kiwkiya«-- 26 (தனித்தமிழியக்க நூற்றாண்டு வெளியீடு) தத்துவம் - 1  வேதாந்த மதவிசாரம் ஆசிரியர் மும்மொழிச்செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் தமிழ்மண் முதல்பதிப்பு : 2015 பக்கம் : 32+224 = 256 விலை : 320/- மறைமலையம் - 26 ஆசிரியர் மும்மொழிச் செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் வெளியீடு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. bjh.ng.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: elavazhagantm@gmail.com  jhŸ : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 352 f£lik¥ò : இயல்பு  படிகள் : 1000 üyh¡f« : வி. சித்திரா   அட்டை வடிவமைப்பு : கவிபாகர்   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006, மற்றும் பிராசசு இந்தியா, திருவல்லிக்கேணி - 600 005.  அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006, மற்றும் பிராசசு இந்தியா, திருவல்லிக்கேணி - 600 005. யான் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான நூல்களில் ஆராய்ந்து கண்ட முடிவுகளை நூல்களாக எழுதியிருக்கின்றேன். பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்தது போல, உண்மை காணும் உணர்ச்சியினால் நடுநிலை நின்று ஆராய்ந்திருக் கின்றேன். ஒருவர் தம் வாழ்நாள் முழுவதும் கற்றாலும் அறியமுடியாத உண்மைகளை எல்லாம் எளிதாக எழுதி வைத்திருக்கின்றேன். எல்லாரும் தமிழ் இலக்கியங்கள் யாவற்றையும் கற்கும் தொல்லையை மேற்கொள்ள வேண்டிய தில்லை, அது முடியவும் முடியாது, தேவையுமில்லை. எல்லா நூல்களிலும் உள்ள சிறந்த உண்மைகளை எல்லாம் பிழி சாறாக யான் வடித்துத் தந்துள்ளேன். என் நூல்களைப் படித்தாற்போதும், அதனால், தமிழ் முழுதுங் கற்ற பயனை அடையலாம். - மறைமலையடிகள் சான்றிதழ் நாகை - திரு. வேதாசலம் பிள்ளையவர்கள் ஒருபோது திருவனந்தபுரத்தில் ஒருவாரந் தங்கியிருந்த ஞான்று, அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்ததற்குச் சாலவும் மகிழ்கின்றேம். வருங்காலத் தமிழ் மக்களுக்கு மட்டற்ற தமிழ்ப்புலமை மிகுந்து வருமென்பதற்குச் சான்றாக இவர் இளமையிலேயே நுண்மாண் நுழைபுலம் உடையராயிருப்பது களிப்பூட்டுகிறது. மற்றும் தாய்மொழிப் பற்றுக் குறைந்த இக்காலத்தில், இவர் தமது நுண்ணறிவைத் தமிழ் நூல்களில் முற்றும் செலுத்தி நன்காராய்ந்துள்ளதும் பாராட்டற்குரியது. பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவகசிந்தாமணி முதலிய பழந்தமிழ் நூல்களில் ஆராய்ச்சியுடன் கூடிய இவர்தம் அறிவுடைமையே என்னை இவர்பால் மதிப்புறுமாறு செய்தது. தமிழாசிரியர்களின் தொகை சுருங்கிவரும் இக்காலத்தில் இவருக்குச் சிறந்த ஊக்கமளித்தால் இவர் ஒரு சிறந்த தமிழாசிரியராவாரென்று நாம் உறுதியாக நம்புகின்றேம். முன்னரே இரண்டாந்தரக் கல்லூரிகளில் தமிழ்கற்பிக்கப் போதுமான அளவு இலக்கண இலக்கியத்திற் சிறந்த தேர்ச்சி பெற்றவராயிருக்கின்றாரெனக் கருதுகின்றோம். Fiwªj msÉš v~¥, V., (F.A.) வகுப்புக்குரிய ஆங்கில அறிவு பெற்றாரானால் மேல்நாட்டு முறைப்படி தமிழ் நூல்களை வரலாற்றுச் சான்றுடன் ஆராயவும் எழுதவும் வல்லுநராவாரென்பது எம்முடைய சிறந்த எண்ணம். வண்ணாரப்பேட்டை மனோன்மணீயம் பெ. சுந்தரம்பிள்ளை திருநெல்வேலி தமிழ்த்தாய் வாழ்த்தின் ஆசிரியர் 2-12-1895 (இந்த நற்சான்று திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் சுந்தரம் பிள்ளையவர்கள் பேராசிரியராக இருந்தபோது கொடுக்கப் பெற்றது.) புகழ் மாலை தென்னாடு பன்னெடுங்காலம் தன்னை மறந்து உறங்கியது. அவ்வுறக்கம் போக்கிய பெருமை மறைமலையடிகட்கு உண்டு. அவர் தமிழ்ப் புலமையும் வடமொழிப் புலமையும் ஆராய்ச்சியும் பேச்சும் எழுத்தும் தொண்டும் தென்னாட்டை விழிக்கச் செய்தன. தென்னாடு அடிகளால் விழிப்புற்றது என்று மண்ணும் முழங்கும்; மரமும் முழங்கும். அடிகள் பேச்சு பல பேச்சாளரைப் படைத்தது; எழுத்து பல எழுத்தாளரை ஈன்றது; நூல் பல நூலாசிரியன்மாரை அளித்தது; அடிகளே தென்னாடு; தென்னாடே அடிகள் என்று கூறல் மிகையாகாது. - திரு.வி.க மறைமலையடிகளின் மாண்பு - முன்னுரை தேனும் பாலும் போன்ற தூய தீந்தமிழ்ச் சொற்களால் உரைநடையும் செய்யுளுமாகிய இருவடிவிலும் பல்துறை தழுவி ஐம்பதிற்கு மேற்பட்ட அருநூலியற்றி முதலிரு கழக நிலைக்குத் தமிழைப் புதுக்கி அதற்குப் புத்துயிர் அளித்தவர். மாநிலத்தில் மக்கள் உள்ளவரை மறையாப் புகழ் பெற்ற மறைமலையடிகளே. - ஞா. தேவநேயப் பாவாணர்; வடமொழி வரலாறு; முன்னுரை. மறைமலைய மாண்பு நுழைவுரை தனித்தமிழ் என்ற அளவில் முன் நிற்கும் முழுதுரு எழில்வடிவர் தவத்திரு. மறைமலையடிகளாரே ஆவர்! முந்தை அடிகள் ஆகிய இளங்கோவடிகள், `முத்தமிழ் அடிகள் என முழக்கமிட நின்றார்! இருபதாம் நூற்றாண்டு மறைமலையடிகளோ, தனித்தமிழ்த் தந்தை என்னும் தகவார்ந்த பெருமை பெற்றார். தமிழ் தனித்து இயங்காது என்றும், வடமொழி வழியது என்றும், வடமொழித் துணையின்றி இயங்காது என்றும், உலக மொழிகளுக் கெல்லாம் தாய்மொழி வடமொழியே என்றும் தமிழ்க் கல்வி வல்ல பெற்றியரும் முற்றும் மயங்கி யுரைக்க, வடமொழி உலக மொழிகளுக்குத் தாய்மொழி என்றால், அதற்கும் மற்றை மொழிகளுக்கும் தந்தை மொழி தமிழே என்று கூறிய வடலூர் அடிகளார் புகழ்பரபாளராய்ப் பொதுநிலைக் கழகம் கண்ட தவ அடிகளார், தனித்தமிழ்த் தந்தை என்னும் பெருமை பெற்ற மறைமலையடிகளார் ஆவர். சிவனியம் சார்ந்த பெருமக்களும், பேரறிவர்களும் கூட, ஒப்பாராய், `தனித்தமிழ் (தனித்து அமிழ்) என்று பழிக்கவும் இழிக்கவும், துணிந்து நின்று, அவர் வெள்க; வெள்ளிடை மலையாகத் `தனித்தமிழ் என்பதை நிலை நாட்டிய நிறைமலை, மறைமலையடிகளாரே! சிவனிய மடத்தினரும், வடமொழி வல்லாரும், `தொல் காப்பியக் கடல் எனப் புகழப்பட்டாருமாம் சாமிநாத தேசிகர், நாணமின்றி, ஐந்தெழுத்தால் ஒருபாடை என்று அறையவே நாணுவர் அறிவுடையோரே; யாமும் அதுவே என்றும், ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டோ? என்றும் - எழுதிப் பரப்பினாராக, ஒரு சொல் தானும் வேற்றுச் சொல் விரவா நூல் யாம் செய்வேம் என்று ஐம்பான் நான்கு நூல்கள் கலைமலி பேழையாய் எழுதிக் காட்சிப் படுத்திய மாட்சியர் மறைமலையடிகளார்! தொல்காப்பியக் காவல் தமிழ் மொழிக்கு வாய்த்த தொல்காப்பிய வளநூல், வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே (884) என்றும், மொழி பெயர்ப்புச் செய்தலிலும் முறைமை பேண வேண்டும் என்பதை, மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல் (1597) என்றும், பேச்சு வழக்கில் ஒரு கால் வேற்றுச்சொல் வந்து விடினும், மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை (1590) என்றும் - வரம்பாணை செய்தும், அச் செவ்வியல் வழித்தடம் சிதைந்தும் சீரழிந்தும், சேறும் சகதியும் நாறும் சிறுமையும் குறுமையும் வழிவழியே எய்த மூவாயிரம் ஆண்டுகளாய், அயலோர் சூழ்ச்சியாலும் திறவோர் மயக்காலும் ஏற்பட்ட அழிபாடுகளை எல்லாம் தாமே ஓர் இயக்கமாய் இருந்து, விழிப்பும் எழுச்சியும் ஊட்டியவர் மறைமலை அடிகளே என்பதால், ஆரியத்தினின்று தமிழை மீட்டெடுப்ப தற்காக அரும் பாடுபட்டு இலக்கிய இலக்கண மரபோடு யான் கற்ற மொழிகள் முப்பது என்னும் பாவாணர், மூவா யிரமாண்டு மோதும் வடமொழியால் சாவாம் தகைநின்ற தண்டமிழை - மேவாக் குமரித் தனிநிலைக்குக் கொண்டுவந்த அப்பர் அமரர் மறைமலை யார் எனப் பாடிப் பரவினார். `தனித் தமிழ்த் தந்தையார் என்ற பாராட்டும் இப் பாட்டின் தலைப்பில் வழங்கினார். நுண்ணிய நூல்பலவும் கற்பதே நோன்பாக எண்ணிய வாழ்நாள் எலாமளித்துப் - பண்ணிய செந்தமிழ்நூல் ஒவ்வொன்றும் செப்பும் கடலறிவை பைந்தமிழ் காக்கும் படை என அடிகள் கல்வி மேம்பாட்டையும் கலைத் திறப் படைப்புகளின் மேம்பாட்டையும் பாவேந்தர் பாரதிதாசனார் பாராட்டுகிறார். பல்துறை ஆற்றல் அடிகளின் பல்துறை ஆற்றலை 1. பேராசிரியர், 2. பெரும் புலவர், 3. பாவலர், 4. ஆராய்ச்சியாளர், 5. மும்மொழிப் புலவர், 6. மொழிபெயர்ப்பாளர், 7. சொற்பொழி வாளர், 8. எழுத்தாளர், 9. பல்கலைச் செல்வர், 10. தனித்தமிழ்த் தந்தையார் என்று பாவாணர் பகுத்துக் காட்டுகிறார். மேலும் அவர் தம் நுண்மாண் நுழைபுலத்தை பனிமலை முகட்டின் உயர்வும், நீல ஆற்றின் நீளமும் அமைதி வாரியின் ஆழமும் அமைந்தவர் மறைமலையடிகள் என்கிறார். (பனிமலை - இமயம்; நீல ஆறு - நைல்; அமைதிவாரி - பசிபிக்கு மாகடல்). அடிகளார் நூல்கள் அடிகள் பன்மாண் மாத்தமிழ் நூல்களை, நூலக இயக்கத் தந்தை அரங்க நாதரும், இந்நாள் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியரும் அந்நாள் நூலகருமாகிய திருமிகு இரா. முத்துக் குமாரசாமி அவர்களும் 14 வகைமைப்படுத்தி வைத்தமை பெரும் பாராட்டுக்கு உரியதாம் அவை, 1. மருத்துவம் 2. மறைபொருள் 3. இலக்கியம் 4. இதழ்கள் 5. சங்க இலக்கியம் 6. பாடல் 7. நாடகம் 8. புதினம் 9. கடிதம் 10. கட்டுரை 11. சமயம் 12. தத்துவம் 13. வரலாறு 14. சமூக இயல் என்பன. முதற் குறள் வாத நிராகரணம் என்னும் மறுப்பு நூலே, அடிகளின் முதல் நூலாக வெளிப்படுகின்றது (1898) அந்நூன் மறுப்பு நயமே நாகை அடிகளை - பல்லவபுர அடிகளாக -தனித்தமிழ் அடிகளாக ஆக்க அரும் பெரும் தூண்டல் ஆயிற்றாம். அடிகளார் வரலாறு: கீழ்கடல் சார் நாகப்பட்டினத்தைச் சார்ந்த சிற்றூர் காடம்பாடி, ஆங்கு வாழ்ந்த அருந்தவப் பெருந்தகையர் சொக்கநாதர் - சின்னம்மையார்! இவ்விணையர் கொடையாய்த் தமிழன்னை செய்த தவப் பேற்றால் பிறந்தவர் வேதாசலம். பிறந்த பெரு மங்கல நாள் கி.பி. 15.07.1876. சொக்கநாதர், சித்தமலம் அறுவித்த சித்தமருத்துவர்; அறிவ மருத்துவம் என்பதும் அது. அத்தொழில் அவர்க்கு வளத்தை வழங்கியது. அதனால் வேதாசலம் குறைவற வாழ்ந்தார். நாகப்பட்டினத்து வெசிலியன் மிசன் பள்ளியில் ஐந்து வகுப்புவரை பயின்றார்; சிறந்த மாணவராக விளங்கினார். ஆறாம் வகுப்பில் சேரும் நிலையில், அருமைத் தந்தையார் இயற்கை எய்தினார். ஆயினும் அன்னையார் உறுதியால் கல்வியைத் தொடர்ந்தார். அப்பள்ளியில் ஆங்கிலக் கல்விக்கு இருந்த முதன்மை தமிழுக்கு இல்லை. கிறித்தவ சமயம் பற்றி அன்றிச் சிவனியம் பற்றி அறிய வாய்ப்பில்லை என்னும் இரண்டு குறைகளையும் இளமையிலேயே உணர்ந்தார். வீட்டிலேயே தமிழ் நூல்களைப் பயின்று முதற் குறையையும், நாகையில் இருந்த இந்துமதாபிமான சங்கம் வழி இரண்டாம் குறையையும் நீக்கினார். பள்ளியிலும் குறையறக் கற்றார். வருவாய்க் குறையால் வாடும் அன்னைக்குச் சுமையாய் இல்லாமல் தனியே பயில்வதே இனியவழி என எண்ணி, நாகையில் புத்தக வணிகராக விளங்கிய நாராயண சாமியார் புலமையாலும் சிறந்து விளங்கியவர். ஆதலால் அவரிடம் தனியே இலக்கிய - இலக்கண - சமய நூல்களைக் கற்றார். நாராயணரின் முன்னை மாணவர் பேரா. மனோன்மணீயம் பெ. சுந்தரனார் என்பதையும் அறிந்தார். ஒன்பதாம் வகுப்பொடு பள்ளிக் கல்வியை நிறுத்தித் தனிக்கல்வியே கற்றார். தொல்காப்பியம், தொகை நூல்கள், திருக்குறள், திருச்சிற்றம்பலக் கோவை, இறையனார் அகப் பொருள் எனக்கற்றார். அடிகளார் இயற்றிய திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை முகப்பில், எமது பதினைந்தாம் ஆண்டில் முறைப்படி துவங்கிய தமிழ்ப் பயிற்சியானது எமது இருபத்தோராம் ஆண்டிற்குள் தொல்காப்பியம், திருக்குறள், சிற்றம்பலக் கோவையார் என்னும் மூன்று நூல்களையும் முழுதும் நெட்டுருச் செய்து முடித்தேம் என்றும் வேறுசில நூல்களையும் முழுவதாக ஓதியதையும் கூறி, இங்ஙனமாக, விழுமிய தமிழ்ப்பழ நூல்களில் எமது கருத்து ஈர்ப்புண்டு நின்று பயின்ற பயிற்சியினாலேயே செய்யுளும் உரையும் தனிச் செந்தமிழ் நடையில் எழுதும் திறம் எமது இளமைப் பருவத்திலேயே எமக்கு வாய்ப்ப தாயிற்று என்கிறார். அவ்வாண்டு கி.பி. 1897. நாகை இந்து மதாபிமான சங்கத்திற்குச் சைவ சித்தாந்த சண்ட மருதம் என்னும் விருது பெற்ற சோமசுந்தர நாயகர் வந்து சொற்பொழிவாற்றினார். அவர் பொழிவில் வந்த கருத்தொன்றனை மறுத்து ஒருவர் எழுத, அதற்கு மறுப்பாக முருகவேள் என்னும் புனைபெயரில் மறுப்புரை எழுதினார். அதனைக்கற்ற நாயகர், மீளப் பொழிவுக்கு வருங்கால் முருக வேளைச் சந்திக்க விரும்பினார். அச்சந்திப்பின் பயனே உன்னை விரைவிலே சென்னைக்கு வருவிப்போம். நீ அந்தப் பக்கங்களில் இருப்பதே நல்லது என்று கூறினார். இதுவே அடிகளார்க்குச் சென்னை வாழ்வு அமைய முதல் தூண்டல் ஆயிற்று. அடிகளுக்குப் பதினேழாம் வயதில் (1893) திருமணம் நிகழ்ந்தது. துணைவி தம் மாமன் மகள் சவுந்தர வல்லி என்பார். திருவனந்தபுரம் நாராயணசாமி அவர்களின் முன்னை மாணவராம் பேரா. சுந்தரனார் திருவனந்த புரத்தில் இருந்தார். அவரியற்றிய மனோன்மணீய நாடக நூல் கற்று அதன் அருமை கண்டு, பேராசிரியரைக் காணவிரும்பினார். அதனால் தம் ஆசிரியரோடு திருவனந்தபுரம் சென்று பேராசிரியரோடு உரையாடினார். வேதாசலனார் இளம் பருவத்தையும் மூதறிவையும் அறிந்த சுந்தரனார் வியப்புற்றுத் தகுதிச் சான்று ஒன்று வழங்கினார். சிறிது காலம் திருவனந்த புரத்தில் ஆசிரியப் பணியும் செய்தார். அவ்விடத்தின் பருவநிலை ஒவ்வாமையால் நாகைக்கே திரும்பினார். சென்னை: சோமசுந்தரனார் முன்னே கூறியபடி வேதாசலரைச் சென்னைக்கு அழைத்து அறிஞர் நல்லுசாமி என்பார் நடாத்திய சித்தாந்த தீபிகை என்னும் இதழாசிரியர் ஆக்கினார். பின்னே சென்னை கிறித்தவக் கல்லூரிக்கு ஒரு தமிழ்ப் பேராசிரியர் வேண்டியிருத்தல் அறிந்த சோமசுந்தரனார் வேதாசலனாரை அக்கல்லூரிப் பேராசிரியராக்க முயன்றார். அதுகால் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர் வி.கோ சூரியநாராயண சாத்திரியார் என்னும் பரிதிமால் கலைஞர். கல்லூரி முதல்வர் வில்லியம் மில்லர் என்பார். 9.3.1898 இல் வேதாசலனார் பணியேற்றார். அங்குப் பதின்மூன்று ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அக்கல்லூரிக் காலத்தே இளங்கலை மாணவர்க்குப் பாடமாக இருந்த முல்லைப்பாட்டு (1903) பட்டினப்பாலை (1906) என்பவற்றுக்கு ஆராய்ச்சி உரை எழுதினார். அவ்வுரை நூலை வாங்கிக் கற்ற மாணாக்கரும் ஏனைத் தமிழறிஞரும் புதுமுறையாக எழுதப்பட்ட அவ்வுரைப் பாங்கினைப் பின்பற்றிப் பழைய தமிழ் நூல்களை ஆராய்வதில் கிளர்ச்சி பெறலானார். இப்புதுமுறை உரை, தமிழ் நூலாராயும் வகைகளை இனிது விளக்கி அறிஞர் பலர்க்கும் அக மகிழ்ச்சி யினை விளைத்தமை கண்டு இனி, இத்தகைய உரைகளையே எழுதுதல் வேண்டும் என எமதுள்ளம் பெரிதும் விழைந்தது என்கிறார். சென்னைப் பல்கலைக் கழகத்தார்ஆங்கிலமும் வட மொழியும் கட்டாயமாகப் படித்தல் வேண்டும் என்றும், தாய்மொழிப் பாடத்தை விருப்பப் பாடமாகக் கற்பிக்கலாம் என்றும் ஒரு தீர்மானம் ஆட்சிக்குழுவில் கொண்டு வந்தனர். ஒரு பாடம் விருப்பப்பாடம் எனப்பட்ட பின்னர் அதனைக் கற்க வருவார் எவர்? தமிழ் கற்கும் மாணவர் எண்ணிக்கை குறையவே ஆசிரியப் பணியிடமும் குறைய வேண்டுவதாகி, அடிகளார் 31.1. 1911 ஆம் நாளுடன் கல்லூரிப் பணியை முடிக்க வேண்டிய தாயிற்று. மாணவர்: இக்காலத்தில் அடிகளின் மாணவராக இருந்தாருள், தணிகைமணி செங்கல்வராயர், இரசிகமணி டி.கே.சி, நாவலர் ச.சோ. பாரதி, பேரறிஞர் ச. வையாபுரியார் முதலோர் சிலர். தணிகைமணியின், தேவார திருவாசகச் சொல்லடைவு ஒரு பிறப்பளவில் செய்யக் கூடியதா? நாவலர் ச. சோ. பாரதியாரின் ஆய்வுத் துணிவு எத்தனை கசடுகளை நீக்கியது? வையாபுரியார், கால ஆய்விலும், வடமொழிப் பிடிவாதத்திலும் தம்மைச் சால்பு ஆய்வில் இருந்து விலக்கினாலும், சங்க இலக்கியப் பதிப்பு, நிகண்டுப்பதிப்பு, பல்கலைக் கழக அகரமுதலிப் பதிப்பு இவற்றைச் செய்த அருமை என்ன? புறத்திரட்டு, களவியல், காரிகை ஆயவற்றின் பதிப்புச் சிறப்பு என்ன? இவர்கள் பணியும் அடிகளாரைத் தழுவுதல் உண்மை தானே! சமரச சன்மார்க்கம் கல்லூரிப் பணியில் இருந்து வீடுபெற்ற அடிகளார், பல்லவபுரத்தை வாழ்விடமாகக் கொண்டார். சமரச சன்மார்க்க நிலையம் தோற்றுவித்தார். எல்லாச் சாதியார்க்கும் எல்லாச் சமயத்தார்க்கும் அங்கீகாரமான சீவகாருணிய ஒழுக்கத்தையும், சமரச சன்மார்க் கத்தையும் பிற்காலத்தில் மிக வலியுறுத்திப் போதித்த ஆசிரியர் ஸ்ரீமத் இராமலிங்க சுவாமிகளே ஆவார். அச்சுவாமி கள் வலியுறுத்திய அவ்விரண்டு கொள்கைகளையும் எங்கும் வலியுறுத்தி விளக்கி அன்பர்களை ஒருங்கு கூட்ட வேண்டி அச்சுவாமிகள் இட்ட பெயராலேயே, `சமரச சன்மார்க்க நிலையம் என்னும் இது தாபிக்கலாயிற்று. இந்நிலையத்திற்கு முன் ஆசிரியர் திருவள்ளுவ நாயனார்; பின் ஆசிரியர் இராமலிங்க சுவாமிகள் ஆவர் என்று பெயரீடு செய்து கொள்கைகளையும் வகுக்கிறார். குடும்பம் 1898இல் அடிகளார் சென்னைக்கு வரும்போது அவர்தம் அன்னையார் சின்னம்மையார், துணைவியார் சவுந்திரம் அம்மை யார், செல்வி சிந்தாமணி, அடிகளார் என்னும் நால்வரைக் கொண்ட குடும்பமாக இருந்தது. 1911இல் பல்லவ புரத்தில் குடிபுகும் போது நீலாம்பிகை, திருஞான சம்பந்தம், மாணிக்கவாசகம், திருநாவுக்கரசு, சுந்தர மூர்த்தி என்னும் மக்களும் கொண்ட ஒன்பதின்மர் குடும்பமாக இருந்தது. பல்லவுரம் புகுந்த பின் திரிபுர சுந்தரி பிறக்கப்பதின்மன் குடும்பம் ஆயிற்று. இந்நிலையிலேயே 27.08.1911இல் சைவத் துறவியர்க்குரிய துறவாடை (காவி) கொண்டு சுவாமி வேதாசலம் ஆனார். சுவாமி வேதாசலம் என்பதன் தனித்தமிழாக்கமே மறைமலையடிகள் என்பது வெளிப்படை. முன்னேயே அவரை அடிகள் என்றது அவர்தம் மாண்பு கருதியேயாம். மீள்பார்வை நாம் மீள்பார்வை ஒன்றுபார்க்க வேண்டும். அடிகள் 21ஆம் அகவையிலேயே தனித்தமிழ் ஆய்வுத்திறம் கைவரப் பெற்றார். 1903, 1907 ஆகிய ஆண்டுகளில் முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய நூல்களுக்கு ஆய்வுரை வழங்குங்கால் இதிலுள்ள சொற்கள் இத்தனை; இவற்றுள் செந்தமிழ்ச்சொல் இத்தனை; வேற்றுச் சொல் இத்தனை - என அறுதியிடுகிறார். ஆதலால், தனித்தமிழ் என்னும் தோற்றம் 1916 ஆம் ஆண்டில் நீலாம்பிகையார் தூண்டலால் ஏற்பட்டமை என்பது, அகத்தே அமைந்து கிடந்த வித்து, முளை விட்டு வெளிப்பட்ட நிலையாம். அவ் வெளிப்பட்ட நிலையும் உடனே பற்றிப் படரவில்லை! மேலும் சில ஆண்டுகளின் பின்னரேயே சமசர சன்மார்க்க நிலையம், பொதுநிலைக் கழகமாகவும், ஞானசாகரம் அறிவுக் கடலாகவும், சுவாமி வேதாசலம் மறைமலையடிகள் ஆகவும் படிப்படியே கிளர்கின்றனவாம்! ஓர் அரிய அமைப்பு உருவாகும் நிலையும், ஓர் அரிய கண்டு பிடிப்பு உலகவர் அறிய வெளிப்படலும், அவை இயக்கமாகவும் பயனாகவும் ஆகின்ற நிலையும் பற்றிய விளக்கம், அடிகளார் தனித்தமிழ் இயக்க வரலாற்றில் அடங்கியுள்ளதாம்! எதிரிடைத் தூண்டல்: மேலும் ஒன்று: ஒரு நேரிடைத் தூண்டலினும் எதிரிடைத் தூண்டல் வலிமை மிக்கது என்பதும், உள்ளத்து உறுதியை வெள்ளப் பெருக்காய் வெளிப்படுத்த வல்லது என்பதும் தெளிவாம். ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டா? என்று கற்றறிந்த தமிழர் ஒருவரே வினாவி நகைத்தல், பெற்ற தாய் மொழிப் பிறவிக்கு உற்ற தகைமை ஆகாது என்பதும், அதனை உணர்ந்த அப்பிறவி பாம்பன் குருபாத அடிகள் போல் சேந்தன் செந்தமிழ் என்ன ஒரு நூலியற்றித் தமிழ் தனித்து இயங்கவல்ல தனி உயர் மொழி என்று நிலைநாட்டியிருப்பின் வழிபடத்தக்க பிறவியாய் அமைந்திருக்கும்! அப்பேறு அதற்கு வாய்க்காமை, துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம் (குறள் 263) என்னும் வள்ளுவர் வாய் மொழிப்படி, தனித்தமிழ்த் தந்தைப் பேறு மறைமலையடிகட்கு வர இருப்பதற்கே நேரிட்ட நேர்ச்சியாம் என்க. இயக்கம் அடிகள் இயக்கம் ஆலமரமெனக் கால்பல கொண்டு அகல அகல விரியத் தனித்தமிழ் இயக்கமாய், உலகத்தமிழ்க் கழகமாய், பாவலரேறு தமிழ்க் களமாய், சேரர் கொற்றமாய், தமிழ்க்காப்புக் கழகமாய், தமிழ்ப் பாதுகாப்புக் கழகமாய், தனித்தமிழ் இலக்கியக் கழகமாய், தமிழ் வளர்ச்சிக் கழகமாய், மறைமலையடிகள் மன்றமாய், தமிழ்க்காவல் குழுவாய், இயற்றமிழ்ப் பயிற்றகமாய், பாவாணர் தமிழ் இயக்கமாய் ஆங்காங்கு முகிழ்த்து முனைப்பொடு கடனாற்ற ஏவியதாம். நூலகம் அடிகள் நூற்றொகை, அருமணிக் குவையன்ன நாலாயிரம் நூல்களைக் கொண்டது. எதிரது உணர்ந்து, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்திற்கு முற்கொடையாக வழங்கியதால், நாலாயிரம் நாற்பதாயிரமாய் மேலும் மேலும் விரிந்து மறைமலையடிகள் நூலகப் பெயரால், பெருமைமிகு வள்ளலார் முதற்கண் பொழிவு செய்த பெரியவர் சோமு அவர்கள் இல்லமே வாய்க்க உலக வளமாக்கியதாம்! அதன் வழியாகவே அடிகள் தாமே வெளியிட்ட நூல்களும், வெளியிடாமல் கழக வழி வெளிவந்த நூல்களும், அடிகள் காலத்திற்குப் பின் வெளிவந்த நூல்களும் ஆகிய முழுமைத் தொகுதிகளும் கி.பி. 1898 முதல் 1969 வரை முதற்பதிப்பாக வெளிவந்தவை. அவற்றுள் படிகள் கிட்டுதற்கு அரியவையும் உண்டு. அடிகள் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்ட பேற்றால், இன்று வாய்த்த நூல்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக வழங்கும் பெருவாய்ப்பைத் தமிழ்மண் பதிப்பகம் பெற்றதாம். வெள்ளச் சேதம் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு பதிப்பகத்துள் புகுந்து அச்சு அடிக்கப்பட்டதும், அடிக்கப்பட இருந்ததும், கணினிப்படுத்தி வைத்த குறுவட்டுகளும், மூலநூல்களும் என வாரி அள்ளிக் கொண்டு போனமை, களத்துக்கு வந்த கதிர் மணிகள், களஞ்சியத்திற்கு வாராமல் போய, பேரழிவு ஒப்பதாம். ஆதலால், நூல்களை மீளத் தேடவும், கணினிப்படுத்தவும், குறுவட்டு ஆக்கி அச்சிடவும் என மும்மடங்குப் பணியும் பேரிழப்பும் பெருத்த அவலமும் உண்டாக்கிற்றாம். அந்நிலையில், ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழா துஞற்று பவர் என்னும் வாய்மொழியை வாய்மை மொழியாக்கிய துணிவுச் செல்வர் இளவழகனாரும் அவர் குடும்பத்தவரும் ஆவர்! முன்னறிவிப்புத் திட்டப்படி நூலுக்கு ஆர்வமாய்ப் பணம் செலுத்தியோர்க்கும் நூல் காலத்தில் கிட்டா உளைச்சல் இல்லாமல் போகாதே! அவர்களும் அமைந்து தாங்கல், இயற்கை இயங்கியல் வழியதாம். வெளியீடுகள் தமிழ்மண் பதிப்பகம் தமிழ்மொழி இன மண்வளம் - வளர்ச்சி மீட்டெடுப்பு - என்பவற்றை முன்வைத்துத் தமிழ்ப் போராளி இளவழகனாரால் தொடங்கப்பட்டதால், பேரிழப்புக்காம் எனத் தெளிவாகத் தெரிந்தும், இசைக் கலைக்கு வாய்த்த ஒப்பற்ற களஞ்சியமாய் வாய்த்த - கருணாமிர்த சாகரத்தை வெளியிட்டதாம்! முன்னை வந்த முதற்பகுதி பேரிழப்பாக்கியும் அதன் பின்னைப் பகுதிகளையும் அரிதின் முயன்று வெளியிட்டது! மொழிஞாயிறு பாவாணர்; ஈழத்து அறிஞர் ந.சி. கந்தையா; வரலாற்றறிஞர் சாமிநாத சர்மா, உரைவேந்தர் ஔவை சு.து; நாவலர் ந.மு.வே; பண்டித வித்துவான் தி.வே. கோபாலர்; சாமி சிதம்பரனார்; மயிலை சீனி. வேங்கட சாமியார்; பேரறிஞர் க. வெள்ளை வாரணனார்; பாவலர் குழந்தையார்; பாவலர் முடியரசனார்; பாவேந்தர், தொல் பொருள் கல்வெட்டு ஆய்ஞர் சதாசிவனார், சாத்தன்குளம் இராகவன் நூல்களையும் எளியேன் நூல்களையும் முழுமை முழுமையாக வெளியிட்டது. தொல்காப்பியம்- பாட்டு - தொகை - காப்பியம் - கீழ்க்கணக்கு - தமிழ்நாட்டு வரலாறு - ஆங்கிலம் வல்ல அறிஞர் இராம நாதனார் நூல்களையும், யாழ்ப்பாண அகராதி முதலாம் அகராதித் தொகுதிகளையும் வெளியிட்டது. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதிதொட்டு, இருபத்தோராம் நூற்றாண்டின் முற்பகுதி வரை வெளிவந்த - தமிழுக்கு ஆக்கமாம் நாட் டுடைமை ஆக்கப்பட்ட நூல்களை எல்லாம் - ஓரிடத்துப் பெற்று, ஒரு தனித்தமிழ் நூலகம் அமைக்கும் அளவுக்கு அச்சிட்டு வழங்கிய பெருமை இளவழகனார்க்கு உண்டு. அவரே அன்றி அவர் துணையையும் மக்களையும் உறவையும் அன்பையும் நண்பையும் ஒருங்கே இணைத்து, அறிஞர் பெருமக்கள் பலர் அரவணைப்பையும் வாய்ப்பக் கொண்டு வாழும் இயல்பு அவர்க்கு வாய்த்தலால் மட்டுமே, இவ்வாறு செயற்கரிய செய்ய வாய்த்ததாம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவரும் அவர். மறைமலைய மாண்பு மறைமலையம், தனித்தமிழ் இயக்கம்! தமிழ்த் தனிப் பெருவளம்! முத்தமிழ்ச் சுரப்பு! சீர்திருத்தச் செழுமை! வாழ்வியல் வளம்! கலைச் சொல்லாக்கக் களஞ்சியம்! பண்டைத் தமிழர் வரலாற்றுப் புதையல்! ஆய்வியல் வழிகாட்டி! பொழிவுப் பொலிவு! எழுத்தின் எழில்! மொழிக் காவல் முனையம்! முட்டறுக்கும் முழுதுறு கொடை! மீட்டெடுக்கும் மேதகைமை! அள்ள அள்ளக் குறையா அணிமணிக் குவியல்! எனல் மெய்மை விளக்கமாம்! புத்தகம் ஏற்றுப் பொலிவதே புத்தகம் வாழிய நலனே! வாழிய நிலனே! திருவள்ளுவர் நிலையம், இன்ப அன்புடன் 7, இராமன் தெரு, இரா. இளங்குமரன் திருநகர், மதுரை - 6 625006. மலைக்க வைக்கும் மறைமலையம்! பதிப்புரை மொழியே இனமக்கள் முன்னேற நல்ல வழியாம் அதனை வளர்க்க -பழியாய்த் தமிழயரத் தாழ்ந்தான் தமிழன் அவனே தமிழுயரத் தானுயர்வான் தான் மொழிப்பேரறிஞர் பாவாணர் அவர்கள் `மொழியின் வழியாகவே மொழிபேசும் மக்கள் முன்னேற முடியும் எனக் கூறுகிறார். உலகம் முழுதும் இவ்வுண்மை உணரப்பட்டுள்ளதை வரலாறு காட்டுகிறது. பாவாணரை அறிவுலகம் சரியாக அடையாளம் காண்பதற்குக் காரணமானது மறைமலையடிகளார் தந்த பாராட்டு! மறைமலையடிகள் (15.7.1876 - 15.9.1950) தேவநேயப் பாவாணர் (7.2.1902 - 16.1.1981) இருவரும் தனித்தமிழியக்கத்தைத் தாங்கி நிற்கும் தூண்களாகப் போற்றப்படுபவர்கள். மறைமலையடிகளார் 1916இல் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம், நூற்றாண்டை எட்டியுள்ள மகிழ்வான நேரம் இது! தனித்தமிழியக்க நூற்றாண்டை நினைவு கூரும் வகையில், தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளாரின் எழுத்து, சொற்பொழிவு, நாட்குறிப்பு, கடிதங்கள் அனைத்தையும் `மறைமலையம் எனும் பெருந்தொகுப்பாகத் தமிழ்மண் பதிப்பகம் வழி வெளிக்கொணரத் திட்டமிட்டோம். உலகம் முழுதும் பரவி வாழும் உணர்வு குன்றாத தமிழர்கள் தந்த ஊக்குவிப்பு, இந்தப் பெருந்திட்டத்தை நிறைவேற்றித் தீரவேண்டும் எனும் உறுதியை எனக்குத் தந்தது. தனித்தமிழ் இயக்க அறிஞர்களும் ஆர்வலர்களும் அடிகளாரின் அரிய படைப்புகள் பலவற்றையும் தேடித்தேடி வழங்கி வழிகாட்டினர்; வலிமையூட்டினர். மறைமலையடிகளார் 1898ஆம் ஆண்டிலிருந்து எழுதி வந்துள்ளார். அறிவுக்கடல் (ஞானசாகரம்) இதழை 1902ஆம் ஆண்டிலிருந்து வெளியிட்டு வந்துள்ளார். அவரின் படைப்புகள் பெருவெள்ளமாய் வெளிவந்திருக்கின்றன. அச்சேறாதவை, பெயர் கூடக் கேட்டறியாதவை, பெயர் தெரிந்தும் பார்வைக்குக் கிட்டாதவை - எனப் பலவகையாய்க் கிடைத்தன அடிகளாரின் அரும்படைப்புகள்! அவற்றை `மறைமலையம் எனும் தலைப்பில் 34 தொகுப்புகளாக ஒருசேரப் பார்க்கும்போது, தமிழுலகம் வியப்படைவது உறுதி. மொழிநலம் இனநலம் பேணுதல் அன்றோ முழுநலம் பெறுவழி! நாம்பெறல் என்றோ? இப்படிக் கவலையோடு கேட்பார் பாவலரேறு பெருஞ் சித்திரனார் (10.3.1933 - 11.6.1995). அவரின் `தென்மொழி இதழ் 1.8.1959 இலிருந்து வெளிவரத் தொடங்கிய பின்புதான், தனித்தமிழ்த் திசை நோக்கி நூற்றுக்கணக்கானோர் நடைபோடத் தொடங்கினர். அதில் நானும் ஒருவன். பெருஞ்சித்திரனாரின் எழுத்து காட்டிய அடையாளத்தால், பாவாணர் நூல்கள் எனும் அறிவுப்புதையல் பலர் கைகளிலும் குடியேறியது. பாவாணர் நூல்கள் வலியுறுத்திப் பேசியதால், மறைமலை யடிகளாரைத் தேடிப்பயிலும் ஆர்வம் தமிழுலகில் புத்துயிர் பெற்றது. ஆரியத்தை எதிர்ப்பதிலும் சமற்கிருதத்தை விலக்கு வதிலுமே தமிழின மேம்பாடும் தமிழ்க் காப்பும் அடங்கியிருக்கிறது. அவ்வுணர்ச்சியைத் தமிழர் நெஞ்சங்களில் அரும்ப வைத்தது திராவிடர் இயக்கம்; மலர்ந்து விரியவைத்தது தனித்தமிழ் இயக்கம்! குமுக, அரசியல், பண்பாட்டு மலர்ச்சிக்கு இந்த ஈரியக்கங்களின் பேருழைப்புப் பயன்பட்டது. தமிழகத்தில் தனித்தமிழ் உணர்வு கி.மு. 7ஆம் நூற்றாண்டுக்குப் பின் தளரத் தொடங்கியது; 10ஆம் நூற்றாண்டுக்குப் பின் சரியத் தொடங்கியது. வடமொழி வெள்ளத்தில் தமிழ் இழுத்துச் செல்லப்பட்டு விடாமல் காப்பாற்றியோர் கம்பரும் பவணந்தியும்! பின்வந்தோருக்கு அந்தக் காப்புணர்ச்சி இல்லாமல், அயன் மொழிப் பற்றுக்கு அடிமையானதால் தமிழும் தமிழினமும் பெற்ற இழப்புகள் ஏராளம்! அயன்மொழிச் சேற்றிலிருந்து தமிழை மீட்கும் முயற்சி ஆங்கிலேயர் வருகையையொட்டிப் புத்துயிர் பெற்றது. வள்ளலார், பாம்பன் சாமிகள், வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள், சுப்பிரமணியசிவா, பரிதிமாற் கலைஞர் முதலிய பலரும் தொடக்க விதைகளாயினர். கோவை அவிநாசியில் பிறந்து விருதுநகரில் வாழ்ந்த விருதை சிவஞானயோகி 19.11.1908 ஆம் நாள் `திருவிடர் கழகம் தொடங்கித் தனித்தமிழ் உணர்ச்சிக்கு வேகங்கூட்டினார். அவ்வமைப்பில் உறுப்பினராயிருந்தவர் சுவாமி வேதாசலம் (மலைமலையடிகள்). மறைமலையடிகள் எனத் தம் பெயரைக் கொண்டு, 1916இல் அவர் தொடங்கியதே தனித்தமிழ் இயக்கம். `துறைமிகு ஆங்கிலம் மறைவட மொழியொடு தூய்தமிழ்ப் பேரறிஞர் - தனித்தமிழ் தோற்றிய ஓரறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடியதற்கேற்ப, மறைமலை யடிகளார் தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம் முதலிய பன்மொழியிலும் புலமை மிக்கவர். பன்மொழிப் பேரறிஞரான மறைமலையடிகளார் தமிழுக்கும் தமிழருக்கும் ஆதரவாக நின்றதால் எதிர்ப்புக்கும் இழப்புக்கும் ஆளாக்கப்பட்டார். ஆனாலும் உறுதி குன்றாமல் தமிழுக்கு ஆதரவாய் உழைக்கும் உள்ளத்தோடிருந்தார். அதனால், தமிழர் உள்ளங்களில் இன்றளவும் மாறாப் பெருமையோடு அவர் வீற்றிருக்கின்றார். வாழ்த்தாத நாளில்லை வையகம் மறைமலை யடிகள் மறையாத் திருப்பெயர் வாழ்த்தாத நாளில்லை வையகம் பாவேந்தர் பாரதிதாசன் அவர் மாண்பினைப் பாடி மகிழ்ந்ததும், தம் `குடும்ப விளக்கு நூலினை மறைமலை யடிகளுக்குக் காணிக்கையாக்கி வழங்கியதும், அவரின் உறுதி தளராத உள்ளமும் உழைப்பும் கண்டு போற்றிய நன்றிக் கடன் என்பதில் அய்யமில்லை. சென்னையில் கடந்த இருபது ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் தமிழ்மண் பதிப்பகப் பணிகளைத் தமிழுலகம் அறியும். வாழும் தலைமுறைக்கும் வருங்காலத் தலைமுறைக்கும் வழிகாட்டவல்ல தமிழறிஞர்கள் பலரின் நூல்களை முழுமுழுத் தொகுப்புகளாக வழங்கியிருப்பது தமிழ்மண் பதிப்பகத்தின் முடிப்பினை (சாதனை)யாகப் போற்றப்படுகிறது. தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட அறிஞர்களைக் கண்டறிந்து, அவர்களின் நூல்களை முழுமையான தொகுப்புகளாகத் தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டு வருகிறது. அவை காலம் முழுதும் பயன்படவல்ல கருவி நூல்கள் என்பதை அறிஞர் உலகம் அறியும்! தமது நலத்தை ஒதுக்கி வைத்து, தமிழ் நலத்தைக் காக்க வாழ்ந்த அறிஞர்களின் அனைத்து நூல்களையும் ஒரு சேரத் தொகுத்து முழுத் தொகுப்பாக வழங்குவது பெரும்பணி! அதனைத் தமிழ்மண் பதிப்பகம் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. தொகுப்பு நூல்களின் பட்டியலைப் பின்னிணைப்பில் காண்க. தமிழுக்காக உழைக்கும் உணர்வை இளமையில் எம்மிடம் ஏற்படுத்தியோருள் பெரும்புலவர் நக்கீரனாரும் அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலனாரும் குறிப்பிடத்தக்கோர்! எம் நன்றிக்குரியோர்! தனித்தமிழ் ஆர்வம், திராவிடர் இயக்க ஈடுபாடு எனும் இரு சிறகுகளால் எம்மை எழவைத்தவர் பெரும்புலவர் நக்கீரனார்! அவரை எண்ணிக் கண்பனிக்க நன்றி கூறுகிறது எம் நெஞ்சம். காலப்பழமையாலும் பராமரிப்புக் குறைவாலும் அழிய நேர்ந்த தமிழிலக்கியங்கள் அளவற்றவை! அவற்றில் ஒருபகுதியை யாவது மீட்டு நம் கைகளுக்கு வழங்கியோர் ஆறுமுகநாவலர், சி.வை. தாமோதரனார், உ.வே.சாமிநாதர் முதலிய சான்றோர் பெருமக்கள்! தமிழிலக்கியப் பெருஞ்செல்வத்தை மீண்டும் மீண்டும் அச்சாக்கி, அனைவர் கைகளையும் எட்டச் செய்த பெருமை - சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், உ.வே.சா. நூலகம், மணிவாசகர் பதிப்பகம் முதலிய பதிப்பாளர்களுக்கு உரியது. அச்சுத்துறை அறிமுகமான பின்பே, அறிவுத்துறை அனைவருக்கும் பொதுச்சொத்தாகும் வாய்ப்பு வந்தது. எட்டாக் கனியாக ஓலைச் சுவடிகளில் முடங்கிக் கிடந்த இலக்கியச் செல்வங்கள், எல்லோருக்கும் எளிதாய்க் கிடைக்கும் பணியைச் செய்த பதிப்பாசிரியர்களும், பதிப்பாளர்களும் நம் நன்றிக் குரியோர்! இரவு பகல் பாராது முதுமையைக் கருதாது உழைக்கும் மனவுரத்தை முன்னோடிப் பதிப்பாசிரியர்களின் பணியே எமக்கு வழங்கியது. அரசும், பல்கலைக் கழகங்களும், அறநிறுவனங்களும், சமய பீடங்களும் ,பெரும் இயக்கங்களும், பெரும் செல்வர்களும் செய்ய வேண்டிய பெருந் தமிழ்ப்பணி இது! எளியவர்களால் இயங்கும் தமிழ்மண் பதிப்பகம் பெருந்தமிழ்ப் பணிகளை இன்னல்களுக்கு இடையில் அருமுயற்சியோடு செய்து வருவது, உள்ளவுரம் ஒன்றினால்தான்! வல்லமை சேர்க்கும் வலிமையுண் டாக்கும்! வண்டமிழ் நைந்திடில் எதுநம்மைக் காக்கும்? காக்கும் தமிழைக் காக்கும் உணர்வைப் பாவேந்தர் பாடல் வரிகள் தந்தன. அச்சுக்கு எட்டாமலும் கைக்குக் கிட்டாமலும் இருந்த பேரறிஞர் பலரின் நூல்களை நாட்டுடைமையாக்கி திராவிடர் இயக்க அரசுகள் வழங்கின. அதனால், அறிவு பரவலாகும் வாய்ப்புகள் உருவாயின. `சரிவும் இழப்பும் நமக்கு வந்தாலும் தமிழுக்கு வரக்கூடாது என எண்ணி உழைக்கும் இயக்கங்களும் அமைப்புகளும் தமிழ் நாட்டில் வற்றாமல் வளர்ந்தபடி இருக்கின்றன. திருவிடர் கழகம் (1908) தனித்தமிழ் இயக்கம் (1916) தென்னிந்திய நலஉரிமைக் கழகம் (1916) சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் (1934) தமிழ்ப்பாதுகாப்புக் கழகம் (1937) தமிழறிஞர் கழகம் (1943) தமிழ்ப் பேராயம் (1959) தமிழ்க்காப்புக் கழகம் (1961) தனித்தமிழ்க் கழகம் (1964) உலகத்தமிழ்க் கழகம் (1968) தமிழியக்கம் (1972) தமிழ்ச் சான்றோர் பேரவை (1998) தமிழ் மலர்ச்சிக்கும் தனித்தமிழ் வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைத்த இத்தகு அமைப்புகளுக்கு மூல விசையாகத் திகழும் பெருமையைப் பெறுவோர் மறைமலையடிகளாரும் பாவாணருமே! தமிழ் வளத்திற்கும் தமிழர் நலத்திற்கும் சிவனிய மேம்பாட்டிற்கும் மறைமலையடிகளார் ஆற்றிய பணிகள் அளப்பரியவை. அவை தொடர்பாக அவர் ஆய்ந்தளித்த அறிவு முத்துகள் எண்ணற்றவை! அடிகளாரின் அனைத்துப் படைப்புகளும் பொருள்வழிப் பிரிக்கப்பட்டு, காலவரிசையில் 34 தொகுப்புகளாகத் தொகுக்கப் பட்டு `மறைமலையம் என உங்கள் கைகளில் இப்போது தவழ்கின்றது. பல தலைமுறைகளுக்குப் பயன்படும் அறிவுக் கருவூலம் இது! தமிழர் இல்லந்தோறும் இருக்கவேண்டிய அருந்தமிழ்ச் செல்வம் இது! அறிவுலகத்தால் `மறைமலையம் வரவேற்கப்படும் என்னும் நம்பிக்கை எமக்குண்டு. நூற் சுரங்கத்தில் நுழைய அழைக்கிறோம். தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழ்க்கென வாழ்வதே வாழ்வதாகும் எனும் பாவேந்தர் வரிகளை நினைவுக் கூறுகிறோம். - கோ. இளவழகன் இதுவரை வெளியிட்டுள்ள தமிழ்மண் பதிப்பகத்தின் நூல் தொகுப்புகள் 1. பாவாணர் தமிழ்க் களஞ்சியம் - 52 நூல்கள் 2. தொல்காப்பியம் - உரைகளுடன் 15 தொகுப்புகள் 3. பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் - 30 நூல்கள் 4. கோபாலையரின் தமிழ் இலக்கணப் பேரகராதி -18 தொகுப்புகள் 5. சாமிநாத சர்மா - 31 தொகுப்புகள் 6. ந.சி.க. நூல் திரட்டு - 24 தொகுப்புகள் 7. சாத்தன்குளம் இராகவன் நூற்களஞ்சியம் - 16 நூல்கள் 8. சதாசிவப் பண்டாரத்தார் - 10 நூல்கள் 9. நா.மு.வே.நாட்டார் தமிழ் உரைகள் - 24 தொகுப்புகள் 10. செவ்விலக்கியக் கருவூலம் - 15 தொகுப்புகள் 11. தேவநேயம் - 14 தொகுப்புகள் 12. திரு.வி.க. தமிழ்க்கொடை - 26 தொகுப்புகள் 13. உரைவேந்தர் தமிழ்த்தொகை - 28 தொகுப்புகள் 14. கருணாமிருத சாகரம் - 7 தொகுப்புகள் 15. பாவேந்தம் - கெட்டிஅட்டை - 25 தொகுப்புகள் 16. புலவர் குழந்தை படைப்புகள் - 16 தொகுப்புகள் 17. கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13 தொகுப்புகள் 18. நாவலர் சோம சுந்தர பாரதியார் நற்றமிழ் ஆய்வுகள் - 5 தொகுப்புகள் 19. முனைவர் இராசமாணிக்கனார் நூல்கள் - 39 நூல்கள் 20. தமிழக வரலாற்று வரிசை - 12 தொகுப்புகள் 21. உவமைவழி அறநெறி விளக்கம் - 3 தொகுப்புகள் 22. முதுமொழிக் களஞ்சியம் - 5 தொகுப்புகள் 23. சாமி சிதம்பரனார் நூற்களஞ்சியம் - 22 தொகுப்புகள் 24. மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 தொகுப்புகள் 25. அறிஞர் க. வெள்ளை வாரணனார் நூல் வரிசை - 21 தொகுப்புகள் 26. ஐம்பெருங் காப்பியங்கள் - 5 தொகுப்புகள் 27. பதினெண் கீழ்க்கணக்கு - 3 தொகுப்புகள் 28. நீதி நூல்கள் - 2 தொகுப்புகள் 29. பி. இராமநாதன் - 10 நூல்கள் 30. யாழ்ப்பாண அகராதிகள் - 2 தொகுப்புகள் 31. வெள்ளி விழாத் தமிழ்ப் பேரகராதிகள் - 3 தொகுப்புகள் 32. ந.சி. கந்தையா அகராதிகள் - 2 தொகுப்புகள் 33. முதுமுனைவர் இளங்குமரனார் தமிழ்வளம் - 40 தொகுப்புகள் 34. இளங்குமரனார் அகராதிகள் - 2 தொகுப்புகள் விரைவில் வெளிவர இருக்கும் அறிஞர்களின் நூல்கள் 1. மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை 2. வ.சுப. மாணிக்கம் 3. பெரியாரியம் (தந்தை பெரியார்) 4. தமிழர் மருத்துவக் களஞ்சியம் 5. தமிழ் - தமிழ் அகராதி பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம் எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம் என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் `உரத்தநாடு திட்டம் என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களை தேடி எடுத்து முழுமையாகச் சேர்த்து பொருள்வழிப் பிரித்து, கால நிரலில் ஒரே வீச்சில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிக்காட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் ரோசா முத்தையா நூலகம் - சென்னை. புலவர் கா. இளமுருகன் - புன்செய் புளியம்பட்டி (மறைமலையடிகள் மன்றம்) மறை. தாயுமானவன் - சென்னை (மறைமலையடிகளின் பேரன்) பிழை திருத்த உதவியோர்: திரு. அ. மதிவாணன் (ஆங்கிலம்) திரு. க. கருப்பையா திரு. புலவர். த. ஆறுமுகம் புலவர். மு. இராசவேலு திரு. இராசுகுமார் திரு. நாக. சொக்கலிங்கம் முனைவர். க. சுப்பிரமணியன் திருமதி. அ. கோகிலா திருமதி. உசா செல்வி. அபிராமி நூல் உருவாக்கம் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திருமதி மலர் திருமதி செல்வி திருமதி ஹேமலதா திரு. ஆசம் திருமதி கலைவாணி பிராசசு இந்தியா திருமதி` புகழ்ச்செல்வி கயல்விழி (Process India), நூல் வடிவமைப்பு: திருமதி வி. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: கவி பாகர் நூலாக்கத்திற்கு உதவியோர் இரா. பரமேசுவரன், க. இளந்திராவிடன், வே. தனசேகரன், கு. மருது, இல. தருமராசன் தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை -1 எதிர்மம் (Negative): பிராசசு இந்தியா (Process India) சென்னை-5. அச்சடிப்பு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு மற்றும் பிராசசு இந்தியா `மறைமலையம் எல்லா நிலையிலும் செப்பமுற வெளி வருவதற்குப் பல்லாற்றானும் உதவியாக இருந்த இவர்களுக்கும் மற்றும் அறிஞர் பெருமக்களுக்கும் எம் நிறைந்த நன்றியும் பாராட்டும். மறைமலையம் தொகுப்பில் இடம்பெறாத நூல்கள் முதற்குறள் வாத நிராகரணம் (1898), துகளறு போதம் (1898), சித்தாந்த ஞானபோதம் சதமணிக் கோவை குறிப்புரை (1898), வேத சிவாகமப் பிரமாண்யம் (1900), இந்த நான்கு நூல்களும் தமிழகத்தின் பல இடங்களில் தேடியும் எங்கள் கைக்குக் கிடைக்க வில்லை. ஆதலான், மறைமலையம் தொகுப்பில் மேற்கண்ட நூல்கள் இடம் பெறவில்லை. வேதாந்த மதவிசாரம் 1958 இல் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பதிப்பித்த நூலினை மூலமாகக் கொண்டு இந்நூல் பதிப்பிக்கப்படுகின்றது. இந்நூலைப் பற்றிய குறிப்புரை... மெய்கண்ட தேவரின் சிவஞானபோதம் மொழி பெயர்ப்பு நூலென்பார் மயக்கங்களைந்து `சிவஞான போதம் மொழிபெயர்ப்பு நூலன்று; அது மெய்கண்டான் முதல் நூலே எனக்கூறும் அடிகளார்,அதனைத் திருக்குறளோடு ஒப்பாய்வு செய்துள்ளார். தன் வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கையறிவினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருளுடைமை, வரம்பிலின்ப முடைமை, முடிவிலாற்றலுடைமை என அமையும் `பதியின் இயல்புகளைக் கூறும் அடிகளார். `கலை என்னும் சொல் `கலா என்னும் வடமொழித் திரிபாகும் எனவும் தெரிவித்துள்ளார். அறியாமை அகற்றி, அறிவுடைமையும் அறிவி னுருவும் தோற்றுவித்தலே இறைவனது உலகங்களின் படைப்பு நோக்கமாகும். ஆண் பெண் அமைப்பு முறைமைகளே முழுமுதற் கடவுளின் அறிவு, ஆற்றல் அருள் நலன்களுக்கான நற்சான்றுகளாகும். மற்றும் ஆணவ மலம், மாயை, இருவினை நிகழ்ச்சிகள், வீடுபேற்றின் மெய்ம்மை ஆகிய செய்திகளைச் சிவஞான போதம் மட்டுமே சிறப்புறச் சொல்லுகிறது என்னும் கருத்தினர் அடிகளார். - டாக்டர் நா. செயப்பிரகாசு மறைமலையடிகள் இலக்கியப்படைப்புகள் (பக். 25 பொருளடக்கம் பக்கம் 1. காப்பு நூல். வேதாந்த விளக்கம் 5 2. பூர்வபட்சசித்தாந்தங்கள் 16 3. ஒரு பரிகாரம் 26 4. பிரமம் ஒன்றேயுளது என்பதை விசாரித்தல் 26 5. தினகரனாரதுபரிசோதனை, மாயாவதம் 42 6. பொறாமை 46 7. பூரணம் 46 8. பிரதிபலந வாதம் 49 9. ஆலாலசுந்தரவிக்ரகம் 50 10. ஒரு ஜாதியில் மற்றொரு ஜாதி தோன்றாதென்பது 54 11. கயிற்றரவுத்திட்டாந்த அழிவு 58 12. பஞ்சத்திட்டாந்த அழிவு 60 13. வியாபசவியாப்திவியாப்பியங்கள் 73 14. தஸத்விசாரம் 85 15. ஸ்ரீகுருவாமிசாமா அவர்கள் சீர்தூக்கம் 101 16. கண்ணொளி 104 17. அருந்தாபத்திப் பிரமாணம் 110 18. எதிரியினது காரணகாரிய அழிவுபாடு 114 19. சத்திஒரு ஜாதியில் மற்றொரு ஜாதி தோன்றாதென்பது 129 வேதாந்தமதவிசாரம் சித்தாந்தஞானபோதம் காப்பு தன்றோ ணான்கி னொன்று கைம்மிகூஉங் களிறு வளர் பெருங் காடாயினு மொளி பெரிது சிறந்தன் றளியவென் னெஞ்சே. நூல் வேதாந்தம் என்பது வேதத்தின் முடிவு என்று பொருள் படும். இவ்வேத முடிவு உபநிடதங்களாம். இவை ஈசாவாய முதல் முக்திகோபநிடத மீறாக நூற்றெட்டாம். வேத வேதாந் தங்களைப் பிரமாணமாகத் தழுவிய சமயிகளொவ்வொருவரும் இந் நூற்றெட்டுபநிடதங்களுந் தஞ்சமயத்தையே பிரதிபாதிப்ப னவாகப் புகலா நிற்பர். இவ்வெல்லாருடைய கருத்துகளும் அவற்றினது ஹ்ருதயமாகா. இவற்றுளொன்றே அவற்றின் ஹ்ருதயமாம். அதுவே மூலத்தோடொத்த வேதாந்தமாம். மூலமும் வேதாந்தம் அதன் பொருளும் வேதாந்தம் என்று நிராடங்கமாய்ப் புகழத்தக்க வாய்மை எச்சமயத்துக்குரித் தெனின், ஒவ்வொரு சமயியுந் தனக்கேயுரித்தென்று கூறுவன். அதற்கேற்ற நியாயங்களையும் விவகரிப்பன். இவருள், தானே கடவுள் என்று சொல்லுகிறசமயியே அதற்கு அதிக பாத்யதை யுடையனாக ஆடம்பரங்காட்டித் தன்னுடைய மதம் வேதாந்த மதம் என்று சொல்லித் திரிகுவன். இவனுக்கும் வேதவேதாங்கங் களுக்கும் வெகு தூரம். வேதாந்தத்தில் முதலுபநிஷத்து ஈசா வாயம். இதில், முதற்கட்போந்த ஈசபதத்திற்கு ஆத்மா என்று பொருளு ரைத்தனர் சங்கராசாரியர். ஆத்மா என்பது ஜீவனைப் பிரதிபாதிக்கும் பதம். ஈசபதத்தை ஜீவவாசகமாகப் போதிப்பது என்ன மதம்? நானே கடவுள் என்னும் அஸங்காத்மவாதமாகத் தட்டில்லையன்றோ? இப்படியே வைஷ்ணவர்கள் ஈசபதத்தை விஷ்ணுவாசகமாகப் போதித்திடுவர். பிறருந் தத்தமக் கியைந்த வாறே போதியாநிற்பர். சித்தாந்தசைவர்கள் (எம்மவர்) ஈசபதத்தை ஈசவாசகமாகவே யுபதேசித்திடுவர். என்னு நிகண்டு வசனத்தால் ஈசபதம் சிவவாசக மென்பது ஸர்வஸம் பிரதிபந்நமாம். இதனால் ஈசாவாயமுத லெல்லா வுபநிஷத்துக்களுஞ் சிவைகநிஷ்ட மன்பது சொல் லாமேயமையும். இவ்வுண்மை தெளிந்தார் வேதாந்தம் யாருடைய சொத்து? அது யாருக்குச் சொந்தம்? என்பதை அறியாமற் போகார்? சொந்தக்காரராகிய யாம் (சைவர்கள்) எமது மதம் வேதாந்தம், யாம் வேதாந்திகள் என்று சொல்லிக் கொண்டு திரிவதில்லை. எல்லாம் பொய் நான்மாத்திரமே மெய் என்று பித்தேறியுரைத்து வேதமுமித்தை கீதமுமித்தை வேதாந்த முமித்தை என்று சூனியவாதம் பேசு மிச்சாவாதி கண் மதம் வேதாந்தமாதலும், அன்னோர் வேதாந்தி களாயிடுதலும் யாங்ஙனம்? இன்னோரது அமங்கலங்களைக் கண்ட எம் பெரியார் மாயாவாதிகள் என்று இவர்களைச் சுட்டி விவகரித் திடுவர். அப்படியே யாமும் விவகரிப்பாம். இம் மாயாவாதிமதத்தில் பிரமமொன்றே சத்திய மென்றும், ஜகஜீவபரங்கள் மிச்சையென்றுஞ் சொல்லப் பட்டிருக்கின்றது. ஜகமென்பது தேகேந்திரியாதிகள், ஜீவ னென்பது அத் தேகேந்திரியாதிகளைத் தாங்கிய சேதனன். பரம் என்பது அந்தச் சீவனுக்குத் தேகேந்திரியாதிகளைக் கொடுத்த சேதனன். பொய்யாகிய இம்மூன்றனுள். ஜீவனே ஜநநமரணப்பட்டு வருந்துகின்றான் என்று அம்மதத்தினர் கூறுகின்றனர். இந்த ஜீவன் ஜலசந்திரனாக வுவமிக்கப் பட்டிருக்கின்றனன். ஆகாயத்திலுலாவுஞ் சந்திரன் ஒரு கடத்தினிறைந்த நீரிற் பிரதிபிம்பித்த போது, அந்த நீரிற் றோன்றிய சாயையே சந்திர பிரதிபிம்பமென்பதாம். இந்தச் சந்திர பிரதிபிம்பம் கடத்தில் சத்தியமானதன்று. இது அந்தக் கடத்தினின்றுந் தாண்டி வேறு கடத்திற் புகுத மாட்டாது. அந்தக்கட முடைந்தவழி அத்தோடே போய் விடுவதாம். வேறு கடமொன்று ஆண்டுக் கொணர்ந்திடின் அந்தச் சந்திர பிம்ப மதிற்றோன்றுமெனின், வேறு கடத்திற்றோன்றிய சந்திரபிம்பம் மூலசந்திரனுடைய தேயன்றி உடைந்த கடப் பிரதிபிம்ப சந்திரனுடையதன்று. இதனைப் பரியா லோசிக்கையில், மாயாவாதஞானிகள் மறுபிறப்பை யொப்புதற் கிடமேயில்லை. இனி ஒரு புருஷனிறந்ததாகக் கொள்வோம். இவனை ஜலசந்திரன் கடத்வம்ஸத்தி லழிந்து போயினதற்கே யொப்பி டுவர் விவேகிகள். அதனால் அழிந்துபோன ஜலசந்திரன் மற்றொரு கடத்திற் புகுத மாட்டாதவாறு போலத் தேகமழிந்த புருஷன் வேறுதேகத்திற் புக்கு மறு பிறப்பெய்தினானெனல் கூடாது. அன்றியு மிவன் சொர்க்க நரகங்களை யடைவதுங் கூடாது. ஜநந மரணங்களையும் சொர்க்க நகரங்களையும் ஜீவனுக் கொப்பிய வேதமுதலிய கலைகளை மாயாவாதி களவாடின மையால், அக்கலைகள் தனக்குப காரஞ்செய்வதும், அல்லது அபகாரஞ்செய்வது மறியாமல் வெளிவந்து கெடுகின்றான். இவன் குடாகாய மகாகாய முதலிய வுவமைகள் தேடுவதும் இவ்வாறே யழிகின்றன வென்க. இனி அதிஷ்டான சந்திரனோடுவமித்த பிரமத்தைச் சிறிது விசாரிப்பாம். சந்திரன் கடநீரிற் பிரதிபலித்தது போல் பிரமம் தேகாந்தர்க்கதமாகிய அந்தக் கரணத்திற் பிரதி பலித்ததெனின், சந்திரன் கண்டரூபி. கடநீர் முதலியன அந்தச் சந்திரனுக்கு வேறாயுள்ளவை. பிரமம் அகண்டமாயுள்ளது. உருவமற்றது. அதற்குவேறா யொரு பொருளுமின்று. இவற்றை யுணர்ந்திடுவார் பிரமம் அந்தக் கரணத்திற் பிரதிபலித்தது என்பதை யொப்புவதெங்ஙனம்? இவரிம் மட்டிலமையாமல் அகம்பிரமம் என்று கூறுவர். இவ்வாறு கூறும் ஒவ்வொரு மாயாவாதியும் தேகச்சுமை சுமந்திருக்கக் கண்டோம். பிரமமோ தேகச் சுமையற்றது. தேகச் சுமை தாங்கிய மாயாவாதி பிரதி பலநப் பிரமமேயன்றி அதிஷ்டானப் பிரமமன்று. அதிஷ்டானப் பிரமமல்லாத தான் அகம் பிரமமென்பது கூடாது. பிரமம் தன்னை அகம்பிரமம் என்று கூறிக் கொள்ளவு மாட்டாது. அவ்வாறு அது கூறிக்கொள் வதற்கு அதற்கு வாக்குமுதலிய கரணங்களுமில்லை. இது நிற்க. பிரமம் பரிபூரணப் பொருளாகையால், தேகச்சுமை தாங்கிய யாமும் பிரமமாயிடுதல் கூடுமென்று அவர் வாதிக் கலாம். பிரமம் பரிபூரணமாயின், தம்மை அவர் பிரதி பலநப்பிரமமென்றது பிழையாம். தமக்குத் தேகச்சுமையை யொப்பியதும், ஜநநமரணங்கள் கூறியதும் மிகையாம். ஜநநம் என்பது ஆன்மா ஒரு தேகத்தை யடைதலும், மரணம் என்பது அது அந்தத் தேகத்தை விடுதலுமேயாம். அவ்வாறு கொள்ளுங்கால், அவ்வான்மாவுக்குப் போக்குவரத்துக் கூறப்படும். இவ்வான்மாவைப் பிரமமாகக் கொள்ளுங்கால், பிரமம் போக்குவரத்தில்லாதது என்னுஞ் சுருதி பொய்ப் பட்டுப்போம். அன்றியும், ஆன்மா வொரு தேகத்திலிருந்து ஒன்றை யறிகையில், கண்ணின் வழியாக வறிந்தபோது காதின் வழியாகவும், காதின் வழியாக வறிந்தபோது கண்ணின் வழியாகவும் அறியாது. இரண்டிந்திரியங்களி லொரேகாலத்தில் வியாபியாது என்பது முடிவு. இரண்டிந் திரியங்களில் வியாபித்து ஏக காலத்தி லிரண்டு விஷயங்களை யறியமாட்டாத ஆன்மா எல்லா விந்திரியங் களிலு மொக்க வியாபித்து எல்லாவிஷயங்களையு மேக காலத்தி லறியு மென்பது கூடாதாகையால், ஆன்மாவைப் பரிபூரண மென்றும், அதுதான் பிரமமென்றுங் கூறுவது அபசித்தாந் தமாய் முடிந்தது. அன்றியும், அவ்வான்மா வொன்றினை யறிகையில் இந்திரியங்களின் சம்பந்தங் கேட்கப்படுகின்றது. இந்திரியங்களின் சேர்க்கையின்றி யொன்றினை யறிய மாட்டாத வதனைச் சுதந்திரவறிவாகிய பிரமம், அல்லது சிவம் என்றிடலுந் தவறுடைத்தாம். ஒரு தேகத்திலேயே முழுதும் ஏககாலத்தில் ஆன்மா வியாபி யாமையால், அது உலக முழுதும் வியாபித்தது என்று கூறுதற் கிடமேயில்லை. ஆகையால், ஆன்மா வியாபக முடைய தென்பது அழிந்தது. இனி, வியாபகம் அல்லது பூரணம் என்பது ஒன்றா யிருந்தபிரமம் பலவாக விரிந்த நிலைமையென்பது என்று அவர் பொருள் விரிக்கின்றனர். அங்ஙனமாயின், அது இப்போது விரிந்த நிலைமையினின்றும் இன்னு மதிகமாய் விரிதலுங் கூடும். அன்றியும் ஒன்றாயிருந்த அது பலவான காரணம் யாதென்னு மாசங்கையுமுண்டாம். பலவென்னும் பிரசங்க முண்டா குகையில், ஒன்று கெடுதலும் அவர் மதத்துக் கிடர் தேடியதாம். ஒன்றாயிருந்தவதனை ஒன்று என்று கூட்டியது யாவர்? அதற்கு வேறாயொரு பொருளில்லாத போது அதனை ஒன்று என்று சுட்டுதற்கிடமேது? சுட்டிய பொருளுண்மையால் அவ்வாறு சுட்டியபொருளும், சுட்டப்பட்ட பொருளும் ஒன்றாயிடுதல் யாங்ஙனம்? அன்றியும் ஒன்றா யிருந்தது பலவாகியதெனின், ஒன்றாயிருந்தது கண்டமும், பலவாய் விரிந்தது அகண்டமுமாம். அதனால் அவ்வொன்று பலவாயிடுதற்குப் பூர்வம் அதற்குப் பூரணத்துவமில்லையாம். இம்மட்டோ, அவ்வொன்று பலவாய் விரிந்ததென்னுங்கால், அது முன்னர் வியாபித்திராத விடத்தி லேயே பின்னர் வியாபித்திடல் வேண்டும். ஒரு வித்து அங்கு ரித்து விருக்ஷமா குகையில். அதனது சாகோபசாகைகள் தழைக் கின்றன. அவ்வாறு தழைத்து வியாபிப்பது அது முன்னரில்லாத இடத் திலேயேயாம். அந்த இடம் ஆகாயமேயாம். அவ்வா காயத்தில் வியாபிப்பதெல்லாங் கண்டப் பொருள்களாம். அகண்டமாகிய ஆகாயம் தனக்கு வேறாயுள்ளவோரிடத்திற் புதுசாய்ச் சென்று வியாபியாது; வேறு இடமில்லாமையால் அன்றியு மவ்வாகாயம் அதற்கு விஜாதியான பலபொருள்களாக விரிந்ததுமின்று. இதனைத் தெளிந்தவர்கள் பிரமம் பலவாய் விரிந்தது என்பதை வித்தானது மரமாகிச் சாகோபசா கைகளாய் விரிந்ததற்கே யொப்பிடுவரென்க. மரம் கண்டமாயினவாறு பிரமமுங் கண்டமாயொழியத் தக்கதென வொதுக்கவும் பின்னிடை யார்கள். மரமானது தான் முன் வியாபியாதவிடங்களிலேயே (சாகைகளாகத்) தழைத்து வியாபித்தது போலப் பிரமமுந் தான் முன் வியாபியாத விடங்களிலேயே(தழைத்து) விரிந்ததெனவுங் கூறமுந்துவார்கள். பிரமம் ஆகாயத்தானத்திலே யுவமிக்கப் படுவதாகையால், ஆகாயம் விரிதற்கு வேறிடமில்லாதவாறு போலப் பிரமம் (பலவாக) விரிந்திடற்கு வேறிடமில்லை யென்று தெளிக. அன்றியும், அவ்வாகாயம் தனக்கு விஜாதி யான பல பொருள் களாக விரிந்திடாதது போலப் பிரமமுந் தனக்கு விஜாதியான பலபொருள்களாக விரிந்திடா தென்பதுஞ் சித்தாந்தமாயின துணர்க. இனிப் பிரமமேயுள்ளது, அஃது வேறு இடத்தில் வியாபித்ததின்று என அவர் கூறலாம். அப்போது அப் பிரமம் வியாபகப் பொருளென்னும் வாதம் நசித்திடும். அது மெய்யா கையால், மரம் சாகைகளாய் வியாபிக்க இடங் கொடுத்த ஆகாயத்தைப் போலப் பிரமம் பல பொருள்களாய் வியாபிக்க இடங்கொடுத்த வேறொரு பொருளினிருப்பும் அப்பிரமத் துடன் அநாதியா யொப்ப வேண்டிய பொறுப்பு அவர்தலை மேல்வந்து விடியாமற் போகாது. அன்றியுமவர் பொன் பணிகளாயினவாறும், பால் தயிராயினிவாறும், கடல் அலை குமிழிகளாயினவாறும் பிரமம் பலவாயின தென்று கூறுவர். அதுவுங் கூடாது; ஏனெனின், பொன்னைப் பூணாக்கிப் புனைவாரில்லாதபோது அந்தப் பொன் தானே பூணாகமாட்டாது. பொன் பூணாயின பின்னர்ப் பூணென் பதேயன்றிப் பொன்னென்னும் பெயர் அதற்குண்டாயின தின்று. பொன் பூணாயினவிடத்தும் அந்தப் பூண் பொன்னின் றன்மையினின்றும் மாறியதின்று. இப்படியே பாலைத் தயிராக்கிப் பருகுவாரில்லாதபோது அந்தப்பால் தானே தயிராக மாட்டாது. பால் தயிராயின பின்னர் தயிரென்பதே யன்றிப் பாலென்னும் பெயர் அதற்குண் டாயினதின்று. பால் தயிராயின பின்னர் அந்தத் தயிர் மீண்டும் பாலாயினதின்று. இனிக் கடலிற் காற்றில்லாத போது அலைகுமிழிக ளதிலாக்கப் பட்டவாறில்லை. காற்று என்று மோயாமையால் அலை குமிழிகள திலங்கியவாறுமில்லை, கடலிலுண் டாகிய அலைகுமிழினக் கடனீரா யிருப்பதன்றி வேறு பொருளாயின தில்லை. இவ்வுபமான ஸாத்ரு சங்களோடு பிரமம் பலவாயிடுத லாகிய பரிபூரணத் தன்மையை நிறுத்த வேலாமையால், பிரமம் உலகுயிர் களாகியும், உலகுயிர்கள் மீண்டும் பிரமமாகியும் நிலைபெறுதற்கேற்ற தகுதியமைந்த வுபமானந்தேடிப் பூர்வ பட்சிகள் தமது மதத்தை நிறுத்திக் கொள்வது ஆவசியகமாம். எவ்வித வுபமானந் தேடினும் பிரமத்தினது பரிபூரணத்வம் அவர் கூறியபடி சித்தியா தென்பது சித்தம். வியாபகம்-வியாப்தி-வியாப்பியம் என்னுஞ் சொற்பாகுபாடு களினுண் மையுண ராத கொடுமையே அவர்க்கு வீணவதியை விளைந்ததென்க. நிற்க. அவர் வியாபகங்கூறியது பிரமத்துக்கென்று விவகார முண்டாயினும், அந்தப் பிரமம் ஆன்மாவைத் தவிர வேறில் லையென்பது அவரது மதமாய் முடிந்தமையின், அவ் வான்மா விபுவாகாமையை மேல் யாமுணர்த்திய துணர்ந்தவர்கள் அவர் கூற்று இழிகூற்றென்றெண்ணி யொதுக்கப் பின்னிடையா ரென்க. இதுகாறுங் கூறியவுண்மைகளால் ஜநநமரணங்களைத் தாங்கிய பொருள் பிரதிபலந சைதன்யமாகிய ஜீவனா? அதிஷ்டாந சைதன்யமாகிய பிரமமா? என்றா சங்கித்த விஷயம் பரிஷ்கரிக்கப்பட்டு, இரண்டுமல்ல வென்று நிச்சயிக்கப் பட்டமையால், இவ்விரண்டுமல்லாததும், அநாதிநித்திய மானதும், கிஞ்சிஜ்ஞத்வாதி யிலக்கணங்களோடு கூடிய பாசவீக்கமுடையதுமாகிய பசு வென்னும் ஆன்மாவே ஜநந மரணப்பட்டு வருந்துந் தன்மைத்து என்று கூறுவர். பெரியோ ரென்க. இதனால் பிரமமொன்றே சத்தியம், ஜகஜீவபரங்கள் மிச்சை என்று பேசிய பொய்வழக்கு அபஜயமடைந்ததறிக. இம் மாயாவாதி மதத்தில் பிரமத்தினிடத்தில் ஜகஜீவ பரங்கள் கற்பிக்கப்பட்டனவென்றும், பிரமம் சத்தியமென்றும் சொல்லப்படு மாபாசத்தில் முன்னர்ப் பிரமத்தையும் ஜீவனையும் விசாரித்து முடிவு செய்தோம். ஏனைய ஜகம் பரம் என்பவைகளை யிப்போது விசாரித்து முடிவு கூறுவாம். ஜகம் என்பது ஜீவனைப் போலப் பொய்ப் பொருளென்று அம்மதத்தினர் கூறுகின்றனர். எங்ஙன மெனின்; பழுதையிற் பாம்பும், கட்டையிற் கள்வனும், சுத்தியில் ரஜிதமும், கானலில் நீரும், ஆகாசத்தில் தாமரையும், முயலிற் கொம்பும், கனவிற் பட்டணமுந் தோன்றியவாறு பிரமத்தின் உலகந் தோன்றியது என்பதேயாம். பிரத்யக்ஷமா யிருந்து கொண்டு உயிர்களுக்குச் சுகதுக்கங்களைத் தந்து அநுபவ வேத்யமாயிருப்பதொன்றை இல் பொருளென்று சொல்லி அதனோடு ஒருவித சம்பந்தத்தையும் பெறாத சில வாபாசவுவமைகளைத் தேடியுரைத்து உலகத்தை வஞ்சிப்பது பெருங் கொடுமையேயாம். இவர் தேடிய வுவமைகளில் முதல் பழுதையிற் பாம்பு தோன்றியது போலப் பிரமத்திலுலகந் தோன்றிய தென்பது கேவலம் அஸங்கதம். எங்ஙனமெனின், பழுதை பாம்பைக் கண்டதின்று. பழுதையிற் பாம்பைக்கண்டவன் அப்பழு தைக்கு வேறாயுள்ள வொருபுருடன். இந்தப் புருட னிதற்குப் பூர்வம் நேரிற் பாம்கைக் கண்டிராத போது இப்போது பழுதையிற் பாம்பைக் காணமாட்டான். இப்படியே பிரமம் உலகத்தைக் கண்டதின்று. பிரமத்தி லுலகைக் கண்டவன் அப்பிரமத்துக்கு வேறாயுள்ள வொரு ஜீவன். இந்தச் சீவனிதற்குப் பூர்வம் உலகத்தைக் கண்டிராத போது இப்போது பிரமத்திலுலகத்தைக் காணமாட்டான். பூர்வம் உலகத்தைக் காண்டலாவது ஆன்மா அநாதியே மலமாயாதி சம்பந்தங் களைப் பெற்றிருத்தலாம். சிவம் அல்லது பிரமம் வியாபகத்தால் தன்னிடத்திலுள்ளும் புறம்புங் கலந்திருந்தும், தான் (அதாவது ஆன்மா) அச்சிவத்தைக் காணாமலுலகத்தைக் கண்டுழலாநின்ற தெனவறிக. இதனால், பழுதை-பதியும், பாம்பு-பாசமும், கண்டவன்-பசுவுமாகக் கொண்டு பதார்த்தத் திரயநிரூபணஞ் செய்திடுதலே யமைவுடைத்தாம். இவ்வுப மானத்தால் ஏகாத்மவாதம் நிலைபெறாதழிந்தது. இதனை யோராது பழுதை, பாம்பைமுன்கண்ட வாசனை, கண்டவன் இம்மூன்றுங் கூடியபோதுண்டான அநுபவத்தைப் பிரமந் தனித்து ஏகமா யிரண்டாவ தெண்ணுக்கே யிடமில்லாது விளங்கிய வவசரத்தி லொட்டி யுரைப்பது யாங்ஙன மிசையும்? இப்படியே கட்டையிற் கள்வன், சுத்தியில் ரஜிதம், கானலில் ஜலம் என்று கூறு முவமைகளுந் தலைதடுமாறிய தறிக. இனி ஆகாயத்தில் தாமரை, முயலிற் கொம்பு என்பவைகள் சொன்மாத்திர மாயுள்ளவை. இவை மேலுவமைகளை விரோதிக்கின்றன. முந்தியவை கண்ணுக்கு விஷய மாகத்தக்கன. பிந்தியவை கண்ணுக்கு விஷயமாகாதன. இவை யெப்படியோ வொன் றோடொன்று வாழ்ந்து வொரு விஷயத்தைச் சாதியா நிற்கும்? இம்மட்டோ, இவர்கள் கடைசியாகத் தேடிய கனவிற் பட்டணம் என்பது முன்னிரண்டையும் விரோதிக்கின்றது. எங்ஙனமெனின், முதற்கட்போந்த விரண்டும் ஜாக்கிர காலத்தின. பிந்தியது சொப்பனத்தினது. ஜாக்கிராநுபவமும் சொப்பனா நுபவமும் ஒருபடித்தின வாகா. ஒன்றோடொன் றிகலி வேறு பட்டு விளங்குமுப மானங்கள் பிரமத்தி லுலகந் தோன்றிய தென்பதற்குப் பிரயோஜனப் படுமென்பது சுத்தப்பொய்யாம். இதனை யிவர்கள் சாதிக்க வேண்டிப் பல கரணம் போட்டுப் பார்க்கிறார்கள். அது ஒருவன் ஒரு பொய்யைச் சாதித்தற்கு வேறு பல பொய்களைத் தேடி யிடர்ப்படுதலுக்கே பொருத்த மாயதென்க. இதனை யிம்மட்டினிறுத்தி இவர்கள் தேடிய பரனதியல்பைச் சிறிது ஆராய்வாம். இவர்கள் பரமென்று கூறுவது இவரது பிரமம் மாயை யிற்றோய்ந்த பிரதிபலனமாம். எங்ஙனமெனின், மூலப் பிரகிருதியென வொன்றுளது. இதுவே மாயையாம். இது ஸத்வ ரஜ தமோ குணாத்மகமா யுள்ளது. இதற்கு வெண்மை, செம்மை, கருமை நிறங்களையுடை மூன்று புரிகளால் பின்னிய ஒரு கயிற்றின் தோற்றமே நிதரிச னமாம், வெள்ளைக்கயிறு போல்வதாகிய சத்வத்தில் தோய்ந்த பிரமம் விஷ்ணுவும், செவப்புக்கயிறு போல்வதாகிய ரஜஸில் தோய்ந்த பிரமம் பிரமனும், கறுப்புக்கயிறு போல்வதாகிய தமசில் தோய்ந்த பிரமம் உருத்திரனும் ஆயிடுதல் இவர்களது மதம். இவ்வாறு கொண்டு கூறுமிவர்கட்கும் அப்பிரமம் குணரகித மாயுளதென்பதும், விஷ்ணுமுதலினோர் குண மூர்த்திகளா யுள்ளவர்களென்பதும் சித்தாந்தமாம். இனி யிவர்களா லேக மென்று சாதிக்கப்படும் பிரமத்துக்கு வேறாக மூலப்பிர கிருதியிருப்பதும், அது முக்குண வடிவமாயிருப்பதும், அம் முக்குணம் மூன்று விதமாயிருப் பதும் பேராச்சரியமாம். இதனால், மூலப் பிரகிருதி அநாதி நித்தியமென்னும் பட்சம் வேரூன்றிப் பிரஹ்மேதர வது வில்லையென்னுந் துர்வாதம் நசித்ததறிக. நிற்க. பிரமம் மூலப்பிரகிருதியிற் றோய்ந்தபோது அப்பிரமத் துக்கு உருவங்கேட்கப்பட்டதின்று. அது கேவலம் சேதன வரூபமாம். அரூபமும், சேதனமுமாகிய அது மாயையிற் றோய்ந்தகாலத்துப் பிரம விஷ்ணு ருத்ரர்களாகிய வுருவ மூர்த்திக ளுண்டானார்களென்பது யாங்ஙனம்? இம்மூர்த்தி களுக்கு அசேதனவுருவத் திருமேனிகளும், சேதனவ ரூபமுங் கேட்கப்படுதலா லொருக்கா லிவர்களது சேதனத்தை வேண்டு மாயின் பிரமத்தின் பிரதி பலனமென்று கூறலாம். அப்போது மொரு பாதகமுண்டாகின்றது. என்னெனின், அரூபமாகியவது பிரதிபலிக்க மாட்டாதென்பதனோடு பிரதிபலனம் பொய்யா யொழிந்திடுதலு முண்மையாதலறிக. அதவா பிரதிபலித்த தாகவே கொள்வாம். அதிஷ்டான மெப்படியோ, அப்படியே யன்றோ பிரதிபலனமு மிருத்தல் வேண்டும்? அங்ஙன மின்றிப் பிரமனுக்கு நான்குதலையும், விஷ்ணுவுக்கு ஒரு தலையும், உருத்திரனுக்கு ஐந்து தலையுங் கேட்கப்பட்டாவா றென்னை? அம்மட்டில மையாமல், பிரமனுக்கு எட்டுக் கண்ணும், விஷ்ணுவுக்கு இரண்டு கண்ணும், உருத்திரனுக்கு மூன்று கண்ணும் பிரதாபிக்கப் பட்ட வாறென்னை? அவ்வளவிலுமமை யாமல், பிரமனுக்கும் விஷ்ணுவுக்கும் நான்கு தோள்களும், உருத்திரனுக்கு எட்டுத் தோள்களும் நிர்ணயிக்கப் பட்ட வாறென்னை? அன்றியும் பிரமனுக்குச் செவப்பு நிறமும், விஷ்ணுவுக்குக் கறுப்பு நிறமும், உருத்திரனுக்கு வெள்ளை நிறமும் நிச்சயிக்கப் பட்ட வாறென்னை? இத்தகைய பல வேறு பாடுடைய திரி மூர்த்திகளை ஒரு விகாரமு மெய்தாத பிரமத்தின் பிரதிபலன மென்று கூறுதற்கு யாது நியாயம்? இவற்றைக் கூர்ந்தறியும் விவேகிகளுக்கு இம் மாயாவாதிகள் கூறும்பரத்தின்றோற்றம் கேவலம் ஆபாச மாகவே தோன்று மென்க. ஒருகால் அவர்கள் ஸத்வரஜதமசுக்களைத் திரிமூர்த்தி களினுருவத் தோற்றங்களுக்குக் காரணமாக வுரைக்கலாம். அப்போதும் அவரைத் தொடர்ந்தலைக்கும் பாதகம் விட்டதின்று. எங்ஙனமெனின், சத்வம் வெண்மை நிறம். இதிற்றோய்ந்த பிரமம் கறுப்பு நிறத்தோடு விஷ்ணுவாகப் பவித்ததென்னை? இரஜசு செவப்பு நிறம். இதிற்றோய்ந்த பிரமம் செவப்புநிறத்தோடு பிரமனாகப் பவித்ததை யாமாட் சேபிக்கவில்லை. இனித் தமசு கறுப்பு நிறம்.