kiwkiya«-- 24 (தனித்தமிழியக்க நூற்றாண்டு வெளியீடு) சமயம் – 5  மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் (தொகுதி -3) ஆசிரியர் மும்மொழிச்செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் தமிழ்மண் முதல்பதிப்பு : 2015 பக்கம் : 8+328 = 336 விலை : 420/- மறைமலையம் - 24 ஆசிரியர் மும்மொழிச் செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் வெளியீடு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. bjh.ng.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: elavazhagantm@gmail.com jhŸ : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 336 f£lik¥ò : இயல்பு  படிகள் : 1000 üyh¡f« : வி. சித்திரா   அட்டை வடிவமைப்பு : கவிபாகர்   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006, மற்றும் பிராசசு இந்தியா, திருவல்லிக்கேணி - 600 005. யான் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான நூல்களில் ஆராய்ந்து கண்ட முடிவுகளை நூல்களாக எழுதியிருக்கின்றேன். பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்தது போல, உண்மை காணும் உணர்ச்சியினால் நடுநிலை நின்று ஆராய்ந்திருக்கின்றேன். ஒருவர் தம் வாழ்நாள் முழுவதும் கற்றாலும் அறியமுடியாத உண்மைகளை எல்லாம் எளிதாக எழுதி வைத்திருக்கின்றேன். எல்லாரும் தமிழ் இலக்கியங்கள் யாவற்றையும் கற்கும் தொல்லையை மேற்கொள்ள வேண்டிய தில்லை, அது முடியவும் முடியாது, தேவையுமில்லை. எல்லா நூல்களிலும் உள்ள சிறந்த உண்மைகளை எல்லாம் பிழி சாறாக யான் வடித்துத் தந்துள்ளேன். என் நூல்களைப் படித்தாற்போதும், அதனால், தமிழ் முழுதுங் கற்ற பயனை அடையலாம். - மறைமலையடிகள் சான்றிதழ் நாகை - திரு. வேதாசலம் பிள்ளையவர்கள் ஒருபோது திருவனந்தபுரத்தில் ஒருவாரந் தங்கியிருந்த ஞான்று, அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்ததற்குச் சாலவும் மகிழ்கின்றேம். வருங்காலத் தமிழ் மக்களுக்கு மட்டற்ற தமிழ்ப்புலமை மிகுந்து வருமென்பதற்குச் சான்றாக இவர் இளமையிலேயே நுண்மாண் நுழைபுலம் உடையராயிருப்பது களிப்பூட்டுகிறது. மற்றும் தாய்மொழிப் பற்றுக் குறைந்த இக்காலத்தில், இவர் தமது நுண்ணறிவைத் தமிழ் நூல்களில் முற்றும் செலுத்தி நன்காராய்ந்துள்ளதும் பாராட்டற்குரியது. பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவகசிந்தாமணி முதலிய பழந்தமிழ் நூல்களில் ஆராய்ச்சியுடன் கூடிய இவர்தம் அறிவுடைமையே என்னை இவர்பால் மதிப்புறுமாறு செய்தது. தமிழாசிரியர்களின் தொகை சுருங்கிவரும் இக்காலத்தில் இவருக்குச் சிறந்த ஊக்கமளித்தால் இவர் ஒரு சிறந்த தமிழாசிரியராவாரென்று நாம் உறுதியாக நம்புகின்றேம். முன்னரே இரண்டாந்தரக் கல்லூரிகளில் தமிழ்கற்பிக்கப் போதுமான அளவு இலக்கண இலக்கியத்திற் சிறந்த தேர்ச்சி பெற்றவராயிருக்கின்றாரெனக் கருதுகின்றோம். Fiwªj msÉš v~¥, V., (F.A.) வகுப்புக்குரிய ஆங்கில அறிவு பெற்றாரானால் மேல்நாட்டு முறைப்படி தமிழ் நூல்களை வரலாற்றுச் சான்றுடன் ஆராயவும் எழுதவும் வல்லுநராவாரென்பது எம்முடைய சிறந்த எண்ணம். வண்ணாரப்பேட்டை மனோன்மணீயம் பெ. சுந்தரம்பிள்ளை திருநெல்வேலி தமிழ்த்தாய் வாழ்த்தின் ஆசிரியர் 2-12-1895 (இந்த நற்சான்று திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் சுந்தரம் பிள்ளையவர்கள் பேராசிரியராக இருந்தபோது கொடுக்கப் பெற்றது.) புகழ் மாலை வாழ்த்தாத நாளில்லை வையகம் மறைமலையடிகள் மறையாத் திருப் பெயர் - வாழ்த். ஆழ்ந்து கடலில் முத்தெடுப் பார் போல் அகன்ற உலக இலக்கியம் அனைத்திலும் வீழ்ந்து பொருளுண்மை விளக்கும் ஆற்றலால் வெல்ல முடியாத நல்லா சிரியனை - வாழ்த். தென்னாடு சார்ந்த குமரிப் பெருநிலம் திரைகடல் மறந்த உண்மைச் செய்திக்குப் பொன்னேடு காட்டும் புலவர்க்குக் புலவனைப் பொழுதெல்லாம் தமிழுக் குழைத்த தலைவனை - வாழ்த. மறையெனப்படுவது தமிழ் நான் மறைநூல் மற்றை மறைநூல் பின்வந்த குறைநூல் முறையாய் இவைகட்குச் சான்றுகள் காட்டி முழக்கஞ் செய்த முத்தமிழ் அறிஞனை - வாழத். - பாவேந்தர் பாரதிதாசனார். நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் ரோசா முத்தையா நூலகம் - சென்னை. புலவர் கா. இளமுருகன் - புன்செய் புளியம்பட்டி (மறைமலையடிகள் மன்றம்) மறை. தாயுமானவன் - சென்னை (மறைமலையடிகளின் பேரன்) பிழை திருத்த உதவியோர்: திரு. அ. மதிவாணன் (ஆங்கிலம்) திரு. க. கருப்பையா திரு. புலவர். த. ஆறுமுகம் புலவர். மு. இராசவேலு திரு. இராசுகுமார் திரு. நாக. சொக்கலிங்கம் முனைவர்.க. சுப்ரமணியன் திருமதி. அ. கோகிலா திருமதி. உசா செல்வி. அபிராமி நூல் உருவாக்கம் கணினி செய்தோர்: âUkâ வி. சித்திரா திருமதி மலர் திருமதி செல்வி திருமதி ஹேமலதா திரு. ஆசம் திருமதி கலைவாணி பிராசசு இந்தியா திருமதி`புகழ்ச்செல்வி கயல்விழி (Process India), நூல் வடிவமைப்பு: திருமதி வி. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: கவி பாகர் நூலாக்கத்திற்கு உதவியோர் இரா. பரமேசுவரன், க. இளந்திராவிடன், வே. தனசேகரன், கு. மருது, இல. தருமராசன் தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை -1 எதிர்மம் (Negative): பிராசசு இந்தியா (Process India) சென்னை-5. அச்சடிப்பு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு மற்றும் பிராசசு இந்தியா `மறைமலையம் எல்லா நிலையிலும் செப்பமுற வெளி வருவதற்குப் பல்லாற்றானும் உதவியாக இருந்த இவர்களுக்கும் மற்றும் அறிஞர் பெருமக்களுக்கும் எம் நிறைந்த நன்றியும் பாராட்டும். மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் தொகுதி - 3 பொருளடக்கம் பக்கம் 21. மாணிக்கவாசகர் குறித்த 3 கடைச்சங்க காலம் 22. முச்சங்க வரலாறும் தொல்காப்பிய காலமும் 49 23. தொல்காப்பிய காலத் தொடர்ச்சி 124 24. இறையனாரகப் பொருளுரை யாராய்ச்சித் தொடர்பு 162 25. கடைச்சங்க காலத் தொடர்ச்சி 188 26. திருத்தொண்டத்தொகையும் திருவாதவூரடிகளும் 200 27. அப்பர் சம்பந்தர் இருந்த கால ஆராய்ச்சி 223 28. மாணிக்கவாசகர் காலத் திட்டமுடிபு 257 மாணிக்கவாசகர் காலம் முதற்பகுதி 287 மாணிக்கவாசகர் காலம் இரண்டாம் பகுதி 304 21. மாணிக்கவாசகர் குறித்த கடைச்சங்க காலம் இனி, மாணிக்கவாசகர் காலத்தை ஆராய்ந்தாருள் ஒருசாரார், அடிகள் தாம் அருளிய திருச்சிற்றம்பலக் கோவையார் இருபதாஞ் செய்யுளில், உயர்மதிற் கூடலின் ஆய்ந்த ஒண்டீந் தமிழின் துறை என்று தமிழாராய்ந்த மதுரைச் சங்கத்தைக் குறிப்பிட் டிருத்தலின், அவர் அம் மதுரைத் தமிழ்ச்சங்கம் இருந்த கி.பி. எட்டாம் நூற்றாண்டிற்குப் பின்னே இருந்தோ ராவரென உரைத்தார். இஞ்ஞான்று செய்யப்படுங் கல்வெட்டு ஆராய்ச்சி யானும் நூலாராய்ச்சியானும் கி.பி. ஆறாம் நூற்றாண்டிலும் ஏழாம் நூற்றாண்டின் இடையிலும் இருந்தவராக ஐயுறவுக்கு இடனின்றித் துணியப்பட்ட திருநாவுக்கரசு நாயனாரும் திருஞானசம்பந்த மூர்த்திகளும் தாம் அருளிச்செய்த திருப்பதிகங்களில், நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம்ஏறி நற்கனகக் கிழிதருமிக் கருளினோன்காண் (திருப்புத்தூர்,3) எனவும், புகலி ஞானசம்பந்தன் உரைசெய் சங்கமலி செந்தமிழ்கள் (திருத்தேவூர்) அற்றன்றி யந்தண் மதுரைத் தொகையாக்கினானும் (பொது) எனவும் மதுரைத் தமிழ்ச்சங்கந் தமக்கு முன்னிருந்ததனைத் தெளிவுறக் குறிப்பிட்டிருத்தல் கொண்டு, அது கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்கு முன்னமே யிருந்தமை தெளியப்படுதலின், அஃது எட்டாம் நூற்றாண்டில் இருந்ததென உரைத்தாருரை பெரிய தொரு தலைதடுமாற்றவுரையாம். ஆகவே, அப் பிழைபாட்டுரை கொண்டு மாணிக்கவாசகர் ஒன்பதாம் நூற்றாண்டிலிருந் தாரென்ற தூஉம் பெரிதும் பிழைபடுவதாமென மறுக்க. இனிச், சேரன்செங்குட்டுவன் என்னும் தமிழ் நூலை ஆக்கியோரும், `தென்னிந்திய சைனமத ஆராய்ச்சிகள்1 என்னும் ஆங்கில நூலை ஆக்கியோரும் மதுரைத் தமிழ்ச் சங்கம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட தாகாது எனக் கூறினாராகலின், அச்சங்கத்தைக் குறிப்பிட்ட மாணிக்கவாசகர் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் இருந்தா ரெனல் பொருந்தாதாம் பிறவெனின்; அவ்விருவர் தங்கூற்றுக்களும் உண்மைக்கு மாறாதலை விளக்கிக் காட்டும் முகத்தால், அடிகள் குறிப்பிட்ட மதுரைத் தமிழ்ச் சங்கம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்கு முற்பட்டிருந்தமை தெளிவுறுத்துதும், கி.பி. 470 ஆம் ஆண்டின் வஜ்ரநந்தி என்பவரால் ஒரு தமிழ்ச்சங்கந் தென்மதுரையில் நிலைபெறுத்தப்பட்டதெனத் `திகம்பரதரிசனம் என்னுஞ் சமண்நூல் கூறும் வரலாற்றினை அவ்விருவருந் தாம் இயற்றிய நூல்களில் எடுத்துக்காட்டி அதனை உண்மை யெனத் தழுவி யிருக்கின்றனர்.2 அங்ஙனம் ஒரு தமிழ்ச்சங்கம் நிலை பெறுத்த வேண்டிற்றானது என்னையென நுனித்து ஆராயின், அதற்கு முன்னிருந்த கடைச்சங்கம் அழிந்து பட்டுத் தமிழாராய்ச்சியுந் தமிழ்வளர்ச்சியும் நிலைகுலைந்து போனமையினாலேயா மென்பது புலப்படும். அற்றேல், முன்னிருந்த கடைச்சங்கம் அவ்வாறழிந்து படவுந் தமிழ் நிலைதடுமாறவும் நேர்ந்த இடுக்கண்கள் யாவையோவெனிற் கூறுதும். கண்ணகி கொழுநன் கோவலனை, அஞ்ஞான்று மதுரையில் அரசுபுரிந்த `ஆரியப்படைகடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் என்னும் மன்னன் ஆராயாது கொலை செய்வித்துத் தான்செய்த அப்பிழையினைக் கண்ணகி எடுத்துக்காட்டிய வழிப்பெரிதும் ஏங்கி அரியணையில் இருந்தபடியே உயிர் துறந்தான்; அதுகண்டு அவன்றன் மனைவியும் உயிர்துறந்தாள். கண்ணகியோ தன் கணவனையிழந்த துயரமும் அரசன் தன் கணவனை நடுவின்றிக் கொன்றதனால் உண்டாய பெருஞ்சினமும் பொறாளாய்த் தன் கொங்கைகளுள் ஒன்றைத் திருகி மதுரைமேல் எறிய, அந் நகரந் தீப்பற்றிக் கொண்டது. நகரத்தில் உள்ளார் பலமுகமாய் உயிர்பிழைத்தோடினார். அப்போது ஆங்கிருந்த கடைச்சங்கப் புலவர்களும் அங்ஙனமே அந் நகரத்தைவிட்டுப் பலவாறாய்ப் பிரிந்து போயினர். அச் சங்கப் புலவருள் ஒருவரான மதுரைக் கூலவாணிகன் சாத்தனாரும் அங்கிருக்க மாட்டாமல், அப்போது மலை நாட்டை அரசுபுரிந்த சேரன் செங்குட்டுவனையடைந்து துறவுபூண்ட நல்லிசைப் புலவரும் செங்குட்டுவன் தம்பியுமாய இளங்கோ வடிகளோடு அளவளாவியிருந்தனர். பாண்டி நாடோ அரசனை யிழந்தமையினாலும், தன் தலைநகர் தீப்பற்றி எரியுண்டமை யினாலும், மழைவறங்கூர்ந்து வறுமையெய்தி வெப்பு நோயுங் குருவுந் தொடரப்3 பெரிது வருந்திற்று. கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன் பின்னர் அரசுக்கு வந்தான்; வந்தும் அரசியல் ஒழுங்குபெறவில்லை. இதற்கு முன்னெல்லாம் பேராற்றலுடையராய் விளங்கிய பாண்டிய அரசரது வலிமையும் இப்போது மங்குவதாயிற்று. கவலையாற் பெரிது நைந்து வெற்றிவேற் செழியனும் இறந்துபட, அவற்குப்பின் `உக்கிரப்பெருவழுதி என்பான் அரசுக்கு வந்தான். பாண்டிய அரசில் நேர்ந்த இக் குழப்பங்களை யெல்லாம் நேரே கண்டவரான சாத்தனாரும் இளங்கோ வடிகளும் சிலப்பதிகார மணிமேகலைகளில் அவற்றை நன்கெடுத்துக் கூறுதல் காண்க. இவ் `உக்கிரப்பெருவழுதியுங் `கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதியும் வெவ்வேறு பாண்டி மன்னராவ ரென்பது பகுத்துணர்ந்து கொள்ளல் வேண்டும். உக்கிரப் பெருவழுதி `மணிமேகலை ஆசிரியர் கூலவாணிகன் சாத்தனார்க்குப் பின்னே ».ã.மூன்wh« நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்தோனாவன். கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதியோ திருக்குறள் அரங்கேறிய காலத்திற் கூலவாணிகன் சாத்தனாரோடு அதனை ஒருங்கிருந்து கேட்டு அதற்குச் சிறப்புப்பாயிரஞ் சொன்னோன் ஆவன். திருக்குறள் அரங்கேறிய ஞான்று கபிலர், இடைக்காடனார், முதலான நல்லிசைப்புலவர் ஆண்டில் மிக முதியராயும், பரணர், கூலவாணிகன் சாத்தனார் முதலான நல்லிசைப் புலவர் ஆண்டில் மிக இளைஞராயும் இருந்தாரெனல் ஆராய்ச்சியாற் புலனாதலின், திருக்குறள் அரங்கேறிய காலம் கி.பி.முதல் நூற்றாண்டின் பிற்பாதியிலிருத்தல் வேண்டுமென உணர்ந்து கொள்க; ஆகவே, கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி கி.பி. முதல் நூற்றாண்டிலிருந் தோனாவனென்பதூஉம் கருத்திற் பதிக்கற்பாற்று. கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்த உக்கிரப் பெருவழுதி பாண்டிய அரசு நிலைகுலைந்த காலத்தில் இருந்தவனாதலின், அவன் வலிமையிற் சிறந்த `வேங்கை மார்பன் என்னுங் குறுநில மன்னனை வென்று அவனது கானப்பேரெயிலைக் கைக்கொண்டா னென்பது சிறிதும் பொருந்தாது. அதுவேயுமன்றிக், கி.பி.முதல் நூற்றாண்டின் இறுதிவரையி லிருந்தவராகப் புலப்படும் ஔவையாராற் பாடப்பட்டோன் `கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெரு வழுதியேயாகல் வேண்டுமல்லாற், கி.பி. மூன்றாம் நூற்றாண் டிலிருந்த உக்கிரப்பெருவழுதி யாகாமையும் உணரற்பாற்று. இவ்வாற்றாற் கி.பி.முதல் நூற்றாண்டின் பிற்பாதியிலிருந்து, சேரன் செங்குட்டுவனது காலமாகிய கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பாதி வரையிலிருந்த பரணருங் கூலவாணிகன் சாத்தனாரும் நீண்ட காலம் அஃதாவது தொண்ணுறு அல்லது நூறாண்டுக்கு மேல் உயிர்வாழ்ந்தா ராதல் வேண்டும்; இது முன்னும் 491, 492 ஆம் பக்கங்களில் விளக்கிக்காட்டினாம். அது நிற்க. காலத்தால் வேறுபட்ட இவ்விருவேறு உக்கிரப் பெருவழுதிகளையும் ஒருவரேயென இஞ்ஞான்றைப் புலவர்கள் மயங்கிக் கொண்டமையால் நேர்ந்த குழப்பங்களும் பிழைபாடுகளும் பல. அதுகிடக்க. இனி, கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்த உக்கிரப்பெருவழுதி தனக்குமுன் நிலைகுலைந்த தமிழ்ச் சங்கத்தை மீண்டும் ஒருங்குகூட்டி நிலைபெறுத்த முயன்றி ருக்கலாம்; ஆனால், அம்முயற்சி கைகூடிற்றில்லையாதல் வேண்டும். கோவலனைக் கொல்வித்த காலந்தொட்டுப் பாண்டியரது அரசிற் பல குழப்பங்களும் இடர்ப்பாடுகளும் அடுத்தடுத்து நேர்ந்தன. தமிழ்நாட்டுக்குப் புறம்பே வடக்கிருந்த வடுகக்கருநாடர் பாண்டியநாட்டைக் கைப் பற்றுதற்கு இதற்கு முன் முயன்றும் அஞ்ஞான்றெல்லாம் பாண்டிவேந்தர் மிகவும் வலியராயிருந்தமையின் அஃதவர்க்குக் கைகூடிற்றில்லை. ஆனாற் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு துவங்கிப் பாண்டியரது ஆற்றல் குறைந்தமையிற் சோழமன்னரது துணைபெற்று வடுகக்கரு நாடர் பாண்டிய அரசர்மேற் படையெடுத்து வந்த வரலாறுகளை மேலே 262 பக்கம் முதல் 272 பக்கம் வரையில் வைத்து நன்கு விளக்கிக் காட்டி யிருக்கின்றேம். உக்கிரப்பெருவழுதிக்குப் பின் அரசுக்கு வந்த வரகுணபாண்டியன் சிவபிரான் திருவடிக்கண் மெய்யன்புடையவனே யன்றிப், பேராண்மையில் மிக்கோன் அல்லன்; அதனால் அவன் தன்மேற் படை யெடுத்துவந்த சோழனை இறைவனருளால் துரத்தினமையும், அங்ஙனமே அவ்வரகுணன் மகன் அரசுக்குவந்த ஞான்றும் வடுகக்கருநாடர் அவன்மேற் படையெடுத்துவர அவனும் போர்த்திறம் இல்லானாகலின் இறைவனருளால் அவர் தம்மைத் துரத்தினமையும், அவனுக்குப் பின் அரசுக்குவந்த வரகுணன் பேரன் காலத்தில் மீண்டும் அவ் வடுகக் கருநாடர் படையெடுத்து வந்து அவளைக் கொன்று பாண்டிய அரசைக் கைப்பற்றிக் கொண்டமையும் ஆங்கே விளக்கிப் போந்தாம். அவைகொண்டு கிபி. மூன்றாம் நூற்றாண்டு முதல் அதன்முடிவு வரையில் அரசுபுரிந்த பாண்டி மன்னர்களின் அரசு செவ்வனே நடைபெறாமையினாலும், அயன்மன்னராற் கலக்குறுத்தப் பட்டமையினாலும் அந் நூற்றாண்டிலிருந்த பாண்டிமன்னர், தமக்கு முன்னே கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பாதியில் நிலைகுலைந்த மதுரைத் தமிழ்ச்சங்கத்தை மீண்டுங் கூட்டி நிலைநிறுத்த மாட்டாராயினர். மற்றுக் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியிற் பாண்டிநாட்டிற் புகுந்து, பாண்டியனரசை வௌவிய வடுகக் கருநாடரோ தமிழ்மொழிக்கு உரியரல்ல ராகலின், அவரும் நிலைகுலைந்த தமிழ்ச் சங்கத்தைப் பெயர்த்தும் உருப்படுத்திவைத்தாரல்லர்; மேலும், அக்கருநட அரசர் சமண்மதத்தினராகலிற் பாண்டி நாட்டிலிருந்த சிவபிரான் திருக்கோயில்களில் வழிபாடு நடக்க வொட்டாமல் அவற்றை அடைப்பித்துவிட்டன ரெனக் கல்லாடநூல் கூறுவதூஉம் நினைவிற் பதிக்கற்பாற்று. இக்கருநடரது ஆட்சிக் காலந் தொட்டுத்தான் சமண்மதந் தமிழ்நாட்டில் மிக்குப் பரவலாயிற்று. திருஞானசம்பந்தர் காலத்தில், அஃதாவது கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பாதியில் இருந்த கூன்பாண்டியன் முதலிற் சமண்மதத் தினனாயிருந்து பின்னர்த் திருஞானசம்பந்தப் பெருமானாற் சைவ சமயத்திற்குத் திருப்பப்பட்ட வரலாற்றினை உற்று நோக்குவார்க்குங் கி.பி. நான்காம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து ஏழாம் நூற்றாண்டின் நடுவரையிற் சமண் மதம் பாண்டிநாட்டில் மிக்குப் பரவியிருந்தமை புலனாம். இவ்வாறு வடுகக் கருநாடராகிய களப்பிரரால் பாண்டியரரசு சிலகாலங் கவர்ந்துகொள்ளப்பட்டமை வேள்விக் குடிப் பட்டயத்தாலும் புலனாதலிற் `கல்லாடம், `பெரியபுராணம், `நம்பியார் திருவிளையாடல் என்னும் பழைய தமிழ்நூல்கள் மூன்றானும் நுவலப்பட்ட இக் கருநடரது பாண்டிநாட்டு ஆட்சி சிறிதும் ஐயுறற்பாலதன்றென்க. இனி, இக் கருநடரது ஆட்சி மதுரையில் நிலைபெற்ற காலம் கி.பி.நான்காம் நூற்றாண்டுமுதல் ஐந்தாம் நூற்றாண்டின் ஈறுவரையிலாதல் வேண்டும். ஏனெனில், வேள்விக்குடிப் பட்டயத்திற் சொல்லப்பட்ட `கடுங்கோன் என்பவனைத் தலைக்கொண்டு தொடங்கிய புதுப்பாண்டிய மரபு ஆறாம் நூற்றாண்டின் நடுவிலிருந்து மதுரையில் அரசாளலான செய்தி அப் பட்டயத்தால் அறியக்கிடத் தலானும், அப் பாண்டிமரபு தொடங்குதற்கு முன்மதுரையை வௌவிய கருநடரது ஆட்சி கால்வழியற்று மாய்ந்துபோக அப்போது பாண்டிய அரசர் மரபில் எவரும்இன்மையின் மூர்த்திநாயனார் என்பவர் மதுரை மாநகர்க்கு அரசராக அந் நகரினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி கல்லாடம் 57 ஆஞ் செய்யுளில் நுவலப்படுதலானும், அம் மூர்த்தி நாயனாரது அரசு கடுங்கோனுக்கு முன் ஆறாம் நூற்றாண்டின் முற்பாதியில் நடைபெற்றதாகல் வேண்டுமாத லானும் என்பது. மேலும் `வஜ்ரநந்தி என்னுஞ் சமண்முனிவர் கி.பி. 470 ஆம் ஆண்டில் மதுரையின் கண்ணே ஒரு தமிழ்ச்சங்கம் நிலைபெறுவித்தா ரென்னும் வரலாற்றின் உண்மையை நோக்குங்கால், சமண் மதத்தவனாகிய கருநட அரசனது ஆட்சி மதுரையில் அப்பொழுது நிலை பெற்றிருந்தமையும் சமண் மதத்தினர் கூட்டம் அங்கு மிக்கிருந்தமையும் நன்குபுலனாம். தம்மதத்தினர் தொகைப் பெருக்கமும், தமது முயற்சி பயன் படுதற்குத் தம் அரசனது உதவியும் இருந்தாலன்றிச், சைவர்கள் மிகுந்துள்ள அந்நகரில் ஒரு சமண்முனிவர் அங்ஙனம் ஒரு தமிழ்க்கழகம் நிலைநிறுத்தல் இயலாதாகலின், அவ்வைந்தாம் நூற்றாண்டின், பிற்பாதி முடிய மதுரையிற் கருநட அரசரது ஆட்சி யிருந்தமை தேற்றமாம். அற்றாயினுங், கி.பி.நான்காம் நூற்றாண்டின் றொடக்கத்திலேயே கருநட அரசரது ஆட்சி மதுரையில் நிலைபெற் றிருப்பவும், அப் போதே அத்தகையதொரு தமிழ்ச்சங்கம் அங்கு ஏற்படுத்தப்படாமல், ஏறக்குறைய அவரதுஆட்சியின் முடிவுக்காலமாகிய ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அஃது ஏற்படுத்தப்பட்ட வாறென்னையெனின்; மதக்கோட்பாட்டிற் சமணராயும் பேசும்மொழியில் வடுகராயும் உள்ள இவ் வேற்று நாட்டரசர், சைவ சமயத்தவராய்ப் பண்டுதொட்டுச் செந்தமிழ் வழங்குவார் நிறைந்த பாண்டிநாட்டுட் புகுந்து அங்கு வழிவழி ஆண்ட பாண்டியரரசை வௌவித் தமதரசை நிலைபெறுத்தல் வேண்டினராயின், தம் அரசர்பால் நேயம் நிரம்பவைத்த தமிழ்க்குடிகட்கும் அப்புதிய கருநட அரசர்க்கும் எத்துணைப் போராட்டம் எவ்வளவு காலம் நிகழ்ந்திருத்தல் வேண்டும்! இப்போராட்டங்களெல்லாந் தணிந்து அப் புதிய அரசரும், இப் பழைய தமிழ்க்குடிகளும் ஒருமைப்படுதற்கும், அவருடன் போந்து குடியேறிய சமண்மதத்தவரும் இங்கிருந்த சைவரும் ஒருங்குகூடித் தமக்குள்ள வேறுபாடுகளை நிரவிக் கொள்ளு தற்கும் ஏறக்குறைய ஒன்றரை நூற்றாண்டுகள் சென்றிருக்க வேண்டுமாகலின், வஜ்ரநந்தி என்பார் வகுத்த தமிழ்ச்சங்கம் அவ்வாறு அக் கருநட அரசரது ஆட்சிக்கால முடிவைநோக்கி எழுதுவ தாயிற்றென்க. மேலும்அவ்வரசர் தமிழுக்குந் தமிழ்க் கொள்கைக்கும் புறம்பானவராகலின், அவர் பாண்டி நாட்டைக் கைக்கொண்ட காலத்திற் கடைச் சங்கம் மதுரையிலிருந்தாலும் அவர் அதனைப் பாதுகாத்திரார். அன்றி அதனைப் பாது காத்திருந்தனராயின், வஜ்ரநந்தி என்னுஞ் சமண்முனிவராற் புதியதொரு தமிழ்க்கழகம் நிலைநாட்ட வேண்டுவதும் இன்றாம். அதுவேயும் அன்றி, இங்குள்ள பழந்தமிழ்ப் புலவரைக்கொண்டு ஒரு தமிழ்க் கழகம் புதுக்காமல், தம் மதத்தவராகிய வஜ்ரநந்தியைக் கொண்டு அங்ஙனம் அதனை நிறுவினமையாலும், அவ்வரசர் இங்கிருந்த தமிழ்ப் புலவர்பால் அன்புடையரல்ல ரென்பது பெற்றாம். பெறவே, கருநட அரசரது ஆட்சி மதுரையிற் றுவங்கிய கி.பி. நான்காம் நூற்றாண்டிலும், அதற்குப் பின்னுங் கடைச்சங்கம் அங்கிருந்ததில்லை யென்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்குதல் காண்க. அங்ஙனமே அவர் வருதற்குமுன் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் நடைபெற்ற பாண்டிய அரசு மழையின்மை யானும் நோயானும் அரசியற் குழப்பங்களானும் பெரிதும் வலிகுன்றி வருந்தினமையின், இரண்டாம் நூற்றாண்டில் மதுரை எரியுண்டமையாற் கலைந்த கடைச் சங்கப் புலவரை அது மீண்டும் ஒருங்குகூட்டி அதனை நடைபெறுவிக்க மாட்டாதாயிற்று; ஆகவே, கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலுங் கடைச்சங்கம் மதுரையில் இருந்திலாமை தெளியப்படும்; படவே, கடைச்சங்ககாலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் அது முடிவெய்துதற்குமுன் நிகழ்ந்ததாகுமெனக் கடைப் பிடித்துணர்ந்து கொள்க. இவ்வாறு கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் ஐந்தாம் நூற்றாண்டின் நடுவெல்லை காறும் நிகழ்ந்த பல்வேறு மாறுதல் நிகழ்ச்சிகளை வரலாற்று முறையின் நன்காய்ந்துணராமற் `சேரன் செங்குட்டுவன் நூலாரும், அவரைப் பின்பற்றித் `தென்னிந்திய சைனமத ஆராய்ச்சி நூலாருங் கடைச்சங்கம் இருந்தது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலே யாம் என் றுரைத்தவுரை உண்மை வரலாற்றுடன் மாறுகொள்ளும் போலியுரையாமென உணர்ந்துகொள்க. இனிச், சோழன் கரிகாலன் காலத்தும் அதற்கு முன்னும் இருந்த மாமூலனா ரென்னும் ஆசிரியர் அகநானூற்றில் பாடிய, வெல்கொடித், துனைகாலன்ன புனைதேர்க் கோசர் தொன்மூ தாலத்து அரும்பணைப் பொதியில் இன்னிசை முரசங் கடிப்பிகுத் திரங்கத் தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர் பணியா மையிற் பகைதலை வந்த மாகெழு தானை வம்ப மோரியர் புனைதேர் நேமி யுருளிய குறைத்த இலங்குவெள் ளருவி அறைவாய் (251) என்னுஞ் செய்யுட்களில் வடநாட்டிலிருந்த மோரிய அரசர் தென்னாட்டின்மேற் படையெடுத்துவந்த ஞான்று, மோகூரில் இருந்த தமிழ் மன்னன் அவரைப் பணிந்து அவர்க்குத் திறைகொடாமையின் அவனது ஊரின் வடவெல்லையில் அரணாய்த் தடைசெய்திருந்த மலைப் பாறையைக் குறைத்து மட்டமாக்கித் தாம் வருதற்கு வழியுண்டாக்கினர் என்னும் வரலாறு கூறப்பட்டிருத்தலை, அவ் விருவரும் எடுத்துக்காட்டி, இதன்கட் குறிப்பிடப்பட்ட மோகூர்மன்னன் என்பான், சேரன் செங்குட்டுவனால் தோல்வியுற்ற `பழையன் மாறனே யாதல் வேண்டுமெனவும், அவ்வாறாகவே மாமூலனார் சேரன் செங்குட்டுவன் காலத்தவராகவும் பெறப்படுதலின் அவராற் சொல்லப்பட்ட மோரியரது படையெடுப்பு இச் சேரவேந்தன் காலத்திலேயே நிகழ்ந்ததாகல் வேண்டுமெனவுங், கிறித்து பிறப்பதற்கு முந்நூறு ஆண்டுகளுக்குமுன் வடநாட்டில் அரசுபுரிந்த `சந்திரகுப்த அரசனே மோரியமரபுக்கு முதல்வனாகலின் அவனாவது அவன்றன் மகன் `பிந்துசார னாவது சேரன்செங்குட்டுவன் காலத்தில் தென்னாட்டின்மேற் படையெடுத்துவந்தா ரென்பது பொருந்தாதெனவும், கிறித்துவுக்குப்பின் முதல்வனான மற்றொரு `சந்திரகுப்த னின் மகனான `சமுத்ரகுப்தன் என்பவனே தென்னாட்டிற் காஞ்சிநகர் வரையிற் படையெடுத்து வந்தமை வரலாற்று நூல்களால் நன்கறியக் கிடத்தலின் இங்ஙனம் வந்த இக்குப்த மரபினரையே மாமூலனாரும் அவர் காலத்திருந்த ஏனைப் புலவர் சிலரும் பிழைபாடாக `மோரியர் என்று கூறினரெனவும், ஆகவே இக் குப்தமரபினர் படை யெடுப்பைக் குறிப்பிட்ட மாமூலனாரும் அவரோடுடனிருந்த மற்றைக் கடைச்சங்கப்புலவரும் அவர் தமிழாராய்ந்த கடைச்சங்கமு மெல்லாங் கி.பி.நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேனும் ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியிலேனும் இருந்ததாகல் வேண்டுமெனவும் உரை நிகழ்த்தினார். இவை தம்மை யாராய்ந்து இவருரைத்த இவ்வுரை பொருந்தாமை காட்டுவாம். முதற்கண் ஆராயற்பாலது, மோரியர் தமிழ்நாட்டின் மேற்படையெடுத்துவந்த ஞான்று அவரொடு பகைத்து அவரைப் பணியாமல் இருந்தோன் `பழையன்மாறன் றானோ என்பதேயாம். ஆசிரியர் மாமூலனார் தாம் பாடிய அகநானூற்றுச் செய்யுட்கள் இரண்டில்மட்டும் 251, 281)`மோரியர் தென்னாட்டின்மேற் படையெடுத்துவந்த செய்தியினைக் குறித்திருக்கின்றார்; அவ் விரண்டுள்ளும் மேலே காட்டிய செய்யுளில் மட்டுமே மோகூர் மன்னன் அம்மோரியரைப் பணியாமை கூறினார்; இங்ஙனங் கூறியவழி வறிதே `மோகூர் என்று மொழிந்தனரே யன்றி,அம்மன்னன்பெயர் `பழையன் மாறன் என்று மொழிந்தனரல்லர். அங்ஙனமிருக்க மோரியர் வந்த ஞான்று மோகூரில் அரசியற்றினோன் பழையன் மாறனே யென்று `சேரன் செங்குட்டுவன் நூலார் கூறுதற்குச் சான்றென்னை? இம்மோரியரது வரவினை அகநானூற்றிற் கூறிய (99) மற்றொரு புலவர் பரங்கொற்றனாராவது, அதனைப் புறநானூற்றிற் கூறிய (175) ஆத்திரையனாராவது அம் மோரியரைப் பகைத்துப் பணியாதிருந்தோன் பழையன் மாறனே யென்று கூறினரா? அங்ஙனம் ஏதும் இல்லையே. அற்றன்று, பழையன் மோகூர் அவையகம் விளங்க நான்மொழிக் கோசர் தோன்றி யன்ன (508, 509) என்று மதுரைக்காஞ்சியுட் சொல்லப்படுதலின், அப்போது மோகூரிலிருந்தோன் பழையன்மாறனே என்பது பெறப்படுமா லெனின்; இம் மதுரைக்காஞ்சியுட் சொல்லப் பட்டதுகொண்டு, அதனை யியற்றிய `மாங்குடி மருதனார் காலத்தில் மோகூரிலிருந்தோன் `பழையன் என்பது மட்டும் பெறப்படுமே யல்லாமல் மோரியர் வந்த காலத்தும் அவ்வூரிலிருந்தோன் பழையனேயென்பது பெறப்படா தாகலின், அவ்வாறு கொள்ளுதல் பொருந்தாதென மறுக்க. அஃதொக்குமாயினும், கரிகாற்பெருவளத்தான் காலத்திற்கும் முற்பட்ட `தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் காலத்தில் மோகூரிற் `பழையன் என்னுஞ் சிற்றரசன் ஒருவன் இருந்தமை நுவலப் பட்டவாறுபோலவே, அப் பாண்டி யனுக்கு ஒரு நூற்றாண்டு பிற்பட்டிருந்த `சேரன் செங்குட்டுவன் காலத்தும் மோகூரிற் `பழையன் என்பான் ஒருவன் இருந்தமை பதிற்றுப்பத்தின் 44, 49 ஆஞ் செய்யுட்களினும் 50 ஆஞ் செய்யுளின் பதிகத்தினும் நுவலப்பட்ட வாறென்னையெனின்; ஒருவன்தன் தந்தையின் பெயரைத் தன் மகற்கிட்டு வழங்குதல் பண்டுதொட்டு இத் தென்றமிழ் நாட்டின்கண் நடைபெற்றுவரும் வழக்கென்பது சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே என்பதனால் நன்குணரக் கிடத்தலின், மாங்குடி மருதனார் காலத்தில் மோகூரிலிருந்த `பழையன் பாட்டன் ஆவன் எனவும், சேரன்செங்குட்டுவன் காலத்தில் அதன்கணிருந்த `பழையன் அவற்குப் பேரன் ஆவனெனவும் பகுத்தறிந்து கொள்க. இவ்வாறு பகுத்தறிய மாட்டாமையிற் `சேரன்செங்குட்டுவன் நூலாரும் அவரைப் பின்பற்றிய சமண் நூலாரும் அவ் விருவேறு `பழையரையும் ஒன்றுபடுத்திச் செய்த குழப்பங்கள் சாலப்பல. அற்றாயினும், நான்மொழிக்கோசர் என்பார் மோரியரொடு சேர்ந்து அவர்க்கு முற்படையாய்ப் போந்து `மோகூர்ப் பழையனைத்தாக்கின வரலாற்றை மேலெடுத்துக் காட்டிய செய்யுளில் மாமூலனார் கூறியிருத்தல் கொண்டும், அங்ஙனமே `மதுரைக் காஞ்சியில் மாங்குடி மருதனார் கூறியிருத்தல் கொண்டும் மோரியர் கோசரை முன்னணியாய் விடுத்துத் தாக்கியது மோகூரிலிருந்த பழையனையேயாம் என்று அச் சமண்மத ஆராய்ச்சி நூலார் உரைத்தது பொருத்தமே யாமெனின்; அது பொருத்தமன்று ஆசிரியர் மாமூலனார் தாம் பாடிய அகநானூற்றுச் செய்யுள் மற்றொன்றில் (281), கனைகுரல் இசைக்கும் விரைசெலற் கடுங்கணை முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர் தென்றிசை மாதிரம் முன்னிய விரவிற்கு என மோரியர் வடுகரை முன்றுணையாய்க் கொண்டு வந்தனரென்று மொழிந்தாற்போல, அவர் கோசரையும் முன்றுணையாய்க்கொண்டு வந்தனரென யாண்டும் மொழிந்தார் அல்லர். ஏனைத் தமிழாசிரியராதல் அக் கோசரை மோரியர்க்குத் துணைவரென்றேனும், பழையன் மாறனை அவர் தாக்கினாரென்றேனும் யாண்டுங் கூறக் காண்கிலேம். மற்று, அக்கோசர் பழையன் மோகூர் அவையகம் விளங்கத் தோன்றின ரெனவே மதுரைக்காஞ்சி புகலாநிற்கின்றது; அவர் பழையனுக்குப் பகைஞராய்ப் புகுந்தனரென்றால், அவனது அவையகம் அழியப்புகுந்தன ரென்றன்றோ கூறுதல் வேண்டும், அவ்வாறின்றி அவனது அவையகம் விளங்கப் புகுந்தனரென்று கூறுதல் ஒக்குமோ? மற்று அஃது அவர் அவனது அவையகம் விளங்கப் புகுந்தனரென்றுரைக்கும் பரிசினை உற்றுநோக்கும்வழி, அக்கோசர் மோகூர்ப் பழையனுக்கு நண்பரே யல்லாமற் பகைஞரல்லரென்பது இனிது புலனாதலின், அவரை மோரியர்க்குத் துணைப்போந்தாரென்பது பெரியதொரு பிழைபாட்டுரையாம். அற்றேல், மாமூலனார், வெல்கொடித், துனைகாலன்ன என்று பாடிய மேற்காட்டிய செய்யு ளடிகட்குப் பொரு ளென்னையெனின்; வென்றெடுத்த கொடியினையும், விரைந்து செல்லுங் காற்றையொத்த ஒப்பனைசெய்த தேரினையும் உடைய கோசரது பழையதாய் முதிர்ந்த ஆலமரத்தின் கேடில்லாத கிளைகளின் கீழுள்ள அம்பலத்தின்கண்ணே, இனிய இசையையுடைய முரசங் குறுந்தடியால் அறையப்பட்டு ஒலிக்கப், பகை மேற்கொண்டு வந்து ஓரிடத்தும் நிலை பெறுதலில்லாத மோரிய அரசர் தமக்குப் பகையாய அக்கோசரது போர் முனையை அழித்தநாளிலும் மோகூர் மன்னன் தமக்குப் பணியாமை கண்டு யானை குதிரைகளையுடைய தமது படையின் புனைதேர் உருள்கள் அவனது ஊர்மேல் தடைப்படாது உருண்டுசெல்லும் பொருட்டு மட்டமாக்கிய, விளங்கும் வெள்ளிய அருவிகள் இழியும் மலைப்பாறைகளிடத்து என்பதே மேலெடுத்துக் காட்டிய அவ் வடிகட்குப் பொருளாகும். இதனால், வடக்கிருந்து வந்த மோரியஅரசர், தெற்கின்கண் உள்ள கோசரது ஆலமரத்தின்கீழுள்ள அம்பலத்தின் கண்ணே அக்கோசரொடு பொருது அவரைத் தோல்விபெறச் செய்தா ரென்பதூஉம், தமக்குத் துணைவரான கோசர் தோல்வியுற்றதைக் கேட்டும் அஞ்ஞான்று மோகூரிலிருந்த மன்னன் அஞ்சி அம்மோரிய அரசரைப் பணியாமையின் அவனையுந் தாக்குதற் பொருட்டுப் படையெழுந்த அம்மோரியர் இடையே தடையாய் நின்ற மலைப்பாறைகளை மட்டமாக்கி வழியுண்டாக்கின ரென்பதூஉம் பெறப்படுகின்றன அல்லவோ? மாமூலனார் கூறிய கோசர் மோகூர் மன்னர்க்கு வழிவழி நண்பரென்பது இவர் கூறியவாற்றானேயன்றி, `மதுரைக் காஞ்சியில் மாங்குடி மருதனார் கூறியவாற்றானும் பெறப்படுதல் காண்க. மேலும், இக்கோசர் என்பார் வாய்மையிற் றவறாத படைமறவ ரென்பதும், துளுநாட்டையும் செல்லூரையும் ஆலமரத்துப் பொதியிலையுங் கொங்குநாட்டையும் இருப்பிடமாகக்கொண்டு வாழ்தல் பற்றி நாலூர்க்கோசர் (குறுந்தொகை, 15) நான்மொழிக்கோசர்4 (மதுரைக்காஞ்சி 509)என்று வழங்கப்படுவரென்பதும் பழைய நூல்களால் நன்கறியக்கிடக்கின்றன ஆகவே, இக்கோசரை முன்றுணையாகக்கொண்டு மோரிய அரசர் மோகூர்ப் பழையனைத் தாக்கினாரென அச்சமண்மத ஆராய்ச்சி நூலாரும் பிறரும் உரைத்தவுரை பழையநூற் சான்றுகளுக்கு முற்றும் முரணாதலின்அது கொள்ளற்பால தன்றென மறுக்க. இனி, இந் நாலூர்க்கோசர் மோகூர் மன்னர்க்கு வழிவழி நண்பரென்பது மேற்காட்டியவாற்றால் நன்குவிளங்குதலின், மாமூலனார் தாம் பாடிய அகநானூற்றுச் செய்யுள் 251 இல் அக் கோசரையும் மோரிய அரசரையும் மோகூர் மன்னனையும் ஒருங்கெடுத்துக் கூறுதல் ஒன்றேகொண்டு, அக்கோசரொடு தொடர்புடையோன் மோகூரில் ஒரு காலத்தி லரசாண்ட பழையனே என்றல் ஒருசிறிதும் பொருந்தாது. அக் கோசர்தம் மூதாதைகளும் மோகூர் மன்னர்தம் மூதாதைகளும் நட்பிற் பிணிப்புண்டோராதல் பற்றிய, அவ் விருவர்தம் வழித்தோன் றினாரும் அங்ஙனம் நட்புரிமையிற் சிறந்து விளங்கினர்; ஆதலாற், கோசர் என்பாரின் தொடர்பு காணப்படுதல் ஒன்றேகொண்டு, மாமூலனார் கூறிய மோகூர் மன்னன் பழையனேயென்று முடிபு கட்டுதல் பெரியதொரு பிழைபாடாமென்க. மற்று,மோரியர் படையெடுத்துத் தன்மேல் வந்த காலத்து அவரைப் பணியாதிருந்த மோகூர் மன்னன் இன்னானென்று மாமூலனார் அவனது பெயரையெடுத்து மொழிந்திடாமையின், அம் மோரிய அரசர் வந்த காலத்தில் மோகூரிலிருந்தோன் பழையனுக்குப் பல தலைமுறை முற்பட்டோன் ஆவனென்பதே துணிபொருளாமென்க. மேலும், அம் மோரிய அரசர் தென்னாட்டின்மேற் படையெடுத்து வந்தசெய்தியை மாமூலனார் தங்காலத்து நிகழ்ந்ததென நிகழ்காலத்தின் வைத்துரையாமல், தெம் முனை சிதைத்த ஞான்றைஎனவுங், குறைத்தஎனவும் இறந்த காலத்தின் வைத்துரைத்தலிற் கி.பி. முதல் நூற்றாண்டின் முற்பாதியிலிருந்த அம் மாமூலனார்க்கு முந்நூற்றாண்டு முற்பட்டிருந்த மோரிய அரசனான பிந்துசாரனே அங்ஙனம் படையெடுத்து வந்தவனா மென்பது தெளிபொருளாகும். அதுவேயுமன்றிச் `சந்திரகுப்தன் என்னும் முதல் மோரிய அரசற்குமுன் பாடலிபுரத்திற் (கி.மு.413) இல் அரசாண்ட நந்த5 அரசர் கங்கையாற்றின் அடிப்படையில் ஒளித்துவைத்த நிதியத்திரளை அம் மாமூலனாரே அகநானூற்றில், நந்தன் வெறுக்கை யெய்தினும் (251) எனவும், பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர் சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை நீர்முதற் கரந்த நிதியங் கொல்லோ (265) எனவுங் கூறக்காண்டலின், அவ் வடநாட்டுச் செய்தியும், அதனையடுத்து நிகழ்ந்த மோரியரது தென்னாட்டுப் படையெடுப்பும் மாமூலனார்க்கு முந்நூறாண்டு முற்பட்டன வாதல் ஐயுறவின்றித் துணியப்படும் என்க. மேலும் மோரியரது படையெடுப்பினையும், அம்மோரிய அரசர்க்குமுன் பாடலிபுரத்தை ஆண்ட நந்த அரசரது பெரும் பொருட்டிரளையும், அப் பொருட்டிரளை அவர் கங்கை யாற்றின் அடிப்படையில் மறைத்துவைத்த வரலாற்றையும் ஆசிரியர் மாமூலனார் பிழைபடாது உரைப்பக்காண்டலின், இவர் தங் காலத்துக்கு முற்பட்ட வடநாட்டு நிகழ்ச்சிகளை நன்குணர்ந்தவராகவே காணப்படுகின்றார். இங்ஙனமிருக்க, கி.பி. 320 ஆம் ஆண்டிற் றுவங்கிய `குப்தமரபுக்கு முதல்வனான மற்றொரு சந்திரகுப்தனின் மகனான சமுத்ர குப்தன் என்பான் தமிழ்நாட்டின்மேற் படையெடுத்துப்போந்த செய்தியினையே பிழைபாடாக `மோரியரது படையெடுப்பென்று கருதி ஆசிரியர் மாமூலனார் பாடிவிட்டனரெனச் `சேரன்செங்குட்டுவன் நூலார் அவ் வாசிரியர்க்கு ஓர் அறியாமையேற்றினார். கிறித்து பிறப்பதற்கு 322 ஆண்டுகட்கு முன் சந்திரகுப்தனைத் தலைவனாய்க்கொண்டு துவங்கிய மரபே `மோரியவமிசம் எனப்பட்டதென்பதும், கிறித்து பிறந்தபின் 320 ஆம் ஆண்டில் மற்றொரு சந்திரகுப்தனைத் தலைவனாய்க் கொண்டு துவங்கிய மரபோ `குப்தவமிசம் எனப்பட்ட தென்பதும் வரலாற்று நூலாராற் பகுத்துவைத்துக் காட்டப்பட்டதோர் உண்மையாம். கி.பி. 320 இல் துவங்கிய மரபுக்கு `மோரியவமிசம் என்னும் பெயர் வழங்கப்பட வில்லையென்பது `சேரன்செங்குட்டுவன் நூலாரும் உடன்பட்டதொன்றாம். ஆசிரியர் மாமூலனார் தாமிருந்த காலத்திற் படையெடுத்துப்போந்த மன்னன் குப்த மரபினைச் சேர்ந்தவனாயிருப்பின் அதனை அவர் எளிதிலே யறிந் துரைத்தற்கு இடன்உண்டு; குப்தமரபில் வந்த அரசர் அனைவருந் தம்மைக் குப்தமரபின்பாற் படுத்து வழங்கினாரே யல்லாமல், மோரிய மரபின்பாற் படுத்து வழங்கினரல்லர்; ஆகவே, தங்காலத்து வந்த மன்னன் குப்த மரபினனாயிருந்தால், அவர் அம்மரபின் பெயரையே தமது பாட்டின்கண் எடுத்துமொழிந்திருப்பர். மேலும் குப்த மரபினன் காலத்திருந் தவராயின் அம் மரபை அவர் தெரிந்துகொள்ளாது, அம் மரபினர்க்கு அறுநூறு ஆண்டு முற்பட்டிருந்த `மோரியமரபை அவர் நினைந்துஅப் பெயரைக் குப்த மரபினர்மேற் பிழையாக ஏற்றிக் கூறினா ரென்றல் சிறிதும் பொருத்தமில் கூற்றாம். தமது காலத்தை யடுத்திருந்த தொன்றாயின் ஒருகால்அவர் அதனை நினைந்து பிழைத்து வழங்கினாரென்றல் சிறிது பொருந்தினும் பொருந்தும். மோரிய மரபினரது படையெடுப்பை அவர் இறந்த காலத்தின் கண் வைத்து ஓதுதலின், அஃது அவர் காலத்திற்கு முற்பட்டதாதல் பெறப்படும். படவே, அவர் அம்மோரிய மரபிற்குப் பின்னிருந்தோராதலுந் தானே பெறப்படும். மோரியரது படையெடுப்பைப் போற் குப்த மரபினரது படையெடுப்பை அவர் யாண்டும் ஓதாமை யானும், அவர் காலத்திருந்த ஏனை நல்லிசைப் புலவராகிய பரணரும் (அகநானூறு, 69) பரங்கொற்றனார் ஆத்திரை யனாரும் மோரியரது படையெடுப்பினையே தாம் பாடிய செய்யுட்களிற் குறிப்பிட்டனரன்றிக் குப்தமரபினரது படையெடுப்பினை ஓரிடத்தாயினும் குறிப்பிடாமையானும், இந் நல்லிசைப் புலவரெல்லாருங் குப்தமரபினரை மோரிய மரபினராகப் பிழைபடுத்துரைத்தார் என்றலினும் பெரியதோர் அறிவில் கூற்றுப் பிறிதொன்று இன்றாமா கலானும், அங்ஙனம் பண்டை நல்லிசைப் புலவராகிய மாமூலனார், பரணர், பரங்கொற்றனார், ஆத்திரையனார் முதலியோரால் எடுத்துரைக்கப்பட்டது, கிறித்து பிறப்பதற்கு முந்நூறாண்டு முற்பட்டு நிகழ்ந்த மோரியரது படையெடுப்பே யல்லாமற், கிறித்து பிறந்த முந்நூறாண்டிற்குப்பின் நிகழ்ந்த குப்த அரசரது படையெடுப்பு அன்றெனக் கடைப் பிடித்துணர்ந்து கொள்க. ஆகவே, இவை யெல்லாம் ஆய்ந்து பாரா துரைத்த `சேரன் செங்குட்டுவன் நூலாரது உரை வழுக்குரையே யாமென விடுக்க. இனிச், சமுத்ரகுப்தன் என்னுங் குப்த அரசனால் வெல்லப்பட்ட அரசர்களின் பெயர் அவ்வரசனே வெட்டு வித்த கல்வெட்டுக்களிற் காணப்படுகின்றன. அங்ஙனம் அவனால் வெல்லப்பட்டோருள் `மண்டராஜா என்பவனும் ஒருவனாகச் சொல்லப்படுகின்றான். கல்வெட்டில் `மண்டராஜா என்று பொறிக்கப்பட்டிருக்கும் பெயரைச்,6 `சேரன்செங்குட்டுவன் நூலார்தங் கருத்து நிரம்புமாறு `மாந்தராஜா (சேரன் செங்குட்டுவன், பக்கம், 171) எனத் திரித்துப் `புறநானூறு முதலான பழைய தமிழ்நூல்களான் அறியப்படும் `மாந்தரன் எனப் பெயர் பூண்ட சேரமன்னர் இருவரில் முதலிலிருந் தோனே சமுத்ரகுப்தனால் வெல்லப் பட்டோனாதல் வேண்டுமெனவும், அதனால் அம்மாந்தரனுக்குப் பின்னர் அரசுபுரிந்த சேரன்செங்குட்டுவனும் அவன் காலத்துப் புலவர்களும் எல்லாம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியி லிருந்தோராதல் வேண்டு மெனவும், ஆகவே கடைச்சங்க காலமும் ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியேயா மெனவுங் கூறினார். சமுத்ர குப்தன் இத்தென்னாட்டின் கீழ்கரைப் பக்கமாய்ப் படையெடுத்து வந்தவனே யல்லாமல் மேல்கரைப் பக்கமாய் வந்தவன் அல்லன். அங்ஙனங் கீழ்கரைப் பக்கமாய் வந்தபோது, அவன் கலிங்கநாட்டின் தலைநகரான `பிஷ்டபுரத்தையும், கஞ்ச மாகாணத்திலுள்ள `மகேந்திரகிரி, `கோட்டூர் என்னும் மலைக்கோட்டைகளையுங் கைக்கொண்டு, கோதாவரி கிருஷ்ணா என்னும் ஆறுகளுக்கு இடையிலுள்ள `கொல்லேரு ஏரியின் கரைக் கண்ணதான நாட்டில் அரசுபுரிந்த `மண்டராஜா என்பவனையும், அவனுக்கு அருகில் `வேங்கை நகரத்தை அரசாண்ட மன்னனையும் வென்று, அதன்பின் தெற்கு நோக்கிப் புகுந்து காஞ்சிபுரத்திற் செங்கோல் ஓச்சிய `விஷ்ணு கோபனையுந் தனக்கு அடங்கச் செய்து, அதன்பின் மேற்கு முகமாய்த் திரும்பி நெல்லூர் மாகாணத்தில் உள்ள `பாலக்க அரசனான `உக்ரசேனனையுந், தக்காணத்தின் மேல்பா லுள்ள `தேவராஷ் டிரம், `ஏரண்டப்பல்ல என்னும் நகரங் களையுந் தன்கீழ்ப் படுத்துக்கொண்டு, தனது தலைநகராகிய `பாடலிபுரம் போய்ச் சேர்ந்தான். தமிழ்நாட்டின்கண் தொண்டை நாட்டைத் தவிரச் சோழ பாண்டிய சேரநாடு களுக்கு இவன் சென்றன னென்பது இவன் வெட்டுவித்த கல்வெட்டுக்களில் ஒரு சிறிதுங் குறிக்கப்படவில்லை. அக் கல்வெட்டுக்களில் காணப்பட்ட சொற்களுட் `கௌராளக் என்னும் ஒரு சொல்லுக்குச் சிலர் `கேரளம் எனப் பிழையாகப் பொருள்செய்து கொண்டதனையே `சேரன் செங்குட்டுவன் நூலார் தாம் பிடித்த பிழைக்கொள்கையை நாட்டுதற்குப் பெருந் துணையாய்க் கொண்டார். பின்வந்த ஆராய்ச்சிக் காரரால் அச் சொல்லுக்குத் திருத்தமான பொருள் காணப்பட்டதும், அது `கொல்லேரு என்னும் ஏரிக்கரைப் பக்கத்ததான ஒருநாட்டைக் குறிப்பதும், அதன்கண் அரசு செலுத்தினவன் `மண்டராஜாவே7 யன்றி மாந்தராஜா அல்லன் என்பதும் அவர் சிறிதும் உணர்ந்திலர். தாங் கொண்ட பிழையானதொரு கோட்பாட்டை நாட்ட முயல்குவார், தாம் அதற்கெடுக்குஞ் சான்றுகளை யெல்லாந் திரித்துப் பிழைபடுத்துவர் என்பதற்குச் `சேரன் செங்குட்டுவன் நூலார் ஓர் எடுத்துக் காட்டாயினார் கண்டீர்! தமிழ் நாட்டின் மேல்கரைக் கண்ணதான மலைநாட்டை அரசுபுரிந்த `மாந்தரஞ் சேரல் என்னுந் தமிழ்வேந்தற்குங், கீழ்க்கரைக்கண் வடுகநாட்டின் ஒருசிறு பகுதியில் அரசாண்ட `மண்டராஜா என்பவற்கும் ஏதொரு தொடர்புங் காணப்படாமையின், தொடர்பில்லா அப்பெயர் களைத் தொடர்புபடுத்தி அவரெழுப்பிய போலிக்கொள்கை கீழே அடிப்படையின்மையின் நிலைபெறாது நுறுங்கிவிழுந் தழிந்தமை காண்க. `மாந்தரஞ்சேரல் என்னும் வேந்தன், வடமவண்ணக்கன் பேரிசாத்தனார் என்னும் புலவர் பெருமான் காலத்தவ னென்பது 125 ஆம் புறப்பாட்டால் இனிது விளங்கலானும், ஆசிரியர் நக்கீரனாராற் பாடப்பெற்ற `பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சியநன்மாறனை இவ்வடம வண்ணக்கன் பேரிசாத்தனாரும் பாடியிருத்தல் 198 ஆம் புறப்பாட்டாற் போதரலானும் கி.பி. முதல் நூற்றாண்டின் முற்பாதி யிலிருந்தவராக முன்னரே பெறப்பட்ட (579 ஆம் பக்கம்) நக்கீரனார் காலத்தில் `மாந்தரஞ் சேரல் இருந்தவனே யன்றிச், சேரன் செங்குட்டுவன் நூலார் பிழைபொதுளக் கூறுமாறு கி.பி.ஐந்தாம் நூற்றாண்டிலிருந்தவன் அல்லனென்று கடைப் பிடித்துணர்ந்து கொள்க. இனி, முன்னரெடுத்துக் காட்டிய பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர், சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை, நீர் முதற்கரந்த நிதியங் கொல்லோ என்னுந் தமது பாட்டில் ஆசிரியர் மாமூலனார் பாடலிநகர் கங்கையாற்றின் வெள்ளத்தால் அழிந்துபட்டதனைக் குறித்திருக்கின்றா ரெனவுங், கி.பி. நான்காம் நூற்றாண்டில் அங்குப் போந்து அந்நகரை நன்னிலையிற்கண்ட `பாகியான் என்னும் சீன அறிஞர் காலம் வரையில் அஃது அங்ஙனம் அழிந்துபட்ட தெனக் கூறுதற்கு இடம் இன்மையின், கி.பி. ஏழாம் நூற்றாண்டில் அங்குப் போந்து அதனை அழிந்து பட்டநிலைமையிற் கண்ட மற்றொரு சீன அறிஞரான ஹியூந்தாங் காலத்திற்கு முன்னரே அஃது அவ்வாறு அழிந்து பட்டதாகல் வேண்டு மெனவும், அவ்விருவர் காலத்திற்கும் இடையே அஃது இன்னகாலத் தழிந்ததென உறுதிப்படுத்துதற்குச் சான்றில்லையாயினுங் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் அதனழிவு நிகழ்ந்ததெனக் கருதுதல் இழுக்கா தெனவும், ஆகவே ஆசிரியர் மாமூலனாருங் கடைச் சங்கமும் இருந்தகாலங் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டே யாகல் வேண்டுமெனவுஞ் `சேரன் செங்குட்டுவன் நூலார் துணிந்துரைத்தார். ஆசிரியர் மாமூலனாரது மேற்காட்டிய செய்யுளடிகளிற், கங்கையாறு பாடலி நகரை அழித்த தென்னுஞ்செய்தி ஒரு சிறிதுங் கூறப்படவில்லை. அவ் வடிகளுக்குப் பொருள் வென்ற போராற் பல புகழ் நிறையப்பெற்ற நந்த அரசர் சிறப்பு மிகுந்த பாடலி நகரின்கண் தொகுத்துப், பின் பிறர் அறியாமைப் பொருட்டுக் கங்கையாற்று நீரின் அடியில் ஒளித்துவைத்த பொருட்டிரள் தானோ என்பதேயாம். இங்ஙனம் வெளிப்படையாகப் பெறக் கிடைக்கும் இச் செய்யுட் பொருளால், `நந்தர் எனப்படும்அரசர் திரண்ட பொருளைத் தமது பாடலி நகரின்கண் தொகுத்து வைத்தார்களென்பதும், அப் பொருட்டிரளினிருப்பைப் பகையரசர் அறிந்து அதனைக் கவர்ந்து கொள்ளாமைப் பொருட்டு அவர் கங்கையாற்றின் அடியிலே அறைகள் வெட்டிக் கட்டுவித்து அவற்றின்கண் அப் பொருண் முழுதும் ஒளித்து வைத்தார்களென்பதும் நன்கு விளங்குகின்றன. இச் செய்திக்கு முற்றும் இசைவான ஒரு வரலாறு, `சந்திரகுப்தன் என்னும் பெயர் தாங்கி வெளிவந்த வடுகுநூல் ஒன்றிலுஞ் சொல்லப்பட்டிருக்கின்றதென ஓர் அறிஞர் எடுத்துக் காட்டியிருக்கின்றார்.8 அதுவருமாறு: மகாபத்மன் மிக்க செல்வமுடையோன் நந்தனிடத்து `மகாபத்ம தனம் இருந்தமையால் அவன் அப்பெயர் பெற்றான். நூறுகோடி கொண்டது ஒரு பத்மம். ஆயிரம் பத்மங் கொண்டது ஒரு மகாபத்மம். இவன் தனது ஆண்மையால் நிலை நிறுத்திய மகதநாட்டிலிருந்து வரி கடமை காணிக்கைகளை அருளும் இரக்கமுமின்றிக் கவர்ந்து, அங்ஙனங் கவர்ந்த அப்பொருட்டிரளை யெல்லாங் குவியல் குவியலாகச் சேர்த்து வந்தமைபற்றி மிக்க செல்வனெனப் பெயர் பெற்றான். இவன் கங்கையாற்றின் நீரை ஒருபுறம் அணைகோலித் தடுத்து, அதனடியில் ஐந்து அறைகள் வெட்டுவித்து அவற்றை அழுத்தமான கற்சுவர்களால் அழியாதமைப்பித்து, அவற்றின் கண் அப் பொருட்டிரளை நிரப்பிப், பின்னர் உருக்கியோட்டிய ஈயத்தால் அவ்வறைகளை மூடுவித்து, அதன்பின் அணையை உடைப்பித்துக் கங்கை நீரை அவற்றின்மேல் ஓடச் செய்தனன் தமிழ்நாட்டிலே யன்றி வடுகுநாட்டிலுந் தொன்றுதொட்டு வழங்கிவந்த இவ் வரலாற்றின் இயல்பினை உற்றுநோக்குங்கால், இஃது இவ் விந்தியநாடு முழுதும் அஞ்ஞான்று பரம்பி வழங்கிய தொன்றாதல் நன்கு விளங்காநிற்கும். இதனானன்றே ஆசிரியர் மாமூலனார் `அகநானூற்றில் தாம்பாடிய மற்றையொரு செய்யுளிலும் (251) நந்தன் வெறுக்கை யெய்தினும் என்று நந்தனது பெருஞ்செல்வத்தை வியந்துரைத்தார். `வெறுக்கை எனினுஞ் செல்வமெனினும் ஒக்கும். இவ்வாற்றாற் `சேரன் செங்குட்டுவன் நூலார், நந்தர், பாடலிக் குழீஇக், கங்கை நீர்முதற் கரந்த நிதியம் என்னும் ஆசிரியர் மாமூலனாரது பாட்டுக்கு உண்மைப் பொருள் காண அறியாது, கங்கைநீர் பாடலியை அழித்ததென அதற்குப் பொருந்தாப் பொருளுரைத்து இழுக்கி யிடர்ப்பட்டமை தெற்றெனப் புலனாம். மாமூலனார் காலத்திற் பாடலிநகர் சிறப்புற்றிருந் தமை பற்றியே அதன்கண் நிகழ்ந்த செய்திகளைத் தெரிந்துரைத்தாராகலின், அதற்கு முரணாக அஃதழிந்து பட்ட காலத்தில் அவரிருந்தாரெனச் செங்குட்டுவன் நூலார் உரைத்த உரையும், அதுகொண்டு காட்டிய கோட்பாடும் பெரியதொரு தலைதடுமாற்றமாய் முடிந்தமை கண்டுகொள்க. இனி, அச் `சேரன் செங்குட்டுவன் நூலார் ஆசிரியர் நக்கீரனார் இருந்த காலத்தை ஆராயப்புகுந்து, பழையன் மாறன் கிள்ளிவளவனை வென்ற செய்தி `அகநானூறு 346 ஆஞ் செய்யுளில் நக்கீரனாராற் கூறப்படுதல் கொண்டும், அப் பழையன் மாறன்சேரன் செங்குட்டுவனொடு பொருந்தா னென்பது `பதிற்றுப்பத்தில் நுவலப்படுதல் கொண்டும் நக்கீரனார் சேரன்செங்குட்டுவன் காலத்தவராதல் வேண்டு மெனத் துணிந்துரைக்கின்றார். இனி, இவரது துணிவுரையின் பிழைபாடு இனைத் தென்பது ஆராய்ந்து காட்டுவாம்: மோகூர் மன்னன் என்னும் பெயரைக் கண்ட அளவானே அவன் `பழையன் மாறனே யாதல் வேண்டும் எனவும், `பழையனே மாறன் என்னும் பெயரைக் கண்ட அளவானே அவன் `சேரன் செங்குட்டுவ னோடு பொருத `பழையனேயாதல் வேண்டு மெனவும் ஆராயா முடிபுகட்டுதலில் மிக வல்லுநரான `சேரன் செங்குட்டுவன் நூலார் ஈண்டும் அங்ஙனமே ஆராயாது முடிபு கட்டுந் தமது வன்மையைக் காட்டுகின்றார். `பழையன் எனப் பெயர்பூண்ட சிற்றரசர் இருவர் மோகூரில் இருந்தன ரென்பதும், அவ் விருவரில் ஒருவன் `தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் காலத்திலும் மற்றொருவன் அப்பழையற்குப் பேரனாய் அவற்கு ஒரு நூற்றாண்டு பிற்பட்டுச் சேரன் செங்குட்டுவன் காலத்திலும் இருந்தனரென்பதை மேலே 599, 600 ஆம் பக்கங்களில் நன்கு விளக்கிக் காட்டினாம். மோகூரிற் `பழையன் என்னும் பெயர்பூண்டிருந்த இவ்விரு சிற்றரசரேயன்றிப், `போஓர் என்னும் மற்றோர் ஊரிற் பழையன் எனப்பெயர் பூண்டிருந்தசிற்றரசன் வேறொருவனும் உளன் என்பது அகநானூற்றிற் `பரணர் பாடிய 189, 326 ஆஞ் செய்யுட் களானும் நன்கறியப்படும். எனவே, தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் காலந் தொட்டுச் சேரன் செங்குட்டுவன் காலம் வரையில், மோகூரிற் பழையன் எனப் பெயர்பூண்ட சிற்றரர் இருவரும் போஓர் என்னும் ஊரில் அப் பெயர் பூண்ட சிற்றரசன் வேறொருவனும் ஆகப் `பழையர் மூவர் இருந்தமை பெறப்படுதல் காண்க. இங்ஙனமே, `கிள்ளிவளவன் எனப் பெயர்வாய்ந்த சோழ மன்னரும் அவ்வொரு நூற்றாண்டில் மூவர் இருந்தமை பழைய தமிழ்நூல்களால் நன்கு புலனாகின்றது. `புறநானூற்றின் 373 ஆஞ் செய்யுளாற் `குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் என்பான் ஒருவனும், 34, 35 முதலான பல செய்யுட்களாற் `குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஒருவனும், சிலப்பதிகாரத்தானும் (நீர்ப்படைக் காதை, 118), மணிமேகலை யானும் (25, 14) அந் நூலாசிரியர் காலத் திருந்தவனாகப் பெறப்படுங் `கிள்ளிவளவன் மற்றொருவனுமாக மூவர் பெறப்படு கின்றனர். கோவூர் கிழார், ஆவூர்மூலங்கிழார், இடைக் காடனார், மாறோக்கத்து நப்பசலையார் முதலான நல்லிசைப்புலவர் பலருங், கபிலர் என்னுஞ் சான்றோர் காலத்தவரென்பது நன்கறியக்கிடத்தலின், இப் புலவர் பெருமக்களாற் பாடப்பெற்ற முதலிரு கிள்ளிவளவருங் கி.பி. முதல் நூற்றாண்டின் முற்பகுதியி லிருந்தோராதலும், மூன்றாங் கிள்ளிவளவன், கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இடைக்காலத்திருந்தோனாதலும் இனிதுவிளங்காநிற்கும். மற்று ஆசிரியர் நக்கீரனாரோ ஆவூர்மூலங்கிழார், இடைக் காடனார் முதலான சான்றோர் காலத்தவர் என்பதை மேலே 579, 580 ஆம் பக்கங்களில் விளக்கிப் போந்தாம். ஆகவே நக்கீரனாராற் குறிப்பிடப்பட்ட பழையன் மாறனும், அவனாற் றோல்விபெற்ற கிள்ளிவளவனுங் கி.பி. முதல் நூற்றாண்டின் முற்பாதியிலிருந்த வேறுமன்னராதல் வேண்டுமே யன்றிச், சேரன் செங்குட்டு வனாற் றொலைவுண்ட பழையனும், அச் செங்குட்டுவற்கு மைத்துனனான கிள்ளிவளவனும் ஆகாரென்பதூஉந் தானே பெறப்படும். ஈதிங்ஙனமாகவுஞ், `சேரன்செங்குட்டுவன் நூலார் `கிள்ளிவளவன் என்னும் பெயரைக் கண்டதுணையானே அவ் வளவன் செங்குட்டுவன் மைத்துனனேயாதல் வேண்டுமென ஆராயாது முடிவு கட்டியது நிரம்பவும் பிழைபாடான தொன்றாம். மேலும் அவர், இவ் வளவன், கரிகாலனுக்கு மகனாதல் வேண்டுமெனவும் ஏதொரு சான்றுங் காட்டாது கூறினார் (சேரன்செங்குட்டுவன், பக்கம் 102) கரிகாற் பெருவளத்தானுக்கும் சேரன்செங்குட்டு வனுக்கும் இடையே இரண்டு தலைமுறை யாதல் சென்றதாகல் வேண்டுமென்பதை மேலே 491, 492 ஆம் பக்கங்களில் விளக்கிக்காட்டினாம். அதனால், மூன்றாங் கிள்ளிவளவன் கரிகாற் சோழனுக்குப் பேரனாகவாதல் பேரன் மகனாகவாதல் இருத்தல் வேண்டுமே யல்லாமல், அவனுக்கு மகனாதல் ஒருவாற்றானுஞ் செல்லாதென உணர்ந்துகொள்க. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் உறையூரைத் தலைநகராய்க் கொண்டு அரசுபுரிந்தோ னென்பது 39 ஆம் புறப்பாட்டால் அறியப்படு தலின், அவன் காலத்திற் புகார் நகரில் (காவிரிப்பூம்பட்டினத்தில்) அரசு செலுத்தின கரிகாற் சோழன் அவனுக்குத் தந்தையோ உடன்பிறந்தானோ ஆதல் வேண்டும். மற்றுக் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவனும் அக் காலத்தவனே யாதலின் அவன் கரிகாற் பெருவளத்தானுக்குப் பின் புகார் நகரில் அரசு புரிந்தோனா கற்பாலன். இவ்விரண்டாங் கிள்ளி வளவனுக்குப் பின் சோழன் கோச் செங்கணானும் அவனுக்குப்பின் மூன்றாங் கிள்ளிவளவனும் புகார் நகரிற் செங்கோல் செலுத்தினார் ஆகற்பாலார் `களவழி பாடிய பொய்கையார், கபிலர் காலத்தையடுத்தும் நக்கீரனார் காலத்தும் இருந்தவரென்பது 580 ஆம் பக்கத்திற் காட்டினே மாதலின், பொய்கையாராற் பாடப்பெற்ற கோச்செங்கணான், கரிகாற் பெருவளத் தானுக்குப் பின் அரசாண்டவன் எனக் கோடலே பொருத்தமாம் என்க. எனவே, செங்குட்டுவன் மைத்துனனான கிள்ளிவளவன், சோழன் கோச்செங்கணானுக்குப் பின் காவிரிப் பூம்பட்டினத்தில் அரசு செலுத்தினமை தெளிபொருளாகலின் இவன் கரிகாலனுக்குப் பேரன் முறைய னாகற்பாலனேயன்றி, மகன் முறையனாதல் ஒருவாற்றானுஞ் செல்லாதென விடுக்க. இனிக், கூடல் நகரில் பழையன் மாறனாற் சாய்ப்புண்ட கிள்ளிவளவன் `களவழி பாடிய பொய்கையார் காலத்தவன் என்பது, அங்ஙனம் அவன் சாய்ப்புண்டதனைக் கண்டு உளம் மகிழ்ந்த `கோக்கோதைமார்பன் என்னுஞ் சேரமன்னனை அப் பொய்கையார் பாடியிருத்தலே (புறநானூறு, 48, 49) சான்றாம். இக் கோக்கோதை மார்பனை நக்கீரனாருந்தமது செய்யுளிற் குறிப்பிட்டிருத்தலை மேலே காட்டினாம். ஆகவே, பழையன் மாறனாற் றோல்வியுற்ற கிள்ளிவளவன் கி.பி.முதல் நூற்றாண்டின் நடுவிலிருந்த நக்கீரனார் காலத்தவனேயன்றிக், கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்த இளங்கோவடிகளின் காலத்தவனான மூன்றாங் கிள்ளிவளவன் அல்லனென ஓர்ந்து கொள்க. மேலும், இம் மூன்றாங் கிள்ளிவளவனொடு பகைத்து இவற்குத் தீதுசெய்தோர் சோழர் குடியிற் பிறந்த ஒன்பது குறுநில மன்னரே யல்லாமற், பழையன் மாறன் அல்லன்; இது, நின், மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர் இளவரசு பொறாஅர் ஏவல் கேளார் வளநா டழிக்கும் மாண்பின ராதலின் ஒன்பதுகுடையும் ஒருபக லொழித்தவன் பொன்புனை திகிரி ஒருவழிப் படுத்தோய் (27,118 - 123) என்று சிலப்பதிகாரமும், ஆராச் செருவிற் சோழர்குடிக் குரியோன் ஒன்பதின்மர் வீழ வாயிற்புறத் திறுத்து (5,பதிகம்) என்று பதிற்றுப்பத்தும் நுவலுமாற்றான் அறிந்து கொள்ளப்படும். எனவே, பழையன் மாறனொடு பகைத்து வீழ்ந்தவன், மூன்றாங் கிள்ளிவளவனுக்குப் பாட்டனாகக் கருதப்படுதற்குரிய நக்கீரனார் காலத்துக் கிள்ளிவளவனே யென்பது தெளிபொருளாம் என்க. அற்றேல், மூன்றாங் கிள்ளிவளவனுக்கு மைத்துனனான சேரன்செங்குட்டுவன், மோகூர் மன்னன் பழையனைத் தாக்கினானென்னும் வரலாறும் உளதாலோவெனின்; தனக்குப் பகைவனாதல்பற்றி அவனை அவன் தாக்கினனென்பது சிலப்பதிகாரத்தானும் (27, 124 - 125), பதிற்றுப்பத்தானும் (5, 44, 49, பதிகம்) பெறப்படுகின்றதே யல்லாமல், கிள்ளிவளவனுக்குப் பகையாதல் பற்றித் தாக்கின னென்பது பெறப்படாமையால், அதுகொண்டு ஈண்டைக் காவதோர் இழுக்கில்லையென உணர்ந்து கொள்க. அதுவேயுமன்றிப் பெயர்க்கும், `பழையன் மாறன் என்னும் பெயர்க்கும் `பழையன் என்னும் பெயர்க்கும் உள்ள வேற்றுமையுங் கருதற் பாற்று. சேரன்செங்குட்டுவனால் தாக்குண்டோன் மேற்காட்டிய இரு நூல்களினும் `பழையன் எனப்பெயர் சொல்லப் பட்டானே யன்றிப் `பழையன் பழையன் மாறன் எனப் பெயர் சொல்லப்பட்டிலன். அகநானூற்றின் நக்கீரனார் செய்யுளிற் சொல்லப் பட்டவனோ, இழையணி யானைப் பழையன் மாறன் எனப் பெயர் சொல்லப்பட்டவனா யிருக்கின்றான்; மேலும், அப் பழையன்மாறன் மோகூர் மன்னன் என்பது அவரால் சொல்லப்படாமல் அவன் கூடன்மா நகரிலிருந்து கொண்டு ஆண்டு வந்தெதிர்த்த கிள்ளிவளவனைச் சாய்த்தனனென்றுந் துணையே சொல்லப்பட்டமையால் அப் பழையன் மாறன் பாண்டிய மன்னன் படைத் தலைவனேயாதல் உய்த்துணர்ந்து கொள்ளப்படும் நக்கீரனார் காலத்துப் பாண்டியனும் (இவன் `இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனாய்9 இருக்கலாம்) சேரமான் கோக்கோதைமார்பனுங் கூடலில் ஒருங்கு படைகூட்டிப் `பழையன் மாறனைப் படைத் தலைவனாய்க் கொண்டு நிற்க அவரை அஞ்ஞான்று வந்தெதிர்த்த `கிள்ளிவளவன் என்னுஞ் சோழனையே பழையன்மாறன் சாய்த்தானாகல் வேண்டும் என்று ஓர்ந்து கொள்க. இங்ஙனம் இவரை வந்தெதிர்த்த கிள்ளிவளவன், கரிகாற் சோழனுக்குப்பின் உறையூரிலாதல் புகாரிலாதல் அப்பெயர் பூண்டு அரசாண்ட இருவரில் ஒருவராதல் வேண்டுமென்பதூஉம் உய்த்துணரப் படும். படவே, பழையன் மாறனாற் சாய்ந்த கிள்ளிவளவன் பாட்டானும், சேரன் செங்குட்டுவன் மைத்துனனான கிள்ளிவளவன் பேரனும் ஆவராகலின், வேறுவேறான அவ் விருவரையும் ஒன்றுபடுத்திய `சேரன் செங்குட்டுவன் நூலாரது கோள்பெரியதொரு வழுக்கோளாமென விடுக்க. நக்கீரனாராற் சொல்லப்பட்ட பழையன் மாறனும், அவனாற் சாய்ப்புண்ட கிள்ளிவளவனும் சேரன்செங்குட்டுவன் காலத்தினர் அல்ல ரென்பது தெளியப்படவே, ஆசிரியர் நக்கீரனாரும் அச் சேரன் காலத்தவர் அல்லரென்பதூஉம், அவர் அவனுக்கு இரண்டு தலைமுறை முற்பட்டவராவ ரென்பதூஉந் தெளியப்படும்; படவே நக்கிரனாருஞ் செங்குட்டுவனும் ஒரு காலத்தவரென்ற சேரன் செங்குட்டுவன் நூலாருரை பொருந்தாவுரையானமை கண்டுகொள்க. இனிச், `சேரன்செங்குட்டுவன் நூலார், இறையனாரகப் பொருளுக்கு ஆசிரியர் நக்கீரனார் உரைத்த உரை யாரய்ச்சியில் இறங்கி, அவ்வுரை வாய்ப்பாடமாகப் பத்துத் தலைமுறை வரையில் ஓதப்பட்டுவந்து, இடையிடையே பல திரிவுபாடுகள் உடைத்தாய்க், கடை முறையாகக் கி.பி. எட்டாம் நூற்றாண் டிலேயே எழுத்துருவடைந்ததென்றும், தலைமுறையொன்றுக்கு முப்பதாண்டாகப் பத்துத் தலைமுறைக்கும் முந்நூறாண்டு கூட்ட நக்கீரனார் இருந்தது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற்கு மேற்படாதென்றுங் கூறினார். இவர் இவ்வாறு கூறாநிற்கத், `தமிழ்வரலாறு உடையாரோ இறையனாரகப் பொருளுரை ஊர் பெயர் தெரியாத ஒருவரால் எழுதப்பட்டதேயன்றி நக்கீரனாரால் எழுதப் பட்டதன்று (தமிழ்வரலாறு, பிற்பாகம், பக்கம், 21) என உரைப்பர். இவர் வழிச் சார்ந்தார் சிலரும் இங்ஙனமே உரையாநிற்பர். இற்றைக்கு இருபத்து நான்கு ஆண்டுகட்குமுன்னரே யாம் `சேரன் செங்குட்டுவன் நூலாரொடு வழக்கிட்டு, `இறை யனாரகப் பொருளுக்கு நக்கீரனார் வரைந்த உரையே இஞ்ஞான்றும் நடைபெறுகின்ற தெனவும், அவ் வுரையின் பாயிரப்பகுதியிற் சில உரைக் கூறுகளும், உரையின் இடை யிடையே கட்டளைக் கலித்துறைப் பாட்டுக்களும் பின் வந்தோராற் சேர்க்கப்பட்டிருத்தல் கொண்டு, அவ்வுரை முழுதும் நக்கீரனார் உரைத்தபடியாகவன்றிப் பெரிதுந் திரிபெய்தி வந்துளதென்றலும், அது வாய்ப்பாடமாக ஓதப்பட்டு வந்து பிற்காலத்தே தான் எழுத்துருவடைந்த தென்றலும் பொருந்தா எனவும் 1902 ஆம் ஆண்டு வெளிப்போந்த ஞானசாகர முதற்பதுமத்தின் 9, 10 ஆம் இதழ்களில் விரித்து விளக்கினேம். இறையனாரகப் பொருளுரை நக்கீரனார துரையென்றே நிறுவிய எம்முடைய ஏதுக்களை இதுகாறும் மறுத்தார் எவரும் இலர். யாங்காட்டிய ஏதுக்களை மறாமலும், எம்மால் மறுக்கப் பட்டொழிந்த தங் கூற்றுக்களைப் பெயர்த்தும் நிலை நிறுத்திக் கொள்ளாமலுந் தாம் முதலிற் கூறிய கூற்றுக்களையே திரும்பத் திரும்பக் கூறி அவ் விழுமியவுரை நக்கீரனாரது அன்று என்னும் ஒரு போலிக் கொள்கையினை எங்கும் பரப்புதலிலேயே எமக்கு மாறாவார் கருத்துற்று நிற்கின்றனர். பழைய செந்தமிழ் நூலுரைகளின் சொற்சுவை பொருட்சுவைகளில் ஊறி, அவ்வந் நூலாசிரியர் களின் உரைவன்மை மென்மைகளையும், அவ் வவர்க்குள்ள சொற்பொருட்டிட்ப நுட்ப வேறுபாடுகளையும் நன்கு பகுத்துக் காணவல்ல நுட்ப வுணர்வினார்க்கு, அவர் பரப்பும் அப்போலிக் கொள்கையின் பெற்றி தெற்றெனப் புலப்பட்டு விடும் அத்துணை நுண்ணுணர்வு வாய்ப்பப் பெறாதார் அப் போலிக் கோட்பாட்டினைக் கண்டு மருளாமைப் பொருட்டு, இறையனார் களவியலுரையென வழங்குவது ஆசிரியர் நக்கீரனார் அருளிய உரையேயா மென்பதூஉம், அவ்வுரையின் பாயிரப் பகுதியிற் காணப்படுஞ் சில உரைக் கூறுகளும், அவ் வுரையின் இடையிடையே காணப்படுங் கட்டளைக் கலித்துறைப் பாட்டுகளும், அப் பாட்டுகள் ஒரு சிலவற்றிற்கு எழுந்த ஒரு சில விளக்கவுரைச் சிறுபகுதிகளுமே பிற்காலத்த வராற் சேர்க்கப்பட்டனவா மென்பதூஉம், இவையல்லாத ஏனை உரைப்பெரும் பகுதி முற்றும் நக்கீரனார் உரைத்த படியாகவே இன்றுகாறும் வழங்கப்பட்டு வருகின்ற தென்பதூஉம் பெயர்த்தும் ஈண்டு விளக்கிக் காட்டுவாம்: பயில்வராது உணர்வினை இன்புறுத்தி அவரது கருத்தைத் தம்மாட்டு ஈர்க்கவல்ல தீஞ்சுவைகெழுமித் தெவிட்டா அமிழ்தமாய் விளங்கும் அரும்பெருந் தமிழ்ப்பாட்டுகளை இயற்றி இயற்றிப் பழுத்த சொல்லும் பழுத்த பொருளும் வாய்ப்பப் பெற்றாரான ஒரு மாப்பெருந் தமிழ்ப் புலவரால் இறையனாரகப் பொருள் உரை எழுதப்பட்ட தென்பதற்கு வேண்டும் அடையாளங்கள் அவ்வுரையின் முதல் இடை கடை யெங்கும் மிளிர்ந்து காணப்படுகின்றன. அவ் வடையாளங்கள் முற்றும் ஈண்டு எடுத்துக் காட்டலுறின் இது மிக விரியுமாகலான், அவற்றுள் ஒரு சிலவே காட்டுதும். இறையனாரகப் பொருள் 2 ஆஞ் சூத்திர உரையுள் ஆயின், இவ் வகைப்பட்ட ஆயத்திடை மேனாட் பிரிந்து பயின்றறியாதாள் தமியளாய் நிற்குமோ வெனின் நிற்கும்; தான் பயின்ற இடம் தன் ஆயத்தினோடு ஒக்குமாகலான் என்பது. யாங்ஙனம் நிற்குமோ வெனின், சந்தனமுஞ் சண்பகமுந் தேமாவுந் தீம்பலவும் ஆசினியும் அசோகமுங் கோங்கும் வேங்கையுங் குரவமும் விரிந்து, நாகமுந் திலகமும் நறவும் நந்தியும் மாதவியும் மல்லிகையும் மௌவலொடு மணங்கமழ்ந்து, பாதிரியும் பாவைஞாழலும் பைங்கொன்றையொடு பிணியவிழ்ந்து, பொரிப்புன்கும் புன்னாகமும் முருக்கொடு முகைசிறந்து, வண்டறைந்து தேனார்ந்து, வரிக்குயில்கள் இசைபாடத், தண் டென்றல் இடைவிராய்த் தனியவரை முனிவு செய்யும் பொழிலது நடுவண், ஒரு மாணிக்கச் செய்குன்றின்மேல், விசும்பு துடைத்துப் பசும்பொன் பூத்து வண்டு துவைப்பத் தண்டேன் துளிப்பதொரு வெறியுறு நறுமலர் வேங்கை கண்டாள்; கண்டு பெரியதொரு காதல் களிகூர்ந்து தன் செம்மலர்ச் சீறடிமேற் சிலம்பு கிடந்து சிலம்பு புடைப்ப, அம் மலரணிக் கொம்பர் நடைகற்பதென நடந்துசென்று, நறைவிரி வேங்கை நாண்மலர் கொய்தாள்; கொய்தவிடத்து, மரகதமணி விளிம்படுத்த மாணிக்கச்சுனை மருங்கினதொரு மாதவி வல்லி மண்டபத்துப், போதுவேய்ந்த பூநாறு கொழுநிழற் கீழ்க் கடிக்குருக்கத்தி கொடிப் பிடித்துத் தகடுபடு சிகரங்களின் முகடுதொடுத்து ஞான்றுவந்து இழிதரும் அருவி பொன்கொழித்து மணிவரன்றி மாணிக்கத் தொடு வயிரம் உந்தி அணிகிளர் அருவி ஆடகப்பாறைமேல் அதிர் குரன் முரசின் கண்ணிரட்ட, வண்டுந் தேனும் யாழ்முரல, வரிக்குயிலுங் கிளியும் பாடத், தண்டாது தவிசுபடப் போர்த்ததொரு பளிக்குப்பாறை மணித்தலத்து மிசை நீல ஆல வட்டம் விரித்தாற்போலத் தன் கோலக் கலாவங் கொளவிரித்து முளையிள ஞாயிற்று இளவெயில் எறிப்ப ஓர் இளமயில் ஆடுவது நோக்கிநின்றாள் 29 ஆஞ் சூத்திர உரையுள் இயற்கைப் புணர்ச்சி புணர்ந்தானும், பாங்கற் கூட்டங் கூடியானுந் தெருண்டு வரைந்தெய்த லுற்றுத் தமரை விடும்; விட்டவிடத்து அவர் மறுப்ப, அஃது இலக்கணமாகலான்; அங்ஙனம் மறுத்தவிடத்துத் தலைமகள் வேறுபடும். எம்பெருமான் மறுக்கப்பட்டமையான் மற்றொருவாறாங் கொல்லோவெனக் கலங்கி வேறுபாடு எய்தின பொழுதே தோழிக்குப் புலனாம்; புலனாயினவிடத்து, எம்பெருமாட்டி! நினக்கு இவ் வேறுபாடு எற்றினான் ஆயிற்றென்னும், என்றவிடத்து, இஃதெனக்குப் பட்டது, இன்னவிடத்து ஒருஞான்று நீயும் ஆயங்களுந்தழையுங் கண்ணியுங் கோடற்கு எண்ணிச் சிறிது நீங்கினாய்; யான் நின்று ஒரு மணிச்சுனை கண்டேன்; கண்ட அம் மணிச்சுனை தான் ஆம்பலே குவளையே நெய்தலே தாமரையே என்றிப் பூக்களால் மயங்கிடும் மேதக்கது; கண்டு வேட்கையான் ஆடுவான் இழிந்தேன்; இழுக்கிக் குட்டம் புக்கேன்; புக்குத் தோழியோவென நீ அங்ஙனங் கேளாயா யினாயாக, ஒரு தோன்றல் வந்து தோன்றி எனது துயர் நீக்குதற்காகத் தன் கை நீட்டினான்; நீட்ட, யானும் மலக்கத்தான் நின்கை யெனப் பற்றினேன்; பற்ற, வாங்கிக் கரைமேல் நிறீஇ நீங்கினான்;நீ அன்று கவலுதியெனச் சொல்லேனாயினேன். நீ எவ்வெல்லைக் கண்ணுங் கைவிடாதாய்க்கு அஞ்ஞான்று கைவிடலாயிற்று விதியாகாதே? இனிப்பிறிதொன்றாங் கொல்லோவெனக் கலங்கி வேறுபட்டே னென்று தோழிக்குத் தலைமகள் அறத்தொடு நிற்கும் எனவும், 59 ஆஞ் சூத்திர உரையுள் இயற்கைப் புணர்ச்சியின் விளையாட் டொக்கல் வேற்றிடம் படர இருவருந் தம்முட் டலைப்பெய்யுமாறும், புணருமிடத்துத் தன்மையும், அது கன்மேற் பொதும்பு பட்டுக் கோட்டுப்பூவுங் கொடிப் பூவும் நிரந்து, நீர்த்துறைமேற் சித்திரப்படாம் விரித்தாலே போன்று, வண்டுந் தும்பியும் வரிக்கடைப் பிரசமும் யாழுங் குழலும் முரன்று, கடற்கரையுங் கானியாறும் முழவுத்துடியும் பாடியம்ப, இரவோரன்ன கொழுநிழற்றாய், நிலவோரன்ன வெண்மண லொழுகி, அகத்தார் புறத்தாரைக் காண்டலெளிதாய்ப், புறத்தார் அகத்தாரைக் காண்டல் அரிதாய், வானோரும் விழைவைத் தவிர்த்தோரும் விரும்பும் பொழிலுள் எனவும், அவ்வுரையின் முதலிடை கடைகளிற் காணப்படும் இப் பகுதிகளைப் போலவே அவ் வுரையின் மற்றைப் பல இடங்களிலுஞ் செய்யுட்சுவை மலிந்த வளவிய உரைநடை காணப்படுகின்றது. இங்ஙனம் அவ்வுரையின் துவக்கம் முதல் அதன் ஈறுவரையிற் செய்யுள் நடை விரவிய ஒரே வகையான உரைச்சுவை கிளர்ந்து திகழுதலின், இறையனாரகப் பொருளுரையினை இயற்றினவர், செய்யுளியற்றுந் திறன்மிக்க ஒரு மாப்பெரும்புலவரா யன்றிப், பிறரொருவர் ஆகாமை செந்தமிழ்நடை வேறுபாடுகளை நன்கு பகுத்துணரவல்லார் எவர்க்கும் எளிதின் விளங்கற் பாலதேயாம். இவ்வாறு செய்யுட்சுவை தோய்ந்த உரைநடை இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர், அடியார்க்கு நல்லார், பரிமேலழகியார், நச்சினார்க்கினியர் முதலான வேறு உரைகாரர்தம் உரைகளுள் யாண்டுங் காணப்படாமையின், இறையனாரகப் பொருளுரை அவ்வுரைகாரருள் ஒருவரால் இயற்றப்பட்ட தாகாமையும் இனிது விளங்கற்பாற்றாம். விரிந்தவுரை எழுதுதலில் வல்லாரான பேராசிரியர், அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கினியர் என்பவருஞ் சிற்சில இடங்களில் நக்கீரனாரது உரைபோற் செய்யுள் நடை விராய விழுமிய உரை எழுத முயன்று பார்த்தனராயினும், அஃது அவர்க்கு நன்கு வாயாமையின், அவரெல்லாந் தம் உரைகளை அம்முறையில் முற்றும் எழுதமாட்டாராய் அம் முயற்சியைக் கைவிட்டனர். மேலுஞ், சூத்திரங்களின் சொற்பொருளை விடாமல் அவற்றைக் கௌவிக் கொண்டே சென்று பேருரை விரிப்பார் ஆசிரியர் நக்கீரனாரைத் தவிர வேறொருவரைக் காண்டல் இயலாது; பிறகாலத்திருந்த சிவஞான முனிவரருங்கூட நக்கீரனார்க்கு ஈடாகார். இனி, இளம்பூரணர், சேனாவரையர், பரிமேலழகியார் என்னும் உரைகாரர் மூவருஞ் சொற்பொருட் டிட்ப நுட்பங்கள் செறிந்த உரைகள் எழுதுதற்கண் வல்லுநராயினும், இளம்பூரணரும் பரிமேலழகியாருஞ் சுருக்கவுரைகளே வரைந்தனர்; சேனாவரையரோ விரிவுரை யெழுத மாட்டுவாராயினும், அவரதுரையும், ஏனை இளம்பூரணர் பரிமேலழகியார் உரையுந் திறமான சொற்செறிவுடையனவே யல்லாமல், நக்கீரனாரது உரைபோல் நெகிழவேண்டும் பதத்து நெகிழ்ந்தும், இறுகவேண்டும் பதத்து இறுகியும், நல்லிசைப் புலமை மலிந்த செய்யுட்போல் நகை, அழுகை, இழிபு, வியப்பு, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்னும் எண்வகை மெய்ப்பாடு தோற்றுவிக்கும் எண்வகைச்சுவை வாய்ந்துஞ் செல்வன அல்ல. அதுவேயுமன்றி, அவைக்களத்தே கேட்டார்ப் பிணிக்குந் தகைத்தான பேருரை நிகழ்த்தும் பேராற்றல் வாய்ந்தோர் தாங்கூறும் பொருள் வினாவும் விடையுமாய் வைத்துத் தருக்க நூன்முறை வழாது தொடர்புபடுத்து விளக்கிச் செல்லுமாறு போலவும், சொல்லையும் பொருளையும் அடுக்கடுக்காய் நுவன்று நகைவேண்டும்பொழுது நகையும், அழுகை வேண்டும் பொழுது அழுகையும், இழிபு வேண்டும் பொழுது இழிபும், வியப்பு அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்பன வேண்டும் பொழுது அவ்வம் மெய்ப்பாடுகளுங் கிளர்ந்து தோன்றுமாறு சொன்மாரிபொழிந்து நிகரின்றிச் செல்லுமாறு போலவும் ஆசிரியர் நக்கீரனாரது உரையினமைப்பும் பொலிந்து திகழ்கின்றது; இத்தகைய தொரு விழுமிய அமைப்பு ஏனை யுரையாசிரியர் எவரிடத்தும் முற்றக் காணப்படுகின்றிலது. பேராசிரியர் இவ்வுரையமைப்பைப் பின்பற்றிச் செல்லச் சால விழைந்தனரேனும், ஒரோவொரு காலன்றி அஃது அவர்க்கு முற்றுங் கைகூடிற்றில்லை. இங்ஙனமாக ஏனை எவரானும் ஆக்குதற்கேலாத ஆசிரியர் நக்கீரனாரது உரையின்மாட்சி, அவ்வுரையின் முதல் இடை கடை யென்னும் மூன்றிடங் களினின்றும் மேலெடுத்துக் காட்டிய உரைக்கூறுகளால் இனிதுவிளங்கா நிற்கும். என்றாலும், ஈண்டு எடுத்துக்காட்டிய அவரது உரையின் நலந் தெற்றெனப் புலனாதற் பொருட்டு, அதன்கணிருந்து மீண்டும் ஓர் உரைப் பகுதியினை ஈண்டெடுத்துக் காட்டுதும்: 35ஆம் சூத்திர உரை இனி ஓதற்குப் பிரியும் பிரிவு முன்வைக்கப்பட்டது; தலையான பிரிவாகலானும், உயர்ந்தோர்க்கு உரித்தாகலானும் என்பது. பரத்தையிற் பிரிவு பின்வைக்கப்பட்டது, காமம் பின்வைத் தெண்ணப்படுமாகலான் என்பது. அஃதேயெனின், இவர் முன்பொருவிறந்தார் என்பதனொடு மாறு கொண்டது இச்சூத்திரம்; என்னையோவெனின், தலைமகளை எய்தியிருந்தே இவன் ஓதுவான் பிரிவானெனின், முன்ஞானமிலனாம்; இலனாகவே, ஞானத்தின் வழியது ஒழுக்கமாகலானும் ஒழுக்கத்தின் வழித்துத் தலைக் குலமாகலானும் இவை யெல்லாங் குறைவுபட்டனா மென்பது. இனிக் காவல் என்பது இவன் நாட்டைப் பிறர் புகுந்து அலைப்பதுங் கொள்வதுஞ் செய்ய அவரை நீக்குதற்கு நீங்குமேயெனின் ஆண்மையிற் குறைபட்டானாம் என்பது. இனிப் பகை தணிவினை யென்பது சந்துசெய்வித்தற்குப் பிரிவது, அங்ஙனம் பிரியுமேயெனின் தூதுவனாயினானாம்; தூதுவராவார் பிறர்க்குப் பணிசெய்து வாழ்வாராவர், அவரது பொருவிறப்பு என்னையோவென்பது. இனி வேந்தற்குற்றுழிப் பிரியுமெனின், கருமச்சேவகனாம்; கருமஞ் செய்வதென்பது இறப்பவும் இளிவந்ததோர் ஒழுக்கம்; பிறர் குறிப்பின்றித் தன் குறிப்பில்லை யெனப்படும்; ஆதலின் அவரது பொருவிறப்பு என்னையோவென்பது. இனிப் பொருள்வயிற் பிரியுமே யெனின், முன்னர்ப்பொருள் இலன் ஆயினானாம்; ஆகவே, எள்ளுநர்ப் பணித்தலும் இரந்தோர்க்கு ஈதலும் என்னும் இவையெல்லாம் பொருட் குறைபாடு உடையார்க்கு நிகழாமையின் இக் குறை பாடெல்லாம் உடையனாம்; அவையுடையானது பொருவிறப்பு என்னையோ வென்பது. இனிப் பரத்தையர்மாட்டுப் பிரியுமே யெனின், இவன் கண்டார்கண் தாழ்வானாம்; ஆகலான்; தலைமகள்மாட்டுக் கிடந்த அன்பிலன் ஆயினானாம்; அல்லதூஉங் கண்டுழி யெல்லாம் உள்ளத்தைச் செலீஇ உள்ளத்தின்வழி ஓடுமாகலான் நிறை இலனாயினானாம்; நிறையிலானது பொருவிறப்பு என்னையோவென்பது. இவையெல்லாஞ் சொல்லப் பெரிது மாறுகொண்டு காட்டிற் றெனின், மாறுகொள்ளாது; மாறுகொள்ளாவாறு என்னையோ வெனின், ஓதற்குப் பிரியுமென்பது கற்பான் பிரியுமென்பதன்று; பண்டே குரவர்களாற் கற்பிக்கப்பட்டுக், கற்றான் அறம் பொருள் இன்பம் வீடு பேறுகளை நுதலிய நூல்களெல்லாம்; பரதேசங்களினும் அவை வல்லார் உளரேற் காண்பல் என்றும், வல்லார்கள் உள்வழிச் சென்று என் ஞானம் மேற்படுத்துஅவர் ஞானங் கீழ்ப்படுப்பல் என்றும் பிரியுமெனக் கொள்க. இனிக் காத்தற்குப் பிரியு மென்பது நலிவார் உளராக நலிவுகாத்தற்குப் பிரியுமென்ப தன்று; நாட்டகத்து நின்றும் நகரகத்துந் தமக்கு உற்றது உரைக்கல்லாத மூத்தார்களும் பெண்டிர்களும் இருகை முடவருங் கூனருங் குருடரும் பிணியுடையாரும் என இத் தொடக்கத்தார் தம் முறைக் கருமங் கேட்டுத் திருத்துதற் பொருட்டாகவும், காட்டகத்து வாழும் உயிர்ச் சாதிகள் ஒன்றனை யொன்று நலிவன உளவாயின விடத்துத் தீதென்று அவற்றை முறைசெய்தற்குங் கொடிய வலைப்பட்டுக் கிடந்தனவற்றைத் துறைநீங்குதற் பொருட் டாகவும், வளன் இல்வழி வளந் தோற்றுவித்தற் பொருட் டாகவுந், தேவ குலமே சாலையே அம்பலமே என்று இத்தொடக்கத் தனவற்றை ஆராய்தற்கும், அழிகுடி யோம்பு தற்கும் பிரியு மென்பது; அல்லதூஉம், பிறந்த உயிர் தாயைக் கண்டு இன்புறுவது போலத் தன்னாற் காக்கப்படும் உயிர்வாழ் சாதிகள் தன்னைக் கண்டு இன்புறுதலின், தான் அவர்கட்குத் தன் உருக்காட்டுதற்கும், மாற்றரசர் ஒற்று வந்தவிடத்து அவர் முன்னந் தனது ஊக்கங் காட்டுதற்பொருட்டாகவும் பிரியும்; அதனானே மாற்றரசருந் திறை கொடுப்பரென்பது. இனிப் பகைதணிவினை யென்பது, தூதுவர்போலச் சந்து செய்வித்தற்குப் பிரியுமென்பதன்று; இருவர் அரசர் நாளைப் பொருதும் இன்றுபொருதும் என்று முரண்கொண்டு இருந்த நிலைமைக்கண், தான் அருளரசனாகலின் இம்மக்களும் இவ் விலங்குகளுமெல்லாம் பட இவ் விரண்டு குலத்திற்கும் ஏதம் நிகழும்; அதனால் இப்போ ரொழிப்ப னென்று இருவரையும் இரந்து சந்துசெய்வித்தலுமொன்று; அல்லதூஉந், தேவரும் அசுரரும் பொருதகாலத்துத் தேவர்களையும் அசுரர்களையும் ஒருவீர் ஒருவீர் மிக்காரை ஒறுப்பல் யானெனப் பாண்டியன் மாகீர்த்தி சந்து செய்வித்ததுபோல் இருவரின் மிகைசெய்தீரை ஒறுப்பலென்று சந்து செய்வித்தலு மொன்று; இருவரையும் ஒறுக்குந் துணை ஆற்றலுடையனாகலானென்பது. அஃதே யெனின் தன்னகத்து இருந்துவிட அமையாதோ அன்ன ஆற்றலனாகலான், தான் செல்லவேண்டுமோவெனின், செல்லவேண்டும்; என்னை? காதலரைப் பிரிந்து ஒருகருமம் முடிப்பதெனின் மிக்க ஆள்வினை இல்லையாக லானென்பது. இனி, வேந்தற் குற்றுழியென்பது அவற்குச் சேவகனாய்ப் பிரியுமென்பதன்று, தனக்கு நட்டான் ஓரரசன் சென்றவிடத்து அவற்கு ஆய மறுதலையை வென்று நீக்குதற்குப் பிரியுமென்பது. ஆதலார் பிரிந்தே சந்து செய்விக்குமென்பது இனிப், பொருட்பிணியென்பது, பொருளிலனாய்ப் பிரியுமென்ப தன்று; தன் முதுகுரவராற் படைக்கப்பட்ட பல்வேறு வகைப்பட்ட பொருள்களெல்லாங் கிடந்ததுமன், அதுகொடு துய்ப்பது ஆண்மைத் தன்மை யன்றெனத் தனது தாளாற்றலால் படைத்த பொருள் கொண்டு வழங்கி வாழ்தற்குப் பிரியுமென்பது; அல்லதூஉந் தேவர்காரியமும் பிதிரர்காரியமுந் தனது தாளாற்றலாற் படைத்த பொருளாற் செய்தன வல்லது பயன்படாது; என்னை, `தாயப்பொருளாற் செய்தது தேவரும் பிதிரரும் இன்புறார் ஆகலான்; அவர்களையும் இன்புறுத்துதற்குப் பிரியுமென்பது. இனிப் பரத்தை யென்பது பொதுப் பெண்டிர் மாட்டுப் பிரிவு; இவள்கண் அன்பிலனாய்க் கண்டார் கட்டாழ்ந்து நிறைஇலனாய்ப் பிரிந்தான் அல்லன்; என்னை? தலைமகளின் நீக்கி ஆடல் காண்பல் பாடல் கேட்பல் எனப் பிரியும், பிரிய, அவற்றின்கட் சென்ற உணர்வு தலைமகண்மாட்டு நின்ற உணர்வினை மறைப்பிக்கும்; என்னை? இரண்டுணர்வு உடன் நில்லாமையின் அவ்வகை மறைப்ப இவர் கண்ணதே உள்ளமாமென்பது; என்னை? தாம் இயல்பாகவேயும் பிறரான் நயக்கப்படும் வனப்புடையார் ஆடற்றகையானும் பாடற் குரலாலும் நயப்பித்துக் கொள்வமென்று எடுத்துக் கொண்டால், அவர் கண் நயப்புச் சொல்ல வேண்டுமோ மென்பது. இவ்வாறாக, `இறையனாரகப் பொருளில் அறுவகைப் பிரிவினை யுணர்த்தும் ஓதல் காவல் என்னும் 35 ஆஞ் சூத்திரத்திற்கு ஆசிரியர் நக்கீரனார் விரித்த இவ்வுரைப் பகுதி தருக்க இயைபுஞ், சொற்பொருளடுக்கு முடைத்தாய்ப், பாச்சுவை விராய உரை நடைத்தாய்ப், பண்டைக் காலச் செந்தமிழ் வளந்துறுமி அகன்று ஆழ்ந்து தெளிந்து நிற்றல் காண்க. இத்தகையதோர் உரை, இளம்பூரணர் முதலான ஏனை யுரைகாரர் எவரானும் யாண்டும் எழுதப்பட்டதின்று. ஓதல் பகையே தூதிவை பிரிவே என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்திற்கு (பொருள், அகத்திணை இயல், 27) இளம்பூரணர் உரைத்த உரையெல்லாம், ஓதற்குப் பிரிதலாவது, தமது நாட்டகத்து வழங்காது பிறநாட்டகத்து வழங்கும் நூல் உளவன்றே, அவற்றினைக் கற்றல்வேண்டிப் பிரிதல். பகைவயிற் பிரிதலாவது மாற்று வேந்தரொடு போர் கருதிப் பிரிதல். தூதிற்குப் பிரிதலாவது இருபெருவேந்தரைச் சந்துசெய்தற்பொருட்டுப் பிரிதல் என்னும் இவ்வளவே. இனிப் பேராசிரியர் `திருச்சிற்றம் பலக்கோவையார் உரையில் அறுவகைப் பிரிவுகளை விளக்கியோதிய உரைக்கூறுகள் வருமாறு: இவ் வண்ணம் முன்னர் ஓதலின்றி இவளை வரைந்த பின்னர் ஓதநின்றானோவெனின், அல்லன்; முன்னர் இவனைப் பொருவிறந்தா னென்று கூறப்படுதலால் ஓதி முடித்தா ரென்பது: இவன் தான் ஓதிய புருடார்த்தமாகிய தருமார்த்த காமங்களை ஒழிய வேறு புருடார்த்தமாகக் கூறப்படுவன உளவோ வென்பதனை ஆராயவேண்டுங் கருத்தினனாத லானும், கல்வியாற் றன்னிற் றாழ்ந்தாரைத் தனது கல்விமிகுதி காட்டி அவர்களை யறிவித்தல் தருமநூல் விதியாதலானும் பிரியும் என்பவாகலின் (308 ஆஞ் செய்யுள். முகவுரை) இனிக். காவற்பிரிவென்பது, எல்லாவுயிர்களையும் அரசன் பாதுகாக்க வென்னுந் தரும நூல்விதியான் அக் காவற்குப் பிரிதல் (312ஆஞ் செய்யுள் முகவுரை). இனிப், பகைதணிவினைப் பிரிவென்பது, தம்மிற் பகைத்தவேந்தரைப் பகையைத் தணித்து இருவரையும் பொருந்தப்பண்ணுதல் (314ஆஞ் செய்யுள் முகவுரை.) இனி, வேந்தற் குற்றுழிப் பிரிவென்பது ஒரு வேந்தனுக் கொருவேந்தன் தொலைந்து வந்தடைந்தால் அவனுக் குதவிசெய்யப் பிரியாநிற்றல் (316ஆஞ் செய்யுள் முகவுரை). இனிப், பொருள் வயிற்பிரித லென்பது, குரவர்களாற் படைக்கப்பட்ட பொருள்கொண்டு இல்லறஞ் செய்தால் அதனான் வரும் பயன் அவர்க்கு ஆம் அத்துணையல்லது தமக்காகாமையால், தமது பொருள்கொண் டில்லறஞ் செய்தற்குப் பொருள்தேடப் பிரியாநிற்றல் (332 ஆஞ் செய்யுள் முகவுரை). இனிப், பரத்தையிற் பிரிதலென்பது, தலைமகளை வரைந்தெய்திய பின்னர் வைகலும் பாலே நுகர்வான் ஒருவன் இடையே புளிங்காடியும் நுகர்ந்து அதன் இனிமை யறிந்தாற் போல, அவள் நுகர்ச்சியினிமை அறிதற்குப் புறப் பெண்டிர்மாட்டுப் பிரியாநிற்றல். அல்லதூஉம், பண்ணும் பாடலும் முதலாயின காட்டிப் புறப்பெண்டிர் தன்னைக் காதலித்தால் தான் எல்லார்க்குந் தலைவனாகலின், அவர்க்கும் இன்பஞ்செய்யப் பிரியா நிற்றல் என்றுமாம். அல்லதூஉந், தலைமகளை ஊடலறி வித்தற்குப் பிரிதலென்றுமாம். இவ்வா றொழிந்து தனக் கின்பம் வேண்டிப் பிரிவனாயின், `கண்டு கேட்டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும், ஒண்டொடி கண்ணே யுள என்பதனால், இவளுக்குத் தலைமகளென்னும் பெயரொடு மாறுபட்டுத் தனது பெருமையொடும் மாறுபடாநிற்கும் (352 ஆஞ் செய்யுள் முகவுரை.) இளம்பூரணர், பேராசிரியர் என்னும் ஈருரைகாரரரும் உரைத்த இவ் வுரைக்கூறுகளை, மேலெடுத்துக் காட்டிய ஆசிரியர் நக்கீரனாருரைப் பகுதியோடு ஒப்பிட்டுக் காணவல்ல அறிஞர்க்குப், பளபளப்பான பலநிறச் சலவைக் கற்கள் அழுத்திப் பொன்மினுக்குப் பூசிப், பலபல அடுக்குமாடங்கள் உடைத்தாய் வான்முகடு அளாய்க், காண்பார் கண்ணுங் கருத்துங் கவரும் நீர்மைத்தாய் உயர்ந்தோங்கி நிற்கும் எழுநிலை மாடம்போல் ஆசிரியர் நக்கீரனாரதுரை நிவந்து நிற்றலும், அம்மாடத்தின் அருகே புல்வேய்ந்த குடிலும் ஓடு மூடியதொரு சிற்றிலும் ஏழைமைத் தோற்றமுடையவாய்த் தாழ்ந்துநிற்றல் போல் இளம்பூரணர் பேராசிரியருரைகள் பீடுகுறைந்து நிற்றலும் பிரிந்தினிது விளங்காநிற்கும். நக்கீரனாருரையும், மேற்காட்டியஏனையிருவருரையுந் தன்மையால் வேறுபடு தலோடு, கொள்கை வகையாலும் வேறுபடுகின்றன. ஓதற்பிரிவு, பகைவயிற் பிரிவுகட்கு இளம்பூரணர் கூறியவுரை, நக்கீரனார் உரைக்கு மாறாய்நிற்பத், தூதிற்பிரிவுக்கு அவர் கூறியவுரை, நக்கீரனார் கூறிய ஒரு சொற்றொடரை எடுத்தாண்ட வளவில் நிற்றலுங் காண்க. மற்றுப் பேராசிரியருரையோ, இளம்பூரண ருரையினுஞ் சிறிது விரிவுடைத்தாயினும், பிற்காலத்து வடசொற்குறியீடுக ளுடைத்தாய், நக்கீரனாருரையின் சொற்கள் சொற்றொடர்களை யெடுத்தாண்டு, அவருரைப்பொருளொடு பெரும்பான்மை யொத்துச் சிறுபான்மை யொவ்வாது, அவ ருரைநலத்தின் மிகச்சிறிதே தன்கட்கொண்டு நிற்கின்றது. இங்ஙனந் தன்மையானுங் கொள்கைவகையானும் இவ்விருவ ருரையும் நக்கீரனாருரையின் வேறாக நிற்றலானும், நக்கீரனாருரையின் சொற்றொடர்களை யெடுத்தாளலானும் அவ்வுரைகளை வகுத்த இளம்பூரணர் பேராசிரிய ரென்னும் இருவர் தம் மனவியற்கையும் நக்கீரனாரது மனவியற்கையின் முற்றும் வேறாதலுந் தெற்றெனப் புலனாம். இறையனாரகப் பொருளுரையினை இயற்றிய ஆசிரியரின் புலமைத்திறம் பெருமாட்சித்தாதலும், தொல்காப்பிய உரையினையியற்றிய இளம்பூரணரின் திறம் அத்துணை மாட்சித்து அன்றாதலும் நுண்மாண் நுழைபுல முடையார்க்கெல்லாம் வெள்ளிடைமலைபோல் விளங்கிக் கிடப்பவும், இஞ்ஞான்று வழங்கும் இறையனார் களவிய லுரையினை யியற்றினவர் இளம்பூரணரே யாதல் வேண்டு மெனச் `சேரன்செங்குட்டுவன் நூலார் கூறினர்.10 இவ்வாறு கூறுதற்குக் களவிய லுரையிலுந், தொல்காப்பியச் சொல்லதிகார இளம்பூரணர் உரையிலும் பொதுப்போற் காணப்படும் இரண்டு உரைக்குறிப்புகளே அவர்க்குப் பெருஞ் சான்றுகளாய்த் தோன்றுகின்றன. களவியல் முதற்சூத்திர உரையின் ஈற்றில் `என்மனார் என்னுஞ் சொல்லுக்குக் காட்டப் பட்டிருக்குஞ் சொன்முடிபும், அதன் ஏழாஞ்சூத்திரவுரையின் ஈற்றிற் காட்டப்பட்டிருக்கும் `வரவு என்னுஞ் சொல்வழக்கும் ஆண்டுள்ளவாறுபோல், தொல்காப்பியச் சொல்லதிகார இளம்பூரணருரையினுங் காணப்படுகின்றன. இவ்வாறு இருவர் உரையினும் பொதுவாகக் காணப்படும் இவ்விரு குறிப்பு களையுந் தம்முரையுள் மறுத்தபின் உரைகாரரான சேனாவரையர் அக்குறிப்புகளை இளம்பூரணருடையவாக வைத்து மறுத்தனரேயன்றி, நக்கீரனாருடையவாக வைத்து மறுத்திலாமையின்,11 அவ்வுரைக்குறிப்புகள் இரண்டையும் உடைய களவியலுரை இளம்பூரணர் இயற்றியதொன் றென்று கோடலே `செங்குட்டுவன் நூலாரது கோள். இனி, இவர் எடுத்துக்காட்டிய அவ் வுரைக்குறிப்புகள் இரண்டையும் இளம்பூரண ருரைகளாக வைத்து, அவ்விளம் பூரணருக்குப் பின்வந்த