள் தலைதூக்குகின்றன. இவை தம்மைத்தாமே பெருக்கி, அக இன்பத்தை மேன்மேலும் தொலைவாக்கி மறக்கடிக்கின்றன. இன்பத்தின் திசையில் சற்றுத் திரும்ப உதவும் இடை ஓய்வுக்குக்கூட இடமில்லாதபடி இடையறா ஆரவாரப் போலி இன்பங்களிலும் துன்பங்களிலும் சுழலவைக்கின்றன. உயிரின் உயிர்ப்பாற்றல் இச்சுழற்சியினால் மிகுதியும் தேய்வுற்று நலிகிறது. தேய்வகற்றப் போதிய அமைதி கிடைக்க வொட்டாமல் புலன்கள் சூழலடுத்த புறப்பொருள்கள் மீதே சென்று சென்று பற்றிப் படர்கின்றன. தனிமையன்றி வேறெதுவும் இப்புறச்சுமையிலிருந்து உயிருக்கு ஓய்வுதர முடியாது. வேலை செய்தலுத்த உடலுக்கு ஓய்வு, துயில் அவசியம். அது இல்லாவிட்டால் அலுப்பால் நேர்ந்த தேய்வு சரி செய்யப் படாமல் உடலுக்கு அழிவு நேரும். அதுபோல அமைதி அல்லது மோனமும், தனிமையும் உயிர்நிலைக்கு அவசியமானவை. அவை இல்லாவிடில் இன்ப ஆற்றல் அழிந்துபட நேரும். அழியும் பொருள்களிடையே புலன்களைச் செலுத்தி வாழ்பவன் இடையிடையே யாயினும் தனிமையும் மோனமும் பேணாவிட்டால் - அழியா அக இன்பத்தின் உயிரொளியின் கூறு பெறாவிட்டால் - அவன் புறவாழ்வுகூட, ஐம்புல நுகர்வின்பம் கூட நீடித்து நடைபெற மாட்டாது. உலகின் எல்லாச் சமயங்களும் தனிமையை வலியுறுத்துவது இதனாலேயே. எல்லாச் சமயங்களிலும் சமயவாதிகள் எத்தனை தவறுகள் செய்தாலும், சமயங்களின் பெயராலும் கடவுளின் பெயராலும் எத்தனை அட்டூழியங்கள் புரிந்தாலும், இயற்கை யுணர்ச்சி காரணமாக மக்கள் என்றும் சமயத்தில் ஈடுபட்டிருப்பதன் காரணமும் இதுவே. சமயவாழ்வின் சடங்காசாரங்கள் சமயவாதிகளிடையே அறிஞரால் கண்டிக்கப்படுபவை. ஏனெனில் அவை அகப் பண்பிலிருந்து புறப்பொருள்களுக்கு மக்கள் கவனத்தை இட்டுச் செல்பவை. ஆயினும் அவற்றில் இயல்பான ஒரு நலன் உண்டு. மக்கள் அதில் இயல்பாக ஈடுபடுவதும் இதனாலேயே. அவை புறப்பொருள்கள்மீது சென்றாலும், அவாவழிச் செல்வதில்லை. ஆகவே அவா வழிச் சென்று அலைக்கழியும் உள்ளங்களுக்கு அச்சடங்கு நேரம் ஓய்வாகப் பயன்படுகிறது. பொருளற்ற சடங்குகள் என்று அறிஞர் அவற்றைக் குறை கூறுகின்றனர். ஆனால் அவற்றின் சிறப்பும் இக்கூற்றிலேயே அடங்கியிருக்கிறது. அவை நற்பொருளற்றவை, தீயபொருளும் அற்றவை - அஃதாவது போலி இன்பங்களுடன் தொடர்புடைய எப்பொருளும் அவற்றில் கிடையாது. இந்நிலையில் அவை அவாவழி அலையும் உள்ளத்துக்கு ஓய்வு தர முடிகிறது. காலா காலத்தில் இச்சடங்குகளில் ஈடுபடுபவர், அந்நேரங்களிலேனும் அச்செயலில் ஒருமுகப்பட்டு ஈடுபாடு காட்டுகின்றனர். பன்முகப்பட்டுப் பரவி அலைக்கழியும் உள்ளத்துக்கு இது ஒரு நல்ல பயிற்சியாகவும் நல்ல ஓய்வாகவும் பயன்படுகிறது. சடங்காசாரப் பக்தி மிகவும் கீழ்த்தரப்பக்தியேயானாலும், அதுகூட அமைதி, ஒருமுகப் பயிற்சி ஆகியவற்றின் மூலம் இழிந்த அவாக்களில் உழல்பவர்களை ஒருபடி உயர்த்த உதவுகிறது என்னல் வேண்டும். அதன் நீடித்த பயிற்சிக்குப்பின் அக அமைதி, மோனம், சிந்தனை ஆகிய படிகளில் அவர்கள் முன்னிலும் எளிதாக ஏறிச் செல்ல முடியும். தனிமையும் ஓய்வும் அக இன்பத்தின் தொலை ஒளிகள், அகக் குரல்கள் தன் உள்ளத்தை அடக்க முடியாமல், இடையிடையே யாவது அமைதியும் தனிமையும் பெற்றுத் தற்பயிற்சியிலீடுபட வழியில்லாது அல்லது வழி தெரியாமல் உழல்பவர்கள்கூட இன்னதென்றறியா வகையில் ஓர் உயர் இன்ப ஆர்வம் கொள்ளக் கூடும். உண்மையில் உலகின் பெரும்பாலான மக்கள் நிலை இதுவே. இத்தகையவர்கட்காகவே மனித நாகரிகத் தொடக்கத்தில் சமயவாழ்வு கால் கொண்டது. இத்தகைய வர்களுக்காகவே இன்னும் சமயம் வாழ்வு பெறுகிறது. உலக ஆசாரியர்களின் உச்ச உயர் வாழ்வுக் குறிக்கோளைச் சென்று எட்டமுடியாத சமயவாதிகள், இன்னும் அவ் உலக ஆசாரியர் களின் பெயர் கூறிக் கொண்டே சமயவாழ்வைச் சடங்காசார நிலையில் வைத்துப் பேணியே வெற்றி கண்டு வருவதும் இதனாலேயே. தவறான தன்னல, ஆரவாரப் பாதைகளில் செல்லாதவரை, சமயவாதிகளும், சமயப்பணி மக்களான குருமாரும் இந் நிலையில் நின்றே மக்களின் இன்றியமையாத் தேவை ஒன்றை நிறைவேற்றுபவராகவும், அது காரணமாக மக்களால் பேணிப் போற்றப்படுபவராகவும் நிலவுதல் இயல்பே. வாழ்க்கையின் மாயமருட்சிகள், சிக்கல்களை எதிர்த்துப் போராடும் ஆற்றல்களையும் அவற்றை வெல்லுவதற்குரிய அறிவையும், வென்று மேல் சென்று உயர்நிலை அடைதற்குரிய மெய்யுணர்வையும் மனிதன் தனிமை மூலமே பெறுகிறான். ஒரு கட்டடத்தின் வலுவும் நீடித்த உறுதியும் அதன் கடைகாலின் ஆழத்தையும் வலுவையுமே பொறுத்தன. ஆயினும் கட்டடத்தைக் காண்பவர் எவரும் அந்தக் கடைகாலைப் பார்க்க முடியாது. இதுபோலவே நாம் காணும் வாழ்வின் ஆற்றலும் இன்ப அமைதியும் நாம் புறங்காணும் சூழலையோ செயலையோ பொறுத்தவையல்ல. அச்செயலுக்கு முன்னோ, பின்னோ, இடையிடையாகவோ, இடைவிடாதோ, மனிதன் பேணும் செயலற்ற அமைதிநிலையும் மோனமும்தான் வாழ்வை வளப்படுத்துபவை. ஓய்வு இல்லாவிட்டால், தனிமை இல்லாவிட்டால் வாழ்வு இல்லை. ஏனெனில் தனிமையும் ஓய்வும் அக இன்பத்தின் தொலை ஒளிகள். மீண்டும் அத்திசையில் திரும்புவதற்குரிய சிந்தனை ஆக்கத்துக்கு வழிவகுப்பவையும் அவையே. ஒவ்வொருவனும் தனிமையிலேயே தன்னைத்தானே உணருகிறான். தன் இயல்பை, தன் ஆற்றலை உள்ளவாறு உணர்வதும் அப்போதே. தன் ஆற்றலின் அளவும் எல்லையும் மட்டுமல்ல, அதன் தங்குதடையற்ற வளர்ச்சி எல்லையையும், எல்லையற்ற வளத்தையும் அக்காலத்திலேயே அவன் மதிப் பிட்டு மதிபெற முடியும். புற உலகவாழ்வின் ஆரவாரக் கம்பலையிலும் அவாக்களின் தாறுமாறான போக்குகளினால் விளையும் குளறுபடிகளிலும் கேளாத அகக்குரலை அவன் அப்போதுதான் கேட்க முடிகிறது. தனிமைக்குச் சிலர் அஞ்சுவதேன்? தன் குற்றத்தைத் தான் அறிய மனிதன் இயல்பாக விரும்புவதில்லை. ஆனால் இது மனிதன் உள்ளார்ந்த இயல் பன்று, புற இயல்பே. அவன் புறவாழ்வும் புல இன்ப அவாக்களும் தன்னலமும் தற்பெருமையுமே அவனுக்கு இயல்பல்லாத இப்பண்பை இயல்பு போன்ற போலிப் பண்பாக்குகிறது. தனிமையிலும் தனிமைதரும் அமைதியிலும் அமைதி நோக்கிய சிந்தனையிலும் அவன் இழந்துள்ள இந்த உள்ளார்ந்த இயல்பு அவனை எளிதாக வந்து அடைகிறது. புண்பட்ட உள்ளங்கள் அடிக்கடி புண்படுத்துபவரிடம் இயற்கையுணர்ச்சியால் உந்தப்பட்டு, இந்த அறிவுரையை அளிப்பது காண்கிறோம். ‘தனியேயிருந்து சிந்தித்துப் பார், நீயேயிருந்து எண்ணிப்பார்’ என்று அச்சமயத்தில் அவர்கள் கூறுவர். ஆனால் புண்பட்டவர்களும் சரி, புண்படுத்தியவர்களும் சரி - இதைப் பிறருக்குத்தான் கூறுவார்கள். தாம் அதைப் பின்பற்றுவது தம்மியல்பாகவேயன்றி அறிவுரை கேட்டல்ல. எவ்வளவு தவறான செயல் செய்தவனும், எவ்வளவு பழி காரனும் தனிமையில் தன் குற்றத்துக்குத் தன்னையே நோகாமல், தன்னைத்தான் குத்திக்காட்டாமல் இருப்பதில்லை. பெரும்பழிகாரர் தனிமையை அஞ்சுவதும், மடமை நிலையில் உள்ளவர் இருள் கண்டு அஞ்சுவதும், உணர்ச்சிக் கொந்தளிப்புக்களுக்கு ஆளானவர் தம் அரைகுறைத் துயிலின் கனவுகள் கண்டஞ்சுவதும் இதனாலேயேயாகும். மனிதர் தனிமையிலும் இருளிலும் பேய்க் கனவுகளிலும் காணும் அகப்பேய், அவர்கள் துன்ப எல்லையில் நின்று தனிமை அவர்களைக் குத்திக்காட்டும் குற்றச்சாட்டின் உருவேயன்றி வேறன்று. தனிமை நெருக்கடிகளில்கூடத் தன்னுணர்வு கொளுத்தும் நண்பன். அதனை எண்ணி அஞ்சுபவர்கள் அத்தனிமைக்குப் போதிய வாய்ப்பளித்துத் தம்மைத் திருத்திக்கொள்ளாது, நீடித்து நாட்கடத்தி வருபவர்களே. உடலுக்கு ஓய்வு தராமல் உடலை வருத்துபவன் ஒரு நாள் உடலழிவுக்கே ஆளாகிறான். ஓய்வு தராமல் உளத்தை வருத்துபவன் ஒருநாள் மூளைக் கோளாற்றுக்கு இரையாகிறான். ஆனால் தனிமை மூலம் ஓய்வுக்கோ, தன் திருத்தத்துக்கோ இடம் தராதவன் கடைசியில் தன்னைக் காணவே தான் அஞ்சும் பேயாகிறான். அந்நிலை யடைந்தவனுக்கு வாழ்வின் திருப்பம் அளித்து, மீண்டும் தனிமையின் இன்பத்தை அவனுக்கு உண்டுபண்ணும் மருந்து அன்பு ஒன்றே. தனிமை தரும் இன்பம் கடந்த இத்தகைய அன்பு என்ற ஒரு தெய்விகப் பண்பு இல்லாவிட்டால், அந்த அன்பை அருளாக வளர்த்துத் தெய்வ ஒளி பரப்பும், அருளாளர் இல்லாவிட்டால், உலகில் தனிமையை அஞ்சும் பேய்ப்பண்பு தளர்வுறாது, மாயாது. தனிமை மனிதன் உள்ளத்தை மனிதன் காணும் ஒரு கண்ணாடியாக்குகிறது. தனிமையின் ஒரு கூறு, புறக்கூறு ஓய்வு. அதன் மறுகூறு, அகக்கூறு சிந்தனை, தற்சிந்தனை. தனிமை பேணுபவன் தற்சிந்தனையை இயல்பாகப் பேணிவிடுகிறான். இவற்றின் இயற்கைக் கூறே துயில். தனிமை மூலமே தன்னைத் திருத்திக்கொள்ளாதவனை, தானாகத் தன்னைக் காண மறுப்பவனுக்கு இயற்கையின் கூறான துயில் உதவ முன்வருகிறது. ஆனால் மட்டுமீறிய ஓய்வின்மை துயிலையும் பாதிக்கமுற்பட்டுவிடுகிறது. இந்நிலையடைந்து அத்துயிலையும் பயன்படுத்தாதவனை உடலுளங்களின் கோளாறான பைத்திய நிலை கோர உருவில் அச்சுறுத்துகின்றது. துயிலில் காணும் பேய்க்கன வுருவங்கள், பித்தம் பிடித்தவன் காணும் திரிந்த உருக்கள் ஆகியவை அவன் தீயவாக்களின் இயற்கை மீறிய தோற்றங்களேயாகும். இயற்கை எனும் கண்ணாடியில் தோற்றும் இயற்கை மீறிய தன் தீயவா உருவங்களின் நிழல்களே அவை என்று தெரியாமல், மடமையின் செறிவால் மனிதன் மிரட்சியும் மருட்சியும் உறுகிறான். ஆனால் உயிராற்றல், இயற்கையாற்றல் இரண்டும் இத்தகைய கோர விளைவுகளைத் தன் மீது தானே வருவித்துக் கொண்ட மனிதனையும் ஆட்கொண்டு திருத்தாமலிருப்ப தில்லை. ஓர் அன்புக் குரல், ஓர் ஆறுதல் மொழி எத்தகைய பழி காரனையும், பைத்தியத்தையும், பேய்பிடித்தவனையும் திடீரென நல்வழியில் திருப்பிவிட்டுவிடும் என்பதை நாம் வாழ்வில் காணலாம். தனிமையும் அன்பும் தள்ளாத் துணைகள் வாய்மையின் அழிவு துன்பம் - வாய்மை அகன்றும் முழுதும் அழியாததானாலேயே, முழுமையான துன்பம் என்ற ஒன்று என்றும் இருக்கமுடியாததாகிறது. நாம் அந்த அழிவு நோக்கிச் செல்லுந்தோறும் தனிமையும் தனிமை நிலைகளும் மேன்மேலும் பெரிய உருவில் நம்மை மேன்மேலும் உரத்த குரலில் எச்சரித்து முழங்குகின்றன. நம் கண்ணை மூடி, காதை அடைத்துக் கொண்டு நாம் அழிவு நோக்கிச் செல்லுந்தோறும், நாம் தீமையின் ஆற்றலை நம் உள்ளத்தில் வளர்க்கிறோம். இது நம்முடன் அமைவதில்லை. நம்மைச் சுற்றிலும் உள்ள சூழலிலும் அதை வளரவிடுகிறோம். தனிமையின் திருத்தம் நம்மை ஆட்கொள்ளத் தவறுந் தோறும், தனிமை இன்பம் நிறைவரப் பெற்ற அன்பர், அருளாளர் சூழல் ஒரு சொல்லுருவில், ஒரு கனிந்த புன்முறுவல் உருவில் வந்து நம்மை ஆட்கொள்ளக்கூடும். சில சமயம் இயற்கையின் ஓர் ஒலி, ஒரு குழந்தையின் அழுகை, அன்புடையவரின் ஓர் ஆறுதல் சொல் ஆகிய ஏதேனும் ஒன்று இத்தகைய படுபள்ளத்திலிருந்து நம்மை மீட்கப் போதுமானதாயிருக்கும். ஆனால் இத்தகைய அகப்பண்பு வாய்ந்த நண்பர்களில் நமக்கு முதல் நண்பன் நம் தனிமையே - சில சமயம் அதுவே நம் முதன்மை வாய்ந்த நண்பனாகவும் செயலாற்றுகிறது. ஏனெனில் மற்ற நண்பர்கள் அதனை உள்நின்றியக்கும் புறத்தூண்டுதல்கள் மட்டுமேயாவர். உயிர்ப்பிழந்தவனுக்கு உயிர்ப்பளிக்க விரும்புவோர் புறநின்று காற்றுவரும்படி விடமுடியும். உயிர்ப்புக்கு உதவியான சூழலை உண்டுபண்ண முடியும். உள்ளுயிர்ப்பாற்றலைத் தூண்டி விட முடியும். ஆனால், உயிர்ப்பாற்றலையே புறநின்று ஊட்டி விடுதல் முடியாது. அதுபோல, தனிமை இன்பம் இழந்தவனுக்கு அதனை அவ்வின்ப நிலையில் மூதறிவற்றோர், அதன் இயல்பில் திளைத்தோர் தூண்டிவிட முடியும். தக்க சூழ்நிலை அளிக்க முடியும். ஆனால் அறவே தனிமை இன்பம் அற்றவனுக்கு அது தர முடியாது. ஆயினும் உண்மையில் தனிமை இன்பம் என்பதே உயிர். அது அற்றவன் என்று ஒருவன் இருக்க முடியாது. காட்டுத் துறவு, ஒரு விசித்திரப் புதிர் தனிமை தற்குற்றம் காண்பது மட்டுமன்று, தன்னைத் தனக்கு முற்றிலும் காட்டுவது. தன்னுரு என்பது தன் குற்றம் மட்டுமல்ல, தன் பண்பும் அடங்கியதே. உண்மையில் தன் குற்றம் என்பது மடமையின் விளைவாகிய புறக்கூறே. இது கடந்த உயிர்நிலையின் மெய்யுருவம் பொதுநல உருவமே. அதுவே அன்பு. தனிமைக்குப் போதிய இடம் அளித்தவர் தங்குற்றம் கண்டு திருந்துவதுடன் நின்று விடுபவர் அல்லர். அதே தனிமையை பாசம் வளர்க்கும். பாசத்தைத் தடுக்கவே துறவிகள் மனைவி மக்கள், சமுதாயம் விட்டுக் காடு செல்வதாகப் பலர் எண்ணுகிறார்கள். இது தவறான கருத்து. நாட்டு வாழ்வில் மனிதப் பண்பின் காட்டையே கண்டவர்கள் - அகப்பண்புக்கு வழியற்றவர்கள்தாம் - அந்நாட்டுக் காட்டை விட்டு நீங்கித் தனிமையில் அதே பண்பு களுக்கு வழிவகுக்கும் நற்காட்டுக்குச் சென்றாவது மீட்சி பெற எண்ணுகிறார்கள். அவர்கள் ஓடுவது குடும்பத்தை விட்டல்ல, சமுதாயத்தை விட்டல்ல - குடும்பத்தை, குடும்ப பாசத்தை, சமுதாயத்தை, மக்கட் பாசத்தை உண்டுபண்ணிக் கொள்ளத்தான், அவர்கள் காடேகுகின்றனர் என்னும் விசித்திரப் புதிரைப் பலர் எண்ணிப் பார்ப்பதில்லை. தற்பற்றின் மிகுதியால், தற்பற்றின் மட்டற்ற விளைவால் அவர்களைப் பொல்லாத பேரவாக்களாக ஆக்கிக்கொண்டவன் தான் அங்ஙனம் தம் தற்பண்பால் நாட்டைக் காடாக்கிக் கொண்டு, காட்டில் நாடு தேடிச் செல்கின்றனன், செல்ல வேண்டும்! வாய்மை ஒரு சேமத்துறை வாய்மையின் கண்டனக் குரலைத் திருத்தக் குரல் என்று அறியாது கோரக் குரலாக எண்ணி வெறுப்பவன், அது காரணமாகவே தனிமையையும் வெறுக்கிறான். ஆனால் வாய்மையை விரும்புபவன், அதன் திருத்தத்தால் வரும் மெய் யுணர்வை நாடுபவன் தனிமையை ஆர்வத்துடன் வரவேற்கிறான். சிறுமை ஆரவாரக் களங்களிலிருந்து கூடிய மட்டும் விலகி, தனிமையில் பழகுகிறான். அது காட்டும் தன் முழு உருவை, தன் தன்வெளிப்பாட்டை, தற்காட்சியைத் தெளிவாகவும், முழு நிறைவுடனும் ஏற்று, அதன்மீது தன்னை இயற்கைக்கு இயைய ஆக்கும் அரும்பணியில் முனைகிறான். அதன்பின் அவன் முன்னிலும் தெளிவாகத் தன்னுள்ளிருந்து கிடைக்கும் வாய்மையின் இன்ப கீத நாதத்தைச் செவிமடுத்து, அதைத் தன் உளமெங்கும் சூழலெங்கும் நிறைக்கிறான். மனிதர் புதிய புதிய உணர்ச்சிகளும் எழுச்சிகளும் நாடியே ஆரவார மக்கள் கூட்டத்தை அணுகுகின்றனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த உணர்ச்சிகளையோ, எழுச்சிகளையோ பெறுவதில்லை. பெற்றபோதும் அது அவர்களுக்கு மகிழ்ச்சியோ, இன்பமோ தருவதில்லை. ஏனெனில் மகிழ்ச்சியும் இன்பமும் அமைதிக்குரிய பண்புகள். ஆரவாரத்துக்குரியவையுமல்ல, உணர்ச்சிக்குரியவையுமல்ல. சில சமயங்களில் அவர்கள் மகிழ்ச்சி நாடிப் பல்வேறு பாதைகளில் செல்கின்றனர். ஆனால் மகிழ்ச்சி நிலையாயிருப்பதில்லை, இன்பமாவதில்லை. ஏனெனில் உணர்ச்சி நீங்கிய பின்னரே மகிழ்ச்சி நிலையான இன்பம் ஆகும். அதுவும் அமைதியின் விளைவு. விலாப்புடைக்கச் சிரிக்கும் நகைச்சுவை, கொந்தளிக்கும் மருட்சி ஆகிய உணர்ச்சிகளில் குளித்து இன்பப் போதைபெற முயல்பவர் உண்டு. ஆனால் இத்தகையவர்கள் இன்பத்துக்கு மாறாகத் துன்பமே - சில சமயம் உயிர்மாள்வே கைவரப் பெறுகின்றனர். அமைதிக்கு மாறான சூழல்களால் அமைதியின் கனியான இன்பம் எப்படிக் கிடைக்கும்? தற்பற்று, தன்னலம் காரணமான தற்சலுகைகள் வாழ்க்கை என்னும் கரையற்ற மாகடலின் அலைகள். மனிதன் அவற்றில் மிதந்து மிதந்து எற்றுண்டு தவழ்கிறான். அவா என்னும் புயல்கள், ஏக்கம் என்னும் சுழல்கள் இடைவிடாது அவனை அலைக் கழிக்கின்றன. அக்கடலின் உறுதியான அடித்தளமாகிய இயற்கையுடன் பிணைக்கப்பட்ட பாறை சார்ந்த தீவத்துறையே வாய்மை அலையும் புயலும் அவ்விடம் முற்றிலும் தளர்வுற்று, அது மனிதக் கலத்துக்குரிய பாதுகாப்பான இன்பத்துறையாக இயங்குகிறது. அதை யடைந்தவன் புயல்களுக்கு, அலைகளுக்கு அஞ்ச வேண்டியதில்லை. அவற்றின் நடுவே அவன் உறுதியான நிலத்தையும் அமைதிவாய்ந்த நீர்ப்பரப்பையும் தன் தங்கிடமாகக் கொள்ள முடிகிறது. பண்புருவில் பழிகள் புறச் செயல்களில் ஈடுபடும் சமயம் மனிதன் தன் ஆற்றல் கூறுகளைச் செலவழிக்கிறான்; இழக்கிறான். இதனால் அவன் ஆன்மிகத் தளர்ச்சியும் தேய்வும் உற்று நலிகிறான். இதைச் சரி செய்ய, அவன் ஒழுக்க ஆற்றல், ஆன்மிக ஆற்றல்களைச் சீர் செய்ய, அவன் தனிமையின் சிந்தனைக்கு இடம் தருதல் வேண்டும். இது அவன் தேவை, இன்றியமையாத் தேவை - உயிர்த் தேவை. இத் தேவையைப் புறக்கணிப்பவன், இழப்பவன், வாழ்க்கையின் மெய்யான அறிவைப் பெறமுடியாது. அதுமட்டு மன்று. பழி களிலிருந்து அவன் முற்றிலும் விலகி வாழவும் முடியாது. ஏனெனில் பழிகளில் தலைசிறந்த பழிகள் பெரும் பழிகள் அல்ல. பழிகள் என்றே தோற்றாத அளவு நுண்மையான பழிகள். அவற்றுட் பல பழிகளாகவே காட்சி தரமாட்டா. பண்புகளாக, கவர்ச்சிமிக்க பண்புகளாகவே காட்சியளிக்கும். மிகச் சிறந்த நன்மக்களைக்கூட இத்தகைய பழிகள் பண்புகளின் உருவில் மயக்கி, அவர்களறியாமலே அவர்களை அழிவின் திசையில் மெல்ல இட்டுச் செல்லும். மெய்யுணர்வை எட்டியவன் தவிர வேறெத்தகையவரும் அவற்றின் தன்மை யறியாது அவற்றின் அழிவாட்சியில் சிக்கிவிடுவர். * ‘உண்முகச் சிந்தனையின் ஓங்கலிடை மோனத் தண்முக அமைதிதரு தனிவீறு கண்டவரே விண்முகவீ றுற்றுந்தம் வியன்குறைகள் நோக்குகின்ற பண்முகமும் கொள்வர் பரிந்து. இடைவிடாது ஆர்ப்பாட்ட உணர்ச்சிகளில் உலவி வாழ்பவர் எப்போதும் ஏக்கங்களுக்கும் இன்னா இடர்களுக்கும் ஆளாவர். புற இன்ப எக்காளங்கள் உச்சநிலையுடையதாகவே இயலும். அதே சமயம் புல இன்ப அவாக்களை நாடாதவன்கூட, புறப்பண்புகளிலேயே நாட்டமுறும் வரை அறிவும் மெய் யுணர்வும் நிரம்பப் பெறுவதில்லை. காட்சிப் பொருள்களின் பன்முக உருவேறுபாடுகளிடையே தனிமையில் தங்கிக் கண்காணாப் புலனறிவு கடந்த உள்ளுயிரின் அகஒளிப் பயிற்சி மேற்கொள்ளும்வரை, ஒருவன் உள்ளம் வெறுமையாகவே இருக்கும். அதுவரை அவன் தன் சூழலை, உலகைத் தன்னியலாக மாற்றும் ஆற்றல் பெற முடியாது. உலகின் உயர் அவா அவர்களை அவன் தூண்டி எழுப்பவும் முடியாது. ஏனெனில் இவ் உயர் அவா ஆர்வங்கள் உள்ளொளி கண்டவரின் பொதுநல ஆர்வங்கள். அவா ஆர்வங்களைத் துன்ப நிழலற்ற இன்ப நாட்டங்களாக்கி, அவற்றின் மூலம் உயிருக்கு ஆன்மிக உணவளிக்கும் பண்புகள் இவையே. தனிமைப் பயிற்சியற்றவர் இவ் ஆன்மீக உணவைத் தாமே பெறாதவர். பிறருக்கு அதை வழங்கும் வாய்ப்பு அவருக்கு இருக்கமுடியாதென்று கூறத் தேவையில்லை. உயிருக்கு உயிர், உள்ளாரமிர்தம் நாள்தோறும் உண்மை உணரும் அவாவால் உந்தப்பட்டுத், தனிமையை நாடி அதனைப் பயன்படுத்துபவர் படிப்படியாகத் தம் புலன்களையும் புலன்கள் வழிச்செல்லும் அவாக்களையும் அடக்கி வெற்றி காண்கிறார். அவர் நெஞ்சம் வாய்மையின் ஆற்றலால் நிறைவடைகிறது. தன் ஆன்மிக வளத்தின் விளை வாக, அவர் உலக நலனுக்கு உதவ முடிகிறது. அவ்வாறு உதவு வதன் மூலமே அவ்வளம் குறைவுறாமல் மேன்மேலும் பொங்கு கிறது. உண்முக மெய்ம்மைகளில் ஒருவன் சிந்தனை செல்லுந் தோறும் அவற்றில் அவன் ஈடுபட்டு ஆழ அமிழுந்தோறும், அவன் அறிவும் ஆற்றலும் பெருகுகின்றன. வாய்மை என்னும் நிறை ஒளியின் கதிர்களை ஏற்கும்வகையில் அவன் உள்ளம் மலர்கள்போலக் கட்டவிழ்ந்து திறக்கின்றது. உயிர்தரும் அவ்அமுதக் கதிர்களை அது செம்மாந்து மாந்துகிறது. அறிவின் உலவா ஊற்றில் அவன் இறங்கி அதன் உயிர்ததும்பும் பேரின்ப வெள்ளத்தில் திளைத்து விடாயும் வெப்பும் அகலப் பெறு கிறான். அவன் வாழ்வு நிறைந்த பயன்மிக்க அறிவு அறுவடை காண்கிறது. ஏனெனில் புலன்கள் ஒரு முழு ஆண்டு ஆழ்ந்து கற்றாராய்ந்து பெறும் அறிவைவிட, அவனது ஒரு மணிநேர ஒருமுகச் சிந்தனை தரும் அறிவுவளம் பெரிதாகிறது. உலகியல் ஆதியந்தமற்றது. அறிவு அளவிறந்தது. தன் உள்ளத்தின் அடிநிலை யாவும் சென்று அதன் உலரா உணர் வூற்றின் நீர்பருகுபவன் என்றும் மாறாத பொங்கல் வாழ்வு பெறுவான். ஏனெனில் அவ்வுணர்வு நீர், அழியா வாழ்வு தரும் அமுத நீர். அது என்றும் உலர்வதில்லை. ஏனெனில் அதுவே உயிருக்கு உயிர். உள்ளாரமிர்தம். அறிவுக்கு அறிவு. உணர்வுக்கு உணர்வு. ஆழ்ந்த மெய்ம்மையின் இந்த உயிர் நிலையுடன் இடை யறாது பழகும் இந்தப் பழக்கமே, உலவாத தலையூற்றிடைச் சென்று வாழ்வின் இந்த உயிரமுத நீரில் திளைக்கும் இவ்வாய்ப்பே மேதைமை ஆகும். இது மடமையின் செறிவான பேதைமைக்கு நேர் எதிரான பண்பு. மேதைகளின் அறிவு வளம் கண்டு போற்றாதார், வியவாதார் இல்லை. அதன் மூல பண்டாரம் உணர்ந்தால், வியப்படையவே தேவையில்லை. அவை எல்லா வளத்துக்கும் மூலமுதலான தலையூற்றிலிருந்தே வளம் பெறுகின்றன. அவர்கள் அறிவு என்றும் புத்தறிவாகத் திகழ்வதும் இதனாலேயே. அவர்கள் இரண்டாந்தர நிலையின் நிழலைக் கைப்பற்றவில்லை. முதல் தரத்திலும் முதன்மை வாய்ந்த, பொருளின் பொருளை, உயிரின் உயிர்முதலைக் கைப்பற்றி யுள்ளனர். அத்துடன் மேதை பிறருக்கு அளிக்குந்தோறும் அவன் வளம் பெருக்கமுறுகிறது. இறைக்க இறைக்கப் பொங்கி ஊறும் ஊற்றுப்போல, செலவாக ஆக அவன் அறிவின் செறிவு வளர்கிறது. ஒவ்வொரு வேலையையும் அவன் செய்து முடிக்குந்தோறும், அடுத்த வேலையைச் செய்வதற்குரிய அவன் ஆற்றல் ஓங்குகிறது. அவன் உள்ளம் விரிவடைகிறது. அகலமுறுகிறது. எல்லையற்ற ஆற்றல் பரப்புகிறது. மேன்மேலும் பல திசையிலும் ஆற்றலலைகளை ஓயாது பரப்பி வளர்த்துக்கொண்டே இருக்கிறது. மேதை அறிவும் புத்தக அறிவும் மேதை உள்ளொளி பெற்றவன். எல்லையுடைய சிறுமைக்கும் எல்லையற்ற மாபெரும் பெருமைக்கும் இடையேயுள்ள பேரகல்வெளிமீது அவன் பாலமிட்டவனாகிறான். அவனுக்கு வேறு துணை, துணையாற்றல்கள் தேவைப்படுவதில்லை. ஒவ்வொரு பெரிய சிறிய அலுவலுக்கும் அவன் மூலபண்டார ஆற்றல் வளத்திலிருந்தே வேண்டிய வேண்டிய ஆற்றல் பெற்றுக்கொள்கிறான். மேதைக்கும் மற்றப் பொதுநிலை மனிதருக்கும் உள்ள வேறுபாடு இதுதான் - மேதை அகமெய்ம்மைகளினிடையே வாழ்கிறான். ஆனால் மற்றவர்களோ புறத்தோற்றங்களிடையே உலவுகின்றனர். மற்றவர்கள் இன்ப அவாக்களை நோக்கி ஓடோடுகின்றனர். மேதை மெய்யுணர்வை நோக்கிச் செயலாற்று கிறான். மேதை தனக்கு வழிகாட்டும் அறிவைத் தன்னுள் காண்கிறான். மற்றவர்கள் அதனைப் பிறர் மதிப்பிலும் பிறர் மீது ஆதிக்கத்திலும் தன்னலத்திலும் புத்தகங்களிலும் தேடுகிறார்கள். புத்தக அறிவுக்குரிய சரியான இடமறிந்தவர்களுக்கு அது பயனுடையதே. ஆனால் அதுவே மெய்யறிவின் கருவூலம் அல்ல, மூலதனம், ஊற்று அல்ல. அதனை உயிரின் செயல் மூலம் உயிரிலே, வாழ்விலே, அனுபவத்திலேதான் காண வேண்டும். புத்தகங்கள் அறிவு பற்றிய தகவல்கள் அளிக்கின்றன. அவை அறிவு அளிப்பவையல்ல. அவை அறிவைத் தூண்ட முடியும், அறிவாகச் செயலாற்ற முடியாது. உன் அறிவை முயற்சிசெய்து அதன் பயனாக நீ பெற்றாக வேண்டும். முற்றிலும் புத்தகங்களையே நம்பி, அதற்கு அறிவும், அந்த அறிவுக்கு உயிரும் ஊட்டும் உயிரறிவின் கருவூலமான அமைதியின் மோன வளத்தை நாடாதவன், அதன் சிந்தனை மூலம் அதை இயக்கி உயிரூட்டாதவன், உயிரறிவு பெற மாட்டான். பெற்ற அறிவு பயன்படாது. பயன்படும் அறிவும் விரைவில் செலவழிந்து இல்லாதுபோம். புத்தக அறிவுடையவன் ஒப்பற்ற திறமைசாலியாக இருக்கலாம். ஆனால் அவன் அக ஒளியின் தூண்டுதலற்றவன். மெய்யுணர்வின் மூலபண்டாரமாகிய தெய்விக உணர்வின் உள்ளாற்றலற்றவன். சேகரித்துவைத்த தகவல்களின் தொகுதி தீர்ந்தவுடன், வெறுங் கூடாகிறான். அல்லது சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லும் கிளிப்பிள்ளையாகிறான். அவன் அறிவு இயல்பான உயிரியக்கம் உடையதன்று. என்றும் புதுமை யாய் இயங்கும் உயிர்வளமும் அதற்கு இருக்க முடியாது. உயிரின் மூல முதலாகிய உள்ளுணர்வு வெள்ளம் உயிரின் சேமவளம். அதனுடன் தொடர்பில்லாதன அறிவு உயிர்த் தொடர்புடையதன்று. உயிரறிவன்று. சடமான, எளிதில் இயல்பாய் அழியக்கூடிய புறத்தோற்றங்களால் அது ஆக்கப்பட்டது. இந்தச் சடஅறிவு வளராதது, முடிவுறுவது, இயங்காதது. ஆனால் மேதையின் அறிவோ இயங்குவது, என்றும் வளர்வது, எல்லை யற்றுப் பொங்குவது. மேதையாதல் எவ்வாறு? மேதைமை, பெருமை ஆகிய இரண்டு சால்புப் பண்புகளும் தனிமையாலேயே பேணப்படுபவை. தனிமையில் மலர்ச்சி யுறுபவை. தனிமையிலேயே நிறைவு பெறுபவை. மேதையும் பெரியாரும் அவ்வாறே பிறக்கின்றனர் என்று நம்புபவர் உண்டு. இது தவறு. மிகப் பொதுப்படையான மனிதன்கூட மேதைமை வழியையும் பெருமை வழியையும் பின்பற்றினால் எளிதில், விரைவிலேயே மேதையாகவும், பெரியவனாகவும் திகழ முடியும். இதற்கான முதல் தேவை உயர்நோக்கம். அடுத்தபடி அந் நோக்கத்தை நிறைவேற்றும் எண்ண உறுதியுடன் மனிதன் தன் ஆற்றல் முழுவதையும், வலிமைத்திறங்கள் எல்லாவற்றையும் அதில் முழுமனதுடன் ஈடுபடுத்துதல் வேண்டும். இதன் பின்னரே தனிமை செயலாற்றுகிறது. தனிமையின் சிந்தனையில் உண்டாகும் நோக்கமும், முயற்சியின் விளைவான அனுபவ அறிவும் ஒருங்கே முறுகி முதிர்வடைகின்றன. இவை மனிதனை ஒரு மேதையாக்கிவிடும். அவன் செயற்கரிய செய்யும் பெரியோனாகவும் திகழ்வான். உலகின் புறப்பொருள் இன்பங்களைத் துறந்து, மக்கட் பாராட்டாகிய புறப்புகழை நாடாமல் ஒதுங்கி நின்று, தனிமையில் மனித இனநலன் நாடிய ஓர் உயர் குறிக்கோள் வழி கருத்திருத்தி, அதனை நிறைவேற்றும் வகையில் சிந்தனையைச் செலுத்தினால், அத்தகைய மனிதன் ஒரு தெய்வக் காட்சியாளன், முனிவன், பகவன் ஆகிறான். இதே முறையில் உள்ளத்தில் மோன அமைதியுடன் அன்பின் இனிமைவார்த்து, உயிரின் உள்ளத்தி னுள்ளும், இயற்கையின் எல்லையற்ற அகல்வெளியினுள்ளும் இடையறாது பண்ணிசைக்கும் புலன் கடந்த மோன இசைவுடன் தொடர்பு கொள்பவனே தெய்வப்பாணன், கவிஞன் ஆகிறான். மேதைகள், பெரியார்கள், ஒப்பற்ற வீரர்கள், உலக ஆசாரியர்கள் - யாவருமே மோனத்தின் பல்வேறு கான் முளைகளே. குழந்தைகளின் எளிய உள்ளம், அகலவிரித்து உன்னிப்பாகக் கேட்கும் செவிகள், விசாலமான அழகிய கண்கள் வாய்ந்த தெய்வக் குழந்தைகள் அவர்கள். ஆரவாரங்களில் உழன்று அலுப்புற்ற மனித சமுதாயம் அகக்கண்களில் காணும் அழகுக் கவர்ச்சி புலனறிவு கடந்து நிலவும் மறை மெய்ம்மையின் சாயலேயாகும். உணர்வற்றவர் அணுக முடியாத அமைதிக் கோட்டையின் அந்தக் கண்காணா அழகை, செவிபடா இசையை, அவர்கள் உருவிலும், உருக்கடந்து வாழ்விலும்; குரலிலும், குரல் கடந்து வாழ்க்கை நெறி முறையிலும் ஒரு சிறிதே கண்டு கேட் பதன் மூலம் துன்பத்தில் நைந்த உள்ளங்கள் ஆறுதல் அடை கின்றன. 3‘பல்லுயிரும் பரந்தோடும்’ பெரும்பருதி வட்டத்தின் எல்லையிலா மோனவெளி தன்னில்என்றும் ஆடுகின்ற நல்லொளியின் உருவண்ணத் தடங்கள், தடஞ் சின்னங்கள் புல்லியநல் லறிகுறியாய்ப் பொருந்தும்உன்றன் உளத்தகத்தே! தனிமையில் தண்ணளிபெற்ற நெடுந்தகையாளர் முதலிலே கொடுஞ் செயலாளராகவும் கண்மூடி வெறிய ராகவும் இருந்தவர்தாம் தூய திரு. பாடல்! மூன்றாண்டுகள் பாலைவனத்தில் கழித்தபின் அவர் ஒரு திருக்காட்சியாளராகவும் அன்பாசிரியராகவும் வெளியே வந்தார். உலகியல் பெரியாராகக் காடுசென்ற கௌதமசித்தார்த்தர், அங்கே தம் உணர்ச்சி வெறிகளுடன் தனிமையில் இருந்து கடும் போராடி உயிரியல் பற்றிய தம் ஆழ்ந்தாராய்வுகளுக்குப் பின் அறிவு விளக்கம் பெற்ற புத்தராகித் திரும்பி வந்தார். அமைந்த மெய்யறிவுவாய்ந்த அவரிடம் துயருழன்று வாடிவதங்கி அன்பு நீருக்கு அலந்த இதயங்களுடன் உலக மக்கள் வந்துவந்து சூழ்ந்தனர். சாவொழிக்கும் அமுதமாகிய உயிர் நீரையே அவரிடமிருந்து அவர்கள் பெற்று உய்வுற்றனர். உலகியல் முறையிலே ஓர் உயர்பதவியிலிருந்தவர் லயோட்சே. உண்மையின் இயல்பு நாடி அவரும் தனிமை தேடியே சென்றார். தனிமையாராய்வின் பயனாக, அவர் பர உணர்வு அல்லது “தாவ்”, கண்டெய்தி, அதன்பின் உலக ஆசாரியரானார். இயேசுபெருமான் முதலில் கல்வியறிவற்ற ஒரு தச்சரேயாவார். மலைமீது சென்று தனிமையில் பல ஆண்டுகள் இயற்கையுடன் ஊடாடித் தளரா அன்புவெளியிலும் மெய்யுணர்வொளியிலும் தோய்வுற்று, மனித இனத்தில் தெய்வீகச் சாயல் மேற்கொண்ட வராக வெளிவந்தார். தெய்விக உணர்வின் உச்ச உயர்தளத்தில் ஏறி அதன் ஒளிபெற்ற பின்னும்கூட, இந்த உலகப் பேரருளாளர் அடிக்கடி தனிமையை நாடி நின்றனர் என்பது கவனிக்கத்தக்கது. இடை யிடையே அவ்வப்போது சிறிது நேரமாவது தனிமையில் ஒதுங்கித் தம்முள் தாமே நிறைவுபெறும் வாய்ப்பை அவர்கள் தவறவிடவில்லை. இத்தகைய புத்துயிர் பெறாவிடில் உச்ச உயர் அருளாளர்கள்கூடத் தம் ஆன்மிகப் புத்துயர்வும் புத்துயிரும் இழந்து தளர்வு பெறுவர். தனிமை ஒன்றே அத்தளர்ச்சியாற்றிப் புத்தாக்கம் அளிக்கவல்லது. தனிமையில் அடிக்கடி தம் கருத்தையும் வாழ்வையும் தம்முள் ஒளிரும் உயிர்க்கதிரவனின் ஒளிக் கதிர்களில் குளிக்க விட்டே இப் பெரியார்கள் ஆற்றல் பெற்றனர். தனிமையிலேயே அவர்கள் தம் சிறு தனியுயிர்நலங்களையும் சிறு தனிமையையும் கடந்து சென்று, மன்னுலக உள்ளத்துடனும் மன்னுயிரின் உயிர் நிலைக் கருத்தாழத்துடனும் ஒன்றுபட்டு நின்று, உலகவாழ்வுக்கே தூண்டுதல்தரும் உயிர்க்கருவியாகத் தம்மை ஆக்கிக்கொண் டனர். இச்செய்திகள் மறைவாணரை மயங்க வைக்கும் உவமை உருவக அணி நயங்களுடன் வருணிக்கப்படும்போது, அவை இயற்கை மீறிய அருநிகழ்ச்சிகளாக, தெய்வீக அருஞ் செயல் களாகத் தோற்றுதல் இயல்பே. ஆனால் உண்மையில் அவை இயற்கை மீறிய அருநிகழ்ச்சிகளல்ல; இயற்கையின் உள்ளார்ந்த நல்லமைதி சார்ந்தவையே. மறைவான அரும்பொருளா யிருப்பவை இந்த நிகழ்ச்சிகளல்ல, இவற்றுக்கு அடிப்படையான அமைதியே. அனைத்துயிரிலும் இயற்கையிலும் உள்ளீடாய் எங்கும் பரவியுள்ள வாய்மை நல ஆற்றலுக்குக் குழைவுற்று அதற்கு அடங்கி இயங்கும் ஒவ்வொருவரும் அதன் உயிரியக் கவிசைப் படைப்பாற்றலுக்கு உரியவர், அதனை உடையவர் ஆகின்றனர். ஒவ்வொரு கவிஞனும் கலைஞனும், ஓவியனும் பாவியனும், ஞானியும் அறிவனும், முனிவனும் அறவோனும் இந்த என்று முள்ள வாய்மையின் இயங்கு கருவிகள் அல்லது பொறிகளே. அவர்கள் உலகுக்கு அளிக்கும் ஒளியின் பரிசும், அவர்கள் தன்னலத்துறப்பு, அவா அடக்க அளவேயாகும். தற்பற்று இடையே திரையாகத் தலைநீட்டும் அளவிலேயே, அவ்வொளி முழுதும் சுடரிடாது மங்கலுறுகிறது. எனவே மேதைமையின் உச்சநிலையும் செயற்கரிய செய்யும் பெரியார் ஆற்றலின் முகடும் தன்னலத்துறவு, பொதுநல அவாவின் செறிவன்றி வேறல்ல. எல்லா நலங்களுக்கும் ஆற்றல்களுக்கும் அடிப்படை தன்மறுப்பே. இது தனிமை ஒன்றின் மூலமே நிறைவு பெறுகிறது. தனிமையிலேயே அது பிறக்கிறது. தனிமையிலேயே அது பேணப் பெறுகிறது. தனிமையிலேயே முதிர்வுறுகிறது. இங்ஙனம் திரட்டப்படும் ஆற்றலே ஆன்மிக ஆற்றல். ஒருமுகப்பட்ட சிந்தனையினால் தனிமையிலேயே ஒருவன் இத்திறங்களைத் திரட்ட முடியும். உலகியல் செயல்கள் இவற்றைச் செலவுசெய்தே நிகழ்வனவாதலால், அவற்றின் ஆரவாரத்திலே செலவன்றி வரவு, அமையாது. நிறைந்த ஆற்றலைத் திரட்டியபின், உலகியல் நிகழ்ச்சிகளில் கூடச் செலவின் அளவு வீதம் மிகக் குறைவாய்விடும். ஆனால் இத்தகுநிலை அடைந்தவர்கள் மிகமிகச் சிலர். பல ஆண்டுகள் நீடித்த பயிற்சியின் பின்னரே அத்தகைய சேம ஆற்றல் பெற முடியும். அந்நிலையுற்றவர் உலக நிகழ்ச்சிகளின் ஆரவாரங்க ளிடையேகூடத் தனிமைச் செல்வமும் ஒருங்கே பெற முடியும். ஆனால் இது பொது அமைதிக்கு மாறல்ல, அதனை வலி யுறுத்தும் விலக்கேயாகும். மனிதவாழ்வு ஓர் ஆன்மிகத் தொழிலாளி வாழ்வே! மனிதன் மெய்யான உறைவிடம், வாழ்வகம் மோனப் பெருவெளியே. அவன் உள்ளார்ந்த நிலையான மெய்ம்மைத் திறங்கள் அனைத்தின் தலையூற்று வளம் இதுவே. ஆனால் உலகியல் வாழ்வில் அவன் இயல்பு இருநிலைப்பட்டது. அதனாலேயே புற நிகழ்ச்சிகளும் அவனுக்கு இன்றியமையாத் தேவைகளாகின்றன. உலகியல் நிலையில், முழுநிறை தனிமையும் அவனுக்கு வாழ்வாகாது. முழுநிறை ஆரவாரச் செயலும் வாழ்வாகாது. ஆயினும் இந்த இருமுகு நிலையிலும் உயிர்ப் பண்பார்ந்த முகம் அகமுகமே. புறஉலகில் செயல்களைச் சரிவரச் செய்வதற்குரிய வலிமையையும் மெய்யுணர்வாற்றலையும் தனிமையில் பெற்று, அதனைப் புறத்தே செலவு செய்வதுதான் நல்ல வாழ்வு. அவ்வாறு செய்பவன், பகல் முழுதும் வேலை செய்தலுத்து மாலையில் களைப்புடன் சென்று ஓய்வும் உணவும் இன்பமும் ஒருங்கே கொண்டு மறுநாள் வேலைக்குச் செல்லுவதற்கான புத்தூக்கம் பெறும் தொழிலாளிபோல, புற உலகின் ஆரவாரக் கம்பலையிடையே உழைத்து, அவ்வுழைப்பின் பின் மோனமனை சென்று அதே வகை ஓய்வு பெறுகிறான். உலகம் அவனுக்கு ஒரு பெருந் தொழிற்சாலையாகவும், இடையோய்வுக்குரிய தனிமை மோனம் அவன் வாழ்மனை யகமாகவும் ஒன்றுக்கொன்று ஆதாரமாக