கவிதை பயிற்றும் முறை (ஆசிரியரின் 67வது அகவை நிறைவு வெளியீடு) பேராசிரியர் டாக்டர் ந. சுப்பு ரெட்டியார் இளங்கணி பதிப்பகம் சென்னை-600 015. நூற் குறிப்பு நூற்பெயர் : கவிதை பயிற்றும் முறை உரையாசிரியர் : ந. சுப்பு ரெட்டியார் பதிப்பாளர் : க. இளந்திராவிடன் மறுபதிப்பு : 2009 தாள் : 18.6கி. என்.எ.மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 160 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 100/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, இராயப்பேட்டை, சென்னை - 6. வெளியீடு : இளங்கணி பதிப்பகம் எண் : 7/2 செம்படத்தெரு, சைதாப்பேட்டை மேற்கு, சென்னை - 600 015. பதிப்புரை கவிதை பயிற்றம் முறை எனும் இந்நூல் தமிழறிஞர் ந. சுப்புரெட்டியார் அவர்களால் எழுதப்பட்டு பாரிநிலையம் முதல்பதிப்பாக 1983 இல் வெளியிட்டுள்ளது. பாவலர்களுக்குப் பயன்படத்தக்க இந்த இந்நூலினை எம் பதிப்பகத்தின் வாயிலாக வெளியிட முன்வந்துள்ளோம். மொழிப்பாடத்தில் கவிதை எனும் இயல் தொடங்கி நான்கு யோசனைகள் எனும் இயலை முடிவாகக் கொண்டு 10 இயல்களில் முடிகின்றது. தமிழுலகில் பாவியம் எழுத முனையும் பாவலர்கள் அனைவரும் படித்துப் பின்பற்றத்தக்க நல்ல நூலாகும். பொருளடக்கம் அன்புப் படையல் 5 நூல் முகம் 7 1. மொழிப்பாடத்தில் கவிதை 13 2. கற்பிப்பவர் தகுதி 19 3. கவிதையைத் தேர்ந்தெடுத்தல் 32 4. கவிதை அறிமுகம் 43 5. கவிதையைப் படித்தல் 55 6. கவிதை விளக்கம் 64 7. கவிதையை வாய்விட்டுப் படித்தல் 80 8. அழகும் உண்மையும் 98 9. கவிதையைமனப்பாடம் செய்தல் 113 10. நான்கு யோசனைகள் 127 பின்னிணைப்பு 1: பயன்பட்ட நூல்கள் 144 பின்னிணைப்பு 2: கலைச்சொல் அகராதி 147 பின்னிணைப்பு 3: பொருட்குறிப்பு அகராதி 152 கவிதையை உணர்வூட்டிப் பயிற்றிக் கற்போரிடம் கவிதைவெறியை மூளச்செய்யும் தமிழாசிரியர்கள் அனைவர்க்கும் அன்புப் படையல் காப்பியம் யாவும் கசடற உணர்ந்தோர்; கற்பகம் எனநிழல் தருவோர்; பூப்பயில் காடாய் மணப்பவர்; கலைகள் புகுதரு கடல்எனப் பொலிவோர்; நாப்பயில் தமிழால் மாணவப் பயிரை நாடொறும் மாண்புற வளர்ப்போர்; மாப்புகழ் தமிழா சிரியர்கட் கிந்நூல் வழங்கினன் படையலாய்; வாழ்க! நூல் முகம் புத்தகம் படிக மாலை குண்டிகை பொருள்சேர் ஞான வித்தகம் தரித்த செங்கை விமலையை அமலை தன்னை மொய்த்தகொந் தளக பார முகிழ்முலை தவள மேனி மைத்தகு கருங்கட் செவ்வாய் அணங்கினை வணங்கல் செய்வாம்.1 பல ஆண்டுகட்கு முன்னர் டி.கே.சி. பம்பாய் சென்றிருந்த போது அவரை ஃபிரான்சு நாட்டைச் சார்ந்த மாடம் சோஃபியா வாடியா (Madame Sophia Watia) என்ற அம்மையார் (அப்போதுஅவர் இந்தியன் P.E.N சங்கத்தின் தலைவர்) தம் இல்லத்திற்கு அழைத்து விருந்தளித்து உபசரித்தாராம். இலக்கிய மேதையாகிய இப் பெருமாட்டி பன்மொழிப் புலமை வாய்ந்தவர் என்றாலும். தமிழ்மொழியை அறியாதவர். அம்மையாருடன் அளவளாவிக் கொண்டிருந்தபோது டி.கே.சி. திருவாசகத்திலிருந்து ஒரு திருப்பாடலை ஒரு தரம் பாடிக் காட்டி விளக்கம் கூறினார். அப்பார் சடையப்பன் ஆனந்த வார்கழலே ஒப்பாக ஒப்புவித்த உள்ளத்தார் உள்ளிருக்கும் அப்பாலுக் கப்பாலை பாடுதுங்காண் அம்மானாய்.2 என்பது அப்பாடல். அவர் கூறிய விளக்கம் இது : ஒரு குடத்துத் தண்ணீர் வீட்டுக்குக் கொண்டு வந்து வீட்டிலும் மச்சுப்படியேறி மாடிக்குக் கொண்டு சேர்ப்பதற்குள் திணறிப் போகிறோம் நாம். ஆனால், இறைவனோ கடலிலுள்ள நீரையெல்லாம் ஆவியாக மாற்றுகிறான். அதை வானத்திலே கொண்டுபோய்ச் சேமித்து வைத்துப் பக்குவக் காலம் வந்தால் மழையாகக் கொட்டுகின்றான். இந்த அரிய சக்தியையும் கருணையையும் உணர்ந்து வியந்த நம் முன்னோர்கள் சிவபெருமான் தன் தலைமேலே கங்கையையே குடமாக வைத்து இருக்கின்றான் என்று கற்பனை செய்திருக்கிறார்கள். அப்பு ஆர் சடையப்பா! (அப்பு-நீர்) என்று அவனைப் பாராட்டியிருக்கிறார்கள். தம்மையே அவனிடம் ஒப்படைத்து விடுகிறார்கள், அப்படிப்பட்ட ஞானிகளுடைய உள்ளத்திலேயே அவன் சப்பணம் போட்டு உட்கார்ந்து கொண்டு இருக்கின்றான். அதே சமயத்தில் இத்தகைய ஞானம் இல்லாதவர்களால் அறியப் படாதவனாயும் அண்டமும் கடந்து உகண்டமும் கடந்து எங்கேயோ தூரத்தொலைவில் உள்ள பேர்வழியாகவும் இருக்கிறான் என்கிறார். டி.கே.சி.3 இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த சோஃபிய வாடியா மணிவாசகரது மேற்காட்டிய பாடலைப் பல தடவை டி.கே.சி. யைப் பாடும்படிக் கேட்டு அநுபவித்து விட்டு இறுதியில் தமிழ் மொழியில் ஓர் அபூர்வ மந்திர ஆற்றல் இருக்கிறது. பாட்டின் ஒலியைக் கேட்கும் போதே ஓர் ஆனந்த மயக்கம் ஏற்படுகிறது. என்கிறார். இப்படி மொழி அறியாதவர்களையும் கவிதை அநுபவம் பெறச் செய்து விடுகின்றார் டி.கே.சி. டி.கே.