தென்னாடு முதற் பதிப்பு - 1954 இந்நூல் 2006 இல் மலர் நிலையம், சென்னை - 1. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. 1 . தென்னாடு உலகின் பழம்பெரு நாடுகளில் தென்னாடு ஒன்று. அதுவே மனித இனத்தின் பிறப்பிடம் என்று மண்ணூலார் சாற்றுகின்றனர். வரலாறு தரும் சான்றுகள் இந்நாட்டுக்குத் தனிப்பெருஞ் சிறப்புக்களை வழங்குகின்றன. பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக, இந்நாடே மனித நாகரிகத்தின் தொட்டிலாகவும், வளர்ப்புப் பண்ணையாகவும் இருந்திருக்கிறது. தென்னாட்டின் முழு வரலாறு இது வரையில் தொடர்ச்சி யாக எழுதப்படவில்லை. அதன் தொடக்கக் காலம் இன்னும் வரலாற்றுக்கு எட்டததாகவே இருக்கிறது. எனினும், இக்காலப் புதை பொருள் ஆராய்ச்சிகளால், அதன் பழம் பெருமைகள் அறிவுலகுக்குப் படிப்படியாக விளக்கமடைந்து வருகின்றன. இன்றைய நாகரிக நாடுகளின் வரலாறுகளெல்லாம் சென்ற இரண்டாயிர ஆண்டுகளுக்கு உட்பட்டவையே. ஆனால், இந்நாடு களில் வரலாறுதோன்றுவதற்கு முன்பே, கிரேக்க உரோம நாகரிகங்கள் தலைசிறந்து விளங்கின. இவற்றின் காலம் 1கி.மு. 1000-க்கும் கி.பி. 500-க்கும் இடைப்பட்ட 1500 ஆண்டுகள் ஆகும். தென்னாட்டு நாகரிகத்திற்கும், கிரேக்க உரோம நாகரிகங் களுக்கும் பலவகைத் தொடர்புகள் இருந்தன. கிரேக்க உரோம நாகரிகங்களைவிடத் தென்னாடே பழமை வாய்ந்தது என்பதற் குரிய சான்றுகள் காணப்படுகின்றன. ஆயினும், கிரேக்க உரோம நாகரிகங்கள் வரலாற்றின் பழங்கதைகளான பின்னும் தென்னாடு இன்றும் நின்று நிலவுகின்றது. நாகரிகப் பழமை பழம் பொருள் ஆராய்ச்சி மூலம் கிரேக்க உரோம நாகரிகங்களுக்கு முற்பட்ட நாகரிகங்கள் பல இருந்தன என்று அறிகிறோம். இவற்றிற்குரிய சான்றுகள் 2எகிப்து, பாலத்தீனம், சால்டியா, பாபிலோன், சிறிய ஆசியா, சுமேர், ஏலம் முதலிய நாடுகளிலும், சிந்து வெளியில் கிடைத்துள்ளன. இவை யாவும் தென்னாட்டுடன் கூடிக் குலாவிய தோழமை நாகரிகங் களேயாகும். இவற்றின் பழமை கி.மு. 3000 வரை, அதாவது ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். தென்னாட்டின் முழுப்பழமை இன்னும் அறியப்படாவிட்டாலும், அது மேற்கூறிய நாடுகளை விடப் பழமையானது என்று திண்ணமாக அறிய முடிகிறது. சிந்துவெளி நாகரிகம் சிறப்பிலும் பழமையிலும் முற்கூறிய நாடுகளை விட முற்பட்டதாகக் காணப்படுகிறது. கி.மு. 4000-லும், அதற்கு முற்பட்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவும், சிந்துவெளி நாகரிகம் நிலவியிருந்தது என்று பழம் பொருள் ஆராய்ச்சியாளர் குறிக்கின்றனர். நடு உலகெங்கும் பரவிப் பெருமையுடன் விளங்கிய இப் பழம்பெரு நாகரிகங்களில் தென்னாட்டு நாகரிகம் ஒன்றே நின்று நிலைத்துள்ளது. மற்றவை யாவும் ‘மண்ணிற் புதையுண்ட. நாகரிகங்களாய் விட்டன. மாண்ட இப்பழம் பெரு நாகரிகங்களின் மாளாக்கன்னி இளஞ்செல்வமாகத் திகழ்வது நம் நாடேயாகும்.’ ஒரே நிலம் தென்னாடு உலகின் பழம்பெரு நாடுகளில் ஒன்று என்பது மட்டும் அன்று; அது இயற்கையன்னையின் முதல் மாநிலக் கன்னியாகவும் இருந்தது. இமயம் உண்டாவதற்கு நூறாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பும், சிந்து கங்கை ஆறுகளும் அவற்றின் சமவெளிகளும் தோன்றுவதற்குப் பன்னூறாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரும் தென்னாடு ஒரு முழு மாநிலமாக இருந்தது. இமயமலையின் சரிவுகளிலும், உச்சிகளிலும் புதையுண்ட மீன் எலும்பு, சங்குசிப்பி, உறைந்த கடற்பாசி ஆகியவற்றின் சின்னங்கள் இன்றுங் காணப்படுகின்றன. இதனால் அம்மலை ஒரு சமயம் மிகப்பெரிய கடலின் அடிநிலமாய் இருந்து, உள்நிலக் கிளர்ச்சியால் மேல் எழுந்து மலையாயிற்று என்பது தெரிகிறது. கடல், மலையான பிறகு, அதிலிருந்து கானாறுகளாய் எழுந்த கங்கை, சிந்து பிரமபுத்திரா ஆகிய நீரோட்டங்களால் அடித்துக் கொண்டு வரப்பட்ட வண்டல் மண், மாகடலைப் பின்னும் தூர்த்து, சிந்து கங்கை சமவெளியைத் தோற்றுவித்தது. இம்மாறுதலால் தென்னாட்டுடன் இச்சமவெளிகள் தொடர்பு பெற்றன. தென்னாட்டோடு இச்சமவெளிகளையும் சேர்த்து இந்தியா என்று நில இயலார் இன்று வழங்குகின்றனர். தென்னாட்டின் தென்பாலுள்ள மாகடலில் பல தீவுகள் இருக்கின்றன. இப் பெருங்கடல் முன்பு தென்னாட்டின் தொடர்ச்சியான ஒரு மாபெருங் கண்டமாயிருந்தது. தென் ஆப்பிரிக்கா, பர்மா, மலாயா, கிழக்கு இந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா, வடமேற்கு அமெரிக்கா ஆகிய நிலப் பகுதிகள் இக்கண்டத்துடன் முன்பு ஒட்டிக் கிடந்து, பின் பிளவுபட்டுச் சிதறிப் போயின என்று மண்ணூலார் குறிக்கின்றனர். இம்மாபெரு நிலப்பகுதியைத் தமிழ்மரபு குமரிக்கண்டம் என்று வழங்குகின்றது. ஆராய்ச்சியாளர் இதனை “இலெமூரியா” என்று குறிக்கின்றனர். உயிரினங்கள் முதன் முதல் இங்கேயே தோன்றின. மனித இனத்துக்கும் அதனை அடுத்த உயிரினமாகிய குரங்கு இனத்துக்கும் பொது மூல இனமான ‘இலெமு’ இம் மாநிலத்தின் சிதறிய பகுதிகளிலேயே வாழ்ந்திருந்ததாகத் தெரிகிறது. மனித இனம் இங்கே தோன்றிய பின்னரே, இமயமலையும் சிந்து கங்கை சமவெளியும் தோன்றின. அவற்றின் வழியாக மனித இனம் உலகின் உட்பகுதியிலும் பரந்தது. பழைய நடுமாகடலின் எஞ்சிய ஒரு பகுதியே இன்று ஐரோப்பாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையேயுள்ள குறுகிய 3‘நடு நிலக்கடல்’ ஆகும். சகாரா, அராபியா, இராஜபுதனம் ஆகிய பாலைவனங்கள் பழைய நடுப் பெருங்கடலில் நீர்வற்றிய மணற் பரப்புகளேயாகும். அக்கடலின் உப்பு நீர் இராஜபுதனத்தில் இடைக்காலத்தில் உப்பு ஏரியாய் இருந்து, இப்போது உப்புப் பாறைகளாக உறைந்து கிடக்கின்றது. தென்னாட்டின் அடிநிலம் பெரும்பாலும் நெருப்புப் பாறையாகவே இருக்கிறது. நில உலகம் ஒரே நெருப்புப் பிழம்பாயிருந்து புறத்தோடு கெட்டியான காலத்திய பாறை இது. அக்கால எரிமலைகள் கக்கிய அடிநிலக் குழம்புகளும் இதே அழற்பாறைகளே. தென்னாட்டிலும் மற்ற இலெமூரியாக் கண்டப் பகுதிகளிலும் நாம் ஒரே வகைப் பாறைகளையும், ஒரேவகை உயிர்செடி இனச் சின்னங்களையும் காண்கிறோம். காவிய ஏடு தென்னாடு, நிலஉலக வளர்ச்சி, உயிரின வளர்ச்சி மனித இனவளர்ச்சி ஆகிய இயற்கையின் பல படிமுறை வளர்ச்சிகளைப் படலம் படலமாகத் தொகுத்து எடுத்துக்காட்டும் ஒரு பெருங் காவிய ஏடாகத் திகழ்கின்றது. தென்னாடு என்ற பெயர் எப்போது என்ன பொருளில் வழங்கத் தொடங்கிற்று என்று வரையறுத்துக் கூறமுடியாது. ‘தென்’ என்ற சொற்பகுதி தெற்குத் திரையைக் குறிக்கக்கூடும்; இனிமை என்ற பொருளையும் குறிக்கக்கூடும். இவற்றுள் முந்திய பொருள் எது என்று கூற முடியாவிட்டாலும், இருபொருளும் தொடர்புடையன என்பது மட்டும் உறுதி. தென்னாட்டின் தென்கோடியிலுள்ளது தமிழகம். அதில் வழங்கும் தமிழ்மொழி, தென்மொழி என்று அழைக்கப் படுகிறது. தமிழகத்தின் தென்கோடியிலுள்ள பாண்டி நாடு வரலாற்றுக் காலத்திலும் ‘தென்னாடு’ என்றே குறிப்பிடப் பட்டது. ஆகவே தென்னாடு என்ற பெயர் தெற்கிலிருந்து பரந்து வளர்ந்த ஒரு நாகரிக நாட்டைக் குறிப்பது என்று கூறத்தகும். வடதிசையில் மற்ற நாகரிகங்கள் புதிதாகத் தோன்றி வளர்ந்தபின், தென்னாடு என்ற இப்பெயரே வடநாடு, வடமொழி ஆகியவற்றினின்று இதனைப் பிரித்தறியவும் உதவியிருக்கக் கூடும். அதே சமயம் ‘தென்’ என்ற சொல்லின் மற்றப்பொருளும் தென்னாட்டு வாழ்வில் வேரூன்றிய பொருளேயாகும். அது ‘தேன்’ என்ற சொல்லுடன் தொடர்புடையது. தென்னாட்டி லுள்ள எல்லா மொழிகளின் பெயர்களும் இதே பொருளை உடையதாயிருக்கிறது என்று காணலாம். ‘தமிழ்’ என்ற பெயர் ‘இனிமை’ என்ற பொருளில் தமிழிலக்கியத்தில் வழங்குகின்றது. ‘தெலுங்கு’ என்ற பெயரின் பழைய வடிவம் ‘தெனுகு’ என்பதே. இது ‘தேன் போன்ற மொழி’ என்ற பொருளிலேயே வழங்கிற்று. இது போலவே ‘கன்னடம்’ என்ற சொல் ‘கரும்பு’ என்ற பொருள் தரும் ‘கன்னல்’ என்ற பகுதியின் திரிபேயாகும். மலையாளம் ‘மலையம்’ அதாவது ‘தென்றல்’ என்ற சொல்லி லிருந்தும், துளுவம் ‘துளி’ அதாவது, தேன் துளியிலிருந்தும், குடகம் என்பது ‘குடம்’ அல்லது ‘குளம்’ அதாவது ‘சருக்கரை’ யிலிருந்தும் பிறந்த சொற்களேயாகும். தென்னாட்டுக்குத் ‘தமிழகம்’ என்ற பெயரும் ‘திராவிடம்’ என்னும் பெயரும் பண்டைக் காலத்திலிருந்தே வழங்கியிருந்தன என்று அறிகிறோம். கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே ‘வெள்ளைத் தீவு’ (மங்களூர்) முதல் மரக்காணம் (சதுரங்கப் பட்டினம்) வரையுள்ள கடற்கரைப் பகுதியைக் கிரேக்கர் `தமிரிகா’ அல்லது `தமிழகம்’ என்று அழைத்தனர். கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்பே முற்றுவிக்கப்பட்ட சமஸ்கிருத புராணங்கள் இப்பகுதியைத் திராவிடம் என்று கூறின. இதனைத் தமிழகம் என்பதன் சிதைவு என்று சிலரும். ‘திருஇடம்’ என்பதன் ‘மரூஉ’ என்று சிலரும் எண்ணுகின்றனர். ஸ்பெயின் நாட்டிலும் பண்டைய ஃவிரான்சு, பிரிட்டன் நாடுகளிலும் இருந்த ‘துருயித இனத்தவருடன்’ தென்னாட்டவர் கொண்டிருந்த தொடர்பை இச்சொல் காட்டுகிறது எனக்கொள்வர் ‘திருத்தந்தை ஹீராஸ் என்ற அறிஞர்’. நாட்டின் எல்லை தென்னாடு இயற்கையெல்லைகளையுடைய மாநிலம். அது தெற்கு நோக்கிய முனையுடைய ஒரு முக்கோண வடிவில் அமைந் திருக்கிறது. வடக்கே விந்தியமலை அதன் நில எல்லையாகவும், நில அரணாகவும் இருக்கிறது. அதனை அடுத்துள்ள மேட்டு நிலமும் காடுகளும், அதற்கு இப்பாலுள்ள சாத்பூரா மலையும், நருமதை, தபதி ஆறுகளும் விந்தியமலை யரணுக்கு அரண் செய்பவை ஆகின்றன. முக்கோணத்தின் மேற்கிலும் கிழக்கிலும் அரபிக்கடல் வங்க விரிகுடா ஆகியவையும், தென்முனையாகிய குமரியின் தெற்கே இந்துமா கடல் என்று வழங்கும் குமரி மாகடலும் நீரரண்களாய் உதவுகின்றன. குமரி முனைக்குச் சற்றுத் தென்கிழக்கே ஈழத்தீவு அல்லது இலங்கை கிடக்கின்றது. இருபது கல் கி.மீ. தொலைவே அகலமுள்ள பாம்பன் கால்வாய் ஈழத்தைத் தென்னாட்டிலிருந்து பிரிக்கிறது. அதே சமயம் இராமேச்சுரம் மன்னார் முதலிய பல சிறிய தீவுகளும் மணல் திட்டுக்களும் தென்னாட்டுடன் அதை இணைப்பவையாய் உள்ளன. தென்னாட்டுடன் இலங்கை, நில இயலில் மட்டுமின்றி, வரலாற்றிலும் மிக நெருக்கமான தொடர்புடையது. உண்மையில் அது தென்னாட்டின் ஒரு கடல் கடந்த பதிப்பேயாகும். அதன் வடபகுதியில் தென்னாட்டு மொழிகளில் ஒன்றான பழந்தமிழும், தெற்கில் அதற்கு இனமான சிங்களமொழியும் பேசப்படுகின்றன. தென்னாட்டின் மேல் கரையிலிருந்து தென்மேற்காக இலக்கத் தீவுகள், மினிக்காய்த் தீவுகள், மாலத்தீவுகள், மோரிசு ஆகிய தீவுக் கூட்டங்கள் இருக்கின்றன. இவை இந்நாட்டை ஆப்பிரிக்காவுடன் தொடர்பு படுத்துகின்றன. இதுபோலவே கிழக்குக் கரையின் கிழக்கேயும், தென் கிழக்கேயும் அந்தமான், நிக்கோபார் (நக்காவரம்) ஆகிய தீவுகள் இருக்கின்றன. இவை தென்னாட்டைப் பர்மாவுடனும், மலாயா இந்துசீனா ஆகிய நாடுகளுடனும் தொடர்புபடுத்த உதவுகின்றன. மலாயாவை அடுத்துள்ள கிழக்கிந்தியத் தீவுக்கூட்டங்கள் இம்மாநிலத்தை ஆஸ்திரேலியாவுடனும் அமெரிக்காவுடனும் தொடர்பு படுத்துகின்றன. இக்கடலகத் தொடர்புகள் பண்டைக் குமரிக் கண்டத் தொடர்பை நினைவூட்டு வனவாகும். பண்டைக் குமரிக்கண்டத் தொடர்புகள் நில இயல், மண்ணூல் சார்ந்த தொடர்புகள் மட்டுமல்ல; இன்று இப்பரப்பு முழுவதிலும் தொழில், வாணிகம் ஆகியவற்றின் காரணமாகத் தென்னாட்டுத் தமிழர் பரந்து குடிபுகுந்துள்ளனர். இது இக்காலப் புதுத் தொடர்பு மட்டுமன்று. முற்காலங்களில் கலிங்கர் அதாவது தெலுங்கர் இப்பகுதியில் குடியேறி யிருந்ததனாலேயே, இன்றும் தென்னாட்டினர் இப்பகுதிகளில் ‘கிளிங்கு’ கள் என்று அழைக்கப்படுகின்றனர். தமிழகக் கரையிலும் தெலுங்கு நாட்டுக் கரையிலும் உள்ள மக்கள் கடலோடிகளாய் இருந்ததனால், அவர்களுக்குத் திரையர் என்று பெயர் வழங்கப்பட்டிருந்தது. தொண்டைமான்கள், குறும்பர், சளுக்கர், பல்லவர், ஆந்திரர் ஆகியவர் இத்திரையர் மரபினரே என்று கூறத்தகும். குமரிமுனை தென்னாட்டின் கரை மையமாகவும் குமரி மாகடலின் தலைமையாகவும் அமைந்துள்ளது. தென்னாடும் கடலுலகின் மைய இடத்தில் நில உலகின் நடுநாயக நாடாக அமைந்திருக்கிறது. இதனைச் சூழக்கடலகத்தில் திட்டுக்களும் தீவுகளும் உள்ளன. தென்னாட்டினரைப் பண்டை நாளிலிருந்தே நாகரிக உலகத்தின் கடலோடிகளாகவும், கடல் வாணிகராகவும் ஆக்கியது இவ்வமைப்பே. தென்னாட்டுப் பேரரசர் பலர் கடல் கடந்த நாடுகளில் சிறப்பாகக் குமரிக் கண்டப் பகுதிகளில் தம் பேரரசைப் பரப்பினர். வாணிகமும், குடியேற்றங்களும் மிகுந்தன. தென்னாட்டுப் பேரரசுகள் இங்ஙனம் கடற்பேரரசுகளாய் இருந்த தனாலேயே, அவர்களிடம் வலிமை வாய்ந்த கடற் படைகள் இருந்தன. தென்னாட்டின் மேல்கடற்கரை 8004 கல்(1280 கி.மீ.) நீளமும், கீழ்க் கடற்கரை 1100 கல் (1760 கி.மீ.) நீளமும் உடையது. எனவே இந்நாட்டின் மொத்தக் கடற்கரை நீளம் 1900 கல்(3040 கி.மீ.), அதாவது கிட்டத்தட்ட2000கல் (3200 கி.மீ.), ஆகும். இதில் கீழ்க்கரையில் விசாகப்பட்டினம், மசூலிப் பட்டினம், காக்கினாடா, சதுரங்கப் பட்டினம், சென்னைப் பட்டினம், பாண்டிசேரி, நாகப்பட்டினம், தூத்துக்குடி ஆகிய துறைமுகப் பட்டினங்களும், மேற்குக்கரையில் குளைச்சல், ஆலப்புழை, கொச்சி, கள்ளிக் கோட்டை, மங்களூர், கோவா முதலிய துறைமுகப் பட்டினங்களும் உள்ளன. பம்பாய், சூரத் ஆகிய துறைமுகங்களும், நில இயல் முறைப்படி தென்னாட்டைச் சேர்ந்தவையே. பண்டைக் காலத்தில் கலிங்கப்பட்டினம், மரக்காணம், மல்லை (மாமல்லபுரம் அல்லது மகாபலிபுரம்), புகார் (காவிரிப்பூம்பட்டினம்), சோழன் தொண்டி, பெருந்துறை, காயல், கொற்கை, உவரி, விழிஞம், சேரன் தொண்டி, வஞ்சி, முசிறி ஆகிய துறைமுகங்கள் தென்னாட்டில் ஆக்கமுற்று இருந்தன. இவற்றுள் பல நகரங்கள் மேலை உலக வாணிகமும், கீழை உலக வாணிகமும் வந்து கூடும் கடல் வாணிகத் துறைகளாயிருந்தன. கடற்கரையும் கடலும் வாணிகத்துக்கு மட்டுமே உதவுபவை அல்ல. அவை உப்பு, மீன், மீனெண்ணெய், பவளம், முத்து, சங்கு, சிப்பிகள் ஆகிய கடல் தரு செல்வங்களையும் தருகின்றன. முதன் முதலில் கடலில் மூழ்கி முத்தும் சங்கும் எடுத்தவர்கள் தென்னாட்டுத் தமிழரே. சங்கறுத்து வளையல் முதலியன செய்தல் இரண்டாயிர ஆண்டுகட்கு முற்பட்டே தமிழகத் தொழில்களுள் ஒன்றாயிருந்தது. முத்துக்குளித்தல் இன்றளவும் தென்னாட்டின் தனிச் சிறப்புத் தொழில் ஆகும். பாரசிகக் குடாவிலும், பண்டைக் கொற்கையின் அருகே யுள்ள தூத்துக்குடிப் பகுதியிலும் தான் இன்றும் முத்து எடுக்கப்படுகின்றது. தென்னாட்டில் வடக்கேயுள்ள விந்தியா, சாத்பூரா மலைகளை யல்லாமல், மேல்கரையோரமாக மேற்கு மலைத் தொடரும். கீழ்க்கரை யோரமாகக் கிழக்கு மலைத்தொடரும் உள்ளன. மேல் தொடருக்கும் கடலுக்கும் இடையே ஐம்பது கல்லுக்கும் (80 கி.மீ.) குறைந்த அகலமுடைய கடல் தீரம் இருக்கிறது. கீழ்த்தொடரோ கடலிலிருந்து நூறுகல் (160 கி.மீ.) வரை அகன்றும், தென்கோடியில் முற்றிலும் விலகி மேல் தொடருடன் இணைந்தும் கிடக்கிறது. இதனால் தென்கோடியில் கிழக்குக் கரைத் தீரம் முந்நூறு கல்லுக்கு (480 கி.மீ.க்கு) மேல் அகலமுடையது. விந்திய மலைக்கும் இரு தொடர்களுக்கும் இடையேயுள்ள பகுதி ஒரே பெரிய மேட்டு நிலமாகும். இதன் வடபகுதி தெக்காணம்; தென் பகுதி மைசூர். கடலின் நீர்வளத்தை மலைகள் மழை வளமாகவும் ஆற்று வளமாகவும் மாற்றுகின்றன. 8000 (2,40,000 செ.மீ.) அடிவரை உயர முள்ள மேல்தொடரே இவ்விரு வளங்களையும் மிகுதியாகத் தருகிறது. மேல்கரைக்கு இது 80 அங்குலத்துக்கு (195 செ.மீ.க்கு) மேற்பட்ட மழையைத் தருகிறது. மற்றப் பெரும் பகுதிக்கு அது கோதாவரி, கிருஷ்ணா, வடபெண்ணை, பாலாறு, தென்பெண்ணை, காவிரி, வைகை, தண்பொருநை (தாமிரவருணி) ஆகிய பேராறுகளை வழங்கியுள்ளது. அத்துடன் அது மேல்கரைக்குப் பல சிறு கானாறுகளையும் பொன்னானி, பெரியாறு போன்ற பெரிய ஆறுகளையும் தருகிறது. விந்தியா, சாத்பூரா மலைகள் நருமதை, தபதி, மகாநதி முதலிய ஆறுகளை வழங்குகின்றன. மேல்தொடரும், விந்திய மலையும், மற்ற மலைகளும் மிகுந்த காட்டு வளம் உடையன. மேல் தொடரிலுள்ள சந்தனமும் தேக்கும். பண்டு முதல் இன்றுவரை இந்நாட்டுக்கே உரிய தனிச் செல்வங்கள் ஆகும். தோதகத்தி, கருங்காலி, ஈட்டி, தேயிலை, காப்பி, இரப்பர், சிங்கொனா, தேன், அரக்கு, யானைத் தந்தம் ஆகிய மலை வளங்களும் இதில் மிகுதி. புதை பொருட் செல்வம் தென்னாடு புதைபொருட் செல்வங்களை மிகுதியாக உடையது. தங்கம், செம்பு, இரும்பு ஆகிய உலோகங்களும், நிலக்கரி, அப்பிரகம், மானோசைட் ஆகியவைகளும், கண்ணாடிக் குரிய களிமண், பாண்டங்களுக்குரிய பசுமண், பசைமண் (சிமிட்டி), கற்பலகை ஏடுகள், சுண்ணாம்பினக் கற்கள், கட்டடக் கற்கள், பாதை செப்பனிடும் கற்கள் ஆகியவையும், வைரம் முதலிய ஒளிக் கற்களும் ஏராளமாகக் கிடைத்து வருகின்றன. இவற்றுள் பல, உலகில் வேறெங்கும் அகப்படாத தென்னாட்டுத் தனிச் செல்வங்கள் ஆகும். நாட்டின் தொழிலாற்றலைப் பெருக்குவதற்கு உயிர்நிலைப் பொருள்களான இரும்பும் நிலக்கரியும் மேட்டு நிலங்களில் ஏற்கெனவே கண்டெடுக்கப்பட்டுள்ளன. கிழக்குக் கரையின் தென் பகுதியாகிய தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்திலும் தென்னார்க்காடு மாவட்டத்திலும் இவை இப்போது பேரளவில் கிடைக்கின்றன. புதை செல்வச் சேம வைப்பீட்டில் தென்னாடு உலகில் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இணையான வளமுடையது என்று அரசியலார் கணிப்பே மதிப்பிடுகிறது. தங்கம், வெள்ளி ஆகிய உலோகங்களை வெட்டி எடுக்கும் சுரங்கத் தொழிலில், உலகிலேயே முதன்முதலாக ஈடுபட்ட வர்கள், தென்னாட்டின் பழங்குடி மக்களேயாவர். இன்னும் இத்தொழிலிலும் முத்துக் குளிப்பிலும் தென்னாட்டு மக்களே மிகப் பெரிதும் பயன்படுத்தப் பெறுகின்றனர். 5ஃவினீசியர், தென்னாட்டினர் ஆகிய இரு இனத்தவரைத் தவிர வேறு எந்தப் பழங்கால மக்களுக்கும் இந்தச் சுரங்கத் தொழில் அந்நாளில் தெரிந்திருக்கவில்லை. உலகில் முதன்முதலாக வைரங்கள் கோல்கொண்டா பகுதியில் கண்டெடுக்கப்பட்டதால், மேனாடுகளில் சிறந்த வைரங்கள் கோல்கொண்டாக்கள் என்றே அழைக்கப்பட்டன. இப்பகுதியே தமிழகத்தின் வட எல்லையையும் தெலுங்கு நாட்டின் தென் எல்லையையும் உட்கொண்ட இராயலசீமாப் பகுதி ஆகும். நெடுங்காலமாக வைரத்துக்குத் தென்னாடும், மாணிக்கத்துக்கு இலங்கையும் உலகின் தனி முதலிடங்களாக இருந்தன. வைரங்கள் ஆப்பிரிக்காவிலும்; தங்கம் ஆஸ்திரேலியா விலும், ஆப்பிரிக்காவிலும் வெள்ளி அமெரிக்காவிலும் பேரளவில் அகப்பட்ட பின்னரே உலகில் அவற்றின் மதிப்பு சற்று இறங்கத் தொடங்கிற்று. பண்டு, மலையாளக்கரை ஒன்றிலேயே ஏலம், மிளகு, கிராம்பு, சாதிக்காய், சாதிபத்திரி ஆகிய மணச்சுவைப் பொருள்கள் பேரளவில் விளைவிக்கப்பட்டன. தென்னாட்டுக்குப் பெருமையும் பெருஞ் செல்வமும் தரக் காரணமாயிருந்தது அதன் பழைய மிளகு வாணிகமேயாகும். இன்றும் கிழக்கிந்தியத் தீவுகளுடன் அத்துறையில் உலக வாணிகத்துக்குத் தென்னாடே மூலதளமாக இயங்குகிறது. தென்னாட்டின் பேராறுகளும், சிற்றாறுகளும், அவற்றிலிருந்து செயற்கையாக வகுக்கப்பட்ட அணைகள், கால்வாய்கள், நீர்த் தேக்கங்கள், நீர் மின்சாரத் திட்டங்கள் ஆகியவையும், வேளாண்மை, தொழில்ஆக்கம், நீர்ப்போக்கு வரத்து, வாணிகம் ஆகிய பல்வேறு வாழ்க்கைத் துறைகளுக்குப் பயன்படுகின்றன. சென்னை, பெங்களூர், கோயமுத்தூர், மதுரை போன்ற மாநகரங்களுக்கு நீர் மின்சாரத் திட்டங்களே ஒளி விளக்கமும் இயந்திர ஆற்றலும் தருகின்றன. நீர் மின்சாரச் சேம வைப்பீட்டில் தென்னாடு அமெரிக்காவுடன் இணையான மதிப்புடையது. வான மழையை ஏரிகளாகத் தேக்கியும், அணைகள் கால்வாய்களாக வகுத்தும் வான் தரு வளத்துடன் கோல் தரும் வளத்தையும் முதன் முதல் பெருக்கும் வகை கண்டவர்கள் தமிழரே. தென்னாடு இயற்கை வளங்கள் வாய்ந்ததாகவும், அதனுடன் செயற்கை வளங்களுக்கான வாய்ப்பு நிறைந்ததாகவும் விளங்குகிறது. மொழிவழியே இனம் நில இயல் முறைப்படி தென்னாட்டின் வட எல்லை விந்திய மலை என்று மேலே குறித்தோம். ஆனால், வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் தென்னாட்டு மக்கள் சிந்து கங்கை சமவெளிகளிலும் பரந்து பல நாடு நகர்களை அமைத்து வாழ்ந்தனர். தென்னாட்டுப் பழங்குடி இனத்தவர் இச்சமவெளி களில் பல அயலினங்களுடன் கலந்து மாறுபட்டனராயினும், மலைப் பகுதிகளில் வடமேற்கிலும், வடக்கிலும், வடகிழக்கிலும் நடுமேட்டு நிலங்களிலும் பழங்குடி இனத்தவர் நாகரிகங்களும் அவர்கள் மொழிகளும் சிதறுண்டு கிடக்கின்றன. ஆகவே இன எல்லையில் தென்னாட்டுப் பழங்குடி இமயம்வரை பரந்து கிடக்கும் ஒன்றாகும். வடஇந்தியா என்று அழைக்கப்படும் இச்சமவெளிகளிலும், அதற்கு அப்பால் எகிப்து, சால்டியா முதலிய நாடுகளிலும், தென்னாட்டுப் பழங்குடி நாகரிகத்துக்கு இனமான நாகரிகங்கள் பரவியிருந்தன. ஆகவே, தென்னாட்டின் பண்டைய நாகரிக எல்லை இமயங் கடந்த ஒன்றாகும். அது இன்றைய கீழ்நாட்டு நாகரிகத்துக்கும், பண்டைய நடு உலக நாகரிகத்துக்கும் மட்டுமன்றிப் புதிய மேலைநாட்டு நாகரிகத்துக்கும் மூல முதல் அடிப்படையானது எனலாம். இக்காலங்களில் நில இயலையும் இன நாகரிக அடிப்படையையும்விட, மொழியே நாட்டின் அரசியல் எல்லையை வகுக்கப் பெரிதும் காரணமாயிருக்கிறது. உலகின் மிகப் பெரும்பான்மையான நாட்டுப் பிரிவுகளும் எல்லைகளும் பெரிதும் மொழியையே அடிப்படையாகக் கொண்டவை. தென்னாட்டிலும் நாட்டு எல்லை, மொழியடிப்படையாகவே வகுக்கப்படுதல் இயல்பு. ஆனால், மாழி அடிப்படையில் தென்னாட்டின் எல்லை நில இயல் எல்லையினும் சற்றுக் குறுகியதேயாகும். ஏனெனில், வடமேற்கிலிருந்து சிந்து கங்கை சமவெளியில் பரந்து பழங்குடி இனத்தவருடன் கலந்த அயலினங்களும், அயலின் மொழிக் கலவைகளும் தென்னாட்டில் வடகிழக்குக் கோடியில் ஒரு சிறிதும் வடமேற்கில் பெரிதும் புகுந்து அப்பகுதியிலுள்ள மொழிகளை வட இந்தியத் தொடர்பு மிகுந்தவை ஆக்கின. எனவே, மொழிச் சார்பில் தென்னாட்டின் வட எல்லை கோவாவிலிருந்து விந்திய மலையின் நடுப்பகுதி வரையிலும், அதிலிருந்து கஞ்சம் மாவட்டம் வரையிலும் உள்ள வளைகோடு ஆகும். தென்னாட்டு மக்கள் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பேசும் மொழிகள் திராவிட மொழிக் குடும்பமாக வகுக்கப்பட்டுள்ளன. விந்திய மலைப் பகுதியிலும், அதற்கு வடக்கேயும் தெற்கேயும் பல பண்படாத் திராவிட மொழிகள் உள்ளன. ஆனால், தென்னாட்டில் பெரும்பாலாகப் பேசப்படும் ஐந்து மொழிகளே சிறப்பு வகையால் திராவிட மொழிகளென்று அழைக்கப்பெறுகின்றன. ஏனென்றால், அவை கலையும் இலக்கிய வளமும் நிறைந்த பண்பட்ட மொழிகள். இம்மொழிகளுள் தென்கோடியில் தமிழும் மலையாளமும், வடபால் தெலுங்கும் கன்னடமும், இவற்றின் வடமேற்கு மூலையில் துளுவும் வழங்குகின்றன. நில இயல் அடிப்படையில் தென்னாட்டின் பரப்பு கிட்டத் தட்ட முந்நூறாயிரம் சதுர மைல். மக்கள் தொகை ஏறத்தாழப் பத்துகோடி. ஆனால், மொழி அடிப்படையிலும் அரசியலடிப் படையிலும் திராவிடமொழி பேசப்படும் தென்னாடு அல்லது திராவிட நாட்டின் பரப்பு இருநூற்றைம் பதினாயிரம் சதுர மைல் ஆகும். அதன் மக்கள் தொகை எட்டுக் கோடிக்கு மேலாகும். இதில் தமிழ் பேசுவோர் மூன்றுகோடி. தமிழ், திராவிடநாடு அல்லது தென்னாட்டுக்கு வெளியிலும் பேசப்படுகிறது. தெலுங்கு பேசுவோர் மூன்று கோடி; கன்னடம் பேசுவோர் ஒன்றே கால் கோடி; மலையாளம் பேசுபவர் முக்கால்கோடி; துளு பேசுவோர் பத்து நூறாயிரம். திராவிட மொழிகளில் அயலினச் சொற்களும் அயல் நாட்டு இலக்கியப் பண்புகளும் பின்னாட்களில் வந்து கலந்தன. ஆயினும், அவற்றின் அடிப்படைப் பண்புகள் இவற்றால் பாதிக்கப்படவில்லை. தவிர, இவ்வெல்லா மொழிகளும் அயலின மொழிகளைவிடக் கலைவளமும் இலக்கிய இலக்கண வளங்களும் பழம் பெருமையும் உடையவையாகவே இருக்கின்றன. திராவிடமொழி இலக்கியங்கள் யாவுமே ஆயிர ஆண்டு களுக்கு மேற்பட்ட பழம்பெருமை உடையவை. தமிழில் இவ்வெல்லை கடந்து இன்னும் ஆயிர ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழம்பேரிலக்கியம் உண்டு. உலக மொழிகளில் ஆயிரக்கணக் கான ஆண்டு தொடர்ச்சியான இலக்கிய வளர்ச்சியுடைய மொழிகள் திராவிட மொழிகளும் சீன மொழியு மட்டுமே என்பது குறிப்பிடத் தக்கது. திராவிடமொழிகளின் பழம்பெருமைக்கும், கலப்பில்லாத தூய மொழிவளம், இலக்கிய வளம், பண்பாட்டு வளம் ஆகியவற்றுக்கும் ஒரு சேம அருங்கலச் செப்பாக விளங்குவது தமிழ் மொழியே. தென்னாட்டிலிருந்து முதன்முதல் வெளியேறிச் சென்ற மக்கள் இனம் 6ஃவின்னியர், சுவீடியர், ஹங்கேரியர் ஆகியவர்களே. இவர்கள் வடமேற்கு ஐரோப்பாவிலும் நடு ஐரோப்பாவிலும் வாழ்கின்றனர். இவர்களையடுத்துப் பல நாடோடி இனத்தவர்கள் சென்று அவர்களை நெருக்கித்தள்ளினர். நாகரிகமுற்ற மனித இனம் இதற்குத் தெற்கேயுள்ள நடு உலகில் பரவிற்று. எனவே, நடு உலகில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் மனித நாகரிகம் உச்ச அளவு வளர்ச்சியடைந்து தழைத்தோங்கியிருந்தது. அதன் சுவடுகள் வடஆப்பிரிக்கா, தென்ஐரோப்பா, தென் ஆசியா நாடு, அமெரிக்கா ஆகிய பகுதிகளில் இன்னும் காணப்படுகின்றன. இவ்வூழியை மனித நாகரிகத்தின் ஒரு பேரலையின் உச்சி முகடு என்னலாம். ஏனெனில், இதன்பின் இந்நாகரிகங்கள் அழிவுற்றன. நாகரிகமற்ற புதிய இனங்களின் புதிய வளர்ச்சி தொடங்கிற்று. கி.மு. 2000முதல் உலகின் வடதிசையில் உள்ள நாகரிகத்திற் பிற்பட்ட நாடோடி மக்கள் பேரளவில் பெருக்கமுற்று தெற்கு நோக்கி வந்து வளமான நாகரிகப் பகுதிகளைத் தாக்கினர். இத்தாக்குதல்கள் வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்தவை. முதலில் தாக்கிய மக்கள் இந்து-ஐரோப்பியர் அல்லது ஆரியப் பெருங் குழுவினர் ஆவர். இவர்கள் நாகரிகமடைந்த பின்னும், இவர்களைப் பின்பற்றி காத்தியர், விசிகாத்தியர், டேனியர், மங்கோலியர், தார்த்தாரியர், யூச்சி, குஷாணர், ஊணர் ஆகிய பல்வேறு இனத்தார் நாகரிக உலகத்துக்கு இரண்டாயிர ஆண்டு தொல்லை தந்து கொண்டே இருந்தனர். இந்து-ஐரோப்பியர்கள் நடு ஆசியப்பகுதியில் உள்ள ஆரிய. நாட்டில் வந்த பின்னரே ஆரியர் என்ற பெயருக்கு உரிய வராயினர். ஓரளவு தங்கல், குடியிருப்புக்களும் தற்காலிகப் பயிர்த் தொழிலும் கற்றனர். பழைய நாகரிகங்களின் வழிபாட்டின் மீது, அவற்றின் பண்புகளைத் தம் பண்பாக்கி இவர்கள் புதிய நாகரிகங்கள் அமைத்தனர். ஆரியர் என்ற பெயரை மேற் கொள்ளாமலே தென் ஐரோப்பாவில் இப்புதிய நாகரிகங்கள் கிரேக்க, உரோம நாகரிகங்களாகத் தழைத்தன. ஆசியாவில் பாரசீக நாகரிகமும் வரலாற்றுக் கால சிந்து கங்கைச் சமவெளியின் பிற்கால நாகரிகமும் கீழை இந்து-ஐரோப்பிய அல்லது ஆரிய இனத்தைச் சார்ந்தவை ஆகும். இந்தியாவில் ஆரியர் சிந்து ஆற்று வெளியில் ஏறத்தாழ கி.மு. 1500 முதலும், கங்கையாற்று வெளியில் கி.மு. 7ஆம் நூற்றாண்டி லிருந்தும் புதுவாழ்வு அமைத்தனர். நடு ஆசிய ஆரியரைக் காட்டிலும் சிந்துவெளி ஆரியர் நாகரிகத்தில் மேம்பட்டிருந்தனர். சிந்துவெளித் திராவிடரின் தொடர்பே இதற்குக் காரணமாகும். கங்கை வெளியில் வந்தபின் பழங்குடிப் பண்பாட்டுடன், இன்னும் மிகுதியாகக் கலந்து ஆரியர்கள் மேலும் சிறப்புற்றனர். இக்காலப் பண்பின் சுவடு இன்னும் சமஸ்கிருத மொழியில் காணப்படுகிறது. நாட்டுப் பெயர்கள் இன்னும் நாட்டார் பெயராகவே அம்மொழியில் இடம் பெறுவது காணலாம். கி.மு. 7 ஆம் நூற்றாண்டில்தான் ஆரியர் நிலையாகக் குடி வாழ்வும் நாடு நகர அமைப்பும் உடையவராயினர். தொடக்க காலங்களில் சிந்துவெளி ஆரிய நாகரிகமும், இடைக் காலங்களில் கங்கைவெளி ஆரிய நாகரிகமும் இந்திய ஆரிய நாகரிகங்களாகப் புகழ்பெற்றன. கங்கை வெளியில் புதிதாக ஆக்கப்பட்ட இந்திய ஆரிய இலக்கிய மொழியே சமஸ்கிருதம் அல்லது திருந்திய ஆரியமொழி என்று பெயர் பெற்றது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்குப்பின் கங்கை சிந்து சம வெளியிலுள்ள புதிய ஆரியக் கலவை மொழிகளின் பண்புகள் தென்னாட்டிலும் சிறிது சிறிதாகப் புகத்தொடங்கின. இவை சிந்து வெளியில் ஏற்பட்டது போன்ற குடியேற்றங்களாகவோ, கங்கை வெளியில் ஏற்பட்டது போன்ற அரசியல் படையெடுப்பு களாகவோ அமையவில்லை. அவை சிறுசிறு அளவிலேயே நடைபெற்றன. வடகிழக்கு, வடமேற்கு ஆகிய இரு இடங்களிலும் அவை ஒரியா, குசராத்தி, மராத்தி ஆகிய தென் ஆரிய மொழிகளை அதாவது தென் ஆரிய மொழிகளை அதாவது தென்னாட்டு ஆரிய மொழிகளை உண்டுபண்ணக் காரண மாயிருந்தன. மொழி வகையில் தென்னாடு முழுவதும் ஆரிய மொழிக் கலப்பு ஏற்படத் தொடங்கியது கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டி லேயேயாகும். இதனால் தென்னாட்டு மொழிகள் ஒன்றுக்கொன்று நாளடைவில் பலவகையாக வேறுபாடுற்றன. ஆயினும், அவற்றின் அடிப்படைப் பண்புகள் மாறாது நிலைபெற்றுவிட்டன. தமிழ் அவ்வடிப்படைப் பண்பை விடாது காத்துப் பேணி வளர்த்து வருகிறது. இங்ஙனம் பழமைச் சிறப்பு, புதுமைச் சிறப்பு, தொடர்ச்சி யான நீண்ட கலை நாகரிக வாழ்வு ஆகிய மூவகைச் சிறப்புக்களும் வாய்ந்தது நம் தென்னாடு. வருங்கால உலகிலும் அதற்குச் சீரிய இடம் இருக்கும் என்பது உறுதி. மனித நாகரிகத்தின் வளர்ச்சி அதன் வருங்காலத்தை நோக்கிய உயர்ச்சியாகும். ஆனால், வளர்ச்சிக்கு ஏற்ற நிலமாய் உதவுவது நிகழ்காலமே. பழைமை அவ்வளர்ச்சிக்குரிய வித்தாகும். பழைமையின் பண்பு அதாவது, நீடித்த வாழ்வின் படிமானமான இயற்கை அறிவு அவ்வளர்ச்சிக்கு உதவும் உரமாக அமைகின்றது. தென்னாட்டின் நீள் பழைமையும், இடையறா நீள் வளர்ச்சியும் உலக நாகரிகத்துக்கு நல்விதையாகவும், ஊட்ட மிகுந்த உரமாகவும் பயன்படத்தக்கன. அவற்றை நாம் பேணி வளர்க்கும் கடப்பாடு உடையவராவோம். வருங்கால உலக நாகரிகத்தின் வளர்ச்சியில் தென்னாட்டுக்கு மற்ற எல்லா நாடுகளோடொத்த சரிசம உரிமை உண்டு. ஆனால், அதன் கடமையும் பொறுப்பும் மற்ற எந்த நாடுகளைக் காட்டிலும் மிகப் பெரியன. பதினாயிரக்கணக்கான ஆண்டு நாகரிக வாழ்வு வாழ்ந்து மனித நாகரிகத்தை வளம்பெறச் செய்து வளர்த்ததனால், அது நீண்டு அகன்று ஆழ்ந்த அனுபவ அறிவையும், வளர்ச்சிக்கு உயிர்நிலைகளாய், உதவவல்ல நுண்நயப் பண்புகளையும் பெற்றிருக்கின்றது. இந்நாட்டு மக்களின் நாடி நரம்புகளில் அவர்கள் குருதியணுக்களில் இப்பண்புகள் ஊறித் தோய்ந்து கிடக்கின்றன. தென்னாட்டின் மொழிகளிலும் கலைகளிலும், பண்பாடுகளிலும் அவை பரந்து ஊடாடி விரவி நிற்கின்றன. இவற்றின் மூலமாகத் தென்னாடு தன் வருங்கால வாழ்வை வளப்படுத்த முடியும். மனித இனத்தின் வருங்காலத்தையும் வகுத்து வளமாக வளர்க்க முடியும். இவற்றைச் செய்வதே தென்னாட்டின் முழுமுதற் கடமை, தென்னாட்டவரின் தனிப்பெரும் பொறுப்பு. தென்னாட்டவராகிய நாம் தென்னாட்டின் புகழை வளர்க்கவும், உலக நாகரிகத்தில் தென்னாட்டுக்குரிய இடத்தை அதற்கு மீட்டும் பெற்றுத்தரவும் பாடுபட வேண்டும். இது சிறு செயல் அன்று; எளிய செயலும் அன்று. நாட்டு மக்கள் அனைவரும் முழு ஆர்வத்துடன் ஒன்றுபட்டு ஒத்துழைத்து நிறைவேற்ற வேண்டிய செயல் ஆகும். இதில் ஈடுபட்டு வெற்றி காண வேண்டுமானால், ஈடுபடுபவரைத் திறம்பட நடத்த வேண்டுமானால், நாம் தென்னாட்டின் இன்றைய சூழ்நிலை களைச் சரிவர உணர்ந்து கொள்ள வேண்டும். நிகழ்காலத்திலேயே, அதன் வருங்கால வளர்ச்சிக்குரிய நற்பண்புகளையும், அவ்வளர்ச்சியைத் தடுக்கக் கூடிய வளர்ச்சிக் கூறுகளையும் அவற்றின் பழைமை நோக்கித் துருவிச் சென்று ஆராய்தல் வேண்டும். இவ் இருவகைகளிலும் நமக்குப் பேருதவியாக வல்லது தென்னாட்டு வரலாறே. அதைத் தென்னாட்டார் அனைவரும் ஆடவரும் பெண்டிரும், முதியோரும் இளைஞரும், உள்ளதை உள்ளவாறே ஆய்ந்துணர்வது இன்றியமையாதது. சிறப்பாக, வருங்கால உலகின் சிற்பிகளான இளைஞர், நங்கையர், மாணவ மாணவியர், பகுத்தறிவாராய்ச்சிப் பண்புடனும், விருப்பு வெறுப்பற்ற ஒருதலை சாயா நடுநிலைப் பண்புடனும் இத்துறையறிவைக் கற்று விளக்கம் பெறுவதற்கு உரியவர் ஆவர். அடிக்குறிப்புகள் 1. கி.பி. என்பது கிறிஸ்துவுக்குப் பின். கி.மு. என்பது கிறிஸ்து பிறப்பதற்குமுன். எனவே, கி.மு. 1000 என்பது இன்றையிலிருந்து ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டு களுக்கு முன்னர் ஆகும். 2. நுபலயீவ. ஞயடநளவiநே, ஊhயடனநn, க்ஷயலெடடிn, ஹளயை ஆinடிச, ளுரஅநச, நுடயஅ 3. ஆநனவைநசசயநேயn ளநய 4. கல் - மைல் 5. ஞடிநinஉயைளே 6. குinளே (யீநடியீடந டிக குiடேயனே) 2. சிந்துவெளி தரும் ஒளி (கி.மு.3250-2500) அரசியல் வரலாறு. நாகரிகம் பண்பாடு ஆகியவற்றின் வரலாறு, மெய்விளக்க வரலாறு என வரலாறு மூன்று வகைப்படும். மன்னர் பெயர் வரிசைப் பட்டியல், அவர்தம் போர்கள், வெற்றி தோல்விகள், ஆகியவற்றின் தொகுப்பே அரசியல் வரலாறாகும். ஒவ்வொரு காலத்திலும் உள்ள மக்களின் வாழ்க்கை நிலைகள், அவ்வக்கால முன்னேற்றங்கள், வளர்ச்சி தளர்ச்சிப் பண்புகள் ஆகியவற்றை வகுத்துக் காட்டுவது நாகரிகப் பண்பாட்டின் வரலாறாகும், நிகழ்ச்சிகள், பண்புகள் ஆகியவற்றைக் காரண காரியத் தொடர்புபடுத்துவது மெய்விளக்க வரலாறாகும், இறந்த கால வரலாறு கொண்டு நிகழ்காலத்தை விளக்குவதும், வருங்காலத்துக்கான திட்டங்களை வகுத்துரைப்பதும், ஒரு நாட்டு வரலாற்றுடன் பிறநாட்டு வரலாறுகளை இணைப்பதும், நாடு கடந்த மனித இன வளர்ச்சிக்கு வழி காட்டுவதும் மெய்விளக்க வரலாறேயாகும், அரசியல் வரலாற்றைவிட நாகரிக வரலாறும், நாகரிக வரலாற்றை விட மெய்விளக்க வரலாறும் சிறந்தவை. ஆயினும் கால வரையறைக்கும், தொடர்ச்சிக்கும் அரசியல் வரலாறே பெரிதும் உதவுதவதால் அதுவே இன்றும் அடிப்படை வரலாறாக இருக்கிறது. தென்னாட்டின் இலக்கியங்கள், கல்வெட்டுக்கள், பட்டயங்கள், நாணயங்கள் ஆகியவற்றின் ஆராய்ச்சியால் நாம் சென்ற இரண்டாயிர ஆண்டு வரலாற்றை ஓரளவு தொகுக்க முடிகிறது. அதற்கு முற்பட்ட காலத்தைப் பற்றி நமக்குச் சில மரபுகள் வந்து எட்டியுள்ளன. ஆனால், அவை எந்த அளவு மெய், எந்த அளவு கட்டுக்கதை என்பதை நாம் அறிய முடியவில்லை. மொழியாராய்ச்சி, இன ஆராய்ச்சி, பழம்பொருளாராய்ச்சி ஆகியவையே இவற்றின் மெய்மை பொய்மைகளை விளக்கவும், அவற்றிடையே வரலாற்று ஒளி காணவும் நமக்குப் பயன்பட்டு வருகின்றன. குகைமனிதர் உயிரினங்கள் ஓரணு உயிர்முதல் பலபடி உறுப்பமைதி யுடைய உயிரினங்கள் ஊடாக முழுநிறைப் பேருயிரான மனிதன்வரை வளர்ச்சி யடைந்தன என்று மண்ணூல், உயிர்நூல் ஆகியவற்றால் அறிகிறோம். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டு கட்கு முற்பட்ட தமிழ் நூலாகிய தொல்காப்பியம் இதை இன்னொரு வகையாகக் குறிப்பிடுகிறது. ‘ஓரறிவுயிராகிய செடி கொடி இனமுதல் ஆறறிவுயி ராகிய மனிதன் வரை இவ்வளர்ச்சி விரிவுற்றது’ என்பது தொல்காப்பியர் கோட்பாடு. மனிதன் தொடக்கத்தில், நூறாயிரக்கணக்கான ஆண்டு களுக்குமுன், விலங்குகளுடன் விலங்காய் வாழ்ந்து வந்தான். அவனுக்கு நாடு, நகர், வீடு கிடையாது. அவன் குகைகளிலும் மரப்பொந்துகளிலும் வாழ்ந்தான். அவனுக்கு ஆடையணி கிடையாது. வெயில் மழைகளிலிருந்தும், குளிர் வெப்பங்களி லிருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, அவன் இலை தழைகளையே பயன்படுத்தினான். பயிர்த்தொழிலோ, சமையல் தொழிலோ அந்நாளில் இல்லை. அவன் தீயைக் கண்டு பயன்படுத்தக் கற்றிருக்கவில்லை. இத்தகைய நாகரிகப் படியை வரலாற்றாசிரியர் குகை மனிதர் காலம் என்பர். மனிதனின் மிகச் சிறந்த அறிவுக் கருவியான மொழி. இக் காலத்தில் உருவாகவில்லை. அது சைகையாகவும் கூச்சலாகவுமே இருந்தது. தற்கால மொழிகளில் இச்கூச்சல்களே வியப்பிடைச் சொற்களாக இருக்கின்றன. இத் தொடக்க காலத்திலிருந்து மனிதன் ஒவ்வொன்றாக நாகரிக சாதனங்களைக் கண்டுபிடித்து முன்னேறினான். அவன் கையாண்ட கருவிகளின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு, வரலாற்றாசிரியர் இவ்வளர்ச்சியைப் பல காலங்களாக வகுத்துள்ளார்கள். அவை பழங்கற்காலம், புதுக் கற்காலம், செம்புக் காலம், வெண்கலக் காலம், இரும்புக் காலம் என்பவை. மனிதன் கல்லைத் தேவையான வடிவில் உடைத்து கத்தி, கோடாலி முதலிய கருவியை ஆக்கிய காலம் பழங் கற்காலம். இதைச் செப்பம் செய்து உருவாக்கிய காலம் புதுக் கற்காலம். இம்முன்னேற்றங்களுக்குப் பதினாயிரக் கணக்கான ஆண்டுக் காலம் தேவையாயிற்று. அக்காலத்துக்குள் அவன் வாழ்க்கைத் துறையில் வேறுபல கூறுகளிலும் வளர்ச்சிகள் ஏற்பட்டன. உலோகங்களைக் கண்டு பிடித்தபின் அவன் இன்னும் வேகமாக முன்னேறினான். இரும்புக்கால வளர்ச்சியே இன்னும் நடைபெற்று வருகிறது. ஐந்திணை மனித நாகரிக வளர்ச்சியைத் தொல்காப்பியர் இன்னொரு வகையில் வகுத்துக் காட்டுகிறார். மனித வாழ்க்கைப் பண்புகள் வாழ்க்கைக்கு அடிப்படையான நிலத்தின் இயல்புக்கேற்ப ஐந்திணைகளாக வகுக்கப் பட்டன. அவை மலைப் பகுதி, காட்டுப் பகுதி, பாலைவனம், ஆற்றுவெளி, கடற்கரை ஆகியவையே. குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம். நெய்தல் ஆகிய ஐந்துமலர்ப் பெயர்களே திணைப் பெயர்களாக அமைந்தன. மனித நாகரிகம் தொடங்கியது மலைப் பகுதியிலேயே. குகையிலே குடிவாழ்வின் வித்தான குடும்ப வாழ்வு தொடங்கிற்று. மக்கள் இங்கே குறவர் எனப்பட்டனர். அவர்கள் தொழில் வேட்டையாடுதல். நரிப்பல், புலிப்பல், நிறக்கற்கள் முதலியன இப்பருவத்தில் அணிகலன்களாக வழங்கின. இறைச்சியும், கிழங்கும், தீக்கல்லால் எழுப்பப்பட்ட தீயில் சுட்டு உணவாக உண்ணப்பட்டன. காட்டு நிலம் அல்லது முல்லைத் திணையிலே மனிதன் நாடோடியாக வாழ்க்கையைத் தொடங்கினான். நாடோடிக் குழுக்கள் அல்லது சாத்துக்கள் நாளடைவில் குலங்களாய் சமூகத்தின் வித்தாயின. இப்பருவத்தில் மனிதன் ஆடுமாடு முதலியவற்றைப் பழக்கி, உணவு தரவும் சுமை தூக்கவும் பயன்படுத்தினான். அவன் ஆங்காங்கே குடிசைகள் கட்டி வாழ்ந்து அக்குடிசைகளை அடிக்கடி தூக்கிச் சென்றான். தினை அரிசி, மூங்கிலரிசி ஆகியவற்றை அவன் வாரி வந்து சமைத்து உண்டான். மனிதனின் முதன் முதல் செல்வம் மாடு. தமிழில் மாடு என்ற சொல் எருது, செல்வம் என்ற இருபொருளும் உடையது. இலத்தீன் முதலிய பிற மொழிகளிலும் 1இவ்விரு பொருளும் ஒரு சொல்லில் அமைந்துள்ளன. முல்லை நில மக்கள் ஆயர் எனப்பட்டனர். பெரிய மந்தையை யுடையவன் தலைவன் ஆனான். ஆயன், ஐயன் என்ற பெயர்கள் தமிழில் தலைவன் என்று பொருள்படும். அத்துடன் தமிழில் ‘கோ’ என்னும் பெயர் பசுவையும் அரசனையும், ‘கோன்’ என்பது மாடு மேய்ப்பவனையும் அரசனையும் குறிக்கும். முதன் முதல் அரசு ஏற்பட்டது இந்நிலத்திலேயே என்பதை இது காட்டுகிறது. ‘கோ’ இருந்த மனையே கோட்டை ஆயிற்று. பிற்காலத்திலும் அரசன் மனை அரண்மனை அதாவது கோட்டை வீடு எனப் பெயர் பெற்றது காணலாம். கோயில் என்ற சொல் அரசன் மனையையும் கடவுள் வழிபாட்டு இடத்தையும் ஒருங்கே குறிக்கிறது. அரசியல் வாழ்வைப் போலவே சமய வாழ்வும் இந்த நாகரிகப் படியிலேயே தோன்றி வளர்ந்தது. பாலை நிலத்தில் வாழ்ந்தவர் எயினர், மறவர் எனப்பட்டனர். இந்நிலம் நில அடிப்படையில் மனித நாகரிகத்துக்குப் பயன் படவில்லை. அது வழிப்பறிக்குரிய இடமாயிருந்தது! ஆனால், மறவர் படிப்படியாக அரசர்களைச் சார்ந்து அவர்கள் படையில் வீரர்களாகி அரசு காத்தனர். தமிழர்களை முதல் பேரரசர் ஆக்கியவர்கள் இந்த மறவர்களேயாவர். நெய்தல் நிலத்திலுள்ள பரதவர் அவர்களைக் கடற் பேரரசராக்க உதவினர். நகர் நாடு ஆற்று வெளியிலேயே மனித நாகரிகம் முழு வளர்ச்சி யடைந்தது. உழவு (வேளாண்மை) இதன் தலைத் தொழிலாயிற்று. இதில் வாழ்ந்தவர் வேளாளர் எனப்பட்டனர். மனித சமுதாயத்தில் குடியாட்சி பிறந்த நிலம் இதுவே. வேள் என்ற சொல் தமிழில் முடிசூடா மன்னனைக் குறிக்கும். இதே சொல்லுக்குப் படைவீரர், வணிகர், தொழிலாளர், கடவுள், கடவுள் வழிபாடு என்ற பொருள்களும் உண்டு. இதற்கேற்ப இந்நிலத்தில் வேளாளரிடையே அந்தணர், அரசர் அல்லது வீரர், வணிகர், உழவர் ஆகிய மூல வகுப்புகளும், பல கலைத் தொழில்களும், தொழில்களுக்கு உரிய கிளை வகுப்புகளும் தோன்றின. குடியுரிமை மன்னரின் தலைவராக, முடியுரிமை மன்னரும் ஏற் பட்டனர். இம்மன்னர் ஆண்ட பேரூர் அல்லது நகரமும், கோட்டை யும், அதைச் சார்ந்த சிற்றூர்களும், மலையும், காடும், ஆறும், கடற்கரையும் சேர்ந்து ஒரு நாடு ஆயின. இத்தொடக்கக் கால நாட்டை மேனாட்டு வரலாற்று நூலாசிரியர் 2‘நகர் நாடு’ என்பர். கடற்கரைப் பகுதி அல்லது நெய்தல் நிலம் முதலில் நாகரிகத்தில் பிற்பட்டே இருந்தது. இதிலுள்ள மக்கள் பரதவர் எனப்பட்டனர். மீன், உப்பு, சங்கு, முத்து ஆகிய கடல் வளத்தாலும், கடல் கடந்த வாணிகத்தாலும் இப்பகுதி விரைவில் ஆற்று நிலத்துடன் நாகரிகத்தில் போட்டியிட்டது. துறைமுக நகரங்கள் தமிழில் பட்டினங்கள் என்றழைக்கப்பட்டன. தமிழகத்தில் மட்டுமன்றித் தென்னாடெங்கும். அதற்கப் பாலும், பட்டினம் என்ற தமிழினப் பெயர் இன்றும் காணப் படுகின்றது. மன்னரோடொப்பச் செல்வம் திரட்டிய வணிக மன்னர் இப்பட்டினங்களில் வேயாமாடங்கள் அல்லது காரை வீடுகள் கட்டி இன்பவாழ்வு வாழ்ந்தனர். பல நாடு கண்ட வணிக அறிஞர், ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற பெருமித உணர்வுடன் வாழ்ந்தனர். தமிழில் நகர் அல்லது மருதநிலப் பேரூரில் வளர்ந்த பண்பாடே நாகரிகம் எனப்பட்டது. ஆயினும் நகர நாகரிகம் தாண்டிப் பட்டின நாகரிகம் நாடு கடந்த உலகப் பண்பாக வளர்ந்தது. தமிழர் நாகரிகத்துக்கு அடிப்படையான பண்பு இவ்வுலகப் பண்பேயாகும். கற்காலம் உலக முழுவதும் நாகரிகம் ஒரே சமகால வளர்ச்சியாக வளரவுமில்லை; ஒரே தொடர்ந்த வளர்ச்சியாக அமையவு மில்லை. உலக நாகரிகத் தொடர்பற்ற ஒதுக்கிடங்களில் - பொதுவாக மலைக்குடியினரிடையிலும், சிறப்பாக வடதுருவப் பகுதியிலும், ஆப்பிரிக்க ஆஸ்திரேலியப் பகுதிகளிலும்-குகை மனித நாகரிகம், கற்கால நாகரிகம் ஆகிய நிலைகளிலுள்ள மக்கள் இன்றும் வாழ்கின்றனர். வரலாற்றிலும் தென் ஐரோப்பா, நடுஉலகு, தென்னாடு ஆகிய இடங்களில் நாகரிகம் சிறந்திருந்த காலங்களில், வடஐரோப்பாவும் வடஉலகும் நாடோடி மக்களின் வேட்டைக் காடுகளாயிருந்தன. கி.பி. 5ஆம் நூற்றாண்டில் இந்நாடோடி மக்கள் நாகரிக உலகின்மீது பரந்து தாக்கினர், பண்டைய நாகரிக ஒளி மங்கி மறுகிற்று, கி.பி.5ஆம் நூற்றாண்டு முதல் 15ஆம் நூற்றாண்டு வரையுள்ள இக்காலத்தை நாம் இடைஇருள் காலம் என்கிறோம். சென்ற ஐந்நூறு ஆண்டுகளுக்குள் உலகில் சிறப்பாக மேனாட்டில் நாகரிகம் மீண்டும் மறுமலர்ச்சி அடைந்து வருகிறது. இடைக்கால இருள் கடந்து பழங்கால நாகரிக ஒளியின் ஊற்றைத் தற்காலத்துக்குக் கொண்டுவரப் பாலமாயிருந்த நாகரிகங்கள் கிரேக்க உரோம நாகரிகங்களும், தென்னாட்டு நாகரிகமுமேயாகும். கிரேக்க உரோம நாகரிகங்கள் மேனாட்டுக்கு ஒளி தந்தன. தென்னாடு கீழ்த் திசையில் சிந்து கங்கை சமவெளி வாயிலாக இதுவரை ஒளி வீசியுள்ளது; நேரடியாக இன்னும் ஒளி வீச இருக்கிறது எனலாம். பழங்கற்கால மனிதன் நாகரிகம் தென்னாட்டில் கி.மு.40,000-வது ஆண்டுக் காலத்துக்குரியது என்று கூறப்படுகிறது. அதாவது அது 42,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. தென்னாடு முழுவதும்-சிறப்பாகக் கடப்பை, கர்னூல் பகுதிகளிலும் அதன் தெற்கிலும்-அதன் சின்னங்களை நாம் காண்கிறோம். அதே சமயம் தென்னாட்டுக்கு அப்பாலுள்ள சிந்து கங்கை சமவெளியில் நாம் அவற்றை அவ்வளவாகக் காணமுடியவில்லை. ஆனால், புதுக் கற்காலச் சின்னங்கள் தென்னாட்டில் சிந்து கங்கை வெளியிலும் ஒரேபடியாகக் காணக் கிடக்கின்றன. இதனால், பழங்கற் காலத்தில் மனித நாகரிகம் தென்னாட்டிலேயே தோன்றி வளர்ந்தது என்றும், புதுக் கற்காலத்தில் அது தென்னாட்டின் வடஎல்லை தாண்டி இமயமலைவரை ஒரே பரப்பாகப் பரந்து விரிவுற்றது என்றும் அறிகிறோம். இன்று தென்னாட்டில் காணப்படாத பல விலங்கினங் களும், உலகிலேயே இக்காலத்தில் மரபற்று அழிந்து போன விலங்குகளும் பழங்கற் காலத்தில் தென்னாட்டில் இருந்திருக்க வேண்டும். விந்தியமலைப் பகுதிகளில் நமக்கு இவற்றின் எலும்புக் கூடுகள்அகப்படுகின்றன. இவ்வெலும்பு களின் அருகிலேயே குகை மனிதன் அல்லது பழங்கற்கால மனிதன் கரித்துண்டு கொண்டு வரைந்த இவ்விலங்குகளின் கல்லாச் சித்திரங்கள் தென்படுகின்றன. இவற்றுள் மரபற்றுப் போன காண்டா மிருகம் போன்ற விலங்கு, 3பைம்மா, மான், குதிரை, யானை ஆகியவற்றின் வேட்டைக் காட்சிகள் தீட்டப்பட்டுள்ளன. கடப்பையிலும் கர்னூலிலும் உள்ள பழங் கற்காலக் கருவிகள் அவ்விடத்திலுள்ள பாறை வகைகளிலிருந்தே உரு வாக்கப்பட்டுள்ளன. தென்னாட்டில் பழங்கற் காலத்திலிருந்து புதுக் கற்கால நாகரிகமும், புதுக் கற்காலத்திலிருந்து செம்பு, வெண்கல, இரும்புக் கால நாகரிகங்களும் உலகின் மற்றப் பகுதிகளைத் தாண்டி மிக விரைந்து வளர்ந்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. ஏனென்றால், பழங்கற்காலக் கருவிகளையடுத்துப் புதுக் கற்காலக் கருவிகள் அகப்படுகின்றன. அத்துடன் புதுக்கற்காலக் கருவி களுடனே, ஆனால், அரும் பொருள்களாக, செம்பு வெண்கலக் கருவிகளும் பொன், வெள்ளி அணிகலன்களும், சில சில இடங்களில் இரும்புக் கருவிகளும்கூடக் கிடைக்கின்றன. புதுக் கற்காலத்திலேயே இவ்வுலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்டும், இவை போதிய அளவில் நாகரிக உலகெங்கும் கிடைக்கவில்லை என்பதை இது சுட்டிக் காட்டுகிறது. தவிர, புதுக் கற்காலத்திலேயே, கல்லால் செய்த நெசவுக் கருவிகளை நாம் தமிழகத்தில் கண்டெடுத்திருக்கிறோம். நாகரிக மனித உலகின் கனவுக் கெட்டாத இத்தொல் பழம் பண்டைக் காலத்திலேயே, தமிழர் பருத்தியின் பயன் அறிந்து, பஞ்செடுத்து, நூல்நூற்று, நெய்யக் கற்றுக் கொண்டிருந்தார்கள் என்பதை இதனால் அறிகிறோம். இது வியப்பினும் வியப்போயாகும்! ஐரோப்பியர் பஞ்சை அறிவதற்குக் குறைந்தது பதினாயிரம் ஆண்டு கட்குமுன்னே தமிழர் அதை அறிந்து பயன்படுத்தி இருந்தனர். பழங்கற்காலத்தில் மனிதன் உயிர்நீத்த தன் இனத்தவர் உடல் பற்றிக் கவலை கொள்வில்லை. கற்களைச் செப்பம் செய்யும் அறிவு அவனுக்கு இன உணர்வையும் இனப்பற்றையும் உண்டு பண்ணியிருந்தது. ஆகவே, அவன் இறந்த உடலைப் புதைத்து, அக்குழியை நாய்நரிகள் கிளறாமலிருப்பதற்காக, அதன்மீது கற்குவியல்களைக் குவித்து வைத்தான். சில இடங்களில் கும்பிடு வடிவிலும், தலைகவிழ் பகரவடிவிலும் 4கல் தாங்கிகள் அமைத்தான். ஆனால், தமிழ் நாட்டில் அவன் இவற்றுடன் அமையவில்லை. உடலை அவன்5 புதை தாழிகளில் அடக்கம் செய்தான். பழங் கற்காலத்திலேயே மனிதன் தீக்கல்லைக் கண்டு, தீ உண்டு பண்ணக் கற்றிருக்க வேண்டும். பின்னாட்களில் தீயுமிழ் மரங்கண்டு தீக்கடை கோலும் வழங்கியிருக்கலாம். இவற்றின் மூலம் அவன் சமைத்துண்டதுடன், தனக்கு வேண்டிய பாண்டங் களையும் களிமண்ணால் செய்யக் கற்றிருக்கவேண்டும். புதுக் கற்காலத்தில் தென்னாட்டினர் செய்த அழகிய கலை வேலைப் பாட மைந்த மட்பாண்டங்களையும், மரச்சீப்பு, எலும்பு ஊசி முதலிய கருவிகளையும் நாம் புதை தாழிகளிலும், அவற்றின ருகிலும் காண்கிறோம். தாழிகளுடன் கோலாப்பூரிலும் மிஸ்ரப்பூரிலும் கண் டெடுக்கப்பட்ட மட்பாண்டங்கள் மிக உயர்ந்த கலைப் பண்பாடு உடையவை, சென்னை, மைசூர், ஹைதராபாத், பம்பாய் ஆகிய இடங்களில் இரும்பு கருவிகள் கூட அகப்படுகின்றன. மிகப் பழமை வாய்ந்த, முக்கியத்துவம் பொருந்திய ஈமத் தாழிகள் பல்லாவரம். செங்கற்பட்டு, நெல்லூர், ஆர்க்காடு, ஆதிச்சநல்லூர், புதுக்கோட்டை இத்தகைய பொருள்களுக்கு ஒரு காட்சிக் கூடமாகவே விளங்குகின்றன. புதுக்கற்காலத் தென்னாட்டு நாகரிகம் சிந்து கங்கை வெளி எங்கும் பரந்து, சிந்துவெளி நாகரிகத்துடன் நெருங்கிய தொடர்புகளும் ஒப்புமைகளும் உடையதாயிருந்தது. கோயமுத்தூர் மாவட்டத்தில் செட்டிப்பாளையத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆட்டு வடிவமுடைய மூடி வாய்ந்த கோப்பை, பாரசீகத்தில் லூரிஸ்தானில் கண்டெடுக்கப்பட்ட வற்றுக்கு இனமாயிருக்கிறது. பல்லாவரத்தில் மணல் கலந்த களிமண்ணால் செய்யப்பெற்ற குறுங்கால் மனித உருவம், ஈராக் நாட்டிலுள்ள பாக்தாது நகரிலும் அகப்பட்டுள்ளது. மதுரையில் கிடைத்துள்ள சுவத்திகா வடிவப் பொருள்களும், குறுங்கால் பாண்டங்களும் மேலை ஆசியாவிலுள்ள திராய் நகரில் கண்டெடுக்கப்பட்டவற்றை ஒத்திருக்கின்றன. சேலத்திலுள்ள குடிசை வடிவத் தாழிகள் கூர்ச்சரத்திலும் உள்ளன. சேலத்தில் கிடைத்த மட்பாண்டங்களில் அழகிய சிவப்பு வண்ணத்தில் ஒரு மங்கையின் வடிவம் தீட்டப்பட்டுள்ளது. அவள் கூந்தல் பின்னிச் சுருள்களாகத் தொங்கவிடப்பட்டிருக்கிறது. சுருள்களை இறுகப் பற்றி நிறுத்தும்படி சுருள் ஊசிகள் குத்திவைக்கப்பட்டிருக்கின்றன. குண்டுக் கல்லில் மரச்சீப்பும், கிருஷ்ணாவில் சித்திரம் தீட்டப்பட்ட குதிரும், களிமண் காப்பும், கர்னூலில் தாயத்துக்களும், ஹைதராபாத்தில் களிமண் நாகங் களும் உள்ளன. மைசூரில் கல்லாலான தாழிகளும், வழிபாட்டு மண்டபமும், கடப்பை, பெல்லாரி, அனந்தப்பூர் மாவட்டங்களில் கல்லுளி, சுத்தி ஆகியவையும் அகப்படுகின்றன. புதுக் கோட்டை யில் ஒரு புறம் இரும்புக் கருவிகளும் மறுபுறம் எலும்பும் உள்ள இரு சிறைத் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிந்துவெளி நாகரிகம் தென்னாட்டு நாகரிகத்தின் பழமைக்கு ஓர் அளவு கோலாகவும், அதன் பெருமைக்கு ஓர் உரைகல்லாகவும் சிந்து வெளி நாகரிகம் திகழ்கிறது. கிழக்குப் பஞ்சாபில் ஹரப்பாவில் 1920 முதலும், சிந்து மாகாணத்தில் மொகஞ்சதரோவில் 1922 முதலும் புதையுண்ட இரண்டு பழைய நகரங்கள் அகழ்ந்து காணப்பட்டன. மொகஞ்சத ரோவில் நகரங்களை மூடியிருந்த மண் மேட்டினுச்சியில் ஒரு புத்த தூபி நிற்கின்றது. இதன் பாழடைந்த அடித் தளங்களில் இரண்டாயிர ஆண்டுகளுக்கு முற்பட்ட நாணயங்கள் அகப் படுகின்றன. மொகஞ்சதரோவின் பழமையை இது சுட்டிக் காட்டிற்று. அகழ்ந்த பின் இன்னும் பல்லாயிர ஆண்டு பழமை உணரப்பட்டது. ஹரப்பாவில் ஒன்றன் கீழ் ஒன்றாக எட்டு அடுக்கான நகரங்களும் மொகஞ்சதரோவில் ஏழு அடுக்கான நகரங்களும் காணப்பட்டன. அவற்றில் கிடைத்த சின்னங்களால் அந்நாகரிகம் மெசெபொட்டோமியாவிலுள்ள சுமேர், ஏலம் நாகரிகங்களுடன் தொடர்புடையதென்றும், அந்நகர்களின் சில அடுக்குகள் அவற்றுடன் சமகால வாழ்வுடையன என்றும் அறியப்பட்டது. அடுக்குகள் சமகால எல்லை கடந்து இன்னும் கீழே செல்கின்றன. ஆகவே, இவ்வகழ்வு ஆராய்ச்சி மூலம் இந்நாகரிகம் எகிப்திய சுமேரிய நாகரிகங்களைவிடப் பழமை யானதென்றும், அவற்றைக் காட்டிலும் பலவகை முன்னேற்றங் களை உடையதென்றும் நாம் அறிகிறோம். அகழ்ந்த பகுதி பத்தில் ஒரு பங்கேயானாலும், அந்த அளவிலேயே அது கி.மு. 3250-க்கு முன்னிலிருந்து கி.மு. 2500 வரை நிலவியிருக்க வேண்டுமென்றும், கி.மு. 2500-க்குப் பின் எக் காரணத்தாலோ திடுமென அழிவெய்தி இருக்க வேண்டுமென்றும் அறிய முடிகிறது. சிந்து வெளியின் நகரமைப்பும், மக்கள் வாழ்க்கைத் திட்டமும் கலைச்சிறப்பும் தற்கால அறிஞர்களைத் திகைப்படையச் செய்கின்றன. கருவி வகையில் அது புதுக்கற்காலங் கடந்து உலோக காலத்தில் புகுந்த நாகரிகமாயிருந்தாலும், பண்பாட்டு வகையிலும் மற்றெல்லாத்துறைகளிலும் கிட்டத்தட்ட முழுநிறை முதிர்ச்சி அடைந்திருந்தது. அது முற்கால நாகரிகங்களைத் தாண்டி, மேற் சென்றிருந்தது மட்டுமல்ல; இக்கால நாகரிகங்களுக்குக்கூடப் பல வகைகளில் வழிகாட்டுவதாய் இருக்கிறது. பண்டை நாகரிகங்கள் பலவற்றிலும்-இக்கால நாகரிகங்கள் பெரும் பாலானவற்றிலும் கூட - மனித இனத்தின் பொருளும், நேரமும், அறிவும் பேரளவில் கடவுளர்க்குக் கோயில் கட்டுவதிலும், மன்னர் இளங்கோக்களுக்கு மாளிகைகள் கட்டுவதிலுமே செலவழிக்கப்பட்டிருப்பது காண்கிறோம். ஆனால், சிந்து வெளியின் நிலை இதற்கு நேர்மாறானது. அதன் மிகச்சிறந்த கட்டடங்கள் நகரப் பொது மக்களுக்கு உரியவையும், தொழிலாளருக்குரியவையுமேயாகும். வடிநீர் வசதி, சாக்கடை வசதி ஆகிய உடல் நல வாய்ப்புடைய தெருக்கள், காற்றோட்டமும் உடல் நல வாய்ப்பும் மிக்க வீடுகள், வீடுதோறும் கிணறுகள், மலம் கழி விடுதிகள், குளிப்பறைகள், நகரங்களில் இடத்துக்கிடம் பூம்பொழில்கள் முதலிய சிறப்புக்கள் சென்னை போன்ற இக்கால நகர்களுக்கும் முன்மாதிரிகளாய் அமைகின்றன. சென்னையில் சில ஆண்டுகளுக்குமுன் வீட்டுக்கு வீடு பொருத்தப்பட்ட குப்பைத் தொட்டிமுறை மொகஞ்சதரோவில் 5000 ஆண்டுகட்கு முன்பே நீடித்து நடைபெற்ற ஒன்றாகும். அந்நகர்களின் உடல்நல வாய்ப்புத் திட்டங்கள் இன்று அவற்றை அகழ்ந்தாராயும் தொழிலாளருக்குக் கூடப் பயனளிக் கின்றனவாம்! கி.பி. முதலாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டுகளில் உரோமர் செங்கற்களால் வீடுகளும் தெருக்களும் அமைத்தனர். உலகில் முதன்முதல் செங்கற்களைக் கண்டு வழங்கியவர்கள் அவர்களே என்று அண்மைக்காலம் வரையில் கருதப்பட்டு வந்தது. ஆனால், சிந்துவெளி மக்கள் உரோமர்களுக்குக் குறைந்தது 3000 ஆண்டுகளுக்கு முன்பே பலவகைப்பட்ட சுட்ட செங்கல், பச்சைச் செங்கற்களைப் பயன்படுத்தினர்! வீடுகளின் சுவர்களுக்கு மட்டுமன்றித் தளங்களுக்கும், வடிகால் களின் பக்கங்களுக்கும் அவர்கள் செங்கற்களை வழங்கியிருந்தனர். மிகப் பெரும்பாலான வீடுகள் காரைவீடுகள் அல்லது வேயா மாடங்களாகவே இருந்ததால், மேல்தளங்களும் செங்கற் களாலேயே அமைக்கப்பட்டிருந்தன. தொழிலாளர் இல்லங்கள் இரண்டு வரிசைகளாகக் கட்டப் பட்டிருந்தன. இரு வரிசைகளுக்கிடையிலும் ஓர் இடை வழி விடப்பட்டிருந்தது. இந்த இடைவழி இரு புறத்திலும் இரண்டு தெருக்களில் சென்று கலப்பதாயிருந்தது. ஒவ்வொரு இல்லத்திலும் மூன்று அறைகளும் ஒரு முற்றமும் இருந்தன. இதுபோன்ற தொழிலாளர் குடியிருப்புக்கள் பண்டை நாளில் எகிப்தில் முதன் முதல் டெல் எல்எமரா என்ற இடத்தில் மட்டுமே இருந்ததாக அறிகிறோம். ஆனால், எகிப்தில் இரு வரிசைகள் கிடையாது, முற்றமும் கிடையாது. மேலும் எகிப்தில் அவை முதன் முதல் கி.மு. 2000-லேயே கட்டித் தரப்பட்டன. மொகஞ்சதரோ விலோ, அவை கி.மு. 2500-க்கு முன்பே காணப்படுகின்றன. மொகஞ்சதரோ இங்ஙனம் காலத்தினால் முந்தியதாயிருப்பதுடன், தொழிலாளர் உடல்நல வாய்ப்புத் திட்டங்களில் எந்நாட்டுக்கும் மேம்பட்டதாகவும் அமைந்திருந்தது. சென்ற இரண்டாயிர ஆண்டுகளாக தென்னாட்டு நாகரிகமும் கீழ்நாட்டு நாகரிகங்களும் பெரிதும் கிராம நாகரிகங்களாகவும், விவசாய நாகரிகங்களாகவும் இருந்து வருகின்றன. ஆனால், தொல் பழங்காலத்துக்குரிய இவற்றின் மூலமுதலான சிந்து வெளி நாகரிகம் இக்கால ஐரோப்பிய அமெரிக்க நாகரிகங்கள் போலவே பேரளவில் சிறந்திருந்த நாகரிகமாகவுமே இருக்கக்காண்கிறோம். சிந்துவெளி மக்கள் அன்று உள்நாட்டில் தமிழகத்துடனும், கங்கை வெளியுடனும், வெளியுலகில் பாரசிகம், மெசெபொட்டேமியா, எகிப்து முதலிய நாடுகளுடனும் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். அக்கேடிய நாட்டில் சிந்துவெளி மக்களின் ஒரு வணிகக் குடியேற்றமே இருந்ததாகக் கூறப்படுகிறது. கைத்தொழிலாளரும் வணிகரும் சிந்துவெளியிலிருந்து சென்று தைக்ரிஸ், யூப்பிரட்டிஸ் ஆற்றோரங்களில் உள்ள வணிகக்களங்களில் தங்கள் சரக்குகளை நேரடியாக விற்பனை செய்தார்கள். இதுபோல சுமேரியக் கலை நுட்பங்களும், மெசெபொட்டேமியாவிலுள்ள நாள் ஒப்பனைப் பொருள்களும் முத்திரைகளும் சிந்துவெளியில் பின்பற்றப் பட்டன. இருதிசைகளுக்கும் இடையிலுள்ள வாணிகம் இன்பப் பொருள்கள், மூலப்பொருள்கள் ஆகியவற்றுடன் நிற்கவில்லை. சிந்து ஆற்றுவழியாகக் கடலிலிருந்து கொண்டுவந்த மீன்கள் நாள்தோறும் சிந்துவெளி மக்களின் உணவு மேடையில் வந்து காத்திருந்தன. ‘வரலாற்றில் நிகழ்ந்தவை’ என்ற கவர்ச்சி கரமான பெயருடைய ஏட்டில் 6கார்டன்சைல்டு என்ற ஆசிரியர் தரும் விவரங்கள் இவை. சிந்துவெளி நாகரிகத்தின் வியத்தகு கூறுகளைத் தொகுத்து 7நான் புதிதாகக் ‘கண்ட இந்தியா’ என்ற நூலில் இந்தியக் கூட்டுறவின் தொடக்க முதல்வரான பண்டித ஜவஹர்லால் நேரு கூறுவதாவது: சிந்துவெளி நாகரிகம் மிகவும் உயர் சிறப்புடையது. அந்நிலையை அது அடையப் பல்லாயிர ஆண்டுகள் சென்றிருக்க வேண்டும். என்பதில் ஐயமில்லை. இதில் மிகவும் வியப்புக்குரிய செய்தி ஒன்று உண்டு. அது யாதெனில், இந்நாகரிகம் முற்றிலும் சமயச்சார்பு அற்றதாக இருப்பதுதான். சிந்து வெளியில் சமய வாழ்வு இல்லை என்று இதனால் ஏற்படாது. ஆனால், அது மக்கள் வாழ்வில் ஒரு கூறாக இருந்தது. இன்றைய கீழ்நாட்டுச் சமய வாழ்வைப்போல அது அவ்வாழ்வையே விழுங்கி வளர்வதா யில்லை. அத்துடன் சமயத்துறையில் மட்டுமன்றி, எல்லாத் துறைகளிலுமே, அது இந்நாட்டு நாகரிகத்தின் மூலக் கருமுதல் ஆகும். சிந்துவெளி நாகரிகம் உலகுடன் நெருங்கிய தொடர்பும் ஒப்புமையும் உடையது. ஆனால், அது வெளி உலகிலிருந்து வந்த நாகரிகம் அன்று. ஏனெனில், அது வெளி உலகிலுள்ள மற்ற எல்லாத் தொல்பழங்கால நாகரிகங்களுக்கும் முற்பட்டு, இவை எல்லாவற்றையும்விடப் பல வகையில் சிறந்ததாயிருந்தது. அத்துடன் அதன் பல கூறுகளும் கீழ்த்திசை வாழ்வுடன் இரண்டறக் கலந்ததாக வும், அதன் மூலதளமான தென்னாட்டு வாழ்வுடன் தனிச் சிறப்பான தொடர்புகள் உடையதாகவும் இருக்கிறது. சிந்துவெளி நாகரிகத்துடன் எகிப்து, மெசெபொட்டேமியா போன்ற தொல்பழ நாகரிகங்களை ஒப்பிட்டு 8சர்ஜான் மார்ஷல் என்பவர் வகுத்துரைக்கும் அதன் சிறப்புக் கூறுகள் வருமாறு: சிந்துவெளிக்கன்றி வேறெந்தப் பழங்கால நாகரிகங் களுக்கும் உரியன அல்லாத கூறுகள் பல. சிந்துவெளி மக்களின் சமய வாழ்வில் பல நாட்டு மக்கள் சமயக் கூறுகளின் ஒப்புமை களைக் காணலாம். ஆனால், இது பழங்கால நாகரிகங்கள் எல்லாவற்றுக்கும் உரிய பொதுப் பண்பே தவிர வேறன்று. அவ்வாழ்வை ஒரே முழுவாழ்வாக நோக்கினால், அது பேரளவில் இன்றைய இந்நாட்டு மக்களின் சமயவாழ்வுடன் இணைப்புடைய கருமுதுல் நிலையாகவே காணப் படுகிறது. வேறு எந்த நாட்டுச் சமய வாழ்வுடனும் அதை இணைக்க முடியாது.” “சிந்துவெளியின் கலைப்பண்புக்கு ஈடாக, அதனோ டோத்த, அல்லது அதனை அடுத்த பழமையுடைய எந்த நாட்டின் கலையையும் கூறமுடியாது. களிமண்ணால் செய்யப்பட்ட செம்மறியாடு, நாய், முத்திரைகளில் செதுக்கப்பட்டுள்ள குறுங்கொம்புடைய நெடுந் திமில் எருதுகள் ஆகியவை மறைந்த இந்நாகரிகத்தின் ஒப்பற்ற கலைச் செல்வங்கள். அவற்றின் உருவமைதியும் வடிவழகும் என்றும் எந்நாட்டுக்கும் பெருமை தருவன. கலையுலகில் கிரேக்கரின் கலைப்பண்புகள் தவிர வேறு எவையும் ஹரப்பாவில் கிடைத்துள்ள இரண்டு மனித உருவங்களுக்குச் சரிநிகராகப் போட்டியிட்டு நிற்கமாட்டா!” தென்னாட்டுடன் சிந்துவெளியைப் பிணைக்கும் மற்றொரு செய்தி அதன் நெசவுத் தொழிலாகும். கம்பளியும் அன்று வழங்கப் பட்டதாயினும், பருத்தியே பேரளவில் நூற்று நெய்து ஆடை யாகப் பயன்படுத்தப்பட்டது. உலகில் வேறெந்நாட்டிலும் அன்று பருத்தி, நெசவுத் தொழிலில் ஈடுபடுத்தப்படவில்லை. சிந்து வெளி நாகரிகக் காலத்திற்குப்பின் 2000 அல்லது 3000 ஆண்டுகள் கழிந்த பின்னரே அது வெளியுலகில் பரவத் தொடங்கிற்று! எகிப்திலோ மெசெபொட்டமியாவிலோ, பிற்கால கிரீசிலோ, உரோமிலோ கூட மொகஞ்சதரோ நகர வாழ்க்கையிலிருந்த நகரமைப்பையோ, நகராட்சித் திட்டத்தையோ, உடல்நல வசதிகளையோ காணமுடியாது. அதன் வீடுகளுக்குச் சமமான மனைகளைப் பல்லாயிர ஆண்டுக்குப் பின் ஐரோப்பாவில் கூட வெனிஸ், வீயன்னா ஆகிய வாணிக நகரங்களில் மட்டுமே காணக் கூடும். இங்கும் மொகஞ்சதரோவின் குளிப்பறை, மலங்கழி விடுதி, வடிகால் வசதி ஆகியவற்றுக்கு ஈடுகாண்பது அரிது. தென்னாட்டிலும் தமிழகத்திலும் சிந்துவெளி நாகரிகச் சின்னத்துடன் ஒத்த சின்னங்கள் ஏராளமாக அகப்படுகின்றன. சிந்துவெளியிலுள்ள முத்திரைகளின் மூலம் நாம் சிந்துவெளியில் எழுத்துமுறை இருந்தது என்று அறிகிறோம். இவை சித்திரங்களால் எழுதப்பட்ட எழுத்துக்களின் வழிவந்த வடிவெழுத்துக் களாயுள்ளன. மீன் வடிவம் எழுத்துக்களின் அடிப்படை வடிவா யிருக்கிறது. இவ்வெழுத்து முறையே தென்னாட்டிலுள்ள பழந் தமிழ் அல்லது வட்டெழுத்துக்கும் மற்ற எழுத்து முறைகளுக்கும் பிராமி முதலிய வடபுல எழுத்துக்களுக்கும் கருமூலம் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். சிந்து எழுத்துக்கள் இன்னும் தெளிவாக இனமறியப் படவில்லை. ஆனால், சிந்துவெளி மொழி திராவிட மொழிகளுடன் தொடர்புடையது என்றும், தமிழுக்கும் பழங்கன்னடத்துக்கும் மிகவும் அணித்தாயுள்ளது என்றும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். முத்திரைகளில் பல தமிழ்ச் சொற்களும் சில தமிழ்க் குறட்பாக்களும் கூடக் காணப்படுவதாக அறிஞர் திருத்தந்தை ஹீராஸ் கூறுகிறார். கார்முகில், மழை, மீனவர், குரங்கர், வேலூர் ஆகிய சொற்களும்; மூன்கண் (முக்கண்ணன்) பேரான் (பெரிய ஏறு அல்லது உயிர்) எண்ணான் (எண்குணத்தான்) என்ற சிவன் பெயர்களும், கோண்டர் களிடையே இன்னும் வழங்கும் மூனுதயது (மூன்று கம்பிளிகள் இன்றியமையாத குளிர்காலம்) என்ற சொல்லும் அவர் கண்ட தமிழ் அல்லது தமிழினச் சொற்களுட் சில. சிந்துவெளி எழுத்துக்கள் கொண்ட நாணயங்கள் தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் கிடைத்துள்ளன. மொழியைப் போலவே சமய வாழ்வு, நாகரிகம், கலை பண்பாடு, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றிலும் சிந்துவெளி பெரிதும் தென்னாட்டையும் தமிழகத்தையும் நினைவூட்டுவதா யுள்ளது. இறந்தவரைப் புதைத்தல், சமயச் சார்பற்ற நாகரிகம், தொழில் வாணிகச் சிறப்பு, நகரவாழ்வு, உயர் இன்பவாழ்க்கைப் பொருள்கள், திட்டமிட்ட நகரமைப்பு ஆகியவகைகளில் சங்க இலக்கிய காலத் தமிழகத்துக்குச் சிந்துவெளி மிக அணுக்கத் தொடர்புடையது. இவை எல்லவாற்றிலும் சிந்துவெளி நாகரிகத் துக்குப் பிற்பட்ட காலத்துக்குரிய வேத நாகரிகம் வேறுபட்டது ஆகும். இன்றைய தென்னாட்டு நாகரிகத்தின் தனிச்சிறப்புக்குரிய கூறுகளுள் ஒன்று தெப்பக்குள அமைப்பு ஆகும். மொகஞ்சதரோ வின் அரண்மனை யடுத்த செய்குளம் பேரளவில் தென்னாட்டுத் தெப்பக் குளங்களை நினைவூட்டுவதாயுள்ளது. அதன் அமைப்பு இன்றைய அமைப்பான்மை வல்லுநருக்குக்கூட வியப்பூட்டுகின்றது. நீர்த்தேக்க எல்லையிலேயே அது 40 அடி(1200 செ.