இயங்குகின்றன. இக் காரணங்களாலேயே, முற்றிலும் வாழ்வு நீத்துக் காட்டுத் தனிமைநாடி அத்தனிமையின் பயன்பெறாதழிபவன், முற்றிலும் ஆரவார வாழ்வில் தன்னை இழந்து ஆற்றலழிபவன் ஆகிய இருவரும் அடையாத இன்பத்தை, நாளின் ஒரு பகுதியைத் தனிமையமைதிக்கு ஒதுக்கி வைப்பவன் மட்டுமே அடைகிறான். தனிமையில் அவன் பேணும் உயர்தெய்வீக நோக்கமே தலையூக்க ஒளியின் கதிர்களைத் தனதாக்கிப் புத்துயிருடன் செயலாற்றும். தனிமை வலிமையுடையவர்க்கு இனிமையளிப்பது. வலிமை நாடுபவருக்கு வலிமையும், வலிமையின் வலிமையாக உரமும் தருவது. தனிமையடையும் அளவிலேயே ஒருவன் பெரியவன் ஆகிறான். தனிமையே பெருமை, பெருமையே தனிமை. ஆனால் வாழ்வில் உரிமையை இப்பெருமை பேணுவது போல, இந்தப் பெருமையின் அருமையைப் பேணுவது செயலே. உலகுக்குப் பயன்படும் அளவிலேயே அது அவனுக்கு இன்பமளிக்கும். ஆகவே பெருமை வழி தனிமை வழிமட்டுமல்ல, அது பொதுமை அளாவிய தனிமை வழி. ஏனெனில் தனிமை தரும் அக இன்பம் பொதுஉணர்வின்பமே. தனிமை வழி ஒன்றே மெய்யுணர்வு, வாய்மை, ஆற்றல் பெறும் வழி. அது என்றும் எல்லாருக்கும் எப்போதும் திறந் திருக்கும் வழி. மெய்யுணர்வு, வாய்மை, ஆற்றல் நாடுபவன் அவ் வழி சென்று அவற்றைப் பெற்று, உலகுக்களித்து, இன்பம் பெறுகிறான். ஆனால் புறத்தே ஆரவாரங்களில் அதனைத் தேடுபவர், தன்னல அவாவுடன் பரந்து சென்று தேடுபவர்கட் புலனுக்குப் படாமல் அகத்தே நுணுகி ஆராய்பவருக்கு மட்டுமே அது அகப்படுவதாதலால் அதை நாம் உயர் இன்பம், மறை இன்பம், வானுலக இன்பம் என்று கூறுகிறோம். பொதுமையின் இவ்வகப் பண்புணராத சமயவாணர் சொற்கடந்து மெய்ம்மை காணாது சொற்புதிரில் சிக்கி அலமருவர். தனிமைச் சிந்தனையிலாழாது, சாத்திரக் குப்பை களில், ஏட்டுப் பாலைவனங்களில் கிடந்துழலுவர். அவர்கள் அனுபவமென்னும் அன்பாரமுதில் திளைக்காதவர்கள். அடிக்குறிப்புகள் 1. “றுhல னைடல ளநநம கசடிஅ டிரவறயசன வாiபேள கூhந யளேறநச iறேயசன ளடைநnஉந செiபேள? றுhல உடiஅb வாந கயச-டிகக hடைடள றiவா யீயin, ஹ நேயசநச எநைற டிக hநயஎநn வடி பயin? ஐn டடிறடநைளவ னநயீவாள டிக bடிளமல னநடடள கூhந hநசஅவை உடிவேநஅயீடயவiடிn னறநடடள, றுhநnஉந, யீநைசஉiபே hநயஎநn,றiவா ளஉசநநநேன ளiபாவ, ழந ளநநள யவ nடிடிn வாந ளவயசள, றாடிளந டiபாவ ளுhயடட படடிசகைல வாந உடிஅiபே niபாவ.” -றுhவைவநைச. 2. “ஐn வாந ளவடைட hடிரச றாநn யீயளளiடிn ளை யவ சநளவ, ழுயவாநச ரயீ ளவடிசநள டிக றளைனடிஅ in வால செநயளவ.” - றுடிசனளறடிசவா. 3. “கூசரந னபைnவைல யbனைநள றiவா hiஅ யடடிநே, றுhடி, in வாந ளடைநவே hடிரச டிக iறேயசன வாடிரபாவ ஊயn ளவடைட ளரளயீநஉவ யனே ளவடைட சநஎநசந hiஅளநடக ஐn டடிறடiநேளள டிக hநயசவ.” 4. ‘ஐn அயn’ள ளநடக யசளைந ஹரபரளவ யவேiஉiயீயவiடிளே, ளலஅbடிடள, வலயீநள டீக ய னiஅ ளயீடநனேடிரச நஎநச டிn நெகடிசந- ஐn வாயவ நவநசயேட உசைஉடந டகைந யீரசளரநள.” 12. தற்சார்புநிலை 1எந்நிலையிலும் தனிமைமுறை தன்னையே நீநாடு உன்னையே நீவழிபடு! உன் உளப்பண்பே கூடு - ஜார்ஜ் ஹெர்பட். 2தெள்ளத்தெளிந்த இதயத்தே செவ்வொளியேற்கும் செல்வந்தான் கள்ளமிலாத பகல்வானின் நடுவாம்கதிரோன் எனவயங்கும் - மில்ட்டன் பேரின்ப நோக்கிய வாழ்வில் திடமான தன்னம்பிக்கை அல்லது தன்னுறுதி முதன்மைத் தேவை ஆகும். ஏனெனில் பேரின்ப வாழ்வுக்கு ஆற்றலும், ஆற்றலுக்கு அமைதியும், அமைதிக்குச் சரிசமநிலையும், சரிசமநிலைக்கு மைய உறுதி யாகிய தன்னுறுதியும் இன்றியமையாதவை. ஆகவே நீடித்த இன்பம் நாடுபவன் தன்னையன்றி எவர்மீதும், தனக்குப் புறம் பான எப்பொருள்மீதும் சார்தல் ஆகாது. அப்பொருள்கள் எந்தக் கணத்திலும் உன் வாழ்வுடன் தொடர்பற்றுப் போகத்தக்கவை, அழியத்தக்கவை. உறுதியற்ற மணலில் கட்டிய கட்டடம்போல அவற்றின்மீது சார்ந்த உன் வாழ்வு பாழாய்விடும். தான் நிற்பதற்குரிய மையத்தளமொன்றைத் தன்னுள் காணும்வரை ஒருவன் வாழ்வு தொடங்கிவிட்டதாகவே கூற முடியாது. வாழ்வின் செயல்கள், பண்புகள் யாவற்றுக்கும் உறவும், தொடர்பும், ஒழுங்கும் அளித்து, வாழ்வியக்கத்தை உண்டு பண்ணுவதே இந்த மூலதளம்தான். அதன் மையநிலை பேணியே அவன் சரிசமநிலையாகிய அமைதி காண முடியும். ஆட்டங் காணும் எதையும் அவன் சார்ந்தால், அவன் சரிசம நிலையமைதி கெட்டு, அவன் வாழ்வும் ஆட்டங்காண வேண்டிவரும். அவன் சார்ந்திருக்கும் பொருள் இன்னொன்றைச் சார்ந்ததாயின், எதிர்பாராத சமயம் அச்சார்பொருள் விலக, அவன் வீழ்ச்சியுற்று வெந்துயர் அடையநேரும். அழியத்தக்க கூளங்களின் மையங்களை அவன் தன் மையத் தளமாக்கினால், சூழல் முழுவதுமே அழிவுற்று, அவன் அச் சூழல்வளங்களின் நடுவே, அவற்றின் மையத்தில் கிடந்து மிதந்து அவதிப்பட நேரும். கடல் நடுவே கிடந்து நீர்விடாயால் வாடுபவன் நிலைமையை அவனது அப்போதைய நிலைக்கு ஒப்பாகக் கூறலாம். வேறு எவர், எதன் சார்பும் நாடாமல், மனிதன் தற்சார்புடன் தன்னை நம்பியே நிற்பானாக. அவன் எவர் உதவியும் கோர வேண்டாம். எவரிடமும் தனிப்பட்ட உதவி கோரிக் கெஞ்சத் தேவையில்லை. அவன் இரந்து குறைப்பட வேண்டியதுமில்லை. குறைகூற வேண்டியதுமில்லை. அவாவவும் வேண்டாம். கழிவிரக்கம் கொள்ளவும் வேண்டாம். தன்னுள் நிலவும் வாய்மையையே தனக்குத் தஞ்சமாகக் கொண்டு, தன் உளச் சான்று தனக்களிக்கும் அமைதியே கொழுகொம்பாகக் கொண்டு நிற்பானாக. உன் ஊன்றுதளம் உன்னுளே! தன்னுள்ளேதான் அமைதி காணாதவன் வேறு எங்கே போய்த்தான் அதைத் தேட முடியும்? தன்னுடனே தான் தனியிருக்க அஞ்சுபவன் வேறு யாருடன் இருந்துதான் என்ன தோழமை பெறக்கூடும்? தன் உள்ளக் கருத்தில் தான் தோய்வுற்று அதில் இன்பங்காண முடியாதவன் பிறர் கருத்துத் தொடர்பால் துன்பம் கொள்ளாதிருப்பது எவ்வாறு? - ஆம். இவைபோலவே, தன்னுள்ளே தனக்கு நிலைபேறாத நிற்க ஒரு தளம் காண முடியாதவன் வேறு எங்கும் ஒரு சிறிது நின்று ஓய்வுபெறத் தக்க இடம்கூடக் காண்பது அரிதினும் அரிது. முடியாதது. தன் இன்பம் தன்னைச் சூழ்ந்துள்ள மக்களைச் சார்ந்தது என்றோ, புறப்பொருள்களைச் சார்ந்தது என்றோ கருதுபவர்கள் பலர் உண்டு. அது ஒரு மயக்கம், ஓர் ஆராய்ந்து காணப்படாத மூடநம்பிக்கை. அதன் பயனாக இடைவிடாத ஏக்கங்கள், கழி விரக்கங்கள், அழுகைக்குரிய வாதனைகள் உண்டாகின்றன. இவைகளால் அலைக்கழிக்கப்பட்ட மனிதன் மேலும் அமைதி யிழந்து, துன்பங்களைப் பெருக்கிக்கொண்டே போவான். ஆனால் புறப்பொருள்கள் எதிலும் இன்பத்தை நாடாமல், அதன் பெருவெள்ளத்தைத் தன்னுள்ளே நாடித் தற்சார்புடனும் தன்னிறைவுடனும் வாழ்பவன் என்றும் இடருக்கும் இன்னா மைக்கும் ஆட்பட மாட்டான். பிறரைச் சார்ந்து வாழ எண்ணுபவர்கள், பிறர் செயல்கள் மூலமே தாம் இன்பமடைய முடியும் என்று நம்புகிறார்கள். நம் இன்பம் நம் செயல் சார்ந்ததன்று கருதத் தவறிவிடுகிறார்கள். பிறர் தம்முடன் ஒத்துழைத்தால்தான் தமக்கு அமைதி கிட்டு மென்று அவர்கள் எண்ணுகிறார்கள். தாமே தம் உள்ளுணர் வொளியுடன் ஒத்துழைத்தால்தான் அமைதிகிட்டும் என்பதை அவர்கள் உணரத் தவறுகிறார்கள். இத்தகையவர்கள் ஆன்மிக வாழ்வில் காலூன்ற இடமின்றி மிதந்து தத்தளிக்கிறார்கள். கணத்துக்குக் கணம் தம்மைச் சுற்றிலும் மாறுபடும் சூழல் களிடையே ஒன்றும் தோன்றாமல் திகைத்துத் திணறுகிறார்கள். இன்பம், துன்பம் ஆகிய இரண்டினும் மோசமான நிலை அவர்களது - இன்பத் தோற்றத்தினூடாகத் துன்பம், துன்பத் தோற்றத்தினூடாகப் பெருந்துன்பம் என்ற ஓய்வொழிவில்லா மேடுபள்ளங்களில் புரண்டு உருண்ட அவர்கள் நிலைதடுமாறு கிறார்கள். அமைதியும் சரிசமநிலையும் இழந்து குப்புறக் கவிழ்ந்து கரணமிட்டுச் சுழலும் அவர்கள் ஆன்மிக வாழ்வு புயலில்பட்ட பயின் கருவி (சுக்கான்) இழந்த படகின் நிலை யாகிறது. தானே தட்டுத்தடவித் தடுமாறியன்றி ஒரு குழந்தை நடக்கக் கற்றுக்கொள்வதில்லை. அது நிற்கக் கற்றுக் கொள்வதும் அவ்வாறே. வாழ்வில் தனிமனிதன் நிலைமை இதற்கு மாறு பட்டதன்று. அவன் தானே தன்னம்பிக்கையுடன் தன்னைச் சார்ந்து நிற்கக் கற்றுக்கொள்ள வேண்டும். தானே சிந்திக்க, தானே சிந்தித்து முடிவு செய்ய, எதையும் மதிப்பிட்டுணரக் கற்றுக் கொள்ளல் வேண்டும். இவற்றின் பயனாக, தானே எதுவும் தேர்ந்தெடுக்க, செயல் செய்யப் பழகியாக வேண்டும். தன் உள்ளத்தின் வலிமை கொண்டு தானே முயன்று தேர்ந்தெடுத்த வழியன்றி, வேறு எத்தகைய வழியும் அவனைப் பேரின்பச் சோலையின் திசையில் திருப்பாது. உன் அரசை நீ ஆண்டால், உலகை நீயே ஆளலாம்! புறமெல்லாம் மாறுதல், அழிவு, உறுதிக்கேடு! அகமெலாம் மாறா உறுதி, அமைதி, பேரின்பம்! ஏனெனில் உள்ளத்தின் உயிர்நிலை முற்றிலும் தன் நிறைவுடையது. அங்கே தேவை எந்த அளவு பெரியதானாலும், அதன் அளவு வளநிறைவும் உண்டு. மனிதனுக்குரிய உலவா இன்பக்கோட்டை அது. அதனுள் நுழைந்த அன்றே அதை நீ வென்றுவிட்டாய். ஏனென்றால் நீ அதை அறிந்தாலும், அறியாவிட்டாலும் அது உன்னுடையது, உனக்குரியது, உனக்காகவே காத்துக்கிடப்பது. நீ அதன் அரசன், அதன் கோமான். மற்ற இடங்களி லெல்லாம் நீ அடிமையாயிருக்க வேண்டும். பிறர் தயவு எதிர் பார்த்து வாழ வேண்டும். இங்கே நீ மன்னன். உன் சொற்கள் ஆணைகள். உன் விருப்பங்களே சட்டங்கள். உன் அறிவே திட்டங்கள். அது உன் அரச செல்வம், பிற அரசுகளைப் பற்றி நீ கவலைப்பட வேண்டாம். அவற்றில் நீ தலையிட வேண்டாம். அவற்றை அவற்றுக்குரியவரிடம் விட்டுவிடு. உன் முழுப்பொறுப்பு, உன் சிறு அரசில். அதிலிருந்து கொண்டே, அதைச் சரிவரப் பயன்படுத்திக்கொண்டே நீ உலகை அரசாளலாம். ஏனெனில் அரசுகளின் பெருமை சிறுமை அவற்றின் எல்லையில், அளவில் இல்லை. அவற்றின் அக அமைதியில், கட்டுப்பாட்டில், உறுதியிலேயே அமைந்துள்ளது. அத்துடன் உலகு ஒன்று. உன் உலகின் மையம், உனக்குரிய உன் அரசு. அந்த அரசை நீ இயக்கியபின், உலகும் அதன்வழி கட்டாயம் இயங்கும். உன் அரசில் உனக்கு ஓர் அமைச்சனுண்டு, அதுவே உன் உளச்சான்று. அதன் சுதந்திரத்தில் குறுக்கிடாதே, அதன் அறிவுரைப்படி நட. உன் அரசாட்சி நல்லரசாட்சியாய் இருக்கும். அதன் உறுதி, உன் வாழ்வில் உறுதிதரும். உன் சூழலில் உன் உலகில் அது உனக்கு வளமும் வளர்ச்சியும் தரும். உன் உலகின் எல்லை, சூழலின் எல்லை, உலகின் எல்லையாக, இயற்கையின் எல்லையாக வளரும். உன் நலத்துக்கும், உலகின் நலத்துக்கும் நீ செய்ய வேண்டும் ஒரே கடமை, உன் அரசின் நல்லாட்சியே. உன் உளச்சான்றை நீ பின்பற்ற வேண்டுமானால், அதற்குத் தங்குதடையற்ற சுதந்திரம் இருக்க வேண்டும். ஆனால் உன் உள்ளம் தெளிவாயில்லாவிட்டால், பொறாமை, பேரவா, தற்பற்றுச் சார்ந்த அவா ஆகியவற்றிலிருந்து நீ விடுபட்டிரா விட்டால், உளச்சான்று சுதந்தரமாக இயங்காது. ஏனெனில் உள்ளத்தில் அறிவு உலவியபின் அந்த அறிவின் இயக்கமாகிய சிந்தனையின் விளைவே மனச்சான்று. மனத்தெளிவு உளச் சான்றைத் தோற்றுவித்து, அதன் நலம் பேணி வளர்ப்பது மட்டுமல்ல, அதன் அறிவுரையைப் பின்பற்றும் ஆற்றலும் தருவது. ஆகவே எப்பாடுபட்டும் மனத்தெளிவும் உளச்சான்றின் உறுதியும் பெற்றாக வேண்டும். தன் முனைப்பு வேறு, துணிவாற்றல் வேறு உன் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தித் தெளிவு உண்டு பண்ணும் வகையில், உட்பகைகளைத் தாக்கி எதிர்த்து வெல்லும் வகையில், உனக்கு உதவும் பண்பு துணிவாற்றல். ஆனால் அப்பகைகளையே பெருக்கிவிடுவது தன் முனைப்பு. தன் முனைப்புக்கும் துணிவாற்றலுக்கும் உள்ள வேறுபாடு திசை வேறுபாடு. தன் முனைப்புப் புறமுகமாக வேலை செய்கிறது. ஏனெனில் அது தற்பற்றை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் துணிவாற்றல் பணிவின் மற்றொரு கிளை. அது தன் முனைப்பை அகமுகமாகச் செலுத்துகிறது. இத்துணிவாற்றலைத் தீய அகப்பகைப் பண்புகளுக்கெதிராகப் பயன்படுத்து. பயன்படுத்துந்தோறும் அதன் ஆற்றல் வளர்வதையும் உன் உறுதி பெரிதாவதையும் நீயே காண்பாய். உன் அறிவை விரிவுபடுத்து. அது உன் படைக்கலம். துணி வாற்றலுடன் அறிவு ஒத்துழைத்தால் உட்பகைகள் வேரறும். அவை ஒளித்தோடி ஒதுங்கிநிற்கும் இடமறிந்து அவற்றைத் துடைத்தழிக்க அஃது உனக்கு உதவும். உன் அறிவுக்கு உதவும் உள்ளொளி உன் உள்ளத்தில் உள்ளாழத்தில் சுடரிடுவது காண்பாய். அதுவே அன்பு. அதனை அணையாது, மங்காது, மறுகாதுபேணு. அதனைத் தூண்டிவிடு. அவா, உணர்ச்சி வெறிகள் என்னும் புயல்களிலிருந்து அதைத் தடுத்தாண்டு, அதன் உதவியால் அவற்றின் இருள்நீக்கு. அது உறுதியாக, நிலையாக நீண்ட சுடருடன் எரியுந்தோறும், உன் வாழ்வில் இன்பம் பெரிதாகும். புற உலகிலிருந்து அக உலகிற்குச் செல். அக உலகிலிருந்து புற உலகை ஆள். மனிதனாயிருக்கும் வகை அதுவே. புறத்தே யிருந்து கொண்டு அகத்தை ஆளும் விலங்காகாதே. மனிதனாகச் சிந்தி, மனிதனாகச் செயலாற்று. புறவளம் நாடாதே! அகவளம் பெற்று, உன் அகவளத்தை நீ பெருக்கி, அதை உலக வளமாக்கு. உன் உலகின் மையமாகிய உன்னுள் அமைந்த உன் மையத்தைக் கண்டு, அதன் வழி நில். உன் நிலவுலகம் தன் மையமான ஞாயிற்றின் தளைக்குக் கட்டுப்பட்டு அதைச் சுற்றியோடுவதுபோல, நீ உன் மையத்தின் அக அமைதிகளுக்குக் கட்டுப்பட்டு, அதைச் சுற்றி நேர்வழி உணர்ந்தொழுகு. உன்னுள், உன் அக நடுவே ஒளிரும் விளக் கொளியே ஒளியாகக் கொண்டு உலவு. அதனைப் பிறர் இருள் என்று கூறினாலும் அதற்காகக் கவலைப்படாதே. உனக்குப் பொறுப்பு நீயே. உன் மீதே நீ சார்க. உன்னை நீ நம்பாவிட்டால், உன்னை வேறு யார் நம்புவார்கள்? உன்னை நீ கண்டஞ்சினால் நீ வேறு யாரைக் கண்டஞ்ச மாட்டாய்? நீ உனக்கு உண்மையாயிராவிட்டால், நீ உன்னை வஞ்சித்தொழுக முற்பட்டால், உன்னை வேறு யார்தான் வஞ்சிக்க மாட்டார்கள், வேறு யார்தான் உன்னை நம்ப முடியும்? பெரியார் என்பவர் யாவரும் தனி மனிதனின் தனியுரிமை என்னும் உறுதிமிக்க பாறைமீது நின்றே வாழ்க்கைப் புயலுடன் போராடி வெல்ல முற்படுவர். தன்னுரிமையில் நின்று நேர்வழி கண்டே உலகின் நெறியளக்க முற்படுவர். தங்கள் பாதையில் தாங்கள் செல்வதற்கு அவர்கள் வேறு யார் கட்டளையையும் எதிர்பார்க்க மாட்டார்கள். வேறு யார் விருப்பங்களையோ, கெஞ்சுதலையோ, வெறுப்புக்களையோ, பகைமைகளையோ மதிக்கமாட்டார்கள். அவ்வழி பின்பற்றுவதற்காக எவரது மன்னிப்பையோ பரிசையோ எதிர்பார்க்கவும் மாட்டார்கள். இகழும் புகழும் அவர்களுக்குச் சமம். அன்னத்தின் தூவி மீது படும் நீர்த்துளிகள்போல அவை அவர்களைச் சாராது உருண்டோடிடும். பிறர் கருத்துக்களைக் கொண்டு அவர்கள் தம்மைச் சீர்செய்துகொள்ள முற்படமாட்டார்கள். பிறர் கருத்துக்கள் பிறர் சூழலின்படி, பிறர் அனுபவத்தின்படி மாறு படுவன என்பதும், அவற்றின்படி ஒழுகுவதால் தம் பொறுப் புக்குப் புறம்பான சூழலில் தாம் சென்று, தம் அறிவு மழுங்க நேரிடும் என்பதும் அவர்கட்குத் தெரியும். பிறர் புகழுக்காக உழைப்பதும், பிறர் இகழுக்காக உழைப்பை மாற்றுவதும் இதுபோன்ற தவறான செயலேயாகும். அது தம் மனிதத் தன்மையையே பிறரிடம் பணயம் வைப்பதுபோன்ற இழிசெயல் ஆகும். தற்சார்பே தன் வாழ்வின் ‘ஏண்’, சமதள மையம் மனிதராயினும் சரி, தேவராயினும் சரி - பெரியவராயினும் சரி, சிறியவராயினும் சரி, எவர் வழியிலும் நில்லாமல், எவர் உதவியும் இல்லாமல், தன்னையே தான் பற்றித் தனியே நிற்க நீ பழகும்வரை, நீ கட்டற்றவன் ஆகமாட்டாய், தன்னுரிமையுடைய வனாகமாட்டாய். தன் இன்பத்துக்குத் தான் உரிமைப் பட்டவனும் ஆகமாட்டாய். உன்னுள் இருக்கும் ஒளியறிந்து, அது வழிகாட்ட, உன் உறுதி மீது நீ நிற்கப் படித்த அன்றே, நீ இன்ப உரிமையாளனாவாய். ஆனால் தனி நிலை, தற்பொறுப்பு என்பதுவே, தற்பெருமை, செருக்கு என்று எண்ணிவிடாதே. ஏனெனில் பிறர்வழி நிற்பதைவிட மோசமானது தற்பெருமை வழி நிற்பது. அது கல்போல் இருக்கும் நுரைமீது நிற்க எண்ணு வது போன்றது. உண்மையில் தற்பெருமையுடன் தற்பொறுப்புடையவன் ஆகவே முடியாது. அவனைவிடப் பிறர் வயப்படுபவன், பிறர்வழி நிற்பவனைக் காண்டல் அரிது. முகப்புகழ்ச்சிக்கே அவன் முற்றிலும் ஈடுபட்டுப் பணிவதால், அவன் பிறரிடையேகூட நல்லவர் வழி நிற்பானென்று கூற முடியாது. புகழ்ச்சிமட்டு மன்று, இகழ்ச்சிகூட அவனை இயக்கிவிடும். ஏனெனில் இகழ்ச்சிக்கு எதிராக நடக்க அவன் விரைவான். சில