சி கையாண்டமுறை தமிழ்க்கவிதை பயிற்றும் ஆசிரியர் கட்கு ஒரு வழிகாட்டு முறையாக அமைதல் வேண்டும். சில அண்டுகட்கு முன்னர் யான் ஆந்திர மாநிலத்திலுள்ள நெல்லூருக்கு ஓர் அலுவல் நிமித்தம் சென்றிருந்தேன். அது ஜுன் மாதம். ஆந்திர நண்பர் ஒரு பழ விருந்து அளித்தார். விருந்து சாமானியமானதே. இரண்டு வெள்ளித் தட்டுகளில் தட்டுக் கொன்றாக இரண்டு மாங்கனிகளை வேலைக்காரன் ஒருவன் எங்கள் முன்னிருந்த மேசையின் மீது கொண்டு வந்து வைத்தான். நண்பர் பழத்தைக் கையில் எடுத்துக்கொண்டு அதைத் தடவிக் கொண்டே நெருடினார். என்னை நோக்கி தினண்டி (தின்னுங்கள்) என்றார். நான் கத்தி ஒன்று வரும் என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன். அதற்குள் நண்பர் பழத்தின் அடிப்புறத்தி லிருந்து காம்பை நீக்கித் தொளையிட்டுப் பழத்தை அப்படியே உறிஞ்சிக் குடித்தார். பழரசத்தைப் பருகின விதம் என்னை வியக்க வைத்தது. பின்னர் எங்கள் முன் இருக்கும் பழம் ரசவருக்கத்தைச் சேர்ந்தது என்றும் இந்த வகைப் பழத்தை இப்படித்தான் உண்ண வேண்டும் என்றும் விளக்கினார். பின்னர் நானும் அவ்விதமே பழத்தை நெருடி அதன் சாற்றை அவர் பருகின முறையிலேயே உறிஞ்சிப் பருகினேன். அற்புதமான பழ அநுபவம் பெற்றேன். அப்போது டி.கே.சி. யின் நினைவுதான் வந்தது. டி.கே.சி ஒரு பாடலைப் பலமுறை படித்து இல்லை பாடி இறுதியில் மிகக் கம்பிரமாகப் பாடி கேட்போரைக் கவிதை அநுபவத்தின் கொடுமுடிக்கு இட்டுச் செல்வதை நினைத்துக்கொண்டேன் மாம்பழச்சாறும் டி.கே.சி தரும் கவிதை ரசமும் ஒன்றுபோல் இருந்தது. இன்றும் என்னை மனத்தால் சுவைக்க வைக்கின்றது. கவிதை பயிற்றலில் பல ஆசிரியர்கள் என் மனக்கண் முன் நிற்கின்றனர். முதலாவது நான் முசிறி உயர்நிலைப் பள்ளியில் (1933) ஐந்தாம் படிவத்தில் (பழைய பத்தாவது) படித்துக்கொண்டிருக்கும்போது தமிழ்க் கற்பித்தவர் திரு. ஜம்புலிங்கக் குருக்கள். அவர் கவிதை கற்பித்த முறை இன்றும் என் நினைவில் பசுமையாகவே உள்ளது. அவர் எழுப்பிய உணர்ச்சிதான் அடிப் படையில் என்னைத் தமிழ் வெறியனாகச் செய்தது. பின்னர் எவரும் கவிதையை அங்ஙனம் பயிற்றவில்லை. பின்னர் நான் சைதயில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் (1940-41) பயின்ற போது கல்வி உளவியலை இதே பாணியில் உளம் கவரும் முறையில் பயிற்றியவர் பேராசிரியர் குருசாமி ரெட்டியார் அவர்கள் அவர் கற்பிப்பது ஓமியோபதி மாத்திரையை உண்பதுபோல் இருக்கும். அவர் பொழிவுகளை உன்னிப்பாகக் கவனிப்பவர்களில் யான் ஒருவன். பெரும் பயன் பெற்றேன். உளவியல் என் ஆன்மாவுடன் ஒன்றி விட்டது. அடுத்து நான் ஆசிரியத் தொழிலில் இறங்கிய பிறகு (1941) (தலைமையாசிரியர், துறையூர் உயர்நிலைப் பள்ளி) அப்போது சேலம் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய திரு. வீ.உலக ஊழியனாரின் கவிதைப்பற்றிய சொற்பொழிவுகள் என் உள்ளத்தைக் கவர்ந்தன. பலமுறை சொற்பொழிவுகட்கென வரவழைத்துத் துறையூரில் (1943) பொருநராற்றுப்படை பாடங்கேட்டேன் பத்துப்பாட்டு சிலப்பதிகாரம் முழுதும் அவருக்கு மனப்பாடம். பொருநராற்றுப் படையில் பல அடிகளை இசையுடன் பல முறைப் படித்து நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்தும்போது துணிக் கடையில் நல்ல விற்பனையாளர் பல்வேறு வண்ணத் துணிகளை வேகமாக விரித்துக் காட்டும்போது அவை நம் கண்ணைக் கவர்வது போகல் உலக ஊழியனாரின் பாட்டிசை என் கருத்தைக் கவர்ந்தது. சொற் பொருளை ஏற்ற இடங்களில் கூறிக்கொண்டே பாட்டைப் பலமுறை பாடியே பொருநாராற்று படையை அற்புதமாகக் கற்பித்து விட்டார். இவர் ஒரு மேடையில் எண்டருங்கடை( அயோ. கைகேயி சூழ்வினை - 31) என்ற கம்பன் பாட்டையும் தையல் துயர்க்கு (நளவெண்பா 2 : 107) என்ற பாடலையும் இசையுடன் பாடி ஒப்பிட்டு விளக்கம் தந்தது இன்றும் அவ்விளக்கத்தைக் கேட்பது போன்ற உணர்வு ஏற்பாடுகின்றது. அடுத்து சென்னையில் (1944இல்) அகநானூறு களிற்றியானை நிரையில் 50 பாடல்களைக் கற்பித்தவர் காஞ்சிபுரம் தொண்டை மண்டல முதலியர் மடத் தலைவர் தவத்திரு ஞானப்பிரகாச சுவாமிகள். இவர்பூர்வ ஆசிரமம் திரு. முத்து சு. மாணிக்கவாசக முதலியாராக இருந்தபோது சென்னைப் பல்கலைக்கழகம் சீறாப்புராணம் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது பன்மொழிப்புலவர் திரு. வே. வெங்கட ராஜுலு ரெட்டியார் இல்லத்தில் இவரிடம் பாடம் கேட்கும் வாய்ப்பு ஏற்பட்டது. கடின சொற்களின் பொருளை விளக்கிக்கொண்டே பாடல்களை இசையுடன் பாடுவார்., பாடலின் இறுதியடியைப் பிடித்துக் கொண்டு கீழிருந்து மேலே போவார். சரியாக முடிச்சினை அவிழ்த்துவிட்டுச் சிவகாசி வெடிச்சரங்களை ஆட்டும்போது வெடிகள் தனித்தனியாக ஓடுவதுபோல், இவர் பாடலைக் கீழிருந்து மேலே பாடிக்கொண்டு போகும்போது சொற்களின் பொருளும் பாட்டின் முழுப் பொருளும் பாடலிலிருந்து கட்டவிழ்த்துக்கொண்டு என் மனதில் பாய்ந்து விடும். பின்னர் (1949)இல் காரைக்குடியில் நடைபெற்ற கம்பன் திருநாளுக்குச் சென்றிருந்தபோது டி.கே.சி. கானாள நிலமகளைக் (யுத்த மீட்சி-223) என்ற கம்பராமாயணப் பாடலையும் கிளைகளாய்க் (குற்றாலக் குறவஞ்சி பாயிரம்-3) என்ற திரிகூட ராசப்ப கவிராயரின் பாடலையும் இரண்டு பொழிவுகளில் விளக்கிமை இன்று கேட்பதுபோல் உள்ளது பேச்சைக் கேட்ட பலர் வீட்டிற்குத் திரும்பும்போது பாடல்களைச் சொல்லிக் கொண்டே போவதையும் கண்டேன்,. பாடல்கள் கேட்போருக்கு மனப்பாடம் ஆகிவிட்டன! இவற்றையெல்லாம் அறியும் நாம் ஆந்திர அன்பர்( ஏன்? நானும் கூடத்தான்) மாம்பழத்தை உண்ணும் முறையை நினைத்துக் கொள்ளவேண்டும். நான் காரைக்குடியில் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் தமிழ் பயிற்றும் முறைப் பேராசிரியனாக இருந்த பொழுது (1950-60) கவிதை பயிற்றும் முறையைப்பற்றிப் பலவாறு சிந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கல்வி உளவியல் பயிற்றும் முறை