உலகில் தமிழினம் ஆசிரியர் முனைவர் அன்பரசு தமிழ்மண் பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : உலகில் தமிழினம் ஆசிரியர் : முனைவர் அன்பரசு பதிப்பாளர் : கோ. இளவழகன் பதிப்பு : 2015 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 120 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 115/- படிகள் : 1000 நூலாக்கம் : வி. சித்ரா & சரவணன் அட்டை வடிவமைப்பு : சரவணன் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு வடபழனி, சென்னை - 26. நூற்குறிப்பு பொருளடக்கம் பதிப்புரை முகவுரை 1. தன்னாட்சி பெற்ற இறைமை நாட்டின் எட்டுப் பண்புகள் 2. நாடுகளின் கூட்டமைப்பான ஐக்கிய நாடுகள் அவையின் தோற்றமும் விரிவும் 3. I.eh., உறுப்பு நாடுகளின் வரலாறு. அவற்றிடையே இன்றுள்ள குழுக்கள். பிரதிநிதித்துவம் இல்லாத மக்களுக்கான பாதுகாப்பு அமைப்புக்கள் 4. நாடற்ற இனங்களில் மிகப் பெரியது தமிழினம் 5. உலகின் பிற பகுதிகளில் (இலங்கை, மலேசியா, பர்மா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில்) தமிழர் வாழ்விடங்கள் 6. புலம் பெயர் தமிழர்கள் 7. பன்னாட்டுச் சட்டத்தின் படியான தன்னாட்சி உரிமை 8. ஐரோப்பாவின் ஆறு சின்னஞ்சிறு நாடுகள் (Micro States); உலகின் பதினேழு சின்னஞ்சிறு நாடுகள் 9. தீவுகளின் எண்ணிக்கையும் முக்கியத்துவமும் 10. இந்து மாக்கடலில் இலங்கையின் அமைவிடம் 11. புதிய நாடுகளின் தோற்றமும் தொடர்பும் 12. புதிய நாடுகள் எங்கே தோன்றக்கூடும்? பதிப்புரை இச்சிறந்த நூல் தமிழ் பேசும் உலகளாவிய தமிழ்ச் சமூகமும், தமிழ்நாட்டுத் தமிழரும் தெரிந்துகொள்ள வேண்டிய இரண்டு பொருண்மை களைச் சார்ந்த விரிவான செய்திகளைத் தருகிறது. i) முதலாவதாக, உலக நாடுகள் அனைத்தையும் பற்றிய பொதுவான பார்வை; அவற்றின் அமைப்பான ஐக்கிய நாடுகள் அவை (பொதுமன்றம், பாதுகாப்புக் குழு, ஐ.நா.வின் கீழமை பிரிவுகளான பல அமைப்புகளும் நிறுவனங்களும்) இவை எப்படி செயற்படவேண்டுமென்பதற்கு வகுத்துள்ள விதிமுறைகள்; அதே நேரத்தில் அவை உண்மையில் செயல்படும் தன்மை; முதலியவற்றை உரிய ஆதாரங்களுடன் தெளிவாக இந்நூல் விளக்குகிறது: [fh©f: இயல் 1. தன்னாட்சி பெற்ற இறைமை நாட்டின் எட்டுப் பண்புகள்; இயல்கள் 2-3, 7-10, இயல்கள்-- ஐ.நா. அவை மற்றும் அதன் பிற உறுப்புகளின் செயல்பாட்டுக்காகவென உருவாக்கியுள்ள கோட்பாடுகளும், நடைமுறையில் அவை செயல்படுத்தப்படும் தன்மையும்; புதிய நாடுகளை அறிந்தேற்க (தன்னாட்சி உரிமை முதலியவை) ஐ.நா. அவையின் முன்னணி நாடுகள் நடைமுறையில் (Realpolitik) செயல்படும் ÉjK«] ii) இரண்டாவதாக, உலகத் தமிழர் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியனவும், பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்கள் அவரவர் தம்மால் இயன்றவரை அக்கறை காட்டவேண்டியனவும் ஆன பின்வரும் சூழ்நிலைகள்: (அ) தமிழினம் 19ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலிருந்து (தமிழகம் உட்பட) இந்தியாவெங்கும் வெள்ளையர் ஆட்சித் தொடங்கிய பின்னர் பெரும் எண்ணிக்கையில் மாரிசிய, ரீயூனியன், தென்இலங்கையின் தேயிலைத் தோட்டப் பகுதி, மலாயா, (தென்னமெரிக்க) கயானா, கரிபீயன் கடல் தீவுகள், பிஜித் தீவு முதலியவற்றிற்கு கரும்பு, ரப்பர் முதலிய தோட்டத்தொழிற் கூலிகளாக (Indentured labour) குடியேற்றப் பட்டவர்கள் பற்றிய செய்திகளையும் இயல்கள் 5, 6, 10இல் காணலாம். இன்றும் அத்தகைய குடியேற்ற நாடுகள் பலவற்றில் தமிழர் நிலை மேம்படுத்த வேண்டியதாகவே உள்ளது. (ஆ) ஈழத்தமிழர்கள் தொல் பழங்காலத்திலிருந்து இலங்கையின் வடக்கு - கிழக்குப் பகுதிகளின் குடிகளாக வாழ்ந்துவரும் வரலாறு; 1947க்கு பின்னர் படிபடியாக அவர்கள் சிங்களவரின் (முக்கியமாக அவர்களுடைய அரசியல்வாதிகளின்) இனவெறி, ஆதிக்கவெறிகளால் தூண்டிவிடப்பட்ட வெறுப்பு, வன்முறை, கொள்ளை, கொலை, கற்பழிப்பு போன்ற வன்முறை களால் கொடுமைக்களாகிய ஈழத்தமிழர்கள் 1958முதல் இன்றுவரை பட்டு வந்த, இன்னும் பட்டு வரும், இன்னல்கள்; 1980க்கு பின்னர் அவர்கள் இன அழிவுக்கு அஞ்சிப் பன்னாடுகளுக்குப் புலம்பெயர்ந்து குடியேறியுள்ளமை முதலிய செய்திகள் ஆதாரத்துடன் விளக்கப்படுகின்றன. மேலைநாடுகள் இதுதொடர் பாகக் கடைப் பிடிக்கும் (தன்னூதியக்கணக்கு; அதே நேரத்தில் போலியான ஆதரவு போன்ற) தன்மைகளையும் ஆசிரியர் பல ஆதாரங் களுடன் விளக்கியுள்ளார். ஈழத்தமிழர் மட்டுமன்றி உலகத் தமிழர் அனைவரும், குறிப்பாக இந்தியத் தமிழர்கள் ஈழத்தமிழர் நலனில் தொடர்ந்து பாடுபட வேண்டியுள்ள நிலைமை. 2. இந்நூலிலிருந்து ஐ.நா. அவையும் அதன் அமைப்புகளும் உண்மையில் செயல்படும் `அழகை நாம் அனைவரும் அறிந்துகொள்ள இயலும். உலகின் புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்று பல்வேறு நாடுகளில் உள்ள நிலைமைகள்; ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் கடந்த முப்பது - நாற்பது ஆண்டுகளாகச் சிங்களவெறி அரசுகளால் பட்ட கொடுமைகள் (அவற்றிற்கு வருங்காலத்தில் உருவாக்கக்கூடிய தீர்வு); புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் இன்று பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வரும் நிலைமைகள் முதலிய பல செய்திகளை இந்நூலில் இருந்து ஆதார பூர்வமாக அறிந்து கொள்ளலாம். நூன்முகம் உலகத் தமிழரும் தமிழ் நாட்டுத் தமிழரும் உணர்ந்துகொள்ள வேண்டிய அடிப்படைச் செய்திகளை நுணுக்கமாக விளக்கிக் காட்டுகிறது. `உலகில் தமிழினம் எனும் இந்நூல்! தமிழர்கள் பல்வேறு நாடுகளில் வாழ்கிறார்கள். உலகில் தமிழர்கள் வாழும் சூழலை விவரிக்கும் முனைவர் அன்பரசு அவர்கள், அக்கறை செலுத்த வேண்டிய செய்திகள் எவையெவை என்பதை இந்நூலில் திரட்டித் தெளிவுபடுத்தியுள்ளார். தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்பினோம். தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம். என்பது பாவேந்தர் பாரதிதாசன் பாட்டு முழக்கம்! அந்த வரிகள் உணர்த்தும் கருத்துவலிமையை உலக நாடுகளின் வரலாற்றோடு பொருத்திக் காட்டி, மொழிக்குள்ள ஆற்றலை உணர்த்தும் போது நாம் வியப்படைவதும் உண்மை, தெளிவு பெறுவதும் உண்மை! பலரும் அறிந்திராத அரிய செய்திகளை இந்நூல் முழுதும் மின்ன வைத்துள்ள முனைவர் அன்பரசு அவர்களின் தனித்திறம் படிப்போரை வியக்கவைக்கும்! பிரிட்டிசு ஆட்சியின் கீழ் இந்தியா இருந்ததைப் போல் நேபாளம், பூடான், மாலத்தீவு முதலிய நாடுகள் இருந்ததில்லை எனக்கூறி அவரே தெளிவுபடுத்துவார். நேபாளமும் பூடானும் வெள்ளை அரசோடு உடன்படிக்கை (Treaties) செய்து கொண்டு தனிநாடுகளாக இயங்கி வந்தவை! மாலத்தீவு வேறுவகை! வெள்ளை அரசின் பாதுகாப்பு (British Protectorate) பெற்று 1887 முதல் செயல்பட்டுவந்த அந்நாடு 1965இல் விடுதலை பெற்றுள்ளது. உலக நாடுகளின் ஒன்றியம் (ஐ.நா) 24.10.1945இல் 51 நாடுகளுடன் உருவாக்கப்பட்ட போது, இந்தியர் அந்தப் பட்டியலில் இல்லை. உலக நாடுகளின் ஒன்றியம் (ஐ.நா) குறித்தும் அதன் பிரிவுகளாய் இயங்கும் அமைப்புகள், நிறுவனங்கள் குறித்தும் அவற்றின் செயல்பாடுகள் குறித்தும் துல்லியமான செய்திகளை இந்நூல் தருகிறது. இறையாண்மை பெற்ற தனிநாடு பெற்றிருக்க வேண்டிய எட்டுவகைப் பண்புகளை இந்நூலின் முற்பகுதி நம்முன் வைக்கிறது. ஒருநாட்டை உரிமை பெறச் செய்வதில் மொழிக்குள்ள தனிப்பெரும் பங்கை இந்நூல் விவரிக்கும்போது, அடுத்த செய்திக்கு நம்விழிகள் நகர மறுக்கும்! மொழிக்குரிய பேராற்றலை உணர்ந்த நெஞ்சில் எழுச்சியும் சோகமும் மாறிமாறி எழுந்து, பழைய மொழிப் போர் வரலாறு நம் கண் முன் விரியும்! இந்நூலில் அவர் சொல்லியிருக்கும் செய்திகள் நமக்குப் புதிய புதிய கதவுகளைத் திறந்து காட்டும். பாகித்தான் இந்தியாவிலிருந்து பிறந்தது! பாகித்தானிலிருந்து வங்கதேசம் ஏன் பிரிந்தது? மொழித் திணிப்புதான் காரணம்! `உருது! உருது மட்டுமே (Urdu and urdu only) என்று 1948இல் அடித்துப் பேசினார் முகமதலிசின்னா. அவருக்குப் பின் வந்தோரின் முகங்கள் மாறினாலும் முழக்கம் மாற வில்லை. `v§fŸ t§f bkhÊ¡F v§nf ïl«? பாகித்தானில் வாழும் வங்காள மக்களின் குரலும் மொழி உணர்வும் மதிக்கப்படவில்லை. வங்கமொழி உணர்வை மதிக்க மறுத்ததால் 16.9.1971 இல் பாகித்தானி லிருந்து வங்கதேசம் பிரிந்தது. இருநாடும் இசுலாம் எனம் ஒரே மதத்தைச் சேர்ந்தவை! மதவுணர்வை விட மொழியுணர்வின் வலிமை மிகுதி என்பது தான் வரலாறு தரும் செய்தி! நூலாசிரியர் முனைவர் அன்பரசு அவர்கள் முத்தாய்ப்பாகக் கூறும் செய்தி நம் சிந்தனைக்குரியது. நாட்டு உருவாக்கத்தில் (State Formation) மொழியின் பங்கு அளப்பரியது. ஈழ உரிமைப்போர் எழுவதற்கும் மொழித்திணிப்பே முகாமையான காரணம் என்கிறார்! `சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி எனும் (Sinhala only Act) சட்டத்தை 1956இல் இலங்கை அரசு நிறை வேற்றியது. தமிழருக்கும் சிங்களருக்குமான நல்லுறவு பாழ்பட்டுப் போகவும், தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டம் வெடித்துக் கிளம்பவும் `சிங்களத் திணிப்புச் சட்டமே காரணம் என்பதற்கான செய்திகளை இந்நூல் விரிவாகத் தருகிறது. மொழிவழித் தேசியம் இருவகையாகச் செயல்படும் புதிய கோணத்தை இந்நூல் நமக்குப் புரியவைக்கிறது. உலகநாடுகள் ஒன்றிய (ஐ.நா.) அமைப்பில் ஆட்சிமொழித் தகுதி இந்திமொழிக்குத் தரப்படவேண்டும் என்று இந்திய ஆட்சியாளர் தொடர்ந்து முயன்றுவரும் வரலாற்றை இந்நூல் சொல்கிறது. இந்திமொழியோ, உலக அளவில் தனக்கு அரியணை தேடும் நிலைக்கு உயர்த்தப்பட்டு வருகிறது. தமிழ் மொழியோ, சொந்தமண்ணிலேயே துறைதோறும் புறக் கணிக்கப்படும் அவலநிலைக்கு ஆளாக்கப்பட்டு வருகிறது. தமிழையும் தமிழரையும் காக்க விரும்பும் அனைவருக்கும் கருத்து ஆவணமாகப் பயன்படும் ஆற்றலுடையது இந்த நூல்! தமிழுணர்வு வற்றாமல் சுரக்கச் செய்யும் அறிவாளர்களின் சிந்தனை களைப் பரப்புவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு உருவானது சென்னை தமிழ்மண் பதிப்பகம். `உலகில் தமிழினம் எனும் இந்த அரிய நூலை வெளியிட வாய்ப்பளித்த முனைவர் அன்பரசு அவர்களுக்கு நன்றி. `இன்றைக்கே எழாமல் நீ என்றைக்குத் தான் எழுவாய் எண்ணிப் பார்ப்பாய் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் இந்தப் பாடல் வரி, இந்நூலைப் படித்து முடிக்கும் ஒவ்வொருவர் நெஞ்சிலும் உயர்ந்தெழு வதைத் தவிர்க்க முடியாது. தமிழருக்கு உணர்வும் விழிப்பும் தருகின்ற நூல்களின் பட்டியலை உருவாக்கும்போது, இந்நூலின் பெயர் அதில் கட்டாயம் இருக்கும்! புலவர் ந. கவுதமன் முகவுரை நாடற்ற இனங்களில் மிகப்பெரியது தமிழினம். உலகத் தமிழர்களின் மொத்த எண்ணிக்கை 7.7 கோடி முதல் 8 கோடிவரை மதிப்பிடப் படுகிறது. தமிழர் எண்ணிக்கை விரிந்து பரந்து செல்கிறது. தமிழ் மொழி பேசுநர் எண்ணிக்கை மாத்திரம் இறங்கு முகமாகச் செல்கிறது. தமிழர் 19 ஆம் நூற்றாண்டில் குடியேற்றப்பட்ட கரிபியன் தீவுகளிலும் நாடுகளிலும் தமிழை மறந்து விட்டனர். தென்னமெரிக்கத் (கயானா) தமிழர்கள் பற்றிச் சொல்லத் தேவையில்லை. வடஅமெரிக்க நாடுகளில், [mbkÇ¡f ஐக்கிய நாடுகள் (U.S.A), fdlh] தற்காலத்தில் குடியேறிய தமிழர்கள் மொழிப் பற்றுடன் வாழ்கிறார்கள். 2. தமிழை மறந்தோரையும் தமிழுணர்வு கொள்ளச்செய்த நிகழ்வுகள் தமிழீழ விடுதலைப் போரால் ஏற்பட்டன. தமிழ்க்கல்வி பற்றிய கரிசனை பெரும்பாலும் ஈழப் போராட்டத்தின் பின்னர்த் தோன்றியது எனலாம். தமிழ் பிறந்த தமிழகத்தில் சின்னத்திரை, பெரியதிரை ஆகியவற்றின் வேண்டப் படாத தாக்கத்தால் தமிழ்மொழி பாரிய பின்னடைவைச் சந்தித்து வருகிறது. 3. குழந்தைகளும் பெற்றோரும் உரையாடும் வீட்டு மொழியாகத் தமிழ்மொழி இருந்தால் மாத்திரமே தமிழுக்கு நாட்டில் ஒரு இடம் கிடைக்கும். தமிழகப் பெற்றோர் பெரும்பாலானோர் ஆங்கில மொழிக்கு முதல் மரியாதை செய்கின்றனர். பொருளாதார மேம்பாட்டிற்கு ஆங்கிலம் அவசியம் என்ற தவறான கொள்கைதான் இதற்குக் காரணம். 4. தமிழக அச்சு ஊடகங்களும் மின்னணு ஊடகங்களும் தமிழ்ச் சொற்களுக்குப் பதிலாக ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துகின்றன. இது திட்டமிட்ட மொழி அழிப்பு நடவடிக்கை என்று தமிழ்மொழி ஆர்வலர் கருதுகின்றனர். தென் பசிபிக், வட பசிபிக் மாக்கடல் தீவுகளில் தமிழ் மறைந்து விட்டது என்று கண்ணீர் சிந்துவோர், தமிழ்நாட்டிலேயே தமிழ் படும் பாட்டைப் பற்றிக் கவலை கொள்ளவேண்டும். 5. வலிந்து ஆங்கிலச் சொற்களைத் திரை உலகிலும், ஊடகத் துறையிலும், புகுத்து வோரையும் வடமொழியைத் தேவ பாசையாகப் புகுத்துவோரையும் மொழிப் பகைவராகக் கருத வேண்டும். வெளிநாட்டார் தமிழுக்குக் கொடுக்கும் மதிப்பும் மரியாதையும் நாம் அறியாததாக இருக்கலாம். ஆனால், அது முற்றிலும் உண்மை. சீனா, ஜப்பான், ரஷியா, செக் குடியரசு, அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற நாடுகளின் பல்கலைக் கழகங்களில் தமிழ் ஆய்வு மொழியாகவும், பயிற்று மொழியாகவும் இருந்து வருகிறது. 6. தமிழ் தான் இந்தியாவின் தேசிய மொழியாக, உலகின் பொது மொழியாக இருப்பதற்கு முழுத் தகுதியுடைய மொழி என்று நான் என்றும் கருதுகிறேன். காந்தி அடிகளின் கருத்தும் இதுவே என்கிறார் பன்மொழிப்புலவர் அப்பாத்துரை. (அறிவுச் சுரங்கம் அப்பாத்துரையார் - மாணவர் பதிப்பகம், சென்னை, 2005 பக் 68.) அன்பரசு இயல்-1 தன்னாட்சி பெற்ற இறைமை நாட்டின் எட்டுப் பண்புகள் அனைத்துலக அரசியற் செயல்பாடானது, இறைமை (Sovereignty) பெற்ற தனி நாடுகளை அடிப்படையாகக் கொண்டது. இந்த அடிப்படையில் தோன்றிய நாடுகள் சிறிதும், பெரிதுமாக உலக அரங்கில் காணப்படுகின்றன. இவ்வகை நாடுகளின் கூட்டமைப்பாக ஐக்கிய நாடுகள் அவை இடம் பெறுகிறது. ஐ.நா.வில் இன்று 193 நாடுகள் உறுப்புரிமை பெற்றுள்ளன. உறுப்புரிமைக்கு விண்ணப்பிக்காத, (அல்லது விண்ணப்பம் இதுவரை மறுதலிக்கப்பட்டு வருவதால்) விலகி நிற்கும் நாடுகளும் உலகில் உள; அவற்றுள் சில ஐ.நா.வில் இணையாமலே இனிது இயங்கவும் செய்கின்றன. 2. இறைமை பெற்ற தனிநாடு என்ற வரையறைக்குள் வரும் தன்னாட்சி பெற்ற நாடுகளுக்கு எட்டு வகைப்பண்புகள் இருத்தல் அவசியம் என்று அரசியல் துறை வல்லுநர் கூறுவர்: (i) அந்த நாட்டிற்குரிய நிலப்பகுதி நன்கு வரையறை செய்த எல்லைகளுடன் இருக்க வேண்டும். அதாவது பன்னாட்டு அளவில் அந்த நாட்டிற்கும் அதன் எல்லைகளுக்கும் அறிந்தேற்பு இருத்தல் வேண்டும். இறைமை பெற்ற நாட்டின் நிலப்பரப்பின் அளவு சிறிதாகவோ பெரிதாகவோ இருக்கலாம். ஒரே நாளில் நடந்தே சுற்றிப் பார்க்கக் கூடிய சின்னஞ்சிறிய நாடுகளும் மிகப் பரந்த நிலப்பரப்புடைய நாடுகளும் உலகில் இருக்கின்றன. அவை பற்றிய விவரங்களையும், ஆய்வுகளையும் அடுத்து வரும் பக்கங்களில் பார்க்கலாம். (ii) இரண்டாவதாக அந்நாட்டில் நிலையாக மக்கள் குடியிருக்க வேண்டும். மக்கள் தொகை பெரும் எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்ற தேவை இல்லை. ஓராயிரத்திற்கும் குறைவான மக்கள் வாழும் நாடுகளும் இருக்கின்றன. எது முக்கியம் என்றால் அவர்கள் நிரந்தரமாக அந்த மண்ணில் வாழ வேண்டும். அது மாத்திரமல்ல அந்த மக்களுக்கிடையில் இன, மத, வரலாற்று, பண்பாட்டு ஒருமைப்பாடும் பேச்சு மொழி, எழுத்து மொழிப் பொதுமையும் தனித்துவமான அடையாளமும் இருத்தல் கட்டாயம். அந்த மக்கள் தாம் வாழும் நாட்டையும் பேசும் மொழியையும் பேணும் பண்பாட்டு விழுமியங் களையும் தமதென்று கொண்டாடிப் பாராட்ட வேண்டும். அந்நாட்டு அரசைத் தமக்குச் சொந்தமானதென்று கருதுவதுடன், அவ்வரசின் சட்டங்களை மதித்து நடத்தல் தமது அறம்சார்ப் பொறுப்பு என்றும் கொள்ளவேண்டும். (iii) மூன்றாவதாக, நாட்டில் பொருளாதார நடவடிக்கைகள் நடைபெற வேண்டும். நன்கு ஒழுங்கு செய்யப்பட்ட வேளாண், வணிக நடவடிக்கைகள் இயங்க வேண்டும், பெருமளவு ஏற்றுமதி, இறக்குமதி ஆலைத் தொழில்கள் இல்லாவிட்டாலும் நாடு இயங்கு (functioning) நிலையில் இருத்தல் தேவை. சொந்தமான நாணயம், அஞ்சல் தலை, போக்குவரத்துச் சாதனங்கள், தொடர்பு ஊடகங்கள் முதலியவற்றையும் கொண்டிருத்தல் வேண்டும். வரி தண்டும் உரிமையும் அதற்கு உண்டு. ஆண்டிற்கு ஒரு முறையாவது அரசு வரவு செலவு மதிப்பீட்டை அந்த நாடு தனது மக்களுக்கு அறிவிப்பத்தோடு அது பற்றிய மதிப்பீடுகளுக்கு ஏற்ற வகையில் நிருவாகஞ் செய்தல் வேண்டும். (iv) நான்காவதாக, மக்கள் நலன் கருதிய கல்வி, பொது நலச் சேவை, வீட்டு வசதி, நல்வாழ்வு, வேலை வாய்ப்பு, சிறுவர் முதியோர்கள், ஏதிலியர், பெண்கள், ஆகியோர் நலன் பற்றிய கவனிப்பும் ஒவ்வோர் துறைசார்ந்த திட்ட உருவாக்கம் - செயற்படுத்தலும் அரசுகளின் அடையாளங்களில் முக்கியமானவை. (v) ஐந்தாவதாகத் தலைநகரையும் நாட்டின் ஏனைய பகுதிகளையும் இணைக்கும் தொடர்வண்டிப் ghij (Rail), நெடுஞ்சாலைகள், பேருந்துகள், விமான ஊர்திகள் ஆகிய வசதிகளை உருவாக்கிப் பேணும் கட்டமைப்பும் இருக்க வேண்டும். (vi) அடுத்ததாக நாட்டின் அமைதிக்கும் மக்களின் பாதுகாப்பிற்கும் இன்றியமையாத சட்டம், நீதி மன்றங்கள், காவல்துறை ஆகிவை மக்கள் அனைவருக்கும் நன்மை பயக்கும் விதத்தில் செயல்பட வேண்டும். வெளிநாட்டு அச்சுறுத்தல்களைச் எதிர்கொள்வதற்கான போர்ப் படைப் பாதுகாப்பையும் வைத்திருக்க வேண்டும். (படையே இல்லாத சிறு நாடுகள் சில விதி விலக்காக அமைகின்றன) மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆட்சியரின் கீழ் திறன் வாய்ந்த நிலையான நிருவாக அமைப்பு (permanent bureaucracy) அனைத்து நாடுகளிலும் காணப்படுகின்றது. கட்சி அடிப்படையில் தெரிவு செய்யப் பட்டோர் வரலாம் போகலாம்; நிருவாக அமைப்பு அதிகாரிகள் ஓய்வுக் காலம் வரை பணியில் இருப்பார்கள். மக்கள் சார்பினர்களைவிட இத்தகைய நிலையான நேர்மையான நிருவாக அமைப்பே இன்றும் இங்கிலாந்து முதலிய நாடுகளின் தனிச்சிறப்பு. இந்தியாவில் 1965க்குப் பின்னரும், வேறு சில நாடுகளில் வெவ்வேறு காலக்கட்டங்களிலும் அத்தகைய நிருவாக அமைப்பை அரசியல் கட்சிகள் திட்டமிட்டுக் கெடுத்துவிட்டன. (vii) எல்லாவற்றிற்கும் மேலாக, இறைமை பெற்ற நாட்டின் அரசிற்குத் தன் மக்களை வெளி அல்லது உள்ளகத் தடையோ கட்டுப்பாடோ இன்றி ஆட்சி செய்யும் முழு உரிமையும் அதிகாரமும் இருத்தல் வேண்டும். இதை இறையாண்மை (Sovereignty) என்று அழைப்பர். தன்னாட்சி பெற்ற நாடுகளாக ஏற்கப்படும் நாடுகள் அனைத்திடமும் இந்த இறையாண்மை உண்டு. விடுதலை பெற்றதும் தன்னுரிமையுடன் (Autonomy) இயங்குவதும் ஆன நாடுதான் இறையாண்மையுடையது எனினும் (ஒப்புக்கு) ஐ.