மீ) அடி நீளம் 23 அடி(690 செ.மீ.) அகலம் உடையது. சுற்றிலும் நீர் எல்லை வரைப் படிக்கட்டுகளும் 41/2 அடி (135 செ.மீ.,) 7 அடி (210 செ.மீ.) திண்ணம் உள்ள இரு மதில்களும் உள்ளன. மதில்களிடையிலும் மதில் முகட்டிலும் அகலமான சுற்றுப் பாதைகள் உள்ளன. செய்குளத்தின் அடித்தளம் வழவழப்பாக இழைக்கப்பட்ட செங்கல்லால் பாவப்பட்டு நிலக்கீலால் தற்கால சிமிட்டிப் பூச்சுப் போலத் தோன்றுப்படி பூசப்பட்டுள்ளது. அடித்தளத்தில் நீர் ஊறித் தண்ணீர் கெட்டுவிடாமலிருப்பதற் காகச் செய்யப்பட்ட இவ்வேறுபாடு இன்றளவும் நீரைத் தூய்மையுடையதாகக் காக்கிறது. நிலக்கீல் மொகஞ்சதரோவில் அருகலாகவும் சுமேரில் ஏராளமாகவும் பயன்படுத்தப் பட்டிருப்பதால் அது அங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் என்று அறிஞர் கருது கின்றனர். தமிழகத்திலும் கன்னட நாட்டிலும் சமயப் பற்றுடையவர் இல்லங்களில் காணப்படுவது போன்ற பூசைப் புரைகள் மொகஞ்சதரோவிலுள்ள பெரும்பாலான வீடுகளில் உள்ளன. பிள்ளைகளுக்குரிய விளையாட்டுப் பொருள்களில் இன்றும் காணத்தக்க ஒரு புதுமை மொகஞ்சதரோவில் உள்ளது. கம்பில் கட்டப்பட்ட ஒரு கயிற்றின் மீது ஒரு பறவை ஏறி இறங்கும் படியாகப் பொறி அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வீட்டுத் தட்டுமுட்டுப் பொருள்கள் பெரும்பாலும் களிமண்ணால் செய்யப்பட்டுள்ளன. ஆனால், விழக்காலங்களுக் குரிய அரும்பொருள்கள் சங்கினாலும் வெண்கலத்தினாலும் செய்யப்பட்டவை. மரம், செம்பு ஆகியவைகளும் வழங்கப்பட்டன. விலங்குகளில் யானை, ஒட்டகம், கழுதை, நாய்கள், ஆடுமாடுகள் ஆகியவையும், புலி, கரடி, மான், மலையாடு, முயல், காண்டா மிருகம் ஆகியவையும் மயில், கிளி, கோழி, புறா, பருந்து, பாம்பு, ஆமை ஆகியவையும், பதுமைகள் வடிவிலும், முத்திரை ஓவியங்களிலும் காணப்படுகின்றன. நாய்கள் சிந்துவெளியிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. சங்கு, மயில், ஆனை என்ற மூன்றும் சிந்துவெளிக்கும் தமிழகத்துக்கும் இடையே இருந்த வாணிகத் தொடர்புக்குச் சான்றுகள் ஆகும். அணிகலன்கள் தங்கம், வெள்ளி, செம்பு, வெண்கலம், தந்தம், கண்ணாடி ஆகியவற்றால் செய்யப்பட்டன, சிந்துவெளித் தங்கத்தில் சிறிது வெள்ளி கலந்திருப்பதால் அது கோலாரிலிருந்து சென்றதே என்று அறிஞர் துணிந்துள்ளனர். சங்க இலக்கியங்களிலே தங்கம் விளையும் கோலார் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சிந்துவெளிக் காலத்திலிருந்தே அங்கே தங்கம் வெட்டி எடுக்கப்பட்டதென்று இதனால் தெரியவருகிறது. சிந்து வெளியில் தங்க வெள்ளிக் கலவை, வெள்ளீயம், காரீயம் ஆகியவையும் வழங்கின. செம்பு இரசபுதனத்திலிருந்தும் பாரசிகத்திலிருந்தும் கிடைத்தன. இன்று செம்புடன் நூற்றுக்குப் பன்னிரண்டு பங்கு வெள்ளீயம் சேர்த்து வெண்கலம் செய்யப்படுகிறது. ஆனால், மொகஞ்சதரோவில் செம்பில் 100-க்கு 22 பங்கு வெள்ளீயம் சேர்த்து வெண்கலம் செய்யப்பட்டுள்ளது. மொகஞ்சதரோவின் வெண்கலக் கலவையே சிந்து கங்கை வெளியில் கி.மு.4-ஆம் நூற்றாண்டுவரை வழங்கியதாக அறிகிறோம். சிந்துவெளி மக்கள் பலவகை மழிக்கும் கத்திகளைப் பயன் படுத்தியிருந்தனர். அவர்கள் தாடி வைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், மீசையுட்பட முகமுழுதும் உடலும் மழித்தனர். ஆண், பெண் இருபாலரும் கண்ணுக்கு மையிட்டனர். செங்காவிப் பொட்டு நெற்றிக்கு இடப்பட்டது. மேசை நாற்காலி போன்ற பீடங்கள் வீடுகளில் இருந்ததன. பெரும்பாலும் செல்வர் வீடுகளுக்கு மாடிகள் இருந்தன. இரம்பம், தோல் அறுக்கும் உளி ஆகியவையும், வாள், ஈட்டி, அம்புமுனை ஆகிய வேட்டைக்கான கருவிகளும் காணப்படுகின்றன. போர், போர்க்கருவிகளுக்கான அடையாளம் எதுவும் காணவில்லை. ஆனால், ஹரப்பாவில் நகரில் வெளியரண் ஒன்று இருக்கிறது. சிந்துவெளி நகரங்கள் யாவும் கோட்டை சூழ்ந்தவையே என்பதை இது காட்டுகிறது. வீடுதோறும் பெண்களுக்கும் விருந்தினருக்கும் சமையலுக்கும் தனியிடம் இருந்தது. பெரிய வீடுகளில் காவலர்க்குத் தனியிடம் இருந்ததாகத் தெரிகிறது. தூண்டில் முள், கொட்டாப்புளி, இழைப்புளி, சுத்தி, துளையிடு கருவி, நெசவாளர் கருவிகள், துணிதுன்னும் ஊசி, தந்த ஆடைமாட்டி, கொண்டையூசி, எலும்புப் பொத்தான்கள், முகக் கண்ணாடி ஆகியவை சிந்துவெளி மக்களின் உயர் இன்ப வாழ்க்கைகான சின்னங்கள். நீள் சதுர வடிவுடைய செப்புத் தகடுகள் பல உள்ளன. இவை நாணயங்கள் என்று கருதப்படுகிறது. இவையும் நிறைகோல், படிக்கற்கள், அளவுகோல், முத்திரைகள் ஆகியவையும் வாணிக வாழ்வுக்குரிய அடையாளங்கள். இலக்க மிடப்பட்ட பல் பொருள்களும் உள்ளன. அவை அரசியலுக்கு உரிமைப்பட்ட பொருள்களாக இருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது. கொத்துவேலை, மட்பாண்டவேலை, தச்சு, கல்தச்சு, பொற் கொல்லர் வேலை, கன்னாரவேலை, இரத்தினத்தொழில், செதுக்குக் கலை, சங்குத் தொழில், மீன்பிடித்தல், வண்டி ஓட்டல், தோட்டி வேலை, காவல் தொழில், கப்பல் தொழில், (நெல், கோதுமை, வால்கோதுமை, எள் பருத்தி ஆகியவற்றின்) பயிர்த் தொழில், தந்த வேலை, பாய் முடைதல், வாணிகம், சிற்பம், ஓவியம் ஆகியவை சிந்துவெளி மக்கள் ஈடுபட்ட தொழில்கள் ஆகும். ஓவியம், இசை, நடனம் ஆகிய கலைகளையும், கணிதம், மருத்துவம், வானநூல் ஆகிய இயல்களையும் அவர்கள் தேர்ந்து வைத்திருந்தனர். மிருதங்கம் நடனப் பெண் ஆகிய ஓவியங்கள் கலைகளுக்குச் சான்று. நிறைக்கற்கள் கணக்கறிவை உணர்த்து கின்றன. வீடு கட்டுவதில் அவர்கள் இராசி அறிவைக் காட்டி யிருந்தனர். கல்வமொன்றில் மீந்துள்ள சிலாசத்து அவர்கள் மருத்துவப் பயிற்சிக்குச் சான்று ஆகும். தமிழ் ஆண்டைப்போலச் சிந்துவெளி மக்கள் ஆண்டு தை மாதத்திலேயே தொடங்கிற்று. சுமேரியருக்கு இராசிகள் பத்தாயிருக்க சிந்து வெளி மக்களுக்கு எட்டேயிருந்தன. இதனால் சிந்துவெளி நாகரிகத்தின் பழமை கி.மு. 5610 வரை எட்டுவதாகத் தெரிகிறது. இது சுமேரிய நாகரிகம் பிறப்பதற்கு ஆயிரக்கணக் கான ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் ஆகும். மனித நாகரிகத்தின் பிறப்பிடமும், வளர்ப்புப் பண்ணையும் எகிப்தோ, பாபிலோனோ அல்ல; சிந்துவெளியும் தென்னாடுமே என்பதை இது அறுதி யிட்டுக் காட்டுகின்றது. சிந்துவெளி நாகரிகம் வேத ஆரிய நாகரித்துடன் தொடர் பற்றது. மேலும் அது வேதநாகரிகத்துக்குப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டது. அதே சமயம் அது திராவிட நாகரிகத்துடன் நெருங்கிய தொடர்புடையது. உண்மையில் ஆரியர் சிந்து கங்கை வெளியில் நுழையுமுன் இருந்த திராவிட நாகரிகம் அதுவே என்று துணியலாம். ஏனெனில், ஹரப்பா மொகெஞ்சதரோ ஆகிய இரண்டு நகரங்களும் இயற்கையாய் அழிந்தவையாகத் தோற்றவில்லை. கி.மு.2500-ஆம் ஆண்டுக்குப் பின் அவை திடுமென அழிவுற்றதற்கான அடையாளங்கள் உள்ளன. இருக்கு வேத ஆரியர் படையெடுப்பாலேயே அவை அழிந்திருக்க வேண்டும் என்று அறிஞர் கருதுகின்றனர். இருக்குவேத ஆரியர் தங்கள் எதிரிகளை ஆரியர் அல்லாத வர்கள், தாசர்கள் (கறுப்பர்கள்), புரியா மொழி பேசுபவர்கள், சப்பை மூக்கர், தமக்கென்று வேறுமாதிரியான வழிபாடுகளை யுடையவர்கள். சிசுன தேவர்கள் (இலிங்கத்தை வணங்குபவர்கள்), மாயமந்திரம் வல்லவர்கள், கோட்டையால் பாதுகாக்கப்பட்ட பல நகரங்களை யுடையவர்கள், மிகுந்த செல்வ முடையவர்கள் என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளனர். இவ்வர்ணனைகள் அனைத்தும் சிந்துவெளி நாகரிகத்துடன் முற்றிலும் பொருத்துபவையே. இந்திரன் உதவியால் இம்மக்கள் நகரங்களைத் தாங்கள் அழித்ததாக அவர்கள் பல தடவை கூறுகின்றனர். இருக்குவேதத்தில் கண்டிக்கப்பட்ட சிந்துவெளி மக்களின் பழக்க வழக்கங்கள், கோட்பாடுகள் ஆகியவை யசுர் முதலிய பிற்பட்ட வேதங்களிலும் பிற்கால புராணப்பகைமையும் தணிந்தபின் சிந்துவெளிச்சமயம், நாகரிகம், பழக்க வழக்கங்கள் ஆகியவைகள் புதிய இந்தோ ஆரியரால் மேற்கொள்ளப்பட்டன என்று அறிகிறோம். ஆனால், பண்பாடுகள் ஏற்கப்பட்டாலும் சிந்துவெளித் திராவிட மக்கள் மொழி, ஆட்சி, நாகரிகத் தூய்மை ஆகியவை சிந்து கங்கை வெளியில் படிப்படியாகக் கைவிடப் பட்டன. நாளடைவில் தென்னாட்டின் வடகோடியையும் இவை தாக்கின. சிந்துவெளி நாகரிகம் பற்றிய செய்திகள் இன்னும் முழுதும் பழம் பொருளாராய்ச்சியால் தெளிவு பெறவில்லை. அகழ்வு ஆராய்ச்சியில் ஒரு பகுதியே நடைபெற்றுள்ளது. வருங்காலத்தில் அகழ்வும் ஆராய்ச்சியும் பெருகித் திராவிட நாகரிகம், தென்னாட்டு வரலாறு ஆகியவற்றுக்கு இன்னும் மிகுதியான விளக்கம் ஏற்பட வழியுண்டு. மொழி இனம் மொழியாராய்ச்சி இன ஆராய்ச்சி ஆகியவை சிந்து வெளி தரும் ஒளியுடன் ஒத்து இயல்கின்றன. அத்துறைகளும் வருங் காலத்தில் வரலாற்றுப் பேரொளி தரவல்லன. கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டுத் தெலுங்கு, துளு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளும் ஒரே எழுத்துமுறை உடைய ஒரு மொழியாய் இருந்தன. அதே சமயம் தெற்கே தமிழும் மலையாளமும் ஒரே எழுத்துடைய ஒரே மொழியாய் இருந்தன. இதனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஐந்து திராவிட மொழிகளும் இரண்டு மொழிகளாவே இருந்தன என்று அறிகிறோம். இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டுத் தென் திராவிடம் அதாவது தமிழ் - மலையாளத்துக்கும், வடதிராவிடம் அதாவது தெலுங்கு - துளு - கன்னடத்துக்கும் மிகுதி வேற்றுமை இல்லாதிருந்தது. தென்னாட்டின் ஐந்து மொழிகளும் இரண்டாயிரத்தைந் நூறு அல்லது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரே மொழி யாயிருந்திருக்க வேண்டும். இதனை நாம் பண்டைத் திராவிட மொழி எனலாம். இன்னும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பண்பட்ட திராவிட மொழிகளாகிய தென்னாட்டு மொழிகளும், சிந்து கங்கை வெளிகளிலுள்ள பண்படாத் திராவிட மொழிகளாகிய பிராகுவி, கோண்டு, இராசமகாலி ஆகியவையும் ஒரே மொழியாய் இருந்திருக்க வேண்டும். இதனை நாம் வரலாற்றுக்கு முற்பட்ட திராவிடம் எனலாம். சிந்துவெளி மொழி, தமிழ் அல்லது பழங்கன்னடத்தை ஒத்திருந்தது என்று அறிகிறோம். இது பண்டைத் திராவிட நிலையையோ, வரலாற்றுக்கு முற்பட்ட திராவிட நிலையையோ குறித்தது ஆகலாம். தென்னாட்டு மக்கள் மிகப் பெரும்பான்மையாகத் திராவிட மக்களே. அவர்கள் பேசும் மொழிகளும் திராவிட மொழிகளே. ஆனால், சிந்து கங்கை வெளியில்கூட திராவிட மொழிதான் ஆரியக் கலப்புற்று இந்தோ-ஆரிய மொழி களாயிற்றேயன்றி மக்கள் அங்கும் பெரும்பான்மையோர் இனத்தால் திராவிடரேயாவர். 1901-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கட் கணிப்பே இதைக் காட்ட வல்லது. தூய திராவிடர் தென்னாடு முழுவதிலும் வாழ்கின்றனர். அத்துடன் விந்தியமலைக்கு வடக்கில் கங்கையாற்றுக்குத் தெற்கில், நிரல்கோடு கிழக்கு 76 டிகிரி (பாகை)க்குக் கிழக்கில் பீகார் வரையிலும் திராவிடரே வாழ்கின்றனர். தவிர தென்னாட்டிலும், அதற்கு அப்பாலும் மலைப் பகுதிகளில் எங்கும் திராவிடப் பழங்குடியினரே வாழ்கின்றனர். சிந்து, கூர்ச்சரம், தென்னாட்டின் வடமேற்குப் பகுதி ஆகியவற்றில் சிறிய - திராவிட கலப்பினத்தாரும், வங்காளம் ஒரிசா ஆகிய பகுதிகளில் மங்கோலிய திராவிடக் கலப்பினத்தாரும் வாழ்கின்றனர். ஆரிய திராவிடக் கலப்பினத்தார் பீகார், உத்தரபிரதேசம், கிழக்குப் பஞ்சாப் ஆகிய இடங்களிலும், கிட்டத்தட்ட தூய ஆரியர் (இந்திய ஆரியர்) காஷ்மீர், மேற்குப் பஞ்சாப், இராஜபுதனத்தின் ஒரு பகுதி ஆகியவற்றிலும் வாழ்கின்றனர். தென்னாடு தூய திராவிட இனமும் மொழியும் பண்பும் உடைய நாடு என்பதையும், அதன் வடக்கிலும் அடிப்படை இனம் திராவிடமே என்பதையும் இக்கணிப்புக் காட்டுகிறது. அடிக்குறிப்புகள் 1. இலத்தீனில் பெகு (ஞநஉர) ஆனினத்தையும் பணத்தையும் குறிக்கும். 2. ஊவைல ளுவயவந. 3. கங்காரு (முயபேயசடிடி)இன்று ஆஸ்திரேலியாவில் காணப்படுகிற விலங்கு. 4. னுடிiஅநளே, ஊசடிஅடநஉhள. 2. ருசளே. 5. ழுடிடனநn ஊhடைன. 6. னுளைஉடிஎநசல டிக ஐனேயை லெ ஞயனேவை துயறயாயசடயட சூநாசர. 7. ளுhi துடிhn ஆயசளாயடட 3. பண்டைப் பரப்பு (கி.மு. 3000 - கி.பி. 300) தென்னாட்டின் நாகரிக வரலாற்றுக்கு மண்ணூல் உதவுகிறது. புதை பொருளாராய்ச்சி உதவுகிறது. சிந்துவெளி ஆராய்ச்சி அத்துறைக்கு மிகவும் வளம் தருகிறது. ஆனால், அரசியல் வரலாற்றை இவை விளக்கப் போதவில்லை. புராண மரபு, மக்கள் மரபு, இலக்கிய மரபு ஆகிய மூன்றும் இத்துறையில் ஓரளவு உதவுகின்றன. ஆனால், அவை தரும் ஒளி மின்னல் ஒளியாகவோ, மின்மினி ஒளியாகவோ தான் இருக்கிறது. முதல் இரண்டு மரபுகளின் மெய்யுடன் பொய் கலந்துள்ளது. எது பொய், எது மெய் என்று பிரிப்பது எளிதாயில்லை. இறுதி மரபு நிறையச் செய்திகள் தருகின்றன. ஆனால், அவற்றை முற்றிலும் காலவரிசைப்படுத்த நமக்கு இன்னும் போதிய சாதனங்கள் கிட்டவில்லை. திருவிளையாடற் புராணம் பாண்டியர் மரபின் வரிசைப் பட்டியலும், பல சோழ மன்னர் பெயர்களும் தருகின்றது. ஆனால், இவை நமக்குத் தெரிந்த வரலாற்றுச் செய்திகளுக்கு முரண்படுகின்றன. இலக்கியத்தால் அறியப்படும் செய்திகளுக்கும் மாறுபடுகின்றன. இந்நிலையில் அப்புராணம் நமக்குச் சிறிதும் பயன்படவில்லை. திருவிளையடற் புராணம் ஒன்றல்ல - பல. அவை ஒன்றுடன் ஒன்று மாறுபடுகின்றன. சேர, சோழ பாண்டியர் முத்தமிழரசர். அவர்கள் ஆயிரக் கணக்கான ஆண்டுகள் தமிழகத்தில் ஆண்டனர். இதை நாம் வரலாற்றில் தெளிவாக அறிகிறோம். ஆனால், மக்கள் மரபும் இலக்கிய மரபும் அவர்கள் உலகத் தொடக்க முதலே மூன்று அரசர் மரபுகளாக இருந்தன என்று கூறுகின்றனர். மூன்றும் முதலில் ஒரே அரச மரபாயிருந்தது என்று மலையாள நாட்டு மக்கள் மரபும் இலக்கிய மரபும் குறிக்கின்றன. அதன்படி ‘மாவலி’ என்ற அரசன் தென்னாடு முழுவதையும் ஆண்டான். அவன் பாண்டிய மரபைச் சேர்ந்தவன். அக்காலத்தில் தென்னாட்டில் ஒரே மொழி, பழந்தமிழ்தான் வழங்கிற்று. சாதி வேறுபாடு, உயர்வு தாழ்வுகள் இல்லை. ஆனால், மாவலிக்கு ஐந்து புதல்வர்கள் இருந்தார்கள். அவர்கள் பாண்டியன், சோழன், சேரன், ஆந்திரன், கன்னடன் என்பவர். ஐவரும் தந்தையுடன் முரண்பட்டனர். அத்துடன் ஒருவருடன் ஒருவர் போராடினர். வெளிநாட்டுச் சூழ்ச்சிக்காரனான வாமனன் அவர்களைத் தூண்டிவிட்டான். மாவலி, புதல்வர் மடமைக்கு வருந்தினான். அதே சமயம் அவன் போரையும் விரும்பவில்லை. ஆகவே, நாட்டை ஐவருக்கும் பிரித்துக் கொடுத்துச் சென்றான். ஐந்து நாடும் ஐந்து மொழி நாடுகள் ஆயின. சோழனும் பாண்டியனும் பிற்காலத்தில் ஒன்றுபட்டதனால், இரண்டு நாடுகளும் ஒரே செந்தமிழ் நாடு ஆயின. மற்றவை கொடுந்தமிழ் நாடுகளாயின. பாண்டியன் என்ற சொல்லின் பொருள் இந்த மலையாள நாட்டு மரபுக்கு வலிமை தருகிறது. ‘பண்டு’ என்றால் பழைமை. பாண்டியநாடு பழம் பெருநாடு என்று தமிழ் இலக்கியத்தில் போற்றப்படுகிறது. அது மட்டுமன்று, மூன்று தமிழரசுகள் இருந்தாலும், தமிழுக்கு முதலுரிமை பெற்றது பாண்டி நாடே. அதில் மட்டுமே சங்கம் இருந்தது. தமிழ் நாட்டு மக்கள் வாய்மொழி, இலக்கியம் இரண்டிலும் இரண்டு பழம் பெருமரபுகள் நமக்கு வந்து எட்டியுள்ளன. ஒன்று கடல் கொண்ட தமிழக மரபு; மற்றொன்று முச்சங்க மரபு. கடல் கொண்ட தமிழக மரபு வருமாறு: குமரிமுனைக்குத் தெற்கே, இன்று குமரி மாகடல் அலைபாயு மிடத்தில், ஓர் அகன்ற நிலப்பரப்பு இருந்தது. அதில் குமரிக் கோடு, பன்மலை முதலிய மலைகளும்; குமரி, பஃறுளி முதலிய ஆறுகளும் இருந்தன. மற்றும் பஃறுளி யாற்றுக்குத் தெற்கே தென்பாலி முகம் என்ற நாடும்; பஃறுளி குமரி ஆறுகளுக்கிடையில் ஏழ்தெங்க நாடு, எம்மதுரை நாடு, ஏழ்முன்பாலை நாடு, ஏழ்பின்பாலை நாடு, ஏழ்குன்ற நாடு, ஏழ்குணகரை நாடு, ஏழ்குறும்பனை நாடு ஆகிய 49 நாடுகளும், குமரியாற்றுக்கு வடக்கே பன்மலையை அடுத்துக் குமரி கொல்லம் நாடுகளும் ஆகமொத்தம் 52 நாடுகள் இருந்தன. பஃறுளி ஆற்றின் கரையில் பாண்டியர் முதல் தலை நகரமான தென் மதுரையும், குமரியாற்றின் கடல் முகத்தில் இரண்டாம் தலைநகரமான அலைவாய் அல்லது கவாடபுரமும் இருந்தன. இத்தனையும் கடல் கொண்ட பின் வைகையாற்றின் கரையிலுள்ள மதுரை கடைசித் தலைநகரமாயிற்று. முச்சங்க மரபு முச்சங்க முத்தமிழ் மரபு கடல்கொண்ட தமிழக மரபுடன் இயைபும் தொடர்பும் உடையது. இறையனார் அகப்பொருள் என்ற நூலின் பழமையான உரை இதை விளக்கமாகத் தருகிறது. பாண்டியர் தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று மூன்று சங்கங்கள் நிறுவினார்கள். தலைச்சங்கம் காய்சினவழுதி முதல் கடுங்கோன் வரை, 89 பாண்டியர் காலங்களில் 4440 ஆண்டுகள் தென்மதுரையில் நடைபெற்றது. அதன் உறுப்பினர் தொகை 549. பாடும் பெருமை சான்ற 7 பாண்டியர் உட்பட பாண்டிய புலவர் தொகை 4449. தலைசிறந்த புலவர்கள் திரிபுரமெரித்த விரிசடைக் கடவுள், குன்றமெரித்த குமரவேள், நிதியின் கிழவன், அகத்தியன், முரஞ்சியூர் முடிநாகராயர் முதலியோர். மற்றும் அதங்கோட் டாசான், தொல்காப்பியனார், பனம்பாரனார் ஆகியோரும் இச்சங்கத்தவர் என்று கூறப்படுகிறது. இச்சங்கத்தில் பாடல் பெற்ற நூல்கள் முத்தமிழிலக்கண மாகிய அகத்தியம்; இயல் தமிழிலக்கணமாகிய தொல்காப்பியம்; முதுநாரை, முதுகுருகு போன்ற இசை நூல்கள்; முறுவல், சயந்தம், குணநூல், செயிற்றியம் போன்ற நாடக நூல்கள் ஆகியவை. மற்றும் பரிபாடல், களரியாவிரை, காக்கை பாடினியம், அவிநயம், நற்றத்தம், வாமனம், புறப்பொருள், பன்னிருபடலம் ஆகியவையும் இச்சங்க காலத்தவை என்று குறிப்பிடப்படுகின்றன. இடைச்சங்கம் வெண்தேர்ச் செழியன் முதல் முடத் திருமாறன் வரை, 59 பாண்டியர் காலங்களில், 3700 ஆண்டுகள், கவாடபுரம் அல்லது அலைவாயில் நடைபெற்றது. அதன் உறுப்பினர் தொகை 59. பாடும் பெருமைசான்ற 5 பாண்டியர் உட்பட, பாடிய புலவர் தொகை 3700. தலைசிறந்த புலவர்கள்: அகத்தியர், தொல்காப்பியர் நீங்கலாக, இருந்தையூர்க் கருங்கோழி, மோசி, வெள்ளூர்க்காப்பியன், சிறுபாண்டரங்கன், துவரைக் கோன், கீரந்தை ஆகியவர்கள். அரங்கேற்றப்பட்ட நூல்கள் கலி, குருகு, வெண்டாளி வியாழமாலை அகவல் ஆகியவை. தவிர, மேற்கோள் நூல்களாக மாபுராணம், இசை நுணுக்கம், பூதபுராணம் ஆகியவையும் கொள்ளப்பட்டன. கடைச்சங்கம், முடத்திருமாறன் முதல் உக்கிரப் பெருவழுதி வரை 49 பாண்டியர் காலங்களில், 1950 ஆண்டுகள், வைகைக் கரையிலுள்ள மதுரையில் நடைபெற்றது. அதன் உறுப்பினர் தொகை 49. பாடும் பெருமைசான்ற 3 பாண்டியர் உட்பட, பாடிய புலவர் தொகை 449. தலைசிறந்த புலவர்கள் சிறுமேதாவியார். சேந்தம்பூதனார். அறிவுடை அரனார். பெருங்குன்றூர்கிழார், இளந்திருமாறன், மதுரையாசிரியர் நல்லந்துவனார், மருதனிள நாகனார், கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஆகியவர்கள். பாடப்பட்ட நூல்கள்: நெடுந்தொகை நானூறு, குறுந் தொகை நானூறு, நற்றிணை நானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, நூற்றைம்பதுகலி, எழுபது பரிபாடல், கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை முதலியன. புராண மரபும் தமிழ் மரபும் இந்த இரண்டு மரபுரைகளும் புராண மரபுரைகள் அல்ல. ஆனாலும் அவற்றில் புராணமணம் வீசாமலில்லை. தெய்வங்கள் புலவருடன் வந்து இடம் பெறுகின்றனர். ஆண்டுகள் ஆயிரம் பதினாயிரக் கணக்கில் காட்சியளிக்கின்றன. ஆனால், இவற்றைப் பொய் என முற்றிலும் விலக்கிவிடவும் முடியவில்லை. அவற்றில் போதிய உண்மைகள் இருக்கின்றன என்பதைத் தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகார நூல் மரபு, உரைமரபு முதலியவை வலியுறுத்துகின்றன. சங்க இலக்கியம் என்ற பெயரில் இன்று நம்மிடையே இருக்கும் இலக்கியம் கடைச்சங்க இலக்கியம். மரபுரையில் குறிப்பிட்ட நூல்களின் விவரங்களுடன் அது பெரும்பாலும் ஒத்துள்ளது. தொல்காப்பியம் இடைச் சங்கம் அல்லது முதல் சங்கத்துக்கு உரியது. முச்சங்க மரபின் பெரும் பகுதி உண்மை என்பதை இவை காட்டுகின்றன. தவிர, சங்க இலக்கியத்துக்கு முற்பட்ட முத்தமிழ் மரபைச் சிலப்பதிகாரமும் அதன் உரையும் மறுக்கமாட்டாத நிலையில் நமக்கு விளக்குகின்றன. இயல், இசை, நாடகம் என்ற மூவகைத் தமிழில், சங்க இலக்கியமும் தொல்காப்பியமும் தெரிவிப்பது இயல் ஒன்றையே. சிலப்பதிகாரம் தெரிவிக்கும் இசை, நாடகம் ஆகியவற்றின் இலக்கண இலக்கியங்கள் அவற்றுக்கு முற்பட்டன வாதல் வேண்டும் என்பது தெளிவு. உலக இலக்கிய கலை ஆராய்ச்சிகள் சிலப்பதிகாரம் தரும் விளக்கொளிக்கு இன்னும் வலிமை தருகின்றன. ஏனென்றால், சிலப்பதிகாரத்தால் நாம் அறியும் தமிழ்நாடக மரபுடன் மலையாள நாட்டு நாடக மரபு, சமஸ்கிருத நாடகமரபு, தென் கிழக்காசிய மரபு, கிரேக்க உரோம மரபுகள் ஆங்கிலேய நாட்டு மரபு, பண்டை அமெரிக்க ‘மய’ நாகரிக மரபு ஆகியவை தொடர்புடையவை. கடல்கொண்ட தமிழ் மரபைச் சங்கநூல் பாட்டுக்கள் மெய்ப்பிக்கின்றன. தற்கால மண்நூல் நில நூலாராய்ச்சிகளும் பிறநாட்டு மரபுகளும் இதனுடன் பெரிதும் பொருந்துகின்றன. இவற்றுடன் சிந்துவெளி ஆராய்ச்சி தமிழின் பழமைக்கும், தமிழினத்தின் பெருமைக்கும் புதிய சான்றுகள் தரத் தொடங்கி யுள்ளது. தமிழகத்தில் மூவேந்தர்கள் மட்டுமல்ல, வேறு பல சிற்றரசர்களும் இருந்தனர் என்று தமிழ் இலக்கியத்தால் அறிகிறோம். இவர்கள் வேளிர் அல்லது குறுநில மன்னர்கள் எனப்பட்டார்கள். மூவேந்தர்கள் முடிஉடைய அரசர்கள். வேளிருக்கு முடி கிடையாது. ஆகவே அவர்கள் குடி அரசர்கள் என்று குறிக்கப்படுகிறார்கள். தமிழகத்துக்கு அப்பால் ஆந்திர தெலுங்குப் பகுதியில் இத்தகைய குடி அரசர்கள் இருந்தனர். தமிழக எல்லையில் இவர்கள் திரையர், பல்லவர், குறும்பர் என்றும், அதற்கப்பால், சளுக்கர், கடம்பர் என்றும் அழைக்கப்பட்டனர். தமிழகத்துக்கு வெளியே இந்தக் குடியரசர்கள் முடியரசர் களுக்கு முற்பட்டவர்கள். சளுக்கர் முதலிய பல பிற்கால முடியரசு மரபுகள் இக்குடியரசுகளிலிருந்தே வளர்ந்தன. தமிழகத்திலும் சேர சோழ பாண்டியர்கள் தொடக்கத்தில் குடியரசர்களாயிருந்திருக்க வேண்டும் என்று கருத இடமுண்டு. பல குடியரசர்கள் சேர்ந்தும், பல குடியரசர்களை வென்றும் அவர்கள் முடியரசர்களாயிருக்கக் கூடும். பாண்டியருக்கு வழுதி, பஞ்சவர், பழயர், செழியர், கௌரியர் முதலிய பல பெயர்கள் உண்டு. சோழருக்குச் செம்பியர், சென்னியர், வளவர், கிள்ளிகள் முதலிய பெயர்களும், சேரர்களுக்கு வானவர், கொங்கர், வில்லவர், பொறையர், கோதைகள், குடவர், குட்டுவர் முதலிய பெயர்களும் இருந்தன. இவை அவர்களுக்கு உட்பட்ட அல்லது அவர்களால் வெல்லப்பட்ட குடியரசுகளின் பெயர் களாயிருக்கலாம். சேர அரசு கடைசிவரை குடியரசுகளின் இணைப்பு (உடிகேநனநசயவiடிn) ஆகவே இருந்து வந்தது. பண்டைக் குடியரசுகளின் இணைப்புக்களில் ஒன்றுதான் ஆந்திர அரசு. அது இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன்பே பேரரசாக விளங்கிற்று. விந்தியமலைக்கு அப்பால் இக்குடியரசுகள் மூன்றாம் நூற்றாண்டு வரை அழியாமல் இருந்தன. புத்தர் பிறந்த சாக்கியர் குடி, லிச்சாவி குடி ஆகியவை இவற்றுள் சில. தொடக்ககால அரசு ஒரு சிறு எல்லைக்குட்பட்டது. அது முதலில் குடியரசாகவே இருந்தது. நாட்டாண்மை முறையாக அது இன்றுவரை இருந்து வருகிறது. ஆனால், குடியரசைத் தனிமனிதர் கைப்பற்றி வேளிர் ஆயினர். அவர்கள் பிற வேளிரை வென்று முடியரசர் ஆயினர். இவை மூவரசர் தோன்றுமுன் இருந்த, இருந்திருக்கக் கூடிய, நிலைமைகள். ஆனால், மூவரசர் காலமே ஆயிரக்கணக்கான ஆண்டு பழமை உடையது. குடியரசுக் காலம் இன்னும் பழமையுடையதா யிருந்திருக்க வேண்டும். வரலாற்றிற்கு முற்பட்ட கடல் வாணிகத் தொடர்புகள் தமிழ் நாகரிகம் தென்னாடு முழுவதும் பரந்திருந்த பழம் பெரு நாகரிகம். அதன் கிளைகள் தென்னாடு கடந்து உலகெங்கும் பரந்து மனித நாகரிகத்தை வளர்த்தன. தென்னாட்டு நாகரிகத்தை நாம் இன்று தமிழின நாகரிகம் அல்லது திராவிட நாகரிகம் என்கிறோம். தமிழன் நாகரிகம் ஃவினீய நாகரிகத்தைப் போல ஒரு வாணிக நாகரிகம், கடல் வாணிக நாகரிகம். கடலும் கடல் வாணிகமும் மிகமிகப் பழங்காலந்தொட்டே தமிழ் இனத்தவர் உயிர் மூச்சாயிருந்தது. அவர்கள் பழங்காலக் கடல் வாணிக வாழ்வு பற்றிய பல குறிப்புகளை நாம் பரிபாடல் போன்ற பழந்தமிழ் நூல்களில் காணலாம். சுமேரிலும் ஏலத்திலும் சிந்துவெளிக் குடியேற்றங்கள் இருந்தன. அந்நாகரிகங்களே சிந்துவெளி நாகரிகத்தின் கிளைகள் என்று பல அறிஞர் கருதுகின்றனர். ஆனால், சிந்துவெளி மூலமாக மட்டுமன்றி, நேரடியாகவே தென்னாட்டு வாணிகப் பழமை பற்றிய சான்றுகள் நமக்குக் கிட்டுகின்றன. கி.மு. 4000-க்கு முற்பட்ட சிந்துவெளி நாகரிகத்தில் தென்னாட்டின் மயில், யானை, தந்தம், பொன் ஆகிய பொருள்களையும் நாகரிகத் தொடர்பையும் காண்கிறோம். அதே காலத்துக்குரிய சுமேரியரின் தலைநகரான ‘ஊ’ரில் உத்தரங் களுக்குத் தென்னாட்டுத் தேக்குமரங்கள் வழங்கின. கி.மு.3000-ல் தென்னாட்டு வணிகரே பாபிலோனுக்குத் தம் சரக்குகளை அனுப்பினர். செங்கடல் வாணிகத்தை அராபியர் தம் கைக்குள் வைத்திருந்ததால், கி.மு.2600 முதல் தென்னாட்டினர் எகிப்தியருக்கு வேண்டிய மிளகு, திப்பிலி, தேக்கு, குங்கிலியம், தானியங்கள், புலித்தோல், தந்தம், பொன் ஆகிய சரக்குகளைக் கிழக்காப்பிரிக்கா மூலம் அனுப்பினர். ஆப்பிரிக்காவிலேயே கட்டடத்துக்குரிய மரங்கள் இருந்தாலும், தென்னாட்டுத் தேக்கே உயர்வாகக் கருதப்பட்டு உயரிய கட்டடங்களுக்குப் பயன் படுத்தப்பட்டன. தவிர, அவுரியும் நல்லெண்ணெயும் தென்னாட்டினராலேயே அங்கே வாழ்வில் புகுத்தப்பட்டன. ‘பண்டு’ நாட்டிலிருந்தும் *‘ஒஃவிர்’ என்ற அதன் துறைமுகத் திலிருந்தும் கலங்கள் அடிக்கடி சென்று வந்தன. ‘பண்டு’ என்பது தென்னாட்டுப் பாண்டிய நாடு, 1‘ஒஃவிர்’ (டீயீhசை) என்பது கன்னியாகுமரியை அடுத்த உவரி என்ற பண்டைத் துறைமுகம். அது தங்கத்துக்கும் முத்துக்கும் பேர் போனதாயிருந்தது. கீழ்த்திசையில் தமிழர் சீனரிடமிருந்து செவ்வந்திக்கல், பட்டு முதலிய பொருள்கள் தருவித்தனர். கரும்புப்பயிர்த் தொழிலைச் சீனரிடமிருந்தே பண்டைத் தமிழ் வேளிர்களுள் ஒருவன் கொண்டு வந்ததாகச் சங்க நூல்கள் கூறுகின்றன. ஆனால், எகிப்துக்குச் செல்லும் சீனரின் சரக்குகள் பெரும்பாலும் நிலவழியாகவே சென்று வந்தன. கி.மு.2000-ல் ஆரியர் படையெடுப்பால், நில வழிநாடுகளில் சீர்குலைப்பு ஏற்பட்டது. அவ்வாணிகம் அதுமுதல் தமிழகக் கடல் வழியாகவே சென்றது. பெரும்பாலும் சரக்குகள் கீழ்க்கடல் துறைகளில் இறங்கிப் பொதிமாடுகளால் சோழ பாண்டிய நாடுகள் கடந்து மேல் கடல் துறைகளில் மீண்டும் கப்பலேற்றப்பட்டன. பண்டைய உலக வாணிகத்தில் தமிழகத்துக்கு இருந்த சிறப்பை இன்னும் உலகமொழிகள் காட்டுகின்றன. அரிசி, இஞ்சி, அகில், சந்தனம் கருவாப்பட்டை, மிளகு (திப்பிலி) ஆகிய சொற்கள் கிட்டத்தட்ட எல்லா உலகமொழிகளிலும், கிரேக்க, எபிரேய, சமஸ்கிருத மொழிகள் வாயிலாகப் பரந்துள்ளன. குரங்கு, தந்தம், மயில் ஆகியவற்றுக்கான சொற்களும், கப்பல் என்பதற்கான சொற்களும் (தமிழ் நாவாய், சமஸ்கிருதம் கிரேக்கம் நவுஸ்) கிரேக்கம், எபிரேயம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பரவின. ‘சிந்து’ என்ற சொல் பாபிலோனிய மொழியில் ஆடையைக் குறித்தது. இது சிந்துவெளியில் செய்த ஆடையின் பெயராயிருந் தால் கூடத் தமிழகத் தொடர்பையே சுட்டிக்காட்டுகிறது. ஏனெனில் நிலவழியாகச் சென்ற சொற்கள் மொழி முதல் ‘ச’ கரத்தை இழந்து விடுவது வழக்கம். அறிஞர் பி.டி. சீனிவாச அய்யங்கார் சிந்து என்பது துணி என்ற பொருளுடைய பழந்திராவிடச் சொல்லே என்று கருதுகிறார். இது தமிழில் கொடி என்ற பொருளையும் கன்னடதுளு மொழிகளில் துணி என்ற பொருளையும் தருகிறது. வேத, ஆரிய, மொழியில் வாணிகச் சொற்கள் மட்டுமின்றி, அணு, அரணி (காட்டுச்சுள்ளி), கருமாரா (கருமான்), பலம் (பழம்), பீசம் (விதை), மயூரம் (மயில்), ராத்திரி (இரவு), ரூபம் (உருவம்), மீனம் (மீன்), நீரம் (நீர்), புஷ்பம் (பூ), நானா (பல-நால்+நால்), காலம், குடி, கணம் முதலிய சொற்களும் தமிழின மொழிகளிலிருந்து சென்று கலந்துள்ளன என்று மொழி நூலார் காட்டுகின்றனர். கி.மு. 1000 முதல் 800 வரை வாழ்ந்த *2ஹோமர் ஹெஸீயட், பிண்டார் ஆகிய கிரேக்க கவிஞர் தமிழகச் செல்வத்தைப் புகழ்ந்துள்ளனர். கி.மு. 1000 முதல் 900 வரை பாலஸ்தீனின் முதலரசராயிருந்த தாவீதும், சாலமனும், தயர் நகரின் ஃவினீசிய அரசனான ஹீரமும், தென்னாட்டு உவரிக்குக் கலங்களை அனுப்பி, முத்து, பொன், வெள்ளி, தந்தம், குரங்குகள் ஆகியவற்றைத் தருவித்தனர். சாலமன் சந்தனமும் மயிலும் தருவித்தான். கி.மு. 9ஆம் நூற்றாண்டு முதல் 8ஆம் நூற்றாண்டு வரை தென்னாட்டு யானைகள் அசிரியாவில் இறக்குமதி செய்யப் பட்டன. கி.மு.6 முதல் 2ஆம் நூற்றாண்டு வரை பெருக்கமுற்றது. கி.மு. 5ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட புத்த நூலாகிய பவேருசாதகம் தென்னாட்டிலிருந்து முதன் முதல், மயில் பாபிலோனுக்குச் சென்றது பற்றிய சுவையான கதை ஒன்றைக் கூறுகிறது. தென்னாட்டு வணிகருடன் வட ஆரியர் கடல் கடந்து வாணிகம் செய்வதை ஆரிய சுமிருதி வாணரான போதாயனர் கண்டிக்கிறார். கி.மு.4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சாணக்கியர் அல்லது கௌடில்யர் தென்னாட்டு வாணிகத்தைச் சிறப் பித்துள்ளார். சிந்து கங்கைவெளி அந்நாளில் கம்பிளி, தோல், குதிரை ஆகிய மலிவான சரக்கையே அனுப்பிற்று என்றும்; ஆனால், தென்னாடு முத்து, வைரம், தங்கம் ஆகிய விலையேறிய பொருள்கள் அனுப்பிற்று என்றும் அவர் குறிப்பிடுகிறார். யவனர் தமிழகத்திலிருந்து மிளகு, இஞ்சி, அரிசி, மெல் ஆடை ஆகியவற்றைப் பெற்றனர். திரைச்சீலை, பாவை விளக்கு முதலிய கலைப் பொருள்களையும், கோட்டைகளுக்கான பொறிகளையும், அரசர் பெருமக்களுக்கான புட்டி மதுவையும் தமிழகத்திற்குக் கொண்டு வந்தனர். யவனப் பெண்டிர் ஆடல் மகளிராகவும், ஆடவர் மெய்க்காப்பாளராகவும் கலைஞராகவும் தமிழகத்தில் வந்து வாழ்ந்தனர். மதுரையிலும் புகார் அல்லது காவிரிப்பூம்பட்டினத்திலும் யவனச் சேரிகள் இருந்ததாகத் தமிழ் நூல்கள் குறிக்கின்றன. மேற்குக் கடல் துறை முகமாகிய முசிறியில் (கிராங்கனூர்) உரோமக் குடியிருப்பும் கோயிலும், உரோமக் காவல் வீரர் 2000பேரும் இருந்ததாக 3பியூட்டிங்கெரியன் பட்டயம் குறிக்கிறது. புதைபொருள் ஆராய்ச்சியால் புதுச்சேரி யிலும் உரோமக் குடியிருப்புகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததாக அறிகிறோம். கி.மு.6-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.6-ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து நடைபெற்ற உரோம யவன வாணிகம் கி.மு. முதலாம் நூற்றாண்டில் உச்ச நிலை அடைந்தது. வாணிக வளர்ச்சி கருதி கி.மு.20, கி.பி.107, 138, 336 ஆகிய ஆண்டுகளிலும் பாண்டியன் உரோமப் பேரரசரிடம் அரசியல் தூதர் அனுப்பிய தாக அறிகிறோம். கி.மு.20-க்கு ஒரு தூது, மெய்க்காப்பாளர் படைக்கு வீரர் தருவிப்பதற்காக படைத்தலைவரிடம் அனுப்பப் பட்டிருந்தது. கிரேக்க உரோமருடன் தமிழகம் நடத்திய வாணிகம் பற்றிய பல விரிவான குறிப்புகளை டாலமி என்ற எகிப்திய நில நூலாசியரும், பிளினி என்ற உரோம வரலாற்றாசிரியரும் பிறரும் தந்துள்ளனர். உரோம மன்னர், உயர்குடிமக்கள், பெண்மணிகள் ஆடை அணி மணி இனப்பொருள்களுக்காகச் செலவு செய்த பொன்னால், உரோம உலகு வறுமையுற்றும், தமிழகம் வளமுற்றும் வந்தது கண்டு பிளினி அங்கலாய்த்துக் கொண்டார். ஆண்டுதோறும் சீனா, தென்னாடு, அராபியா ஆகிய நாடுகளுக்கு உரோமர் வாணிகத்துக்காக அனுப்பிய 100 கோடி *4செஸ்டாஸ்களில் பாதி தென்னாட்டுக்குச் சென்றதாக அவர் கணித்தார். இதற்கேற்ப, கிட்டத்தட்ட எல்லாப் பேரரசர் கால நாணயங்களையும் புதைபொருளாராய்ச்சியாளர் தென்னாட்டில் ஏராளமாகக் கண்டெடுத்துள்ளனர். உரோம நாட்டில் அடித்த நாணயங்களில் பெரும்பகுதி தமிழகத்திலேயே வந்து நிலையாகத் தங்கிற்று என்பதை இது காட்டுகிறது. கீழ்திசைத் தொடர்பு கி.மு.6ஆம் நூற்றாண்டில் இலங்கையின் முதல் அரசனான விசயன், பாண்டியன் மகளை மணம் புரிந்து கொண்டான். பாண்டிய இளவரசி சென்ற கப்பலில் யானைகள், தேர்கள், அரசியற் பணியாளர்கள், பதினெண் தொழிற் குழுக்களுக்குரிய ஆயிரம் குடிகள், 75 பணிப்பெண்கள். 700 பணியாட்கள் ஆகியோர் சென்றதாக அறிகிறோம். மன்னரைப் போலவே மக்களும் இரு நாடுகளிலும் மணத்தொடர்பு கொண்டிருந்தனர். ‘எலாரா’ என்ற சோழ நாட்டுத் தமிழ் வீரன் இலங்கையை வென்று கி.மு.205 முதல் 161 வரை யாவரும் புகழ ஆண்டதாக அறிகிறோம். தமிழ் மரபில் இவன் ஏலேலசிங்கன் என்று குறிக்கப் படுகிறான். ஏழு கடல் கடந்தாலும் ஏலேலசிங்கன் கப்பல் திரும்பி வரும், என்ற பழமொழியும், ‘ஏலேலோ’ என்ற கப்பற் பண்ணும் தமிழரிடையே அவன் மரபை நினைவூட்டுகின்றன. அவன் திருவள்ளுவரின் மாணவனும் வள்ளலும் ஆவான் என்று தமிழ் மரபுரை ஒன்று கூறுகிறது. ஏலேலசிங்கனைப் பின்பற்றித் தமிழர் பலகால் இலங்கைக் கரையில் மாந்தோட்டத்தில் இறங்கித் தம் வாள் வலியால் செல்வமும் குடியிருப்புகளும் அமைத்தனர். அவர்கள் கட்டிய கோயில்களும் குளங்களும், அவர்கள் வெற்றிகட்கும் கலைப் பண்புக்கும் சான்றுகளாயுள்ளன. கி.மு.44 முதல் 25 வரையில் சில தமிழ் மன்னர் இலங்கையில் ஆண்டனர். ஐந்து - ஏழாம் நூற்றாண்டுகளில் இருபுறமும் படையெடுப்புகளும் எதிர்ப்படையெடுப்புக்களும் நிகழ்ந்தன. தமிழர் படையெடுப்புக்களும் குடியேற்றங்களும் கிறிஸ்து பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன் இருந்தே அந்தமான், பர்மா, மலாயா, சுமாத்ரா, சாவா, இந்து-சீனா ஆகிய கடல் கடந்த நாடுகளில் பரவின. இவ்வெல்லா நாடுகளிலும் உள்ள பெரிய கோயில்களும், கல்வெட்டுக்களும் அவற்றின் இலக்கியங்களும், மொழியும், ஊர்ப் பெயர் குடிப் பெயர்களும், பழக்க வழக்கங்களும், கலைகளும் இத்தெடர்புக்கு இன்றளவும் சான்று பகர்கின்றன. மதுரை என்ற தமிழக நகரின் பெயர் யமுனை ஆற்றங் கரையிலுள்ள ஒரு பண்டை நகரப் பெயராகவும் சாவக நாட்டில் உள்ள ஒரு தீவின் பெயராகவும் இயங்குகிறது. சாவக நாட்டின் பண்டைக்கால அரசர் பெயர்களும் சீர்மாறன் என்ற பாண்டியர் குடிப்பெயர் காணப்படுகின்றனது முற்காலப் பாண்டியருள் ஒருவனும் பிற்காலப் பல்லவரும் சோழரும். கடல் கடந்த பேரரசுகள் நிறுவியிருந்தனர். அகச்சான்றாக முச்சங்க மரபால் தெரியவரும் தமிழகத்தின் பழமை, பெருமை ஆகியவை மேற்கண்ட புறச் சான்றுகளால் வலிமை பெறுகின்றன. தொல்காப்பியம், கடைச்சங்க நூல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய தமிழ் நூல்களில் கடலக வாழ்வு, வாணிகம், யவனர், சாவகம் ஆகியவை பற்றிய ஏராளமான குறிப்புக்கள் காணக் கிடக்கின்றன. காதலன் காதலியைப் பிரிந்து ஆண்டுக்கணக்காகக் கல்விக் காகவும், கடல் கடந்த வாணிகத்துக்காவும், அரசியல் பணிகளுக்காகவும் செல்வதுண்டு என்று தொல்பழந்தமிழ் நூலான தொல்காப்கியமே எடுத்துக் காட்டுகிறது. பாரத இராமாயண காலச் செய்திகளைப் பற்றியும் கி.மு.4-ம் நூற்றாண்டில் கங்கை வெளியில் ஆண்ட நந்தரைப் பற்றியும், கி.மு.3-ம் நூற்றாண்டில் சிறிதளவில் நடைபெற்ற மோரியர் படையெடுப்பைப் பற்றியும் சங்க நூல்கள் குறிப் பிடுகின்றன. வரலாற்று நோக்குடன் ஆராய்பவர்க்குத் தமிழ் இலக்கியம் ஒப்புயர்வற்ற ஒரு வரலாற்றுக் கருவூலம் என்பதை இவை சுட்டிக் காட்டுகின்றன. சோழ பாண்டிய மன்னர் பலரைப் பற்றியும், பல குறுநில மன்னரைப் பற்றியும் அவை நமக்கு எத்தனையோ செய்திகள் தருகின்றன. அவற்றுள் ஒரு சிலவே இதுகாறும் காலவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. புதிய ஆராய்ச்சிகளாலும், புதிய கல்வெட்டு, பழம்பொருள், புதைபொருள் ஆராய்ச்சி களாலும் இன்னும் பல செய்திகள் விளக்கப்படலாகும். பண்டைப் பாண்டியப் பேரரசு பாண்டியருள் மிகப் பழமை வாய்ந்தவனாக அறியப் படுபவன் புறம் 9ஆம் பாட்டில் ஒரு பழம் பாண்டியனின் முன்னோனாகக் குறிக்கப்படும் நெடியோன் ஆவன். அவன் முந்நீர் விழாவின் நெடியோன் என்றும், நன்னீர்ப்பஃறுளி ஆற்றுக்கு உரியவன் என்றும் குறிக்கப்படுகிறான். முச்சங்க மரபின்படி இவன் தலைச்சங்க காலப்பாண்டியன் ஆவன். தொல்காப்பியம் அரங்கேற்றுவித்த நிலந்தரு திருவிற் பாண்டியன் அல்லது சயமாகீர்த்தி இவனே. சய அல்லது யவநாடாகிய சாவகத்தை வென்று, கடல்நீர் வந்து அலம்புமிடத்தில் பாறையில் தன் அடி பொறித்து, இவன் முந்நீர் விழா ஆற்றினான். இக்காரணத்தால் இவன் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் என்று புகழப்பட்டான். மதுரை அல்லது சுமாத்ராவிலும், சாவாவிலும் இவ்விழா பின்னாட்களிலும் அரசரால் கொண்டாடப்பட்டதாக அந்நாட்டுக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இவன் எவ்வளவு காலத்துக்கு முந்தியவன் என்று கூற முடியாவிட்டாலும் கி.மு.5ஆம் நூற்றாண்டுக்கு மிகவும் முற்பட்டவன் என்று துணிந்து கூறலாம். பஃறுளி ஆறு பாசனத்துக்காக வெட்டப்பட்ட ஆறே என்று அறிகிறோம். இவ்வளவு பழங் காலத்திலேயே பாண்டியர் நீர்ப் பாசனத்திலும் வேளாண்மையிலும் கருத்தைச் செலுத்தியிருந்தனர் என்பது வியப்புக்குரிய செய்தி ஆகும்! கால அறுதி ஏற்பட்டால், உலக வரலாற்றிலேயே இவன் முதற் கடற் பேரரசன் என்ற செய்தி தெளிவாக விளக்கமுறுதல் கூடும். சுமாத்ராவில் பாலம்பாங்கில் ஆண்ட பேரரசர் பிற்காலத்தில் சீர்மாறன் என்ற குடிப் பெயரும் பிற தமிழகத் தொடர்புங் கொண்டிருந்தனர். பிற்காலச் சோழப் பேரரசரைப் போலவே பண்டைக்கால முதற்பாண்டியப் பேரரசர் மலாய், கிழக்கிந்தியத் தீவுகள் ஆகிய கடல் கடந்த பகுதிகளில் பரந்திருந்தனர் என்று கருத இடமுண்டு. கடைச் சங்ககால பாண்டியர்களுள் முற்பட்டவனாகக் கூறத் தக்கவன் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதி, வேள்விக்குடிப் பட்டயத்தின்படி அதற்குரிய நன்கொடையை முதன் முதல் அருளிய அரசன் இவனே. ‘விழாக்காலங்களில் நகர்வலம் வரும் முக்கட் செல்வர் குடைக்கன்றி உன் குடை எக்குடைக்கும் சாயவேண்டாம்!’ என்று காரிகிழார் என்ற புலவர் இவனைப் பாடியுள்ளார். இவன் வேளிரை அடக்கியாண்ட வீர அரசன் என்று நெட்டிமையார், பெரும்பல்லியத்தனார் ஆகிய புலவர்கள் இவனைப் பாராட்டியுள்ளனர். மதுரைக் காஞ்சியில் குறிக்கப்படும் பாண்டியர் முன்னோருள் இவனொருவன். பாண்டியரின் மீன் கொடியை இமயத்தில் பொறித்தவன் முதலாம் நெடுஞ்செழியன் அல்லது ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஆவான். கோவலனைக் கொல்வித்துக் கண்ணகி யின் சீற்றத்துக்கு ஆளானதாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடும் பாண்டியன் இவனே. இவன் காலம் ஏறத்தாழ, கி.பி.151 ஆகும். முதலாம் நெடுஞ்செழியனின் கீழ் கொற்கை இளவரசரா யிருந்து, அவனுக்குப்பின் கி.பி.190 வரை ஆண்டவன் வெற்றிவேற் செழியன். சிலப்பதிகாரக் கதையின்படி கண்ணகி விழாவில் சேரன் செங்குட்டுவனுடனும் இலங்கைக் கயவாகுவுடனும் கலந்துகொண்ட பாண்டியன் இவனே. கடைச்சங்கப் பாண்டியருள் வீர அரசனாகவும் வீர மிக்க கவிதை வல்லவனாகவும் விளங்குபவன் இரண்டாம் நெடுஞ்செழியன் அல்லது தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆவான். பட்டத்துக்கு வரும் போது அவன் சிறுவனாயிருந்தான். அந்நிலையில் சேரரும் சோழரும் திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான், பொருநன் ஆகிய ஐந்து வேளிரும் மதுரை மீது படையெடுத்தனர். தலையாலங் கானம் என்ற இடத்தில் அவன் அவ் எழுவரையும் சிதறடித்து, சேரனைச் சிறைப்பிடித்தான். போருக்குமுன் அவன் எடுத்துக் கொண்ட சூளுரை (புறம் 72) தமிழ் இலக்கியத்திலேயே ஈடும் எடுப்பும் அற்ற அரும் பெரும்பாடல் ஆகும். கற்புடைக் காரிகை யையும் கலைத் தமிழ்ப் புலவரையும் அவன் எவ்வாறு தன் உயிரினும் அரசினும் சிறந்த செல்வங்களாகக் கருதினான் என்று அப்பாடல் காட்டுகிறது. தலையாலங்கானத்துப் போர் அக்காலத்திய மக்கள் உள்ளத்திலேயே வீறார்ந்த இடம் பெற்றது. அதனை உவமையணியாக எடுத்தாண்ட புலவர் பலர். மதுரைக் காஞ்சியில் மாங்குடி மருதனார் இப்போரை விரித்துரைத் துள்ளார். கபிலரும் பரணரும் இந்நெடுஞ்செழியனையும், குறுங் கோழியூர் கிழார் அவனால் சிறைப்பட்டுக் கிடந்த சேரனையும் பாடியுள்ளனர். கடைச் சங்கத்தின் கடைசிப் பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி. கானப்பேரெயில் என்பது காளையார் கோயிலிலுள்ள வெல்லுதற்கரிய பழைய அரண், அதனை அழித்து, அதனை ஆண்ட வேங்கை மார்பனை இப் பாண்டியன் அடக்கிய செய்தியை ஐயூர் மூலங்கிழர் (புறம் 21) பாடியுள்ளார். இவ்வரசனுடன் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளியும், சேரமான் மாவெண்கோவும் நண்பராக ஒருங்கிருந்த போது, அவ்வையார் அவர்களைப் (புறம் 367) பாடியுள்ளார். தமிழ் மூவரசர் காலவரையறைக்கு இப்பாட்டு ஓர் அருங்கலச் செப்பு ஆகும். இவன், தானே புலவன். அகநானூற்றில் (26) நற்றிணையிலும் (88) இவன் பாடல்கள் உள்ளன. அகநானூற்றைத் தொகுப்பித்த வனும், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாக மாபாரதத்தைப் பெருந்தேவனாரால் பாடுவித்தவனும் இவனே. திருவள்ளுவர் காலத்திய பாண்டியனும் ஓர் உக்கிரப் பெருவழுதியே என்பது மரபு. இதற்குச் சான்று கிடையாது. மேலும் திருவள்ளுவர் காலம் அவ்வையாருக்கும் பெரும்பாலான சங்கப் புலவர்களுக்கும் சிலபல நூற்றாண்டுகளேனும் முற்பட்டதாதல் தெளிவு. ஆகவே, திருவள்ளுவர் காலப் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி என்ற பெயருடையவனானால், அவன் முற்பட்ட வேறொரு உக்கிரப் பெருவழுதியாகவே இருத்தல் வேண்டும். கடைச் சங்கம் முடிவடைந்தது கி.பி.250-ல் எனலாம். கடைச்சங்கப் புலவரால் பாடப்பெற்ற பாண்டியர், சோழர் மிகப்பலர். வரிசை முறையும் காலவரையறையும் ஏற்பட்டாலன்றி அவர்கள் செய்திகளை வரலாறாகத் தொகுக்க முடியாது. நன்மாறன் என்ற பாண்டியன் உக்கிரப் பெருவழுதிக்குப் பிற்பட்டவன் என்பர் வரலாற்றாராய்ச்சியாளர். திருவிளையாடற் புராணத்து வரகுணனும், அவன் பின்வந்த பாண்டியரும், அவர்கள் காலத்தவரான மாணிக்கவாசகரும் கடைச்சங்கத்தின் இறுதிக் காலத்தவரே என்பர் ஆசிரியர் மறைமலையடிகளார். சங்ககாலச் சோழர்: சோழ அரசரின் முன்னோராகப் புராண மரபு பல கற்பனை மன்னர்களின் கதை வளர்த்துள்ளது. பறக்கும் கோட்டைகள் மூன்றை வென்ற தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன், ஆன்கன்றுக்காகத் தன் மகனைப் பலியிட்ட மனுச்சோழன், புறாவுக்காகத் தன்னைப் பலியிட்ட சிபிச் சோழன் ஆகியவர்கள் கதை பழைமை வாய்ந்தது. ஆனால், இவை வரலாறு என்று கூறுவதற்கில்லை. சோழருள் காலத்தால் மிக முற்பட்டவன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி. இவனுக்குப்பின் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியும் முதலாம் கரிகாலனும் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியும், இரண்டாம் கரிகாலனான கரிகாற் பெருவளத்தானும் ஆண்டனர். கரிகாற் பெரு வளத்தான் புதல்வியான நற்சோணை அல்லது மணக்கிள்ளியே சேரன் செங்குட்டுவனின் தாய். வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி குடக்கோ நெடுஞ் சேரலாதன் என்ற சேர அரசனுடன் போரிட்டு மடிந்தான். ஆனால், அடுத்த அரசன் முதலாம் கரிகாலன் வெண்ணிப் போரில் அச்சேரனை வென்றான். போரில் புறப்புண்பட்டதனால் சேரன் வடக்கிருந்து மாண்ட உருக்கமான காட்சியைக் கழாத் தலையார் என்ற புலவர் (புறம் 65) தீட்டிக் காட்டியுள்ளார். வெண்ணிப் போரை மாமூலனார் (அகம் 55), நக்கீரர் (அகம் 141), பரணர் (அகம் 125, 246, 376), கருங்குழலாதனார் (புறம் 7,224) ஆகிய புலவர்கள் பாடியுள்ளனர். உறுவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி முதலாம் கரிகாலன் மகன். இரண்டாம் கரிகாலன் தந்தை. காவிரிக்குக் கரை கட்டியவன் என்றும், இமயத்தில் சோழர் கொடியாகிய புலியைப் பொறித்தவன் என்றும், காடாயிருந்த தொண்டை நாட்டின் பெரும்பகுதியை நாடாக்கி வேளாளரைக் குடியேற்றியவன் என்றும் தென்னாட்டு வரலாற்றில் பெரும் புகழ்பெற்ற அரசன் இரண்டாம் கரிகாலன். இவன் காலம் கி.பி.50 முதல் 90 வரை எனலாம். பன்னூறாண்டுகளுக்குப் பின்னும் மைசூர், இராயலசீமாப் பகுதிகளிலுள்ள சிற்றரசர் அவன் புகழ்மரபைத் தம் கல்வெட்டுக்களில் பாராட்டிப் பேசுகின்றனர். காலத்தாலும் இடத்தாலும் வேறுபட்ட பலநாட்டு மன்னர், தாம் கரிகாலன் மரபினர் என்பதிலும், தம்முன்னோர் கரிகாலனுக் காகக் காவிரிக்குக் கரைகட்டியவர் என்பதிலும் அடையும் பெருமை வியப்புக்குரியதோயாகும்! அதுமட்டுமன்று. இன்னும் கரிகாலன் செய்த செயல்களைத் தெலுங்கு நாட்டு மக்கள் பாராட்டுகின்றனர். கல்வெட்டுக்களால் அவற்றின் உண்மை யறிந்த அறிஞர் ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டு கடந்த கரிகாலன் இறவாப் புகழ்கண்டு மலைக்கின்றனர்! கரிகாற் பெருவளத்தான் தலைநகரை உறையூரிலிருந்து காவிரிப் பூம்பட்டினம் அல்லது புகாருக்கு மாற்றினதாக அறி கிறோம். கடியலூர் உருத்திரங்கண்ணனார் இவனைப் பட்டினப் பாலையாலும், முடத்தாமக் கண்ணியார் பொருநராற்றுப் படையாலும் பாடினர். முந்திய நூலுக்காக அரசன் புலவருக்கு 16 நூறாயிரம் பொன் பரிசளித்ததாகக் கலிங்கத்துப் பரணி குறிக்கிறது. கரிகாலனைப் பற்றி எழுந்த புராணக் கதைகள் பல. இவை இரண்டு கரிகாலரையும் ஒன்றாக்கிவிட்டன. இரண்டாம் கரிகாலனின் புதல்வி நற்சோணை அல்லது மணக்கிள்ளி சேரன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மனைவி யாதலால், சேரன் செங்குட்டுவன் தாய் ஆவாள். கரிகாலனுக்குப்பின் அவன் புதல்வர் நெடுமுடிக்கிள்ளியும் சேட்சென்னி நலங்கிள்ளியும் அரசுரிமைக்காகப் போராடினர். சேட்சென்னி உட்பட ஒன்பது சோழ இளவரசரைச் சேரன் செங்குட்டுவன் நேரிவாயில் போரில் முடியடித்து நெடுமுடிக் கிள்ளியை முடிசூட்டினான். ஆனால், காரியாற்றுப் போரில் அவன் மாண்டதால், நலங்கிள்ளியே மீண்டும் அரசனானான். நெடுமுடிக்கிள்ளி அல்லது கிள்ளிவளவன் காலத்தில் காவிரிப் பூம்பட்டினம் கடல்கொள்ளப்பட்டதை மணிமேகலை குறிப்பிடுகின்றது. பீலிவளை என்ற நாககன்னிகை மூலம் அவனுக்கு இளந்திரையன் என்ற புதல்வன் இருந்தான். கிள்ளிவளவனால் அவன் காஞ்சியில் திரையர் கோன் அல்லது தொண்டைமானாக முடிசூட்டப்பட்டான். காரிகாலனைப் பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணனாரே பெரும்பாணாற்றுப் படையில் இளந்திரையனைப் பாடியுள்ளார். நக்கீரரும் (அகம் 340) காட்டூர்கிழார் மகனார் கண்ணனாரும் (அகம் 85) வேங்கட மலையில் கண்ட மற்றொரு திரையனைப் பாடியுள்ளனர். திரையன், இளந்திரையன் என்ற பெயரொற்றுமையைப் பார்க்க. பீலிவளை திரையர் குடிநங்கையே என்று எண்ண இடமுண்டு. சங்கப் பாடல்களால் கோப்பெருஞ் சோழன், இராசசூயம் வேட்டபெரு நற்கிள்ளி, கோச்செங்கணான் ஆகிய சோழர் களைப் பற்றிப் பல செய்திகள் அறிகிறோம். ஆனால், இவர்களைக் கால வரிசைப்படுத்த முடியவில்லை. இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி அவ்வையார் காலத்தவன். கோச்செங்கணான் சிவபெருமானுக்கு எழுபது கோயில்களைக் கட்டியதாகத் திருமங்கையாழ்வார் குறிக்கிறார். பண்டைச் சேர மரபு சங்க மரபின்படி முதல் சங்கத்துக்கும், புராணமரபின்படி பாரத காலத்துக்கும் உரிய மிகப் பழங்காலச் சேரன் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன், பாரதப் போரில் இருக்கிற வீரர்களுக்கும் பெருஞ்சோறு வழங்கியதாக முரஞ்சியூர் முடிநாகராயர் என்ற முதற்சங்கப் புலவர் (புறம் 2) அவனைப் பாடியுள்ளார். வேறு இருசங்கப் பாடல்கள் (அகம் 65, 233) இச்செய்தியைக் குறிப்பிடுகின்றன. கிட்டத்தட்டச் சேர அரசர்களின் ஒரு வரலாறாக இயங்குவது பதிற்றுப்பத்து. அதன் முதல் பத்தும் கடைசிப் பத்தும் நமக்குக் கிட்டவில்லை. ஆனால், இரண்டாம் பத்து, கடைச் சங்கத்தின் மிகப் பழைய அரசனாக உதியஞ்சேரலைக் குறிக்கிறது. சேர அரசர் குடியுரிமை இக்காலக் கொச்சி அரசர் உரிமை போன்றது. குடியின் மூத்த ஆணே அரசனானான். எனவே ஒரே சமயம் வயதுவந்த அனைவரும் அரசுரிமை பெற்றனர். இக்காரணத்தால் சேர அரசரை மரபு வரிசைப்படுத்துவது கூட அரிதாகின்றது. உதியஞ் சேரலையடுத்து அவன் மூத்த புதல்வன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும், அவன் இளவல் பல்யானை செல்கெழு குட்டுவனும் ஆண்டனர். அதன்பின் அவன் இளைய புதல்வர் இரண்டாம் ஆதன் அல்லது முடிச்சேரலாதனும் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் ஆண்டனர். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் கி.பி. 50 வரை 58 ஆண்டுகள் ஆண்டான். மற்ற இரு அரசரையும் ஐந்து வேளிர் களையும் அடக்கியதற்கு அடையாளமாக அவன் ஏழு முடிமாலை அணிந்திருந்தான். சேரரது விற்பொறியை அவன் இமயத்தில் பொறித்தான். அவன் கடற் கொள்ளைக்காரரை அவர்கள் இருந்த தீவுவரை சென்று அழித்து, மேற்கடற் கரையின் கடல் வாணிகத்துக்குப் பாதுகாப்பும் ஆக்கமும் அளித்தான். தன்னை எதிர்த்த யவனரை அவன் சிறைப்படுத்தி விடுதலைப் பணமாகப் பெரும் பொருள் பெற்றான். அவன் தலைநகரமாகிய நறவு உரோம ஆசிரியர் பிளினியால் நவுரா என்றும், எகிப்திய நிலநூலாரான டாலமியால் நிட்ரியாஸ் என்றும் குறிக்கப் பட்டது. இரண்டாம் பத்தால் தன்னைப்பாடிய குமட்டூர்க் கண்ணனார்க்கு இவன் உம்பற்காட்டுப் பகுதியையும் தென்னாட்டின் 38 ஆண்டு வரியையும் பரிசாகத் தந்தான் என்று அறிகிறோம். பல்யானை செல்கெழுகுட்டுவன் 25 ஆண்டு ஆட்சி செய்தான். அவன் கொங்கு நாட்டின்மீது படையெடுத்து அகப்பா என்ற கோட்டையைக் கைப்பற்றினான். அயிரை மலையம்மனுக்கு அவன் விழாவாற்றியதுடன், இரு கடல் நீரால் திருமுழுக்குப் பெற்றான். நெடும்பலிதாயன் என்ற ஆசிரியனுடன் அவன் துறவறம் பூண்டான். அவன் மூன்றாம் பத்தால் தன்னைப்பாடிய பாலைக் கோதமனார் விருப்பப்படி, பத்துவேள்வி முடித்து அவரையும் அவர் மனைவியையும் வானுலகுக்கு அனுப்பினான். களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் 25 ஆண்டுகள் ஆண்டான். நெடுமிடல் என்ற குடிப் பெயரையுடைய அதியமான் நெடுமானஞ்சியின் முன்னோனை அவன் அடக்கினான். கடம்பின் வாயில் என்ற இடத்தில் நன்னனை அவன் அழித்தான். வானவரம்பன் என்றும் நீர்கொப்புளிக்கும் நேரிமலையை யுடையவன் என்றும் அவன் புகழப் பெறுகிறான். நாலாம்பத்தால் தன்னைப்பாடிய காப்பியாற்றுக் காப்பியனாருக்கு அவன் 40 நூறாயிரம் பொன்னும் அரசிற் பாதியும் ஈந்து அவனை அமைச்சனாகக் கொண்டான். சேரன் செங்குட்டுவன் அல்லது கடல் பிறக்கோட்டிய குட்டுவனே சேரர் குடியில் யாவரினும் புகழ்மிக்க பேரரசன். அவன் 55 ஆண்டுகள் ஆட்சி செய்தான். இடும்பில் என்ற இடத்தில் வெற்றிகண்டு, வியலூர், கொடுகூர் ஆகியவற்றை அழித்தான். சோழ இளவரசர் ஒன்பதின்மரை நேரிவாயிலில் முறியடித்து, தன் மைத்துனனாகிய கிள்ளிவளவனை அவன் சோழ அரசிருக்கை ஏற்றினான். தமிழக முழுதும் வென்று போர்கெழுகுட்டுவன் என்ற பெயர் பெற்றதுடன் அமையாது, இமயம்வரை படையெடுத்து கனகவிசயர் என்ற ஆரியபுல அரசரை வென்று, கண்ணகிக்குச் சிலை எடுப்பித்து விழா அயர்ந்தான். இவன் தம்பி இளங்கோவடிகளே சிலப்பதிகாரம் இயற்றியவர். ஐந்தாம்பத்தால் தன்னைப் பாடிய பரணர் என்ற புலவர் பெருமானுக்கு இவன் உம்பர்க்காட்டு வாரியத்தையும் தன் மகன் குட்டுவனையும் ஈந்ததாகக் கூறப்படுகிறது. கண்ணகி விழாவுக்கு இலங்கை அரசன் கயவாகுவும் வெற்றிவேற் செழியனும் வந்திருந்தனர். இவர்கள் காலம் ஏறத்தாழ கி.பி. 175 ஆகும். ஆறாம்பத்திற்குரிய ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்பவன் இமயவரம்பனுக்கும் நார்முடிச் சேரனுக்கும் உடன் பிறந்தவன். அவன் ஆட்சி சேரன் செங்குட்டுவனுக்கு முந்தியதாயிருக்கக் கூடும். அவன் 38 ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவன் சிறப்புச் செயல் கரிகாலன் சீர் செய்த தொண்டை நாட்டின் வடபகுதியிலுள்ள காட்டூர்களின்மீது படையெடுத்து அவற்றின் கால்நடைச் செல்வங்களைக் கைக் கொண்டதாகும். அவன் கேரளத்தில் ஒவ்வொரு பிராமணர்க்கும் ஒரு பசுவும் ஒரு ஊரும் தானம் செய்தான். ஆறாம்பத்தால் தன்னைப்பாடிய பெண்பாற் புலவர் காக்கை பாடினியார் நச்செள்ளையார்க்கு அணி மணிக்காக அவன் 9 ‘கா’ ப் பொன்னும் 100,000 ‘காண’ மும் கொடுத்து, அவரைத் தன் அரசுரிமைத் துணைவியாகக் கொண்டான். ஏழாம்பத்திற்குரிய செல்வக் கடுங்கோவாழி யாதனின் உறவுமுறை விளங்கவில்லை. அவன் சேரமான் சிக்கற்பள்ளி துஞ்சிய செல்வக் கடுங்கோவாழிஆதன் என்றும் குறிக்கப் பட்டான். அவன் அந்துவன் சேரனுக்கும் தொண்டை மகளாகிய பொறையார் பெருந்தேவிக்கும் மகனாவான் என்று கூறப்பட்டுள்ளது. தன்னைப் பாடிய கபிலர் பெருமானுக்கு அவன் நூறாயிரம் காணமும், நன்றா மலையிலிருந்து காணும் நாடும் தந்தான். எட்டாம் பத்திற்குரிய தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும் பொறை அரிசில் கிழாரால் பாடப் பெற்று, அவருக்கு 9 நூறாயிரம் காணமும் அரண்மனையும் ஈந்து அவரைத் தன் அமைச்சனாகப் பெற்றான். இவன் ஆயர்தலைவன் கழுவுளை அடக்கினான். இவன் ஆண்டது 7 ஆண்டுகள். அடுத்த அரசன் இளஞ்சேரலிரும்பொறை சோழ பாண்டியரையும் விச்சிக்கோ வையும், பொத்தப்பிச் சோழரையும், பழயன் மாறனையும் வென்றான். தன் மாமனாகிய மய்யூரி கிழானையே அவன் தன் ஆயத்துறை அமைச்சனாகக் கொண்டான். தன்னைப் பாடிய பெருங்குன்றூர் கிழாருக்கு அவன் 32 ஆயிரம் பொன்னும், காப்புவரி தள்ளப்பட்ட நிலங்களும் ஈந்தான். பத்தாம்பத்து நமக்குக் கிட்டவில்லையாயினும், அவன் கடைச்சங்கச் சேரரில் கடைசியானவன் எனலாம். அவ்வை யாரால் சோழ பாண்டியன் ஒருங்கே பாடப்பட்ட சேரமான் மாவெண்கோவே என்று அறிகிறோம். வேளிர் தமிழகத்திலும் தமிழகத்துக்கு அப்பாலும் கடைச் சங்க காலத்துக்கு முன்னிருந்தே எண்ணற்ற முடியுரிமையற்ற சிற்றரசர் அல்லது வேளிர் இருந்தனர். இவர்களில் சிலர் மூவரசருக்கு உட்பட்டும் பலர் உட்படாதும் வாழ்ந்தனர். மூவரசருக்கு உட்படாது தனியாட்சி உடையவருள் தமிழகத்தில் ஏறைக் கோன், ஓரி, கடியநெடுவேட்டுவன் குமணன், தழும்பன், தாமன் தோன்றிக் கோன், திதியன், நள்ளி, நாஞ்சில் வள்ளுவன், பழயன், பாரி, மல்லிகிழான், காரி, மூவன், பண்ணன், வெளிமான், வேங்கை மார்பன், தொண்டைமான் ஆகியோர் முக்கியமானவர். தமிழக எல்லையிலும் அப்பாலும் வேங்கடமலை புல்லி, பல்குன்றக் கோட்டத்து நன்னன், வேங்கடமலைக் கும்பனூர் கிழான், வேங்கட மலைத் திரையன், தெள்ளழ சூரிலுள்ள எருமையூரன் ஆகியோர் இருந்தனர். தமிழகத்துக்கு வெளியே முடியுடையரசர் ஆட்சி நெடுங் காலம் ஏற்படவில்லை. வேளிர் இங்கே திரையர், பல்லவர், குறும்பர், சளுக்கர், இரட்டர், கடம்பர் எனப் பல குடிப் பெயர் உடையவராயிருந்தனர். இவர்களில் பலர் பின்னாட்களில் முடியுடையரசர் மரபினராயினர். வடதிசைப் பேரரசுகள் தமிழகத்துக்கு வெளியே தென்னாட்டின் முதற்பேரரசுகள் கலிங்கப் பேரரசும் ஆந்திரப் பேரரசுமே. இவற்றுள் கலிங்கப் பேரரசு பழமையானது. ஆனால், அதன் பழமையெல்லை, ஆட்சியெல்லை, மரபு ஆகியவை பற்றி நமக்கு எதுவும் நேரடியாகத் தெரியவில்லை. அதன் வடபால் கங்கை வெளியில் குருபாஞ்சாலம், கோசலம், விதேகம் அல்லது மகதம், காம்போசம் ஆகிய அரசுகள் நிலவின. ஆரியர், பாரசீகர், யவனர், சகர், குஷாணர், ஊர் முதலியவர்கள் படையெடுப்பால் மேற்கு அரசுகள் தளர்ந்தன. விதேகம் அல்லது மகதம் கி.மு. 7-ஆம் நூற்றாண்டு முதல் தொடர்ச்சியாக சிசுநாகர், நந்தர், மௌரியர், சுங்கர், கண்வர் ஆகிய மரபினரால் ஆளப்பட்டது. நந்தர்கள் கலிங்கத்தை வென்று ஆண்டனரென்று அந்நாட்டின் காரவேலன் கால கல்வெட்டுக்களால் தெரிய வருகின்றது. தெற்கேயும் குந்தள நாட்டை அவர்கள் ஆண்ட தாகப் பிற்காலக் கன்னடக் கல்வெட்டுக்களால் அறிகிறோம். அவர்கள் ஆட்சி அசோகன் ஆட்சி எல்லையளவிலே தெற்கே தமிழக எல்லை வரை பரந்திருந்தது என்று கொள்ள இடமுண்டு. நந்தர்கள் பெருஞ் செல்வத்தைப் பற்றிக் கடைச் சங்கப் புலவர் மாமூலனார் பாடியுள்ளார். மாமூலனார் நந்தர் காலம் அதாவது கி.மு.4-ஆம் நூற்றாண்டினர் என்று இதனால் கருத இடம் ஏற்படுகிறது. மோரிய மரபின் பேரரசனான அசோகன் கி.மு. 260-ல் கலிங்கத்தின் மீது படையெடுத்தான். போரில் அவன் வெற்றி பெற்றாலும் அது பேரளவில் அழிவுப் போராயிருந்தது. கலிங்கர் பக்கம் நூறாயிரம் போர் வீரர் இறந்தனரென்றும் நூற்றைம் பதினாயிரம் வீரர் சிறைப்பட்டனர் என்றும் அறியப்படுகிறது. போரின் கடுமையும் அளவும் நோக்கி, கலிங்கம் ஒரு வலிமை வாய்ந்த அரசு மட்டுமல்ல, ஒரு பேரரசே என்று கொள்ளத்தகும். அதன் எல்லை அன்றே மைசூர் வரை பரவியிருந்தது என்று கூறல் தவறாகாது. ஏனெனில், இதுவே நந்தர் பேரரசாட்சியின் தென் எல்லை ஆகும். மோரியர் நந்தரை வென்றபோது கலிங்கர் தனியரசாகி, நந்தர் பேரரசின் தென் பகுதியைக் கைக் கொண்டி ருந்தல் வேண்டும். கலிங்கத்தை வென்ற பின் அவ்வெற்றியா லேயே அசோகன் ஆட்சி எல்லை மைசூருக்கு வந்தெட்டிற்று. பிற்காலத்தில் மைசூரில் மேல் கங்கரும் கலிங்கத்தில் கீழ்கங்கரும் ஆட்சி செய்ததை நோக்க, இரண்டு கோடிகளும் ஒரே பண்டைய கங்க மரபினரால் ஆளப்பட்டன என்று எண்ண இடமுண்டு. மேனாட்டு வரலாற்றாசிரியர் கூட, கலிங்கத்தை ஒரு சிறிய அரசாகக் கொண்டு, மைசூர் வரை மோரியர் எப்போது வென்றனர் என்று ஆராய்ந்து முடிவு காணாது இடர்ப்படுவர்! அசோகனுக்குப் பின் மோரியப் பேரரசு சிதறுண்டது. ஆந்திரரும் கலிங்கரும் தலை தூக்கினர். ஆந்திரர் கி.மு.220 முதல் படிப்படியாக வளர்ச்சியடைந்து பேரரசராய், கி.பி.225 வரை ஆற்றல்மிக்க வல்லரசராய் விளங்கினர். அவர்கள் தாயகம் விந்திய மலைப்பகுதியே என்று பல வரலாற்றறிஞர் கருதினர். ஆனால், புதிய கல்வெட்டுக்களால் அவர்கள் சங்ககால ஆய் அண்டிரன் மரபினரே என்றும், கடப்பை கர்னூல் மாவட்டங்களிலுள்ள அண்டிரா மலையையும் அண்டிரா ஆற்றையும் சார்ந்தவர்களே என்றும் அறிகிறோம். ஆந்திர அரசுக்கு வடமேற்கிலுள்ள கலிங்க அரசில் கி.மு.170 முதல் கி.மு. 159 கடந்து காரவேலன் என்ற புகழ்மிக்க பேரரசன் ஆண்டான். அவன் சமண மதத்தைச் சார்ந்தவன். அதைப் பரப்புவதில் அவன் ஓர் இள அசோகனாக விளங்கினான். அவன் தென்னாட்டின் வட பகுதியை வென்றதுடன், கி.மு.163-ல் மகத நாட்டையும் வென்று பேரரசனாக விளங்கினான். காரவேலன் காலத்தில் ஹத்திகும்பக் கல்வெட்டு தமிழக மூவரசுகளின் ஒற்றுமை பற்றியும் வலிமை பற்றியும் குறிப்பிடுகிறது. 113 ஆண்டுகளாகக் கலிங்கப் பேரரசு விரிவடைய வொட்டாமல் தமிழரசர்களின் கூட்டுறவு தடுத்து நிறுத்தியதாக அது தெரிவிக்கிறது. வடதிசையில் வெற்றி கண்ட காரவேலன் படைகள் தெற்கே இத்தமிழ்ப் படையால் மீண்டும் மீண்டும் தோல்விகள் கண்டன. காரவேலனாட்சியால் ஆந்திரர் வளர்ச்சி சிறிதே தடைப் பட்டிருந்தது. அவனுக்குப் பின் தென்னாட்டின் கீழ்கடல் வரையும் மேல்கடல் வரையும் அவர்கள் ஆட்சி பரந்தது. கி.மு.26-ல் ஆந்திரப் பேரரசன் முதலாம் புளுமாயி, மகதத்தை ஆண்ட கடைசிக்கண்ணுவ அரசனை வீழ்த்தி இமயம்வரை தன் பேரரசைப் பரப்பினான். சிந்துவெளிக்கு அப்பாலிருந்து வந்த சகர் தென்னாட்டின் வடக்கெல்லையில் ஆண்டனர். அவர்கள் சகப் பேரரசரின் கீழ் சத்திரபர் அல்லது மாகாண ஆட்சியாளராயிருந்து பின் தனி யரசராயினர். அவர்களுடன் ஆந்திரர் போராட வேண்டி வந்தது. ஆந்திரப் பேரரசருள் புகழ்மிக்கவன் கி.பி. 113 முதல் கி.பி. 138 வரை ஆண்ட கௌதமிபுத்ர சதகர்ணி ஆவன். இவன் சத்திரபன் நாகபாணன் என்பவனைக் கொன்று அவன் கையில் சிக்கிய நாட்டுப் பகுதியை மீட்டான். ஆனால், சாஷ்டணன் என்ற அடுத்த சத்திரபன் மீண்டும் வெற்றியடைந்தான். கி.பி. 184 முதல் 213 வரை ஆண்ட யக்ஞசிரீ மீண்டும் சில வெற்றிகள் கண்டான். ஆந்திரப் பேரரசர் திரையர் அல்லது பல்லவர் மரபைச் சேர்ந்தவரே. பெயருக்கேற்ப அவர்கள் கடல் வாணிகத்தில் சிறந்திருந்தனர். அவர்கள் நாணயங்களில் இரு பாய்மரமுடைய ஆழ்கடலோடும் கப்பல் பொறிக்கப்பட்டிருந்தது. அக்காலத்தில் ஆந்திர கருநாடக தமிழகக் குடிகள் கடல் கடந்து வாணிகக் குடியேற்றங்கள் அமைத்திருந்தனர். கனகவிசயர் சேரன் செங்குட்டுவன் வடநாட்டின் படையெடுத்தது கௌதமி புத்திரனுக்கும் யக்ஞசிரீக்கும் இடைப்பட்டகாலம் ஆகும். அவனுக்கு உதவிய நூற்றுவர் கன்னர் என்பவர் ஆந்திர சதகர்ணிகளே எனக் கூறப்படுகிறது. ஆந்திரரின் எதிரிகளாகிய சக அரசர்களுள் குஷாண அரசனான கனிஷ்கனும் அவன் கீழ்ச் சிற்றரசனான விசயாலயனும் சேர்ந்திருந்தனர். தோற்ற கனகவிசயர் இந்த கனிஷ்கனும் விசயாலயனுமேயாவர் என்று பல வரலாற்றாசிரியர் கருதுகின்றனர். அதற்கேற்ப, கனிஷ்கனின் பின்னோர் புத்தசமயம் விடுத்துச் சைவசமயம் சார்ந்திருந்தனர். செங்குட்டுவனும் மற்றத் தமிழரசரும் புத்தரால் அலைப்புரண்ட வட ஆரியருக்குத் தமிழகத்தில் சதுர்வேதி மங்கலங்கள் அளித்தும், அவர்கள் ஆதரவுக்காக வேள்விகள் நடத்தியும் வந்தனர். வேள்விக்குடிப் பட்டயமும் இலக்கியக் குறிப்புக்களும் இதற்குச் சான்று பகர்கின்றன. யக்ஞசிரீயின் ஆட்சிக்காலத்திலேயே (கி.பி. 184-213) ஆந்திரப் பேரரசு தளர்ச்சியுற்றுச் சிதறத் தொடங்கிற்று. பூனா, நாசிக் ஆகிய பகுதிகளை ஆண்ட சூடு சதகர்ணி மரபினர் பேரரசின் தளையவிழ்த்துத் தனியாட்சியாளராயினர். கி.