இவை பற்றிய பல மேனாட்டு நூல்களைப் பயின்று பல கருத்துக்களை அறியவும் அவற்றைச் சிந்திக்கவும் ஒரு கட்டாயம் ஏற்பட்டது சுற்றுப்பக்க ஊர்களிலுள்ள பல உயர்நிலைப்பள்ளிகட்கு பி. டி பயிற்சிபெறும் மாணாக்கர்களை இட்டுச்செல்லும் பொழுதெல்லாம் பல தமிழாசிரியர்கள் கவிதை பயிற்றுவதை நேரில் காணவும் வாய்ப்புகள் கிடைத்தன. இந்த வாய்ப்புகளில் காரைக்குடி நகராண்மைக் கழக உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியர் திரு. பூ. அமிர்தலிங்கம் அவர்களும் பள்ளத்தூர் உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியர் திரு. முத்து வேங்கடாசலம் அய்யர் அவர்களும் கவிதை பயிற்றின முறை என் உள்ளத்தைக் கவர்ந்தது. மனத்தில் இவற்றையெல்லாம் நிறுத்தி எழுதப் பெற்றதே இந்நூல். இது கவிதை அநுபவம் (மே 1961) என்ற என் நூலின் மூன்றாவது பகுதியாக அமைந்திருந்தது. இப்போது இது தனி நூலாக உலவத் தொடங்கியுள்ளது இதிலுள்ள கருத்துக்கள் கவிதை பயிற்றுவிப்பார்குப் பெருந்துணைபுரியும் என்பது என் அதிராத நம்பிக்கை. இதனை அழகுற அச்சிட்டு உதவியவர் என் அருமை நண்பர் திரு. முதபா அவர்கள் (மீரா பௌண்டேஷன் AE-103 அண்ணாநகர் சென்ன - 40, அச்சக உரிமையாளர்) நல்ல தமிழறிஞர் இதனை அழகுறக் கட்டமைத்துக் கற்போர் கரங்களில் தவழச் செய்தவர் கந்தனடிமை எ.பி. சண்முகம் பிள்ளை அவர்கள் (Ganesh Printing and Binding 6, ஃபிலிப் தெரு, சென்னை 600 040. என்ற நிறுவனத்தின் உரிமையாளர்) இவர்கள் இருவருக்கும் என் உளங்கனிந்த நன்றியைப்புலப்படுத்திக்கொள்ளுகின்றேன். நான் காரைக்குடியிலிருந்துகொண்டு இந்நூலை எழுதிய போது ஓரிரண்டு ஆண்டுகளில் என்னை ஆட்கொள்ள இருந்த ஏழுமலையப்பன் கலைவாணியின் அருளாக இருந்து எனக்குத் துணை செய்தான் என்பது என் திடமான நம்பிக்கை. மணி வாசப் பெருமான், அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை யெல்லாமும் குன்றே யனையாய்! என்னையாட் கொண்டே போதே கொண்டிலையோ? என்று (திருவா. குழை. பத்து - 7) கூறியதுபோல், புகல் ஒன்று இல்லா அடியேன் உன். அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே திருவாய் 6 10:10) என்று கூறி அந்த நாளை (ஆகடு 1, 1960) இன்று நினைத்து பார்க்கின்றேன். அன்றிருந்து இன்றுவரை எனக்கு உடல்நலத்தையும் மனவளத்தையும் நல்கி வரும் ஏழுமலயைப்பனை மனம் மொழி மெய்களால் வணங்கி வாழ்த்துகின்றேன். தெளிவுறவே அறிந்திடுதல் ; தெளிவுதர மொழிந்திடுதல் ; சிந்திப்பார்க்கே களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவுபல காட்டல்; கண்ணீர்த் துளிவரஉள் உருக்குதல் இங் கிவையெல்லாம் நீஅருளும் தொழில்க ளன்றோ? ஒளிவளரும் தமிழ்வாணீ! அடியேனற்கு இவையனைத்தும் உதவுவாயே.4 - பாரதியார் வேங்கடம் Ad - 13, அண்ணாநகர் சென்னை - 600 040. 7 - 9 - 1983 ந. சுப்புரெட்டியார் மொழிப்பாடத்தில் கவிதை கல்வியைப்பற்றியும் நடைமுறைக் கல்வியைப்பற்றிப்பலர் கூறும் கருத்துக்களைப்பற்றியும் நாம் சிந்தித்தால், இரண்டிலும் உள்ள குறைகள் ஒரே காரணத்தால் எழுகின்றன என்பதை அறிவோம். கற்பித்தலில் நேரிடும் கேடுகள் கல்வி முழுவதிலும் பரவுகின்றன பல அறிஞர்கள் கல்வியைப்பற்றிக் கூறும் குறைகள் யாவும் கற்பித்தலில் தம்முடைய நோக்கம் என்ன என்பதைப் பற்றித் தெளிவான கருத்தே இருப்பதில்லை தாம் மேற்கொள்ளும் முறைகளும் சரியானவைதாமா என்பது பற்றியும் அவர்களிடம் தெளிவான எண்ணம் இல்லை. பல்வேறு தவறுகள் : ஆனால் கல்வியைப்1 பற்றித் திறனாய்ந்து குறைகளை எடுத்துக் காட்டுவோரிடம் திட்டமான கருத்துக்கள் உள்ளன. கல்வியால் என்ன விளைய வேண்டு மென்று அவர்கள் எடுத்துக்காட்டிக் கற்பிக்கும் ஆசிரியர்களையும் தேர்வுகளில் வெற்றியடைந்து வெளிவரும் மாணாக்கர்களையும் குறை கூறுகின்றனர் ஆனால் பெரும்பான்மையான திறனாய்வாளர்கள்2 கல்வியைப்பற்றிக் குறை கூறுவோர் ஆசிரியர்களைப் போலவே குறைகளையுடையவர்கள் அவர்கள் ஓர் உண்மையைச் சரியாகப் புரிந்து கொள்வதில்லை. கல்விக்குப் பொறுப்புள்ளவர்கள் ஆசிரியர்களைச் செய்யும்படி ஏவுவது ஒன்று. இத் திறனாய்வாளர்கள் ஆசிரியரிடம் எதிர்ப்பார்ப்பது பிறிதொன்று கல்வியை இயக்குவோர் ஒன்றுகூற இத்திறனாய் வாளர் வேறொன்றை எதிர்பார்த்தால் ஆசிரியர்கள் என்ன செய்ய முடியும்? தம்முடைய நோக்கம் யாது என்பது பற்றித் தெளிவாக அறிந்து கொள்ளாத ஆசிரியர்களும் தவறுகின்றனர். ஆசிரியர்களின் நோக்கம் யாதாக இருக்க வேண்டும் என்பதை புரிந்துகொள்ளாத திறனாய்வாளர்களும் தவறு இழைக் கின்றனர் தாம் செல்ல வேண்டிய திசையை அறியாது ஆசிரியர்கள் சென்று கொண்டேயிருந்தால் அவர்கள் சரியான இடத்தை அடைவது எங்ஙனம்? ஆசிரியர்கள் எத்திசையில் செல்ல வேண்டும் என்பதுபற்றிப் புரிந்து கொள்ளாமலேயே, அவர்கள் ஒரு குறிப்புட்ட இடத்தை அடைய வில்லையென்று குறைகூறும் திறனாய்வாளர்களைப் பற்றி நாம் என்ன சொல்வது என்பது தான் தெரியவல்லை. எல்லாம் காலத்தின் கோலம் குடியரசு முறையால் விளையும் அற்புதங்கள் யார் எதை வேண்டு மானாலும் சொல்லலாம் என்பதால் ஏற்படும் விளைவுகள் ஒவ்வொரு துறையைப்பற்றியும் அத்துறை வல்லுநர்களே எதையும் கூறுவதற்கு உரியவர்கள் என்ற நியதி இருந்தால் இத்தகைய வேண்டாத கருத்து வேறுபாடுகள் எழுவதற்கு வாய்ப்புகளே ஏற்படா. மருத்துவத்துறை பொறியியல் துறை வேறு பல