இதிற்றோய்ந்த பிரமம் வெள்ளை நிறத்தோடு உருத்திரனாகப் பவித்த தென்னை? இப்படி விவகார விரோதமாய் நியாயத்தோ டொட்டியு மொட்டாமலும் பிரமம் திரிமூர்த்திகளின் றோற்றத்துக்குக் காரணமாய் நின் றன்மை பாலிசர்சிரிக்கவே இடஞ்செய்கின்றது. இது நிற்க. இந்த மூன்று மூர்த்திகளும் புருஷரூபந் தாங்கியுள்ள வர்கள். இவர்களுக் கதிஷ்டானமான பிரமமோ ஆணும் பெண்ணும் அலியு மல்லாதது. இது என்ன விந்தை? இந்த மூன்று மூர்த்திகளுக்குந் தனித்தனி மூன்று திரீகள் கேட்கப் படுகின்றனர். இவருள், செவப்புநிறமுடைய பிரமனுக்கு வெள்ளை நிறமான திரீயும், கறுப்பு நிறமுடைய விஷ்ணுவுக்குப் பொன்னிறமான திரீயும், வெள்ளை நிறமுடைய உருத்தி ரனுக்குப் பச்சை நிறமானதிரீயும் அமைந்தவிதம் எப்படி? இவர்களுடைய வுற்பத்தி கற்பிதத்திற் கற்பிதமாம். இதனை விரிக்கிற் பெருகும். இம் மும்மூர்த்தி களுக்கும் பத்தினிகள் கேட்கப்பட்டவாறு இவர்களுடைய பிரதிபலனத்தின் அதிஷ்டானமாகிய பிரமத்துக்கு ஒரு மனைவியுங் கேட்கப் பட்டதின்று. இதுவும் விந்தையாம். பிரதிபலித்த பொருளுக்கு அவ்வாறு பிரதிபலித்த இடத் திலன்றிப் புடை பெயர்ச்சியும், வேறிடத்திற் சென்றியங்குதலுங் கூடாவாறுபோலப் பிரதிபலன மூர்த்தி களாகிய பிரமனா தியர்களுக்கும் புடை பெயர்ச்சியும், வேறிடங் களிற் சென்றி யங்குதலும், மற்றொன்றினை யியக்கு தலுங் கூடாவாம். இங்ஙனமாகவும், அவர்களுக்குச் சிருட்டியாதி கிருத்யங் களையும், இராமகிருஷ்ணாதி அவதாரங்களையும், சர்வ வியாபகத்வாதி தர்மங்களையுங் கூறிய வேதாதிகளுக்கு யாது கதி? இம்மட்டோ? பிரமம் ஒருவித சங்கற்பமு மில்லாதது. இது பிரதிபலித்ததனான் மூன்றிடங்களிலொரே அவசரத் திலுண்டாகிய மூன்று மூர்த்திகளில் ஒருவருக்குச் சிருட் டியும், ஒருவருக்குத் திதியும், மற்றொருவருக்குச் சங்கார முந், தொழில்களாயினதும் ஆச்சரியமாம். இவர்களில், ஒருவரை யொருவர் வணங்கினாரெனவும், ஒருவரோ டாருவர் பிணங் கினாரெனவும், ஒருவரையொருவ ருண்டாக்கினா ரெனவும், பின்னரழித்தாரெனவும் புராணங்கள் கூறுவதும் என்னாவது? வேத முதலிய கலைகளில் சிவபெருமானொருவரே கடவுள் அல்லது பிரமமெனவும், அவரா லுண்டு பண்ணப் பட்டவர்கள் பிரமன் முதலியோ ரெனவும், அவர்கள் பாசவயப்பட்டுழலும் பசுக்க ளெனவுங் கூறப் படுதல் சத்தியமாகையால், இப்பிரம னாதியர்களைப் பிரமத்தின் சாயையெனவாவது, அதனவ தாரமெனவாவது கூறி, ஜீவப் பிரஹ்மவாதிகளாகிய மாயாவாதிகள் திண்டாடுவது கேவலம் பரிதாபமென்க. இதனால், அவர்கள் கூறும் பிரமலட்சணம், ஜகஜீவபரதர்மங்கள் முதலியயாவும் பரம நாதிகப் பாஷண்ட போதமாய் முடிந்ததறிக. விரிக்கிற் பெருகும். என்னுமிதனை எமது ஸ்ரீலஸ்ரீ நாயகரவர்கள் வெளியிட்டனர். இதன்மேற் சிலவாசகங்கைகளெழுப்பி ஒரு மாயாவாத நண்பர் விவகரித்தனர். அதற்குமேல் எமது சகோ தரரொருவர் சமாதானங் கூறினர். அவ்விரண்டனையும் ஈண்டு வெளிப்படுத்தி யுபகரிப்பாம்.. பூர்வபட்சம் பிரமத்தினிடத்தில் ஜகஜீவபரங்கள் கற்பிக்கப்பட்டன வென்றும், பிரமம் சத்தியமென்றும் சொல்லப்படும் ஆபாசத்தில் என்று நாயகர் கூறியது யாங்ஙனம்? முன்னைய மூன்றும் எவ்வாறாயினும் பிரமம் சத்தியமென்றவர் கூறுவதும் சத்திய வாபாசமா? சித்தாந்தம் நாயகரவர்கள் ஆபாசமென்றது ஜகஜீவபரங்கள் பொய், பிரமம் மெய்யென்ற சித்தாந்தத்தையேயன்றிப் பிரமமாகிய வதுவை மெய்யென்றதை யன்று. இவ்வாறு சுலபமா யாருமுணரத்தக்கதைத் தாங்கள் அந்யதா கிரகித்தது யாதோ? நாயகரவர்கள் பிரமம் பொய்யென்று யாண்டா யினுங் கூறியதுண்டாயின், தங்களாசங்கை பயன்படும். பிரமம் அல்லது பதி சத்தியமாவது போல ஏனைய பசுபாசங்களும் சத்தியமாயிடுதல் நாயகரவர்களது கொள்கை. இவ்வாறன் றிப் பதி சத்தியம், பசு பாசங்கள் பொய்யென்றது ஆபாச மேயாம். பூர்வபட்சம் பழுதையிற் பாம்பு, கட்டையிற் கள்வன், சுத்தியி லிரஜிதம், கானலிற் சலம், ஆகாயத்திற் றாமரை, முயலிற் கொம்பு, கனவிற் பட்டணம் முதலியவைகளை ஆபாசவுவ மைகளென்று திரகரித்த நாயகர் பழுதை பதியும், பாம்பு பாசமும், கண்டவன் பசுவுமாகக் கொண்டு பதார்த்தத்திரய நிரூபணஞ் செய்திடுதலே அமைவுடைத்து என்று அங்கீ கரித்ததென்னையோ? ஒரு ஆபாசவுவமையைக் கைக் கொண் டவர் மற்ற ஆபாச வுவமைகளையுங் கைக்கொள்ளாமற் போவரோ? சித்தாந்தம் நாயகரவர்கள் மேற்கண்ட உவமைகளை யாபாசமென்றது மாயாவாதிகளது சித்தாந்தத்தை அவை நிறுத்து மியல்பு காணாமையாலென்க. அவ்வளவேயன்றி அவ்வுவமைகளை யொன்றோடும் புணர்த்திக் காட்டாத வவசரத்தில் ஆபாச மென்றதில்லையறிக. எமது சைவ சித்தாந்தத்திற்கே யொரு புடை யொத்தவுவமைகளென்று காட்டியது உசிதமேயாம். மாயாவாதி யுயிர்போலோம்பிய வுவமைகள் அவனுக்கிடர் விளைத்திடலா லாபாசமென்ற தமையுடைத்தே. எமக்கவை யிடர் செய்யாமையா லாபாசமாயினதில்லையறிக. பழுதை பாம்புவமை போல ஏனையெல்லாவுவமைகளு மெமக் கொப்பேயாமென்க. இவ்வாறு தெளிந்திடாமல் பூர்வாபர விருத்தமா யெழுதினீர்கள் என்று நாயகரவர்களைத் தாங்கள் குறை கூறியது உசிதமாயினதில்லையறிக. நிற்க. பழுதையிற் பாம்பு தோன்றியது போலப் பிரமத்தி லுலகந் தோன்றியதென்பது அசங்கதம். எங்ஙனமெனின், பழுதை பாம்பைக் கண்டதின்று. பழுதையிற் பாம்பைக் கண்டவன் அப்பழுதைக்கு வேறாயுள்ள வொரு புருடன். இந்தப் புருடன் இதற்குப் பூர்வம் நேரிற் பாம்பைக் கண்டிராத போது இப்போது பழுதையிற் பாம்பைக் காணமாட்டான். இப்படியே பிரமம் உலகைக் கண்டதின்று. பிரமத்தில் உலகைக் கண்டவன் அப்பிரமத்துக்கு வேறாயுள்ள வொரு ஜீவன். இந்தச் சீவனிதற்குப் பூர்வம் உலகைக் கண்டிராத போது இப்போது பிரமத்தில் உலகைக் காண மாட்டான். பூர்வம் உலகைக் காண்டலாவது ஆன்மா அநாதியே மலமாயாதி சம்பந்தங் களைப் பெற்றிருத்தலாம் என்று நாயகரவர்கள் தெரிவித்த வுண்மையைத் தாங்கள் பாராதவர் போல நியாயம் பேசவந்தது தருமமா? மேற்காட்டிய மாயாவாதவாபாசத்திற்கு யாது பரிகாரந் தேடிக் கொண்டீர்கள்? உண்மையை நழுவ விட்டு விவகரித்த தாங்கள் உண்மைஞானப் பிரியன் என்று வெளி வந்தது உண்மையாவ தெங்ஙனம்? பூர்வபட்சம் சிவஞானபோதம் சிவஞான சித்தியார் முதலிய சைவ சித்தாந்த சாத்திரங்களிலும் பேய்த்தேருபமானங் கூறியிருக் கின்றது. இதனை யெங்ஙனோ ஆபாசமென்றனர் நாயகர்? சித்தாந்தம் இவ்வுபமானம் சைவசித்தாந்தத்திற்கே யுரித்தென் பதைப் பாநுமூர்த்திக்கு வீரபத்திரமூர்த்தி உபதேசித்த பகுதியில் நன்கு பரிஷ்கரித்திருக்கின்றது. நீலலோசனியை வரித்துப் பார்த்துத் தெளிந்திடுக. எல்லாவுவமைகளு மெமக்கொப்பென்ற விடையாலும் இதற் கிறை தந்ததாயிற்று. பூர்வபட்சம் மாயாவாதிகூறு முவமைகள் ஜாக்கிராவதையிலும் சொப்பனாவதையிலுமுள்ள பொருள்களாதலால் ஜாக் கிராநுபவமும் சொப்பனாநுபவமும் ஒரு படித்தனவாகா என்ற நாயகர், சிவஞானபோதத்தில் நீரிலெழுத்து என்பதி லுள்ள வுவமைகளும் ஜாக்கிர சொப்பனகாலத்தி லுள்ளன வென்பது கொண்டு குறை கூறுவாரோ? சித்தாந்தம் ஜாக்கிரவுவமை ஆகும், சொப்பனவுவமை ஆகாது எனவாவது, அல்லது சொப்பனவுவமை ஆகும், ஜாக்கிர வுவமை ஆகாது எனவாவது நாயகரவர்கள் கூறியதில்லை. இரண்டு வமைகளும்உபமேயங்களுக்குத் தக்கவாறு பிரயோஜனப்படத் தக்கனவாம். எடுத்துக் கொண்ட வுபமேயத்தைச் சாதிக்க வேலாத விருத்தோபமானம் பயன் படாதென்பதே நாயக ரவர்களது கருத்து. ஜாக்கி ரோப மானத்தாற் சாதித்தற்குரிய வோருப மேயத்தைச் சொப்பனோப மானத்தாலும், சொப்பனோ பமானத்தாற் சாதித்தற் குரிய வோருப மேயத்தைச் சாக்கிரோ பமானத்தாலும் நிரூபிக்க முடியாத காரியமாம். இரண்டுபானங்களையு மெடுத்துச் சாதித்தற்கேற்ற வோருப மேய மமையாது. இதனையே நாயகரவர்கள் விளக்கி மாயா வாத ஞான நிலையை மறுத்தார்கள். அதனை யீண்டு யாம் நான்கு விளக்கிக் காட்டுகின்றோம். கட்டையிற் கள்வன், சுத்தியி லிரஜிதம், கானலில் ஜலம் ஆகிய இம்மூன்றுங் கண்ணுக்கு விஷயமாகின்றன. ஆகாயத்திற் றாமரை, முயலிற் கொம்பு ஆகிய இவ்விரண்டுங் கண்ணுக்கு விஷயமாகாமல் சொன்மாத்திரமா யொழிகின்றன. கண்ணுக்கு விஷயமாகியும், விஷயமாகாமலுமிவை யொதுங் கினு மிவ்விருபகுதியவுஞ் சாக்கிர காலத்தினவாம். கனவிற் பட்டணம் என்பது சொப்பனாவத்தையினதாம். இவை பிரமத்தி லுலகந் தோன்றியதென்று மாயாவாதிகள் கூறுஞ் சித்தாந்தத்திற் கிடர் விளைப்பதன்றித் தொடராக நின்று பகரியாவென்க. எங்ஙனமெனின், கட்டை சுத்தி கானல் என்பவை பிரமத்துக்கும், கள்வன்-ரஜிதம் ஜலம் என்பவை பிரபஞ் சத்துக்கும் முதலுவமைகளாயின. ஆகாயம் முயல் என்பவை பிரமத்துக்கும், தாமரை-கொம்பு என்பவை பிரபஞ்சத்துக்கும் இரண்டாவ துவமைகளாயின. கனவைக் கண்ட தான் என்பது பிரமத்துக்கும், கனவிற் பட்டணம் என்பது பிரபஞ்சத்திற்கும் மூன்றாவ துவமையாகியது. இனிப் பிரமத்திற் றோன்றிய பிரபஞ்சத்தை முதலுவமைகளைப் போலத் தோற்றன் மாத்திரமாய்க் கொள்வதா? இரண் டாவதுவமைகளைப் போலச் சொன்மாத்திரமாகக் கொள்வதா? மூன்றாவது வமையைப் போல வேறுகாலத்து விசித்திரத் தோற்றமாகக் கொள்வதா? மூவகையுவமை களையு மொன்றில் அமைக்க முடியாதாகையால், மாயாவாதிகள் முன்னொடுபின் மலை வாகப் பேசுமுவமைகளை நாயகரவர்கள் மறுத்தது ஸாமஞ்ச ஸமேயாம். இஃது ணராது தாங்கள் சிவஞான போதத்தை வீணிற் பிரதாபித்தலும், அதிலொரே பொருளிடத்திற் சாக்கிரசொப்பன வுவமைகளு ரைத்திருப்ப தாகத் தாங்கள் கூறியதை விளக்கிக் காட்டாததும் விவேகிகளுக்கு மன தாபத்தையே யுண்டு பண்ணிய தென்க. பூர்வபட்சம் மாயாவாதிகள் ஜகஜீவபரங்கள் உண்டென்று சொல்லு கிறார்கள் என்று எழுதிய நாயகர், ஏகாத்மவாதம் நிலை பெறாதழிந்தது என்று பின்னர்க் கூறியவாறென்னை? சித்தாந்தம் ஜகஜீவபரங்கள் உண்டென்றால், ஏகாத்மவாதம் நிலை பெறாதென்பது சத்தியமே. மூன்று பொருள்கள் உண்டென் பாரது மதத்தில் ஒரு பொருடா னுண்டென்னுஞ் சித்தாந்தம் நிலை பெறுமாறு யாங்ஙனம்? ஜகஜீவபரங்கள் விவகாரத்தி லுண்டென்று மாயாவாதிகள் கூறுவதாக நாயகரவர்கள் சொல்லியிருக்கலாம். அவ்வளவேயன்றி மாயாவாதிகள் ஜக ஜீவபரங்களைப் பரமார்த்தத்தி லுண்டென்று சொல்லு வதில்லை. அவர் கூறும் விவகாரமெல்லாம் அவரது மதத்தில் வெறும் பொய்யாம். இவ்வாறு அவர் கூறும் உபதேசவொலி பனையின் சலசலப்பொலி யோடுதானே சேரும் பண்பி னதாம். இனிச் சகசீவபரங்கள் சத்தியமென்பது சித்தாந்த மாகையால், மாயாவாதிகளது ஏகாத்மவாதம் நிலைபெறா தழிந்தது என்று நாயகரவர்கள் கூறியது ஸாமஞ்சஸமேயாம். பூர்வபட்சம் ஜீவான்மா, பரமான்மா என்னுமிரண்டில் மாயா வாதிகள். எந்த ஆன்மாவை ஏகமெனக் கொண்டார்களென்று நாயகரெண்ணி ஏகாத்மவாதம் அழிந்தது என்றனர்? சித்தாந்தம் மாயாவாதிகளது மதத்தில் ஜீவான்மாவும் பரமான் மாவும் ஒரே ஆன்மா என்பது நிச்சயமாகையால், தாங்கள் ஜீவான்மா பரமான்மா என்னுமிரண்டில் என்றது பிழையாம். ஜீவான்மா கல்பிதமும், பரமான்மா சத்தியமுமாயிடுதல் அவரது மதம். ஜீவான்மபரமான்ம பேதங்கள் விவகாரமேயன்றி பரமார்த் தத்தில் ஆன்மா ஏகமென்பதே அவரது முடிவாம். அதனால் அவரது மதம் ஏகாத்ம வாரமாயினது சத்தியம். அவ்வேகாத் மவாதத்தை அவர் தேடிக் கொண்ட பழுதை-பாம்பு முதலிய வுவமைகள் சாதித்துக் கொடுக்காமையால் நாயகரவர்கள் அவரது ஏகாத்மவாதம் நிலைபெறாதழிந்தது என்றது ஸர்வஸம் பிரதிபந்நமாயின துணர்க. பூர்வபட்சம் சிவம் ஆதாரம், உலகம் ஆதேயம். அவ்வாறே பிரமம் ஆதாரம், உலகம் ஆதேயம் என்பது சைவ சித்தாந்தி மாயாவாதி இருவர்க்கும் ஒப்ப முடிந்த தன்றோ? சித்தாந்தம் சிவம் அல்லது பிரமம் ஆதாரமும், உலகம் ஆதேயமும் என்பது சைவ சித்தாந்திக்கே யொப்ப முடிந்தது. மாயாவாதி ஆன்மாவையே பொருளெனக் காண்டமையால் நிறுத்தப் பொருள் பிரம்ம மாகாது. அதனால், அவனுக்குப் பிரமம் ஆதாரமென்பது கூடாது. அவன் சைவசித்தாந்தியைப் போல் ஆதார ஆதேயங்களாக இரண்டு பொருள்களை யொப்புவது மில்லை. அவனுக்கு ஆதாரமும் ஆதேயமும் ஒரு பொருளேயாம். அவனது பரமார்த்தத்தில் ஆதார ஆதேயப் பிரஸக்தியு மின்றாம். அவனது மதமும், சைவ சித்தாந்தி மதமும் ஒன்றாயின தில்லையறிக. தாங்கள் காட்டிய ஹாலாய மாஹாத்மிய வசனம் சைவ சித்தாந்திக்கே பயன்பட்டவாறறிக. தாங்கள் கொண்ட உண்மை ஞானப் பிரியன் என்னு நாமத்துக் கேற்ப உண்மை ஞானத்தை யுணர்ந்துய்வீர்களென்று திருவருளைச் சிந்திக்கின்றேன். இவர் நிற்க. வேறொரு நண்பர் எமது நாயகரவர்களைச் சுட்டி கேண்மை வினா என்று சில வினாக்களையெழுப்பினர். அவைகட்கும் முன் சகோதரரே விடை கூறினார். அவ்விரண் டனையும் ஈண்டு முன்போல வரைந்திடுவாம். பூர்வபட்சம் மறைத்தலைச் செய்யும் ஆணவமலமும், நினைத் தலைச் செய்யும் மாயாமலமும், பிறத்தலைச் செய்யும் கன்ம மலமும் ஒன்றோடொன்று பொருந்தாத (மாறு பட்ட)தன்மையை புடையனவாக விருப்பதால் பசுவுக்கு அநாதியாக மும்மலமும் உண்டென்று சொல்லக் கூடுமா? சித்தாந்தம் தாங்கள் ஒன்றோடொன்று மாறுபட்ட மலங்கள் அநாதியி லான்மாவினிடத்தி லெப்படியிருக்கக்கூடு மென்றா சங்கித்தீர்கள். mehâÆ yitÆU¥gâ yhr§if Ãfœ¤âd ikahš., அநந்தரம் அவை யொன்றுகூடி யிருப்பதிற் றங்களுக்கு ஆசங்கையுண்டாயினதாகத் தோன்றவில்லை. அதாவது இப்போது ஒரு ஆன்மா தேகாதிகளைப் பெற்றிருக்கின்றது. இதில் மறைப்பு, நினைப்பு, பிறப்புகளுக்கு மூலமாகிய ஆணவமாயை கன்மங்கள் கூடியே வாழ்கின்றன. ஒன்றோ டொன்று மாறுபட்ட மும்மலங்களும் இப்போது கூடிவாழ்தல் போலவே அநாதியிலுங் கூடி வாழ்ந்தன வென்றறிக. பூர்வபட்சம் மாயாமலத்தாலும் கன்ம மலத்தாலும் பசுவுக்கு அநாதி யில் ஏதாவது சுகதுக்கமுண்டா? சித்தாந்தம் ஆணவத்தை ஆன்மா வநுபவிக்குஞ் சுழுத்தியில் மாயை கன்மங்களி னனுபவமாகிய சுகதுக்கமில்லாமை போல றியத்தக்கது. பூர்வபட்சம் பசுவின் மும்மலங்களை நீக்க வேண்டுமென்று பரமன் கருணை கொண்டதும், பதியானது பசுக்களுக்குத் தநுசுரண புவனபோகம் உண்டாக்கியதும் எப்போது? சித்தாந்தம் அநாதியில். பூர்வபட்சம் பசு ஆகாமிய-சஞ்சித-பிராரத்த கன்மங்களை அடைந்த தெப்போது? சித்தாந்தம் தநு-கரண-புவன-போகங்களைப் பரமன் கூட்டிய வனந்தரம். பூர்வபட்சம் அநாதியாயுள்ள வதுக்களுக்குக் காரணஞ் சொல்லலாமா? சித்தாந்தம் காரணஞ்சொல்லார் அறிஞர். பூர்வபட்சம் இருவினையற்றால் முத்தியா? மும்மலமற்றால் முத்தியா? முக்தியில் பசுவானது பதியுடன் கலந்தால் பாசமடைந்த கதியென்ன? சித்தாந்தம் இருவினையறுதல் முத்திக்குச் சமீபம். மும்மலமற்றுத் திருவடிப் பேறெய்துதலே முத்தி. முத்தியில் பசுவானது பதி யுடன் புதுசாய்க் கலப்பதில்லை. முன்னரே கலந்திருந்த பதியை மலத்தாற் றரிசியாதிருந்த ஆன்மா அம்மல நீங்கியதனாற் றரிசித்தின்புறு மென்றறிக. ஆதித்தன் சந்நிதி யையடைந்த நேத்திரத்தை (முன்மறைத்திருந்த) இருளானது மறைக்காமலும், முனைத்துத் தோன்றாமலும், முதல் கெடாமலும் நிற்குமென்றறிக. இவர்நிற்க. வேறொரு மாயாவாத பண்டிதர் இந்து என்னும் பெயரால் வெளிப்பட்டுச் சிற்சில வஸங்காத்மவாதங்களைப் பெருக்கிச் சிவனடியார் தூஷணம், சைவதூஷணங்களைப் பரப்பி ஒரு நூல் வெளியிட்டனர். அதனைத் தூத்துக்குடிச் சைவசித்தாந்த சபையார் பரிகரித்து உபகரித்தனர். அதனையும் ஈண்டு ஸாதுக்க ளுபயோகார்த்தம் வெளிப்படுத்தி யுபகரிப்பாம். இந்துவுக்கோ ரிதோபதேசம் இந்துவே! நீர் வெற்றெனத்தொடுத்தல் - மற்றொன்று விரித்தல் - கூறியது கூறல் - மாறுகொளக்கூறல் முதலிய பலகுற்றம்படப் பத்திரிகையை நிறைத்தெழுதினீர். அதனுளடங்கிய விஷயம் 1. நும்மவர் மாயாவாதிகளல்லரென்பதும், 2. ஸ்ரீமத் சோமசுந்தரநாயகரவர்கள் மாயாவாதிகளாகிய நும்மவர்க்குத் தோற்றாரென்பதும், 3. பிரமம் ஒன்றேயுள்ளது, இதர பதார்த்தங்கள் (ஜகசீவபரங்கள்) காலத்திரயத்துங் கிடையா வென்பது மேயன்றோ? அவைகளை முறையே விசாரித்திடுவாம். மாயாவாதவிசாரம் ஆதிகசமயிகள் ஒவ்வொருவரையும் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நாமங்களே ஈசுவரவாதிகளென உணர்த்தி நிற்பதுபோல், உம்மவர்க்கு ஏற்பட்ட நாமங்களே உம்மை மாயாவாதிகளென உணர்த்தி நிற்கின்றன. அஃது எங்ஙன மெனின்;--சிவனைத் தெய்வமாய்க் கொண்டவர் சைவர், விஷ்ணுவைத் தெய்வமாய்க் கொண்டவர் வைஷ்ணவர் எனக் கொள்வது போல வேதத்தைத் தெய்வமாய்க் கொண்டவர் வைதிகர், மிருதியைத் தெய்வமாய்க் கொண்டவர் மார்த்தரென்றுதானே கொள்ள வேண்டும்? அப்படிக் கொள்ளுங்கால் நீவீர் மாயாகாரியமாகிய நூல்களையே தெய்வமெனக் கொண்ட மாயாவாதிகளென்பதற்கு யாது தடை? நூல் சம்பந்தமான பெயர் வைத்துக் கொண்ட மாத்திரையானே தாங்கள் நூலைத் தெய்வமெனக் கொண்ட வராயின், பாஞ்சராத்திரிகள் வைகானசர் முதலினோரையும் அங்ஙனமல்லவோ கூறவேண்டி வருமென்பீராயின், அற்றன்று. அவர்கட்கு நூலின் சம்பந்தமான பலபெயரிருப்பினுந் தெய்வ சம்பந்தமான பெயருமிருத்தலானும், உம்மவர்க்கு அங்ஙனந் தெய்வ சம்பந்தமான பெயர் யாதொன்று மின்மை யானும் அத் தோஷமவர்மாட் டணுகாமல், உம்மவர் பக்கலே குடிகொள்ளு மென்க. இனிப். பிரமவாதிகளெனக் கூறு மெமக்குத் தெய்வ மில்லையென்பது யாங்ஙனம் என்று நீர் வாதிக்கலாம். இப்பிரம வாதிப் பெயர் உம்மவரை மாயாவாதிகளெனச் சைவ சாதிரங் களும் சைவர்களும் பிரதாபிக்கும் அவமானத்திற் கஞ்சி நேற்று நவீனமாகச் சூடிக் கொண்ட தல்லவோ? இப்பெயரை நேற்று முளைத்த சிசுப்பிராயர்கள் சிலரேயன்றி உமது முன்னோர் களாகிய பூர்விக மாயாவாதிகள் யாவரா யினும் எந்த நூல்களி லாவது தங்களுக்குரியதென வழங்கி வந்திருப்பதுண்டா? சிவம்-பிரமம் என்பன பரியாயச் சொற்களாகலின். உபநிஷத்துக்களில் பிரமவாதிகளெனப் படிக்கப்பட்டது சைவர்க்கே சொந்தமாம். அப்பெயர்க்கு நீவிராசைப் படுவது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் படுவதையே நிகர்க்கும். இஃதன்றியும் வேதம் நித்தியம் என்பது உமது மதம். ஒன்றுக்கேயன்றி இரண்டுக்கு நித்யத் வங்கூறின் உமது அத்வைதமதம் கெடுமென்றறியாமல் தியங்கு கிறீர். நீவிர் மாயாகாரியமான நூலையே தெய்வ மெனக் கொண்ட மாயாவாதிகளென்பது மறுக்கமுடியாத முடிபாம். அன்றியும் நும்மவர்க்கு இப்பட்டங் கொடுத்தவ ரென்ன சாமான்யர்களா? சர்வலோக நாயகராகிய சோமசுந்தரக் கடவுளே விண்புரை முடிமிசை மண்பொறை சுமந்தும். நீற்றெழின் மேனியில் மாற்றடி பட்டும் ஆட் கொண்டருளிய ஸ்ரீமந் மாணிக்க வாசக சுவாமிகளும். ஸ்ரீ நடராஜப் பெரு மானை அடியார்க் கெளியன்சிற் றம்பலவன் கொற்றங்-குடியார்க்கெழுதிய கைச்சீட்டுப்-படியின்மிசை-பெற்றான் சாம்பனுக்குப் பேதமறத் தீக்கை செய்து-முத்தி கொடுக்க முறை என்னுந் திருமுகப் பாசுரம் விடுத்தருளும் ஒரு நிரூப நேசராக்கிக் கொண்ட உமாபதி சிவாசாரிய வள்ளலும், அவ்வள்ளலாரது பரமாசிரிய மூர்த்த மாகிய சகலாகம பண்டித ரென்னும் அருணந்தி சிவாசாரிய சுவாமிகளுமே அப் பட்டங் கொடுத்தவர்கள். அந்தச் சிவ ஞானச் செல்வர்களாற் கொடுக்கப்பட்ட பட்டத்தை அவ ஞானப் புலவர்களாகிய நும்மவர் எங்ஙன மாற்றக்கூடும்? கூடாது! கூடாது! அதனை மாற்றிக் கொள்ள முயல்வது கடலைக் கையால் நீந்திக் கரைசேர முயல்வதையே நிகர்க்கும். நிற்க. ஸ்ரீ நாயகரவர்களைத் தூஷீத்ததற்குப் பரிகாரம் நீர் வைதிகசைவ சித்தாந்த சண்டமாருதமாகிய ஸ்ரீமத் நாயகரவர்களை நும்மவர்க்குத் தோல்வியடைந்து ஒளித்துக் கொண்டதாயும், அப்பாலிவ்வூர்ச் சபை மூலமாய் வெளி வந்திருப்பதாயும் பேசி மகிழ்ந்தீர். இராக் காலங்களில் சூரிய னொளித்துக் கொள்ளுகிறானென்று கூறுவதை நம்பத்தக்க வரேயன்றி விவேகிகள் யாரேனும் இதனை நம்புவார்களா? எதனால் நம்ப மாட்டாகளென்னில் நும்மனோர்க்கும் ஸ்ரீமத்நாயகரவர்களுக்கும் நடந்து வந்த விவதாம்சங்களைத் துலைநாவன்ன தமது அறிவால் நிறை பார்த்து வந்த வித்வஸிம்ஹமும், நிஷ்பட்சபாத நெறிபிறழாச் செங்கோல் வேந்தரும் ஆகிய ஸ்ரீ சேது பாகர வள்ளலார் எமது நாயகரவர்கள் பாற்றோன்றிய நியாயவாத மென்னுஞ் சண்டமாருத சமூகத்தில் மாயாவாதிகளாகிய நும்மவ ரெல்லா மகப்பட்டுப் பஞ்சாய்ப் பறந்து போனதைப் பார்த்து நாயகர வர்களை நோக்கி உங்கள் எதிரிகள் புறங்காட்டிய பின்னரும் நீங்களேன் எடுத்த ஆயுதத்தைக் கீழே போடாமலிருக் கின்றீர்கள்? இப்போதே போட்டு விடுங்கள் என்று கூறியதும், அக்காரணந் தோன்ற அவர்கட்கு வைதிக சைவசித்தாந்த சண்ட மாருதம் எனப் பட்டங் கொடுத்து, தமது சமதான நாமந் தீட்டிய பொற்கடகவிருது புனைந்ததும் உலகப் பிரசித்தி யாயினதாலென்க. பிரமம் ஒன்றேயுளது என்பதை விசாரித்தல் நீர் பிரமமொன்றே திரிகாலத்துமுள்ளதெனவும் இதர பதார்த்தங்கள் (பசுபாசங்கள்) காலத்திரயத்துங்கிடையா வெனவுஞ் சாதிப்பான் றொடங்கி முன்னுக்குப் பின் விரோ தமா யேதேதோ எழுதிப் பத்திரிகையை நிரப்பியிருக்கின்றீர். அதில் நாயகரவர்கள் கூறிய சித்தாந்தத்தில் ஒன்றையேனும் அநுவ தித்துத் தக்க சமாதானங் கூறாமல் மற்றொன்று விரித்தலிலிறங்கி மானங்காத்துக் கொண்டீர். இனிப் பிரம மொன்றே யென் பதற்கு நீர்கொண்ட பிரமாணம்யாது? சுருதியா? யுக்தியா? அனுபவமா? சுருதியென்னில், அந்தச் சுருதி எதை ஒன்றென யாருக்குபதேசித்தது, பிரமத்துக் கென்னில், பிரமம், சுருதி உபதேசத்தால் தெளிய வேண்டிய அஞ்ஞான பிண்டமா? ஜீவர்களுக்கென்னில் உமது ஏகாத்ம வாதத்தின்றலையி லிடிவிழுந்ததன்றோ? அற்றன்று, கட சந்திரனைப் போல அந்தக் கரணப் பிரதிபிம்பமான சாயாப் பிரமங்களுக்கென்னில், பிரமத்துக்கு அன்யமாய் அந்தக் கரணமென ஒரு முதலுண் டெனவும், அது இருந்தவிடத்தில் பிரமமில்லையெனவும், அதனால் பிரமம் கண்டப் பொரு ளெனவும் அங்கீகரிக் கப்பட்டுப் போமாகையால் உமது போலி அத்துவிதம் தலை தூக்குமாறில்லையறிக. வேத மொருமுதல் பிரமமொரு முதலெனக் கூறுநீர் எப்படியோ ஏகவாதஞ் சாதிப்பது? ஞான வடிவாகிய பிரமத்தை அஞ்ஞான முடையதெனவும், ஜடமாகிய வேதத்தை ஞான முடைய தெனவும் மாறுபடக்கூடும் விபரீத ஞானிகளென உம்மை மேலோர் அருவருக்கின்றனர் கண்டீர். உமது அபசித்தாந் தத்துக்குச் சுருதி ஆதாரமாகுமென்பதை அடி யோடே மறந்து விடும். பிரமம் பரிபூரண வதுவானதால் ஒன்று பூரண மாயிருக்குமிடத்தில் மற்றொன்றிராதென்னும் யுக்தியே பிரமாணமென்னில், நன்று! நன்று!! கடவுளுண்டெனக் கொள்ளும் ஆதிகர் யாவரும் கடவுளைப் பூரணரென்றே அங்கீகரித்திருக்கின்றனர். அவரெல்லாம் ஏனோ மண்ணும் பிரமம்-மயிரும் பிரமம்-கழுதையும் பிரமம்-குதிரையும் பிரமம் - சுமப்பவனும் பிரமம் - துன்பம் செய்பவனும் பிரமம் பல்லக்கும் பிரமம்-செலுத்துபவனும் பிரமம்-துன்பப்படு பவனும் பிரமமெனக் கூறும் உமது மதத்திற் புக்குழலாது புறம்பாயினார்? உம்மவருக்குத் தோன்றிய இந்த அபூர்வயுக்தி அவர்களுக்கெல்லாந் தோன்றாமல் போனதென்ன? உம்மைப் போல அவர்கள் சாயாப்பிரமங்களல்லவோ? உமது கூற்றெல்லாம் பிரதூஷணமாவதே யன்றிப் பிரமஞான மாகாது கிடீர். அற்றேல் ஒன்றிருக்குமிடத்தில் மற்றொன்றிரா தென்னும் யுக்திக்கு வழியே தென்னில், அந்த நியாயம் உருவப் பொருளைப் பாதிக்குமேயன்றி அருவப்பொருளைப் பாதிக்க மாட்டாதென்க. அதனைக் காட்டுந்தன்மை யுடைய கதி ரொளியுங், காணுந்தன்மையுடைய கண்ணொளியும் அத்து விதமாய்க் கலந்து ஒரு பொருளைக் காணுந் திருஷ்டாந்த முகத்தாற் றெளிந்திடுக. இனிக் கண்ணுக் கவ்வொளி இயற்கை யிலின்று செயற்கையால் வந்ததெனின், கதிரொளி முதலிய எவ்வித வொளியும் எய்தப்பெறாத இருட்டறையில் பூனை-எலி முதலிய பல ஜந்துகளுக்குக் கண்தெரிவதற்குக் காரணம் யாது? இதற்குத் தக்கவிடைவந்த பின் அவ்விசாரத் தில் தலையிடுவோம். இனி யுண்மைதான் யாதெனில். எம் அனுபவத்தில் ஒன்றெனப்புலப்படவில்லை. உம்முடைய அநுபவத்திலும் அவ்விதம் புலப்பட்டதாய்த் தோன்றவில்லை. உமக்கு அவ்வித அனுபவம் உண்மை யாயிருக்கும் பக்ஷத்தில் ஸ்ரீலஸ்ரீ நாயகரவர்கள் வேறு, நீர் வேறுஎனக் கொண்டு இவ்வளவு விவாதஞ்செய்யக் காரணமில்லை. எமது அனுபவத்தி லில்லாவிடினும் மேலோரனுபவ மெல்லாம் அப்படியே யிருந்திருக்கின்ற தென்பீராயின், அதனை யங்கீகரிக்கின்றோம். அதனால் பிரமமொன்றே சத்தியமென நிர்ணயிக்கப்பட மாட்டாது. எதனாலெனின், பிரபஞ்சத்தையே தியாணித்துக் கொண்டிருக்கும் பிரபஞ்ச தரிசிகளுக்கு எப்படிப் பிரமந் தோன்ற வில்லையோ, அப்படியே பிரமத்தையே தியானித்துக் கொண்டிருக்கும் பிரமதரிசிகளுக்குப் பிரபஞ்சந் தோன்றாது. பிரபஞ்ச தரிசனத்திற்றோன்றாத பிரம்ம இலபொருளாகுமானால் பிரமதரிசனத்திற்றோன்றாத பிரபஞ்சமும் இல் பொருளாகும். அற்றேல் பிரபஞ்சத்தைக் கானல்நீரெனச் சித்தாந்த சாதிரங்கள் கூறுவ தென்னை யெனின், அஃது காரியமாகிய மாயேயத்தை நோக்கியே யன்றிக் காரண மாகிய மாயையை நோக்கியன்று. சுருதி யுக்தி யனுபவ மென்கின்ற மூன்று பிரமாணங்களும் உம்மை நட்டாற்றில் விட்டுச் சைவரையே சார்ந்து கொண்டமை யால், உமது போலியத்துவிதத்தைப் புறக்கணித்துச் சைவ சித்தாந்த சுத்தாத்வைத மெய்ந் நெறியையே கைக் கொண்டாழுகுவீராக. அங்ஙனமே உமது முன்னோர்களாகிய ஜனகமகாராஜரும், ஆதி சங்கரா சாரியரும் முறையே விநாயகக் கடவுளையும் ஸ்ரீ நீலகண்டசிவாசாரிய சுவாமிகளையும் ஆசிரயித்து, சைவ சித்தாந்த வுண்மையைக் கடைப்பிடித்துப் பிழைத்திருக் கின்றனர். அதனைப் பார்க்கவ புராணத்தானும், ஸ்ரீ நீலகண்ட விஜயத்தானும் உணர்ந்துய்வீராக. இவர் நிற்க. இவ்விஷயத்தை யின்னுமொருநண்பர் வெளிவந்து விசாரித்தனர். அதனையும் ஈண்டு வெளிப்படுத்துவாம். மாயாவாதியாகிய இந்து வென்பவர் அத்வைதிகள் என்று ஆரம்பித்தனர். அத்வைதிகள் என்றால் ஒருவரா? பலரா? இவர் அத்வைதம் என்ற பதத்திற்கு இன்மைப் பொருள் விரித்து இரண்டில்லாதது ஒன்றெனப் பொருள் கொண்டன ரன்றோ? (ஈண்டு இவர் என்றது இவரினத்தவர் யாரையுஞ் சேர்த்தெனக் கொள்க.) ஒன்றாகிய பொருளுக்குப் பன்மை விகுதி இணைக்க இவர் எந்த இலக்கணத்திற் கற்றாரோ அறியேம். மரியாதைப்பன்மையெனக் கூறுவாராயின், இவர் எண்ணின் மேற் கூறுவதால் அது பொருந்தாது. இனி மாயாவாதமயக்கத் தால் கள் விகுதியையுங் கூடச் சேர்த்துக் கொண்டரென்றே கூறல் வேண்டும். அத்வைதியென்று பெயர்பூண்ட மாயா வாதியார் மாயா வாதி மதத்தில் பிரமம் ஒன்றேயென்றும், ஜகஜீவ பரங்கள் மித்தையென்றுஞ் சொல்லப்பட்டிருக்கின்றது என்று நாயகரவர்கள் கூறியதனை இவ்வாறு சொல்பவர்கள் அத்துவிதிகளேயாம் என்று ஒப்பி ஏதோதோ குழறினர். இதனைச் சற்றுப் பரியாலோசிப்பாம். ஜகம் தேகேந்திரி யாதிகள். ஜீவன் அத்தேகேந்திரியாதிகளைத் தாங்கிய சேதனன். பரம் அந்தச் சீவனுக்குத் தேகேந்திரி யாதிகளைக் கொடுத்த சேதனன் என்று எம்மவர் விளக்கியதை இவர் விரோதித்தமையால் தேகேந்திரியாதிகளையும், ஜீவனையும், ஈசனையும் இவர் தூஷித்தவராயினர். அதனால், இவர் செய்யும் ஈசுவர வழிபாடும், வைதிகாநுஷ்டானங்களும், ஏனைய சிவ தருமங்களும் பொய் யாம். இதனால், சகல ஸத்கர்மங்களையுங் கைவிட்டுத் தன்னைத் தவிர வேறு தெய்வமில்லையென்னும் படிற்றொழுக்கம் பூண்டவர் களாகவே இவரது கூட்டத்தவ ரெண்ணப்படு கின்றனர். இனியிவரை அத்துவிதியென்றே பாவித்துப் பார்ப் போம். இவர் மதத்தின்படி இவர் ஒருவராய்த் தனக்கன்னியமான வேறுபொருளின்றி எங்கு நிறைந்த பரிபூரணப் பொருளா யிருத்தல் வேண்டும். அவ்வாறு இவர் விளங்கு வாராயின், இவரைத்தவிர வேறு பொருளிருந்ததற்கே இட மில்லை. அங்ஙனமாயின், இவர் அத்வைதியென்ற பதத்திற்கு கள் விகுதியைச் சேர்த்துக் கொண்டது பிசகெனவே முடியும். இனி இவர் சொல்லும் வண்ணமாயேனும் இவர் அத்வைதி யாயிருக்கின்றாரோ வென்று ஆராய்வாம். இவர் ஸ்ரீலஸ்ரீ நாயகரவர்களைச் செயித்து விட்டதாயும், இன்னும் சமாஜத் தாரையு மொருங்கே ஜயிக்கப் போவதாயும் விருது கூறுகின்றார். இவர் நீக்கமற நிறைந்திருப்பவரென்னில், ஸ்ரீலஸ்ரீ நாயகரவர் களுக்கும், சமாஜத்தாருக்கும் மட்டும் எங்ஙனம் இடம் ஒதுக்கி வைத்தனர்? ஏகமாய் மனமிறந்து நிற்குநிலையில் இவருக்கு இத்தனை அகங்காரங்கள் எவ்வாறு உதித்தன? இவரை இவ்வாறு ஆட்டிவைக்கும் செருக்காதிகள் எங்கிருந்து தித்தன? இராகத் துவேஷாதிகள் அசுத்தமாயையின் காரியங்களாதலால் அதன் வயப்பட்டி ழிந்து தமதுநிலை இன்னதெனத் தோன்றாத வலப்படும் நமது நண்பரை இனி அசுத்தமாயாவாதியென்று சொல்லுவதைத் தவிர வேறு நாமம் புகலுதற்கிடமில்லை. இனி இவர் அனுபவ சித்தமாய் நான் அத்வைதி யல்ல சொன்மாத்திரத்தானே அத்வைதி என்று சொல்லித் தப்பித்துக் கொள்வாராயின், அதுவும் பொருந்தாது, ஏனெ னின், இழிகுலத்திற்பிறந்த ஒருவன் நான் என்னை அரச குமாரனாய்ப் பாவித்துக் கொண்டேன். இனி இராஜ்யத்தைக் குறித்து நான் வழக்கிடப் போகிறேன் என்று சொல்லு வானாயின், அவனை உலகமெவ்வாறு கொள்ளும்? இதனை யூகித்திடுக. இனி வாதத்தின் பொருட்டுத் தார்க்கீகர்கள் போல ஒரு கக்ஷியையெடுத்துப் பேசத் துணிந்தேனென்று சொல்லு வாராயின், அதுவுங்கூடாது. ஏனெனின் இவருக்குச் தெரியாத ஒரு கக்ஷியை இவரெடுத்துப் பேசுவது யானை கண்ட குருடர் கதையாய் முடிதலினென்க. நிற்க. இவர் அத்வைதியென்று கூறுவதனாலேயே தான் ஒன்றும், தான் ஒன்றாயிருக்கு நினைவு ஒன்றும் ஆகத் துவிதம் சித்தித்து அத்துவிதம் கெடும். இதனானே இவருக்கு முக்கியப் பிரமாணமென்று கொள்ளும் கைவல்லியத்தில் அத்துவித நிலை கூறுமிடத்து கூடத பிரமமென்னும், நெஞ்சமு நழுவி யொன்றாய் நின்ற பூரணத்தைக் கண்டான் என்று விளக்கப்பட்டிருக்கின்றது. அவ்வாறிருக்க, இவர் ஜாக்கிரத்தில் இறகைத் தொட்டு எழுதப் புகுங்காலத்தில் 35-கருவிகளின் விவகாரத்தை மேற் கொண்டிருக்கின்றனர். இத்தனைப் போராட்டத்தோடு இவர் தம்மை அத்வைதி யென்று சொல்லிக் கொண்டு வெளிவருவது மலடிமைந்தர்கள் உலகெலா நிறைந்தனரென்னுஞ் சொல்லுக் கிணையாகவே யிருக்கின்றது. இனித் தன் பெயர் தெரியாது தவித்துழல்பவராகிய இவ் விந்துவை இன்னுங்கொஞ்சம் விசாரிப்பாம். அத்வைத மென்னும் மதமொன்றுண்டா? மதம் என்றதற்கு இவர் யாது பொருள் கொண்டனர்? மதம் என்றதற்குக் கொள்கை யெனப் பொருள் கோடில் அக்கொள்கை யென்னும் பொருளிரண் டாகி அத்துவிதங் கெடும். அத்துவிதத்தை நிலைநிறுத்தி யன்றோ பின்னரவர் மதத்தை நிலைக்கப் பண்ண வேண்டும்? அத்துவித மென்பது சைவ வைஷ்ணவர்களைப் போல ஒரு சமயமெனனில், அவ்வாறு யாண்டுங் கண்டிலம், இரண்டற்ற அத்வைதியார் தனக் கன்னிய மிருந்தாலல்லவோ. தம் மதத்தைப் போதிக்க வேண்டும்? தனக்கன்னியமில்லாத விடத்து அம்மதமிருந்து தான் யாது பயன்? அம்மதம்பற்றி இவரும் இவரினத்தவருஞ் சிவனைப் பெய்யென்று நிந்தித் துழலா நிற்பர். இவரது சமய குருவாகிய சங்கராசாரியர் சௌந்தரியலகிரியில் வேத ரஞ்சகன் மால்புரந்தகன் வேக சண்ட குபேரனோ டாதியெண் டிசை பாலர்பொனறவு மாதியந் தமி லாததோர், நாதர் பொன்றில ரேதுன்மங்கல நாணுறுந் திற மாதலால், நீதழைந்தது யோகமம்பிகை நீலி யென்பது பாவமே. என்று துதித்து, சிவபரஞ்சுடரை ஆதியந்த மில்லாதவரென்றும், விஷ்ணுமுதலிய தேவர்கள் பொன்றினும் பொன்றாதவ ரென்றும் விதந்தவாறென்னை? தமது பரமாசாரியர் கூறியது தமக்குடன் பாடன்றெனக் கூறுவாராயின், யாமிவர் சோலிக்கு இனிப்போகோம். பிரமகீதை-கேனோபநிடதார்த்த முரைத்த அத்தியாயம் பரகதி சிவன்பால் வைத்திடப் பட்ட பத்தியா லுறுமது வன்றி யுரகணைத் துயில்வோன் பாலுமென் பாலு முற்றபத் தியி லுளதாகா திரமுறு சிவபத் தன்றனா கத்துத் திருவரு ளொளிமிகத் திகழும் பரிசறி பத்தர்க் கெனது பத்தர்க்கும் பரமுள நிகழ்வுறப் படாதால். என்று கூறுகின்றது. இதனால் சிவபக்தரே முக்தியடைதற் குரியவரென்று பிரமதேவர் கூறியதாக வெளிப்பட்டது. இவ்வுண்மையால் சிவநிந்தைபுரியும் பூர்வபட்சிக்குக் கிடைக்குங் கதி ஈதெனச் சுலபமாய் எவருமுணர்ந்திடலாம். பிரமக்கீதை ழன்சொல்லிய உபநிடதங்களினர்த்தத்தைத் தொகுத்துரைத்த அத்தியாயம் மாலுமவ் விடத்தே திருவெர்டுங் கூட மகிழ்தரு மனத்தொடும் வந்தா னாலுதிக் கிலும்பூ மாரியாய்ப் பொழிய நாமசங் கீர்த்தன நாத மேலெடுத் தெங்கும் விளங்குமப் பொழுதில் விளங்கிய பிரமன்மா லவனும் சாலுமெய்ப் பத்தி யோ டுமர்ச் சித்தார் சங்கர னம்புயத் தாளில். என்றும், ஈசுவரகீதை-சிவசக்தியின் செயலுரைத்த வத்தியாயம் எந்தநாளுமெனை யேநினைந்தவியல் பாலேயென்னருளி னாலயன் சந்தநாடரிய திவ்யமாமெனது தன்மையாலவத ரிக்கிறா னந்தமாதியிலென் னேவலாலவனிவ் வகிலலோகமும மைக்கிறா னிந்தநாரணண ளிக்குமாறுமிவ னென்னில்வேறெனவி லாமையால். என்றும், சூதசங்கிதை முத்திகாண்டம் என்றுதுதிப்பத் திருநெடுமா லெதிரேதோன்றி யென் செய்தாய் சொன்றியளிக்குந் தகுதியர்பாற் சுரரூண்விரும்பு வாருளரோ நன்றுமுத்தி விரும்பினையே னம்மால் வணங்கப்படுங் கடவுள் குன்று குழைத்துப் புரம்பொடித்த குமுகன் சரணமடையென்றான் என்றும், வேதாந்த மதவிசாரம் சுவேதாசுவதா உபநிஷத்து பிரமா நிலையற்றவர். சங்கார கர்த்தாவாகிய ஹரனோ நித்தியராயும், என்று முள்ளவராயுமிருக்கிறார். அவரைத் தவிர வேறே கடவுளில்லை. அவரே உலகத்தையும் ஆன்மாவையும் ஆளுகிறவர். என்றும் கூறுகின்றன. இவற்றிற்கு விரோதமாக நமதுநண்பர் கூறுவது யாது பயன் கருதியோ அறியேம். விபூதியைத் தரித்துக் கொண்டு விபூதியைப் பொய்யென்றும், சிவபூஜை செய்து கொண்டு சிவனைப் பொய்யென்றும் பேசுவது பேராச்சரியமாம். மங்கல நாணணிந்து கொண்டு புருடனு யிரோடிருக்கவும், அவன் இறந்தானெனப் பேசும் பெண்மணியோடுதானே இவர் சேரத்தக்கவரென்க. இவரது தன்மையைச் சூதசங்கிதை பின்வருமாறு கூறுகின்றது. தீயமறை யவர்பொய்யே கற்பித்த நிந்தை மொழி செவியிற கேட்டுத் தூயதவத் திருமுனிவன் சிவசிவமற் றிவரென்ன சொன்னா ரென்று காயழலிற் கண்சிவப்ப நனிவெகுண்டு செய்நன்றி கழியக் கொன்ற பாயவினை யம்மறையோர் முகநோக்கிக் கொடுஞ்சாபம் பகர லுற்றான். பரசிவன்றன் சொரூபத்து மூர்த்தியினும் பத்தியினும் பகர்நா மத்துந் தரமிகுமெய்ஞானத்து மற்றவன்பொன் னாலயநற் றரிச னத்தும் வரமிகு விபூதியக்க மணிதரிக்குஞ் செல்வத்து மற்று முள்ள உரவுமிகு சிலவிடய மெவற்றினுநும் மனஞ்செல்லா தொழிந்து போக. என்னுஞ் சாபவாக்கியங்களைத் தெளிந்தவர்கள் பூர்வ பட்சியையும், அவரினத்தவரையும் வெறுப்பதிற்பயனின் றென்க. இன்னோர் தம்மை ஏனோ அத்வைதிகளென்று சொல்லிக் கொண்டு உலகை வஞ்சிக்கின்றனர்? சிவஞானபோதம் அதுவிது வென்ற ததுவல்லான் கண்டார்க் கதுவிது வென்றதையு மல்லான்--பொதுவதனி லத்துவித மாத லகண்டமுந் தைவமே அத்துவிதி யன்பிற் றொழு. என்னுந் திருவெண்பா அத்துவிதமினைத்தென்று கூறியது. இவர் கைக்கொள்ளும் நூல்களில் அசிபத ஐக்கிய மென்பதொன்று கூறப்படுகின்றது. அந்த விடத்தில் ஏக பாவனையும் விட்டு, ஒன்றுமில்லாதிருக்குநிலையே முடிவெனக் கூறியிருக்கின்றது. இது ஏகவாதஞ் சாதிக்கும் அத்துவித மதமாவது யாங்ஙனம்? இதனை ஒன்று மில்லாத மத மென்றும், சூனியவாதமென்றுங் கூறுவதே மரபாம். இவரது அத்துவிதத்தால் தானே பொருளாகி நிற்றலால், தன்னைத் தவிர வேறே தெய்வமில்லையென்று சொல்லிக் கொண்டு எந்தப் பாதகத்தையுந் தைரியமாய்ச் செய்யலாம். இதைத் தவிர வேறு சாதனை இவரது மதத்தால் சித்தியாது. இவரது மதத்தின் பெருமை இவ்வளவு யோக் யதையிலிருப்ப தறியாது துரீய சிவனிடத்திலிருந்து சிவன டியார் ருண்டாவ தெங்ஙன மென்று தாம் கேட்டதற்கு எமது நாயகரவர்கள் விடையளிக்கவில்லையென்று கூறி மகிழ்கின்றார். அவர்களவ் வாறு விடைபகராதிருப்பின், இவரது கேள்வியை அருவருத்த படியாம். இவரைச் சித்தாகிய பிரமத்தினிடமிருந்து ஜடமாகிய ஜகமெவ் வாறுண்டாயிற் றென்று கடாவுங்கால் வகை தெரியாது விழிக்கநேருவதால் இக்கேள்வி கேட்டு இதற்குண் டாகும் விடையால் தாமும் வழிதேடிக் கொள்ளலாமென்று பார்த்தார் போலும். சித்தாந்திகள் கடவுளுக்கு உருவம், அருவம், உருவருவ மாகிய மூன்றுங் கொள்பவராதலால் கடவுள் எவ் வடிவுங் கொள்ளலாம். இத்துணையுந் தெரியாதார்க்கு விடைபகர்ந்தும் பயனின்றாதலால் நாயக ரவர்கள் ஒதுக்கி யிருக்கலாம். இவ்விடையை யுணர்ந்தாலும் மாறுபட்ட கொள்கையின ராகிய இவருக்கு யாதும் பயனின்றாம். இனி, இவர் ஸ்ரீமது நாயகரவர்களோடு வாதப் போர் புரிந்து வெற்றியடைந்து விட்டதாய் வீரம் பேசி வெளியில் வந்தார். இந்த வீரம் எது போலிருக்கிறதென்றால், ஒருவன் தான் சபா பட்டம் பெற்றதாய் மீசையை முறுக்கி வெளியில் வந்தானாம். உனக்கு யாரிந்தப் பட்டங் கொடுத்தவ ரென்று கேட்டதற்கு ஒருவர் கொடுக்க வேண்டுமா? நானும் என் மனைவியுமாய்ச் சேர்ந்து வைத்துக் கொண்டோம் என்றானாம். அந்த யோக்கியதையுங் கூட இவ்விந்துவுக்குக் கிடைத்ததாய்க் காணப்படவில்லை. இவரைத் தவிர இவர் வெற்றி பெற்ற தாய்க்கூற வேறே ஆளைக்காணோம். இது தானோ வெற்றி? தோற்றவருங் கெலித்தவருந் தாமேயாகிய இவரது மதசொரூபந் தெரியாமல் ஒரு பொருளுள்ள விடத்தில் மற்றொரு பொருளிரா தென்றும், அவ்வாறு கூறுவது நாற்கோணத்தில் முக்கோண மடங்குவது போலென்றும் இறுமாப்படைகின்றார். நாற் கோணத்தின் எதிர்மூலை களிரண்டையு மிணைத்து ஒருகோடிழுக்கில் நான்கு முக்கோணங்களடங்கு மென்பது இவர் கற்றிலர் போலும். இது நிற்க. ஒரு பொருளுள்ள விடத்தில் மற்றொரு பொருளிருத்தல் கூடாதென்று ஒரு இரும்புக் குண்டுக்குள் மற்றொரு இரும்புக் குண்டமை யாதென்றும், ஒரு பெட்டிக்குள் சாமான்களிருத்தல்போ லென்னினும் பூரணத்வம் கெடுமென்றுங் கூறுகின்றனர். கைவல்ய மென்னுஞ்சுவடியில் பொன்னில மாத ராசை பொருந்தினர் பொருந்தாருள்ளந், தன்னிலந் தரத்திற் சீவ சாட்சி மாத்திரமாய் நிற்கும். என்று கூறப்பட்டிருக்கின்றது. இதில், அந்தரத்திற் சீவகாட்சி மாத்திரமாய் நிற்கும் என்றதற்கு ஆகாயமானதுமற்றை நான்கு பூதங்களையுமடக்கித் தான் தனியே நிற்பது போல என்று இவரது முன்னோர் பொருள் கூறினர். ஒன்றிலொன் றடங்காத நியாயங்கற்ற இவர் இந்த வுரையையும், மூலத்தையு மொதுக்கி வாழ்வார்போலும், இதைத் தழுவுவா ராயின், கொள்ளிக் கட்டையை யெடுத்துத் தலை சொரிந்து கொள்வது போலாம். இன்னுமிவரது ஆபாசத்தை தாபிக்க அப்பும் உப்பும் சேருவது அணுக் களினியை பென்றார். கண்ணொளி சூரியனொளி திருட்டாந்த மெடுத்துக் கூறிக் கண்ணுக் கொளியில்லையென்றார். அப்படியு நில்லாது கண்ணுக்கு ஒளியிருந்தாற்றானென்ன என்று ஒருவாறு ஒத்துக் கொண்டவர்போலப் பேசிச் சிறுகாற்றும் பெருங் காற்றும் வேறுவேறாய்ப் பேதப் படுவதுபோல ஒளியும் பேதப்படு மென்கிறார். இவர் காற்றுண்டாகும் விதம் இன்னதென்றே யறியாதவர். கடவுளுக்குப் பூரணத்வம் வேறு பொருள்களிற் கூறக் கூடாதென்று திருட்டாந்த ரூபமாய் நிரூபிக்கவந்து ஒளிகள் வேறென்று கூறிக்கொள்ளும் இவரது நுட்பத்தைச் கற்றவர் நன்கு மதிப்பதெங்ஙனம்? இவர் மனப்பாடஞ்செய்து ஒப்புவிக்கும் பாட மெல்லாம் ஜீவேசுவர ஜகத்துண்டா? இல்லையா? எனக் கேட்கில் அவை முற்றிலுமில்லையென் றுரைத்தல் கூடா தென்கிறார். பின்னரும் அது சத்துமல்ல, சித்துமல்ல, சத சத்துமல்ல, அநிர்வசனீய மென்கிறார். (வார்த்தையினால் வெளிப்படுத்த முடியாத தென்பது அதன் பொருளாம்.) அதனால் பொருளுள்ள தென்பது நிச்சயமாகின்றது. இவரை லக்ஷணவிவரம் விரித்துரைக்கச் சொல்லி யாவர் கட்டாயப் படுத்தினார்? காற்று எவ்வண்ண மிருக்குமென்னுங் கடா நிகழுங்கால் அதற்கிணை யாய்ச் சொல்லத்தகும் பொருளின் மையால் அது இன்ன தன்மைத்தெனக் கூற வார்த்தை இடங் கொடுக்கவில்லை யென்றுதானே சொல்ல வேண்டும்? அதாவது அவர் கூறியபடி அநிர்வசனீயப் பொருளென்று தான் சொல்ல வேண்டும். அவ்வாறே பிரமத்தினது லக்ஷணங்களைப் பகுத்துரைக்க முடியாதாகையால் அதுவும் அநிர்வசனீயமாம். இதனாலே காற்றும் பிரமமும் இல்லை யென்ப தமையுமா? இவ்வுண்மை தேராது இதனைத் தாமாய்க் கூறிக் கொள்ளவில்லை யென்றும், வேதம் அவ்வாறு கூறுகிறதென்றும் சில உபநிஷத் வாக்கியங் களை யெடுத்துக் கூறித் தமது மதத்தை நன்கு புலப்படுத்தி நிற்கின்றார். வேதம் பொது நூலாதலால் பல பக்குவர்களுக்குரிய இதங்களை ஆங்காங்கே வெளிப் படுத்தாநிற்கும். இவர் உபநிஷத்வாக்கியங்க ளிரண்டொன்றை அதனந்த ரங்கச் கருத்துணராமல் எடுத்து தகரிப்பதால் தம்மை வேதமெல்லாங் கரைகண்ட நிபுணரென்று யாவரு மதிப்பதாக எண்ணுகிறார். இவருக்கு வேதம் எத்துணையும் உபகரியா தென்க. நாரதபரிவ்ராஜகோப நிஷத்து ஈசுவரன் ஜீவன் இவர்கள் பிறப்பற்றவர்கள். பிறப்பற்ற வளாயும், ஒருத்தியாயுமிருக்கிற பிரமசத்தி யானவள் போக்தாக்களுடைய போகார்த்தமாய்ப் பிரவிருத்திக்கின்றாள் என்று கூறுகின்றது. இவ்வுபநிடதவாக்கியத்தானே இவர் கொள்கை முற்றும் அடியற்ற பனையாகியதறிக. இது உபநிடதவாக்கிய மன்றெனக் கூறுவாரோ? இது போன்ற உபநிடதவாக்கியங்க ளின்னும் பலவுள. இவர் அறியாமையால் வேதத்திற்குத் தோஷங் கற்பிப்பதைப் பிறர் கைக் கொள்ளார். இனி வேதத்தில் சில வசனங்களில் ஜகத்தை மித்தையெனக் கூறிய தென்னை யெனின், வேதம் பரிபாகநோக்கிப் பலவாறு கூறுமென்பதை முன்னரே வெளியிட்டனம். கண்ணை மூடிக் கொண்ட ஒருவனுக்கு உலகம் தோன்றாது. அதனால் உலகமில்லை யென்று சொல்லலாமா? அது போலச் சிவானுபூதிச் செல்வர் களுக்கு உலகந் தோன்றாது. அந்நிலையில் நிற்போர்க்குக் கூறியிருக்கும் வசனங்களைப் பொருளறியாது மயங்கித் தம்மவென வெடுத்தாண்டு புலம்பித் தவிக்கிறார். இவரது பரிபாகக் குறைவே இவரை மருட்டிக் கெடச் செய்கிறதென்க. இவருக்குப் பாகம் வரித்துத் திருவருள் துணை செய்யக்கடவது. நிற்க. இனி இவர் கூறுவதில், ஸ்ரீலஸ்ரீ நாயகரவர்கள் ஜல சந்திரனதுவமான மெடுத்துக் கூறிக் கண்டித்தது பிசகென்றும், அதைத் தம்மவர்களே பூர்வபக்ஷமா யொப்புக் கொள்ளுகிறார் களென்றுங் கூறுகின்றனர். மெத்தச் சந்தோஷம். இவரே பூர்வபக்ஷமென்று ஒப்புக் கொண்டால் நம்முடைய வேலையை இவரே எடுத்துக் கொண்டவ ராகின்றார். இனி, இவருடைய சித்தாந்தந்தான் யாதென்று பரியாலோசிப்பாம். பிரமவித்யா 16-ஆம் இலக்கப் பத்திரி கையில் அந்த விவர்த்தவாத திருஷ் டாந்தங்களாகிய கயிற்றரவு, கானனீர், இந்திரஜாலம், சொப்பனவுலகு முதலியவை களுக்குள் சொப்பனவுலகே சித்தாந்தம் என்கிறார். பின்னர் 18-ம் இலக்கப் பத்திரிகையில் பரபர விரோதமாய் இது அத்வைதிகளுடைய கொள்கை யன்று, பின்னையாதெனின், கானல்நீர் அலையாதிகள் ஆதல் போலாம். இது தான் அத்வைதிகள் கொள்கை என்கிறார். முன்னர் கானல்நீர் திருஷ்டாந்தம் பூர்வபக்ஷமென்று கூறிப் பின்னரதனையே அத்வைதிகள் கொள்கையென்கிறார். இவரேழைமதிக்கு எதைத்தான் இணையாகச் சொல்லலாம்? இவரைப்போல யாமும் வசையகராதியிற் பயன்றிருப்போ மாகில் அவ்வகை வசனங்களால் நிரப்பலாம். அவ்வாறின் மையால் இவரை இம்மட்டோடே விட்டொழித்து இவரது முடிவு ஸித்தாந்த மென்று கூறும் சொப்பனவுலகு திருஷ்டாந்தத்தைப் பரிசோதிப்பாம். சொப்பனம் என்பது யாது? சொப்பனத்தில் விவகரிக்கும் ஜீவனுக்குத் தைசதனென்றும், அவன் கொள்ளுந் தேகம் சூக்குமதேக மென்றும், அவன் 25 கருவிகளோடு விவகரிக்கிறானென்றுங் கூறுவது என்னை? சொப்பனவுலகு பொய்யென்றாகுங்கால் தைசதனென்பதும், சூக்கும சரீர மென்பதும், கருவிகள் விவகார மென்பதும் பொய்யாய்த் தானே முடியும்? பொய்யாகிய விஷயங்களைச் சொல்லும் சாதிரங்களும் பொய்யென் றல்லவோ முடியும்? அதனா லிவர்மதமும் ஆகாயத் தாமரையாமன்றோ? சொப்பனத்தில் கண்ட சில விஷயங்கள் மெய்யாய் முடிவதற்கு என்ன கதி? கணித பண்டிதராகிய டாக்டரொருவர் ஒரு கணக்குப் போட்டுப் பார்த்துப் பகலெல்லாங் கஷ்டப்பட்டும் அது சரிப்பட வில்லை. அதனால் அயர்ந்து நித்திரைபோய் விட்டார். இரவில் தாம் சொப்பனத்தில் அதனைக் கண்டு பிடித்து விட்டதாகக் கண்டு விழித்துப் பார்த்துச் சொப்பன மெனத் தள்ளி மறுபடியுந் தூங்கினார். காலையில் எழுந்து தமது மேசையின் பேரில் பார்க்கும்பொழுது அதே கணக்குத் தாம் சொப்பனத்திற் கண்டவண்ணமே தமது கையினால் எழுதப் பட்டிருந்ததைக் கண்டு வியப்புற்றார். இது போல எண்ணி றந்த திருஷ்டாந் தங்களுள. இவைகளுக்கென் சொல்லுவார்? ஜாக்கி ரத்திற் கண்ட பொருளே சொப்பனத்தில் விவகரிக்கிற தென்பது ஆன்றோர் கொள்கை. அன்றிச் சொப்பன மென் பது ஆன்றோர் மனோவிவகாரமேயாம். சிதம்பரத்தைப் பாராத ஒருவனுக்குப் பார்த்து வந்தவன் அவ்விடத்திய விசேடங்களைக் கூறிய காலையில் இவனும்போய்ப் பார்க்க வேணுமென்னுமவா வினால் இவன் கேட்காத அனேக விஷயங்களையு மெண்ணி, மனோ ராஜ்யம் செய்கிறான். அவைகள் வாதவத்தில் அவ்விடத்தி லில்லை யாயினும் இவனது மனோ ராஜ்யம் பலவாறா யெண்ணும்படிச் செய்கிறது. அதுபோல நாம் பாராத அனேக விஷயங்களும் மனோராஜ் யத்தால் தோற்றுவது முண்டு. அதனால் சிதம்பரம் உளதென்பது கெட்டுப் போக மாட்டாது. இந்த மனோராஜ் யத்தால் காரியம் சிதைவு படாதாகையால் இதைப்பற்றி நாம் கவனிக்க வேண்டிய ஆவசியகமில்லை. சொப்பனவுலகுக்கு மனது முதற்காரண மென்கிறார். ஜீவனில்லாதவிடத்து மனது எவ்வாறு விவகரிக்கும்? இதை ஏன் மறந்தனரோ அறியேம், மாயாவாத மயக்கத்தினால் தமக்குயிரிருக்கிற தென்பதையும் மறந்தனர் போலும். இதனால் திரிபதார்த்த நிச்சயமே வெளியாகிற தன்றோ? ஜீவன் உடலெங்கும் பரவி நிற்கவும், மனது அதன் சம்பந்தத்தால் வியவகரிக்குங்கால், அது அதன்சக்தியென்று வெளியாகிறது. இதுபோலவே சிவபரஞ் சுடர் சர்வ வியாபக மாயும். ஜீவனும் மாயையும் அதற்குள்ள டங்கி வியவகரிப்பவர் களாயும் பெறப்படு முண்மை சித்தம். இவர் முக்கிய பிரமா ணமாய்க் கொள்ளும் ஞானவாசிட்டத்தில் காதிகதையை இவர் பார்த்திருந்தா லிவ்வாறு பேச மாட்டார். அக்கதையில் சொப்பனம் நிதரிசனமாயிற்றென்றே நிரூபித்திருக்கின்றது. இவர் சொல்லுகிறபடி சொப்பனம் பொய்யென்பது சித்தாந்த மானால் அக்கதையை அடியோடே வாசிட்டத்திலிருந்து எடுத்துவிட வேண்டும். சொப்பனமும் கர்மத்துக்கீடாகவே அனுபவிப்பதொன்றாம். அதனைக் கனவின்பயனும் நனவின் பயனும், வினையின்பயனவை பொய்யென வேண்டா என்றார் சித்தாந்தச் செல்வர். இனி, இவர் வேதத்தைக் கைக்கொண்டவரென்றும், சித்தாந்திகள் வேதத்தைத் தூஷிப்பவர்களென்றுங் கூறி நடிக்கிறார். இவருக்கு வேதத்தின் சம்பந்த மெம்மட்டி லிருக்கிறதென்பதையும் வெளியிடுவோம். வேதம் கரும காண்டம், ஞான காண்டமென இரு பகுப்புகளையுடையது. இதில், கருமகாண்டம் யாகம்-யோகம்-ஈசுவரோ பாசனை களைக் கூறுமியல்பின. பிற்பாதியாகிய ஞானகாண்டம் உபநிஷத்துக்களாம். இவரது அகம்பிரமவாதத்திற்கு யாக யோகங்கள் தூரமாயொதுங்குமியல்பின, யாம் மேலிடத்தில் உபநிஷத்துகள் இவர் கொள்கைக்கு மாறுபாடாகியவென நிரூபித்தோம். இன்னும் இவர் தமது மதச் சார்பென வெண்ணி எடுத்துதகரித்த உபநிஷத்துகளும் இவருக்குப் பயன்பட்டன வல்லவென்று விளக்கினோம்.