சேனாவரையர், தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்குத் தாம் வரைந்த உரையில் மறுத்திருப்பது கொண்டு, அவ் வுரைக்குறிப்புகள் இரண்டு மட்டுமே காணப்படுங் `களவியலுரை முழுவதூஉம் இளம் பூரணரே இயற்றியதாமெனல் யாங்ஙனம் பொருந்தும்? ஒருவர் உரையில் உள்ள சொற்களையுஞ் சொற்றொடர் களையும் பொருள் களையும், அவர்க்குப் பின்வரும் உரைகாரர் தமதுரையில் நிரம்ப எடுத்தாள்வது தொன்று தொட்ட வழக்கமா யிருக்கின்றது. இஃது இளம்பூரண ருரையினையும் அவர்க்குப் பின்வந்த பேராசிரியர் சேனாவரையர் நச்சினார்க்கினிய ருரைகளையும் ஒத்து நோக்குவார்க்கு நன்குவிளங்கும். இளம்பூரணருரையிற் காணப்படும் உரைப் பகுதிகள் பல ஏனை உரைகாரர் உரைகளிற் காணப்படுதல் கொண்டு, அவருரைகளை யெல்லாம் இளம்பூரணருரை யென்று கோடல் அடுக்குமோ? அடாதன்றே. அதுபோலவே, இளம் பூரணருரையிற் காணப்படும் இரண்டு சிறு உரைக் குறிப்புகள் மட்டும் `இறையனாரகப் பொருளுரையிற் காணப்படுதல் கொண்டு, அவ்வுரைமுற்றும் இளம் பூரணருரைத்ததே என்று கோடலினும் பெரியதோர் இழுக்கான உய்த்துணர்ச்சி வேறு யாண்டுமிலது. இறையனாரகப் பொருளுரைப் போக்கும். இளம்பூரணருரைப் போக்கும், ஒன்றையொன் றொவ்வாமற் பெரிதும் வேறுபட்டுக் கிடக்குமாற்றினை, அவருரைகளி னின்றும் மேலெடுத்துக் காட்டிய உரைப்பகுதிகளால் நன்கு விளக்கிக் காட்டினேம். அதுவேயுமன்றி, நக்கீரனார் சொற்றொடர்களை அமைக்கும் முறையோ, இளம்பூரணர் முதலான ஏனை உரைகாரர் அவற்றை அமைக்கும் முறைக்கு முற்றும் வேறானதொரு தன்மைத்தா யிருக்கின்றது. ஒரு பொருண்மேல் வரும் பல சொற்றொடர்களை அவர் ஒருவரிசைப்படத் தொடுக்குந் திறமும் அழகும் பெரிது பாராட்டற்பாலதான தனிச்சிறப்பு வாய்ந்து மிளிர்கின்றன; ஒருசொற்றொடரை முடித்து, அதனோடு இயைபுடைய பிறிதொரு சொற்றொடரைத் தொடங்குகையில், முடித்த சொற்றொடரின் ஈற்றிலுள்ள வினைமுற்றுச் சொல்லையேவினையெச்சமாகத் திரித்து, அதனை அதற்கடுத்த சொற்றொடரின் முதற்கட் பெய்து தொடங்கிச் செல்கின்றார்; மேலே 918 ஆம் பக்கம் முதல் 920 ஆம் பக்கம் வரையில் எடுத்துக் காட்டிய `இறையனாரகப் பொருளுரைப் பகுதிகளில தடித்த எழுத்திற் பதிப்பித்திருக்குஞ் சொற்களைக் காண்க; வெறியுறு நறுமலர் வேங்கை கண்டாள் என்று முதலில் ஒரு சொற்றொடரை முடித்தவர், அச் சொற்றொடரின் ஈற்றில் உள்ள `கண்டாள் என்னும் வினைமுற்றைக் `கண்டு என்னும் வினையெச்சமாகத் திரித்து அதனை முதற்கட்பெய்து அடுத்த சொற்றொடரைத் தொடங்குதலும் இங்ஙனமே அதற்கடுத்த தொடரை அவர் எழுதிக்கொண்டு போதலும் உற்றுநோக்குக. இத்தகையதொரு சொற்றொடரமைப்பு `இறையனார்களவியலுரையின் துவக்கம் முதல் அதன் முடிவு வுரையிற் காணப்படுமாறுபோல, இளம் பூரணருரையிலாதல் ஏனை உரைகார ருரையிலாதல் காணப்படாமையின், களவியலுரை, அவ்வுரை யெழுந்த தற்கு இயைந்த பேராற்றல் வாய்ந்த ஆசிரியர் நக்கீரனாரால் இயற்றப்பட்டதாகுமேயன்றி இளம்பூரணர் முதலான ஏனையோருள் ஒருவரால் இயற்றப்பட்டதாகாது. மேலும், வேலேறுபடத் தேளேறு மாய்ந்தாற் போல எனவும், பள்ளத்துத்துவழி வெள்ளம்போல எனவும், யானை தொடு வுண்ணின் மூடுங்கலம் இல்லது போலஎனவும், கடல்வெதும்பின் வளாவுநீர் இல்லது போல எனவும், கெடுத்துத் தேடும் நன்கலம் எடுத்துக் கொண்டாற்போல எனவும், மணிக்கலங் கதுவாய்ப் பட்டது போல எனவும், உற்றார்க்குரியர் பொற்றொடி மகளிர்,கொண்டார்க் குரியர் கொடுத்தார்எனவும், மூடியிருந்து வேவதொரு கொள்கலம் மூய்திறந்தவிடத்து ஆவியெழுந்து முன்நின்ற வெப்பம் நீங்கினாற்போல எனவும், யாறு வருகின்றதென்று ஆடை தலைச் சூடாரன்றே எனவும், வண்டோரனையர் ஆடவர் பூவோரனையர் மகளிர் எனவும், `இறையனார் களவியலுரையில் ஆண்டாண்டுக் காணப்படும் பண்டைக் காலத்துச் செந்தமிழறிஞர் தம் முதுமொழிகள் போல்வன, இளம்பூரணர் முதலான ஏனையுரையாசிரியர் தம் உரைகளிற் காணப் படுகின்றில. இவ்வாற்றானும் `இறையனார் களவியலுரை நக்கீரனார் இயற்றியதாவதல்லது ஏனையோர் இயற்றியதாகாமை `உள்ளங்கை நெல்லிக்கனி போற் றெற்றெனப் புலனாம். இதுகொண்டு, சான்றோர்தம் முதுமொழிகளை இடையிடையே மடுத்து உரை எழுதுதலில் ஆசிரியர் நக்கீரனார் வேட்கை மிகுதியும் உடையராதல்போல ஏனையுரைகாரர் இருப்பக் காணாமையின், அவ் விருபாலர்க்குமுள்ள இயற்கை வேறுபாடுகளைப் பகுத்துணர்ந்து கடைப்பிடித்துக்கொள்க. இவையெல்லாம் ஒக்கும்மன்; இறையனார் களவிய லுரையிலுந், தொல்காப்பியச் சொல்லதிகார இளம்பூரணருரை யிலும் பொதுமையிற் காணப்படுவனவாக மேலெடுத்துக் காட்டிய இரண்டுரைக் குறிப்புகளையும், பின்வந்த சேனாவரையர் நக்கீரனார் மேலனவாக வைத்துரையாது, இளம்பூரணர் மேலவாக வைத்துரை கூறியதென்னை யெனின்; சேனாவரையர் காலத்து வழங்கிய `களவியலுரை ஏட்டுச் சுவடிகளில் அவ் விரண்டுரைக் குறிப்புகளுள் ஒன்றுகாணப் படாமல், தொல்காப்பியச் சொல்லதிகார இளம்பூரணர் உரையில் மட்டும் அது காணப்பட்டமையின், அது தன்னை இளம்பூரணர் மேலதாக வைத்துச் சேனாவரையர் மறுத்திட்டார். எனவே, சேனாவரையர் காலத்திற்குப் பின்வந்த களவியலுரை ஏட்டுச் சுவடிகளின் மட்டுமே, அவ் விரண்டில் ஒன்று இளம்பூரண ருரையிலிருந்து எடுத்துச் சேர்க்கப்பட்டதாதல் வேண்டு மென்பது பெறுதும். அதனானன்றே, அது நக்கீரனா ருரையினகத்தே காணப்படாமல் `இறையனாரகப் பொருள் முதற்சூத்திர உரையின் முடிவில் அதற்குப் புறம்பாய்க் காணப்படுவதாயிற் றென்பது. ஒருவருரையில் மற்றொருவ ருரையினைச் சேர்க்கலுறுவார், அவ் வுரையின் இடையே அதனைச் சேர்த்தற்கு இடங்காண்டல் அரிதாகலின், அதன் ஈற்றிலே அதனை எளிதாகச் சேர்த்து விடுவர். இவ்வியல்புக்கு ஒப்பவே, இளம்பூரண ருரைக்குறிப்பு ஒன்றை, நக்கீரனாரது களவிய லுரையிற் சேர்க்க வேண்டினார் ஒருவர், அதற்கு அவ்வுரையின் அகத்தே இடங் காணாமையின், அதன் ஈற்றின்கண்ணே அதற்குப் புறம்பாய் அதனைச் சேர்க்கலாயினா ரென்க. அற்றேற், களவியல் முதற் சூத்திரத்திற் போந்த `என்மனார் என்னுஞ் சொல்லின் முடிபை நக்கீரனார் கூறாதுவிட்ட தென்னையெனின்; நக்கீரனார் பேருரை வகுக்குங் குறிப்பினராகலின், தமதுரைக்கு வேண்டப்படாத சொன் முடிபுகளைக் கூறிற்றிலர்; அதனால் `என்மனார் என்னுஞ் சொல்லுக்கு அவர் முடிபு கூறாதுவிட்டது ஒரு குறை பாடாகாதென விடுக்க. மற்றுப், பிற்காலத்து வந்தார் ஒருவர் அச்சொல்லுக்கு முடிவுகாட்டல் வேண்டினாராகலின், அவரே அதனை இளம்பூரண ருரையிலிருந்தெடுத்துக், களவியல் முதற்சூத்திரவுரையி னிறுதியிற் சேர்த்து விட்டாரென்க. இனி, இறையனாரகப் பொருள் ஏழாஞ் சூத்திர வுரையில் `வரவு என்னும் சொல்வழக்குக்கு நக்கீரனார் உரைத்த உரையுந், தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் தருசொல்வருசொல் ஆயிரு கிளவியுந், தன்மை முன்னிலை ஆயீரிடத்தஎன்னுஞ் சூத்திரத்திற்கு இளம்பூரணர் கூறிய, உரையுந் தம்முள் மாறுபட்டு நிற்கின்றன. `வருதல் என்னும் வினை இச் சிறப்புச் சூத்திரங் கூறுமாறு தன்மை முன்னிலை என்னும் ஈரிடத்தின் கண் வரற்பாலதாகவும், அதனை விட்டு அஃது இருவரும் உள்வழி அவன்வர வுணர்தல்எனக் களவியற் சூத்திரத்திற் படர்க்கை யிடத்தின்கண் வந்தமை வழுவாம் போலுமென மயங்கும் மாணாக்கற்கு அம்மயக்கந் தீர்த்தற்பொருட்டாகவே, நக்கீரனார், செலவினும் வரவினுந் தரவினுங் கொடையினும் நிலைபெறத் தோன்றும் அந்நாற் சொல்லுந் தன்மை முன்னிலை படர்க்கை யென்னும் அம்மூ விடத்தும் உரிய என்ப (தொல்காப்பியம், சொல், 28) என்னும் பொதுச் சூத்திரத்தில் அது படர்க்கை யிடத்திற்குஞ் சிறுபான்மை யுரித்தாதலை விளக்கிக் காட்டினார். நக்கீரனார் கூறிய இவ்வுரைக்கு இணங்கவே, சேனாவரையருந் தருசொல் வருசொல் என்னுஞ் சூத்திரத்தில் வருசொல்லைப் படர்க்கை இடத்திற்கும் அமைத்துத் தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது என்னுஞ் சான்றோர் செய்யுளையும் அதற்கு இலக்கியமாக் காட்டினார். மற்று, இளம்பூரணரோ `செலவு `வரவு `தரவு `கொடை என்னுஞ் சொற்கள் நான்குங் கொடைப் பொருளை உணர்த்துமெனக் கூறித், தூண்டில் வேட்டுவன் வாங்கவாராது என்னுஞ் செய்யுளை அதற்குப் புறனடையாக எடுத்துக் காட்டினார். இளம்பூரணர் கூறிய இவ்வுரை தொல்லாசிரியர் வழக்கொடு முரணுதலின், அச்சொற்களுட் `கொடுத்தல் `தருதல் என்னும் இரண்டொழியச் `செல்லுதல் `வருதல் என்னும் மற்றிரு சொற்களுங் கொடைப் பொருளை உணர்த்தா என்பதூஉம், இளம்பூரணர் தாமே புறனடையாக எடுத்துக் காட்டிய தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது என்னுஞ் சான்றோர் செய்யுளே அதற்குச் சான்றா மென்பதூஉம் போதரச் சேனாவரையர் இந்நான்குங் கொடைப் பொருளன வென்று உரையாசிரியர் கூறினாராலெனின்; தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது என்பதனை அமைத்தாராகலின், அவர்க்கு அது கருத்து அன்று என்க. எனப் பணிவுகாட்டி அவரை மறுத்திட்டார். சேனாவரையர் மறுத்த இவ் விளம்பூரண ருரைப் பகுதிக்கும், ஆசிரியர் நக்கீரனார் அச்சொற்கள் நான்கும் பற்றிக் கூறிய உரைப்பகுதிக்கும் ஏதோரொற்றுமையும் இன்மை அவ்விரு நூலுரைகளை நன்காராய்ந்தார்க் கெல்லாம் இனிது விளங்கிக் கிடப்பவுஞ், `சேரன்செங்குட்டுவன் நூலார் அவற்றை நன்காய்ந்து பாராது, தாம் பிடித்ததை எங்ஙனமாயினும் நிலைப்படுத்தி விடுதல் வேண்டுமென எழுந்த பற்றினால் அறிவு மருண்டு நக்கீரனார் வரைந்த களவிய லுரையை இளம்பூரணர தென்றுரைத்து இழுக்கினார். நக்கீரனார் `செல்லுதல் `வருதல் என்னுஞ் சொற்கள் கொடைப்பொருளை யுணர்த்து மென்று கூறிற்றிலர்; இளம்பூரணரோ அவையுங் கொடைப் பொருளை யுணர்த்து மென்று கூறினர். நக்கீரனார் தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது என்னுஞ் சான்றோர் செய்யுளை, `வருதல் என்னுஞ்சொல் படர்க்கை யிடத்தில் வருதற்கு இலக்கியமாகக் காட்டினர்; இளம் பூரணரோ அச்சொல் தாங்கூறிய கொடைப் பொருளில் அடங்காது வேறாய் நிற்றற்கு அதனைப் புறனடை இலக்கியமாய்க் காட்டினார். இவ்வா றிருவர் உரையும் ஒன்றினொன்று மாறுபட்டு நிற்றல் வெள்ளிடைமலை போல் விளங்கிக் கிடப்பவுஞ் `செங்குட்டுவன் நூலார் அவ் விரண்டனையும் ஒரு பெற்றியவாக வைத்து மயங்கிக் கொண்டு, இளம்பூரணருரையை அவர்க்குரிய `உரையாசிரியர் என்னும் பெயராற் கூறி மறுத்த சேனாவரையர், அதனோடு ஒப்பதாகிய களவியலுரையை நக்கீரனார் பெயராற் சொல்லாமையின் அக் களவியலுரை இளம்பூரணர் இயற்றியதே யாதல் வேண்டுமெனப் பெரிதும் பிழைபட உரைத்தார். களவியலுரையும் இளம்பூரண ருரையும் ஒரே பொருளைப் பற்றியெழுந்து ஒரு தன்மைப்பட நிற்குமாயின், இளம்பூரணருரை யென்று கொண்டு மறுத்த சேனாவரையர், அதற்குமுன் னிருந்த களவியலுரையிலுங் காணப்படும் அதனை இளம்பூரணர் மேற்றாக வைத்து மறுத்தது என்னை? என்பது ஆராயற்பாற்றாம். அங்ஙனம் அவை ஒரு தன்மைப்பட நிற்றலைக் கண்டவிடத்தும், அவ்வொற்றுமை யாகிய ஒரு சிறு சான்றினைக்கொண்டு கதுமென ஒருவ ருரையினைப் பிறரொருவ ருரையாக மயங்கவைத்தலுங் குற்றமாம்; என்னை? சேனாவரையர் காலத்துக் களவியலுரை ஏட்டுச் சுவடிகளிற் காணப்படாத சில உரைப்பகுதிகள் அவர்க்குப் பிற்பட்ட காலத்தவரால் அதன்கட் சேர்க்கப்பட் டிருத்தலுங் கூடுமாகலின் என்பது. எனவே, சேனாவரையர் தருசொல் வருசொல் என்னுஞ் சூத்திரவுரையில் எடுத்து மறுத்த இளம்பூரண ருரைப் பகுதிக்கும், ஆசிரியர் நக்கீரனார் `களவியலுரை 7ஆஞ் சூத்திர வுரையில் `வருசொல் வழக்குப்பற்றி யுரைத்த உரைப் பகுதிக்கும் ஏதோர் இயைபுங் காணப்படாமையின், சான்றல்லா அதனைச் சன்றாகக்கொண்டு நக்கீரனாருரையை இளம்பூரண ருரையாகப் புரட்டிவிடத்துணிந்த `சேரன் செங்குட்டுவன நூலாரது செயல் சிறுதுரும்பினைப் புணையாகப் பற்றிக்கொண்டு ஆழ்ந்ததொரு குட்டத்தின்கட் புக்கோன் செயலோ டொப்புமை யுடைத்தாய் முடிந்தமை காண்க. அற்றேல் அஃதாக,சேனாவரையர் காலத்திற்கு முன்னரே, நக்கீரனார் `இறையனாரகப் பொருளுக்கு எழுதிய உரை உண்டென்பது எற்றாற் பெறுதுமெனின்; `இறையனாரகப் பொருள் கஅஆஞ் சூத்திரவுரையில் அஃதேயெனின் அறியக் `கிளக்கப்பட்ட இடம் என்னாது `கிளந்தஇடம் என்றது எற்றிற்கோ வெனின், வினைச் சொற்கள் நான்கு விகற்பம் உடைய; யாவை அவ்விகற்ப மெனின், கருத்தன் ஏதுக் கருத்தன், கருவிக் கருத்தன், கருமக்கருத்தன் என இவை; அவற்றுட் கருத்தனென்பது, தச்சனெடுத்த மாடம், கொல்லன் செய்த வாள்; ஏதுக் கருத்தனென்பது ஏவினானைக் கருத்தாவாகச் செய்வது, அரசர் தொட்ட குளம், அரசர் எடுத்த தேவகுலம் என இத் தொடக்கத்தக்கன; இனிக் கருவிக் கருத்தனென்பது, வாள்எறியும், சுரிகை குற்றும், இம்மிடா நாற்குறுணி, அரிசிச் சோறு அடும் என இத் தொடக்கத்தன; கருமக் கருத்தன் என்பது, திண்ணைமெழுகிற்று, கலங்கழுவிற்று, மரங் குறைத்தது என்று சொல்லுவது என ஆசிரியர் நக்கீரனார் விளக்கிய உரைக் கூற்றிற் போந்த `கருமக்கருத்தன் என்பதனைச் சுட்டிச் சேனாவரையர், தொல்காப்பியச் சொல்லதிகார 269 ஆஞ் சூத்திரவுரையில், செயப்படு பொருளை வினைமுதல் வாய்பாட்டாற் கிளத்தலேயன்றி, எளிதின் அடப்படுதல் நோக்கி, அரிசி தானே யட்டது எனச் செயப்படுபொருளை வினை முதலின்றொழிற்படக் கிளத்தலும் வழக்கியன் மரபு என்றற்குத் `தொழிற்படக் கிளத்தலும் என்றார்; இதனைக் கருமக்கருத்தன் என்ப எனக் கூறியிருத்தலின், சேனாவரையர் காலத்திற்கு முற்றொட்டே நக்கீரனாரது களவியலுரை உண்டென்பதூஉம், அதனைச் சேனாவரையர் நன்கு பயின்றிருந்தன ரென்பதூஉம்பெறப்படும். இவ்வாறே, இளம்பூரணரது தொல்காப்பிய வுரைக்கு முன்னும் நக்கீரனாரது களவியலுரை யுண்டென்பதற்குச் சான்றுண்டோ வெனின்; உண்டு; யாம் மேலே காட்டியவாற்றால் (626, 627, 628 ஆம் பக்கங்கள்), நக்கீரனாரது களவியலுரைச் சொற்றொடர் களையும் கருத்துகளையும் இளம்பூரணர் ஆங்காங்குத் தழுவி யுரைவரைந் திருத்தல் அறியப்படும்; அவையெல்லாம் ஈண்டெடுத்துக் காட்டலுறின் இது மிகவிரியும்; ஆகலின், நக்கீரனார் களவியல் நூற்பாயிர வுரையிலும், களவியல் முதற் சூத்திரவுரையில் முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் என்பவற்றிற்குக் கூறிய வுரைப் பகுதிகளிலும் உள்ள சொற் பொருள்களை இளம்பூரணர் அங்ஙனமே எடுத்துத் தொல்காப்பிய எழுத்ததிகாரப் பாயிரவுரையிலும், பொருளதி கார முதல் கரு வுரிப்பொருட் சூத்திரவுரையிலும் எழுதிச் செல்லுதலை ஒப்பிட்டுக் கண்டுகொள்க. இனி, `இறையனாரகப் பொருள் உரைப்பாயிரத்தில், தமிழ்முச்சங்க வரலாறும் நக்கீரனார் உரைவந்த வரலாறுங் கூறாநின்ற சில உரைப்பகுதிகளைக்கொண்டும், நூலின் உரையகத்தே எடுத்துக்காட்டாக வந்துள்ள `கட்டளைக் கலித்துறைச் செய்யுட்களைக் கொண்டும், இறையனராகப் பொருளுரை முழுவதூஉங் கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்குப் பின் இயற்றப்பட்டதொன்றாகல் வேண்டுமென்றும், அக்கலித் துறைச் செய்யுட்களிற் புகழ்ந்துரைக்கப்படும் பாண்டிவேந்தன் காலத்திருந்து பத்துத் தலைமுறை கணக்குச்செய்ய நக்கீரனாருங் கடைச்சங்கமும் இருந்த காலங் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற்கு மேற் செல்லாதென்றுஞ் `சேரன்செங்குட்டுவன் (பக்கம், 178-180) நூலார் கூறினர். இக் கூற்றுக்களின் பிழைபாடும் ஆராய்ந்து காட்டுதும்: `களவியல் முதற்சூத்திரத்திற்கு ஆசிரியர் நக்கீரனார் உரை யுரைக்கும் முன் அதற்குப் பாயிரவுரையும் அவர் தாமே உரைத்திட்டார். அந் நூலுக்குச் சிறப்புப் பாயிரங் கூறினார் வேறு யாரும் இல்லாமையின்,உரையெழுதுவான் புகுந்த நக்கீரனாரே அதற்குப் பாயிரவுரை கூறியது வாய்வதேயாம். ஒரு நூலுக்கு உரைகூறப் புகுந்த ஆசிரியர் அந் நூலின் வரலாறு தெரிப்பதாகிய பாயிரம் மட்டுமே தமதுரையில் வரைகுவ ரன்றித், தாம் அந்நூலுக்கு உரைவகுத்துவந்த வரலாறுந் தெரிப்பாரல்லர். ஆக்வே, நக்கீரனார், இறையனார் களவியலுக்கு முதற்கண் எழுதிய தமது பாயிரவுரையில், தாம் அந் நூலுக்கு உரையெழுதப் புக்க வரலாறுங் கூறுவரால்லர்; என்னை? அவ்வாறுரைப்பது தம்மைப் புகழ்தலாய் முடியுமாகலானும், நல்லிசைப்புலவர் அங்ஙனந் தம்மைப் புகழாராகலானும் என்பது. எனவே, நூல்வரலாறு தெரிக்கும் அப் பாயிரவுரையினிடையே, நக்கீரனாரது உரை வரலாறு தெரிக்கும் பகுதி நக்கீரனாலன்றி அவர்தம் மாணாக்கர் வழியில் வந்த ஒருவரால் எழுதிச் சேர்க்கப்பட்ட தொன்றாதல் தேற்றமாம். அற்றன்று, அது பாயிரத்துள்ளே உரைத்தாம் என்று நக்கீரனாரே தமது சூத்திரவுரையகத்தே மொழியக் காண்டலின், பாயிரவுரை முற்றும் அவரே எழுதினாரென்பது பெறப்படுமாலோ வெனின்; அறியாது கூறினாய்; அது பாயிரத்துள்ளே உரைத்தாம் என்று அவர் கூறியது எதுவென்று ஆராய்ந்து காண்பார்க்கு, அது நூல்வரலாறு தெரிக்கும் பாயிரவுரையில் அவர் கூறிய வுரையேயல்லாமல், தமது உரைவந்த வரலாறு காட்டும் உரைப் பகுதியில் உள்ளதல்லாமை இனிதுவிளங்கும். யாங்ஙனமெனிற் கூறுதும்: களவியல் முதல் சூத்திரவுரை யினகத்தே இரண்டிடங் களில் அது பாயிரத்துள்ளே உரைத்தாம் என்னுஞ் சொற்றொடர் காணப்படுகின்றது; அவற்றுள் ஒன்று: இனி, நூல் நுதலியதூஉம் உரைக்கற் பாலது; அது பாயிரத்துள்ளே யுரைத்தாம் என்பதாம் இப்பகுதியுள் `அதுபாயிரத்துள்ளே யுரைத்தாம் என்னுஞ் சொற்றொடர் காணப்படுகின்றது. அவற்றுள் ஒன்று இனி நூல் நுதலியதூஉம் உரைக்கற்பாலது. அது பாயிரத்துள்ளே உரைத்தாம் என்பதாம். இப்பகுதியுள் அது பாயிரத்துள்ளேயுரைத்தாம் என்பதாம். இப்பகுதியுள் அது பாயிரத்துள்ளே யுரைத்தாம். என்னுஞ்சுட்டு, நூற்பாயிர வுரையுள் இனி நுதலிய பொருளென்பது நூற்பொருளைச் சொல்லுதல் என்பது. இந் நூல் என்னுதலிற்றோவெனின், தமிழ் நுதலியதென்பது என்று அவர் கூறிய வுரையினைக் குறியா நிற்கின்றது. மற்றொன்று : இங்குப் பிறவுங் களவுண்மை சொல்லி, அக் களவுகட்கெல்லாம் இக் களவு சிறப்புடைமை சொல்லும் ; துறக்கம் வீடுபேறுகளை முடிக்குமாகலான் `எனப்படுவது என்று சொல்லிச் சிறப்பிக்கப் பட்டது; அது பாயிரத் துள்ளும் உரைத்தாம் என்பதேயாம்; இதன்கட் போந்த சுடடு, நூற்பாயிர வுரையில் இனிப், பயன் என்பது இது கற்க இன்னது பயக்கும்என்பது துவங்கி மற்றும் இவை போல்வன களவாகா, நன்மை பயக்கும் என்பது ஈறாகக் கிடந்த பகுதியினையே குறியா நிற்கின்றது. இங்ஙனமாக முதற்சூத்திர வுரையுள் அது பாயிரத்துள்ளே உரைத்தாம் என்று இருகாற்போந்த சுட்டுக்கள் இரண்டும், நக்கீரர் தாமேயுரைத்த நூற்பாயிர வுரையிற் போந்தஉரைப் பகுதிகளைக் குறிக்கக் காண்டுமே யல்லாமல், உரைவரலாறு கூறும் பகுதியிலுள்ள வற்றைக் குறிக்கக் காணாமையின், அவை கொண்டு பாயிரவுரை முழுதும் நக்கீரனார் ஆக்கியதே யென்றல், அப் பாயிரவுரைப் பகுதிகளைப் பகுத்தாராய்ந்து பார்க்க மாட்டாதார் கூறும் பிழை பாட்டுரையேயாமென விடுக்க. அற்றேல், இறையனாரகப் பொருள் முதற் சூத்திரத்திற்கு ஆசிரியர் நக்கீரனார் கூறிய நூற்பாயிர வுரையாவது எது? அதன்கட் பிறர் கூறிய உரைப்பாயிரவுரையாவது எது? என வினவின், அவை தம்மையும் பிரித்துக் காட்டுதும். நூற்பாயிர வுரையாவது: ஒரு நூல் செய்த ஆக்கியோன் பெயரும், அந் நூல் இன்ன நூலின் வழித்தாகச் செய்யப்பட்டதென அதன் வழியும், அஃது இன்ன எல்லைக்குள் வழங்குவதென அதன் எல்லையும், அந்நூலின் பெயர் இதுவென அதன் பெயரும், அது `தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்ப்பு என ஆக்கப்படும் நால்வகையில் இன்னதுபற்றி யாக்கப் பட்டதென அதன் யாப்பும், அஃது இத்தகையதொரு பொருளை விளக்குவான் புகுந்ததென அது நுதலிய பொருளும், அஃது இன்னதோர் அவையகத்தே இத்துணைச் சிறந்த சான்றோராற் கேட்டு ஏற்கப்பட்டதென அதனைக் கேட்போரும், இந்நூல் கற்க இன்னபயன் உண்டாம் என அதன் பயனும், அஃது இயற்றப்பட்ட காலமும், அஃது அரங்கேறிய அவைக்களமும், அந்நூல் செய்யவேண்டிற்றாங் காரணமும் என அந் நூலைப் பற்றிய பதினொரு வரலாறுந் தெரிப்பதே ஒரு நூலுக்குப் பாயிரமாகும். இப்பதினொரு வரலாறுங் கூறும் பாயிரம் ஒரு நூலுக்கு இன்றியமையாச் சிறப்பிற்றாதல் நோக்கியே தொன்று தொட்டுவந்த தமிழாசிரியர் ஆயிரமுகத்தான் அகன்ற தாயினும், பாயிரம் இல்லது பனுவ லன்றே12 என்று கூறுவாராயினர்; அவர் கூறிய ஆணைகடவாதே நக்கீரனார் முதலாகவந்த உரையாசிரியரும் பிறருந் தாமெடுத்த நூற்கு முதலிற் பாயிரம் உரைத்தலை ஒரு பெருங்கடமையாக் கொண்டார். அறுபது சூத்திரங்களால் ஆகிய `இறையனாரகப் பொருள் என்னும் அகப்பொருள் நூல், திருவாலவாய்க் கோயில் இறைவன் றிருவுருவப் பீடத்தின் கீழ் நின்றுந் தற்செயலாய்க் கிடைத்த மூன்று செப்பேடுகளில் எழுதப்பட் டிருக்கக் கண்டமையின், அதனை இறைவனே அருளிச் செய்தானென்று கொண்டு, அக்காலத்திருந்த நக்கீரனாரை யுள்ளிட்ட நல்லிசைப் புலவர் அதற்கு உரை வரைந்தாராகல் வேண்டும். அதற்குச் சிறப்புப் பாயிரம் எவராலும் உரைக்கப் படாமையின், உரையெழுது வான் புகுந்த நக்கீரனாரே தமது உரைமுகத்தில் அந்நூற் சிறப்புப்பாயிரத்திற்குரிய பதினொன் றும் உரைத்திட்டார். அடிக்குறிப்புகள் 1. Studies In South Indian Jainism 2. சேரன் செங்குட்டுவன், பக்கம். 170 Studies In South Indian Jainism. p.52. 3. சிலப்பதிகாரம், உரைபெறு கட்டுரை. 4. அகநானூறு, 15, 90, 251: சிலப்பதிகாரம் உரைபெறு கட்டுரை, 2. 5. Dr. V.A. Smith’s The Oxford History of India. of 1923, pp. 57-58. 6. Dr. V.A. Smith’s ‘The Early History of India’. 1914 p.284; also of R.C. Dutt’s ‘A History of Civilisation in Ancient India’, Vol. II, p.50. 7. Dr. V.Smith’s ‘The Early History of India’, 1914 p.284. 8. செந்தமிழ், 15 ஆந்தொகுதி, 655 ஆம் பக்கம் காண்க. 9. புறநானூறு, 59. 10. செந்தமிழ், 4. ஆந் தொகுதி, பக்கம். 309. 11. தொல்காப்பியம், சொல், 1, 29. 12. இதுவும், இன்னோரன்ன பாயிரச் சூத்திரங்களும் நக்கீரனார் இளம்பூரணர் முதலான தொல்லாசிரியர் தம் உரைகளில் வழங்கக் காண்டலின். இவை அவர்க்குப் பிற்காலத்து வந்த பவணந்தியாரால் இயற்றப்பட்டன அல்ல. இவை கடைச்சங்க காலத்திற்கு முன்னரே ஆக்கப்பட்டனவாகும். இவற்றுட் சில பாடலனார் என்னும் ஆசிரியரால் இயற்றப்பட்டனவென யாப்பருங்கலக்காரிகையின் பழையவுரை கூறாநிற்கும். இவை தம்மையே பிற்காலத்திற் பவணந்தியார் தமது நன்னூலில் எடுத்தாண்டனரென்க. 22. முச்சங்க வரலாறும் தொல்காப்பிய காலமும் நூல் வரலாறு தெரிக்கும் இப் பதினொன்றும் அல்லாத ஏனை உரைப்பாயிர வுரையெல்லாம் நக்கீரனார் தம் மாணாக்கர் வழிவந்த ஏனையொருவராற் றாம் கேட்டவாறே எழுதிச் சேர்க்கப்பட்டனவாகும். அங்ஙனஞ் சேர்க்கப்பட்டவை யாவையோவெனிற், கூறுதும்: தலைச்சங்க இடைச்சங்க கடைச்சங்க வரலாறுகளை எடுத்துரைக்கும் பகுதிகள் அவ்வளவும் நக்கீரனார் எழுதியன ஆகா. என்னை? `சங்கம் என்னுஞ்சொற் றமிழ்ச்சொல் அன்மையானும், நக்கீரனார் காலத்தும் அவர்க்கு முன்னும் இருந்த சான்றோர்கள் எல்லாம் `மன்றம் `அம்பலம் `குழாம் `பொதியில் என்னுந் தூய தமிழ்ச்சொற்களையே வழங்கினரன்றிச், `சங்கம் என்னுஞ் சொல்லை வழங்கக் காணாமையானும், முச்சங்க வரலாறு நக்கீரனாரே எழுதினராயின் அவருந் `தலைமன்றம் `இடைமன்றம் முதலான தனித்தமிழ்ச் சொற்களினாலேயே அவை தம்மை வழங்கியிருப்பராகலானும் என்பது. அதுவேயுமன்றித், தலைச்சங்கத்தில் அகத்தியனாரும் சிவபெருமானும் முருகக்கடவுளும் இருந்து தமிழாராய்ந்தா ரென்னும் ஒரு கதையை, உலக இயற்கையொடு மாறுறாத நக்கீரனார் எழுதுவாரல்லர்; மேலுங், கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட பழந்தமிழ்ப் பாட்டுகளில் எங்கும் அகத்தியனார் என்று ஓராசிரியர் இருந்தாரென்பதற்கு ஏதொரு சான்றும் இல்லாமை மேலே விளக்கிப் போந்தாமாகலானும், காணவுங் கருதவும் படாத முழுமுதற் கடவுளான சிவபிரானும் முருகவேளுந் தலைச்சங்கத்தில் ஏனைப் புலவரோடு ஒக்க வீற்றிருந்து தமிழாராய்ந்தார் என்னுங் கதை, புராணக் கதைகள் மிக்கெழுந்த கி.பி. நான்காம் நூற்றாண்டுக்குப் பின்னன்றி முன் வழங்கிய தாகாமையானும், அன்றி அது முன்வழங்கிய தென்பதற்குக் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட தமிழ்நூல்களிற் சான்றின்மையானும் அக் கதையை நக்கீரர் எழுதினாரென்பதூஉம் ஆகாது. அதுவேயு மன்றித், தலைச்சங்கம் 4440 ஆண்டு நடைபெற்ற தென்பதூஉம் நம்பற்பாலதன்று; மக்கள் வாழ்க்கையில் அத்துணை நீண்டகாலம் ஏதொன்றும் நடைபெறக் காணாமையானும் அதற்குப் பழையநூற்சான்று ஏதும் இன்மையானும் இந்நீண்ட கால அளவைக் கற்பித்தது, ஒன்றை ஆயிரமாகப் பெருக்கிப் பொய்க்கும் புராண காலத் தன்றி நக்கீரனார் காலத்தாகாது. இங்ஙனமே இடைச் சங்கத்தைப் பற்றிய வரலாற்றினுள்ளும் அகத்தியனார் பெயரும், அச் சங்கம் 3700 ஆண்டிருந்த தென்னும் நீண்ட காலவளவையுங் காணப்படுதலானும் அதுவும் நக்கீரனார் எழுதியதாகாது. தலைச்சங்க வரலாற்றின் கண், அச்சங்கத்தை நடைபெறுவித்தார் ஒருவர்பின் ஒருவராய் அரசுக்குவந்த பாண்டியர் எண்பத்தொன்பதின்ம ரென்பது குறிக்கப்பட் டிருக்கின்றது. உலகின்கண் ஆங்காங்கு அரசாண்ட அரசர்களின் தொகையையும், அவரரசுபுரிந்த ஆண்டுகளையுந் தனித்தனியே கூட்டிப், பின் ஆண்டின் தொகையை அரசரது தொகையால் வகுத்துப் பார்க்க, ஒவ்வோர் அரசர்க்கும் இருபது முதல் முப்பது ஆண்டுக்குமேல் ஆட்சிக்காலம் பெறப் படாமையை இஞ்ஞான்றை வரலாற்று நூலாசிரியர்கள் நன்காராய்ந்து முடிவுகட்டி யிருக்கின்றார்கள். அம்முடிபொடு பொருந்த, ஒரு பாண்டிய அரசர்க்குக் குறைந்தது இருபதாண்டு வைத்துக் கணக்குச் செய்யத்`தலைச்சங்கம் நடைபெற்ற காலம் 1780 ஆண்டுகள் ஆகுமே யல்லாமல், 4440ஆண்டுகள் ஆகா. இங்ஙனமே `இடைச்சங்கத்தை நடைபெறுவித்த பாண்டியர் ஐம்பத்தொன்பதின்மர் என்பதூஉம் அவ் வரலாற்றின்கட் சொல்லப்பட் டிருத்தலால், அவ் வைம்பத் தொன்பதின் மருக்கும் மொத்தமாய்ப் பெறப்பட்ட 1180 ஆண்டுகளே இடைச்சங்கம் நடைபெற்ற காலமாகும்; ஆதலால் அது 3700 ஆண்டுகள் நடைபெற்ற தென்பதும் பிழைபாட்டுரையாம். ஆகவே, இவ்விரண்டு சங்கங்களின் வரலாறும் நக்கீரனார் எழுதியதாதல் செல்லாது. இனிக், `கடைச்சங்க வரலாறும் நக்கீரனார் எழுதிய தாகாது. என்னை? கடைச்சங்கம் நடைபெறுவித்த பாண்டி மன்னர் நாற்பத்தொன்பதின்மர் என்பது குறிக்கப்பட்டிருத்த லானும், அந் நாற்பத்தொன்பதின்மர்க்கும் 980 ஆண்டுகளே பெறப்படுவதாயிருக்க, அதுநடைபெற்ற காலம் 1850 ஆண்டுகளென்று வழுவுற வரையப் பட்டிருத்தலானு மென்பது. அதுவேயுமன்றி, `அகத்தியம் என்னும் இலக்கணத்தைப் பற்றிய குறிப்பு, இறையனாரகப் பொருளுரையிலாதல் ஏனைக் கடைச்சங்க நூல்களினாதல் ஒருசிறிதுங் காணப்படாதாக, இப் பாயிர வுரையிற் போந்த கடைச்சங்க வரலாற்றில் அவர்க்கு நூல் அகத்தியமுந் தொல்காப்பியமும் என்ப என்பது குறிக்கப்பட்டிருக்கின்றது. `அகத்தியம் கடைச்சங்க காலத்துப் புலவர்பால் வழங்கிய துண்மையாயின், தொல்காப்பியச் சூத்திரங்கள் நக்கீரனாரது உரையின்கண் மிகுதியாய்ப் பயின்று வருதல்போல், அகத்தியச் சூத்திரங்கள் ஒருசிலவாயினும் அதன்கட் காணப்படுதல் வேண்டும் அன்றே? அவ்வாறு ஒருசிலவுங் காணப்படாமையின், அகத்தியம் என்பதொன்று கடைச்சங்க காலத்திலும் இல்லாமை திண்ணமாம்; அங்ஙனமாகவும், அஃது அஞ்ஞான் றிருந்ததெனக் கூறும் பொய்வரலாறு நக்கீரனார் உரைத்த தாகாது. இன்னுங் கடைச்சங்க காலத்துப் புலவர்களாற் பாடப்பட்டவை: நெடுந்தொகை நானூறும் (அகநானூறும்), குறுந்தொகை நானூறும், நற்றிணை நானூறும், புறநானூறும், ஐங்குறுநூறும், பதிற்றுப்பத்தும், நூற்றைம்பது கலியும், எழுபது பரிபாடலும், கூத்தும், வரியும் சிற்றிசையும், பேரிசையும் என்று இத்தொடத்தக்கன என்பது கடைச்சங்க வரலாற்றிற் குறிப்பிட் டிருக்கின்றது. இங்ஙனங் குறிக்கப்பட்டுள்ள நூல்களுள் இதுகாறும் வெளிப்போந்தவை யெல்லாம், ஒரோவொரு புலவரால் ஆக்கப்படாமற், பற்பல காலத்திருந்த புலவர் பற்பலராற் பற்பல பொழுதுகளிற் பாடப்பட்ட பாக்களின் தொகை நூல்களாயிருக்கக் காண்கின்றோம். தலைச்சங்க காலத்திருந்த `முரஞ்சியூர் முடிநாகராயர், `நெட்டிமையார், `காரிகிழார் `நெடும்பல்லியத்தனார்முதலான நல்லிசைப் புலவர் பாடிய செய்யுட்கள் `புறநானூற்றின்கட் காணப்படு தலானும், `பரிபாடற் பாட்டுகளிற் சொல்லப்பட்டுள்ள திருமால் வணக்கத்தை ஆராயுங்கால் அப் பாடல்களைப் பாடிய புலவர் பலருங் கடைச்சங்க காலத்திற்கு மிக முற்பட்டவராதல் வேண்டுமென்பதை மேலே 440 ஆம் பக்கத்திற் காட்டினமாகலானும், இவ்வாறே ஏனைத்தொகை நூல்களினுங் கடைச்சங்க காலத்தவரல்லாத பண்டை நல்லிசைப் புலவர் தம் பாக்கள் விராய்க் காணப்படுதலானும் மேற்காட்டிய தொகை நூல்களெல்லாங் கடைச்சங்கப் புலவர்களாலேயே ஆக்கப்பட்டனவென்பது பொருத்தமில் கூற்றாம்; இப்பொருத்தமில் கூற்றைக் கடைச்சங்க காலத் திருந்த நக்கீரனார் எழுதினாரென்றல் இசையாமையால், இது கொண்டும் முச்சங்க வரலாறு நக்கீரனார் உரைத்ததன் றென்பது பெற்றாம். அற்றேல், நக்கீரனார் வரைந்த பாயிரவுரையினிடையே முச்சங்க வரலாறு கூறும் இப்பகுதி அவர் உரையாத தொன்றாயின் ஆகுக; மற்று, இல்லாததொன்றை அங்ஙனம் உள்ளதுபோற் படைத்துப் பிறரொருவர் அதனை வழங்க விட்டனரென்றல் யாங்ஙனமெனின்; நன்றுகடாயினாய்; முச்சங்க வரலாறு கிளக்கும் அப்பகுதி முற்றும் பொய்யாவது அன்று; அதன்கண் மெய்யாவன பல உள: அவை யாவையெனிற் காட்டுதும்: முரஞ்சியூர் முடிநாக ராயர் என்னும் நல்லிசைப் புலவர் தலைச்சங்கத்தில் வீற்றிருந்தாரென்னு முரை உண்மையுரையேயாம். பாண்டவர் ஐவர்க்குந் துரியோதனன் முதலிய நூற்றுவர்க்கும் நிகழ்ந்த பாரதப் போரில் முனைந்து நின்ற பாண்டவர் படைக்குப் பெருஞ்சோறு வழங்கிய உதியஞ்சேரலாதன் என்னுஞ் சேரவேந்தனது ஈகைத்திறத்தினை வியந்து அவனை முன்னிலைப் படுத்து, வலியுந் தெறலும் அளியும் உடையோய்! நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும்நின் வெண்டலைப் புணரிக் குடகடற் குளிக்கும் யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந! வான வரம்பனை நீயோ பெரும! அலங்குனைப் புரவி ஐவரொடு சினைஇ நிலந்தனைக் கொண்ட பொலம்பூந் தும்பை ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்! என்று அப் புலவர் பெருந்தகையாகிய முரஞ்சியூர் முடிநாகராயர் பாடிய மண்டிணிந்த நிலனும் என்னுஞ் செய்யுள் புறநானூற்றிற் கடவுள்வாழ்த்துச் செய்யுளுக்குப் பின்னே முதலாக வைக்கப்பட்டிருக்கின்றது. அஃது அத்துணைப் பழைய காலத்தே பாடப்பட்ட செய்யுளாதல் நோக்கியே, பண்டிருந்த சான்றோர் அதனை அந் நூலின் முதற்கட் பெய்துவைத்தா ரென்பது தெற்றென விளங்கும். பாரதப்போரில் நின்ற பாண்டவர் படைக்குஉதியஞ்சேரன் பெருஞ்சோறு வழங்கிய செய்தி, உதியஞ் சேரல், பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை (233) என்று அகநானூற்றினும், ஓரைவர் ஈரைம் பதின்மர் உடன் றெழுந்த போரிற் பெருஞ்சோறு போற்றாது தான் அளித்த சேரன் பொறையன் மலையன் திறம்பாடி (ஊசல்வரி, 24) என்று சிலப்பதிகாரத்தினும் நன்கெடுத்து மொழியப் பட்டிருத் தலால், அஃது உண்மை வரலாறேயாதல் ஐயுறவின்றித் துணியப்படும். இனித், தலைச்சங்கம் நடைபெற்ற காலத்தில் ஒருவர் பின் னொருவராய் அரசுபுரிந்த பாண்டிவேந்தர் எண்பத்தொன் பதின்மரெனவும், இடைச்சங்கம் நடைபெற்ற காலத்தில் அங்ஙனமே அரசுபுரிந்த பாண்டியர் ஐம்பத்தொன்பதின்ம ரெனவும் அம் முச்சங்க வரலாற்றிற் காணப்படுங் குறிப்புகள் உண்மையாவனவேயாம். யாங்ஙனமெனிற் கூறுதும்: மேலேகூறிய பாரதப்போர் இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகட்கு முன் நிகழ்ந்ததாகும் என்பதனை வைத்தியா என்னும் அறிஞர் தாம் எழுதிய `மகாபாரத ஆராய்ச்சி1 என்னும் நூலில் உயர்ந்த பல உண்மைச் சான்றுகள் காட்டி நன்குவிளக்கியிருக்கின்றனர். மாபாரதப் போர் நிகழ்ந்தகாலம் கிறித்து பிறப்பதற்குமுன் 1250 ஆம் ஆண்டில் நிகழ்ந்ததாகு மெனத் `தத்தரும் 1194-ஆம் ஆண்டில் என `வேலந்தைக் கோபால ஐயரும் புகன்றவை பொருந்தாவாய்ப் பிழைபடுதலும், சதபதபிராமணமானது கி.மு. 2500 ஆம் ஆண்டில் அஃதாவது இற்றைக்கு நாலாயிரத்து நானூறு ஆண்டுகட்குமுன் இயற்றப்பட்ட தொன்றாகு மென்று பாலகங்காதர திலகர் பெரிது ஆராய்ந்து நிறுவிய கொள்கையே பொருத்தமாதலும்2 அவரால் நன்காராய்ந்து காட்டப்பட்டிருக் கின்றன. அவ் வாராய்ச்சிகளெல்லாம் ஈண்டெடுத்துக் காட்டலுறின் இது மிக விரியும்; ஆகலான் அவற்றை அந் நூல்களிற் கண்டுகொள்க. இங்கே, அம் முடிபு தமிழ் முச்சங்க வரலாற்றுட் காணப்படுங் காலக்கணக்கோடு ஒத்திருத்தலே யாங் காட்டுதற்கு உரித்தாவதாம். தலைச்சங்கம் நடைபெறத் துவங்கிய காலம்முதல் அதன் ஈறுவரையில் 89 பாண்டியர்கள் அரசாண்டன ரென்பதனால் அதன் முழுக்கால வெல்லை 1780 ஆண்டுகளாகும்; இடைச்சங்கம் நடைபெற்ற கலத்தில் 59 பாண்டியர்கள் இருந்தன ரென்பதனால் அதன் முழுக்கால வெல்லை 1180 ஆண்டுகளாகும்; கடைச்சங்க காலத்தில் 49 பாண்டியர்கள் இருந்தமை நுவலப்படுதலால் அதன் முழுக் காலவெல்லை 980 ஆண்டுகளாகும்; ஆகத் தமிழ் முச்சங்கம் நடைபெற்ற மொத்தக் காலம் 3940 ஆண்டுகளாதல் இனிது பெறப்படும். இனிக், கடைச்சங்கம் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் முடிவடைந்த தென்பதை மேலே விளக்கிக் காட்டின மாதலால், முச்சங்ககால மொத்தத் தொகையில் 200 ஆண்டுகள் கழிக்கக், கிறித்து பிறப்பதற்கு 3740 ஆண்டுகட்கு முன்னர்தான் தலைச்சங்கம் துவங்கிய தென்பது தெளியப்படும். மற்றுத்தலைச்சங்கம் 1780 ஆண்டுகள் நடைபெற்றுக், குமரிநாடு கடல்கொண்ட காலத்தில் அதற்குத் தலைநகராகிய தென்மதுரையும் அழிந்து பட்டமையால், அதன்கண் நடை பெற்ற அத் தலைச்சங்கமும் அழிந்துபட்டது! எனவே அத் தமிழ்ச்சங்க முடிவுங் குமரிநாடு கடல்கொண்ட காலமுஞ் சிறிதேறக்குறையக் கி.மு. 2000த்தில் அஃதாவது இற்றைக்கு 4000 ஆண்டுகட்கு முன் நிகழ்ந்தனவாமென்பது தானே போதரும். மநுவென்பவர் காலத்து நிகழ்ந்த கடல்கோள் ஒன்று சதபத பிராமணத்தின் கண் (1, 8, 11-1) நுவலப்பட்டிருக்கின்றது. அதனால், அக் கடல்கோள் நிகழ்ச்சியினைக் கூறுஞ் சதபத பிராமணப்பகுதி, இற்றைக்கு நாலாயிர ஆண்டுகட்குமுன் அக் கடல்கோளை யடுத்துச் செய்யப்பட்டதாகல் வேண்டுமென்பது நன்கு பெறப்படும். பாபிலோனியர் என்னும் மிகப் பழைய மக்கள் வழங்கிய இக் கடல்கோள் வரலாறு கி.மு. 2000 ஆம் ஆண்டில் அவர்களாற் செதுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றிற் சொல்லப் படுதலாலும்,3 யூதவேதத்தின் முதலாகமத்திற் குறிக்கப்பட்ட உலகத் தோற்றத்திற்குப்பின் 1659 ஆண்டுகள் கழித்து அஃதாவது 2344ஆம் ஆண்டில் அக்கடல்கோள் நிகழ்ந்ததென்று யூத நூலாசிரியர்கள் கணக்கிட்டிருத்தலாலும்,4 குமரிநாடு முதன்முதல் கடலால் விழுங்கப்பட்டது இற்றைக்கு நாலாயிர ஆண்டுக்கு முன்னென்பது துணியப்படும். தனித்தனி வெவ்வேறிடங் களில் இருந்த தமிழர், ஆரியர், பாபிலோனியர், யூதர் என்னும் பழைய பல்வேறு மக்கட்பிரிவினர் அதற்குக் கூறுங் காலக்கணக்குப் பெரிதும் ஒத்திருத்தல்கொண்டு, அக் கடல்கோள் நாலாயிர ஆண்டுகட்குமுன் நிகழ்ந்தமை ஒருவாற்றானும் ஐயுறற்பாலதன்றாம். இங்ஙனமாகத், தமிழர் அல்லாத ஏனைப் பழையமக்கள் மொழிந்த கடல்கோட் காலக்கணக்கொடு தமிழ் முச்சங்கம் நடாத்திய பாண்டி வேந்தரின் காலக்கணக்குப் பெரும்பாலும் ஒத்திருத்தலின், இறையனாரகப்பொருள் உரைப் பாயிரவுரையில் தலைச்சங்கம் நடாத்திய பாண்டிமன்னர் எண்பத்தொன்ப தின் மெரனவும், இடைச்சங்கம் நடாத்திய பாண்டிமன்னர் ஐம்பத்தொன் பதின்மரெனவும், கடைச்சங்கம் நடாத்திய பாண்டிமன்னர் நாற்பத்தொன்பதின்ம ரெனவும் மொழிந்த வரலாற்றுரை உண்மையுரையே யாதல் கடைப்பிடித்துக் கொள்க. அற்றாயினும், சதபத பிராமணத்திற் சொல்லப்பட்ட கடல்கோள் தென்னாட்டின்கண் நிகழ்ந்ததென்று அதன்கட் கூறப்படாமையானும், அதனை ஆராய்ந்த `பாலகங்காதர திலகர் அது வடதுருவத்தின் கண்ணே நிகழ்ந்த தாகல் வேண்டுமெனக் கூறுதலானும், அது குமரிநாட்டைக் கொண்ட கடல்கோளே என்பதற்குச் சான்றென்னை யெனிற் கூறுதும் சதபதபிராமணம் அக் கடல்கோள் இன்ன இடத்தில் நிகழ்ந்ததென்று உரைத்திலதேனும், அதற்குப் பின்வந்த புராணங்களில் மிகப் பழைதாகிய மற்சபுராணம் (1, 12), அக் கடல்கோள்களில் தொடர்புற்ற மநு என்பவர் மலையம் என்னும் மலைமேல் தவம்புரிந்து கொண்டிருந்தார் என்று நுவலுதலானும், சதபதபிராமண மற்ச புராணங்களிற் போந்த அச் சுருக்க வரலாறுகளுக்கு விரிவுரைபோற் றோன்றிய பாகவத புராணமானது (8, 24, 7) தமிழ்நாட்டில் ஓடுங் கிருதமாலை என்னும் ஆற்றங்கரையில் தமிழர்க்கு அரசனான சத்தியவிரதன் என்பான் தவஞ் செய்துகொண்டிருந்த காலையில், அங்கு மீன்வடிவில் வந்த ஒரு தெய்வம்அவற்கு அங்கு நிகழப்போகுங் கடல்கோளினை முன் அறிவித்து, அறிவித்தவாறே அது நிகழலானபொழுது, அங்குப் போந்த மரக்கலம் ஒன்றில் அவனையும் அவனுடனிருந்தார் சிலரையும் ஏற்றுவித்து, வெள்ளத்தில் அம் மரக்கலத்தை இழுத்துக் கொண்டு போய் அவர் தம்மையெல்லாந் தப்புவித்த வரலாற்றினை விரித்துரைத் தலானும், `மலையம் என்னும் பொதியமலை யிருந்த குமரி நாட்டிலேயே அக் கடல்கோள் நிகழ்ந்தமை நன்கு துணியப்படும். அத் தமிழ்நாட்டு மன்னனான `சத்தியவிரதன் (இப் பெயர் அவனுக்குரிய பழைய தமிழ்ப் பெயரை மொழிபெயர்த்த வடமொழிப் பெயராகும்) என்பான் இறைவனாற் பாதுகாக்கப்பட்டு அக் கடல்கோளுக்குத் தப்பிக், கடல்கொண்ட குமரிநாட்டுக்கு வடக்கிருந்ததாகிய இத் தமிழ்நாட்டில் வந்து சேர்ந்து, கடல்நீராற் கவரப்பட்ட தமிழ்நான்மறைப் பொருள்களைப் பெயர்த்தும் வழங்கச் செய்து, நாகரிகத்தை நிலைநாட்டினான். இங்ஙனம் போந்த இவ்வுண்மை வரலாறுகள் கொண்டு, சதபதபிராமணத்திற் குறிக்கப்பட்ட கடல்கோள் பண்டைத் தமிழ்நாடாகிய குமரிநாட்டின்கண் நிகழ்ந்ததேயாகுமென்பது தெள்ளிதிற் புலப்படுதலால், ஏதொரு சான்றும் இன்றி அது வட துருவத்தில் நிகழ்ந்ததாகுமென மொழிந்த பாலகங்காதர திலகருரை கொள்ளற்பால தன்றென விடுக்க. இனிச் சதபதபிராமணமானது குருகுல பாஞ்சால குலமன்னர்க்குரிய தேயம் இதுவெனக் குறித்துரைப்பதோடு, ஜனமேஜயன் குருகுலவேந்தனாதலும்,5 சுருதசேனன் உக்கிரசேனன் வீமசேனன் முதலியோர் அருச்சுனன்றன் பேரற்கு மக்களாய் ஜனமேஜயனுக்கு உடன்பிறந் தோராதலும்6 தெரித்தோதுகின்றது. எனவே, சதபித பிராமணம் மாபாரதப் போர் நடந்தேறியபிற் பல நூற்றாண்டுகள் கழித்து இயற்றப் பட்ட நூலாதலும் நன்கு தெளியப்படும். சதபத பிராமணப் பகுதிகள் சில கி.மு. 2300 ஆம் ஆண்டிற்குப் பின் இயற்றப்பட்ட தாதல் செல்லாமை யாற், குமரிநாடு கடல்வாய்புக்கது கி.மு. 2400 இலும், பாரதப்போர் நிகழ்ந்தது கி.மு. 300 இலும் என்று கோடலே சாலப் பொருத்தமாம். மற்றுத், தலைச்சங்கமோ அக் கடல்கோளுக்கு முன் 1780 ஆண்டுகள் நடைபெற்ற தென்பதனை மேலே விளக்கிக் காட்டினமாதலால், அத் தலைச் சங்கப்புலவருள் ஒருவரான முரஞ்சியூர் முடிநாகராயர், பாரதப் போரில் நின்ற பாண்டவர் படைக்குச் சோறு வழங்கிய உதியஞ்சேரலனை முன்னிலைப்படுத்துப் பாடியிருத்தல் கொண்டு, அப் பாரதப்போர் நிகழ்ந்த கி.மு. 3101 இல் அஃதாவது இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகட்குமுன், அஃதாவது தலைச்சங்க நடுக்கால எல்லையில் அவர் இருந்தவராவ ரென்பது துணியப்படும். இங்ஙனமாக, இறையனாரகப் பொருள் உரைப்பாயிரத்தின் முச்சங்க வரலாற்றிற் குறிக்கப் பட்ட பாண்டிவேந்தரது தொகையுந், தலைச் சங்கத்தில் முரஞ்சியூர் முடிநாகராய ரென்பாரொரு பெரும்புலவர் இருந்தனரெனப் போந்த உண்மையும் வடநூற் சான்று களோடும் ஏனைப் பாபிலோனியர் யூதர் என்னும் பிறநாட்டார் வரைந்து வைத்திருக்கும் வரலாறுகளோடும் முழுதொத்து நிற்கக் காண்டலின், அவை தொன்றுதொட்டு வந்த மெய்வரலாறு களாதல் துணியற் பாற்றாம் என்பது. இனித் தலைச்சங்கத்தார்க்கு நூல் `அகத்தியம் என்றும், இடைச் சங்கத்தார்க்கு நூல் அகத்தியமுந் தொல் காப்பியமும் மாபுராணமும் இசை நுணுக்கமும் பூதபுராணமும் என இவை என்றும் போந்த உரையில், `அகத்தியம் தலைச்சங்க நூலென்றதூஉம், `தொல்காப்பியம் இடைச் சங்க நூலென் றதூஉம் உண்மையாகா. `அகத்தியம் என்றொரு நூல் பண்டைக் காலத்தில் இருந்ததில்லை யென்பதை முன்னரே காட்டினாம். மற்றுத் `தொல் காப்பியமோ, குமரிநாடு கடல்கொள்ளப் படுமுன் ஆக்கப்பட்ட நூலென்பது பனம்பாரனார் கூறிய சிறப்புப் பாயிரத்தானும், அதற்கு `இளம்பூரணர் உரைத்த உரையானுந் தெளியப்படுதலின், அது தலைச்சங்ககாலத் தெழுந்த நூலேயாகு மல்லாமல் இடைச் சங்ககாலத்ததாகாது. அற்றேல், தொல்காப்பியத்திற்குப் பாயிரஞ் செய்த பனம்பாரனார் பல்புகழ் நிறுத்த படிமை யோனே என்று ஆசிரியர் தொல்காப்பியனாரைத் தவவொழுக்கத்தினராக வைத்து உயர்த்துக் கூறுதலானும் `படிமை என்னுஞ் சொல் `தவ வொழுக்கத்தினை யுணர்த்துதல் சமண் மதத்தவர் நூல்களிலன்றி அவற்றிற்கு முற்பட்ட வடமொழி தென்மொழி நூல்களிற் காணப்படாமையின் அச் சொல்லால் உயர்த்துரைக்கப்பட்ட தொல்காப்பியனார் சமண் மதத்திற்கு உரியவரேயாதல் அதனாற் போதரலானும், சமண்நூலார் உயிர்த் தொகைகளை ஓரறிவு முதல் ஐயறிவு ஈறாகப் பகுத்து அவ்வைவகையுள் அவற்றை வைத்து அடக்குமாறுபோலவே தொல்காப்பியனாரும் `மரபியலில் உயிர்த்தொகைகளை ஒன்றுமுதல் ஆறு அறிவு ஈறாகப் பகுத்து அவ்வகைகளுள் வைத்து அவை தம்மை அடக்கிக் கூறுதல் கொண்டு அவர் சமண்மதத்தினரென்பதற்கு மற்றுமொரு சான்று பெறப்படுத லானும் அவர் சமண்மதத்தினரேயாவர் என்பர் ஒரு சாரார்.7 வடமொழி இலக்கண ஆசிரியரான பாணினி என்பவரும் `ஐந்திரவியாகரணத்தைச் செய்த `இந்திரன் என்னும் ஆசிரியரும் கி.மு. 300 ஆம் ஆண்டில் இருந்த ஒரே காலத்தவ ராயினுந், தொல்காப்பியனார் ஐந்திர வியாகரணத்தையே விரும்பிக் கற்றவராகலின், அவரை ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்று பனம்பாரனார் ஓதினார்; ஓதவே, தொல்காப்பியனார் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதாதல் பெறப்படும் என்பர் பிறிதொருசாரார்.8 இவ்வா றுரைப்பவரே பிறிதோ ரிடத்தில், தொல்காப்பியம் கி.மு.நான்காம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதாகாது9 என முன்னொடுபின் முரணஉரை நிகழ்த்தினார். பின்னும் ஒருசாரார், இலங்கைத் தீவின் வரலாற்றில்10 முதற் கடல்கோள் கி.மு. 2387 இலும், இரண்டாங் கடல்கோள் பாண்டுவாசன் அரசுபுரிந்த கி.மு 504 இலும், மூன்றாவதொன்று கி.மு. 306 இலும், நிகழ்ந்தமை குறிக்கப்பட்டிருத்தலின், இறையனாரகப் பொருட் பாயிரவுரையில் சொல்லப்பட்ட கடல்கோள்களைக் ».K.மூன்wh« நூற்றாண்டில் நிகழ்ந்த மூன்றாங் கடல்கோளாக வைத்துத் `தொல்காப்பியம் அக்கடல் கோளுக்குச் சிறிது முன்னே செய்யப்பட்ட தெனவும், கி.மு.நான்காம் நூற்றாண்டில் இந்திய நாட்டின்மேற் படை யெடுத்து வந்த கிரேக்க அரசனான அலெக்சாந்தருடன் போந்த கிரேக்க வான் நூலாசிரியர் கொணர்ந்த `ஹோரா என்னுங் கிரேக்கமொழியைத் தொல்காப்பியனார் `ஓரை எனத் திரித்துத் தமது நூலுள் வழங்குதலே அவர் ».K.மூன்wh« நூற்றாண்டில் இருந்தா ரென்பதற்குப் பின்னும் ஒரு சான்றாமெனவும் உரையாநிற்பர்.11 மற்றும் ஒருசாரார், கிறித்துபிறந்த முதல் நூற்றாண்டாகிய அத்துணைப் பழையகாலத்தில் தமிழ்மொழி அத்துணை ஒழுங்கானதோர் உயர்ந்த நிலையை அடைந்திருத்தல் நம்பற்பால தன்றெனத் தங்கருத்து உரைத்துப், பாண்டிமன்னர் வழங்கிய `வட்டெழுத்துக்கள் என்பன அசோகமன்னர் வழங்கிய `பிராமி எழுத்துகளினின்றே வந்தனவாகல்வேண்டு மாதலானும், `பிராமி எழுத்துக் களால் ஆக்கப்பட்ட கல்வெட்டுகள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டன அன்மையால் வட்டெழுத்துக்கள் தோன்றிய பின்னன்றித் தமிழ்மொழி எழுத்துரு அடைந்திருத்தல் ஏலாமையானும் தொல்காப்பியம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட தாகுமென்று கோடலே பொருத்தமாம் என்பர். கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி.எட்டாம் நூற்றாண்டுவரையிற் சென்றஆயிரம் ஆண்டுகளில் வட்டெழுத் தாற் செதுக்கப்பட்ட ஒரு கல்வெட்டுத்தானுந் தமிழ்நாட்டின்கட் காணப்படாமையின், கி.பி. எட்டாம் நூற்றாண்டிற்குமுன் தமிழ்மொழி ஓர் ஒழுங்குபெற்ற நிலையை எய்தவில்லை யென்பதே திண்ணமாம் எனவும் இன்னார் உரையாநிற்பர்12 பின்னும் ஒரு பார்ப்பனர், கி.பி.ஏழாம் நூற்றாண்டில் தொல்காப்பியம் இயற்றப்பட்டதென நாட்டுவான் புகுந்து, சிலப்பதிகாரத்திற், புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின் விண்ணவர் கோமான் விழுநூல் எய்துவிர் (11, 98 - 99) எனவும், கப்பத் திந்திரள் காட்டிய நூலின் மெய்ப்பாட் டியற்கையின் விளங்கக் காணாய். (11, 154 - 155) எனவும் போந்த அடிகளிற் குறிப்பிடப்பட்டது `பத்ரபாகு என்னுஞ் சமண் முனிவராற் செய்யப்பட்ட `கல்பசூத்திரமே யாகுமென்றும், இக் கல்பசூத்திரமானது `ஐந்திரம் `ஜைநேந்திரம் என்னும் பெயர்களால் வழங்கப் படுவதாமென்றும், இதனைக் கடைமுறையாக வெளியிட்ட `பூஜ்யபாதர் என்னுந் தேவநந்தியின் மாணாக்கரனான `வஜ்ரநந்தி என்பவர் கி.பி. 440 இல் மதுரையின்கண் ஒரு திராவிட சங்கம் நிலைநிறுத்தினராகலின் அச் சங்கத்தாருள் ஒருவரான தொல்காப்பியர் சமண்முனிவரே யாகல் வேண்டுமென்றும், சமண்முனிவராகிய தொல்காப்பியர் உணர்ந்தது பத்ரபாகு இயற்றிய கல்பசூத்திரமாகிய ஜைநேந்திரமே யாகல்வேண்டுமென்றும், இவ்வாற்றால் தொல்காப்பியர் கி.பி. 650 ஆம் ஆண்டளவில் இருந்தாராகற் பாலரென்றும் மொழிந்திட்டார்.13 இங்ஙனமாகப், பார்ப்பனரும் அவர் வழிச்சார்ந்தார் ஏனைச்சிலரும் ஒருவர்பின் ஒருவராய் எழுந்து, தமிழுக்குந் தமிழர்க்கும் இயற்கையாயுள்ள தனிப்பெருஞ் சிறப்பினையும் பழைய நாகரிகத்தினையுங் குறைத்து விடுதற்கும், தம்பால் வந்து கலந்த ஆரியரது கூட்டுறவினாலேயே தமிழர் ஓராயிர ஆண்டு களாகத்தான் சிறிது நாகரிகம் எய்தி வருகின்றார்களென்று காட்டுதற்கும் உண்மையல்லாத வைகளை உண்மைபோல் எழுதித் தமிழ் மக்ளை இழித்துப்பேசி வருகின்றார். தமிழரில் ஆராய்ச்சியுணர்வு வாயாதார் எல்லாம் பார்ப்பனர் உரைக்கும் இப் பொய்யுரைகளிற் சிக்குண்டு, தாமும் அவர்க்குத் துணையாய் நின்று தம்மினத்தவரை வேரறுக்குங் கருவியாய் அவர்க்குப் பயன்றந்து வருகின்றாராலெனின்; அவர் தம் பெற்றி எவ்வாறாயினும் ஆகுக. ஒப்புயர்வில்லாத் தொல்காப்பிய நூலின் உண்மைப் பழைமையைக் குறைப்பான் புகுந்த இப் பார்ப்பன ருரைகள் அத்தனையும் பொய்யுரை களாதலை முறையே வகுத்தாராய்ந்து காட்டுவாம்: தொல்காப்பியத்திற்குப் பாயிரச்செய்யுள் உரைத்த பனம்பாரனார் பல்புகழ் நிறுத்த படிமை யோனே என்பதில் தொல்காப்பியனாரைப் படிமையோன் என்று கூறினமை யானும், `படிமை என்னுஞ் சொல் சமண் நூல்களிலன்றி வேறு வடமொழி தென்மொழிப் பழைய நூல்களில் தவவொழுக்கத் திற்குப் பெயராய் வழங்காமை யானுந் தொல்காப்பியர் சமணரேயாதல் வேண்டுமென்றார். கூற்றை முதற்கண் ஆராய்வாம். `படிமை என்னுஞ் சொல் `ப்ரதிமா என்னும் வடசொல்லின் திரிபாகுமென்பது எல்லார்க்கும் உடன்பாடாம்; இது `படிவம் எனவுந் தமிழிற் றிரிந்து வழங்கும். மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய என்னுஞ் சூத்திரவுரையில் (தொல்காப்பியம், பொருள், 30), உரையாசிரியர் இளம்பூரணர் படிமை என்பது `ப்ரதிமா என்னும் வடமொழித்திரிபு; அது தேவர்க்கு ஒப்புமையாக நிலத்தின்கட் செய்து அமைத்த தேவர்மேல் வந்தது என்று உரை கூறியவாற்றால் இச்சொல்லின் உண்மை தெளியப்படும். படவே, `படிமை என்பது கடவுளர்க்குப் பிரதியாக அஃதாவது கடவுளரை யொப்ப அமைத்த வடிவங்களை உணர்த்துதல் பெற்றாம். பெறவே, இச்சொல் முதலில் ஒரு தெய்வத்தோடு ஒத்த வடிவத்தையும், பின்னர்த் தெய்வவடிவம் போல் வாராகிய அருந்தவத்தோரையும் அதன்பின் அவ்வருந்தவத் தோர்க்குரிய தவவொழுக்கத்தையும் உணர்த்துதலும் பெற்றாம். பாரோர் காணாப் பலர்தொழு படிமையன். (சிலப்பதிகாரம், 15, 158) என்புழிஅச்சொல் தெய்வ வடிவத்தினையும், கூறினை பெருமநின் படிமை யானே (பதிற்றுப்பத்து, 74, 28) என்புழி அது தெய்வ வடிவத்தோ டொத்த தவவொழுக்கத்தினையும், இஃதிவர் படிவம் ஆயின் (புறநானூறு, 349) என்புழித் தவவொழுக்கத்தின் பாலதான நோன்பினையும் தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப் படிவ வுண்டிப் பார்ப்பன மகனே. (குறுந்தொகை, 156) என்புழித் துறந்த பார்ப்பனரின் தவவொழுக்கத்தினையும் அஃதுணர்த்துதல் காண்க. கல்தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான் என்னும் முல்லைப்பாட்டில் 37ஆம் அடியினால் அந்தணரிற் காவியாடை யுடுத்தாரின் தவவடிவத்தைப் படிவம் என்னுஞ்சொல் உணர்த்துதலும் நன்குவிளங்காநிற்கும். மேற்காட்டிய குறுந்தொகைச் செய்யுளால் அவ் வந்தணத் துறவோர் முக்கோலுந் தண்ணீர்க்கரகமுங் கைக்கொண்டிருப்ப ரென்பதூஉம் இனிது புலனாம். கலித்தொகையிற்போந்த, எறிதரு கதிர்தாங்கி ஏந்திய குடைநீழல் உறித்தாழ்ந்த கரகமும் உரைசான்ற முக்கோலும் நெறிப்படச் சுவல்அசைஇ வேறோரா நெஞ்சத்துக் குறிப்பேவல் செயன்மாலைக் கொளைநடை அந்தணீர்! (பாலைக்கலி, 8) என்பதனாலும் பண்டைக் காலத்துத் தண்டமிழ் நாட்டு அந்தணரில் துற வொழுக்கத்தின் பாலராய் நின்றார் தவவடிவம் நன்கெடுத்து மொழிந்திடப்பட்டமை காண்க. ஆசிரியர் தொல்காப்பியனாருந் தமது காலத்திருந்த அந்தணர்க்குரிய வடிவங் கூறுகின்றுழி, நூலே கரகம் முக்கோன் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய (மரபியல், 70) என்று ஓதுதலால், அக்காலத்து அந்தணரில் இல்லறத் தாருங்கூடத் தவவடிவங் கைக்கொண் டிருப்பரென்பது பெற்றாம். பெறவே, அக்காலை அந்தணர் கொண்ட தவவடிவம் அப்பெற்றித்தாயது என்னையென்பது ஆராயற்பாற்று. பண்டைத் தமிழ்மக்கள் காணவுங் கருதவும்படாத முழுமுதற் கடவுளைக் காணவுங் கருதவும் எளிதாம்படி தம்மை யொத்த ஒரு மக்கள் வடிவில்வைத்து வழிபடலாயினர். அங்ஙனம் மக்கள் வடிவில் வைத்து அவனை வழிபடினும், அவன் மக்களுள் ஒருவனாம் போலுமெனத் தம்மனோர் மயங்கிவிடாமைப் பொருட்டு, உலகத்தோற்றத்தில் கட்புலனாம் விழுப்பொருள்களையே அவன்றன் திருவுருவத்திற்குப் பல்வேறு உறுப்புகளாக்கினர். உலகத்தில் நடைபெறும் ஒழுக்கங் களெல்லாம் ஒளியுடைப் பொருள்களின் உதவியால் நடைபெறக் காண்டலின், அவ் வொளியுடைப் பொருள்களை அப் பெருமானுக்குக் கண்களாகக் கருதினர். உலகின்கட் காணப்படும் ஒளியுடைப் பொருள்கள்: ஞாயிறு, திங்கள், தீ என்னும் மூன்றுமேயாம்; ஆகவே, சிவபிரானுக்கு ஞாயிறு வலக்கண்ணாகவுந், திங்கள் இடக்கண்ணாகவுந், தீ நெற்றிக் கண்ணாகவுங் கொள்ளப் பட்டன. இம்மூன் றொளியுடைப் பொருள்களும் இறைவனுக்கு மூன்று கண்கள் போல் விளங்குவதோடு, அருளொளியினனாகிய அவனுக்குத் திருமேனி போலவும் பொலிதலால் அம்மூன்றும் அவ் வொப்புமை பற்றி அம் முழுமுதற் கடவுளாகவே வைத்து வணங்குதலும், வாழ்த்து தலுஞ் செய்யப்படும். இது பற்றியே ஆசிரியர் தொல் காப்பியனார், கொடிநிலை கந்தழி வள்ளி யென்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றுங் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே (புறத்திணை இயல், 33) என ஓதினார். இச் சூத்திரத்திற்கு இளம்பூரணர் மெய்யுரை கண்டிலர். நச்சினார்க்கினியர் `கொடிநிலை என்பதற்கு `வெஞ்சுடர் மண்டிலம் எனவும் `வள்ளி என்பதற்குத் `தண்கதிர் மண்டிலம் எனவும் மெய்யுரை கண்டுமொழிந்தனரேனுங், `கந்தழி என்பதற்கு `ஒருபற்றுக் கோடின்றி அருவாகித் தானே நிற்குந் தத்துவங் கடந்த பொருள் என்று ஒருவாற்றாற் பொருந்தாவுரை கூறினார். `கந்தழி என்று முழுமுதற் கடவுளை மட்டுமே உணர்த்துவ தாயின் அவர் அதற்குக் கூறியவுரை பொருந்துவதேயாம். மற்றுக், கொடிநிலை, கந்தழி, வள்ளி என்னும் மூன்றனை வாழ்த்தும் வாழ்த்துரையுங் கடவுள் வாழ்த்தோ டொப்பக் கருதுமாறு வரும் என்று ஆசிரியர் தொல்காப்பியனார் மேற்காட்டிய சூத்திரத்தில் அருளிச்செய்தலின், அம் மூன்றுந் முழுமுதற் கடவுளாகா என்பது ஆசிரியர் கருத்தாதல்பெற்றாம். பெறவே, முழுமுதற் கடவுளாகாமல் முழுமுதற் கடவுளோடு ஒருபுடையொப்பக் கருதப்படுங் `கந்தழி என்பதற்கு `முழுமுதற் கடவு ளிலக்கணமாகிய ஒரு பற்றுக்கோ டின்றி அருவாகித் தானே நிற்குந் தத்துவங்கடந்த பொருள் என்பதனை ஏற்றுதல் ஆசிரியர் கருத்தறிந்த உரையாகாமையுந் தெற்றென விளங்கும். அற்றேல், மற்றென்னோ அதற்கு மெய்யுரையெனிற் கூறுதும்: `கந்தழி என்றது `தீப்பிழம்பினையே யாம்; அஃது அப்பொருள் தருமாறு யாங்ஙனமெனிற்; `கந்து எனுஞ்சொல் `பற்றுக்கோடு என்னும் பொருட்டாதல், மறங் கந்து ஆக நல்லமர் வீழ்ந்து (புறநானூறு, 93) என்பதனாலும் அதனுரையாலும் அறியப் படும். `அழி என்பது அழிப்பது; எனவே, `கந்தழி என்பது `தான் கொண்ட பற்றுக் கோட்டினைத் தானே அழிப்பது என்று பொருடருவதாகும். இனித், தீயானது தான்பற்றிய விறகினையுந், திரி நெய்யினையும் அழித்துவிடுதல் எவரும் அறிந்ததேயாம். அதனாற், `கந்தழி என்பது தீம்பிழம் பேயாயிற்று. மேலும், ஞாயிறு திங்கள் என்னும் இரண்டு ஒளியுடைப் பொருள்களோடு இயைபுடையது அனற்பிழம்பே யல்லது பிறிதின்மையின், `கந்தழி என்பதற்கு அவ்விரண் டோடு இயைபு சிறிதுமில்லா வேறுபொருள் உரைத்தல் ஆசிரியர் கருத்துக்கு முற்றும் முரணாமென்க. அற்றாயின், ஞாயிறு தீ திங்கள் என்னும் வெளிப்படைச் சொற்களாற் கிளவாமற், கொடிநிலை கந்தழி வள்ளி என்னுந் திரிசொற்களால் ஆசிரியன் அவற்றைக் கிளந்தது என்னை யெனின்; ஞாயிறு தீ திங்கள் என்னுஞ் சொற்கள் கற்றார் முதற் கல்லாதார் ஈறான எல்லாரானும் வழங்கப் படுதலின் அச்சொற்கள் ஒளியுடைய அப்பொருள்களின் கடவுட்டன்மை யின் நினைவுறுத்தமாட்டா. ஆகலான்: அருளொளி யுருவினனாகிய இறைவன் அவ் வொளியுடைப் பொருள் களைத் தனக்குத் திருமேனியாகக் கொண்டு அவற்றின்கண் விளக்கித் தோன்றி எல்லா உயிர்களின் அறிவையும் மறைக்கும் புறவிருள் அகவிருள் இரண்டனையும் ஒட்டி அவைதமக்கு அவ் வறிவை விளங்கச் செய்தல் குறித்து, அம் மூன்றுங் கடவுட்டன்மை யுடையவாதல் தெரிப்பார் அவை தம்மைக் கொடிநிலை கந்தழி வள்ளியென்னும் பெயர்களாற் சிறந்தெடுத்துக் கூறினார். அற்றேல், அச்சொற்கள் கடவுட் டன்மையினைக் குறிக்குமாறு யாங்ஙனமெனிற் காட்டுதும்: `கொடிநிலை என்னும் இருமொழித் தொடரிற் `கொடி என்பது கிழக்குத் திசையினை யுணர்த்துதல், பொய்தீர் உலகம் எடுத்த கொடி மிசை மையறு மண்டிலம் வேட்டனள். (கலித்தொகை, 141) என்று உரைகாரர் நச்சினார்க்கினியர் ஆண்டெடுத்துக் காட்டிய செய்யுளால் நன்குவிளங்கும். விளங்கவே, கீழ்த்திசைக்கண்ணே வந்து நிற்குங் கதிரொளியை அஃதுணர்த்துதல் புலனாம். திங்களும்இல்லாத இரவின் எல்லையெல்லாங் கண்ணொளியை மறைத்த இருளால் அறிவொளியும் மறைபட்டு அயர்ந்துறங்கிய உயிர்த் தொகைகள் அத்தனையுங், கிழக்கின்கட் கதிரொளி வந்து நிலைபெற்ற அளவானே தன் கண்ணொளியுங் கருத் தொளியும் ஒருங்கு விளங்கப்பெற்று முயற்சி யுடையவாதல் கண்டாமன்றே. இங்ஙனமாக உயிர்ப் பன்மைகளின் அறிவும் முயற்சியும் விளங்கி நடைபெறுதற்குக் கீழ்த்திசைக்கண் எழுந்து நிலையும் ஞாயிறு ஏதுவாதலின் அக் கீழ்த்திசைக் கதிரொளி கடவுட்டன்மை யுடையதென்பது அறிவுறுத்துதற்கே அதற்குக் `கொடிநிலை என்னுஞ் சொல்லைப் பேரறிவு மிக்க ஆசிரியன் வழங்கு வானாயினன். ஞாயிறு என்னும் வழக்குச்சொல் கீழ்த்திசை மேற்றிசை இரண்டினும் நிற்குங் கதிரொளிக்குப் பொதுப்பெயராகலானும், மேற்றிசைச் சென்ற ஞாயிறு விரைவில் மறைந்து புறவிருள் அகவிருள் களை வருவித்தலின் அது கடவுட்டன்மை யுடைய தாகாமை யானுங், கடவுட்டன்மை யுடையதென வைத்து வாழ்த்துதற்கு ஏற்புடையது கீழ்த்திசை ஞாயிறே யென்பதனை வலியுறுத்து வான்வேண்டி, அப்பொருள் பயக்குங் `கொடிநிலை என்னுஞ் சொல்லை ஆசிரியன்அதற்கு விதந்தெடுத்துக் கூறினா னென்பது. இதனானன்றே ஆசிரியர் நக்கீரனார், உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு என்று திருமுருகாற்றுப்படையிலும், ஆசிரியர் இளங்கோவடிகள், ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதுங் காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டு மேரு வலந்திரித லான் என்று சிலப்பதிகார முகத்தினுங் கீழ்த்திசை, எழூஉஞ் செங்கதிர்ச், செல்வனை வாழ்த்துவாராயினர் என்க. இனி, மேலது போலவே தீ, நெருப்பு, அழல், தழல் முதலான சொற்கள் மக்கள் எல்லாரானும் வழங்கப்படுதல் நோக்கி அவை அதன் கடவுட் டன்மையினை யுணர்த்துதற் கேற்ற `கந்தழி என்னுஞ் சொல்லால் அதனைக் குறிப்பா னாயினன். தனக்கொரு பற்றுக்கோடின்றித் தான் எல்லா வற்றிற்கும் ஒரு பற்றுக் கோடாய் நிற்பதூஉந், தான்பற்றிய உயிரின் பருப்பொருளறிவினை யழித்து அவ் வறிவினை நுண்ணிதாக்கி அதனைத் தன்றன்மையாய் நிற்கச் செய்வதூஉந், தான் எதனானும் பற்றப்படாத அருவுமாய்க் கட்புலனாயினுந் தொடப்படுவதல்லாத உருவுமாய் இவ்வாறு இருதிறமும் விராய அருவுருவாய் நின்று திகழ்வதூஉம் எல்லாம் வல்ல இறைவனியல்பாதல்போலத், தீப்பிழம்புத் தானிருத்தற்கு ஒரு பற்றுக்கோடு வேண்டு மென்பது இன்றாய் எல்லா உயிர்ப்பொருள்களி னிருப்புக்குந் தானொரு பற்றுக்கோடாய் அவற்றினுள்ளும் ஏனைப்பொருள்களினுள்ளும் விரவி நிற்றலானுந், தான் பற்றிக்கொண்டு தோன்றும் விறகு திரி நெய் முதலியவற்றின் பருப்பொருட்டன்மையை அழித்து அவற்றை நுண்பொருளாக்குவதுடன் தான் பற்றி எரியுங்காறும் அவற்றைத் தன் நிறமாக வயங்கச் செய்தலானுந், தான் புலப்பட்டுத் தோன்றாவழி எங்குமுள்ள அருவாய் விளக்கு விறகு முதலியவற்றிற் புலப்பட்டுத் தோன்றியவழியும் எவரானும் பிடிக்கப்படுவதல்லாத உருவுமாய் இவ்வாறு அருவும்,உருவுமாம் இருதிறமும் ஒருங்கு கலந்த இயல்பிற்றா மாகலானுந் தீ கடவுட் டன்மை யுடையதாதல் துணியப் படும். இப்பெற்றித்தாந் தீம்பிழம்பின் இலக்கணத்தை உணர்த்துதற்கு வாய்ப்புடைத்தாதல் பற்றியே ஆசிரியன் `கந்தழி என்னுஞ் சொற்கொண்டு அதனையுங் கடவுள் வாழ்த்தின்பாற் படுப்பானாயினான் என்க. இனி,ஞாயிறு திங்கள் என்னும் இருமண்டிலங்களுங்கூடத் தீத் திரளையே யாகலானும், தீ யொன்றுமே அவற்றின் விளக்கத்திற்கு ஏதுவாகலானுங் `கொடிநிலை என்னும் ஞாயிற்றிற்கும் `வள்ளி என்னுந் திங்களுக்கும் இடையே `கந்தழி என்னுந் தீப்பிழம்பின் வாழ்த்தை ஆசிரியன் வைத்திட்டா ரென்பதூஉம் அறியற்பாற்று. இனித், திங்கள், நிலா, அம்புலி என்னுஞ் சொற்கள் எல்லாரானும் வழங்கப்படுதலின் அவை அவருள்ளத்தே கடவுள் நினைவுத் தோற்றுவியா எனக் கருதி, அந்நினைவினைத் தோற்றுவித்தற்கு ஏற்ற `வள்ளி என்னுஞ் சொல்லால் அதனை ஆசிரியன் குறிப்பானாயினன். கதிரொளி வெம்மைகலந்த ஆற்றலை14 உலகுயிர்களுக்குத் தாராநிற்ப, நிலவொளி தண்மை கலந்த ஆற்றலை15 அவற்றிற்கு வழங்கி அவற்றைப் பேணி வளர்த்தலின் `வள்ளி எனப் படுவதாயிற்று. அற்றேற், கதிரவனும் வெம்மை கலந்த ஆற்றலை வழங்கும் வண்மை (ஈகை) யுடையனாகலின் அவனையும் `வள்ளி எனக்கூறல் வேண்டுமாம் பிறவெனின்; அற்றன்று; கொடுமையோடு கொடுக்குங் கொடையினைக் கொடை என்றுஎவரும் உயர்த்துக்கூறார், அஃது இன்றியமையாக் கொடையேயா யினும் மற்று, அகங்கனிந்து முகம் மலர்ந்து குளிர்ப்பக்கூறிக் கொடுக்குங் கொடை யிடையே எவரும் மகிழ்ந்து புகழாநிற்பர். அங்ஙனமே, ஞாயிறு கொடுக்கும் மின்னாற்றல் இன்றியமை யாததொன்றே யாயினும், அது வெம்மையொடு கூடியிருத் தலின் அதனை `வண்மை என ஆசிரியன் கொண்டிலன்; மற்றுத் திங்கள் வழங்குந் தண்மைகலந்த மின்னொளி எவரானும் விரும்பி ஏற்கப்படுங் குளிர்ச்சியுடைமையின் அதனையே ஆசிரியன் `வண்மை என வேண்டினான். அதுவேயுமன்றிக், கதிரொளி வெய்யதாகலின், அஃது ஆண்டன்மைப் பாற்படும்; நிலவொளி தண்ணிதாகலின் அது பெண்டன்மைப் பாற்படும்.16 அப்பெண்பாற் றன்மையினை `வள்ளி என்னுஞ்சொல் இகரவிகுதியால் நன்குணர்த்துதலின். அது திங்கண் மண்டிலத்தின் வண்மைத் தன்மையினை அறிவிக்கும் பெயராதற்குப் பெரிதும் ஏற்புடைத்தாதல் காண்க. ஈண்டுக் காட்டிய இவ்வியல்புகள் ஞாயிறு நெருப்பின் றன்மையும் ஆண்டன்மையும் உடைமையானும், திங்கள் நீரின்றன்மையும் பெண் டன்மையும் உடைமையானு மென்பது. அல்லதூஉம், வெண்கதிர் அமிர்தந் தேவர்க்கு வழங்கலானும் `வள்ளி என்பதுமாம் என்று நச்சினார்க்கினியர் கூறியவுரையானும் புலனாதல் கண்டுகொள்க.17 இறைவன் ஒருபால் ஆண்டன் மையனாயிருந்து அழித்தற் றொழிலினையும், மற்றொருபாற் பெண்டன்மையனாயிருந்து படைத்தல் காத்தல்களையுஞ் செய்கின்றனனாகலின், அவன்றன் ஆண் கூற்றின்பாற் பட்ட `கொடிநிலை போல, ஈண்டு `வள்ளி என்பது அவன்றன் பெண்கூற்றின்பாற்பட்டு நிற்றலும் நுணுகி யுணர்ந்து கொள்க. இவ்வாறாகக், காணவுங் கருதவும்படாத முதல்வன் இயல்பினை நம்மனோர் காணவுங் கருதவும் எளிதாம்படி வைத்து விளங்கக் காட்டும் விழுப்பம்பற்றியே கொடி நிலை கந்தழி வள்ளி என்னும் மூன்றும் அம் முதல்வனோடொப்ப வைத்து வாழ்த்தப்படுமென்று முற்றுணர்வுடைய ஆசிரியர் தொல்காப்பியனார் அருளிச்செய்தனர். இன்னும், இறைவன் தீ வடிவினன் ஆதலும் தீவடிவில் விளங்கித் தோன்றி நம்மனோர்க்கு அருள் வழங்கலும் மேலே மாணிக்கவாசகர் வரலாறு 95 ஆம் பக்கம் முதல் 99 ஆம் பக்கம் வரையில் வைத்து விரித்து விளக்கியிருக்கின்றேம். ஞாயிறுந் திங்களும் தீ வடிவேயாகலின், அவ் விரண்டொடுங் கூட்டத் தீ மூவகைத் தாதல் கண்டுகொள்க. ஏனை உலகுயிர்களில் விரவி நிற்குங்கால் இறைவன் கட்புலனாகா அருவனாய் இருத்தலின், தன்னை உயிர்கள் கட்புலனாற் கண்டுவணங்க மாட்டாவென இரங்கியே, அவர்தங் கண்கட்குப் புலனாகும் இவ் வொளியுடைப் பொருள்கள் மூன்றையுந் தோற்றுவித்து, அவற்றின்கட்டனது அருளொளி யுருவினைக் காட்டி அவர் தமக்குத் தன் அருளமிழ்தம் வழங்கிவரா நிற்கின்றான் என்பது. இங்ஙனமாக இறைவன்றன் அருளொளி விளக்கத்திற்கு ஓர் உறையுளா யிருந்து உயிர்கட்கு உதவுதல் குறித்தே ஞாயிறு திங்கள் தீ என்னும் மூன்றுங் கடவுளோ டொப்ப வைத்துவணங்குதலும் வாழ்த்துதலுஞ் செய்யப்படும். தமிழ்நாட்டு அந்தணர் மிகப் பழையகாலந் தொட்டே இறைவனைத் தீ வடிவில் வைத்து வணங்கி வந்தன ரென்பதும், அத்தீத்தான் ஞாயிறு திங்கள் தீ என முத்திறப்படுதலின் அவற்றிற்கு அடையாளமாக ஞாயிற்றை யொத்த வட்டவடிவிலும் பிறையை யொத்த வில்வடிவிலுந் தீயையொத்த முக்கோண வடிவிலுங் குழிகள் வெட்டுவித்து அவற்றின்கண் தீ வளர்த்து அதனை வழிபட்டு வரலாயின ரென்பதும் அறியற்பாலன. தலைச்சங்கத்திருந்த முரஞ்சியூர் முடிநாகராயர் காலத்திலேயே பொதியமலைமுதல் இமயமலை காறும் பரவியிருந்த தமிழ்நாட்டு அந்தணர் முத்தீவேட்டமை, சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும் முத்தீ விளக்கிற் றுஞ்சும் பொற்கோட் டிமயமும் பொதியமும் போன்றே (புறநானூறு, 2) என்று அவர் பாடியவாற்றான் அறியப்படும். இம் முத்தீயை வளர்க்கும் வேள்விக் குண்டங்களுள் ஒன்று வட்டமாய் அமைக்கப்படுதல் சதபதபிராமணம் ஏழாங்காண்டம் முதல் அத்தியாயம் முதற் பிராமணத்துள்ளும், மற்றிரண்டும் வில்வடிவும் முக்கோண வடிவுமாய் அமைக்கப்படுதல், மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து என்னுந் திருமுருகாற்றுப்படையடிக்கு நச்சினார்க்கினியர் கூறிய உரையுள்ளுங் கண்டுகொள்க. பண்டைக்காலத்திருந்த தண்டமிழ்ச் சான்றோர் தாம் ஞாயிறு திங்கள் தீ என்னும் முத்தீயை வணங்குதற்கு அறிகுறியாக அம்மூன்றின் வடிவு போன்ற குண்டங்கள் நிலத்தின்கண் வெட்டுவித்து அவற்றின்கண் வேள்விவேட்ட நுட்பம் அறியாத பிற்காலத்தார் இக் குண்டங்களில் ஒன்றன் வடிவை நாற்கோணமாக்கிப் பிழைபட்டார். அதுகிடக்க. இனி, இம் முத்தீயினையும் வடநூலார், `ஆகவநீயம் `காருகபத்தியம் `தக்ஷிணாக்கினி என வழங்கினரேனும், அவற்றுள் ஆகவநீயங் காருகபத்தியம் என்னும் இரண்டுமே சதபதபிராமணம் முதலான பழைய வடநூல்களுட் காணப்படுகின்றன; ஏனைத் `தக்ஷிணாக்கினி என்னும் பெயர் அவற்றின்கட் காணப்படுகின்றிலது. இருக்கு வேதத்திலுந் (2, 3, 6, 4; 3, 20, 2) தீக் கடவுளுக்கு மூன்றிருப்பிடங்கள் மட்டுஞ் சொல்லப்பட்டிருக்கின்றனவே யல்லாமல், அம் மூன்றின் பெயர்களாதல் `தக்ஷிணாக்கினி என்னும் பெயராதல் ஆண்டுச் சொல்லப்பட வில்லை. மற்றுப், புறநானூற்று உரையாசிரியரோ தக்ஷிணாக்கினியைத் `தென்றிசையங்கி என்றுரைக்கின்றார்; தென்றிசையங்கி என்பது தென்றிசைக் கண்ணதாகிய தமிழ்நாட்டிலே வேட்கப்படுந் தீ என்று பொருள்படுவதாகும். தீயானது எல்லாத்திசைகளில் உள்ள எல்லா நாடுகளுக்கும் உரித்தாகவும், அதனைத் தென்றிசைக் கண்ண தாகிய தமிழ்நாட்டுக்கே வரைந்து வைத்துத் `தக்ஷிணாக்கினி அல்லது `தென்றிசையங்கி எனக் கூறியதென்னை? என நுணுகிநோக்கவல்லார்க்கு, எல்லாம்வல்ல முழுமுதற் கடவுள் தீ வடிவின்கட் புலப்பட்டுத்தோன்றி விளங்குதலை முதன் முதலுணர்ந்து, அதற்கேற்ற பரிசால் தீயினை வழிபடும் முறைகளைக் கண்டறிந்து, அவ் வழிபாட்டினைச் செய்து வந்தோரும் வருவோருந் தென்றமிழ்நாட்டி லுள்ள தமிழ்ச் சான்றோர்களே யென்பது இனிது புலனாகாநிற்கும். மேலே 468 ஆம் பக்கத்திற் `சத்தியவிரதன் என்னும் மநு தமிழ் முனிவனே யாதலை உயர்ந்த பல மேற்கோள்கள் கொண்டு விளக்கினாம். ஓ அக்நியே, நின்னை மநுமுனிவன் மக்களெல்லார்க்கும் ஓர் ஒளிப்பொருளாய் ஏற்படுத்தினான் (1, 36, 19) எனவும், ஓ, ஆதித்தியர்களே, மநுமுனிவன் தீ வளர்த்த காலையில், முதல் அவியை ஏழு ஹோத்திரிக் குருமார்களோடும் வேண்டு கோளுரையோடும் நுமக்கே சேர்ப்பித்தான் (10, 63, 7) எனவும், இறைவனை அழைப்பவனும் மநுமுனிவன் மரபினர் பாற்குடிகொண் டிருப்பவனுமான அக்நியே இச் செல்வங்களுக்கெல்லாந் தலை வனாவான் (1, 68) எனவும், அறிவனும் இல்லத்திற்கு இளைய தலைவனுமான அக்நி ஐந்து மரபினரின் இல்லங்கடோறுங் குடி கொண்டிருக்கின்றான் (7, 15, 2) எனவும், ஓ இந்திராக்நியே, நீ யதுக்கள், துருவசர்கள், துருகியர்கள், அணுக்கள், பூருக்கள் என்னும் இவ்வை வகையினரிடங் குடிகொண்டி ருத்தலால் (1, 108, 8) எனவும் இருக்கு வேதங் கூறுமாற்றானும், இவ் வைந்து நாடுகளும், இவ் வைந்து மரபினர்களும் மநுவினிடத்திருந்தே தோன்றினர் (3, 24, 2) என அதர்வ வேதங் கூறுமாற்றானும், இவற்றோடு இணங்கவே ஆசிரியர் திருமூலருந் தமிழ் மண்டலம் ஐந்துந் தாவிய ஞானம் எனக் கூறுமாற்றானுந், தமிழ் முனிவராகிய மநுவும், அவர்வழித் தோன்றிய ஐந்து நாடுகளிற் குடியிருந்த `பஞ்ச திராவிடர் எனப்படும் பண்டைத் தமிழ் மரபினருமே, முழுமுதற்கடவுள் தீ வடிவில் விளங்கித் தோன்றுதலை முதன்முதற் கண்டறிந்து அத் தீயின்கண் அவனை வழிபடும் முறைகளை வகுத்தன ரென்னும் அரிய பெரிய உண்மை தெளியப்படும். இவ் வைவகைத் தமிழ் மரபினர்க்குந் தலைவராய்இருந்து அந்நாளில் அரசுபுரிந்தவர்கள் பரதன் என்னுந் தமிழ் வேந்தன் வழியில் வந்தவரான பரதர்களே யாவர். பாரத மரபினரான தேவசிரவர், தேவவாதர் என்னும் இருவரும் பயன்மிகுந்த அக்நியை மிக்க வலிமையொடுந் தேய்த்து உயிர்ப்பித்தனர். (3, 23, 2) எனவும். ஓ அக்நியே, வலிய படைவீரர்களையுடைய பழைய பரதர்கள் தமக்குப் பேரின்பம் வேண்டி நின்னையே இரந்தனர் (6, 19, 4) எனவும், ஓ பரதர்களுக்கு உரிய அக்நியே (6, 16, 45) எனவும் இருக்குவேதம் இங்ஙனமே இன்னும் பலவிடங்களில் வற்புறுத்து ஓதுதல் கொண்டு, பண்டைத் தமிழ்மக்கட்குத் தலைவரான பரதர்களே இறைவனைத் தீ வடிவிற்கண்டு வழிபடும் நுட்பத்தை முதன்முதற் கண்டுணர்ந்தன ரென்பதும், தீம்பிழம்பின் வடிவுபோல்வதாகிய திரண்டு நீண்டு குவிந்த சிவலிங்க அருட்குறிகளும் அவற்றிற்கு உறையுளாகக் கூட கோபுர மோங்கிய திருக்கோயில்களுந் தெற்கே பொதியம் முதல் வடக்கே இமயமலைகாறும் அவர் தம்மால் ஆங்காங்கு அமைக்கப்படலாயின வென்பதும் நன்கு தெளியப்படும். தீப்பிழம்பு இறைவனருளொளியோடு ஒற்றித்து விளங்கும் இவ்வரும் பேருண்மையினைப் பரதர் என்னும் பண்டைத் தமிழ்த்தலைவர் முதன்முதற் கண்டறிந்த சிறப்புப் பற்றியே அக்நியானது பாரதன் எனப் பெயர்பெறலானமை இருக்குவேத இரண்டாம் மண்டிலத்து ஏழாம் பதிகத்தானும், அதன் முதன் மண்டிலத்து நாற்பத்து நான்காம் பதிகத்தாற் றெளியக்கிடந்தபடி அக்நிக்கு உயிராவான் `பகன் என்னும் பெயருடைய சிவபிரானேயாம் உண்மையைத் தெளியக் கண்டவர் பரதரேயாம் சிறப்புப் பற்றியே உருத்திரப் பெருமானுங்கூடப் `பரதன் எனப் பெயர்பெற்றமை அதன் இரண்டாம் மண்டிலத்து முப்பத்தாறாம் பதிகத்தானும் இனிதுணரக்கிடக்கின்றன. `அக்நியின் உண்மைத் தன்மையும் அதன் வழியே எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளைக் கண்டு வழிபடுமாறுந் தென்றமிழ் நாட்டவர்க்கு உரியவாதல் பற்றியே அக்நி வடநூல்களில் `தக்ஷிணாக்நி எனப் பெயர் பெறலாயிற்று. விளக்கொளியிற் சிவவொளியைக் கண்டுதொழுங் கார்த்திகைத் திருவிழாத் தமிழ்நாட்டகத்துக் கொண்டாடப் படுமாறு போலப், பிறநாடுகளிற் கொண்டாடப் படாமையுங் கருத்திற் பதிக்கற்பாற்று.18 இங்ஙனமாக இறைவனை நெருப்பொளியிற் கண்டு வணங்கும் முறையுணர்ந்த `பரதர் பண்டைநாளில் இவ்விந்திய நாடு முழுதும் ஒருங்கு செங்கோல் ஓச்சினராகலின், அவர் பெயரால் இது பரதகண்டம் எனப் பெயர் பெறுவதாயிற்று. இப் பரதர்கள் முதன்முதல் கடல்சார்ந்த நெய்தல் நிலத்தின்கட் குடியேறி, அதன்கட் பட்டினங்கள் அமைத்து நாகரிகத்திற் சிறந்து வாழ்ந்தனராகலின், அந்நெய்தல் நிலத்துமக்கள் `பரதர் `பரத்தியர் எனப் பெயர் பெறலாயினர்.19 வடக்கிருந்து வந்து இந்தியநாட்டின் வடமேற் கெல்லையிற் குடியேறிய ஆரியர் நாகரிகம் இல்லாதவராய், உயிர்க்கொலை புரிந்த வரைதுறை யின்றி ஊனுண்டுங்கட் குடித்தும் மகளிர் புணர்ந்தும் நாகரிகமுடைய தமிழ்மக்கள் அருவருக்குமாறு ஒழுகினமையின் அவர்கள் இந்நாட்டுள் நுழையாதபடி அக்காலையில் அவர்களை விபாசுதுத்ரீ என்னும் ஆற்றங் கரையின் அப்பால் இப் பரதர்கள் எதிர்த்து நின்றமையும், பின்னர் அவர்கள் அவ்வாறுகளை இடையூறின்றிக் கடந்து இப்பால் இனிது சேரும்படி, அப் பரதமரபினர்க்குக் குருவான விசுவாமித்திரர் அவ் யாறுகளை வேண்டி வழுத்தினமையும் இருக்குவேத மூன்றாம் மண்டிலத்தின் 33 ஆம் பதிகத்தில் நன்கெடுத்து மொழியப்படுதல் காண்க. திரித்சுக்கள் என்னும் ஆரிய வகுப்பினர் சுதா என்பவனைத் தலைவனாய்க் கொண்டுவந்த ஞான்று, மேலெடுத்துக் காட்டிய ஐவகைத் தமிழ்மரபினரில் துருவசர்களும் துருகியர்களும் அணுக்களும் பூருக்களும் ஒன்றுகூடி அவர்களைத் தடுத்து நின்று போர்புரிந்தமையும், அத் தமிழ் அரச வகுப்பினர்க்குதவியாகப் பக்தர்கள், பலாநர்கள், அலிநர்கள், சிவர்கள், விஷாநியர்கள் என்னும் வேறு ஐவகைத் தமிழ்க் குடியினர் ஒருங்குநின்று திரித்சுக்கள் என்னும் அவ்வாரியரோடு போராடினமையும் இருக்குவேத ஏழாம் மண்டிலத்தின் 18 ஆம் பதிகத்தில் விளக்கமாகக் கூறப்படுதல் காண்க. இப்பதிகத்தின் 13-ஆஞ் செய்யுளிற் `பூருக்கள் ஆரியரால் மிக இழித்துப் பேசப்படுதலும் நினைவிற் பதிக்கற்பாற்று. வசிட்டரைக் குருவாய்க் கொண்ட ஆரியர் திரித்சுகளுக்கும், விசுவாமித்திரரைக் குருவாய்க் கொண்ட பரதர் முதலான தமிழ்மரபினர் பதின்மர்க்கும் நிகழ்ந்தபோரில், ஆரியர்க்குத் தெய்வமான இந்திரன் பரதர்களைச் செயலற் றிருக்கச் செய்தனன் என்று இருக்குவேத ஏழாம் மண்டிலத்து 33 ஆம் பதிகத்தைச் செய்த வசிட்டக்குடியினர் தமக்குரிய அவ் விந்திர தெய்வத்தைப் புகழ்ந்து பேசிக்கொள்கின்றனர். பரதர்கள் அப்போரில் தோல்வி பெற்றிலராயினும், ஆரியர் செய்த சூழ்ச்சியினாலும் அச்சூழ்ச்சிக்கு உதவியாய் நின்ற தமிழரிலேயே ஒரு வகுப்பாரின் படிற் றொழுக்கத்தினாலும் அப்போரில் தமிழ் மரபினர்க்குத் தலைவராய் நின்ற பரதர்க்குப் பேரிடுக்கண்கள் நேர்ந்தன என்பது மட்டும் புலனாகின்றது. இங்ஙனம் பரதர்க்குப் பேரிடுக்கண் நேருமாறு ஆரியர்க்கு உதவிசெய்த தமிழ்வகுப்பினர், முன்னெல்லாம் அப் பரதர்க்கு நெருங்கிய உறவினருந் துணைவருமாய் நின்ற `பூருக்கள் என்பவரேயாவர். இஞ்ஞான்றைத் தமிழரிற் சிலர் ஆரியர் கட்டிய சூழ்ச்சியில் அகப்பட்டுத் தம்மினத்தவராகிய தமிழரை அவ்வாரியர் இழிபு படுத்துதற்குக் கருவியாய் முன்நின் றுதவுதல்போல, அஞ்ஞான்றைத் தமிழ் வகுப்பினராகிய பூருக்களுந், தம்மவர்க்கு இரண்டகமாய் நடந்து ஆரியர்க்கு மறைந்துதவி புரிந்தமையும், அது கண்டு பரதர்க்கே உரியதான தீக்கடவுள் ஆரியரோடு உடன்கூட்டி அப் பூருக்களைப் போரிற் றொலைத்தமையும் இருக்குவேத ஏழாம் மண்டிலத்து 8ஆம் பதிகத்திற் சொல்லப்படுதலும் நினைவு கூரற்பாற்று. எனவே, அக்காலத்து ஆரியர் தமிழரைப் போரில் வென்று இந் நாடுகளைக் கைப்பற்றின ரென்பாருரை பொருந்தாமையும், அவர் தமிழரிலேயே சில வகுப்பாரைத் தம் வயப்படுத்தி அவர் தம் இரண்டகச் செயலின் உதவியால் இந் நாடுகளை மெல்ல மெல்லக் கைப்பற்றிக் கொண்டமையுந் தாமே பெறப்படும். தமிழ்நூல்களைப் பயின்றறி யாமையின் தமிழரின் நாகரிக உயர்ச்சியை நன்கு உணரப்பெறாத ஐரோப்பிய ஆசிரியரான ராகொசின் என்னும் நுண்ணறிவினர், தமிழரைவிட ஆரியரையே உயர்த்துப் பேசுங் குறிப்பினராயினும், இருக்குவேதப் பாட்டுகளை நடுநிலை திறம்பாமல் தாம் ஆராய்ந்த ஆராய்ச்சியின் முடிபாக, ஆரியர் தமிழரைப் போரில் வென்று அவர் தம் நாடுகளைக் கைப்பற்றினவர் அல்லரென்னும் எமதுகருத்தினையே தாம் அரிது ஆராய்ந்தெழுதிய `வேத இந்தியா என்னும் நூலில் விளக்கமாகக் கூறியிருக்கின்றார். ஆரியர் தென்றமிழ்நாடு புகுந்தது படையெடுப்பினால் அன்று, மெல்ல மெல்ல முன் ஊர்ந்து சென்றதனாலேயாம். ஆண்மையும், விடாப்பிடியும் வலுவாய் ஒழுங்குபடுத்தப் பட்ட படையமைப்புங் குடிநெருக்கமும் உடைய தமிழர்களைத், தொகையில் மிகக் குறைந்த ஒருகூட்டத்தார் எதிர்த்துச் செல்வதென்றால் அஃது எத்துணை இடர்ப்பாடுடையதாய் இருக்கவேண்டு மென்பது நாம் எளிதில் உணரக்கூடிய தொன்றேயாம். தமிழர்கள் இப்போதும் அத்தன்மை யராகவே இருக்கின்றனர்; விந்தியமலைக்குத் தெற்கே இருநூற்றெண்பது இலட்சம் பேர்க்குமேல் உளர்; அவர்கள் தமது தேயத்தின்மேல் வைத்த அன்பினால் ஆரியரை எதிர்த்து நின்ற அம் மிகப் பழைய காலத்திலும் அவர்கள் அங்ஙனமே பெருந் தொகையினராய் இருந்தன ரென்பதை ஐயுறுதற்கு ஏதோர் இயைபும் இல்லை20 எனவும், இந்திய நாட்டுக்குள் குடியேறிய ஆரியர் தமக்கு முற்பட்டே அந் நாட்டுக்கு உரியராகத் தாம் கண்ட இனத்தாரின் மரபினரோடும் அவ் வினத்தார்க்கு ஈடானாரோடும் அவ் வாரியரை ஒப்பிட்டுங் காணுமளவில் அவ் வாரியரது தொகை அவர்க்குச் சிறிதும் ஒவ்வாது மிகச் சிறிதாயிருத்தல் பலர்க்கும் வியப்பினைத் தோற்று வியாநிற்கும். இவ்விருதிறத்தாரின் தொகையில் ஏற்றத்தாழ்வுகள் அம் மிகப் பழையகாலத்தே இன்னும் மிகுதியாய் இருந்ததாகல் வேண்டும்; ஆகவே, வெறுவல்லாண்மையினாலும் வெற்றி யினாலுமே ஆரியரது தலைமைப்பாடு இந் நாட்டின் கண் நிலைபெறலாயிற் றென்னுங் கொள்கை பெரிதும் பொருத்த மற்றதென உறுதிப்படுத்துதற்கு ஈதொன்றுமே போதும்21 இங்ஙனமெல்லாம் பண்டைக்கால ஆரியர்க்குந் தமிழர்க்கும் இடைநிகழ்ந்த பெரும்போராட்டமும், தமிழரின் பேராண்மையினையும் பெருநாகரிகத்தினையும் நன்குணர்ந்த ஆரியர் அவரோடு எதிர்த்துநின்று அவரை வெல்லுதல் இயலாமை கண்ட வளவானே அவர் தம்மில் வலியரா யினாரைப் பல்வகைச் சூழ்ச்சிகளால் தமக்குத் துணையாய்க் கொண்டு அவ்வழியால் இப் பரதநாட்டுள் மெல்ல மெல்லப் புகுந்து ஆங்காங்குக் குடியேறலானமையும் இருக்குவேதப் பாட்டுக்களைக் கருத்தூன்றி ஆராய்வார்க் கெல்லாந் தெற்றெனப் புலனாகா நிற்கும். தமிழரிற் பரத மரபினர்க்குக் குலகுருவான விசுவாமித்திரருங்கூட ஒருகால் ஆரியர் செய்த சூழலில் அகப்பட்டு, ஆரிய அரசரான சுதா என்பவனுக்கு வேள்வியாசிரியராய்ச் சென்று, ஆரியர்க்குத் தெய்வமான இந்திரனை வணங்கி வழுத்திக், கீகடர் என்னுந் தமிழ் வகுப்பாரின் அரசனான பிரமகந்தனின் பெருஞ் செல்வ மெல்லாம் அவ் வாரிய அரசன் சுதா என்பவனுக்கு வந்து சேருமாறு வேண்டவே, அங்ஙனம் இரண்டகஞ் செய்த அவ் விசுவாமித்திரரின் நாவானது சிவபிரான்றன் சீற்றத்தால் மந்திரஞ் சொல்லும் வன்மை யிழந்து இயங்காது அவரை ஊமை ஆக்க, அவரும் அப்போது செயலற் றிருந்தனர். அது கண்டு உருத்திரரைத் தீ வடிவிற் கண்டு வணங்குவோரும், விசுவாமித்திரர்க்கு உறவினருமான ஜமதக்கினிகள், (இருக்கு, 10, 16, 7, 4) என்னுந் தமிழ்க்குருமார் அவரது செயலறவினைக் கண்டு இரங்கி, ஞாயிற்றின்கட் புலனாய்த் தோன்றுஞ் சிவபிரான் பக்கல் அமர்ந்த சசர்பரீ என்னும் உமைப்பிராட்டியை வேண்டி வழுத்த அவளது அருட்கடைக்கண் நோக்கால், விசுவாமித்திரர்க்குப் பெயர்த்தும் நாவன்மை உண்டாகவே, அவர் தாம் தமிழ்வகுப்பினர்க்கும் அவ் வகுப்பினர்க்குத் தலைவரான பரதர்க்கும் நன்மை விளையுமாறு வேண்டி, ஆரிய அரசன் சுதா என்பவனது வேள்விக்களத்தைவிட்டு அகலாநிற்ப, அது கண்டு அவ் வாரிய அரசனின் குலகுருவான வசிட்டர் அவரையுந் தமிழரையும் பகைத்து இகழ்ந்துரைப்ப, அதனால் விசுவாமித்திரரும் பெருஞ்சீற்றங்கொண்டு அவ் வசிட்டரையும் ஆரியரையும் வைதுரைத்துத், தாம் தம் தமிழ்மரபினரோடுஞ் சென்றமையும் இருக்குவேத மூன்றாம் மண்டிலத்து 53 ஆம் பதிகத்தில் நன்கெடுத்து ஓதப்பட்டமை காண்க.