நா. உறுப்பு நாடுகளாக உள்ள நாடுகள் சிலவற்றில் அத்தன்மை இல்லை. பெரு நிலப் பரப்பையும், பாரிய மக்கள் தொகையையும் கொண்ட நாடுகளைப்போல சிறு அளவு மக்கள் தொகை கொண்ட சிறிய நாடுகள் ஐ.நா. உறுப்பினராக இருப்பினும் அவற்றிற்கு முழுமையான இறைமை இல்லை. வல்லரசுகள் அவற்றை நெருக்கித் தம் விருப்பம் போல் வாக்களிக்கும் படி செய்து விடுவர். வலுவுள்ளவர் செய்வதை வலுவற்றோர் பொறுத்துக் கொண்டாக வேண்டும் என்றார் கிரேக்க படைத் தளபதி, வரலாற்றாசிரியர் மெய்யியலார் தூசிடைடிஸ் [Thucydides கி.மு. 460-455 இடையில் பிறந்து, கி.மு. 411 - 400 இடையில் ïwªjt®] (viii) மேற்கூறிய பண்புகள் அனைத்தும் இருந்தாலும் போதாது. பன்னாட்டுச் சட்டத்தின்படி (International law) ஒரு நாட்டைப் பிறநாடுகள் (குறிப்பாக வல்லரசு நாடுகள்) தமக்குச் சமமென ஏற்று அறிந்தேற்பு (Recognition) தந்தால்தான் அந்நாடு இறைமை (Sovereignty) உடையதாகக் கருதப்படும். குறிப்பிட்ட அந்நாட்டைச் சமம் என ஏற்று இராசதந்திர உறவு கொள்ள வேண்டும். தூதர் பரிமாற்றம். இராச தந்திரக் கலந்துரையாடல், தூதரகத் தலைவர் சந்திப்புகள், வணிக உறவுகள் முதலியவை மிக முக்கியம். ஐ.நா. சபை ஒரு நாட்டை உறுப்புநாடாக ஏற்றுக் கொண்டு அச்சபையில் அந்நாடு இருக்கை பெறும் பொழுது நாட்டின் அறிந்தேற்பு உச்சநிலை பெற்று விடுகிறது. இயல் - 2 நாடுகளின் கூட்டமைப்பான ஐ.நா.வின் தோற்றமும் விரிவும் ஐக்கிய நாடுகள் சபை 1945 அக்டோபர் 24 ஆம் நாள் அதிகார பூர்வமாகத் தோன்றியது. ஐ.நா. பாதுகாப்புப் பேரவை இடம் பெறும் (U.N. Security Council) ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகள் உட்பட 51 நாடுகள் ஐ.நா. பேராவணத்தை ஏற்றுக்கொண்டு ஒப்பமிட்டன. ஐ.நா.வை நிறுவிய அந்த 51 நாடுகள் வருமாறு:- ஆர்ஜென்டினா - Argentina ஆதிரேலியா - Australia பெல்ஜியம் - Belgium பொலிவியா - Boliva பிரேசில் - Brazil பைலோரஷ்யா - Pilo Russia கனடா - Canada சிலி - Chile சீனா - China கொலம்பியா - Columbia கொடரிக்கா - Costarica கியூபா - Cuba செக்கோசுலோவாகியா - Australia டென்மார்க் - Denmark டொமினிக்கன் குடியரசு - Dominican Republic இக்குவடார் - Ecuadar எகிப்து - Egypt எல்சல்வடோர் - El Salvador எதியோப்பியா - Ethiopia பிரான்சு - France கிரீ - Greece குவாதமாலா - Guatemala ஹெயிட்டி - Haiti ஹான்டூரா - Honduras இந்தியா - India ஈரான் - Iran ஈராக் - Iraq லெபனான் - Lebanan லைபீரியா - Lyberia லக்செம்பர்க் - Luxumberk மெக்சிக்கோ - Mexico நெதர்லாந்து - Netherlands நியூசிலாந்து - New zealand நிகராகுவா - Nicaragua நார்வே - Norway பனாமா - Panama பராகுவே- Paraguay பெரு - Peru பிலிப்பைன் - Philliphines போலந்து - Polland சவுதி அரேபியா - Saudi Arabia சிரியா - Syria துருக்கி - Turkey உக்ரையின் - Ukraine தென் ஆப்பிரிக்கா - South Africa சோவியத் ஒன்றியம் - Soviet Union இணைந்த அரசு (United Kingdom) அமெரிக்க ஐக்கிய நாடுகள் (USA) உருகுவே - Uruguay வெனிசுவெலா - Veninzuela யூகோசுலாவியா - Ugoslavia 2. (i) ஐ.நா. ghJfh¥ò¥ nguit (UN Security Council) IªJ Ãuªju cW¥ò ehLfshf ï‹WŸsit Ódh, nrhÉa¤ x‹¿a«, ïizªj muR (U.K) ãuh‹R, m.I.eh., (U.S.A). (ii) 1945 - 1949 ஆம் ஆண்டு காலஅளவில் பெருநிலப்பரப்புச் சீனாவானது ஐ.நா. பொது அவையிலும் பாதுகாப்பு அவையிலும் உறுப்பு நாடாக இடம் பெற்றது. ஆனால் 1949 இல் பொதுவுடைமைச் சீனா உருவாகிய பிறகும், சின்னஞ்சிறிய தாய்வான் தீவுதான் 1971 வரை சீனாவுக்குச் சார்பாளராகப் பாதுகாப்பு அவையிலும், பொது அவையிலும் (Security Council General Assembly) இடம் பெற்றது! 1971ஆம் ஆண்டு அமெரிக்க சீன நட்புறவு (நிக்சன் - மாவோ இசைவில்) ஏற்பட்ட பிறகுதான் ஐ.நா. பொது அவை தீர்மான எண் 2758 மூலம் தாய்வானின் இரண்டு உறுப்புரிமைகளும் பெருநிலப்பரப்பு (பொதுவுடைமை)ச் சீனாவுக்கு மாற்றி வழங்கப்பட்டன. [jhŒth‹ தீவும் தன்னை சீனக்குடியரசு (Republic of China) என்று அழைத்துக் bfhŸ»wJ!] 3. (i) பேரரசாக விளங்கிய சோவியத் ஒன்றியம் 1991ஆம் ஆண்டில் உடைந்து ரசியா உட்பட 15 நாடுகள் உருவாயின. சோவியத் ஒன்றியத்தின் வாரிசு நாடாக ரசியா ஏற்றுக் கொள்ளப்பட்டது பாதுகாப்பு மற்றும் பொது அவைகளில் சோவியத் ஒன்றியம் வகித்த இடங்களை இன்று ரசியா வகித்து வருகிறது, (ii) சோவியத் ஒன்றியம் உடைந்து பல நாடுகள் தோன்றிய பின்னர் கீழ்க்காணும் 15 நாடுகளும் இறைமை பெற்ற நாடுகளாக மாறி ஐ.நா. உறுப்பு நாடுகளாக உள்ளன: அர்மீனியா - Armenia அசர்பைஜான் - Azerbaijan பெலார - Belarus எதோனியா - Estonia ஜார்ஜியா - Georgia கசக்தான் - Kazakhsthan கிர்கிதான் - Kirikistan லட்வியா - Latvia லிதுவேனியா - Lithuania மால்தாவியா - Moldovia ரஷ்யா (பழைய சோவியத் யூனியனின் நேரடி வாரிசு) - Russia தாஜிக்கிதான் - Estonia துர்க்மெனிதான் - Turkmenistan உக்ரையின் - Ukraine உபெகிதான் - Uzbekistan 4. (i) ஐ.நா. நிறுவனத்தின் தொடக்க உறுப்பு நாடான இந்தியா 1945 இல் ஆங்கிலப் பேரரசின் பகுதியாக இருந்து, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் விடுதலை பெற்று இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு புதிய நாடுகள் உருவாகின. I.eh., வின் மூல உறுப்பு நாடான இந்தியா அவ்வாறே தொடர்ந்தது. பாகிஸ்தான் புதிய நாடாகி 30.9.1947 அன்று ஐ.நா. பொது அவை உறுப்பினர் ஆகியது. (ii) இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் உருவாக்கத்தில் மதம் முக்கிய அடையாளமாக இருந்தது. மத அடிப்படையில் (இந்து) இந்தியா, (இசுலாமிய) பாகிஸ்தான் என்று உருவாயின. மொழியும் மதமும் முக்கியப் பண்பாட்டு ஆதாரங்களாக இருப்பினும் மதத்தை விடச் சற்று அதிக வலிமை மொழிக்கு இருப்பதை வரலாறு காட்டுகிறது. இசுலாமிய அடிப்படையில் உருவான பாகிஸ்தானில் மொழியின் முக்கியத்துவம் 1970களில் வெளியாகியது (பாகிஸ்தான் உருவாக்கத்தில் மொழி மாத்திரமல்ல புவியியல் முரண்பாடும் கருத்தில் எடுக்கப்படவில்லை என்பதும் பின்னர் விளக்கப்படும்) கிழக்குப் பாகிஸ்தான் தலைநகர் தாக்கா (Dacca)Éš முகமது அலி ஜின்னா கிழக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தானின் தேசிய மொழி உருது, உருது மட்டுமே (Urdu and Urdu only) என்று 1948 இல் அடித்துக் கூறினார். அவருக்குப்பின் வந்தோரும் இதே நிலையை எடுத்துச் செயல்படுத்தியது தான் பின்னர் அந்நாடு உடையக் காரணமாயிற்று. நாட்டு உருவாக்கத்தில் (State Formation) மொழியின் பங்களிப்பு அளப்பரியது என்பதை உணர்ந்த இந்தியா தனது மாநிலங்களை மொழி அடிப்படையில் 1956 இலேயே உருவாக்கியது. 5. (i) புவியியல் அடிப்படையில் 1947 இல் பாகிதான்அமைந்தது சரியான அடிப்படை அல்ல. gh»°jh‹ nk‰F, »H¡F¥ gFâfS¡F ïilÆš öu« 1400 ».Û.; இடையில் இந்திய நாடு. உருது மொழியைத் தேசிய மொழியாகச் செயல்படுத்திய மேற்குப் பாகிஸ்தானை ஆண்டோர் [mt®fSŸ பெரும்பாலோருடைய தாய்மொழி பஞ்சாபி jh‹!] கிழக்குப் பாகிஸ்தானில் வாழ்ந்த வங்காள மொழி பேசுநர் உணர்வுகளை மதிக்கத் தவறினர். கிழக்குப் பாகிஸ்தான் மக்கள் தேசியமொழி வங்காள மொழி; உருது அவர்களுக்கு அந்நிய மொழி; மேலும் கிழக்குப் பாகிஸ்தான் (வங்காளி) மக்கள் மேற்குப் பாகிஸ்தான் மக்களை விட எண்ணிக்கையில் அதிகம்! 1971ஆம் ஆண்டில் பாகிஸ்தான் இரண்டாகப் பிளவுபட்டதற்கு மொழிதான் அடிப்படைக் காரணம். (ii) உலகில் இன்று ஆண்டுதோறும் பெப்பிரவரி 21ஆம் நாள் உலகத் தாய்மொழி நாளாக (International Mother Language day) 1999 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. 1952 பெப்பிரவரி 21 அன்று வங்காள மொழிக்கு ஆதரவுக் குரல் எழுப்பிய மாணவர்களையும் மக்களையும் காவல்துறை சுட்டுக் கொன்றதனை நினைவூட்டி, இந்திய மேற்கு வங்காள மாநிலத்திலும், விடுதலை பெற்ற வங்க தேசத்திலும், பெப்பிரவரி 21ஆம் நாள் மொழிப் போர் ஈகியர் நாள் (Language Martyrs day) ஆகக் கொண்டாடப்படுகிறது. (iii) விடுதலைக்காக வங்காள தேசமக்கள், குறிப்பாகப் பெண்கள் கொடுத்த விலை மிகப் பெரியது. மேற்குப் பாகிஸ்தான் படைசெய்த இனப்படுகொலை ஜெனோசைடு என்று கருதப்படுகிறது. இந்தியப் படையின் தலையீடுதான் வங்காள தேச மக்களுக்கு 1971, செப்தெம்பர் 16ஆம் நாள் விடுதலை பெற்றுத் தந்தது. (iv) விடுதலை பெற்ற வங்காள தேசத்தை அங்கீகரித்த முதல் நாடு இந்தியா, இரண்டாவது நாடு பூட்டான். 1972 இல் வங்காள தேசம் ஐ.நா.வில் உறுப்பு நாடாக இணைய விண்ணப்பம் செய்தது. பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா தனது பாதுகாப்பு அவை வெட்டுவாக்கு உரிமையை (veto) பயன்படுத்தி விண்ணப்பத்தைத் தோல்வி அடையச் செய்தது. 1974 செப்டம்பர் 17 ஆம் நாள் வங்காள தேசத்திற்கு ஐ.நா. உறுப்புரிமை கிடைத்தது; (சீனாவின் அங்கீகாரம் 1975இல்தான் கிடைத்தது) 6. வரலாற்றில் பல பேரரசுகள் தோன்றி மறைந்துள்ளன. மிகப் பெரியதும் உலகளாவிய கடைசிப் பேரரசுமாகத் திகழ்ந்தது பிரிட்டிஷ் ஆங்கிலேயப் பேரரசு. பகலவன் எழுவதும் படுவதும் எமது சாம்ராச்சிய எல்லைக்குள் என்று கூறிப் பெருமிதமடைந்த ஆங்கிலேயர்கள் இன்று சிறிய தீவுக்குள் இணைந்த அரசு (United Kingdom) என்ற பெயருடன் முடங்கியுள்ளனர். எனினும் ஆங்கில மொழி ஆதிக்கம் உலகம் எங்கும் பிற மொழிகளின் இருப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. 7. பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தின் மையமாக இந்தியா இருந்தது. சில நூறு ஆண்டுகள். இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளையும் ஆங்கிலேயர்கள் இந்தியாவுடன் இணைத்து ஆட்சி செய்தனர். பர்மாவை 1826 - 1886 கால அளவில் படிப்படியாகக் கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் 1937ஆம் ஆண்டுவரை இந்திய நாட்டின் மாகாணமாகவே ஆட்சி செய்தனர்; பின்னர் 1948 ஜனவரி 4 அன்று பர்மாவுக்கு விடுதலை வழங்கினர். 8. ஒல்லாந்தர்களிடம் (Holland) இருந்து இலங்கையைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் அதற்குச் சிலோன் (Ceylon) என்று பெயரிட்டனர். 1972 ஆம் ஆண்டு சிங்கள அரசு இலங்கைக்குச் சிறிலங்கா என்று பெயரிட்டது. Äf K¡»akhf¡ ftÅ¡f nt©oaJ ahbjÅš xÇrhÉš fŠr«; fUehlf¤âš bj‹ f‹dl«; nfus¤âš kygh® kht£l«; bjY§F ngR« bj‹dh£L¥ gFâÆ‹ »H¡F, nk‰F kht£l§fŸ [2014 - ïš ïJ Mªâuãunjr« vd¤ jÅ khÃy« MdJ.]; தெலுங்கு பேசப்படும் தெலுங்கானாவும் தனி மாநிலம் ஆனது; தெலுங்கானா என்றும் சென்னை மாகாணத்துடன் இணைந்து இருந்த தில்லை) இவற்றையெல்லாம் அடக்கிய இணைந்த சென்னை மாகாணத்துடன் (Madras Presidency) இலங்கையையும் 1795 - 1798 ஆம் ஆண்டுகளில் இணைத்து ஆட்சி செய்தனர். 1798 - 1948 கால அளவில் இலங்கை தனி காலனி (Crown colony) நாடானது. இலங்கை விடுதலை பெற்ற நாள் 1948 பெப்ரவரி 04 ஆகும் (பர்மா விடுதலைக்கு ஒரு மாதத்திற்குப் பின்னர்). 9. நேபாளம், பூட்டான் இவை பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தின் பகுதியாக ஒரு போதும் இருந்ததில்லை. இவ்விரு நாடுகளும் பிரிட்டிஷ் அரசோடு உடன்படிக்கைகள் (treaties) செய்து கொண்டு தனி நாடுகளாக இயங்கின. மாலத்தீவு பிரிட்டிஷ் பாதுகாப்பு பெற்ற நாடாக (British Protectorate) 1887 முதல் இயங்கிப் பின்னர் 1965இல் விடுதலை பெற்றது. 10. இலங்கை, வங்காள தேசம், பாகிஸ்தான், இந்தியா ஆகிய நான்கு தென்னாசிய நாடுகளை ஆய்வுப் பொருளாகக் கொண்டு இரு நூல்கள் மொழி வழித்தேசியம் (Linguistic Nationalism) பற்றி வெளிவந்துள்ளன:- i. Language movement and Ethnic Nationalism by Michael Edward Brown and Sumit Ganguly, MIT Press 2003. ii. Politics of India since Independence by Paul R. Brass, Cambridge University Press, 1994. 11. வங்காள தேசம் பாகிஸ்தான் படைகளை எதிர்த்துப் போராடுவதற்கும் தனி நாடாகக் தோன்றுவதற்கும் மொழிதான் முக்கியக் காரணமாக அமைந்ததை மேலே கண்டோம். இலங்கையில் 1956 ஆம் ஆண்டு சிங்கள அரசு கொணர்ந்த தனிச்சிங்களச் சட்டம் (Sinhala Only Act) சிங்கள - தமிழ் நல்லுறவுகள் பாழ்படுவதற்குக் காரணமாக அமைந்ததோடு, நாளடைவில் தனி நாட்டுக்கான ஆயுதப் போராட்டத்துக்கும் காரணமாக அமைந்தது. 12. வங்காள தேசம் தனி நாடான பின்னர் எஞ்சிய மேற்குப் பாகிஸ்தானில் உருது (அரபு லிபி) அரசாங்க மொழியாக இருப்பினும் பாகிஸ்தான் ஒரு பன்மொழிநாடு என்பதில் ஐயமில்லை. இந்தியாவில் இந்தி, பாகிஸ்தானின் உருது, இரண்டும் எழுத்துருவால் (லிபி) மாறு பட்டவை ஆயினும், ஏறத்தாழ (சொற்களஞ்கியத்திலும் இலக்கணக் கட்டமைப்பிலும்) ஒரே மாதிரியான மொழிகள்தாம். ஆயினும் இன்று பாகிதான் உருதுவில் அரபு, பாரசீகச் சொற்களே பெருமளவில் சேர்க்கப்படுகின்றன. உருது இசுலாமியக் கலாச்சாரத்துடனும் இந்தி இந்துக் கலாச்சாரத்துடனும் தொடர்புடையதாக இரு நாட்டினருமே கருதுவதால், இருநாடுகளிடையே இடைவெளியும் முரண்பாடும் அதிகரிக்கின்றன. உருதுவும் இந்தியும் நெருங்கி வரும் வாய்ப்புகள் இல்லை. [».K. ஏழாம் நூற்றாண்டிலேயே தமிழ்நாட்டில் தமிழர் உருவாக்கிய தமிழி லிபியிலிருந்து அசோகன் காலத்தில், வடநாட்டினர் உருவாக்கிக் கொண்ட தேவ நாகரியைத்தான் இந்தி பயன்படுத்துகிறது என்றாலும் தன் சொல்வளத்தைப் பெருக்கிடச் சமகிருதச் சொற்களையே இந்தி ehL»wJ.] 13. இந்தியாவின் மொழிக்கொள்கை இந்தி, ஆங்கிலத்தை மையப் படுத்தியுள்ளது. இந்தியை இந்திய அரசின் ஒரே ஆட்சி மொழி ஆக்கினால் தேசிய ஒருமைப்பாடு வலுப்பெறும் என்று வட இந்திய அரசியல் வாதிகள் நம்புகின்றனர். தமிழ் நாட்டில் 1937 - 1940, 1946 - 1950, 1965 - 1967 ஆகிய காலங்களில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் எளிதில் மறக்கக் கூடியவையல்ல. 14. மொழி வழித் தேசியம் இருவகையாய்ச் செயற்படுகிறது: (i) முதலாவ தாக, பெரும்பான்மை இனம் தனது எண்ணிக்கை காரணமாக அரசியல் அதிகாரம், ஆட்சி உரிமை ஆகியவற்றைக் கொண்டு சிறுபான்மை மொழியினர் மீது தனது மொழியைத் திணிக்க வகைசெய்கிறது. (ii) இரண்டாவதாக, சிறுபான்மை இனங்கள் தமது மொழியை முக்கிய அடையாளமாகக் கொண்டிருப்பதோடு, தமது மொழி இல்லை என்றால் தமது இனமும் இல்லை என்று உறுதியாகக் கருதுகின்றனர். எனவே, மொழியைக் காக்கப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். 15. முன்பத்திகள் 11 - 14 இல் சொன்னவை மைக்கேல் எட்வர்ட் பிரவுன், பால் பிராஸ் நூல்களில் கூறப்பட்டவற்றின் முக்கியக் கருத்துகளாகும். மொழி என்பது பண்பாட்டு அடையாளம். தேசிய மொழி என்ற தீர்மானம் அரசியல் சார்ந்தது. புதிய நாடுகள் தோன்றுவதற்கும் பழைய நாடுகள் உடைவதற்கும் மொழி முக்கியக் காரணம் என்பதை அவ்விரு நூல்களும் விளக்குகின்றன. 16. தகவல் தொடர்புச் சாதனங்கள் பல்கிப் பெருகிய இந்த யுகத்தில் தொலை நாடுகளில் வாழ்ந்தாலும் ஒரே மொழியைப் பேசும் மக்கள் நெருக்கமான உறவைப் பேணுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஐந்து கண்டங்களிலும் பிரிந்து வாழும் உலகத்தமிழர்கள் ஒற்றைக்குரல் கொடுக்கவும், தமது தாய்மொழியை வளர்க்கவும் தூர உறவுகளின் சுக துக்கங்களில் பங்கெடுக்கவும் இன்று வசதி ஏற்பட்டுள்ளது. 17. (i) மொழி, மதம், இனம், மண் என்பன மக்களை வீறுகொண்டெழச் செய்யும் தன்மை வாய்ந்தன. அவற்றிற்காக உயிர் கொடுக்கவும் மக்கள் தயங்க மாட்டார்கள். தென்னாப்பிரிக்காவில், வெள்ளையர்களுக்கு எதிராகக் கறுப்பர்கள் நடத்திய போராட்டத்திற்கு மொழியும் ஒரளவு காரணமாகும். இன ஒதுக்கல் (Apartheid) கொள்கையை வெள்ளை ஆட்சியர் அரசியலில் மாத்திரமன்றிக் கல்வித்துறையிலும் அமலாக்கிய போது மொழிப்போர் வெடித்தது. தென் ஆப்பிரிக்க வெள்ளையர்களுள் பெரும்பாலோர் ஆப்பிரிக்கான்ஸ் (Afrikaans) எனப்படும் ஒல்லாந்து மொழியைப் பேசினர். கறுப்பர் ஆபிரிக்கான்ஸ் மொழியை அடக்குமுறை யாளர் மொழி (Language of the Oppressor) என வெறுத்தனர். அவர்கள் ஆங்கிலத்தையும் தாய்மொழியான சூலு (Zulu) மொழியையும் விரும்பினர். (ii) 1976 ஆம் ஆண்டு வெள்ளையர், நாட்டின் கல்வி நிலையங்கள் அனைத்திலும் ஆங்கிலத்தோடு ஆபிரிக்கான்ஸ் மொழியைக் கட்டாயமாக்கினர். இதனை எதிர்த்த கறுப்பு இளையோர் ஏறத்தாழ 10,000 பேர் 1976 சூன் 16 இல் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். காவல் துறை மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது, சொவெத்தோ (Soweto) என்ற இடத்தில் முதலாவது களப் பலியான மாணவர் 13 வயது ஹெக்டர் பீட்டர்சன் (Hector Pieterson). இக் கிளர்ச்சி தென்னாப்பிரிக்கக் கறுப்பர் இன விடுதலை வரலாற்றில் ஒரு திருப்புமுனை. படிப்படியாகப் போராட்டம் பெருகி இறுதியில் நெல்சன் மண்டேலா தலைமையில் கறுப்பர் ஆட்சி தென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்டது. (iii) 2002 சூன் 16 தேசிய இளையோர் நாளாக (National Youth day) தென்னாப்பிரிக்காவில் கொண்டாடப்படுகிறது. பீட்டர்சன் கொல்லப் பட்ட இடத்தில் அவனுக்கு நினைவாலயம் 16 சூன் 2002 ஆம் நாள் நிறுவப்பட்டது. 18. (i) ஐக்கிய நாடுகள் சபையிலும் மொழி முக்கிய இடம் பிடிக்கிறது. I.eh., அதிகார பூர்வ (Official) மொழிகள் ஆறு. ஆங்கிலம், பிரெஞ்சு, சீனம், ருஷ்யன், அரபு, ஸ்பானிஷ். [I.eh., brayf eilKiw bkhÊ ïu©L M§»y«, ãbuŠR] I.eh., பிரதிநிதிகள் இதில் எந்தவொரு மொழியில் பேசினாலும் உடனடியாக அது பிற ஐந்து மொழிகளிலும் மொழி பெயர்க்கப்படுகிறது. (ii) ehLfS¡»ilÆyhd cl‹go¡if Mtz§fŸ I.eh.,Éš அதற்குரிய அலுவலகத்தில் வைக்கப்படுகின்றன. உடன்படிக்கைகள் எந்த மொழியில் இருந்தாலும் பிரெஞ்சு, ஆங்கில மொழி பெயர்ப்புகளுடன் சேர்த்து ஐ.நா. வுக்குத் தர வேண்டும். 19. ஐரோப்பிய ஒன்றியத்தில் மொழிப் பயன்பாடு சற்று மாறுபடுகிறது. ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் 28. ஐரோப்பிய ஒன்றிய ஆவணங்கள், அறிக்கைகள் அனைத்தும் 28 மொழிகளிலும் பெயர்க்கப்படுகின்றன. வருடமொன்றுக்கு இதனால் 30 கோடி யூரோ செலவாகிறது. செயற்பாட்டு மொழிகள் (Working languages) மூன்று. ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் (வழமையாக ஆங்கிலம் தான் முதலிடம் பிடிக்கிறது). 20. mbkÇ¡fhÉYŸs Ãôah®¡ efÇš I.eh., தலைமைச் செயலகத்தின் பணிகள் ஆங்கிலத்தில் தான் நடைபெறுகின்றன. bgU«ghyhd I.eh., கிளை நிறுவனங்களும் சிறப்பு முகவரகங்களும் சுவிசர்லாந்தின் ஜெனிவா நகரின் பழைய சர்வதேசச் சங்க கட்டிடத்தில் (League of Nations) இயங்குகின்றன. இங்கு பெரும்பாலும் பிரெஞ்சு மொழி தான் அலுவல் மொழி. 