சமயம் இகழ்ச்சிமீது எதிர்ப்புத் தெரிவிக்கும் முறையில் அதைப் பின்பற்றி நடக்கவும் முனைவான். அவன் இன்பதுன்பங்களல்ல, மகிழ்ச்சி துயரங்களல்ல, அமைதி இன்பதுன்பங்களல்ல, மகிழ்ச்சி துயரங்களல்ல, அமைதி கொந்தளிப்புக்கள்கூடப் பிறர் விருப்பம் சார்ந்தவை ஆகிவிடுகின்றன. தற்சார்புடையவன் தற்பெருமையுடையவனல்லன். அதை அறவே நீக்கியவன். அவன் தற்பணிவுடையவன், தன் வாழ்வின் நோக்கத்துக்கு, அமைதிகளுக்கு, தன்னுள் அமைந்த ஒளிக்குக் கட்டுப்பட்டவன். இதன்மீது நின்று, இதன்மீதே அவன் தன் போக்குவரவுகளை, இயக்கங்களை வகுத்தமைத்துக் கொள் கிறான். அதை மையதளமாகக் கொண்டே அவன் சரிசமநிலை அமைகிறது. அவாக்களென்னும் புயல்கள், உணர்ச்சி வெறிக ளென்னும் அலைகள் அவனை எத்திசையில் தள்ள முனைந் தாலும் அவன் அதையே தன் காப்பகமாகக் கொண்டு பற்றி நிற்கிறான். கருத்து வேறுபாடுகளிடையேயும் தற்சார்பின் சரிசம நிலையே ஒருவன் ஒழுங்கு மையம் ஆகிறது. புயலோ, அலையோ அவனை அதிலிருந்து தள்ளி அப்புறப்படுத்தினால்கூட, அவன் அடத்த முயற்சிகள் யாவும் அதை மீண்டும் சென்று பற்றுவ தாகவே இருக்கும். ஏனெனில் அது அவன் வாழ்வு. அதை அடையும்வரை அவனுக்கு வேறு வாழ்வு, வேலை கிடையாது. இந்நிலையை அவன் அடைந்தபின், அவன் இன்ப முற்றிலும் அவன் கைப்பொறுப்பாகி விடுகிறது. உன் தற்சார்பை உன் வாழ்வின் மையமாக, வாழ்வின் சரிசம தளமையம் அல்லது ‘ஏண்’ ஆக்கிவிட்டால், உன் வாழ்வின் வெற்றிக்கு அதுவே அடிகோலிவிடும். உன் வாழ்க்கைத் தொழில் எதுவாயினும், அதில் நீ வெற்றி காண்பது திண்ணம். உன் வாழ்வில் நீ எண்ணிய எக்காரியமும், மேற்கொண்ட எச் செயலும் வெற்றியடையாமல் போகாது. ஏனெனில் தற்சார் புடைய மனிதன் எப்போதுமே தோலாவெற்றி மேற் கொண்டவன். நீ பிறர்மீது, பிற பொருள்களின்மீது சாராவிட்டாலும், பிறரிடமிருந்து படிப்பினை கொள்ளத் தயங்காதே. எதையும் கூர்ந்து கவனித்து அதன்மூலம் புத்தறிவு பெறத் தவறாதே. அறிவைப் பெருக்கும் வாய்ப்பு எதுவாயினும், அதைக் கைவிடக் கூடாது. நல்லன, பயனுடையன எவையாயினும் உன் சிந்தனைக்கு அவற்றை விருந்தாக்கு. தற்பணிவு எவ்வளவு உன்னிடம் இருக்க முடியுமோ, எவ்வளவுக்கு அதை நீ வளர்க்க முடியுமோ, அந்த அளவும் நலம். ஏனெனில் தற்பணிவே தற்பண்பின் தாய்த்திறம். தற்சார்பு மிக்கவர்கள் எப்போதும் தற்பணிவு மிக்கவர்களாகவே இருப்பர். இத்தற்பணிவிலே, தற்பண்பிலேதான் தன்மதிப்பு அடங்கி யிருக்கிறது - தற்பெருமையிலோ, செருக்கிலோ, தன் முனைப் பிலோ அல்ல. எந்த உயர்குடிக் கோமானும், எந்த அரசுரிமை இளவரசும் ஞானியின் தற்பணிவின்முன் தன் பெருமை நிலைநிறுத்த முடியாததன் காரணம் இதுவே. ஞானி ஏன் இவ்வளவு பணிவு காட்டுகிறான்? அவனுக்கு வேறு பெருமை தேவையில்லை. கடவுளருளின் பெருமை, உச்ச உயர் எல்லைவாய்ந்த பெருமை அவனிடம் போதுமான அளவில் நிரம்பியுள்ளது என்பதே அதன் காரணம். பெரியார் வழியை உன் வழியாக்கு எல்லா மனிதரிடமிருந்துமே நீ படிப்பினைகள் கற்றுக் கொள். ஆனால் சிறப்பாக, வாய்மையின் வேந்தர் அறிவுரைக்கு உன் உள்ளத்தின் ஆழத்திலே இடமளி. ஆனால் இப்படிப் பினைகள் யாவும் உனக்குத் தூண்டுதல்களே தவிர, நேர் வழி காட்டிகளல்ல என்பதை மறவாதே. அவற்றிலிருந்து உனக்கு வழிகாட்டும் கருத்துக்களை மேற்கொள்ளும் பொறுப்பு உன் னுடையது. அதை வகுத்தமைக்கும் உண்மை வழிகாட்டி உன்னுள் இருக்கும் ஒளியே என்பதை மறவாதே. உலக ஆசாரியர் ஒருவர் ‘இதோ இருக்கிறது நேர் பாதை!’ என்று சுட்டிக் காட்டக்கூடும். ஆனால் அதன்வழி நீ நடக்கும்படி அவர் உன்னைக் கட்டாயப்படுத்தவும் முடியாது. உனக்காக அவர் அதில் நடந்துசெல்லவும் முடியாது. நடக்க விரும்புவது, துணிவது நீ; நடப்பதும் நீயே; நடந்து அதன் பயன் நுகர்வதும் நீதான். ஆகவே அதுபற்றிச் சிந்தி. அதை உன் ஒளியுடன் கலந்து ஆராய்ந்து, உன்னால் ‘ஏற்கத்தக்கதா, பின்பற்றத்தக்கதா, செய்யக் கூடியதா’ என்று பார். ஏற்பதென்று உன் ஒளி முடிவு செய்தால், அதன்பின் அதை உன் முடிவாக்கு. உன் பாதையாக்கி, அதில் முனை. நீயாக முயன்று, உன் வலிமை முழுதும் ஈடுபடுத்தி, ஆசாரியர் கண்ட வாய்மையை உன் சார்பிலேயே உன் வாய்மை யாக்கு. ஆசாரியர் உனக்குரிய புறத்தூண்டுதல்களில் ஒரு சிறந்த தூண்டுதல். ஆனால் உன் வழிகாட்டி நீயே என்பது உணர்ந்து, தன்னம்பிக்கை, தற்சார்புடன் முன்னேறு. 3கடவுளாம் நிலை எது எனின், மனிதனாய் மனிதன் திடமுடன் தனதாவியின் ஆற்றலைப் பெருக்கிக் கடமையாற்றி இவ்வாழ்வொளி நாட்டுதலுதுவே. இயற்கையின் ஒரு கூறு நீ, மற்றக் கூறுகளுடன் எல்லா வகைகளிலும் ஒத்த, எவ்வகையிலும் குறையாத ஓர் உயிர்க்கூறு. ஆகவே நீ கெஞ்ச வேண்டியதில்லை. பார்த்துப் பின்பற்ற வேண்டியதில்லை. உனக்குத் தலைவன் நீயே, உனக்கு ஆணை பிறப்பிக்கும் ஆண்டகை வேறு இல்லை. நீ எல்லாரிடமும் அன்பு காட்டு, அன்பு கோராதே. ஒத்துணர்வு காட்டு, ஒத்துணர்வு வேண்டுமென்று கேளாதே. உதவி செய், ஆனால் எவர் உதவியையும், எதன் துணையையும் எதிர்பாராதே. உன் செயலை, உன்னை எவரேனும் பழித்தால், அதைச் செவியிலே போட்டுக் கொள்ளாதே. உன் செயலை மதிக்க வேண்டியவன் நீ ஒருவனே, பாராட்ட வேண்டியவனும் நீயே. ஏனெனில் அதன் பயனை, நன்மை யையோ தீமையையோ, நுகர போகிறவன் நீதான். உன் உள் ளொளியின் நோக்கில் அது வாய்மையுடையதாயிருத்தல் வேண்டும் - அதுவே போதியது! ‘என் செயல் பிறருக்கு மகிழ்ச்சியூட்டுமா?’ என்ற கேள்வி உனக்குத் தேவையில்லை. ‘அது வாய்மையுடையதா?’ என்று மட்டும் கேள். அது வாய்மையுடையதாயிருந்தால், எவர் பழி யாலும் அது கேடடையப் போவதில்லை. எதுவும் அதைத் தீண்டப் போவதில்லை. அது வாய்மையற்றதானாலோ, அப் போதும் இகழ் தானாக அதை எதுவும் செய்யப்போவதில்லை. உள்ளார்ந்த வாய்மைக் கேட்டாலேயே அஃது அழிதலுறும். தானாக அழிவதை யாரும் அழிக்க வேண்டியதில்லை. வாய்மையுடைய சொல்லும் சரி, செயலும் சரி, அததற்குரிய பயனைத் தராமல் போவதில்லை. எவர் சொல்லும் செயலும், எவர் பழியும் புகழும், இவ்வமைதியைத் தடுக்கவோ மாற்றவோ, குறைக்கவோ கூட்டவோ, விரைவுபடுத்தவோ தாமதப் படுத்தவோ முடியாது. தவறான சொற்களும் செயல்களும் இதுபோன்றவையே. ஆகவே குறைகூறலும், பழியும் தவறான செயல்கள்கூட அல்ல, வீண் செயல்கள் ஆகும். உயிரின் அக இயல்பு - தற்சார்பு, பொதுமை பிறரைச் சார்ந்து வாழ எண்ணும் அடிமை எண்ணமும் பழக்கமும் உலகைப் பீடித்துள்ள ஒரு கொடுங்கோன்மைப் பழி. இதை யாவரும் தாமே தம்மீது சுமத்திக்கொள்கிறார்கள். அது இயற்கையானதுமல்ல, யாராலும் யார் மீதும் சுமத்தப்படுவது மல்ல. ஒவ்வொருவரும் ஒவ்வொரு உயிரும் தன் மீது தற் சார்புடன் நிற்க முடியும். உயிர் என்பதன் பொருள் அதுவே. தானே இயங்குவதே, இயக்கப்படாமல், தன் உள் ஆற்றலால், புறத்தூண்டுதலில்லாமல் அகத்தூண்டுதலாலே புறத்சூழ லுணர்ந்து இயங்குவதே உயிர். ஆனால் அதே சமயம் உயிர் மற்ற உயிர்களுடனும் சூழலுடனும் தொடர்பற்ற பண்பன்று. அதன் தற்சார்பு உலகையளாவிய தற்சார்பு, இயற்கை முழுவதும் அளாவிய தற்சார்பு. தற்சார்பு, உலகளாவிய தற்சார்பு ஆகிய இந்த இருமைப் பாட்டைக் காட்டுவது புறமல்ல, அகம்! ஆகவே உயிரின் அகம் உயிரின் தற்சார்பையும் இயற்கையையும் ஒருங்கிணைப்பது. அதன் தற்சார்பு உண்மையில் குறுகியதன்று. பரந்த பொதுமை நிலையேயுடையது. தற்சார்பு நீங்கிப் பிறிது சார்பவன் இக் காரணத்தாலேயே தற்சார்பு மட்டும் இழந்தவனல்லன். பொதுமையையும் இவன் இழக்கிறான். ஏனெனில் பொதுமை யின் உயிர்க் கண்ணாடியே அகம். தற்சார்புடையவன் தன்னலத்தில் என்றும் சறுக்கா திருப்பதன் இரகசியம் இதுவே. தற்சார்புடையவனே பொது வான இனச்சார்பும் உடையவனாகிறான். பொது இனத்தின் ஒத்துணர்வே அகத்தின் அகமாகிய அன்பொளி, வாய்மை. அதன் இன்ப உருவம் பொதுமையுடன் தனிமையாக அளாவிய இன்பமே. ஆயிரம் ஆண்களின் கூட்டம் ஒரு குடும்பம் ஆகாது. ஆயிரம் பெண்டிரின் குழாமும் அப்படியே. அவர்களிடையே எவ்வளவு நேசமிருந்தாலும் அது குடும்பப் பாசம் ஆகாது. அன்பில் இணைந்த ஒரு பெண்ணும் ஒரு ஆணுமே அப்பாசம் விளைவிக்க முடியும். அதுபேல புறவாழ்வில் ஈடுபட்ட எத்தனை பேர் கூடியும் ஓர் இனவாழ்வின் இன்பம் காண முடியாது. உண்மை அகவாழ்வொளி, அன்பு, காணாது, புறம் வெறுத்து ஒதுங்கி வாழ்பவரும் எத்தனை பேரானாலும், அது காண மாட்டார். இனமளாவிய அகத்தில் தனிமையில் ஒதுங்கி இனப்பண்பாகிய அன்பொளி பேணியவர் மட்டுமே, அகத்தில் இன்பம் காண்பர். அதைப் புறத்தும் பரப்புவர். தன்னுரிமை என்பது தற்சார்பு. ஆனால் அது வெறுப்புடன் ஒதுங்கிய தற்சார்பு அன்று, ஒத்துணர்வில் உலகளாவிய அன்புத் தற்சார்பு - அதுவே உண்மை விடுதலை. அது கைக்குக் கையாய் உதவும் கருவி கலம் - வீண் சுமையன்று. அது கையழகுக்கு அழகு செய்யும் வளைகாப்பு - வெறும் விலங்கல்ல. அது செயல் தடுப்பதல்ல, துன்பம் தருவதல்ல - அழகும் இன்பமும் தருவது. நாடி விரும்பி முயன்றுபெற விடுதலை, தற்சார்பின் சின்னம். அஃது இன்பம் தருவது. அதனை உடையவன் மெய்யுணர் வமைதி பெறுகிறான். அதனை வழங்குபவன் இன்பம் அடைகிறான். அவ்வின்ப நலம் ஆற்றலை எங்கும் வழங்கி, வழங்கியதனால் ஆற்றல் குறைவதற்கு மாறாக, அதனாலேயே ஆற்றல் பெருக்க மடைகிறது. கொடுக்கக் கொடுக்கக் குறையாது கூடும் பொங்கல் வளம் அதுபோலப் பிறிதில்லை. 4‘வாழி! தனி வாழ்வினிலே தற்சார்புகொண்டு வாழ்வாங்கு வாழ்ந்து நிறைவாழ்வின் ஒளிகண்டு பாழ்பழிகள் கூறுமவர் பாராமல் அகத்தே தாழ் ஒளியில் தாழ்ந்தொளிரும் தகையாளர் வாழியே! தாழ்ஒளியின் தாள்தொடரும் தகையாளர் வாழியே!! அடிக்குறிப்புகள் 1. “க்ஷல யடட அநயளே ரளந வடி நெ யடடிநே. ளுயடரவந வாலளநடக; ளநந றாயவ வால ளடிரட னடிவா றநயச.” - ழுநடிசபந ழநசநெசவ. 2. “ழந வாயவ hயள டiபாவ றiவாin hளை டிறn உடநயச செநயளவ ஆயல ளவை in வாந உநவேசந யனே நதேடில செiபாவ னயல.” - ஆடைவடிn. 3. ‘கூhளை வாiபே ளை ழுடின-வடி நெ அயn றiவா வால அiபாவ, கூடி பசடிற பசநயவ in வாந ளவசநபேவா டிக வால ளயீசைவை, ஹனே டiஎந டிரவ வால டகைந யள வாந டiபாவ.” 4. “ழடிnடிரச வடி hiஅ றாடி, ளநடக-உடிஅயீடநவந, வை டடிநே, ஊயசஎநள வடி வாந பசயஎந டிநே யீயவாறயல யடட hளை டிறn, ஹனே hநநனiபே யேரபாவ வாயவ அநn அயல வாiமே டிச ளயல, ஹளமள ரெவ hளை ளடிரட, கை னடிரவெகரட டிக வாந றயல.” 13. வாழ்வின் எளிய சிறு அமைதிகள் பற்றிய நுண்ணறிவு 1வாய்மையின் விளக்கம் வருந்திசை நோக்கிச் சேய்மையின் தலைநிலை தேருதி யாயின், தாய்மைகொள் அதன்முதல் உன்னுளே துளங்கும் தூய்மை என்றறிவாய் தூங்கா உளத்தே! - பிரௌனிங் 2கணிகொளும் இயற்கை அமைதி அருங்கலம் மணிகளின் மதிப்பினும் விலைமதிப் பரிய, நணிதுறழ் தேனிறா லதனினும் இனியது, எணினது மகிழ்விலும் மகிழ்தரல் உரியது. - ஆசியசோதி வாழ்வின் எளிய அமைதிகள் பற்றிய சரியான அறிவு! பேரின்பச் சோலைக்குச் செல்லும் நெடுஞ்சாலையின் மருங்கி லுள்ள இன்பப் பண்ணைகளிலே உலவும் இன்பவாணன் பேரின்ப எல்லையருகே தங்குவதற்குரிய கடைசியான இன்பப் பண்ணை, இன்பப் பண்ணைகள் யாவிலும் மிக முக்கியமான இன்பப் பண்ணை இதுவே. இன்பப் பண்ணைகள் பலவற்றிலும் தங்கி, அவற்றின் அழகை நுகர்ந்து, அவற்றின் இன்ப நறுமணம் மாந்திய வண்ணம், அவன் தன் சுமைகளில் ஒவ்வொன்றாக ஒவ்வொரு பண்ணையிலும் இறக்கிக்கொண்டே வருகிறான். அவன்தன் கடைசிச் சுமையை இறக்கிவிட்டு, களைப்பு முற்றிலும் அகற்றி, ஓய்வு இனித் தேவையில்லை என்று கூறுமளவுக்கு ஓய்வின் உருவாகிய உள்ளக் கிளர்ச்சியும் உவகையும் பெற்று, தன் பயணத்தை இன்ப உலாவாகக் கொண்டு மகிழும் இடம் இதுவே. ஓய்வு தேவைப்படாத அளவுக்கு அது களைப்பகற்றி விடுவது மட்டுமல்ல, நிலையான அமைதியும் தருவது. அதுவே எல்லையற்ற ஆறுதல் அளிப்பது. வரம்பிலா ஆற்றலும் உறுதி யும் உண்டுபண்ணும் வளம் உடையது. இப் பண்ணையை அடைபவன் இதை அணுகுமுன்னரே எல்லாக் குறைகளையும், எல்லா அவாக்களையும்; எல்லா ஐயங்களையும், எல்லாக் கலகங்களையும்; எல்லாத் துயரங் களையும் எல்லா ஊசலாட்டங்களையும் விட்டொழித்தவனா கிறான். மனநிறைவென்னும் பொங்கல் வளத்திலே, அறி வொளியிலே, இன்ப உறுதியிலே அவன் மிதக்கிறான். வாழ்க்கையின் களங்கமற்ற, தெள்ளத் தெளிந்த படிகநிற ஆழ்தடங்களை முற்ற உணர்ந்தவனாதலால், அவன் அதன் தெள்ளமைதிகளை எளிதாகப் பின்பற்றி இன்பம் காண்கிறான். அதை விட்டுத் தன்னல அவாக்களின் கடுஞ் சிக்கல் வாய்ந்த, இருண்ட, இடரார்ந்த இடுமுடுக்குகளில் அவன் திரும்புவ தில்லை. எந்தத் தீங்கும் அணுகமுடியாத, எந்தப் பகைமைக்கும் எட்ட ஒண்ணாத காப்பான காவகத்தே அவன் செல்கிறான். ஐயங்கள், அவாக்கள், துயர்கள் எங்கு, எவ்வாறு நிகழக்கூடும் என்பதையே அவன் அறியமாட்டான். ஏனெனில் மெய்மைதோன்றுமிடம் ஐயமகன்ற இடம். எல்லையிலா நிலவர இன்பம் நிறைவுறும் இடம், தொல்லை தரும் துன்பத்தின் தடமகன்ற இடம். தளராத, என்றுமுள்ள நல்லொளி கண்டுணரப்பட்ட போது அங்கே துன்பத்துக்கு எவ்வாறு இடம் இருக்க முடியும்? ஒழுங்குகளின் பின்னல் தொகுதியே வாழ்க்கை! மனித வாழ்க்கை சிக்கல் வாய்ந்ததன்று. சரியான முறையில் வாழ்பவனுக்கு அது எளிது, அழகுவாய்ந்த எளிமை நலம் உடையது. ஆனால் சரியான வழி அறியாதவனுக்கு, சரியான நேர்பாதையறிந்து செல்லாதவனுக்கு அது பல சிறுதிறப் போலி இன்பங்கள், அவாக்கள், குறைபாடுகள் நிறைந்த கடுஞ் சிக்க லாகத் தோன்றாதிருக்க முடியாது. இவை வாழ்வின் சிக்கலல்ல, வாழ்வல்ல - வாழ்வினைக் கெடுக்கும் கேடுகள், நோய்கள். உடலின் கோளாற்றினாலே வரும் காய்ச்சல் முதலிய நோய்கள் போல, இவை உள்ளத்தின் கோளாறுகளால் நிகழ்பவை. இவற்றையே வாழ்வாகக் கருதுவர் பலர். ஆனால் இவையே பேரின்ப ஒளியை மனிதரிடமிருந்து மறைக்கும் மடமைத் திரைகள். இத்திரைகளைக் கிழித்து உண்மை வாழ்வின் ஒளியைக் காட்டத் தொடங்குவது அவாவடக்கம். முழுநிறை அவா அடக்கம் திரை முழுவதுமே கிழித்து, உண்மை வாழ்வொளி காட்டிவிடும். உண்மை வாழ்வு - அதன் ஒழுங்கான எளிய அமைதி - அதன் பின்னரே தென்படும். வாழ்க்கை - உண்மை வாழ்க்கை - அன்பு என்னும் சுடர் விளக்கின் ஒளியேயாகும். அதன் கதிர்களே அமைதிகள், ஒழுங்குகள். ஒழுங்குகளே வாழ்க்கையின் எல்லைகள் ஆகின்றன - ஒழுங்குகளின் வலைப் பின்னல் தொகுதியே வாழ்க்கை. எனவே ஒழுங்கமைதிகளின்றி வாழ்க்கையில்லை. வாழ்க்கையின்றி ஒழுங் கமைதிகள் இல்லை. அவை வாழ்க்கையை நிறைவுபடுத்து கின்றன. வாழ்வின் எல்லாக் குறைகளையும் நிறைவேற்றும் ஆற்றல் அவற்றிலே உண்டு. அவை நிறைவேற்றாக் குறை எதுவு மில்லை. அவாவுடையவர்கள் அமைதியை மீறிவிடும் இடம் இதுவே. ஏனெனில் அவாவாணனுக்கு ஒவ்வோர் அவாவும் ஒரு கற்பனை உருவான குறையே. தன்னல அவாக்கள் ஒழுங்கமைதி மீறியவை, அன்பொளியை மறைக்கும் அவாத்திரையின் இருள் நிழல்களே. ஆகவே அவை உருவாக்கிக் காட்டும் குறைகளும் உண்மைக் குறைகள் அல்ல. நீர்போல் தோன்றி ஏய்க்கும் கானல்நீர் போல, அவை குறைபோலத் தோன்றும் போலிக் குறைகளே. ஒழுங்கமைதிகளை மீறி அவை துன்பமும் இடுக்கணும் உண்டுபண்ணுவதன் காரணம் இதுவே. தனி மனிதன் அவாக்கள் இனக் குறிக்கோளுக்கெதி ரானவை. ஆனால் இனக் குறிக்கோள் அல்லது இன அவாக்களே தனி அவாக்களுக்கு முற்பட்டவை. அதனாலேயே அவை இயல் பானவை. தனி அவாக்களுக்கு மேம்பட்ட ஆற்றலுடையவை. தனி அவாக்கள் அழிந்த அல்லது தளர்ந்த இடத்தில் அவை தாமாகச் செயலாற்றத் தொடங்கிவிடும். ஊதாரி மைந்தன் கதை: அதன் உட்பொருள் விவிலிய ஏட்டிலுள்ள ஊதாரி மைந்தன் கதை இதை உருவகப்படுத்திக் காட்டுகிறது. ஊதாரி மைந்தன் தன் தந்தையின் வீட்டிலிருந்த காலத்தில் அவனுக்கு வேண்டிய யாவும் கிடைத்தன - வேண்டும் அளவிலும் மேம்பட வளமாகக் கிடைத்தன. தனி அவாவின் குறை அவனுக்கு ஏற்படவில்லை. ஏனெனில் குடும்ப அடிப்படையில், இன அடிப் படையில் வேண்டிய யாவும் ஏராளமாயிருந்தன. ஆனால் அவன் உள்ளத்தில் அவா எழுந்தபோது, இந்த வளம் மனநிறைவு தரவில்லை. அவன் குறை கண்டான். பேராவாவால் தொலை நாடுகளுக்குச் சென்றான். ஆனால் இங்கே புதிய வறுமை அவனைப் பீடித்தது. புதிய இன்னல்கள் பலவற்றுக்கு அவன் ஆளானான். பட்டினி, நோய், வறுமை ஆகிய உச்சநிலையடைந்த பின்னரே, வீட்டு நினைவு அவனுக்கு