இப் பதிகப் பொருளை ஆழ்ந்தாராய்ந்த ராகொசின் என்னும் ஐரோப்பிய ஆசிரியர் தமது வேத இந்தியா என்னும் நூலில் அதுபற்றி எழுதிய நடுநிலைவழா உரை தமிழ் நன்மக்களாவார் கருத்திற் பதிக்கற்பால தொன்றாகலின் அதனை இங்கே மொழிபெயர்த் தெழுதுவாம்: 22இருக்கு வேதத்தினாலேயே அறியக் கிடக்குஞ் செய்தியினளவில் தனிநின்று நோக்குங்கால், வசிட்டர் என்பார் தனி ஆரியத் தலைவரான திரித்சுக்களுக்குக் குரவராதலும், விசுவாமித்திரர் என்பார் அவ் வாரியர்க்குப் பெரும்பகைவரும் உள்நாட்டுக் குடிமக்களுள் ஆண்மையில் மிகச் சிறந்தாரும் ஆன பரதர்க்குக் குரவராதலும் பெறப்படா நிற்கும். விசுவாமித்திரர் ஒரு காலத்தில் திரித்சுக்களிடம் போய்ச் சேர்ந்திருந்தனர். பின்னர் எதனாலோ - ஒருகால் பழிக்குப் பழிவாங்கும் எண்ணத் தினாலோ, அவர் அவர்களை விட்டுச்சென்றனர்; ஆரியர் முன்னேறி வருகையினையும் அவர்க்கு வரவர மிகும் வலிவினையுந் தடை செய்யத், தம்மினத்தவர் தம்மிற் கூடிச்செய்த கட்டுப்பாட்டில் அவர் முதல்வராய் நின்றனர். இருக்கு வேத மூன்றாம் மண்டிலத்தில் (தீக்கடவுண்மேலும் ஏனை ஆரியச் சிறு தெய்வங்கண் மேலும்) விசுவாமித்திரக் குடியினர் இயற்றிய பதிகங்களுள் 53 ஆம் பதிகமானது மேற்காட்டிய நிகழ்ச்சியினையே தமிழர் ஆரியரொடு போராடி அவரைத் தடுத்து நின்ற செய்தியினையே) குறிப்பிடுகின்றது. சுதா என்னும் அரசனின் வேள்விகளை விசுவாமித்திரர் நடத்தியபோது இந்திரன் அம் முனிவர் பொருட்டு அவனுக்கு அருள்புரிந்து அவன் எடுத்துச் செல்லும் படையெடுப்பினையும் அவன்றன் போர்க் குதிரையினையும் அவனையும் வாழ்த்தி வரங் கொடுத்தனனென அப் பதிகத்தின் முதற் பகுதியானது மொழியா நிற்கின்றது. அதன்பிற் சடுதியிலே விசுவாமித்திரர் தம் வேண்டுகோளுரைகள் பரத வகுப்பினரைக் காக்கவெனக் கட்டுரைத்தார் எனக் கழறுகின்றது; அப்பதிகத்தின் ஈற்றில் நிற்கும் நான்கு செய்யுட்கள் பகைவரைக் கெடுகவென வைதுரைக்கின்றன; இங்ஙனம் வைதுரைக்கப்பட்ட பகைவர் இன்னா ரென்பது அவற்றின்கட் சொல்லப்படவில்லை யாயினும், அப் பகைவர் வசிட்டரும் அவர் தங் குடியினருமே யாவரெனவும், அதனால் அவ்வசிட்டக் குடியினைச் சேர்ந்த பிற்காலத்துக் குருக்கண்மார்களுங்கூட அந்நான்கு செய்யுட் களையுந் தம்வாயால் ஒருபோதுஞ் சொல்லாமையோடு, மற்றைப் பார்ப்பன வகுப்பினர் அவற்றை ஓதுங்கால் அவை தம்மைச் செவி கொடுத்துக் கேளாதிருக்கவும் முயன்றன ரெனவுந் தொன்றுதொட்டுவரும் வரலாறு நுவல்கின்றது. வசிட்டக் குடியினர்க்குத் தனிச்சிறப்புக் கொடுக்கப்பட்டமை கண்டு (இது திரித்சுக்கள் என்னும் அரச குடும்பத்தார்க்கு அவர்கள் புரோகிதராக ஏற்படுத்தப்பட் டமையா யிருக்கலாம்), விசுவாமித்திரர் செற்றங்கொண்டு, அத் திரித்சுக்களுக்குப் பெரும்பகைவரும் வலியருமான பூருக்களும் பரதர்களும் என்பார்பாற் போய்ச்சேர்ந்தனர். திரித்சுக்களும் அவர்களோ டுடன்சேர்ந்தவர்களும் பின் நிகழ்ந்த `அரசர் பதின்மரின் போர் எனப்படுஞ் சண்டையில் வெற்றிபெற்றனர். இருதிறத்தாரையுஞ் சேர்ந்த பாவலர் அச்சண்டையைப் பற்றியும், பருஷிநீ யாற்றங் கரையில் முடிவாக நடந்த போரைப் பற்றியுந் தாம் பாடிய கிளர்ச்சியான பதிகங்களில் (இருக்குவேதப் பதிகத் திரட்டில் இப்பதிகங்கள் உண்மை நிகழ்ச்சிகளை அறிவிப்பன என்பதிற் சிறிதும் ஐயறவுக்கு இடமில்லை) விளக்கமாகச் சொல்லியிருக்கின்றார்கள். பிற்பட்ட காலத்தில் வசிட்டரைச் சார்ந்தோரும் அவர் வழியில் வந்தோரும், உயிரற்ற விதிகள் பொருளற்ற சடங்குகள் ஆசாரங்கள் என்பவற்றை ஓர் எள்ளளவுகூட விடாமல் உன்னித்துச் செய்யுள் புல்லிய தன்மையிலும், ஆரியரது முறையிற் சேராத எதனையுங் கண்டு மனந் தாங்காமையிலும், மற்றை வகுப்பாரொடு கூடாமற் பிரிந்து நிற்குங் கொடுமையிலும் முதிர்ந்து குறுகிய நோக்க முடையராய் வருஞ் சரியான பார்ப்பன இனத்தின்றன்மை யினைக் காட்டுவோ ராவரென்பது அறியற்பாற்று. இம் மரபினரே நமது காலம் வரையிற் சாதி வேற்றுமையினை நெடுகக் காத்துவந்தவராவர்; அவ்வேற்றுமையினை முதன் முதல் உண்டாக்கினவரும் அவரே யாதல் கூடும். பார்ப்பனக் குருமார்கள் தெய்வத்தன்மை வாய்ந்தவர்கள். அவர்களே உலகினை ஆளுதற்கு உரியர். அவர்களே உலகிலுள்ள எல்லாப் பொருள்களுக்கும் உரிமையாளர், அவர்களே உலகின்கண் நடைபெறும் இயற்கை நிகழ்ச்சிகளை யெல்லாந் தாம் வேண்டுமாறு நடப்பிக்கவல்ல கடவுட் டன்மை யுடையர், வேள்வியாற்றுதலாலுந் தவவொழுக்கங்களாலும் இன்னும் இவைபோல்வன பிறவாலும் அவர்களே கடவுளரையும் ஏவல்கொளவல்லவர், எனப் பார்ப்பன ருரிமைகளை அளவுக் கடங்காமற் பாரித்துப் பேசி, அவற்றை விடாப்பிடியாய்க் கொண்டு முன்னேற்றி வைத்தவர்கள் இவ்வசிட்ட மரபினரே யாவர். மற்று, விசுவாமித்திரரைச் சார்ந்தாரும் அவர் வழிவந்தாருமோ, விரிந்த நோக்கமும் மேன்மேற் பெருகும் ஆக்கமும் எல்லாரோடும் உறவுபாராட்டும் இயற்கையும் எல்லாரோடும் அளவளாவும் வாழ்க்கையும் வாய்ந்த குடிமக்களின் றன்மையினைக் காட்டுவோராவரென்பதூஉம் அறியற்பாற்று எனவும், சிவர் என்பாருடன் சேர்த்துச் சொல்லப்பட்ட விஷாநியர் என்பார், மிகப் பழைய தமிழ்மக்களுள் ஒரு வகுப்பினரான துக்ரரே யாவரெனக் கருதப்படுகின்றனர்; இவர்களையே `நாகரின் மக்கள் எனக் குறிப்பிட்டு ஆரியர் இகழ்ந்துரைத்தனர்; இவர்களே சைவர் எனப் பெயர் பூண்டு, நாகத்தின் வடிவின்கீழ் அல்லதொரு நாகத்தின் தன்மையில் வைத்துச் சிவபாழிபாட்டினை உண்டாக்கினோராதல் வேண்டும்23 எனவும் அவர் மொழிந்தமை காண்க. உண்மை யாராய்ச்சியில் வல்ல இவ்வைரோப்பிய ஆசிரியர் இருக்குவேதப் பதிகங்களை நடுநின்று நுண்ணிதின் ஆராய்ந் துரைத்த இவ்வுரைகளால், வசிட்டரும் அவரைக் குருவாய்க் கொண்ட ஆரியரும், விசுவாமித்திரர்க்கும் அவரைக் குருவாய்க் கொண்ட பரதர் முதலான தமிழ்க் குடியினர்க்கும் அத் தமிழ்க்குடியினர் தீ வடிவில் வைத்து வழிபடுஞ் சிவவழிபாட்டுக்கும் முற்றும் மாறாய் நின்றமை நன்கு புலனாகின்றதன்றோ? தீத்திரளையான ஞாயிற்றினையும், அஞ் ஞாயிற்றினை ஓர் உடம்பாய்க் கொண்டு `பர்க்கன் எனப் பெயர் பூண்டு விளங்குஞ் சிவபெருமானையும் வழுத்துங் காயத்திரி மந்திரமானது, விசுவாமித்திரரையும் அவர்தங் குடியினரையும் ஆசிரியராய்க் கொண்ட இருக்குவேத மூன்றாம் மண்டிலத்தின் இறுதிக் கண்ணதான 62 ஆம் பதிகத்தின் 10-வது செய்யுளாய் அமைந்திருத்தலையும் இம் மூன்றாம் மண்டிலத் தொடக்கத்திலுள்ள பதிகங்களும் அதன் இடையிடையேயுள்ள பதிகங்களுந் தீக்கடவுண் மேலன வாயிருத்தலையும், தீக்கடவுண் மேலனவாய் இம் மூன்றாம் மண்டிலத்தினும் ஏனை மண்டிலங்களினும் பாடப்பட்டுக் கிடக்கும் பதிகங்கள் பெரும்பாலனவற்றின் மட்டுமே `பரதர் என்னுந் தமிழ்க்குடியினர் பெயர் எடுத்துக் கூறப்படுதலையும், இருக்குவேதத்தில் தீக்கடவுண்மேலும் உருத்திரர் மேலும் பாடப்பட்டிருக்கும் பதிகங்களின் ஆசிரியர் பெரும்பாலும் விசுவாமித்திரக் குடியினைச் சேர்ந்த முனிவரராயிருத்தலையும் உற்றுநோக்க வல்லார்க்குத், தீக்கடவுளையுஞ் சிவபிரானையும் பாடிய அம் முனிவரெல்லாம் பண்டைத்தமிழ் வகுப்பினரே யாதல் தெற்றென விளங்காநிற்கும். இதனாலன்றோ வசிட்ட மரபினரும் விசுவாமித்திர மரபினரும் ஒருவரையொருவர் மிகப் பகைத்து வைதுரைக்கும் பாட்டுகள் இருக்கு வேதத்தின்கட் காணப்படுவவாயின. இவர் தம்மிற்றாம் இகலி நின்றதொன்றின் மட்டின் அமையாது வசிட்டக் குடியினர் விசுவாமித்திரக் குடியினர் வணங்கிய முழுமுதற் றெய்வமாகிய சிவபெருமானை யும் கூடச் `சூத்திர தெய்வம், `சிசிதேவதை எனப் பெரிதும் இகழ்ந்து பேசலாயினர். இங்ஙனம் வசிட்டரைக் குருவாய்க் கொண்ட ஆரியர், விசுவாமித்திரரைக் குருவாய்க்கொண்ட தமிழ ரிடத்தும், அவர் வணங்கிய தமிழ்த் தெய்வமாகிய ஞாயிறு திங்கள் தீ என்னும் ஒளிப்பிழம்பு களிடத்தும் அப்பிழம்பு களினுட் கட்புலனாய் விளங்கித் தோன்றும் உருத்திரரிடத்தும் வரைகடந்த பகைமை கொண்டமை யாலன்றோ, பிற்காலத்தில் அவ்வாரிய வசிட்ட மரபினரின் வழித்தோன்றிய பார்ப்பனர் ஆக்கிய `வசிட்ட மிருதிமுதல் அத்தியாயத்தில் சதுர்வேதீ ச யோவிப்ரோ வாசு தேவம் நவிந்ததி என்று தொடங்குஞ் செய்யுண் முதல் ஐந்து செய்யுட்கள், நான்கு வேதங்களிலும் வல்லவனா யிருப்பினும், வாசுதேவனை யறியாத ஒரு பார்ப்பனன், வேதமாகிய ஒரு பெருஞ் சுமையைத்தாங்கி நடுங்கிக் கொண்டிருக்கும் ஒரு பார்ப்பனக் கழுதையேயாவான். ஆதலால் வைஷ்ணவனா யிருந்தாலன்றி ஒருவன் பார்ப்பனத்தன்மையை இழந்து விடுவன். வைஷ்ணவனாயிருப்பதால் ஒருவனுக்கு முழுமுதற்றன்மை உண்டாகின்ற தென்பதிற் சிறிதும் ஐயம் இல்லை. ஏனென்றால் நாராயணனே பரப்பிரமம்; அவனே பார்ப்பனர்களுக்குத் தெய்வமாவன்; திங்களும் ஞாயிறும் மற்றையவும் க்ஷத்திரியர்க்கும் வைசியர்க்குந் தெய்வங்களாகும்; உருத்திரனும் அவனையொத்த தெய்வங்களுஞ் சூத்திரர்களாலேயே இடைவிடாது வணங்கற்பாலன. புராணங்களினும் மிருதி களினும் உருத்திர வணக்கஞ் செய்கவெனக் கட்டளையிடும் இடங்கள் பார்ப்பனரைக் குறிப்பன அல்ல; இவ்வாறு பிரஜாபதி வற்புறுத்திக் கூறினார். புராணங்களில் விதந்து சொல்லப்படும் உருத்திர வழிபாடும் மூன்று கீற்றாகத் திருநீறு இடுதலும், க்ஷத்திரியர் வைசியர் சூத்திரர் என்னும் இனத்தாரை நோக்கிச் சொல்லப்பட்டனவே யல்லாமல், மற்றை யோரை நோக்கின அல்ல. ஆகையாற், சிறந்த முனிவர்களே, பார்ப்பனர்கள் திரிபுண்டாம் அணிதல் ஆகாது24 என்று வற்புறுத்தி, ஆரியப் பார்ப்பனர் தமிழ்த்தெய்வமாகிய உருத்திரரை வணங்காவாறும், தீயினை வழிபட்டு அதன் தூய அடையாளமாகத் தமிழர் இடுந் திருநீற்றை அவ் ஆரியர் தாமும் அணியாவாறுந் தடை செய்வவாயின. இங்ஙனமாகப் பண்டு தொட்டு ஆரியர் தமிழரையுந் தமிழ்த்தெய்வமாகிய சிவபிரானையும் பகைத்து இகழ்ந்து வருதல் பற்றியே, அவ்வாரிய இனத்திற் றம்மைச் சேர்த்துக்கொண்டு வடமொழியையும் வடநூல்களையுமே தமக்குரியன வென்று தழீஇத், தம்மைப் பார்ப்பனரென்று சொல்லிக்கொள்ளும் இஞ்ஞான்றை மக்களெல்லாரும், சிவபிரானைச் சூத்திரதெய்வ மென்றுந் தேவார திருவாசகத் தமிழ்மறைகளைச் சூத்திரப்பாட் டென்றும் இழித்துரைத்துத் திருமாலின் அவதாரங்களாகத் தாம் பிழைபடக்கொண்ட இராமன் கண்ணன் என்பாரை மட்டும் வணங்கி வட நூல்களையே ஒரு வரைதுறையின்றிப் பாராட்டி வருகின்றனர். இவ்வாறு தொன்றுதொட்டு இன்றுகாறும் நடைபெற்றுவரும் ஆரியர் ஒழுகலாற்றினை நடுநின்று நன்காய்ந்து காணும் நுண்ணறிவாளர் எவர்க்கும், இருக்கு வேதத்திற் `பரதர் முதலிய பெயர்களால் வழங்கப்பட்ட பண்டைத் தமிழ் நன்மக்களே ஞாயிறு திங்கள் தீ என்னும் முத்தீவடிவில் வைத்து முழுமுதற் கடவுளான சிவபிரானை வழிபடும் நுட்பமுறையைக் கண்டோராவர் என்னும் அரும்பேருண்மை தெற்றென விளங்கா நிற்கும். பரதகண்டமாகிய இத் தமிழ்நாட்டுட் புகுந்து பல்வகைச் சூழ்ச்சிகளால் தமிழரது உறவைப்பெற்று ஆங்காங்குக் குடியேறி நிலைபெற்ற ஆரியர், தமக்கு முன்னே நாகரிகத்தில் மிகச் சிறந்தாராய்த் திகழ்ந்த தமிழ்மக்கள் செய்துபோதரும் முத்தீ வேள்வியினைக் கண்டு, அதைப் போற் றாமும் வேள்வி வேட்கத் தலைப்பட்டனர். இருக்குவேத காலத்தில் தமிழ்ச் சான்றோர்களே முத்தீ வேள்விகள் வேட்டனரன்றி, ஆரியக்குருமார் அவற்றை வேட்டனரல்ல ரென்பதூஉம், எஜுர்வேத சாமவேத காலங் களிலே தாம்அவர்கள் தமிழாசிரியரது துணைகொண்டு அவற்றை வேட்கலாயின ரென்பதூஉம் ஐரோப்பிய ஆசிரியரான மாக்மூலர் விளக்கியவாற்றானும் நன்குணரப் படும்.25 ஆரியர் தாம் வேள்விவேட்கத் தெரியாத காலங்களி னெல்லாம் `விசுவாமித்திரர், `ஜமதக்கினிகள் முதலான தமிழ்க் குருமார்களைத் தம்பால் வருவித்துத் தமக்குரிய இந்திர தெய்வத்திற்கு வேள்வி வேட்டமையும், அவ்வாற்றால் தாமும்வேள்வி வேட்கத்தெரிந்து கொண்டபின் அத்தமிழ்க் குருமாரை விலக்கித் தமக்குக் குரவர்களான வசிட்டர் முதலாயினரைக் கொண்டு அவ்வாரியர்கள் வேள்வி வேட்கலானமையும் இங்ஙனஞ் செய்துபோந்த ஆரியரது படிற் றொழுக்கத்தால் இருதிறத்துக் குருமார்களுக்குட் பகைமையும் அதுவாயிலாக அவ் விருதிறத்தாரின் அரசர்க்குட்போரும் அடுத்தடுத்து நிகழலானமையும் இருக்குவேதப் பாட்டுக்களைக் கருத்தூன்றி யாராய்வார்க்கு இனிது புலனாகாநிற்கும். தமிழர் வேட்கும் முத்தீ வேள்வியைப்போல், ஆரியரும் வேட்கத் தொடங்கி வேள்விச் சடங்குகளை அளவிறப்பப் பெருக்கிப் `பிராமணங்கள் வரைந்து, தமிழரசர்களை ஏமாற்றி அவர்பாற் பெற்ற பெரும் பொருட்டிரள் கொண்டு, தாம் ஊனுண்டு கட்குடிக்கும் ஒழுகலாறு உடையராகலின், அதற்கேற்பக் கொலையுங் குடியும் மலிந்த வேள்விகளைப் பல்லாயிரக் கணக்காக வேட்டுவந்தனரேனும், அவர்கள் அவ்வேள்விகளிற் சிவபெருமானை வணங்கினவர் அல்லர். தமிழ்ச் சான்றோர்கள் வேட்டுவந்த வேள்விகள் அத்துணையுங் கொலையுங் குடியும் இல்லாதனவாய்ச் சிவபிரான் ஒருவனை மட்டுமே வணங்குதற் பொருட்டு வேட்கப்பட்டன; ஆரியர் வேட்ட வேள்விகளோ பல்லாயிரக் கணக்கான உயிர்களைக் கொன்றுந் தொட்டி தொட்டியாகச் சோமப்பூண்டில் இறக்கிய கள்ளை யுண்டும் இந்திரன் வருணன் முதலான சிறு தேவதைகளை வணங்குதற் பொருட்டாகவே வேட்கப்பட்டன. தமிழர் தீயினையும் ஞாயிறு திங்களினையும் வழிபடுங் கால் அவை முழுமுதற் கடவுளோடொப்ப ஒளிவடிவினவாய் விளங்கும் நுட்பம் உணர்ந்து, அவற்றை இறைவற்கு உடம்பாகவும் இறைவனை அவற்றிற்கு ஓர் உயிராக வுங்கொண்டு அவ் வொளிவடிவுகளைச் சிறந்தெடுத்துப் பாராட்டி வழிபட்டனர்; ஆரியரோ, தாம் படைக்கும் ஊனையுங் கள்ளையும் ஏற்று அவற்றை இந்திரன் முதலான சிறுதெய்வங்கட்குச் சேர்ப்பிக்கும் ஓர் ஏவலனாக இழிந்த நிலைமைக்கண் வைத்துத் தீக்கடவுளை வணங்கலாயினர். இவ்வாறு தமிழர் வேட்ட வேள்விகட்கும் ஆரியர் வேட்ட வேள்விகட்கும் உள்ள பெரியதொரு வேறுபாட்டினைத் தெரித்தற் பொருட்டே சைவசமயாசிரியரான திருநாவுக்கரசு நாயனார், எரிபெ ருக்குவர் அவ்வெரி ஈசனது உருவ ருக்கம தாவது உணர்கிலார், அரிஅ யற்குஅரி யானை அயர்த்துப்போய் நரிவி ருத்தம தாகுவர் நாடரே (பொது) எனவும், அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில் அருக்கன் ஆவான் அரன்உரு அல்லனோ? இருக்கு நான்மறை ஈசனை யேதொழுங் கருத்தி னைநினை யார்கன் மனவரே (பொது) எனவும் அருளிச்செய்திட்டார். தீயும் ஞாயிறுஞ் சிவபெருமான்றன் றிருவுருவங்களாதலை உணரப்பெறாத ஆரியப் பார்ப்பனரை நரிவிருத்தம தாகுவர் கன்மனவர் என்று ஆசிரியர் இரங்கி இகழ்ந்துரைத்தமை நினைவிற் பதிக்கற்பாற்று. அவ்வாரியர் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை வணங்குதல் விட்டு, அரிபிரமன் இந்திரன் என்னுஞ் செத்துப் பிறக்குஞ் சிறுதெய்வங்களை வழிபடுதல் கண்டன்றோ இரங்கி மனங்கொதித்துப் பின்னும் அப்பெருந்தவ ஆசிரியர், செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று பத்தி செய்மனப் பாறைகட்கு ஏறுமோ? அத்தன் என்று அரியோடு பிரமனுந் துத்தி யஞ்செய நின்றநற் சோதியே (பொது) எனவும், நூறுகோடி பிரமர்கள் நொந்தினார் ஆறு கோடி நாராயணர் அங்ஙனே ஏறு கங்கை மணல்எண்ணில் இந்திரர் ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே (பொது) எனவும் நிரம்பக் கடுத்த சொல்லில் எடுத்து இடித்தறிவுறுத் தருளினார். இவரைப் போலவே சைவசமய முதலாசிரியரான மாணிக்கவாசகப் பெருமானும், கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு குடிகெடினும் நள்ளேன் நினதடியாரொ டல்லால் நரகம் புகினும் எள்ளேன் றிருவருளாலே இருக்கப்பெறின் இறைவா உள்ளேன் பிறதெய்வம் உன்னையல்லா தெங்கள் உத்தமனே (திருச்சதகம், 2) என்றும், புற்றில்வா ளரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன் கற்றைவார் சடைஎம்அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி மற்றும்ஓர் தெய்வந் தன்னை உண்டென நினைந்துஎம் பெம்மாற் கற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே (அச்சப்பத்து, 1) என்றுந் திருவாசகத்தில் அருளிச்செய்திருத்தல் காண்க. இவ்வாறு பிறப்பு இறப்பு இல்லாச் சிவபெருமானே முழுமுதற் கடவுளாதல் தெரித்து, ஏனைச் சிறுதெய்வங் களெல்லாம் பிறப்பு இறப்புகளுட் கிடந்து அவன் ஆணை வழி யுழலுஞ் சிற்றுயிர்களாதலுங் காட்டிச் சைவ சமயாசிரியர் களெல்லாரும் ஒரே முகமாய் அச் சிறுதெய்வ வணக்கத்தை மறுத்து விலக்கிய செந்தமிழ் அருளுரைகள் வெள்ளிடை மலைபோல் விளங்கிக் கிடப்பவும், இஞ்ஞான்று தம்மைச் சைவரெனவுங் கூறிக் கொள்வார் சிலர், ஆரியரது ,சூழ்ச்சியில் வீழ்ந்து ஆரிய வேதங்கள் சிவபிரான் அருளிச் செய்தனவேயா மென்னும் ஒரு பொருந்தாக் கொள்கை யினை நாட்டுதற்குப் புகுந்து, இறைவன்றன் திருவுருவ வழிபாட்டினை இகழ்ந்து மறுத்துத் தம் வாழ்நாள் எல்லையளவுஞ் சைவசமயத்துக்கு மாறாய் நின்ற `தயாநந்த சரவதி என்னும் வடநாட்டு முனிவரரின் கொள்கையைத் தழீஇ இருக்குவேதத்திற் சொல்லப்பட்ட இந்திரன் மித்திரன் வருணன் முதலான பல தெய்வப் பெயர்களெல்லாம் ஒரு தெய்வத்தின் மேலனவே யாமென்றும், ஆரிய வேதங்களின் படி வேட்கப்பட்ட வேள்விகளில் உயிர்க்கொலை நிகழவில்லையென்றும், உயிர்க்கொலை செய்கவென ஏவுஞ் சொற்றொடர்கட் கெல்லாம் வேறு பொருள்கள் உளவென்றுந் தத்தமக்குத் தோன்றியவாறெல்லாம் பேசி, இலக்கண இலக்கிய அளவை நூல் வரம்புகளைக் கடந்துந், தொன்றுதொட்டு வரும் ஆரியர் தம் ஒழுகலாற்றுக்கும் வேதங்கள் பிராமணங்கள் தரும சூத்திரங்கள் முதலான ஆரிய நூல்களில் மிக விரிவாகவும் விளக்கமாகவுஞ் சொல்லப்பட்டிருக்கும் உயிர்க்கொலை வேள்வி முறை கட்கும் முற்றும் மாறானதொரு கோட்பாட்டினைக் கிளப்பியும் பெரியதோர் ஆரவாரம் புரிவாராயினர். இந்திரன் முதலிய பெயர்கள் முழுமுதற் கடவுளையே குறிப்பது உண்மையாயின், அப்பெயர்களால் உணர்த்தப்படும் அத் தெய்வங்கள் முழுமுதற் கடவுட்குரிய இலக்கணங்கள் உடையவாய் இருத்தல் வேண்டுமன்றோ? இந்திரன் சோமன் என்பார் பிரஜாபதியாற் படைக்கப்பட்டவர் எனச் `சதபதபிராமணங் (11, 1, 6) கூறுதலானும்,மித்திரன், வருணன், தாத்ரி, அர்யமான், அம்சன், பகன், விவவதன், ஆதித்யன் என்னும் எண்மரும் அதிதியின் புதல்வரென அஃது அங்ஙனமே எடுத்துச் சொல்லுதலானும், கட்குடியும் விலங்குகளின் கொலையால் வரும் ஊன்உணவும் அவ் இந்திரன் முதலியோர் கைக்கொண்டமையுந் தந்தையைக் கொல்லல் மகளைப் புணர்தல் முதலான மிக இழிந்த செயல்களை அவர் புரிந்தமையும் மேலே 372 ஆம் பக்கம் முதல் 380 ஆம் பக்கம் வரையில் எம்மால் எடுத்துக் காட்டப்பட்டிருத்தலானும், இத்தேவர்கள் பகைவராற் பலகாலுந் தோல்வியுற்று வருந்தி வந்தமையின் தாம் சாவாதிருத்தற்கு மருந்து வேண்டி முயன்ற காலத்தில் அவரைக் கொல்லும் நஞ்சு ஒன்று எழ அதனைச் சிவபிரான் உட்கொண்டு அத் தேவர்களைக் காத்தமை கேஸி விஷய பாத்ரேண யத் ருத்ரேணா பிபத் சஹா (10, 136, 7) என இருக்கு வேதத்தின் கண் நன்கெடுத்துக் கூறப்பட்டிருத் தலானும் அத் தேவரெல்லாரும் மக்களோடொத்த சிற்றுயிர் களேயாவ ரல்லது முழுமுதற் கடவுளராதல் செல்லாது. மற்றுச், சிவபிரானோ உயிர்கட்குள்ள இக் குற்றங்கள் சிறிதும் அணுகப் பெறாதவனாகலின் அவன் ஒருவனே எல்லா முதன்மையும் உடைய முழுமுதற் கடவுளாதலும் மேலே விளக்கப்பட்டது. இன்னும் இதன் விரிவை வேளாளர் நாகரிகம் என்னும் எமது நூலிற் கண்டுகொள்க. ஆரியர் உயிர்களை ஏராளமாய்க் கொன்று தாம் வணங்கி வந்த சிறுதெய்வங்களுக்கு அவற்றின் இறைச்சியைப் படைத்துத் தாமும் அயின்றுவந்தமை இருக்குவேதத் திலேயே பற்பல இடங்களிலுந் தெளிவாகச் சொல்லப் பட்டிருக் கின்றது. அதன் முதன் மண்டிலத்து, 116 ஆம் பதிகத்தின் 7 ஆவது செய்யுளில் அசுவினி தேவர்கள் சுக்ஷீவானுக்கு நூறு சாடிச் சாராயங் கொடுத்தமையும், 16 ஆவது செய்யுளில் `ரிஜிராசுவன் அசுவினி தேவர்களின் ஊர்தியான கழுதையின்பொருட்டு விதையடித்த நூறு செம்மறியாடுகளை வெட்டி அவற்றின் ஊனை உணவாகப் படைத்தமையுஞ் சொல்லப்பட்டிருக்கின்றன; 162, 163 ஆம் பதிகங்களில் வெள்ளாட்டினையுங் குதிரையையுங் கொன்று அவற்றின் ஊனைச் சமைத்துப் `பூஷன் `இந்திரன் என்னுந் தெய்வங்கட்குப் படைத்தமை விரிவாகக் கூறப்பட்டிருக் கின்றது; அதன் ஐந்தாம் மண்டிலத்து 29 ஆம் பதிகத்தின் 7 ஆவது செய்யுளில் முந்நூறு எருமை மாடுகளைக் கொன்றுஅவற்றின் இறைச்சியை நெருப்பில் வாட்டிப் பதப்படுத்தி அதனை மூன்று பெரிய தொட்டிச் சோமச் சாராயத்துடன் இந்திரனுக்குப் பலியூட்டினமை வெளிப்படை யாக நுவலப்பட்டிருக்கின்றது; அதன் ஆறாம் மண்டிலத்து 17 ஆம் பதிகத்தின் 11 ஆவது செய்யுளிலும் அங்ஙனமே நூறு எருமை மாடுகளைக் கொன்று தீயிற் பதப்படுத்தி அவ்வூனை மூன்று பெரிய தொட்டிக் கள்ளுடன் இந்திரனுக்குப் படைத்தமை தெளிவாக மொழியப்பட் டிருக்கின்றது; 4 ஆவது செய்யுளில் ஆரியர் தம்முள் இறந்துபோன ஒருவனைச் சுடுகாட்டின் விறகின்மேல் வைத்துக் கொளுத்தப் போகையில் ஓர் ஆட்டைக் கொன்று அதன் உறுப்புகள் ஒவ்வொன்றையும் பிணமாய்க் கிடப்பவன் உறுப்புகளின் மேல் வைத்து அவனைக் கொளுத் தினமை கூறப்பட்டிருக்கின்றது;அம் மண்டிலத்து 85ஆம் பதிகத்தின் 13 ஆவது செய்யுளில் ஒருவனுக்கும் ஒருத்திக்கும் மணம் நடத்துவதற்குமுன் மகமீன் நாளிற் காளைமாடுகளைக் கொன்று பகலவனுக்குப் பலியூட்டி, அதன்பிற் பங்குனி நாளில் மணம் நடத்துமுறை பகரப்பட்டிருக்கின்றது; அம் மண்டிலத்து 86 ஆம் பதிகத்தின் 14 ஆவது செய்யுளில் ஆரியர் பதினைந்து எருமை மாடுகளைக் கொன்று இந்திரனுக்குப் படைக்க, அவன் அவற்றின் கொழுப்பை ஆரத்தின்று வயிறு நிறைந்தடைந்த மகிழ்ச்சி எடுத்துரைக்கப் பட்டிருக்கின்றது; அம் மண்டிலத்து 91 ஆம் பதிகத்தின் 14 ஆவது செய்யுளிற் குதிரைகளையும் எருது களையும் ஆக்களையும் வறட்டு ஆக்களையும் செம்மறி யாடுகளையும் கொன்று ஆரியர் வேள்வி வேட்டமை விளக்கமாக விளம்பப்பட்டிருக்கின்றது. இருக்கு வேதத்திற்குப் பின் எழுந்த `பிராமணங்கள் `மிருதிகள் என்பவற்றில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கும் உயிர்க்கொலை வேள்விகள் தாம் இருக்குவேத காலத்திற்குப்பின் உண்டா யினவென்று கூறத்துணிபவர், இருக்குவேதத்திலேயே ஒருகாலன்றிப் பலகாலும் இங்ஙனம் விளக்கமாக நுவலப்பட்டிருக்குங் குடி கொலை மலிந்த வெறியாட்டு வேள்விகள் நிகழவில்லை யென்றலும், அவை தமக்கு வேறுபொருள்கள் உளவென்றலும் `முழுப் பூசனிக்காயைச் சிறு சோற்றில் மறைப்பதற்கே ஒப்பாய் ஆராய்ச்சி யறிவுடையாரால் நகையாடி விடுக்கற்பாலனவாய் ஒழியும் என்க. இவை தமக்கெல்லாம் வேறு பொருள்கள் உளவென்பார் கூற்றுத், `தவவொழுக்க மென்பது ஏதோர் உயிரையுங் கொன்று அதன் ஊனை உண்ணாமையேயாம் என்று வற்புறுத்தி ஔவைப் பிராட்டியார் மொழிந்த நோன் பென்பது கொன்று தின்னாமை என்னும் அறிவுரைத் தொடரைத் தன் கருத்துக்கு இணங்குமாறு பொருள்படுத்த வேண்டினான் ஓர் ஊன்தின்னி `தின்னாமை என்னும் ஒருசொல்லைத் `தின் ஆமை என இரண்டு சொல்லாகவுந், `தின் ஆ மை என மூன்று சொல்லாகவும் பிரித்து `ஆமை இறைச்சியைத் தின்னல் எனவும், `மாடு ஆகிய என்பவற்றின் இறைச்சியைத் தின்னல் எனவும் பொரு ளுரைத்து, `ஆகவே `தவவொழுக்க மென்பது ஆமை மாடு ஆடு என்பவற்றின் ஊனை யுணவாகக் கொள்ளுதலேயாம் என்று அவ் வறிவுரைக்குப் பொருள் கூறி ஆரவாரம் புரிதலோடு ஒப்பதாமன்றிப் பிறிதென்னை? ஒரு நூலின் போக்கையும் அதனை இயற்றிய ஆசிரியர் கருத்தையும் பிறழ்த்தித், தாம் வேண்டியவாறெல்லாம் உரை யுரைப்பதும் மெய்யுரை யாகுமா? எனவே, தென்னாட்டுச் சைவமுனிவரர் எவரது அருளுரையுந் தமது மருளுரைக்கு இடந்தந்து உதவி செய்யாமையின், அத் தெய்வ முனிவரரைத் தமக்கு மேற்கோளாகக் கொள்ளுதல் ஆகாமை கண்ட இந் நாட்டுப் போலிச் சைவர் சிலரும் மாயாவாத வேதாந்திகள் பலருந் தமது போலிக்கொள்கைக்கு இசைந்த வடநாட்டு முனிவரர் தயாநந்த சரவதியை அடைக்கலம் புக்கது சாலப் பொருத்தமேயாம். புக்கும் என்! அவர் கைக்கொண்ட இருக்கு வேதமே அவரது கோட்பாட்டின் பொய்ம்மை காட்டி அவரைக் கைவிட்டதாயின், தயாநந்த சரவதி அவர்க் கெங்ஙனம் உதவி செய்யவல்லார்! அற்றேல், அஃதாக, ஆரியமொழி நூல்களாகிய `இருக்கு, `எசுர் முதலிவற்றில் தமிழ்ச் சான்றோர்தங் கோட்பாடுகள் புகுந்தவாறு என்னையெனிற் கூறுதும்: ஆரியர் நல்லுணவும் நல்லுறைவிடமும் பெறுதற்குத் தேடியலைந்து தமிழ் நிலமாகிய இப் பரத நாட்டிற்புகுந்த காலத்துப் பெரும்பாலும் போர் மேற்கொண்டே போந்தனர்; அப்போது தமிழர்கள் நாகரிகத்தின் மிக்காராய், ஆங்காங்கு நகரங்களும், அந் நகரங்களில் அரசியல்களும் அமைத்துப் பொருள்வலியும் படைவலியும் போர் வலியும் மிகப் படைத்தவர்களாய் வாழ்ந்து வந்தமையின், பசித்துவந்த வறியராகிய ஆரியர் பண்டைத் தமிழ்மக்களை எதிர்த்து வெல்லுதல் இயலாதாயிற்று. இயலாதாகவே பலவகையாலுந் தமிழர் தம் நட்பையும் உறவையும் தேவநாட்டிலிருந்து வந்த தேவர்களேயென்றும், தாம் பேசும்மொழி தேவமொழியே யென்றுந், தம்மைப் பகைத்தலுந் தமக்கு இடர் செய்தலும் அங்ஙனஞ் செய்வாரை மீளாநரகிற்கு ஆளாக்கு மென்றுந், தம்மை வணங்கித் தாம் ஏவிய செய்தொழுகுவார்க்கு இம்மையில் எல்லா நலங்களும் பெருகுவதன்றி மறுமையிலும் பிதிரர்களால் உவந்தேற்று உயர்ந்த இன்ப உலகங்களில் வைக்கப்படுவதுங் கைகூடு மென்றுஞ் சொல்லித் தமிழரிற் பெரும்பாலாரை ஆரியர் தம் வயப்படுத்திவிட்டார். அஞ்ஞான்றை ஆரியரிற் பெரும்பாலார் வடக்கே பனிமிகுந்த நாடுகளிலிருந்து வந்தவர்களாதலின் அழகிய வெண்ணிறமுள்ள உடம்பும் நீல விழிகளும் வாய்ந்தவர்களாயிருந்தனர். அவர்களது அழகிய தோற்றத்தைக் கண்ட அஞ்ஞான்றைத் தமிழரிற் பலர், அவ்வாரியர் சொல்லை மெய்யென நம்பி அவர்களைத் தம்மினும் உயர்ந்த தேவர்களாகவே எண்ணிக் கொண்டாடி அவர்க்குப் பணிந்தொழுகலாயினர். இவ்வளவுக்குத் தமிழரைத் தங் கீழ்ப்படுத்த இடம்பெற்ற ஆரியர்க்கு இனி இங்கு ஆகாதது என் உளது! ஆரியர் கடவுளராகவும், அவர் கொணர்ந்த ஆரியமொழி கடவுளர் மொழியாகவும், அம்மொழியில் அவர் பாடிய பாட்டுக்கு `இருக்கு `எசுர் `சாமம் என்னும் வடிவிற் புருஷமேதத்தில் (ஆண் மகனைக்கொன்று வேட்ட வேள்வியில்) தோன்றியனவாகவும் (இவ்வாறு இருக்குவேத புருடசூத்த மந்திரத்தில் எழுதிவைக்கப்பட் டிருக்கின்றது). பின்னுஞ் சிலகாலங் கழிந்தபின் இவ்வேதங்கள் சிவபிரானாலேயே அருளிச் செய்யப்பட்டனவாகவும் வைத்துத் தமிழர் கொண்டாடும் படி செய்துவிட்டனர். இவ்வளவில் அமையாது, ஆரிய மொழி யல்லாத தமிழ் முதலியன மக்களால் ஆக்கப்பட்டன வாகலின் அவற்றின்கண் வரையப்பட்ட நூல்கள் ஆரியரால் ஏற்கற்பாலன அல்லவெனவும், ஆரியமொழியில் உள்ள நூல்களே தலைமேற்கொண்டு ஏற்றற்குரியன வெனவும், ஆரிய இனத்தவரல்லாத தமிழரும் பிறரும் ஆரியமொழி நூல்களை ஓதுதற் குரிமையுடையரல்ல ரெனவும், தமிழரும்பிறரும் ஆரியர் ஏவிய பணிசெய்து ஒழுகுதல் ஒன்றற்கே உரியரெனவும் மொழிந்து நாட்செல்லச் செல்லத் தமது முதன்மையினை நாட்டுதற்கு வேண்டும் ஏற்பாடுகளை யெல்லாம் ஆரியர் ஒரே கட்டுப்பாடாயிருந்து திறமாய்ச் செய்துகொண்டனர். தமிழரில் வலியராயுள்ள அரசர் களையுஞ் செல்வவாழ்க்கையிற் சிறந்த வணிகர்களையுந் தமது முதன்மை நிலைபெறாதெனக் கண்டு, அரசரையும் வணிகரையும் மட்டுந் தமக்குக் கீழ் ஒருபடி இரண்டுபடி மட்டில்இறக்கி, அவர்களுக்கு, `க்ஷத்திரியர், `வைசியர் என்னும் பெயர்களைச் சிறப்பாகத் தருவதுபோற் றந்து, அவர்கள் மகளிரோடு தாம் கலக்கலாம், ஆனால் அவர்கள் தம் மகளிரொடு கலக்கலாகாதென்றும், அங்ஙனங் கலப்பராயின் அவர் பெருந்தீவினைக்குஆளாகுவரென்றும் தமக்குக் கீழ் இவ் விருவகுப்பினர் மட்டுந் தம்முடைய ஆரியநூல்களை ஓதுதற்கு உரிமையுடையரென்றுஞ் சொல்லி அவ்விருவகுப்பாரையுந் தம் மினத்தவராக்கி, அவ்வாற்றால் தமது முதன்மை அவர் தமக்குள்ளும் நிலைபெறுதற்கு இடஞ்செய்துகொண்டனர். இங்ஙனமாக ஆரியரது சூழ்ச்சியாற் பழந்தமிழ் மக்களுக்குட் பெரியதொரு மாறுதல் நிகழ்ந்து பரவவே ஆரியரார் உயர்ந்தவராகப் பாராட்டப் படுதலும், ஆரியமொழியைக் கற்பதும், ஆரியநூல்வழி யொழுகுதலும், தமிழையுந் தமிழ்வழங்கும் ஏழைமக்களையும் இழிந்த நிலைமைக்கட் படுத்துப் பேசுதலுந் தமக்குச் சிறப்புத் தருவனவாகத் தமிழரிலேயே கற்றவருஞ் செல்வருமாயுள்ளார் கருதுவாராயினர். அதனால், தமிழரில் அரச வகுப்பினரும் பிறரும் ஆரியமொழியை விரும்பிக் கற்று, அதன்கண் உரையாடுதலும் நூல் எழுதுதலுஞ் செய்வாராயினர். இங்ஙனந் தமிழர்க்குள் ஆரியமொழியும் ஆரியர் தம் வழக்கவொழுக்கங் களும் பரவவே, அவ்வாரிய வழக்குகளுக்கு ஒருவாற்றால் உடன்பட் டிருப்பினும், அவற்றின் சிறுமையும் தமிழ் உடன்பட் டிருப்பினும், அவற்றின்சிறுமையும் தமிழ் வழக்குகளின் பெருமையும் புடைபட ஒற்றி ஆராய்ந்தளந் துணர்ந்து உண்மை கண்ட `ஜனகன் `அஜாதசத்துரு, `அவபதிகை கேயன் `பிரவாகனஜைவலி முதலான தமிழ்வேந்தர்கள், அமயம் நேர்ந்துழியெல்லாம் ஆரிய முனிவர்க்குத் தமிழ்ச்சான்றோர் நுணுகி யறிந்த மெய்ப்பொருள்களை அவர்க்குரிய ஆரியமொழியிலேயே யெடுத்துத் தெருட்டி, அவர்க்கு மெய்யறிவு கொளுத்தி, அவர் தம் ஆரியக் கோட்பாடுகள் பயனிலவாதன் மேலுந் தீவினைப் பலவாதலுங் காட்டி வரலாயினர். இவ்வாறு தமிழ் வேந்தர்கள் ஆரியர்க்கு அறிவுறுத்தி வந்த மெய்யுரைத் திரட்டுகளே `உபநிடதங்கள் எனப் பெயர்பெறுவவாயின. இத் தமிழ்வேந்தர்களின் பெயர்கள் ஆரியச் சொற்களா யிருத்தல் கொண்டு அவரெல்லாம் ஆரியர் போலுமென மயங்கி விடற்க. சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணத்திலுள்ள சிவனடியார் களின் தனித்தமிழ் இயற் பெயர்கள் பலவற்றை வடநூலார் தமது வடமொழியில் மொழபெயர்த்து வைத்துக் கொண்டவாறு போல, அவ் வேந்தர்களின் பண்டைத் தனித்தமிழ்ப் பெயர்களும் அவ்வாறு ஆரியமொழியில் மொழிபெயர்த்து அமைக்கப் பட்டன வென்று உணர்ந்து கொள்க. இன்னும் தமிழரச வகுப்பினின்றுந் துறவுபுகுந்த `விசுவாமித்திரர், `தேவாபி முதலான முனிவரர்களும் ஆரிய மொழியைக் கற்று அதிற் பெரும்புலமைமிக்கு, ஆரியர் கைக்கொண்டு போதருஞ் சிறுதெய்வ வணக்கத்தையும் உயிர்க்கொலை வெறியாட்டு வேள்விகளையுந் தொலைப்பான் வேண்டியே ஞாயிறு திங்கள் தீ என்னும் ஒளிவடிவுகண் மேலும், அவற்றின்கண் ணெல்லாம் அருளொளி வடிவினராய் விளங்குஞ் சிவபிரான் மேலும் பற்பல பதிகங்களை ஆரியர்க்கு மாறாய் அவர்தம் ஆரிய மொழியிலேயே இயற்றி, அவை தம்மைத் தாம் முழுமுதற் கடவுளை வழிபடுங் காலங்களிற் பயன் படுத்திவந்தனர். இவ்வாறு விசுவாமித்திரர் முதலாயினார் ஆரியமொழியிற் பதிகங்களும் நூல்கள் இயற்றினும் அவரெல்லாந் தமிழ் வகுப்பினராதலை யுணர்ந்தன்றே மநுமிருதியும் (10, 45), இருபிறப்பாள ரல்லாத மற்றை எல்லா வகுப்பினரும் மிலேச்சர்தம் மொழியைப் பேசினும் அல்லது ஆரியர்தம் மொழியைப் பேசினும் அவரெல்லாந் தயுக்களேயாவர் எனக் கூறுவதாயிற்று. இதனால் ஆரியரல்லாத தமிழரும் பிறரும் அக்காலத்தில் ஆரியமொழியைப் பேசினாரென்பது பெறப்படு கின்றதன்றோ? தயுக்க ளெனப்பட்ட தமிழரில், அரசராயினாரையும் அவருட் டுறவுநிலை புக்காரையுஞ் செல்வவள முடை யாரையும் வேறு போக்கின்மையாலே க்ஷத்திரிய வைசிய வகுப்பின்கட் சேர்த்துக்கொண்ட ஆரியர் அங்ஙனஞ் சேர்க்கப்பட்ட அவர்கள் தமக்கு மாறான தயுக்களே என்பதனை அமயம் வாய்த்துழியெல்லாம் வெளிப்படை யாகச் சொல்லியே வந்திருக்கின்றனர். `அஜீகர்த்தன் என்னும் ஆரியப் பார்ப்பனன், தன்மகன் `சுநஸேபனை வேள்விக்களத்தில் வெட்டி வருணனுக்குப் பலியூட்ட வேண்டிக் கேட்ட `ரோகிதன் என்பவன்பால் நூறு கறவைமாடுகளை வாங்கிக்கொண்டு அவனை அவனுக்கு விற்றுவிட்டது மன்றி, வேள்விக்களத்திற் கொணரப்பட்ட தன்மகனைக் கழுத்தறுப்பதற்கு வேறு யாருந் துணியாராய்ப் பின் வாங்கிநிற்றல் கண்டு, தனக்கு இன்னும் இருநூறு கறவைகள் கொடுத்தால் தானே தன் மகன் கழுத்தை வெட்டுவதாகச் சொல்லி, அங்ஙனமே இருநூறு கறவைகள் கொடுக்கப் பெற்றுக்கொண்டு அவ்விளைஞன் கழுத்தைக் கத்திகொண்டு அரியப்போகையில், அம்மகன் தன்தந்தையின் கொடுஞ்செயலைக்கண்டு அலறிக் கடவுளரை வேண்டி அழாநிற்ப, அதுகண்டு பெரிதும் நெஞ்சங்கரைந்த விசுவாமித்திரர் அச் சுநஸேபனை அக்கொலைக்குத் தப்புவித்து, அவனைத் தம் மக்கள் எல்லார்க்கும் மூத்த தலைமகனாக ஏற்றுச் சிறப்புச்செய்தமையும், அதே நேரத்தில் அச் சுநஸேபன் விசுவாமித்திரரை நோக்கி, ஓ பரதர் களுக்குத் தலைவரே என்று விளித்து நுங்கள் புதல்வர்கள் இசைந்தால், எனக்கு நன்மையுண்டாமாறும் யான் தங்கட்கு மகனாந் தன்மையடையுமாறும் அவர்கள் என்பால் நேயமாய் இருக்கக் கற்பியுங்கள்என்று வேண்ட, அவரும் அதற்கு ஒருப்பட்டுக் தம்மக்கள் நூறுபேர்க்குந் தம் துணிபு தெரிவிக்க, அவருள் `மதுச்சந்தர் எனப்படும் இளைஞர் ஐம்பதின்மர்க்கு மூத்த ஐம்பதின்மர் மட்டும் அதற்கு உடன்படாராக, அதனால் விசுவாமித்திரர் அவர்மேற் சினங்கொண்டு நும் வழியில் வருவார் இந் நாட்டை விட்டகன்று இதன் எல்லைப் புறங்களில் இருக்க என்று வைதமையால் அம் மரபினரே ஆந்திரர், புண்டரர், சபரர், புளிந்தர், மூதிபர் ஆனமையும், தயுக்களிற் பெரும்பாலார் விசுவாமித்திரர் வழித்தோன்றினமையும் ஐதரேய பிராமணம் ஏழாம் இயலிலில் (13 முதல் 18 வரையில் தெளித்துரைக்கப் பட்டிருத்தல் காண்க. இதனால், ஆரியப்பார்ப்பனர் தாம் பொருண்மேல் வைத்த பேரவாவால் எத்தகைய கொடுந் தொழிலுஞ் செய்தற்குப் பின் இடை யாராதலும், தமிழ்ச் சான்றோர் இடருற்ற ஆரியர் மாட்டும் பேரிரக்கமுடையராய் அவர்க்குப் பேருதவி புரிவாராதலும், ஆரியரல்லாத தயுக்க ளெல்லார்க்கும் பிறப்பிடமாவார் விசுவாமித்திர மரபினரே யாதலும், தயுக்களிற் சிறந்த `பரதர்க்கு விசுவாமித்திரரே முதற்குரவராதலும், ஆரியர் நேரத்திற்குத் தக்கவாறு தம்மவரல்லாதாரை ஒருகால் தயுக்களென இகழ்ந்தும் பிறிதொருகால் க்ஷத்திரியர் வைசியரெனத் தம்மோடு இனப்படுத்திப் புகழ்ந்துந் தமிழரை ஏமாற்றும் நீரராதலும் இனிது விளங்குகின்றனவல்லவோ? இன்னும், விசுவாமித்திர மரபினர் உயர்ந்த மெய்ப்பொரு ளுணர்ச்சி யுடையரென் பதூஉம், தாம் அரிதின் உணர்ந்த மெய்ப்பொருள்களை, அவை யுணராத ஆரியமரபின் வழிவந்த சுநஸேபனுக்கு அவர் அறிவுறுத்தின ரென்பதூஉம், விசுவாமித்திர மரபினரான காதினர்க்கு ஆரியவேதங்களின் வேறாகத் தெய்வத்தன்மை பொருந்திய மற்றொரு வேதம் இருந்ததென்பதூஉம்26 அவ் ஐதரேய பிராமணமே நன்கு உரை தருகின்றது. இவ் விசுவாமித்திர மரபினர்க்குரிய தெய்விகவேதமே அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொரு ளியல்புகளையும், சிவபிரானையும், அவன் முனைத்து விளக்கும் முத்தீ வழிபாடுகளையும் உணர்த்தும் பண்டைத் தமிழ்வேத மாதலுந் தானே பெறப்படும். இன்னுந், தமக்கு உதவியுந் துணையுமா யிருந்து, தாஞ்செய்து போந்த உயிர்க்கொலை வேள்விகளை நடத்தி வந்த வரையில் தமிழரை க்ஷத்திரியராக வைத்துத் தம்மோடினப்படுத்திக் கொண்டாடிய ஆரியர், பின்னர்த் தம்மைஅவர் ஒரு பொருட் படுத்தாரானவழி, உடனே அவரை இழிந்தவராக்கிவிட லாயினர். இது, வேள்வி யாற்றாமை யாலும் பிராமணரோடு உறவு கலவாமையாலும், க்ஷத்திரிய மரபினரான பௌண்டரகர், ஓட்ரர், திராவிடர், காம்போஜர், யவனர், சகர், பாரதர், பல்லவர், சீனர், கிராதர், தரதர், கசர், என்பார் வரவரச் சாதிப்புறம்பான விருஷலரின் நிலையை யடைந்தனர் என மநுவும் (10, 13, 44), மாபாரத அநுசாசன பருவமும் (2103) உரைக்குமாற்றால் நன்குணரப்படும். மேற்குறித்த தமிழரச மரபினர் அனைவரையும் ஆரியர் `தயுக்கள் எனவே கொண்டு இகழ்ந்தன ரென்பதற்கு, மாபாரத துரோண பருவம் (4747), ஆயிரக்கணக்கான காம்போஜர், சகர், சபரர், கிராதர், வர்வரர் என்பாரின் குருதியினாலுந் தசையினாலும் இவ் வழகிய நிலத்தைச் `சைநேயன் சோற்றுத் திரளை யாக்கினான்; கத்தரிக்கப்பட்டுத் தலையில் மயிர் இலராயினும் நீண்ட தாடிமயிரினை யுடைய தயுக்களின் தலைகளாலும்; அவர் தம் முடிகளாலும் மூடுண்ட நிலம், இறகிழந்த பறவைகளால் மூடுண்ட நிலம்போன் றிருந்தது எனக் கூறுதலே சான்றாம். இதனோ டொப்பவே அரிவம்சமும் (773), சகர்,யவனர், காம்போஜர், பாரதர், பல்லவர், கோலிசர்ப்பர், மகிஷர், தார்வர், சோழர், கேரளர் முதலிய அனைவரும் க்ஷத்திரிய ராகவேயிருந்தனர்; ஆனால் வசிட்டருடைய சொல்லால் தூண்டப்பட்ட சிறந்த சகரவேந்தனால் அவர்கள் தமக்குரிய வாழ்க்கை யுயர்வினையுஞ் சமய நிலையினையும் இழக்கலாயினர்என உரைத்தல் காண்க. மேலே குறித்துக் காட்டப்பட்ட இனத்தவர் பற்பலரும் பண்டைத் தமிழ் வகுப்பினராதலும், ஆரியர் இங்கு வருதற்கு முன்னரே இந் நாட்டின் பற்பல பகுதிகளிலுங் குடியேறி அவற்றை அரசாண்ட அத்தமிழ் மக்கள் தம்பால் வந்து அடைக்கலம் புகுந்த ஆரியர் தம் சூழல்களிற் சிக்குண்டு அவர் தஞ் சொற்படி, நடந்து வந்த வரையில் அவர் தம்மை `க்ஷத்திரியர் `வைசியர் எனப் பெயர் வைத்துச் சீராட்டிவந்த ஆரியர், பின்னர்த் தம் தீவினைச் செயல்களைக் கண்டு தம்மை அத் தமிழ்மக்கள் அருவருத்து விட்ட வுடனே அவர் தமக்கெல்லாம் `தயுக்கள் என ஓர் இழிந்த பெயர் வைத்து அவரை ஒருங்கே இழித்துரைக்கலானதும், இவ்வாறாகத் தமிழரை இழித்துரைக்குமாறு ஆரியரை ஏவினவர் ஆரியர்க்குக் குருவான வசிட்டரேயாதலும் மேற்காட்டிய வடமொழி நூல்களின் உரைகளினாலேயே நன்கு தெளியப்படுகின்றன அல்லவோ? இனி, இஞ்ஞான்று தம்மைப் பார்ப்பனரென உயர்த்துப் பேசிக்கொள்வாரும், அப் பார்ப்பனரைப் பின்பற்றி யொழுகி அவ்வாற்றால் தமக்கு உயர்வு தேடிக்கொள்வாரும் ஏனைப் பொதுமக்களை இழிந்த நிலைமைக்காட்படுத்து நடத்தும் இயல்புகளை உற்றுக்காண வல்லார்க்குப், பண்டைக் காலத்துப் பார்ப்பனரின் ஒழுகலாறுகளும் இவர் தம்மோடொத்த இயல்பினவாம் உண்மை தெற்றெனப் புலனாகாநிற்கும். மேல்நாட்டிலிருந்து போந்து இந்நாட்டை அரசாளும் ஆங்கில நன்மக்களின் மொழியையும் அவர்தம் நடையுடை வழக்கங்களையும் பின்பற்றி அவர்பாற் பல சிறப்புக்களையும் பெற முந்துவோர் பார்ப்பனரேயாவர். ஏனைப் பொதுமக்களின் வேறாகத் தம்மைப் பிரித்து உயர்த்துதற்கும், செல்வ வாழ்க்கை யிற் றலைமைபெற்று வாழ்தற்கும் ஏதுவாவது ஆங்கில மக்களின் நாகரிகத்தைத் தழுவி யொழுகுதலே எனக் கண்டுகொண்ட நான் தொட்டுப், பார்ப்பனர் பெரும்பாலும் ஆங்கில மொழியையே கற்றலும், அதனாலேயே உரையாடு தலும், ஏனைத் தமிழரையுந் தமிழையுஞ் `சூத்திரர், `சூத்திர பாஷை என இகழ்தலுஞ் செய்தல் எவரும் உணர்ந்ததேயாம். இங்ஙனமே பண்டைநாளி லிருந்த பார்ப்பனருஞ், தம்மைத் தமிழரின் வேறாக உயர்த்துதற்கு வாயிலாவது ஆரியமொழியையும் ஆரிய ரொழுகலாற்றையும் பின்பற்றுதலே எனக் கண்டவளவானே ஆரிய மொழியைக் கற்று ஆரிய வழக்குகளைத் தழுவித், தமிழரெல்லாரையுந் `தயுக்கள் எனவுந் தமிழரின் மொழியை `மிலேச்சமொழி எனவும் இகழ்ந்துரைப்பா ராயினர். இஞ்ஞான்றைப் பார்ப்பனர், தமிழரிற் சிறந்த அரசரையும் செல்வ வாழ்க்கையிற் பெரிய வணிகரையும் அவ்வாறிகழ்ந் தொதுக்குதல் ஆகாமல் அவரைத் தாம் சார்ந்து பிழைக்கவேண்டியிருத்தல் கண்டு, அவரை `க்ஷத்திரிய வைசிய வகுப்பின்பாற் படுத்துக் கொண்டாடுதல் போலவே, பண்டைப் பார்ப்பனருந் தமிழ் அரசரையும் வணிகரையும் `க்ஷத்திரிய வைசிய வகுப்பின்பாற்படுத்துக் கொண்டாடலாயினர். திருவனந்தை அரசர், மைசூர் அரசர் முதலாயினாரை `க்ஷத்திரியர் எனவும், நாட்டுக்கோட்டை வணிகரை `வைசியர் எனவுங் கொண்டாடி, அவர்பாலுள்ள பொருட்டிரளையும் பிறநலங்களையும் இஞ்ஞான்றைப் பார்ப்பனர் கொள்ளை கொண்டு நுகர்தல் காண்க. இவர் தம் பாராட்டுரையில் மயங்கி இவ் வரசரும் இவ் வணிகருந் தம்மை அப் பார்ப்பனருக்கு அடுத்த நிலையில் உயர்ந்தவராகக் கருதி வைத்துக்கொண்டு தம் மினத்தவரான ஏனைத் தமிழ்மக்களெல்லாரையுஞ் `சூத்திரர் என இகழ்ந்துரைத்து ஒழுகுதல் போலவே, பண்டைத் தமிழ்மன்னரும் வணிகரும் பார்ப்பனர்தம் பொய்ப் பாராட்டுரையில் வீழ்ந்து தம்மினத்தவரையுந் தமிழையும் புறம்பழித்து வந்தனர். இன்னும் இஞ்ஞான்று, பார்ப்பனர் தம் பாராட்டினையே பெரிதாகக் கருதிப் பிழைப்பா ரெல்லாருந், தம்மோடொத்த தமிழர்பாற் சிறிதும் உறவுகலக்க இசையாராய், அப் பார்ப்பனர்பாலும் உறவுகலத்தல் இசையாதேனும் அவர் தம் புறக்கடை வாயிலிற் காத்திருந்து அவர் வீசியெறியவும் எச்சிற் சோற்றை யுண்டு, அப் பார்ப்பனர்தந் தெய்வத் தன்மையினையும் அவர்தம் ஆரியமொழி நூல்களின் தெய்வத் தன்மையினையும் அப் பார்ப்பனரினும் பார்க்க உயர்த்துப் பேசித் `திருநாவுக்கரசர் `மெய்கண்ட தேவர், `சேக்கிழார் முதலான அருட் பேராசிரியர்களையும் பார்ப்பனர் கூறுஞ் சூத்திர வகுப்பின்பாற் படுத்து,அவர் அருளிச்செய்த அருள் நூல்களையும் வடமொழியிலிருந்து கடன்கொள்ளப்பட்டன வாக மொழிந்து, உண்மைக்கு மாறான பொய்ப்படுகுழியில் வீழ்ந்து அலகைபோல் அலறுதல்போலவே, அஞ்ஞான்றைப் பார்ப்பனர் தம் பாராட்டினை விழைந்த தமிழருங் கோடரிக்காம்பை யொப்பத் தம்மினத்தவர்க்குந் தமது தமிழ்மொழிக்கும் இழைத்த தீங்குகள் அளப்பில. தமிழர்க்குந் தமிழ்க்குந் தமிழ்நாட்டுக்கும் ஆரியரால் விளைந்த பொல்லாங்குகளை விடத், தம்மை அவ் ஆரிய இனத்திற் சேர்த்துக்கொண்ட பார்ப்பனராலும், அவர் தம்மால் ஒதுக்கப்பட்டிருந்தே அவர் தம் பாராட்டுரையினை மேலதாகக் கருதி அவர்வழிச் சார்ந்தொழுகிய தமிழராலும் விளைந்த பொல்லாங்குகளே மிக்க கொடியனவாமென்று உணர்ந்து கொள்க. இஞ்ஞான்று ஆரியர் என ஒரு தனி வகுப்பார் காணப்பட்டிலரேனுந், தமிழரிலிருந்தே பெருந்தொகையினர் ஆரியராய் மாறிப் பார்ப்பனர் பெயர் புனைந்து வடமொழி நூல்களை ஓதித், தமிழர்க்குந் தமிழ்மொழிக்குந், தமிழ்த்தெய்வக் கொள்கைக்கும் மாறாய் நின்று வருதல் போலவே, அஞ்ஞான்றுந் தமிழ்வகுப்பினரும் பிறருரும் பெருந்தொகை யினராய் ஆரியர் ஒழுகலாறுகளைக் கைக்கொண்டு வடநூல்களைப் பயின்று தமிழ்வழக்குக்கு முழுமாறாய் நின்றனர் என்க. இப் பெற்றியினரால் எழுதப்பட்டனவே வடமொழியில் உள்ள பல பிராமணங்கள், கல்ப சூத்திரங்கள், மீமாஞ்சை, பொய்க்கதை பொதிந்த புராணங்கள் முதலாயின வாகுமென்று உணர்ந்துகொள்க. இனி, இஞ்ஞான்றும் பார்ப்பனர் கட்டிய பொய் வழக்குகளின் பெற்றிதேற்றி, அருளொழுக்கமாட்சியும் முழுமுதற் கடவுள் வழிபாடுந் தெருட்டுவார் உளராதல் போலவே, அஞ்ஞான்றுங்குடி கொலை மலிந்த ஆரிய வேள்வியின் தீவினைப் பெற்றியுஞ் சிறுதெய்வ வணக்கச் சிறுமையுந் தேற்றி அன்பும் அருளும் பெருகச்செய்த தமிழ்ச்சான்றோரும் உளர். அவர் அருளிச் செய்தனவே: முத்தீ வேள்வியும் உருத்திர வழிபாடுஞ் சிறந்தெடுத்துக் கூறும் இருக்கு எசுர் சாம அதர்வ வேதப் பதிகங்கள் சில பலவும், உண்மைவழா உபநிடதங்களும், சாங்கிய போக வைசேடிக நையாயிக வேதாந்த சூத்திரங்களும், மற்சம் வாயு முதலான சில புராணங்களும், பௌட்கரம், மிருகேந்திரம் முதலான சில சிவகாமங்களும் பிறவுமாம். இஞ்ஞான்றும் ஆங்கில மொழியைக்கற்று அதன்கண் நலங்கிளரும் நூல்கள் பல இயற்றுந் தமிழர்களும் ஏனை வகுப்பினரும் உளராயினாற்போலவே, அஞ்ஞான்றும் ஆரியமொழியைக் கற்று அதன்கட் பயன் பெருகும் நால்வேதப் பதிகங்களும் உபநிடதம் முதலிய அறிவுநூல்களும் இயற்றின தமிழ்ச்சன்றோர் பலரும் உளரானார் என்று தெளிக. இஞ்ஞான்றை ஆங்கிலமொழியில் ஆங்கிலரும் ஆங்கில ரல்லாத பிறரும் இயற்றிய நூல்களில் அவ்வவர் இயற்கைகளும் அவ்வவர்க்குரிய கோட்பாடுகளும் பிரித்தறி யலாம்படி விளங்கிக் கிடத்தல் போலவே, அஞ்ஞான்றை ஆரிய மொழி யுளும் ஆரியரும் அவரைப் பின்பற்றினாருந் தமிழ்ச்சான்றோரும் ஏனைப் பிறரும் இயற்றிய பதிகங்களும் நூல்களும் அவரவர்க்குரிய இயற்கையுங் கோட்பாடுகளும் பொருந்தப் பெற்றனவாய், நுண்ணறிவினார்க்கு, இவை ஆரியர் இயற்றின, இவைதமிழர் இயற்றின இவை ஏனைப் பிறர் இயற்றினவென்று பிரித்தறியலாம்படி விளங்கி நிற்குமென்க. எனவே, ஆரியமொழியில் தமிழ்ச்சான்றோர், அருளிச் செய்த பதிகங்களும் நூல்களும் விரவி நிற்கும் இயல்பு ஆராய்ச்சி யறிவுடையார்க் கெல்லாந் தெற்றென விளங்கிக் கிடக்கு மென்க. பண்டுதொட்டே பல்வேறு நாடுகளிலுள்ள பல்வேறு மக்கட் பிரிவினருந் தத்தம் நாடுகளை விட்டகன்று ஏனை நாடுகளில் உள்ள ஏனை மக்களோடு கலந்துறவாடி வந்தன ராகலின், அவர் தம்முள் ஒரு வகுப்பினர் ஏனை வகுப்பினரின் நடையுடை வழக்கங்களைப் பின்பற்றி யொழுகுதலும் அவரது மொழியைத் தாங் கற்றலும் அம் மொழியில் தாம் நூல்கள் இயற்றுதலும் இயற்கையாய் நிகழப் பெறுமாறு வரலாற்று நூலுணர்ச்சி யுடையார்க்கெல்லாம் இனிது விளங்கிக் கிடப்பதொன்றேயாம். ஆகவே, தமிழ்ச்சான்றோர் அருளிச் செய்த பதிகங்களும், நூல்களும், அவர்தங் கோட்பாடுகளும் ஆரியமொழியிற் புகுந்து நிலைபெறலானது ஒரு புதுமை யன்றென ஓர்ந்து கொள்க. என்றிதுகாறும் விளக்கியவாற்றாற், பிறப்பு இறப்பு இல்லா அருளொளி வடிவினனாகிய எல்லாம்வல்ல முழுமுதற் கடவுள், எத்துணையும் பெரிய தனது முழுமுதற்றன்மையை எத்துணையுஞ் சிறிய எம்மனோர் ஒருவாற்றானாயினுங் கண்டு வழிபட்டு உய்தற்பொருட்டு, எம்மனோர் கண்கட்குப் புலனாம் நெருப்பொளியில் விளங்கித் தோன்றிநிற்கும் உண்மையினை முதன்முதற் கண்டறிந்தோர் பரதர் என்னும் பண்டைத் தனித் தலைமைத் தமிழ்ச்சான்றோரே யாவ ரென்பதூஉம், அவ் வுண்மைக்கு மாறாகாமலே இருக்கு வேதம் அனல் வழிபாட்டை ஓதும் இடங்களிலெல்லாம் அதனைக் கண்டறிந்தவர் `பரதரே ஆவர் எனவும், அதனால் அனற் கடவுளும் அக் கடவுளற்கு உயிராய் விளங்குஞ் சிவபிரானும் `பாரதன் `பரதன் எனப்பெயர் பெறுவரெனவுந் தெளியக் கூறுவதாயிற் றென்பதூஉம், தீப்பிழம்பின் வாயிலாக எல்லாம் வல்ல முதல்வனை நேரே கண்டுவணங்கும் மாப்பெரு வணக்கத்தை முதன்முதற் கண்டவர் தென்றமிழ் நாட்டின்கட் பண்டிருந்த தமிழ்ச் சான்றோரேயாதல் பற்றியே தீக்கடவுள் வணக்கத்தைத் தென்றிசைக் குரியதாக்கி அதனைத் `தக்ஷிணாக்கிநி என வடநூல்களெல்லாம் ஒருமுகமாக நின்று ஒத்துரைப்பவாயின வென்பதூஉம், தீப்பிழம்பானது `ஞாயிறு `திங்கள் `தீ என முத்திறப்பட்டு நிற்றலின் அம் மூன்றினும் விளங்கித் தோன்றும் இறைவனை வழிபடும் வேள்வியினையும் முத்திறப்படுமாறு வைத்து வேட்டு வந்தவர் இமயம் முதற் குமரியீறாகக் கிடந்த இப்பரத நாட்டின்கட் பண்டுவைகிய தமிழந்தணரே யாவரென்பதூஉம், விசுவாமித்திரர் முதலான தமிழந்தணர் வேட்ட முத்தீ வேள்வி சிவபிரான்மேற்றாய்க் குடி கொலை இல்லா அருளொழுக்க வழிபாட்டின்பாலதாதல் பற்றியே அம்மெய்ம்மையினை ஓதாதுணர்ந்த அருளாசிரியரான திருஞானசம்பந்தப் பெருமான் அதனை வேதவேள்வி என மீக்கூறுவாராயினரென்பதூஉம், தமிழந்தணர் வேட்டமுத்தீ வேள்வியின் நுண்பொருள் மறைநுட்பம் அறியப்பெறாத பருப்பொருளறிவினரான ஆரியப் பார்ப்பனர் தாமும் அவர்போல் வேள்வியாற்றப் புகுந்து தமக்குரிய ஊனையும் கள்ளையும் படைத்து இந்திரன் முதலான சிறுதெய்வங்களை வணங்கி வெறியாட் டயர்ந்து வந்தமை கண்டே சைவசமய ஆசிரியரான திருநாவுக்கரசு நாயனார் அவரையும் அவர் செய்துபோந்த வழிபாடுகளையும் வருந்தி இகழ்ந்துரைப்பா ராயினரென்பதூஉம் தமிழ்ச்சான்றோர் வேட்ட முத்தீ வழிபாட்டினையே பண்டைத் தமிழ்ப் பேராசிரியரான தொல்காப்பியனார், கொடிநிலை கந்தழி வள்ளி என்னும் பொருளதிகாரச் சூத்திரத்திற் கடவுள் வாழ்த்தின் பாற்படுப்பாராயின ரென்பதூஉம், முத்தீயும் இறைவனுக்குத் திருமேனிபோல் விளங்குவதோடு அவற்கு மூன்றுவிழிகள் போலவுங் காணப்படுதல் குறித்தே இறைவன் அவை தம்மைக் கண்களாக உடைய `முக்கண்ணன் எனப் பெயர் பெறுவானாயின னென்பதூஉம் இனிது பெறக்கிடந்தமை கண்டுகொள்க. ஆசிரியர் தொல்காப்பியனார் குறித்த முத்தீ வழிபாடு, குடி கொலைமுதலான குற்றங்கள் உடையதல்லாமை பற்றியே அதனை வடு நீங்கு சிறப்பு வாய்ந்ததென அவர் ஓதினார். அவர் அதனை அவ்வா றோதவே, ஏனை ஆரியர் செய்துபோந்த வேள்விக ளெல்லாங் குடி கொலை முதலான குற்றங்கள் உடையவாதலுந் தானே பெறப்படும். அதுநிற்க. இனிப், பண்டைக் காலத்துத் தண்டமிழ் அந்தணர் கொண்ட தவ வடிவம் முழுமுதற் கடவுளின் திருவருளுருவத் தோடு ஒத்த இயல்பிற்றாதல் காட்டப்புக்க முறையில், இறைவற்கு ஒளியுடைப் பொருள்கள் மூன்றும் மூன்று கண்களாக வைத்து உருவகப்படுத்தப்பட்ட உண்மை இத்துணை விரிந்தமையின் எஞ்சியவற்றைச் சுருக்கமாக எடுத்து ஆராய்ந்து காட்டுதும். இறைவன் ஞாயிற்றின்கண் முனைத்து விளங்கு வோனாகலின், அஞ்ஞாயிற்றினை அவற்கொரு திருமுகமாகக் கொண்டு, கீழ்பால் எழூஉம் ஞாயிற்றின் உச்சியிலும் மேல்பால் விழூஉம் ஞாயிற்றின் உச்சியிலும் வானின்கட் படர்ந்து காணப்படும் முகிற்குழாங்க ளெல்லாங் கதிரவன்றன் செவ்வொளி தோயப்பெற்று அவற்குச் செக்கர்ச் சடைபோற் றோன்றுதல் பற்றி, அவை தாமே அவற்குச் செஞ்சடைக் கற்றைகளாக வைத்து நுவலப்பட்டன இதனானன்றோ இறைவற்குச் `சடையன் என்னும் பெயருந்தொன்றுதொட்டு வழங்கிவரா நிற்கின்றது. இனி, வானின்கட் படர்ந்துள்ள முகிற்குழாங்கள் அத்துணையும் நீராவிப் படலங்களே யாகையாலும், அப்படலங்கள் தம்மேற் குளிர்ங் காற்று வீசியளவானே வானினின்றும் மழைத் துளிகளாய்க் கீழ் இறங்குகையாலும், அம் முகிற்குழாங்களை இறைவற்குச் சடைக்கற்றைகளாகக் கூறிய தமிழ்ச்சான்றோர், அம் முகிற் குழாத்திலுள்ள தூயநீரை அச் சடைக்கற்றையில் வைகிய கங்கை நீராகவும், வானினின்றும் மலைமேல் இறங்கி நிலத்திலிழியும் அம் மழைநீரை இறைவன்றன் சடைமுடியினின்றும் பனிமலை (இமயமலை)யில் வீழ்ந்து கீழ் இழியுங் கங்கையாறாகவும் வைத்து உருவகப்படுத்தி யுரைப்பாராயினர். இனி ஒருநாட் காலையில் கீழ்பால் எழூஉம் ஞாயிறு புதிய இளமைச் செவ்வி வாய்ந்ததாய் இருத்தலானும், கீழ்கடலின் எல்லைப்புறத்தினின்றும் எழுந்து ஞாயிறு மேல் இவருங்கால் அக் கடல்நீரின் மேற்பரப்பெல்லாம் மயிலின் நிறம்போல் நீலமும் பசுமையுங் காலத்து ஒளிருதலானும், அவ் விடியற்காலை ஞாயிற்றின்கண் விளங்கித் தோன்றும் இறைவற்கு `இளையோன் என்று பொருள்படும் முருகன் என்னும் பெயரை வைத்து, அஞ் ஞாயிற்றின் கீழ்ப் பச்சென்று காணப்படுங் கடற்பரப்பினை அவன் ஊர்ந்து செல்லும் மயிலாக வழங்குவாராயினர். பண்டைத்தமிழ் மக்களாகிய `பரதர் என்பார் கடற்கரையடுத்த இடங்களில் முதன்முதல் வைகி உயிர் வாழ்ந்தனர் என்பதை மேலே காட்டினம். அவ்வா றுயிர்வாழ்ந்த மிகப்பழைய காலத்தேதான் அவர் தாம் வணங்கிய முழுமுதற்கடவுளை முருகன் என்னும் பெயரான் வழங்கினர். காலைஞாயிற்றின் கட் கட்புலனாய் விளங்கிய முதல்வனை இளையனெனக் கொண்டு வணங்கிய அவர், அதன் பிற்பொழுது முதிர்ந்த மாலை ஞாயிற்றின்கட் டோன்றிய இறைவனை முதியோன் எனக்கொண்டு,அங்ஙனங் கொள்ளினும் அவ்விருவரும் ஒருவரேயாதல் தெரிந்து, அவர் தம் ஒற்றுமை தெரிப்பான் வேண்டி அம் முதியோன் `முருகன் தாதையே யாவன் எனவும் மிகவுஞ் சிவந்த நிறத்ததாய் விளங்கும் அம்மாலை ஞாயிற்றின்கண் வைகுவானான அப்பெருமானுஞ் சிவன் எனுஞ் சிறந்த நிறத்தினனே யாவனெனவுங் கடைப்பிடிப்பா ராயினர். இவ் வுண்மை அறிவுறுத்தற் பொருட்டே சிவன் எனும் நாமந் தனக்கேயுடைய செம்மேனி எம்மான் என்னும் திருநாவுக்கரசு நாயனார் அருண்மொழியும் எழலாயிற்று. அது நிற்க. இனி, மாலைஞாயிற்றின் மேல்பா லெல்லையெல்லாம் மிகச் சிவந்து சுடருஞ் செக்கர் வானத்தில் மட்டுமே மூன்றாம்பிறை இயற்கையாய்த் தோன்றுதலின், அதனையே உருவக வகையாற் சிவபிரான்றன் செஞ்சடைக்கண் வைகும் மூன்றாம் பிறையாக வைத்துத் தமிழ்ச்சான்றோர் உரைப்பாராயின ரென்பது. இனித், தீயானது தான் பற்றிய பொருளை முழுதும் எரித்துச் சாம்பராக்குதற்குமுன், அப்பொருளின் மேற்சுற்று முழுமையும் எரித்துச் சாம்பராக்கி அச் சாம்பர் மேலே பூத்திருப்ப உள்ளே தான் செந்தணலாய் முறுகி விளங்கும் இருவகை இயல்பே, இறைவன்றன் திருமேனி மிசைப்பூத்து ஒளிருந் தூய வெண்ணீறாகவும் அதனுட் சிவந்து மிளிரும் அத் திருமேனியாகவும் வைத்து உருவகப்படுத்தப்பட்டது. இவ் அரிய உருவகத்தின் வனப்பு துடிகொள்நேர் இடையாள் சுரிசூழல் மடந்தை துணைமுலைக் கண்கள்தோய் சுவடு பொடிகொள்வான் தழலிற் புள்ளிபோல் இரண்டு பொங்கொளி தங்குமார் பினனே (திருவாசகம், அருட்பத்து, 50) என்று மாணிக்கவாசகப் பெருமான் இசைத்த செய்யுளிற் கனிந்து நிற்றல் காண்க. இனி, எண்ணிறந்த உயிர்களை யெல்லாம் இறுகப்பற்றி வருத்தி வரும் ஆணவம், மாயை, வினை என்னும் மும்மலங் களையும் குத்திக் கல்லி நீக்கவல்ல பேராற்றல் இறைவன் ஒருவனிடத்தே மட்டும் உளதாகலின், அம் மும்முலங்களையும் அகத்தே முத்திறமாய் நின்று தொலைக்கும் அப்பேராற்றலே, புறத்தே காணப்படுங் கழுக்கடை அல்லது முத்தலைவேல் (சூலம்) ஆக வைத்து உருவகப்படுத்தப்பட்டது. இவ்வுண்மை, கோற்றேன் மொழிக்கிள்ளாய், கோதில் பெருந்துறைக்கோன் மாற்றாரை வெல்லும் படைபகராய் -ஏற்றார் அழுக்கடையா நெஞ்சுருக மும்மலங்கள் பாயுங் கழுக்கடைக்காண் கைக்கொள் படை (திருத்தசாங்கம், 7) என்னுந் திருவாசகந் திருப்பாட்டினால் உணர்த்தப்பட்டமை காண்க. இனி, எல்லாத் துன்பங்களும் பிறத்தற்கிடமான ஆணவமலத்தின் குறும்புக்கு அடையாளமாவது புலியே யாகலின், அம்மலத்தின் செயலை ஒடுக்கிநிற்கும் இறைவனது நிலையே, புலித்தோலை யுரித்து உடுத்திருக்கும் நிலையாக வைத்து உருவகப்படுத்தப்பட்டது. இங்ஙனமே இறைவன் றிருமேனிமிசை யடையாளங்களாக மொழியப் படுவன வெல்லாம் அரும்பெரு நுண்பொருள்களை உள்ளடக்கிய உருவக வமைப்புக்களே யாகும்; அவை யெல்லாம் ஈண்டெடுத்துக் காட்டலுறின் இது மிக விரியும். இதுகாறுங் காட்டியளவே ஈண்டைக்குப் போதுமாகலின், இவற்றை இத்துணையின் நிறுத்தி மேற்செல்வாம். இறைவன் றிருவுருவ அடையாளங்களாக வைத்து மேலே காட்டியவாறு உருவகஞ்செய்து, எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளை ஓர் உருவத்திருமேனியிற் கொண்டு வழிபடும் முறை, எத்தனையோ ஆயிர மாண்டுகளுக்கு முற்றொட்டே நிகழ்ந்து வருவதொன்றாம். இறைவனைச் சிவந்த நிறனுடைய `சேயோன் ஆகவும், நீலநிறனுடைய `மாயோன் ஆகவுங்கொண்டு வழிபடுந் திருவுருவ வணக்கம். மாயோன் மேய காடுறை யுலகமும் சேயோன் மேய மைவரை யுலகமும் என்னுந் தொல்காப்பியப் பொருளதிகாரச் சூத்திரத்திலேயே எடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றது. `பஃறுளியாறு கடல் கொள்ளப்படுமுன் அவ் யாறு பாய்ந்த பெருநிலப் பரப்பை அரசாண்ட பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பான் சிவபிரான் திருக்கோயிலை வலம்வந்து பணியும் இயல்பினனென்பது, பணியிய ரத்தைநின் குடையே முனிவர் முக்கட்செல்வர் நகர்வலஞ் செயற்கே (புறநானூறு, 6) என்று அவனுடனிருந்த காரிகிழார் என்னும் நல்லிசைப் புலவர் பாடிய பாட்டான் நன்குபுலனாகின்றது. இப்பாண்டி மன்னன் அவையிலிருந்த மற்றொரு நல்லிசைப் புலவரான நெட்டிமையார் என்பார் இவனை வாழ்த்துகின்றுழி, முந்நீர் விழவின் நெடியோன் நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே (புறநானூறு, 9) என்பதனாற் பஃறுளியாற்று மணலினும் பல ஆண்டு வாழ்கவென அவனை வாழ்த்துதல் கொண்டு, முதுகுடுமி எனும் அப் பாண்டிவேந்தனும், அவனது அவைக்களத்துப் புலவர்களான `காரிகிழார், `நெட்டிமையார் முதலியோரும் பஃறுளியாறு கடல்கொள்ளப்படும் முன் அஃதாவது இற்றைக்கு ஐயாயிம் ஆண்டுகளுக்கு முன்னரே இருந்தோராதல் நன்கு துணியப்படும். இனி, தொல்காப்பியம் ஆக்கப்பட்ட காலத்தில் முத்தீ வழிபாடும், அம் முத்தீக்கண்ணும் முனைத்து விளங்கும் இறைவன் சிவந்த மேனியனாய்ச் `சேயோன் என நிற்பனென்னுங் கோட்பாடும் மிக்கு வழங்கினவாயினும், `சிவன்என்னும் பெயராதலால், `முக்கண்ணன் என்னு பெயராலாதல் இறைவனை வணங்கும் வணக்கம் அஞ்ஞான்று உளதாயிற்றில்லை. `முக்கண்ணன் `சிவன் என்னுஞ் சொற்கள் தொல்காப்பியத்தில் ஓரிடத்தாயினுங் காணப்படவில்லை. இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட காரிகிழாரது செய்யுளிற் காணப்படும் `முக்கண்ணன் என்னுஞ் சொல் தொல்காப்பியத்திற் காணப்படாமையை உற்று நோக்குங்கால், தொல்காப்பியங் காரிகிழாரது காலத்திற்கும் பன்னூற்றாண்டு முற்பட்டு இயற்றப்பட்டதென்பது தெளியப் படும். படவே, தொல்காப்பியனார் காலத்தில் வணங்கப்பட்ட தெய்வங்கள் முருகக்கடவுளும், அக்கடவுள் முனைத்து விளங்கும் ஞாயிறு திங்கள் தீ என்னும் முத்தீயும், மாயோனுமேயாம். இனி, இருக்குவேதத்தில் உருத்திரக் கடவுண்மேற்பாடப் பட்ட பாக்களையும், ஏனைச் சிறுதெய்வங்கண்மேற் பாடப்பட்ட பாக்களையும் ஒப்பிட்டு நோக்குங்கால், ஏனையோரைப் பாடிய பாக்களினும், உருத்திரன்மேற் பாடியவை மிகச் சிலவாதல் ஆராய்ச்சிவல்லார்க் கெல்லாம் எளிதின் விளங்குவதேயாம். அச் சிலவற்றுள்ளும் `உருத்திரன் என்னும் பெயரன்றி, `முக்கண்ணன் எனும் பெயர் காணப் படுகின்றிலது. இருக்குவேதப் பத்து மண்டிலங்களுள், ஏனை ஒன்பது மண்டிலங்களைவிடக் காலத்தாற் பிற்பட்டதாகிய பத்தாம் மண்டிலந் தொண்ணூற்றிரண்டாம் பதிகம் ஒன்பதாஞ் செய்யுளில்மட்டும் ஏபி:சிவ எனச் `சிவன் எனும்பெயர் காணப்படுகின்றது. சுக்கில எசுர் வேதத்தின் கண்ணதான `சதருத்ரியத்தில் உருத்திரன், சிவன், சர்வன், பவன், சங்கரன், பசுபதி, ஈசானன் முதலான சிவபிரான் பெயர்களெல்லாம் ஒருங்கே காணப்படினும், `முக்கண்ணன் என்னும் பெயர்மட்டும் ஆண்டுங் காணப்படுகின்றிலது. `த்ரையம்பகன் எனும் ஒருசொற் காணப்படினும், அஃது `அம்பிகையாகிய அம்மையோடு கூடினவன் எனப் பொருள் செய்யப்படுகின்ற தல்லாமல், முக்கண்ணன் எனப் பொருள் செய்யப்படு கின்றிலது. இருக்கு, எசுர் முதலான வேதங்கள் எங்கணும் `ஆயிரங்கண்களுடையவன் சிவபிரான் என்பது சொல்லப் படுகின்றதேயல்லாமல் `முக்கண்ணன் என்பது ஓரிடத்தாயினுஞ் சொல்லப்படவில்லை. பண்டைத் தென்றமிழ் மக்களின் கோட்பாடுகளைப் பெரிதுந் தழுவி எழுதிய இதிகாசங்கள், புராணங்கள், உபநிடதங்கள் முதலாயின் ஈண்டைக்கு மேற்கோள்கள் ஆகா. மிகப் பழைய தமிழ்நூல் வடநூல்களை நன்காய்ந்து காணுங்கால், எல்லாம்வல்ல இறைவற்கு, ஞாயிறு, திங்கள், தீ என்னும் மூன்று ஒளிகளையும் முக்கண்களாக அமைத்துச், சிவந்தொளிரும் உலகுருவினையே அவற்கு ஒரு திருமேனியாகக் கற்பித்து அவனை வணங்கும் வணக்கம் பண்டைத் தமிழ்மக்கட்கு மட்டுமே உரித்தாதல் இனிது விளங்காநிற்கும். இன்னும், இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழ்நூல்கள் தமிழ்ப்பாட்டுக்களிலாதல் வடநூல்கள் வடமொழிப் பாட்டுக்களிலாதல், கடவுளை நான்முகன் திருமால் சிவபிரான் என முத்திறப்படுத்து `மும்மூர்த்தி என்றோதி, அம்மூவருட் சிவபிரானும் ஒருவன் என்னும் பொருந்தாக் கோட்பாடு ஒரு சிறிதாயினுங் காணப் படாமையும், அவற்றின்கண்ணெல்லாஞ் சிவபிரான் பிறப்பு இறப்பு இல்லா எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளாகவே வைத்து மொழியப்படுதலும் பெரிதும் நினைவிற் பதிக்கற் பாலனவாகும். இனி, உருத்திரப்பெருமான் சிவந்த நிறத்தினனாய்த் திகழ்தலோடு, சென்னியிற் செக்கர்ச்சடைகளும் உடையனா யிருக்கின்றன னென்பது இருக்குவேதத்திற் பலகாலும் நுவலப்பட் டிருக்கின்றது. இதற்கு, அதன் முதன் மண்டிலத்தில் இமா :ருத்ராய தவஸே கபர்திநே க்ஷயத்வீராயஎன்று தொடங்கும் 114 ஆம் பதிகமே சான்றாம். இதன்கட் போந்த `கபர்திந் என்னுஞ்சொற் `சடையன் என்னும் பொருட்டு. இதுவும், இதனோடொத்த இருக்குவேதப் பதிகங்கள் ஏனையவும் நாலாயிரத்து நானூறாண்டுகட்கு முன்னரே இயற்றப்பட்டனவாகும். இன்னுங், கிறித்து சமயத்தவர்க்குரிய முதலாகமத்தில் `இறைவன் ஆபிரகாமுக்கு எதிரே தோன்றி அருள் செய்தக்கால் தன் பெயர் எல்சடை என மொழிந்தான் என்பது சொல்லப் பட்டிருக்கின்றது. மேலும், `எல் என்னும் அடைமொழியின்றிச் `சடை என்னும் பெயரே இறைவற் குரிய இயற்பெயராக `ஜாப் என்னும் ஆகமத்தில் முப்பத்தொருமுறை காணப்படுகின்றது.27 இச் `சடை என்னுஞ்சொல் தமிழ்ச்சொல்லாதல் அறியாத ஈபுருமொழிப் புலவர், இதன் பிறப்பும் பொருளுந் தெரியாமையிற் பெரிதும் இடர்ப்பட்டு மயங்குவாராயினர். `ஆபிரகாம் முதலான பண்டைநாயன்மார்கள் தமிழரே யென்பது ஆராய்ச்சியிற் புலனாதலின், அவர் தமக்குத் தோன்றிய இறைவன் தன் பெயரைச் `சடையன் எனத் தமிழ்மொழியில் அருளிச் செய்தது சாலப் பொருந்துவதேயாம் என்க. இனி, இற்றைக்கு இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகட்குமுன் `செவ்வேள் மேற்பாடப்பட்ட `குன்றம் பூதனாரது பரிபாடற் செய்யுளிற், சிவபிரான் தன் சடைக் கற்றையிற் கங்கை நீரைத் தாங்கிநிற்கும் இயல்பு, எரிமலர்த் தாமரை இறைவீழ்த்த பெருவாரி விரிசடைப் பொறையூழ்த்து விழுநிகர் மலரேய்ப்பத் தணிவுறத் தாங்கிய தனிநிலைச் சலதாரி மணிமிடற் றண்ணற்கு மதியாரற் பிறந்தோய் நீ என்று தெளிவாகக் கூறப்பட்டிருத்தல் காண்க. `திருமாலின் திருவடிகளினின்றும் இறங்கிய கங்கை நீரைச் சிவபிரான் தனது சடைக்கண் ஏற்றான் எனப் பிற்காலத்து வைணவர் முழுமுதற் கடவுளை இழித்துரைப்பான் வேண்டிக் கட்டிவிட்ட பொய்க்கதை பழைய தமிழ்நூல் வடநூல்களிற் சிறிதுங் காணப்படாமையும் ஈண்டுநினைவிற் பதிக்கற்பாற்று. இனி, இறைவன் திருமுடிமேற் பிறையமர்ந்து விளங்குந் தோற்றம், இற்றைக்கு ஆயிரத்தெண்ணூறாண்டுகட்கு முன் பாடப்பட்டனவாகிய. ஓங்குமலைப் பெருவிறற் பாம்புஞாண் கொளீஇ ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப் பெருவிறல் அமரர்க்கு வென்றி தந்த கறைமிடற் றண்ணல் காமர் சென்னிப்பிறை (புறம், 55) பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி நீலமணி மிடற் றொருவன் (புறம், 91) நுதலது இமையா நாட்டம் இகலட்டுக் கையது கணிச்சியொடு மழுவே மூவாய் வேலும் உண்டுஅத் தோலா தோற்கே, ஊர்ந்தது ஏறே சேர்ந்தோள் உமையே, செவ்வான் அன்ன மேனி, அவ்வான் இலங்குபிறை அன்ன விலங்குவால் வையெயிற்று எரியகைந் தன்ன அவிர்ந்துவிளங்கு புரிசடை முதிராத் திங்களொடு சுடருஞ் சென்னி மூவா அமரரும் முனிவரும் பிறரும் யாவரும் அறியாத் தொன்முறை மரபின் வரிகிளர் வயமான் உரிவை தைஇய யாழ்கெழு மணிமிடற் றந்தணன் தாவில் தாள்நிழற் றவிர்ந்தன்றால் உலகே (அகம், 1) என்றற் றொடக்கத்துப் பழந்தமிழ்ச் செய்யுட்களிற் றெளித்துரைக்கப்பட் டிருத்தல் காண்க. ஏனைத் திருவுருவ வடையாளங்களும் இவ் வகநானூற்றுச் செய்யுட்கண் ஓவியத்தெழுதிக் காட்டினாற்போல் அத்துணை எழில்பெறக் கூறப்பட்டிருத்தலும் வியக்கற்பாலதொன்றாம். இவ்வாறாக ஒளியொடுகூடி விளங்கும் உலகத் தோற்றத்தினையே உருவக வகையால் இறைவன்றன் திருவுருவமாக வைத்து வழிபட்ட பண்டைத் தமிழ்ச் சான் றோரில், அந்தணர் என்பார் வேறு முயற்சியிற் புகுதலின்றி, இறைவற்கு வழிபாடு ஆற்றுதலினும், இறைவன் நூல் ஓதுதலினுமே கருத்து ஒருப்பட்டு நின்றனராகலின், அவரெல்லாம் அவ் விறைவன் றிருவுருவத்தோடு ஒத்த தவவடிவமே தமக்கும் உரியதாகக் கொண்டிருப்பாராயினர் அரசரைச் சார்ந்தார் பெரும்பான்மையும் அவ் வரசரோ டொத்த கோலத்தினையும், முனிவரைச் சார்ந்தார் பெரும் பான்மையும் அம் முனிவரோடொத்த கோலத்தினையும், ஏனைப் பல்வகை நிலையின் நிற்பாரைச் சார்ந்தார் பெரும் பான்மையும் அவ்வந் நிலையினர்க்குரிய கோலத்தினையுந் தாந் தாம் மேற்கொள்ளுதல் இயல்பாதல்போல, எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளைச் சார்ந்தாரும் பெரும்பான்மையும் அக் கடவுட்குரிய திருக்கோலத்தினைத் தாமும் மேற்கொண்டு ஒழுகுதலும் இயல்பாயிற்றென்பது. எனவே, இறைவன் பொன் தோன்ற ஒளிவடிவினனாதல் பற்றி அவன் வழியில் நிற்பாரான அருந்தவத்தோர் தாமுந் தழல்வடிவினதாகிய காவியாடை உடுப்பாராயினர். தழல்தான் பற்றிய பொருளைத் தூய சாம்பராக்கி அச் சாம்பரைத் தன்மேற் பூக்க அணிந்திருக்கும் இயல்பே இறைவன்றன் திருமேனிமிசைத் திமிர்ந்திருக்குந் திருநீற்றின் உண்மையாதல் கண்டு, அவனை வழிபடுஞ் சான்றோருந் தந்திருமேனி மேலுந் திருநீறு பூசாநிற்பர். இறைவன் தனது நெற்றிமேற் கண்ணொடு முக்கண்ணனாய் விளங்குதலோடு ஒப்பவே, சான்றோருந் தமது நெற்றிமிசைச் சாந்தினாற் பொட்டிட்டிருப்பர். இறைவன் தன் திருமுடிமேற் சடைக்கற்றை உடையனாய் இருத்தல் போலவே, அருந்தமிழ்த் தாபதருந் தஞ்சென்னிமேற் சடைமுடியுடைய ராயிருப்பர். இறைவன் தன் சடைக்கற்றைமிசைச் சுமந்திருக்குங் கங்கைநீர்க்கு அடையாளமாகவே, தமிழ்த் தாபதருந் தம் கையில் தண்ணீர்க் குடுவை ஏந்தியிருப்பர். இறைவனைப்போல் தண்ணீரைத் தாம் தலைமிசைத் தாங்குதல் ஆகாமையின், அருந்தவத்தோர் அதனைத் தலையிலன்றிக் கையின்கட் டாங்குவாராயின ரென்று உணர்ந்துகொள்க. இன்னும், மும்மலங்களைச் செகுக்கும் இறைவனது பேராற்றலே அவன் தன் கையில் ஏந்திநிற்கும் முத்தலை வேலாகச் சொல்லப்படுதலின், அவனது திருக் கோலத்தைத் தாங்கிய தாபதரும் `முக்கோல் ஏந்தியிருப்பர்; இதுபற்றியே இவர் `முக்கோற் பகவர்எனவும் மொழியப்படுவர்28. இன்னும், ஆணவமலத்தின் வலியை யொடுக்கிய இறைவனது நிலையே, அவன் புலித்தோலை உடுத்தியிருக்கும் இருப்பாதலின், அவன்வழிச் சார்ந்த தாபதர் தாமும் புலித்தோலை மேற்கொண்டிருப்பர்; இனி, `மான் என்னுஞ்சொல் தமிழில் மான் என்னும் விலங்கினையும், வடமொழியிற் `பிரகிருதிமாயையினையுங் குறிப்பதொன் றாகலின்29 மாயையை யொடுக்கிநிற்கும் நிலைக்கு அடையாள மாக மான்றோலை இருக்கையாய்க் கொண்டும் இருப்ப ரென்க. இன்னும் எல்லா நூற்கல்விக்கும் இறைவனே தலைவன் என்பதற்கு அறிகுறியாக அவன் தனது வலக்கையிற் சுவடியொன்றேந்தி அமர்ந்திருத்தல் போல, அவன் வழிப்பட்ட தாபதருந் தமது கையில் நூல் ஒன்றேந்தியிருப்ப ரென்க. இவ்வாறாக இறைவனோடொத்த வடிவுகொள்ளுந் தமிழந்தணரின் தவவடிவ அடையாளங் களிற் சில, ஆசிரியர் தொல்காப்பியனரால், நூலே கரகம் முக்கோலை மணையே ஆயுங் காலை அந்தணர்க்கு உரிய என்று ஓதப்பட்டமை காண்க. இச் சூத்திரத்தின்கட் சொல்லப்பட்ட `நூல் என்பது `கலைநூலே யல்லாமற் பூணுல் அன்று. தொல்காப்பியனார் நூல் எழுதிய பண்டைக்காலத்திற் புரிநூல் பூணும் வழக்கம் உண்டென்பதை நாட்டுதற்குச் சான்று இன்மையானும், துறவொழுக்கத்தின் நிற்பார்க்குப் பூணூல் இன்மை வடநூலார்க்கும் உடம்பாடகலானும்,30 இதற்குப் பூணுல் என்று உரைகூறிய பிற்காலத் துரைகாரரான `பேராசிரியர் கூற்றுப் பொருந்தாமை கண்டுகொள்க. `கரகம் என்பது நீர்க்குடுவை. `முக்கோல் இறைவனேந்திய முத்தலை வேலுக்கு அடையாளம். `மணை இருத்தற்கு இடும் புலித்தோல் மான்றோல் முதலியன. இன்னுந் தவவொழுக்கம் மேற்கொண்ட அந்தணர் தலைமிசைச் சடைமுடியுடையரா யிருப்பரென்பது, கடுந்தெறற் செந்தீ வேட்டுப் புறந்தாழ் புரிசடை புலர்த்து வோனே (251) என்னும் பழைய புறநானூற்றுச் செய்யுளால் இனிது விளங்கா நிற்கும். இன்னும் அவர் காவியாடை பூண்டு முக்கோல் கைக்கொண்டு தவவொழுக்கத்தின் நிற்றல், கல்தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான், முக்கோல் அசைநிலை கடுப்ப என்னும் பழைய முல்லைப்பாட்டு அடிகளாற் புலனா கின்றது. இன்னும் அவர் மேற்கூறிய தவ அடையாளங் களோடு, தந் திருமேனிமேல் திருநீறும் பூசியிருப்பரென்பது, சுத்திய பொக்கணத்து என்பணி கட்டங்கஞ் சூழ்சடை வெண் பொத்திய கோலத்தினீர் (242) என்று திருச்சிற்றம்பலக் கோவையாரில் மாவிரதியர் விளிக்கப்படுமாற்றால் அறியப்படும். இங்ஙனமாகப் பண்டைக்காலத்துத் தண்டமிழ் நாட்டிலிருந்த தாபதரெல்லாரும்,எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளை `முருகன் `சிவன் என்னும் பெயர்களால் முத்தீக்கண் வணங்கி, அம் முழுமுதற் கடவுளுக்குத் தாம் உருவக வகையாற் கற்பித்த வடிவத்தையே தாமும் பூண்டு, தவவொழுக்கத்தின் கண்ணராய் ஆங்காங்கு வைகினமையே பழைய செந்தமிழ் நூல்களான் அறியக்கிடக்கின்றது. இவ்வாறொழுகிய அருந்தவத்தோரின் வடிவமும், அவர் தந் தவவொழுக்கமும், அவ் வொழுக்கத்தின் பாலதான நோன்பும், பார்ப்பனரின் துறவொழுக்கமுமே `படிமை `படிவம் என்னுஞ் சொற்களால் உணர்த்தப்பட்டன என்பதை மேலே 654, 656 ஆம் பக்கங்களிற் பழையநூல் மேற்கோள்கள் பல கொண்டு நன்கு விளக்கிக்காட்டினேம். தொல்காப்பியம் முதலாக வந்த பண்டைத் தமிழ்நூல்களில் ஓரிடத்தானும் `படிமை `படிவம் என்னுஞ் சொற்கள், சமண்முனிவரின் தவவொழுக்கத்தினை உணர்த்துதற்கு மேற்கோள் கண்டிலம். கரிகாற்சோழன் காலத்திற்கு அஃதாவது இற்றைக்கு ஆயிரத்துத் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் தமிழ்நாட்டின்கட் சமண்சமயமாதல் அதனைத் தழுவினோராதல்இருந்த ரென்பதற்கு ஏதொரு சான்றும் பழைய தமிழ்நூல்கள் தமிழ்ப்பாட்டுகளில் ஓர் எட்டுணையுங் காணப்படவில்லை. உண்மை யிவ்வாறிருப்பத், தொல்காப்பியனாரைச் சமண் முனிவரென நாட்டப்புக்கவர் அவர் காலத்திற் சமண்மதந் தமிழ்நாட்டில் இருந்ததென்னுந் தமது கூற்றை மெய்ச்சான்று ஒன்றுதானுங் காட்டி நிறுவாமல் அவரைச் சமணரெனக் கூறப்புக்கது, பழந்தமிழ் நூலாராய்ச்சி யுடையாரால் நகையாடி எள்ளப்படுதற்கே இடனாயது காண்க. மேலும் அவர் `படிமை என்னுஞ் சொல்லுக்குத் `தவவொழுக்கம் என்னும் பொருள் உளதாதலைக் கண்டிலேம் எனவும், தாம் வினவிய வடமொழிப் புலவர் களுங்கூட அச்சொல்லும் பொருளும் இல்லையென்று தெளிந்தேம் எனவும் உரைப்பாராயினர்.31 பழைய தமிழ்நூல்களை ஆராய்ந்துபாராமலே அவர் அங்ஙனந் துணிவுரை நிகழ்த்தியது இரங்கற்பாலதொன்றாம். கூறினை பெருமநின் படிமை யானே என்னும் பதிற்றுப்பத்திலும், தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப் படிவ வுண்டிப் பார்ப்பன மகனே என்னுங் குறுந்தொகையிலும், கல்தோய்த் துடுத்த படிவப் பார்ப்பான் என்னும் முல்லைப் பாட்டிலும் `படிமை `படிவம் என்னுஞ் சொற்கள்அந்தணரின் தவவொழுக்கத்தை உணர்த்துதல் முன்னரே எடுத்துக் காட்டினாம்.அச் சொற்கள் அங்ஙனம் அப் பொருள் உணர்த்தும் வழியெல்லாஞ் சைவசமயத் துறவி களையே உணர்த்தக் காண்டுமன்றிச், சமண் துறவிகளை ஒரு சிறிதாயினும் உணர்த்தக் காண்கிலேம். மேலுஞ், சமண் சமயத்தினர் முழுமுதற் கடவுள் ஒன்று உண்டென்னும் நம்பிக்கையுடையரல்லர்; அந்நம்பிக்கை யில்லாமையின், முத்தீவேட்டு வழிபடும் நீரரும். அல்லர்; அஃதில்லாமையின், தீ நிறத்ததாகிய காவியாடையும், தீயின் எச்சமாகிய தூய வெண்ணீறும் மேற்கொள்வாரும் அல்லர்; இறைவனின் திருவடையாளமாகிய சடை முடியுந்; தண்ணீர்க் குடுவையும், முக்கோலும் உடையாரும் அல்லர்; இப் பெற்றியினரான சமண் முனிவர் `ஆசீவகரும், `நிகண்டரும், `முண்டசாவகரும் என முத்திறப்படுவ ரென்பதூஉம், இவருள் ஆசீவகராவார் ஆடையின்றி முற்றும் அம்மணமாயும், நிகண்டர் இடுப்பில் ஒருசிறு துண்டு மட்டும் உடுப்பவராயும் முண்ட சாவகர் அரையில் ஒரு துண்டு உடுத்துத் தலையை மழித்துவிடுபவராயும் இருப்பரென்பதூஉம் அங்குத் தரநிகாயத்திற் குறிக்கப் பட்டிருக்கின்றன. இச் சமண்முனிவரும், இவரின் வேறான புத்த முனிவர்களும் கௌதம சாக்கியர் காலத்தில் இருந்தாற்போலவே, தலையிற் சடைமுடியுடையருங் கையில் முக்கோல் ஏந்தியவருமான பார்ப்பனத் துறவிகளும் அக்காலத்தில் வடநாட்டிலும் இருந்தனரென்பதூஉம் அவ் அங்குத்தர நிகாயத்திலேயே நுவலப்பட்டிருக்கின்றது.32 எனவே, கௌதமசாக்கியர் இருந்த காலத்திலேயே அஃதாவது இற்றைக்கு இரண்டாயிரத்தைந் நூறு ஆண்டுகட்கு முன்னரேயே வடநாட்டிலுஞ் சிவவடிவம் பூண்ட பார்ப்பன முனிவர்கள் இருந்தமை பௌத்த சமய நூல்களினாலேயே புலனாகின்றதன்றோ? மற்றுத் தென்றமிழ் நாட்டிலோ அக்காலத்திற் பார்ப்பன முனிவரைத் தவிர, ஏனைச் சமண் பௌத்த முனிவர் இருந்திலர். ஆகவே, `படிமை என்னுஞ் சொற்றென்றமிழ் நாட்டிலிருந்த சைவ அந்தணரின் தவ ஒழுக்கத்தையுந் தவவடிவத்தையுஞ் சுட்டுதற்கே எழுந்ததன்றிச், சமண் முனிவரின் தவவொழுக்கத்தை உணர்த்துதற் கெழுந்ததன் றென்பது கடைப்பிடிக்க அதுவேயுமன்றி, வடநாட்டிலிருந்த சமண் முனிவரின் தவவொழுக்கத்தை உணர்த்துஞ் சொல்லாக அது சமண் சமய நூல்களிலாயினும் வழங்கப்பட்டுள்ளதோவென யாம் அந் நூல்களை ஆராய்ந்து பார்க்க, ஆண்டும் `படிமா என்னுஞ் சொல்லைக் கண்டிலேம். அச் சொல் சமண் முனிவரின் தவ வொழுக்கத்தையே குறிக்கு மென நாட்டப்புக் கவராதல், அதற்கு ஒரு மேற்கோளாயினுஞ் சமண் நூல்களிலிருந் தெடுத்துக் காட்டினரோ வென்றால், அதுதானும் இல்லை. `படிமா என்பது சமண் சமயச் சொல்லே என்பதற்கு ஏதொரு மேற்கோளும் பழைய சமண் நூல்களிலிருந் தெடுத்துக் காட்டாது, இப்போது சில ஆண்டுகளுக்குமுன் ஓர் ஆங்கில மாதர் எழுதிய ஓர் ஆங்கில நூலை நம்பி அச்சொல் சமண் சமயத்தவர்க்கே யுரித்தாதல் வேண்டுமெனத் தந் துணிபுரைத்தலினும்பிழைபாடாவது பிறிதில்லை; இப் பிழைபாட்டுரையைக் கொண்டு ஆசிரியர் தொல்காப்பிய னாரைச் சமண முனிவரென காட்டப் புகுவதினும் பேதைமையாவதும் பிறிதில்லை. ஆராய்ச்சி முறை இன்னதென்றறியாதார் தாமும் இன்னோரன்ன ஆராய்ச்சியிற் புகுதல் பெரிதும் ஏதமாமென்க. இப்போது வழங்குஞ் சமண் நூல்களில் வடமொழி தென்மொழியில்இருப்பனவெல்லாம் கி.பி.ஆறாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து இயற்றப்பட்டன வாகுமென அவை தம்மை நன்காராய்ந்த ஐரோப்பிய ஆசிரியர்கள் கூறாநிற்கின்றனர்.33 இவ்வாறு பிற்பட்ட காலத்தில் எழுதப்பட்ட சமண்நூல்களில் யாண்டோ அருகிப் `படிமை என்னுஞ் சொல் சமண் முனிவரின் தவவொழுக்கத்தை யுணர்த்துதற்கு வழங்கப்பட்டிருக்கலாம். அது கொண்டு அச்சொல் சமண் சமயத்தவர்க்கே உரித்தென்றல் ஆராய்ச்சியுணர்வில்லார் கூற்றாம். கி.பி. ஆறாம் நூற்றாண் டிலிருந் தெழுதப்பட்ட சமண் நூல்கட்கு ஐந்நூறாண்டு முற்பட்ட அருந்தமிழ் நூல்களினும் பாட்டுகளினு மெல்லாம் அச்சொல் அந்தணரின் சைவ தவவொழுக்கத்தையே உணர்த்தக் காண்டலால், அது சைவ சமயத்தவர்க்கே உரித்தாவதன்றிச் சமண்மதத்தவர்க்கு உரித்தாதல் ஒருவாற்றானுஞ் செல்லாது. தமக்கு முன்னிருந்த சைவ அந்தணத் தாபதர்தந் தவவொழுக்கத்துக்கு வழங்கி வந்த அப் `படிமை யென்னுஞ் சொல்லையே பின்வந்த சமண் முனிவர் தமக்கும் உரியதாக ஒரோவிடத்துப் பயன்படுத்தினா ராகற்பாலார். வடநாட்டிற் கௌதம சாக்கியர் காலத்திருந்த புத்த சமண் சமயத்தவருங் கூடத், தங் காலத்திற்கு முன்னிருந்த சைவ அந்தணரின் தவவொழுக்கத் தையே முதலாக வைத்து, அதன்படி தமக்குரிய ஒழுகலாறுகளை வரையறுத்தமைப்பா ராயினரென, இவை தம்மைப் பலபடியானும் நடுநின்று நன்காய்ந்த ஹெர்மன் ஜாகோபி என்னும் ஐரோப்பிய ஆசிரியர் நன்கு விளக்கிக்காட்டி யிருக்கின்றார்.34 வடநாட்டிற் பண்டைக் காலத்திருந்த சைவ அந்தணத் தாபதர் சிவபிரான் திருவுருவ அடையாளமான காவியாடையே உடுத்துத் தலைமேற் சடைமுடியுடையரா யிருந்தன ரென்பது, அவர் தமது `ஜைனசூத்திர ஆங்கில மொழிபெயர்ப்பின் முகவுரையில் எடுத்துக் காட்டிய போதாயன தருமசாத்திர மேற்கோள் களால் (2, 6, 11, 15 - 21) நன்கு விளங்கும். சைவ அந்தண முனிவர் உடுத்துங் காவியாடையைப் பார்த்தே, பௌத்த பிட்சுக்கள் நிறத்தால் அதனை யொப்பதொரு துவராடை யுடுப்பராயின ரென்பதூஉம், புத்த சமண்முனிவர் துவக்கத்தில் வடநாட்டின் ஒரு சிறு பகுதியில் இருந்தமைபோலாது சைவமுனிவரர் பரதநாடெங்கும் பண்டுதொட்டே பரவியிருந்தன ரென்பதூஉம் பிறவும் அவரால் நன்கெடுத்துக் காட்டப் பட்டன. உண்மையாராய்ச்சியிற் றேர்ந்த இவ்வைரோப்பிய ஆசிரியர் எடுத்துக்காட்டிய பண்டை வடநூல் மேற்கோள்களையும், அவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்து காட்டிய உண்மை முடிபுகளையும் நடுநின்று நோக்கவல்லார்க்குப், புத்த சமண்முனிவர் தோன்றுதற்குப் பல நூற்றாண்டுகள் முற்றொட்டே சைவ அந்தண அருந்தவத்தோர் இப் பரத நாடெங்கும் பரவியிருந்தமையும், பின்வந்த புத்த சமண் துறவோர் தமக்குப் பல நூற்றாண்டுகள் முன்னிருந்த சைவ அந்தணரின் தவவொழுக்கத்தையே பெரும்பான்மையுந் தழுவி யொழுகலானமையுந் தெற்றெனப் புலனாகா நிற்கும். ஆகவே, தவவொழுக்கமும், அத் தவவொழுக்கத்தை யுணர்த்தும் `படிமை, `படிவம் `ப்ரதிமா என்னுஞ் சொற்களுஞ், சைவ அந்தணரினின்று ஏனைப் புத்தசமண் சமயத்தார்க்கு வந்ததாகல் வேண்டுமேயன்றிப், பிற்காலத் தவரான புத்தர் சமணரிலிருந்து, இவர்க்குப் பல்லாயிரம் ஆண்டு முற்பட்ட சைவ முனிவர்க்குச் சென்றதாகல் ஏலாது. ஆதலால், முற்காலத்தது இது, பிற்காலத்தது இது என்று பகுத்தாராயமாட்டாது, முன்னது பின்னதாகவும் பின்னது முன்னதாகவும் பிறழக்கொண்டு, படிமையொழுக்கஞ் சமணர்க்கே யுரியதெனக் கரைந்தாரது உரை பெரியதொரு தலைதடுமாற்ற வுரையாய் முடிந்தமை கண்டு கொள்க. அற்றேலஃதாக, தவவொழுக்கமும் அதற்கேற்ற தவ வடிவமும் அதனை யுணர்த்தும் `படிமை என்னுஞ் சொல்லும், புத்தர் சமணர் தோன்றுதற்குப் பல்லாயிர ஆண்டுகள் முன்னரே சைவ அந்தணர்பால் உளவாயது உண்மையாயின், அதனை நிறுவுதற்குரிய பழைய நூன் மேற்கோள்கள் காட்டுக வெனின்; அவை தம்மைப் பண்டைத் தமிழ்நூல்களினின்றும் முன்னரே எடுத்துக் காட்டினாம். அப் பழந்தமிழ் நூல்கள் பாட்டுகளில் யாண்டும் புத்த சமண் சமயத்தவர் ஓரெட்டுணையுங் குறிக்கப்படாமையும், `படிமை, `படிவம் என்னுஞ் சொற்கள் சைவ அந்தணரின் தவவொழுக்கத்தையே குறித்தற்கு அவற்றுள் வழங்கப்படுதலும் ஆண்டே விளக்கிப் போந்தாம். ஆகவே, புத்தர் சமணர் தோன்றுதற்கு மூவாயிர ஆண்டு முற்பட்டதாகிய தொல்காப்பியச் சிறப்புப்பாயிர வுரையிற் போந்த `படிமையோன் என்னுஞ்சொற் சைவ அந்தண முனிவனாகிய ஆசிரியன் தொல்காப்பியன்றன் தவவொழுக் கத்தையுந் தவவடிவத்தையும் மட்டுமே சுட்டுதல் வேண்டுமன்றி, அவற்குப் பெருங்காலம் பிற்பட்டிருந்த புத்தர் சமணரின் தவவொழுக்கத்தையாதல் தவவடிவத்தையாதல் சுட்டுதல் ஒரு சிறிதும் இசையாதென் றுணர்ந்துகொள்க. தொல் காப்பியத்துள் யாண்டும் புத்தசமண் சமயங்கள் ஒரு தினைத்தனையுங் குறிப்பிடப் படாமையும் நினைவிற் பதிக்கற்பாற்று. இன்னுங், கௌதமசாக்கியரும் மகாவீரருந் தோன்றி முறையே புத்தசமண் சமயங்களைத் தோற்றுவித்தற்கு முன், சாக்கிய வகுப்பினர் சிவபிரானையே வணங்கி வந்தன ரென்பது, வடநாட்டிலுள்ள பழைய கல்வெட்டுகளின் ஆராய்ச்சியால் நன்கு புலனாகாநிற்கின்றது.35 கௌதம சாக்கியர் பிறந்த ஞான்று, அவர் சிவபிரான் திருவருளைப் பெறுதற் பொருட்டுச் சிவபிரான் திருக்கோயிற்குப் பெற்றோரால் எடுத்துச் செல்லப்பட்டமை, பழைய புத்தசமயக் கல்வெட்டு ஒன்றிற் செதுக்கி வைக்கப் பட்டிருக்கின்றது.36 மிகச் சிறந்த இச் சான்றுகளை உற்றாராய வல்லார் எவர்க்கும், புத்த சமண்மதங்கள் தோன்றுதற்குப் பல்லாயிர ஆண்டுகள் முற்றொட்டே இப் பரதநா டெங்கணும் பரவி யிருந்தது சைவசமயமேயா மென்பதூஉம், இங்கு முழுதும் உலவிய தாபதர் சைவசமய அந்தண முனிவரேயாவரென்பதூஉந் தெற்றென விளங்காநிற்கும். அற்றேல், `ப்ரதிமா, `படிமை `படிவம் என்னுஞ் சொற்களுள் ஒன்றேனும், புத்தசமண் நூல்களுக்கு முற்பட்ட பழைய வடநூல்களுள் உண்டோ வெனின்; உண்டு. வடநூல்களுள் மிகப் பழையன இருக்கு, எசுர், சாமம் என்பவைகளேயாம். ஐயாயிர ஆண்டுகளுக்குமுன் தமிழர் ஆரியர் என்னும் இருவகுப்பினர்க்கும் ஆசிரியராயிருந்த முனிவர்களாற் பாடப்பட்டுச் சிதர்ந்துகிடந்த இவற்றின் பாட்டுகள் பாரதப் போர் முடிந்தபின் வியாசரால் ஒருங்கு தொகுக்கப்பட்டு இருக்கு, எசுர், சாமம் என்னும் மூன்று வேதங்களாக வகுக்கப்பட்டன. இவ்வேதப்பாட்டுகள் வழங்கிய காலத்தில் வணங்கப்பட்டு வந்த இந்திரன், வருணன், உருத்திரன் முதலான தெய்வங்களுக்கு உருவங்கள் சமைத்து வைத்து, அவற்றிற்கு வழிபாடு ஆற்றிவந்தனர் என்பதும் அவை தம்மைக் கருத்தூன்றி ஆராயும்வழி இனிது புலனாகின்றது. ஆரியர் போர்மேற் சென்ற காலங்களில் இந்திரனது வடிவத்தை எடுத்துச் சென்றனரென்பது இருக்குவேதத்திற் சொல்லப்பட் டிருக்கின்றது.37 சிவபிரான் திருவடையாளமான சிவலிங்க வடிவத்தைப் பண்டைத் தமிழ்மக்கள் வைத்துவழிபட்டமை இருக்குவேத ஏழாம் மண்டிலத்தின் இருபத்தோராம் பதிகத்திலும் பத்தாம் மண்டிலத்தின் தொண்ணூற்றொன்பதாம் பதிகத்திலும் விளக்கமாக வைத்து நுவலப்பட்டிருக்கின்றது. இவையேயன்றி, `ப்ரதிமா என்னுஞ் சொல்லே ஒரு தெய்வம்போற் செய்த வடிவத்தைக் குறிக்கும் மொழியாக எசுர்வேதத்தில் நதய ப்ரதிமா அதி (32, 3) என்று தெளிவாகக் கூறப்பட்டிருக் கின்றது. இவ் வுண்மைகளைச் சிறிதாயினும் ஆராய்ந்து பார்க்கும் அறிவு மதுகையின்றி, `ப்ரதிமா என்னுஞ் சொல் சமண் நூல்களி லன்றிப், பழைய வேதநூல்களில் யாண்டு மில்லை யென்று துணிந்துரைத்தவர் தம் பேதைமைப் பெருக்கை என்னென்பேம்! இனியேனும் அச்சொல் பௌத்த சமண் நூல்கள் தோன்றுதற்கு மூவாயிர ஆண்டு முன்னிருந்த எசுர்வேதத்திலேயே உளதென்றறிந்து அவர் உண்மை தெளியக்கடவாராக. இனி, அவர், தொல்காப்பியரைச் சமண்சமயத்தினரென நாட்டுதற்கு மற்றுமொரு சான்று காட்டுவே மெனப் புகுந்து, உயிர்களை ஓரறிவுமுதல் ஐயறிவு ஈறாக உள்ள ஐந்து வகைகளிற் பகுத்தடக்குதல் சமண்சமயக் கோட்பாடாகு மென்றுந் தொல்காப்பியனார் இவ்வைவகை உயிர்ப் பாகுபாடுகளைத் தமது `மரபியற் சூத்திரங்களில் எடுத்தோதுதலின் அவர் சமண் சமயத்தவரேயாதல் வேண்டுமென்றுங் கூறினார். இதுவும் ஒரு சிறிது ஆராயற்பாற்று. சமண் மதத்தவர்கள் எவ்வகைப்பட்ட உயிரையும் எவ்வகை ஏதுபற்றியும் கொல்லலாகாது என்னும் மிகச் சிறந்த கொல்லா அறத்தைக் கடைப்பிடித்து நின்றவர்கள். வடநாட்டின்கண் வந்து குடியேறிய ஆரியரும் அவர் வழிச் சார்ந்த பார்ப்பனரும் வேள்வி வேட்டலை ஓர் ஏதுவாக வைத்துக்கொண்டு, எண்ணிறந்த விலங்கினங்களைக் கொன்று அவற்றின் ஊனை நெய்யிற் பொரித்து உண்டுஞ், சோமப் பூண்டில் இறக்கிய கள்ளை நிரம்ப அருந்தியும் வெறியாட் டயர்ந்து வந்தமையால், இயற்கையிலேயே புலாலுங் கள்ளும் மறுத்த சைவவேளாள அரசர் (க்ஷத்திரியர்) அவ் வாரியர்தந் தீய ஒழுகலாற்றினை அருவருத்து, அதனைத் தடைசெய்தற் பொருட்டாகவே சமண் புத்தகக் கொள்கைகளைத் தோற்றுவித்து, அவற்றை எங்கும் பரவச் செய்தனர். சமண்மத ஆசியரான `மகாவீரரும் புத்தசமய ஆசிரியரான `கௌதம சாக்கியரும் வடக்கே மகதநாட்டில் வைகிய க்ஷத்திரிய அல்லது தமிழ் வேளாள அரசமரபிற் பிறந்தோரே யாவர். ஆரியர் வடநாட்டிற் புகுந்து ஆங்காங்குக் குடியேறியபோது, அங்கம், மகதம், காசி, கோசலம், வச்சீ, மல்லை, சேதீ, வஞ்சம், குரு, பாஞ்சாலம், மச்சம், சூரசேனம், அச்சகம், அவந்தி, காந்தாரம், காம்போசம் முதலிய பதினாறு நாடுகளில் நாகரிகத்திற் சிறந்து விளங்கிய வேறு மரபினரான தமிழ் வேளாளரே அரசுபுரிந்தனர் என்பது அங்குத்தரநிகாயத்தில் (1, 213; 4, 252, 256, 260) செவ்வனே குறிக்கப்பட்டிருக்கின்றது. மகத நாட்டிலிருந்த தமிழர், முன்னரே யாம் விளக்கியெழுதிய பூருக்களைச் சேர்ந்தோராவர்.38 இங்ஙனமாகச் சமண் கோட்பாட்டைப் பரவச் செய்த மகாவீரர் தமிழரச முனிவரேயாகையால், அவர்க்கும் அக்காலத்திருந்த ஏனை வேளாளர்க்கும் பொதுவாக உரிய கொல்லா அறத்தைஅவர் வலியுறுத்திப் பரவச் செய்ததில் ஏதும் புதுமையில்லை. அஞ்ஞான்றிருந்த அத்தமிழ் முனிவர், தங் காலத்திற்குப் பல்லாயிர ஆண்டு முன்னிருந்த ஆசிரியர் தொல்காப்பியனார் முதலான தமிழ்ச் சான்றோர் கண்டுரைத்த உயிர்ப் பாகுபாடுகளையே தாமுந் தழுவிக் கூறினாரல்லது, மகாவீரர் முதலாகப் பின்வந்த சமண்முனிவர் வகுத்ததனைக் கண்டு தொல்காப்பியனார் அவை தம்மைக் கூறினாரல்லர். அஃதெங்ஙனமெனிற் காட்டுதும்: எவ்விடத்திலுள்ள உயிரையுங் கொல்லலாகா தென்பதே சமணர்தங் கோட் பாடாகையால், அக் கோட்பாட்டிற்கு இசையவே உயிர்கள் உயிர்வாழும் இடங்களை அவர்கள் முதலில் ஆராய்ந் துரைப்பாராயினர். உயிர்கள் நிலத்திலுள்ளனவும், நீரிலுள்ளனவும், நெருப்பிலுள் ளனவுங், காற்றிலுள்ளனவும் என நால்வகைப் படுமென்று உரைத்து, ஆண்டாண்டுள்ள உயிர்களுக்கு நோயுஞ் சாக்காடும் உண்டாகாவண்ணம், அவற்றோடு இயைந்து காணப்படும் உயிரில் பொருள்களைத் தாம் பயன்படுத்திக் கொள்ளும் முறைகளை விளக்கிக் காட்டுதலே சமண்சமய ஆசிரியர் கருத்தாகும். இப்போதுள்ள சமண் நூல்களில் மிகப் பழையதாகிய ஆசாரங்கசூத்திரம், சுருதகந்தம், இரண்டு, மூன்று, நான்கு, ஏழாம் அத்தியாயங்களில், உயிர்கள் உலவுதற்கிடமான நிலன்நீர் நெருப்பு காற்று என்னும் இடவகையால் அவ்வுயிர்களை நால்வகைப்படுத்து, அவை தமக்கு இடர் நேராவண்ணம் அங்கங்குள்ள ஏனைப் பொருள்களைப் பயன்படுத்துமாறு விரித்துரைத்தல் காண்க; இதன் ஆறாம் அத்தியயனத்தில், ஈரறிவு மூவறிவு நாலறிவு ஐயறிவு உடைய எல்லா உயிர்களுக்கும் இன்ப துன்பமும் அச்சமும் உளவாகலின், அவை தமக்கு எந்த ஏதுவைக் கொண்டும் எவ்வகை இடருஞ் செய்தலாகா தென்னும் அத்துணையே வற்புறுத்துரைக்கப் பட்டிருக்கின்ற தல்லாமல், ஓரறிவு முதல் ஐயறிவு ஈறாக வைத்து உயிர்களைப் பாகுபாடு செய்தல் ஆண்டுங் காணப்படவில்லை. ஆகவே, உயிர்களை இடவகையால் நால்வகைப்பட வகுத்துக் காட்டுதலே பண்டைச் சமண் ஆசிரியர்தங் கருத்தாதல் காண்டுமன்றி, அறிவுவகையாற் பகுத்துக்காட்டுதல் அவர்க்குக் கருத்தாதல் கண்டிலம். இடவகையாற் பகுத்தலேஅவர்தங் கோட்பாட்டுக்குப் பயன்படுவதன்றி, அறிவு வகையாற் பகுத்தல் அதற்குச் சிறிதும் பயன்படுவதன்றாம்; என்னை? ஈரறிவுடைய வாயினும் அல்லது ஐயறிவுடையவாயினும் எல்லாவுயிர்க்கும் இன்பதுன்பமும் அச்சமும் உடையவாகையால், அறிவின் ஏற்றத்தாழ்வு கருதாது எல்லாவுயிர்களையும் பாதுகாத்தலே செயற்பால தென்பதூஉம், உயிர்கள் ஓரிடத்தும் உள ஓரிடத்தும் இல என அறியாமையாற் கருதிவிடாது நிலன் நீர் நெருப்பு காற்று என்னும் நான்கிடங்களிலும் அவை உளவாதலைக் கருத்தூன்றி யாராய்ந்து பார்த்தல் இன்றியமையாததென்பதூஉம் அவர்தங் கருத்தாகலி னென்க. எனவே, உயிர்களை இடவகையால் ஆராய்தலே பண்டைச் சமணாசிரியர் கோட்பாடாகுமல்லது அறிவு வகையால் ஆராய்தல் அவர்தம் கோட்பாடாகாமை பெற்றாம். பெறவே, உயிர்களை இடவகையாற் பகுத்து விரித்துக் காட்டிய பழைய ஆசாரங்க சூத்திரத்திற்கு மாறாக, அவை தம்மை இடவகையாலும் அறிவு வகையாலும் பகுத்து விரித்துரைத்த உத்திராத்தியயனநூல் (34) மிகவும் பிற்பட்ட காலத்தெழுந்த சமண்முனிவரால் தொல்காப்பியத்தைப் பார்த்துச் செய்யப்பட்ட தொன்றாக வேண்டுமாகலின், அஃது ஈண்டைக்கு மேற்கோளாகாதென மறுக்க. ஆசாரங்க சூத்திரத்திற்குச் சீலாங்க முனிவர் எழுதியவரை கி.