நுணுக்கமான துறைகளில் நடைபெறும் வேலை நுணுக்கத்தை பற்றி அத்துறைகளைச் சாராதவர்கள் எதையும் சொல்வதில்லை. அவற்றில் குறை கூறவும் அவர்கட்குத் தெரியாது. ஆனால் கல்வியைப்பற்றி எவரும் எதை வேண்டுமானாலும் கூறுகின்றனர். இதற்குக் காரணம் என்ன? பெரும்பாலான ஆசிரியர்கட்குத் தம் துறையில் அதிக நம்பிக்கை இல்லை. கல்வித் துறையில் தொழில் நுட்பம் எத்துணையளவு ஆராய்ச்சிகளால் வளர்ந்துள்ளது என்பதை அறிந்துகொண்டு அதற்கேற்றவாறு தாம் எங்ஙனம் பணியாற்ற வேண்டும் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதே இல்லை. இந்நிலையால் தான் கல்வித்துறையில் சொல்லொணா அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஏற்பட்டும் வருகின்றது. பாடத்திலும் குறிக்கோள் நிலை: ஒரு பாடம்3 கல்வி ஏற்பாட்டில்4 ஏன் சேர்க்கப்பெறல் வேண்டும் என்பதை ஆசிரியர்கள் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் இன்றியமையாதது. எய்த வேண்டிய முடிவினைத் தெளிவாக அறிந்து கொண்டால் தான் அதற்கேற்றவாறு கற்பித்தலைத் தாம் உருவாக்க முடிம். குழந்தையின் கல்வியில் ஒரு பாடம் எவ்வாறு வளர்ச்சிபெறுதல் வேண்டும் என்பதை ஆசிரியர்கள் அறிந்து கொள்ளாதவரையில் தாம் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆசிரியர்கள் புரிந்து கொள்ளாத வரையில் அவர்கள் நடைமுறையிலுள்ள கல்வி ஏற்பாட்டைக் கொண்டு செலுத்த முடியாது. ஆனால் முடிவு குறிக்கோள் நிலையில்5 இருந்து அதை என்றுமே அடைய முடியாதிருந்தால் என்ன செய்வது? என்று சிலர் வினவலாம். நாம் அடைய வேண்டிய முடிவுகள் யாவும்குறிக்கோள் நிலையில்தான் இருத்தல் வேண்டும். மானிட இனத்தின் சிறந்த பகுதியினர் யாவரும் அடைய முடியாத குறிக்கோள்களை எண்ணியே அவற்றை எப்படியும் அடைந்தே தீரவேண்டும் என்று கருதியே, தம்முடைய வாணாட்களைக் கழிக்கின்றனர். இதை நன்கு தெரிந்து கொண்ட அவர்கள் அங்ஙனம் தம்முடைய காலத்தைக் கழிக்கின்றனர். தொடுவானத்தை நோக்கிச் செல்வோர் அதனை ஒரு நாளும் எட்டி அடைய முடியாத நிலையைப் போன்றே இவர்கள் வகுத்துக்கொண்டே குறிக்கோளும் உள்ளது என்பது அவர்கட்கு நன்கு தெரியும் அங்ஙனமே ஆசிரியரும் தம்முடைய குறிக்கோளை அடைதல் வேண்டும் என்ற நோக்கத்தால் உந்தப்பெற்றுத் தம்முடைய முழு ஆற்றல்களையும் அதில் செலுத்த வேண்டும். தம்முடைய முழு முயற்சியையும் கொண்டு செலுத்த வேண்டும். அவர்களுடைய வெற்றியை எவ்வாறு அளப்பது? எந்த அளவுகோலைக் கொண்டு அளப்பது? ஆசிரியரின் குறிக்கோளை அடைவதற்கு இன்னும் எவ்வளவு தொலைவு உள்ளது என்று அளவிடுதலைவிடத் தம்முடைய மாணாக்கர்களை ஆசிரியர் எவ்வளவு உயரம் உயர்த்தியுள்ளார் என்று அளவிட்டு அறிவதே சிறந்தது. மாணாக்கர் முன்னிருந்த நிலையிலிருந்து எவ்வளவு உயர்ந்துள்ளனர் என்று காண்டலே வேண்டப்பெறுவது. விரும்பப்பெறுவது. ஆசிரியர் தம்முடைய கற்பித்தலில் மேற்கொள்ளும் எல்லா முறைகளையும் இந்த அளவுகோலினைக் கொண்டே அளத்தல் நலம் பயக்கும் இதனையே அவர்கள் நடைமுறையில் மேற்கொள்ளுதல் வேண்டும். கவிதை பயிற்றலின் நோக்கம் : கவிதை கற்பித்தலிலும் இத்தகைய சிறந்ததொரு குறிக்கோளை வகுத்துக்கொள்ள வேண்டியது தாய்மொழியாசிரியர்களின் தலையாய கடமை யாகும். கவிதையைப் பயிற்றலே தாய்மொழிப் பாடத்தில் உயிர்நிலை போன்ற பகுதி. இதில் ஆசிரியர்கள் தாம் வகுத்துக்கொண்ட குறிக்கோள் நிலையை அடையவேண்டும் என்று முயல்வதே தமிழ்க் கவிதைகளை தக்க முறையில் பயிற்றுவதாகும். தாய்மொழியாசிரியரின் வேலையைச் சோதிக்க வேண்டுமாயின் கவிதை கற்பித்தலில் அவருடைய வேலையைச் சோதிப்பதே சிறந்தது. தாய்மொழி பயிற்றலில் இப்பகுதியே மிக உயர்ந்தது. அவருடைய பெரும்பான்மையான காலத்தையும் ஆற்றலையும் இப்பகுதியே விழுங்குகின்றது. கவிதை கற்பிப்பதில் வெற்றி காணும் தாய்மொழியாசிரியர் தம்முடைய துறையின் ஏனைய பகுதிகளிலும் வெற்றியடைவார் என்பது ஒரு தலை ஆனால் ஒன்று ஏனைய பகுதியில் வெற்றியுடன் பணியாற்றிக் கவிதையைப் பயிற்றுவதில் வெற்றியடையாது போகவும் கூடும். கவிதை பயிற்றல் கடினமான துறை. தம்முடைய உணர்ச்சிகளையும் ஆற்றல் களையும் ஒருங்கு திரட்டிக்கொட்ட வேண்டிய துறை. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கவிதை பயிற்றப்பெற வேண்டியதற்குக் காரணம் என்ன? கவிதை ஒருகலை. கல்வி நிலையங்களில் மாணாக்கர்களிடம் முருகுணர்ச்சியை வளர்ப்பதற்காகவும் தாம் காண்பனவற்றில் அழகைக் கண்டு இன்புறும் பயிற்சி பெறுவதற்காகவும் கவிதைப்பகுதி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பெறுகின்றது. இந்த இரண்டு நோக்கங்கட்கு மேலும் கவிதை பல விளைவுகளை உண்டாக்குகின்றது என்பது உண்மையே. ஆனால் அவை மாணாக்கர்கள் அழகினை உணரும் அளவிற்கேற்பவே உண்டாகும். கவிதை அழகு தருவதுடன் நின்று விடுவதில்லை. அது வாழ்க்கை உண்மைகளையும் தருகின்றது. வாழ்க்கையைப்பற்றிய திறனாய்வுதானே கவிதை? கவிதையில் அழகே உண்மை ஏனைய கலைகளிலுள்ளதைப் போலவே கவிதையிலும் அழகின்மூலமே உண்மையை அடைகின்றோம். அழகைப்பற்றி எண்ணாத இடம் இல்லை. அழகின் மாட்டு உலகம் கொண்டுள்ள பற்றைப்போல் வேறு எதன் மாட்டும் அது கொள்ளவில்லை. அழகு அழகு என்று உலகம் அழகில் உறைந்து கிடக்கின்றது. குருமணி உறைந்து உருண்டு திரண்டாலென இருள் சூழ்ந்த கொண்டல்முடியும். செஞ்ஞாயிற்றின் எழுகதிர் உமிழும் இளவெயிலில் ஒன்றி