மற்றை யுபநிஷத்துகளும் இவருக்குச் சம்பந்தமில்லாதனவாகவே யொழியும். இவ்வாறு யாவும் ஒழிதலால் இவரை வேதபாகிய ரென்று கூறுவதில் யாதும் தடையில்லையென்க. இவர் நிற்க. தினகரனென்பவரும் இம்மாயாவாதியாரது அத்வைத விசாரத்தைச் சிறிது பரிசோதித்திருக்கிறார். அதனையும் ஈண்டு வெளிப்படுத்துவாம். ஈண்டெடுத்துக் கொண்ட மாயாவாத நண்பர் இந்து வென்பவரே. இவர் தமது பெரிய பிரபந்தத்தில், ஸ்ரீ நாயகரவர்கள் போலீசுக்குப் போனா ரென்று முதல் ஒரு குறைவு கூறினார். அதனையீண்டுப் பரிகரித்திடுவாம். ஒரு வைணவர் திருவண்ணாமலை விஷ்ணு சேக்ஷத்திரமென்றும், அதனைச் சைவர்கள் களவாடினார் களென்றுங் கூறியதை மறுத்து, அவ்வாறு எழுதினவரை நன்கு விசாரியாத புருடன் என்று பொருள் படத்தக்க வொரு சொல்லால் நாயகரவர் களொதுக்கினர். அந்தச் சொல்லுக்கு அபார்த்தங்கொண்டு தம்மைநாயகர் பெருங் குறைவு செய்து விட்டதாக அவர் பேரில் வழக்குத் தொடுத்தனர் அந்த வைணவர். வழக்கிட்ட எதிரியோடு எதிர் வழக்கிட்டுக் காலம் போக்குவது ஸாதுக்களுக்கு மரபன் றெனவும், அது சைவ பரிபாலனமாகாதெனவுந் துணிந்து எதிரியை யொருசிறு தொகை கொடுத்துச் சமாதானஞ் செய்து கொண்டனர் நாயகர். அத்தோடே யெதிரிக்கு அக்குறைவு நீங்கிவிட்டது. அச்சிறுதொகை பெற்றுச் சென்ற வைணவர் இவ்வுலகை வெறுத்து ஒருமாதங்கூட இங்கிருக்கச் சம்மதியன்றி உடனே மேல்நாட்டுக்குச் சென்றனர். இதனால், நாயகரவர்கள் பாலுண்டாய குறைவுயாது? திருவண்ணாமலை விஷ்ணு க்ஷேத்திரமாகாதென நாட்டிய ஜயதம்பம் சிறிதேனும் ஆட்டங்கொடுக்கின், எதிரிகள் நாயகரவர்களைக் குறை கூறலாம். அத்திருமலை எப்படிப் பாதலத்தின் கீழுமூடுருவி விஷ்ணுமூர்த்தியால் தோண்டி முடியாமல் அதீதமாய் நின்றதோ, அப்படியே (திருவண்ணாமலை விஷ்ணுக்ஷேத்திர மாகாதென) நாயகரவர்கள் நாட்டிய சித்தாந்தமும் வேரூன்றிப் பொலிவெய்தியதுணர்க. நாயகரவர்களோடு வழக்கிட்ட எதிரியாவது, அவரினத்தவராவது அத்திருமலை விஷ்ணு க்ஷேத்திரந்தான் என்று கருதி மூலங்காட்டி யுக்தியநுபவங் களோடு சாதித்ததுண்டாயின் பூர்வபட்சிகள் சந்தோஷிக்கலாம். அஃதொன்றுமின்றி மனதாபமான வார்த்தைகளைப் பெருக்கி எதிரிகள் சந்தோஷிப்பது ஒரு சந்தோஷமா? இதுவரை யாம் கூறியது வைஷ்ணவர்களைப் பற்றியது. இவர்கள் கதையை நமது மாயாவாத நண்பர் தூக்கிக் கொண்டு வெளி வந்தது பேராச்சரியமாம். வைஷ்ணவ சித்தாந்தம் தலை குனியப் பெற்றது போல நமதன்பரது மாயாவாதமும் எமது நாயகர வர்களால் நிலைகுலைந்த பரிபவமேலீட்டால் இந்து நண்பர் சிந்து பாடினார் போலும். இதனைத் தினகரனென்பார் காய்ந்து மாய்ந்திடச் செய்த பகுதி அபரிமிதம். அதனை நிறுத்தி, அவரெழுதிய ஏனைய சாதிர விஷயங்களை மாத்திரம் ஈண்டெழுதிக் காட்டுகிறோம். வேதாந்தம்-அத்துவிதம் என்று இவர் கொண்டாடும் அவல மார்க்கத்தை மாயாவாதம் என்று எல்லாச் சமயிகளுங் கூறுகின்றனர். ஒருவன் தன்னை யுயர்வொப்பில்லாதவ னென்று கூறிக் கொள்வது ஸஹஜம். அது மணம் பெறுமா? பிறர் தன்னைப் புகழ்வதே பெருமை. பிறரெல்லா மிழித்துக்கூறிக் கொண்டிருக்கவும், தான் தன்காலைக் கும்பிட்டுக் கொள்வா னொத்து நமது இந்து நண்பர் தன்னை அளவுக்கதிகமாகக் கூறிக் கொள்வதைப் பார்த்துப் பெருஞ் சிரிப்படைந்த தினகரனார் பின்வருமாறு பிரகாசப் படுத்துகிறார். தினகரனாரது பரிசோதனை மாயாவாதம் தம் மதத்தை மாயாவாதம் என்றால் நண்பருக்கு வெகு எரிச்சலுண்டாகிறதுபோற் காணுகின்றது. அது இயல்பு தான். ஆயினும் என்செய்வது? அதற்குரிய கொள்கை அம் மதத்தில் நிலவுவதால் உலகம் அதற்கு அப்பெயரிடுகின்றது. சைவ ரொருவர் மாத்திர மல்லவே. இந்து மதப் பிரிவின ரெல்ல வருமே நெடுங்காலந் தொட்டு அதை அப்பெயரிட்டழைக் கின்றார்கள். அப் பெயரும் பரம்பராசாரமாய் வழங்கப் பட்டு நிலைத்து விட்டது. அதனை அவர்கள் முன்னோர் யாரும் சங்கித்ததாகப் புலப்படவில்லை. அப்பெயரை மறுப்பதற்கு கற்ற விவேகிகள் மதிக்கத்தக்க நியாயமில்லா மையாலோ, மற்றெதனாலோ அவர்கள் மறுக்காராயினர். நண்பருக்கோ கற்றோர் கவனிப்பரே என்னுங் கவலையில்லை போற் காண்கின்றது. ஆதலினாலே தான் ஏதேதோ நியாயங்களை யெல்லாஞ் சொல்ல நீங்கள் தான் மாயா வாதிகள் என்று (சொன்னவர்களையே) திருப்பிச் சொல்லத் துணிந்தனர். இவ்வாறே வேறு சில விஷயங்களிலும் சொன்னவர்களையே அவர் திருப்பிச் சொல்லும் விந்தை சிரிப்பை விளைக்கின்றது. ஈசுவரன்மித்தை-ஜீவன் மித்தை யென்பனவாதி கருத்துகள் அவர் மதத்தில் வருவது கொண்டு அதை நாதிகத்திற் குவமித் துரைத்தால், நீங்கள் தான் நாதிகர் என்பார். வேதம் பொய் (இல் பொருள்); வேதத்தில் வந்த கருமதருமங்களும் பொய், உலகமும் பொய்; யென்னுங் கருத்துக்கள் வருவது கொண்டு அவர் மதத்தை வேத பாகியம் என்றால், நீங்கள் தான் வேதபாகியர் என்பார். அவர் மதக் கொள்கை ஒரு வழியில் பௌத்தத்திற்கினப் பட்டிருத்தல் நோக்கி அதைப் பிரச்சன்ன பௌத்தம் என்றால் நீங்கள் தான் பிரச்சன்ன பௌத்த ரென்பார். மாயாவாத நூற்களை மோகன சாதிரம் என்றால், சிவாகமங்கள் தான் மோகனசாதிர மென்று அரிய சிவபுண்ணியந் தேடிக் கொள்வார். இப்படித் தம்மதத் திற்கிடும் பெயரை யெல்லாந் திருப்பிச் சொன்னவர்களுக்கே சொல்லுகின்றர். இது யாருக்குத் தான் சிரிப்பை விளைக்காது? நண்பர் தமது பருவத்தைப் பாலப்பருவ மென்று நினைத்து அப்படிக்கெல்லாம் பேசுகின்ற னரோ யாதோ தெரியவில்லை. பிள்ளைகள்தான் அங்ஙனம் திருப்பிச் சொல்லி வாதாடக் காண்கின்றோம். இவர் பேசுவது விந்தையே. சைவரும் ஏனை இந்துமதப் பிரிவினரும் (எல்லா மததரும்) இவர் மதத்தை மாயாவாத முதலிய பெயர்களிடட் டழைக்கின்றார்கள். இம் மாயாவாதிகள் நிரீச்சுவரவாதிகள், பிரசன்ன பௌத்தர்கள் என்று முடிவதால் இவர்கள் ஆதி கராகா ரென்க. இவர் மதப்படி ஜீவனில்லை - ஈசுவரனில்லை - ஜகத்தில்லை. இவை யாவும் காலத்தியத்துமில்லாத இல் பொருள்களாயிருந்தும், கள்ளத்தனமாயிருப்பது போற் காட்டிக் கொண்டு, உள்ளே ஒரேவதுவாகிய பிரமத்தை எப்படியோ இன்னபடி யென்றறியவும், உரைக்கவு முடியாத அநிர்வசனீய வழியில் மயக்கி, மனிதன்-நாய்-நரி-பூனை-புழுவாதி ஜன்ம சம்சாரப் பிரதிபந்தத்தில் விட்டு, ஆட்டிப் புடைத்து இப்போது பழைபடிப் பிரமமாக வேண்டிய பெரிய தொல்லையில் கொண்டுவந்து விட்டு வேடிக்கை பார்க்கும் அதிசயம் விவேகிகளுக்குச் சிரிப்பை விளைக்காமற் போகுமா? இதுதானா ஆதிகம்? பளா! நன்று! நன்று! இம்மதத்தைத் தான் உள் பொருளாக வேதங்களெல்லா மெடுத்து முழக்கு மென்று நண்பர் சொல்லிச் சந்தோஷிக்கிறார். அவரை அச்சந்தோஷத் திலழுத்திவிட்டு, வீண்காலம் போக்காமல் வேறுபகுதிகளைப் பரிசோதிக்கச் செல்வாம். சைவர்கள் நியாயங் காட்டாமல் ஏகான்மவாதிகளை மாயாவாதிகள் என்று பொறாமையினாற் சொன்னால், அது ஒப்பந்தக்கதல்ல என்னும் யுக்தியொன்று காட்டி மாயாவாத மகுடத்தை நண்பர் கழற்றியெறியப் பார்த்தார். அவ்வள வெளிதில் அம்மகுடங் கழலுவதாயிருந்தால், இது வரையிலும் அவர்மதத்தவரில் யாராவது அதைக் கழற்ற முயன்றி ருப்பார்களே. ஏன் முயலவில்லை? அவர்கள் தம் மதவூன முணர்ந்தவர்கள். அன்றியும், கற்றோரவைக் கண்ணே கண்ட யுக்திகளைச் சொல்லி வீண்வாதஞ் செய்வதில் அச்சமுடைய வர்கள். இல்லையாயின், நண்பருக்குத் தெரிந்த இந்தக் குயுக்தி அவர்களுக்குத் தெரியாதிருக்குமா? மேலும் ஏதோநியாய மில்லாமல் உலகில் எதுவுஞ் சொல்லப்பட மாட்டாதே. மாயாவாதபதம் பூர்வப் பெரியோர்களது செய்யுட்களில் வந்திருக்கின்றது. அப்பதப் பிரயோகத்திற்கு நியாயம் அதில் தொகையாயிருக்கும், நாயகரவர்கள் அதை விரித்துக் கூறியிருக் கின்றனர். பிரபஞ்சத்தினுபாதான காரணம் பிரமம் என்பது மாயாவாத நூற்களின் ஓர் துணிபு. அவர்கள் நூற்களே அங்ஙனந் துணிந்தமையால் அதன்மேல் அவர்கள் நூறு நியாயங்கள் சொல்லிக் கொண்ட போதிலும் ஜடவுலகுக் குபா தானமாகிய அவர்களது பிரமம் சித்தாந்த சாத்திரக் கொள்கை யின்படி மாயையினிடத்தில் நிற்பதால், பொய் மாத்திரத்தானே அவர்கள் மதநிலை யின்னதென்று எளிதிற்றோன்றவும், அதனை யுணர்ந்து உலகம் மயக்க கற்றியுய்யவும் வேண்டிப் பூர்வ காலத்துப் பெரியோர்கள் அம்மதத்திற்கு மாயாவாதம் என்று நாமஞ்சாற்றி யுபகரித் ததாக நாயகரவர்கள் பிரகாசப் படுத்தினர். உண்மை யிங்ஙன மாயின், இதில் ஏன் ஒருவருக்கு வாதமாவது, வருத்தமாவது நிகழ வேண்டுமா தெரியவில்லை. பிரமம் ஜடப் பிரபஞ் சத்திற்கு உபாதானமென்று அவர்கள் மதநூல் நாட்டா விடில், சித்தாந்தப் பெரியோர்கள் அம்மதத்திற்கு மாயா வாதம் என்று பேரிடவுடன்படார்கள். இவ்வுண்மை யியல்புகளை யுணருஞ் சக்தியின்றித் தங்களை மாயாவாதிகள் என்றழைப் பதைச் சகியாது அங்ஙன மழைப்பவரையே திருப்பி நீங்கள் தான் மாயாவாதிகள் என்று வீண்வாது பேசினால் அது கற்றோர் மதிப்பி லெங்ஙனங் கனம் பெறும்? சைவர்களெங்ஙனோ மாயாவாதிகளாவார்கள்? நண்பரே அதை அந்தரங்கத்தில் நம்புகின்றனரா? மாயோபாதான மொன்றுண்டென்று கொள்வதனாலேயே சைவர்கள் மாயாவாதிகளாவதற்கு எந்த நியாய சாதிரம் இடந்தரும்? மாயையேயன்றிப் பிரமமும், ஆன்மாக்களும், ஜகத்தும் அவர்கள் உள் பொருள்க யென்கின்றார்களே. நண்பரது (கற்றுத்தேர்ந்த) யுக்தியின்படி அவ்வொவ்வொரு பொருள்கள் வழியிலும் அவர்களுக்குப் பெயர்கள் வரல்வேண்டு மன்றோ? இது என்ன ஆபாசம்? இனி, கற்றோர்முன் சைவர்களுக்கு அப்பெயர்களையெல்லாமிட்டு, வேண்டிய பரிசு பெற்று நண்பர் சந்தோஷிக்கட்டும். இது நிற்க. சைவர்கள் மாயாவாதிகளாதற்கு அவர்கள் பிரமமாக் கொண்ட பரம் பொருள், நண்பர் மதக் கொள்கைபோல் மாயை தானத்திற் சென்று முடிந்தகாலமன்றோ நியாய முண்டாம்? ஜடப்பிரபஞ்சத்திற்கு ஜடமாகிய மாயை யுபாதான காரண மென்றும், அம்மாயைக்கு வேறான சைதன்யமாயுள்ள பரம் பொருளால் காரணரூபமாயோ பாதனத்திருந்து ஜடவுலகங் காரியப்படு மென்றும் சித்தாந்த சாதிரங்களறுதி யிட்டன. பித்தியக்ஷமுதலிய பிரமாணங் களுக்கிசைந்து, விபரீத முரண் பாடுகளுக் கிடந்தராமல் ஏதுவையும் பயனையும் இசைவுறக் காட்டி நிர்விவாதமாய் நிகரற்று ஜொலிக்கும் இவ்வரிய கொள்கையை யுடைய சைவர்களைப் பார்த்து நீங்கள் தான் மாயாவாதிகள் என்று திருப்பிச் சொன்னால், யார்தான் சிரிக்க மாட்டார்கள்? நாயகரவர்கள் இப்பகுதிகளை யெல்லாம் முன்னரே நன்கு பரிஷ்கரித்திருப்பதா லிவ்வளவில் நிறுத்தி னோம். நிற்க. பொறாமை பூர்வகாலத்துச் சைவப் பெரியோர் பொறாமையினால் ஏகான்மவாதத்தை மாயாவாதம் என்றதாக நண்பர் துக்கித் தாரன்றோ? மாயாவாதத்தில் நண்பருக்குள்ள அழுத்தம் வியக்கத்தக்கதே. ஆயினும் அந்தங்கெட வொன்றை விளம்பு வதும், விவகரிப்பதும் அழகு செய்யாவே. மாயாவாதக் கொள்கையில், சைவருள் மகான்களாயிருந்தவர்களுக்குங் கூடப் பொறாமை வரத்தக்க புதுமை யாதுளது? ஐந்து வருஷகாலமாக இவ்வாதம் நிகழ்கிற தென்று நண்பரே மொழிகின்றனர். இந்நீண்டகால வாதத்தில் மாயாவாதிகளாவார் என்ன சாதித்தார்கள்? இதுகாறும் அவர்கள் காட்டிவந்த புதுமை களெல்லாம் சைவசித்தாந்த சண்ட மாருதத்தின் முன்பு பஞ்சாய்ப் பறக்கக் கண்டோம். அவர் களது மதப்புதுமை களெல்லாம் பிரமத்திற்குப் பிராந்தி தோஷம்-அவித்தியாப் பிரதிபந்த தோஷம் (தற்கால விவகாரத்தின்படி) வேதத்தாலும் இன்னபடி யென்றறிந்து சொல்ல முடியாத அநிர்வசனீய ஜகத்தோற்ற தோஷமாகி அநுசித யுத்திகளிற்றானே முடிந்திருக் கின்றன? இதில் யாருக்குப் பொறாமை? சாதாரணருக்கே வராதெனில், சர்வைசுவரியஸம்பந்நர்களாய், சிவஞானச் செல்வர்களா யிருந்த மேலோருக்கு அது வந்ததென்று இந்து என்பவர் கூசாமற் கூறவந்தது அவர் புண்ணியக் குறைவென்றே துக்கிக்கின்றோம். இனி அதனுண்மைப் பெயரை உலகமுணர்ந் துய்ய வேண்டுமென்று விளம்பினாரென்பதே பொருத்த முடையதென்க. நிற்க பூரணம் இந்து என்பவருக்குச் சைவர் கொள்கையிற்றோன்றுஞ் சகலவாக்ஷேபங்கட்கும், மாயாவாதமத முரண்களில் அவருக்குண்டாகுஞ் சகல வுடன்பாடுகளுக்கும் இப்பூரண லக்ஷணமொன்றே காரணமெனக் காணப்படுகின்றது. பதிப் பொருளோடு பசு பாசங்களை யுள்பொருள்களாகக் கொள்ளுங் கொள்கையில் நண்பருக்குண்டாகுங் கஷ்டங் கொஞ்சமல்ல. காலத்திரயத்துமில்லாத இல் பொருள் களாகிய பிரத்யக்ஷ ஜீவேசுவர ஜகங்கள் சொன்னபடி யென்று சொல்ல முடியாத படி சும்மாத் தோற்றிக்கொண்டிருக்கும் என்னுங் கொள்கையில் மாத்திரம் அவருக்குக் கஷ்டங் கொஞ்சமுந் தோன்றாது ஒருவதுவுள்ளவிடத்தில் மற்றோர் வது விருக்கமுடியா தென்றும், இருந்தால் பூரணங் கெடுமென்றும் நியாயம் பேசித் தமது சாமர்த்தியந் தோன்ற நாற்கோணத்தில் முக்கோண மிருக்குமா? என்று கடாவித் தர்க்கித்தனர். நாற்கோணத்திற் முக்கோணம் அடங்கியிருக்குமுண்மையை நாயகரவர்கள் சிறிய வோரதிசய யுக்தியால் நன்கு விளக்கி னார்கள். மூலைக்கு மூலை கோடிழுக்கின் நாற்கோணத்தில் முக்கோண மடங்கி யிருக்கு மழகு வெளிப்படு மென்பதே அந்த யுக்தியாம். இவ்வதிசய யுக்தியைக் கேட்ட பின்னர் இவர் குணப்பட்டாரா? ஏதேதோ கேள்விகளைக் கேட்டுத் தர்க்கம் பண்ணிக் கொண்டு வீண் பிடிவாதங்களை விட்டுக் குணப்படாத வர்களுக்கு எத்தனை யுக்தி நியாயங்கள் சொன்னலும் பயனென்னை? அவர்கேட்ட கேள்வியிலேயே நாற்கோணத்தில் (பூரணங் கெடாமல்) முக்கோணங்களடங்கி யிருக்கு முண்மை யியல்பைக் கண்ட பிறகு சத்தியத்தை விரும்பினவராயிருந்தால் நண்பர் உடனே மனந்திரும்பிக் குணப்பட வேண்டியது அவர் கடனன்றோ? நண்பர் கேட்ட கேள்வியும், அதற்கு வந்த அதிசயவிடையும் நண்பருக்குப் பயன்படா தொழியினும், மெய்யன்பர்களுக்கு மெய்ம்மையை யுணர்த்தி, அதில் அவர் களது மனம் திண்மை யெய்தப் பண்ணினதால் அன்பர் களுக்கே அவை பயன் பட்டன வென்க. தண்கமலத்தூற்றுந் தேனைச் கொள்ளை கொண்டுண்பது தூரத்திலிருந்து வரும் பண்ணளி களே யாமன்றோ? இவர் அதிசூஷ்ம பரமசிவத்தின் பூரண லக்ஷண விசாரத்தில் கேவலம் தூலவது நியாயங் களைக் கலந்து வாதிக்கில் உண்மை தோன்றுமாறெங்ஙனம்? தூலம் பாயாதவிடங்களில் சூஷ்மம் பாயுமியல்பொன்றைச் சிந்திக்கில் விருதாவான வாசங்கைக் கிடஞ்செய்யாதென்க. அதி சூக்கும பரமசிவமானது சர்வ தத்துவங்களிலும் நீக்கமற நிறைந்து பரிபூரணமாயிருக்கவல்ல தன்மையை என்னும் மஹாமந்திரம் நன்கு விளக்குகின்றது. இவ்வுண்மை யியல் பினை நம் சிற்றறிவுக்கொருவாறு விளக்குதற் பொருட்டே கதிரொளி - ஆகாயம் - எள்ளிலெண்ணெய் முதலிய நமதநுபவ வதுக் களை யுவமைகூறிச் சாத்திரங்க ளுபகரித்தன. ஆன்றோரும் அவ்வுவமைகளை யெடுத்தாண்டர். அவற்றின் மேல் விபரீத சங்கைகள் செய்து நண்பர் உண்மையை யுதைத்துத் தள்ளினர். கண்ணொளியில் கதிரொளி கலந்தது போலென்னும் உவமையில், கண்ணுக்கொளி யில்லை யென்று வீண்வாதஞ் செய்தனர். இவருக்குக் கண்ணொளி யின்றெனில் உலகுக்கு மஃதில்லையாமோ? கண்ணொளி யற்றவர்களுக்கு எதிலும் உண்மைநிலைதோன்றுவது கஷ்டங் கஷ்டமே! கண்ணொளி யில்லையென்ற நண்பர் வாதத்தைச் சித்தாந்தச் செல்வர்கள் முன்னரே சிதைத்தொழித்தார்கள். ஆகாயமானது ஏனைப் பூதபௌதிகங்களி னுள்ளும் புறம்பும் நிறைந்து பூரணமாய் நிற்றல் போலென்னு முவமையில், ஆகாயமே ஏனையபூத பௌதிசங்களாய்த் திரிந்து அல்லது, திரிந்ததுபோற் காட்டிக் கொண்டிருக்குமன்றி ஆகாயம் வேறு, ஏனைப்பூத பௌதி கங்கள் வேறு என்பது பிசகென்று கண்ணொளியற்ற நியாயஞ் சொல்லி, பஞ்சுத் திட்டாந்த மொன்று காட்டி இந்துவென்பவ்ர் வாதித்தனர். இவர் காட்டிய பஞ்சத் திட்டாந்தப் பொதிக்கு நாயகரவர்கள் வைத்த நெருப்புப் பொறியைப் பின்னர் வெளியிடுவோம். இனி எள்ளில் எண்ணெயானது உள்ளும் புறம்பும் நிறைந்து நிற்றல்போல வென்னுமுவமையில் எள் என்பது திப்பியும் நெய்யுங் கலந்த வதுவென்றும், எள்ளையாட்டிப் பிழிந்தால் திப்பிவேறு நெய்வேறாகு மென்றும், இவ்விருபொருள்களும் பூரணங் கெடாமற் சேர்ந்திருக்க முடியாதென்றும் வீணாசங்கைகள் செய்து தர்க்கித்தனர். திப்பியும் நெய்யுங் கலந்த நிலையிற்றானே எள்ளென்று சொல்லப்படும். அந் நிலையிற்றா னிங்குவ மானம், எள்ளை யாட்டிப் பிழிந்து விபரீதப்படுத்தச் சொன்னவர் யாவர்? எள்ளிலுள்ள எண்ணெய் அதனுள்ளும் புறம்பும் நிறைந்து பரிபூரணமாய் நிற்கும். எள்ளைப் பூதக் கண்ணாடிக்கு மகப் படாத அதிநுணுக்கவணுக்களாகச் செய்து பார்த்தாலும் அவ்வணுக்களுள்ளும் பரமாணுவாக எண்ணெய் நிறைந்து நிற்குமுண்மை யாவரு மறியக்கிடக்கும். இதனால் எண்ணெயி னது சூக்ஷ்ம வியாபகம் இனைத்தென விளங்கும். எண்ணெயி னது இந்நிறைவையே பரமசிவத்தின் வியாபக லக்ஷணத்திற்கு ஆதிதொட்டுச் சாத்திரங்களிலும், ஆன்றோராட்சிகளிலும் உவமையாக வெடுத்தாண்டு வருவது சித்தம். இதிலின்று நண்பர் வீண்வாதஞ் செய்ய வந்ததென்னோ? எள்ளிலெண்ணெ யென்பதிலும், ஏனை யுவமானங்களிலும் இன்று குற்றங் காண வந்த நண்பருக்கு, ஆகாயமானது எப்படி யேனைய பூத பௌதிகங்களாய்த் திரிந்தது போற் காட்டிக் கொண்டிருக்கு மோ அப்படியே பிரமமும் பிரபஞ்சமாய்த் திரிந்தது போற் காட்டிக் கொண்டிருக்கும் என்னுங் கண்ணொளியற்ற கொள்கை யிலும், சத்துமாகாமல் அசத்து மாகாமல் (இன்னபடி யென்றறிந்து சொல்ல முடியாத) அநிர்வசநீயமாய் மாயாப் பிரபஞ்சங்கள் தோற்றிக் கொண்டு பிரமங்களாகிய நம்மை யேமாற்றிக் கொண்டிருக்கு மென்னும் பயித்தியக்காரக் கொள்கையிலும் ஆசங்கை நிகழாதது அதிசயம்! அதிசயமே!! நிற்க. பிரதிபலந வாதம் நாமரூபமற்ற பிரமம் மாயா வித்தைகளிற் பிரதி பலிக்குமென்பது மாயாவாத நூற்களின் முக்கியக் கருத்து. இதை நாயகரவர்க ளாசங்கித்து உருவமற்ற பிரமத்தினிடத்தில் பிரதிபலந நியாயஞ் செல்லாதென்றும், அதவா செல்லுமென் றொப்பினாலும் இரண்டாம் வதுவில்லா விடத்துப் பிரதி பலநம் உண்டாகாதென்றும், இரண்டாவது வதுவை யொப்புங்கால் அத்வைதபதத்திற்கு பிரமத்தைத் தவிர இரண்டாம் வதுவில்லை என்று கூறும் மாயா வாதி களுடைய அத்வைதம் அனர்த்தமாய்ப் போமென்றுங் காட்டிப் பிரதிபலந வாதத்தைக் கண்டித்தனர். அதன் மேல் உருவமற்ற சிவம் பலவுரு வெடுத்ததென்றது மாத்திரமாகும், உருவமற்ற பிரமம் பிரதிபலித்தது என்றதுமாத்திரங் கூடாதாம் என்று நண்பர் வழக்காடினர். சிவம் பலவுரு வெடுக்கு மென்பதற்காக நண்பர் தமது பிரமத்திற்கும் அவ்வியல்பைச் சொந்தப் படுத்த வந்தனர். அவ்வியல்புக்கு இன்றியமையாத ஏனைக் கொள்கை களையும், இலக்கணங் களையு மங்கீகரித்தாலன்றோ அது பொருந்தும்? முன்னொடு பின் முரணும் அவாந்தரக் கொள்கை களை அவலம்பித்துக் கொண்டு பிரமம் பலவுருத்தாங்கு மியல்புக்கு ஆசைப் பட்டால் அது பொருந்துமோ? நண்பர் விஷயந் தெரிந்து வியவரிக்கிறதாகப் புலப்படவில்லை. இனி நாயகரவர்கள் சொல்லும் பிரமம் அல்லாது சிவத்தினுடைய லக்ஷணமும், நண்பர் கூறும் பிரமத்தினுடைய லக்ஷணமும் ஒன்றாகுமா? நாயகரவர்கள் சொல்லும் பிரமம் அருவம்-உருவம்-அருவுருவம்-அதீதம் என்னும் லக்ஷணமுடையது. ஆன்மாக்களது அநுக்கிரகார்த்தமாக அது அவ்வியல்புகளைத் தாங்கியருளி அநுக்கிரக வியல்புக்கேற்ப அவனவளதுவா யாவிர்ப்பவித்து வெளிவரு மியல்பினதென்று வேதாக மங்கள் துதியா நிற்கும். பரம அங்ஙனம் வெளிவருவதும் அருட் சத்தியைத் திருமேனியாகக் கொண்டாம். இங்ஙனமாக, அதிலும் பன்றியுரு வெடுக்குமா? என்று நண்பர் பரிகாச வழியில் இழிவுறவினாயது வேதபாகியருக்கன்றி வைதிகருக் கடாதே. நிற்க, நாயகரவர்கள் சொல்லும் சிவம் அல்லது பிரமம் பலவுருவா யாவிர்ப்ப வித்தலில், மேலே காட்டிய நியாயங்களால் விரோதம் யாதும் வருமாறில்லை. நண்பர் சொல்லும் பிரமமோ உருவமற்ற வியல்பொன்றே யுடையது. தனக்கன்னியமா யிரண் டாம் பதார்த்தத்தி னிருப்பை ஏற்காதது. ஏற்காதாகவே நிக்ரகா நுக்ரச வியல்பற்றது. அப்படிப்பட்ட பிரமம் மற்றொன்றிற் பிரதிபலித்தது என்றால், யார் குடியை வாழவைக்க அது அங்ஙனம் பிரதிபலித்தது என்று உலகஞ் சங்கை செய்யாது விடுமா? உள்பொருள்களாகாத மாயா வித்தைகளில் அது எங்ஙனம் பிரதிபலிக்கும் என்றும் உலகங் கேட்காது விடுமா? ஆகவே மாயாவாதிகளது பிரிதிபலந வாதம் சுத்த வீண்வாத மென்றே தள்ளத்தக்க தாயிற்றென்க. நிற்க. ஆலாலசுந்தர விக்ரகம் இவ்வரிய திவ்யமங்களவிக்கிரகத்தையும் நண்பர் தமது வீண்விவகாரத்தி லிழுத்து விட்டனர். பிரமத்தின் பிரதி பிம்பம் ஜீவனெனச் சுருதியாதிகள் சொல்லியும் அதை யொத்துக் கொள்ளாமல் அவைதிகராய் நின்று வேத விரோதமா யாக்ஷேபிப்பவர், பரமசிவனுடைய பிரதிபிம்பம் சுந்தர மூர்த்தி சுவாமிகளென அங்கீகரிப்ப தெங்ஙனமோ வறியோம் என்று தாக்கினர். ஸ்ரீபரமசிவத்தின் பிரதிபிம்பம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் என்று நண்பர் சொன்னது பழுது. ஸ்ரீ ஆலாலசுந்தர மங்கள விக்கிரகமே அதுவாம். ஸ்ரீசுந்தர மூர்த்திகள் திருக் கோலம் மானிடவுருத்தாங்கிய அவசரத்தது. இது நிற்க. பிரமம் ஜீவனாகப் பிரதிபலித் துழன்று வருந்தும் என்று சுருதியாதிகள் சொல்வதாகச் சொல்லித் தம்மை வைதிகராக்கிக் கொண்டு, பிரமம் ஜீவனாகப் பிரதிபலித்தாவது பரிணமித்தாவது உழன்று வருந்தாது என்ற நாயக ரவர்களை அவைதிகரெனத் தூற்றிய போது நண்பருக்கு உள்ளுக்குள் சிரிப்பு வந்திராமற் போகாது. இவ்விருவாதிகள் கொள்கைகளிலும் சுருதியினிதயமிசைந்த கொள்கை இன்ன தாமென்று சிறுபிள்ளைகளு முணரக் கிடக்குமாதலால் நண்பருக்கு அது தோன்றாமலிராதே. ஆன்மாக்களடையும் எழுபிறவிகளுள். உயர்பிறவியாகிய தேவர் களிற் சிலரைச் சுருதியாதிகள் பிரமம் என்றழைத்தனவன்றோ? அதை யெக் கருத்தில் நண்பர் கொண்டனர்? வேதம் பல் பக்குவமோர்ந்து பூர்வபக்ஷசித்தாந்தங்களாகச் சொல்லுங் கருத்துகளைக் கலவைக் கீரையாய்க் கலந்து விவகரிப்பது விசாரத் தெளி வாகாமையுந் தவிர உண்மையுந் தோன்றா தொளிக்கும். சுருதியில் நண்பர் சொல்லுவது போன்ற வாக்கியங் களிருப்ப துண்மையெனில், அவை பூர்வபக்ஷக் கருத்தில் வந்தனவாம். எந்தச் சுருதியாவது தனது கௌரவத்தை மறந்து பரப் பிரமத்திற்கு ஜீவனாய் வரும் இழிவையும், ஜநந மரண சம்சா மடைந்து அது வருந்தும் அசங்கதத்தையும், அநிர்வசனீ யமாய்ப் பிரபஞ்சத் தோற்ற மயக்கமுளைத்த வநுசிதத்தையுங் கூறி யிழிவுறுமோ? சுருதிகளில் பூர்வபக்ஷ வாக்கியங்களைக் கொள்ளும் நண்பரினத்தவர் வைதிகரா வரெனின், அவ்வரிய சுருதிகளின் சித்தாந்த வாக்கியங்களைக் கைக்கொண் டொழு கும் எங்கள் நாயகரவர்கள் அவைதிகரா வரென்றது எந்த நியாயத்தாலோ தெரியவில்லையே. இவ்விந்தையான நியாயம் யாருக்குத்தான் சிரிப்பை விளைவிக்க மாட்டாது? இனி யுண்மை யாதெனில், சுருதியாதிகளின் சித்தாந்த வாக்கியங்களையுங் கருத்துகளையுங் கைக் கொள்வோர் நிஜமான வைதிகரும், பூர்வபக்ஷ வாக்கியங் களையுங் கருத்துகளையுங் கைக்கொண் டொழுகுவோர் போலிவை கதிகருமாவ ரென்பதே சித்தமாம். இனி, சிவம்-அல்லது பிரமம் நிஷ்களசகள லக்ஷணங் களுடைய தென்பது வேதசிவாகங்களின் றுணிவு. சகளம் ஆன்மாக்களின் அநுக்கிரகார்த்தம் வெளிப்படும் பரமோ பகார திவ்யமங்களவடிவமாம். அது சகளமாய் வராதாயின் ஆன்மாக் களுக்கு உய்தியில்லையாய் விடும். இச்சகள வடிவம் ஒன்றிற் பிரதிபலித்தல் சாலும். இவ்வடிவத்திற் கன்னியமான கண்ணாடி முதலிய அன்னிய வதுக்களினிருப்புஞ் சாலும். கண்ணாடியில் எல்லாம் வல்ல பரனது சகளத்திருவுருவம் பிரதிபலித்த லுஞ்சாலும். அங்ஙனம் பிரதிபலித்ததும், அப்பிரதி பலநம் உருவமாய் வெளிவந்ததும் ஆகிய எல்லாமும் அநுக்கிர கார்த்தமேயாம். இதில், நியாய விரோதமாவது உண்மை விரோதமாவது நிகழ விடவில்லை. நண்பர் சொல்லும் பிரமமோ, உருவமற்ற ஒரே லக்ஷண முடையது. தனக்கன்னியமா யிரண்டாம் பதார்த்தத்தைக் காலத்திரயத்தும் ஏற்காதது. அப்படிப்பட்ட பிரமம் பிரதி பலிக்குமென்பதும், அங்ஙனம் பிரதிபலித்தலைச் சுருதி யாதிகள் சொல்லுமென்பதும், அக் கொள்கைகளை யவலம் பிப்பவர்களே வைதிகரென்பதும் ஆகியவிவையாவும் பரிகாசமாகாது மற்றென்னாம்? பிரமம் பலஜீவராய்ப் பிரதி பலித்துழன்று வருந்துவது என்ன காரியஞ் சாதித்தற்கோ? அல்லது யார் குடியை வாழவைக்கவோ? ஆலாலசுந்தர மங்கள விக்கிரகத்தை விவகாரத்தி லிழுத்ததனால் நண்பருக் கென்ன சாதகமாயிற்றோ தெரியவில்லை. இவ்வாறு வீண் சங்கதிகள் பலவற்றையெழுதிப் புத்தகங்களை நிரப்பி விட்டு, அவற்றிற்கெல்லாம் பதிலெழுதுவது சுத்த வீண்காலப் போக்காமென் றொதுக்கிய எம்மவர்மேல் (தாம் கேட்ட கேள்விகள் மலையளவென்றும், அவற்றிற்குப் பதில் சொல்லக் கையாலாகவில்லையென்றும்) பழியேற்றி மகிழ்ந்தது மதியா மோ? நண்பருக்குச் சத்தியத்தில் விருப்பும், உய்ந்து போவதில் ஆவலுமுண்டெனில் சத்தான கேள்விகளைக் கேட்டு, முடிவு ஏற்படும் வரையிலும் பொறுத்து மகிழ்வதே அழகாம். நிற்க. பஞ்சபூத முதலிய சில விஷயங்களில் இந்துவென்பவர் காட்டிய மாயாவாத நியாயங்களின் அவலக்ஷணங்களை யெம் போல் வார் மறுப்பதிலும் ஸ்ரீநாயகரவர்கள் மறுத்திடலுசிதமா மெனக்கருதி நாயகரவர்களைக் கேட்டுக் கொண்டோம். அவர்களு மவ்வாறே சில வெழுதிக் கொடுத்தார்கள். அவற்றை யீண்டு முறையே வெளிப்படுத்துவாம். ஸ்ரீநாயகரவர்களுபகரித்தது ஒரு ஜாதியில் மற்றொரு ஜாதி தோன்றாதென்பது இவர் விஷ்ணு புராணத்தில் பிருதிவியானது அதைச் சூழ்ந்த அப்புவிலும், அவ்வப்பு அதைச் சூழ்ந்த தேஜசிலும், அத்தேஜசு அதைச் சூழ்ந்திராநின்ற வாயுவிலும். அவ்வாயு தன்னைச் சூழ்ந்த ஆகாயத்திலும், அவ்வாகாயம் அகங் காரத்திலும், அவ்வகங்காரம் மகத்தத்துவத்திலும் லய மாகின்றன என்று கூறியிருப்பதாக வெழுதித் தனது அப சித்தாந்தந் தாபிக்கப்பட்டதாக மனப்பால் குடித்தார். இவரது மதம் தாபிக்கப்பட வேண்டுமாயின், பிருதிவியானது அதற்குக் காரணமாகிய அப்புவிலும், அவ்வப்பு அதற்குக் காரணமாகிய தேஜசிலும், அத்தேஜசு அதற்குக் காரணமாகிய வாயுவிலும், அவ்வாயு அதற்குக் காரணமாகிய ஆகாயத்திலும் லயமாகின் றனவென்று கூறியிருத்தல் வேண்டும். காரணத்திற் காரியந் தோன்றுதலும், அந்தக்காரியம் முன்காரணத்தி லொடுங்குதலும் நியதம். இவ்வாறு கூறாமல் பிருதிவியைச் சூழ்ந்த அப்பு, அப்புவைச் சூழ்ந்த தேயு, தேயுவைச் சூழ்ந்த வாயு, வாயுவைச் சூழ்ந்த ஆகாயம் என்று கூறினமையால், பிருதிவியை அப்பு வியாபித்தலும், அப்புவைத் தேயு வியாபித்தலும், தேயுவை வாயு வியாபித்தலும், வாயுவை ஆகாயம் வியாபித்தலும் பெறப் பட்டன. இதனால் வியாபக வியாப்பியங்களே யன்றிக் காரண காரியங்கள் பெறப்பட்டவா றில்லையறிக. ஆகாயத் தினி டத்தில் அதற்கு விஜாதியாகிய வாயுவும், வாயுவினிடத்தில் அதற்கு விஜாதியாகிய தேயுவும். தேயு வினிடத்தில் அதற்கு விஜாதியாகிய அப்புவும், அப்புவினிடத்தில் அதற்கு விஜாதி யாகிய பிருதிவியும் விரிந்திட மாட்டாவென்று யாம் கூறிய தாக அநுவதித்து அதனை யிவர் மறுத்தவழகு தெய்வத் துக்கே வெளிச்சம். விஜாதியான இரண்டு பொருள்க ளொன்றி லொன்று பிறக்கலாமென்பதற்கு வித்தின் றன் மையை விட்டு அரும்பு-மலர்-காய்-கனி முதலிய விஜாதிகளும், விந்துவின் றன்மையைவிட்டு மாமிசம்-உதிரம்-எலும்பு முதலியவைகளும், இந்திர ஜாலசத்தியிலிருந்து வேறுதன்மையான பல விஜாதிப் பொருள்களும், சித் வடிவமான புத்தியிலிருந்து அசித் வடிவ மான பல விகாரங்களும், மனத்திலிருந்து சொப்பனஜகமு முண்டாகவில்லையா வென்று ஆசங்கித்து அகங்களித்தார். இவரது தெளிவின் மைக்கு யாம் பலதரம் வியசனப்படுகிறோம். ஏனெனில், ஒரு வித்தினுக்கு அதனங்குரம்-துளிர்-இலை-பூ-காய்-பழம்-பட்டை-மரம் முதலியன விஜாதிகளல்லவாம். மாவித்து அல்லது மாங்கொட்டை, மாவினங்குரம், மாந்துளிர், மாவிலை, மாம்பூ, மாங்காய், மாம்பழம், மாம் பட்டை, மாமரம் என்பவற்றாலறிக. மாவுக்கு விஜாதித்வம் யாண்டு மமைந்திலது. மாங்கொட்டையில் வாழையினங் குரமும், வேப்பந்துளிரும், ஆவிலையும், கொன்றைப்பூவும், பலாக் காயும், முந்திரிப்பழமும், வேலம்பட்டையும், எட்டி மரமுந் தோன்றுமாயின், இவை விஜாதிகளென்னலாம். இப்படிக் கின்றி மாவித்தில் அதன் காரிய பேதங்கடோன்றிய வாறு வாழை, வேம்பு, ஆல், கொன்றை, பலா, முந்திரி, வேல், எட்டி முதலிய வித்துக்களில் அவ்வவ்ற்றின் காரியபேதங் கடோன்றி, அந்தந்த ஜாதிப் பேராலேயே வாழைக்குருத்து, வேப்பங்கொட்டை, ஆலம்பழம், கொன்றைமலர், பலாக் காய், முந்தியிலை, வேலமுள், எட்டிமரம் என்பனவாதியாக வழங்கப் பட்டுவருத லிவரறியாது பிதற்றியது இவரது அகந்தையின் பயனேயாம். தருக்க நூல்களில் நெல்கமுகாய் நீளுமாறு யாங்ஙனம் என்று காட்டியிருக்கு முதாரணத் தையேனு மிவரறிந்து வெளிப்பட்டாரா? இவரது மூடக் கொள்கை நிலைபெற வேண்டின் நெல் வைக்கோலாய் நீளுமாறு யாங்ஙனம்? என்று முன்னோர் மொழிதேடி யிவர் காட்ட வேண்டும். இவருக்கு அகந்தையே குருவாகையால், இவர் பெரியோரைத் துணை கொண்டு வாழப் பின்னிட்டு விஷயங்களி னுண்மையியல் பறியப் பெறாத பேதையாயினா ரென்க. இப்படியே யிவர்காட்டிய ஏனையுவமைகளையும் பாகுபாடு செய்தொதுக்குவர் பெரியோரென்க. இவரிவ்வளவி லமையாது காரணத்தில் அங்ஙனமாய சத்தியிருந்தமையான் விஜாதி வடிவங்களுண்டாயின வென்னின், அங்ஙனமே விஜாதியான வாயுவாதிகள் தோன்றுதற் கியைந்த சத்தியிருந்தமையான் ஆகாயத்தினின் றும் விஜாதி யான வாயுவாதிகளுண்டாயின வென்பதாம். இவ்வாறே ஞானரூபமான பிரமத்தினின்றும் அஞ்ஞான ரூபமான (விஜாதி ரூபம்) உலகுதித்ததென்க. என்று நியாய மணங்கந்திக்க நின்று பிரசங்கித்தார். இவரது மணம் துர்மண மாதல் யீண்டுத் தெரிவிப்பாம். இவர் காரணத்தில் விஜாதி வடிவங்களுண் டாகத்தக்கசத்தி யுண்டாயினவெனின் என்று பிறர் மதந்தழுவி மறுக்கவந்தது யாங்ஙனம்? பிறரவ்வாறு கூறா திருக்கவும் அவர் கூறினார்போன்று இவர் வருவித்துக் கொண்டது இவரது அறியாமையேயாம். காரணத்திற் காரியமுண்டாம். அக்காரண மெத்தன்மைத்தோ காரிய முமத்தன்மைத்தாம். காரணத்திலுண் டாகுங் காரியம் விஜாதி யாகாமையை மாமரத்திட்டாந்தத் ல் மேல் யாம் விளக்கியதே போதும். காகம் அணிலைப் பெறுமா? அணில் யானையை யீனுமா? யானை கோட்டானைத் தருமா? என்பனவாதி வினாக்களே ஸாமஞ்சஸமாம். இவ்வாறு கடாவுதலொழிந்து காகத்தின் விந்துவில் காகத்தின் முட்டை யுண்டாகுமா? அணிலின் விந்துவில் அணிலின் மயிர் முளைக் குமா? யானையின் விந்துவில் யானையின் மத்தகந் தோன்றுமா? கோட்டானது விந்துவில் கோட்டானது சிறகுதிக் குமா? என்று கடாவுவாரை முட்டாள்களுக் கெல்லாஞ் சட்டாம்பிள்ளை யென்றே தத்துவ நூல் வல்லார் பேசித் தள்ளுவரென்க. இவரதுபமானம் கற்றவர்கழகத் திழிவெய்தியழிந்தமையால் அவ்வுபமானத்தாற் சாதிக்க வெழுந்த ஆகாசாதி பூதங்களினுற் பத்தியுபமேயம் நிலைபேறாயினதின்றென்க. இது போலவே ஞானரூபமான பிரமத்தில் அஞ்ஞானரூபமான விஜாதியுலகந் தோன்றிய தென்னும் பிரஹ்மதூஷணவாதமு மொழிந்து நிர்மூலமாய தென்க. இவரிங்கே யொரு ஜாதியில் மற்றொரு ஜாதி பிறக்கு மென்று பிரசங்கித்துப் பிரமத்தை யலையவிட்டு மாயாவாத மஹாநுபாவராய்க் கொடிபோட்டாரன்றோ? இவரது பூர்வ நூல்கள் சுஜாதி விஜாதி சுகதபேதரகிதமானது பிரமம் என்று கூறுகின்றன. பிரமத்துக்கு வேறான சுஜாதிப் பிரமமும், விஜாதிச்சீவனு மில்லையென்றதோடு அப்பிரமத்திலிருந்து அதுபோன்ற பிரமமேனும், அதற்கு வேறான ஜீவஜகங்க ளேனும் (சுகதபேதமாக) உண்டாகவில்லையென்று கூறு மிவர்களது முன்னோர் மதத்தை இவர் மூடமதமாக்கினார் கண்டீர். என்னை? முன்னோர்மதத்தைத் தழுவியேயன்றோ யாம் விவர்த்தவாதா வலம்பனஞ் செய்து இல்லையென்று கூறுவதும் உண்மை தான், உண்மையென்று கூறுவதும் உண்மை தான் என்று கூறிக் கயிற்றரவைச் சுட்டிச் சாதித் தோமெனின், இவர் சாதித்தது பரமார்த்த குருவாகிய இவரது சீடர்களுக்கே பயன்படத்தக்கதாம். எங்ஙனமெனின், இவர் முதலி லெடுத்துக் கொண்ட பஞ்சு நூலுவமைகளில் பஞ்சும், நூலும் காரண காரியப் பொருள்கள். இவ்விரண்டும் உள் பொருள்களாம். பின்னரெடுத்துக கொண்ட நூல்வ திரங்களும் உள்பொருள் களாம். அநந்தரமெடுத்துக் கொண்ட ஆகாயம் வாயு முதலியவைகளு முள்பொருள்களாம். இவற்றொடு பொருத்திய பிரமமும் உலகமும் உள்பொருள் களாம். காரணகாரிய சம்பந்தத்தினாலாவது, வியாபக வியாப்பிய சம்பந்தத்தினா லாவது உள்பொருள்களாந் தன்மையே பெறப்பட்டதனை யிவரிப்போது தொடுத்த ரஜ்ஜுஸர்ப்பதிட்டாந்தம் விரோதித்து இனப்படா தொதுங்கியவாறறிக. பிரமமும் உலகமும் கயிறும் அரவும் போல்வனவென்று இவரது மதாபாசகரேயன்றி யேனைய எந்த வைதிகசமயியாவது கூறியதுண்டா? கயிற்றிற் பாம்பு போல்வது பிரமத்திலுலகம் என்றிவர் கூறியது சொல்லா யிருப்பதன்றிப் பொருள் கொண்டு நின்றதில்லை. இதனை நம்பிப் கெடார் விவேகிகளென்க. இதனை யேன் நம்பக் கூடாதெனின், இவரே விவர்த்தவாத திருஷ்டாந்தங்களாகிய கயிற்றரவு, கானனீர், இந்தரஜாலம், சொப்பனவுலகு முதலியவை களுக்குள் சொப்பனவுலகே சித்தாந்தம் என்று கூறினமை யாலென்க. சொப்பனவுலகே சித்தாந்தம் என்றது கொண்டு, கயிற்றரவு முதலியன பூர்வபட்சம் என்பது சொல்லாமே யமைந்தது இவர் கயிற்றரவைப் பூர்வபட்சமென்று ஒரு அவசரத்திற் சொன்னாலும், பல அவசரங்களிற் கயிற்றர விலேயே தமது பிரமத்தைக் கொண்டு போய் மாட்டிக் கலங்கச் செய்கின்றவராகையால், இந்தக் கயிற்றரவுத் திட்டாந்தத்தையும் சொப்பனவுலகுத் திட்டாந்தத்தையுஞ் சோர்வுபடச்செய்து பிரமத்துக்கு அஞ்ஞான முண்டாகாமையை யெவருமறிந்து சந்தோஷிக்கச் செய்வாமென்க. கயிற்றரவுத் திட்டாந்த அழிவு கயிறு அரவுபோற் றோன்றுகிறது. யாருக்கு தோன்றுகிறது? ஒரு புடனுக்குத் தோன்றுகிறது. ஏன்றோன்றுகிறது? மாலைக்கால தோஷத்தால், இனிப் பிரமம் உலகுபோற்றோன்றுகிறது. யாருக்குத் தோன்றுகிறது? வழ வழ குழ குழ. இதற்குப் பொருளென்னை? சொல்லத் தெரியாத பொருடான், சொல்லத் தெரியாமலா மாயாவாதி மல்லாடுவது? பிரமத்தைத் தவிர இரண்டாவது பொருளில்லாத போது எது அப்பிரமக்கயிற்றில் உலக அரவைக் கண்டது? கண்டபொரு ளேற்படாத போது அதற்கு உலகு ஏன் றோன்றிய தென்னுங் கடா நிகழ்வதெப்படி? ஏன் றோன்றியதென்னுங் கடாநிகழ்வதற்கே ஏதுவில்லாதபோது பலானதோஷத்தாலென்று எப்படிக் கூறுவது? இவ்வாறு கயிற்றரவுத் திட்டாந்தங் காலைக்கிளப்பிக் கொண்டதற் கிவரென்செய்வார்? கயிறு தன்னைப் பாம் பாகப் பிரமித்ததுண்டெனின், பிரமந் தன்னை யுலகாகப் பிரமித்த சித்தாந்தந் தலைதூக்கும். கயிற்றுக்கு ஒருக்காலும் பிரமை யுண்டானதும், அது பாம்பானதுங் கிடையாதா கையால், பிரமத்துக்கு அஞ்ஞான முண்டானதும் அது உலகமானதுங் கிடையாதென்றறிக. இனியவ்வுபமானத்தை யெமது சைவ சித்தாந்தத்தோடொட்டி யுபகாரப்படுத்துவாம். கயிறு அரவுபோற்றோன்றியது. யாருக்கு அரவு தோன்றியது? ஒரு புருடனுக்கு. ஏன் றோன்றியது? மாலைக்கால தோஷத்தால். இனிப் பிரமம் உலகு போற் றோன்றியது. யாருக்கு உலகு தோன்றியது? ஜீவனுக்கு. ஏன்றோன்றியது? அஞ்ஞானத்தால். மாலைக்காலம் விலகியபோது பாம்பு தோன்றாமல் கயிறே தோன்றுவது போல அஞ்ஞானம் விலகியபோது உலகு தோன்றாமல் பிரமமே தோன்றுமென்க. மாலைக் காலமும் அஞ்ஞானமும் பிரதிபந்தக மாகையால் இந்தப் பிரதிபந்தகத்தைப் பிரமத்தினிட மாரோபித்தமதம் கேவலம் ஈனமதமாயினது சத்தியமென்றறிக. ஈண்டியாம் கயிற்றரவுத் திட்டாந்தத்தை யாண்டது சித்தாந்தமாக வன்று. அது எமது மதத்திற்குத் தீங்கு பயவாமையைத் தெரிவித்தபடியாம். இவரது விவர்த்தவாதம் விருதாவாதமாகி யழிந்ததற் கினி யிவரென் செய்வார்? கயிற்றரவு போன்ற விவர்த்தவாதமே யெமக்குச் சொந்தமென்று சாதித்த விவர் வேறோரிடத்தில் அத்வைதி களுடைய சித்தாந்தம் கயிற்றரவு போன்ற பரிணாமமேயாம் என்று பேசிப் பெருமையிழந்தா ரிதென்கோலோ? பால் தயிரா யிடுதலே பரிணாமத்தி னியல்பு. இது தனது மதத்துக்கு முதுகு மூட்டையாயிடுதலை யறிந்து இதனை யொழிக்க இடைவெளி பார்த்து இவரது மதத்தினார் பால் தயிராகும் பரிணாமத்தைப் பூர்வபக்ஷமாயாளுகின்றனரென்று சாக்குப்பேசிச் சதுரிழந்தனர். எந்தப் பூர்வநூலிலிவர் பிதற்றியது போலப் பால்தயிர்ப் பரிணாமம் பூர்வபட்ச மென்றும், கயிற்றரவுப் பரிணாமமம் சித்தாந்தமென்றுஞ் சொல்லப்பட்டிருக்கின்றன? இவருக்குத் தலை நோயாய் வந்து சம்பவிக்கு மிவரது சமய திட்டாந்தங்களை யிவரே யிப்போது பூர்வபட்சம் பூர்வபட்சம் என்று சொல்லி மானங்காத்துக் கொள்ளப் பார்க்கிறார். எல்லாவற்றையும் பூர்வபக்ஷங்களென வொழித்து இவர் சித்தாந்தமாகத் தேடிய கயிற்றரவும் இவரைத் தெருவிலே தியங்க விடுத்தமையால் இனி யிதன் முகத்தில் விழித்து அவமானப்படாது சீவிப்பது இவருக்குப் பெருமை யாம். இனி யிவரது மதத்தினர் கூறுந் திட்டாந்தங்கள் ஒரு பொய்யைச் சாதிக்கத்தேடிய பல பொய்களாம். எல்லாத் திட்டாந்தங்களும் பொய்யா யொழி யவே, அவற்றாற் சாதிக்கப்படு மிவரது மாயாவாத மதம் சுத்த பொய்யாயினது சத்தியமென்றறிக. இவ்வாறு நாயகரவர்களா லெழுதப்பட்ட அரிய விஷயங்களைக் கண்ணுற்றபின் இந்து என்பவர் போன்ற வர்கள், சத்தியத்தை விரும்பினவரும் தமது ஆத்மோஜ் ஜீவனத்தைக் கருதினவருமாயிருப்ப துண்மையெனின், வீண் பிடிவாதங்களை விட்டு உடனே குணப்படவேண்டியது. பஞ்சுத் திட்டாந்த அழிவு இனி இந்து என்பவ ரெடுத்தாண்ட பஞ்சுத் திட்டாந் தத்தின் மேல் நாயகரவர்களது விசாரனை வருமாறு: இவர் ஆகாயத்திலிருந்து வாயுவும், வாயுவிலிருந்து தேயுவும், தேயுவிலிருந்து அப்புவும், அப்புவிலிருந்து பிருதிவியுந் தோன்றினவென்று கூறி, இதற்குப் பஞ்சிலிருந்து நூலும், நூலிலிருந்து வதிரமு முண்டாகிய வுபமானத்தை யெடுத்து நிறுத்தினார். பஞ்சில் நூல்வதிரங்க ளெங்ஙனந் தோன்றுமோ, அங்ஙனமே ஆகாயத்தில் வாயுவாதிகள் தோற்ற மெனவும், அப்படியே பிரமத்தின் கண் இச்சாக்கிரவுலகு தோற்றமாம் எனவும் தமது ஆபாசஞான மண்மாரி பொழிந்து செருக்கித்தருக்கினார். ஆகாயம்-வாயு-தேயு-அப்பு-பிருதிவி யென்பன பஞ்சபூதங்களெனப் பெயர் பெறும். இவை யொன்றி லொன்று காரியரூபமாகத் தோன்றியதுண்டாயின், பூதம் ஒன்றேயென்றும், அது ஆகாயமென்றும், ஏனைய வாயு முதலியன பூத காரியங்க ளென்றும் வேதாதிகள் கூறும், அங்ஙன மின்மையானும், பஞ்சபூதங்களென்று அவை கூறலானும் இந்தப் பஞ்ச பூதங்களும் ஒன்றிலொன்று காரண காரியங் களாகத் தோன்றாமல் பஞ்சதன்மாத்திரைகளி னின்றும் பிறந்தன வென்பது தத்துவசாதிரிகளது துணிவாகலானும் இவரது ஏழைமதியை யினிச் சுட்டெரிக்க வேண்டியதே. ஆகாயத்தில் வாயுவும், வாயுவிற்றேயுவும், தேயுவில் அப்புவும், அப்புவிற் பிருதிவியுந் தோன்றின வென்பது பொய்யோவெனின், இவர் கூறிய காரண காரியத்தைத் தடுத்தோமேயன்றித் தோற்றத்தை யாம் தடுத்தோமில்லை. இனி யத்தோற்றம் வியாபக வியாப்பியங்களாய்க் கொள்ளத் தக்கது. எங்ஙன மெனின், ஒரு பெரிய பாத்திரத்தில் அதிற் சிறிய பாத்திரமும், அதில் மற்றொரு சிறிய பாத்திரமும், அதில் வேறொரு சிறிய பாத்திரமும், அதில் பிறிதொரு சிறிய பாத்திரமும் அடங்கியிருப்பதும் அவையொன்றிலிருந் தொன்று வெளி வருவதுமாகிய நிதரிசனமே யீண்டமைதி யாய தென்க. இனி யிவர் தேடிய வுபமானம் இவரது எண்ணத்தைப் பூர்த்தி செய்யுமோவென்று யோசிப்போம். பஞ்சு-நூல்-வதிரம் என்றிவ ரெடுத்துக் கொண்டதில் பஞ்சிலுள்ள தன்மையே நூலிலும் வதிரத்திலுங் கண்டாம். எனவே, நூலையும் பஞ்சென்று கண்டாம். வதிரத்தையும் பஞ்சென்று கண்டாம். நூலைப் பிச்சிப் பார்த்த போதும் வதிரத்தைப் பிச்சிப் பார்த்த போதும் இவை பஞ்சாலாக்கப் பட்டவை யென்று சிறு குழந்தையு மறிந்து சொல்லும். இவற்றோ டெங்ஙனோ ஆகாயமாதிகள் பொருந்தும், ஆகாயத்தின் றன்மை வாயு முதலியவைகளிலும், அல்லது ஆகாயத்தின் றன்மை வாயுவிலும், வாயுவின் றன்மை தேயு விலும், தேயுவின் றன்மை அப்புவிலும், அப்பிவின் றண்மை பிருதிவியிலுங் காணுதல் கூடுமோ? இவை யொன்றோடொன்று விஜாதி களும், ஒன்றிலொன்று பகைமை கொண்டவைகளுமா மென்பது எவருமெளிதி னுணரக் கூடுமாகவும், இவ்விந்துவுக்கு மாத்திரம் ஏனோ இப்படி வீண்விபரீதம் ஜனித்தது, இவ ரெழுதிவிட்டது கொண்டே உலகம் சம்மதித்து விடுமா? இவர் கிறுக்கி வைத்ததற்கு நூலாட்சியுண்டா? எந்தப் பூர்வ மாயாவாதி யாவது, இவரது (மததாபகர்) சங்கராசாரியராவது ஆகாய மாதிகளைப் பஞ்சு நூல் வதிர முதலியவைகளோடு உவமித்து முன்னுக்கு வந்ததுண்டா? இவரது பிரசங்கத்துக்கு ஓரு ஆதரவு மில்லாமையால் விவேகிகளிவரைப் பிச்சரென் றொதுக்கப் பின்னிடாரென்க. ஆகாயம், காற்று முதலியவை களுக்கு வியாபகவியாப்ய தர்மங்களும், பஞ்சு நூல் முதலியவை களுக்குக் காரண காரிய தர்மங்களுங் கற்றுணர்ந்த பேரியோர் கூறுவா ராகவும், இவர வற்றின் பேதந் தெரியாமலோ, அல்லது இருவித தர்மங்களையும் ஒன்றோக்கவோ குழறுபடை ஞானம் பேசினது அறிவின் குறைவேயாம். வியாபகம்-வியாப்தி-வியாப்ய மென் பவைகளை யிவரங்கீகரித்தால், இவற்றினிலக்கண மறிந்தா ரவைக்கண்ணே யிவரது ஏகான்மவாதத்துக்கு நேத்திரபங்க முண்டாகின்றது. காரண காரியங்களை யங்கீகரித்தால் ஒருவாறு இவரது மதம் ஜீவிக்கும். அதுபற்றியே இவரெல்லா வற்றையும் ஒன்றுபடுத்தப் பார்க்கிறார். அது முடியாத காரியம். உயிரும் மெய்யும் ஒன்றா? சுட்டும் வினாவும் ஒன்றா? பெயரும் வினையும் ஒன்றா? இவைகளை யெல்லாம் ஒன்றென்றுகற்பிக்கு மிலக்கண மொன்று இனி இவரால் வெளிப்படுங்கால், வியாபக வியாப்யங்களும், காரண காரியங்களு மொன்றென்றெழுதி யிவரது மாயா வாதத்தைத் தாபித்து இவர் மகிழ்ந்திடலாம். நிற்க. இவர் பஞ்சில் நூல்-வதிரங்கள் தோற்றமென்றார். இது சர்வாபத்தமாம். பஞ்சினது விகாரம் நூல் வதிரங்கள். இவ்வாறு கூறுவதொழிந்து, ரஜ்ஜுவிலே சர்ப்பத்தோற்றம் போலும், கானலிலே ஜலத்தோற்றம் போலு மிவைகளைக் கூறியது மூடர்களே மெச்சத்தக்க தாயிற்று. எந்தப்பூர்வ மாயாவாதிகளு மிப்படி யாபாசப்பெட்டகங்களா யிருந்த தில்லை. தோற்றமென்றால் உண்மையிலில்லாதது என்ப திவர் கருத்து. ஆகாயத்தில் காற்று முதலியவைகளை யில்லாத பொருள்களென்று சாதிக்க விவராசைப்பட்டது அரசனிடத் தில் மந்திரி முதலியவர்களையும், ஏனை அவனது தவலத்துகளையும், அவனது பூமி காணிகளையும் இல்லாத பொருள்களென்று சாதிப்பதோடுதானே யினப்பட்டழிந்த வாறறிக. அன்றியுமிவரது உபமானமாகிய பஞ்சு-நூல்-வதிரங்களில், வதிரத்தைப் பார்த்தவர்கள் இதில் நூலிருக்கிறதென்றும், இந்த நூல் பஞ்சென்றும் எளிதிற் கூறுவார்கள். இவரது உபமேயமாகிய ஆகாயம்-காற்று-தீ-நீர்-நிலங்களில் நிலத்தைப் பார்த்தவர்கள் இதில் நீர் இருக்கிற தெனவாவது, நீரைப் பார்த்தவர்கள் இதில் நெருப்பிருக் கிறதென வாவது, நெருப்பைப் பார்த்தவர்கள் இதில் காற்றிருக் கிறதெனவாவது, காற்றைப் பரிசித்தவர்கள் இதிலா காயமிருக்கிறதெனவாவது கூறமுடியுமா? இனிப் பஞ்சதன் மாத்திரைகளில் பஞ்சபூதந் தோன்றின வென்பதும், ஆகாயத்திற் காற்றும், காற்றில் நெருப்பும், நெருப்பில் நீரும், நீரில் மண்ணும் சிவனாணையாலடங்கியிருந்து வெளிப்பட்டு விவகாரத்துக்கு வருமென்பதுமே யமைவுடைத்து. இவ்வாறு தெளிந்த விவேகிகள் பிரமத்தின்கண் இக்சாக் கிரவுலகு தோற்றமாம் என்று இந்து வென்பவரிசைத்ததை யீன வார்த்தையென் றொதுக்கப் பின்னிடாரென்க. நிற்க. நமது பூர்வபட்சியார் சத்துமாகாமல் அசத்துமாகாமல் சதசத்விலக்ஷணமாக ஒன்றிருக்கிறதென்றும், அது அநிர் வசனீயமெனப்படும் மாயை யென்றும் அடிக்கடி சொல்லி (ஓர் நிலைதோன்றாமல்) தாம் குழப்பத்தில் நின்றது மல்லாமல் தஞ்சொல்லைக் கேட்பவர்களையுங் குழப்பத்தில் நிறுத்தினார். உளது இலது என்பதற்கு வேறான அநிர்வசனீயம் என்பதனால் ஏதாவது ஓர் நிச்சயந் தோன்றுகிறதா? இப்படியும் ஒரு கொள்கையிருக்குமா? நண்பரை விட நண்பருடைய பூர்வீக மாயாவாதிகள் மிகு நேர்மையாளர். அவர்கள் சொல்வதில் குழப்பந் தோன்று கிறதில்லை. என்னை? நண்பரது பூர்வீகராகிய கைவல்லியக் காரர் மாயையை நிருபிக்க வந்தவிடத்தில் அதனையின்ன தென் றுரைத்திடப்படாத அவாச்சிய வடிவம் அதாவது அநிர்வசனீயம் என்று சொல்லி அநிர் வசனியம் என்பதற்கு அவரே அடுத்தவரியில் பொருள் விரித்திருக்கின்றார். கதையிலாத பொய் என்பதே அப் பொருளாம். இவ்வாறு பொருள்விரித்து இப்பொருளை வற்புறுத்து வான் மறுபடியும் கானனீர் கிளிஞ்சில் வெள்ளி யாதிகளைப் போல் மாயையாதிகள் காலத்திரயத்து மில்லாத பொய்யே யாமென்று தம்மேல் ஆணையிட்டுக் கூறியிருக் கின்றார். இக்கைவல்லியக்காரர் சொல்லும் அநிர்வசனீயத்தில் குழப்பத்திற் கிடமேயில்லை. ஆனால், இந்துவென்பவரோ, (கைவல்லியக்காரரைப் போல) மாயையாதிகளை இல்லை யென்று சொல்லமாட்டோம் என்கின்றார். பின்னை யென் னென்பீர்களென்று கேட்கில், இன்னபடியென்று சொல்ல முடியாத அநிர்வசனீயம் என்போமென்றார். இவருடைய அநிர்வசனீயபதத்தில் தேறுங் குழப்ப நிச்சயத்தை யாருக்குங் கொடாமல் இவரே வைத்தனுபவிக்கட்டும். இனி, அநிர் வசனீயத்திற்குச் சாதாரணப் பொருள் யாதென நோக்கு மிடத்து, வாக்குக்கு எட்டாதது என்று பொருள் படுகின்றது. வாக்குக் கேயன்றி மனதுக்கும் எட்டாத அவாங்மானச வடிவமாய் விளங்கும் ஸாக்ஷாத் பிரமத்தையேயன்றோ இன்னபடியென்று ஒருவாறு சொல்லி உள்பொருள் என்று நிச்சயித்துச் சுருதிகள் குழப்பமற அறுதியிட்டன? அத்தகைய சுருதிகளுக்குங்கூடவா மாயை இன்னபடித்து என்று சொல்ல முடியாமற் போயிற்று? மாயையும் அதன் காரியமாகிய பிரபஞ்சமும் தற்கால மாயா வாதிகளுக்கு இன்னபடியென்று சொல்ல முடியாத அநிர் வசனீயம் என்றாவதில் எமக்குச் சங்கையில்லை. ஆனால், சுயம்புவெனப்படுஞ் சுருதிக்கும், அச்சுருதி நிச்சயித்த பிரமத் துக்குங்கூட மாயையை யின்னபடியென்று சொல்ல முடியாமற் போயி றென்னுங் கொள்கை பயனற்ற வீண்கொள்கையே யாமென்று உய்தியைவிரும்பும் முமூட்சுக் களால் தள்ளத் தக்கதென்க. இனி, உள்ளதுமாகாமல் இல்லதுமாகாமல் ஒரு பொருளிருக்குமா? எனவருங் கேள்விக்கு இருக்கும் என்பதற்குச் சொப்பனவுலக திட்டாந்தத்தைக் காட்டினர். ஜாக்கிரமில்லாமல் சொப்பனம் நிகழவே மாட்டா தென்னுஞ் சங்கதி நண்பரறிந்திலர். இச் சொப்பனவுலக திட்டாந்தத்தை ஸ்ரீ நாயகரவர்களழிக்கும் விதம் வருமாறு: சொப்பனவுலகத் திட்டாந்த அழிவு இவர் சொப்பனவுலகத் தோற்றங் கூறியதை யீண்டு முதலநுவதித்துப் பின்னரதனாபாசத்தை யெடுத்துக் கூறுவாம். மனத்திலோர் சத்தியுளது. அது அவாந்தரசக்தி. அன்றிப் பின்னாசத்தி. அந்தச்சத்தி மனத்திற்கு வேறுமல்ல, மனமுமல்ல. அச்சத்தி சத்துமல்ல, அசத்துமல்ல, சதசத்துமல்ல. அநிர்வசனீயமாம். அந்தச் சத்தியினின்றும் சொப்பனவுலகு தோன்றுகின்றது. அங்ஙனமே பிரமத்தின்கண் ஒரு சத்தியுளது. அது அவாந்தரசத்தி. அன்றிப் பின்னாசத்தி. அந்தச் சத்தி பிரமத்துக்கு வேறுமல்ல பிரமமுமல்ல. அந்தச் சத்தி சத்துமல்ல, அசத்துமல்ல, சதசத்துமல்ல. அநிர்வசனீயமாம். அந்தச்சத்தியினின்றும் இச்சாக்கிரவுலகு உண்டாயிற்று. என்று தடுமாறி யுரைத்ததோடு இன்னும் பல பயனில் சொற்களை யிரைத்துப் பக்கங்களை நிரப்பிப் பாழ் மதிப் பட்டாபிக்ஷேகஞ் செய்து கொண்ட இவரது புன்மையை யினிக்களைந்தெறிவாம். மனத்திலோர் சத்தியுள்ளது என்றார். அதனை யவாந்தர சத்தி-பின்னசத்தியென்று கூறிவிட்டு, அது மனத்திற்கு வேறுமல்ல என்று பேசியது யாங்ஙனம்? பின்னசத்தியென்று கூறினமையால் மனத்திற்கு வேறானது என்று பொருள் படவும், மனத்திற்கு வேறுமல்ல என்று விரோதமுண்டாக வதனை மீண்டும் பிரதாபித்தவாறென்னை? அன்றியும் அதனை அவாந்தரமென்று கூறியவாறென்னை? பின்னும் அதனை மனமுமல்லவென்றதன் கருத்தென்னை? மேலே அதனை மனத்திற்கு வேறுமல்ல வென்றது கொண்டே அது மனமாகவும், ஈண்டதனை மனமுமல்ல வென்றது மதியாமாறு யாங்ஙனம்? இம்மட்டிலமையாமல், அச்சத்தி சத்துமல்ல, அசத்துமல்ல, சதசத்துமல்ல வென்று பிரசங் கித்தவாறென்னை? இவர் சத்தியென்றது ஒரு பொருளினது அபின்னகுணத்தை, குணத்தை, சத்தா? அசத்தா? சதசத்தா? என்று விசாரியார் தத்தவ சாதிரிகள். குணத்தையுடைய குணியையே விசாரிப்பர். இவ்வனமாக, இவர் மனத்தை யொதுக்கி மனத்தின் சத்தியினி டத்தில் சதசத்விசாரஞ் செய்யப்பட்டது மதியாமா? இவர் சத்தியை யொதுக்கின மையால், அச்சத்தியையுடைய மனத்தை ஸத்தென்று கொண்டார்போலும். இவரந்த மனதை ஸத்தென்று தாபிப்பாரோ, வேறு எவ்வாறு தாபிப்பாரோ வறியேம், எப்படித்தாபிக்கினு மெமக்கென்னை? கற்றுணராத அவரது நிஷ்பிரயோஜனமான நிகளப் பிரசங்கம் ஸாதுக் களுக்குத் தியாஜ்யமாவ துணர்க. இவரிவ்வாறு பிதற்றியதற்கு நூற்பிரமாண முண்டா? இவரது சங்கராசாரியராவது கூறிய துண்டா? இவரிஷ்டம்போற் குழறியதையெல்லாம் யாவரொப் புவர்? இவரது பித்துபதேசம் யாருக்கு என்னவுபகாரத்தைச் செய்தது? வீணே பக்கங்களை நிரப்புவதற்கும், படிப்பில்லாத மூடர்களை மயக்குவதற்குமே யிவரது வெற்றுரைகள் பயன் பட்டவாறறிக. நிற்க. இவரது உபமான தானத்தினின்ற மனத்தின் கதியிவ் வாறாகுமென்றறியாமல் இவர் பிதற்றியது நிற்க, இவரது உபமேய வதுவாகிய பிரமத்தில் ஜகம் விரிந்த வகையைச் சிறிது யோசிப்பாம்.. இவர் மனத்துக்குக் கூறிய அவாந்தர சத்தி-பின்னாசத்தி முதலியவைகளைப் பிரமத்துக்குங் கூறி, அச்சத்தி பிரமத்துக்கு வேறுமல்ல, பிரமமுமல்ல, ஸத்து மல்ல, அஸத்துமல்ல, ஸதஸத்துமல்ல என்று பிரசங்கித்து முடிவில் அநிர்வசனீயம் என்று ராகம் பாடியோய்ந்தார். இதற்கும் மனோ சக்திக்கு வந்தகதியே யமையும். இனி யிவர்சாதித்த வுபமானவுபமேயங்களைப் பொருந்திப் பார்ப்போம். பூர்வபட்சம் மனத்தின்கணுள்ள சத்தியினின்று சொப்பனவுலகு தோன்றும். அதுபோலப் பிரமத்தின்கணுள்ள சத்தியினின்று ஜாக்கிரவுலகு தோன்றும். மனோசத்தின் கட்டோன்றிய சொப்பனவுலகு பொய் யாதல்போலப் பிரமசத்தியின்கட் டோன்றிய ஜாக்கிரவுலகு பொய். சித்தாந்தம் மனம், அதன்சக்தி என்று பிரிப்பதன் முன்னர் அந்த மனம் எவ்வியல்பின தென்று விசாரிப்பாம். மனம் தனித் தொரு பொருளன்று. அது அந்தக் கரணங்களி லொன்று. இது ஏனைய வுட்கரணபுறக்கரணங்களோடு சீவனுக்குச் சிவபரஞ் சுடரால் மாயையிலிருந்து காரியப்படுத்திக் கொடுக்கப் பட்டது. இது ஜீவனுக்குக் கருவியாயமையாத போது இதனிடத்தில் ஒரு சேட்டையுமின்று. இதிலிருப்பதாக இந்து என்பவர் கண்டுகூறிய சத்தியின்பிரதாபமும் வெற்றுரையாம். இதனோடு எப்படி யோ பிரமம் ஸாம்யம் பெறும்? 1. ஜீவனது சேர்க்கையைப் பெற்றுச் சொப்பனவுலகை யுண்டுபண்ணுவது மனம். யாவரது சேர்க்கையைப் பெற்று ஜாக்கிரவுலகை யுண்டு பண்ணுவது பிரமம்? 2. மனம் ஜீவனுக்குக் கரணம். பிரமம் யாருக்குக் கரணம்? 3. மனம் மாயையிற் காரியப்பட்டது. பிரமம் எதிற் காரியப்பட்டது? 4. மனம் பிரமத்தாற் காரியப்பட்டது. பிரமம் எதனாற் காரியப்பட்டது? 5. மனம் தனிப்பொருளன்று. பிரமம் தனிப் பொருளன் றோ? 6. மனம் ஜடம். பிரமம் ஜடமோ? இவ்வவதிகளை யோசியாது இவர் காயிதங்களைக் கறுப்பாக்கித் தமது பொய்யைப் பூரித்து வைத்தது கொண்டே மாயாவாதம் மகிமை பெற்றதாக மகிழ் வெய்தியது அறியாமை யேயாம். இவரது அபசித்தாந்தத்தின் மகிமை யிவ்வளவின தேயோ? இன்னுங் கொஞ்ச முரைப்பாம். 1. மனம் அசுத்தம். அதிலுண்டாகும் சொப்பனவுலகும் அசுத்தம். பிரமம் அசுத்தமோ? அதில் அசுத்த (ஜாக்கிர)வுலகு தோன்றியவாறென்னை? 2. ஜீவன் மனமாகிய கருவியாற் சொப்பனவுலகைப் பார்க்கிறான். பிரமமாகிய கருவியால் ஜாக்கிர வுலகைப் பார்ப்பவன் யாவன்? சொப்பன வுலகையும் ஜாக்கிரவுலகையும் ஜீவனே யிப்போது பார்க்கிறானா கையால் அந்தச்சீவன் சொப்பன வுலகைக் காணுங் கருவிக்கு மனமென்றும், ஜாக்கிர வுலகைக் காணுங் கருவிக்குப் பிரமமென்றும் இவர் பேரிட்டார் போலும். 