பி. 230-க்குள் ஆந்திரப் பேரரசின் பெயர் வரலாற்றில் மறைந்தது. கி.பி. 3-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தை நாம் பண்டைக்காலம் என்கிறோம். இந்தக் காலத்திய நிலையை அறிய நமக்கு உதவும் இலக்கியம் தமிழ் இலக்கியம் மட்டுமே. இதில் தொல்காப்பியமும் திருக்குறளும் சங்க இலக்கியத்தில் சில பகுதிகளும் பழமை யெல்லை அறியப்படாத பழைய இலக்கியம் ஆகும். தொல்காப்பியமும் சில சங்க இலக்கியப் பகுதிகளும் கடைச்சங்கத்துக்கு முற்பட்டவை. அதாவது கி.மு. 5-ஆம் நூற்றாண்டு அல்லது அதற்கு முற்பட்ட காலத்துக்குரியது. ஏலேலசிங்கன் மரபை ஏற்க முடியுமானால், அது கி.மு.3-ஆம் நூற்றாண்டுக்குரியது எனலாம். இவை நீங்கலான சங்க இலக்கியத்தின் பெரும் பகுதியும் கி.பி.2-ஆம், 3-ஆம் நூற்றாண்டு களுக்கு உட்பட்டவை. சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்கள் இக்காலத்தின் இறுதிக்கு உரியன. நமக்குக் கிட்டிய இந்த இலக்கியப் பகுதிகளே தமிழிலக் கியத்தின் பழைமை, உயர்வு, பெரும் பரப்பு ஆகியவற்றுக்குச் சான்று பகர்வன. கிட்டாத முத்தமிழ்ப் பேரிலக்கியப் பரப்பை உய்த்துணரச் சிலப்பதிகார உரை உதவுகிறது. தென்னாட்டு இலக்கியங்களில் புத்த சமண காலங்களுக்கு முற்பட்ட இலக்கியம் தமிழில் மட்டுமே இருக்கிறது. புத்த சமண இலக்கியமும் ஏராளம். சைவ, வைணவ இலக்கியங்களும் பிற்காலத்தில் மிகுதி. கன்னடத்தில் 9-ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட இலக்கியமே நமக்குக் கிடைத்துள்ளதாயினும், அதில் சமண கால இலக்கியம் இடம் பெறுகிறது. சைவ வைணவ இலக்கியங்களும் மிகுதி. பிற மொழிகளிலும் கங்கை சிந்து வெளிகளிலும் வைணவ கால இலக்கியம் மட்டுமே கிட்டுகின்றன. 4. பல்லவ பாண்டியப் பேரரசுகள் (கி.பி.3-9ஆம் நூற்றாண்டுகள்) தென்னாட்டின் வரலாற்றில் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு ஒரு முனைப்பான திரும்பு கட்டம் ஆகும். நாகரிகம், அரசியல் ஆகிய இரு துறைகளிலும் அது மிகப் பெரிய மாறுபாடுகளை உண்டு பண்ணிற்று. இம்மாறுபாடுகளின் மூலகாரணத்தை நாம் முற்றிலும் தென்னாட்டிலேயே காணமுடியாது. அவற்றைத் தென்னாட்டின் வடக்கிலுள்ள சிந்து கங்கை சமவெளியிலும், அதற்கு அப்பாலுள்ள நாடு ஆசியப் பகுதியிலுமே சென்று காண்டல் வேண்டும். களப்பிரர் படையெழுச்சி கி.மு. 1500 வரை சிந்து கங்கை வெளி தென்னாட்டு நாகரிகத்தின் ஓர்புறச் சிறை வாரமாகவே இருந்து வந்தது. ஆனால், ஆரியர் குடியெழுச்சிக்கால முதல் ஆயிர ஆண்டுகளாக அயலார் படையெடுப்பாலும் அயலார் கலப்பாலும் சிந்துவெளி பேரளவிலும் கங்கை வெளி ஓரளவிலும் சின்னாபின்ன மடைந்தே வந்தன. கி.மு.2-ஆம் நூற்றாண்டிலிருந்து மீண்டும் பேரளவில் பண்படா முரட்டு மக்கள் இனங்கள் புடைபெயரத் தொடங்கின. மங்கோலியர், யூச்சி என்ற இனத்தவரை வடக்கிலிருந்து நெருக்க, அவர்கள் ஊணரையும், ஊணர் குஷாணரையும், குஷாணர் சகரையும் முறையே தெற்கு நோக்கி நெருக்கித் தள்ளினர். ஆந்திரப் பேரரசர் குஷாணரையும் சகரையும் கிழக்கே கங்கை வெளிலும் தெற்கே தென்னாட்டிலும் பரவாமல் தடுக்கப் பெருமுயற்சிகள் செய்தனர். சேரன் செங்குட்டுவன் கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் கங்கைவெளி வரை படை நடத்தி, ஆந்திரப் பேரரசருடன் சேர்ந்து இம்முயற்சியில் பெரு வெற்றிகள் கண்டான். ஆனால், அணை கடந்த வெள்ளம்போல், 3ஆம் நூற்றாண்டில் இந்த மக்கள் எழுச்சி பாய்ந்து வந்து பரந்தது. தென்னாட்டின் வடமேற்கில் இருந்த பல குடிகள் இக்குடியெழுச்சியால் உந்தப்பட்டுத் தெற்கு நோக்கிப் புடைபெயர்ந்தனர். சேரநாடு வலிமை வாய்ந்த பேரரசாயிருந்த வரை தண்டகக் காட்டிலுள்ள இவ்வெழுச்சி தடை பட்டிருந்தது. ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் இப்பகுதியிலடைந்த வெற்றியை நாம் முன்பு கண்டோம். ஆயினும், விரைவில் கன்னட நாட்டெல்லையிலிருந்த களப்பிரர் என்ற ஒரு பண்படாக்குடி, தமிழகத்தின் மீதே சாய்ந்தது. இதனால் சேர சோழ நாடுகள் நிலைகுலைந்தன. பாண்டி நாடும் திடுமென நிலை கவிழ்ந்தது. மீண்டும் பாண்டிய அரசு தலை தூக்க இரண்டு மூன்று நூற்றாண்டுகள் ஆயின. சேர சோழ அரசுகள் தலையெடுக்கவே இன்னும் மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாயின. அளப்பரிய அதிராசரை அகலநீக்கி, அகலிடத்தைக் களப்பிரன் என்னும் கலியரசன் கைக்கொண்டான்... என்பது வேள்விக்குடிச் செப்பேடுகள் தரும் வாசகம். இக்களப்பிரர் படையெடுப்பின் பயனாகப் பாண்டியர் மரபு மட்டுமன்றி, பண்டைத் தமிழர் முச்சங்க வாழ்வும், முத்தமிழ் வாழ்வும் பழங்கதையாயின. ஈடும் எடுப்புமற்ற பழந்தமிழரின் தூய தென்னாட்டுப் பண்பாடும், சமூக சமயவாழ்வும் பண்படா அயலினப் பண்பாடுகளின் தாக்குதலால் தளர்ந்து நாளடைவில் அவற்றுடன் சரிசமமாகக் கலக்கத் தொடங்கிற்று. வடக்கேயிருந்து வந்த குடிபெயர்ப்புக் குழப்பம் தென்னாட் டையும் சிறிது பாதித்ததுபோலவே; வடக்கே அதனாலேற்பட்ட பண்பாட்டுக் குழப்பமும் தென்னாட்டின் பண்பமைதியை ஓரளவு கலைத்தது. வேள்விக்குடிப் பட்டயம் களப்பிரர் புரளியையே கலியின் புரளி என்று குறிப்பிட்டது போல, வடபுலத்திலும் சகர், ஊணர் படையெடுப்புக்களே கலியுகத்தின் தொடக்கமாகக் கொள்ளப்பட்டது. இக்காலத்தில் எழுதித் தொடுக்கப்பட்ட பழங்கதைகளுடன் அக்கால வரலாறும் எதிர்கால உரையாகப் புராணங்களில் குறிப்பிடப்பட்டது. எதிர்காலக் கற்பனைகள் மூன்றாம் நூற்றாண்டுடன் முடிவதிலிருந்து, அவற்றின் காலம் அந்நூற்றாண்டே என்பது தெற்றென விளங்குகிறது. இப்புராணங் களுடன் கலந்து பல அயலவர் சமய சமூகக் கோட்பாடுகள் தென்னாட்டு வாழ்வில் புகுந்து தென்னாட்டினர் சமூக அமைதியையும் குலைக்கத் தொடங்கின. மூன்றாம் நூற்றாண்டின் மக்கட் புடைபெயர்ச்சி சிந்து வெளியை நிலையாகவும், தென்னாட்டின் மேற்குப் பகுதியைத் தற்காலிகமாகவும் தாக்கிற்று. அதே சமயம் அது கங்கை வெளியைத் தற்காலிகமாகவும் தென்னாட்டின் கீழ்ப்பகுதியை நிலையாகவும் தாக்காது விட்டிருந்தது. இதன் பயனாகக் கங்கை வெளியில் மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஏழாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை குப்தப் பேரரசும், ஹர்ஷன் பேரரசும் நிலவ முடிந்தது. அதன்பின் சிந்துவெளியின் குழப்பம் கங்கை வெளியிலும் படர்ந்தது. ஆனால், தென்னாட்டில் ஆந்திரப் பேரரசும் சரிந்துவிட்டாலும் வேறு பல அரசுகள் புதிதாக எழ இடமிருந்தது. தமிழகத்திலேயே அத்தகைய புதிய அரசு ஒன்று ஏற்பட்டது. அதுவே காஞ்சியைத் தலைநகராகக் கொண்ட பல்லவ அரசு. அது தமிழகத்தின் வடபகுதியைக் கைக்கொண்டு தமிழகம் தாண்டி விரைந்து வளரலாயிற்று. பல்லவ மரபு பல்லவர் பிறப்பைப்பற்றி வரலாற்றாசிரியர் பல கூறி மயங்கு வதுண்டு. குடியெழுந்துவந்த வடபுலமாக்களுள், சகர், பார்த்தியர் ஆகியவர்களுடன, பஃலவம் அல்லது பாரசீக நாட்டு மக்களாகிய பஃலவர் என்ற இனத்தவரும் இருந்தனர். பல்லவர் அவர்களின் ஒரு பிரிவினரே என்பர் ஒரு சாரார். ஆனால், அவர்கள் ஆந்திரப் பேரரசிலேயே சிற்றரசாயிருந்தனர் என்று அறிகிறோம். அத்துடன் அவர்கள் கொடியின் சின்னம் ஏறத்தாழச் சோழர்களின் புலிக் கொடியாகவே இறுதிவரை இருந்தது. எனவே முன் பிரிவுகளில் குறிப்பிட்டபடி, பல்லவர் சோழருடன் தொடர்பு கொண்ட திரையரே யாவர். பல்லவர், திரையர் தொண்டைமான் ஆகிய சொற்கள் தமிழிலக்கியத்தில் ஒரு பொருட்சொற்கள் ஆகும். முதல் தொண்டைமானாக இளந்திரையன் குறிக்கப்பட்டான். அவனுக்கும் முதல் பல்லவனுக்கும் உள்ள தொடர்பு விளங்காவிட்டாலும் இருவரும் தொடர்புடையவரல்லர் என்று கூற இடமில்லை. ‘தோட்டி முதல் தொண்டைமான்வரை’ என்ற மரபுரையில் தொண்டைமான் என்ற சொல் இன்றும் தமிழ் வழக்கில் உள்ளது. காடு கொன்று தொண்டைக்காட்டை நாடாக்கிய கரிகாலன் செயலையும் தொண்டைமான் இளந்திரையன் புகழையும், தொண்டை நாட்டின் தமிழகப் பகுதியும் தெலுங்கு நாட்டுப் பகுதியும் இன்னும் நினைவில் கொண்டுள்ளன. கல்வெட்டுச் சான்றுகள் இவற்றை வலியுறுத்துகின்றன. சோழர் தொடர்பை இது எடுத்துக்காட்டுகிறது. வடபுலப் புடைபெயர்ச்சி யால் ஆந்திரப் பேரரசும், களப்பிரரால் சோணாடும் நிலை குலைந்த சமயம் பல்லவர் எளிதில் புதிய ஆட்சி பிறப்பித்துப் பரவியிருத்தல் இயல்பே. இதே சமயம் திரையர்குடி மூலம் பல்லவர் ஆந்திரருடனும் தொடர்புடைய வராயிருத்தல் வேண்டும். ஆந்திரரின் தலைநகரம் கோதாவரிக்கருகிலுள்ள அமராவதியாயினும் தொடக்கத்தில் அவர்கள் துங்கபத்திரைக்கருகிலுள்ள அண்டிரா ஆற்றங்கரையி லிருந்தவர்களே என்பது மேலே குறிக்கப்பட்டது. மூன்றாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டுவரை தென்னாட்டு வரலாற்றில் பல்லவரே நடுநாயகம் வகிக்கின்றனர். அவர்கள் முதலில் ஆந்திரப் பேரரசின் எல்லையைக் கைக்கொள்ள முயன்று, வடக்கே புதிதாய் எழுந்த கடம்பர், சாளுக்கியர் ஆகியவர்களுடனும், மேற்கே கொங்கு அரசர் அல்லது மேலைக்கங்க மரபினருடனும் போராடினர். ஆறாம் நூற்றாண்டுக்குப்பின் அவர்கள் பாண்டியப் பேரரசுடன் பல தடவை மோதிக் கொண்டனர். பல்லவர்களில் முதல்வனான பப்பன் ஆந்திர அரசரின் வீழ்ச்சிக் காலத்தில் அவர்கள் கீழிருந்து ஆண்டு தென்பகுதியில் தன் ஆட்சிக் கொடியை உயர்த்தியவன். அவன் காலம் மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கம் என்று கருதப்படுகிறது. நான்காம் நூற்றாண்டின் முதற் பகுதியில் விஷ்ணுகோபன் காலத்தில் கங்கை வெளியின் பேரரசனான சமுத்திரகுப்தன் காஞ்சிமீது படையெடுத்ததாகக் கூறப்படுகிறது. இக்காலங்களில் பல்லவர், பாலாறு முதல் கிருஷ்ணாவரையுள்ள தொண்டை நாட்டுடன் தற்போதைய கிருஷ்ணா, கோதாவரி மாவட்டங்கள் அடங்கிய வேங்கி நாட்டையும் ஆண்டதாக அறிகிறோம். ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியில் ஆண்ட பல்லவ அரசன் முதலாம் சிம்ஹவர்மன் ஆவன். இச்சமயம் சிற்றரசராகிய பாண மரபினர் தென்தொண்டை நாட்டில் வலிமை பெற்று வந்தனர். அவர்கள் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கத்துடன் சிம்ஹவர்மன் ஹரிவர்மன் என்ற கங்க அரசனை ஆதரித்து அவனுக்குத் தானே முடிசூட்டினான். இவன் காலத்தில் மைசூரிலுள்ள கங்க அரசர் மீது அவன் ஆதிக்கம் பரவியிருந்தது என்பதை இதனால் அறிகிறோம். ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து பல்லவருக்கும், அவர்களுக்கு வடக்கே ஆண்ட சாளுக்கியருக்கும் பெரும் போராட்டம் தொடங்கிற்று. கி.பி.600 முதல் 630 வரை ஆண்ட பல்லவப் பேரரசன் மகேந்திர வர்மன் ஆவான். இவன் தொடக்கத்தில் சமண மதத்தவனாயிருந்து திருநாவுக்கரசு நாயனாரின் முயற்சியால் சிவநெறி தழுவினான். சமணப் பள்ளிகள் பலவற்றை அழித்து, அவற்றைக் கொண்டே அவன் ‘குணபரன்’ அல்லது ‘குணதரன்’ என்ற தன் பெயரால் ‘குணதரச்சுரம்’ என்ற ஒரு சிவன் கோயில் கட்டினான் என்று தெரியவருகிறது. இசையிலும் சிற்பத்திலும் சமஸ்கிருதத்திலும் இவன் வல்லவனாயிருந்தான். சமணனா யிருக்கும்போது இவன் இயற்றிய ‘மத்தவிலாசம்’ என்ற களிநாடகம் அத்துறையில் தலைசிறந்த ஒன்றாக இன்றும் கருதப்படுகிறது. சித்தன்னவாசல் போன்ற பல குகைக் கோயில்களின் ஓவியம் இவன் காலக் கலைப்பெருமைக்குச் சான்று ஆகும். சாளுக்கியர் இவன் காலத்திறுதியில் பல்லவரை முறியடித்துத் தொண்டை நாட்டையே சூறையாடினதாக அறிகிறோம். பல்லவர் தம் புகழின் உச்சி அடுத்த பேரரசனாகிய முதலாம் நரசிம்மவர்மன் கி.பி. 630 முதல் 668 வரை ஆண்டான். இவன் சாளுக்கியர் மீது பழி தீர்த்துக் கொண்டான். பரியளம், மணிமங்கலம், சூரமாரம் ஆகிய இடங்களில் இவன் சாளுக்கியரை வென்று அவர்கள் தலைநகரமாகிய வாதாபியை அழித்துத் தரை மட்டமாக்கினான். வடநாட்டில் ஹர்ஷன் பேரரசனாக ஆண்ட காலம் இதுவே. சாளுக்கியரும் இச்சமயம் உச்சநிலை எய்தியிருந்தனர். சாளுக்கியப் பேரரசனாகிய இரண்டாம் புலிகேசியின் ஆட்சித் தொடக்கத்தில் ஹர்ஷன் தெற்கே படையெடுத்து வந்திருந்தான். அவனைப் புலிகேசி முறியடித்துப் பின் அரசியல் மதி நுட்பத்துடன் சமரசம் செய்து கொண்டான். ஆயினும் 642-ல் அவன் பல்லவரால் முறியடிக்கப்பட நேர்ந்தது. வாதாபியை அழித்த பல்லவப் படைத் தலைவனான பரஞ் சோதியே, அறுபத்துமூன்று நாயன்மாரில் ஒருவரான சிறுத்தொண்டர். இவர் காலத்தில் தலைநாயன்மாருள் ஒருவரான திருநாவுக்கரசர் வயது சென்றவராகவும் திருஞானசம்பந்தர் இளைஞராகவும் இருந்தனர். சிந்து கங்கை வெளியின் பேரரசனை வென்ற தென்னாட்டுப் பேரரசன் புலிகேசி. அவனை வென்று, பல்லவர் தம் புகழின் உச்சியை அடைந்தனர். முடியிழந்த இலங்கையரசன் மானவர்மனுக்கு, நரசிம்ம வர்மன் அடைக்கலம் அளித்திருந்தான். இரண்டாம் மகேந்திரவர்மன் இரண்டு ஆண்டுகளே ஆண்டான். அடுத்த அரசனாகிய பரமேசுவர போதவர்மன் 696 வரை இருபது ஆண்டு ஆட்சி செலுத்தினான். இரண்டாம் புலிகேசிக்குப் பின் சாளுக்கிய அரசு மேலைச்சாளுக்கிய அரசு, கீழைச்சாளுக்கிய அரசு என இரண்டாக நிலவிற்று. இரண்டாம் மகேந்திரவர்மன், பரமேசுவர போதவர்மன் இருவர் காலத்திலும் மேலைச்சாளுக்கியருடன் பெரும்போர் நிகழ்ந்தது. சில சமயம் மேலைச்சாளுக்கிய அரசன் விக்கிரமாதித்தியனும் சில சமயம் பல்லவனும் வெற்றி கண்டனர். ஆனால், இறுதியில் விக்கிரமாதி தன் கையே மேலோங்கிற்று. அவன் தெற்கே திரும்பிப் பல்லவர் பாண்டியர் ஆகிய இரு பேரரசுகளுடனும் பெருவளநல்லூர், மங்களபுரம், மருதூர் ஆகிய இடங்களில் போர் செய்தான். பெருவளநல்லூரில் அவன் முறியுண்டு மீண்டான். இரண்டாம் நரசிம்ம வர்மன் 690 முதல் 715 வரை ஆண்டான். தென்னாட்டின் தலைசிறந்த பழைய கலைப் படைப்புகளாகிய மாமல்லபுரம் அல்லது மகாபலிபுரத்திலுள்ள கடற்கரைச் சிற்பங்களையும் காஞ்சிபுரத்திலுள்ள கைலாசநாதர் கோயிலையும் கட்டியவன் இவனே. இரண்டாம் நந்திவர்மன் (717-776) காலத்தில் சித்திரமாயன் என்ற இளவரசனுடன் அரசுரிமைக்கான உள்நாட்டுப்பூசல் ஏற்பட்டது. பாண்டியர் இதில் தலையிட்டதனால், பாண்டிய பல்லவப்போர் தொடங்கிற்று. சங்கரமங்கை, மண்ணைக்குடி, நெல்வேலி ஆகிய இடங்களில் கடும் போர்கள் பல நிகழ்ந்தன. நந்திவர்மனுக்கு அவன் படைத்தலைவனாகிய உதயசந்திரன் உதவினான். அவன் உதவியாலும் தஞ்சைப் பெரும்பிடுகு, முத்தரயர், அதிகைமான் ஆகியவர் உதவியால் நந்திவர்மன் அரசுரிமை இழக்காமல் காப்பாற்றப்பட்டான். சங்கரமங்கையில் இரு திறத்தவரும் வெற்றி கோரினர். மண்ணைக் குடியில் பல்லவன் வென்றான். ஆனால், பெண்ணாகடத்தில் மீண்டும் பாண்டியன் கை ஓங்கிற்று. இதற்கிடையே மேலைச்சாளுக்கிய அரசன் இரண்டாம் விக்கிரமாதித்தியனும் பல்லவர் நாட்டை அலைக்கழித்தான். பல்லவர் ஆட்சியின் சரிவு பல்லவர் ஆட்சி இதுமுதல் சரியத் தொடங்கிற்று, நந்திவர்மன் (779-830) காலத்தில் தென்னாட்டின் வடமேற்கில் புதிதாய் எழுந்த ராஷ்டிரகூட மரபினர் பல்லவரைக் கீழ்ப் படுத்தினர். அடுத்த பல்லவ அரசன் மூன்றாம் நந்திவர்மன்; ராஷ்டிரகூடப் பேரரசன் முதலாம் அமோகவர்ஷன் புதல்வியாகிய கலையிற் சிறந்த சங்கையை மணந்து கொண்டான். பல்லவன் நிருபதுங்கன் காலம் மீண்டும் பாண்டியருடன் போரில் கழிந்தது. கங்க அரசர் இப்போது பல்லவருக்கு உதவி செய்து காத்தனர். கி.பி.829-ல் திருப்புறம்பயம் போரில் பல்லவன் வெற்றி பெற்றாலும், பேரரசு இதற்குள் சோர்வுற்றது. கடைசிப் பல்லவ அரசன் காலத்தில் புதிதாக அப்போதுதான் தலை எடுத்து வந்த சோழ மரபின் காவலன் முதலாம் ஆதித்தன் பல்லவனை அடக்கி அந்நாட்டையே கைக்கொண்டான். ஆறு நூற்றாண்டுகளாகத் தமிழகத்திலும் தமிழக எல்லை கடந்து தென்னாட்டின் நடுப்பகுதி முழுவதும் ஆண்ட பல்லவப் பேரரசு பாண்டிய, சாளுக்கிய, கங்க, இராஷ்டிரகூட அரசுகளுடன் நீண்ட போராட்டமாடி வீழ்ச்சியுற்றது. பல்லவர் ஆட்சிக்காலத்தில் வாணிகமும் குடியேற்றமும் கிழக்கே கடல் கடந்து இந்துசீனா, கிழக்கிந்தியத் தீவுகளில் மிகவும் பரந்தது. பல்லவப்பேரரசர் பலர் தாமே கலைஞரா யிருந்து ஓவியம், இசை, சிற்பம் ஆகிய கலைகளை வளர்த்தனர். முற்காலப் பல்லவர் சமண மதத்துக்கும் பிற்பான்மை வைணவ மதத்துக்கும் ஆதரவு செய்து பற்பல கோயில்கள் எழுப்பினர். ஆனால், மொழித் துறையில் அவர்கள் பெரிதும் சமஸ் கிருதத்துக்கே பாடுபட்டனர். தமிழ்ப் புலவராலும் சைவ நாயன்மாராலும், வைணவ ஆழ்வார்களாலும், பாடப்பட்டாலும் அவர்கள் தமிழ் தெலுங்கு ஆகிய எந்தத் தாய்மொழியையும் வளர்க்க முயலவில்லை. இரண்டாம் பாண்டியப் பேரரசு சங்க காலத்துக்கும் களப்பிரர் படையெடுப்புக்கும் பின் வந்த பாண்டியர்கள் தொடக்ககாலப் பல்லவர்களைப் போலவே 7ஆம் நூற்றாண்டு வரை சமண சமயத்தைத் தழுவியவராயிருந்தனர். இவர்களில் 3,4,5,6-ம் நூற்றாண்டுகளி லுள்ள பாண்டியர்களைப் பற்றி நாம் இன்னும் மிகுதியாக எதுவும் அறியமுடியவில்லை. அறியத்தக்க சில செய்திகள் முன்பிரிவில் கூறப்பட்டுள்ளன. சைவ, வைணவ இயக்கங்கள் இக்காலத்தில் தோன்றி முதலில் புத்த சமயத்தின் ஆதிக்கத்தை ஒடுக்கி, பின் சமண சமயத்தையும் எதிர்க்கத் தொடங்கின என்று அறிகிறோம். இக்காலப் பாண்டியர்களுடன் வேள்விக்குடிச் செப் பேட்டினால் நமக்குத் தெரியவரும் முதல் பாண்டியன் கடுங்கோன் ஆவான். இவன் காலம் ஏறத்தாழ கி.பி. 590 முதல் 610 வரை ஆகும். பாண்டிய அரசு முன்போல் அமைதியும் வலிமையும் பெறத் தொடங்கியது இவன் காலத்திலேயேயாகும். அடுத்த அரசனாகிய மாறவர்மன் அவனிசூளா மணியே இறையனார் அகப்பொருளுறையில் மேற்கோளாகக் காணப்படும் கோவைக்குரிய பாட்டுடைத் தலைவன் என்று மறைமலையடிகளார் கருதுகின்றனர். இவனுக்குப்பின் வந்த செழியன்சேந்தன் கல்வெட்டுகளில் தன்னை வானவன் என்று குறிக்கிறான். இதிலிருந்து இவன் பாண்டி நாட்டை ஆண்டதுடன் சேரனையும் போரில் வென்றிருக்கக் கூடும் என்று கருதலாம். சேந்தன் திவாகரம் என்று குறிக்கப்படும் தமிழின் முதல் நிகண்டு இவன் காலத்திலேயே எழுதப்பட்டது. இடைக்காலப் பாண்டியப் பேரரசை நிறுவியவன் என்று கூறத்தக்க பெரும் பாண்டியன் அரிகேசரி பராந்தகன். பெரிய சின்னமானூர்ச் செப்பேட்டில் குறிக்கப்படும் அரிகேசரி மாறவர்மன் இவனேயாவான். இவன் உள்நாட்டில் பரவரையும் குறுநாட்டு வேளிரையும் கீழடக்கினான். சேரனுக்கு எதிராகப் பல தடவை போரிட்டு அவனை அடக்கினான். சங்கரமங்கை என்ற போர்க்களத்தில் பல்லவரை வென்றான். அவன் வெற்றி கண்ட மற்றொரு போர்க்களம் செந்நிலம் ஆகும். திருஞானசம்பந்தரால் சமண சமயத்திலிருந்து சைவ சமயத்துக்கு மாற்றப்பட்ட கூன் பாண்டியன் என்ற சுந்தர பாண்டியன் இவனே. இதனால் வாதாபி அழித்த பல்லவன் காலத்தை ஒட்டி இவன் வாழ்ந்தவன் என்று அறிகிறோம். இவன் ஆட்சி, 670 முதல் 710 வரை நடைபெற்றது. அடுத்த பேரரசன் கோச்சடையன் 740 வரை ஆண்டான். பெரிய சின்னமனூர் செப்பேட்டில் இவன் ஜடிலன் என்று குறிக்கப்படுகிறான். இவன் மருதூர்ப் போரில் ஆய்வேளை முறியடித்தான். வானவன். செம்பியன், சோழன், மதுரகருநாடகன், கொங்கர் கோமான் என்ற பெயர்கள் இவன் வெற்றிகளுக்குச் சான்றாகின்றன. தற்போது மங்களூர் என்றழைக்கப்படும் தென்கன்னட மாவட்டத்திலுள்ள மங்களாபுரத்தைத் தாக்கி வெற்றி கண்ட செய்தி செப்பேடுகளில் குறிக்கப்படுகிறது. கொங்கர்மீது இவன் ஆட்சி செலுத்தினான். ஆனால், கொங்குவெற்றி இன்னும் நிலையானதாக வில்லை. பாண்டியப் பேரரசின் உச்சநிலை மாறவர்மன் முதலாம் இராசசிம்மன் 740 முதல் 765 வரை ஆண்டான். நெடுவயல், குறுமடை, மண்ணைக் குறிச்சி, திருமங்கை, பூவளூர், கொடும்பாளூர் ஆகிய இடங்களில் இராசசிம்மனுக்குப் பெரு வெற்றிகள் கிடைத்தன. சென்னைப் பொருட்காட்சிப் பட்டயங்களில், இவனுக்குப் பல்லவபஞ்சனன் என்ற பெயர் அளிக்கப்பட்டிருக்கிறது. பல்லவரை எதிர்த்து இவன் பெற்ற வெற்றிகள் மிகவும் முக்கியமானவை. இவனால் முறியடிக்கப் பட்ட பல்லவமல்லன் போர்க்களத்தை விட்டு ஓட நேர்ந்தது. குழும்பூர்ப் போரில் பல்லவமல்லன் முற்றுகைக்கு ஆளாகிச் சிறைப்பட இருந்தான். ஆனால், அவன் வீரப்படைத் தலைவன் உதயசந்திரன் அவனைச் சிறைமீட்டான். இவன் பெரியலூரில் மழகொங்கரை வென்று, அவர்கள் தலைவன் மகளை மணந்து கொண்டான். அவன் கொங்கு நாட்டை வென்றபின், அவன் மகன் கொங்கர்கோன் என்ற பட்டத்துடன் இளவரசுரிமை பெற்றான். மாறன்காரி என்ற பாண்டியர் படைத் தலைவன் கங்கர் முதலிய அரசர் உதவியுடன் வல்லபன் அல்லது மேலைச் சாளுக்கியரை வெண்பையில் முறியடித்தான். இதன் பின் கங்க அரசர் புதல்வி இளவரசன் கொங்கர் கோனுக்கு மணம் செய்து வைக்கப்பட்டாள். இரணிய கருப்பம், துலாபாரம் ஆகிய விழாக்கள் மூலம் இராசசிம்மன் பிராமணர்களுக்குப் பொன்னும் மணியும் வாரிக் கொடுத்தான். கூடல், வஞ்சி, உறையூர்க் கோயில்களை அவன் பெரிதாக்கிச் செப்பம் செய்தான். அடுத்த பாண்டியப் பேரரசன் ஜடில பராந்தக நெடுஞ்சடையன் அல்லது (முதலாம்) வரகுணன் கி.பி. 765 லிருந்து 815 வரை ஆண்டான். ஆனைமலை, திருச்சிராப்பள்ளிக் கல்வெட்டுகள் இவனை மாரஞ்சடையன் என்றும் குறிக்கின்றன. இடைக்காலப் பாண்டியருள் மிகச்சிறந்த வீர அரசன் இவனே. வேள்விக்குடிச் செப்பேடுகள் இவனாலேயே அளிக்கப்பட்டன. ஆய்வேளின் தலைமையில் எழுந்த காட்டுக்குறும்பர் கிளர்ச்சியை இவன் அடக்கினான். பெண்ணாகடம் என்ற இடத்தில் பல்லவ அரசனை அவன் வென்றான். வடக்கே கங்கர் முதலிய அரசர்களுடன் வெள்ளூர், விண்ணம், செழியக்குடி ஆகிய இடங்களில் போர் செய்தான். ஆயிரவேலி அயிளூர் என்ற இடத்திலும் புகழியூரிலும் அவன் அதிகனை முடியடித்ததுடன், அவனுக்கு உதவியாக வந்த பல்லவரையும் கேரளரையும் களத்திலிருந்து கலைந்தோடச் செய்தான். மேல் கொங்கு நாடு இதன் பின் நிலையாகப் பாண்டி நாட்டுடன் சேர்க்கப்பட்டது. வேம்பில் நகரையும் கேரளத்திலுள்ள விழிஞம் என்ற நகரையும் அவன் அழித்தான். இம் மன்னன் திருமாலிடம் மிகவும் பற்றுடையவன். கொங்கு நாட்டுக் காஞ்சிப்பேரூரில் அவன் திருமாலுக்குக் குன்றமன்னதோர் கோயில் கட்டினான். அம்பாசமுத்திரம், திருச்செந்தூர் முதலிய சிவத் திருப்பதிகளுக்கும் அவன் நன்கொடை யளித்திருந்தான். இம்மன்னன் வாழ்நாளில் பெரும்பகுதி போரிலேயே கழிந்தது. இவன் ஆட்சியின் இறுதியில் பாண்டிநாடு அதன் எல்லை கடந்து தஞ்சை திருச்சிராப்பள்ளி, சேலம், கோயமுத்தூர் மாவட்டங்களை உள்ளடக்கியதாயிருந்தது. சீர்மாற சீர்வல்லபன் (815-862) குன்னூர், விழிஞம் ஆகிய இடங்களில் கங்கர், பல்லவர், சோழர், கலிங்கர், மகதர் முதலிய தென்னாட்டரசர் பலரின் கூட்டு வலுவைச் சிதறடித்தான். தெள்ளாறு என்ற இடத்துப் போரில் பல்லவன் பாண்டியனை வென்றானாயினும், அதன்பின் குடமூக்கில் பாண்டியன் பல்லவன் மீது மீண்டும் வெற்றி நாட்டினான். தமிழ்நாட்டின் அகத்துள்ள இவ்வெற்றிகளுடன் அமையாமல், சீர்மாறன் இலங்கை மீதும் படையெடுத்தான். இலங்கையரசன் களம் விட்டோடினான். இரண்டாம் பாண்டியப் பேரரசு முதலாம் வரகுணன், சீர்மாறன் ஆகியவர்கள் காலத்திலேயே உச்சநிலை அடைந்திருந்தது. சீர்மாளன் புதல்வன் வரகுண வர்மன் ஆட்சியில் சோழ அரசு தலைதூக்கத் தொடங்கியிருந்தது. அதை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரகுணவர்மன் இடவை மீது தாக்கி வென்றான், ஆனால், வடக்கே பல்லவர், கங்கர் ஆகிய இருவருடனும் அவன் மோதிக்கொண்டான். திருப்புறம்பயம் என்ற பெரும் போரில் பாண்டியர் படை பின்னடைந்தது. கங்க அரசன் அதில் இறந்த போதிலும் பல்லவன் வெற்றி பெற்றான். பாண்டியப் பேரரசின் வலு இது முதல் தளரத் தொடங்கிற்று. பல்லவர் இப்போரில் வென்றும்கூட, அவர்கள் பேரரசும் ஏற்கெனவே தளர்ச்சி யெய்தியிருந்தது. பராந்தக வீரநாராயணன் 880 முதல் இருபது ஆண்டுகளும் மாறவர்மன் இரண்டாவது இராஜசிம்மன் 900 முதல் இருபது ஆண்டுகளும் ஆட்சி செய்தனர். இவர்கள் காலத்தில் பாண்டியர் பேரரசு நிலையை இழந்து சரியலாயிற்று. 907-ல் சோழன் முதலாம் பராந்தகன் மதுரை கொண்ட சோழன் என்றும் மதுராந்தகன் என்றும் விருது கொள்ள முடிந்தது. வேளூர்ப் போரில் இலங்கை அரசனையும் பாண்டியனையும் சோழன் ஒருங்கே முறியடித்து மதுரையைக் கைக்கொண்டான். 925 முதல் 13-ஆம் நூற்றாண்டு வரை பாண்டிய அரசு புதிதாக எழுந்த சோழ அரசின் கீழடங்கிய ஒரு சிற்றரசாயிற்று. வடபுல அரசுகள் தமிழகத்துக்கு வடக்கே ஆந்திரர்களுக்குப் பிறகு மிகவும் பழமையான மரபினர் வாகாடகர், மேலைக் கங்கர், கடம்பர், விஷ்ணுகுண்டின மரபினர், சாளுக்கியர், கிழக்குக் கங்கர், இராஷ்டிரகூடர் ஆகியவர்களே. வாகாடகர் வாகாடகர்கள் மைசூருக்கு வடகிழக்கில் பெரும்பகுதியை ஆண்டவர்கள். குந்தளம் என்று குறிக்கப்படும் பெல்லாரி சூழ்ந்த பகுதியையும் அவர்கள் கைக்கொண்டு ஆண்டதுண்டு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே அவர்கள் வளர்ந்து வந்தனர். நான்காம் நூற்றாண்டில் ஆண்ட முதலாம் பிருதுவி சேனன் நாட்டைத் தென்பால் பரப்பிக் குந்தள தேசத்தைக் கைக் கொண்டான். அடுத்த அரசனாகிய இரண்டாம் உருத்திரசேனன் கங்கை வெளியை ஆண்ட இரண்டாம் சந்திரகுப்த விக்கிர மாதித்தன் புதல்வியை மணந்து கொண்டான். கி.பி. 500 உடன் இம்மரபு மேலைக் கங்கர், சாளுக்கியர் ஆகியவர்கள் ஆட்சியுள் மறைந்தது. கடம்பர் கடம்பர்கள் என்ற பெயர் மேற்குக் கரையில் கடற் கொள்ளையிட்ட ஒரு கூட்டத்தின் பெயராகச் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றது. அவர்கள் கி.பி.340-ல் பல்லவர்களை எதிர்த்து வனவாசியில் தம் ஆட்சி நிறுவினர். கிளை ஆந்திர மரபினரான சூடு சதகர்ணிகளை விழுங்கி அவர்கள் விரைந்து வளர்ந்தனர். முதல் அரசன் மயூரவர்மனைப் பின்பற்றி எழு தலைமுறைகளாக ஒன்பது அல்லது பத்து அரசர் ஆண்டனர். ஆறாம் நூற்றாண்டில் சாளுக்கிய அரசன் முதலாம் புலிகேசியாலும், கீர்த்தி வர்மனாலும் அவர்கள் ஆண்ட பகுதி வனவாசி பன்னீராயிரம் என வழங்கப்படுகிறது. மேலைக்கங்கர் மேலைக்கங்கர் ஆண்ட பகுதி கிழக்கு மைசூரும் அனந்தப் பூரும் ஆகும். இது நெடுங்காலம் கங்கதாடி தொண்ணூற்றாறாயிரம் என வழங்கிற்று. கங்க மரபினர் பெர்மானடி, கொங்குணிவர்மர் என்ற பட்டங்களை மேற்கொண்டனர். ஐந்தாம் நூற்றாண்டுவரை அவர்கள் குறுநில மன்னராகவே இருந்தனர். கி.கி.450-ல் பாணர்களை ஒடுக்குவதற்காகவே பல்லவன் சிம்மவர்மனால் அவர்கள் முடியுரிமை அளிக்கப்பட்டனர். ஆனால், அந் நூற்றாண்டிலேயே கடம்பர்களாலும் 6-7ஆம் நூற்றாண்டுகளில் சாளுக்கியர்களாலும் அவர்கள் கீழடக்கப்பட்டு அவர்கள் கீழ்ச் சிற்றரசர்களாக இருந்தனர். ஆயினும் சிற்றரசர்கள் என்ற நிலையிலேயே அவர்கள் வலிமையுடையவர்களாயிருந்தனர். 7ஆம் நூற்றாண்டில் சாளுக்கியர் இராஷ்டிரகூடரால் அடக்கப் பட்டபின், கங்கர் தன்னாட்சி பெற்றனர். 805 முதல் 810 வரை ஆண்ட இரண்டாம் சிவமாரன் இராஷ்டிரகூட அரசன் துருவனால் வீழ்த்தப்பட்டு, மூன்றாம் கோவிந்தனால் மீண்டும் அரசுரிமை வழங்கப்பட்டான். அடுத்த அரசன் விஜயாதித்தியன் (810-840) கிழக்குச் சாளுக்கியருடனும், அவன் பின்னர் வந்த முதலாம் பிருதிவீபதி வரகுண பாண்டியனுடனும் திருப்புறம்பயத்தில் போர் புரிந்தனர். திருப்புறம்பயப் போரில் பிருதிவீபதி உயிரிழந்தான். 9, 10ஆம் நூற்றாண்டுகளில் கங்கர் மீண்டும் சோழருக்கும் இராஷ்டிர கூட அரசர்களுக்கும் கீழடங்கியவர்களாக இருந்து, அப்பேரரசர்களிடையே போரில் எதிரிகளைத் தாக்கும் கருவிகளாக இருந்து வாழ்ந்தனர். இவ்வகையில் இரண்டாம் பிருதிவீபதி (900-940) முதலாம் பராந்தக சோழனின் ஆளாய், பாணர்களின் நிலத்தோடு செம்பியன் மாவள வாணராயன் என்ற பட்டமும் பெற்றான். இரண்டாம் பூதுகன் (939-950) இராஷ்டிரகூட அரசனாகிய மூன்றாம் கிருஷ்ணனுடன் சேர்ந்து தக்கோலப் போரில் சோழன் முதலாம் இராசாதித்தியனைக் களத்தில் கொன்றான். மாரசிம்ஹன் (961-974) நொளம்ப பல்லவரால் 8ஆம் நூற்றாண்டு முதல் ஆளப்பட்ட நொளம்பவாடி மும்பத்தாறாயிரத்தை வென்றான். கடைசி கங்க அரசனான இராசமல்லன் (974-1004) காலத்தில் அவன் அமைச்சனான சாமுண்டன் சிரவணபெல கோளாவிலுள்ள பெரிய சமணப் பாறைச் சிலைகளைக் கட்டுவித்தான். என்றுமே பேரரசரின் செல்லப் பிள்ளைகளாக இருந்த கங்கர் 11ஆம் நூற்றாண்டுக்குப்பின் மீண்டும் குறுநில மன்னர் நிலையை அடைந்து விட்டனர். இவர்களுள் பலர் நன்னிய கங்கசோடர் எனப் பெயர் பூண்டனர். 1180ஆம் ஆண்டைய கல்வெட்டுகளில் சீயகங்கன் அமராபரணன் என்ற சிற்றரசன் பெயர் காணப்படுகிறது. இவன் தந்தை கோவளாலபுரத்தின் இறைவனாகக் குறிக்கப்படுகிறான். தமிழில் நன்னூல் எழுதிய பவணந்தியை ஆதரித்த வள்ளல் இவனே என்று அறிகிறோம். விஷ்ணு குண்டின மரபு விஷ்ணு குண்டின மரபினர் கோதாவரி, கிருஷ்ணா ஆறுகளுக்கிடையிலுள்ள வேங்கை நாட்டை ஆண்டவர்கள். ஆந்திரப் பேரரசர் காலத்தில் இதில் ஆண்ட சாலங்காயன் மரபினரை ஒழித்து வாகாடகர் உதவியால் இவர்கள் 4ஆம் நூற்றாண்டின் நடுவில் ஆட்சிக்கு வந்து, ஏழாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை நிலைத்தனர். அதன்பின் அந்நாடு கீழைச்சாளுக்கியர் வசப்பட்டது. சாளுக்கியர் பல்லவ நாட்டுக்கு வடக்கே எழுந்த பேரரசுகளுள் வலிமை மிக்கது சாளுக்கிய அரசே. முற்காலச் சாளுக்கியர் கி.பி. ஆறாம் நூற்றாண்டிலிருந்து தென்னாட்டின் வடமேற்குப் பகுதியை முதலில் பைத்தானிலிருந்தும், பின் வாதாபி அல்லது பாதமியிலிருந்தும் ஆண்டார்கள். முற்காலச் சாளுக்கியருள் முதல்வனான முதலாம் புலிகேசி (550-565) வாதாபியைக் கைப்பற்றி அதை தலைநகராக்கினான். அடுத்த அரசனான முதலாம் கீர்த்தி வர்மன் (566-597) கடம்பர்களை வென்று வனவாசியைக் கைப்பற்றினான். அடுத்த அரசன் மங்களேசன் (597-610) களசூரியரை வென்றான். கடைசி அரசன் இரண்டாம் புலிகேசி (610-642) காலத்தில் சாளுக்கிய அரசு பேரரசாய் உச்சநிலை அடைந்து. அவ்வாட்சிக் குள்ளேயே வீழச்சியும் அடைந்தது. தொடக்கத்தில் வடக்கே கங்கை வெளியின் கடைசிப் பேரரசனான ஹர்ஷன் சாளுக்கிய அரசன்மீது படையெடுத்தான். புலிகேசி, ஹர்ஷனை வென்று புகழ் பெற்றான். ஆயினும் தெற்கே வளர்ந்து வந்த பல்லவர் களுக்கு அஞ்சி அவசர அவசரமாக உடன்படிக்கை செய்தான். ஆனால், 642-ல் பல்லவர் படைமுன் அவன் தோற்றான். வாதாபி மீண்டும் என்றும் நன்னிலையடையாதபடி அழிவுற்றது. சாளுக்கியப் பேரரசும் விழுந்தது. பதின்மூன்றாண்டு சாளுக்கிய அரசு குழப்பநிலையில் இருந்தது. பின் அது மேலைச்சாளுக்கிய அரசு, கீழைச் சாளுக்கிய அரசு என்று இரண்டு மரபுகளாக மீண்டும் மறுமலர்ச்சி யெய்திற்று, புலிகேசியின் புதல்வன் முதலாம் விக்கிராமதித்தியன் மேலைச் சாளுக்கிய மரபின் முதல்வனாகவும், புலிகேசியின் இளவல் குப்ஜவிஷ்ணுவர்த்தனன் கீழைச் சாளுக்கியரின் முதல்வனாகவும் விளங்கினர். மேலைச் சாளுக்கியர் மேலைச்சாளுக்கிய அரசனான முதலாம் விக்கிர மாதித்தியன் (654-680) சோழரையும் கேரளரையும் மூன்று பல்லவரையும் வென்றான். வினயாதித்தியன் ஆட்சியில் (680-696) களப்பிரர், பல்லவருடன் போர் நீடித்தது. இரண்டாம் விக்கிரமாதித்தியன் (733-744) காஞ்சியையே பிடித்து அதைத் திருப்பிக் கொடுத்து விட்டதாகக் கல்வெட்டுக்களில் கூறுகிறான். இரண்டாம் கீர்த்திவர்மன் (744-753) ஆட்சியில் தந்திதுர்க்கன் என்ற இராஷ்டிரகூட அரசன் அவன் நாட்டைக் கைக் கொண்டான். கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளாக மேலைச் சாளுக்கியர் ஆண்ட பகுதியை இராஷ்டிரகூடரே ஆண்டனர். கி.பி. 973-ல் தைலப்பன் என்ற மூன்றாம் தைலப்பன் இராஷ்டிர கூடரை முறியடித்து மீண்டும் சாளுக்கிய அரசை நிலை நாட்டினான். தைலப்பன் காலமுதல், முதலாம் சோமேசுவரன் (1042-1068) காலம்வரை ஐந்து அரசர் ஆட்சிகளில் மேலைச் சாளுக் கியருக்கும் சோழருக்கும் கடும் போராட்டம் நிகழ்ந்தது. 1052-ல் கொப்பம் போரிலும் கூடல்சங்கமம் போரிலும் இருதிறத்தவரும் வெற்றி நமதே என்று கூறினும், மேலைச்சாளுக்கியரே அவற்றால் வலிமை பெருக்கினர். கடைசி இரண்டரசருள் முதல்வனான பெர்மாடி இரண்டாம் ஜகதேக மல்லன் மைசூரில் எழுந்த புதிய ஹோய்சள மரபினரை வென்றான். ஆனால், பிந்திய அரசன் மூன்றாம் தைலப்பன் (1151-1156) அமைச்சனான பிஜ்ஜளகளசூரி அரசனைக் கொன்று களசூரி மரபை நிறுவினான். கீழைச் சாளுக்கியர் முற்காலச் சாளுக்கியரில் கடைசி அரசனான இரண்டாம் புலிகேசி, பல்லவர், கீழ்க்கங்கர் ஆகியவரிடமிருந்து கோதாவரி, கிருஷ்ணா ஆற்றுவெளியிலுள்ள வேங்கை நாட்டைக் கைக்கொண்டிருந்தான். அவற்றை அவன்கீழ் ஆண்ட அவன் தம்பி குப்ஜவிஷ்ணுவர்த்தன் புலிகேசிக்குப்பின் தன்னாண்மை பெற்றுக் கீழைச்சாளுக்கிய மரபை நிறுவினான். அவன் கி.பி. 615 முதல் 633 வரை ஆட்சி செய்தான். விமலாதித்தியன் (1011-1022) முதலாம் இராசராச சோழன் புதல்வியான குந்தவையை மணந்துகொண்டான். இது முதல் ஒவ்வொரு தலைமுறையிலும் சோழர்-கீழைச் சாளுக்கியர் மணஉறவால், மிகுதி மரபுக்கலப்பு உடையவராயினர். இதன் பயனாக இரண்டாம் இராசேந்திரன் (1063-1070) கீழைச் சாளுக்கிய அரசனாயிருந்து கொண்டே 1070-ல் சோழ அரசுக்கும் உரிமையுடையவனாய், குலோத்துங்க சோழன் என்ற பெயர் பெற்றான். கீழைச்சாளுக்கிய மரபு தனிமரபு என்ற முறையில் இத்துடன் முடிவடைந்தது. இராஷ்டிரகூடர் இராஷ்டிரகூட மரபினர் எட்டாம் நூற்றாண்டுக்குமுன் சிற்றரசராகவே இருந்தனர். இரண்டாம் இந்திரன் ஒரு சாளுக்கிய இளவரசியை மணந்திருந்தான், அடுத்த அரசனாகிய தந்திதுர்க்கன் மேற்குச் சாளுக்கியரை வென்ற பேரரசு நிறுவினான். இவன் வெற்றிகள் 748,758 ஆகிய ஆண்டுகளுக்குரிய கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றன. 768, 772 ஆகிய ஆண்டுகளில் வாழ்ந்த முதலாம் கிருஷ்ணனே புகழ் பெற்ற எல்லோராக் குகைச் சிற்பங்களை வகுத்தவன் என்று அறியப்படுகிறது. 783-ல் துருவன் மேலைக்கங்க அரசன் சிவமாரனைச் சிறைப்படுத்தினான். மூன்றாம் கோவிந்தன் (783-814) பெரும் போர்வீரன். கிழக்குச் சாளுக்கிய அரசன் விஜயாதித்தியனுடன் அவன் செய்த போர்கள் மிகப்பல. அத்துடன் இவன் குஜராத்தையும் கேரளத்தையும் வென்றான். குஜராத்தில் அவன் கீழ் ஆண்ட அவன் தம்பி மூன்றாம் இந்திரன், பின்னால் தனிக் கூர்ஜர மரபு கண்டான். முதலாம் அமோகவர்ஷன் (814-877) புதல்வி சங்காவைப் பல்லவ அரசன் மூன்றாம் நந்திவர்மன் மணஞ் செய்து கொண்டான். அமோகர்வஷனுக்குப் பின்வந்த அரசர்கள் வலி குன்றியவரா யிருந்தனர். கடைசி இராஷ்டிரகூட அரசன் இரண்டாம் கர்க்கலன் அல்லது நாலாம் அமோகவர்ஷன் (972-3) கீழைச்சாளுக்கிய மரபினனான தைலப்பனால் வீழ்த்தப் பட்டான். இராஷ்டிரகூட மரபு இதனுடன் முடிவடைந்தது. கேசரி மரபினர் வடகிழக்கில் கலிங்க நாட்டில் காரவேலனுக்குப் பின் ஒரு சில அரசர் பெயர்களே நமக்குத் தெரியவருகின்றன. கலிங்கத்தின் வடபகுதியில் இன்றைய ஒரிசாவில் கேசரி மரபினர் 10ஆம் நூற்றாண்டு வரை ஆண்டதாகக் கல்வெட்டு மரபு குறிக்கின்றது. கி.பி. 615-ல் கலிங்கரிடமிருந்து வேங்கி நாட்டைக் கீழைச் சாளுக்கியர் கைப்பற்றி ஆண்டனர். கிழக்குக் கங்கர் கிழக்குக் கங்க மரபினர் இதன் பின் சிற்றரசராகவே இருந்தனர் என்று கருதவேண்டும். ஆனால், ஏழாவது அரசனான மூன்றாம் காமர்ணவன் (877-897) தன் ஆட்சித் தொடக்கத்தி லிருந்து கலிங்க கங்க ஊழி ஒன்று தொடங்கினான். இதனால் வடபகுதியிலேனும் அவன் தன்னாண்மையுடைய வனாயி ருந்தான் என்று எண்™ இடமுண்டு. தேவேந்திர வர்மன் அல்லது முதலாம் இராசராசன் 1070ல் அரசுகட்டில் ஏறினான். அவன் குலோத்துங்க சோழன் புதல்வி இராசசுந்தரியை மணந்துகொண்டான். இது முதல் கீழைக்கங்க மரபு சோடகங்க மரபு என்று அழைக்கப் பெறுகிறது. முதல் சோடகங்கனாகிய அனந்தவர்மன் சோடகங்கன் 1078 முதல் 1152 வரை 74 ஆண்டுகள் ஆட்சி செய்தான். சோடகங்கர் கலிங்கத்தின் வடபகுதியாகிய ஒரிசாவையும் வென்று ஆண்டனர். இவர்கள் தமிழகத்தில் சோழருடன் நெருங்கிய தொடர்பு உடையவர்கள். தமிழுக்கும் தமிழ்ப் புலவர்களுக்கும் அவர்கள் பேராதரவு செய்தனர் என்பதை அவர்கள் கல்வெட்டுக்கள் காட்டுகின்றன. இம்மரபினர் 1434 வரை ஆண்டனர். அதன்பின் ஆயர் குடியினனான கபிலேந்திரனால் கஜபதி மரபு என்ற புது மரபு நிறுவப்பட்டது. சமயம், மொழி, கலை, பண்பாடுகள் தென்னாட்டின் அரசர் பேரரசர் மரபுகளுள் பெரும் பாலானவை இக்கால முழுதும் சமண சமயம் தழுவியவையாய் இருந்தன என்பது கவனிக்கத் தக்கது. பிற்காலப் பல்லவரும், பிற்கால பாண்டியர் சிற்றரசராயிருந்த சோழரும், சோடகங்கரும் மட்டுமே சைவ-அல்லது வைணவ சமயம் தழுவியவராயிருந்தனர். கன்னட நாட்டில் களசூரி மரபின் தோற்றம் வீரசைவ சமயத்தின் பிறப்பாகவே அமைந்தது. மொழித்துறையில் தமிழ் நீங்கலாகத் தென் இந்திய மொழிகள் எவற்றுக்கும் இவ்விடைக்காலத்தில்கூட இலக்கிய வாழ்வு ஏற்படவில்லை. கன்னடத்தில் கி.பி. 4ஆம் நூற்றாண்டி லேயே இலக்கியம் இருந்ததென்பதற்கான சான்றுகள் தமிழ் நூல்களின் மூலமே கிடைக்கின்றன. ஆனால், இன்று நமக்கு 9ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட இலக்கியமே கிட்டுகின்றது. தெலுங்கிலுள்ள பழைய கல்வெட்டுக்கள் 7-8ஆம் நூற்றாண்டுக் குரியவை. அவற்றால் அது அன்றே இலக்கிய வளம் உடையதாயி ருந்ததாய் அறிகிறோம். ஆனால், நமக்கு 12ஆம் நூற்றாண்டு முதலே தெலுங்கில் இலக்கியம் கிட்டியுள்ளது. இலக்கியம் மலையாளத்தில் 12ஆம் நூற்றாண்டு முதலே நமக்கு இலக்கியம் கிடைத்துள்ளது. கன்னட நாட்டில் இக்கால இறுதியிலும், மலையாள, தெலுங்கு, நாடுகளில் இது கடந்துமே இலக்கியம் நமக்குக் கிட்டுகின்றது. கடைச்சங்க காலத்திலிருந்தே ஆந்திரர், பல்லவர் இலக்கியம் வளர்த்ததாக அறிகிறோம். ஆந்திரர் புத்த சமயத்தினராதலால் பாளி இலக்கியமே பெரிதும் ஆதரவு பெற்றது. அதுவும் நமக்கு இன்று கிட்டவில்லை. சாளுக்கியர், இராஷ்டிரகூடர், மேலைக்கங்கர் ஆகியவர் சமணராதலால், பிராகிருத இலக்கியம் பெருக்கினர். சமணசமயம் கன்னட நாட்டில் தொடக்க கால இலக்கியத்தையும் தமிழகத்தில் சங்க காலத்துக்குப் பிற்பட்ட இலக்கியத்தையும் பெரிதும் ஊக்கிற்று. சங்க காலத்துக்குப் பின் தமிழகத்தில் புத்த, சமண சமயங்களின் தூண்டுதலாலும், இவற்றை எதிர்த்து மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே எழுந்த சைவ, வைணவ பக்தி ஞான இயக்கங்களாலும் புத்திலக்கியம் பெருகிற்று. பழைய சங்க இலக்கியப் பண்பும் உயர்கலைப் பண்பும் மரபற்று நலிந்தன வாயினும், பல புதுப் பண்புகள் தோன்றின. சமயம் பாண்டிய பல்லவப் பேரரசுகளின் ஊழியில் தென்னாட்டின் பண்டை நாகரிகவாழ்வில் பெருத்த மாறுதல்கள் ஏற்பட்டன. அதன் தொடக்கத்தில் எங்கும் புத்த சமண சமயங்களே பரவி மேம்பட்டிருந்தன. பாண்டியர், பல்லவர், சாளுக்கியர், ஆகிய அனைவரும் சமணராகவே இருந்தனர். சங்க காலந் தொட்டு கி.பி.6ஆம் நூற்றாண்டு வரை தமிழ் இலக்கியத்திலும் ஒரு பெரும்பகுதி புத்த சமண இலக்கிய மாகவே இருந்தது. சூளாமணி, குண்டலகேசி, யசோதர காவியம் ஆகிய புத்த சமண காப்பியங்களும்; சிந்தாமணி என்ற சமண சமயப் பெருங்காப்பியமும் இக்கால நிலைக்குச் சான்றுகள் ஆகும். இவை இக்காலத் தொடக்கத்துக்குரியவை என்று சிலரும், இதனையடுத்த 9-10ஆம் நூற்றாண்டுக்குரியவை என்று சிலரும் கொள்கின்றனர். இக்காலத்தில் தொடக்கத்திலிருந்தே தமிழகத்தில் புத்த சமண சமயங்களை எதிர்த்துச் சைவ வைணவ சமயங்கள் தலைதூக்கின. இவை பக்தி இயக்கங்களாக வளர்ந்து. கி.பி.6-7ஆம் நூற்றாண்டுகளில் முழு மறுமலர்ச்சியடைந்தன. 8 முதல் 10 அல்லது 12ஆம் நூற்றாண்டுகள் வரை அதன் முதிர்ச்சியால் நீலகண்டர், சங்கரர், இராமானுசர் போன்ற புதிய சமய அறிவு ஆராய்ச்சியாளர் தோன்றி சமஸ்கிருத மூலம் இன்றைய இந்திய சமய அடிப்படை கோலினர். சைவ பக்தி இயக்கத்தை வளர்த்த நாயன்மார்களாலும், வைணவ பக்தி இயக்கத்தை வளர்த்த ஆழ்வார்களாலும், தமிழ் இலக்கியத்தை சங்க காலத்தில் தளர்வுற்று நலிந்த இசை இலக்கியம் புதிதாக வளர்ந்தது. தேவாரம், திருவாசகம், திருமந்திரம், திருநாலாயிரம் ஆகியவை இவற்றின் பயனாகவே எழுந்தன. நீலகண்டர், சங்கரர், இராமானுசர் ஆகிய சமஸ் கிருத வாணர்களுக்கு வழி வகுத்தவர்கள் இவர்களே. கன்னட நாட்டில் இராமானுசரைப் பின்பற்றி 14ஆம் நூற்றாண்டில் மத்வாசாரியரும், அவரைப் பின்பற்றி 16ஆம் நூற்றாண்டில் வங்க நாட்டில் சைதன்னியரும் தோன்றினர். பல்லவர்களில் பிற்காலத்தவர் சமஸ்கிருதத்தைப் பெரிதும் வளர்த்தனர், பாளி பிராகிருத மொழிகள் நலிவுற்றபின் பிற்கால புத்த சமயத் தலைவர்களின் முயற்சியால் கி.பி.4ஆம் நூற்றாண்டிலிருந்து புதிதாக சமஸ்கிருத மென் இலக்கிய மொழி தோன்றி வளரத் தொடங்கிற்று. இதைத் தமிழுடன் போட்டி யிடத்தக்க ஓர் இலக்கிய மொழி ஆக்கியவர், தென்னாட்டில் பல்லவரும், கங்கை நாட்டில் குப்தரும், ஹர்ஷரும் பிற்கால இராஜபுத்திர அரசருமேயாவர். அத்துடன் கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன் இருந்த புத்த சமண இலக்கியங்களையும் மக்கட் பழங்கதைகளையும் முதலில் சைவ, வைணவச் சார்பாகவும் பின் புதிய சுமார்த்த அல்லது பிராமண சமயச் சார்பாகவும் திரித்துப் புராண இதிகாசங்களாக்கினர். புத்த சமண மதங்கள் நலிவுற்ற பின் இவையே பழைய இலக்கியங்களாக நடமாடின. சோழர் பேரரசாட்சியுடன் தென்னாடும் கீழ் நாடும் ஒரு புதிய ஊழியில் புகுந்தனவாதலால் அதன் வரலாற்றை அடுத்த பிரிவில் ஆராய்வோம். 5 . சோழ பாண்டியப் பேரரசுகள் (9-14ஆம் நூற்றாண்டுகள்) பாண்டிய பல்லவப் பேரரசர் ஆட்சிக்குப்பின் தென்னாட்டில் அடுத்த ஐந்நூறாண்டு வரலாறு பெரிதும் இரண்டு பேரரசுகளின் வரலாறாக இயங்குகிறது. அவை சோழப் பேரரசு, பாண்டியப் பேரரசு ஆகியவையே. சோழப் பேரரசு 10 முதல் 12ஆம் நூற்றாண்டுகள் வரையிலும், பாண்டியப் பேரரசு 12, 13ஆம் நூற்றாண்டுகளிலும், தழைத்திருந்தன, இவற்றின் காலத்திலும், இவற்றின் பின்னும் நிலவினவாயினும், அவற்றின் வாழ்வு தாழ்வுகள் பெரிதும் இப்பேரரசுகளின் வாழ்வு தாழ்வுகளைச் சார்ந்தவையாகவே இருந்தன. தென்னாட்டில் தொடக்கக்கால முதலே பல பேரரசுகள் இருந்தன. அவற்றினிடையே கடல் கடந்த பேரரசுகளும், தென்னாடு கடந்த நிலப் பேரரசுகளும் கூட உண்டு. ஆனாலும் நாம் பேரளவில் சோழப் பேரரசையே தென்னாட்டின் முதல் தேசியப் பேரரசு என்று கூறலாம். ஏனெனில் பழைய பேரரசரைப் போல சோழப் பேரரசர் அயலரசர்களைக் கீழ்ப்படுத்தித்திறை கொள் வதுடன் அமையவில்லை. கூடிய மட்டும் படிப்படியாகத் தம் நேரடியாட்சியையும், ஆட்சி முறையையும் பரப்பினர். நிலையான நிலப்படை, கடற்படைகளின் மூலமாக, வலிமை வாய்ந்த நடு வாட்சியை ஏற்படுத்தவும் முயன்றனர். இவற்றால் பண்பாடு, இனம், கலை, இயல் ஆகியவற்றால் ஏற்பட்ட நாட்டொற்றுமை இன்னும் உறுதி அடைந்தது. வடமேற்குப் பகுதி நீங்கலாகத் தென்னாடு முழுவதிலும், அதற்கப்பாலும் சோழப் பேரரசு பரந்திருந்தது. இலங்கை அந்தமான், நக்காவரம், மலாயா, கிழக்கிந்தியத் தீவுகள் ஆகிய எல்லை வரை அதன் ஆற்றல் எல்லையும், பரப்பும் எட்டியிருந்தன. அத்துடன் சோழப் பேரரசு பேரளவிலும், அதன்பின் வந்த பாண்டியப் பேரரசு ஓரளவிலும் தென்னாட்டின் கடைசிக் கடற் பேரரசுகளாயிருந்தன. சோழப் பேரரசின் ஆட்சிக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து 9ஆம் நூற்றாண்டு வரை தமிழக இயக்க மாயிருந்த பக்தி இயக்கத்தைத் தென்னாடெங்கும் பரப்பியது சோழப் பேரரசர் ஆட்சியே. தமிழகத்துக்கு அப்பால் தாய்மொழி இலக்கியங்கள் இந்த இயக்கங் காரணமாக வளர்ச்சியடைந்ததும் அவர்கள் காலத்திலேயேயாகும். சோழர் ஆட்சி எல்லை கடந்து பக்தி இயக்கம் பரவவும் தாய்மொழி இலக்கியங்கள் தோன்றி வளரவும் பல நூற்றாண்டு சென்றன என்பது குறிப்பிடத்தக்கது. பாண்டியப் பேரரசு பரப்பில் சோழப் பேரரசைவிடச் சிறிது குறுகியதே. ஆயினும்; ஆற்றலிலும், புகழிலும், செல்வ நிலையிலும் அது சோழப் பேரரசைத் தாண்டிச் சென்றிருந்தது. தமிழகப் பேரரசுகள் நலிவுற்றபின், தமிழகத்துக்கு அப்பால் வடக்கே பாமனிப் பேரரசும், தெற்கே விசயநகரப் பேரரசும் தோன்றின, சோழப் பேரரசும் தோன்றின. சோழப் பேரரசு களப்பிரர் காலத்துக்குப்பின் ஆறாம் நூற்றாண்டு வரை முந்நூறாண்டுகளாக நாம் சோழரைப் பற்றி எதுவும் அறிய முடியவில்லை. ஆனால், 6ஆம் நூற்றாண்டிலிருந்து 9ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை அவர்கள் உறையூரையும் அதனைச் சூழந்த பகுதியையும் ஆண்ட சிற்றரசராக இயங்கினர். அவர்கள் பழம் பெருமை இக்காலத்திலும் முற்றிலும் மறக்கப்பட்டு விட்டதாகக் கூறமுடியாது. ஏனென்றால், பாண்டிய பல்லவப் பேரரசர் அவர்களுடன் மண உறவும் நேச உறவும் கொண்டிருந்தனர். அவர்களுக்கு உட்பட்ட சிற்றரசராகவும் படைத்தலைவராகவும் அவர்கள் ஓரளவு புகழ் பெற்றனர். சோழ மரபுக்குரிய பல சிற்றரசர் தமிழகத்திலும் அதற்கப் பால் தெலுங்கு கண்ட நாடுகளிலும் பரவி, பல சிற்றரசுகளை அமைத்ததாகவும் அறிகிறோம். சித்தூர், கடப்பை, கர்நூல் பகுதிகளில் ஆண்ட தெலுங்கு சோழர் தங்களைக் கரிகால மரபினர் எனக் குறித்தனர். 6ஆம் நூற்றாண்டிலிருந்து 12ஆம் நூற்றாண்டுவரை இவர்கள் ஆட்சி செய்தனர். திக்கணர் முதலிய தொடக்க காலத் தெலுங்குக் கவிஞர்களுக்கு அவர்கள் பேராதரவு காட்டினர். தமிழகத்தில் கொடும்பாளூரிலும், கன்னடநாட்டில் பல பகுதிகளிலும் சோழமரபினர் பலரும்; பாண்டிய மரபினர் சிலரும் சிற்றரசராக நீண்ட நாள் இருந்தனர். பிற்காலச் சோழப் பேரரசர் மரபுக்கு வித்தூன்றிய முதல்வன் விசயாலயன் என்பவன். இவன் ஏறத்தாழ கி.பி. 850-ல் உறையூரில் ஆட்சி செய்தான். இவன் காலத்தில் தஞ்சையை முத்தரயர் என்ற குடிமன்னர் ஆண்டார். விசயாலயன் அவர்களிடமிருந்து தஞ்சையைக் கைப்பற்றினான். அடுத்த சோழன் முதலாம் ஆதித்தன் (875-907) காலத்தில் பாண்டியரும் பல்லவரும் திருப்புறம்பயம் போரில் ஈடுபட்டனர். பல்லவப் பேரரசு பாண்டியப் பேரரசை வென்றாலும், இரு பேரரசுகளுமே அப்போது நலிவுற்றிருந்தன பல்லவர் வெற்றிக்குக் காரணமாகயிருந்த கங்க அரசன் முதலாம் பிருதிவீபதி போரில் இறந்து பட்டான். இந்நிலையில் வெற்றியின் பெரும் பயனை ஆதித்தனே அடைய முடிந்தது. பழைய சோணாடாகிய திருச்சி தஞ்சை மாவட்டங்கள் அவன் கைப்பட்டன. அவன் ஆட்சிக் காலத்துக்குள்ளேயே பல்லவனை ஒழித்து அவன்தன் ஆட்சியை வலுப்படுத்தினான். தொண்டை மண்டலமும் சோணாடும் அவன் ஆட்சிக்கு உட்பட்டன. கங்கரும் அவன் ஆதிக்கத்தை மேற்கொண்டனர். கொங்கு நாட்டின் மீது அவன் கைவரிசை சென்றது. தாணுரவி என்ற சேர மன்னன் மகளை மணந்து அவன் இதை வலுப்படுத்திக் கொண்டான். மேற்குத் தொடரில் இருந்து கடல் வரை காவிரியின் இரு கரைகளிலும் அவன் பல கோயில்கள் கட்டினான் என்று அன்பில் பட்டயங்கள் குறிக்கின்றன. ஆதித்தனுக்குக் கோதண்டராமன் என்றொரு பட்டப் பெயர் உண்டு. காளத்தியில் அவன் மறைந்த இடத்தில் அவன் மகன் முதலாம் பராந்தகன் கோதண்டராமேசுரம் என்ற பெயரால் ஒரு கோவில் கட்டினான். முதலாம் பராந்தகன் முதலாம் பராந்தகன் (907-953) காலத்தில் சோழ அரசு திடுமென ஒரு பேரரசாக விரைந்து வளர்ந்தது. பராந்தகன் வடக்கே பாணமன்னர், வைடும்பர் இருவரையும் முறியடித்தான். பாணர் நாட்டைத் தன் நேச அரசனும் தன் மேலாட்சியை ஏற்றுக் கொண்ட வனுமான கங்க அரசன் இரண்டாம் பிருதிவீபதிக்குத் தந்தான். வைடும்பர் நாட்டை தன் அரசுடன் சேர்த்துக் கொண்டான். சீட்புளி நாட்டை வென்றதனால் வடக்கே அவன் ஆட்சி, நெல்லூர் வரை எட்டிற்று. தெற்கே பராந்தகன் பாண்டி நாட்டின்மீது படையெடுத்து அதை வென்றான். பாண்டியனோடு இலங்கை அரசன் படைகளையும் சேர்த்து அவன் வேலூர்ப் போரில் வெற்றி கொண்டு, ‘மதுரையும் ஈழமும் கொண்ட சோழன்’ என்று விருது சூட்டிக் கொண்டான். பாண்டியன் முதலில் இலங்கைக்கு ஓடிச் சென்றான். இலங்கை அரசன் பாண்டியனை ஆதரித்தாலும். தம் அரசன் அவனுக்கு அடைக்கலம் தருவதை உயர் குடிமக்கள் விரும்பவில்லை. ஆகவே அவன் சேர நாட்டுக்கு ஓடவேண்டி வந்தது. சேரன் பாண்டியனுக்கு மட்டுமல்லாமல்-சோழனுக்கும் உறவினன். ஆகவே பாண்டியன் தன் மணிமுடியையும், இந்திர மாலை என்று புகழப்பட்ட தன் மாலையையும் இலங்கை யிலேயே விட்டுச் சென்றான். பராந்தகன் மதுரையில் மற்றுமொரு தடவை பாண்டிய அரசுரிமையுடன் பேரரசனாக முடிசூட்டிக் கொள்ள விரும்பினான். இந்நோக்கத்துடன் அவன் இலங்கை மீது படையெடுத்தான். வெற்றி காணாமலே அவன் இலங்கைப் போரிலிருந்து மீளவேண்டியதாயிற்று. ஏனெனில், இராஷ்டிரகூடப் பேரரசனான மூன்றாம் கிருஷ்ணன் இதற்குள் வடதிசையில் படையெடுத்தான். இராஷ்டிரகூட மன்னன் உறவினனான கங்க அரசனும், சோழனால் துரத்தப்பட்ட பாண, வைடும்ப அரசரும் அவன் பக்கம் சேர்ந்தனர். ஏறக்குறைய 949ல் நடைபெற்ற தக்கோலப் போரில் சோழன் தோல்வியுற்றான். அவன் மூத்த புதல்வன் இராசாதித்தியன் போரில் இறந்தான். மிக விரைந்து வளர்ந்த சோழப் பேரரசில் குழப்பம் ஏற்பட்டு, தொண்டைநாடு மெள்ள இராஷ்டிரகூடப் பேரரசன் வசமாயிற்று. கன்னியாகுமரி முதல் நெல்லூர் வரை விரைந்து வளர்ந்த சோழப் பேரரசில் தொண்டைநாடும் மைசூரும் மீண்டும் விலகின. பாண்டியரும் சோழர் மேலாண்மையை உதறித் தள்ளித் தன்னாட்சி கண்டனர். போர் வீரனாக நாட்கழித்த பராந்தகன் சிவபிரானிடம் பற்றுடையவனாயிருந்தான். தன் வெற்றிகளினிடையே பிராமணர்களுக்குப் பல பிரமதேயங்களை வழங்கினான். இரணிய கருப்ப விழா, துலாபார விழாக்களால் அவன் தன்னைப் பெருமைப்படுத்திக் கொள்ளத் தவறவில்லை. அவன் கட்டிய கோயில்களும் மிகப்பல. சிதம்பரம் கோயிலை அவன் பொன்னால் வேய்ந்தான் என்று லெய்டன் பட்டயம் குறிக்கிறது. பராந்தகனுக்குப் பின் அவன் இரண்டாம் புதல்வன் கண்டராதித்தனும், மூன்றாம் புதல்வன் அரிஞ்சயனும் அவன் புதல்வன் சுந்தர சோழனும் ஆண்டனர். சுந்தர சோழன் மகனான, முதலாம் இராசராசன் பட்டத்துக்கு வருமுன், கண்டராதித் தனின் புதல்வனான மதுராந்தக உத்தமசோழன் பூசலிட்டதால், அவனை அரசனாக ஏற்று, இராசராசன் இளவரசுப் பட்டம் ஏற்றான். பராந்தகன் பின்வந்த இவ்வரசர்கள் சரிந்த பேரரசின் இழந்த பகுதிகளை மீட்க அரும்பாடுபட்டனர். இளமையில் மாண்ட சுந்தர சோழனின் மூத்த புதல்வன் ஆதித்தன், சேவூர் என்ற இடத்தில் வீரபாண்டியன் மீது வெற்றி கண்டு, ‘பாண்டியன் தலைகொண்ட சோழன்,’ என்ற புகழ்ப்பெயர் கொண்டான். ஆயினும் பாண்டியநாடு முற்றிலும் கீழடக்கப்படாமலே இருந்தது. வடக்கில் சுந்தரசோழன் ஆட்சியிலும் உத்தம சோழன் ஆட்சியிலும் தொண்டை மண்டலம் முழுவதும் மீட்டும் சோழப் பேரரசுடன் சேர்க்கப்பட்டது. முன் இராஷ்டிரகூடருடன் சேர்ந்த சிற்றரசரும் இப்போது சோழர் மேலாட்சியை ஏற்பவராகி விட்டனர். முதலாம் இராசராசன் தஞ்சைப் பெருஞ்சோழன் என்றும் புகழ்பெற்ற முதலாம் ராசராசன் (985-1015) சுந்தர சோழனின் இரண்டாம் புதல்வன். சோழப் பேரரசுக்கு இருநூறு ஆண்டு தளரா உறுதியுடைய அடிப்படை கோலிய பெரும் பேரரசன் இவனே. போரில் அவன் வெந்நிடா வெற்றி வீரன். ஆட்சித் திறத்திலும், செயல் திறத்திலும் அவன் ஒப்புயர்வற்றவன். உறையூரிலிருந்து தஞ்சைக்கு அவன் தன் தலைநகரை மாற்றிக்கொண்டான். தஞ்சையில் அவன் கட்டிய பெருவுடையார் அல்லது பிருகதீசுவரர் கோயில் கோபுரமும் அதன் முன்னுள்ள பெரிய நந்தியும் தென்னாட்டுப் பண்டைச் சிற்பக் கலையின் உச்ச நிலையைக் குறிப்பன. தஞ்சைக் கோயிலைப் போலவே, அவன் அமைத்த ஆட்சி முறையும் அழியாதது. சோழர் ஆட்சிமுறைக்கு மட்டுமன்றி, இன்றைய தென்னாட்டு ஆட்சி முறைக்குமே அது, மாறா நிலவரமான அடிப்படை ஆகும். கல்வெட்டுக்களில் ஆட்சி வரலாற்றைக் குறிக்கும் நன் மரபைத் தமிழகத்தில் முதன் முதல் கையாண்ட மன்னன் இவனே. இராசராசன் ஆட்சித் தொடக்கத்திலேயே சோழப் பேரரசு வடக்கே பராந்தகன் காலத்து ஆட்சி எல்லையை எட்டியிருந்தது. ஆனால், தெற்கே பாண்டியநாடு இன்னும் முற்றிலும் கீழடக்கப் படவில்லை. இராசராசன் பாண்டியன் அமரபுஜங்கனை முறியடித்துச் சிறைப்படுத்தினான். பாண்டியனுக்கு உதவி செய்த சேரன் பாஸ்கர இரவிவர்மன் மீது படையெடுத்துச் சென்றான். காந்தளூர்ச்சாலை, விழிஞம் ஆகிய இடங்களில் சேரனை வென்று அந்நாட்டைக் கைக்கொண்டான். சேர அரசன் கடற்படையை அழித்தான். ஆட்சியிறுதியில் அவன் கடற்படை பழந்தீவு பன்னீராயிரம் என்று அந்நாள் அழைக்கப்பட்ட மாலத் தீவுகளையும் பிடித்தடக்கி இருந்தது. கொங்கு நாட்டின் எல்லையிலிருந்த உதகைக் கோட்டையை இராசராசன் கைப்பற்றிய செய்தி கலிங்கத்துப் பரணியில் குறிக்கப்படுகிறது. இதனையடுத்து இராசராசனின் வீரப் புதல்வனான இராசேந்திரன் வடமலையாளம், கொண்காணம், குடகு ஆகிய பகுதிகளை வென்றான். பாண்டியனுக்கு உதவி செய்ததற்காக இராசராசன் இலங்கைமீது படையெடுத்துச் சென்று, பழைய தலைநகராகிய அனுராதபுரத்தை அழித்து, பொலன்னருவா என்ற இடத்தைத் தலைநகராகக் கொண்டு ஜனராதமங்கலம் என்ற பெயருடன் அதில் தன் ஆட்சியை நிறுவினான். இந்நகரிலும் மாந்தோட்டம் முதலிய நகர்களிலும் இராசராசனும் அவன் ஆட்சித் தலைவர்களும் கட்டிய கோயில்கள் செதுக்கிய கல்வெட்டுக்கள் முதலியன பல இன்றும் காணப் பெறுகின்றன. கொங்கு வெற்றியை அடுத்து மைசூரிலுள்ள கங்கவாடி, நுளம்பவாடி, தடிகைவாடி ஆகிய பகுதிகள் வென்று சோழப் பேரரசில் சேர்க்கப்பட்டன. வடகிழக்கில் சீட்புளிநாடும் பாகநாடும் பரமன்மழ பாடியார் என்ற படைத்தலைவன் மூலம் கைப்பற்றப்பட்டன. கிழக்குச் சாளுக்கிய அரசில் ஏற்பட்ட ஒரு அரசுரிமைப் போராட்டத்தில் ஒரு பக்கத்தை ஆதரித்ததன் மூலம் இராசராசன் அந்நாட்டையும் வென்று. அதன் புதிய அரசனின் நேசத்தைப் பெற்றான். விமலாதித்தியன் என்ற அந்தக் கீழைச்சாளுக்கிய மன்னன் இராசராசனின் மகள் குந்தவையை மணந்து கொண்டான். இராசராசனின் போர் வெற்றிகள் மகேந்திரகிரியில் வெற்றித் தூண்களில் பொறிக்கப்பட்டன. 1001ஆம் ஆண்டில் இராசராசன் தன் பேரரசிலுள்ள நிலங்களை எல்லாம் அளந்து கணக்கிடுமாறு பணித்தான். இப்பெரும் பணியைச் செய்து முடித்தவன் இராசராச மகாராசன் என்றும், சேனாபதி குறவன் உலகளந்தான் என்றும் குறிக்கப்படுகிறான். தந்தையின் காலத்திலேயே இராசராசன் மகன் இராசேந்திரன் கங்க மண்டலத்தில் தண்டநாயகனாக கடும்பணி ஆற்றினான். 1012-ல் அவன் இளவரசனாகவும் முடிசூட்டப் பெற்றான். இராசராசன் கட்டிய பெருவுடையார் கோயில் தேவார காலத்துக்குப் பிற்பட்டதாதலால் பாடல் பெறப்படவில்லை. ஆனால், இராசராசன் காலத்திலிருந்த கருவூர்த்தேவரால் அதற்குத் திருவிசைப்பாவில் பதிகம் பாடப்பட்டுள்ளது. இராசராசன் சிவபெருமானிடம் பற்றுள்ளவனாயினும் சமரசப் பான்மையுடன் திருமால்நெறி முதலிய பிறநெறிகளுக்கும் ஆதரவளித்தான். கடல்கடந்த கீழ்த்திசைப் பேரரசனான ஸ்ரீவிஷய கடாகவேந்தன் ஸ்ரீமார ஸ்ரீவிஜயோத்துங்கவர்மன் தன் தந்தை பெயரால் கட்டிய சூடாமணி விகாரம் என்ற புத்தப் பள்ளிக்கு அவன் ஆனைமங்கலம் என்ற ஊரைக் கட்டளை வகுத்தான். இராசராசன் ஆட்சி இறுதியில் சோழப் பேரரசு சென்னை மாகாணத்தையும் மைசூரையும் இலங்கையில் பெரும் பகுதியையும் உட்கொண்டதாயிருந்தது. இராசேந்திரன் ஆட்சியில் இவ்வெல்லை இன்னும் விரிவுபட்டதானாலும், அதற்கு அடிகோலியவன் இராசராசனே. தென்னாட்டுப் பேரரசருள் தலைசிறந்தவன் இராசராசனே எனலாம். தென்னாட்டில் அவன் ஆட்சி பரவாத இடம் வடமேற்குக் கோடியே. இங்கே ஆண்ட இராஷ்டிரகூடரை அவர்களுக்குமுன் ஆண்ட மேலைச் சாளுக்கிய மரபினரே வென்று, தம் மரபைப் புதுப்பித்திருந்தனர். இராசராசன் விரைந்த வெற்றிகள் துங்கபத் திரையைக் கடக்கவில்லை, அதே சமயம் மேலைச்சாளுக்கியரும் தம் நாட்டின் வடதிரையில் ஆண்ட பாரமாரருடன் கடும்போர் செய்வதில் ஈடுபட்டிருந்ததால், தெற்கே நாட்டம் செலுத்த முடியவில்லை. முதலாம் இராசேந்திரன் முதலாம் இராசேந்திரன் (1012-1044) ஆட்சியில் சோழப் பேரரசு தென்னாடு கடந்து நிலத்திலும் கடலிலும் கீழ்நாடுகளில் வேறெந்தப் பேரரசும் அடையாத பேரெல்லையும் பெருவாழ்வும் அடைந்தது. திருவாலங்காட்டுப் பட்டயங்கள் அவன் நில வெற்றிகளையும் கடல் வெற்றிகளையும் விவரமாகக் குறிக்கின்றன. தென்னாட்டில் இராசராசனால் வென்று கைக்கொள்ளப் படாதிருந்த ஒரே பகுதி மேற்குச் சாளுக்கியர் ஆண்ட வடமேற்குப் பகுதியே. இராசேந்திரன் முதன்முதலாக மேற்குச்சாளுக்கிய அரசன் சத்தியாசிரயன்மீது தாக்குதல் நடத்தினான். இடிதுறைநாடு அல்லது வனவாசிப் பகுதியைக் கைப்பற்றிய பின் அவன் கொள்ளிப்பதாகைக் கோட்டையை முற்றுகையிட்டழித் தான். மண்ணைக் கடகம் அல்லது மான்யகேதம் என்ற தலைநகரம் மீண்டும் என்றும் தலைதூக்காவண்ணம் அழிக்கப் பட்டது. மேலைச் சாளுக்கியர் இதன்பின் கலியாணியைப் புதுத் தலைநகராக்கி ஆண்டனர். மண்ணைக் கடகம் ஹைதராபாதுக்கு வடக்கிலும் கலியாணி இன்னும் வடக்கிலும் உள்ளன. மேலைச்சாளுக்கியர் தோல்விகளடைந்தாலும் முற்றிலும் வீழ்ந்து விடவில்லை. சோழப் பேரரசர் ஆட்சியுள் புகாத பகுதி இது ஒன்றே. இலங்கையில் முந்திய ஆட்சியில் வெல்லப்படாதிருந்த தென்கோடிப் பகுதியையும் இராசேந்திரன் வென்றான். இதனால் இலங்கையிலிருந்த பாண்டியன் முடிமட்டுமன்றி, இலங்கை அரசன் அரசி முடிகளும் அவன் கைப்பட்டன. ஆனால், ஆட்சி இறுதியில் தென்கோடிப்பகுதி மட்டும் மீண்டும் சோழர் கையினின்று கிளர்ந்தெழுந்த தனியாட்சி அடைந்தது. சேர அரசன் முடியும் கைக்கொள்ளப்பட்டு அப்பகுதி சோழர் நேராட்சிக்கு வந்தது. அத்துடன் இலக்கத்தீவம் முதலிய தீவுகளும் கீழடக்கப்பட்டன. இராசேந்திரன் ஆட்சியில் இரண்டாண்டுகள் கங்கைக் கரையிலுள்ள நாடுகளை வெல்வதில் ஈடுபட்டன. அவனால் வெல்லப்பட்ட அரசுகள் இந்திரரதன், ரணசூரன், தர்மபாலன், கோவிந்தசந்திரன் ஆகியவர்கள். இவர்கள் ஆண்ட பகுதிகள் கங்கை வெளியில் இன்று பீகார், வங்காளம், கோசலம் என்று அழைக்கப்படும் பகுதிகள் ஆகும். இராசேந்திரனின் வடபுலப் போர்ப் பயணத்தில் ஒரு பகுதியாகக் கன்னோசிப்போர் அமைந்திருந்தது. இதில் பல வட அரசர் படைக்குழுவின் தலைமையில் அவன் முகமது கஜினியை வென்றான் என்று சில வரலாற்று ஆசிரியர் கருதுகின்றனர். சிந்து வெளியில் பதினெட்டுத்தடவை படையெடுத்துச் சூறையாடிய இவ் ஆஃவ்கன் அரசன் கன்னோசி தாண்டிக் கங்கை வெளிக்கு வராதது இதனாலேயே என்று கூறப்படுகிறது. இராசேந்திரன் வடபுல யாத்திரை, சேரன் செங்குட்டுவன் யாத்திரையை நினைவூட்டுவது ஆகும். இருவருமே சிந்து கங்கை வெளிக்கு அப்பாலுள்ள ஓர் அயலரசன் தாக்குதலைத் தடுத்து நிறுத்தி அப்பெரும் பரப்பைக் காக்க முற்பட்டனர். வங்காளத்தில் ஆண்ட சேன மரபினரும் கர்நாடக மரபினரும் இராசேந்திர சோழனுடன் சென்று தங்கிய தென்னாட்டு மரபினர்களே யாவர் என்று வரலாற்றறிஞர் ஆர்.டி.