அழகு காட்டும் பச்சைப் பசுங்காட்டுப் போர்வையும் மணி கொழித்து முழ வார்த்துச் சங்கொலிக்கும் அருவியணியும் வண்டு யாழ் முரலலும் குயில் பாட்டும் மஞ்ஞையாட்டுங் கொண்ட ஒரு மால் வரைக்கும்6 அழகு தந்தவர் யார்? ஞாயிறும் திங்களும் விண்மீன்களும் எவரால் இயற்றப்பெற்றன? நெருப்புக்கு வெம்மையும் புனலுக்குத் தன்மையும் ஊட்டியவர் யார்? இவை யாவும் இயல்பாக அரும்பியவை. கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பைக் கொண்டவை. முருகுணர்திறன்: இத்தகைய அழகைக் காணும் முருகுணர்ச்சியை நாம் மாணாக்கர்களிடம் வளர்க்கக் கூடுமாயின் இவர்கள் கல்வி நிலையங்களைவிட்டு வெளிவந்த பிறகும் யாண்டும் எதிலும் அழகினையே காண்பர். ஒலியிலும் ஒளியிலும் சிந்தையிலும் செயலிலும் அவர்கட்கு அழகு தட்டுப்படும். இந்நிலை எய்தப்பெற்றால் கல்வியின் விழுமிய பயனையே இவர்கள் அடைந்தவர்களாவர். இவர்கள் வாழ்க்கையில் புகுந்து நாட்டிற்கும் சமூகத்திற்கும் சிறந்த பணியாற்றி உயர்ந்த குடிமக்களாகத் திகழ்வர். நாம் வாழும் இவ்வுலகினைத் திரும்பப் படைத்து விடுவார். முருகுணர்ச்சி பெற்ற குடிமக்கள் நம்முடைய நகர்ப்புறங்களில் காணும் அருவெறுக்கத்தக்க காட்சிகளைக் காண்பதற்குச் சகியார். தீயநாற்றம் வீசும் சாய்க்கடைகள், தூசுகளும் புழுதிகளும் எழுப்பும் தெருக்கள், குப்பைக்கூளங்கள் நிறைந்த அங்காடிவீதிகள், காணவும் சகிக்க முடியாதவறியர் வாழும் குடிசைகள் இவர்கள் கவனத்தைப் பெற்றுச் சிறப்படையும் இவர்கள் நகர்த்தந்தை யர்களாகத் தேர்ந்தெடுக்கப்பெறுங்கால் நகரங்களைப் பல்லாற்றானும் ஒல்லும் வகையில் வனப்புடைய தாகச் செய்வார் கண்டோர் மகிழும் வண்ணம் கவின்பெறச் செய்து விடுவர். மக்கள் தக்க கல்வியைப் பெற்றால்தான் சமூகம் சிறந்த முறையில் முன்னேற்றம் அடையும் என்பதைச் சமூகச் சீர்திருத்தவாதிகள் முழு மனத்துடன் ஒப்புக்கொள்வர் தாம் என்னதான் பாடுபட்டாலும் மக்கள் தக்க கல்வி பெறாவிடின். தம் தொண்டால் நற்பயன் விளையது என்பதை இவர்கள் நன்கு அறிவர் புறநிலையில் காணும் கூறுகளைச் சீர்த்திருத்தம் செய்ய வேண்டியது மிகவும் இன்றியமையாதது என்றிருந்த போதிலும் அகக்கூறுகளைத் திருத்த வேண்டியது அதனைவிட முக்கயிமானது நகர்ப்புறங்களை வனப்பாகச் செய்வதை விடக் குடிமக்களின் மனத்தை உள்ளத்தை - விழுமியதாகச் செய்வது முதலில் வேண்டப்பெறுவது. கவினைக் காணும் மனப்பான்மையையும் வனப்பை விழையும் உள்ளத்தையும் மக்களிடம் வளர்த்துவிட்டால் அனைத்தும் சீர்படும். ஒரு சமூகத்தினரிடையே உடல் தூய்மையையும் எண்ணத் தூய்மையையும் செயல் தூய்மையையும் ஏற்படுத்துவதென்பது குதிரைக் கொம்பு நம்மால் செய்ய முடியாதது. ஆனால் அச்சமூகத்தினரிடையே இத்தகைய கூறுகளில் நல்ல மனப்பான்மையை உருவாக்கக்கூடுமாயின் அவர்கள் அழகிற்குப் புறம்பானவற்றை யெல்லாம் வெறுத்தொதுக்குவர். அருவெறுக்கத் தக்கனவற்றைக் கண்டு பொறுக்கவும் மாட்டார்கள். மானிட வாழ்க்கை மேம்பாடு எய்த வேண்டுமாயின் குழந்தைகளிடம் முருகுணர்திறனை - அழகு நலம் பாராட்டும் பண்பை வளர்த்தல் வேண்டும். இத்தகைய முருகுணர் திறனை வளர்க்கும் பாடக்குழுவில் கவிதையும் ஒன்று. கவிதையின் முக்கிய நோக்கம் இத்தகைய முருகுணர்திறனை வளர்ப்பதேயாகும் இக்காரணம் பற்றியே கவிதை கல்வி ஏற்பாட்டில் இடம் பெறுகின்றது. கல்வி வல்லுநர்களும் கவிதை கற்பித்தலைப் பெரிதும் வற்புறுத்துகின்றனர். கவிதையைச் சரியான முறையில் பயிற்றுவதற்கும் வழிவகைகள் ஆராயப் பெறுகின்றன. அடுத்து வரும் இயல்களில் கவிதை கற்பிப்பதைப் பற்றிய ஒரு சில கருத்துக்கள் வற்புறுத்தப்பெறுகின்றன. கற்பித்தல் துறையில் புதிதாகப் புகும் இளம் ஆசிரியர்கட்கு இவை பெருந்துணையாக இருக்கும். தமிழ்ச் சுலைஞர்களும் பொது மக்களும் இவற்றைப் படித்தால் பயன் பெறலாம். முதலாவதாகக் கவிதை கற்பிப்பவரின் தகுதியைப் பற்றிச் சிறிது ஆராய்வோம். கற்பிப்பவர் தகுதி ஆசிரியர்களைப் பற்றிப் பொதுவாக ஆன்றோர்கள் குறிப்பிட்டவை அனைத்தும் கவிதை கற்பிக்கும் ஆசிரியருக்கும் பொருந்தும். நல்லாசிரியரின் இயல்பை நன்னூல். குலனருள் தெய்வம் கொள்கை மேன்மை கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை நிலம்மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும் உலகியல் அறிவோடு உயர்குணம் இனையவும் அமைபவன் நூலுரை யாசிரி யன்னே1 என்று குறிப்பிடும். நல்லாசிரியரை நிலம், மலை, துலாக் கோல் மலர்ஆகியவற்றுடன் ஒப்பிட்ட காரணத்தையும் விளக்குவர் ஆசிரியர்2 பயிற்றும் முறைகளைக் கூறும் மேனாட்டு நூல்களும் நல்லாசிரியரின் தன்மைகளை நன்கு விரித்துரைக்கின்றன.3 இக்கருத்துக்கள் யாவற்றையும் கவிதை கற்பிக்கும் ஆசிரியர்கள் நன்கு சிந்தித்து உணர்தல் வேண்டும். இவை ஒருபுறமிருக்க அடியிற்கூறுபவை மிக மிக இன்றியமையாதவை. கவிதைகளை உணரும் நிலை : தேர்வுகள் எழுதிப் பல பட்டங்களைப் பெற்றுவிட்டால், கவிதை கற்பிக்கும் தகுதி தமக்கு வந்து விட்டது என்று ஆசிரியர்கள் கருதுவது தவறு. தேர்வு எழுதித் தகுதி பெறும் நிலை வேறு கவிதைகளை உணரும் நிலை வேறு. கவிதைகள் யாவும் அவற்றையாத்த கவிஞனின் உணர்ச்சிப் பெருக்கைக் காட்டுபவை. எனவே, கற்பிக்கும் ஆசிரியர்கள் தாம் கற்பிக்கும் கவிதைகளை உணர்ந்து பயின்றிருத்தல் வேண்டும். பயின்று கொண்டே இருக்கவும் வேண்டும். இவ்வாறு