3. சொப்பனவுலகம் நினைவின்பாலது, நினைவு சங்கிலியும், அதினீக்கமறநிற்பது சொப்பனவுல குமாம். நினையாதபோது அவ்வுலகமில்லையாம். ஜாக்கிரவுலகம் நினைவின்பாலதோ? நினைத்த போதும், நினையாதபோதும் அந்நினைவோடு கூடியும், அதற்கு வேறாகியு நிற்கு நிலைமை யினதாத லநுபவமன்றோ? இவை யெப்படியோ திட்டாந்த முந் தாட்டாந்தமுமாகும்? யாமெடுத்துக் காட்டிய எல்லாப்படியாலும் சொப்பன வுலக திட்டாந்தம் இந்து என்பவர் ஜாக்கிரவுலகம் பொய் யென்றிடற் குபகாரப்படா தொழிந்தது சத்தியமாயின மையால், உலகம் பொய்யென்று அவருளறியாத முடை பட்டுப் போயதறிக. யாம் சொப்பனவுலகம் போல்வதன்று ஜாக்கிரவுல கென்றதேயன்றிப் பூர்வபட்சி கூறியபடிச் சொப்பனவுலகு பொய்யென்று கூறகில்லேமென்க. ஏனெனில், சொப்பன மென்பது ஜீவனது அவத்தைகளிலொன்று. ஏனையிரண்ட வத்தைகள் மெய்யாகவும், ஏனோவிஃதொன்று மாத்திரம் பொய்யாய்த் தொலையும்? ஜாக்கிரத்திலிருக்கிறபடியே ஜீவனுக்குச் சுகதுக்கானுபவங்கள் சொப்பனத்திலுமுண்டா கையால், இரண்டும் மெய்யேயாம். இரண்டு மெய்களிலும் ஒன்றுக்கொன்று கொஞ்சம் பேதமுடையதெனலே யமை வுடைத்து பொய்யென்பது மாத்திரம் பொருந்தாது நனவின் பயனுங் கனவின்பயனும்-வினையின்பயனவை பொய்யென வேண்டா என்றதோத்து. அன்றியும். கனவின் கண்ணே பூர்வபட்சி கூறியவாறு மனம் மாத்திரம் தனியே நிற்பதின்று. நிலவுங்கண்டத் தாக்கிய சொற்பனமதனில் வாயுபத்து மடுத்தனசத்தாதி வசனாதியாக நோக்குகரணம் புருடனு டனேகூட நுவல்வர் என்று ஸ்ரீ தாயுமான சுவாமிகள் கூறியபடியே இருபத்தைந்து தத்துவங்க ணிலைபேறாகும். இவற்றுள், பூர்வபட்சி கூறிய மனமொன்று. மனமும், அத்து டன் இருபத்துநான்கு தத்துவங்களும் நிலைபேறானபோது தோன்றத்தக்க சொப்பன ஜகத்தை நோக்குங்கால், ஜாக்கிர வுலகத் தோற்றத்துக்கிவர் தேடிய பிரமத்திற்குப் பலதுணைக ளாவசியக மென்பது சொல்லாமேயமைந்தது. துணை யின்றிச் சகத்தைத் தரமாட்டா வஸத்துப் பொருள் பிரம மென்றற்கே யிவரது சொப்பனவுலக திட்டாந்தம் பயன் செய்ததன்றி, உலகம் பொய்யென்றிடற் கோரணுத்துணையு மிடந்தந்ததின்றென்க. இனி யிவர் சொப்பனவுலகம் ஜாக்கிரத்தி லநுபவத்துக்குவாராமையால் பொய் யென்னலாம். அது கூடாது. சொப்பன விஷயங்கள் ஜாக்கிரத்தி லனுபவத்துக்குவந்த திவ்ய சரித் திரங்கள் புராணப் பிரசித்த மாகையாலும், இப்போதும் உலகிற் சிற்சில விஷயங்கள் சொப்பனத்திற் கண்டவை ஜாக்கிரத்திற் கைகூடுவது எவருக்கு மனுபவமாகையாலும் சொப்பனவுலகு பொய்யெனல் அசங்கதம்? சொப்பனமானது இறந்தகால வப்னம்-நிகழ்கால வப்னம்-எதிர்கால வப்னம் என மூன்று வகைப்படும். முன் ஜாக்கிரத்திற் கண்டதைச் சொப்பனத்திற் காணுவது இறந்த கால வப்னமும், பின் ஜாக்கிரத்திற் காணப்போவதைச் சொப்பனத்திற் காணுவது எதிர்கால வப்னமும், முன் ஜாக்கிரத்திற் கண்டதுமின்றிப் பின்ஜாக் கிரத்திற் காணப்போவது மின்றி இடைக்காலத்திற் புதுசாய்க் காணுவது நிகழ்கால வப்ன முமாம். நிகழ்காலத் தினதை யெதிர்காலத்தி லபேட்சித் திடுதல் அஸங்கதமாம். அது அந்த நிகழ்காலத்தின் மாத்திரமே சுகதுக்கவடிவமாயிருந்து உயிர் களுக்கு வினைப் போகமாயிடுதல் ஸத்தியமென்றறிக. இவ் வுண்மையறியாமல் கண்மூடித்தனமாய் வப்னம் பொய் யென்னும் வாதம் சுஷ்கவாத மாயினதறிக. இனி யிவரிஷ்டம்போற் சொப்பனம் சுத்த பொய்யே யாகட்டும். அதனால், ஜாக்கிரவுலகு பொய்யென்றிடற்கு நியாயமில்லை. எங்ஙனமெனின், இவர் சொப்பனவுலகைப் பொய்யென்று கொண்டது எதனால்? ஜாக்கிரவுலகு மெய்யா யிருப்பதனாலன்றோ? மெய்யாகிய ஜாக்கிரவுலகையும், பொய்யாகிய சொப்பனவுலகையும் சுத்தப் பொய்யென்று கூறுவது யாங்ஙனம்? சுவாநுபூதியில் உலகந் தோன்றா மையா லெனின், அஞ்ஞானிக்கேதுசிவமப்படியே யாகுங் காண், மெய்ஞ்ஞானிக் கிவ்வுலகம் என்றதனாலது நிரதம். அஞ்ஞானிக்குச் சிவம் தோன்றாமையால் சிவம் இல்பொரு ளாமோ? அப்படியே மெய்ஞ்ஞானிக்கு உலகந் தோன்றா மையால் உலகம் இல் பொருளாமோ? சிவம் தோன்றாமையால் சிவத்தை இல்பொருளென்று வாதிக்கும் உலகாய தனுக்குத் தம்பியாய் மாயாவாதி கனம் பெற்றானென்க. அங்ஙனம் பெற்றவிடத்தும், உலகாயதன் புகழ் இவனை வந்தெய்த மாட்டாது. ஏனெனின், உலகாயதனுக்குச் சிவம் தோன்றாதது சத்தியம். அதனாலவன் சிவம் பொய்யென்றது அடுக்கும். மாயாவாதியின் கதி அங்ஙனமாமா? எந்த மாயாவாதிக்கு உலகந் தோன்றவில்லை? ஒருவன் வெளி வரட்டும் பார்ப்போம். மாயா வாதிக்கு உலகந் தோன்றாத அவசரமுமுண்டு. அது யாதெனின், மாயாவாத நூல்களில் நான் சுகமாய்த் தூங்கினேன் என்றொரு வசனமெழுதி யிருப்பதுண்டு. இவ்வாறு தூங்குமூஞ்சிகளா யெழும் பிரமங்களுக்குத் தூக்கத்திலுலகந் தோன்றாதது சத்தியம். இதனை யெந்தச் சமயியும் மறுக்க முடியாது கண்டீர். இவ்வநுபவம் மாயாவாதிகளுக்கும் மற்றவர்களுக்கும் ஒத்ததா கையால், மாயாவாதிகள் நானும் பிரமம், நீயும் பிரமம், அவனும் பிரமம், யாரும் பிரமம், யாவும் பிரமம் என்பது உசிதமே யாயதென்க. இவ்வாறு மாயாவாதிகள் பிரமமாகலாமே யொழியப் பிரமமாகிய தம்மைத்தரிசித்து, உலகந் தோன்றாத வநுபவ மெய்தி, உலகம் பொய்யென்று கூறுதற் கவகாச முண்டாயின தில்லை யறிக. எமது பெரியோர்கள் தம்மைத் தரிசித்து உலகம் பொய்யென்றார்கள் ஏனெனின், அது சாட்சியற்றதும், யுத்தியனுபவங்கட் கொவ்வாதது மாகை யால் கனம் பெறா தென்க. அவர்கள் சுழுத்தியி லநுபவிக்குஞ் சுகம் மறுக்கப்படாமையால், அதுவே ஸர்வஸம் பிரதிபந்ந மாயதென்றறிக. அந்தச் சுழுத்தியில் கருவிகரணங்களெல் லாமோய்ந்து ஆணவம் அல்லது அஞ்ஞானம் முனைத்துத் தோன்றுகையால், ஆன்மாவும் அஞ்ஞானமும் அபேதமாய் விளங்கும். இதனா லான்மாவுக்கநுபவம் அஞ்ஞானத்தி லென்னுமுண்மை வெளிப்படும். இவ்வுண்மை போதரவே மாயாவாதியை நோக்கி அநுபூதிதானுமது கூடிடாது எனவும், நீ அநு பூதியென்று கூறுவது உனது அஞ்ஞானத் தோடாம் என்பது தோன்ற அறிவிலாமையே எனவும் எமது சைவப் பெரியார் கூறியதுய்த்துணர்க. ஆயின், சைவசமயிகள் உலகம் பொய்யென்று கூறு வதும், சிவாநுபூதிமான்கள் தாமென்பதும் யாங்ஙனமெனின், பற்றுக பற்றற்றான்பற்றினை யப்பற்றைப், பற்றுக பற்று விடற்கு என்ற சைவப் பெரியார் திருவாக்கானே அது விளங்கும். பற்றுக- பசுவாகிய நீ பற்றக்கடவாய், பற்றற்றான் பற்றினை - பாசமில்லாத சிவபரஞ்சுடரினது திருவடிப் பற்றை, அப்பற்றைப் பற்றுக - அத்திருவடிப் பற்றை யுறுதி யாகப்பிடி, பற்றுவிடற்கு - உன்னைச் சூழ்ந்திருக்கும் மல மாயாதி தோஷங்களாகிய பாசம வைவிடுதற் பொருட்டு என்று பெறப்பட்ட உண்மையுணர்ந்தா ரவைக் கண்ணே இந்து என்பவரது ஆசங்கை விட்டுப் போமென்க. ஒன்றைவிட்டு மற்றொன்றினைப் பிடித்த போது முன் பற்றியது மறக்கும். தொட்டது சிறக்கும். இது யார்க்கு மநுபவம். சிவத்தி லதீதப் படும் போது முன்பற்றியிருந்த உலக வாசனை விட்டுப்போம். அதனால், அவ்வுலகமில் பொருளா யிடுதலின்று. உலகப் பற்றொழிந்ததெனலே அதன் கருத்தாம். உலகம் இல்பொரு ளென்றும், தனக்கு வேறான பரமொன் றில்லையென்றும், தான் தன்னைக்கண்டனு பவித்தலே முத்தி யென்றுங் கூறும் அபசித்தாந்தம் (உலகம் உள்பொரு ளென்றும், தனக்கு விஜாதியான பரமொன்றுண்டென்றும், கண் கண்ணைக் காணுமாயின் தான் தன்னைக் காணுமென்று கழித்துத் தனக்குக் காட்டாகிய சிவத்தைக் கண்டநுபவித்தலே முத்தியென்றுங் கூறும்) சைவசித்தாந் தத்தோ டொத்து வாழாதாகையால் சிவ ஞானி களுக்குரிய சிவாநுபூதிப் பெருஞ்செல்வம் எம்பெரியோர்க்கு முண்டென்று அவ ஞானப் பெரியோராசை கொண்டு கூறுவ தடாதென மறுத் திடுக. உலகம் யாண்டும் இல்பொருளாயிடுதல் நிரத மென்க. விரிக்கிற் பெருகும். இதுகாறும் யாம் பிரகாசப்படுத்திய நியாயங்களால் பூர்வபட்சியினது விவர்த்தோபாதான தாபனம் தலை தூக்க முடியாமலடங்கி மூலதோஹாநி யாயினது சித்த மென்றுணர்க. இதனால், யாம் ஆகாயந் தனக்கு விஜாதியான பல பொருள் களாக விரிந்திடாததுபோலப் பிரமமுந் தனக்கு விஜாதியான பல பொருள்களாக விரிந்திடாது என்றதை மறுத்தவர்போல இந்து என்பவர் தலை விரித்தாடியாது அவரது மூடாவேசத்தின் பயனென்றே அறியத்தக்கது. ஆகாயங் காற்றாகவும், காற்று நெருப்பாகவும், நெருப்பு நீராகவும், நீர் நிலனாகவும் விரிந்த தில்லையென்னும் ஸத்தியத்தை மேலிடத்தில் யாமினிது பிரகாசப்படுத்தி யிருப்பதே போதும். அப்படியே பிரமம் ஜகஜீவர்களுக்கு உபாதானமாகியதென்ற விவாதமும் அடியோடே தொலைந்த வாறறிக. இந்தப் புத்திமான். பிரமம் ஜகத்துக்கு பாதாள மென்றவிடத்தில் விவர்த்தத்தைக் கட்டிக் கொண்டு வெறும் வாயைமென்று விருதாகாலக்ஷேபஞ் செய்தது போல ஆகாயம்-காற்று முதலியவைகளின் றோற்ற விஷயத் திலும் விவர்த்தத்தைக் காட்டி யுள்ளம் வெதும்புகிறா ரிதென் கொலோ? இவரது மதத்தில் பிரமம் உலகமாகியது என்பதற் குக் கயிறு அரவாயிடுதலையும் கானல் நீராயிடு தலையும் உவமை யாக வெடுத்துக் கூறுவதுண்மை. இவர் அந்த வழியை விட்டு (ஆகாயம் காற்றாயிடுதலுக்கு) அரவு கயிறா யிடுதலையும், கானல் நீராயிடுதலையுமெடுத்துக்கூறி நிர்வகிக் கப் பார்க்கிறார். இனியிவர் புத்திரன் அவன் பிதாவினிட முண்டாயிடுதலையுங் கயிறு அரவானதற்கும், கானல் நீரானதற்கு மொப்பிட்டு விவர்த்தவாதத்தில் வெந்து மடிவார்போலும். ஆகாயம்-காற்று முதலியவைகளின் றோற்றத்தை விவர்த்தவாதத்தா லிதுகாறும் எந்தவே தாந்தியும் (மாயாவாதியும்) சாதித்தது காணோம். நிற்க. வியாபக வியாப்தி வியாப்பியங்கள் இவர் வியாபக வியாத்தி வியாப்பியங்களை விசாரிப்ப வராயெழுந்து கடல் சிவ நீரான்மா வுப்பு மலம் என்னுந் திருவாக்கின் கருத்தை யநுவதித்துக் கொண்டு தம்மாலான சன்மார்க்க விலக்கை யெல்லாங்காட்டிச் சந்தோஷித்தார். இவரது திறமைக்குப் பரிசளிக்குங்கர்த்தா விவனென்பது தோன்ற ராமதருமனும் பகடுமேய்க்கியாய்த் தனியிருப்ப என்று ஸ்ரீதாயுமானச் செல்வனார் கூறினாரேனும் இவரது பசித்தாந்தத்தின் பிடரியை யிறுகப்பிடிக்கும் நமனாக வெமது நியாயசதிரத்தை வீசிச் சிவனடியார்கள் களிக்கச் செய்வாம். இவர் கடல்-வியாபகம், நீரும் உப்புங் கலந்திருத்தல்-வியாப்தி. கடலில் நீரும் உப்பும் அடங்கியிருத்தல் வியாப்பியம். இது உபமானம். உபமேயமாவது பதி-வியாபகம், பசுவும் பாசமுங் கலந்திருத்தல்-வியாப்தி, பசுவும் பாசமும் பதியினிடத்தில் அடங்கியிருத்தல்-வியாப்பியம் என்று வியாபகமாதிகளி னிலக்கணத்தை விரித்தார். இது சுத்த பிசகு. இனி யிதற்கு வியாபகமாதி விரிக்குங்காலை வியாபகமேலிடு நிறைவா மென்ப-வியாத்திசமநிறை வாகும் விளம்பின் - வியாப்பிய மொன்றின் மிடைந்த நிறைவே - வியாபகங்கடலே வியாத்தியந் நீரே - வியாப்பிய முவரென வீக்கிய நூலே - வியாபக மீசன் வியாத்தியாருயிர் - வியாப்பிய மலமென விளக்கிய நூலே என்பதோத்து. இந்த நூற் பிரமாணத்தி லடங்காமல் இவரது பிரசங்கம் விபசரித்ததை யீண்டுத் தெரிவிப்பாம். இவர் நீரும் உப்புங் கலந்திருத்தல் வியாப்தி யென்றார். எந்தவிடத்திற் கலந்திருத்தல் என்று விளக்கா ராயினர். கடல் வியாபகமென்று மேலே கூறின மையால், அக்கடலிலே கலந்திருத்தலென்று கொள்க வெனின், மீண்டுமிவர் வியாப்பிய லக்ஷணமாகக் கடலில் நீரும் உப்பும் அடங்கியிருத்தலைக் கூறினாராகையாலது கூடாது. இரண்டு மொரேவிதமாயின், ஒன்றற்கு வியாப்தியென்றும் மற்றொன் றனுக்கு வியாப்திய மென்றும் பேரிட்டது அஸங்கதமாம். வியாப்தியை நீரு முவருங் கலந்த தென்றும், வியாப்தியத்தை நீருமுவரும் அடங்கலென்றுங் கூறினாமெனின், நீருமுவருங் கலந்தே கடலிலடங்கினமையால் இரண்டையும் வேறு பிரித்தது மிகையாம். இனியிவர் வியாபக தானத்தினின்றது இன்னவியற்கையினது என்று யாதேனுங் கண்டு கூறினாரா? தப்புந் தாறுமாக வேனும் வியாப்தி வியாப்பியங்களை விளக்கினவர் வியாபகத் தையும் விளக்குவது ஆவசியகமாகவும், அதனை விளக்காதது மதியாமா? நிற்க. யாம் காட்டிய வாக்கியத்தில் மேலிடுநிறைவு - சம நிறைவு - ஒன்றின் மிடைந்த நிறைவு என வியாபக வியாப்தி வியாப்பியங்களை யினிது விளக்கியிருக்கின்றது. மேலிடு நிறைவு கடல். சமநிறைவு நீர். ஒன்றின் மிடைந்த நிறைவு உவர். நீருக்கு நிலைக்களமான இடம் கடலும், உவருக்கு நிலைக்களமான இடம் நீருமாம். கடலில் நீரடங்கியது. நீரில் உவரடங்கியது. உவரானது கடல் நீர் என்னுமிரண்டிலு மடங்காமல் நீரொன்றிலேதானே யடங்கலால், இவ்வாறு கலக்கும் வியாப்பியத்தை ஒன்றின் மிடைந்த நிறைவே என்று கூறியபடியாம். இவ்வாறு பிரமாணத்திற் கட்டுண்டு கூறாமல் இவரது அகந்தையடியிற் கூறியது நிப்ருஹ மென்க. நிற்க. இவர் உபமானத்தில் கடலென்னுஞ் சொல்லுக்குப் பொருள் யாது என ஆராயின் நீரையன்றியில்லை. நீரினது நிலைமையைப் பற்றிக் கடலென்றும், ஏரியென்றும், குள மென்றும், மடுவென்றும், யாறுஎன்றும், கிணறு என்றும் சொல்லப்படுகின்றனவேயன்றி, மற்றப்படிக் கடல் முதலிய சொல்லுக்குப் பொருள் யாதென உய்த்து நோக்கின் அபாவந் தான் பொருள். கடல் முதலியன வியவகாரிக சத்தியமாய் உலக விவகாரத்தில் சொல்லப்படுகின்றன. பரமார்த்திக மாயும் வேதாந்த சாதிர ரீதியாயும் பொருளாகச் சோதித்துப் பார்க்குமிடத்துக் கடல் பொய்யும், நீருண்மையுமாம் என்று பிரசங்கித்து, இவ்வுபமானத்தைக் கையாளுஞ் சைவ சித்தாந்தி களுக்குக் கடலினது தானத்தினின்ற பதிப்பொருள் அபா வந்தான் என்றும், நின்றது நீரினது தானத்தினின்ற பசுவே யென்றும், இனிப் பொய்யான பதியின் கண்ணே பசுபாசங்கள் எப்படி யடங்கியிருக்குமென்றும், பசுக்களையும் பாசங்களையு மிழுத்துவிட்டால் இவரது கடவுளான பதிக்குப் பொருள் ஆதாயப்பூவும், மலடி புத்திரனுந்தான் என்றும் முடிவுகட்டித் தனது புத்தியின் விசேஷத்தை வெளிப்படுத்திக் கொண்டார். இவரது வியாபக வியாப்தி வியாப்யதோஷங்களை மேலே விரித்து யாவருமறியத் தெருட்டினாம். இனி வியாபகமாதிகள் தருக்கவியலின் பாலன. இவையெல்லாச் சமயிகளுக்கும் பொது. பொதுவாகிய விதனை யாம் (சைவர்கள்) கையாளுகிறபடி யெல்லாச் சமயிகளுமே கொண்டு கூறுவர். அப்படியே மாயா வாதிகளுங் கொண்டு குதுகலிப்பர். மாயாவாதிகளுள் மணியாய்த் தோன்றிய இவர், விரித்துக் காட்டிய விதம் கேவலம் ஆபாசத்தினும் ஆபாசமாம். அவ்வாபாசம் சைவ சித்தாந்திகள் கொள்வதன்றாம். வேறு சித்தாந்திகளும் அதன் முகத்தில் விழிக்க நாணுவர். மாயாவாதிகளும் அதனை மண்ணை வெட்டிக் கீழே புதைப்பர். இந்தக் கண்ணொளியற்ற மாயாவாதி வியாபகம் கடல் என்பது முதலியவைகளைச் சைவ சித்தாந்தியே சொல்வதாகக் கொண்டு தாறுமாறாய்ப் பேசித் தலை தடுமாறினார். மாயாவாதி மதத்தில் விவகார பரமார்த்த மிரண்டில் ஜகஜீவபரங்களை யொப்புவது விவகார ஞானம். இந்த விவகார ஞானத்தில் பரம் வியாபகமும், ஜீவன் வியாப்தியும், ஜகம் வியாப்பியமுமாம். இந்தப் பரஜீவஜகங் களுக்கு உபமானம் கடல் நீர் உவர்களேயாம். கடலினது தானத்தினிறுத்தப்பட்ட பரம் இவரது வியாக்கியானத்தை யநுசரிக்கும் போது (கடல் அபாவபதார்த்தமா யொழிவது போலச்) சூனியப் பொருளாயிடுதல் சத்தியம். இவரது வியாக்கியானத்தையாம் காற்கடை கொண்டெற்றினோமா கையால் வியாபகமாகிய கடலினது தானத்தில் நின்ற வெமது பதிப்பொருளை அபாவந்தான் என்று இவரலறிப் போட்ட பேய்க் கூச்சலுக்கு ஸாதுக்களஞ்ச வேண்டிய ஆவசியக மின்றெனவறிக. வேதம்-சாதிரம்-யாகம்-யோகம்-தவம்-தானம்-தீர்த்தம்-மூர்த்தி முதலிய யாவும் மாயாவாதிகளுக்கு வியவகார மேயாம். இந்த வியவகாரத்தைக் கையாளாத சங்கர மதத்தவரில்லை. சங்கராசாரியர் சந்திர மௌலி பூசை செய்வதன் பயன்றானென்னை? இவரது சங்கர குருவுக்குச் சந்திரமௌலியேயன்றோ வியாபகப் பொருள்? ஜீவனாகிய தானேயன்றோ வியாப்பியப்பொருள்? தன்னைப் பந்தித்த பலமும் யன்றோ வியாப்பியப் பொருள்? இத்தனையும் பொய் யென்று இவர் கூறுவது பரமார்த்தத் திலேயேயன்றோ? வியவகாரிக சத்தியமொப்பியே இவர் சிவ பூசையையும், அதன்பயனையு மங்கீகரித்துச் சிவானந்தலஹரி முதலிய திவ்ய தோந்திரங்களைப் பாடிக் கதறியழுதா ரென்று தூர்த்த மாயாவாதிக ளல்லாதவர்கள் வியந்து துதிப்பார்களாகையால், இந்தப் பூர்வபட்சி பதிக்குப் பொருளே யில்லாதிருக்க அது பரிபூரணமென்றும், நித்திய மென்றும், சச்சிதானந்தமென்றும், பசுக்களை முத்தியிற் செலுத்துமென்றும், பசுக்கள் பதியை வணங்க வேண்டு மென்றும் இவ்வாறு பலப்பல சொல்லிப் பிரசங்கிப்பதும் எழுதுவதும் என் கொண்டோ? என்று தூஷித்தது இவரது சங்கர குருவுக்கே நாம் போட்டதாக முடிந்து, குருத் துரோகியும் சிவத் துரோகியும் இவரைத்தவிர வேறொருவரு மில்லையென்னுஞ் சித்தாந்தம் வெளியாயினதறிக. நீரையும் உவரையு மிழுத்துவிட்டால் கடலுக்குப் பொருளேது என்று கூறிய இவரது புத்தியில், அவ்வில்பொருளா யழியுமதற்கு நாம் வியாபகத்தை மாத்திர மொப்புவது சரியாவென்று தோன் றாதது என்னை? இல்பொருளாகிய கடலில் உள் பொருளாகிய நீருவர்களை யிவரடைப்பதும், வியாபக மில் பொருள், வியாப்தி வியாப்பி யங்கள் உள்பொருள்களென்று இவர் சாதிப்பதும் இவர்போன்ற த்விபாதஜந்துக்களுக்கே பயன்படத்தக்கன வென்க. அன்றியும், இவரது பிரசங்கத்தில் கடல் முதலியன வியாவகாரிக சத்தியமாய் உலக விவகாரத்தில் சொல்லப் படுகின்றன என்றும் பரமார்த்திகமாயும் வேதாந்த சாதிர ரீதியாயும் பார்க்குமிடத்துக் கடல் பொய்யும் நீருண்மையுமாம் என்றும் பெறப்பட்டிருப்பதனால் அதனையுஞ் சிறிது விசாரித் தொதுக்குவாம். இவரது மதத்தில் பிரமந்தவிர ஏனை யெல்லாப் பொருளும் வியா வகாரிக சத்தியமாய்க் கொள்ளப்படுவன வேயாம். ஆகலினிப்போதிவரெடுத்துக் கொண்ட கடல் - நீர் - உவர் என்பனவும் வியாவகாரிக சத்திய மேயாம். இங்ஙனமாக, இவர் பரமார்த்திகமாயும் வேதாந்த சாதிர ரீதியாயும் கடல் பொய்யும் நீருண்மையுமாம் என்றது எந்த மதியினால்? பரமார்த்தத்தில் கடல் பொய்யாகிற படியே யன்றோ நீரும் பொய்யாக வேண்டும்? நீர் மெய்யாகு மானால், அப்படியே யன்றோ கடலும் மெய்யாக வேண்டும்? நீரைப் பரமார்த்தத்தில் மெய்யென்று ஈண்டொப்பினவர்க்குப் பரமார்த்தத்தில் பிரமமொன்றே மெய்யென்னு மிவரதுமத மழியாது நிலை பெறுவதெங்கே? எந்த வேதாந்த சாதிரத்தில் கடல் பொய் - நீர் மெய்யென்று எழுதப்பட்டிருக்கின்றது, இவர் காட்டிய வேதாந்த (மாயாவாத) சாதிரங்களில் கடலினி டத்தில் அலைகுமிழிகடோன்றி யடங்குவதுபோலப் பிரமத்தினிடத்தில் ஜீவஜகங்கடோன்றி யடங்குகின்றன வென்று கூறுஞ் சத்தியத் தைச் சத்தப் பிரகரணம்படித்த சிறுபையனும் அறிவானே. பிரமம் கடலும், ஜீவஜகங்கள் நீருவர்களுமாகக் கூறியிருக்கும் நிலைகளை யிவரறியாமை யாலன்றோ கடல் பொய்யென்று கூறிப் பிரமத்தைத் தெருவில் விட்டுக் கண் சாம்பினார். இவ்வாறு எதிரியினது சதிரம் வந்து தமது கண்ணைக்குத்து மென்று இவரறியாமையால் தம்மினத்துப் பாலிசர் மகிழச் சில பலவெழுதித் தொலைத்தார். இதுகாறும் யாம் பரமார்த்த விவகார மெய்பொய்களை பிரதாபித்தது பூர்வ பட்சியினது மதாநுசாரமாகவேயாம். எம்முடைய சித்தாந்த ரீதியாக விவகார பரமார்த்தங்களுக்கு நூனாதிக்யங் கூறுவதன்றிப் பொய்மெய் யென்னும் பிரசங்கஞ் செய்திடர்ப்ப டேமென்க. இனிக் கடல் - நீர் - உவர் என்பவைகளில் கடல் அபாவப் பொருளன்றென்பதையும். அவ்வுபமானத்தாற் பெறப்படு முபமேயமாகிய சிவம் அபாவ வதுமாகா தென்பதையு மினித் தெரிவிப்பாம். மேலே யாம் வியாபகம் மேலிடு நிறைவெனவும், அது நீரையாதரிக்கும் நிலைக்களமான இடம் எனவும், அந்த இடந்தானே கடலென்னும் பேர்பெற்ற தெனவும் விரித்திருக் கின்றோம். இந்த இடமில் லாதபோது நீர் நிற்பதெங்கே? நீருக்கு இடங்காட்டாது அந்த நீரையே முக்கியப் பொருளாக நிறுத்திய விவருக்கு நீர் இல் பொருளாக வன்றோ முடியும்? கடலை இல்பொருளென்று கூறிய இவருக்கு நீரும் இல்பொருளாய் முடிந்தமையால், இவரது முடிவு பிரமத்தையும் ஜீவனையும் பெரும்பாழ்கள் என்று கொண்டதாக ஏற்பட்டது. குளம் வெட்டினேன் - கிணறு எடுத்தேன் - ஏரியுண்டாக்கினேன் என்று உலகினர் வழங்குவது எவைகளை? குளத்தில் நீரில்லை - ஏரியில் ஜலமில்லை-ஏரிவற்றியது - பாழ்த்த கிணறு என்பன வாதி பிரயோகங்களையும் அற்ற குளத்திலறு நீர்ப்பறவை போல் என்னு மான்றோர் வாக்கியத்தையும் இவரறியாது உளறினார் கண்டீர்! கங்கையானது கடலை நிரப்பியது, கடல் சுவற வேல்விட்டது என்று கூறும் ஆதரவுகளும் இவரது மதத்தைச் சிதைத்தனவென்க. இவ்வளவிலடங்கி வாழ்த லிவருக்குப் பெருமையாம். நிற்க. இவர் நீரும் உப்புங்கலந்திருத்தல் பின்னமாகவா அபின்னமாகவா என்று தொடங்கி அபின்னமென ஒரு போதும் சொல்லப்படாது என்று கூறினார். நீரும் உப்பும் அபின்னமென்று சொன்னவர் யாவர்? சைவ சித்தாந்திகள் அவற்றின் சம்பந்தத்தைப் பின்னமென்றே கொண்டிருக் கிறார்கள். சைவர்களொப்பியிருப்பதையே யிவருங் கூறிவிட்டு அவர்களைக் கண்டித்ததாக மனப்பால் குடித்தது அவிவேக மாகாதொழியுமோ? நீரும் உப்பும் பின்னமே யென்பதற்கு இவர் தேடிய ஏனையாதரவுகளின் ஜோலிக்குயாம் போவது ஆவசிய கமோ? எமக்கு விரோத மில்லாதவைகளை யாம் தொட்டுக் கொண்டு வீண் கால க்ஷேபஞ் செய்யகில்லேமென்க. பின்ன சம்பந்தமுடைய நீர்உவர்களை யுபமானமாகக் கொண்டு பசுபாசங்களும் பின்னசம் பந்தமுடையனவே யாமென்பது சித்தமென்றுணர்க. பாசங் கழன்றாற் பசுவுக்கிடம்பதியாம் பசுவினின்றும் பாசங் கழலுமென்பதற்கே நீரினின்றும் உப்பு நீங்கும் என்னுமு பமான முபகாரமாயதென்க. இனி யிவர் எது பின்னமா யொருகாலத்திற் பிரிகின்றதோ, அது ஒரு காலத்தில் பின்ன மாய்க்கூடியே யிருந்திருக்க வேண்டும் என்று பிரசங்கித்து மரத்தின் மேலிருக்கும் பறவை பின்னமாகலின், அது மரத்தை விட்டுப் பிரிந்து போகின்றது என்று எடுத்துக் காட்டியதையுஞ் சிறிது விசாரித் தொழிப்பாம். நீரையும் உப்பையும் பசுபாசங்களின் பின்னசம்பந்தத்தை விளக்குமுப மானமாக நூல்களெடுத்துக்கூறவும், இவரந்தநீருப்புகளின் நீர் உப்பு பின்ன சம்பந்தத்தை விளக்குதற்கு மரம் - மரத்திலிருக்கும் பறவை யென்பவைகளை யெடுத்தாண்டது சுத்தமூடத் தனமாம். உபமேயத்தை உபமானத்தால் விளக்குவது ஆவசியகம். அவ்வுபமானத்தை வேறோருபமானத்தால் விளக்குவது ஆவசியகமோ? ஓருபமேயத்தைப் பல வுபமானங்களால் விளக்கலாம். அவ்வுபமானங்க ளொன்றோ டொன்று உதைத்துக் கொள்ளுமாயின், எடுத்துக் கொண்ட உபமேயத்தைச் சாதித்துக் கொடுக்கமாட்டா. இவரெடுத்துக் கொண்ட நீருப்புகளின் பின்னசம்பந்தமும், மரம் பறவைகளின் பின்ன சம்பந்தமுந் தம்முளொத்துவாழமாட்டா. எங்ஙனமெனின், நீருள்ள ஞான்றே அதனோடு உவருள்ளது. நீரும் உவரும் பிரிபடாது தம்முள்விரவி நிற்பன. நீர்முழுதும் உவர் நிறைந்து விளங்கும். இவற்றோடு மரம் பறவைகளின் சம்பந்தம் பொருந்துமாறு யாங்ஙனம்? மரமுள்ளபோதே அதனோடு பறவையுள்ளதோ? மரமும் பறவையும் பிரிபடாது தம்முள்விரவி நிற்பனவோ? மரமுழுதும் அதாவது மரத்தி னுள்ளும் வெளியும் பறவை நிறைந்து நிற்பதோ? அன்றி, ஒரு மரத்தி லொருபறவைதானோ வாழும்? அதிலும் ஒரு ஜாதி பறவைதானோ வாழும்? இவை நீருவர்களின் சம்பந்தத்தோ டொவ்வாமையால், நீருவர்களின் சம்பந்தத்தோ டொட்ட வுரைக்கும் பசுபாசங்களுக்கு இவை களை நிதரிசனமாக்கியது அவிவேகமேயாம். அன்றி, கடனீரிலி ருந்து உப்பு ஒரு காலத்தில் பின்னமாயெடுக்கப் படுகின்ற மையால், அது ஒரு காலத்தில் பின்னமாய்க் கூடியே யிருந்திருக்க வேண்டு மென்பதும் மூடமாம். ஒரு காலத்திற் பின்னமாய்க் கூடியிருத்தலென்றது கடலுண்டானபோதோ, அல்லது உண்டாகிய சிலகாலத்தின் பின்னரோ, அந்தக் கடல் நீரில் முன்னில்லாதவுப்பினைக் கொண்டுபோய்க்கொட்டி ஒருவர் அல்லது பலபேர் கலந்துவைத்தார்களென்பதேயாம். கடலை யுண்டாப்பினவர் கடவுளேயாகையால், அவர் கடனீரையும்-உப்பையுந் தனித்தனி யுண்டாக்கிப் பின்பொரு காலத்தில் இரண்டையு மொன்று சேர்த்தார் போலும். நூற்றுக்கு எழுபத்துமூன்று பங்கு நீரும், இருபத்தேழு பங்கு உப்புங் கடலிலிருந்தெடுக்கிறார்களென்று இவர் கூறிய படியே தான் ஆதியில் கடவுளவைகளைச் சேர்த்திருக்க வேண்டும் போலும். இவரிவ்வாறு கண்டெழுதியது எந்த வேதோப நிஷத்திலிருந் தென்றும் புலப்படவில்லை. கடல்நீரி லிவர் காட்டிய கணக்கின் படி உப்பையளந்து கொட்டிக் கலந்து வைத்தவர் வியாவகாரிக சத்தியக் கடவுளே யாகையால், அவர் இவரது பாரமார்த்திக சத்திலக் கடவுள் சந்நிதியில் பொய் யாய்ப் போகத் தட்டில்லை. அவர் பொய்யாய்ப் போகவே, அவர் கடலையுண்டாக்கினதும், கடல் நீரில் உப்பையளந்து சேர்த்ததும் வெறும் பொய்யென்று மூடவுரை கூறிப் பதுங்கு வதைக் காட்டிலும் வேறு என்ன சமாதான மிவரெமக்குச் சொல்லப் போகின்றார்? இவரது மதத்தின் றொடக்கம் ஆதிகமும், முடிவு நாதிகமுமாம். நாதிகப் படுகுழியின் வாயை ஆதிக மூடியா லலங்காரஞ் செய்திருப்பதால் இவரையொத்த சாமானியர்கள் அதில் வீழ்ந்து வாழ நேர்ந்ததெனவறிக. சுகமாய் வாழட்டும். நிற்க. இவர் தனக்கு வரப் போகிற கதியை யறியாமல் தன் எதிரியை இந்த முழுநாதிகர் என்று கைகூசாதெழுதியது. இவரதுவிசார புத்திக்கொத்ததேயாம். பதிபசு பாச பதார்த்தத் திரயங்களில் பாசமாகிய ஜகத்துமாத்திரம் உள் பொரு ளென்றும், ஏனையிரண்டு மில்பொருள்களென்றுஞ் சொல்லும் உலகாயதனுக்குத் தம்பியாய்ப் பசுவாகிய ஆன்மா மாத்திர முள்பொருளென்றும், ஏனையிரண்டு மில்பொருள் களென்றும் மாயாவாதமதம் பற்றிக் கூறுமிவருக்குப் புத்தி யிருந்தால், தன்னை ஆதிகரென்றும், சைவர்களை நாதிகரென்றுஞ் சொல்லாரென்க. மூன்று பொருள்களில் ஒன்றற்கே அதித்வ மொப்பிய உலகாயதனை நாதிக னென்பது போலவேயன்றோ அவனைப்போல ஒரு பொருளினுக்கே (ஜநநமரண துக்க பந்தத்தில் வருந்தும் பொருளுக்கே) அதித்வ மொப்பிய மாயாவாதியாகிய இவரையும் நாதிக ரென்றிடல் வேண்டும்? உலகாயதன் பாசத்தையேற்று மற்றவைகளுக்கு அதித்வ மொப்பாதது போல, இந்தப் பூர்வ பட்சி பசுவையேற்று மற்றவை களுக்கு அதித்வ மொப்பா மையால் நாதிகசிரோமணி யாய்த் தலைமைபெற்றோங் கினாரென்பதி லோராசங்கையு மின்றென்க. பதிபசுபாச மெனப் பெயரிய உள்பொருள்கள் மூன்றில் ஒன்றினையும் இல் பொருளென்று கூறாமல் மூன்று முள்பொருள் களென்று கூறும் (முழு ஆதிக) சைவரிடம் ஆதிகப் பிச்சையேற்று இந்தப் பூர்வபட்சி க்ஷேமமடையத் தக்க புண்ணியம் இந்த ஜந்மத்திற் கிடைக்குமோ, எப்படியோ அறியேம். இனி யிவரொருகால் (உள்பொருள் ஒன்றே, மூன்று பொருள்களில்லை, அதனால் யாம் ஒரு பொருளுக்கே அதித்வமொப்பினோம், ஆகையால் யாமே ஆதிகர் என்று வாதிக்கலாம். இவருடைய தமையனாகிய உலகாயதனு மிப்படியே சொல்லுகிறானாகையால், இவருடைய வார்த் தைக்குக் கனமில்லையென்றறிக. தமையான்- தம்பிகளாகிய இவ்விருவரில் பெரியவனே புத்திசாலியாய்த் தோன்று கிறான். எங்ஙனமெனின், அவன் ஒரே பொருள் உள்ளது என்று முதல் கூறியதினின்றும் புரண்டு பேசுகிறதில்லை. ஜகத்தையேயன்றி ஜீவபரங்களை மறந்துங்கூறான். சின்னவனுக்குச் சின்ன புத்தியே யிருப்பதால், ஒரே பொருளுள்ளது என்று முதல் கூறிய தினின்றும் புரண்டு ஜகஜீவபரங்களையும், புண்ணிய பாவங் களையும், சொர்க்க நரகங்களையும் உள்பொருள்களென்று சில சமயங்களில் பிரதாபித்து மானமழிகிறான். இவனெப் படியோ ஒரே பொருளைச் சாதிப்பவனாகலாம்? அல்லது மூன்று பொருள்களைச் சாதிப்பவனென்று தானிவனை யெப்படிச் சொல்லலாம்? இவனது வார்த்தை நிலையில்லாத மூடவார்த்தை யேயாம். இத்தகைய அஸங்காத்ம வாதத்தைக் கடைப்பிடித் தெழுந்து பூர்வபட்சி மானமழிவது அதிகபரிதாப மென்க. இப்படி யிவரெழுதும் ஒவ்வொன்றும் கல்லின்மேற் போட்ட கலமாயுடைபடுகின்றமையால், இவர் முதலிலெடுத் துக் கொண்ட வியாபகத்வாதிகளின் விசாரணை இவரது அந்ததமசின்பாலதாக முடிந்து நிஷ்பலமாகியதுணர்க. நிற்க. இவர் இவரது சுவடியி னோர் மூலையில் கடவுள் உள்ளும் புறம்புங் கலந்து நிற்பர் என்று சொல்வது பிசகென்றும், அப்படிச் சொல்வதனால் அவர் இடையில் இல்லையென்றாகிற தன்றோ வென்றும் தமதுவல்லபந் தோன்றப் பிரசங்கித்திருக்கின்றார். சுருதிஎன்று கூறியதன் பொருளென்னை? நாராயணர் உள்ளும் வெளியுங் கலந்திருக்கின்றாரென்று வேதங் கூறியது பிசகாயின், இவரது மதம் என்னாவது? சுருதி இப்படி யிருக்கு மென்று இவரறியார். அதட்டியாள அறிஞரில்லாவிடின் (கிறித வர்கள் தங்கள் விவிலிய நூலை அடிக்கடி மாற்றி யெழுதுவது போல) இவரும் சுருதியைத் தமதிஷ்டம் போல மாற்றி யெழுதவுந் துணிவார் போலும். வேதநிந்தகராய் வெளிப் பட்ட இவரது அவலப் பிரசங்கத்தை ஸாதுக்கள் தியஜிப்ப ரென்க. அன்றியுமிவர் எள்ளிலெண்ணெய் போற் கடவு ளெங்கும் நிறைந்திருக்கின்றா ரென்பதையுந் தமதூத்தைவாய் திறந்து நிந்திக்கின்றார். என்றும்என்றும் சுருதிகூறியதுண ராமல் துஷ்டத்தனஞ் செய்யும் பசுப்பிராய ரிவரென்றொதுக் குவதைக் காட்டிலும் விவேகிகள் வேறொன்றுஞ் செய்யா ரென்க. எள்ளிலெண்ணெய்போலும், தயிரில் நெய்போலும், பாலில் நெய்போலும் பரமன் விளங்குகின்றானென்று ஒவ்வொரு காரணம்பற்றி வேத முரைக்கும் போதமுணர்ந்து குணப்படாமல் யானைகொழுத்து அடையுங் கதியை இவரடைந்ததால் நாமென்ன செய்யலாம்? வேதபாகிய ரென்று விலக்குவதே விவேகமாம். நிற்க. மேலே யாமுதகரித்த சுருதிகளில் என்னும் வாக்கியம் கடவுளென்கிற தானத்தில் ஆன்மா என்று பிரதாபித்தது. இதனால் கடவுள் ஆன்மா என்னுஞ் சொற்கள் ஒரே பொருளை விளக்கினவென்று ஏற்படுகின்றது. இனி இது கொண்டு கடவுளென்பதற்குப் பதிலாக ஆன்மா என்னுஞ் சொல்லையே யாண்டும் வழங்கலாமெனின், அது கூடாது. ஏனெனின், நாம் ஆன்மாவினருளைப் பெறவேண்டுமென்று ஒருவருஞ் சொல் லார். ஏன் சொல்லாரெனின், கூறுதும். உடலை யியக்குவது உயிர். உயிரையியக்குவது கடவுள். இயக்கும் பொருளுக்கு ஆன்மா என்று பெயர். உடலை யியக்குகையால் உயிரை ஆன்மா என்றும், உயிரை யியக்கு கையால் கடவுளை ஆன்மா என்றும் வேதாதிகள் கூறும். உயிருக்கும் கடவுளுக்கும் ஆன்மா என்னும் பெயர் வழங்கி வரினும் உயிராகிய ஆன்மாவிலும் கடவுளாகிய ஆன்மா வினது விசிட்டம்போதரக் கடவுளைப் பரமான்மாவென்று சர்வகலைகளுஞ் சாற்றும். ஆன்மா-பரமான்மா என்றும் அல்லது ஜீவான்மா-பரமான்மா என்றும் வேதவித்யா பாரங்கசீலர் விளம்புமருமை புன்மக்களறியாரென்க. கடவுளுக்குப்பரமான்மா என்னும் பெயர் சிறந்தமையால் அவரை ஆன்மா என்று சாதாரணமாய்க் கூறார் மேன் மக்களென்க. பரமான்மா நம்மைரக்ஷிப்பார் என்பதேயன்றி ஆன்மா நம்மை ரக்ஷிக்கட்டும் என்பது மரபறிந்தார்க்குடம்பாடாகாதென்க. ஆன்மாவையே கடவுள் என்று கொண் டால் பரமான்மாவை எதுவாகக் கொள்ளது? ஆன்மா அருளைப் பெறுவதும், பரமான்மா அருளைப் புரிவது மாகியதன்மைகளை யுடையனவாம். ஆன்மாவே கடவுளா னால், அது யாருக்கு அருள் புரியத்தக்கது? ஆன்மாவாகிய தனக்குக் கடவுளாகிய தான் அருள் புரிந்திடும் போலும். இது தன்னுடையதோளில் தானேயேறி விளையாடிய தோடொக்கு மென்க. தன்னிற்றன்னைத் தானேகாணல், கண்ணிற்கண்ணைக் காணவும்படுமே என்று கழித்தனரிதனைச் சைவத் தலைவ ரென்க. அன்றியும், சுருதி என்று கூறி என்று முடிவு கூறியது. இதில் ஆத்மாவும் அந்தராத் மாவும் அநாசிரய பதார்த்தங்க ளென்று வர்ஜிக்கப்பட்டன. இங்ஙனமாக, ஆன்மாவே பரவதுவா யிடுதல் எங்ஙனோ சிறக்கும்? அன்றி, ஆன்மாவும் பரமான்மாவும் ஒன்றாயிடுதலும் யாங்ஙனோ நிலைக்கும்? இவ்வாறு பகுத்துணருமறிவிழந்த பூர்வபட்சியார் ஆன்மா வைத் தவிரப் பிரமமில்லை யென்பதிற் குற்றமென்ன என்றும், அதத்தைத் தவிரக் கையில்லையென்றால் அது குற்றமா என்றும், ஆன்மா என்கிற சொல் பிரமத்துக்குப் பரியாய நாம மென விவரமறியாது போனால் அத்வைதிகளுக் காகவேண்டுவ தென்ன என்றும் தமதாபாசத்தைச் சோனை மாரியாகப் பொழிந்தார். பிரமத்துக்கு மாத்திரமே ஆன்மா என்னும் பேர் சிறவாமல் ஜீவனுக்கும் அது சிறந்தமையால் இவரது முதல் வாக்கியம் முதலறுந்தழிந்தது. அதம்- கைபோலாகாமல் சிவசீவர்கள் சூத்ரதாரி-பதுமை போல விஜாதியான இரு பொருள்களாகத் துணியப்பட்டமையால் இவரது இரண்டாவது வாக்கியம் இடுப்பொடிந்து வீழ்ந்தது. ஆன்மா என்கிற சொல் ஜீவனுக்குப் பரியாயமும், பரமான்மா என்கிற சொல் பிரமத்துக்குப் பரியாயமுமாயிடுதல் சித்தமாயின மையால் இவரது மூன்றாவது வாக்கியமும் முகங்கவிழ்ந்து போயிற்று. ஆன்மா என்கிற சொல் கடவுள் என்று பொருள் படுவதாகச் சிலவசனங்களை இவரெழுதிக் காட்டியிருக் கின்றார். அவ்வான்மா பரமான்மாவேயாம். அது ஜீவான்ம பரமாகா தென்க. இடத்துக்குத் தக்கவாறன்றோ பொருள் கொள்ள வேண்டும்? யாகோப யோகமானபசுவை யூபத்திற் கட்டினான் என்று பிரதாபமுண்டாகுகையில் அதனை ஆடு என்பதேயன்றிக் கழுதையென்று கோடலமை யாது, ஆன்மா உலகில் நிறைந்து எல்லாவற்றையும் இயக்குகின்றது என்கையில் அது ஜீவான்மா என்றிடல் கூடாது. பரமான்மா என்றிடலே தகுதியாம். அன்றியும், இரண்டான் மாவு மொன்றென்றலும் அஸங்கதமாம். ஆடும் கழுதையும் பசு என்னும் பெயர் பெற்றது கொண்டே இரண்டும் ஒன்றா யிடுதல் ஸம்பா விதமோ? இவ்வாறு பகுத்துணர்வா ரவைக் கண்ணே பூர்வபட்சி யெழுதிக்காட்டிய வசனங்கள் அவரது பட்சத்துக்கு அநுபயோகமாயினவென்று தீர்மானம் பெறுதலே சித்தமொன்றுணர்க. அன்றி, வேறொரு சமாதான மும் ஈண்டுக் கூறுகின்றோம். வேதமானது என்றும் என்றுங் கூறுகின்றது. இப்ப டியே ஜீவன் அல்லது ஆன்மா பிரஹ்மமென்று கூறுதலுமாம். ஆன்மாவினிடத்தில் பிரஹ்மத்வாரோபணமே ஆண்டமை வுடைத்து. அன்னமுதலிய பொருள்களிடத்தும் நாராயணரிடத் துமே உபசார வழக்கு நிலைபெறுமாயின், கேவலம் மலபத்த ஜந்துவாகிய ஆன்மாவினிடத்தில் பிரஹ்மத் வஸமர்த்தநம் உபசாரமென்றிடற்கு ஐயமுளதேயோ? வேத மானது ஒரு பொருளைக் காரணவது வாகக் கூறும். அதனை யப்படியே நிறுத்தாது பின்னர்ப் பூர்வபட்சப் படுத்தி வேறொரு வது வைக் காரணப்பொருளென்று கூறுவதுண்டு. அதனையும் முற்படிப் பூர்வபட்சப்படுத்தி வேறொரு பொருளைக் காரண வதுவென்று கூறுவதுண்டு. இப்படியே யொன்றன் மேலொன்று காரணவதுவென்று வந்து கொண்டிருக்கும். பூர்வ பட்சமாகாமல் நிலைத்த சித்தாந்த வது சிவ பரஞ்சுட ரொன்றேயாம். வேதத்தின் இவ்வுண்மை போத ரவே பூதங் களல்லபொறியல்லவேறு புலனல்லவுள்ள மதியின் பேதங் களல்லவிவையன்றிநின்ற பிறிதல்லவென்று பெருநூல் - வேதங்கிடந்து தடுமாறும் வஞ்சவெளியென்ப கூடன் மறுகிற் - பாதங்கணோவ வளை யிந்தனா திபகர் வாரையாயுமவரே என்று விரிந்தனர் சைவப் பெரியோரென்க. இதில் பிறிதல்ல என்றதே ஆன்மாவை நிஷேதித்தபடியாம். இதிற்றானே இந்திரவாதி - சந்திரவாதி - சூரியவாதி- ஹிரண்ய கர்ப்பவாதி - வாசுதேவபரமாத்மவாதி முதலினோரது மதங் களடங்கும். இந்த மதவாதிகள் ஆன்மாவாகிய தன்னையும், பிறவான்மாக் களாகிய இந்திராதி களையும் பிரஹ்மமென்று பிரமித்து வாதிட லால் இன்னோர் யாவரையும் பசுக்கள் பரமென்று கொண்டவராகக் கழித்த படியாம். மேலே தொடங்கிய பூதங்களல்ல என்றதுமுதல் மதியின்பேதங் களல்ல என்றதுவரையில் பூதவாதி முதல் அந்தக் கரண வாதியீறாகப் பாச காரியங்களைப் பரமென்று கூறியவர்களை நிஷேதித்தபடியாம். இந்த வாதிகள் கொண்ட பொருள்கள் ஜடமாகையால், இவற்றில் வேறு பிரித்துக் காட்ட வேண்டிச் சித்தாகிய ஆன்மாவைக் கூறும் வாதிமதத்தை இவையன்றி நின்ற பிறிது என்று விளக்கிய படியாம். இப்படி விசாரிப்பவரது சந்நிதியில் ஆன்மபரமான சுருதிகள் பூர்வபட்சமாயடங்குதலே சால்புடைத்தாமாறறிக. இப்படியிவர் தொடுக்கும் ஒவ்வொரு வாதமும் சூரியன் முன்னர் மின்மினிப்போ லடங்குதலால், இவரது துர்வாதத்தில் அறிவுடையோர் மயங்காரென்க. ஸதஸத்விசாரம் இனி, இவர் சத்து-அசத்து-சகசத்துக்களின் றன்மையை விசாரித்த பகுதியைச் சிறிது ஆராய்வாம். இவர் ஜீவன் எப்படி அநாதிநித்தியம் என்று ஆசங்கையெழுப்பி, சத்தாய் அநாதி நித்தியமா? அசத்தாய் அநாதிநித்தியமா? சதசத்தாய் அநாதி நித்தியமா? என்று தமதறிவினகலத்தை விரித்து அதற்குமேல் மூன்று விதமும் பிழைபடுவனவாகச் சில நியாயங்காட்டினார். இப்படி முடித்தவர் இவவளவவலக்ஷணமுள்ள மதத்திற் புத்தியின்றிப் பிரவேசித்தும், வாயுங்கையு மாத்திரம் வெகு நீட்சியா யிருக்கின்றன என்று தூஷித்துத் தமதடக்கத்தை வெளியிட்டுக் கொண்டனர். இவர் சத்து-அசத்து-சதசத்து என்னுஞ் சொற்களை யங்கீகரித்தேயன்றோ எம்மைக் கடாயினார்? அம்மூன்று சொற்களுக்கும் உண்மை யானபொரு ளிவரறிந்திருந்தால் அசத்தென்பது இல்லை யென்று பொருள்படும் எனவும், சதசத்தோ அது உண்மை யில்அசத்தேயாகும் எனவும் பிதற்ற இடமிராது. அசத்தும் சதசத்தும் ஒரு பொருளிலேயே நின்று பயன்செய்வன வாயின், அசத்தென்னுஞ் சொல்லொன்றே போதும். சதசத்தென்னுஞ் சொல்லுக்குப் பிரயோசனமில்லையாம். அசத்து-சதசத்து என்னுஞ் சொற்கள் தாமரை - கமலம் என்பன போலப் பரியாயச் சொற்களாயிடின், இவரது பிரசங்கம் ஒருவாறு தலைதூக்கும். அவைகளை இவர் பரியாயமாகக் கொண்டிருந் தால், அசத்தா -சதசத்தா என்று அச்சொற்களை வேறு படுத்திக் கடாவுதல் செய்யாரென்க. சொற்பாகுபாடு ணரமாட்டாத இவ்வந்தகர் அவற்றின் பொருட் டிறமுணர் தலும், அதற்குமேல் அவற்றை மறுத்திடலும் விந்தையாகாது வேறியாதாம்? அன்றியும், இவர் சத்து உள்பொருள், அசத்து இல்பொருள், சதசத்து உள்ளதுமில்லதுமாகிய பொருள் என்று பொருள்கொண்டு தடுமாறியே சதசத்து உண்மையில் அசத்தேயாமென்று பிதற்றி யோய்ந்தார். இலதாகிய பொருளும், உளதுமிலது மாகிய பொருளு முண்டென் பாரது அவிவேகத்தைச் சுட்டெரிக்க எம்மால் முடியாதென்க. இந்தச் சொற்களின் பாகுபாடினைத் தெனச் சைவ சித்தாந்த முறைப்படிப் பின்னே கூறுதும். நிற்க. ஈண்டிவர் தொடுத்த (ஆன்மா சத்தானநித்தியமா? அசத்தான நித்தியமா? சதசத்தான நித்தியமா?) என்னும் வாதத்தை முதல் விசாரித்தொழிப்பாம். சத்தான நித்தியம்- அசத்தான நித்தியம் - சதசத்தான நித்தியம் என்னும் மூவித நித்தியங்களையும் ஆன்மாவுக்கொப்பிய சைவ நூற்கள் யாவை? இவ்வாறு சைவ நூல்கள் கூறுமாயினன்றோ இவர் சைவ நலத்தைத் தூஷிக்கமுந்தலாம்? ஆன்மா நித்தியம் என்றபிறகு அதனைத் சத்தென்பதொழிய (இவர் கொண்ட பொருள்களை யேற்று) அசத்து-சதசத்து என்று எந்த மூடனுஞ் சொல்லத் துணியானென்க. நித்தம் என்பதும் சத்து என்பதும் ஒரு பொருளிலேயே பரிவஸானத்தையடைவ திவரறியாமலே மருண்டுவாய்திறந்து அவலக்ஷண பிரசினைகளைச் செய்தா ரென்க. இவர்செய்த அசாதிரீய பிரசினைகளை இவரது பிரமத்தின் மேலேற்றிக் காட்டினால், அப்போது இவரது மந்தபுத்தியில் தமதுமதியீனம் நன்கு புலப்படும். இவர் பிரமம் சத்தென்று கூறுகையில், இவரை யொரு நிர்மூடன் அந்தப் பிரமம் நித்தியமானசத்தா? அநித்தியமானசத்தா? நித்தியா நித்தியமானசத்தா? என்று கேட்டதாகக் கொள்வோம். அவனுக்கும், அவனது மூத்த தமையனாகிய இவருக்கும் பேத மென்னையோ? இப்படி வெறுஞ்சொற்களைத் தொடர்ப் படுத்தித் தெரியாதவரை யெல்லாம் ஏனோ இடர்ப்படுத்த வேண்டும்? பதி-பசு-பாசம் என்னும் .இம்மூன்றுந் தனித்தனி யுள்பொருள்களே யாகை யால், இந்த மும் முதல்களும் சத்துப் பொருள்களேயாம். மூன்றுஞ் சத்துப் பொருளாகுகையில், சிவத்தைச் சத்தென்றும், பாசத்தை அசத்தென்றும், சீவனைச் சதசத்தென்றுஞ் சைவ நூல்கள் கூறுமா றென்னையெனின், அதனை விளக்குதும். சத்து, உள்பொருள். இது சிவம். இது தன்மை மாறாதிருப்பது. எனவே ஒரு விகாரத்தையு மெய்தாமலிருப்பது. அசத்து, சத்துப் போன்ற தல்லாமலிருப்பது, இது பாசம். இது தன்மை மாறிக் கொண்டிருப்பது. எனவே விகாரத்தை யடைந்து பொண்டே யிருப்பது. இது விகாரித்து வருதலே தநுகரண புவனபோகங் களாம். சத்து - அசத்து என்பன பிராமணன் - அப்பிராமணன் என்பவை போன்றனவாம். பிராமணன் பிராமணத்தன்மை மாறாதவன். அப்பிராமணன் பிராமணத்தன்மை மாறினவன். இப்படியே சத்தசத்துக்களையும் அறிந்திடுவர் மேலோரென்க. அப்பிராமணன் என்றவிடத்துப் பிராமணத்துவம் விட்டொழி யாதிருப்பது சத்திய மாயினவாறுபோல, அசத்தென்றவிடத்துச் சத்துத்தன்மை விட்டொழியா திருப்பது சத்தியமாயினவாறறிக. அப்பிராமணன் என்ற விடத்தில் பிராமணனது அபாவமென்று பொருள்பட்டு ஆளில்லாமை சிறக்குமாயின், அசத்தென்ற விடத்தில் சத்தினது அபாவமென்று பொருள்பட்டு ஒரு பொருளு மில்லாமை சிறந்திடுமென்க. இவ்வுண்மை தேராது சத்து உள் பொருள், அசத்து இல்பொருள் அல்லது சூனியப் பொருள் என்று விசங்கிப்பாரது மதம் அசத்தின் பாற்பட்ட தெனலே அமைவுடைத்து, இனிச் சதசத்து - சத்தைப் போல் தன்மை மாறாமலும், அசத்தைப் போல் தன்மை மாறிக் கொண்டும் இருப்பது. இது ஜீவன் அல்லது ஆன்மா என்று சொல்லப் படும். இந்தச் சீவன் சத்தையும் அசத்தையுஞ் சார்ந்து சத்தைச்சார்ந்த போது சத்தாயும், அசத்தைச் சார்ந்த போது அசத்தாயும் விளங்குகின்றானாகையால், இவனைச் சதசத்தென்று கூறியது அமைதியாம். அசத்தாகிய பாசத்தைச் சார்ந்து அவ்வசத்து விகாரப்படும் போது, அவ்விகாரங் களாகிய புல் - பூடு - புழு - மரமுதலிய தொடங் கிற்பட்டு உழன்று கொண்டு புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி பிறவுமாகிப் பிறந்து அவ்வசத்தினது விகாரத்தைத் தானும் மருவலால் ஆன்மாவினது பந்தநிலையை நோக்கி அதனை அசத்தென்ற படியாம். இவ்வான்மாத்தானே பந்த நிவர்த்தியிற் சித்தினது திருவடியைச் சாரும்போது, அச்சிவம் ஒரு விகாரத்தையும் மருவாமல் இன்பவடிவாய மர்ந்திருத்தல் போலத் திருவடிப் பேறு கைகூடி யொரு விகாரத்தையும் மருவாமையாகிய (பிறந் திறந்துழ லாமையாகிய) முத்தி நிலையை நோக்கி அதனைச் சத்தென்ற படியாம். இதனால் ஆன்மாவைச் சதசத்தென்ற வுண்மை யினைத்தென்று வெளிப்பட்டது. இவ்வாறு தெளிந்தாரவைக் கண்ணே, சத்து உள் பொருள், அசத்து இல்பொருள், சதசத்து உள்ளது மில்லதுமாகிய பொருள் என்று பூர்வபட்சி செய்து கொண்ட வியாக்யானம் துச்சமா யொதுங்குமென்க. இவரது அபசித்தாந்தம் நிலை பெறுவ தாயின், சத்து என்னும் ஒரு சொல்லேயன்றி, அசத்து-சதசத்து என்னுஞ் சொற்கள் சசவிஷாணம் என்னுஞ் சொல்லோடினப் பட்டுப் பொருளில்லாத புன்சொற்களா யழிவது மரபா மென்றுணர்க. அன்றியும், எஞ்சிநின்ற சத்து என்னுஞ் சொல்லை யுச்சரித்தற் காளில்லாமையும், அதனால் அச்சத்து என்னுஞ் சொல்லும் பயன்படாமையெய்தி யழிந் தமையும் பெறப்படலால், அச்சொற்குப் பொருளாகிய சிவமும் இல்பொருளாகிப் பரமநாதிகப் பாஷண்ட ஞானமே தலை தூக்குமென்றறிக. நிற்க. இவர்காட்டிய மூவிதநித்தியங்களில், அசத்தான நித்தியம், சதசத்தானநித்தயம் என்பவைகளின் விபரீதப் பொருள்களை இதுகாறும் விலக்கிச் சத்தான நித்தியத்தை விடுத்திருந்தோ மாகையால், அதனையும் ஈண்டெடுத்து விசாரித்து முடிவு கூறுவாமென்க. இவர் கொண்ட பொரு ளில் அசத்தான நித்தியம் என்று ஆன்மாவைச் சைவ சித்தாந்திகள் கூறாமையை யாம் விதந்ததுநிற்க, வேறு சித்தாந்தி களாவது எமது ஆன்மா சத்தான நித்தியம் - அசத்தான நித்தியம் - சதசத்தான நித்தியம் என்று தனித்தனிக்கூறிச் சாதிப்பதுண்டாயினன்றோ இவரவை களை மறுத்துச் செய்த து.ஷ்டப்பிரசங்கத்துக்கு ஒரு கௌரவ முண்டா கலாம்? ஒருவர் சித்தாந்தத்தையுந் தாக்கவலியற்ற மூட பிரசினைகள் செய்து வீண்சொற்களை நிரப்பி, அவைகளை மறுப்பதாகப் பயனில்லாத துடுக்கு வார்த்தைகளைப் பரப்பி இவர் செய்த ஜாலவித்தை இவரினத்தவர்க்கே பயன்பட்டு க்ஷேமமுண்டு பண்ணட்டும். இனியிவர் சத்தான நித்தியமா ஆன்மா? என்று கடாவி மறுத்த பகுதியையும் வெட்டிச் சாய்த்து ஸாதுக்கள் சந்தோஷிக்கச்செய்வாமென்க. ஜீவனை சத்தாய் நித்திய மென்பாராயின், அநாதிசத்தாகியசிவன் பரிபூரண ராகலின், அந்தப் பரிபூரணத்தில் மற்றொரு சத்துப் பொருளி ருத்தல் கூடாது என்று தருக்கியதே இவரது ஆசங்கையாம். இவர் சத்து நித்தியமென்று கொண்ட (சிவன் என்னும்) பொருள் பரிபூரணமாயித்தலே ஜீவனது சத்திய நித்தியத்வத்தை விரோதிக்கின்றது என்பது இவரதுமதம். இனிப் பரிபூரணம் என்பது நிறைவு என்று பொருள்படும். இதனால் சிவம் தானேயெல்லாமாய் நிறைந்திருப்ப தெனவும், அதில் இன்னுமொருபொருளிருத்தற் கிடமில்லை யெனவும், அப்படி யிருப்பதாயின், சிவமில்லாதவிடத்தில் அது இருக்க வேண்டு மெனவும், இரண்டு பொருள்களில் ஒன்றிருந்த விடத்தி லொன்றிருக்க மாட்டாதெனவும், ஆகை யால் ஜீவன் சத்தான நித்தியமென்றல் கூடாதெனவும் பூர்வபட்சி மதம் வியக்த மாகின்றது. இதிலுள்ள வாபாசத்தை இனி விரிப்பாம். இவர் சிவம் சத்து-நித்தியமென்று கூறிய வரையில் எமக்காக்ஷேப மில்லை. பின்னர் பரிபூரணமென்று கூறியது இவர் மதத்தை வெட்டிக் கீழே புதைக்கத் தேடிக் கொண்ட தொடுகருவி (மண்வெட்டி) யாயதென்.க எங்ஙன மெனின், பரிபூரண மென்றபோது அதில், சிவம்-ஜீவன்-பாசம் என்னும் மூன்று மடங்கின. இவற்றுள் சிவம் நிற்க, ஜீவன் எண்ணிறந்தன. பாசம் திரிவிதம்; அன்றியும், தநுகரண புவனபோக காரியரூபங்களு மவையாம். இவையெல்லாஞ் சேர்ந்தே சிவபரிபூரணமென்ப திவரது மதம். சிவனே இப்படியெல்லா மாயினாரென்ப திதன் முடிவு. இவ்வாறு கூறும் அபசித்தாந்தியை நோக்கி நிர்மல சித்தாகிய சிவம் மலினசித்தாகிய ஜீவனாதலும், கேவலம் ஜடமாகிய உலகமாதலும் யாங்ஙனமென்று கடாயினார்க்கு இவர் இரண்டுவித சமாதானங் கூறியிருக்கின்றார். அவற்றுள் விஜாதியான இரண்டு பொருள்கள் ஒன்றிலொன்று பிறக்கு மென்பதொன்றும், பிரமம் எல்லாமாய் விரிந்த தென்னின் பொருளாய் விரிந்ததென்பது அத்வைதிகளுடைய சித்தாந்தமன்று. கயிறு அரவாயிற்று. கானல் நீராயிற்று. இந்திர ஜாலசத்தி பலபொருளாயிற்று. மனம் சொப்பன வுலகாயிற்று என்பதில் கயிறு முதலியன அரவு முதலிய வாதல் தோற்றமேயன்றிப் பொருளல்ல. இது தான் அத்வைதிகளுடைய சித்தாந்தம் என்று செருக்கு மீதூரத் தருக்கிய தொன்றுமாம். இந்தச் சமாதானங்களில் முதற்சமா தானத்தை மொட்டையடித்துக் கரும்புள்ளி செம்புள்ளிகுத்தி முன்னமே தானே விநோதக்காட்சி மந்திரத்தில் வேடிக்கை பார்க்க வைத்து விட்டோம். ஈங்கு இனி அவரது இரண்டாவது சமாதானத்துக்குஞ் செய்வன திருந்தச் செய்து ஒழுங்கு செய்வாமென்க. இவர் பிரமம்பரிபூரணம் என்பதற்கு அது பொருளாய் விரிந்ததின்றெனவும், தோற்ற மாத்திரமாய் விளங்குகின்றது எனவும் பொருள் கொண்டதாகத் தெரிகின்றது. விஜாதியான பொருள்கள் ஒன்றிலொன்று பிறக்குமென்று இவர் முதற் கூறிய சமாதானத்தில் பரிபூரணம் பொருளாகவே விரிந்தது என்றேற் படுகின்றது. இவ்விரண்டும் ஒன்றையொன்று உதைத்துத் தள்ளுகிறதோடு, முந்தியதை யாம் முகங்கவிழச் செய்தது யாவருமறிவார்கள். இந்த இரண்டாவது சமா தானத்தில் பரிபூரணம் தோற்றமென்று இவர் கூறியதும் அசங்கதமேயாம். யாங்ஙனமெனின், இவர் தோற்ற ஸமாதானங்கூறியது எப்போது? நிர்மலசேதனமாகிய பிரமம் மலினசேதனமாகிய ஜீவனாகவும், ஜடப் பிரபஞ்சமாகவும் விரிந்தவாறு யாங்ஙன மென்று யாம் கடாவியபோதே யன்றோ? பிரமம் பொருளாய் (விஜாதிப் பொருள்களாய்) விரிந்ததென்பதிலுண்டாகிய தோஷமே வெறுந்தோற்றத் திலும் சம்பவித்திருப்பதை யிவருக்கிப் போது காட்டுகிறோம். பிரமம் நிர்மலமான ஒரு தன்மையுடையது. அதில் அதற்கு விஜாதியான மலினசேதனத் தோற்றமும், ஜடப் பிரபஞ்சத் தோற்றமு முண்டாமாறு யாங்ஙனம்? பிரமத்தினிடத்தில் யாருக்கு இவ்விதத்தோற்ற முண்டாகியது என்பதற்கு இவரது மதத்தில் சமாதானங் கிடைப்பதரிதாய் விட்டது. நிற்க. கயிறு அரவாய் விரிந்தது எனவும், அது பொருளாக விரியாமல் தோற்ற மாத்திரமாய் விரிந்தது எனவும், இவரே விரித்துக் காட்டினாரன்றோ? கயிறு எப்படி யிருந்ததோ, அப்படியே யன்றோ அரவின் றோற்றத் தையும் நாம் காண்கிறோம்? கயிற்றில் அரவின்றோற்ற மன்றிக் குதிரையின்றோற்றம்-மயிலின்றோற்ற முதலியவைகளை யாராவது காண்ப துண்டா? இங்ஙனமாக, பிரமத்தினிடத்தில் ஒருவிதமான தோற்றத்தை இருவிதமான (விஜாதியான) தோற்றத்தைப் பிரசங்கிப்பதன்றி இந்தப் பூர்வபட்சியார் பிரசங்கித்தவா றென்னை? கயிறு நீளமா யிருந்தால் பாம்பு நீளமாகத் தோன்றும். கயிறு சுருட்டிக் கொண்டிருந்தால் பாம்பு சுருட்டிக் கொண்டிருந்தவாறு தோன்றும். கயிறு வெள்ளை யாயிருந்தால் அது வெள்ளைப் பாம்பாகத் தோன்றும். கயிறு கறுப்பாயிருந்ததால் அது கறுத்த பாம்பாகத் தோன்றும். கட்டையினிடத்திற் கள்வன் தோன் றுவன். கட்டை யினிடத்திற் பாம்பு தோன்றுமா? கயிற்றினி டத்திற் பாம்பு தோன்றியவாறு அதனிடத்திற் கள்வன் தோன்றுவனா? எது எப்படி யிருக்கிறதோ அதனிடத்தில் அப்படியே தோற்ற முண்டாயிடுதல் அநுபவமாகவும், இதற்கு விரோதமாக நிர்விகாரமாகிய பிரமத்தினிடத்தில் விகார வடிவங்களாகிய சிற்சடப் பிரபஞ்சந் தோற்றமாகக் காணப் படுகின்றது என்னும் அஸங்காத்ம வாதம் எங்ஙனோமணம் பெறும்? அன்றியுங் கயிறு குட்டையாயின் சிறிய பாம்பும், நெட்டை யாயின் பெரிய பாம்புந் தோற்றமாம். கயிறு எவ்வளவு பரிமா ணமோ அந்த அளவுக்கதிகமாகப் பாம்பிறோற்ற முண்டா காது. இந்த வுபமானத்தால் பிரமத்தில் தோற்ற மாத்திரமாய் விளங்கும் சிற்சடப்பிரபஞ்சம் பிரமத்தின் பரிமாணத் தளவாயே விளங்காநிற்கும். இதனால், பிரமம் எவ்வளவு பெரிசு என்று கேட்பார்க்கு உலகம் எவ்வளவு பெரிசோ, அவ்வளவு பெரிசென்று விடை பகர்வதே இவரது தலை யெழுத்தாய் முடிந்தது. பிரமம் எப்படியிருக்குமென்று கேட் பார்க்குக் பிரபஞ்சம் எப்படி நாநாத்வமாகிய விகாரமாயிருக் கின்றதோ அப்படியிருக்கு மென்றேயன்றோ இனியிவர் விடையிறுத்தல் வேண்டும்? இவ்வநுபவத்தால் உலகத்துக்குப் பெரிசாகாமல் (ஆதீதப்படாமல்) இவ்வளவென்று அளந்தறியத்தக்க நிலையிற் கண்டப்பட்டு விகாரமாய் விளங்கும் பிரமத்தை அகண்டம் - பரிபூரணம் - நிர்விகாரம் என்று இவர் பிதற்றியதை எந்த வித்வான்க ளொப்புவார்கள்? பிரமத்தைப் போலவே உலகமும், உலகத்தைப் போலவே பிரமமும் ஒரேயளவினவாய் விளங்குத லிவரது ரஜ்ஜுஸர்ப்ப திருஷ்டாந்தத்தாலறிந்த விவேகிகளது ஸதஸில் இந்தப் புத்திமான் பிரமம் அகண்டம், பிரபஞ்சம் கண்டம் என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளும்விதம் யாதோ அறியேம். இவரது விவர்த்தவாதம் இவரைத் தெருவிலே தியங்கவிட்டு அநர்த்தவாதமாய் முடிந்தது இவரது அதிர்ஷ்ட மேயாம். இதுகாறுங் கூறிய நியாயங்களால், பிரமம் வாத வமாக உலகமாய் விரிந்ததென்னும் பரிணாமவாதமும் பிரமம் தோற்றமாக உலகாய் விரிந்ததென்றும் விவர்த்த வாதமும் பிரமத்தை யல்லற்படுத்தி அசுத்தமும், விகாரமும், கண்ட முமாக்கி அதனது பரிபூரணத்தைப் பருந்துக்கிரையாக்கி விட்ட வாய்மை வெளிப்பட்டவாறறிக. இவரது பரிபூரணம் வெறுந் தோற்றமும், தோற்றம் பொய்யுமாமென்று இவரே பிரசங் கித்தார். இதனால் பரிபூரணம் பொய்யென்பது இவரது மதமாகின்றது. இங்ஙனமாக, அனாதிசத்தாகிய சிவன் பரிபூரணராகலின் என்று இவர் பரிபூரணத்தைக் கௌர வித்தது என்னமதி? பரிபூரணம் மெய்யாயிருக்கும் பட்சத்தில், இவர் மதப்படிப் பிரமமிருந்தவிடத்தில் மற்றொரு சத்துப் பொருளிருத்தல் கூடாது. பொய்யான பரிபூரணபிரமத்துடன் (பரிபூரணமல்லாத பிரமத்துடன்) மற்றொரு சத்துப் பொருளிருத்தல் ஏன் கூடாது? இவர் தோற்றத்தையே யன்றோ பரிபூரணமென்றனர்? தோற்றத்திற்கு அதிஷ்டான மாகிய பிரமத்தை (அதிற்றோற்ற முண்டாகாதபோது) பரிபூரண மென்றனரா? இல்லையே; இல்லாதபோது அத்துடன் சத்தான நித்திய ஜீவனிருப்பை அங்கீகரிக்க மாட்டேனென்றது இவரது அகந்தையின் பயனேயாம். அன்றியும், இவர் தோற்றமாகிய பரிபூரணத்தில் மற்றொரு சத்துப் பொருளிருத்தல் கூடா தென்றது நிற்க. தோற்றத்தைக் காண்பதற்கு ஆளேற்படாத போது அத்தோற்றப் பரிபூரணம் பிரமத்திலுண்டாயதென்பது யாங்ஙனம்? உண்டாகாத பரிபூரணத்தில் மற்றொரு சத்துப் பொருளிருத்தல் கூடா தென்றது யாங்ஙனம்? இவரது அபசித்தாந்தத்தை யாமங் கீகரித்திடினும், ஆன்மாவை அல்லது ஜீவனை நித்திய மென்றிடற் கோராசங்கையுமெழ இடமில் லாமற் போயின மையால், இவரது அகந்தைக்கே வியசனப் படுகின்றனர் ஸாதுக்களென்க. அன்றியும், இவர் பிரமம் உலகமாகிய பொருளாய் விரிந்ததென்னும் வாதத்தைப் பரிணாமமென்று கண்டுகழித்தாரன்றோ? அப்பிரமம் தோற்றமாய் விரிந்த விவர்த்தவாதமே தனது சொந்தமென்று இப்போது தருக்கிய தற்கு மாறாக இந்த விவர்த்தத்தை முன்னரோ ரிடத்தில் தோற்றப் பரிணாமமென்று சொல்லித் தொலைத்தார் தோற்றத்தைப் பரிணாமமென்று இவர் கண்டு கூறிய தற்கு ஆதரவு காட்டல் வேண்டும். இப்படியே தோற்றத்தைப் பரிபூரண மென்று கூறியதற்கும் நூலாட்சி வேண்டும். இவருளறுஞ் சொல்லெல்லாம் பிரமாணமாய் விடுமா? பூர்வ மாயா வாதிகளுக்கு இவ்வித மோசவித்தைகள் தெரியா வென்க. நிற்க. சுருதி என்று போதிக்கின்றது. இதனால் ஈசனும், அநீசனாகிய ஜீவனும் ஆகிய இருவரும் பிறவாதவர் களென்று பெறப்பட்டமையால், பிறவாத ஈசன் நித்திய மாயிடுதல் போலப் பிறவாத ஜீவனும் நித்தியமாயிடுதல் சித்தமென்றுணர்க. இந்த அர்த்தத்தையே என்னுஞ் சுருதியும் பிரதி பாதித்துப் பசுவை நித்தியமென்று தாபிக்கின்றது. பசுவாகிய ஆன்மா நித்தியமாகாத போது பதியாகிய சத்துப் பொருளும். பாசமாகிய அசத்துப் பொருளும் வேத படித மாயிருத்தலில் ஒரு பயனுமின்றாம். பதியானது பாசத்தை யறியாது. பாசம் பதியையறியாது. ஒளி இருளை யறியாது. இருள் ஒளியை யறியாது. ஒளியையும் இருளையுங் கண்ணறி வது போலப் பதியையும் பாசத்தையும் பசுவே யறியுமென் றுணர்க. இந்தப் பசுவாகிய நித்தியப் பொருளும், பதியாகிய நித்தியப் பொருளுந் தம்மிற்கலந்து நிற்றலையே பரிபூரணம் என்று கூறும் வேத முதலிய கலைகளென்க. அக்கரங் களின்றா மகரவு யிரின்றேல் - இக்கிரமத்தென்னுமிருக்கு எனவும் உயிர்க ளொன்றி - நின்றனனென்றுபன்மை நிகழ்த்துவதென்னை யென்னின், அக்கரங்கடோறுஞ் சென்றிடுமகரம் போல நின்றனன் சிவனுஞ்சேர்ந்தே எனவும், அகரவுயிர் போலறி வாகியெங்கு - நிகரி லிறைநிற்கு நிறைந்து எனவும் சைவத்திரு வாளரது வாக்கியங்கள் பலவுள. இவ்வுண்மையையே அகர முதலவெழுத் தெல்லாமாதி - பகவன்முதற்றேயுலகு என்றார் திருவள்ளுவ தேவரும், ககரமெய்யை அகரவுயிர் புணர்ந்து பரிபூரணத் தன்மை யெய்திய போது க- என்று வெளிப்படும். அகரத் துக்கு ஒரு மாத்திரை யொலியும், க் -என்னும் மெய்க்கு அரை மாத்திரையொலியுமாம். ஒன்றும் அரையுங்கலந்த போது ஒன்றரை மாத்திரையாக வொலிக்காமல், க - என்னும் உயிர்மெய் அகரத்தைப் போல ஒரு மாத்திரையாகவே யொலித்திடல் அநுபவ மாம். இப்படியே சிவனையுஞ் சீவனையுமறிந்து இன்புறுவர் பெரியோரென்க. இனி அகரத்துக்கு ஒலியுண்டு. க்-என்னும் மெய்க்கும் ஒலியுண்டு. இரண்டொலியுங்கலந்து வெளி யாகும்போது அகரம் எப்படித் தன்னொலிக்கு அப்புறப் பட்டுப் போகாமல், க்-என்னுமெய்யொலியைத் தன்னில டக்கித் தனது பூரணத்தைப் பிரகாசப்படுத்திக் கொள்ளு கிறதோ, அந்தப்படியே சிவமும் ஆன்மாவுங்கலந்து வெளியாகும் போது சிவம் தனது வியாபகத்துக்கு அப்புறப்பட்டுப் போகாமல் ஆன்மவியா பகத்தைத் தன்னிலடக்கித் தனது பூரணத்தைப் பிரகாசப் படுத்தி யொளிருமென்க. இவர் ஆன்மாவினது வியாபகத்தை (காட்டன்பேல் - Cotton Bale) பருத்திப் பொதியைப் போல் ஞானம் பேசித் தடித்தனமாய் விவகரித்துத் தன்வரை யில் சந்தோஷித்துக் கொண்டது இப்போது என்னாயது? நிற்க. வேதாந்ததீபிகையென்னுஞ் சுவடியொன்றில், க-என்னு முயிர் மெய்க்கு ஒன்றரை மாத்திரை கூறாமல் ஒருமாத்திரை இலக்கண நூலார் கூறியது பிசகென்றும், அவ்வுபமானம் சிவசீவர் களிடத்திற் பொருந்தாதென்றும் பிரசங்கிக்கப் பட்டிருக்கிறது. அகத்தியம் - தொல்காப்பிய முதலிய நூல்களை யழித்து இவ்வாபாசதீபிகைக்காரர் இனியொரு இலக்கணஞ் செய்து வெளிவந்த பிறகே இவரது வாதம் கேதம் பெறாது. இவருக்குத் தோன்றிய இலக்கண நியதியைத் தள்ளி ஏனோ அந்யதா கூறினர் அகத்யாதி முனிவர்கள்? இவரெவ்வித ஜாலவித்தை செய்தாலுங் கண்ணொளியுடையார் கலங்காரென்க. நிற்க. ஆகாயமுங்காலும்போல வசைவற்ற-தேகாண் பரி பூரணம் என்ற திருவாக்கும் சிவ ஜீவர்களது பரிபூரணத்தை வெளிப்படுத்துகின்றது. ஆகாயம் பொருள், வாயுவும் பொருள். இரண்டு முதல்களுந் தம்மிற்கலந்து பொருள் கெடாமல் வர்த்திக்குந் தன்மையுணர்ந்தோர் சிவபூரணத் திலடங்கி வர்த்திக்கும் ஆன்மாவினது நித்தியவியாகபத் தன்மையில் ஓராசங்கையுங் கொள்ளாரென்க. ஆகாயமும் வாயுவும் விஜாதிகளென்பதும், ஆகாயத்தில் வாயு பிறந்ததின் றென்பதும், ஆகாயத்தில் வாயுவானது (கயிற்றிலரவுபோல) தோற்றமாகா தென்பதுமாகிய வுண்மைகளை மேலேயாம். இனிது பரிஷ் கரித்து எதிரிமதத்தை யீடழியச் செய்தோ மாகையால், பூர்வபட்சியினது புண்பட்ட சொல்லுக்கு இனிக் கௌரவ முண்டாகாதென்க. இவ்வருமைகளை அஹங்காரா வேச மின்றிப் பார்த்து மகிழாமல் பொருளில் பொருளடங்குமா வென்று பயனில் கேள்வி கேட்டுத் தனது விபரீதங்களை யெல்லாம் உபமானங்களாக்கி, அவற்றைத் தானேயாட் சேபித்துக் கொண்டு இவரிது காறும் மனப்பால் குடித்ததும், அதற்குமேல் விவர்த்வாதாநுசாரமான பரிபூரணம் நிராட் சேபமானது என்று வீண்தருக்கம் பேசியதும் இனியென் னாமோ வறியேம். இவரது தத்துவநிச்சயம் புருடர் மெச்சுந் தன்மையின தாகாமையை இன்னுங் கொஞ்சம் - விரிப்பாம். இவர் கொஞ்சம் மானியம் விட்டு வைதிகரென மெச்சிய ஸ்ரீகண்டமூர்த்திகள் சிவபரிபூரணத்தைப் பொருளாகக் கொண்டனரா? தோற்றமாகக் கொண்டனரா? ஏனைய இராமாநுஜர் முதலினோர் எவ்வாறு கொண்டார்கள்? இவர்களையும். சித்தாந்த சைவர்களைப் போலக் கேவலம் நிமித்தவாதங் கூறும் மத்துவ மதத்தவரையும் இந்த அவிவேக புஞ்சம் தெரியாதவர்களாக்கித் தனது சங்கரா சாரியருங் கண்டு கூறாத தோற்றப் பரிணாமம் - தோற்றப் பரிபூரண முதலிய ஆபாசங்களையெழுதிப்பரப்பி அஹங்காரமஹோத்ஸவங் கொண்டாடித்திரிவது காலத்தின் கொடுமையேயாம். சுருதிகள் சிவபரமாத்மாவை விசுவாதிகன்-விசுவககாரணன் - விசுவாந் தரியாமி-விசுவரூபி என்று கூறுமுண்மைகளுக்கு இந்தக்கண் ணொளியற்ற வித்வான் யாதுகதி கண்டு கூறினர்? இவற்றுள், அந்தரியாமி என்பதற்குத் தோற்றத்துக்கு அந்தரியாமி யென்பாரோ? விசுவாதிகர் = மாயாகரியதேகமெய்தாத வனெனவும், விசுவகா ரணர்=மாயை காரியப் படுதற்கு நிமித்த காரணராயிருப்ப ரெனவும், விசுவ ரூபி=மேலிருவித பிரபஞ் சங்களில் நிறைந் திருத்தலால், அந்தப் பிரபஞ்சமே திருமேனி யாக வுடையவ ரெனவும் பொருள் விரித்திடுதல் நியதமாம். விசுவகாரணன் - பிரபஞ்சோற்பத்திற்கு அபின்னநிமித்தோ பாதானமானவன் என்று பொருள் கொண்டால், விசுவாந்திரி யாமி யென்பது விரோதப்படும். அன்றியும், விசுவரூபி என்பது கூறியது