பானர்ஜி குறித்துள்ளார். கடல் கடந்த ஸ்ரீ விஜயப் பேரரசுடன் இராசேந்திரன் தொடக்கத்தில் நேசத் தொடர்பு கொண்டிருந்தான் தந்தை காலத்தில் அக்கடல் கடந்த பேரரசன் கட்டிய புத்தப்பள்ளிக்குத் தரப்பட்ட மானியத்துக்கு அவன் அப்பேரரசன் வேண்டுகோளால் செப்புப் பட்டயம் அளித்தான். ஆயினும், எக்காரணத்தாலோ 1036க்குப் பின் இருபேரரசுகளுக்கு மிடையே போர் மூண்டது. ஸ்ரீவிஜய நாட்டின் அரசுரிமைப் போரில் ஒரு சார்பினருக்கு உதவவே இது நிகழ்ந்ததாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. ஆனால், கடல்கடந்த இப்போரில் இராசேந்திரன் வெற்றி கண்டான். அதன் மூலம் அப்பேரரசின் பகுதிகளான அந்தமான் தீவுகள், நிக்கோபார்த் தீவுகள், தென்பர்மா அல்லது பெகு, மலாயா, சுமாத்ரா ஆகிய பகுதிகள் சோழப் பேரரசின் மேலாண்மையை ஏற்றன. சுமாத்ராவில் இவ்வாட்சிக்குரிய தமிழ்க் கல்வெட்டுக்கள் காணப் பெறுகின்றன. 1036க்குப் பின் இராசேந்திரன் பேரரசின் பல பகுதிகளின் ஆட்சியையும் போர்களையும் புதல்வர்கள் மூலமே நடத்தினான். கங்கை கொண்டான், கடாரம்கொண்டான் முதலிய பல விருதுகளை அவன் மேற்கொண்டான். அவற்றுள் கங்கை கொண்டான் என்ற பெயரையே அவன் தனக்குரிய பெருஞ் சிறப்பாக நினைத்தான். சோழர் தலைநகரையும் அவன் தஞ்சையிலிருந்து மாற்றி, கங்கை கொண்ட சோழபுரம் என்ற பெயருடைய புதிய தலைநகரை உண்டு பண்ணினான். பின் வந்த எல்லாச் சோழருக்கும் இதுவே தலைநகரமாயிருந்தது. இளவரசர்கள் முயற்சியால் பாண்டியர், சேரர், இலங்கை மன்னன் ஆகிய மூவருடைய கிளர்ச்சிகளும் அடக்கப்பட்டன. பூண்டிப் போரில் இராசேந்திரன் புதல்வன் இராசேந்திரனால் மேலைச்சாளுக்கிய அரசன் ஆகவமல்லன் தோற்கடிக்கப் பெற்றான். அவன் புதிய தலைநகரான கலியாணியும் அழிக்கப்பட்டது. தாராசுரம் கோயிலிலுள்ள ஒரு துவாரபாலகர் உருவின்கீழ், அது அனலெரியூட்டப்பட்ட கலியாணிபுரத்திலிருந்து கொண்டு வரப்பட்டது என்ற செய்தி குறிக்கப்பட்டுள்ளது. அதன் சிறப்புப் பண்பும் சோழர் கலைப்பண்புக்கு மாறாகவே இருக்கிறது. சோழர் மூவர் முதலாம் இராசேந்திரனுக்குப் பின் அவன் புதல்வர் மூவர் ஏறத்தாழ தொடர்ச்சியாக ஆண்டனர். அவர்களே முதலாம் இராசாதிராசன் (1013-1054) இரண்டாம் இராசேந்திரன் (1054-1064), வீரராசேந்திரன் (1063-1069) ஆகியவர்கள். மூவரும் வீரர்களாதலால் அவர்கள் பேரரசின் எல்லை குன்றாமல் காத்து நின்றனர். கொப்பம் போரில் இராசாதிராசன் மேலைச் சாளுக்கியரை எதிர்த்து நின்று ஆனை மீதிருந்து மாண்டான். இதனால் இவன் ‘ஆனைமேல் துஞ்சின சோழன்’ எனப்பட்டான். அவன் இளவல் இரண்டாம் இராசேந்திரன் படைக்களத்திலேயே முடிசூட்டிக் கொண்டு போர்க்களத்தின் தோல்வியை வெற்றியாக மாற்றினான். இரண்டாம் இராசேந்திரன் காலத்தில் மேலைச்சாளுக்கிய அரசனான சோமேசுவரனின் வீர மைந்தன் விக்கிரமாதித்தியன் கீழைச்சாளுக்கியரிடமிருந்து வேங்கியைக் கைக்கொண்டு அதன் வடபாலுள்ள சக்கரக் கோட்டம் அல்லது சித்ர கூடத்தையும் வென்றான். ஆனால், சில நாட்களுக்குள் முடக்காறு, கூடல் சங்கமம், சக்கரக்கோட்டம் ஆகிய வடமுனைகளில் வெற்றி கண்டு கீழைச்சாளுக்கிய இளவரசன் விசயாதித்தியனுக்கு அரசுரிமை தந்தான். அரசுரிமைக்குரிய மற்றொரு இளவரசனான இராசேந்திரனுக்குச் சோழ இராசேந்திரன் தன் மகள் மதுராந்தகியை மணம் செய்து கொடுத்து, சக்கரக்கோட்டத்தில் அரசுரிமை தந்தான். இந்தச் சாளுக்கிய இராசேந்திரனே பின்னாளில் குலோத்துங்க சோழனானான். கீழைச்சாளுக்கிய அரசுரிமையில் தலையிட்டு, அந்நாட்டை நேச நாடாக்கியது போலவே, மேலைச் சாளுக்கிய அரசுரிமை யிலும் தலையிட வீரராசேந்திரனுக்கு ஒரு வாய்ப்புக்கிட்டிற்று. சோமேசுவரன் புதல்வர்கள் இரண்டாம் சோமேசுவரனும் விக்கிரமாதித்தியனும் அரசுரிமைக்குப் போட்டியிட்டனர். வீரராசேந்திரன் விக்கிரமாதித்தியனுக்கு உதவி செய்தான். விசயவாடாப் போரில் அவன் பெரு வெற்றி கண்டு, விக்கிர மாதித்தனுக்குத் தென்பாதி அரசை வாங்கித் தந்தான். அவனுக்கே தன் மகளையும் மணம் செய்து தந்து நேசத்தை உறுதிப்படுத்தினான். ஹைதராபாதில் காடிகல் என்ற இடத்தில் இவ்வெற்றிக்கு அறிகுறியாக வீரராசேந்திரன் வெற்றித்தூண் நாட்டினான். வீரராசேந்திரன் பிள்ளைகளில் மதுராந்தகன் என்ற ஒருவன் சோழேந்திரன் என்ற பட்டத்துடன் தொண்டை மண்டலத்திலும், கங்கை கொண்ட சோழன் என்ற மற்றொருவன் சோழபாண்டியன் என்ற பட்டத்துடன் பாண்டி நாட்டிலும் மண்டலீகர்களாக ஆண்டனர். வீரராசேந்திரன் காலத்திலும் பல சிற்றரசர்கள் கிளர்ச்சி செய்தனர். அவர்களுள் பொத்தப்பி அரசன், சேர அரசன், தாரா வருஷ மன்னன் தம்பி, பாண்டியன் சீவல்லபன் மகன் வீரகேசரி ஆகியவர்களை அவன் போரில் கொன்று வாகை சூடினதாக அறிகிறோம். கடாரம் அல்லது சீர்விசய நாட்டிலும் அரசுரிமை கோரிய இரு இளவரசனுக்காகப் போரிட்டு, வீரராசேந்திரன் அவனைப் பேரரசனாக்க உதவினான். வீரராசேந்திரனுக்குப்பின் அவன் பிள்ளைகளுள் ஒருவனே அரசுரிமைக்கு வந்ததாக அறிகிறோம். ஆனால், அவன் மைத்துனனான மேலைச்சாளுக்கிய விக்கிரமாதித்தியன் அவனுக்கு உதவி செய்தும்கூட, அவனுக்கெதிராக நாடெங்கும் கிளர்ச்சியும், குழப்பமும் மிகுந்தன. அவன் ஓரிரு வாரங்களே ஆட்சி செய்து மாண்டான். சக்கரக் கோட்டத்திலிருந்து கொண்டே ஒரிசாப் பகுதியிலும் கடல்கடந்த நாடுகளிலும் தன் வெற்றிப்புகழ் நாட்டி வந்த கீழைச்சாளுக்கிய இராசேந்திரன் இப்போது சோழ நாடு வந்து முதலாம் குலோத்துங்கன் என்ற பெயருடன் சோழப் பேரரசைக் கைக்கொண்டான். முதலாம் குலோத்துங்கன் முதலாம் குலோத்துங்கன் (1070-1120) சாளுக்கியர் குடிக்கும் சோழர் குடிக்கும் ஒருங்கே உரியவனாதலால் உபய குலோத்துங்கன் (இரு குலப் புகழ்கொண்டவன்) என்றும், சாளுக்கிய சோழன் என்றும் அழைக்கப்படுகின்றான். இராசராசன் காலத்தில் உறுதியான அடிப்படையுடன் அமைந்த சோழப் பேரரசு 1070-க்குள் தளர்வுறத் தொடங்கியிருந்தது. முதலாம் குலோத்துங்கன் நீண்ட ஆட்சி அதற்கு மீண்டும் வலுத்தது, அதை இன்னும் நூறாண்டு வாழவைத்தது. குலோத்துங்கன் வீரனும் நல்லாட்சியாளனும் மட்டுமல்ல, காலமறிந்து விட்டுக் கொடுத்து வெல்லும் பண்பும் உடையவன். எல்லை கடந்து பேரரசைப் பெருக்கி, அதன் வலுவைக் குறைக்காமல், தேவைப்பட்ட இடங்களில் குறுக்கி உறுதிப் படுத்தவும் அவன் தயங்கவில்லை. மேலைச்சாளுக்கிய அரசின் ஒருபகுதி இப்போது முந்திய சோழன் வீரராசேந்திரன் மருமகனான ஆறாம் விக்கிரமாதித்த னிடம் இருந்தது. அவன் குலோத்துங்கனின் மாறாப் பகைவனாகி அவன்மீது படையெடுத்தான். ஆனால், மேலைச் சாளுக்கிய அரசின் வடபாதி அரசனான இரண்டாம் சோமேசுவரனும், தேவகிரியில் ஆண்ட யாதவ மரபு மன்னனும், ஹொய்சளன் எறெயங்கனும், உச்சங்கியிலிருந்து நுளம்பவாடி முப்பத்திரண் டாயிரத்தை ஆண்ட பாண்டிய மரபினனான திரிபுவனமல்லனும் குலோத்துங்கனுக்கு உதவியாய் நின்றனர். நங்கிலிப் போரில் சோழன் வெற்றி பெற்றான். ஆயினும் அவன் போரை நீடிக்காமல் சந்துசெய்து கொண்டு திரும்பினான். இரண்டாம் சோமேசுவரன் தன் உடன் பிறந்தானிடம் சிறைப்பட்டுத் தன் நாடிழந்தான். இப்போரின் அரைகுறைத் தோல்வியால் மேலைச் சாளுக்கிய அரசு பாதிக்கப்படவில்லை. நேர்மாறாக இருபாதி அரசுகளும் ஒன்றாகி அது வலுவடைந்தது. குலோத்துங்கன் வடதிசையில் முன்னேற விரும்பாததற்குத் தென் திசையின் நிலைமைகளே காரணம். ஆட்சி தொடங்கு முன்பே உள்ள குழப்பம் காரணமாக, பாண்டியன் விடுதலை பெற்றுத் தனியுரிமை அடைந்தான். சேரனும், இலங்கையின் புதிய அரசன் விஜயபாகுவும் அவனுக்கு உதவிசெய்தனர். விஜயபாகு இலங்கை முழுவதிலும் சோழ ஆட்சியை ஒழித்தான். மேலைச் சாளுக்கிய விக்கரமாதித்தியன் இலங்கை அரசனுக்குத் தூதனுப்பி அவனை ஊக்கினான். சோழன் முதலில் பாண்டியர் ஐவரை வென்றான். அதன்பின் பாண்டிய நாட்டெல்லையிலுள்ள கோட்டாற்றுக் கோட்டையைத் தீக்கிரை யாக்கிச் சேரநாட்டில் முன்னேறினான். இரு தடவை சேரரின் கடற்படைத் தளமாகிய சாலை, விழிஞம் ஆகியவற்றை அவன் தீக்கிரையாக்கினான். இராமநாதபுரம் மாவட்டத்தில் செம்பொன் மாரி என்ற இடத்தில் நின்று போராடிய சேர பாண்டியரின் துணிகர மறவர் படையான ‘சாவேர்’ப் படையை அவன் அழித்தான். பாண்டிய நாட்டில் இராசராசன் ஏற்படுத்திய நேரடி ஆட்சி முறை வெற்றி தரவில்லை. குலோத்துங்கன் இங்கே, புதிதாகப் பாளைய முறையைப் புகுத்தி, எதிரிகள் வளரவொட்டாமல் காக்க முற்பட்டான். இலங்கையில் தமிழ் வீரர் இன்னும் சோழ அரசரின் பக்கமாகக் கிளர்ச்சி செய்து கொண்டே இருந்தனர். ஆனால், அக்கிளர்ச்சிகள் அடக்கப்பட்டு வந்தன. குலோத்துங்கன் இலங்கை அரசனுடன் சமரச உடன்படிக்கை செய்து கொண்டு அமைதியை நிலை நாட்டினான். தன் புதல்வி சூரியவள்ளியாரை அவன் பாண்டிய உறவுடைய ஒரு சிங்கள இளவரசனுக்கு மணம் செய்து தன் நேச உறவை வலிமைப்படுத்தினான். குலோத்துங்கன் ஆட்சியின் பிற்பாதியில் ஹொய்சளர் கங்கவாடி அல்லது மைசூரைக் கைப்பற்றிக் கொண்டனர். மேலைச்சாளுக்கிய விக்கிரமாதித்தியன் இறந்தபின் குலோத்துங்கன் வேங்கையை மீட்டும் எளிதில் வென்றான். ஒரிசாவையும் வட கலிங்கத்தையும் ஆண்ட இராசராசனுக்கு அவன் தன்மகள் இராசசுந்தரியை மணம் புரிவித்தான். ஆயினும் எக்காரணத்தாலோ இராசராச சோடகங்கன் மகன் அனந்தவர்மன் காலத்தில் அவனுக்கும் குலோத்துங்கனுக்கும் பகை ஏற்பட்டது. இதன் பயனாகக் குலோத்துங்கன் இருதடவை வடகலிங்கத்தின் மீது படையெடுக்க நேர்ந்தது. முதல் கலிங்கப் போரின் படைத்தலைவன் குலோத்துங்கன் மகனான விக்கிரம சோழனே. இதனால் கலிங்கத்தின் தென்பகுதி சோழ அரசின் கைக்கு வந்தது. இரண்டாவது போரின் படைத் தலைவன் வண்டை மன்னன் கருணாகரத் தொண்டைமான் என்பவன். அவன் கொண்ட பெருவெற்றியே சயங்கொண்டார் கலிங்கத்துப் பரணியில் பாடப்பட்டது. ஒட்டக்கூத்தரும் இதே வெற்றி குறித்துப் பாடியதாக அறிகிறோம். குலோத்துங்கன் பேரரசு கிட்டத்தட்ட இராசேந்திரன் பேரரசின் அளவிலேயே இருந்தது. இலங்கையும் மைசூரும் குறைந்தன. ஆனால், கலிங்கம் விரிவு பெற்றது. குலோத்துங்கன் நல்லாட்சிக்கு இருசெயல்கள் சான்று பகர்கின்றன. ஒன்று, இராசராசனைப்பற்றி 1086, 1116 ஆகிய ஆண்டுகள் நடைபெற்ற பேரரசின் நிலப்பேரளவை, இன்னொன்று; உள்நாட்டு வாணிகத்தைச் சீர்செய்வதற்காக அவன் சுங்கங்கள் ஒழித்தது. முந்திய செயலில் அவன் நீணிலமளந்த சோழன் என்றும், பிந்திய செயலால் சுங்கம் தவிர்ந்த சோழன் என்றும் புகழப்பட்டான். குலோத்துங்கன் காலத்தில் சோழர் ஆட்சியின் புகழ் உலகெங்கும் பரந்திருந்தது. 1077-ல் அவன் சீனப் பேரரசனுக்கு ஓர் அரசியல் தூதனை அனுப்பியிருந்தான். பத்தாண்டுகளுக்கு முன் சீன அரசனுக்குத் தூதனுப்பிய சீர்விசயப் பேரரசன் பெயரும் குலோத்துங்கன் பெயராயிருப்பதால், இளவரசனாகவே அவன் அப்பேரரசின் மேலாட்சியுரிமை பெற்றிருந்தான் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். அத்துடன் குலோத்துங்க காலத்துச் சீர்விசயப் பேரரசன் அவனிடம் தன் அரசியல் தூதனுப்பி நாகப்பட்டினத்துப் புத்த விகாரத்துக்குச் சில நன்கொடைகள் பெற்றான் என்று அறிகிறோம். காம்போஜ அல்லது சயாம் நாட்டரசன் தன் மகனுக்கும் குலோத்துங்கனைக் கொண்டு அவன் பெயரிட்டதாகவும் கேள்விப் படுகிறோம். இம்மன்னன் அனுப்பித் தந்த ஓர் அருங்கல் சிதம்பரம் கோயில் மதிலின் பகுதியாகப் பதிக்கப் பெற்றது. 1088-ல் சுமாத்திராவிலுள்ள ஒரு தமிழ்க் கல்வெட்டு அங்கே திசையாயிரத்து ஐந்நூற்றுவர் என்ற பெயருடன் ஒரு தமிழ் வாணிகக் குழு இருந்ததென்று குறிக்கிறது. கங்கை கொண்ட சோழபுரத்தின் கோயில் மதிலில் 111-ல் குலோத்துங்கனுடன் கங்கைவெளியில் கன்னோசியிலுள்ள அரசன் செய்து கொண்ட உடன்படிக்கை குறிக்கப்பட்டுள்ளது. இதே காலத்தில் கன்னோசி அரசன் கோவிந்தசந்திரன் வாகீசரட்சிதன் என்ற சோணாட்டுப் புலவன் பெயர் குறிக்கப் பட்டுள்ளன. இப்புலவன் ஆசிரியன் சாக்கியரட்சிதன் ஒரிசாவில் இருந்ததாகவும் குறிக்கப்பட்டுள்ளது. பிற்காலச் சோழர் குலோத்துங்கன் காலத்துக்குப்பின் விக்கிரமசோழன் (1118-1135), இரண்டாம் குலோத்துங்கன் (1133-1150) இரண்டாம் இராசராசன் (1156-1163), இரண்டாம் இராசாதிராசன் (1163-1178), மூன்றாம் குலோத்துங்கன் (1178-1216) ஆகிய ஐந்து சோழர் ஆண்டனர். இரண்டாம் இராசாதிராசன் காலம் வரை பேரரசின் தலைநகரும் எல்லையும் மாறாமலே இருந்தது. அதன்பின் வெளித் தோற்றத்தில் மட்டுமே பேரரசு நிலைபெற்றது. மைசூரில் ஆண்ட ஹொய்சளர், நெல்லூரில் ஆண்ட தெலுங்கு சோடர், தொண்டை மண்டலத்தில் வலிமைபெற்ற கோப்பெருஞ்சிங்கர் என்ற பல்லவச் சிறுகுடி மன்னர், பாண்டியர் ஆகியோர் மேலோங்கினர். பாண்டியர் விரைவில் மீண்டும் பேரரசாற்றல் பெற்று முன்னேறினர். உலகாண்ட சோழப் பேரரசையே அவர்கள் விழுங்கினர். சோழர் - பாண்டியர் போர் உலகாண்ட சோழப் பேரரசு பாண்டிநாட்டை மட்டும் நீண்டகாலம் தன் கீழ் அடக்கி வைத்திருக்க முடியவில்லை. சோழப் பேரரசு விந்தியம் தாண்டி நிலையாக வளராததற்குப் பாண்டியரே தலைக்காரணமாவர். பாண்டியருக்கு இவ்வகையில் சேரரும் இலங்கை அரசரும் எப்போதும் உதவியாயிருந்தனர். இலங்கை அந்நாட்களிலெல்லாம் தென்னாட்டுக்கு அயல் நாடாய் இல்லை. தென்னாட்டின் பகுதியான தமிழகத்தின் கடல் கடந்த ஒரு கூறாகவே இயங்கிற்று. முதலாம் பராந்தக சோழன் காலத்துக்குப்பின் வீர பாண்டியன் வலிமையுடன் ஆண்டான். சுந்தரசோழ இரண்டாம் பராந்தகன் காலத்தில் அவன் மகன் ஆதித்தனும், கங்க அரசனும் சேர்ந்து பாண்டியனை முறியடித்தனர். ஆனால், பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குள் அவன் மீண்டும் வலிமை யுடையவனாய் சோழாந்தகன் என்ற பட்டம் ஏற்றான். சுந்தர பாண்டியன் என்ற மற்றொரு பாண்டியனும் இப்போது ஆட்சி செய்தான். இராசராசன் காலத்தில் மீண்டும் பாண்டியர் அரசிழந்தனர். சிலகாலம் பாண்டியரே சோழர் கீழிருந்து ஆண்டனர். சிலகாலம் சோழ மன்னர் புதல்வர் சோழ பாண்டியர் என்ற பெயருடன் நேரடி ஆட்சி செய்தனர். சோழ அரசர் பாண்டியருடன் மணஉறவு கொண்டனர் என்பதைச் சோழ அரசியரின் பெயர்கள் காட்டு கின்றன. சோழாந்தகன் (சோழர்களுக்கு அந்தகன் அல்லது கூற்றுவன்) என்ற பட்டத்துக்கு எதிராக, மதுராந்தகன் என்ற பெயரைச் சோழர் சிலர் கொண்டனர். ஐந்து பாண்டியர் என்ற பெயரை நாம் குலோத்துங்கன் காலத்தில் முதல் முதலாகக் கேட்கிறோம். அரசர் குடியில் மூத்தவர் களாக ஒரு சமயத்தில் ஐவர் அரசர் பட்டத்துடன் ஆளும் வழக்கம் பாண்டிய நாட்டில் இக்கால முதல் இருந்த தென்று அறியலாம். இது சோழர் மரபுவரிசையை விடப் பாண்டியர் மரபு வரிசையைச் சிக்கலாக்குகிறது. சோழப் பேரரசன் ஆட்சி இறுதியில் இரண்டாம் இராசாதிராசன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகியவர்கள் ஆட்சியில் எழுந்த பாண்டியர் அரசுரிமைப் போராட்டமே சோழப் பேரரசின் வீழ்ச்சிக்கும், பாண்டியப் பேரரசின் தோற்றத்துக்கும் காரணமாய் அமைந்தது. இப்போரின் முதல் கட்டம் (1169-1177) இரண்டாம் இராசாதிராசன் ஆட்சியில் மூன்றாம் குலோத்துங்கன் இளவர சனாகப் பட்டத்துக்கு வருமுன் முடிவடைகிறது. அரசுரிமைக்குப் போராடிய பாண்டியர்கள் பராக்கிரம பாண்டியன், குலசேகர பாண்டியன் ஆகிய இருவர். இவர்களினால் குலசேகர பாண்டியன் திருநெல்வேலியைத் தலைநகராகக் கொண்டு 1132 முதல் 1169 வரை பாண்டிய நாட்டை ஆண்ட மாறவர்மன் சீவல்லவன் புதல்வன். சீவல்லவன் காலத்திலேயே பாண்டியர் திருவாங்கூரையும் கீழடக்கி யாண்டனர். பராக்கிரம பாண்டியன் தம் மரபினரின் பழம்பதியாகிய மதுரையையும் கைக்கொள்ள விரும்பினான். ஆகவே அவன் பராக்கிரமனைத் தாக்கி மதுரையை முற்றுகை யிட்டான். பராக்கிரமன் இலங்கை அரசன் உதவியை நாடினான். இலங்கையரசன் இலங்காபுரன் என்ற படைத்தலைவனை பெரும்படையுடன் அனுப்பினான். ஆனால், இலங்கைப் படைத் தலைவன் வந்து சேருமுன் குலசேகரன் மதுரையைக் கைப்பற்றிப் பராக்கிரமனையும் அவன் மனைவி மக்களையும் கொன்றுவிட்ட hன். ஆயினும் தப்பியோடிய சிறுவன் வீரபாண்டியனை இலங்காபுரன் அரசனாக்க முனைந்தான். இதில் அவன் வெற்றியும் கண்டான். ஆனால், இலங்கைப் படையின் அட்டூழியங்கள் மக்களுக்குப் பிடிக்கவில்லை. அத்துடன் குலசேகரனும் சோழரிடம் உதவி கோரினான். சோழர் படைத் தலைவனான அண்ணன் பல்லவராயன் இலங்கைப் படைகளைத் தோற்கடித்து, குலசேகரனுக்கு முடி சூட்டினான். இலங்காபுரனின் தலையும் பிற படைத்தலைவர் தலைகளும் மதுரைக் கோட்டை வாயிலில் தொடங்க விடப்பட்டன. அண்ணன் பல்லவராயன் இப்போது இலங்கை மீது படையெடுக்கத் தொடங்கினான். இலங்கையரசன் இச்சமயம் தன் அரசியல் சூழ்ச்சியால் குலசேகரனை ஏற்று அவனை நண்பனாக்கினான். சோழர் சமயத்துக் கேற்றபடி தாமும் மாறி, வீரபாண்டியனை அரசனாக ஏற்று, குலசேகரனைத் துரத்தினர். வீரபாண்டியனும் இலங்கை அரசன் சூழ்ச்சிக்குள்ளாகவே, சோழர் அவனையும் வீழ்த்தி 1190-ல் விக்கிரமன் என்பவனைப் பாண்டிய மன்னனாக்கினார். இவனே பிற்காலப் பாண்டியப் பேரரசின் முதல்வனான சடையவர்மன் குலசேகரபாண்டியன். நெட்டூர்ப் போரில் வீரபாண்டியனைச் சிறைப்படுத்தி தலை துணிந்தபின் சோழர் வெற்றிக் கம்பம் நாட்டினர். சடையவர்மன் குலசேகர பாண்டியன் சடையவர்மன் குலசேகர பாண்டியன் (1180-1217) பட்டத்துக்கு வந்தவுடனேயே தான் ஒரு பேரரசை நிலை நாட்ட வந்தவன் என்பதைக் காட்டிக் கொண்டான். அவன் கல்வெட்டுக்கள் வீரப் பரணி பாடுகின்றன. “வஞ்சினங் கூறும் மதகளி றிவர்ந்த, வெஞ்சின வேங்கை வில்லுடன் ஒளிப்ப” என்று அவன் சோழ சேர மரபுகளுக்கு மேற்பட, தன் மரபை உயர்த்திக் கூறினான். அவன் வீராபிஷேகம் முதலிய விருதுகள் நடத்தினான். தன் அரண்மனைக்குப் புகழா பரணம் என்றும், மூன்று வேறு வேறான அரசிருக்கைகளுக்கு மழவராயன், கலிங்கராயன், முனையதரன் என்றும் பட்டயங்களில் பெருமைப்படப் பெயர் குறித்தான். இப்பட்டயங்கள் அவன் வீரப் பெருமைக்குச் சான்றுகள் என்பதில் ஐயமில்லை. ஏனென்றால், அவன் ஆட்சிக் காலமுழுவதும் சோழர் பாண்டியநாட்டைப் படையெடுக்கத் துணியவில்லை. அவன் ஆட்சி எல்லை மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுர மாவட்டங்கள் உட்பட்ட பாண்டி நாடேயானாலும், ஆட்சி வலிமையும் அரசியல் சூழ்ச்சி வலிமையும் அவனிடம் இருந்தன என்பதை இது காட்டுகிறது. சோழன் மூன்றாம் குலோத்துங்கன் சோழரின் தளர்ச்சியும் பாண்டியரின் வளர்ச்சியும் கண்டு புழுங்கியிருந்தான் என்பதில் ஐயமில்லை. குலேசேகரனின் ஆட்சியிறுதிக் காலத்தில் கிடைத்த சிறுவெற்றிகளின் பின் அவனும் விருதுகளும் வீராபிஷேகங் களும் நடத்தித் தன்வலிமையை நிலைநாட்டத் தொடங்கினான். ஆனால், அடுத்த அரசன் காலத்திலேயே சோழப் பேரரசின் வீழ்ச்சி கண்ணுக்கு எட்டிற்று. மாறவர்மன் சுந்தர பாண்டியன் மாறவர்மன் சுந்தர பாண்டியன் (1217-1239) சோழப் பேரரசின் எல்லையைத் தன் எல்லையாக்க முற்பட்டான். தஞ்சையும் உறையூரையும் கைப்பற்றிச் சுற்றுப்புறங்களைச் சூறையாடிச் சோழபதி என்ற பட்டத்தையும் சூட்டிக் கொண்டான். சோழர் முடியை முதலில் கைக்கொண்டு, அதன்பின் அதனை நன்கொடையாகச் சோழனுக்கே கொடுத்து, அவன் மகனையே தனக்குப் பிணையமாகப் பெற்று ஆண்டான். இவற்றின் சின்னமாக அவன் ‘சோணாடு கொண்டருளிய’, ‘சோணாடு வழங்கியருளிய’, என்ற சிறப்பு அடைமொழிகளை ஏற்றான். முன் ஒரு சோழன் வீராபிஷேகம் நடத்திய அதே இடத்திலேயே அவன் இப்போது வீராபிஷேகம் நடத்தினான். சோணாட்டை வென்றும் பாண்டியன் அதைத் திருப்பிக் கொடுத்தது பெருந்தன்மையின் பயனாக மட்டுமன்று. தெற்கே பாண்டியரைப்போல வடக்கே ஹொய்சளர் வளர்ச்சியடைந்து வந்தனர். இரு புதிய அரசுகளும் சோழருடன் மணத்தொடர்பு கொண்டிருந்தனர். ஒருவர் வளர்ச்சியை ஒருவர் தடுக்கச் சோணாடு இருப்பது நலம் என்றே இருவரும் நினைத்தனர். ஹொய்சளரின் தலையீடு இம்முடிவை எளிதாக்கிற்று. அவர்கள் பாண்டியர் படையெடுப்பின்போது, வடசோழ நாட்டைக் கைப்பற்றி யிருந்தனர். ஆனால், தெலுங்குச் சோடர் விரைவில் ஹொய்சளரை எதிர்த்துத் தொண்டை மண்டலத்தைத் தாம் கைப்பற்றினர். 1238-ல் பாண்டிய ஆட்சி எல்லையில் திருச்சிராப்பள்ளி, புதுக் கோட்டை மாவட்டங்கள் இணைந்திருந்தன. மாறவர்மன் இரண்டாம் சுந்தரபாண்டியன் (1238-1253) வலிமை குனறிய அரசனாயிருந்ததனால், ஹொய்சள மரபினராகிய அவன் உறவினர் நாட்டில் ஆதிக்கம் செலுத்தினர். பாண்டியப் பேரரசின் உச்சநிலை சடையவர்மன் சுந்தரபாண்டியன் (1251-1270) காலத்தில் பாண்டிய அரசு பேரரசாகிய அதன் உச்சப் புகழை அடைந்தது. அவன் சோழரைத் தன் கீழ்ச் சிற்றரசர் ஆக்கினான். கொங்கு நாட்டை வென்றான். ஹொய்சளரை முறியடித்து ஒதுக்கினான். காஞ்சிபுரம் தெலுங்கு சோடரிடமிருந்து கைப்பற்றப்பட்டு, மதுரைக்கு அடுத்த இரண்டாந் தலைநகரமாயிற்று. சேர மன்னர் அவனுக்குத் திறை செலுத்தினர். இலங்கையை அவன் வென்று நேரடியாக ஆட்சி செலுத்தினான், மற்ற எந்தப் பேரரசரும் எளிதில் செய்திராத முறையில் அவன் ஒரு தனி மனிதனாக நின்று ஓர் ஆட்சிக்காலத்துக்குள் தன் வாள்வலியால் ஓர் உறுதி வாய்ந்த பேரரசை நிலைநாட்டினான். அதன் எல்லை முதலாம் பராந்தகன் சோழப் பேரரசின் அளவாயிருந்தது. ஆனால், அதன் வலிமையும் செல்வாக்கும் புகழும் தென்னாட்டில் எந்தப் பேரரசுக்கும் இல்லாத அளவில் இருந்தது. சேமன் என்ற தலைவனின் வெல்லப்படாத கோட்டை யாகிய கண்ணனூர்க் கொப்பத்தையும், வாணிகச் செல்வத்தில் சிறந்த கோப் பெருஞ்சிங்கன் நகராகிய சேந்தமங்கலத்தையும் அவன் வென்றான். 1253-ல் பாண்டியப் பேரரசின் எல்லை கர்நூல், திராட்சாராமம் வரை எட்டிற்று. தெலுங்கு சோட அரசன் கண்ட கோபாலனையும், காகதிய மரபின் அரசன் கணபதியையும், பிற தெலுங்கு அரசரையும் அவன் முடுகூர் என்ற இடத்தில் வென்றான். ஆட்சி இறுதியில் அவன் பேரரசனாக நெல்லூரில் வீரா பிஷேகம் செய்து கொண்டான். ‘எம்மண்டலமும் கொண்டருளியவன்’ ‘மகாராஜாதி ராஜ ஸ்ரீ பரமேசுவரன்’ ஆகியவை அவன் விருதுப் பெயர்கள். போர்களில் சூறையாடிய செல்வக் குவியல்களையும் சேரர், கன்னடர், இலங்கையரிடமிருந்து திறையாகப் பெற்ற பொன்மணி களையும் செலவு செய்து அவன் சிதம்பரத்திலுள்ள சிவன் கோவிலுக்கும், சீரங்கத்திலுள்ள திருமால் கோவிலுக்கும் பெருஞ் சிறப்புகள் செய்தான். சீரங்கக் கோவிலை அவன் பொன்னால் வேய்ந்ததனால் ஹேமச்சாதன ராஜா என்று தன்னைக் குறித்துக் கொண்டான். பிற்காலப் பாண்டியன் சடையவர்மன் குலசேகரன் (1252-1275) சுந்தர பாண்டியன் காலத்திலேயே அவன் இளவலாயிருந்து ஆண்டான் என்று கூறலாம். ஏனெனில், அவன் காலத்திலேயே பாண்டிய மண்டலத்துக்குட்பட்டு இவன் கல்வெட்டுக்கள் காணப்படு கின்றன. காரிக்களம் என்ற இடத்துப் போரில் அவன் இலங்கை யில் இரண்டு அரசரை வென்று, கோணம்பி, திரிகூடமலை ஆகிய இடங்களில் பாண்டியரின் இணை கயல் கொடியை நாட்டினான். மாறவர்மன் குலசேகரன் (1268-1312) சடையவர்மன் சுந்தர பாண்டியன் (1276-1292) ஆகிய இருவரும் ஒரே காலத்தில் ஆண்ட பேரரசர்கள். சேரன், சோழன், ஹொய்சளர் ஆகியவர்களை வென்று திறைகொண்டு அவற்றால் குலேசகரன் திருநெல்வேலி மதிற் சுவர்களைச் செப்பம் செய்து உயர்த்தினான். கண்ணனூரில் அவன் வென்று போரிட்டு அப்பகுதியை வென்றான். இப்போரில் பாண்டியன் படைத்தலைவனாக இருந்து வெற்றிப் புகழ் பெற்றவன் ஆரிய சக்கரவர்த்தி என்ற பெயர் உடையவன். மன்னருக் கொப்பாகத் தமிழ்ப் புலவர்களையும் ஆதரித்தான். இலங்கை அரசன் அவன் காலடியில் பணிந்து புத்தர் ‘பல்’ பேழையையும், செல்வங்களையும் அவனிடம் காணிக்கையாக ஒப்படைத்துப் பரிசாக மீண்டும் பெற்றதாக மகாவம்சம் கூறுகிறது. 1302-ல் இலங்கை அரசன் வேண்டுகோள் மீது பாண்டியன் ‘பல்’ பேழையைப் பெருந் தன்மையுடன் திருப்பிக் கொடுத்தான். சுந்தரபாண்டியன் கல்வெட்டுக்களுள் ஒன்று சைவசித்தாந்த நெறி காப்பதற்காகத் தஞ்சையில் ஒரு சைவ மடம் ஏற்படுத்தியதைக் குறிக்கிறது. ‘மார்க்கோ போலோ,’ என்ற வெனிஸ் நகர யாத்திரிகனும் ‘வஸ்ஸஃவ்,’ என்ற முசல்மான் வரலாற்று எழுத்தாளனும் குலசேகரனைப் பற்றியும் சுந்தர பாண்டியனைப் பற்றியும் விரிவாக நமக்கு எழுதியுள்ளனர். அந்நாளைய உலகின் பெரும்பகுதி செல்வமும் வாணிக மூலமும் வெற்றிகள் மூலமும் முத்துக்குளிப்பும், சங்குத் தொழில்கள் மூலமும் தமிழகத்திலேயே வந்து குவிந்திருந்தன. தென்னாடு, சிறப்பாகப் பாண்டிய அரசு அந்நாளில் செல்வத்திலும் ஆற்றலிலும் முதன்மைபெற்றிருந்ததனால், அது பெரிய இந்தியா என்றும், இமயம் வரையுள்ள வட இந்தியா சிறிய இந்தியா என்றும் அழைக்கப்பட்டன. பாண்டிய அரசன் செல்வத்தின் பெரும்பகுதி அராபி நாட்டிலிருந்து வரும் குதிரைகளை வாங்குவதிலேயே செலவிடப் பட்டது. ஆண்டு தோறும் நூறாயிரம் குதிரைகளுக்கும் குறையாமல் பாண்டியர் படைக்கு வாங்கப்பட்டன. மன்னன் அணிந்த ஆடையணி மணிகளும் பேரரசின் செல்வத்தில் பாதி பெறுவதாயிருந்தது. இவையே மார்க்கோபோலோ, வஸ்ஸஃவ் ஆகியோர் அந்நாளைய பாண்டிய நாடு பற்றித் தரும் தகவல்களில் முக்கியமானவை. 14ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாண்டியரிடையே மீண்டும் அரசுரிமைப் போர் மூண்டதாக அறிகிறோம். இதனிடையே திருவாங்கூரில் ஆண்ட இரவிவர்ம குலசேகரன் என்ற சிற்றரசன் திடுமென எழுந்து சேர சோழ பாண்டியர் மூவரையும் வென்று, கொல்லம், சீர்காழி, காஞ்சிபுரம் ஆகிய மூன்றிடங்களிலும் தென்னாட்டுப் பேரரசனாகத் தன்னை முடிசூட்டிக் கொண்டான். 1310-இல் சிந்து கங்கைவெளியை ஆண்ட கில்ஜி மரபினரான பேரரசன் அலாவுதீனிடமிருந்து மாலிக்காபூர் என்ற படைத் தலைவன் தெற்கு நோக்கி இராமேசுவரம் வரை படையெடுத்துச் சூறையாடினான். அப்படையெடுப்பால் வடகோடியிலிருந்து தென்கோடி வரை எல்லா அரசுகளும் நிலை கவிழ்ந்தன. தேவகிரியை ஆண்ட யாதவர், மைசூரை ஆண்ட ஹொய்சளர், தமிழகத்தை ஆண்ட சேர சோழ பாண்டிய அரசர் ஆகிய அனைவரிடையேயும் கலவரமும் குழப்பமும் ஏற்பட்டன. பாண்டியப் பேரரசு ஒரு தனிமனிதன் வீரத்தை நம்பி இருந்தது. சோழப் பேரரசைப் போல் ஆட்சி முறையும் மரபும் வகுத்தமைக்க வீரமிக்க அப்பேரரசர் தவறியிருந்தனர். தென்னாட்டில் பேரரசு மீண்டும் ஏற்படும் வரை அரசியல் குழப்பமடைந்தே இருந்தது. இலக்கிய வளர்ச்சி சோழப் பேரரசர் ஆட்சி தமிழ் இலக்கியத்திலும் பேரரச ஆட்சியாகவே இருந்தது. சுந்தரசோழன் காலத்துக்கும் மூன்றாம் குலோத்துங்கன் காலத்துக்கும் இடையே கவிப்பேரரசர் என்ற பெயருடன் கலிங்கத்துப் பரணியால் புவிப்பேரரசரைப் பாடிய சயங்கொண்டார், கம்பர், ஒட்டக்கூத்தர் ஆகிய புலவர்களும்; வெண்பாப் புலியாகிய புகழேந்தியும்,பெரியபுராணம் பாடிய சேக்கிழாரும் வாழ்ந்தனர். பாண்டியப் பேரரசு விழுந்தபின் திருநெல்வேலியின் சிற்றூராண்ட அரசருள் வரதுங்க பாண்டியன், வரகுண பாண்டியன் ஆகியவர்களும் கவிஞரா யிருந்தனர். கங்க அரசருள் சிலர் புத்த சமணச் சார்பான நன்னூல், நேமிநாதம் போன்ற நூல்களுக்கு ஆதரவளித்தனர். தமிழில் உரையாசிரியர் பலர் ஏற்பட்டதும், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகியவற்றில் பெருங்காவியங்கள் எழுதப் பட்டதும் இக்காலத்திலேயே. தெலுங்கு பாரதம் எழுதிய திக்கணன் தெலுங்கு சோடரையும், கன்னடக் கவிஞன் பில்ஹணன் ஆறாம் விக்கிரமாதித்தனையும் பாடினர். 6. அணிமைக்காலம் (14-18-ஆம் நூற்றாண்டுகள்) சோழப் பேரரசு அரசியல் ஒற்றுமை மூலம் தென்னாட்டின் இயற்கையான பண்பாட்டொற்றுமையை வளர்த்தது. ஆனால், இவ்வொற்றுமை தென்னாட்டின் அகத்திருந்து எழுந்த அக ஆற்றல். மாலிக்காபூரின் விரைந்த எழுச்சி இதே செயலைப் புற ஆற்றலாகச் செய்து முடித்தது. அரசியலில் பேரரசுகள் சரிந்து தளர்ந்த காலத்தில் அது தேவகிரி முதல் இராமேசுவரம் வரை மின்னல் போலப் பாய்ந்து, எல்லா அரசுகளிடையேயும் மக்களிடையேயும் மின் ஆற்றலைப் பாய்ச்சிற்று. புதிய பேரரசுகள் ஏற்படுவதற்கு இது பெருந்தூண்டுதலாய் இருந்தது. பகமணி விசயநகரப் பேரரசுகள் 14ஆம் நூற்றாண்டுவரை தென்னாட்டுப் பேரரசுகளில் ஆந்திரப் பேரரசு நீங்கலாகப் பெரும்பாலன தமிழகத்திலிருந்தே தோன்றின. ஆனால், 14ஆம் நூற்றாண்டுக்குப் பின் பேரரசுகள் தென்னாட்டின் நடுமண்டலத்திலும் வட மண்டத்திலுமே எழுந்தன. அவற்றுள் முதல் பேரரசுகளும் முதன்மையான பேரரசுகளும் பகமனி விசயநகரப் பேரரசுகளே. பகமனிப் பேரரசு தென்னாட்டின் முதல் இஸ்லாமியப் பேரரசு. அது தென்னாட்டுக் கலைப் பண்பையும் பாரசீகக் கலைப்பண்பையும் இணைத்துத் தென்னாட்டுக்குச் சிறப்பான ஓர் இஸ்லாமிய நாகரிகத்தையும், உருது மொழி இலக்கியத்தையும் உருவாக்கி அகல் உலகிற்கு அளித்தது. விசயநகரப் பேரரசு அதற்கெதிராகத் தென்னாட்டுக்குச் சிறப்பான ஒரு புதிய வைணவ நாகரிகத்தை உருவாக்கி அதைப் பரப்பிற்று. இன்றைய தென்னாட்டு நாகரிகத்தையும் தென்னாடு கடந்த இந்திய நாகரித்தையும் படைத்து வளர்த்த பேரரசுகள் இவையே. விசயநகரப் பேரரசும் அதைச் சார்ந்த மண்டல அரசுகளும், சிற்றரசுகளும் சிறப்பாகத் தெலுங்கு இலக்கியத்தையும், பொதுவாகக் கன்னடம் தமிழ் மலையாள இலக்கியங்களையும் வளர்க்கத் தூண்டுதலாயிருந்தன. பகமனிப் பேரரசும் விசயநகரப் பேரரசும் கிட்டத்தட்ட ஒரே காலத்தில் தோன்றியவை. விசயநகர ஆட்சி, உண்மையில் முற்பட்டே தொடங்கிற்று. ஆயினும், பகமனிப்பேரரசு விரைவில் சிதறுண்டு, வலிமை வாய்ந்த பல அரசுகளாயிற்று. அதன் வரலாற்றை நாம் முதலில் எடுத்துக் கொள்வதன் காரணம் இதுவே. சிதறியபின்பும் அது விசயநகரப் பேரரசின் வலுவைச் சிதறடிக்கும் ஆற்றல் உடையதாயிருந்தது. பகமனிப் பேரரசு மாலிக்காபூர் படையெடுப்பின் பின் தேவகிரி தில்லியின் ஆட்சிக்கு உட்பட்டது. முகமது துக்ளக் என்ற தில்லிப் பேரரசன் தில்லியிலிருந்து தன் தலைநகரை அதற்கு மாற்ற முயன்றான். இத்திடீர் முயற்சி முற்றிலும் தோல்வியடைந்தது. அத்துடன் அதனால் ஏற்பட்ட குழப்பத்திடையே அலாவுதின் ஹசன் கங்கு பகமனி என்பவன் 1347-இல் தானே தேவகிரிக்கும் அதனைச் சூழ்ந்த பகுதிக்கும் அரசனானான். குல்பர்கா என்ற தலைநகரை அமைத்து அவன் பகமனிப் பேரரசின் முதல்வனானான். மேலைச் சாளுக்கியர் ஆண்ட தென்னாட்டின் வடமேற்குப் பகுதி முழுவதும் விரைவில் இப்பேரரசில் ஒன்றுபட்டது. இக்காலத்தில் தமிழகத்தில் மதுரையில் ஒரு முஸல்மான் அரசு ஏற்பட்டது. அதன் ஆட்சி முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளாக நடைபெற்றது அவர்களுக்கு வடக்கே உள்ள கடைசி ஹொய்சள அரசர் அடிக்கடி முஸல்மான் படைகளின் தாக்குதலுக்கு ஆளானாலும் நீடித்த போராட்டம் நடத்தினர். வடக்கே உள்ள இஸ்லாமியப் பேரரசு தெற்கே பரவாமலும் தெற்கிலுள்ள இஸ்லாமிய அரசு வளர்ந்து அதனுடன் தொடர்பு கொள்ளாமலும் அது சில காலம் தடுத்தது. ஆயினும் கடைசி ஹொய்சள அரசன் மூன்றாம் பல்லாளனுக்குப்பின் அவ்வரசும் வீழ்ச்சியடைந்தது. ஹஸன் கங்கு பகமனி 1347 முதல் 1358 வரை அரசாண்டான். அவன் பின்னோர்கள் 15ஆம் நூற்றாண்டின் இறுதிவரையில் பேரரசை ஆற்றலுடையதாக்கி ஆட்சி நடத்தினர். ஆனால், மாமூது அரசன் (1482-1518) ஆட்சியில் சிற்றரசர், பெருமக்கள் நடுவாட்சியை எதிர்த்துக் கிளர்ந்தெழுந்தனர். அவன் ஆட்சி முடிவுக்குள் பேரரசின் பகுதிகள் பீஜப்பூர், கோல்கொண்டா, அகமது நகர், பீடார், பீரார் என்ற ஐந்து அரசுகளாகப் பிரிவுற்றன. பீஜப்பூர் அரசர் ஆடில் ஷாக்கள் என்று அழைக்கப் பட்டனர். அவ்வரசின் முதல்வன் யூசுஃப் பகமனிப் பேரரசின் கீழடக்கியவனாகவே இருந்துகொண்டு விசய நகரத்தைத் தாக்கி வெற்றி கண்டு சூறையாடினான். அவன் மகன் இஸ்மாயில் காலத்தில் பீஜப்பூர் பாமனியின் மேலாட்சியை உதறித் தள்ளித் தனியாட்சி நிறுவிற்று. முகம்மது காலத்தில் (1626-1686) பீஜப்பூர் அரசில் பணியாளராயிருந்த ஷாஜி என்ற மகாராஷ்டிர வீரன் மகனான சிவாஜி, கொங்காணக்கரையில் கிளர்ச்சிக் கொடி ஏந்தி ஒரு தனியரசுக்கு அடிகோலினான். இப்போது விசயநகரத்தின் ஆற்றல் மிகத் தளர்ந்திருந்ததனால் முகம்மது தன் அரசை மைசூர் கடந்து தமிழகத்தில் தஞ்சைவரை பரப்பினான். ஆனால், அடுத்த அரசன் ஆட்சிக்குள் கொங்காணம் முழுவதும் சிவாஜி கைக்குள்ளாயிற்று. சிவாஜியின் தம்பி எகோஜி தமிழகப் பகுதியில் தஞ்சையைக் கைக்கொண்டு ஆண்டான். கடைசி பீஜப்பூர் அரசன் சிகந்தர் (1672-1686) காலத்தின் இறுதியில் பீஜப்பூர் தில்லியில் அந்நாளைப் பேரரசன் அவுரங்கசீப்பினால் கைக் கொள்ளப்பட்டது. கோல்கொண்டா அரசர் குத்ப்ஷாக்கள் என்று அழைக்கப் பட்டனர். முதல் அரசன் குலீப், பகமனியின் கீழ் தெலிங் காணத்தை ஆண்டவன். 1512 அல்லது 1518-இல் அவன் கோல் கொண்டாவைத் தலைநகராகத் கொண்டு தனி அரசு நிறுவினான். இப்ரஹீம் அரசன் காலத்தில் (1550-1581) வேங்கிநாடு என்று முன்பு அழைக்கப்பட்டிருந்த ஆந்திரக் கீழ்க்கரைப் பகுதி கோல்கொண்டாவுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டது. கிட்டத் தட்ட இரண்டு நூற்றாண்டு வலிமையுடன் இயங்கியபின் 1687-ல் கோல்கொண்டா அரசரும் தில்லிப் பேரரசின் படையெடுப்புக்கு ஆளாய் நாடிழந்தனர். அகமது நகரின் அரசர் நிசாம்ஷாக்கள் ஆவர். முதல் அரசன் மாலிக் அகமத் 1489-ல் அகமது நகரைப் புதிதாக அமைத்துத் தனியாட்சி ஏற்படுத்தினான். அவன் மரபில் வந்த ஹுசேன் (1554-1565) அடிக்கடி பீஜப்பூருடன் போரிட்டான். அத்துடன் அமையாது விசயநகரப் பேரரசைத் தலைக்கோட்டைப் போரில் நிலை குலையச் செய்யவும் அவனே பெரிதும் காரணமாயிருந்தான். பகதூர் (1595-1600) ஆட்சியில் தில்லிப் பேரரசன் அக்பர், அகமது நகர்மீது படையெடுத்தான். அரசன் இறந்த பின்னும் அரசி சாந்த் பீபீ வீரத்துடன் போரிட்டு மாண்டாள். தென்னாட்டின் வீரமிக்க பெண்ணரசிகளுள் சாந்த் பீபீ இடம் பெற்றாள். 1600-ல் அகமது நகரம் தில்லிப் பேரரசில் இணைக்கப் பெற்றது. பீடார், பீரார் ஆகிய இரண்டு அரசுகளும் மிகக் குறுகிய காலமே தனியரசுகளாக நிலவின. அவை விரைவில் அகமது நகர் அரசுடன் இணைந்துவிட்டன. விசயநகரப் பேரரசு முசல்மான் படைவீரர்களின் அட்டூழியங்களாலும் பகமனிப் பேரரசர் படையெடுப்புகளாலும் தென்னாட்டில் மக்களிடையே எதிர்ப்பு ஆற்றல் வளர்ந்தது. ஹொய்சள வீழ்ச்சியின் பின் அவர்களிடம் படைத்தலைவர்களாயிருந்த ஐந்து உடன் பிறந்தார்களும், அமைச்சராயிருந்த ஒரு பிராமண அறிஞரும் சேர்ந்து 1336-ல் விசய நகரம் என்ற புதிய தலைநகருடன் ஒரு பேரரசை நிறுவ ஏற்பாடு செய்தனர். அதுவே விசயநகரப் பேரரசு. அது 1565 வரை பெருக்க முற்றுத் தென்னாட்டில் வலிமைமிக்க பேரரசாக வளர்ந்தது. ஆனால், 1565-ல் தலைக்கோட்டை என்னுமிடத்தில் நடைபெற்ற பெரும்போரில் அகமதுநகர், பீஜப்பூர், கோல்கொண்டா ஆகிய முசல்மான் அரசுகளின் ஒன்றுபட்ட எதிர்ப்பினால் அது சீர் குலைந்தது. ஆனால், அதன் பின்னும் 1672 வரை பெயரளவில் அது நிலவிற்று. விசயநகரப் பேரரசைத் தோற்றுவிக்க உதவியவர்கள் ஹரிஹரன், புக்கன் ஆகிய இரண்டு உடன்பிறந்தவர்களும், வித்தியாரண்யர் என்ற அவர்கள் ஆசிரியரும் ஆவர். கம்பணன், மாரப்பன், முத்தப்பன் ஆகிய மற்றும் மூன்று உடன்பிறந்தார்கள் துணைசெய்தனர். விசயநகரம் நிறுவப்படுவதற்கு முன்பே கம்பணன் அல்லது கம்பண உடையார் ஹொய்சள அரசனின் படைத்தலைவன் என்ற முறையில் தமிழகத்திலும் படையெடுத்து, முசல்மான் படைவீரர்களால் அலைக்கழிக்கப்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பும் நல்லாட்சியும் வகுத்து வந்தான். 1370-க்கு பின் அவன் முசல்மான் அரசரிடமிருந்து மதுரையைக் கைப்பற்றி அதை ஆண்டு வந்தான். விசயநகரத்தை ஆண்ட பேரரசர்களில் நான்கு மரபினர் ஒருவர் பின் ஒருவராக ஆண்டனர். முதலாவது சங்க மரபினர் 1336 முதல் 1485 வரையும், இரண்டாவது சாளுவ மரபினர் 1485 முதல் 1505 வரையிலும், மூன்றாவது துளுவமரபினர் 1505 முதல் 1565 வரையிலும், கடைசியாக ஆரவீடு மரபினர் 1565 முதல் 1672 வரையிலும் ஆண்டனர். மூன்றாவது மரபைச் சேர்ந்த மன்னருள் இரண்டாம் கிருஷ்ணதேவராயர் காலத்தில் (1509-1529) விசயநகரப் பேரரசின் புகழ் உச்ச எல்லை அடைந்தது. அவர் காலத்தில் இப்பேரரசு கன்னட தெலுங்கு மொழி எல்லைகள் முழுவதையும் உள்ளடக்கி யிருந்தது. தமிழகத்தில் மதுரையை ஆண்ட கம்பண உடையார் மரபினரும் பிற பகுதிகளிலுள்ள சோழபாண்டியத் தலைவர் களும் சேர நாட்டை ஆண்ட திருவாங்கூர் மன்னனும் பேரரசின் மேலுரிமையை ஏற்றிருந்தனர். கிருஷ்ணதேவராயர் தாமே தெலுங்கில் பெரும்புலவர். தமிழகத்தின் ஆழ்வார்களில் ஒருவரான நாச்சியார் மீது அவர் ஒரு காவியம் இயற்றினார். அவர் காலம் தெலுங்கு இலக்கியத்தின் பொற்காலமாயிருந்தது. தெலுங்கு நாட்டில் மட்டுமின்றித் தமிழகத்திலும் மைசூரிலும் ஆண்ட மன்னர்கள்கூட இக்காலத்தி லும் இதற்குப்பின் நெடு நாட்களும் தெலுங்கு மொழியையும் இலக்கியத்தையும் வளர்த்தார்கள். தெலுங்கின் பண்டைய உரைநடை இலக்கியமும், நாடக இலக்கியமும் சிறப்பாக மைசூர், மதுரை, தஞ்சை அரசர்களாலே உச்சநிலைக்குக் கொண்டு வரப்பட்டன. தெலுங்குக்கு அடுத்தபடியாகக் கன்னட இலக்கியமும் அதற்கடுத்த படியாகத் தமிழ் இலக்கியமும் விசயநகர ஆட்சியில் தழைத்தன. தமிழ் இலக்கியத்துக்கும் தமிழகக் கோயில்களுக்கும் பேராதரவளித்தவர் கிருஷ்ணதேவராயருக்குப் பின் வந்த பேரரசரிடம் படைத்தலைவராகவும் அமைச்சராகவும் தமிழகத்தின் தண்டத் தலைவராகவும் இருந்து புகழ்பெற்ற தளவாய் அரியநாத முதலியார் ஆவர். மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் செப்பம் செய்து ஆயிரக்கால் மண்டபத்தைச் சீரமைத்த காரணத்தால் அவர் வீரச்சிலை அம்மண்டபத்தருகில் இடம் பெற்றது. கிருஷ்ணதேவராயருக்குப்பின் ஆண்ட அச்சுதராயர் காலத்தில் (1529-1542) தமிழகத்தில் பேரரசுக் கெதிரான கிளர்ச்சி ஏற்பட்டது. இதனைப் பயன்படுத்தித் திருவிதாங்கூர் அரசன் தென்பாண்டி நாட்டைப் பாண்டியரிடமிருந்து கைக்கொண்டான். அச்சுதராயர் தாமே நேரடியாக வந்து கிளர்ச்சியை அடக்கியதுடன் பாண்டிய இளவரசியை மணந்து கொண்டார். தமிழக முழுவதையும் மேலாட்சி செய்ய அவர் விட்டலராஜர் என்ற படைத் தலைவரையும் அமர்த்தி விட்டுச் சென்றார். அச்சுதராயருக்குப் பின்னும் தமிழகத்தில் பாண்டியர் சோழர் பூசல்கள் ஏற்பட்டன. அதன் பயனாக நாகம நாயக்கன் என்ற தலைவன் மேலாளாக அனுப்பப்பட்டான். இவன் புதல்வன் விசுவ நாதனே 1559-ல் மதுரை நாயக்க மரபின் முதல்வனானான். 1565-இல் தலைக்கோட்டைப் போருக்குப்பின் பீஜப்பூர் கோல்கொண்டா வளர்ச்சியடைந்தது. விசயநகரம் தளர்ச்சி யுற்றது. தலைநகரத்தையே இழந்து, பேரரசர் தமிழகத் துணைத் தலை நகரமாக இருந்த சந்திரகிரியில் வந்திருந்து ஆண்டனர். தஞ்சை, மதுரை, மைசூர் ஆகிய மூன்றிடங்களிலுமுள்ள தலைவர் கள் அரசராகி வலுப்பெற்ற பின் பேரரசு வீழ்ச்சியடைந்தது. மதுரை நாயக்க மன்னர் மதுரையில் நாயக்க மரபினர் 1559 முதல் 1736 வரை கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகள் புகழுடன் ஆண்டனர். பாண்டியர் பழம்புகழுக்கு இவர்கள் பல வகையில் புது மெருகு ஊட்டினர். முசல்மான்கள் ஆட்சியால் அழிவுற்றிருந்த மதுரை நகரையும் கோயிலையும் கோட்டை கொத்தளங்களுடன் முதல் நாயக்க மன்னன் விசுவநாத நாயக்கன் கட்டினான். வைகை ஆற்றுக்குப் பேரணை சிற்றணை என்ற அணைகள் கட்டிக் கால்வாய்கள் வகுத்து ஆற்றின் இருகரைகளிலும் புதிய ஊர்களும் குடியிருப்புகளும் அமைத்தான். அவனுடன் தண்டநாயகராயிருந்த தளவாய் அரியநாத முதலியார் உதவியுடன் கோயிலையும் கோட்டையையும் செப்பம் செய்து நாட்டாட்சிக்கான புதிய முறைகள் வகுத்தான். இப்புதிய முறையே பாளையக்காரர் முறை ஆகும். இது பாண்டியப் பேரரசர் காலப் பாளைய முறை போன்றதாயினும், அதைவிட விரிவான முறையில் அமைந்தது. தமிழகமெங்கும் 72 கோட்டைகளும் அவற்றின் தலைமையில் 72 பாளையக்காரரும் அமைக்கப்பட்டனர். இவர்கள் பிரித்துத் திறைகட்டியதுடன், போர்க்காலங்களில் அரசனுக்கு உதவினர். பாஞ்சாலங்குறிச்சிக் கட்டபொம்மன் மரபு இப்பாளைய மரபுகளுள் ஒன்றே. பல சிற்றரசர்களும் பாளைய அமைப்பில் இணைக்கப்பட்டனர். இந்நாளையப் பெருநிலக்கிழவர் பலர் இப்பாளையக்காரரின் பின் மரபினரேயாவர். விசுவநாதனுக்குப்பின் ஆண்ட குமாரகிருஷ்ணப்பன் (1563-1573) காலத்தில் தும்பிச்சி நாயக்கன் என்ற பாளையக்காரன் தலைமையில் பாளையக்காரர் கிளர்ச்சி செய்தனர். கிளர்ச்சி அடக்கபட்டு, தும்பிச்சி நாயக்கன் தூக்கிலிடப்பட்டான். முத்து கிருஷ்ணப்பன் (1602-1609) இராமேசுவரத்துக்குச் செல்லும் யாத்திரிகர் நலனை எண்ணி இராமநாதபுரத்தில் சேதுபதி மரபினரைத் தலைவராக்கி, அப்பகுதியில் அமைதி நிலவச் செய்தான். மதுரை நாயக்க மரபினருள் தலைசிறந்தவன் திருமலை நாயக்கன் (1623-1659) ஆவான். இவன் வலிமைமிக்க மன்னன். அத்துடன் அவன் பேரரசனாகும் பேரவா உடையவனா யிருந்தான். ஆகவே, பெயரளவில் இன்னும் விசயநகரப் பேரரசனுக்குச் செலுத்தப்பட்ட திறையை நிறுத்தி அவனை எதிர்த்தான். தஞ்சை மன்னரும் செஞ்சி மன்னரும் அவனுடன் சேர்ந்தனர். மைசூர் மன்னன் பேரரசர் பக்கம் இருந்தான். ஆனால், திருமலை நாயக்கனின் அரசியல் சூழ்ச்சிகளால் பேரரசு விரைவில் விழுந்தது. தஞ்சை நாயக்கருக்கும் பல தொல்லைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் பீஜப்பூர், கோல்கொண்டாப் படைகள் புகுந்து மதுரைக்குத் தொல்லை விளைவித்தன. ஆயினும் திருமலை நாயக்கன் ஆட்சியில் பகைவர் மதுரைப் பக்கம் நாட முடியவில்லை. கட்டடங்கட்டும் கலையில் இராசராசன், இராசேந்திரன் ஆகிய சோழப் பேரரசருக்குப்பின் மிகச் சிறந்த தென்னாட்டரசன் திருமலை நாயக்கனே. அவன் கட்டடக் கலையின் அருமை தெரியாமலே அவன் அரண்மனையாகிய திருமலை நாயக்கன் மகாலின் பெரும் பகுதியைத் தமிழகம் அழிய விட்டுவிட்டது. ஆனால், எஞ்சிய சிறு பகுதியே அதன் புகழை இன்று உலகெல்லாம் பரப்பப் போதியது. அவன் கட்டிய பெரிய வண்டியூர்த் தெப்பக்குளமும், நாயக்க மன்னர் பலர் திருவுருவங்களடங்கிய புது மண்டபமும் அவன் காலச் சிற்பத் திறமைக்குச் சான்றுகளே. ஆனால், அவன் பேரவாவை மதுரையிலும் மற்றும் பல நகரங்களிலும் முடிவு பெறாது விடப்பட்ட நிலையில் உள்ள இராஜகோபுரங்களே காட்டவல்லன. அவை எகிப்திய மோட்டுக் கோபுரங்களுடன் போட்டியிடப் புறப்பட்டனவோ என்று கூறத்தக்க முறையில் அடிகோலப்பட்டுப் பின் முடிவுறாமலே நிற்கின்றன. திருமலை நாயக்கனைப் போலவே சொக்கநாத நாயக்கனும் (1662-1682) வலிமையுடையவனாயிருந்தான். அவனும் பேரவாவுடன் அரசியல் சூழ்ச்சி வலை விரித்து, அதில் மதுரையைச் சிக்க வைத்தான். அவன் ஆட்சி இறுதியில் மதுரை சீரழிவுற்றது. ஆயினும் இரண்டாட்சி கழிந்து அரசி மங்கம்மாள் (1689-1704) தன் கணவன் இறந்தபின் தானே ஆட்சியைக் கைக்கொண்டு மதுரையை மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்தினாள். கோயில்குளங்கள், சத்திரங்கள், சாலைகள் போன்றவைகளை கட்டிய மங்கம்மாளின் புகழ் இன்றளவும் நிலை நிற்கின்றது. தஞ்சையைப் புகழுடன் ஆண்ட நாயக்க மன்னர் ஆட்சி சொக்கநாதர் சூழ்ச்சிகளிடையே வீழ்ந்தது. மராட்டிய வீரர் அதனைக் கைக்கொண்டனர். சிவாஜி தஞ்சையையும் செஞ்சியையும் கைக்கொண்டனர். அவுரங்கசீப்பின் படைத் தலைவரும் இந்நாளில் தமிழகத்தின் மீது படையெடுத்துக் குழப்பநிலை உண்டு பண்ணினர். விசயரங்க சொக்கநாதன் (1704-1731) ஆட்சியில் படை யெடுப்புகளால் மதுரை சீரழிந்தது. விசயரங்க சொக்கநாதன் அச்சமயத்திலும் பிராமணர்களுக்கும் கோயில்களுக்கும் வரம் பில்லாமல் பணத்தை வாரி இறைத்து ஆட்சியைச் சீர்குலைத்தான். அவனுக்குப் பின் அவன் மனைவி மீனாட்சி சரிந்துவிழும் தமிழக ஆட்சியை மீண்டும் நிலைநிறுத்த அரும்பாடுபட்டாள். ஆனால், அது பயன்படாமல் போயிற்று. 1736-இல் மதுரையில் நாயக்கர் ஆட்சி முடிவுற்றது. மேனாட்டவர் கைவரிசைகள் 17ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து சிந்து கங்கை சமவெளி முழுவதையும் தில்லியிலிருந்து ஆண்ட முகலாயப் பேரரசர் தென்னாட்டிலும் தம் ஆட்சியைப் பரப்பத் தலைப்பட்டனர். பாமனிப் பேரரசு சிதறுண்டபின் அந் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அகமது நகரும் பீடாரும் பீராரும் அவர்கள் ஆட்சியுட்பட்டன. விசயநகரை விழுங்கி முன்னேறிய பீஜப்பூரும் கோல்கொண்டாவும் அந்நூற்றாண்டின் இறுதியில் முகலாயப் பேரரசினால் விழுங்கப்பட்டன. ஆனால், தெற்கே முன்னேற முன்னேற, தில்லிப் பேரரசின் வலு தளர்ந்தது. படைத்தலைவர்கள் தாமே தனியரசராகப் பேரரசின் பெயரை வைத்துக் கொண்டு ஆளத்தலைப்பட்டனர். முகலாயப் பேரரசருடன் போட்டியிட்டு, தென்னாட்டு முசல்மான் அரசரின் அமைச்சராகவும் படைத் தலைவராகவும் இருந்துகொண்டே, சிவாஜியின் மரபினரான மகாராஷ்டிர வீரரும் தமிழகத்தில் தனியரசுகள் நாட்டினர். அழிந்து வரும் நாயக்க மரபினர், முன்னேறிவரும் முசல்மான் படைவீரர், தலைவர் ஆகியவர்களுக் கிடையே, வாணிகங் காரணமாகக் கடற் கரைகளில் சிறு கோட்டைத் தளங்களுடன் வாழ்ந்த மேனாட்டு வெள்ளையரும் தம் ஆற்றலைப் பரப்பினர். விசயநகரப் பேரரசர் ஆட்சிக் காலத்திலேயே போர்ச்சுக்கீசியர் கோவாவில் இறங்கி, கள்ளிக்கோட்டை சாமூதிரி அரசரிடமும், கிருஷ்ண தேவராயரிடமும், கொச்சி அரசரிடமும், பட்டயங்கள் பெற்றனர். கொச்சியிலும் சென்னைக் கரையிலும் இருந்து சிறிது பழங்காலக் கிறிஸ்துவக் குழுக்களை அவர்கள் பெருக்கிப் புதிய ஆதரவு தேடினர். போர்ச்சுக்கீசியரைப் பின்பற்றி 16-ம் நுற்றாண்டில் ஹாலந்து நாட்டினரான டச்சுக்காரரும், 17ஆம் நூற்றாண்டில் பிரான்சு, இங்கிலாந்து ஆகிய நாட்டைச் சேர்ந்த ஃபிரஞ்சுக்காரரும் ஆங்கிலேயரும் தென்னாட்டில் இடம் பெற்றனர். டச்சுக்காரர் இலங்கை, மலாயா, கிழக்கிந்தியத் தீவுகள் ஆகியவற்றிலிருந்து உலகின் மிளகு வாணிகக் களங்களைத் தமதாக்கினர். தென்னாட்டில் போர்ச்சுக்கீசின் தலைமையிடம் கோவா ஆயிற்று. சூரத்தும் அவர்களிடம் இருந்தது. தமிழகத்தில் போர்ச்சுக்கீசியர் தரங்கம்பாடியிலும், டச்சுக்காரர், சதுரங்கப் பட்டினத்திலும் தம் வாணிகக் கோட்டைகளை அமைத்தனர். ஃபிரஞ்சுக்காரர் இதில் சிறு பங்கே பெற்றாலும், தென்னாட்டின் பண்டைத் துறைமுகங்களான காரைக்கால், புதுச்சேரி, மாகி ஆகியவற்றைக் கைப்பற்றினர். ஆங்கிலேயேரோ, சென்னைப் பட்டினத்திலும் பம்பாயிலும் புதிய துறைமுகங்கள் கட்டிப் புத்தாட்சிக்கு அடிகோலினர். வங்காளத்தில் தில்லிப் பேரரசர் அவுரங்கசீப்பினிடமிருந்து கங்கைக் கரையில் இடம் பெற்று, ஃபிரஞ்சுக்காரர்கள் சந்திர நாகூரிலும், ஆங்கிலேயர் கல்கத்தாவிலும் நகரும் வாணிக நகராட்சியும் அமைத்தனர். தஞ்சை அரசு மரபுகள் மதுரை நாயக்க மரபைப் போலவே தஞ்சையரசர் மரபும் விசயநகரப் பேரரசின் ஒரு கிளையாகத் தொடங்கிற்று. இதன் முதல்வன் செவ்வப்ப நாயக்கன், அச்சுத ராயரின் மைத்துனன் அச்சுத ராயராலேயே தஞ்சையின் ஆட்சியாளனாக அமர்த்தப் பட்டான். ஆனால், 1565ஆம் ஆண்டில் பேரரசு தலைக் கோட்டைப் போரில் தோல்வியுற்றுத் தளர்ச்சியடைந்தபின், அவனும் மதுரை நாயக்கரைப் போலத் தன்னாட்சி நிறுவினான். அவனுக்குப்பின் அச்சுதப்ப நாயக்கனும் (1572-1614) இரகுநாத நாயக்கனும் (1640-1674) ஆண்டனர். இரகுநாத நாயக்கனும் பாண்டிய இளவரசியை மணந்துகொண்டான். விசயராகவ நாயக்கன் காலத்தில் (1640-1674) தஞ்சை அரசு மிகத் தழைத்து இருந்தது. அரசன் நல்லாட்சித் திறனும் வீரமும் உடைய வனாயிருந்தான். ஆனால், மதுரை நாயக்கன் சொக்கநாதன் தஞ்சையைத் தாக்கி முற்றுகையிட்டு வென்றான். அரண்மனைக் குள்ளிருந்து வெளிவந்து வீரமாகப் போரிட்டு விசயராகவனும் அவன் பிள்ளைகளும் மாண்டனர். சின்னஞ்சிறு கையேந்தலான செங்கமல தாஸுடன் அமைச்சன் வெங்கண்ணா தப்பிச் சென்றான். சொக்கநாதன் தன் தம்பி முத்து அளகிரியைத் தஞ்சையில் விட்டுச் சென்றான். முத்து அளகிரி தமயனுக்கு எதிராகத் தஞ்சையைத் தானே கைக்கொள்ள முனைந்தான். ஆனால், வெங்கண்ணாவின் முயற்சியால் செங்கமலதாஸின் சார்பில் பீஜப்பூர் அரசன் உதவி கோரப்பட்டது. பீஜப்பூர் படைத் தலைவனாக இருந்த சிவாஜியின் உடன்பிறந்தான் எக்கோஜி என்ற வெங்காஜி தஞ்சைக்கு வந்து அதைக் கைக்கொண்டான். செங்கமலதாஸுக்கு அவன் நாட்டைத் தர மறுத்துத் தஞ்சையில் மகாராஷ்டிரா மரபை நாட்டினான். சிவாஜி எக்கோஜியிடம் தமிழக அரசில் பங்கு கோரி வந்து அவனைத் தோற்கடித்தான். ஆயினும் வேலூரில் தங்கி முடி சூட்டிக்கொண்டு அவன் திரும்பிச் சென்றான். 1674 முதல் 18ஆம் நூற்றாண்டின் இறுதிவரை மகாராஷ்டிர மரபு தஞ்சையை ஆண்டுவந்தது. பாஞ்சாலங்குறிச்சிப் போரின் பின் அரசுரிமையிழந்து இறையூதியம் பெற்று 1855வரை நீடித்தது. அவ்வாண்டுடன் அது தொடர்பற்று முடிந்தது. தத்தெடுக்க முடியாமல் ஆங்கில ஆட்சி முதல்வர் டெல்ஹவுஸிப் பெருமகனார் தடை செய்தார். பிற தென்னாட்டு அரசுகள் சோழ பாண்டியராட்சி அளவுகூடச் சேரநாட்டின் ஆட்சி மரபுபற்றி நமக்குத் தொடர்பான வரலாறு கிட்டவில்லை. அதன் தென்கோடியான வேணாட்டில் மட்டுமே பழைய ஆய்குடியின் மரபினர் திருவிதாங்கூர் அரசர் என்ற பெயருடன் கிட்டத்தட்டத் தொடர்ச்சியாக ஆண்டு வந்தனர். மாலிக்காபூர் படையெடுப்பின் பின் இரவிவர்மன் குலசேகரன் என்ற திருவிதாங்கூர் அரசன் (1309-16) மலையாளக்கரை முழுவதையும் வென்று பாண்டிய சோழ நாடுகளையும் தன் கீழ்ப்படுத்தி 1316-ல் காஞ்சியில் பேரரசனாக மூடிசூட்டினான். ஆனால், விரைவில் ஹொய்சளர் படையெடுப்பினால் அவன் ஆட்சி கவிழ்ந்தது. அவன் படை யெடுப்பினால் அவன் ஆட்சி கவிழ்ந்தது. அவன் உமா என்ற பாண்டிய இளவரசியை மணம் செய்திருந்தான். வீரராகவன் என்ற அரசன் 1320-ல் சிறிய கிறிஸ்துவ சமூகத் தினருக்குக் கோட்டயம் பட்டயங்களை அளித்தான். 15ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் வென்ற மண்கொண்ட பூதலன் என்ற நான்காம் வீரவர்மனும் அந்நூற்றாண்டிறுதியில் (1595-1607) ஐந்தாம் இரவிவர்மாவும் ஆட்சி செய்தனர். 18-ஆம் நூற்றாண்டில் வேணாடு பல சிற்றரசுகளாகப் பிளவு பட்டிருந்தது. திருவிதாங்கூர் அரசர் தென்கோடியை மட்டும் ஆண்டனர். மார்த்தாண்டவர்மன் என்ற அரசன் இன்றைய திருவிதாங்கூர் எல்லை முழுவதையும் வென்று ஆண்டான். திப்பு சுல்தானை எதிர்த்தும் பாஞ்சாலங்குறிச்சிக் கிளர்ச்சியை எதிர்த்தும் திருவிதாங்கூர் அரசர் ஆங்கில வாணிகக் கழக ஆட்சியாளர்க்குச் செய்த உதவிகாரணமாக அவ்வரசு அவர்களின் நேசநாடு ஆயிற்று. மைசூர் அரசுகள் மைசூரில் ஹொய்சளர் ஆட்சி முடிவுற்றபின் 15ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே ஒரு சிற்றரசு தோன்றிற்று. விசயநகரப் பேரரசின் கீழ் இருந்த தலைவர்களை எதிர்த்து அம்மரபில் வந்த நான்காம் சாமராசன் தன் எல்லையைப் பெருக்கிக் கொண்டான். இராசாதிராசன் (1578-1617) சீரங்கப்பட்டணத்தைக் கைப்பற்றி மைசூர் இராச மரபின் முதல்வனானன். இரண்டாம் தொட்ட கிருஷ்ணன் காலத்தில் (1713-1731) தேவராசன் என்ற தளவாய் எட்டாம் சாமராசன் மூன்றாம் மும்மடி கிருஷ்ணன் ஆகியவர்களை அரசனாக்கி ஆட்டி வைத்தான். 1716-இல் படைத் தலைவன் ஹைதர் அலி வலியமைற்ற ஆட்சியினைத் தன்வயப்படுத்தி ஆண்டான். அவன் ஆட்சியில் மைசூர் கிட்டத்தட்ட ஒரு பேரரசு என்ற நிலையில் வளர்ந்தது. ஆங்கிலேயர்களும் மற்றச் சிற்றரசர்களும் அவன் பெயர் கேட்டு நடுங்கினர். அவன் காலத்தில் நடந்த இரண்டு மைசூர்ப் போர்களில் அவன் சென்னை நகரையே தாக்கிச் சூறை யாடினான். ஹைதரின் மகன் திப்பு ஐரோப்பாவில் எழுந்த ஃபிரஞ்சு வல்லரசு வீரன் நெப்போலியனுடன் நேச உறவு கொண்டு ஆங்கி லேயரை அடக்க நினைத்தான். ஆனால், அவன் அமைச்சன் பூரணய்யா ஆங்கிலேயருக்கு உள்ளாளாயிருந்து அவனை வீழ்த்தினான். மைசூருக்கு வெளியே திப்பு ஆண்ட பகுதிகளில் கோயமுத்தூர், சேலம் மாவட்டங்களும், மதுரையும் ஆங்கிலேயர் கைப்பட்டன. இராயலசீமாப் பகுதி நிஜாமுக்குத் தரப்பட்டு அவனால் பின் ஆங்கிலேயருக்கு வழங்கப்பட்டது. ஹைதர் காலத்துக்கு முன்னிருந்த பழைய யாதவ மரபின் அரசன் நான்காம் மும்மடி கிருஷ்ணனின் புதல்வன் பத்தாம் சாமராசன் திப்புக்குப் பின் ஆங்கிலேயரால் அரசனாக்கப் பட்டான். அவன் மரபினர் இறுதிவரை மைசூரை ஆண்டு வந்தனர். மராட்டியர் ஆட்சி மேலைச் சாளுக்கியரும் இராஷ்டிரகூடரும் ஆண்ட தென்னாட்டு வடமேற்குக் கோடியிலுள்ள மராட்டியரை 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வீரசிவாஜி நாட்டார்வம் ஊட்டி ஒரு நாட்டினமாக்கினான். அவன் வைணவ சமயத்திலும் ஊன்றிய பற்றுடையவன். ஆயினும் வைணவ அடியார்களை விட, வினை முறைச் சடங்குகளின் பெயரால் சாதி உயர்வு தாழ்வு நாட்டிய புரோகிதர்களின் பிடியில் அவன் மிகுதி சிக்குண்டு. அவர்களின் சிலந்தி வலைக்கட்டுகளுக்கு உள்ளானான். கொங்காணத்தில் ஓர் அரசும் தஞ்சையில் ஓர் அரசும் அவன் முயற்சியாலும் அவன் குடியினர் முயற்சியாலும் ஏற்பட்டது. ஆனால், தஞ்சையரசு சிற்றரசாயிற்று, கொண்காண அரசு சதாரா, கோலாப்பூர் என்ற இரண்டு அரசுகளாக மாறின. தில்லிப் பேரரசுகளை எதிர்த்தும் தென்னாட்டு முசல்மான் அரசுகளிடையே அரசியல் சூதாட்டமாடியும் இரு பேரரசுகளை அமைக்க சிவாஜியின் அமைச்சராயிருந்த புரோகிதர் உதவினர். அவர்கள் உறவினரும் நண்பரும் எல்லாத் தென்னாட்டு அரசுகளிலும் கால் பாவியிருந்தனர். ஆனால், சிவாஜி முடிசூட்டு விழாவை எதிர்த்தும், வேள்விகள், புரோகித தானங்கள் ஆகியவற்றில் பணத்தைக் கொட்டியும் புதிய அரசின் வலுவைக் குறைக்க அவர்கள் வற்புறுத்தினர். சிவாஜியின் பின் மரபினர் காலங்களில் அவர்கள் இதனுடன் அமையாது, அரசரைக் குடியிலும் இன்பங்களிலும் ஈடுபடுத்தித் தாமே ஆட்சி நலங்களைச் சூறையாடினர். ஆட்சியை இவ்விளம் பேரரசின் சார்பில் கைக்கொண்ட அமைச்சர்களே பேஷ்வாக்கள் எனப்பட்டனர். பேஷ்வாக்களின் ஆட்சியின்போது மராட்டியப்பேரரசு பாமனிப் பேரரசைப் போலவே சிந்தியா, ஹோல்கார், பரோடா, கெய்க்வார், பான்ஸ்லே ஆகிய ஐந்து அரசுகளாகப் பிரிந்தன. இவைகளும் வலுவுடையவையாகவே இருந்தன. ஆயினும் அவை அமைச்சர்களின் அரசியல் சூழ்ச்சிகளால் ஒற்றுமை நாட்டும் வலுவிழந்து ஆங்கிலேயர் ஆட்சிக்கு ஒவ்வொன்றாக இரையாயின. கருநாடகப் போர்கள் ஆங்கில ஆட்சி தென்னாடு முழுவதும் பரவக்காரணமா யிருந்த நிகழ்ச்சிகள் கருநாடகப் போர்களேயாகும். பெயரளவில் இது தென்னாட்டு அரசர்களின் அரசுரிமைப் போராட்ட மாயிருந்தது. ஆனால், ஆங்கிலேயரும், ஃபிரஞ்சுக்காரரும் இருபுறமும் இருந்து அதைத் தங்கள் ஆதிக்கப்போராகத் திருப்பினர். ஃபிரஞ்சுக்காரரிடம் இப்போது டியூப்ளே என்ற ஒப்பற்ற வீர அரசியல் தலைவன் இருந்தான். அவன் தமிழரைப் படைவீரராகப் பயிற்றுவித்துப் போர் வெற்றி காண முயன்றான். ஆங்கிலேயர் அரசியல் சூழ்ச்சிகளில் வல்லவர். அவர்களிடையே புதிதாய் எழுந்த வீரத்தலைவன் கிளைவ் டியூப்ளேயின் முறைகளை அவனைவிடத் திறமையாகக் கையாண்டான். அத்துடன் ஆங்கில அரசியலார் இன்னோருண்மையை நன்கறிந்து கொண்டனர். தென்னாட்டு அமைச்சர், மற்ற அரசியல் சூதாடிகள் ஆகியவர்கள் உதவி மிகவும் பயன்படுவது என்பதை அவர்கள் கண்டுகொண்டனர். போர்ச்சுக்கீசியர் முதலிய தொடக்க கால வெள்ளையர் தங்கள் சமயத்தைப் பரப்ப எடுத்துக் கொண்ட முயற்சியைவிட, தென்னாட்டுச் சமயத்தையே ஆட்டிப்படைத்த புரோகிதர்களைத் தம் வயப்படுத்துவது அரசியலில் மிக்க பயன் தரும் என்று அவர்கள் கண்டனர். இக்காரணங்களால் ஃப்ரஞ்சு ஆதிக்கம் தாண்டி ஆங்கிலேயர் ஆதிக்கம் விரைவில் பரந்தது. மதுரை நாயக்க மரபில் இறுதியில் நடைபெற்ற அரசுரிமைப் பூசலைப் பயன்படுத்தி ஆர்க்காட்டை ஆண்ட இஸ்லாமிய அரசன் மதுரையைக் கைக்கொண்டான். ஆனால், மதுரையை வெல்ல அனுப்பப்பட்ட சந்தாசாகீபு அவ்வரசன் உறவினன். அவன் மதுரையைத் தன் தனியாட்சியாக்க முற்பட்டான். தில்லிப் பேரரசின் உரிமைப்படி ஆர்க்காட்டு அரசனின் மேலாளாக அமைந்தவன் நிஜாம் அரசன். அவன் 1740-ல் தன் ஆளான அன்வருதீன் என்பவனை ஆர்க்காட்டு அரசனாக்கினான். சந்தா சாகிபு அவனை ஆம்பூர் போரில் எதிர்த்துக் கொன்றான். அத்துடன் நிஜாம் இறந்தவுடன் அந்த ஆட்சிக்கும் தன் ஆட்பேரை அனுப்பத் துணிந்தான். நிஜாம், ஆர்க்காடு இரண்டும் அவன் வசமாயின. சந்தா சாகிபுக்கு ஃபிரஞ்சுக்காரர் உடந்தையாயிருந்தனர். தமிழகம் முழுதும் அவன் கைப்பட்டது. இதை உணர்ந்த ஆங்கிலேயர் நிஜாமில் எதிர் உரிமையாளரையும் ஆர்க்காட்டில் பழைய அரசனின் மகன் மகமதலியையும் ஆதரித்தனர். கிளைவின் வீரத்தாலும் அரசியல் திறத்தாலும் மகமதலி வெற்றிபெற்றான். தமிழக முழுவதும் ஆங்கிலேயர் வசப்பட்டது. ஆயினும் மகமதலி மூலமாகவே ஆட்சி நடைபெற்றது. தென்னாட்டிலிருந்து ஆங்கிலேயரை ஒழிக்க ஹைதரும் திப்புவும் திட்டமிட்டனர். ஆனால், மூன்றாம் மைசூர்ப்போர், நான்காம் மைசூர்ப் போர் என்ற இரண்டு மைசூர்ப் போர்களின் பின் திப்பு அழிந்துவிட்டான். அதன்பின் திப்புவுடன் தொடர்பு கொண்டிருந்ததாகக் குற்றாஞ்சாட்டப்பட்டு மகமதலியிடமிருந்து நாடு கைப்பற்றப்பட்டது. பாஞ்சாலங் குறிச்சிப் புரட்சி சந்தாசாகிபு மதுரையைக் கைப்பற்றியிருந்தாலும் அவன் ஆட்சி தென்பாண்டி நாட்டில் முழுதும் எட்டவில்லை. மகமதலியின் பெயரால் அவன் மீது ஆதிக்கம் செலுத்த ஆங்கிலேயர் முற்பட்டனர். தளவாய் அரியநாத முதலியாரின் மரபில் வந்த சில பெருங்குடிமக்களையும் திருவாங்கூர் அரசரையும் வேறு சில சிற்றரசர்களையும் அவர்கள் வசப் படுத்தினர். சிற்றரசர்க்குச் சிற்றரசர் இருந்த பகைமை இதை எளிதாக்கிற்று. ஆனால், பாண்டிய மரபின் பெயரையும் குருதியையும் வீரத்தையும் தமதாக்கியிருந்த பாஞ்சாலங் குறிச்சித் தலைவர் கட்ட பொம்மனும் அவன் துணைவர், உறவினரான ஊமைத்துரை முதலியவர்களும் கிளர்ந்தெழுந்து வீரப் போராற்றினர். தற்காலப் படைக்கலங்களும் வெளிநாட்டு ஆதிக்க வாய்ப்பும் பெற்றிருந்தும், அவர்களை அடக்கி ஒழிக்கப் பிரிட்டிஷாருக்குப் பல ஆண்டுகள் பிடித்தன. கடைசிப் போராட்டங்கள் 1798-ல் தொடங்கி 1801-லேயே முடிவுற்றன. ஆங்கில ஆட்சியை எதிர்த்த தென்னாட்டுப் போர்கள் மைசூர்ப் போராட்டமும் பாஞ்சாலங் குறிச்சிப் போராட்டமும் மட்டுமேயாகும். முன்னது ஒரு தென்னாட்டு மன்னனின் கடைசி விடுதலைப்போர். பின்னது தென்னாட்டு மக்களின் முதல் விடுதலைப்போர். சிந்து கங்கை வெளியில் ஆங்கில ஆட்சி விரிந்தபின் இவ்விரண்டு போர்களின் எதிரொலியாக 1857-ல் அப்பகுதியின் முதல் விடுதலைப் போரில் ஆங்கிலேயேர் பெற்ற அனுபவத்தால், பின் வந்த அந்தப் போரை அவர்கள் எளிதில் அடக்க முடிந்தது. தென்னாட்டில் ஆங்கில ஆட்சியின் கீழ்ச் சிற்றரசாக விடப் பட்ட நாட்டரசர்கள் பாஞ்சாலங் குறிச்சிப் போரில் ஆங்கில ஆட்சிக்கு உடந்தையாயிருந்தவர்களும், மைசூர்ப் போரில் கலவா திருந்த பழைய மன்னர் மரபோருமேயாவர். சிந்து வெளியிலும் 1857 விடுதலைப் போரில் கலவாமல் அதற்கெதிராயிருந்த நாட்டரசர்களே நீடித்தனர். 1857-க்குப் பின் தென்னாடும் சிந்துகங்கை வெளியும் ஒரே ஆங்கில ஆட்சியின் கீழ் வந்தன. பலுசிஸ்தான், பர்மா, இலங்கை, ஆகியவைகளும் ஏடன், அந்தமான் போன்ற கடல் கடந்த இடங்களும் அவற்றுடன் சேர்ந்து ஆங்கில அல்லது பிரிட்டிஷ் இந்தியப் பேரரசு என்று அழைக்கப்பட்டன. அண்மைக்கால இலக்கியம் அண்மைக்காலம் தமிழ் இலக்கியம் மூன்று புதிய துறைகளாகப் பரந்தது. 12ஆம் நூற்றாண்டில் மெய்கண்டாரும் அவர் பின்வந்த அறிவுத் துறைச் சமய ஆசிரியர்களும் சைவசித்தாந்தக் கருத்துக்களை மெய் நூல்களாக வகுத்தனர். பழைய பக்தித் துறை ஆசிரியர்கள் அல்லது சமயாசிரியர்களால் பாடல் பெற்ற திருப்பதிகங்களும் பிறவும் இப்போது தலபுராணங்களுக்கு உரியவை ஆயின. இலக்கியத்தின் இன்னொரு துறையாகப் பழைய இலக்கியங்களுக்கு உரை நடையில் விளக்கங்கள் எழுதப்பட்டன. சில உரைகள் பல்லவ பாண்டியர் காலத்திலும் சோழ பாண்டியர் காலத்திலும் எழுந்தனவாயினும், பெரும்பாலான உரையாசிரியர்களின் காலம் 12-முதல் 14ஆம் நூற்றாண்டு வரையிலுமேயாகும். இவை தற்கால உரைநடை இலக்கியத்துக்கு முன்னோடிகளாயின. மூன்றாம் இலக்கியத்துறை, மக்கள் இலக்கியமாகும். அறிவுத் துறையில் இவை சித்தர்களின் ஞானப் பாடலாகவும், மருத்துவம் முதலிய நூல் துறைகளாவும், கலைத்துறையில் பண்டைக்காலப் பாணரின் புதிய பதிப்பான கவிராயர் பாடல்களாகவும் வளர்ச்சியுற்றன. தெலுங்கு இலக்கியத்தின் மிகப்பெரும் பகுதியும் மலையாள இலக்கியத்தின் மிகச் சிறந்த பகுதியும் இக்காலத்தனவே. விசய நகர ஆட்சிக்குப் பின் தெலுங்கு நாட்டுக்கு வெளியிலேயே தெலுங்கு நாடக இலக்கியமும் உரைநடை இலக்கியமும் பேரளவில் வளர்ச்சி யடைந்தன. மலையாளத்தில் 16ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இலக்கியம் திருவாங்கூரில் தமிழ்க் காவியங்களைப் பின்பற்றிய இலக்கியமாகவும், வடமலையாளத்தில் (மலபாரில்) மக்கள் நாடோடிப் பாடல்களாகவும் நிலவின. 16ஆம் நூற்றாண்டில் அரசியல் குழப்ப நிலைகளுக்கிடையே சமய, கலை, இலக்கிய இயக்கம் உண்டு பண்ணிய மக்கட் கவிஞனான எழுத்தச்சனால் மலையாள இலக்கியம் புதியதொரு கிளர்ச்சி பெற்றது. குஞ்சன் நம்பியார் அவரை அடுத்து இலக்கியத்தை இன்னும் பொதுமக்கள் உடைமை ஆக்கினார். கன்னட இலக்கியம் இக்காலத்தில் பக்தி இயக்கச் சார்பாகத் திரிந்து மலையாள இலக்கியத்துடன் ஒன்றுபட்டது. 7. தற்காலம் (19-20ஆம் நூற்றாண்டுகள்) பதினாயிரக்கணக்கான ஆண்டு நாகரிகம் வளர்த்து, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தன்னாண்மையுடன் கடல் கடந்து வாணிகமும் செங்கோலும் ஓங்கியது தென்னாடு. ஆனால், வேற்றுமைகள் வளர்ந்து, ஒற்றுமை தவறிக் கெட்டு, போட்டி பொறாமை, தன்னலம், அடிமை மனப்பான்மை ஆகியவை மலிந்த ஓர் இடைவேளையில் அயலினம், அயல்நாடு, அயல்நெறி தென்னாட்டில் கால்வைக்க இடம் பெற்றது. தென்னாட்டையே தளமாக்கி அது கீழையுலகில் படர்ந்து அதில் ஒரு பேரரசை ஏற்படுத்திற்று. அதுவே பிரிட்டிஷ் இந்தியப் பேரரசு. ஆனால், தென்னாட்டின் பேரரசுகளில் பேரரசின் ஆட்சிக் காலத்துக்கு மேற்பட அது கீழ்நாட்டில் நிலவ முடியவில்லை. பிரிட்டிஷ் இந்தியப் பேரரசு 1857 வரை பிரிட்டிஷ் வாணிகக் கழகமே ஆண்டது. 1856 லிருந்து 1947 வரை வாணிகக் கழகத்தின் ஆட்சி முடியாட்சியாக மாறி, கீழை உலகில் ஓர் இந்தியப் பேரரசை அமைத்தது. இவ்வரசி னுள் தென்னாடு மட்டுமன்றி, சிந்து, கங்கை சமவெளியும் பர்மாவும் பலுசிஸ்தானும், அந்தமான் முதலிய கடல் கடந்த தீவுகளும் ஏடன் போன்ற கடல் கடந்த துறைமுகத் தளங்களும் அடங்கியிருந்தன. சோழப் பேரரசைப் போலவே கடல் கடந்த பேரரசாக பிரிட்டிஷ் பேரரசும், அதன் ஒரு நடுநாயகப் பெரும் பகுதியாக இந்தியப் பேரரசும் நிலவின. சோழருக்கு முற்றிலும் தலைவணங்க மறுத்த வணங்கா முடிப் பாண்டிய மரபினர்; பாண்டியருக்கு அடங்காது திமிறியெழுந்து தலைதூக்கி நின்ற சோழ மரபினர்; செந்தமிழ்ப் புலவோருக்குப் பரிசில் தருவதில் முந்துற்று நின்ற சேர மறவர்; தமிழகம் தளர்ந்த போதும் தளராது நின்ற கருநாடகப் பெருமக்கள்; இரட்டைப் பாய்மரக் கப்பலோட்டி அதையே தம் நாணயங்களில் சின்னமாகப் பொறித்த ஆந்திரப் பேரரசின் வழிவந்த கடலோடித் தெலுங்கர் ஆகிய அத்தனைபேரும், நுகத்தடியில் பூட்டப் பெற்ற சிங்கம் புலி கரடிகள் போல நூறாண்டுகள் அடங்கிக் கிடந்தனர். ஆனால், இவ்வடக்கம் முற்றிலும் வீண்போகவில்லை. தன்னாண்மை, விடுதலை ஆகியவை வீரத்தின் சின்னங்கள் மட்டுமல்ல, ஒற்றுமையின் சின்னங்கள் என்பதைத் தென்னாட்டு மக்கள் அறிய இவ்வடக்கம் பெரிதளவு உதவியுள்ளது. தென்னாட்டவர் வீரமும், பொருளும், அறிவும் பிரிட்டிஷ் ஆட்சியினருக்குச் சிந்து கங்கை வெளியையும் அது கடந்து பிறகு கீழுலகப் பகுதிகளையும் தம் ஆட்சிக்குட்படுத்தப் பேருதவியா யிருந்தன. அத்துடன், இதுவரை கடல் கடந்த வாணிகத்தாலும், ஆட்சியாலும், தொழில் வளத்தாலும் தென்னாட்டில் உலகின் பெரும்பகுதி தங்கம் வந்து குவிந்து கிடந்தது. தென்னாட்டைச் சூழ்ந்துள்ள நாடுகளில் தென்னாடு உலகின் தலை சிறந்த வாணிகக் களத்தையும் தோற்றுவித்திருந்தது. இவ்விரண்டின் உதவியால் உலகின் ஒரு மூலையிலிருந்த பிரிட்டன் உலகின் தொழில் களமாய், வாணிக மூலதனமாய், செல்வச் செருக்குமிக்க கடற்பேரரசாக வளர முடிந்தது. தென்னாட்டின் தலைசிறந்த வாழ்வு முன்பு கீழை உலகத்தை வளர்த்தது போல, பிரிட்டனின் தலைசிறந்த வாழ்வு மேலை உலகத்தை வளர்த்தது. ஆயினும் பிரிட்டிஷ் ஆட்சியால் ஏற்பட்ட தீங்குகள் தற்காலிக மானவை மட்டுமே. அதன் நலன்கள் நிலையானவை வலிமை மிக்க பேரரசுகளை எதிர்த்து வெற்றி கண்ட வீரன் சிவாஜி, அவ்வெற்றியின் முடிவில் அறிந்த பெரும் படிப்பினையைத் தென்னாடு பிரிட்டிஷ் ஆட்சியிலேயே முதல் தடவையாகக் கண்டுணர்ந்தது. புறப்பகையை வெல்லப் பயன்படும் வீரம் உட்பகையை வெல்லப் பயன்படாது என்பதே அந்தப் படிப்பினை! வேற்றுமை, அடிமை மனப்பான்மை, தன்னலப் போட்டி, பொறாமை ஆகியவை அயலாட்சியின் பயனாக ஏற்படுபவை என்பதைவிட, அதை வருந்தி வரவழைக்கும் மூலகாரணங்கள் என்பதே பொருத்தமானது. கல்வியறிவிலும் அரசியல் வாழ்விலும் மக்களில் ஒரு சிறு பகுதியினரே ஈடுபட்டிருக்கும் எந்த நாடும் நீண்ட நாள் தன்னாட்சி யுடன் இருக்க முடியாது; தன்னாட்சியுடன் இருக்கும் காலத்திலும் தன் நாகரிகத்தைப் பிறருக்கு வழங்க முடியுமேயன்றித் தனக்குப் பயன்படுத்த முடியாது. மக்கள் விடுதலை ஆர்வம் பிரிட்டிஷ் ஆட்சியில் தென்னாட்டு மக்களிடையே அறிவு எல்லா வகுப்பினரிடையேயும் ஓரளவேனும் பரந்தது. அரசியலில் மக்களின் எல்லாப் பகுதியினரும் படிப்படியாக இடம் பெற்றனர். விடுதலையார்வம் முன்போல் ஆள்பவர் விடுதலையார்வமாக இராமல், முதன் முதலாக மக்கள் விடுதலை ஆர்வமாகத் தொடங்கிற்று. அவ்வார்வத்தை வ.உ.சிதம்பரனார், பெரியார் ஈ.வெ.ரா., திரு.வி.கலியாணசுந்தரனார், கலையறிஞர் சி.என்.