பயின்றால் தான் மின்னாற்றல் குறைந்த மின்கலம் (Battery) மீண்டும் மின்னாற்றாலைப் பெறுவதுபோல் ஆசிரியர்களும் புதிய உணர்ச்சி பெருக்கைப் பெற்றுக்கொண்டேயிருப்பர். கவிதைகள் வெறும் செய்திகளைக் கூறுபவை மட்டும் அன்று. இவற்றை இவை உணர்ச்சி கலந்து தருகின்றன என்பதை நாம் உணர்தல் வேண்டும். எனவே, கவிதைகளை நாளிதழ்களில் செய்திகளைப் படிப்பது போன்று படிப்பதால் பயன் இல்லை. செய்திகளைக் கூறும் நாளிதழ் நிருபர் நிலை வேறு. உணர்ச்சிகளைச் சித்தரித்துக் காட்டும் பெருங்கவிஞனின் நிலை வேறு. கவிஞன் சித்தரிக்கும் நிகழ்ச்சி ஒன்றினைப் பார்ப்போம் போர்க்களத்தில் மேகநாதன் மலரவன் படையை ஏவி மாயமாய் மறைந்து விடுகின்றான். இராமன் பக்கலில் உள்ள அனைவரும் இறந்து படுகின்றனர். இக்காட்சியைக் கண்ட இராமனும் சோகத்தால் மூர்ச்சை அடைகிறான். இந்நிலையை இராவணன் அரக்கிமார்களைக் கொண்டு சீதைக்கு நேரில் காட்டச் செய்கின்றான். அதைக் கண்ணுறும் மிதிலைச் செல்வி தண்டாமரைப் பூ நெருப்புற்ற தன்மையுறுகின்றாள். அவள் அடைந்த நிலையை இவ்வாறு கம்பன் நமக்குக் காட்டுவான். மங்கை அழலும் வானாட்டு மயில்கள் அழுதார், மழவிடையான் பங்கில் உறையும் குயில் அழுதாள் பதும மலர்மேல் மாதழுதாள் கங்கை அழுதாள்; நமடந்தை அழுதாள்; கமலத் தடங்கண்ணன் தங்கை அழுதாள்; இரங்காத அரக்கிமாருந் தளர்ந்தழுதார். அடித்தாள் முலைமேல்; வயிறலைத்தாள்; அழுதாள்; தொழுதாள்; அனல்வீழ்ந்த கொடித்தான் என்ன மெய்சுருண்டாள்; கொதித்தாள்; பதைத்தாள்; குலைவுற்றாள்; துடித்தாள்; மின்போல் உயிர்கரப்பச் சோர்ந்தாள்; சுழன்றாள்; துள்ளினாள்; குடித்தாள் துயரை உயிரோடும்; குழைத்தாள்; உழைத்தாள்; குயிலன்னாள், விழுந்தாள்; புரண்டாள்; உடல்முழுதும் வியர்த்தாள்; அயர்த்தாள்; வெதும்பினாள்; எழுந்தாள்; இருந்தாள்; மலர்க்கரத்தை நெரித்தாள்; சிரித்தாள்; ஏங்கினாள் கொழுந்தா! என்றாள்; அயோத்தியர்தம் கோவே! என்றாள்; எவ்வுலகும் தொழுந்தாள்; அரசே! ஓ என்றாள்; சோர்ந்தாள்; அரற்றத் தொடங்கினாள்.4 இப்பாடல்களில் கம்பனுடைய உணர்ச்சித்துடிப்பைக் காண்கின்றோம். சீதையின் சோக உணர்ச்சியைச் சித்தரிக்கும் தானும் சீதையின் சோகத்தைப் பகிர்ந்து கொள்கின்றான். சோக வடிவமாகின்றான். பாட்டுகளுக்கு உயிரூட்டிப் படிக்கும் நம்மையும் சோகக்கடலில் மூழ்கவைத்து விடுகின்றான். சோகத்தாலாகிய நங்கையின் உணர்ச்சியை நாமும் பெற்று விடுகின்றோம் கவிஞன் செய்யும் இதே வேலையைத்தான் கவிதைகளைக் கற்பிக்கும் ஆசிரியர்களும் தம் மாணாக்கர்களிடம் உண்டு பண்ண வேண்டும் இவ்வாறு கவிஞன் பாத்திரங்களின் மீது ஏற்றுக்கூறும் உணர்ச்சி களையும் கவிக்கூற்றாகக் கூறும் உணர்ச்சிகளையும் மாணாக்கர் களிடம் எழச்செய்து விட்டால் அதுவே ஆசிரியர் தம் கடமையில் கண்ட வெற்றியாகும். முதலில் ஆசிரியர் உணர்ச்சி வயத்தரானால் தான் அவ்உணர்ச்சி தம் முன்னுள்ள மாணாக்கர்களிடமும் பரவும் அவர்களும் உணர்ச்சி வயத்தராவர். உணர்ச்சி கிளர்ந்தெழும் தன்மையும் அவர்களிடம் தானாக வளரும். பலவேறுநிலை மாணாக்கர்கள் : சில மாணாக்கர்கள் கவிதையைத் தாமாகப் படித்துச் சுவைக்கும் திறனைப் பெற்றிருப்பர். ஆசிரியர் கவிதையை உணர்ச்சியுடன் கற்பித்தாலும் சரி, கற்பிக்காவிடினும் சரி, அவர்கள் தாமாகவே கவிதைகளின் உணர்ச்சியைப் பெற்று விடுவர். ஆனால் சராசரி மாணாக்கர்களிடம் இத்திறன் அமைந்திருக்கும் என்பது ஐயமே. ஆசிரியர் தாம் தம்முடைய கற்பிக்கும் திறனால், கவிஞனின் உணர்ச்சியை மாணாக்கர்களிடம் கிளர்ந்தெழச் செய்தல் வேண்டும். கவிதையைக் கேட்டு அநுபவிக்கும் கேள்விப்புலன் சிலரிடம் மட்டிலுமே அமைவது என்று சிலர் கூறலாம். இதில் உண்மை இல்லாமல் இல்லை. சிலரிடம் இசைக்கலையின் கேள்வி உணர்வு இல்லை. ஆனால் அவர்கட்கு இசைக்கலையைக் கற்பிக்கும் பொறுப்பு தருவதில்லை ஆயின் இசையைக் கேட்டநுபவிக்கும் உணர்வு இருந்தால், சரியான பயிற்சியினால் அவ்வுணர்வை வளர்க்கலாம். கவிதை கற்பித்தலிலும் அப்படித்தான். கவிதையைப் படித்து அநுபவிக்கத் தெரியாதவர்களிடம் கவிதையைக் கற்பிக்கும் பொறுப்பைத் தருவதால் என்ன பலனை எதிர் பார்க்க முடியும்? ஆனால் அத்தகையோர் ஒரு சிலர்தாம் இருப்பர். பெரும்பாலான மக்கள் கவிதையை உணர்ந்து படிப்பதைக்கேட்டு அநுபவிக்கும் திறனைப் பெற்றிருப்பர். ஆசிரியரின் பொறுப்பெல்லாம் அத்தகைய திறனை மாணாக்கர்களிடம் வளர்த்து விடுவதேயாகும். ரசிகமணி டி.கே.சி. அவர்கள் தாய்மொழியை வெறுத்து ஆங்கில மோகத்தில் இருந்தவர்களையெல்லாம் தாய்மொழிக் கவிதைகைளச் சுவைக்கும்படி செய்ததை நாம் அறிகின்றோம். மதமாற்றம் செய்யும் பாதிரி யாரிடமுள்ள திறன் டி.கே.சி. அவர்களிடம் அமைந்திருந்ததை அவருடைய நண்பர்கள் நன்கு அறிந்திருந்தனர். சுவைஞர்களின் கூட்டத்தில் டி.கே.