கூறலாய் முடியும். விசுவம் தானேயானபோது தன்னில் தான் அந்தரியாமியாயிடுதல் கூடாதாகையால், விசுவகாரணன் - விசுவரூபி யென்பவற்றிற்கு யாம் கூறியவுரையே ஸாமஞ்சஸ மாயினவாறறிக. நமது ரஜ்ஜுஸர்ப்பபிராந்திக்காரருக்கும், மேல் சுருதிகளுக்கும் வெகு தூரமென்க. இந்தச் சுருதி களுக்குத் தப்பர்த்தங்கூறியும், அதட்டிக் கேட்டால் சுருதியும் மிச்சையென்பது வம்பளந்தும் உய்வகையிழந்து போவது அவரதியற்கையாகையால், இதை யிம்மட்டினிறுத்தி வேறொன் றினை யீண்டுவிரித்துச் சிவ பரிபூரணத்தைச் சிறந்திடச் செய்வாமென்க. பிரமத்தில் விவர்த்தமாக உலகுண்டாகியது என்றாலும், பிரமத்தின் பரிணாமம் உலகு என்றாலும், பிரமத்தினது காரியம் உலகு என்றாலும் பிரமத்துக்குப் பூரணத்வம் சித்தியாது. எங்ஙனமெனின், முதற்பட்சத்தை யோசிக்கின், நிர்விசாரமாகிய பிரமத்தினிடத்தில் விவர்த்தவிகாரங் கேட்கப்பட்டபிறகே அந்தப் பிரமத்துக்குப் பூரணத்வம் சித்திக்கின்றது. பிரமம் பரிபூரணம் என்று சாதிக்க வெழுந்து அது நிர்விகாரமென்பதை இழக்க நேர்ந்தது பரிதாபமென்க. விவர்த்தம் வெறுந் தோற்ற மாகையால் அதனிடத்தில் விகாரதோஷப்பிரதாபம் அஸப்ய மெனின், அவ்வெறுந் தோற்றத்தைப் பரிபூரண மென்று பிரசங்கிக்க வந்தது. அதனினும் அஸப்யமாகா தொழியுமோ? அன்றியும், அது தோற்றவிகாரம் என்னும் பெயர்பெறா தொழியுமோ? பூர்வபட்சி மதத்தை யங்கீகரித்த போதும் தோஷம் விலகியதின்றென்க. இன்னும் கயிறு எப்படியோ, அப்படியே பாம்பு விவர்த்தமாவது போலப் பிரமம் எப்படியோ அப்படியே உலகுவிவர்த்தமாயினதறிக. உருவமுடையதும், கோணல் முதலிய விகாரமுடையதுமான கயிற்றில் உருவம் - கோணல் முதலிய விகாரத்துடன் பாம்பினது தோற்ற முண்டாகியபடியேயன்றோ உருவமுடையதும், பல விகார முடையதுமான பிரமத்தில் உருவமுடையதும் பலவிகார முடையதுமான பிரபஞ்சத்தோற்ற முண்டாக வேண்டும்? இங்ஙனமாக, பிரமம் உருவமில்லாதது என்று விவர்த்தவாதிகள் கூறுவது விவேகமாகுமா? ஒரு விருக்ஷத்தின் சாயையை நாம் பார்ப்போம். அதன் கிளைகள் - அக் கிளைகளின் கோணல்கள் - அவற்றிலடர்த்தியாயுள்ள இலை முதலியவைகள் எப்படியோ, அப்படியே யன்றோ சாயையில் நமக்குப் புலப்படுகின்றது. மரத்தின் கிளைகள் நான்காயிருக்க அதன் சாயையில் கிளைகள் எட்டாய்த் தோன்றுமா? மரத்தின் இலைகள் அடர்த்தி யாயிருக்கச் சாயையில் இலை களில்லாமல் தோன்றுமா? நிழலிற்றோன்றிய விகார மனைத்தும் விருக்ஷத்தில் நைஜம் என்பதை மறுப்பாருண்டோ? இப்படியே உலகத்தின் றோற்ற மனைத்தும் பிரமத்தில் நைஜம் என்பதை ஏனோ மறுத்திடுவர் நியாயமுணர்ந்தோர்? பிரமத்தினிடத்தில் சத்திய விகாராதி யுருவங்களை யொப்பி மானமழிய வேண்டிய விவர்த்தவாதிகள் மூடர்களை மயக்கி, பிரமம் நிர்விகாரம் - அரூபம் - சுத்தம் - அகண்டம் என்று வாய்ஞானம் பேசித் திரிவது இனி என்னா மோ அறியேம். இப்பேயர்கள் உலகம் கண்டம், பிரமம் அகண்டம் என்பதும் இனி எங்ஙனோ ஜீவிக்கும்? உலகத்துக்கும் பிரமத்துக்கும் ஓரேயளவு தேறிய துணர்ந்தவர்கள் கண்டா கண்ட பிரதாபத்துக்கு இடங்கண்டு ணர்த்துவதெங்கே? பிரமமொரு முதலும் உலகமொரு முதலுமாக இவரொப் பாதவர். அங்ஙனமொப்பின், பிரமம் அகண்டம் - உலகம் கண்டம் என்று கூறலாம். அநந்தரம் கண்டவுலகத்தை யியக்கு தற்கு அதிலகண்ட பிரமம் வியாபித்துவர்த்திகிற தென்னும் வாதத்தையு நிகழ்த்தலாம். அப்படிக் கொன்றுங் கூறாமல் பிரமமேயுளது, அதில் விவர்த்தவுலகந் தோன்றியது, அதின் றோற்றமே பரிபூரணம் என்று புலம்பும் வாதத்தைச் சிவ பரிபூரணத்வம் எங்ஙனம் நிலைப்பிக்கும்? இவ்விவர்த்த வாதி உலகவிரிவுக்குப் பிரமத்தை அதிஷ்டானமாக வொப்பின மையால் இத் தோற்றவுலகுக் கதிகமான வியாபகத்வம் அப் பிரமத்தினிடத்தி லுண்டென்று வாதிக்க இவரான் முடியா தென்க. இதனால் பிரமம் அகண்ட பரிபூரணம் - உலகம் ஏகதேசவிவர்த்தரூபம் என்று இவர் கத்தியவாதம் இனிச் சீவிப்பது கஷ்டமாயினதறிக. நிற்க. யாம் மாயாவாதிமதக்குழப்பம் என்று பெயர் கொடுத் தெழுதியதில் ஆன்மா அல்லது பிரமம் வியாபகமுடைய தெனின், அதற்கிரண்டிரண்டாவதில்லாத போது அது வேறு எதில் வியபித்தது? எல்லாந் தானாயிடுதலே வியாபக மாகை யால் எதில் எது வியாபித்தது என்றது அடாதெனின், அப்போது வியாப்தி-வியாப்யம் என்னுஞ் சொற்களும் அவற்றின் பொருள் களும் என்னாவது அன்றியும் எல்லாந் தானாயிடுதலே வியாபகமெனின், எல்லாம் என்றது பாச பசுக்களேயாம். தான் என்றது பதியாம். இப்படியேனோ அப் பதி பசுபாசங்களாக விரிந்தது? அல்லது வியாபித்தது? பாச மாகவும் பசுவாகவும் வியாபித்தபதி ஏனோ இன்னும் (பாச பசுக்களுக்கு வேறாய) பல பொருள்களாக வியாபித்தல் கூடாது? அங்ஙனம் பதிவியாபி யாமையால் அவ்வாறு வியாபிக்கத் தக்கவாற்றல் அதற்கில்லை யென்பது சித்தமாம். அதவா வியாபிக்குமெனக் கொள்ளின் அவ்வாறு வியாபிக்கு மெவ்வளவு வியாபகமும் அதனது வியாபகத்தின் அகண்ட மாகாமல் கண்டமேயாய் முடியும். அதனால் அது சர்வ வியாபகப் பொருளாதல் பூர்த்தி கட்டாது. இதனால் (சிவம்) தானே எல்லாமாயதென்னும் வாதத்தை யொழித்து, தான் என்னும்பதி எல்லாம் என்னும் பசுபாசங்களில் வியாபித் தலை யொப்புவதே பதியினது வியாபகதர்மமாம். பசு பாசங்களை யியக்குதற்கே பதி அவற்றில் வியாபித்தமையால் அதுவே பூரணமாம். பசுபாசங்களைத் தவிர வேறு பொருள் களில்லாமையால் பதிக்கு அவற்றின் மேலிட்ட வியாபகத்வம் கேட்கப்படவில்லை. பதியைப் போலப் பசுபாசங்களும் நித்தியமாகையால் இவற்றிற்கு அன்னியமாக வேறு பொருள்களின் பிரதாபம் சாதிரங்களிலுண்டாக வில்லை. இவ்வாறு தெளிந்திடாத இவர் பதியினது வியா பகத்தை விசாரித்துச் சைவ சித்தாந்தத்தை மறுக்கப் புகுந்தது ஆச்சரியமாயதென்க என்று பிரகாசப்படுத்தியிருக்கின்றோம். இதற்குச் சமாதானங்கூறுபவரா யெழுந்த பூர்வபட்சி என்ன எழுதித் தொலைத்தார்? பதி பசு பாச வாதம் என்னும் அவரது பாழ்வாசகத்தில் பதி பசுபாசங்களில் வியாபித்த தாய் இவரும் ஒப்புக் கொள்ளுகின்றார்? அத்வைதிகளும் ஒப்புக் கொள்ளுகின்றார்கள். இவர் பொருளாக வொப்புக் கொள்ளுகின்றார், அவர்கள் தோற்றமாக ஒப்புக் கொள்ளு கின்றார்கள், அத்வைதிகள் பொருளாய் வியாபகஞ் சொல்லா மையால் இவருடைய ஆக்ஷேபம் அவர்களைப் போய்த் தாக்காது என்று கூறினார். பதியானது பாசங்களில் வியாப்பித்ததாக யாம் ஒப்பினோம் என்பது சத்தியம் இந்த மூர்க்கவாதி அவ்வாறு ஒப்பிய தெங்கே? பதியானது பாசபசுக்களில் வியாபித்தது என்று யாமொப்பியதும் அவரொப்பியதும் ஒன்றாவதெங்ஙனம்? இருவர் கூறியது மொன்றானால் யாம் இவரது காதைப் பிடித்தாட்ட வேண்டிய ஆவசியக முண்டோ? நிற்க. இவர் யாம் பொருளாக வொப்பவில்லை-தோற்றமாக வொப்பினோம் என்றதினா லுண்டான வெற்றி இவருக்கு யாது? இவர் தோற்ற வாதத்தை மேலே யாம் துவைத்து நிர்முலமாக்கிய துணர்ந்தவர்கள் இவரைப் பிச்சரிற் பிச்சரா யொதுக்கப் பின்னிடையாரென்க. இவரது தோற்ற வாதந் தொலைந்து நெடுநாளாயினமையால், அதனை இவரடிக்கடி பேசி யேசப்படுவது பரிதாபமென்க. பரிணாம வாதிகள் இவரைப்போலத் தோற்றமாக வொப் பாமல் பொருளாகவே ஜகத்தையொப்பி அதற்கதிஷ்டானம் பிரமமென்று கூறுகை யால் இவரது தூஷணம் அவரையே சென்று சேருமென்க. பிரமமாகிய பொருள் உலகமாகிய பொருளாய்ப் பரிணமித்தது என்றபிறகு உலகத்தில் பிரமம் வியாபித்தது என்றிடற் கவகாசமில்லாமையால், அதுவும் சிவபரிபூரணத் துக்கு இடர் தேடிய சித்தாந்தமாகவே யொதுக்கப்பட்டவாறறிக. இந்தத் தோஷந்தானே பிரமம் உலகமாகக் காரியப்பட்டது என்ற ஆரம்ப வாதத்திலும் நேர்ந்து இடர்ப் படுத்தியவாறறிக. இவ்விருவாதிகளும் விவர்த்த வாதியைப் போலப் பிரமமே உலகுக்கதிஷ்டான மென்று கூறுகையால் இப்போது விரிந்த வளவில் பிரமத்தின் வியாபகத்தை இன்னோர் கட்டுப்படுத்தினா ரென்றிடல் ஸங்கதமாயிற்று. இந்த வாதிகள் சிவபரிபூரணத்தை விளக்கு வதிலெமொடுமாறுபடினும் யாம் பொருளாக வொப்ப வில்லை என்று பிதற்றிய அஸங்காத்ம வாதியை யடித்துத் துரத்து மாற்றல் வகித்த ஆப்தராயினா ரென்க. உலகத்தைப் பொருளாகவொப்புவதே சர்வமதசம்மத மாகையால் இவருடைய ஆக்ஷேபம் அவர்களைப் போய்த் தாக்காது என்று பூர்வபட்சி புலம்பியது வெறுங்கத்தா யொழிந்ததறிக. நிற்க. இவர் ஏனோ பசுபாசங்களாக (பிரமம்) விரிந்தது என்று யாம் கடாவியதற்குப் பொருளாய் விரியவுமில்லை வியாபிக்கவு மில்லை என்று விடைகூறி எமது கேள்வி தகுதியற்றதென்று பரிகசித்தார். நாயை யெங்கடித்தாலுங் காலைத் நூக்குவது சுபாவம். அதுபோல இவரை எந்தக் கேள்வி கேட்டாலும் யாம் உலகைப் பொருளாக வொப்பி னோமா? றோற்றமாக வேயன்றோ வொப்பினோம் என்று விடைகூறி யிறுமாந் திடுகின்றார். நல்லழகிது! இவரது அபசித்தாந்தத்தைத் தழுவியே பின்னுங் கேள்வி கேட்கின் றோம். ஏனோ பிரமத்தினிடத்தில் பசு பாசங்கள் தோற்றமாக வேனும் விரிந்தது? இவரது மதத்தைத் தாபித்ததற்கு இவர் தேடிய (கயிறு அரவாய் விரிந்த) உபமானத்தைச் சிறிதாராய்வாம் ஏனோ கயிறு அரவாய் விரிந்தது என்று கடாவெழின் மாலைக்காலத்தில் பார்ப்ப வனது கண் குற்றத்தால் அவ்வாறு விரிந்தது என்று விடை யுண்டாம். இப்படிப் போல வொரு சமாதானங் கூற வேண்டியது இவரது கடமையாகவும், இவர் விடை கூறாது வெற்றுரை பேசியது சத்துரையாகுமா? கயிற்றிற் பாம்பு தோன்றியது துன்பத்துக்கேதுவாம். பிரமத்திலுலகந் தோன்றியது அப்படி யாகலாமா? பிரமத்தினிடத்தி லின்பஞ்ச நிப்பதற்கு மாறாகத் துன்பஞ் சநித்தல் அதனதுயோக்யதை யையே வெளிப்படுத் தியது. எனவே, அது பிரமமன்றென்பது வெட்ட வெளி யாகியதுணர்க. அன்றியும், கயிற்றில் அரவின் றோற்றத்தைக் கயிறுக்கு வேறாகிய (கயிறல்லாத) வொருவன் கண்டு பிரமித்திடல் போலப் பிரமத்தில் உலகத்தோற்றத்தைப் பிரமத்துக்கு வேறாகிய (பிரமமல்லாத) வொரு பொருள்கண்டு பிரமித்திட லமையாமையால் இந்தவுலகமாகிய மலம் அப்பிக் கொண்டிருக்கும் அசுத்த பதார்த்தம் இவரது பிரம மென்று நிச்சயிக்கப்படுகின்றது. இன்னும் கயிறு-பாம்பின் றோற்றம் - கண்டவன் ஆகிய இம் மூன்றும் ஒன்றல்ல, பிரமம் - உலகத் தோற்றம் - காணும் பொருள் ஆகிய இம் மூன்றுக்குங் கதியென்னை; பிரமம் என்று பூர்வபட்சி கூறும் பொருளில் தோற்றக் காட்சியானது பிரமம் போலிராமல் ஜடவுலகும், அஞ்ஞானகலுஷித ஜீவனுமேயாயினமையால் அவர் சித்தாந்தமாகத் துணிந்த பொருள் பிரமமென்னும் பெயர் மாத்திரம் பெற்றிருப்பதன்றி அதனிலக்கணத்தைப் பெற்றுப் பிறங்கியதின்றென்பது நாட்டப்பட்டது. இதனால், வேதம் கூறிய பதிபசுபாசங்களில் இவர் பதியைக் கோடலொழிந்து பசுபாசங் களைப் பரம் என்று துணிந்து, பசுவைக் கோடலால் ஜீவப் பிரஹ்மவாதியும், பாசத்தைக் கோடலால் மாயாவாதி யுமாயினரென்பது சித்தமாயினதறிக. இவ்வாறு ஸ்ரீநாயகரவர்களெழுதி யுபகரித்தபகுதியை இம்மட்டி னிறுத்தினாம். இவ்வுயிர் வொப்பில்லாத நியாய ரக்ஷாமணிகளை ஸாதுக்கள் கொண்டு வாழ்ந்து சுகிக்கட்டும். இவ்வுண்மைகளை யறியுந் திறனிருந்தும், அநுபவிக்கும் புண்ணியங் கைகூடாமையால் பூர்வபட்சிகள் ஸ்ரீநாயகரவர் களை இன்னுந் தூஷித்துக் கொண்டே யிருக்கின்றனர். எவரெவ்வாறு வைதுமகிழ்ந்திடினும் அதனை யொரு பொரு ளாக மதித்து வருந்தாமல் அவர்கள் குணப்பட வேண்டு மென்னுங் கருத்தையே முக்கியமாகக் கொண்டு ஸ்ரீநாயகரவர் களும், அவர்களை யாசிரயித்து வாழும் யாமுந் திருவருளை வாழ்த்தி வந்திக்கின்றோம். என்று தினகரனாருபசாந்தி யடைந்தனர். இனியிவ் விஷயத்தில் ஸ்ரீவைத்யநாத குருவாமிசாமா என்னும் எமது தோழர் சிலவரைந்தனர். அதனையும் ஈண்டெடுத்துக் காட்டி யுபகரிப்பாம். சாமா அவர்களது சீர்தூக்கம் இந்து அவர்கள் சதசதத்து என்னும் பெயரின் பொருளை அறியாமல் அழுதுவழிந்து தடுமாறியதைப் பார்க்குந் தோறும் அவரது அற்பபுத்திக்கு யாம் பரிதவிக் கிறோம். அவர் தமது பிரசங்கத்தில் சதசத்தென்று சொல்ல லாமெனில் சதசத் தென்பதன் பொருள் உளது இலது ஆதலாலும், ஒன்றுக் கொன்று நேர் விரோதமான இலக்கணம மையப்பெற்ற பொருள் இராதாதலாலும் சதசத்தென்று கூறுதலமையாது என்று சொல்லியிருக்கின்றனர். மீண்டும் ஓரிடத்தில் சதசத் தென்னலாமெனில் எதிர்மறையான ஒரு இலக்கணமுள்ள பொருள் இராது என்றும், நேர்விரோதமான இரண்டு தருமம் ஒரு பொருளிடத்திராது என்றுங் கூறினர். மறுபடியும் சதசத்தென்றுரைக்கப்படுமாலோ எனின் மறுதலைப்பட்ட இரண்டு தருமம் ஒன்றின்கணிரா என்று கூறினர். இப்படியே வேறு அநேகம் இடங்களிலுஞ் சொல்லியிருக்கிறார். இதனால் சதசத்து என்பதேகிடையாது என்றும், அப்பெயரும், அப்பெயர்க்குரிய பொருளும் ஒரு போதுமில்லை என்றும் சொல்லிவிட்டு, மற்றோரிடத்தில் எது சதசத்தோ அது உண்மையில் அசத்தேயாம் என்று சொல்லிச் சதசத்து என்பதை ஸம்மதிக்கிறார். இம்முரண் அற்ப புத்தியினது விளைவா? அல்லது அநிர்வசனீயமா? ஸ்ரீமந் மாணிக்க வாசக வாமிகள் இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே என்றும் எல்லாமாய் அல்லவுமாய் என்றும், சோதியனே துன்னிருளே என்றும் நேர்விரோதமான இருதர்மங்களைக் கடவுளிடம் கூறுகின்றனரே? இதை யென் சொல்வார் இந்து? நிற்பவன் பொருட்டு வணக்கம் ஓடுபவன் பொருட்டு வணக்கம் எனவும், நாயானான் பொருட்டும், நாக்குப் பதியானவன் பொருட்டும் வணக்கம் எனவும் வேதம் ஸ்ரீபரமேச்சுரனைத் துதிக்கின்றதே. இதற்கு என்சொல்வார் இந்து? தன்னையன்றி ஒன்றுமில்லை எனவும், தான் ஒன்றுமல்ல எனவுங் கூறும் உபநிடதத்துக்கு என்ன கதி? இப்படி அனந்தமுளவாதலால் இருகுணங்கள் ஒன்றி னிடத்துக் காணப்படுவது ஸஹஜம். தகப்பனாகவும், மகனா கவும் அநேகரிவ்வுலகி லிருக்கின்றார்களென்றால். உடனே நமது இந்து அதுகூடாது என்று ததிங்கணத்தோம் ஆடுவாரோ? இவருக்கு மகப்பேறுண்டானால் இவர் தந்தையல்லவோ? இவர் ஒருவருடைய மகனல்லவோ? ஆகவே, இவரைத் தகப்பனும் மகனுமானவர் என்பது பிழைதானோ? ஸ்ரீ சிவபெருமானை வழிபடும் எம் பெருமக்கள் சொல்லும் ஸதஸத்து என்னும் பொருள் மேற்கூறியபடியே ஸத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது அஸத்தாகவும், அஸத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஸத்தாகவும் விளங்கலால் அதற்கு அப்பெயர் சிறந்தவாறறிக ஒரு பொருளுக்கு ஒரே காலத்தில், ஒரே காரணத்தினால் ஸத்தென்றும் அஸத்தென்றும் பெயர் யாருஞ் சொல்ல வில்லை. ஸதஸத்தென்னும் பதத்தின் பொருளை யுணராமல் தடுமாறும் இந்து என்பவர் ரூபாரூபம் என்னும் பதப் பிரயோகத்தைக்கண்டு பிராணனை விடாதவிதம் யாது? ரூபத்துடன் ஒப்பிடும்போது அருபமாகவும், அரூபத் துடன் ஒப்பிடும் போது ரூபமாகவும் உள்ளதே ரூபாரூபம். இப்படியே நிலையாமல் நிலைத்தல் முதலிய பலபிரயோகங்களுள்ள வற்றையுமறிந்து இந்து அவர்கள் குணப்படுவாராக. நிற்க. இந்து அவர்கள் பரிணாமம் :முன்றுவகை (1) பால் தயிராவதொன்று (2) மண்கடமாவதொன்று (3) கயிறு அரவாவதொன்று என்று கனைத்திருக்கின்றனர். ஐயோ பாவம்! தானுமறியார்; தம்பெரியாரையுங் கேளார்; அன்னி யரைக் கண்டும் பொறார். இத்தகையாரை எப்படித் திருத்துவது? பரிணாமம் என்றால் திரிதல் என்றேபொருள். மரம்+ சாய்ந்தது = மரஞ்சாய்ந்தது என்னுமிடத்துச் சகரத்தின் ஸந்தி விசேஷத் தால் மகரம் ஞகரமாகப் பரிணமித்தது. (இலக்கணத்தில் பரிணாமமென்று சொல்லவில்லை யாமே உதாரணத்துக்காக அப்பெயரிட் டோம்.) ஒன்று வேறொன்றாகத்திரிதல் (மாறுதல்) தான் பரிணாமம். அப்படியிருக்க, நமது இந்து அவர்கள் கயிறு அரவாவது ஒரு பரிணாம மென்கிறார். ஜாலக்காரன் பாம்புத் தோலைக் காட்டிப் பாம்பாக மாற்றுகிறான். நமது இந்துவோ கயிற்யையே பாம்பாக மாற்றி விட்டார். என்றாவது கயிறே பாம்பாக மாறுமா? காலத்திரயத்தும் மாறாது. கயிற்றைப் பாம்பாக எண்ணிப் பிரமிப்பவருண்டு. கயிறு ஒருநாளும் பாம்பாவதே கிடையாது. அப்படியிருக்க, அதை ஒரு பரிணாமமாகச் சொல்லி ஊளையிட்டார் நமது நண்பர். மீண்டுமவர் கயிற்றரவுப் பரிணாமம் யதார்த்தமன்று என்றுஞ் சொல்லுகிறார். பரிணாமமல்லாததைப் பரிணாமமென்று மோசமாய்ச் சொன்னது அற்ப புத்தியின் விளைவேயொழிய வேறன்று. இத்துடனாவது நின்று தொலைத்தாரா? இங்ஙனமே பிரமம் கயிற்றரவுபோல் உலகமாகப் பரிணமிக் கிறது என்றுங் கூறுகிறார். கயிறு அரவாகமாறவே மாறாது. அதுபோல் பிரமம் உலகமாக மாறவே மாறாது என்றாயிற்று. இவ்வித மந்தமதியோ மாயாவாதத்துக்கு வக்கீலாய்ப் புறப்பட்டனர்? ஐயோ பாவம்! உண்மையில், பரிணாமம் பலவகை. பொருட் பரிணா மம் - உருவப் பரிணாமம் - சினைப் பரிணாமம் - ஒலிப் பரிணாமம் - தொழிற் பரிணாமம் ஆதியாக உள்ளன. இவ்வகை ஒவ்வொன் றிலும் கிளைவகைகளும் உள. பால் தயிராவது மோர் கூடி; தயிர் மோராவது வெண்ணெய் குறைந்து. இனி வாளைப்பளம் என்பது ஒலிப்பரிணாமம். இப்படிப் பார்த்துக் கொண்டே போனால் பலவகைகள் காணலாம். நிற்க. இவர் மற்றொருபுதுமை கூறினார். என்னெனின் தோன்றாமையின் சத்து எனல் அமையாது என்று ஸத்தினிலக் கண முரைத்திருப்பதேயாம். தம்மை மறப்பவ ராகிய இந்து அவர்கள் வேறோரிடத்தில் கடவுள் இந்திரியத் தினாலும் மனத்தினாலும் ஜீவான்மாவாலும் காணப்படாத வரென்பது சித்தாந்தமாயிற்றென்க என்று ஊளையிடுகிறார். ஆகவே, இவர் ஸத்தல்ல என்று கடவுளை ஒதுக்கி விட்டவராயினர். அல்லது அஸத்தைத் தொழுபவராயினர். வேறு எவ்வாறாயினும் ஆகக்கடவர். இவரது பிரமம் ஸத்தல்ல என்றது நிச்சயம். இத்துடனாவது நின்று தொலைத்தாரா? அஸத்தென்பது இல்லையெனப் பொருள் படுகின்றது என்று ஓரிடத்தில் எழுதியிருக்கிறார். கடவுளை அஸத்தென்றும், இல்பொரு ளென்றும் உளறிவழியும் இவரை அலகையென்று ஒதுக்கி விடுவதே எமக்குத் தருமமென்று இவ்வளவில் விடுத்தாம். இவருக்கு அநேகவித்தை தெரியும். இவரைத் தெய்வம் கண்குருடில் லாமல் பிறப்பித்திருந்துங் கண்ணுக்கொளி யில்லையென்று வாதிட்டுமாய்கிறார். கண்ணொளி இனி ஒளி விஷயத்தில் உலகின் பொருள்கள் நால் வகை. ஒன்று சூரியனொளிபோல் அதிக பிரகாசமுள்ளவை; இரண்டாவது கண்ணாடியினொளிபோல் உள்ளவை; மூன்றாவது காகிதவொளி போல் உள்ளவை; நான்காவது ஏனைய கண்ணிலோ, ஜலபிண்டமும் (Aqueous Humour) படிகபிண்டமும் (Lens) நுங்குவெள்ளி போன்ற ஓரு பிண்டமும் (Vitrens Humour) ஒன்றன்பின் ஒன்றாய் இருக்கின்றன. இவை இல்லாதகண்கள் முழுக்குருட்டு மூழைகளே. இவை ஒவ்வொன்றும் இரண்டாம்வகை யொளிப் பொருள்கள். ஆதலால் கண்ணுக்கொளியில்லை யென்பவரைக் கற்றறியாப் பேதை அறிவிலி அற்பபுத்தி என்று சொல்ல இடங் கொடுக்கிறது. நிற்க. இந்து அவர்கள் வைதிகர்தாமோ? அங்ஙனமாயின், ஐதரேயோபநிடதத்தில், கண்களினின்றும் ஒளியுண்டா யிற்று, அவ்வொளியினின்றும் ஆதித்யனுண்டாயினான் என்று சொல்லியிருப்பதற்கு என்செய்வார்? அது போலவே புருஷ ஸூக்தத்திலும், கடோபநிஷத்திலும் கண்ணினது ஒளியைப் பிரதாபித்திருப்பதற்கு என்செய்வார்? இந்து அவர்கள் பெரியவர்களிடம் மதிப்பும், மரியாதையும் உள்ளவர்தாமோ? பொய்யாமொழிப் புலவர் என்று எல்லா மதத்தவராலும் நன்குமதிக்கப் பெற்ற திரு வள்ளுவ நாயனார் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்றைந் தின், வகை தெரிவான் கட்டே உலகு என்று கண்ணின் குணத்தை ஒளியென்றாரே! இதற்கு எங்குப் போய் முட்டிக் கொள்ளுகிறது? எமது மதத்தவர் என்று மாயாவாதிகள் சண்டையிட்டுச் சேர்த்துக் கொள்ளப் பார்க்கிற தாயுமானவர் வெளியான நீ என் மனவெளியூடு விரவினையால், ஒளியாரும் கண்ணும் இரவியும் போனின் றுலாவுவன்காண் என்று பச்சையாய்க் கண்ணொளி கதிரொளி உதாரணஞ் சொல் வதற்கு என்ன வழிதேடுவது? ஒளியிழந்த கண்ணே போல் என்று கம்பன் சொல்வதற்கு யாதுகதி? இப்படி இன்னும் அநந்தமானபேர் சொல்வது எவ்வாறு தொலைவது? இவைகளை ஸாதுக்கள் யோசிக்கட்டும். நிற்க. எமது ஸ்ரீலஸ்ரீ நாயகரவர்கள் முன்னோர் சொன்ன தையும், சுருதியுக்திகளையுமொத்துக் கண்ணுக்கொளி யுண் டென்றார். இந்து என்பவர் அதை மறுத்து, கண்ணுக்கொளி யில்லை யென்றார். யாம் முன்னோரையும் வைதிக நூல் களையுமநுஸரித்து ஸ்ரீலஸ்ரீ நாயகரவர்கள் சொன்னது உண்மையென்றும், இந்து என்பவர் சொன்னது பிசகென்றும் மறுத்து நியாயங் கூறினோம். அதற்கு மேல் விஜயபாநு என்பவர் தோன்றி சூரியனது சோதியாகிய பிரகாசத்தை ஒளியென்றும், இந்தச் சோதியாகிய ஒளி கண்ணுக்குக் கிடையாதென்றும் இந்து கூறுகிறார் என்று இந்துவைப் பரிந்து பேசினார். சோதி, பிரகாசம், ஒளி என்பவை ஒரே பொருளுள்ளனவா வேறு வேறா? ஏண்டா நாழி கழித்து வந்தாய் என்று கேட்ட உபாத்தியாயருக்கு நாழியாய்ப் போயிற்று என்று மாணாக்கன் பதில் சொன்னானாம். இதுபோல இவரது வார்த்தை கனம் பெற்றதறிக. சூரியனைப் போல் கண்ணுக்கொளியில்லை, என்ற சிறுவாக்கியத்துக்குப் பதிலாக அகராதிகளிலுள்ள பிரதிபதங் களை இவர் அநாவசியமாய்க் கொட்டியளந்தது சுருங்கச் சொல்லி விளங்க வையாததையும், பயனில் சொல் பாராட்டு தலையும் இவரது தலையிலுள்ள காயங்களாக நிலைப்பித்து விட்டது. சூரியன் போன்ற அவ்வளவு ஒலி கண்க்குண் டென்று எமது நாயகரவர்கள் சொன்னதுண்டா? கண்ணுக்கு ஒளி யுண்டென்பது மட்டும் நாயகர் கூற்றென்று யாம் முந்தியே கூறினோம். அதை இவர் கவனித்திலர். நிற்க. கதிரவனுக்கே ஒளியுண்டு. கண்ணுக்கொளியில்லை என்றது இந்துவின்மதம். கதிரவனுக்கு ஒளியுண்டு, கண்ணுக் கும் ஒளியுண்டு. ஆனால், இவை ஏற்றத் தாழ்வுடையன என்பது எமது மதம். எமக்கு மேல் கோட்டி யெழுதிய இவர் வைத்யநாதரோ எனில் காகிதம் முதலியவற்றின் பளபளப் பாகிய மேனியையே ஒளியென்றும், இந்தப் பளபளப்புத் தருமம் கண்ணுக்குண் டென்றும் கூறுகின்றார். இதனால் இந்து சோதியை ஒளியென்றும், வைத்யநாதர் மேனியை ஒளியென்றுங் கூறியதாக விளங்குகின்றது. என்று பிரசங் கித்தார். மேனியென்றால் பொருளென்னை? தேகத்தின் மேல் பரப்பா? அப்படியானால் நாம் மேனியைப் பற்றிக் கூறவே யில்லை. மேனியென்றால் நிறமா? நாம் நிறத்தைப் பற்றிக் கூறவேயில்லை. மேனியென்றால் பின்னர் என்னை? ஒளியே யன்றோ? பளபளப்பு, மேனி, ஒளி, மினுக்கு, மின்னல், சோதி காந்தி, பிரகாசம் என்னும் எந்தப் பெயரைச் சொன்னாற்றா னென்னை? இவற்றில் யாது வித்யாஸங்கண்டாரோ விஜய பானு? மேனி, ஒளியின் ஆதரவைப் பெற்று விளங்குவதாம், ஒளி தானே விளங்குவதாம். இது தவறு. இப்படியுள்ள வித்யாசத்தை ஒத்துப் பார்த்து நாம் பதார்த்தங்களுக்கு ஒளியுண்டெனக் கூறினோமில்லை. ஒளியென்றால் இன்னது என்று பானுவுக்குத் தெரியவில்லை யென்பது இன்றுதான் வெட்ட வெளியாயிற்று. ஒளியின் வகை தெரியாத இவரை யம்ப்ரஹ்மமென்று தான் சொல்ல வேண்டும். இவ்வொளி விஷயம் தெரியாதவர் களுக்குச் சொல்லப் புகுந்தால் வெகு கஷ்டமாகுமானதால் எடுத்த விஷயத்தை யொருவாறு, முடிப்பாம். ஒளி தானாய் விளங்குவது. இது அநுபவப்ரமாணம், கண்ணாவது, கடிதக் கண்ணாடியாவது இருளைப் போக்கு கின்றதா இதனால் கண்ணுக்கு ஒளியில்லையென்பதும், அவ்வொளியைக் கண்ணுக்குரியமேனியோடு உவமிப்பதும் அடாதென்பதே முடிபு என்றார்பாநு. இதிலிருக்கும் ஆகாரம், தீர்மானம் இவைகளைப் பண்டிதரே பார்த்துப் பரிசு கொடுக்கட்டும். ஒளி தானாய் விளங்குவது என்றாரே! பதினாயிரம் சூரியர்கள் ஏககாலத்துதித்தாலும், இவர் குருடாகயிருந்தால் இவர் சொல்லும் ஒளி இவருக்குத் தானாய் விளங்குமோ? சூரியனுக்கு மட்டும் இவர் சம்பாதித்துக் கொடுத்த வொளியை அவன் எம்மட்டில் அனுபவித் திருக்கிறான்? கண்ணுள்ளவ னுக்கும், பார்வை குறைந்தவனுக்கும், பார்வை மழுங்கின வனுக்கும், முழுக்குருடனுக்கும் ஓரேயளவாய் ஒளிவிளங்கினா லல்லவா ஒளி தானாய் விளங்குவது என்ற ஆதாரத்தைப் பற்றிக் கொண்டு தீர்ப்புச் சொல்லலாம்? கண்ணாடி, காகிதம், ஜலம், படிகம், வைரம், அனல், மதி, சூரியன், கண் முதலிய எல்லாவற்றிற்கும் ஒளியுண்டு. ஆனால் அவை தாரதம்யமுடை யனவாம். கண்ணானது சூரியனைப் போல் பதார்த்தங்களைக் காட்டுகிறதா? ஆதலால் அதற் கொளியில்லை யென்பதும், சூரியனானது கண்ணில்லாத வழி ஒளியுள்ளதா? ஆதலால் சூரியனுக்கொளியேயில்லை யென்பதும் தப்பிதமாகும். உண்மையில் இரண்டுக்கும் ஒளியுண்டு, இவற்றில் எது இல்லாவிடினும் ஒளியென்னும் அறிவே இல்லாததாகும். ஒளியில் தாரதமயமில்லை யென்றும், ஒளியென்றால் சூரிய னொளி ஒன்று தான் என்றும் எண்ணிக் குழறிவழியும் இவர் சூர்யன்-சந்திரன்-அக்னி-மின்மினி வைரம்-கண்ணாடி முதலிய வேறு பாடுகளில் எதை மேனி என்பார்? எதை ஒளியென்பார்? ஒருமரம் (சோதிமரம்) இரவில் பிரகாசிக்கின்றது. அதை மேனியென்பாரோ? மினுக்கென்பாரோ? ஒளியென்றுதான் சொல்லித் தொலைப்பாரோ? அறியேம். ஐதரேய உபநிடதத்திலிருந்து நாம், கண்ணுக்கொளி யுண்டெனக் கூறியிருந்தோம். அது இவர் புத்திக்கெட்டிய தில்லை யாதலால் நாம் சொன்ன பொருள் திரிபு கொண்டது என்று பேசினர். ஒவ்வொருவர் கண்களிலுமிருந்து சூரிய னுண்டாய்விட்டால் இருக்குஞ்சூரியனுக்கு என்னவழி தேடுவது? ராஜீநாமாதான் கொடுக்க வேண்டிவரும் என்றார். ஐயோ சற்நு நிதாநித்துப் பாராததால் வந்த குறைவே இது. விராட் புருஷனுடைய கண்ணினின்றும் ஒளியும், ஒளியி னின்றும் சூரியனும் உதித்ததாக உபநிடதம் சொல்லுகிற தேயன்றி, பீளையும் உவர்நீரும் மலிந்த (இவர் போன்றவரது) புன்புலாற் கண்ணினின்றும் ஒளியும், ஆதித்யனும் பிறந்ததாகச் சொல்லவில்லை. ஒளியோ ஸர்வ வியாபகமுடையது. அது கண்ணில்லையென்றும், ஆதித்த னில் மட்டும் இருக்கிற தென்றும் பிதற்றியது பேதமை யேயாம். நிற்க. சூரிய ஒளியே ஒளியென்று கூச்சல் போட்ட பாநு அவர்கள் நெருப்பு, மின்மினி முதலியவற்றை ஒளியுள்ளன வாகப் பேசினர். இதையுங் கொஞ்சம் ஆலோசிப்பாம். ஸ்ரீ ருத்ரமூர்த்தி எப்படி ஸர்வவியாபியோ, அப்படியே அக்னியும் ஸர்வவியாபி. அக்னியுள்ள இடமெங்கும் ஒளி யுண்டு. இந்த ஒளியே பஹிர்ப்பூதமான நெருப்பினிடத்தும், அது போன்ற நீரினுள்ளும், அது போன்ற பிருதிவியினிடத்தும் விளங்கு கின்றது. இது சூரியனுக்கு மட்டும் என்றும், மற்றொன்றுக்கு மட்டும் என்றும் சொல்வது ஒருபோதும் உண்மையன்று. எல்லாவற்றிற்கும் பொது வென்றறிந்து குணப்படுவாராக. இவ்வாறு முடிவுகூறிய சர்மா அவர்களைப் போல இந்தக் கண்ணொளி விஷயத்தை ஸ்ரீ செந்திநாதைய ரவர்களுஞ் சிறிது கூறிப் பிரகாசப்படுத்தினர். அது வருமாறு: இருக்கு முதலிய பதினெண் வித்தைகளுள்ளும் நியாயம் என்பதொன்றன்றோ? இந்த நியாயமும். வைசேஷி கமும் ஷட்தரிசனங்களுள் அமைந்தனவன்றோ? நியாயம் கௌதம முனிவராலும். வைசேஷிகம் கணாதமுனிவராலும் அருளப் பட்டனவன்றோ? ஆகவே, நியாயமும் வைசேஷி கமும் ரிஷிப் புரோக்தங்களாம். (முனிவர் திரு வாக்குகளாம்) என்பது நன்கு துணியப்பட்டதாயிற்று. கணாத முனிவரும் கௌதம முனிவரும், என்று அருளிய சூத்திரங்களாலும், அவ்விருநியாய வைசேஷிக டீகா ஆக்கியோர்களாலும் கண்ணுக்கு ஒளியுண் மையாமாறு விளக்கப்பட்டிருக்கின்றது. பூனை கோட்டான் முதலியவற்றிற்கு இராப்போதிற் கட்பிரசாகமுண்மை பின்ன பின்ன தேஜோவி விசேஷங்களாமென்றுணர்த்தற்குக் கௌதம முனிவர் இராப்போதில் இராக்ஷஸனுக்குக் கட்பிரகாச வுண்மை விளக்கி, என்று சூத்திரித்தார். விசுவநாத பஞ்சானன பட்டாசாரியாரும் தாம் இயற்றிய தர்க்ககாரிகாவளியிற் போந்த என்ற மூலத்துக்குக் கண் ஒளியுடைப் பொருளாமெனப் பொருள்பட என்று சித்தாந்தமுக்தாவளி வியாக்கியான வாயிலாக விதந்துரைத்தார். இங்ஙனம் கண்ணுக்கு ஒளியுளதாதல் இருடிகளாலும், மற்றைத் தார்க்கீகர்களாலும் அங்கீகரிக்கப் பட்ட தொன்றாம். அத்துவித ஆசாரியர்களுக்கும் அத்துவித கிரந்தங்களுக்கும் விரோதமுற்றதின்றாம்; மறுக்கப்பட்டது மின்றாம்; நான்கு சாதிரபண்டிதர்களாயுள்ள ஸ்ரீ சிவ குமார பண்டிதர் - கங்காதரசாதிரியார் - மஹாமஹோ பாத்தி யாய ராகிய ஸ்ரீ தியாகராஜ மகிராஜர் முதலிய பாரத கண்டத்துப் பெரும் புகழ்படைத்த சமத பெரியோரனை வராலும் ஒத்தமனசோடு அங்கீகரிக்கப்பட்ட தொன்றாம். இங்ஙனமாக, வடமொழிப் பயிற்சி எட்டுணையுமின்றி, தமிழிலேனும் நிரம்பிய உணர்ச்சியின்றி, கல்லாதான் சொற் காமுறுதல் என்ற திருவாக்கை முற்றும் மறந்து மாயாவாதி கண்ணுக்கொளி யில்லை யென்று வாதிடுவது என்பெற வோ? என்றுவிளக்கிய சிறிது பாகத்தையே யீண்டெடுத் தெழுதினோம். இவரெழுதிய பகுதிகள் மலையிலக்காயிருக் கின்றன. அவற்றை யொருங்கே திரட்டி வெளிப்படுத்தி யுபகரிப்பது சைவசமயிகளுக் கின்றியமையாப்பெருங் கடமையாம். திருவருள் கூட்டி முடிக்கக்கடவது. இன்னும் ஸ்ரீ வேங்கடரமணதாசரவர்கள் - ஸ்ரீஸத்யோஜாத சிவா சாரியார் முதலிய சாம்பவமணிகளும் இத்தூர்த்த மாயா வாதிகளது கொட்டமடக்கிய விஷயங்கள் பலவுள. அவைகளையுந் திரட்டி நம்மவர் வெளியிடுவது ஆவசியகமாம். இவ்வாறு பலஸாதுக்கள் பிரவாததித்துவரு மருமை களைக் கண்டு மாயாவாதப்படிறா மனம் பொறாது மானம் பொங்கி யெழுந்து பின்னுங் குறை கூறித்தலை நீட்டியது கண்டு (அச்சாம்பவமணிகளதுதிருவடித்தாமரைகளைச்சிரமேற்சூடிய) யாமுஞ் சிலவரைந்துள்ளே மாகையால், அதனையும் ஈண்டெழுதி வெளிப்படுத்துகிறோம். அருந்தாபத்திப் பிரமாணம் இப்பிரமாணத்தில் இயல்பறியும் வன்மையின்மை யாலோ? தம்மதத்தை நியாய வழியாகவல்ல துரபிமான வழியாக நிலைக்கச் செய்ய வேண்டுமென்ற கருத்தினாலோ? சிலர், இதன் (இப்பிராமணத்தின்) தொல்லை வரம் பழித்து அது கூறப்படும் தருக்கவிலக்கணத்தைப் புரையறக் கற்ற தாகத் தருக்கிச் சில பத்திரிகையில் வரைந்திருப்பது நண்பர்கள் அறிந்திருக்கலாம்.. யுக்தி நியாயங்களுக்குத் தம் மதம் பொருத்தமுடையதாயில்லாவிடில் (நடுவு நிலைமை கருதினவராயிருந்தால்) அவைகட்குப் பொருத்தமுடைய தாயிருக்கும் ஒரு மதந்தேடி அதை யனுசரித்துப் பெருமை பெறுதலே புத்திமான்கட்கழகாகும். அதைவிடுத்து யுக்தி நியாயங்கட்கேற்ப அதியுசித ஏற்பாடுகளோடு கட்டப் பட்டிருக்கும் ஒரு சமயத்தைத் தூஷித்து, அதை யனுசரித்துத் தம்மட்டிலொழுகி வாழும் பெரியாரது மன வருத்தத்தையும் வருவித்து, தொல்லை இலக்கண விலக்கியங்களின் வரம் பையும் அழித்து வருவதென்றால், உடனே, அவரது மிகை பட்ட செய்கையை உலகங் கண்டியாது விடுமோ? இனி யெமதுண்மையை விரிப்பாம். அருத்தாபத்திப்பிரமாணம் தொல்லாசிரியர் பலராலும் நன்கு விளக்கப்பட்டிருக்கின்றது. தொல்காப்பியத்துள் எடுத்த மொழியினஞ்செப்பலுமுரித்தே எனும் சூத்திரத்தில் உரையாசிரியர் நச்சினார்க்கினியார் அருத்தா பத்தி இனஞ் செப்புமாறு தன்னோடு மறுதலைப்பட்டு நிற்பது ஒன்று உள்வழியாயிற்று. மறுதலைப்பாடு பல உள்வழிச் செப்பாது என்றுரை கூறி அறஞ்செய்தான் துறக்கம்புகும் என்றவழி, மறஞ்செய்தான் நிரயம்புகும் என்பது இதனாற் பெறப் படுமென் றுதாரணமுங் காட்டினார். எனவே, இனமாய பொருள் இரண்டுள்வழி அருந்தாபத்திப் பிரமாணம் பயன்படுதலும், பலவுள்வழி அது பயன் படாமையும் நன்கு விளங்கும். ஆவாழ்க என்றால் ஏனையவெல்லாம், இறந்துபடல் வேண்டுமென்பது கருத்தா காமையால் இதில் அருத்தாபத்திப் பிரமாணம் வற்புறுத்தாது; ஆவிற்கு மறுதலைப்பொருள் எருமை, குதிரை, ஓட்டகமெனப் பலவிருத்தலாலென்க. சந்திரன் இரவை விளக்குமென்றால், சூரியன் பகலை விளக்குமென்பது கருத்தாதலின் இதில் அருத்தாபத்திப் பிரமாணம் பயன்பட்டது; சந்திரனுக்கு மறுதலைப் பொருள் சூரியன் ஒன்றேயாகலான். இவ் வருத்தா பத்திப் பிரமாணம் சிறுபான்மை அனுமானப் பிரமாணத்துள்ளும் அடங்கும். அனுமானப் பிரமாணத்துள் அருத்தா பத்திப் பிரமாணம் அடங்குமென்பது, ஆசிரியர் சிவஞான யோகிகள் மொழிபெயர்த்தருளிய தருக்கசங்கிரக வுரையிற் காண்க. இன்னும் அருத்தாபத்திப் பிரமாணத்தின் விதியை அளவை நூலுடையார் அடுத்துலகோதும் பொருள ருத்தா பத்தி என்னுந்துறையிற் கூறியிருத்தலானுங் காண்க. இதன் விதி இங்ஙனமாகவும், நண்பரொருவர் ஒருவன் மனைவி யிரு வருள், மூத்தாள் பதிவிரதையென்றால் இளையாள் வியபி சாரியென்பதெப்படி? என்று கடாவெழுப்பி, பகலுண் ணான் சாத்தன் பருத்திருப்பன் என அருத்தாபத்திப் பிரமா ணத்துக்குத் தருக்க சங்கிரகவுரையில் தந்திருந்த உதாரணத்தை எடுத்துப் போட்டுக் கொண்டு சாத்தன் இரவுண்பன், பகலுண்ணானாயும் பருத்திருத்தலின் என்று கருதலளவையான் அறியுமாப் போல, இளையாள் வியபிசாரி யென்ப தறிதற் கறிகுறியொன்று மின்மையால் அங்ஙனங் கூறப்படா தென்றும், இளையாள் பதிவிரதையாகவுமிருக்கலாம், அப்படியல்லாமலு மிருக்கலாம் அவளைப் பற்றிப் பிரதாபம் இல்லை, ஈண்டுப் பிரதாபிக்க வந்தது மூத்தாளையே யென்றுங் கூறியிருப்பதாகத் தெரிய வருகின்றது. தருக்க சங்கிரகவுரையில் அவ்வுதாரணம் வந்த சமயந்தெரியாது வீண்பிரசினை செய்தது தம்மதத்திலெழுந்த துரபிமான புத்தியினாலும் பிற மதத்தின் மேலெழுந்த துவேஷ புத்தியினாலும் அவருக்கு உண்மை தோன்றாமற் போனதை இனிது விளக்குகின்றது. ஆண்டுக் கூறவந்ததெல்லாம் இது: தருக்கசங்கிரகம் சுருக்க நூலாதலின் அது தான் கூறும் விஷயங்களையும் முதல் நூலில் கூறப்பட்ட விஷயங்களையும் சுருக்கிப் பேசவே கருதிற்று. அது சுருங்கச் சொல்லல் என்னும் அழகும், அவ்வழகாற் பெரிய விடயங்களும் தெளிவாய் விளங்குதலால் விளங்க வைத்த லென்னும் அழகுமாம். அது காண்டல் கருதல், ஒப்பு, உரையென நான்களவைவகுத்து, அவ்வகுத்தவற்றுள் முதல் நூலிற் கூறப்பட்ட ஏனையளவை களையும் அடக்கப் பார்க்கும். அதனால், அருத்தாபத்தியும் சிறுபான்மை அனுமானப் பிரமாணத்துள் அடங்குதல் பற்றி அதையவ்வாறே யடக்கும். முற்றும் அருத்தாபத்திப் பிரமாணம் அனுமானப் பிரமாணத்துள் அடங்காதாம். முற்றுமே யடங்குமாயின், அருத்தாபத்தியெனப் பெயர் வேறு கொடுத் தொன்று காட்டல் நின்று பயனின்மை என்னுங் குற்றமாம். அது கூறிய முதல் நூல்களும் மிகைபடக் கூறலென்னுங் குற்றத்திற்கிலக்காம். ஆதலால், ஒவ்வோர் இயைபு பற்றியும் சிறுபான்மை தான் கூறிய பிரமாணங்களுள் அவை அடங்குதல்பற்றியும் தருக்கசங்கிரகம் அவற்றை அடக்கின மையை அதனுரை தெரிவித்து அதற்கியைந்த உதாரணங் களையும் காட்டிற்று. ஆகவே, அருத்தாபத்திப் பிரமாணம் முற்றும் அனுமானத்துள் அடங்குமாறில்லை; அதற்கு தாரணமாம் அறஞ்செய்தான் துறக்கம் புகும் என்பதும், பகலுண்ணான் சாத்தன் பருத்திருப்பான் என்பது போல் அனுமானப் பிரமாணத்துள் அடங்காதாம். அதவா, அனுமானிக்கினும் சொல்லுவான் கருத்து வகையாலும் அதன் வழித்தான் அவன் சொல்வகையானுமே தெளியப் படுமென்பது. அதுபோல மூத்தாள் பதிவிரதை யென்பதுங் கொள்ளப்படும் என்றால், இளையாள் வியபிசாரி என்பதும் பெறப்படுமென்க. இளையால் வியபிசாரியோ அல்லது பதிவிரதையோ அதைப் பற்றிய பிரதாபமில்லை என்பதைச் சற்றுப் பரிசோதிப்பாம். ஒருவனது பொருளாகிய மனைவிய ரிருவரில், பேசுகிறவன் மூத்தாளாகிய இலக்கியப் பொருளை யெடுத்துக் கொண்டு அதன் பாலுறும் இலக்கணமாகிய பதிவிரதைத் தன்மையை வரைந்து பேசும் போது, அவ்விலக் கணம் இளையாள் பாலுஞ் செல்லுமாறு பேசினானாயின் அதி வியாததி யென்னுங் குற்றமாம்; அல்லது, இருவரது இலக்கணங்களும் தெரிந்திருந்தே மூத்தாட்கு மட்டும் அவ்விலக் கணத்தை வரைந்து கூறினானாயின், இருபொருட் குப் பொது வாவ தொருபண்பை ஒன்றற்கே சிறப்புறக் கூறுதல் குற்றமாம். ஆதலால் இருவர் இலக்கணங்களும் மாறுபட்டிருந்தமை கண்ட ஒருவன், அவர்களது கணவற்கு அவற்றைத் தெரிவிக்க வேண்டி மூத்தாள் பாலுள்ள இலக்கணத்தை மட்டுங்கூறி, அவ்விலக் கணம் இளையாள் பாலில்லாமையைக் குறிப்பாலுணர்த்தி அவ்விலக்கணத்தை மூத்தாட்கு மட்டும் வரைந்து கொண்டு நின்று விட்டான். அதையறிபவன் அருத்தாபத்திப் பிரமாணத் தாலறிதற் பாலனாமென்க. மனைவியரில் மூத்தாளிலக்கணம் கூறுவோன், இளையாளில க்கணந் தெரியானாயின் அறிப வன் அருத்தாபத்திப் பிரமாணத்தா லறியாதிருத்தற் பொருட்டு இளையாளிலக்கண மெனக்குத் தெரியாது என்றுஅடை கொடுக்கற்பாலனென்பது. இது அன்னம் பட்டியத்தினுங் காண்க; குறித்தோன் கூற்றந் தெரித்து மொழி கிளவி என்றார் தொல்காப்பியனாரும். ஒரு பொருள் வேறுபாடு குறித்தோன் அது ஆற்றன் முதலியவற்றால் விளங்காதாயின், அதனைத் தெரித்துச் சொல்லுக என்பதே யதன்பொருளாம். அன்றியும், தருமஞ் செய்தான் சுவர்க்கம்பு குவான் என்றால், பாவஞ் செய்தான் சுவர்க்கம் புகலாம் அல்லது புகாதிருக்கலா மென்று கொள்ளப்படலா மென்பார் போலும் நமதன்பர்; நிற்க. எதிரியினது காரணகாரிய அழிவுபாடு ஸ்ரீநாயகரவர்கள் எழுதிய சைவ சித்தாந்தத்தில் பொதிந்து கிடந்த உண்மைப் பகுதிகளையும், ஏனைச் சமயிகள் அறிவுதிரிந்து கூறும் புரைபட்டுக் கீழ்மையுறும் பகுதிகளையும் தினகரன் என்னு மெமதரிய நண்பர் கூர்த்த அறிவுடைய சித்தாந்தசைவர் உணர்ந்து பேறுபெறுமாறு விரித்துத் தீட்டிவந்த விடயங்களின் திறமறிந்து நன்னெறிச் செல்லும் ஊழின்றி, அவை புரைபட்டன வாகத் தமது திரிவெய்திய அறிவிற்கண்டு, தொன்னூல்கட்கு முரணுறு மாறு அவற்றை மறுப்பார்போன்று சில பலவரிகள் எழுதிச் சிறுமியர் மணற்சோறட்டுண்டு தம்மிலே தேக்கிக் களிக்குமாறுபோலக் களிப்பெய்தி நின்றன ரொரு மாயாவாதி. தமிழிலுள்ள சிறந்த காவியங்களையும் இலக்க ணங்களையும், மெய்கண்ட சாத்திரங்களின் அருங்கருத் தையும் படித்தறிந்து தெளிதலில்லாத அந்நண்பர் எழுதிய வற்றை யொரு பொருட் படுத்தி யான்றோர் ஒருவரும் இது காறுங் கண்டித்திலர் எனினும், மந்த அறிவுடையார் இந்நண்பரது போலிக் கூற்று களைக்கேட்டு மயங்காமைப் பொருட்டு, ஈண்டுச்சில யாம் வரைந்து காட்டுவாம். இந்நண்பரது அருத்தாபத்திப் பிரமாண விசாரத்தை மேலே துவைத்தாம். இனி மற்றப்பகுதி வருமாறு: ஸ்ரீநாயகரவர்கள் பஞ்சபூதம் ஒன்றிலொன்றொடுங்கு முறைமைக்கும், அவை வெளிப்படு முறைமைக்கும் தெளிவு பெற எடுத்துக் காட்டிய பாத்திரவுவமானத்திற் குற்றங் காணவந்து ஒரு பாத்திரம் மற்றொரு பாத்திரத்தை விட்டு வெளிவந்த பிறகு இவ்விரண்டு பாத்திரங்கட்கும் சையோகாதி மற்றெந்தச் சம்பந்தமுமில்லாதிருக்கும் அங்ஙனம் பஞ்சபூதங்களிருக்கக் காண்கிலோம் என்று நண்பர் வரைந்தார். பஞ்சபூதத்தின் ஒடுக்கத் தோற்றத்தொழின் மாத்திரைக்கு எடுத்துக்காட்டிய பாத்திரவுவமை யுத்தியில் அவற்றின் (பஞ்சபூதத்தின்) இருத்தற் றொழிக்கும் இயைபு காணவந்து ஆவிரம்பூப் பொன்னோ டொக்குமென்றால் அது பொன்போல் அடித்து நீட்டவருமோ என்று வினாவுவாரோ டிந்நண்பரும் இனப்பட்டு இழுக்குற்றார். பொருட்கும் உவமைக்கும் உள்ள இயைபுகள் காணவல்ல அத்துணைப்பயிற்சி தானு மிவர்க்கில்லை கொலாம். பொருட்கு உவமை எடுத்துக் காட்டுவார் குறிப்பொடு பட்டன்றே அவ்விரண்டற்கும் உள்ள இயைவு கோடற் பாலது? அவ்வாறின்றி நண்பர் கருத்துப்படியெல்லாம் இயைபுகள் காணப்படவேண்டும் போலும்? அது கிடக்க, நண்பர் கருத்துப் படியே பார்க்கினும் ஈண்டைக் காவதோ ரிழுக்கில்லை, என்னை? ஸ்ரீநாயகரவர்கள் கூறியவற்றில் பெரிய பாத்திரத்தில் சிறிய பாத்திரங்கள் அடங்கி யிருப்பதும் அவை ஒன்றிலிருந்து வெளிவருவதுமாகிய நிதரிசனமே யீண்டமைதியாயதென்க எனப் போந்த தொடரில் வெளிவருவதும் என்ற இரு சொல்லும் என்னை வாட்டந்திருத்துவதே என்ற திருக்கோவையாரிற் போல ஒரு சொன் னீர்மைத் தாய்நின்று கட்பொறிக்குப் புலனாவதும் என்று பொருள் கோடுமாயினென்பது; புறம்பே படின் என்று கோடுமாயினன்றே நண்பரது இழுக்கிய கருத்துப் படி வழுவாவது? முறையே சிறியவும் பெரியவுமாய பாத்திரங் கள் பலவற்றைப் பொதிந்து கொண்ட ஒரு பெரும்பாத்திரம் வாயில் மூடப்பெற்றிருந்த நிலைமை ஆகாயமொழிந்த நான்குபூதங்களும் அதனுள் ஒடுங்கியிருந்த முறைமைக்கும் அப் பாத்திரத்தின் மூடி நீக்கப்பட்டு அது ஏனையவற்றைத் தன்னுட் செறித்து கொண்டு கட்பொறிக்கு விடயமாகு நிலைமை ஒன்றைவிட்டொன்று பிரிவுறாது தோன்றும். ஐம்பெரும் பூதங்களின் கிடைக்கைக்கும் ஒப்பாயவாறு தேர்ந்துணரவல்ல நுண்ணறிவாளர்க்கு நாயகரவர்கள் எழுதிய அரிய தொடரி னுண்மை இனிது விளங்கும். அவ்வாறன்றி உண்மைப் பகுதி களிலும் குற்றங்காணத் துரபிமானம் கடைப்பிடித்தொழுகும் நண்பர் போல்வார்க்கு அவர் மதத்தில் விசேடித்துவழங்கும் கயிற்றரவு, இப்பி வெள்ளி, பேய்த்தேர்போல அவ்வுண்மைப் பகுதியும் பொய்மையாகக் காட்டிற்றோ? அதுவன்றி அம்மதத் தினர்க்கு நிலத்தியல்பால் நீர்திரிந்த வாறுபோலத் தாங்கள் பயிலும் நூற்பழக்கத்தால் திரிவு கொண்டு எல்லாவற்றையும் பொய் (முக்காலத்தும் இல்லை) என்று கண்ட அவர் கருத்து அங்ஙனம் காட்டிற்றோ? நிற்க. பிரமமே உலகமாகத் திரிந்தது என்னும் தமது வழுக்கு ரையை நிலைநிறுத்தற் பொருட்டு எடுத்த ஆகாய உபமானத்தை ஆதரிக்க இந்துவென்பவர் காட்டிய பஞ்சு திட்டாந்தம் பொருந்தாமையான் நாயகரவர்கள் நூலைப் பிச்சுப் பார்த்த போதும் அவை பஞ்சாலாக்கப் பட்டவை யென்று சிறு குழந்தையும் அறிந்து சொல்லும். இவற்றோடு எங்ஙனோ ஆகாயாதி பொருந்தும்? என்று மறுத்ததைப் போலி மருட்டால் மாற்றவந்து இந்நண்பர் ஆகாயத்தின் றன்மை சப்தம்; ஆதலின். எங்கெங்கு ஆகாயமுளதோ அங்கங்குச் சப்தமுள்ளது. வாயு வாதி பூதங்களில் ஆகாய முளது ஆகலின் வாயுவாதி பூதங்களில் சப்தமுளது ஆகலின் எப்படிப் பஞ்சிலுள்ள தன்மையே நூலிலும் வதிரத்திலு முண்டோ, அப்படியே ஆகாயத்தின் தன்மை ஏனைய பூதங்களிலுமுண்டு. நாயகரவர்கள் அபேக்ஷித்த படியே ஆகாசாதிகளின் றன்மை வாயுவாதிகளி லிருக்கக் கண்டாம். இப்போதாவது காரணகாரிய சம்பந்தம் பூதங்களில் ஒப்புவார்களோ? ஒப்பார்களோ? என்று மிக இரங்கிக் கூறுகின்றார். இவரது புலமையை என்னென்பாம்? காரணப் பொருளிற் கிடக்குந்தன்மை காரியப் பொருளினும் இருத்தற் பாலது. காரணப்பொருளிற் கிடந்திலவாய பண்புகள் காரியப் பொருளிற் காணலுறுமேயெனின், அவை பிற காரணப் பொருளின் சேர்க்கையால் உண்டாயின வென்பதும் தெற் றெனத் துணியப்படுமன்றே? எவ்வாறெனில்? வெண்பஞ்சியா னாய நூலின் வெண்டன்மையும், அந்நூலின் உருவத்தைச் சிதைப்புழிக் காரணப் பொருளாம் பஞ்சின்றன் மையுமே காணலுறுவதன்றிப் பிறகாரணப் பொருளின் றன்மை இறைத் துணையுங் காணப்படுமாறில்லை. அவ்வாறன்றி, வெண்பஞ்சி யானாய நூலிற் செம்மை நிறம் காணப்படுமாயின், அச் செம்மை நிறத்தைத் தரும்பொருள் வெண் பஞ்சின் வேறாகப் பிறிதொன்றுண்டெனவேபடும். படவே, வெண்பஞ்சியானாய நூலிற் செம்மைநிறங் காணப்படுவது கொண்டு அந்நூல் வெண்பஞ்சியானாய தென்றாகாமல், செம்மைநிறந்தரும் பொருளின் காரியம் என்று கோடல் பொருந்து மாறியாங்ஙனம்? அது போலவே உளருந்தன்மைத் தாய் வளியினிடத்து ஆகாயத்தின் பண்பாம் ஓசை தோன்று மாயின், அது ஆகாயத்தின் சேர்க்கையானாய தென்று கோடலன்றி, ஆகாயத்தின் காரியமே வாயுவென்று கோடலி யாங்ஙனம்? வாயு ஒரு பொருள். ஆகாயம் பிறிதொரு பொருள். இங்ஙனம் வெவ்வேறு பெற்றியவாயபூதங்களுள் வாயுவில் ஆகாயம் புணருங்கால் தன்னரைக்கூற்றிற் காற் பாகமே அதிற்கலக்கு மென்பதூஉம் அவ்வாறு கலந்துழியும் ஆகாயத்தின் காரியம் வாயுவாகாதென்பதூஉம் பஞ்சீகரண முறைமை யுணர வல்லார்க்கு இனிது விளங்குமென்பது. இனிக் காரியமாய நூலாதியைப் பிச்சுப் பார்த்த போது காரணமாய பஞ்சாகவே முடிந்தபடி, காரியமாய வாயுவாதி களைப் பிச்சுப் பார்த்த பொழுது, காரணமாய ஆகாசமாக வில்லையே என்று திருத்தமுற நாயகரவர்கள் வரைந்த பகுதியை, நண்பர் தமது குழறுபாட்டுரையான் மறுக்கவந்து அங்ஙனமாக இப்போது ஒவ்வொரு பூதமாக வெடுத்துப் பிச்சுப் பார்க்குமளவில் ஒவ்வொன்றும் துவியணுகம், திரியணுகம், சதுரணுகங்களாகப் பிரியும். அவைகளை மறித்தும் பிரிக்க (கையினாற் பிரிக்கக்கூடாதாயின், மனத்தினாலங் ஙனம் செய்யலாம்) ஆதீந்திரிய அணுக்களாய் முன்கூறியவாயுவோ டொப்ப ஆகாயரூபமாகு மல்லவா? அங்ஙனமாயின் காரியமாய நூலாதிகள் காரணமாய பஞ்சானது போல் காரியமாயவாயு வாதிகள் காரணமான ஆகாயமாயது பொருத்தமுடைத்தே என்றோர் வழுக்குரை யெழுதிக் களித்துச் செருக்கினார். உலகியற்பொருளெல்லாம் அரு உருவென இருபிரிவுடையன வாய் மறித்தும் கலப்புப் பொருளெனவும் தனிப் பொருளெனவும் இருவேறு வகுப்புடையனவாய் இயலும். இங்ஙனமாக நான்கு வகுப்புக்குட்பட்ட பொருள்களனைத்தும் வெவ்வேறு பெற்றியவாய அணுக்கூட்டக்கிழமையானாயதாதலின், அவற்றுள் உருவப் பொருளின் அணுக்குழாம் பிரிக்கப் பட்டுழி அவை யருவத்தன்மை பெறுதலே கண்கூடாக அறியக் கிடக்கின்றது. பொருள்கள் பகுக்கப்படுங்கால் தனிப்பொருள் ஒருதன்மைத்தாய பல அணுக்களாலும் கலப்புப் பொருள் பல தன்மையவாய பல அனுக்களாலும் அமைக்கப்பட்ட வாகலான், அவை பகுக்கப்பட்டுழியும் அவ்வாறே பிரிவனவாம். பிரிந்துழியும் ஓரணு தன்றன்மை திரிந்து மற்றோணுவாகவாதல் ஓரணுச்சாதி தன்றன்மை திருந்து மற்றோரணுச் சாதியாகவாதல் திரிதலில்லை யென்பது பொருட்டிறநூல் (Physics) நாற்பூத விளக்கம் (Chemistry) ஆதிய அரிய நூல்களாலும் மெய்கண்ட நூல்களாலும் இனிது புலப்படும். எவ்வாறெனின்? ஒரு பசும் பொற்கட்டி தனிப் பொருளாதலின் அதைப் பல அணுக்களாகச் சிதைத்து, ஒரு கலத்திட்டு (in a glass vessel) அவை புறம்பே போகாவண்ணம் ஓம்பிப்பார்ப்புழி அவை கட்பொறிக்குப் புலனாகாமை தெள்ளிதிற்புலப்படும். மறித்தும் அப்பாத்திரத் தோடு எரிதழல்கூடியவழி யவ் வணுக்கள் ஒருங்குசேர்ந்து முதலிற்கண்ட பசும்பொற் கட்டி யாயே காணப்படும். இதனால், உருவத்தனிப்பொருள் அணுக்க ளாகப் பிரிக்கப்பட்டுழி அருவத்தன்மையுற்றும் தன்றன்மை அணுக்களைவிட்டுப பிரியாததாய் அவ் வணுக்கள் தனிப் பொருளணுவாற்றலால் (Cohesion) கூடியவிடத்து முன்னைய உருவப்பொருளாயே தோன்று மென்பதூஉம், ஓர் உருவத்தனிப் பொருள் அருவத் தன்மை யெய்தி மறித்தும் உருவமாகச் சமைந்துழிப் பிறிதோர் தன்மைப் பொருளாகாது முன்னைய தன்மைப் பொருளாகவே யமையுமென்பதூஉம், இயல்பில் பழமையாகவே நிலைபெறும். எவ்வெப் பொருளும் உருவம் வேறுபட்டு ழியும் அருவமடைந் துழியும் தன்றன்மையிற்சிறிதும் வேறுபடுதவில்லையென்பதூஉம் திண்மைபெறக் கிடைக்கப் பெற்றதன்றே? இது போலவே நீர் என்னும் கலப்புப் பொருளும் நூல்வழியே பிரிக்கப்படுமிடத்து இருவேறு நீர் வாயுக்களாகப் பிரிந்து மீண்டும் அவ்வாயுக்கள் புணர்க்கப் படுங்கால் நீர் என்னும் கலப்புப்பொருள் அமைவதூஉம், நீ ரென்னும் கலப்புப் பொருளை உண்டாக்குதற் கிழமைத்தாய அணுக்கள் தன்றன்மை திரிவெய்தி வேறுதன்மை யுடைய ஒரு பொருளாக அமைத லில்லை யென்பதூஉம், அவ்வாறு அமைத்துக் கோடற்கு நண்பர்போன்ற எத்துணை மாயா வாதிகள் எத்துணைமாயம் புரியினும் அவை கடைபோகா வென்பதூஉம், இனிதுபெறக் கிடந்ததன்றே? இவ்வாறே மண்-புனல்-அனல் என்னும் உருவப் பொருளெல்லாம் அணுக் களாகப் பிரிந்துழி உருவழிந்துகட் பொறிக்குப் புலனாகா. அத்துணையேயன்றி, ஆகாயத்தின் றன்மை யெய்துதலாதல், ஆகாயமாகத் திரிதலாதல் இயல்பில மைந்த விதிக்கு முரணுறுமாதலால், அங்ஙனங்கூறுவார் சொல் லன்றி அப்பொருள்கள் அவ்வாறாகாமை யினிது பெறப்பட்டு, இது போலவே வாயுவின்றன்மையும் திரிவெய்துமாறில்லை யென்பதும் பெறப்பட்டு நண்பர் எடுத்துரைத்த மறுப்புகளும், கொள்கைகளும் அவரையே மயற்கடற்குளமிழ்த்தி நாயகரவர் களது அருங்கொள்கை களைத் தாங்குத் திண்ணிய கோடாயி னமைகண்டு யாம் செருக்குற்றனம். என்னையெனில்? காரியப் பொருளாம் நூலைச்சிதைக்கப் பஞ்சுபெற்றவாறு போல் ஆகாயத்தின் காரியமென்று நண்பர் குமுறியுரைத்த பிருதிவியாதிகள் ஒடுங்குமுறைமையில் ஆகாயமாகிய காரணப்பொருளாகத் திரிதலில்லையென்பது பெறப்பட்ட மையினென்க. தருக்க நூலாரும், பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயமாதிகளைத் தனித்திரவியங்களென்றும் அவ்வொவ் வொன்றின் றன்மை களையும் தனித்தனியே எடுத்து விதந்து ரைத்து ஒன்றன்பண்பு பிறிதொன்றிற் காணலுறின் அதன் சையோகத்தால் பிறி தொன்றிற்கும் அப்பண்பெய்திற்றென்று அதிவியாத்திக் குற்றம் படாது விலக்கி, உதாரணமாகத் தண்ணென்றது சிலாதலம் என்புழித் தட்பந்தோன்றுதல் நீரின் சம்பந்தத்தா லாகலின், ஆண்டு அதிவியாத்தியின்மையுமுணர்க, என்றும் விரித்துத் தெளிவுபெற விளக்குபவாகவும், நண்பர் அவற்றை யெல்லாம் தினையளவும் ஆராய்ச்சி செய்திலராய்த் தனக்குத் தோன்றியவாறெல்லாம் புரைபல விரியவரைந்து பெரி யாரைப் பழித்து வசைமொழிக்கிலக்காயினார் கண்டீர். இங்ஙனம் ஒரு பொருள் பிறிதொரு பொருளாகத் திரியு மாறில்லையெனும், உண்மையைச் சிறக்கவாராய்ச்சி செய்தன்றே எமது சைவப் பெரியோரும் உலகினிற் பதார்த்த மெல்லா முருவமோடருவமாகி, நிலவிடுமொன் றொன் றாகா என்று அருளிச் செய்வாராயினர். இன்ன பல அரிய வுண்மையெல்லாம் துரபிமானம் கடைபிடித் தொழுகும் நண்பர் போல்வார்க்கன்றி நடுவுநிலைமை யோடிருந்து கருவிநூல் உதவிகொண்டு முறைபட ஆராய்ச்சி செய்வார்க்கே புலப்படற் பாலனவாம் என்பது. நிற்க. இனி, எமது சைவ சித்தாந்த சண்டமாருதம் ஆகாயம் ஒழித்தொழிந்த ஏனைய பூதங்கட்கு அவ்வாகாயம் முதற் காரணப் பொருளாமாறில்லையென்பதை வேறொரு முகத் தானும் விளக்கிய வெடுத்த இவை (பூதங்கள்) ஒன்றோ டொன்று விஜாதிகளும் ஒன்றிலொன்று பகைமை கொண்டவை களுமாமென்பது எவரும் எளிதிலுணரக் கூடுமாகவும் இவ்விந்துவுக்கு மாத்திர மேனோ இப்படி வீண் விபரீதம் ஜனித்தது என்ற தொடரின் மேல் தடையெழுப்பி விஜாதி யென்றால் வேறுஜாதி யென்றர்த்தம். பொருட்களின் ஜாதி அப்பொருட்களின் குணங்களால் நிதானிக்கப்படும் ஆகலின், பூதங்களின் குணத்தைச் சிறிது விசாரித்து ஜாதியேற்படுத்து வோம். மண்ணின் விசேஷகுணம் நாற்றம் ஆகலின் அது எது நாற்றமுடைத்தோ அது அது மண்ஜாதி. (நாற்றமென்னல், நறு நாற்றம் தீயநாற்றம் இரண்டையுமே) புஷ்பம் சந்தனாதிகளும், மல மூத்திராதிகளும் நாற்றமுடையன வாகலின் அவை மண் ஜாதியாம். இங்ஙனமே, ஆகாய விசேஷகுணம் சப்தம ஆகலின் எது எது சப்த முடைத்தோ அதெல்லாம் ஆகாயஜாதி. எப்படி காரிய மாயநூல் துணிகள் அவைகளின் காரணமாய் பஞ்சோடு ஸஜாதியோ, அப்படியே காரியமான பூதங்கள் அவைகளின் காரணமான பூதத்தோடு ஸஜாதியாம் என்று வாளா விரிவுறவரைந்து மிகத்தருக்கினார் நண்பர். ஜாதியினிலக் கணம் இதுவென்றெழுதி மறுக்கப்புகின் அது தமக்கே ஒரு பெருங்கேடு விளைக்குமென்று கருதிப் போலும் நண்பர் ஜாதியென்பது இன்னதகைத்து என்று விளக்கிலராய் மேற் குறிக்கப்பட்ட பகுதியெழுதியது? நிற்க. ஒரு குணமாதல் பலகுணமாதல் பொருந்திய ஒரு பொருட்கூட்டமே ஜாதியென்னும் பெயர்த்தாம். என்னை பெறுமாறெனின்? ஒரு வணிகர்கடையில் பலபொற்கட்டிகள் பகுப்புகளாக இருக்கக்கண்டு அவற்றுள் ஒரு பகுதியை விலை கோடற்குப் போவார் அவ்வணிகர் பெருந்தகையை விளித்து ஐய! நல்ல ஜாதிப் பொற்கட்டிப் பகுதி எமக் கொன்று தருகவென வினவி அவ்வாறேபெற்று ஒவ்வொரு கட்டியையும் உரைகல்லில் உரைத்து அப்பகுதிக் கட்டிகளனைத்தும் ஒரு மாற்றாக விருக்கில் அதற்குரியவிலை கைக் கொடுத்துப் போவதைப் பார்த்துச் ஜாதியினிலக்கணம் அறியவிரும்புஞ் சிறுவனொருவன் அதை யினிது தெளிந்து கொள்ளுமன்றே; இது போலவென்பது. இதுவே, ஆசிரியர் சிவஞான யோகிகட்குங் கருத்தால் ஜாதி யாவது ஒரு நிகரனவாகிய பலபொருட்குப் பொதுவாவதோர் தன்மை என்று சித்தியார் அளவை யிலக்க ணத்தில் வரைந்தமை யானுணர்க. நண்பர் ஒரு ஜாதியைக்கூறும் பஞ்சபூதங்களில் இவ்விலக்கணக்கிடக்கை அறிவுக்கு இனிது போதருமாறு புலப்படுகின்றதா? என்பதைச் சிறிது ஆராய்வாம். பஞ்ச பூதங்களும் ஆகாயச் சாதியயெனின், அதன் (ஆகாயத்தின்) சிறப்புக்குணம் ஓசை யொன்றுமே யவ்வைந்தினு மிருத்தற் பாலது, அஃதன்றிப் பிறகுணங்களுங் காணப்படின் அவை வெவ்வேறு சாதியவென்பதே துணிபாம். அற்றன்று; துத்த குணமுடைய ஆகாயமொன்றே வாயுவாகத் திரிந்து பரிசமும், தேயுவாகத் திரிந்து உருவமும், அப்புவாகத்திரிந்து சுவையும் பிருதிவியாகத் திரிந்து நாற்றமும்எய்தி ஏனைய குணங்களோடு நிகழுமென்றா லென்னையெனின்; அறியாது கடாயினாய். காரணமாய் ஆகாயமொன்றே காரிய பூதங்கள் ஏனை நான்குமாகத் திரிந்ததென்னின், காரணத்தில் இலவாய குணங்கள் காரியத்திற் புதிதாகத் தோன்றுதல் யாண்டு மின்மையானும், இதுபற்றியே தெய்வீகச் சுருதிகளும் தோற்றமும் ஈறும் உள்ளதன்பாலே கிடத் தலின் என்றும் இல்லதற்குத் தோற்றமின்மையின் என்றும் அருளிய வாகலானும், ஆங்கிலேய நூலாரும் பொருட்டிற நூலில் (Physics) நமக்குத் தெரிந்த வளவில், இல்பொருளினின் றும் ஓரணுவைச் சிருட்டிக்கவாதல், உள் பொருளை இல்பொரு ளாகத் திரிவுபடுத்தவாதல் வல்லதொரு தன்மைப் பொரு ளில்லை யென்னும் பொருள்பட (By no power known to us can the smallest particle of matter be either created out of nothing or reduced to nothing) என்று கூறுபவாகலானும் அது பொருந்துமாறு யாங்ஙன? மென்பதாம். அவ்வப்பண்பு களை யுந் தந்து கொண்டிருக்கும் தனித்தனி வெவ்வேறு பூதங்கள் உளவென்பதே தேற்றமாம். ஒரு பூதத்தின் உதவி ஏனைய பூதங்கட்கும் வேண்டியிருத்தலான்* பிறவா யாக்கைப் பெரியோன் சங்கற்ப மாத்திரையானே, அவைகட்குச் சையோகம் பிறந்தமையை நண்பர்தம் போலி மதத்திற்குச் சார்பாகக் காரணகாரியமாக்க வந்து மிக நலிந்து அவற்றை யிடர்ப் படுத்தியும் அவற்றால் அவை போழப்படாவாறு அவற்றினி யற்கை வைரக்குப்பாயம் அவைகட்குப் பூட்டப் பட்டவாறுணர்க. இப்பூதங்கள் ஒன்றிலொன்று காணலுறு வது சையோக மாத்திரையே யன்றிக் காரணகாரியமாக வன்றென்பதை நண்பர் உரையைக் கொண்டே விளக்கிக் காட்டுவாம். ஆங்கிலேய சாதிரிகளும் 4--டிகிரி உஷ்ணம் அப்புவிலுண் டென்று கண்டார்கள் என்றும் கொதிக்கும் ஜலத்தைப் பனிக்கட்டி செய்யும் எந்திரத்திலூற்றி அவ்வெந்திரத்தையிக்க ஜலத்திலுள்ள உஷ்ணவன்மை குறைந்து கொண்டே வந்து ஓர் நிலையில் தண்ணீராகி அது குளிர்ந்து கட்டியாகும். இக் கட்டியோ தன்னிடமிருந்த உஷ்ணமெல்லாம் பறி கொடுத்து, வெளுத்த அப்புவாம் என்றும் நண்பர் வரைந்தார். தேயு வென்னுங் காரணப்பொருள் அப்புவென்னுங் காரியப் பொருளாங்கால் தேயுவின் பண்பாம் வெம்மை அப்புவுக்கும் பண்பாய் அமைதற்பாலது; பொற்பணிபோல, அவ்வாற மைந்துழி அப்பு குணியும், அதன்வெம்மை குணமுமாம். குணியழிந்துழிக் குணமழியும் குணமழிந்துழிக் குணியழியும். ஒன்றைவிட் டொன்று பிரிந்திராவாகலா னென்பது; ஆனால், நண்பருரைப்படி தண்ணீரில் இருந்த வெம்மையெல்லாம் அது பனிக்கட்டியாகப் பரிணமித்துழிக் கெட்டொழிந்தது. ஒழியக் குணமாகிய வெம்மையின்றிக் குணிப் பொருளாம் அப்புத் தனித்திருந்தது போலும்? நன்று! நன்று!! இவர் அறிவின் கூர்மையிருந்தவாறு, குணமொழியவும் குணிநிலை பெறுதற்கு அரியவிதி நண்பர் தான் கற்ற குதர்க்கநூலிற் பெற்றார்கொல்? நிற்க, அப்பு தேயுவின் காரியமாயிருந்துழித் தன்றன்மையாகிய வெம்மையைப் பிரிந்திராதுடனே தானுமழிவுற்றிருக்கும். அங்ஙனமின்றி