அண்ணாத் துரை, சக்ரவர்த்தி சி. இராசகோபாலச்சாரியார், ஆகிய தென்னாட்டுத் தலைவர்களும், தென்னாடு கடந்த மாநிலத்தில் பாலகங்காதர திலகர், மகாத்மா காந்தி, வங்கச் சிங்கம் தலைவர் பெருந்தகை போஸ், பண்டித ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்களும் விடுதலைப் பேரியக்கமாக வளர்த்து, பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க உதவினர். தென்னாட்டுத் தேசிய வாழ்வை அவர்கள் விட்ட இடத்திலிருந்து மேற்கொண்டு முன்னேறத் தென்னாட்டு மக்கள் இனி பாடுபடவேண்டும். சமூக சீர்த்திருத்த இயக்கங்கள் தமிழகத்தில் சித்தர்கள் மக்களுக்குச் சமய அறிவோடு சமூகச் சீர்த்திருத்த அறிவையும், பகுத்தறிவையும் புகட்ட அரும்பாடு பட்டனர். மலையாள நாட்டில் குஞ்சன் நம்பியாரும், கன்னட நாட்டில், சர்வஞ்ஞரும், தெலுங்கு நாட்டில் வேமண்ணாரும் இதே அரும்பணியைச் செய்தனர். மராட்டிய நாட்டில் வைணவ இயக்கத்தைப் பரப்பிய ஞானேசுவரர் முதலிய பக்தர்களும் உயர் குடியினரின் பேரெதிர்ப்பையும் பொருட்படுத்தாது இதே பணியை ஆற்றினர். தமிழகத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரை பக்தி இயக்கமும் சமூகச் சீர்திருத்த இயக்கமும் ஒன்றுபட்டு நிலவின என்பதை இராமலிங்க வள்ளலாரின் வரலாறும் பாடல்களும் நன்கு எடுத்துக்காட்டுகின்றன. வங்க நாட்டில் இதே ஒளி இராஜாராம் மோகன்ராயரின் பிரம சமாஜ இயக்கமாகத் தளிர்த்தது. இன்னும் தொலைவில் வடமேற்கில் பாஞ்சாலத்தில் அது தயானந்த சரஸ்சுவதி யின் ஆரிய சமாஜத்தின் உள்ளார்ந்த கருத்துகளாக உலவின. பிரிட்டிஷ் ஆட்சித் தொடக்கத்திற்குள் தென்னாட்டின் பண்டைக்காலக் கல்வி முறைகள் பெரிதும் வீழ்ச்சியடைந் திருந்தன. காஞ்சியிலும் பண்டை வங்கத்திலும் நடைபெற்ற புத்தகாலப் பல்கலைக் கழகங்கள் வரலாற்று ஆராய்ச்சிக்குரியவை யாக ஆகி விட்டன. திண்ணைப் பள்ளிக்கூடங்கள் மட்டுமே நடை பெற்றன. அவற்றுள்ளும் பல வகுப்பினர் நுழையவிடப் படாமல் தென்னாட்டின் மீது பரவிய இடைக்கால அடிமை நாகரிகம் தடுத்தது. இந்நிலையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் கல்வி பரப்பும் வேலையில் மேனாட்டுக் கிறித்துவ சமயப் பெரியார் முனைந்தனர். அவர்கள் முயற்சி போதிய வெற்றியும் கண்டது. பிரிட்டிஷ் அரசியலார் 1858-ன் பின் இதைப் பரப்ப முன் வந்தனர். கல்வி முறை தொடக்கத்தில் கல்வியை எந்த மொழியில் நடத்துவது என்பது பற்றிய வினா எழுந்தது. இந்தியப் பேரரசில் ஆட்சிகள் பல, மொழிகள் பல. மக்கள் பண்பாடுகளும் வகுப்புகளும் பல தரப்பட்ட உயர்வு தாழ்வுடன் உடையன. இந்நிலையில் ஆங்கில மொழியே ஒரே நிலைக் கல்வியைத் தரும் என்று மேனாட்டு அறிஞர்கள் பலர் எண்ணினர். சமயப் பணியாளர்களும் இயல்பாக அம்மொழி யையே பரப்பியிருந்தனர். ஆனால், மேனாட்டாட்சியாளர்கள் தம்மொழியை மக்கள்மீது சுமத்தலாகாது என்று ஒரு சில மேனாட்டு அறிஞர்கள் கருதினார்கள். அறிஞர் இராஜா ராம் மோகன் ராயர் பெருந்தன்மை மிக்கஇவ்ஆங்கில அறிஞர் களின் கருத்துகள் தவறானது என்று வாதாடி, ஆங்கிலத்துக்கே ஆதரவு தேடியிருந்தார். அதன் பயனாக ஆங்கிலமொழிக் கல்வியே மாநிலமெங்கும் பரந்தது. இராஜா ராம்மோகன் ராயர் கருத்து மேலடியாய்ப் பார்த்தால் தேசிய நோக்குக்கு மாறானதென்று தோன்றக்கூடும். ஆனால், உண்மையில் கீழ்நாட்டின் மறுமலர்ச்சி அவர் கருத்தின் பயனாகவே ஏற்பட்டுள்ளது என்பதை நாம் இன்றும் காணலாம். தென்னாட்டு மொழிகளைப்போலப் பண்டை இலக்கிய வளம் பேரரசின் பிற்பகுதிகளில் அன்று இல்லை. பொதுமக்கள் வாழ்வுடன் தொடர்பற்ற சம்ஸ்கிருத மொழி ஒன்றே சிந்து, கங்கை சமவெளியின் இலக்கிய மொழியாக இருந்தது. எனவே கீழ்நாட்டைத் தாண்டி வேகமாக வளர்ந்துவரும் உலக நாகரிகத்தை ஒரு சிறிதாவது எட்டிப் பிடிக்க வடநாட்டுத் தாய்மொழிகளோ சமஸ்கிருதமோ அன்று உதவியிருக்க முடியாது. தென்னாட்டில் கூடத் தமிழ் நீங்கலான மற்றத் தாய்மொழிகளில் பண்டைப் பேரிலக்கியங்கள் பெரிதும் அழிந்துவிட்டன. இந்நிலையில் ஆங்கிலமொழிக் கல்வி மக்களுக்குத் தற்கால உலக நாகரிக ஒளியையும், சமத்துவம், சகோதரத்துவம், சுதந்தரம் ஆகிய உயர்த் தத்துவங்களையும் பரப்பி அறிவுக் கண்ணைத் திறக்கப் பெரிதும் உதவியுள்ளது. புதையுண்ட பழம் பேரிலக்கியங்கள் பண்டைப் புத்த சமண மக்களால் பாதுகாக்கப்பட்டுச் சைவ மடங்களில் உறங்கிக் கிடந்த சங்க இலக்கியங்களின் எச்சமிச்சங்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே வெளிவந்துள்ளன. தமிழகத்துக்கு வெளியே அறிஞர் உலகம் அவற்றை இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே காணத் தொடங்கியுள்ளது. ஆங்கில மூலம் கிடைத்த பகுத்தறிவு இப்பெரும் பேரிலக்கியத்தின் பண்பறிந்து முன்னேறத் தமிழகத்துக்கு உணர்வூட்ட வல்லது. ஆந்திர நாட்டில் அறிஞர் சி.ஆர். ரெட்டி போன்ற பெரியார் தெலுங்கிலும் புதையுண்ட பழம்பேரிலக்கியங்களைத் தேடி வெளியிட்டுள்ளனர். ஒருவேளை வருங்காலத்தில் இன்று நமக்குக் கிடைத்துள்ளதைவிடப் பழைமையான, இடைக்கால அடிமை இலக்கியங்களுக்கு முற்பட்ட, பேரிலக்கியங்கள் தமிழிலும் பிற தென்னாட்டு மொழிகளிலும் கிடைத்தல் கூடும். தென்னாட்டவர் தம் நாட்டின் மெய்யான பண்பையும் உள்ளுரத்தையும் உணர்ந்து மேனாடுகளை எட்டிப்பிடிக்க அவை மேலும் தூண்டக்கூடும். இந்திய தேசிய நாட்டாண்மைக் கழகம் பிரிட்டிஷ் ஆட்சியிலேயே தூங்கிக்கிடந்த தென்னாட்டு மக்களின் குடியாட்சிப் பண்புகள் தட்டி எழுப்பப்பட்டன. சிறுநிலத் தன்னாட்சி நிலையங்கள் நிறுவப்பட்டதுடன் பெருநில (ளுவயவந) மன்றங்களிலும் நடுமன்றங்களிலும் படிப்படியாக தேர்வுமுறை, பேராண்மை ஆட்சிமுறை (சுநயீசநளநவேயவiஎந ஆநவாடினள டிக ழுடிஎநசnஅநவே) மெள்ள மெள்ளப் புகுந்தன. மக்களிடையே இவற்றைக் கையாள் வதற்குரிய அரசியலறிவை வளர்ப்பதற்காகத் தென்னாட்டறிஞர் பலரும் மற்ற நாட்டறிஞரும் ஆங்கில அறிஞரும் சேர்ந்து 1885-ல் இந்திய தேசிய நாட்டாண்மைக் கழகம் (ஐனேயைn சூயவiடியேட ஊடிபேசநளள) என்று ஒரு மாபெரும் பேரவையை தோற்றுவித்தனர். தோற்று வித்தவர்கள் நோக்க எல்லையிலேயே அது 1907 வரையில் நின்று மன்னரும் பெருஞ்செல்வரும் நிறைந்த மாநாடுகளைக் கூட்டிற்று. கங்கை வெளியின் கீழ்கோடியிலுள்ள வங்கமும் தென்னாட்டின் தென்கோடியிலுள்ள தமிழகமும் 1907-ல் மண்கீண்டெழும் ஒரே செடியின் இருமுறைகள் போலக் கிளர்ந்தெழுந்தன. ஒருமொழி பேசிய வங்கத்தை இரண்டுபடுத்த முனைந்த பிரிட்டிஷ் ஆட்சி முதல்வன் கர்சானை நோக்கிக் கர்ச்சனை புரிந்தது வங்கம். வங்கக் கடலில் வங்கத்தை மிதக்கவிட்டு வங்கப்போர் புரிந்தது தமிழகம். வங்கக் குரலும் பாஞ்சாலங்குறிச்சிக் குரலும் வ.உ.சி.யின் கப்பல் இயக்கமாகவும் தொழிலாளர் இயக்கமாகவும் முழங்கின. சிவாஜியின் குரல் மராட்டியத்தில் திலகர் குரலாக எதிரொலித்தது. கடல் வாணிகம் செய்த தமிழகத்துக்கு இணையாகக் கரை வாணிகம் செய்ய முற்பட்ட கூர்ச்சரமும் மூன்று குரலையும் இணைத்து மகாத்மா காந்தியை அளித்தது. மறமிக்க அரசியலில் வள்ளுவர் அறத்தைக் கலந்து, புதிய அரசியல் போராட்டமுறை வகுத்தார் காந்தியடிகள். அவர் கொடி ஏந்திப் பெரியார் ஈ.வெ.ரா., டாக்டர் வரதராஜுலு நாயுடு, திரு.வி.கலியாணசுந்தரனார், எஸ்.சத்தியமூர்த்தி, சி. இராசகோபாலச்சாரி ஆகியோர் தமிழகத்தின் முழு வலிமை யையும் விடுதலைப் போரில் ஈடுபடுத்தினர். ஆந்திரகேசரி பிரகாசம், நாகேசுவரராவ் பந்துலு ஆகியோர் ஆந்திரத்தில் விடுதலைப் பேரிகை முழங்கினர். பெரியார் ஈ.வெ.ரா., கோளப்பன் முதலியவர்கள் முயற்சிகளால் கேரளமும் கிளர்ந்தெழுந்தது. விடுதலைப் போராட்டங்கள் குடியானவர் புரட்சிகளிலும், குடிசைத் தொழில் இயக்கங் களிலும், சட்டமறுப்புக்களிலும் கருநாடகம் தமிழகத்துடனும், கூர்ச்சரம், பாஞ்சாலம் ஆகிய மண்டலங்களுடனும் போட்டி யிட்டு நின்றது. 1922-ல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கம், 1930-ல் நடைபெற்ற உப்புப்போர் அல்லது சட்டமறுப்பு இயக்கம், 1942-ல் நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியே போ’ என்ற குரல், அதே சமயம் கடல் கடந்து தமிழகத்தில் நின்று தலைவர் பெருந்தகை போஸ் நிகழ்த்திய விடுதலைப் போர்ப்புயல் ஆகிய இத்தனையும் உலக மக்கள் உள்ளத்திலும் உலக அரசியலின் போக்கிலும் பெருத்த மாற்றம் உண்டு பண்ணின. 1947 உலகம் அதற்களித்த மறுமொழி, பிரிட்டிஷ் ஆட்சி விலகிவிட்டது. கீழை உலகின் விடுதலை விளக்குப் பொன்னொளி வீசத் தொடங்கியுள்ளது. தென்னாட்டின் தேசிய விடுதலைக் குரலுக்கு இரண்டு ஓசைகள் உண்டு. ஒன்று புற ஓசை. மற்றொன்று அகஓசை, புறஓசை வெளியாட்சி ஏகவேண்டுமென்பது. அக ஓசை தன்னாட்சி ஏற்படவேண்டுமென்பது. இவற்றுள் ஒன்று நிறை வெய்தியுள்ளது. மற்றது இன்னும் மெய்யான வடிவில் ஏற்படவில்லை. இந்திய மாநில இயக்கம் தோன்றுமுன் இருந்ததைவிட மாநில இயக்கத்தின் பின் மாநிலத்தின் தொழில் நிலை உயர்ந்துள்ளது. அது பிரிட்டனுடன் சிறிது தொலைவில் நின்றாவது போட்டியிடவல்ல தொழிலரசாகவும் வல்லரசாகவும் ஆகியிருக்கிறது. ஆனால், மாநிலத்தின் இந்த முன்னேற்றத்தில், அயலார் படையெடுப்புகளுக்கு வாயிலாயிருந்த சிந்து கங்கைப் பரப்பே பங்கு கொண்டுள்ளது. கீழ்த்திசை நாகரிகத்தின் தூய தாயகமான தென்னாடு அதனின்றும் ஒதுங்கி அதன் நிழலாக, அதன் வளர்ச்சிக்கு இடம் தரும் வாணிகக் களமாக மட்டுமே நிலவுகின்றது. மாநிலத் தேசியக் குரலை எழுப்பியவர்கள் மாநிலமெங்கும் அதை ஆங்கில மொழியிலேயே எழுப்பினர். தாய் மொழிக் குரலை முதன் முதல் எழுப்பியது தென்னாடே. அது மட்டுமன்று. விடுதலை முழக்கத்தையே இலக்கியக் குரலாக, பாரதி, பாரதிதாசன் ஆகிய கவிஞர்களின் கவிதைக் குரலாக எழுப்பியது தமிழகமே. ஆனால், விடுதலைக் குரலை முதலில் எழுப்பிய ஆங்கில மொழியின் இடத்தில் தென்னாட்டு மொழிகளுள் ஒன்றோ, பாரதியாரின் திருமொழியோ இடம் பெறவில்லை; தென்னாட்டுக் கப்பாலுள்ள பரந்துபட்ட ஒரு பண்பிலா மொழியே இடம் பெற்று வருகின்றது. சமஸ்கிருத இலக்கியத்துக்கு முன்பே தமிழகத்தில் முத்தமிழ் இலக்கண இலக்கியமும் முத்தமிழ் கலையும் உண்டு. ஆனால், சமஸ்கிருதத்துக்கே வழிகாட்டிய தமிழ் இலக்கியத்துக்கு மாநிலப் பல்கலைக் கழகங்களில் இடம் இல்லை; அதன் நிழலாக நிலவிய சமஸ்கிருத இலக்கியத்துக்கே இடம் தரப்பட்டுள்ளது. தென்னாடு எழுப்பிய விடுதலை முழக்கத்தின் புற ஓசையுடன் மாநிலம் நிறைவடைகின்றது. ஆனால், அக ஓசையைத் தென்னாடு எழுப்பியுள்ளது; எழுப்புகிறது. தென்னாட்டு அகவிடுதலை வரலாறு வ.உ. சிதம்பரனார் புற விடுதலையைக் கனவு கண்ட அதே நாளிலேயே, அகவிடுதலையைக் கனவு கண்டார் மற்றொரு தமிழகப் பெரியார் டாக்டர் சி.நடேசனார், தென்னாட்டின் தூய பழம்பெரும் நாகரிகத்தை வளர்க்க அவர் 1912-ல் திராவிட சங்கம் அமைத்தார். புற விடுதலையை மட்டுமன்றி அக விடுதலையை - ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய பண்புகளை உடைய தென்னாட்டுத் தேசிய விடுதலையை எழுப்ப அவர் முனைந்தார். 1916-ல் அது நேர்மைக் கட்சியாகவும், பெரியார் ஈ.வெ.ராவின் தலைமையில் 1925-ல் தன்மான இயக்கமாகவும், 1944-ல் திராவிடர் கழகமாகவும் 1949-ல் கலையறிஞர் சி.என். அண்ணாத்துரையின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகமாகவும் மலர்ச்சியுற்று வந்துள்ளது. புறவிடுதலைக் கனவு கண்டு அதனுள் அகவிடுதலையைக் குழைத்த பாரதியாரைப் போல, அகவிடுதலைக் கனவு கண்டு அதில் புதிய நாட்டு விடுதலையாகிய புற விடுதலையைக் குழைத்துத் தந்துள்ளார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். நாடு என்ற சொல் பண்டு மிகக் குறுகிய ஒரு சிறிய எல்லை யையே குறித்தது. நாடு கடந்து பண்பாடு மட்டுமே வளர்ந்தது. ஆனால், அரசியல் எல்லை பண்பாட்டெல்லையை எட்டிப் பிடிக்குந் தோறும் நாடு என்ற சொல்லும் விரிந்த எல்லையைக் குறித்தது. பறம்புநாடு, எய்மாநாடு என்பவை பாரி முதலிய வேளிர் ஆண்ட எல்லையைக் குறித்தன. சேரநாடு, சோழ நாடு, பாண்டிநாடு என்பன அரசர் நீடித்து ஆண்ட எல்லையாயின. இந்த எல்லைகளும் வரவர விரிவுற்றன. ஆனால், மொழி எல்லையில் வந்தபின் நாட்டெல்லையின் வளர்ச்சியில் ஒரு புது மாறுதல் ஏற்பட்டது. புற எல்லை விரிவையிட அக எல்லையின் ஆழம் மிகுதி ஆற்றல் தரும் என்ற உண்மை உணரப்பட்டது. ஆகவே மொழி எல்லையில் நின்று நாடுகள் தம் எல்லையுட் பட்ட மக்கள் வாழ்வின் உயர்வு தாழ்வுகளை வேறுபாடுகளைக் களைந்து ஒன்றுபட்ட வலு நாடிற்று. ஒவ்வொரு நாடும் அகலுலக ஒற்றுமைக்கு அடிப்படை யான உறுதியான ஒரு தளமாக வளர்ந்தது. மொழி கடந்த ஒற்றுமை அருமையானது; ஆனால், அது முடியாத ஒன்றல்ல. அது மொழியின் தன்னாட்சி அடிப்படை யான கூட்டுறவாட்சியாய் இருக்கவேண்டும். அத்துடன் சரிசமத்துவமும் நேசமும் உடையதாய் உறுப்பினரின் மனமார்ந்த தங்குதடையற்ற விருப்பத்தின் மீதமைந்ததாய் இருக்கவேண்டும். இத்தகைய மொழி கடந்த கூட்டரசின் ஒற்றுமை, உலக ஒற்றுமைக்கு அடி கோலுவதாய் அமையும். இன்றைய உலகம் மொழி கடந்து, இனம் கடந்து, எல்லைக் கோடுகள் கடந்து பண்பாட்டில் வேகமாக முன்னேறி வருகிறது. ஆயினும் மொழிமீது மொழி ஆட்சி செய்கிறது, மொழிக்கு மொழி உயர்வு தாழ்வு இருக்கின்றது. அதேநிலை இனங்களுக் கிடையிலும் எல்லைக் கோடுகளுக்கிடையிலும் இருக்கிறது. செல்வ உயர்வு தாழ்வுகள் நாகரிகங்குன்றிய பண்டை நாட்களை விட இன்று மிகுதி. அத்துடன் நாகரிகங்குன்றிய நாடுகளை விட நாகரிகமிக்க நாடுகள் என்று கூறப்படுவனவற்றில்தான் இது மிகுதி. இந்த நிலைகளை மாற்றினாலன்றி, மாற்ற வழிகாட்டும் ஒரு புதிய நாகரிகம் தோற்றினாலன்றி, ஓர் உலகம் என்பது பழைய ஏகாதிபத்தியவாதிகளின் புதியகுரலாகுமேயன்றி வேறன்று. வழிகாட்டும் தென்னாட்டு நாகரிகம் இதற்கு வழிகாட்ட வல்லது தென்னாட்டு நாகரிகம் ஒன்றே-ஆனால், உலகின் எல்லாப் பெரியாரும் இதே வழியைக் காட்டி யுள்ளனர். உயர்ந்தவன் உயர்வுக்கு உறைகல். அவன் தன் உயர்வுக்குப் பாடுபடாமல் பிறர் உயர்வுக்கு, தாழ்ந்தவர் உயர்வுக்குப் பாடுபடவேண்டும். என்பதே. உரிமையில் சமத்துவம் வேண்டும், ஆனால், கடமையில் உயர்ந்தோர், தாழ்ந்தவர்களுக்குத் தம் உரிமையை விட்டுக்கொடுக்க வேண்டும். இயேசுவும், முகம்மதுவும், புத்தரும், மகாவீரரும், மகாத்மா காந்தியும், டால்ஸ்டாயும், ரோமேன் ரோலந்தும், இராமலிங்க வள்ளலாரும் கண்ட கனவு இது-இதுவே வள்ளுவர் எல்லாருக்கும் முற்படக் கண்ட நனவு. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு தென்னாடு தான் ஒற்றுமை வளர்த்து, சமத்துவ அடிப்படை யில், உயர்ந்தவர் தாழ்ந்தவர்க்கு விட்டுக்கொடுத்து உழைக்கும் கட்டுப்பாட்டு அடிப்படையில், சாதி மத இனவேறுபாடும் உயர்வு தாழ்வும் அற்ற பண்பாட்டின் அடிப்படையில் ஒரு புதிய தேசிய இனமாக ஆர்வம் கொண்டுள்ளது. அறிவுடைய உலகம் அதனை ஆதரிப்பது உறுதி. ஏனெனில் அது உலகுக்கு வழிகாட்டியாகும். அதை அடையும் வகையில் உலகின் வேறெந்த இலக்கியத்தையும் விடத் தூய தனித்தமிழ் இலக்கியமாகிய தொல்காப்பியமும் திருக்குறளும் மற்றச் சங்க இலக்கியங்களும் உதவும். மேனாட்டு இலக்கியமும் இதற்கு உறுதுணையாகும். கீழ்நாடுகளின் மற்ற இலக்கியங்கள் - இடைக்காலத் தமிழ் இலக்கியம் உட்பட - இவற்றின் பேருதவியால் புதுப்பிக்கப்படத் தக்கவையேயாகும். கதிரவன் மேற்கு நோக்கிச் செல்கிறான், சாய்கிறான். அவன் கிழக்கே திரும்பவும் எழுவது திண்ணம். அவன் வடக்குநோக்கிச் சாய்கிறான். அவன் தெற்கு நோக்காதிருக்க முடியாது. ஏனெனில் அதுவே கதிரவனின் சமன் செய்யும் ஏம முறை. தமிழகம் உயர்ந்தி ருந்தது. ஆனால், அது இச்சம நெறியைப் போதிய அளவு பேணவில்லை. ஆகவேதான் உயர்ந்தது தாழ்ந்தது. தாழ்ந்தது உயர்ந்தது. கதிரவன் வழியையும் இயற்கையின் வழியையும் கண்டு தமிழகமும் தென்னாடும் தம்நலம் பேண உலக நலமும் உலக நலம் பேணத் தம்நலமும் வளர்ப்பனவாக! பண்டைப் பெருமையினின்று இன்றையப் பொதுமையும் நாளையப் புதுமையும் ததும்பத் தென்னாட்டவராகிய நாம் பாடுபடுவோமாக! ந்ந்ந் இதுதான் திராவிட நாடு முதற் பதிப்பு – 1956 இந்நூல் 1958 இல் பாரி அச்சகம், சென்னை - 1, வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. 1. காலங்கடந்த நாடு கிழக்கு கீழ் நிலம், தாழ் நிலம் - கோதாவரியும் கருணையும், காவிரியும் பொருநையும், பாலாறும் வைகையும் வங்கக் கடல் சென்று விழும் திசை! மேற்கில் மேலே, வானோக்கி உயர்ந்த மேலை மலைத் தொடரளாவி அது கடந்து அரபிக்கடல்வரை அது பரந்திருந்தது. வடக்கு வண்மையுடன் விந்த மலைக் காடுகளும் கடத்தற்கரும் மேட்டு நிலங்களும் உடைய விரிந்த எல்லை! தெற்கு தென்னுதற்கு உதவும் நெம்புகோல்போல, நுணுகி ஒரு முனையாய்க் குமரியில் சென்று நிற்பது! மொழியிலே, தமிழ் மொழியில் திசைகளுக்கு அமைந்த சொற்களிலே எல்லை காட்டி, மொழி எல்லையே இன எல்லையாக, இன எல்லையே நாட்டெல்லையாக, நாட்டெல்லையே பண்பாட்டின் அக எல்லையாகக் கொண்ட நானிலம், ஐந்திணை அளாவிய முழு நிலம் பண்டைத் தமிழகம், இன்றைய தென்னாடு - அதுதான் திராவிடம்! கங்கை சிந்துவெளிகள் நிலவுலகில் தோன்றுவதற்குப் பல்லாயிர ஆண்டுகளுக்கு முன், அந்த ஆறுகளும் அவற்றுக்குரிய பிறப்பிடமான இமயமலைத் தொடரும் கடலாக அலைபாய்ந்து கொண்டிருந்த காலத்தில் இன்றைய ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களே உருவாவதற்கு முன், மனிதனும் மனித நாகரிகமும் முதலில் பிறந்த கன்னி மாநிலம் இது! இயற்கையின் முதல் நிலவுலகக் குழந்தை, உலகுடன் பிறந்து உலகுடன் வாழும் நிலவுலக மையம், நாகரிகத்தின் பிறப்பிடம், வளர்ப்புப்பண்ணை, சேமகலம் - திராவிடப் பெருங்குடி மக்கள் வாழும் இத்திருவிடமே! நிலவுலகம் இன்றைய வடிவமடைந்த பின்னும், இன்று உலகில் வாழும் நாடுகள், இனங்கள், மொழிகள் பிறக்குமுன், அவற்றின் பெயரை வரலாறு அறிவதற்கு நெடுநாள் முன்னரே வளம் பெற்றுப் புகழ் நிறுவி மாண்ட இனங்கள் பல. அந்த மாண்ட இனங்களுக்குமுன் பிறந்து, அம்மாண்ட இனங்களுடன், அவற்றின் பல தலைமுறைகளுடன் கூடிக் குலாவி, அவற்றுடன் கலைத்தொடர்பும் வாணிகத்தொடர்பும், குடியேற்றத் தொடர்பும், அரசியல் சமுதாயத் தொடர்பும், நாகரிகத் தொடர்பும் கொண்டு பின் அம்மாண்ட இனங்கள் அழிந்த பின்னும் அவற்றின் தூதராகி இன்றைய உலகின் புதிய இனங்களிடையேயும் பொன்றாது வாழும் காலங்கடந்த கடவுள் நிலம் இதுவே! இன்று நிலவும் இனங்களின் வாழ்வு கடந்தும் வருங்கால உலகின் அவாவாய் இன்னும் காலங்கடந்து, உலகின் கனவார்வங்களைத் தன் கருவில் கொண்டு பேணும் கருநிலமாய் இயங்கும் எழிலார்ந்த தாய்நிலம் இவ்வாழ் நிலமே எனலாம். 2. மேலைத் தொடர்பு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிலவுலகாண்ட உலகப் பெரும் பேரரசு உரோமகம். அதன் மாமன்னர்களும் மணிமுடி தாங்கிய அரசியரும், இளங்கோக்களும், நாகரிக உயர்குடி நங்கையரும் தமிழகத்தின் முத்துக்களுக்கு, பொன் அணி மணிகளுக்கு, மெல்லிய ஆடைகளுக்கு, மணச்சுவைப் பொருள்களுக்கு ஏங்கித் தவம் கிடந்தனர். அவற்றைப் பெறத் தம் பேரரசின் பெருந்திறைச் செல்வம் முழுதும், தம் தம்பட்ட சாலையில் அடித்த பொன்னாணயங்களத்தனையையும் புதிது புதிதாகக் கொட்டி யளந்தனர். அவர்களுக்குமுன் ஆயிரம் ஆண்டுகளாகக் கலை யாட்சி செய்த யவனர் அல்லது கிரேக்கர் தமிழகத்திலிருந்து அரிசியும், சர்க்கரையும், அகிலும் சந்தனமும், தேக்கும் யானைத் தந்தமும் பெற்று, இப் பொருள்களுக்குரிய தமிழ்ப் பெயர்களையே அவற்றுக்குரிய பெயர்களாகத் தம் மொழியிலும் மேலை மொழிகளிலும் வழங்கச் செய்துள்ளனர்! பெண்களே வீரராகவும் ஆட்சியாளர்களாகவும் விளங்கிய கன்னி நாடு ‘தமிரிகா’ என்று அவர்கள் தமிழகத்தைப் போற்றினர். அக்கால நாகரிக உலகின் மையமாய், வாணிகக்களமாய், கீழையுலகின் கலங்களும் மேலையுலகின் கலங்களும் வந்துகூடும் உலகக் கடல் தளமாய் விளங்கிய மரக்காணம், மல்லை, பொதுசா அல்லது புதுச்சேரி என்னும் பாண்டிச்சேரி, காவிரிப் பூம்பட்டினம், சோழன் தொண்டி, கொற்கை, மேல் கரை முசிறி (தற்காலத் தென் கன்னட மாவட்டத்திலுள்ள மங்களூர்) முதலிய துறைமுகங்களைப் பற்றியும், அவற்றின் வளங்களைப் பற்றியும் கிரேக்க வரலாற்று ஆசிரியரும் நில நூல் ஆசிரியரும் பலபடப் புகழ்ந்து பாராட்டி யுள்ளனர். யவன வீரரும் வட ஆரிய எழில் நங்கையரும் புத்தாக்கம் தேடி இப் புகழ்நில வேந்தரான சேர சோழ பாண்டியரிடமும் குறுநில மன்னரிடமும் அரண் காவலராகவும், மனை காவலராகவும், ஏவலராகவும் பணிநங்கையராகவும் இடம்பெற்று வாழ்ந்தனர். யவன உரோமப் பேரரசர் பாண்டியருடன் தூதுறவும் நேச உடன்படிக்கையும் கொண்டு தம் வலிமையைப் பெருக்கினர். உரோம கிரேக்க நாகரிகங்கள் பிறப்பதற்கு ஆயிர மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மேலையுலக நாகரிகத்தின் தலையூற்றாய் அமைந்த நாடு எகிப்து. அந்நாட்டவர்கள் தம் நாகரிகத்தின் மூல உயிர் நிலம் ‘பண்ட்’ என்று போற்றினர். இது பாண்டி நாடே என்பர் திராவிட ஒப்பியல் மொழி நூலின் தந்தையாகிய நல்லாயர் கால்டுவெல். அப் ‘பண்ட்’ நிலம் பொன்விளையும் நாடு என்றும், அதில் அந்நாளைய பெருந்துறைமுகம் ‘ஓபிர்’ என்றும் அவர்கள் தம் ஏடுகளில் குறித்தனர். இத் துறைமுகம் திருநெல்வேலி மாவட்டத்தி லுள்ள ‘உவரி’யே என்றும் நல்லாயர் கால்டுவெல் கருத்துரைத்தார். மூவாயிர, நாலாயிர ஆண்டுகளுக்கு முற்பட்ட அந்நாட் களிலிருந்தே, இன்றைய கோலாறும் குடகு நாடும், காவிரி அல்லது பொன்னிக் கரையும், வைகைக் கரையும் பொன் விளையும் நிலங்களாய் இருந்தன என்பதைச் சங்க இலக்கியங்களும் சிந்து வெளி நாகரிகச் சின்னங்களும் குறித்துக் காட்டுகின்றன. திப்புசுல்தான் காலம்வரை இப்பொன் வளத்துக்காகவே குடகு நாட்டையும் கைக்கொள்ளப் பல தென்னாட்டு அரசர்கள் கடும் போரிட்டுள்ளார்கள். அசோகன்கூட இப்பொன்னுக்கு ஆசைப்பட்டே தெற்கே படையெடுப்புகள் பல நடத்தித் தோல்வியுற்று, அத் தோல்விகளின் அவமதிப்பை மறைக்கவே புத்தமதஞ் சார்ந்து துறவு பூண்டானென்று வரலாறு கூறுகின்றது. எகிப்தியருடன் பழமையிலும் பெருமையிலும் போட்டியிட்டுக் கடலாட்சியிலும் நாகரிகத்திலும் அவர்களை நெடுந் தொலை விஞ்சி நின்றவர் பினீசியரும், யூதரும், சால்டியாரும், சுமேரியரும், ஏலமியரும், சிந்துவெளி மக்களும் ஆவர். அவர்களனைவருடனும் நாலாயிர, ஐயாயிர ஆண்டுகளுக்கு முன்னிருந்தே வாணிகத் தொடர்பும், குடியேற்றத் தொடர்பும் கொண்டிருந்தனர் தமிழர்! சுமேரிய, சிந்துவெளி நகரங்களில் தமிழரும், தமிழ் வணிகரும் கடலோடிகளும் உலவினர். அந்நாடுகளின் நாணயங்கள் தமிழகத்திலும், தமிழகத் தங்கம் அந்நாடுகளிலும் காணப்படுகின்றன. தேக்கு, சந்தனம், யானைத் தந்தம், மணப் பொருள்கள், குரங்குகள் முதலியவற்றைத் தமிழகம் அந் நாடுகளுக்கு அனுப்பியதாக அறிகிறோம். அது மட்டுமன்று; புதுக்கற்கால நாகரிகத்திலேயே அவ்வெல்லா நாகரிகங்களும் நிலவிய அத்தொல்பழங்காலத்திலே, தமிழகம் மட்டும் தங்கச்சுரங்கம் மட்டுமன்றி, இரும்புச் சுரங்கங்களும் அகழ்ந்து, இரும்புக் கருவிகளும் வழங்கத் தொடங்கியிருந்ததாக அறிகிறோம். அறவுருவான காந்தியார் போற்றிய கீழ்திசையின் பழஞ் செல்வங்களான கைத்தறியும் இராட்டினமும் நெசவுத் தொழிலும் உழவும் பழங்காலத்திலேயே - இருபதினாயிரம் நாற்பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே - தமிழகத்தில் வழங்கின என்பதை மைசூர் இராயலசீமா பகுதிகளில் கல் நிலங்களில் அகழ்ந்து காணப்படும் கல்லறை மாடங்கள் காட்டுகின்றன. 3. கீழை உலகத் தொடர்புகள் இம் மேல்திசைத் தொடர்புகளுக்குப் பழமையிலோ பெரு மையிலோ பிற்பட்டனவல்ல கீழ்திசைத் தொடர்புகள். தமிழ் மொழியே இவற்றையும் குறித்துக் காட்டுகிறது. சங்க இலக்கியமும், சிலம்பு மேகலைகளும், தொல்காப் பியமும் காட்டுகின்றன, இரண்டாயிரத்தைந்நூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகத்தின் தென்எல்லை குமரிமுனையல்ல என்பதை! திருந்திய புகழ் பேசப்பட்ட தமிழ் நல்உலகு அல்லது செந்தமிழ் நிலமே வடக்கே வேங்கட முதல் தெற்கே குமரியாறு வரை பரந்து கிடந்தது என்று அறிகிறோம். செந்தமிழகத்திற்கு வடக்கேயும் தமிழகம் விந்தம்வரை பரவியிருந்தது போல, குமரியாற்றுக்குத் தெற்கேயும் தமிழகம் பரவியிருந்தது! ஏனெனில், பாண்டியர் தலைநகரமே குமரியாற்றுக்குத் தெற்கே, பாண்டியன் வெட்டித் திருத்திய பண்டைப் புத்தாறாகிய பஃறுளி ஆற்றின் கரையில் - தமிழ்ப் பெயரையே கொண்ட ஆற்றின் கரையில் - இருந்தது. நகரின் பெயர் இன்றைய மதுரையின் பெயரே. இன்றைய மதுரை வடமதுரை என்றும், அது தென்மதுரை என்றும் வழங்கின. பழைய தமிழகத்தில் இன்றைய இலங்கை ஒரு பகுதி. இதை யவன உரோமர் குறிப்புகளே சுட்டிக்காட்டுகின்றன. தமிழகத்தில் ஓடும் தாமிரபரணி - தண் பொருநை - அன்று இலங்கை வழியாக ஓடிற்று. இலங்கையில் அது ஓடிய படுகையையும் விழும் இடத்தையும் இன்றும் காணலாம் என்று பலர் கூறியுள்ளனர். செந்தமிழ் பேசும் மக்கள் பழைய செந்தமிழ் நாட்டெல்லையாகிய இப் பகுதிவரை இன்றும் வாழ்கின்றனர். ஈழத்துத் தமிழ்ப் பெரும்புலவர் யாழ் நூல் இயற்றிய விபுலானந்த அடிகள் பிறந்த ஊர் பண்டைச் செந்தமிழ் மாநிலத்தின் இத்தென்கீழ்க் கோடியிலேயே உள்ளது. கொங்கு - ஈழம் இந்த இரண்டு சொல்லுக்கும் தமிழில் பொன் என்ற பொருள் உண்டு. பொன்னாறே பொன்னியாகிய காவிரி! வடபெண்ணை, தென்பெண்ணை - வடவெள்ளாறு, தென்வெள்ளாறுபோல, பண்டு வடபொன்னி, தென்பொன்னி ஆறுகள் இருந்திருக்கலாமோ என்றுகூடக் கருதலாம். ஏனெனில் இலங்கையில் இடைக்காலத்தில் சோழர் எழுப்பிய தலைநகரம் பொலன்னரு வாவிலும் ஈழம் என்ற இச் சொல்லின் பொருள் தொனிக்கிறது. இரு பொன்னிகளும் ஓடிய நிலங்களின் பெயர்களும் இதற்கேற்ப ஒருமையுடையவையாய் இருக்கின்றன. காவிரிக்கு வடக்கிலுள்ள தமிழகம் பண்டு அருவா என்றும் மாவிலங்கை என்றும் அழைக்கப்பட்டிருந்தது. ஈழம் தென் அருவா அல்லது பொன் அருவா அல்லது பொலன் அருவாவாகவும், தென்னிலங்கை அல்லது சிறு இலங்கையாகவும் பெயர் பெற்றிருத்தல் இயல்பு. பழந்தமிழ் நாகரிகம் பல திசையில் கெடாது பேணும் மலையாள மக்களுக்கும், இலங்கை வாழ் தமிழர் மட்டுமின்றி இலங்கை வாழ் சிங்களவருக்கும் பல ஒப்புமைகள் மொழியில், பழக்க வழக்கங்களில், பண்பாட்டில் இன்றும் காணப்படுகின்றன. இவற்றை நாம் தென்கிழக்காசியா எங்குமே காணலாம். தாம் வானவர் மரபினர், சிங்க மரபினர் என்ற வழிவழிக் கதைகள், பண்டைத் தமிழர் சங்க காலம்வரை வழங்கியிருந்த வண்ணப் பூவாடைகள், தலைமுடியின் ஐம்பால் சிங்காரிப்பு, பெண்கள் மண உரிமை, கைகால்களுக்குச் சாயம் தோய்த்தல், கண்ணுக்கு மையிடல், முகமூடியும் கவசமுமிட்ட நடன நாடக அரங்குகள், கோயில் வகைகள் ஆகியவை இவற்றுள் சில. மலையாளம் என்ற பெயரிலுள்ள மலை மாலத் தீவிலும், மலாயாவிலும், சுமாத்ராத் தீவின் பழைய நகரமான மலையூரிலும் இடம் பெற்றிருக்கின்றன. தமிழகத்தில் உள்ள ஊர்ப்பெயர்கள், மரபுப் பெயர்கள், ஆற்றுப் பெயர்கள் தென்கிழக்காசியாவெங்கும் கடல் கடந்து, சாவா, போர்னியோ, செலிபிஸ் தீவுகள்வரை காணப்படுகின்றன. பண்டைச் சப்பானிய எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களின் திரிபே என்று சப்பானிய பழமையாராய்ச்சியாளர் குறித்துள்ளனர். சேர நாட்டவரையும் திபெத்தியரையும் போலவே, சீனர் தம்மை வானவர் என்று குறித்துக் கொண்டனர். இம் மூன்று நாடுகளிலும், சப்பானிலும் உள்ள கோயில்கள், நாடகங்கள் ஆகியவற்றின் ஒப்புமைகள் வரலாற்றுக் காலத் தொடர்பு கடந்தவை. இன்று சீனர் மங்கோலிய இனத்தவர் என்று எப்படியோ கருதப்பட்டு வருவதனால், சீனரின் தென் கிழக்காசியத் தொடர்பு மறக்கப்பட்டு, மறைக்கப்பட்டு வருகிறது. ஆனால், சீனரே வட சீனத்தின் மீது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் படை எடுத்துச் சூறையாடிய மங்கோலியக் காட்டுமிராண்டிகளை வெறுத்தனர். அவர்களைத் தடுத்து நிறுத்துவதற்காக அவர்கள் கட்டிய நாலாயிரம் கல் நீளமுடைய கோட்டை, ‘நெடுமதில்’ என்று இன்றளவும் உலக அதிசயங்களில் ஒன்றாகப் பாராட்டப்படுகிறது. மங்கோலியரும் அவ்வினத்த வரான மஞ்சூரியரும் குடியேறி வாழ்ந்த பகுதி இன்றும் மங்கோலியா, மஞ்சூரியா என்று குறிக்கப்படுகின்றது. தென்சீனம், இன்றைய வடமங்கோலிய மஞ்சூரியப் பகுதிகளிலும் பழமை வாய்ந்த நாகரிகமுடைய தென்பதையும், அதுவே உண்மைச் சீனம், பண்டிருந்து நாகரிகம் வளர்த்த சீனம் என்பதையும் இது காட்டுகிறது. தமிழ், தமிழின நாகரிகங்களுடன் இனத் தொடர்பும் நாகரிகத் தொடர்பும் தொல் பழங்கால வரலாற்றுத் தொடர்பும் மிக்க பகுதி இது. பண்டைத் தமிழரும், மலாய் மக்களும் கடலோடிகளாய் இருந்தனர். பிரிட்டன் உலகில் ஒரு பெருங்கடலரசாக வளர்ந்த காலம் 19ஆம் நூற்றாண்டேயாகும். அதுவரை உலகின் கடற் பேரரசுகளாகவும் வாணிகப் பேரரசுகளாகவும் நிலவியவர்கள் இவர்களே. மேற்கே நடுநிலக்கடல் நாடுகளில் பரவிய ‘திரையர்’ பண்டைத் திராவிட இனத்தவரே என்று திருத்தந்தை ஹீராஸ் குறிப்பிடுகிறார். அதுபோல அவர்கள் கிழக்கேயும் சீனம், சப்பான் கடந்து நெடுந்தொலை கடல் கடந்தும் கடலோரமாகவும் பரவியி ருந்தனர். அமெரிக்கப் பழங்குடி மக்களைப்பற்றி ஆராய்பவர்கள் அக் கண்டத்தின் பழம்பெரு நாகரிகங்களான மய, இங்கா, பெருவிய இனங்கள் திராவிட இனத்துடனும் தென்கிழக்காசிய நாகரிகத்துடனும் மிகப் பழந்தொடர்புடையவை என்று குறித்துள்ளனர். வெற்றிலை, பாக்கு, சுண்ணக் கலவை இத் தொடர்புக்குரிய ஒரு சின்னம் என்று அவர்கள் கருதுகின்றனர். இங்ஙனம் விந்தமுதல் குமரிவரை மொழியின வாழ்வு பெருக்கி, மேற்கும் கிழக்கும் பண்டை நாகரிக உலகெங்கணும் பண்பு பரப்பிய உலகின் தலை மாநிலமே திராவிட நாடு. 4. வாழ்வும் வீழ்வும் கதிரவன் வழிபாடு, நாக வணக்கம், உழவுத் தொழில், நெற்பயிர் விளைவு, பருத்தி நூற்றல், நெசவு, ஆநிரை பயிர்ப்பு முதலிய பண்புகளை உலகெங்கும் பரப்பிய ஒரு தொல் பழங்காலப் பேரினம் இருந்ததென்று, ‘கதிரவன் சேய்கள்’ என்ற பழமை யாராய்ச்சி நூலில் டபிள்யூ. ஜே. பெரி என்ற அறிஞர் விரித்து விளக்குகிறார். எகிப்தியரும், தென்னாட்டவரும் இவ்வினத்தின் இரு பெருங்கிளைகள் என்று அவர் கருதுகிறார். ‘உலக வரலாறு’ இயற்றிய எச். ஜி. வெல்ஸ் என்பார், மேற்கிலும் கிழக்கிலு மட்டுமன்றி, வடக்கிலும் தெற்கிலும்கூடக் கிட்டத்தட்ட நாகரிக உலகெங்குமே தமிழினத்துடன் தொடர்புடைய ஒரு பழம் பேரினம் பரவியிருந்ததென்றும், மற்ற உலகப் பகுதிகளில் அது பின் வந்த பல இனங்களுடன் கலந்துவிட்டாலும், கிட்டத்தட்டத் தனிப் பண்புடன் தென்னாட்டில் இன்றுவரை உயிர் வளர்ச்சி பெற்று வருகிறதென்றும் தெரிவிக்கிறார். மொழிப்பண்பிலும் வானூல், உழவு, நெசவு, கரும்பாலைத் தொழில், இரும்பு, கனிச்சுரங்கத் தொழில், சிற்பம் ஆகியவற்றிலும் இன்றைய மனித நாகரிகம் தொடங்கு முன்பே தமிழினத்தவர் இக்கால உலகம் வியந்து மூக்கில் கை வைக்கும் உயர் வளம் பெற்றிருந்தனர் என்று கில்பர்ட் ஸ்லேட்டர் என்பார், ‘இந்திய நாகரிகத்தில் திராவிடப் பண்பு’ என்ற நூலில் குறித்துள்ளார். இவ்வாறு பண்டைப் பழங்காலத்திலிருந்தே வாழ்ந்த மா நிலம், நாகரிகம் தோற்றுவித்து வளர்த்து, உலகில் பண்பும் கலையும் பரப்பி வழிகாட்டி உலகாண்ட நாடு திராவிடம். இன்னும் உலகாள, உலகின் மறுமலர்ச்சி தூண்டிப் புத்துலகம் ஆக்க, புதுவாழ்வு காணத் துடிக்கும் மறுமலர்ச்சி, புது மலர்ச்சிக் கனவுகளைத் தன்னுள் கருநிலையில் அடக்கிக்கொண்டிருக்கின்ற நாடு அது. ஆனால், தற்போது அது பண்டைப் பெருமையும் இழந்து புதுப்பெருமை அடைவதற்கும் முடியாதபடி விடுதலை தவறிக்கெட்டு, பெயரிழந்து பண்பிழந்து கையும், காலும் கட்டப்பட்டு, மயக்க மருந்துக்கும் நச்சுக் குழல்களுக்கும், ஆட்பட்டு நலியும் நிலையில் உள்ள நிலமாகக் காட்சியளிக்கிறது. வரலாறு அறிந்தவர்கள் வாய்விட்டு அலறக்கூடும். வருங்காலம் அவாவுபவர்கள், உலகவளம் காணத்துடிக்கும் நல்லோர் அங்கலாய்க்கக் கூடும். ஆனால், திராவிடத்தின் இந்நிலை மாற வேண்டுமானால், திராவிட மக்களிடையே இவ் வரலாற்றறிவு, இவ் வருங்கால அவா, உலக அவா எழுப்பப்படுதல் வேண்டும்.அவர்கள் தன்னறிவு, தன்இன அறிவு, தன்னம்பிக்கை ஆகியவை பெற்று உலக வாழ்வில் தங்குதடையற்ற தனிப் பங்கு பெற்றாக வேண்டும். அதாவது திராவிட நாட்டை அந் நாட்டுக்கும், மொழிக்கும், அதன் பண்புக்கும் முரண்பட்ட பண்புருவற்ற இந்தியப் பரப்பிலிருந்து பிரித்து, தனி உரிமை நாடாக, விடுதலைப் பெருவாழ்வுக்குரிய நாடாக விளங்க வழிவகுக்க வேண்டும். இவற்றைக் கிளர்ந்தெழுகின்ற மாபேரியக்கமே திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட இயக்கத்தின் புது மலர்ச்சிப் பூந்துணர், திராவிட இனத்தின் மறுமலர்ச்சிக் கொடி! அது தமிழகம் தன்னுரிமை பெற, தமிழினம் அல்லது திராவிடம் தனிவாழ்வும், தனி ஆட்சியும் மேற்கொள்ள, உலக நாகரிகம் வளர்க்கும் உயர் நாட்டினங்களிடையே திராவிட நாடு தனக்குரிய நற்பங்கு பெற உழைத்து வருகிறது, மக்களை ஊக்கி வருகிறது! விழுந்து கிடக்கும் உருவிலாப் பரப்பிலே, அது பகுத்தறிவுக் கண்கொண்டு கண்டு சுட்டிக்காட்டும் பொன்னுருவே திராவிட நாடு. வரலாற்றின் துணை கொண்டு பண்பும் எல்லையும் விளக்கி, உலக நாகரிகத்தின் போக்கினைத் தீட்டிக்காட்டி உரிமை முழக்க மிட்டு, வருங்கால நோக்கி உயிர்ப்பூட்டி அது எழுப்பிவரும் தேசிய ஆர்வத்துக்குரிய நிலைக்களமே திராவிட நாடு. தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ்ப்பண்பு இவை உயிர்ப் புடன் நிலவி, தங்கு தடையின்றி வளர்ந்து, உலக நாகரிகம் வளர்த்து வந்துள்ள, வளர்க்க இருக்கிற இடமே திராவிட நாடு. இன்று அது இருக்குமிடத்தையே நாம் உலகப் படத்தில் காண முடியாது. அயலினங்களின் உருவிலாப் பரப்பிலே அது முன் இருந்து வாழ்ந்து, கடலுலகும் நிலவுலகும் ஆண்ட தடங்களை மட்டுமே அதில் காணலாம். ஆனால், உலகங் கண்டு தமிழகம் காணா அயலினக் கட்சிகளாகிய கம்யூனிஸ்ட்களும், சோஷலிஸ்ட்களும், உருவிலா நூற்றுக்கணக்கான அயலினப் பரப்பாகிய ‘மீந்த இந்திய யூனியன்’ கண்டு தமிழகம் காணமுடியாத அயலினக் கட்சிகளாகிய காங்கிரசும், பிரஜா சோஷலிஸ்ட் கட்சியும், தமிழரசுக் கட்சியும் ‘எங்கே திராவிட நாடு’ எங்கே திராவிட நாடு’ என்று துடித்து ஏங்குகின்றன. எங்கே வரலாற்றில் காட்டு, சொல்லாராய்ச்சித் தளத்தில் சென்று விளக்கு என்று தலைவர்களுக்கு அறைகூவல் விடுத்து, அறிஞர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி, மக்களை அத் துறையில் விழிப்படையும் படி ஊக்கி வருகின்றன. தெரியாத மக்களுக்கும் தெரிவிக்க உதவும் இவ் அறியாத மக்கள் கேள்விக்குத் திராவிட இயக்கம் நன்றி தெரிவிக்கும் கடப்பாடு உடையதே என்னலாம். 5. வடக்கும் தெற்கும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலம்வரை எவருக்கும் தலை வணங் காமல் உலகில் தனியாட்சி செலுத்திய மாநிலம் திராவிட நாடு. தென்திசை யரசர் வடதிசையில் படையெடுத்து அதை அடிப் படுத்தியதுண்டு. நிலந்தரு திருவிற் பாண்டியன், ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன், இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன், சேரன் செங்குட்டுவன், கரிகாற் சோழன், ஆந்திரப் பெரும் பேரரசர், கலிங்கப் பெரும் பேரரசர், சோழப் பெரும் பேரரசன் இராசேந்திரன் ஆகியோர் வரலாறுகள் இதற்குச் சான்று. ஆனால், வடதிசையரசர், பேரரசர் எவரும் திராவிடத்தின் வட எல்லையில்கூட நெடுங்காலம் விளையாடியதில்லை. அசோகன் கலிங்கம் கடந்ததில்லை, சோழப் பேரரசர் கலிங்கம் கடந்து கங்கையும் கடாரமும் அடிப்படுத்திய துண்டு. கனிஷ்கன் கங்கை கடந்ததில்லை, சேரன் செங்குட்டுவன் கங்கை கடந்து கனகவிசயரை - கல் சுமக்க வைத்தான். ஹர்ஷன் விந்தம் கடந்ததில்லை, ஆனால், விந்தம் கடக்குமுன் தென்னகம் ஆண்ட புலிகேசி ஹர்ஷனையும், தமிழகம் ஆண்ட பல்லவன் நரசிம்மவர்மன் ஹர்ஷனையும், தமிழகம் ஆண்ட பல்லவன் நரசிம்மவர்மன் அந்தப் புலிகேசியையும் வென்று மண் கொண்டனர்! அலாவுதீன் கில்ஜி, முகமது பின் துக்ளக் விந்தம் கடந்த அன்றே தம் பேரரச வாழ்வு இழந்தனர். அவர்கள் வட திசையை எவ்வளவு எளிதில் கீழடக்க முடிந்ததோ, அவ்வளவு எளிதில் விந்த எல்லையையே கடக்க முடியவில்லை. அவுரங்கசீப் காலம்வரை நாலு முகலாயப் பேரரசர் முயற்சிகளின் முடிவு - முகலாயப் பேரரசின் வீழ்ச்சியாகவே முடிந்தது! தென்திசை வடதிசையை வெல்ல - முடிந்தது. வடதிசை தென் திசையை என்றும் அணுக முடிந்ததில்லை. அதுமட்டுமன்று. வட திசையின் வரலாறு ஓயாத அயலினம், அயலரசர் படையெடுப் பாகவே உள்ளது. தென் திசையில் அந்த அயலினத்தவர் நிழலும் படவில்லை. அறவோர் உருவில், புலவோர் உருவில், விருந்தினர் உருவில், இரவலர் உருவில், வணிகர் உருவில் வந்தாலன்றி, தென்திசை அணுகியவர் எவரும் இலர்! ஆரியர், பாரசீகர், கிரேக்கர், குஷாணர், பார்த்தியர், ஊணர், அராபியர், ஆப்கானியர், முகலாயர் முதலிய பல அயலார் படையெடுப்புகளின் வரலாறே வட இந்தியாவின் வரலாறு. திராவிடர் பழம் பண்பாட்டின் சிதைவுடன் அவ் அயலார்களின் அயற் பண்பாடு கலந்த கலவைப் பண்பாடே வட இந்தியப் பண்பாடு என்னும் அவியல்! ஆனால், தென் திசை இந்த இனங்கள் எவற்றின் படையெடுப்புக்கோ, குடியெழுச்சிக்கோ என்றும் ஆட்பட்டதில்லை. அவற்றுடன் சரிசம அடிப்படையில் வாணிக, கலைத் தொடர்பன்றி வேறு தொடர்பு வைத்துக் கொண்டதில்லை. ஆரியத்தை அணைப்பிலும் தமிழின மொழிகள் வீரியம் இழந்ததில்லை. வீரரை இழந்துவிடினும் வீரமரபை இழந்துவிடவில்லை! தென்னகப் பண்பே கீழ்த் திசையின் ஒரே பழந்தேசியப் பண்பாக நின்று நிலவுகிறது. டேரியஸின் பாரசீகப் பேரரசிலும், அலெக்சாண்டரின் கிரேக்கப் பேரரசிலும், கனிஷ்கரின் குஷாணப் பேரரசிலும் தில்லிமா நகரை உட்கொண்ட சிந்து கங்கைப் பெருவெளி ஒரு மாகாணமாய் அடங்கியிருந்ததுண்டு. பார்த்திய பல்லவரும் ஊணரும் அப்பரப்பெங்கும் சூறையாடிப் பேரரசுகளும் சிற்றரசு களும் நிறுவி நூற்றாண்டுக்கணக்காக ஆண்டதுண்டு. ஆப்கானியர், முகலாயர் ஆகிய அயலினத்தவர் பிரிட்டிஷ் ஆட்சிவரை அதைத் தம் வேட்டைக்களமாக்கிக் கொண்டிருந்தனர். வடநாடு அடிமைப் பரப்பாக அல்லல்பட்டுக் கொண்டிருந்த இந்த இரண்டாயிர ஆண்டுக்காலமும், தெற்கே திராவிடம் தனிச் செங்கோல் ஓச்சிக்கொண்டிருந்த காலம் ஆகும். உலகின் குடியேற்றக் களமாக வடதிசை நிலவிய அந்தக் கால முழுவதும், தென்னகம் மேலையுலகையும் கீழையுலகையும் தன் குடியேற்றக் களமாகவும், வாணிகக் களமாகவும் ஆக்கிக் கொண்டிருந்தது. தைமூரும், நாதர்ஷாவும், அகமதுஷா அப்துராணியும் அதைச் சூறையாடிக் கொண்டிருந்த அதேகாலத்தில் தென்னாட்டவர் இலங்கையையும், இந்துமா கடல் தீவங்களையும், தென் கிழக்காசியாவையும் படையெடுத்துச் சென்று திறைகொண்டு வீறுடன் ஆண்டனர். கனவில்கூடக் காளிதாசன் போன்ற சமஸ்கிருதக் கவிஞர்கள் இருகடற்கரைவரை நீண்ட வடதிசைப் பரப்பையே தம் கனவுகளுக்குரிய உச்ச எல்லைப் பெரும் பேரரசின் எல்லை யாகக் கொண்டிருந்தனர். அதையே உலகமாகவும் கருதினர். “மாகடல் அளாவிய மாநில மன்னர்’ - ஆசமுத்ர சஷிதீசாஃ. என்றும், ‘உளது ஒரு மாமலையரசு வடதிசைக்கண் இமயம் வளமுடன் கீழ்மேல் கடல்கள் மூழ்கி இடை உலகம் அளக்கின்ற முழங்கோல் போல் கிடக்கின்ற தந்தோ!’ அஸ்த் யுத்தரஸ்யாம் திசிதேவதாத்மா ஹிமாலயோ நாம நகாதிராஜஃ பூர்வாபரௌ வாரி நிதீ விகாஹ்ய ஸ்திதஃ ப்ருதிவ்யா இவமானதண்டஃ என்றும் அவன் கூறுவது காண்கிறோம். ஆனால், தமிழக அரசரோ இரு கடல் குளித்த தென்னகப் பெருநில அரசரையும் வானிமயத் தருக்கடக்கிய வளர்நிலப் பேரரசையும், கடல்கடந்த கடற் பேரரசையும் வரலாற்றில் கண்டு பாடியுள்ளனர். அதுமட்டு மன்றி முத்தமிழ் நாடுகளான சேர, சோழ, பாண்டிய நாடுகள் மூன்றையும் ஒருங்கே ஆண்ட மன்னரையே மூவுலகாண்ட மன்னரென்றும் அவருள்ளும் எழுகடல் தாண்டிக் கடல்கடந்த உலகாண்ட மன்னரையே ஏழுலகாண்ட மன்னரென்றும் தமிழக வரலாறு காணாத புராணிகரைத் தமிழர் பாட வைத்தனர்! மூவரசருமே இமயத்தில் தமிழ்க்கொடி பொறித்து உலகாண்டவராதலால் மூவரசும் ஆண்டவரை மூவுலக அரசரென்றும், அலை ஏழு கடலை எழு கடலென்றும் உரைத்த தமிழ் வாய்மையைத் தமிழ்க் கற்பனை மாண்புணராத வடவர் அறியாது உழன்றனர், உழல்கின்றனர்! 6. இயற்கை எல்லை நாளைக்கொருவன், வேளைக்கொருவன் - சங்கிலி வரிசையாக முன்வாசலில் மூவர், பின்வாசலில் நால்வர் - இப்படி குடும்பம் நடத்திய ‘வாழ்வரசி’ ஒருத்தி மற்றொருத்தியை - தன் கணவன் வெளியூர் செல்ல விட்டு அடைத்துக்கிடக்கும் ஒரு பெண்ணைப் பார்த்து, ‘அடி வாழாவெட்டி’ என்று அழைத்தாளாம்! இந்தக் கதையை நினைவூட்டுகிறது, திராவிட இன எழுச்சியாளரைப் பார்த்துப் பாரத தேச பக்தர்கள் கேட்கும் கேள்விகள் - ‘எது திராவிட நாடு? திராவிட நாட்டு எல்லைகள் என்ன? திராவிட நாடு பெறமுடியுமா?’ என்பவை. ஏனெனில், திராவிட நாடு பண்டைப் பெருநாடு, உலகின் முதல் தேசிய இனம், என்றும் தனி வாழ்வும் பெருவாழ்வும் வாழ்ந்த பேரினத் தாயகம். ஆனால், இந்திய மாநிலமோ இன்று ஆசியாக் கண்டத்தின் ஒரு பெரும்பகுதியாகிய துணைக்கண்டம், ஒரு குட்டி உலகம். பழங்காலத்திலோ, பழைய புராண கால நில நூலின்படி, உலகின் ஒன்பது கண்டங்களில் அது ஒரு முழுக்கண்டம். இன்னும் பழங்காலப் புராணங்களின்படி, அதுவே ஒன்பது கண்டங்களையும் உள்ளடக்கிய முழு உலகமாய், ஏழு உலகங்கள் அல்லது தீவங்களில் ஒன்றாயிருந்தது. பாரத கண்டத்தை உள்ளடக்கிய பாரத வர்ஷமாகிய அதையே மனித இனம் வாழும் முழு நிலவுலகமாக, உப்புக்கடல் சூழ்ந்த நிலவலயத் தீவமாக மிகப் பழம் புராணங்கள் கற்பனை செய்துள்ளன. மற்ற நிலவலயத் தீவங்கள் அல்லது உலகங்கள் ஆறும் பால்கடலாலும், தயிர்க் கடல், நெய்க் கடல்களாலும் சூழப்பட்டவை - இயக்கர், கந்தருவர், கின்னரர், தேவர் வாழ்பவையாம்! திராவிட நாட்டுக்கு இயற்கை எல்லைகள் உண்டு. மூன்று புறம் கடல், ஒருபுறம், வடக்கே விந்திய மலையும் நடுமேட்டு நிலமும் அவற்றின் கடக்க முடியாக் காடுகளும் நிலவுகின்றன. இன்றைய இருப்புப் பாதைகள்கூட இவ்வெல்லையை இரு கோடிகளிலும்தான் ஓரளவு ஊடுருவிச் செல்கின்றன. நேர்மாறாக இந்திய மாநிலத்துக்கு இம்மாதிரி எல்லைகள் திராவிடநாட்டுக் கமைந்த எல்லையன்றி வேறு கிடையாது. ஏனெனில், திராவிடத்தையும் அப்பரப்பில் சேர்த்துக் கொண்டால்தான் திராவிடத்தின் முப்புற எல்லையாகிய கடல் அதற்கும் எல்லையாக முடியும். இல்லாவிட்டால் திராவிடத்தின் வடஎல்லையே, அதன் தென் எல்லை. வடதிசையில் இமயத்தை அதன் எல்லையாகப் பெருமிதத்துடன் பலர் குறிப்பதுண்டு. ஆனால், அது நேபாளம், பூட்டாணம் ஆகிய நாடுகளுக்கும் எல்லை. இமயத்தின் தெற்கிலுள்ள இந்த நாடுகளும், வடக்கிலுள்ள திபெத்தும் ஓரின நாகரிகத் தொடர்புடையவை. கிழக்கிலோ பர்மா எங்கு தொடங்குகிறது, இந்தியா எங்கு முடிகிறது, என்று கூறமுடியாது. வெள்ளையர் இட்ட கோடுதான் அங்கே எல்லை. கிழக்குப் பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் உள்ள எல்லையோ வெள்ளையரும், வெள்ளையர் காலக் காங்கிரஸ் இந்துத் தலைவர்களும் குருதிப் போரிட்டுப் பேரம் செய்து வெட்டிச் செதுக்கிய கோடேயாகும். மேற்குத் திசையிலும் பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்னே எதுவரை பாரசிகம், எது முதல் இந்தியா என்ற எல்லைவரையறை கிடையாது. வெள்ளையனின் ஏகாதிபத்தியக் கரம் சென்றெட்டிய எல்லை வரையறையே தவிர, வேறு எல்லை இல்லை, அப்பிரிவினைக்குப் பின்னோ இந்து - முஸ்லிம் கலவரங்கள் அமைத்த எல்லையே எல்லை. இந்த எல்லைகள் அரசியல் எல்லைகள் மட்டுமே, நிலவரமான தேசிய எல்லைகள் என்று எவரும் கூறமுடியாது. ஏனெனில், வருங்காலப் போர்கள் ஒவ்வொன்றாலும் இவை மாறுபடத்தக்கவை. இன்றைய பாரதத்தின் எல்லை இன அடிப்படையாக, மொழியடிப்படையாக அமைந்ததன்று. வங்காள மொழி பேசுகிறவர்கள் இந்தியாவிலும், கிழக்குப் பாகிஸ்தானத்திலும் சிதறிக் கிடக்கிறார்கள். பஞ்சாபி மொழி பேசுபவர்கள், சீக்கியர்கள், சிந்தி மொழி பேசுபவர்கள் அது போலவே மேற்கெல்லையில் இரு தேசிய இனங்களிடையே சிதறிக் கிடக்கிறார்கள். பாரதக் கூட்டுறவினுள்ளே வாழும் மக்கள் மொழிவழி, இன வழி, நாகரிகவழி - எவ்வழி பார்த்தாலும் சிறிய பெரிய மொழிகள், மொழியினங்கள், இனக் கூட்டுறவுகளின் கதம்ப கூளங்கள், அவியல் கும்பல்களாகவே உள்ளனர். அதில் தனி நாடு கோரும் திராவிடநாடு போலவே, தனி வாழ்வு கோரும் நாகர் முதலிய பல்வேறு இனத்தினர் விலங்குக் காட்சிசாலையில் அடைபட்டுக் கிடப்பதுபோலக் கிடந்துழல்கின்றனர். இப்பெரும் பரப்பை ஒரு கண்டமென்று சிலரும், கண்டமன்று, ஒரு சிறு உலகம் என்று சிலரும் கூறுவது இதனாலேயே. 7. இயற்கைத் தேசியம் எது? திராவிட நாட்டு எல்லை மட்டுமல்ல, தேசியமும் இயற்கைத் தேசியம். அது மொழியையும், இனத்தையும், நாகரிகத்தையும் வரலாற்றையும் அடிப்படையாகக் கொண்டது. அதில் பேசப்படும் மொழிகள் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய திராவிட மொழிகள். இவை கிட்டத்தட்ட ஒரே மொழி என்று கூறத்தக்க அளவு அடிப்படை ஒற்றுமையும் பொது வரலாற்று, நாகரிக, இனத் தொடர்பும் உடைய மொழிகள். திராவிட நாட்டின் நிலஇயல் எல்லையில், தேசிய எல்லையடுத்து நிலவும் மராத்தி, பீலி, குஜராத்தி, கோண்டு, கூயி, ஒரியா முதலிய மொழிகளில்கூட, கோண்டு ‘பண்படாத் திராவிட மொழி’ என்று வகுக்கப்படுவது. ‘பீலி’ கூட ஆரிய மொழியினம் சாராதது; தமிழக ‘வில்லி’களின் தொடர்புடைய பண்டைப் பெருந்திராவிட இனம் சார்ந்த இனக்கலவை மொழியே. தவிர வரலாற்றுக் காலத்திலேயே மராத்தியும், குஜராத்தியும் திராவிட (நாட்டு) மொழிக் குழுவில் சேர்க்கப்பட்டிருந்தன. அந்த அளவு அவை ஆரிய திராவிடக் கலப்புக்கு ஆளானவை. இவ்வகையாகத் திராவிடத்தின் வடதிசை நிலஎல்லை இயல்பான தேசிய எல்லையாகவும், இயல்பாக வடக்கிலுள்ள ஆரிய இன மொழிகளுடனும் பிற வடதிசை இனங்களுடனும் படிப்படியாகக் கலக்கும் எல்லையாகவுமே இருக்கிறது. திராவிட நாட்டின் தேசிய எல்லை திராவிட நாட்டின் நில எல்லையைப் பார்க்கச் சற்றுக் குறைந்ததே. ஆனாலும் திராவிட இயக்கத் தலைவர்கள் நில எல்லை முழுவதும் கோரவில்லை. ஏனெனில் வடதிசைப் போலித் தேசியத்தைப்போலத் திராவிடத் தேசியம் ஏகாதிபத்திய நோக்கம் கொண்டதன்று. நில ஆதிக்க, இன ஆதிக்க நோக்கம் கொண்டதன்று. துருக்கிய மறுமலர்ச்சித் தந்தையான கமால் பாஷா இஸ்லாமிய எல்லை, துருக்கி நாகரிக எல்லை முழுதும் கோராமல் அவற்றை வேண்டாம் என்று உதறி இனஎல்லையுடன் நின்றது போல, திராவிடத் தலைவர்களும் தம் இன எல்லையுடன் தம் தேசியக் கோரிக்கையை நிறுத்துகின்றனர். உண்மைத் தேசியவாதிகளாகிய அவர்களுக்குத் தெரியும் - இனங்கடந்து பரவுவது தேசிய இனத்துக்கு வலுவன்று, வலிமைக்கேடு என்று! எல்லாம் நாலுகால் உடைய மிருக இனங்கள் தான் என்று கூறிப் பசப்பி ஆட்டையும் புலியையும் பூனையையும், நாயையும், ஓநாயையும் ஒரே கொட்டிலில் அடைக்க விரும்பும் அனைத்திந் தியத் தேசபக்தர்களல்லர் அவர்கள்! வரலாற்று முறையில், அரசியல் முறையில் பார்த்தால், வடதிசை தேசிய எல்லையற்ற ஒரு பரப்பாகவே வெள்ளையர் ஆட்சிவரை இருந்தது. அது என்றும் தனி வாழ்வோ, அயலாரிடமிருந்து பிரித்தறியத்தக்க அரசியல் நாகரிகவாழ்வோ வெள்ளையர் ஆட்சிக்காலம்வரை பெற்றிருந்ததில்லை. மூவாயிர ஆண்டாக அது அடிமையாட்சிப் பரப்பாகவே இருந்து வந்த தென்பதை வரலாறு காட்டுகிறது. ஆனால், அதே சமயம் மூவாயிர ஆண்டாக, வெள்ளையர் வரும்வரை தனி இனமாக, தனிப்பெருஞ் சுதந்திர நாடாகத் திராவிடம் நிலவி வந்தது. வெள்ளையர் ஆட்சியிலே தனி வாழ்வு பெற்ற பல்கூட்டு ஏகாதிபத்தியமாகிய இந்தியப் பரப்புத்தான், அவ்வாட்சிவரை சுதந்திரமாயிருந்து அவ்வெள்ளையராட்சியிலே விடுதலையிழந்த திராவிடத்தை நோக்கி ‘நீ ஒரு நாடா?’ என்று கேட்கிறது. நித்திய கலியாணி, நிதம் நிதம் பலருக்கு மடிவிரித்தவள் ஒருநாள் ஒருவனுக்கு மடி விரித்தவளைப் பார்த்துச் ‘சீ, மானங்கெட்டவளே!’ என்று சீறிய கதையே இது, வேறன்று. 8. கீழ்த்திசையின் இனத் தேசிய மையம் வெள்ளையர் வடதிசை ஆட்சி பெற்று வடவர் துணையால் தென்னகத்தில் பரவவில்லை. நேர்மாறாகத் தென்னக ஆட்சி கைப்பற்றி, தென்னவர் வீரம், தென்னவர் செல்வம் ஆகியவற்றின் துணைகொண்டே தங்கள் ஏகாதிபத்தியத்தை வடக்கே இந்தியா, பாகிஸ்தான் பரப்புகளிலும், ‘பட்டாணிஸ் தான்’ பரப்புகளிலும், பர்மாவிலும், சிங்கப்பூரிலும், இலங்கை யிலும், ஏடனிலும் விரிவுபடுத்தினார்கள். அதுபோலவே, வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்த உயிர்த்தேசியம் ஏடனிலோ, பர்மாவிலோ, சிங்கப்பூரிலோ, இலங்கையிலோ தொடங்கவில்லை. அவற்றில் தேசியம் பரவுவதற்கு முன்னே அவற்றை துண்டித்துவிடத்தான் அவ் ஏகாதிபத்தியம் விரைந்தது. அப்படியும், பிரிந்த பர்மாவும், இலங்கையும் இந்தியா சுதந்திர மடைந்த அன்றே தாமும் சுதந்திரம் அடைந்தன. மலேயாவிலும் தேசிய உணர்ச்சி இந்தியாவிலிருந்து பரவி, அதுவும் இந்தியாவை அடுத்துச் சுதந்திரம் பெற்றுள்ளது. ஆனால், இந்தியாவிலுள்ளே இத்தேசிய ஆர்வம், விடுதலைக் கனல், வடக்கே இந்தியப் பரப்பிலோ, பாகிஸ்தான் பரப்பிலோ, பட்டாணிஸ்தான் பரப்பிலோ தொடங்கவில்லை. தென்னகத்திலேயே வேர்விட்டு வடதிசையில் படர்கொடியாக மட்டுமே பரந்தது. அது பரவாமல் தடுப்பதற்கு வெள்ளை ஏகாதிபத்தியம் துண்டுபடுத்திப் பிரிக்கும் மந்திரத்தை அன்று கண்டுபிடிக்கவில்லை. கனலை விட்டுத் தொலைவில் தங்கள் ஏகாதிபத்தியத் தளத்தை மாற்றியமைக்கவே வெள்ளையர்கள் அன்று முயன்றனர். தென்னகத்தில் 1752இல் ஆர்க்காட்டைக் கைப்பற்றிய பின்தான், வெள்ளையர்கள் வடதிசையில் 1764இல் வங்காளத்தில் வேரூன்றத் தொடங்கினர். அதுவரை வெள்ளையர் மூலபலம், மூலதளம் தெற்கே சென்னையில்தான் இருந்தது. சென்னையே கிட்டத்தட்ட பிரிட்டிஷ் கம்பெனியாட்சியில் இந்தியாவின் தலைமையிடமாகவும் இருந்தது. சென்னை வீரர், சென்னைப் பணம், சென்னையில் அனுபவம் பெற்ற கவர்னர்கள், தளபதிகள், கிளைவ் (ஊடiஎந)ஸர் அயர்கூட் (ளுசை நுலசள ஊடிடிவந) போன்றவர்கள் உதவியாலேயே வங்காளம் வெல்லப்பட்டது. ஆனால், தெற்கே 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே தேசீயக்கனலின் வெப்பம் வெள்ளையரைத் தாக்கியதனால், 1764க்குப்பின், அவர்கள் வங்காளத்தில் கல்கத்தாவைத் தங்கள் தலைநகரம் ஆக்கினார்கள். 1857 வரை அதுவே இந்தியாவின் தலைநகரமாயிருந்தது. ஆனால், தெற்கிலிருந்து பரவிய தேசியக் கனலின் வெப்பு அங்கும் நூறாண்டுகளுக்குள் வெள்ளையரைத் தாக்கத் தொடங்கவே, 1857க்குப்பின் அவர்கள் இந்தியாவின் முழு அடிமைப்பரப்பு, தேசிய ஒளிபரவாத இந்திமொழிப் பரப்பின் கோடியிலுள்ள தில்லியைத் தங்கள் புதிய ஏகாதிபத்திய மூலதளமாக்கிக் கொண்டனர். இந்தியாவின் உள்நாட்டுத் தேசியங்கள், உள்நாட்டுப் பேரரசுகளின் தளங்கள் தென்னாடும், வங்கமுமே. அவற்றை விடுத்து அயல் தேசியங்கள், அயலினப் பேரரசுகளின் மூலதளமாகிய டெல்லிக்குப் போனபின்தான், வெள்ளை ஏகாதிபத்தியம் கீழ்திசையில் எளிதில் தழைக்க முடிந்தது. தில்லி இந்தியாவின் பிடரி, இந்தி அதன் பிடரிமயிர் - இவற்றைப் பிடித்துக் கொண்டால் இந்திய மாநிலத்திலுள்ள இனங்களை எளிதாக அடிமைப்படுத்தி ஆளலாம் என்று தில்லி சென்ற வெள்ளை ஏகாதிபத்தியம் கண்டு கொண்டது. அந்த ஏகாதிபத்தியத்தின் ‘பட்லர்’ பதிப்பான இன்றைய வடதிசைக் குட்டி ஏகாதிபத்தியமும் அதே முறையைக் கைப்பற்றிக் கீழ்திசைத் தேசீய இனங்களை அடக்கியாள முற்பட்டு வருகிறது. இந்திப் பரப்பும் தில்லியும் கீழ்திசை அடிமைக்கள மையங்கள் என்று, வெள்ளை ஏகாதிபத்தியம் கண்டு கொண்டதனால்தான், தன் ஏகாதிபத்திய வாரிசுரிமையைத் தன் அடிமைப் பிள்ளையாகிய தில்லிக்குக் கொடுத்துச் சென்றது. தான் கண்டெடுத்த உள்நாட்டு விதேசி மொழியாகிய இந்தியையும் வளர்த்துவிட்டுச் சென்றுள்ளது. வீரமரபில் நின்ற பிள்ளையாகிய தென்னகத்தை நம்பி வெள்ளையர் அதனிடம் உரிமையை ஒப்படைக்க விரும்பவில்லை. தென்னகம் விடுதலை உரிமை பெற்றால் கீழ்திசை எங்கும் - ஆசியா, ஆப்பிரிக்கா முழுவதும் முன்போல் மீண்டும் புதிய தேசியங்களாகத் தழைத்துப் புது நாகரிகம் வளர்க்க நேர்ந்துவிடும் என்பதையும், கீழ்திசையெங்கும் வெள்ளை ஏகாதிபத்தியங்கள் நடத்தி வரும் சுரண்டலுக்குக் குந்தகம் வந்துவிடும் என்பதையும் வெள்ளையர் அறிந்திருந்தனர். அதே காரணத்தினால்தான் வெள்ளை ஏகாதிபத்தியம், தெற்கே காங்கிரஸ் சார்பில் போர் முழக்கமிட்ட கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரத்தின் வாரிசுகளையோ, காங்கிரசுக்கு வெளியேயிருந்து மிதவாதப் போர்வையில் சமூகப் புரட்சியும் அடிப்படைத் தேசியத் தன்மான ஆர்வமும் வளர்க்கத் துணிந்த நீதிக்கட்சியின் வாரிசுகளையோ முற்றிலும் தமக்கேற்ற அடிமைகளாக, கங்காணி மன்னர்களாக நம்பவில்லை. சுய ஆட்சி என்று கத்திப் பின் சுய ஆட்சியின் சாரம் போதும் என்று விளக்கியும்; பூரண சுதந்திரம் என்று முழக்கிப் பின் பிரிட்டிஷ் மன்னரையே பொதுவரசின் இணைப்புச் சின்னமாகக் கொண்ட குடியரசு வேண்டுமென்று பசப்பியும் இருதிசை மணியங்களாய்த் தேசிய வேடமிட்ட வடதிசை ஏகாதிபத்திய முதலாளித்துவத் தலைவர்களையே நம்பி, அவர்களிடம் கவலையின்றித் தம் உரிமையை ஒப்படைத்தனர். குலைக்கிற நாய் கடிக்காது என்ற வெள்ளையரின் அனுபவ அறிவு வீண் போகவில்லை. இன்று பல்லிழந்த பழைய வெள்ளை ஏகாதிபத்தியமாகிய பிரிட்டனுடனும், புதிதாக அரிசிப்பல் குருத்துவிட்டு வரும் புதிய வெள்ளை ஏகாதிபத்தியமாகிய அமெரிக்காவுடனும் இந்திய உள்நாட்டு ஏகாதிபத்தியம் தன் உரிமை முதலாளிப் பிள்ளை களாகிய டாட்டா பிர்லாக்கள் மூலமாகவும், டி. டி. கே., நேரு போன்றவர்கள் மூலமாகவும் பேரம் செய்து தென்னகத் தேசியத் தையும் அது சூழ்ந்து நிலவும் முதிரா ஆசியத் தேசியங்களையும் பிரித்தாண்டும் சுரண்டியும் கீழ் திசையில் அடிமைப் பயிர் வளர்த்து வருகிறது. வெள்ளை ஏகாதிபத்தியங்கள் எல்லாமே வீழ்ந்துவிட நேர்ந்தால்கூட ஓர் அரை வெள்ளை ஏகாதிபத்தியத்தையாவது அதற்குள் வளர்த்து விட்டுவிடக் கங்கணங் கட்டிக்கொண்டு உழைக்கிறது, அகில இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி! பிரிட்டனின் சண்டிப் பிள்ளையாகிய கிளைவ், அதற்கு ஒரு ஏகாதிபத்தியத் துக்குக் கால்கோள் செய்ததுபோல, அந்நியத் தேசியத்தின் சண்டிப் பிள்ளையாகிய இந்த இன ஏகாதிபத்தியக் கட்சி காங்கிரசும் கனவு காணாத ஒரு வருங்கால ஏகாதிபத்தியத்துக்குக் கால்கோள் விழா வாற்றும் கனவு கண்டு வருகிறது! இந்த ஏகாதிபத்தியத் தத்துப் பிள்ளையாகிய தில்லிதான், சுதந்தர தேசியத்தின் உதயசூரியனாகிய திராவிடத்தைப் பார்த்துக் கேலி செய்கிறது. தொண்டு செய்யும் அடிமை உனக்குச் சுதந்திர நினைவோடா! பண்டு கண்ட துண்டோ? என்று வெள்ளையர், திலகரிடம் கேட்டதாகக் கவி பாரதியார் பாடும் பாணியில், தென்னகத் தலைவரிடம் இந்த குட்டி ஏகாதி பத்தியம் சீறிப் பேசத் துணிந்துள்ளது! அந்தக் குட்டி ஏகாதிபத்தியத்தின் அடிவருடுகிற தன்மானமற்ற, தன் மொழிப்பற்றற்ற, தன் இனப்பற்றற்ற சொத்தைகளும் தம் சொத்தைப் பற்களைக் காட்டிச் சொத்தை வாதங்கள் பேசி வருகின்றன. தம் நொள்ளைக் கண்களை மறந்து திராவிட இன வீறு பெற்ற இளங்காளையர்களையும், வீரத்தாய் இனத்தின் உரிமை நங்கையர்களையும் பார்த்து நொள்ளைக் கண்ணரென்று விதண்டாவாதம் பேசி வருகின்றன. திராவிடம் ஒரு தனி இனம், தனி நாகரிகம் வாய்ந்த தனிநிறை தேசியம். பாரதம் என்று கூறப்படும் இந்தியாவோ, அதில் குறைபட்ட இன்றைய இந்தியக் கூட்டுறவோ தனித் தேசியமன்று என்பது மட்டுமல்ல, தனித் தேசியங்களின் ஒரு கூட்டுறவுகூட அல்ல. திராவிடம் போன்ற ஒரு சில தனித் தேசியங்களையும் தேசியமாக உருவாகாத பெயரில்லாப் பரப்புகளையும் உள்ளடக்கிய ஒரு கதம்ப கூளம் அது! திராவிடம் கீழ்திசையிலுள்ள பழம் பெரு வரலாற்றினங் களுள் ஒன்று - முக்கியமான, நடு நாயகமான ஒன்று. அது கீழ்திசைப் பேரினங்களின் உயிர் மையமான, அவற்றினிடையே மிகப் பழமையும் பெருமையும் வாய்ந்த மூல - முதல் தேசிய இனம். திராவிடத்திற்கு ஓர் உயிர் வரலாறு உண்டு. நாகரிகம், நாகரிக வளர்ச்சி உண்டு. அதில் இடப்பரப்பு வகையிலோ, இன வகையிலோ, மொழி வகையிலோ உயர்வு தாழ்வுகள் கிடையா. அதிலுள்ள இடவேறுபாடுகள், மொழி வேறுபாடுகள்கூட, ஒன்றை ஒன்று நிறைவுபடுத்தும் ஒரே பெருந் தேசியத்தின் உறுப்பு வேறுபாடுகளே. இதற்கு நேர்மாறாக இந்தியக் கூட்டுறவுக்கு, பாகிஸ்தானும் திராவிட நாடும் நீங்கிய இந்தியாவுக்கு, அயலினப் படையெடுப்புக்களின் வரலாறன்றி வரலாறில்லை. இந்தியக் கூட்டுறவின் கீழ் கோடியில், இந்தியாவில் பாதியும் கிழக்குப் பாகிஸ்தானில் பாதியுமாகப் பிரிந்து கிடக்கும் விதேகம் (பீகார்) ஆகிய கீழ் திசைப் பரப்பில் ஆண்ட அசோகனும் சந்திரகுப்தனு மன்றி உள்நாட்டு அரசர்களாக அவர்கள் எவரையும் காட்டமுடியாது. சந்திரகுப்தன், அசோகன் ஆகிய இவ்விருவர்களில்கூட இன்று பாரத பக்தர் பெருமைப்படக் கூடிய அளவில் உலகப் புகழ் நிறுவியவன் அசோகன் மட்டுமே. ஆனால், பாரதத்தின் புராணமும் இதிகாசமும் இந்த அசோகனை அறிந்ததில்லை; அறிந்த அளவில் பெருமைப்படுத்திப் பாராட்டியதுமில்லை. அசோகன் பண்பாட்டைப் பழைய பாரதம் அயல் பண்பாடு, வேண்டாப் பண்பாடாகவே விலக்கி வைத்திருந்தது என்பதை இன்று யாரும் மறக்க முடியாது - மறைத்தே வருகின்றனர்! இந்தியா தவிர மற்ற எல்லா நாகரிக நாடுகளும் வரவேற்ற பண்பாடு, அசோகர் பின்பற்றிய புத்தர் பண்பாடு. இந்தியா என்ற பாரதமோ, பாரதத்தின் வருணாசிரம தருமப் பண்பாடோ, அதற்கு ஆதாரமான பாரதத்தின் பழைய வேதபுராண சுமிருதி இதிகாசங் களோ அப் பண்பாட்டுக்கு மதிப்பளித்தது கிடையாது. இது மட்டுமோ? மெய்யும் பொய்யும் கலந்து கூடப் புராண இதி காசங்கள் பெருமைப்படுத்திய இந்திய - இந்து அரசு அசோகன் அரசன்று, புத்த சமயப் பேரரசரான கனிஷ்கன், ஹர்ஷன் கூட அல்லர் - சந்திரகுப்த விக்கிரமாதித்தன் அரசு மட்டுமே என்பது கவனிக்கத்தக்கது. சமஸ்கிருதமும், சமஸ்கிருத நாகரிகமும் வளர்த்த பேரரசன் அவன் ஒருவனே - அசோகனோ பிறரோ அல்லர். 9. கடலாண்ட இனம் திராவிடம் திராவிடம் பண்டிருந்து பிரிட்டிஷ் ஆட்சிக் காலம்வரை உலகின் செல்வவளமிக்க நாடு. திராவிடர் நாகரிக உலக நாடுக ளெங்கும் சென்று குடியேறியும், வாணிகம் வளர்த்தும் உலகின் குபேர நாடுகளில் முதல் குபேர நாடாகத் தம் மாநிலத்தை வளமாக்கியிருந்தனர். இன்றுபோல் உலகின் வாணிக விலைக்கள மாகத் தென்னாடு என்றும் - அணிமைக் காலம் வரையிலும் - இருந்ததில்லை. தொழிலும் வாணிகமும் பெருக்கி, உலகெங்கும் தன் விலையேறிய சரக்குகளை அனுப்பி, பெருங்களமாக்கி யிருந்தனர். இதற்கேற்ப ஆழ்கடல் கடக்கும் கப்பல்களும் கப்பல் தொழிலும் திராவிடத்திலே செழிப்புற்றிருந்தன. இரண்டாயிர ஆண்டுகளுக்குமுன் இமயம்வரை வென்று பர்மாவையும் தம் ஆட்சிக்குள் கொண்டு வந்திருந்த ஆந்திரப் பேரரசர் ஆழ்கடல் செல்லும் இரு பாய்மரக் கப்பல்களையே தம் நாணயங்களில் வீறுடன் பொறித்திருந்தனர்! இராசேந்திர சோழன் 12ஆம் நூற்றாண்டில் கடாரம் அதாவது தென்கிழக்காசியாவை வென்று ஆண்டது இத்தகைய கப்பல் தொழிலின் உருத்தகு வெற்றிக்கு ஒரு சான்று. 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நீராவிக் கப்பல்கள் புதிதாக உலகில் எழும்வரை உலகின் சிறந்த கப்பல்களும், மிகப் பெருங் கப்பல்களும் தென்னகத்தில் செய்யப்பட்ட திராவிடக் கப்பல்களே. வெள்ளையர் திராவிடத் தச்சர்களைத் தம் நாட்டுக்குக் கொண்டு சென்றுதான், கீழ்திசைக் கப்பல்களை ஆட்கொள்ளும் அளவு தம் கப்பல் படையைப் பெரிதாக்கிக் கொண்டனர் என்பதை, முக்கர்ஜி என்பாரின் “இந்தியக் கப்பல் தொழிலும் கடலோடி வாழ்வும்” என்ற வரலாற்றாராய்ச்சி ஏடு எடுத்துக் காட்டுகிறது. 1840ஆம் ஆண்டு வெள்ளையர் இந்தியாவில் நிறைவேற்றிய ‘கப்பல் தொழில்’ கடல் வாணிகச் சட்ட’மே உலகக் கடல்களில் திராவிடருக்கு இருந்து வந்த இந்த வானுயர் செல்வாக்குக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தது. திராவிடர் வரலாற்றிலும், தமிழிலக்கியம் முழுவதிலுமே தென்னவரின் இக்கடலோடிப் பண்புக்குச் சான்றுகள் ஏராளமாகக் காணலாம். கப்பல் தொழிலைப் போலவே மற்றப் பல்வேறு வகைக் கைத் தொழில்களிலும் - உழவு, நெசவு, பட்டுத் தொழில், சுரங்கத் தொழில், முத்து, மணி, பொன் வெள்ளி சார்ந்த கலைத் தொழில்கள் முதலிய எல்லாத் தொழில்களிலும் திராவிடமே உலகின் மையத் தொழிற்களமாய், உலகின் செய்பொருள் மூலதளமாய் இருந்தது. வெள்ளையர் முதலில் 16-17ஆம் நூற்றாண்டுகளில் இவற்றைத் தம் அரசியல் ஆதிக்கத்தாலும், அதனை அடுத்து 18-19ஆம் நூற்றாண்டுகளில் தமக்குப் புதிதாகக் கிடைத்த இயந்திர சாதனத்தாலும் அழித்த திராவிடத்தின் இத்தொழில் தலைமையும் வாணிகத் தலைமையும் அதன் மீது அரசியலாதிக்கம் செலுத்திய பிரிட்டனுக்குக் கை மாறின. இதனைக் கார்ல்மார்க்ஸ் தம் உலக வரலாற்று விளக்கத்தில் எடுத்துக் காட்டியுள்ளார். இவ்வெல்லா வகைகளிலும் திராவிட நாட்டுக்கும், அதன் இன மரபுக்கும், நாகரிகத்துக்கும் நேர்மாறான இயல்புடையது. திராவிடம் நீங்கிய பாரதத்தின் வடதிசை உருவிலாப் பரப்பு, திராவிடர் பண்டைக் கடலோடி இனங்களில் முதல் இனமாவர்; ஆரியரோ உலகின் பண்படா நாடோடி இனமாய் வாழ்வு தொடங்கி இன்றுவரை கருத்திலும் கனவிலும் கூட அது கடந்து சிந்தனை செலுத்தாதவராய் உள்ளனர். தண்ணீரைக் கண்டால் வாலைக் கால்களுக்கிடையில் சுருட்டிப் பதுங்க வைத்துக் கொண்டு பின்னேறும் ‘நாட்டு நாய்’ போன்றவர்களாகவே அவர்கள் இன்றும் உள்ளனர். தொல்காப்பிய காலத்திலிருந்து தமிழருக்குரிய ‘முந்நீர் வழக்கம்’ அதாவது, கடல் வாணிக மரபினை, ஆரியர்களும் அவர்கள் இலக்கியமும் அறியா. அவர்களின் சுமிருதி ஏடுகள் இதை திராவிடருக்குரிய தகா வழக்கம், ஆரியர் மேற்கொள்ளக் கூடாத பெரும் பழி என்று இதனைக் கண்டித்தன. திராவிடர் கடல் கடந்து வாணிகமும் குடியேற்றமும் கண்டனர். ஆரியரோ கடல் கடந்த வரை - திராவிடரைக்கூடத் தம் சாதி வருணாசிரமக் கோட்டை யிலிருந்து விலக்கி வைக்கச் சட்டம் இயற்றினர். திராவிடப் பேரரசர் உலகெங்கும் கடல் கடந்த பேரரசுகளும் பேரரசத் தொடர்புகளும் கொண்டனர். இரண்டாயிர ஆண்டுகட்கு முற்பட்ட பாண்டியர், உரோமப் பேரரசர் அகஸ்டஸுடன் தூதுத் தொடர்பும் அரசியல் கூட்டுறவும் கொண்டனரென்றால், அதே உறவை 13ஆம் நூற்றாண்டுக்குரிய பாண்டியர், சீனப்புகழ்ப் பேரரசன் குப்ளாகானுடன் மேற்கொண்டிருந்தனர். இவ்விரு கோடிக்கும் இடைப்பட்ட ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கிடையே இதேபோன்ற தொலை உலகத் தொடர்பு பல்லவப் பேரரசருக்கும் சோழப் பேரரசர்க்கும், சாளுக்கியப் பேரரசர்க்கும் இருந்தது. ஆனால், வடதிசையோ நிலப் பேரரசன்றிக் கடற்பேரரசு அறியாதது. கடல் கடந்த எந்த நாட்டின் பெயரும்கூட - இராமாயணம் குறிப்பிடும் புராணக் கற்பனை இலங்கைத் தவிர - வேறு எதுவும் வடதிசை மரபு அறியாதது. புத்த சமயப் பிரசாரம் காரணமாகத் தற்செயலாக அசோகன், ஹர்ஷன் காலங்களில் பிற நாகரிக நாட்டவர் இந்தியாவுடன் கொண்ட தொடர்பன்றி, வடதிசை அரசர் பேரரசர் எத்தொடர்பும் வெளியுலகுடன் நாடியதில்லை. அவர்கள் இலக்கியத்தில் உலகம் என்பது வட இந்தியாவாகவே இருந்தது. தென்னகத்தைக் கூட அவர்கள் அறிந்ததில்லை. அதே சமயம் தமிழர் பண்டுதொட்டே இமய உச்சியில் ஏறித் தமிழ்க்கொடி பொறிக்கும் ஆர்வக் குறிக்கோள் உடையவராய் இருந்தனர் - திரைகடலோடியும் திரவியம் தேடு என்று சிறுவருக்கே போதித்தனர்! 