21. (அ) ஜெனிவா கன்வென்ஷன் (Geneva convention) எனப்படும் போர்க் கைதிகள், காயமடைந்த போர்க் கைதிகள், காயமடைந்த போர் வீரர்கள், சரணடைந்த போர் வீரர்கள், போர் வலயத்தில் வாழும் சிவிலியன்கள் தொடர்பான சர்வதேச மனிதநேயச் சட்டங்கள் அனைத்தும் ஆங்கிலம், பிரெஞ்சு, என்ற இருமொழிகளில் மட்டுமே எழுதப்படுகின்றன. (M) I.eh., சிறப்புப் பிரிவுகளில் (Subsidiaries) ஒன்றான யுனெஸ்கோ அதிகார பூர்வ மொழிகள் ஒன்பது என்று கொண்டுள்ளது. 22. இராசதந்திரத்தின் (diplomacy) பேச்சு மற்றும் எழுத்து மொழியாக பிரெஞ்சு மொழிதான் 19 ஆம் நூற்றாண்டு இறுதி வரை இருந்து வந்தது. அந்தச் செல்வாக்கை இன்று ஆங்கிலம் கைப்பற்றி விட்டது! I.eh., வின் நிலவரம் இது தான். I.eh., மொழிகள் ஆறாக இருந்தாலும் மொழிபெயர்ப்புச் சிரமம், நிதிப் பற்றாக்குறை காரணமாக ஆறு மொழிகளையும் சமமாக நடத்த இயலுவதில்லை! பல மொழிகளில் மாற்றம் செய்யும் போது தவறான பொருண்மைகளும் கற்பிதங்களும் நிறைய எழ வாய்ப்புண்டு. இன்னொன்றையும் நாம் கருத வேண்டும்: ஐ.நா. வின் மொழிகள் ஆறையும் தாய்மொழி/இரண்டாவது மொழியாகக் கொண்ட உலக மக்கள் தொகை 280 கோடி தான். உலக மக்கள் மொத்தத் தொகையில் இது பாதிக்கும் குறைவு. எனினும் இந்த ஆறு மொழிகள், உலக நாடுகளின் மொத்தத் தொகையில் பாதிப்பேர் வாழும் நாடுகளின் ஆட்சி மொழியாக இருப்பதால் ஐ.நாவின் நடைமுறை மொழிகளாக அந்த ஆறு மொழி களும் ஏற்கப்பட்டன. 23. ïªâah, t§fhs njr« KjÈa ehLfŸ Kiwna ïªâ, t§fhs« M»a bkhÊfS¡F I.eh., ஆட்சிமொழித் தகுதி வழங்க வேண்டுமெனக் கோருகின்றன. இந்திய வெளியுறவு அமைச்சகம் 2009 ஆம் ஆண்டு இந்தியை ஐ.நா. அதிகாரபூர்வ மொழியாக்கும் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபடுவதாகத் தெரிவித்தது. இதற்குத் தமிழ்நாடு, மேற்கு வங்காளம் முதலிய மாநிலங்களில் எதிர்ப்பு இருந்ததாகத் தெரிய வருகிறது. 2009 ஏப்ரல் மாதத்தில் ஐ.நா. பொது அவையில் உரை நிகழ்த்திய வங்காள தேசப் பிரதமர் ஷேக் ஹசினா வங்காள மொழிக்கு ஐ.நா. செயல்பாட்டு மொழித் தகுதி தர வேண்டும். அம் மொழியை உலகில் 21 கோடி மக்களுக்குமேல் பேசுகின்றனர். உலகில் மிக அதிகமான மக்கள் பேசும் மொழிகளில் ஆறாவது வங்காள மொழி என்று சுட்டிக் காட்டினார். 2009 திசம்பரில் மேற்கு வங்காள அரசும் ஷேக் ஹசீனா கோரிக்கையை ஆதரித்தது. அசாம் திரிபுரா மாநிலங்களும் தமது ஆதரவை வெளிப்படுத்தின. இந்தியைத் தாய் மொழியாகக் கொண்டோர் 37 கோடி, அதை இரண்டாவது மொழியாகக் கொண்டோர் 12 கோடி. ஆக மொத்தம் 49 கோடி என்பது ஒரு கணக்கு. ஐ.நா.வில் இந்தி இடம் பெறாவிட்டாலும் இந்தியாவின் 12ஆம் தலைமையமைச்சர் நரசிம்மராவ் (1991 - 1996) ஐ.நா.வில் இந்தி மொழியில் தாம் பேசிட வற்புறுத்தியதால் பெரும் செலவில் அவருக்கு அவ்வசதி வழங்கப்பட்டது. 24. (i) உலகின் 188 நாடுகள் இணைந்த இரட்டை நிதி நிறுவனங்களாக உலக வங்கி (World Bank), பன்னாட்டு நிதி நிறுவனம் (International Monetary Fund) என்பன ஆங்கிலத்தில் பணியாற்றுகின்றன. இரண்டும் 1944ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு உலக நிதி ஆளுகையில் முக்கியப் பங்களிப்புச் செய்கின்றன. (ii) உலகப் பொருளாதாரம் மற்றும் நிதிநிலவரம் இவற்றின் உறுதிப் பாட்டை இந்த அமைப்புகள் கவனிக்கின்றன. கிட்டத் தட்ட ஒரே இலக்கைக் கொண்டிருந்தாலும் இரண்டிற்கும் இடையே வேறுபாடுகள் இருக்கின்றன. ஏழை நாடுகளுக்கு மேம்பாட்டுக் கடனுதவி வழங்குவதிலும் வறுமை ஒழிப்புத் திட்டங்களை முன்னெடுப்பதிலும் உலக வங்கி கவனம் செலுத்துகிறது. மேம்பாடும் மீள்கட்டமைப்பும் அதனுடைய குறிக்கோள்கள் எனலாம். உலகநிதி ஒழுங்கு (World Financial Order) சீர் கெடாமல் பார்ப்பதும் பொருளாதார வீழ்ச்சி உலக அளவில் ஏற்படாமல் தடுப்பதும் அனைத்துலக நிதி நிறுவனத்தின் முதன்மை இலக்குகள் எனலாம். இரண்டுமே தேவையான நிதியைப் (Capital) பணக்கார நாடுகளிடம் இருந்து பெற்று ஏழை நாடுகளுக்குக் கடனாக வழங்குகின்றன. உலக வங்கியைக் கடன் கொடுக்கும் நிறுவனம் என்று அழைப்பர். (iii) இவ்விரு நிதி அமைப்புகளின் தலைமையகங்களும் வாஷிங்டனில் வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள சாலையில் இரு பக்கங்களில் எதிரும் புதிருமாக உள்ளன. I.v«.v¥., (IMF) ÃWtd¤J¡F thΧlidÉl¢ á¿a _‹W mYtyf§fŸ ghǰ, b#Åth M»a efu§fËY« Ãôah®¡ I.eh., அலுவலகத்திலும் உள்ளன. (iv) பிற நாடுகளிடம் பெற்ற கடனையோ வட்டியையோ செலுத்த முடியாமல் வீழ்ச்சியை எதிர்நோக்கும் போது நிலைமையைச் சீராக்கப் பன்னாட்டு நிதி நிறுவனம் கடன் உதவி வழங்குகிறது. அத்துடன் கடனாளி நாடு செய்ய வேண்டிய சீர்திருத்தங்களையும் வற்புறுத்துகிறது. உலகப் பொருளா தாரத்தில் ஒரு நாட்டின் வீழ்ச்சி பிற நாடுகளையும் பாதிக்கும். இதை ‘Ripple effect’ என்பர். குட்டையில் கல் வீசினால் எழும் வட்ட அலைகள் பாதிப்பு என்பர். எனவே தான் இவ்வங்கிகள் இவ்வாறு செயல்படுகின்றன. உலக வங்கி சுமார் 7000 வல்லுநர்களையும் உலகெங்கும் மொத்தம் 40 கிளை அலுவலகங் களையும் கொண்டுள்ளது. கடன் வழங்கியவுடன் அந்நாட்டைக் கண்காணிக்க ஒரு கிளையை அது தொடங்கி விடும்! 25. (i) முழுமையும் ஆங்கில மொழியில் செயற்படும் 53 நாடுகளின் கூட்டமைப்பு பொது நல வாய நாடுகள் அமைப்பு (Commonwealth of Nations) ஆகும். பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தின் முந்தைய காலனி நாடுகள் விடுதலை பெற்றபின் இவ்வமைப்பை ஏற்படுத்தியுள்ளன. உறுப்பு நாடுகள் உலகின் எல்லாக் கண்டங்களிலும் உள்ளன. இவை அனைத்தின் மொத்தப் பரப்பளவு 3 கோடி சதுர கி. Û., (1.16 கோடி சதுரமைல்.) உலக நாடுகளின் மொத்தப் பரப்பளவின் இது கால் பங்காகும். மொத்த மக்கள் தொகை 224 கோடி [cyf மக்கள் தொகையில் மூன்றில் ஒரு g§F] (ii) முன்பு பிரிட்டன் ஆண்டு வந்த பர்மா, ஏடன், ஆகிய நாடுகள் இந்த அமைப்பில் இணைய மறுத்து விட்டன. கம்பியா (Gambia) என்ற ஆப்பிரிக்க நாடு 40 ஆண்டுகள் இணைந்திருந்து அண்மையில் வெளியேறிவிட்டது. பிரிட்டிஷ் பேரரசோடு தொடர்பில்லாத மொசாம்பிக், ருவான்டா ஆகிய இரு ஆப்பிரிக்க நாடுகள் உறுப்புரிமை பெற்றுள்ளன. இராணுவ ஆட்சி ஏற்பட்ட பிஜித் தீவு நிரந்தரமாக இவ்வமைப்பில் இருந்து வெளியேற்றப் பட்டுள்ளது. (ஜெனரல் முஷாரப் ஆட்சியைக் கைப்பற்றிய போது பாகிஸ்தானும் வெளியேற்றப்பட்டது. பிறகு தேர்தல் நடந்து, மக்கள் ஆட்சி ஏற்பட்ட பின் மீண்டும் சேர்க்கப்பட்டது.) (iii) முள்ளி வாய்க்கால் இனப்படுகொலைகளைத் தொடர்ந்து இலங்கையை இவ்வமைப்பில் இருந்து வெளியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய நட்பு நாடுகள் அம்முயற்சியைத் தடுத்து நிறுத்திவிட்டன. (iv) பொது நலவாய நாடுகள் அமைப்பில் மிக அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடு இந்தியா (120 கோடி). மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்டது துவாலு (Tuvalu) - வெறும் 10,000 பேர். வேறு சில முக்கிய நாடுகள் பற்றிய விவரங்கள் வருமாறு:- fdlh 100 y£r« rJu ».Û., (39 லட்சம் சதுர மைல்) ஆஸ்திரேலியா 76 ,, (29 ,, ) இந்தியா 33 ,, (13 ,, ) இந்த அமைப்பின் தலைமையகம் இலண்டனில் உள்ளது, செயலாளர் நாயகம் ஒருவர் தலைமையில் இயங்குகிறது. இவற்றிடையே ஒற்றுமையும் கூட்டுறவும் மூன்று வழிகளில் பேணப்படுகிறது: 1. அமைப்பின் சாசனம் (Charter) 2. நான்கு வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் 3. CHOGM (Commonwealth Heads Of Government Meeting) எனப்படும் இந்நாடுகளின் தலைவர்கள் கூட்டம் இரு ஆண்டிற்கு ஒரு முறை நடக்கும். இயல்-3 I.eh., உறுப்பு நாடுகளின் வரலாறு, அவற்றிடையே இன்றுள்ள குழுக்கள், பிரதிநிதித்துவம் இல்லாத மக்களுக்கான பாதுகாப்பு அமைப்புக்கள்; முதலிய செய்திகள் 1. மனிதனின் படைப்புகளில் சிகரம் மொழி. மொழி அடிப்படையில் தான் ஒரு தேசிய இனம் உருவாகிறது. மரபின் அடிப்படையிலோ, மத அடிப்படையிலோ, தேசிய இனம் உருவாக முடியாது. திராவிடம் என்பது ஒரு மரபினம், அதைத் தேசிய இனத்திற்கான அடிப்படையாகக் கொள்ள முடியாது. தமிழால் உருவான தமிழினம் ஒரு உண்மையான தேசிய இனம். உலக நாடுகள் பற்றிய எந்தவகை ஆய்விலும் மொழியைத் தவிர்க்க இயலாது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் மொழி அடிப்படையில் உருவாகியதை அறியமுடியும். அதே சமயத்தில் ஆசிய - பசிபிக் மண்டலத்தில் மொழி முரண்பாடுகள் இருப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். 2. (i) இன்று ஐ.நா. வில் 193 உறுப்பு நாடுகள் இருக்கின்றன. இன்று புவியியல் மற்றும் பண்பாட்டு அடிப்படையில் ஐந்து மண்டலக் குழுக்களாக அவை உள்ளன. இந்தக் குழுக்கள் வாக்களிப்பின் போது ஒன்றிணைந்து செயற்படுவதற்கும் பேரம் பேசும் பலத்திற்கு மாகவே தோன்றியுள்ளன. (ii) குழு உருவாக்க முரண்பாடுகள் பல, கண்ணை உறுத்தும் வகையில் வியப்பானவை: (அ) மேற்கு ஐரோப்பிய நாடுகளும் பிறவும் (Western European and others) என்ற குழுவில் கனடா, ஆஸ்திரேலியா, இஸ்ரேயில் ஆகிய நாடுகள் உள்ளன. (ஆ) கனடா வட அமெரிக்க நாடு. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இரண்டும் ஆசிய - பசிபிக் பிராந்திய நாடுகள். இஸ்ரேயில் மேற்கு ஆசிய நாடு தான் என்றாலும் ஆசியக் குழுவுடன் அது இருக்க முடியாமல் இருக்கிறது. அதற்குக் காரணம், ஆசியக் குழு நாடுகளில் பெரும் பாலாவை முஸ்லிம் நாடுகள். அவைதம் குழுவில் இஸ்ரேயில் இருப்பதை விரும்பவில்லை. ஆகவே இஸ்ரேயில் மேற்கு ஐரோப்பியக் குழுவில் சேர்ந்துள்ளது. (இ) (பசிபிக் குழுவுடன் சேர வேண்டிய) தென் பசிபிக் கடல் பகுதி நாடான கிரிபாட்டி (Kiribati) என்ற மிகச்சிறு தீவு நாடு எந்தக் குழுவுடனும் சேராமல் தனித்து நிற்கிறது. காரணம் தெரியவில்லை. ஐக்கிய அமெரிக்காவும் (United States of America - USA) ஒரு குழுவுடனும் சேராமல் நின்றாலும் வாக்களிப்பு, பேரம் பேசுதல் போன்றவற்றில் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் பிறவும் என்ற குழுவுடன் இணைந்து செயற்படுகிறது. (ஈ) ஆசிய - ஐரோப்பிய இரண்டு கண்டங்களிலும் நிலப்பரப்புள்ளது துருக்கி நாடு. அது ஐரோப்பியக் குழு, ஆசியக் குழு ஆகிய இரண்டுடன் முழு அளவில் இணைந்து செயற்படுகிறது. (iii) ஐ.நா பொது அவைத் தீர்மானம் 67/19 இன் படி பாலஸ்தீனமும் வத்திக்கானும் பார்வையாளர் நாடுகளாக (Observer States) அனுமதிக்கப் பட்டுள்ளன. (iv) மேற்கூறிய குழுக்களின் (groups) பட்டியல் வருமாறு 1. ஆப்பிரிக்கக் குழு (African) 54 2. ஆசிய - பசிபிக் குழு (Asia - Pacific) 53 3. கிழக்கு ஐரோப்பியக்குழு (Eastern European) 53 4. இலத்தீன் - அமெரிக்கன், கரிபியன் குழு 33 (Latin American and Caribbean) சுருக்கப்பெயர் GRULAC. 5. மேற்கு ஐரோப்பிய நாடுகளும் பிறவும் அடங்கிய குழு (Western European and Others) சுருக்கப் பெயர் வியாக் (WEO) நாடுகள் 29 6. ஒரு குழுவுடனும் சேராத நாடு கிரிபாட்டி (Kiribati) 1 193 ஆபிரிக்கக் குழு நாடுகள் 54 1. அல்ஜீரியா (Algeria) 2. அங்கோலா (Angola) 3. அல்ஜீரியா (Benin) 4. பாட்ஸ்வானா (Botswana) 5. பார்க்கின்பாசோ (Burkina Faso) 6. புருண்டி (Burundi) 7. காமரூன் (Cameroon) 8. nf¥nt®nl(Cape Verde) 9. சென்ட்ரல் ஆபிரிக்கக் குடியரசு (Central African Republic) 10. சாட் (Chad) 11. கொமொரொஸ் (Comoros) 12. காங்கோ குடியரசு (Republic of Congo) 13. கொட்டே டீ ஐவோர் (Cote d Ivoire) 14. காங்கோ ஜனநாயக் குடியரசு (Congo Democratic Republic) 15. டிஜிபுதி (Djibuti) 16. எகிப்து (Egypt) 17. ஈக்குவடோரியல் கினி (Equatorial Guinea) 18. எரித்ரியா (Eritrea) 19. எதியோப்பியா (Ethiopia) 20. கபொன் (Gabon) 21. கம்பியா (Gambia) 22. கானா (Ghana) 23. கினியா (Guinea) 24. கினியா பிசொவ் (Guinea - Bissau) 25. கென்யா (Kenya) 26. bybrhnjh(Lesotho) 27. லைபீரியா (Liberia) 28. லிபியா (Libya) 29. மடகாஸ்கர் (Madagascar) 30. மாலாவி (Malawi) 31. மாலி (Mali) 32. மாரிதானியா (Mauritania) 33. மாரிசியல் (Mauritius) 34. மொசாம்பிக் (Morocco) 35. மொசாம்பிக் (Mozambique) 36. நமீபியா (Namibia) 37. நைஜர் (Niger) 38. நைஜுரியா (Nigeria) 39. ருவான்டா (Rwanda) 40. சவோதோம் & ரின்சிப்பே (Sao Tome and Rincipe) 41. செனெகல் (Senegal) 42. brõš°(Seychelles) 43. சியராலியோன் (Sierra Leone) 44. சோமாலியா (Somalia) 45. தென் ஆப்பிரிக்கா (South Africa) 46. தென் சூடான் (South Sudan) 47. சூடான் (Sudan) 48. சுவாசிலாந்து (Swaziland) 49. தோகோ (Togo) 50. டியூனீசீயா (Tunisia) 51. உகாண்டா (Uganda) 52. தான்சானியா (Tanzania) 53. சாம்பியா (Zambia) 54. சிம்பாப்வே (Zimbabwe) ஆசியா - பசிபிக் குழு உறுப்பு நாடுகள் – 53 1. ஆப்கானிதான் (Afghanistan) 2. பஹ்ரேயின் (Bahrain) 3. வங்காள தேசம் (Bangladesh) 4. பூட்டான் (Bhutan) 5. புரூணை - தாருசலாம் (Brunei - Darusassalam) 6. கம்போடியா (Cambodia) 7. சீனா (China) 8. சைப்பிர (Cyprus) 9. கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு (Democratic Peoples Republic Of Korea) 10. பிஜி (Fiji) 11. இந்தியா (India) 12. இந்தோனேசியா (Indonesia) 13. ஈரான் (Iran) 14. ஈராக் (Iraq) 15. ஜப்பான் (Japan) 16. ஜோர்தான் (Jordan) 17. கசக்தான் (Kazakhstan) 18. குவெய்த் (Kuwait) 19. கிர்கிதான் (Kyrgyzstan) 20. லாவோ (Laos) 21. லெபனோன் (Lebanon) 22. மலேசியா (Malaysia) 23. மாலத்தீவுகள் (Maldives) 24. மார்ஷல் தீவுகள் (Marshall Islands) 25. மைக்ரோனேசியா இணைந்த நாடுகள் (Federated States of Micronesia) 26. மங்கோலியா (Mongolia) 27. மியான்மார் (Myanmar) 28. நவுரு (Nauru) 29. நேபாளம் (Nepal) 30. ஓமான் (Oman) 31. பப்புவா - நியூகினி (Papua - New Guinea) 32. பிலிப்பைன் (Phillipines) 33. கட்டார் (Qatar) 34. கொரியக் குடியரசு (Republic of Korea) 35. சமோவா (Samoa) 36. சவுதி அரேபியா (Saudi Arabia) 37. சிங்கப்பூர் (Singapore) 38. சாலமன் தீவுகள் (Solomon Islands) 39. சிறீலங்கா (Srilanka) 40. சிரியா (Syria) 41. தஜிக்கிதான் (Tajikistan) 42. தாய்லாந்து (Thailand) 43. திமோர் - லெதே (Timor - Leste) 44. தொங்கா (Tonga) 45. துர்க்மெனிதான் (Turkmenistan) 46. துவாலு (Tuvalu) 47. ஐக்கிய அரபு எமிரேட் (United Arab Emirates) 48. உபெக்கிதான் (Uzbekistan) 49. வானுவட்டு (Vanuatu) 50. வியற்நாம் (Vietnam) 51. யேமென் (Yemen) 52. பாக்கிதான் (Pakistan) 53. பலவ் (Palau) கிழக்கு ஐரோப்பியக் குழு நாடுகள் - 23 1. அல்போனியா (Albania) 2. ஆர்மீனியா (Armenia) 3. அசர்பைஜான் (Azerbaijan) 4. பெலார (Belarus) 5. பானியா மற்றும் ஹெர்சகோவினா (Bosnia - Herzgovina) 6. பல்கேரியா (Bulgaria) 7. குரோசியா (Croatia) 8. செக் குடியரசு (Czech Republic) 9. எதோனியா (Estonia) 10. ஜார்ஜியா (Georgia) 11. ஹங்கேரி (Hungary) 12. லட்வியா (Latvia) 13. லிதுவேனியா (Lithuania) 14. மாசிடோனியா குடியரசு (Republic of Macedonia) 15. மொன்டெநெகிரோ (Montenegro) 16. மால்டோவா (Moldovia) 17. போலந்து (Poland) 18. ருமேனியா (Romania) 19. ரஷ்யா (Russia) 20. செர்பியா (Serbia) 21. ஸ்லோவாக்கியா (Slovakia) 22. ஸ்லோவேனியா (Slovenia) 23. உக்ரையின் (Ukraine) இலத்தீன் அமெரிக்கா, கரிபியன் குழு நாடுகள் - 33 1. அன்டிகுவா மற்றும் பார்புடா (Antigua and Barbuda) 2. ஆர்ஜென்டைனா (Argentina ) 3. பகாமா (Bahamas) 4. பார்படோ (Barbados) 5. பேலி (Belize) 6. பிரேசில் (Brazil) 7. சிலி (Chile) 8. கொலம்பியா (Columbia) 9. கொடரிக்கா (Costarica) 10. குயூபா (Cuba) 11. டொமினிக்கா (Dominica) 12. டாமினிக்கன் குடியரசு (Dominican Republic) 13. ஈக்குவடார் (Ecuador) 14. எல்சல்வடார் (El Salvador) 15. கிரெனடா (Grenada) 16. குவாதமாலா (Guatemala) 17. குயானா (Guyana) 18. ஹெயிட்டி (Haiti) 19. ஹான்டூரா (Honduras) 20. ஜமாய்க்கா (Jamaica) 21. மெக்சிக்கோ (Mexico) 22. நிகராகுவா (Nicaragua) 23. பனாமா (Panama) 24. பராகுவே (Paraguay) 25. பெரு (Peru) 26. செயின்ட் கிட் (Saint Kitts and Nevia) 27. செயின்ட் லூசியா (Saint Lucia) 28. செயின்ட் வின்சென்ற் கிரெனடைன் (Saint Vincent and Grenadines) 29. சுரிநாம் (Surinam) 30. டிரினிடாட் டொபாகோ (Trinidad Tobago) 31. உருகுவே (Uruguay) 32. வெனிசுவெலா (Venezuela) 33. பொலிவியா (Boliva) மேற்கு ஐரோப்பிய நாடுகளும் பிறவும் குழு நாடுகள் - 29 1. அன்டோரா (Andorra) 2. ஆதிரியா (Austria) 3. ஆதிரேலியா (Australia) 4. பெல்ஜியம் (Belgium) 5. கனடா (Canada) 6. டென்மார்க் (Denmark) 7. பின்லாந்து (Finland) 8. பிரான்சு (France) 9. ஜெர்மனி (Germany) 10. கிரீ (Greece) 11. ஐலாந்து (Iceland) 12. அயர்லாந்து (Ireland) 13. இரேல் (Israel) 14. இத்தாலி (Italy) 16. லுக்டென்டைன் (Lichtenstein) 16. லுக்செம்பூர்க் (Luxembourg) 17. மால்தா (Malta) 18. மொநாகோ (Monaco) 19. நெதர்லாந்து (Netherlands) 20. நியூசீலாந்து (New zealand) 21. நார்வே (Norway) 22. போர்த்துக்கல் (Portugal) 23. சான் மாரினோ (San Marino) 24. பெயின் (Spain) 25. சுவீடன் (Sweden) 26. சுவிட்சர்லாந்து (Switzerland) 27. துருக்கி (Turkey) 28. ஐக்கிய இராச்சியம் (United Kingdom) 29. ஐக்கிய அமெரிக்கா (United States of America) 3. (i) I.eh., உலக நாடுகளை உள்ளடக்கிய அனைத்துலக அமைப்பு. ஐரோப்பிய ஒன்றியம் (European Union) அதனுடைய பெயருக்குப் பொருத்தமான விதத்தில் ஐரோப்பிய நாடுகள் இணைந்த அமைப்பு. தன்னாட்சி பெற்ற 28 ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பாக ஐரோப்பிய ஒன்றியம் விளங்குகிறது. அரசியல், பொருளாதர, சமூக நலனை முன்னெடுப்பதற்காக (to enhance Political, Economic and Social welfare) ஐரோப்பிய ஒன்றியம் 1993 நவம்பர் 01 ஆம் நாள் நிறுவப்பட்டது. (ii) யூரோ (Euro) என்று பெயரிடப்பட்ட பொது நாணயம் 1999 சனவரி 1 இல் அறிமுகம் செய்யப்பட்டு 2002 சனவரி 1 இல் பயன்பாட்டுக்கு வந்து இன்றும் தொடர்கின்றது. (28 உறுப்பு நாடுகளில் 18 மட்டுமே யூரோ நாணயத்தை ஏற்றுள்ளன. பிற 10 நாடுகளும் தத்தமது சொந்த நாணயத்தையே பயன்படுத்துகின்றன.) ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் பட்டியல் - 28 1. ஆஸ்ரியா 2. பெல்ஜியம் 3. பல்கேரியா 4. குரோசியா 5. சைப்பிர தீவில் கிரீஸ் நாட்டின் ஆட்சிக்குப்பட்ட பகுதி 6. செக் குடியரசு 7. டென்மார்க் 8. எதோனியா 9. பின்லாந்து 10. பிரான்சு 11. ஜெர்மனி 12. கிரீஸ் 13. ஹங்கேரி 14. அயர்லாந்து 15. இத்தாலி 16. லத்வியா 17. லிதுவேனியா 18. லக்சம்பர்க் 19. மால்டா 20. நெதர்லாந்து 21. போலந்து 22. போர்த்துக்கல் 22. ரோமானியா 23. சுலோவாக்கியா 24. சுலோவேனியா 25. பெயின் 27. சுவீடன் 28. ஐக்கிய இராச்சியம் (United Kingdom) (iii) முதன் முதலில் 1958 ஆம் ஆண்டு பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்சு, இத்தாலி, லக்ஸ்செம்பர்க், நெதர்லாந்து, ஆகிய ஆறு நாடுகள் பொருளாதார ஒத்துமைப்பிற்காக இந்த அமைப்பை ஆரம்பித்தன. கடந்த 50 ஆண்டுகளில் கிட்டத்திட்ட ஐரோப்பா முழுவதையும் உள்ளடக்கும் விதத்தில் அது வளர்ந்துள்ளது. உலகின் முன்னோடி அமைப்பாக ஐரோப்பிய ஒன்றியம் இடம் பெறுகிறது. 4. (i) புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் குடியேறிய நாடுகள் பல, ஐரோப்பிய ஒன்றியக் கூட்டமைப்பில் காணப்படுகின்றன. தமிழர்களின் அண்மைக் கால விடுதலை வரலாற்றோடு தொடர்புடைய நார்வே, சுவிட்சர்லாந்து ஆகிய இரு நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையவில்லை. ஸ்கான்டிநேவிய நாடுகள் (Scandinavian countries) நார்ட்டிக் (Nordic) நாடுகள் எனப்படும் நார்வே, சுவீடன், டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து ஆகிய ஐந்தும் ஈழத்தமிழர் நடத்திய விடுதலைப் போருடன் தொடர்புடையவை. நார்வே, ஐஸ்லாந்து ஆகியன ஐரோப்பிய ஒன்றியத்தில் சேராதவை. ஏனைய மூன்றும் சேர்ந்துள்ளவை. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையில் ஏற்பட்ட புரிந்துணர்வு உடன் படிக்கையை (Memorandum of understanding) 2002 ஆண்டு பெப்ரவரி 22 ஆம் நாள் தோற்றுவித்த நாடு நார்வே. நார்வே இரு பகுதிக்கும் இடையிலான இடைநடுவராகவும் (Mediator) செயற் பட்டது. அந்த உடன்படிக்கை மூலம் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை (Ceasefire agreement) கண்காணிக்கும் பொறுப்பை நார்வே உட்பட ஏனைய ஸ்காண்டி நேவிய நாடுகள் ஏற்றுக் கொண்டன. இந்த ஐந்து நாட்டுச் சார்பாளர்களும் சிறிலங்கா படை ‘Srilanka Millitary Mission’ என்று அழைக்கப்பட்டனர். (ii) ஸ்காண்டிநேவிய நாடுகளின் கண்காணிப்புப் பணி பெப்ரவரி 2002 முதல் மே 2007 வரை நீடித்தது. அதற்குப் பிறகு அவர்கள் விலகி விட்டார்கள். 2002 ஆம் ஆண்டு போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையில் ஆறு சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. செப்டம்பர் 2002, அக்டோபர் 2002, ஜனவரி 2003 ஆகிய நாள்களில் தாய்லாந்திலும் டிசம்பர் 2002 நார்வே தலைநகர் ஆஸ்லோவிலும், பெப்ரவரி 2003 ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள நார்வே தூதரகத்திலும், மார்ச்சு 2003 ஐப்பானிலும் பேச்சுகள் நடைபெற்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அக்டோபர் 2006 இல் சுவிட்சர்லாந்து நாட்டு ஜெனிவாவில் பேச்சுகள் இருதடவை நடந்து தோல்வியில் முடிந்தன. டிசம்பர் 2002 ஆஸ்லோ பேச்சுகளின் போது இலங்கை இனப் பிரச்சினைக்கு சமஷ்டித் தீர்வைப் பரிசீலிப்பதற்குத் தயாராக இருப்பதாகப் புலிகள் அறிவித்தனர். இது ஆஸ்லோ பிரகடனம் என்று (Oslo Declaration) என்று குறிப்பிடப்படுகிறது. 5. (i) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக (Terrorist organisation) ஐரோப்பிய ஒன்றியம் 2006 மே 19ஆம் நாள் பட்டியலிட்டது. இதன் காரணமாக ஐரோப்பிய நாடுகளிலுள்ள புலிகளுக்குச் சொந்தமான நிதி ஆதாரங்களும் பிற சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன. இன்று வரை அவை விடுக்கப்படவில்லை. (ii) பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்த்த ஐரோப்பிய ஒன்றியம் பயன்படுத்திய ஆதாரங்களை வழக்காடுநர் சார்பான வழக்கறிஞர் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தபோது நீதிபதிகள் கடும் அதிர்ச்சி தெரிவித்தனர். இந்தியா செயல்படுத்தி வந்த பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான சட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் சட்ட முன்னுதாரணமாகப் (precedent) பயன்படுத்தியுள்ளது. அந்தச் சட்டத்தைச் செயற்படுத்தும் போது குற்றஞ் சாட்டப்பட்டவாகளுக்கு இந்திய நீதிமன்றங்கள் நியாயமான தீர்வை வழங்கினவா என்பதை ஐரோப்பிய ஒன்றியம் உறுதிப்படுத்திக் கொள்ளத் தவறியுள்ளது. மேலும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை உத்தரவு ஆதாரங்களை ஐரோப்பிய ஒன்றியம் விக்கிபீடியா (Wikipedia) என்ற இணையதளத்தில் இருந்து பெற்றுள்ளது, இந்த இணையத்தின் பதிவுகள் ஒரு பக்கச் (சீரீலங்க அரசு) சார்பாகவும் நடுநிலை அற்றனவாகவும் உள்ளன. (iii) மேலும் ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய போர்க் காலத்திலும் அமைதி உடன்படிக்கைக் காலத்திலும் ஐக்கிய இராச்சிய (UK) அரசு பெருமளவு இராணுவ ஆயுதத் தளவாடங்களை 2009 ஆம் ஆண்டு வரை விற்பனை செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிடும்படி ஐக்கிய இராச்சிய அரசு (UK) ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது கடும் அழுத்தம் தந்தது. நீதிமன்ற விசாரணையின் போது பயங்கரவாதப் பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகளை நீக்கக் கூடாது என்று ஐக்கிய இராச்சிய அரசு (UK) தரப்பு வாதிட்டது. நெதர்லாந்து அரசும் அதனோடு கூட்டுச் சேர்ந்து தடை நீக்கத்தை எதிர்த்தது. (iv) 2009 nk - Niy khj§fËš jÄÊd¥ gLbfhiy t‹Å k©Âš elªj nghJ I.eh., பாதுகாப்புச் சபை அது பற்றி வாதிடக் கூடாது என்று ஐ.நா.வில் இருந்த ஐக்கிய இராச்சியப் (UK) பிரதிநிதி முட்டுக்கட்டை போட்டுத் தடை செய்தது பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. (v) பின்னர் 2014 பெப்ரவரி 26 ஆம் நாள் விசாரணைக்கு எடுக்கப்பட்ட இந்த வழக்குத் தீர்ப்பு அந்த நாளில் இருந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு வெளியிடப்படும் என்று நீதிமன்றப் பதிவாளர் தெரிவிக்கிறார். பயங்கரவாதப் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகளின் பெயர் நீக்கப்படுவது உறுதி என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 6. (i) ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடான நெதர்லாந்தின் நிர்வாகத் தலைநகரான ஹேக்நகரில் (The Hague) பிரதி நிதித்துவப் படாத நாடுகளும் மக்கள் அமைப்புக்களும் (Unrepresented Nations and Peoples Organisation) என்ற அமைப்பு இயங்குகிறது. சுருக்கப் பெயர் அன்போ (UNPO) ஹேக் நகர் அமைதி அரண்மனையில் (Peace Place) இந்த அமைப்பு 1991 இல் நிறுவப்பட்டது. அதில் உலகின் 10 கோடி மக்களின் சார்பாளர்களான அமைப்புகள் 50 வரை இணைந்துள்ளன. அவை யாவும் தன்னுரிமைக் கோட்பாட்டின் (Self Determination) அடிப்படையில் உரிமைக் கோரிக்கை வைக்கின்றன. (ii) அன்போவில் இணைவதற்குச் சில நிபந்தனைகள் உள்ளன. Kjyhtjhf I.eh., பன்னாட்டு நிறுவனங்கள் முதலியவற்றில் இணைந்திருக்கக்கூடாது, இரண்டாவதாக அன்போ சாசனத்தில் குறிப்பிட்ட பின்வரும் ஐந்து கோட்பாடுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். 1. எந்த இலக்கை அடைவதற்கும் உறுப்பினர் நாடுகள் வன்முறையில் ஈடுபடக்கூடாது. 2. மனித உரிமைகளைப் பேண வேண்டும். 3. சுற்றுச் சுழல் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். 4. ஜனநாயக முறையில்தான் எந்த உரிமைப் போரையும் நடத்த வேண்டும். 5. சமாதானச்சக வாழ்வும் பிறர் உரிமைகளுக்கு மதிப்புக் கொடுக்கும் போக்கும் கட்டுப்பாடும் இருத்தல் வேண்டும். (iii) அன்போவில் ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகள், உரிமை மறுக்கப்பட்ட சிறுபான்மை மக்கள், பாதிக்கப்பட்ட பழங்குடி மக்கள் (tribes) முதலியோர் உறுப்பினர் ஆவர். உறுப்புரிமை வகித்த சில அமைப்புகள் தன்னாட்சியும் பெற்றுள்ளன. கிழக்கு திமோர் (Timor Leste), கொசோவோ உதாரணங்கள். அன்போ உறுப்பு அமைப்புகளின் பட்டியல் வருமாறு: 1. அப்காசியா (Abkhazia) 2. ஆதிரேலியப் பழங்குடி மக்கள் (Aboriginals) 3. சுமத்திரா தீவின் ஆச்சே பகுதி (Aceh of Sumatra) 4. மாசிடோனியாவின் அல்பேனியர்கள் (Albanians of Macedonia) 5. அசீரியா - ஈராக் (Assyrian - Iraq) 6. பாஷ்கர் - துருக்கிதான் (Bashkirs - Turkistan) 7. ருவான்டா நாட்டின் பாட்வா பகுதி (Batwa of Rwanda) 8. பூகென்வில் (Bougainville) தீவு 9. பர்யாட்டியா (Buryatiya) 10. கபின்டா (Cabinda) 11. ரஷ்யாவின் செச்சென்யா (Chechnya of Russia) 12. மியன்மாரின் சின் மக்கள் (Myanmar: Chin people) 13. வங்காள தேச, சித்தகாங் மலைவாழ் மக்கள் (The hill people of Chittagong, Bangladesh) 14. சுவரஷ் மக்கள் (Chuvash people) 15. கிர்கிசியா மக்கள் (Circassia) 16. பிலிப்ன் கார்டிலெரா (Phillipines-Cordillera) 17. உக்ரைன்: கிரிமியா (Ukrain: Crimea) 18. இந்தோனேசியா: கிழக்குத் திமோர் (Indonesia: Timor Leste) 19. கிழக்குத் துருக்கிதான் (East Turkistan) 20. காகசியா (Cacausia) 21. அல்பேனியக் கிரேக்கர் (Albanian Greeks) 22. ரோமேனியா: ஹங்கேரிய மொழிச்சிறுபான்மையினர் (Romania: the Hungarian minortity) 23. இன்குஷியா (Ingushia) 24. இன்கேரி (Inkeri) 25. ஈராக்-துர்க்கோமான் இனம் (Iraq-Turkoman) 26. ஹாவாய் - கல்குயி மக்கள் (Hawaii - Kalhui) 27. கம்போடியாவின் கிமர் (Cambodia Khmer) 28. கொசோவோ (Kosovo) 29. கொமிக் (Komyk) 30. மியன்மார்: கச்சின் மக்கள் (Myanmar: Kachin) 31. ஈராக்: குர்திதான் (Iraq: Kurdistan) 32. லக்கோட்டா (Lakota) 33. பொலினீசியாவின் மயோரி மக்கள் (Maoris-Polynesia) 34. மப்புச்சி (Mapuchi) 35. மியன்மார் மான் மக்கள் (Myanmar) 36. இந்தியாவின் நாகாலாந்து (India - Nagaland) 37. நக்சல் தேசம் (Nuxal nation) 38. நைஜீரியார் ஒகோனி மக்கள் (Nigeria - Ogoni people ) 39. ருசின் மக்கள் (The Rusyn people) 40. சன்யாக் (Sanyak) 41. மியன்மார் - ஷான் தேசம் (Myanmar-Shan) 42. தென் மொலுக்கால் (South Moluccas) 43. தாய்வான் (Taiwan) 44. தார்தார்தான் (Tatarstan) 45. திபெத்து (Tibet) 46. துவா (Tuva) 47. உமர்சியா (Udmurtia) 48. இந்தோனேசியா - மேற்கு பப்புவா (Indonesia - West papua) 49. கானியா (Scania) 50. சான்சிபார் (Zanzibar) (iv) m‹ngh (UNPO)Éš K‹d® ïUªj M®ÛÅah, y¤Éah, v°njhÅah, #h®Íah ngh‹wit ïiwikbg‰w ehLfsh» I.eh., cW¥òÇikí« bg‰WŸsd, »H¡F¤ ânkhU« ï‹W I.eh., வில் இணைந்துள்ளது. 7. நாடாக அறிந்தேற்கப் பெறாத இனங்கள் (Unrecognised Stateless nations) உலகில் பெரும் எண்ணிக்கையில் இன்னும் காணப்படுகின்றன. இவற்றுள் தமிழினம் முதலிடம் பிடிக்கிறது; காண்க - 1) தமிழினம் 7.70 கோடி முதல் 8 கோடி வரை வாழும் இடம் தமிழகம், தமிழீழம் மற்றும் இவற்றுடன் ஆசிய, ஆப்பிரிக்க, ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகள் பலவற்றில் புலம் பெயர்ந்துள்ள தமிழீழ மக்களும் இதில் அடக்கம். 2) பாகிஸ்தான், சிந்தி மொழி பேசுநர்; 60 இலட்சம். 3) குர்து மக்கள் (Kurdish people) இவர்கள் துருக்கி, ஈராக், ஈரான், ஆர்மீனியா ஆகிய நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும் சிலர் புலம் பெயர்ந்து வாழ்கின்றனர். 4) நைஜீரியா - யொருபா (Yoruba) மக்கள் நைஜீரியா, பெனின், டோகோ ஆகிய நாடுகளில் வாழ்கின்றனர் (35 லட்சம்). 5) நைஜீரியா - இக்போ (Igbo) 30 இலட்சம் மக்கள் பயாபிரா (Biafra) என்ற தனி நாட்டை அடைவதற்காக இக்போ மக்கள் 1960களில் விடுதலைப் போர் நடத்தினார்கள். பல இனங்களையும் மதங்களை யும் ஒன்றிணைத்து நைஜீரியாவை உருவாக்கிய பிரிட்டிஷ் வல்லரசு விடுதலை வழங்கிய பிறகும் எண்ணெய் வளம் மிக்க நைஜீரியா அரசுக்குத் துணையாக இங்கிலாந்து, அமெரிக்க ஆகியவையும் துணைநின்று இக்போ மக்களுக்கு எதிரான கொடிய போர் 1967 - 70 இல் கடந்தது. விமானக் குண்டு வீச்சிலும் போரால் நிகழ்ந்த பசி பட்டினியாலும் 30 லட்சத்துக்கு மேற்பட்ட இக்போ மக்கள் கொன்றொழிக்கப்பட்டனர். தேசிய இனப் பாதுகாப்பு சார்ந்த உலகளாவிய சிந்தனைக்கு இக்போ மக்கள் நடத்திய பயாபிரா விடுதலைப் போர் முக்கிய இடம் பிடிக்கிறது. இந்த இன அழிப்பை உலகில் பல நாடுகள் வசதியாக மறந்து விட்டன. எனினும் மறக்க முடியாதது பயாபிரார் மக்கள் அழிப்பு. நைஜீரியாவில் பணியாற்றிய தமிழீழப் பெண் ஒருத்தி இக்போ இன விடுதலைப் போரில் பங்கெடுத்து வீரமரணம் அடைந்தாள். அவள் ஈகத்தைப் பற்றிய நாட்டுப் பாடல்களை இன்னும் இக்போ மக்கள் பாடுகின்றனர். 6) பாலஸ்தீனிய மக்கள் இறைவனால் சபிக்கப்பட்ட மக்களாக நாடற்று, நாதியற்று, வலுவான தலைமையற்று நாளும் மடிந்து கொண்டு வருகிறார்கள். மேற்கு நாடுகளின் ஆதரவுடன் இவர்களின் தாயகமண் யூதக் குடியேற்றத்தின் மூலம் பறிக்கப்படுகின்றது. ஜோர்தான் நாட்டின் அகதி முகாம்களில் தலைமுறை தலைமுறையாகப் பாலஸ்தீன மக்களின் பெரும் பகுதியினர் வாழ்கின்றனர். இவர்கள் வாழும் பகுதிகள் மேற்குக் கரை (West Bank) காசா (Gaza strip) ஜோர்தான், சிரியா, லெபசினான், இஸ்ரேல் (மொத்த எண்ணிக்கை 1.10 கோடி) 7) (அ) ரோமனி அல்லது ரோமா (Romani/Roma) என்றழைக்கப்படும் நாடோடி மக்கள் இந்திய நாட்டின் வட மாநிலங்களில் இருந்து துருக்கியர் படையெடுப்புக்குப் பின்னர் வட - மேற்குத் திசையில் பெருங் கூட்டமாகச் சென்று 13 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் குடியேறியதாகக் கருதப்படுகிறது. ஆனால் திட்டவட்டமான வரலாற்றுச் சான்றுகள் இன்று இல்லை. (ஒரு காலத்தில் இவர்கள் எகிப்தில் (Egypt) இருந்து ஐரோப்பாவுக்குச் சென்றதாக தவறாக கருதியதால் ஜிப்சிகள் என்று அழைக்கப்பட்டனர்) இப்போது மரபணு ஆய்வுகளும், ஜிப்சிமொழி ஆய்வும் இவர்கள் இந்தியாவிலிருந்து சென்று பரவியிருக்கலாம் என்பதை ஆதரிக்கின்றன. இவர்களுடைய மொழி இந்தி, பஞ்சாபி மொழிகளுக்கு நெருக்கமானது. சில சொற்கள் மார்வாரி மொழியைச் சேர்ந்தவை. இலக்கணத்தில் வங்காள மொழிக் கூறுகளும் உள்ளன. (ஆ) இவர்கள் நாடோடி வாழ்க்கையை விரும்பி ஏற்றுள்ளனர், தங்கள் வரலாறு பற்றிய செய்திகளைப் பதிவு செய்யவில்லை, இவர்கள் எண்ணிக்கையை வரையறுப்பதும் கடினம்; வாய்மொழி வரலாறும் தெளிவாக இல்லை. (இ) இந்தோ - ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பலகிளை மொழிகளைப் பேசும் இந்த மக்கள் பெரும்பாலோர் கிறிஸ்தவத்தையும் சிலர் இசுலாத்தையும் தழுவியுள்ளனர். இந்து மதச் சாயல்கள் இவர்களுடைய மத, சமூக நம்பிக்கைகளில் உள்ளன. இவர்கள் மத்திய ஐரோப்பா, கிழக்கு ஐரோப்பா நாடுகளான பல்கேரியா, மாசிடோனியா, சுலோவாக்கிய, ரோமானியா, செர்பியா, ஹங்கேரி, ரஷ்யா, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ளனர். 19 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு இவர்களுள் சிலர் வட அமெரிக்க, தெற்கு அமெரிக்க நாடுகளிலும் ஆஸ்திரேலியாவிலும் கூடக் குடியேறி யுள்ளனர். இந்த மக்களின் மொத்த எண்ணிக்கை 1.20 கோடி; அமெரிக்காவில் மட்டும் 10 லட்சம் பேர் வாழ்கின்றனர். இவர்களுடைய இனப்பெயர் எப்படித் தோன்றிற்று என்பது பற்றி ஒருமித்த கருத்து இல்லை. (ஈ) இவர்களை மதிப்பிற்குரிய குடிமக்களாக எந்நாடும் ஏற்பதில்லை. குற்றவாளிகள் வேண்டப்படாதவர்கள் என்று தூற்றப் படுகின்றனர். இவர்களுடைய இனப் பெருக்கத்தைத் தடுத்துக் கட்டாயக் கருத்தடையைச் செக் குடியரசு, சுலோவாக்கியா, ஜெர்மனி, நார்வே, சுவீடன், சுவிட்சர்லாந்து, முதலிய நாடுகள் முந்தைய நூற்றாண்டுகளில் மேற்கொண்டன. ஹிட்லரின் உத்தரவுப்படி நாஜிப் படைகள் 1940களில் 65 இலட்சம் nuhkh (Roma) மக்களை இனப் படுகொலை செய்தன. இந்த மக்கள் தங்களுக்குத் தனி நாடு வேண்டும் என்று கேட்பதில்லை, உயிருடன் வாழ விட்டால் போதும் என்பதே அவர்களுடைய கோரிக்கை. (a) ஆஸ்திரேலியப் பழங்குடி (Aboriginals of Australia) மக்களை Aborigines என்று மானுடவியலாளர்கள் வகைப்படுத்துகின்றனர். இலத்தீன் மொழியில் அபாரிஜின்ஸ் என்றால் தொன்மைக்குடி மக்கள் (Original inhabitants) என்று பொருள். ït®fŸ v©Â¡if ».ã., 1770 இல் 10 லட்சம் அல்லது 8 லட்சம் அளவில் இருந்தது. 1778 இல் ஆங்கிலேயர் குடியேற்றப்பட்டனர். அநியாயப் படுகொலை, கொடிய மதுப்பழக்கம், வெள்ளையர் கொணர்ந்த நோய்கள், சிறு குழந்தைகளைப் பிரித்தல் முதலிய கொடுமைகளால் இப் பழங்குடிகள் எண்ணிக்கை விரைவில் 50,000 ஆகக் குறைந்தது விட்டது. இந்த உலகில் இன்று உள்ள அனைத்து மக்களையும் விட மிகப் பழைய பண்பாட்டு ஆதாரங்களைக் கொண்ட மக்கள் இவர்கள் தாம் என்பதைப் பல துறை அறிஞரும் ஏற்றுள்ளனர். (b) கடந்த 50 ஆண்டுகளில் இவர்கள் நிலை சற்றே மேம்பட்டு அண்மையில் (2011) இவர்களுடைய எண்ணிக்கை சுமார் 7 லட்சம் எனத் தெரிகிறது. (முழு மக்கள் தொகையில் 3 சதவீதம்) வெள்ளையர்கள் வரும் முன்னர் ஆஸ்திரேலியக் கண்டம் முழுவதும் இவர்களுக்குச் சொந்தமாக இருந்தது. இன்று மிகச் சிறுபான்மையினரான அவர்கள் 50,000 வருடங்களுக்கு முன் இந்தக் கண்டத்திற்கு வந்திருப்பதாக ஆய்வுகள் முடிவு கட்டியுள்ளன. உலகப் பெருங்கடல்களின் நீர்மட்டம் உயர்ந்தால் அவர்கள் வெளியுலகத் தொடர்பை இழந்தனர். இம் மக்கள் 50,000 ஆண்டுகளுக்கு முன் சென்றிருந்தாலும் 200 வரையான கிளை மொழிகளாகப் பிரிந்து விட்டாலும் அவை அனைத்தும் ஆஸ்திரேலியப் பழங்குடி மூலமொழியின் அடிப்படைக் கூறுகளைப் பெருமளவுக்கு இன்றும் கொண்டுள்ளன. இவர்கள் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறிக் கிழக்கு ஆப்பிரிக்காவையும் தெற்கு இந்தியாவையும் ஒட்டிய ஒடுங்கலான தரைப் பாதை (Continental Shelf, now submerged under the sea) மூலம் இந்தியத் துணைக் கண்டத்தின் தென் பகுதிக்கு வந்திருக்க வேண்டும். அது 75,000 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்திருக்கலாம் மாந்தவியலாளர் கருதுகின்றனர். தென்னிந்தியா வழியாகத் தான் ஆதிரேலியப் பழங்குடி மக்கள் அக்கழி பழங் காலத்தில் ஆஸ்திரேலியா சென்றனர் என்றும் கருதப்படுகிறது. மூல ஆஸ்திரேலியப் பழங்குடியினர் மொழியைத் திராவிட மொழிக்குடும்பத்தோடு மாத்திரமே தொடர்புபடுத்த இயலும் என்பது கால்டுவெல் (1856) R.M.W ஆர். எம். டிபியு. டிக்சன் The Languages of Australia (1980), நாரிஸ், பிரிச்சார்ட் முதலியவர்கள் முடிவாகும். அவர்களுடைய மொழிக்கும் தமிழுக்கும் இடையில் வியத்தகு ஒற்றுமைகள் உள்ளன. ட, ற, ல, ர, ள, போன்றவை சொல் முதலில் வரமுடியாத நிலை, நான்காம் வேற்றுமை உருபு கு வாக இருப்பது, சொல் முதலில் ஒரு மெய் மட்டுமே வர முடியும் முதலிய அடிப்படை ஒற்றுமைக் கூறுகள் பல உள்ளன. ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் மொழிகளும் தமிழும் செந்தமிழ்ச் செல்வி மே 1984 கட்டுரை, பி, இராமநாதன் 2012 நூல் தொல் தமிழியச் சிந்து நாகரிகம். ஆகியவற்றைக் காண்க. சொற்கள், சொற்றொடர் அமைப்பு, ஒலியன் அமைப்பு இலக்கணம் முதலிய வற்றில் தமிழுக்கும் ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் மொழிக்கும் இடையிலுள்ள 50,000 - 40,000 ஆண்டுப் பழமை வாய்ந்த ஒற்றுமையின் அடிப்படையில் தமிழர் மாந்த இனத்தின் மூலக் குடிக்கு மிக நெருங்கியவர்கள், தமிழ்மொழி மாந்தனின் முதல் தாய்மொழிக்கு (Mother tongue of man) மிகவும் நெருங்கியது என்ற கோட்பாட்டை இன்றை மேனாட்டு மொழியியலறிஞர் பலரும் [fhÈ‹ பி. மாசிகா, வாக்லாவ் பிலாசக்; பொம்ஹார்டு மற்றும் கொன்ஸ்; ஜே.எச். கிரீன் பெர்கு; ஸ்தீபன் ஹில்யர் லெவிட்; H.p.A எச்.பி.ஏ. Anfhyh], ஆதரிப்பதாகும். தமிழர்கள் உலகில் இன்றுள்ள வேறெந்த மொழி, பண்பாட்டையும் விட அதிகத் தொன்மை யானதும் இடையீடு இல்லாததுமான மொழிக்கும் பண்பாட்டுக்கும் சொந்தமானவர்கள் என்பதை இன்றைய அறிவியற் புலங்கள் அனைத்தும் ஆதரிக்கின்றன. இயல் - 4 நாடற்ற இனங்களில் மிகப் பெரியது தமிழினம் 1. பண்டைக்காலத் தமிழர் இந்தியாவிலேயே அடைபட்டு இருக்கவில்லை. அவர்கள் கிழக்கே பிலிப்பைன்ஸ் தீவுகள் வரையும், மேற்கே இங்கிலாந்து வரையும் கடல் வழியாகச் சென்று வாணிகம் நடத்தினார்கள். வாணிகத்தின் பொருட்டுச் சென்ற மக்கள் அந்நாடுகளில் குடியேறி அங்குத் தமது பண்பாட்டைப் பரப்பினார்கள். சில நேர்வுகளில் தாம் குடியேறிய நாடுகளுக்குத் தாமே அதிபர்களும் ஆனார்கள் (தமிழர் பண்பாடு - ந.சி. கந்தையா) பழந்தமிழர் பரவிய நாடுகள் - பழ. நெடுமாறன் - 2004. பக் . 23) 2. கி.பி. 1800-1920 காலக்கட்டத்தில் நிகழ்ந்த தற்காலத்தமிழர் பரவல் வேறு விதமாக அமைந்தது. இந்தியா முழுவதும் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்தபொழுது தமிழர்கள் பலர் இங்கிருந்து பிற நாடுகளுக்கு கூலித் தொழிலாளர்களாகக் கொண்டு சென்று குடியேற்றப்பட்டனர். தாயகம் பலமாக இருப்பின் உலகெலாம் பரவியுள்ள தமிழர்கள் பலம் பெறுவர். தேசிய உணர்வு, மொழி உணர்வும் இல்லாமல் விடுதலை உணர்வு தோன்றுவது கடினம். 3. (i) நாடற்றவர் எண்ணிக்கையில் மிகப்பெரிய இனம் என்று தமிழினம் வகைப்படுத்தப்படுகிறது. தமிழனில்லாத நாடுமில்லை, தமிழனுக்கென்று நாடுமில்லை என்பது பொய்யா மொழி. மண் பரப்பில் குறைந்த, மக்கள் தொகையில் குறைந்த சிறிய நாடுகள் கூடத் தன்னாட்சி பெற்று உலக அரங்கில் நிமிர்ந்து நிற்கின்றன. தமிழகமும் தமிழ் ஈழழும் நாதியற்றுச் சரிந்துள்ளன. நமது இனத்திற்கு வாய்த்த தலைவர்கள் நெடுங்காலமாகவே தொலை நோக்கின்றித் தன்னல உந்துதல்களால் பெருந்தவறு இழைத்துள்ளனர். தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் தலைமையில் இளைய தலைமுறையினர் நாடு நிறுவும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். (ii) உலகின் 27 நாடுகளில் தமிழர்கள் வாழ்கின்றனர். சின்னஞ்சிறிய எண்ணிக்கையிலான தமிழர்கள் 60 வரையிலான நாடுகளில் காணப்படுகின்றனர். தமிழ் நாட்டின் மக்கள் தொகை 7.22 கோடி. பாண்டிச்சேரி மக்கள் தொகை 12.44 இலட்சம். தமிழ்நாட்டில் வாழும் தமிழீழ அகதிகள் தொகை மத்திய அரசு வெளியிட்ட கணக்குப்படி 1,02,241 (2014), தமிழ்நாடு, பாண்டிச்சேரி, தெற்கு ஒரிசா, பங்களூரு, கேரளா ஆகிய பகுதிகளில் ஈழத்தமிழ் அகதிகளுக்கான அகதி முகாம்களின் எண்ணிக்கை 132 4. இருநாடுகள் (சிங்கப்பூர், இலங்கை) தமிழ்மொழியைச் சட்டபூர்வ மொழியாகவே ஏற்றுள்ளன. இலங்கையின் அரசாங்க மொழிகள் சிங்களம் மற்றும் தமிழ். சிங்கப்பூரின் அரசாங்க மொழி ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ். 5. கேரளத்தின் 14 மாவட்டங்களில் 35 இலட்சம் தமிழர்கள் வாழ்கின்றனர். அந்தமான் நிக்கோபர் தீவுகளின் தமிழர் எண்ணிக்கை 40,000. ஹரியானா மாநிலத்தின் அரசாங்க மொழிகளில் ஒன்றாக தமிழ் இடம் பெற்றது. 6. (i) இந்திய அரசியல் சட்டத்தின் 8 ஆம் அட்டவணை மொழிகள் 14 என்று முதலிலிருந்தது, பின்னர், படிப்படியாக உயர்ந்து இன்று 22 மொழிகளாக உள்ளன. இந்திய மாநிலங்கள் அரசாங்க மொழியைத் தெரிவு செய்யும் உரிமையை பெற்றுள்ளன. தமிழ்நாடு, பாண்டிச்சேரி ஆகியவை தமிழை அரசாங்க மொழியாகக் கொண்டுள்ளன. (ii) பேச்சு மொழியாக இல்லாவிட்டாலும் சமசுக்கிருத மொழி இந்தியாவின் 22 மொழிகளில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. அது இந்து மொழி என்று சிறப்பிக்கப்படுகிறது. 7. (i) தமிழகத்தின் அரசாங்க மொழிச் சட்டப்படி தமிழாக இருந்த போதிலும் பள்ளி, கல்லூரிகளில் தமிழை மொழிப் பாடமாகக் கூடப் படிக்காமல் ஒரு மாணவன்/ மாணவி எந்த மாநிலத்தை சேர்ந்த வராயினும் படிக்க முடியும்! ஆனால் கேரளம், கன்னடம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில், கண்டிப்பாக அந்தந்த மாநில மொழியைப் படித்தாக வேண்டும். தமிழ் படித்தால் தட்டேந்தணும், புலவர் என்றால் பிச்சை எடுக்கணும் என்பது நிலை! (ii) உலகிலேயே தொல் பழங்காலத்தில் தோன்றிய மூத்த மொழி மாந்தமுதன் மொழிக்கு மிக நெருங்கியது என்ற சிறப்புகளும் தகுதியும் தமிழுக்கு உண்டு. (இது பற்றி முன் இயலில் கண்டோம்) ஆங்கில வரலாற்றாசிரியரும் ஒலிபரப்பாளருமான மைக்கேல் வூட் (Michael Wood) தமிழர்களே இன்று வரை நிலைத்திருக்கும் தொல் பழமை நாகரிகப் பாரம்பரியமுள்ள உலகின் ஒரே இனம். பல இன்னல்களுக்கு மத்தியிலும் அவர்கள் தமது பழைய நம்பிக்கைகள், பண்பாடு, மொழி இலக்கியம் ஆகியவற்றைப் பேணுகின்றனர் என்றார். இந்திய மக்கள் தொகையில் 5. 91 விழுக்காட்டினரும், இலங்கை மக்கள் தொகையில் 15.6 விழுக்காட்டினரும் தமிழர்கள். 8. 1800 - 1920 காலக்கட்டத்தில் தமிழர்களின் உலகளாவிய பரவலுக்குச் சில முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. (i) முதலாவதாக இந்தியாவில் கோழிக் கோட்டில் 1498இல் கால் பதித்த ஐரோப்பியர்கள் தமது ஆளுமைப் புலங்களை ஏற்படுத்தியதோடு, பிறநாடுகளில் தாங்கள் ஏற்படுத்திய கரும்பு, தேயிலை முதலிய தோட்டக் கூலிகளாகப் பெருமளவுக்கு ஏழைத் தமிழர்களைக் கப்பல்களில் ஏற்றிக் கொண்டு சென்றனர். தமிழ்நாட்டின் கிழக்குக் கரையில் கால் ஊன்றிய ஹாலந்து, டென்மார்க், இங்கிலாந்து பிரான்சு நாட்டவர்கள் அப்பகுதிகளைப் பிடித்ததோடு, தமிழ் மக்களைத் தமது ஆசிய, ஆபிரிக்க, கரிபியன், பசிபிக் பிராந்திய காலனிகளுக்குத் தோட்டக் கூலிகளாகக் கப்பல் வழிக் கொண்டு சென்றனர். ஒல்லாந்தர்கள் தமிழ் மக்களைக் தமிழீழத்தில் இருந்தும் தென்னமெரிக்கக் கீழைக்கரைக் காலனிகளான சுரிநாம் (Surinam) கயானா (Guyana) ஆகியவற்றிற்குக் கொண்டு சென்றனர். [jÄHÇ‹ உலகப் பரவலுக்குப் பண்டைக் காலத்தில் வாணிகம் காரணமானது. அண்மை நூற்றாண்டுத் தமிழர் பரவலுக்கு ஐரோப்பியக் குடியேற்ற நாடுகளின் பொருளாதாரக் கொள்ளை நோக்கு அடிப்படைக் காரணமாக mikªjJ.] (ii) இரண்டாவதாக, ஈழத் தமிழர்கள் விடுதலை பெற்ற இலங்கையில் பெரும்பான்மைச் சிங்களவர்களின் இன அழிப்புக் கொடுமைகளில் இருந்து தப்புவதற்காகப் பெரும் எண்ணிக்கையில் மேற்கு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தனர். 9. (ஆபிரிக்க) அடிமை வணிகத்தை இங்கிலாந்து சட்டபூர்வமாக கி.பி. 1834இல் தடை செய்தது. அதற்குப் பிறகு ஆப்பிரிக்க அடிமைகளைப் போன்ற மலிவான கூலித்தொழிலாளர்கள் தேவைப்பட்டனர், அவர்கள் பெரும்பாலும் தமிழர்களாக அமைந்தனர். சட்டத்தை மதிப்பதாக நடித்துக் கொண்டே தமது தேவைகளை நிறைவு செய்வதில் வல்லவர்களான ஐரோப்பியர்கள் கொடுமையான ஒப்பந்தக் கூலி முறையை (Indentured labourers) உருவாக்கினார்கள். இத்தகைய கூலிகளாகச் செத்து மடிந்தவர்கள் பெரும்பாலோர் தென்னாட்டு மக்கள், குறிப்பாக ஏழைத் தமிழர்கள் ஆவர். தமிழரின் உலகப் பரவலின் முதல் கட்டத்தை (ஏறத்தாழ கி.பி. 835லிருந்து) ஆய்வு செய்தவர்கள் கூறுவது இந்துமாக் கடலின் மாரிசியல், ரீயூனியன், தீவுகள் கரிபியன் கடற்பகுதியில் ஐமாய்க்கா, திரினிடாட் - தொபாகோ, தென்னமெரிக்காவின் சுரிநாம், குயானா, தென்னாபிரிக்காவின் டர்பன், நேட்டால், பசிபிக் மாக்கடலில் பிஜித்தீவுகள், நீயூகலிபோர்னியா மலாயா, வடக்கு சுமத்திரா ஆகியவற்றுக்கெல்லாம் தமிழ்நாட்டு ஏழைமக்கள் கூலிகளாகக் கொண்டு செல்லப்பட்டனர். தமிழர்களின் கண்ணீரும் குருதியும் தாம் இரப்பர் தோட்டங்கள், கரும்புத் தோட்டங்கள், நிலக்கரிச் சுரங்கங்கள் ஆகியவற்றை நிறுவி ஐரோப்பியர்கள் வளம் செழிக்க உதவின. [Tamil Latin co website] 10. (i) தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் 1860 - 1917 கால அளவில் ஆங்கிலேயர்களால் தமிழகத்தில் இருந்து கூலிகள் ஆகச் சென்றனர். இன்று தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர் எண்ணிக்கை 13 இலட்சம். (தமிழர் ஏறத்தாழ 6 லட்சம் உட்பட) இந்திய விடுதலை வரலாற்றிற்கும் தென்னாப்பிரிக்கத் தமிழர்களுக்கும் நெருக்கமான தொடர்புண்டு காந்தி அடிகள் 21 வருடங்கள் (1893 - 1914) தென்னாப்பிரிக்காவில் தங்கியிருந்து அங்கு நடத்திய அறவழி உரிமைப் போராட்டங்களுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் தமிழர்களே. காந்தி அடிகள் மூன்றாவது முறையாகச் சிறையில் இருந்து விடுதலை பெற்றுத் திரும்பிய பிறகு 1914 சூலை 15 அன்று பேசியது வருமாறு:- பிற இந்திய இனத்தவர்களை விடப் போராட்டத்திற்கு அதிக ஆதரவு கொடுத்தவர்கள் தமிழர்களே. அமைதி வழியில் நடத்திய எனது போராட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் உயிரிழந்தவர்கள் தமிழர்களே, எல்லா விதத்திலும் இந்தியப் பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதில் தமிழர்கள் சிறந்து விளங்குகின்றனர் இந்தியன் ஒப்பீனியன் (Indian Opinion) ஆகஸ்து 05, 1914. தென்னாப்பிரிக்கத் தமிழர் தமது போராட்டத்துக்குக் கொடுத்த ஆதரவு காரணமாகக் காந்தியடிகள் தமிழை ஓரளவு எழுதப்படிக்கக் கற்றுக் கொண்டார். (ii) தென்னாப்பிரிக்கத் தமிழர்களில் மிகவும் பிரபலமானவர்கள் இரு பெண்கள் - தில்லையாடி வள்ளியம்மை (1898 - 1914), நவநீதம் பிள்ளை ஆவர். வள்ளியம்மை பற்றிக் காந்தி அடிகள் எனக்கு முதன் முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய பெருமைக்குரியவர் என்று கூறியுள்ளார் (சத்திய சோதனை). வள்ளியம்மை 16 வருட காலமே வாழ்ந்தவர். தந்தை பெயர் முனுசாமி, தாயின் பெயர் மங்களத்தம்மாள், தாயாரின் கிராமம் நாகை மாவட்டம் தில்லையாடியாகும். வள்ளியம்மையும் அவருடைய தாயும் தென் ஆப்பிரிக்க அரசு இந்தியக் கூலிகள் மீது விதித்த அரசுத்தடையை மீறிப் பேரணியில் பங்கு பெற்றவர். வள்ளியம்மை (வயது 15) மூன்று மாதம் சிறையில் அமைக்கப்பட்டு கடும் நோய் வாய்ப்பட்டுச் சிறையிலிருந்து விடுதலையாகிப் பின்னர் சில மாதங்களில் 1914 பெப்ரவரி 22 ஆம் நாள் தனது 16 ஆம் பிறந்த நாளன்று காலமானார். தில்லையாடியில் வள்ளியம்மையின் நினைவாலயமும் சிலையும் காணப்படுகின்றன. அவர் நினைவு அஞ்சல் தலையினை இந்திய அரசு 2008 இல் வெளியிட்டது. (iii) ã¿bjhU òfœó¤j bj‹dh¥ãÇ¡f¤ jÄœ¥bg©k b#ÅthÉYŸs I.eh., மனித உரிமைக் கவுன்சில் தலைவி நவநீதம் பிள்ளை அவர்களைப் பற்றி விவரங்கள் வருமாறு: 1941 செப்டம்பர் 23 ஆம் நாள் பிறந்தவர். இப்போது அவருக்கு வயது 72. பரஞ்சோதி பிள்ளை என்ற வழக்கறிஞரை நவநீதம் பிள்ளை 1965இல் திருமணம் செய்தவர். ஈஸ்வரி, காமினி என்ற இரு பெண்கள் அவருக்கு, நவநீதம் பிள்ளை தமிழ்மொழிக் கல்வி பெறாததால், தமிழில் பேச வராது, ஆயினும் தமிழுணர்வு அதிகம். அவருடைய தந்தை பேருந்து ஒட்டுநராகப் பணி செய்தவர், தாய் எழுதப் படிக்கத் தெரியாத குடும்பத் தலைவி. தென்னாப்பிரிக்க நேட்டால் (Natal) மாநிலத்தில் சட்டம் பயின்று தென் ஆப்பிரிக்க வழக்கறிஞர் ஆகிய முதல் தமிழ்ப் பெண் அவரே. தென்னாப்பிரிக்க உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாகப் பதவி வகித்த முதலாவது வெள்ளையரல்லாத பெண்ணும் அவரே. அமெரிக்காவின் முன்னணிப் பல்கலைக் கழகமான ஹார்வார்டில் (Harvard) முனைவர் பட்டம் பெற்ற முதலாவது தென்னாப்பிரிக்கப் பெண் அவரே. கபி (Gaby) என்று செல்லமாக அழைக்கப்பட்ட அவருடைய கணவர் பரஞ்சோதிப் பிள்ளை வெள்ளையருக்கு எதிரான போராட்டத்தில் நெல்சன் மண்டலாவுடன் ராபின் (Robben) தீவில் சிறை வைக்கப்பட்டார். (பரஞ்சோதிப் பிள்ளை இயற்கை எய்திவிட்டார்) ஜெனிவா மனித உரிமைக் கவுன்சில் தலைமைப் பதவிக்கு வருமுன்னர் நவநீதம் பிள்ளை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாகவும் பதவி வகித்தார். அவருடைய முதலாவது மகள் நியூயார்க் நகரிலும், இரண்டாவது மகள் காமினி தென்னாபிரிக்காவிலும் வசிக்கின்றனர். (iv) தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் அதிகமாக வாழும் நேட்டால் மாகாணத்தில் அரசுக் கல்வி நிலையங்களில் 1991 ஆம் ஆண்டு வரை தமிழ் ஒரு பாடமாகக் கற்பிக்கப்பட்டது. 1991 இல் நிறுத்தப்பட்டது. 2014லிருந்து அரசு கல்வி நிலையங்களில் தமிழ்மொழியை மூன்றாம் மொழியாகப் பயில மட்டுமே முடியும். தமிழுணர்வு அதிகமானாலும் தமிழ் மொழியைப் படிப்போர் எண்ணிக்கை மிகக் குறைவு. தமிழ் இந்து மதத்தின் மொழி என்ற தவறான எண்ணம் தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் நிலவுகிறது; தமிழ்க் கல்வி சோறு போடாது என்றும் எண்ணுகின்றனர். 11. (m) M¥ãÇ¡f¡ f©l¤â‹ bj‹ - »H¡»š 2000 ».Û., தொலைவில் இந்து மாக்கடற் பகுதியில் இருக்கும் மாரிசிய (Mauritius) தீவுக்கூட்டம் தமிழர்களுக்கும் இந்தியர்களுக்கும் மிகவும் முக்கிய மானது. ïj‹ bkh¤j Ãy¥gu¥ò 2040 rJu ».Û., (787 சதுரமைல்) [khÇáaÞ தீவுகளுக்கு 1968 இல் சுதந்திரம் வழங்கும் வரை அத்தீவுகளுடன் இணைந்திருந்த சாகோஸ் தீவுகளைப் (Chgos) பிரிந்த பிரித்தானிய ஒன்றிய அரசு தன்னோடு வைத்துக் கொண்டது. சாகோஸ் தீவுகளின் மிகப்பெரிய தீவான டிகோ கார்சியாவை (Diego Garcia) நீண்ட காலக் குத்தையாக அமெரிக்காவுக்குக் கொடுத்த பிரித்தானிய ஒன்றிய அரசு (United Kingdom அதாவது இங்கிலாந்து) அங்கு வாழ்ந்த குடிமக்களை வெளியேற்றியது. டிகோ கார்சியாவில் அமெரிக்கா தனது மிகப் பெரிய இந்து மாக்கடல் படைத்தளத்தை அமைத்துள்ளது. (ஆ) மாரிசிய தீவுகளை முதலில் போர்த்துக்கீசியர், அடுத்து டச்சுக்காரர் பின்னர் பிரெஞ்சுக்காரர்கள் ஆண்டு வந்தனர். 1767 - 1810 கால அளவில் பிரான்சு நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்த போது காரைக்கால், பாண்டிச்சேரியில் இருந்து தமிழர்கள் அங்கு கூலிகளாகக் கொண்டு செல்லப்பட்டனர். 1810 1921 கால அளவில் 5 இலட்சம் இந்தியத் தொழிலாளர்கள் கரும்புத் தோட்டக் கூலி வேலைக்குச் சென்றனர். மாரிசியசுக்கு அப்படி வந்த தமிழர்களுடைய மரபினர்கள் இன்று நல்ல நிலையில் இருக்கின்றனர். ஏறத்தாழ 100 ஆரம்பப் பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. (இ) மாரிசியஸ் மக்கள் தொகை 2013இல் 12.96 இலட்சம் இதில் 5.83% தமிழர். இந்து மதம் 48.5% கிறிஸ்தவம் 32.7%, இஸ்லாம் 17,3% புத்த மதம் 0.4% என்றவாறு மாரிசியஸ் மக்கள் மதம் அமைந்துள்ளது. இந்து கோயில்களின் எண்ணிக்கை 125; முருகன், விநாயகர், அம்மன் கோவில்கள் மிக முக்கியமானவை. (ஈ) காந்தியடிகள் 1901இல் மாரிசியசுவுக்குச் சென்ற பொழுது தமிழர்களுடைய விடுதலை உணர்வைப் பாராட்டியுள்ளார். தமிழர்கள் எண்ணிக்கையில் குறைந்தாலும் தமிழுணர்வில் ஒப்பற்று விளங்குகின்றனர். மாரிசியஸ் மத்தியவங்கி வெளியிடும் நாணயத்தாள்களில் தமிழ்மொழி இடம் பெறுகிறது. 1977 இல் அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு கருத்தரங்கு மாரிசியஸில் நடந்தது. இரண்டாவது அனைத்துலக முருக வழிபாட்டு மாநாடும் அங்கே நடைபெற்றது. உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் இரண்டாவது மாநாடு 1980 இல் மாரிசியஸில் மகாத்மா காந்தி மண்டபத்தில் நடந்தது. மாரிசியஸ் நாட்டு மகளிர் துறை அமைச்சர் திருமதி ராதாமணி தொடங்கிவைத்தார், பிரதமர் சிவசாக ராம் குலாம் மாநாட்டைத் துவக்கிவைத்துப் பேசினார், இறுதிநாள் மாரிசியஸ் நிதி அமைச்சர் வீராசாமி ரெங்காடு தலைமை வகித்தார். (உ) உலகம் பரவிய தமிழர் ஒன்றிணைப்புக்கான அனைத்துலக மாநாடு 2013 நவம்பர் 10 அன்று மாரிசியஸ் தலைநகரில் நடந்தது. உலகளாவிய தமிழர் மறுமலர்ச்சிக்காகவும் தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் அனைத்துலகத் தமிழர் செயற்குழுவை நிறுவிடத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 12. (i) khÇáa° ÔîfS¡F¤ bj‹nk‰»š 200 ».Û., (120 மைல்) தூரத்தில் பிரான்சு குடியரசின் பகுதியான ரீயூனியன் (Reunion) தீவு இருக்கிறது [ïªâahÉ‹ பகுதியான இலட்சத்தீவுகள், அந்தமான் நிக்கோபார் தீவுகள் மாதிரி ரீயூனியன் பிரான்சு நாட்டின் பகுதியாகும், காலனி mšy.] பிரான்சு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடாகையால் ரியூனியனும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு சிறு பகுதியாக இந்து மாக்கடலில் இருக்கிறது! (ii) ரீயூனியன் தீவை ஐரோப்பியர் கண்டு பிடிக்கும் வரை அங்குப் பூர்வ குடிகள் யாரும் இல்லை. இன்று வாழ்வோர் அனைவரும் குடியேறியவர் தாம். பரப்பளவு 2511 சதுர கீ.மீ., (970 சதுரமைல்) மக்கள் தொகை 2013 இல் 8.41 இலட்சம். இங்கு வெள்ளையர், ஆபிரிக்கக் கறுப்பர், சீனர், இந்தியா, தமிழர் வாழ்கின்றனர். தேசிய மொழி பிரெஞ்சு ஆகும். தமிழர்கள் எண்ணிக்கை 1,20,000 - இங்கு இன்றும் தமிழர்களை மலபார் (Malabar) என்று அழைக்கின்றனர். இத்தமிழர்களைக் கரும்புத் தோட்டக் கூலிகளாகப் பாண்டிச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலிருந்து பிரெஞ்சுகாரர்கள் கொண்டு வந்தனர். இந்து மதமும் தமிழ்மொழியும் இங்கு சிறந்து விளங்குகின்றன. தேசியக்கல்வி நிலையங்களில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. 13. இதே பகுதியில் மடகாஸ்கர் (Madagascar) தீவிற்கு வடகிழக்கில் சீஷெல்ஸ் (Seychelles) தீவுக்கூட்டம் உள்ளது 116 சிறு தீவுகளைக் கொண்டது. நிலப்பரப்பு 456 ச.கீ.மீ., (அ) 176 ச. மைல் ஆகும் இந்த மாக்கடலில் இருப்பினும் இந்நாட்டை ஐ.