பி. 876 இல் முடிக்கப்பட்ட தொன்றாகையால்,39 ஆசாரங்க சூத்திரத்தின் காலங் கி.பி. ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டிற்கு மேற்பட்டதாகாது. `உத்தராத்தியயனம் சமண் நூல்களில் மிகப் பிற்பட்டதாதலும், அதன் இறுதிக் கண் உயிர்களை இடவகையாலும் அறிவுவகையாலும் பாகுபாடு செய்து விரித்தோதும் முப்பத்தாறாம் அத்தியயனம் இன்னும் பிற்பட்ட காலத்தே செய்து சேர்க்கப்பட்டதாதலும் மேற்குறிப்பிட்ட ஐரோப்பிய ஆசிரியரால் நன்கு விளக்கிக் காட்டப் பட்டிருக்கின்றன40 பழையதாகிய `ஆசாரங்க சூத்திரம் முதற்கண் உயிர்களை இடவகையாற் பகுத்து விரித்தோதி அறிவுவகையாற் பகுத்தலை ஒரு சொற்றொ டரளவில் மிகச் சுருக்கிக் கூறாநிற்க, `உத்தராத்தியயனமோ இடவகையான் மட்டுமேயன்றி அறிவு வகையாலும் உயிர்களைப் பகுத்து மிக விரித்தோதா நிற்கின்றது; இதனை உற்றுநோக்கவல்லார்க்கு, உத்தராத்திய யனத்தின் இவ் விறுதிப்பகுதி பெரிதும் பிற்பட்ட காலத்த தாலும், அறிவு வகையால் உயிர்களைப் பகுத்தோதுமுறை பண்டைச் சமணாசிரியர்களாலன்றிப் பின்றைச் சமண புலவரால் அவர் தம் பழைய கோட்பாட்டுக்கு முரணாகக் கைக்கொள்ளப்பட்டதாதலும் அங்கையங் கனிபோல் இனிது விளங்காநிற்கும். உயிர்களை அறிவுவகையாற் பகுத்தல் சமண் கோட்பாட்டிற்கு இசைந்து அதற்கு ஏதொரு பயனும் பயவாமையாலும், அவை தம்மை இடவகையாற் பகுத்தல் அதன் கோட்பாட்டொடு பெரிதும் ஒத்து அதற்குப் பயன்படுதலாலும், அதற்கிணங்கவே பழைய `ஆசாரங்க சூத்திரமும் உயிர்களை இடவகையாற் பகுத்தே விரித்துரைத் தலாலும், பண்டைக்காலத்துச் சமண் நூலாசிரியர்க்கு உயிர்களை அறிவுவகையாற் பகுத்தல் கோட்பாடன் றென்பது துணிந்துகொள்ளப்படும். ஆகவே, ஆசாரங்க சூத்திரத்தைப் போல், உயிர்களை ஒரு சிறிதாயினும் இடவகையாற் பகுத்தோதாத ஆசிரியர் தொல்காப்பியனார் சமண் சமயத் தவரால் யாண்டையதென மறுக்க. ஆசிரியர் தொல்காப்பியனார் சொற்பொருளாராய்ச்சியில் ஆழச்சென்று, அச்சொற்பொரு ளிலக்கணப் பரப்பெல்லாம் நுணுகி யறிந்தெடுத்து விளக்கி முடிக்கின்றுழி, உலகின்கட் காணப்படும் உயிர்த்தொகுதி களெல்லாந் தத்தமக்கு இயல்பாக அமைந்த ஒன்று முதல் ஆறு ஈறான அறிவுகள் விளங்குதற்கேற்ற உடம்புகளின் வைகி உயிர்வாழுமாற்றைத் தமது நுண்மாண் நுழைபுலத்தாற் கண்டறிந்து, அறிவான் மிக்க சான்றோரெல்லாங் கண்டு வியந்து பாராட்டும்படி அவற்றை அறுவகைப்படுத்தோதித் தமதொப்புயர் வில்லா இலக்கணக் களஞ்சியத்தைக் கட்டி முடித்தார். இங்ஙனம் உயிர்களை அறிவுவகையால் அறுவகைப்படுத்து விளக்கல் இலக்கண ஆராய்ச்சியின்பாற் படுவதல்லது, ஒரு சமயக் கோட்பாட்டின்பாற் படுவதன்றாம். உயிர்களை இடவகை யாற் பகுத்தலோ சமண் கொள்கைக்குப் பெரிதும் பயன்படுவதாகும். இவ்வாறு ஒன்றினொன்றியையாத இருவேறு பாகுபாடுகளின் இயல்பும் பயனும் அறிந்து பாராமல், தொல்காப்பியனாரைச் சமண் சமயத்தின்பாற் படுக்கப் புகுந்தார்தம் அறியாமையின் வலிவை என்னென்பேம்! அதுகிடக்க. இனித், தொல்காப்பியனார் சமண்சமயத்தின ரல்லரென்பதற்குப் பின்னுஞ் சில சான்றுகள் காட்டுதும். பழைய சமண் நூல்களினெல்லாம் நிலன் நீர் தீ வளி என்னும் நாற்பெரும் பொருள்களே சொல்லப்பட்டன வல்லாமல், அந் நான்கின் வேறான `விசும்பு (ஆகாயம்) ஒன்று உளதென்பது கூறப்படவில்லை. உத்தராத்தியயனத்திற் கூறப்படும் இடைவெளி ஐம்பெரும் பொருள்களிற் சேர்ந்தன்று; அஃது ஆண்டு `ஆகாச மெனக் கூறப்படாமல் `நப எனக் கூறப்படுதலே அதற்குச் சான்றாம். மற்று, ஆசிரியர் தொல்காப்பியனாரோ, நிலந் தீ நீர் வளி விசும்போடு ஐந்துங் கலந்த மயக்கம் உலக மாதலின் (மரபியல், 89) என்பதனால் `விசும்பு என ஐந்தாவதொரு பொருள் உளதென அருளிச்செய்கின்றார். சமண் நூலார் மக்களையுந் தேவர் நரகர்களையும் ஐயறிவுடைய உயிர் வகைகளில் அடக்கி, வானவர் மக்கள் நரகர் விலங்குபுள் ஆதி செவியறிவோடு ஐயறி வுயிரே (நன்னூல், உரியியல், 8) எனக் கூறாநிற்பர்; உத்தராத்தியயன நூலும் இங்ஙனமே கூறாநிற்கும். இவ்வைந்தறிவின் வேறாக ஆறாவது மனவறிவு ஒன்று உண்டென்பது பழைய சமண் நூல்களிற் காணப்பட வில்லை; பிற்காலத்து நூல்கள் மேற்கோள்கள் ஆகா. மற்று, ஆசிரியர் தொல்காப்பியனாரோ, மக்களினுங் கீழ்ப்பட்ட மாவும் மாக்களுமே ஐயறிவினவா மென்பதும், மக்களோ ஆறறிவினராவ ரென்பதும் போதா. மாவு மாக்களும் ஐயறி வினவே (மரபியல், 32) எனவும், மக்க டாமே ஆறறி வுயிரே (மரபியல், 33) எனவுந் தெற்றென மொழிகின்றார். மேலும், புத்தசமண் ஆசிரியர் தாம் இயற்றும் நூல்களின் முகப்பில் புத்தனை ஆசிரியர் அருகனையும் வணங்காதிரார். எல்லாச் சமயத்தவரும் எடுத்துப் பயிலும் இலக்கணம் நிகண்டு முதலான பொது நூல்களை ஆக்கும் வழியும் புத்தர் சமணர் அந் நூல்களின் முதலிற் புத்தக்கடவுள் அருகக்கடவுளுக்கு வாழ்த்து உரையாதிரார். இதற்கு `வீரசோழியம், `யாப்பருங்கலம், `யாப்பருங்கலக்காரிகை, `நன்னூல், `சூடாமணிநிகண்டு, முதலிய நூல்களின் கடவுள் வாழ்த்துச் செய்யுட்களே சான்றாம். மற்றுத், தொல்ப்பிய னாரோ தமது நூன் முகத்தில் அங்ஙனம் புத்தனையாதல் அருகனை யாதல் வணங்கக் காணாமையானும், அவர் அருளிச்செய்த பெரு நூலாகிய `தொல்காப்பியத்துள் ஓரிடத்தாயினும், புத்தக்கடவுள் அருகக்கடவுள் அவர் வகுத்த பௌத்த சமண் மதங்கள் முதலாயினவற்றைப் பற்றிய ஒருசிறு குறிப்புத் தானுங் காணப் படாமையானும், அவ் வாசிரியர் அதன்கட் கூறுங் கொள்கைக் குறிப்புகளெல்லாம் பண்டைக்காலத்தில் இப் பரதநா டெங்கணும் பரவியிருந்த தமிழ்ச் சைவ அந்தண முனிவரின் ஒழுகலாறுகளையும் அவர் தமக்குரிய சைவக் கோட்பாடுகளையும் தழீஇ நிற்றலானும் அவ்வாசிரியர் பௌத்த சமண்மதங்கள் தோன்றுதற்குப் பல்லாயிர ஆண்டு முற்பட்டிருந்தவராதல் ஒரு தலையேயாம். என்றித் துணையும் ஆராய்ந்து காட்டியவாற்றாற் `படிமை என்னுஞ் சொல்லாற் குறிக்கப்பட்ட தவ வொழுக்கம் பண்டைத் தமிழ்ச் சைவ அந்தணரின் தாபத வொழுக்கத்தையே குறிக்கு மென்பதூஉம், அதற்கு முதலான `ப்ரதிமா என்னுஞ்சொற் பழைய எசுர்வேதத்தின்கண்ணேயே காணப்படுதலின் அஃதறியாது அதனைச் சமண் மதத்தவர்க்கே உரிய சொல்லாக வரைந்து வைத்து அவ்வாற்றால் தொல்காப்பி யனாரைச் சமண் சமயத்தின் பாற்படுக்கலாயினாருரை நுணுகி விரிந்த ஆராய்ச்சியுணர் வில்லாதார்தம் போலியுரையா மென்பதூஉம், தொல்காப்பியனார் ஒன்று முதல்ஆறறிவு ஈறாக வைத்து உயிர்களை ஆறு தொகுதியில் அடக்கியமுறைக்கும், சமணர் நிலன் நீர் நெருப்பு காற்று என்னும் நான்கிடவகையில் வைத்து உயிர்களைப் பகுத்த முறைக்கும் வேற்றுமை சாலப் பெரிதாகலின் அவ் வியல்புக ளெல்லாம் பழைய சமண்நூல் மேற்கோள்கள் கொண்டு முற்ற ஆராய்ந்து பாராது நுனிப்புல் மேயும் யாடுபோல் தாம் அறிந்த சிறிதையே பெரிதாக மயங்கி அம் மயக்க வுணர்ச்சியால் தொல்காப்பியனாரைச் சமண ரென்றாருரை பொருந்தா தென்பதூஉம், அதுகொண்டு அவர் கி.மு. 3 ஆம் நூற்றாண்டிலிருந்தாரெனல் போலியுரையா மென்பதூஉம் நன்கு விளக்கப்பட்டன. அடிக்குறிப்புகள் 1. The Mahabharata, A criticism by Mr. C.V.Vaidya M.A. LL.B. see also his article on The Date of the Bharata Fight in The Student’s Brotherhood Quarterly Vol. VII. Vo. 4 Bombay. 2. The Artic Home in the Vedas. p.387. 3. See Dr. H.E. Ryle’s Commentary on Genesis, p. 118. 4. do do Introduction, P.XXXVI 5. Prof. A.A. Macdonell’s Sanskrit Literature, p.213. 6. Mr. G.V. Vaidya’s The Mahabharata, A. Criticism. p. 69,70. 7. செந்தமிழ், தொகுதி 18, பகுதி 9; தொகுதி 19, பகுதி. 4. 8. Dravidian India, By Mr. T.R. Sesha Iyengar. M.A., p. 158,159. 9. Ibida, P.170. 10. Tennent’s History of Ceylon; See also P. Arunachala,’s Sketches of Ceylon History, p.8.9. 11. Studies in South Indian Jainism, pp.38,39. 12. Studies in South Indian Jainism by Mr. M.S. Ramaswami Ayyengar, M.A., pp. 168 -171. 13. See. the Hindu for the 4th April, 1925. 14. Positive electricity. 15. Negative electricity. 16. சதபதபிராமணம், 1, 1, 1, 20. 17. தொல்காப்பியம், புறத்திணை இயல, 33 - ஆஞ் சூத்திரைவுரை. 18. தற்செயலாய் இப்பகுதி இவ்வாண்டின் கார்த்திகைத் திருநாளன்றே எம்மால் எழுதப்படலாயிற்று. 19. இறையனராகப் பொருள் முதற்சூத்திர உரை. 20. It was bot so much an invasion as an advance, and we can easily imagine that it must have an achievement of no small difficulty for a body of men necessarily very inferior in numbers, in the face of compact population, brave, stubborn, and strongly organized. Such the Dravidians are now, when the number, over twentyeight millions south of the Vindhya, and there is not the slightest reason to doubt that such in the main, they were at the early time of their long patriotic struggle Vedic India, p. 295. 21. It will be surprise to many that the Aryan population of the Indian continent should be so out of all proportion small when compared to the descendants and representatives of those races which the Aryan immigrants found in possion. The same difference must have existed on a still greater scale in those earliest times - and would alonse suffiee to stamp as irrational the theory of Aryan supremacy having been established by sheer conquest and force” Ibid,p.314. 22. To keep strictly within the information supplied by the Rig-Veda itself - Vasishtha was the bard of the Tritsu the leading and purest Aryan tribe, and Visvamitra was the bard of the Bharatas, their great enemies and one of the most powerful native tribes. He at one time had been with the Tritsu, and for whatever cause he left them -not improbably personal revenge - he played a conspicuous part in the confederacy which attempted to check the Aryan advance and increasing power. There is a hymn (53), in Book III, that of the Visvamitra family, which evidently alludes to this very thing. In the first part of the hymn it is said that when visvamitra conducted kings sudas sacrifies, Indra was gracious to him for the Rishi’s sake, and a great blessing is pronounced on the king, and his war -steed and the expedition on which he starts,. Then , quite suddenly, visvamitry is made to declare in his own person, that his prayers protect of imprecation against enemies who are not named, but whom tradition so positively inentified with vasishtha and his family that the priests of this house in later times never uttered these four verses, and tried not to hearthem when spoken by other Brahmans. It is most probable that the Visavamitras resented some distinction conferred upon the vasishthas, possibly their appointment as purohitas to the Tritsu royal family and went over to theri most powerful enemies, the Purus andharatas. The Tritsu and their allies were veictorious in the ensuingstruggle known as “the war of the ten kings” and both the bards have lfet descriptions of it and of the final battle on the Parushni, in some spirited hymns, the most undoubtedly historical of the collection. At a later period the followers of Vasishtha and his descendants represent the narrowl orthodox Brahminic school, with its petty punctillousness in the matter of forms, rites observances, its intolerance in the matter of forms, rites, observances, its on tolerance of everthing in -Aryan, its rigid separatism. This school it was which stood guard through all these ages. and up to our day the champion -and possibly orginally the institutor of case who advanced and upheld all the exaggerated claims of the Brahman priesthoo, to divinity. To the rule of the world and ownership of all it holds, to supernatural compelling powers over nature and the gods themselves through sacrifice and ascetic practices. and the likd. The followers of visvamitra nd his descendants, on the other hand, represented the school of liberalism and progress of conciliation and amalgamation. Vedic Indian, pp. 318 - 320. 23. The Vishnin bracketed with the Siva, which is thought to be a name of the Tugra, one of the oldest aboriginal Dravidian peoples, whom the Aryas had specially nick named ‘Sons of the Serpent’ and who under the religious designation of Siva, were very probably the originators of the worship of siva under the form or with the attribute of a snake:” Ibid, p.328. 24. See the great Vedic Scholar Prof. Max Muller’s ‘A History of Ancient Sanskrit Literature’, Panini office publication, p.29. 25. Ibid, PP.236 -238. 26. தைவ வேதேச காதிநாம். ஐதரேய பிராமணம், 7, 18. 27. See Dr. H.E.Ryle’s ‘Commentary on the Book of Genesis’ p.197. 28. எறிதரு கதிர்தாங்கி என்னும் பாலைக்கலிக்கு நச்சினார்க்கினிய ரெழுதிய உரையைக் காண்க. 29. சிவஞானமாபாடியம், 160 ஆம் பக்கம். 30. துறவிகள் பூணுலைக் களைந்தெறியுமாறு பிரமோபநிடதங்கூறுதல் காண்க. 31. செந்தமிழ், தொகுதி, 18, பகுதி. 9. 32. See Prof. Rhys. David’s Buddhist India, p. 145. and. Dialogues of the Buddha, Vo,. I. pp. 220 -221. 33. Dr. A. Barth’s ‘The Religions of India’ p. 140. 34. Introduction to Jaina Sutras by - Hermann Jacobi, pp. XXIV -XXIX. 35. See Mr. H. Krishna Sastri’s South - Indian Images of Gods and Goddesses, p. 83. 36. See epigraphia Indica, Vol. v. p. 3. 37. The Cambridge History of Ancient India, Vol. I. p. 106. 38. The Cambridge History of Ancient India, p.109. 39. See H. Jacobi’s Introduction to Jaina Sutras Vol. I.p. II. 40. Do Do Vil.2. pp. XXXVIII -XXXIX 23. தொல்காப்பிய காலத் தொடர்ச்சி இனி, ஆசிரியர் தொல்காப்பியனாரைக் கிறித்து பிறத்தற்குமுன் முந்நூறாம் ஆண்டிலிருந்த பாணினி முனிவர் காலத்திற்கும் பின்னே வைத்தல் வேண்டுமென வரைந்த பார்ப்பனருரை ஆராயற்பாற்று. யாம் `பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும் என்ற நூலில் ஆசிரியர் தொல் காப்பியனார் இற்றைக்கு நாலாயிரத்து முந்நூறாண்டுகட்கு முன் இருந்தாரென்று பலஏதுக்கள் கொண்டு நாட்டிய காலத்தைத், தாமும் பல தக்கசான்றுகள் காட்டி மறாமல், யாம் கூறிய காலக்கணக்கு அளவுக்கு மிஞ்சியதெனவும், ஆகவே அதனை மறுத்தல்வேண்டா வெனவும் அப் பார்ப்பனர் மொழிந்தனர். தமிழர் அல்லாத ஆரியர், எகுபதியர், சாலடியர், பாபிலோனியர் முதலியோரெல்லாம் ஐயாயிரம் பதினாயிரம் ஆண்டுகட்கு முன்னரே நாகரிகத்திற் சிறந்து விளங்கினா ரென்று கூறுவதெல்லாம் அளவுக்கு மிஞ்சிய தாகாது! ஆனால் தமிழர் நாலாயிர ஆண்டுகட்கு முன்னரே இலக்கண இலக்கியங் களுடையராய் நாகரிகத்திற் சிறந்து விளங்கினா ரென்றுரைப்பது மட்டுந்தான் இப்பார்ப் பனருக்கு அளவுக்கு மிஞ்சியதாய்த் தோன்றி விட்டது! இவர் ஏதொரு சான்றுங் காட்டாது, உண்மைச் சான்றுடன் எழுதிய எமதுரையினைத் தாம் கருதுதற்குரித்தன்றென விட்டனரேனும், அறிவான் மிக்கோர் எமதுரையின் மெய்ம்மையும் அவருரையின் பொய்ம்மையும் எளிதிற் றேர்ந்து எமதுரையினைக் கைக்கொள்வ ரென்க. அது கிடக்க. முதலில் இவர் தொல்காப்பியம் இடைச் சங்க நூலென்னும் ஒரு பொருந்தாவுரையைத் தழுவி, அவ் விடைச்சங்கங் கிறித்து ஆண்டுக்கு முன்னும், கடைச்சங்கம் அவ்வாண்டின் துவக்க காலத்திலும் இருந்தனவெனக் கரைந்தார். `பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பான் குமரிநாடு கடல்வாய்ப்புகுவதன்முன் அஃதாவது இற்றைக்கு 5000 ஆண்டுகட்கு முன் தலைச்சங்க காலத்தில் இருந்தோனாவன் என்பதை மேலே 701 ஆம் பக்கத்தில் விளக்கினாம். அவன்மேற் பாடப்பட்ட செய்யுள் ஒன்றில் `ஞமன் என ஞகரத்தை முதலாக உடைய சொல் (புறம். 6) ஒன்றுவரக் காண்கின்றேம். தொல்காப்பியனார் இப்பாண்டிய அரசன் காலத்திலேனும், அல்லது அவற்குப் பின்னேனும் இருந்தனராயின், தாம்இயற்றிய இலக்கண நூலில் ஞகரத்தை முதலாகவுடைய சொல்லையுந் தழுவியிருப்பர். ஆனால், அவர் தங்காலத்தில் ஞகரத்தை முதலாகவுடைய சொல் தமிழில் வழங்காமையின், அதனை விலக்கி ஆ, எ, ஒ எனும் மூவுயிர் ஞகாரத்துரிய (எழுத்து, 64) என்று சூத்திரஞ் செய்வாராயினர். இவ்வொரு பெருஞ்சான்று கொண்டே தொல்காப்பியனார் பாண்டியன் முதுகுடுமியின் காலத்திற்கும் அஃதாவது இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகளுக்கும் முன்னரே இருந்தா ரென்பது நன்கு துணியப்படும். இன்னும், கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அஃதாவது இற்றைக்கு இரண்டா யிரத்து இருநூறு ஆண்டுகளுக்குமுன் தொல்காப்பியனார் இருந்தனராயிற், சிறிதேறக்குறைய அக்காலத்தில் இயற்றப்பட்ட `பரிபாடற், செய்யுட்களிற் காணப்படுஞ் `சகடம் `சடை, சண்பகம், `சமம் `சமழ்ப்பு சமைப்பின் முதலான சகர முதற் றமிழ் மொழிகளையும் `ஞமன் என்னும் ஞகரமுதற் றமிழ் மொழியினையுந் தழுவியிருப்பர்; ஆனால், அவர்தங் காலத்தில் அச் சொற்கள் வழங்காமையின் ஞகர முதன்மொழி தமிழில் வரா என்று சூத்திரஞ் செய்தாற் போலவே, சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே அ ஐ ஔ வெனும் மூன்றலங் கடையே (எழுத்து, 62) எனச் சகர முதன்மொழிகளுந் தமிழில் வரா எனச் சூத்திரஞ்செய்திட்டார். ஆகவே, இச் சொற்கள் தமிழில் வழங்கிய கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கும், ஞகர முதன் மொழி வழங்கிய கி.மு. முப்பதாம் நூற்றாண்டிற்கும் முன்னே தொல்காப்பியனார் இருந்தமை கன்மேற் கட்டிய அரண்போல் நாட்டப்படுமென்க. எனவே, தொல்காப்பியனார் தலைச்சங்க காலத்தவரல்லால், இடைச்சங்க காலத்த வரல்லரென ஓர்ந்துகொள்க. இனி, அவர், தொல்காப்பியச் சிறப்புப் பாயிரச் செய்யுளிற் போந்த ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்பதிலுள்ள `ஐந்திரம் என்பதை ஆராயப்புகுந்து, அது வடமொழியிலுள்ள வியாகரணமா மென்றும், அதனை யாக்கிய இந்திரனும், அட்டாத்தியாயியை ஆக்கிய பாணினியும் ஒரே காலத்த வராதல் வேண்டுமென்றும், பாணினி கி.மு. மூன்றாம் நூற்றாண் டிலிருந்தவாரகலான் ஐந்திரம் உணர்ந்த தொல்காப்பியர் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கும் பிற்பட்டவராதல் வேண்டு மென்றுங் கூறுவதுடன், பனம்பாரனார் இயற்றிய சிறப்புப் பாயிரச் செய்யுள் பிற்காலத்தே செய்து தொல்காப்பியத்தில் நுழைக்கப்பட்ட தாயிருக்கலாமென்றும் நுவல்கின்றார். இவ்வாறுரைக்கும் உரைகளின் இடையே ஒன்றினுந் துணிவு பிறவாமலுந் தக்க சான்றுகள் காட்டாமலும் முன்னொடு பின் முரணுமாறு இவர் செய்யுங் குழப்பங்கள் பல.1 வடமொழி இலக்கண நூலாசிரியரில் இந்திரனே முதலாசிரியனாவனென்பது தைத்திரீய சம்ஹிதையிற் (7, 4, 7) சொல்லப்பட்டிருக்கின்றது. `தைத்தீரிய சம்ஹிதை கிருஷ்ணயஜுர் வேதத்தைச் சேர்ந்ததாகையால், அஃது இற்றைக்கு நாலாயிரத்து ஐந்நூறாண்டுகளுக்கு முற்பட்ட தென்பது மேற்காட்டியவாற்றால் தானே போதரும். நாகோஜிபட்டரது `பரிபாஷேந்து சேகரத்திற்கு உரை யெழுதிய வைத்தியநாதரும் பழைய வையா கரணிகளாவார் இந்திரன் முதலாயினார்2 என்றுஅவ்வுரைமுகத்திற் கூறினார். இந்திரனுக்குப் பின்னும் பாணினிக்கு முன்னும் ஒருவர்பின் னொருவராய் வந்த வடமொழி இலக்கண ஆசிரியர் அறுபத்து நால்வரென்பது பெறப்படுதலால்,3 ஓர் ஆசிரியர்க்கு முப்பதாண்டுகள் விழுக்காடு வைத்துக் கணக்குச்செய்யவே அறுபத்து நால்வர்க்கும் ஓராயிரத்துத் தொளாயிரத் திருபஃது யாண்டுகள் ஆகின்றன. இனிப் பாணினி முனிவர் இருந்த காலம் கி.மு. 700 என்று முடிவு செய்யப்பட்டிருத்தலால், வடமொழி முதல் இலக்கண நூலாசிரியன்இந்திரன் இருந்தது இற்றைக்கு நாலாயிரத்தைந் நூறியாண்டுகளுக்கு முன்னென்பதும் முடிக்கப்படும். ஆரியவேத காலத்தையும், குமரிநாடு கடல்கொண்ட காலத்தையும், பாரதப்போர் நிகழ்ந்த காலத்தையும், தலைச்சங்க காலத்தையும், தொல்காப்பியனார் காலத்தையும் மேலே பல முகத்தால் ஆராய்ந்து காட்டிய காலக்கணக்கோடு, ஆரிய இலக்கண முதலாசிரியன் இந்திரன் காலமும், ஈண்டுக் காட்டியவாறு கணக்குச் செய்யின் முழுதொத்து நிற்கக் காண்டலால், இவ் வுண்மை முடிபுக்கு மாறாக, இந்திரனும் அவற்கு இரண்டாயிர மாண்டு பிற்பட்ட பாணினி முனிவரும் ஒரே காலத்தின் ரென்றாருரை பெரியதொரு பிழைபாட்டுரை யாம் என்க. அற்றன்று, இந்திரனே பாணினிகாலத் திருந்தவன் அல்லன்; இந்திரன் ஆக்கிய ஐந்திரன்வழிக் கி.பி.முதல் நூற்றாண்டிற் செய்யப்பட்ட `காதந்தரமும்4 கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இயற்றப்பட்ட `ஜைநேந் திரமும்5 என்னும் நூல்களே, பனம்பாரனாரது சிறப்புப் பாயிரவுரையில் `ஐந்திரம் என அவற்றின் முதல் நூற்பெயராற் கூறப்பட்டன வென்று கொள்ளாமோ வெனிற், கொள்ளாம்; இப் பரதநாடெங்கணும் உள்ள ஆன்றோராற் பெரிது பாராட்டிப் பயிலப்பட்டு வந்த பழைய விழுமிய இலக்கண நூலாகிய பாணினீயத்தைப் பயிலாது, அருகிமிகச் சிலராற் பயிலப்பட்டு வந்த `ஜைநேந்திரம் முதலிய பின்னூல்களைத் தொல்காப் பியனார் கற்று நிரம்பினா ரென்றல் ஒவ்வாமையானும், தொல்காப்பியனார் பாணினீயத்திற்குப் பிற்பட்டவராயின் ஒரு முதனிலையிற் பிறந்த பல சொற்களை ஆராய்ந்துஅவ்வொரு முதனிலையிற் கொணர்ந்தடக்கும் பாணினீய முறையின் நுட்பமும் பயனும் உணர்ந்து தாமுந் தமிழ்ச்சொற்களை அம்முறையில் ஆராய்ந்தடக்குவரே யன்றி மொழிப்பொருட் காரணம் விழுப்பத் தோன்றா (தொல்காப்பியம், சொல், 394) எனக் கூறாராகலானும், ஐந்திரத்தின் வழி வந்த `காதந்தரம் `ஜைநேந்திரம் முதலிய நூல்கள் ஒரு காலத்தனவன்றி வெவ்வேறு காலத்தனவாகலின் அவை தம்மையெல்லாந் தொல்காப்பியனார் ஒருங்கு கற்றற்குக் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இருந்தாலல்லது அவர்க்கு அஃது இயலாமை யானும், அவ்வழி நூல்கள் பலவற்றையுங் கல்லாத ஒருவரை ஐந்திரம் நிறைந்த என்றல் பொருந்தாமையானும், `ஐந்திரம் என்னும் முதல் நூலை மட்டும் பயின்றார் ஒருவரையோ அவ்வாறு ஐந்திரம் நிறைந்த என்றுரைத்தல் ஏற்புடைத்தா மாகலானும், திருநாவுக்கரசு நாயனா ரிருந்த கி.பி.ஆறாம் நூற்றாண்டிலிருந்து தொல்காப்பியனார் நூல் செய்தனராயின் அக்காலத்திற் பெரிதும்பரவி வழங்கிய `கட்டளைக்கலித்துறை `பல்வகை விருத்தப் பாக்கள் முதலியவற்றிற்கும் ஏனைச் சொற்கள் சொற்றொடர்கட்கும் இலக்கணங்கூறல் இன்றியமையாததாகவும் அவற்றுள் ஒருசிறிதாயினும்அவர் உரையாமையானும், பௌத்தம் சமணம் முதலான மதக் குறிப்புகளாதல் அம் மதத் தெய்வங்களாதல் அவரால் ஓர் எட்டுணையுஞ் சுட்டப் படாமையானுந், தொல்காப்பியனார் நுவன்ற இலக்கணங்கள் அத்துணையும் மிகப் பழைய அஃதாவது ஐயாயிர ஆண்டுகட்கு முற்பட்ட செந்தமிழ்ச் சொற்பொருள் வழக்குகளையே குறிப்பனவா யிருத்தலானுந், தொல்காப்பியனார் பயின்ற `ஐந்திரம் என்பது ஆரியத்தில் முதல் இலக்கண ஆசிரியனாகி இந்திரன் செய்த நூலேயா மென்று கோடலே தொல்காப்பியனாரிருந்த மிகப் பழைய காலத்திற்கு இசைவதொன்றாமாகலானும், பனம்பாரனார் மொழிந்த `ஐந்திரம் இந்திரன் ஆக்கிய முதல் நூலேயாகுமன்றி அதற்குப் பன்னெடுங் காலம பின்னெழுந்த `காதந்தரம் முதலியனவாகாவென்று கடைப்பிடித் துணர்ந்துகொள்க. இனி, ஆங்கில ஆசிரியர் சிலரது கோட்பாட்டைத் தழீஇப் பாணினி முனிவர் ».K.மூன்wh« நூற்றாண்டில் இருந்தாரென அவர் மொழிந்ததூஉங் கொள்ளற்பாலதன்று. ஐரோப்பிய ஆசிரியருள்ளும், நம் பரதநாட்டுக் கற்றாருள்ளும் வடமொழி நூற் கால அளவைகளைக் கணக்கிட்டார் தொகை இருதிறப் பட்டு நிற்கின்றது. அவருள் ஒருசாரார் மிகப் பழைய இருக்குவேதப் பாட்டுகளுக்கே கி.மு. 1300 க்குமேற் பழைமை சொல்ல ஒருப்படுகின்றிலர். மற்றொரு சாரார் அவை தமக்குக் கி.மு.4000க்கு மேற்பழைமை சொல்வர்.6 இவ்வாறு காளிகட்டத்தின்கண் ஓர் அறிஞர் இருக்குவேதப் பதிகங்கள் பல இற்றைக்கு முப்பதினாயிர ஆண்டுகளுக்குமுன் இயற்றப்பட்டன வாகுமென்று அரிய பல சான்றுகள் கொண்டுவிளக்கி வருகின்றார்.7 இங்ஙனமே மாபாரதப்போர் நிகழ்ந்த காலமும், பாணினி முனிவர் காலமும் இருதிறப்படுத் துரைக்கப்படு கின்றன. இவை தம் பழைமைகளைக் குறைத்துக் கூறுவார்தங் காலக்கணக்குப் பழைய தமிழ்நூலாராய்ச்சிக்கும், ஏனை எகுபதியர், சாலடியர், எபிரேயர் முதலான மக்களின் நாகரிகப் பழைமைக்கும் இசைந்து வாராமையின் அஃது உண்மையுடைய தாகாது. இருக்குவேத முதலியவற்றின் மிகப் பழைய காலத்தை உண்மையாராய்ச்சியாற் கண்டுரைப்பார்தங் காலக்கணக்கே, பழந் தமிழ்மக்களின் பண்டை நாகரிக வரலாற்றோடு ஒத்துநிற்கக் காண்டலின் அதுவே உண்மையென்று கொள்ளற் பாற்று. `என்பகைவற்கு இரண்டு கண்கள் கெடுவதாயின், எனக்கு ஒரு கண் கெடினுங் கெடுக என்னும் அழுக்காறுடையான் போல், தமிழ்நூல்களின் பழைமையைக் குறைத்து விடுதற்கு உதவுமாயின் வடநூல்களின் பழைமையுங் குறையினுங் குறைகவென்று பார்ப்பனர் சிலர் அழுக்காற்றாற் கருதுகின்றனர். இதற்குத், தொல்காப்பியனாரைக் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிற் படுப்பிக்கவேண்டிய பார்ப்பனர், கி.மு. முப்பதாம் நூற்றாண்டிற்கு முன்னிருந்த ஐந்திர ஆசிரியன் இந்திரனையுங், கி.மு.ஏழாம் நூற்றாண்டி லிருந்த பாணினி முனிவரையுங் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற் படுப்பித்ததே சான்றாம். பாணினி முனிவர் காலத்தைப் பற்றித் தமக்குமுன் ஆராய்ந்தார் முடிபுகளையெல்லாந் திரும்பவும் நுணுகி யாராய்ந்து, அவரது காலங் கி.மு.ஏழாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதாதல் ஒருவாற்றானும் இசையாதென்று கிருஷ்ண பேல்வால்கர் என்னும் அறிஞர் `சமகிருத வியாகரண வகைகள்8 என்னுந் தமது நூலில் நன்கு விளக்கி யிருத்தல் காண்க. இன்னும் அப் பார்ப்பனர், பனம்பாரனார் உரைத்த பாயிரவுரை தமது கோட்பாட்டிற்கு இடர்விளைத்து அதனைப் பாழ்செய்தல் கண்டு, அது பிற்காலத்தெழுதித் தொல்காப் பியத்துள் நுழைக்கப்பட்டதா யிருக்கலாமென்று மெல்லக் கரைந்தார். இப்போதுள்ள உரைகளில் மிகப் பழையதாகிய நக்கீரனார் தம் `இறையனாரகப் பொருளுரை முகத்திலேயே வடவேங்கடந் தென்குமரி யாயிடை என்பது தொல்காப்பியத்தில் உளதாகக் குறிக்கப்பட்டிருத் தலானும் அவர்க்குப் பின்வந்த இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் முதலான எல்லா உரைகாரரும் அதனைத் தொல்காப்பியச் சிறப்புப்பாயிரச் செய்யுளென்றே மொழி தலானும், அப் பாயிரச்செய்யுள் இயற்றினார் தொல் காப்பியனார் என்று களவியலுரையும் தொல்காப்பியனா ரோடு ஒருசாலை மாணாக்கராய பனம்பாரனார் என்று ஏனையுரைகளுங் கூறுதல்கொண்டு அப்பாயிரச் செய்யுள் இயற்றினார் பெயர் ஐயறவுக்கு இடனாயிருப்பினும் எல்லா உரைகாரரும் அதனைத் தொல்காப்பியத்தில் உள்ளதெனக் கிளத்தலின் ஆண்டு அதன்கண் ஐயுறுதற்கு இடன் இன்மையானும், அது பிற்காலத்தெழுதி நுழைக்கப்பட்ட தென மெல்லக் கிளந்தார் உரைபொய்யுரையேயாமென விடுக்க. இனி, ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்தைக் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிற் படுப்பித்த பார்ப்பனருரையாலுந் தொல்காப்பியம் இரண்டாயிர ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைமையுடைத் தென்பது போதரலால், அவ்வளவு பழைமைகூட அதற்குச் சொல்லுதற்கு மனம் பொறாத மற்றொரு பார்ப்பனர், தொல்காப்பியனார் அறிந்த `ஐந்திரம் என்பது `ஜைநேந்திரமே என நாட்டுதற்குப் புகுந்து, சிலப்பதி காரத்தில் அதற்குச் சான்றுகள் தேடிக் காட்டுவாராய்ப், புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின் விண்ணவர் கோமான் விழுநூல் எய்துவிர் எனவும், கப்பத் திந்திரன் காட்டிய நூலின் மெய்ப்பாட் டியற்கை விளங்கக் காணாய் எனவும் போந்த `சிலப்பதிகார அடிகளிற் குறிக்கப்பட்ட இந்திரன் நூல் `ஜைநேந்திரேமே எனப் புகன்றார். மேற்காட்டிய அடிகள் சிலப்பதிகாரத்தின் `காடுகாண் காதையில் இருக்கின்றன.மதுரைக்குச் செல்லும் வழி கேட்ட கோவலனுக்கு, அவனை எதிர்ப்பட்ட ஒரு மறையோன் அவ்வழியின் அடையாளங்களைச் சொல்லிக் கொண்டு போம்பொழுது, அழகர் மலையின் பக்கத்தே மூன்று பொய்கைகள் உள. அவற்றுட் புண்ணிய சரவணம் என்னும் பொய்கையில் நீராடுவிராயின் வானவர்க்கு அரசனான இந்திரன் இயற்றிய சிறந்த நூலினுட் பொருளை உணரப்பெறுவீர் என்று கூறக், கோவலனுடன் இருந்த கௌந்தியடிகள் அச் சொற்கேட்டு ஆயுட் கற்பத்தினை யுடைய அவ்விந்திரன் இயற்றிய நூலின் மெய்ப்பொருளை அருகன் அருளிச்செய்த பாட்டியலில் விளங்க அறிவாயாக என அறிவுறுத்தின ரென்பதே மேலையடிகளின் பொருளாகும்; விண்ணவர் கோமானாகிய இந்திரன் இயற்றிய நூலென்பது `ஐந்திரவியாகரணமே யென இவ் வடிகளுக்கு உரையெழுதிய அரும்பதவுரைகாரரும் அடியார்க்கு நல்லாரும் மொழிந்தனர்; இவ்வுரைகளிலன்றிச், சிலப்பதிகார நூலில் எங்கும் `ஐந்திரம் என்னும் பெயர் காணப்படவில்லை. உரைகாரர் கூறியவாறே யெடுப்பினும், `ஐந்திரம் இந்திரன் இயற்றிய நூலென்றே மேலையடிகளிற் பெறப்படுகின்ற தல்லாமற், `பத்ரபாகு என்னுஞ் சமண் முனிவன் இயற்றிய `ஜைநேந்திரம் என்பது அவற்றின் கட் சிறிதும் பெறப்படவில்லை. சிறிது தமிழறிவுடை யார்க்கும் மேலையடிகளின் பொருள் இதுவேயாதல் தெற்றென விளங்காநிற்கும். `கப்பம் என்னுஞ் சொல்நீண்ட வாழ்நாள் எல்லையினைக் குறிக்குங் `கல்பம் என்னும் வடசொல்லின் திரிபாகுமென்றே உரைகார ரிருவருங் கூறினர்; அதன் உண்மைப்பொருள் அவ்வாறிருக்கத், தங்கருத்து நிரம்புதற் பொருட்டு அச் சொல்லுக்குக் `கல்பசூத்திரம் எனப்பொருள் செய்து `பத்ரபாகு என்னும் முனிவன் செய்த கல்சூத்திரத்திலே இந்திரன் ஆக்கிய ஐந்திரவியாகரணத்தின் உண்மை காணாயோ என அப் பார்ப்பனர் அவ் வடிகளுக்கு உரை யுரைத்துக் கொண்டார். `ஐநேத்திரம் என்னும் நூல் பூஜ்யபாதர் என்னுந் தேவநந்தியாற் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதே யல்லாமற் கி.மு. நான்காம் நூற்றாண்டிலிருந்த பத்ரபாகுவினாலாவது, கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்த மகாவீர ராலாவது இயற்றப்பட்ட தன்று. `தனஞ்சயகோசம் என்னும் `ஜைநஹரிவம்ஸ நூலும், போப தேவரென்னும் ஹேம சந்திரரும் `பூஜ்யபாதரென்னுந் தேவநந்தியே ஜைநேந்திரம் இயற்றினாராவர் எனக் கூறுமாற்றால் இவ்வுண்மை நன்குவிளங்கும்; பூஜ்யபாதரே `ஜைநேத்திரத்தின் ஆசிரியரா வரெனப் பேல்வால்கரும் முடித்துக் கூறினார்.9 இனி, `ஜைநேந்திரம் இயற்றப்பட்ட காலங் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியாமென்பதும் அவரால் நன்கு காட்டப்பட்டது.10 கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கையை ஆண்ட `முதற்கயவாகு மன்னன், சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகளின் காலத்தில் இருந்தவன் என்பது சிலப்பதிகார நூலினுள்ளேயுங்11 குறிக்கப்பட்டிருத்தலால், ஜைநேந்திரம் இயற்றப்படுதற்கு 250 ஆண்டுகட்கு முன்னரேயுள்ள சிலப்பதிகாரத்திற், பிற்பட்ட அச்சைநேந்திர நூல் குறிப்பிடப்பட்டதென்றல் யாங்ஙனம் பொருந்தும்? `மொட்டைத் தலைக்கும் முழந் தாளுக்கும் முடிப்போடுதலோடு ஒப்ப. இயைபு சிறிது மில்லாதவைகளை இயைத்து வைப்பதில்இப் பார்ப்பனரன்றி மற்று எவர் வல்லார்! அது நிற்க. அமற்காட்டிய சிலப்பதிகார அடிகளிற் குறிக்கப் பட்டது. `ஜைநேந்திரம் என்னும் வடமொழியிலக்கணம் ஆதல் செல்லாதென்றது ஒக்கும்; `பழைய பிராதி சாக்கியங்களையும் `ஐந்திரத்தையும் பின்பற்றிச் செய்த `காதந்தரம் என்னும் வியாகரணநூல், தக்கணத்திற் கி.பி. முதல் நூற்றாண்டில் அரசுபுரிந்த `சாதவாகனன் காலத்த தாகலின், அதுவே அச் சிலப்பதிகார அடிகளிற் சுட்டப் பட்ட தாகுமென்று கொள்ளாமோவெனிற்; கொள்ளாமன்றே; என்னை? அங்கே சுட்டப்பட்டது விண்ணவர் கோமான் இந்திரன் இயற்றிய நூலேயல்லாமற் பிறிதன்று; வெளிப் படையாகச் சுட்டப்பட்ட தொரு நூலை விடுத்துச் சுட்டப்படாத தொன்றனை ஆண்டுக் கொணர்ந்து பிணைத்தல் பெரிதுங் குற்றமாகலினென்க. அற்றாயினும், இந்திரன் ஆக்கிய நூற்பொருளை அருகதேவன் அருளிய ஆகம நூல்களிற் பரக்கக் காணலாம் என்று கௌந்தியடிகள் கூறும் பின்னிரண்டடிகளைக் கொண்டு, ஐந்திர நூற் பொருளை அகத்தடக்கிய சமண் நூல்கள் சிலப்பதிகாரத்திற்கு முன்னரே உளவாதல் பெறப்படுமாலோ வெனிற் கூறுதும்: மேலே குறித்த சிலப்பதிகார அடிகளில் இந்திரன் ஆக்கிய நூல் என்று பொதுவகையாற் குறிக்கப்பட்டிருப்பதற்கு `ஐந்திரவியா கரணம் எனச் சிறப்புவகையாற் பொருள் செய்வது யாங்ஙனம் பொருந்தும்? இளங்கோவடிகள் வேறியாண் டேனும் இந்திரன் ஆக்கியது ஐந்திரமே எனக் கூறினரா? இல்லையே. அவ்வாறிருக்க, அவ்வடிகளிற் சுட்டியது ஐந்திரவியாகரணமே என்ற உரைகாரருரை பொருத்த முடையதாகக் காணப்பட வில்லை. மற்றுக், கௌந்தியடிகள் மொழிந்த விடையை உற்று நோக்குங்காற், சமண் சமயக் கோட்பாடுகள் பொதிந்த ஒரு நூல் இந்திரன் எனப் பெயரிய ஓர் அரசனால் இயற்றப்பட்டு முன்னரே யுளதாயிற் றென்பதே அதனாற் போதரும். அருகதேவன் அருளிச் செய்த ஆகமம் என்பது வீட்டுநூற் பொருளை யறிவுறுத்துவ தாயிருத்தல் வேண்டுமேயன்றி, இலக்கணமாகிய கருவி நூற்பொருளை யறிவுறுத்துவதாய் இருத்தலாகாது. ஆகவே அவ்வாகமப்பொருளோடு ஒப்பச் செய்த நூலும் வீட்டு நூற்பொருளையே யுணர்த்துவதா யிருத்தல் வேண்டுமென்று தெளிந்து கொள்க. ஆகவே, மேலே காட்டிய சிலப்பதிகார அடிகளிற் சமண் முனிவர் செய்த வடமொழியிலக்கண நூலாகிய ஜைநேந்திரஞ் சுட்டப் பட்டதெனக் கரைந்த பார்பனருரையும் அவரோ டொப்பக் கூறும் ஏனையோருரைகளும் பொள்ளற்பட்டுப் போலியா யொழிந்தமை காண்க. அவை அவ்வா றொழியவே, ஐந்திரம் நிறைந்த ஆசிரியன் தொல்காப்பியனைச் சமண் மதத்திலும், அம் மதத்தவர் இருந்த கி.பி.ஆறாம் நூற்றாண்டிலும் படுப்பிக்க முயன்றார் முயற்சியும் புரைபட்டொழிந்தமை காண்க. இனி, இலங்கைத் தீவின் வரலாற்றிற் சொல்லப்பட்ட மூன்று கடல்கோள்களிற் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் நிகழ்ந்த மூன்றாம் கடல்கோளுக்குச் சிறிது முன்னரேதான் `தொல்காப்பியம் இயற்றப்பட்டதாகல் வேண்டுமென்ற மற்றொரு பார்ப்பனருரையின் பெற்றியினை ஆராய்வாம். மூன்றில் முதற் கடல்கோள்கள் கி.மு. 23, 87 இல் நிகழ்ந்ததென `இலங்கை வரலாறு கூறாநிற்ப, அதற்குமுன் `தொல்காப்பியம் இயற்றப்பட்டதாகுமென உரையாமல், மூன்றாங் கடல்கோளுக்கு முன்னர்த்தான் அஃதியற்றப் பட்டதெனக் கூறுதற்கு அவர் காட்டிய ஏது வென்னை? ஒன்றுமேயில்லை. மேலே யாம் பலவாற்றானும் விளக்கிக் காட்டிய பகுதிகளால், தொல்காப்பியங் `குமரிநாடு கடல் கொள்ளப்படுமுன் இயற்றப்பட்ட தொன்றென்பது பெறப்படும். குமரிநாடு இருந்த முதலூழிக்கட் செய்யப்பட்ட செங்கோன்றரைச் செலவு என்னும் நூலின் மிகப் பழைய வுரையில் பஃறுளியாற்றுத் தலைப்பாய்ச்சல் ஏழ்தெங்க நாட்டு மூத்தூர் அகத்தியன் எனவும், முதலூழி, முன்கடல் கொள்ளப்பட்ட பெரும்பரப்புத் தமிழ் நிலம் எனவும் போந்த உரைக் குறிப்புகளாற், பஃறுளியாறு பாய்ந்த குமரிநாடு மிகப் பெரியதொரு நிலனாயிருந்ததென்பது புலனாம். இவ்வுண்மை, பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள என்று சிலப்பதிகாரத்துந் தெளித்துக் கூறப்படுதல் காண்க. இவ் வடிகளுக்கு உரையெழுதிய `அடியார்க்கு நல்லாரும், அக்காலத்து அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி யென்னும் ஆற்றிற்கும், குமரியென்னும் ஆற்றுக்கும் எழு நூற்றுக்காவதவாறும் இவற்றின் நீர்மலி வானென மலிந்த ஏழ்தெங்கநாடும் ஏழ்மதுரைநாடும் ஏழ்முன் பாலைநாடும் ஏழ்பின் பாலைநாடும் ஏழ்குன்றநாடும் ஏழ்குணகாரைநாடும் ஏழ்குறும்பனைநாடு மென்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும் காடும் பதியும் தடநீர்க் குமரி வடபெருங் கோட்டின்காறும் கடல்கொண் டொழிதலாற் குமரியாகிய பௌவமென்றார் என்று கடல்கொண் டொழிந்த பெருநிலப் பரப்பாகிய குமரிநாட்டின் வகைகளெல்லாம் விரித்துரைத்தார். இஞ்ஞான்று கிடைக்கப்பெறாத அரிய பெரிய தமிழ் நூல்கள் பற்பலவற்றை நன்காராய்ந்துணர்ந்த இவ் வுரைகாரர் உரைத்த குமரிநாட்டின் பெரும்பரப்பு, மேலே காட்டிய செங்கோன்றரைச் செலவின் உரையாசிரியர் கூற்றோடு பெரிதொத்து நிற்றல் காண்க. இங்ஙனமே `களவியல் முகவுரை யுரைகாரரும், இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும், `கலித்தொகையில் க0சஆம் கலியின் ஆசிரியரும் பெரும்பாலும் ஒத்துரைப்பர். இவருட் சிலர் கூறுவன சுருக்கமாயும், வேறு சிலர் கூறுவன விரிவாயும் இருக்கும்; அடியார்க்கு நல்லார் பண்டை நூல்கள் பலவற்றை நன்காய்ந்த பெரியாராகலின், அவர் இவ் வரலாற்றைப் பழையநூற் சான்றின்றி விரித்துரையார்; இவருரையிற் கண்ட `ஏழ்தெங்கநாடு செங்கோன்றரைச் செலவு என்னும் முதலூழி நூலின் உரையிற் காணப் படுதலோடு, `எழுநூற்றுக்காவதவாறு என்பதனாற் பெறப்பட்ட பெருநிலப்பரப்பும் அப் பழையவுரையிற் குறிக்கப்பட்டமை காண்க. `பெருந்தமிழ் நிலமாகிய குமரிநாடு கடல்வாய்ப் புக்க செய்தி தொன்றுதொட்டு நூலாசிரியர் உரையாசிரியர் களால் வரலாற்றுமுறை வழாமல் உரைக்கப்பட்டு வரா நிற்கவும், அடியார்க்கு நல்லார் காட்டியவாறு அத்துணைப் பெருநிலங் கடல்நீரால் விழுங்கப்பட்டது மக்கள் தோன்றுதற்கு எத்தனையோ நூறாயிர ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்ததால் வேண்டுமே யன்றி ஐயாயிர ஆண்டுகட்குமுன் நிகழ்ந்தது ஆகாதெனவும் அவருரைத்தவுரை அவரே கட்டிய பொய்யுரையா மெனவும், கடல் கொண்ட அத்தமிழ்நிலம் ஒரு சிற்றளவினதேயா மெனவும், வேறொரு பார்ப்பனப் புலவர் செந்தமிழ் 14ஆந் தொகுதியின் 11, 12ஆம் பகுதிகளில் எழுதினார். இப்போது குமரி முனைக்குத் தெற்கேயுலவும் `இந்திய மாக்கடல் பல்லாயிர ஆண்டுகளுக்குமுன் பெருநிலனா யிருந்ததென்பது இஞ்ஞான்றை `நிலநூல் வல்லார் எல்லார்க்கும் ஒப்ப முடிந்த தொன்றேயாம். இப் பார்ப்பனர் தாமும் அதனை உடம்படுகின்றார். அப் பெருநிலப் பரப்பைக் கடல்நீர் விழுங்கியதும் இப் பார்ப்பனர்க்கும் ஏனை இயற்கை நூல் வல்லார்க்கும் உடம்பாடாவதேயாம்.12 பண்டைக்கால மக்கட் பகுதியாரின் வரலாறுகளை ஆராய்ந்து நூலெழுதி னாரில் மிகச் சிறந்தாரான ஜான்லப்பக் என்னும் ஆசிரியர், நிகிரோவர் என்னும் மக்களின் பண்டை வரலாற்றினை நன்காய்ந்து பார்த்துப் பின்வருமாறு முடிவு கூறுகின்றார். நிகிரோவர் ஆப்பிரிக்கா தேயத்திற் `சகாரா என்னும் பாலை நிலத்திற்குத் தெற்கேயுள்ள நாடெங்கும் உறைகின்றனர்; அப்பாலை வெளியை அவர்களாவது மற்றை விலங்கினங் களாவது கடந்து சென்றதேயில்லை; இம் மக்கள் அரேபியா, பாரசிகம், இந்துதானம், சீயம், சீனம் முதலிய நாடுகளிலும் யாவா, சுமத்திரா, போர்னியோ முதலிய தீவுகளிலுங் காணப்படாவிடினும், மடகாகர் அந்தமான் தீவுகள், மலாய் நாடு, பிலிப்பைன், புதுக்கினியா, புதுஹீபிரிட், புதுக்காலிடோனியா, பிஜித் தீவுகளிலுந், தாமானி யாவிலுங் காணப்படுகின்றனர். இவர்கள் கப்பலேறிச் செல்லும் வழக்கமுடைய ரல்லராகையால், இவர்கள் மேற்கூறிய நாடுகளிலும் தீவுகளிலும் பரந்து காணப்படுதற்கு, ஆப்பிரிக்காவின் கீழ்கரையிலிருந்து இந்தியமாக் கடலினூடே நெடுகத் தொடர்ந்து நீண்டு கிடந்த தீவுகளாவது அல்லது மிகப்பெரிய நிலமாவது இருந்ததாகல் வேண்டும். அப்போது இந்தியக் கடல் இப்போதுள்ள சகாரா பாலைநிலத்தில் நின்றுலவினதாயிருத்தல் வேண்டும்13 என்று அவ் வியற்கை நூற்பேரறிஞர் பெரிதாராய்ந் துரைக்கும் மெய்யுரையால், இப்போதுள்ள இந்திய மாக்கடலின் ஒரு பெரும்பகுதி பல்லாயிர ஆண்டுகளுக்கு முன் ஒரு பெருநிலமாயிருந்த தென்பதூஉம், அந் நிலத்தின் கண் உறைந்த மக்களின் கால் வழியில் வந்தோரே இப்போது ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியமாக்கடலின் நெடுக ஆங்காங்குள்ள தீவுகளிற் சிதர்ந்து காணப்படும் நிகிரோவ ராவரென்பதூஉம் இனிது பெறப்படுகின்றன வல்லவோ? இனி, இப் பெருநிலப்பரப்பு முழுதும் ஒரே காலத்திற் கடல்நீரால் விழுங்கப்பட்டதெனக் கோடல் பெரியதொரு பிழைபாடாம். சகாரா என்னும் பாலை நிலத்தின்கண் நின்ற கடலே, நிலவுருண்டையின் மையத்தே காலங்கடோறுந் தோன்றும் அதிர்ச்சிகளின் அளவுக்குத் தக்கபடி அவ்விடத்தை விட்டுப் பெயர்ந்து குமரிநாட்டை மெல்ல மெல்ல விழுங்கியதாகும். சகாரா நிலத்தின் சுற்றளவு காற்கோடி மைல் ஆகும்; இந்திய மாக்கடலின் சுற்றளவோ இரண்டரைக்கோடி மைல் ஆகும். ஆகவே, சகாராவில் நின்ற கடல் நீரால் விழுங்கப்பட்ட குமரிநாட்டின் சுற்றளவு சிறிதேறக் குறைய இருபத்தைந்து இலட்சம் மைல் உள்ளதாகும். சகாராவின் நிகளம் மூவாயிரம் மைல் என்று கணக்கிடப் பட்டிருத்தலாற், குமரிநாட்டின் நிகளமும் மூவாயிரம் மைலாகுமென்றும், அதன்அகலம் எண்ணுறு மைலுக்குக் குறையாதென்றுங் கணக்குச் செய்தல் இழுக்காது. கடல்கொண்ட நாற்பத் தொன்பது நாடுகளும் 700 காவதம் பரப்புள்ளன என்று அடியார்க்குநல்லார் கூறியதை ஆராயப் புகுந்த அப் பார்ப்பனர், குமரிமுனைக்குந் தென்றுருவத்திற்கும் இடையே யுள்ள அகலம் ஏழாயிர மைலிற் குறைந்துளதாகலின், எழுநூறு காவதம்அல்லது ஏழாயிர மைல் கடல்கொண்ட தென்ற அடியார்க்கு நல்லாருரை பொருந்தாதென்றார். அகலத்தில் ஏழாயிர மைல் என்பது அடியார்க்கு நல்லாருரையிற் பெறப் படாமையின், அவ்வாறு பொருள் செய்த அப் பார்ப்ப னருரையே பொருந்தா வழுவுரையா மென்க. அடியார்க்கு நல்லார் உரைத்த அப்பரப்பின் அளவு ஏன் நிகளத்தையே சுட்டுவதா யிருத்தலாகாது? என்று வினாவுவார்க்கு அவர் விடைகூறுமாறு யாங்ஙனம்? குமரி என்னும் யாற்றுக்கும் பஃறுளி யென்னும் யாற்றுக்கும் இடையேயுள்ள நிலம் 700 காவதமுளதென்ற வளவானே அஃதகலத்தின் அளவையே சுட்டுவதென்றால் பொருந்துமோ? அவ்விரண்டு யாறுகளைச் சுட்டிக் கூறினமையானே அவற்றினிடைப் பட்ட நிலத்தின் அகலம் சிறிதென்பது தானே பெறப்படா நிற்க, நிகளத்தில் அங்ஙனம் இருபுறத்து எல்லைகளுஞ் சுட்டப் படாமையின் அந் நிகளத்தின் பெரும்பரப்பு எல்லாரானும் அறியப் படாமைபற்றி அதுவே அங்ஙனம் 700 காவதமென்று அவராற் குறிக்கப்பட்டதென்பது தானே போதரும். இனி, உரைகாரர் அடியார்க்கு நல்லார் காலத்திலும் அவர்க்கு முற்சென்ற காலத்தினுங் `காவதம் என்னுஞ் சொல் எத்தனை நாழிகை வழிக்குப் பெயராய் வழங்கிற்றென் பதனைத் தெளிய அறிதற்குத் தக்க சான்றுகள் பழைய தமிழ்நூல்களில் ஆராய்ந்த மட்டில் அகப்பட்டில. ஆயினும், இற்றைக்கு 2200 ஆண்டுகட்குமுன் இயற்றப் பட்டதாகிய கௌடிலியரது அர்த்த சாதிரத்தில் 14000 முழங்கொண்டதே ஒரு யோஜனையென்று சொல்லப் பட்டிருத்தலால், அதுவே ஒரு சின்னக் காவதமாம் என்றுங் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகிய `கணிதசார சங்கிரகத்தில் 32000 முழங்கொண்டதே ஒரு போஜனை யென்று கூறப்பட்டிருத்தலால் அதுவே ஒரு பெரிய காவதமாம் என்றும் ஓர் அறிஞர் எழுதினார்.14 மேற்காட்டிய வடநூல்கள் இரண்டிலும் `யோஜனை யினளவு இத்துணை யென வரையறுத்துரைக்கப்பட்டிருக் கின்றதே யல்லாமல், `காவதம் என்னுஞ் சொல்லாதல் அதனளவாதல் அவற்றின்கட் சிறிதுங் குறிக்கப்பட்டில. இனி, மற்றோர் அறிஞர் பழைய தமிழ்ப்பாட்டுகள் சிலவற்றின். சான்று கொண்டு அணு 8 -க் கொண்டது 1-தேர்த்துகள், தேர்த்துகள் 8-க் கொண்டது 1-பஞ்சிழை, பஞ்சிழை 8 -க் கொண்டது 1 -மயிர் 8 -க் கொண்டது 1-மணல் மணல் 8-க்கொண்டது 1-கடுகு, கடுகு 8 -க் கொண்டது 1 - நெல், நெல் 8 - க் கொண்டது 1 - விரல், விரல் 12 கொண்டது 1 - சாண், சாண் 2 - கொண்டது 1 - முழம், முழம் 4 -கொண்டது 1-கோல், கோல் 500 -கொண்டது 1-கூப்பீடு, கூப்பீடு, 4 -கொண்டது 1-காதம்என நன்கு விளக்கிக் காட்டி யிருத்தலோடு, இந் நீட்டலளவைக் கணக்கு முற்றுந் தனித்தமிழ் நாட்டு வழக்கேயா மெனவும் நாட்டி யிருக்கின்றார்.15 இவ்அறிஞர் தாம் சான்றாகக் காட்டிய பாட்டுகள்இன்ன நூலின்கண் உள்ளனவென்பது காட்டிற்றிலராயினும், இவர் காட்டிய இந் நீட்டலளவைக் கணக்குத் தனித்தமிழ் நாட்டுவழக்கேயா மென்பதற்கு, இதன்கணுள்ள சொற்கள் அத்துணையுந் தனித்தமிழ்ச் சொற்களாயே யிருத்தலுங், `காதம் என்னுஞ் சொற்பழைய வடநூல்களுட் காணப்படாமையுமே சான்றாமென்பது. எனவே, ஒரு காவதம் என்பது 8000 முழங்கொண்ட ஒரு நெடுவழியே யாதல் தெளியப்படும். அஃது இஞ்ஞான்றை ஆங்கில அளவைப்படி இரண்டே கால் மைலும் எண்பது முழங்களும் ஆகின்றது. ஆக, எழுநூறு காவத நிகளமென்பது சிறிதேறக்குறைய ஆயிரத்தறுநூறு மைல்களே யாகின்றது. ஆப்பிரிக்கா தேயத்தின் கீழ்க்கரையிலிருந்து கிழக்கே சுமத்திரா தீவகத்தின் மேல்கரைவரையிற் கடல் கொண்ட நிலத்தின் நிகளஞ் சிறிதேறக்குறைய நாலாயிர மைலாகும். ஆப்பிரிக்காவின் வடக்கிலுள்ள சகாரா பாலைநிலத்தின் நிகளம் மூவாயிர மைல் என்பது முன்னரே காட்டினேம். அதன் அகலம் ஆயிரம் மைல் உளது. இப் பெரும்பரப்பில் நின்ற கடல்நீர் வற்றி, ஆயிரத்தறுநூறு மைல் அஃதாவது எழுநூறு காவத நிகளமுள்ள குமரிநாட்டை விழுங்கிற் றென்பதில், உண்மை நிகழ்ச்சிக்கு மாறானது ஏதுமேயில்லை. ஆதலால், இவ்வுண்மை நிகழ்ச்சியைத் தமது காலத்து வழங்கிய நூற்சான்றுகள் கொண்டு நன்குவிரித்து விளக்கிய அடியார்க்கு நல்லாருரையைப் புனைந்து கட்டிய பொய்யுரை யென்ற பார்ப்பனருரையே புரைபட்டுப் பொய்படுவதா மென்க. அற்றேல், ஆங்கில ஆசிரியர் பலர், தெற்கின் கண்ணதான பெருநிலப்பரப்பு மக்கள் தோன்றுதற்குப் பன்னூறாயிர ஆண்டுகளுக்கு முன்னரே கடல்நீரால் விழுங்கப்பபட்டதெனக் கூறுவதென்னையெனின்; குமரி நாட்டினும் நான்மடங்கு பெரிதாய், அக் குமரிநாட்டின் தெற்கிலிருந்த பெருநிலம் மட்டுமே மக்கள் தோன்றுவதற்குப் பன்னூறாயிர ஆண்டுகட்கு முன்னர்க் கடலுள் அமிழ்ந்துபோயிற் றென்பதே அவர்தங் கருத்தாவதாம். மக்கள் தோன்றுதற்கு முன் அழிந்துபட்ட அந்நிலப் பரப்பைப் பற்றி ஈண்டு ஆராய்ச்சியில்லை. மக்கள் தோன்றியபிற் பல்லாயிர ஆண்டுகள் கழித்துக் கடல்வாய்ப் புக்க குமரிநாட்டைப் பற்றியதே யாம் ஈண்டு எடுத்துக்கொண்ட ஆராய்ச்சியின் பெற்றியாம் என்க. அற்றன்று, மக்கள் தோன்றுதற்கு முன்தெற்கின்கண் இருந்த பெருநிலத்தைக் கவர்ந்த கடல் கோள் ஒன்றுமே பெரியதொரு கடல்கோளாம்; மற்று, அவர் தோன்றியபின் நிகழ்ந்தனவெல்லாம் அத்துணைப் பெரிய கடல்கோள்கள் ஆகா; அவையெல்லாஞ் சிறுசிறு நிலப்பகுதிகளை அடித்துச் சென்ற சிறுசிறு கடற் பெருக்குகளேயா மெனின்; மக்கட் டோற்றத்திற்குப்பிற் பெருங்கடல்கோள்கள் ஏதும் நிகழ்ந்தில தென்று அவர் அங்ஙனந் துணிந்து சொல்லுதற்குச் சான்றென்னை? உலக இயற்கையிற் பண்டுதொட்டு நிகழ்ந்து வராநின்ற சாலப் பெரிய மாறுதல்களெல்லாம் இப் பார்ப்பனர் தங் கருத்துப் படிதான் நிகழ்ந்து வருகின்றன போலும்! லப்பக் என்னும் ஆங்கில ஆசிரியர் மக்கட்டோற்றத்திற்குப் பின் இந்திய மாக்கடலால் விழுங்கப்பட்ட நிலப்பரப்பு மிகப் பெரிதாதல் வேண்டுமென நன்காய்ந்து முடிவுகட்டிய உரைக்கூற்றை மேலே எடுத்துக்காட்டின மாகலானும், அவர் கூறிய அம்முடிபு குமரிநாடிருந்த காலத்தில் இயற்றப்பட்ட செங்கோன்றரைச் செலவு என்னும் நூற்கூற்றொடுங், குமரிநாடு கடல் கொண்டபின் இயற்றப்பட்ட தமிழ்நூற் கூற்றுக்களொடும் முழுதொத்து நிற்கக் காண்டலானும் அஞ்ஞான்றிருந்த தமிழகமாகிய அக்குமரிநாடு பெரிய தொரு நிலப்பரப்பேயா மென்பதூஉம், அதனை விழுங்கிய கடல்கோளும் பெரியதொரு கடல்கோளேயா மென்பதூஉம் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெள்ளிதின் விளங்கற் பாலனவாமென்க. தமிழ்நூல் வடநூற் சான்று களானும், இஞ்ஞான்றை ஆங்கில மாப்பேராசிரியர் செய்து போதகரும் வியத்தகு ஆராய்ச்சிகளானும் ஐயுறவுக்குத் தினைத்தனை இடமுமின்றி நாட்டப்பட்டதாகிய இம் மெய்ந்நிகழ்ச்சி யினை அடியோடு புரட்டி அப் புரட்டால் தமிழின் தொன்மையைக் குறைத்துவிடுவதற்கு ஆவலுற்றது உழலும் அப் பார்ப்பனரது செயல், மலையைக் கல்லியெறிதற்கு மிக முயன்று அது கைகூடாமையின் மாயையின் றோற்றமாம் அம்மலை என்றுமில்லாத வெறும் பொய்ப்பொருளே யாமெனக் கரைந்து மகிழும் அவர் தம் இனத்தாரது உரை போற் கரைந்துமகிழுநர் செயலாய் நகையாடி விடுக்கற்பால தாகும். மேலாராய்ந்து காட்டியவாற்றால், மக்கட்டோற்றத் திற்கு முன் தெற்கின் கணிருந்த பெருநில வெல்லைகளைப் பற்பல காலங்களிற் கவர்ந்து வந்த கடல்கோள்கள் பற்பல உளவாயினும் அவையெல்லாம் ஈண்டை யாராய்ச்சிக்கு வேண்டப்படா வெனவும், மக்கட்டோற்றத்திற்குப் பல்லாயிர ஆண்டுகள் கழித்துத் தோன்றிப் பண்டைத் தமிழகமாகிய குமரிநாட்டின் பெரும் பரப்பை வாய்ப்பெய்து கொண்ட பெருங் கடல்கோள் புறத்தேயுள்ள தமிழர்தம் நாடு நகரங்களை அழித்தொழிப் பினும், அவர் தமதகத்தே ஆராய்ந்து எழுப்பிய மாப்பேரறிவுநிலையாகிய தொல்காப்பியத்தை யழிக்கும் வலியிலதாய், அதன் றொன்மை மாட்சியினை யஞ்சி, அதுவீறி நிற்கும்இத் தென்றமிழ் நாட்டின் கீழ்கரை மேற்கரைப் பக்கங்களைத் தன் திரைக்கைகளாற் கவைஇத், தான் முன் செய்பிழையினைக் கூறி ஓவென ஓலமிட்டு, அதன்அடிக்கீழ் வீழ்ந்து அரற்றாநிற்கின்ற தெனவும் ஓர்ந்து கொள்க. இனிச், `செங்கோன் றரைச்செலவு என்னும் நூலுரையினும், அடியார்க்குநல்லா ருரையினுங் குமரி நாட்டிலிருந்தனவாகக் குறிப்பிடப்பட்ட `ஏழ் தெங்கநாடு `ஏழ்பனைநாடு என்பவை களில் அழிந்தனபோக இப்போது எஞ்சி நிற்பனவே: ஈழம், நக்கவாரம், மோரிசு, சுமத்திரா, யாவா முதலான தீவுகளாகும்.இத் தீவுகளிலெல்லாந் தென்னையும் பனையுமே மிகச் செழித்திருத்தலும் மேலை நிகழ்ச்சிக்குப் பின்னும் ஒரு பெருஞ்சான்றாம். ஆகவே, கி.மு. 2387 இல் நிகழ்ந்த முதற்கடல் கோளே குமரிநாட்டின் மாப்பெரும் பகுதியை வாய்ப்பெய்து கொண்டதாகு மென்பதூஉம், அக் கடல்கோளுக்கு முன்னர்ச் செய்யப் பட்டுத் தமிழ் வழங்கும் நிலனெங்கும் உலாயதே `தொல்காப்பியம் ஆமென்பதூஉம் இனிது தெளியக் கிடந்த வாறு காண்க. மற்றுக், கி.மு. 504 இலும், கி.மு. 306 லும் நிகழ்ந்த ஏனைக் கடல்கோள்கள் இரண்டுந், `திருச்சீர் அலைவாய் (வடமொழியிற் `கபாடபுரம் எனப்பட்ட திருச்செந்தூர்க்குப் பக்கத்தே எஞ்சி நின்ற சில நாடு நகரங்களை இரண்டுமுறையாக அடித்துச்சென்ற சிறுசிறு கடல்கோள் களாகு மல்லாமற், குமரிநாட்டை முழுதுங் கவர்ந்த பெருங் கடல்கோள் ஆகாதென்பதுங் கருத்திற் பதிக்கற்பாற்று. இனித், தொல்காப்பியத்துக் களவியல், 44 ஆஞ்சூத்திர மாகிய மறைந்த வொழுக்கத்து ஓரையும் நாளும் என்பதன்கட் காணப்படும் `ஓரை என்னுஞ் சொல்லைக் கிரேக்க மொழி யெனக் கொண்டு, அவ்வாற்றால் தொல்காப்பிய காலத்தைக் கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் பாற் படுப்பிக்க வேண்டினார் கூற்றைச் சிறிது ஆராய்வாம். `ஓரை என்னுஞ்சொல் இன்னமொழிக்கு உரியதென்று ஆராய்ந்து உறுதிப் படுத்தியபின், அதனை ஒரு சான்றாகக் கொண்டு ஒரு முடிவுக்கு வருதலன்றோ உண்மையாராய்ச்சி செய்வாரது கடமையாகும்? அங்ஙனம் ஆராய்ந்து பாராது `ஓரை எனும் அச் சொல்லைக் கண்ட அத்துணையானே, அதனைக் கிரேக்க மொழியெனத் துணிந்துரைத்தல் பெரிதும் பிழைபடுவ துடைத்தாம். இங்ஙனமே இஞ்ஞான்று ஆராயாமல் வடமொழிகளெனவும் பிறமொழிகளெனவும் கொள்ளப்படும் நூற்றுக் கணக்கான சொற்கள் ஆராய்ந்து பார்க்கப் பார்க்கத் தனிச்செந்தமிழ் மொழிகளாதலை அறிவுடையோர் (Dr. Caldwell) காட்டா நிற்பர். யாமும் மேலே சில காட்டிப் போந்தாம். இனி, `ஓரை என்னுஞ் சொல் தமிழ்மொழியிலுங் கிரேக்க மொழியிலும் வடமொழியிலுங் காணப்படுகின்றது. மூன்று மொழிகளிலும் பொதுவாகக் காணப்படும் இச் சொல்லைக் கிரேக்க மொழிக்கே யுரியதென வரைந்து கட்டினவர், அவ்வாறு தாம் அதனை வரைந்து கட்டுதற்குக் காட்டிய சான்றென்னை? ஏதுமே காணேம். தொல்காப் பியத்திற்கு முற்பட்ட கிரேக்க நூலிலாயினும் வடநூலிலா யினும் `ஓரை என்னும் அச் சொல் வழங்கப்பட்டிருக்குமாயின், அதனை அப் பிறமொழிகளுக்கு உரிய சொல்லாகக் கொள்ளுதல் ஒக்கும். தொல்காப்பியம், கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேதான் இயற்றப்பட்டதாகும் என இச் சொல் வழக்கையே ஒரு சான்றாகக் கொண்டு நாட்டப்புக்கவர், அச்சொல் கிரேக்க மொழியிலேனும் வடமொழியிலேனுங் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்குமுன் இயற்றப்பட்ட நூல்களில் வழங்கப் பட்டுளதெனக் காட்டல் வேண்டுமன்றோ? அவ்வாறு செய்தலை விடுத்து, அதனை வாளா கிரேக்க மொழி யென்றால், அதனை ஆராய்ச்சியறிவுடையார் கைக்கொள் வரோ? யாம் ஆராய்ந்த மட்டிற் கி.மு. மூன்றாம் நூற்றாண் டிலாதல், அதற்கு முற்பட்ட காலத்திலாதல் இயற்றப்பட்ட கிரேக்க நூல் ஆரிய நூல்களில் `ஓரை என்னுஞ்சொல் வழங்குதலைக் கண்டிலம். கி.பி. ஆறாம் நூற்றாண்டிலிருந்த வராகமிகிரரால் மட்டுங் கிரேக்கரின் வான் நூலாராய்ச்சியைத் தழுவி `ஹோரா சாதிரம் என்னும் ஒரு நூல் வடமொழியில் எழுதப்பட்டிருக்கின்றது. அதுகொண்டு `ஹோரா என்னுஞ்சொற் கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்குச் சிறிது முற்பட்ட காலத்திற் கிரேக்க மொழியில் வழங்கப்பட்டமை மட்டும் அறியப்படும். 16கி.மு.இரண்டாம் நூற்றாண்டிலிருந்த கிரேக்க ஆசிரியரான `ஹிப்பார்க்க காலத்திலேதான் கிரேக்கரின் வான் நூலாராய்ச்சி ஓர் ஒழுங்குபெறத் துவங்கி அவர்க்கு முந்நூறாண்டுகளுக்குப்பின் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இடையிலிருந்த `தாலமி என்னுங் கிரேக்க ஆசிரியாராலேதாம் அது முற்றுப் பெறலாயிற்று. ஆகவே, கி.மு. இரண்டாம் நூற்றாண்டிற்குங் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்திலேயேதான் `ஹோரா என்னுஞ் சொல் கிரேக்க மொழியில் வழங்கப் பட்டதாகல் வேண்டுமென்பது துணியப்படும். படவே, கி.மு. இரண்டாம் நூற்றாண்டிற்குமுன் கிரேக்க மொழியில் வழங்காத ஓரை என்னுஞ் சொல்லை அக்கிரேக்கமொழிக்கே உரியதென்றலுங், கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாகிய `தொல்காப்பியத்தை அந் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதாகிய அச் சொற்கொண்டு கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இயற்றப் பட்டதாகு மென்றலும் என் முப்பாட்டன் திருமணக்காலத்தில் யான் அத்திருமணப் பந்தற்காலைப் பிடித்து நின்றேன் எனக்கூறும் ஒருபேரனது சான்றுமொழியோ டொப்பவைத்து நகையாடற் பாலனவா மென்க. அற்றேல், `ஓரை என்னுஞ் சொல் எந்தமொழிக்கு உரியதெனின்; மிகப்பழைய தமிழ்நூலாகிய தொல்காப் பியத்தில் அச்சொற் காணப்படுமாறுபோல் அங்ஙனமே பழைய கிரேக்கநூல் ஆரிய நூல்களில் அது காணப்படாமையானுந், தொல்காப்பியத்திற்கு மூவாயிரத்தைந்நூறாண்டு பிற்பட்டுக் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந் துண்டான கிரேக்க ஆரிய வான் நூல்களின் மட்டும் அது காணப்படுதலானும் அது பண்டைச் செந்தமிழ் மொழிக்கே யுரிய தூயதமிழ்ச் சொல்லாதல் உணர்ந்துகொள்க. அங்ஙனமாயின் அதற்குத் தமிழ்ச் சொற்பொருள் கூறுகவெனின் கூறுதும். `ஓரை என்னும் அச்சொற்கு முதனிலை `ஓர் என்பதாகும். ஓர்ப்பு என்பது ஒரு பொருளை ஆராய்ந்து உணர்தல்17 என்று ஆசிரியர் நக்கீரனார் உரை கூறினாராகலின், அவ்வாறு ஆராய்ந்து உணரப்பட்ட வான்மீகி வட்டமே (இராசிச் சக்கரமே) ஓரையென வழங்கப்படலாயிற்று. பண்டைத் தமிழ்மக்கள் வழங்கிய `ஓரை என்னும் இத் தமிழ்ச்சொல்லே கிரேக்க மொழியிற் சென்று `ஹோரா என அம் மொழியினியல் புக்கு ஏற்பத் திரிந்து, பின் வடநாட்டில் வந்து குடியேறிய கிரேக்கர் வாயிலாக வடமொழியிற் புகுவதாயிற்று. அற்றேற், பண்டைத் தமிழ்மக்கள் தமக்கு நெடுந் தொலைவிலிருந்த மேனாட்டவராகிய கிரேக்கருடன் கடல் தாண்டிச்சென்று கலந்தாலன்றோ, அச்சொல்அவர் மொழியிற் கலத்தற்கு இடனுண்டாம்? எனின், அந்நிகழ்ச்சியும் ஒருசிறிதுகாட்டுதும்: மேல்கடற் பாலதான சாலடி நாட்டின் (Chaldea) தலைநகராகிய `ஊர் என்னும் இடத்தே நிலத்திற் புதைந்துகிடந்த பழைய வேந்தரின் அரண்மனை களைக் கிளறிப் பார்க்கையிற், கி.மு. 3000 த்தில் அஃதாவது இற்றைக்குச் சிறிதுகுறைய ஐயாயிர ஆண்டுகளின்முன் அங்குஅரசுபுரிந்த `ஊரேயா என்னும் வேந்தனாற் கட்டப்பட்ட அரண்மனையின் கண் தமிழ்நாட்டுத் தேக்கு மரத்துண் டொன்று கண்டெடுக்கப் பட்டது; அது கொண்டு, பண்டைத் தமிழர்கள் ஐயாயிர ஆண்டுகளுக்கு முன்னரேயே கடல் தாண்டிச் சென்று மேல்நாட்டவரொடு வாணிகம் நடாத்தினாரென ஆங்கில வரலாற்று நூலாசிரியர் முடிவுகட்டிச் சொல்கின்றனர்.18 அதுவேயுமன்றி, விவிலிய நூலிற் சொல்லப்பட்ட `சாலமன் என்னும் வேந்தன் மேல் நாட்டில் அரசுபுரிந்த கி.மு.1000த்தில், அஃதாவது இற்றைக்கு மூவாயிர ஆண்டுகளுக்கு முன்னமே மயிற்றோகை, யானைமருப்பு, குரங்கு, அகிற்கட்டை முதலான பண்டங்களை, அவ் வரசனுடைய மரக்கலங்கள் `உவரி19 என்னும் இத் தென்னாட்டுத் துறைமுகத்தில் வந்து ஏற்றிக் கொண்டுபோன வரலாறுங், கருவாப் பட்டை, கருப்பூரம் முதலான பண்டங்கள் தமிழ்நாட்டிலிருந்து கிரேக்க நாட்டிற்கு இற்றைக்கு இரண்டாயிர ஆண்டுகளின் முன்னரே ஏற்றிச் செல்லப்பட்டமையின் அப் பண்டங்களின் தமிழ்ப்பெயர்கள் கிரேக்க நூல்களிற் கலந்த வரலாறுங் `கால்ட்வெல் ஆசிரியரால் நெடுநாட்கு முன்னமே நன்கெடுத்துக் காட்டப்பட்டன.20 இங்ஙனமாக ஐயாயிர ஆண்டுகளுக்கு முற்றொட்ட காலத்திருந்தே தமிழர்களும் மேனாட்டவர்களும் ஒருங்கு கலந்து வந்தமை ஐயமின்றித் தெளியக்கிடத்தலின், அம் மேனாட்டு மொழிகளுட் கலந்த பலப்பல தமிழ்ச் சொற்களில் `ஓரை யென்பதும் ஒன்றாதல் காண்க. அற்றேலஃதாக, இற்றைக்கு இரண்டாயிர ஆண்டுகளாக மேனாட்டவர்களே வான்நூ லாராய்ச்சியிற் சிறந்தவராகக் காணப்படுகின்றனரன்றி, இப் பரதநாட்டின் கண் உள்ளார், அவருள்ளும் இத் தென்றமிழ் நாட்டவர் அத்துணைப் பழைய காலத்தே அதில் வல்லுநரா யிருந்தன ரென்பது கண்டிலமாலெனின்; ஆராயாதுகூறினாய்; வானூலா ராய்ச்சி மதிவழியளவு (சந்திரமானம்) பகல்வழியளவு (சூரியமானம்) எனவும் இருதிறப்படும். மேனாட்டவரிற் பண்டைநாளிலே வானூலாராய்ச்சியிற் பெரும்புலமை பெற்று வயங்கினார் பாபிலோனியர் அல்லது சாலடியரெனப்படும் பழைய நாகரிக மக்களே யாவர். என்றாலும் இவர்கள் `பகல்வழியளவு என்னுஞ் சூரியமான ஆராய்ச்சியிற் றேர்ந்தவர் களேயல்லாமல், `மதிவழியளவு என்னுஞ் சந்திரமான ஆராய்ச்சியிற் றேர்ந்தவரல்லர், அதனை யுணர்ந்தவரும்அல்லர். வான் மீன்களைப் பன்னிரண்டு வீடுகளாக (இராசிகளாகப்) பகுத்து, அவற்றினூடு செல்லும் பகலவன் இயக்கத்தைக் கொண்டு 360 நாட்கள் அடங்கிய ஓர் ஆண்டினைப் பன்னிரண்டு திங்களாக வகுத்தனர்.21 ஆனாலும் இருபத்தேழு அல்லது இருபத்தெட்டு வான்மீன் நிலைகளை யுணர்ந்து, அவற்றூடு செல்லும் மதியின் இயக்கத்தைக் கண்டறிந்து நாள்களுங் கோள்களும் வகுத்த நம் இந்திய மக்களின் `மதிவழியளவாகிய சந்திரமான ஆராய்ச்சியைப் பழைய பாபிலோனியர் ஒரு சிறிதுந் தெரிந்தவர் அல்லர். இந்நாளில் ஆரியமொழி நூல்களை எழுத்தெண்ணிக் கற்று ஆரிய மொழியினும் மேனாட்டு மொழியாராய்ச்சியினும் மாப்பெரும் புலவராய்த் திகழ்ந்த மேனாட்டாசிரியரான மாக்மூலர், இவ் வரிய பெரிய உண்மையினை இற்றைக்கு 44 ஆண்டுகட்கு முன்னமே பின்வருமாறு எடுத்துக் காட்டினார்: பாபிலோனியர் கண்டறிந்த வான் வீடுகள் பகலவன் வழியவாகும். முளையெழுத்துப் பட்டையங்களை அடுத்தடுத்து ஆராய்ந்தமையாற் பற்பல உண்மைகள் புலனாயினவேனும், மதிவழியளந்த வான்வீட்டாராய்ச்சி பாபிலோனியர்பா லிருந்ததென்பதற்கு ஏதொரு சுவடுதானும் அகப்பட்டிலது. மதிவழியளவு பாபிலோனியர்க்குத் தெரிந்த தொன்றென்றே வைத்துக் கொள்வோமாயினும், வேத நூல்களையும் பழைய வேதச்சடங்குகளையும் அறிந்தவர் எவரும், அவ் எளிதான வான் அளவையினைப் பாபிலோனியரிடமிருந்து இந்துக்கள் இரவலாக வாங்கிக் கொண்டனரென நம்புதற்குத் தாம் எளிதில்இசையார். வேத வேள்விகளிற் பெரும்பாலன, பகலவ னியக்கத்தைவிட மதியினியக்கத்தையே சார்ந்து நிகழ்வன வென்பது எவரும் நன்குணர்ந்ததேயாம் ***** ஒவ்வொரு நாளுஞ் செய்யப்படுஞ் சடங்குகளாகிய மாப்பெரு வேள்விகள் ஐந்துங் காலை மாலையிற் செய்யப்படும் எரியோம்பலுமே யன்றி, வேதகாலத்தில் முதன்மை பெற்றன; `தர்சபூரணமாசம் என்னும் மறைநிலா முழுநிலா வேள்விகளும், பருவகால வேள்விகளாகிய `சாதுர்மாசியமுமே யாகும்.22 இங்ஙனமாக இப் பரதநாட்டின்கணிருந்த பண்டை நன்மக்களே வான் நூலாராய்ச்சியிற் சிறந்து விளங்கினமை காட்டியதோடு, `மதிவழியளவு இருக்குவேத இரண்டாம் மண்டிலத்தின் 32 ஆம் பதிகத்திலும், எட்டாம் மண்டிலத்தின் 3 ஆம் பதிகத்திலுங் குறிப்பிடப்பட்டிருத்தலையும் முதன்முத லெடுத்துக் காட்டினார். இருக்குவேதத்தின் மட்டுமேயன்றி, எசுர் வேதத்திலுந், தைத்திரீயகத்தினுஞ், சாந்தோக்கியத்தினும் வான்நூலாராய்ச்சிக் குரிய சான்றுகள் இருத்தலையுங் குறித்துப் போந்தார்.23 இவரைப்போலவே வீபர் என்னும் மேனாட் டாசிரியரும் பழைய ஆரியவேத நூல்களிலிருந்து சான்றுகள் பல எடுத்துக்காட்டி, மிகப்பழைய நாளிலேயே இப் பரதநாட்டவர் மதிவழியளவை யாகிய வானூலா ராய்ச்சியிற் புலமையுடையராயிருந்தமை தெளித்து விளக்கினார்.24 இவர்களெல்லார்க்கும் முன்னரேயே கோல்புரூக் என்னும் ஆசிரியர் இவ்வுண்மைகளை எடுத்துரைத்தனர். இனி, `மதிவழியளவைத் தவிரப் `பகல்வழியளவு வடநாட்டிலிருந்த நம்பரத நன்மக்கட்குத் தெரியாதாயினுந், தென்னாட்டிலிருந்த பண்டைத் தமிழ் நன்மக்கட்கு அவ்விருவகை யளவுந் தொன்றுதொட்டே தெரிந்திருந்தன வென்பதற்குப் பதினோராம் பரிபாடலிற் போந்த, விரிகதிர் மதிய மொடு வியல்விசும்பு புணர்ப்ப எரிசடை யெழில்வேழந் தலையெனக் கீழிருந்து தெருவிடைப் படுத்த மூன்றொன்பதிற் றிருக்கையுள் உருகெழு வெள்ளிவந் தேற்றியல் சேர வருடையைப் படிமகன் வாய்ப்பப் பொருடெரி புந்தி மிதுனம் பொருந்தப் புலர்விடியல் அங்கி யுயர்நிற்ப அந்தணன் பங்குவின் இல்லத் துணைக்குப்பால் எய்த இறையமன் வில்லிற் கடைமகர மேவப்பாம் பொல்லை மதியம் மறைய வருநாளில் வாய்ந்த பொதியின் முனிவன் புரைவரைக் கீறி மிதுனம் அடைக விரிகதிர் வேனில் எதிர் வரவு மாரி என்னும் பகுதியிற் பன்னிரண்டு நாள் வீடுகளும் (இராசிகளும்), தாங்கூறும் முதிர்வேனிற்காலத்தில் அவை காணப்பட்டவாறும் ஆசிரியர் நல்லந்துவனார் நன்கெடுத்து மொழிதலே சான்றாம். ஆசிரியர் நல்லந்துவனார், அகநானூறு, 59ஆஞ் செய்யுளில் மதுரை மருதனிளநாகனாராற் புகழ்ந்து பேசப்பட்டிருத்தலானும் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை இம் மருதனிள நாகனாரும்ஆசிரியர் நக்கீரனாரும் பாடிய பாட்டுக்கள் (55, 56) புறநானூற்றின்கட் காணப்படுதலானும் மேலே 579 ஆம் பக்கத்திற் கி.பி.முதல் நூற்றாண்டின் முற்பகுதி யிலிருந்தவராகப் பெறப்பட்ட நக்கீரனாரது காலமே நல்லந்துவனார்க்கும் காலமாதல் தெளியப்படும். படவே, நல்லந்துவனார் கூறிய `பகல்வழியளவு, கி.பி.இரண்டாம் நூற்றாண்டிலிருந்த கிரேக்க வானூலாசிரியரான `தாலமி என்பவர் கண்டெழுதிய `பகல்வழியளவுக்கும் முற்பட்ட தாதலுந் தானே விளங்கும். இங்ஙனமாகக் கிரேக்க வானூலாசிரியர்க்கு முன்னமே தமிழ்ச்சான்றோர் `பகல் வழியளவு தெரிந்திருந்தமை புலனாதலிற், கிரேக்கரிட மிருந்து அவ் வளவினைத் தமிழர் கற்றுணர்ந்தாரென்பது அடாது. மற்றுத், தமிழரிடமிருந்தே அதனைக் கிரேக்கர் கற்றுணர்ந்தாரென்க. அற்றேற், கி.பி. ஆறாம் நூற்றாண்டிலிருந்த வராக மிகிரர் எழுதிய `ஹோராசாதிரத்திற் காணப்படுங் கோள்கள், வான்வீடுகள் முதலியவற்றின் பெயர்கள் கிரேக்க மொழிச் சொற்களோடு ஒத்து நிற்றலும், அவை தமிழ்ச் சொற்களோடு ஒத்து நில்லாமையும் என்னையெனின்; கி.மு.முதல் நூற்றாண்டிலிருந்தே வடநாட்டவரும் அவர் வழியே வடமொழியுந் தமிழ்நாட்டின் கண்வந்து மிகுதியாய்ப் பரவத் துவங்கிவிட்டமையின் தமிழர்கள் முன்னே தனித் தமிழ்ச் சொற்களால் வழங்கிய தம் பொருள்களையும் இடையிடையே வடசொற்களால் வழங்கத் துவங்கி விட்டனர். மேலெடுத்துக் காட்டிய நல்லந்துவனாரது செய்யுட் பகுதியிற் றனித்தமிழ்ச் சொற்களினிடையே `புந்தி, `மிதுனம் `அங்கி, `பங்கு, `யமன், `மகரம், முதலான வடசொற்கள் புகுந்துவிட்டமை காண்க. இங்ஙனமே நாட்செல்லச் செல்ல வடசொற்களும் வடமொழி வழக்குகளுந் தமிழ் நாட்டிற் பரவப் பரவத் தமிழர்களே தம் இயற்பெயர்களையும் `ஞானசம்பந்தன், `சுந்தரன், `உமாபதி, `சுவாமிநாத தேசிகன், என்றற் றொடக்கத்து வட சொற்களால் அமைக்கலானதுடன், தாமே வருந்தி யாராய்ந்தறிந்தெழுதிய ஒப்புயர்வில்லாத் தனித்தமிழ் நூல்களுக்குஞ் `சிவஞானபோதம், `சிவஞானசித்தி, `சிவப்பிரகாசம், `சங்கற்பநிராகரணம், முதலான வடமொழிப் பெயர்களை யமைத்து, அந்நூல்களுள் எடுத்துரைக்கப்படுஞ் சில பல பொருள்கட்கும் வடசொற் குறியீடுகளையிட்டு வழங்குவாராயினர். தமிழ்வேளாண் மக்கட்குப் பிறந்த பிள்ளைகள் `சுப்பிரமணியன், `விநாயகன், `வீரபத்திரன், `சங்கரநாராயணன் முதலான வடசொற் பெயர்களைப் புனைந்து கொண்ட அளவானே, வடநாட்டுக் குரிய ஆரியப்பிள்ளைகளாய்விடாமை போலத், தனித் தமிழர்தம் ஆராய்ச்சி நுண்ணுணர்விற் பிறந்த `சிவஞான போதம் முதலிய அருந்தமிழ் நூல்கட்கு வடசொற்பெயர் புனைந்து விட்டமை பற்றி அவை ஆரியர்க்குரிய ஆரிய நூல்களாய் விடுதல் ஒருவாற்றானுமில்லை. இவ்வாறே தமிழ்நாட்டு ஊர்களாகிய தில்லை,அண்ணாமலை, ஐயாறு முதலியன சிதம்பரம், அருணாசலம், பஞ்சநதம் முதலான வடமொழிப் பெயர்களைப் புனைந்தமட்டானே அவை வடவர்க்குரிய `ஆரியப் பிரதேசங்களாய் விடுதலும் எஞ்ஞான்றுமில்லை. இவ்வியல்புகளை ஆய்ந்து கண்டுணர மாட்டாதார், இவ் வடசொற் பெயர்களுங் குறியீடுகளும் உடைமைபற்றி மேற்கூறிய உண்மைத் தமிழ்நூல்களை வடநூன் மொழி பெயர்ப்புகள் போலுமென மயங்குவாரும், அவை அவற்றின் மொழிபெயர்ப்புகளேயா மெனப் பிடித்துப் பேசுவாருமாய்ப் பெரிதும் பிழைபடாநிற்பர். இஞ்ஞான்றை ஆங்கில வழக்குப் பற்றி, ஆங்கிலம் அறியாத் தமிழ்மாதர்களுந் தாம் வழங்கும் பண்டங்களுக்குத் தப்புந் தவறுமாய் ஆங்கிலச் சொற்களை யிட்டுப் பேசுதலும், ஆங்கிலமுணர்ந்த தமிழாடவர் இடை யிடையே ஆங்கிலச் சொற்கலந்த தமிழில் உரையாடுதலும் ஆகிய `அயல்மொழி மயக்கின் இயல்பினை உற்றுக்காண வல்லார்க்குப், பண்டைத் தமிழ்ச்சான்றோருந், தமக்குப் புறம்பான ஆரியமொழிச் சொற்களைத் தாங்கண்டறிந்த கோள்கள் நாள்கள் முதலியவற்றிற்கும் பிறவற்றிற்கும் பெயர்களாய் அமைக்கும் வேட்கையுடையரானதன் உண்மை புலனாகா நிற்கும். வடநாட்டவரால் அறியப்படாமல் தமிழ்நாட்டவராற் கண்டுணரப்பட்ட கோள்கள் நாள்கள் ஓரைகட்குத் தமிழ்ச் சான்றோரோ வடமொழிப் பெயர்களைப் புனைந்து விட்டாராகலின், வாணிகஞ் செய்தற்பொருட்டும் பொறிகள் அமைக்கும் பொருட்டும் அரசர்க்கு மெய்காப் பாளராயும் ஏவற்சிலதர் சிலதியராயும் அமர்தற்பொருட்டுந் தமிழ்நாட்டில் தொகை தொகையாய் வந்த யவனராகிய கிரேக்கரே `பகல்வழியள வினைத் தமிழர்பாற் கற்றுணர்ந்து, அதனைத் தாம் கற்றுணர்ந்தபடியே வடசொற் பெயர்களாற் றமது கிரேக்க மொழியில் வரைந்து வைப்பாராயினர். அவ்வாறவர் வரைந்துவைத்த வானூற்கல்வி அவர் கூட்டங்கூட்டமாய்க் குடியேறிய வடநாட்டிற் பரவவே, அங்கிருந்த வராகமிகிரரை யுள்ளிட்ட வடநூற் புலவர்கள் அப் பகல்வழியளவினைத் தாமுங் கற்று, அதன்கட் காணப்பட்ட பெயர்களுங் குறியீடுகளுந் தமது ஆரியமொழிக் குரியவாயிருத்தலைக் கண்டு மகிழ்ந்து, அவை யெல்லா வற்றையும் ஒருங்கே தழுவி `ஹோராசாதிரம் எனப் பெயரிய ஒரு வான் நூல் எழுதி, அங்ஙனம் எழுதினுந் தாம் அறிந்த அப் பகல்வழியளவு தமக்குக் கிரேக்கர் பாலிருந்துங் கிடைத்ததென்பது தோன்ற அதற்கு `ரோமகசித்தாந்தம், `பௌலிகசித்தாந்தம், என்னும் பெயர் களையுங் கிளந்து சூட்டினர்.25 இங்ஙனமாகக் கிரேக்கர் `பகல்வழியள வினைத் தமிழர்பாலிருந்து கற்றது கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலும், அதனை வடநாட்டவராகிய ஆரிய பட்டரும் வராகமிகிரருங் கிரேக்கர் பாலிருந்து கற்றது கி.பி.ஐந்தாம் நூற்றாண்டின் துவக்கத்திற்கும் பின்னுமே யாகலின், இதனைக் கி.பி. முதனூற்றாண்டுக்கு முன்னரே யறிந்திருந்த தமிழ்ச் சான்றோரே இதனை இவ்விருவேறினத் தார்க்குங் கற்பித்த ஆசிரியராவரென்றுணர்ந்து கொள்க. அற்றாயினுஞ், சாலடிநாட்டிலிருந்த பாபிலோனியர் மிகப் பழைய நாளிலேயே வான்நூலாராய்ச்சியில் தேர்ச்சி பெற்றிருந்தா ரென்பது எல்லார்க்கும் ஒப்பமுடிந்ததாதலின், அவரொடு வாணிகம் நடாத்திய பண்டைத் தமிழரே ` பகல்வழியளவினை அவர்பாற் கற்றுணர்ந்தாரென்றாற் படும் இழுக் கென்னையெனிற்; கூறுதும்; பண்டைச் சாலடியராதல், இருக்குவேத காலத்து வடவராதல் வானூலாராய்ச்சியில் நிரம்பத் தேர்ந்தவரென்று கோடல் அமையாது; என்னை? சாலடியர் அதிற் தேர்ச்சி பெற்றது உண்மையாயின், அவர்பாற் `பகல்வழியளவோடு `மதிவழி யளவுங் காணப்படுதல் வேண்டும், மற்றஃது அவர்பாற் காணப்படாமையானும், இனி இருக்குவேத காலத்து வடவர் அதிற்றேர்ச்சி பெற்றவராயின் அவர்பால் `மதிவழியளவு காணப்படுமாறு போலப் `பகல்வழியளவுங் காணப்படுதல் வேண்டும், ஆனாலஃது அவர்பாற் காணப்படாமை யானும் என்பது. பண்டைச் சாலடியர்பாற் `பகல்வழியளவு ஒன்றுமே காணப்படுத லானும், இருக்குவேத காலத்து வடவர்பால் `மதிவழியளவு ஒன்றுமே காணப்படுதலானும், மற்றுப் பண்டைத் தமிழர்பாலோ அவ் இருவேறளவும் ஒருங்கே காணப் படுதலானும், சாலடியாரும் வடவருந் தாமாகவோ அன்றித் தமிழரிடமிருந்தோ அவ்விரண்டில் ஒன்றைத் தெரிந்து கொள்ளுதற்கு முன்னமே தமிழ்ச்சான்றோர் தாமாகவே அவ் விருவகையளவும் ஒருங்குணர்ந்திருந்தமை தேற்றமாம். அற்றன்று, சாலடியரிடமிருந்து `பகல்வழியளவும் வடவரிடமிருந்து `மதிவழியளவுந் தெரிந்து கொண்டமை யினாற்றான், தமிழர்பால் அவ்விரண்டும் ஒருங்கு காணப்படுவ வாயினவென் றுரையாமோ வெனின், உரையாம். தமிழரின் வானூலுணர்ச்சியை நடுவுநிலை வழாது ஆராய்ந்தறிந்த மக்லீன் என்னும் மேனாட்டாசிரியர், தென்னாட்டின்கண் உள்ள பரதவர் தமது தொழிலின் பொருட்டு வளர்பிறை தேய்பிறை இயக்கங்களைத் தெரிய வேண்டினமையிற், பண்டை நாளிலேயே காலத்தை `மதிவழியளக்குங் கணக்கை உண்டாக்கினர். வெளிநிலங்களி லிருந்த உழவர்களோ பருவ காலங்களையும் பகலவ னியக்கங்களையும் உற்று நோக்குவாராயினர். பார்ப்பனரது தொடர்பினாற் பற்றப்படுதற்கு முன்னமே, தமிழர்கள் தமது நாள்வாழ்க்கைக்கு வேண்டிய வளவு வானூற் பயிற்சியை மிகவுஞ் சிறந்ததாகச் சீர்ப்படுத்தி வைத்திருந்தனர்; அவர்களது முறை பலவாற்றானும் இன்றும் நிலைபேறுற்று நிலவுகின்றது. தமிழரது காலக்கணக்கை ஒழுங்குறுத்துவ தாகிய வியாழ மண்டிலச்சுழற்சி ஐந்துகொண்ட அறுபதாண்டு வட்டம் ஆரியரது முறையிற் சேர்ந்ததன்று. தமிழரின் மனை வாழ்க்கை நிகழ்ச்சிகளின் பொருட்டு வழங்கும் பன்னிரண் டாட்டைக் காலஅளவும் அங்ஙனமே தமிழர்க்கு மட்டும் உரித்தாவது என்று கூறுதலும்26 லேட்டர் என்னும் ஆசிரியர், தமிழ்க் காலக் குறிப்புகள் நமதாராய்ச்சி யுணர்வினைப் பெரிதும் எழுப்பி விடுகின்றன. குருக்கள்மார்க்கு உரியதுங் குடிமக்கட் குரியதுமெனக் காலக்குறிப்பு இரு திறப்படுகின்றது. குருக்கள்மார்க்குரிய குறிப்பு, தெலுங்குக் குறிப்பு உட்பட ஏனை ஆசியாநாட்டுக் குறிப்புகளோடொப்ப மதிவழியளவின் பாற் படுவதாகலின், அதனைச் சிறந்தெடுத்துப் பேசல்வேண்டா. ஆனாற், குடிமக்கட்குரிய காலக்குறிப்போ `பகல்வழியள வின்பாற் படுவது, உண்மை யாகவே முற்றும் `பகல்வழியள வின்பாற் படுவதாகும்; முதலில் `மதிவழியள வாயிருந்து பின்பு பகல்வழி யாண்டிற்கு இசையத் திரிபு செய்யப்பட்ட நமது காலக்குறிப்பை ஒப்பதன்று. ஒருதிங்களுக்கு இத்தனை நாட்கள் தாம் இருத்தல் வேண்டுமென்று அவாவாத அவ்வளவுக்கு அது தனிப் `பகல்வழியளவின்பாற் பட்டதாயிருக்கின்றது. பகலவன் செல்லும் வான்வழியானது பன்னிரண்டு கூறுகளாகப் பகுக்கப்படுகின்றது; காலையிலோ நண்பகலிலோ இரவிலோ எந்த நேரத்திற் பகலவன் ஒரு புதுவீட்டிற் செல்கின்றனனோ அந்த நேரத்திலேயே ஒரு புதுத்திங்கள் பிறக்கின்றது. நாட்களின் பிறப்பானது கதிரவன் எழும் பொழுதிலேயே துவங்குகின்றது; அங்ஙனந் துவங்குவது, இந்தியாவிலுள்ள ஏதேனும் ஓரிடத்திற் றோன்றுங் கதிரவன் எழுச்சியைப் பற்றிய அவ்விடத்து நேரத்தைக் கொண்டன்று; மற்று, அது, பழைய தமிழர்கள் கோள்களின் இயக்கங்களை உற்றுநோக்குதற்கு அமைத்த கொடுமுடிகளுள்ள இடத்தின் நேர் உச்சியிலும், நடுக்கோட்டின் (Equator) பாற்படும் இடத்திலும் பகலவன் எழும்போது கணக்குச் செய்யப்பட்ட நேரத்தைக்கொண்டு துவங்குவதாகும். இத்தகையதொரு தனிக் காலக்குறிப்பினை இவர்கள் எக்காலத்திற் கைக் கொண்டார்களென்பதை எவரேனும் என்றாயினும் எடுத்துக் காட்டினரோ இல்லையோ யான் அறியேன். இது தனித்த இயல்பிற் றென்பதும், வழக்கமான வசதிக்குச் சிறிதுஇடர் பயப்பதாயினுங் கோள்கள் நாள்களின் இயக்கங்களை முன்பின் முரணாமல் திருத்தமாக அளந் தறிவதில், இப்போது வழங்கும் வேறெந்தக் காலக் குறிப்பைக் காட்டிலும், இதுவே முன்நிற்ப தென்பதும் பெரிதுங் கருத்திற் பதிக்கற் பாலனவாகும். இது தமிழரல்லாதாரின் தொடர்பு சிறிதும் அணுகப்பெறாத தென்னாட்டின்கண் தனியே இடையறாது நடைபெற்று வந்த தமிழ்மக்களின் கலைநூற் புலமையின் சுருசுருப்பினை மெய்ப்பிக்கின்ற தன்றோ?27 என்று கூறுதலுங் கொண்டு, சாலடியர்க்குத் தெரியாத `மதிவழியள வினையும், ஆரியர்க்குத் தெரியாத `பகல்வழியளவினையும், பண்டைத் தமிழ்மக்கள் தாமாகவே நன்கறிந் திருந்தமை தெளியக் கிடக்கின்றதன்றோ? தமிழ் நாட்டின்கண் வழங்கும் அறுபது ஆண்டுகளுக்குத் தமிழ்மக்கள் வடமொழிப் பெயர்களைப் புனைந்திருப்பினும், வியாழமண்டிலச் சுழற்சியை ஆராய்ந்து கண்டு அவ்வாற்றால் அவ்வறுபதாண்டுகளை வகுத்தமுறை தமிழ்மக்கட்கே உரித்தாதல், மேற்காட்டிய ஆங்கில ஆசிரியர் நடுவுநின்று ஆராய்ந்துரைக்கு முரையால்இனிது பெறப்படுகின்ற தன்றோ? இவ்வானூ லாராய்ச்சியில் வெளிப்பட்ட உண்மையைக் கருத்தூன்றிப் பார்ப்பவர்க்கு, வடசொற் களையுங் குறியீடுகளையும் உடைமை பற்றித் தமிழர்க் குரியவைகள் ஆரியர்க் குரியவாதல் செல்லாமை நன்குவிளங்கும். எனவே, வெறும் பெயர்களையும் குறியீடுகளையுங் கண்டுமயங்கி உண்மையைத் திரித் துணராமல், அதனை உள்ளவா றுணர்தல் மெய்யறிவினார்க்கு இன்றியமையாத கடமையாதலுந் தானே போதரும். என்றித் துணையும் விரித்து விளக்கியவாற்றாற், பழைய `தொல்காப்பிய நூலுட் காணப்படும் `ஓரை என்னுஞ் சொல் வானவீட்டைக் குறிக்குந் தூய தமிழ்ச்சொல்லாய்ப் பண்டைத் தமிழரால் வழங்கப்பட்டுவந்த தொன்றாவதூஉம், தமிழர்பால் வந்து `பகல்வழி யளவினைக் கற்றுணர்ந்த யவனராகிய கிரேக்கரே ஏனைப் பல தமிழ்ச் சொற்களோடு அதனையுங் கற்றுப் போய்த் தாம் வரைந்த வானூல்களுள் எழுதி வைப்பாராயின ரென்பதூஉம் நன்கு புலனாதலின், அவ் `ஓரை எனுஞ் சொல்லைக் கிரேக்க மொழியெனப் பிறழவுணர்ந்து, அவ்வாற்றால் `தொல்காப்பியம் கி.மு. மூன்றாம் நூற்றாண் டிற்றான் இயற்றப் பட்டதாதல் வேண்டுமெனக் கரைந்தாருரை பொருந்தாவுரையாதல் காண்க. மேலும், `ஓரை என்னும் இத் தமிழ்ச் சொல் கிரேக்க மொழியில் `ஓரீ எனப் பெரும்பாலுந் தமிழ் வடிவத்தோடு எழுதப் படுதலையும்28 கிரேக்கரிடமிருந்து கடன்வாங்கிய வடநாட்டு ஆரியரே அதன் தமிழ் வடிவத்தைத் திரித்து `ஹோரா என எழுதினார் என்க. இனிப், பாண்டிய அரசர் வழங்கிய `வட்டெழுத்துக்க ளின் பிறப்பையும், அவற்றாற் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்களின் காலத்தையும் ஆராயும் முகத்தால் தொல்காப்பிய காலத்தைக் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற் படுப்பித்தார் உரைகள் ஆராயற்பாலன. தமிழ்நாட்டில் வழங்கிய வட்டெழுத்துக்களைப் பற்றியும், இவ் விந்திய நாடெங்கும் வழங்கிய அசோக எழுத்துகளைப் பற்றியும் யாம் இற்றைக்கு இருபத்தோராண்டுகட்கு முன்னமே ஆராய்ந்து, அவ் வாராய்ச்சியைக் கி.பி. 1100 ஆம் ஆண்டு வெளிப்போந்த `பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும என்னும் எமது நூலில் வரைந்திட்டாம். அதற்கு எட்டாண்டுகள் கழித்துக் கி.பி. 1114இல் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டதாகிய `தமிழாராய்ச் சிகள் (Tamil Studies) என்னும் நூலின்கண் அதன் ஆக்கியோரான சீனிவாச ஐயங்கார் வட்டெழுத்துக்களைப் பற்றிய எமதாராய்ச்சியினை முற்றுந் தழுவி, வட்டெழுத்துக்கள் தமிழர்க் குரியனவே யன்றி வடநாட்டில் வழங்கிய `பிராமி எழுத்துக்களின் திரிபாகா வென்றும், இற்றைக்கு மூவாயிரத்தைந் நூறாண்டு கட்கு முன்னமே தமிழரும் பினீசியர் எகுபதியரும் வாணிக வாழ்க்கையிற் கலந்துறவாடின ராகலின் எகுபதிய ரறிந்த எழுத்து முறையைத் தமிழரும் அந்நாளிலேயே அறிந்தவராயிருத்தல் வேண்டுமென்றும், இவ்வெழுத்து முறையைத் தமிழரிடமிருந்தே இந்திய ஆரியர் கற்றுணர்ந்த வராதல் வேண்டுமென்றும், மப என்னும் எழுத்தின் வடிவங்கள் பிராமி அசோக எழுத்துக்களிலும் வட்டெழுத்துக்களிலும் வேறுபட்டிருத்தலே இதற்குச் சான்றாமென்றும், ஆசிரியர் தொல்காப்பியனார் உரைக்குந் தமிழ் எழுத்தின் வடிவங்கள் வட்டெழுத்துக்களின் வடிவோடு ஒத்திருத்தல்போற் பிராமி எழுத்துக் காலத்திற்கு முன்னமே வட்டெழுத்துக்கள் தமிழ்நாட்டின்கண் வழங்கினவாதல் வேண்டுமென்றும் நன்காய்ந்துவலிய சான்றுகள் பலவற்றால் தமிழ் எழுத்துக் களின் பழைமையை இனிது விளக்கிக் காட்டியிருக்கின்றார்.29 அவர் கொண்ட முடிபே எமது முடிபுமா மாகலானும் இவ்விந்தியநாட்டு எழுத்தின வடிவங்களை நன்காய்ந்து கண்ட `ரிடேவிட், `தாம, `பர்னல், முதலான ஐரோப்பிய ஆசிரியர் நடுநின்றாராய்ந் துரைக்கும் உரையும் எமது முடிபோடு ஒருங்கொத்து நிற்றலானுந் தமிழ் வட்டெழுத்துக்கள் ஆறாயிர ஆண்டுகளாய் வழங்குவ னவாகப், பிராமியெழுத்துக்களோ இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு உட்பட்ட வழக்கமே யுடையன வாயிருத்தலாற், பிராமியெழுத்துக்களே தமிழ் வட்டெழுத்துக்களைப் பார்த்துச் செய்யப்பட்டன வாகல் வேண்டுமல்லது, வட்டெழுத்துக்கள் பிராமி யெழுத்துக்களைப் பார்த்துச் செய்யப்பட்டனவாகல் ஒரு சிறிதுஞ் செல்லாதென்க. அற்றேற், கி.பி. எட்டாம் நூற்றாண்டின்முன் வட்டெழுத்துக் களாற் செதுக்கப்பட்ட ஒரு கல்வெட்டாயினும் இத் தென்றமிழ் நாட்டின்கட் காணப்படாமை யென்னை யெனிற்; கி.பி. எட்டாம் நூற்றாண்டிற்கு முன்னே நீண்டு சென்றபெருங் காலத்திலேதான் தமிழருந் தமிழ் மன்னரும் மிகச் சிறந்த நாகரிக வாழ்க்கையிலிருந்தனர்; அக்காலத்திலே தான் தனித்தமிழ் மொழி எழில்நலங் கனிந்து தன் சுடரொளி விரிந்து வீறித் திகழ்ந்தது; அஞ்ஞான்றிருந்த தமிழ்ப் புலவர்கள் மெய்யறிவு சான்ற மேன்மக்களாய்ப் பல கலைத் துறைகளிலும் அறிவுநிரம்பி அவ்வத் துறைகளிலும் அளவிறந்த விழுமிய நூல்களியற்றி இத்தமிழகத்தை அறிவொளியால் துலங்கச் செய்தனர்; அப்பண்டைநாளில் ஏனை நாடுகளிலிருந்த ஏனை மக்களெல்லாம் நாகரித்திலும் வளத்திலுங் குறைந்தாராய்த் திருந்திய அறிவின்றி வருந்து நிலையி லிருந்தமையின் அவரும் அவர் தம் மன்னருந் தமிழகத்தைக் கைப்பற்ற மாட்டாராயினர். அதனால், தமிழகந் தனக்குப் பகையாவார் எவருமின்றித் தன் வேந்தர் பெருமக்களின் வெண்கொற்றக்குடை நிழலில் அமைதியுற் றிருந்தது; எங்குங் கல்வியுங் கைத்தொழிலும் உழவும் மலிந்திருந்தன; நூல்களும் நூலாராய்ச்சி செய்வார் தொகையும் பெருகிக்கிடந்தன; எல்லா நூல்களும் ஏடுகளில் எழுதப்பட்டு எங்கும் பரந்து வழங்கின. அரசர்களின் ஆண்மையும் புகழும் விளங்கப் பாடிய பாட்டுகளும், அவர் தம் ஈகையுங் கொடையும் வரலாறும் விரித்த நூல்களும் ஏடுகளிற் பொறிக்கப்பட்டு எங்கும் நிலவினமையாலும், இவ்வேட்டுச் சுவடிகள் அழிந்து படுதற்குரிய நிகழ்ச்சிகள் ஏதுமே அஞ்ஞான்று நிகழாமை யாலும் அவை தம்மைக் கருங்கற்களிற் செதுக்கிவைக்க வேண்டுமென்னும் எண்ணம் பண்டைத் தமிழ் மன்னர்க்குங் கற்றோர்க்கும் ஏனைக் குடிமக்கட்குந் தோன்றாமலே போயிற்று. அதனாலேதான் கி.