சி அவர்கள் ஒரு சுவைக்குன்றுபோல் காட்சியளிப்பார். அவரிடமிருந்து சுவை அலைகள் மின்விசைபோல் மெதுவாகப் பரவிச் சென்று சுவைஞர்களை அடைந்துவிடும். சிறுது நேரத்தில் சுவைஞர்கள் அனைவருமே சுவைக் குன்றுகளாகிவிடுவர். சுவைஞர்களின் கூட்டம் சுவைக்கடலாக மாறிவிடும். இத்தகைய நிலையினை ஆசிரியர் கவிதை வகுப்புகளில் நிலவும்படி செய்தல் வேண்டும். தமிழ்க்கடல் ராய, சொ. அவர்கள் காரைக்குடி இந்து மதாபிமான சங்கத்தில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று இத்தகையதொரு சூழ்நிலையை நிலவச்செய்ததைக் காரைக்குடி இலக்கிய அன்பர்கள் நன்கு அறிவர். சில ஆசிரியர்கள் கற்பிக்கும் முறை : சில ஆசிரியர்கள் கவிதைப் பாடத்தை உணர்ச்சிக்குரிய பாடம்போல் கற்பிக்காமல் அறிவுக்குரிய பாடமாகக் கற்பிப்பதைக் காண்கின்றோம். அவர்கள் வரலாற்று விவரங்கள் புவியியல் குறிப்புகள், தன்-வரலாற்று நிகழ்ச்சிகள் பல்வேறு கதைக்குறிப்புகள், சொல்லிலக்கணக் குறிப்புகள், அணிவகைகள் முதலியவற்றில் அதிகக் கவனத்தைச் செலுத்திக் கற்பிக்கின்றனர். இம்முறையில் கற்பிக்கப் பெறும் மாணாக்கர்கள் கவிதையைத் தவிர ஏனைய அனைத்தையும் அடைவர்! இவ்வாறு கற்பித்ததற்குக் காரணம் என்ன? கவிதை அவர்களிடம் இல்லை. கவிதை உள்ளமும் அவர்களிடம் இல்லை. அதனால்தான் அவர்கள் கவிதையை உயிரியல் ஆய்வாளர் ஆய்வுப்பொருளை ஆய்வகத்தில் சிதைத்துக் கூறுபடுத்தி ஆராய்வதுபோல் கவிதை ஆராய்ச்சி நடத்துகின்றனர்! இத்தகைய குறிப்புகள் யாவும் மாணாக்கர்களுக்குத் தேவையில்லை என்பது இந்நூலாசிரியரின் கருத்தன்று. அவற்றைக் கற்பிக்கும் இடம் வேறு. சந்தர்ப்பமும் வேறு. கவிதைச் சுவையில் மாணாக்கர்களை ஈடுபடுத்தும்போது அவை கூடா என்பதே கருத்தாகும். கவிதைகளைப் பயிற்றும் ஆசிரியர்கள் என்றும் கவிதை களைப் பயின்று கொண்டேயிருக்க வேண்டும் என்று மேலே கூறினோம் அல்லவா? அவ்வாறு பயின்றவண்ணமிருந்தால்தான் ஆசிரியரிடம் கவிதை உயிருடன் நிலவும். ஆசிரியர் தாம் கற்ற கவிதைகள் தம் தொழிலுக்குப் போதும் என்று எண்ணிக் கவிதைகளைப் படிப்பதையே நிறுத்தி விடுவாராயின், அவர் முன்னேற்றத்தை விரும்பவில்லை என்றும் அதற்குப் பதிலாகப் பின்னோக்கிச் செல்லுகின்றார் என்றும் கருத வேண்டும். படித்தலில் நிறுத்தமே கூடாது. வாழ்க்கை என்றால் அதில் துலக்கமும் இருக்கும். மாற்றமும் காணப்பெறும். படித்தலில் ஓய்வு பெறுதல் என்றால் சாதலின் தொடக்கம், அழிவின் அறிகுறி. கற்பிப்பதற்கு வேண்டிய கவிதைகள் ஆசிரியருக்குத் தெரியும் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் நாம் விரும்புவது கவிதையைப் பற்றிய அறிவு அன்று. வாழ்க்கையின் பொலிவு, மலர்ச்சி, வேலையின் மீது உற்சாகம் ஆகியவற்றையே நாம் விழைகின்றோம். இவை யாவும் கவிதை உயிருடன் நிலவும் ஆசிரியரிடம் மட்டுந்தான் காணப்பெறும் அவரிடம் தான் உணர்ச்சிப் பெருக்கும் வற்றாது தோன்றும். மழையின்றேல் ஏரி நீர் வற்றிப்போகும். மணற்கேணி தொட்டனைத்துத்தானே ஊறும்? அது போலத்தான் கவிதையும். படிக்கும் அளவை யொட்டித்தானே கவிதைகள் உயிரோட்டத்துடன் இலங்கும். கற்றனைத்து ஊறும் அறிவு. ஒரு சிலர் தவறாக ஆசிரியத் தொழிலை மேற்கொண்டு ஆசிரியர் சமூகத்திற்கே இழுக்கினைத் தேடுகின்றனர். இவர்கள் தமக்குச் சிறிதும் பொருத்தமற்ற தொழிலிலிருந்து கொண்டு மாணாக்கர்களின் காலத்தை வீணாக்குவதைவிடத் தமக்கேற்ற தொழிலுக்குப் போய் விடுவது நல்லது. கல்வி என்ற தோட்டத்தில் இத்தகையவர்கள் இருப்பதால், அவர்களிடம் அறிவு பெறும் மாணாக்கர்களாகிய இளஞ்செடிகளின் வளர்ச்சி குன்றிவிடுகின்றது. ஆசிரியத் துறையின் சிறப்பு : எல்லாத் துறைகளையும் விட ஆசிரியத் துறை மிகவும் சிறந்தது என்பதற்கு ஐயமில்லை. தம்மிடம் பயிலவரும் தெய்வ உருவங்கள் போன்ற சிறுவர்களின் அஞ்ஞான இருளை அகற்றும் நிலையிலுள்ளனர் ஆசிரியர்கள். எல்லாக் காலங்களிலும் அத்துறை அஞ்ஞான இருளையகற்றும் வழியாகவே அமைந்துள்ளது. ஆசிரியர்களும் அத்துறையைத் தாமாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டனர் என்பதை நன்கு அறிவர். வாழ்க்கை நடத்துவதற்கு ஏதோ அத்துறையால் சிறிது வருவாய் கிடைப்பினும், ஆசிரியர்கள் செய்யும் தொண்டிற்கு அது சிறிதும் இணையாகாது. ஆனால் சிறந்த முறையில் கவிதை பயிற்றிய பிறகு தம்முன் அமர்ந்திருக்கும் நாற்பது அல்லது நாற்பத்தைந்து சிறுவர்களின் முகமலர்ச்சியைக் காண்பதற்கு இவ்வுலகில் வேறு எதையும் ஈடாகச் சொல்லமுடியாது. ஆசிரியர் பெறும் மகிழ்ச்சிக்கு ஏதாவது ஈடு சொல்ல வேண்டுமாயின், பாரதப்போரில் கன்னன் தன் கடமைகளை நிறைவேற்றி விட்டதாகக் கொண்ட மகிழ்ச்சியைத்தான் ஈடு சொல்லலாம். கன்னனுடைய புண்ணியமனைத்தையும் கண்ணன் பெற்று அவன் கேட்ட வரங்களையும் தருகின்றான். அன்றியும். கூற்றுறழ், கராவின் வாயினீன்றழைத்த குஞ்சர ராசன் முன் அன்று தோற்றிய திருமாலின் தரிசனமும் கன்னனுக்குக் கிடைக்கின்றது. தன் கடமையை முடித்துக்கொண்டமைக்காகவும் இம்மையிலேயே அமலநாரணைத் தான் காணப்பெற்றதற்காகவும் பெரு மகிழ்ச்சியுற்றுத் தன் மகிழ்ச்சியைக் கண்ணனுக்கு இவ்வாறு தெரிவிக்கின்றான் கன்னன். தருமன் மகன் முதலான அரிய காதல் தம்பியரோ டெதிர் மலைந்து தறுகண் ஆண்மைச் செருவிலென துயிரனைய தோழற் காகச் செஞ்சோற்றுக் கடன்கழித்தேன்; தேவர் கோவுக்கு உரைபெறுநற் கவசமுங்குண் டலமும் ஈந்தேன்! உற்றபெரு நல்வினைப்பேறு உனக்கே தந்தேன் மருதிடைமுன் தவழ்ந்தருளும் செங்கண் மாலே! மாதவத்தால் ஒரு தமியன் வாழ்ந்த வாறே. வான்பெற்ற நதிகமழ்தாள் வணங்கப்பெற்றேன், மதிபெற்ற திருவுளத்தான் மதிக்கப் பெற்றேன்: தேன்பெற்ற துழாயலங்கற் களப மார்பும் திருப்புயமும் தைவந்து தீண்டப் பெற்றேன். C‹bg‰w gfÊÆdhš mʪJ 圪J« cz®îl‹ Ë âUehk« ciu¡f¥bg‰nw‹ ah‹bg‰w bgUªjt¥ng bw‹id a‹¿ ïUÃy¤âš ãwªnjhÇš ah®bg‰whnu!5 ஆசிரியரும் தம் வாழ்நாள் முழுவதும் எத்தனையோ சிறுவர் கட்கு