நாவில் ஆபிரிக்கக் குழுவுடன் சேர்க்கின்றனர். 116 தீவுகளில் 30 தீவுகளில் மட்டுமே மக்கள் (2013 இல் 90000 பேர்) வாழ்கின்றனர். 98% கறுப்பர்கள்; கலப்பினத்தவர்கள் 0.3% இந்தியர்கள் 0.3% சீனர்கள் சிறிய தொகை வெள்ளையர்கள் ஆகியோர் வாழ்கின்றனர். ஆட்சி அதிகாரம் வெள்ளையர்கள் மற்றும் அவர்களுடன் இணைந்தவர்கள் கையில் இருக்கிறது. 1815 இல் இத்தீவுகளின் ஆட்சி பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து ஆங்கிலேயரிடம் மாறியது, ஆங்கிலேயர்கள் இந்தியக் கூலித் தொழிலாளர்களை இங்கு கொண்டு வந்து குடியேற்றினர். பிற்காலத்தில் வணிக நோக்கில் வந்த தமிழர்கள் நல்ல தமிழறிவுடனும் மற்றும் மதப்பற்றுடனும் வாழ்கின்றனர். சீஷெல்ஸ் தமிழர் எண்ணிக்கை 4000 மாத்திரமே, (அவர்களுள் பெரும்பாலோர் தஞ்சை மாவட்டத்தினர்.) 14. (அ) தென்னிந்தியாவுக்கு 1498 இல் வந்த போர்த்துக்கேயர்கள் பின்னர் வந்த டச்சுக்காரர்கள், டென்மார்க் நாட்டவர்கள், பிரெஞ்சுக் காரர்கள், பிரிட்டிஷார் அனைவரும் தத்தம் தோட்டப் பண்ணைகளில் (பெரும்பாலும் கரும்புப் பயிர்) கூலிகளாக வேலை செய்யப் பெரும் எண்ணிக்கையிலான தமிழர்களைக் கரிபீயன் தீவுகளுக்குக் கப்பல் கப்பலாகக் கொண்டு சென்று குடியேற்றினர். கரிபீயன் பகுதி (Caribbean) என்று கூறும் பொழுது கரிபீயன் கடலில் உள்ள மேற்கு இந்திய தீவுகளையும், தென்னமெரிக்காவின் கிழக்குக் கரையோரம் உள்ள கயானா நாடு முதலியவற்றையும் சேர்த்துச் சுட்டுவதே வாலாயம். மேற்கு இந்தியத் தீவுகளை ஸ்பெயின், போர்த்துக்கல், இங்கிலாந்து, ஹாலந்து, பிரான்சு, டென்மார்க் இவை தமக்குள் பங்கு போட்டுக் கொண்டு குடியேற்றங்களாக்கி ஆண்டன. (ஆ) மேற்சொன்ன ஐரோப்பிய நாடுகள் ஏற்கெனவே (கி.பி. 1498இல் தொடங்கி) தமிழகத்தில் அமைத்திருந்த தளங்கள் வருமாறு - (i) போர்த்துகேசியர்கள் போட்டோ நோவா (பரங்கிப்பேட்டை) சாந்தோம் (மயிலாப்பூர்) அங்கிருந்த பழைய கபாலீஸ்வரன் கோவிலை இடித்து விட்டு அவ்விடத்தில் தமது கிறித்துவ ஆலயத்தைக் கட்டினர். இன்றைய கபாலிஸ்வரன் கோயில் பின்னர் புதிய இடத்தில் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சிக் காலத்தில் இந்துக்கள் புதியதாகக் கட்டியது. (ii) (ஹாலந்து நாட்டு) டச்சுக்காரர் 1600 இல் தமிழகம் வந்து தமது தலைமையகத்தையும் கோட்டையையும் பழவேற்காட்டில் (Pulicat) அமைத்தனர்; அவர்களுடைய இன்னொரு காலனி சதுரங்கப் பட்டணம் (Sadras) ஆகும். டச்சுக்காரர்களின் காலனிகளைப் பிரிட்டிசார் 1854 - இல் கைப்பற்றினர். (iii) டென்மார்க் நாட்டவர் தரங்கம்பாடிக் கடற்கரையில் கோட்டையைக் கட்டி வர்த்தகம் செய்தனர். அங்கு இறையூழியம் செய்த பார்த்தலோமியூ சீகன்பால்க் என்ற ஜெர்மன் பாதிரி விவிலியத்தின் புதிய ஏற்பாட்டை முதன் முறையாகத் தமிழில் மொழி பெயர்த்தார். (iv) பிரெஞ்சுக்காரர்கள் ஆண்டது தென்னிந்தியாவில் பாண்டிச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகிய பகுதிகள் மட்டுமே. தென்னிந்தியா முழுவதையும் கைப்பற்ற அவர்கள் எடுத்த முயற்சிகள் இறுதியாக 1815 இல் நெப்போலியன் பிரெஞ்சு ஆட்சி தோற்ற நிலையில் அவர்கள் இவ்வாறு முடங்கினர். (இ) (தமிழ்நாட்டில் இருந்த) வெள்ளைய காலனிகளில் இருந்துதான் மேலே கூறிய கால அளவில் (1838-1917) தமிழகத்தில் இருந்து கரிபீயன் நாடுகளுக்குத் தீவுகளுக்குத் தமிழர்கள் கூலிகளாகக் சென்று குடியேற்றப்பட்டனர். கரீபியன் தீவுகள் / நாடுகள் வகைப்பாடு இங்கிலாந்து காலனிகள் 1. கயானா (Guyana) 2. திரினிடாட் (Trinidad) தீவு மற்றும் தொபாகோ தீவு 3. செயின்ட் வின்சென்ட் (Saint Vincent) 4. கிரெனடா (Grenada) தீவு 5. பேலி (Belize) டச்சு காலனிகள் 6. செயின்ட் லூசியா (Saint Lucia) தீவு 7. சுரிநாம் (Surinam) டென்மார்க் காலனி 8. செயின்ட் குரோய் (Saint Croix) பிரெஞ்சு காலனிகள் 9. பிரெஞ்சு கினியா (French Guinea) 10. குவாதலூப் (Guadeloupe) தீவு 11. மாட்டினிக் (Martinique) தீவு இப்பகுதிகள் பலவற்றிலிருந்து இன்று கரிபீயன் என்ற இனம் இன்று உருவாகியுள்ளது. 1840 ஐ ஒட்டித் தமிழகத்திலிருந்து கூலிகளாகக் கொண்டு செல்லப்பட்ட இவர்கள் தமிழை முற்றாக மறந்து விட்டனர். டிரினிடாட்-தொபாகோ தீவுகளில் வாழும் தமிழர் தமிழை மறந்தாலும் தமது இந்து மதத்தை முக்கியமாக மாரியம்மன் வழிபாடு உட்பட இன்றும் கைக் கொண்டுள்ளனர். 15. (i) பிரெஞ்சுக்காரர்கள் தென் பசிபிக் மாக்கடலில் தீவு நீயூ கலிடோனியா தீவு (New Caledonia) சுரங்கங்களில் வேலை செய்யக் காரைக்கால் பாண்டிச்சேரித் தமிழர்களை 19 ஆம் நூற்றாண்டில் கொண்டு சென்றனர். அவர்கள் தமிழ் அடையாளங்களை முற்றாக இழந்துவிட்டனர். (ii) ஆங்கிலேயர்கள் பசிபிக் பெருங்கடல் வடமையப் பகுதியில் உள்ள பீஜித்தீவுகளுக்குத் (Fiji) தமிழகத் தமிழர்களைக் கொண்டு சென்று கரும்புத் தோட்டக் கூலிகளாக்கினர். பீஜித் தீவுகளில் இன்றும் தமிழர் என்ற அடையாளத்துடன் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர் வாழ்கின்றனர். இவர்களில் 5000 பேருக்கு மாத்திரம் ஓரளவுக்குத் தமிழ் பேசத் தெரியும். (1000 பேருக்குத் தமிழ் எழுதவும் படிக்கவும் தெரியும்.) (iv) தென்னமெரிக்காவுக்கு வடகிழக்கில் உள்ள நாடு பேலீஸ் (Belize). இது முன்னர் 1862 - 1930 கால அளவில் பிரிட்டிஷ் ஹாண்டுராஸ் என்று அழைக்கப்பட்டது (கரிபீயன் கடலைப் பார்த்தபடி இது குவதமலாவுக்கும் மெக்சிக்கோவுக்கும் இடையில் இருக்கிறது.) இங்கு பிரிட்டிசார் கரும்புத் தோட்டம் அமைத்த நாள் தொட்டுத் தமிழகக் கூலிகள் கொண்டு செல்லப்பட்டனர், சிலர் இன்று நல்ல வசதியுடன் வாழ்கின்றனர். சில வருடங்களுக்கு முன் தமிழர்வழி வந்தவர் சட்ட அதிகாரியாக பதவி வகித்தார். இங்கு தமிழ் முற்றாக மறைந்து விட்டது. மக்கள் அனைவரும் ஆங்கிலம், ஸ்பானிஷ் மொழிகளைப் பேசுகின்றனர். நாட்டின் பரப்பளவு 22,800 சதுர கீ.மீ., (8,800 சதுர மைல்) மக்கள் தொகை 2013 இல் 3.40 இலட்சம். ãw fÇÕÇa‹ ehLfis¥ nghš ngȰ - 2« 1981 ïš ÉLjiy bg‰W I.eh., உறுப்பு நாடாகியுள்ளது. 17. தொலைந்த தமிழ் இனத்தை நினைக்கும் போது மனம் கனக்கிறது. அதே சமயத்தில் தமிழர் வளத்துடன் மேம்பட்டு வாழ்ந்து வரும் மாரிசியல், சிஷெல்ஸ், ரியூனியன் போன்றவற்றை எண்ணி ஆறுதல் பெறுகிறோம். வாய்ப்புக் கிடைத்தால் சீஷெல்ஸ் தமிழ் மன்றம் வெளியீடு தமிழ்முரசு இதழைப் படிக்கலாம். தமிழகக் கிழக்குக் கரையில் ஐரோப்பியர்கள் முதலில் கைப்பற்றி நிறுவிய துறைமுக விவரங்கள் ஞ. ஐயகுமார் எழுதிய தமிழகத்துறைமுகங்கள் (அன்பு பதிப்பகம், தஞ்சாவூர் (2001))நூலில் உள்ளன. இயல் - 5 உலகின் பிற பகுதிகளில் (இலங்கை, மலேசியா, பர்மா சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில்) தமிழர் வாழ்விடங்கள் ஆசிய நாடுகளில் பாகிஸ்தான் முதல் சீனா வரை தமிழர்களாலும் பிற இனத்தவர்களாலும் தமிழ் மொழி பயிலப்படுகிறது. மத்தியக் கிழக்கு நாடுகள் சிலவற்றிலும் தமிழர்கள் வாழ்கின்றனர். தமிழை வளர்க் கிறார்கள். ஊடகத்துறையிலும் திரைப்படத் துறையிலும் தமிழ் முன்னணியில் இடம் வகிக்கிறது. 2001 ஆம் ஆண்டு விவரப்படி உலகில் 353 நாளிதழ்கள் உட்பட. 1,863 தமிழ்த் தாளிகைகள் வெளிவருவதாகத் தெரிகிறது. 2. கனடா அரசு ஒவ்வொரு ஆண்டும் சனவரி மாதத்தை தமிழ் மரபுரிமை மாதம் (Tamil Heritage month) என்று அறிவித்துள்ளது. அந்த நாட்டின் சில மாநிலங்களின் அறிவிப்புப் பலகைகளிலும் தமிழ் இடம்பெறுகிறது. பாகிஸ்தான் 3. பாகிஸ்தான் துறைமுக நகர் கராச்சியில் 3000 தமிழர் (முஸ்லிம்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள்) சேர்ந்து வாழ்கின்றனர். தமிழ் நாட்டில் இருந்தும் இலங்கையில் இருந்தும் சென்ற தமிழ் பேசும் இஸ்லாமியர்களும் இந்துக்களும் அவர்களுள் பெருமளவு உள்ளனர். பாகிஸ்தான் தேசிய வானொலி நாளொன்றுக்கு 30 நிமிடம் தமிழ்ப்பாடல்களையும் செய்திகளையும் வழங்குகிறது. சீனா - ஜப்பான் - கொரியா 4. மத்தியக் கால நூற்றாண்டுகளிலிருந்ததே தமிழ் (Middle Ages) வணிகக் குழுக்களுக்கும் சீனாவுக்கும் நெருக்கமான வணிகத் தொடர்பு இருந்தது. தென் கரையோர குவாங்சு (Guanzhou) நகரில் ஒரு சிவன் கோயிலைக் கட்டித் தமிழர்கள் வழிபாடு நடத்தியுள்ளனர். 9 - 13 நூற்றாண்டுகளைச் சார்ந்த தமிழ்க் கல்வெட்டுக்கள் சீனாவில் கிடைந்துள்ளன. சீனம் - தமிழ் உறவுகள் சில பற்றியும் ஆய்வுகள் உள்ளன. மேலும் தமிழ்மொழி பற்றிய அக்கறையை இந்த நாடுகளில் காணலாம். சீனாவில் ஏறத்தாழ 5,000 தமிழ் பேசும் மக்கள் இருக்கிறார்கள். சீனத் தொடர்பூடகப் பல்கலைக்கழகம் (Communication University of China) தலைநகர் பீஜிங், சந்யோங் மாவட்டத்தில் (Chanyang district, Beijing) இயங்குகிறது. இங்கு பட்டப்படிப்பு வரை தமிழ் கற்க முடியும். சீனா அனைத்துலக வானொலி (China Radio International) 1963 முதல் தமிழில் ஒலிபரப்பு செய்கிறது. 5. (i) ஐப்பானிய மொழியும் தமிழும் மிக நெருங்கியவை என சுசுமோ ஓநோ, சண்முகதா, பொன். கோதண்டராமன் போன்றோர் திட்டவட்டமாக நிறுவியுள்ளனர். (ii) தமிழுக்கும் கொரிய மொழிக்கும் இடையிலுள்ள நெருக்கத்தை 1905 இல் ஹுல்பெர்ட் (Hulbert) தொடங்கிப் பலரும் வெளிப்படுத்தியுள்ளனர். 6. உலகின் ஆறாவது மிகப்பெரிய தீவான (50 லட்சம் மக்கள் வாழும்) சுமத்திராதீவில் 30,000 - 40,000 தமிழர்கள் நிரந்தரமாக வாழ்கிறார்கள். மலாக்கா நீரிணைக்கு மேற்கில் இருப்பதால் சுமத்திராவுக்குப் பெரும் முக்கியத்துவம் உண்டு. முதலாம் இரோசந்திர சோழனின் கடற்படை கி.பி. 1025 இல் சுமத்திராவை அன்று ஆண்டுவந்த ஸ்ரீ விஜய அரசைத் தாக்கிக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அதன் பிறகு மலாக்கா நீரிணைப்பு வழியாகத் தமிழர்களின் சீனக்கடல் வாணிகம் எளிதாக நடைபெற்றது. (17,508 சிறிய பெரிய) தீவுகளைக் கொண்ட இந்தோனேசி யாவை ஆட்சி செய்த டச்சு கிழக்கு இந்திய கம்பெனி தமிழகத் தமிழர்களை சுமத்திராத் தீவில் கூலிகளாகக் குடியேற்றியது. அவர்கள் எண்ணிக்கை ஒரு இலட்சம் ஆகும். 1940 - 50 அளவில் பலர் தமிழ் நாட்டிற்குத் திரும்பிவிட்டனர். எஞ்சியோர் இன்றும் தமிழ் அடையாளங் களோடு வட சுமத்திராவில் கோவில்களைக் கட்டி எழுப்பி நன்கு வாழ்கின்றனர். இவர்கள் தனிமைப் படுத்தப்படாததற்குக் காரணம் சிங்கப்பூரும், மலேசியாவும் அருகில் இருப்பதுதான். மலேசியா - சிங்கப்பூர் 7. (i) தாய்த்தமிழகத்தோடு நெருக்கமான தொப்புள் கொடி உறவைப் பேணும் தமிழர்கள் தமிழகத்திலும் மலேசியாவிலும் வாழ்கின்றனர் மலேசிய - தமிழக உறவுகள் பன்னெடுங்காலப் பழமை வாய்ந்தவை. கடாரத்தில் தமிழர்கள் பல நூற்றாண்டுக் காலம் வாழ்ந்ததற்கான சுவடுகளைக் காணலாம். அன்று குடியேறி வாழ்ந்த தமிழர்களின் வாரிசுகள் இன்று தனிப்படக் காணுமாறில்லை. (ii) சங்க காலத் தமிழ்க் கடல் வணிகர் மணிமேகலை என்னும் கடல் தெய்வ வழிப்பாட்டைத் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரப்பினர் ஜாவா, சுமத்திரா, மலாயா, தாய்லாந்து ஆகியவற்றில் மணிமேகலையை மின்கேலா என்று அழைத்து வணங்கினர். கி.பி. 5 ஆம் நூற்றாண்டி லிருந்து காரைக்காலம்மையார் தமிழக வாணிகர்களின் குல தெய்வமாக இருந்தார். தமிழக வாணிகர் குடியேறிய தென்கிழக்கு ஆசிய நாடுகளில் காரைக்கால் அம்மன் வழிபாடு சிறப்பாக நடந்தது. (iii) மலாயா தேசத்திற்கு இப்பெயர் வரக் காரணமானவர்கள் தமிழர்கள். மலாயா நாட்டின் ஒரு பகுதியான (நீரிணைக்கு அருகிலுள்ள மலாக்காதீவில் தமிழர்கள் பழங்காலத்திலேயே குடியேறி வாணிகத்தின் மூலம் ஆதிக்கம் பெற்று இருந்தனர். 1511 ஆம் ஆண்டு போத்துக்கேயர் மலாக்காவைக் கைப்பற்றிய பின்னரும் அவாகள் உன்னத நிலை தொடர்ந்தது மலாக்காவில் தமிழர்களை இன்று மலாக்காச் செட்டி என்று அழைக்கின்றனர். இன்று இவர்கள் தமிழ் மொழியை முற்றாக இழந்துவிட்டனர்; எனினும் இந்து மதத்தை விடாமல் பின்பற்று கின்றனர். பெரும்பாலும் வேற்றினப் பெண்களைத் திருமணம் செய்யும் இவர்கள் அப் பெண்களையும் இந்து மதத்திற்குத் கொணர்ந்துள்ளனர். மலாக்காவை ஆட்சி செய்யும் இஸ்லாமியச் சுல்தான்கள் பலர் தம்மைச் சோழர் பரம்பரையினர் என்று பெருமையுடன் கூறுகின்றனர். மலேசியாவின் மொத்த மக்கள் தொகை 3 கோடி (2014) இதில் 7 விழுக்காட்டினரான தமிழர் தொகை 17.75 இலட்சம். 8. (i) á§f¥óÇ‹ (bkh¤j¥ gu¥ò 716 rJu ».Û.,) மொத்த மக்கள் தொகை 54 இலட்சம் 4% ஆன தமிழர் தொகை 2 இலட்சம். ஆங்கிலேயர்கள் மலாயா, சிங்கப்பூர் ஆகியவற்றை 1786 - 1824 கால அளவில் கைப்பற்றி ஆளத் தொடங்கினர். காடுகளை அழிப்பதற்கும் ரப்பர் தோட்ட வேலைக்கும் தேவைப்பட்ட கூலித்தொழிலாளர்களைத் தமிழ்நாட்டில் இருந்து ஆங்கிலேயர்கள் கொண்டு வந்தனர். அவர்கள் வழிவந்தோர் இன்று தோட்டத் தொழிலாளர்களாக மட்டுமன்றிப் படித்து முன்னேறி வணிகர், ஆட்சிப் பணியினர், மருத்துவர் போன்ற உயர்நிலைகளிலும் உள்ளனர். (ii) 1957 இல் மலேசியா விடுதலை பெற்ற போது மலேசியர் சார்பில் ஆங்கிலேயர்களுடன் செய்த ஆவணத்தில் இணைந்தவர்களில் ஒருவர் வீ.டி சம்பந்தன் என்ற தமிழர். தமிழர்களுக்கென்று தனிநாட்டை நிறுவக் கூடிய அரிய வாய்ப்பு அது. அப்பொழுது மலேசியத்தமிழர்கள் அன்று அதை நழுவ விட்டனர் எனலாம். மலாக்கா அல்லது பினாங்கை ஆங்கிலேயருடன் பேச்சு நடத்தித் தனி நாடாகப் பெற்றிருக்க இயலும். 9. தென் இந்தியாவைக் கைப்பற்றிய ஐரோப்பிய நாடுகள் இங்குள்ள வறுமையையும் நெரிசலையும் தமது தோட்டக் கூலித் தேவை களுக்காக ஈவு இரக்கமின்றிப் பயன்படுத்தினர். (மக்கள் தொகை மிகுந்தால் பிற நாடுகளுக்குச் செல்க என்று அர்த்த சாத்திரமும் கூறுகிறது.) 1700இலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழகத்தில் ஆட்சி அதிகாரம் பெறத்தொடங்கிய ஆங்கிலேயர்கள் தமிழ்நாட்டி லிருந்து கண்காணாத தேசங்களுக்குக் கூலிகளாகக் கொண்டு சேர்த்த தமிழர் தொகை பல மில்லியன் அளவில் இருக்கும். இலங்கை 10. 1505 - 1658 கால அளவில் போத்துகேயரும், 1658 - 1796 அளவில் டச்சுக்காரர்களும் 1796 - 1948 அளவில் ஆங்கிலேயர்களும் இலங்கையை ஆட்சி செய்தனர். போத்துக்கேயர் ஆட்சியில் தமிழர்கள் சொல் லொணாத துயரம் அடைந்தனர் (சென்னையில் மயிலை கபாலீசுவரர் கோயிலை இடித்தது பற்றி மேலே கண்டோம்.) யாழ்ப்பாணத்தில் ஏறத்தாழ 500 சைவக் கோவில்களை போர்த்துக்கேயர்கள் இடித்து அழித்தனர். நல்லூர் தலைநகரில் யாழ் மன்னர்கள் நிறுவிய சரஸ்வதி நூலகத்திலிருந்த ஏட்டுச் சுவடிகள் அனைத்தையும் கொளுத்தினர். ஒல்லாந்தர் (டச்சுக்காரர்) காலமும் கொடியது தான். அவர்களும் மதச் சுதந்திரம் தரவில்லை. தாம் உண்பதற்காக வீட்டுக்கு ஒரு மாடு தரல் வேண்டும் என்ற ஒல்லாந்தர் கட்டளையால் தமிழர்கள் மனம் ஒடிந்து போனார்கள். 17ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்திலுள்ள திருநெல்வேலியில் தலையாரியாக இருந்தவர் இரவோடு இரவாகக் கடல்கடந்து சிதம்பரம் கோயிலில் அடைக்கலம் புகுந்தார். அவர் தான் ஞானப்பிரகாசர் என்ற பெயர் பூண்டு துறவியானார். அவர் வெட்டிய குளம் சிதம்பரம் ஞானப்பிரகாசர் குளம் என்னும் பெயரில் விளங்கிறது. 11. 16ஆம் நூற்றாண்டு யாழ்ப்பாண மன்னன் பரராஜசேகரன் இராசாக்கள் தம்பிரான் மடத்தைச் சிதம்பரத்தில் நிறுவனர். சிதம்பரம் கோவில் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு முக்கியமாதலால் யாத்திரை வரும் அடியார்கள் தங்கும் வசதிக்காக யாழ்ப்பாணக் கிராமங்களான மாதகல், கல்வியெங்காடு, வறணி, கொக்குவில், சங்கானை போன்றவை சிதம்பரத்தில் மடங்களைக் கட்டின. (அவை இன்று அழியும் நிலையில் உள்ளன) அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவாகும் முன்னரே ஆறுமுகநாவலர் 1860 ஐ ஒட்டிக் கணிதம், விவசாயம், வணிகம், மருத்துவம், அரசியல், வானவியல், புவியியல், தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றைக் கற்பிக்க ஒரு கல்வி நிலையத்தைச் சிதம்பரத்தில் ஆரம்பித்தார். 12. பண்டுமுதல் தமிழர் ஆண்டு வந்த இலங்கையின் வடக்கு - கிழக்குப் பகுதி போர்த்துக்கேயர், டச்சுகாரர் காலத்தில் தனி மாநிலமாகவே ஆட்சி செய்யப்பட்டது. பின்னர் இலங்கையைப் பிடித்த ஆங்கிலேயர்தாம் இந்த ஒழுங்கை மீறி, நேர்மை தவறித் தமிழர் பகுதியையும் சிங்களவர் பகுதியையும் 1883 ஆம் ஆண்டு ஒன்றாக இணைத்து ஆட்சி செய்ய முற்பட்டனர். அது மட்டுமன்றி 1948 இல் வெளியேறிய ஆங்கிலேயர் தமிழர் தாயகத்தைச் சிங்கள இனத்தவரின் ஆட்சிப் பிடிக்குள் விட்டுச் சென்றனர். இதனால் தமிழர்கள் தமது மண்ணையும் தன்மானத்தையும் இழந்தனர். தமது மண்ணை மீட்கப் போர் நடத்தி வந்த தமிழர்கள் உலகப் பன்னாட்டு அரசியல் மாற்றத்தால் தோல்வி அடைய நேர்ந்தது. 13. போர்த்துகேயர், டச்சுக்காரர் காலத்தில் இலங்கையின் மலைப் பகுதியில் இருந்த கண்டி இராச்சியம் சுதந்திரமாக இயங்கிக் கொண்டிருந்தது. கண்டி இராச்சியத்தை அவர்கள் வெல்ல முடிய வில்லை. 1815 இல் பல சூழ்ச்சிகள் செய்து கண்டி இராச்சியத்தையும் ஆங்கிலேயர் கைப்பற்றினர். மதுரை நாயக்கர் அரச பரம்பரையினரான (தமிழ்பேசும்) கடைசிக் கண்டி மன்னனைக் கைது செய்து வேலூர்ச் சிறையில் குடும்பத்தோடு அடைத்தனர். மலைப் பகுதியான கண்டியில் ஆங்கிலேயர்கள் காப்பித் தோட்டம், தேயிலை தோட்டங்களை நிறுவத் தலைப்பட்டனர். 1830 லிருந்தே காடு வெட்டும் வேலைகள் தொடங்கின. சிங்களத் தொழிலாளர்கள் இப்பணிக்கு வரமாட்டார்கள்; இருக்கவே இருக்கிறார்கள் தமிழகக் கூலித் தொழிலாளர்கள்! என்று அவர்களை ஏமாற்றிச் சிறிய கப்பல்களில் ஏற்றி தலைமன்னாரில் கொண்டு வந்து இறக்கினார்கள். அங்கிருந்து 20 மைல் தூரம் கால்நடையாகவே மலையகத்திற்கு விரட்டிச் சென்றார்கள். வழியில் நோயினால் இறந்தவர்களை அங்கங்கே புதைத்தனர். ஒவ்வொருக்கும் அரிசி, பருப்பு கொடுக்கப்பட்டது, சமைத்து உண்ண வேண்டியது அவரவர் பொறுப்பு. இப்படிக் கொண்டு செல்லப்பட்ட ஏழைத் தமிழர்கள் தாம் இலங்கை ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் இன்றும் அடித்தளமாக இயங்கும் தேயிலை, இரப்பர் தோட்டங்களை நிறுவி வளப்படுத்தி இன்றும் செயல்படுத்தி வருபவர்கள். 14. இலங்கை சுதந்திரம் பெற்ற 1948லும், அடுத்து 1949லும் சிங்களவர்கள் யாழ்ப்பணத் தமிழ்த் தலைவர் சிலரின் துணையோடு அம் மலையகத் தமிழர்களின் குடியுரிமையைப் பறிக்கும் சட்டத்தை நிறைவேற்றினர். பத்துலட்சம் தோட்டத் தொழிலாளத் தமிழர்கள் குடியுரிமை இழந்தனர், உலகில் முதன் முறையாக நாடற்ற தமிழன் (Stateless Tamil) தோன்றினான் (The untold story of Ancient Tamils in Srilanka - Chelvadurai Manoharan; Prof. of Geography and International Studies, Wisconsin university USA; Kumaran publishers; Chennai 2002) 15. ïy§if eh£o‹ ï‹iwa k¡fŸ bjhif 21,675,48 (2013) gu¥gsî - 65,610 rJu ».