பி. எட்டாம் நூற்றாண்டிற்கு முற்சென்ற பழந்தமிழ்க் காலத்தில் வட்டெழுத்தால் ஆக்கிய கல்வெட்டு ஒன்று தானும் இல்லாதாயிற்று. இதனை முன்னரே கஎரு ஆம் பக்கத்திலும் எடுத்துக் காட்டினேம். மற்று, வடநாட்டிற் குடிபுகுந்த பழந்தமிழரோ தென்னாட்டவரைப்போல் நாகரிகத்தில் அத்துணைச் சிறவாமையானுந், தம் நாட்டகத்தே அடுத்தடுத்துப் புகுந்த ஆரியரானுங் கிரேக்கரானும் ஊணரானுந் தொடர்பாக அலைக்கப்பட்டு அவ் வலைப் பினால் தம் அரும்பொருள்களையும் நாடு நகரங்களையும் நூற் சுவடிகளையும் இடையிடையே இழக்கலானமை யானும் அங்கிருந்த மன்னர்களும் பிறருந் தம் ஆண்மைச் செயல்களையும் பிற வரலாறுகளையும் எளிதிற் சிதைந்துபோம் பனையேடுகளிற் பொறித்துவையாமற் கருங்கற்களிற் செதுக்கிவைக்க வேண்டியவரானார். அதனாற் கல்வெட்டுகள் முதன் முதல் வடநாட்டின் கண்ணேதான் தோன்றுவவாயின. கி.பி.இரண்டாம் நூற்றாண்டிற்குப் பின் தென்னாட்டின்க ணிருந்த தமிழ்வேந்தர்களின் ஆற்றலும் ஆண்மையுஞ் சுருங்கவே வடக்கிருந்த மன்னர்கள் மெல்ல மெல்லத் தமிழ்நாட்டின்கட் புகுந்து தமிழ்மன்னர்களை வென்று அதனைக் கைக்கொள்வா ராயினர். இங்ஙனமாக இத் தென்னாட்டின்கட் பெருங்குழப்பங்கள் நிகழ்வுழித் தமிழ்மக்கள் தமக்குரிய அரும்பொருள்களையும் நாடுநகரங் களையும் ஏட்டுச் சுவடிகளையும் இழந்துவரலானார். வடக்கிருந்து வந்த பல்லவ அரசர்களுந் தமது வழக்கப்படி தம் ஆண்மைச் செயல்களையும் பிறவற்றையுங் கருங்கற் சுவர்களில் ஆங்காங்குப் பொறித்து வைப்பாராயினர். அப் பல்லவர் காலத்தும் அதற்குப் பின்னும் இத் தமிழகத்தி லிருந்த தமிழரசர்களும் அவ் வழக்கத்தைத் தாமுங் கைப்பற்றி ஏடுகளினும் நிலைபேறாயுள்ள கல்வெட்டுகளை அமைப் பாராயினர். தமிழ்நாட்டின்கட் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பின் கல்வெட்டுகள் உண்டான வரலாறு இங்ஙனமாகலின், இஃதறியாமல் அம் மூன்றாம் நூற்றாண்டிற்கு முன் வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்று தானும் இல்லாமை பற்றி, வட்டெழுத்துக்களே அஞ்ஞான்று வழங்கிற்றில வெனக் கரைவாருரை பொருந்தாப் புல்லுரை யாமென்க. நாகரிகம் மிக்க இந் நாளிற் காகிதச் சுவடிகளில் எத்தகைய வரலாறும் நூலும் எழுதிவைப்பாரையே காண்டுமன்றி, அவை தம்மையெல்லாங் கருங்கற் பலகை களிலேயே பொறித்து வைப்பாரைக் காண்கிலேம். இடைப்பட்ட காலத்து வழக்கம்பற்றிக் கருங்கற்களில் நினைவுக்குறிகளை வரைந்தமைப்பார் இஞ்ஞான்று ஒரு சிலரேனும் உளராதல் போலப், பண்டைக் காலத்துத் தமிழ் நாகரிக மாந்தரிலும் பெயரும் பீடுமெழுதி அதர்தொறும், பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்30 நாட்டும் வழக்கம் நிகழ்ந்து வந்தமை பழைய நூல்களிற் புலனாயினுங், கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்குமுன் அங்ஙனம் நாட்டப்பட்ட நடுகல் ஒன்றுதானும் இதுகாறுங் காணக்கிடையாமையின், அவ்வியல்பினை இனைத்தென்றுணர்தல் இயலா தென்று விடுக்க. மேலும், இத் தென்றமிழ் நாட்டின்கட் பழைய நகரங்கள் இருந்து அழிந்துபோன இடங்களை அகழ்ந்து, அவற்றின் கீழ்ப் புதைந்து கிடக்கும்பொருள்களை மேற்கொணர்ந்து ஆராய்வார் இன்மையின், பண்டைக் காலத்து நடு கற்களின் இயல்பினை அவ் வாராய்ச்சியின்றி முடிவுகட்டுதல் இயலா தென்பதுங் கருத்திற் பதிக்கப்பாற்று. அசோகமன்னன் காலத்திலே அவனுக்குக் கீழடங்காமல் அவனோ டொத்த நிலையிலிருந்த சேர சோழ பாண்டியர்களாந் தமிழ்வேந்தரின் அரசியல் மாட்சி அவ்வசோக மன்னன் வெட்டுவித்த கல்வெட்டுகளிலேயே நுவலப்பட்டிருக் கின்றது; அத்துணைச் சிறந்த அத்தமிழ் மன்னர் தம் நாகரிக அரசியல் எழுத்துகளின் உதவியின்றி நடைபெறுதல் இயலாதென்பதும் ஓர்ந்துணரற் பாற்று. மேலும், வட்டெழுத்துக்களாற் பொறிக்கப்பட்ட பழைய கல்வெட்டுக்கள் கிடையாவாயினும், அவ் வெழுத்துக்களின் வடிவினைத் தெளிய விளக்கும் மிகப் பழைய தொல்காப்பிய நூல் உண்மையின், இதனினுஞ் சிறந்த சான்று பிறிதொன்று வேண்டுமோவெனவுங் கூறி மறுக்க, கி.பி. எட்டாம் நூற்றாண்டுமுதல் தமிழ்நாட்டில் வழக்கத்துக்கு வந்த கல்வெட்டுகள் அந் நூற்றாண்டிற்குமுன் அந்நாட்டின்கட் காணப்படாமையினையே ஒருபெருஞ் சான்றாய்க் கொண்டு, ஏனைப் பழைய உண்மைத் தமிழ்நூற் சான்றுகளை யெல்லாம் புறந்தள்ளி, அவ்வாற்றால் தமிழ்மொழி கி.பி. எட்டாம் நூற்றாண்டிற்குமுன் ஓர் ஒழுங்குபட்ட நிலையை எய்த வில்லையெனக் கரையும் பார்ப்பனர், அவ்வாறு கரைதல் தமக்குந் தமக்குரியதெனக் கொள்ளும் வடமொழிக் குமே கேடு பயத்தலை யுணர்ந்திலர். என்னை? தனிச் சமகிருத மொழியிற் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் எல்லாம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டனவே யன்றி, அதற்குமுற்பட்டது அவற்றுள் ஒன்றுதானும் இன்மையின்,31 சமகிருத மொழியும் அவ்விரண்டாம் நூற்றாண்டிற்குமுன் ஓர் ஒழுங்குபட்ட நிலையை எய்தவில்லை யென்பதும், அம் மொழியிற் பழைய நூல்களெனக் கூறப்படும் இருக்கு, எசுர் முதலிய வேதங்களும் பிராமணங்களும் பிறவு மெல்லாம் பிற்றை ஞான்றைப் பார்ப்பனர் களாற் பழையனபோற் புனைந்து கட்டப்பட்டன வேயன்றி உண்மையில் அவை கி.பி. இரண்டாம் நூற்றாண் டிற்குப் பிற்பட்டனவேயா மென்பதும் முடிக்கப்படுமாதலின் என்க. கல்வெட்டுகளை மட்டுஞ் சான்றாகக் கொண்டு தமிழ்ப் பழைமையைக் குறைக்க மடிகட்டி நிற்கும் பார்ப்பனர்க்கு, அவர்கொண்ட அம்முறையே அவர் தம் வடநூற் பழைமையைக் குறைத்து, உண்மைக்கு மாறாய்ப் பெரிதொரு தலைதடுமாற்றத் தினை விளக்கக் காண்டலிற், பழைய உண்மைநூற் சான்றுகளே பண்டைக்கால நிலையினை உள்ளவாறு அளந்தறிதற்குக் கருவியாதல் தெளிந்து கொள்க. எனவே, கி.பி.எட்டாம் நூற்றாண்டிலிருந்து இத் தமிழ் நாட்டில் வழங்கிய தமிழ் வட்டெழுத்துப் பட்டையங்களை மட்டுஞ் சான்றாகக் கொண்டு, அவற்றிற்குப் பல்லாயிர ஆண்டு முற்பட்ட தொல்காப்பிய நூலின் காலத்தை அளக்கப் புகுதல் `நரிவால் கொண்டு கடலாழம் பார்க்கப் புகுதலோடு ஒத்து நகையாடற் பாலதாமென விடுக்க. இனித் தொல்காப்பியத்தி னுதவி கொண்டே வட்டெழுத்துக்களின் காலந் துணியப்படு வதன்றி, வட்டெழுத்துப் பட்டையங்களி னுதவிகொண்டு தொல்காப்பிய காலந் துணியப்படா தென்பதுங் கடைப்பிடிக்க. இன்னுங், குமரிநாடு கடல்வாய்ப்படாது நிலவிய காலத்தில் தொல்காப்பியம்இயற்றப்பட்டதா மென்பதற்கு, அந் நூலின்கண் உள்ள குறிப்புகள் பலவுமே நன்குசான்று பகர்கின்றன. அவற்றுட் சில ஈண்டெடுத்துக் காட்டுதும் ஆசிரியர் தொல்காப்பியனார் வெறுமணல் வெளியாகிய பாலை நிலத்தை நடுவு நிலைத்திணை எனவும், அந் நிலத்தின்கண் வேனிற்காலத்து நண்பகற் கொடுமையே மிகுந்திருக்கும் எனவுங் கூறுகின்றார்.32 நாற்புறத்துங் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நிலப் பகுதிகளாற் சூழப்பட்டு, அவற்றிடையே மிக அகன்று நீண்டு விரிந்து கிடப்பதாகிய வெறுமணல் வெளிக்கு அவர் நடுவு நிலைத்திணை என்று பெயர் கூறுமாற்றை உற்றாராயுங் கால், அத்தகையதொரு பெருமணல்வெளி அவர் காலத்தில் இருந்ததாகல் வேண்டுமென்பது புலனாம். இஞ் ஞான்லுள்ள இத் தமிழ்நாட்டின் கண், நாற்புறமும் நால் நிலங்களாற் சூழப்பட்டு இடையே பெரிதும்விரிந்து நீண்டு வேனிற் கொடுமை மிகுந்த அத்துணைப் பெரியதொரு மணல்வெளி எங்கேனும் உள தோவென ஆராயின், அவ்வியல்பின தொன்று உளதென்பது புலனாகவில்லை. வெம்மை மிகுந்த நடுக்கோட்டிற்கு (Equtor) இஞ்ஞான்றைத் தமிழ்நாடு மிக எட்டியிருத்தலின் அவர் கூறியதொரு வேனிற்காலக் கொடுமையும் இங்குப் புலனாகவில்லை. ஆகவே, தொல்காப்பியனார் கூறிய பெருமணல் வெளியும், அதன்கண் உண்டாம் வேனில் அழற்சியும் நடுக்கோட்டை யடுத்த நிலப் பகுதியிலேதான் இருந்தன வாதல் பெறப்படும். அந் நிலப்பகுதி இஞ்ஞான்று இந்தியமாக்கடலின் கீழ் அமிழ்ந்தி நிற்பினுந், தொல்காப்பினார் இருந்த ஞான்று அது பெரியதொரு நிலப்பரப்பாய்க் குமரி நாடென பெயர்பெற் றிருந்ததென உணர்ந்துகொள்க. அந் நிலப்பரப்பி னிடையே யிருந்த பெரும் பாலைநிலமே அவரால் `நடுநிலைத்திணை எனச் சுட்டப்பட்டதாம் என்பது. அதுவேயுமன்றித், தொல்காப்பியனார், ஒட்டகம் அவற்றோடு ஒருவழி நிலையும்(18) என்னும் மரபியற் சூத்திரத்தில், `ஒட்டகம் என்னும் விலங்கினைக் குறிப்பிட் டிருக்கின்றார். தமது காலத்திருந்த நூல்களிற் பெருவர வினவாய் வழங்கிய சிற்றுயிர்களின் ஆண் பெண் அவற்றின் பிள்ளைகளை எவ்வெச் சொற்களால் வழங்குதல் மரபோ அம்மரபினை அவர் முறைப்படுத்திச் சொல்லுதற்கண் ஒட்டகம் என்னும் விலங்கும் அவரிருந்த காலத்து மக்களாற் பெரிதும் பயன்படுத்தப்பட்ட தொன்றென்பது தெற்றென விளங்கா நிற்கும். ஒரு பெரும்பாலை நிலத்தைச் சூழவுள்ள மக்களே அம் மணல்வெளியை ஊடுருவிச் சென்று வாணிகம் நடாத்துவர். அவ்வாறவர் அம்மணல் வெளியை ஊடுருவிச் செல்லுதற்கே, அந்நிலத்தில் இயற்கையே யுண்டாய் உயிர்வாழும் ஒட்டகம் என்னும் விலங்கினைப் பயன்படுத்தா நிற்பர். இவ் வுண்மை, இஞ்ஞான்றை வட ஆப்பிரிக்காவிலுள்ள சகாரா என்னும் பெரும்பாலை நிலத்தைச் சூழவுள்ள மக்கள் ஒட்டகத்தின் உதவியையே கொண்டு வாணிகம் நடாத்து மாற்றால் நன்குணரப்படும். இவ்வாறு பாலைநிலத்திற்கு இயற்கையாயுள்ள விலங்காய்ப், பாலைநிலத்தைச் சூழவுறையும் நாகரிக மக்களால் வாணிக வாழ்க்கைக்குப் பெரிதும் பயன்படுத்தப்படும் ஒட்டகத்தைத் தொல்காப்பியனார் கூறுதல் கொண்டு, அவர் காலத்திற் குமரிநாட்டினிடையே கிடந்த பாலை வெளியை, அதனைச் சூழ இருந்த பண்டைத் தமிழ் மக்கள் ஒட்டகங்களினுதவி யாற் கடந்துசென்று வாணிகம் நடாத்தினமை தெளியப் படும். இஞ்ஞான்றைத் தமிழ்நாட்டில் அத்தகைய பெரும் பாலை வெளியும், அதன்கண் இயங்கும் ஒட்டகமும் இல்லாமையின், அவ் விலங்கினைக் காட்சிப் பொருட்டாக வன்றி ஊர்தியாகப் பயன்படுத்துவார் யாருமில ரென்க. எனவே, ஒட்டகம் என்னும் விலங்கும் அதன்பெயரும் பண்டைத், தமிழ்மக்கட் குரியனவே யல்லாமல் வடவாரியர்க்கு உரியன ஆகாமையால், அவர் அவ் விலங்கின் பெயராய் வழங்கும் `உஷ்ட்ர என்னுஞ் சொல், `ஒட்டகம் என்னுந் தமிழ்ச் சொல்லின் திரிபாதல் துணியப்படும். இவ் வொட்டகம் என்னும் விலங்கு தெற்கே நடுக்கோட்டைச் சார்ந்த வெய்ய பாலைநிலங்களி லன்றிக், குளிர் மிகுந்த வடநாடுகளில் உயிர் வாழ்வது அன்மையின், இது தென்னாட்டாவர்க்கே யுரித்தாதல் திண்ணம். இங்ஙனமாகக் குமரிநாட்டிலிருந்த பெரும் பாலைநிலத்தையும், அதனூடு சென்று வாணிகம் நடாத்திய பண்டைத் தமிழர் அம் மணல்வெளியைக் கடத்தற்குப் பயன்படுத்திய `ஒட்டகம் என்னும் விலங்கையும் ஆசிரியர் தொல்காப்பியனார் நன்கு குறிப்பிடுதலின், அவரும் அவரியற்றிய தொல்காப்பியமுங் குமரிநாடு கடல்வாய்ப் படுதற்கு முன் இருந்தமை தேற்றமாம். என்றிதுகாறுந் தொல்காப்பிய காலத்தைப் பற்றி யெழுந்த ஆராய்ச்சியின் முடிபாகத், `தொல்காப்பியங் குமரிநாடு கடல் கொள்ளப் படும் முன், அஃதாவது இற்றைக்கு நாலாயிரத்தைந் நூறாண்டுகட்கு முன்னும், அதற்கும் முன்னே பாரதப்போர் நிகழ்ந்த காலத்து உடனிருந்த `முரஞ்சியூர் முடிநாகராயர், `பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, `நெட்டிமை யார், `நெடும்பல் லியத்தனார், முதலான தலைமைச்சங்கப் புலவர் சிலர்க்குமுன் அஃதாவது இற்றைக்கு ஐயாயிரத்து ஐந்நூறியாண்டுகட்கு முன்னும் இயற்றப்பட்ட மிகப் பழையதொரு தனித்தமிழ் நூலாதல் பெறப்பட்டது. பெறவே, அது தலைச்சங்க காலத்து நூலாகுமே யல்லாமற், குமரிநாடு கடல்வாய்ப் புக்கபின் எழுந்த இடைச்சங்க காலத்து நூலாதல் செல்லா தென்பதுந் தானே போதரும். போதரவே, அதனை இடைச்சங்ககாலத்து நூலென்ற இறையனாரகப்பொருள் உரைப்பாயிரவுரைக்கூற்று ஆசிரியர் நக்கீரனார் உரைத்த தாகாமையும், அஃது உண்மை வரலாறு அன்மையுந் தாமே பெறப்படும். இறையனாரகப் பொருள் முகத்துள்ள `நூற்பாயிரவுரை `உரைப்பாயிரவுரை என்னும் இரண்டுள் நூற்பாயிரவுரை முற்றும் நக்கீரனாரே கூறியதாதலும், அதன்பின் போந்த உரைப்பாயிரவுரை வழிவந்த பிறரொரு வரால் உரைக்கப்பட்டதாதலும் பகுத்துக்காட்டி விளக்கியவழி, உரைப்பாயிரவுரையுட் போந்த வரலாற்றுக் குறிப்புகள் மெய்யோடு பொய்யும் இடைமிடைந்தன வாயிருத்தலைப் பகுத்துக் காட்டுவான் புகுந்து அதன்கண் மெய்யாவன இவை யெனவும் பொய்யாவன இவை யெனவும் நிரலே இதுகாறுங் காட்டிவந்தன போக, எஞ்சி நிற்பனவுங் காட்டுகின்றாம். அடிக்குறிப்புகள் 1. See Pages 154 -160 `Dravidian India’ by MR. T.R. Sesha Iyengar, M.A 2. Dr. T. Goldstucker’s Panini, P.58; Panini Office Publication. 3. Dr. A.A. Macdonll’ Aistoryof Sanscrit Literature’, P. 430. 4. Dr. S.K. Belvalkar’s Systems of Sanscrit Grammaï P.83. 5. Do Do Do. P.64. 6. Dr. Hermann Jacobin inIndian Antiquary Vol. XXIII. PP. 154. sq. Mr. B.G. Tilak in The Arctic Home in the Vedas and Dr. Bloomfeield. 7. Dr. Abinas Candra Dasï M.A., Ph.D., in his `Rig Vedic India’ 8. Systems of Sanscrit Grammer by Mr. Kirshna Belvalkar, M.A. Ph. D.P.18. Dr. Goldstukerï PRof. Bhandarkar and Dr. Vincent Smith long ago assigned 7th Century B.C. to Panini. 9. Systems of Sanscrit Grammae, P. 63. 10. Ibid. P.64. 11. வரந்தருகாதை. 160. 12. See ‘The Tamilian Antiquary’ Vol. II. No. 9. 13. Pre -Historic Times’ by Sir John Lubbock, p.363. 14. செந்தமிழ், 14, பகுதி, 11. 15. செந்தமிழ், 15, பகுதி, 3. 16. See Short History of Astronomy by A. Perry A.A., pp. 40 and 62. 17. இறையனராகப் பொருள், 2 ஆஞ் சூத்திரஉரை. 18. Ragozin’s Vedic India, p. 305. 19. இப்போது இவ்வூர் தூத்துக்குடிக்குத் தெற்கே செம்படவர் குப்பமாய் இருக்கின்றது: Tamiliana Antiqauary. No. I. p.23. 20. See Dr. Caldwell’s A Comparative Grammar of the Dravidian Languages, 3rd edition, Introduction, pp.88 -91. 21. Chaldea by Z. Ragozin, p. 230. 22. Maxmuller’s India What Can It Teach Us? pp.126, 127. 23. Max Muller’s A History of Ancient Sanscrit Literature, Panini Office editions (1912), pp. 107 -109. 24. A. Weber’s The History of Indian Literature’, p.248. 25. See Dr.A. Weber’s The History of Indian Literature, p.258; and also Mr. R.C. Dutt’s ‘A History of Civilsation in Accient India’, Vol.II.p.243. 26. Quoted in Mr.T.R.Sesha Iyenger’s Dravidian India, pp.129. 130. 27. ‘The Dravidian Element in Indian Culture’ pp. 71,72. 28. A. Weber’s The History of Indian Literature P. 254. 29. See Tamil Studies’, pp. 113 -131. 30. அகநானூறு, 131. 31. See Prof. Rhys David’s Buddhist India, pp.134,135. 32. தொல்காப்பியம், அகத்திணையியல், 9 ஆஞ் சூத்திரம். 24. இறையனாரகப் பொருளுரை யாராய்ச்சித் தொடர்பு இனி, இடைச் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கபாடபுரத் தென்பது; அக்காலத்துப் போலும் பாண்டியனாட்டைக் கடல் கொண்டது என்னுங் குறிப்பு உண்மை வரலாறு தெரிப்ப தொன்றேயாம். குமரிநாடு கடல்கொண்டது சிறிதேறக்குறையக் கி.மு. 2000 த்திலாமென்பதை மேலே 647 ஆம் பக்கத்தில் விளக்கிக் காட்டினமாகலின், அப்பெருங் கடல்கோளுக்குப் பின் பாண்டிமன்ன ரரசு ஓர் ஒழுங்கு பெற்றுத் திரும்பவுந் தமிழ்ச்சங்கங் கூட்டப்படுதற்கு மூன்று நான்கு நூற்றாண்டுகள் சென்றிருத்தல் வேண்டும். ஏனென்றால், இரண்டாங் கடல்கோள் ஒன்று இலங்கையிற் பாண்டுவாசான் அரசுபுரிந்த கி.மு.ஐந்தாம் நூற்றாண்டிலும், மூன்றாங் கடல்கோ ளொன்று ».K.மூன்wh« நூற்றாண்டிலும் நிகழ்ந்தமை இலங்கைத் தீவின் வரலாற்றிற் குறிக்கப்பட் டிருத்தலின் இடைச் சங்கங், கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் நிகழ்ந்த கடல்கோளுடன் முடிவடைந் திருத்தல் வேண்டுமாகலானும், இடைச்சங்கம் நிகழ்ந்த காலம் 1180 ஆண்டுகளாகுமென மேலே 642 ஆம் பக்கத்தில் விளக்கிக் காட்டினமாகலின் கிறித்து பிறப்பதற்கு முற்சென்ற அவ் ஐந்நூறாண்டுகளோடு இவ்விடைச்சங்க காலத்தையும் கூட்டக் கி.மு. 1680 ஆம் ஆண்டையடுத்து இடைச்சங்கந் தோன்றி யிருத்தல் வேண்டுமாகலானும் என்பது. அற்றாயினும், மூன்றாங் கடல்கோள் நிகழ்ந்த கி.மு. மூன்றாம் நூற்றாண்டையே இடைச் சங்கத்தின் இறுதிக் காலமாய்க் கொள்ளலாகாதோ வெனிற், கூறுதும்: இரண்டாங் கடல்கோள் நிலப்பரப்பை மிகுதியும் விழுங்கிச் சென்ற தொன்றாயின், அந் நிலப் பரப்பின்கண் நடைபெற்ற சங்கமும் அதனோடு உடனழிந் திருக்கவேண்டு மாகலின் அது பின்னுங் ».K.மூன்wh« நூற்றாண்டு வரையி லிருந்த தெனக் கோடலாகாது. மற்று அக்கடல்கோள் அத்துணைப் பெரியதன்றாக, மூன்றாங் கடல்கோள் அத் துணைப் பெரியதென்றாமாயின் இடைச் சங்கங் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலே தான் முடிவடைந் திருத்தல்வேண்டும்; அஃதெங்ஙன மாயினுங், கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுமுதல் மூன்றாம் நூற்றாண்டுவரையிற் சென்ற இருநூறாண்டுகளில் இரண்டு கடல்கோள் நிகழ்ந்ததனை உற்றுக் காணுமிடத்து, இந்நிலவுலக அமைப்பிற் பேரிடர் பயப்பனவாகிய பெருமாறு தல்களும் பெருங் குழப்பங்களும் அப்போது அதன் தென்பகுதி யில் நிகழ்ந்தமை தெளியப்படும். அவ்வாறு அப்பெருந் துன்ப நிகழ்ச்சிகள் நடைபெறத் துவங்குதற்கு ஓர் அறிகுறியாகவே கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் ஒரு சிறுகடல்கோள் நிகழா யிற்றெனக் கொள்ளினும், அச்சிறு கடல்கோளை நிகழலாயிற் றெனக் கொள்ளினும், அச் சிறுகடல்கோளை யடுத்துத் தோன்றிய பெருந் துன்ப நிகழ்ச்சியினிடையே இடைச்சங்கம் இருந்ததாயினும் அஃது அப்போது செவ்வனே நடைபெற்ற தாகாது. ஆகவே, இடைச்சங்கங் கி.மு.ஐந்தாம் நூற்றாண்டில் ஒடுகிற்றெனக் கொள்ளினும், அல்லது கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் ஒடுங்கிற்றெனக் கொள்ளினும் ஈண்டைக் காவதோர் இழுக்கில்லை. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அது முடிவடைந்ததெனக் கொள்ளின், கி.மு. 2000த்தில் நிகழ்ந்த முதற்கடல்கோளுக்குப்பின் ஐந்நூறாண்டுகள் கழித்து இடைச்சங்கந் துவங்கலாயிற்றென்று கொள்ளல் வேண்டும். இனி, அவ் விடைச்சங்க மிருந்து தமிழாராய்ந்த இடங் கபாடபுரம் என்ற உரைத்தொடரிற் `கபாடபுரம் என்னுஞ் சொல் வடசொற்றொடரா யிருத்தலானும் இடைச்சங்கம் நடைபெற்ற அப் பழைய காலத்தே அத்தகைய வடசொற் றொடர் வழங்கினமைக்குச் சான்று இல்லாமையானும், அக் `கபாடபுரம் என்னும் பெயர் வடமொழியில் வான்மீகி இயற்றிய இராமாயணத்தின்கட் காணப்படுதலின் அவ் இராமாயணக்கதை இத் தமிழ்நாட்டின்கட் டெரியத் துவங்கிய கி.பி. முதல் நூற்றாண்டிற்குப் பின்னன்றி அதற்குமுன் அப்பெயர் இங்கு வழங்குதலாகாமையானும் அச்சொற்றொடர் நக்கீரனார் எழுதியதாகாது. அற்றேற் `கபாடபுரம் இருந்தது பொய்யோ வெனிற், பொய்யன்று; என்னை? அவ் வடமொழிப் பெயராற் கூறப்பட்ட அப் பழந்தமிழ் நகரம் பண்டைநாளில் `அலைவாய் என்னுந் தூய தமிழ்ப்பெயரால் வழங்கப்பட்டதாகும். `அலைவாய் என்னுஞ்சொல் `அலையையுடைய கடலை நோக்கும் வாயில் எனப் பொருடந்து, அவ்வாயிலையுடைய பாண்டியனது தலைநகருக்குப் பெயராயிற்று. இத் தூய தமிழ்ச்சொல்லின் மொழிபெயர்ப்பாகவே `கபாடபுரம் என்னும் வடமொழிப் பெயர் வான்மீகியாராற் குறிக்கப் பட்டது. `கபாடம் என்பது `வாயிற்கதவு எனவும் `புரம் என்பது நகரமெனவும் பொருடரு வனவாகும். பொன் நிறைந்ததாயும், அழகுடைத்தாயும், முத்துமணிகளால் ஒப்பனை செய்யப்பட்டதாயும், பாண்டியர்க்கு இசைந்த தாயுமுள்ள கவாடத்தை வானரவீரர்காள் பார்க்கக் கடவீர்கள்1 என்று சுக்கிரீவன் கூற்றாகவைத்து வான்மீகியார் கூறுதல் காண்க. இவ் `அலைவாய் நகரிற் பழந்தமிழ்த் தெய்வமாகிய முருகன்கோயி லிருந்தமை அலைவாய்ச் சேறலும்நிலைஇய பண்பே என்று நக்கீரனார் `திருமுருகாற்றுப் படையிற் கூறுமாற்றால் அறியப்படும். பழைய அலைவாய் நகர் கடல்கொண்டழிந்தபின், அந்நகரைக் கவர்ந்த கடலின் கரைக்கண் உள்ள `திருச்செந்தூரில் அம் முருகன் கோயில் அமைக்கப்படலாயிற்றென்க. எனவே, கபாடபுரத்தின்கண் இடைச்சங்கம் இருந்ததென்னும் உரை நக்கீரருரை யன்றாயினும், அதிற் போந்த வரலாறு மெய் வரலாறேயாமென ஓர்க. இனிக், கடைச்சங்கம் நடைபெற்ற ஞான்று பாண்டி நாட்டிற் பன்னீரியாண்டு மழைவளங் குன்றிப் பெரியதொரு வற்கடந்தோன்ற மன்னுயிர்கள் மடிந்தனவாகலின், அச்சங்கம் அவ்வற்கடம் நீங்கும்வரையிற் கலைந்து அது நீங்கியபின் திரும்பக் கூடிற்றென அவ்வுரைப்பாயிரங் கூறும் வரலாறு உண்மையாகவே காணப்படுகின்றது. பாண்டி நாட்டை விட்டுவேறு சேயநாடுகளுக்குச் செல்லாதநம் தமிழாசிரியன் மார் பன்னீரியாண்டு உயிர்களை வருத்திய அவ் வற்கடத்தைப் பாண்டியநாட்டின்கண் நிகழ்ந்த தொன்றாக வைத்துரைப் பினும் அக் கொடிய வற்கடஞ் சேய்மைக் கண்ணுள்ள வடநாடுகளிலும் அப் பன்னீரியாண்டு நிகழ்ந்ததென்பது வடமொழியிலுள்ள சமண் நூலாராய்ச்சியால் இனிது புலனாகின்றது. கிறித்து பிறப்பதற்குமுன் மூன்றாம் நூற்றாண்டிலிருந்த `பத்ரபாகு என்னுஞ் சமண்முனிவர் காலத்தில் அக்கொடிய வற்கடம் பன்னீரியாண்டு நிகழ்ந்ததென வடநாட்டின்கண் இயற்றப் பட்ட சமண்நூலொன்று கூறுதலால்,2 அஃது அஞ்ஞான்று வடநாடு தென்னாடு முழுவதூஉம் பரவியிருந்தமை புலனாம். கி.பி. இரண்டாம் நூற்ண்டில் இயற்றப் பட்டதாகிய மணிமேகலையிலும், பன்னீ ராண்டு பாண்டிநன் னாடு மன்னுயிர் மடிய மழைவளம் இழந்தது (14, 55 - 56) என இவ் வற்கடகாலங் குறிப்பிடப்பட் டிருத்தலின், இது மணிமேகலை காலத்திற்குப் பல நூற்றாண்டுகட்கு முன்னமே தென்னாட்டின்கண்ணும் நிகழ்ந்தமை ஐயமின்றித் துணியப்படும். இனிச், சமண்முனிவரான `பத்ரபாகு என்பவர் கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியி லிருந்தவ ரென்பது வரலாற்று நூலாசிரியரால் துணியப்பட்டிருத்தலின், அம் முனிவர்காலத்தில் நிகழ்ந்ததாகிய அக்கொடிய வற்கடமுங் கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் நிகழ்ந்தமை தெளியப்படும். அவ்வற்கடகாலத்திற்கு முன்னிருந்த கடைச்சங்கம், அவ் வறட்சிக் காலத்திற் கலைந்ததென்பதனாற், கி.மு. ஐந்தாம் நூற்றாண்டின் ஈற்றில் நிகழ்ந்த இரண்டாங் கடல்கோளுடன் ஒடுங்கிய இடைச்சங்கத்திற்குப்பின் ஓரைம்பது ஆண்டுகளாவது கழித்துத்தான் கடைச்சங்கங் கூட்டப்பட்ட தாகல் வேண்டும். மூன்றாங் கடல்கோளும் பன்னீரியாண்டு வற்கடமும் ஒருங்குதோன்றிய பேர்இடரான காலத்திற் கலைந்த கடைச்சங்கத்திற்குப்பின், அவ்விடர் நீங்கிய காலத்தில் மீண்டுங் கூட்டப்பட்டதாகிய சங்கத்தை நான்காஞ் சங்கமென்றுரையாமற் கடைச் சங்கமே யென்றுரைத்த லென்னையெனின்; கடைச் சங்கம் அவ்வாறு கலைந்ததும் மீண்டும் கூட்டப்பட்டதும் ஓரரசனது ஆட்சிக் காலத்திலேயே நிகழ்ந்தனவென்று அவ் வுரைப்பாயிரமே தெளிவாகக் கூறுதலால், ஓரரசனாலேயே கலைத்துக் கூட்டப்பட்ட அது வெவ்வேறு சங்கங்களாகாமல் ஒரே சங்கமாகவைத்து வழங்கப்படுவதாயிற் றென்க. இவ்வாற்றால், மூன்றாம்முறை தோன்றிய கடல்கோள் இலங்கைத் தீவைச்சேர்ந்த நூறாயிரங் கடற்றுறைப் பட்டினங்களையுந், தொள்ளாயிரத் தெழுபது செம்படவர் குப்பங்களையும், நானூற்றெழுபது முத்துச்சலாபத் தூர்களையுங் கொள்ளைகொண்டு போயினும்3 அஃது இத் தமிழ்நாட்டின் தென்பகுதியை அத்துணை மிகுதியாய் வாய்ப்பெய்து கொள்ளவில்லை யென்பதூஉம், அதனால் அப்போதிருந்த பாண்டியவேந்தன் தானுந் தன் நாடும் அழிந்துபடாமற் கொடிய அவ் வற்கடத்தினால் மட்டுந் துன்புற்று அச்சங்கத்தை அது நீங்குங்காறுங் கலைத்து அது நீங்கியபின் மீண்டுங் கூட்டினா னென்பதூஉம், அதுபற்றியே அம்மூன்றாம் சங்கங் கடைச்சங்கமென ஒரு பெயரே பெறலாயிற்றென்பதூஉம் அறியப்படும். மற்றுத், தலைச்சங்க இடைச்சங்கங்களோ முதற்கடல்கோள் இரண்டாங் கடல்கோள்களால் வாய்ப்பெய்து கொள்ளப்பட்ட பெரிய நாடுநகரங்கள் மன்னர்கள் மக்களோடு ஒருங்கழிந்து போனமையின், அவற்றை யொருதொடர்பு படுத்துவர் இல்லையாய் ஒழிய, அவை ஒரு சங்கமென ஒன்றாய் வைத்து வழங்கப்படா வாயினவென்பது. இனி, இடைச்சங்கம் அழிந்துபட்ட கி.மு. ஐந்தாம் நூற்றாண்டின் இறுதிக்குப்பின் அதன் இடையிற் றுவங்கிய கடைச்சங்கம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் முதலில் ஒருகாற் கலைந்து மீண்டுங்கூடிப், பின் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் ஈறுவரையில் நடைபெற்று முடிவெய்தியதாகலின் அதன் முழுக்காலவெல்லை அறு நூற்றைம்ப தாண்டுகளே யாகின்றன. மேலே 642 ஆம் பக்கத்திற் கடைச்சங்கம் நடைபெற்ற முழுக் காலவெல்லை 980 - ஆண்டுகளென்று கணக்குச் செய்யப்பட்ட தாயினும், அதன் முழுக்காலவெல்லை 650 ஆண்டுகளேயாதல் தெளியற்பாற்று; அற்றேல், இது முன்னதனோடு முரணாதோ வெனின் முரணாது; என்னை, ஆண்டு அரசர் ஒருவர்க்கு ஒரு குத்துமதிப்பாக இருபதாண்டு வைத்து நாற்பத்தொன்பதின் மர்க்கும் 680 ஆண்டுகள் கணக்குச் செய்யப்பட்டன; ஆனால், அதனை நடாத்திய அவ் வரசர் நாற்பத்தொன்பதின்மரிற் பலர் குறைந்த வாழ்நாளுடை யராய்ச் செல்லுதலும் இயல்பேயாகலின், அக் கணக்கு இப்போது 650 ஆண்டுகளில் வந்து ஓர் உறுதிப்பட்டு முடியலாயிற்றென்க. இன்னும், `இறையனாரகப் பொருள் வந்த வரலாறு தெரிக்கும் உரைப்பகுதியும் ஆசிரியர் நக்கீரனார் உரைத்ததாகாது என்னை? அதன்கட் காணப்படுங் குறிப்புகள் பல பொருந்தாதனவாயிருத்தலின் அப் பொருந்தாக் குறிப்புகள் யாவையோவெனிற் காட்டுதும்: `பன்னீரியாண்டு வற்கடஞ் சென்றபின், மழை மிகப்பெய்து நாடு செழித்தமையிற், கலைத்த கடைச்சங்கத்தைத் திரும்பக் கூட்டலுறும் பாண்டியன் `நூல்வல்லாரைக் கொணர்க என ஒற்றரை எல்லாப் பக்கமும் போக்க, `எழுத்ததிகாரமுஞ் சொல்லதி காரமும் யாப்பதிகாரமும் வல்லாரைத் தலைப்பட்டுக் கொணர்ந்து, பொருளதிகாரம் வல்லாரை எங்குத் தலைப் பட்டிலேமென்று வந்தார். அதனால் அரசன் கவலை பெரிதுடையனாக, அவற்கு இரங்கி ஆலவாயமர்ந்த அவிர்சடைக் கடவுள் அறுபது சூத்திரங்களாலாய இச்சிறு நூலை ஆக்கி, அதனை மூன்று செப்பேட்டிலெழுதித் தான் அமர்ந்த இருக்கையின்கீழ் இட, அதனைக் கோயிற்பூசகன் கண்டெடுத்துக் கொணர்ந்து அரசன்பாற் காட்ட, அதனை அரசன் தன்பால் மீண்ட அந் நூல்வல்லார் கைக்கொடுத்து, அதற்கு உரைகாண்கவென, அவரும் அதனை ஏற்றுப்போய் உரைகண்டுழி, ஒருவருரைத் தவுரை மற்றொருவ ருரைத்த வுரையொடு மறுதலைப்பட்டு, உண்மைப் பொருள் இதுதான் என்பது துணியப்படாதா யொழியப் பின்னர் இறைவனருளாற் பெற்ற உருத்திரசன்மரால் நக்கீரனா ருரைத்தவுரையே மெய்யுரையெனத் துணிந்தார். என்பது இந்நூல் வரலாற்றின் சுருக்கமாகும். இவ்வரலாறு கொண்டு, பன்னீரியாண்டு வற்கடம் நேர்தற்கு முன் நடைபெற்ற கடைச்சங்கத்திருந்த புலவரனைவரும் பொருளதிகாரம் வல்லுநராயிருந்தன ரென்பதூஉம் அவ் வற்கடத்தின்பிற் றிரும்பக் கூட்டப்பட்ட கடைச்சங்கத்திற் போந்த புலவரே பொருளதிகாரவுணர்ச்சி நன்கு வாயாதாவராயின ரென்பதூஉம் அறியப்படும். பன்னிரண்டு ஆண்டுகட்குமுன் கலைந்து பின்னர் அது திரும்பக் கூட்டப்படுதற்குள் முன்னிருந்த புலவரனைவரும் மடிந்து போயினாலன்றிப் பொருளதிகார வுணர்ச்சி இல்லையா யொழிதல் ஏலாதன்றே! திரும்பக் கூட்டப்பட்ட அக் கடைச்சங்கத்திற் பொருளதிகாரம் வல்லார் எவரும் இருந்திலராயின், அகப்பொருளிலக்கண மாகிய `இறையனாரகப் பொருளைப் பாண்டிய மன்னன் அவர் கைகொடுத்து அதற்குப் பொருள்காணச் சொல்லுதலும், அவருள் ஒருவராகிய நக்கீரனார் அதற்கு மெய்யுரை கண்டாரென்றலும் யாங்ஙனம் பொருந்தும்? முன்னரே பொருளதிகார வுணர்ச்சி நன்கு வாயாதவராயின் நக்கீரனார் அதற்கு அத்துணை விழுமியதொரு விரிவுரை யுரைத்து அகப்பொருளிலக்கணங்களெல்லாம் ஒருங்கெடுத்துத் தெளித்தல் யாங்ஙனம் கைகூடும்? பொருளதிகார வுணர்ச்சி யிலராயின், தொல்காப்பியப் பொருளதிகாரத்திலிருந்து பல சூத்திரங்களைத் தமதுரையில் நக்கீரனார் எடுத்துக் காட்டி விளக்குதலென்னை? என்று இவ்வாறெல்லாந் தடை நிகழ்த்துவார்க்கு, அவ் வரலாறு உண்மையன்றாதல் தெற்றென விளங்கா நிற்கும். மேலும், இறைவனே அந்நூலை இயற்றித் தந்தா ரென்பதும் நம்புதற் குரித்தன்றாம். மக்களறிவு விளங்குதற்கு கருவிகளான பல அமைதிகளை வகுத்து, அவ்வாற்றான் அவரறிவினுண் ணின்று அதனை யியக்கி, அம் முகத்தால் அம்மக்கடாமே பல அரும்பெரு நூல்களையும் புதுமை களையும் ஆக்குமாறு இறைவன் புரிந்து வருதலைக் காண் கின்றாமே யன்றி, அவன்றானே நூல்களையும் புதுமைகளையும் ஆக்குதல் யாண்டுங் கண்டாமில்லை. மேனாட்டு வெண் மக்கள் நிலத்திலும் நீரிலும் வானிலுஞ் செல்லுமாறு அமைத்திருக்கும் பொறிகளின் புதுமைகளைக் காண்பவர்க்குக், கடவுளன்றி மக்களும் இங்ஙனம் இவற்றைச் செய்தல் இயலுமோ என்று இறும்பூது எழாநிற்கும். இத்தகைய புதுமைகளெல்லாம் மக்களறிவினாற் செய்யப் படுவன வாயிருக்க. இவற்றோடொத்த அருமைப்பாடு இலவாய், மக்களியற்கை உலக வியற்கைகளை யுள்ளவாறு ஆராய்ந்து விளக்கும் ஆராய்ச்சி யொன்றேயுடைய `இறையனாரகப் பொருள் போன்ற நூல்கள் மட்டும் இறைவனால் ஆக்கப்பட்டன வென்றல் ஒரு சிறிதும் நம்பற்பாலதன்றாம். ஆகவே, பொய்யும் புரட்டும் நிறைந்த கதை நூல்களையுங்கூட இறைவன் வாய்மொழியெனக் கூசாதுரைக்கும் பிற்காலத்துப் பொய்யர் மலிந்த புராண காலத்திலே, இக் கதையுங் கட்டிவிடப்பட்ட தொன்றாகல் வேண்டுமேயல்லாது, பொய்யா நாவினரான நக்கீரர் முதலான சங்கப்புலவர் காலத்தில் இக்கதை வழங்கிய தாகாது. தொல்காப்பிய பொருளதிகாரத்திலுள்ள `களவியல், `கற்பியல், என்பன மிக விரிந்து கிடத்தலின், அவற்றைச் சுருக்கி அறுபது சூத்திரத்தில் ஒரு சிறு நூலை எவரோ ஒரு சிறந்த புலவர் இயற்றி, அதனைப் பனையேட்டிற் பொறித் துவைப்பிற் செல்லரித்துவிடுமென அஞ்சிச், செப்பேட்டிற் பொறித்து வைத்தா ராகல் வேண்டும். அஃது ஆலவாய்க் கோயிலில் இறைவன் திருவுருவத்தின் கீழ் வைக்கப்பட்டிருந் ததனை உற்றுநோக்குமிடத்துப், பண்டொருகாலத்திருந்த அக் கோயிற் பூசகரொருவராதல், அல்லதவர்க்கு நேயரான பிறரொருவராதல் அந்நூலை யியற்றினாராகல் வேண்டும். பின்னர் அஃது இறைவன் திருவுருவத் தவிசின்கீழிருந்து எடுக்கப்பட்ட ஏதுவினால்,அஃது இறைவனாலேயே இயற்றப்பட்ட தாகுமெனக் கருதிவிட லானார். பாண்டியனது கவற்சி கண்டு இறைவனே யியற்றினனாயின், உடனே வெளிப்படுக்கப்படுவ தாகிய அந் நூலைச் செல்லுக் கஞ்சிச் செப்பேட்டிற் பொறிக்க வேண்டுவது இன்றாம். செப்பேட்டிற் பொறிக்கப்பட்ட தென்பது கொண்டே அது பண்டிருந்த புலவரொருவரால் ஆக்கப்பட்ட தென்பது போதரும். இங்ஙனங் கண்டெடுக்கப்பட்ட இறையனாரகப் பொருள் என்னும் நூல் திட்பநுட்பஞ் செறிந்து, பரந்த தொல்காப்பியப் பொருளிலக்கணச் சுருக்கமாய், அவ்விலக்கணப் பொருளைத் தெளித்துரைக்கும் பெற்றி கண்டே, பாண்டிமன்னன் அதனை வழங்குவித்தற் பொருட்டு அதற்கொரு நல்லுரை காணுமாறு புலவரை ஏவினான். ஒரு நூலுக்குப் பலர் உரை வகுக்குங்கால், அப் பலருரையும் ஒன்றோடொன் றொவ்வாமலிருத்தல் எங்கும் நிகழும் இயற்கை நிகழ்ச்சியேயாம். இனி, அவ்வுரைகள் பல வற்றுள்ளுஞ் சிறந்ததொன்றனைத் தெரிந்தெடுத்தல் பேரறிவு வாய்ந்த சான்றோர்க்கு எளிதிற் கைகூடுவதேயாகவும், இதன் பொருட்டுத் தெய்வத்தன்மை மிக்க ஓர் ஊமைப்பிள்ளையி னுதவியைத் தேடினாரென்றல், பின்வந்த புராண காலத்தவர் கட்டிவிட்ட கதையேயாகுமல்லால், உண்மைப் பேரறிவு சான்ற சங்கப் புலவர் குழாத்திற்குச் சிறிதும் அடாது. அப் புலவர் பெருமக்கள் தம்முள் இகலாமைப் பொருட்டுத், தம்மாற் பெரிது பாராட்டப்பட்ட `உருத்திரசன்மர் என்னும் நடுநிலை திறம்பாப் புலவர்பெருமானை அவற்றுள் விழுமியவுரை இதுவெனத் தேற்றும் நடுவராக எல்லாரும் ஓருப்பட்டு வைத்து, அவர் தம்மால் நக்கீரனாருரையே அந்நூலுக்கு மெய்யுரையெனக் கண்டாரென்க. இவ் வுண்மை நிகழ்ச்சியே பிற்போந்த புராண காலத்தவரால் திரித்துரைக்கப்பட்ட தாகலின், இவ்வுரைப்பாயிரப் பகுதி நக்கீரனாருரைத்த தன்றென்பது ஒருதலை. இனி, இவ் `இறையனாரகப் பொருளுக்கு நக்கீரனார் தாம் உரைத்த உரையைத் தம் மகனார் கீரவிகொற்றனார்க்கு விளக்கிச் சொல்லி அதனை அவர்கைக் கொடுத்தார்; கீரவிகொற்றனார் அங்ஙனமே அதனைத் தம் மாணாக்கர் தேனூர் கிழார்க்கு விளக்கிச் சொல்லி அதனை அவர்கைக் கொடுத்தார்; அவர் அதனைப் படியங் கொற்றனார்க்குக் கொடுத்தார்; படியங்கொற்றனார் செல்வத்தாசிரியர் பெருஞ்சுவனார்க்கும், அவர் மணலூராசிரியர் புளியங்காய்ப் பெருஞ்சேந்தனார்க்கும், அவர் செல்லூராசிரியர் ஆண்டைப் பெருங்குமரனார்க்கும், அவர் திருக்குன்றத் தாசிரியர்க்கும், அவர் மாதவளனார் இளநாகனார்க்கும், அவர் முசிறி யாசிரியர் நீலகண்டனார்க்குமாக அதனை விளக்கி யுரைத்து அவ்வுரையினை இங்ஙனம் வழிவழியே வழங்குவித்தார் என்னும் உரைப்பகுதியும் நக்கீரனார் உரைத்ததாகாது; என்னை? நக்கீரனார் தமக்குப் பின்வந்த பத்துத் தலைமுறைப் புலவரை முன்னெடுத்துரைத்த லாகாமையால். ஒரு தலைமுறைக்கு முப்பதாண்டு வைத்துக் கணக்குச் செய்யின், இப் பதின்மர்க்கும் முந்நூறாண்டுகளாகும். இறுதிக்கண் நின்ற முசிறியாசிரியர் நீலகண்டனார் ஆசிரியர் நக்கீரனார்க்கு முந்நூறாண்டு பிற்பட்டு வந்தோராகையால், அவரே இப் பத்துத் தலைமுறை கூறும் உரைப் பகுதியினைச் சேர்த்தாராகல் வேண்டுமென்பது. மேலும், பன்னீரியாண்டு வற்கடம் நிகழ்ந்ததும், அது நிகழ்ந்த ஞான்று கடைச்சங்கங் கலைக்கப்பட்டு அது நீங்கியின் திரும்பக் கூட்டப்பட்டதும் உண்மையேயாயினும், அவ்வாறது பெயர்த்துங் கூட்டப்பட்டுழி `இறையனாரகப் பொருள் கண்டெடுக்கப்பட்ட தென்றலும், அப்போததற்கு நக்கீரனார் முதலான ஆசிரியர் உரைகண்டாரென்றலும் மெய்யாகா. ஏனெனில்,அவ் வற்கடமுங் கடைச்சங்கங் கலைத்துக் கூட்டப்பட்டதும் மேலே காட்டியவாறு கிறித்து பிறப்பதற்கு இருநூற்றைம்பதாண்டுகளின் முன் நிகழ்ந்தன வாகும்; மற்று, ஆசிரியர் நக்கீரனாரோ கிறித்து பிறந்த முதல் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்தோராதலை மேலே 579 ஆம் பக்கத்தில் விளக்கிக்காட்டினேம். தமது உரை அரங்கேறியது உக்கிரப் பெருவழுதியின் அவைக்களத்திலே யாம் என்று நக்கீரனாரே கூறுதலாலும், அவ்வுக்கிரப் பெருவழுதி யென்பான் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதியே யாவனென மேலே 592, 593 ஆம் பக்கங்களிற் காட்டப்பட் டிருத்தலாலும், இவ்விருவர் காலமுங் கி.பி.முதல் நூற்றாண்டிற்குமேற் செல்லாமை யாலுங் கி.பி. முதல் நூற்றாண்டில் நிகழ்ந்த இந்நிகழ்ச்சிகளைக், ».K.மூன்wh« நூற்றாண்டில் நிகழ்ந்த வற்கட காலத்தை யடுக்கவைத் துரைக்கும் அவ்வுரைப் பகுதி பெரியதொரு தலைதடுமாற் றத்தை விளைக்கக் காண்டலின், அது பிற்காலத்தவர் எழுதி நுழைத்ததே யல்லாமல் நக்கீரனார் உரைத்த தன்றென ஓர்க. இவ்வாறாக, ஆக்கியோன் பெயர் முதலிய நூற்பாயிர வுறுப்புகள் பதினொன்றனையும் விளக்கிச் சொல்லும் நக்கீரனாரது பாயிரவுரைக் கிடையே மடுக்கப்பட்ட உரைப்பாயிரைவுரை, நக்கீரனார் தம் மாணாக்கர் மரபில் வந்த பின்னையோர் ஒருவராற் சேர்க்கப் பட்டதாதல் தெளிந்து கொள்க. அது பாயிரத்துள்ளே உரைத்தாம் என நக்கீரனார் தமதுரையிற் குறிப்பிட்டவை, தாம் உரைத்த நூற்பாயிரவுரை யிலுள்ளனவற்றையே சுட்டக் காண்டுமன்றிப், பிறர் அதனிடையே செருகிய உரைப் பாயிரத்தி லுள்ளவற்றை யல்லாமையால், நக்கீரனார் தம் அவ் வுரைக்குறிப்புக் கொண்டு பாயிரவுரை முற்றும் நக்கீரனாரே யெழுயதிதா மென்றார் கூற்று, அவ் வேறுபாடுகளைப் பகுத்தறிய மாட்டார்தங் கூற்றாயினவாறு கண்டுகொள்க; இதனை முன்னரும் உரைத்தாம். இனி, முதற்சூத்திர வுரையினீற்றில் `என்மனார் என்பதற்குச் சொன்முடிபு கூறிய உரைப்பகுதியும் நக்கீரனாருரைத்ததன்றென்பது மேலே 629 ஆம் பக்கத்தில் விளக்கிக்காட்டினாம்; அங்கே அதனைக் காண்க. இனி, இறையனாரகப் பொருட் சூத்திரங்களுக்கு நக்கீரனார் உரைத்த உரைக்கிடையே அவர் தம்மால் மேற்கோள்களாகக் காட்டப்பட்ட செய்யுட்கள், அகநானூறு, `ஐங்குறுநூறு, `குறுந்தொகை `நற்றிணை `கலித்தொகை, `கூத்தநூல், `திருக்குறள், `காக்கை பாடினியம், `தொல் காப்பியம் முதலான தமிழ்ச்சங்க நூல்களினின்று எடுக்கப் பட்டன வாகும். அகநானூற்றி லிருந்து எட்டுச் செய்யுட் களும், ஐங்குறுநூற்றிலிருந்துமூன்று செய்யுட்களும், நற்றிணை யிலிருந்து பன்னிரண்டு செய்யுட்களுங், கலித்தொகை யிலிருந்து இரண்டு செய்யுட்களுங், கூத்த நூலிலிருந்து ஒரு செய்யுளுந், திருக்குறளிலிருந்து ஐந்து செய்யுட்களுங், காக்கை பாடினியத் திலிருந்து ஒரு சூத்திரமுந், தொல்காப்பியத் திலிருந்து முப்பத்திரண்டு சூத்திரங்களும், பெயர் தெரியாத ஏனைப் பல பண்டை நூல்களிலிலிருந்து நாற்பத்தாறு செய்யுட்களும் ஆக நூற்றிருபத்தெட்டுச் செய்யுட்கள் அவ்வரைப் பொருளை நன்கு விளக்குதற்கு மேற்கோள்களாக அவர் தம்மால் எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன. இங்ஙனங் காட்டப் பட்ட இப் பழந்தமிழ்ப் பாக்களே உரைப் பொருளை மாணாக்கன் இனிது தெளிந்து கொள்ளுதற்குப் போதுமானவாம்; இவற்றின் வேறாக மேலும் பல செய்யுட்களை யெடுத்துக் காட்டுதல், வேண்டா கூறல் மிகைபடக்கூறல் கூறியதுகூறல் என்னுங் குற்றங்கட் கிடனாதல் அவ்வுரை மேற்கோள்களை நுணுகி யாராய்வார்க்குத் தெற்றென விளங்கும். இதற்குச் சான்றாக ஈண்டு ஒன்றெடுத்துக் காட்டுதும்: எழில்நலங் கிளர்ந்த ஒரு குமரிபாற் காதல் கைம்மிக்கு மெலிந்து வந்த தன் தலைமகனை நோக்கி அவன் பாங்கன் அவற்கு உற்றதுவினாவ நெருநல் இவ் வகையார் ஒருவரைக் கண்டேற்கு என்னுள்ளம் பள்ளத்துவழி வெள்ளம்போல் ஓடி இவ்வகைத் தாயிற் றென்று சொல்லும்; அதற்குச் செய்யுள்; (3ஆஞ் சூத்திர உரை) சிறுவெள் ளரவின் அவ்வரிக் குருளை கான யானை அணங்கி யாஅங்கு இளையள் முளைவாள் எயிற்றள் வளையுடைக் கையள்எம் அணங்கி யோளே (குறுந்தொகை, 119) இதன்கட் போந்த உரைக்கு எடுத்துக்காட்டிய இச்செய்யுளும் மற்றொரு குறுந்தொகைச் செய்யுளும் உரையாசிரியன் கூறிய பொருளை விளக்குதற்குச் சாலுந் தன்மையவா யிருக்கின்றன. இவ்வா றிருப்பவும், மேற்காட்டிய குறுந்தொகைச் செய்யுட் பொருளையே கொண்ட அளையா ரரவின் குருணை அணங்க அலைபார் கழன் மன்னர், பொரு நெடுந்தானைப் புல்லார் தம்மை என மேலும் மூன்று செய்யுட்கள் கூறியது கூறலாய் எடுத்துக் காட்டப்பட்டிருக் கின்றன. தாம் எடுத்துக்காட்டிய குறுந்தொகைப் பாக்களி னாலேயே இனிது விளங்கும் அப் பொருளுக்கு நக்கீரனார் மேலும் பல செய்யுட்களை யெடுத்துக் காட்டிக் கூறியது கூறல் மிகைபடக் கூறலென்னுங் குற்றங்களுட் படுவாரல்லர். ஆசிரியர் நக்கீரனார் இத்தகைய குற்றங்களுட் படும் நீரரல்லர் என்பது, அவர்மிக நுணுகி யாராய்ந் தெழுதும் இவ் வுரையில் ஒரு சொல்லாயினும் வேண்டா கூறலாய் நில்லாமல் எல்லாம் ஒன்றறோடொன்று தொடர்புற்று ஒன்றற்கொன்று இன்றியமையாதனவாய் நிற்றலை உற்றுநோக்குவார்க் கெல்லாம் நன்குவிங்கும். இங்ஙனமே தாங்கூறும் உரைப் பொருள்கட்கு அவர் மேற்கோள்களாக எடுத்துக் காட்டிய தமிழ்ப்பாட்டின் பொருளையே நுதலும் பலப்பல கட்டளைக் கலித்துறைப் பாக்கள் ஆங்காங்கு வேண்டா கூறலாய்ச் செருகப்பட்டிருத்தலை ஆராய்ந்து காணவல்ல அறிவு மதுகை யுடையார், அக் கலித்துறைச் செய்யுட்களும் அங்ஙனமே `சிலப்பதிகாரங் கானல் வரியினின் றெடுத்துக் காட்டப்பட் டிருக்கும் ஏழு செய்யுட் களும் நக்கீரனாராற் காட்டப்பட்டன ஆகாமையினைத் தெற்றென அறிந்துகொள்வர்.மேலும், இக்கட்டளைக் கலித்துறைப்பா நக்கீரனார் இருந்த கி.பி. முதல் நூற்றாண்டில் வழங்கிய தூஉம் அன்று; அது முதன்முதல் வழங்கத் துவங்கிய தெல்லாங் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதிக்குப் பின்னரேயாம்; கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட பழந்தமிழ் நூல்களில் ஓரிடத்தாயினும் இக் கட்டளைக், கலித்துறைப் பாவினைக் காண்டல் இயலாது. ஆகவே வேண்டா கூறலாய் இவ் வுரையின்கட் போந்த கட்டளைக் கலித்துறைச் செய்யுட்கள் அத்துணையும், நக்கீரனார்க்குப் பல நூற்றாண்டுகள் பிற்பட்டுவந்த ஒருபுலவராற் செய்து சேர்க்கப்பட்டனவாகுமே யல்லாது, நக்கீரனாரால் எடுத்துக் காட்டப்பட்டன ஆகாவென்று தேர்ந்து கொள்க. அற்றே லஃதாக, மாணிக்கவாசகப் பெருமான் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் இருந்தனராயின், அவர் அருளிச்செய்த `திருச்சிற்றம்பலக் கோவையாரில் அகப்பொருட்டுறைகளை விளக்குங் கட்டளைக் கலித்துறைச் செய்யுட்கள் மலிந்து கிடக்கவும், அவை தம்மை விடுத்து அவ் வகப் பொருட்டுறை களையே நுதலும் வேறு முந்நூற்றிருபத் தொன்பது கட்டளைக் கலித்துறைச் செய்யுட்களைப் புதியவாய்ப் படைத்து, அவற்றை அப் பின்வந்த புலவர் இவ் விறையனாரகப் பொருளுரையி னிடையிடையே செருகி விட்ட தென்னையெனிற் கூறுதும்: இக் கட்டளைக் கலித்துரைச் செய்யுட்கள் முந்நூற்றிருபத் தொன்பதிலும் புகழ்ந்து பாடப் பெறுவோன் ஆண்மை மிக்க ஒரு பாண்டிய வேந்தனே யாவன்; அவ்வேந்தன் பெயர்கள்: உசிதன், பராங்குசன், பஞ்சவன், பூழியன்மாறன், நெடுமாறன், அரிகேசரி, வரோதயன், விசாரிதன், அதிரியன், நேரியன், வானவன்மாறன், இரணாந்தகன், சத்துருதுரந்தரன், விசயசரிதன், கலிமதனன் முதலிய பலவாகச் சொல்லப்படு கின்றன. அவன் பாழி, விழிஞம், கோட்டாறு, ஆற்றுக்குடி, பூலந்தை, சேவூர், நறையாறு, கடையல்,நெல்வேலி, வல்லம், மணற்றிமங்கை வெண்மாத்து, களத்தூர், நாட்டாறு, நெடுங்களம், குளந்தை, சங்கமங்கை, வாட்டாறு மேற்கரை முதலான பத்தொன்பதூர் களில் நடந்த பெரும் போர்களிற் சேரமன்ன னொருவனை அடுத்தடுத்து வென்றமை இக்கலித் துறைச் செய்யுட்களிற் பலகாலும் உயர்த்துச் சொல்லப்படு கின்றது. இவ்வாற்றால் இப் பாண்டி வேந்தனுக்கும், அவன்காலத் திருந்த சேர மன்னனொருவனே பெரும் பகைவனா யிருந்தமை அறியப்படும். ஈதிங்ஙனமாகவுங், கோடன் மலர்ந்து என்னும் 323 ஆஞ் செய்யுளிற் `பொன்னி நாடன் என்னும் ஒரு சொற்றொடர் காணப்படுதல் கொண்டு, அவன் காலத்துச் சோழ மன்னனொருவனையும் இவன் வென்றானெனப் பொருள் பண்ணினாரும் உளர்.4 பாழிவென்ற ஆடல் நெடுங்கொடித்தேர் அரிகேசரி அந்தண் பொன்னி நாடன் பகைபோல் மெலிகின்ற தென்செய்ய நன்னுதலே. என அச் செய்யுளிற் போந்த அடிகள் `பாழியென்னும் ஊரிற் போர்க்களத்தே வெற்றிகொண்ட ஆடுதலையுடைய நீண்ட கொடி கட்டிய தேரினையுடைய அரிகேசரி எனவும், `அழகிய குளிர்ந்த காவிரியினையுடைய நாட்டுக்குத் தலைவன் ‘எனவும், `அத்தகைய தலைவற்குப் பகையாயினார் மெலிவடைதல்போலச் செவ்விய நன்னுதலையுடைய இந்நங்கையும் மெலிவடை தலென்னை? எனவும் பொருடருதலின், `அரிகேசரி `பொன்னி நாடன் என்னும் இருபெயரும் ஓரரசன் மேலவாயே வருதல் வெள்ளிடை மலைபோல் விளங்கற்பாற்று. இச் செய்யுளிற் குறிப்பிடப் பட்ட பாண்டி மன்னன் தனது பாண்டி நாட்டுக்கே யன்றிச் சோழநாட்டுக்குந் தலைவனாயிருந் தனனென்னும் அத்துணையே இதன்கட் பெறப்படுகின்றதல்லாமல், இவன் சோழ மன்னனை வென்றானென்பதும் அதனாற் பெறப்பட வில்லை. சோழநாட்டுக்குந் தலைவனென்றமையானே அது பெறப்படுமாலெனின், அஞ்ஞான்றைச் சோழ மன்னற்கு அரசுக்குரிய புதல்வன் இல்லையாய்ப் புதல்வியொருத்தியே இருந்தனளாயின், அப் புதல்வியை மணந்துகொண்ட முறையால் அப் பாண்டிவேந்தன் சோழ நாட்டுக்குந் தலைவனாதல் கூடுமாகலின்,அந் நாட்டினுரிமை அவற்குச் சொல்லியதே கொண்டு அவன் சோழனை வென்றா னென்றல் பொருந்தாதென மறுக்க. இனி, இப் பாண்டிவேந்தன் பெயர்கள் பலவற்றுள் `நெடுமாறன் என்பதும் ஒன்றாய்க் காணப்படுதலானும், இவன் `நெல்வேலியிற் போர்புரிந்து பகைவரைத் தொலைத்தா னென்பது சொல்லப்படுதலானுந், திருஞான சம்பந்தப் பெருமான் காலத்தவனும் நெல்வேலிச் செருக் களத்தில் வந்தெதிர்ந்த வடபுல மன்னரைச் சாய்த்த வனுமாகிய `நின்றசீர் நெடுமாற் பாண்டியனே இறையனாரகப் பொருளுரையி னிடையிடையே செருகப்பட்ட கட்டளைக் கலித்துறைச் செய்யுட்களிற் குறிப்பிடப் பட்டவனாவ னென்று கொள்வாரும் உளர். அது பொருந்தாது நின்றசீர் நெடுமாறன் நெல்வேலிப் போர்க்களத்திற் சாய்த்தது வடக்கிருந்து படைதிரட்டி வந்த வடுகமன்னரையே யாம்; அஃது, ஆயவர சளிப்பார்பால் அமர்வேண்டி வந்தேற்ற சேயபுலத் தெவ்வரெதிர் நெல்வேலிச் செருக்களத்துப் பாயபடைக் கடன்முடுகும் பரிமாவின் பெருவெள்ளங் காயுமதக் களிற்றினிரை பரப்பியமர் கடக்கின்றார். எனவும், இனையகடுஞ் சமர்விளைய இகலுழந்த பறந்தலையிற் பனைநெடுங்கை மதயானைப் பஞ்சவனார் படைக்குடைந்து முனையழிந்த வடபுலத்து முதன்மன்னர் படைசரியப் புனையுநறுந் தொடைவாகை பூழியர்வேம் புடன்புனைந்து. (நின்றசீர் நெடுமாற நாயனார், 3, 7) எனவும் போந்த பெரியபுராணச் செய்யுட்களால் நன்குணரப் படும். மற்று, இறையனாரகப் பொருளுரைக் கலித்துறைகளிற் சுட்டப்பட்ட பாண்டியனோ நெல்வேலிப் போர்க்களத்திற் றொலைத்தது இன்னாரையென்பது சொல்லப்படவில்லை; வாளா. நீடிய பூந்தண் கழனி நெல்வேலி நிகர்மலைந்தார் ஓடிய வாறுகண் டொண்சுடர் வைவே லுறைசெறித்த ஆடியல் யானை அரிகேசரி. (22) என்று பொதுப்படப் பகைவரை ஓட்டினானென்னு மளவே சொல்லப்பட்டிருக் கின்றது. நெல்வேலியில் அவனால் முறிவுண்ட பகைவர் பெயர் குறிக்கப்பட்டில தேனும், விழிஞம், கோட்டாறு, ஆற்றுக்குடி, பூலந்தை, சேவூர், நறையாறு, கடையல் முதலான போர்க்களங்களில் அவனாற் றொலைவுண்டோன் ஒரு சேரமன்னனே யென்பது அடுத்தடுத்து விளக்கமாய்ச் சொல்லப் படுதலின், நெல்வேலி முதலான ஏனைப் பறந்தலைகளிலும் அப் பாண்டியனாற் றோல்வியுற்றோன் ஒரு சேரமன்னனே யாவனன்றி வடபுலமன்னன் ஆகான். ஆகவே, நெல்வேலிப்போரில் வென்றான் என்னுங் குறிப்பு ஒன்றேகொண்டு, இறையனாரகப் பொருளுரைக் கலித்துறைப் பாக்களில் மொழியப்பட்டோன் `நின்றசீர் நெடுமாறனே யென்றல் பெரிதும் பிழைபடுவதுடைத் தாம். இனிச், சின்னமனூரிலும் வேள்விக் குடியிலுங் கண்டெடுக்கப்பட்ட பட்டையங்களானே இந் நின்றசீர் நெடுமாற பாண்டியனுக்கு முன்னே `செழியன் சேந்தன் `மாறவர்மன் அவநி சூளாமணி, `கடுங்கோன் எனப் பெயரிய பாண்டிய அரசர் மூவர் அரசுபுரிந்தமை அறியக் கிடக்கின்றது. அம் மூவரில் நடுநின்ற `அவநி சூளாமணி என்னும் பாண்டியனுக்கும் `மாறன் என்னும் பெயர் உண்மை தெளியப்படுதலானும் நடுக்காலத்துச் சமண் தமிழ்க் காப்பியங்களுள் மிகச்சிறந்ததாகிய சூளாமணி என்பது இப் பாண்டிமன்னன் பெயரால் இவன்மகன் `செழியன் சேந்தன் காலத்தில் ஆக்கப்பட்டதனை உற்றுநோக்குமிடத்து அவ் `அவநி சூளாமணி மாறன் தமிழ்மொழிக்கண் மிக்க அன்புடையனாய் அதனை வளர்த்தலில் நிரம்பக் கருத்தூன்றி நின்றமை புலப்படுதலானும் `இறையனாரகப் பொருளுரையின் இடையிடையே செருகப்பட்ட கட்டளைக் கலித்துறைச் செய்யுட்கள் அத்துணையும், அவனது தமிழ்ப் பற்றினையும் அவன்றன் பேராண்மையினையும் பாராட்டுதற்பொருட்டு அவனது அவைக்களத்துப் புலவரொருவராற் பாடப் பட்டமை துணியப்படும். இவ் அவநி சூளாமணி மாறன் காலத்திற் றமிழ்மொழி மதுரையில் மிகவுஞ் செழிப்புற் றிருந்த தென்பது. வண்டுறை வார்பொழில் சூழ்நறை யாற்றுமன் ஓடவைவேல் கொண்டுறை நீக்கிய தென்னவன் கூடற் கொழுந்தமிழின் ஒண்டுறை மேலுள்ளம் ஓடியதோ அன்றி யுற்றதுண்டோ தண்டுறை வாசிந்தை வாடிட என்நீ தளர்கின்றதே என்னும் 23ஆங் கலித்துறைச் செய்யுளிற் கூறப்படுத லாலும், அவன் தமிழ்மொழி யுணர்ச்சியிலும் நிரம்பி யிருந்தா னென்பது, உரையுறை தீந்தமிழ் வேந்தனுசிதன் (2), பாவணை யின்றமிழ் வேந்தன் பராங்குசன் (13), ஆய்கின்ற தீந்தமிழ் வேந்த னரிகேசரி (28), அந் தீந்தமிழநர் கோமான் (50), எனப் பலகாலும் அவன் அக் கலித்துறைச் செய்யுட்களிற் பாராட்டப்படுதலாலும் நன்கு தெளியப்படும். இவ் வவநி சூளாமணி மாறனுக்கும்,இவன்றன் பேரனாகக் கருதப்படும் நின்றசீர் நெடுமாறனுக்கும் இடையில் அறுபதாண்டு களாவது சென்றதாகல் வேண்டும். நின்றசீர் நெடுமாறன் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே இருந்தமை கல்வெட்டுகளாற் றுணியப்பட்டிருத்தலின், அவற்குப் பாட்டனான அவநி சூளாமணிமாறன் கி.பி.ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியி லிருந்தானாதல் வேண்டுமென்பதுந் தானே பெறப்படும். இம் மன்னர்பிரான் காலத்திற் றமிழ்மொழிப் பயிற்சியும் ஆராய்ச்சியும் மிக்கு ஒங்கவே, அஞ்ஞான்று பெரிது பயிலப்பட்டுவந்த இறையனாரகப்பொரு ளுரையினிடையே, அப் பாண்டி மன்னன்மேற் பாடிய கலித்துறைச் செய்யுட்கள் எல்லா வற்றையும் அவற்றைப் பாடிய புலவரே சேர்த்துவிட்டா ரென்க. இவ்வாற்றால், இப் பாண்டிவேந்தன் `இறையனாரகப் பொருளுக்கு ஆசிரியர் நக்கீரனா ரியற்றிய சாலச்சிறந்த தமிழுரைப் பயிற்சியை மிகப் பரவவைத்தா னென்பதூஉம், அது பற்றியே அவன் காலத்துப் புலவரொருவர் அவன்மேற் பாடிய அக் கலித்துறைச் செய்யுட்களை அதன்கட் சேர்க்கலாயினா ரென்பதூஉம் அறியற்பாலன. மாணிக்க வாசகப் பெருமான் அருளிச் செய்த `திருச்சிற்றம்பலக் கோவையாரின் அகப்பொருட் கலித்துறைகள் சைவசமயத் தெய்வமாகிய சிவபெருமான் மேலவாய் வருதலிற் பொதுநூலாகிய இறையனார் களவிய லுரையில் அவற்றை யெடுத்துக் காட்டுதல் நடுவன்றாகலானும், அல்லது அவற்றை யெடுத்துக் காட்டலுறின் அக்களவியலுரைப் பயிற்சியை வளர்த்துத் தமிழை யோம்பித் தம் போன்ற தமிழ்ப்புலவரைப் புரக்கும் அவ் வேந்தர் பெருமானைப் பாராட்டுதற்கு விழைந்த தங்கருத்து நிரம்பாமையானும் அப் புலவர் அவ் வரசன் மேற்பாடிய கலித்துறைச் செய்யுட்க ளவ்வளவையும் அவ்வுரையின்கட் சேர்த்துவிடலாயின ரென்று தெளிந்து கொள்க. இனி, இறையனாரகப் பொருள், 2 ஆஞ் சூத்திர வுரையில் `நயப்பு என்பதற்கு ஆசிரியர் நக்கீரனார் உரைத்த உரையி னிடையே செருகப் பட்டிருக்கும், வேறு மெனநின் றிகன்மலைந் தார்விழி ஞத்துவிண்போய் ஏறுந் திறங்கண்ட கோன்றென் பொதியில் இரும்பொழில்வாய்த் தேறுந் தகையவண் டேசொல்லு மெல்லியல் செந்துவர்வாய் நாறுந் தகைமைய வேயணி யாம்பல் நறுமலரே. என்னுஞ் செய்யுளும் அதனுரையும் அவர் தம்மால் வரையப்பட்டன ஆகா. `நயப்பு என்பதற்கு நக்கீரனாருரைத்த உரைப்பொருளையே இச் செய்யுள் தன்கட்கொண்டு நிற்கின்றது. `நயப்பு இன்னதென விளக்கித் தாம் கூறிய உரைக்குப்பின் அவர் தம்மாற் காட்டப்பட்ட மேற்கோள் கொங்குதேர் வாழ்க்கை என்னும் பழைய `குறுந்தொகைச் செய்யுள் ஒன்றேயாம். இக் குறுந்தொகைச் செய்யுட் பொருளே அடங்கிய மேலும் ஐந்து கலித்துறைச் செய்யுட்கள் வேண்டா கூறலாய்ப் பின்னும் ஈண்டுச் சேர்க்கப் பட்டிருத்தலை உற்றுநோக்குமிடத்து, இவை யெல்லாமும், இவற்றுட் சிலவற்றிற்குப் போந்த வுரைகளும் நக்கீரனார் கண்ட வுரையுட்படுவன அல்லவென்பது நன்கு புலனாம். இங்ஙனமே, பிறரால் பிற்காலத்தே சேர்க்கப்பட்ட கலித்துறைச் செய்யுட்களைப் பற்றிய பிற உரைக்குறிப்புகள் சிற்சிலவும் அச் செய்யுட்களைச் சேர்த்தவர் தம்மாலே தாம் எழுதி உடன்சேர்க்கப்பட்டனவாதல் வேண்டுமென் றுணர்ந்து கொள்க. அவையெல்லாம் ஈண்டெடுத்துக் காட்டலுறின் இது பின்னும் விரியும். இவ்வளவில், ஆசிரியர் நக்கீரனார் இறையனாரகப் பொருளுக்குரைத்த ஒப்புயர் வில்லா விழுமிய உரையி னிடையிடையே பிறராற் பின்றைக்காலத்தே சேர்க்கப்பட்டவை: நக்கீரனாரது அவ் வுரைவந்த வரலாறு தெரிக்கும் உரைப்பகுதியும், இடை யிடையே மேற்கோள்களாக வேண்டா கூறலாய்க் காட்டப்பட்டிருக்குங் கட்டளைக் கலித்துறைச் செய்யுட்கள் அவ்வளவும், அக் கலித்துறைச் செய்யுட்கள் ஒரு சிலவற்றிற்கு எழுதப்பட்டிருக்கும் ஒரு சில உரைகளும் உரைக்குறிப்பு களுமே என்பது பிரித்தெடுத்துக் காட்டப்பட்டமையால், இச்சிறு பகுதிகள் ஒழிய ஏனை உரைப் பெரும்பகுதி முற்றும் அதனிடையே விராய பழைய சங்கச் செந்தமிழ்ச் செய்யுள் மேற்கோள்களும் ஆசிரியர் நக்கீரனார் வரைந்தனவேயா மென்பது கடைப்பிடிக்க. இனிச், `சேரன் செங்குட்டுவன் நூலார், `இறையனாரகப் பொரு ளுரையினிடையே சேர்க்கப்பட்டிருக்குங் கலித்துறைச் செய்யுட்களிற் போந்த `அரிகேசரி பராங்குசன் என்பான் கி.பி. 770 இலிருந்த `ஜடில பராந்தக னுக்குத் தந்தையே யாவனென்றும், அவன்மேற் பாடப்பட்ட கலித்துறைச் செய்யுட்களை எடுத்துக்காட்டிய `களவியலுரை அவ்வாற்றாற் கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதே யாகுமென்றும், நக்கீரனார் செய்த அவ்வுரை வாய்ப்பாட மாகப் பத்துத் தலைமுறை சொல்லப்பட்டுவந்து பத்தாந் தலைமுறையாகிய கி.பி. எட்டாம் நூற்றாண்டிலே தான் எழுத்துருவடைந்தமையின் அப் பத்துத் தலைமுறைக்கும் முந்நூறாண்டு கூட்ட நக்கீரனார் இருந்தது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டேயாகல் வேண்டுமென்றுங் கூறிய கூற்றினைச் சிறிதாராய்வாம். செப்புப் பட்டையங்களிற் குறிப்பிடப்பட்ட `அரிகேசரி பராங்குசன் என்னும் பாண்டிமன்னன் குழும்பூரிலுஞ் சங்கரமங்கையிலும் பல்லவ அரசர்களை முறியடித்தவன் என்னுந் துணையே சொல்லப் பட்டிருக்கின்றது; மற்று `இறையனாரகப் பொருளுரைக் கலித்துறைச் செய்யுட்களிற் புகழ்ந்து பாடப்பட்ட `அரிகேசரி பராங்குச நெடுமாறன் என்னும் அவநிசூளாமணி பாண்டியனோ பாழி, விழிஞம், சங்கமங்கை, நெல்வேலி முதலான பத்தொன்பதூர்களிற் சேரனொருவனைச் சிதைத்தான் என்னுந் துணையே சொல்லப்பட்டிருக்கின்றது. செப்புப் பட்டையத்திற் கண்ட அரிகேசரி பாண்டியன் நெல்வேலியிற் போர் புரிந்து சேரனொருவனை வென்றானென அச் செப்புப் பட்டையங் களுள் ஒன்றாயினுங் குறிக்கக் காணேம்; பல்லவரை வென்ற செப்புப்பட்டையப் பாண்டி யனையுஞ், சேரனை வென்ற களவியலுரைக் கலித்துறைப் பாண்டியனையும் ஒருவராக நாட்டுதற்குச் சான்று ஒன்றுதானுங் காணப்படா தாகவும் அவ் விருவரையும் ஒருவரென அஞ்சாது கூறத் துணிந்த செங்குட்டுவன் நூலாரது துணிபை என்னென்பேம்! அற்றன்று, செப்புப் பட்டையத்திற் குறிக்கப்பட்ட `சங்கர மங்கை என்னும் ஊரே களவியலுரைக் கலித்துறையிற் சங்கமங்கை எனக் கூறப்பட்டதென உரை யாமோவெனின், அவ்வாறுரைத் தற்குத்தான் சான்றென்னை? அரிகேசரி பாண்டியன் சங்கரமங்கையில் வென்றது பல்லவ அரசரையேயாம்; மற்று, அவநிசூளாமணி பாண்டியனோ சங்கமங்கையிலும் ஏனைப் பல போர்க்களங் களிலும் வென்றது ஒரு சேரமன்னனையேயாம்; களவியலுரைக் கலித்துறைச் செய்யுட்கள் 326இல் ஓரிடத்தாயினும் அவன் பல்லவரை முறியடித்தானென்பதுஞ் சொல்லப்டவில்லை; அவன் போர்புரிந்த, பத்தொன்பது ஊர்ப் போர்க்களங்களிற் `குழும்பூர் ஒன்றாதலுங் காணப்படவில்லை. ஆகவே, சங்கமரங்கை, குழும்பூர் என்னும்இடங்களிற் பல்லவரை முறியடித்த `அரிகேசரி பராங்குச மாறவர்மனும் பாழி, விழிஞம், சங்கமங்கை, நெல்வேலி முதலான பத்தொன்பதூர்ப் பறந்தலைகளிற் சேரமன்னன் ஒருவனைவென்ற `அவநி சூளாமணி நெடுமாறனும் வெவ்வேறு காலத்திருந்த வெவ்வேறு பாண்டி மன்னரே யாவரல்லது. அவ் விருவரும் ஒருவராகாமை உள்ளங்கை நெல்லிக் கனிபோல் தெள்ளிதின் விளங்கற் பாலதாம். அல்லதூஉங் களவியலுரைக் கலித்துறைச் செய்யுட்களில் நுவலப்பட்ட பத்தொன்பதூர்ப்பெரும் போர்களில் ஓரிடத்தாயினும் பல்லவ அரசர் மொழியப் படாமையின், இத்தென்னாட்டின்கட் பல்லவராட்சி நிலைபெறுதற்குமுன் நிகழ்ந்த நிகழ்ச்சிகளையே அக் கலித்துறைச் செய்யுட்கள் மொழிகின்றன வென்பது திண்ணமாம். அக் கலித்துறைச் செய்யுட்கள் அத்தனையும் ஒரு பாண்டிவேந்தன் மேலனவாய்ப் பாடப்பட்டிருத்தலை உற்றுநோக்குவார் எவர்க்கும், அவை அவ்வரசனாற் புரக்கப்பட்ட ஒரு புலவரால் அவ் வேந்தன் காலத்திலேயே இயற்றப்பட்டனவாதல் வேண்டுமென்பது புலனாகாநிற்கும். கி.பி.எட்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் `அரிகேசரி பராங்குச மாறவர்மன் என்னும் ஒரு பாண்டியனும், கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பாதியில் நெல்வேலிக்கண் வில்வேலியை முறியடித்த `அரிகேசரி மாறவர்மன் என்னும் ஒரு பாண்டியனும், கி.பி.ஆறாம் நூற்றாண்டின் முற்பாதியில் `அவநி சூளாமணி மாறவர்மன் என்னும் ஒரு பாண்டியனும் ஆகப் பாண்டிமன்னர் மூவர் `மாறன் என்னும் பெயருடை யராய் அரசுபுரிந்தமை செப்புப் பட்டையங்களான் அறியக் கிடக்கின்றது. `மாறன், `அரிகேசரி, `பராங்குசன் என்னும் பெயர்கள் பாண்டிவேந்தர் பலர்க்குப் பொதுவாகக் காணப்படுதலால். அப் பெயர்களை மட்டுங் கொண்டு இன்னார் இன்னகாலத்திருந்தனர் எனத் துணிவது இழுக்குடைத்தாம். அவ்வம் மன்னர் செய்த ஆண்மைச் செயல் வரலாறுகளையும் பிறவற்றையுங், கருவியாகக் கொண்டு இவர் இன்னகாலத் திருந்தனரெனத் துணிவதே வாய்வதாகும். மேற்காட்டிய பாண்டிவேந்தர் மூவரில் எவ்வெவர் காலத்திற் செந்தமிழ்ப் பயிற்சிமிக்கு நிகழ்ந்ததென்று ஆராயும்வழி. `அவநி சூளாமணி மாறன்றன் ஆட்சிக்காலத்திலும், அவன்மகன் `செழியன் சேந்தன் காலத்திலுமே அஃதவ்வாறு செழிப்புற்றுத் திகழ்ந்த தென்பது `சூளாமணி என்னுஞ் செந்தமிழ்க் காப்பியம் முன்னையோன் பெயரால் இயற்றப்பட்டு அவன் மகன் சேந்தனது அவைக்களத்தே அரங்கேற்றப் பட்டமையினை, நாமாண் புரைக்குங் குறையென்னினும் நாம வென்வேற் றேமாண் அலங்கற் றருமால் நெடுஞ் சேந்த னென்னுந் தூமாண் தமிழின் கிழவன்சுட ரார மார்பிற் கோமான் அவையுள் தெருண்டார்கொளப் பட்ட தன்றே.5 என அக் காப்பியமே நன்கெடுத்துக் கூறுமாற்றால் இனிது விளங்கும். இவ் இருபாண்டி வேந்தர்க்குப்பின் அரசு செலுத்திய நின்றசீர் நெடுமாற பாண்டியன் காலத்தில் தமிழ் அங்ஙனஞ் சிறப்புற்றிருந்த தென்பது ஏதொரு நூற் சான்றானும் பெறப்படாமை யானும், அப் பின்னையோன் காலத்தில் அது சிறப்புற் றிருந்ததாயின் அவ்வாறு நூற்சான்று சிறிதும் இல்லையாய் ஒழியாதாகலானும் அப்பின்னையோன் காலத்திலெல்லாந் தமிழ்மொழிப் பயிற்சி குன்றிச், சமண் சைவ மதப் போராட்டமே எங்கும் ஆர்ப்பெடுத்துப் பரவலாயிற்றென்க; செழியன் சேந்தனுக்குப் பின்வந்த `நின்றசீர் நெடுமாற பாண்டியன் காலத்தில் திருஞானசம்பந்தப் பெருமானுக்குஞ் சமண்முனிவர்க்கும் இடைநிகழ்ந்த வழக்கே இதற்கு ஒருபெருஞ் சான்றாம். ஆகவே, நின்றசீர் நெடுமாற பாண்டியன் காலத்திற்குமுன் அரசுபுரிந்த `செழியன் சேந்தன் காலத்திலும், அவனுக்குத் தந்தையாகக் கருதப்படும் `அவநி சூளாமணி மாறன் காலத்திலும் மட்டுமே தமிழ்மொழிப் பயிற்சி வளங்கெழுமி நின்றமை தமிழ்நூல்களாற் றெளியக் கிடத்தலின் இறை யனாரகப் பொருளுரைப் பயிற்சியும், அவநி சூளாமணி மாறன்மேற் பாடப்பட்ட கலித்துறைச் செய்யுட்கள் அவ்வுரையி னிடையிடையே செருகப் பட்டமையும் அவ் விருவருஞ் செங்கோலோச்சிய கி.பி.ஆறாம் நூற்றாண்டி னிடையிலேதான் நிகழ்ந்ததாகல் வேண்டுமே யல்லாமற் `செங்குட்டுவன் நூலார் கூறியபடி கி.பி.எட்டாம் நூற்றாண்டில் நிகழ்ந்தன ஆகா. இவ்வாற்றால் செப்புப் பட்டையங்களிற் குறிக்கப்பட்ட `சங்கரமங்கையுங், களவியலுரைக் கலித்துறைச் செய்யுட்களில் மொழியப் பட்ட `சங்க மங்கை யும் எவ்வே றூர்களாகக் கொள்ளப் படல் வேண்டுமென்பதும், அங்ஙன மின்றி அவை யிரண்டும் ஒன்றேயென்று கொள்ளப்படினும் அதன்கண் நிகழ்ந்த போர்கள்இரண்டாய் ஒன்று அவநி சூளாமணி மாறனுக்கும் ஒரு சேர மன்னனுக்கும் இடை நிகழ்ந்ததேயாக, மற்றொன்று அரிகேசரி பராங்குச மாறனுக்கும் பல்லவ அரசர்க்கும் இடைநிகழ்ந்ததாய் வெவ்வேறு காலத்தன ஆகுமென்பதுந் தாமே போதரும் என்க. இனி, நக்கீரனார் இயற்றிய களவியலுரை பத்துத் தலைமுறை வாய்ப்பாடமாக வந்து, பத்தாந்தலைமுறை யாகிய கி.பி. எட்டாம் நூற்றாண்டிலேதான் எழுத்துரு வெய்திற் றென்ற `செங்குட்டுவன் நூலாரது கூற்றுப் பெரியதொரு பிழைபாடுடைத்தாம். வடக்கிருந்த ஆரிய மாந்தரே கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையில் தம்முடைய நூல்களை எழுத்திலிட்டு எழுதத் தெரியாதவர்களாய், அவற்றை வாய்ப்பாடமாகக் கிடைகூட்டி நெட்டுருப்பண்ணி இடர்ப் பட்டோ ராவர். மற்றுத், தமிழ்மக்களோ தொல்காப்பியனார் இருந்த ஆறாயிர ஆண்டுகளுக்கு முன்னே தொட்டுத் தமது மொழியையும் அம்மொழி நூல்களையும் எழுத்திலிட்டு எழுதத் தெரிந்த நாகரிக வாழ்க்கையினராய் இருந்தன ரென்பதையும், அவர் வழங்கிய எழுத்துக்கள் வட்டெழுத்துக்களேயா மென்பதையும் மேலே 753 ஆம் பக்கத்திலிருந்து 759 ஆம் பக்கம் வரையில் வைத்து விளக்கிக்காட்டி யிருக்கின்றேம். அங்ஙனம் எழுத்தெழுதத் தெரிந்த பண்டைத் தமிழறிஞர் தம்முடைய நூல்களையெல்லாம் பனையேடுகளில் எழுதி வைத்துப் பயின்று வந்தனரே யன்றி, வட வாரியரைப்போற் கிடைகூட்டிப் பயின்று அவை தம்மை முற்றும் உருச்செய்து, இடர்ப் பட்டாரல்லர். தமிழர்க்கும் ஆரியர்க்கும் பண்டேயுரிய இவ் விருவேறு நூற்பயிற்சி முறையினியல்பு, எழுத்தெழுதத் தெரிந்த இந் நாளிலும் அவ்வாரிய வழக்கத்தைப் பின்பற்றிய பார்ப்பனர் அதனை விடமாட்டாராய்க் கிடை கூட்டித் தம் நூல்களை நெட்டுருச் செய்து வருதலாலும், தமிழறிஞர் அவ்வாறின்றித் தமது பழைய வழக்கப்படியே தம் நூல்களை யெல்லாம் பனையேடுகளில் எழுத்திட்டெழுதிப் பயின்று வருதலானுந் தெற்றென விளங்கா நிற்கும். அதுவேயுமன்றிக் ,களவியலுரைப் பாயிரமே இவ் வறுபது சூத்திரத்தையுஞ் செய்து மூன்று செப்பிதழகத் தெழுதிப் பீடத்தின்கீழ் இட்டான் என மொழிதலால், இறையனாரகப் பொருட் சூத்திரமும் அவற்றினுரையும் ஆக்கப்பட்ட பழைய நாளிலேயே தமிழ்நூல்கள் எழுத்திட் டெழுதப் பட்டமை ஐயுறவின்றித் துணியப்படும். படவே, களவியற் சூத்திரமும் உரையும் பத்துத் தலைமுறை வரையில் வாய்ப் பாடமாகவே வந்ததென்று பண்டைநூற் சான்றுகட் கெல்லாம் முரணாகத் துணிபுரை நிகழ்த்திய `சேரன் செங்குட்டுவன் நூலாரதுகோள் புரைபட் டழிந்தமை காண்க. அற்றேல், நக்கீரனார் தாமெழுதிய அக் களவிய லுரையைத் தம் மகனார் கீரவிகொற்றனார்க் குரைத்தார்; அவர் தேனூர் கிழார்க் குரைத்தார்; அவர் படியங்கொற்றனார்க் குரைத்தார் என்றற் றொடக்கத்தனவாகப் போந்த சொற்றொடர்க்கருத் தென்னையெனின்; இக் காலத்திற் பல்லாயிரக்கணக்கான நூல்களை அச்சிற் பதித்துத் பரப்புவிக்கும் அச்சுப் பொறிகளும் அச்செழுத்துக்களுந் தாள்களும் உளவாயினாற் போல, அக்காலத்து அக்கருவிகள் இன்மையின், அஞ்ஞான் றிருந்த நல்லிசைப் புலவ ரொருவர் தாம் இயற்றிய நூலைத் தாம் எழுதியவாறே பிழைபடாமல் வழங்குவித்தற்பொருட்டுத், தாம் அறிந்த கற்றார் ஒருவர்க்கு அந் நூலைப் பாடஞ்சொல்லி வைத்து அந்நூற் பொருளைப் பிறர் தமக்குத் தோன்றியவாறு திரித்துணர்ந்து அத் திரிபுணர்ச்சிக்கு இசைய அதன்கண் உள்ள சொற்களையுஞ் சொற்றொடர் களையும் மாற்றிப் பிழைபடுத்தா வண்ணந், தமதுண்மைக் கருத்துத் தெரித்துரைப்பர். அவ்வாறு அந் நூலாசிரியன் வாய் அந்நூலின் மெய்ப் பொருளுணர்ந்தவர், அதனைத் தாம் கேட்டுணர்ந்தவாறே தாம் அறிந்த மற்றொருவர்க்கோ அல்லது பலர்க்கோ அதனைப் பாடஞ் சொல்லி வைப்பர். இங்ஙனமாக ஓராசிரியன் இயற்றிய நூல் அவன் கருத்தை வழுப்படாமல் அறிவிக்குங் கருவியாய் அவன் வழிவந்த மாணாக்கருள் ஒருவர் ஒருவர்க் குரைப்பவரும் வரிசையினையே நக்கீரனார் தம்மகனார் கீரவிகொற்றனார்க் குரைத்தார்; அவர் தேனூர்க் கிழார்க் குரைத்தார் என்றற் றொடக்கத்துச் சொற்றொடர்கள் அறிவுறுத்துவதன்றி, எழுத்தெழுதத் தெரியா ஆரிய மாந்தர் தம் நூல்களைத் தம்மவர்க்கு வாய்ப்பாடமாகச் சொல்லி வைத்தல்போல், நக்கீரனார் முதலியோருந் தத்தம் மாணாக்கர்க்கு அதனை வாய்ப்பாடமாய்ச் சொல்லி வைத்தாரென அறிவுறுத்துவன அல்ல. ஏனெனிற், பண்டே எழுத்தெழுதத் தெரிந்த தமிழர்க்குள் அங்ஙனம் வாய்ப்பாடமாகச் சொல்லிவைக்கும் வழக்கம் இல்லாமை யானும், அன்றி அவ் வழக்கம் இருந்ததென நாட்டுதற்கு ஏதொரு சான்றுங் காணப்படாமையானும் என்பது. அது கிடக்க. இனிக், களவியலுரை உரைக்கப்பட்டு வந்த மாணாக்கரின் காலவரிசைபத்தாந் தலைமுறைக்கண் நின்ற முசிறியாசிரியர் நீலகண்டனாரொடு முற்றுப் பெறுதலின், அவ்வுரை நீலகண்டனார் காலத்திலேதான் எழுத்துருப் பெற்று ஏட்டிலெழுதப்பட்ட தென்றும், அங்ஙனம் அஃது எழுதப்பட்ட காலம் அவ்வுரையி னிடையிடையே எடுத்துக் காட்டாய்ப் போந்த கலித்துறைச்செய்யுட்களிற் புகழப் பட்டவனுங் கி.பி. எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியி லிருந்தவனுமாகிய `அரிகேசரி பராங்குச மாறவர்மன் காலத்திற்கும் பிற்பட்டதே யாகற்பாலதென்றுஞ் `செங்குட்டுவன் நூலார் கூறினர். பத்தாந் தலைமுறைக்கண் வந்த நீலகண்டனாரொடு நக்கீரனாருரையின் வழிவந்த மாணாக்கர் மரபு முற்றுப் பெறுதலால், அம் மாணாக்கர் வரிசையினைக் கூறும் உரைப்பகுதி மட்டும் நீலகண்டனார் எழுதியதாயிருக்கலாம். ஆனால் நீலகண்டனார் காலத்திலே தான் அவ்வுரை எழுத்துருப் பெற்ற தென்பதற்குச் சான்றென்னை? தொல்காப்பியனார் காலந்தொட்டே தமிழ் நாட்டகத்துத் திகழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் தம்முடைய நூல்களை எழுத்திட் டெழுதப் பயின்று வந்தார்களென்ப தற்கே நூற்சான்றுகள் இருக்கக் காண்டுமன்றி, அவர்கள் அவற்றை வாய்ப்பாடமாக ஓதிவந்தார்களென்பதற்குத் தினைத் தனைச் சான்றும் இன்மையின், நீலகண்டனார் காலத்திலே தான் அவ்வுரை எழுத்துருப் பெற்றதெனப் பிழையாகப் பொருள் பண்ணிக்கொண்ட `சேரன் செங்குட்டுவன் நூலாரது உரை பெரும்பிழை பாட்டுரையேயா மென்க. இனிக், களவியலுரையி னிடையிடையே செருகப் பட்டுள்ள கலித்துறைச் செய்யுட்களிற் புகழ்ந்துபாடப் பெற்றவன் கி.பி. ஆறாம் நூற்றாண்டின் முற்பாதியிலிருந்த `அவநிசூளாமணி மாறனே யல்லாது, அவனுக்கு நான்கு தலைமுறை பிற்பட்டு வந்து கி.பி.எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்த `அரிகேசரி பராங்குச மாறவர்மன் அல்லவென்பதை மேலே நன்கு விளக்கிக் காட்டின மாதலால், அவ்வரசனைப் பின்னோனாக மாறுபடுத்திச் சொல்லிய செங்குட்டுவன் நூலாரதுரை பெரியதொரு தலைதடுமாற்ற வுரையேயாமென விடுக்க. இனி, அப் பாண்டி மன்னன்மேற் பாடப்பட்டிருக்குங் கலித்துறைச் செய்யுட்களை அவ்வுரையினிடையிடையே சேர்த்தவர், நக்கீரனார்தம் மாணாக்கர் வழியில் வந்த நீலகண்டானரே யாவரென்பதுபடச் `செங்குட்டுவன் நூலார் மொழிந்ததற்குச் சான்று யாது என்றாராய்வுழிச் சான்றேதும் புலப்படக் காணேம். சான்றேதுமின்றித் தமக்குத் தோன்றிய வாறெல்லாம் எழுதிவிடுதல்தான் வரலாற்றுரை போலும்! மற்று, அக் கலித்துறைச் செய்யுட்கள் அவ் அவநிசூளாமணி மாறனது அவைக் களத்திருந்த ஒரு புலவராற் செய்து அவ்வுரையினிடையே சேர்க்கப் பட்டனவாதல் வேண்டுமே யல்லாமல், நக்கீரனார் தம் மாணாக்கர் வழிவந்த நீலகண்டனாராற் சேர்க்கப் பட்டன ஆகாவென்பது முன்னரே விளக்கப்பட்டது. ஆசிரியர் நக்கீரனார் கி.பி. முதல் நூற்றாண்டின் முற்பகுதியி லிருந்தாரென்பதை மேலே சான்றுகள் காட்டி விளக்கியிருக்கின்றேம். ஆகவே, அவர் தம் மாணாக்கர் மரபிற் பத்தாந் தலைமுறைக் கண் நின்ற நீலகண்டனார் கி.பி. நான்காம் நூற்றாண்டின் நடுவிலிருந் தாராகற் பாலார். நக்கீரனார் கண்ட களவியலுரைப் பாயிரத்தினிடையே அவருரை வந்த வரலாறு தெரிக்கும் உரைப்பாயிரப்பகுதி இந் நீல கண்டனாரால் எழுதி அதன் கட் சேர்க்கப்பட்டதோ, அன்றி அந் நீலகண்டனார்க்கும் முற்போந்த மாணாக்கரால் எழுதிச் சேர்க்கப்பட்டதோ, இன்னதுதானென்று துணிந்து சொல்லுதற்குச் சிறிதும் வாயிலில்லை. அஃதெங்ஙனமாயினும்,ஆரியர் நடையைப் பின்பற்றிய பார்ப்பனர் பொய்யும் புரட்டும் நிரம்பக் கட்டிவிட்ட புராணகதைகள் தமிழ் நூல்களில் மெல்ல மெல்லப் புகத்தொடங்கிய கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்குப் பின்னரேதான் அப் புராணக்கதைகளோ டொத்த புளுகுகள் பல விரவிய அவ்வுரைப் பாயிரப் பகுதி எழுதி அதன்கண் நுழைக்கப்பட்டதாகல் வேண்டு மென்பதுமட்டுந் திண்ணம். ஏனைக் கட்டளைக் கலித்துறைச் செய்யுட்கள் முந்நூற் றிருபத்தொன்பதும், அவற்றுட் சிலவற்றிற்குப் போந்த உரைகளும் உரைக் குறிப்புகளுமோ நீலகண்டனார்க்கு இரு நூறாண்டு பிற்பட்டுவந்த `அவநிசூளாமணி மாறன்றன் அவைக் களத்துப் புலவரொருவரால் இயற்றி அவ்வுரையின்கட் சேர்க்கப்பட்டனவாதல் வேண்டுமென்று பகுத்துணர்ந்து கொள்க. இவ்வாறாக, அக் கலித்துறைச் செய்யுட்களை அவ்வுரையின்கட் கோத்தவர் நீலகண்டனார் அல்ல ரென்பது பெறப்படவே, கி.பி. நான்காம் நூற்றாண்டின் கண்ணதான அவரது காலத்தைக் கி.பி.எட்டாம் நூற்றாண்டின் கண்ணதாகச் சான்றேதுமின்றிப் பிழைத்துணர்ந்து, அவ்வாற்றால், ஆசிரியர் நக்கீரனாரைக் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற் படுப்பிக்க விழைந்த `சேரன் செங்குட்டுவன் நூலாரது விழைவு நிரம்பாது ஏமாற்றம் அடைந்தமை காண்க. நக்கீரனார் இருந்தகாலங்கி..ã. ஐந்தாம் நூற்றாண்டாகாமல் முதல் நூற்றாண்டாகவே பலவாற்றானுந் திண்ணமாய்ப் பெறப்படுதலால், அவரும் அவரோடொருங் கிருந்த தமிழ்ச் சான்றோரும் நடை பெறுத்திய கடைச்சங்க மிருந்த காலமுங் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டாகாமற் கி.பி.இரண்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாகவே பெறப்படும் என்பது. அடிக்குறிப்புகள் 1. செந்தமிழ், ஏழாந்தொகுதி, மூன்றாம்பகுதி, 128 ஆம் பக்கம். 2. Introduction to Jaina Suras by Dr. Hermann Jacobi Vol. I. p.XIII. 3. See P. Arunchalam’s Sketches of Ceylon History. pp. 8, 9. 4. Dr. S. Krishnaswami Aiyangar in his `The Beginnings of South Indian History’, p. 267. 5. சூளாமணி, பாயிரம், 3. 25. கடைச்சங்க காலத் தொடர்ச்சி இனிச், `சேரன்செங்குட்டுவன் நூலார் மேற்காட்டிய வாறெல்லாம் பிழைபாடாகத் தாம் செய்துகொண்ட செய்யுட்பொருள்களாலும், உண்மைகளை மாறுபடுத்திக் கொண்ட மாறுபாட் டுரைகளாலும், ஒன்றை மற்றொன்றாகக் கருதிய திரிபுணர்ச்சியாலுங் கடைச்சங்க காலத்தைக் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின்கட் படுப்பிக்க முயன்று அம் முயற்சியில் முற்றும் இழுக்கியவாற்றினை விரித்து விளக்கிக், கடைச் சங்ககாலங் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட தாதலை நிறுவினாம். அவர் அம்மட்டிலமையாது, `சிலப்பதி காரத்திற் போந்த சில குறிப்புகளைப் பொறுக்கியெடுத்து அவற்றிற்குத் தம் மனம் போனவாறு பொருளுரைத்து அவ்வாற்றால் வடநாட்டு மன்னர் சிலரிருந்த காலவாராய்ச்சி யினைத் தம் கருத்துக்கிணங்கத் திரித்து அதுகொண்டு கடைச்சங்ககாலம் ஐந்தாம் நூற்றாண்டின்கட் படுமென்றார். ஆகலின், அதனையும் ஆராய்ந்து அவர் கொண்ட முடிபு பொருந்தாமை காட்டுதும். சிலப்பதிகார ஆசிரியரான இளங்கோ வடிகட்குத் தமையனும், பேராண்மையிற் சிறந்த சேர வேந்தனும் ஆகிய செங்குட்டுவன் கண்ணகியின் உருவஞ் சமைத்தற்கு இமயமலையினின்றும் ஒரு கருங்கற்றுண்டு கொண்டு வருதற்பொருட்டுந், தென்றமிழ் மன்னரை இகழ்ந்து பேசிய வட ஆரிய மன்னராங் கனக விசயர் என்பாரை வென்றடக்குதற் பொருட்டும் வடநாடு நோக்கிப் படையெடுத்துச் சென்றா னென்பதும், அங்ஙனம் அவன் சென்ற காலத்து அவனுக்கு உதவிசெய்த நண்பரான ஆரிய மன்னர் `நூற்றுவர் கன்னர் எனப்படுவ ரென்பதுஞ் சிலப்பதிகாரங், கால்கோட் காதையிற் சொல்லப்பட்டிருக் கின்றன. வட ஆரியமன்னரில் நூற்றுவர் கன்னரே சேரன்செங்குட்டு வனுக்குச் சிறந்த நண்பரென்பது, வேற்றுமை யின்றி நின்னொடு கலந்த நூற்றுவர் கன்னரும் (கால்கோட் காதை, 148, 149) எனப்போந்த அடிகளாலும், இவன் வடக்கே சென்று கங்கைப் பேரியாற்றைக் கடக்க வேண்டுழி அக் கங்கை யாற்றுப் பக்கத்திருந்த நாடுகளில் அரசுபுரிந்த அந்நூற்றுவர் கன்னர் அவனுக்கு மரக்கலன்கள் பலவற்றைக் கொடுத் துதவிசெய்து, அவற்றால் அவன் தன்படை யொடும் அவ்வியாற்றைக் கடந்து அதன் வடகரை சேர்ந்தவழி அவ் வாரியமன்னர் அவனை எதிர்கொண்டு தமது நாட்டுக்கு அழைத்துச் சென்றனரென்பது, கங்கைப் பேரியாற்றுக் கன்னரிற் பெற்ற வங்கப் பரப்பின் வடமருங் கெய்தி, ஆங்கவர் எதிர்கொள அந்நாடு கழிந்து (176, 178) எனப்போந்த அடிகளாலும், அங்ஙனஞ்சென்ற செங்குட்டுவன் தன்னை எதிர்த்த கனகவிசயரையும் அவர்க்குத் துணைப்போந்த ஆரிய மன்னரையும் வென்று இமயத்தெடுத்த கருங்கற்றுண்டை அக் கனகவிசயர் முடிமேலேற்றித் தென்னாடு நோக்கிப் பெயர்கையில் தனக்கு உதவிசெய்த நண்பரான `அந் நூற்றுவர் கன்னரை, அவர் தம் நாடுநோக்கிச் செல்கவென ஏவினனென்பது, ஆரிய மன்னர் ஐயிரு பதின்மரைச் சீர்கெழு நன்னாட்டுச் செல்கவென் றேவி (நீர்ப்படைக் காதை, 177, 178) என்னும் அடிகளாலும், அதன்பின் தென்றமிழ்க் குடநாட்டிற்றன் வஞ்சிமாநகர்க்குத் திரும்பிய செங்குட்டுவன் தான் கொணர்ந்த கருங்கற் றுண்டிற் கண்ணகியின் உருவமைத்து அதற்கென்று கட்டுவித்த கோயிலில் அதனை நிறுத்தி விழாவெடுத்த ஞான்று, அவன் போரிற்றொலைத்துச் சிறையாய்க் கொணர்ந்த ஆரிய மன்னரையும் அவர்போல் முன்னரே சிறைக்கணிருந்த ஏனை மன்னரையுஞ் சிறையினின்றுஞ் சிறை வீடு செய்ய அம் மன்னருங், குடகநாட்டின் கொங்கரும், மாளுவநாட்டின் வேந்தரும், இலங்கைத்தீவின் வேந்தனான கயவாகுவும் வந்து அக்கண்ணகி யின் னுருவத்தை வணங்கினரென்பது, அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும் பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னருங் குடகக் கொங்கரும் மாளுவ வேந்தருங் கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும் எந்நாட் டாங்கண் இமய வரம்பனின் நன்னாட் செய்த நாளணி வேள்வியில் வந்தீ கென்றே வணங்கினர் வேண்ட (வரந்தரு காதை, 157-163) என்னும் அடிகளாலும், இவற்றையெல்லாம் உடனிருந்து கண்ட இளங்கோவடிகளே சிலப்பதிகாரத்தில் விளங்கக் கூறியிருக் கின்றார். இவர் கூறிய இவ் வுண்மை வரலாற்றுக் கங்கை யாற்றின் வடகரையை யடுத்துள்ள நாடுகளில் அரசாண்ட ஆரிய மன்னராதலும், ஏனை `மாளுவ வேந்தர் என்பார் கங்கை யாற்றுக்குத் தெற்கே நெடுந்தொலைவில் உளதாகிய நருமதை யாற்றங்கரையை யடுத்து `ராஜபுதனத்தின் தென்பகுதிக்கண் விரிந்ததாகிய மாளுவ நாட்டை ஆண்டோராதலும், இவ் விருவேறு அரசரும் வெவ்வேறு நாட்டினரும் வெவ்வேறு இனத்தினரு மாவரே யல்லது இவ்விருவரும் ஒருவரேயென ஒன்று படுத்துரைத்தற்குத் தினைத்தனைச்சான்றும் இளங்கோவடிகள் அருளிச்செய்த இவ்வரலாற் றுரைகளில் இல்லையாதலும் இவை தம்மை ஆயுந் தமிழறிஞர் எவரும் நன்குணர்வர். ஈதிங்ஙனமாகவுஞ் `செங்குட்டுவன் நூலார், இளங்கோ வடிகள் குறித்த `மாளுவ வேந்தரும் `நூற்றுவர் கன்னரும் வேறுவேறல்லர் ஒரு வகுப்பினரே யென்றுங், கி.பி. 350ஆம் ஆண்டிற் சமுத்திரகுப்தன் இம் மாளுவ நாட்டின்மேற் படையெடுத்துவந்த ஞான்று இம் மாளுவ வேந்தர் தமது மாளுவநாட்டைப் பல பிரிவுகளாகப் பகுத்து அவற்றின்கண் அரசுபுரிந்துவந்தன ரென்றுங், கண்ணகிகோயிலிற் செங்குட்டுவன் விழவெடுத்த நாளில்அவனுக்குச் சிறந்த நண்பரான நூற்றுவர்கன்ன ரென்பார் வராதிராராகலின் அவர் அப் பெயராற் குறிக்கப்படாவிடினும் அப்போது வந்திருந்தவராகச் சொல்லப்பட்ட மாளுவவேந்தரே அந் நூற்றுவர்கன்ன ராதல் வேண்டுமென்றும், அதனாற் செங்குட்டுவன் காலங் கி.பி. ஐந்தாம் நூற்ண்டேயாகற்பால தென்றுங் கூறினார். மாளுவவேந்தரும், நூற்றுவர் கன்னரும் வேறல்லர் என்பதனை நாட்ட இவர் காட்டிய இரு சான்றுகளுட், சமுத்திரகுப்தன் படையெடுத்துவந்த ஞான்று மாளுவ நாடு பல பிரிவுகளாக வகுக்கப்பட்டு அரசர் பலரால் ஆளப்பட்ட தென்பதொன்று. ஆனால், இவர் இதற்கு மேற்கோளாக எடுத்துரைத்த ஆங்கில வரலாற்று நூலாசிரியர் இவருரைக்கும் வண்ணமே யுரைப்பக் காணேம். அவ் வாங்கில ஆசிரியர் 1பஞ்சாபி கீழைஇராசபுதனம் மாளுவ நாடென்பன பெரும்பாலுங் குடியரசு முறையில் உயிர் வாழ்ந்த குடியினர்அல்லது இனத்தவரின் ஆளுகையில் இருந்தன எனவும், 2சமுத்திரகுப்தன் ஆண்ட நாட்டின் எல்லைப்புறத்திருந்த மாளுவரும் மற்றைக் குடியினருந் தமதாட்சியில் வைத்திருந்த தேயங்கள் தனது பேராளுகையினுள் ளடக்கப்பட்டதுடன் (இரண்டாஞ் சந்திரகுப்தனது) வெற்றி நிறைவெய்திய நடுக்காலம் கி.பி. 395 ஆம் ஆண்டாகக் கொள்ளப்படலாம் எனவும் மொழிதல் கொண்டு, சமுத்திர குப்தனும் அவன் மகன் இரண்டாஞ் சந்திரகுப்தனும் அரசுசெலுத்திய கி.பி. நான்காம் நூற்றாண்டில் மாளுவநாடானது குடியரசின் கீழிருந்ததென்பது பெறப்படுகின்றதே யல்லாமல், அப்போது அது வேந்தராட்சியின் கீழிருந்ததென்பது சிறிதும் பெறப்படக் காணேம். மற்று, ஆசிரியர் இளங்கோவடிகளோ, சேரன் செங்குட்டுவன் எடுப்பித்த கண்ணகி விழாவுக்கு மாளுவநாட்டிலிருந்து வந்த அரசரை மாளுவவேந்தன் என்றே விளக்கமாய்க் கூறுகின்றார். ஆகவே, `செங்குட்டுவன் நூலோர் தாம் எடுத்துக் காட்டிய ஆங்கில வரலாற்று நூலாசிரியரதுரை தமது கருத்துக்கு முழுதும் மாறாய் நிற்றலை அறிந்து கொள்ளாமை இரங்கற்பால தொன்றாம். ஆங்கிலத்திலுள்ள அந்நூலைத் தமிழொன்றே கற்றார் அறியாராதலால், அந்நூலைக் காட்டியாயினுந் தமது வழுக்கொள்கையினை நாட்டி விடலாமென அவர் எண்ணினர் போலும்! இனிச், சமுத்திரகுப்தன் காலத்தும் அவன் மகன் சந்திரகுப்தன் காலத்தும் மாளுவநாடு குடிமக்கள் பலர் ஒருங்குகூடி நடாத்திய குடியரசின் கீழிருந்தமை, அவரெடுத்துக் காட்டிய ஆங்கில ஆசிரியர் வரைந்த வரலாற்று நூலினாலேயே தெற்றெனப் புலனாதலின், இளங்கோவடிகள் குறித்த மாளுவவேந்தர் அக்குடியரசு நடாத்திய குடிமக்களாகாமை சிறிதறிவுடையார்க்கும் விளங்கற் பாலதேயாம். அற்றேல் இளங்கோவடிகள் குறித்த அம் மாளுவவேந்தர் தாம் யாரோவெனிற்; கனிஷ்க மன்னனைத் தலைவனாய்க் கொண்டு காந்தாரத்தில் அரசுபுரிந்த குஷான்குடிப் பேரரசர்க்குக் கீழடங்கி மாளுவநாட்டை ஆண்ட அரசர் `சகசத்திர பதிகளே ஆவர். இவர்களுட் சிறந்த அரசனாய்த் திகழ்ந்தவன் `முதலாம் ருத்ர தாமன் என்பவனே யாவன்: இவன் கி.பி. 150ஆம் ஆண்டையடுத்துக் `கிர்நார் ஊர்க் கற்பாறையில் வெட்டுவித்த கல்வெட்டு ஒன்றால் இவன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியி லிருந்தமை துணியப்படும்.3 அவனுக்குப் பின்னும் அரசர் அறுவர் மாளுவ நாட்டின் தலைநகராகிய `உச்சயிநியில் அரசு புரிந்தமையுங், கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதி யோடு, இச் சகசத்திரபதி யரசரின் மரபும் இவரோடு ஒரு காலத்தினராகிய ஆந்திர அரசரின் மரபும் அற்றுப் போனமையும் ஆங்கில ஆசிரியரான வின்செண்ட் சிமித் என்பவரால் நன்கெடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.4 மேலே 248, 249 ஆம் பக்கங்களிற் காட்டப்பட்டபடி கி.பி. 