10. கடலாட்சியும் கடற்படையும் ஆரியர் வருவதற்குமுன் திராவிடருக்கு இருந்த கோட்டை கொத்தளங்கள், வீரம் செல்வம், உழவுதொழில் வளங்கள், வாணிக வளம் ஆகியவைபற்றி ஆரிய வேத உபநிடதங்களே ஏராளமாகச் சான்று பகர்கின்றன. ஆரியர் வறுமை வாழ்வு, வீரமற்ற வஞ்சகச் சூழ்ச்சி மரபு, தொழில் வாணிக மீது வெறுப்பு, உழவு மீது வெறுப்பு ஆகியவை இன்னும் ஆரிய வருணாசிரம மரபை உற்று நோக்குவோர்க்கு வெள்ளிடை மலையாக விளங்கும். திராவிட மரபுப்படி உழவுத் தொழிலுக்குரிய வேளாளரும் மற்றத் தொழிலாளரும் வீரமரபினருமே உயர் குடியினராகப் போற்றப்படுகின்றனர். ஆனால், ஆரிய வருண மரபில் அவர்கள் கடைப்பிடிக்கும் கீழ்ப்பட்டவர்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கி. மு. 4ஆம் நூற்றாண்டில் வட திசையில் வாழ்ந்ததாகக் கூறப்படும் தென்னகப் பார்ப்பன அறிஞராகிய சாணக்கியர், தம் காலத்தில் விலையேறிய ஏற்றுமதி என்பதையும், வாணிகத்துக்கும் செல்வ நிலைக்கும் தென்னாடு பேர் போனது என்பதையும், வடதிசை வாணிகம் அத்தகு சிறப்பு ஒரு சிறிதும் அற்றதாக இருந்தது என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். 14ஆம் நூற்றாண்டில் தென்னகம் வந்த வெளிநாட்டு யாத்திரிகரான மார்க்கோ போலோவும் இபன்பதூதாவும் வஸஃவ்வும் இதே நிலை அணிமைக் காலத்திலும் இருந்ததாகக் குறிப்பிடுகின்றனர். செல்வ வளமும் அரசியலாற்றலும் மிகுந்த தென்னகத்தைப் பெரிய இந்தியா என்றும், அது குன்றிய வடதிசையைச் ‘சிறுமை இந்தியா’ என்றும் அவர்கள் குறிப்பிட்டுக் காட்டியுள்ளனர். விசயநகரப் பேரரசர் நீங்கலாகத் தென்னக அரசர், பேரரசர் யாவருக்கும் இருந்த கடற்படை வடதிசை அரசர்கள், பேரரசர்கள் எவரும் - அசோகன் முதல் அவுரங்கசீப் வரை எவருமே - அறியாத ஒன்று. உண்மையில் வடதிசைப் பரப்பு நில எல்லையில்கூட வீரமரபு பேணாது, நடு ஆசியாவின் பண்படாக்குடிகளின் குடியெழுச்சிகளுக்கும் படை யெழுச்சிகளுக்கும் வாயில் திறந்து வைத்து, தான் கெட்டதுடன் நில்லாது தென்னகத்தின் வீரமரபிலும் கடல் மரபிலும் சமயப் போர்வையில் புகுந்து கேடு சூழ்ந்தது. அதன் பயனாகவே கடைசித் தென்னகப் பேரரசரான விசய நகரப் பேரரசரும் 16-17ஆம் நூற்றாண்டுத் தென்னகமும் பழைய வீர மரபு கடல் மரபு இரண்டும் பெரிதளவு மறந்து வெள்ளையர் கடல்வழி வரவுக்கு இடந்தர நேர்ந்தது என்னலாம். தென்னகத் தேசியத்தில் கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம் இம்மரபு புதுப்பிக்க எண்ணியும், வடதிசைப் போலித் தேசியம் அவர் பண்பையும் மறைத்துப் பெயரையும் இருட்டடித்து வருவது தமிழர்கள் அனைவரும் அறிந்ததே யாகும். 11. கீழ்த்திசை நாகரிக ஒற்றுமை தென்னகத்தின் நிழலே ‘திராவிடநாடு எது, எங்கே’ என்ற கேள்வி இவ்வாறாக ஒரு புதிய தேசியம் பற்றிய பழைய தேசியத்தின் கேள்வியல்ல. ஒரு பழம்பெரும் தேசியம் பற்றிய ஒரு புதிய, இன்னும் உருவாகாத, என்றும் உருவாக முடியாத ஒரு போலித் தேசியத்தின் கேள்வியேயாகும். உண்மையில் கேள்வி கேட்பவர் உள்ளத்தில் நிழலுருவாக ஊசலாடும் போலி ஒற்றுமைக் குறிக்கோள், போலித் தேசியக் குறிக்கோள்கூடத் திராவிட நாட்டின் ஒற்றுமையின் ஒருவிரிந்த நிழலேயன்றி வேறன்று. இன்று இந்தியாவில் காணப்படும் பரந்த ஒற்றுமை போன்றதே ஐரோப்பாவின் ஒற்றுமை. அது ஐரோப்பாவின் ஒற்றுமையைவிட மிகக் குறைந்ததே என்று சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரி போன்ற அறிஞர் சுட்டிக் காட்டியுள்ளனர். ஐரோப்பாவில் காணப்படும் நாகரிக ஒற்றுமையை நாம் முனைப்பாக மேற்கிலும் தெற்கிலும் காண்கிறோம். வரலாற்றில் அது தென் கிழக்கிலிருந்து தென்மேற்கு, மேற்கு, வடமேற்காக வலஞ்சுழித்துச் சென்று, மற்ற திசைகளில் பரவுவது காணலாம். அதுபோல, ஒரு கண்டம், ஒரு குட்டி உலகம் என்ற அளவில்கூட இந்தியாவில் (இந்தியக் கூட்டுறவு, பாகிஸ்தான் உட்பட்ட பரப்பில்) காணப்படும் ஒற்றுமை, தெற்கிலும் கிழக்கிலுமே காணப்படுவதாகும். அது வரலாற்றில் தெற்கிலிருந்து தென் கிழக்கு, வடகிழக்காக இடஞ் சுழித்துச் செல்வது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே பாரத கண்டத்தின் ஒற்றுமை என்பது, உண்மையில் அதில் ஒழுங்கான தேசியக் கட்டமைப்புடைய உயிர்ப் பகுதியான திராவிட நாட்டின் ஒற்றுமை, திராவிட நாடு கடந்த திராவிடப் பண்பாட்டின் விரிவெல்லை ஆகியவையேயன்றி வேறன்று. திராவிட நாட்டின் தனிப் பேரினமான திராவிட இனமே, இந்தியத் துணைக் கண்டத்தின் அடிப்படை இனம் என்பதை இந்தியக் கூட்டுறவரசு வெளியிட்டுள்ள இனவாரிப் படமே தெளிவாகக் காட்டும். விந்தியம் வரையுள்ள தென்னகப் பரப்பு தூய திராவிட இனமாகவும், பஞ்சாப், இமயமலையடிவாரம் தவிர மீந்த பகுதிகள் பல்வேறினங்களுடன் கலந்த திராவிட இனமாகவுமே அதில் குறிக்கப்பட்டுள்ளன. ஆனால், இது திராவிட இனத்தின் தேசியப் பரப்பல்ல. அதன் உலகளாவிய நாகரிகப் பரப்பின் ஒரு பகுதியே. ஏனெனில் இன வரலாற்று அறிஞர், பண்பாட்டு வரலாற்று அறிஞர் கூற்றுப்படி, தென்கிழக்காசியா, தென் ஆசியா, மேலை ஆசியா, தென் ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, நடு அமெரிக்கா ஆகிய பெரும் பரப்புக்களின் இன, நாகரிக அடிப்படைப் பண்பாடே திராவிட நாகரிகத்துடன் தொடர்புடையது என்று கூற இடமுண்டு. திராவிடம் தேசிய இனமா என்று வடவரும் வடவர் பக்தரும் கேட்கும் கேள்வி இவ்வாறு அவர்களுக்குத்தான் ஆபத்தான கேள்வியாக முடிகிறது. ஏனெனில், அதன் விடை திராவிடம் தேசிய இனம் என்பது மட்டுமன்று, திராவிடம்தான் பண்டை உலகின் ஒரே தேசிய இனம் என்பது. பாரதமோ பண்டை உலகிலும் தேசிய இனமன்று, இன்றைய உலகிலும் ஒரு தேசிய இனமன்று. ஒரு தேசிய இனமாகவோ, தேசிய இனக் கூட்டுறவாகவோகூட அது வருங்காலத்தில் உருவாகும் வாய்ப்புடையதன்று. ஏனெனில், அத்தகைய தேசிய இனக் கூட்டுறவைக் குடியாட்சிப் பண்பு அளாவிய ஒரு உயிர்த் தேசிய இனமே வளர்த்து உருவாக்க முடியும். திராவிட இனத் தேசியம் அத்தகைய குடியாட்சிப் பண்புடைய உயிர்த் தேசியம். அதன் வழி நின்றால் தென் கிழக்காசியாவே, ஆசியாவே ஓர் உயிர்த்தேசியக் கூட்டுறவாக வளம் பெறமுடியும். வடதிசைப் போலித் தேசியமோ உருவாகாத் தேசியங்களை அடக்கியாள நினைக்கும் ஒரு செயற்கை ஏகாதிபத்தியம் - வெள்ளை ஏகாதிபத்தியம் உருவாக்கி இயங்கவிட்டுச் சென்ற குட்டி ஏகாதிபத்தியம். அதனால் உயிர்த் தேசியமாக இயங்கவும் முடியாது; உருவாகாத் தேசியங்களை உருவாக்கும் திராவிடப் பண்பாற்றலும் அதற்குக் கிடையாது. 12. பலமுக ஏகாதிபத்தியத்தின் பலவேசக் குரல்கள் உலகமெல்லாம் ஒன்றாக ஆகிவரும்போது, ஏனப்பா நீ பிரிவினை முழக்கம் செய்கிறாய்? ‘ஒன்றுபட்டாலுண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே’ என்ற பாரதி பாட்டை நீ அறியமாட்டாயா? - இது பாரத தேசியத்தின் பரத நாட்டியக் குரல், உலக வேதாந்தக் குரல்; வெள்ளையர் கற்றுக் கொடுத்த ஏகாதிபத்தியக் கரத்தை உள்ளே ஒளித்துக்காட்டும் பசப்புக் குரல். ஒற்றுமைக்குப் பதில் பிரிவினையா? ஐயோ, தேசத்தைத் துண்டாடலாமா? கூறுபடுத்தலாமா? இது துண்டாடப்பட்ட அரசியல் பிச்சை பெற்றவர்கள் சுதந்திர தேசியவாதிகளை நோக்கி அலறும் அலறல். ஆரியமாவது, திராவிடமாவது! அதெல்லாம் மலையேறிவிட்ட காலம். இனவேறுபாட்டை இந்த இருபதாம் நூற்றாண்டிலும் யாராவது கிளப்புவார்களா? யார் ஆரியர், யார் திராவிடர்? எல்லாம் ஒன்றுபட்ட ஒரே பாரதமாக உன் கண்களுக்கு விளங்கவில்லையா? இது இனமற்ற தேசியம் பேசும் இனவேறுபாட்டுக்காரர் தாம் உட்கொண்ட அபினியை மற்றவருக்கும் முதலில் இலவசமாக ஊட்ட வரும் அன்புக் கீதம். திராவிடமா, அது என்ன மொழிச்சொல்? தனித்தமிழ்ச் சொல்லா? சமஸ்கிருதச் சொல்லாயிற்றே! இலக்கியத்தில் அதற்கு வழக்கு உண்டா? வடவர் சொல்லையா தமிழர் வழங்குவது? தனித்தமிழை வெறுப்பவர் மேற்கொள்ளும் தனித்தமிழ் வாதம். வடவரை எதிர்த்துப் பேசும் வடவர் கங்காணிகளின் நயவஞ்சகக் குரல் இது! திராவிடம்! வெள்ளைக்காரன் உபயோகித்த, உற்பத்தி செய்த பெயராயிற்றே! வெள்ளையன் உருவாக்கிய பாரத தேசியத்தை - அவன் பிரித்த பிரிவினையை - தம் முன்னோர் வழி வழிச் சொத்தாகக் கொண்டவர் கேட்கும் மடமை வினா இது. திராவிடம்! ‘ஆரியப் பகைவன்’ ‘நம்’ இனத்தை இழிவாகக் கருதி வசைபாடி அளித்த பெயரையா நாம் ஏற்பது? ‘ஓடிவந்தவர்’, ‘திருடர்’, ‘திராவைகள்’, ‘பஞ்சைகள்’ என்றல்லவா சமஸ்கிருதத்தில் அதற்குப் பொருள்? அந்தச் சொல்லைக் காதால் கேட்டாலே ‘கர்ணகடூர’மாய் இருக்கிறதே! இது, பகைவன் என்று ஆரியரைக் கூறிக் கொண்டே, ஆரியர் பக்கமாக நின்று வயிறு வளர்க்கும் விபீஷணாழ்வார்கள் பேச்சு. தனித் தமிழின் உயிர் எதுவென்று அறியாத சில தனித்தமிழ்ப் பசப்பர்களை அறிவு மடமையால் ஏய்க்கும் கிளிப்பிள்ளைக் குரல் இது! தமிழன் என்று தன் தாய் மொழிப் பெயரைச் சொல்லு! தமிழ்நாடு என்று சொல்லு! ஐக்கிய தமிழகம் என்று கூறு! அது தான் மொழி சார்ந்த தேசியம். திராவிடம் ஒரு தேசியம் ஆகுமா? பாரத தேசியத்தை எதிர்ப்பவரையே தமிழ்ப் பற்று மூலம் தமிழருக்கெதிராகத் தூண்டிவிடும் நச்சுப் பாம்பின் நெளிவு குழைவு இது. பாரதம் எவ்வளவு பரந்த தேசம்? பரந்த மனப்பான் மையுடன் அதை ஏற்று ஒற்றுமை வளர்த்தால் உலகில் மதிப்பும் பெறலாமே? திராவிடம் என்று ஏன் குறுக்குகிறாய்? அத்தகைய சிறு பரப்பு உலகில் வலிமையுடன் வாழ முடியுமா? திராவிடம் தனித்து வாழ முடியுமா? வடக்கு, தெற்கு, என்று ஏன் திசை வேறுபாடு கொள்கிறாய்? இது ஏகாதிபத்தியத்தின் அரசியல் சூழ்ச்சிக் குரல். பேராசைப் பேயின் அலறல் பேச்சு. உலகளாவிய மனித இனப் பாசம் பேசும் மனித இனக் கங்காணிகள், இமயமளாவிய கதம்ப தேசியம் பேசும் கீழ்திசைத் தேசிய விபீஷணர்கள், இமயத்திலிருந்து தொங்கிக் கொண்டு தமிழ்ப்பற்றுடையார் போல் நடிக்கும் ஐந்தாம் படை ஒற்றர்கள், ஏகாதிபத்தியதாசர்கள், தில்லியின் தத்துப் பிள்ளைகளான இளையாழ்வார்கள் கேட்கும் கேள்விகள் இவை. அடிமைத்தனத்திலும் தெரியாத்தனத்திலும் சூழ்ச்சி முறையிலுமே இக் கேள்விகள் திராவிட மக்களிடம் கேட்கப் பட்டாலும், திராவிடத் தலைவர்கள், திராவிட அறிவியக்க அறிஞர்கள் இவற்றிற்கு உவகையுடன் பதில் கூற முன் வருகிறார்கள். ஏனெனில், இன்னும் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் - நூற்றுக்கு ஓரிருவர் கூடக் கல்வி பெறாத நிலையில் வைக்கப்பட்டிருக்கும் நம் திராவிட மக்களிடையே அரசியலறிவை, கல்வியின்பத்தை, தன்னின வரலாற்றறிவை, இனப் பண்பாட்டறிவைப் பரப்ப இக்கேள்விகள் பயன்படுபவை ஆகும். அவற்றின் விளக்கங்கள் வருங்காலத் திராவிடத்தின் அறிவுக் கோயில்களைக் கட்டமைப்பதற்கான தூண்டுதல் தருபவை ஆகும். இவற்றுக்கான விளக்கம் கூறுவதன் நோக்கம் கேட்பவர்களுக்குப் பதில் கூறுவதற்காக மட்டுமல்ல. அதைவிடப் பயனுடை யது மக்களுக்குத் தரப்படும் அறிவு விளக்கம். இன்னும் நிலையான பயனுடையது விளக்கத்தின் பின்னணியில் இருந்துகொண்டு திராவிட மறுமலர்ச்சி இளைஞர், நங்கையர் உருவாக்க இருக்கும் வருங்காலத் திராவிட வாழ்வின் அருங்கலச் செல்வம், திராவிடர் புதுவாழ்வு திட்டம்! இவ்விளக்கம் கேட்ட பின்னும் கேள்வி கேட்டவர் மீண்டும் மீண்டும் கேட்கலாம். கேட்ட கேள்வியையே கேட்கலாம். அதனாலென்ன? கேட்டவர் தாமே பதில் கூறும்வரை, திராவிட அறிவுப்படையில் முன்னணி வீரராகும் வரை நாம் புதிது புதிதாகப் பதில் கூறிக்கொண்டே இருக்கும் பண்புவளம், அறிவு வளம், மொழிவளம் கொண்டவர்கள்தாம். இவ்விளக்கமே வருங்காலத் திராவிடத்தின் புதுமலைகளாக, ஆறுகளாக, கடல்களாகக் குவித்து வழியும்வரை பதில் கூறிக்கொண்டே இருக்க நாம் தயங்க மாட் டோம். இவற்றுக்கான விளக்கம் ஒரு சொற்பொழிவாக வெளி வரலாம். ஒரு கட்டுரையாக எழுதப்படலாம். ஒரு ஏடாக, பல ஏடுகளாகப் பெருகலாம். ஒரு முழு இலக்கியமாக, இயல், கலைத் துறையாக, பல இலக்கியங்களாக, பல கலை இயல் துறைகளாக வளரலாம். ஆனால், கேள்விகள் மழையாக, சோனாமாரியாகத் திரும்பத் திரும்பக் கேட்கப்படுந்தோறும், விளக்கங்கள் வளர்ந்து கொண்டே செல்லும். சொல் விளக்கங்களாக அவை நிற்கப் போவதில்லை. இன்றைய உலகம் கண்டு பெருமிதத்துடன் பாராட்டும் முறையில், அத் திராவிடத்தை உலகுக்கு ஒரு முன் மாதிரி நாடாக ஆகும் வரை, ரஷ்யாவுக்கு ஒரு புதிய ரஷ்யாவாக அது உலகைப் புதுவாழ்வுக்கு இட்டுச் சென்று புது உலகும் படைத்துக் காட்டி, அதில் உலக முழுவதின் ஒத்துழைப்பையும் பெறும்வரை இந்த விளக்கங்கள் நிற்கப் போவதில்லை. சொல் விளக்கம், வரலாற்று விளக்கம், அறிவு விளக்கம், பண்பாட்டு விளக்கம், செயல் விளக்கம், வாழ்வு விளக்கம் என அத்தனை விளக்கங்களையும் தரவல்ல இளைஞர் நங்கையரின் அறிவுப் பட்டாளம், செயல் வீரர் வரிசை, கலைஞர் குழாங்கள் நம் பின்னே சடை வரிசையில், சங்கிலி வரிசையில் அணி அணியாக நின்று துடிதுடித்துக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் அறிவோம். உலகம் விரைவில் அறிய இருக்கிறது! வருங்கால உலகம் அதனால் வளம் பெற இருக்கிறது! திராவிட இயக்கம் திராவிடத்தின் சொத்துமட்டுமன்று. வருங்கால உலகிற்குக் கிடைக்க இருக்கும் பெரும் புதையல். 13. ஓருலகில் தமிழனுக்கு இடம் இல்லையா? “பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பொதுவரசாகி, ஓருலகத்துக்கே உரிய ஒரு முதற்படியாய் இருக்கும்போது, நீ ஏனப்பா சுயராஜ்யம், பூரண சுதந்தரம் வேண்டுமென்கிறாய்?” என்று பழைய ஏகாதிபத்தியம் கேட்டது, இந்திய விடுதலை இயக்கத்தாரிடம்! பூரண சுதந்தரம், முழு நிறை விடுதலைக்குப் பதில், ஏகாதிபத்தியப் புத்துருவான பொதுவரசில் ஓர் உறுப்பாக இருக்கும் அரும்பெரும் பேறு போதும்; அதற்காக மன்னரை இணைப்புக் குறியாக ஏற்கும் ஒரு புதுவகைக் குடியரசாகக்கூட நான் வேசம் போடுகிறேன் என்று கெஞ்சிய குட்டி ஏகாதிபத்தியம் இப்போது உண்மைத் தேசியவாதிகளை, திராவிட உயிர்த் தேசியவாதிகளைப் பார்த்து அதே கேள்வியைக் கேட்கிறது. அந்தோ, காலந்தான் மாறிவிட்டது. பண்பு மாறவில்லை. நிலைமை மாறவில்லை! ஐயோ, பாம்பு மடியவில்லை. சட்டை மாற்றிக்கொண்டு புத்துருவில், புதிய பளபளப்புடனும் புத்திள மையுடன் சீறுகிறது! ஒரே உலகத்தில் ஒரே பாரதம் வேண்டுமென்று முழங்கி, பின் துண்டுபட்டால்கூட மீந்த பாரதம் போதுமென்று கையேந்தி வாங்கிய இந்தக் குட்டி ஏகாதிபத்தியவாதிகளின் முன்னோர் களான விடுதலை வீரர்கள் எதற்காக, எந்த விடுதலை கோரி, எந்த ஒரே உலகத்தில் ஒரே பாரதம் கோரிப் பாடுபட்டுத் தேடி அதைக் கடைசியில் இந்த ஏகாதிபத்தியத்திடம் பறிகொடுத்துவிட்டுப் போனார்களோ, அதே விடுதலைக்காக, அதே ஒரே உலகில் ஒரே திராவிடத்துக்காக, அதே காரணத்தை முன்னிட்டு, ஆனால், அந்தக் காரணத்தைவிட மேலான வரலாறு உயிர்த் தேசியத் துடிப்புடன், திராவிடரும் திராவிட இயக்கத்தவரும் திராவிட நாடு கோருகிறார்கள். ஆனால், டில்லி ஏகாதிபத்தியம் பழைய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் குரலில் ஓருலக வேதாந்தம் பசப்புகிறது. ஓருலகம், ஒரு மனித இனம் என்ற கனவு இன்றைய உலகின் கனவு. ஆனால், ஒருசில நூற்றாண்டுகளுக்குமுன் தமிழ், தமிழகம், தமிழிலக்கியம் நீங்கலான எந்த நாடும் மொழியும் இலக்கியமும் அதை அறியாது. பாரதப் புதல்வர்களின் முன்னோர்களோ என்றும் ஓருலகக் கனவு கண்டதில்லை. ஒரு தேசம், ஒரு குலமும் நாடிய தில்லை. அவர்கள் விரும்பியது வருணாசிரம தருமம் - அது தேச வாழ்வை, சமுதாய வாழ்வை, பொருளியல் வாழ்வைப் பிரித்தது. ஒரு தேசத்தை மட்டுமல்ல, ஒரு ஊரையே ஒன்றாக வாழ முடியாமல், துண்டு துண்டாகப் பிரித்தது. சமத்துவம், சம உரிமை கெடுத்து ஏற்றத்தாழ்வை உண்டுபண்ணிற்று. ஆனால், தமிழர் இரண்டாயிர மூவாயிர ஆண்டுகட்கு முன்னும் ஓருலகக் கனவு கண்டவர்கள். ‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ என்று ஓருலக அடிப்படையிலே ஒரே ஆண்டவனைக் கனவு கண்டவர்கள். தமிழ் பேசும் பகுதிகளனைத்தையும்-தென்னாட்டையும் தென்னவர் குடியேறி ஆண்ட பகுதிகளையும் ஒருங்கு சேர்த்து அவர்கள் தமிழுலகம் என்றே கூறினர். தமிழர் இன்று அயலினத்தார் பரப்பாகிய இந்தியாவுடன் கட்டுண்டு மறுகுகின்றனர். ஆனால், தமிழ் பேசுகிற தமிழர் வாழும் தமிழுலகத்தினின்று வெட்டுண்டு கிடக்கின்றனர். அது மட்டுமோ? தமிழர் வெளிநாடுகளில்கூட வாழமுடியாத நிலையில் இந்த அயலினக் கூட்டுறவு நீடிக்கிறது. அது தமிழனைத் தமிழரிடமிருந்து பிரித்து வைக்கிறது. தமிழினத்தவன் தமிழரைப் பகைக்கும்படி ஓயாது தூண்டிவருகிறது. உலகம் என்ற சொல் தமிழிலக்கியத்தில் பயின்ற அளவு உலகில் வேறெந்த இலக்கியத்திலும் பயின்றதில்லை. உலகம் என்ற சொல்லையே மங்கலச் சொல்லாகக் கொண்டு தொடங்கிய இலக்கிய ஏடுகள், சமய ஏடுகள், காவியங்கள் பல. அவை ‘உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன்’ ‘உலகம் யாவையும் தாமுளவாக்கிய தலைவர்’ என்று இறைவனைப் போற்றின. ‘உலகெல்லாம் இன்புற்றிருக்க’ அவாவினர் தமிழர்! அந்த உலகத்தையும் ஓர் உலகம், ஒரே ஆண்டவனை ஒப்பற்ற ஒரே தந்தையாகக் கொண்ட ஓருலகக் குடும்பம், சாதிவேறுபாடற்ற, இனவேறுபாடு கடந்த, சமயங்கடந்த, சமய வேறுபாடு கடந்த ஒரு கடவுட் படைப்பான ஓருலகம் என்றே அவர்கள் கருதினர். உலகெலாம் இன்புற்றிருக்கக் கனவு கண்ட இந்தத் தமிழகத்துக்குத் தான் இன்று ஓருலகில் இடம் வேண்டாம் என்கின்றனர் ஓருலகப் பண்பும், ஒருகுலப் பண்பும் அற்ற ‘குலநீதி’ உத்தமர்கள்! ஓருலக அரசு அணிமைக்காலக் கனவு. ஆனால், இன்று அது நாட்டடிப்படையிலே, இன அடிப்படையிலே, தேசிய அடிப் படையிலே மட்டுமே அமைந்து வருகிறது. அப்படித்தான் அமைய முடியும். ஏனெனில், அது சர்வ தேசிய ஓருலகம். இது மட்டுமன்று. இன்னும் ஓருலக அமைப்பு விடுதலை அடையாத, தன்னுரிமையற்ற தேசிய இனங்களுக்குப் பிரதிநிதித்துவம் தரவில்லை. விடுதலை அடையாத நாடுகளின் பிரதிநிதித்துவம் வழங்குவதில் அவற்றின் தேசிய வாழ்வைத் தன் அகன்ற வயிற்றுக் குரிய சொந்த உடைமையாகக் கருதும் ஏகாதிபத்தியங்களே தடையாய் இருக்கின்றன. இந்நிலையில் விடுதலை பெற்ற பர்மாவும் இலங்கையும் இடம்பெற்றதுபோல, திராவிடம் இடம் பெறாமல் பாரத ஏகாதிபத்தியம்தான் தடுத்து வருகிறது. ஓருலகக் கனவு கண்ட, ஓருலகப் பண்புமிக்க, ஓருலகத்தைப் படைத்துரு வாக்கும் ஆற்றல்மிக்க திராவிடத்துக்குத்தான் அந்த ஓருலகில் இடமில்லாமல் பாரத ஏகாதிபத்தியம் தடுத்து வருகிறது. மற்ற ஏகாதிபத்தியங்களுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டு திராவிடநாடு போன்ற தனி இனங்களின் உரிமைகளை ஏப்பமிடப் பாரத பக்தர்கள் பட படக்கின்றனர். தமிழன் ஓருலகை விரும்புகிறான்; ஆர்வமாக விரும்புகிறான். ஆனால், அவன் விரும்பும் ஓருலகில் அவனுக்கு இடம் வேண்டும். அவன் உரிமைக்கும் அவன் இனத்துக்கும் மற்ற இனங்களுடன் ஒத்த, மற்ற தேசியங்களுடன் ஒத்த சமஉரிமை வேண்டும். தமிழனுக்கு, தமிழினமாகிய திராவிட இனத்துக்கு, திராவிடத்தைப் போலவே ஏகாதிபத்திய இனங்களின் காலடியில் பட்டுத் துவளும் பல தேசிய இனங்களுக்கு உரிமையில்லாமல் இருக்கும்போது ஓருலகம் என்று பேசுவது ஏகாதிபத்தியங்களின் திமிர் பிடித்த ஆணவப் பித்தலாட்டமே தவிர வேறில்லை. தமிழன், திராவிடன் உரிமையில்லாது ஓருலகம் உண்மையில் அமைய முடியாது. நீடித்து உலக மக்களுக்கு நலந்தந்து வளர முடியாது. ஏனெனில் அதைக் கனவுகண்டு, அதற்கான திட்டங்களைத் தன் தேசியத்தில் உருவாக்கிய தமிழினமே அதைத் திறம்பட இயக்கமுடியும். தமிழன் சார்பில், திராவிடத்தின் சார்பில் வடதிசை ஏகாதிபத்தியம் இருந்தால், அது தமிழன் உரிமையை மட்டும் அழிப்பதாயிராது. தமிழினப் பண்பாகிய ஓருலகப் பண்பையும் குடியாட்சிப் பண்பையும் சமதருமப் பண்பையும் உலகில் படிப் படியாக ஒழிப்பதாகவே இயங்க முடியும். ஏனெனில் வருணாசிரம தரும நெறியில் ஊறிய அதன் அறிவு எல்லாவற்றையும் அந்த உயர்வு தாழ்வு வேறுபாட்டுருவிலேயே காண முடியும், பேண முடியும், வளர்க்க முடியும். அது இலக்கணத்தில், எழுத்தில் பல வகைகளில் வருணா சிரமம் கண்டு அதைத் தமிழிலும் மற்ற தாய்மொழிகளிலும் புகுத்திய இனம். வான நூலில் கோளினங்கள் அல்லது கிரகங்களிடையே ஆண் பெண் பேதம், ஆண் பெண் அலி பேதம், சாதி பேதம், வருணாசிரம பேதம், இன பேதம் ஆராய்ந்தது காணும் அறிவுடைய உலக இனம் வேறு எதுவும் கிடையாது. இதுமட்டுமோ? அது கடவுளைப் பலராகக் கொள்வதுடன் அமைதி கொள்ளாமல் அவர்களிடமும் ஆண் பெண் வேற்றுமை, சாதி வருணாசிரம வேற்றுமை, இன வேற்றுமை வகுத்துள்ளது. கடவுளரிடம்கூட அரசர், புரோகிதர் உண்டு. காமுகர், தாசிகள் உண்டு. கயவர், குறும்பர் உண்டு. தமிழில் நான்கு வகைப்பாக்கள் உண்டு. பாவினங்கள் உண்டு. இந்த எண்ணிக்கையைக் கண்டவுடனே வருணாசிரமக் கற்பனை வேலை செய்துவிட்டது. வெண்பா பிராமணப் பாவாம், ஆசிரியப் பா சஷத்திரியம்; கலிப்பா வைசியம்; வஞ்சிப்பா சூத்திரப் பாவாம்! நாயன்மார், ஆழ்வார்கள், கம்பர் முதலிய இடைக்காலப் புலவர்கள் பெரிதும் பயன்படுத்திய விருத்தம் பாவினமே. அது தாழ்த்தப்பட்ட இனப்பா, ஆதித்திராவிடப்பா, பாரதி பாரதிதாசன் புதிய பாக்களுக்கு இனி இடம் தேட வேண்டும். பாரத ஆட்சி அதைத் தேடிக் கண்டுபிடித்துவிடும் - அவை சண்டாளப் பாக்கள் என்று கருதப்படத் தகும். எழுத்தில் உயிர் பிராமண எழுத்து; வல்லெழுத்து சஷத்திரிய எழுத்து - அப்பப்பா! இது பிற்காலத் தமிழ் இலக்கண நூல்கள் தமிழிலே புகுத்திய வேறுபாடு...; இவ் வேறுபாடு பாரத மொழிகளிலும் புகுத்தப்பட்டுள்ளது. சமஸ்கிருதம் பிராமண வருணம். சமஸ்கிருதமும் வடதிசை மொழயுங்கூடித் திரிந்த தெலுங்கு கன்னட மலையாளம் வைசிய மொழிகள். தமிழ் சூத்திர வருணம் - பஞ்சம வருண மொழிகள் உண்டு! 14. வேற்றுமை யறிவு ஒற்றுமை ‘உலகமெல்லாம் ஒன்றாக ஆகிவரும்போது ஏனப்பா நீ பிரிவினை முழக்கம் செய்கிறாய்?’ என்று பாரத போலித் தேசிய பக்தர்கள் திராவிட உயிர்த் தேசிய இயக்கத்தாரிடம் கேட்கிறார் களல்லவா? அதற்குத் திராவிட இயக்கத்தார் வேறு விரிவான விளக்கம் எதுவும் கூறத் தேவையில்லை. பிரிவினை என்ற ஒரு சொல்லுக்குப் பதில் வேற்றுமை என்ற சொல்லைப் போட்டு அதே கேள்வியை அவர்களிடம் திருப்பிக் கேட்டு விட்டால் போதும். ஏனெனில் அந்தக் கேள்வி கேட்க வேண்டியவர்கள் பாரத பக்தர்களல்ல, திராவிட தேசிய இயக்கத்தார்களே. அக் கேள்வி கேட்கப்பட வேண்டியவர்கள் திராவிட தேசிய இயக்கத்தவர் அல்ல, பாரத போலித் தேசியவாதிகளே. “உலகமெல்லாம் ஒன்றாக, ஓரினமாக ஆகிவரும்போது, ஏனப்பா நீ மட்டும் இன வேற்றுமை முழக்கம் செய்கிறாய்?” என்று திராவிடர் பாரத பக்தரைக் கேட்டால் அவர்கள் கதிகலங்குவர், திணறுவர். அது அவர்கள் உண்மைச் சொரூபத்தை உலகுக்குக் காட்டிவிடும்! ஏனெனில் ஆரியருக்கு ஒரு நீதி, ஆரியரல்லாதவர்க்கு ஒரு நீதி - இதுவே அவர்கள் தேசியத்தின் பழம் பெருமை வாய்ந்த நீதி - சமஸ்கிருத இலக்கியங்கள், பகவத்கீதை, சாத்திரங்கள் போற்றும் நீதி! பாரத பக்தர்கள் பாரதியின் பாட்டைக் காட்டி ஒற்றுமைக் கீதம் பாடுகிறார்கள். பிரிவினை ஒற்றுமைக்கு எதிரான பண்பு என்று வாய்கிழியப் பேசுகிறார்கள். ஆனால், ஒற்றுமைக்கு எதிரிடையான பண்பு பிரிவினையல்ல, வேற்றுமை! பிரிவினை ஒருமைக்கே எதிரானது. இதனை அவர்கள் சொல் புரட்டு மறைத்துக் காட்டுகிறது. ஒற்றுமைக்குப் பாடுபடும் இனம் திராவிட இனம் - ஊரிலும் சரி, சமுதாயத்திலும் சரி, நாட்டிலும் சரி, உலகிலும் சரி, அது இன வேறுபாடற்ற, நாடு வேறுபாடற்ற ஒற்றுமையையே - சரி சமத்துவ ஒற்றுமையையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. அதன் இலக்கியம், ஆரியக்குளறுபடியில்லாத நிலையில், அவர்கள் சமய இலக்கியம்கூட, இதற்காகவே போராடுகிறது. ஆனால், பாரத போலித் தேசியமோ அதன் போலி நாகரிகமோ, இதற்கு நேர்மாறாக, வேற்றுமையை, உயர்வு தாழ்வு அடிப்படையான ஒருமையை அதாவது சமத்துவமற்ற ஒற்றுமையை, ஆண்டான் அடிமை ஒற்றுமையை, போலி ஒற்றுமையை, ஒற்றுமை என்ற தவறான பசப்புப் பெயரால் பொதுமக்கள் மீதும் மற்ற இனத்தவர் மீதும், தன் ஏகாதிபத்தியப் பிடியில் சிக்கிய மற்ற நாட்டவர் மீதும் போலிப் புலமைப் போர்வையிலோ, போலிச் சமயப் போர்வையிலோ, போலித் தேசியப் போர்வையிலோ புகுத்திவிட முயல்கிறது. ‘இன வேறுபாடு காட்டாதே’ என்கிறார்கள் பாரத பக்தர்கள். ஆனால், திராவிடர் கேட்பது இன வேறுபாடல்ல, இன உரிமை, இன வேறுபாடற்ற சமத்துவம். பாரத பக்தர்கள் வெறுப்பது இன உயர்வு தாழ்வு வேறுபாடல்ல, ‘இனம்’ என்ற பெயர், இனங்களிடையே சரிசம நிலை! அவர்கள் நாடுவது இன ஒற்றுமையல்ல, இன ஆதிக்கம்; இன முதலாளித்துவம், ஓர் இனத்தை உழைக்கும் இனமாக்கி, அந்த உழைப்பினத்தை அடிமையினமாக்கி, உழையாத, தகுதியற்ற இனத்தை, மொழியை, நாட்டை அரியாசனம் ஏற்றப் பார்க்கிறவர்களே அவர்கள்! இனத்துக்கு இனம் வேற்றுமை, சாதிக்குச் சாதி வேற்றுமை ஆகிய பழைய வருணாசிரம் தரும வேற்றுமை போதாதென்று, பாரத பக்தர்கள் இப்போது வடதிசை தென்திசை வேற்றுமை யையும் உயிர் வேற்றுமையாகப் பாராட்டுகிறார்கள். உண்மை உயிர்த் தேசியமான தெற்கு, போலிப் பொய்த் தேசியப் பரப்பான வடக்கு என்ற இயற்கை வேறுபாட்டைத் தலைகீழாக்கி, பொய்த் தேசியத்துக்கு உண்மைத் தேசியத்தைப் பலியிட்டு, முன்னதிலே பின்னதை அடக்கப் பார்க்கிறார்கள். பொருளில் நிழலை அடக்கினால்கூடக் கேடில்லை - நிழலில் பொருளை அடக்கப் பார்க்கிறார்கள். தாமரைமலர் பூவல்ல, தாமரையின் நிழல்தான் பூ, தாமரை மலர்தான் நிழல் என்கிறார்கள். தாமரைக்கு மணமில்லை, அதன் நிழலுக்குத்தான் மணம் என்கிறார்கள்! ஒற்றுமை என்ற பெயராலேயே வேற்றுமையை, சமரசம் என்ற பெயராலேயே இன வேறுபாட்டை, ஒருமை என்ற பெயராலேயே ஏகாதிபத்திய அடிமைத்தனத்தைப் புகுத்தி விடுவதில் பாரத பக்தர் ‘சமர்த்தர்’, அசகாய சூரர். அவர்கள் இனவேறுபாடு வேண்டாம் என்பர். ஆனால், இனமே வேண்டாம், இனப் பெயர் கூறிச் சமத்துவம் கோர வேண்டாம் என்பதே இதன் உட்கிடக்கைப் பொருள். இன எல்லையை அழித்துவிட்டு, ஒரு இனத்தவர் ஆண்டார்களாகவும் மறு இனத்தவர் அடிமைகளாகவும் இருக்கும் நிலை மீது திரையிட்டு, ஆண்டான் அடிமைகளாகவே அந்தக் கூட்டு நிலைத்திருக்கட்டும் என்று பல்லவி பாடுகிறார்கள். ஒரு இனத்துக்குமட்டும் உரிமை, ஒரு இனத்துக்கு மட்டும் கடமை என்ற அநீதியின் மீது அடிமை இனத்தவர் கருத்துச் செலுத்தக் கூடாது. அவர்கள் அறிவுக்கண் பட்டுவிடக்கூடாது என்பதே அவர்கள் சமரச கீதத்தின் ‘தாத்பரியம்’ இனங்களிடையே காட்டப்படும் இதே சமரச கீதம்தான் அரசியல் எல்லையில் அவர்கள் தேசியகீதம் ஆகும். வடக்கு ஆளும் இனம், தெற்கு ஆளப்படும் இனம்; வடக்குக்கு உரிமை, செல்வ வளம், இயந்திரத் தொழில் வளம்; தெற்கு கடமையுடன், வறுமையுடன், குடிசைத்தொழில் பெருமையுடன் மனநிறை வடைய வேண்டும் என்பதே அவர்கள் கோரும் போலித் தேசியம், போலி ஒற்றுமை, அவர்கள் ஒற்றுமை, சமரசம், தேசியம், ஏக பாரதம் என்பதெல்லாம் இதுதான். வடநாடு வாய், வயிறு; தென்னாடு கால், கை, வால்!’ இது அவர்கள் உட்கிடக்கை. 15. பிரிவினையல்ல சுதந்திரம் திராவிட நாட்டுப் பிரிவினை என்பதிலுள்ள ‘பிரிவினை’ என்ற சொல்லை வாய்ப்பாக வைத்துக்கொண்டு பாரத பக்தர்கள் பகடையாடுகிறார்கள். பிரிவினைக்கு எதிரான சொல் ஒருமை என்பது அவர்கள் அறியாததல்ல; ஆனால், பிரிவினை வேண்டாம், ஒருமையே வேண்டும் என்று அவர்கள் கூறமாட்டார்கள். வேற்றுமை வேண்டாம், ஒற்றுமை வேண்டும் என்றுகூடக் கூற மாட் டார்கள். பிரிவினை வேண்டாம். ஒற்றுமை வேண்டும் என்று பரப்புவார்கள். அவர்கள் விரும்பும் ஒற்றுமை, அதாவது ஒருமை, வேற்றுமையற்ற, சமத்துவமுடைய ஒருமைகூட அல்ல; வடக்குத் தெற்கு வேற்றுமை உடையது அது என்பதை அவர்கள் ஒற்றுமை என்ற சொல்லால் மறைத்துக் கூறவே விரும்புகிறார்கள். உரிமை வடக்கே, கடமை தெற்கே; ஆளுவது வடக்கு, ஆளப்படுவது தெற்கு - இதுவே அவர்கள் உள்ளத்தில் எண்ணும் ஒற்றுமையின் உருவம், ‘நீயும் நானும் ஒண்ணு, உன் வாயில் மண்ணு, என் வாயில், சர்க்கரை’ என்று சிறுவர் சிறுமியர் விளையாட்டாகக் கூறும் ஒற்றுமையே அவர்கள் திராவிடருக்கு ஆசை காட்டி அளிக்க விரும்பும் ஒற்றுமை! திராவிட நாட்டுப் பிரிவினை என்ற தொடரில், பிரிவினை என்ற சொல் தேசியத்துக்கு எதிரான பிரிவினை என்ற பொருளில் வழங்கப்படவில்லை. ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தேசியப் பிரிவினையையே அது குறித்துக் காட்டுகிறது. பிரிவினை வேண்டாமென்பவர்கள் தேசத் துரோகிகள், ஏகாதிபத்திய வாதிகள். பிரிவினை வேண்டுமென்பவர்கள்தாம் உண்மை உயிர்த் தேசியவாதிகள். ஆனால், இந்தப் புண்ணிய பூமியில் நச்சுப் பாம்பு நல்ல பாம்பு என்று அழைக்கப்படுவது போல, பல கடவுள்களை நம்புபவர்கள் மட்டுமே அன்பில்லாதவர்கள், சாதி வேறுபாடு காட்டுபவர்கள் தாம் கடவுளுக்கும் வேதங்களும் சொந்தமான வைதிகர்கள் என்று கருதப்படுவதுபோல, உலகை வெறுத்தவர்கள் தாம் உத்தம முனிவர்கள் என்று நம்பப்படுவதுபோல, ஏகாதிபத்திய வாதிகள் தாம் தேசியவாதிகள் என்ற நாமத்தைத் தமதாக்கிக் கொண்டு, தேசியவாதிகள் மட்டுமே தேசத் துரோகிகள் என்று தூற்றப்படுகிறார்கள். திராவிட இனத்தவர் மட்டுமல்ல, மராத்திய இனத்தவரும் பஞ்சாபிய இனத்தவரும், அசாமிய நாக இனத்தவரும் இந்த உண்மையைக் காணத் துவங்கியுள்ளார்கள்! மெள்ள ‘உள் நாட்டு ஏகாதிபத்தியம்’ என்ற மந்திரத்தை அவர்கள் உச்சரிக்கத் தொடங்கிவிட்டார்கள்! திராவிட நாட்டுச் சுதந்தரம் என்று திராவிடர் கூறாமல், திராவிட நாட்டுப் பிரிவினை என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணமான சூழலே ஏகாதிபத்தியச் சூழல்தான். ‘தேசியத்தி லிருந்து பிரிவினை’ என்று பொருள்படும்படி அது என்றும் வழங்கியதில்லை. ஏகாதிபத்தியத்திலிருந்து பிரியும் சுதந்தர தேசியத்தையே அது குறிக்கிறது. ஒருவகையில் பிரிட்டிஷ் ஏகாதி பத்தியத்திலிருந்து இந்தியா பிரிந்த பிரிவினை போன்றதுதான் அது. ஆனால், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலிருந்து பிரிந்தது ஒரு தேசியமல்ல, ஒரு ஏகாதிபத்தியம். பெரிய ஏகாதிபத்தியத் திலிருந்து பிரிந்த சிறிய ஏகாதிபத்தியமாகவே, சுதந்தரம் என்று தவறாக அழைக்கப்படும் இந்தியப் பிரிவினை அமைந்தது. பெரிய ஏகாதிபத்தியம் அதை ஒரு ஏகாதிபத்தியப் பிரிவினையாக்காமல், இந்தியக் கூட்டுறவு ஏகாதிபத்தியப் பிரிவினை, பாகிஸ்தான் ஏகாதிபத்தியப் பிரிவினை என்று இரண்டு ஏகாதிபத்தியப் பிரிவினைகள் ஆக்க முடிந்ததன் காரணம் இதுவே. ஆனால், இந்திய ஏகாதிபத்தியத்திலிருந்து திராவிடம் ஒரு ஏகாதிபத்திய மாகப் பிரியப் போவதில்லை. ஒரு தேசியமாகவே பிரிய இருக்கிறது. ஆயினும் இப்புண்ணிய பூமியின் புண்ணிய மொழிகளில் ஏகாதிபத்தியப் பிரிவினைக்குத் தேசிய சுதந்தரம் என்ற பெயர் தரப்பட்டது. தேசியப் பிரிவினையை மட்டுமே, சுதந்திரம் என்று வழங்காமல் பிரிவினை என்று வழங்கித் தூற்ற எண்ணுகிறார்கள். ஆனால், கூர்ந்து நோக்கினால், பிரிவினை என்ற சொல் ஏகாதிபத்தியவாதிகள் கண்ணையே குத்திக் காட்டும் சொல் ஆகும். சுதந்தரத்தைப் பிரிவினையாகவும் ஏகாதிபத்தியத்தை ஒற்றுமையாகவும் கருதுபவர்கள் இந்திய ஏகாதிபத்தியத் ‘தேசிய’வாதிகள். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலிருந்து இந்தியா, பாகிஸ்தான், பர்மா, இலங்கை, சிங்கப்பூர், மலாயா ஆகிய நாடுகள் எப்படிப் பிரிந்து சுதந்தரம் கோரினவோ, அப்படித்தான் திராவிட இயக்கத் தவரும் திராவிடரும் திராவிடத்தின் சார்பில் இந்திய ஏகாதிபத்தி யத்தினிடமிருந்து பிரிந்து திராவிட நாட்டுச் சுதந்தரம் அல்லது விடுதலை கோருகின்றனர்; கோரிப் போராடத் தொடங்கி விட்டனர். ஆனால், சுதந்தரம் என்ற சொல் சுதந்தர இயக்கத்த வரால் கூட இங்கே வழங்கப்படாமல், ஏகாதிபத்தியச் சூழல் காரணமாகவே பிரிவினை என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. செயற்கைச் சூழல்களால் ஓர் அயலினத்துடன், அயல் தேசியத்துடன் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலிருந்தே மற்றொரு தொலை அயலினத்தால் திராவிடம் வலுக்கட்டாயமாக, அத்தொலை அயலினத்தின் வசதிக்காகவே, இணைக்கப் பட்டிருந்தது. இப்படித் திராவிடம் தொலை அயலினத்தவரால், அத் தொலை அயலினத்துக்கு உள்ளான, அவர்கள் ஏகாதிபத்திய மரபை ஏற்ற ஓர் அணிமைக் கங்காணி அயலினத்துடன் கட்டிப் போடப் பட்டிராவிட்டால், பிரிவினை என்ற இத்தகைய சொல்லே எழுந்திருக்காது. விடுதலை, சுதந்தரம் என்ற சொல்லே வழங்கப்பட்டிருக்கும். அதுமட்டுமன்று, நாம் சுதந்தரம் என்று சொல்லாமல் பிரிவினை என்று முழங்குவதற்கு இன்னும் ஒரு காரணமும் உண்டு. வடநாடு தென்னாட்டை என்றும் வென்றதில்லை, ஆண்ட தில்லை. ஆண்ட இனத்தினிடமிருந்த ஆளப்படும் இனம் சுதந்தரம் கோரி முழக்கமிடும். ஆனால், திராவிடம் கோரும் சுதந்தரம் ஆண்ட இனத்தினிடமிருந்தன்று, ஆளப்படும் ஓர் இனத்தினிடமிருந்தே - அதுவும் ஆளப்படும் தேசியத்தினிட மிருந்தன்று, ஆளப்படும் ஓர் ஏகாதிபத்தியத்தினிடமிருந்து தான்! அவ்வாறு பிரிந்துதான் அது முன்போல் தனித்தேசியமாக முடியும். பிரிவினை என்ற சொல்லையே திராவிட இயக்கத்தவர் வழங்குவதன் உண்மைக் காரணம் இதுவே. அவர்கள் ஆளும் இனத்தினிடமிருந்து சுதந்தரம் கோரவில்லை; தம்முடன் சேர்த்து ஆளப்பட்ட அடிமை இனத்தினிடமிருந்துதான் பிரிவினை கோருகின்றனர். அந்தப் பிரிவினைக்குப் பின்தான் அவர்களுக்குச் சுதந்தரம் கிட்டும்! ‘பிரிவினை’ என்ற சொல் வழங்கப்படுவதன் முழு உட்பொருள் இதுமட்டுமன்று; பிரிந்தபின் திராவிடம் உலகின் ஒரு பழம் பெருந்தேசியத்தின் புத்துயிர் உருவாகக் காட்சியளிக்கும். ஆனால், பிரிந்தபின் கூடப் பாரதம் ஒரு தேசியமாக, புதுப் பெருந் தேசியமாகக் கூடக் காட்சியளிக்காது. அது அப்போதும் ஒரு புதிய சிறிய ஏகாதிபத்தியப் பரப்பாகவே இருக்கும். அத்துடன் பிரிவினைக்குப்பின் திராவிடம் முன் ஆண்ட இனமாதலால், மறுபடியும் ஆட்சித் திறமையுடன், உலகில் செல்வ வளமும் புகழும் நாட்டி, வருங்கால உலகில் சீரிய ஒரு நடுநாயகப் பங்குகொண்டு மேம்பட்டு விளங்கும். ஆனால், பிரிந்த பின்னும் பாரதம் அவ்வாறு விளங்குதலரிது. ஏனெனில் அது என்றும் தன்னைத்தான் ஆண்டு பழகாத இனக் கதம்பம். வரலாறும் பாரதக் கூட்டரசே வெளியிட்டுள்ள இனவாரி நிலப்படமும் இதனைக் காட்டும். கிழக்கே வங்காளிகள் திராவிட - மங்கோலியக் கலப் பினத்தவர். அசாமியர் பண்படாத் திராவிடர் அதாவது நாகர் - மங்கோலியக் கலப்பினத்தவர். மேற்கே மராத்தியர், குஜராத்தியர் திராவிட- சிதிய இனக் கலப்பினத்தவர். விந்தியப் பகுதி பண்படாத் திராவிட - மங்கோலிய - ஆரியக் கலப்பினத்தவர். இமயப் பகுதி ஆரிய - திராவிடக் கலப்பும், சிந்து காசுமீரப் பகுதி ஆரிய - சித்தியக் கலப்பும் உடையது. மொழித் துறையிலோ கிழக்கும் தெற்கும் மேம்பட, வடக்கும் மேற்கும் படிப்படியாகத் தேய்வுற்று வரும் அழிவுநிலையுடையவை என்றும் ஆளாத இந்தக் கதம்ப இன ஏகாதிபத்தியம் திராவிடம்போலத் தனித் தனி தேசிய இனங்களாகி, திராவிட நாகரிகத்தையும் பண்பாட்டையும் பின்பற்றிச் சமத்துவப் பண்பும் குடியாட்சிப் பண்பும் பெற்றாலன்றி, உலகில் தேசியமோ சர்வதேசியமோ பேணும் ஓர் உறுப்பாக இடம்பெற முடியாது. செல்வ நிலையிலோ, வடதிசையின் ஏகாதிபத்தியப் பரப்பு இன்று தென்னகத்தைச் சுரண்டி வாழும் வழியன்றி மற்றெவ்வகையிலும் வளங்காணும் முயற்சியேயில்லாதது. அதன் வறுமையை மாற்ற இன்றுபோல இனியும் நெடுநாள் ஆசிய இனங்களைச் சுரண்டி வாழ எண்ண முடியாது. திராவிடப் பண்பு பேணினாலன்றி அது புதிய தேசியங்கள் வகுத்துப் புதுவளம் காண முடியாது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே, ஆண்ட இனமாகிய பிரிட்டிஷாரிடமிருந்து பாகிஸ்தானைப் போல, பர்மாவைப் போல, இலங்கையைப் போலத் திராவிடமும் நேராகப் போராடிப் பிரிந்திருந்தால், அந்த அரசியல் புரட்சியை நாம் பிரிவினை என்றே கூறியிருக்க மாட்டோம். சுதந்தரம், விடுதலை, தன்னுரிமை என்றே கூறியிருப்போம். இப்போது தனியுரிமை கேட்பது ஆண்ட இனத்தவரிடமிருந்தல்ல, ஆண்ட இனத்தவரை வெளியேற்றி விட்டு, அந்த ஆண்ட இனத்தவர் பிரியவிட்டது போக மீந்த பரப்பை யெல்லாம், பிரிக்காது மீத்துத் தந்த பரப்பையெல்லாம் சுருட்டி வைத்துக் கொண்டு ஆள எண்ணுகிற, ஒரு தேசிய இனக் கதம்ப ஏகாதிபத்தியத்தினிடமிருந்தே - ஆளத் தெரியாத, ஆண்ட அனுபவமோ, தகுதியோ, ஆளுபவர்க்குரிய நேர்மை உணர்வோ இல்லாத ஓர் ஏகாதிபத்தியத்தினிடமிருந்து - வென்று ஆளாது வெல்லாமலே மற்றோர் ஏகாதிபத்தியத்தின் தயவால் கிடைத்ததை அதன் தத்துப் பிள்ளையாக, கங்காணியாக ஆளவந்திருக்கிற கோழை ஏகாதிபத்தியத்தினிடமிருந்து கோரப்படும் தன்னுரிமையாதலால்தான், திராவிடராகிய நாம் இத் தனியுரிமையை இன்னும் பிரிவினை என்று கூறுகிறோம். 16. உயிர் ஏகாதிபத்தியத்தின் எச்சமிச்சமான உயிரற்ற ஏகாதிபத்தியம் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியிலே இந்தியா ஒரு தனித் தேசிய இனமாகவோ, ஒரு தேசிய உறுப்பாகவோ, ஒரு தேசியக் கூட்டுறவாகவோ கூட இடம் பெற்றிருக்கவில்லை. இதைப் போலித் தேசியப் போர்வை போர்த்த பாரத பக்தர்கள் மறந்திருக்கக்கூடும்; அல்லது மறந்துவிட்டதாகப் பாவிக்கக் கூடும். தெரியாதவர்களாக, நினையாதவர்களாகக்கூட நடித்து மறைக்கக் கூடும். ஏனெனில் மறதியும் மறைப்பும் இவ் வகையில் அவர்களுக்கு ஆதாயமானவை. சில காரியச் சமர்த்தரான வணிகர் உண்டு. அவர்களுக்குக் கடன் கொடுத்தவர்கள் வரும் சமயங்களில், தம் கண்கள் அரை குறைப் பார்வையுடையவை என்பது அவர்கள் நினைவுக்கு வந்துவிடும். தம் செவிகள் கிட்டத்தட்டச் செவிடு என்பதையும் அச் சமயம் அவர்கள் மறந்துவிட மாட்டார்கள். ஆனால், கடன் வாங்கியவர்கள் நெடுந்தொலைவில் சென்றால்கூட, அவர்கள் கண்கள் கழுகுக் கண்களாகவும், செவிகள் பாம்புச் செவி களாகவும் செயல்படத் தயங்கமாட்டா. டில்லி ஏகாதி பத்தியவாதிகள் இந்தக் கலையைக் கரை கண்டவர்கள். அவர்கள் வேண்டும்போது, ஆதாயம் குறிக்கொள்ளும்போது, குருடாக, செவிடாக மட்டுமல்ல - பார்வை என்ற ஒன்று, ஓசை என்ற ஒன்று இருப்பதையே அறியாதவர்களாக நடிக்க, நடக்கத் தொடங்கி விடுவர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மிகப் பெரிய, ஆனால், துண்டு துண்டாக, உலகெங்கணும் சிதறிக் கிடந்த ஓர் உருவிலாப் பரப்பு. பெயரளவில் அதன் தலைமையிடமாக விளங்கிய பிரிட்டனோ, அதன் ஒரு மூலையில், உலகிலே ஒதுக்குப்புறமான ஒரு கோடியில் உள்ளது. எனவே அதன் ஒரு பெரும் பரப்பாக, நடுநாயகமைய அங்கமாக, பிரிட்டிஷ் ஆட்சியாளர் ஒரு புதுவகை ஏகாதிபத்தி யத்தையே உருவாக்கினர். அதுவே இந்திய ஏகாதிபத்தியம் (ஐனேயைn நுஅயீசைந). அது பெயரளவில், கொள்கையளவில் பெரிய ஏகாதிபத்தியத்தின் ஓர் உறுப்பானாலும், உண்மை நிலையில், செயலளவில், தானே ஒரு ஏகாதிபத்தியமாக ஏகாதிபத்திய அங்கமாக அமைந்ததுடன், உருவிலா ஏகாதிபத்தியத்தின் உருவுடைய ஏகாதிபத்திய உடலாகவும் நிலவிற்று. உருவிலா ஏகாதிபத்தியம் உலகில் பாதியானால், இந்த உருவுடைய ஏகாதிபத்தியம் அவ்வுருவிலா ஏகாதிபத்தியத்தில் பாதிக்கு மேலாகவும், உலகில் ஒரு மாபெரும் பகுதியாகவும் இருந்தது. அத்துடன் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் வலிமை, வளம், இதயம், உயிர் நாடியாக அது இயங்கிற்று. இக்காரணங்களால் பிரிட்டிஷார் அடிக்கடி தம் ஏகாதிபத்தியத்தையே மறந்து, இந்திய ஏகாதிபத்தியத்தையே தம் ஆட்சிக்குரிய பெருமையாகக் கொண்டனர். ஏகாதிபத்தியம் என்று அவர்கள் கூறும்போது, இந்திய ஏகாதிபத்தியமே அவர்கள் மனக் கண்முன் வீறுடன் நின்றது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் முடிசூடிய தலைமையைக் குறிக்க அவர்கள் வழங்கிய தொடர் இதைக் காட்டுகிறது. அவர் பிரிட்டிஷ் சக்கரவர்த்தி என்றோ, பிரிட்டனின் சக்கரவர்த்தி என்றோ, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சக்கரவர்த்தி என்றோகூட அழைக்கப்பெறவில்லை. பிரிட்டனின் மன்னர், இந்தியாவின் சக்கரவர்த்தி என்றே அழைக்கப்பெற்றார். பிரிட்டனுக்கோ, வேறு எந்தப் பகுதிக்கோ அவர் சக்கர வர்த்தியல்லர், மன்னரே! இந்தியாவுக்கு மட்டுமே - இந்தியா தேசத்துக் கல்ல, அப்படி ஒன்று பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலோ - அல்லது எக் காலத்திலோ இருந்ததில்லை - இந்திய ஏகாதி பத்தியத்துக்கு மட்டுமே அவர் ஏகாதிபத்தியத் தலைவர் அல்லது சக்கரவர்த்தியாகக் கருதப்பட்டார். அத்துடன் இந்திய ஏகாதிபத்தியத்தின் தலைவர் ஒருவர் மட்டுமே அரசப் பிரதிநிதி (ஏiஉநசடில) என்ற தனிப்பெருமை வாய்ந்த பட்டத்துக்கு உரியவராயி ருந்தார். அவருக்குத் தரப்பட்ட மதிப்பும், அவர் வாழ்க்கை ஆரவாரமும், அவர் கொலுமண்டப ஆடம்பரமும், ஊதியமும், சம்பளப்படிகளும், அதிகாரங்களும் பிரிட்டிஷ் ஏகாதி பத்தியத்துக்கு உள்ளோ, வெளியிலோ உலகில் வேறு எங்கும், எவருக்கும் அளிக்கப்படாதவையாய் இருந்தன. இந்திய ஏகாதிபத்தியத்தின் முதல்வரே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கும் முதல்வராக, உலகத்துக்கும் முதல்வராக விளங்கினார். அவர் ஆட்சிப்பரப்பு ஏகாதிபத்தியத்திற்குள் ஒரு குட்டி ஏகாதிபத்தியமாக, உலகத்தில் ஒரு குட்டி உலகமாக இயங்கிற்று என்பதை இது தெளிவுபடக் காட்டுகிறது. இந்திய ஏகாதிபத்தியம் என்று பிரிட்டிஷ் ஆட்சியில் அழைக்கப்பட்ட பரப்பு இன்றைய பாரதத்தை - இந்தியக் கூட்டரசை மட்டும் உட்கொண்டதல்ல. இன்றைய கிழக்கு, மேற்குப் பாகிஸ்தான்கள் இரண்டையும் அது உள்ளடக்கியது. இவை மட்டுமல்ல. இன்றைய இலங்கையும், பர்மாவும், ஏடனும் சிங்கப்பூரும், மலாயாவும், மாலத் தீவுகளும், இலக்கத் தீவுகளும், அந்தமானும், நிக்கோபாரும் அதனுடன் இணைந்த பகுதிகளாகவே இருந்தன. பிரிட்டிஷார் வென்று கைக்கொண்ட பகுதிகள் என்ற முறையில் தென்னகத்துடன் இந்திய, பாகிஸ்தான் பரப்புக்கள் ஒன்றாகக் கட்டிப்போடப்பட்டது. போலவே, ஏடன், இலங்கை, மலாயா, சிங்கப்பூர், பர்மா ஆகியவையும் இந்திய ஏகாதிபத்தியத்துடன் சேர்த்து இணைக்கப்பட்டிருந்தன. அத்துடன் இவற்றைப் போலவே, வடமேற்கில் ஆப்கானிஸ்தானத்தையும் பலூச்சிஸ்தானத்தையும், வடக்கே நேபாள, பூட்டாணப் பகுதிகளையும், வட கிழக்கில் இந்துசீனம், சீனம், திபெத் ஆகியவற்றையும் கூடப் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் வென்று இந்திய ஏகாதிபத்திய ஆட்சியுடன் சேர்க்கவே விரும்பிற்று. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் விட்டுச் சென்ற ஏகாதிபத்திய மரபை இன்னும் மேம்பட வளர்க்கும் டில்லிக் குட்டி ஏகாதிபத்தியம் இன்று சுதந்தர நேபாளத்திலும் இந்தியைக் கட்டாய மொழியாகப் புகுத்தப் போராட்டம் தொடங்கி வருகிறது! ஆனால், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நேபாள பூட்டானை வெல்ல முடியாவிட்டாலும் இப்போது மேற்கு பாகிஸ்தானின் பகுதியாக விளங்கும் பட்டாணிஸ்தான் என்னும் பழைய ஆப்கானிஸ்தானப் பகுதியையும், பலூச்சிஸ்தானத்தையு மட்டுமே தங்கள் கைவசப்படுத்தி அன்றை ஏகாதிபத்தியப் பகுதியுடன் சேர்த்தது. இச் செய்திகளை மனத்துட் கொண்டே பாரத பக்தர்கள் 1947-இல் பிரிந்துவிட்ட பாகிஸ்தானிலிருந்து பட்டாணிஸ்தானைப் பின்னும் பிரித்துப் பிரிந்த பாகிஸ்தானின் எதிரியாகத் தம் பக்கம் சேர்க்க அரும்பாடுப் பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே அடிப்படையில்தான் பாகிஸ்தானில் சேராத காஷ்மீரும் ஏகாதிபத்தியத்தின் நேர் வாரிசான தம்முடைய ஆட்சிக்கே உரிமையாக வேண்டுமென்று வாதாடி அதற்காக நம் பணத்தையும் இறைத்து, நம் மக்களுயிரை யும் பெரிதும் பலி கொடுத்துள்ளனர். உண்மையில், பிரிட்டிஷார் நேபாளத்தையும் பூட்டாணத்தையும், திபெத்தையும் இந்து சீனாவையும், சீனத்தையும் வென்றிருந்தால், அனைவரும் இந்திய ஏகாதிபத்தியத்தின் கூறுகளாகவே ஆகியிருக்கக் கூடும். ஏகாதிபத்தியத்தின் கூறுகளாகவே அசாமையும் தம் கைக்குள் வைத்துக் கசக்க எண்ணும் தில்லி ஏகாதிபத்தியவாதிகள் அவற்றையும் விடாப்பிடியாகத் தம் தேசப் பகுதிகள் என்று இன்று கூறி வந்திருப்பர், வருவர் என்பதில் ஐயமில்லை. இன்றைய இந்திய ஏகாதிபத்தியத்தின் துரதிருஷ்டம், பிரிட்டிஷார் படைவலிமை சீனாவரை சென்று எட்டவில்லை. இல்லையென்றால் பிரிட்டிஷாரின் நேர்வாரிசான நேரு பண்டிதரின் ஏகாதிபத்தியக் கொடி திபெத்திலுள்ள கைலாசத்திலும் பறந்திருக்கும்! பாரத மக்கள் வணங்கும் பரமேசுவரன் வாழும் மலையும், அவருக்குரிய தாழ்வடக்காய் தரும் மரம், விசிறியாம் வெண்சாமரம் தரும் கவரிமான் ஆகியவற்றைச் செல்வமாகக் கொண்ட நாடும் பாரத மக்களுக்கே உரியவை என்றுகூடப் பாரதம் பண்பாடியிருக்க வழியுண்டு! இது மட்டுமோ? அக்கொடி காவிரிக் கரையில் மட்டுமல்ல, யாங்ட்ஸி ஆற்றுக்கரையிலும், மினாங், மீகாங் ஆற்றுக்கரைகளிலும் கூடப் பறந்திருக்கக் கூடும். நேபாளம், பூட்டாணம், ஆப்கானிஸ்தானம் ஆகியவற்றின் நல்ல காலம், அவை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் வெல்லப் படாததனால் அவ்வாறு வெல்லப்பட்ட இந்திய ஏகாதிபத்தியத்தின் பிடியுட்பட்டுத் தம் சுதந்தரத்தை இழந்து விடவில்லை. அதுபோலவே, ஏடன், இலங்கை, பர்மா, மலாயா, சிங்கப்பூர் ஆகியவற்றின் நல்ல காலம், அவை பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே இந்திய ஏகாதிபத்தியத்திலிருந்து பிரிவுற்று அந்த அறிவுடைய ஏகாதிபத்தியத்திலிருந்தே சுதந்தரம் பெறும் பேறு பெற்று விட்டன. மூன்றாவதாகப் பாகிஸ்தானின் நல்ல காலம் பிரிட்டன் இந்திய ஏகாதிபத்தியத்திலிருந்து பிரிந்து செல்லும் போதே அதுவும் இந்திய ஏகாதிபத்தியத்தினிடமிருந்து பிரிந்து சுதந்தரம் பெற்றுவிட்டது. ஆனால், திராவிடம், அசாம் முதலிய பகுதிகளுக்கு மட்டும்தான் ஏகாதிபத்தியத்தின் ஆட்சியாளர் பிரிந்து சென்ற பின்னும், அந்த ஏகாதிபத்தியத்திலிருந்து பிரியாத நிலையில் அவ் அடிமைப்பரப்பில் ஒட்டிய அடிமைப் பரப்பாய் இன்னும் சில காலம் இயங்கும் துரதிருஷ்டம் ஏற்பட்டுள்ளது. 17. சுதந்தர தேசியங்களின் பிரிவினை இலட்சியம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலிருந்து முதன்முதல் பிரிவுற்ற நாடுகள் இந்திய ஏகாதிபத்தியத்துக்கு வெளியேயுள்ள கனடா, தென் ஆப்பிரிக்கா கூட்டுறவு, ஆஸ்திரேலியா ஆகிய வெள்ளையர் குடியேற்றப் பகுதிகளே, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இதன் பின்னரே பொதுவரசுக் காப்பகம் (ஊடிஅஅடிn றுநயடவா யனே ஞசடிவநஉடிசயவந) ஆயிற்று. ஆனால், தனியுரிமை (னுடிஅiniடிn ளுவயவரள) பெற்ற குடியேற்றங்கள் மட்டுமே பொதுவரசு என்ற சொல்லால் குறிக்கப்பட்டன. இந்திய ஏகாதிபத்தியப் பகுதியோ காப்பகம் என்ற சொல்லால் சுட்டப்பட்டது. காப்பரசின் உறுப்புகள் சார்பரசுகள் (னுநுஞநுசூனுநுசூஊஐநுளு) என்று வழங்கப்பட்டன. இந்த இந்திய ஏகாதிபத்திய உறுப்புக்களிலும் முதன்முதல் வெள்ளையர் ஆட்சியிலேயே பிரிந்தவை ஏடனும் இலங்கையும் மலாயாவும் சிங்கப்பூருமே. இப்பிரிவினைகள்தாம் அவற்றின் சுதந்தரத்துக்கு வழி வகுத்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ஏகாதிபத்தியத்திலிருந்து பிரிந்த சுதந்தர நாடுகளெல்லாம் போக, எஞ்சியுள்ள சுதந்தரம் பெறாத பகுதிகள்கூட ஒரு தேசிய இனப் பரப்பல்ல என்பதை ‘இந்தியக் கூட்டுறவு’ (ஐனேயைn ருniடிn) என்ற அதன் பெயரே சுட்டிக் காட்டுகிறது. காங்கிரஸ்காரர்களே பிரிட்டிஷார் விலகிய சமயம் அதை ஒரு தேசியக் கூட்டுறவு என்றுதான் கருதினர். ஒவ்வொரு பெரிய மாகாணமும் ஒரு தேசிய இனம் என்றே அவர்கள் கருதினர். விடுதலை இயக்கமாக நிலவிய அக்காலக் காங்கிரஸ்காரர் உள்ளப் பாங்கைச் சரிவரக் குறிப்பதானால், அவர்கள் தேசிய இனங்கள் என்று குறித்தது பிரிட்டிஷ் ஆட்சிக் கால மாகாணங் களையல்ல - அவை தேசிய அடிப்படையில் அமையவில்லை யாதலால், காங்கிரஸ் அமைப்பு, மொழி அடிப்படையிலேயே மாகாணங்களைத் தேசிய இனங்களாக வகுத்துக் கொண்டி ருந்தது. ஆனால், விடுதலை இயக்கத் தின்போது கனவு கண்ட இந்த உண்மைத் தேசியம் இன்றைய ஏக இந்தியாவில் கைவிடப்பட்டுள்ளது. மொழியடிப்படையாக மாகாணம் வகுப்பதில் - தமிழகம், கன்னடம் ஆகியவற்றுக்கு மொழிப் பெயர் தருவதில் கூட - அவர்கள் தயக்கமும் மறுப்பும் காட்டுகின்றனர். அத்துடன் பிரிட்டிஷ் ஆட்சியில் மாகாணங் களுக்கிருந்த தன்னாட்சி, மாகாண சுய ஆட்சி உரிமையும் இப் போது பறிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் தேசியக் கூட்டுறவு பெயரளவில்தான் இன்று தேசியக் கூட்டுறவாக அழைக்கப் படுகிறது. அது தேசிய உரிமைகளைக் காலடியிலிட்டு நசுக்கும் பிற்போக்கான கோரமான ஓர் ஏகாதிபத்தியமே என்பதை இவை காட்டுகின்றன. மாகாணங்கள் நாட்டாண்மைக் கழகங்கள் ஆக்கப் பட்டு, மைய ஆட்சி இன்று சர்வாதிகாரம் செலுத்துகின்றது. பிரிட்டிஷ் ஆட்சித் தொடக்கத்தில் இலங்கை இந்தியாவின் ஒரு பகுதியாக, ஒரு முழு மாகாணமாகக் கூட அல்ல, சென்னை மாகாணத் தலைவர் கீழுள்ள ஒரு பெரிய மாவட்டமாகவே அமைந்திருந்தது. இலங்கைக்கு அன்று ஏற்பட்ட இலங்கை இந்திய காங்கிரஸ் இலங்கை பிரிந்த பிறகு இன்னும் தனி அமைப்பாக இயங்குகிறது. இந்திய ஏகாதிபத்திய அம்சமாக முதலில் இருந்த அந் நாடு இடைக்காலத்திலேயே பிரிந்து, ஏகாதிபத்தியம் சுதந்தர மடைந்தபோதே சுதந்தரம் அடைந்தது. காங்கிரஸ் இயக்கம் ஏற்பட்ட காலத்தில் இந்தியாவின் மாகாணங்களில் ஒன்றாகப் பர்மாவும் இயங்கிற்று. மற்ற மாகாணங்களுக்கு மாகாணக் காங்கிரஸ் இயங்கிவந்ததைப் போலவே பர்மாவுக்கும் ஒரு மாகாணக் காங்கிரஸ் (பர்மிய மாகாணக் காங்கிரஸ்) இருந்துவந்தது. பிரிந்துவிட்ட பாகிஸ்தானில் இன்னும் காங்கிரஸ் கட்சி வெளிநாட்டுக் கட்சியாய் இயங்குவதுபோன்றே, பர்மாவில் அது இன்னும் இயங்குகிறது, இந்திய தேசியம் வலுப் பெற்ற காலத்தில் பர்மியர் தாம் இந்திய தேசியத்தின் ஒரு மாகாணமல்ல, தனித் தேசியம் என்பதை உணர்ந்து பிரிவினை கோரினர். பாகிஸ்தானை எதிர்த்ததுபோலவே, இப்போது திராவிட நாட்டை எதிர்ப்பது போல, காங்கிரஸ் அதை முழு மூச்சாக எதிர்க்கவே செய்தது. இன்றைய திராவிடத்தில் முதலமைச்சர் காமராசரும் அமைச்சர் சுப்பிரமணியமும், முன்னாள் காங்கிரஸில் மௌலானா ஆசாதும் காங்கிரஸுக்கும் திராவிட, முஸ்லிம் விபீஷணர்களாயிருந்து வந்துள்ளது போல, பர்மாவுக்குக்கூட அன்று பங்கி உத்தமர் போன்ற விபீஷணர்கள் காங்கிரஸ் ஆதரவாளராக இல்லாமலில்லை. ஆனால், தேசியங்களின் சார்பில் கூட்டுத் தேசிய அமைப்பாகப் பிரிட்டனை எதிர்ப்பதில்தான் காங்கிரஸ் வெற்றி பெற முடிந்ததே தவிர, தேசிய இனங்களின் சுதந்தரப் போராட்ட எதிர்ப்புக்கு முன் அது என்றும் வெற்றி கண்டதில்லை, காணவும் முடியாது. ஏனெனில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் போதுதான் காங்கிரஸ் இயக்கம் விடுதலை இயக்கமாகச் செய லாற்ற முடியும். தேசிய இனங்களை எதிர்க்கும்போது, அதுவும் ஏகாதிபத்தியமாய், தன் சொந்த உருவான ஏகாதிபத்திய வடிவம் பெற்று, உலகில் ஏகாதிபத்தியங்கள் அடைந்த, அடைய இருக்கிற கதியையே தானும் அடைய நேருகிறது. திராவிட தேசியத்தின் முன்னும் அது இதே வகையான தோல்வியைக் கண்டே தீரும்! பர்மாப் பிரிவினையை இப்போது யாரும் நினைப்பதில்லை. ‘பிரிட்டிஷார் பிரித்த பிரிவினைதான் பர்மாப் பிரிவினை; ஆகவே பர்மா ஒரு தனி நாடன்று’ என்று எந்த இந்திய ஏகாதிபத்தியவாதியும் இன்று கூற முடியாது; கூற மாட்டார். ஆனால், பாகிஸ்தான் வகையில் அவ்வாறு கூறினர். நாட்டைக் கூறு போடுவதா, தாயைச் சிதைப்பதா என்றெல்லாம் கூக்குரலிட்டுக் கதறினர்; கேலிப் படம் போட்டனர். ஏகாதிபத்திய வடவர் மட்டுமல்ல, அவர்களின் தமிழகக் கூலிகள்கூடச் சிலேடை நயம்பட, சின்னா அவர்கள் செய்ய எண்ணும் ‘சின்னாபின்னம்’ பார் என்று படம் போட்டுப் பத்திரிகைக் கட்டுரைகள், நூல்கள் எழுதி எழுதிக் குவித்தனர். உலகப் பெரியார் காந்தியடிகள் முதற்கொண்டு, இஸ்லாமிய உலகப் பேரறிஞரான அபுல்கலாம் ஆஸாத் என்ன, பின்னாளில் பட்டாணிஸ்தான் கோரிய எல்லைப்புறக் காந்தி கபார்கான் என்ன- இத்தனை பேரும் சேர்ந்து எதிர்த்தார்கள். ஆனால், இந்திய ஏகாதிபத்தியம் ஒரு சிறு பூசலிட்டுப் பர்மிய தேசியத்தின் முன் தோற்றுவிட்டதுபோலவே, சிறிது பெருங் கூச்சலிட்டு ஆரவாரம் செய்து, தெரிந்தோ தெரியாமலோ தன்னுடன் சேர்ந்து கத்திய முஸ்லிம் விபீஷணர்களையும் பலியிட்டு, பாகிஸ்தான் தேசியத்தின் முன் பணிந்தது. அதனுடன் போட்டியிட்டு நாடு பிரித்துச் செயற்கைத் தேசியம் ஆக்கிற்று! உலக இயக்கமன்றித் தேசிய இயக்கப் பண்பு உணராத காங்கிரஸில் வளர்ந்த உலகப் பெரியாரான காந்தியடிகளைக் கூடக் கைவிட்டு, அவரையும் பலிகொண்டு, காங்கிரஸ் ஏகாதிபத்தியம் பிரிவினைக்குப் பணிந்ததுடன் நில்லாது, அதையே தன் புதுத் தேசிய கீதமாகவும் ஆக்கிக்கொண்டது. அதன் பலனே புதிய ஏகாதிபத்திய ‘சுயராஜ்யம்’! பிரிவினை அடிப்படையாகச் சுதந்தரம் பெற்ற தேசியம்தான் அது - இப்போது பிரிவினையா என்று சீறுகிறது! இதில் இன்னொரு அழகு என்னவென்றால், இன்று திராவிட நாடு ஒரு தேசியமா என்று டில்லி ஏகாதிபத்தியக் குட்டிக்குப் பின் பிறந்த ஏகாதிபத்தியக் கடைக்குட்டியாகிய கம்யூனிஸ்ட்கள் டில்லி ஏகாதிபத்தியக் கட்சியின் வேட்டை நாயாய்ப் பாகிஸ்தான்வாதிகள் மீது பாய்ந்தது என்பதே! ஆனால், புதிய பாகிஸ்தானில் பாகிஸ்தான் காங்கிரஸ் கட்சிபோல, பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சி பிரித்து, அப்புதுத் தேசிய எதிர்ப்பை விழுங்க அது தயங்கவில்லை! நாளை திராவிட நாடு அமைந்த பின்னும் அது திராவிட நாட்டு எதிர்ப்பை விழுங்கித் திராவிட நாட்டுக் கம்யூனிஸ்ட் கட்சியாக இயங்கத் தயங்காது என்று உறுதியாக நம்பலாம்! திராவிட நாடு வகையில் - பாரத பக்தர்கள் - மற்ற தேசியங்களை எதிர்த்துக் கூச்சலிட்டது போலக் கூச்சலிடக்கூடத் துணிய வில்லை. அதன் உள்ளார்ந்த உயிர்த் தேசிய வலுவை அவர்கள் அக உள்ளம் உணர்ந்துள்ளது. திராவிட இயக்கத்தார் மட்டுமே உரத்துக் குரல் எழுப்புகின்றனர், நாவிலே! - பல காங்கிரஸ் தலைவர்கள், அறிஞர்கள் அதையே உள்ளத்திற்குள் வைத்துக் குமுறுகின்றனர் என்பது அவர்கள் அறியாததல்ல. திராவிட இயக்கம் பொது மக்களிடையே வேகமாகப் பரவுவதும் அவர்களுக்குத் தெரியும். ஆனால், அவர்களின் ஒரே நம்பிக்கை - மக்கள் உரிமைகளை விபீஷணர்கள் ஆட்சி மூலமாகவும், தேர்தல் சூழ்ச்சிகள், சமரசப் பிரசாரங்கள் மூலமாகவும் மிதித்துத் துவைக்கலாம் என்பதும், திராவிட நாட்டுப் பிரிவினை நாளை எவ்வளவு நாள் முடியுமோ அவ்வளவு நாள் ஒத்திப்போடலாம் என்பதும், அதற்கிடையே தென்னகச் சுரண்டலையும் ஆதிக்க வேட்டையையும் சாதிக்கு மட்டும் சாதித்துக் கொள்ளலாம் என்பதுமேயாகும். 18. பாரதக் கூட்டுறவில் திராவிட இனத்துக்கு இடம் உண்டா? ‘ஆரியமாவது, திராவிடமாவது’ அதெல்லாம் மலையேறி விட்ட காலம் இப்போது யார் திராவிடர், யார் ஆரியர்? எப்படி அறிவது? இரண்டின் கலவை மீதுதானே இன்றைய பாரத சமுதாயம் கட்டமைக்கப்பட்டுள்ளது?’ என்று கூறும் நல்லோர்கள், பெரியோர்கள், அருளாளர், சமரசவாதிகளை நாம் அங்கங்கே காண்கிறோம், வடக்கிலும் தெற்கிலும்! இவர்கள் பெரும்பாலும் படித்தவர்கள்; ஆரிய திராவிட வேறுபாட்டை வரலாற்றில் கண்டுணர்ந்தவர்கள். பாரத பக்தி, காங்கிரஸ் பற்று, இத்தகையவர்களைத் தாம் காணும் வேற்றுமை கடந்து, ஓர் உருவெளித் தேசியத்தைக் கனவு காணத் தூண்டி யுள்ளன - அவ்வளவே. அக் கனவு நனவாக வேண்டுமானால், அவர்கள் காணும் ஒரே வழி வேற்றுமை அகற்றுவதல்ல, வேற்றுமை காணாதிருப்பதே. வேற்றுமை அகற்றவல்லவர், வேற்றுமை அகற்றவல்ல இயக்கம் காங்கிரஸ் தேசியமன்று. முற்போக்குடையவரென்று தப்பட்டையடித்துக் கொள்ளும் அதன் முன்னோடும் பிள்ளைகளான சமதருமவாதிகள், பொதுவுடைமையாளருமல்லர். அரசியல் சார்பற்ற ஆரியப் போர்வை போர்த்த சமயவாதிகளோ, சமஸ்கிருத வெறியர்களோ, இந்தி வெறியர்களோகூட அல்லர். ஏனெனில், இவர்களெல்லாம் நல்ல பாரத பக்தர்கள் காணும் வேற்றுமையை, கண்டு புறக்கணிக்க விரும்பும் வேற்றுமையைக் கூடக் காணாதவர்கள். ஆரிய திராவிட வேற்றுமையையே தங்கள் பாரத தேசியமாக, சமதர்மமாக, பொதுவுடைமைச் சமுதாயமாக, அகிம்சா தர்மமாகக் கருதுபவர்கள், ஆண்டான் அடிமை ஒற்றுமையன்றி எதுவும் குறிக்கொள்ளாதவர்கள் இவர்கள். ஆரிய திராவிட வேற்றுமை பாராட்டக்கூடாது என்ற சீரிய எண்ணம் கொண்டவர்களுள் முன்னணி முன் வரிசையில் இருந் தவர் காந்தியடிகள். முன் வரிசையில் இருப்பவர் பண்டித ஜவஹர்லால் நேரு. ஆனால், இருவரும் இருவேறு வகைகளில் ஆண்டான் அடிமை ஒற்றுமையையே ஆரிய திராவிட ஒற்றுமையாகக் கண்டனர். இறுதிக்காலத் தொழுகைக் கூட்டமொன்றில் திராவிட நாட்டுக் கோரிக்கைபற்றிக் காந்தியடிகளார் குறிப்பிட நேர்ந்தது. ‘தென்னாட்டிலுள்ள திராவிட மொழிகள் - தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகள் - மிகப் பழமையான பேரிலக்கியம் உடையவை என்று கேள்விப்படுகிறேன். ஆனால், சமஸ்கிருதச் சொல் தொகுதியைப் பேரளவில் கொண்டுதானே - சமஸ்கிருத இலக்கியத்தைப் பேரளவில் அணைத்துத்தானே அவை இத்தகைய வளங்கண்டுள்ளன?’ என்று அவர் கேட்டார். ஆரியர் சார்ந்தே ஆரிய திராவிட ஒற்றுமை காண முடியும், காண வேண்டும் - காந்தியடிகளின் அருளார்ந்த சமரசக் கற்பனை கூட இதற்குமேல் இன ஒற்றுமையை உருவாக்கிக் காணமுடிய வில்லை. சமஸ்கிருத எழுத்து முறை விலக்கி, சமஸ்கிருதச் சொற்கள் என்று ஐயுறப்படும் சொற்களைக்கூட விலக்கித் தனித்து இன்றும் இயங்கி, இனியும் இயங்க இருக்கும் தமிழ் மொழி பற்றிக் காந்தியடிகள் கேள்விப்படவில்லை என்பது தெளிவு. கேள்விப்பட்டால் என்ன கூறியிருப்பாரோ, அறியோம். அத்துடன் சமஸ்கிருதத்துக்கு இலக்கிய இலக்கணம் ஏற்படுமுன்னரே, எழுத்து உருவாகும் முன்னரே, எழுத்து முறையும் இலக்கண இலக்கிய வளமும் வாய்ந்த சிறந்த மொழி தமிழ் என்பதும் காந்தியடிகள்வரை சென்று எட்டாத ஒரு செய்தி ஆகும். பாரத தேசியம் - பல தமிழ்த் தலைவர்களைக் கொண்ட பாரத தேசியம் - அத் தமிழ்த் தலைவர்கள் உழைப்பை மட்டும் ஏற்று, அவர்கள் பெயர் மறந்த தேசியம் செய்த, செய்து வரும் இருட்டடிப்பு இது! காந்தியடிகளாரைவிட முனைப்பாக, காந்தியடிகளாரின் வாரிசாகிய பண்டித ஜவஹர்லால் நேரு ஆரிய திராவிட வேற்று மை உணர்ந்தவர். ‘மீட்டும் கண்டுபிடிக்கப்பட்ட இந்தியா’ என்ற அவர் சிறைக் காவியத்தில், ஆரியர் வருகைக்கு முன்பே நிலவியிருந்த, ஆரிய நாகரிகந்தாண்டிய சீர்சான்ற சிந்துவெளி நாகரிகம் பற்றி அவர் கிட்டத்தட்ட கவிதை மொழியில் சிந்து பாடுகிறார். ஆரியர் வருகையால், இந்திய நாகரிகம் சிறிது தடைப்பட்டு, சிறிது தளர்வுற்றதன்றி, வேறெவ்வகையிலும் தொடர்ச்சியறாது. இன்று வரை நிலவுகின்றது என்றும், இன்றைய இந்திய நாகரிகத்தின் வேர்முதல் அதுவே என்றும் அவர் விளக்கி மகிழ்கின்றார். அத்துடன் ‘நாத்திகம்’ என்ற பகுதியில், இன்றைய இருபதாம் நூற்றாண்டைய மேலை உலகுகூட வியப்பார்வத்துடன் காணத்தகும் உயர் முற்போக்குக் கோட்பாடுகளையுடைய உயர் பண்பாட்டியக்கம் இந்தியாவில் எங்கும் வேதகாலத்துக்கு முன்பே பரவியிருந்தது; அது மூட நம்பிக்கையற்ற பகுத்தறிவொளி கண்டு சமுதாயச் சமத்துவம், சமயச் சார்பற்ற அறிவிலக்கியம் கண்டிருந்தது என்று பெருமைப் படுகிறார். ஆனால், இப்பெருநாகரிகத்தின் - பெரும் பண்பாட்டின் - நிலைக்களமான திராவிட நாகரிகத்தைப் பெயர் சுட்டிக் குறிப் பிடக்கூட அவர் அறிவார்ந்த ஆரியக் குருதி இடம் தரவில்லை. இந்தியா என்ற பெயர் ‘இந்து’ அதாவது நிலவை அடிப்படையாகக் கொண்டு பிறந்தது என்று அவர்தம் புதல்விக்கு வரையும் கடிதத்தில் குறிக்கிறார். விந்தியத்துக்கு வடக்கேயுள்ள பாரதம் - சிந்து கங்கை சமவெளி - ‘இந்து’ போல, பிறைபோல வளைந்து கிடப்பதாலேயே அப் பெயர் பெற்றது என்றும் அவர் கூறத் தயங்கவில்லை. இராமாயணம் தென்னாட்டில் ஆரியர் பரவிய செய்தியைக் குறிப்பதென்றும் அவர் ஒளிவு மறைவின்றி ஏற்றுக் கொள்கிறார். இவை சரியா, தப்பா என்ற ஆராய்ச்சியன்று, இங்கே கவனிக்கத்தக்கது. ஆரிய திராவிட வேற்றுமைகளை நன்கறிந்த பின்னும் ஹார்வார்டு பல்கலைக் கழகத்தின் இச் சீரிய பட்டதாரி, தாம் ஆரியர் என்பதையும் மறந்துவிடவில்லை. நம் பாரத தேசியம் ஆரிய தேசியமே என்பதையும் வற்புறுத்தத் தயங்கவில்லை. அந்த ஆரிய தேசியத்தில் திராவிடருக்குரிய இடம், ஆரிய ஆட்சியை ஏற்றமைந்து, அதற்கு அடிவருடி வாழ்வதே என்பதை இந்த ஆசிய சோதி ஒப்புக்கொள்ள முடிகிறது. இந்தியாவை வெளி உலகில் பெருமைப்படுத்துவதற்காகப் பாரத வாழ்விலும் இலக்கியத்திலும் புறக்கணிக்கப்பட்டிருந்த புத்தரையும் அசோகச் சக்கரத்தையும் ஏற்று வானளாவப் பிரசாரம் நடக்கிறது. அதே முறையில் அதன் பழம் பெருமையைக் கூறுவதற்காகவே உலகம் போற்றும் சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றிப் பண்டிதர் நேரு தம் ஏட்டில் பக்கம் பக்கமாக எழுதுகிறார். அந் நாகரிகம் இருக்கு வேத ஆரியருக்குரியதே என்று நாட்ட முற்படும் ஆரிய இனப் பண்டிதர் உண்டு என்பதை அவர் அறிவார். ஆனால், உலகமொப்பிய அறிஞரான அவர் அவ்வாறு கூற விரும்பவில்லை; கூறவில்லை. அது ஆரியருக்கு முற்பட்ட நாகரிகம் என்றே கூறுகிறார். ஆனாலும் அது ஆரியருக்கு முற்பட்ட இந்து நாகரிகம் என்றே கூறுகிறார், திராவிட நாகரிகம் என்று கூற அவர் ஆரியக் குருதி இடம் தரவில்லை. தென்னாட்டில் முற்போக்கான எண்ணம் - குறைந்தபடி உயர்ந்த ஆங்கிலப்படிப்பு - உடைய பலர் தம் பெயரின் பின் உள்ள ஐயர், ஐயங்கார் என்ற பட்டங்களைத் துண்டித்து எழுதுவதையே நாகரிகமாகக் கொண்டுள்ளார்கள். ஆனால், ஜவஹர்லால் நேருவோ இன்னும் பண்டித என்ற அடைமொழியுடனே நாட்டு மக்களிடையே அறிமுகப்படுத்தப்படுகிறார். ‘பண்டித’ என்பது தென்னாட்டில் வேறு குலத்தவர் அடைமொழியாகப் பயன்படுத்தப்படினும், அதுவே வடதிசையில் ஐயர், ஐயங்கார் போன்ற ஆரிய முதல் வருண அடைமொழி ஆகும். ‘பண்ட்’, ‘பண்டா’ என்பவையும் இதன் திரிபுகளே. ‘ஆரியமாவது திராவிடமாவது, இன வேறுபாட்டை இந்த இருபதாம் நூற்றாண்டிலும் யாராவது கிளப்புவார்களா?’ என்று கேட்க வேண்டியவர்கள் பாரத பக்தர்களோ, சனாதனிகளோ, அல்லது மற்ற அகில இந்திய, அகில உலக இயக்கத்தவர்களோ அல்ல, திராவிட இயக்கத்தவர்களே. இனவேற்றுமை பாராட்டாத இனம் திராவிட இனம். மனித இனத்தை ஒரு குடும்பமாக்கி, உலகை ஓருலகாக்கி, ஓருலகடிப்படையில் ஒரு கடவுள் கண்ட இனம் அது. ஆனால், அது குறிக்கொள்ளும் ஓருலகம், ஓரினம் ‘ஓநாய்’ குறிக்கொள்ளும் ஒருமையல்ல. ஓரினத்தை ஓரினம் விழுங்கி அடிமை கொள்ளும் ஓரின ஒற்றுமையல்ல. இனவரம்பழித்து, உலகை, தேசியத்தை ஓரின வேட்டைக் காடாக்கும் ஒற்றுமையன்று. அது எல்லா இனங்களையும் சரிசம உரிமையுடையவையாக மதித்து, எல்லா இனங்களுக்கும் தத்தம் தன்னுரிமை, தன்னாட்சியுரிமை தந்து, அன்பு அடிப்படையிலே, நேச உறவடிப்படையிலே ஒற்றுமையை உண்டுபண்ண விழைகிறது. இந்த அடிப்படையில்தான் யவனர் என்ற பண்டைக் கிரேக்க, உரோம நாட்டினருடனும் சீனருடனும் அராபியருடனும் (தமிழர்) தொடர்பு கொண்டிருந் தனர். அதே அடிப்படையில் தான் பாரதப் பரப்பிலோ கீழ்திசையிலோ, வேறு எந்தப் பரப்பிலோ இல்லாத அளவில் தமிழகத்தில் மட்டும் இன்று வந்தவர்களுக்கு ஆதரவும், இன உரிமையும் பண்பாட்டுரிமையும், மொழி உரிமையும் தங்குதடையின்றி வழங்கப்பட்டு வந்துள்ளது, வருகிறது. 19. தமிழ்ப் பண்பின் தகையார்ந்த சால்பு தமிழர் இன வேறுபாடற்ற தன்மையே தமிழ்ப் பண்பு. அதுவே தமிழகம் கடந்து, தென்னக முழுவதும் பரந்து, தென்னகப் பண்பாய் இயங்கிற்று, இயங்குகிறது, என்றும் இயங்கும். இத் தமிழ்ப் பண்பு தென்னகப் பண்பு உயிரற்ற தேகப் பண்பன்று. அது உயிர்ப்பண்பு, விசையார்ந்தபண்பு, தான் இன வேறுபாடு காட்டாததுடன் அது அமைவதில்லை. தன்னைச் சார்ந்த கிளையினங்கள், அயலினங்கள் எல்லாவற்றையும் அது அப்பண்பினால் தன் வயப்படுத்தி ஒற்றுமையூட்டவல்லது, ஆட்டி வந்துள்ளது, வருகிறது. தன்னுடன் இணைவுற்ற பின் அது அவற்றை முன்னிலும் பன்மடங்காக வளப்படுத்தவல்லது. இதனை நாம் வரலாற்றிலே பின்சென்று காணலாம். தமிழகத்துக்குள் சிவாஜியின் மரபினருடன் மராத்தியர் வந்து குடி புகுந்தனர். தத்தம் தாய்மொழி பேணிக்கொண்டே, தத்தம் பழக்க வழக்கங்களுடனேயே, தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் அவர்கள் பல்வேறு தொழில்களிலும் இன்றும் முனைந்துள்ளனர். வீட்டில் பேசும் மொழியன்றி வேறெதுவும் இன்று அவர்களைத் தமிழர் சமுதாயத்திலிருந்து பிரித்தறிய உதவாது. இவர்கள் போலவேதான் சௌராஷ்டிரத்தி லிருந்து நடுஇந்தியா, கன்னடநாடு, தெலுங்குநாடு ஆகியவற்றி லெல்லாம் சுற்றி இறுதியில் மதுரையிலும் தமிழகத்திலும் குடியேறிய சௌராட்டிரர் தம் தாய்மொழி நீங்கலாக மற்றெவ் வழியிலும் தமிழரிடமிருந்து வேறு பிரித்தறிய முடியாத வராகியுள்ளனர். சௌராட்டிரத் தாயகம் இவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டால் பெருமையும் இறும்பூதும் எய்தும் அளவுக்கு அவர்கள் முன்னேறியுள்ளதுடன், இக் காலம்வரை எழுத்தும் இலக்கியமும் இல்லாத தம் தாய்மொழிக்குத் தமிழகத்திலிருந்தே எழுத்தும் இலக்கியமும் உண்டுபண்ணி இனப் பெருமை பேணு பவராய் உள்ளனர். விசயநகரப் பேரரசர் காலத்தில் தெலுங்கரும் கன்னடியரும் இதுபோலவே தமிழகத்தில் பரவி வாழ்ந்தனர். சென்ற நானூறு ஆண்டுகளுக்குள் தென்னகத்துக்கு உள்ளிருந் தும் அதன் எல்லையிலிருந்தும் தமிழகம் புகுந்த இவ் வினத்தவர் தத்தம் தாயகத்தில் வாழும் பழைய உறவினரைவிடச் செல்வத்திலும் கல்வியிலும் வாழ்க்கை வளத்திலும் மேம்பட்டவர் களாக, தமிழகத்தின் வாழ்வில் வளமான பங்கு கொள்பவர் களாகவே உள்ளனர். அவர்களில் பலர் தமிழுக்காகப் பாடுபட, தமிழ்ப் புலமையிலும் ஆராய்ச்சியிலும் மேம்பட, தமிழுக்காகப் போராடக் கூடத் தயங்கியதில்லை. முதல் இந்தி எதிர்ப்பு இயக்கத்தில் இத்தகையோர் பலர் தலைமையே வகித்துத் தமிழ்த் தியாகிகளாயினர். இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர், உருதுவைத் தாய் மொழியாகக் கொண்டவர், வங்கத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர் கூடத் தமிழகத்தில் உண்டு. இந்தி ஒழிப்பியக்கத்தில், அயல் ஆதிக்க மொழியாக வந்த தம் தாய் மொழியாகிய இந்தியை எதிர்த்து இவர்களில் சிலர் சிறை வாழ்வுரை ஏற்றுள்ளனர். சேர சோழ பாண்டியர் ஆட்சியில் அராபியரும், யூதரும் சிரிய மக்களும் பல்வேறு காரணங்களால் தென்னகக் கரையோரமெங்கும், கோவா முதல் காயல்பட்டினம் வரை பரவலாக வந்து குடியேறினர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயேசுபிரான் வாழ்ந்த காலத்திலேயே - அவர் சீடர் தூய திருதாமசுடன் யூத சிரிய மக்கள் வந்து தம் சமயம் பரப்பிக் கோயில் குளம் கட்டி வாழ்ந்து வந்துள்ளனர். சென்னை யருகிலுள்ள பறங்கிமலை இந்தத் தூய தாமஸ் பெயரால் இயங்குவதுடன், சென்னையின் தலைசிறந்த அரச பாட்டையும் (மவுண்டு ரோடு) அப் பெயராலேயே வழங்குகிறது. சேர அரசர் இந்த யூத, சிரிய மக்களுக்குத் தனியுரிமைப் பட்டயங்கள் வழங்கியதன் பயனாக, இன்றளவும் சமயம் ஒன்றால் மட்டும் தனியுரிமையுடைய சிரிய கிறித்துவர்களாகவும், அஞ்சுவன்னத் தார் என்னும் பெயருடன் இஸ்லாமியர்களாகவும், மரக்காயர் அல்லது மரக்கலராயர் என்ற மதிப்பு வாய்ந்த சிறப்புப் பெயருடன் தமிழ் வணிகர்களாகவும், சீதக்காதி போன்ற தமிழ்ப் புரவலர்களாகவும், வள்ளல்களாகவும் வாழ்ந்து வந்துள்ளனர். பாண்டியர் ஆட்சிக் காலத்தில் பாண்டிய அரசியற் போர்வை யிலேயே அராபியக் குடியேற்றத்தாரின் பேராளராக (பிரதி நிதிகளாக) அரேபியரே இடம் பெற்று, அமைச்ச ரவையிலே ஆய்வுரையாளராகச் சிறந்து உரிமையுடன் விளங்கினர் என்று அறிகிறோம். இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகம் வந்த இந்த அயலினத்தாரில் பலர் எவ்வகையிலும் தமிழரிடமிருந்து பிரித்தறிய முடியாதவராகத் தமிழராகிவிட்டதன் மருமம் என்ன? சிலர் தம் பழைய மொழி, சமயம், பழக்க வழக்கங்கள் ஆகிய சின்னங்களை இன்றும் பேணி வந்தாலும், தாம் அயலா ரென்பதையே மறந்து, தமிழராக வாழ்வதன் மறை திறவுதான் என்ன? பலர் தம் பழைய தாயகத்தை அயலினமாகக் கருதுமளவுக்கு, அவர்களால்கூட அவ்வாறு கருதப்படுமளவுக்குத் தமிழ் வாழ்வுடன் எப்படி ஒன்று பட்டார்கள்? எல்லா இனங்களுக்கும் தமிழர் இடம் தந்ததுடன் நில்லாது அவரவர்களுக்கு முழுச் சமத்துவ உரிமை, இனப் பாதுகாப்பு, மொழிப் பாதுகாப்பு, உரிமைகள், குடியாட்சி உரிமைகள் வழங் கியதே இப்பொன்னார் நிலைக்குக் காரணம் என்று காண்டல் அரிதன்று. தமிழகத்திலுள்ள தெலுங்கர் தமிழ் மொழியை மட்டும் வளர்த்தவர்கள் அல்ல. தொலைத்தாய் இனமான ஆந்திரத்தின் இலக்கியத்திலும் அவர்கள் கொண்ட பங்கு சிறிதல்ல. தம் காலத் தமிழர் வரலாற்றை, தமிழகக் கலைவளங்களை அவர்கள் தெலுங்கில் எழுதி ஆந்திர வாழ்வையும் வளப்படுத்தியுள்ளனர். ஆந்திர மொழியில் 16 முதல் 18ஆம் நூற்றாண்டு வரையுள்ள நாடகப் பேரிலக்கியம், உரைநடைப் பேரிலக்கியம் கிட்டத்தட்ட முழுவதும் தமிழகத் தெலுங்கர் தமிழர் வாழ்வுபற்றித் தெலுங்கில் எழுதியவையேயாகும். தியாகராயர் வளர்த்த தமிழிசை ஆதரவற்றுத் தளர்ந்து அழிந்து வந்த தமிழிசைக் கலையின் தெலுங்கு உருவமேயாகும். தவிர, ஆந்திர முன்னோர், உறவினர் வாழ்வின் வளத்தை விட, உயர்வை விடத் தமிழகத் தெலுங்கர் வாழ்வில் வளமும் அறிவும் சிறந்தவர்களாகவே, இன்றளவும் விளங்குகின்றனர். தமிழக மராத்தியர், அராபியர், சிரியர் நிலையும் இதுவே. மராத்திய நாட்டு வாழ்விலோ, அரபி நாட்டு வாழ்விலோ கூட அவர்கள் இவ்வளவு சீரிய நிலை அடைந்திருக்க முடியாது. தாழ்ந்த தமிழகத்திலேயே அவர்கள் நிலை இது என்றால், இனி வர இருக்கும் வாழ் தமிழ்த் தாயகத்தில் அவர்கள் பங்கு எவ்வளவு என்று எண்ணி மதிப்பிடல் அரிதே என்னலாம். 20. பிராமண இளைஞர் முன்வருவரா? தமிழகத்தில் வந்த அயலினத்தாரில் மிக மிகப் பழமையா னவர்தாம் ‘ஆரியர்’ என்று அடிக்கடி தம்மைக் குறித்துக் கொள்ளும் கவிஞர் பாரதியினத்தவரான பிராமணர்கள். இவர்களில் இருநூறு ஆண்டுகட்கு முன் வந்தவரும் உண்டு. இரண்டாயிர ஆண்டுகட்கு முன் சங்க காலத்திலே தமிழகத்துக்கு விருந்தினராக வந்து, பட்டயங்களுடனும் தனிச் சிறப்புரிமை களுடனும் தமிழரசரால் போற்றப் பட்டவர்களும் உண்டு. வடவர், பிரகசரணத்தார், எண்ணாயிரவர், அறுவேலிகள் (ஆறாயிரத்தார்) முதலிய பெயர்கள் இன்னும் அவர்கள் தனி வருகைச் சின்னங்களாக இயல்கின்றன. இவர்கள் வடக்கிலிருந்து வந்தவர்கள் என்பதற்கு உண்மையில் அவர்கள் பெயர்களையும் வரலாற்று ஆதாரங்களையும் தவிர வேறு தெளிவு காண்டல் அரிது. அந்த அளவுக்கு மற்ற அயலினங்கள் கூடப் பெறாத தனிச் சிறப்புரிமையும் சமுதாய, சமய அரசியல் வாழ்வில் பங்கும் அவர்கட்குத் தொடக்கத்திலிருந்தே தரப்பட்டிருந்தன. தாழ்ந்த தமிழகத்தில், பிரிவுற்றுத் தேய்ந்த தென்னகத்தில் கூட அவர்கள் நிலை, வாழ்வோங்கிய வடதிசையிலுள்ள அவர்கள் முன்னோர், இன்றைய உறவினர் நிலையைவிட எவ்வளவோ மேம்பட்டது. அவர்கட்குத் தமிழகத்திலும் தென்னகத்திலும் இருக்குமளவு வாழ்க்கை வசதி, கல்வி வசதி, மக்கள் ஆதரவு ஆகியவை அவர்களுடைய வடதிசை உறவினர்களுக்கும் கிடையாது. தமிழ் வணிகர்களும் செல்வர்களும், தென்னக அரசர்களும் ஒருவரை ஒருவர் எவ்வளவு எதிர்த்தழித்தாலும், தம் குடிகளை எவ்வளவு துயரப்படுத்தித் தவிக்கவிட்டாலும், ஒருவருடன் ஒருவர் போட்டியிட்டுச் சமஸ்கிருதப்பள்ளி, கல்லூரிகள், வேதபாட சாலைகள், அறநிலையங்கள், கோயில் திருப்பணிபேரால் மானியங்கள் ஆகியவற்றுக்கு நாட்டின் செல்வ முழுதும் வாரி வழங்கினர். பிரிட்டிஷ் ஆட்சியிலும் இந்நிலையே நீடித்துள்ளது. வடதிசை தராத வாய்ப்பு வளங்களைத் தென்திசை அவர்கட்குத் தந்ததனாலேயே, இன்று கல்வியிலும் அறிவிலும், திறமையிலும் ஆற்றலிலும் வடதிசைப் பிராமணரைவிடத் தென்திசைப் பிராமணரும் தலை சிறந்து விளங்குகின்றனர். அனைத்திந்தியப் பணிமனைகளிலே, எல்லாத் தாய்மொழி நிலங்களிலும், தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தமிழகப் பிராமணர்களையே மிகமிகப் பெருவாரியாக இன்று காண்கிறோம். அவர்கள் இல்லையானால் இன்று பாரத ஆட்சியில்லை, நாகரிகமில்லை, கலை இல்லை. அவர்கள் இல்லையானால் சமஸ்கிருதத்தின் பெருமை, ஆரிய நாகரிகத்தின் பெருமை பாதிக்குமேல் குன்றிவிடும். மற்ற அயலினத்தவர்களெல்லாம் தம் தாய்மொழி, பழக்க வழக்கங்கள், சமய முறைகளைக் கொண்டே வந்தனர். பலர் இன்னும் அவற்றைப் பேணியே வருகின்றனர். ஆனால், ஆரியர் எனப்படும் பிராமணர் தம் தாய்மொழியைக் கொண்டு வந்தனரோ, இல்லையோ - இன்று புகுந்த நாட்டுத் தாய் மொழியன்றி அவர்கட்கு வேறு எதுவும் மொழி மரபு கிடையாது. பழக்க வழக்கங்களிலும் அவர்கள் தம் அயற்பழமை பேணியுள்ளனர் என்று கூறமுடியாது. அவர்கள் தமிழர் கோயில்களையும் வழிபாட்டு முறைகளையும் சமயத்தையும் தமதாக்கிக் கொண்டு அவற்றில் ஆதிக்கமே வகிக்கின்றனர். தம் பழைய வேள்வி முறைகளை, மந்திர தந்திரங்களைப் பெரிதும் மறந்து கை நெகிழ விட்டுள்ளனர். அதுமட்டுமோ? அவர்கள் வடதிசை முன்னோரையும் உறவினரையும்கூடத் தம் தென்திசை ஆதிக்கத்தால் மாற்றி, தென் திசைப் பண்பை இமயம்வரை ஓரளவு பரப்பியும் விட்டனர். அத்துடன் தம் வடதிசை உறவினர் உண்ணும் மீனையும் கைவிட்டு, தமிழகச் சமய உயர் வகுப்பினருடன் இடம் பெற்று, அத் தமிழகச் சமய உயர் வகுப்பினருடன் இடம் பெற்று, அத் தமிழகப் பண்பாட்டைக் கூர்ச்சரம், அலகாபாதுவரை பரப்பியும் வருகின்றனர். அவர்கள் வடதிசை உறவினர் அணிந்துவந்த, அணியும் இரட்டைக் குழல் பைகளை (பாய்ஜாமாக்களை) மெல்லப் பாளைத்தாராக்கி இப்போது பழமைச் சின்னமாக ஒதுக்கி வருகின்றனர். அவர்கள் முன்னோரும் அவர்கள் வழிவந்த இன்றைய வடதிசை உறவினரும் விரும்பி உண்ணும் மரப்பலகை (சப்பாத்தி)யையும் அறவே மறந்து, மென்மை வாய்ந்த தமிழுணவே உண்டு அவர்கள் தமிழரினும் மெல்லியவர்கள் ஆய்விட்டனர். மற்றவரினும் முனைப்பாக - மற்ற அயலினங்களைப் போலவேதான் தமிழக ஆரியரும் முற்றிலும் தமிழராய், தமிழ் நாகரிகத்தைப் பாரதமெங்கும், உலகெங்கும் பரப்பும் தூதராய் விளங்குகின்றனர். ஆனால், தென் திசைத்தேனை உலகெங்கும் வாரியிறைத்த- இறைத்து வரும் இதே தமிழக ஆரியர் அல்லது பிராமணர் வடதிசை ஆலகாலத்தையும் - வருணாசிரம இன வேறுபாட்டை யும் - தமிழகத்தில் ஊறச் செய்து, அதன்பிடியை இன்னும் வலுப்படுத்தவே வடதிசைப் பிற்போக்கு நாகரிகத்துடன் முற்போக்குடைய தென்னகத்தைக் கட்டிப்போட விழைகின்றனர். எப்படியோ முற்றிலும் அவர்கள் கையில் சிக்கிவிட்ட கல்வி, செய்தி பரப்பி நிலையங்களை எல்லாம் இன வேறுபாட்டு முறை, சாதி வருண முறை, மூடநம்பிக்கைகள் பரப்பும் ‘அழகுச் சைத்தான் கலை நிலையங்க’ ளாக்க அரும்பாடுபட்டு வருகின்றனர். தென்னகப் பிராமணர் தமிழர் நாகரிகத்தில் மேம்பட்டு விளங்கும் அளவுக்குத் தென்னகப் பண்பிலும், தமிழ்ப் பண்பிலும் ஊறி, இன வேறுபாடற்ற தமிழர் தனி வாழ்வுரிமைக்குப் பாடுபட்டு, தமிழினத்தைத் தம் மூலதனமாக்கி உலகுக்கு ஒளிதரப் பாடுபடும் நாள் விரைவில் வர வேண்டும். அந்நாள் வரப் பாடுபடும் பிராமணரே வருங்கால உலகில் உலக நாகரிகத்துக்குப் புது வாழ்வு தந்த பிராமணராகப் போற்றப்படுவார் என்பதில் ஐயமில்லை. மற்றெல்லாம் வகைகளிலும் வளமும் உரமும் வாய்ப்பும் மிக்க தமிழகத்தை அடிமைப்படுத்தி உள்ளூர நின்றரித்துவரும் ஆரியத்தை, பாரத தேசிய நோயை, உலகின் முதலாளித்துவ முறைக்கெல்லாம் மூலவேராயுள்ள நச்சுப் பண்பை அகற்ற அவர்கள் பாடுபட்டால், தென்திசை மீண்டும் உலக நலனில் பங்கு கொண்டு அதை மீண்டும் புதுவாழ்வு நோக்கி வளர்க்கும் வளர்ப்புப் பண்ணையாக இயங்கி விடும். அந்நிலைக்கு உழைக்க இளைஞர் நங்கையர் - பார்ப்பன இளைஞர், நங்கையர் - முன் வந்து, தமிழ்ப் பண்பின் புது வளத்துக்கு இன்னும் ஒரு சான்று அளிப்பரா? 21. தமிழ்ப் பண்பும் ஆரியப் பண்பும் இன வேற்றுமை காட்டாத தமிழரின் இனப் பண்பு, அதாவது திராவிடப் பண்பு மொழி கடந்து, இனங்கடந்து, தேசங்கடந்து செயலாற்றவல்லது. ஆனால், இன வேற்றுமையே பண்பாகக் கொண்ட ஆரியப் பண்பு அவ்வினத்துக்கே கேடும் பழியும் சூழ்வது. இதனைத் தமிழகப் பிராமணர் நிலையும் காந்தியடிகளாரின் வாழ்க்கையுமே மெய்ப்பித்துக் காட்டவல்லன. தமிழகத்திலும் சரி, தமிழகத்துக்கு வெளியேயுள்ள பிற தென்னகப் பகுதிகளிலும் சரி - பிராமணர் அறிவிலும் நாகரிகப் புறப்பண்பிலும் வாழ்க்கைத் தரத்திலும் மற்ற தென்னாட்டவரைக் காட்டிலும் உயர்ந்த நிலையுடையவராகவே விளங்குகின்றனர். இங்கே அவர்கள் ஆட்சியினத்தில் மிகப் பெரும் பங்கு உரிமையு டையவர்களாக, கிட்டத்தட்ட ஆட்சியினமாகவே இயங்கு கின்றனர் என்பதும் தெளிவு. இதனால் அவர்கள் தற்பெருமை கொண்டு, தம் உயர்வுக்கு ஆரியக்குருதி - ஆரியப் பண்பாடுதான் காரணம் என்று கருதி அந்த ஆரிய இனத்தையும் ஆரியப் பண்பாட்டையுமே வளர்க்க அரும்பாடுபடுகின்றனர். ஆனால், அவர்கள் ஒரு சிறிது சிந்தனைக்கு வாய்ப்பளித்தால், இந் நம்பிக்கையின் பொருந்தா முரண்பாடு தெற்றென விளங்கும். பிராமணர் உயர்வுக்கு ஆரியக் குருதியோ, ஆரியப் பண்பாடோ, ஆரிய மரபோ காரணமென்று கொள்வதானால், சிந்து ஆற்று வெளிப் பிராமணர் கங்கைவெளிப் பிராமணரிலும் கோதாவரிக் கரைப் பிராமணர் காவிரிக் கரைப் பிராமணரிலும் மேம்பட்டவராயிருத்தல் வேண்டும். பண்டோ இன்றோ அத்தகைய நிலை இருந்ததாக இருப்பதாக யாரும் கூற முடியாது. வேதகாலந் தொடங்கிப் பாணினி காலம்வரை வடக்கே இந்நிலை இருந்ததென்பது உண்மையே. ஆனால், இது பிராமணர் நிலையல்ல, ஆரியர் நிலை மட்டுமே. சிந்து ஆற்றுவெளி ஆரியர் அன்று சிந்து ஆற்றைப் புண்ணிய ஆறாகவும், சிந்துவெளியைப் புண்ணிய நிலமாகவும் (ஆரிய பூமி, புண்ணிய பூமி, பிரமதேசம்), தற்காலம் ஆப்கானிஸ்தான் எல்லையிலிருக்கும் தட்சசீலத்தைப் புண்ணிய நகரமாகவும் கொண்டாடினர். கங்கை வெளியை ஆரிய திராவிடக் கலப்பினத்தவரின் திருந்தாமொழிப் பகுதியாகக் கருதி இழித்துரைத்தனர். ஆனால், பாரத காலத்தில் யமுனைக் கரையும், இராமாயண காலத்துக்குள் கங்கைக் கரையுமே ஆரிய நாகரிகத்தின் தலைமை யிடங்களாயின. இக் காலத்திலே புராணங்கள் இயற்றப்பட்டனவாதலால் அன்று முதல் இன்றளவும் சிந்து ஆறு புண்ணிய ஆறு என்பது மறக்கப்பட்டுக் கங்கை ஆறே புண்ணிய ஆறாகவும், சிந்து வெளியாகிய பாஞ்சாலமே பழைய பிரமதேசம் அல்லது ஆரிய பூமி அல்லது புண்ணிய தேசம் என்பது மறக்கப்பட்டு, கங்கை வெளியே புண்ணிய நிலமாகவும், தட்சசீலமே புண்ணிய நகரம் என்பது மறக்கப்பட்டுக் காசியே புண்ணிய நகரமாகவும் கருதப்பட்டு வருகின்றன. ஆயினும் அதன்பின் கோதாவரியிலும், காவேரியிலும், வைகைக் கரையிலும், தாமிரவருணிக் கரையிலும் தங்கிய பிராமணர்தாம் திராவிட நாட்டில் புதிதாக வளர்த்த பண்பாட்டையே ஆரியப் பண்பாடாக்கி, அதைக் காசிவரை பரப்பினர். காவிரி தலைசிறந்த புண்ணிய ஆறாகவும், காஞ்சி தலைசிறந்த புண்ணிய நகரமாகவும் ஆயின. நகரங்களில் சிறந்த நகரம் காஞ்சி (நகரேஷு காஞ்சி) என்ற பழஞ் சொல் காளிதாசன் காலத்திலேயே (கி. பி. 5ஆம் நூற்றாண்டிலேயே) புதிய ஆரியத்தின் பழஞ் சொல்லாகிவிட்டது. புதிய ஆரிய சமயத்தின் எல்லா ஆச்சாரியரும் தென்னகத்திலேயே பிறந்து காஞ்சியை வாழ்வகமாகவோ பயிற்சித் தளமாகவோ ஆக்கிக் கொண்டிருந்தவர்களே என்பதை யாவரும் அறிவர். இன்றும் சிந்துவெளிப் பிராமணரைவிடக் கங்கைவெளிப் பிராமணர், அவர்களைவிடக் கோதாவரி, காவிரி, தண் பொருநைக் கரைப் பிராமணரே பிராமண சமுதாயத்தில் பண்பாட்டிலும் அறிவிலும் திறமையிலும் தலை சிறந்தவர்களாக விளங்குகின்றனர். பிராமணர் உயர்வுக்குக் காரணம் அவர்கள் ஆரியக் குருதியோ, ஆரிய மரபோ, ஆரியப் பண்பாடோ அல்ல. அவர்கள் திராவிடப் பண்பாட்டுத் தொடர்பே என்பதை இது தெள்ளத் தெளியக் காட்டுகிறது. தென்னாட்டில் அவர்கள் பெற்ற தலைமை நிலைக்குத் தென்னக அரசரும் செல்வரும் மக்களும் அவர்களுக்கு அளித்த தனிச் சலுகைகளே காரணம் என்பதையும் இதே நிலை விளக்குகிறது. ஏனெனில், பிராமணருக்கும் ஏனைய நாட்டு மக்களுக்கும் இடையே தென்னகத்தில் உள்ள மலைமடுவான வேற்றுமை வடதிசையில் பொதுவாக, சிந்துவெளியில் சிறப்பாக, இல்லாத ஒன்று. மற்றும் ஒரு செய்தியும் இதை வலியுறுத்திக் காட்டுகிறது. தென்னகத்திலும் ஆந்திரம், தமிழகம், மலையாளம், கன்ன டம் ஆகிய நான்கு பகுதிகளிலும் அவர்களுக்குத் தரப்பட்ட சலுகைகள் வேறு வேறு வகைப்பட்டவை. தமிழகச் சலுகைகளில் சமயச் சார்பான மக்கட் சலுகை மிகுதியானாலும், அதனிலும் அரசர், செல்வர் ஆகிய ஆட்சி வகுப்பினர் அளித்த அரசியல் சலுகை, கல்விச் சலுகையே மிகுதி. அதனால் அவர்கள் அடைந்த உயர்வும், அறிவு வகுப்பு, ஆட்சி வகுப்பு என்ற முறைப் பட்டதாகவே பெரிதும் இருந்து வருகிறது. ஆந்திர நாட்டில் அவர்கள் பெற்ற சலுகை பெரிதும் சமயச்சலுகை மட்டுமே. அவர்கள் உயர்வும் தேற்ப உற்ப ஆட்சி வகுப்பு, அறிவு வகுப்பு என்ற அளவில் பெரு மதிப்படையவில்லை. மலையாள நாட்டிலும் அதன் வடதிசைக் கன்னடப் பகுதியிலும் (அதாவது பழைய சேர நாட்டிலும்) அவர்களுக்குச் சமய, சமுதாய உயர்வும் நிலப்பண்ணை முறைசார்ந்த உயர்வும் அளிக்கப்பட்டன. இதனால் இங்கே பிராமணர் அரசியல் அறிவுவகுப்பாகவோ ஆட்சி வகுப்பாகவோ அமையாமல், கலைவகுப்பாகவும் சமய ஆட்சி வகுப்பாகவும், நிலச்செல்வ ஆட்சி வகுப்பாகவும் (ஜன்மிகள் அல்லது ஜமீன் வகுப்பாகவும்) நிலவுகின்றது. சமண சமயம் நீண்ட காலமும் வீர சைவ சமயம் அதன் பின்னும் நிலவியிருந்த கன்னட குசராத்து நாடுகளிலும் தமிழக வைணவம் பரவிய மராத்தி வங்கநாடுகளிலும் பிராமணர் இவ்வளவு எளிதாக உயர்வு பெற முடியாமல், மற்ற ஆட்சி வகுப்பினருடன் நீடித்துப் போராடி வந்துள்ளதும் இன்னும் வடதிசையில் ஆட்சி வகுப்பினரை அண்டி வாழ்பவராகவோ மக்களுடன் மக்களாகவோ வேறுபாடில்லாமலே வாழ்வதும் காண்கிறோம். இன்றளவும் வரலாற்றில் இவ் வேறுபாடுகளின் தடங்களைப் பார்க்கலாம். இனங்கடந்த இயல்பான திராவிடப் பண்பின் ஆற்றலை யும், ஆரியப் பண்பாட்டின் அழிமதியையும் காந்தியடிகள் வாழ்க்கையிலே ஒருங்கே காணலாம். பாரத தேசியத்தை ஏற்ற காந்தியடிகள் திராவிட இனத் தேசியத்தை முற்றிலும் மறுக்கவே முற்பட்டிருந்தார் என்பதை மேலே கண்டிருக்கிறோம். ஆனால், அதே சமயம் திராவிடரின் இன வேறுபாடற்ற பண்பு அவர் வாழ்க்கையில் ஒளி வீசிற்று என்பதில் ஐயமில்லை. அவரே இப்பண்பு காரணமாகப் பகவத்கீதை, இயேசு பிரானின் மலைமேல் போதனை, நபி நாயகம், டால்ஸ்டாய் போன்றவர் அருள் நெறிகள், வள்ளுவர் குறள் ஆகியவற்றை ஒரேபடியில் வைத்து மூல ஒளிகளாகக் கண்டுள்ளார். ஆனால், இயேசுபிரான், நபிநாயகம், டால்ஸ்டாய், வள்ளுவர் ஆகியோர் பண்புகள் அவரை ‘உலகப் பெரியார்’, ‘மகாத்மா’ ஆக்கின என்பதில் ஐயமில்லை. அவற்றுடன் ஒப்பாக அவர் கொண்ட கீதையோ அவர் வாழ்க்கைக்குக் கூற்றுவனாக முடிந்தது! திராவிடத் தேசியத்தை மறுத்த அடிகளின் இறுதித் தொழுகைக் கூட்டத்தை அடுத்தே மற்றொரு தொழுகைக் கூட்ட நிகழ்ச்சியும், அதன் ஒரு மூல நிழல் என்று கொள்ளத்தக்க அவர் தேசிய வாழ்வின் தொடக்க நிகழ்ச்சி ஒன்றும் இதனை முனைப்பாக நம் கண்முன் படம் பிடித்துக் காட்ட உதவுகின்றன. ‘தென்னகத்தில், தமிழகத்தில், பிராமண எதிர்ப்பியக்கம் ஒன்று வகுப்புவாத முறையில் உயிராற்றலுடன் இயங்குகிறது. அது தமிழகக் காங்கிரசைக்கூட ஆட்டிப் படைக்கிறது. இதுபற்றித் தங்கள் கருத்து விளக்கம் அறிய விரும்புகிறோம்’ என்று தொழுகைக் கூட்டத்தில் ஒருவர் கேட்டார். ‘அதற்குக் காரணம் என்ன? எத்தனையோ சாதிகள் தமிழகத்தில் இருக்க, பிராமணரை மட்டும் இப்படி ஒரு சாரார் எதிர்ப்பானேன்?’ என்று கேட்டார் அடிகள். “கல்வித் துறையிலும், எல்லா நிலையங்களிலும், பணிமனைகளிலும் பிராமணரே பெருவாரியாக இருக்கின்றனர்; இதனால் ஏற்படுவதே இந்த எதிர்ப்பு” என்று விடை தரப்பட்டது. அடிகள் புன்முறுவல் பூத்தார். “அப்படியா? இதில் குற்றம் பிராமணர் மீதுதான் இருக்கிறது என்று எண்ணுகிறேன். உண்மையான பிராமணர் கடமை, ஆங்கிலம் படித்து அயலாட்சிகளில் அடிமைத் தொழில் புரிவதன்று. பிராமணருக்கு வகுக்கப்பட்ட கடமை அதுவன்று. அவர்கள் சமஸ்கிருதமும் வேத சாத்திரங்களும் படித்து வேள்வி வழிபாடுகளில் கருத்துச் செலுத்தி மக்களுக்குச் சமயத் தலைமை கொள்ள வேண்டியது தான் முறை. அதைத் தென்னகப் பிராமணர் பின்பற்றினால், அவர்கள் தருமமும் சிறக்கும், சிக்கலும் தீரும்” என்றார் அவர். அடிகள் விளக்கம், தமிழகப் பிராமணரையும் மராத்தியப் பிராமணரையும் ஒருங்கே நெஞ்சில் அடித்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால், தமிழகப் பிராமணர் வெறும் அரசியல் வகுப்பு மட்டுமல்ல; திராவிடப் பண்பில் ஊறிய வகுப்பு. ஆகவே அவர்கள் கண்டித்தனர், கிளர்ச்சி செய்தனர். அவர்கள் பெரியார் வழிதான் பின்பற்றினர். கோட்சே வழி பின்பற்றவில்லை. கோட்சே செயலுக்குத் தூண்டுதல் மட்டும் தம்மையறியாமலே அவர்கள் மேற்கொள்ள நேர்ந்தது. ஆனால், வடதிசையில் பொதுவாக, மராத்தி நாட்டில் சிறப்பாக ஏற்பட்ட நிலை இதுவல்ல. அங்கே பிராமணர் தமிழகப் பிராமணர்போல ஆட்சி வகுப்பினரல்ல, ஆட்சி வகுப்புடன் போராடி அதை முற்றிலும் அழிக்க முயன்றும் முழுதும் முடியாமல் அவதிப்பட்ட பேஷ்வா மரபு அது. தமிழகப் பிராமணர் ‘கூற’த் தயங்கியதை அது கோட்சே உருவில் ‘செய்ய’த் துணிந்தது! இந் நிகழ்ச்சிக்கு மூல முதலான நிகழ்ச்சி இவ்வளவு கோர முடிவுக்குரியதன்று. தென்னகப் பிராமணர், தமிழகப் பிராமணர் ஒருபோதும் இம் முடிவுக்கு வந்திருக்க மாட்டார்கள் என்று உறுதியாகக் கூறலாம். ஆனால், மூல நிகழ்ச்சி தென்னகப் பிராமணர் பிரச்சனை - தூண்டிய உணர்ச்சியும் அதுவேயாகும். தென்னகப் பிராமணர் சென்ற தவறான பாதையையும், திராவிடப் பண்பும், திராவிட இயக்கமும் அவர்களுக்குக் காட்டி வரும் சீரிய ஒளி விளக்கத்தையும் இது நயம்படக் காட்டுவதாகும். இம் மூல நிகழ்ச்சிக்கு ஒளிகாட்டும் மூலக்கரு முதல் நிகழ்ச்சி ஒன்று உண்டு. அது இருபதாம் நூற்றாண்டில் இருபது கடந்த காலம். தென்னகத்தில் இன்றைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூல முன்னோடியான நீதிக்கட்சி ஆட்சி மேற்கொண்டிருந்தது அந்நாட் களில்! ஆனால், ஆட்சி நீதிக் கட்சியின் கையிலிருந்தாலும், இன்றும் ஆளும் வகுப்பினர் உள்ளத்திலே திராவிட முன்னேற்றக் கழகப் பண்பு உள்ளூறப் பரவி வருவதுபோல, அன்று அரசியல் வடிவிலில்லாவிட்டாலும் ஆன்மிக வடிவில், அறவடிவில் காந்தியாரின் அருட் பண்புகள் மக்களிடையேயும் நீதிக் கட்சி ஆட்சியாளரிடையேயும் கூடப் பரவி வந்தன. பல நீதிக் கட்சித் தலைவர்கள் காங்கிரசின் அரசியல் கோட்பாட்டை ஏற்காமலே காந்தியடிகளின் அருளுருவின் வீர வழிபாட்டில் தம்மையறியாது இழைந்து வந்தனர். அவர்களில் சிலர் திரை மறைவில், ஆனால், தூய உள்ளத்துடன், தலைமை யாட்சியாளரிடையிலேயே மெல்லக் காந்தியப் பிரசாரமும் காங்கிரசுப் பிரசாரமும் தொடங்கினர். ‘காந்தியடிகள் வந்தபின் காங்கிரஸ் இயக்கம் பழைய அரசியல் இயக்கமாக இல்லை. மனங் கவர்ந்து ஆட்கொள்ளும் மக்கள் இயக்கமாகி வருகிறது. அதற்கு வெளியே இருந்து நாம் எதிர்நீச்சு நீந்துவானேன்? காங்கிரசிலேயே சேர்ந்து பிராமணரல்லாதார் நலனுக்காகக் காந்தியடிகளின் தூய அருள் தலைமையில் போராடுவோம்!’ என்று அவர்கள் பேசினர். நீதிக் கட்சியின் முதல்வர்களில் ஒருவர் நீங்கலாக மற்றவர்கள் காங்கிரசில் இருந்து வளர்ந்தவர்களே. அதைத் தோற்றுவித்த அந்த முதல்வர் டாக்டர் நடேசனோ காந்தியடி களுடனொத்த அருளாளர், மக்கள் தொண்டர். ‘மகாத்மா’ப் பட்டம் பெறாத ஒரு மகாத்மா. நீதிக்கட்சியின் இதயம் அவரே. இதயமும் மூளைகளும் பேசி ஒரு முடிவுக்கு வந்தன. நீதிக்கட்சியினர் படிப்படியாகக் காங்கிரசில் சேருவதென்றும், ஆனால், சேரு முன்னால் தம் மனங் கவர்ந்த அருள் தலைவர் காந்தியடிகளுடன் தம் கருத்துக்களைக் கலந்து கொள்வதென்றும் தீர்மானமாயிற்று. பிராமணர் அல்லாதார் நலனில் தம் அக்கறை காட்டு வதற்காக, காங்கிரசிலுள்ள பிராமண நல்லோர் எல்லாரும் சேர்ந்து, ஐந்தாண்டுகள் அரசியற் பணிகளில் புதிதாகப் பிராமணரைச் சேர்க்காமலிருந்து சமத்துவத்தில் தம் அக்கறை தெரிவிக்க வேண்டுமென்றும், காந்தியடிகள் இதனைப் பிராமண அன்பருக்குப் பரிந்துரைக்க இணங்கினால், தாம் காங்கிரசில் சேருவதென்றும் முடிவு செய்யப்பட்டது. காந்தியடிகள் சென்னை வந்தபோது நீதிக்கட்சித் தலைவர்கள் அவரை நேரில் பேட்டி கண்டு இது செய்தி தெரிவித்தனர். உலகப் பெரியாரானாலும், காங்கிரசை உயிராகக் கொண்டவர் காந்தியடிகள். அவர் உள்ளம் பூரித்தது. ‘ஐந்தாண்டுகள்தானா? ஐம்பது ஆண்டுகள் கேட்க நான் ஒத்துக் கொள்கிறேன். சென்னைப் பிராமணருடன் நீங்கள் நெருங்கிப் பழகவில்லை. அவர்கள் எவ்வளவு நல்லவர்களென்பது உங்களுக்குத் தெரியாது. நான் கேட்டால் உங்கள் மகிழ்ச்சிகரமான முடிவுக்கெதிராக, ஐம்பதென்ன, நூறாண்டு கேட்டால்கூட அவர்கள் தாராளமாக இணங்குவார்கள்! சக்ரவர்த்தி இராச கோபாலாசாரியார் போன்ற அருளாளர் நிலையாகக்கூட ஆத்மிக சேவையிலிறங்கும்படி தம் தோழர்களைத் தூண்டத் தக்கவர் என்பதில் எனக்கு ஐயமில்லை’ என்றார் அடிகள். இப் பேச்சு விவரம் கேட்ட சென்னைப் பத்திரிகைகள் கலகலத்தன. வெள்ளையுள்ளம் படைத்த காந்தியடிகளை அரசியல் சூழ்ச்சியில் சிறந்த நீதிக் கட்சியாளர் குழியில் தள்ளி விட்டதாகக் குமுறினர். காந்தியடிகளிடம் சென்று வாதித்து, அம் முடிவை மறந்துவிடும்படி வற்புறுத்தினர். ‘கண்ணன் காட்டிய வழி’ மகாத்மா வழியாயிற்று. கண்ணன் காட்டிய வழியில் முதலில் வேண்டா விருப்புடன் சென்றவன் ‘சத்திய வீர’ னாகிய விசயன். பாரதக் கதையிலே இரண்டாவதாக அவ்வழியில் வேண்டா வெறுப்புடனே நின்றவர் துவாபர யுகத்தின் ‘சத்தியவீர’ ரான தருமபுத்திரர். மூன்றாவதாக வேண்டா வெறுப்பாகவோ, விரும்பா வெறுப்பாகவோ நின்றமையத் தூண்டப்பட்டவர் நம் கலிகால தருமபுத்திரர், தற்காலச் சத்திய விரதரான காந்தியடிகளே! 22. இனவேறுபாடும் இனமாற்றமும் வள்ளுவர் நெறியில் வந்தது திராவிட இயக்கம். அதன் மூலமுதல் ஒளி வள்ளுவர். இதே வள்ளுவர் நெறியின் இனங்கடந்த நிழலொளியாக விளங்கிய காந்தியடிகளுடன் ஒன்றுபட இருந்த அந்நாளைய பொன்னான வாய்ப்பைத் தமிழகப் பிராமணத் தலைவர் அன்று அழித்தனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அறிஞர் அண்ணா அதே ஒளியை பொன்னான வாய்ப்பைத் தமிழகப் பிராமணத் தலைவர் அன்று அழித்தனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அறிஞர் அண்ணா அதே ஒளியை முன்னிலும் விளக்கமுடன் திராவிட நாட்டின் பிராமண சமுதாயத்திற்கே அளிக்க முன்வந்துள்ளார். திராவிட நாட்டுப் பிராமண சமுதாயத்துக்கே மூளைகளென்று கூறத்தக்க தலைவர்கள் மொழித் துறையில் காட்டிய மனமாற்றத்தை இனத்துறையிலும் இனச்சார்பற்ற தேசியத் முறையிலும் காட்ட முற்பட்டால், திராவிட இயக்கத்தை இன வேறுபாட்டியக்கம் என்று கூறி அதை தம் முகம் பார்க்கும் கண்ணாடியாக்குபவர் அறியாச் செயல் முற்றிலும் பட்டழிந்து, ஓருலகில் ஓருலகம் கண்ட தமிழினம் இடம்பெறவும், ஓருலகம் விரைவில் அமையவும் வழி எளிதில் ஏற்பட முடியும். தமிழகப் பிராமணர் மட்டுமன்றி, தமிழக உலக இயக்கங்கள் பாரத இயக்கங்களில் தலைமை வகிப்பவர்களும் இனவேற்றுமையகற்றவல்ல திராவிட இன இயக்கத்தை எதிர்த்துப் போலித் தேசியம் வளர்ப்பதற்கு மாறாக, இன வேறுபாடற்ற திராவிட இனத் தேசியத்தை வளர்க்க முற்படுவார்களாக! அது பிராமணருக்கே ஒரு புதுப் புகழும் புது வாழ்வும், பாரத தேசியத்துக்கே ஒரு நல்ல வழிகாட்டியும் ஆகும். திராவிட தேசியத்துக்கு வழிவகுத்து அதன்பின் தானும் அவ்வழி நின்றாலன்றி, பாரத தேசியம் ஓருலகு காணவல்ல நல்ல தேசியமாக, கீழ் திசையில் மறுமலர்ச்சி தூண்ட வல்ல தேசியக் கூட்டுறவாக இயங்க முடியாது. இன வேற்றுமை, இன வேறுபாடு, இன வாழ்வு இவை மூன்றையும் இந்நாட்டுப் பொதுமக்களிடையே பலர் தெரிந்தோ தெரியாமலோ குழப்புகின்றனர். இனம் என்ற சொல்லின் பல தளத்திலுள்ள பொருள்களிலும் இதுபோன்ற குளறுபடி உண்டு பண்ணுகின்றனர். இன வேற்றுமை என்பது ஓரினத்துக்கு ஒரு நீதி, மற்றோர் இனத்துக்கு மற்றொரு நீதி, ஓரினத்துக்கு உரிமை, மற்றோரினத்துக்குக் கடமை என்ற அடிப்படையில் ஒருங்கு வாழும் தேசியம் அமைப்பதேயாகும். இன வேறுபாடு இதுவன்று. இனத்துக்கு இனம் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் ஆகியவற்றில் வேறுபாடு இருக்கலாம். இருப்பது இயல்பு. இவற்றை வலிந்து ஒற்றுமைப் படுத்துவது, அதாவது ஒருமைப் படுத்துவது என்பது உண்மையில் ஓரின ஆதிக்கமாகவும் இன வேற்றுமையாகவுமே முடியும். எல்லா இனங்களும் சரிசம உரிமை பெற்று, அன்புப் பாசம், அறிவுடன் கூடிய விட்டுக் கொடுப்பு, ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் வேறுபாட்டில் ஒற்றுமை வளர்ப்பதே இன வேறுபாடு ஆகும். இதுவே பல இனங்களாக வாழ்ந்த குழுக்களை இயற்கையின் சூழலில் ஒரே தேசிய இனமாக உருவாக்க உதவும். இவ்வாறு ஓரின அடிப்படையிலும் சரி, பல இன அடிப்படையிலும் சரி, வேறு பாட்டடிப்படையில் கூட்டமைப்பாக அமைபவையே பெரும்பாலான நாகரிக தேசிய இனங்கள். பண்பில் இவ்வாறு உருவாகாத இனக் கூட்டுகள் மதம், மொழி, வாழும் இடம் ஆகியவற்றால் ஒரு திசைப்பட்டு ஓரினம்போலக் காட்சியளிக்கலாம், ஓரினம் என்று கூறப் படலாம். ஆனால், அவை தேசிய இனங்கள் ஆகமாட்டா. ஐரோப்பாக் கண்டம் ஒரே நில இயல் பரப்பாகவும் கிட்டத் தட்ட ஒரே நாகரிகமும், ஒரே சமயமும் பழக்க வழக்கமும் உடையதாகவுமே நிலவுகிறது. ஆயினும் அது ஒரே தேசிய இனமல்ல, பல இனக் கூட்டாகக்கூட ஒருங்கு கூடி வாழ முடிய வில்லை. அதுபோலவே இஸ்லாமிய உலகு ஆற்றல் வாய்ந்த ஒரு தனிப் பெருஞ் சமயத்தாலும் அதன் கட்டுப்பாட்டாலும் ஒன்று பட்டிருந்தாலும்கூட, அராபியர், துருக்கியர், பாரசிகர், நீக்ரோக்கள், ஆரியர், திராவிடர் ஆகிய பலதர நாகரிகமுள்ள இனங்களை ஒரே இனமாகப் பொருத்திவிட முடியவில்லை. இவை தனித் தனி இனமாக வாழ முடியும். திராவிட இனப் பண்பாடு பின்பற்றிய கூட்டினமாக ஒரே தேசிய இனமாகக்கூட முடியாதென்றில்லை. ஆனால், கூட்டு வாழ்வுக்குரிய ஒரே அடிப்படை இன வேறுபாடும் சமத்துவமும் உடைய ஒத்துழைப் படிப்படையேயாகும். உயர்வு தாழ்வு அடிப்படையிலோ ஓரின ஆதிக்க அடிப்படையிலோ அமையும் வலுக்கட்டாயமான ஒற்றுமை ஆதிக்க ஒற்றுமை, அது கூட்டமைப்புக்கு உரியதன்று. மேலை நாடுகள் நாகரிகத்தில் மேலோங்கியிருப்பதன் காரணம் அவை தனித்தனி இனங்களாகவோ, இன்றியமையா இடங்களில் சரிசம உரிமையுடைய நாட்டின் அமைப்புக் களாகவோ குடியாட்சிப் பண்புடன் இயங்குவதுதான். ஸ்விட்சர்லாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள், சோவியத்து ருசியா ஆகிய கூட்டமைப்புக்கள் பல வேறுபடிகளில் இக் கூட்டமைப்பு முறையில் வெற்றி பெற்று வருகின்றன. ஆனால், இவற்றில்கூட மிகவும் வேறுபட்ட சில தனி இனங்களை முற்றிலும் கூட்டமைப்பில் எளிதில் இணைக்க முடியாமல் இன்னல்கள் எழுகின்றன. அமெரிக்காவில் நீக்ரோப் பிரச்சினையும் ஆப்பிரிக்காவில் ஆசிய மக்கள் பிரச்சனையும் இத்தகையனவே. ஆப்பிரிக்காவில் நீக்ரோக்கள், மலாயாவில் மலாய் மக்கள் ஆகிய துரதிருட்டம் வாய்ந்த இனங்களோ, ஏறத்தாழத் தமிழகத்தில் தமிழர், திராவிடத்தில் திராவிடர் நிலை யிலேயே திராவிட இயக்கம் போன்ற இன உரிமை இயக்கம் கூட இல்லாத நிலையிலேயே உள்ளன. ஆரியர் வரும்வரை திராவிட நாகரிகம் மேலோங்கி இருந்ததற்கான காரணம், திராவிடர் தனி இன வாழ்வு வாழ்ந்தது மட்டுமன்று. பிற இனங்களுடன் கூடி வாழ நேரும் சமயங்களில் கூட, திராவிடர் பின்பற்றிய பண்பு இன்றைய ஐரோப்பிய நாகரிகம் பின்பற்றும் பண்பாய் இருந்தது என்பதே. அவர்கள் இயல்பான குடியாட்சிப் பண்பு வலிந்த ஒற்றுமை நாடாமல் இனவேறுபாட்டடிப்படையில், சரிசம உரிமையுடன் அவ்வினங்களுக்கு விட்டுக்கொடுத்து, பண்பொற்றுமை நாடி வந்தது. அவர்கள் ஒருமை நாடவில்லை. ஆனால், ஆரியர் வருகைக்குப் பின், ஆரிய திராவிட வேறுபாடு மட்டுமல்ல - ஆரியருக்குள்ளும் திராவிடருக்குள்ளும் நிலவிய, நிலவுகிற வேறுபாடுகள்கூட உயர்வு தாழ்வு வேறுபாடுகளாக, ஆதிக்க அடிப்படையில் ஆண்டான் அடிமை வேறுபாடுகளாக ஆக்கப் பட்டன. குடி வேறுபாடுகள் குல வேறுபாடுகளாக்கப்பட்டன. குல வேறுபாடுகள் சாதி வேறுபாடுகளாக, சாதி வேறு பாடுகள் வருண வேறுபாடுகளாகப் படிப்படியாக வளர்ந்தன. மனித இனத்தில் இயல்பாக எங்கும் எழக்கூடும், நிலவக் கூடும் சிறு உயர்வு தாழ்வுகள் இயல்பாகவே மீண்டும் இயற்கையாற்ற லாலேயே மாறுபடுபவைகள்தாம். மற்ற நாடுகளில் அவ்வாறே மாறுகின்றன. ஆனால், திராவிடத்திலும் அது சூழ்ந்த நிலங்களிலும் இந்த இயல்பான சிறு உயர்வு தாழ்வுகள் செயற்கையான பெருத்த உயர்வு தாழ்வுகளாகவும், தற்காலிக உயர்வு தாழ்வுகள் நிலையான உயர்வு தாழ்வுகளாகவும், எளிதில் மாறக்கூடிய உயர்வு தாழ்வுகள் மாற முடியாத, மாற்ற முடியாத, சமய சாத்திர, கடவுளடிப்படை யான மாறுபாடுகளாகவும் ஆக்கப்பட்டு வந்துள்ளன. திராவிட இயக்கம் கீழை உலகில் தோன்றும்வரை எந்த இயக்கத்தாலும் மதத்தாலும் - இஸ்லாத்தினால் கூட - சாதிவேறுபாட்டை அகற்றவோ தளர்த்தவோ முடியவில்லை. அது வளர்ந்து கொண்டேதான் வந்திருக்கிறது. திராவிட இயக்கம் பரவாத இடங்களில் இன்னும் வளர்ந்து கொண்டேதான் வருகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒளி இன்னும் பரவாத இராமநாதபுரத்தில் எழுந்துள்ள முதுகுளத்தூர்ப் படுகொலை இதற்கு ஒளி தரும் சான்றாகும். ஆரிய சமய, சமுதாய, பொருளாதார, சட்ட ஆதிக்கம் நீங்கிய ஒரு சுதந்திர திராவிட சமுதாயம், சமயம், அரசியல், பொருளாதார வாழ்வு அமையுமானால், அதில் திராவிடர் மட்டுமல்ல, ஆரியரும் மற்ற இனங்களும் கூட இன உயர்வு தாழ்வற்ற சரிசம அடிப்படையில், அன்பு ஒற்றுமையும் அறிவார்ந்த கூட்டுழைப்பும் பெற்று மேம்பட முடியும் என்பதில் ஒரு சிறிது வரலாற்று நோக்க முடையவர்க்கும் ஐயம் ஏற்படாது. இந்திய மாநிலத்தில் கிழக்கைவிட மேற்கிலும், வடக்கைவிடத் தெற்கிலும் பிராமணரே முன்னேற்றமடைந்துள்ளதும், இதே போக்கில் மொழிகள் வளமடைந்துள்ளதும் இதனைத் தெளிவாகக் காட்டும். 23. இனம், உலகம் வளர்க்கும் இன இயக்கம் ஆரியப்பண்பு தமிழகத்திலும் சூழ் நிலங்களிலும் பரவிய அளவில்தான் சென்ற இரண்டாயிர ஆண்டுகளில் கீழ்திசை படிப் படியாகக் கீழ்ப்பட்டு வந்துள்ளது. திராவிட நாடு அமைந்து, கீழ் திசையில் ஒரு பகுதியிலேனும் திராவிடப் பண்பு தழைத்துப் பரவ வழி ஏற்பட்டால், கீழ்திசை மேல்திசையுடன் எல்லா வகையிலும் முனைப்பாகப் பரந்து வளரும் என்பதில் தடையில்லை. ஏனென்றால் மேல்திசை முன்னேற்றத்துக்கு ஆரியப் பண்பின் அலைகள் அங்குச் சென்று எட்டாமையே காரணம். அதுபோலவே கீழ்திசையின் கிழக்கும் தெற்கும் ஓரளவு முன்னேற்ற மடைந்துள்ளதற்கு அங்கே திராவிடப் பண்பு முற்றிலும் அழியாமல் ஓரளவாவது நிலவ இடம் ஏற்பட்டி ருப்பதே காரணம் என்றும் காணலாம். திராவிட நாடும், தென்கிழக்காசியாவும், ஆசியாவும் நிலவு லகின் இயற்கை மையங்கள். அவை யாவுமே இயல்பான வளங்கள், வளப்பங்கள் உடையவை. இவை மட்டுமோ, அவையே மனித நாகரிக வரலாற்றில் நீண்ட காலம் முதலிடம் பெற்றவை. திராவிட நாடு பிரிவுற்ற ஒரு சில நாட்களில், இந்த இயல்பான, வரலாற்றடிப்படையான வாய்ப்பை ஆசியா மீண்டும் எளிதில் பெற்றுவிட முடியும். இங்ஙனம் திராவிட நாட்டுப் பிரிவினை திராவிட நாட்டின் வருங்கால வளமாக மட்டும் நின்றுவிடாது. அது உடனடியாகத் தென்கிழக்காசியா முழுவதையும், அடுத்த படியாக ஆசியாவையும் ஆப்பிரிக்காவையும் ஓருலகில் தமக்குரிய இடம்பெறச் செய்வதாக அமையும். திராவிட நாட்டுக்குள்ள இந்த இன வேறுபாடற்ற, இனம் வளர்க்கும் பண்பை நாம் வரலாற்றில் பின் சென்று 12ஆம் நூற்றாண்டில் காணலாம். அந்நூற்றாண்டுவரை இந்தியாவில் இலக்கியமுடைய மொழிகள் இரண்டே இரண்டுதான் இருந்தன. ஒன்று திராவிடத்தில் தமிழ்; மற்றது ஆரிய நாடு என்று அன்று அழைக்கப்பட்ட தேசிய உருவிலாப் பரப்பில் திராவிடப் பண் பாட்டின் தாக்குதலால் புதிதாக எழுந்த செயற்கை இலக்கிய மொழியாகிய சமஸ்கிருதம். முன்னது தென்மொழி என்றும் பின்னது வடமொழி என்றும் அந்நாளில் அழைக்கப்பட்டதன் காரணம் இதுவே. தெற்கு அந்நாளிலேயே ஓர் உயிர்மொழி, தேசிய மொழியை மணமுள்ள மலராகப் பேணிற்று. வடக்கோ உருவிலா, உயிரிலா மொழி, தேசியப் பண்பற்ற மொழியைத்தான் மலராகப் போற்றிற்று! 12ஆம் நூற்றாண்டுடன் தென்மொழி, வடமொழி என்ற இந்த வழக்குப் பொருளற்ற பழவழக்கமாக மாறிவிட்டது. சமஸ்கிருதத்தின் இலக்கிய வாழ்வு அந்நூற்றாண்டுடன் கிட்டத்தட்ட மாண்டது. அதே சமயம் 12-ஆம் நூற்றாண்டு முதல் தென்னாட்டு மொழிகள் நான்கும் இலக்கிய வாழ்வில் புதுமலர்ச்சியுற்றன. விந்தியத்துக்கு அப்பாலும் சிறப்பாக வட இந்தியாவின் தெற்கு, கிழக்கு எல்லையிலுள்ள தாய்மொழிகளில் 16ஆம் நூற்றாண்டில் சிலவும், 18, 19ஆம் நூற்றாண்டுகளில் சிலவும், 20ஆம் நூற்றாண்டில் சிலவுமாகப் புதிதாக இலக்கிய வாழ்வும் மொழி வாழ்வும் மலர்ச்சியும் பெற்றன. இம் மலர்ச்சிகளுக்குத் திராவிடப் பண்பாட்டின் உயர்குறிக்கோளில் ஊன்றித் தமிழகத்திலிருந்து எழுந்து வடதிசை நோக்கிப் பரவிய வைணவ இயக்கமே காரணம் என்பதை வரலாறு காட்டுகிறது. தமிழ் நீங்கலாக இந்தியாவின் எல்லா மொழிகளிலுமே இலக்கியங்கள் ஓரளவு இராமாயண பாரதங்களாக, பாகவதங் களாகக் காட்சியளிப்பதன் விளக்கமும் இதுவே. இந்த வைணவத்தை இன்னும் வடஆரியர் திராவிட சம்பிரதாயம் என்றும் தென்கலை என்றுமே அழைக்கின்றனர் என்பதும், தென்னாடில் 16 ஆம் நூற்றாண்டில் எழுந்த வடகலை, வடநாட்டில் இன்றுவரை பரவவில்லை என்பதும் இங்கே குறிப் பிடத்தக்கன. ‘ஆரியமாவது திராவிடமாவது’ என்ற கூக்குரல் உண்மையி லேயே எழுமானால், இனவேறுபாடு, இன உயர்வு தாழ்வற்ற அத்தகைய நிலை உண்மையில் ஏற்பட்டிருக்குமானால், திராவிடப் பண்பாடு வெற்றிகரமாக வளர்ந்துவிட்டதென்று நாமும் ஒத்துக் கொள்ளலாம். அத்தகைய இன உயர்வு தாழ்வு வேறுபாடற்ற நிலையே திராவிடப் பண்பாட்டு நிலை. ஆனால், ஆரியதிராவிட இன எல்லை அழிப்பதால் மட்டும் இது உண்டாவதல்ல. இன எல்லை யழிந்தபின் நிலவும் பண்பு திராவிடப் பண்பானாலும், இரண்டு இனங்களும் சரிசம அடிப்படையில் இயங்கி ஒருமைப்பட வழி இருக்கலாம். ஆனால், இன்று இன எல்லை அழிக்கப்பட்டதாகக் கூறமுடியாது. நேர் மாறாக, ஆரியர் ஒரே ஆரிய இனமாகவும் இல்லை. திராவிடர் ஒரே திராவிட இனமாகவும் இல்லை. ஆரியருக்குள்ளும் பலவகை வேறுபாடுகள், உயர்வு தாழ்வுகள் உள்ளன. திராவிடருக்குள்ளும் அதே நிலைதான். இத்தனை உயர்வு தாழ்வுகளையும் ஐயங்கார், ஐயர், முதலியார், செட்டியார், மறவர், குறவர், தீண்டப்படாதார், அணுகப்படாதார், மலங்குடிகள், காட்டுக்குடிகள் இத்தனையை யும் பொறுத்துக்கொண்டு இவற்றை மாற்ற விரையும், மாற்றத்துடிக்கும் திராவிடப் பண்பாடு, திராவிட இலக்கியம், திராவிட இயக்கம் ஆகியவற்றையும் நசுக்க எண்ணும் ஆரியம்தான் இன்று ஆரியமாவது, திராவிடமாவது என்று பசப்பி, இந்த உயர்வு தாழ்வு வேறுபாடுகளை நிலவரமான வையாக்கப் பார்க்கிறது. தவிர, இனவேறுபாடு வேறு, இனவாழ்வு வேறு. இன வேறுபாடு பழக்க வழக்கங்களைப் பொறுத்தது; பண்பாட்டைப் பொறுத்தது. ஆனால், இனவாழ்வு என்பது அந்த இனத்தின் உறுப்பினர் தன்னலம் கடந்த பொதுமைப் பாசம், அதற்கு உதவும் இன மரபுகள், பண்பு மரபுகள், உயர் இனக்குறிக்கோள்கள் ஆகியவற்றைச் சார்ந்தது. திராவிட நாட்டுக்கு எவ்வளவு இயற்கை வளம் உள்ளதோ, அதே அளவு திராவிட இனத்துக்குப் பண்புவளம், மொழி வளம், இலக்கிய வளம் ஆகிய மூன்றும் உலகில் வேறு எந்த இனத்தையும்விட மேலை, இனங்களை விடக்கூட மிகுதியாக உள்ளன. இனமும் சமயமும் மட்டுமன்றி, காலமும் தேசமும் கடந்த தமிழ் வள்ளுவர் பொதுமறைவழி, புத்தர், மகாவீரர், இயேசு, நபிகள் நாயகம் ஆகியவர்கள் வழிகளைப் போலத் தனி மனிதர் வழிமட்டும் அன்று. அது திராவிட இனத்தில் தோன்றி முளைத்து மலர்ச்சியடைந்த திராவிட இனநெறி. ஏனெனில் அதுவே தொல்காப்பியத்தின் நெறி, சங்க இலக்கிய நெறி. அதனைக் குருதியிலே, இனத்தலை யூற்றிலே கொண்ட திராவிட இனம் உலக இனங்களில் தலை சிறந்து விளங்க மட்டுமல்ல, உலக இனங்களுக்கு வழிகாட்ட மட்டுமல்ல, உலக இனங்களையே கைதூக்கிவிட்டு உயர்த்தவல்ல இயல்பான வாய்ப்பு வளம் உடையது. ஆனால், வள்ளுவர் பண்பை, சங்க இலக்கியப் பண்பை, வளர்க்கும் வாய்ப்பு, அதனடிப்படையில் நாடும் அரசியலும் சட்டமும் அரசிய லமைப்பும் வகுக்கும் உரிமை திராவிடருக்கு இன்று இல்லை. திராவிட நாடு அமையும் நாளிலேயே அது ஏற்பட முடியும். தமிழகத்திலும் தமிழிலக்கியத்திலும் தமிழர் சமய வாழ்விலும் கலந்த ஆரியப் பண்பாடு அதை வளமாக இயங்கவொட்டாமல் நீண்டகாலம் தடுத்து வந்துள்ளது. அது போதாமல் பிரிட்டிஷ் ஆட்சியிலும் இன்றும் அதுவே - அந்த ஆரியப் பண்பே - முழுதும் ஆட்சியுரிமையும் சட்ட உரிமையும் பெற்று நிற்க, தமிழும் தமிழின மொழிகளும் அவற்றின் பண்பாடுகளும் உரிமையற்ற நிலையில் வாழ்வுக்கும் சாவுக்குமிடையில் போராட வேண்டும் என்ற நிலையில் இருக்கின்றன. 24. இனம் என்ற சொல்லின் ஆக்கப் பொருள், அழிவுப் பொருள் திராவிட நாட்டுப் பிரிவினை இன அடிப்படையாகத் தேசிய இனம் வளர்த்து உலக இனம் நோக்கி வளர இருக்கும் ஒரு மாபேரியக்கத்தின் குரல். அது இனம் பேசி, இன வேறுபாடு வளர்த்து, உயர்வு தாழ்வும் ஆதிக்கமும் பேணி, உலகில் வேற்று மைகள் நெருங்கி வரும் ஆரியரின் இனப்பெயர் கூறா இன ஆதிக்கக் கிளர்ச்சியன்று. இனம் என்ற சொல்லை ஆரியச் சார்பாளர், பாரத தேசியச் சார்பாளர் பயன்படுத்தலாம், பயன் படுத்தாமல் இருக்கலாம். ஆனால், திராவிடர் பயன்படுத்தும் ‘இனம்’ என்ற சொல்லின் பொருளும் பண்பும் வேறு. அவர்கள் பயன்படுத்தும் ‘இனம்’ என்ற சொல், அல்லது மனத்தில் கொள்ளும் ‘இனம்’ என்ற சொல்லின் பொருளும், பண்பும் வேறு. அவ் வேறுபாடு ‘காமம்’,’காதல்’ என்ற சொற்களின் வேறுபாடும், ‘மாடு’ ‘பசு’ என்ற சொற்களின் வேறுபாடும் போன்றது. ஆரியர் பயன்படுத்தும் ‘இனம்’ என்ற சொல் ‘காமம்’ ‘மாடு’ போன்றது. அது சொல்லத் தகாத, கீழ்த்தர உணர்ச்சியுடைய சொல். பண்புடையவர் களிடையே மதிப்புப் பெற முடியாத சொல். அவர்கள் அச் சொல்லை மறைப்பதற்கும் ஏளனமாகப் பயன் படுத்துவதற்கும் காரணம் அதுவே. ஆனால், திராவிடர் அதே சொல்லை அதன் உயிர்ப் பொருளில், நாகரிக வளர்ச்சிக்குரிய ஆக்கப் பொருளில், ‘காதல்’ ‘பசு’ என்ப வற்றைப் போல, மறைக்காது, கூசாது வழங்குகின்றனர். மாடு முரட்டுத்தனம் உடையது. பசு அமைதியுடையது. காமம் குடும்பம் கெடுப்பது. காதல் குடும்பம் வளர்ப்பது. இது போலவே ஆரியர் பேணும் ‘இனம்’, இனப் பண்பு, மனித வாழ்வு- கெடுப்பது. திராவிடர் பேணும் ‘இனம்’ - இனப்பண்பை மனித வாழ்வை வளப்படுத்துவது. தேசிய இனம், மனித இனம், உலகம் ஓரினம் என்று நாம் கூறும்போது, ‘இனம்’ என்ற சொல்லைத் திராவிடர் ‘இனம்’ என்று குறிப்பது போன்ற அறிவார்ந்த, ஆக்கப் பொருளி லேயே வழங்குகிறோம். 25. திராவிடம் நாகரிகம் வளர்க்கும் பண்பு; ஆரியம் அது கெடுக்கும் பண்பு மொழியின் சொற்கள் மொழியுடன் வளர்பவை. அவை என்றும் முற்றிலும் பொருள் மாறுபட்டு விடுவதும் இல்லை. அதே சமயம் என்றும் அவை முற்றிலும் ஒரே பொருளைச் சுட்டுவதும் இல்லை. அடிப்படைப் பண்பு கெடாமல், பண்பு வளர்ச்சி பெற்றுப் படிப்படியாகப் பொருள் எல்லை மாறுபடும், உயர்வு தாழ்வடையும். எடுத்துக்காட்டாக, இன்று ஆங்கிலத்தில் உந்து வண்டிக்குப் பயன்படுத்தப்படும் சொல் (ஊயச) முன்பு ஒய்யார வண்டி அல்லது விசையாகச் செல்லும் வண்டி அதாவது தேருக்குப் பயன்படுத்தப்பட்ட சொல்லே, தொடக்கத்தில் விசைத்தேர் (ஆடிவடிச ஊயச) என்று வழங்கி, பின் தேர் என்ற பொருளுடைய சொல்லாகவே வழங்கிற்று. இச் சொல் ஆங்கில நாட்டு வாழ்வில் உந்து வண்டி அல்லது விசை வண்டித் துறையில் அமைந்துள்ள முன்னேற்றத்தைத் தன்னுள் அடக்கிக்கொண்டு, ஓரின வரலாறாக இயங்குகிறது. ‘இனம்’ என்ற சொல்லும் திராவிடர் நாவில் இனச் சார்பாகத் திராவிட மக்கள் அடைந்த முன்னேற்றங்கள் அனைத்தையும் குறித்துக் காட்டுவது ஆகும். அதனால் அதன் மேலையுலகச் சொல் (சுயஉந) போலவே அதை நாம் குடும்பத்திலிருந்து தொடங்கி, தேசிய இனம், மனித இனம்வரை கொண்டு செல்கிறோம். ஓருலகம், ஒரே மனித இனம் நோக்கிய திராவிடப் பண்பாட்டின் வளர்ச்சியை இது குறிக்கிறது. அது மட்டுமன்று. ஆங்கிலச் சொல்லின் அடைவடிவம் (சுயஉல) இனப் பண்பு அல்லது உயிர் வளர்ச்சிப் பண்பையும் அதன் பயனான ஆக்கவளம், இன ஆக்க வளத்தையும், மொழியின் இணைப் பண்பையும் குறிப்பதுபோல, ஆங்கிலச் சொல்லைவிடச் சிறந்த முறையில், அது தமிழில் வளமும் இனிமையும் சிறப்பும் உடையது. இன வாழை, இன மலர் என்ற வழக்குகளில் அது இன நலமுடைய என்ற பொருளும், இனப் பரப்பு அல்லது நீடித்த இனப் பயிற்சியின் ஆக்கமுடைய என்ற பொருளும் தருகிறது. ஆனால், ஆரிய வழக்கிலோ ‘இனம்’ என்ற இதே சொல் படிப்படியாக ஆரிய நாகரிகம் அடைந்து வந்த பிற்போக்கு, பிளவு, உயர்வு தாழ்வு மனப்பான்மைகளையெல்லாம் குறிக்கிறது. தமிழில் ‘கீழினம்’ என்றால் பண்பில் இழிந்தவர் என்று மட்டும்தான் பொருள். ஆரிய வழக்கில் அது பிறப்பில் கீழ்ப்பட்ட என்ற, தமிழன் உள்ளத்திலேயே இல்லாத ஒரு பண்பைத் தமிழனிடமே புகுத்திவிட முயல்கிறது. ஆரியரும் அவர் சார்பில் இருந்து தமிழ்ப் பண்புணராத வரும் கூறும் பொருளில் இன வேறுபாடோ, வேற்றுமையோ எதுவும் திராவிடர் கனவில் கூடக் கிடையாது. திராவிட இனம் என்பது பிறப்பை மட்டும் அடிப்படையாகக் கொண்ட இனமன்று. பிறப் புடன் பண்பு சேர்ந்த இனத்தையே அது குறிக்கும். அப் பண்பு பிறப்புக் கடந்து செல்வதாதலால் திராவிடராகப் பிறவாத வரையும் அது அப் பண்பில் இழையவிட்டு, தம் பண்பாட்டில் அவர் களையும் அவர்கள் விரும்பினால், விரும்பிய அளவில் சேர்த்துக் கொள்ளும் தன்மையுடையது. ஆனால், திராவிடருடன் இணைய விரும்புபவர்கள் திராவிடர் உரிமையையே கெடுப்பவராக இருத்தலாகாது. திராவிடப் பண்பு ஆரியர் வரவால், அவர்கள் பண்பாட்டின் கலப்பால் கேடடைந்த வகை இதுதான். பெருந்தன்மையுடன் இனவேறுபாடு காட்டாது தன்மை ஏற்று ஆதரவு தந்த தமிழன் உரிமையையே கெடுக்க முற்பட்ட ஒரே இனம் ஆரிய இனம். தமிழினத்தவராகிய தெலுங்கர், கன்னடியர், அயலினத்தவராகிய மராட்டியர், வங்காளியர், தொலை இனத்தவராகிய அராபியர், யூதர் - எவரும் தமிழருடன் கலக்கும்போது தமிழன் உரிமையை, தமிழ்மொழி உரிமையைச் சூறையாட எண்ணிய தில்லை. அதில் அவர்கள் அக்கறை காட்டவுமில்லை. ஆனால், ஆரியரும் ஆரிய மயமான பிற இனத்தவரும் - ஆரிய மயமான நிலையில் மராத்தியரும், வங்காளியரும் - தெலுங்கரும், மலையாளிகளும்கூடத் தமிழர் உரிமைகளைக் கெடுக்க முற்படுகின்றனர். அதுமட்டுமோ! ஆரிய மயமாய்விட்ட தமிழர் தமிழரையும், தெலுங்கர் தெலுங்கரையும் உரிமை கெடுத்துத் தாழ்த்தத் தயங்கவில்லை. உண்மையில் ஆரிய மயமான ஆரியர் மற்ற ஆரியர் உரிமை கெடுத்துத் தாழ்த்தக் கூடக் கூசுவதில்லை. ஐயங்கார் - ஐயர் சண்டை, ஐயங்கார்களுக்குள் வடகலை, தென்கலைப் போராட்டம், ஆதிக்க மொழியாகிய இந்திக்குள்ளும் சமஸ்கிருத மயமான இந்தியா, தாய்மொழி இந்தியா என்ற வாதம் ஆகியவை அதற்குச் சான்றுகள். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இறுதியில் மனிதரையே கடிக்கும் வேட்டை நாய்களைப் போல, இந்தி முதலில் திராவிட இன மொழியாகிய தமிழைக் கடிக்கப் புறப்பட்டு, பின் முஸ்லிம் இந்தியாகிய உருதுவையும், காந்தியடிகள் இந்தியாகிய இந்துஸ்தானியையும், இறுதியில் இப்போது ஆரிய மொழி களாகிய வங்காளி, பஞ்சாபி, மராத்தி ஆகியவற்றையும் கடிக்கத் தொடங்கி யிருப்பதும் இதே உண்மை காட்டும். ஆகவே ஆரிய திராவிட இனவேறுபாடு, பிறப்படிப்படை யான, நாட்டடிப்படையான ஒரு வேறுபாடுமட்டுமன்று, பழக்க வழக்க அடிப்படையான தேசிய வேறுபாடுமட்டும் கூட அன்று. அது ஒரு பண்படிப்படையான வேறுபாடு. ஒன்றுக்கொன்று நேர் எதிரான குறிக்கோள்களையுடைய ஒரு முரண்பட்ட வேறுபாடு. திராவிட நாடு பிரிந்து தனித்து வாழ்வதால் ஏற்படும் நன்மை திராவிட நாட்டுத் தேசிய வாழ்வின் நலம் மட்டுமன்று. அந்த நலம் திராவிட நாட்டில் திராவிடப் பண்பைத் தங்குதடையின்றி வளரச் செய்வதால், அப்பண்பலைகள் ஆரிய நாட்டையும் வளப் படுத்தும் தன்மையுடையவையாகும். திராவிட நாட்டில் திராவிடனைச் சுரண்டுவது நின்றுவிடும். அதுமட்டுமன்று, ஆரிய நாட்டிலும் ஆரியன் ஆரியனைச் சுரண்டும் இன்றைய நிலை அதன்பின் நீடித்திராது. ஆரியர் விரும்பும் ஆரிய திராவிட ஒற்றுமை ஆரிய திராவிட உயர்வு தாழ்வை அடிப்படையாகக் கொண்டது என்பதைக் கீழ்திசை, மேல் திசை வேற்றுமை தெள்ளத் தெளியக் காட்டும். ஆரிய திராவிட வேறுபாடும், அதில் உயர்வு தாழ்வு கற்பித்துப் ‘போலி ஒற்றுமை’ வளர்க்கும் ஆரியப் பண்பாடும் இன்று திராவிட நாட்டிலும் உண்டு; ஆரிய நாடாகிய வட நாட்டிலும் உண்டு. ஆகவேதான் இந்த இரண்டு நாடுகளிலும் அக்கிரகாரங்கள் உண்டு. அம்பட்டனும் உண்டு. ஆரிய திராவிட வேறுபாடோ, அதன் அடிப்படையில் ஏற்பட்டுள்ள ஆரிய ஒற்றுமையோ இல்லாத இங்கிலாந்தில், பிரான்சில் அம்பட்டன் உண்டு. அக்கிரகாரம் கிடையாது. அது மட்டுமல்ல. அம்பட்டன் ஒரு தொழிலாளி. அவன் பிறக்கும்போதே அம்பட்டனல்ல. அவன் உறவினரெல்லாம் அம்பட்டரல்லர். ஆரிய திராவிட வேறுபாட்டின் அடிப்படையாக ஆரியம் நிலவும் திராவிட நாட்டிலும் ஆரிய நாட்டிலுமே அக்கிரகாரம் ஓர். இனமாகவும் அம்பட்டன் அதனுடன் படைப்புக்கால முதல் ஊழி முடிவு வரையும் தொடர்பற்ற மற்றோரினமாகவும் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆரியம் வாழும் இடத்தில் ஒரு நாடல்ல, ஓர் ஊர், ஒரு தெரு, ஒரு வீடுகூட இன வேறுபாடற்ற ஓரினமாக வாழ முடியாது. எக் காலத்திலேனும் அக்கிரகாரம் ஒரு தனி இனமாக வாழ வேண்டும் நிலை ஏற்பட்டால், அது வாழ முடியாது. வண்ணான் இருக்க முடியாது. அம்பட்ட இனத்தில் பிறந்த ஒருவனும் வண்ணான் இனத்தில் பிறந்த ஒருவனும் புதிதாகப் பிரமதேவனால் படைக்கப்பட்டுத்தானாக வேண்டும். அது போலத்தான் வேளாள இனம், வீர இனம், வணிக இனம், தட்டார் இனம் எல்லாம் கடவுளே படைத்து அவர்களுக்கு அனுப்பியாக வேண்டும். திராவிடம் நாகரிக அடிப்படையாக, வரலாற்று அடிப் படையாக ஓர் இனம். ஆரியம் அதுபோன்ற இனம் வகுக்க வில்லை. திராவிடம் ஒரு தேசிய இனமாகி அதனடிப்படையில் ஓருலகில் பங்கேற்று, ஓருலகை வளர்க்க முடியும். ஆரியம் ஒரு நல்ல உலகையோ, தேசியத்தையோ அல்ல, ஒரு நல்ல சமுதாயத் தையோ, ஊரையோ, குடும்பத்தையோகூட அமைக்க முடியாது. பிராமணப் பெண்கள் மட்டும் தங்கள் கல்வியறிவைத் தம் இனம், பெண் இனம்பற்றிய சிந்தனையில் செலுத்தத் தொடங்கி, ‘ஆரிய’ ஆராய்ச்சியில் இறங்கிவிட்டால், பிராமணக் குடும்பங் களே நடைபெற முடியாது. ஏனென்றால், பிராமணப் பெண்களை யெல்லாம் ஆரிய நாகரிகம் சூத்திரர்கள் என்று கருதி, பஞ்சமரில் ஆடவர்களை மதிக்கும் அளவுகூட, நம்பும் அளவுகூட நம்புவதில்லை. தம்பி, தந்தை, கணவன்மார்கள், அண்ணன் தம்பிமார்கள், பிள்ளைகள் தம்மை ஆண் விலங்குகளுக்குக் கூடச் சமமாக மதிக்கவில்லை, நம்பவில்லை என்பதை அவர்கள் காண்பர். அதுமட்டு மோ? தாம் வணங்கும் தெய்வங்களில் கூட, பெண்ணுருவான தெய்வங்கள், பார்வதி, இலக்குமி, சரஸ்வதி, இந்திராணி ஆகியோர் பஞ்சமரில் ஆண்களைவிடக் கீழாக மதிப்பிடப்பட்டு இழிக்கப்படுவது காண்பர். சமஸ்கிருத நாடகங்களில் தேவர்களும் தேவர்களுடன் உறவாடும் ஆரியப் புரோகிதர்களும் அரசர்களும் வீரர்களும் தேவ மொழியாகிய சமஸ்கிருதத்தில் பேசுவதாக நாடகக் கவிஞன் காட்டுகிறான். சூத்திரர்களாக வரும் நாட்டு நகர மக்களும் பணிமக்களும் மனித மொழிகள் அல்லது பாகதங்களில் அதாவது அந் நாளைய பாலி முதலிய மனித உலகில் வழங்கிய தாய் மொழிகளில் பேசுவார்கள். ஆனால், பெண்களைப் பற்றிய வரை இதே தாய்மொழிகளில்தான் வேலைக்காரப் பெண்டிரும் சரி, பணிப்பெண்கள், பாங்கியர்களும் சரி, அரசியரும் சரி பேசவேண்டும். எம்பிராட்டி, சீதை, உலக அன்னை பார்வதிகூடச் சூத்திரருடன் சூத்திர மொழியில்தான் பேச வேண்டும். வைதிக தருமத்தில் பிராமணர் முதலிய உயர் வருணத்தில் பிறந்த ஆணுக்குக்கூடப் பிறப்பில் தீட்டு உண்டு. அவன் சூத்திர னாகப் பிறப்பதாகத் தான் சாத்திரங்கள் கருதுகின்றன. பிறந்த வீட்டுத் தீட்டுச் சூத்திரச்சியாகிய தாய் வயிற்றில் பிறந்த தீட்டே. ஆனால், தீட்டு முழுதும் உபநயனத்தின்போது வேத மந்திரங் களால்தான் தீரும். அதுவரை அவன் பிராமணர் முதலிய உயர் வருணத்தில் பிறந்திருந்தாலும், சூத்திரச்சி வயிற்றில் பிறந்த சூத்திரனேயாவான். அதன் பின்தான் பெண் வயிற்றில் பிறந்த பாவத்தை, இழிவை அவன் வேத மந்திரங்களால் போக்கி, பிராமணனாக வாழ்கிறான். பெண்ணுடனே வாழும் இல்லறத்தை ஆரியம் வெறுப் பதற்கும் ‘சம்சார பந்தம்’, ‘உலக மாயை’ என்று தலையிலடித்துக் கொள்ளுவதற்கும் உள்ள அடிப்படைக் காரணத்தை அறிந்த எந்த பிராமணப் பெண்ணும் ஆரியருடன் வாழ ஒருப்பட மாட்டாள். ஏனென்றால், நாள்தோறும் பெண் பேயைத் தொட்டு ஊடாடுவ தால்தான் இல்லறம் தீது துறவறம் நன்று என்று கூறப்பட்டது. நாள்தோறும் இரவில் பெண் பேயுடன் கூடிய தொடர்பை நீக்கத் தான் காலைக் குளியல் வைதிகருக்கு இன்றியமையா ஆரியக் கடனாகிறது! ஐயர், ஐயங்கார், செட்டியார், முதலியார் போன்ற இந்தப் பட்டங்கள் ஆடவருக்குத்தான் உண்டு. அவர்கள் வீட்டுப் பெண் களுக்குக் கிடையாது. ஏனென்றால், எல்லாப் பெண்களும் ஆரியத் தின் கண்ணில் சூத்திரர்களே - உண்மையில் சூத்திரர்களில் ஆண் களிலும், பஞ்சமரில் ஆண்களிலும் கீழான பேய்களே! 