வந்தது. தந்தையுள்ளத்தின் தங்குதடையற்ற தண்ணளி அவனைத் தடுத்தாட்கொண்டு வளம்பெருக்கி யுதவிற்று. அவாக்கள் பின்னிய வலைகளின் சிக்கலில் மனிதன் மாட்டிக் கொள்வதாலேயே, அவன் பலவகைக் குறைபாடுகளுக்கு ஆளாய், மனக்குறை, துன்பம், வேதனை ஆகியவற்றுக்கு இரை யாகிறான். அவனுக்கு இருக்கும் ஒரே மீட்சி வழி, ஒரே பாது காப்பு, விடுதலை - தந்தை யில்லம் - இனத்தாயகம் மீள்வதே! அவாவை விட்டு, வாழும் உலகின் ஒரு பகுதியாக வாழ்வதே! - ஊதாரி மைந்தன் கதை சுட்டிக் காட்டும் உண்மை இதுவே. ஆனால் தனிவாழ்வின் பயனான தொல்லைகளின் எல்லை, துன்பத்தின் பொறுக்க முடியாத உச்சநிலை கண்டாலன்றி அவன் இங்ஙனம் திசை திரும்ப எண்ண மாட்டான். துன்பத் துக்கும் வேதனைக்கும் காரணம் அவாக்களே என்பதை அவன் அப்போதுதான் உணர்வான். அகநோக்கி, அவா எழாத நிலையிலிருந்த அமைதிவளம் நோக்கி அவன் நாட்டம் திரும்புவது அப்போதுதான். திசை திரும்பியபின், அவன் இனநோக்கித் தன்தளர் நடைப் பயணம் தொடங்குவான். அப்பயணம் அவன் கடைசி நம்பிக்கையாகவே முதலில் துலங்கும். ஆனால் அப்பயணத்தின் ஒவ்வோர் அடியும் அவன் வேதனையைக் குறைக்கும். அதன் முடிவோ, இனத் தாயக எல்லையில் கொண்டுவிட்டு அதனை அறவே அகற்றும். இனத் தாயக வாழ்வில் தனி வாழ்விலுள்ள கடுமை, சிக்கல், அருமுயற்சி எதுவும் இராது. அவாவின் பசிக்கும், துடிப்புக்கும் அவன் அடிமையல்ல. அவற்றுக்கு அஞ்சி அவன் நடுநடுங்க வேண்டியதில்லை. ஏனெனில் அவன் புதுவாழ்வு, வாய்மை நாட்டம், பழைய அவாக்களுடன் வைத்தெண்ணப்படத் தக்க ஒன்றன்று. அது அவா ஆர்வம் மட்டுமே. அவா தனக்கெனப் பெறத் துடிக்கிறது. பெறாவிட்டால் இன்னும் துடிக்கும். பெற்றால் பின்னும் வேறு அவா எழுப்பித் துடிதுடிக்கும். ஆனால் அவா ஆர்வமோ தனக்கெனப் பெறும் துடிதுடிப்பு அற்றது. அது துடிப்பதற்கு மாறாக, விதிர்விதிர்ப் புடன் எதிர்நோக்குகிறது. எதிர்நோக்கி விதிர்விதிர்ப்புடனேயே காத்திருக்கிறது. அது புலனவா அன்று, நிறைவினால்கூட அமைதி பெறாததன்று. அது இதய அவா, நிறைவை உறுதியுடன் நோக்கிக் காத்திருப்பது, நிறைவின்பின் மீண்டும் நிறைவே கோரி நிற்கும் அமைதி உடையது. அவா என்றும் மேன்மேலும் அவாவாகப் பெருகும். ஆனால் அவா ஆர்வம் நிறைவேற்றத்தை எதிர்பார்த்து வாழ்வ தில்லை. எதிர்நோக்கி நிறைவேறும்வரை அமைந்து காத்திருக்க ஒருப்படுகிறது. அவா என்றும் குறை உடையது. அவா ஆர்வம் என்றும் நிறைவுடையது. அவாவுக்கு ஒரு எல்லை கிடையாது, முடிவில்லை. அவா ஆர்வத்துக்கு எல்லையுண்டு, அதுவே அமைதி. அது மேலும் மேலும் விரிவடையும். ஆனால் அது குறைவையன்று, நிறைவையே வளர்க்கிறது. அவா அழிந்து, அமைதியின் ஆர்வம் இனமளாவ வளர்ந் தாலும் அது தனி இதயத்தில் இன்பதுன்ப அலைகளை உண்டு பண்ணுவதில்லை. அது ஒரே அமைதியான இன்பமயமாய் அலைபாய்கிறது. பேரின்பக் கரைநோக்கி அவ்வலைகள் சென்று கொண்டேயிருக்கும்! அருட்பாக்களின் பேரின்பப் பண் பேரின்பத்தின் உச்ச உயர்நிலை வாழ்வு முழுநிறை ஒழுங் கமைதி உடையது. அதே சமயம் அது சிக்கல்களற்றது. எளிமை வாய்ந்தது. ஆற்றலின் முழு அளவும் பயனுடைமையின் நிறை அளவும் அதில் வந்து ஒத்திணைகின்றன. ஆகவே பயனற்ற ஆற்றலும் இல்லை. ஆற்றல் கடந்த பயனும் இருக்க முடியாது. பயன் நாடிய ஆற்றல், ஆற்றல் நாடிய பயன் என இரண்டும் ஒன்றையொன்று தழுவியன ஆகின்றன. பேரின்பத்தின் உச்சநிலை வாழ்வு முழுநிறை அமைதி உடையது. ஏனெனில் அமைதி நாடும் அவாக்கூட அவ்வமைதி யில் கிடையாது. அமைதியே இயல்பான பண்பாக நிலையாக நீடித்துவிடுவதால், அமைதி நாட்டம் என்ற ஒன்று இல்லாத தாகி, அமைதியின் அமைதி தவழ்கிறது. அவாக்கள் வெல்லப்பட்டுவிட்டால், உள்ளம் செயலற்ற தாகி, உயிர்த் துடிப்பிழந்துவிடும் என்று சிலர் கூறுவதுண்டு. அது செயலின்மை, ஆற்றலழிவுதரும் என்றும் கருதுவதுண்டு. ஆனால் இவர்கள் உண்மையில் அவாக்களில் ஆழ்ந்து அமிழ்ந் துள்ளவர்களாதலினாலேயே அவ்வாறு கூறுகின்றனர். இது தவறு. அவா அழிவு செயலின்மையாவதில்லை. அது முன்னிலும் நிறைசெறிவுடைய செயலூக்கம் பெற்று இயங்குகிறது. அதில் ஆற்றல் அழிவு ஏற்படுவதில்லை. உண்மையில் மனிதர் கனவு காணாத அளவில் முழுநிறை ஆற்றலே அதில் செயற்படுகிறது. அது உயிர்த்துடிப்பிழந்து விடவில்லை. நேர்மாறாக அதன் உயிர்த்துடிப்பு தன் உயிரின் சிற்றெல்லை கடந்து, இன உயிரின் பேரெல்லை யெங்கும் அலைபாயும் பேரின்ப உயிர்த்துடிப் பாகிறது. அதனைப் போல உயிர்வளம், இன்பவளம், புகழ்வளம் பிறிதில்லை. தனி மனிதர் இன்ப நாட்டம் கனவில்கூடச் சென்றெட்டாத இன்பம், சிற்றுயிர்கள் எண்ணிப் பார்க்க முடியாத அழியா உயிர்த்துடிப்பு, தனி உடைமை அவாவும் சிறு தற்பற்றாளரும் உணர முடியாதது பெரும்பேருடைமை, பொதுவுடைமை உணர்வு அந்நிலையில் தழைக்கின்றது. இந்நிலைபற்றி அருட்பாக்கள் பண்பாடுகின்றன. 3 ‘இல்லைமுரணொலி, இல்லைபூசல், கலாம் அங்கே; மல்லல்தூரிகை வண்ணம், யாழிசை உண்டங்கே; செல்லல்நீங்கிய உள்ளம் வேய்ங்குழ லதுவாகச் சொல்லும் சொற்பொருள் தாண்டிய மோனச் சுவையங்கே! வீங்குவஅல்ல மடிமை, மிடிமை, துயர்வேட்கை ஏங்குவஅல்ல நாளும் வேளையும், பொருள்ஏதும் நீங்குவ தெண்ணி; நிறைநீள் காலம் விரைதரவே, ஒங்குவ துண்டே உள்ளத் துள்ளம் உவந்தங்கே! எண்ணுவ தெண்ணும் தனிநிலை யழிந்த உளமங்கே, கண்ணுறு மழகு கடந்த அழகு வெளியங்கே; கண்ணீ ரெல்லாம் பேரருள் ஒளியால் வானிடுவில் பண்ணா ரொளியின் வண்ணம தாகும் பரிசங்கே! இனத்தாயக மீட்சி தற்பற்றார்ந்த அவாக்களின் பிடியிலிருந்து ஒரு மனிதன் மீட்கப்பட்டபின், அவன் உள்ளத்தின் பாரம் குறைகிறது. அவன் அதன்பின் தனக்கெனவன்றி, மனித இனத்துக்கென உழைக்கும் ஆற்றல் பெறுகிறான். பசிவிடாய் நிறைவை நாடி மேன்மேலும் பசிவிடாய்களே பெருக்கிச் சுழன்றோடும் அவா வேட்டையின் வீண் முயற்சிக்குப் பதிலாக, இப்போது அவன் இருந்த இடத்தி லிருந்தே அமைதியுடன் புறப்பகைகளைக் கட்டிப் பிணைத்துள்ள அகப்பகைக் கயிறுகளைப் பிடித்தாட்டி, புன்முறுவலுடனும் உறுதியான வெற்றி நம்பிக்கையுடனும் போராடுகிறான். வெற்றி தோல்வி பற்றிய கவலை, ஏக்கம் இல்லாததனால், அவன் போராட்டம் களியாட்டமாக எளிதாகிறது. அதே சமயம் உயிர் இலக்குடன் கூடிய அப்போராட்டத்தில் அவன் அமைதி தன் முழு ஆற்றலையும் ஈடுபடுத்துகிறது. வெற்றி நாடிய அவாப் போராட்டத்தில் வெற்றி தோல்வி கள் கவலையையும், வெற்றி தற்காலிகக் களிப்பையும், தோல்வி துன்பத்தையும் தந்தன. இப்போது கவலையற்ற நிலையில் அவன் வெற்றியிலும் தோல்வியிலும் ஒருங்கே களிக்கிறான். ஏனென்றால் தோல்வியை வெற்றிக்கான பயிற்சியாக மட்டுமே இப்போது அவன் எண்ண முடியும். வெற்றி தோல்விக் கவலையில்லாததால், நேர்மை வாய்மை இலக்கை மட்டும் குறிக்கொண்டு, அவன் தன் கடமையை அப்பழுக்கின்றிக் கவனத்துடன் முடித்து, அதிலேயே கலையார்ந்த மகிழ்வு காண முடிகிறது. முழுநிறை ஒளிபெற்று, முழுநிறை இன்ப நாட்டமுடைய வன் செயல்களை அவாத் தூண்டுவதில்லை, அறிவு தூண்டு கிறது. அவாவுடையவனைச் செயலில் ஊக்குவது பயன், நற்பரிசு. விளையாட்டுப் பொருள்களின் அவாவால் பயிற்சியில் ஈடுபடும் சிறுவர் சிறுமியர் நிலைப்பட்டதே இது. பயிற்சியின் முடிபு நற்பயிற்சியே என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். ஆனால் அறிவுடையவர் உழைப்பின் இலக்கு நல்லுழைப்பே. எனவே அவர்கள் எந்தக் கணமும் தளராத ஊக்கத்துடன் தம் ஆற்றல் முழுதும், வாழ்வு முழுதும் எக்கடமையிலும், தேவையான எச்செயலிலும் ஈடுபடுத்தச் சித்தமாயிருக்கின்றனர். ஆன்மிக நிலையில் அவாவாணர் சிறுவர் சிறுமியர் போன்றவர். அறிவுடையவனே ஆன்மிக நிலையில் முழு மனிதன் அல்லது தெய்விக நிலையினன் ஆவான். அவனை இயக்கப் பரிசு தேவையில்லை. அவன் வாழ்க்கையிலேயே மகிழ்கிறான். நன்மை தீமை சிறு பிள்ளைகளின் விளையாட்டுப் பூசலின் கட்சிப் பிரிவினை போன்றது. முழு மனிதன் எல்லாவற்றையும் நல்லனவாகக் காண்கிறான். எல்லாவற்றிலும் நலமே காண் கிறான். அவன் சிறு பிள்ளைகளைப் போலச் சிறு சிறு காரியங் களுக்காக முகங்கோணிச் சிணுங்குவதில்லை. அடுத்த கணம் துள்ளிக் குதிப்பதுமில்லை, அவன் ஒரே நிலையான இன்ப அமைதி கொள்கிறான். அவ்வின்பம் இடையறாதது, தளராதது, மாறாதது. ஏனெனில் அது வாழ்வின் ஒழுங்கமைதிகளின் இழையோடு இழையாடி இசைவது. வாழ்வின் மற்றப் பண்புகள் யாவும் கருவிப் பண்புகள். வாழ்வின் இலக்கைச் சென்றடைவதற்கான படிகள், வகை துறைகள். ஆனால் பேரின்பநிலை இவற்றுள் ஒன்றல்ல - அதுவே இலக்கு, அதுவே வாழ்வின் நிறைவு! அதுமட்டுமன்று. அதுவே வாழ்வின் இயற்கைநிலை! வாழ்வின் தொடக்கம் அதுவே. தொடக்கத்தில் அருமையறியாத நிலையில் இருந்து, வாழ்வு முழுதும் மறைவுற்று ஒளிவீசி, இறுதியில் முழுநில வொளியாய்ப் பாலொளி பரப்புவது. இதனை ஊதாரிப் புதல்வன் கதை குறித்துக் காட்டுகிறது. முதலில் அருமையறியாத நிலையில் அருகிருந்தும் நுகரப் பெறாத அவன் தந்தையகத்தின் வாழ்வு பேரின்ப வாழ்வின் இயற்கை நிலை போன்றது. அதிலிருந்தகன்று தொலைநாட்டுப் புறவாழ்வில் அல்லலுற்று, மீண்டும் அத்தந்தையகத்தின் அருமை யுணர்ந்ததே, அவன் அதனை நோக்கிவந்து அமைதி பெறு கிறான். அவன் தொலைநாட்டு வாழ்வின் அல்லல்கள் மனிதன் தற்பற்றார்ந்த புல அவாக்களின், புறவாழ்வின் அழற்சி சுழற்சிகளே. ஊதாரி மகனுக்கு அவன் உள்ளத்தினுள் எழுந்த அனுபவமற்ற அறியாப் பேராவலன்றி எதிர்கள் இல்லாதது போல, மனிதனுக்குப் பொறி புலச் சார்பான தற்பற்றவாக்கள் தவிர வேறு பகை கிடையாது. மூவுலக மரபின் மெய்மை அவாக்களுக்குரிய இச்சிக்கல்கள் உள்ளத்தின் மனிதப் பகுதியல்ல, அதன் விலங்குப் பகுதியே. அவற்றைக் கீழடக்கி மனிதப் பகுதியை வலுப்படுத்தும் அளவிலேயே அவன் மனிதனாகிறான். விலங்குப் பகுதியை முற்றிலும் அழித்து, மனிதப் பகுதியை முழுநிறைவாக்கிய நிலையே தெய்வநிலை. விலங்குப் பகுதியை நரகமென்றும், மனிதப் பகுதியை நிலவுலக மென்றும், தெய்வப் பகுதியை வானுலகம், இன்ப உலகம், பொன்னுலகம் என்றும் அறிவுச் சமயங்களை ஆக்கிய அறிவு முதல்வர் உருவகப்படுத்தினர். பிற்றைச் சமயவாணர் அவ் வனுபவ உண்மை உணராது உருவகத்தைச் சொற்பொருளின் பருநிலைக் கூறுகளாகக் கொண்டு தடுமாறினர். முதலில் பேரின்பத்தின் பாதை கரடுமுரடாகவும் கடுஞ் சிக்கல் வாய்ந்ததாகவுமே தோற்றுகிறது. ஏனெனில் அதன் நேரெளிமை காணவொட்டாமல், அவாக்கள் அறிவைக் குருடாக்குகின்றன. எளிமையை எடுத்துக்காட்டும் இயற்கையின் நேர் ஒழுங்குகள் அப்போது தென்படுவதில்லை. ஆனால் மனத்தின் மாசகலுந்தோறும் பட்டையிட்ட வைரம் ஒளியை நிழற்படுத்திக் காட்டுவது போல, மனமும் அவ்வொழுங்குகளை எதிரொளி வீசிக்காட்டும். இயற்கையின் நேர் ஒழுங்குகள் உள்ளத்தில் மலர்ச்சி யுற்றபின் உணர்வுக் கண் திறக்கும். நேர் ஒழுங்குகள் கண்டு கருத்தும் செயலும் அவற்றைப் பின்பற்றியபின், பேரின்பப் பாதையும் நேர்பாதையாக, எளிய பாதையாகக் காட்சியளிக்கும். தயக்கமும் மயக்கமும் அதன்பின் அகலும். அறிவின் தெளிந்த நோக்கில் எல்லாம் தெள்ளிதில் பட்டாங்கமாகப் புலப்படும். வாழ்வின் அடிப்படைப் பாடங்கள் வாய்மை ஒளியை, பேரின்பத்தை நாடிச் செல்லுபவன் பயணத்தை ஊக்கி விரைவுபடுத்தும் பண்புகள் உண்டு. அவையே நாம் மேலே குறிப்பிட்ட எளிய, சிறிய நேரொழுங்கமைதிகள். கணக்கியலின் விதிகள்போல அவை தன்னுறுதி வாய்ந்தவை. மீறத் தகாதவை. மீறுபவர்க்குத் தட்டின்றித் தடுமாற்றமும் துன்பமும் தருபவை. அவற்றின் அறிவே பேரின்பப் பாதையின் எல்லைக் கற்கள், அப்பாதையருகே இருபுறமும் உள்ள பாழ் கசங்கள் பற்றிய எச்சரிக்கைச் சின்னங்கள். அவற்றில், 4‘முதல்பாடமே அடிப்படைப்பாடம் முதலன, எளியன, சிறியன என்பதால் அவை என்றும் மறக்கப்படா, மறுக்கப்படா! முதற் பாடம்: உலகம் ஒன்று வாழ்க்கை ஒன்று. அதன் தோற்றங்களே பல. அதன் அமைதியும் ஒன்றே! வாழ்க்கையின் தோற்றங்களிடையே, படிகளிடையேதான் அதுவும் பலவகைத் தோற்ற வடிவங்கள் பெறுகிறது. பலவகைகளில் செயற்படுகிறது. ஆகவே, வழக்க மாகக் கருதப்படுவதுபோல, புறத்தே பொருளுலகுக்கு ஒரு அமைதியும், அகத்தே உள்ளத்துக்கு வேறோர் அமைதியும் கிடையாது. தோற்றுகின்ற உலகுக்கு ஓர் அமைதியும், தோற்றா உலகுக்கு மற்றோர் அமைதியும் வேறுவேறு இருப்பதாகப் பாமரமக்கள் கருதுகின்றனர். பாமரரின் இவ்வறியாமையைச் சமயவாணர் மேற் கொண்டதுடன் நில்லாது அதை வற்புறுத்தி மக்கள் சமய வாழ்வையே கெடுக்கின்றனர். புற உலகம், அக உலகம் என்றும் உலகியல் வாழ்வு, ஆன்மிக வாழ்வு என்றும் வேறுபடுத்தி, முரண் பாடாகக் காட்டித் துண்டுபடுத்தி, சமயத்தின் பெயராலேயே அவர்கள் மக்களை விலங்கு நிலைக்கு மேன்மேலும் மக்களிடையே வளர்த்துச் செறிய வைத்து, வானுலகத்தின் பெயர் கூறிக் கொண்டே நரகவாழ்வு பரப்புகின்றனர். இக்கேடுகளிலிருந்து நாம் தப்பிப் பிழைக்க வேண்டுமானால் ‘உலகம் ஒன்று, உலகின் அமைதி ஒன்று’ என்ற முதற்பாடம் நம் வாழ்வு முழுவதும் வலியுறுத்தப்படல் வேண்டும். உலகியல் வாழ்வு, ஆன்மிக வாழ்வு வேறுவேறல்ல உலகுக்கு, நில உலகின் உலகியல் வாழ்வுக்கு ஒரு நீதி, உயர் உலகுக்கு, அக உலகின் ஆன்மீக வாழ்வுக்கு வேறொரு நீதி என்பது பித்தர் கூற்று, பேயர் கோட்பாடு. உலகியலில் மனிதர் பற்றுறுதியுடன் சில நேரொழுங்கு களைச் செயலில் பின்பற்றுகிறார்கள். அவற்றைப் பிசகில்லாமல் அணுப்பிழையாமல் பின்பற்றினால் வெற்றி என்றும், தெரிந்து மீறினாலும், பின்பற்றுவதில் தெரியாமல் வழுவினாலும் தோல்வி என்றும் அனுபவவாயிலாகவே அறிந்துள்ளனர். இத்தகைய தவறுகள் தவறு செய்பவனுக்கு மட்டுமல்ல, மக்க ளுக்கே அழிவு சூழ்வதனையும் அறிந்துள்ளனர். எடுத்துக் காட்டாக, பாலம் அமைப்பவன் பொருளின் பளு அல்லது நில ஈர்ப்பு, மூலப் பொருள்களின் உறுதி, கட்டுமானங்களின் இணைப் புறுதி ஆகியவற்றைக் கணித்தே பாலம் அமைக்கிறான். இவற்றில் அவன் அறியாமை, அறிவுக் குறைபாடு அவன் தொழிலுக்கு மட்டும் கேடன்று. அதன் முதற்கேடு சமுதாயத்துக்குரிய இடராகவும், துணைக்கேடாகவே அவன் தொழிற்கேடும் விளைகின்றன. சமுதாயத்தின் இவ்விடர்களே, சமுதாய நலன் நோக்கமே, பாலம் கட்டும் தொழிலின் அடிப்படை. ஆகவே மேலீடாகக் காண்பதுபோல, பாலம் கட்டும் தொழில் பாலம் கட்டுபவனுக்கு மட்டும் உரியதல்ல. சமுதாயம் முழுமைக்குமே உரியது. தொழில் என்றும் வாழ்வு என்றும் பிரிக்கும் பிரிவுகள் உண்மையில் ஒரே சமுதாய வாழ்வின் இருதிசைக் கூறுகளேயன்றி வேறன்று. சமுதாய நலம் சமுதாய வாழ்வுக்குரிய நேர்கூறு. அதற்காகவே, சமுதாயச் சார்பாக நின்று, அவர்கள் அனைவரும் செய்ய வேண்டிய செயலை அவர்கள் கருவியாக அமைத்து தொழிலாளி செய்கிறான். இது சமுதாயத்துக்குரிய மற்றொரு கூறு. இதுவே அவற்றின் உறவு. இதுபோன்றதே புறம், அகம் என்ற வாழ்வின் இருதிசைத் தொடர்பு. ஒருவனது வாழ்வின் புறம் அவன் அகத்தின் நிழலீடு. ஆனால் அகமோ மற்ற மனிதர் வாழ்வின் பொதுச் சின்னம். அவன் செயல்கள் யாவும் அந்த இனச் சார்பில் செய்யப்படும் தொழிலாளியின் செயல்போன்றதே. அகம், புறம் என்ற இந்த நெருங்கிய துண்டுபடுத்த முடியாத இணைதொடர்பை உலகியல், ஆன்மிகம் என்ற இணைவற்ற, முரண்பட்ட எதிரெதி ரான தொலைப் பண்புகளாக்கிய சமயவாணர் உண்மை ஆன்மீகப் பண்பின் நிழலையே மனித வாழ்விலிருந்து துடைத்தழித்து வருபவராவர். தனி மனிதன் அக வாழ்வு என்பது இனத்தின் பொது வாழ்வின் அகக்கூறு. அதன் இயக்கம் தனி மனிதன் புற வாழ் வியக்கம். ஆனால் அதன் நன்மை தீமைகள் தனி மனிதன் வாழ்வை மட்டும் பாதிப்பதல்ல. இன முழுவதையுமே பாதிப்பது தனி மனிதன் அக வாழ்வு உண்மையில் அவன் புறவாழ்வைவிட இனத்தின் வாழ்வுடன் நெருங்கிய தொடர்புடையது. ஏனெனில் அது இன வாழ்வை இயக்கியே தனி மனிதன் புறவாழ்வையும் பாதிக்கிறது. இத்தகைய இருதிசைப் பிணைப்புடைய, தனி மனிதனுடனும் இனத்துடனும் பின்னிப் படர்ந்துள்ள அக வாழ்வை உலகியலுடன் தொடர்பற்ற வேறோர் ஆன்மிக உலகின் வாழ்வு என்று கருதுவதுபோன்ற இருளார்ந்த மடமை வேறு இல்லை. அஃது ஆன்மிக உலகின் வாழ்வும் தனி மனிதன் வாழ்வும் மட்டுமன்றி மனித உலகின் சமுதாய வாழ்வும், அரசியல் வாழ்வும், மனித நாகரிகமும் கெட்டழிய ஏதுவாகின்றது. உலகியல் வாழ்வுக்கு