171, முதல்193 வரையில் இலங்கையில் அரசாண்ட முதற் கயவாகு என்னும் வேந்தனும் சேரன்செங்குட்டுவன் எடுப்பித்த கண்ணகி விழாவுக்கு வந்திருந்ததனை, அவரோடு உடனிருந்த ஆசிரியர் இளங்கோவடிகளே சிலப்பதிகாரம், வரந்தரு காதை, 190 ஆம் அடியில் விளங்கக் கூறுதலின், அவ் விருபத்திரண்டு ஆண்டுகளில் மாளுவ நாட்டின்கண் அரசு புரிந்த `ஜீவ தாமன் `முதல் ருத்ரசிம்மன், ` முதல் ருத்ரசேனன், என்னுஞ் சகசத்திரபதி அரசர் மூவரில் எவனேனும் ஒருவனும், அக்காலத்தில் மாளுவத்தை யடுத்த மேல்நாடுகளுக்கு அரசரான ஆந்திரர் அச் சத்திரபதி யரசரோடு உறவு கலந்த பிற் றோன்றிய ஆந்திர மன்னனான `கௌதமீபுத்ர யஜ்ஞஸ்ரீ என்னும் வேந்தனுமே அக் கண்ணகி விழவுக்கு வந்திருந்தா ராகற்பாலர். அவரையே இளங் கோவடிகள் அவர் தம் உறவுரிமை பற்றி `மாளுவவேந்தர் எனப் பலர்பாற் சொல்லாற் குறித்தாராகல் வேண்டும். இவ்விரு மன்னர் வந்தமை பற்றியே இவரை இளங் கோவடிகள் இங்ஙனம் பலர்பாற் சொல்லாற் கிளந்திருக்க, இவ்வுண்மையினை நன்காய்ந்து பார்க்கும் ஆங்கில நூலறிவு மதுகை யின்றி, `வேந்தர் என்னும் அச் சொல்லைக் கண்ட துணையான், அதற்கு `நூற்றுவர் கன்னர் எனப் பிழையகப் பொருள்செய்து, அப் பிழையையே தமது பொருந்தாக் கொள்கைக்கு ஒரு பெரும் பற்றுக்கோடாய்க் கொண்ட `செங்குட்டுவன் நூலார் செயல், நீரில் அமிழ்ந்து வோன் மரக் கோடென நினைந்து ஒரு சிறுதுரும்பினைத் தாவிப்பற்றிய செயலோடு ஒப்பதாய் முடிந்தமை காண்க. இனி, அவர் அவ் விருவேறு வேந்தரையும் ஒன்று படுத்தற்குக் காட்டிய நுண்ணறிவின் திறத்தை என்னென்பேம்! செங்குட்டுவனுக்குச் சிறந்த நண்பரான `நூற்றுவர் கன்னர் அவ் வேந்தன் எடுப்பித்த கண்ணகி விழவுக்கு வராதிரார் ஆகலின், அதற்கு வந்திருந்தவராகச் சொல்லப்பட்ட மாளுவ வேந்தரே அந் நூற்றுவர்கன்ன ராதல் வேண்டுமென்னுஞ் `செங்குட்டுவன் நூலாரது உய்த்துணர்ச்சி எவ்வளவு நுண்ணிது! எவ்வளவு ஆழ்ந்தது! வேற்றுமையின்றி நின்னொடு கலந்த, நூற்றுவர் கன்னர் எனவும், கங்கைப் பேரியாற்றுக் கன்னரிற் பெற்ற எனவும், ஆரிய மன்னர் ஐயிருபதின்மரை எனவுஞ் செங்குட்டுவனுக்கு நட்பரசரான அவரைத் தாம் மொழிய வந்துழி யெல்லாங் `கன்னர், `நூற்றுவர், `ஐயிருபதின்மர் என்னும் பெயர்களால் ஐயுறுதற்கிடனின்றி விளங்கக் குறிப்பிட்டுவந்த ஆசிரியர் இளங்கோவடிகள், இவ் வோரிடத்துமட்டும் அவரை `மாளுவவேந்தர் என முன்பின் மொழிந்திலாத வேறொரு பெயராற் குறிப்பரோவெனவும், அவ்வாறு குறித்தற்கு ஏது வென்னை யெனவும், எத்துணைப் பெரியாருந் தாங் கருதியவற்றைத் தாங் கருதியவாறே செய்துமுடிக்க இயலாவாறு மாறான நிகழ்ச்சிகள் வலிகொண்டு நிகழும் இஞ்ஞாலத்தில் `நூற்றுவர் கன்னர் வராதிரார் என நீர் அங்ஙனந் துணிந்துரைத்தற்குக் கொண்ட சான்று எப்பெற்றிய தெனவும் வினவுவார்க்குச் `செங்குட்டுவன் நூலார் தமது நுண்ணறிவு கொண்டு எங்ஙனம் இறுப்பரோ அஃதிறைவனே அறியற்பாலான்! யாம் ஆராய்ந்த மட்டில் இவரது நூலிலிருந்து இவ் வினாக்களுக்கு விடை ஒரு சிறிதும் பெறப்படாதென்பது திண்ணம். கங்கையாற்றின் வட கரைக்கண் அரசாண்ட நூற்றுவர் கன்னரை ஆசிரியர் வேறியாண்டும் மாளுவ வேந்தரென உரைப்பக் காணாமையானும், மாளுவ நாடென்பது கங்கையாற்றுக்குத் தெற்கே நெடுஞ் சேய்மைக்கண் உளதாகிய நருமதை யாற்றங் கரையை யடுத்துளதாகலின் அதன்கண் அஞ்ஞான்று அரசு வைகிய வேந்தர் வேறென்பதே வரலாற்று நூலாற் புலப்படுதலானும் அம் மாளுவவேந்தரே நூற்றுவர் கன்னராவரென்றல் சிறிதும் அடாதவுரையாம் என்பது. அற்றேற் கண்ணகி விழவிற்கு வந்திருந்த அரசரில் நூற்றுவர் கன்னர் மொழியப்படாமை யென்னையெனிற், கூறுதும்: தென் றமிழ்நாட்டுச் சேரன் செங்குட்டுவ வேந்தற்கு உற்ற நண்பராயினார் வட ஆரியமன்னர் நுற்றுவர் கன்னர் மட்டுமே யென்பது மேலெடுத்துக்காட்டிய இளங்கோவடிகளின் கொழுந்தமி ழுரைகளால் நன்கு விளங்காநிற்கும்; அவரை யொழிந்த ஏனை வட ஆரிய மன்னர் அவனைப் பகைத்திருந் தமையும், அதுபற்றியே அவன் அவர்மேற் படையெடுத்துச் சென்றமையுங் கூட அவ்வாசிரியர் மொழிகளாற் புலனாகின்றன. இங்ஙனமாகத் தென் றமிழ்நாட்டரசனான செங்குட்டுவற்கு நண்பராகித் தம் இனத்தவரான ஆரியமன்னரைப் பகைத்து நின்ற நூற்றுவர் கன்னர்க்கு வடநாட்டில் உள்ள அவ்ஆரிய மன்னரோடு எவ்வளவு போராட்டம் இருந்ததாகல் வேண்டும்! நெடுஞ் சேய்மைக்கண் உளதாகிய தென்னாட்டிலிருந்து, தமது வடநாடு நோக்கிப் படை திரட்டி வந்த செங்குட்டுவ வேந்தற்கு அந் நூற்றுவர் கன்னர் எவ்வளவு உதவிகள் செய்து, தம் மிருவர்க்கும் மாற்றாரான அவ் ஆரிய மன்னரைப் போரில் வென்றிருத்தல் வேண்டும்! அவ்வாறு பேருதவிகள் செய்து பெரும்போர் நிகழ்த்தி வெற்றிகண்ட பேராண்மையில் எத்தனை ஆயிரம் படைஞரும் எத்தனை ஆயிரம் யானை குதிரைகளும் அவர் மடியக் கொடுத் திருத்தல் வேண்டும்! எத்தனை நூறாயிரம் பொருட்டிரள் அவர் இழந்தாராகல் வேண்டும்! இங்ஙனமெல்லாந் தம் படைகளையும் பொருளையும், இழந்து தமது அரசியல் வலிகுறைந்த நிலையி லிருக்கையில், அதனைத் திரும்ப வலிபெறுத்தும் முயற்சியைக் கைவிட்டு, அடுத்து நிகழ்ந்த கண்ணகிவிழவுக்கு அந் நூற்றுவர் கன்னர் எங்ஙனம் வரக்கூடும்? அன்றி வந்திருப்பரேற் சீர்குலைந்த நிலையிலுள்ள அவர் தம் அரசியல் அவரில்லாத காலத்தில் வேறு மாற்றரசரால் எளிதிற் கைப்பற்றப் படுமன்றே? இவ்வியல்புகளை நன்குணர்ந்து பார்த்தே செங்குட்டுவன் வெற்றி வேந்தனாய்த் தனது தென்னாடு நோக்கித் திரும்புகின்றுழி, உற்ற நண்பரான அந் நூற்றுவர் கன்னரைத் தன்னோ டுடனழைத்துவராமல், அவரை அவர் தம் நாடு நோக்கிச் செல்கவென்று ஏவி அவ்வாற்றால் அவர் வலிகுறைந்த தமது அரசியலைப் பெயர்த்தும் வலிபெறுத்து தற்கு இடஞ்செய்தான். ஆகவே, அந்நூற்றுவர் கன்னர் செங்குட்டுவ வேந்தன் உடன்பாடு பெற்றே கண்ணகி விழாவுக்கு வாராராயினாரென்பது சிறிது கருத்தொருங்கி நோக்க வல்லார்க்கும் புலனாகற் பாலதேயாம். இவ்வுண்மையினை ஆராய்ந்து பார்க்கும் வன்மையின்றிச் சேரன்செங்குட்டுவன் நூலார் கண்ணகி விழாவுக்கு வந்திருந்தோரில் நூற்றுவர்கள்ளர் சொல்லப்படாமை ஒன்றே கண்டு அதற்கு வந்திருந்த மாளுவ வேந்தரை அந் நூற்றுவர் கன்னராகப் பிழைத்துணர்ந்தது சிறிதும் பொருந்துவ தில்லாப் போலியாராய்ச்சியாமென விடுக்க. எனவே மாளுவ வேந்தரென ஆசிரியராற் குறித்தோதப் பட்டார். `நூற்றுவர் கன்னர் அல்லரென்பதூஉஞ், சமுத்திர குப்தனும் அவன் மகன் சந்திரகுப்தனும் அரசுபுரிந்த கி.பி. நான்காம் நூற்றாண்டில் மாளுவநாடு குடியரசின் கீழிருந்ததே யன்றி வேந்தராட்சியின் கீழிருந்ததன் றென்பது வரலாற்று நூல்களால் நன்கறியக் கிடத்தலின் அஃது அரசாட்சி யிலிருந்தது கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் நடுவுக்கு முன்னரே யாமென்பதூஉம், அந் நூற்றாண்டின் நடுவுக்கு முற்சென்ற காலத்தில் மாளுவ நாட்டை அரசுபுரிந்த அரசர் வரிசையிற் கண்ணகிவிழவுக்கு வந்தவராகக் கொள்ளப் படுதற் குரியார், முதற் கயவாகுவென்னும் இலங்கைவேந்தன் காலத்தவரான சகசத்திர பதியரசர் மூவரில் ஒருவனும் அவற்குறவினனான `கௌதமீபுத்ர யஜ்ஞஸ்ரீ என்னும் ஆந்திர மன்னனுமேயாவ ரென்பதூஉம், அவரது காலங் கி.பி. 173 க்கும் 193 க்கும் இடைப்பட்டதேயாகலின் அதன்கண் அழிந்துபட்ட கடைச்சங்கங் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் நடுவுக்கு முற்பட்டதே யாகல் வேண்டு மென்பதூஉந் திண்ணமாய்ப் பெறப்படும். ஆதலால், இவ்வுண்மை முடிபுக்கு மாறாகச் `சேரன் செங்குட்டுவன் நூலார் அதனைக் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின்கட் படுப்பிக்க விழைந்து செய்த போலியாராய்ச்சி பொருந்தா தொழிந்தமை காண்க. இனிச், `சிலப்பதிகாரம், `மணிமேகலை என்னும் பெருந்தமிழ்ப் பாட்டுடைச் செய்யுட்கள் இயற்றப்பட்ட காலத்தை வகுத்தற்கும், அதன்வழியே அதற்குமுன் நிலவிய கடைச்சங்க காலத்தை வகுத்தற்கும் நுறுங்கா வைரவாள்போல் நின்று உதவிபுரிவதாகிய இலங்கை மன்னன் முதற்கய வாகுவின் காலங் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பாதியிற் படுவ தாதலை வரலாற்று நூலாசிரியரெல்லாரும் ஒருப்பட்டுரைக்கக் காண்டலிற், கடைச்சங்க காலத்தைக் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டிற் படுப்பிக்க விழைந்த தமது கருத்துக்கு அது முழுமாறாய் நின்று தமதாராய்ச்சியினை இருகூறாய்ப் போழ்ந்து அவ்வாராய்ச்சி உள்ளீடில்லா வெறும் புரையாய் இருத்தலைக் காட்டுத லுணர்ந்த `செங்குட்டுவன் நூலார் அவ் வைரவாளினையும் நுறுக்கிவிடுதற்கு முயன்று, அம்முயற்சி கைகூடாவாறு அஃது அதனையும் ஈர்ந்து பாழ்படுத்த, அதனால் அவர் செயலற்றுக் கரைந்த கையறவுரைப் பெற்றியுஞ் சிறிது காட்டுதும்: இலங்கையரசரின் வரலாறுகளை யுரைக்கும் பொருட்டுப் புத்த குருமார்களால் வரையப்பட்ட `மகாவம்சம் என்னும் நூலின்கண், முதற்கயவாகு வேந்தன் சேரன் செங்குட்டுவன் காலத்திருந்தனன் என்பதனைக் காட்டுங்குறிப்பு ஏதுங் காணப்படவில்லையென்று `செங்குட்டுவன் நூலார் கூறினர். புத்த சமயத்தினனாகிய அம் மன்னவன் கண்ணகியென்னும் ஒரு கற்புடைமாதைத் தெய்வமாகக் கொண்டு வழிபட்டானாயின், அதனைச் சொல்லுதலிற், புத்த குருமார்க்கு விருப்பு நிகழாமை இயற்கையேயாம். அவர் அது சொல்லாமையே பற்றிக் கயவாகுவேந்தன் செங்குட்டுவன் காலத்தினன் அல்லனென்றல் யாங்ஙனம் பொருந்தும்? செங்குட்டுவனால் எடுப்பிக்கப் பட்ட கண்ணகிவிழவுக்குக் கயவாகுவேந்தன் சென்றதையுந், திரும்பி அவன் இலங்கைக்கு வந்தபோது கண்ணகி யணிந்திருந்த பொற் சிலம்பினைக் கொணர்ந்து தனது வெற்றியினை நினைவுகூர்தற் பொருட்டு ஆண்டுகடோறும் அவன் நடப்பித்த கொண்டாட்ட விழவில் அப் `பத்தினிதேவியின் வழிபாட்டைச் சிறந்தெடுத்து வைத்ததையும் இன்றுங்கூடச் சிங்களவர்கள் அறங்கூறும் மன்றில் அச் சிலம்பைத் தொட்டுச் சூளுரைப்பதையும் நன்கெடுத்துக் காட்டி, முதற் கயவாகுவேந்தன் சேரன் செங்குட்டுவன் காலத்தினனேயாவனென்று, திரு அருணாசலம் அவர்கள் தாம் பெரிதாராய்ந் தெழுதிய `இலங்கை வரலாற்றின் முதற்குறிப்புகள்5 என்னும் நூலில் இனிது விளக்கியிருக் கின்றார்கள். கயவாகு மன்னன் கண்ணகி வழிபாட்டினை இலங்கைக்குக் கொண்டு சென்ற வரலாறு `மகாவம்சத்திற் குறிக்கப்படாவிடினும், அம் மகாவம்சத்தைப் போலவே பழையனவாய் இலங்கை வரலாறுக ளுரைக்கும் `ராஜரத்நாகரி, `ராஜாவளி என்னும் நூல்களில் அது குறிக்கப்பட் டிருத்தலினாலன்றே6 அருணாசலம் அவர்கள் தாம் எழுதிய அந்நூலில் அக்குறிப்பினை நன்கெடுத்து விளக்குவாராயினர்கள். இவ்வாற்றால் முதற் கயவாகுவேந்தன் சேரன்செங்குட்டுவன் காலத்தினனே யாவனென்பதும் அதனால் அவனுஞ் செங்குட்டுவனுங் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இருந்தவரே யாவரென்பதும், ஆகவே செங்குட்டுவனைக் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற் படுப்பிக்க முயன்ற `செங்குட்டுவன் நூலாரது முயற்சி `ஆடிக்காற்றி னிடைப் பட்ட பஞ்சுத்துய் போற் பயன்படாது பறந்தோடிப் போயிற்றென்பதும் வைரத்தூணென நாட்டப் பட்டமை காண்க. இனித், தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தவனான `திதியன் என்னுந் தமிழ்மன்னனையுங், கி.பி. 460 இல் இலங்கையை அரசாண்ட `ததியன் என்னுந் தமிழ்மன்னனையுஞ் `செங்குட்டுவன் நூலார் ஒன்றுபடுத்துரைத்து, அதனைத் தமது கோட்பாட்டுக்கு ஒருபெருஞ் சான்றாகக் காட்டித் தமதாராய்ச்சியினை முடித்திட்டார். `ததியன் எனும் பெயர் வாய்ந்த மற்றொரு தமிழரசன் கி.மு. 90 இல் இலங்கையை ஆண்டவன் என்பது அருணாசலம் அவர்களால் தமது `இலங்கை வரலாற்று முதற்குறிப்புகள் என்னும் நூலில் எடுத்துக்காட்டப்பட் டிருக்கின்றது.7 `செங்குட்டுவன் நூலார் தாமும் அதனையே யெடுத்துக் காட்டினார். ஆகவே `ததியன் எனப் பெயர்பூண்ட இலங்கைத் தமிழ் மன்னர் இருவரில் ஒருவன் கி.மு. 90 இலும், மற்றொருவன் அவற்கு ஐந்நூறாண்டு பிற்பட்டுக் கி.பி. 490 இலும் இருந்தமை புலனாகாநிற்கும். மற்றுத், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனோ கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்தவனென்பதை மேலே 600 ஆம் பக்கத்தில் விளக்கிக் காட்டினாம். ஆதலால், அப்பாண்டியன் காலத்த வனாய்த் தமிழ்நாட்டிலிருந்த `திதியன் என்னும் அரசனுக்கும், அவனுக்கு ஒரு நூற்றாண்டு முன்னும் நான்கு நூற்றாண்டுகள் பின்னும் இலங்கையிலிருந்து அரசாண்ட `ததியன் எனப் பெயர் பூண்ட அரசரிருவர்க்கும் ஏதொரு தொடர்புங் காண்கிலம். திதியனுக்குந் ததியனுக்கும் பெயரொற்றுமைதானும் இலது. வரலாற்று நூலில், வெறும் பெயரொற்றுமை யொன்றே கொண்டு ஒரு முடிபுசெய்தல் பொருந்தாதெனப் பல்காலுங் கரையாநிற்குஞ் `செங்குட்டுவன் நூலாரே அப்பெயரொற்றுமை தானும் இல்லாத `திதியன் `ததியன் என்னும் அரசர் இருவரையும் ஒருவரெனத் துணிந்துரைப்பது நகையாடுதற்கே ஏதுவாம். வெவ்வே றிடங்களிலும் வெவ்வேறு காலங்களிலும் இருந்த அவ்விருவரையும் ஒருவரெனக் கோடற்குப் பிற குறிப்புக்கள் தாமும் இலவாகவும், இயைத்து ஒன்றுபடுத்தற்கு இயலா அவ் விருவரையும் இயைத்து ஒன்றுபடுத்தப் புக்கது, மொட்டைத் தலைக்கும் முழந்தாளுக்கும் முடிப்போடுவதோடு ஒப்பதாமன்றி மற்றென்னை? இங்ஙனமாகக், கி.பி.முதல் நூற்றாண்டில் தமிழ்நாட்டின்க ணிருந்த `திதியன் என்னும் அரசற்குங், கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் இலங்கையிலிருந்த `ததியன் என்னும் அரசற்குந் தொடர்புகாட்டுதல் எவ்வாற்றானும் இயலாதாகலின், தமது வெற்றெண்ணமே கருவியாய்க் கொண்டு கடைச்சங்க காலத்தைக் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற் படுப்பிக்கப்புகுந்த `செங்குட்டுவன் நூலாரது முயற்சி, வானத்தின்கண் ஓவியம் வரையப் புகுந்தார் தம் முயற்சியோடொத்து வறிதானமை காண்க. என்றிதுகாறும் ஆராய்ந்து காட்டியவாற்றாற், கடைச் சங்ககாலஞ் `செங்குட்டுவன் நூலார் கூறியபடி கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின்கட் படுவதன்றாய்க், கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்னதாவது ஐயுறவுக்கு இடனின்றித் துணியப்படுதலிற், கி.பி. மூன்றாம் நூற்றாண்டின்கணிருந்த மாணிக்கவாசகப் பெருமான் உயர்மதிற் கூடலின் ஆய்ந்த ஒண்டீந் தமிழின்றுறை என்று அச்சங்கத்தைக் குறிப்பிட்டு அருளிச்செய்தது சாலவும் வாய்ப்புடைத்தாய் மலைமேற் கட்டிய அரண்போல் நாட்டப்பட்டமை தெளிந்து கொள்க. அடிக்குறிப்புகள் 1. The Panjab, Easern Rajputana, and Malwa for the most part were in Possesion of tribes of clans living under republican institution” Dr.Vincent A. Smith’s ‘The Early History of India’, 1914, p 286. 2. “The year 95 may be assumed as a mean date for the completion of the conquest, which involved the incorporation in the empire of the territory held by the Malavas and other tribes, who had remained outside the limits of Samudragupta’s dominion.” Ibid, p.291. 3. Ibid. p. 132. 4. Ibid. p.218. 5. ‘Sketches of Ceylon History’ by P. Arunachalam, M.A. (Cantab), 2nd edition, p.22. 6. See also Dr. Krishnawami Aiyangar’s ‘The Beginnings of South Indian History’ p. 210 and first foot note. 7. ‘Sketches of ceylon History’ List of Kings facing p.26. 26. திருத்தொண்டத்தொகையும் திருவாதவூரடிகளும் இனித், திருத்தொண்டத்தொகையில் திருவாதவூரடிகள் குறிப்பிடப்படவில்லை யென்றும், அதன்கட் சொல்லப் பட்ட `பொய்யடிமை யில்லாத புலவர் என்பார் கடைச் சங்கத்திலிருந்து தமிழாராய்ந்த `கபிலர், `பரணர், `நக்கீரர் முதலான புலவர் கூட்டத்தவராகிய தொகையடியாரே யாவரல்லால் தனியடியாராகிய திருவாதவூரடிகளாதல் செல்லாதென்றுந், திருவாதவூரர் தமது காலத்துக்கு முந்தியவரானாற் சுந்தரமூர்த்திகள் தாம் அருளிய அத் திருத்தொண்டத் தொகையில் அவரைச் சொல்லாது விடார் என்றும், ஆகவே சுந்தரமூர்த்திகள் இருந்த கி.பி. எட்டாம் நூற்றாண்டிற்குப் பின்னரேதான் திருவாதவூரடிகள் இருந்தாராகல் வேண்டுமென்றுந் `தமிழ் வரலாறு உடையார் கூறிய பகுதியினை ஆராய்வாம்: திருத்தொண்டத் தொகையிற் போந்த `பொய்யடிமையில்லாத புலவரைத் தனி யடியாராகக் கொள்ளாமல் தொகையடியாராகக் கொள்ளல் வேண்டுமென்பதற்கு இவர் காட்டிய சான்று என்னையெனிற், கூட்டம்ஒன் பானோ டறுபத்து மூன்று தனிப்பெயரா ஈட்டும் பெருந்தவத் தோர்எழு பத்திரண்டு என்று நம்பியாண்டார் நம்பிகள் தாம் பாடிய `திருத் தொண்டர் திருவந்தாதிச் செய்யுளில் `தொகையடியார் ஒன்பதின்மர் எனவுந், `தனியடியார் அறுபத்துமூவர் எனவுங் கூறியதேயாம். சுந்தரமூர்த்தி நாயனார் இருந்தபோது அவரோடு உடனிருந்து அவரது கருத்தை அவர்பாற் கேட்டறிந் தவராயின், அல்லது அவர் தம் மாணாக்கர் மரபில்வந்த ஒருவர்பால் அதனை உசாவி யறிந்தவராயின் நம்பியாண்டார் நம்பிகள் கொண்ட பொருளே நாயனார் கருத்தென்றல் வாய்வதாகும். சுந்தரமூர்த்தி நாயனாரோ கி.பி. எட்டாம் நூற்றாண்டின் ஈற்றி லிருந்தவர்; நம்பியாண்டார் நம்பிகளோ அவர்க்குப்பின் இருநூறாண்டு கழித்துக் கி.பி. பத்தாம் நூற்றாண்டின் ஈற்றில் இருந்தவர். ஆதலால், நம்பிகள் நாயனார் கருத்தை அவர்பால் நேரேயிருந்து கேட்டவர் அல்லரென்பது புலனாம். அங்ஙனமில்லை யாயினும், நாயனார்தம் மாணாக்கர் மரபில்வந்த ஒருவர்பால் நம்பிகள் அதன் பொருளைக் கேட்டாரோ வென்றால், திருத்தொண்டர் திருவந்தாதியின் முதற்கண் உள்ள, பொன்னி வடகரை சேர்நாரை யூரிற் புழைக்கைமுக மன்னன் அறுபத்து மூவர் பதிதேம் மரபுசெயல் பன்னஅத் தொண்டத் தொகைவகை பல்கும் அந்தாதிதனைச் சொன்ன மறைக்குல நம்பிபொற் பாதம் துணைதுணையே என்னுஞ் சிறப்புப்பாயிரச் செய்யுளால் நம்பிகள் அங்ஙனம் அதனை ஒருவர்பாற் கேட்டவரல்லர்; திருநாரையூரிலுள்ள பொல்லாப் பிள்ளையார் அருளால் அதனை யுணர்ந்தவ ராவாரென்பது பெறப்படும். கடவுளிடத்து அன்பு மிக்கவர் செய்த ஒரு நூலைக் கடவுளே அருளிச் செய்ததாகக் கூறுவது பிற்காலத்தவர் வழக்கமாகும். ஆகவே, திருத்தொண்டத் தொகையிற் போந்த `பொய்யடிமை யில்லாத புலவரை நம்பிகள் தொகையடியாராகப் பொருள் செய்து கொண்டது தமதுள்ளத்திற் பட்டபடியேயாம்; அவர் அவ்வாறு செய்து கொண்ட பொருளே சுந்தரமூர்த்தி நாயனாரது கருத்தென்பது அடாது. என்னை? சுந்தரமூர்த்தி நாயனார் `பொய்யடிமை யில்லாத புலவர் என்பதனால் இறைவனைப் பாடிய புலவர் கூட்டத்தினையே கூறல் கருதினாராயின், அவர் திருத்தொண்டத் தொகையின் பத்தாஞ் செய்யுளிற் பரமனையே பாடுவா ரடியார்க்கும் அடியேன் என்று மீண்டும் அதனையே கூறுவாரல்லர். ஆகவே, `பொய்யடிமை யில்லாத புலவர் என ஏழாஞ் செய்யுளிலும், `பரமனையே பாடுவார் எனப் பத்தாஞ் செய்யுளிலுங் கூறப்பட்ட அவ்விருவேறு சொற்றொடர் களுக்கும் ஆசிரியன் கொண்ட பொருளைத் துணிதற்கு, அச் சொற்றொடர்கள் நிற்கும் இடங்களின் இயல்புணர்தலே கருவியாகும். `பொய்யடிமை யில்லாத புலவர் என்னுஞ் சொற்றொடர் நிற்குஞ் செய்யுளிற் சொல்லப்பட்ட `புகழ்ச்சோழர் `நரசிங்க முனையரையர், `அதிபத்தர், `கலிக்கம்பர், `கலியர், `சத்தியார், `ஐயடிகள் காடவர்கோன் என்னும் ஏனை நாயன்மார் எழுவருந் தனியடியாரே யல்லால், தொகையடியாரல்லர்; தனியடியாரைச் சொல்லும் இச்செய்யுளியற் `பொய்யடிமை யில்லாத புலவர் என்பதொன்று மட்டுந் தொகையடியாரைச் சுட்டுமென்றல் ஆக்கியோன் கருத்துக்கு மாறாவதாம். மற்றுப், `பரமனையே பாடுவார் என்னுஞ் சொற்றொடர் நிற்குஞ் செய்யுளிற் போந்த `பத்தராய்ப் பணிவார்கள், சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்கள், `திருவாரூர்ப் பிறந்தார்கள், `முப்போதுந் திருமேனி தீண்டுவார், `முழுநீறு பூசிய முனிவர், `அப்பாலும் அடிச் சார்ந்தார், என்னும் அடியார் அறுவருமே தொகையடியாரே யாதல் எல்லார்க்கும் ஒப்பமுடிந்த தொன்றாம். தில்லைவா ழந்தணர் என்னும் முதற்பாட் டொன்றிற் றவிரத், தனியடியாரைக் கூறும் ஏனை யொன்பது செய்யுட்களில் எங்குந் தொகையடியாரை இடைமடுத்து ஆசிரியன் உரைப்பக் காண்கிலம். தொகை யடியாரை ஒருங்கு தொகுத்துக் கூறும் பத்தராய்ப் பணிவார்கள் என்னும் ஒரே செய்யுளியல் வேறு தனியடியாரை இடைப்புகுந்து ஆசிரியன் மொழியவுங் காண்கிலம். ஆகவே, தனியடியாரைக் கூறும் பாட்டுக்களில் தொகையடியாரையுந், தொகையடியாரைக் கூறும் பாட்டில் தனியடியாரையும் மொழிதல் சுந்தரமூர்த்தி நாயனார்க்குக் கருத்தன்மை தெள்ளிதிற் புலனாகின்றதன்றோ? அற்றேல், தில்லைவா ழந்தணர் என்னும் முதற்பாட்டின் முதலில் தொகையடியாரும், அதன்பின் றனியடியாரும் மொழியப் படுதலென்னையெனிற் கூறுதும்: சிவபிரான் றிருவடிக்கண் மெய்யன்புடையராய் ஒழுகிய திருத்தொண்டரைப் பாடுதற்குச் சுந்தரமூர்த்திகள் விழைவுமீதூர்ந்து நின்றவழிச், சிவபிரானே, தில்லைவா ழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் என்று முதலடி எடுத்துக்கொடுத்துத் திருத்தொண்டத்தொகை பாடுமாறு அவர்க்குக் கட்டளையிட்டருளின ரென்பது, தொல்லைமால் வரைபயந்த தூயாடன் றிருப்பாகன் அல்லல்தீர்ந் துலகுய்ய மறையளித்த திருவாக்கால் தில்லைவா ழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்என் றெல்லையில்வண் புகழாரையெடுத்திசைப்பா மொழியென்றார் எனவுந், தம்பெருமான் கொடுத்தமொழி முதலாகத் தமிழ்மாலைச் செம்பொருளாற் றிருத்தொண்டத் தொகையான திருப்பதிகம் உம்பர்பிரான் றானருளும் உணர்வுபெற வுலகேத்த எம்பெருமான் வன்றொண்டர் பாடியவ ரெதிர்பணிந்தார் (தடுத்தாட்கொண்ட புராணம். 199, 202) எனவுஞ் சேக்கிழார் பெருமான் அருளிச்செய்த வாற்றால் நன்கறியப்படும். படவே, திருத்தொண்டத் தொகை முதற் செய்யுளின் முதலடிக்கண் உள்ள தில்லைவா ழந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்னுஞ் சொற்றொடர் சுந்தரமூர்த்திகள் செய்த தன்றென்பது பெற்றாம். பெறவே, தனியடியாரைக் கூறும்அம் முதற் செய்யுளில் அது வந்தமைபற்றி ஈண்டைக்காவதோர் இழுக்கில்லையென விடுக்க. நன்று சொன்னீர், மக்கள் அறிவினாற் செய்தற்கெளி தாகிய ஒருபாட்டுக்கு இறைவனே முதலெடுத்துக் கொடுத்தானென்றால் நம்பற்பாலதன்று; அக் கதையின் கருத்தென்னென்றாற், சுந்தரமூர்த்தி நாயனார் திருத் தொண்டத்தொகை பாடும் விழைவினராய் அதனை எவ்வாறு துவங்குவதென்று ஆராய்ந்து கொண்டு நிற்கையில், அவர்க்கு அருகே நின்றாரில் ஒருவர் தற்செயலாய்த் `தில்லைவா ழந்தணர் என்று சொல்லக் கேட்டு அதனையே இறைவனெடுத்துக் கொடுத்ததாக உட்கொண்டு அதன் முதற்கண் நிறுத்துப் பாடினாராதல் வேண்டுமெனக் கோடலே அதன் கருத்தாவதாமெனின்; அங்ஙனங் கொள்வார் கொள்க; அவ்வாறே கொள்ளினுந் `தில்லைவாழந்தணர் எனத் தொகை யடியாரைக் குறிக்கும் அச்சொற்றொடர் சுந்தரமூர்த்திகள் அருளியதன்றென்பதே பெறப்படுமாகலின் அதுவும் எமது கொள்கையினையே வலியுறுத்துமென வுணர்க. அற்றன்று, தேவாரப் பதிகங்களுள் எதனைப் பாடத் துவங்கினுந் தில்லைக்கண் உள்ள `திருச்சிற்றம்பலம் என்பதனைச் சொல்லியே துவங்குதல் தொன்றுதொட்ட வழக்காய்ப் போதரக் காண்டலின், ஏனையெல்லாப் பதிகளினும் உள்ள அடியாரைச் சொல்லுதற்குமுன் தில்லையம்பதிக்கண் உள்ள தொகையடியாரையுந் தனியடியா ரொருவரையும் ஒருங்கெடுத்து மொழிதல் வேண்டுமென்னுங் கருத்துப் பற்றியே அப் பதிக்கண் இருந்த தில்லைவா ழந்தணராகிய தொகையடியாரையுந், திருநீலகண்ட நாயனாராகிய தனியடியாரையுஞ் சுந்தரமூர்த்திகள் ஒருங்கெடுத்து முதற்கண்வைத்து ஓதுவாராயின ரெனின்; அவ்வாறுரைப்பினுந், தனியடியாரைக் கூறுஞ் செய்யுளில் தொகையடியார் குழுவொன்றைக் கூறுமாறு தமது கருத்துக்கு முரணாய்நின்று தம்மை வலிந்தேவும் ஒரு சிறந்த ஏதுவின் வழிப்பட்டே சுந்தரமூர்த்திகள் அங்ஙனந் `தில்லைவா ழந்தணராந் தொகையடியாரை அம் முதற் செய்யுளின் முதற்கண் வைத்து ஓதலாயினா ரென்பதே கொள்ளக் கிடக்குமாதலின், அதைப் போலவே `பொய்யடிமை யில்லாத புலவருந் தொகையடியாராயின் அவர் தம்மைத் தனியடியார் வரிசையினிடையே பகுத்துரைத்தற்கு அவர் தம்மை அவ்வாறு வலிந்தேவுஞ் சிறந்த பிறிதோர் ஏது வேண்டப்படுமன்றே; மற்று அதற்கு அங்ஙனஞ் சிறந்த பிறிதோரேது ஒருவாற்றானும் பெறப்படாமையின், தனியடியாரை மொழியும் ஏழாஞ் செய்யுளிற் போந்த `பொய்யடிமை யில்லாத புலவர்என்பாருந் தனியடியாரே யாவரல்லாற் றொகையடியா ராதல் செல்லாதென்று கடைப்பிடிக்க. அதுவேயுமன்றித், தில்லைக்கணுள்ள அடியாரை முதற்கண் வைத்து ஓதுங் குறிப்பினராயே சுந்தரமூர்த்திகள் `தில்லைவா ழந்தணரை முதலாக வெடுத்துத் திருத்தொண்டத் தொகை அருளிச் செய்தாரெனக் கொள்வார்க்குந், தில்லைக்கண் உள்ள தனியடியாரான திருநீலகண்ட நாயனாரை முதற்கணுரையாது, தொகையடியாரான தில்லைவா ழந்தணரைப் பின்றொடருந் தனியடியார் வரிசையினின்றும் வேறு பிரித்து முதலெடுத்தது, திருநீலகண்ட நாயனார் தொடங்கி ஒன்பதாஞ்செய்யு ளிறுதி காறுந் தாம்பாடும் அடியார் அத்தனைபேருந் தனியடியாராகவே இருத்தல் வேண்டுமெனக் குறித்த தமது கருத்துக்கு மாறாகமற் றனியடியாரையெல்லாம் ஒரு வரிசைப் பட வைத்தற் பொருட்டும், அவருள்ளுந் தில்லையம்பதிக்கண் உள்ள தனியடியாரான திருநீலகண்ட நாயனாரை அத் தனியடியார் வரிசையில் முதல் நிறுத்துதற் பொருட்டுமே யாமென்பது கொள்ளல்வேண்டும். அங்ஙனங் கொள்வுழியுந், தில்லைவாழந்தணர்க்குப்பின் ஒன்பதாஞ் செய்யுளிறுதிகாறுங் கூறப்பட்ட அடியா ரத்தனை பேருந் தனியடியாரே யாவரெனவும், அதனால் அவ்வரிசையினிடைப்பட்ட பொய்யடிமையில்லாத புலவருந் தனியடியாரே யாவரெனவுங் கொள்ளும் எமது கோட்பாடே நிலைபெறுதல் காண்க. அற்றன்று, தில்லைக்கண் வாழ்வாராயினுங் குயவர் இனத்திற் சேர்ந்த திருநீலகண்ட நாயனாரிலும், அந்தண வகுப்பினராகிய `தில்லைவாழந்தணர் சிறந்தமையிற் சுந்தரமூர்த்திகள் அவரையே முதற்கண் வைத்து ஓதுவாரா யினரெனின்; நன்று சொன்னாய், அடியாருள் இன்னவர் உயர்குலத்தார், இன்னவர் இழிகுலத்தார் எனப் பிறப்பு வேற்றுமை பற்றிய உயர்விழிவுகளை ஒருசிறிதுங் கருதாது, தாம் அந்தண குலத்திற் பிறந்தவராயிருந்துஞ் சுந்தர மூர்த்திகள் அவ்வடியவ ரெல்லாரையும் ஒத்த சிறப்பினராகவே கருதி, அவரெல்லார்க்குந் தனித்தனியே தாம் அடிமை யாதலை மெய்பெறக் கிளந்தோதி யிருத்தலாலும்; பதியிலார் குலத்து வந்தாராகிய பரவை நாச்சியாரையும் வேளாள குலத்திற் பிறந்தாராகிய சங்கிலி நாச்சியாரையும் அவர் திருமணம் புரிந்து சாதிவேற்றுமையின்றி ஒழுகினமை யாலும்; வேளாண் குலத்தின ராகிய ஏயர்கோன கலிக்காம நாயனார் தம்பால் அருவருப்புடையராயிருந்துந் தாம் அவர்பாற் பேரன்பு பூண்டு அவரைக் கண்டு வணங்கச் சென்றமையாலுஞ்; சாதியுயர்வு கருதியே அவர் தில்லை வாழந்தணரை முதற்கணெடுத் துரைத்தா ரென்றற்குத் தினைத்தனைச் சான்றும் அவர் அருளிச்செய்த திருப்பதிகங் களிலாதல் அவர் தம் வாழ்க்கையிலாதல் காணப்படாமை யாலும்; அந்தண ரென்னும் உயர்வு பற்றித் தில்லைவாழந் தணரை முதற் கணெடுத் தோதினாரென்னும் அவ்வுரை சுந்தரமூர்த்தி நாயனார் திருவுளக்கிடைக்கு முற்றும் மாறான அடாத வுரையாமென் றொழிக. `தில்லைவா ழந்தணர் என்னுஞ் சொற்றொடர் முதல்வனால் எடுத்துக் கொடுக்கப்பட்டதாகாமற் சுந்தரமூர்த்தி களாலேயே அமைக்கப்பட்ட தொன்றாக இருக்குமாயின், தாம் ஓரினப்படக் கூறக் கருதிய தனியடியார் வரிசையினிடையே தொகையடியா ராகிய `தில்லைவா ழந்தணரைப் புகுத்தல் முறையாகாமை கண்டே அவரை அவர் அத்தனியடியார் வரிசையினின்றும் வேறாகப் பிரித்தெடுத்து முதற்கண் வைத்து மொழிந்தாரெனக் கோடலே எல்லாவாற்றானும் இயைவதா மென்று கடைப்பிடிக்க. எனவே, தனியடியார் வரிசை னிடைப்பட்ட `பொய்யடிமை யில்லாத புலவர் என்பார், தமது செந்தமிழ்ப் புலமைத் திறத்தால் `திருவாசகம், `திருச்சிற்றம்பலக் கோவையார் என்னும் ஒப்புயர்வில்லா முழு மாணிக்கங்களை உலகிருள் இரியவுஞ் சிவவொளி சுடர்ந்து திகழவும் தந்து, அவ்வாற்றால் `மாணிக்கவாசகர் என்னும் அருமைத் திருப்பெயர் பூண்டு, உள்ளேன் பிறதெய்வம் உன்னையல்லா தெங்கள் உத்தமனே என முழுமுதற் கடவுளாஞ் சிவபெருமான் ஒருவற்கே மெய்யடிமைத் திறம்பேணிய திருவாதவூரடிகளே யாவரல்லாற் பிறராகாமை திண்ணமாமென்று தெளிந்து கொள்க. அச்சொற்றொடர் இவ்வாறு திருவாதவூரடிகளையே யுணர்த்துதல் அறியாராய், அது கபிலர், பரணர் நக்கீரர் முதலான கடைச்சங்கப் புலவரையே குறிக்குமெனக் கூறிய நம்பியாண்டார் நம்பிகள் கூற்றுப் பிழைபடுகின்றமையின், அது கொள்ளற்பால தன்றென விடுக்க. நக்கீரர் முதலான கடைச்சங்கப் புலவர்கள் பரமனையே பாடுவார் என்னுந் தொகையடியார் குழாத்துள் அடங்குதலின், அவரையே மீண்டுங் கூறுதல் சுந்தரமூர்த்தி நாயனார்க்குக் கருத்தாகாமை வெள்ளிடை மலைபோல் விளங்கற்பாற்று. அற்றேல், நம்பியாண்டார் நம்பிகள் திருநாரை யூரின்கண் எழுந்தருளியிருக்கும் பொல்லாப் பிள்ளையார் பால் திருத்தொண்டர் வரலாறுகளைக் கேட்டுணர்ந் தாரெனத் திருமுறைகண்ட புராணங் கூறுதலிற், `பொய்யடிமை யில்லாத புலவர் என்பதற்கு நம்பியாண்டார் கண்ட பொருள் இறைவனே யுணர்த்திய தொன்றாதல் வேண்டும்; வேண்டவே, நம்பிகள் பிழைபட்டாரென மேலே சொல்லிய குற்றம் இறைவனையுஞ் சாருமாலெனின்; திருத்தொண்டத் தொகையிற் போந்த அடியாரின் வரலாறுகளை ஒருவர் தெரிதல் வேண்டினாராயின் அவர் தமது காலத்துள்ள கல்வி யறிவுடையார் பலரை வினாவினால் அவை தம்மை நன்கறிந்து கொள்ளலாம். நம்பியாண்டார் நம்பிகள் இருந்த காலத்தில் இச் செந்தமிழ் வளநாடு சேர சோழபாண்டிய ரென்னுந் தமிழ் வேந்தரது ஆட்சிக்கீழதாய்த் தமிழ்க் கல்வியிலும் நாகரிகத்திலும் மிகவுஞ் செழிப்புற்றிருந்தது. சைவ சமய உணர்ச்சியிலும் வைணவ சமய உணர்ச்சியிலும் நிரம்பத் தேர்ந்த நல்லிசைப் புலவர்களும் ஆங்காங்குத் திரள்திரளாய் மலிந்திருந்தனர். பல்வகைக் கலைநூல் அறிவு நூல்களை ஓதுவார் தொகையும் விஞ்சி நின்றது. இவ் வுண்மை, நம்பியாண்டார் நம்பிகளே தாம் அருளிச்செய்த திருஞானசம்பந்தர் திருவுலா மாலையில், மறைபயில்வார் மன்னு வியாகரணக் கேள்வித் துறைபயில்வார் தொன்னூல் பயில்வார் -முறைமையினால் ஆகமங்கள் கேட்பார் அருங்கலைநூல் ஆதரித்துப் போகம் ஒடுங்காப் பொருள்துய்ப்பார் - சோகமின்றி நீதி நிலையுணர்வார் நீள்நிலத்துள் ஐம்புலனுங் காதல் விடுதவங்கள் காமுறுவார் - ஆதி அருங்கலைநூல் ஓதுவார் ஆதரித்து வென்றிக் கருங்கலியை நீங்கக் கனல்வகுப்பார் -ஒருங்கிருந்து காமநூல் கேட்பார் கலைஞனங் காதலிப்பார் ஓமநூல் ஓதுவார் உத்தரிப்பார் என்று கூறுமாற்றால் இனிது விளங்காநிற்கும். இத்துணை நூற்பயிற்சியும், அறிவுமிக்கார் குழுவும் மலிந்தோங்கிய காலத்தில் திருத்தொண்டர் வரலாறுகளை அறியாதாரும் இருப்பரோ? இராரன்றே. நாமிருக்கும் இக்காலந் திருத்தெண்ட ரிருந்த காலத்திற்கு ஆயிரமாண்டு பிற்பட்டதாயிருந்துந், திருத்தொண்டர் புராணத்திற் காணப் படாத வரலாறுகள்கூட இன்னும் அறிவுடையார் தமக்குள் வழங்கக் காண்டுமன்றே. இத்துணைப் பிற்பட்ட காலத்திலேயே அவ் வரலாறுகள் தொடர்ந்து வழங்குமாயின், இற்றைக்குத் தொள்ளாயிரம் ஆண்டுகட்கு முன்னரேயே அத் திருத் தொண்டரது காலத்திற்கு அண்மை யிலிருந்த நம்பிகள் காலத்தில் அவை யின்னும் எத்துணை மிகுதியாய் வழங்கியிருத்தல் வேண்டும்! ஆதலால், அவை மிக்கு வழங்கிய அப் பழங்காலத்திருந்த நம்பியாண்டார் நம்பிகள் அவ் வரலாறுகளை அஞ்ஞான்றிருந்த சைவசமயச் சான்றோர்பால் வினாவியறிந்தாரெனக் கோடலே மெய்ம்மையாகுமன்றிப், பொல்லாப் பிள்ளையார்பால் அவை தம்மைக் கேட் டுணர்ந்தாரென்றல் வெறும் பொய்க்கதையே யாகுமென்று கடைப்பிடிக்க. நம்பிகள் இருந்த காலத்தில், தமிழ்கற்ற சான்றோருந் தமிழ் நூல்களுந் தமிழ்ப் பயிற்சியும் அறவே யில்லையாயொழியினன்றோ அத்துணை வறும் பாழாய்ப் போன காலத்திற் புதிது தோன்றிய நம்பிகள் ஒருவர்க்குப், பொல்லாப் பிள்ளையாராகிய தெய்வமே அருள்கனிந்து முன்னின்று அவ் வரலாறுகளை அறிவுறுத்திற் றென்றுகோடல் பொருந்தும். அவர் இருந்த அக் காலம் அங்ஙனம் வெறும் பாழாதலின்றிக் கற்றுவல்ல சான்றோர் கூட்டங்களால் நிறைந்துகிடந்தமை நம்பிகள் அருளிச்செய்த பாட்டினாலேயே நன்கு பெறப்படுதலாற், கற்றுவல்ல மக்களறிவினால் ஆகற்பாலனவற்றிற் கெல்லாங் கடவுளை வலிந்திழுத்துக் கட்டிய கதைகள் படுபொய்யெனவே விலக்கற் பாலனவாமென்க. இஞ்ஞான்று நம்மனோரில் அறிவிற் சிறந்தாராலுங் கண்டறியப்படாது மறைந்து கிடந்த நீராவி, மின் என்பவற்றின் ஆற்றல்களை யெல்லாங் கண்டறிந்து, `இவை தெய்வத்தா லன்றி மக்களாலுஞ் செய்யப்படுமோ! என்று வியக்கத்தக்கவாறான பொறிகளை (இயந்திரங்களை) அமைத்து, அப் பொறிகளில் அவ்வாற்றல்களை யுய்த்துச், செயற்கருஞ் செயல்களை யெல்லாஞ் செய்து போதரும் மேனாட் டறிஞர் தாங்கண்ட நுட்பங்களுக்கெல்லாங் கடவுளை முன்னிழுத்துப் பேசாதிருக்க இந் நுட்பங்களிலும் இவற்றையறியும் அறிவின் திறங்களிலும், எட்டுணை தானும் இலவாய்க், கலைவல்லாரை உசாவிய வளவானே மட்டுங் கடவுளை முன்னிழுத்துப் பேசுதல் பின்னுள்ளோர் கட்டிய வெறும் பொய்க்கதையாவதன்றி மற்றென்னை? ஆகவே `பொய்யடிமை யில்லாத புலவர் என்பதற்கு நம்பிகள் செய்துகொண்ட பொருட்பிழை இறைவனைச் சாருமென்றல் ஆராய்ச்சி யுணர்வில்லார் கூற்றாமென விடுக்க. அல்லதூஉம், நம்பியாண்டார் நம்பிகள் அருளிச் செய்த `திருத்தொண்டர் திருவந்தாதியை வழிநூலாகக் கொண்டு `திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணத்தை அருளிச்செய்த ஆசிரியர் சேக்கிழார், அந்த மெய்ப்பதி கத்தடி யார்களை நந்தம் நாதனாம் நம்பியாண்ட டார்நம்பி புந்தி யாரப் புகன்ற வகையினால் வந்த வாறு வழாமல் இயம்புவாம் என்னும் நூற்பாயிரச் செய்யுளில்,நம்பிகள் அடியார் வரலாறுகளைப் பொல்லாப் பிள்ளையார்பாற் கேட்டுணர்ந் தாரென உரையாமல் `அவர் தமது அறிவினாலேயே நிரம்ப ஆராய்ந்து புகன்றனர் என்பது போதரப் புந்தியாரப் புகன்ற வகையினால் என்று விளங்க ஓதலின், நம்பிகள் `பொய்யடிமை யில்லாத புலவர் என்பதற்குக் கொண்ட பொருள் தம்மறிவிற் பட்டபடி கொண்டதே யல்லாமல் இறைவன் உணர்த்தியபடி யன்றென்பது பின்னும் வலிபெறும். பொல்லாப் பிள்ளையார் நம்பிகட்கு அடியார் வரலாறுகளை யுணர்த்திய துண்மையாயின், அத்துணைச் சிறந்ததோர் அருள்நிகழ்ச்சியைச் சேக்கிழார் சொல்லாது விடார். ஆகவே, அக் கதை சேக்கிழாருக்குப்பின் வந்தாராற் கட்டிவிடப்பட்டதாகு மென்றுணர்ந்து கொள்க. அற்றேலஃதாக, மேலே காட்டிய செய்யுள் பெரிய புராணத் திருமலைச்சருக்கத்தின் ஈற்றிற் காணப்படு தலானும், அத் திருமலைச்சருக்கஞ் சேக்கிழாரால் இயற்றப் படாமற் பிற்காலத்தவரால் இயற்றிச் சேர்க்கப்பட்டதென நீரே பிறிதோரிடத்துக் கூறுதலானும், அச் செய்யுளை ஈண்டுச் சேக்கிழாரது மொழியாக எடுத்துக் காட்டுதல் நுமது கூற்றுக்கே முரணாம்போலுமெனின்; அற்றன்று; பெரியபுராணம் என்னுஞ் சார்பு நூலுக்கு வழிநூலாவது இதுவெனக் காட்டும் அந்த மெய்ப்பதிகத் தடியார்களை என்னுஞ் செய்யுளும், அதற்கு முதனூலாவது இன்னதெனக் காட்டும் மற்றிதற்குப் பதிகம் வன்றொண்டர்தாம் என்னும் அதற்கு முன்னுள் செய்யுளும் நூற்பாயிரத்திற்கு இன்றியமையாதனவா யிருத்தலின், அவை ஆசிரியர் சேக்கிழாராலேயே செய்யப் பட்டுத், தெய்வவணக்கமுஞ் செயப்படுபொருளும், எய்தவுரைக்குந் தற்சிறப்புப் பாயிரமாய் நூன்முகத்தே உலகெலாம் என்னுஞ் செய்யுள் முதலாக நிற்கும் பகுதியில் நூற்பெயர் கூறுவதாகிய இங்கிதன் நாமங்கூறின் என்னுஞ் செய்யுட்குப்பின் நிறுத்தப்பட்டனவாகும். சேக்கிழாருக்குப் பிற்காலத்தே வந்தாரொருவர் `திருமலைச்சருக்கத்தைப் புதிதாக இயற்றி அதனைப் பாயிரத்திற்குப்பின்னே சேர்க்கின்றுழித் தமது கருத்துக்கு இசையுமாறு அச்செய்யுட் களிரண்டனையும் பிரித்தெடுத்து அச் சருக்கத்தின் ஈற்றில் வைப்பாராயினரென் றுணர்தல் வேண்டும். இங்ஙனமே `அநபாயசோழவேந்தன் சிறப்புக் கூறுவதாகிய கையின் மான்மழுவர் என்னுஞ் செய்யுளுஞ் சேக்கிழாராற் செய்யப்பட்டு `வெள்ளானைச் சருக்கத்தில் நின்றதொன்றாகும்; திருமலைச்சருக்கம் பாடிச் சேர்த்த பின்னையோர் தமது கருத்து நிரம்புமாறு அதனையும் ஆண்டுநின்றும் பிரித்தெடுத்து இதன்கட் சேர்க்கலாயினா ரென்பதைச் `சேக்கிழாரும் பெரிய புராணமும் என்னும் எமதாராய்ச்சியுரையில் விளக்கிக் காட்டினாம்; அது நிற்க. அவையெல்லாம் ஒக்குமாயினுந், தெய்வத்தன்மை வாய்ந்த நம்பியாண்டார் நம்பிகள் `பொய்யடிமை யில்லாத புலவர் என்பதற்கு மெய்யல்லாப் பொருள்சொல்லிப் பிழைபடுதலுங் கூடுமோவெனின்; நம்பிகள் மெய்க்கல்வி யிலுஞ் சிவபிரான் திருவடிப்பேரன்பிலுஞ் சிவனடியாரன் பின் றிறத்திலுஞ் சிறந்த பெரியாரேயாயினுஞ், சைவ சமயாசிரிய ரோடுஞ் சேக்கிழாரோடும் ஒத்த தெய்வப் பெற்றியுடைய ரல்லர். சைவசமயாசிரியர் நால்வரும் முழுமுதற் கடவுளை நனவிலேயே நேரே கண்டவர்; கடவுளின் திருவருட்டுணை கொண்டு எவராலுஞ் செயலாகா அரும்பெரும் புதுமைகளை நிகழ்த்தி முழுமுதற் பெரும்பொருளின் உண்மையை நாட்டினவர்; சேக்கிழாரோ இறைவனே தமக்கு உலகெலாம் என முதலெடுத்துக் கொடுக்கத் தாம் திருத்தொண்டர் புராணம் பாடத் துவங்கினமையைத் தாமே நூற்பாயிரத்தில், வெருளில் மெய்ம்மொழி வான்நிழல் கூறிய பொருளின் ஆகு மெனப்புகல் வாமன்றே என்று மொழிந்திருத்தலின் அவருந் தெய்வப் பெற்றியுடையாரென்பது துணியப்படும். நம்பிகளும் இவரையொத்த தெய்வப் பெற்றியுடையாரெனக் கோடற்குச் சான்று ஏதும் இன்மையின், அவர் ஒரோவழிப் பிழைபடுதலும் இயற்கையேயாம். எத்துணைப் பெரியாரும் பிழைபடுதலுண் டென்பது தெருட்டுதற்கென்றே தெய்வத் திருவள்ளுவர், அரியகற்று ஆற்றார் கண்ணுந் தெரியுங்கால் இன்மை யரிதே வெளிறு என்று அருளிச் செய்வாராயினரென்பது. அற்றாயினும், உமாபதிசிவாசாரியர் தாம் இயற்றிய `திருமுறை கண்ட புராணத்தில், நம்பியாண்டார் நம்பிகள் பொல்லாப்பிள்ளையாரால் இயற்றிய புதுமைகளை எடுத்துக்காட்டி, அவர் தெய்வப்பெற்றி யினரென்பது தேற்றினாராலெனின், நம்பிகள் பொல்லாப்பிள்ளையாரைக் கொண்டு மிக வியத்தகு நிகழ்ச்சிகளை விளைவித்தது உண்மையாயின், அவர் தாமியற்றிய `திருநாரையூர் விநாயகப் பிள்ளையார் திருவிரட்டைமாலையிலாதல் ஏனைத் தம் பாடல்களிலாதல் அதனைச் சிறிதாயினுங் குறித்திருப்பர். என்னை? சமயாசிரியர்க்கு நிகழ்ந்த வியத்தகு அருள் நிகழ்ச்சிகள் அவர் தம் பாடல்களில் ஆங்காங்குக் குறிக்கப்பட்டிருத்தல் காண்டுமாகலின். மற்று, நம்பிகள் அருளிச்செய்த நூல்களில் அத்தகைய குறிப்பொன்றுங் காணப்படாமையானும், அவரது காலத்தை யடுத்து வந்த ஆசிரியர் சேக்கிழார்,நம்பிகள் பொருட்டு நிகழ்ந்தனவாகச் சொல்லப்படும் அருள்நிகழ்ச்சி களை ஒரு தினைத்தனை தானுங் குறிப்பிடக் காணாமையானும் ஏதொரு சான்று மின்றி அவைகளை வெறுங்கதையாகச் சொல்லுந் `திருமுறைகண்ட புராணம் நுண்ணிய உண்மை யாராய்ச்சியில் தலைநின்றவருஞ் சைவசித்தாந்த ஆசிரியரில் நாலாம் எண்ணுமுறைமைக்கண் நின்றவருமான `உமாபதி சிவாசிரியர் செய்ததாகாது; அவர் பெயர் தாங்கிய வேறெவரோ ஒருவர் செய்ததாகல் வேண்டும். இதற்குப் பின்னும் ஒரு சான்று காட்டுதும்; நம்பியாண்டவர் நம்பிகள் தாம் அருளிச்செய்த `திருநாவுக்கரசுதேவர் திருவேகாதச மாலையின் ஏழாஞ் செய்யுளில், பதிகம்ஏழ் எழுநூறு பகரும்மா கவியோகி என்று திருநாவுக்கரசு நாயனார் திருவாய்மலர்ந் தருளியன நாலாயிரத்துத் தொளாயிரம் பதிகங்களே யென்பது தோன்றக்கூறினார். மற்றுத், திருமுறை கண்டபுராணமோ 15 ஆஞ் செய்யுளில், ஒருநாற்பத் தொன்பதினாயிரமதாகப் பெருநாமப் புகலூரிற் பதிகங்கூறி என அரசுகள் நாற்பத்தொன்பதாயிரம் பதிகங்கள் அருளிச் செய்தனரெனக் கூறாநிற்கின்றது; நம்பிகளுக்கு முன்னிருந்த சுந்தரமூர்த்தி நாயனாரும் இணைகொள் ஏழெழுநூறிருபனுவல் ஈன்றவன் திருநாவினுக்கரையன் என்று திருநின்றியூர்த் திருப்பதிகத்தில் அருளிச்செய் திருக்கின்றனர். இதனாலுந், `திருமுறைகண்டபுராணம் ஆராய்ச்சியுணர்வில்லாத ஒருவராற் செய்யப்பட்டதொரு நூலென்பது இனிது புலனாதலின், சான்றேதுமின்றி அதன்கட் சொல்லப்பட்ட வெறுங்கதையைக் கொண்டு நம்பியாண்டார் நம்பிகளைத் தெய்வப் பெற்றியுடை யாரெனக்கோடல் இழுக்காமென்றுணர்ந்து கொள்க. எனவே, தெய்வப் பெற்றியுடையராகாத அவர் ஒரோவழி இழுக்குதல் இயல்பேயாகலின் அதுபற்றி அவர் இகழப் படார். அவர் எம்மனோரால் வழுத்தப்படும் மாட்சி நனியுடைய சைவப்பெரியாரென்பதிலும் ஐயம் இல்லையென்க. அத்துணைப் பெரியாரேயாயினும் அவர் வழுவிய இடங்களிலும் அவரைப் பின்பற்றி யாமும் வழுவி எமது மெய்யறிவை யிழத்தல் நன்றாகாது. நம்பிகளினுஞ் சுந்தரமூர்த்தி நாயனாரே பல்லாயிரமடங்கு சிறந்த தெய்வமாட்சி யுடைய ராகலின், அவர் அருளிச்செய்த `திருத்தொண்டத் தொகையிற் போந்த `பொய்யடிமை யில்லாத புலவர் என்பதற்கு அவரது கருத்தறிந்து உண்மைப்பொருள் கோடலே சிறந்ததாகுமல்லாமல், நம்பிகளைப் பின்பற்றி நாயனாரது கருத்துக்கு முரணான பொருள் கோடல் பெரிதும் ஏதமாமென்க. அதுவேயுமன்றிப், `பொய்யடிமை யில்லாத புலவர் என்பதற்கு நம்பிகள் கொண்ட பொருளே அதற்குண்மைப் பொருளாயின், அதனை வழிநூலாகக் கொண்டு சார்புநூல் செய்த ஆசிரியர் சேக்கிழார் தாமும் அதற்கு அப்பொருளே கொண்டு பாடியிருத்தல் வேண்டும். பொய்யடிமை யில்லாத புலவர்க்கு நம்பிகள் கொண்ட பொருள் கபிலர், பரணர், நக்கீரர் முதலான நாற்பத்தொன்பான் சங்கப் புலவரேயென்பது, தரணியிற் பொய்ம்மை யிலாத்தமிழ்ச் சங்க மதிற்கபிலர் பரணர் நக்கீரர் முதனாற்பத் தொன்பது பல்புலவோர் அருணமக் கீயுந் திருவால வாயரன் சேவடிக்கே பொருளமைத் தின்பக் கவிபல பாடும் புலவர்களே என்று அவர் திருத்தொண்டர் திருவந்தாதியிற் பாடிய வாற்றால் துணியப்படும். மற்றுச் சேக்கிழார் அடிகளோ அதற்கு நம்பிகள் கொண்டவாறு பொருள் கொள்ளாது. செய்யுணிகழ் சொற்றெளிவுஞ் செவ்வியநூல் பலநோக்கும் மெய்யுணர்வின் பயனிதுவே யெனத்துணிந்து விளங்கியொளிர் மையணியுங் கண்டத்தார் மலரடிக்கே யாளானார் பொய்யடிமை யில்லாத புலவரெனப் புகழ்மிக்கார் எனப் பொதுப்படக் கூறிச் சென்றார். இச் செய்யுளிற் `பொய்யடிமை யில்லாத புலவர் என்பார்: சங்கப்புலவரே என்று கூறப்படாமையோடு, அவர் பலரென்பது குறிக்கப் படாமையும் என்னை? யென்று நுணுகி நோக்கும்வழி, ஆசிரியர் சேக்கிழார்க்கு நம்பியாண்டார் நம்பிகள் கொண்ட பொருள் பொருத்தமாகக் காணப்படவில்லையென்பது தானே போதரும். அற்றேற், `பொய்யடிமை யல்லாத புலவர் எனப் பட்டார் தனியடியாரே யாவரென்பதும், அவர் மாணிக்கவாசகப் பெருமானே யாவரென்பதுஞ் சேக்கிழார்க்குக் கருத்தாயின் அவை தம்மை அவர் ஏன் வெளிப்படையாகக் கூறிற்றிலரெனிற், சேக்கிழார்க்கு எண்ணூறாண்டு பிற்பட்டதாகிய இஞ்ஞான் றுள்ள எமக்கு அவரது கருத்தைத் துணிபுறக் காட்டும் வலிய சான்று ஏதும் காணப்படாமையின், அதனை இன்னது தானெனத் திண்ணமாய்க் காட்டுதல் இயலாததென விடுக்க. ஆயினுந், தமக்குமுன் வழிநூல் செய்த நம்பியாண்டார் நம்பிகள் அதற்குப் பொருந்தாப் பொருள் கொண்டமையானும், அவரொடு மாறுகொண்டு அதற்குத் தாங்கொண்ட தனியடியார் என்னும் பொருளை வெளிப்படையாக நாட்டுதலிற் சேக்கிழார்க்குக் கருத்தொருப்பா டில்லாமை யானும் அவர் அதனை வெளிப்படச் சொல்லாது நெகிழ்ந்தோதி விடலானா ரென்க. அல்லதூஉம், மாணிக்க வாசகப் பெருமானையும் அவர் அருளிச்செய்த `திருவாசகம், `திருச்சிற்றம்பலக் கோவையார் என்னும் நூல்களையும் இஞ்ஞான்று ஆங்காங்குள்ள வீரசைவர் களும், வீரசைவமடங் களின் குரவர்களும், சைவசமயாசிரியர் ஏனை மூவரினும் அவர் அருளிச்செய்த `தேவாரமறைகளினும் பார்க்க மிகுத்துக் கொண்டாடி வழிபாடாற்றி வருதலை உற்றாராயுமிடத்து, இவ்வழக்கந் தொன்றுதொட்டு வருவ தொன்றென்பது புலனாகாநிற்கும். வீரசைவமானது சைவ சமயத்தின் வேறல்லாததாய்ச் சிவலிங்க வழிபாட்டில் மிக உறைத்து நிற்பதொன்றே யாயினும், அஃது இத்தமிழ் நாட்டிற்கு உரியதல்லாததாய்க், கி.பி. இரண்டாம் நூற்றாண்டு முதல் வடக்கிருந்து தமிழ்நாட்டிற் குடிபுகுந்த வடுகக்கருநாடராற் கொணரப்பட்டதாகலின், இங்கிருந்த சைவசமயச் சான்றோர் அதனைத் தமது சமயத்தின் வேறுபட்ட தொன்றாகவே கொண்டொழுகலாயினர். கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் ஈற்றில் வடுகநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற் குடிபுகுந்து வைகிய வீரசைவ மரபினர் பலருட், பாண்டி நாட்டில் வைகிய ஒரு தெய்வப் பார்ப்பனக் குடியிலிருந்து மாணிக்கவாசகப் பெருமான் தோன்றினமையாற் போலுந் சிவபெருமானால் நேரே ஆட்கொள்ளப் பட்டுச் சிவமாய் வயங்கிய அப் பெருமான், கடவுள் இல்லையென மறுத்து நாத்திகம் பேசிய இலங்கைப் பௌத்தர்களை நடுநிலை வழாமல் வழக்கில் வென்றுந், திருவாசகந் திருக்கோவையா ரென்னுஞ் செழுந்தமிழ் மறைத்தேனைத் தம் அருண் மணவாய்மலர் விண்டு அருளியுந், தில்லைச் சிற்றம்பலத்தே தோன்றிய சிவவொளியில் இரண்டறக் கலந்து சிவமாகியுந் தெய்வச் சைவசமயா சிரியராய் வீறித்திகழ்ந்தமை கண்டு, அவரைத் தமது மரபிற் பிறப்பித்துக் கொள்ளும் பெருந்தவம் ஆற்றிய வீரசைவச் சான்றோர்கள் அவரைத் தம் முதலாசிரியராய்க் கொண்டு அவரையும் அவர் அருளிய தமிழ்மறைகளையுந் தம் உயிர்போற் கொண்டு வழிபாடுசெய்து வருவாராயினர். இவ்வாறு, வடக்கிருந்துவந்து குடியேறிய வீரசைவமரபினரால் முதலாசிரியராய் வைத்து மாணிக்க வாசகப் பெருமான் வழுத்தப்படுதல் பற்றியே, தமிழ்நாட்டிலிருந்த சைவசமயச் சான்றோர்கள் நெடுங்காலம் வரையில் அவரைத் தமது சைவசமய குரவர் வரிசையில் வைத்துக் கொண்டாடிற்றிலர். இதனாலேதான் சுந்தரமூர்த்தி நாயனாரும் அவரது திருப்பெயரை விளங்கக்கூறாது `பொய்யடிமையில்லாத புலவர்எனச் சிறிது மறைத்துக் குறிப்பாற் கூறினாராதல் வேண்டும். சுந்தரமூர்த்தி நாயனாரதுகாலத்திற்குச் சிறிது பின்னேயெல்லாம் வடக்கிருந்துவந்த வீரசைவத்திற்கும் இந்நாட்டிலுள்ள சித்தாந்த சைவத்திற்கும் முன்னிருந்த வேற்றுமையுணர்ச்சி மறைய, அவ்விரண்டிற்கும் உரியார் ஒருவரோடொருவர் ஒருங்கு அளவளாவி இருவர் கொண்ட சமயமும் ஒருசமயமேயென உண்மை கண்டு உறவுகலந் தமையின், மெல்லமெல்ல மாணிக்கவாசகரையும் நாலாஞ் சைவசமயாசிரியராக இங்குள்ளா ரெல்லாரும் ஒருப்பட்டுக் கொள்ளும் பெரும்பேறு பெறலாயினாரென்க. சுந்தர மூர்த்திநாயனார் காலத்தும் அவர்க்கு முற்பட்ட காலத்தும் இங்கிருந்த சைவசமயப் பெரியார் மாணிக்கவாசகப் பெருமானை அவ்வாறு சைவசமய ஆசிரியராய்க் கொண்டிலர்; அல்லதவ்வாறு கொண்டன ரென்பதற்குச் சான்றும் இன்று. சுந்தரமூர்த்திகளுக்குப்பின் பட்டினத்தடிகள் அருளிச்செய்த `திருவிடைமருதூர் மும்மணிக் கோவையிலே தான் (28) முதன்முதல் மாணிக்கவாசகப் பெருமான் ஏனை மூவரொடு சேர்த்து நாலாமவராகச் சொல்லப்பட்டிருக்கின்றார். இந் நூலுடன் `பதினோராந் திருமுறையிற் சேர்க்கப் பட்டிருக்கும் ஏனை அருள்நூல் வரிசையில் நம்பியாண்டார் நம்பிகள் அருளிச்செய்திருக்கும் நூல்களும்இறுதியில் நிறுத்தப்பட்டிருக் கின்றன. நம்பிகள் தாமியற்றிய நூல்களைத் தாமே ஏனைப்பெரியார் தம் நூல் வரிசையிற் சேர்த்திரார் என்பது திண்ணம். நம்பிகள் காலத்திற்குப்பின் அவர்பால் மெய்யன்பு பூண்டொழுகிய மற்றொருவரே நம்பிகளின் நூல்களை அவற்றோ டுடன் கோத்தாராகல் வேண்டும். இதற்கு, நம்பிகள் அருளிய `திருத்தொண்டர் திருவந்தாதியின் துவக்கத்தில், நம்பிகளின் திருவடித் துணையைவேண்டிப் பாடியிருக்கும், பொன்னி வடகரை சேர்நாரை யூரிற் புழைக்கைமுக மன்னன் அறுபத்து மூவர் பதிதே மரபுசெயல் பன்னஅத் தொண்டத் தொகைவகை பல்கும் அந் தாதிதனைச் சொன்ன மறைக்குல நம்பிபொற் பாதத் துணைதுணையே என்னுஞ் செய்யுளே சான்றாம். இச்செய்யுளை இயற்றினவர் இன்னா ரென்பதும் இன்னகாலத் திருந்தாரென்பதுங் குறிக்கப்படாவிடினும், இச் செய்யுளிற் போந்த பொல்லாப் பிள்ளையார் கதையுந் `திருமுறைகண்ட புராணத்திலுள்ள பொல்லாப்பிள்ளையார் கதையும் ஒத்திருத்தலின், அத்திருமுறை கண்ட புராணம் இயற்றிய உமாபதி சிவாசாரியாரென்பாரே இச் செய்யுளையும் இயற்றிச் சேர்த்துத், `திருத்தொண்டர் திருவந்தாதியையும் நம்பிகள் அருளிச்செய்த ஏனை நூல்களையும் பதினோராந் திருமுறையின் ஈற்றிற் கோத்தவரா யிருக்கலாமென்று கோடல் இழுக்காது. இங்ஙனம் நம்பிகளுக்குப் பின்வந்த ஓர் அன்பராற், பதினோராந் திருமுறையின் ஈற்றில் நிறுத்தப்பட்ட நம்பிகளின் நூல்களைத்தவிர, ஏனைப் பெரியார்தம் நூல்களெல்லாந் `திருமுறைகண்ட புராணங் கூறுமாறு நம்பிகளாலேயே கோக்கப்பட்டன வென்பது உண்மை யாயின், அங்ஙனங் கோக்கப்பட்ட நூல்களுள் ஒன்றான திருவிடைமருதூர் மும்மணிக்கோவையும் அதனாசிரி யரான பட்டினத்தடிகளும் நம்பியாண்டார் நம்பிகளிருந்த கி.பி.பத்தாம் நூற்றாண்டின் இறுதிக்கு முற்பட்டிருத்தமை பெறப்படும். பட்டினத்தடிகள் தாம் அருளிச்செய்த அத் `திருவிடை மருதூர் மும்மணிக்கோவையில். வித்தகப் பாடல் முத்திறத் தடியருந் திருந்திய அன்பிற் பெருந்துறைப் பிள்ளையும் (28) என்று திருஞானசம்பந்தர் அப்பர் சுந்தரர் என்னும் மூவரையும் மாணிக்கவாசகரையும் ஒருங்கு சேர்த்து ஓதியிருக்கின்றார். முதன் மூவரை ஒரு தொகையாக்கி முன்னும், மாணிக்கவாசக ரொருவரை மட்டும் அம்மூவர்க்குப் பின்னுமாகவைத்து அவர் ஓதுதலை உற்றுக்காணுமிடத்து, அவர் காலத்திற்கு முன்னெல்லாம் அம் முதன் மூவருமே சைவசமய ஆசிரியராய்க் கொள்ளப்பட்டனரென்பதும், அவரது காலத்திலேதான் மாணிக்கவாசகரும் அம் மூவரோடு நாலாமவராக வைத்துச் சைவ நன்மக்க ளெல்லாராலும் வழுத்தப்படலாயினா ரென்பதும் நன்குவிளங்காநிற்கும். ஈதிங்ஙனமாகவுந், `தமிழ்வரலாறு உடையார், சைவசமயாசிரியர் மூவருங் காலத்தான் முற்பட்டவராதல் பற்றி அம்மூவரையும் ஒரு தொகையாக்கி முன்னும், மாணிக்கவாசகர் அம் மூவர்க்கும் பிற்பட்டவராதல்பற்றி அவரைப் பின்னுமாக வைத்துச் சைவசமயச் சான்றோர்கள் வழங்குவாராயினரெனக் கூறினார். கால முற்பிற்பாடு பற்றி மூவர் முன்னும் மாணிக்க வாசகர் பின்னுமாக வைக்கப் பட்டது உண்மையாயின், மூவர் காலத்திற்கும் முன்னிருந்தோரான `திருமூல நாயனாரையும் அவர் அருளிச்செய்த `திருமந்திர நூலையும் அம் மூவர்க்கும் அவர் அருளிச் செய்த `தேவாரத் திருமுறைகளுக்கும் முன்னரன்றோ வைத்து வழங்கல் வேண்டும்? அற்றன்று, திருமூலநாயனார் காலத்தால் முற்பட்டவரேனுங், கடவுளுண்மையை மறுத்த பௌத்தஞ் சமணம் முதலான புறச்சமயங்களை வழக்கில் வென்று சிவபிரானே முழுமுதற் கடவுளாதலைப் பல வியத்தகு தெய்வ நிகழ்ச்சிகளால் நிலைநிறுத்திய நால்வரைப் போல் திருமூலர் சைவவுண்மையினை நாட்டினவரல்ல ராகலின், அவர் அவர்க்குமுன் வைக்கப்பட்டில ரெனின்; இதுவும் எமது கொள்கைக்கே துணை செய்வதாகும்; என்னை? சமயாசிரியர் நால்வரின் வைப்புமுறை அவரவர் சிறப்புப்பற்றியே வைக்கப்பட்டதல்லாமல் அவர்தங் கால முற்பிற்பாடு பற்றியன்றென்பதே எமது கோட்பாடாக லானும், நீர் எழுப்பிய வினாவும் அக்கோட்பாட்டையே நுதலுதலானு மென்பது. மேலுந், திருநாவுக்கரசு நாயனார் காலத்தால் திருஞானசம்பந்தப் பெருமானுக்கு முற்பட்டவராயிருந்தும், அவர் அறிவு முதிர்ந்த முதுமைக் காலத்துஞ் சமண்சமயக் கோட்பாட்டின் பொருந்தாமை யுணராராய் அதன்கண் அழுந்திநிற்ப, ஞான சம்பந்தப் பெருமானோ பால்பருகுங் குதலைச் செவ்வாய்க் குழவி யாயிருந்த ஞான்றே அம்மையப்பரை நேரே கண்டு அவரால் ஞானப்பால் ஊட்டப்பெற்று எல்லாம் ஓதாதுணர்ந்த ஞானாசிரியராய் விளங்கினமை கண்டே அக்காலத்திருந்த சான்றோர் அவரை முன்னும் அப்பரை அவர்க்குப் பின்னுமாக வைத்து வழிபட்டு வரலானாரென்க. இவ்வுண்மையினை நன்காய்ந்துணர மாட்டாத `தமிழ் வரலாறுடையார், திருஞானசம்பந்தப் பிள்ளையார் முதலில் அருளொளியில் கலந்தமை பற்றி முன்னும் அதற்குச் சிறிது காலங்கழிந்து இறைவன் றிருவடிப்பே றெய்தினமை பற்றி அப்பர் அவர்க்குப் பின்னுமாக வைத்து வழுத்தப் பட்டனரென்றார்; இவ்வாறுரைக்கின்றுழி இவர் இடையிடையே வழுப்பட மொழிந்தனவும் பல; ஒரு காலத்தொருங்கிருந்த இருவரில் ஒருவர் முன்னும் மற்றவர் அவர்க்குப் பின்னுமாக இறைவன் திருவடிநீழல் அடைந் தமையினை ஓர் ஏதுவாகக் கொண்டு முன்னடைந்தவரை முன்னும் பின்னடைந்தவரைப் பின்னுமாக வைத்து வழங்கு தலை யாம் யாண்டுங் கேட்டிலேம். நூல்களிலாதல் ஆன்றோர் வழக்கிலாதல் அதற்குச் சான்றுங்கண்டிலேம் `தமிழ் வரலாறுடையார் ஒருவரே இவ்வாறு பொருந்தாவுரை நிகழ்த்தக் கண்டேம். சிறப்புடைய இருவரில் ஒருவரை முன்னும் ஏனையவரைப் பின்னுமாக வைப்பது, முன்வைக்கப்பட்டார் தனித்தலைமைச் சிறப்புக் கெழுமினராயிருத்தலும் மற்றையார் அது கெழுமாரா யிருத்தலும் பற்றியேயாம்; இதுவே தொன்று தொட்டு ஆன்றோர் நூல்வழக்கிலும் உலகவழக்கிலும் பிறழாது நடைபெறும் முறையாகும். இம்முறைக்கு மாறாகத் `தமிழ்வரலா றுடையார் சமயாசிரியர் தம்முள் ஒருவரை யுயர்த்துதலும் மற்றொருவரை அவரிற் றாழ்த்துதலும் அடாத செயலென் கின்றார்! ஏன் அடாதசெயலாம்? அவரவர்க்குள்ள சிறப்புகளை உள்ளவாறு ஆராய்ந்தளந்து மிக்க சிறப்புடையாரை மிக உயர்த்துதலும், அத்துணைச் சிறப்பு வாயாதாரை அவர்க்கு அடுத்த நிலையில் வைத்து வழுத்துதலுங் குற்றமாமாறு யாங்ஙனம்? தெய்வத் திருவள்ளுவரும், பொதுநோக்கான் வேந்தன் வரிசையால் நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர் என்று பொதுநோக்கே குற்றமுடைத்தாதலும், அவரவர்க்குரிய வரிசைக்குத் தக்க சிறப்புநோக்கே விழுப்பமுடைத்தாதலும் நன்கு தேற்றினாரல்லரோ? ஏனையாசிரியனும் ஓராசிரியரைச் சிறந்தெடுத்துவைக்கும் உண்மை யாராய்ச்சியால், அவரவர்பால் அன்பு செலுத்துமுறை உண்மைவழிச் சென்று உறைத்து நிற்குமே யல்லாமல், அது பழுதுபடுதலும் ஏனையோரை யிழித்தலுமாய் முடியுமோ? காதல் வழிநிற்குங் கற்புடை மனையாள் ஒருத்தி தன் காதல் கணவனோடொப்ப ஏனை யுறவினர்பால் தலைப்பேரன்பு செலுத்தாமல் அவரவர்க்குத் தக்கவாறு அன்புபூண்டொழுகு வளாயின், அது கண்டார் அவளைப் புகழ்வரோ? இகழ்வரோ? எல்லாரும் அவளைப் புகழ்வதன்றே செய்குவர். அங்ஙனமே, நம் சமயாசிரியன்மார் எல்லாரையுங் குருட்டுத்தனமாய் ஒரே படியில் வைத்து அன்பு பாராட்டுதல் மெய்யன்புக்கு இழுக்காதல் உணர்ந்து, அவரவர்க்குரிய வகையில் வைத்து அவ்வவர்பால் உண்மையன்பு பூண்டொழுகுதலே சாலச்சிறந்ததா மென்று உணர்ந்து கொள்க. இவ்வாறு ஆசிரியன்மார்க்குள்ள சிறப்பு முறையினை உண்மையான் உணர்ந்து அம் முறையைக் கடைப்பிடித் தொழுகுவது எம்முயிர்க் குறுதி பயத்தல் பற்றியன்றே, முதன்முதல் திருநாவுக்கரசுநாயனார் சீர்காழியிற்போந்து திருஞானசம்பந்தப் பிள்ளையாரைக் கண்டு வணங்கி அவரோடும் அங்குள்ள திருக்கோயிலை வழிபடச் சென்றுழி அவ் விருவர்தந் தோற்றத்தினையுங் கூறப்புக்கவர் அவ்விருவர்க்குள்ள சிறப்பிலும் வேற்றுரை தோன்றத் தெரித்து, அருட்பெருகு தனிக்கடலும் உலகுக் கெல்லாம் அன்புசெறி கடலுமா மெனவும் ஓங்கும் பொருட்சமய முதற்சைவ நெறிதான் பெற்ற புண்ணியக்கண்இரண்டெனவும் புவன முய்ய இருட்கடுவுண் டவர் அருளும் அகில மெல்லாம் ஈன்றாள்தன் றிருவருளு மெனவுங் கூடித் தெருட்கலைஞா னக்கன்றும் அரசுஞ் சென்று செஞ்சடைவா னவர்கோயில் சேர்ந்தா ரன்றே1 என்று அருளிச் செய்வாராயினர். இதன்கண் அருட்கட லாவார் திருஞானசம்பந்தப் பிள்ளையாரெனவும், அன்பின் கடலாவார் திருநாவுக்கரசு நாயனாரெனவும், இருட்கடு வுண்ட இறைவனருளே சமணிருள் பருகிய திருஞான சம்பந்தப் பிள்ளையாராவ ரெனவும், உலகெலாமீன்ற இறைவியினருளே தாண்டகச் செந்தமிழ் பயந்த திருநாவுக்கரசு நாயனாராவரெனவும் ஆசிரியர் சேக்கிழார் அவ்விருவர் தமக்குள்ளும் உள்ள சிறப்பில் வேற்றுமை காட்டுதலை உற்றுநோக்க வல்லார்க்கு, அருள் என்பது கடவுட்டன்மையாதல் போல அதனோடொப்பிக்கப் பட்ட திருஞானசம்பந்தப் பிள்ளையாருந் தெய்வ அருள்மாட்சி யுடையராதலும், அன்பு என்பது அடியார்க்குரிய தன்மை யாதல் போல அதனோடொப்பிக்கப்பட்ட திருநாவுக்கரசு நாயனாரும் அடிமைத்திறத்தில் தலைநின்ற மாட்சியுடைய ராதலும் பிரிந்தினிதுவிளங்காநிற்கும். இங்ஙனமே இவ்வாசிரியன்மார் இருவரையுஞ் சேக்கிழார் ஒருங்குகூற நேர்ந்துழி யெல்லாம், அப்பரினும் பார்க்கத் திருஞானசம்பந்தப் பிள்ளையாரை மிக உயர்த்துவைத்து மொழிந்திருத்தலை ஆங்காங்கு நுணுகி யாராய்ந்துணர்ந்து கொள்க. இவ்வாறு சேக்கிழார் அவ்விருவரில் ஒருவரை ஏனையோரினும் மிகுத்துரைத்தல் கொண்டு, அவர் சம்பந்தரிடத்துப் போல அப்பரிடத்து மிக்க அன்பு வைத்திலரெனச் சொல்லுதல் ஒக்குமோ! அவர் அடியார்கள் அனைவரிடத்தும் பேரன்பு பூண்டொழுகுந் திறத்தின ரென்பது அவர் அவ்வவ்வடியார் அன்பின் றிறங்களைக் கல்லும்உருகப் பாடியிருக்குஞ் செந்தமிழ்ப் பாக்களால் இனிது புலனாகின்ற தன்றோ? இங்ஙனமாகச் சேக்கிழார் அடியாரெல்லாரிடத்தும் நெகிழாத பேரன்பினராயினும், அவ்வடியார் தமக்குள்ளுந் தனிப்பெருஞ் சிறப்புடையார் தலைமைப்பாட்டினையும் அவர் உண்மைவழாது ஆங்காங்கு நன்கெடுத்துக் காட்டும் முறை எம்மனோராற் பெரிதும் போற்றற்பால தொன்றாமென்பது. இனித்,திருநாவுக்கரசு நாயனாரே தம்மினுந் திருஞான சம்பந்தப் பிள்ளையார் சிறந்தாராயிருத்தலை யெடுத்து மொழிந்து, அத்துணை மாட்சியுடைய அப் பிள்ளையார் தம்மோடு உடன்நிற்றலின் அவர் பொருட்டாகவாதல் இறைவன் தனது திருவுருவினைத் தமது கட்புலனெதிரே காட்டியருளுதல் வேண்டுமெனக் குறையிரந்து, திறக்கப் பாடிய என்னினுஞ் செந்தமிழ் உறைப்புப் பாடி அடைப்பித்தா ரும்நின்றார் மறைக்க வல்லாரோ தம்மைத் திருவாய்மூர்ப் பிறைக்கொள் செஞ்சடை யாரிவர் பித்தரே என்று திருவாய்மூர்ப்பதிகம் 8 ஆஞ் செய்யுளில் அருளிச் செய்திருத்தல் பெரிதும் நினைவிற் பதிக்கற்பாற்று. இன்னுந், திருவாவடுதுறையிற் சிவபெருமான் திருஞான சம்பந்தப் பிள்ளையார்க்கு ஆயிரம் பொன்முடிந்த கிழி யொன்று அருள்சுரந்து அளித்ததனை அப்பரே மனங்கசிந்து, காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல ஊரர்க்கு அம்பொன் ஆயிரங் கொடுப்பர் போலும் ஆவடு துறைய னாரே (திருவாவடுதுறைத் திருநேரிசை, 9) என்று அருளிச் செய்தமையும் என்றும் நினைவுகூரற் பாலதாகும். இனி, இவ்விருவர்க்கும் பின்னேவந்து, அடியாரனை வர்க்குந் தாம் தனித்தனியே யடிமையாதலை மொழிந்து `திருத்தொண்டத் தொகை அருளிச்செய்த சுந்தர மூர்த்திகளும், வம்பறா வரிவண்டு மணநாற மலரும் மதுமலர்நற் கொன்றையா னடியலாற் பேணா எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் என்று திருஞானசம்பந்தப் பெருமானை மிக உயர்த்துக் கூறினாற்போல ஏனையடியாரைக் கூறிற்றிலர். இவ்வாறு திருஞானசம்பந்தர் காலத்திருந்த அடியார்முதல் இற்றை ஞான்றை வந்த இராமலிங்க அடிகள் ஈறான சான்றோ ரெல்லாரும் ஞானசம்பந்தப் பெருமானை ஏனை யெல்லாரினும் பார்க்க மிகுத்து வைத்தே வணக்கவுரை நிகழ்த்தக் காண்டலின், சமயாசிரியர் நால்வரில் ஞானசம்பந்தப் பெருமான் முன்வைத்து வழங்கப்பட்டது ஏனையாசிரியரிற் காணப்படாத தனிப்பெருஞ் சிறப்பு அவர்பாற் காணப்படுதல் பற்றியேயாம்; இவ் வுண்மையினை மறைத்து, அப்பருக்குமுன் சம்பந்தர் இறைவன் திருவடிநீழல் எய்தினமை கொண்டே அவர் அப்பருக்குமுன் வைக்கப் பட்டாரெனக் கரைந்ததும், சம்பந்தரும் அப்பர் முதலான ஏனையடியாரும் ஒருங்கொத்த சிறப்பினரே யாவரெனப் பகுத்துணர்ந்து பாராது பகர்ந்ததுந் `தமிழ் வரலாறுடையார்க்கு ஏதமாமென்க. அப்பரே தமது அருமைத் திருமொழியால் திருஞானசம்பந்தரைத் தம்மினும் மிக உயர்த்துவைத்துப் பாடியிருத்தலானும், அக் குறிப்பறிந்து சேக்கிழாரும் பலவிடங்களிலும் ஞானசம்பந்தரை அப்பரினும் பார்க்க உயர்த்துக் கூறுதலோடு, தொழுதணைவுற் றாண்டஅரசு அன்புருகத் தொண்டர்குழாத் திடையே சென்று பழுதில்பெருங் காதலுடன் அடிபணியப் பணிந்தவர்தங் கரங்கள் பற்றி எழுதரிய மலர்க்கையால் எடுத்திறைஞ்சி விடையின்மேல் வருவார் தம்மை அழுதழைத்துக் கொண்டவர்தாம் அப்பரே என அவரும் அடியேன் என்றார் என்று ஞானசம்பந்தர் தெய்வத்தலைமை யுடையராதலும் அப்பர் அவர்க்கு அடிமைத்திறம் பேணும் நிலையராதலும் விளங்கத் தேற்றுதலானும், நம்மாசிரியன்மார் தாமே அவ்வாறு அவர் தமக்குட் காட்டிய சிறப்பியல் வேற்றுமைக்கு மாறாக அவரெல் லாரையும் ஒருபடியராக வைத்துரைத்தல் பெரியதொரு குற்றமாமென்க. அடிக்குறிப்பு 1. திருநாவுக்கரசு நாயனார் புராணம். 185. 27. அப்பர் சம்பந்தர் இருந்தகால ஆராய்ச்சி அற்றேலஃதாக, திருநாவுக்கரசு நாயனார் தாம் தழுவிய சமண்மதந் துறந்து சிவபெருமான் திருவருட்பேற்றினை எய்திய ஞான்று முதுமைமிக்கிருந்தா ரென்பதற்குச் சான்றென்னை யெனிற் கூறுதும்: திருநாவுக்கரசு நாயனார் சிவபிரான் திருவருளாற் சைவசமயத்திற்குத் திரும்பித் திருவதிகையிற் சூலைநோய் தீர்ந்துஅப் பெருமான் திருவடிக்கு ஆளானபிற் சில திங்களிலெல்லாஞ் சீர்காழிக்குப் போந்து திருஞானசம்பந்தப் பிள்ளையாரைக் கண்டு வணங்கி அவரொடு அளவளாவி யிருந்தனரென்பது ஆராய்ச்சியாற் புலானாகின்றது. இதனை நன்காய்ந்து பாராத `தமிழ்வரலாறுடையார் திருவதிகையில் ஆட் கொள்ளப்பட்டபின் அப்பர் அவ்விடத்திலேயே முப்ப தாண்டுகள் இருந்தாராகல் வேண்டுமென்றும், அவர் மீண்டுஞ் சைவசமயத்தைத் தழுவியஞான்று நாற்பதாண்டின ரென்றும், அவர் சீர்காழியிற் போந்து திருஞானசம்பந்தப் பெருமானை வணங்கியபோதான் எழுபதாண்டுக்கு மேற்பட்டவரா யிருந்தா ரென்றும் உண்மைநிகழ்ச்சிக்கு முற்றும் முரணாகக் கூறினார் (தமிழ்வரலாறு பிற்பாகம், முற்பகுதி, 50 ஆம் பக்கம்) சேக்கிழாரடிகள் பெரிதாராய்ந்து பாடியிருக்கும் வரலாறு களைக் கருத்தாய் நோக்குவார்க்குத், தமிழ் வரலாறுடையார் கூறிய இவை முற்றும் மாறு கோளுரைகளாதல்விளங்கா நிற்கும். திருநாவுரக்கரசுகள் சமண்மதந் துறந்து சைவசமயம் புகுந்தமை தெரிந்த வளவானே சமண்மதத்தவர் வாளா இரார்; அவர் தம் அரசனை ஏவி அவரை நீற்றறையில் இடுவித்தன் முதலான பொல்லாங்குகளையெல்லாம் உடனே அவர்க்கு இழைத்தாராகல் வேண்டும். அப்பர் சிவபிரான் திருவருளைப் பெற்றதற்குப்பின் நெடுநாள் இடையீடின்றியே இத் தீங்குகள் சமண் அரசனால் அவர்க்கு உடனே விளைவிக்கப்பட்டன வென்பதற்குச் சேக்கிழார், இன்ன தன்மையில் இவர்சிவ நெறியினை யெய்தி மன்னு பேரருள் பெற்றிடர் நீங்கிய வண்ணம் பன்னு தொன்மையிற் பாடலி புத்திர நகரிற் புன்மையேபுரி அமணர்தாம் கேட்டது பொறாராய் (திருநாவுக்கரசு நாயனார் புராணம், 79) என்று அருளிச்செய்தவாற்றாற் புலனாம். சமண் அரசன் தான் இழைப்பித்த பல கொடுந் தீங்குகளும் அப்பரை ஒரு சிறிதும் ஊறுபடுத்தாமை கண்டு, கடைப்படியாக அவரை ஒரு பெருங்கற்பாறையிற் பிணிப்பித்துக் கடலில் இடுவித்தனன். அப்பரோ ஆண்டவன் சுரந்த பேரருட் டுணையால் அக் கல்லையே புணையாகப் பெற்று மிதந்து திருப்பாதிரிப்புலியூர்ப் பக்கத்துள்ள கடற்கரையைச் சேர்ந்து கரைமீதேறி அவ்வூரிலுள் ளாராற் பெரிதும்வியந்து பணிந்து வரவேற்கப்பட்டு, அங்கேயுள்ள திருக்கோயிலிற் சிவபிரானை வணங்கி அவன்றிருவடிக்கு, ஈன்றாளுமாய் எனக்கெந்தையுமாய் என்னுந் தீந்தமிழ்ப் பதிகமாலை சாத்திப், பின்னுந் திருவதிகை வந்துசேர்ந்து திருத்தாண்டகச் செந்தமிழ் பாடியபடியாய் அங்கே உழவாரத் திருப்பணி செய்துகொண்டு சிலநாள் வைகினார். இவரைப் பல கொடும் பொல்லாங்குகளால் வருத்திய சமண்வேந்தனான `மகேந்திரவர்ம பல்லவன் தான் கடைப்படியாக இழைப்பித்த தீங்குக்கும் அரசுகள் தப்பிக் கரையேறினா ரென்பது கேட்டதுணையானே, அவரது பெருமையுஞ் சிவபிரான் றிருவருள் அவர்க்கு உறுபெருந் துணையாய் நின்று தான்செய்வித்த தீங்குகளையெல்லாம் பாழ் படுத்தியதும் உணர்ந்து, நல்வினையால் உளந்திருந்தித் திருவதிகை சென்று திருநாவுக்கரசரின் திருவடி மலர்களில் வீழ்ந்து, அவரது கடைக்கண் நோக்கம் பெற்றுச் சமண்மதம் பொய்யாதலுஞ் சைவசமயமே மெய்யாதலும் உணர்ந்து சிவபிரான் றிருவடிக்கு ஆளானான். இந் நிகழ்ச்சிக்குப்பின் அப்பர் திருவதிகையினின்றும் புறப்பட்டுச் சிவபிரான் திருக்கோயில்களுள்ள பதிபலவுஞ் சென்றிறைஞ்சுதற்கு விழைவுமீதூரப் பெற்றாரென்று சேக்கிழாரடிகள் தெளித்துக் கூறுமாற்றால், அப்பர் முன்னும் பின்னுந் திருவதிகையிற் பலவாண்டுகள் வைகினா ரல்லரென்பது இனிது பெறப்படும். ஈதிங்ஙனமாகவும், இவ்வுண்மை வரலாற்றுக்கு முழுமாறாய்த் `தமிழ் வராறுடையார் முப்பதாண்டுகள் அப்பர் திருவதிகையில் வைகினாரெனத் துணிபுரை நிகழ்த்தியது பெரியதொரு பொய்யுரையாமென விடுக்க. இனி, மேற்காட்டிய வாறெல்லாம்அப்பர் சமண்மதந் துறந்து திருவதிகையிற் சைவசமயம் புகுந்து, சமண்மதத்த வரால் அளவின்றித் துன்புறுத்தப்பட்டுத், திருவருளால் அவற்றிற் கெல்லாந் தப்பி மீண்டுந் திருவதிகை சென்று இறைவனை வணங்கிச் சிலநாளங்கிருந்து, பின்னர்ச் சிவபிரான் திருக்கோயில் கடோறும் வணங்கப் புறப்பட்ட வரையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகட் கெல்லாம் எவ்வளவு காலஞ் சென்றதாகல் வேண்டுமென்று சிறிதமைந்து ஆய்ந்து காணவல்லார்க்கு, அது சற்றேறக் குறையப் பன்னிரண்டு திங்கள் அல்லது ஓராண்டுக் குள்ளாகவே தான் இருக்கலாமென்பது நன்கு விளங்காநிற்கும். இனித், திருநாவுக்கரசு நாயனார் திருவதிகையினின்றும் புறப்பட்டுத் `திருத்தூங்கானைமாடம், `திருவரத்துறை, `திருமுதுகுன்றம், `திருத்தில்லை, `திருவேட்களம், `திருக்கழிப் பாலை முதலான திருக்கோயில்கட்குச் சென்று ஆங்காங்கு இறைவனைப் பரவிப்பாடிச் சிற்சில நாள் தங்கி, மீண்டுந் தில்லைமாநகர்க்குப்போந்து ஆண்டுத் திருப்பணிசெய் தமரும்நாளில், மூன்றாட்டைச் சிறுமதலையாகிய திருஞான சம்பந்தர் சீர்காழியிலே இறைவனையும் இறை வியையும் நேரே கண்டு அவரால் ஞானப்பால் ஊட்டப் பெற்று எல்லாம் ஓதாதுணர்ந்த எல்லாம்வல்ல ஞானா சிரியராய் எழுந்தருளி யிருக்கின்றார் என்னும் வியப்பான செய்தியை அடியார்கள் உரைப்பக்கேட்ட திருநாவுக்கரசர் அளவுபடா வியப்பு அவரைக் காணுங் காதலுந் தமதுள்ளத்தைக் கவர்ந்து கொள்ள, உடனே தில்லையை வணங்கிப் புறப்பட்டு, வழியிலே திருநாரையூரைப் பணிந்து பாடிப், பின் சீர்காழிமருங்கு சார்ந்தார். இவ்வாறு இவர் வருதலைக் கேட்ட திருஞானசம்பந்தப் பிள்ளையார் தாமும் அதற்காகப் பெருமகிழ்வுற்று,அவரை எதிர்கொளச் செல்லும் பொழுதில், எதிர்வருந் திருநாவுக்கரசரின் தோற்றத்தைச் சேக்கிழாரடிகள், சிந்தைஇடை யறாஅன்புந் திருமேனி தனில் அசைவுங் கந்தமிகை யாங்கருத்துங் கையுழவா ரப்படையும் வந்திழிகண் ணீர்மழையும் வடிவிற்பொலி திருநீறும் அந்தமிலாத் திருவேடத் தரசும்எதிர் வந்தணைய1 என்று விளக்கிச் சொல்லியிருக்கின்றார். பிள்ளையாரைக் காணவந்த காலத்தில் திருநாவுக்கரசுகள் ஆண்டில் மிக முதியரா யிருந்தனரென்பது, மேலைச்செய்யுளிற் போந்த `திருமேனி தன்னில் அசைவும் என்னும் சொற்றொடரால் நன்கு அறிவுறுத்தப்படுதல் காண்க. எழுபது ஆண்டுக்கு மேற்பட்டார் ஒருவர் நடக்கும் பொழுதுதான் அவரதுடம்பு தள்ளாடுதலை உலகவழக்கில் எவரும் நன்குணர்வர். ஆகவே, அரசுகள் பிள்ளையாரைக் காணவந்த காலத்தில் எழுபது ஆண்டுக்கு மேற்பட்ட முதுமையுடையரா யிருந்தன ரென்பதூஉம், அதுபற்றியே பிள்ளையார் அவரை `அப்பரே என்றழைத்தன ரென்பதூஉம் இனிது விளங்கா நிற்கும். அரசுகள் சமண்மதந் துறந்துசிவபிரான் திருவருளைப் பெற்று, அதனாற் சமண் வேந்தனாற் பலவாறு துன்புறுத்தப் பட்டுச், சிவபிரானருளால் அவற்றிற்கெல்லாந் தப்பி, மீண்டுந், திருவதிகை புகுந்தவரையிற் சென்றகாலம் ஓராண்டின் அகமேயாமெனவும், அதன்பிற் றிருவதிகையி னின்றும் புறப்பட்டுச் சில திருக்கோயில்களை வணங்கிக் கொண்டு அவர் திருஞானசம்பந்தப் பிள்ளையாரைக் காணவந்தவரையிற் சென்ற காலமும் ஓராண்டிற்குள்ளே யாகுமெனவுங் கோடலே சேக்கிழார் கூறும் வரலாற்று ரைக்கும் அறிவு வழக்குக்கும் ஒத்ததாக இருத்தலின், பிள்ளையார்பால் வந்தபோது அரசுகள் எழுபத்தைந்தாண்டு சென்ற முதியராயிருந் தாராதலும், அமண் மதப்பற்று விட்டுத் திருவதிகையில் அவர் இறைவன் றிருவருட்பேற்றிற் குரியரான போது எழுபத்து மூன்றாண்டினரா யிருந்தா ராதலுந் தெற்றெனப் பெறப்படும். இவ்வுண்மை திருநாவுக் கரசு நாயனாரே தாம் திருவதிகையிலிருந்து திருவாய் மலர்ந்தருளிய, முன்பெலாம் இளையகாலம் மூர்த்தியை நினையாதோடிக் கண்கண இருமிநாளுங் கருத்தழிந் தருத்தமின்றிப் பின்பக லுணங்கலட்டும் பேதைமார் போன்றென்உள்ளம் அன்பனாய் வாழமாட்டேன் அதிகைவீ ரட்டனீரே என்னுந் திருப்பாட்டாலும் நன்று வலியுறுத்தப்படும். இதன்கட் டாம் இளமைக் காலமெல்லாஞ் சமண் மதத்திலிருந்து கழித்தமையுங், கண்கணென்று இருமி நினைவு கலைந்து துன்புறும் முதுமைக்காலத்தே தாம் அச் சமண் மதம் விட்டுச் சிவபிரான் திருவருளைப் பெற்றமையும் அவரே விளங்கக்கூறுதல் காண்க. மேலுந், திருநாவுக்கரசு நாயனார் அருளிச் செய்திருக்கும் திருப்பதிகத் தொகையினையுந், திருஞான சம்பந்தப் பிள்ளையார் அருளிச்செய்திருக்குந் திருப்பதிகத் தொகை யினையும் ஒப்பிட்டுக் காண்புழி, அரசுகள் சமண் மதந்துறந்து சிவபிரான் திருவருளைப் பெற்றபின் பத்து அல்லது பன்னிரண்டு ஆண்டுகளில் இவ்வுலக வாழ்வு நீத்து இறைவன் திருவருளொளியில் இரண்டறக்கலந்தமை நன்கு தெளியப்படும். திருநாவுக்கரசர் அருளிச்செய்த திருப்பதிகத் தொகை நாலாயிரத்துத் தொளாயிரமே யாதலை, மேலே சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச்செய்த திருப்பாட்டொன் றானும் நம்பியாண்டார் நம்பிகள் பாடியருளிய செய்யுளொன்றானும் இனிது விளக்கிக் காட்டினேம். மற்றுத், திருஞானசம்பந்தப் பெருமானோ பதினாறாயிரந் திருப்பதிகங்கள் அருளிச்செய்தன ரென்பது, நகரங் கெடப்பண்டு திண்டேர் மிசைநின்று நான்மறைகள் பகரங் கழலவ னைப்பதி னாறாயி ரம்பதிகம் மகரங் கிளர்கடல் வையந் துயர்கெட வாய்மொழிந்த நிகரெங் கிலிகலிக் காழிப்பிரா னென்பர் நீணிலத்தே என்று `திருஞானசம்பந்தர் திருவந்தாதி 15 ஆஞ் செய்யுளிலும், பன்னு தமிழ்ப்பதினா றாயிர நற்பனுவல் மன்னு புவியவர்க்கு வாய்ப்பவும் என்று `திருஞானசம்பந்தர் திருவுலாமாலையிலும் நம்பியாண்டார் நம்பிகள் அருளிச் செய்திருக்குமாற்றால் ஐயுறவுக்கு இடனின்றித் துணியப்படும். பிள்ளையார் மூன்றாம் ஆண்டில் இறைவன் றிருவருளை நிறையப் பெற்றுத், தாம் திருமணங் கூடியநாளில் பிள்ளையார் திருமணங்கூடிய காலத்திற் பதினெட்டு அல்லது இருபதாண்டு நிரம்பப்பெற் றிருந்தா ரென்று கோடல் இழுக்காகாது; என்னை? பதினா றாண்டுக்குமேல் இருபதாண்டுக்குள் ஓர் இளைஞனுக்கு மணஞ்செய்து வைத்தலே பண்டைத் தமிழ்மக்கள் முறையாய்ப் போதரக் காண்டலின். ஆகவே, அருள்பெற்ற காலம் முதல் இறைவன் றிருவடி நீழலெய்திய காலம் வரையில் அஃதாவது சிறிதேறக்குறையப் பதினைந்தாண்டு களில் திருஞானசம்பந்தப் பிள்ளையார் இந்நிலவுகின்மீ தெழுந்தருளியிருந்து அருளிச் செய்த திருப்பதிகத்தொகை பதினாறாயிரம் ஆகின்றது. பிள்ளையார் பதினாறாயிரம் பதிகங்கள் அருளிச்செய்தற்குப் பதினைந்தாண்டுகள் சென்றனவாயின், திருநாவுக் கரசுகள் நாலாயிரத்துத் தொளாயிரம் பதிகங்கள் அருளிச் செய்தற்கு ஏழு அல்லது எட்டு ஆண்டுகளே தாம் சென்றனவாதல் வேண்டும். வடக்கே திருக்கைலாயம் வணங்கச் சென்றபோது அரசுகள் இடையே பாடாதிருந்தார் போலும்! மற்றுத், `தமிழ் வரலாறுடை யாரோ? அப்பர் நாற்பதாமாண்டிலேயே அருள்பெற்றுப் பின்னும் நாற்பதாண்டுகள் இந் நிலவுலகின்மீது எழுந்தருளி யிருந்தன ரென்றார். அருள் பெற்றபின் அவ்வாறு அவர் நாற்பதாண்டுகள் இங்கிருந்தனராயிற் சிறிதேறக்குறைய முப்பதினாயிரந் திருப்பதிகங்களாவது அவர் அருளிச் செய்திருத்தல் வேண்டுமன்றோ? அங்ஙனமின்றி அவர் நாலாயிரத்துத் தொளாயிரம் பதிகங்களே அருளிச் செய்திருக்கக் காண்டலால், அருள்பெற்றபின் அவர் அத்துணை நீண்ட காலம் இங்கிருந்தாரென்றல் சிறிதும் உண்மையாகாது. எழுபதாண்டுக்கு மேல் அருள்பெற்று எண்பதாம் ஆண்டளவில் அவர் சிவபிரான் திருவருளொளியிற் கலந்தன ரென்னும் உண்மை முடிபினையே அவர் அருளிச்செய்த திருப்பதிகத்தொகை நாட்டுவதாகுமென்று கடைப்பிடிக்க. எனவே, திருநாவுக்கரசு நாயனார் தமது நாற்பதாம் ஆண்டில் அருள்பெற்றாரென்னும் உரை பொருத்தமில்லாததா மென்பதூஉம், அவரருளிச்செய்த திருப்பதிகத்தொகைக்கு எட்டு ஆண்டுகளும் வடநாடு சென்று மீண்டமைக்கு இரண்டாண்டுகளுங் கூட்ட அரசுகள் அருள் பெற்றபின் இந் நிலவுலகின்மீ தெழுந்தருளி யிருந்தகாலம் பத்தாண்டுகள் அல்லது மிகுதியாய்ச் சொன்னாற் பன்னிரண்டு ஆண்டுகளே யாமென்பதூஉம், அவ்வாற்றால் அவர் தமது எழுபத்து மூன்றாம் ஆண்டில் அருள்பெற்று எண்பத்தைந்தாம் ஆண்டில் இறைவன் திருவடி நீழலை எய்தினாராகல் வேண்டுமென்பதூஉந் தாமே போதருமென்க. மேலும், பழைய கல்வெட்டுகளின் ஆராய்ச்சியால் இஞ்ஞான்று புலனாயிருக்கும் உண்மை வரலாற்றுக் குறிப்புகளுக்கும் யாம் மேலே காட்டியவைகளே பொருத்தமா யிருத்தலையும் ஒருசிறிது காட்டுவாம்: திருநாவுக்கரசு நாயனார் சமண்மதத்திலிருந்து சைவசமயத்திற்குத் திரும்பிய காலையில் அவரைப் பலவாற்றால் துன்புறுத்தினவனுந், தான்செய்த துன்பங்கள் அத்தனையும் அவரைச் சிறிதும் ஊறுபடுத்த மாட்டா தொழிந்தமை அவர் சிவபெருமான் றிருவருட் பாதுகாப்பில் நின்றமையாற்றான் என்பதனைத் தெளிய வுணர்ந்த பின்னர் அவரது அருளாற் சிவபிரான் றிருவடிக்கு ஆளானவனும் `முதலாம் மகேந்திர வர்ம பல்லவனே என்பது இஞ்ஞான்று துணியப்பட்டுக் கிடக்கின்றது.2 இவ்வேந்தன் கி.பி.600 ஆம் ஆண்டிலிருந்து 625 ஆம் ஆண்டுவரையில் அரசுபுரிந்தா னென்பதும், வரலாற்று நூலாசிரியராற் றுணியப்பட்ட தொன்றாம்.3 இவ்வேந்தன் `மத்தவிலாசம் எனப்பெயரிய நகைச்சுவை நாடகம் ஒன்றை வடமொழியில் ஆக்கி, அதிற்பாசுபத மதத்தினராகிய துறவியொருவரையும், ஒரு காபாலிகரரையும் அவர் தம் மனைவியாரையும், ஒரு பௌத்த பிக்குவையும் உரையாடவிட்டு, அவர் தம்மை யெல்லாம் ஏளனஞ் செய்திருக்கின்றான்.3 இதனால் இவன் இந் நாடகம் ஆக்கிய காலத்திற் சமண் மதத்தவனாயிருந்தமை பெறப்படும். இவன் அரசாண்ட இருபத்தைந் தாண்டுகளின் இறுதிப் பகுதியிலேதான், அப்பரின் அருட்பேராற்றலுஞ் சிவபிரானே முழுமுதற் கடவுளாதலுந் தெளிந்து அவரது திருவருளாற் சைவசமயத்தைத் தழுவினான். அவ்வாறு சைவசமயத்தைத் தழுவியுடனே, தென்னார்க்காடு மாகாணத்தின் கண்ணதான `பாடலிபுத்திரம் என்னும் நகரிற் சமண்முனிவர்க்குப் பெரியதோர் உறையுளாயிருந்த பெருஞ்சமண்பள்ளியினை இடித்து,4 அதன்கட் பெற்ற கருவிகளைக் கொண்டு தன்சிறப்புப் பெயர்களில் ஒன்றான `குணபரன் அல்லது `குணதரன் என்னும் பெயராற் `குணதரேச்சுரம் என்னுஞ் சிவபிரான் திருக்கோயிலைத் திருவதிகையிற் கட்டுவித்தான்; இது. வீடறியாச் சமணர்மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த காடவனுந் திருவதிகை நகரின்கட் கண்ணுதற்குப் பாடலிபுத் திரத்திலமண் பள்ளியொடு பாழிகளுங் கூடவிடித் துக்கொணர்ந்து குணதரவீச் சுரமெடுத்தான்.5 என்று ஆசிரியர்சேக்கிழார் கூறுமாற்றானும் அறியப்படும். அதுவேயுமன்றித், திருச்சிராப்பள்ளி, செங்கற்பட்டு, வட ஆர்க்காடு, தென்னார்க்காடு முதலான மாகாணங்களிலுள்ள மலைகள் பலவற்றைக் குடைந்து அவற்றின்கட் சிவபிரானுக்குத் திருக்கோயில்களும் அமைப்பித்தான். இவ்வாறு இவன் சைவ சமயத்தைத் தழுவியபின் பல திருக்கோயில்களை அமைப்பித்தற்கு ஐந்தாண்டுகளேனுஞ் சென்றதாகல் வேண்டும். இவனது அரசு கி.பி. 625 -ஆம் ஆண்டோடு முடிவுபெறுதலால், இவன் சைவசமயத்தைத் தழுவியது கி.பி. 620 ஆம் ஆண்டில் நிகழ்ந்ததாகல் வேண்டும். அவ் வாண்டிலேயே திருநாவுக் கரசருஞ் சமண்மதந் துறந்து சைவசமயம் புகுந்தாராகல் வேண்டும்; புகுந்த இரண்டு ஆண்டிற்குள்ளெல்லாம் அவர் திருஞான சம்பந்தப் பெருமானைச் சீர்காழியிலே வந்து கண்டு வணங்கினமையினை மேலே விளக்கிக்காட்டினாம். அக்காலையிற் சம்பந்தப் பெருமான் நாலாண்டு சென்ற சிறு மதலையாகவே இருந்தனரென்பது சேக்கிழாரடிகள் அஞ்ஞான்று நிகழ்ந்த வரலாறுகளை எடுத்துரைக்கு மாற்றால் துணியப்படும். அதன்பிற் சில திங்கள் கழித்து அப்பருந் திருஞானசம்பந்தருந் திருப்புகலூரில் ஒருங்கு கூடியபோது, அவர்கள்பாற் சிறுத்தொண்ட நாயனார் வந்து அவர்களை வணங்கி அவர்களோடு அளவளாவி யிருந்தன ரென்பது நீலநக் கடிகளும் நிகழ்சிறுத் தொண்டரும் உடனணைந் தெய்து நீர்மைச் சீலமெய்த் தவர்களுங் கூடவே கும்பிடுஞ் செய்கைநேர் நின்று வாய்மைச் சால்பின்மிக் குயர்திருத் தொண்டினுண் மைத்திறந் தன்னையே தெளிய நாடிக் காலமுய்த் தவர்களோ டளவளா விக்கலந் தருளினார் காழி நாடர்6 என்று சேக்கிழார் கூறுமாற்றான் அறியப்படும். இந்நிகழ்ச்சிக்குச் சில திங்கள் முன்னே திருஞானசம்பந்தர் திருச்செங்காட்டங் குடிக்கு எழுந்தருளிய போதுஞ், சிறுத்தொண்டர் தம் அருமைப் புதல்வர் சீராளருடன் சம்பந்தப்பெருமானை வரவேற்று வணங்கினமை, கூராரல் இரைதேர்ந்த குளமுலவி வயல்வாழும் தாராவே மடநாராய் தமியேற்கொன் றுரையீரே சீராளன் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய பேராளன் பெருமான்றன் அருளொருநாட் பெறலாமே என்று திருஞானசம்பந்தப் பெருமானே திருச்செங் காட்டங்குடித் திருப்பதிகத்தில் அருளிச் செய்தவாற்றால் தெளியப்படும். இங்ஙனமாகச் சீராளருடன் சிறுத்தொண்ட ரோடும் அளவளாவிப், பின்னர்ச் சில திருக்கோயில்களை வணங்கிக் கொண்டு பிள்ளையார் அப்பருடன் திருமறைக் காடு வந்து சேர்ந்து, அங்குள்ள திருக்கோயிலின் முன்வாயிற் கதவுகள் எவரானுந் திறக்கக்கூடாவாறு அடைபட்டு நிற்ப, அவற்றைத் திறக்கவும் அடைக்கவுஞ் செய்து, அம்மையப்பரை வணங்கியபடியாய் அங்கே சிலநாட்கள் வைகியிருப் புழி, மதுரையிற் பாண்டிமன்னன் மாதேவியாரான `மங்கையர்க் கரசியார் மதுரைக்கு எழுந்தருளுமாறு வேண்டிச் சம்பந்தப் பெருமானுக்கு ஒரு திருமுகம் விடுத்தனர். அவரது வேண்டு கோட் கிணங்கிப் பெருமானும் மதுரைக் கெழுந்தருளி அமைச்சர் குலச்சிறை நாயனாராலும் மங்கையர்க் கரசியாராலும் வணங்கி வரவேற்கப்பட்டு இறைவனை வழுத்தி அடியார் குழாத்துடன் அங்கே வைகினர். மங்கையர்க்கரசியார் சைவசமயந் தழுவினரா யிருந்ததும், அவர் தங் கணவரான கூன்பாண்டிய மன்னரோ அப்போது சமண்மதந் தழுவினராயிருந்தார். சமண்மதம் பாண்டி நாடெங்கும் பரவியிருந்தது. சமண்முனிவர்கள் தம் மதம் புகுதாத சைவர்களை மிகவுந் துன்புறுத்தி வந்தனர். சைவ சமயாசிரியரான திருஞானசம்பந்தரும் அவருடன் பெருந்திரளான சிவனடி யார்களும் மதுரைக்கு வந்திருத்தலைக் கண்டு மனம்பொறாத சமண்முனிவர்கள் தம் பாண்டி மன்னனது உடன்பாடு பெற்றுப், பிள்ளையாரும் அடியார்களும் அமர்ந்திருந்த திருமடங்களிலே ஒரு நள்ளிரவில் தீயிட்டனர். அவர்களிட்ட தீப்பற்றித் திருமடங்கள் எரிதலைக்கண்ட பிள்ளையார், இது பாண்டிமன்னன் ஒருப்பாடு பெற்றுச் சமணர் செய்ததென உணர்ந்து, செங்கண் வெள்விடை யாய்திரு வாலவாய் அங்கணா அஞ்ச லென்றருள் செய்யெனைக் கங்குல் ஆரமண் கையர் இடுங்கனல் பங்கமில் தென்னன் பாண்டியற் காகவே என இறைவனை வேண்டிப் பாட, அத் தீயானது அவிந்து, உடனே பாண்டிமன்னன் உடம்பைக் கொடிய தொரு வெப்பு நோயாய்ச் சென்று பற்றிக்கொண்டது. அக் கொடுநோய் சமண் முனிவர்களால் தீர்க்கலாகாத வாறு பெருகவே, மங்கையர்க் கரசியார் அருளுரைகேட்டு அப் பாண்டிமன்னன் திருஞான சம்பந்தப் பிள்ளையாரைக் குறையிரந்துதன்பால் வருவிக்கப், பிள்ளைரும் அவன்பாற் சென்று அவன் இடுவித்த இருக்கையில் அவன் மருங்கே அமர்ந்தருளினார். அப்போது மங்கையர்க் கரசியாரும் பிள்ளையாரது பக்கத்தே யிருப்பச் சமண் முனிவர்கள் அவர்க்கு எதிர்ப்பக்கத்தே யிருந்து அவரைப் பலவாறு இழித்துப் பேசலாயினர்; அதுகண்டு அரசியார் உளந்துடித்து `எம் பச்சிளந் தெய்வப் பெருமானை இவர்கள் இவ்வாறு இகழ்ந்துரைப்பதே! என்று தங்கணவனாரை நோக்கி வருந்தி மொழிந்தனர். அதுகண்ட பிள்ளையார் அரசியார்க்கும் ஆறுதல் உண்டாம் பொருட்டு, மானி னேர்விழி மாத ராய்வழு திக்கு மாபெருந் தேவிகேள் பால்நல் வாய்ஒரு பாலன் ஈங்கிவன் என்று நீபரி வெய்திடேல் ஆனைமாமலை யாதி யாய இடங்க ளிற்பல அல்லல்சேர் ஈனர் கட்கெளி யேன்அ லேன்திரு வால வாய்அரன் நிற்கவே என்னுந் திருப்பாட்டை முதலாக உடைய திருப்பதிகத் தினைத் தமது அருமைத் திருவாய்மலர்ந்தருளிப் பாண்டிமா தேவியா ருளங் குளிரவுஞ் சமண்முனிவர் வன்னெஞ்சந் திடுக்கிட்டு ஒடுங்கவுஞ் செய்திட்டார். இங்ஙனம் அருளிச் செய்த இத் திருப்பதிகச் செய்யுளிற் பிள்ளையார் தம்மைப் `பால்பருகுதலாற் பால்மணங்கமழும் வாயினையுடைய ஒருபாலன் என்று குறிப்பிடுதல் மிகவுங் கருத்திற் பதிக்கற் பாலது. இது கொண்டு, திருஞானசம்பந்தப் பெருமான் மதுரைமாநகர்க்கு எழுந்தருளிய ஞான்று பால்பருகும் பருவத்தினையுடைய சிறுபிள்ளையா யிருந்தனரென்பது ஐயமின்றிப் பெறப்படுகின்றதன்றோ? பால்பருகும் பிள்ளைமைப் பருவம் ஐந்தாண்டுக்கு மேற்படு தலின்மையின், மதுரையிலிருந்து பிள்ளையார் அருளிச் செய்த இத் திருப்பதிகச் செய்யுளில் தம்மைப் `பானல்வாயொரு பாலன் என்று குறிப்பிட்டது தாம் அக்காலையில் ஐந்தாட்டைப் பருவத்தினரா யிருந்தமைபற்றியேயாம். இவர் இறைவியால் ஞானப்பால் ஊட்டப்பட்ட நாள் முதல் மதுரைக்குச் சென்றவரையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைச் சேக்கிழாரடிகள் கூறுமாறு வைத்துக் கணக்கு செய்யின், அவை தமக்கு இரண்டு ஆண்டுகளே செல்லுதல் நன்கறியப்படும். மதுரைக்குச் சென்றகாலத்திற் பிள்ளையார் தாமே தம்மைப் பால்பருகும் பாலனென்று குறித்த உரையுஞ் சேக்கிழாரது வரலாற்றுரையும் ஒத்து நிற்கின்றன. ஆகவே, பிள்ளையார் ஞானப்பாலுண்டது தமது மூன்றாம் ஆண்டிலும், மதுரைக்குச் சென்றது தமது ஐந்தாம் ஆண்டிலுமே யாமென்பதும், மதுரைக்குச் செல்லுமுன் திருப்புகலூரில் அப்பருடன் எழுந்தருளியிருந்த காலையிலும் அதற்குமுன் திருச்செங்காட்டங்குடிக்கு எழுந்தருளிய காலையிலுஞ் சிறுத்தொண்ட நாயனாரைக் கண்டு அவரொடு அளவளா வினது தமது நாலரையாண்டிலேயா மென்பதும் தாமே போதரும். இனி, அப்பரும், அவரைத் துன்புறுத்தி அவரது அருளாற் சைவ சமயந்தழீஇய முதலாம் மகேந்திரவர்ம பல்லவ வேந்தனுஞ் சமண்மதப் பற்றுவிட்டுச் சிவபிரான்றிருவடிக்கு ஆளான காலங் கி.பி.620 ஆம் ஆண்டிலேயாமென்பதை மேலே நன்கு விளக்கிக் காட்டினாம். அப்பர் முதன்முதற் சீர்காழிக்குப்போந்து திருஞானசம்பந்தப் பெருமானைக் கண்டது கி.பி. 622 ஆம் ஆண்டிலேயாமென்பதூஉம் மேலே விளக்கினாம். அப்போது திருஞான சம்பந்தப் பிள்ளையார் நாலாண்டுடைய தெய்வச் சிறுமதலை யாயிருந்தனர். அதன்பிற் சிறுத்தொண்ட நாயனாரையும் அவர்தஞ் சிறுபுதல்வர் சீராளரையுங் கண்டபோது பிள்ளையார்க்கு நாலரையாண் டாயிற்று. அதன்பின் அப்பருடன் திருமறைக்காட்டுக்கு எழுந்தருளி, அங்கு நின்றும் அப்பரைப் பிரிந்து திருவாலவாய்க்கு எழுந்தருளி மங்கையர்க்கரசியாரையும் அவர் தங் கொழுநரான கூன்பாண்டிய மன்னனையுங் கண்டபோது பிள்ளையார்க்கு ஐந்தாமாண்டு நிரம்பிற்று. எனவே, கி.பி. 623 ஆம் ஆண்டிலேதான் பிள்ளையார் ஐந்தாட்டைச் சிறுவரா யிருந்தூஉங், கூன்பாண்டியனைக் கண்டதூஉமாகும். இக் கி.பி. 623 ஆம் ஆண்டு கூன்பாண்டிய வேந்தனது ஆட்சியின் துவக்ககாலமோ இறுதிக்காலமோ வெனின்; இஞ்ஞான்றை வரலாற்று நூலாசிரியராற் சிறந்த சான்று களாகக் கொண்டாடப்படுங் கல்வெட்டுகளைக் கொண்டு, இவ் 623 ஆம் ஆண்டு அவ்வரசன்றன் ஆட்சிக்காலத் துவக்க மாதலைக் காட்டுவாம்: யானைமலைக் குகையின்கட் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இரண்டினால் `ஜடிலபராந் தகன் எனப்படும் `மாறன் சடையன் பராந்தகன் என்பான் கி.பி. 770 இல் அரசு வீற்றிருந்தமை துணியப் படுகின்றது. வேள்விக் குடி நன்கொடைப் பட்டையத்தானும், சின்னமனூரிலக்கப்பட்ட சிறிய பெரிய செப்பேடுகளானும் இம்`மாறன் சடையன் பராந்தகன் என்னும் பாண்டி மன்னனுக்குமுன் அவன்றந்தை `தேர்மாறன் அரிகேசரி பராங்குசன் என்னும் `முதலாம் ராஜசிம்ம பாண்டியனும், அவனுக்குமுன் அவன்றந்தை யாகிய `கூன்பாண்டியன் நின்றசீர் நெடுமாறன் என்னும் `அரிகேசரி மாறவர்மனும் அரசு புரிந்தமை தெளியப் பட்டிருக்கின்றது.7 இவ்வாறு ஜடிலபராந்தகனையும், அவற்கு முன் அரசாண்ட பாண்டி மன்னர் மூவரையுஞ் சேர்த்து ஒவ்வொருவர்க்கும் முப்பதாண்டுகள் விழுக்காடு வைத்துக் கணக்குச்செய்ய, அந் நால்வர்க்கும் நூற்றிருபதாண்டு களாகின்றன; இத் தொகையை ஜடிலபராந்தகனிருந்த கி.