Û., (25,332 சதுர மைல்) சிங்கள இனம் 79% வடகிழக்குத் தமிழர் 11.2% மலையகத்தமிழர், 2% தமிழ் பேசும் முஸ்லிம்கள் 7% 16. jÄœeh£o‹ »H¡F¡ fiu¡F« ïy§ifÆ‹ nk‰F¡ fiu¡F« ïilÆyhd öu« 28 ».Û., (18 மைல்) இராமநாதபுரம் சிற்றரசர்களான சேது மன்னர்கள் கச்சத்தீவு உள்ளிட்ட சில தீவுகளையும் வட இலங்கையின் சிற்சில பகுதிகளையும் சில நூறு ஆண்டுகள் அனுபவித்து வந்தார்கள். கச்சத்தீவும் அப்பொழுது இராமநாதபுரம் சிற்றரசு ஆட்சிக்கு உட்பட்டதாகவே இருந்தது. பர்மா 17. கி.பி. 1852ஆம் ஆண்டு முதல் படிப்படியாகப் பர்மா முழுவதும் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்தது பர்மாவின் தென்பகுதியும் ஆங்கிலேயர் வசமான பின்னர் பெரும் எண்ணிக்கையில் தமிழர்கள் பர்மாவில் குடியேறினர். ஐராவதி சமவெளிச்சதுப்பு நிலத்தை நெல் விளையும் பூமியாக்குவதற்கு ஏறத்தாழ 2.43 இலட்சம் தமிழர்கள் குடியேற்றப்பட்டனர். 18. பிரிட்டிஷ் ஆட்சியில் பர்மா உலகிலேயே அதிக அளவில் அரிசியை ஏற்றுமதி செய்து வந்தது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இரண்டாவது மிகச்சிறந்த பொருளாதார நாடு எனப் பர்மா கருதப்பட்டது. பர்மாவின் முழுநிலப்பரவில் 60% நெல் பயிரிட்டது. பாண்டியர் காலந் தொட்டுத் தமிழர் சிலர் பர்மாவில் வாழ்ந்தாலும் பெரும் எண்ணிக்கையில் பிரிட்டிஷ் ஆட்சியில் தான் அங்கு சென்றனர். பர்மாவின் புதிய பெயர் மியன்மார். மாறன் என்பது பாண்டிய மன்னர் பெயர். மாறன் மாதேயம்-மாறன் மா - மியன்மர் என்று திரிபுற்றது. மார்கோ போலோ தமது பயண நூலில் பர்மாவின் பெயரை மீன் அரசு என்று குறித்துள்ளார். [Äa‹k® என்ற பெயரை அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா ஆகியநாடுகள் ஏற்காமல் தொடர்ந்து பர்மா என்றே miH¡»‹wd®.] (iii) இரண்டாம் உலகப் போரில் சப்பான்காரர்களிடமிருந்து தப்பி ஐந்து இலட்சம் தமிழர்கள் இந்தியா திரும்பினர்; இவர்கள் தரைமார்க்கமாக பாதையற்ற காடுகள் மலைகள் வழி இந்தியா சென்ற பொழுது இடையில் 10,000 பேர் நோயுற்று மாண்டனர். 20. தமிழர்கள் மிக உன்னதமான வளர்ச்சி பெற்ற நாடு பர்மா தான், அதே சமயத்தில் அவர்கள் கடும் வீழ்ச்சி அடைந்ததும் அங்கு தான். வணிகச் சிறப்பாலும் வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்கிய தொழில் திறத்தாலும் தமிழர் உயர்வடைந்தனர். பர்மா நாட்டின் நிலத்தில் 50 விழுக்காடு தமிழர்களுக்குச் சொந்தமாகியது. 1948இல் பர்மா சுதந்திரம் அங்கு கொண்டு வரப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு ஏற்பக் குடியுரிமை கோரி விண்ணப்பம் செய்யாமல் பெரும்பாலான தமிழர் தவற விட்டனர். 1955 - 1958ஆம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட பர்மிய நிலவுடமைச் சட்டப் படி நிலம் அனைத்தும் தேசியப் பொதுவுடைமை ஆக்கப்பட்டது. குடியுரிமை உள்ளவருக்கே நிலம் சொந்தம் என்று வரையறை செய்யப்பட்டது. இந்தியாவில் குடியுரிமையும் பர்மாவில் சொத்துரிமையும் வைத்திருந்த தமிழர்கள் நிலத்தை இழந்தனர். இதனால் பர்மாவின் சரிபாதி நிலத்திற்குச் சொந்தக்காரராக விளங்கிய முன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் நாடற்றவர்களாக இன்று பர்மாவில் வாழ்கின்றனர். 21. பர்மாவின் மக்கள் தொகை 6 கோடி, பர்மாத் தமிழர் எண்ணிக்கை 1.5 லட்சம் ஆகும். தமிழ்க் கல்வியும் தமிழர் அடையாளங்களான ஆடை, உணவு முதலியவை படிப்படியாக மறைகின்றன. தமிழக்கல்வி புகட்டும் முயற்சி கடந்த சில வருடமாகக் கொஞ்சம் நடைபெறுகிறது. தாய்லாந்து 22. தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மொழி பண்பாடு ஆகியவற்றில் தமிழ் நாட்டின் செல்வாக்கு மிக அதிகமாகவுள்ள நாடுகளில் தாய்லாந்து ஒன்று. இங்கும் பர்மா, கம்போடியா போல் தேரவாத புத்தமதம் மேலோங்கியுள்ளது. எனினும் பர்மா, தாய்லாந்து ஆகியவற்றின் மொழிகளிலும் எழுத்துக்களிலும் தமிழின் தாக்கம் தெளிவாக உள்ளது. 23. மார்கழித் திருவெம்பாவைத் திருவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடும் நாடு தாய்லாந்து. மன்னர் முடிசூட்டு விழாவில் தமிழ் மந்திரங்களான திருவெம்பாவை முதலியன ஒதப்படுகின்றன. தாய்லாந்து பிராமணருக்கு சமஸ்கிருதமொழி தெரியாது. கிரந்த எழுத்துக்களில் மூவர் பாடிய தேவாரங்களையும் மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் மன்னரின் முடிசூட்டு விழாவில் பாடுகின்றனர். இவை தமிழ்நாட்டில் தமிழ் எழுத்து வடிவிலிருந்து மாற்றி எழுதிக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. தாய்லாந்து தலைநகர் பாங்காக் இந்துக் கோவில்களிலும் தமிழ் மந்திரங்கள்தான் ஒலிக்கின்றன. தாய்லாந்துப் பிராமணர்கள் தாங்கள் இராமேஸ்வரத்தில் இருந்து சென்றதாகக் கூறுகின்றனர்; வரும் போது தேவாரம், திருவாசகம், திருவெம்பாவை இவற்றைக் கொண்டு வந்திருப்பார்கள். இவர்களுக்குத் தமிழ்மொழி இன்று தெரியாது; தாய்லாந்து மொழியைப் பேசுகின்றனர். 24. இன்று தாய்லாந்து மக்கள் தொகை 6.68 கோடி, தமிழ் பேசுவோர் 10,000 பேர். jhŒyhªJ Ãy¥gu¥ò 5.13 ïy£r« rJu ».Û.,) பிலிப்பைன், இந்தோ சீனா, போர்னியோ முதலியவை 25. கிறிஸ்து ஊழிக்கு முன்பும் அதை ஒட்டியும் தமிழர் பலர் வணிகர்களாகவும். போர்த் தலைவர்களாகவும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குடியேறியுள்ளனர். அவர்கள் அனைவரும் மொழியை மறந்த நிலையில் வேற்றினமாக மாறியுள்ளனர். மொழி ஒன்றே எந்த இனத்திற்கும் முதன்மையான அடையாளம் ஆகும்; அது போனால் வேற்றினமாவது உறுதி. 26. சீனா, பிலிப்பைன்ஸ், தெற்கு வியட்நாம் (சம்பா) ஜாவா, சுமத்திரா, தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளில் அன்று குடியேறிய தமிழர்களும் சிற்சில காலம் ஆட்சி செய்த தமிழ் மன்னர்களும் இன்று இல்லை; வெறும் வரலாற்றுச் செய்திகளாகவே உள்ளன. 27. இந்த நாடுகளின் மொழிகளில் மிகப்பல தமிழ்ச் சொற்கள் இன்றும் பயன்பாட்டில் உள்ளன. பிலிப்பைன்ஸ் நாட்டு மக்கள் (1/4) கால் பங்கினருடைய தாய்மொழியாகவும் மீதமுள்ள பெரும் பகுதியினரின் இரண்டாவது மொழி யாகவும் இடம்பெறும் தாகலாக் (Tagalog) மொழியில் தமிழ்ச் சொற்கள் பல உள்ளன. இந்த மொழியின் எழுத்து வடிவம் (லிபி) திராவிட மொழி வகை சார்ந்தது. 28. அந்நாடுகளில் எல்லாம் தமிழர்கள் வாழ்ந்தற்கான புறச்சான்று களும் செய்திகளும் ஏராளம் அவை ஒன்றை மாத்திரம் உணர்த்து கின்றன: குடியேறிய நாட்டில் காணாமல் போய்விட்டதற்கும் தமிழன் நாடற்றவனாக இன்று இகழப்படுவதற்கும் நம் முன்னோர் மொழிப் பற்றை இழந்ததே முக்கிய காரணம் ஆகும். சங்க காலத்தில் தென்பாண்டிநாட்டுத் தமிழர் போர்னியோ பெருந்தீவில் குடியேறி அதற்குப் பொருநை என்று பெயர் இட்டனர், அது திரிந்து போர்னியோ ஆகிவிட்டது. அங்கு வாழ்வோர் இந்த உண்மையை ஏற்க மறுப்பதில் வியப்பில்லை! 29. பழந்தமிழர் பரவிய நாடுகள் என்ற ஆய்வு நூலில் அய்யா பழ. நெடுமாறன் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுவதை தமிழர் அனைவரும் நினைவு கூர்வோமாக: தமிழ்நாடு அன்னியர்களிடம் அடிமைப்படாது இருந்திருக்குமே யானால் இந் நாடுகளில் விளங்கிய தமிழர் ஆட்சிகளும் (தென்கிழக்கு ஆசிய நாடுகள் உட்பட) நீடித்திருக்கும். அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளைக் கண்டறிந்து அங்கு குடியேறிய ஆங்கிலேயர்கள் அந்நாடுகளை முழுமையாகத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்; நாளடைவில் இந்த நாடுகள் ஆங்கிலேயர் நாடுகளாகவே மாறிப்போயின; இன்றளவும் இந்த நாடுகள் தங்களின் தாயகமான பிரிட்டனுடன் நெருங்கிய தேச உறவு கொண்ட நாடுகளாக விளங்கி வருகின்றன. ஆனால் தமிழர்களோ தாங்கள் குடியேறி ஆட்சி புரிந்த நாடுகளையும் இழந்தார்கள் [Kfîiu fh©f.] தமிழர் தம் சோக வரலாறு மேலும் தொடர்ந்தது; காலம் மாறியது காட்சிகளும் மாறின; 19 ஆம் நூற்றாண்டில் அதே தென்கிழக்காசிய நாடுகளுக்குக் கப்பல் கப்பலாகத் தமிழர்கள் கொத்தடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்ட கொடுமை நடந்தது. நம் முன்னோர்கள் எந்தெந்த நாடுகளில் குடியேறி ஆண்டார்களோ, அதே நாடுகளில் அடிமைச் சேவகம் புரிய நம் தமிழர்கள் கொண்டு செல்லப்பட்டனர். 30. தமிழர்கள் தமது வரலாற்றைப் புரட்டிப் பார்ப்பதும் இல்லை, அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்வதும் இல்லை. சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுக்கத் தயங்க மாட்டார்கள் என்றெல்லாம் நம்மை பற்றிப் பிறர் கூறக் கேட்டுள்ளோம். இனியாவது நாம் திருந்துவோம்; வரலாற்றுத் தவறுகளைத் தவிர்ப்போம். இயல் -6 புலம் பெயர் தமிழர்கள் 1. உலகில் புலம் பெயர்ந்த தமிழர்கள் என்ற புதிய சொற்றொடர் 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உருவாகியது. தமிழீழத் தாயகத்தில் நிம்மதியாக வாழமுடியாமல் மேற்கு நாடுகளுக்குச் சிதறியோடித் தஞ்சம் புகுந்த ஈழத் தமிழர்கள் இவர்கள். 2. உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத நாட்டில் இருந்து தப்பி ஓடுவது மனித இயல்பு. வரலாற்றில் இந்த அவலத்தை மனிதகுலம் பலமுறை சந்தித்திருக்கிறது. இனிமேலும் சந்திக்கும். பிறந்த நாட்டைத் துறந்து பிறநாடு சென்று வாழும் மக்கள் கூட்டத்தை டயஸ்போரா என்பார்கள். (கிரேக்க மொழியில் டியஸ்பைரைன் (தம் பரம்பரை வாழ்விடத்தை விட்டு மாந்தர் பிற நாட்டிற்கு ஓடக் கட்டாயப்படுத்துதல்.) 3. ஒரு நாட்டில் இருந்து வெளியேறி இன்னொரு நாட்டில் குடிபுகுவது குடிபுகுதல் மைகிரேசன் (migration) எனப்படும். அதிலிருந்து டயஸ்போராவை இனங்காண்பதில் சில சிக்கல்கள் உள்ளன. 1991 இல் வில்லியம் சப்ரன் (William Safran) என்னும் கொலரோடோ அரசியலறிவியல் (Political Science) பேராசிரியர் புலம் பெயர்ந்தவர் களின் அடையாளங்களைப் பின்வருமாறு நிர்ணயித்தார். (i) புலம் பெயர்ந்த இனத்தைச் சேர்ந்த அனைவரும் தாயகம் பற்றிய ஒரே மாதிரியான வேறுபாடற்ற கருத்தோட்டத்தைக் கொண்டிருத்தல் வேண்டும். (ii) தம்முடைய தாயகமே நிரந்தரமானது; புலம் பெயர்ந்து சென்றாலும் என்றோ ஒருநாள் தாயகம் திரும்புவோம் என்ற உறுதிப் பாட்டுடன் புதிய நாட்டில் வாழ வேண்டும். (iii) தாயக மீட்புக்கான ஒப்பளிப்புணர்வுடன் வாழ வேண்டும். (iv) தமது இன, மத, மொழி, பண்பாட்டு அடையாளங்களைப் பேணிவர வேண்டும். (v) தமது பிற்சந்ததியினரிடம் தமது இழப்பின் தன்மையை உணர்த்தி புதிய நாட்டு வாழ்க்கை நிரந்தரமல்ல, தாயகமே நிரந்தரம் என்ற உணர்வை வலியுறுத்த வேண்டும். 3. (i) திரும்பிச் செல்வோம் என்ற எண்ணமே மைகிரேசன் இடப் பெயர்வில் இல்லை, அது ஒருவழிப் பாதை 19ஆம் நூற்றாண்டில் நடந்த ஜரிஷ் மக்களின் வெளியேற்றம் போன்றது. 1947 ஆகஸ்டு மாதம் இந்திய - பாகிஸ்தான் பிரிவினையை யொட்டி நிகழ்ந்த மாபெரும் மக்கள் இடப் பெயர்ச்சியும் அது போன்றதே. (ii) அயர்லாந்தில் 1845 - 1852 காலப் பெரும் பஞ்சத்தில் மக்கள் தொகையில் எட்டில் ஒரு பங்கினர் (ஏறத்தாழ 10 இலட்சம் பேர்) பசி பட்டினியால் இறந்தனர். அயர்லாந்து மக்களின் முக்கிய உணவான உருளைக்கிழங்குப் பயிர் தொடர்ச்சியாகச் சில ஆண்டுகள் பூஞ்சைக்காளான் (fungus) நோய் தாக்கி முற்றாக அழிந்தது, அயர்லாந்தை ஆண்டு வந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர் நிவாரண உதவியும் வழங்கவில்லை; பிற நாடுகளுக்குத் தப்பிச் செல்வதற்கான உதவியும் செய்யவில்லை. இந்தக் கொடிய உருளைக்கிழங்குப் பஞ்சத்தில் சாகாமல் பிழைத்திட அயர்லாந்து மக்கள் 20 இலட்சம் பேர் அமெரிக்க, கனடா, ஆதிரேலியா, அர்ஜென்டினா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்குக் கடல் கடந்து சென்று குடியேறினர். இவ்வாறு பிறநாடுகளுக்குச் சென்று பின்னர் அங்கேயே நிலைத்து வாழும் அயர்லாந்து மக்கள் சந்ததியினர் எண்ணிக்கை இன்று 8 - 10 கோடி அளவில் இருக்கலாம். (iii) ரோஜர்ஸ் புருபேக்கர் (Rogers Brubaker) என்ற சமூகவியலாளர் 2005 இல் தந்துள்ள உலகின் முக்கிய புலம் பெயர்ந்த இனங்களின் பட்டியலில் ஈழத் தமிழர், குர்து (Kurds), காஷ்மீரி, பாலஸ்தீனர், பாஸ்கு (Basque), பர்மா நாட்டு ரோகங்கியா (Rohingya) ஆகியவை அடங்குவர். [uhã‹ கோஹன் Robin Cohen தனது Global diasporas - an introduction (2008) நூலில் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர் பற்றி விரிவாகக் F¿¥ãlÉšiy.] 4. பாகிஸ்தானும் இந்தியாவும் முறையே 1947 ஆகஸ்து 14, 15 அன்று விடுதலை பெற்றன, ஆனால் இரு நாடுகளுக்கிடையிலான எல்லைக் கோடு ஆகஸ்து 17 அன்று அறிவிக்கப்பட்டது. உலக மாந்தர் வரலாற்றில் மிகப்பெரிய இடப்பெயர்வு அப்போது நடந்தது. 10 கோடி இந்துக்கள் சீக்கியர் இந்தியா வுக்கும் முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கும், ஆகத் திடுமென ஏதிலிகளாகக் குடிபெயர்ந்தனர். இரு தரப்பினரும் மிகப்பெரிய இழப்பைச் சந்தித்தனர். 10 லட்சம் பேருக்கு மேல், படுகொலை செய்யப்பட்டனர். விடுதலைக்காக மக்கள் கொடுத்த கொடுமையான விலை அது. கொலையுண்டோர் போக ஏனையோர் எவரும் தமது தாய் நாட்டுக்குத் திரும்பிச் செல்லும் பேச்சுக்கே இடமில்லை. 5. (i) 1948 இல் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்ற இலங்கையில் நடந்தது சற்று மாறுபட்டது; தமிழரின் எண்ணிக்கை பலத்தைக் குறைப்பதற்காகவே அநியாயமாக குடியுரிமைப் பறிப்புச் சட்டம் 1948இல் நிறைவேற்றப்பட்டது. ஒரு நூற்றாண்டிற்கு மேலாக இலங்கையில் வாழ்ந்து அந்த நாட்டின் வளத்துக்காக உழைத்தத் தோட்டத் தொழிலாளர் (தமிழ் மக்கள்) வகுப்பு ஏதிலியாக்கப்பட்டது. உலகின் மனச்சாட்சியாகத் தன்னைக் காட்டிக் கொண்ட இந்திய பிரதமர் நேரு இதற்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை; ஆதரவு நல்கினார்! மேலாதிக்க அரசியலில் சிறுபான்மையினர் மீது பெரும்பான்மையினர் தமது மொழியைத் திணிக்கும் செயல் பல நாடுகளிலும் பண்டுதொட்டு நிகழ்வதுதான். மொழியானது (இந்தி, சிங்களம், உருது) எதுவாயினும் சரி, ஆக்கிரமிப்புக்கான ஒரு காரணியாகவே பயன்படுத்தப்படுகிறது. (ii) தமிழ் மொழியை ஒழிப்பதற்காகவே இலங்கை அரசு 1956 இல் சிங்களம் மட்டும் சட்டத்தை நிறைவேற்றியது. அதை எதிர்த்த தமிழர்கள் மீது கொடிய இனக்கலவரத்தை சிங்களவர் ஆதிக்க அரசே தூண்டி விட்டது. தொடர்ச்சியாக 1956, 1958, 1966, 1971, 1983 ஆகிய ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிராகக் கொடிய வன்முறைகள் நடந்தன. 6. (i) 1983 சூலை 23 அன்று தொடங்கிய கலவரங்கள் கறுப்பு சூலை இனக்கலவரங்கள் என்று தவறாக அழைக்கப்பட்ட போதிலும் உண்மையில் அவை தமிழர்களுக்கு எதிராகச் சிங்கள அரசின் நேரடி ஆதரவுடன் நடந்த தாக்குதல்கள் தாம். அன்று தொட்டுத் தமிழர்கள் குடும்பம் குடும்பமாக வெளியேறுகின்றனர். அந் நிகழ்வுகள் பற்றி சிங்களப் பேராசிரியர் எல். பியதாக (Piyadasa) தனது ஆய்வு நூலில் கூறுவது வருமாறு மூத்த அமைச்சர்கள் உட்பட அமைச்சர்கள், அதிகாரிகள், பொலிசார், இராணுவத்தினர், சிங்களக் காடையர்கள், பல தரப்பினர் இணைந்து திட்டமிட்டு ஈழத் தமிழர்கள் மீது புரிந்த இனப் படுகொலைகளை, தீவைப்புகளைச் சூறையாடல்களை, பாலியல் வன்முறைகளை 1983 சூலை மாதம் தொடர் நிகழ்ச்சிகளாகக் கண்டோம் (The holocaust and after, 1984 London.)” (ii) ஐரிஷ் மக்களின் விடுதலை இயக்கத்தில் 1854 – உருளைக் கிழங்குப் பஞ்சச் சாவுகளும், ஆண்ட ஆங்கிலேயர் அலட்சியப் போக்கும் திருப்புமுனையாயின. இலங்கையில் 1983 ல் தொடங்கிய சிங்கள அரசின் வன்முறைகள் தமிழீழத் தனி நாட்டுப் போராட்டத்திற்கு வேராக அமைந்தன. 7. (i) உலகின் புலம் பெயர்ந்த இனங்களில் மிகவும் துடிப்பானவர்கள் ஈழத்தமிழர்கள். இலண்டனில் வெளிவரும் எக்கனாமிஸ்ட் (Economist) இதழ் தமிழர் தமது பிள்ளைகளைக் கல்வித்துறை, விளையாட்டுத்துறை ஆகியவற்றில் முதலிடம் பிடிக்கச் செய்வதற்காகப் பல தியாகங்களைச் செய்கின்றனர் என்று கூறியுள்ளது. ஈழத் தமிழரின் தேசியம் தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டது. புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் தமிழை வளர்ப்பதோடு இணையத்தில் ஆங்கிலத்திற்கு அடுத்த நிலையில் தமிழை ஊடக மொழியாக்கியுள்ளதற்கும் முதன்மைக் காரணம் அவர்கள் தாம். (ii) 1956 இனக் கலவரத்திலிருந்தே தமிழ்மக்கள் பிற நாடுகளுக்குத் தஞ்சம் கோரிச் செல்லத் தொடங்கினர். நெடுந்தூரம் செல்லும் வசதி அற்ற ஈழத்தமிழர்கள் இந்தியாவில் முதலில் தஞ்சம் புகுந்து பின்னர், மேற்கு நாடுகளுக்குச் சென்று தமிழீழ அகதிகள் ஆகக் குடியுரிமை பெற்றுள்ளனர். (iii) ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளர் பற்றாக்குறை நிலவுகிறது. இந்தக் குறையைத் தமிழீழ மக்கள் இட்டு நிரப்புகின்றனர். கனடா போன்ற நாடுகள் தமிழீழ, மக்களின் பெறுமதியை உணர்ந்து அவர்களுக்குரிய உரிமைகளை வழங்குகின்றன. தமிழீழத்திற்கு வெளியே மிகக் கூடுதலான எண்ணிக்கையில் ஈழத் தமிழர்கள் வாழும் நாடு கனடா அவர்களுள் பெரும்பாலோர் 1983 வன்முறைகளுக்குப் பிறகு கனடா சென்றவர்கள். இன்று கனடாவாழ் ஈழத்தமிழர் தொகை 3,00,500; அவர்களுள் 2 இலட்சம் பேர் டோரன்டோ மாநிலத்தில் வாழ்கின்றனர். 8. (i) jÄæH Ãy¥gu¥ò« k¡fŸ bjhifí« tUkhW bkh¤j Ãy¥gu¥ò 21,952 rJu ».Û., (8,476 சதுர மைல்) மக்கள் தொகை - தமிழர்கள் 12,65,905 முஸ்லீம்கள் 4,15,267, சிங்களவர்கள் 1981 இல் 45,00,00 சிங்களவர்கள் 2011 இல் 6,85,896. (ii) தமிழர்கள் தாயகத்தில் இருந்து வெளியேறிக் கொண்டிருக் கிறார்கள். சிங்கள அரசு தனது மக்களைத் தமிழர் தாயகத்தில் இராணுவம், காவல்துறைப் பாதுகாப்புடன் முனைப்பாகக் குடியேற்றி வருகிறது. 2014 இல் ஈழத்தமிழர் தொகை மேலும் குறைந்திருக்கும், சிங்களவர்கள் தொகை குடியேற்றத்தின் மூலம் மேலும் கூடியிருக்கும். (iii) 1983ஆம் ஆண்டு தான் பெரும் எண்ணிக்கையில் ஈழத் தமிழர்கள் (2 இலட்சம் பேர்) இலங்கையை விட்டு வெளியேறினர். விரிவான தகவலுக்கு - Tamil Eelam, Wikipedia பார்க்கவும். 