அறிவினை நல்கி அவர்களின் முகமலர்ச்சியைக் கண்ணாரக் கண்டு அநுபவத்திருப்பார். இந்த அநுபவந்தான் அவர் பெற்ற பேறு. அதிகம் சொல்வானேன்? மேற்கண்ட இரண்டு பாடல் களையும் மாணாக்கர்கட்குக் கற்பிப்பதாகக் கொள்வோம். போர்க் களத்தில் கன்னனும் கண்ணனும் இருந்த சூழ்நிலையையே வகுப்பில் திரும்பப் படைத்து மாணாக்கர்களைக் கவிதைச் சுவையின் கொடுமுடிக்குக் கொண்டு செலுத்தினால் அவர்கள் முகத்தில் இன்பம் ததும்பியோடும் அவர்கள் முகமலர்ச்சியே இதனைக் காட்டும் இதனை ஆசிரியர் கண்ணுறும்பொழுது அவரும் பேரின்பக் கடலில் மூழ்குன்றார். இப்படி ஆசிரியர் எத்தனையோ வாய்ப்புகளைக் கண்டிருப்பார். இந்த அநுபவமே அவர் தம் துறையில் பெறும் உண்மையான ஊதியமாகும். ஆசிரியத் துறையின் சிறப்பை இன்னோர் எடுத்துக்காட்டாலும் விளக்கலாம். சாதாரண மனிதருக்கு இல்லாளின் அன்றாடத் தொண்டு முடிவில்லாத சலிப்பாகத் தோன்றலாம். சலிப்பும் அலுப்பும் தரக்கூடிய ஒவ்வொரு சிறு விவரங்களையும் கவனிக்கவேண்டிய தொல்லை தரும் பணியாகவும் தோற்றலாம். இத்தனையும் பொய்யான காயத்திற்கும் காற்றடைத்தபைக்கும் செய்கின்ற செயல்கள் தாமே என்றும் அவர் நினைக்கலாம். ஒருவருக்கு வாழ்க்கைத் துணைவியாக வந்தாள் தொட்டு இச்சிறு விவரங்களையும் கண்ணுங்கருத்துடன் யாதொரு சலிப்புமின்றித் தொடர்ந்து அவள் செய்து வருவதற்குத் காரணம் என்ன? அவளது தன்னலமா? இல்லை. இவை யனைத்தையும் ஒன்றாகப் பிணிப்பது ஒன்றே ஒன்றுதான் அதுதான் அன்பு குடும்பத்தின் மீது அவள் கொண்டுள்ள அன்பு. தன் துணைவனின் நலம். தனது செல்வச் சிட்டுக்களின் நலம் ஆகியவற்றைக் கவனிப்பதையே தன் கடன் எனக் கொண்டு பின் தூங்கி முன் எழும் பேதையர்களால்தாம் இவ்வுலகம் இதுகாறும் நிலைபெற்று வருகின்றது. இத்தகைய குடும்ப விளக்குகள் தாம் இவ்வுலகத்தை நன்முறையில் இயங்கச் செய்கின்றனர். இத்தகைய பொறுப்புகளையும்தன் திருமணத் தன்று பெறுகின்றாள் குடும்பத் தலைவி. இத்தலைவியின் பொறுப்பைப் போன்றதுதான் ஆசிரியரது பொறுப்பும். அவள் பல தொல்லைகளை மறந்து தன் கடமையிலேயே கவனம் செலுத்துவதைப்போலவே. ஆசிரியரும் தம் அவலக்கவலைகளை யெல்லாம் மறந்து தாமும் கவிதை இன்பத்தில் திளைத்து தம்மிடம் பயிலும் சிறுவர்களையும் அதில் திளைக்கச் செய்ய வேண்டியவராக உள்ளார். ஆசிரியப் பணியை ஏற்ற அன்றே அப்பொறுப்புகள் அவரை வந்தடைகின்றன. ஆசிரியர் அடையும் மகிழ்ச்சி : கல்வியின் முக்கிய நோக்கங்களுள் ஒன்று rhšãid6 வளர்ப்பது. ஆசிரியர் இதில் கவனம் செலுத்தாவிடில் சால்பிற்கு எல்லைக்கோடுகளை யாவர்தாம் வரையறுப்பது? சால்பினை வளர்க்கும் பொறுப்பு ஆசிரியரையன்றி வேறு எவரும் மேற்கொள்ள இயலாது. மேற்கொண்டாலும் தக்க பயனைக் காணல் இயலாது. ஆசிரியர்களே மாணாக்கர்களின் வீர வழிபாட்டிற்குரியவர்கள். ஆசிரியருக்கு அநுபவம் பெருகப் பெருகச் சால்பினை வளர்க்கும் பெருவழி மிகவும் வியப்பினைத் தருவதாக அமைகின்றது. அந்த வழியில் காணும் ஒவ்வொன்றும் புதியனவாகவே தோற்றமளிக்கும். நன்மையும் தீமையும் தரும் ஆற்றலும் மகிழ்ச்சியையும் துன்பத்தையும் நல்கும் ஆற்றலும் அவர்கள் கையில்தான் உள்ளது. அவர்கள்தாம் அதனைச் சரியாக உணர்தல் கூடும். அந்தப் பொறுப்பினை அவர்கள் நன்கு உணர்வார்களாயின், அது சுமக்க முடியாத அளவுக்குப் பெரிதாக இருப்பது தெரியவரும். கற்பித்தல் என்பது ஒருவரது பணியின் ஆற்றலையும் சாத்தியப்படக் கூடியதையும் காட்டுவதைப்போலவே, அவரது சிறுமையையும் எடுத்துக்காட்டவல்லது. தாம் என்ன செய்யலாம் என்பதையும் தம்மால் என்ன செய்யமுடியும் என்பதையும் ஆசிரியர் காணும் பொழுது அவர் தம்முடைய சுவட்டிலேயே தாம் வகுத்துக்கொண்ட துறையிலேயே சிலர் மிகப்பெரிய நிலையை எய்துகின்றனர் என்று காண்பர். தம்முடைய ஆற்றலையெல்லாம் கொட்டி ஒரு பாடத்தை முடித்தபிறகு தாம் காண்பதைப்போன்ற பெருமிதத்தை வேறு எப்பொழுதும் அவரால் காணமுடிகின்றதில்லை அவரிடம் பாடங்கேட்ட சிறுவர்கள் பள்ளியை விட்டு வெளிச் செல்லுகின்றனர். ஆசிரியரும் சதாரணமனிதராகி விடுகின்றார். ஆனால் அந்த ஒரு மணி நேரமாவது தம் வாழ்க்கை முழுத்தன்மை எய்தியது என்ற உணர்ச்சி அவரிடம் கட்டாயம் இருக்கத்தான் செய்யும். ஆசிரியத் தொழிலில் இல்லாதவர்களும் இத்தகைய பேரின்பத்தை அடையும் வாய்ப்பு உண்டு. ஒரு நல்ல கவிதையைப் படித்து அதன் சுவையை அநுபவித்தவர்களும் அந்தக் கவிதையைப் படித்த ஒரு சிறிய கால அளவிலாயினும் தம்முடைய வாழ்க்கை முழுத்தன்மை எய்தியது என்பதை உணர்வர் எடுத்துக்காட்டாக, எள்ளத் தனைவந் துறுபசிக்கும் இரங்கிப் பரந்து, சிறுபாண்டி எக்கிக் குழைந்து, மணித்துவர்வாய் இதழைக் குவித்து விரித்தழுது துள்ளித் துடித்துப் புடைபெயர்ந்து தொட்டில் உதைத்து. பெருவிரலைச் சுவைத்துக் கடைவாய் நீர்ஒழுகத் தோளில் மகரக் குழைதவழ மெள்ளத் தவழ்ந்து, குறுமூரல் விளைத்து, மடியின் மீதிருந்து விம்மிப் பொருமி முகம்பார்த்து வேண்டும் உமையாள் களபமுலை வள்ளத் தமுதுண் டகம்மகிழ்ந்த மழலைச் சிறுவா! வருகவே! வளரும் களபக் குரும்பைமுலை வள்ளிக் கணவா! வருகவே.7 என்ற பாடலைக் கேதாரகௌளத்தில் பாடினால் எத்தகைய மகிழ்ச்சி யுண்டாகும் என்பது அதைப் பாடி மகிழ்பவர்களே அறிவர். அந்தப் பண் தெரியாதவர்கள் இப்பாடலை ஓரளவு ஏதாவது இசையுடன் படித்தாலும் அதை நன்கு அநுபவிக்கலாம். ïir fyªJ gh£o‹ bghUËš eh«