பி. 770 -இற் கழிக்கக், கூன்பாண்டியன் கி.பி. 650ல் அரசு வீற்றிருந்தமை கல்வெட்டாராய்ச்சியானும் நன்கு புலனாகின்றது. மேற்குறிப்பிட்ட பாண்டியர் ஒவ்வொருவர்க்குங் குத்து மதிப்பாய்க் கணக்குச் செய்யும் முறையில் முப்பதாண்டுகள் வைக்கப்பட்டனவாயினுங், கூன்பாண்டியன் என்னும் நின்றசீர் நெடுமாறர் அம்முப்பதாண்டுகட்குமேல் ஐம்பதாண்டுகள் வரையில் அரசுவீற்றிருந்தமை புலனாகா நிற்கின்றது; என்னை? மேலே காட்டியவாற்றால் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் இப்பாண்டிமன்னனைக் கி.பி. 623, இல் வந்துகண்டமை துணியப்பட்டதாகலி னென்க. கூன்பாண்டியன் திருஞான சம்பந்தப் பெருமானுக்கு இழைப்பித்த கொடுந் தீவினை யாற் கொடியதொரு வெப்புநோய் கொள்ள அந் நோயே அவனுடம்பிலிருந்த நச்சு நீரையெல்லாம் உரிஞ்சி அதனைத் தூயதாக்கவும் அதனால் அவன் நீடுவாழவுந் தமது திருவுளத் தெண்ணிப் பிள்ளையார் அவனுக்குத் திருநீறு அளித்து வேந்தனும் ஓங்குக எனுந் தமது அருளுரை யாற்றலால் அவன் கூனும் நிமிர்ந்து `நெடுமாறன் ஆகவும் அருள்புரிந்தாராகலின், இப் பாண்டிமன்னன் ஐம்பதாண்டுகள் செங்கோல் செலுத்தினமை வாய்வதேயாமென்க. அற்றாயினும், மேலே யெடுத்துக்காட்டிய கல்வெட் டாராய்ச்சியால் நின்றசீர் நெடுமாற பாண்டியன் கி.பி. 650 ஆம் ஆண்டில் அரசு வீற்றிருந்தமை மட்டும் பெறப்படுகின்ற தல்லாமல் அதற்கு முன்னே அவன் கி.பி. 623 ஆம் ஆண்டிலும் இருந்தானென்பது பெறப்பட வில்லையெனிற், கி.பி. 623 ஆம் ஆண்டிலிருந்த துடன், சிறிதேறக் குறைய கி.பி. 620 ஆம் ஆண்டளவிலேதான் அப் பாண்டிமன்னன் அரியணையேறி அரசு செலுத்தத் துவங்கினானாதல் வேண்டுமென்பதூஉ ஈண்டொருசிறிது விளக்கிக் காட்டுதும். நின்றசீர் நெடுமாறற்கு மகனான `கோச்சடையன் என்னும் பாண்டி மன்னன் கி.பி. 675 ஆம் ஆண்டில் அரசுவீற்றிருந்தமையுங், கி.பி. 674 ஆம் ஆண்டின்கண் வடநாட்டிலிருந்து படையெடுத்துவந்த சாளுக்கிய வேந்தனாகிய `முதலாம் விக்கிரமாதித்தனை அவன் மருதூரிலும் மங்கலபுரத்திலும் எதிர்ந்து தோல்வி பெறச் செய்தமையும், அவ்வாறு அவன் அச் சாளுக்கிய மன்னனை எதிர்ந்துநின்றுழித் தொண்டைநாட்டரசனான `முதலாம் பரமேசுரவர்மனும் அவன்றன் மகன் `இரண்டாம் ராஜசிம்மனும் அவற்குத் துணையாய் நின்று அவ் விக்கிர மாதித்தனொடு பொருது அவனைத் தமிழகத் தினின்று துரத்திவிட்டமையும் `வேள்விக்குடி, `கேந்தூர் என்னும் இடங்களில் அகப்பட்ட பட்டையங்களைக் கொண்டு வரலாற்று நூலாசிரியர்களால் நன்காராய்ந்து காட்டப் பட்டிருக்கின்றன.8 இனிக், `கோச்சடையன் நின்றசீர் நெடுமாற பாண்டியற்கு மகனாதல் போலவே, `முதலாம் பரமேசுரவர்மனும் வாதாவிகொண்ட முதலாம் நரசிம்மவர்மன் ஆகிய முதலாம் ராஜசிம்மனுக்கு மகன் ஆவன். இந்நரசிம்மவர்மன் மகளைக் கோச்சடையன் மணந்து கொண்டமையால், அவள் வயிற்றிற் பிறந்த தன் மகனுக்கு அவன்றன் பாட்டனின் சிறப்புப்பெயரான `ராஜசிம்மன் என்பதனை இயற்பெயராகச் சூட்டினான். அங்ஙனமே, முதலாம் பரமேசுரவர்மனுந் தன்மனையாள் வயிற்றிற் பிறந்த தன் மகனுக்கும் அவன்றன் பாட்டன் சிறப்புப்பெயராய `ராஜசிம்மன் என்பதனை இயற்பெயராகச் சூட்டினான். இவ்வாற்றாற், கோச்சடையன் என்னும் பாண்டிமன்னனும், முதலாம் பரமேசுரவர்ம பல்லவ வேந்தனும் நெருங்கிய மைத்துனக்கிழமை யுடையராதலும், அதுபற்றியே அவ்விருவரும் ஒருங்குசேர்ந்து வடக்கிருந்துவந்த பகை மன்னனான சாளுக்கிய விக்கிரமாதித்தனை எதிர்ந்து வென்று துரத்தினாராதலும் வரலாற்று நூலாரால் நன்கு விளக்கப் பட்டிருக்கின்றன.9 ஆகவே, கி.பி.676 ஆம் ஆண்டில் இச் செந்தமிழ் நாட்டின் தென்பகுதிக்கண் அரசுபுரிந்த பாண்டி மன்னனும், வடபகுதிக் கண் அரசுபுரிந்த பல்லவ அரசனும் நெருங்கிய சுற்றத்தொடர்புடையராய் ஒருவரோ டொருவர் அன்பினால் அளவளாவி நின்றனரென்பதும், அவ்விருவர்க்கும் அஞ்ஞான்று பகைவனாய் அவரொடு முரணி நின்றோன் வடநாட்டுச் சாளுக்கிய மன்னனான முதலாம் விக்கிரமாதித் தனேயாவ னென்பதும் நன்கு பெறப்படுதல் காண்க. இனிக், கி.பி. 674 ஆம் ஆண்டுக்குமுன் தென்றமிழ் நாட்டில் அரசுவைகிய `நின்றசீர் நெடுமாற பாண்டியன் தன்மகன் கோச்சடையனுக்கு, வாதாவி கொண்ட நரசிம்மவர்ம பல்லவன் மகளை மணஞ்செய்து கொண்டமை மேற்காட்டியவாற்றால் நன்குவிளக்குதலின், நெடுமாறனும் நரசிம்மவர்ம பல்லவனுந் தம்முள் நட்புரிமை வாய்ந்தனரா யிருந்தமையுந் தானேபெறப் படும். இதுகொண்டு, நெடுமாறன் நெல்வேலிப் போர்க்களத்தில் வென்று துரத்தினது நரசிம்ம வர்ம பல்லவனை அன்றென் பதூஉம், அங்ஙனம் அவனாற் போர்முனையில் தொலை வுண்டோன் தமிழ்நாட்டு வடவெல்லைக்குப் புறம்பான வடபுல வாதாவியில் அரசு புரிந்த சாளுக்கியமன்ன னொருவனே யாவனென்பதூஉஞ் செவ்வனே முடிக்கப்படும். இனி, நெடுமாறன்மேற் படையெடுத்துவந்த சாளுக்கிய மன்னன் யாவனென்பது ஆராயற்பாற்று. நெடுமாறற்கு மகனான `கோச்சடையன் மேற் போர்க்கெழுந்து வந்து தோல்வியுற்றோன் முதலாம் விக்கிரமாதித்தன் என்னுஞ் சாளுக்கிய வடபுல மன்னனேயாதலும், அங்ஙனம் அவ்விருவர்க் குள்ளும் மூண்டபோர் கிபி. 674 ஆம் ஆண்டில் நிகழ்ந்ததாலுந் துணியப்பட்டுக் கிடத்தலின் கோச்சடையன் அரியணையேறி அரசு வீற்றிருக்கத் துவங்கியதும், அவன் றந்தையாகிய நின்றசீர் நெடுமாறன் இறைவன்றிருவடி நீழலெய்தியதுஞ் சிறிதேறக் குறையக் கி.பி. 670 ஆம் ஆண்டில் நிகழ்ந்தனவாகல் வேண்டும். கோச்சடையன்மேற் படையெடுத்து வந்த முதலாம் விக்கிரமாதித்த சாளுக்கிய மன்னனோ, கி.பி. 642 ஆம் ஆண்டில் நரசிம்மவர்ம பல்லவவேந்தற்குப் படைத்தலைவராய்ப் படையெடுத்துப் போந்த சிறுத்தொண்ட நாயனாரொடு பொருது அப்போரில் இறந்துபட்ட இரண்டாம் புலிகேச மன்னற்கு மகனாவன். இங்ஙனமாகக், கோச்சடையனை வந்தெதிர்த்தவன் முதலாம் விக்கிரமாதித்தனென்பது தெளியப் படவே, கோச்சடையற்குத் தந்தையான நின்றசீர் நெடுமாறனை வந்தெதிர்த்த சாளுக்கிய வேந்தன் விக்கிரமாதித்தனுக்குத் தந்தையான இரண்டாம் புலிகேசனே யாவனென்பது ஒருதலை. புலிகேச மன்னன்றன் போர்த்திறத்தினையும் அவன் படையெடுத்துச் சென்ற நாடுகளையும் விரித் துரைக்கும் ஒரு செப்புப் பட்டையமானது கி.பி. 634 ஆம் ஆண்டில் வெட்டப்பட்டதாகும்.10 வடக்கே வடுகுநாட்டின் கண் எல்லூருக்குங் குண்டூருக்கும் இடையிலிருந்த ஊர்கள் அத்தனையும் முதலாம் மகேந்திரவர்மனுக்கு உரியவா யிருந்தன; தன் நாட்டுக்கு அருகிருந்த அவ்வூர்களை இரண்டாம் புலிகேசன் நடுவுநிலையிகந்து கி.பி. 910 ஆம் ஆண்டிற் கவர்ந்துகொண்டான். அதுமுதல் தமிழ்நாட்டின் வடபகுதியி லிருந்த பல்லவ அரசர்க்குந், தமிழ்நாட்டின் வடவெல்லைக்கு அப்பாலிருந்த சாளுக்கிய மன்னர்க்குந் தீராப் பகை உண்டாவதாயிற்று.11 புலிகேசன் அவ்வாறு மகேந்திரவர்ம பல்லவற்குரிய வடுக நாடுகளைக் கைப்பற்றிக் கொண்டபிற், சில ஆண்டுகள் கழித்துத், தமிழ்நாட்டின் மேற் படையெடுத்து வந்து, பல்லவ வேந்தர்க்குத் தலைநகரான திருக்கச்சியை (காஞ்சிபுரத்தை) முற்றுகை செய்தான்.அக்காலம் மகேந்திரவர்ம பல்லவன்றன் மகனான முதலாம் நரசிம்மவர்ம பல்லவனது ஆட்சி துவங்கியகாலமா யிருத்தல் வேண்டும்; ஏனென்றால், அங்ஙனம் வந்தெதிர்த்த புலிகேச மன்னனைத் துரத்த மாட்டாமல் நரசிம்மவர்மன் பின்னடைந்தானென `ஐகோலில் அகப்பட்ட கல்வெட்டானது நுவலா நிற்கின்றது. இந் நரசிம்மவர்மன் அரசாளத் துவங்கிய காலம், இவன்றந்தை `மகேந்திரவர்ம பல்லவன் இறைவன்றிருவடி யெய்திய கி.பி. 625 ஆம் ஆண்டே யாகையாற், புலிகேசன் இவன்மேற் படை யெடுத்துவந்து இவனது தலைநகராகிய திருக்கச்சியைச் சூழ்ந்து கொண்டது இவன்றன் ஆட்சி துவங்கி ஐந்தாண்டுகள் சென்றபின் அஃதாவது கி.பி. 630 ஆம் ஆண்டில் நேர்ந்ததாயிருத்தல் வேண்டும்.12 அற்றன்று, மகேந்திரவர்மனது ஆட்சியின் இறுதிக்காலத்திலேயே புலிகேசன் காஞ்சி நகர்மேற் படையெடுத்து வந்தானெனிற் படும் இழுக் கென்னை யெனின்; அக்காலையில் நருமதை யாற்றங்கரைக்கு வடக்கிலும் இமயமலைக்குத் தெற்கிலும் உள்ள வடநாடு முழுமைக்கும் ஒரு தனிவேந்தனாய்க் கன்னோசிநகரில் அரசு செலுத்திய `ஹர்ஷன் என்பான், நருமதை யாற்றங்கரைக்குத் தெற்கேயுள்ள சாளுக்கிய நாட்டையுங் கைப்பற்றுதற் பொருட்டுப், புலிகேசன் அவனைத்தடைசெய்து அவன் தனது நாட்டின்மேல் வராதபடி அவனுடைய யானைப் படைகளைக் கொன்று அவனைப் பின்னிடையச் செய்தனன். இவ்வாறு கி.பி. 620 ஆம் ஆண்டு முதற் பல ஆண்டுகள் வரையிற் புலிகேசன் தனது நாட்டின்மேல் `ஹர்ஷன் வராமல் அவனைத் தடைசெய்து அதனைப் பாதுகாக்கும் முயற்சியில் நின்றமையால், அவன் மகேந்திர வர்மனது ஆட்சியின் இறுதிக்காலமாகிய அப்போது கச்சி நகர் மேற் படை திரட்டி வருதல் சிறிதும் இயலாது. பேராண்மை மிக்க ஹர்ஷவேந்தன் தனது நாட்டினுட் புகாவாறு அதன் வடவெல்லையில் தன் காவற்படைகளை நிறுத்தி அதனைப் பாதுகாக்கும் முயற்சியில் சிறிதேறக் குறையப் பத்தாண்டுகள் வரையிற் புலிகேசன் உறைத்து நின்றமை ஆராய்ச்சியாற் புலனாகின்றது. ஏனெனில், ஹர்ஷவேந்தன் நருமதை யாற்றங்கரைக்குத் தெற்கே வரும் முயற்சியைக் கைவிட்டு மேல்கரைக்கண் உள்ள `வலபை நாட்டின்மேற் படையெடுத்துச் செல்லும் முயற்சியைக் கி.பி. 630 ஆம் ஆண்டிற்குச் சிறிது முன்னே துவங்கி, அதன்பிற் சிறிது காலத்தி லெல்லாம் அந்நாட்டின்மேற் சென்றனன்.13 அவ்வாறு அவன் வலபை நாட்டின்மேற் செல்லும் முயற்சியிற் றன்கருத்தைச் செலுத்தினமை திண்ணமாய்த் தெரிந்தபிறகுதான், புலிகேசனுந் தமிழ்நாடு நோக்கிப் படைமேற்கொண்டு பெயர்ந்தானாகல் வேண்டும். இங்ஙனமாகப் புலிகேசன் கி.பி. 629 ஆம் ஆண்டிற்குப் பின்னர்த்தான் காஞ்சிநகர்மேற் படையெடுத்து வந்தானென்பதுஉண்மைச் சான்றுகளால் நாட்டப்படுத லானும், கி.பி. 625 ஆம் ஆண்டொடு மகேந்திரவர்ம பல்லவனது ஆட்சி முடிவுபெற்று அவன் மகன் நரசிம்மவர்ம பல்லவனது ஆட்சி துவங்குதலானும், அவன் மகேந்திரவர்மனது ஆட்சியின் இறுதிக்காலத்தே படையெழுந்து வந்தானென்றல் ஒருவாற்றானும் பொருந் தாதெனவிடுக்க. மற்று, அஃது அவன் மகன் நரசிம்மவர்ம பல்லவனது ஆட்சியின் றொடக்க காலத்திலே தான் நிகழ லாயிற்றென்பது திண்ணம். பல ஆண்டுகளாகப் போராண்மையிற் பெரிதும் பழகி, ஹர்ஷவேந்தனையும் போரிற் பின்னிடையச் செய்து போர்த் தொழிலிற் றேர்ச்சிபெற்ற பெரும்படை யோடு சடுதியில் தன்மேற் போர்கெழுந்து வந்த புலிகேசனை, அப்போதுதான் அரசியற்பொறை தாங்கிய இளைஞனான நரசிம்மவர்ம பல்லவன் எதிர்ந்து வெல்லமாட்டாது பின்னிடைந்தது வாய்வதேயாம். இனி, இவ்வாறு தமிழ்நாட்டின் வடபகுதியிலிருந்த முதலாம் நரசிம்மவர்ம பல்லவனை வென்றடக்கியபின், அதன் நடுப்பகுதியை ஆண்ட சோழமன்னனையும் வென்று, தென்பகுதிக்கண் அரசுவைகிய பாண்டிய மன்னனான நெடுமாறன்மேற் செல்வது புலிகேசனுக்கு எளிதாயிற்று. இங்ஙனமாகப், புலிகேசன் தமிழ்நாட்டின்மேற் படையெடுத்து வந்து நின்றசீர் நெடுமாற பாண்டியனை எதிர்த்தது கி.பி.629 ஆம் ஆண்டிற்கு முற்படுதல் இசையாமையானும், இவன் தமிழ்நாட்டின்மேற் சென்ற வரலாறுகளை விரித்துரைக்கும் ஒரு செப்பேடானது கி.பி. 634 ஆம் ஆண்டிற் பொறிக்கப் பட்டதாதலை மேலெடுத்துக் காட்டின மாகலானும் நெடுமாறற்கும் இவற்கும் நெல்வேலிக்கண் நடந்த போர் கி.பி. 629 க்குங் கி.பி. 634க்கும் இடைப்பட்டதாகிய கி.பி. 630 ஆம் ஆண்டில் நிகழ்ந்ததென்று கோடலே பொருத்தமாம்; வரலாற்று நூலாசிரியரும் 630 ஆம் ஆண்டிற் புலிகேசன் நருமதை யாற்றுக்குத் தெற்கேயுள்ள நாடுமுழுமைக்கும் பேராற்றலில் மிக்க வேந்தனாய் வயங்கினானெனக் கூறா நிற்பர்.14 என்றாலும், புலிகேசன் நெல்வேலிப் போரிற் பாண்டியன் நெடுமாறனை வென்றான் அல்லன்; அதில் வெற்றி பெற்றான் நெடுமாறனேயென்பது, திருஞானசம்பந்தப் பெருமானது காலத்தை யடுத்துவந்த சுந்தரமூர்த்தி நாயனார், நிறைக்கொண்ட சிந்தையால் நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாற னடியார்க்கும் அடியேன் என்று திருத்தொண்டத் தொகையில் அருளிச்செய்த வாற்றால் நன்கு பெறப்படுதல் காண்க. புலிகேசன் நெல்வேலிப்போரில் நெடுமாறற்குத் தோற்றானாயினும், அது பற்றி அப் பாண்டிமன்னன்மேற் பகைகொளாது அவனது ஆண்மைத் திறத்தை வியந்து அவன்பால் நட்புரிமை கொண்டு தன் தலைநகர்க்குத் திரும்பினா னென்னுங் குறிப்பு ஐகோலிற் கிடைத்த கல்வெட்டால் உய்த்துணரக் கிடக்கின்றது.15 இனி, இந் நெல்வேலிப் போர், திருஞானசம்பந்தப் பெருமான் மதுரைக்குச் சென்று சமண்முனிவர்களை வழக்கில் வென்று அம்முகத்தால் நெடுமாறனைச் சைவ சமயந் தழுவுமாறு செய்தபின் நிகழ்ந்ததென்பது ஆசிரியர் சேக்கிழார், தடுமாறு நெறியதனைத் தவமென்று தம்முடலை யடுமாறு செய்தொழுகும் அமண்வலையில் அகப்பட்டு விடுமாறு தமிழ்விரகர் வினைமாறுங் கழலடைந்த நெடுமாற னார்பெருமை யுலகேழு நிகழ்ந்ததால் அந்நாளில் ஆளுடைய பிள்ளையார் அருளாலே தென்னாடு சிவம்பெருகச் செங்கோலுய்த் தறமளித்துச் சொன்னாம நெறிபோற்றிச் சுரர்நகர்க்கோன் றனைக் கொண்ட பொன்னார மணிமார்பிற் புரவலனார் பொலிகின்றார். ஆயவர சளிப்பார்பால் அமர்வேண்டி வந்தேற்ற சேயபுலத் தெவ்வரெதிர் நெல்வேலிச் செருக்களத்துப் பாயபடைக் கடன்முடுகும் பரிமாவின் பெருவெள்ளங் காயுமதக் களிற்றினிரை பரப்பியமர் கடக்கின்றார் எனக் கூறிய செய்யுட்களால் இனிது விளங்கா நிற்கின்றது. இந்நெல்வேலிப் போர் கி.பி. 630 ஆம் ஆண்டில் நடைபெற்றமை மேலே நன்குவிரித்து விளக்கப்பட்டமை யின், திருஞானசம்பந்தப் பெருமான் மதுரை மாநகர் சென்று அந் நெடுமாற பாண்டியனைக் கண்டதூஉம், அவர் தந் திருவருளால் அவன் சமண்மதந் துறந்து சைவசமயந் தழுவியதூஉஞ், சமணர்கள் சம்பந்தப் பெருமானோடு வழக்கிட்டு தோற்றதூஉமாய நிகழ்ச்சிகளெல்லாம் அப்பாண்டி வேந்தன்றன் ஆட்சி துவங்கி இரண்டு மூன்று ஆண்டுகள் சென்றபின் அஃதாவது கி.பி. 623 ஆம் ஆண்டில் நிகழ்ந்தனவாதல் வேண்டுமென்பது வெள்ளிடை மலைபோல் விளங்கற்பாலதா மென்க. இனி, இவ்வாராய்ச்சியின் முடிபாகப் பெறப்பட்ட உறுதிப் பொருள்களொடு, `தமிழ்வரலாறுடையார் கூறும் வேறு சில கூற்றுக்களும் முரணி யுண்மை யல்லாதன வாய்ப் பாழ்படுதலும் ஈண்டுக் காட்டற்பாலன. திருஞான சம்பந்தப் பெருமான் மதுரைக்குச் செல்லுமுன்னரே, அவரைக் கி.பி. 622 ஆம் ஆண்டில் திருநாவுக்கரசு நாயனார் சீர்காழியில் வந்து கண்டமையும், அப்போது நாயனார் எழுபதாண்டுக்கு மேற்பட்ட முதுமைமிக் கிருந்தமையும் மேலே உண்மைச் சான்றுகளால் நிலைபெறுத்தப் பட்டமையின், திருஞான சம்பந்தப் பெருமான் தமது திருமணத்திற் றோன்றிய சிவவொளியிற் கலந்தது கி.பி. 636 அல்லது 638 ஆம் ஆண்டிலும், திருநாவுக்கரசு நாயனார் சிவபிரான் திருவடிப் பேற்றினை யெய்தியது கி.பி. 632 அல்லது 634 ஆம் ஆண்டிலுமே நிகழ்ந்தனவாதல் வேண்டும். சம்பந்தப் பெருமான் தமது பதினெட்டு அல்லது இருபதாமாண்டில் திருமணங்கூடினாராதல் வேண்டுமென்பது சேக்கிழாரடிகள் கூறுமாற்றால் தெளியக் கிடத்தலின், கி.பி. 622 இல் நாலாண்டுடையராயிருந்த பெருமான் கி.பி. 636 அல்லது 638 இற் சிவவொளியிற் கலந்தமையே தேற்றமாம். இன்னும் அக் கி.பி. 622 இல் திருநாவுக்கரசு நாயனார் எழுபத்தைந் தாண்டுசென்ற முதியாரயிருந்தன ரென்பதூஉம் மேலே காட்டப்பட்டமையால், அவர் அதிலிருந்து பத்தாண்டுகள் கழிந்த பின் அஃதாவது கி.பி. 632 இல் இறைவன் றிருவருட்பேரொளியிற் கலந்தாரெனக் கோடலே எவ்வாற் றானும் பொருந்துவதாகும். திருஞான சம்பந்தப் பிள்ளையார் தாமிருந்த பதினாறு பதினேழாண்டுகளிற் பதினாறாயிரந் திருப்பதிகங்கள் அருளிச்செய் திருத்தலால், நாலாயிரத்துத் தொள்ளாயிரம் பதிகங்களே அருளிச்செய்த திருநாவுக்கரசுகள் தாம் அருள்பெற்ற கி.பி. 620 ஆம்ஆண்டிலிருந்து பத்து அல்லது பன்னிரண்டு ஆண்டுகட்குமேல் இந் நிலவுலகின்மே லிருந்தாரெனக் கோடல் ஒருசிறிதும்இசையாது; அதனால் அவர் கி.பி. 630 அல்லது 632 - இல் இறைவன் றிருவடி நீழலெய்தினமை ஐயுறவின்றித் தெளியற்பாற்று. இவ்வாற்றால், திருநாவுக் கரசுகளே முதலில் இறைவன் றிருவருட் பேரொளியிற் கலந்தாராதலும், அதற்கு நான்கு அல்லது ஆறாண்டுகள் கழித்தே திருஞான சம்பந்தர் சிவவொளியிற் கலந்தாரா தலும், உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெள்ளிதின் விளங்காநிற்கும். இவ்வுண்மை நிகழ்ச்சிகளை நன்காராய்ந்து அளந்துபார்க்கும் அறிவுமதுகை வாயாத `தமிழ் வரலாறுடை யார், `திருஞானசம்பந்தரே முதலிற் சிவவொளியிற் கலந்தார், அதன்பிற் பல ஆண்டுகள் கழித்தே திருநாவுக் கரசுகள் அவ்வொளியிற் கலந்தாரென மாறுபாட்டுரை நிகழ்த்தினார்; அதுவேயுமன்றி இம் மாறுபாட் டுரையினையே ஒரு கருவியாய்க் கொண்டு, திருஞான சம்பந்தர் நால்வரில் முன்வைக்கப்பட்டது அவர் முதலிற் றிருவடிப் பேறெய்தினமை பற்றியும், திருநாவுக்கரசர் அவர்க்குப் பின்வைக்கப்பட்டது இவர் அவர்க்கும் பின்னர்த் திருவடிப் பேறெய்தினமை பற்றியுமே யெனவும் ஒரு பொருந்தாவுரை நிகழ்த்தினார்; இவர் காட்டிய ஏதுவும், அதுகொண்டு இவர் முடித்த முடிபு மெல்லாம் வெட்ட வெளியில் எழுதிய வட்டெழுத்துப்போல் மாய்ந்தொழிந்தமை இதுகாறும் யாம் விரித்து விளக்கின வாற்றாற் கண்டுகொள்க. மேலுந், திருஞான சம்பந்தப் பிள்ளையார்க்குப் பூணுற் சடங்கு நிகழ்ந்தஞான்று, அவர்க்கு ஏழாண்டாயிற்று என்றுந் `தமிழ் வரலாறுடையார் ஒரு பொருந்தாவுரை வரைந்தார். பிள்ளையார் பாண்டிநாட்டுக்குச் சென்று மங்கையர்க் கரசியாரைக் கண்டஞான்றே அவர் பால்பருகுஞ் சிறுபிள்ளையா யிருந்தனரென்பது, அவர் அரசியாரை நோக்கி யருளிச்செய்த மானினேர்விழி மாதராய் என்னுந் திருப்பாட்டினால் இனிது விளங்கிக் கிடத்தலானும், பிள்ளையார் அத்துணைச் சிறு மதலையா யிருந்தமை யினாலேயே அவரை முதன்முதற் கண்டபோது மங்கையர்க் கரசியார் அன்பினால் நெஞ்சங் குழைந்துருக அவர் தந்திருக்கொங்கைகளிற் பால்சுரந்து ஒழுகிய தென்று பிற்காலத்துச் சான்றோரான சிவப்பிரகாச அடிகளும், இலைபடர்ந்த பொய்கை யிடத்தழுதல் கண்டு முலைசுரந்த அன்னையோ முன்நின் - நிலைவிளம்பக் கொங்கை சுரந்தஅருட் கோமகளோ சம்பந்தா இங்குயர்ந்தார் யார்சொல் எமக்கு என்று நால்வர் நான்மணிமாலையிற் கூறுதலானும் நன்குபெறப்படும். பாண்டிநாட்டுக்குச் சென்றஞான்றே பிள்ளையார் ஐந்தாண்டுச் சிறுமதலையா யிருந்தனராயின், அதற்குமுன் திருச்செங்காட்டங்குடிக்குச் சென்று சிறுத்தொண்டரையும் அவர் புதல்வர் சீராளரையுங் கண்டு அளவளாவிய போழ்து பிள்ளையார் 11 அல்லது 12 ஆண்டினராயிருத்தலும், அதற்குமுன் பூணுற்சடங்கு நடை பெற்ற போழ்து அவர் ஏழாண்டினரா யிருத்தலும் எவ்வாறு பொருந்தும்? `தமிழ் வரலாறுடையார் கூறும் இப் பொருந்தாவுரை, `என் தந்தையும் தாயும் மணஞ்செய்து கொண்ட ஞான்று யான் அவர் மணப்பந்தற் காலைப் பிடித்துநின்றேன் எனக் கூறும் ஒருவன் வெற்றுரையோடு ஒப்பவைத்து நகையாடி விடுக்கற்பாலதாமென்க. அற்றேற், பூணுற்சடங்கு ஏழாண்டுக்கு மேல் நடத்தும் உலகியன் முறைப்படி யன்றோ பிள்ளையார்க்கும் அது நடத்தப் பட்டிருத்தல் வேண்டுமாலெனின்; திருஞான சம்பந்தப் பிள்ளையார் உலகியலில் எங்கும் காண இயலாத ஓரருட் பெரும் புதுமையால் மூன்றாம் ஆண்டிலேயே எல்லாம் ஓதாதுணர்ந்த பேரறிவாளராய்த் திகழ்ந்தமை கண்டு, அஞ்ஞான்றிருந்த சான்றோர் உடனே அவர்க்குப் பூணுற்சடங்கு செய்வித்தனராதல் வேண்டுமேயல்லாமல், அவரை ஏனைச் சிறுபிள்ளைகளோடொப்பக் கருதி அவர்க்கு ஏழாம் ஆண்டு வருமளவுங் காத்திருந்து பின்னர் அது செய்தாரல்லர். இன்னும் மதுரைமாநகர்க்குச் செல்லுமுன்னரே திருஞானசம்பந்தர் சிறுத்தொண்டரையும் அவர் தம் புதல்வர் சீராளரையுந் திருச்செங்காட்டங்குடியிற் கண்டு அளவளாவினமை மேலே காட்டப்பட்டமையால் அப்போது பிள்ளையாருக்கு நாலரையாண்டே யாதலும், அது கி.பி. 622 க்கும் 623 க்கும் இடையில் நிகழ்ந்ததேயாதலுந் துணியப் படும். ஈதிங்ஙனமாகவுந், `தமிழ் வரலாறுடையார், திருச்செங் காட்டங்குடிக்குச் சம்பந்தப்பெருமான் எழுந்தருளியது கி.பி. 646ஆம் ஆண்டிலோ அதற்கு இரண்டோராண்டு பிற்பட்டோ நிகழ்ந்ததாகல் வேண்டும் (தமிழ்வரலாறு, பிற்பாகம் 53 ஆம் பக்கம்) எனக் கூறினார். திருஞானசம்பந்தப் பெருமான் திருவருளொளியிற் கலந்தது கி.பி. 638 ஆம் ஆண்டுக்குப்பின் நிகழ்ந்ததாதல் எவ்வாற்றானும் இசையாமை மேலே ஆராய்ந்து நிறுவப் பட்டமையால், அதற்குப் பின்னும் எட்டாண்டு கழித்து அவர் திருச்செங்காட்டங்குடிக்கு வந்து சிறுத்தொண்டரைக் கண்டாரெனத் `தமிழ்வரலாறுடையார் கூறியது இல்பொரு ளுரையேயாம். அற்றாயினும், பெரிய புராணத்தில் ஆசிரியர் சேக்கிழார் சிறுத்தொண்டநாயனார் வரலாறு உரைக் கின்றுழி, வாதாவிப்போரில் வெற்றிபெற்றுத் திரும்பிய பின்னர்த்தான், சிறுத்தொண்டரின் பெருமையுணர்ந்து அவர்தம் வேந்தன் அவரைத் தங்கீழ் ஏவலில் அமர்த்தற்கு அஞ்சி அவர்க்கு வேண்டும் பொருளெல்லாம் நிரம்பநல்கி அவர்தம் விருப்பப் படியே தம் மனையகத்திருக்க விடை கொடுத்தானென்றும், அதற்குப் பின்னதாகவே சிறுத் தொண்டர் ஓரரும்பெறல் மாதரை மணஞ்செய்து கொண்டு சீராளரை ஈன்றனரென்றும், சீராளர்க்கு மூன்றாமாண்டு நிரம்பிய பின்னரே தான் சம்பந்த பிள்ளையார் திருச் செங்காட்டங்குடிக்கு எழுந்தருளினா ரென்றும் மொழிதலால், வாதாவிப்போர் நடைபெற்ற கி.பி. 642 ஆம் ஆண்டுக்கு நாலாண்டுகள் பிற்பட்டே பிள்ளையார் திருச்செங்காட்டங் குடிக்கு எழுந்தருளினமை பெறப்படுதலின், `தமிழ் வரலாறுடையார் கூற்றுப் பொருத்தமே யாமாலெனின்; அற்றன்று; திருநாவுக்கரசு நாயனார் புராணத்துந் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணத்தும் ஆசிரியர் சேக்கிழார் கூறிச் செல்லும் நிகழ்ச்சிக்குறிப்புகள் அத்தனையும் வரலாற்றுநெறி வழாது அவ்விருவர்தந் தேவாரச் செய்யுட்களிற் காணப்படும் அகச்சான்றுரை களோடு முழுதொத்து நிற்கச், சிறுத்தொண்ட நாயனார் புராணத்துப் போந்த நிகழ்ச்சிக் குறிப்புகளோ அம் முன்னையவற்றோடு மாறுகொண்டு பொருத்தமில்லனவாய் நிற்கின்றன. வாதாவிப்போர் நிகழ்ந்த கி.பி. 642 ஆம் ஆண்டுக்குப் பத்தொன்பதாண்டுகள் முன்னரே அஃதாவது 622 இலே தான் சம்பந்தப்பெருமான் சிறுத்தொண் டரையுஞ் சீராளரையுங் கண்டு அளவளாவினாராதல் வேண்டும். வைரவர் கோலத்திற் புகுந்த சிவபிரானுக்குச் சிறுத் தொண்டர் தம்புதல்வர் சீராளரை அறுத்துக் கறிசமைத்து வைத்தது, சம்பந்தப் பெருமான் திருச்செங்காட்டங்குடியை விட்டுச் சென்ற இரண்டாண்டுகட்குப் பின்னராதல் வேண்டும்; ஏனென்றால், அங்ஙனம் அவர் தம் அருமைப் புதல்வரைச் சிவனடியார் ஒருவர் பொருட்டு அறுத்துக் கறிசமைத்து வைத்தது அவர் அங்கு வருவதற்கு முன்னரே நிகழ்ந்ததுண் டாயின், அத்துணைச் சிறந்த அவரது அத்திருத்தொண்டின் உறைப்பைச் சம்பந்தப்பிள்ளையார் தாம்அருளிச் செய்த திருப்பதிகத்தில் எடுத்துரையாது விடாராகலினென்பது. மற்றுச் சிறுத்தொண்டரையுஞ் சீராளரையுந் தமது திருசெங்காட்டங் குடித் திருப்பதிகத்திற் சிறந்தெடுத்துப் பாராட்டிப் பிள்ளையார், அவரது இவ்வரும் பெருந் தொண்டை அதிற் சிறிதுங் குறியாதது கொண்டே அஃது அவர் அங்கு வருதற்கு முன்னே நிகழந்தது அன்றென்பது தெற்றெனப் பெறப்படும். பிள்ளையார் அங்குவந்து சென்றபின், இறைவனே சிறுத் தொண்டரின் பெருமையை எல்லார்க்கும் புலப்படுத்தற் பொருட்டு அவர் தம் பிள்ளையை அறுத்துக் கறி சமைக்குமாறு செய்து அதன்பின் அப் பிள்ளையையும் உயிர்பெற்றெழச் செய்து மறைந்தனன். அதுமுதற்றான் அவரது பெருமையை ஊரவரெல்லாரும் உணர்ந்தாராகல் வேண்டும். இவ்வுண்மை சேக்கிழாருரைக்கும் உரையினாலேயே புலப்படா நிற்கின்றது; யாங்ஙனமெனின், வடக்கே பேரரசர்களாலும் வெல்லப் படாத பேராண்மையிற் சிறந்த புலிகேச வேந்தன்மேற் சிறுத்தொண்டர் தனக்காகப் படையெடுத்துச் சென்று, அவனது வாதாவிநகரைத் துகளாக்கி மீண்ட அரும் பேராண்மையினைக் கண்டு பெரிதுவியந்து, நரசிம்மவர்ம பல்லவவேந்தன் தன் அமைச்சரை நோக்கிக் கேட்டதூஉம், அதற்கவர் விடையிறுத்ததூஉங் குறிப்பிடுவதாகிய, கதிர்முடிமன் னனும்இவர்தங் களிற்றுரிமை யாண்மையினை அதிசயித்துப் புகழ்ந்துரைப்ப அறிந்தஅமைச் சர்கள்உரைப்பார் மதியணிந்தார் திருத்தொண்டு வாய்த்தவலி யுடைமையினால் எதிரிவருக் கிவ்வுலகில் இல்லையென எடுத்துரைத்தார் என்னுஞ் செய்யுளால், வாதாவிப்போர் நிகழ்தற்கு முற்றொட்டே சிறுத் தொண்டர் தம் புதல்வரை யறுத்துச் சமைத்துச் சிவனடியாரொருவர்க்குக் கறியாகப் படைத்த திருத்தொண்டின் பெருமை ஊரவர்க்கெல்லாந் தெரிந்திருந் தமை புலனாம். அத்துணை யரிய திருத்தொண்டு நிகழ்ந்தில தாயின், அப்போது சிறுத்தொண்டர்தம் பேரன்பின் உறைப்பினை அமைச்சரும் பிறரும் உணர்தற்குச் சிறிதும் வாயில் இல்லையாம்; இல்லை யாகவே, மதியணிந்தார் திருத்தொண்டு வாய்த்த வலியுடைமை யினால், எதிர் இவருக்கு இவ்வுலகில் இல்லை யென அவ்வமைச்சர் அத்திருத்தொண்டினை அத்துணை வலியுறுத்தி யுயர்த்துப் பேசுதலும் இயலாதாம். ஆகவே, வாதாவிப்போர் நிகழ்தற்கு முற்றொட்டே சிறுத்தொண்டர் மனையற வாழ்க்கையில் நின்று, சிவனடியார்க்கு ஆற்றுந் திருத்தொண்டில் மிக்க உறைப்புடையராய்த், தம் புதல்வரையும் ஓரடியவர் பொருட்டு அறுத்துக் கறியாக்கிப் படைத்துப், பின்னரவ் வடியவர் அருளால் தம் புதல்வன் உயிர்பெற்றெழ அப் புதுமையால் தமது புகழ் எங்கும் பரவப்பெற்றாரென்பதே உண்மை நிகழ்ச்சியாம். இத்துணை மன உறுதிப்பாடு டைமையே அவர் வாதாவிப்போரில் வெற்றிபெறுதற்கு ஏது வாயிற் றென்றறிதல் வேண்டும். அற்றேல், ஆசிரியர் சேக்கிழார் இந் நிகழ்ச்சிகளைச் சிறுதொண்டர் புராணத்தில் முன்பின்னாக மாற்றிக் கூறுதலென்னையெனின்; இம்மாற்றுச் சேக்கிழாரால் நேர்ந்ததோ அன்றிப் பிற்காலத்த வரால் நேர்ந்ததோ இன்னதுதானென உறுதிப்படுத்தல் இஞ்ஞான்றுள்ள எம்மனோர்க்கு இயலாதென விடுக. மேலும், வரலாற்று நிகழ்ச்சிகளை உள்ளவாறுணர்ந் தெழுதுதற்கு ஏற்ற கருவிகளும் முறையும் இஞ்ஞான்று உளவாயினாற்போல, அஞ்ஞான்று உளவாயின அல்ல. அதனாலுஞ், சிறுத்தொண்ட நாயனார்க்குச் சிறிதேறக் குறைய நானூற்றைம்பதாண்டு பின்னிருந்த ஆசிரியர் சேக்கிழார், இடைக்காலத்திருந்தார் பிறழ்த்தி வழங்கிய சிறுத்தொண்டர் வரலாற்றினைத் தாங் கேட்டறிந்தவாறே எழுதினாராதலுங் கூடுமதனாலும் அப் பிறழ்ச்சி சேக்கிழாராலேயே நிகழ்ந்ததெனக் கட்டுரைத்தல் ஏலாதென வுணர்ந்து கொள்க, எனவே, திருஞானசம்பந்தப் பெருமான் சிறுத்தொண்டரையுஞ் சீராளரையுந், திருச்செங்காட்டங் குடியிற் கண்டது கி.பி.622 ஆம் ஆண்டையடுத்தும் அவர் தமது திருமணத்திற் சிவவொளியிற் கலந்தது கி.பி. 638 ஆம் ஆண்டுக்கு முன்னும் நிகழ்ந்தனவாதல் நன்குபெறப் பட்டமையால், இவையெல்லாம் வாதாவிப்போர் நடந்த கி.பி. 642 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட நிகழ்ச்சிகளேயாதல் சொல்லாமே விளங்கும். இவற்றோடொப்பவே, திருநாவுக் கரசு நாயனார் இறைவன் திருவடிநீழல் எய்தியதும் கி.பி. 632 ஆம் ஆண்டை யடுத்துநிகழ்ந்த தொன்றாகையால், அதுவும் வாதாவிப் போர்க்கு முற்பட்ட நிகழ்ச்சியேயாதலுந் தெளியப்படும். இவ்வாற்றால் திருநாவுக்கரசு நாயனாரே திருஞானசம்பந்தப் பெருமானுக்கு முன் சிவபிரான் திருவடிப் பேற்றை யெய்தினமையுந் தானே போதரும் இவ்வாறன்றித், `தமிழ் வரலாறுடையார் கூறுமாறு திருஞானசம்பந்தரே திருநாவுக்கரசுகளுக்குமுன் சிவபிரான் றிருவடிசேர்ந்த துண்மையாயின், சம்பந்தப் பிள்ளையார் தந் திருமணத்தில் அவர்காலத்திருந்த அடியார் களெல்லாரும் ஒருங்குவந்து குழுமியிருக்கத், திருநாவுக்கரசுகள் மட்டும் அப்போதங்கு வந்திராமை என்னை? அப்பர் அப்போது இந் நிலவுலகின் மிசை இருந்தனராயின் அவர் பிள்ளையார்தந் திருமணத்திற்குச் செல்லாதிரார் என்பது அவர் தம் நட்பின் கெழுதகைமையினை யுணர்ந்தார் எவரும் நன்கறிவரன்றோ? பிள்ளையார்தந் திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் இன்னாரென்பது புலப்பட ஆசிரியர் சேக்கிழார், சீர்பெருகு நீலநக்கர் திருமுருகர் முதற்றொண்டர் ஏர்கெழுவு சிவபாத இருதயர்நம் பாண்டார்சீர் ஆர்திருமெய்ப் பெரும்பாணர் மற்றெனையோ ரணைந்துள்ளோர் பார்நிலவு கிளைசூழப் பன்னிகளோ டுடன்புக்கார் என்றோதுஞ் செய்யுளில் திருநாவுக்கரசுகள் குறிக்கப்படாமையை உற்றுநோக்கும்வழி, அவர் அத் திருமண நிகழ்ச்சிக்கு முன்னரே இறைவன் றிருவடியைத் தலைக்கூடினாராகல் வேண்டுமென்பது விளங்காநிற்கும். எனவே திருஞானசம்பந்தர் முன்னுந் திருநாவுக்கரசர் பின்னுமாக இறைவன் றிருவடி நீழலெய்தின ரென்றும், அம் முறைபற்றியே நால்வரிற் சம்பந்தர் முன்னும் அப்பர்அவருக்குப் பின்னுமாக வைக்கப்பட்டன ரென்றுந் `தமிழ் வரலாறுடையார் கூறிய கூற்று உண்மைக்கு முற்றும் மாறான பிழைபடுகூற்றாதல் தெளியப்பட்டமையின், அப்பிழைபடு கூற்றையே ஒரு நிலைக்களனாய்க் கொண்டு சமயாசிரியர் நால்வரில் மாணிக்கவாசகர் இறுதிக்கண் வைக்கப்பட்டது, அவர் காலத்தில் ஏனை மூவர்க்கும் பிற்பட்டவராதல் பற்றியே யாமென்று அவர் கரைந்ததூஉம் பிழைபடு கூற்றாய் ஒழிந்தமை காண்க. மாணிக்கவாசகப் பெருமான் வடக்கிருந்து வந்த வீரசைவக் குடியிற் றோன்றினமையானும், அதுபற்றியே இத் தமிழ்நாட்டின்கட் குடிபுகுந்து வைகிய வீரசைவச் சான்றோர்க ளனைவருந் தொன்றுதொட்டு அவரையும் அவர் அருளிச் செய்த `திருவாசகந் `திருக்கோவையாரையும் முதற்படிக் கண்வைத்து வழிபட்டு வரலானும் இங்கிருந்த சைவர்கள் அவரைத் தம் சமயாசிரியருள் ஒருவராக வைத்து வழிபடுதற்கு நெடுங்காலம் வரையில் ஒருப்படாதிருந்து, பின்னர்க் காலஞ் செல்லச்செல்ல வீரசைவம் சைவசமயத்தின் வேறல்லாமை கண்டு அச்சமயத்தவரோடு தாம் அளவளாவத் துவங்கிய கி.பி. பத்தாம் நூற்றாண்டி லிருந்தே ஏனை மூவரொடு சேர்த்து அவரையும் நாலாம் ஆசிரியராக வைத்து வழிபட்டு வரலாயினாரென்க. இந்த ஏதுவினாலேயே மாணிக்கவாசகர் ஏனைமூவர்க்குப் பின் நாலாமவராக வைக்கப்பட்டதல்லது, அவர் மூவர்க்குங் காலத்தாற் பிற்பட்ட வராதல்பற்றி யன்றென்றுணர்ந்து கொள்க. அல்லதூஉம், ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் முதலிய ஆசிரியர் மூவரும் அருளிச்செய்த தேவாரத் திருப்பதிகங்கள் அத்துணையும், இருக்கு எசுர் சாமம் என்னும் ஆரிய வேதங்கள் போல், இறைவனைப் பாடிய வழுத்துரைகளாகவே இருத்தலானுந், `திருவாசகம் வழுத்துரையாதலோடு, ஆரியவேதங்களின் அந்தமாக (முடிவாக)க் கருதப்படுதலின் `வேதாந்தம் எனப்படும் பழைய உபநிடதங்களைப்போல், இறைவன் உயிர் மலம் மாயை வினை என்னும் ஐம்பொருளிலக் கணங்களும், உயிர் மலப்பிணிப்பு நீங்கி இறைவனைத் தலைக்கூடுமாறும் ஆங்காங்குத் தெற்றென எடுத்து ஓதுதலானுந், `திருக்கோவை யார் காதலின்பத்தின் வைத்து வீட்டின்ப இலக்கணமும் நுகர்ச்சியும் விளங்க விரித்துக் கூறுதலானுந், தேவாரங்களை ஆரிய மும்மறைகளோ டொப்ப முதற்கண் வைத்துந், திருவாசகந் திருக்கோவையார் இரண்டினையும் அவ்வாரிய மறைகளின் முடிவான உபநிடதங்களோடொப்ப அத்தேவாரங் களின் பின்வைத்தும், இவ் வைப்பு முறைக்கேற்பவே தேவாரம் அருளிச்செய்த மூவரை முன்னுந், திருவாசகந் திருக்கோவையார் அருளிச்செய்த மாணிக்கவாசகரை அம் மூவர்க்குப் பின்னுமாக வைத்துங் கி.பி. பத்தாம் நூற்றாண்டுமுத லிருந்த சைவசமயச் சான்றோர்கள் அவை தம்மை வழங்கி வரலாயினரென்பதூஉம் புலனாகா நிற்கின்றது. தேவார திருவாசகங்களும் அவற்றின் ஆசிரியர்களும் வைக்கப்பட்ட வைப்புமுறை இதுவேயாமென் பதற்குப் பின்னும் ஒரு சான்று உளது. மாணிக்கவாசகர்க்குப் பின்னும், ஏனை மூவர்க்கு முன்னுமாகக் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்த திருமூலநாயனாரருளிச் செய்த `திருமந்திர நூல் செய்த `திருமந்திர நூல் கி.பி. எட்டாம் நூற்றாண் டிலிருந்த சுந்தரர் தேவாரத்திற்கும், ஒன்பதாம் நூற்றாண் டிலிருந்த அடியார்கள் அருளிச்செய்த `திருவிசைப்பா, `திருப்பல்லாண்டு என்பவைகட்கும் பின்னர்ப் பத்தாந் திருமுறையாக வைக்கப்பட்டிருத்தலை உற்றுக்காண வல்லார்க்கு, இவ்வைப்பு முறை ஆரியநூல் வைப்புமுறையை ஒட்டி வைக்கப்பட்ட தொன்றாதல் பொள்ளெனப் புலனாம். என்னை? ஆரியநூல் வைப்புமுறை வேதம், உபநிடதம், ஆகமம் என நின்றாற் போலவே, தேவாரத் திருப்பதிகங்கள் தமிழ்வேதங்களாகவுந், திருவாசகத் திருக்கோவையார் என்பன தமிழ் உபநிடதங் களாகவுந், திருமந்திரம் தமிழ் ஆகமமாகவும் ஒன்றற்குப் பின் ஒன்றாகவைத்து முறைப்படுத்தப்பட்டு நிற்கலாயின வாகலினென்க. அற்றேல், வீரசைவமுஞ் சைவமும் ஒன்றாதல் கண்ட பின்னரேதான் மாணிக்கவாசகப் பெருமானுஞ் சைவசமயா சிரியராக ஏனை மூவர்க்குப்பின் சேர்க்கப்பட்டனரென முன்னேகூறிய துண்மையோ, ஆரிய நூல் வைப்புமுறை யோடொட்டி நால்வரும் பிறரும் அருளிய அருளுரைகளை முறைப்படுத்துகின்றுழி அவ்வருளுரைகளை வழங்கிய ஆசிரியரும் அம்முறைக்கு இணங்கவே முன்னும் பின்னுமாக வைக்கப்பட்டனரென அதன்பிற் கூறியதுண்மையோ வெனின்; இரண்டும் உண்மையேயாம்; யாங்ஙனமெனின், இத்திருமுறை கள் தொகுத்து வகுக்கப்படாநின்ற காலத்தே தான் மாணிக்க வாசகப் பெருமானுஞ் சைவ சமயாசிரியருள் ஒருவராக இங்குள்ள சைவ நன்மக்களால் வழுத்தப்படு வாராயினர்; அக் காலத்திலேயே திருமுறை வகுப்பும் நிகழ்வதாயிற்று; அதற்கு முன்னெல்லாஞ் சைவசமய ஆசிரியராக வழுத்தப்பட்டு வந்த ஏனைமூவரொடு மாணிக்கவாசகரையுஞ் சேர்த்து நாலாமவராக வைத்தற்குப் பின்னும் ஓர் ஏதுவுந் தோன்றுவதாயிற்று. அதுதான்: மூவர் அருளிய தேவாரமுந் தமிழ் வேதங்களாக நிறுத்தப்படவே, மாணிக்கவாசகர் அருளிய திருவாசகந் திருக்கோவையா ரென்பன அவ் வேதங்களின் முடிபான உபநிடதங்களாக நிறுத்தப்பட்டன; அந் நூல்கள் நிறுத்தப்பட்டமுறை அவ்வாறானபின், அந் நூல்களை, அருளிச்செய்த ஆசிரியரும் அம்முறையே வைக்கப்பட லானதற்குப் பின்னும் ஓர் ஏதுவுந் தானே போதரலாயிற்று. ஆகலான், முற்கிளந்த இருவகை ஏதுவும் மாணிக்கவாகர் சைவசமயாசிரியரில் நாலாமவராக வைக்கப்படுதற்குக் கருவியானவாறு கடைப்பிடித் துணர்ந்துகொள்க. இவ்வாற்றால், மாணிக்கவாசகர் சைவசமயாசிரியர் வரிசையில் நாலாமவராக வைக்கப் பட்டது அவர் ஏனைமூவர்க்குங் காலத்தாற் பிற்பட்ட வராதல் பற்றியன்றென்பதூஉம், அன்றாகவே அங்ஙன முரைத்த `தமிழ்வரலாறுடையார் உரை உண்மை யாராய்ச்சியின்மையாற் பிறந்த மாறுகோளுரையே யாமென்பதூஉம் வைரத்தூண்போல் நாட்டப்பட்டமை காண்க. அற்றேலஃதாக; மாணிக்கவாசகர் வடநாட்டின் கணிருந்து வந்து குடிபுகுந்த மரபிற்றோன்றிய துண்மையாயின் அவர் தம்முன்னோரிருந்த அவ்வட பகுதிக்கண் உள்ள குறிகளுள் ஒன்றாயினுந் தம்நூலுட் கூறாது விடார்; அதுவேயுமன்றி, அவர் தம் முன்னோர் வழங்கிய வடநாட்டுமொழிச் சொற்களுள் ஒன்றிரண்டாயினுந் தம்முடைய பாட்டுகளிற் புகுத்தாதிரார்; தம் மரபினர் கைக்கொண்ட வீர சைவமுறைகளிற் சிலவற்றை யாயினும் எடுத்துரையாதிரார்; ஆகவே, அவரை வீரசைவ மரபிற் குரியராகச் சொல்லுமவர், அவர் அவ்வாறாதற்குரிய அடையாளங்கள் சிலவேனுங் காட்டற்பாலரெனின்; அவ்வாறே காட்டுதும்: மாணிக்கவாசகப் பெருமான் தாம் அருளிச் செய்த `திருவாசகச் செந்தமிழ்மறையில் பலவிடங்களிலும் `மகேந்திர மலை என்பதொன்றைப் பலகாலுஞ் சுட்டுகின்றார். மன்னு மாமலை மகேந்திர மதனிற் சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும் என்றும், மற்றவை தம்மை மகேந்திரத் திருந்து உற்றவைம் முகங்க ளாற்பணித் தருளியும் என்றும், மந்திர மாமலை மகேந்திர வெற்பன் என்றுங் கீர்த்தித்திருவகவலிலும் (1, 19, 100) மந்திர மாமலை மேயாய் போற்றி என்று போற்றித் திருவகவலிலும் (205), வேடுரு வாகி மகேந்திரத்து மிகுகுறை வானவர் வந்துதன்னைத் தேட விருந்த சிவபெருமான் என்றுந், தூவெள்ளை நீறணி யெம்பெருமான் சோதிம கேந்திரநாதன் என்றுந் திருவார்த்தையிலும் (4, 9) அவர் அதனைக் குறித்துச் சொல்லுதல் காண்க. `மகேந்திரம் எனப் பெயரிய இம்மலை வடக்கே கஞ்சம் மாகாணத்திற் `பெர்ஹாம்பூ ருக்குத் தென்மேற்கே முப்பத்திரண்டுகல் இடைவழி கழிந்த ஓரிடத்தில் இருக்கின்றது; இம் மலையிற் சிவபிரான்றிருக் கோயில்கள் பல இப்போதிடிந்து பாழாய்க்கிடக்கின்றன. இம் மலைக்கண் இத்தனைப் பல திருக்கோயில்கள் அக்காலத்தில் அமைக்கப் பட்டமையினை நினைந்து பார்க்குங்கால், அம் மலையடுத்த ஊர்களிற் சைவசமயந் தழுவின மக்கள் பல்லாயிரக்கணக்காய் அஞ்ஞான்று குடியிருந்து வாழ்ந்தமை நன்கு விளங்காநிற்கும். இம் மகேந்திர வெற்பினை அடிகள் பலகாலுங் குறிப்பிடுதலை உற்று நோக்குங்கால், அவர் தமது இளமைக் காலத்தில் அம்மலையடிவாரத்திருந்த ஓர் ஊரில் இருந்தமையும், அதனால் அம் மலையின் தோற்றமும் அதன்கட் சிவபெருமான் திருக்கோயில்கொண் டெழுந்தருளிய சிறப்பும் அவருள்ளத்திற் பதிந்து நின்று,அவர்தம் இனத்தவருடன் பாண்டிநாட்டிற் குடிபுகுந்து வைகியபின்னும் அவை அவரது நினைவை விட்டுமாறாவாய் அவர் அருளிச்செய்த திருப்பாட் டுகளிற் குறிக்கப்படலானமையும் புலனாகா நிற்கின்றன. நல்லிசைப்புலவர் தமது பிள்ளைமைப் பருவத்தில் எவ்வெவ்விடங்களில் இருந்தனரோ, அவ்வவ்விடங்களின் அழகிய தோற்றங்களிலும் அவ்வழகிய தோற்றங்களை யுடைய பொருள்களிலும் மனம் அழுந்தப் பெற்றுப் பின்னர்த் தாம் பாடிய பாட்டுக்களில் அவை தம்மைச் சிறந்தெடுத்துக் கூறுவதில் வேட்கையுடையராகவே வந்திருக்கின்றனர். ஆகவே, மாணிக்கவாசகப் பெருமான் தமது பிள்ளைமைப்பருவத்தில் வடக்கே கஞ்சம் மாகாணத்தின் கண்ணதான மகேந்திரமலைப் பக்கத்துள்ள ஓர் ஊரிலிருந்து, பின்னர்த் தாம் பெற்றார் உறவினருடன் பாண்டிநாடு புகுந்து திருவாதவூரில் வைகினாரெனக் கோடல் இழுக்காதென்க! இனி, இம் மகேந்திரமலையென்பது இமயமலைக் கண்ணதான கைலாயமலையே யல்லாமற் பிறிது அன்றெனக் கரைந்தாரும் உளர். அடிகள், `நீத்தல் விண்ணப்பம் 34 ஆம் செய்யுளில் எதிர்வதெப்போது பயில்விக் கயிலைப் பரம்பரனே எனவும், 40 ஆஞ் செய்யுளிற் கயிலாய மென்னும் மலைத் தலைவாஎனவும், `செத்திலாப் பத்து 10 ஆஞ் செய்யுளிற் கயிலைமாமலை மேவியகடலே எனவுங், `கீர்த்தித்திருவகவற் கடையில் ஒலி தருகைலை யுயர் கிழவோனே எனவும் அதனை வேறாக ஓதுதலின், மகேந்திர மலையுங் கைலைவெற்பும் ஒன்றே யென்பார் கூற்றுப் போலியா மென்றொழிக. அற்றன்று, வேடுருவாகி மகேந்திரத்து மிகு குறை வானவர் வந்து தன்னைத், தேடவிருந்த சிவபெருமான் என்பதனால், அருச்சுனன் பொருட்டுக் கைலை மலைச்சாரலில் வேட்டுவன் வடிவில் வந்து சிவபிரான் அருள்செய்த நிகழ்ச்சியினை அடிகள் மகேந்திரமலைக் கண்ணதாக வைத்துரைத்தல் கொண்டு, அவ்விரண்டும் ஒன்றேயாதல் பெறப்படுமாலோ வெனின்; அறியாது வினாயினாய், கைலைமலைக்கட் சிவபிரான் நிகழ்த்திய ஓர் அருள் நிகழ்ச்சியினை, அவன் திருக்கோயில் கொண்டெழுந்தருளி யிருக்கும் ஏனையிடங்களினும் நிகழ்ந்த தாக வைத்துரைத்தல் ஆன்றோர் மரபு. இமயமலைக் கண் நிகழ்ந்தனவாகச் சொல்லப்படும் நான்முகன் தலையறுத்ததும், அந்தகனைக் கொன்றதும், முந்நகர் அழித்ததுந், தக்கனை ஒறுத்ததுஞ், சலந்தரனைச் சிதைத்ததும், யானை உரித்ததுங், காமனை எரித்ததுங், கூற்றுவனை உதைத்ததும் ஆய அருட்செயல்கள் முறையே திருக்கண்டியூர், திருக்கோவலூர், திருவதிகை, திருப்பறியலூர், திருவிற்குடி, திருவழுவூர், திருக்குறுக்கை, திருக்கடவூர் முதலிய தென்றமிழ் நாட்டூர்களில் நிகழ்ந்தனவாக வைத்து ஆன்றோர்களாற் றொன்றுதொட்டுப் பாராட்டப் பட்டு வருதலே இதற்குச் சான்றாம். ஆகவே, வேடுருவாகி வந்த அருள்நிகழ்ச்சி கைலைக் கண்ணும் மகேந்திர மலைக்கண்ணும் நிகழ்ந்த தொன்றாக வைத்துச் சொல்லப்படுதல் ஒன்றே கொண்டு, அவ்விருவேறு மலையும் ஒன்றேயாமென்றல் உண்மையுணர மாட்டாதார் வெற்றுரையே யாமென விடுக்க. இனித், தெலுங்குமொழிச் சொல்லாகிய `அதெந்துவே என்பது அருட்பத்தில் அடுத்தடுத்துக் காணப்படுகின்றது. அதுவேயுமன்றிக், `கிறி, `பளகு, `இத்தை, `சட்டோ, `சழக்கு, `ஆதம், `அச்சோ முதலிய சொற்கள் திருவாசகத்திற் பலகாலுங் காணப்படுகின்றன. திருவாசக காலத்திற்கு முற்பட்ட சங்கச் செய்யுட்களிற் காணப்படாத இச் சொற்கள் வடக்குள்ள வடுகுநாட்டில் வழங்கினவாய்ப் பின்னர் மாணிக்கவாசகப் பெருமான் வாயிலாகத் தமிழ் நாட்டின்கட் புகுந்தனபோலும்! இனி, வடுகுநாட்டின் கண்இருக்கும் வீரசைவர் தாம் வழிபடுஞ் சிவலிங்கப் பெருமானை ஓரிமைப்பொழுதும் பிரிந்திருக்கமாட்டாராய், அதனை ஒரு சிறுபேழையுட் பெய்து தமதுடம்பின்கண் அணிந்துகொளா நிற்பர். இங்ஙனமே மாணிக்கவாசகப் பெருமானுந் தாம் வழிபட்டு வந்த சிவலிங்க அருட்குறியைத் தமது திருமேனிமிசை அணிந்திருந் தாரென்பது, எந்தையே ஈசா உடல் இடங் கொண்டாய் எனச் செத்திலாப்பத்திலும் (10), என் மெய்ந்நாடொறும் பிரியாவினைக்கேடா என `உயிருண்ணிப்பத்தி லும் (1) அவர் விளங்கக் கூறுமாற்றால் அறியப்படும். இவ்வாறு வடக்கிருந்து வடுகுநாட்டிற்குரிய குறிப்புகளையும் ஆண்டுள்ளார் தழுவியொழுகிய வீர சைவ சமயத்திற்குரிய குறிப்புகளையும் மாணிக்கவாசகப் பெருமான் தாம் திருவாய் மலர்ந்தருளிய செய்யுட்களில் ஓதக்காண்டலின், அவர் தமது இளமைக் காலத்திற் கஞ்சத்தின்கண்ணதான மகேந்திரமாமலைப் பக்கத்திருந்து, தம்மனோருடன் பாண்டிநாட்டுட் புகுந்து வைகினாரென்பது நன்கு தெளியப்படுமென்க. இங்ஙனமாக மாணிக்கவாசகப் பெருமான் வடக்கிருந்து வந்த வீரசைவ மரபிற்கு உரியராய், அம் மரபினரால் தலைமையாசிரியராக வைத்துப் போற்றப்பட்டு வந்தமை கண்டே, தமிழ்நாட்டுச் சைவசமயத் தெய்வ ஆசிரியரான சுந்தரமூர்த்தி நாயனார் தாம் அருளிச் செய்த `திருத்தொண்டத் தொகையில் அவர் பெயரை வெளிப்படக் கிளந்து ஓதாது `பொய்யடிமையில்லாத புலவர் என்று அவரைக் குறிப்பால் ஓதியதூஉம், சுந்தரமூர்த்தி நாயனார்க்குப்பின் கி.பி. பத்தாம் நூற்றாண்டின் றொடக்கத்தில் வந்த பட்டினத்தடிகள் காலத்திலெல்லாம் மாணிக்கவாசகப் பெருமானும் இங்குள்ள சைவநன் மக்களாற் சைவசமய ஆசிரியராக வழுத்தப் படலானமையின் இதற்குமுன் தாம் சைவசமய குரவராகக் கொண்டு வழிபாடாற்றி வந்த சம்பந்தர், அப்பர், சுந்தரர் என்னும் மூவரொடு நாலாமவராக உடன்வைத்து அவரால் அவர் வணங்கப்படலாயின தூஉமென்க. எனவே, பொய்யடிமை யில்லாத புலவர் என்னுஞ் சொற்றொடர் தனியடியாரொரு வரையே குறிக்கக் காண்டலின், `திருத்தொண்டத் தொகையிற் போந்த தனியடியார் அறுபத்துமூவராவர், தொகையடியார் எண்மராவர்; ஆக, அடியார்தொகை எழுபத்தொன்றேயாம்; நம்பியாண்டார் நம்பிகள் சுந்தரமூர்த்தி நாயனாரையும் அவ்வடியார் தொகையிற் சேர்த்தமையின் அடியார் தொகைமொத்தம் எழுபத்தி ரண்டாயிற்று. இதற்கு மாறாக நம்பியாண்டார் நம்பிகள் தொகையடியார் ஒன்பதின்மரா வரென உரைத்த உரைப்பொருள் பிழைபடுதலை மேற்காட்டிய வாற்றல் அறிந்துகொள்க. அடிக்குறிப்புகள் 1. திருஞானசம்பந்த மூர்த்திநாயனார் புராணம், 270. 2. Dr. G. Jouveau - Dubreui’s The Pallavas, p. 37. 3. Dr. V. Smith’s The Early History in India’ 1914 edition. p.472. 4. Some Contributions of South India to Indian Culture, by Dr.S. Krishnaswami Aiyangar, p.204. 5. திருநாவுக்கரசு நாயனார் புராணம், 166. 6. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம், 523 7. The Pallavas by Prof. G. Jouvean -Dubreui pp. 67 -69. 8. Ibid, p.68. 9. Ibid, P.68. 10. Prof. R.G. Bhandarkar’s Early History of the Dekkan, 1884, p.39. 11 Prof. G.J. Dubreuil’s The Pallavas. p. 37. and Dr. V. Smith’s The Early History of India, p.472. 12. Ibid, p. 425. 13. Ibid, p.340. 14. Ibid, p. 424 15. Prof. Dubruil’s The Pallavas’ p.37. 28. மாணிக்கவாசகர் காலத் திட்டமுடிபு இனிப், பத்தாம் நூற்றாண்டிற்குமுன் உரை யியற்றிய உரையாசிரிய ரெவருந் தமதுரையுள் `திருவாசகம், `திருக்கோவையார் என்னும் நூல்களிலிருந்து மேற்கோள்கள் எடுத்துக் காட்டிற்றிலரெனக் கூறுவான் புகுந்து முதற்கண் `இறையனாரகப் பொருளுரையில் திருக்கோவையார் துறைச் செய்யுட்களை அதன் உரைகாரர் எடுத்துக் காட்டாமை யினையும், இரண்டாவதாகத் தொல்காப்பிய அகத்திணை யியல் களவியல் கற்பியல்கட்குப் போந்த உரையில் இளம்பூரணர் அதன் செய்யுட்களை அங்ஙனமே எடுத்துக் காட்டாமையினையுந் `தமிழ் வரலாறுடையார் குறித்துப் பேசி, அவ்வாற்றால் திருவாசகம் திருக்கோவையா ரென்பன கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேதான் இயற்றப்பட்டன வாதல் வேண்டுமெனக் கூறினார். `அவநி சூளாமணிமாறன் காலத்தில் தமிழ்மொழிப் பயிற்சி மிக்கோங்கியிருந்தமையின், அப்போது பெரிது பயிலப்பட்டு வந்த `இறையனாரகப் பொருளுரையில் அவ்வேந்தன் காலத்திருந்த புலவர் ஒருவர் அவனைப் பாட்டுடைத் தலைவனாக நிறுத்திப் பாடிய கட்டளைக் கலித்துறைச் செய்யுட்களெல்லாவற்றையும் அவ் வுரையின் கட் புகுத்திவிட்ட வரலாற்றினை மேலே 778 ஆம் பக்கம் முதல் 783 ஆம் பக்கம் வரையில் வைத்து ஆராய்ந்து விளக்கிக் காட்டியிருக்கின்றேம். மற்று, அவ்வுரையினை யியற்றிய ஆசிரியர் நக்கீரனார் கி.பி.முதல் நூற்றாண்டில் மாணிக்க வாசகப் பெருமானுக்கு முன்னே யிருந்தவராகலின் அவர் `திருச்சிற்றம்பலக்கோவையாரிலிருந்து மேற்கோள்கள் காட்டுதல் யாங்ஙனங் கூடுமென மறுக்க. அற்றேலஃதாக, கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இயற்றப் பட்டதாகப் புலப்படும். `புறப்பொருள் வெண்பாமாலை யிலிருந்து மேற்கோள்கள் எடுத்துக்காட்டும் இளம்பூரணர், அவ்வாற்றால் ஆறாம் நூற்றாண்டிற்குப் பின்னிருந்தமை தெற்றென விளங்குதலின், `திருச்சிற்றம்பலக் கோவையார் அவர்க்கு முன்னமே இயற்றப்பட்ட தொன்றாயின் அவர் அதன்கணுள்ள அகப்பொருட்டுறைகளைத் தமது தொல் காப்பிய வுரையில் எடுத்துக் காட்டாமை என்னையெனின்; `தொல்காப்பியம் எம் மதத்தவராலும் பயிலப்படுந் தமிழ்மொழி யிலக்கணங்களை வகுத்துக் கூறும் பொது நூலாகலின், அதன் உரையிற் சைவ சமயத்தவராற் பெரிதும் பாராட்டப்படுந் திருச்சிற்றம்பலக் கோவையார் நூற்செய்யுட் களை எடுத்துக்காட்ட உரையாசிரியர் எவரும் ஒருப்பட்டிலர். முதல்நூல் எழுதிய ஆசிரியர் தொல்காப்பிய னாருங்கூடத் தமது நூல் `தொல்காப்பியம் எல்லார்க்கும் பொதுவாதல் பற்றியே அதன் முகத்திற் கடவுள்வணக்கம் ஏதுமே கூறாதுவிட்டார். பிற்காலத்தார்க்கு இலக்கண நூலெழுதிய சமண்முனிவரான பவணந்தியோ இந்நுட்பம் உணராமையின், தமது `நன்னூலின் முகத்துத் தாம் வழிபடு கடவுளாகிய அருகதேவனை வணங்கி வாழ்த்துரைத்தார்; இது குற்றமாதல் கண்டுகொள்க. தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார், ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்தை நன்கு உணர்ந்த வராகலின் அவரைப் பின் பற்றிய தாம் எச்சமயத்தார்க்கும் பொதுவாக இயற்றிய தெய்வத் `திருக்குறள் நூலின்கண் தாம் வழிபடுங் கடவுளுக்கு வாழ்த்துங் கூறாமல், எல்லாச் சமயத்தார்க்கும் ஏற்புடைத் தான பொதுநிலையில் வைத்துக் கடவுள்வாழ்த்துக் கூறினார். இப் பேராசிரியர் இருவர் தங் கருத்தை நன்கறிந்தே, தொல்காப்பியத்துக்கு உரைவகுத்த இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் முதலான உரைகாரர் எவருந் தமதுரையில் திருச்சிற்றம்பலக் கோவை யாரின் அகப்பொருட்டுறைகளை எடுத்துக் காட்டிற்றிலரென்க. திருச்சிற்றம்பலக் கோவையார்க்கு விழுமிய நல்லுரை வரைந்த பேராசிரியரே, தாம் எழுதிய தொல்காப்பிய உரையில் அதன் அகப்பொருட் செய்யுட்களை எடுத்துக் காட்டிற்றிலராயின், பிறர் அவை தம்மை எடுத்துக் காட்டாமைக்கு ஏது என்னையென்று வினாதல் வழுவன்றோ வெனக் கூறி மறுக்க, கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிற்கு முன்னிருந்த இளம்பூரணரே யன்றி, அதற்குப் பின்னிருந்த நச்சினார்க்கினியருந் தமது தொல்காப்பிய அகப்பொரு ளுரையில் திருச்சிற்றம்பலக் கோவையார் செய்யுட்களை மேற்கோள்களாக எடுத்துக் காட்டாமையின், அங்ஙனம் எடுத்துக் காட்டாமை ஒன்றே கொண்டு, அவர்தங் கருத்துண்மை யுணராத `தமிழ் வரலாறுடையார் மாணிக்கவாசகப் பெருமானைக் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிற் படுப்பிக்க விழைந்தது பெரியதொரு பிழைபாடாய் முடிந்தமை காண்க. உரையாசிரியர் எல்லாரும் பொதுநூலாகிய தொல்காப்பியத் திற்குத் தாம் வரைந்த உரையுள், தொல்காப்பியத்தைப் போலவே பொது நூல்களாகிய `அகநானூறு நற்றிணை, குறுந்தொகை ஐங்குறுநூறு `கலித்தொகை முதலான சங்க இலக்கியங்களிலிருந்தே மேற்கோள்கள் எடுத்துக் காட்டுங் கடப்பாடு உடைய ராகலின், அவர் தமக்கு முன்னிருந்த பிறநூல்களை எடுத்துக் காட்டாமை கொண்டு, அவையெல்லாம் அவர்க்குப் பிற்காலத்தே எழுந்தனவாதல் வேண்டுமெனத் துணிபுரை நிகழ்த்தலினுங் குற்றமாவது பிறிதில்லையென ஓர்க. என்றிதுகாறும் விரித்து ஆராய்ந் துரைத்த உரைப் பொருளால், `தமிழ் வரலாறுடை யாரும் பிறரும் மாணிக்கவாசகப் பெருமானைக் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின்கட் படுப்பிக்க விழைந்து காட்டிய போலியே துக்கள் அத்தனையும் வேரற வெட்டிச் சாய்க்கப்பட்டமையும், நமது அவ்வுரைப் பொருளின் இடையிடையே ஆழ்ந்தாராய்ந்து காட்டப்பட்ட உண்மை யேதுக்களால் அவரது காலங் ».ã.மூன்wh« நூற்றாண்டின் முற்பகுதிக்கட் படுவதாலும் வைரத்தூண் போல் நன்கு நிறுவப்பட்டமை காண்க. இனி, மாணிக்கவாசகப் பெருமானது காலங் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின்கட் படுதலைப் பின்னுஞ் சில ஏதுக்களால் விளக்கி, அவ்வளவில் இப் பெருநூலை முற்றுவிப்பாம். கணபதி, விநாயகர், விக்கிநேசுவரர், பிள்ளையார் என்னுந் திருப்பெயர்களையுடைய `யானைமுகக் கடவுள் மாணிக்கவாசகப் பெருமான் அருளிச்செய்த `திருவாசகம் `திருச்சிற்றம்பலக் கோவையார் என்னும் நூல்களில் ஒரு சிறிதுங் குறிக்கப்படாமையினை மேலே 351 ஆம் பக்கத்தில் எடுத்துக் காட்டிப் போந்தாம். அதுகொண்டு, மாணிக்கவாசகர் யானைமுகக் கடவுள் வழிபாடு இத்தென்றமிழ் நாட்டின்கண் உண்டாதற்கு முற்பட்ட தொருகாலத்தே இருந்தனராதல் வேண்டு மென்பதும் ஆண்டே காட்டப்பட்டது. அதனை மீண்டும் இங்கே சிறிது ஆராய்ந்து காண்பாம். வடமொழிவல்ல அறிஞரான `பண்டாரகர் என்பார் தாம் பெரிதாராய்ந் தெழுதிய `வைஷ்ணவம் சைவம் என்னும் நூலில்1 யானைமுகக் கடவுளாகிய கணபதி வணக்கங் கி.பி. ஆறாம் நுற்றாண்டிற்குமுன் காணப்படுவதன்றென நன்காராய்ந்து விளக்கியிருக்கின்றார். இத்தென்றமிழ் நாட்டகத்துக் கி.பி. ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்த திருநாவுக்கரசு நாயனார் திருப்புறம்பயத் திருத்தாண்டகம், 10 ஆஞ்செய்யுளிற் குமரனும் விக்கின விநாயகனும் எனவுந், திருவீழி மிழலைத் திருத்தாண்டகப் பதிகமொன்றிற் கைவேழ முகத்தவனைப் படைத்தார்போலும் எனவுந், திருவாய்மூர்த் திருத்தாண்டகம் 8 ஆஞ்செய்யுளில் மெல்லியலும் விநாயகனுந் தோன்றக் கண்டேன் எனவும் அருளிச் செய்திருத்தலின் யானைமுகக் கடவுள் வணக்கம் ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கிருந்தமை தெளியப்படும். இனி, ஐந்தாம் நூற்றாண்டின் ஈற்றிலாதல் ஆறாம் நூற்றாண்டின் துவக்கத்திலாதல் இயற்றப்பட்ட தொரு விழுமிய நூலாக மேலக 178, 179 ஆம் பக்கங்களிற் காட்டப்பட்ட கல்லாடத்தில் யானைமுகக் கடவுள் வணக்கங் கூறப்பட்டிருத்தலின், அது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் ஈற்றிலும் இத் தென்றமிழ்நாட்டகத் திருந்தமை தேறப்படும். இன்னும் இவ்வணக்கங் கல்லாட நூலொடு ஒருகாலத்ததாய புறப்பொருள் வெண்பா மாலையுள்ளுங் காணப்படுகின்றது. இனிக், கி.பி .ஆறாம் நூற்றாண்டின் றுவக்கத்தில் இயற்றப்பட்ட இந் நூல்கட்கு முற்பட்டுக், கி.பி. இரண்டாம் நூற்றாண்டின்கட் டோன்றினவாகிய `சிலப்பதிகாரம் `மணிமேகலை என்னும் பெருங்காப்பிய நூல்களிலோ யானைமுகக் கடவுளைப்பற்றிய குறிப்புச் சிறிதுங் காணப் படவில்லை. இந் நூல்களுக்கு முற்பட்டுக் கி.பி. முதல் நூற்றாண்டிலும் அதற்கு முன்னும் இயற்றப்பட்ட சங்கத் தமிழ் நூல்களாகிய `நான்மணிக்கடிகை `இனியவைநாற்பது `இன்னாநாற்பது `கார்நாற்பது, `ஐந்திணைஐம்பது, `திரிகடுகம், `ஆசாரக்கோவை, `இன்னிலை, `நற்றிணை, `குறுந்தொகை, `ஐங்குறுநூறு, `பரிபாடல், `கலித்தொகை, `அகநானூறு, `புறநானூறு, என்பவற்றில் வழுத்தப் பட்டிருக்குந் தெய்வங்கள் சிவபிரான், முருகவேள், காடுகிழாள், மாயவன், திருமால், வாமனன், கண்ணன், நான்முகன் என்பவரே யாவர். இச் சங்கத்தமிழ் நூல்களுக்குப் பின் இவற்றோடொப்பக் ».ã.மூன்wh« நுற்றாண்டிலிருந்து கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் நடுவரையிற் சமண காலத்தில் இயற்றப்பட்ட `நாலடியார் `பழமொழி `ஏலாதி என்னும் நூல்களில் வழுத்தப்பட்டோன் சமண்மதத்திற்குரிய அருக தேவனேயாவன். இவ்வாறாகக் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டிற்கு முன்னர் இயற்றப்பட்ட செந்தமிழ் நூல்களில் ஓரிடத் தாயினும் யானை முகமுடைய பிள்ளையார் கூறப்படாமை என்னையென்று உற்றுக்காண்புழி, அவ்வியல்பினரான ஒருகடவுளின் உணர்ச்சியும் அவரை வணங்கும் வணக்கமுங் கி.பி. ஆறாம் நூற்றாண்டின் றொடக்கம்வரையில் இத் தென்றமிழ் நாட்டகத்துத் தோன்ற வில்லையென்ப துள்ளங்கை நெல்லிக்கனியைப் போல் விளங்குகின்ற தன்றோ? முதலிற் பிள்ளையார் வணக்கமின்றி எதனையுந் தொடங்காத பின்றைக் காலத் தமிழ்மக்களின் வழிபாட்டு முறையில்வைத்துப் பண்டைக்காலத் தமிழரின் வழிபாட்டுமுறையினை ஒப்பிட்டுக் காணவல்லார்க்குப், பழைய நூல்களில் யாண்டும் பிள்ளையார் வணக்கங் காணப்படாமை பெரியதோர் ஆராய்ச்சியினையும் வியப்பினையும் விளைக்கற் பாலதன்றோ? பிள்ளையாரும் அவரை வணங்கும் வணக்கமும் அஞ்ஞான்றிருந்தமை உண்மையாயின், அதனைப்பற்றிய குறிப்புப் பழைய நூல்களில் ஒரு சிறிதுங் காணப்படாமை என்னை? என்று வினாவுவார்க்கு இறுக்கலாகாமையின், அவ் வணக்கம் அஞ்ஞான்று உளதாயிற்றன்று என்பதே தேற்றமாம். கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்குப் பின்வந்த சைவசமயாசிரியரும் சைவசமய நூலாசிரியருமாகிய எல்லாரும் யானை முகமுடைய பிள்ளையாரைத் தாம் அருளிச்செய்த திருப்பதி கங்களிற் குறிப்பிடுதலுந், தாம் இயற்றிய நூல்முகத்தே வணங்குதலும் பிறழாமற்செய்து போதரக் காண்டலானும், அவ்வாறாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட சைவ சமய நூல்களிலும் பிறவற்றிலும் யானை முகக் கடவுளைப் பற்றிய குறிப்பு ஒரு சிறிதுங் காணப்படாமையானும், வடநாட்டில் வடநூல்வல்ல சிறந்த அறிஞராய் விளங்கிய பண்டாரகரும் ஆறாம் நூற்றாண்டுக்கு முன் பிள்ளையாரும் பிள்ளையார் வணக்கமும் இருந்தமைக்குத் தினைத்தனைச் சான்றும் இல்லாமையின் அக்கடவுளும் அக்கடவுள் வணக்கமும் ஆறாம் நூற்றாண்டு முதற்றான் தோன்றினமை பெறப்படுமென ஆராய்ந்து காட்டினராக லானும், தாம் அருளிச்செய்த `திருவாசகந் திருக்கோவையார் என்னுஞ் சைவசமய விழுமிய நூல்களில் யானைமுகக் கடவுளாகிய பிள்ளை யாரைக் குறிப்பாலேனும் வெளிப்படை யாலேனுஞ் சுட்டாத சைவசமய முதலாசிரியராகிய மாணிக்கவாசகப் பெருமான் அவ்வாற்றாற் கி.பி.ஆறாம் நூற்றாண்டிற்குமுன் இருந்தவரென்பது ஒருதலையாகப் பெறப்படுமென்க. அற்றேலஃதாக, மாணிக்கவாசகப் பெருமான் மேற்காட்டியவாற்றால் ஆறாம் நூற்றாண்டிற்குமுன் இருந்தாரென்னுந் துணையே பெறப்படுமல்லது, அவர் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் றொடக்கத்திலிருந்தமையும் அதனாற் பெறப்படாதாலெனின்; அது, மேலே துவக்கம் முதற் பலதலையான் ஆராய்ந்து முடிபுகளாற் பெறப்படு மேனும், ஈண்டு அதற்குப்பின்னும் ஒரு வலியுடைச் சான்று காட்டுதும்: இப்போது `சிதம்பரம் என வழங்கப்படுந் தில்லைமாநகர்க்குத் திருஞானசம்பந்தப் பெருமானுந் திருநாவுக்கரசு நாயனாருஞ் சென்ற காலத்தில், அந்நகர் உப்பங்கழியினாற் சூழப்பட்டிருந்த தென்பது கழி சூழ்தில்லை எனச் சம்பந்தர் அருளிச் செய்தவாற்றானும், வயலுஞ் சோலைகளும் அந் நகர்ப்புறத்தே நிறைந்திருந்தமை பாளையுடைக்கமு கோங்கிப் பன்மாடம் நெருங்கி யெங்கும், வாளையுடைப் புனல் வந்தெறி வாழ்வயற் றில்லை எனவும், நீடுஇரும் பொழில்களும் சூழ்ந்த, மதியந்தோய் தில்லை எனவும் அப்பர் அருளிச்செய்த வாற்றானும் பெறப்படும். பண்டு ஒருகாற் கடல்நின்ற இடமாகிப் பின்னர் அக்கடல்நீர் வற்றி எட்டிச்செல்லச் செல்ல முன் கடல்நீர் நின்ற இடம் ஆழமில்லாக் கழிநீருடையதாகுமேல் அதனையே உப்பங்கழியெனக் கூறாநிற்பர். தில்லைமாநகர் மிகப் பழையநாளிற் கடலருமேக நின்றதோர் இடமாகும்; திருஞானசம்பந்தர் சென்ற காலத்தில் அக்கடல்நீர் வற்றிச் சிறிது எட்டிப்போக, அக்கடல்நீரொடு தொடர்புடைய கழிநீர்மட்டுமே அந்நகரருகே நின்றமை புலனாகின்றது. அந்நகரின் கீழ்ப்பக்கந் தவிர ஏனை முப்பக்கங்களிலும் வயலுஞ் சோலையும் மலிந்திருந்தன. இந்நாளிலோ தில்லைமாநகர்க்குக் கிழக்கிலுள் கடல் அந்நகரைவிட்டுச் சிறிதேறக் குறைய ஏழுகல்வழி கடந்துபோய்விட்டது. சம்பந்தப் பெருமான் காலத்தில் தில்லையின் அருகுநின்ற கழிநீர் கடல்நீரோடு தொடர்புடையதாய் நின்றதென்ப தனால், அப்போது அக்கடல் அந்நகருக்குச் சிறிதேறக்குறைய ஒரு கல்தொலைவில் நின்றதாகல் வேண்டும்; இற்றைக்கு 1300 ஆண்டுகளுக்குமுன், சம்பந்தப்பெருமான் இருந்தமை மேலே தெளிவுறுத்தப் பட்டிருத்தலால், இவ் ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளில் ஆறுகல்தொலைவு மேலும் பின்னிடைந்து சென்ற கடல் சிறிதேறக்குறைய 225 ஆண்டுகளுக்கு ஒருகல் விழுக்காடு பின்வாங்கிச் சென்ற தெனக் கணக்குச் செய்வோமானாற், சிறிதேறக்குறைய 1600 ஆண்டுகளுக்குமுன் அது தில்லை மாநகர்க்கு மிக அணித்தாக நின்றமை தெற்றெனத் துணியப்படும். ஆகவே, திருஞானசம்பந்தப் பெருமானிருந்த காலத்தில் தில்லையை விட்டு ஒருகல் எட்டிநின்று, தானின்ற இடத்தை ஆழமில்லா உப்பங்கழி யாக்கிய கடல்நீரானது, திருஞானசம்பந்தப் பெருமானுக்கு 225 ஆண்டு முற்பட்டதாகிய காலத்தில், அஃதாவது கி.பி. நாலாம் நூற்றாண்டில்அந்நகருக்கு மிகவும் அணித்தாக நின்றமை தெளியப்படுகின்ற தன்றோ? அங்ஙனம் அது கி.பி. நாலாம் நூற்றாண்டிலும் அதற்கு முன்னுந் தில்லைக்கு மிகவும் அணித்தாக நின்று உலவிய துண்மை யாயிற், கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்த மாணிக்கவாசகப் பெருமான் தில்லையம்பதிக்குச் சென்ற ஞான்று அதனருகே உலாய கடற்காட்சியினை வியந்து, தாம் அங்கிருந்தருளிச் செய்த திருப்பாட்டுகளிற் பாடியிருப்பரல் லரோ? ஆகவே, அவர் தில்லைக்கணிருந்து அருளிச்செய்த `திருச்சிற்றம்பலக் கோவையாரில் தில்லையினருகே கடல் நின்றமை குறிப்பிட்டனரோ என்பது ஆராயற்பாற்று. இனித்திருக் கோவையார் 122 ஆஞ் செய்யுளிற் கடற்றில்லை யன்னாய் எனவும், 183 ஆஞ் செய்யுளிற் பூண்நிகர் வாளரவன் புலியூர் சுற்றும் போர்க்கடலே எனவும் அடிகள் தில்லைக்கட் கடல் நின்றமை அருளிச் செய்திருப்பதோடு, தில்லை யினருகுநின்ற அக்கடலிற் பெரிய சங்குகள் முத்து ஈன்றமையும் பெரிய மரக்கலங்கள் பல நின்றமையுங் கடலலைகள் ஓவாது ஒலிசெய்தமையும் பிறவும் நன்கு விளங்கச், சங்கந் தருமுத்தி யாம்பெற வான்கழி தான்கெழுமிப் பொங்கும் புனற்கங்கை தாங்கிப் பொலிகலிப் பாறுலவு துங்க மலிகலை யேந்தலின் ஏந்திழை தொல்லைப்பன்மா வங்க மலிகலி நீர்தில்லை வானவன் நேர்வருமே என அந் நூலின் 85ஆஞ் செய்யுளில், ஓவியம் வரைந்து காட்டினாற்போற் சிலசொல்லிற் பல கடற்காட்சிகளையும் அவர் அணிந்துரைத்தலுங் கருத்திற் பதிக்கற்பாற்று. எனவே, மாணிக்கவாசகர் காலத்தே தில்லைநகரின் அருகே கடல் நின்றதென்பதூஉம், திருஞான சம்பந்தர் காலத்தே அக் கடல் அந்நகரைவிட்டு ஒருகல்வழி எட்டிப் பின்னிட அக்கடல் நீரொடு தொடர்புடைய ஒருகழி மட்டுமே அந் நகரின் பாங்கர் நின்றதென்பதூஉம், இஞ்ஞான்று அக்கடல் தில்லையைவிட்டு ஏழுகல்வழி விலகிப் போய்விட்டதனைக் கணக்குச்செய்ய மாணிக்கவாசகர் காலத்திருந்த கடல்நீர் வற்றி யெட்டிச் செல்லவும் அதனொடு தொடர்புடைய கழிநீர் மட்டும் ஆண்டு நிற்கவுஞ் சிறிதேறக் குறைய 225 ஆண்டுகளாவது சென்றதாகல் வேண்டு மென்பதூஉம் அவ்வாற்றால் மாணிக்கவாசகப் பெருமான் இருந்த காலங் கி.பி. நான்காம் நூற்றாண்டுக்கு முற்படுவதா மென்பதூஉம் இனிது பெறப்படுதல் காண்க. இங்ஙனமே, மாணிக்கவாசகர் குதிரை வாங்கச் சென்று இறைவனால் ஆட்கொள்ளப்பட்டதோர் இடமாகிய `திருப்பெருந்துறை என்பதும் அடிகள் காலத்திற் கடற்றுறைப் பட்டினமாய் இருந்தமையும், அப்போது அது மிழலைக் கூற்றத்தின் உள்ளடங்கியதாய்ச் சோழநாட்டின் தென்பகுதிக்கண் இருந்தமையும், இஞ்ஞான்று அக்கடல் திருப்பெருந் துறையை விட்டுப் பதினான்கு கல் விலகிச் சென்றமையும் மேலே 287 ஆம் பக்கத்திருந்து 289 ஆம் பக்கம் வரையில் விளக்கிக் காட்டி யிருக்கின்றேம். அடிகள் காலம் இதனாலும் சைவசமயாசிரியர் ஏனைமூவர்க்கும் முற்பட்டதாதல் பெறப்படாநிற்கும். அற்றேல், தில்லைக்கண் நின்ற கடல் அதனைவிட்டு ஒருகல் விலகிச் செல்லுதற்கு 225 ஆண்டுகள் கழிந்தனவாகத், திருப்பெருந் துறைக்கண் நின்ற கடல் அதனைவிட்டு ஒருகல் விலகுதற்கு 107 ஆண்டுகள் மட்டுமே கழிந்ததென்னையெனின்; அவ் வேறுபாடு ஆண்டாண்டுள்ள நிலப்பகுதிகளின் ஏற்றத் தாழ்வால் நிகழலாயிற்றென் றுணர்ந்துகொள்க. திருப்பெருந்துறையை யடுத்துக் கடல்நீர் நின்ற நிலப்பகுதி மேட்டுப்பாங்கா யிருந்ததனால் அக் கடல்நீர் அதனை விட்டு விரைந்து சென்றதாகல் வேண்டும்; மற்றுத் தில்லையை யடுத்துக் கடல்நீர் நின்ற நிலப்பகுதி பள்ளத் தாக்காயிருந்தமையால் அதனைவிட்டு அது மெல்லச் சென்றதாகல் வேண்டும் என்க. இனி, மாணிக்கவாசகர், சைவசமயாசிரியர் ஏனை மூவர்க்குந் திருமூலநாயனார்க்கும் பின்இருந்தவராயின், தேவாரத் திருப்பதிகங்களிலுந் திருமந்திரத்திலும் உள்ள சொற்கள்- சொற்றொடர்கள் பொருள்களைத் தம்முடைய திருவாசகந் திருக்கோவையார் என்பவற்றிற் சிறிதாயினும் எடுத்தாண்டு இருத்தல் வேண்டும்; அவற்றின் செய்யுளமைப்பு களைப் பின்பற்றிப் பாடியிருத்தல்வேண்டும்; அதுவேயுமன்றித், திருமந்திரத்திற் காணப்படுஞ் சைவ சித்தாந்தக் குறியீடு களையும் அவற்றின்கண் வழங்கினாராதல் வேண்டும்; திருஞான சம்பந்தர் திருப்பதிகங்களிற் பிறருள்ளத்தை ஈர்க்குஞ் சொற்றொடர் அமைப்புகளும் இயற்கைப்பொருளழகளுஞ் சந்தக் குறிப்புகளும் மலிந்து கிடக்கின்றன; மாணிக்கவாசகர் சம்பந்தர்க்குப் பின்னிருந்தனராயின் இவற்றுள் ஒரு சிலவற்றையாயினும் எடுத்தாளாதிரார் அங்ஙனமே திருநாவுக்கரசு நாயனார் அருளிச் செய்தவற்றில் `தாண்டகச் செய்யுட்கள் எத்தகை யோர் உள்ளத்தையும் நீராய் உருக்குந்தகையன. சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச்செய்த பலவும் அந் நீர்மையவே. இவ்வாசிரியரின் சொற்பொருள்களேனுஞ் செய்யுளமைப்பு களேனும் ஒரு தினைத்தனையுந் திருவாசகந் திருக்கோவையாரிற் காணப்படுகின்றில. மேலுஞ், சைவசித்தாந்த நூல்களில் உயிர்களைக் கட்டி நிற்கும் மலங்கள் மூன்றுளவென்பதூஉம், அவை ஆணவம் மாயை கன்மம் எனப் பெயர்பெறுமென்பதூஉங் காணப்படும். திருமூலர், பசுக்களைக் கட்டிய பாசம் மூன்றுண்டு (2406) எனவும், ஆணவம் மாயையுங் கன்மமும் ஆம்மலம் (2192) எனவுங் கூறுதலே அதற்குச் சான்றாம். இக் கோட் பாட்டை மாணிக்கவாசகப் பெருமான் தழுவி நின்றமைக்கு மூலமாகிய மும்மலம்(111) என்று கீர்த்தித்திருவகவலிலும், மயக்கமாயதொர் மும்மலப்பழ வல்வினைக்குள் அழுந்தவும் (7) என்று திருக்கழுக்குன்றப் பதிகத்திலும், ஏற்றார் அழுக்கடையா நெஞ்சுருக மும்மலங்கள் பாயுங், கழுக்கடை (19) எனத் திருத்த சாங்கத்திலும், மும்மைமலம் அறுவித்து (9) என அச்சோப்பதிகத்திலும் அவர் அம் மூன்றையும் பல காற் கூறுதலே சான்றாம். இம் மும்மலப் பெயர்களுள் `மாயை, `கருமம், என்பன திருவாசகத்திற் காணப்படினும், மும்மலத்தின் பெயரான `ஆணவம் என்னுஞ்சொல் அதன்கண் ஓரிடத்தேனுங் காணப்படுகின்றிலது; இவ்வாணவமலத்தைக் குறிப்பிட நேர்ந்துழியெல்லாம் அடிகள் அதனை மலங்கினேன் கண்ணின் நீரை மாற்றி மலங்கெடுத்த பெருந்துறை (திருக்கழுக்குன்றப் பதிகம், 3) எனவும், கடலின்றிரை யதுபோல்வரு கலக்கம் மலம் அறுத்தென் (உயிருண்ணிப்பத்து, 6) எனவும், சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட (அச்சோப்பதிகம், 1) எனவும் `மலம்என்னுஞ் சொல்லாற் குறிப்பிட்டனரேயல்லால், ஆணவம் என்னுஞ் சொல்லாற் குறிப்பிட்டிலர். அடிகள் திருமூலநாயனார்க்குப் பின் இருந்தனராயின், அம் மூலமலத்தைச் சுட்டுஞ் சிறப்புச் சொல்லாகிய `ஆணவம் என்பதனை எடுத்து ஆளாதிரார். ஆகவே ஆணவம் எனுஞ் சொல்வழக்கு உண்டாகவில்லை யென்பதூஉம், அவர்க்கு முந்நூறாண்டு பிற்பட்டுவந்த திருமூலநாயனார் காலத்திலே தான் அச் சொல் தோன்றி வழங்கலாயிற் றென்பதூஉம் நன்கு பெறப்படுதல் காண்க. இங்ஙனமே `மாயையைச் சுத்தமாயை அசுத்தமாயை என இரண்டாகப் பிரித்துப், பழம்பிறவி நிகழ்ச்சிகள் உயிர்கட்குத் தெரியவொட்டாமல் மறைக்கும் இறைவன்றன் அருட்செயலை, மறைக்கும் ஒப்புமைபற்றி மலமெனப்படுத்து, அதனையுந் `திரோதமலம் என வழங்கி, அவ்வாற்றால் `மலங்கள் ஐந்தெனவும் படும் என்னுஞ் சைவசித்தாந்தக் கோட்பாடு திருமூல நாயனார். ஆணவம் ஆகும் அதீதமேன் மாயையும் பூணுந் துரியஞ் சுழுத்திபொய்க் காமியம் பேணுங் கனவு மாமாயை திரோதாயி காணு நனவின் மலக்கலப் பாகுமே (2259) என்று திருமந்திரத்தில் அருளிச்செய்திருக்குமாறு பற்றி அறிந்து கொள்ளப்படும். இக் கோட்பாடு திருவாதவூரடி கட்கும் உடம்பாடாதல், அவர் `நீத்தல் விண்ணப்பத்தில் (29) மலங்கள் ஐந்தாற் சுழல்வன் தயிரிற்பொரு மத்துறவே என்று அருளிச்செய்தமையாற் பெறப்படும். ஆயினும், அம்மலங்கள் ஐந்தின் பெயர்களுள் `ஆணவம் `மாயை, `திரோதாயி என்பன `திருவாசகந் `திருக்கோவையாருள் யாண்டுங் காணப்படு கின்றில. `ஆணவத்தை மலம் என்றே அடிகள் வழங்குமாறு முன்னரே காட்டப்பட்டது. ஆகவே அடிகள் காலத்தில் இம்மூன்று சொற்களும் அம் மலங்களின் பெயர்களாக வழங்கப்படவில்லையென்பது மட்டுந் திண்ணம். அடிகள், திருமூலநாயகனார்க்குப் பின்னிருந்தன ராயின் இச் சொற்களை யெடுத்தாண்டிருப்பர்; அங்ஙன மில்லாமையினாலன்றே அவர் அச் சொற்களைத் தம் நூலகத்து யாண்டும் வழங்கிற்றிலரென்க. அற்றேல், மலங்கள் ஐந்து என்று கூறியமட்டில் அவற்றுக்குப் பெயர்களும் அவர் காலத்திருந்தனவாதல் வேண்டுமே யெனின்; வேண்டுந்தான்; ஆயினும், அப்பெயர்கள் அவர்காலத்து நூல்களில் யாண்டுங் காணப்படாமையின், அவை இன்னவைதா மென்பது துணியப்படாததென விடுக்க. இனிச், சைவசமயாசிரியர் நால்வருள் திருவாதவூரடிகள் ஏனைமூவர்க்கும் முன்னிருந்தவராகலின், அவர்அருளிச் செய்த `திருவாசகந் `திருக்கோவையாரில் தேவாரச் சொற்பொருள் களும் பாவகைகளும் திருமந்திரத்திலுள்ள சைவசித்தாந்தக் குறியீடுகளுங் காணப்படாவாயின் என்ற தொக்கும்; மற்றுத்,திருவாசகந் திருக்கோவையாரென்பன, தேவாரந் திருமந்திரம் என்பனவற்றிற்கு முன்னிருந்த துண்மையாயின், அம் முன்னூல்களிலுள்ள சொற் பொருளமைப்புகளும் பாவகைகளும் இப் பின்னூல்களிற் காணப்படுதல் வேண்டுமா லெனின்; வேண்டும்; அவை யாவையோ வெனிற் காட்டுதும்: திருவாசகந் திருச்சதகத்தில் (54) உள்ள மலமாக் குரம்பை என்பதனோடொத்த மயலாய மாயக்குரம்பை என்னுஞ் சொற்றொடர் திருநாவுக்கரசு நாயனார் அருளிச் செய்த திருக்கழிப்பாலைத் திருத்தாண்டகத்தில் (9) காணப்படு கின்றது குயிற்பத்தில் (2) ஆர்கலி சூழ்தென்னிலங்கை அழகமர் வண்டோதரிக்குப், பேரருளின்பம் அளித்த பெருந்துறை மேய பிரானை எனப் போந்த குறிப்பு, அப்பர் அருளிய திருவெண்காட்டுத் திருத்தாண்டகத்தில் (10) மாக்குன் றெடுத்தோன்றன் மைந்தனாகி எனக் காணப்படுகின்றது. திருக்கோவையார், 11ஆஞ் செய்யுளில் உள்ள தேம்பலஞ் சிற்றிடை என்னுஞ் சொற்றொடர், திருஞானசம்பந்தப் பெருமான் அருளிச் செய்த பந்துசேர் விரலாள் என்னுந் திருப்பிரமபுரப் பதிகத்தின் ஈற்றுச்செய்யுளில் தேம்பு நுண்ணிடையாள் எனக் காணப்படுகின்றது. திருச்சதகம் 35 ஆஞ் செய்யுளிற் போந்த `பளகு என்னுஞ்சொல், சம்பந்தரின் பெண்ணிய லுருவினர் என்னுந் திருப்பிரமபுரப் பதிகத்தின் ஈற்றுச் செய்யுளிற் பளகர்கள் என்பதிற் போந்துளது. திருவுந்தி ரியாரிற் போந்த வெய்யவன் அங்கி விழுங்கத்திரட்டிய, கையைத்தறித்தான், நாமகள்நாசி சிரம்பிரமன்படச், சோமன்முகன் நெரித்து என்பன, சம்பந்தர் அருளிய மடன்மலி கொன்றை என்னுந் திருப்பிரமபுரப் பதிகத்தின் 5 ஆஞ் செய்யுளிற் சுருதி யான் றலையும் நாமகண் மூக்குஞ் சுடரவன் கரமுமுன்னியங்கு, பரிதியான் பல்லும் இறுத்தவன் எனப் போந்துள்ளமை காண்க. போற்றித் திருவகவலிற் போந்த, பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி நீரிடை நான்காம் நிகழ்ந்தாய் போற்றி தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி வளியிடை யிரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி வெளியிடை யொன்றாய் விளைந்தாய் போற்றி என்பன, அப்பர்அருளிய திருப்புள்ளிருக்கு வேளூர்த் திருத்தாண்டகத்தின் 5ரு ஆஞ் செய்யுளில், மின்னுருவை விண்ணகத்தில் ஒன்றாய் மிக்கு வீசுங்கால் தன்னகத்தில் இரண்டாய்ச் செந்தீத் தன்னுருவின் மூன்றாய்த் தாழ்புனலின் நான்காய்த் தரணிதலத் தஞ்சாகி யெஞ்சாத்தஞ்ச மன்னுருவை எனப் போந்தவாறு காண்க. திருக்கோத்தும்பி, 8 ஆஞ் செய்யுளில் உள்ள என் தாதை தாதைக்கும் எம்மனைக்குந் தம் பெருமான் என்பது, சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச் செய்த மூப்பதுமில்லை என்னுந் திருவேள்விக்குடித் திருப்பதிகத்தின் 7 ஆஞ் செய்யுளில் என்னைப் பெற்ற, முற்றவை தம்மனை தந்தைக்குந் தவ்வைக்குந் தம்பிரானார் எனப் போந்திருக்கின்றது. முத்திநெறி யறியாத மூர்க்கரொடு முயல்வேனை என்னும் அச்சோப்பதிகப்பா அமைப்பு, அப்பர் அருளிய விடகிலே னடிநாயேன் வேண்டியக்காலியாதொன்றும் என்னுந் திருவையாற்றுப் பதிகத்திற் காணப்படுகின்றது. திருவண்டப்பகுதி யிலுள்ள பூவினாற்றம் போன்றுயர்ந்தெங்கும், ஒழிவற நிறைந்து மேவிய பெருமை என்பது, அப்பர் அருளிய திருவை யாற்றுத் திருத்தாண்டகம் ஆவினிலைந்தும் என்னுஞ் செய்யுளிற் பூவினாற்றமாய் நின்றாய் நீயே எனப்போந்திருக்கின்றது. திருச்சதகத்தும் (98) பிறவிடங் களிலும் வரும் அள்ளுறு என்னுஞ் சொற்றொடர், அப்பரது திருவாலம்பொழிற்பதிகத்தின் 3 ஆஞ் செய்யுளில் அள்ளூறி யெம்பெருமா னென்பார்க் கென்றும் என்பதிற் காணப்படுகின்றது. கீர்த்தித்திருவகவலில் ஐயா றதனிற் சைவ னாகியும் என்று சிவபிரான் சொல்லப்பட்டாற் போலவே, திருஞானசம்பந்தரது திருவேதிக் குடிப்பதிகத்திலும் (10) அடியார் கருதுசைவன் என்று சொல்லப்பட்டிருக்கின்றான். திருக்கோவையாரில் (1) திருவளர் தாமரை சீர்வளர் காவிகள் ஈசர்தில்லைக், குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்கொண் டோங்கு தெய்வ, மருவளர் மாலையோர் வல்லி என்று வந்தாற்போலவே, அப்பரின் திருநல்லூர்த் திருவிருத்தத்தில் (10) திருவமர் தாமரை சீர்வளர் செங்கழு நீர்கொ ணெய்தல், குருவமர் கோங்கங் குராமகிழ் சண்பகங் கொன்றைவன்னி, மருவமர் நீள்கொடி என்பதும் அமைந்திருத்தல் கருதற்பாலது. குலாப்பத்திற் குமண்டையிடக் குனித்து (1) என்பதிற்போந்த `குமண்டை என்னுஞ்சொல், அப்பர் அருளிய திருநாகேச்சரத் திருக்குறுந் தொகையில் (5) கொண்டவேள்விக் குமண்டையதுகெட என்னும் அடியிற் போந்திருத்தல் காண்க. யாத்திரைப்பத்து, 7ஆஞ் செய்யுளிற் பிற்பானின்று பேழ்கணித்தால் என்பதன்கட் போந்த `பேழ்கணித்தல் என்னும் அருஞ்சொல், சுந்தரரது திருவிடை மருதூர்த் திருப்பதிகத்தின் முதலில் உமையாளவள் பேழ்கணிக்க என்பதன்கட் போந்திருத்தல் நோக்குக. அருட்பத்தின் முதற்கண்ணதாகிய சோதியே சுடரே என்னுஞ் சொற்றொடர், அப்பர்தம் திருவா வடுதுறைத் திருக்குறுந் தொகையில் (3) சோதியே சுடரே யென்று சொல்லுமே என்பதன்கட் காணப்படா நிற்கின்றது. திருத்தோணோக்கத்திற் போந்த பாழுக்கு இறைத்தேன் (13) என்னுஞ்சொற்றொடர், திருநாவுக்கரசுகளின் திருக்கடவூர் வீரட்டத் திருநேரிசையில் (6) பழியுடையாக்கை தன்னிற் பாழுக்கே நீரிறைத்துஎன்னும் அடியில் அமைந் திருக்கின்றது. திருக்கழுக்குன்றப்பதிக இரண்டாம் பாட்டிற் சட்டநேர்பட வந்திலாத சழக்கனேன் என்று `சட்ட என்னுஞ்சொல் வந்தாற்போலவே, அப்பர் தந் திருவீழி மிழலைத் திருவிருத்த முதற்பாட்டில் நான் சட்ட உம்மை மறக்கினும் என அச் சொல் வந்திருக்கின்றது. திருவாசகத்துக்கு முற்பட்ட தமிழ்நூல்களில் யாண்டுஞ் `சட்ட என்னுஞ்சொற் காணப்படாமை நினைவிற் பதிக்கற்பாற்று. இங்ஙனமே முன்நூல்களிற் காணக்கிடையாக் `குருவன் என்னுஞ் சொல் திருச்சதகத்தில் (68), வானோர், குருவனே போற்றி எனக் காணக்கிடைத்தல் போலவே, அஃது அப்பரருளிய திருவீழிமிழலைத் திருக்குறுந்தொகையில் (5) குருவனேயடி யேனைக் குறிக்கொளே எனக் காணக்கிடக்கின்றது. திருக்கோவையார், 9ஆஞ் செய்யுளிலுள்ள `உணர்ந்தார்க்கு உணர்வரியோன் என்னுஞ் சொற்றொடர், அப்பர்தந் திருவீழிமிழலைத் திருத்தாண்டகத்தில் (5) உற்றவத்தை யுணர்ந்தாரும் உணரலாகா வொருசுடரை என அமைந்திருக் கின்றது, அங்ஙனமே திருவண்டப் பகுதியில் உள்ள இருமுச்சமயம் என்னுஞ் சொற்றொடர், மேலைத் திருத்தாண்டக 7ஆஞ் செய்யுளில் இருமூன்று சமயமாகி என வந்திருத்தல் காண்க. திருக்கோவையார் 242 ஆஞ் செய்யுளிற் சுத்திய பொக்கணத் தென்பணி கட்டங்கம் என்னும் அடியிற்போந்த `பொக்கணம் என்னும் அரிய சொல், அப்பரின் திருச்சிவபுரத் திருத்தாண்டகத்தில் (2) பொக்கன்காண் பொக்கணத்த வெண்ணீற்றான் காண் என்பதன்கட் காணப்படுதல் அறிக. அங்ஙனமே திருக்கழுக் குன்றப்பதிகத்திற் காணப்படுஞ் `சழக்கு என்னும் அருஞ்சொல், அப்பரின் திருக்கொண்டீச்சரப் பதிகத்தில் (7) சாணிரு மடங்கு நீண்ட சழக்குடைப் பதிக்கு நாதர் என்பதிற் போந்திருத்தல் காண்க. திருச்சதகத்தில் (35) வந்துள்ள அளவறுப்பதற்கரியவன் இமையவர்க்கு அடியவர்க்கு எளியான் என்னுங் கருத்துத், திருஞான சம்பந்தர் அருளிய திருவிற்குடி வீரட்டப்பதிகத்தில் (9) அன்புசெய்வாராவர்க்கெளியவர் அரியவர் அல்லார்க்கு என்னும் அடியிற் காணப்படுகின்றது. திருப்பொற் சுண்ணத்தில் (12) வந்துள்ள `பொய்யர் தம் பொய்யினை மெய்யர்மெய்யை என்னுஞ் சொற்பொருள்கள், அப்பர் அருளிய திருப்புகலூர்த் திருப்பதிகத்துச் செய்யர் வெண் நூலார் என்னும் பாட்டில் மெய்யர் மெய்நின்றவர்க்கு அல்லாதவர்க்கென்றும், பொய்யர் எனப் போந்திருக்கி ன்றன. கீர்த்தித் திருவகலிற் காணப்படும் இந்திரஞாலம் என்னுஞ் சொற்றொடர், சம்பந்தரது திருவாரூர்ப்பதிகம் பாடலன் நான்மறையன் என்பதன் 10 ஆஞ் செய்யுளில் இந்திர ஞாலமொழிந்து எனக் காணப்படுகின்றது. திருத்தோணோக்கத்தில (13) போந்த பாழுக்கிறைத்தேன் என்பது, அப்பரின் படுகுழிப்பவ்வத்து என்னுந் திருவாரூர்த் திருநேரிசையில் (7) பயிர்தனைச் சுழியவிட்டுப் பாழ்க்குநீ ரிறைத்து எனப் போந்துள்ளது. திருச்சதகத்திற் (40) போந்த மத்திடுதயிராகி என்னும் உவமை, மேலைத் திருநேரிசையில் (9) மத்துறு தயிரேபோல எனப் போந்திருக்கின்றது. திருப்பொற் சுண்ணத்திற் (20) காணப் படுவதாகிய சோதியுமாய் இருளாயினார்க்கு என்னுஞ் சொற்பொருள்கள், அப்பரின் பாதித்தன் றிருவுருவில் என்னுந் திருவாரூர்த் திருத்தாண்டகத்தில் (6) சோதியாய் இருளாகி எனக் காணப்படாநிற்கின்றன. திருச்சதகத்தில் இசைக்கப்பட்டுள்ள `உழிதரு (7), `பளகு (35) என்னும் அருஞ்சொற்கள், அப்பரது பொய்ம்மாயப் பெருங் கடலில் என்னுந் திருவாரூர்த் திருத்தாண்டகச் செய்யுளிலும், அதன் மூன்றாஞ் செய்யுளிலும் இயைக்கப்பட்டிருக்கின்றன. திருச்சதகத்தின் செய்யுளாகிய, ஆமாறுன் திருவடிக்கே அகங்குழையேன் அன்புருகேன் பூமாலை புனைந்தேத்தேன் புகழ்ந்துரையேன் புத்தேளிர் கோமான்நின் திருக்கோயில் தூகென்மெழுகேன் கூத்தாடேன் சாமாறே விரைகின்றேன் சதுராலே சார்வானே என்பதன் சொற்பொருள்களோடு, அப்பர்தந் திருவாரூர்த் தாண்டகச் செய்யுளாகிய, நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா நித்தலும்எம் பிரானுடைய கோயில் புக்குப் புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப் பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித் தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடி. என்பதன் சொற்பொருள்கள் பெரிதொத்து நிற்றல் காண்க; அங்ஙனமே, மேலைத் திருத்தாண்டகப் பதிகத்தின் ஈற்றயற் செய்யுளிலுள்ள ஏசற்று என்னுஞ் சொல்லும், ஈற்றுச் செய்யுளிலுள்ள புறம்புறமே திரியாதே என்னுஞ் சொற்றொடருந், திருவாசகக் கோயின் மூத்த திருப்பதிகத்தின் 5 ஆஞ் செய்யுளிலும், பிடித்தபத்தின் 9 ஆஞ்செய்யுளிலும் முறையே முன்வழங்கப்பட்டிருக்கின்றன. திருத்தெள்ளேணம் 5 ஆஞ் செய்யுளிலுள்ள அருமந்ததேவர் என்னுஞ் சொற்றொடர், அப்பர்தந் திருவாரூர்த் தொண்டகச் செய்யுளாகிய பிரமன்றன் சிரமரிந்த என்பதன்கண் அருமந்த தேவர்க்கரசே போற்றி எனப் போந்திருக்கின்றது. திருக்கோவையாரின் 343 ஆஞ்செய்யுளிற் கூறப்பட்ட பேய்வயினும் அரிதாகும் பிரிவு என்பது, சுந்தரர் அருளிய மீளாவடிமை என்னுந் திருவாரூர்த் திருப்பதிகத்தின் 9 ஆஞ் செய்யுளிற் பேயோடேனும் பிரிவொன்று இன்னாது என்பர் என வந்திருக்கின்றது. திருவேசறவு முதற்செய்யுட்கண் உள்ள கரும்புதரு சுவை என்பதனோடு, அப்பரின் திருவாரூர்த் தாண்டகச் செய்யுளாகிய பொருங்கை மதகரியுரிவை என்பதிற் காணப்படுங் கரும்புதரு கட்டி என்பது ஒத்திருத்தல் ஓர்க. திருக்கோவையார், 312 ஆஞ்செய்யுளிற் போந்த மூப்பான் இளையவன் முன்னவன் பின்னவன் என்னுஞ் சொற்றொடர், திருநாவுக்கரசுகளின் திருவலிவலத் தாண்டகத்தில் (8) முன்னவன்காண் பின்னவன்காண் மூவாமேனி முதல்வன்காண் என்பதில் இயைந்து நிற்றல் காண்க. நீத்தல் விண்ணப்பத்தில் வழங்கப்பட்டுள்ள எய்ப்பில் வைப்பை (39) என்னுஞ் சொற்றொடருஞ், `சோத்து (44) என்னுஞ் சொல்லும் சுந்தரரது திருவலிவலத் திருப்பதிகத்தில் நல்லடியார்மனத்து எய்ப்பினில் வைப்பை (2) என்றும், தேவர்கள் போற்றுஞ், சோத்தானை (4) என்றும் முறையே தொடுக்கப்பட்டிருத்தல் கண்டுகொள்க. திருக்கோவையாரில் (27) உள்ள ஆலத்தினால் அமிர்தாக்கிய கோன் என்பதுந், திருச்சாழலில் (19) உள்ள தன்பெருமை தான்அறியாத் தன்மையன் என்பதுஞ், சம்பந்தரது பொங்குவெண் மணற்கானல் என்னுந் திருமறைக்காட்டுத் திருப்பதிகத்தில் வேகநஞ்செழவாங்கே வெருவொடும் இரிந் தெங்குமோட, ஆகந்தன்னில் வைத்து அமிர்தம் ஆக்குவித்தான்(7) என்பதன்கண்ணுந், தக்கன்வேள்வியைத் தகர்த்தோன் தனதொரு பெருமையை ஓரான் என்பதன் கண்ணும் முறையே அமைந்திருத்தல் கண்டுகொள்க. திருக்கோவையார், 21 ஆஞ்செய்யுளிற் காணப்படுங் குஞ்சரங் கோளிழைக்கும் என்னுஞ் சொற்றொடர், சுந்தரரது கோத்திட்டையுங் கோவலும் என்னுந் திருப்பரங்குன்றத் திருப்பதிகத்தில் (9) கோளாளிய குஞ்சரங் கோளிழைத்தீர் எனக் காணப்படுகின்றது. குழைத்தபத்து 7 ஆஞ் செய்யுளில் செடிசேர் உடலைச் சிதையாதது எத்துக்கு என்னும் அடிக்கட்போந்த எத்துக்கு என்னுஞ்சொல் சுந்தரர் தந்திருமுருகன்பூண்டித் திருப்பதிகத்தில் எத்துக்கு இங்கிருந்தீர் எம்பிரானிரே என ஒவ்வொரு பாட்டினீற்றிலும் போதரல் காண்க. கண்டபத்து, 5 ஆஞ்செய்யுளிலும் பிறாண்டுந் தொடுக்கப்பட்டுள்ள `ஆதம் என்னுஞ் சொல், அப்பரது திருவதிகை வீரட்டானத் திருநேரிசையாகிய நம்பனே எங்கள்கோவே என்னும் பதிகத்தில் (5) உழிதரும் ஆதனேனை என்பதன்கண் அமைந்திருக்கின்றது. போற்றித் திருவகலில் 131ஆவது அடியாகிய தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி என்பது, அப்பரது, எல்லாஞ் சிவனென நின்றாய் போற்றி என்னுந் திருவதிகை வீரட்டானத் திருத்தாண்டகத்தில் (8) துஞ்சாப் பலிதேருந் தோன்றல் போற்றி தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி என்பதன் கண் முழுதும் வந்திருக்கின்றது. இது பெரிய கருத்திற் பதிக்கற்பாலதாகும். குயிற்பத்தின் 10 ஆஞ் செய்யுளின் முதற்கண்ணதாகிய கொந்தணவும் பொழில் என்னுஞ் சொற்றொடர், சுந்தரரது திருமுதுகுன்றத் திருப்பதிகத் தில் (7) கொந்தணவும் பொழில்சூழ் குளிர்மாமதின் மாளிகைமேல் என்பதன்கண் இயைந்து நிற்கின்றது. திருக்கோவையார், 11 ஆஞ் செய்யுளின் முதற்கண் நிற்குங் கூம்பலங் கைத்தலத்தன்பர் என்னுஞ் சொற்றொடர், அப்பரது திருக்கச்சியேகம்பத் திருவிருத்தமாகிய ஓதுவித்தாய்முன் என்பதன் 8 ஆஞ் செய்யுளிற் கூம்பலைச் செய்த கரதலத்தன் பர்கள்எனப் போந்துள்ளமை காண்க. போற்றித் திருவகவலில் (34) வந்துள்ள ஈர்க்கிடை போகா இளமுலை மாதர் என்பதனோடொப்பச், சம்பந்தர்தந் திருவோத்தூர்த் திருப்பதிகத்தில் (2) இடையீர் போகா இளமுலையாளை என்னுஞ் சொற்றொடர் அமைந்திருத்தல் நினைவு கூரற்பாலது. திருக்கோவையார் 3 ஆஞ் செய்யுளிற் போந்த பகல்குன்றப் பல்லுகுத்தோன் என்னுஞ் சொற்றொடர் போற், சுந்தரரது திருக்காளத்திப் பதிகத்தில் (3) பகலவன் பல்லுக்குத்தவனே என்பதமைந்திருத்தல் காண்க. திருவம் மானை, 16 ஆஞ் செய்யுளில் வந்துளதாகிய வானோர் அறியாவழி என்னுஞ் சொற்றொடர், சுந்தரர் தம் அறியாவழி என்னுஞ் சொற்றொடர், சுந்தரர் தம் திருக்கச்சூராலக் கோயிற் றிருப்பதிகத்தில் (3) வானோர் அறியா நெறியானே என வந்திருத்தல் அறிக. திரும்புலம்பலிற் (3) காணப்படுங் குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தர் என்னும் சொற்றொடர் அப்பர் அருளிய திருவங்கமாலையில் (10) குற்றாலத்துறை கூத்தன் எனத் தொடுக்கப் பட்டிருக்கின்றது. திருப்பூவல்லியின் 3ஆஞ் செய்யுளிலுள்ள நாயிற் கடைப்பட்ட நம்மையுமோர் பொருட் படுத்து என்பதுபோல், அப்பரது மருளாவா மனத்தனாகி என்னுந் தனித் திருநேரிசையிலுள்ள (6) நாயினுங் கடைப் பட்டேனை நன்னெறி காட்டி யாண்டாய் என்பது அமைந் திருக்கின்றது. திருச்சதகம், 49 ஆஞ் செய்யுளிலுள்ள எட்டினோ டிரண்டும் மறியேனையே என்பதனோ டொப்ப, அப்பர் தம் பாவநாசத் திருக்குறுந் தொகையில் (3) எட்டுமொன்று மிரண்டும் அறியிலென் என்பது பாடப்பட்டிருத்தல் கண்டுகொள்க. திருத்தோணோக் கத்தின் 5 ஆஞ் செய்யுளாகிய, நிலன் நீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன் புலனாய மைந்தனொடு எண்வகையாய்ப் புணர்ந்துநின்றான் என்பதன் சொற்பொருள்கள், அப்பர் அருளிய, இருநிலனாய்த் தீயாகி நீருமாகி இயமான னாய்எறியுங் காற்றுமாகி அருநிலைய திங்களாய் ஞாயிறாகி யாகாச மாய்அட்ட மூர்த்தியாகி என்னும் நின்ற திருத்தாண்டகத்தில் இயைக்கப் பட்டிருத்தல் காண்க. திருவெம்பாவையில் (19) உள்ள எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோ ரெம்பாவாய் என்பதன்கட் போந்த முதற்சொற்றொடர், அப்பரது அப்பன் நீ அம்மை நீ என்னுந் தனித் திருத்தாண்டகப் பதிகத்தில் (2) எங்கெழிலென் ஞாயிறு எளியோமல்லோம் என முழுதுந் தொடுக்கப் பட்டிருக்கின்றது. திருச்சதகத்தின் 30 ஆஞ் செய்யுளாகிய, தேவர்கோ அறியாத தேவ தேவன் செழும்பொழில்கள் பயந்துகாத் தழிக்கும் மற்றை மூவர்க்கோ னாய்நின்ற முதல்வன் மூர்த்தி மூதாதை மாதாளும் பாகத்தெந்தை யாவர்கோன் என்னையும்வந் தாண்டு கொண்டான் யாமார்க்குங் குடியல்லோம் யாம் அஞ்சோம் மேவினோம் அவன் அடியார் அடியா ரோடும் மேன்மேலுங் குடைந்தாடி ஆடு வோமே என்பதன் சொற்பொருள்கள், திருநாவுக்கரசு நாயனார் அருளிச்செய்த, நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம் நரகத்தி லிடர்ப்பட்டோம் நடலை யில்லோம் ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம் இன்பமே எந்நாளுந் துன்ப மில்லை தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான சங்கரன்நாற் சங்கவெண் குழையோர் காதிற் கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க் கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமோ என்பதன்கண்ணுஞ், சென்றுநாஞ் சிறுதெய்வஞ் சேர்வோமல்லோஞ் சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோம் என்பதன் கண்ணும், மூவுருவின் முதலுருவாய் இருநான்கான மூர்த்தியே என்பதன்கண்ணும் புகுந்தமைத்திருத்தல் காண்க. இங்ஙனமே திருவாசகந் திருக்கோவையாரில் முதன் முதற் காணப்படுங் `கட்டளைக் கலித்துறை என்னும் பாவுந், தேவாரத்தில் `திருவிருத்தம் என்னும் பெயராற் காணப் படுகின்றது. இப்பாவானது பண்டைக் கலிப்பா வகையினின்று தோன்றிய தொன்றாயினுங், கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட பழைய செந்தமிழ் நூல்களில் இஃது ஒருசிறிதுங் காணப்படுகின்றிலது. இது முதன்முதற் காணப்படுவதெல்லாங், கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் துவக்கத்தில் உண்டான திருவாசகந் திருக்கோவையாரிலே யாம். இப்பா, தேவாரத்தில் `திருவிருத்தம் என்னும் பெயரால் வழங்கப்பட்டிருத்தலை உற்றுநோக்குமிடத்து இக்காலத்தில் மிகுதியாய் வழங்கிவரும் விருத்தப்பாக் களெல்லாம் இதனினின்றே பிறந்து பல திறமாய்ப் பெருகலாயினவென்பது புலனாம். இது பண்டைக்காலக் கலிப்பாவுக்கும் பின்றைக்கால விருத்தப்பாவுக்கும் இனமாய் இடைப்பட்டதொரு காலத்தில் உண்டாயதென்பது, முன்னும் பின்னும் அதற்கு வழங்கிய பெயர்களை ஆராயுமுகத்தால் நன்கு உணரப்படும். மாணிக்கவாசகர் காலத்தே அதற்கு வழங்கிய `கட்டளைக்கலித்துறை என்னும்பெயர், அது கலிப்பாவோடு இனமுடைத்தாதலைக் காட்டும்; அப்பர் சம்பந்தர் காலத்தே அதற்கு வழங்கிய `திருவிருத்தம் என்னும் பெயர், அது விருத்தப்பாவோடு இனனடைத்தாதலைக் காட்டும். கலிப்பா வழக்கமும் பண்டைநாளில் மிக்கிருந்து பின்றைநாளில் அருகிப் போயிற்று. விருத்தப்பா வழக்கம் பண்டைநாளில் சிறிதும் இல்லையாய்ப் பின்றைநாளிற்றான் மிக்குப்பெருகுவ தாயிற்று. இவ்விரண்டிற் கலிப்பா வழக்கம் அற்றுப்போயது கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியிலேயாம். விருத்தப்பா வழக்கம் மிக்குப் பெருகலானது கி.