வெம்மைப்பண்பு தன்னை விட்டொழியவும் தான் அழிவுறா திருந்தமையான் அது தேயுவின் காரியமன் றென்பதூஉம் தனதுநெகிழ்ச்சிக் குணத்திற்கு ஒருதலையாக இன்றியமையா அசமவாயி காரணமாய் வேண்டப் படுதலான் இறைவனது சங்கற்ப மாத்திரையானே தன்னொடு தேயுவின் சையோகத்தைப் பெற்றதென்பதூஉம் இனிது பெறக்கிடந்த வாறுணர்க. இப்பகுதியால், நாயகரவர்கள் எம்மீது (சித்தாந்த சைவர்கள் மீது) பெருங்கருணையால் தெளிவுறத் தீட்டி வந்த, பூதங்களின் காரணகாரியத்தைப் பஞ்சுதிட்டாந்த அழிவி னால் மறுத்தொழித்தபகுதி நியாயவலியுடைத் தென்பதூஉம், பூதங்களொன்றோடொன்று விஜாதி பேதமுற்றன வென்பதன்றிறம் தருக்கவியைபுடைத்தென்பதூஉம் இனிது விளக்கி வற்புறுத்தப்பட்டது. பூதங்கள் ஒன்றோடொன்று விஜாதிபேத முள்ளன வென்று நாயகரவர்கள் ஆழியகருத்தொடு வரைந்ததன் உண்மையுணராது பூர்வபட்சி தன் மிதந்த அறிவான் ஆராய்ச்சிசெய் தெழுதியவை பொருத்தமுடைய வல்ல வென்பதைக் காட்டி மறுத்தொழித்தாம். இனி ஒன்றி லொன்று பகைமை கொண்டவைகள் என்ற தொடரின் மேல் நண்பர் எழுப்பிய தடைகளின் உரத்தையும் நண்பர் உரத்தையும் ஐம்மை வடிவுடைய எமது கூரிய வேலாற் போழ்ந்தெறிவாம். நாயக ரவர்கள் மேற்காட்டிய தொடரி னுள்ள பகைமை என்ற சொற்கு நண்பர் ஒன்றையொன்றழிக்குந் தன்மை எனப் பொருள் கொண்டு குமுறினார். நண்பர் ஆன்றோர் இலக்கியங்களிலும் காவியங்களிலும் ஏனைய பிரபந்தங்களிலும் நன்கு பயின்றில ரென்பதும், தருக்க நூலையும் ஒழுங்குற ஆராய்ச்சி செய்தில ரென்பதும் இதனால் இனிது புலப்படுகின்றது. இலக்கண நூலால் வினை வேறுபடூஉம் பலபொரு ளொருசொல், வேறுபடு வினையினு மினத்தினுஞ் சார்பினுந், தேறத் தோன்றும் பொருடெரிநிலையே என்றும், தருக்க நூலார் இயல் பளவை யென்றும் தெரித்தவற்றை யாராயாது பகைமை என்பதற்கு ஈண்டைக் கேலாப்பொருள் செய்து நண்பர் எமது நியாயசதிரத்திற்கு இலக்காயினார். சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்பவற்றில் ஒன்றையொன்றழிக்குந் தன்மை காணப் பெறாமையால், நாயகரவர்கள் எடுத்தாண்ட பகைமை எனுஞ் சொற்கு அது பொருளன்மையும், நாயகரவர் கட்கு அவ்வாறு கூறுதல் கருத்தன்மையும் பெறுதும். ஈண்டுப் பகைமை என்பதற்கு மாறுபாடு எனப் பொருள் கோடலே சிறப்புடைத் தாம்; என்றால் ஒரு பூதத்திற்குரிய குணம் பிறிதொரு பூதத்திற்கும் உரித்தாகாது, அதனில் வேறுபட்ட குணத்தை யுரித்தாகக் கொள்ளும் என்பதே நாயகரவர்கள் கருத்தென்று இனிது கண்டாம். ஆகவே, ஐம்பெரும் பூதங்களும் ஒரு பண்புடைய வாகாது வேறுபல பண்புகளையுடைய பண்பி களாய் நிலை பெறுவனவாம். சுவையின்வேறுஒளி; ஒளியின் வேறுஊறு; ஊறின் வேறு ஓசை; ஓசையின்வேறு நாற்றம் என்பதாம். இவ்வேறு பாட்டையே பகைமை யென்றதாம். இவ்வருங் கருத்துற வரைந்த தொடர்க்குப் பொருள்காணும் அத்துணை மதுகைதானுமின்றி நண்பர் பிருதிவிக்குக்குணம் சப்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம். இக்குணங்களில் எவைஎவை பகை யுடையன? ஆகாசாதி பூதங்களின் குணங்களைவிட வாயு வாதிய பூதங்களில் அதிக குணமிருக்கக் காண்கின்றோம். இது காரணகாரிய சம்பந்தமுடைய பொருட்கட்கு அமையும் ஓரிலக்கணமாம் என்று வாளாவரைந்து செருக்கினார். ஆகாயத்தின் காரியமே பிருதிவியாயின் ஆகாயத்திலுள்ள பண்பன்றி அதிலிலவாய பண்புகள் உலக இயற்கை யமைதிக்கும் அதை நலமுற ஆராய்ந்த கிரந்தங்கட்கும் முரணாகத் தோன்றுமா றில்லையென்பதை மேலேயாம் கடாவிடைகளால் விரிவுறவரைந்து விளக்கினா மாதலின் நண்பர் இது காரண காரிய சம்பந்தமுடைய பொருள்கட்கு அமையும் ஓரிலக்க ணமாம் என்று வரைந்தது பொருந்தா மையுணர்க. இவரிவ் வரிய இலக்கணத்தை ஈண்டுப்பெற்றே மென்றந் நூலையுங் குறித்து விளக்கினாரில்லை. ஆதலான் அவர் கூறியது அவர் கூறிய கயிற்றரவேயாமென்க. மேல், பகைமை என்பதற்கு நண்பர் கருத்துப்படியேயும் பொருள் கொண்டு ஆனால் பகைமை தேயுவிலும் அப்புவிலு மிருக்கக் காண்கின்றோம் என்று நாயகரவர்கள் கூறலாம். அப்படித் தான் சாமானியமாய்த் தோன்றுகிறது ஆனால் உள்ளபடி அப்படியல்ல. பகையுடைய விருகுணங்கள் ஓரகத்திலிரா என்று தருக்க வாய்பாட்டிற்கு விரோதமாய்ச் சீதோஷ்ணங்களாய் இரு வியதிரேக குணங்களும் அப்புவிலி ருக்கின்றன. மேற்கூறிய தர்க்க வாய்பாட்டுடன் விரோதிக்கின்றதே யெனின்; அங்ஙனமன்று. தேயு உஷ்ணத் தோடு கூடிய அணுக்களாலாக்கப்பட்டது, அப்புவோ அவ்வுஷ் ணங்குறைந்த அணுக்களாலாக்கப்பட்டது; ஆகலின் முரணா தென்க என்று நாயகரவர்களை மறுப்பார் போன்று வந்து தானே ஓர் ஆசங்கை யெழுப்பியதற்கு விடையுந் தானேயிறுத் தெழுதிய பகுதியைச் சிறிது ஆராய்வாம். நண்பர் தான் எடுத்தெழுதிய தருக்க வாய்பாட்டின் நுண்ணிய கருத்தறியாது பொருந்தா ஆசங்கை எழுப்பியதற்கேற்ற மாணாவிடையும் விளம்பி யிடருழப்பதைக் கண்டு கற்றோர் நகையாடுகின்றனர். பகைமையுடைய இரு பண்புகள் ஒரு பொருட்குப் பண்பாதலின் என்பதே யதன் கருத்தாம். தண்மை பண்பியாம் அப்புவுக்கு வெம்மை பண்பாயினன்றே அதனோ டொருங்கிருத்தல் சாலாது? அது அப்புவின் பண்பாகாது தேயுவின் பண்பா மென்றும், தேயுவின் சையோகமாத்திரை யானே அப்புவுக்கு வெம்மையுறு மென்றும் முன்னர் விளக்கினாமாதலின் எடுத்துக் காட்டிய தருக்கவாய்பாட்டிற்கு அது முரணுமாறியாண்டைய தென்ப தாம். பகைவராயினா ரிருவருள் வலியராம் ஒருவர் தன்னெ ளிய பகைவரை யடக்கிக் கொண்டிருத்தல்போலத் தேயுவின் சையோகத்தானே வெம்மைமிகின் அப்புவின் தன்மை புலப்படாது அடங்கியும், அதன் வெம்மை குறையின் தண்மை புலப்பட்டு நிற்குமென்றுங் கோடலன்றித் தேயு வெம்மை மிகுந்த அணுக்களாலும் அப்பு வெம்மை குறைந்த அணுக்களாலும் அமைக்கப்பட்டனவென்று கோடல் உலக வியல்புரைக்கும் நூலாராய்ச்சியில்லார் மருங்கென்று கூறி மறுக்க அஃதாயின் நன்று; குணமழிந்துழிக் குணியுமழியுமென்று முன்னர்க் கூறினீராகலான், தேயுவின் சையோகத்தானே வெம்மைமிகுந்து அப்புவின் பண்பாம் தன்மையழியவும் அப்பு கேடிலாதிருந்த தெவ்வாறெனின்;-நன்றுகடாயினாய், தேயுவின் கூறாம் பசும்பொன்னின் வெம்மைப் பரிசமும். ஒளிரும் வெம்மையும் புலப்படாமை, அதனைப் பொதிந்த பிருதிவிக்கூற்றினருவமும் பரிசமும் அவற்றைத் தடுத்தலான் என்று தருக்க நூலார் தெளிவுற விளக்கியதுபோலத் தேயுவின் சையோகத்தானாம் வெம்மையும் அப்புவின்றன்மை புலப்படாது அதைத்தடுத்து நிற்குமென்று கோடுமாகலானும் தண்மையழிந்து இலதா மென்று யாண்டுங் கொண்டில மாதாலானும் அழிந்தில தாயது மறுவலுந் தோன்றாதொழியவும், ஆறவைத்தநீரில் மறித்துந் தண்மை புலப்படக் காண்டுமாகலானும் அவ்வாறு வினாதல் போலியென்றொழிக. அற்றேல் அஃதாக, ஒளியின தபாவமே இருளென்று கோடல்போல வெம்மைய தபாவமே தண்மை யென்றுகோடும் பிறவெனின்;- அற்றன்று, தண்மை பரிச வுணர்ச்சிக் கிடமாயிருத்தலானும், அபாவப் பொருட்குத் தொழிலிலதாகலானும், தருக்க நூலாரும் அதைப்பொரு ளென்றே கொள்பவாகலானும் அவ்வாறு கோடல் பொருத்த மின்றென்றொழிக. இன்னுங் குண குணியதியலை இயைபுபற்றி மேலிடத்தில் ஆங்காங்குப் பெருகவுரைத்தாம் ஆண்டுக்கண்டு கொள்க. இங்ஙனங் கூறிப் போந்த நெறி பிழைத்து மிகுந்த குறைந்த அணுக்குழுவே தீயுநீருமென்பார்க்கு நூலாதரவும் யுக்தியனுபவ முமின்றென்று கூறுக. இதனாலும் அப்பு தேயுக்கள் விஜாதி பேதமுற்றனவென்பதூஉம், அவை தம்மிலே பகைமை கொண்டனவாமென்பதூஉம் இனிது விளக்கி வற்புறுத்தப் பட்டது. நிற்க. இனி, நண்பர் வேறொரு முகத்தானும் அப்புதேயுக்களது பகைமையை மறுக்கிறார். அதையுஞ் சிறிது ஆராய்வாம். நாயகரவர்கள் நெருப்புநீரைப் பருகுதலானும், நீர் நெருப்பை யவித்தலானும் இவ் விரண்டும் பகைமை யுடையனவெனப் புகலலாம், இது கூடாது என்றெழுதி தீப்பற்றியெரியும் போது அதன் சுவாலையும் நெருப்பாம். தீச்சுவாலையினூடே இந்தனத்தைத் தொடாத படி நீரைப் போக்கவிடுத்தால். அந்நீர் தன்னோடு சையோகித்த தீயை யவியாமல் அதன் உஷ்ணகுணத்தை அச்சையோக வளவாகப் பெற்று மீளும். ஆகலின், அவைகள் பகையுடை யனவன்று என்றோர் ஆசங்கையையும் பின்னர் எழுப்புகிறார். இவ்வா றெழுதி யித்துடன் நின்றிருக்கினும் நண்பருரை சிறிதுபாடு பெறும். இடையில் அறிவுதிரிந்து சிலவரிகளெழு தினமை தான் இவரை இப்போதிடர்க் கடற்குளமிழ்த் துவதாயிற்று. தேயு வுக்குப் பொதுவுஞ் சிறப்புமென இரு வேறுருவுள வென்றும், அவை முறையே பூதங்களினும் இந்தனாதிகளினு மமைந்திருக்கு மென்றும், இந்தனாதிகளில் எரிவதற்கு அது இந்தனாதிகளின் ஓரளவு வெம்மையை யவாவிநிற்குமென்றும், ஆதலாற்றான் ஈரவிறகிலும் நீர் சொரியப்பட்டவிடத்தும் பற்றாது அவிந்து விடுகிறதென்றும் எழுதியிழுக்குற்றார். மேலே, நண்பர் அப்பு வெம்மை குறைந்த அணுக்களா லாக்கப்பட்ட தென்றமையால், தண்மையென்பது வேறுபிறிதன்று, வெம்மையின் குறைவே யென்பது பெற்றாம். ஆகவே ஈர விறகுங் குறைந்த வெம்மை யுடைத்தாம். வெம்மை யேற்றக் குறைச்சலாயிருக் கினும் வெம்மை வெம்மையோடு கூடுதற் கோர்தடை யின்றாம், இனம் இனத்தோடு சார்தல் மரபாதலின். அங்ஙன மாகவும் தீப்பற்று தற்கு ஓரளவு வெம்மை வேண்டுமென்பது அருங்குழவியின் குதலைச் சொல்லொன்றே கோடும். அஃதன்றியும் குறைந்த வெம்மையுடைய எளிய பொருள் அப்புமிகுந்த வெம்மை யுடையவலிய பொருளைச் (தீயைச்) சிதைக்குமாறி யாங்ஙனம்? எளியபொருள் வலிய பொருளைப் புறங்காணுமா? இவற்றை யெல்லாம் நண்பர் ஆராயாமல் பெரியாரைமறுக்க வந்தது, பிறப்பிற் பேடி செருச்செய்யச் சென்றது போலாம், அவை பகைப்பொரு ளாதலினன்றே ஒன்றையொன்று மேற்கொள்வ னவாயின. இவ்வாறெளிதிற் கொளக்கிடந்த தொன்றை நலிந்து கொண்டும் அது நிலையுதலின்றிக் கேடுறுதல், நண்பர் கட்ட குடி காநயத்துட் சிறந்தவரென்பதைக் காட்டுகிறது. பளா!! பளா!! இனித் தேயுப்பிழம்பை நீரவியாமைக்குக் காரணங் கூறுதும். தூலப்பொருள் சூக்குமப் பொருளைக் கெடுக்குமாறில்லை யென்பது தெளியப்பட்டதொன்றாம். ஐம்பெரும் பூதங் களுள் ஆகாயமும் வாயுவுமொழித்தொழிந்த பூதங்கள் மூன்றும் தூலவுருவும் சூக்குமவுருவும் என இருவேறுரு வுடையன வென்பது நண்பர் முதலானோரும் ஒப்புக் கொண்டதாம். அங்ஙனமே, இந்தனத்தில் சுடர்விட்டெரியும் பிழம்பு சூக்குமவுருவினது. அப்பிழம்பினூடே நண்பர் போகவிடச் சொன்ன அப்பு தூலவுருவினதாம். இவ்வாறு தூலவுரு வென்று பெறப்பட்ட அப்பு சூக்குமவுருவிற்றாய சுடர்ப்பிழம்பை யவிக்குமாறில்லை யென்பது எளிதிற் பெறக் கூடுமாக, நண்பர் தூல சூக்கும மரபறியாது மறுக்க வந்தது பிள்ளைமையேயாம். இந்தனத்தில் பொதிந்த தீயையே தூல அப்புக் கெடுக்கவற்று, அதிலுள்ள தீ தூலவுருவிற்றாகலா னென்பது. உண்மை யிவ்வாறிருத்தலின் நண்பர் இவ்விரண்டு பூதமும் பகைமை யுடையவல்லவென்று மறுத்தவுரை நிலை யுதவினறென்பதூஉம், எம் அடிகள் ஸ்ரீலஸ்ரீ நாயகரவர்கள் வரைந்த வுரையே என்றும் ஒளிகெழுமித் துலங்குவனவா மென்பதூஉம், நடுவு நிலைமை யொடு நோக்குவார்க்கு இனிது விளங்கும். நண்பர் மேல் மறுத்தெழுதிய தொடரில் நீரைப் போக்க விடுத்தால் என்று இரு பிறவினை தந்து வரைந்தது வழுவாம் போக்க அல்லது விடுத்தால் எனுமிரண்டு சொற்களில் ஒன்றே பிறபொருட் டொழிலைத் தருவதாக நண்பர் மற்றொன்று விரித்தது மிகைபடக் கூறலாமென்க. இன்னபல வழுஉக்களை இவர் எழுதிய விடயங்களிற் றில தண்டுல நயமாக எளிதிற் பிரித்தெடுத்து விளக்கு தலெளிதாகவும் அவற்றில் சிலவற்றை மாத்திரம் இன்றியமையாத விடங்களிற் குறித்துப் போந்தாம்; ஏனையவற்றைப் பிரித்தலில் பெரும் பயனின்மையான் விடுத்தாம். நிற்க, இத்துடன் அமையாமல் கழிபேரிரையன் ஊணையவாவிக் கொண்டே நிற்குமாப்போல நண்பர், இவ்விரண்டு பூதத்தின் பகைமையை மறுத்துக் கேண்மையைச் சாதிப்பான் றொடங்கி அங்ஙனமில்லாது தன்னோடு சையோகித்த அங்கியின் சூட்டைத் தான் பெறலால் நீருக்கு நெருப்பினிடத்துச் சிநேகத் துவமே சாதிக் கத்தக்கது என்றொரு தொடர் எழுதுகிறார். அறிவுடைப் பொருளல்லா இவ்விரண்டு பூதம் ஒன்றன் குணத்தை யொன்று பெறுமாறும் விடுக்குமாறும் யாங்னம்? அறி பொருட்கன்றேயது நிகழ்தற் பாற்று. ஆகலான், இறைவனது சங்கற்ப மாத்திரையானாதல் பிற அறிபொருளின் புடை பெயர்ச்சி யானாதல் இவ் விரண்டிற்குஞ் சேர்க்கை நிகழ்ந்துழி நூனங்களதிகத் திற்கியைந்தவாறு வெம்மை தண்மை எய்தப் பெறுவனவாம்; இது தொழிலாற்றோன்றிய சையோகம். இதனானும் இவ்விரண்டு பூதத்தின் பகைமை நிலைநிறுத்தப் பட்டமை யறிந்தடங்குக. நண்பர் இப்பண்பின் றிரிவை இனிது விளக்குதற்பொருட்டு எடுத்தாண்ட அங்ஙனமன்றோ மனிதருங்கூட்டுறவால் ஒரு குணமாறி மறுகுணமடைகிறார் கள். என்னுந் தொடரின் யுக்தியை என்னென்பாம்? ஆன்ம விலக்கணம், கடவுளிலக்கணங் கூறத் தெரியாத மாயாவாதத்தை அனுசரித்தமையால் நண்பரிவ்வா றெல்லாங் குழறும்படி நேர்ந்தது. குணமழிந்துழிக் குணியழியுமென்பது மரபாதலின், ஆன்மாவுக்குள்ள ஒருகுணந்தொலைந்து பிறிதொருகுணத்தை எய்துங்கால் அது அழிவுறா திருந்ததி யாங்ஙனம்? இவர் கூறும் நியாயத்தால் நித்திய ஆன்மாவுக்கு அநித்தியம் வரலால், அவர் கூற்றுப் போலியாமென மறுக்க. பின் என்னையோ பெறுமா றெனின்? ஆன்மா சார்ந்ததன்பாலா மியல்பு டைத்து. இது இங்ஙனமாதல், கருடபாவனை பண்ணுமவன் மாட்டும், வெறியாடும் வேலன்மாட்டும் இன்பமெய்தி யான்கண்ணும் வைத்துணரப் படுமென்க; நக்கீரனாரும் இறையனாரகப் பொருளுரையில் ஆற்றாமையெய்தலாவது பிறிதெவ்வுணர்வு மின்றி யவ்வாற்றாமைதானே யாவது என்றுரைத்த வாற்றானு ணர்க. இன்ன தன்மையுடைய ஆன்மா தனக்கெனவோர் உரிமைப் பண்டையதாகாது சார்ந்ததன்பாலதாதலின் கூட்டுறவுக்கு இயைந்தவாறு குணம் பெறும் எனக் கூறுதலே வழுவிலதென்க. நாயனாரும் நிலத்தியல்பானீர் திரிந்தற்றா குமாந்தர்க், கினத்தியல் பதாகுமறிவு என்றருளிச் செய்த வாறுணர்க. இன்னு மிதனை விரிக்கிற் பெருகும் நிற்க. வேறு விஷயமொன்று இனிக் கூறுகின்றாம். சத்தி சத்தியென்றாலும் ஆற்றலென்றாலு மொக்கும். இனிச் சத்தியென்பது சித்துப்பொருள் சடப்பொருளென்னு மிவற்றிலி யற்கையாய்ப் பிளவுபடாது ஒற்றித்து நிற்கும் ஓர்குணமாம். ஒரு பொருளும் அப்பொருட்சத்தியுந் தம்முட் சமவாய சம்பந்த முடையவாகலா னொன்றினொன்று பிரிந்து நிற்குமாறு அவற்றைப் பிரித்தவழி யவை யங்ஙனம் பிரிந்து நில்லாது ஒருங்கேயழிந்து படுமென்பது காட்சி யளவையாற் றுணியப்படும். எனவே, சத்தியென்பது ஒரு பொருட் குணமாய் அப்பொருடோன்றுங் காலத்து டன்றோன்றி யஃதழியுங்காற் றானு முடனழிவதாமென்க. ஒரு பொருட்க ணுள்ள சத்தி மற்றொருபொருட் சத்தியோடி யைந்து அதனைப் புலப்படுக்கும் வழித்தானும் புலப்பட்டு நிற்குமாமென்பதூஉம், அப்பொருளோ டிணங்கியதன் சத்தியைப் புலப்படுத்தாதவழித் தானும் புலப்படாது தன்பொருளிற்கரந்து கிடக்குமா மென்பதூஉம், இங்ஙனம் ஒரு பொருட்சக்தி புலப்பட்டு நின்றவழி யச்சத்தியையுடைய பொருள் தொழிற்படுகின்ற தெனவும் அப்பொருட்சத்தி புலப்பட்டு நில்லாவழியப் பொருள் வறிதே கிடந்ததெனவுங் கூறப்படுமென்பதுதூஉம் விளங்குமாறு ஒன்றன்மேல் வைத்துக் காட்டுதும், சாத்தான்மண்ணாற் குடத்தை வனைந் தான் என் புழி வனைதற்சத்தி சாத்தன் கண்ணும் குடமாதற் கேற்ற சத்தி மண்ணினிடத்தும் புலப்பட்டுநின்றன. வனைதற்சத்தி சாத்தனிடத்தினின்றும் வெளிப்படாதாயின் குடமாதற் கேற்ற சத்தி மண்ணினி டத்தும் வெளிப்படாதாம். சாத்தனதுவதைத்ற்சத்தி வெளிப் படுங்கால் அவன் முயற்சியுடைய னாயினானென்றும், அவனிடத்தச் சத்தி விளங்காதாயின் அவன் வறிதே யிருந்தா னென்றுங் கூறுப. எனவே, சாத்தனதுவனைதற்சத்தி வெளிப் படுதற்கு மண்ணினது குடமாதற் கேற்ற சத்தியும், மண்ணினது குடமாதற்சத்தி வெளிப்படுதற்குச் சாத்தனது வனைதற்சத்தியுந் தம்முட் காரணமாம். அற்றேலிவை யொன்றையொன்று நோக்கித் தம்முட்காரணமாயியைதலி னிங்ஙன முரைத்த லன்னி யோன்னி யாச்சிரயக் குற்றமாகா தோவெனின்:- அற்றன்று, தலைவன் றலைவியோடின்ப நுகர்ந்தான் என்புழி யின்ப நுகர்ச்சி யிருவர் கண்ணுங் காணப்படுதலானும், தலைவியை யின்றித் தலைவனுந் தலைவனையின்றித் தலைவியுமின்ப நுகர்தல் ஒருவாற்றானு மமையாமையி னவரதின்ப நுகர்ச்சிக்கு அவர் தம்முட்டாமே காரணராதல் பெறப்படுத லானும், இதனை இருவரின் முடியுமொருவினை என்பவாகலானும் இன்னோரன்ன வெல்லாம் அன்னி யோன்னி யாச்சிரயக் குற்றமாதல் செல்லா தென்றொழிக. அற்றேலஃ தாக, குடமாதற் கேற்ற சத்தி மண்ணினிடத்துள்ள தென்றுரைத்த தென்னை, சாத்தனி டத்துள்ள வனைதற் சத்தியே மண்ணினிடத்துக் குடமாகக் காரியப்பட்டெழுந்ததா லெனின்;-அறியாது கடாயினாய், சாத்தனிடத்துள்ள வனை தற்சக்தியே மண்ணினி டத்துக் குடமாகக் காரியப்பட் டெழுந்த தென்பார்க்கு அச்சத்தி நீரிற்சென்ற வழியுந் தீயிற்சென்ற வழியும் வாயுவிற் சென்ற வழியும் ஆகாயத்திற் சென்ற வழியுங் குடமெழுதல் வேண்டும், அங்ஙனமெழுதல் காட்சிவகை யானுங் கருத்துவகையானு மறிப்படாமையிற் குடமாதற்கேற்ற சத்தி மண்ணின் மாத்திரமே யுளதென்றும், அது சாத்தனிடத் துள்ள வனைதற்சத்தியோ டியைந்தவழிக் குடமெழுமென்று முணர்ந்து கொள்க. இதனாற் சற்காரிய வாதங்கொள்ளு மெமது சித்தாந்தசைவமே நிலையுதலுறுமாறும், சிவாத்துவித சைவரும் மாயாவாதியரு ளொருசாரா ருங்கூறு மசற்காரிய வாதம் அழிவுபடுமாறுங் கடைப்பிடிக்க. இங்ஙனந் தருக்க நெறியோ டொத்துத் தலையாய அறிவினோ ரெல்லார்க்கு மினிது விளங்கக் கிடக்கு மிதனை மாயாவாதி யருளொரு சாரார் பாகுபடுத்துணராது எல்லாப் பொருள் களும் சத்தியினின்றே தோன்றினவென்ற கூறுதலினவருரை பொருந் தாதா மென்று மறுக்க. இனிப் பிரமவித்தியாப் பத்திரிகையு ளொருவரெழுந்து சத்தியி னிலக்கணங்களைச் செவ்வனே விரித்து விளக்குமதுகையின்றிக் குழறுபடையாகச் சிலவரைந்து, கடமென்பது சத்தின்பாலதா அசத்தின் பாலதாவென்று காரணகாரிய முறைப்படி யாராயப்புகுங் கால் சடமென்பதே முக்காலத்துமில்லாத மிச்சைப் பொருளென்பது முடிந்ததாகலி னக்கடசத்தியுமதனை வெளிப்படுக்கும் வனைதற் சத்தியு முளவாமா றியாண்டு மின்றா மென்றும், கடத்தோற்றமுள தாகலினதுபற்றி யச்சத்தியுமுள தென்று கோடுமெனின் பனியைப்புகையென்றே மருண்ட வுணர்வினானது கொண்டே தீயில்லாவிடத்துத் தீயுள தென்று நிறுவப் புகுந்தவாறுபோல வெறும் பொய்யே யாமென்றும், இன்னோரன்னவெல்லாம் அனுமானப் போலியாமென்றும், உண்மையனுமானத்தா னுணர்வதே மெய்ப்பொருளுணர்ச்சி யெய்துதற் கேதுவா மென்றும் கூறிச் சத்தியுங் காரியமும் யாண்டுமில்லாத மிச்சைப் பொருள்களே யாமென முடிவுரையுங் கூறினார். சிறுமகார் நகையாடுந் திறத்தாற் கூறிய விவர துரைத்திறத்தை யுற்று நோக்குவார்க்குக் கடமென்பதும் உலகமென்பதும் மிச்சைப் பொருள்களாய் முடிவுழி யவற்றாற்சுட்டப்படும் குயவனது வனைதற் சத்தியும் இறைவனது கிரியாசத்தியும் பெறப்படா மையான், அவற்றையுணர்வதற்குக் கருவியாமென்ற அனுமான முதலிய பிரமாணங்களு மில்லையாய் அவற்றை யுணர்த்தி வைத்த தருக்க நூல்களும் போலியாமென்பதும் நன்கு விளங்கும். தருக்க முதலிய நூல்களும் அவற்றுட் கூறப்படும் அநுமானம் முதலிய பிரமாணங்களும் பொய்யொழிந்தவழி எதார்த்த வநுமானமென வொன்றுண்டா மென்பது வெறுஞ் சொன் மாத்திரையே போலும். அசத்துப் பொருளை அநித்தப் பொருளென்று துணிவதற்கு மாறாக அதனை அபாவப் பொரு ளென்று துணிந்தது விலங்குணர்ச்சி போலாமென்றுணர்க. குடங்காரியவுருவாக இருந்த வழி அநித்தமென்றும் காரண மான பரமாணுவுருவாகத் திரிந்த வழி நித்தப் பொருளா மென்றுந் தருக்க நூல்களிற் கூறப்படுதலை யிவர் அறிந்தார் வாய்க் கேட்டறியாமை பெரிதும் இழுக்குடைத்தாம். இனிப் பனித் தோன்றியவழி அதனைப் புகையென்று காணுதல் பிரத்தியட்ச வாபாசமாம். அப்பிரத்தியட்ச வாபாசத்தின்வழி யுய்த் துணரப்படும். அநுமானமும் ஆபாசமாம். பிரத்தியட்ச வுணர்வு சவிகற்பமாய் நிகழ்ந்து துணியப்பட்ட விடத்து அதன் வழியே யநுமான வுணர்வு நிகழ்வதன்றிப் பிரத்தியட்ச வுணர்வு ஐயவிபரீதங்களுடன் நிகழ்வுழி யதன்வழித்தாக அநுமான வுணர்வு நிகழ்தலேலாதாமென்க. இதுபோலக் குடத்தைக்கண்டு குடமென்றே பிரத்தியட்ச வுணர்வு சவிகற்ப வுணர்ச்சி யோடுடன் நிகழ்ந்தவழி மற்றவ்வுணர்ச்சி யாற் குடமாதற் கேற்ற சத்தி மண்ணினிடத்தும் வனைதற் சத்தி குயவனிடத்தும் உளவென்று உய்த்துணர்ந்து கோடல் ஒருவாற்றானும் வழுவா மாறில்லை; யாண்டுக் குடமுளது ஆண்டதன் சத்தியும், அச்சத்தியைப் புலப்படுத்தும் சத்தியும் உளவென்னும் பிறழ்ச்சி யுணர்வோடு கூடாவியாத்தி யுணர்ச்சியுண்மையா னென்க. இனி மற்றொருசாரார் இறைவன் அளவிறந்த சத்தியுடைய னாதலான் இல் பொருளை யுள்பொருளாகவும் உள்பொருளை யில்பொருளாகவுஞ் செய்தற்கண் இழுக்கின் றாகவும் ஆன்மாக் களும் ஆணவ முதலியமலங்களும் அனாதியே யுளவென்றெம்ம னோர் கூறுதல் பொருந்தாதென்ப. அவரு மறியார் என்னை? முன்னோதியவாற்றாற் சத்தியென்பது ஒரு பொருட்கண்ண தாய்ப் பிறிதொருபொருட் கணுள்ள சத்தியை யெழுப்புவ தூஉம், மற்றதனைத் தடைப்படுத்துவதூஉமென்னுந் தொழின்மை யுடையதாகலா னென்பது. இறைவனிடத் துள்ள சத்தியும் அறிவுப் பொருளாயுள்ள அவ்வான் மாக்கட்கு அவ்வறிவை யெழுப்புவதூஉம், இயக்கப் பொருளாகிய மலத்திற்கு அவ்வியக்கத்தை யெழுப்புவதூஉம், மற்றச் சத்திகளியங்காவாறு தடைசெய்து நிற்றலு முடையது. இப்பெற்றித்தாகிய சத்தியே சத்தியெனப்படுவதல்லது பிறிதன் றாகலான், இதனைப் பிறவாறுரைப்பார்கூற்றுப் போலியா மென்றொழிக. இதனை யீண்டெடுத்து விளக்கியது தன்னின முடித்தலென்னு முத்தியாம் என்றித்துணையுங் கூறுதலான் மாயாவாதி, விவர்த்தவாதி, பரிணாமவாதி, சிவாத்துவிதி முதலி யோர் கூறும் மயக்குரையான் மயங்கிச் சித்தாந்த சைவத்துறையி லெடுத்துக் கொள்ளப்படும் சத்தியினிலக்கணங்களாகிய ஆணிமுத்துக் களை யிழவாது பெற்றுக் களிப்புறுவதே பயனா மென்க. இம்மட்டோ, இம் மாயாவாதப்படிறரது கோலா காலத்திற் களவில்லை. எமது நாயகரவர்கள் அகரமுதல என்னுந் திருக்குறளுக்கோர் அரியவுரையெழுதி யுபகரித்திருந் தார்கள். சோமனைப் பார்த்துத் தலைவீங்கிய பிராணியாகிய இவர் முதற்குறள் வாதம் என்றொரு வழுவாசகத்திரட்டை வெளிப்படுத்தினர். அதனை மறுத்து யாம் முதற் குறள் வாத நிராகரணம் என்னும் வைரத்தம்பம் நாட்டியுள்ளேம். அதனையசைக் காத இவரது வீண்கூச்சலுக்கு அறிஞர் மனமிளையார். இத்தகைய அரிய விஷயங்களைக் கொண்ட தாயும், ஸாதுக் களுக்கு மனவுறுதியைப் பயப்பதாயும் விளங்கும் இந்தஸத் கிரந்தம் உலகில் நீடுவாழ்க. சுபம். சுபம். திருச்சிற்றம்பலம் வேதாந்த மதவிசாரம் - முற்றும் - தமிழ் முகவுரைகள் - மறைமலையடிகள் மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை-1 முதற் பதிப்பின் முகவுரை மக்கள் நூறாண்டு உயிர்வாழ்தல் எப்படி? எனப் பெயரிய இந் நூலை இற்றைக்கு இருபத்து நான்கு ஆண்டு களுக்கு முன் சௌமிய வைகாசியில் எழுதத் துவங்கினேம். சென்ற முப்பத்தோராண்டுகளாக எம்மால் நடத்தப்பட்டு வரும் எமது ஞானாசாகரம் என்னுந் திங்கள் வெளியீட்டின் ஐந்தாம் பதுமத்து முதலிதழிலே இதன் முதலத்தியாயமாகிய `நீண்ட வாழ்க்கை என்பது வெளிவரத் தொடங்கியது. அவ் வைந்தாம் பதுமத்தின் மற்றையிதழ்களிலும் ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்தாம் பதுமங்களின் இடை இடையேயும் வெளியாகி வந்த இதன் மற்றை அத்தியாயங்கள். யோக நித்திரை. மனித வசியம் என்னும் எம்முடைய ஏனை நூல்களை அப்போது விரைந்து முடிக்க வேண்டி யெழுந்த இடையூற்றால் அப் பத்தாம் பதுமத்தின் 2,3 ஆம் இதழ்களில் வெளிவந்த அளவில் நிற்க, இந்நூலும் இடையே முடிவு பெறாது நிற்கலாயிற்று. அதுவரையில் வெளிவந்த இந் நூலின் பக்கங்கள் 216 ஆகும், இந் நூலுக்கு அப்போது இடப் பட்ட பெயரில் `வருஷம் என்னும் வட சொற் கலந்திருக்கின்றது. இந்நூல் முதன் முதல் எழுதத் துவங்கிய ஞான்று, வடசொற் கலப்பால் தமிழ்மொழிக்கு நேரும் பொல்லாங்கினை யாம் உணராதிருந்தமையாற் சிறிதேறக் குறைய இந்நூலின் முதல் நூறு பக்கங்களிற் சிற்சில வடசொற்கள் இடையிடையே கலந்துவிடலாயின. ஞானசாகரப் பத்தாம் பதுமத்து 3ஆம் இதழில் நின்றுபோய இந் நூற்பகுதி மீண்டும் ஞானசாகரம் பதினைந் தாம் பதுமத்து 3 ஆம்இதழிலே துவக்கஞ் செய்யப்பட்டுச் சிறிதேறக்குறையத் தொடர்பாக அதன் கண்ணும். பதினாறாம் பதுமத்து முதல் நான்கிதழ்களிலும் வெளியாகி. இப்போது அப்பதுமத்தின் இவ் 5,6ஆம் இதழ்களில் முடிவு பெறலாயிற்று. இடையிலே மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் பெரிய நூலை ஞானசாகரம் 10ஆம் பதுமத்தின் 10ஆம் இதழிலிருந்து துவங்கி ஏழாண்டுகள் பெரிதாராய்ந்தெழுதி, 14ஆம் பதுமத்தின் ஈற்றில் முடிக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்தமையால், இந்நூல் சிறிதேறக் குறைய எட்டாண்டுகள் வரையில் இடையே எழுதப்படுதற்கு இடமில்லாமல் நின்று போயது. என்றாலும், எல்லாம் வல்ல இறைவன் திருவருளால் இப் பெருநூல் இருபத்து நான்கு ஆண்டுகட்குப் பின்னரேனும் இப்போது இனிது முடிவுபெற லானமைக்கு எமது புல்லிய வணக்கம்எம் பெருமான் றிருவடிப் போதுகட்கு உரியதாகுக! இந் நூலை முடித்தற்கு இத்தனை காலஞ் சென்ற தாயினும், இதிற் சொல்லப்பட்ட பொருள்களையும் முறை களையும் பற்றியாம் ஓவாது ஆராய்ந்தபடியாகவேயிருந் தேம். நோய் வரா வகைகளையும் வந்த நோய் நீக்குமுறை களையும் பற்றித்தமிழ் ஆங்கில வடமொழிகளிற் சான்றோர் எழுதிய உயர்ந்த நூல்கள் பற்பலவற்றை யாம் பயின்றறிந்த வளவில் நில்லாது, அவை தம்மை யெல்லாம் எம்மிடத்தே செய்து பார்த்தும். எம்மைச் சார்ந்தாரிடத்தே செய்து பார்த்தும். அவற்றுள் எவை மிகச் சிறந்தனவாய்ச் செலவில்லனவாய் எளிதிற் செய்து பயன்பெறத் தக்கனவாய்த் தெளியப்பட்டன வோ அவைகளை இந் நூலின்கண் வரைந் திருக்கின்றேம். இத்தகையதொரு பயன் சிறந்த உரைநூல் தமிழ் மொழிக்கண் இல்லாப் பெருங்குறையால், ஆண் பெண் பாலாரிற் பெரும்பகுதியினர் தமது வாழ்க்கையிற் பிழைமிக ஒழுகிப் பல்வகை நோய்களாலும் பொருட்செலவாலும் வறுமையாலும் பிடியுண்டு, தாம் ஆண்டு முதிரா முன்னரே இறந்தொழிவ தல்லாமலுந். தம் வயிற்றிற் பிறக்கும் பிள்ளைகளும். அவர்க்குப் பிறக்கும் பிள்ளைகளும் எல்லாம் எங்ஙனமே பெருந்துன்பங்களுக்கு வழிவழி ஆளாகி மடிந்து போகவுஞ் செய்துவிடுகின்றனர். தமிழ் மக்களின் துன்பம் மிகுந்த இக் குறு வாழ்க்கையைக் கண்டு எமதுள்ளத்தில் உண்டான இரக்கமே இந் நூலையியற்றி வெளியிடுமாறு எம்மைத் தூண்டலாயிற்று. மக்கள் வாழ்க்கையைப் பற்றிய இந் நூலில், எந்தப் பகுதியையும் மறைத்தெழுதுதல் ஆகாமையாலும். அன்றி அங்ஙனம் மறைத் தெழுதினால், இன்றியமையாது தெரிந்து ஒழுக வேண்டிய முறைகள் விடப்பட்டு. அதனால் ஆண் பெண் பாலாரை இஃது அறியாமையினின் றெடுக்கமாட்டாதாய்ப் பயனின்றிக் கழியுமாதலாலும் `ஆண்பெண் சேர்க்கை, `மக்கட்பேறு `கரு விலக்குமுதலான பகுதிகளிற் சொல்ல வேண்டுவன வெல்லாம் ஒரு சிறிதும் மறையாமல் திறப்பாகவே வரைந் திருக்கின்றேம். மக்கள் வாழ்க்கையின் உயிர்நிலையாயுள்ள இச் சிறந்த பொருள் களைத் தெளிந்து விளக்காது விடுதலால் வழி வழிப் பெருகும் பெருந்தீங்கினை நன்குணர்ந்தே. திருமூலர் முதலான நம் பண்டையாசிரியர்களும் இவை தம்மைத் தம் நூலில் மறையா தெடுத்து விளக்கி அறிவுறுத் திருக்கின்றனர். இஞ்ஞான்றை ஆங்கில அமெரிக்க ஆசிரியர் களிற் புகழ் மிகப்படைத்த ஆடவரும் மகளிருங்கூட இத்துறைகளில் மறைவு சிறிது மின்றியே திறந்தெழுதி வருமாற்றை, இதற்குப் பின்னுள்ள எமது ஆங்கில முகவுரை யுள்ளும் எடுத்துப் பேசியிருக்கின்றேம். ஆதலால் வாழ்க்கை யின் மறைபொருள் நுட்பங்கள் முற்றும், நோய் நீக்கும் இயற்கை முறைகள் முற்றும் நன்கெடுத்து விளக்கும் இந்நூல் ஆண்பெண்பாலார் இருதிறத்தினர்க்கும் பெரிது பயன் பட்டு அவரை நீடினிது வாழ்விக்கும் என்னும் நம்பிக்கை மிகுதியும் உடையேம். இந்நூலின் முதற்பகுதியில் விரவியிருக்குஞ் சிற்சில வடசொற்களையும் இதன் இரண்டாம் பதிப்பின்கட் களைந்து விடுதற்கு திருவருள் விரைவிற் கூட்டுவதாக. திருவள்ளுவர் ஆண்டு, 1963 மறைமலையடிகள் மாசித்திங்கள், 3 ஆம் நாள் மரணத்தின் பின் மனிதர் நிலை இரண்டாம் பதிப்பின் முகவுரை இந்நூல் முதன்முதல் நமது ஞானசாகரம் (அறிவுக்கடல்) பத்திரிகையின் ஐந்தாம் பதுமத்து இரண்டாவது இதழில் சௌமிய ஆண்டு ஆவணித்திங்கள் துவக்கஞ் செய்யப்பட்டு, இடையிடையே பகுதிபதியாக வெளிவந்து, ஏழாம் பதுமத்து ஒன்பதாவது இதழின்கண் முடிவு பெறலாயிற்று. இதுவரையில் நமது செந்தமிழ் மொழியில் வெளிவராத உண்மைப் புதுப் பொருள் அடங்கிய இந்நூல் மக்கள் வாழ்க்கையின் இயல்பு களையும், அவர்கள் ஒவ்வோர் உலகங்களில் ஒவ்வொரு வகையான உடம்புகளெடுத்து உலவுதலையும், அவர்கள் உலவும் உலகங்களின் தன்மைகளையும் நன்கு விளக்கி உண்மையை உள்ளங்கை நெல்லிக்கனிபோற் காட்டுதல் கண்டு பலரும் இதனை விரும்பிக் கற்பாராயினர். ஆயினும், ஞானசாகரம் (அறிவுக்கடல்) பத்திரிகை வாங்குவோரன்றிப் பிறர் இதனைக் கற்பதற்கு ஏற்ற வசதி இல்லாமை கண்டு இதனை இப்போது தனிப்புத்தகமாக வெளியிடலானேம். இனி மக்கள் என்று சொல்லப்படும் உயிர்கள் எண்ணிறந்த உயிர்ப்பாகுபாடுகளில் ஒன்றிற் சேர்ந்தனவேயாகும். ஆனால், மக்கள் என்னும் உயிர்கள் நல்லதிது தீயதிது என்று பகுத்துக் காணுஞ் சிறந்த மனனுணர்வும், தீயதை விலக்கி நல்லதைக் கைப்பற்றியொழுகுங் கடப்பாடும் உடையனவாய் இருத்தலால் இவை ஏனை ஐயறிவுயிர்கள் எல்லாவற்றையும் விடச் சிறந்தனவாகும். ஆகவே, இவை இறப்புப் பிறப்புக்களின் சிறுமையுணர்ந்து இறைவன் திருவடிப் பேரின்பத்தை அடைதற்கேற்ற பெருமை வாய்ந்தனவாகும். இத்துணைப் பெருமைவாய்ந்த இவ்வுயிர்கள் தம் பிறவிப் பெருமை அறியாமலும், தமக்கு உடம்பையும் உலகங்களையும் படைத்துக் கொடுத்துத் தோன்றாத் துணையாய்த் தம்முள் விளங்கிப் பிறவிகடோறும் தமதுயிரைத் தூய்மை செய்துவரும் இறைவன் பேருதவியை நினையாமலும், தம் முற்பிறவிகளை உய்த்துணராமலும், இந்நிலவுலகின் சிறு வாழ்வையே நிலை யாக மதித்துப் பழி பாவங்களை மிகவும் தொகுத்து, மேல்வரும் பிறவிகளைப் பாழாக்குகின்றன. இறைவன் தந்தருளிய இவ்வரிய மக்கட்பிறவியை இங்ஙனம் வறிதாக்குவதன் காரணம் என்னென்று நோக்கியவழி, அவை தாம் இறந்தபின் அடையும் நிலையை ஆராய்ந்து பாராமையே யென்பது நன்கு விளங்கிற்று. உயிர்கள் மறுமையில் எய்தும் நிலைகளைப் பற்றிக் கூறும் நூல்கள் சிற்சில உளவேனும், அவற்றில், எடுத்துக் காட்டப்பட்ட கதைகள் உண்மையுடையனவென்பது புலப்படாமையால், அந்நூற்பொருள் நம்பத் தக்கவைகளாக நமக்குத் தோன்றவில்லை. அவற்றைத் தவிர மறுமை நிலையை உள்ளவாறு விரித்துக்கூறும் வேறு நூல் ஒன்றேனும் தமிழில் இல்லாமையால், இதனை இயற்றலானேம். இதன்கண் எடுத்துக் காட்டப்பட்ட வரலாறுகளிற் பெரும்பாலன உண்மையாகவே நிகழ்ந்தவையாகும். ஆதலால் மறுமை நிலையை ஒருவாறாயினும் உண்மையான் உணர்ந்து பயன்பெற வேண்டுவார்க்கு இந்நூல் பெரிதும் பயன்படும் என்னும் நம்பிக்கையுடையேம். மறைமலையடிகள் யோக நித்திரை முகவுரை சாலிவாகனசகம் 1834-ஆம் ஆண்டு சித்திரைத் திங்கள் (ஏப்பிரல், 1911) வெளிவந்த நமது ஞானசாகர ஆறாம்பதுமத்து முதல் இதழில் முதன் முதல் துவக்கஞ் செய்யப்பட்ட யோக நித்திரை என்னும் இவ்வரும்பெருங் கல்விநூல், இடையிடையே பல ஆண்டுகளாக மெல்ல மெல்ல வெளிவந்த அதன் ஏழு எட்டு ஒன்பதாம் பதுமங்களில் தொடர்பாக எழுதப்பட்டு, இப்போது நடைபெறும் ஞானசாகரப் பத்தாம் பதுமத்தின் 6,7ஆம் இதழ்களில் முற்றுப்பெறுவிக்கப்பட்டது. ஆகவே, இந்நூல் முற்றுப் பெறுதற்குப் பதினோராண்டுகள் ஆயினவென்று அறிதல் வேண்டும். இவ்வாறு இது மெல்ல மெல்ல எழுதப் பட்டதனால், சென்ற இருபதாண்டுகளாக இக் கலைத்திறத்தைப் பற்றிய பல நூலாராய்ச்சிகளிற் கண்ட முடிபுகளும், பல்லாண்டுகளாக இடையிடையே ஆழ நினைந்து பார்த்துத் தெளிந்த நுணுக்கங்களும், இதிற் சொல்லப்பட்ட முறைகளை நேரே செய்துபார்த்து அறிந்த மெய்ப்பயன்களும் இதன்கண் இயன்றமட்டும் நன்கெடுத்துக் காட்டி விளக்க இடம்பெற்றேம். மக்கள் வாழ்க்கையைப் பலதுறைகளிலுஞ் சீர்திருத்தஞ் செய்து அறியாமையால் வரும் எண்ணிறந்த துன்பங்களையும் எளிதாகப் படிப்படியாய் விலக்கி, உயிரைத் தூயதாக்கி, இப்பிறவியில் அடைதற்கு உரிய மெய்யறிவு இன்பங்களையும், வரும் பிறவியில் நுகர்தற்குரிய பேரறிவு இன்பங்களையும் பிழையாமல் எய்துதற்கு இந்நூல் உண்மை வழி காட்டுவதா மென்பதை இதனைக் கருத்தூன்றிக் கற்று, இதிலுள்ள முறைகளை நன்கு பழகி வருவாரெல்லாரும் தாமே இனிது உணர்வர். இந்நூலில் எழுதப்பட்டிருக்கும் பொருள்கள், யாமறிந்தமட்டில், தமிழ்மொழியில் இதற்கு முன் இவ்வளவு அழகாகவும் விரிவாகவும் விளக்கமாகவும் எவராலும் திருத்தமாக எழுதப்படவில்லை. ஐரோப்பா அமெரிக்கா என்னும் புறநாடுகளிலுள்ள வெள்ளைக்கார நன் மக்களே இக்கல்வியின் மறைபொருள்களைச் செவ்வையாக ஆராய்ந்து நூல்கள் எழுதி உலக வாழ்க்கையிலும் பயன்படுத்தி வந்தவர்களாவர். நம் தமிழ்நாட்டிலுள்ள அருந்தவத்தோர் இக்கல்வியினையும் இதனைப் பயன்படுத்தும் முறைகளையும் நன்கு உணர்வராயினும், தகுதியுடைய மாணாக்கர் சிலர்க்கன்றி வேறெவர்க்கும் அவைகளைச் சிறிதுந் தெரிவியாமல் மறைவாகவே வைத்து வந்தனர். இனி, இங்குள்ள மந்திரகாரரிற் சிலர் இம்முறைகளைத் தெரிந்து பயன்படுத்தி வருவாராயினும், இவற்றின் உண்மை களைச் சிறிதாயினும் ஆராய்ந்துகண்டு, அவற்றை உயர்ந்த வழிகளிற் பயன்படுத்தத் தெரிந்தவர் அல்லர். மேலும், அவர் இவற்றைப் பொல்லாங்கான வழிகளிலும் பயன்படுத்தித் தமக்கும் பிறர்க்குங் கேடு விளைப்பவராகவுங் காணப்படுகின்றனர். அருந்தவத்தோரும், மந்திரகாரருங் கையாண்டுவரும் இவ் யோகநித்திரை என்னும் அறிதுயின் முறைகளின் உண்மையினையும் மெய்ப்பயனையும் அறிந்து கொள்ளமாட்டாத மக்கள், அவ்வறியாமையாற் பெரிதும் பிழைபட நடந்து, நிரம்பவுந் துன்புறுகின்றார்கள். இக்கலையின் உண்மையினையும் இதனைப் பயன்படுத்தும் வகையினையும் அறியாதிருக்கும்வரையில், சில்வாழ்நாட் பல்பிணிச் சிற்றறிவினராகிய மக்கட்கு ஐயோ! துன்பத்தினின்றும் மீட்சி இல்லை. அதுகண்டு உள்ளங் குழைந்தே, இந்நூலிற் சொல்லிய பொருள்களையும் பயன்படுத்தும் முறைகளையும் பல்காலும் பலபடியாலும் ஆராய்ந்து, நேரேயும் செய்து பார்த்து, இவற்றை எல்லாரும் அறிந்து பயன்பெறும் பொருட்டுத் திறந்தெழுதி ஒரு நூலாக வெளியிடலாயினேம். இவற்றின்கண் தெரிந்தெழுதப் பட்ட முறைகளெல்லாம் நேரே பலகாற் செய்துபார்த்துத் தீதில்லாப் பயன்றருதல் தெளியப் பட்டனவாகலின், இவற்றை ஊன்றிக் கற்றுப் பழகுவார் தாம் வேண்டிய எல்லா நலங்களையும் பெறுவரென்பது திண்ணம். இந்நூலின் முற்பகுதிகள் பல்லாண்டுகட்கு முன்னரே வெளிவந்தனவாகலின், அவற்றின்கண் உள்ள சிற்சில வடசொற்களையுங் களைந்து தமிழ்ச்சொற் பெய்து பதிப்பிடுதற்கு இப்போது நமக்கு இடம் வாய்க்கவில்லை. இந்நூலின் இரண்டாம்பதிப்பில் அவை முற்றக் களைந்து முழுதுந் தூயதமிழாக்கப்படும். இத்துணை யாண்டுகள் கழிந்தும் இந்நூல் முற்றுப்பெறுமாறு செய்த எல்லாம் வல்ல இறைவனை மனமொழிமெய்களாலும் வழிபடுகின்றேம். மறைமலை தொலைவிலுணர்தல் முதற்பதிப்பின் முகவுரை இற்றைக்கு இருபத்துநான்கு ஆண்டுகளுக்குமுன் அதாவது விரோதி கிருது ஆண்டு (1911) சித்திரைத் திங்களில் யாம் எழுதத்துவங்கிய தொலைவிலுணர்தல் என்னும் இவ்வுரை நூல், எமது ஞானசாகரம் என்னும் அறிவுக்கடலின் ஆறாந்திருமலரிலும் எட்டாந்திருமலரிலும் ஒன்பதாந்திருமலரிலும் பக்கங்கள் வரையில் வெளிவந்து, பத்து, பதினொன்று, பன்னிரண்டு, பதின்மூன்று, பதினான்கு, பதினைந்தாந் திருமலர்களில் தொடர்ந் தெழுதப்படாமல் நின்றுபோய். மீண்டும் 16 ஆந் திருமலரில் ஆங்கிரச ஆவணி புரட்டாசிக்குரிய ஏழு எட்டு இதழ்களில் தொடர்புகொண்டு வெளிவரத் துவங்கி, இப்போது அதன் பதினேழாந் திருமலரின் எட்டு ஒன்பதாம் இதழ்களில் எல்லாம் வல்ல இறைவன் றிருவருளால் இனிது முடிவு பெறலாயிற்று. இங்ஙனம் இந்நூல் இடையிடையே எழுதப்படாமல் நின்று போயது ஏனெனின்; யோகநித்திரை, மனிதவசியம், மக்கள் நூறாண்டு உயிர்வாழ்தல் எப்படி?, மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் பேராராய்ச்சிப் பெரும்பயன் நூல்களும் வேறுசில சிறு நூல்களும் இடையிடையே எழுதி வெளியிட வேண்டுவது இன்றியமையாததாக நேர்ந்தமையானும், அந்நூற் பொருள்களின் உண்மைகளை உள்ளவாறு ஆராய்ந்து எழுதுதற்குத் தமிழ் ஆங்கிலம் வடமொழி என்னும் இந்நூற் பொருளின் உண்மைகளையும் உண்மை நிகழ்ச்சிகளால் விளக்குதற்கு இன்னும் பல நூல்களைப் பயில வேண்டுவது முதன்மையா யிருந்தமையானும், மேற்கிளந்த நூல்கள் முடியுந்தனையும் இந்நூலை இடையே பல ஆண்டுகள் நிறுத்தி வைக்க இருபத்துநான்கு ஆண்டுகளுக்குப் பிறகாவது இது முற்றுப்பெறும்படி அருள்புரிந்த எம்பிரான் றிருவடிகளுக்கு அடியேங்களின் புல்லிய வணக்கங்கள் உரிய வாகுக! தொலைவிலுணர்தல் என்பது ஐம்புலன்களுக்கும் எட்டாத் தொலைவிலுள்ள பொருள்கள் உயிர்கள் பொருணிகழ்ச்சிகள் உயிர் நிகழ்ச்சிகளை மக்களாகிய நாம் நமதுள்ளத்தால் உணரப் பெறுதலே யாகும். ஐம்புலன்களின் வாயிலாகவன்றி எதனையும் உணரமாட்டாத எளிய நிலையில் நிற்கும் நாம், அவ்வைம்புலன்களுக்கும் எட்டாத இடத்திலுங் காலத்திலும் உள்ள பொருள்களையும் உயிர்களையும் அவற்றின் நிகழ்ச்சி களையும் ஒரோ வொருகாற் கனவிலும் நம் அகக்கண்ணெதிரே சடுதியிற் கண்டு, அங்ஙனங் கண்டபடியே பின்னர்ப் புறக்கண்ணெதிரேயும் அவை தோன்றக் கண்டால் அப்போது நாம் எவ்வளவு இறும்பூதெய்துகின்றோம்! கனவிலோ நனவிலோ நாம் நம் அகக்கண்ணாற்கண்டு நினைவுற்ற ஓரிடத்தே அங்ஙனங் கண்டபடியே சிறிதும் பிசகாது நமது புறக்கண்ணேதிரேயுங் காணநேருங்கால் அப்போது நாம் எவ்வளவு வியப்புறுகின்றோம்! இன்னும் நமக்கு இனியராயினார் ஒருவரைப்பற்றி நாம் ஆழ்ந்து நினைந்து கொண்டிருக்கையில், அவர் நமக்கெதிரே வந்தாலும், அல்லாதவரிடமிருந்து எதிர் பாராமலே ஒரு கடிதம் வந்தாலும் அப்போதும் நாம் எவ்வளவு வியப்பினை அடைகின்றோம்! இவ்வாறு ஐம்புலன்களுக்கும் அப்பாற்பட்ட நிகழ்ச்சிகள் ஒருகாலன்றிப் பல காலும் ஆங்காங்கு நிகழ்தலை நம்மனோர் தம்மாட்டும் பிறர் மாட்டும் அடுத்தடுத்து அறிந்துவைத்தும், அவற்றைப் பற்றி ஆராயாதும், அவ் வாராய்ச்சியாற் பெறும் பெரும்பயனைப் பெறாதும் வாளா நாட்கழித்து மாய்ந்து போதல் எத்துணை இரங்கத்தக்க தொன்றா இருக்கின்றது! இவ்வுடம்பும் இவ்வுடம்பிலமைந்த ஐம்புலங்களும் நமக்கு அறிவை வளர்த்தற்கும் இன்பத்தைப் பெருக்குதற்கும் இன்றியமையாதவைகளாய் இருந்தாலும், இவையிற்றின் உதவி யில்லாமலே பொருள்களையும் உயிர்களையும் அவற்றின் நிகழ்ச்சிகளையும் நேரே யறிந்து கொள்ளுதற்குரிய அறிவும் ஆற்றலும் உடையவர்களாய் இருக்கின்றோம் என்பது மேல் நிகழ்ச்சிகளால் விளங்க வில்லையா? இத் துணைச் சிறந்த அறிவாற்றல் நமக்கு இயற்கையாகவே யிருந்தும், ஏதோ ஓர் இருள் நம்மறிவைக் கவிந்து கொண்டிருத்தலினாலன்றோ, இவ்வுடம்பும் இதிலமைந்த ஐம்புலன்களும் அவ்விருளைப் போக்கி நமதறிவை விளங்கச் செய்தற்கு இன்றியமையாக் கருவிகளாக இறைவனால் நமக்கு வகுத்துக்கொடுக்கப் பட்டிருக்கின்றன? கட்பார்வை மங்கிய கண் கண்ணாடியின் உதவியால் தனது பார்வை விளங்கப் பெறுதல் போலவும், புகையிற் பொதிந்த நெருப்புக் காற்றினுதவியால் அப்புகை நீங்கிச் சுடர்ந்தெரிதல் போலவும், பாசி மூடிய நீர் செம்படவர் வலையால் அரிப்புண்ட பின் தெளிந்து விளங்குதல் போலவும். மழைமுகிலால் மறைவுண்ட மதியம் மழை பொழிந்தபின் நீலவானில் நிலவொளி விரித்துச் சாலத் துலங்குதல்போலவும், நம தறிவை மறைத்த இருளும் விலகவிலக அவ்வறிவுஞ் சொலற்கருந் துலக்கமுடையதாகி, ஐம்புல உதவி வேண்டாமலே அண்மையிலுஞ் சேய்மையிலும் முற்கால இக்காலப் பிற்காலங்களிலும் எவற்றையும் எவற்றின் நிகழ்ச்சி களையும் நேரே காணவல்லதாகிய அறிவுக் காட்சியை நாம் பெறுங்கால், அதற்கு முன் நாம் அறியாமையால் அடைந்த நோயுங் கவலையும் வறுமையும் அவற்றால் வரும் அளவிலாத் துன்பங்களும் நம்மைவிட் டொருங்கே நீங்கிப்போக, நாம் எல்லையற்ற அறிவும் இன்பமும் நிரம்பப் பெற்று, எல்லாம் வல்ல ஆண்டவனது அருட்பேரொளியில் அழிவின்றி நிலை யுதலுறுவோம். ஆகவே, அத்துணைச் சிறந்த அறிவுக் காட்சி நமக்கு இயற்கையே உண்டென்பதனையும், அவ்வறிவுக் காட்சியால் நம் மக்களிற் சிலர் பலர் ஐம்புலன்களுக்கும் எட்டாத அரிய பல நிகழ்ச்சிகளை நேரே காண்டலையும், உண்மையாக நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் கொண்டு நன்கு விளக்கி, அவ்வாற்றால் மக்கட் பிறவியினை அரிதிற் பெற்றாரெல்லாரும் ஓவாத தமது தவமுயற்சியால், அவ்வறிவுக் காட்சியினை இன்னும் வரம்பின்றிப் பெருகச் செய்து, அதனால் அறியாமையும், அறியாமையினை அடிப்படையாகக் கொண்டு வரும் அல்லல்களும் ஒழிந்து இம்மை மறுமைக்குரிய எல்லா நலன்களையும் எய்தல் வேண்டும் என்னும் நோக்கம் பற்றியே தொலைவிலுணர்தல் என்னும் இந்நூலை இயற்றலாயினேம். இந்நூலின்கண் எடுத்துக் காட்டப்பட்டிருக்கும் மெய்ந் நிகழ்ச்சிகளிற் பெரும்பாலன மேனாட்டாசிரியர் ஆராய்ந்து உண்மையென உறுதி செய்தவைகளாகும். இத்தமிழ் நாட்டிலும் ஆங்காங்குத் தொலைவிலுணர்தலாகிய நிகழ்ச்சிகள் நாடோறும் நிகழ்கின்றனவாயினும், அவை தம்மை நடுநின்று ஆராய்ந்து பல மெய்ச் சான்றுகளால் உறுதிப்படுத்துவாரும் உறுதிப்படுத்தி நூல் எழுதுவாரும், யாமறிந்தவரையில், எவருமில்லை. அதனால் இத்தமிழ்நாட்டில் நிகழுந் தொலைவிலுணர் நிகழ்ச்சிகளை மிகுதியாய் எடுத்துக் காட்டுதுல் எம்மால் இயலாதாயிற்று. எந்நாட்டிலிருப்பினும், எம் மக்கள் குழுவைச் சேர்ந்த வராயிருப்பினும், உண்மைகாணும் வேட்கையும் முயற்சியும் உடைய சான்றோர் ஆராய்ந்து கண்ட மெய்ம்மைகளை எடுத்துக் காட்டுதலே மக்களுக்கு மெய்யறிவைத் தருமாகலின், யாம் எடுத்துக் காட்டிய மேனாட்டாசிரியர் தம் மெய்யுரைகள் நம்தமிழ் நாட்டவர்க்கு மெய்யறிவைப் பயந்து அவர்க்குப் பெருநலன்களை விளைக்கு மென்னும் நம்பிக்கை யுடையேம். இருபத்துநான்கு ஆண்டுகளுக்குமுன் யாம் இந்நூலை எழுதத்துவங்கிய காலத்தில், வடசொற் கலப்பால் நம் செந்தமிழ் மொழிக்குண்டாந் தீதினை உன்னியாதிருந்தேம். அதனால், இந்நூற்படிகள் சிலவற்றில் முதல் ஐம்பதுதொரு பக்கங்கள் வரையிற் சிற்சில வடசொற்கள் கலந்துவிட்டன. இந்நூலின் இரண்டாம் பதிப்பில் அவ்வடசொற்கள் களைந்தொழிக்கப் படும். இதுகாறும் எமது நூற்றொண்டுக்குத் துணைபுரிந்துவரும் இறைவன்றிருவருள் மேலும் அதற்குத் துணைபுரிவதாக! பல்லாவரம் பொதுநிலைக்கழக, நிலையம், மறைமலையடிகள் திருவள்ளுவர் ஆண்டு, இரண்டாம் பதிப்பின் முகவுரை இந்நூலின் முதற்பதிப்பு முகவுரையிற் கண்டபடி தொலைவிலுணர்தல் என்னும் இத்தமிழ்நூல் திருவள்ளுவர் ஆண்டு 1942இல் (கி.பி. 1911இல்) இயற்றத் துவங்கி, இடையிடையே பல ஆண்டுகளாக எழுதி அச்சிடப்பட்டு 1935ஆம் ஆண்டில் (கி.பி. 1966 இல்) நூல் வடிவில் வெளிவந்ததாகும். அதன்பின் இவ்விரண்டாம் பதிப்பு, கி.பி. ...... இல் துவங்கிய மேல் கீழ்நாட்டுக் கொடும் பெரும் போருக்குமுன் பல்லாண்டுகள் இடையிடையே அச்சிடப்பட்டு, அப்போர் முடிந்ததற்குப்பின் இப்போது தான் வெளிவரலாயிற்று. முதற்பதிப்பின்கண் இருந்த வடசொற்கள் முற்றுங்களைந் தெடுக்கப்பட்டு இவ் விரண்டாம் பதிப்பு முழுதுந் தூய தனித் தமிழ் உரைநடையில் ஆக்கப்பட டிருக்கின்றது. முப்பத்தைந் தாண்டுகளுக்குப்பின் இந்நூலின் 2ஆம் பதிப்பை வெளியிடுதற்கு அருள்சுரந்த எல்லாம் வல்ல இறைவன் திருவடிப்போதுகளுக்கு அடியனேன் புல்லிய வணக்கம் உரியதாகுக! பல்லாவரம் பொதுநிலைக்கழக, நிலையம், மறைமலையடிகள் திருவள்ளுவர் ஆண்டு, கி.பி. திசம்பர், 1946 சாகுந்தல நாடகம் முகவுரை இற்றைக்கு 1480-ஆண்டுகளுக்கு முன் வடநாட்டில் உச்சயினி மாநகரின்கண் வடமொழி நல்லிசைப் புலவர் மாமணியாய் விளங்கிய ஆசிரியர் காளிதாசர் இயற்றிய சாகுந்தல நாடகம் சொற்சுவை பொருட்சுவை நிரம்பித், தன்னைப் பயில்வார்க்கு நுண்ண றிவு பயந்து, கழிபெரு மகிழ்ச்சி விளைக்கும் பெற்றித்தாய் நிற்றலின், அதன் அருமை பெருமையைத் தமிழ்மக்களும் நன்குணர்ந்து களிக்கும் பொருட்டு, இற்றைக்கு 24-ஆண்டுகளுக்கு முன் அதனைத் தெளிவான செந்தமிழில் மொழிபெயர்த்திட்டேம். இது செய்யுட்களும் இடை இடையே விரவிய உரைநடையில் ஆக்கப்பட்டிருக்கின்றது. எழில் முதிர்ந்து உலகியற் பொருட் டோற்றங்களையும், மக்கள் வடிவங்களையும், அவர் தம் மன அசைவுகளையும் நுவலும் இடங்கள் உள்ளத்தைப் பெரிதும் இன்புறுத்துவனவாதலால், அவை தம்மை மிழற்றுதற்கு ஏற்பன இசை தழீஇ நடக்குஞ் செய்யுட்களேயாம். அத்துணை அழகு பயவாது பொதுவியல் ஒழுக்காய்ச் செல்லும் உரையாட்டு களும் பிறவும் விழுமிய பாநடைக்கு ஒவ்வாமையான் அவை யெல்லாம் உரை நடையின்பாற் படுத்தற்கே இசைந்தனவாகு மென்று பகுத்துணர்ந்து கொள்ளல் வேண்டும். இங்ஙனம் உரையும் பாட்டும் விரவிய இம் மொழி பெயர்ப்பு வடமொழியிலுள்ள முதல்நூலைச் சிறிதும் பிறழாமற் பின்பற்றிச் செல்வதாகும். இவ் விரண்டாம் பதிப்பு வடமொழியிலுள்ள பல முதல்நூல்களுடன் வைத்து ஒப்பிட்டு நோக்கிப் பலப்பல திருத்தங்கள் செய்யப் பட்டிருக்கின்றது. இன்னும், இம் மொழிபெயர்ப்பின் உரையிலுள்ள அருஞ் சொற்களுக்கும், இடையிடையே விரவிய செய்யுட்களுக்குந் தெளிபொருள் விளக்கங்களும் புராணக் குறிப்புகளும் பின்னே விரிவாக எழுதிச் சேர்க்கப் பட்டிருக்கின்றன. தமிழக்கு ஆக்கமாக எழுதப்படும் நூல்களில் வடசொற்களைக் கலந்தெழுதுதல், ஒரு பெருங்குறை பாடாகக் காணப்படுதலின், முதற்பதிப்பில் ஆங்காங்கு விரவிய சிற்சில வடசொற்களையுங் களைந்து அவற்றிற்கு ஒத்த தூய தமிழ்ச் சொற்களையே பெய்து இதனை அமைத்திருக்கின்றேம். இனி, இந் நாடகக் காப்பிய நுண்ணமைப்புகளும் நாடக மாந்தர் இயற்கைகளுங், காளிதாசர் வரலாறும், அவரிருந்த காலமும் பிறவும் சாகுந்தல நாடக ஆராயச்சியில் விரித்து விளக்கப்பட்டிருக்கின்றன. பல்லாவரம் பொதுநிலைக்கழகம் திருவள்ளுவர் ஆண்டு 1963 மறைமலையடிகள் மூன்றாம் பதிப்பு இம் மூன்றாம் பதிப்பின்கட் சிற்சில சீர் திருத்தங்களே செய்யப்பட்டிருக்கின்றன. வேறு பெரிய மாறுதல் ஒன்றுஞ் செய்யப்படவில்லை. இந் நூலை அண்ணமலைப் பல்கலைக் கழகத்தாரும், சென்னைப் பல்கலைக் கழகத்தாரும், இலங்கைப் பல்கலைக் கழகத்தாரும் பி.ஏ. வகுப்பிற் பயிலுந் தத்தம் மாணவர்க்குப் பாடமாக வைத்து அவர்க்குத் தனித்தமிழ்ப் பயிற்சியின் நலத்தைக் காட்டினமைக்காக நன்றி செலுத்துகின்றேம். பல்லாவரம் பொதுநிலைக்கழகம் திருவள்ளுவர் ஆண்டு, 1970 புரட்டாசி, 26 மறைமலையடிகள் முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை மூன்றாம் பதிப்பின் முகவுரை முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப் பாலை கடாத்தொடும் பத்து என்னும் பழைய பாட்டின்கட் கண்ட திருமுருகாற்றுப்படை முதல் மலைபடுகடாம் ஈறான அருந்தமிழ்ப் பாட்டுகள் பத்தினுள் ஐந்தாவதாய் நிற்பது முல்லைப்பாட்டாகும். தன் ஆருயிர்க் கணவனைப் பிரிந்து வருந்தியிருந்த தலைவியின் நிலைமையும், பகையரசர் மேற்போர்புரியச் சென்ற அவள் கொழுநன் கார்காலத் துவக்கத்தே அப் போர்வினையை முடித்துத் தன் மனைவிபாற் றிரும்பிவரும் வகைமையும் இச் செய்யுளின்கண் மிகவும் அழகாக எடுத்துச் சொல்லப்படுகின்றன. இச் செய்யுள் இயற்றப்பட்டுச் சிறிதேறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகின்றன. இதனை இயற்றிய ஆசிரியர்; காவிரிப் பூம்பட் டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார் என்று சொல்லப்படுவர். இப் பாட்டைத்தவிர இவ்வாசிரியரால் இயற்றப்பட்டனவாக வேறு எவையும் இதுவரையும் வெளிப்பட வில்லை. கற்போருணர்வைக் கவருந் திறத்ததாய், அழகிய இயற்கைப் பொருள் நிலைகளை இருந்தவாறே எடுத்து மொழிவதாய், நூற்று மூன்றடிகளிற் சுருங்கிய பாவாய் இருப்பினுந் தமிழ்மொழியின் நலங்களை விளக்கமாகத் தேற்றுவதாய் உள்ள இம் முல்லைப் பாட்டு கி.பி. 1903 ஆம் ஆண்டு கலைநூற் புலமைக்குப் பயிலும் மாணாக்கர்க்குப் பாடமாக வந்தது. சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் அப்போது யாம் தமிழாசிரியராய் இருந்து மாணாக்கர்க்குத் தமிழ்நூல் அறிவுறுத்தி வந்தமையால், இம் முல்லைப் பாட்டிற்கும் உரைவிரித்து உரைக்கலானேம். இச்செய்யுட்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையையுங் கூடவே விளக்கி வருகையிற், செய்யுளியற்றிய ஆசிரியர் கொண்ட பொருண்முறை ஒரு பக்கமாகவும், உரைகாரர் கொண்ட பொருண்முறை மற்றொரு பக்கமாகவும் ஒன்றோடொன்று இணங்காதாய் மாறுபட்டு நிற்றல் கண்டு மாணாக்கர் பெரிதும் இடர்ப்படுவாராயினர். அதுவேயுமன்றி, ஆக்கியோன் அமைத்த சொற்றொடர் நெறியைச் சிதைத்துச் சொற்களையும் அடைமொழிகளையும் ஒரு முறையுமின்றிப் பிரித்துக்கூட்டிப் பொருளுரைக்கும் நச்சினார்க்கினியருரை சிறிதும் ஏலாவுரையேயாமென்றும் அவர் கருதுவாராயினர். முன்னரே ஆக்கியோன் கருத்தையொட்டி வேறோர் உரைசெய்து வைத்திருந்த யாம் அதனையெடுத்து அவர்க்கு விளக்கிக்காட்டினேமாக, அது கண்டு அவரெல்லாந் தமதுரை ஆக்கியோன் கருதிய பொருளை நேர்நின்று விளக்குவதொடு, பண்டைக்காலத்துத் தண்டமிழ்ச் சிறப்புகளைப் பின்றைக் காலத்துக்கேற்றபடி தெற்றென நன்கு தெரிப்பதாயும் இருத்தலின் தமது விரிந்த இவ் வாராய்ச்சியுரையினையே பதிப்பிட்டு எமக்குத் தந்தருளல் வேண்டும் எனக் கேட்டு அது பதிப்பிடுதற்காஞ் செலவும் ஒருங்கு சேர்ந்து முன் உதவினர். அங்ஙனம் உதவிய அம் மாணாக்கர்க்கு யாம் என்றும் நன்றிசெலுத்தக் கடமைப் பட்டிருக்கின்றேம். உடனே யாம் எழுதிய முல்லைப்பாட்டாராய்ச்சியுரை அச்சிற் பதிப்பிக்கப்பட்டமையின், அதன் அச்சுப் புத்தகங்கள் அவ்வாண்டின் மாணாக்கர்க்கும் பிறர்க்கும் வழங்கப்பட்டன. அவ்வுரை நூலை வாங்கிக் கற்ற மாணாக்கரும், ஏனைத் தமிழறிஞரும் புதுமுறையாக எழுதப்பட்ட அவ்வுரைப் பாங்கினைப் பெரிதும் வியந்து பாராட்டி, அம்முறையினைப் பின்பற்றிப் பழைய தமிழ் நூல்களை ஆராய்வதிற் கிளர்ச்சி பெறலானார். இப்புது முறையுரை தமிழ் நூலாராயும் வகைகளை இனிது விளக்கி அறிஞர் பலர்க்கும் அக மகிழ்ச்சியினை விளைத்தமை கண்டு, இனி இத்தகைய உரைகளையே எழுதுதல் வேண்டுமென எமதுள்ளம் பெரிதும் விழைந்தது. கி.பி. 1906 ஆம் ஆண்டு கலைநூற் புலமைக்குப் பயிலும் மாணாக்கர்க்குப் பத்துப்பாட்டுக்களில் ஒன்றான பட்டினப் பாலை என்னும் அருந்தமிழ்ச் செய்யுள் பாடமாய் வந்தது. யாம் முல்லைப்பாட்டிற் கெழுதிய ஆராய்ச்சியுரை யினைப்பற்றிக் கேள்வியுற்ற அவ்வாண்டின் மாணாக்கர்களுந் தமக்குப் பாடமாய் வந்த பட்டினப்பாலைக்கும் அதனைப் போலவே ஒர் ஆராய்ச்சி யுரை எழுதித்தரும்படி வேண்டி, அதனைப் பதிப்பிடுதற்காஞ் செலவின் பொருட்டுத் தாமும் ஒருங்குசேர்ந்து பொருளுதவி செய்தனர். அம் மாணாக்கர் செய்த வுதவிக்கும் யாம் பெரிதுங் கடமைப்பட்டிருக் கின்றேம். திரும்பவுங் கி.