ஒரு விதி, ஆன்மிக வாழ்வுக்கு ஒரு விதி - குடும்பவாழ்வுக்கு ஒரு விதி, சமுதாய வாழ்வுக்கு வேறொரு விதி - அரசியல் வாழ்வுக்கு ஒரு விதி, அரசியல் கடந்த நாடு கடந்த வாழ்வுக்கு இவற்றுக்கு முற்றிலும் மாறான ஒரு மூன்றாம் விதி - இது இன்றைய நாகரிக உலகின் அமைதியாய் இருந்து வரு கின்றது. தற்கால உலகின் கேடுகள் பலவற்றிற்கும் உரிய மூல காரணம் இதுவே. இவையனைத்துக்கும் ஒரே அடிப்படை விதிதான் இயல்பானது என்ற அறிவு இல்லாத வரை உலகில் பேரின்ப ஒளி பரவ முடியாது. இயற்கை வாழ்வின் நேரெளிமை வாய்ந்த, உயிர்ப் பண்புடைய சின்னஞ்சிறு ஒழுங்கமைதிகளில் முதல் அமைதி இதுவே. இரண்டாம் விதி: உழைப்புக்கே உணவு ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வுக்குரிய பொருளைத் தானே ஈட்டிக் கொள்ள வேண்டும், தன் வாழ்வின் பொறுப்பைத் தானே ஏற்க வேண்டுமென்பது உலகியல் வாழ்வின் அடிப்படை விதி. உழைப்பவன் உண்ணல் தகுதி, உழையாதவன் உண்ணும் உரிமை அற்றவன் என்பது இவ்வடிப்படை விதியின் விளைவான நீதி. மனிதர் பெரும்பாலும் இதனைப் பின்பற்றுவதனாலேயே, நேர்மையுடைய நல்ல நீதி என்று கருதுவதனாலேயே, ஓரளவு உலகில் அனைவரும் அவரவர்க்குரிய உணவைப் பெறுகின்றனர். உலகியல் வாழ்வில்கூட, இந்த அடிப்படை நீதியை மறுப்பவர், மறைப்பவர், ஏய்ப்பவர் உண்டு. மறுப்பவர், மறைப் பவரைச் சமுதாயமும் அரசியலும் கொள்ளைக்காரர், திருட ரென்று தண்டனைக்குரியவ ராக்குகின்றனர். ஏய்ப்பவரை மட்டுமே தண்டனைக்கு ஆளாக்காமல்விட்டு, சமுதாயமும் இனமும் தண்டனைக்காளாகி வருகின்றன. சமுதாயத்தின் இந்த இருமை நீதிபோல மனித உலகை அழித்தொழிப்பது வேறில்லை. ஏனெனில் உழையாது உண்ணும் உலுத்தரான முதலாளி வகுப்பு ஒருபுறமும், அதை அண்டிப் பிழைக்கும் சுரண்டல் வகுப்பு ஒருபுறமும் மனித சமுதாயத்தின் புற்று நோய்களாகவும் நோய்க் கிருமிகளாகவும், உழைத்துழைத்து உணவின்றி உருக்குலைபவர் மற்றொரு புறம் இனத்தின் தேய்மானப் பகுதியாகவும் பெருகு கின்றனர். உழைப்பவருக்கே உணவு என்ற நீதி உலகியலில் பெரிதும் பின்பற்றப்பட்டுச் சிறிது வழுவுவதனாலேயே இனத்துக்கு இத்தனை பெருங்கேடு ஏற்பட்டு வருகின்றது. ஆனால் ஆன்மிக இயலில், அகத்திறத்தில், இவ்விதி முற்றிலும் மறுக்கப்படுவதால் விளையும் கேட்டுக்கு இது ஒரு சிறிதும் இணையாகாது. உலகியல் வாழ்வில் உழையாதவன் உணவில்லாமலும் உடையில்லாமலும் திரிவது நீதியே என்று ஒத்துக்கொள்பவர், அவனை இரவலனாகக் காணும்போது இரக்கமின்றிச் சீற்றம் வேறு அடைபவர் உண்டு. ஆனால் இத்தகையவர் மட்டுமன்றி ஏனைய பலர்கூட ஆன்மிகத் துறையில் உழைப்புக்கும், உணவுக்கும் வாழ்வுக்கும் தொடர்பு இருக்க வேண்டியதில்லை என்று கருதுகின்றனர். உலகியல் வாழ்வின் வெற்றிக்கு உழைப்பு ஒரு தகுதி என்று கருதும் அளவில்கூட, ஆன்மிக வாழ்வின் வெற்றிக்கு அதுபோன்ற தகுதி வேண்டும் என்று அவர்கள் கருதுவதில்லை. ஆன்மிக உலகின் பரந்த ஆன்மிக வறுமைக்கு, ஆன்மிகத் துயருக்குக் காரணம் இதுவே. உண்மையில் புறஉலகில் உழைப்பவர் உழைத்தும் உருக் குலைவதற்கு, உழையாதவர் உணவுத் தகுதி பெற்றதாக எண்ணித் தருக்கி நோயாளியாக வளர்வதற்கு உரிய மூல காரணம் கூட இதுவே. கவிஞர் தம் கவிதை உணர்வால் இவ்வுண்மை யறிந்து கூறியுள்ளனர். ‘தனி மனிதனுக்கு உணவிலை எனில், செகத்தினை அழித்திடுவோம்’ என்று அவர்கள் பாடும்போது, அது ஓர் அழகுக் கவிதையணி, சொற்சாதுரியம் என்று பலர் எண்ணு கின்றனர். சிலர் கவிஞன் சாபமிட்டுத் தன் சீற்றம் அறிவிப்பதாக எண்ணுகிறார்கள். இரண்டும் தவறு. தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையானால், சமுதாயம் அழிவுக்குரிய நோய்க்கு ஆளாகும் என்ற அடிப்படை விதியையே அவர்கள் கவிதை உணர்ச்சி கண்டு இம்மொழியில் உரக்கக் கூறியுள்ளது. அந்த உரத்த குரல்கூட ஆன்மிகச் செவிடான உலகின் காதில் உறைப்ப தில்லை. ஆன்மிக உழைப்பு பொதுநல ஆர்வம். ஆன்மிக உணவு இன்பம். ஒன்று இல்லாமல் மற்றது கிடையாது. ஒருவனுக்கு உணவு, உடை, துணைக்கலங்கள் அல்லது வேறு ஏதேனும் தேவை ஏற்பட்டால், யாரும் கடைகளில் சென்று இரக்க எண்ணுவதில்லை. விலை கொடுத்தால்தான் கடைக்காரர் தருவர். கேட்பது பொருளையன்று, விலையையே என்பதை எவரும் அறிவர். ‘விலை கொடுத்துப் பொருள் பெறுவதே வாங்குபவர் நீதி, விலை பெற்றுப் பொருள் கொடுப்பதே விற்பவர் நீதி’ என்பதையும் எவரும் அறிந்தொப்பியுள்ளனர். அதுவே வாணிக நீதி, வாணிக இயல்பு என்றும் எவரும் அறிவர். விலை கொடுத்தபின் கடைக்காரர் பொருள் கடைக்காரருக்கு உரியதன்று, வாங்கியவர்க்கு உரிமையாகிவிடுகிறது. உலகியல் புறவாழ்வின் இதே வாணிக நீதி அகநிலை ஆன்மிக வாழ்வுக்கும் முற்றிலும் பொருந்துவதேயாகும். கொடுப்பதற்கேற்ப வாங்குவது, வாங்குவதற்கேற்ப கொடுப்பது, இவற்றிடையேயுள்ள தொடர்பே விலை என்ற வாணிக அமைதிச் சின்னம். இதுபோன்றே இன்பம், அமைதி, ஆற்றல் ஆகிய பண்புகளைப் பெறவிரும்புபவர் அவற்றுக்குச் சமமான தன்மறுப்பு, அவா மறுப்பு, அன்பு ஆகிய பண்புகளைத் தர வேண்டும். இதுவே ஆன்மிக அமைதி. உலகியல் வாழ்வில் இந்த இருதிசை இயக்கத்தின் தொடர்பு விலையாக அறுதியிடப் படுவது போலவே, ஆன்மிக வாழ்விலும் கொடுக்கல் வாங்கல் களின் தொடர்பு தகுதியால் அறுதியிடப்படுவது ஆகும். விலை கொடுத்த பின்பே பொருளுக்கு ஒருவன் உரியவன். அதுபோலத் தகுதிவாய்ந்த தன் மறுப்புச் செய்தபின்பே, பண்புகளுக்கு அவன் உரியவன் ஆகிறான். ஆன்மிகப் பண்டமாற்று உலகியலில் பருப்பொருளுக்குப் பதில் பருப்பொருளே பண்டமாற்றுச் செய்கிறோம். ஆனால் அவற்றின் தொடர்பு குறிக்கும் எடைப்பண்பு விலை. அஃது எடையே பணம் என்ற பொருளால் அளக்கப்படுகிறது. இந்த அளவை உண்மையில் பண்டங்களை ஆக்கும் உழைப்பின் அளவும், அருமையும் அருமையளவுமே என்பதையும்; உழைப்பின் அளவைப் பணத்தின் அளவும், உழைப்பின் அருமையைப் பணத்தின் அருமையும் குறித்துக்காட்டுகின்றன என்பதையும் கார்ல் மார்க்ஸ் போன்ற உழைப்பியல் பொருளறிஞர் சுட்டிக்காட்டு கின்றனர். ஆன்மிக உலகிலும் இதுபோலப் பண்டத்துக்குப் பண்ட மாகப் பருப்பொருள்களுக்குப் பதில் பருப்பொருள், பண்பு களுக்குப் பதில் பண்புகள் வழங்கப்படுகின்றன. பருப்பொருள் களுக்கு மாற்றுப் பருப்பொருளாவதுபோல, பண்புகளுக்கு மாற்றுப் பண்புகளாகவே அமைகின்றன. அவற்றின் இடைத் தொடர்பைக் குறிப்பதும் தகுதி என்ற நாணயம், ஆன்மிகப் பணம் ஆகும். நாணயம் என்ற தமிழ்ச்சொல் தகுதியையும் பணத்தையும் ஒருங்கே குறித்துக் காட்டுவதுடன், உண்மையான தகுதியின் தன்மையையும் விளக்குவதாக அமைந்துள்ளது காணலாம். ஏனெனில் அதே சொல் வாய்மை, பொறுப்பு, நம்பகம் என்ற பொருள்களும் தருகின்றது. ஆன்மிக நிலையில் ஆன்மிக உழைப்பின் தகுதி, தன்னலமறுப்பு, பொதுநல அவா, வாய்மை ஆகிய அரும்பண்புகளாலும், அஃதாவது அருமையாலும், அப்பண்புகளின் தன்மறுப்பளவாலுமே அளவிட்டு மதிக்கப் பெறுகின்றது என்பதை இது காட்டுகிறது. உலகியல் பண்டமாற்றுக்கும், ஆன்மிகப் பண்டமாற்றுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு ஒன்றே ஒன்று. உலகியல் பண்ட மாற்றில் தகுதி அல்லது நாணயம் சமூக அடிப்படை. தொடர்பு கொள்பவர் சமுதாயத்தில் உறுப்பினராகிய தனிமனிதர். ஒரு தனி மனிதர் இன்னொரு தனி மனிதருடன் சமுதாயப் பொதுத் தளத்தின் மீது கொள்ளும் தொடர்பாகவே வாணிகம் நிகழ் கிறது. ஆனால் ஆன்மிகப் பண்டமாற்றுச் சமுதாய அடிப்படை யுடைய தன்று. இன அடிப்படையானது. சமுதாயத்தை ஒரே குடும்பமாகக் கொண்டதே இனம். அது எல்லையில் குடும்பம் கடந்தது, பண்பில் சமுதாயம் கடந்தது. சமுதாய எல்லையில் நிகழும் குடும்பப் பண்பே அது. இந்த இன அடிப்படைத் தளத்தின்மீது ஆன்மிக வாணிகத் தில் கொடுப்பவர், கொள்பவர் வேறுவேறு சமுதாயம் அல்லது இனத்துக்குரிய உறுப்பினர் அல்லர். கொள்பவரும் கொடுப்ப வரும் ஒருவரே. ஒரே இன உறுப்பினரே. அதே சமயம் இனத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் இவ்வாணிகம் செய்தற்குரியவர் ஆவர். ஒவ்வொருவரும் தாமே கொடுப்பவராகவும் தாமே கொள்பவ ராகவும் உள்ளது இவ் விசித்திர வாணிகம். இதுமட்டுமன்று, அவர்கள் கொடுப்பது அவர்கள் புற வாழ்வு, இதையே நாம் தன்மறுப்பு என்கிறோம். புறப்பண்பை அவர்கள் கொடுக்கின்றனர். இதற்குப் பதிலாக அவர்கள் இயற்கையிடமிருந்து அகப்பண்பைப் பெறுகின்றனர். கொடுக்கும் போது அவர்கள் தம் சார்பிலேயே கொடுக்கின்றனர். ஆனால் பெறும்போது அவர்கள் இனச்சார்பில் பெறுகின்றனர். கொடுக்கும்போது அஃது அவர்கட்குப் பெரிதாகத் தோற்று கிறது. ஆனால் கொடுத்தபின் பெறுவது காண, கொடுத்தது மிகமிகச் சிறிது, பெறுவது மிகமிகப் பெரிது என்னல் வேண்டும். ஏனெனில் கொடுக்கும் அளவிலேயே அவர்கள் வாங்கினாலும், கொடுப்பது ஒருவர் உடைமை. பெறுவது இன உடைமை. கொடுப்பது தனி மனிதன் அளவான ஒன்றானால், பெறுவது இன அளவில் பன்னூறு கோடி யளவான பெருக்கமுடைய தாகிறது. வாணிகத்தில் நூற்றுக்கு ஒன்று விழுக்காடு, பத்து விழுக்காடு, நூறு விழுக்காடு, ஆயிர விழுக்காடு என ஆதாயம் பெருக்குபவர் உண்டு. ஆனால் ஆன்மிக வாணிகத்தின் வளம் உலகியல் வாணிகம் கனவில்கூடச் சென்றெட்டாத வளம் - அது நூற்றுக்கல்ல, ஒன்றுக்குப் பன்னூறுகோடி விழுக்காடு என்னும் வளம், எண்ணளவையும் தாண்டிய வளம் - உலகியல் சார்ந்த கணக்கியலால் கணித்தளக்க முடியாத வளம் ஆகும். ஆன்மிகச் செல்வம்: தவத்தின் மெய்யுரு ஆன்மிக இன்பம் கைவரப் பெற வேண்டுமானால் ஏதாவது ஒரு தற்பெருமையை, தற்பேற்றை, தன் அவாவை, மடமையை, தீயபண்பை விலையாக விட்டுக் கொடுத்தாக வேண்டும். மிகுதி விற்றவன், மிகுதி உழைப்பின் பயனை விற்றவன் பெரும் பொருள் திரட்ட முடிவதுபோல, மிகு பண்புகளை, பெரும் பண்புகளை மிகுந்த தன்மறுப்புடன் விட்டவனே மிகுந்த ஆன்மிகச் செல்வம், மிகுந்த ஆன்மிக ஆற்றல், மிகுந்த ஆன்மிக வளம் உடையவனா கிறான். பண்டைக்கால அறிவுச் சமயவாணர், சமய முதல்வராகிய பகவர், தன்மறுப்பால் வரும் ஆன்மிக வலிமையையே தவ வலிமை என்று குறித்துப் போந்தனர். ஆனால் முதல்வர் பண்புண ராத இடைக்கால மூடமதியினராகிய போலிச் சமய வாணர் முனிவர் சாபம், முனிவர் கோபம் என்ற முரணுரைகளால் புராணங்களைச் சழக்கேடுகளாக்கினர். ஏனெனில் அன்பும் அருளும் உடைய இனமுதல்வர்க்கன்றி வேறு எவர்க்கும் இத்தவ ஆற்றல், சித்து, சித்திப்பதில்லை. சித்திக்கப்பெற்ற சித்தர் சித்தம் அன்பு வழியிலன்றி வேறெவ்வழியிலும் அதைச் செலவு செய்யாது. மேலும் அன்புவழி என்பது ஆன்மிக வாணிகவழி. அதில் செலவழிதல் என்பது கிடையாது. கொடுப்பதற்கேற்ப வாங்குதல் என்பதுகூடக் கிடையாது. கொடுப்பதில் பன்னூறு கோடியாகப் பெருகும் செயலொன்றே அதில் இடம்பெறும். ஆன்மிக ஆற்றலைச் சேமித்தவன் செல்வத்தைச் சேமித்த செல்வன் போன்றவன், ஆனால் செல்வத்தைச் சேமிப்பதுடன் உண்மையான செல்வன் செயல், உண்மையான வணிகன் செயல் முற்றுப் பெறுவதில்லை. ஏனெனில் செல்வம் ஓர் ஆற்றல், ஒரு கருவி. அதைப் பயன்படுத்தாவிட்டால் அச்செல்வத்தை ஈட்டிச் சேமித்துப் பயனில்லை. பயன்படுத்தும்போதும் அவன் உண்மைச் செல்வனாக, உண்மை வணிகனாக இருத்தல் வேண்டும். ஒன்று பத்தாக்கி, பத்து நூறாக்கி ஈட்டிச் சேமித்த பணத்தை நூறாகவே வைத்துக் கொண்டிருக்கும் கஞ்சன் செல்வனாகான்; வணிக னாகான். அதை வாழ்வாகப் பயன்படுத்துபவனே உண்மைச் செல்வன். வாழ்வு ஆக்குவதிலும், ஒன்று பத்து நூறாக்கிய வணிகன் நூற்றுக்குப் பதில் நூறு பெற்றால் போதுமா? நூற்றை ஆயிரம் பதினாயிரமாக வாழ்வின் பயன் ஆக்க வேண்டும். அச்செல் வத்தில் தன் இன்பம் மட்டுமன்றி, சூழலிலும் இன்பம் பரப்ப அதைப் பயன்படுத்த வேண்டும். செல்வத்தை இவ்வாறு சமுதாய நலத்துக்குப் பயன்படுத்தி அதன் இனிமை பெருக்குபவனே உண்மைச் செல்வன், உண்மை வணிகன். புற உலகில் உண்மைச் செல்வத்தின் பயனே இதுவானால், ஆன்மிக உலகின் பண்புச் செல்வத்தின் பயன் இன்னும் மிகுதியான இனவளம் தருவது என்று கூறத்தேவையில்லை. ஆன்மிக ஆற்றலைச் சேமித்து வைப்பதால் மட்டும் ஒருவன் பேரின்பம் கண்டுவிட முடியாது. அது செல்வத்தைச் சேர்த்து வைத்து அதன்பயன் நுகராத கஞ்சன் நிலையாகவே அமையும். செல்வத்தைத் தன் வாழ்வாகவும் தன்னைச் சார்ந்தவர் வாழ் வாகவும் மாற்றுவதே செல்வத்தின் பயனாவதுபோல, பண்புச் செல்வம் திரட்டியவனும் அதை இனவாழ்வாக மாற்றுவதன் மூலமே இன்பம் காண்கிறான். செல்வமீட்டாதவன் நிலையில், உழையாதவன் வறுமையிற் குறைந்ததல்ல, உழைத்து ஈட்டிப் பயனின்றிச் சேமித்து வைப்பவன் செல்வ வறுமை. தன்மறுப்பால் ஈட்டிய பண்புச் செல்வத்தைத் தனக்கெனவோ, தன்னைச் சார்ந்தவர்க்கெனவோ, தன் சூழலுக்கெனவோ தேக்கி வைப்பவன் நிலை இதுவே. ஏனெனில் புறச்செல்வம் கடந்து பண்புச் செல்வம் பயன் பெருக்குவது. அது உடனடியாக இன எல்லையே குறிக்கோளாகக் கொண்டு பரவி, அந்த இனத்தை உயர்த்துவதன் மூலமே பண்பாளன் பண்புச் சூழல் பரப்பி அவன் நலமும் வளர்க்கிறது. தன் உணர்ச்சிவெறிகள், அவாக்களை - சீற்றம் வெறுப்பு, புல இன்பங்கள், தற்பெருமை, செருக்கு, தற்சலுகை ஆகிய இவற்றால் வருந் தற்காலிகப் போலி இன்பங்களை - பெரிதாக எண்ணுபவன் நிலை செல்வத்தைப் புதைத்து வைத்தவன் நிலையில் மேம்பட்டதல்ல; உண்மையில் அதனினும் கேடானது. ஏனெனில் கஞ்சன் பணத்தின் பயன் அடையவில்லை. ஆனால் அதனால் தீங்கு அடையவில்லை. உணர்ச்சிகளுக்கு ஆளான வனோ தீங்கும் அடைகிறான். பசிக்கு உணவு உண்பதற்கு மாறாக, கஞ்சா உண்டு பசி மறப்பவன் செயலேயாகும் இது. கவலை களைப் போக்கும் வழிகளைச் சிந்திப்பதற்கு மாறாக, சிந்தனை யையும் கவலையையும் மறக்கடிக்கும் குடியை, அபினியை ஒருவன் மேற்கொள்வது போல்வதே இப்போலி இன்பங்கள் தரும் அவலநிலை! அறம், இயற்கையின் பேரமைதியான உழைப்பு ஊதியத் தகுதி உலகியல் வாழ்விலே அறிவும் திறமையும் உடையவன் என்றும் இரப்பதுமில்லை; திருடுவதுமில்லை. அவன் உழைக் கிறான், உழைப்பின் பயனாகச் செல்வம் தந்து பொருள்களை வாங்குகிறான். உலகம் இந்தத் தற்சார்பு காரணமாக அவனை மதிக்கிறது. இதுபோலவே ஆன்மிக வாழ்விலும் அறிவும் திறமையுமுடையவன் இரக்கவோ திருடவோ மாட்டான். அஃதாவது, பிறரைச் சார்ந்து வாழவோ, பிறர் கூறுவதை, பிறர் மதிப்பை நம்பி வாழவோ மாட்டான். அவன் தன் அக உலகில் நின்று ஆன்மிக உழைப்பு உழைக்கிறான். அவ் உழைப்பின் பயனான ஆற்றலால் ஆன்மிக உடைமைகளை, அகப் பண்பு களைப் பெறுகிறான். இயற்கையை உள்ளடக்கிய உயிருலகம் முழுவதும் அந்நேர்மை காரணமாக அவனை முழு நிறைவுடன் போற்றிப் பாராட்டுகின்றது. அவனுடன் ஒத்துழைப்பளிக் கின்றது. உலகியல் வாழ்வில் மற்றொரு அமைதி கூலி உழைப்புப் பற்றியது. இன்னொருவனிடம் சென்று உழைப்பைத் தருவதாகச் சொல்லும் எவனும், உழைப்பைத் தரும் சமயம் அவன் ஏற்றுக் கொண்ட கூலியுடன் மனநிறைவு பெற்றுவிடுகிறான். வார முழுதும் உழைப்புச் செய்து கூலி பெற்றபின், உழைப்பு முதல்வரிடம் மிகுதியான ஊதியத்தைக் கோருவதில்லை. ‘மிகுதிகோரும் நேரிய உரிமை எனக்குக் கிடையாதுதான், ஆனாலும் நீங்கள் தருவீர்களென்று எதிர்பார்க்கிறேன்’, என்று பேசினால் அவர் கோரியபடி கூடுதல் ஊதியம் அவருக்குத் தரப்படாது. அங்ஙனம் கோரியவர் அந்தப் பணியிலிருந்தே விடுவிக்கப்பட்டு விடவும் நேரலாம். அத்துடன் அவர் தன் மதிப்பும் இழந்தவராவர். உலகியல் வாழ்வில் சமுதாயம் அதன் பின் அவர்மீது நம்பிக்கையும் கொள்ளாது. ஆனால் இதேவகைக் கோரிக்கையை ஆன்மிகத் துறையில் எத்தனையோ பேர் கூசாமல் விடுக்கிறார்கள். ஒப்புக்கொள்ளப்பட்ட கூலியையே மிகையாகக் கேட்கப் படாதென்றால், ஒப்புக்கொள்ளப்படாத கூலியை உழைத்து அவ் உழைப்பின் பின்னரே கேட்கப்படாதென்றால், உழைத்துத் தகுதி இருக்கும் சூழலிலேயே கேட்கப்படாதானால், தகுதியில்லாமலே கேட்பது எவ்வளவு மடமை வாய்ந்தது, எவ்வளவு குறுகிய தன்னலப் போக்குடையது என்பதை இத்தகையவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை. ஒவ்வொரு மனிதனும், தன் செயலுக்கான ஊதியத்தை இயற்கையின் ஒழுங்கமைதிகளிடமிருந்தே பெற வேண்டும். அதை அவன் இயற்கையுடன் உறுதி செய்து கொள்ளா விட்டாலும், இயல்பாக, அது