26. தீமைகளின் கோவையே ‘ஆரியம்’ ஆரியம் உலகில் வாழ்வதற்கு, வளர்வதற்குரிய ஒரே கார ணம், அது எல்லா வகைத் தன்னலங்கள், பொய்மைகள், வஞ்சகங்கள் ஆகியவற்றுக்கும் தாராளச் சலுகை தந்து வஞ்சகக் கோட்டையாக நிலவுவதுதான். ஆனால், அதே சமயம் அது ஆயிரக்கணக்கான ஆண்டு நிலவுவது உலக அதிசயங்களிலேயும் விசித்திரமான ஓர் அதிசயம்தான். சிந்திக்கும் பண்பு எங்கு வளர்ந்தாலும் அங்கே அது நிலவ முடியாது. ஏனெனில், அது ஒருவர் இருவரை, ஒரு குழுவை மட்டும் வஞ்சிப்பதன்று. திருடர் எல்லார் வீட்டிலும் திருடுவர். தம் வீட்டில் திருடமாட்டார். ஆரியமோ எல்லாரையும் வஞ்சிக்கும். தன்னையும் விட்டு வைக்காது. திருடர் வீட்டிலும் திருடும். வஞ்சகரையும் வஞ்சிக்கும் முக்கால உணர்வுடையவர் என்று கூறும் எந்த முனிவராவது பிராமணராவது சிறிது தொலைநோக்குடன் சிந்தித்திருந்தால் இந்த ஆரியம் ஒரு கணம்கூட நிலவியிருக்க முடியாது. ஆனால், கணக்குப் பிள்ளையை மாற்றிக்கொண்டே வரும் கள்ள மார்க்கட்டுக்காரரைப்போல, ஆரியம் எந்த ஆரியரையும்கூட நம்புவதில்லை. வடநாட்டுப் பிராமணரிடம் அது தென்னாட்டுப் பிராமணரெல்லாம் சண்டாளர் என்றும் தென்னாட்டுப் பிராமணரிடம் ‘வட நாட்டிலுள்ள பிராமணரிடம் நெருங்காதே, அவர்கள் ஆசாரம் கெட்டவர்கள், மீன் தின்பவர்கள்’ என்றும் அது கூறுகிறது. பிராமண ஆணிடம் பெண்ணை நம்பாதே என்று போதிக்கிறது. பிராமணப் பெண்ணிடம் அது வேறு தொனியில் பேசுகிறது. ‘ஆடவன் காரியத்தில் தலையிடாதே, உன் புத்தியைப் பயன்படுத்திக்கொள். அவன் போக்கில் அவனை விட்டு, அவன் சொற்படி நடந்தால், உனக்குக் கேடொன்றும் வராது, குறைவராது. உன் தர்மம் உனக்கு இகத்திலும் பரத்திலும் எல்லாம் தரும்’ என்று புராண இதிகாச மொழியில் கூறியிருக்கிறது. ஆரிய இனத்தவர்தாம் ஜெர்மானியர், ஆங்கிலேயர். ஆரிய இனத்தவர்தாம் உலகாண்ட உரோமர், மேலை உலகுக்கே நாகரிகம் அளித்த கிரேக்கர். ஆனால், ‘ஆரியம்’ அங்கே கிடையாது. ஆரியர் வாழ்ந்த நாடுகளில் ஒரே ஒரு நாட்டில்தான் ஆரியர் ‘ஆரியம்’ படைத்தனர். அதுவே திராவிட நாடு. திராவிட நாட்டை வளர்ப்புப் பண்ணையாகக் கொண்டு வளர்த்த ஆரியம்தான் இந்தியாவிலே, ஆசியாவிலே ஆரியம் என்ற பெயரால் ஒரு போலி நாகரிகம் பரப்பிற்று; பரப்பி வருகிறது. அந்தப் போலி நாகரிகம்தான் உலகாண்ட செங்கிஸ்கான் மரபை, கைரஸ் மரபை, புத்தர் அசோகன் மரபை அழித்து ‘கீழ்’ திசையை அடிமைத் திசையாக்கியுள்ளது. இன வேறுபாடற்ற மேலை யுலக நாகரிகமும் அதேபோல இன வேறுபாடற்ற திராவிட நாகரிகமும் ‘இனம்’ என்ற சொல்லையே உலகில் உயர்த்திய இனங்கள், நாகரிகங்கள். அந்தப் பொருளில் ‘இனம்’ என்ற சொல்லை ஆக்க முறையில் பயன்படுத்தித்தான் திராவிட இயக்கம் இனத் தேசியம் பேசுகிறதே தவிர, ஆரியச் சார்பாளர் உள்ளத்தில் படரும் கீழ்த்தரப் பொருளுடைய சொல்லைப் பயன்படுத்தி அது பேசவில்லை. ‘ஆரியமாவது, திராவிடமாவது’ என்று பேசுபவர் வரலாறறியாதவர் மட்டுமல்ல. வரலாறறிந்த பின்னும் இந்தப் பண்பு வேறுபாடறிய முடியாதவர்களே யாவர். யார் திராவிடர், யார் ஆரியர் என்று இன்று கூற முடியாமலிருக்கலாம்; கூற முடியலாம். ஆனால், யார் திராவிடப் பண்புடை யவர், ஆரியப் பண்புடையவர் என்று கூறுவது எளிது, மிக மிக எளிது. ஏனெனில், ஆரியப் பண்பாடு போற்றும் வருணா சிரம தருமம் ஆரிய திராவிட வேறுபாட்டை, வேற்றுமையை, உயர்வு தாழ்வடிப்படையில், ‘நித்திய முதலாளித்துவ அடிப்படையில், சுரண்டல் அநீதி அடிப்படையில் உலகில் என்றென்றும் நிலை நிறுத்துவதேயாகும். அதை என்றென்றும் நிலைநிறுத்துவதற்காகவே அதற்கு அணிமைக்காலப் பெரியார்கள் சிலர் பழைய உபநிடத வாசகமொன்றுக்குப் புது வழக்கும் புதுப் பொருளும் அளித்துச் சனாதன தர்மம் - கடவுளைப்போல நித்தியமான, அனாதியான இயற்கைமுறை என்ற புது வழக்குப் படைத்துப் புதுப்புது பெயரிட்டிருக்கிறார்கள். அதைக் கடவுள் நெறி என்று - இயற்கை முறை என்று காட்டவே, மொழிகளில் வருணாசிரமம் (வேதமொழி, பொதுமொழி, சமஸ்கிருதம் ஆகியவை பூசுரர் பிராமணர் மொழி; பிராகிருதம், பாலி ஆகியவை வைசிய மொழிகள்; வட இந்தியத் தாய்மொழிகளான இந்தி முதலியவை சூத்திர மொழிகள் (பேய் மொழிகள்) என்றும், எழுத்துக்களில் வருணாசிரம் (உயிர் எழுத்து பிராமண எழுத்து, வல்லெழுத்து க்ஷத்திரிய எழுத்து; சார்பெழுத்துக் கலப்பினத்தவர், பஞ்சமர், சண்டாளர்) என்றும், பாவகைகளில் வருணாசிரமம் (வெண்பா பிராமணர், ஆசிரியப்பா க்ஷத்திரியர், கலி வைசியர், வஞ்சி சூத்திரர், கம்பர் கால விருத்தம் போன்ற பாவினங்கள், பஞ்சமர்; நாடக சினிமாப் பாட்டுக்கள் சண்டாளர்) என்றும், கிரக இராசிகளில் வருணாசிரமம் (பிரகஸ்பதி அல்லது வியாழன் பிராமணன்; சனி சூத்திரன்; இராகு பஞ்சமன்; கேது சண்டாளன்) என்றும், தமிழிலேயே ஆரியப் பண்பாளர் இடைக்காலத்தில் அரும்பாடுபட்டு வகுத்துள்ளனர். இனமலர், இன வண்டு, இனப்பரிமா ஆகிய பண்பார்ந்த தமிழ்ச் சொற்களைக் கூட மெள்ளசாதி மலர், சாதி வண்டு, சாதிக் குதிரை என மாற்றி, இன்றைய தமிழரிடை இம்மாறுபட்ட வழக்குப் புகுத்தப்பட்டு வருகிறது. ஆரியம் மிகுதியாக நுழையாத பகுதி - எப்படியும் இந்தி யாவில் உருவாக்கப்பட்ட செயற்கை ஆரியத்தை அறியாத பகுதி மேலை உலகு. ஆனால், அங்கேகூட இனக் கலப்பால் ஆப்பிரிக்காப் பகுதியிலுள்ள வெள்ளையர்களிடையே நிற வேறுபாடு நிலவுகிறது. இது இயற்கை வேறுபாடு; வெளி நாகரிக வேறுபாடு மட்டுமே. அத்துடன் தன்னலம், குழு நலம், ஆட்சி வகுப்பு இறுமாப்பு, நிற இறுமாப்பு ஆகியவை இவற்றுக்குச் சற்று வலிமை தந்துவிடுகின்றன. ஆனாலும் இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள வேறுபாட்டுடன் இது ஒப்பிடத்தக்கதன்று. ஏனெனில், இங்கே துணைக் கண்டத்தின் வேறுபாடு வேறு வேறு மொழி பேசும் வேற்று நாட்டாரிடையேயன்று; ஒரே மொழி பேசுபவர், ஒரு நாட்டில், ஊரில், தெருவில் வசிப்பவர்களிடையே - மலையாள நாட்டில் ஒரு குடும்பத்த வரிடையே கூட நிலவுகிறது. - இரண்டாயிர மூவாயிர ஆண்டுகளாக ஒருங்கே வாழ்ந்து வருபவர்களிடையே நிலவுகிறது! இது மட்டுமோ? மேலையுலகிலுள்ள இன வேறுபாடுகளுக்கு எந்த மதத்தின் ஆதரவும் கிடையாது. துரதிருஷ்டவசமாக வெள்ளையரோ, நீகிரோவரோ, எவராவது ‘பாழாய்ப் போன இந்து மதம் சேர்ந்தாலல்லாமல் அந்த நிலை ஏற்படவும், செய்யாது; கிறித்துவ, இஸ்லாமிய சமயங்கள் அவ்வேறுபாடுகளை, உயர்வு தாழ்வு அநீதிகளை அகற்ற முடியாமல் இருக்கலாம். அகற்ற முடியாமல் பேசாதிருந்து உடந்தையாகக்கூட அமையலாம். ஆனால், இந்தியத் துணைக் கண்டத்திலுள்ளபடி உயர்வு தாழ்வு வேறுபாடு கடவுளால் அமைக்கப்பட்டது என்று கூறும் நிலை - சாத்திர சம்பிரதாயங்களால் அரண் செய்து காப்பாற்றப்படும் நிலை இல்லை. உலகின் எந்தச் சமயத்திலும் இல்லை. எந்த நாட்டிலும் மேலோரால், சுற்றறிந்தவரால், ஆராய்ச்சித்திற மிக்கவர்களால், சட்டமறிந்து சட்டம் இயற்றுபவர்களால் இவை பேணி வளர்க்கப்படும் நிலை - இந்தப் பாரத புண்ணிய பூமியைத் தவிர வேறு எந்தத் திருநாட்டிலும் இருக்க முடியாது! வேறு எந்த நாட்டிலும், அறவோர் இதைத் தெய்விக அமைப்பு என்று வாதாடவும் முடியாது. கிறித்துவ இஸ்லாமியர் மரபுப்படி கடவுளுக்கு எதிரியான ஒருபேய் மகன் அல்லது சைத்தானே ஓரவதாரமெடுத்து ஒருமதம் உண்டு பண்ணினால் கூட, அது வருணாசிரம சனாதன இந்து மதத்தளவு அறிவுத் துணிவுடனும், கட்டுப்பாட்டுடனும் உயர்வு தாழ்வு அநீதியைத் தெய்வ நீதியாக்கி அதற்கு விளக்கம், விளக்க வேதாந்தம் கூறுமென்று கூற முடியாது. ஆனாலும் இந்தியாவில் ஆரிய மரபில் தேவர், முனிவர், அவதார புருடர், அருளாளர்கள் முதற்கொண்டு அவ்வாறு விளக்க முன்வந்துள்ளனர், வருகின்றனர்! சைத்தானே கடவுளுருவாகக் காட்சி தரும் இதுபோன்றதொரு துணைக் கண்டம் கடவுட் படைப்பில் வேறு கிடையாது! இதனால்தானோ என்னவோ இந்தத் துணைக் கண்டத்தைப் புண்ணிய பூமி, போக பூமி என்று புராணங்கள் போற்றிப் புகழ்கின்றன - யாருக்குப் புண்ணியமோ, யாருக்குப் போகமோ, அதை அந்தக் கடவுள்தான் - அல்லது அந்தச் சைத்தான்தான் உணர வேண்டும்! வருணாசிரம தருமம் இத்துணைக் கண்டத்தில் அறிவை, பண்பை எந்த அளவு கறைப்படுத்தியுள்ளது என்பதை அளந்து பார்க்க வேண்டுமானால், காந்தியடிகள், இராமகிருஷ்ணர், தாகூர் போன்ற மனிதருள் மாணிக்கங்களின் அருட் பார்வையையே அது களங்கப்படுத்தியுள்ளது என்பதை நாம் காண வேண்டும். ஜனாப் ஜின்னா போன்ற பகுத்தறிவார்ந்த தேசிய முஸ்லிம் அறிஞர்கூடக் காந்தியடிகளை எளிதில் உணர முடியாமற் போனதற்கும், இந்தியாவில் இனி இஸ்லாம் வாழமுடியாது என்று மனக்கசப்புற்று விட்டதற்கும், திராவிட இயக்கத்தவர் பலர் காந்தியடிகள் வாழ்ந்த காலத்தில் அவர் உயர் பண்புகளை எளிதில் காண முடியாமற்போனதற்கும் காரணம், அவர் வருணாசிரம தருமத்தைச் சனாதன தருமம், கடவுள் நெறி என்று ஏற்றதுடன் மட்டுமன்றி, அதுவே இயேசுவும், முகமது நபிகளும் கூடச் சென்றெட்டிவிடாத உயர் நெறி, உயர் தெய்விக நெறி என்று புது விளக்கங்கள் தந்ததேயாகும். விவேகானந்த அடிகள் கேரளத்தைப் பார்த்து - அதன் சாதி மத அநீதிகளைக் கண்டு, அதை ஒரு பைத்தியக்காரர் கண்காட்சிச் சாலை என்றாராம்! அந்தப் பெயர் உண்மையில் ஆரியம் உலாவும் வரை இந்தியத் துணைக் கண்டம் முழுமைக்கும் - ஆரியம் இன்று புதிதாகப் பரவி வரும் இலங்கை, பர்மா, மலாயா ஆகிய நாடு களுக்கு முற்றிலும் பொருந்தும் என்னலாம். 27. ஏன் ‘திராவிடம்’? சொல்லாராய்ச்சி இதுவரை நாம் கூறிய விளக்கங்கள் ‘ஆரியராவது திராவிடராவது’ என்று கூறும் ஆரியருக்கே, அறிஞருக்கே கூறப்பட்டவை ஆகும். தமிழகத்துக்கு வெளியேயுள்ள அறிஞர்களுக்கும் இவ்விளக்கங்கள் பயன்படுக்கூடும். ஆனால்,, தமிழகத்துக்குள் இவ்விளக்கங்கள் பெரும்பாலும் தேவைப்பட மாட்டா. திராவிட இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம், நாடு நகரெங்கும், பட்டிதொட்டி எங்கும் அறிஞர் அண்ணா அவர்களின் அறிவார்ந்த அழகு விளக்கங்களாலும், அவர் இளவல்கள், நங்கையர்கள், பிற அறிஞர்கள், கலைஞர்கள், கவிஞர்களின் பேருரைகள், கட்டுரைகள், கலைத் தொகுதிகளாலும் இவையாவற்றையும் பொதுமக்கள் உள்ளங்களிலே, வீட்டுத் தாய்மார் உள்ளங்களிலே கூடப் பசுமரத்தாணி போல் பதியவைத் துள்ளன. ஆனாலும் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வெளியே இன்னும் உலவ இடம் கிடைக்கும் இடங்களில், வேளைகளில் - விளக்கம்தர முடியாத போதுகூட அறிவுக் குழப்பம் தரும் முறையில் சிலர் பலர் பேசுகின்றனர். திராவிடமா, அது என்ன மொழிச் சொல்? தனித் தமிழ்ச் சொல்லா? சமஸ்கிருதச் சொல்லா? இலக்கியத்தில் அதற்கு வழக்கு உண்டா? வடவர் சொல்லையா தமிழர் வழங்குவது? திராவிடர் என்றால் ஓடி வந்தவர், போக்கிரிகள் என்றல்லவா பொருள்? அதை விட்டுவிட்டுத் ‘தமிழன்’ ‘தமிழ்நாடு’ என்று சொன்னாலென்ன? இக்கேள்விகளுக்கு விளக்கங்கள் அடிக்கடி மேடைகளில், பத்திரிகைகளில் தரப்பட்டும், கேள்விகள் கேட்கப்பட்டுக் கொண் டேதான் இருக்கின்றன. இதற்கு ஒரு காரணம் உண்டு. ‘கோல்டுஸ் மித்’ என்ற ஆங்கிலக் கவிஞரின் ‘பாழ்பட்ட ஊர்’ என்ற கவிதையில் ‘தோற்றுவிட்டாலும் விடாது வாதாடும்’ ஒரு நாட்டுப்புற ஆசிரியர் பற்றி அவர் வருணிக்கிறார்; (ஹனே வாடிரபா னநகநயவநன, hந றடிரடன யசபரந ளவடைட) ஆனால், அங்கே ஆசிரியர், ஊரில் தன்மதிப்புப் பேணும் பழம் பாணியிலேயே அவ்வாறு செய்கிறார். இங்கே நோக்கம் இதுவன்று. ‘திராவிட இயக்கம் படித்தவரையும் ஆட்கொண்டுவிட்டது; படியாதவரையும் ஆட்கொண்டுவிட்டது. ஆகவே அரைகுறைப் படிப்பினால் குழம்புபவரையாவது சற்றுக் குட்டை குழப்புவோம்’ என்ற எண்ணமே இவ்விடாக் கேள்விகளுக்குரிய காரணமாகும். ஆனாலும் இக்கேள்விகள் தாம் திராவிட இயக்கத்தை முழுநிறை அளவில் ஆழ்ந்து வேரூன்றிய ஒரு தேசிய இயக்கமாக்கி வருபவை? ஏனென்றால் கேள்வி கேட்பவர் உள்ளத்திலேயே, தடுமாற்றத் திலேயே திராவிடம் புகுந்து கொண்டிருக்கிறது! விடை விளக் கங்கள் திராவிட இயக்கத்தை, திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒரு காலங்கடந்த இயக்கமாக, தேசங்கடந்த புகழ் மரபாக, மனித இனத்தையே வாழ்வித்து வாழும் தகுதியுடைய பண்பாக மாற்றி விடும் என்பதில் ஐயமில்லை. திராவிடம் என்ன மொழிச் சொல்? - என்ன மொழிச் சொல்லானால் என்ன, அப்பனே! காங்கிரஸ், சோஷலிஸ்ட், கம்யூனிசம் என்ன மொழிச்சொல் என்று கேட்டாயா? இந்தியா, இந்து மதம் என்ன மொழிச் சொல் என்று எந்த அகராதியையாவது - தமிழ், தெலுங்கு சமஸ்கிருதம், இந்தி - எந்த மொழி அகராதியையாவது எடுத்துப் பார்த்தாயா, தம்பி! உன் பெயர், உன் தாய் தந்தையர், அண்ணன் தம்பி, அக்காள் தங்கையர் பெயர்கள் என்ன மொழிச் சொற்கள் என்று எண்ணிப் பார்த்ததுண்டா? நம் நாட்டுத் தலைவர், நம் தமிழ்க் கவிஞர், தமிழ்ப் புலவர் பெயர்களில் கூட எத்தனை பெயர்களில் தமிழ் இடம் பெற்றிருக்கும்? இவற்றை யெல்லாம் கேட்கக் கருதாதவர்கள் நாவில், ‘திராவிடம் என்ன மொழிச் சொல்?’ என்ற கேள்வி எழுகிற தென்றால், அதுவே திராவிட இயக்கத்தின் மாபெரு வெற்றிக்கு ஒரு சான்றாயிற்றே! திராவிட இயக்கம் வளம் பெற்றோங்கியுள்ள இந்தத் தலைமுறை யிலன்றி, முந்திய அடிமைத் தலைமுறைகளில் இக்கேள்வியை எவரே கேட்டிருக்கக் கூடும்? எவருக்குத்தான் கேட்கத் தோன்றி யிருக்கும்? திராவிட இயக்கத் தந்தை பெரியார் கேட்டிருக்க முடியாத கேள்வி இது - திராவிட முன்னேற்றக் கழக ஊழியிலே, திராவிட இயக்க எதிரிகளே கேட்கின்றனர், கேட்டுவிட்டனர்! தமிழகத்துக்கு மிக மிக நல்ல காலம் பிறந்துவிட்டதென்றே கூற வேண்டும்? திராவிடம் தனித் தமிழ்ச் சொல்லா? சமஸ்கிருதச் சொல்லா? ஆகா, ‘மறைமலை’ மணம் கமழும் கேள்வி! இக்கேள்வியில் திராவிட இயக்கம் மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழக மணமே வீசுகிறது! இதை ஆசிரியர் மறைமலையடிகள் கேட்டிருக் கலாம். அவர் மாணவ சிகாமணிகள் - இல்லையில்லை, சிகா மணிகள் - சமஸ்கிருதம் - தலைமணிகள் கேட்டிருக்கலாம்! திராவிட இயக்க ஒளியுடன் ஆசிரியர் மறைமலை அடிகளின் மரபொளியும் கலந்த இணையொளியரான தற்போதைய தி. மு. க. வின் பொதுச் செயலாளர் நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள் கேட்டிருக்கலாம். முன்னாள் பேராசிரியர், இந்நாள் சட்டமன்ற வாணர் க. அன்பழகன் கேட்டிருக்கலாம். இவர் களல்லாவிடில் பேராசிரியப் பேரறிஞர் தேவநேயப்பாவாணர், முனைவர் பேராசிரியர் மு. வரதராசனார் அவர்கள் கேட்டிருக் கலாம்! ஆனால், இவர்கள் எவரும் கேட்கவில்லை. இவர்கள் எல்லாருமே தமிழினத்தை, தமிழின மொழிகளை, தமிழின நாகரிகத்தை உலகுக்கு எடுத்துரைக்கத் ‘தமிழ்’ என்ற சொல்லின் போதாமையை - குறைபாட்டை உணர்ந்து, தேயாத பழம் பெருந் தமிழ் என்ற பொருளுடைய ‘திராவிடம்’ என்ற சொல்லை வழங்கியுள்ளனர். ஆரியருள் ஆரியத்தின் முன் தமிழுக்குப் போராட மார் தட்டி முன்வந்த பெரியார் பரிதிமாற் கலைஞர் தமிழராகியதும், தம் பெயர் சமஸ்கிருதப் பெயராய் இருக்கக்கூடாதென்பதற்காக, சூரிய நாராயண சாஸ்திரியார் என்ற வீறமைந்த பெயரைப் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக் கொண்டார். அவர் அறிந்து வழங்கிய சொல் ‘திராவிடம்’. தமிழ் தனித்தியங்கவல்லது என்பதை முதன் முதல் நிலை நாட்டிய பேரறிஞர் - சைவ உலகெங்கும் சமய உலகெங்கும் பெரும்புகழ் நிறுவிய, சுவாமி வேதாசலம் என்னும் தம் பெயரையே மாற்றி ‘மறைமலையடிகள்’ என்று புதுவழக்கு ஏற்படுத்தி அதையும் இன்று நாடறியச் செய்துவிட்ட, தமிழறியச் செய்து விட்ட பெரியார் - நூற்றுக்கணக்கான தம் ஏடுகளிலும் சொற்பொழிவுகளிலும் ஒரு சமஸ்கிருதச் சொல் கூட வராமல் பேசிய, எழுதிய தனித்தமிழ்த் தறுகணாளர் - அவர் கேட்க வில்லை, திராவிடம் எம்மொழிச் சொல்லென்று - அவர் வழங்கிய சொல்லே அது! ‘ஆசிரியர் மறைமலையடிகளாரும் அவர் காலத்தவரும் திராவிடம்’ சமஸ்கிருதச் சொல் என்றுதான் கருதினார்கள். ஆனால், அது ‘தமிழ்’ என்பதன் சமஸ்கிருதத் திரிபு என்று அவர்கள் எண்ணியிருந்தார்கள். ஆனால், அந்த வடிவில்கூடத் தூய தனித்தமிழ்க் களிறாகிய அவர் அம் முறையில் அதைப் பயன்படுத்தியிருக்க மாட்டார். ‘தனித் தமிழ்’ என்பதற்கு, திராவிடத் தமிழ் என்பதுதான் பொருள் என்பது கருதியே அவர் அச்சொல்லை மட்டும் - அந்த ஒரே சமஸ்கிருதத் திரிபு வழக்குச் சொல்லைமட்டும் - வழங்க ஒருப்பட்டார். ‘தனித் தமிழ்’ என்ற தொடரில் ‘தனி’ என்பதற்கு என்ன பொருள் என்று யாராவது அவரிடம் கேட்டிருந்தால், அவர் என்ன சொல்லியிருப்பார்? ‘திராவிடத் தமிழ்’ என்றுதான் கூறியிருப்பார்? அதற்காகவ அவர் திராவிடர் என்ற சொல்லைப் பேணினார் - பண்பு கெட்ட இன்றைய தமிழைப் பண்புடைய தமிழாக்க வேண்டுமென்றால், அதைத் திராவிடத் தமிழ், தனித் தமிழ் ஆக்குக என்பதே அவர் கருத்து, திராவிடம் என்ற சொல் தமிழினத்தை, வாழ்ந்த பெருந் தமிழினத்தை செந்தமிழ் கொடுந்தமிழ் என்று இடைக்காலத்தில் பிரிந்த தமிழகத்தை, செந்தமிழகமாகிய இன்றைய தென்னகத் தமிழகத்தை மட்டுமன்றி, இலங்கையையும், கொடுந் தமிழகங் களாக இடைக்காலத்தில் மாறி இன்று வேறு பெயர் கொண்டி லங்கும் மலையாள, கன்னட, தெலுங்கு மொழிப் பகுதிகளையும் உட்கொண்டது. அந்தத் தமிழகத்தை, பெருந் தமிழகத்தை, புகழ்த் தமிழகத்தை, முழுநிறை தமிழகத்தைக் குறிக்கும் சொல் திராவிடம். அதுமட்டுமன்று, அந்த முழு நிறை தமிழகத்திலும் அதன் மொழி மட்டுமன்றிக் கலை, இயல், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை ஒருங்கே குறிக்கும் சொல் என்ற காரணத்தினாலேயே சரியாகவோ தவறாகவோ ஆரிய வடிவம் பெற்ற சொல் என்று கருதியும்கூட அவர் இச்சொல்லைத் தாராளமாக எடுத்து வழங்கினார். 28. ‘தமிழ்’ தமிழர் தேசியப் போராட்டம் பயன்படாது! ஆசிரியர் மறைமலையடிகள் தனித்தமிழுக்கு அறிஞர் அண்ணா அவர்கள் விளக்கம் தந்தபோது, மறைமலையடிகள் உள்ளத்தையே அவர் படம் பிடித்துக் காட்டினார். ‘தனித் தமிழ் என்றால் என்ன? தமிழ் இன்று தமிழும் ஆரியமும் கலந்த புதுத் தமிழாகி வருகிறது - புதுத் தமிழாய் அது வளர்கிறதா என்றால், இல்லை, தேய்கிறது. இந்த தேயும் தமிழை நிறை தமிழாக்க வேண்டுமானால் நாம் என்ன செய்ய வேண்டும்? கூட்டிய கேட் டைக் குறைக்க வேண்டும். நம் பள்ளிப் பிள்ளைகள் கணக்குப் போடும் முறையில் கூறினால், தமிழ் - ஆரியம் = திராவிடம். திராவிடம் என்றால் என்ன என்பதற்கு இது ஒரு நல்ல விளக்கம். ஆனால், இதைப் பார்க்கிற குதர்க்கவாதி எவனேனும் கூறக்கூடும்- ‘குறைக்கிறீர்களே, தேய்கிறதே’ என்று! ‘தமிழ் = ஆரியம் ஓ புதுத் தமிழ் என்று கூறுங்களேன், இதுவல்லவா வளர்ச்சி’ என்று அவர்கள், குழம்பும் அரைப் படிப்பாளர்களைக் குளறுபடி செய்ய எண்ணக் கூடும். ஆனால், அவர்களுக்கு நாம் கூறுவதெல்லாம், கணக்கு முறையிலிருந்து இயல் நூல் (விஞ்ஞானம்) சென்று பாருங்கள்; தமிழ், கலப்பால் கெட்ட வகையை அது காட்டும் என்பதே. இரும்பு = உயிர்வளி ஓ துரு. துரு - உயிர்வளி = இரும்பு. பண்டைத் தமிழ் உண்மை இரும்பு, தம்பி! இன்றைய தமிழ் அதனுடன் உயிர்வளி கலந்த புது இரும்பு, துரு! துருவையே இரும்பாகக் கருதுபவனிடம் நாம் இரும்பு என்று சொன்னால், அது அவனுக்கு விளங்காது. அவன் துருவைத்தானே எண்ணுவான். தமிழ்த் தேசிய இனத்தைத் ‘தமிழினம்’ என்று கூறினால், தேசிய முழு நிறை தமிழைத் தமிழ் என்று கூறினால், மறைமலையடிகள் போன்றவர்கள் - நாவலர் சோமசுந்தரனார், அண்ணல் தங்கோ, கி. ஆ. பெ. விசுவநாதம் போன்றவர்கள்கூட அதை உண்மையான தமிழ், நல்ல தமிழ், தனித் தமிழ் என்று குறிப்பால் அறிந்துகொள்ளக் கூடும். ஆனால், புலவர் தலைவர்களிடையே மறைமலையடிகளுக்கு மட்டும், திராவிட இயக்கத்தவரிடையே அனைவருக்கும் தெரிந்த அரிய உண்மையாதெனில், இன்றைய தமிழன் துருவுக்கே இரும்பு என்று கூறும் தமிழனாவான். அவன் உண்மை இரும்பு என்றால்கூட உண்மைத் துரு என்றுதான் எண்ணுவான். பழைய இரும்பு என்றாலும் பழைய துரு என்பது தவிர வேறு அவனுக்கு விளக்கம் ஏற்படாது. ஆகவே, துரு - உயிர்வளி = இரும்பு என்பதுபோல, தமிழ் - ஆரியம் என்பதைக் குறிக்க ஒரு மயக்கம் தராத அறிவுத் துறைச் சொல்லை (கூநஉhniஉயட றுடிசன) வழங்க எண்ணினர். தமிழ், திராவிடம் இவற்றிடையே உள்ள வேற்றுமையை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுவது ‘எல்லை’ தான், தமிழ், தமிழகம் - சிலம்பு பாடிய இளங்கோவின் நாட்டை அயல் நாடாக்குகிறது. சிலப்பதிகாரத்தை அயல்மொழி நூலாக் குகிறது. தமிழ், தமிழகம் - தமிழ்ப் பாடலுக்குப் பரிசாக எந்தத் தமிழரசரும் கொடுக்காத அளவு, சோழ பாண்டிய நாடுகளையே விலைக்கு வாங்கிவிடப் போதிய அளவு - நூறாயிரக்கணக்கான பொன்னை - ஆனைமலைக் காடு முழுவதையும் - தம் நாடு முழுவதையுமே - பதிற்றுப்பத்துப் பாடிய பத்துப் புலவர்க்கும் வழங்கிய வண்டமிழ்ச் சேரரை - பதிற்றுப் பத்துக்கொண்ட நெடுஞ்சோற்றுதியன் சேரலாதனை, இமயவரம்பனை, மேல் கன்னட நாடு பெற்ற யானைக்கட்சேயை, கடலாண்டு ஆரிய அரசர் தலைமீது தமிழணங்கின் சிலை ஏற்றிய சேரன் செங்குட்டுவனை, கன்னட ஆந்திர நாடுகளை முழுவதும் வென்றாண்ட ஆடுகோட்பாட்டுச் சேரலாதனை அயல் நாட்டவராக்கும் சொற்கள் ஆகும். தமிழ், தமிழகம் - தொல்காப்பியம் காலப் பாண்டி நாட்டை யும் அதன் தலைநகரையும், தலை இடைச் சங்கப் பாண்டியர் களையும், அப் பகுதியிலடங்கிய இன்றைய இலங்கையையும் அயல் நாடுகளாக ஆக்கி விடும்; அல்ல, அல்ல, ஆக்கி விட்டிருக் கின்றன. இலங்கைத் தமிழர்கூடத் தம் நாடு பண்டைத் தமிழகத்தின் ஒரு பெரும்பகுதி என்பதை மறந்து விட்டனர். ஆரிய ஆட்சியிலுள்ள தேயும் தமிழ் வாழும் இடம் நம் தென்னகத் தமிழகம். அத் தென்னகத் தமிழகத்துக்கே தமிழுணர்ச்சி யூட்டிய தமிழர் யாழ்ப்பாணத் தமிழர்கள்! அது இயல்பும்கூட! ஆனால், அத்தகையவர்களையே - விபுலானந்த அடிகள், ஆறுமுக நாவலர் முதலிய ஆராய்ச்சிச் சான்றோர் களையே தமிழ் வரலாறு மறந்துவிடச் செய்த சொற்கள் தமிழ், தமிழகம் என்ற சொற்களே. தேய்ந்த ‘ஆரியத் தமிழ்’ பேசும் தமிழர் வழங்குவதனால் மெய்ப் பொருள் கெட்டுப்போன இச் சொற்களே யாகும். ஏனெனில், அவர்கள் யாவரும் வாழும் இலங்கையைத் தமிழருக்கு அயலான நாடு என்றே கருதி, அக் கருத்தை இலங்கையிலும் தமிழுலகிலும் வெளியேயும் பரப்பி விட்டனர்! இலங்கை - பாண்டியர் ஆண்ட இலங்கை, தொல்காப்பியர் வாழ்ந்த இலங்கை என்பதை மறந்து அது விபீடணன் ஆண்ட இலங்கை என்று நினைத்துக் கொண்டனர். இலங்கைத் தமிழகம் தமிழகத்தின் ஒரு பகுதி. அது தமிழர் குடியேறிய நாடல்ல. இராமாயண காலத்தில் இலங்கைக்கும் தென்னாட்டுக்கும் இடையே கடல் புகுந்துகொண்டது. ஆனால், இராமாயண காலத்துக்கு முன், தொல்காப்பியர் காலத்தில், இடைச்சங்க, தலைச்சங்க நாட்களில், பாண்டி நாடும் தமிழகமும் இலங்கையில் மட்டுமல்ல, அது தாண்டி நெடுந்தொலை பரவியி ருந்தன. அவை பரவியிருந்த பகுதிகள் கடலால் பிரிக்கப்பட்டும், கடலடியில் நழுவிப் புடைபெயர்ந்துமே இன்றைய மடகாஸ்கர், மலாயா, தென் கிழக்காசியத் தீவுகள், ஆஸ்டிரேலியா, மேலை அமெரிக்காவாக மாறியுள்ளன என்று நில நூல், உயிர் நூல், செடி நூல், இன நூல் அறிஞர் கூறுகின்றனர். தமிழகத்திலிருந்து இலங்கைக்குக் குடியேறிய தமிழன் உண்டு. ஆனால், அது திருநெல்வேலியிருந்தும் தஞ்சையி லிருந்தும் சென்னைக்குக் குடியேறுபவர்கள் போன்ற நிலையேயன்றி வேறன்று. வரலாற்றுக் காலங்களில் குமரிக்கு வடக்கிலுள்ள தமிழகத்திலிருந்து இலங்கைக்குப் பலர் சென்ற துண்டு. அது போலவே இலங்கையிலிருந்து குமரிக்கு வடக்கி லுள்ள தமிழகத்துக்குக் குடிபெயர்ந்த தமிழரும் ஏராளம். தமிழரில் ஒரு பெரும் பகுதியினரும் மலையாள நாட்டவரில் ஒரு பெரும் பகுதியினரும் ஆன ஈழவர் என்ற சமுதாயப் பெயர் அதற்கு இன்றளவும் சான்றளிக்கிறது. இலங்கையின் மிகப் பழமையான பெயர் தாம்பிரபர்ணி என்பதே. தமிழ், தமிழகம் - தெலுங்கர் கன்னடியரையும், வங்காளி குசராத்தியரையும், சீன சப்பானியரையும், டேனியர் பின்னி யரையும் ஒருங்கே அயலாராக்கும் சொற்கள். இது அப்பா அம்மை தவிர மற்ற எல்லாரையும் - மாமன் மைத்துனர் - சிற்றப்பன் சின்னம்மை - தங்கை தமக்கை கணவன் ஆகிய எல்லாரையுமே - அயலாரென்று கருதும் ‘இனமடமை’ யை இன்றைய தமிழனிடம் - தமிழனிடம் மட்டுமே உண்டு பண்ணி யிருக்கிறது. ஏனெனில், வடவர் தம் இன எதிரியான புத்தரை ஆரியராக்கி, தென்னாட்டுக்கும் தெற்கிலிருக்கும் சிங்களவர் களையும் அவர்கள் மொழியையும் துணிந்து ஆரியம் என்று நிலைநாட்ட முற்பட்டு, பண்டைப் பாண்டியரும் சோழரும் ஆண்ட மலாயா, சுமாத்ரா, சயாம், இந்து சீனப் பகுதிகளில் தமிழர் நாகரிகச் சின்னங்களையே மறைத்துத் திரித்து உலகுக்கு ஆரியச் சின்னங்களாகக் காட்டி வருகின்றனர். ஓமந்தூரார் ஆட்சியின்போது நம் அமைச்சர்கள் உள்ளங் களிலும் கண்களிலும் திராவிட ஒளி காட்டி அவர்களையும் அவர்கள் பரிவாரங்களையும் முக்காடிட்டு அவ்வொளியை மறைக்கச் செய்த நிகழ்ச்சிகள் பல உண்டு. ‘நம் நாடு’, ‘திராவிட நாடு’, பழைய ‘மாலைமணி’ வாசகர்கள் அவற்றை முற்றிலும் மறந்திருக்க மாட்டார்கள். ஆனால், ஒரே ஒரு நிகழ்ச்சியை மட்டும் இங்கே குறிப்பிடுகிறோம். இலங்கைத் தமிழ் விழாவில் நம் பெயரில்லாத் தமிழ் நாட்டின் தமிழமைச்சரும் தேய்ந்த தமிழகத் தமிழறிஞரும் சென்றிருந்தனர். கண்காட்சிகளைப் பார்வையிடச் சென்றனர். புத்தகக் கண்காட்சி, படக் கண்காட்சி ஆகியவற்றைக் கடந்து, கலைக் கண்காட்சிப் பக்கம் திரும்பினர். ‘திராவிடக் கலையரங்கம்’ என்ற பெயரைக் கண்டு திகைத்தனர். இது எந்தக் கறுப்புச் சட்டைக்காரன் செய்த செயல் என்று தமிழுக்கே வளர்ச்சிக் கழகம் அமைத்துள்ள அந் நாளைய அமைச்சர் சீறினாராம்! தமிழ் விழாவில் ஏன் ‘திராவிடம்’ என்று கடிந்து உசாவினாராம்! பதில் அவரை வெள்குற வைத்தது. தமிழ்க் கலைகளில் மிகப்பெரும் பாலானவை ‘தமிழகத்துக்கு வெளியிலேதானே இருக்கின்றன?’ என்று கேட்டார்களாம் அவர்கள்! சிலப்பதிகாரத்தைத் தமிழ் காப்பியமாக மட்டும் போற்றும் தமிழருக்கு இது ஓர் ‘அபாய அறிவிப்பு’ - திராவிடம் என்ற சொல்லை வெறுக்கும் தமிழர், சிலப்பதிகாரத்தை மட்டுமல்ல, பதிற்றுப்பத்தையும் தமிழகத்தைவிட்டு விரட்ட வேண்டும். நாயன் மாரில் ஒரு நாயனாரைத் தலைமுழுகியாக வேண்டும் - ஆழ்வார்களில் ஒரு ஆழ்வாரையும் ஆழ்வார்கள் பாடிய திருநாலாயிரத்தில் ஒரு ஆயிரத்தையும் வெட்டியெறிய வேண்டும். இவை மட்டுமோ? சங்க இலக்கியத்திலேயே புறநானூற்றுப் பாடல்கள் பலவற்றை, அகநானூற்றுப் பாடல்கள் பலவற்றை, மற்ற சங்கப் பாடல்களில் பலவற்றை - டி. கே. சிதம்பரநாதன் போற்றிய முத்தொள்ளா யிரத்தில் கிடைத்துள்ள நூறு வெண்பாக்களிலும் சிலவற்றைத் தள்ள வேண்டும்! 29. ஆரியம் ஆரியர் சரக்கல்ல, திராவிடர் சரக்குமல்ல! திராவிடம் - தமிழ் ஆகிய சொல் வழக்குகளுக்கு விளக்க மாகக் காட்டப்பட்ட இரும்பு துரு உவமை நமக்குத் தரும் படிப்பினை பெரிது. ஏனென்றால், நாம் கூறும் ஆரியம் என்பது ஆரியரைக் குறிக்கவில்லை என்பதையும் அதுவே விளக்கும். இரும்பும் உயிர்வளியும் சேர்ந்தால் துரு என்று நாம் கணக்கியல் வாய்பாட்டு முறையில் கூறினாலும், உண்மையில் இரும்பும் உயிர் வளியும்மட்டும் கலந்துவிட்டால் அது துருவாய்விடாது. அதனு டன்கூட ஈரம், சூடு ஆகிய இரு பண்புகளும் இருந்தாக வேண்டும். காற்று நீக்கிய மணிக் கவிகையில் (யசை யீசடிடிக நெடட - தயச) இரும்பும் உயிர் வளியும்மட்டும் புகுத்தினால், இரும்பு துரு ஏறவே செய்யாது. அதுமட்டுமல்ல, மணிக்கவிகையின் ஒருபுறத்தில் ஈர நீக்கும் கந்தகத் திராவகம் (ளுரடயீhரசiஉ ஹஉனை) வைத்துவிட்டாலோ, அல்லது காற்றின் தட்பவெப்ப நிலையை 4 பாகை நூற்று மானத்தில் (4 னுநபசநநள ஊநவேபைசயனந) குறையச் செய்தாலோ இரும்பு துரு ஏறாது. அதுபோலவே, தூய தமிழும் அதாவது தேயாத தமிழ் அல்லது திராவிடமும் தூய ஆரியமும் மட்டும் சேர்ந்தால்கூடத் தமிழ் தேய்ந்திராது, கெட்டிருக்காது. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்றபடி, இந்த இன வேற்றுமையைப் பயன்படுத்தி இடையே இனக் கலப்பிடையே சுரண்டலுக்குரிய வாய்ப்புக் கண்டு, அதை வருணாசிரம தரும முறையாக்கி, ஆரியர் ஆரியருடனோ, திராவிடர் திராவிடருடனோ அல்லது ஒருவர் ஒருவருடனோ அன்பு செலுத்த இணையாமல் செய்து ஆதாயம் கண்ட ஆரியப் பதர்கள், திராவிடப் பதர்கள் ஆகிய இரண்டினப் பதர்களின் கூட்டுப் படைப்பே ஆரியம். மன்னார்குடியில் ஒரு பெரியார் தமிழிலும் சமஸ் கிருதத்திலும் ஒப்ப அறிவு சான்றவராயிருந்தாராம்! ஒரு பள்ளியில் சமஸ்கிருதப் பேராசிரியராக இருந்த அவர், தம் மாணவர்கள் - சிறப்பாகச் சமஸ்கிருதம் படிக்கும் தமிழ் மாணவர் களுக்காக ஒரு சமஸ்கிருதத் தமிழ் அகராதி இயற்றினார். நம் தேய்ந்த தமிழகத்தில் அது விற்கவேயில்லையாம்! ஏன் தெரியுமா? ‘அக்நிஸ்’ என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு அவர் மற்ற அகராதிக்காரர்களைப் போல எளிய தமிழில் அந்த சமஸ்கிருதச் சொல்லையே ‘அக்கினி’ என்ற தமிழ் எழுத்தில் எழுதிப் பொருள் விளக்கவில்லை. கடுந்தமிழில் ‘தீ’ என்று எழுதியிருந்தார். ‘உதகம்’ என்ற சமஸ்கிருதச் சொல்லுக்குப் பொருளாக ‘ஜலம்’ என்ற மற்றொரு சமஸ்கிருதச் சொல்லை, சமஸ்கிருத எழுத்தில்லாமல் எழுத முடியாத சமஸ்கிருதச் சொல்லைத் தரவில்லை. கடுநடையில் ‘தண்ணீர்’ என்று எழுதியிருந்தார்! சமஸ்கிருத எழுத்துக்களைச் சேர்த்துக்கூடத் தமிழில் எழுத முடியாத ‘ச்ரீ’ என்ற சொல்லுக்கு முழுச் சொல்லையும் பழைய சமஸ்கிருத எழுத்தாகிய கிரந்த எழுத்தில் எழுதிவிடாமல், திரு, திருவார்ந்த, அழகு, நன்மை, செம்மை, சீர், செல்வம், என்று ‘விளங்காத தமிழில்’ பொருள் எழுதியிருந்தாராம்! நல்ல தமிழை - படியாத மக்கள் எல்லாம் கேட்டவுடன் அறிந்து கொள்ளும் தமிழை - கடு நடை என்று கருதுபவர்களும், சிந்தித்த உயிர் மரபு சார்ந்த புதுக்கருத்துக்களை எந்த நடையில் சொன்னாலும் எந்த மொழியில் கூறினாலும் புதுக் கருத்து என்ற முறையில் வாங்கிக்கொள்ள முடியாத நிலையில் நடை புரிய வில்லை என்று கூறுபவர்களும் தமிழகத்திலேயே திராவிட இயக்கத்தில்கூட இன்னும் இருக்கிறார்கள். அவர்கள் தமிழகத்தில் - திராவிட இயக்கத்திலேயே வாழ்ந்தாலும்கூடத் தேய்ந்த தமிழகத்தில் பிறந்து, தேய்ந்த தமிழையே பள்ளி கல்லூரிகளில் கற்றுத்தரப்படும் தமிழகத்தில் பயின்று, அந்த ஆரியத் தமிழையேதான் எளிய தமிழ் என்று கருதுகிறார்கள். தனித் தமிழ் சமஸ்கிருதம் நீங்கிய தமிழ்மட்டுமல்ல! அது தமிழ்ப் பண்புடைய தமிழ் - சிந்தித்துச் சிந்தித்துச் செம்மைப் படுத்திய, செதுக்கிச் செதுக்கிச் செப்பம் செய்யப்பட்ட அறிவுப் பண்பு மிக்க சொற்களைக் கொண்ட செந்தமிழ். அது கலப்புத் தமிழைவிட மட்டுமல்ல, சமஸ்கிருதத்தை விட, இலத்தின் கிரேக்க மொழிகளைவிட, ஆங்கிலம், ஜெர்மன், ரஷ்யம் முதலிய நேற்றைய அறிவார்ந்த மொழிகளைவிடச் சிந்தனைக்கும் கலைப் பண்புக்கும் ஏற்ற உயர் கருவி. மற்ற மொழிகள் கட்டை வண்டிகளில் நல்ல கட்டை வண்டிகள் - தமிழ் மணிக்கு ஆயிரங் கல்லுக்கு மேலும் பறக்கவல்ல வானூர்தி! 30. மற்ற மொழியாளர் ஏற்பார்களா? திராவிடர், திராவிடம் என்ற சொற்களையே வழங்காமல் தமிழ், தமிழகம் என்ற சொற்களை மட்டும் தமிழர் வழங்கினால், அதற்குப் பதில் மலையாளம், கேரளம் என்ற சொற்களை மட்டுமே மலையாளிகள் வழங்கினால், கன்னடம், கர்நாடகம் என்ற சொற்களை மட்டும் கன்னடியர் வழங்கினால், தெலுங்கு ஆந்திரம் என்ற சொற்களை மட்டுமே தெலுங்கர் வழங்கினால், அதனால் வரும் கேடுகளை மேல்வரும் நிலைகளே சுட்டிக் காட்டும். திராவிடம் என்ற சொல்லை மலையாளிகள் ஏற்பார்களா? ஏற்காவிட்டால் கேடு முதலில் அவர்களுக்கு, பின்தான் அவர்கள் இனத்தவர்களாகிய - சுற்றத்தார்களாகிய நமக்கு! தமிழ் மொழி பேசும் திராவிட இனத்தவர் மலையாளிகளிடம் மாமன் மைத்துனர், சிற்றப்பன் பிள்ளை, பெரியப்பன் பிள்ளைபோல அன்புரிமையுடன் மட்டும்தான் பேசுவர், பேச முடியும். மலையாள நாட்டறிஞரே, தந்தை தாய்போல், அண்ணன் அக்காள்போல அவர்களுக்கு விளங்க வேண்டும். அதை ஓரளவு அவர்கள் செய்யா மலில்லை. ஆனால், வெள்ளையர் ஆட்சியிலிருந்து வடதிசைக்குத்தான் அவர்கள் விடுதலை வாங்கித் தந்துள்ளனர். ‘கேரளம்’ அமைந்தபோதுகூடத் தலைப்பாகையில்லாத அடிமைகள் தலைப்பாகை அணியும் அடிமை உரிமை வாங்கியிருக்கிறார்களென்ற நிலை ஏற்பட்டி ருக்கிறதே தவிர, வேறில்லை. திராவிட நாடு அமையும் காலத்தில், திராவிட நாட்டுக் கூட்டுறவின் சரிசம உரிமை உறுப்பி னராகத் திராவிடப் பண்பாட்டடிப்படையில் சுதந்தர சம்மேளனம் அமையும்போது தான், ‘தன்னுரிமை’ என்றால் என்ன என்பதை - குடியாட்சியென்றால் என்ன என்பதை - சம தருமம், பொது வுடைமை என்றால் என்ன என்பதை - இவற்றையெல்லாம்விட உயரிய வள்ளுவர் பண்புடைய ‘தேசியம்’ ‘நாட்டுரிமை’ என்றால் என்ன என்பதை அவர்கள் கொள்கை முறையிலும் சரி, அனுபவ முறையிலும் சரி அறிந்து கொள்ள முடியும். ‘திராவிடம் என்ற சொல்லை வழங்காத கேரளம் தேய்ந்த கேரளம் - இமயவரம்பன் சேரலாதனின் கேரளமல்ல - செங்குட்டுவன், இளங்கோவின் கேரளமல்ல. திராவிடம் என்ற சொல்லை வழங்காத கேரளம் பண்டைக் கேரளத்தின் நாடகக் கலையின் அடிப்படையையே இழந்த கேரளமாகும். பழைய திருவாங்கூர் அரசியலாரின் அரசியல் வெளியீடொன்று ‘திருவாங்கூரில் கதகளி’ என்னும் தலைப்புடன் வெளியிடப்பட்டுள்ளது. கதகளிக்கு இன்னும் வழக்கிலுள்ள இசைக் கருவிகளின் பட்டியலொன்றையும் அது தந்துள்ளது. நூற்றுக்கு மேற்பட்ட இசைக் கருவிகள் - தமிழர் கண்டறியாத, கேட்டறியாத சங்க இலக்கியத்தில் மட்டுமே புலவர் பெயரளவில் காணக்கூடிய கருவிகள் - அப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இவை இன்றள வும் திருவாங்கூரில் வழங்கும் கருவிகள் மட்டுமே. இவற்றுள் இன்னும் மிகப் பல கருவிகளையும் சேர்த்து இருநூறுக்கு மேற்பட்ட கருவிகளின் பெயர்கள் ‘சிலப்பதிகாரம் என்ற பண்டை மலையாளப் பெருங்காப்பியத்தில் காணப் படுகின்றன’ என்று அரசாங்க வெளியீடு கூறுகிறது. பழைய கொச்சி அரசர்கள் மலையாளிகள் பச்சை மலையாளிகள்தாம். ஆனால், அவர்கள் தாம் நேரே சேரர் பரம்பரையில் வந்தவர்கள் என்று உரிமை கொண்டாடுகிறார்கள். பதிற்றுப்பத்துப் பாடிய புலவர்களுக்குப் பத்து நூறாயிரம், கோடிக்கணக்கான பொன்காசுகளை எம் முன்னோர்கள் கொடுத்தார்கள் என்று பெருமையுடன் கூறிக்கொள்கிறார்கள். திருவாங்கூர் அரச மரபினரும் இதனுடன் போட்டியிட்டு நாங்களும் அதே மரபினர்தான் என்று போராடுகிறார்கள். அத்துடன் சிலப்பதிகாரத்தில் செங்குட்டுவன் முன் சாக்கியர் கூத்து நாடகமாடிய அதே பறையூர்ச் சாக்கையர்குடி மரபினரை இன்றும் அதே நாடகமாடுவித்து, மாதச் சம்பளமும் படிகளும் கொடுத்து வருகின்றனர் திருவாங்கூர் பழைய அரச மரபினர். தொல்காப்பியம் அரங்கேற்றியபோது அதை அவைத் தலைவராயிருந்து கேட்ட அதங்கோட்டாசான் குடி இன்னும் அதங்கோட்டாசான் என்ற பெயருடனே, அந்தக் குடியினால் பெருமை பெற்ற பெயருடைய ஊரிலே - திருவதங்கோட்டிலே உள்ளது. இது இன்றைய குமரி மாவட்டத்தில் நாகர்கோவிலுக்கும் இரணியலுக்கும் இடையே உள்ளது. திருவாங்கூரின் பழந்தலை நகர் இதுவே - திருவாங்கூருக்கு அப்பெயர் தந்ததும் இந்த அதங்கோடே! தொல்காப்பியருக்கு ஆசிரியராயிருந்த புலவர் பெயரால்தான் கேரளத்தின் ஒரு பகுதியாகிய திருவாங்கூர் இன்றும் அழைக்கப்படுகிறது. திராவிடம் என்ற சொல்லை மறுத்தால், மறந்தால், மலையாளம் சிறு மலையாளமாய், கேரளம் தேய்ந்த, தேயும் அடிமைக் கேரளமாய் இருக்க முடியுமேயன்றிக் கடம்பரைக் கடற்படையால் வென்ற சேரர் பரம்பரையாய், உண்மைத் தேசியக் கேரளமாய் நில்லாது. மலையாளத்துக்குக் கூறியதே ஆந்திரத்துக்கும் அமையும். உண்மையில் இன்றைய ஆந்திரம் ‘ஆந்திரம்’ என்ற பெயர் கூறவே வெட்கமடைய வேண்டும். ஆந்திரப் பேரரசர் ஆண்ட விசால ஆந்திரம் இன்றைய கட்டெறும்பு ஆந்திரமுமல்ல, அடிமை ஆந்திரமுமல்ல - இன்றைய இந்தியாவில் பெரும் பகுதியையும் பர்மா முழுவதையும் மலாயாவில் ஒரு பகுதியையும் உட்கொண்டதாகும். முக்கலிங்கமாண்டவர் (திரிசலிங்காதிபதி) முக்கடல் மன்னர் (த்ரிசமுத்ராதிபதி) என்ற பெயர்கள் பட்டங்கள் அவர்கள் பெருமை எல்லையை மட்டுமன்றி, வீழ்ந்த வகையையும் (சமஸ் கிருதப் பட்டங்களையும்) ஒருங்கே சுட்டிக்காட்டும். ஆந்திரம் மீண்டும் அதே தேசிய உயிராற்றல் பெற வேண்டுமானால், அது பாரத ஆந்திரமாயிருந்து பயனில்லை. சுயேச்சையும் சுயாதீனமுமுடைய திராவிட ஆந்திரமாக வேண்டும். கன்னடத்தின் செய்தியும் இதுவே. கன்னட நாடு என்று இன்று கூறப்படும் பகுதி முழுவதும், சேலம், கோயமுத்தூர், நீலகிரி மாவட்டங்களும் சேர்ந்ததுதான் பண்டைத் தமிழரின் கொங்குநாடு. கன்னடம் என்பது கொங்கு தமிழே. பழங்கன்னடப் புலவர்கள் கன்னட நாட்டெல்லையைக் காவேரி முதல் கோதாவரிவரை என்று கூறியது இதனாலேயே. தெலுங்கர் ‘திராவிடம்’ என்ற சொல்லை மறந்ததனால், வட எல்லையில் ஒரியாவை மட்டுமன்றித் தெலுங்கரும் திராவிடப் பழங்குடி மொழியினரும் வாழும் கஞ்சம், விசாகப்பட்டின மாவட்டங்களையும் வடவரிடம் கோட்டை விட்டது போலவே, கன்னடியரும் வடதிசையில் தம் எல்லையின் பெரும்பகுதியை வடவருக்குக் கோட்டை விட்டுள்ளனர். தெலுங்கர், கன்னடியர் பகுதிகளில் திராவிட இயக்கத்தை நம் கன்னடத் தாய்மொழி கொண்ட பெரியார் பரப்பியிருந்தால், தெலுங்கர், கன்னடியர் ‘திராவிடம்’ என்ற சொல்லைப் போர்க் குரலாகக் கொண்டிருந்தால், வடதிசையில் வளமான விந்திய மலைப் பகுதிகளைக் கையிழந்திருக்க மாட்டார்கள். நீதிக்கட்சிக் காலத்தில் மராத்தியர்கூடத் தென்னாட்டு இயக்கத்தில் பங்குகொண்டிருந்தனர். தேசியப் பெயரால் பிற்போக்காளர் செய்த சூழ்ச்சியால் அவர்கள் விலகி நின்றதாலேயே, சிவாஜி பரம்பரையினர், சிவாஜியையே தேசிய வீரத்துக்கு இலக்காகவும், ‘இராஷ்டிரம்’ என்ற சொல்லையே தேசியத்துக்குரிய இந்தியச் சொல்லாகவும் கொண்ட தேசியத்தில் இன்று அவர்கள் உரிமை கெட்டு அவல நிலையடைந்திருக்க மாட்டார்கள். அவர்கள் திராவிட இனக்கலப்பே அவர்களை வீரராக்கிற்று - வடவர் அவர்களை ஒதுக்கும்படி செய்வதும் அதுவே. திராவிடம் என்ற சொல் தமிழர்க்கு மட்டுமன்று, தென்னாட்டவர் அனைவருக்குமே - வருங்காலத்தில் ஆசியாவுக்கே - உலகுக்கே புத்தூக்கமும் புது மலர்ச்சியும் ஊட்டவல்ல சொல். தேய்ந்த தமிழகத்தின் தேய்வை, அடிமைத் தமிழகத்தின் அடிமையை, வரலாறறியாத, பண்பறியாத தமிழகத்தில் இருட்கால நிலையை அணைத்துக் கொள் கிறவர்கள் வாதத்திற்குள் புகுமுன், அவர்கள் மன இருள் காட்ட இவை போதியவை. 31. வெள்ளைக்காரன் வழங்கிய வழக்கா? ‘திராவிடம்! வெள்ளைக்காரன் உபயோகித்த, உற்பத்தி செய்த பெயராயிற்றே! அதை ஏன் நாம் நம் பெயராகச் சூட்டிக்கொள்ள வேண்டும்?’ என்று கேட்பவர் உண்டு. வெள்ளையன் உருவாக்கிய பாரத தேசியத்தை, அவனுக்குமுன் என்றும் ஒன்றாக இயங்கியிராத மாநில ஒருமைப்பாட்டை, ஏக இந்தியாவைத் தம் புதுத் தேசியமாகக் கொள்பவர்கள் கேட்கும் கேள்விதான் இது. அதுமட்டுமோ? அந்த ஏக இந்தியாவை மட்டுமன்றி அந்த வெள்ளையன் பிரித்த பிரிவினையையும், ஏற்றுப் பிரிக்கப்பட்ட புத்தம் புதிய இந்தியக் கூட்டுறவையும் தம் முன்னோர் வழிச் சொத்தாகக் கொண்டு பாரதம் என்ற பெயர் சூட்டியவர்கள்தாம் இக் கேள்வியாளர். தவிர, திராவிடம் என்ற பெயர் வெள்ளையன் அளித்த பெயரல்ல என்பதை அவர்கள் அடுத்த கேள்வியே காட்டுகிறது. திராவிடம்! ஆரியப் பகைவன் நம் இனத்தை இழிவாகக் கருதி வசைபாடி அளித்த பெயரையா நாம் ஏற்பது! “ஓடி வந்தவர்” ‘திருடர்’, ‘திராவைகள்’, ‘பஞ்சை’கள் என்றல்லவா சமஸ்கிருதத்தில் அதற்குப் பொருள்! அந்தச் சொல்லைக் காதால் கேட்டாலே கர்ணகடூரமாய் இருக்கிறதே! பகைவன் என்று ஆரியனை ஒப்பியழைத்து, சில சமயம் அயலான் என்று மனமாரக் கூறிக்கொண்டே ஆரியர் பக்கமாக நின்று இன உரிமை விற்று வயிறு வளர்க்கும் விபீஷணாழ்வார்கள் பேச்சு இது. ஆனால், திராவிடம் என்ற சொல் வெள்ளையரால் மட்டுமல்ல, சமஸ்கிருத கால ஆரிய நாட்டவர் வழக்கிலும் அது இருந்து வந்தது என்பதை நினைவூட்டுகிறது. கி. பி. 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குமாரிலன் தென்னக மொழி அல்லது மொழிகளைத் திராவிட ஆந்திர பாஷா என்று கூறுகிறான். அதே நூற்றாண்டில் கிட்டத்தட்ட கி. பி. 640-இல் சீன யாத்திரிகன் யுவான் சுவாங் காஞ்சிக்கு வந்து அங்கே ஆண்டுக் கணக்கில் தங்கியிருந்தான். அவன் காஞ்சியை உட்கொண்ட தென்னாட்டைத் திராவிடம் என்ற பெயராலேயே அறிந்து வழங்கியுள்ளான். இது தேவார காலத்துக்கே முற்பட்ட பழமை வாய்ந்த வழக்கு. புராணங் களில் மிகப் பழமை வாய்ந்தவற்றில் ‘திராவிட நாடு’ திராவிடத்து அரசர் செய்திகள் பல கூறப்படுகின்றன. பாரத இராமாயணங் களிலும் அதற்கு முற்பட்ட ஏடுகளிலும் சில சமயம் தமிழகப் பகுதியும் மிகப் பல சமயம் வட ஆந்திரப் பகுதியும் திராவிடம் என்று சுட்டப்பட்டுள்ளது. கி. மு. 2 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சாரவேலன் திராவிட அரசர் மூவரை வென்றதாகக் குறிக்கிறான் - இவர்கள் சேர சோழ பாண்டியராகிய பண்டைத் தமிழக மூவேந்தர்களேயாவர். இந்த வழக்குக்கூட ஆரியர் வழக்குத்தான் என்று வலிந்து தனித் தமிழ் வெறியர் வேடமிட்டுக் கூத்தாடுவர் வீடணப்படை வீரர்கள். ‘திராவிடர்’ என்ற பெயர் ஆரியரிட்ட பெயரல்ல. ஆனால், வாதத்துக்காக அவ்வாறே வைத்துக் கொண்டாலும், இந்தியாவுக்கு இந்தியா என்ற பெயர் கொடுத்தது யார் என்று அவர்கள் தம்மைத் தாமே கேட்டுக்கொள்ள மறப்பவர் ஆகின்றனர். தமிழ் இலக்கிய வழக்கிலோ நிகண்டிலோ இந் நாளைய அகர வரிசையிலோகூட அப் பெயர் காணமுடியாது. ‘இந்தியா, ‘இந்து’ என்ற இரு சொற்களையுமே ஆங்கில அகராதி, பழைய கிரேக்கர் வழக்கில் காணலாமேயன்றி, வேறு எந்த இந்திய மொழியின் இலக்கியத்திலோ நிகண்டிலோ, அகராதியிலோ - சமஸ்கிருத இலக்கியத்திலோ நிகண்டிலோ, அகராதியிலோ கூட இன்றும் காணமுடியாது. சமஸ்கிருதத்தில் இந்தியா என்று எழுத்து வடிவில் எவரும் இதுவரை எழுதியது கிடையாது என்பதுகூடக் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் அத்தகைய வழக்கு இல்லாததனாலேயே ‘இந்தி’ மொழி யாளர் முதலிய வட இந்தியர் இன்னும் ‘இந்தியா’ என்று கீழ் திசை வழக்கில் எழுதாமல் ‘இண்டியா’ என்று ஆங்கில ஒலிப்பு முறைப்படி எழுதுகின்றனர். அதுமட்டுமோ! இந்தியா, இந்து, இந்தி மூன்றையுமே கீழ்திசை முகமதியர் ஹிந்த், ஹிந்து, ஹிந்தி என்று குறித்தனர். இரு சொற்களில் மட்டும் கீழ்திசை அயலார் வழக்கைப் பாரதம் ஏற்று, மாநிலப் பெயரில் ஐரோப்பிய வழக்கையே இந்தியா என்று ஏற்றுள்ளது என்பதை இது காட்டுகிறது. ஏனெனில், மாநிலப் பெயரை அருகிலுள்ள பாரசிகர் வழக்கிலிருந்து ஏற்றிருந்தால் ஹிந்து போல அது ‘ஹிந்த்’ ஆகியிருக்க வேண்டும். கிரேக்க மொழி வழியாக ஆங்கில மொழி சென்ற, பாரசிக வழக்கு இன்று கீழ்திசை வழக்காகியுள்ளது. திராவிடம் கீழ்திசை ஆரியர் வழக்கானாலும்கூட, அது மேலை ஐரோப்பியர் வழங்கிய இந்தியா என்னும் பெயரைவிடச் சிறந்தது, பழமையானது ஆகும். ஆனால், அது ஆரியர் வழக்கல்ல. தாயுமானவர் பாடல் தமிழ் மொழியைத் திராவிடம் என்று குறித்துள்ளது. சைவ சித்தாந்த நூலாகிய சிவஞான போதத்திற்குச் சிவஞான யோகிகள் இயற்றிய உரை சமஸ்கிருத வழக்கிலும் தமிழ் வழக்கிலும் ஒருங்கே திராவிடமாபாடியம் என்றே வழங்கப்பெறுகிறது. தொல்காப்பிய உரையாசிரியர்கள் தமிழையும் தென்னக மொழிகளையும் சேர்த்துத் திராவிட மொழிகள் என்று குறித்துள்ளார்கள். மிகப் பழங்காலத் தமிழர் தமிழ் என்ற சொல்லையே நாம் வழங்கும் தனி மொழிப் பொருளில் வழங்காமல் எல்லாத் திராவிட மொழிகளையும் சேர்த்து ஒருங்கே குறிக்க வழங்கியுள்ளனர். தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகள் முதலில் ‘கொடுந்தமிழ்’கள் என்றே வழங்கப்பட்டு, அதன்பின் தெலுங்குத் தமிழ், மலையந்தமிழ், கன்னடத்தமிழ் என்று நாட்டுப் பெயருடன் குறிக்கப்பட்டு, அணிமைக் காலத்திலேயே இறுதிச் சொல் அவாய் நிலையாய் மறைவுற்றபின் கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்று கூறப்பட்டன. அத்துடன் இன்னும் தெலுங்கு இலக்கிய வழக்கில் ‘ஆந்திரம்’ என்ற சொல் சமஸ்கிருதம் கலந்த தெலுங்குக்கும், தெலுங்கு என்ற சொல் தூய தெலுங்கு அதாவது திராவிடத் தெலுங்குக்கும் வழங்கப்படுகிறது. 32. பழம்பெருந் தேசியம் குறித்த சொல் தென்மொழிகள், வடதிசைத் தாய்மொழிகள் எல்லா வற்றிலுமே சமஸ்கிருத வடிவிலுள்ள சொற்கள் ஆரியம் அல்லது தத்சமம் என்றும், தாய்மொழி மயமாக்கப்பட்ட சமஸ்கிருதச் சொற்கள் தத்பவம் என்றும் தூய தாய்மொழிச் சொற்கள், தாய்மொழி மரபுகள் தேசியம் (தேச்யம்) என்றும் குறிக்கப் பட்டன. இவ்வழக்கடிப்படையாகவே தேசியம் என்ற புதுச்சொல் அதற்குரிய ஆங்கிலச் சொல்லைக் குறிக்க (சூயவiடியேடளைஅ) 1922-க்குப் பின் கையாளப்பட்டு வருகிறது. மொழிப் புலவர் இச்சொல்லைக் கண்டுபிடிக்குமுன் 1916 முதல் 1922 வரை வழங்கிய சொல் ராஷ்டிரம் என்பது. இது இன்னும் ராஷ்டிரபதி, ராஷ்ட்ரிய ஜண்டா ஆகிய ‘காங்கிரஸ்’ மரபுத் தொடர்களில் வழங்குகிறது. ராஷ்டிரம் என்ற இந்த சொல் கண்டு பிடிக்கப்படுமுன் 1907 முதல் 1916 வரை சுதேசி என்ற சொல்லே வழங்கிற்று. 1907ஆம் ஆண்டு நடைபெற்ற ‘சுதேசி இயக்கம்’, அதனையடுத்துக் கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனார் நடத்திய சுதேசிக் கப்பல் இயக்கம், 1922இல் காந்தியடிகள் நடத்திய சுதேசித்துணி இயக்கம் ஆகியவற்றில் இச் சொல் இன்றும் பதிவுற்றுக் காணப்படுகிறது. ‘திராவிடம்’ இங்ஙனம் தென்னகத்தைக் குறிக்க வடவரால் வழங்கப்பட்ட சொல் மட்டுமல்ல. அது தேசியப் பண்போ தேசியமோ அற்ற வடவருக்குப் புதிய மேலை உலகக் கருத்துப் பொதிந்த மேலையுலகச் சொல்லுக்கீடாகத் ‘தேசியம்’ என்ற சொல்லை உருவாக்கித் தந்துள்ளது. தேசியம் என்ற சொல் திராவிடச் சொற்களைக் குறிக்க வடவர் வழங்கிய சொல்லின் திரிபேயாகும். ‘திராவிடம்’ தென்னகத்தைக் குறிக்க ஆரியர் வழங்கிய சொல். அதுவே ஆரியச் சொல் என்று கருதியவர் உண்டு. அத்தகையவர்களுள் ஒரு சாரார் ‘திராவிடம்’ என்ற சொல்லே ‘தமிழ்’ என்று மருவியதென்று கூறுவர். திராவிடம் திரவிடம், திரமிளம் ஆகிய படிகளினூடாகத் தமிழ் ஆயிற்று என்பர். ஆனால், இக் கருத்து இருவகையில் தவறுடையது. தொல்காப்பியர் காலத்துக்கு முன்னிருந்தே ‘தமிழ்’ என்ற சொல் வழங்குகிறது. கிரேக்கரும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் அதை அறிந்திருந்தனர். ஆகவே ‘திராவிடம்’ என்ற சொல் எவ்வளவு பழமையானதோ, அதுபோலப் பழமையுடைய வழக்கே ‘தமிழ்’. அத்துடன் திரமிளம் என்ற சமஸ்கிருத வழக்குக்கூடத் திராவிடம் என்பதற்கு முற்பட்டே காணப்படுகிறது. ஆகவே ‘திராவிடம்’, ‘தமிழ்’ என்ற சொற்கள் ஒரே வழக்கின் திரிபுகளானால், அவை ஆரிய வழக்காற்றின் திரிபுகளல்ல; தமிழர் வழக்காற்றிலுள்ள இரு திரிபு வழக்குகளாகவே இருக்க முடியும். அதே சமயம் அவை திரிபுகளாகப் பிற்காலத்தில் கருதப்பட்டன என்று கொள்ள இடமுண்டேயன்றி, திரிபுகள் என்று நிலைநாட்டப் பட முடியாது. இரு சொற்களும் தென்திசை வழக்குகளே. ஒன்று திராவிடம், தொடக்க காலத்திலிருந்தே முழுத் தென்னகத்தையும், தென்னகம் கடந்து பரந்த இனத்தையும், சில சமயம் அவ்வினத்தின் சில கிளைகளையும் குறித்து வழங்கிற்று. மற்றது தொடக்கத்தில் மொழி, இனம் ஆகியவற்றையும், பின் செந்தமிழ் என்ற பண்டைத் தமிழின் கிளை மொழியையும் மட்டுமே குறித்து வழங்கிற்று. தமிழும் தமிழினமுமாகிய திராவிடமும் திராவிடப் பண்பும் இயற்கையின் முதல் குழந்தைகள். தமிழ் கடந்து தமிழினமாகிய திராவிடமும், திராவிட இனம் கடந்து திராவிடப் பண்பலைகளும் மிகமிகப் பழங்காலத்திலிருந்தே உலகெலாம் பரந்துள்ளன. இக் காரணத்தால்தான் தமிழகத்தில் மொழியும் இனமும் தொன்று தொட்டு ‘தமிழ்’ என்ற சொல்லால் குறிக்கப்பட்டாலும், தமிழகமும் தென்னாடும் கடந்த தமிழினப்பண்பு இன்னும் மிகமிகப் பழமையான காலத்திலிருந்தே - சங்ககாலத்துக்கும் தொல்காப்பியத்துக்கும் மிக நெடுங்கால முன்னிருந்தே - கிறிஸ்து பிறப்பதற்கு மூவாயிர, நாலாயிர ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ‘திராவிடம்’ என்று அழைக்கப்பட்டது. திராவிடம் என்ற சொல்லும் அதன் பகுதியாகிய திரையர் என்ற சொல்லும் கடல் கடந்து அகலுலகெங்கும் பரவின. நடுநிலக் கடலில் திரையர் கிளையினங்களில் ஒன்று விரிந்து சென்று, பண்டை உலகெங்கும் சென்று கடல் வாணிகம் பரப்பிற்று. அவர்கள் துறைமுக நகரம் திரெ என்னும் ‘டயர்’ நகரம் ஆகும். டயரிலும், சிடெனிலும் வாழ்ந்த இந்த பினீஷியரிட மிருந்தே எகிப்தியர் கப்பல் தொழில் கற்றனர். ஆனால், திரையருக்கும் முற்பட கிரேட் தீவிலும் அதன் சூழலிலும் வாழ்ந்த ஈஜிய, கிரேட்ட, மிசீனிய இனத்தவர் கடல்வாணிகம் சிறந்து வானில் பறக்கும் முயற்சியில் கூட முற்பட்டிருந்தனர் என்று இன்றைய வரலாற்றுப் பழமையாராய்ச்சியாளர் கருதுமளவு உயர்வுற்றிருந்தனர். இவர்கள் ‘திரையர்’ ஆதலினாலேயே தம்மைச் சூழ்ந்த கீழைநடுநிலக் கடலுக்குத் திரேனியக் கடல்’ என்ற பெயரிட்டிருந்தனர். இன்றளவும் அப் பெயர் வழக்கில் இருந்து வருகிறது. உரோமப் பேரரசின் தலைமையாட்சியாளராகிய பாத்திரி சியர் (தந்தையர்) ஆரியரல்லர்; ஆரியர் வருமுன் இருந்த எதுருசுக்கானரே. அவர்கள் பெயரிலும் ‘திரையர்’ என்ற பெயரின் தடம் காணப்படுகிறது. ஸ்பெயினிலும் பிரான்ஸிலும் பிரிட்டனி லும் ஆரியர் வந்த பின் கலந்து குருமாராகியும், வருமுன் தனித்தும் வாழ்ந்த ஐபீரிய மக்கள், தம் தலைமைக் குருமார் குடியைத் ‘துருயிதர்’ என்ற பெயராலேயே குறித்தனர். இதுவும் ‘திராவிட’ என்பதன் சிதைவே என்று திருத்தந்தை ஹீராஸ் கூறியுள்ளார். தற்கால மனித நாகரிகத்துக்கு மூலமான உலகின் தொல் பெரும்பழமை வாய்ந்த இனத்தை மேலை ஆசிரியர் எச். ஜி. வெல்ஸ் என்பவர் தவிட்டு நிற இனம் (க்ஷசரநேவவந சுயஉந) என்பர். பிரிட்டன் முதல் ஜப்பான் வரையும், இது கடந்து அமெரிக்காவில் கூட அவர்கள் பரந்து வாழ்ந்த காலம் 7000 ஆண்டுகட்கு முற்பட்டது. இந்த இனத்தில் திராவிடர் ஒரு பகுதி என்பர் ஆசிரியர் வெல்ஸ். திராவிடம் என்ற சொல்லாராய்ச்சி இவ்வாறாக, திராவிட நாட்டின் புதுமையல்ல, பழம்பெருஞ் சிறப்பை - சிறுமையையல்ல, உலகளாவிய அதன் பெருமையை, பிரிவினை வேற்றுமையல்ல, மனித இன முழுவதும் அளாவிய அடிப்படை ஒற்றுமையைக் குறித்த சொல் ஆகும். தனித்திராவிடர் தமிழகத்துக்கும், கீழ்த்திசைக்கும் மட்டு மன்று, உலகுக்கே ஒரு புது ஊழி வகுத்தவர், வகுக்க வல்லவர் என்பதை இது சுட்டிக் காட்டுகிறது. 33. சிறு நாடல்ல, வளமுள்ள இனப்பெருந் தாயகம் ‘தமிழகம், திராவிடம் சிறுநாடு, தனித்து வாழ முடியுமா? என்ற கேள்வியும் இப் பரந்த விளக்கத்தின் முன் பகல் வானில் விண்மீன் ஒளியாக மங்கிவிடும் என்பதில் ஐயமில்லை. சென்னை நகரினும் சிறிய நாடுகள் பல இன்று உலக அரங்கில் மதிப்புப் பெறுவதுடன் தமிழகத்தைவிட, ‘இந்திய’ மாநிலக் கதம்பத் தேசியத்தைவிட மதிப்புடனும் செல்வ வளத்துடனும் வாழ்கின்றன. ஆனால், தென்னகமோ, 10 கோடி மக்களும் பெரும்பரப்பும் பெருவளங்களும் நிரம்பியது. அத்துடன் அதன் பகுதிகளாகிய தமிழகம், ஆந்திரம், கேரளம், கன்னடம் ஆகியவையே தனித்து வாழவல்ல அளவு நிறைவும், கூட்டுப் பொங்கல் வளம் பெறத்தக்க அளவு கூட்டுவள வாய்ப்புக்களும் உடையன ஆகும். சேரவள நாட்டின் காட்டுவளம், பாண்டிய நாட்டின் முத்துவளம், சோழ நாட்டின் நெல், கரும்பு வளம், தொண்டை நாட்டின் சான்றாண்மை வளம் ஆகியவை பண்டே இத்தகைய பல்வகைப் பெருக்கம் கண்டன. இன்றோ கேரளத்தின் மிளகும், இரப்பரும், அணு ஆற்றலுக்குரிய கருமணலும், தமிழகத்தின் புதிய இரும்பு, நிலக்கரி, எண்ணெய் ஆதார வளங்களும், ஆந்திர நாட்டு அப்பிரகமும், கன்னட நாட்டுத் தங்கமும், இரும்பும் வளங்களின் பல்வகைப் பெருக்கம் வாய்ந்த உயிர்க்கூட்டு வளங்கள் ஆகும். இயற்கையில் எப்படியோ, அப்படியேதான் வாழ்விலும், கலையிலும், இலக்கியத்திலும்! இலக்கியப் பழமையில் தமிழகம் சிறந்ததென்றால், நாடகக் கலைப் பழமையில் கேரளமும், ஓவிய, சிற்பக் கலைப் பெருமையில் ஆந்திரமும், கன்னட நாடும் தனிப் பெருமை உடையன. திராவிடம் ஐந்து மொழியகங்களின் கூட்டுமட்டுமே என்று நினைப்பவர் உண்டு. அது ஒரு இனமல்ல என்று கருதியே, தமிழன் என்று கூறு, தமிழ்நாடு கோரு, திராவிடம் பொருளற்றது என்றும் சிலர் கூறுகின்றனர். ஆனால், இக்கேள்வியிலேயே ஒரு பேருண்மை தொக்கி நிற்கிறது. திராவிட நாட்டின் நாற்பெருங் கூறுகளும் நாற்பெருந் தேசியங்களே என்னும் அளவு தனித்தனிப் பண்புவள நிறைவும் முழு வளமும் உடையன என்பதையே இது சுட்டிக் காட்டுகிறது. தனித்தனி வாழ முடியாதவையல்ல. ஆனால், கூடிவாழின் சரிசமக் கூட்டுறவு அடிப்படையிலே ஒத்திசைந்து வாழ்ந்தால், அத் தனிவாழ்வின் வளம் தாண்டி அவை பொங்கல் வளம் பெருக்கி, உலகளாவ வளம் பரப்ப வழி உண்டு. திராவிடம் ஓர் உயிர்த்தேசியம். ஆகவே அதன் பகுதிகளும் சரிசம அடிப்படையில் தனித்து வாழும் திறமுடையவையாய், அத் தனி வாழ்வுகளையும் அக்கூட்டு வாழ்வால் வளப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு உடையவையா யிருக்கின்றன. இந்த உண்மை யான உயர் தேசியப் பண்பு மற்ற உலகத் தேசியங்களுக்குப் பொதுவாகவும், போலிக் கதம்பத் தேசியமாகிய இந்தியத் தேசியத்துக்குச் சிறப்பாகவும் கூடிவராத ஒன்று. அதுமட்டுமன்று. உயிர்த் தேசிய எல்லை கடந்தும் உலகத் தேசிய அலைகளை, ஆதிக்க அடிப்படையிலன்றிக் கூட்டுறவு அடிப்படையில் திராவிடம் மட்டுமே வளர்க்க முடியும். திராவிடம் பிரிவினை அதாவது தனி உரிமை பெற்ற நாளிலிருந்து, உலகில் இத்தகைய கூட்டுத் தேசிய (ஐவேநசயேவiடியேட) வாழ்வில் புதுமலர்ச்சியுறும். திராவிடம் பிரிந்து தனித்து வாழ முடியும். அதன் பகுதிகள் கூட வாழ முடியும். ஆனால், திராவிடம் பிரிந்தால் வாழ வகையற்றதாக விளங்கப் போவது பாரதமே. இது பிரிவினையால் வரும் கோளாறு அல்ல; பாரதம் பின்பற்றும் தேசியத்தின் கோளாறு ஆகும். எனினும் பிரிவுற்ற திராவிடம், தான் தனித்து வாழ்வதுடன் அமையாது, பாரதத்துக்கும் அவ்வாற்றலை ஊட்டும் திறம் உடை யது. பிரிவுற்றபின் திராவிடம் மேற்கொண்டு வளர்க்கும் சமத்துவக் குறிக்கோளும் அதன்வழி திராவிடம் காண இருக்கும் பொங்கல் வாழ்வும் அணிமைப் பரப்பிலும் புதுத்தேசிய ஆர்வத்தையும் எழுச்சியையும் உண்டாக்காமல் போகா. இன்று தன் போலித் தேசிய வளத்துக்காகத் தென் னாட்டைச் சுரண்டும் இந்தியத் தேசியம் போலன்றி, புதிய திராவிடம் சுரண்டலற்ற வளம் கண்டு, அண்டையயல் பரப்பு களிலும் அத்தகைய - மனித இன ஆர்வத் தேசியம் பரப்பும். அந்நாள் - புதிய உலகம் காணும் புதிய திராவிடம் மலரும் நாள் - விரைவதாக. வள்ளுவர் ஆயிரக்கணக்கான ஆண்டுகட்குமுன் கண்ட கனவுதான் திராவிட நாடு. அதன் ஒரு கனவுப் பொறிதான் தொலை நாட்டறிஞர் கார்ல் மார்க்ஸ் தீட்டிக் காட்டிய பொதுவுடைமை ஓவியத்தில் மின்னுகிறது. அதே கனவைத் திட்டமாக்கி, திராவிட இயக்கத் தலைவர்கள் வரலாற்றுச் சட்டமிட்டு, அறிவெனும் பின்னணித் திரைமீது கலையெனும் தூரிகையால், தமிழ்ப்பற்றார்வம், தமிழர் கனவார்வமென்னும் வண்ணங்கள் தோய்த்துத் தீட்டும் படமே திராவிடம்! இன்று கனவுருவப் படம் அது - ஆனால், அது நனவுத் திட்டம், நனவுருவாகி வருகிறது. அந்நனவுருவமே, தென்னக மக்களின் ஆர்வக் கொழுந்துருவே திராவிடம்! ந்ந்ந் அப்பாத்துரையம் - 11 (110 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு) வரலாறு  தென்னாடு  இதுதான் திராவிட நாடு ஆசிரியர் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற்குறிப்பு அப்பாத்துரையம் - 11 ஆசிரியர் முதுமுனைவர். இரா இளங்குமரனார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2017 பக்கம் : 20+268 = 288 விலை : 360/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: நடயஎயணாயபயவேஅ@பஅயடை.உடிஅ  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 288  கட்டமைப்பு : இயல்பு  படிகள் : 500   நூலாக்கம் : கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  நுழைவுரை தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர். பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம். தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும். தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம். தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார். அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன. இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும். தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள் கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர் திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன், திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர். இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய `கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும் `சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி. நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். “ஆக்கத்தை எனக்கிந் நாட்டார் அளித்திட்ட அறிவை யெல்லாம் தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே செலவிடக் கடமைப் பட்டேன்.” - பாவேந்தர் கோ. இளவழகன் தொகுப்புரை மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்! இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின. “அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார். பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார். சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன. - தனித்தமிழ் இயக்கத் தோற்றம் - நீதிக் கட்சி தொடக்கம் - நாட்டு விடுதலை உணர்ச்சி - தமிழின உரிமை எழுச்சி - பகுத்தறிவு விழிப்புணர்ச்சி - இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர் - புதிய கல்வி முறைப் பயிற்சி - புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம் இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன. “தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது! அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்! பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, - உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல். - தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல். - தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல். - தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல். - திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல். - நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல். இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது. பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது. உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன. 1. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு 2. வரலாறு 3. ஆய்வுகள் 4. மொழிபெயர்ப்பு 5. இளையோர் கதைகள் 6. பொது நிலை பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும். இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின் உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன. கல்பனா சேக்கிழார் நூலாசிரியர் விவரம் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இயற்பெயர் : நல்ல சிவம் பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989 பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி) உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர் மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி பள்ளிக் கல்வி : நாகர்கோவில் கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம் : இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி `விசாரத்’, எல்.டி. கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி) நூல்கள் : 120 (ஆங்கிலம், 5) இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை. பணி : - 1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர். - 1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர். - பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு. - 1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி - 1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர். - 1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர் அறிஞர் தொடர்பு: - தொடக்கத்தில் காந்திய சிந்தனை. - 1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு விருதுகள்: - மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது, - 1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் `சான்றோர் பட்டம்’, `தமிழன்பர்’ பட்டம். - 1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் `கலைமாமணி’. - 1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய `திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம். - மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய `பேரவைச் செம்மல்’ விருது. - 1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர். - 1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார். - இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது `தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது. பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்: - அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005. - பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007. பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் `உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். தொகுப்பாசிரியர் விவரம் முனைவர் கல்பனா சேக்கிழார் பிறந்த நாள் : 5.6.1972 பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர் இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். ஆற்றியுள்ள கல்விப்பணிகள் - அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி. - திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு. - புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர். - பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். - பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார். - 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். - மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார். - இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார். - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார். நூலாக்கத்திற்கு உதவியோர் தொகுப்பாசிரியர்: முனைவர் கல்பனா சேக்கிழார் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திரு ஆனந்தன் திருமதி செல்வி திருமதி வ. மலர் திருமதி சு. கீதா திருமிகு ஜா. செயசீலி நூல் வடிவமைப்பு: திருமதி கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) திருத்தத்திற்கு உதவியோர்: பெரும்புலவர் பனசை அருணா, திரு. க. கருப்பையா, புலவர் மு. இராசவேலு திரு. நாக. சொக்கலிங்கம் செல்வி பு. கலைச்செல்வி முனைவர் அரு. அபிராமி முனைவர் அ. கோகிலா முனைவர் மா. வசந்தகுமாரி முனைவர் ஜா. கிரிசா திருமதி சுபா இராணி திரு. இளங்கோவன் நூலாக்கத்திற்கு உதவியோர்: திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன் அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14. பொருளடக்கம் தொன்னாடு 1. தென்னாடு ... 3 2. சிந்துவெளி தரும் ஒளி (கி.மு.3250-2500) ... 19 3. பண்டைப் பரப்பு (கி.மு. 3000 - கி.பி. 300) ... 39 4. பல்லவ பாண்டியப் பேரரசுகள் (கி.பி.3-9ஆம் நூற்றாண்டுகள்) ... 64 5. சோழ பாண்டியப் பேரரசுகள் (9-14ஆம் நூற்றாண்டுகள்) ... 85 6. அணிமைக்காலம் (14-18-ஆம் நூற்றாண்டுகள்) ... 108 7. தற்காலம் (19-20ஆம் நூற்றாண்டுகள்) ... 125 இதுதான் திராவிட நிhடு 1. காலங்கடந்த நாடு ... 139 2. மேலைத் தொடர்பு ... 141 3. கீழை உலகத் தொடர்புகள் ... 144 4. வாழ்வும் வீழ்வும் ... 147 5. வடக்கும் தெற்கும் ... 150 6. இயற்கை எல்லை ... 153 7. இயற்கைத் தேசியம் எது? ... 156 8. கீழ்த்திசையின் இனத் தேசிய மையம் ... 158 9. கடலாண்ட இனம் திராவிடம் ... 163 10. கடலாட்சியும் கடற்படையும் ... 166 11. கீழ்த்திசை நாகரிக ஒற்றுமை தென்னகத்தின் நிழலே ... 168 12. பலமுக ஏகாதிபத்தியத்தின் பலவேசக் குரல்கள் ... 170 13. ஓருலகில் தமிழனுக்கு இடம் இல்லையா? ... 174 14. வேற்றுமை யறிவு ஒற்றுமை ... 179 15. பிரிவினையல்ல சுதந்திரம் ... 182 16. உயிர் ஏகாதிபத்தியத்தின் எச்சமிச்சமான உயிரற்ற ஏகாதிபத்தியம் ... 187 17. சுதந்தர தேசியங்களின் பிரிவினை இலட்சியம் ... 192 18. பாரதக் கூட்டுறவில் திராவிட இனத்துக்கு இடம் உண்டா? ... 197 19. தமிழ்ப் பண்பின் தகையார்ந்த சால்பு ... 202 20. பிராமண இளைஞர் முன்வருவரா? ... 206 21. தமிழ்ப் பண்பும் ஆரியப் பண்பும் ... 209 22. இனவேறுபாடும் இனமாற்றமும் ... 216 23. இனம், உலகம் வளர்க்கும் இன இயக்கம் ... 220 24. இனம் என்ற சொல்லின் ஆக்கப் பொருள், அழிவுப் பொருள் ... 224 25. திராவிடம் நாகரிகம் வளர்க்கும்பண்பு; ஆரியம் அது கெடுக்கும் பண்பு ... 225 26. தீமைகளின் கோவையே ‘ஆரியம்’ ... 231 27. ஏன் ‘திராவிடம்’? சொல்லாராய்ச்சி ... 236 28. ‘தமிழ்’ தமிழர் தேசியப் போராட்டம் பயன்படாது! ... 241 29. ஆரியம் ஆரியர் சரக்கல்ல, திராவிடர் சரக்குமல்ல! ... 246 30. மற்ற மொழியாளர் ஏற்பார்களா? ... 249 31. வெள்ளைக்காரன் வழங்கிய வழக்கா? ... 253 32. பழம்பெருந் தேசியம் குறித்த சொல் ... 256 33. சிறு நாடல்ல, வளமுள்ள இனப்பெருந் தாயகம் ... 259