பி.1910 ஆம் ஆண்டு கலைநூற் புலமைக்குப் பயிலும் மாணாக்கர்க்கும் முல்லைப்பாட்டுப் பாடமாக வந்தது. இதற்கிடையில் முதற் பதிப்பிட்ட எமது முல்லைப் பாட் டாராய்ச்சியுரைப் புத்தகங்கள் எல்லாஞ் செலவழிந்து போனமையின், அவ்வாண்டின் மாணாக்கர் களுஞ் செய்த வேண்டு கோட் கிணங்கி அவர் தாமும் ஒருங்குசேர்ந்து முன்னர்த் தந்த பொருள்கொண்டு அஃதிரண்டாம் முறையும் பதிப்பிடப்பட்டது. இரண்டாம் பதிப்புப் புத்தகங்களுஞ் செலவாய் விட்டமையால், இப்போதிதனை மீண்டும் பதிக்கலாயினேம். இப்பதிப்பின்கட் பல திருத்தங்களும் பல மாறுதல்களுஞ் செய்யப்பட்டிருக்கின்றன. எமதிடமுள்ள ஓர் ஏட்டுச் சுவடியையும் அச்சுப் புத்தகத்தையும்ஒப்பிட்டுப் பார்த்து முல்லைப்பாட்டுச் செய்யுளின் கண்ணுஞ் சில திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. முல்லைப் பாட்டுப் பயில்வோர் பிறநூல் உதவி பெரிதும் வேண்டாமல் எளிதில் அதனைக் கற்றறிதற் பொருட்டு முன்னிரண்டு பதிப்புக்களிலும் இல்லாத பல விளக்க உரைக் குறிப்புகள் இப்போதிதன்கட் புதியவாய்ச் சேர்க்கப்பட்டிருக் கின்றன. அதுவேயுமன்றி, உலக வழக்கத்திலுள்ள சொற்களைத் தவிர்த்து முல்லைப்பாட்டில் வந்த ஏனை எல்லாச் சொற்களையும் அகர வரிசைப்படுத்தி அவற்றிற்கெல்லாம் பொருள்கள் எழுதியிருக் கின்றேம். இவ் வருஞ்சொற்பொருள் வரிசையின் உதவி கொண்டு இச்செய்யுட்பொருள் உணர்ந்து கொள்வது எவர்க்கும் எளிதேயாம். இனி, இவ்வருஞ் சொற்கட்குப் பொருள் வரையுங்கால் இம் முல்லைப்பாட்டு வழங்கிய காலத்தில் அதன்கண் வந்த சொற்கட்கு வழங்கிய பொருள்களையும், அக்காலத்தை அடுத்துத் தோன்றிய சான்றோர் நூல்களில் அவற்றிற்கு வழங்கிய பொருள்களையும் எடுத்துக்காட்டியிருக்கின்றேம். ஒரு செய்யுள் வழங்கிய காலத்தும் அதனை யடுத்துவந்த காலத்தும் அச் செய்யுட் சொற்கட்குப் பொருடெளிவது அச்செய்யுள் ஆக்கியோன் கருத்தை நன்கறிந்து கோடற்குக் கருவியாமாதலின், இங்ஙனஞ் சொற் பொரு டுணிவிக்கும் முறையைத் தமிழாராய் வோர் அனைவருங் கைப்பற்றி ஒழுகுவராயின் நமதருமைச் செந்தமிழ்மொழி சாலவும் விளக்கம் உடையதாகித் திகழும். இனி, இவ்வாராய்ச்சியுரையின்கண் மற்றொரு முதன்மை யான சீர்திருத்தமுஞ் செய்திருக்கின்றேம். தொன்று தொட்ட சிறப்பும், இலக்கண இலக்கிய வரம்புந், தனக்கெனப் பன்னூறாயிரஞ் சொற்களும் வாய்ந்து, இன்றுகாறும் வழக்கு வீழாது உயிரோடு உலாவிப் பன்னூறாயிரம் மக்கட்குப் பெரிது பயன்பட்டு வரும் நமது இனிய செந்தமிழ் மொழியை அயல்மொழிச் சொற்கள் விரவாமற் பாதுகாத்துத் தூயதாய் வழங்கி அதனை வளம்பெறச் செய்வது தமிழராயினார் ஒவ்வொரு வர்க்கும் இன்றியமையாத கடமையாம். சில நூற்றாண்டுகளாய்த் தோன்றி இலக்கண இலக்கிய வரம்பில்லாது தமக்கெனச் சில சொற்களேயுடைய மொழிகளையும், உலக வழக்கிற்குச் சிறிதும் பயன்படாமல் இறந்துபட்ட மொழிகளையும் அவற்றிற்குரியாரும் அவற்றிற்கு உரியார்போற் றம்மை எண்ணிக் கொள்வாரும் அவற்றைத் தூயவாய் வழங்கவும் அவற்றை உயிர்ப்பிக்கவும் ஓவாது முயன்றுவர, எல்லா நலங்களும் ஒருங்குடைய நமதருமைச் செந்தமிழ் மொழியை நம்மனோர் பயிலாதும் பாதுகாவாதுங் கைவிட்டிருத்தல் நிரம்பவும் இரங்கற்பாலதொன்றாம். இனியேனும் அவர் அங்ஙனம் மடிந்திராமைப் பொருட்டு, நம்மனோரிற் கற்றவராயிருப்போர் ஆரியம் ஆங்கிலம் முதலான பிறமொழிச் சொற்களைக் கலவாமற் றனித்தமிழிற் பேசவும் எழுதவுங் கடைப்பிடியாய்ப் பழகிவரல் வேண்டும். இதனை முன்நடந்து காட்டும் பொருட்டு, இதற்குமுன் யாம் எழுதிய நூல்களிற் புகுந்த சிற்சில அயன்மொழிச் சொற்களையும் அந்நூல்களைத் திரும்பப் பதிப்பிட்டுவரும் இப்போது முழுதுங் களைந்து விட்டு, அவை நின்ற இடத்திற் றூய தமிழ்ச் சொற்களையே நிரப்பி வருகின்றேம். இம் முல்லைப்பாட்டாராய்ச்சி யுரையின் கண்ணும் முற்பதிப்புகளிலிருந்த அயன்மொழிச் சொற்களை நீக்கி அவற்றிற்கீடான செந்தமிழ்ச் சொற்களையே இப்பதிப்பின்கட் பெய்து வைத்திருக்கின்றேம். என்றாலுங், காலநிலைக்கும் நாகரிக வளர்ச்சிக்கும் இசையச் சில அயன்மொழிச் சொற்களையுஞ் சில சொற்றொடர்களையுங் குறியீடுகளையும் ஒரோவிடங்களில் மிகச் சிறுக எடுத்தாளுதல் வழுவன் றென்பதூஉம் அறிஞர்க்கு உடன்பாடாமென்க. இத் தன்மையவான ஆராய்ச்சியுரைகள் எழுதுவதற்கு நல்வழி காட்டின ஆங்கிலமொழி நல்லிசைப் புலவர்க்கு யாம் எழுமையும் நன்றி பாராட்டுங் கடமை உடையேம். பல்லாவரம் பொதுநிலைக் கழகம் இங்ஙனம் சாலி, 1841 ஆவணி மீ மறைமலையடிகள் நான்காம் பதிப்பின் முகவுரை இற்றைக்கு இருபத்தெட்டாண்டுகளுக்கு முன் யாம் இம் முல்லைப்பாட்டாராய்ச்சி யுரையை எழுதிய காலத்துப் பழைய சங்கத் தமிழிலக்கியங்களாகிய அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை முதலாயின அச்சிட்டு வெளிப்படுத்தப்படவில்லை. அதனால் யாம் பயின்ற தொல்காப்பிய வுரையிலிருந்தே இவ்வாராய்ச்சியுரைக்கு வேண்டிய மேற்கோட் செய்யுட்களை எடுத்துக்காட்டலாயினேம். அப்போது அம் மேற்கோள் உள்ள நூல்களைக் குறிப்பிடுதல் இயலாதிருந்தது. மற்று, இந் நாளிலோ எட்டுத்தொகை நூல்கள் அவ்வளவும் வெளிவரும் பேறு கிடைத்திருத்தலின், யாம் இப்பதிப்பின்கண் ஒவ்வொரு மேற் கோளுக்கும் அவை வந்துள்ள நூல்களின் பெயர்களைக் குறித்திருக்கின்றேம். அதுவேயுமன்றி, முற்பதிப்புகளில் இல்லாத சில பகுதிகளும் விளக்கவுரைக் குறிப்புகளும் இப்பதிப்பின்கட் புதியவாய்ச் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இன்னும், இந்நூலின் உரைநடைச் சுவையை முன்னையிலும் மிகுதிப்படுத்தல் வேண்டிப், பலப்பல சொற்றிருத்தங்களும் சொற்றொடர்த் திருத்தங்களும் ஆங்காங்குச் செய்திருக்கின்றேம். இவையல்லாமலும், முற்பதிப்புக்களில் இடையிடையே விரவியிருந்த சிற்சில வட சொற்களையுங்களைந்தெடுத்து, இவ்வுரைநடையைச் சாலவுந் தூய தனித் தமிழாக்கியிருக் கின்றேம். இங்ஙனமாக உரைநடை வகையிலும் உரைக் குறிப்பு வகையிலுஞ் செய்யப்பட்ட சில பல மாறுதல்களைத் தவிரப் பொருள் வகையில் ஏதொரு மாறுதலும் இதன்கட் செய்யப்பட வில்லை. ஆகவே, முற்பதிப்புக்களைப் பயின்றவர்கள் இப் பதிப்பின்கண் திகைப்புறத்தக்க பொருள் மாறுதல் ஏதுஞ் செய்யப்படவில்லை யென்பதும், இந்நூலின் தமிழ்ச் சுவையினை மேலும் மிகுதி செய்தற்கு வேண்டிய அளவே சில பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன வென்பதும் அறிஞர்கள் அறிவார்களாக! இந் நூலின் முற்பதிப்பினைப் பயின்று மகிழ்ந்தவர்களுக்கு இப் பதிப்பு அம் மகிழ்ச்சியினை மிகுதி செய்யுமென்னும் நம்பிக்கையுமுடையேம். பல்லாவரம் பொதுநிலைக் கழகம் இங்ஙனம் திருவள்ளுவர் யாண்டு, 1961 மறைமலையடிகள் முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர் முன்னுரை திருவள்ளுவர் ஆண்டு 1964 வைகாசித்திங்கள் 29ஆம் நாள் திருநெல்வேலி மாநகரிற்கூடிய சென்னை மாகாணத் தமிழர்மாநாட்டின் புலவர் பேரவையில் யாம் அவைத் தலைவராய் நின்று நிகழ்த்திய சொற்பொழிவையே பின்னர் மிக விரித்தெழுதி முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவோர் என்னும் இந் நூலாக வெளியிடலானேம். இடையிடையே வெளியூர் களிற் கூடும் அவைகளை நடத்துதற்குப் போய் வந்தமையாலுஞ், செந்தமிழ் மொழியிலுஞ் சைவ சித்தாந்தத்திலும் பொதிந்து கிடக்கும் அரும்பெரும் பொருள்களை இவ்வுலக மெங்கணு முள்ள அறிஞர்கள் தெரிந்து நலம் பெறல்வேண்டி அவையிற்றை யாம் ஆங்கில மொழியில் எழுதி இரண்டு திங்கட்கு ஒரு கால் ஒரு வெளியீடாகச் சென்ற ஒன்றரையாண்டுகளாக வெளியிட்டு வருதலாலும், இவற்றிடையே எம்முடைய பல புதிய தமிழ் நூல்களையுஞ் செலவாய்ப்போன பல பழைய தமிழ் நூல் களையும் அச்சிடுவித்து வருதலாலும், இவற்றின் பொருட்டு இரவு பகல் ஓவாது பற்பல நூல்களை ஆராய்ந்து வருதலாலும், பலதிறத்தவான இந் நன்முயற்சிகளினூடே உடம்பு நலங் குன்றிப் பின்னரது முன்போல் மீண்டு நன்றாதற்குப் பல நாட்கள் கழிதலாலும், இந்நூல் இடையிடையே விட்டு விட்டெழுதி முடிவுபெறுதற்கு இரண்டாண்டுகளும் மூன்று திங்களும் ஆயின. முற்காலத்து விளங்கிய செந்தமிழ் நல்லிசைப்புலவர்கள் தமதருமைச் செந்தமிழ் மொழியைத் தம் இன்னுயிரினும் விழுமிதாக ஓம்பிப், பொய்சிறிதுங் கலவா அறவுரையே பகருந் தமது நாவால் மெய்ப்பொருள்களையே நிரப்பிய பாக்களும் நூல்களும் அதன்கண் இயற்றி, அதனை மேன்மேல் உரம்பெற வளர்த்துவந்தனர். அஃது அஞ்ஞான்று மலைமேல் ஏற்றிய நந்தாமணி விளக்குப்போல், தனது பொங்கு பேரொளியை எங்கணும் வீசி, இவ்வுலகின் கண்ணிருந்த மாந்தரெல்லாருடைய அறிவுக் கண்ணையும் விளங்க விளக்கிற்று. மற்றுப் பிற்காலத்தே, அஃதாவது சென்ற அறுநூறு ஆண்டுகளாகத், தோன்றிய தமிழ்ப் புலவர்களோ பெரும்பாலுந் தம்முன்னோர் சென்ற நெறியே தேர்ந்து செல்லாதவர்களாய், அவர் சென்ற மெய்ந்நெறி பிழைத்துப், பொய்ந்நெறி ஏகித் தமதருமைச் செந்தமிழ் மொழியின் தூய்மையை ஓம்பாது, அதனைப் பிறமொழிச் சொற்களொடு கலந்து மாசுபடுத்தியதல்லாமலும், அதன்கண் மெய்யல் லாதனவும் முழுப் பொய்யும் மிடைந்த பாவும் நூலும் இயற்றி அதன் மெய் வழக்கினையும் பாழ்படுத்தி விட்டனர். அவ் விருதிறமும் பிரித்து நனிவிளங்க விளக்கிக் காட்டினாலன்றி, இனித் தமிழ் கற்பார் தமிழ்மொழியினையும் அதனை வழங்கும் மக்களையும் பேணி வளம்படுத்தாரெனக் கருதியே இந் நூலை இயற்றலானேம். இதனைப் பயில்வார் பண்டைத்தமிழ் நல்லிசைப் புலவரின் அளக்கொணா மாட்சியும் மெய்வழக்கும் நன்கறிந்து, அவர் ஒழுகிய மெய் யொழுக்கத்தையே கடைப் பிடித்துத், தாம் மிக்குயர்வதொடு, தமிழையுந் தமிழ்மக்களை யும் மிக்குயரச் செய்வார்களாக! பல்லாவரம் பொதுநிலைக் கழகம் திருவள்ளுவர் யாண்டு, 1967 மறைமலையடிகள் ஆவணி 16 குமுதவல்லி நாகநாட்டரசி இரண்டாம் பதிப்பின் முகவுரை இவ்விரண்டாம் பதிப்பின்கட் செய்திருக்கும் சீர்திருத்தங்கள் சில: முதற்பதிப்பின் இடையிடையே கலந்திருந்த வடசொற்கள் அத்தனையுங் களைந்தெடுக்கப்பட்டு இது தனித் தமிழாக்கப் பட்டிருப்பதும், இடையிடையே சில சொற்களுஞ் சொற்றொடர்களும் முன்னையிலும் இப்போது சுவை மிகுந்தனவாக மாற்றப்பட்டிருப்பதும் பிறவும் அங்ஙனஞ் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் ஆகும். இப்பதிப்பையும் முதற் பதிப்பையும் ஒத்துநோக்கிப் படிப்பவர்க்கு வடசொற்களுக்கு நேரான தமிழ்ச்சொற்கள் இவையென்னும் அறிவுஞ் செந்தமிழ் உரைநடையை மேன்மேல் அழகுஞ் சுவையும் முதிர எழுதும் வகையும் நன்கு விளங்கா நிற்கும். - மறைமலையடிகள் 1942 கோகிலாம்பாள் கடிதங்கள் இரண்டாம் பதிப்பின் முகவுரை கோகிலாம்பாள் கடிதங்கள் என்னும் இப்புதுக்கதை நூல் இற்றைக்குப் பத்தாண்டுகட்கு முன் வெளியாகியது. இதன் இரண்டாம் பதிப்பு இப்போதுதான் வெளிவருகின்றது. முதற் பதிப்பிலிருந்த சிற்சில எழுத்துப் பிழைகளும் ஒரு பெயர் மாறாட்டமும் இதன்கண் திருத்தப்பட்டன. இவற்றிற்குமேல் வேறு ஏதொரு மாறுதலும் இதன்கட் செய்யப்படவில்லை. இந்நூற்கதையின்கண் வருந்தலைவி கோகிலாம்பாளும் அவளுக்கு முதல் உறவினரும் பார்ப்பன இனத்தைச் சேர்ந்தவர் களாயிருத்தலாலும், அவள் தந்தையாகிய பாரசிகர் வட நாட்டவரா தலாலும் அவர்களுடைய உரையாட்டுகளில் இடை யிடையே வட சொற்களுஞ் சில கொச்சைத் தமிழ்ச்சொற்களுங் கலந்திருத்தல் காணலாம். உலகவழக்கிற்கு மாறுபடாமல், அதன் நிகழ்ச்சிகளை அங்குள்ளவாறே எடுத்து அவற்றை விழுமியவாக்கித் தொடுத்துக், கதைகளும் நாடகங்களும் இயற்றுதலே, புனைந்துரை வழக்கில் வைத்து அவை தம்மை இயற்றும் நல்லிசைப்புலவனுக்கு இன்றியமையாத கடமையாம். உலக இயற்கையிலும் மக்கள் இயற்கையிலும் ஒருசிறிதுங் காணப்படாதவைகளைத் தானே படைத்து ஒரு கதை நூல் வகுத்தல் நல்லிசைப்புலமையாகாது. வட மொழியிலுள்ள பழங்கதைகள், இறைவன் வகுத்த உலக இயற்கையிலும் மக்கள் இயற்கையிலும் ஒரு சிறிதுங் காண லாகாத வைகளைப் படைத்து மொழிதலால், அவை தம்மைப் பிற்காலத்தே மொழிபெயர்த் துரைத்த புலவர்கள் தமிழ்நூல் வழக்கிற்கு ஒவ்வாத அவைகளைத் தாம் சிறிதாயினும் பகுத்துணர்ந்து பாராமல் அவ்வட நூல்களிலுள்ளவாறே எடுத்து மொழிந்து, ஆராய்ச்சியுணர்வு சிறிதுடையார்ககும் பெரியதோர் அருவருப்பினை விளைவியா நின்றனர். ஒரு குரங்கு கடலைத் தாண்டிற்றென்றலும், அஃது ஒரு மலையைப் பெயர்த் தெடுத்துக் கொணர்ந்த தென்றலும், ஒருவன் பத்துத் தலையும் இருபது கைகளும் உடையனாயிருந்தன னென்றலும், மற்றொருவன் இரண்டாயிரங் கைகள் உடையனாயிருந்தன னென்றலும், ஒருத்தியை வேறொருவன் சிறையாக எடுத்துச் சென்றக்கால் அவளிருந்த நிலத்தைப் பெயர்தெடுத்துச் சென்றானென்றலும், ஒருவன் தன் கையிலிருந்த வட்டத்தைச் சுழற்றியெறிந்து பகலவனை மறைத்தானென்றலும், இன்னும் இவைபோல்வன பிறவுமெல்லாம் உலக இயற்கை மக்களியற்கை யில் எவரும் எங்குங் காணாதனவாகும். ஆகையால், இன்னோரன்ன பொருந்தாப் புனைவுகளை ஒரு கதையிலாதல் ஒரு நாடகத்திலாதல் இயைத்துரைத்தல் நல்லிசைப்புலமைக்குச் சிறிதும் ஒவ்வாது. ஏனென்றால், இயற்கைக்கு முழு மாறான கட்டுக்கதைகளைக் கூறும் நூல்களைப் பகுத்தறிவுடையார் கற்பராயின் அவர்க்கு அவை இன்பம் பயவாவாய் வெறுப்பினையே விளைக்கும். புதுக்கதைகளும் நாடகங்களும் ஆக்குதலின் நோக்கம் என்னென்றால், இன்பச்சுவையினையும், அதனோடு அறிவுவிளக்கத் தினையும் தந்து, அவ்வாற்றால் மனமாசு நீக்கி மக்கள் ஒழுகலாற்றினைத் தூயதாக்குவதேயாம். இனி, இன்பச் சுவையினைப் பயப்பதொன்றே கதைகள் நாடகங்கள் காப்பியங்கள் ஆக்கும். நல்லிசைப்புலவனுக்குத் தனிப்பெரு நோக்கம் ஆதல் வேண்டுமென்பாரும், மற்ற இன்பச்சுவையினை ஒருவாயிலாக் கொண்டு மக்கள் மனமாசு களைந்து அவர்தம் ஒழுகலாற்றினைச் சீர்திருத்தஞ் செய்தலே அந்நூல்கள் யாக்கும் ஆசிரியர்க்குக் கடமையாதல் வேண்டுமென்பாரும் என இருதிறத்தர் ஆங்கில நூலாசிரியர், பண்டைத் தமிழகத்தும் இங்ஙனம் இருவேறு கொள்கை களுடைய நல்லாசிரியர் இருபகுப்பினர் உளரேனும், மனமொழி மெய்கள் தூயவாதற்கு இன்பச்சுவையினை ஒருவாயிலாகக் கொள்வாரே தமிழாசிரி யரில் மிகப்பலர். இஃது, ஆசிரியர் நக்கீரனார், கடுத்தின்னாதானைக் கட்டி பூசிக் கடுத்தீற்றியவாறு போலவுங், கலங்கற்சின்னீர் தெருளாமையான் உண்பானை, அறிவுடையான் ஒருவன் பேய்த்தேரைக்காட்டி உதுக்காணாய்! நல்லதொருநீர் தோன்றுவ, அந்நீர்பருகாய், இச்சேற்று நீர் பருகி என்செய்தி? என்று கொண்டுபோய், நல்லதொருநீர் தலைப் படுவித்து ஊட்டியது போலவுந், தான் ஒழுகா நின்றதோர் இணைவிழைச்சினுள்ளே மிக்கதோர் ஒழுக்கங்காட்டினான். என்று இறையனாரகப்பொருள் முதற்சூத்திர வுரையின்கண் நன்கெடுத்து விளக்கிக்காட்டியவாற்றானும், ஆசிரியர் இளங்கோவடிகள் தாம் சிலப்பதிகாரம் என்னுஞ் செந்தமிழ்க் காப்பியம் இயற்ற வெண்ணியதன் நோக்கம் இதுவென்பது புலப்பட, அரைசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவதூஉம் உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை யுருத்துவந் தூட்டு மென்பதூஉஞ் சூழ்வினைச் சிலம்பு காரணமாகச் சிலப்பதி காரம் என்னும் பெயரால் நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள் என அந்நூற்பதிகத்தில் ஓதியருளியவாற்றானும் நன்கறியக் கிடக்கின்றது. ஆகவே, அறிவு விளக்கத்திற்கும், மனமொழி மெய்கள் தூயவாதற்கும் ஏற்ற இன்பச்சுவை ஒன்றுமே முதிர்ந்து நிற்கப் புதுக்கதைகளும் நாடகக் காப்பியங்களும் இயற்றுதலே எல்லாராலும் விரும்பற்பால தொன்றாம். மற்று, அறிவுவிளக்கத் திற்குப் பழுது செய்யும் இயற்கை மாறுபாடுகளும், அகந் தூய்மைக்கு ஒவ்வா நிகழ்ச்சிகளுமே நிரம்ப அந்நூல்களை யமைத்தல் உயர்ந்த புலனெறி வழக்கிற்கு இசையாததொன்றா மென்று உணர்ந்து கொள்க. வடமொழியினின்று மொழி பெயர்க்கப்பட்டும், வட மொழியிலுள்ளவைகளைப் போற் செய்யப்பட்டும் இஞ்ஞான்று தமிழில் வழங்கும் புராணங்கள் காவியங்கள் முதலியன வெல்லாம், பகுத்தாராய்ந்து பார்க்க வல்லார்க்கு, அவர் நாடொறும் பழகும் இருவகை இயற்கை நிகழ்ச்சிகளொடுந் திறம்பி, அறிவுக்கு இசையாதனவாயிருத் தலின், அவை உயர்ந்த புலனெறி வழக்கின் பாற் படாவாய், அச்சுறுத்துதற்கு எத்தகைய பூச்சாண்டியைப் பொய்யாகப் படைத்து மொழியினும் அவை தம்மையெல்லாம் நம்பிவிடுஞ் சிறுமகாரை யொத்த புல்லறி வினார்க்கே உவகையளிக்கும் பொய்வழக்கின்பாற் படுவனவாகும். மற்றுக், கலித்தொகை, அகநானூறு முதலான சங்கத் தமிழ்ப் பாட்டுகளும்; அவற்றையடுத்துத் தோன்றிப் பட்டது பட்டாங்கு மொழியுஞ் சிலப்பதிகாரமும்; உண்மையில் நடந்த தன்றாயினும் இருவகையியற்கைநிகழ்ச்சியொடும் மாறுபடாது செல்லுங் கதைதனை நூவலாநின்ற சீவக சிந்தாமணியும்; அதற்குப் பின்னெழுந்து உண்மை நாயன்மார் வரலாறுகளை உள்ளவாறே நுவன்று, இருவகை நிகழ்ச்சி யொடும் முழுதொத்து, அவற்றிற்கு மேற் புலனாகாது நிற்கும் முழுமுதற்கடவு ளியற்கையைப் புலனாக விள்ளுந் தனிப் பெருமாட்சி வாய்ந்த பெரியபுராணம் என்னுந் திருத் தொண்டர் வரலாறும் அஃகியகன்ற சான்றோர் கலங்கா மெய்ம்மை விலங்கற்பாறைமேல் நலனுறவெழுப்பிய புலனெ றிவழக்காம் பொன்மாளிகையுட் பொலிந்து விளங்கும் விலையறு மாணிக்கத்தாற் சமைத்த எழில்கிளர்பாவை களாமென்றறிந்து கொள்ளல் வேண்டும். இங்ஙனம் உலகவியற்கைக்கும், மக்களியற்கைக்கும் மாறாகாத மெய்வழக்கின் வழிநின்றே கதைகளும் நாடகங்களுங் காப்பியங்களும் ஆக்கப்படல் வேண்டுமாயின், உண்மை நிகழ்ச்சிகளை உள்ளவாறே எடுத்து நுவலும் வரலாற்று (சரித்திர) நூல்கட்கும், மற்றுக் கதை நாடகங்கட்கும் வேறுபாடு என்னையெனின்; வரலாற்று நூல்கள் வரையும் ஆசிரியன், சென்ற காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைத் தொகுத்து அவற்றை முறைப் படுத்தித் திறம்படச் சொல்லும் அத்துணைக்கே யுரியனல்லது, அந்நிகழ்ச்சிகளைத் தான் வேண்டியவாறெல்லாந் திரித்துச் சொல்லுதற்குச் சிறிது முரியன் அல்லன். மற்றுக், கதை நாடகங்கள் இயற்றும் புலவனோ செல்கால நிகழ்ச்சிகளை அங்ஙனந் திரிபுபடுத்தாமல் நுவலல் வேண்டுங் கடப்பாடு உடையன் அல்லன்; மற்று, அச்செல்கால நிகழ்ச்சிகளில் அழகியன விழுமியன சில தெரிந்தெடுத்து, அவற்றைப் பின்னும் அழகில் மிகுவித்தல் வேண்டிக் கூட்டவேண்டுவன குறைக்க வேண்டுவன வெல்லாம் நுனித்தறிந்து செய்து, இங்ஙனஞ் செய்வுழி யெல்லாம் அவை உலக வியற்கையோடும் மக்க ளியற்கையோடும் திறம்பா தமைய இழைத்து, அங்ஙனம் இழைத்து ஆக்கிய அவற்றைப் பயில்வார்க்கு நகையும் அழுகையும் இளிவரலும் மருட்கையும் அச்சமும் பெருமிதமும் வெகுளியும் உவகையும் என்ற எண்வகை மெய்ப்பாடுகளுட் சில பல தோன்றவைத்து அருகா வின்பந் தருகுவனாவன். வரலாற்று நூலாசிரியற்கும் நல்லிசைப் புலவற்கும் உள்ள இவ்வேறுபாட்டை விளங்க அறிதற்கு, இஞ்ஞான்று எடுக்கப் படும் நிழலுருப்படத்தையுங் கைவல் ஓவியனால் வரையப்படும் விழுமிய ஓவியத்தையும் உற்று நோக்குமின்கள்! கருவிகொண்டு எடுக்கப்படும் நிழலுரு, எவ்விடத்தில் எக்காலத்தில் எவ்வெப்பொருள்கள் எவ்வெவ்வாறு இருந்தனவோ அவ்வவ் வாறே யமையும்; அதன்கண் அழகுள்ளனவும் அழகில்லனவும் ஆகிய எல்லாந் தாந்தாம் அமைக்கப்பட்டபடியே தோன்று மல்லது தமதியல்பில் மிகுந்தாயினுங் குறைந்தாயினுந்தோன்றா அந்நிழலுருவினை யெடுக்கும் விளைஞனும் அதன்கட்டோன்று வனவற்றிற் கூட்டியுங் குறைத்தும் ஏதொன்றுஞ் செய்ய மாட்டுவான் அல்லன்; நிழலுருக்கள், தான் பொருத்துங் கண்ணாடிப் பல வகையிற் செவ்வகையாகப் பதியப்பார்த்துப், பின்னர் அவற்றைக் காகிதத்தில் அச்சிட்டுத் தரும் அவ்வளவே அவனுக்குரிய தொழிலாகும். மற்றுக், கைவல் ஓவியனால் தீட்டப்படும் ஓவியமோ, ஓரிடத்தில் ஒருகாலத்தில் தோன்றும் ஒரு நிலக்காட்சியையோ, அல்லது சில சிற்றுயிர்களையோ, அல்லது அழகிற் சிறந்த மக்களையோ ஆங்காங்குக் காணப்படும் இயற்கைக்கு முரணாமல் மேன்மேல் அழகுமிகுத்து, அவ்வவ் வற்றின் நிறத்திற்கு ஏற்ற வண்ணங்களாற் குழைத்தெழுதிக் காட்டப்பெற்றுத் திகழ்வ தொன்றாகும்; அழகியவற்றோடு அருவருப்பாவனவுங் கலந்து காணப்படுமாயின்; அவற்றுட் பின்னையவற்றை நீக்கி முன்னைய வற்றை மட்டுமே தெரிந் தெடுத்து வரைகுவன் கைவல் ஓவியன்; ஒரோவொருகால் அவன் திருத்தமான வடிவங்களின் தோற்றத்தை மேலுஞ் சிறப்பாக விளங்க வைத்தற் பொருட்டுத் திருத்தமில்லாத வகைகளையும் உடன் வைத்து வரைய வேண்டுவனாயின், அவற்றின் அருவருப்புத் தன்மையைப் பலபடியாற் குறைத்து வரைகுவனேயன்றி, அதனை யுள்ளவாறே வரைந்து நமது சுவையுணர்வினைக் கெடுப்பான் அல்லன்; எனவே, அவன் பலநாளும் பலமுறையும் ஆய்ந்தாய்ந்து பார்த்துத் தான் வரையும் பொருள் வடிவங்களை இயற்கையிற் காணும் அளவினும் அழகுசெய்து, பகலவனொளி படும் பகுதி ஒளிரவும் அது படாத பகுதி சிறிதே இருளவும் வண்ணங்களை ஆற்றித் தொட்டெழுதி, அங்ஙனம் எழுதிய ஓவியத்தைக் காண்ப தெல்லாம் ஆ! இஃதியற்கையை எவ்வளவு ஒத்திருக் கின்றது! எனினும், ஈது இயற்கையழகினும் எவ்வளவு சிறந்து துலங்கு கின்றது! என்று வியந்துகூறிப் பெரிதும் இன்புறச் செய்யுஞ் செயற்கருஞ் செய்கைத்திறனுடையனா மென்றுணர்ந்து கொள்ளல் வேண்டும். இங்ஙனம் இருவேறுவகையவாய், அமைக்கப்படும் படங்களுள் நிழலுருப்படத்தை யொப்பதே வரலாற்று நூலா மென்பதூஉங், கைவல் ஓவியன் வரைந்த அரிய ஓவியத்தை யொப்பனவே கதைகள் நாடகங்கள் காவியங்களாகு மென்பதூஉம் நினைவிற் பதிக்கற்பாலனவாகும். இயற்கையிற் காணப்படும் பல்வகைப் பொருள்களையும் அவற்றின் நிகழ்ச் சிகளையும் அவ்வியற்கையிலுள்ளவாறே வகுத்துரைக்கு மாற்றில் வரலாற்று நூல்கள் நிழலுருப்படங்களையே ஒப்பனவாகும். மற்று, இயற்கையி லுள்ளவற்றை அவ்வவ்வற்றின் இயல்புக்கு மாறாகாமலே, மேன் மேற் றூய்மைசெய்து மேன்மேல் அழகுசெய்து, தன் அறிவியல் நுட்பமுந் தன் அழகியலுணர்வும் அவற்றின் அமைப்பினூடு விரவி விளங்கச் சான்றோ னொருவனால் யாக்கப்படுமாற்றிற் கதைநூல் முதலியன விழுமிய ஓவியங்களையே யொப்பனவாகும். இயற்கைக்கு முற்றும் மாறுபட்டுக் காணப்படும் ஓவியங்களை நோக்குவார். அவற்றைக்கண்டு மகிழாமல் ஈதென்னை! உலகத்தில் எங்குங் காணப்படாத பொய்வடிவாய் இருக்கின்றதே! என்று இகழ்ந்துபோதல் போல, உலகவியற்கை மக்கள் இயற்கைக்கு முழுமாறாய் ஆக்கப்பட்ட கதைகள் நாடகங்களைக் காணும் அறிஞர் அவற்றின் பொய்ம்மை கண்டு அவற்றைப் பாராட்டாது புறத்தொதுக்குவர். அற்றேல், இயற்கையோ டொத்தவற்றில் நமக்கு மகிழ்ச்சி மிகுதலும், ஒவ்வாதவற்றில் அருவருப்புண்டாதலும் என்னை யெனின்; மக்கள் மனநிலை உள்ளதை உள்ளவாறு அறிதலிலேயே வேட்கை மிகுந்து நிற்கின்றது; அதுதான் அங்ஙனம் நிற்கவேண்டுவ தென்னையெனின்; உண்மையுணரும் அறிவினாலேயே மக்க ளெல்லாரும் உயிர்பிழைத்து வாழ வேண்டியவர்களாய் இருக்கின்றார்கள். பசித்து உண்ண வேண்டி யிருப்பவனுக்குத் தனக்கேற்ற உணவையறிந்து உட்கொள்வதில் வேட்கையிருக்குமே யல்லாமல், உணவுப் பண்டங்களைப்போல் மெழுகாலும் நெட்டியாலுஞ் செய்யப் பட்டவைகளையெல்லாம் அறியாமல் உணவென நம்பி யுட்கொள்வதில் வேட்கை செல்லாது; நீர் வேட்கை மிகுந்தவனுக்கு நறுந் தீம்புனல் பருகுவதில் விழைவு மிகுமேயல்லாமல், தீம்புனல்போற் பொய்யாகச் செய்து வைக்கப்பட்ட நச்சுநீரைப் பருகுவதில் விழைவு செல்லாது, தமது பசிக்குந் தமது விடாய்க்கும் வேண்டுவன இவைதாம் என உண்மையாக அறிந்தாலன்றி, எவரும் எதனையும் வெறுந் தோற்றத்தளவில் மயங்கி உட்கொண்டு விடக் காண்கின்றோ மில்லையே. அல்லதெவரேனும் அறிவுமயங்கி நஞ்சை யுணவாகப் பொய்த்துணர்ந்து உட்கொள்வராயின், அவர் தமதுயிரிழத் தலுங் காண்டுமென்றே, ஆக, உயிர்வாழ்க்கை இனிது நடைபெறுதற்கே பொருள்களை உள்ளவா றுணர்தல் இன்றியமையாது வேண்டப் படுவதாயிருக்க, உயிர்வாழ்க்கை யோடு இன்ப அறிவு வாழ்க்கையும் நன்கு வாய்த்தற்கு உண்மையுணர்ச்சி இன்னும் எத்துணை இன்றியமையாததாய் வேண்டப்படும்! உண்மையுணர்ச்சி இத்துணைச் சிறந்ததாய் இருத்தலினாலேயே, நாம் பயிலுங் கதைகள் நாடகங்கள் காப்பியங்கள் முதலிய நூல்களிற் கூறப்படும் நிகழ்ச்சிகள், நம் பழக்க வழக்கங்களிற் காண்கின்ற படியே உண்மை வழாது நுவலப்பட்டிருத்தல் காணிற்பெரிது மகிழ்ந்து அவைதம்மை மிகப்புகழ்ந்து பேசுகின்றோம். மேலும், நம்மோடொத்த மக்கள் எவ்வெவ் வகையான இயற்கையுடையரா யிருக்கின்றனர்? அவர்கள் தத்தம் இயற்கையால் எவ்வெவ்வகையான செயல்களைச் செய்கின்றனர்? தாஞ் செய்யும் அச்செயல்களால் துன்பத்தையடைகின்றனரா? இன்பத்தை யடைகின்றனரா? ஒருவரது செயலால் அவர்க்குப் பகையாம் நிலையிலோ உறவாம் நிலையிலோ நிற்பவர்கள், அவரைப் பகைத்தோ அல்லதவரோடு உறவாடியோ எங்ஙனம் ஒழுகுகின்றனர்? அவ்வெவ்வேறு ஒழுக்கத்தால் அவரும் ஏனையோரும் எய்தும் முடிவுகள் யாவை? என்று இவ்வா றெல்லாம் நாம் அவரவர் இயற்கை செயற்கை வரலாற்று முடிபுகளை யறிந்து கொள்வதிற் பேராவல் வாய்ந்தவர்களா யிருக்கின்றோம். இங்ஙனம் உணரும் உணர்ச்சியில், நல்லவரா யினார் இன்புறக் கண்டால் நாமும் இன்புற்றும், அவர் துன்புறக்கண்டால் நாமுந் துன்புற்றும் ஒழுகும் இயல்பு நம்மெல்லா ரிடத்தும் அமைந்து நிற்கின்றது. இன்னுந், தீயராயினார் தமது தீய செயலால் துன்புறக் கண்டால் அஃது அவர்க்குத் தகும் என்னும் மனநிறைவும், அவர் அங்ஙனந் துன்புறாமற் செவ்விய வாழ்க்கையிற் களித்து இறுமாந்திருக்கக் கண்டால் இத் தீயரும் இங்ஙனம் வாழ்தல் தகுமோ! இறைவனே நீ உளையோ! என்னும் மனப்புழுக்கமும் அடைபவர்களா யிருக்கின்றனம். இவையேயன்றி, இங்ஙனம் பலதிறப்பட்டவராய் இருக்கும் மக்கள் தாந்தாம் பிறவியெடுக்குங்கால் எவ்வெக்குடும்பத்தில் எவ்வெவ்விடத்திற் போந்து எவ்வெவ்வாறு வளர்ந்து வந்தனர்? அங்ஙனம் வளர்ந்து வருங்கால் அவர் எவ்வெக்காலத்திற் செய்த செயல்கள் எவ்வெப்பயனைத் தமக்கும் பிறர்க்கும் விளைத்தன? அவர் பிள்ளைமைப்பருவந் தொட்டுக் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று நுகர்ந்துவந்த உலகியற் பொருள்கள் யாவை? அவை தம்மால் அவருடைய உணர்வும் பண்புஞ் செயலும் எவ்வெவ்வாறு உருவாகிப் புறத்தே புலனாயின? என்று உலக இயற்கைக்கும் மக்கள் மனவளர்ச்சிக்கும் உள்ள உறவும் பயனும் அறிவதிலும் நாமெல்லாம் மிக்க வேட்கை வாய்ந்தவர்களா யிருக்கின்றனமே. இவ்வாறெல்லாம் மக்களுள் ஒவ்வொருவரின் இயற்கைகளும் அவற்றின் புறநிகழ்ச்சிகளும் ஒன்றோடொன்று சன்னல் பின்னலாகப் பிணைக்கப் பட்டிருத்தலுடன், இப்பிணைப்பு, இடத்திலுங் கால இயக்கத்திலும் பொருந்திக் கிடக்கும் உலகியற் பொருள்களோடும் மிக நெருக்கமாக விரவி நடைபெறுகின்றன வல்லவோ? ஆகவே, இத்துணைப் பிணைப்புகளோடுங் காணப்பட்டுச் செல்லா நின்ற மக்களியற்கை உலகவியற்கைகளை அளந்து ஆராய்ந்து கண்டு, அப்பிணைப்புகளின் சிக்கலை விடுவித்து, ஒவ்வொன்றனையும் இழையிழையாகத் தம் உணர்வினாற் பிரித்துப் பார்த்தும், பின்னர் அவற்றை இயைத்துப் பார்த்தும், அவற்றால் மக்கள் அடையும் முடிபுகளைச் சுவைதுளும்பத் திறனாக அமைத்துக்காட்டும் நல்லிசைப்புலவரே கதைகள் நாடகங்கள் காப்பியங்கள் இயற்றுதற்குரிய ரென்றுணர்ந்து கொள்க. அற்றேல், நாடகங்கள் காப்பியங்களுக்குங் கதைகளுக்குந் தம்மில் வேறுபாடு என்னையெனிற், கூறுதும். பழையகாலத் தமிழில் இம்மூன்றுஞ் செய்யுள் வடிவிலேயே இயற்றப்பட்டன. மற்று, இக்காலத்திலோ காப்பியங்களைத் தவிர ஏனை இரண்டும் உரை நடையிலேயே பெரும்பாலும் இயற்றப் படுகின்றன. ஓராயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முன் மாணிக்கவாசகப் பெருமானால் அருளிச் செய்யப்பட்ட திருச்சிற்றம்பலக் கோவையார் என்னும் நாடகத்தமிழ்நூல் வடித்த செந்தமிழ்ச் செய்யுட்களினாலேயே ஆக்கப்பட்டிருக் கின்றது. இற்றைக்கு ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்குமுன் வடமொழியிற் காளிதாசரால் இயற்றப்பட்ட சாகுந்தலம், விக்ரமோர்வசீயம், மாளவிகாக்நிமித்ரம் என்னும் நாடகங்கள் மூன்றும் பாட்டும் உரையும் விரவிய நடையில் ஆக்கப் பட்டிருக்கின்றன. இற்றைக்கு முந்நூற்றைம்ப தாண்டுகளுக்கு முன் மேற்கே இங்கிலாந்து தேயத்திலிருந்த ஷேக்பீயர் (Shakesphere) என்னுந் தமக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லா ஆங்கிலநாடக ஆசிரியரும் பாட்டும் உரையும் விரவிய நடையிலேயே தம்முடைய நாடகங்களை இயற்றியிருக்கின்றார். ஆனாலும், இஞ்ஞான்று ஆங்கிலத்தில் நாடகங்கள் வரையும் பெர்னாட்ஷா (Bernard Shaw), கால் உவர்த்தி (Galsworthy) பாரி (Barrie) முதலான ஆசிரியர்களோ முழுதும் உரைநடையிலேயே அவை தம்மை இயற்றுகின்றார்கள். என்றாலும், நாடகங்களைச் செய்யுளும் உரையும் விரவிய நடையில் இயற்றும் முன்னையாசிரியர் வழக்கமே சிறந்த தொன்றாகக் காணப்படுகின்றது. ஏனென்றால், உணர் வெழுச்சி தோன்றாத வெறுங்காலங்களில் மக்கள் இயற்கையாகவே உரைநடையிற் பேசுகின்றார்களாயினும், மிகுமகிழ்ச்சி, மிகுகவலை, மிகுதுயரம், மிகுசினந்தோன்றப்பெறும் நேரங்களில் அப்போது தாமிருக்கும் நிலைக்கேற்றபாட்டுகளைப் பாடுவதிலோ, அல்லது செய்யுள்நடையிற் பேசுவதிலோ முனைந்து நிற்கின்றார்கள்; அந்நேரங்களில் வெறிதான உரைநடையிற் பேசுதல் அவர்கட்கு இயல்வதில்லை. அறிவில் மிகச்சிறந்தார் முதல் அதில்மிகக் குறைந்தார் ஈறான எல்லாரும் மகிழ்ச்சி மிக்க நேரங்களிற் பாட்டுப்பாடி யின்புறுதலைக் காண்மின்கள்! மிகு கவலை மிகு துயரங்கொண்ட காலங்களிற் பெண்மக்களும் ஒப்பாரி சொல்லி யழுதலைக் காண்மின்கள்! மிகச்சினந்து கலாம் விளைப்பவர்கள் அடுக்கடுக்கான சொற்களைச் செய்யுள்நடையிற் பெய்து உரத்துக் கூவுதலைப் பார்மின்கள்! ஆகவே, உணர்வெழுச்சி தோன்றும் இடங்களிற் பாட்டும், அஃதில்லாது உணர்வுஞ் செயலும் அமைதியாகச் செல்லும் இடங்களில் உரையும் வர நாடகநூல்கள் இயற்றுவார் பக்கமே மக்களியற்கையொடு பெரிதொத்து நிற்பதாகும். இனிக், கதைநூல்களெல்லாம் இஞ்ஞான்று உரைநடை யிலேயே இயற்றப்படுகின்றன. இவற்றுள் ஒரோவிடங்களிற் செய்யுட்களுங் காணப்படுதல் உண்டெனினும், அவை அக்கதையுள் இயங்குவார் மகிழ்ச்சிமிக்கோ துயரம்மிக்கோ பாடுவனவாய் அருகிவருமே யல்லாமல், நாடகங்களிற்போலப் பெருவரவினவாய்ப் புகுவன வல்ல. இதுவேயுமன்றி, நாடகங்களில் அவற்றை யியற்றும் ஆசிரியன் உரையாகத் தொடர்ந்து வருவன எவையும் இரா; எல்லாம் நாடகங்களில் இயங்குந் தலைமகன் தலைமகள் பாங்கன் பாங்கி என்றற் றொடக்கத்தார் உரையாடும் உரையாட்டு களாகவேயிருக்கும். மற்றுக், கதை நூல்களிலோ தலைமகன் தலைமகள் முதலாயினார் நேர்முகமாகவோ, அன்றி ஒரோவொரு கால் தனிமையிலிருந்து தாமாகவோ பேசும் உரைகளைப் பிணைப்பதோடு, அக்கதைநூல்களை இயற்றும் ஆசிரியன், தலைமகன் தலைமகள் முதலாயினார் தம் இயற்கைகளைப் பற்றியும், அவர்தம் ஒழுகலாறுகளைப் பற்றியும், அவற்றால் விளையும் நன்மை தீமைகளைப் பற்றியும், அவர் இயங்கும் இடத்தின் இயல்பு காலத்தின் இயல்புகளைப் பற்றியும், இன்னும் இவைபோன்ற வேறு சிலபலவற்றைப் பற்றியுந்தான் கூறக் கருதியவைகளைக் கூறவும் இடம் பெறுவன். இவ்வேற்றுமையே யன்றிக், கதைகள் சிறியவும் பெரியவுமாய்ச் சுருங்கியும் விரிந்தும் நடைபெறல்போலாது, நாடகங்கள் மிகவிரிந்து செல்வதின்றிச் சுருங்கிநடக்கும் மற்றுமொரு வேறுபாடும் உடையதென்பதும் நினைவிற் பதிக்கற்பாற்று. என்றிதுகாறுங் காட்டிய கதைநூல் இலக்கணங்கள் இனிதொருங்கமையக் கோகிலாம்பாள் கடிதங்கள் என்னும் இந்நூல் இயற்றப்பட்டிருக்கின்றது. இதன்கண் வருந் தலைமகள் கோகிலாம்பாள் தன் காதற்கணவற்கெழுதிய கடிதங்களின் வாயிலாகவே இந்நூற்கதை புலனாகிச் செல்லுதலால், அத்தலை மகளே இந்நூலை இயற்றிய ஆசிரியன் நிலையில் நிற்கின்றாள். ஆதலால், இந்நூலாசிரியன் தன் கருத்தாகக் கூறக் கருதியன வெல்லாம் அவன் வரையுங் கடிதங்கள் வாயிலாகவே புலப்படுக்க வேண்டியவனாவான் என்றுணர்ந்து கொள்க. கோகிலாம்பாள் நாட்செல்லச் செல்லத் தமிழ்மொழிப் பயிற்சியில் மிக்கவளாய்ச் செல்லுதலின், துவக்கத்தில் அவள் எழுதுங் கடிதங்களில் அவள் இனத்தவரான பார்ப்பனர் வழங்கும் வடச்சொற்கள் இடையிடையே கலந்திருந்தல் போலப், பின்னர் அவள் எழுதுவனவற்றில் அவை அத்துணை கலவாமல், தனித்தமிழ்ச் சுவை மிகுந்து வருதல் கண்டுகொள்க. கோகிலத்தின் மாமனார் தமிழ்ப்பயிற்சியுடையரேனும், அவர் தமிழ்நடை யெழுதிப் பழகியவரென்பது புலப்படாமையின், அவர் பேசுவனவற்றில் வடசொற்கள் காணப்படும். அவர்க்கு இனமான ஏனையோரில், அவள் தமையனைத் தவிர மற்றையோ ரெல்லாந் தமிழ்ப்பயிற்சி சிறிதும் இல்லாத வராகலின், அவர் இயற்கையாய்ப் பேசுகின்ற படியே அவருடைய உரையாட்டுகள் எழுதப்பட்டிருக் கின்றன. என்றாலும், இயற்கையில் அவர்கள் மிகவுஞ் சிதைத்துப் பேசுந் தமிழ்ச் சொற்கள் நூலுள் அங்ஙனமேவருதல் அருவருப்புக்கு இடமாய் நூன்மாட்சிக்கு வழுவாமாகலின், அவை பெரும்பாலுந் திருத்தியே எழுதப்பட்டிருக்கின்றன. இங்ஙனஞ் சொற்களையும் பொருள்களையும் தூயவாக்கி வகுத்தலே நூல்யாக்குமுறை யென்பதனைச் சிறிதும் ஆய்ந்துபாராத இஞ்ஞான்றைக் கதை நூற்காரர்கள், வடசொல்லும் ஆங்கிலச் சொல்லுங் கொச்சைத் தமிழ்ச்சொல்லும் விரவிய மிகச் சீர்கெட்ட நடையில் அவைதம்மை வரைந்து, நூன்மாட்சி யினைப் பாழ்படுத்து கின்றனர். நாளேற நாளேற அறிவுஞ் செயலுஞ் சீர்திருந்தி வளர்தற்கு ஏற்ற உயர்ந்த முறையில் எழுதப்படுங்கதை நூல்களையே பயிலல்வேண்டுமல்லால், இத்தகைய வழூஉக் கதைகளைப் பயிலல் நன்றாகாது. இனிப், பார்ப்பனருள்ளுந் தமிழ் நன்குணர்ந்தாரது மனவியற்கை மென்பதப்பட்டு விரிந்தநோக்க முடைத்தாய்ப் பிறர் நலங்கருதும் விழுப்பம் வாய்ந்து திகழ்தலும், அஃதுணராத ஏனையோரது இயற்கை வன்பதப்பட்டுக் குறுகிய நோக்கம் உடைத்தாய்த் தன்நலங் கருதுஞ் சிறுமைவாய்ந்து நிற்றலும் இக்கதை நிகச்சியுள் வருவார்பாற் பிரிந்து தோன்றி உலக வழக்கில் உள்ள படியே அமைந்துகிடத்தல் காணலாம். இவ்விரு வேறு வகையினருள்ளும் ஒவ்வொருவர் இயற்கையுஞ் சிறிதும் பெரிதுமாய்த் தனித்தனி வேறுபட்டு, அவரவர்க்குரிய உண்மைத் தோற்றத்தை ஓர் உருப்படுத்தித் தனித்தனி விளங்கக் காட்டுதலுங் கண்டுகொள்க. இனிச், சிறந்த ஒரு கதையின் அமைப்பும் உடம்பின் அமைப்புந் தம்முள் ஒப்புமை யுடையனவாகும். உடம்பின் உறுப்புகள் அத்துணையும் ஒன்றுக்கொன்றுதவியாய் அவ்வுடம் போ டொருங்குசேர்ந்து நின்று அதனை வளரச்செய்தல் போல, இக் கதைநூற் றலைவியின் வரலாறும், அவடன் பெற்றோர் வரலாறும், அவடன் பாட்டன் மாமன் வரலாறும் பிறவுமெல்லாம் ஒன்றோ டொன்று பிணைந்துநின்று இக்கதையினை நடாத்துதல் காண்க. ஓர் உடம்பிற்கு அதன் உயிர் இன்றியமையாததாய் நிற்றல் போல மக்கட்கூட்டுறவின் விழுப்பமுங் காதற்கற்பொழுக்க மாட்சியுந் தமிழ்மொழியின் ஏற்றமும் முழுமுதற்கடவுள் விளக்கமும் இக்கதை நூலுக்கு உயிராய்நிற்றல் உணர்ந்துகொள்க. மறைமலையடிகள் சிந்தனைக் கட்டுரைகள் மூன்றாம் பதிப்பின் முகவுரை இந்நூல் இயற்றப்பட்டு முப்பதாண்டுகள் ஆயின. முப்பதாண்டுகட்கு முன் இந்நாட்டில் தமிழ்ப்பயிற்சி யிருந்த நிலைமையோடு இப்போதிருக்கும் அதன் நிலைமையினை ஒப்பிட்டு நோக்குங்கால், இனித் தமிழ்மொழிப் பயிற்சி எங்கும் பரவுமென்றெண்ணி மகிழ வேண்டுவதாகின்றது. இந்நூலின் முதற்பதிப்பிலும், அக் காலத்தில் இயற்றப்பட்ட எம்முடைய நூல்கள் பிறவற்றினும் வடசொற்கள் கலந்திருந்தன. தமிழறிஞர் பலர் அக்காலத்தியற்றிய நூல்களிலுங் கட்டுரைகளிலும் வடசொற்களும் பிறசொற்களும் தமிழிற் கலத்தலால், நாடோறும் வழக்கில் உள்ள நிலம் நீர் நெருப்பு சோறு ஒளி கோயில் குளம் முதலான எத்தனையோ பல தமிழ்ச்சொற்களும் வழங்காமல் போதலையுணர்ந்து, பிற மொழிக் கலப்பைத் தமிழினின்றும் அறவே ஒழித்தற்கு முயலத் துவங்கினேம். அதனால், இன்றைக்குப் பன்னிரண்டு ஆண்டுகட்கு முன் வெளிவந்த இந்நூலின் இரண்டாம் பதிப்பு முற்றுந் தனிச் செந்தமிழ் நடையினதாகச் செய்யப்பட்டது. அங்ஙனமே, எம்முடைய மற்றைய நூல்களுந் தனிச் செந்தமிழ் நடை யினவாகவே செய்யப்பட்டன, செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு செய்யவே, இப்போது தனிச் செந்தமிழ்நடையே பெரும்பாலும் எங்கும் வழங்கி வருகின்றது. தமிழ் வல்லவர்கள் எல்லாரும் இனித் தனிச் செந்தமிழில் திருத்தமாக எழுதி னாலன்றி அவர்களுடைய நூல்கள் மணம்பெறா என்பதனை உள்ளத்திற் பதித்து அவர்கள் தமிழன்னையை ஓம்பி நலம் பெறுவார்களாக! இந்நூலின் இப்பதிப்பில் இன்னும் பல சீர்திருத்தங்களுஞ் செய்யப்பட்டிருக்கின்றன. பல்லாவரம் மறைமலையடிகள் பொதுநிலைக்கழக நிலையம் முதற் பதிப்பின் முகவுரை - 1905 இவ்வுரை நூலின்கண் அடங்கியிருக்கின்ற ஆறு கட்டுரை களும், ஆங்கில மொழியில் நல்லிசைப் புலவரான அடிசன் என்பார் சொற்சுவை பொருட்சுவை நிரம்ப எழுதிய கட்டுரைகளினின்றும் பெரும்பாலும் மொழி பெயர்த்துச் செய்யப்பட்டனவாகும். ஆங்கிலமொழியின் அமைப்புஞ் செந்தமிழ்மொழியின் அமைப்பும் பலவகையால் மாறுபட்டுக் கிடத்தலின், ஆங்கிலத்திற் கிடந்த அரிய நூற்பொருளை ஆண்டு நின்றவாறே எடுத்துச் செந்தமிழில் மொழிபெயர்த்தல் செந்தமிழறிஞர்க்கு இன்பம் பயவாதாய் ஒழியும். ஆகவே, அம்மொழிநூலில் மிகவுஞ் சுவைப்பதாய் விளங்கும் பொரு ளைச் செந்தமிழ் இயல்புக்கு இணங்குமாற்றாற் சிறுபான்மை திரித்தும், வேறுசில சேர்த்தும் அதனை இயற்றுதல் வேண்டும். இம்முறை வழுவா வண்ணம், அடிசனார் உரைப்பொருளை வேண்டு மிடங்களில் இயையுமாறு திரித்தும், எனக்கு ஆங்காங்குத் தென்பட்ட நிகழ்ச்சிகள் சிலவற்றை உடன் கூட்டியும் இவ்வுரைகளை மொழிபெயர்த்து இயற்றுவேனாயினேன். ஆங்கிலத்தில் இவ்வுரைகளைப் பயின்றார்க் கன்றி ஏனையோர்க்கு, இவற்றை எழுதுதற்கண் யான் எடுத்த உழைப்பும் பிறவுஞ் சிறிதும் விளங்கா. தமிழ் ஒன்றே வல்லார்க்கு இது மொழிபெயர்ப்பு நூலென்பது சிறிதும் புலனாகாது. ஆங்கிலம் பயிலுந் தமிழ் மாணவர் தமிழினும் புலமை எய்த வேண்டுவராயின், அவர்க்கு இக்கட்டுரைகள் மிகவும் பயன்படு மென்பது இதனை ஒரு சிறிது நோக்கினுந் தெற்றென விளங்கும். ஆங்கிலப்பயிற்சி யின்றித் தமிழில் வல்லராக விரும்புநர்க்கும் இது சொன்னயம் பொருணயங்களைத் தெளிவு பெறக் காட்டுமென்னுந் துணிபுடையேன். நாகை வேதாசலம் பிள்ளை சென்னை கிறிடியன் காலேஜ் அறிவுரைக் கொத்து முதற்பதிப்பின் முகவுரை கற்றார் கல்லாதார் என்னும் இரு திறத்தார்க்கும் பயன்படும் பொருட்டுச், சென்ற பல ஆண்டுகளாக யாம் இடையிடையே வெளியிட்டு வந்த துண்டுத் தாள்களிற் போந்த கட்டுரைகளே பெரும்பாலும் இந்நூலிலே தொகுக்கப்பட் டிருக்கின்றன. mit: `irt rka¥ ghJfh¥ò’, âU¡nfhÆš tÊghL’, `áW njtijf£F cÆ®¥gÈ Ælyhkh?, `சீவ காருணியம், `தமிழ்த்தாய், `அறிவுநூற் கல்வி, `உடன்பிறந்தார் ஒற்றுமை, `கூட்டு வாணிகம், `பெண் மக்கள் கடமை என்பனவாகும். இவை பல்லாயிரக்கணக்கான துண்டுத் தாள்களில் அச்சிடப்பட்டுத் தமிழ் வழங்கும் நாடுகள் எல்லா வற்றிலும் விலையின்றி வழங்கப்பட்டன. இவற்றைப் பதிப்பிட்ட போது இவற்றின் அச்சுக்கூலி கடிதக்கூலிகளை மட்டும் ஆங்காங்கு உள்ள நண்பர்கள் சிற்சிலர் ஏற்றுக்கொண்டனர். இனித், துண்டுத் தாள்களாக அல்லாமல், எமது ஞானசாகர இதழில் யாம் இடையிடையே எழுதி வெளியிட்ட வேறு சில கட்டுரைகளும் இந்நூலின் கண் ஊடே ஊடே சேர்க்கப்பட்டிருக்கின்றன. அவை: `கடவுளுக்கு அருளுருவம் உண்டு, `கல்வியே அழியாச் செல்வம், தமிழிற் பிறமொழிக் கலப்பு, `பெற்றோர் கடமை என்பனவாகும். இவற்றுட் கல்வியே அழியாச் செல்வம் என்பதும், `பெற்றோர் கடமை என்பதும் எம் அருமைத் திருமகள் நீலாம்பாள் அம்மை அவைக்களத்தில் விரிவுரை நிகழ்த்தும் பொருட்டு எழுதப்பட்டனவாகும். இந்நூலின்கண் அடங்கிய பதின்மூன்று கட்டுரைகளுந் தூய தனித்தமிழில் எழுதப்பட்டிருத்தலோடு, எல்லாரும் எளிதிற் கற்றுணரத்தக்க எளிய நடையிலும் அமைந் திருக்கின்றன. மேலும், இவற்றிலுள்ள பொருள்களும் எல்லார்க்கும் விளங்குவனவாய், அவர்க்கு மேலுமேலும் அறிவை வளர்க்கும் இயற்கை வாய்ந்து மிருக்கின்றன. யாம் எழுதிய மற்றை நூல்களிற் பெரும்பாலான சிறிதேனுங் கல்வியறிவு பெற்றவர்களுக்கே பயன்படுவனவா யிருக்க இந்நூற் கட்டுரைகள் மட்டும் எல்லார்க்கும் பயன்படும் இயல்பு கண்டு எமக்கு நண்பராய் உள்ளார் பலரும் இவற்றை யெல்லாம் ஒருங்கு திரட்டி ஒரு நூலாக வெளியிடல் வேண்டுமென்று கேட்டுக் கொண்டதற் கிணங்கி, அவற்றை இங்ஙனம் வெளியிடலானேன். சமரச சன்மார்க்க நிலையம், இங்ஙனம் பல்லாவரம், வேதாசலம் 1843 இரண்டாம் பதிப்பின் முகவுரை முதற்பதிப்பில் இல்லாத ஐந்து நீண்ட கட்டுரைகள் இப்பதிப்பின்கட் புதியவாய்ச் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அவை: `கடவுள் நிலை, `கல்வியுங் கைத்தொழிலும், `பகுத்துணர்வும் மாதரும், `தனித் தமிழ் மாட்சி, `தமிழ் நாட்டவரும் மேல்நாட்டவரும் என்பனவாகும். இதனால் இப்பதிப்பில் 80 பக்கங்கள் மிகுதியாகச் சேர்ந்துள்ளன. முதற்பதிப்பிற் சிற்சில கட்டுரைகளிற் கலந்திருந்த சிற்சில வடசொற்களும் இப் பதிப்பின்கண் அறவே களைந்தெடுக்கப் பட்டன. அதனால் இந்நூற் கட்டுரைகளின் உரைநடை இன்னும் மிகுதியான செந்தமிழ்ச் சுவை வாய்ந்து நடத்தல் காணலாம். 1931 இங்ஙனம் மறைமலைகடிகள் மூன்றாம் பதிப்பு இம்மூன்றாம் பதிப்பிற் சிற்சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. பொதுநிலைக் கழகம் இங்ஙனம் பல்லாவரம் மறைமலைகடிகள் 1935 திருவொற்றி முருகன் மும்மணிக்கோவை இரண்டாம் பதிப்பும் அதன் உரையும் முகவுரை சாலிவாகன, 1820 ஆம் ஆண்டாகிய விளம்பி ஆனித்திங்கள், 15-ஆம் நாள் (1898 , ஜூன், 27) எமக்குண்டான கொடிய நோய்தீர்த்த முருகப்பிரான் றிருவருளை வியந்து இயற்றிய எமது மும்மணிக்கோவை அவன் றிருவடிக்குச் சாத்தப்பட்ட வரலாறு, இந்நூலின் முதற் பதிப்பு முகவுரையில் வரையப்பட்டுளது. மேற்சொன்ன நோயால் துன்புற்ற நாளில் எமக்கு ஆண்டு, 21, மிக இளைஞனாயிருந்த காலம்; அப்போதுதான் யாம் சென்னைக்கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியராய் அமர்ந்து மாணாக்கர்க்குத் தமிழ் இலக்கண இலக்கியங்கற்பித்து வரலானதும். அந்நாளில் யாம் பழைய தமிழ் இலக்கண இலக்கிய நூற்பயிற்சியில் மட்டுப்படா விழைவு கொண்டு கருத்தூன்றி யிருந்தேம். எமது பதினைந்தாம் ஆண்டில் முறைப்படி துவங்கிய தமிழ்ப்பயிற்சியானது எமது இருபத் தோராம் ஆண்டிற் பெரும்பாலும் நிரம்பிய தென்னலாம், இருபத்தோராம் ஆண்டிற்குள் தொல்காப்பியம். திருக்குறள், திருச்சிற்றம்பலக் கோவையார் என்னும் மூன்று நூல்களையும் முழுதும் நெட்டுருச்செய்து முடித்தேம்; கலித்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், நாலடியார் முதலிய நூல்களிற் பெரும்பகுதிகள் அங்ஙனமே நெட்டுருச்செய்து முடிக்கப் பட்டன; சிவஞான போதம், சிவஞானசித்தியார் என்னும் நூல்களிரண்டும் முழுமையும் நெட்டுருச்செய்து முடிக்கப் பட்டன; இவையேயன்றி, நன்னூல் விருத்தி, தொல்காப்பியச் சூத்திரவிருத்தி, யாப்பருங்கலக்காரிகை, இறையனாரகப் பொருளுரை, தண்டியலங்காரம் முதலான நூல்களும் முன்னமே முழுமையும் நெட்டுருச்செய்து முடிக்கப் பட்டனவாகும். கல்லாடம், சீவகசிந்தாமணி, பெரியபுராணம் என்னும் நூல்களின் சொற்சுவை பொருட்சுவைகளிற் பெரிதுமூழ்கி யிருந்தும் அவற்றிலிருந்தெடுத்துப் பாடஞ்செய்த செய்யுட்கள் மிகுதியாயில்லை; என்றாலும், அவற்றின் சொற் பொருணயங்கள் எமதுளத்தில் வேரூன்றி நின்றன. இங்ஙனமாக, விழுமிய தமிழ்ப்பழ நூல்களில் எமது கருத்து ஈர்ப்புண்டுநின்று பயின்ற பயிற்சியினாலேயே, செய்யுளும் உரையுந் தனிச்செந்தமிழ் நடையில் எழுதுந் திறம் எமதிளமைப் பருவத்திலேயே எமக்கு வாய்ப்பதாயிற்று; எழுதும் திறம் வாய்ப்பவே. அவைக்களங்களிற் பேசுந்திறமும் அதனையொட்டி வாய்ப்பதாயிற்று. பழந்தமிழ்ப் பயிற்சியால் எமக்குண்டான சொற்பொருணலங்கள் அத்தனையும் இம்மும்மணிக் கோவையின் கண் விளங்கிக்கிடத்தல் எளிதில் அறியப்படும். இஞ்ஞான்றைத் தமிழ்மாணவரும் பிறரும் இந்நூலைக் கருத்தூன்றிக் கற்பராயின், அவர் பழந்தமிழ்நூற் சொற்பொரு ணயங்களை எளிதில் உணர்ந் தின்புறுதற்கு இஃதொரு வழிகாட்டியாமென்னும் நம்பிக்கையுடையேம். இனி, எமக்குவந்த கொடுநோய் தீர்த்த முருகப்பிரான் றிருவடிக்கு ஒரு பாமாலை தொடுக்க விழைந்த எமது கருத்து, அந்நோய் தீர்ந்த ஒன்றரையாண்டுகட்குப் பிறகுதான் நிறை வேறலாயிற்று. கல்லூரியில் உயர்வகுப்பு மாணவர்க்குத் தமிழ் நூல்கற்பிக்குந் தொடர்ந்த முயற்சிக்கிடையிடையே, அவைகளிற் சொற்பொழிவுகள் நிகழ்த்தும் முயற்சியும், எமதில்லத்தே போந்து தமிழ்கற்க விழைவு மீதூர்ந்த மாணவர்க்கு அது கற்பிக்கும் முயற்சியும், அஞ்ஞான்று நடைபெற்ற தமிழ்வெளியீடு ஆங்கில வெளியீடுகட்குத் தமிழ் ஆங்கிலக்கட்டுரைகள் எழுதிவிடுக்கும் முயற்சியும் பிறவும் நடைபெற்றுவந்தன. அவற்றிற் கிடையே எம் மனைவி இருமல் நோயால் துன்புற்றனர் யாம் அப்போ தீன்ற பெண்மகவுஞ் சிலந்திக்கட்டிகளால் நெடுநாள் துன்புற்றது; எமக்கப்பபோது கல்லூரியிற்கிடைத்த சம்பளமோ சிறிதாதலால் எமது வாழ்ககையுஞ் செழுமையாக நடைபெற்றிலது. ஆகவே, இத்தனை முயற்சிகட்குந் தொல்லைகட்கும் நடுவே, இந்நூற்பாக்கள் மனவமைதி பெற்ற ஒழிவுநேரங்களில் மட்டுமே தொடுக்கப்பட்டுவந்தன. எம்முடைய பழையநாட் குறிப்பு களைத் தேடிப்பார்த்ததில், இம்மும்மணிக்கோவை முடிக்கப்பட்டநாள் சார்வரியாண்டு புரட்டாசி, 13 (1900, செப்டம்பர், 28) என்பது புலனாயிற்று; இதன் 14ஆவது அகவற்பா. 1900, பிப்பிரவரி, 4இல் முடிக்கப்பட்டதென்னுங் குறிப்பு அகப்பட்டமையால், இந்நூல் துவக்கஞ்செய்யப் பட்டகாலம். 1899 இன் இடையில், அதாவது எமது இருபத்துமூன்றாம் ஆண்டின் துவக்கத்தின் கண்ணதாகல் வேண்டுமென்பதூஉம் உய்த்துணரப்படுகின்றது. இனி, இதற்குரையெழுத முயன்ற மாணவர் பலரின் முயற்சியிற் பாலசுந்தரம்பிள்ளை யென்னுந் திரு. இளவழக னாரின் முயற்சியே நிறைவேறலாயிற்று. இவர் பன்னிரண் டாண்டுகட்கு முன் எம்மிடந் தமிழ்நூல் கற்றுவந்தகாலத் திலேயே, இதற்குரையெழுதக் கருதிய தமது குறிக்கோளைத் தெரிவித்து, இதனை முறையாக எம்மிடம் பாடங்கேட்டு வந்தனர். யாஞ் சொல்லிவந்த உரைகளையுங் குறிப்புகளையும் அவ்வப்போது குறித்துக்கொண்டு வந்து பின்னர் அவைகளை யெல்லாம் ஓரொழுங்குபடுத்தெழுதி, எழுதிய கையெழுத்துப் படியினை 1932. மார்ச்சு, 28-ஆம் நாள் எம்மிடஞ் சேர்த்து, அதனை முழுதும் பார்த்துத்திருத்தி அச்சிட்டு வெளியிடும்படி எம்மை வேண்டிக் கொண்டனர். அங்ஙனமே அதனை முழுதுந்திருத்தி அச்சிட்டு முடிப்பதற்கு எட்டாண்டுகட்கு மேற் சென்றன. உரையின்கட் செய்யப் பட்ட திருத்தங்கள் பல: ஆக்கியோன் கருத்துக்கு மாறாய்க் காணப்பட்டவைகளை அம்மாறுகோள் நீக்கி இயைபு படுத்தியதும்; உரையெழுதாமல் விடப்பட்ட சில பகுதிகட்கு உரைவகுத்ததும்; சொற்பொருள் கட்குப் பிற்காலத்து நூல்களி லிருந்து எடுத்துக்காட்டிய மேற்கோள்களை நீக்கி, முற்காலத்துச் செந்தமிழ்ப் பழ நூல்களிலிருந்தே மேற்கோள்கள் காட்டியதும்; மேற்கோள் காட்டப்படாதவற்றுக்கு மேற் கோள்கள் காட்டியதும்; இலக்கணக் குறிப்புகள் பல மாற்றியதும், பல புதியவாய்ச் சேர்த்ததும்; உரைநயங்கள் பல மாற்றியதும் புதியவாய்ச் சேர்த்ததும்; சொற்களையுஞ் சொற்றொடர் களையுஞ் செந்தமிழ்ச்சுவை துளும்ப மாற்றியதும்; இன்னும் இவைபோன்ற நுண்ணிய திருத்தங்கள் பல உரைநெடுகச் செய்ததுமாகும். ஒரு நூலுக்கு எழுதப்படும் உரை அந்நூலாசிரியன் காலத்தே செய்யப்பட்டு அவனாலேயே முழுதுந்திருத்தப் பட்டு அமையு மானால், அத்தகைய உரையே நூலாசிரியன்றன் கருத்தறிந்த உரையாகும். அப்பெருநலம் இம்மும்மணிக் கோவைக்கு வாய்க்குமாறு முருகப்பிரான் றிருவருள் இயைத்தமைகண்டு இது தன்னைப் பயில்வரர் மிக மகிழற் பாலார். எமதிளமைக்காலத்தே இயற்றப்பட்ட இச்செய்யுள் நூல், நாற்பத்தோராண்டுகட்குப்பின் இப்போதுரையுடன் வெளிப்போந்து தமிழுலகுக்குப் பயன்படு மாறருள் புரிந்த முருகப்பிரான் றிருவடிப்போதுகட்கு எமது புல்லிய வணக்கம் உரித்தாகுக! எட்டாண்டுகட்கு மேலாக இந்நூலின் உரையினைத் திருத்துவதிலும், இதனை அச்சிடுவதிலும் எமக்குண்டான உழைப்புச் சிறிதன்று, பொருட்செலவோ ஐயாயிர ரூபாய்க்கு மேலாயிற்று. இப்பெருஞ்செலவில் ஒருபகுதிக்குப் பயன்படுமாறு, யாழ்பாணந் தெல்லிப்பழையில் தமிழ்க்கலைவல்ல நுண்ணறி வினராய்த்திகழ்ந்த வழக்கறிஞரும் எம் நண்பருமான திருவாளர் தம்பையா பிள்ளையவர்களின் இளையபுதல்வியாரான திருமகள் சிவநாயகியம்மையாரும் அவர்தங்கணவரும் எம்பால் மெய்ப்பொருள் கேட்டஞான்று எமக்கு ஐந்நூறுரூபா காணிக்கை செலுத்தினர். அவர்கள் எல்லாநலங்களுடனும் நீடினிது வாழ்கவென்று அம்பலவாணரம்மை திருவடிகளை வேண்டுதும். பல்லாவரம், பொது நிலைக்கழக நிலையம், திருவள்ளுவர் ஆண்டு, 1972, மார்கழி, 18 (1942, ஜனவரி, 1) மறைமலையடிகள் மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் முகவுரை வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென் ஊன்கலந்து வுயிர்கலந்து வுவட்டாமல் இனிப்பதுவே. வருமொழிசெய் மாணிக்க வாசகநின் வாசகத்தில் ஒருமொழியே என்னையுமென் உடையனையும் ஒன்றுவித்துத் தருமொழியா மென்னில்இனிச் சாதகமேன் சஞ்சலமேன், குருமொழியை விரும்பியயல் கூடுவதேன் கூறுதியே. (இராமலிங்க அடிகள்) மாணிக்கவாசகப் பெருமான் அருளிச் செய்த திருவாசகத்தென்றமிழ் மாமறையின் அளப்பரு மாட்சி யினை அளந்து கூறிய இராமலிங்க அடிகளின் மேலைத் திருச் செய்யுட்களால், திருவாசகத்தை உள்ளுணர்ந்து ஓதுவா ரெவராயிருப்பினும், அவர் வேறெங்குங் காணாத ஒரு பேரின்பம் எய்தித் தம் உடம்பும் உயிருமெல்லாம் அதன் வயமாய் நிற்கப் பெறுவரென்பதூஉம், மக்களாற் காணவுங் கருதவும் இயலாத இறைவனை அவர் எளிதிலே தமதகத்துக் கண்டு அவனோடு ஒருமைப்பட்டு நின்று பேரின்ப வாழ்விற் பிரிவின்றி வாழ்வரென்பதூஉம் நன்கு தெருட்டப்பட்டமை காண்க. இங்ஙனமாகத், தன்னை ஓதுவா ருள்ளத்தையும் உணர்வையும் உயிரையுமெல்லாம் பேரின்ப வுருவாக்குந் திறம் ஏனை எந்த நுல்களுக்கும் வாயாமல் திருவாசகத்திற்கு மட்டும் வாய்த்ததென்னையெனின்; இவ் வுலக வாழ்க்கை யில் வரும் இன்ப நுகர்ச்சிகளில் எங்கும் புலனாகாத ஒரு பேரின்பம் இதனை யோதுவா ரெல்லாரிடத்தும் பிறழாது நிகழக் காண்கின்றேமாகலானும், அத்துணை விழுமிய அவ்வின்பம் ஒன்றையும் பற்றாது தனித்து நிற்பதின்றி உலகு உயிர் களிலெல்லாம் நிறைந்து நிற்கும் ஒரு முழுமுதற் பெரும் பொருளான கடவுளைப் பற்றிக் கொண்டே நிற்பதொன்றா கலனும், அத் தன்மையரான கடவுளைத் தலைக்கூடினார்க் கன்றி அது வாயாதாகலானும், இறைவனை இறுகப் பற்றிக் கொண்ட மாணிக்க வாசகப் பெருமான்றன் மன மொழி மெய்கள் எல்லாவற்றையும் அப் பேரின்ப வெள்ளமானது தேக்கி அவரது திருவாயின் வழியே திருவாசகமாய்ப் பெருக் கெடுத்துப் போந்ததாகலானும் அந் நூலுக்கு அத் திறம் உளதாயிற்றென்று அறிதல் வேண்டும். கற்கண்டின் பாகும் முப்பழச் சாறும் நறுநெய்யும் ஒருங்கு கலந்த அடிசில் தீஞ்சுவைத் தெள்ளமிழ்தமாய்த் திகழ்தல் காண்டுமன்றே; அதுபோற் சிவத்தின் எல்லையற்ற பேரின்பத்தில் முழுதுந் தோய்ந்த வாதவூராரின் மன மொழி மெய்களும் பேரின்ப வுருவாய்த் துலங்கலாயின இளவள ஞாயிற்றொடு கூடிநிற்கும் மாசற்ற நீலவான் பரப்பெல்லாம் அதன் பேரொளியால் ஊடுருவப் பெற்று மிளிர்தல் காண்டுமன்றே: அதுபோற் சிவத்தின் எல்லையற்ற அறிவாற் கவரப்பெற்ற அடிகளின் தூய அறிவும் அளப்பிலாச் சிறப்பினதாய்ச் சுடர்வதாயிற்று. சுடர்ந்தெரி தீயின் சேர்க்கையால் தூய ஆன்இழுது நீராளமா யுருகி யொழுகுதல் காண்டுமன்றே; அதுபோற் சிவத்தின் வரம்பிலடங்கா அருளாலும் அன்பாலும் நிறையப் பெற்ற அடிகளின் திருவுள்ளமும் அன்பாலும் அருளாலும் பொங்கித் ததும்பித் திருவாசகம் பொழிவதாயிற்று என்க. உலகில் வேறெங்குங் காணப்படாத ஒரு தனித் தெய்வ மாட்சி மாணிக்கவாசகப் பெருமான் ஒருவதிடத்தே மட்டுங் காணப்படலான இந் நுட்பத்தை ஆழ்ந்து ஆராயுங்கால், அஃது எல்லாம் வல்ல கடவுளே வலியவந்து அவரை ஆட்கொண்ட பேரருட்டிறத்தின் பெருவிளைவாதல் புலனாகா நிற்கும். கடவுள் ஒருவர் உண்டு என அதன் இருப்பை மட்டும் உணர்வார்க்குப் பொதுவகையால் ஒரு மெய்யறிவு விளங்குமே யல்லாமல், அதனின் மேற்பட்ட ஓர் இன்ப வுணர்வு தோன்றாது. கடவுளின் பேரறிவு விளக்கத்தினை அவனாற் படைக்கப் பட்ட புற்பூண்டுகள் முதல் மக்களுடம்பு ஈறாக வுள்ளவற்றிற் கண்டு கண்டு வியப்பார்க்கு அவ்வறிவுக் காட்சியில் ஒருவகை மகிழ்ச்சியுங் களிப்புந் தோன்றுமே யல்லாமல் அதனின் மேற்பட்ட மாறா இன்ப நிலை தோன்றாது. தமது சிறுமையுங் கடவுளின் பெருமையும் அறிந்து தமக்கு வேண்டுவன வெல்லாந் தந் தலைவன் பாற் கேட்க அறியாத என்பில்லாப் புழுமுதல் எல்லா உயிர்கட்குந் தானாகவே உளங்கனிந்து பலவேறு வியத்தகு யாக்கை களையும் அவற்றின் நுகர்ச்சிக்குப் பல்வேறு வியத்தகு பண்டங்களையும் அமைத்துவத்த முதல்வனின் அருட் பெருந்தகைமையினை ஆராய்ந்து நினையுந்தொறும் நினையுந் தொறும் அங்ஙனம் நினைவார்க்கு முன்னில்லாத ஓர் உள்ளக் கசிவும் ஓர் உள்ளக் களிப்புந் தோன்றுமேயல்லாமல், அதனின் மேற்பட்டு என்பெலாம் புரைபுரையுருக்கும் பேரின்ப நிலை தோன்றாது. இவ்வாறு நம்மனோர் தமது சிற்றறிவு முயற்சி கொண்டு எத்துணை தான் கடவுள் நிலையினை உணர்வாராயினும், அவர் அங்ஙனம் உணரும் உணர்ச்சிதான் இறைவனை அண்முதற்கு ஒரு வழியினைத் தோற்றுவிக்குமே யல்லாமல், அவன்றன் உண்மை நிலையினை வருவித்துக் காட்டமாட்டாது. மற்றுத் தமது சிற்றறிவுமுயற்சி அவிந்து சிவத்தையே களைகணாய்ப் பற்றி ஏசற்றிருப்பார்க்கே, சிவம் தானே முனைந்து தோன்றித் தன் முழுமுதல் இன்ப விளக்கத்தை அவரது உள்ளத்தில் ஏற்றிவைத்துத், தன் உண்மைநிலை முற்றும் அவர்க்கு நன்கினிது புலனாமாறு செய்யும். இவ்வாறு, சிவம் தானேவந்து அருள்செய்யப் பெற்றார் தம்முள் மாணிக்கவாசகப் பெருமானோ தாம் பெற்ற அப்பெறலரும் பேற்றைத் தம்மைச் சார்ந்த எம்போல்வா ரெல்லாம் எளிதிற் பெற் றின்புற்றிருக்குமாறு தாம் திருவாய் மலர்ந்த திருவாசகச் செந்தமிழ் மாமறைவழியே வழங்கிய வள்ளன்மை யுடைய ராகலின், அவர் எம்மனோர்க்குத் தலைக்கணியாய் நிற்குந் தனிமுதன்மை யுடையரென்பது நினைவிற் பதிக்கற்பாற்று. மாணிக்கவாசகரைப் போல் இறைவனைக் கண்டு அவனருளை முற்றப் பெற்றார் பலர் அவர்க்கு முன் இருந்தது உண்மையா யிருக்கலாமேனும், அவரெல்லாந் தாங் கண்ட அருட்பெருங்காட்சிகளையும், அவற்றால் தாம் பெற்ற பேரின்ப நிலைகளையும், இறைவன் தமக்குச் செய்த அருட்பேருதவிகளையும், தாம் இறைவற்கு ஆளாய் நின்று உருகின வகைகளையும் இவர்போற் செந்தமிழ்ப் பாக்களில் நிறைத்து யாமெல்லாம் பருகிக் களிக்க வழங்கியவரல்லர். மாணிக்க வாசகராற் கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு இன்மை கண்டபின் என்று உயர்த்துப் பாடப்பெற்ற கண்ணப்ப நாயனார்தம் ஒப்பற்ற அன்பின் நிலையினையும் பிறர் வாயிலாக அறியப்பெறுகின்றன மேயன்றி, அவர் உற்ற அவ்வன்பின் நிகழ்ச்சிகளை அவர் வாயிலாகவே அறியப் பெறுகின்றனம் இல்லையே! மற்று, மாணிக்கவாசகப் பெருமானோ தாம் இறைவனைக் கண்டடைந்த இன்ப நிகழ்ச்சிகளையெல்லாம் நெஞ்சம் நெக்கு நெக்குருகக் கண்ணீர் ஆறாய்ப் பெருகக் குழைந்து குழைந்தலறித் தம் அருந்தமிழ்ச் செய்யுட்களில் மிழற்று கின்றார். இவரது இந் நிலையினை எளிதிலுணர விழைவார்க்கு, ஓய்வலாதன உவமனில் இறந்தன ஒண்மலர்த் தாள் தந்து, நாயிலாகிய குலத்தினுங் கடைப்படும் என்னைநன் னெறி காட்டித், தாயிலாகிய இன்னருள் புரிந்தஎன் தலைவனை நனி காணேன் தீயில் வீழ்கிலன் திண்வரை யுருள்கிலேன் செழுங்கடல் புகுவேனே. என்று அவருளிச்செய்த ஒரு திருவாசகச் செய்யுளே போதும், ஏனை எல்லா மக்கட்கும் புலனாகாத அருவ நிலையில் நிற்கும் இறைவன் தம்பொருட்டுக் கட்புலனாம் மேதகும் அருளுருவிற் றோன்றித் தமக்கு அருள்செய்து உடனே மறைந்து சென்றமையால், அவ்வருளுருவினை எந்நேரமுங் காணப் பெறாத ஆற்றாமையினை நனிகாணேன் என்னும் அருமைத் திருமொழிகளாற் புலப்படுத்தி அழுது அலறும் இச்செய்யுள், அவர் இறைவனைக்கண் டெய்திய பேரன்பின் பெருக்கினை எத்துணை வெளியாகக் காட்டிக், கல்லினும் வல்லென்ற நெஞ்சினையும் எத்துணையெளிதிற் கரைக்குந் தகையதாய் மிளிர்கின்றது! தம்மாற் காணப்படாத ஒருவரின் குணநலங்களைக் கேட்டு அவர்பால் அன்புமீதூரப் பெற்ற மற்றொருவர் அவர் மாட்டு எத்துணைதான் அன்பு பூண்டு ஒழுகுவாராயினும், அவர்க்குள்ள அவ்வுள்ள நெகிழ்ச்சி அந் நண்பரை அவர் நேரே காணப்பெறுங்கால் அடையும் பேரின்பப் பெருக்கிற்கு ஒரு சிறிதும் ஒவ்வாது; அவரைக் காணாமுன் வைத்த அன்பு அவரைக் கண்டபின் கரைகடந்து பெருக, அதனை ஆற்றாராய் அம்மற்றவர் கண்ணீர் உகுந்துக் கதறியழுது ஆடிப்பாடித் தன்னை மறந்த தன்மையினராய்க் குழைந்து நீராயுருகும் நிலையினை நேரிற் கண்டுணர்ந்தவர்க்கே யாங் கூறும் இவ் வுண்மை தெற்றென விளங்கா நிற்கும். இங்ஙனமே, முழுமுதற் கடவுளின் அருட்பெருந் தன்மைகளை நேரே காணப்பெறாமல் உய்த்துணர்ந்தறிந்து அவ்வாற்றால் அவர்பால் அன்பு நிகழப் பெற்றார்க்குள்ள