உறுதி செய்யப்பட்டுள்ளது. அது இயற்கையின் மாறாச் சட்டம், ஆகவே அவன் கூட்டியோ குறைத்தோ கேட்டாலும் திட்டப்படியன்றித் தரப்பட மாட்டாது. அது மட்டுமன்று, அவன் வேண்டாமென்றால்கூட, அது திட்டப்படி அவனிடம் ஒப்படைக்கப்படாமலிராது. தனி மனிதனின் ஒவ்வொரு கருத்துக்கும் செயலுக்கும் உரிய ஊதியம் - இயல்பான பயன் ஒன்று உண்டு. அது அக்கருத்துக்கும் செயலுக்கும் சரியான மதிப்புடைய ஓர் எதிர் செயல் அல்லது எதிர் கருத்து அல்லது பண்பு ஆகும். இங்ஙனம் நேர்மையாக வருவதைத் தடுக்க முடியாது. வருவதன்மேல் கூடுதல் குறைவாக எதுவும் கோரிப் பெறவும் முடியாது. இவற்றைத் தெரிந்த அறிவின் இயற்கை தரும் எந்த விளைவுகளையும் வேண்டு மென்று கோருவதுமில்லை, வேண்டாமென்று மறுக்க எண்ணு வதுமில்லை, போதும் என்று கூறுவதுமில்லை, போதாதென்று குறைபடுவதுமில்லை. நன்மையாயினும் தீமையாயினும் அது தனது, தனக்குரியது, தன் தகுதியின் மதிப்பு என்றே கொள்வான். இயற்கையின் பேரமைதி அறம். அஃது எவரையும், நேசிப்ப தில்லை, பகைப்பதில்லை - எவருக்கும் தண்டனை யளிப்பது மில்லை, பரிசளிப்பதுமில்லை. ஆனால் அறிவற்றவன் பேசிய கூலிக்குமேலும் ஊதியம் கேட்பவனைப் போல, இயற்கையின் பரிசுகளுக்கும் குறைப்படுகிறான். சில சமயம் வீணான கழிவிரக்கம் கொள்கிறான். மன்னிப்புக்காகக் கெஞ்சுகிறான். மடமையில், பித்துக்கொள்ளித்தனத்தில் ஒவ்வொரு வகை யாகவே இவை ஒவ்வொன்றும் கருதப்படத் தக்கவை. அறிவுடையவன் செய்ய வேண்டுவதெல்லாம், பயனின் போக்கிலிருந்து, அளவிலிருந்து, தன் தகுதி தகுதிக் கேட்டை, அகப்பண்பின் காரணகாரியத் தொடர்பை, நலந் தீங்குகளை ஆராய்ந்து அறிந்து அதற்கிசையத் தன்னையே தான் சீர்செய்து கொள்வதேயாகும். ஆன்மிக வளம் உலகியல் பொருள்நிலையில், செல்வ வளம் விரும்புபவன் சிக்கனத்தைக் கையாள வேண்டும். ஏதேனும் ஒரு தொழில் துறைக்குரிய மூலமுதலாக ஒரு பெருந்தொகை திரளும்வரை தன் வருவாய் வளங்களைத் திறமையுடன் கையாண்டு வரவு செலவு சரிசெய்து மீத்துச் சேமிக்க வேண்டும். இச்சிறுமுதலையும் முற்றிலும் நெகிழ்வாகக் கட்டற்ற செலவுக்கு உட்படுத்தாமலும், முற்றிலும் கையிறுக்கமாக வைத்துப் பூட்டி வைக்காமலும் பயன்படுத்தத்தக்க நல்ல தொழில் பார்த்து முதலீடாக்க வேண்டும். இச் செயலால் அவன் உலகியலறிவில் மேம்பட்டவ னாகக் கருதப்படுவான். உலகியல் செல்வ நிலையிலும் வளம் பெறுவான். சோம்பேறியாக வாழ்ந்து ஊதாரித்தனமாகச் செலவு செய்பவன் செல்வனாக முடியாது. வீணாரவாரச் செலவு செய்பவன் இன்னும் விரைவில் அழிவை வருவித்துக் கொள்வான். ஆன்மிக வளத்தை நாடுபவன் இதுபோலவே சிக்கனம் பயில வேண்டும். தன் உள்ளத்தின் ஆற்றல் வளங்களைத் திறம்பட நற்பயனுடனேயே கையாள வேண்டும். வீணே சிதறவிடக் கூடாது. நாவை அடக்க வேண்டும். உணர்ச்சிகளைக் கட்டற்று இயங்கவிடக்கூடாது. வம்பளப்பில் தன் ஆற்றல் சோராவிடப் படாது. வீண் வாதத்தில் சீற்றத்தில் ஈடுபடக் கூடாது. இவ்வாறு ஓரளவு மெய்யுணர்வும் ஆற்றலும் திரட்டியபின் அதனை உலக நலனுக்காகப் பிறர் வாழ்வில் ஈடுபடுத்திப் பண்பு வளமாக்க வேண்டும். ஆற்றல் எந்த அளவு பிறர் நலங்களுக்கு ஈடுபடுத்தப் பட்டுப் பயன்பெறுமோ அந்த அளவுக்கே அது வளம்படுகின்றது. ஆன்மிக உணர்வு வளத்திலும் ஆன்மிகச் செல்வத்திலும் ஒருவன் மேம்படும் வகை இதுவே. இது செய்யாமல் தன் அகத் தூண்டுதல்களையும் அவாக் களையும் குருட்டுத்தனமாகப் பின்பற்றுபவன், தன் மனத்தை அடக்காதவன், ஆன்மிகத்துறை ஊதாரியாகிறான். அவன் என்றும் ஆன்மிக வளம் பெற முடியாது. திசை மாறினும் விசை மாறினும் பொருண்மை மாறா இயற்கையின் அமைதி ஒருவன் மலையுச்சியை அடைய விரும்பினால், அடிவாரத்திலிருந்து அதில் அங்குலம் அங்குலமாக ஏறியாக வேண்டும். இது இயற்கை நியதி. போவதற்குரிய பாதையையும் அவன் தேடி அதில் உன்னிப்புடன் நடந்து சென்றாக வேண்டும். முயற்சியின் கடுமையை எண்ணியோ இடர்களைக் கண்டு மலைத்தோ, கைகால் வேதனைகளைப் பெரிதாகக் கருதியோ பின்னிடைவானானால், அவன் தான் விரும்பியபடி மலையுச்சி அடைய முடியாது. இயற்கையின் இதே நியதி ஆன்மிகத் துறைக்கும் பொருந்தும். ஒழுக்க உச்சி, அறிவின் உச்சி அடைய விரும்புபவன் இது போலவே தன் சொந்த முயற்சியுடன் உழன்றே அதைப் பெற முடியும். அதற்கான பாதையை அவனே தேர்ந்தெடுக்க வேண்டும். தானே கடுமுயற்சியுடன் அதில் ஏற வேண்டும். முயற்சியில் தளரவோ, திரும்பவோ செய்தலாகாது. இடர்களை எப்பாடு பட்டும் எம்முறையிலும் தாண்டித் தீர வேண்டும். மருட்சிகள், கடுந்தேர்வுகள், துன்பங்கள் அவன் காலடியில் முட்களாக, பரற்கற்களாக உறுத்தலாம்; குருதி காணும்படி கீறலாம். ஆனால் கற்களாக உறுத்தலாம்; குருதி காணும்படி கீறலாம். ஆனால் இத்தனையும் கடந்து அவன் சென்றால்தான் தான் விரும்பிய இலக்கின் புகழ்சான்ற உச்சி சென்று அதன்மீது கவியும் தெய்வ வானின் மோனப் பெருவெளியைக் கண்டு மகிழ முடியும். மற்றும் தொலை நகரத்தைக் குறிக்கொண்டு அதனை அடைய விரும்புபவன் அத்திசையில் பயணம் செல்லாமல் அதை அடைய முடியாது. உடனடியாக அதை அடையும் அமைதி எதுவும் இல்லை. அதற்கான முயற்சியின்றி, அதன் பயனை அடைய முடியாது. நடந்தே சென்றால் அவன் முயற்சி பெரிது, ஆனால் செலவிடும் பணம் சிறிது. ஊர்திகளிலோ, பிற செல் கலங்களிலோ பயணம் செய்வதானால், முயற்சி குறைவது போலத் தோன்றும். ஆனால் அவன் முன்னைய உழைப்பின் பயனான பணம் தந்தே அவ்வாறு தற்போதைய முயற்சி தவிர்க்க முடியும். ஆகவே இயற்கை அமைதியை வென்றுவிடுவதாக மேலீடாகத் தோற்றும் இடங்களில்கூட, நாம் அதை உண்மை யில் வெல்லுவதில்லை. அதன் உருவத்தை, அதன் முறையை, கால இட எல்லைகளை மாற்றுகிறோமேயன்றி, அழிப்பதில்லை. இயற்கையமைதியின் இதே தன்மை வாய்ந்தது ஆன்மிக அமைதி! தூய்மை, அருளிரக்கம், மெய்யுணர்வு, அமைதி முதலிய எந்தப் பண்பிலக்கை ஒருவன் அடைய விரும்பினாலும், அவற்றை நோக்கிச் செல்லும் வழியில் நடந்து கடந்து சென்றேயாக வேண்டும். இந்த அழகிய ஆன்மிக நகரங்களுக்கு உழைப்போ உழைப்பின் பயனான தகுதியோ இன்றிச் சென்று விடத்தக்க அருநிகழ்வு எதுவும் இயற்கையின் நியதியில் இல்லை. இயற்கை நியதியின் எல்லையிலே அவன் தன் முயற்சியால் செய்யத்தகும் சிக்கனமெல்லாம், வழிகளிலே சுற்று வழிகள் இருந்தால் அறிந்து விலக்கி நேர்வழி, குறுக்குவழி காண்பதும், கடுவழிகள் இருந்தால் விலக்கி எளியவழி காண்பதும் மட்டுமே. நேரான, எளிய வழி அறிந்ததன்பின் அந்த நல்ல, சுருங்கிய எளிய வழியில் தேவைப்பட்ட அளவு முயற்சி முற்றுவித்த பின்னரே, ஒருவன் தன் உழைப்பின் பயனாகத் தன் குறி சென்றடைய முடியும். முழுநிறை மனிதப்படி - கடவுட்படி இவ்வமைதிகள் மேற்பார்வைக்குப் பலவாகத் தோற்றி னாலும், பலவான அத்தோற்றம் இட, காலச் சூழல் சார்ந்ததே. உண்மையில் இவையும் இவைபோன்ற பிறபல சின்னஞ்சிறு ஒழுங்கமைதிகளும் இயற்கையின் ஒரே அமைதியின் கூறுகள் அல்லது திசைகளே. இயற்கை அமைதி, உலகியல் அமைதி, ஆன்மீக அமைதி என்பதுகூட அந்த ஒரே பேரமைதியின் பல கோண நோக்குகளேயன்றி வேறன்று. நாம் மேலே ஒன்றை ஒன்றினுக்கு உவமையாகக் கூறியதுகூடப் புற உவமையன்று, அக உவமை. ஏனெனில் அவை ஒரே அமைதிக்கு ஒத்த பல அமைதிக் கூறுகளேயாகும். உலகியல் வாழ்வு ஆன்மீக வாழ்வு என்பவை ஒரே இயற்கை வாழ்வின் இரு முகங்களேயன்றி வேறு வேறல்ல. இந்த எல்லா முகங்களும் எல்லாக் கூறுகளும், சேர்ந்ததே முழுவாழ்வு, முழு மனிதத் தன்மை. அதுவே பேரின்பம், தெய்விக வாழ்வு. இயற்கை யமைதிகள் அத்தனையையும் பின்பற்றியே நாம் முழு இன நிறைவை எய்த முடியும். ஏனெனில் அரசியல் சட்டங்களைப் போல, இந்த இயற்கை அமைதிகளில் நடைமுறையிலுள்ளவை. நடைமுறையிலில்லாதவை என்ற வேறுபாடு கிடையாது. எல்லா அமைதிகளும் - மிகச் சிறு நுண்ணமைதிகூட - நடைமுறையி லுள்ளவையே, முழுதும் செல்லுபடியானவையே. ஏனெனில் பெரிதும் சிறிதுமான அவை யாவும் உண்மையில் ஒரே அமைதியின் கூறுகள். இதே காரணத்தினால் சமுதாய அமைதிகளில் இருப்பது போல உயிர்த்துடிப்புடைய அமைதி, காலங்கடந்த சட அமைதி அல்லது ஆசாரம் என்பவையும் ஆன்மிகத் துறையில் கிடையாது. இயற்கை யமைதிகள் போலவே அவை எங்கும் எப்போதும் எல்லா வகையிலும் முழுநிறை இயக்கமுடையவை. சமுதாயமும் அரசியலும் மனிதவாழ்வு, உயிர்வாழ்வு சார்ந்தவை. எனவே உயிர் வாழ்வுபோல அவை காலத்திலும் இடத்திலும் வளர்பவை. அவற்றின் அமைதி இயற்கையமைதியி லிருந்து ஓரளவு வேறுபடுவதன் காரணம் அதுவே. ஆனால் உயர் உயிர்வாழ்வாகிய மனித வாழ்வின் மனிதப் பகுதியான தெய்விக வாழ்வு அல்லது ஆன்மிக வாழ்வு இயற்கை வாழ்வு போன்றது. உயிர்வாழ்வு கடந்த இயற்கையின் மறுபதிப்பே அது. உயிர் வாழ்வின் கீழ்ப்படி கடந்து, இயற்கை நோக்கி வளரும் மனிதன் வாழ்வுக்கூறு அது. இயற்கைக்கு அடிமைப்பட்ட வாழ்வே கீழ் உயிரின வாழ்வு. இயற்கையுடன் ஒன்றுபட்டு இழைவதே உயர் உயிரின வாழ் வாகிய மனிதவாழ்வு. உயிரின வாழ்வுப்படியின் பிடியிலிருந்து விலகியவுடன் மனித வாழ்வு தெய்வீக வாழ்வாக, இயற்கை யோடொத்த, இயற்கையோடொன்றிய வாழ்வாக ஆம் வகை இதுவே. கடவுளாதல், கடவுளுடன் இணைதல், கடவுளை அணவுதல், கடவுளுருவாதல், கடவுட் பண்பளாவுதல் என்று உயர் சமய அறிவேடுகள் உருவகப்படுத்தும் முழுநிறை மனிதப்படி இதுவே. இயற்கையின் மாறாக் கடுநேர்மை உலகியல் அமைதி, இயற்கை அமைதி ஆகியவற்றைப் போலவே ஆன்மிக அமைதியும் முழுநிறை உயிர்ப்பு, முழு நிறை இயக்கம், விலக்கு விதியற்ற நிறை செயல், கட்டாய விளைவு ஆகிய பண்புத் திறங்களை உடையது. அவற்றைப் போலவே அணுவும் பிசகாத வாய்மையுடையது. ஏனெனில் கைகண்ட இயற்கை யமைதியின் கண்கண்ட நிழற்கூறே உலகியல் அமைதி. இரண்டன் கண்காணா உள்ஒளிக்கூறே ஆன்மிக அமைதி. இயற்கை ஆன்மீக வாழ்வின் நிழல், அதன் உருப்படிவமாதிரி. அதுபோல உலகியல் வாழ்வு தெய்விக மெய்யுணர்வின் நிழல், அதன் உருப்படிவ மாதிரி. உலகியல் வாழ்வில் அனுபவத்தால் மனிதர் அறிந்து, அட்டியின்றி, கேள்வி பதில் ஆராய்வுகூட இன்றி, இயல்பாகப் பின்பற்றுகிற சிறு நேரமைதிகள் யாவும், அதே நுணுக்க விரிவு விளைவுகளுடன், அதே வகை அணுப்பிசகில்லா நிலையில் ஆன்மிக வாழ்விலும் செயலாற்றுகின்றன. ஆனால் உலகியல் வாழ்வில் அவ்வமைதிகள் கண்கூடான நீடித்த இடைவிடா அனுபவம் காரணமாக இயல்பாகப் பின்பற்றப்படும். ஆன்மிக வாழ்விலோ, இன்ப துன்பங்களின் நீடித்த அனுபவம் வரும்வரை அதே வகையாகப் பின்பற்றப்படுவதில்லை. இந்த அனுபவ அறிவுதான் மெய்யுணர்வு ஊன்றி நிற்கும் அறிவு நிலம். இதை அடைந்தவுடனே ஐயங்கள் தீர்கின்றன. துன்பங்கள், துயரங்கள் ஆகியவற்றின் இருள் மெய்யறிவின் ஒளிபெற்றுத் தெளிவடைந்தவுடனே, அஃது இன்ப உருவா கின்றது. இன்பங்கள் ஒளிதரும் மெய்யறிவுக் கதிரவனுக்குரிய வழிகாட்டிகள், திசைகாட்டிகள் ஆகின்றன. வாழ்க்கை சிக்கலுடையதன்று, வளைவு நெளிவுடையதன்று - கோடா நடுநேர்மையும் நெறிதிறம்பாக் கட்டெளிமையும் உடையது. அதன் இயக்கம் நேர்மைக்கும் நியதிக்கும் கட்டுப் பட்டது. ஒழுங்கமைதிகள் கால தேசச் சூழல்களால் மாறு வனவல்ல. அவற்றின் மாறுபடும் தோற்றத்தால் மாறுபட்டுத் தோன்றுபவை மட்டுமல்ல. அம்மாறுபாடுகளே தவறான நோக்கினால், அறியாமையால், மடமையால் ஏற்பட்டவை. விருப்பு, வெறுப்பு உணர்ச்சித் தூண்டுதல் ஆகியவை இம் மடமையின் கோட்டங்களுக்கான காரணம் ஆகும். இவை யற்றவை அமைதியும் அன்பும், ஒழுங்கமைதிகளின் நேர்மையைக் காட்டும் பண்புகள் இவை. அவற்றின் நடுநேர் கோடும் (டுயவவைரனந) நடு நிரைகோடும் (டுடிபேவைரனந) என அவற்றைக் கூறலாம். இயற்கைக்கு வேண்டுதல் வேண்டாமை, சலுகைக்குரிய வர்கள் கிடையாது. அது கடுநேர்மை, ஒருதலை கோடா நடுநிலை உடையது. ஒவ்வொரு மனிதனுக்கும் அஃது உரிய தகுதியே அளிப்பது. ஒழுங்கமைதிகளின் நோக்கில் எல்லாம் நல்லவையே, நல்லவை கெட்டவை என்ற வேறுபாடு கிடையாது. மனிதன் இவ்வொழுங்கமைதி வழியன்றி வேறு நன்மை தீமை காண்டலரிது. ஒழுங்கமைதி அறிந்தொழுகினால், அவன் நடுநேர்வழி செல்ல முற்படுகிறான். அது கண்டபின் மகிழ்வும் இன்பமும் உவகையுமே அவனுக்குரியன. துன்பமுட்பட அருளாளர்க்கு யாவும் இன்பமயம் இயேசுபிரான் கண்டுணர்ந்து கூறிய ஒளியுலகத் தந்தை தளரா நன்மை உருவினர். எல்லாப் பொருளின் அமைதிகளி னூடாகவும் அவற்றையே தன் ஒளிக் கதிர்களாகக் கொண்ட இயங்கும் ஒளிப்பிழம்பு அவ்வுரு. நல்லவனுக்கு வாழ்விலோ மாள்விலோ தீங்கு எதுவும் நேர முடியாது என்று அவர் உறுதி கூறியதன் மறைதிறவு இதுவே. தம் முடிவில் இயேசுபிரான் நலனே கண்டார். தன்னைத் துன்புறுத்தியவரிடம் குறைகாண, தீமை காண அவர் மறுத்தார். ‘எவரும் என்னிடமிருந்து என் உயிரை எடுக்கவில்லை. நானே அதை மனமார ஒப்படைக் கிறேன்’, என்பது அவர் இறுதி அருள்வாசகம். தம் முடிவுக்கு அவர் யாரையும் காரணமாகக் கருதவில்லை. தாமே அதன் செயற்காரணம் என்பதை அறிந்து ஏற்று விளக்கினார். வாழ்வை எளிமையுடையதாக்கி, உள்ளத்தைத் தூய்மை யுடயதாக்கிக் கொண்டவன் இயற்கையின் இயலெளிமையாகிய அழகுணர்வில் ஈடுபடுகிறான். அதுவே மெய்யுணர்வு. அதுவே தூய நல்லுணர்வு. அந்நிலையில் அவன் எல்லாப் பொருள் களிலும் எல்லா நிகழ்ச்சிகளிலும் இயற்கையமைதியின் மாறாத உறுதிப் போக்கைக் காண்கிறான். இதன் பின்னணியாக, அவன் தன் கருத்துக்கள், செயல்கள், பண்புகளின் தன்மையைப் புற உலகில் அவற்றால் ஏற்படும் விளைவுகளிலிருந்து உணர்கிறான். அவை தன் உளப்பண்புகள் இயக்கும் வழிகளையே தம் இயக்கமாகக் கொண்டுள்ளன என்று அவன் உணர்கிறான். இதன்பின் இயற்கையை இயற்கைவழி நின்று இயக்குவது எளிதாகிறது. இன்பந்தரும் கருத்துக்கள், இன்பந்தரும் சொற்கள், இன்பந்தரும் செயல்கள், இன்பம் பரப்பும் பண்புகளை அவன் வளர்க்கிறான். கருத்தும் சொல்லும், செயலும் பண்பும் இன்பத்தில் கருவுற்று, இன்பத்தில் முதிர்ந்து, இன்பத்தில் வளர்ந்து, இன்பத்தில் இன்ப உருவாக நிறைவுறுகின்றன. அறியாமையின் பயனாகச் செய்யப்படுகின்ற செயல்கள், அவற்றுக்குத் தூண்டுதலான சொற்கள், அவற்றுக்கு மூல முதலான அகப் பண்புகள் விலக்கப்படுகின்றன. தற்பணிவுடன் செயலின் செயற்காரணமான அமைதிகள் அறிந்து அவன் அகவாழ்வை இயக்குவதால், எதையும் எவரையும் குறை கூறுவதில்லை. எவரையும் கெஞ்சுவதில்லை. கழிவிரங்குவ தில்லை. ஒழுங்கமைதியுடன் ஒழுகி அமைதி பெறுகிறான். ஒழுங்கமைதியின் உணர்விலே, நல்லொழுங்கின் அறிவிலே அவன் நிறை இன்பத்தின் உருவரை கண்டு அதை நோக்கி முன்னேறுகிறான். 5‘நம் வாழ்வு நம் ஆடை; அதன் வண்ணங்கள் நாம் தோய்க்கும் வண்ணங்கள், பிறவேறில்லை; நம் வாழ்வூழ், நம்கழனி; அதன்மீதிலே நாம்விதைக்கும்படி அறுப்போம், எதுவாயினும்! விதைத்தபடி அறுப்பதெனில் வெந்துயரம் ஏன்? கொடுத்தப்படி கொள்வதனில் குறைவேறுண்டோ? சிதைக்கின்ற துன்பமும்தான் இன்பமன்றோ- சிதைவும் இன்பவழிகாட்டும் சீரதாமே! அடிக்குறிப்புகள் 1. “றுயவஉh யேசசடிறடல கூhந னநஅடிளேவசயவiடிடிn டிக ய வசரவா, வைள bசைவா, ஹனே லடிர வசயஉந யெஉம வாந நககடரநnஉந வடி வைள ளயீசiபே ஹனே ளடிரசஉந றiவாin ரள.” -க்ஷசடிறniபே 2. “ஆடிசந ளை வாந வசநயளரசந டிக வாந டுயற வாயn பநஅள; ளுறநநவநச வாயn உடிஅb வைள ளறநநவநேளள, வைள னநடiபாவள, னுநடiபாவகரட யீயளவ உடிஅயீயசந.” - கூhந டுiபாவ டிக ஹளயை 3. “ழநசந யசந nடி ளடிரனேள டிக னளைஉடிசன, nடி யீசடிகயநே டீச ளநளேநடநளள படிளளiயீ டிக ரறேடிசவால வாiபேள- டீடேல வாந ளடிபேள டிக வாந உhளைநடள யனே டிக யீநளே, டீக ரௌல செரளாநள யனே நஉளவயவiஉ ளவசயiளே டீக ளடிரடள ளரசஉhயசபநன றiவா அரளiஉ அடிளவ னiஎiநே. ழநசந ளை nடி னைடந ளடிசசடிற, nடி யீடிடிச பசநைக குடிச யலே னயல டிச டிதெநஉவ டநகவ நொiனே- குடிச வiஅந ளை உடிரவேநன யீசநஉiடிரள யனே hநசநin ஐள ளரஉh உடிஅயீடநவந யயெனேடிnஅநவே டிக ளுநடக கூhயவ வநயசள வரசn iவேடி சயinbடிறள யனே நnhயnஉந கூhந நெயரவல டிக வாந டயனே றாநசந யடட ளை கயசை.” 