9. (i) தமிழீழ மக்கள் பேச்சு, எழுத்து, வழக்காற்றுத் தமிழில் உள்ள சொற்களின் இலக்கண, இலக்கிய வடிவங்கள் சில தமிழ்நாட்டில் பயன்பாட்டில் இல்லை. போர்த்துக்கேய, டச்சுமொழிச் சொற்கள் பல ஈழத்தமிழ் மொழியில் விரவியுள்ளன. புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தமது இலக்கிய படைப்புக்களில் ஈழத்தமிழ் வழக்குகளைப் பயன்படுத்து கின்றனர். கனடாவில் உள்ள புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் சமூகவியல் ஆய்வர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். சோம்பிக் கிடவாத துடிப்பான சமூகம் என்ற பெயரைப் பெற்றுள்ளனர். அத்தமிழர் தமிழ்மொழி வளர்ச்சியில் முனைப்புக் காட்டுகின்றனர், தமது பொருளாதார வலுவை உயர்த்துவதிலும் முனைப்புக் காட்டுகின்றனர். (ii) கடல் போலச் செந்தமிழைப் பெருக்க வேண்டும் என்றார் பாவேந்தர் பாரதிதாசன். உலகில் மிகக் கூடுதலானோர் பேசும் மொழிகள் வரிசையில் தமிழ் 15ஆம் இடத்தில் வருகிறது. உலக மக்கள் தொகையில் ஒரு விழுக்காட்டினர் தமிழைத் தாய் மொழியாகப் பேசுகின்றனர். 10. (i) கனடாத் தமிழர் வெளியிடும் தமிழர் மத்தியில் என்ற விவரச்சுவடி (Directory) பல நூறு பக்கங்களைக் கொண்டது, தமிழர்களுக்கான வணிகச் சேவைகள், தமிழர்கள் நடத்தும் வணிக நிலையங்கள் பற்றிய செய்திகள் அதில் உள்ளன. கனடாத் தமிழர்கள் செய்தி இதழ்கள் 10 ஐ நடத்துகிறார்கள் தமிழ்வானொலி நிலையங்கள் நான்கு, தமிழ்த் தொலைக்காட்சி நிலையங்கள் மூன்று இவற்றையும் நடத்துகிறார்கள் (இவை 24 மணி நேரம் இயங்குபவை) உலகின் மிகப்பெரிய வீடியோ, ஆடியோ, குறுந்தகடு விற்பனை நிலையங்களை டோரண்டோ தமிழர்கள் நடத்துகின்றனர். (ii) ஈழத்தமிழ் இளையோர் இந்து இளைஞர் வலையமைப்பை (Hindu youth Network) கனடாவில் செயற்படுத்துகின்றனர். கனடா தேசிய அரசியலில் ஈழத் தமிழர்கள் நல்ல தடம் பதித்துள்ளனர். பாராளுமன்றம், மாநிலத் தேர்தல் தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். (iii) கனடா தமிழ் காங்கிரஸ் அமைப்பு (Canadian Tamil Congress) தமிழர்களுக்கான தலைமை அமைப்பு என்ற நிலையைத் தாண்டி வளாந்து அனைத்துச் சமூகத்தின் நன் மதிப்பைப் பெற்ற இணைப்பு அமைப்பாக வளர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் பல்வேறினத்தவர்களின் பங்களிப்புடன் தமிழர்களின் தலைமைத்துவத்தைக் கொண்டு வருவதில் கனடாத் தமிழ் காங்கிரஸ் சாதனை படைத்துள்ளது. பல்வேறு இனத்தவர்களும் தமிழர்களைச் சமமானவர்களாகவும் தேவைப்படும் போது பிணக்குகளுக்குத் தீர்வு காணும் தகுதி உள்ளவர்களாகவும் மதிக்கின்றனர். (iv) ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த (தமிழகம் தமிழீழம், மலேசியா, சிங்கப்பூர், கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா ஆகியவற்றைச் சேர்ந்த) 78 படைப்பாளிகளின் தமிழ்க் கவிதைகள் டொரண்டோவில் 2014 மார்ச்சு 9 அன்று வெளியிடப்பட்டன 78 கவிஞர்களில் 21 பேர் பெண்கள். நூலின் ஆங்கிலப் பெயர் (Illustrated World - Billingual Global Tamil poetry) உலகில் - சமகால உலகத்தமிழ்க் கவிதைகள் நூல் ஆசிரியர் செல்வா கனக நாயகம். (டொரன்டோ பல்கலைக் கழக ஆங்கிலத்துறையும் தெற்காசியவியல் துறையும்)! நிதி ஆதாரத்தை அளித்தது. ஒன்டாரியோ அரசின் (Trillium Foundation) திரில்லியம் அறக்கட்டளை ஆகும். அமெரிக்காவின் சிக்காகோ பல்கலைக் கழகம் தென்னிந்தியவியல் துறைப் பேராசிரியர் சஸ்சா எபெலிங் (Sascha Ebeling) இந்நூலைத் திறனாய்வு செய்கையில் கடந்த சில வருடங்களில் தமிழ் இலக்கியம் உலகத் தமிழரை இணைக்கும் பாலமாகவும் மொழி வளாச்சிக் கருவியாகவும் மேம்பட்டுள்ளது- என்று பாராட்டியுள்ளார். 11. (i) அமெரிக்கா (USA) வாழும் தமிழர்கள் எண்ணிக்கை ஏறத்தாழ 3 இலட்சம். இவர்களிற் பெரும்பங்கினர் தமிழகத்தவர். மேற்குக் கரையோரத் தொழில் நுட்ப நகரங்களில் இவர்கள் கணினிப் பொறியியலாளர், பேராசிரியர் போன்ற உயர் தொழில் புரிகின்றனர். சிலிக்கன் பள்ளத்தாக்கு (Sillicon valley) என்ற கலிபோர்னியா மாநிலக் கணினி நகரில் பெருமளவு தமிழக வல்லுநர் பணியாற்றுகின்றனர். மைக்ரோ சாப்ட் நிறுவனத்தில் தமிழகப் பொறியியலாளரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. பெப்சி (Pepsi) மென்பானம் நிறுவனத் தலைவி சென்னைவாசியான இந்திரா அம்மையார். (ii) தமிழீழத் தமிழர்கள் நியூயார்க், லாஸ்ஏஞ்சல்ஸ், மத்திய நியூஜேர்சி போன்ற பகுதிகளிலும் காணப்படுகின்றனர். தமிழகத் தமிழர்களும் ஈழத் தமிழர்களும் சிறந்த முறையில் இணைந்து செயற்படுகின்றனர். நியூஜெர்சி தமிழ்ச்சங்கம் தமிழ்ப்பணி ஆற்றுகிறது. 12. இந்தியா முழுவதையும் எடுத்துக் கொண்டால் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை 30 இலட்சத்திற்கும் அதிகம். உலக நாடுகளில் நிரந்தரக் குடிமக்களாக வாழும் இந்திய மரபுவழி மக்கள் எண்ணிக்கை 2.50 (இரண்டரைக்) கோடி. 13. (i) தமிழையும் தமிழர்களுக்குரிய சைவ சித்தாந்தத்தையும் வளர்க்கும் ஆதீனம் அமெரிக்காவின் 50 ஆம் மாநிலம் ஆன ஹாவாய் தீவுகளின் ஒன்றான கவ்வை தீவில் உள்ளது. இந்த ஆதினத்தின் கிளைகள் மாரிசியஸ், யாழ்ப்பண அளவெட்டி ஆகியவற்றில் நிறுவப்பட்டுள்ளன. ஆதீனத்தை நிறுவியவர் சிவாய சுப்பிரமணிய சுவாமி என்ற (வெள்ளையர்) அமெரிக்கர் ஆவர். கவ்வை தீவில் இவர் தமிழகச் சிற்பிகள் தம் கையால் உருவாக்கிய சிவலிங்கம் என்ற திருக்கோயிலைக் கட்டியுள்ளார். முழுவதும் கல்லால் கட்டிய மேற்குலகின் ஒரேயொரு சைவக் கோயில் என்ற சிறப்பு உண்டு. (ii) சிவாய சுப்பிரமணிய சுவாமி (1927 - 2001) கலிபோர்னியா மாநிலத்தில் ராபர்ட் ஹான்சென் என்ற பெயருடன் வாழ்ந்து 20 ஆம் வயதில் சைவ மதத்திற்கு மாறினார். அவர் தனது ஞான குருவைத் தேடித் தமிழகம் வந்தார். ஒருவரும் அவருக்குத் திருப்தி அளிக்க வில்லை. யாழ்ப்பாணம் சென்ற அவர் யோகர் சுவாமி என்ற துறவியிடம் சந்யாசமும், சுப்பிரமணிய சுவாமி என்ற பெயரும் பெற்றார். 1980களில் ஈழத் தமிழர்கள் விடுதலைப் போர்க்காலத்தில் அல்லற்பட்ட மக்களுக்கு அவர் உதவி அளித்தார். ஈழத்தமிழ் அகதிகள் உலகெலாம் பரவிய போது அவர்களோடு தொடர்பு கொண்டு பல உதவிகளைச் செய்தார். (iii) தமிழீழ அகதிகள் வழிபாட்டுத் தேவைகளுக்காக, சுப்ரமணிய சுவாமி கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, டென்மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து நாடுகளிலும் பிஜித் தீவுகளிலும் சிவாலயங்களைக் கட்டிக் கொடுத்தார். இந்தியாவுக்கு வெளியே நடராசர் ஆடிய 108 தாண்டவ சிற்பங்களைப் பார்க்க வேண்டுமானால் கவ்வைத் தீவு இறைவன் சிவலிங்கம் கோவிலுக்குத்தான் போக வேண்டும். இந்த ஆதீனம் ஆற்றிய மிகப்பெரிய தமிழ்ப்பணி தமிழ் ஆகமங்கள் அனைத்தையும் கணினி மயப்படுத்தி இன்டர்நெட் மூலம் இலவசமாகப் படித்துப் பயன்பெறும் வசதி செய்ததாகும். இப்போது நிர்வாகம் வேலன்சுவாமி அவர்கள் பொறுப்பில் உள்ளது. (iv) தமிழ்ப் பணிபற்றிப் பேசும் போது கலிபோர்னியா பர்க்கலி பல்கலைக் கழகத்தின் தமிழ்ப்பிரிவையும் அதன் பேராசிரியர் ஜார்ஜ் எல் ஹார்ட் அவர்களையும் மனத்தில் இருத்த வேண்டும். தமிழ் 2004இல் செம்மொழித் தகுதி பெற வலுவான அடிப்படைச் செய்திகளைத் தந்து ஊக்குவித்தவர். ஹார்ட் சிறந்த தமிழ்ப் புலமையாளர், தமிழ் ஆர்வலர், இ. மறைமலையோடு தொடர்பில் உள்ளவர்; தமிழ்மொழி செம்மொழித் தகுதி பெறத் தடங்கலாக இருப்பது அரசியல் தான் என்று அவர் எழுதியது நினைவு கூரத்தக்கது. 14. புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களைப்பற்றி அண்மையில் வெளிவந்த ஒரு புள்ளி விவரத்தைக் குறித்தல் வேண்டும். தமிழீழ மக்களில் நான்கில் ஒருவர் மாத்திரமே தாயகத்தில் வாழ்வதாகவும் எஞ்சிய மூவரும் புலம்பெயர் நாடுகளில் குடிமக்களாகவும் அகதிகளாகவும் வாழ்க்கை நடத்துவதாகப் புள்ளி விவரம் குறிப்பிடுகிறது. இந்தியா, ஐரோப்பிய நாடுகள், வடஅமெரிக்க நாடுகள், ஆசிய நாடுகள் சில ஆகியவற்றில் ஈழத் தமிழர்கள் பரந்து வாழ்கின்றனர். மிகப்பெரும் எண்ணிக்கையில் ஈழத்தமிழர்கள் கனடாவில் வாழ்வதைக் குறித்துள்ளோம். 15. (i) அடுத்ததாக ஐக்கிய இராச்சியத்தில் வாழும் தமிழரில் (United Kingdom) 3 லட்சம் தமிழர்கள் தமிழீழத்தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. (ii) பிரான்சில் ஈழத் தமிழர் எண்ணிக்கை 1.5 இலட்சம் அவர்கள் அந்த நாட்டின் உள்ளாட்சி அரசியலில் தடம் பதித்துள்ளனர். ஐக்கிய இராச்சியம் நார்வே ஆகிய நாடுகளிலும் ஈழத் தமிழர்கள் உள்ளாட்சி அரசியலில் வெற்றி பெற்று உள்ளனர். (iii) ஈழத்தமிழர் எண்ணிக்கை டென்மார்க் நாட்டில் 10,000; நார்வேயில் 30,000; ஜொமனியில் 60,000; இத்தாலியில் 25,000; என்று தெரிகிறது; சுவிட்சர்லாந்தில் 50,000 வரை இருக்கலாம்; சுவீடன் 3,000; பின்லாந்து 2,000; ஆஸ்திரேலியா 40,000; ஆஸ்திரேலிய அரசு அகதி முகாம்களில் அடைத்து வைத்திருப்போர் பற்றிய விவரம் கிடைக்கவில்லை. (iv) முன்பு இலங்கையை ஆட்சிசெய்த ஒல்லாந்து நாடு இப்போது நெதர்லாந்து என்று அழைக்கப்படுகிறது. அங்கு வாழும் ஈழத்தமிழர் எண்ணிக்கை 25,000. 16. ஆசிய நாடுகளான கம்போடியா, வியட்நாம், லாவோ ஆகியவற்றில் ஈழத்தமிழரும் இந்தியத் தமிழரும் நிரந்தரமாக வாழ்கின்றனர். வியட்நாம் பெரு நகரம் ஹோ சி மீன் சிட்டியில் 3,000 தமிழர்கள் முருகன் கோயில் கட்டிக்கொண்டு வாழ்கின்றனர். கம்போடியா தலைநகரில் 1000 தமிழர்களும் லாவோசில் 500 தமிழர்களும் வாணிகம், கூலித்தொழில் என்று பலவித முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். 17. (i) ஈழத்தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (Tamil co - ordinating Committee) என்ற அரசியல் மற்றும் சமூக அமைப்பை உருவாக்கி செயற்படுகின்றனர். ஐக்கிய இராச்சியம், பிரான்சு, நார்வே, டென்மார்க் இத்தாலி சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகியவற்றில் எல்லாம் இந்தக் குழுக்கள் இயங்குகின்றன. அவை அனைத்துலகத் தொடர்பு வலையமாகவும் இயங்குகின்றன. ஈழத் தமிழர் தாம் வாழும் நாடுகளில் எல்லாம் கோயில்களை அமைத்துத் தேர்த்திருவிழா போன்ற சமய நிகழ்ச்சிகளைக் கொண்டாடுகின்றனர். தேசிய நிகழ்ச்சிகள், ஈழத் தமிழரின் போராட்ட வரலாற்றுடன் தொடர்புடைய முக்கிய நாட்களையும் சிறப்பாகக் கொண்டாடுவதோடு உள்ளூர் மக்களையும் இணைத்துச் செயற்படுகின்றனர். (ii) ஐரோப்பிய நாடுகளின் பள்ளிநிலைக் கல்விக் கொள்கையில் தமிழுக்கு இடமளிக்கவில்லை என்பதால் ஈழத்தமிழரின் பொருட் செலவையும், சிரமத்தையும் பாராது வார இறுதியில் தமிழ் வகுப்புகளை நடந்தி வருகின்றனர். 18. புலம் பெயர்ந்த ஈழத்தமிழர் பற்றி 1999இல் வெளியிட்ட பீட் பேக்கர் வேரை நினைவு கூருதல் (Romembering Roots by Piet Baker) என்ற நூலில் காலம் தூரம் பாராமல் புலம் பெயர்ந்து வாழ்வோர்க்கு ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதற்கும், தாயகம் பற்றிய செய்திகளைப் பகிர்வதற்கும், இன அடையாளங்களைப் பேணுவதற்கும் நவீன தொலைத் தொடர்பு சாதனங்கள் போக்குவரத்துச் சாதனங்கள் இணைய தளம் ஆகியவை வகை செய்கின்றன என்ற உண்மையைப் பதிவு செய்துள்ளார். இயல் - 7 பன்னாட்டுச் சட்டத்தின் படியான தன்னாட்சி உரிமை அரசியலமைப்பில் நாடு (State) என்ற சொல் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது. நாட்டிற்கு இருக்க வேண்டிய முக்கிய உறுப்புக்கள் ஆக அறிஞர் பெருமக்கள் வகுத்துள்ளவை. ஆள்நிலம் (territory) குடிமக்கள் (population) அரசு (Government) இறைமை அல்லது கோன்மை (soeverignty) ஒற்றுமை (unity) என்ற ஐந்தாகும். 2. ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பு தோன்றிய திருக்குறள் படை, குடி, பொருள், அமைச்சு, நட்பு, அரண் ஆகிய ஆறையும் அரசனுக்கு (அரசுக்கும் தான்) உறுப்பாகக் கூறியது. நாடு பற்றிக் கூறாவிட்டாலும் அது மேற்கூறிய ஆறின் அடிப்படையாகும். குடியின்றி நாடிருக்கலாம். ஆனால் நாடின்றிக் குடி இருக்க முடியாது 3. பல்வகைக் குடியரசுகள் தோன்றிச் செயல்படும் இக்காலத்தில் நாட்டின் (State) உறுப்புகளாக எட்டு வகைப்பண்புகள் இருக்க வேண்டியது இன்றியமையாதது. 1. வரையறை செய்யப்பட்ட ஆள்நிலம் (territory) 2. நிரந்தரக் குடிமக்கள் 3. பொருளாதாரச் செயல்பாடுகள் 4. மக்கள் நலப் பணி 5. நிருவாக அமைப்பு 6. சட்டம் ஒழுங்கைப் பேணும் அமைப்பு 7. இறைமை 8. பிறநாடுகளின் அறிந்தேற்பு மேற்கண்ட எட்டில் அரசை நேரிடையாகச் சொல்லாவிட்டாலும் பொருளாதார நடவடிக்கைகள் முதல் சட்ட ஒழுங்கைப் பேணுதல் வரையுள்ளவற்றை அரசு மட்டுமே வழங்க முடியும் என்பது உட்பொருள். 4. (i) நாட்டு மக்களுக்கிடையில் பொது அடையாளம், வரலாற்றுப் பின்னணி என்பன இருந்தாலொழிய எந்த நிலப்பகுதியும் நாடாக இருக்க மாட்டாது; இதை ஒற்றுமை என்பர். வள்ளுவர் குறள் 381இல் இறைமாட்சி அதிகாரத்தில் கூறிய நட்பு மிகவும் முக்கியமானது; இன்றைய சூழலில் அதை அறிந்தேற்பு எனலாம். தன்னாட்சி பெற்றாலும் நாடுகள் நட்புறவின்றித் தனித்தியங்க முடியாது. (ii) நாட்டு நிலப்பரப்பு, குடிமக்கள் தொகை இவை பற்றித் திட்டவட்டமான வரையறை எதுவும் இல்லை. மிகச்சிறிய நிலப்பரப்பையோ மிகக் குறைந்த குடிமக்களையோ ஒரு நாடு கொண்டிருக்கலாம், பிற தகுதிகள் இருந்தால் அது நாடாக ஏற்றுக் கொள்ளப்படும். உலக வங்கி (World Bank) தனது செயற்பாடு களுக்காக 15 இலட்சம் மக்கள் தொகையும் 200 சதுரமைல் பரப்பளவும் இல்லாத நாடுகளைச் சிறிய நாடாக வரையறுத்துள்ளது. அப்படி 56 நாடுகள் உள்ளன. ஐ.நா. உறுப்பு நாடுகள் 193 இல் 105 மக்கள்தொகை அடிப்படையில் தம்மைச் சிறிய நாடுகள்ஆகத் தெரிவித்துள்ளன. ஐ.நா.வில் சிறிய நாடுகள் அமைப்பு (Forum of small States) என்ற பெயருடன் 1992 இலிருந்து இயங்குகிறது. m›tik¥ò I.eh.,வில் பலமுறை மாற்றங்கண்டுள்ளது. 5. (i) fÇÕa‹ ÔîfËš x‹whd âÇÅlh£ - bjhgnfh á¿a ehL vÅD«, 1989ïš M©L I.eh., பொது அவையில் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் நிறுவப்பட வேண்டும் என்று முன் மொழிந்தது. 1994 ïš eilKiw¡F tªj I.eh.,வின் பன்னாட்டுக் கடல் வலயச் சட்டம் (International law of the sea) கொணர சிங்கப்பூர், மால்டா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் முதலில் குரல் கொடுத்தன. (ii) ஐ.நா. ghJfh¥ò mit cW¥ò jU« mo¥gil¡ nfh£gh£oš á¿a ehLfŸ bfh°lÇ¡fh, n#h®jh‹, È¡bl‹°il‹, á§f¥ó®, RÉ£r®yhªJ M»ait I.eh., சிறிய நாடுகள் அமைப்பை உருவாக்கிட 2012இல் தீர்மானம் கொண்டு வந்தன; ஆனால் பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பு நாடுகள் எதிர்ப்பால் அத் தீர்மானம் கிடப்பில் போடப்பட்டது. 1992ஆம் ஆண்டு முதல் இவ்வகையில் சிங்கப்பூர் உழைத்து வருகிறது. (iii) பசிபிக் கடலில் உள்ள வளர்முகத்தீவுகளின் அமைப்பு (Pacific Area Islands Develping Association) என்ற அமைப்பும் ஐ.நா. வில் இயங்குகிறது. (PACIDA) புவி வெப்பம் அடைந்து கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் தமது தீவுகள் முழுவதும் அழிந்து விடும் என இந்த அமைப்பு ஐ.நா. பொது அவையில் முறையீடு செய்கிறது. 6. சிறிய நாடுகள் உருவாவதற்கு விடுதலை உணர்வும் போராட்டக் குணமும் முக்கியக் காரணங்களாகும். இதுவரை விடுதலை அடையாத பெரிய நாடுகள் இன்று மிகக் குறைவு இல்லை என்றே கூறலாம். ஆனால் விடுதலைக்காக இன்றும் ஏங்கி வரும் சிறிய நாடுகள் எண்ணிக்கை மிக அதிகம். 1990இல் மாத்திரம் 31 நாடுகள் தன்னாட்சி பெற்று ஐ.நா. உறுப்புரிமை பெற்றுள்ளன. சூன், 2006 அன்று மொன்டி நெகிரோயும் 2002 மே மாதம் கிழக்கு திமோர் நாடும் ஐ.நா. உறுப்பினர் ஆயின. 7. இலங்கைத்தீவு பரப்பளவில் சிறியது; அதற்குள் இறைமையுள்ள நாடுகள் இரண்டு அமைய முடியாது என்று வறட்டுத் தனமாகப் பிதற்றுவார் இன்று நாம் உலகில் காணும் நடைமுறை நிலைமைகளைக் கூர்ந்து நோக்க வேண்டும். சிறு தீவுகளைப் பிரிப்பது கடினம் என்போர் தீவுகளல்லாத நாடுகளிலும் பல, பிரிக்கப் பட்டுத் தனி நாடுகள் ஆகியுள்ளதை உணர வேண்டும் சிறிய நாடுகளின் தோற்றம் பற்றிய ஆய்வு நூல் The Creation of States in International law James Crawford - Clarendon Press Oxford (1979) சொல்வது வருமாறு: - புதிய நாடுகளை உருவாக்கும் பொழுது வழக்கமாக அவற்றால் இயங்க இயலுமா? என்றுதான் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. வரையறுக்கப்பட்ட ஆள்நிலம், நிரந்தரக் குடிகள், (ஓரளவாவது) நிலையான அரசு, பிற நாடுகளின் வல்லாண்மைக்கு உட்படாதிருத்தல் போன்றவை முக்கியமாகக் கவனிக்கப் பெறுகின்றன. அந்தந்த நாட்டின் நிரந்தரத் தன்மை, அது பன்னாட்டுச் சட்டங்களை மதித்து நடக்கும் பண்பு, பிற நாடுகள் அதற்கு வழங்கும் அறிந்தேற்பு முதலியனவும் கருதப்படுகின்றன. 8. (i) ஈழத்தமிழர்கள் பன்னாட்டுச் சட்டம் வழங்கும் தன்னாட்சி உரிமைக் கோட்பாட்டின் (Self - determination) அடிப்படையில் தமது தனி நாட்டுக் கோரிக்கைகையை முன் வைக்கின்றனர். தத்தம் அரசியல் தலைவிதியைத் தாமாகத் தீர்மானித்துக் கொள்ளும் உரிமையை இக்கோட்பாடு வழங்குகிறது. (அது பற்றி விரிவாக அடுத்து வரும் இயல்களில் விளக்கப்படும்.) (ii) சிங்கள மக்களின் பிடியில் இயங்கும் இன்றைய இலங்கை அரசு இலங்கைத் தீவு மீதான சிறப்புப் புவியாளுமை ஒருமையை (Special Territorial Integrity) வலியுறுத்துகிறது; தமிழர்களுக்கென்ற தாயகமோ நிரந்தர வாழ்விடமோ இல்லை என்றும் அவ்வரசு தவறாகச் சாதிக்கின்றது. அதிகாரப் பரவலாக்கல் (devolution of powers) நாளடைவில் பிரிவினைக்கும் தனிநாட்டுத் தோற்றத்திற்கும் வழிவிடும் என்று சிங்கள இனம் நடத்தும் அரசு அஞ்சுகிறது. அயல் நாடுகளின் அழுத்தத்தில் வழங்கிய அற்ப சொற்ப அதிகாரங்களையும் கூடச் சிங்கள அரசு மீண்டும் எடுத்துக் கொண்டுவிட்டது. 9. 1985 இல் இந்திய அரசை நடுவராகக் கொண்டு நடந்த பேச்சுகளில் தமிழ்ப் தரப்பு முன் வைத்த கோரிக்கைகள்:- (i) ஈழத் தமிழர்களைத் தேசிய இனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். (ii) இலங்கையின் வடக்கும் கிழக்கும் இணைந்த தாயகத்தை அறிந்தேற்க வேண்டும். (iii) ஈழத் தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் பிரிந்து செல்லும் உரிமை உண்டு. தமிழீழ நாட்டின் தோற்றத்தைச் சிங்கள அரசு எதிர்ப்பதற்கான அடிப்படைக் காரணங்கள் வருமாறு:- 1. சிறிய தீவைப் பிரிக்க முடியாது. 2. இலங்கைத் தீவின் முழு நிலப்பரப்பில் 50%ஐயும் கடற்கரையின் 30% ஐயும் தமிழீழம் பெற்றுவிடும், சிங்களர் பகுதி சுருங்கி விடும். 3. சிங்களவர்கள் வடகிழக்கிலும் வாழ்கிறார்கள், அவர்களுக்கும் அது தாயகம் தான். 4. தமிழர்கள் தனி நாடு கேட்கவில்லை, பயங்கரவாதிகள் மட்டுமே கேட்கிறார்கள். 5. ஈழத் தமிழர்கள் இலங்கையின் நிரந்தரக் குடிகள் அல்ல பாண்டியர், சோழர் படையெடுப்புக் காலத்தில் குடியேறிய ஆக்கிரமிப்பாளர்கள் தாம். 6. jŤjÄæH« ïªâa eh£o‰F« Mg¤J ÉisÉ¡F« mªe£ò eh£il¥ ghJfh¥gJ vkJ mw«rh® bghW¥ò (1992 nk khj¤âš vš.o.o.,