அன்பின் நிலை, அக்கடவுளைத் தம் கண்ணெதிரே கண்டு அவர் மாட்டுக் கரையிகந்து பெருகும் அன்புடையராயினார்க்கு மீதூரும் பேரின்ப நிலைக்கு ஒரு தினைத்தனையும் ஈடாகாது. மாணிக்கவாசகர் தாங் கண்ட இறைவன் திருவுருவினையும், அவ் வுருவின் நிறத்தினையும், அவ் வுருவின் அடையாளங்களையும் தாம் அருளிச் செய்த திருவாசகத்திற் பலகாலும் பலவிடத்தும் அடுத்தடுத்து ஓதுகின்றார்; அவற்றுட் சில இங்கே காட்டுதும்:- எந்தாய் உன்றன் வண்ணந்தான் அதுகாட்டு வடிவுகாட்டி மலர்க்கழல்கள் அவைகாட்டி வழியற் றேனைத் திண்ணந்தான் பிறவாமற் காத்தாட்கொண்டாய் எம்பெருமான் என்சொல்லிச் சிந்திக்கேனே. அரத்த மேனியாய் அருள்செய் அன்பரும் நீயும் அங்கெழுந்தருளி இங்கெனை இருத்தினாய் முறையோ வென் எம்பிரான் என்று திருச்சதகத்தும், கனவேயுந் தேவர்கள் காண்பரிய கனைகழலோன் புனவேயன வளைத் தோளியொடும் புகுந்தருளி நனவே எனைப்பிடித் தாட்கொண்டவா நயந்து நெஞ்சஞ் சினவேற்கண் நீர்மல்கத் தெள்ளேணங் கொட்டாமோ என்று திருத்தெள்ளேணத்தும், நான் தனக்கு அன்பின்மை நானும்தானும் அறிவோம் தான் என்னை யாட்கொண்டது எல்லாருந் தாமறிவார். கருவாய் உலகினுக்கு அப்புறமாய் இப்புறத்தே மிருவார் மலர்க்குழல் மாதினொடும் வந்தருளி அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட திருவான தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. நானும் என்சிந்தையும் நாயகனுக்கு எவ்விடத்தோம் தானுந் தன்தையலுந் தாழ்சடையோன் ஆண்டிலனேல் என்று திருக்கோத்தும்பியினும் போந்த அருமைத் திருமொழிகள் என்றும் நினைவிற் பதிக்கற்பாலனவாகும். இங்ஙனமாக, எவரானுங் காணப்படாத அரும்பெரும் பேரின்பக் கடலினை நேரேகண்டு அதன்கட் டிளைத்துப் பேரின்ப வுருவான அடிகள் அருளிச்செய்த திருவாசகம் அவர் நுகர்ந்த அப்பேரின்பத் தேறலைத் தன்னிற் பொதிந்து வைத்திருத்தலின், அதனைப் பருகுவா ரெல்லாம் அப்பேரின்ப நிலையினை எளிதில் எய்துவரென்பது சொல்லவும் வேண்டுமோ? இத்துணை விழுமிதான திருவாசகத்தை ஓதியும் உருகாத ஓருயிர் இருக்குமாயின், அதனைக் கல்லென்று கழறுதுமோ, அன்றி மண்ணென்று வகுக்குதுமோ, இரும்பென்று இயம்புதுமோ, சொன்மின்கள்! மேலுங் கடவுளை நேரே காணாதவர்கள், காணாமையின், அதன் பேரின்பத்தை நுகர்ந்தறியாதவர்கள், பிறதுறையில் எவ்வளவுதான் சிறந்தவர்களாயினும், அவர்கள் பால் யாம் அப்பேரின்பச் செல்வத்தைப் பெறுதல்கூடுமோ? கூடாது. பெரும்பொற்றிரள் புதைந்ததோர் இடம் இக் கானகத்தின்கண் உளதென்று மட்டும் ஒருவாற் றானறிந்து, அதன்கண் அஃதுள்ள இடம் இதுதான் என்று குறித்துணரமாட்டாது அல்லும் பகலும் அப் பொருளுக்காக ஏக்கற்று நின்ற வருந்தும் ஒரு வறிஞன் மற்றையொரு வறிஞனுக்கு அதனை எடுத்துத்தர மாட்டுவனோ? இங்ஙனமே கடவுளைக் காணப்பெறாத ஆசிரியர்களைப் பின்பற்றிச் செல்வாரெல்லாருந் தாம் கருதிய பயனைப் பெறாமல் ஏமாந்து, மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கினவரோடு ஒப்பத் தம் அரும்பெறற் பிறவிப்பயனையும் இழப்பர். ஒருவன் உலகம் எல்லாம் பெற்றாலுந் தன் உயிரை இழந்து விடுவனாயின் யாது பயன்? என்று மேனாட்டு ஆசிரியரொருவர் வினாவியாங்குக், கடவுள் அல்லாத மற்றைப் பொருள்களின் உண்மையெல்லாம் ஒருவன் ஓராசிரியர்பால் உசாவித் தெளிந்தானாயினுந், தன் னுயிர்க்குயிராய் நின்று பிறவிகடோறுந் தனக்குப் பெருந்துணையாயிருந்து உதவுங் கடவுளின் உண்மைநிலையைத் தெளிந்திலனாயின், யாது பயன்? பொறுத்தற்கரிய விடாய்கொண்டு தீம்புனல்வேட்டு வருவான் ஒருவனுக்கு, அவன் வேண்டிய அந் நீரினைக் காட்டாமல், நீரின் நலங்களை மட்டும் விரித்து உரைத்துக் கொண்டிருப்பான் ஒருபேதை எதிர்ப்படின், அவன் இவன் சொல்லை ஒரு பொருட்டாகக் கருதிக் கேட்டு நிற்பனோ? நில்லானன்றே; தான் வேண்டிய குளிர்ந்த நீர்நிலையைக் காட்டும் ஏனையொருவனை நாடியேயன்றோ செல்வன். அதுவோல், நம்மைப் படைத்த நம் அப்பனைக் காணும் விழைவு மிக்கு அதனை ஆற்றாதே நிற்கும் நாமும், அவனைத் தாம் கண்டு நமக்குங் காட்டவல்ல உண்மை யாசிரியரைச் சார்ந்தன்றோ அப் பெறலரும் பேற்றைப் பெறுதல் வேண்டும். அத்தகைய உண்மையாசிரியன்மார் மாணிக்கவாசகரும் அவர்க்குப்பின் திருஞான சம்பந்தர் அப்பர் சுந்தரருமேயாதலை அவர்கள் அருளிச்செய்த திரு வாசகந் தேவாரம் என்னும் அருட்செம் பாடல்களால் நன்கறியப் பெறுகின்றோம். கடவுளைக் கண்டவரின் நிலைகளும், அவர் கண்ட காட்சிகளும் அவர்தாமே எடுத்துரைக்க வல்லுநரன்றி, எனையோர் வல்லுநர் ஆகார். புதிது விரிந்த ஒரு கொழுந் தாமரை மலரின் நறுமணமும் பெருநலனும் அது தானே நமக்கு விளங்கக் காட்டி நம்மை இன்புறுத்துமல்லால், அவற்றை வாயாற் சொல்வாரொருவர் அங்ஙனம் அவற்றைக் காட்டி நம்மை இன்புறுத்த மாட்டுவரோ? மேலும் ஓராசிரியரின் நிலைகளை எடுத்துரைக்கப் புகும் மற்றொருவர் அவர்பால் மிகுந்த பற்றுடையராயின், அவரை அளவிறப்பப் புகழ்தலோடமையாது; அவர் காணாதவைகளைக் கண்டனவாகவுஞ் செய்யாதவைகளைச் செய்தனவாகவுஞ் சொல்லி உண்மைக்கு மாறான பொய்களைப் புனைந்து கட்டிவிடுவர். அங்ஙனமே ஓராசிரியற்பாற் பகைமை கொண்டா ரொருவருந்தம் பகைமையை வெளிக்காட்டாது அகத்தடக்கி அவர்தம் நிலைகளைக் கூறப் புகுவராயின், இவர் அவரைக் குறிப்பாலிகழ்தலோடமையாது, அவரிடத்தில்லாத குற்றங் குறைகளையெல்லாம் ஏற்றிப் பொய்யான பலவற்றையும் புனைந்து கட்டிவிடுவர். இவ்வாறாக, ஆசிரியரின் நிலைகளைக் கூறப் புகும் ஏனையோர் இருதித்தினராய் அவர்தம் உண்மை நிலைகளைப் புரட்டிவிடும் பெற்றியினராகவே பெரும்பாலுங் காணப்படுதலால், அவருரைகள் ஏற்கற்பாலன அல்ல. கடவுளைக் காண்டற்குரிய பேறு வாயாதவர்களை யெல்லாம் அது வாய்த்தவர்களாகக் கட்டிவிட்டுப் பிறர் சொல்லிய கதைகட்கோர் அளவேயில்லை. ஆதலால், அத் தன்மையவாம் பொய்க்கதைகளுட் சேர்ந்தன வாகாமற், சைவசமய ஆசிரியன்மார் கடவுளை நேரே கண்டு தாம் எய்திய பேரின்ப நிலைகளும், தாம் பெற்ற அப் பேரின்ப நிலைகளை இவ் வையகமெல்லாம் பெறல் வேண்டுமெனக் கருதி அவர் செய்த செயற்கருஞ் செயல்களும் அவரருளிச் செய்த திருவாசக தேவாரச் செந்தமிழ் மாமறைகளிலிருந்தே நன்கு புலனாகிக் கமழ்தலால், அவர்தம் வரலாறுகளை ஆய்ந்துணரும் உணர்ச்சியொன்றே பிறவிக்கடலிற் கிடந்துழலும் நம்மனோரைப் பேரின்பக் கரையில் ஏற்றவல்லதா மென்பதை யாவருங் கடைப்பிடித்தல் வேண்டும். இனிச், சைவசமயாசிரியன்மார் நால்வருள்ளுந் திருஞானசம்பந்தப் பெருமான் மூன்றாண்டுச் சிறுகுழந்தை யாயிருந்தபோதே அம்மையப்பராம் இறைவன்றன் அருளுரு வினை நேரே கண்டு, அருட்பால் ஊட்டப் பெற்றுப், பதினாறாயிரஞ் செந்தமிழ்த் தெய்வப்பாடல்களைப் பொழிந்து, கடவுள் இல்லையென்று பாழ்ங்கொள்கை பேசிய சமணராற் கடவுளை நம்பினார்க்கு இழைக்கப்பட்ட கொடுந் தீங்குகளை யெல்லாம் வியத்தகு கடவுளருள் நிகழ்ச்சிகளாற் சுவடறத் தொலைத்து, எல்லாம் வல்ல இறைவனருட் பேற்றிற்கு எல்லாரும் உரியராம்படி அவ் வருள் ஒளியை இத் தமிழ் நாடு யாங்கணுந் திகழச் செய்த அளப்பருந் தெய்வமாட்சியில் ஒப்பாரும் மிக்காரும் இலராயினும், அவர் திருவாய் மலர்ந்தருளிய தெய்வப் பாக்கள், மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவாசகத்தைப் போல் ஓதுவார் நெஞ்சத்தை உருக்குந் தகையஅல்ல. அஃது ஏனென்ற்ல திருஞான சம்பந்தர், இந் நிலவுலகின்கண் மக்கள் வாழ்க்கையில் அடுத்தடுத்துவருங் கவலை நோய் காமம் வெகுளி பொய் புரட்டுக் கொலை களவு துயர் முதலான பல்வேறு அல்லற் படுகுழிகளைக் கண்டு, அவற்றின் கட் கிடந்து துன்புறும் மக்கட் பகுப்பினர் தம் நிலைகளையெல்லாம் உணர்ந்தவர் அல்லர். இவ் வுலகவாழ்க்கையின் இடர்களை உணர்வதில்லாச் சிறு குழவிப்பருவத்திலேயே, அம்மையப்பர் அருளுருவினை நேரே கண்டு அதன்கட் டமது உணர்வு முற்றும் பதியப் பெற்றவர். உலக இயற்கைத் தோற்றங்களிலுள்ள அழகுகளும், இறைவன்றன் அருள்மாட்சிகளுமே இவர்தம் பாடல்களிற் பெரும் பாலுங் காணப்படுதற்கு இதுவே ஏதுவாகும். இவர் குழவிப்பருவங்கடந்து இளமைப்பருவத்தை எய்தியகாலத்தே. உலக வாழ்க்கையிலுள்ள துன்பங்கள் சில இவரது உணர்வுக்குப் புலனாகத் துவங்கினவென்பது, அப்போது அவரருளிச்செய்த சில திருப்பதிகங்களால் உய்த்துணரக் கிடப்பினுந், துன்பம் நிறைந்த இவ் வுலக வாழ்விற் பெரிதும் வெறுப்புற்று, அவர் தமது திருமணம் நிகழ்ந்த அஞ்ஞான்றே இறைவன் றிருவருளிற் கலந்திட்டா ராகலின், மக்களின் துன்ப நிலைகளையும், அவற்றினின்று திருவருளுதவியால் மீண்டு இறைவனருளைத் தலைக்கூடும் வகைகளையும் மாணிக்கவாசகரைப் போல் அத்துணை உருக்கமாக எடுத்து விரித்துப் பாடுதற்கு அவர் இடம்பெற்றிலர் மற்று, மாணிக்கவாசகரோ அவரைப்போல் தமது குழவிப் பருவத்திலேயே இறைவனைக் கண்டு, சிறிதுகாலத்தில் அவனருளிற் கலந்தவரல்லர் ஏனை மக்களுட் சிறந்த குடிப்பிறந்த மகாரைப்போல், அஞ்ஞான் றுள்ள கலைகளையெல்லாம் பல்லாண்டுகள் முயன்று கற்று அறிவு நிரம்பித், தாய்தந்தையர் சுற்றத்தவரால் மணஞ் செய்விக்கப்பெற்று, அவரிடையே செல்வவாழ்க்கையில் வாழ்ந்து, பின் பாண்டிய அரசற்கு அமைச்சராய் அமர்ந்து, உலகியலுள் விரசிக் காணப்படும் நலந் தீங்குகளையெல்லாம் மாறிமாறி நுகர்ந்து, பின்னர்ச் சடுதியிலே திருப்பெருந்துறையில் இறைவனைக் கண்ணாரக் காணப்பெற்று அவன் றிருவடிக்கு ஆளானவர்; இவ்வாறவர் உலகவாழ்வி னூடுசென்று சிவபிரான்றிருவருளைப் பெற்ற குறிப்பு, மாடுஞ் சுற்றமும் மற்றுள போகமும் மங்கையர் தம்மோடுங் கூடி அங்குள குணங்களால் ஏறுண்டு குலாவியே திரிவேனை வீடு தந்துஎன்றன் வெந்தொழில் வீட்டிட மென்மலர்க் கழல் காட்டி, ஆடுவித்துஎனது அகம்புகுந்து ஆண்டதோர் அற்புதம் அறியேனே என்று அவர் தாமே அருளிச்செய்த திருப்பாட்டால் நன்கு விளங்கா நிற்கின்றது. இத்தகையதொரு செய்யுளைத் திருஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகங்களிற் காண்டல் அரிதினும் அரிது; மற்றுத், திருவாசகத்திலோ இன்னோரன்ன கருத்துக்கள் உள்ளடங்கிய செய்யுட்கள் பற்பல. இங்ஙனம் மக்கள் வாழ்க்கையில் எங்குங் காணப்படுங் குற்றங் குறைகளை ஒருவர் நினைந்து, அத்துணைத் தீங்குகளையும் பொறுத்து எத்துணையுந் தூயனாகிய இறைவன் எத்துணையும் எளிய தம்மை ஒரு பொருட்டாக்கி ஆளும் அருட்டிறத்தையும் நினைந்து, அவை இரண்டனையும் ஒப்பிட்டு நோக்கி நெஞ்சம் நெக்கு நெக்குருகி அலறிப் பாடுவராயின் அவர் பாடும் அச் செய்யுட்களே, நமது சிறுமையினையும் எல்லாம் வல்ல ஐயன்றன் அருட்பெரும் பெருமையினையும் மறுதலைப் படுத்துக் காட்டி நமதுள்ளத்தை உருக்கி நம்மை இறைவன் றிருவடிக்கு ஆளாக்குவனவாகும். இவ்வாறு மக்கட்பிறவியின் இழிபினை இறைவன் முன்னிலையில் எடுத்தெடுத்து விளம்பி, அம் மக்களுள்ளத்தைக் கரைத்துத் தூய்மை செய்தற்கண் மாணிக்கவாசகர் திருவாசகத்துக்கு ஈடாவதொரு நூல் எம்மொழியினுமே இல்லை இதற்கு, நடித்து மண்ணிடைப் பொய்யினைப் பலசெய்து நான்எனது எனும்மாயக் கடித்த வாயிலே நின்றுமுன் வினைமிகக் கழறியே திரிவேனைப் பிடித்து முன்நின்றுஅப் பெருமறை தேடிய அரும்பொருள் அடியேனை அடித்துஅடித்துஅக் காரம்முன் தீற்றிய அற்புதம் அறியேனே என்னும் ஆரமிர்தன்ன அடிகளின் திருபபாட்டே பின்னும் ஒரு சான்றாம். மேலும், அடிகள் இறைவனை முன்னிலைப்படுத்து அழுதுரைக்கும் பாக்களைப் போல்வன, ஏனை ஆசிரியன்மார் தேவாரத்திருப்பதிகங்களில் மிகுதியாயில்லை. அவர் அருளிச்செய்த திருப்பதிகங்களெல்லாம் பெரும்பாலுஞ் சிவபிரானைப் படர்க்கை யிடத்துவைத்தே பரவுகின்றன. தன் தலைவன் முன்நின்று அவனை முன்னிலைப்படுத்து ஓர் அடியவன் தனக்குள்ள குற்றங் குறைகளை எடுத்து மொழிந்து அவனது அருளை வேண்டுங்கால், அவன் நெஞ்சம் நெகிழ்ந்துருகுமாறுபோல், தன் தலைவனைக் காணாவிடத்தே யிருந்து அவன் எத்துணைதான் தன் சிறுமையினையுந் தன் றலைவன்றன் அருட்பெருமையினையும் நினைந்து பார்ப்பினும் உரைப்பினும் அவன் நெஞ்சம் அத்துணை மிகுதியாய் உருகாது. இவ் வியற்கை மன நிகழ்ச்சிக்கு இசையவே, இறைவனை முன் னிலைப்படுத்துப் பாடிய அடிகளின் திருவாசகமுங் கன்னெஞ்சினையும் உருக்குந்திறம் பெறலாயிற்றென்றும். அவனைப் பாடர்க்கையிடத்து வைத்துப் பாடிய ஏனை யாசிரியன்மார் மூவரின் திருப்பதிகங்கள் அத்துணை யுருக்கம் பெரும்பாலும் வாயா வாயினவென்றும் அறிந்துகொள்ளல் வேண்டும். அதுவல்லாமலும், இறைவனைக் கண்ணாரக் கண்டு அவனுக்கு ஆளான காலந்தொட்டு, மாணிக்கவாசகர் தமக்கு எளியனாய் வந்த அவ்வாண்டவனுருவினைத் தமது அகக்கண் எதிரே ஓவாது கண்டு உருகுதற்கு உரியவரானார். திருப்பெருந்துறையிற் குருந்தமரநீழலில் அடியவர் குழாத்தொடும் போந்தமர்ந்து தம்மை ஆடகொண்ட குருவடிவினையும் அதன்பிற் குதிரைகள் கொணர்ந்த வாணிகச்சாத்திற்குத் தலைவனாய் ஓரழகிய பரிமீது இவர்ந்து பாண்டியன்முன் போந்து தம்பொருட்டு அக்குதிரையின் பல்வேறு நடைகளையும் அவ்வரசன்முன் நடாத்திக்காட்டிய சேவகன் வடிவினையும், அதன்பின் மதுரைப் பிட்டு வாணிச்சி பொருட்டு மண்சுமக்குங் கொற்றாளாய்ப் போந்து பாண்டிவேந்தன் கையாற் பிரம்படியுங்கொண்டு மறைந்த ஐயனருமைத் திருவுருவினையும் மாணிக்கவாசகர் நேரே கண்டவராதலின், பொல்லாத புல்லறிவிற் கடைப்பட்ட மக்களுக்காகத், தேவர்க்கும் அரியனான சிவபிரான் அத்துணை எளியனாய் வந்து செய்த பேரருட்டிறத்தை நினைந்து நினைந்து ஆற்றா நிலையினராகி அவ் வாண்டிவன்பால் வைத்த பேரன் பால் ஆவியோடு ஆக்கை புரைபுரை கனியப் பெற்றார். பலகாற் பல்லாருங் காணவந்து இறைவன் மாணிக்கவாசகர்க்கு அருள்செய்தவாறு போல் வேறெவர்குஞ் செய் திலன். இஃது அடிகளே, கல்லாத புல்லறிவிற் கடைப்பட்ட நாயேனை வல்லாள னாய்வந்து வனப்பெய்தி யிருக்கும்வண்ணம் பல்லோருங் காணஎன்றன் பசுபாசம் அறுத்தானை எல்லோரும் இறைஞ்சுதில்லை யம்பலத்தே கண்டேனே என்று அருளிச்செய்தவாற்றால் தெற்றென விளங்கா நிற்கின்றது. திருஞான சம்பந்தப்பெருமானுக்குப் புலனாய்த் தோன்றிய இறைவனுருவம் வேறெவர்க்கும் புலனாயிற்றில்லை. அப்பர்க்குத் தோன்றியதும் அப்பெற்றியதே, சுந்தரர்க்குப் பார்ப்பன முதியோனாய்த் திருமணப் பந்தலிற் றோன்றிய வடிவம் பல்லரருங் காண வந்ததொன்றே யாயினும், அது திருவெண்ணெய் நல்லூர்க்கு அவரை ஈர்த்துச் சென்று மறைந்தக்கால், அதனைக் கண்டு தெய்வமெனத் தெளிந்தவர் சுந்தரரைத் தவிர மற்றையோர் அல்லர். மற்று, மாணிக்கவாசகர் பொருட்டுக் குருவடிவிற் போந்து மறைந்த முதல்வனையோ எல்லாருங் கண்டனர்; கொற்றாளாய் வந்து பாண்டியன் கைப்பிரம்பால் அடியுண்டு மறைந்த கோலத்தினையும் அங்ஙனமே ஆண்டிருந்தாரெல்லாருங் கண்டு மெய்ம்மறந்த நிலையினரானார். அதனால், எல்லாம்வல்ல சிவபிரான் மாணிக்கவாசகர் பொருட்டு எல்லார்க்கும் எதிரே எளியனாய்த் தோன்றி மறைந்தாற்போல், வேறொவர் பொருட்டும் எங்கேனுஞ் செய்ததுண்டோ வெனின், அதற்குச் சான்றின்மையின், அவ்வாறு செய்ததில்லையென்பதே தேற்றமாமென்று முடிக்க. இவ்வாறு, எல்லாம்வல்ல முழுமுதற்கடவுளை நேரே கண்டு அவற்கு அடிமையாகி அவன்மேற் குழைந்து குழைந்து அழுதழுது பாடிய மாணிக்கவாசகரின் திருவாசகத்தை ஓதியுருகாதார் நெஞ்சம் வேறெதனாலும் உருகா தென்பதுபற்றி யன்றோ, திருவாசகத்தின் உருகார் மற்றொருவாசகத்தும் உருகார்என்னும் பழமொழியும் யாண்டும் வழங்கிவருகின்றது. நெஞ்சக்கசிவு, நெஞ்சக்குழைவு இல்லாதவர்கட்கு அருளும் அன்பும் இரக்கமும் உண்டாகா; அவையில்லாதவர்கள் தம்மோடொத்த மக்களிடத்தும் ஏனைச் சிற்றுயிர்களிடத்தும் அருளும் அன்பும் இரக்கமும் உடையராகார்; இச்சிரந்த மென்குணங்கள் இல்லாதவர்கள் இம்மையிலும் இனிய வாழ்க்கையினை எய்தாராய் பெரிதுந் துன்புற்று மடிவதோடு, மறுமையிலும் இறைவனருளைப் பெறாராய் இழிந்த பிறவிகளிற் சென்று புகுந்து துன்புறாநிற்பர். தமக்கு இப்பிறவியைத் தந்த தலைவன்பால் நன்றிமிக்கு, அவனை உருகி வழுத்தாதவர்க்கு இம்மை மறுமையிரண்டிலும்இன்பமில்லையாதலாலும், தமக்குப் பேருதவி செய்த தலைவனை வணங்கி வழுத்துதல்விட்டுத் தம் தலைவனல்லாத மக்களையும் ஏனைச் சிற்றயிர்களையுந் தம் தலைவனாகப் பிழைபடக்கொண்டு வழிபடுவார்க்கும் அங்ஙனமே இம்மை மறுமைப் பயன்கள் வாயாவாதலாலும், தந்தலைவன் இன்னவன்றான் என்றுணராருந் தமக்குத் தலைவனேயில்லையென்று மறுப்பாருமான போலியாசிரியர் களைப் பின்பற்றி நிற்பார்க்கும் அங்ஙனமே இம்மை மறுமைப் பேறுகள் வாயாவாதல் திண்ணமாமாதலாலும், உலகுயிர்கட்கெல்லாம் ஒரே தலைவனாய்த் தாயுமிலி தந்தையிலியாத் தனிநிற்குஞ் சிவ பிரானை நேரேகண்டு அவன்பால் என்பெலாம் நெக்குநெக்குருகப் பாடிய மாணிக்கவாசகர் தந் திருவாசகம் ஒன்றே நமக்கு இம்மை மறுமைப் பேறுகளெல்லாம் ஒருங்கே யுதவுமென்று கடைப்பிடித்தல் வேண்டும். இத்துணைச் சிறந்த தெய்வத் திருவாசகத்தையும் அதனை அருளிச்செய்த மாணிக்கவாசகப் பெருமானையும் இத் தென்றமிழ் நாட்டிலுள்ள நன்மக்கள் முறையே ஒப்புயர் வில்லாத் தமிழ்மறையாகவும் சமயாசிரியராகவும் வைத்து வழிபட்டுவருதல், அவர்தம் மெய்யறிவின் மாட்சியையே விளக்கிக் காட்டுகின்றது. ஏனை எந்த நாட்டவர்க்கும் வாயாத இவ் வரும்பெரும்பேறு தமக்கு வாய்த்திருத்தலை நன்குணர்ந்த தமிழ்மக்கள், திருப்பெருந்துறையில் உள்ள திருக்கோயிலிர் மாணிக்க வாசகரையே சிவபிரானாக வைத்து வழிபாடு செய்துவருவது பெரிதும் போற்றற்பாலதொன்றாம். வெறு நாடகக்காப்பியம் இயற்றிய செகப்பிரியர் என்னும் ஆங்கில நல்லிசைப்புலவர் உயிர்வாழ்ந்த இல்லத்தையும் ஒரு கோயிலாக்கி, இவ் வுலகமெங்கணுமுள்ள ஆங்கில அறிஞர்கள் மெய்யன்புடன் அங்கே சென்று அங்கு அமைந்திருக்கும் அவர்தம் உருவத்தை வணங்கிச் செல்கின்றார்களென்றால், எவராலுங் காணமுடியாத கடவுளைக் கண்டு அவர்க்குந் தமக்கும் உண்டான கெழு தகைமைகளை யெல்லாம் எம்மனோர்க்குத் தெய்வத் தமிழ்ப் பாக்களால் தெளிய அறிவுறுத்திய இத்தெய்வ ஆசிரியர் மாணிக்கவாசகரை, இத்தென்றமிழ் நாட்டவரேயன்றி இவ்வுலக மெங்கணுமுள்ள அறிஞர்களெல்லாரும் வந்து வணங்கிப் பெறற்கரும் பேற்றைப் பெறுகவென்றழைத்தல் எம்மனோர்க்கு இன்றியமையாத கடமையன்றோ? இவ் வரும்பெருங் கடமையினை நன்கு நிறைவேற்றுதற் பொருட்டாகவே, மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் இப் பெருநூலினை மாணிக்கவாசகப் பெருமான் திருவடித் துணை கொண்டு ஆறு ஆண்டுகளாக ஆராய்ந்தெழுதி வெளியிடலானேம். இப் பெருமான்றன் திருவடித் தூசின் மிகச் சிறு துகள் ஒன்றிற்கும் ஒவ்வாத சிற்றறிவினேமாகிய எம்மையும் இம் முயற்சியிற் புகுத்தி, இதனை நிறைவேற்றி வைத்த சிவபிரான் திருவடிப்போதுகளுக்கே இந்நூலை மாலையாக அணிந்து அவற்றை வழுத்துகின்றோம். இனி, இந் நூல் எழுதுதற்கட் கைக்கொள்ளப் பட்ட ஆராய்ச்சி முறைகள் சிலவற்றைப்பற்றிச் சில கூறவேண்டுவது இன்றியமையாததாகின்றது. மாணிக்க வாசகர் வரலாற்றுக் குறிப்புகளிற் பல, அவ்வரலாறு நுவலும் நூல்களில் உள்ளபடியே இங்கு எடுத்து எழுதப்படவில்லை. ஏனென்றால், அக் குறிப்புகளிற் பல ஒரு புராணத்திற் காணப்பட்டபடியே, மற்றொரு புராணத்திற் காணப்படவில்லை; ஒன்றுக்கொன்று முரணாகவே காணப்படுகின்றன; அம் மாறுபாடுகளும் பிறவும் இந்நூலின்கண் ஆங்காங்கு எடுத்துக்காட்டி அவற்றுட் கொள்ளற்பாலன இவை, தள்ளற்பாலன இவை யென்பதை நன்கு விளக்கிக்காட்டி யிருக்கின்றோம். இவ்வாறு காட்டுமிடங்களிலெல்லாந் திருவாசகச் செந்தமிழ்ப் பாக்களிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட சானறுரைகள், அடிகளின் உண்மைவராற்றுக் குறிப்புகள் இவையென்று நாட்டுதற்கு உதவியாகக் காட்டப் பட்டிருக்கின்றன. இறைவனை வழுத்திப் பாடுஞ் செய்யுட்களில் அடிகள் தம் வரலாற்றுக் குறிப்புகளைத் தம்வய மின்றியே மொழிந்துவிடுமாறு நேர்வித்த சிவபிரான்றிருவருட்கு எங்ஙனம் நன்றி பகரவல்லேம்! அடிகளின் வரலாற்றுக் குறிப்புகளைத் திருவாசகந் திருக்கோவையாரிற் காணப்படுங் குறிப்புகளுடன் வைத்து ஒத்து நோக்கி அவைதம்மை எழுதியிருந்தனராயின், புராணகாரர்கள் அங்ஙனந் தம்முள் மாறுகொண்டுரையார், புராணகாரருரைகளில் மாறுகோள் கண்டவழியும், அவற்றுட் காணப்படாத குறிப்புகளை ஆராய்ந்துகண்டு எழுது கின்றுழியுந், திருவாசகந் திருக்கோவையாரின் இடை மிளிரும் வரலாற்றுக் குறிப்புகளே அடிகளின் வரலாற்றுண்மையினைத் துணிதற்குக் கருவிகளாயின. இவ்வாறாக ஓர் ஆசிரியரின் உண்மை நிலையைத் துணிதற்கு அவரியற்றிய நூல்களிலுள்ள சொற்பொருட்குறிப்புகளையே பெருந்துணையாய்க் கொள்ளும் ஆராய்ச்சிமுறை இந் நூன்முழுதும் ஊடுருவி நிற்றல் கண்டுகொள்க. அடிகளின் வரலாறு கிளக்கும் பகுதியில் இம்முறை மிக்கு நிற்றல் தெற்றெனப் புலனாம். இனி, அடிகளிருந்த காலமும் அக் காலநிலையும் உண்மையாக விளங்கினாலன்றி, அவரது வரலாற்றினுண்மையும், அவர் அருளிச்செய்த நூல்களின் உண்மை யும், அவற்றின் வாயிலாக அறியவேண்டி நிற்கும் முற்கால பிற்கால நூல்களின் உண்மையும், சைவம் வைணவம் பௌத்தம் சமணம் மாயாவாதம் முதலான சமயங்களின் உண்மையும், அவ்வச் சமயங்களிற் காலங்கடோறும் புகுந்த புராண கதைகளின் உண்மையும், அவ்வக் காலங்களில் தமிழ்மொழி தனித்தமிழுங் கலப்புத்தமிழுமாய் நின்ற உண்மையும், அவ்வக் காலங்களில் நின்ற அரசியல்களின் உண்மையும் அவ்வக் காலங்களில் திரிபெய்திவந்த ஒழுக்கங்களின் உண்மையும் பிறவும் உள்வாறறிதல் இயலாது நூல்களின் காலவரையறை தெரியாதவரையிற், பழையது புதியதாகவும் புதியது பழையதாகவும், மெய் பொய்யாகவும் பொய் மெய்யாகவும், முன்னிருந்த ஆசிரியர் பின்னிருந்த வராகவும் பின்னிருந்தவர் முன்னிருந்தவராகவும் கொள்ளப் பட்டு உண்மை சிறிதும் விளங்காமற் பெரியதொரு தலைதடு மாற்றமே தலைவிரித்தாடும். இத் தலைதடுமாற்றப் பேயாற் பிடியுண்டு நிற்கும்வரையில் மக்கள் பொய்யான வழிகளில் அலைந்து திரிந்து மீளாத் துன்பத்திற்கு ஆளாகி நிற்பர். ஆனதனாற்றான், உண்மையையுள்ளவாறுணர்ந்து இம்மக்கட்பிறவியை உண்மைநெறியிற் செலுத்தி முன்னேற்றுதற்கு, அறிவையும் இன்பத்தையும் நமக்கு வழங்கிய நம்மாசிரியரிருந்த காலங்களையும் அக் காலநிலைகளையும் உணர்வதில் ஐரோப்பிய அறிஞர்கள் பெருவேட்கையும் பெருமுயற்சியும் உடையவர்களா யிருக்கின்றனர். முற்காலத் திருந்த அறிஞரின் உண்மைநிலைகளை யெல்லாம் உண்மையாக ஆராய்ந்தறிந்து, உண்மையறிவில் தலைசிறந்து வருதலினாற் றான் மேனாட்டு வெண்மக்கள் அறிவிலும் ஆற்றலிலும் நாகரிகத்திலும் இன்பவாழ்விலும் நாளுக்குநாள் வளர்பிறை போல் வளர்ந்து, அவ் வுண்மையறிவு வாயாத மற்றை நாட்டவர்களையெல்லாந் தம் அடிக்கீழ்ப் படுத்துச் செங்கோலோச்சி வருகின்றனர். கால ஆராய்ச்சி செய்து அவ்வக்கால நிலைகளையும் அவ்வக்காலத்திருந்த ஆசிரியர் நிலைகளையும் உணராமையினாற்றான், நம்நாட்டவர்கள் பொய்க் கதைகளிலும் பொய்த் தெயவ வணக்கங்களிலும் போலியாசிரியர் மருளுரைகளிலும் வீழ்ந்து மயங்கி உண்மையறிவு வாயாதவர்களாய், அதனாற் றம் பிறவியைப் புனிதப்படுத்தும் வழி வகைகள் தெரியாதவர்களாய், அறிவும் ஆற்றலும் இன்றித், தம்முட் பகைமையும் பொறாமையுங் கொண்டு, நோயிலும் வறுமையிலும் உழன்று, தீவினைக்காளாகி மங்கி மடிந்து போக்கின்றனர்! எனவே, இம் மக்கட்பிறவியைத் தெய்வப்பிறவி யாக்குதற்கு இன்றியமையாத கருவியாய் மேம்பட்டு விளங்குவது, கால ஆராய்ச்சியால் உரங் கொண்டு துலங்கும் மெய்யறிவு விளக்கமேயாம். இத்துணைச் சிறந்த கால ஆராய்ச்சிமுறை இத் தமிழ்நாட்டகத்திலுள்ள அறிஞரெவ ராலும் ஒழுங்காகக் கடைப்பிடிக்கப்பட்டு, நந் தமிழ் மொழிக்கண் உள்ள எந்த நூலினும் இது காறும் விரிவாகக் காட்டப்படாமையின், மாணிக்கவாசகர் வரலாற்றினும் மாணிக்கவாசகர் காலம் எம்ல் நான்மடங்கு பெருக்கி எழுதப்படுவதாயிற்று. புதிது புகுந்து தமிழ்ச்சொல் வடசொற்களாலும், முற்காலத்தின்றிப் பிற்பிற் காலங்களிற் றோன்றிய தெய்வ வணக்கங்களாலும், முன் நூல்களி லின்றிப் பின் நூல் களிற் புனைந்து சேர்க்கப்பட்ட புராண கதைகளாலும், முற்பிற் காலங்களிற் பொருள் வேறுபட்ட சொற்களாலுஞ் சமயக் கோட்பாடுகளாலுங், காலங்கடோறும் புதிது தோன்றிய பாவகைகளாலும், முன்னாசிரியர் நூலிலுள்ள சொற்பொருட் குறிப்புகளைப் பின்னாசிரியர் தம் நூலுள் எடுத்தாளும வகைகளாலும், முன்னிருந்தோரைப் பின்னிருந்தோர் குறிப்பாலும் வெளிப்படையாலும் நுவலும் நுவற்சிகளாலும், அவ்வந்நூல்களிற் குறிப்பிடப்பட்ட சிவபிரான் கோயில்கள் திருமால் கோயில்களைக் கணக்குச் செய்த தொகை களாலும், கல்வெட்டுகள் செப்பேடுகள் முதலாயின வற்றிற் புலனாம். அரசரின் காலக்குறிப்புகளாலும், வடமொழி நூல்கள் அயல்நாட்டவர் வரைந்துவைத்த வரலாற்று நூல்கள் முதலாயினவற்றில் தமிழர் ஆரியரைப் பற்றி நுவலும் பகுதிகளாலும், இன்னோரன்ன பிறவற்றாலுந் தமிழாசிரியர் தமிழ்நூல்களின் காலவரையறைகளும், அவ்வக்கால வியல்புகளும், அவற்றிடையே படும் மாணிக்கவாசகரது காலமும் மிகவும் விழிப்பாக ஆராய்ந்து தெளிவுபடுத்தப்பட்டிருக்கின்றன. இவ்வாறு செய்கின்றுழி, ஒவ்வொன்றுக்குஞ் சான்றுகள் காட்டப்பட்டிருப்பதோடு, சான்றாக எடுக்கப்பட்ட மேற்கோள் உள்ள நூற்பெயர்களும், அவற்றின்கண் அவை உள்ள இடங்களுஞ் சுட்டிச் சொல்லப் பட்டிருக்கின்றன. இவ்வாறு மேற்கோள்கள் உள்ள இடங்கள் கிளந்து குறிக்கப் பட்டிருத்தலால், இந் நூலைக் கற்பவர்கள்யாம் செய்துகாட்டும்ஆராய்ச்சி முடிபுகட்கு உள்ள சான்றுகளைத் தாமும் எளிதிற்கண்டு, எம்முடைய முடிபுகள் பொருந்துமா பொருந்தாவா எனத் தாமே வருத்தமின்றி ஆராய்ந்து தெளிதல்கூடும். பெரும்பாலும் தமிழில் உரை நூல்களும் ஆராய்ச்சி நூல்களும எழுதும் அறிஞர்கள் தமது கோட்பாடுகட்குச் சான்றாகக் காட்டும் மேற்கோள்கள் உள்ள நூற்பெயர்களைக் கூட மொழியாதுபோவர்; ஏனென்றால், அங்ஙனங் குறித்துக் காட்டுதற்குப் பொறுமையும் பேருழைப்பும் நூல்களும் வேண்டும். யாம் எம்முடைய வருத்தத்தையுங் காலக்கழிவினையும் பொருட்செலவினையும் பாராது, உலகத்தில் உண்மை விளங்கி எல்லாரையும் உய்வித்தல் வேண்டும் என்பதொன்றனையே கடைப்பிடியாகக் கொண்டு, ஒவ்வொன்றுக்கும் மேற்கோள்களும் அவையுள்ள இடங்களுங் குறித்திருத்தலை அன்பர்கள் கருதிப்பார்த்து, இம் முறையினைத் தாமுங் கையாண்டு உண்மையராய்ச்சியினை ஓம்புவாராக! இங்ஙனம் ஆராய்ந்து செல்லும் நெறியிற் பிழையெனக் கண்டவைகளை மறையாது, அவை பிழைபடுதலைக் கிளந்து சொல்லியிருக்கின்றேம். எல்லாராலுந் தெய்வத்தன்மை யுடையவராகக் கொள்ளப்பட்ட ஆசிரியர் நூல்களிலும் பிழையெனக் கண்டவைகளை மறையாது வெளிப் படையாக எடுத்துக்காட்டியிருக்கின்றேம். கடவுளல்லாத ஏனை மக்களெல்லாரும் எத்துணைதான் சிறந்வராயிருப்பினும் பிழைபடாதிரார். இது, தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனாரே. அரியகற்று ஆசற்றார் கண்ணுந் தெரியுங்கால் இன்மை யரிதே வெளிறு என்று அருளிச்செய்தமையானுந் தெளியப்படும். ஆகவே, அறிவில் மிகச் சிறந்த சான் றோர்களும் ஒரோவழிப் பிழைபடுவராயின், அவர் செய்த அப் பிழைகளை உண்மை விளக்கத்தின் பொருட்டு எடுத்துக்காட்டுதல் அவர்பால் யாம் வைத்துள்ள அன்புக்கும் நன் மதிப்புக்கும் எள்ளளவும் பழுதுசெய்யாது. ஒரோவொரகாற் பேரறிவினர்பால் மெய்யல் லாதன தோன்றுதலுஞ், சிற்றறிவினர்பால் மெய்யாவன தோன்றுதலும் உலகியல் நிகழ்ச்சிகளிற் காணக்கிடத்தலின், உண்மையாரச்சி செய்பவர்கள், அவ்வவர்தம் பெருமைசிறுமை பாராது, அவ்வவற்பாற் புலனாவனவற்றிலுள்ள பொய்ம்மை மெய்ம்மைகளை ஆராய்ந்து கண்டெழுது தலே, உலகினை வஞ்சியாது அதற்கு நன்மைபயக்கும் விழுமிய ஒழுகலாறாம்; இது தேற்றுதற் கன்றோ ஆசிரியர் திருவள்ளுவனாரும், எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு என்று அருளிச் செய்வாராயினர்? இவ்வாறு உண்மையைக் கண்டெழுதுதலிற் கடைப் பிடியாய் நில்லாது, இவர் தெய்வத்தன்மை வாய்ந்த ஆசிரியர்; இவரியற்றிய இந் நூலிற் குற்றங் குறையாவது ஏதும் இராது என்று குருட்டுப் பிடியில் உறைத்துநின்று, தாமும் அவர் நூற்பொருளை யாராயாது, ஆராய்வார் சிலர் தம்மையுங் கண்டவாறு புறம் பழித்துப் பேசி உலகினை அறியாமையில் அழுத்துவாரும் உளர்; அத்தன்மையினாருரைகளை ஒருபொருட்டாக வையாது, மெய்மையாராய்ச்சியிற் செல்லுதலே உலகினைத் தேற்றுஞ் சான்றோர் கடனாமென்க. மாணிக்கவாசகப் பெருமான் இருந்த காலம் இற்றைக்கு ஆயிரத்து எழுநூறு ஆண்டுகட்குமுன், அஃதாவது கி.பி.மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதிக்குட்படுவதா மென்பதனை, இருபத்தேழு ஆண்டுகட்குமுன் வெளிவந்த ஞானசாகர முதற் பதுமத்தின்கண் வெளியான மாணிக்கவாசகர்கால நிருணயம் என்னுங் கட்டுரையில் நன்கு விளக்கினேம். அக்கட்டுரையும் இந் நூலின் இறுதியிற் சேர்க்கப்பட்டிருக்கின்றது. அதன்பின் இருபஃதாண்டுகளாய்ப் பொதுவாகத் தமிழ்நூற் கால அளவைகளைப் பற்றியுஞ் சிறப்பாக மாணிக்கவாசகரிருந்த காலவரையைப் பற்றியும் அறிஞர் பலரால் எழுதி வெளியிடப்பட்ட கட்டுரைகளையும் நூல் களையுஞ் செவ்வனே ஆராய்ந்துபார்த்து, அவற்றுட் பொருந்துவனவும் பொருந்தாதனவும் வேறுபிரித்துக் காட்டிப், பண்டைத் தமிழ்ப்பெரும் பனுவலாகிய தொல்காப்பியம் முதற் பின்றைத் தமிழ்க் பேரறிவு நூலாகிய சிவஞான போதம் ஈறாக வந்த தென்னூல் வடநூல்களின் காலங்களையெல்லாம் வரையறை செய்து நிறுவி, அம் முகத்தால் மாணிக்கவாசகப் பெருமான் காலம் திருநாவுக்கரையர், திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்திகள் முதலான சைவசமயாசிரியர் ஏனை மூவர் காலத்திற்கும் முன்னே கி.பி. மூன்றாம் நூற்றாண்டின்கண் மிளிர்வதாதலை இப்போது மீண்டும் வலியுறுத்தியிருக்கின்றேம். இங்ஙனம் யாம் எமது இளமைக்காலத்திலேயே இவ்வுண்மையைக் கண்டுணரு மாறு எமதுணர்வுக்கு உணர்வாய் நின்று விளக்கி, அதனை என்றும் நிலைபெறச் செய்த சிற்றம்பலத் தெங்கள் செல்வப் பெருமான் திருவடிகட்கு எமது புல்லிய வணக்கம் உரிய தாக! ஓம்சிவம். பல்லவபுரம், பொதநிலைக்கழக நிலையம், திருவள்ளுவர் ஆண்டு 1960 மாசி, முதல்நாள் மாலை. மறைமலையடிகள் சைவ சித்தாந்த ஞானபோதம் மூன்றாம் பதிப்பின் முகவுரை கற்றவர்முதற் கல்லாதவர் ஈறான எத்திறத்தவர்க்கும் இனிது விளங்கும்பொருட்டுப் பற்பல ஊர்களிலும் பற்பல நகர்களிலும் அவைக்களங்களில் யாம்நிகழ்த்திய சைவ சித்தாந்தச் சொற்பொழிவுகளின் ஒரு தொகுதியே `சைவ சித்தாந்த ஞானபோத முதற்பாகம் என்னும் இந் நூலின்கட் பெரும்பாலும் அடங்கி யிருக்கின்றன. இந்நூலின் முதற்பதிப்பாகக் கருதப்படும் எம்முடைய சொற்பொழிவுகள் சில 1906, 1915ஆம் ஆண்டுகளில் வெளிவந்த எமது ஞானசாகரத்தின் இதழ்களில் வெளிப்போந்தன வாகும், அவை அப்போது முன்பனிக்கால உபந்நியாசங்கள் என்னும் பெயரால் தனிநூலாகவும் வெளிவந்தன. அந்நூலில் அடங்கியவை ஆறு விரிவான சொற்பொழிவு களேயாகும், அப்பதிப்பின் படிகள் செலவானபின், 1922ஆம் ஆண்டில் பின்னும் பத்துச் சொற்பொழிவுகள் சேர்க்கப்பெற்று, ஆக மொத்தம் பதினாறு சொற்பொழிவுகள் அடங்கிய இதன் இரண்டாம் பதிப்பு வெளி வரலாயிற்று, அவ்விரண்டாம் பதிப்புப் படிகள் செலவழிந்தபின், இதன் மூன்றாம் பதிப்பை அச்சிடத் துவங்கிப் பல ஆண்டுகள் கழிந் தமையானும், இவற்றிடையே இன்னும் பல சொற்பொழிவு களைச் சேர்க்க வேண்டுவது இன்றியமையாததாய் நேர்ந்தமை யானும், இச் சொற்பொழிவுகளை யெல்லாம்ஒருங்கே சேர்ப்பின் இந்நூல் அறுநூறு பக்கங்களுக்கு மேற் பெருகுமெனக் கண்டமை யானும் ஒன்பது சொற்பொழிவுகள் தொகுத்த இந்நூலின் முதற் பாகத்தை இப்போது வெளியிடலானேம், ஏனைச் சொற்பொழி வுகள் தொகுத்த இரண்டாம்பாகம் இனிப் பதிப்பிட்டு வெளியிடப்படும், எம்முடைய நூல்களிற் சிறுபான்மையாகக் காணப்படும் வடசொற்களையும் முற்றக்களைந்து, தூய தமிழ்ச் சொற்களையே அவ்வவ்விடங்களில் நிரப்பி இப்போது பதிப்பிட்டு வரும் எமது முறைப்படி, இந்நூலின் முற்பதிப்பில் வெளிவந்த விரிவுரை களிலிருந்த வடசொற்களைக் களைந்து ஆங்காங்குத் தூயதமிழ்ச் சொற்களைப் பெய்தும், இப்போது இதன்கட் புதியவாகச் சேர்க்க எடுத்த விரிவுரைகளைத் தூய தனித்தமிழிலேயே எழுதியும் இந்நூலை இயற்றலானேம். ஆனாலும், இத்தமிழ் நாட்டிற் புதியராய்ப் புகுந்த ஆரியர், பௌத்தர், சமணர், மாயாவாத வேதாந்திகள், வைணவர் என்பாரெல்லாந், தமிழ் மக்களை மருட்டுதற் பொருட்டு,அவர் வழங்குந் தமிழ்மொழியிற் றம்முடைய கோட்பாடுகளை வரைந்து வையாமல், அவர் அறியாத வடமொழியில் அவை தம்மை வரைந்து வைத்து,அவைகளைமறைபொருளாகவே பரப்பி வந்தமையால்,அன்னார் செய்த ஏமாற்றத்தினின்றுந் தமிழ் மக்களை விடுவிக்கக் கருதிய பிற்காலத்துத் தமிழ்ப் பெரியார் களும், பண்டைத்தமிழ்ச் சான்றோர் கண்ட முடிந்த வுண்மை களுக்குச் சைவ சித்தாந்தம் என வடமொழியிற் சிறப்புப் பெயர் நிறுவியும், அவ்வுண்மைகளை விளக்குங்காற் பற்பல குறியீடுகளை வடசொற் கொண்டே புதியவாய்ச் சமைத்தும், வடமொழி யிலேயே `சிவாகமங்கள், `சிவபுராணங்கள் இயற்றியுந், தமிழ்ச் சான்றோர் தமது மெய் யறிவாற் றெளிந்த மெய்ப் பொருள்களை இத் தமிழ் நாட்டகத்தே பரவச் செய்யலாயினர். அதனால், அங்ஙனஞ் சிறப்புப் பெயர்களாகவுங் குறியீடுகளாகவும் புகுந்து தமிழ் நூல்களில் நிலைபெற்ற வடசொற்கள் சொற்றொடர் களைச் சடுதியில் மாற்றினால் அவற்றிற் பழகினார்க்கு இந்நூற் பொருள் மயக்கத்தைத் தருமெனக் கருதி, அவையிற்றை மட்டும் மாற்றாது ஆங்காங்கு இருக்கவிட்டேம். ஆனாலும், அவை தமக்கு நேரான தனித்தமிழ்ச் சொற்களையும் இந்நூலின் இறுதியிற் காட்டியிருக்கின்றேம். அங்ஙனங் காட்டப் பட்டிருக்குந் தமிழ்ச்சொற்கள் நன்கு வழங்கி வரலானபின், அவ்வடமொழிச் சிறப்புப் பெயர்கள் சொற்கள் சொற் றொடர்களையுங் களைந்துவிடக் கருதியிருக்கின்றேம், இதுகாறும் உதவி செய்த சிவபிரான் இன்னும் அடியேமுக்கு உதவுக! பல்லாவரம் மறைமலையடிகள் பொது நிலைக் கழக நிலையம் திருவள்ளுவர் ஆண்டு 1966 பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும் இரண்டாம் பதிப்பின் முகவுரை - 1924 பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும் என்னும் இந் நூல் முதன்முதல் எமது ஞானசாகர மூன்றாம் பதுமத்தில் வெளிவந்தது. அதன்பின் 1906-ஆம் ஆண்டு ஏழாந் திங்களில் அது தனிப் புத்தகமாக வெளிப்படுத்தப்பட்டது. அத் தனிப் புத்தகப் பதிப்புப் படிகள் பெரும்பாலுஞ் செலவழிந்தனவேனும், அப்பதிப்பின் பழஏடுகள் சில பலமிஞ்சியிருந்தமையின், அவற்றை நிறைவுசெய்தற் பொருட்டே இப்போது இதில் முந்நூற்று முப்பது படிகள் திரும்பப் பதிப்பிடப்பட்டன. சென்ற பல ஆண்டுகளாக யாம் இடைவிடாது செய்து வரும் ஆராய்ச்சிகளால், இந்நூலின்கட் புதியனவாய்ச் சேர்க்கவேண்டிய பொருள்களும், இதன்கண் முன்னுள்ள சொற்பொருள்களிற் செய்யவேண்டிய மாறுதல்களும் நிரம்பப் பல உளவேனும், இப்போது எம்மால் எழுதப்பட்டு வரும் நூல்கள் முடியும்வரையில், இவற்றைச் செய்து முடித்தற்கு வேறு ஒழிவுகாலம் இல்லாமைபற்றி, இந்நூலின் இவ் விரண்டாம் பதிப்பு முற்றும் முன்னுள்ள படியாகவே பதிப்பிக்கப்படலாயிற்று. இந்நூலின்கண் தமிழர் ஆரியரைப் பற்றி யாம் பதினெட்டு ஆண்டுகட்கு முன்னரே வரைந்துள்ள கருத்துக்கள் மேன்மேல் ஆராய்ச்சிகளால் மேன்மேல் உரம்பெற்று வருகின்றனவே யல்லாமல், அவை சிறிதும் மாறுபடவில்லை. அவ்விரிவு களெல்லாம் இதன் மூன்றாம் பதிப்பின்கண் எடுத்துக்காட்ட நினைந்திருக்கின்றேம். இந்நூல் நடையின்கண் ஆங்காங்கு விரவியுள்ள சிற்சில வடசொற்களும் அம் மூன்றாம் பதிப்பின்கண் முற்றுங் களைந்து விடப்படும். பல்லாவரம் மறைமலையடிகள் வேளாளர் நாகரிகம் முதற் பதிப்பு முகவுரை கி.பி. 1921 ஆம் ஆண்டு மார்கழித் திங்களில் யாம் யாழ்ப்பாணத்தில் உள்ள அன்பர்களால் அழைக்கப்பட்டு, அங்கே விரிவுரை நிகழ்த்தச் சென்று, யாழ்ப்பாண நகரத்தும் அதனையடுத்துள்ள பல ஊர்களிலுஞ் சைவசித்தாந்தப் பொருள்களையுந் தமிழ்ச் சிறப்புகளையும் எடுத்துப் பல விரிவுரைகள் நிகழ்த்தினேம். அவ் விரிவுரைகளை யெல்லாம் பெருந்திரளான அன்பர்கள் ஆங்காங்கு வந்துகேட்டு இன்புற்றனர். கடை முறையாக யாம் யாழ்ப்பாணத்தை விட்டுப் புறப்படுதற்குச் சில நாட்களின்முன், அஃதாவது கி.பி. 1922 ஆம் ஆண்டு தைத்திங்கள் முதல்நாள் அன்று யாழ்ப்பாண நகரமண்டபத்தில் மாலை 6 மணிக்குத் துவங்கித் தமிழர் நாகரிகம் என்னும் பொருளை விரித்துப் பேசினேம். தமிழர் நாகரிகத்தின் வரலாறுகளை அவ்விரிவுரை புதுமுறை ஆராய்ச்சியால் நன்கெடுத்து விளக்கினமையால், அவற்றை ஆண்டுக் குழுமியிருந்து கேட்ட அறிவுடை அவையத்தார் எல்லாரும் அவ் விரிவுரையை மிக வியந்து பாராட்டினர். அவ் விரிவுரையின் அருமை இலங்கையிலும், யாழ்ப்பாணத்து நன்மக்கள் மிகுதியாய்ச் சென்று குடியேறி வாழும் மலாய் நாடுகளிலும் விரைந்து பரவலாயிற்று. யாழ்ப்பாணம், கந்தரோடையிலிருந்து சென்று மலாய் நாட்டில் இரெங்கான் என்னும் ஊரிற் புகைவண்டிநிலை உதவித் தலைவராய் (Assistant station Master) அலுவலில் அமர்ந்திருந்த திருவாளர் ந.சி. கந்தையா அவர்கள் சைவசித்தாந்த உண்மைகளையுந் தமிழின் அரும்பெருஞ் சிறப்புகளையும் நாடெங்கும் பரவச் செய்வதில் நிரம்பக் கருத்தூன்றினவர்களாதலின் தமிழர் நாகரிகம் என்னும் அவ் விரிவுரையை ஒரு நூலாக அச்சிட்டு வெளியிடும்படி எம்மைக் கேட்டுக் கொண்டதோடு, செகமத் என்னும் ஊரில் அரசினர் மருத்துவ விடுதியில் (Government Hospital) அலுவல் பார்க்குந் திருவாளர் குமாரசாமி அவர்களை ஊக்கி, அவர்களும் அவர்களின் நண்பர் சிலருமாக ஒருங்கு சேர்ந்து அந்நூற் பதிப்புச் செலவுக்கு இருநூறு ரூபா பொருளுதவி செய்யுமாறும் புரிந்திட்டார்கள். தமிழில் இத்தகைய புதுமுறை ஆராய்ச்சி நூல்கள் வெளிவருதற்கு உதவி செய்தலினுஞ் சிறந்த அறம் வேறு இல்லை. இவ்வுயர்ந்த அறத்தைச் செய்துவருந் திருக்கந்தையா அவர்கட்கும் அவர்களின் நண்பர் திருக் குமாரசாமி அவர்கட்கும் அவர்களோடு ஒத்து உதவி செய்த மற்ற நண்பர்கட்கும் யாம் பெரிதும் நன்றி செலுத்துகின்றேம். கல்விவளர்ச்சியின் பொருட்டுப் பல நன்முயற்சிகளை யாம் இடைவிடாது செய்து வருதலால், தமிழர் நாகரிகம் என்னும் இதனை எழுதி வெளியிடுதற்கு அமயம் வாயாது ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் கழிந்தன. பிறகு, நாட்டுக்கோட்டைச் செட்டிமார் முன்னேற்றத்தின் பொருட்டு வெளியிடப்படுந் தனவைசிய ஊழியன் என்னும் இதழில் (கி.பி. 1923 ஆம் ஆண்டு ஆடித்திங்கள் 12 ஆம் நாள்) அதன் தலைவர் வேளாளர் உண்மை வரலாறுகளை அறியாமல் அவரைச் சூத்திரர் என்று இகழ்நது, தம் மரபினரில் உள்ள ஆடவர்கட்கு வேளாள மரபினரிலிருந்து பெண்கள் எடுத்து மணஞ்செய்வித்துக் கொள்ளு தலைப்பற்றிப் பேசியவிடத்துத், தாம் வைசிய வகுப்பினராகலான் தம்மவர் தம்மிற்றாழ்ந்த சூத்திர வகுப்பினரான வேளாளரிடமிருந்து பெண்கள் எடுத்து மணஞ் செய்து கொள்ளல் முறையேயாம் என்று எழுதிய கட்டுரை ஒன்றைக் கண்டேம். அப்போது நமக்கு நண்பராயுள்ள சைவ வேளாளர் சிலர் வேளாளரின் பண்டை உண்மை வரலாறுகளை ஆராய்ந்து ஒரு கட்டுரை விரைந்தெழுதும்படி எம்மைப் பெரிதுவேண்டினர். g©il¡fhyª bjh£L e« brªjÄœ k¡fËš ehfÇf¤jh‰ áwªJ thœªJ, jÄœbkhÊiaíŠ át tÊgh£ilí« ÃiyÃW¤â MÇaiuíª âU¤â eštÊ¥ gL¤ândh® ntshsnu v‹gJ vkJ MuhŒ¢áÆš e‹F òy¥ g£likahš, ‘ntshs® aht®? என்பதனை விளக்குகையில் தமிழரது நாகரிகத் தையும் உடன் விளக்க வேண்டுவது இன்றியமையாததாய்த் தானே வந்து கூடிற்று. ஆகவே, யாம் முன்னர் எழுதக் குறித்திருந்த தமிழர் நாகரிகம் என்பதனையும் இதன்கண் விரித்து விளக்க இடம் பெற்றேம். ஆரியர் இவ்விந்திய நாட்டிற் புகும் முன்னரே தமிழர் நாகரிக வாழ்க்கையில் முதிர்ச்சிபெற்று நின்று, பின்னர்த் தம்மொடு வந்து கலந்த அவ்வாரியரைத் திருத்தினமை இதன்கண் நன் கெடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றது. பழந்தமிழ் நூலாராய்ச்சி யின்றி, வட நூற் பயிற்சி ஒன்றேயுடையார் ஆரியரை உயர்த்துத் தமிழரை இழித்துக் கூறுவனவெல்லாம் பொருந்தாமையுந், தமிழரே எவ்வாற்றானும் உயர்ந் தோராதலும் இவைதம்மை ஆராயாதார்க்குப் புதுமையாய்த் தோன்றினும், யாம் ஆராய்ந்து சான்றுகளோடு உரைப்பனவற்றை நடுநிலை வழாது நின்று காண்பார்க்கு எம் உரையின் மெய்ம்மை தானே விளங்குதல் திண்ணம். - மறைமலை அடிகள் இரண்டாம் பதிப்பு முகவுரை இவ்விரண்டாம் பதிப்பிற் பல புதியகுறிப்புகள் விரித்தெழுதிச் சேர்க்கப்பட்டிருக்கின்றன. முதற்பதிப்பில் இருந்தவைகளிற் சிற்சில திருத்தங்களுஞ் செய்யப்படிருக் கின்றன. இவ்வாறற்றால் இந்நூல் முன்னையினும் ஒருபங்கு கூடப்பெருகிவிட்டது. ïŤ jÄHU£ áwªj ntshs® ehfÇf¤ij És¡fnt jÄHuJ ehfÇfKª jhnd bgw¥gLkhfyhD«, Kj‰ gâ¥ò¡F it¤j `jÄH® ehfÇf«’ mšyJ `ntshs® aht®? என்னும் இருபெயர்கள் வழங்குதற்கு இடர் பயத்தலானும் இப் பதிப்புக்கு அவ்விரண்டையும் உள்ளடக்கிய `வேளாளர் நாகரிகம் என்பதனைப் பெயராக அமைத்தாம். பல்லாவரம் மறைமலையடிகள் 1927 தமிழர் மதம் முகவுரை சென்னை மாநகரில் அனைத்திந்திய தமிழர் மத மாநாடு கூட்டுவதற்கு முனைந்த அதன் அமைச்சர், யாமே அதற்கு அவைத் தலைவராய் அமர்ந்து அதனை நடத்துதல் வேண்டுமென எம்மை வற்புறுத்து வேண்டிக்கொண்ட துடன், அதனை நடத்தும் எமதுழைப்பிற்காக இருநூறு ரூபாயும் எமக்கு நன்கொடையாக அன்புடன் விடுத்து தவினர். அதனை ஏற்று, அவரது வேண்டுகோளுக்கும் இணங்கி அதனை நடத்த ஒப்புக் கொண்டேம். பின்னர்ச் சிலநாளில், அம்மாநாட்டில் யாம் நிகழ்த்துந் தலைமையுரையினை முழுதும் எழுதி அச்சிட்டு வெளி யிட்டால், தமிழ்மக்கட்கும் பிறர்க்கும் அது பெரிது பயன்படும் எனத் தெரிவித்து, அதனை எழுதுமாறு வற்புறுத்தி அவர் எம்மை மிகவும் வேண்டினர். அதன்மேல், அதனை எழுது தற்கு இசைந்து, எழுதிமுடித்தபின் அதனை அச்சிடுஞ் செலவுக்கு என் செய்வதென்று அவரை வினாவினேம். அதற்கவர், அச்சுச் செலவைத் தாமே கொடுப்பதாகவும், அச்செலவுத் தொகையை அச்சிட்டபின் புத்தகப் படிகளாகத் தாம் பெற்றுக் கொள்வதாகவுங் கூறினர். அவரது சொல்லை நம்பி, எம்முடைய நூல்களில் அரைகுறையாய் அச்சிட்டு முடிக்கப்படாமலிருக்கும் நூல்களின் வேலையையும் நிறுத்திவைத்துத், தமிழர்மதம் என்னும் இந்நூலை விரைந் தெழுதி முடிக்கும் முயற்சியிலேயே இறங்கி விட்டேம். இறங்கி இதனைப் பாதிக்குமேல் எழுதி விட்டபின், இந்நூலை அச்சிடுஞ் செலவுக்கு வேண்டுந்தொகை திரட்டமுடியா மையால், இதன் அச்சுச்செலவுத் தொகையைத் தாம் தரல் இயலாதென்று அமைச்சர் தெரிவித்துவிட்டார். இதனால் முதலில் எமதுள்ளஞ் சிறிது கலங்கினாலும், இதுகாறும் எம்முடைய தமிழ்த்தொண்டு சிவத்தொண்டு களுக்குப் பொருளுதவி செய்துவரும் எல்லாம்வல்ல சிவ பெருமான் இதற்கும் உதவி செய்து எப்படியும் இதனை வெளியிடுவிப்பான் என்னும் எண்ணம் எமதுள்ளத்தில் முனைந் தெழவே, இதனை எங்ஙனமாயினும் எழுதிமுடித்து அச்சிட்டு வெளிப்படுத்தல் வேண்டுமென உறுதிகொண்டு, திருவள்ளுவர் ஆண்டு 1969, சித்திரைத் திங்கள், 24 ஆம் நாள் எழுதத் துவங்கிய இந்நூலைத், திருவள்ளுவர் ஆண்டு 1970, ஆனித் திங்கள் 29ஆம் நாள் எழுதி முடித்தேம். ஆகவே, இதனை எழுதிமுடிப்பதற்கு ஓராண்டும் இரண்டு திங்களும் இரண்டு நாளும் ஆயின. இந்நூலை எழுதி வெளியிடுதற்கு எமக்குண்டான வாழ்க்கைச் செலவு ரூ. 1500 ஆகும்; இந்நூலின் அச்சுச் செலவு, காகிதச்செலவு, கட்டிடச் செலவெல்லாம் ரூ. 750 ஆகும்; ஆக இந்நூற் செலவு மொத்தம் இரண்டாயிரத்து இருநூற்றைம்பது ரூபாயாகும். இந்த ரூ.2250உம் முன்பணமாகச் செலவழித்தால் அல்லாமல் இந்நூல் வெளி வருதற்கு வேறு வழியில்லை. இப்பெருந் தொகையை முன்னதாகச் செலவழித்தலால் முதலும் வட்டியுங் கரைந்து விடுகின்றன; பிறகு இத்தொகையைக் காண்டலும் இயலாது. இந்நூலின் ஆயிரம்படிகளில் தொளா யிரம்படிகளே விற்பனையாகும்; எஞ்சிய நூறும் பலவழிகளில் வீண் செலவாய்ப்போம்; இத்தொளாயிரம் படிகளும் விற்கச் சிறிதேறக் குறையப் பன்னிரண்டு ஆண்டுகளாகும். இதன் படிகளை அவ்வப்போது விற்றெடுக்குஞ் சிறு சிறு தொகைகளோ உடனுக்குடன் செலவாய்ப்போதலால், இதற்கென்று முன்பணமாகச் செலவழித்த தொகையையும் வட்டியையுந் திரும்பப் பெறுதலும் இயலாது. இங்ஙனமே, எம்முடைய நூல்களை வெளியிடுதற்குச் செலவழித்த தொகை சிறிதேறக்குறைய ஐம்பதினாயிர ரூபாயாகும். இத்தொகை முழுமையாய்க் கையில் இப்போதி ருந்தால், எமக்குத் திங்கடோறும் இருநூறு ரூபாய்க்குக் குறை யாமல் வருமானம் கிடைக்கும். ஆனால், தமிழுலகம் அதனால் யாது பயன்பெறும்? அதனை நினைந்தே எமக் குண்டாம் பெரும் பொருட் செலவையும் பேருழைப்பையும் ஒரு சிறிதுங் கருதாமல் எமது தொண்டினை நாற்பத்தைந் தாண்டுகளுக்கு மேலாகச் சிவபிரான் றிருவருளுதவி ஒன்றேகொண்டு எம்மாலியன்ற மட்டுந் தனித்தமிழில் தொடர்பாக நடத்தி வருகின்றோம். இந்நூல், தமிழையுந் தமிழர்தம் மதத்தையும் பற்றி யாம் நாற்பத்தைந்தாண்டுகளுக்கு மேலாக ஆராய்ந்த ஆராய்ச்சி யின் முடிபுகளை மிகச்சுருங்காமலும் மிக விரியாமலும் நன்கு விளக்க வேண்டு மளவுக்கு விளக்கிச் செல்வதாகும். இதன்கட் காணப்படும் பொருள்களிற் பெரும்பாலான பலர்க்குப் புதுமையாக காணப்படலாம். அதற்குக் காரணம், நந்தமிழ் மக்களிற் பெரும்பாலார் கல்வியறிவு வாயாதவர்களாயுங், கல்வியறிவு வாய்த்த சிறுபாலாரும் பழந்தமிழ் நூல்களை ஆராய்ச்சிக் கண்கொண்டு ஆழ்ந்து நுணுகிப் பாராதவராய் வடநூற் பொய்வழக்குகளைத் தழீஇப் பொய்க் கொள்கை களில் மனம் அழுந்தப் பதிந்தவராயும் இருப்பதேயாகும். தமிழ்ப்பழமக்களின் கொள்கைகளில் யாம் எடுத்து விளக்குதற்குப் புகுந்த ஒவ்வொன்றிற்குந், தொல்காப்பியம் முதலான மிகப் பழைய தமிழ்நூல்களிலிருந்தும், அங்ஙனமே மிகப்பழைய இருக்குவேதம் முதலான வடநூல்களிலிருந்தும், பண்டைத் தமிழர்தங் கொள்கைகளின் உண்மையை உரம்பெற நாட்டும் இஞ்ஞான்றை ஆங்கில அரும்பெறல் நூல்களிலிருந்தும் வலிய சான்றுகள் எடுத்துக் காட்டியிருக் கின்றே மாதலால், யாம் இதன்கண் விளக்கியிருக்கும் பொருள்கள் அத்தனையும் மிகப்பழைய உண்மைப் பொருள் களேயல்லால், முன் இல்லாது புதியவாய் முளைத்த பொருள் கள் அல்லவென் றுணர்தல் வேண்டும். பிறவியிலேயே கண் குருடாகிப் பகலவன் ஒளியைக் காணாத ஒருவன், கதுமென இறைவனருளாற் குருடு நீங்கிப் பகலவனது பேரொளி விளக்கத்தைக் கண்டு புதிய இக்காட்சி மெய்யோ பொய்யோ வெனக்கருதி மருளுமாப் போலவே பழந்தமிழ்ச் சான்றோரின் மெய்க் கொள்கைகளாகிய பெருஞ்சுடரொளி விளக்கத்தைக் காணமாட்டாமல் அகக்கண் குருடுபட்ட இஞ்ஞான்றைத் தமிழர் பெரும்பாலார், இந் நூலால் அக்குருடு நீங்கி அம்மாப்பெருங் காட்சியைக் காணுங்கால் இது மெய்யோ பொய்யோ என மருளுதல் இயல்பன்றோ? ஆயினும், அவர் இந்நூலை ஒருகாலன்றிப் பலகாலும் உற்றுநோக்கிப் பயில்வா ராயின், அம்மருட்சி நீங்கி ஈறில்இன்பம் எய்துவரென்பது திண்ணம். அது நிற்க. சென்ற ஆண்டு ஐப்பசித் திங்கள், 4 -ஆம் நாள் 5-ஆம் நாள் சென்னை மாநகரிற் பச்சையப்பன் கல்லூரியில் அனைத்திந்திய தமிழர் மத மாநாடு கூடிற்று. பெருந்திரளான அன்பர்கள் கல்லூரியின் மேன்மண்டபத்திலும் அதன் கீழும் நிறைந்திருந்தனர். யாம்முன்னமே ஒப்புக்கொண்டபடி, தக்கார் பலர்வேண்ட அம்மாநாட்டின் பேரவைக்குத் தலைவராய் அமர்ந்து, தமிழர் மதம் என்னும் இத்தலைமை யுரையின் முதற்பகுதியை முதலிற் படிக்கச்செய்தேம். அம்முதற்பகுதி முடிந்ததும், அவையிலுள்ளார் பலருங் கடவுளைப்பற்றிய தமிழரின் கொள்கையைச் சொற்பொழி வாகவே நிகழ்த்துதல் வேண்டும் என எம்மைப் பெரிதும் வேண்டினர். அதற்கிசைந்து தமிழரின் கடவுட் கொள்கை இன்னதென்பதை ஒன்றரை மணிநேரம் வரையில் எம் மாலியன்ற மட்டும் நன்கினிது விளக்கிப் பேசினேம். அவையிலிருந்தார் அனைவரும் அதனைக் கருத்தொருங்கி அமைதியுடன் கேட்டு இத்தகைய அரிய சொற்பொழிவு அமெரிக்கா முதலான அறிஞர் நிறைந்த இடங்களிற் செய்யப்பட்டிருக்குமானால் இதன்மேன்மை உலகம் முழுவதுங் கொண்டாடப்பட்டிருக்கும், என வியந்து பாராட்டி மகிழ்ந்தனர். கடவுள் நம்பிக்கை யில்லாதார் சிலரும் எம்பாற் போந்து, கடவுள் அறிவுச்சுடர் என்னும் இக்கொள்கை எங்கட்கும் ஏற்றதொன்றேயாகும் எனக் கூறி மகிழ்ந்தனர். எங்ஙனமாயினும், எமது சிற்றறிவால் அளந்து ரைத்த சிற்றுரை, அளக்கலாகாப் பேரொளிவடி வினனான இறைவன்றன் அளப்பரிய மாட்சியினை அன்பர்கட்கு ஒரு சிறிதாயினும் விளங்கவைத்து அவரை மகிழ்வித்ததே யாம் பெற்ற பேறேனக் கருதி இறைவன் றிருவடிக்கு எமது புல்லிய வணக்கத்தைச் செலுத்தி, இந்நூலைத் தமிழுணர்ந்தார் எல்லார்க்கும் பயன்படும்படி அவர் எல்லாரிடையும் உய்க்கின்றேம். பல்லாவரம், மறைமலையடிகள் பொதுநிலைக் கழகநிலையம், திருவள்ளுவர் ஆண்டு 1970, ஆனி, 32. பொழுதுகள் : பெரும்பொழுது, சிறுபொழுது பெரும்பொழுது : 6 பருவங்கள் பருவங்கள் மாதங்கள் 1. கார் காலம் : மடங்கல் (ஆவணி), கன்னி (புரட்டாசி). 2. கூதிர்காலம் : துலை (ஐப்பசி), நளி (கார்த்திகை). 3. முன்பனிக் காலம் : சிலை (மார்கழி), சுறவம் (தை). 4. பின்பனிக் காலம் : கும்பம் (மாசி), மீனம் (பங்குனி). 5. இளவேனில் காலம் : மேழம் (சித்திரை), விடை (வைகாசி). 6. முதிர்வேனில் காலம் : ஆடவை (ஆனி), கடகம் (ஆடி). சிறுபொழுது வைகறை (நள்ளிரவு) : 2-6 காலை : 6 -10 நண்பகல் : 10 - 2 எற்பாடு (சாயுங்காலம்) : 2-6 மாலை : 6-10 இரவு (யாமம்) : 10-2 தமிழில் மாதங்கள் தை - சுறவம் மாசி - கும்பம் பங்குனி - மீனம் சித்திரை - மேழம் வைகாசி - விடை ஆனி - ஆடவை ஆடி - கடகம் ஆவணி - மடங்கல் புரட்டாசி - கன்னி ஐப்பசி - துலை (துலாம்) கார்த்திகை - நளி மார்கழி - சிலை தமிழ் கிழமைகள் திங்கள் - திங்கள்கிழமை செவ்வாய் - செவ்வாய்க்கிழமை புதன் - அறிவன் கிழமை வியாழன் - வியாழக்கிழமை வெள்ளி - வெள்ளிக்கிழமை சனி - காரிக்கிழமை ஞாயிறு - ஞாயிற்றுக்கிழமை பிழைதிருத்தக் குறியீடுகள் தொடர்ச்சியாக வரச் செய் திருப்பிப்போடு இடநிரப்பியை அழுத்து மொக்கை எழுத்தை மாற்று X நீக்கி விடு d/ விட்டுப்போனதைச் சேர் இடம் விடு # இடவெளியை ஒன்றுபோல் செய் சிறிய இட நிரப்பியைப் போடு சொற்களை இணை இறங்கியிருப்பதைத் தூக்கு தூக்கியிருப்பதை இறக்கு வரியை நேர்செய் /// புள்ளியைப் போடு . காற்புள்ளியைப் போடு , அரைப்புள்ளியைப் போடு : முக்காற் புள்ளியைப் போடு ; / ஒற்றை மேற்கோள்குறி போடு இரட்டை மேற்கோள் குறி போடு இணைப்புக் குறியை சேர் _ இட அல்லது வலப்புறம் நகர்த்து [ or ] ஆசிரியரின் விளக்கம் தேவை ? ஓர் `எம் இடநிரப்பி போடு ஓர் `எம் கோட்டைப் போடு இரண்டு `எம் கோட்டைப் போடு புதிய பத்தி பிரி பத்தி வேண்டியதில்லை no தவறான எழுத்து wf அப்படியே இருக்கட்டும் stet மாற்றி அமை trs பெரிய தலைப்பெழுத்தைப் போடு caps சிறிய தலைப்பெழுத்தைப் போடு sc கீழ்வகுப்பு எழுத்தைப்போடு lc சாய்வெழுத்தைப் போடு itals ரோமன் எழுத்தைப் போடு rom புரட்டிப் போடு t.o மறைமலையடிகள் எழுதிய நூல்கள் (காலமுறைப்படி) 1. முதற் குறள் வாத நிராகரணம் 1898 2. சித்தாந்த ஞானபோதம்- சதமணிக் கோவை 1898 3. துகளறு போதம் 1898 4. முனிமொழிப் பிரகாசிகை 1899 5. வேதாந்த மத விசாரம் 1899 6. வேத சிவாகமப் பிரமாண்யம் 1900 7. திருவொற்றியூர் முருகர் மும்மணிக்கோவை 1900 8. சோமசுந்தரக் காஞ்சியும், காஞ்சியாக்கமும் 1901 9. ஞானசாகரம் 1902 10. முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரை 1903 11. பட்டினப்பாலை ஆராய்ச்சி உரை 1906 12. சைவசித்தாந்த ஞானபோதம் 1906 13. பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும் 1906 14. முன்பனிக்கால உபந்நியாசம் 1906 15. சாகுந்தல நாடகம் 1907 16. சிந்தனைக் கட்டுரைகள் 1908 17. மரணத்தின் பின் மனிதர்நிலை 1911 18. குமுதவல்லி நாகநாட்டரசி 1911 19. சாதிவேற்றுமையும் போலிச்சைவரும் 1913 20. கோகிலாம்பாள் கடிதங்கள் 1921 21. பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் 1921 22. அறிவுரைக் கொத்து 1921 23. யோக நித்திரை அல்லது அறிதுயில் 1922 24. வேளாளர் நாகரிகம் 1923 25. மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 1930 26. மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை 1933 27. சாகுந்தல நாடக ஆராய்ச்சி 1934 28. சிறுவர்க்கான செந்தமிழ் 1934 29. தொலைவிலுணர்தல் 1935 30. மாணிக்கவாசகர் மாட்சி 1935 31. முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவர் 1936 32. தமிழ்நாட்டவரும் மேல்நாட்டவரும் 1936 33. இந்தி பொது மொழியா? 1937 34. மனிதவசியம் (அ) மனக்கவர்ச்சி 1937 35. பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் 1938 36. திருவாசக விரிவுரை 1940 37. தமிழர் மதம் 1941 38. கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா 1948 39. திருக்குறள் ஆராய்ச்சி 1951 40. மாணிக்கவாசகர் வரலாறு 1952 41. அம்பிகாபதி அமராபதி 1954 42. இளைஞர்க்கான இன்றமிழ் 1957 43. மறைமலையடிகளார் கடிதங்கள் 1957 44. சோமசுந்தர நாயகர் வரலாறு 1957 45. சிவஞான போத ஆராய்ச்சி 1958 46. அறிவுரைக்கோவை 1971 47. உரைமணிக் கோவை 1972 48. கருத்தோவியம் 1976 49. மறைமலையடிகள் பாமணிக்கோவை 1977 ஆங்கில நூல்கள்: 50. Oriental Mystic Myna bi Monthly 1908 51. Ocean of Wisdom’ bi Monthly 1935 52. The Concemption of God Rudhra 1935 53. The Tamilian and Aryan Forms of Marriage 1936 54. Ancient and Modern Tamil poets 1937 55. Can Hindi be the Lingu franca of India? 1937 56.Saiva Siddhanta as a Philosophy of Practical Knowledge 1940 மேலே கண்ட வரிசை எண் 1இல் முதற் குறள் வாத நிராகரணம், 2இல் சித்தாந்த ஞானபோதம் சதமணிக் கோவைஉரை, 3இல் துகளறு போதம், 6இல் வேதசிவாகமப் பிரமாண்யம் இந் நான்கு நூல்களும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஆதலான், இத் தலைப்புள்ள நூல்கள் மறைமலையம் தொகுப்பில் இடம்பெறவில்லை.