4. “கூhந நடநஅநவேநசல டயறள நேஎநச யயீடிடடிபளைந.” 5. “கூhந வளைளரந டிக டிரச டகைந வடி நெ றுந றநயஎந றiவா உடிடடிரசள யடட டிரச டிறn, ஹனே in வாந கநைடன டிக னுநளவiலே றுந சநயயீ யள றந hயஎந ளடிறn. “ஹனே கை றந சநயயீ யள றந hயஎந ளடிறn, ஹனே வயமந வாந னடிடந றந னநயட, கூhந டயற டிக யீயin ளை டடிஎந யடடிநே, கூhந றடிரனேiபே ளை வடி hநயட.” 14. இன்ப முடிவு 1வாய்மைசென்று சேர்வ திந்த நேர்மைநீதி, வளைத்திதனைத் திருப்புபவர் யாருமில்லை! தூய்மைதரும் அதன்உள்ளம்அன்பு, அதன்சி துங்கமுடி இன்னமைதி; அது தொடர்வாய்! - ஆசிய சோதி. 2கடுமையெலாம் தீர்ந்த இடம் காண்டி, திண்ணம் கருதுகின்ற தீமையெலாம் நலமாம் வண்ணம்! திடமுடனே உழைப்பின்பின் ஓய்வுவாரம் சென்றெட்டும் தெய்வநலம் திகழ்தேவாரம்! - விட்டியர். வாழ்க்கை பற்பல இன்ப முடிபுகளை உடையது. ஏனெனில் அதில் விழுமிய வீறு, தூய்மை, எழில்நலம் மிக உண்டு. உலகில் பழியும் மடமையும் மலிந்திருந்தாலும், கண்ணீரும் புண்ணீரும், துயரும் புன்மையும் மிக்கிருந்தாலும், அவற்றினும் மலிவாகத் தூய்மை உண்டு; அறிவு உண்டு. அமைந்த புன்முறுவலுடன் ஆறுதல் தரும் கனிவும், உவகையும் கழிபேரளவில் அதில் காணப்பெறும். அதுமட்டுமன்று, அதில் நன்மையின் ஆற்றல் பெரிது. ஒரு சிறிது தூய கருத்துத் தோன்றிவிட்டாலும், ஒரு தன்னலமற்ற செயல் எழுந்துவிட்டாலும், அவற்றிலிருந்து இடையறா எல்லையற்ற இன்ப அலைகள் எல்லையில்லாக் காலமெங்கும் பரவி இன்ப முடிவையே உறுதிசெய்துவிடும் தன்மையுடையது. வாழ்க்கையின் பல இன்ப முடிவுகளுள், இன்பந் தங்கு மிடங்களுள் ஒன்று குடும்பம். இன்பக் குடும்பம் ஓர் இன்ப முடிபு. வெற்றிகரமான வாழ்வு மற்றோர் இன்ப முடிபு. வாழும் குழுக்களாகிய சமுதாயமும் இனமும் பேரினங்களும் இன்ப முடிபுகளே! வாய்மையுடன் நன்கு நிறைவேறிய ஒவ்வொரு கடமையும் ஓர் இன்ப முடிபு காண்பதே. அன்புப் பாசமிக்க நண்பர்களைச் சூழ்வரப் பெற்றமைதல் ஓர் இன்ப முடிபே. இன்னும் விலக்கி வைக்கப்பட்ட பூசல், துடைக்கப்பட்ட பகைமை, ஏற்றமைந்து மன்னித்துவிடப்பட்ட கடுஞ்சொல், நண்பர் முறி வழிந்து நட்பு மீட்டும் முறுகிவிடல் - இவை யாவும் நன் முடிபுகளே. கிளைப் பாதையின் இன்ப முடிபுகள் - இன்பக் கூறுகள் நீடித்த விடாமுயற்சியின் பின் எய்தப்பெற்ற இலக்கு; துன்பக் கண்ணீர் உலருமுன் அதை இன்பக் கண்ணீராக மாற்றிய இனிய மாற்றம்; பழிசேர் பேய்க் கனவுகளின் பின் அக்காட்சி கலைக்கும் விடியற்கால எழிலொளி காட்டும் இன்ப விழிப்பு; பல தவறுகளின்பின் பொம்மெனத் தோன்றிய தெய்வ ஒளி - இவை பலவண்ண இன்பமுடிபுகள். வாழ்க்கையின் நேர்மை நெடுஞ் சாலையின் ஓரங்களிலுள்ள இன்பப் பண்ணைகளில் உலவிச் செல்பவன் இத்தகைய இன்ப முடிபுகள் பலவற்றைக் காண்பான். கிளைப்பாதைகளில் சிலவற்றில் தேடியும் சிலவற்றில் தேடாமலும், சில இடங்களில் எதிர்பார்த்தும் சில இடங்களில் எதிர்பாராமலும் இத்தகைய இன்ப முடிபுகள் அவனை வந் தடைந்து, அவன் இளைப்பு ஆற்றி அவனுக்கு ஊக்கம் தரும். ஏனெனில் இக்கிளைப் பண்ணைகள் இத்தகைய காட்சிகள் நிரம்பியவை. இக்கிளை வழிகளில் உலவி நெடுஞ்சாலை செல் பவன் இவற்றை நாடியும் நாடாமலும் எளிதில் இவற்றை அடையும் வயணம் இதுவே. நேராகத் தொடங்கி, நேர்மையுடன் செல்பவன், இவற்றைத் தேட வேண்டியதேயில்லை. தேடாமலே அவை எதிர்ப்படும். அவை அருகிலுள்ளன. அருகருகே ஒன்றை ஒன்று தொடர்ந் துள்ளன. வாழ்வில் எளிதில் ஒதுக்க முடியாத மெய்ம்மைக் கூறுகள் அவைகள். இன்ப முடிபுகளில் சில முற்றிலும் புற உலகுக்கு, பருப் பொருள் உலகுக்கு உரியன. இவையே நிலையற்றவை, கணத்தில் தோன்றி, கணத்தில் மறைபவை. அக உலகுக்கு, நுண்ணிய பண்புலகுக்கு உரியனவும் உண்டு. இவையே என்றும் நின்று நிலவுபவை. மறையாதவை. தோழமைகள், கரிமகிழ்வுகள், வாய்ப்பு நலவளங்கள் ஆகியன இனியவையே, - ஆனால் இவை மாறுபடுவன, மறைவன. தூய்மை, மெய்யுணர்வு, வாய்மை பற்றிய அறிவு ஆகியவை இவற்றிலும் இனியன. அவை மாறாதவை, மயங்காதவை, மறையாதவை. மனிதன் உலகில் செல்லும் திசையெங்கும் தன் உலகியல் உடைமைகளைக் கொண்டு செல்ல முடியாதென்றில்லை. ஆயினும் அவை தாமாக அவனைவிட்டுச் செல்லாமலிருக்க முடியாது, சென்றே தீரும். அவன் அவற்றையே நம்பி, அவற்றின் மீதே தன் இன்ப அவாவை நாட்டினால், மிக விரைவில் அவன் ஆன்மிக வறுமைக்கும் வெறுமைக்கும் ஆளாகிவிட நேரும். ஆனால் ஆன்மிகப் பண்புகளை ஈட்டி, அவற்றின்மீது அன்பாட்சி நாட்டியவன் அவ்வின்பத்துக்காதாரமான பண்பு களிலிருந்து எளிதில் பிரிக்கப்படமாட்டான். அவை என்றும் அவனை விட்டகலமாட்டா. உலகில் அவன் எங்கே, எச்சூழலில் ஏகினாலும், அவை அவன் பிரியா உடைமையாக அவனுடனே தங்கும். ஈறிலாப் பேரின்ப எல்லை செல்லும்வரை இருந்து அவை அதனுள் ஒன்றுபடும். அதன் நிறைவு வந்தெய்தி, அதில் நிறைவு பெறும்வரை அது அவனிடம் வளர்ச்சியுறும். முடிபின் முடிபு இன்பத்துள் இன்பம் இந்த இன்ப முடிபுகளை நுகர்ந்து அவற்றின் இன்பப் பண்புகளால் இன்ப ஒளியின் கனிவு எய்தியவன் தனதென்னும் நிலையும், தான் என்னும் நிலையும் மறைகின்ற கட்டத்தை எய்தும் தறுவாயில், நிறைநீளின்பப் பேரொளியில் நுழைவுறு கிறான். உடலுடனே, வாழ்வுடன் வாழ்வாக வாழ்ந்துகொண்டே, அவன் கடவுளரசு, தெய்வீக அரசு, உலைவில் அமைதி (நிர்வாணம்), பொன்னுலகு, புதியஜெருசலம், ஒலிம்பஸ் மாமலை, மேரு, வல்ஹாலா (பண்டைச் செருமானிய வானவ ருலகு), கயிலை, வைகுண்டம் எனப் பல காலங்களில் பலவாறு பல்வேறு மெய்வழிகளால் சுட்டப்படும் பேரின்ப வாழ்வு என்னும் பொன்னவிர் பூம்பொழிலில் உலவப் பெறுகிறான். முடிவின் முடிபு, ஒருமையில் ஒருமை, இன்பத்தின் இன்பம், மெய்மையின் மெய்மை அதுவே. அழகெலாம் நிழலாகக்கொண்ட அழகின் அழகு. மாறு படும் ஒளிகளெல்லாம் நிழலாகக்கொண்ட மாறா ஒளி, பல வகைப் பெயர்கள் கொண்ட பெயரிலா நிலை அது. எல்லையற்ற அந்த இன்ப உறைவிடத்தில் மனிதன் தன்னையிழந்து அவ் வின்பமாகி விடுகிறான். வாழ்விலே வாழ்வு - புலன்களலைக்கும் உலகிலே புலன் கடந்த வாழ்வு - இருளவாக்கள், விருப்பு வெறுப்புப் புயல் களிடையே இன்பஒளி, அன்பமைதி - தன்னலவாணர் தட்டித் தடவும் உலகிலே பொதுநலத்தின் சார்புக்கனிவே கண்ணாகக் கொண்டு எத்திசையும் ஒத்துநோக்கும் நிறை மாட்சியுணர்வு - உள்ளத்தின் உள்ளே நின்று புறமியங்கும் வாழ்வு அவனது. அதில் சென்று தங்கி, இன்பவாணன் தன் பேரின்பப் பயணத்திலிருந்து நிலையான ஓய்வுபெறுகிறான். எல்லா உயிர்க்கும் இன்னமைதி அவன் உள்ளம் இந்த இன்னமைதியின் ஒருகூறாய் உலகுடன் ஓர் இனிய உள்ளுலகாய் இயங்குகிறது. முடிந்த அம்முடிவில், நிறைந்த அந்நிறைவில் மிதந்து, ஆடாமல் அசை யாமல், விரையாமல் அமைதியுடன் அவன் உலகெலாம் இன்பம் பரப்பி இயக்கி இன்பத்தில் இழைகிறான். இன்ப உருஎய்தி இன்ப உருவாம் கடவுளொளியின் ஒரு கதிராய் இயங்குகிறான். அடிக்குறிப்புகள் 1. “Such is the Law which moves to righteousness, Which none at last can turn aside or stay; The heart of it is Love, the end of it Is peace and consummation sweet. Obey.” - The Light of Asia. 2. “So haply, when thy task shall end, The wrong shall lose itself in right, And all thy week-day Sabbaths blend With the long Sabbath of the Light.” - Whittier.. அப்பாத்துரையம் - 29 (110 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு) மொழிபெயர்ப்பு  பேரின்பச் சோலை ஆசிரியர் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற்குறிப்பு அப்பாத்துரையம் - 29 ஆசிரியர் முதுமுனைவர். இரா இளங்குமரனார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2017 பக்கம் : 16+320 = 336 விலை : 420/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: நடயஎயணாயபயவேஅ@பஅயடை.உடிஅ  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 336  கட்டமைப்பு : இயல்பு  படிகள் : 500   நூலாக்கம் : கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  நுழைவுரை தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர். பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம். தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும். தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம். தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார். அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன. இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும். தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள் கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர் திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன், திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர். இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய `கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும் `சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி. நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். “ஆக்கத்தை எனக்கிந் நாட்டார் அளித்திட்ட அறிவை யெல்லாம் தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே செலவிடக் கடமைப் பட்டேன்.” - பாவேந்தர் கோ. இளவழகன் தொகுப்புரை மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்! இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின. “அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார். பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார். சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன. - தனித்தமிழ் இயக்கத் தோற்றம் - நீதிக் கட்சி தொடக்கம் - நாட்டு விடுதலை உணர்ச்சி - தமிழின உரிமை எழுச்சி - பகுத்தறிவு விழிப்புணர்ச்சி - இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர் - புதிய கல்வி முறைப் பயிற்சி - புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம் இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன. “தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது! அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்! பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, - உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல். - தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல். - தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல். - தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல். - திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல். - நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல். இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது. பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது. உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன. 1. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு 2. வரலாறு 3. ஆய்வுகள் 4. மொழிபெயர்ப்பு 5. இளையோர் கதைகள் 6. பொது நிலை பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும். இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின் உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன. கல்பனா சேக்கிழார் நூலாசிரியர் விவரம் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இயற்பெயர் : நல்ல சிவம் பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989 பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி) உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர் மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி பள்ளிக் கல்வி : நாகர்கோவில் கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம் : இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி `விசாரத்’, எல்.டி. கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி) நூல்கள் : 120 (ஆங்கிலம், 5) இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை. பணி : - 1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர். - 1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர். - பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு. - 1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி - 1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர். - 1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர் அறிஞர் தொடர்பு: - தொடக்கத்தில் காந்திய சிந்தனை. - 1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு விருதுகள்: - மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது, - 1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் `சான்றோர் பட்டம்’, `தமிழன்பர்’ பட்டம். - 1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் `கலைமாமணி’. - 1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய `திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம். - மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய `பேரவைச் செம்மல்’ விருது. - 1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர். - 1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார். - இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது `தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது. பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்: - அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005. - பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007. பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் `உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். தொகுப்பாசிரியர் விவரம் முனைவர் கல்பனா சேக்கிழார் பிறந்த நாள் : 5.6.1972 பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர் இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். ஆற்றியுள்ள கல்விப்பணிகள் - அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி. - திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு. - புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர். - பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். - பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார். - 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். - மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார். - இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார். - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார். நூலாக்கத்திற்கு உதவியோர் தொகுப்பாசிரியர்: முனைவர் கல்பனா சேக்கிழார் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திரு ஆனந்தன் திருமதி செல்வி திருமதி வ. மலர் திருமதி சு. கீதா திருமிகு ஜா. செயசீலி நூல் வடிவமைப்பு: திருமதி கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) திருத்தத்திற்கு உதவியோர்: பெரும்புலவர் பனசை அருணா, திரு. க. கருப்பையா, புலவர் மு. இராசவேலு திரு. நாக. சொக்கலிங்கம் செல்வி பு. கலைச்செல்வி முனைவர் அரு. அபிராமி முனைவர் அ. கோகிலா முனைவர் மா. வசந்தகுமாரி முனைவர் ஜா. கிரிசா திருமதி சுபா இராணி திரு. இளங்கோவன் நூலாக்கத்திற்கு உதவியோர்: திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன் அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14. பொருளடக்கம் 1. நற்றொடக்கம் ... 6 2. சிறு கடப்பாடுகளும் கடமைகளும் ... 23 3. இன்னல் இடர்தாண்டுதல் ... 51 4. சுமை நீக்கம் ... 70 5. புறந்தெரியாச் சிறு தியாகங்கள் ... 98 6. ஒத்துணர்வு ... 132 7. மன்னிக்கும் பண்பு ... 160 8. தீங்கு நாடாமை ... 178 9. நீடின்பம் ... 215 10. மோனநிலை ... 231 11. தனிமை ... 246 12. தற்சார்புநிலை ... 267 13. வாழ்வின் எளிய சிறு அமைதிகள் பற்றிய நுண்ணறிவு ... 280 14. இன்ப முடிவு ... 309