பி.ஆறாம் நூற்றாண்டு முதலேயாம். இவ்விரண்டு வரம்புக்கும் இடைப்பட்ட காலத்திலோ, கலிப்பாவோடு ஒட்டி அதனிற்றோன்றிய `கட்டளைக்கலித்துறையும் அக் கட்டளைக் கலித்துறையோடு ஒட்டி அதனிற்றோன்றிய விருத்தப்பாவகைகளும் ஒன்றன் பின்னொன்றாய்த் தோன்றி உருப்பெறலாயினவென்பது ஓர்ந் துணரப்படும். கி.பி. ஆறாம் நூற்றாண்டில் `அவநிசூளாமணி மாறன் காலத்தில் தோலா மொழித்தேவரால் இயற்றப்பட்ட சூளாமணி என்னுஞ் செந்தமிழ்க்காப்பியத்தை உற்று நோக்குதலால், அஞ்ஞான்று பெருகிய விருத்தப்பாக்களின் வகைகள் செவ்வனே புலனாம். மாணிக்கவாசகர் அருளிய `திருவாசகம் `திருக்கோவையார் என்பனவற்றை உற்று நோக்குதலாற், பண்டைக் கலிப்பாவிற்கு உறவான `கட்டளைக் கலித்துறைப் பாட்டுகள் மிகுதியாயும், அவற்றினின்று தோன்றிய `விருத்தப் பாட்டுகள் குறைவாயும் அவர் காலத்து வழங்கினமை தெளியப்படும். எனவே, மாணிக்கவாசகப் பெருமானிருந்த காலம் பண்டைத்தமிழ் வழக்கத்தொடு பெரிதுந் தொடர்புடையதாய் அதனை அணுகி நிற்றலுஞ், சூளாமணிக்காப்பியந் தோன்றிய ஆறாம் நூற்றாண்டு, பின்றைத் தமிழ் வழக்கத்திற்குத் தோற்றுவாய் செய்து பழைய தமிழ் வழக்கத்தினின்று பெரிதகன்று நிற்றலுந் தெற்றென விளங்காநிற்கும். இம்முறையால் ஆராய்ந்து நோக்கு மிடத்துந் திருவாதவூரடிகளது காலம், பழைய தமிழ் வழக்கிற்கு அணுக்கமாய் நிற்கும் மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதிக் கட்படுதல் துணியப்படும். அற்றேல், மூன்றாம் நூற்றாண்டிற்கும் ஆறாம் நூற்றாண்டிற்கும் இடைப் பட்டதொரு காலத்தே அடிகளிருந்தாரென உரையாமல், மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியிலேதான் அவரிருந் தாரென அத்துணை வரையறுத்துச் சொல்லுதற்குச் சான்றென்னையெனின்; கி.பி. 280 ஆம் ஆண்டில் வடுகக்கருநாடர் வடக்கிருந்து படையெடுத்துப் போந்து, வரகுணபாண்டியற்குப் பேரனாகக் கருதப்படும் அக்காலைப் பாண்டியனை வென்று,அவனது அரசை வௌவிக் கொண்டமையும், அதுமுதல் ஐந்தாம் நூற்றாண்டின் நடுவரையில் மதுரையை ஆண்டோர் அவ்வடுகக் கருநாடரேயாதலும், ஐந்தாம் நூற்றாண்டின் ஈற்றில் இயற்றப்பட்டதாகிய `கல்லாட நூல், இவ்வடுகக் கருநாடரது ஆட்சியினைக் கூறுதலோடு மாணிக்கவாசகப் பெருமான் பொருட்டு இறைவன் நரிகளைப் பரிகளாக்கிய திருவிளை யாடலையுங் குறிப்பிடுதலின் அவ்விரு நிகழ்ச்சிகளும் ஐந்தாம் நூற்றாண்டின் இறுதிக்குமுன் நிகழ்ந்தன வாதலும், பழைய பாண்டிமரபு மூன்றாம் நூற்றாண்டின் ஈற்றில் அற்றுப்போனமையின் மாணிக்க வாசகர் பாண்டியன்மாட்டு அமைச்சராயிருந்தது கி.பி. 280 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்டு நிகழ்தல் செல்லாமையும் மேலே 264 ஆம் பக்கம் முதல் 276 ஆம் பக்கம் வரையில் வைத்து விரித்து விளக்கியிருக்கின்றேம். ஆண்டுக்காட்டிய சான்றுகளே ஈண்டைக்கும் ஒக்குமாதல் கண்டு கொள்க. இவ்வாற்றால் திருவாதவூரடிகள் கி.பி. 280 ஆம் ஆண்டுக்குப்பின் இருந்தாராதல் ஒருவாற்றானும் ஏலாதென உணர்தல் வேண்டுமென்பது. இனிச், சிவபிரான்றிருக்கோயில்கள் பண்டைநாளில் எத்துணை இருந்தன, பின்றைநாளில் எத்துணை இருந்தன என ஆராய்ந்துபார்க்கும் முகத்தாலும் மாணிக்கவாசகப் பெருமான் வயங்கியகாலம் ஏனைமூவர்க்கும் முன்னர்த் தாதல் காட்டுதும். கி.பி.இரண்டாம் நூற்றாண்டுக்குமுற் சென்ற காலத்தில் இயற்றப்பட்ட தனித்தமிழ் நூல்களை உற்றுநோக்குவா ரெவர்க்கும், அஞ்ஞான்று காவிரிப் பூம்பட்டினம் கச்சி, உறையூர், ஆலவாய், பரங்குன்று, வஞ்சி முதலான தமிழ்வேந்தர் தந்தலைநகர்களிலும் ஏனைச் சில ஊர்களிலுஞ் சிவபிராற்குச் சிற்சில திருக்கோயில்களே இருந்தமை தெற்றென விளங்கா நிற்கும். கி.பி. முதல் நூற்றாண்டின் ஈறுவரையில் இருந்தவராக மேலே 579, 580 ஆம் பக்கங்களிற் பெறப்பட்ட `களவழி பாடிய `பொய்கையார் காலத்தவனான சோழன் செங்கணானே முதன்முதற் பல திருக்கோயில்கள் சிவபிரானுக்கு அமைத்தோனாவன். இது, திருமங்கையாழ்வார் இருக்கிலங்கு திருமொழி வாய் எண்டோள் ஈசற்கு எழில்மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட, திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்தகோயில் எனப் பெரிய திருமொழி ஆறாம் பத்தின் 8 ஆஞ் செய்யுளிற் கூறுமாற்றானும், இச் சோழன் `கோச்செங்கணானே யாவனென்பது நன்கினிது விளங்க அப் பத்தின் முதற்செய்யுளிற் செம்பியன் கோச்செங் கணான் சேர்ந்தகோயில் என அவன் பெயரை அவர் தெரித்துரைக்கு மாற்றானும் பெறப்படும். கி.பி. முதல் நூற்றாண்டின் ஈற்றிலிருந்த இக் கோச்செங்கட்சோழன் சிவபெருமானுக்கு எழுபது திருக்கோயில்கள் அமைப் பித்தன்மை பற்றியே அப்பர் சம்பந்தர் தேவாரத் திருப்பதிகங் களிலும் இவ்வேந்தன் உயர்த்துப் பேசப்படுகின்றான். சோழநாட்டில் நூற்றுத்தொண்ணூறு சிவபிரான் திருக் கோயில்களும், தொண்டைநாட்டில் முப்பத்திரண்டு திருக்கோயில்களும், பாண்டி நாட்டிற் பதினான்கு திருக்கோயில்களும், சேரநாடு கொங்கு நாடுகளில் எட்டுத் திருக்கோயில்களும் நடுநாட்டில் இருபத்திரண்டு திருக்கோயில்களுந் தேவாரந் திருப்பதிகங்கள் பெற்றன வாயிருத்தலை உற்றுநோக்குமிடத்துச், சோழவேந்தர்களே சிவபிரான் திருக்கோயில்கள் எடுப்பித்தலில் முதல் நின்றவர்களென்பது புலப்படா நிற்கும். சோழவேந்தருள்ளுங் கோச்செங்கட் சோழனே முதன்முதல் எழுபது சிவபிரான் திருக்கோயில்கள் அமைப்பித்தோ னென்பது திருமங்கை யாழ்வார் கூறுமாற்றால் இனிது விளங்குதலின், அவனுக்குப் பின் அவன் மரபில்வந்த சோழமன்னர்களே காலங்கடோறும் புதிய புதியவாய்ச் சிவபிரான் திருக்கோயில்கள் அமைப்பித்து அவற்றின் தொகையைப்பெருக்கி வந்தனரென்பதும் நன்குவிளங்கா நிற்கும். எனவே, கோச்செங்கணான் இருந்த முதல் நூற்றாண்டுக்குமுன் சிவபிரான் திருக்கோயில்கள் மிகச் சிலவே இத் தமிழ்நாட்டின்கண் இருந்தமையும், அவனுக்குப்பின் அவை எழுபதுக்குமேற் பெருகினமையும், அப்பர் சம்பந்தர் இருந்த ஆறாம் ஏழாம் நூற்றாண்டில் அவை நூற்றுக்கணக்காய்ப் பெருகிவிட்டமையுந் தாமே போதரும். இனி, மாணிக்கவாசகப் பெருமான் ஏனை மூவர்க்கும் பின்னிருந்த துண்மையாயின், அவர், தேவாரம் பெற்றன வாயிருக்கும் நூற்றுக்கணக்கான திருக்கோயில்களில் ஒரு நூற்றைம்பதாவது குறியாதுவிடார். கீர்த்தித்திருவகவலில், அவர்தங் காலத்திருந்த திருக்கோயில்களை யெல்லாஞ் சிறிதுஞ் சலியாது எடுத்துக்கூறிச் செல்லக் காண்டலின், அவர் அவை எத்துணைமிகுந்திருப்பினும் அவை தம்மை எடுத்துரைத்தற்கட் பின்னிடாரென்பது, அவர் அவை யிற்றை யெடுத்துமொழியும் வேட்கைப் பெருக்கால் இனிதுணரப்படும். மற்று, அவர் தாம் அருளிச்செய்த திருவாசகந் திருக்கோவையாரென்னும் அருமைத் திருநூல்களிற் குறிப்பிட்டவையெல்லாம் ஐம்பத்து நான்கு திருக்கோயில்களேயாம். அவை யாவையோவெனில், அண்ணாமலை, அம்பலம் அல்லது தில்லை, அரிகேசரி, அவிநாசி, ஆரூர், ஆனைக், இடைமருதூர், ஈங்கோய் மலை, உத்தரகோசமங்கை, ஏகம்பம், ஐயாறு, ஒற்றியூர், ஓரியூர், கச்சி, கடம்பூர், கடம்பை, கல்லாடம், கவைத்தலை, கழுக்குன்று, கழுமலம், காளத்தி, குவைப்பதி, குற்றாலம், கூடல், கோகழி, சந்திரதீபம், சாந்தமபுத்தூர், சிராப்பள்ளி, சிவநகர், சிவபுரம், சிற்றம்பலம்,சுழியல், திருவாஞ்சியம், துருத்தி, தேவூர், நந்தம்பாடி, பஞ்சப்பள்ளி, பட்டமங்கை, பரங்குன்று, பராய்த்துறை, பழனம், பனையூர், பாண்டூர், பாலை, புறம்பயம், பூவணம், பூவலம், பெருந்துறை, மகேந்திரம், மதுரை, மூவல், வாதவூர், வெண்காடு, வேலம்புத்தூர் என்னும் ஐம்பத்து நான்கேயாம். மற்று, அப்பர், சம்பந்தர், சுந்தரர் என்னும் ஆசிரியர் மூவரின் தேவாரத் திருப்பதிகங்கள் பெற்ற திருக்கோயில்களும் இப்போது `திருவிடைவாயுஞ் சேர்த்து இருநூற்று எழுபத்தைந் தாகின்றன. இவ்வளவு திருக்கோயில் கள் உள்ள கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் திருவாதவூரடிகள் இருந்தன ராயின், அவற்றுள் அரைப்பங்காயினுங் கூறாதுவிடுவரோ? மற்று, அவராற் குறிப்பிடப்பட்ட 54 திருக்கோயில்களுந், தேவாரம்பெற்ற திருக்கோயிற்றொகையில் ஐந்திலொரு கூறாகவே யிருக்கக் காண்டலால், மாணிக்கவாசகர் இருந்த காலத்திற் சிவபிரான் திருக்கோயில்கள், தேவாரகாலத் திலிருந்தனபோல் மிகுதியாயில்லையென்பதே தேற்றமாம். முதல் நூற்றாண்டின் பிற்பகுதியிற் கோச்செங்கட்சோழனாற் கட்டுவிக்கப்பட்ட எழுபது திருக்கோயில்களும் வேறு சிலவுமே அடிகளிருந்த மூன்றாம் நுற்றாண்டிலிருந்தன வென்பதூஉம், அவைதம்முள் 54 திருக்கோயில்களே அடிகளாற் குறிப்பிடப் பட்டவென்பதூஉம் கருத்தினிற் பதிக்கற்பாலனவாகும். இவ்வாற்றானும் அடிகளிருந்தது மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியேயாதல் காண்க. இனிச், சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச்செய்த `திருத்தொண்டத்தொகையிற் சொல்லப்பட்ட தொண்டர் களுள், மாணிக்கவாசகராற் குறிப்பிடப்பட் தொண்டர்கள் எத்துணைபேர் அப்பர், சம்பந்தராற் குறிப்பிடப்பட்ட தொண்டர்கள் எத்துணைபேர் என ஆராயுமுகத்தானும், மாணிக்கவாசகர் ஏனைமூவர்க்கு முற்பட்டவராதல் காட்டுதும்: திருவாசகந் திருக்கோத்தும்பி, 4 ஆஞ் செய்யுளிற் கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் எனவுந். திருத்தோணோக்கம் 3 ஆஞ் செய்யுளிற் செருப்புற்ற சீரடி வாய்கலசம் ஊன் அமுதம், விருப்புற்று வேடனார் சேடறிய எனவுங் கண்ணப்ப நாயனார் திருவாதவூரடிகளால் இருகாற் குறிப்பிடப் பட்டுள்ளார். திருத்தோணோக்கம். 7 ஆஞ் செய்யுளில் மட்டுந், தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச் சாதியும் வேதியன் தாதைதனைத் தாளிரண்டுஞ் சேதிப்ப ஈசன் றிருவருளால் தேவர்தொழப் பாதக மேசோறு பற்றினவா தோணோக்கம் எனச் சண்டீசநாயனார் அவரால் ஒருகாற் குறிப்பிடப் பட்டுள்ளார். இவ்விரு தொண்டர்க்குமேல் வேறெருவரும் அடிகளால் வேறெங்கும் குறிக்கப்படவில்லை. இனித் திருவெம்பாவை, 7 ஆஞ் செய்யுளாகிய, ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான் சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப் பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள் பேரரையற் கிங்ஙனே பித்தொருவ ராமாறும் ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள் வாருருவர் பூண்முலையீர் வாயார நாம்பாடி ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய் என்பதன்கட் காரைக்காலம்மையார் குறிக்கப்பட்டன ரெனச் சிலர் கூறுப. இத் திருப்பாட்டிற் காரைக்கால மையாரைப் பற்றிய குறிப்பு ஒருசிறிதுங் காணப்படாத தாகவும், இதன்கட் சொல்லப்பட்ட பெண்பாலர் காரைக் காலம்மையாராகவே யிருக்கவேண்டுமெனக் கொண்டாரது கோளுக்குச் சான்றேதுங் காணாமையின், அவருரை கொள்ளற்பாலதன்றென விடுக்க. மேலைச் செய்யுளிற் சொல்லப்பட்ட பெண்பாற்றொண்டர் மாணிக்கவாசகப் பெருமான்றன் அருமைத் திருமனைவி யாராகவே யிருக்க வேண்டுமென்பதனை வரலாற்றிற் கூறிப்போந்தாம். ஆகவே மாணிக்கவாசகராற் குறித்துச் சொல்லப்பட்ட திருத்தொண்டர் கண்ணப்பருஞ் சண்டீசரும் ஆய இருவரே யல்லாற் பிறரில்லையெனத் துணிந்துகொள்க. இனித், திருநாவுக்கரசு நாயனாரால் தாம் அருளிச் செய்த திருப்பதிகங்களுட் குறிப்பிடப்பட்ட திருத் தொண்டர் இத்துணைய ரென்பது ஆராயற்பாற்று. திருக்கழிப் பாலைத் திருத்தாண்டகம், 6 ஆஞ் செய்யுளிலுந், திருச்சாய்க்காட்டுத் திருநேரிசை 8 ஆஞ் செய்யுளிலுந், திருக்குறுக்கை வீரட்டப்பதிகம், 7 ஆஞ் செய்யுளிலுந், திருமழபாடித் திருத் தாண்டகம், 9 ஆஞ் செய்யுளிலும், பொது, ஆமயந்தீர்த்து என்னுஞ் செய்யுளிலுங் கண்ணப்ப நாயனார் ஐந்துமுறை குறிக்கப்பட்டி ருக்கின்றார். திருச்சாய்க்காட்டுத் திருநேரிசை, 3 ஆம் பாட்டிலுந், திருக்குறுக்கை வீரட்டத்திருப்பதிகம், 4 ஆம் பாட்டிலுந், திருநாரையூர்த் திருப்பதிகம், 8 ஆம் பாட்டிலுந், திருக்குடந்தைக் கீழ்க்கோட்டப்பதிகம், 8 ஆம் பாட்டிலுந், கோச்செங்கட்சோழ நாயனார் நான்குமுறை குறிப்பிடப் பட்டுள்ளார். திருச்சாய்க்காட்டு நேரிசை, 9 ஆஞ் செய்யுளிலுந், திருக்குறுக்கை வீரட்டப்பதிகம், 3 ஆஞ் செய்யுளிலுந், திருக்குடந்தைக் கீழ்க்கோட்டப்பதிகம் 6 ஆஞ் செய்யுளிலுந், திருவாரூர், ஒருவனா யுலகேத்த நின்றநாளோ என்னுந் திருத்தாண்டகத்தின் 10 ஆஞ் செய்யுளிலுந் திருச்சேறைப் பதிகத்தின் 5 ஆஞ் செய்யுளிலுஞ் சண்டீச நாயனார் ஐந்துமுறை சொல்லப்பட்டிருக்கின்றார். திருக்குறுக்கை வீரட்டத் திருப்பதிகம் 6 ஆஞ் செய்யுளிலுந், திருவீழி மிழலைத் திருத்தாண்டகம் மூன்றாம் பத்தின், 8 ஆஞ் செய்யுளிலுஞ் சாக்கிய நாயனார் இரண்டுமுறை குறிக்கப் பட்டிருக்கின்றார். திருக்கழிப்பாலைத் திருத்தாண்டகம், 7 ஆஞ் செய்யுளிலுந், திருக்குறுக்கை வீரட்டத்திருப்பதிகம், 9 ஆஞ் செய்யுளிலுங் கணம்புல்ல நாயனார் இரண்டுமுறை சுட்டப்பட்டிருக்கின்றார். திருப்பழனத் திருப்பதிகம், 10 ஆஞ் செய்யுளில் அப்பூதி நாயனார் ஒரே ஒருமுறை சொல்லப்பட்டிருக்கின்றார். திருவாரூர்த் திருவிருத்தம் வேம்பினைப் பேசி என்பதன்கண் நமிநந்தியடிகள் ஒரேமுறை குறிப்பிடப் பட்டிருக்கின்றார். ஆக அப்பரது தேவாரத்தின்கட் குறிக்கப்பட்ட நாயன்மார்கள்: கண்ணப்பர், கோச்செங்கட்சோழர், சண்டீசர், சாக்கியர், கணம்புல்லர், அப்பூதி, நமி நந்தியடிகள் என்னும் எழுவருந், திருஞான சம்பந்தப் பெருமானும் என எண்மர் ஆவர். இனி, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அருளிச் செய்த தேவாரத் திருப்பதிகங்களுட் குறிப்பிடப்பட்ட திருத்தொண்டர் இத்துணையரென்பதனை ஆராய்வாம். திருப்பிரமபுரம், ஈண்டுதுயிலமர் என்னுந் திருப்பதிகத் திலுந், திருவானைக்காத் திருப்பதிகம், 3ஆம் பத்தின் 7 ஆஞ் செய்யுளிலும், திருக்காளத்தித் திருப்பதிகம் 2 ஆம் பத்தின் 4ஆஞ் செய்யுளிலுந், தென்குடித் திட்டைப் பதிகம் 7 ஆஞ் செய்யுளிலுங் கண்ணப்பர் நான்கு முறை சுட்டப்பட்டிருக் கின்றார். திருச்சேய்ஞலூர்த் திருப்பதிகம் 6 ஆம் பாட்டிலுந், திருவானைக்காத் திருப்பதிகம், முதற்பத்தின் 5ஆஞ் செய்யுளிலுந், திருவைகன்மாடக் கோயிற் பதிகம், 2, 4 ஆம் பாட்டுக்களிலுந், திருவம்பர்ப் பெருந் திருக்கோயிற்பதிகம், 1, 2, 5 ஆம் பாட்டுக்களிலுந் திருவரிசிற்கரைப்புத்தூர்ப் பதிகத்தின் 7 ஆம் பாட்டிலுந், திருத்தண்டலை நீணெறிப் பதிகம், 6 ஆம் பாட்டிலுங் கோச்செங்கட்சோழர் ஆறுமுறை கூறப்பட்டிருக் கின்றார். திருச்சேய்ஞலூர்ப்பதிகம், 7ஆம் செய்யுளிலுந், திருக்கோளிலிப்பதிகம், 4ஆஞ் செய்யுளிலுந், திருவாலவாய் ஆலநீழலுகந்த என்னும் பதிகம் 5ஆஞ் செய்யுளிலுந், திருக்கயிலாயப் பதிகம் 2ஆம் பத்தின் 10ஆஞ் செய்யுளிலுஞ் சண்டீசர் நான்குமுறை குறிப்பிடப் பட்டுள்ளார். திருக்கலிக்காமூர்ப் பதிகம், 7ஆஞ் செய்யுளிற் குங்குலியக்கலயர் ஒருகாற் குறிக்கப்பட்டிருக்கின்றார். திருவரிசிற்கரைப் புத்தூர்ப் பதிகம் 7ஆஞ் செய்யுளிற் புகழ்த்துணையார் ஒருகாற் சொல்லப்பட்டுள்ளார். திருச்செங்காட்டாங்குடித் திருப்பதிகத்திற் சிறுத்தொண்டர் குறித்துச் சொல்லப்பட் டிருக்கின்றார். திருச்சாத்தமங்கைத் திருப்பதிகத்தில் திருநீலநக்கர் கூறப்பட்டுள்ளார். திருக் கோளிலிப்பதிகத்தில் நமிநந்தியடிகள் சுட்டப்பட்டிருக் கின்றார். திருவாலவாய் மானி னேர்விழி மாதராய் என்னுந் திருப்பதிகத்திலும், மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை என்னும் பதிகத்திலும் மங்கையர்க்கரசியார் இருகாற் சொல்லப்பட்டிருப்பதோடு, பிற்பதிகத்தின் 2ஆஞ் செய்யுளிற் குலச்சிறையாரும் ஒருங்குவைத் துரைக்கப் பட்டிருக்கின்றார். திருவாலவாய் மந்திரமாவது நீறு என்னுந் திருப்பதிகத்தின் ஈற்றில் நின்றசீர் நெடுமாறர் குறித்துரைக்கப் பட்டிருக்கின்றார். ஆகத், திருஞான சம்பந்தரது தேவாரத்திற் குறிப்பிடப்பட்ட திருத்தொண்டர்: கண்ணப்பர், கோச்செங்கட்சோழர், சண்டீசர், குங்குலியக் கலயர், புகழ்த்துணையார், சிறுத்தொண்டர், திருநீலநக்கர், நமிநத்தியடிகள், மங்கையர்க்கரசியார், குலச்சிறையார், நின்றசீர் நெடுமாறர் எனப் பதினொருவர் ஆவர். எனவே, அப்பர் சம்பந்தர் என்னும் இருவராலுந் தம்முடைய தேவாரத் திருப்பதிகங்களில் ஆங்காங்கு எடுத்துச் சொல்லப்பட்ட நாயன்மார்கள்; கண்ணப்பர், கோச்செங்கட் சோழர், சண்டீசர், சாக்கியர், கணம்புல்லர், அப்பூதி, நமிநந்தியடிகள், குங்குலியக்கலயர், புகழ்த் துணையார், சிறுத்தொண்டர், திருநீலநக்கர், மங்கையர்க் கரசியார், குலச்சிறையார், நின்றசீர் நெடுமாறர் எனப் பதினால்வர் ஆவர். இந்நாயன்மார் பதினால்வரிற் பலர், சம்பந்தர் அப்பர் இருந்த கி.பி.ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருந்தோராக ஏனைச் சிலரோ ஆறாம் நூற்றாண்டிற்கும் முற்பட்ட காலத்தே இருந்தோராவர். அப்பர் சம்பந்தராற் குறித்தருளிச் செய்யப்பட்ட இந்நாயன்மார் பதினால்வரிற் கண்ணப்பர், சண்டீசர் என்னும் இருவரைத் தவிர ஏனையோரை மாணிக்கவாசகப் பெருமான் குறிப்பிடாமை என்னையென்று ஆழ்ந்து ஆராயவல்லார்க்கு, அவர் கண்ணப்பர், சண்டீசர் என்னும்இருவர்க்குப் பின்னும், ஏனையோர்க்கு முன்னும் இருந்தாரென்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெள்ளிதின் விளங்குமன்றோ? இனிக், கி.பி. ஆறாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இயற்றப்பட்ட `கல்லாட நூலின் ஆசிரியர் சிவபிரான் மாட்டுஞ் சிவனடியார் மாட்டும் பெருகிய மெய்யன் புடையராகலின், அவராற் குறிக்கப்பட்ட நாயன்மார் இனையரென்பதூஉஞ் சிறிது ஆராய்வாம். கல்லாட நூலின் 15, 57, 6, 78, 101 ஆம் பாட்டுக்களில் முறையே கண்ணப்பநாயனார், மூர்த்திநாயனார், சாக்கிய நாயனார், காரைக்காற் பேயம்மையார் என்னும் நால்வர் மாட்சியினை வியந்தெடுத்துப்பாடின ஆசிரியர், ஏனைநாயன்மாரில் ஒரு சிலரையேனும் எடுத்துக் கூறாதுவிட்டதென்னையென ஆராயுங்கால், இந் நாயன்மார் நால்வரும் ஆறாம் நூற்றாண்டிற்கு முன்னிருந்தாற்போல ஏனையோர் இல்லாமை பற்றியே யாமென்பது நன்குவிளங்கும். இந் நால்வரிற் பின் மூவர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்தா ராகற்பாலராகலின், இம் மூவரைக் கூறாத மாணிக்கவாசகர், ஐந்தாம் நூற்றாண்டிற்கும் முற்பட்டவராதல் தெளியப்படும். இதுவேயுமன்றி, இவ்வாசிரியர் 44ஆஞ் செய்யுளில், வெடிவாற் பைங்கட் குறுநரி யினத்தினை ஏழிடந் தோன்றி இன்னூற் கியைந்து வீதி போகிய வாலுளைப் புரவி ஆக்கிய விஞ்சைப் பிறைமுடி யந்தணன் எனவும், 98 ஆஞ் செய்யுளிற், கூடற் பதிவரும் ஆடற் பரியோன் எனவும், மாணிக்கவாசகர் பொருட்டு இறைவன் `நரிபரி யாக்கிய திருவிளையாடலையும், 46 ஆஞ் செய்யுளில், மண்ணகழ்ந் தெடுத்து வருபுனல் வையைக் கூலஞ் சுமக்கக் கொற்றா ளாகி நரைத்தலை முதியோள் இடித்தடு கூலிகொண்டு கோமகன் அடிக்க அவனடி வாங்கி எவ்வுயிர் எவ்வுலகு எத்துறைக் கெல்லாம் அவ்வடி கொடுத்த அருள்நிறை நாயகன் எனப் பிட்டுவாணிச்சி பொருட்டு `மண்சுமந்த திருவிளை யாடலையும் நன்கெடுத்து மொழிதலானும், இவ்விருவேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏதுவாய்நின்ற மாணிக்க வாசகர் ஐந்தாம் நூற்றாண்டிற்கும் முன்னே கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் திகழ்ந்தமை இனிது விளங்காநிற்குமென்பது. என்றித்துணைப் பல்வேறு வகையாலும் உண்மைச் சான்றுகள் என்னும் மணிக்கற்கள் கொண்டு அடிப்படை கோலி, அவற்றின்மேல் எழுப்பிய மாணிக்கவாசகர் காலம் என்னும் விழுமிய மெய்ம்மணிக்கோயில் ».ã.மூன்wh« நூற்றாண்டின் முற்பகுதி முதற் றிகழ்ந்து, சைவ மெய்ச் சமயத் தெய்வமுஞ் செந்தமிழ்த் தெய்வத் தனிமகளும் ஒருங்குகூடி மெய்யறிவுச் செங்கோலொளியரசு நடாத்தும் மாப்பெரு நிலையமாய் நிலைபேறுற்று நிலவுவதாமென்க. `மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் இச்செந்தமிழ்த் தனிப்பேர் ஆராய்ச்சி நூல்,தொண்டை நாட்டுப் பல்லவபுரத்துத் தமது பொதுநிலைக் கழகத் திருமாளிகையில் நாகைகிழார் மறைமலையடிகளால் இயற்றப்பட்டது. ஓம்சிவம். அடிக்குறிப்பு 1. Dr. Bhandarkarkar’s Vaishnavism, Saivism, p.147. fol. மாணிக்கவாசகர் காலம் முதற்பகுதி சைவ சமயாசிரியருள் ஒருவரான மாணிக்கவாசக சுவாமிகள் இருந்த காலம் உறுதிப்படுத்தற் பொருட்டுத் தமிழ் ஆங்கில மொழிவல்லார் ஆங்காங்கு ஆராய்ந்தெழுதி வருகின்றார். அவருள், திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யூ.போப் என்பார் அம்மொழி பெயர்ப்பின் முதலிலே சேர்த்திருக்கும் பொருட்குறிப் பொன்றில், மாணிக்கவாசக சுவாமிகள் காலம் இனிது துணியப்படவில்லை யாயினும், அவர்காலம் கிறிது பிறந்த பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயேயா மென்று கோடல் உத்திக்குப் பொருத்தமாவ தொன்றென்றுரை கூறுகின்றார். இனி இவர் காலத்திற்கு ஒரு நூற்றாண்டு கழிந்து ஞானசம்பந்தர் முதலான மற்றை ஆசிரியர் தோன்றினாரென்றும் உரைப்பாராயினார். இனி, மாணிக்கவாசகர் காலம் உறுதிப்படுத்தற் பொருட்டு ஆங்கில மொழியில் ஒரு நூலெழுதிய திருமலைக் கொழுந்து பிள்ளையவர்கள், மாணிக்கவாசகர் கடைச் சங்கம் நிலைபெற்று விளங்கியஞான் றிருந்தாரெனவும், அக்கடைச் சங்கத்தில் ஆசிரியர் திருவள்ளுவ நாயனார் தமது நூலை அரங்கேற்றிய காலம் கிறிது பிறந்த முதனூற் றாண்டாகலான் மாணிக்கவாசகர் காலமும் அந் நூலரங்கேறிய காலத்திற்குச் சிறிது பின்னாவதாமெனவும் சில பல சான்றுகள் காட்டித் தம்முரை நிறுத்துகின்றார். இனி, ஆங்கில மகனான இன் என்பார் ஏஷியாடிக் குவார்டர்லி ரிவியூ என்னும் பத்திரிகையில் சுந்தரம் பிள்ளையவர்கள் சிறந்த வாராய்ச்சி செய்து கி.பி. ஏழாவது நூற்றாண்டின் றொடக்கத்திலே யாமென்று துணிந்துரை நிறுத்திய ஞானசம்பந்தர் காலத்தை உடன்பட்டு, ஞானசம்பந்தப் பிள்ளையாராதல் அவரோ டுடனிருந்த அப்பர் சுவாமிகளாதல் அவர்க்குப் பின்னிருந்த சுந்தர மூர்த்திகளாதல் மாணிக்கவாசகரைத் தம் திருப்பதிகங்களுட் குறிப்பிடாமை யானே, மாணிக்கவாசகர் காலம் அச் சைவசமயாசிரியர் மூவர்க்கும் பின்னதாதல் துணியப் படுமெனக் கொண்டு சில மொழிந்திட்டார் இனிச், சுந்தரம் பிள்ளையவர்கள் ஞானசம்பந்தப் பிள்ளையார் காலம் உறுதிசெய்து ஆங்கில மொழியிலெழுதிய மிக அரியதோ ருரைநூலில் மாணிக்கவாசகர் காலம் பற்றிச் சிறப்பாய் ஏதுமெடுத்து மொழிந்ததில்லை யாயினும், அந் நூன் முகவுரையில் மாணிக்கவாசகர் ஞானசம்பந்தப் பிள்ளையார்க்கு முன்னிருந்தா ரென்பதன்கண் தமக்கு ஐயம் நிகழா நிற்கின்றதென ஓருரை குறித்துப் போயினார். இனிச், சரிதவாராய்ச்சியின் நுட்பமும், அதனை ஆயும் முறையும் அறியமாட்டாத தமிழ் ஒன்றே வல்லார் சிலர் ஞானசம்பந்தப் பிள்ளையார் நாலாயிர ஆண்டுகட்கு முன்னிருந்தா ரெனவும், மாணிக்கவாசகர் அப் பிள்ளை யார்க்கும் முன்னிருந்தா ரெனவுந், தமக்குத் தோன்றியவாறே கூறி நெகிழ்ந்துபோய் உண்மை காணாது ஒழிவர். இது நிற்க. இனி மேலே காட்டிய நால்வர் கருத்துக்களும் ஒன்றோ டொன்று பெரிதும் மாறுபட்டு மயங்கிக்கிடத்தலான், அவற்றைப் புடைபடவொற்றி யளந்தாய்ந்து யாம் எம்மறிவில் மெய்யெனக் கண்டவற்றை ஈண்டுத் தந்து காட்டுவாம். முதன் மொழிந்த போப்புத்துரை, மாணிக்கவாசகர் கி.பி. பத்தாம் நூற்றாண்டின் றொடக்கத்திலே யிருந்தா ரெனவும், அவர்க்குப் பின் ஒரு நூற்றாண்டு கழிந்து பதினோராவது நூற்றாண்டில் ஞானசம்பந்தப் பிள்ளையார் தோன்றினா ரெனவுஞ் சரிதவரம்பின் நில்லாது அதனியல் வழுவ தமக்குத் தோன்றியவாறே பெரிதும் பிழைபடக் கூறினார். சரிதவாராய்ச்சியின் மிக்குப் புலமையுடைய ஆங்கில இனத்திற் பிறந்து அவ்வாங்கில மொழிப் புலமையும் பெற்றுள்ள இத்துரை மகனார் தாமங்ஙனங் கால உறுதி செய்தற்கேற்ற ஏதுக்கள் நன்கெடுத்து மொழிந்திடாமற் சரிதவியல் பிறழத் தமக்கு வேண்டியவாறே கூறியது பற்றிப் பெரிதும் வியப்படைகின்றாம். சரிதவாராய்ச்சி யின்னதென் றறியமாட்டாத தமிழ்ப் புலவர் அங்ஙனங் கூறினாராயின், அஃது அவர்க் கிழுக்கன்றாம். அவ்வாராய்ச்சியில் முதிர்ந்த வுணர்ச்சி யுடையரான ஆங்கில மக்களே அங்ஙனம் பிறழ வுரையாடுவராயின் அது பற்றி யுலகம் அவரைப் பழியாதொழியுமோ? இதுநிற்க. டாக்டர் ஹூல் முதலான ஆங்கிலப் புலவரால் வெளியிடப் பட்டுவருந் தென்னாட்டுக் கல்வெட்டுப் பட்டையங்களானே, தேவாரத்திருமுறை வகுப்புச் செய்த நம்பியாண்டார் நம்பியோ டொருங்கிருந்த இராசராச அபயகுல சேகரசோழன் அரியணை வீற்றிருப்புப் பெற்றுச் செங்கோலோச்சி உலகு புரந்தருளத் தொடங்கிய ஆண்டு கி.பி. 984 ஆகும். வெங்கையரவர்களும் சென்னைக் கிறித்தவன் கலாசாலைப் பத்திரத்தில் அவ்வரசன் காலம் அவ்வாறாதல் சான்றுகள் பல காட்டி மிக நுட்பமாக விரித்துரைத்து நிறுத்தினார். சுந்தரம் பிள்ளையவர்களும் அக் காலவளவையை நன்காராய்ந்து பார்த்து அது பொருத்தமாவதே யாமென்று ஒருப்பட்டுத் தழுவிக் கொண்டார். ஆங்கில வித்துவான்கள் பிறரும் அதன்கண் ஐயுறவுகொள்ள இடம்பெறுகின்றிலர். இங்ஙனமெல்லாரும் ஒருங்கே தழீஇக்கொண்டு நிறுத்திய இராசராச சோழன் காலம் கி.பி. பத்தாம் நூற்றாண்டின் இறுதிக்கண்ண தாதல் இனிது விளங்குதலின், அவ்வரசன் காலத்தே முறைவகுப்புச் செய்யப்பட்டுப் பெரிதும் பெருமையுற்று வழங்கிய தேவாரப் பதிகங்களும் அவற்றை உலகுய்ய மொழிந்தருளிய குரவரும் அப் பத்தாம் நூற்றாண்டிற்கு முன் நிலவியவாறு மலைவின்றித் துணியற்பாற்று. இனி அச் சமயகுரவன்மா ருள்ளுஞ் சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் கண்ணதா மென்று கோடுமாயினும், அச் சுவாமிகளால் திருத்தொண்டத் தொகையில் நன்கெடுத்து மொழிந்திடப்பட்ட திருஞான சம்பந்த சுவாமிகள் காலம் எட்டாம் நூற்றாண்டாகவாதல் ஏழாம் நூற்றாண்டாகவாதல் கொள்ளற்பாற்றென்பது சொல்லாமலே விளங்கும். இங்ஙனஞ் சொல்லுதற்குப் பெரிதும் வாய்ப்புடைய ஞானசம்பந்தப் பிள்ளையார் காலவளவை குறித்துரையாட மாட்டாமன் மற்று அது பதினோராம் நூற்றாண்டின் கண்ணதாமென்று கூறிய போப்புத்துரை கூற்றுப் பிழையுடைத்தாதல் தெற்றென விளங்கும். அல்லதூஉம், திருமுறை வகுத்திட்ட நம்பியாண்டார் நம்பிகளும், அத் திருமுறைகளை யருளிச்செய்த சமயகுரவரும், அவருள்ளும் சுந்தரர்க்கு முன்னிருந்த பிள்ளையாரும் எல்லாம் பதினோராம் நூற்றாண்டின் கணிருந்தாரென்று கோடல் உண்மைச் சரிதவாராய்ச்சிக்கு ஒரு சிறிதும் இசையாது. ஞானசம்பந்தப் பிள்ளையார் காலம் ஏழல்ல தெட்டாம் நூற்றாண்டு ஒன்றன்கட் படுவதன்றி இரண்டினும் ஒப்பச்சேறல் கூடாமையான்,அக் காலவரையறைதான் யாதென்றறிய வேண்டுவார்க்கு அது காட்டுவாம். இனி, உண்மைச் சரிதவியல் பிறழாதுரைக்கும் பெரிய புராணஞ் சிறுத்தொண்டநாயனார் வரலாற்றில், பரஞ் சோதியா ரென்னும் பெயருடைய அச் சிறுத்தொண்டர் திருச்செங்காட்டங்குடியிற் பிறந்தவரெனவும், அவர் போர்த்தொழில் பலவுங் கற்று மிகவல்லவராய்ச் சிவபெருமான் றிருவடிக்கண் மெய்யன்பு பூண்டொழுகித் தம்மரசனிடத்துத் தண்டத் தலைமை மேற்கொண்டு அவற்கு அணுக்கரா யிருந்தாரெனவும், அங்ஙனம் அமருங்காலத்து வடநாட்டில் வாதாவி என்னும் நகர்மேற் படையெடுத்துச் சென்று அதன் மன்னனை வெற்றிகண்டு வாகைசூடித் திரும்பத் தம் நாடடைந்து தம்மரசற்குப் பெரும்புகழெய்து வித்தா ரெனவுங் கிளந்துரையா நின்ற, ஈசனடி யார்க்கென்று மியல்பான பணிசெய்தே யாசில்புகழ் மன்னவன்பா லணுக்கரா யவற்காகப் பூசன்முனைக் களிறுகைத்துப் போய்வென்று பொருமரசர் தேசங்கள் பலகொண்டு தேர்வேந்தன் பாற்சிறந்தார் மன்னவற்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாவித் தொன்னகரந் துகளாகத் துளைநெடுங்கை வரையுகைத்துப் பன்மணியு நிதிக்குவையும் பகட்டி னமும் பரித்தொகையு மின்னனவெண் ணிலகவர்ந்திங் கியலரசன் முன்கொணர்ந்தார் என்னுஞ் செய்யுட்களானே அவர் மெய்வரலாறு இனிது விளங்குதலுடன், அவர் வடபுலத்து வாதாவி என்னும் நகர்மேற் படையெடுத்துச் சென்று அதனைத் தம்மரசற்கு உரிமையாக்கினா ரென்னுஞ் சரிதநுண் பொருளும் புலப்படுவதாயிற்று. இனி, வடநாட்டின்கட் டொகுக்கப்படுங் கல்வெட்டுப் பட்டையங் களானே முதல் நரசிம்மவருமன் என்னும் அரசன் மேலேயுரைத்த வாதாவிநகரை யழித்துத் தன்கீழ்ப்படுத்தினா னென்பதும், அப்போது அந் நகர் வேந்தனாயிருந்தோன் இரண்டாம் புலிகேசன் என்பதும் பெறப்படுகின்றன. இந்த நரசிம்மவரும அரசன் பல்லவவேந்தர் மரபில் வந்தோனாவன். புலிகேசனென்னு மரசன் மேனாட்டுச் சாளுக்கியவேந்தர் மரபில் வந்தோனாவன். இனி, இப் பல்லவ வேந்தர்க்கும் மேனாட்டுச் சாளுக்கிய வேந்தர்க்கும் பலமுறையாலும் போர்கள் நிகழ்ந்தனவென்பதும் அப் பட்டையங்களானே பெறப்படும் உண்மையாம். மேலே மொழிந்த வாதாவிநகர் வெற்றி நரசிம்மவருமனை யொழித்து ஒழிந்த பல்லவ அரையர்மேற் செல்லாமையான், தம்மரசற்குத் தண்டத் தலைவராய்ப் படையெடுத்து மேற்சென்ற சிறுத்தொண்டரை அவ்வாறுடையனான வரசன் முதல் நரசிம்மவருமனே யாமென்ப தொருதலை. பெரியபுராணத்தில் இவ்வரசன் பெயர் சொல்லப்பட்ட தில்லையாயினும், வாதாவி நகரிற் காணப்படும் பல்லவ அரையன் கல்வெட்டுப் பட்டைய மொன்று அவ் வெற்றிக் குரியோன் அவ்வரசனென் றுரைக்கும் உறுதிமொழி பற்றிச் சிறுத்தொண்டர் தம் அரசன் முதல் நரசிம்மவருமனேயா மென்பது உய்த்துணர வல்லார்க்கு நன்குபுலனாம். இனி, மேலே காட்டிய இரண்டாம் புலிகேசனான மேனாட்டுச் சாளுக்கியவேந்தன் செங்கோலோச்சிய காலவளவை வடநாட்டுக் கல்வெட்டுகள் கொண்டு ஹூல் என்னுங் கல்வெட்டு ஆசிரியராற் கி.பி. 609 முதல் 642 இறுதி யாமென நன்று குறித்திடப்பட்டது. இங்ஙனம் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் றொடக்க முதல் அதனிடையளவுஞ் செங்கோலோச்சிய புலிகேசவரசனைப் புறங்கண்ட நரசிம்ம வருமன் முதலாலோனும் அந்நூற்றாண்டின் றொடக்க முதல் இடையளவும் இருந்தானா கற்பாலன். இனி அந்த நரசிம்ம வருமனென்னும் வேந்தற் குறுதுணைத் தண்டத்தலைவரான சிறுத்தொண்டரும் அந் நூற்றாண்டின் முற்பகுதியி லிருந்தாராகற்பாலர். இனி, ஞானசம்பந்தப் பிள்ளையார் திருச்செங்காட்டங் குடிக்கு எழுந்தருளிய காலையில் ஆண்டிருந்த சிறுத் தொண்டராற் றாம் பெரிதும் மெய்யன்போடு ஏற்கப்பட்டு அவரோடளவளாயினா ரென்பது, அந்நாளிற் சண்பைநகர் ஆண்டகையார் எழுந்தருள முன்னாக எதிர்கொண்டு கொடுபுகுந்து முன்னூல்சேர் பொன்மார்பிற் சிறுத்தொண்டர் புகலிகா வலனார்தம் நன்னாமச் சேவடிகள் போற்றிசைத்து நலஞ்சிறந்தார் என்பதனானும், சண்பையர்தம் பெருமானுந் தாங்கரிய பெருங்காதற் பண்புடைய சிறுத்தொண்டர் உடன்பயின்று மற்றவரை மண்பரவுந் திருப்பதிகத் தினில்வைத்துச் சிறப்பித்து நண்பருளி எழுந்தருளத் தாம்இனிது நயப்புற்றார் என்பதனானும் நன்குபெறப்படுகின்றது. இஃதல்லாமலும், ஞானசம்பந்தப் பிள்ளையார் தாமே சிறுத்தொண்ட நாயனாரைச் சிறப்பித்துச், செடிநுகருஞ் சமணர்களுஞ் சீவரத்த சாக்கியரும் படிநுகரா தயருழப்பார்க் கருளாத பண்பினான் பொடிநுகருஞ் சிறுத்தொண்டர்க் கருள்செய்யும் பொருட்டாகக் கடிநகராய் வீற்றிருந்தான் கணபதீச் சரத்தானே எனவும், செந்தண்பூம் புனல்பரந்த செங்காட்டங் குடிமேய வெந்தநீ றணிமார்பன் சிறுத்தொண்ட னவன்வேண்ட வந்தண்பூங் கலிக்காழி யடிகளையே யடிபரவுஞ் சந்தங்கொள் சம்பந்தன் றமிழுரைப்போர் தக்கோரே எனவுந் திருப்பதிகங் கட்டளையிட் டருளிய வாற்றானும் அவர் நட்பின் கிழமைத்திறந் தெற்றென உணரப்படும். இதனானே, அச் சிறுத்தொண்டரோடு ஒருகாலத்தினரான ஞானசம்பந்தப் பிள்ளையார் காலமும் ஒன்றேயாதல் பெற்றாம். பெறவே, ஞானசம்பந்தப் பிள்ளையார் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பாதியிலே இருந்தருளினாரென மலைவின்றி நிறுத்தப்பட்ட வாறு காண்க. இன்னும், திரிசிரபுர மலைமுழைஞ்சிற் காணப்படுங் கல்வெட்டுக்களானே முதல்நரசிம்மவருமன் தந்தையான குணபரனென்னும் முதல்மகேந்திரவருமன் காலத்தில் திருநாவுக்கரைய ரென்னும் அப்பர் சுவாமிகள் இருந்தா ரென்பது ஹூல் என்னுந் துரைமகனார் நிறுவிய வாற்றால் இனிது விளங்குதலின், அவ் வப்பர்சுவாமிகள் கி.பி.ஆறாம் நூற்றாண்டின் பிற்பாதியினும் ஏழாம் நூற்றாண்டின் முற்பாதியினும் இருந்தாரென்பது தேற்றமாம். இதனானே, அப்பர் சுவாமிகள் எண்பது ஆண்டளவு மிருந்தாரெனக் கூறும் தமிழ்நூல் வரலாற்றுண்மை பெரிதும் வலியுடைத்தாமாறு காண்க. இனி, எடுத்துக்கொண்ட மாணிக்கவாசகர் காலம் உறுதி செய்தற்பொருட்டு, மேலே காட்டிய அப்பர் ஞானசம்பந்தப் பெருமான் முதலியோர் காலம் கி.பி. ஆறாம் நூற்றாண்டின் பிற்பாதிமுதல் ஏழாம் நூற்றாண்டின் முற்பாதி யீறாகவா மென்பதுபெறப்படுதலின், அது கொண்டு மாணிக்கவாசகர் காலம் கி.பி. ஆறாம் நூற்றாண்டின் முற்செல்லுமாறு காட்டுவாம். அப்பர் சுவாமிகள் அருளிச்செய்த பாடிளம் பூதத்தினானும் என்னுந் திருவாரூர்ப் பதிகத்தில், நரியைக் குதிரை செய்வானும் நரகரைத் தேவு செய்வானும் விரதங்கொண் டாட வல்லானும் விச்சின்றி நாறு செய்வானும் என்னுஞ் செய்யுளில் மாணிக்கவாசகர் பொருட்டு இறைவன் நரியைக் குதிரையாக்கிய திருவிளையாடல் நன்கெடுத்துக் குறித்திடப்பட்டது. தம்பொருட்டே பெருமான் நரிகளை யெல்லாங் குதிரைகளாகத் திரித்துக் கொண்டு போதருவானா யினானென மாணிக்கவாசக சுவாமிகள், நரியைக் குதிரைப் பரியாக்கி ஞாலமெல்லாம் நிகழ்வித்து எனவும், நரிகளெல்லாம் பெருங்குதிரை யாக்கியவா றன்றேயுன் பேரருளே எனவுந், அரியொடு பிரமற் களவறி யொண்ணான் நரியைக் குதிரை யாக்கிய நன்மையும் எனவுந் தாமே தம் அருட்டிருவாயான் மொழிந் திடுதலின், இறைவன் செய்தருளிய அத் திருவிளையாடல் மாணிக்கவாசகர் பொருட்டேயாமென்பது இனிது தேறப்படும். இப்பெற்றி தேறாத ஆங்கிலமகனான இன் என்பவர் சிலப்பதிகாரத்தானும் திருவிளையாடலானும் வன்னியுங் கிணறும் அழைத்த அற்புத நிகழ்ச்சி இரண்டாதல்போல நரியைக் குதிரையாக்கிய இவ்வற்புதமும் மாணிக்கவாகர் பொருட்டென்றும் அதற்கு முன்னே நிகழ்ந்த வேறொன்றுமாக இரண்டாகலாமெனவும், அங்ஙனம் அஃதிரண்டாகவே அப்பர் சுவாமிகளாற் குறித்திட்ட அவ்வற்புத நிகழ்ச்சியும் மாணிக்கவாசகர் மேலதாமாறு இல்லையெனவுந் தமக்குத் தோன்றியவாறே அளவைவரம்பு பிறழ்ந்துஎழுதுவாராயினார். வன்னியுங் கிணறும் அழைத்த திருவிளையாடல் இரண்டாதல்போல நரியைக் குதிரையாக்கிய திருவிளையாடலும் இரண்டாகல் வேண்டுமென்னும் யாப்புறவு யாங்ஙனம் பெற்றீரெனக் கடாவுவார்க்கு அத் துரைமகன் இறுக்குமா றின்றாம். வன்னியுங் கிணறும் அழைத்த திருவிளையாடல் இரண்டாதற்கு மேற்கோள் சிலப்பதிகாரத் தினும் திருவிளை யாடலினுங் கண்டாம். அல்லதூஉம், சிலப்பதிகாரத்திற் பேசப்பட்ட `வன்னியுங் கிணறும் அழைத்த திருவிளை யாடலும் திருவிளையாடற் புராணத்திற் சொல்லப்பட்ட `வன்னியுங் கிணறும் அழைத்த திருவிளை யாடலும் வேறு வேறு என்று நாட்டுதற்குத்தான் சான்றுகள் யாவை? இருவேறு நூல்களிற் கூறப்பட்டமையானே இரண்டென்றல் யாங்ஙனம்? அது கிடக்க. நரியைக் குதிரையாக்கிய திருவிளையாடல் இரண்டாதற்கு மேற்கோள் யாண்டுங் கண்டிலம். இங்ஙனம் அளவைநெறி பிழைத் தெழுதப்படும் போலிப் பொருள்களும் ஆங்கிலமொழியில் வரையப்படுதலிற் சிறந்தெடுத்துப் பாராட்டப்படுகின்றன. அரசியன்மொழி யல்லாத தமிழ் முதலிய சொற்களிலெழுதப் படும் அரிய பெரிய உண்மைப் பொருள்களுஞ் சிறவாதொழிகின்றன. என்னை! என்னை! இம் மயக்கவுலகின் றன்மை யிருந்தவாறு! இதுகிடக்க. நரியைக் குதிரையாக்கிய திருவிளையாடல் மாணிக்க வாசகர் பொருட்டன்றிப் பிறிதாகவும் இயற்றப்பட்ட துண்டென்பதற்கு மேற்கோள் யாண்டுங் காணப்படாமை யானும், அத் திருவிளையாடல் தம்பொருட்டே நிகழ்த்தப் பட்டதென மாணிக்கவாசக சுவாமிகள் தாமே தம் அருமைத் திருவாயாற் கிளந்தெடுத்து மொழிந்தருளு தலானும் கல்லாடம் முதலான தொன்னூல்களும் அத்திருவிளையாடல் மாணிக்க வாசகர் பொருட்டே நிகழ்த்தப்பட்டதெனத் துணிவுதோன்றக் காட்டுதலானும் அத் திருவிளையாடல் பிறிதொன்றுளதெனக் கோடல் ஒருவாற்றானும் பொருந்து மாறில்லை. ஆகவே, மாணிக்கவாசகர் பொருட்டுச் செய்யப்பட்ட அத் திருவிளை யாடல் அப்பர் சுவாமிகளான் மொழிந்தருளப்பட்டமை யானே, மாணிக்கவாசகர் காலம் ஆறாம் நூற்றாண்டின் முன்னதாதல் இனிது துணியப்படுதல் காண்க. இனித், திருமலைக்கொழுந்து பிள்ளையவர்கள், மாணிக்கவாசகர் காலம் கடைச்சங்கம் நிலைபெற்று விளங்கிய கி.பி. முதனூற்றாண்டின்கட் படுவதாமெனக் கூறிய உரைப்பொருளிற் கருத்தொருப்பாடு உறுகின்றிலம். என்னை? கடைச்சங்கத்தார் காலத்துச் செய்யுளியல் வழக்கின்கட் படுவதன்றாய், அக்காலைத் தமிழில் ஒருசிறிதுங் காணப்படாத விருத்தப்பாட்டுகள் திருவாசகத்தின்கட் காணப்படுதலா னென்பது. கடைச் சங்கத்தார் செந்தமிழ்ச் செய்யுளியல் வழக்கின்கண்ணே விரவப்பெறாத விருத்தப்பாக்கள் உலகியலாறாய் மற்றுத் தமிழ்ப் புலனெறிவழக்கிற் புகப்பெறுதற்கு அச் சங்கத்தார் காலத்தின்பின் இரண்டு மூன்று நூற்றாண்டு கழிதல் வேண்டுமாகலான் மாணிக்கவாசகர் கடைச்சங்கத்தார் காலத்திருந்தாரெனக் கோடல் சரித வழுவாமென்றுணர்க. அற்றேல், விருத்தப்பாக்கள் பெருகிய செய்யுள் வழக்காய் நடைபெறுதற்குத் தொடங்கிய அப்பர் சுவாமிகளிருந்த ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியிலே மாணிக்கவாசக ரிருந்தாரெனக் கொள்ளாமோ வெனிற்; கொள்ளாம். திருவாசகத்தின்கண் விருத்தப்பாக்கள் மிக்கு விரவப் பெறாது ஒரு சிலவே காணக்கிடத்தலானும், தமிழ்ச் செய்யுளியல் வழக்கிற்கே சிறப்பானவாகிய அகவலுங் கலியும் பெரிதும் விரவிக்கிடத்தலானும் தமிழ்ச்செய்யுட்கள் முறை முறையே வழக்குவீழ்ந்து விருத்தப்பாக்கள் இடையிடையே விரவப் பெறுகின்ற காலத்தே திருவாசகம் அருளிச்செய்த மாணிக்கவாசக ரிருந்தாரெனல் ஒருதலையாம். அக்காலந் தான் யாதென்று நுணுகி நோக்குவார்க்கு அது கி.பி. மூன்றாம் நூற்றாண்டாமென்பதினிது விளங்கும். அல்லதூஉம், நக்கீரர் முதலான தெய்வப்புலவர் விளங்கிய காலத்தில் மாணிக்கவாசகர் இருந்தாராயின் தாம்அவரைக்குறித்து ஏதும் மொழிந்திடுவர்; அங்ஙனம் ஒன்றுஞ் சொல்லாமையானும், மதுரையில் ஆய்ந்த தமிழைப்பற்றிப் பேசவந்தவிடத்தும் உயர் மதிற்கூடலி னாய்ந்த வொண்டீந்தமிழின்றுறை என்று இறந்தகாலத்தா னுரைத்துக் கடைச்சங்க காலந் தமக்கு முன்னதாதல் குறிப்பான் உணரவைத்தலானும் அவர் காலமும் வேறே கடைச்சங்க காலமும் வேறே யென்பது உணரற்பாற்று. கடைச்சங்க காலத் திருந்தாராயின் உயர் மதிற்கூடலி னாயுமொண்டீந் தமிழின்றுறை என்று கூறிடுவார்; அங்ஙனங் கூறுதலாற் செய்யுள் சிதையுமாறுமின்று. இதுகிடக்க. இனிக், கல்லாடம் சங்கச்செய்யுளாகலின் அதன்கட் குறிப்பிடப்பட்ட `பிட்டுக்கு மண்சுமத்தன் முதலிய வற்றானே அவ்வற்புதங்கள் நிகழ்தற்கு ஏதுவாயிருந்த மாணிக்கவாசகர் காலம் சடைச்சங்ககாலமெனத் துணியப்படுமாம் பிறவெனின்: நன்று கடாயினாய், கல்லாடம் சங்கச் செய்யுளேயாமென்று துணிதற்கு மேற்கோள் யாண்டுங் காணப்படாமையானும், அல்லது அது சங்கச் செய்யுளென்றே கோடுமாயின் அது பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு முதலியவற்றின்கட் சேராமை யென்னையெனுங் கடா நிகழ்தலானும், சங்கச் செய்யுண் மேற்கோள்கொண்டு உரை யெழுதுவாரான இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர், நச்சினார்க் கினியர் முதலான உரையாசிரியன்மாரும் அதன்கண் மேற்கோள் கொண்டு தம்முரையிற் குறித்திடாமை யானும், சங்கத்தார் காலத்து அகவற்செய்யுள் அமைப்பிற்குங் கல்லாட வகவற்செய்யுள் அமைப்பிற்கும் வேறுபாடு பெரிது காணக்கிடத்தலானும் பிறவாற்றானுங் கல்லாட நூல் சங்கத்தார் காலத்ததாதல் செல்லாதென்பதூஉம், அக் கல்லாட நூலையே பெரியதொரு நிலைக்களனாகக்கொண்டு மாணிக்கவாசகர் காலம் உறுதிசெய்யப் புகுந்த திருமலைக் கொழுந்து பிள்ளையவர்கள் உரை வாய்ப்புடைத்தாமா றில்லையென்பதூஉம் நுணுகி யாராயவல்லார்க்கெல்லாம் நன்றுணரக்கிடக்கும். இன்னும் அவர்கள் தாமெழுதிய அவ்வுரை நூலின்கண் மேலே காட்டிய உரையாசிரியன்மார் யாருந் தம்முரையில் தேவாரத் திருப்பாட்டுகளை மேற்கோளாக மொழிந்தில்லையெனவும், சரிதமுறை பிறழாத பெரியபுராணமும் ஒரோவிடங்களில் அம்முறை வழுவுகின்ற தெனவும் பிறவுங் கூறாநிற்பர். நச்சினார்க் கினியர்க்கு முன்னிருந்தோரான பேராசிரியர் திருச்சிற்றம்பலக் கோவையாருரையில் அப்பர் சுவாமிக ளருளிச்செய்த, அண்ட மாரிரு ளூடு கடந்தும்ப ருண்டு போலுமோ ரொண்சுட ரச்சுடர் கண்டிங் காரறி வாரறி வாரெல்லாம் வெண்டிங் கட்கண்ணி வேதிய னென்பரே என்னுந் திருப்பாட்டை எடுத்துக் காட்டுதலானே உரையாசிரியர் யாருந் தேவாரத்திருப்பாட்டை மேற்கோளாக எடுத்து மொழிந்திலரென்னும் உரை பொருத்தமின்றாமாறுணர்க. இனி, அக் கல்லாடநூல் `நரியைக் குதிரையாக்கிய தனை 44 ஆவது செய்யுளினும், பாணபத்திரர் பொருட்டு விறகு தலையனாய்ச் சென்று இசைபாடினதனை 45 ஆவது செய்யுளினும், `வையையடைக்க மண்சுமந்ததனை 49 ஆவது செய்யுளினும், `மூர்த்தி நாயனார் முழங்கை தேய்த்த திருத்தொண்டினை 57 ஆவது செய்யுளினும், `சாக்கிய நாயனார் திருத்தொண்டினை 68 ஆவது செய்யுளினும், `இடைக்காடன் பிணக்குத் தீர்த்ததனையும் `காரைக் காலம்மையார் திருவாலங் காட்டிற் றிருநடங் கண்டதனையும் 78 ஆவது செய்யுளினும், `காரைக்காலம்மை மாங்கனியால் வீடு பெற்றமையினை 101 ஆவது செய்யுளினும், இவற்றினும் பழைய திருவிளை யாடல்கள் பலவற்றை இடையிடையே பல செய்யுட்களினும் அன்பால் என்பு நெக்குருக எடுத்தோதியவாறு போலச், சிவபெருமான் திருவருள் பெற்றோரிற் றலை சிறந்து நிற்கும் அப்பர் சம்பந்தர் சுந்தரர் முதலான ஏனைமூவரை ஒருசிறிதுங் குறிப்பிடாமையால், அக் கல்லாட நூல் அம்மூவர்க்கும் முற்பட்டதென்பது நன்கு பெறப்படும். அந்நூலாசிரியர் சிவபெருமானிடத்தும், அவனடியா ரிடத்தும் பேரன்புடையராகக் காணப்படுதலால், அவர் அம் மூவர்க்கும் பின்னிருந்தனராயின் அவர் நிகழ்த்திய அற்புதங்களை ஒருசிறிதாயினுங் கூறாது விடார். மற்று அம் மூவரைப் பற்றிய குறிப்புச் சிறிதுங் கூறாமைகொண்டே அவர் அவர்க்கு முன்னிருந்தாரென்பது ஒருதலையாகத் துணியப்படும் என்க. அங்ஙனமாயின், `திருஞானசம்பந்தப் பெருமான் வெப்புநோய் தீர்த்தமை அறுபத்து நான்கு திருவிளையாடல்களுள் ஒன்றாய் இருத்தலானும், கல்லாடத்துள் எட்டெட் டியற்றிய கட்டமர் சடையோன் என அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் குறிப்பிடப்பட்டிருத்தலானும் அந்நூல் திருஞான சம்பந்தர்க்கும் பிற்பட்டதாதல் பெறப்படு மாலோ வெனின்; மாணிக்கவாசகப் பெருமான் திருவாசகத்திற் குறிப்பிட்ட பல திருவிளையாடல்கள் பெரும்பற்றப்புலியூர் நம்பியார் திருவிளையாடற் புராணத்திலும், பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணத்தினுங் காணப் படாமையானும், இவ்விரு புராணங்களிற் காணப்பட்டனவும் ஒன்றிலுள்ளவாறு பிறிதொன்றில் காணப்படாமல் ஒன்றில் ஒருவாறாயும் பிறிதொன்றிற் பிறிதொருவாறாயும் இருப்பக் காண்டலானும், இறைவனே இயற்றிய திருவிளையாடல்களி னிடையே திருஞானசம்பந்தப் பெருமா னியற்றிய அற்புதங் களையுங் கோத்தற்கு ஓரியைபு இன்மையானும் கல்லாடத்துட் குறிப்பிடப்பட்ட பழைய திருவிளையாடல்கள் அறுபத்து நான்கனுள் திருஞானசம்பந்தப் பெருமான் அவற்றிற்குப் பிற்காலத்தே நிகழ்த்திய அற்புதங்கள் சேர்ந்திலவென்பது தேற்றமாமென்க. இவ்வாற்றால், கல்லாட நூல்அப்பர் ஞானசம்பந்தர் முதலான மூவர் காலத்திற்கு முன்னும், மாணிக்கவாசகர் காரைக்காலம்மையார் காலத்திற்குப் பின்னும் எழுதப் பட்டதொன்றாதல் நன்கு பெறப்படுதலின் கி.பி. ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டின் கண்ணதான அக்கல்லாட நூலையே கருவியாகக் கொண்டு மாணிக்கவாசகர் கடைச்சங்கம் நிலைபெற்று விளங்கியஞான் றிருந்தாரெனக் கூறுதல் ஒரு சிறிதும் ஏலா வுரையாமென்பதும், அந்நூல் கொண்டு அவர் ஐந்தாம் நூற்றாண்டிற்கு முன்னிருந்தா ரெனல் மட்டும் இனிது விளங்குமா மென்பதும் பெறப்படும். இது கிடக்க. இனி, ஆங்கில மகனான இன் என்பவர் ஞான சம்பந்தர் முதலான குரவன்மார் மூவருள் யாரும் மாணிக்கவாசகரைத் தம்பதிகத்துட் கிளந்தெடுத்துக் குறித்திடாமை யான் அவர் அம் மூவர்க்கும் பின்னிருந்தா ரென்பது உய்த்துணரற்பாற்றென மொழிந்ததூஉம் பொருந்தாது. யாம் மேலே காட்டிய நரியைக் குதிரை செய்வானும் நரகரைத் தேவு செய்வானும் என்பதும், மணியார் வைகைத் திருக்கோட்டின் நின்றதோர் திறமுந் தோன்றும் என்பதும் அப்பர் சுவாமிகள் திருப்பாட்டுகளாக லானும், மாணிக்கவாசகர் பொருட்டியற்றப்பட்ட திருவிளை யாடல்கள் அவற்றிற் காணப்படுதலானும் மாணிக்கவாசகர் அக்குரவன்மார் எவரானும் மொழியப்படவில்லை என்பது யாண்டையதென் றொழிக. அற்றன்று, முன்னைக்காலத்துச் சிவனடியார் தம்மையெல்லாந் தொகுத்தோதி வழுத்துவான் புகுந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் மாணிக்கவாசகரையும் அங்ஙனம் எடுத்துமொழிந்த தில்லையாலோ வெனின்; நன்றே வினாயினாய், `அதெந்துவே `வேசறு என்னும் வடுகுமொழிச் சொற்களும், வடுகர் நாட்டிலுள்ள `மகேந்திர வெற்பைப்பற்றிய குறிப்பும் திருவாசகத்தின்கட் காணப்படு தலானும், வீரசைவர் தமது திருமேனிக்கட் சிவலிங்கம் பூணுங்குறிப்பு `என் னுடலிங்கொண்டாய் என்னுஞ் சொற்றொடராற் பெறப்படுதலானும் மாணிக்கவாசகர் வடுகநாட்டு வீரசைவ குலத்துப் பிறந்த பெரியாரென்பது பெறப்படுகின்றது. வீரசைவநெறி பிழையாது நின்று சிவ வழிபாடியற்றிச் சிவபிரான் திருவடிப் பெரும்பேறு தலைக்கூடிய அவரைச் சித்தாந்த சைவ மரபின்கட் டோன்றிச் சித்தாந்த சைவத் துறைவழிநின்று இறைப்பணி பேணிய சுந்தரமூர்த்தி சுவாமிகள், சித்தாந்த சைவத்துறை வழி நின்று அங்ஙனமே இறைவன் றிருவருணெறி தலைக்கூடிய ஏனைச் சித்தாந்த சைவப் பெரியாரைத் தொகுத்தோதுந் தந் திருப்பதிகத்தினுட் கிளந்தெடுத்துக் கூறுதற்கு அமர்ந்திலராய்ப், பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன் என்பதனாற் குறிப்பாற் கொள வைத்துக் கூறியருளினார். `பொய்யடிமையில்லாத புலவர் என்பது தொகையடியாரைக் குறிப்பதென நம்பி யாண்டார் நம்பி கூறினாரேனும், அச் சொற்றொடர் தனியடியாரைக் கூறுந் திருப்பாட்டின்கட் காணப்படுதலானும், தொகையடி யாரையே ஒருங்கு தொகுத்தோதும் பத்தராய்ப் பணிவார்கள் என்னும் பாட்டு வேறு தனியே யுண்மையானும், சேக்கிழாரும் `பொய்யடிமை யில்லாத புலவரைத் தொகை யடியாரெனக் கிளந்து கூறாமையானும் அச் சொற்றொடர் மாணிக்க வாசகரையே குறிக்குமென்றல் இழுக்காது. மாணிக்கவாசக சுவாமிகள் வீரசைவ மரபிற்குரிய ரேயா மென்பது வீரசைவ மரபினருந் துறவோரும் மாணிக்க வாசகரைத் தம் முதல் ஆசிரியராய்க் கொண்டு அவர்அருளிச் செய்த திருவாசகத்தைத் தமக்குரிய முதன்முறையாய் வைத்துப் பண்டுதொட்டு வழிபாடு ஆற்றி வருதலானும், புதுச்சேரி முதலான இடங்களிலுள்ள வீரசைவ மடாதீனங்களெல்லாம் மாணிக்கவாசகர் பெயர் கொண்டே நிலவுதலானும் இனிது துணியப்படும். இப்பெற்றி தேறாத சைவசித்தாந்த நன்மக்களில் ஒரு சிலர் நடுநிலை திறம்பி மாணிக்கவாசக சுவாமிகளைத் தமிழ் நாட்டுச் சைவசித்தாந்த மரபின்கட் டோன்றியவரேயா மெனக் கொண்டு, ஏனைச் சைவசித்தாந்த குரவன்மார் அவரைத் தந் திருப்பதிகங்களுட் கிளந்து குறிப்பிடாமை யென்னையென்று எதிர் கடவுவார்க்குச் செவ்வனே இறுக்க லாகாமையின் ஏதேதோ தமக்குத் தோன்றியவாறெல்லாங் கூறிப்பெரிதும் இடர்ப்படுவாராயினர். சமயங் கடந்த நிலையாய் விளங்கும் மெய்கண்ட சித்தாந்த மரபுபேணும் நல்வினை பெரிதுடையோ மாயினும், நடுநிலை பிறழாது உண்மைப் பொருளை யுலகிற்குள்ளவாறு தெளித்தல் வேண்டுமென்னும் மனவுறுதிப்பாடுகொண்டு மாணிக்கவாசக சுவாமிகள் சரிதத்தை உண்மையாராய்ச்சி செய்து, அவ் வாராய்ச்சியில் யாம் மெய்யெனத் துணிந்துகண்ட பொருட் கூறுபாடு பற்றி அச் சுவாமிகள் வீரசைவ மரபினரேயாமென உலகிற்கு அறிவிக்குந் துணிபுடைய மானோம். இதனைக் காணும் சைவசித்தாந்தச் செல்வர்கள் இதுபற்றி நம்மேற் கதுமென வெகுளாது, அதனைப் பொறுமையுடன் ஆய்ந்து பார்த்துத் தம் உண்மைக் கருத்தை யுலகின்கண் வெளிப்படுப்பார்களாக! எப்பொரு ளெத்தன்மைத் தாயினு மப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு என்னுந் திருக்குறள் உண்மை கடைப்பிடிக்க வல்லார்க்கே யாங்கூறிய உரை வாய்மை நன்கு புலப்படா நிற்கும். இனி, மாணிக்கவாசக சுவாமிகள் அங்ஙனம் வீரசைவ மரபின்கட் பிறந்தாராயினுஞ் சைவசித்தாந்த முடிபொரு ளுணர்ந்து அப் பொருணெறி வழாதொழுகிச் சிவவழிபாடியற்றிச் சிவமுத்தி தலைக்கூடினாரென்பது அவர் அருளிச்செய்த திருவாசகத் திருமுறையானே நன்கு பெறப்படுதலின், அவர் வீரசைவ மரபின்கட் பிறந்தா ரென்பது பற்றி ஈண்டைக் காவதோ ரிழுக்கில்லையென விடுக்க. அற்றேற், சுந்தரமூர்த்தி சுவாமிகள் அவர்தம் மரபின்வழி கருதாமல் அவரைத் தந் திருப்பதிகத்திற் கிளந்தோதவமையுமாம் பிறவெனின்; அற்றன்று, சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலத்தே மல்கிக்கிடந்த வீரசைவ மரபினர் மாணிக்கவாசகரைத் தமக்குரிய குரவராகக் கொண்டு பேணி வழிபட்டு வந்தார்களாதலின் அவர் தம்மைத் தந் திருப்பதிகத்தினுட் கிளந்தோத ஒருப்பட்டிலா. வீரசைவத்தைப் பற்றிய குறிப்பு காமிகம், சுவாயம்புவம், சுப்பிரபேதம், வீரம் முதலான சிவாகமங்களிற் காணப் படலானும், வீரசைவர் கொள்கையாகிய சிவாத்து விதத்தை இனிது விளக்கலாற் சங்கரபாடியத்திற்கும் முற்பட்ட நீலகண்டபாடியம் சிவாத்துவித பாடியமென வழங்கப் படலானும், எல்லா வழிபாட்டினும் முற்பட்ட சிவலிங்க வழிபாட்டைக் கடைப்பிடியாய்ச் செய்து வருதலோடு சிவலிங்க வடிவினைத் தம துடம்பின் மிசையும் அணிந் திருத்தல்பற்றி வீரசைவர் `இலிங்கிகள் எனப் பண்டு தொட்டே பெயர் பெறலாயினா ரென்பது சங்கம் மருவிய பழைய நூலாகிய திரிகடுகத்தில் சொல்வென்றி வேண்டும் இலிங்கியும் எனப்போந்த குறிப்பால் நன்குவிளங்கலானும், தொன்றுதொட்டு இன்றுகாறுந் தெலுங்கு, கன்னடம் முதலான நாடுகளிலுள்ளார் பலரும் வீரசைவராகவே யிருப்பக் காண்டலானும் வீரசைவம் மிகப் பழைய காலத்ததென்பது திண்ணமாமென்க. முற்காலத்தில் வீரசைவ மரபினர் பெருக்கமுற்றிருந்தாரென்பதற்குப் பிரபுலிங்கலீலை, இலிங்கபுராணம், வசவபுராணம் முதலான நூல்களும் சான்றாம். அற்றேல், நம்பியாண்டார் நம்பிகள் தாந் திருமுறை வகுப்புச் செய்தருளிய காலத்தில் திருவாசகத்தை ஏனைக் குரவன்மார் அருளிச்செய்த திருமுறைகளோடு ஒருங்கு வைத்து எட்டாந் திருமுறையாக வகுத்தவா றென்னையெனின், நம்பியாண்டார் நம்பிகள் காலத்தே வீரசைவ மரபு சுருங்கி வருதலானும், திருவாசகத்தின்கட் காணப்படுஞ் சொன்னயம் பொருணயங்களுஞ் சித்தாந்த சைவக் கோட்பாடுகளும் எல்லாரானும் பெரிதும் போற்றப்பட்டு வருதலின் அதன்கட் காணப்படும் வீரசைவப் பொருணுட்பங்கள் உணர்வாரின்மை யால் மறைந்து போதலானும், சித்தாந்த சைவரெல்லாரும் அத் திருவாசகந் தமக்குமுரியதென்று போற்றுதலானும் அதனை அவ்வாறு எட்டாந் திருமுறையாகக் கோத்தாரென உரைக்க. இங்ஙனமாகலின், ஏனைக் குரவன்மார் தந் திருப்பதிகங்களுள் அவரைக் கிளர்ந்தெடுத்து மொழிந்திடாமை கொண்டே அவர் அக்குரவன்மார் மூவர்க்கும் பின்னிருந்தாரெனக் கூறுதல் போலியா யொழியு மென்பது. இதுகிடக்க. இனி, யாம் மேலே விளக்கிய உரையின்கட் சிலர் கருத்தொருப்பாடிலராய் யாம் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்பாரோடொத்து, ஏனைக் குரவன்மார் மூவரும் மாணிக்கவாசகரைத் தந் திருப்பதிகங்களுட் கிளந்தெடுத்துக் கூறாமையான் அவர் அம் மூவர்க்கும் பின்னிருந்தமை தேற்றமாமென வுரைப்பர். அற்றேல், அம் மூவர்க்கும் பின்னிருந்த மாணிக்கவாசகர் தாமருளிச்செய்த திருவாசகந் திருக்கோவையாருள் அம் மூவரையுங் குறிப்பிட்டு ஏதுமுறை யாமை யென்னையென எதிர்கடாவு வார்க்கு அவர் விடுக்குமா றறிதுயாது விழிக்கு நீரராவராகலின், அங்ஙனம் அழிவழக்குப் பேசுதல் பெரியதோர் ஏதமா மென்றுணர்ந்து கொள்க. அல்லதூஉம், திருவாசகந் திருக்கோவையாரின்கட் காணப்படுந் தமிழ்ப் புலனெறி வழக்கிற்கும், தேவாரத் திருமுறையின் றமிழ்ப் புலனெறி வழக்கிற்கும் வேறுபாடு பெரிதாகலானும், அவற்றுள்ளும் முன்னையவற்றில் தமிழ்த்தொன்மை வழக்கே பெரும் பான்மையும் பயின்று வருதலானும், அவ்விருவகை வழக்கிற்கும் இடையிட்ட காலம் சிறியதாதல் செல்லாது. தமிழ்த்தொன்மை வழக்கே தழீஇ வந்த திருவாசகந் திருக்கோவையாரென்பன, தமிழ்ப் புதுவழக்கு இடை யிடையே விராய்வந்த தேவாரத் திருமுறைக்குப் பின்னெழு ந்தன வென்றல் பெரியதொரு தலைதடுமாற்றமாய் அங்ஙனங் கூறிடுவார் தமிழ்வழக்கு ஒருசிறிதும் அறியாரென்பதனைப் பெறுவிக்கும். ஆகலின், அவ்வாறு கூறுதல் எவ்வாற்றானும் பொருத்த மில்லாத போலியுரையா மென்க. மாணிக்கவாசகர் காலம் இரண்டாம் பகுதி நமது `ஞானசாகரப் பத்திரிகையின் முதற் பதுமத்தில் சைவ சமயாசிரியரான ஸ்ரீமந் மாணிக்கவாசக சுவாமிகள் காலம் இற்றைக்கு ஆயிரத்தைந்நூறு வருடங்களுக்கு முற்பட்டதா மென்பதும், அவர் திருஞான சம்பந்த மூர்த்திகள், திருநாவுக்கரசுகள், சுந்தரமூர்த்திகள் என்னும் ஏனைச் சைவகுரவன்மார் எல்லார்க்கும் முற்பட்ட வராவரென்பதும் இஞ்ஞான்றைச் சரித்திர ஆராய்ச்சிமுறை வழுவாது ஆய்ந்து தெற்றென விளக்கினாம். ஞானசாகரத்தில் இங்ஙனம் நிலைபெற நாட்டிய கால நிலையைப் பின்னும் ஆங்கிலமுணர்ந்தாரும் தெரிந்துகொள்ளல் வேண்டி அதனை ஆங்கில மொழியினும் எழுதி எமது கலாசாலைப் போதகாசிரியரால் நடாத்தப்படும் `சென்னைக் கிறித்துவ கலாசாலைப் பத்திரிகையினும் பிரகடனஞ் செய்வித்தேம். அதன்பிற் சில வருடங்கழித்து ஸ்ரீ. து.அ. கோபிநாதராவ் என்பவர் தாமும் மாணிக்கவாசகர் காலத்தை நிலை பெறுத்துவான் புகுந்து ஆங்கிலத்தில் ஒன்றெழுதி அதனையும் எங்கள் சென்னைக் கிறித்துவ கலாசாலைப் பத்திரிகையில் வெளியிடுவித்தார். ராவ் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய அதனையே தஞ்சையிற் பிரசுரமான `தமிழகம் என்னும் பத்திரிகையில் அதன் பத்திராசிரியர் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவித்தார். அது நிற்க இனிக் கோபிநாத ராவ் அவர்கள், மாணிக்கவாசகர் காலம் நாட்டுதற்குக் காட்டிய காரணங்கள் சரித்திரமுறைக்கும், தருக்க முறைக்கும் இணங்காதவனவாய்ப் பிழைபடுதலின், அவற்றின் பிழைபாடுகளை நெறியே வகுத்துக் காட்டி, அப்பெருமான் காலம் யாம் நிறுவியவாறே நிலைபெறுவதா மென்பதனை ஈண்டு வலியுறுத்துதற்குப் புகுகின்றேம். இ. மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் முதலான ஏனை ஆசிரியன்மார் மூவர்க்கும் பிற்பட்டவர் என்று நாட்டுதலே ராவ் அவர்களது கொள்கையாம். அஃதேனெனில், மாணிக்கவாசகர் அம்மூவர்க்கும் முற்பட்ட வராயின், பின்னையோரான அம்மூவரும் தாமருளிச் செய்த தேவாரத் திருப்பதிகங்களில் முன்னையோரான மாணிக்கவாசகரைக் குறிப்பிட்டு ஏதேனும் மொழிந்திடு வாராகலினென்க. அற்றேல், நரியைக் குதிரை செய்வானும் நரகரைத் தேவுசெய்வானும் என்று திருநாவுக் கரையர் திருவாக்கிற் போன்ற குறிப்பே மாணிக்கவாசகரைப் பற்றி அவர் கூறினமைக்குப் போதிய சான்றாம் என்பாரை மறுத்தற் பொருட்டு ராவ் அவர்கள் நரியைக் குதிரையாக்கிய திருவிளையாடல் மாணிக்கவாசரைப் பற்றியதாகாதென்று ஆசங்கிக்கின்றார். அத்திருவிளையாடல் அவர் மேற்றாக வைத்துக் கூறிய வாதவூர் புராணஉரையும் திருவிளையாடற் புராணவுரையும் கொள்ளற் பாலன வல்லவென்றும், அதனைத் தம் பொருட்டாகவே சிவபெருமான் நிகழ்த்தினாரென மாணிக்கவாசகர் தாமே தமது திருவாக்கிற் கூறிற்றில ரென்றும் நரியைக் குதிரை செய்வானும் என்னுந் தேவாரத்தில் முதலது மாத்திரம் மாணிக்கவாசகர்பால தாயின் நரகரைத் தேவு செய்வானும் விரதங்கொண்டாட வல்லானும் என்றர் றொடக்கத்தனவாகப் பின்வருவன வெல்லாம் வேறெவர் பொருட்டாக நிகழ்த்தப்பட்டன வென்றும் மேலும் மேலும் வற்புறுத்து மொழிந்தார். இனித் திருவாசகத்தை ஒருமுறை உற்றுநோக்கு வார்க்கும் நரிபரியான திருவிளையாடல் தம் பொருட் டாகவே சிவபெருமான் நிகழ்த்தினாரென மாணிக்கவாசகர் பலவிடத்துங் கூறுதல் வெள்ளிடை மலைபோல் விளங்கிக் கிடப்பவும், ராவ் அவர்கள் அதனை அறியமாட்டாது ஆசங்கித்தல் பெரிது வியப்புடைத்தாம். ஒருங்குதிரை உலவுசடை உடையானே நரிகளெல்லாம், பெருங்குதிரை பாக்கியவா றன்றேஉன் பேரருளே என்பது `சிவபெருமானே, நீ எனக்குச் செய்த பேரருட்டிறமானது நரிகளை யெல்லாம் பெரிய குதிரைகளாகத் திரிபுசெய்த திருவிளையாட்டானே விளங்கிக் கிடத்தன்றோ? என மாணிக்க வாசக சுவாமிகள் கூறினதை இனியேனும் உணர்வாராக. இதன்கண் `என்பொருட்டு என்னுஞ் சொற் பிரயோகம் வந்ததில்லை யாலோவெனின்; செய்யுட்பொருள் போகுமுறையால் `என்பொருட்டு என்பது எளிதிற் பெறக்கிடத்தலால் அங்ஙனம் உசாவுதல் பொருந்தாதென்க. சிவபெருமான் நிகழ்த்திய ஏனைத் திருவிளையாடல்களைப் பற்றிப் பேசுமிடத்தெல்லாம், இறைவனை முன்னிலைப் படுத்து விதந்து கூறாத மாணிக்கவாசகப் பெருமான் ஈண்டு `உன் பேர் அருள் என முன்னிலைப் படுத்து `நரிகளெல்லாம் பெருங்குதிரை யாக்கிய வாறன்றே என்று கிளந்தெடுத்துக் கூறியவாற்றானே, `எனக்குச் செய்த உன் பேரருள் நரிகளை யெல்லாம் குதிரைகளாக்கிய வகையான அன்றே விளங்கியது என்பதே அதற்கு மெய்ப்பொருள் எனல் செய்யுட் பொருள்கோண் முறை அறிவார்க்கெல்லாம் தெற்றென விளங்கிக் கிடந்தது. இதற்கிதுவே மெய்ப்பொரு ளாவாது, மாணிக்கவாசக சுவாமிகள் பிறாண்டுங்கூறிய, தெரிவர நின்றுருக்கிப் பரிமேற்கொண்ட சேவகனார், ஒருவரையன்றி யுருவறியா தென்றனுள்ளமதே பாய்பரிமேல் கொண்டென் உள்ளங் கவர்வரால் பரிமேற் கொண்டு நமையாண்டான் என்றற் றொடக்கத்து உபப்பிருங்கண வாக்கியங்களானும் இனிது துணியப்படும். நரியைக் குதிரையாகச் செய்து அக் குதிரைமே லிவர்ந்து போந்த பெருமானதுசகளமங்கள அருட் கோலத்தினையே என்மனம் நினைவதன்றிப் பிறிதோருருவத்தினை நினைய மாட்டாதென்று சுவாமிகள் வலிபெறுத்திக் கூறியவாற்றானே அத் திருவிளையாடல் அவர் தம் பொருட்டே நிகழ்த்தப் பட்ட தென்பது இனிது புலப்படவில்லையா? அற்றேலஃதாக, மேலைத் திருவாக்குகளில் `பரிமேல்வந்தார் எனக் கூறியதன்றி நரியையே குதிரையாகக் கொண்டு வந்தா ரென்பது சொலப்பட்ட தில்லையா லொவெனின்; நன்று கடாயினாய்; நரியைக் குதிரைப் பரியாக்கி ஞாலமெல்லாம் நிகழ்வித்துப், பெரியதென்னன் மதுரையெல்லாம் பிச்சதேற்று பெருந்துறையான் என்றும், அரியொடு பிரமற் களவறி யொண்ணான் நரியைக் குதிரை யாக்கிய நன்மையும் ஆண்டுகொண் டருள அழகுறு திருவடி பாண்டியன் றனக்குப் பரிமா விற்று ஈண்டு கனக மிசையப் பெறாஅது ஆண்டா னெங்கோ னருள்வழி யிருப்பத் தூண்டு சோதி தோற்றிய தொன்மையும் என்றும் சுவாமிகள் பிறாண்டும் ஓதிய ஏனை உபப்பிருங்கண வாக்கியங்களால், இறைவன் மதுரையிற் கொண்டுவந்த பரிகள் எல்லாம் நரிகளா லாக்கினவே யாமாவது நன்கு தெளியப் படுமென்க; அல்லதூஉம், அங்ஙனம் நரிகளை யெல்லாம் பரிகளாக்கிக் கொணர்ந்தவர் பெருந்துறையிற் குருந்தமர நீழலிற் குருவடியாய் எழுந்தருளித் தமக்கு அனுக்கிரகித்த இறைவனே என்பது பொள்ளெனப் புலப்பட மாணிக்கவாசகர் `பெருந் துறையான் எனவுங் கிளந்தெடுத்துக் கூறினாராகலின், நரிபரியான திருவிளையாடல் மாணிக்கவாசக சுவாமிகள் பொருட்டே நிகழ்த்தப்பட்ட தென்னும் உண்மை மலையரண் போல் நிலைபெற நிற்றல் காண்க. இத்துணை நுட்பமும் ஒருங்குணர்ந்து அத்திருவிளையாடல் மாணிக்க வாசகர் பாலதாக வைத்துக் கூறிய ஆன்றோர் தொல்வழக்குரைப் பொருளோடு, பெரிதும் மாறு கோளுற்றுக்கூறியதன்மேலும் அமையாது, அவர் தம்மைத், தாம்பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று பிடிவாதமாய்ச் சாதிப்பார் என்று இகழ்ந்து கூறிய ராவ் அவர்கள் அறியாமையை என்னென்பேம்! இனி, நரியைக் குதிரைசெய்வானும் என்னும் அப்பர் திருவாக்கில் வேறுகூட்டிச் சொல்லப்பட்ட `நரகரைத் தேவு செய்வானும் விரதங் கொண்டாட வல்லானும் விச்சின்றி நாறுசெய்வானும் என்றற் றொடக்கத்துப் பிற லீலைகள் எவர் பொருட்டுச் செய்யப்பட்டன? என்று ராவ் அவர்கள் வினாவுகின்றனர். பிறவகையிற் பிறர் பொருட்டுச் செய்யப் பட்ட ஏனை லீலைகளைக் குறித்து இங்ஙனம் வினா நிகழ்த்தல் எடுத்த பொருளுக்குச் சிறிதும் இயைபுடைத் தாகாமை அவர் உணராததென்னை? மாணிக்கவாசகர் பொருட்டு நிகழ்ந்த நரிபரித் திருவிளையாடலை அப்பர் கூறியதனானே, அதனோடு உடன் தொகுத்துக் கூறப்பட்ட ஏனையவும் மாணிக்கவாசகர் பாலனவாகக் கூறவேண்டு மென்பது ராவ் அவர்கள் கருத்துப்போலும்! இத் தருக்கமுறை அழகிது! அழகிது! அன்பர்கள் பொருட்டு இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல் மாட்சியினைத் தொகுக்கப் புகுந்த திருநாவுக்கரசு சுவாமிகள், மாணிக்க வாசகர் பொருட்டும் பிறர்பொருட்டும் நிகழ்ந்தன கலந்தெடுத்துக் கூறினாரன்றி, அன்பர் ஒருவர்க்கே நிகழ்த்திய லீலையெல்லாம் கூறுவேனெனக் கருதிக் கூறப்புகுந்தாரல்லர். இது தானும் பிரித்துணரவல்ல தமிழ்மொழிப் பயிற்சி பெறாது, அரும் பெருந் தமிழ் நூல்களை ஆய்ந்து காலவளவை வரையறுப்பே மெனப் புகுவார் திறம் அறிவுடையார் கண்டு நகையாடுதற்கே ஏதுவாமென்றொழிக. எனவே அப்பர் சுவாமிகள் தமது திருவாக்கிற் குறித்துரை காட்டிய நரியைக் குதிரை செய்வானும் என்னுந் திருவிளையாடல் மாணிக்க வாசக சுவாமிகள் பொருட்டு நிகழ்ந்ததனையே காட்டுவதாகு மன்றிப் பிறிதாக மாட்டாதென்பது நிறுவப்பட்டது. இனி அவர் கூறிய ஏனைக் காரணங்களையும் முறையே ஆய்ந்து செல்வாம். இனி ராவ் அவர்கள் சிலாசாசன ஆராய்ச்சி வகையிலும் மாணிக்கவாசகர் ஏனை மூவர்க்கும் பிந்தியவராய்க் காணப்படுகின்றார் எனக் காட்டப் புகுந்து இத்தேயத்தின் கட் பல விடங்களினுங் காணப்படுங் கல்வெட்டுகளில் இவரது பெயர் காணப்படாமையானும், சிறுத்தொண்டர் சீராளதேவர் முதலாயினாரை யெல்லாம் குறிப்புச் செய்த இராசராச சோழன் இவரை அங்ஙனங் குறிப்புச் செய்யாமையானும் சுவாமிகள் காலம் பிற்பட்டதாதல் ஒருதலை என்கின்றார். இனி, இவருரைகூற்றுப் பொருத்தமின் றென்பது காட்டுவாம். அரசாங்கத்தார் சென்றசில வருடங்களாகவே ஆங்காங்குள்ள கல்வெட்டுகளைப் பிரதிசெய்து போதருகின்றா ரென்பதும், இன்னும் இத் தென்னிந்திய நாட்டிற்பிரதி செய்யப்படாது கிடக்கின்ற கல்வெட்டுகள் பல்லாயிரக் கணக்காக இருக்கின்றன வென்பதும் எல்லாரும் அறிந்தனவே யாம். இத் தென்னிந்தியாவிலுள்ள கல்வெட்டுகள் அனைத்தும் பிரதிசெய்து வெளியிடப் பட்டிருப்பினன்றே அவை தம்மிற் சிலவற்றிலேனும் மாணிக்கவாசகர் பெயர் காணப்பட வில்லையே என்று வினாவலாம்? வெளிவாரதவற்றில் அவர் பெயர் இருப்பினும் இருக்கலாம். ஆகையால், கல்வெட் டாராய்ச்சி அரைகுறையாயிருக்கும் இந் நாளில்அங்ஙனந் துணிபுரை நாட்டுதல் போலியாமென்க. அல்லதூஉம், கும்பகோணத்துக்கு அருகாமையிலுள்ள திருவலஞ்சுழிக் கல்வெட்டொன்றில் மாணிக்கவாசகர் பெயர் காணப்படுகின்றதென் றுரைத்த ராவ் அவர்கள், அக் கல்வெட்டின் காலவளவையும் அதன் வரலாறும் கூறாது விட்டது என்னையோ? திருவலஞ்சுழிக் கல்வெட்டு மிகப் பழையதாதல் பற்றி அதனை விவரித்துரைப்பிற் றமது கொள்கை புரைபடுமெனக் கருதி விட்டார்போலு மென எமக்கு ஐயம் நிகழாநிற்கின்றது அது நிற்க. அல்லதூஉம், சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட். சென்னி,சேரலாதன், ஆலங்கானத்திற் போர்வென்ற பாண்டியர் நெடுஞ்செழியன், சேரன் செங்குட்டுவன் என்றற்றொடக்கத்துப் பழைய தமிழ்மன்னர் பெயரும், நக்கீரர், கபிலர், பரணர், மாங்குடி மருதனார் என்றற் றொடக்கத்துத் தமிழ் நல்லிசைப் புலவர் பெயரும் பொறித்த கல்வெட்டுகள் காணப் படாமைபற்றி அவரெல்லாம் பிற்காலத்திருந்தனரென ராவ் அவர்கள் கூறப்பெறுவரோ? பண்டைக்காலத்துத் தண்டமிழ் வளஞ்சிறக்க இலக்கண இலக்கிய நூல்கள் பரக்கக்கற்றும் பலப்பல புதிது புதிதா இயற்றியும் வந்தமையானே, அந் நூல்களால் அம் மன்னர் புலவர் முதலாயினர் பெயர் பதிக்கப்பட்டு இன்றுகாறும் வழங்கி வரலாயின. இலக்கண இலக்கிய நூல் வழக்கின்றி நாகரிகக்குறைவுள்ள காலத்தின் மாத்திரமே மன்னர்கள் தம் பெயரும் தம் கொடைத் திறமும் மறையாதிருத்தற் பொருட்டுக் கல்வெட்டுகள் தோற்றுவிப்பர். யாங் கூறுவதே உண்மைப்பொரு ளென்றற்குத் தமிழ்வளம்மிக்க பண்டைநாட் டமிழ்மன்னர் கல்வெட்டுகள் இதுகாறும் வெளிவராமையே உறுஞ் சான்றாம். மற்று இவ்வாறன்றி, இராசராச சோழன் முதலிய பிற்காலமன்னர் காலத்தே தமிழ்க்கல்விவளஞ் சுருங்கிப்போக, மிலேச்சவரசர் பலர் அலைமேலலை புகுந்தாற்போல இடையிடையே படை யெடுத்து வந்து இந்திய மக்களை நலிந்து குழப்பமுண்டாக்கி வந்த காரணத்தானே, பிற்காலத்துத் தமிழ்வேந்தர் தங்கொடைத்திறம் முதலியன தமக்குப் பின்னும் அழியாது புலப்படுதல் வேண்டிக் கற்களிற் பொறித்து நிலை பெறுவித்தார். பண்டைநாட் டமிழ்மன்னர் காலத்து வேற்றரசர் தமிழ்நாடு புகுதாமையானும், தங்கொடைத் திறத்தை வியந்தியற்றிய தமிழ்நூல்கள் அழியாவென்றவர் கருதினமை யானும் அவர் பிற்காலத்தார் போலக் கல்வெட்டுகள் தோற்றுவித்திலரென்க. இங்ஙனமாகலின் மாணிக்கவாசகர் பெயர் கல்வெட்டுகளிற் காணப்படாமை கொண்டே அவர் ஏனை மூவர்க்கும் முற்பட்ட காலத்திருந்தா ரென்பது பெறப்படும். அவர் பிற்காலத்திருந்தனராயின் கல்வெட்டுகள் மிகுதியுமுண்டான அப்போது அவர் பெயர் பெரிதும் அவற்றில் காணப்பட்டுக்கிடக்குமென்க. அற்றேலஃதாக, இராசராச சோழன் தனக்கு முன்னிருந்த சிறுத்தொண்டர் சீராள தேவரைக் குறிப்பித்தவாறுபோல. அங்ஙனமே தனக்கு முற்பட்ட மாணிக்கவாசகரைக் குறிப்பிடாத தென்னை யெனின்; அஃதவ்வரசன் கருத்தறிவதற்குக் கருவி வாய்ப்பி னன்றி முடிவுகட்டல் ஏலாததொன்றாம். ஒவ்வொருவர்க்கு ஒவ்வொரு காரணம்பற்றி ஒவ்வொருவர் மாட்டு அன்புநிகழும். தம் ஒரே புதல்வனை அறுத்துக் கறிசெய்துஅடியார்க்கு அமுதூட்டிய அருமைத் திறத்தை மிகவியந்து அவ்வரசன் உலகத்தார்க்கு அவரன்பின் றிறத்தை நன்மாதிரியாய் நிறுத்தல் வேண்டி அங்ஙனம் அவரைக் குறித்திருக்கலாம். இதுவேயன்றிப் பிற காரணமும் இருக்கலாம். அல்லதூஉம், தனக்குச் சிறுகாலம் முற்பட்டிருந்த சிறுத்தொண்டரை நினைவுகூர்தற்குக் காரணம் வாய்த்தாற் போலத் தனக்குப் பெருங்காலம் முற்பட்டிருந்த மாணிக்க வாசகரை நினைவுற்றுப் பிரதிட்டை செய்தற்குக் காரணம் அம் மன்னற்கு வாயாது மிருக்கலாம். ஆகலின், அதனை ஒரு காரணமாய்க்கொண்டு மாணிக்கவாசகர் காலம் பிற்பட்டதென நிறுவப்புகுதல் பெரிது பிழைபடுவதொன்றாம் என்க. மேலும் 11 ஆவது நூற்றாண்டிற்கு முன்னர் மாணிக்கவாசகர் உருவம் எந்தக் கோவிலினும் பிரதிட்டிக்கப்பட வில்லை என்கின்றார். இங்ஙனம் கூறும் இவர் சுவாமிகள் உருவம் அவ்வாறு எங்கும் பிரதிட்டிக்கப்படவில்லை என்பதனைக் காரணங்காட்டி நிச்சயித்தனரா? சிறிதும் இல்லை. பிரபல காரணங்கள் எடுத்துக் காட்டது `எனக்குத் தோற்றிய வரையில் என்று நெகிழ்ந்து உரை கூறிப்போதல் சரித்திரமுறைக்குச் சிறிதும் இணங்காத தொன்றாமென்க. இவர் தமக்குத் தோன்றிய இவ்வற்புதத் தோற்றத்தைத் தம்மளவே வைத்துப் பார்த்துப் பார்த்து மகிழ்க. இனி, மாணிக்கவாசகர் மற்றைச் சமயாசிரியன்மார்க்கு முந்தியவராயின், அவராற் பாடப்பெற்ற திருப்பெருந்துறை, திருவுத்தரகோசமங்கை என்னுஞ் சிறந்த சிவதலங்கள் தேவாரத்துள் யாண்டுங் குறிக்கப்படாமை என்னை? என்று வினாவி, அவ்விரண்டும் ஏனைமூவர்க்கும் பிற்காலத்தே புதிதே முளைத்தெழுந்தனவாகலின் அவை தம்மைப் பாடிய மாணிக்கவாசகர் அம்மூவர்க்கும் பிற்காலத்தினர் என்று ராவ் அவர்கள் தருக்கிக்கின்றனர். இத்தருக்கவுரை அத்தலங்களின் உண்மைநிலை தெரியாமல் எழுந்ததாகும் என்பதனை இங்கே ஒரு சிறிது விளக்குவாம்: முதலில் திருப்பெருந் துறையைப் பற்றி விவரிப்பாம். திருப்பெருந்துறை என்பது தெற்கே பாண்டி நாட்டின்கண் தலைமைபெற்றிருந்ததொரு கடற்றுறைப் பட்டினமாம். முற்காலத்துப் பாண்டிமா நாட்டுக்குச் சிறந்த கடற்றுறைப் பட்டினங்களாயிருந்த கொற்கை, உவரி, பெருந்துறை என்பனவற்றைப் பற்றிய குறிப்புகள் பழைய சங்க இலக்கியங்களிற் காணப்படுகின்றன. சிலப்பதிகாரம், இந்திர விழவூரெடுத்த காதையினால் இவ்விந்திய தேசத்துக்கு அப்பால் மேற்கேயுள்ள பலதேயச் சாதியாரும் தமிழ்நாட்டில் வந்து வாணிகஞ் செய்தாரென்பது அறியக் கிடந்ததாகலின், பெருந்துறை என்னுங் கடற்றுறைப் பட்னடித்திலும் அவ்வாறே பல தேயத்துச் சாதியாரும் வாணிகஞ் செய்தற் பொருட்டு வந்தனரென்பது பெறப்படும். பாண்டியன் பொருட்டாகக் குதிரைவாங்கப் புறப்பட்ட மாணிக்கவாசகரும் பிறதேயத்தார் குதிரைகொண்டு வந்திறக்கும் இடமாதல் பற்றியே பெருந்துறை நாடிச் சென்றார். மாணிக்கவாசகர் சென்ற காலத்துப் பெருந்துறை சிவாலயமுடையதாக இருந்ததில்லை. அவ்விடத்தில் மிகுதியாயிருந்தன தென்னஞ் சோலைகளும் பூம்பொழில் களுமே யென்று தமது அருமைத் திருவாக்கால் தெங்கு சாலைகளை சூழ்பெருந்துறை1 எனவும், `தெங்குதிரள் சோலைத் தென்னன் பெருந்துறையான்2 எனவும், செந்தார்ப் பொழில் புடைசூழ்தென்னன் பெருந்துறையான்3 எனவும், சுவாமிகள் அருளிச்செய்தமையானே இனிது துணியப்படும். இவ்வுண்மை, சுவாமிகள் சரித்திரவுண்மை வழுவாது கூறிய திருவாதவூரார் புராணத்திலும் ஐயமறத் தெளித்துச் சொல்லப்பட்டது. அது, ஈனமில் பெருந்துறை யெனும்பதியின் ஞாங்கர் கானமிகு புன்னைவளர் கந்தமுள சந்தம் வானமுயர் சண்பக மரந்திகழ் நரந்தம் தேனின முரன்றெழு செருந்திகள் பொருந்தி. வீழ்ந்தநற வத்துளி விழிப்புன லதாகத் தசூழ்ந்துமுரல் வண்டினிசை தோத்திரம தாகத் தாழ்ந்துமல ரேந்தியிறை தன்றிருமு னின்றே வாழ்ந்துருகு மன்பரென மன்னுமொரு பூங்கா என்னும் அப்புராணச் செய்யுட்களிற் காண்க. மேலும், மாணிக்கவாசகப் பெருமானை ஆட்கொண்டருளல்வேண்டி அச்சோலையிற் குருந்தமரநீழலின்கண்ணே எழுந்தருளிய குருநாதன் பின்னர் அவர்க்கு உபதேசித்தற்பொருட்டு வேண்டுவன வெல்லாஞ் சித்தஞ்செய்ம்மின்கள் என்று தன் மருங்கிருந்த சீடர் குழாத்துக்குக் கட்டளையிட்ட அளவிலே, அவர்கள் எல்லாஞ் சித்தஞ் செய்கின்றுழி மலர்மாலை யினாலும், பொற்சரிகையின் நடுவே அழுத்தின முத்துக் களுள்ள பட்டாடையினாலும் அப் பூங்காவின் ஊடு ஒரு கோயில் செய்தனர் என்னும் பொருள்பட, முன்னவன் புகன்ற வாறு முயல்குவ மென்றே யந்த மன்னுறு தவத்தின் மிக்கார் வகைமலர்த் தெரிய லாலும் பொன்னிடை யழுத்திமுத்தம் புனைந்தபல் பட்டி னாலம் அந்நெடுங் காவி னூடங் கானபூங் கோயில் செய்தே என்று திருவாதவூரர் புராணத்தின்கட் சொல்லப் பட்டதனால், திருப்பெருந்துறையின்கண் சிவாலயம் அப்போதிருந்திலது என்றல் பசுமரத்தாணிபோல் நாட்டப் பட்டமை அறிக. அன்றி அங்கே சிவாலயம் இருந்ததாயின் அச் சோலையின்கண் அவ்வாறு பட்டாடை யினால் ஒரு கோயில் இயற்றல் வேண்டாமையானும், சிவாலயமிருந்த தாக அப் புராணத்தின்கண் யாண்டும் ஓதப்படாமை யானும் மாணிக்கவாசகர் காலத்துச் சிவாலயம் அங்கில்லை யென்பது தெளிபொருளேயா மென்க. அற்றேல், பரஞ்சோதிமுனிவர் திருவிளையாடலினும், வேம்பத்தூரார் திருவிளையாடலினும் அங்கே கோயிலுள்ளதாகச் சொல்லப்பட்டிருத்தல் என்னையெனின்; பின்னையோரான அவ்விருவரும் சரித்திர மாறுபாடாகத் தாமே சிருட்டித்துக் கொண்டு ஓதுவன பல உளவாகலின், அவர் கூறுவன ஈண்டைக்குப் பிரமாணமாகா வென்க. திருவாதவூரர் புராணம் ஒன்றுமே சுவாமிகள் சரித்திரத்தைப் பிழைபடாமல் உள்ளவாறே யுரைப்பதாம்; இம்மெய்ப் புராணவுரையோடு திறம்பிக்கூறும் அப் புராணவுரைகட்கு ஆதாரம் திருவாசகத்தும் பிறாண்டும் பெறப்படாமையின் அவை கொள்ளற்பாலனவல்லவென்று மறுக்க. இனி, மாணிக்கவாசகர் வருமிடம் நோக்கி அவரை ஆட் கொண்டருளல் வேண்டிக் குருநாதன் அப்பூங்காவிலே எழுந்தருளினான். மாணிக்கவாசகர் தாங் குதிரைகொள்ளப் போன அப் பெருந்துறையிலே அக் குருநாதனைக் கண்டு மெய்ஞ்ஞானப் பேறுடையராய் விளங்கினார். இங்ஙன மல்லது மாணிக்கவாசகர் பெருந்துறையிலே சிவாலய மிருப்பதாக உணர்ந்து அங்குச் சென்றாரல்லர். ஆகலின், இவர் அவ்விடஞ் சென்றதுகொண்டே அங்குச் சிவாலய மிருந்ததென நாட்டுவாருரையும் பொருந்தாதென்றுணர்க. இனி, மாணிக்கவாசகர் தாம் மெய்ஞ்ஞானப் பேறு பெற்று இறைவனுக்கு ஆட்பட்ட பெருந்துறையில் உடனே கோயில் கட்டுவித்தா ரென்றேனும், உபதேசம் பெற்றுப் பாண்டியனிடம்போய்ப் பின்னும் பெருந்துறை நண்ணி அவ்விடத்தைக் கடைசியாகவிட்டு மீண்ட பின்னர்த் திரும்பவும் அவ்விடத்திற்குச் சென்றாரென்றேனும் திருவாசகமாவது திருவாதவூரர் புராணமாவது கூறுகின்றில. மாணிக்கவாசகர் பின் தாம் பெருந்துறையை நினைவு கூர்ந்தபோதெல்லாம் அங்கே குருந்தமர நீழலிலே எழுந்தருளித் தம்மை யாட்கொண்ட குருநாதன் கோலத்தையே நினைந்துருகினதாகத் திருவாசகத்தினாற் பெறப்படுகிறதே யல்லாமல் அங்கே சிவாலயமிருந்ததாக நினைவுற்றுருகினரென்பது சிறிதும் புலப்படவில்லை. அற்றேலஃதாக, மாணிக்கவாசகர் தாங் குதிரை வாங்குவதற்கென்று கொண்டு சென்ற பொருட்டிரளை யெல்லாம் எங்ஙனம் செல விட்டாரெனின்; கூறுதும்: மாணிக்கவாசகர் தங்குருநாதனுக்கு உடல் பொருளாவி மூன்றனையும் உரிமைப்படுத்துங்கால் தாங்கொண்டுவந்த பொருட்டிரள் முழுவதூஉம் குருநாதன் றிருவடியிலே உய்த்தார். அப் பொருட்டிரளைக் குருநாதன் தன்சீடர் குழாத்தின்பால் உய்த்துத், திருந்திய பொருளி தெல்லாம் திருப்பணிக் களியும் மேலாம். அருந்தவர்க் குதவும் இல்லா தலந்தவர்க் கருளு மென்றார் என்று கூறியதாகத் திருவாதவூரர் புராணத்தின்கட் சொல்லப்படுதலின், அங்கிருந்த அவ்வடியவர்கள் எல்லாரும் அப் பொருட்குவையைச் சிவாலயத் திருப்பணி கட்கும், அரியதவசிகடக்கும், வறியவர்கட்கும், கொடுத்துச் செலவிட்டன ரென்பது பெறப்படும், நன்று சொன்னீர், `திருப்பணிக்கு அளியும் என்றதனானே பெருந்துறையிற் புதிதாக ஒருகோயில் கட்டுவித்தார் எனல் பெறப்படுமன்றோ வெனின்:அறியாது கூறினீர், `திருப்பணி என வாளா கூறினமையானே தமிழ்நாட்டின்கண் முன்னமேயுள்ள சிவாலயங்கள் புதுப்பிக்குஞ் செலவுக்குக் கொடுத்தா ரென்பது பெறப்படுவதல்லாமல், அதுகொண்டு புதுவதாக ஒருகோவில் கட்டுவித்தாரென்பது பெறப்படாது. அன்றி அவ்வாறு ஒன்று கட்டுதற்கென்றே கொடுத்தாரெனக் கொள்வேமெனினும், அச் செய்யுளைத் தொடர்ந்துவரும் பிற செய்யுட்களிற் கோயில் கட்டுவித்த விஷயம் ஒரு சிறிதும் குறிக்கப்படாமையின் அவ்வாறு கோடல் போலியுரையா மென விடுக்க. எனவே, மாணிக்கவாசகர் காலத்தில் திருப்பெருந்துறை சிவாலயமுடையதாயில்லை யென்பது நிறுவப்பட்டமை காண்க. இனித், திருவுத்தரகோசமங்கையி னியல்பை ஒரு சிறிது ஆராய்வாம்: மாணிக்கவாசகப் பெருமானைப் பெருந் துறையிலே விட்டுக் குருநாதன் நீங்கும்போது, தன்னைப் பிரிந்திருக்கமாட்டாமையால் தாயைப் பிரிந்து வருந்தும் கன்றுபோற் கரைந்து கரைந்து உருகியழும் தன் அன்பரை நோக்கிப் பூங்காவினிடை நின்ற ஒரு மடுவைச் சுட்டிக் காட்டி, இம் மடுவின் நடுவிலே சோதிமயமான ஒரு தழற்பிழம்பு தோன்றும், அப்போது நம் அடியரெல்லாஞ் சென்று அதன்கண் வீழ்ந்து நம்பாற் சேர்குவர்; நீயும் அவ்வாறு அவரோடு உடன்சென்று விழாமல் `உத்தர கோசரமங்கை யென்னும் நம் ஊரிற் சென்று, சித்தி யங்கு எவையும் எய்தி அதன்பின் நஞ் சிவலிங்கவடிவு வைத்த சிவதலங்கடோறுஞ் சென்று வருகுவையாயின் அங்கங்கும் இத் தழற்பிழம்பு வடிவே காண்பாய். இறுதியாகச் சிதம்பரம் போந்து அங்கே புத்தரை வாதில் வென்றபின் சிவபெரும்பதம் பெறுகுவை, என்று அக் குருமூர்த்தி அருளிச்செய்ததாகத் திருவாதவூரர் புராணங் கூறுகின்றது. இங்கே, உத்தரகோசமங்கையைச் சிவலிங்கம் வைத்த தலமாகக் கூறாமல், மற்றைத் தலங்களையே அது வைத்ததாகக் கூறினமையே கவனிக்கற்பாலதாம். மாணிக்க வாசகர் தம் சிவநிட்டை கைகூடுதற்காகவே அந்நிட்டை மெய்ப்பொருள் தேற்றிய குருநாதன், திருப்பெருந்துறைப் பூங்காவோ டொப்பப் பொழில்கள் நிறைந்து நிட்டை புரிதற்குப் பெரிதும் அனுகூலமுடைத்தாய் விளங்கும் திருவுத்தரகோச மங்கையூர்க்கு ஏகுகவென்று ஏவினாரென்பது மேலதனால் தெளியற்பாலதாம். அதனால் திருவுத்தரகோ சமங்கையில் அந்நாளிற் சிவாலய மிருந்ததின் றென்பதூஉம் பெறப்படுவதே யாகும். மெய்ப்பொருள் வழாதுகூறும் இத் திருவாதவூரர் புராணவுரைக்கு ஏற்பவே மாணிக்கவாசகப் பெருமானும் தன்னருமைத் திருவாக்கால், அளிதேர்விளரி, ஒலிநின்ற பூம்பொழில் உத்தரகோசமங்கை. அணிபொழில் உத்தர கோசமங்கை என நீத்தல் விண்ணப்பத்தினும், தெங்குலவு சோலைத் திருவுத்தர கோசமங்கை எனத் திருப்பொன்னூசலினும் கிளந்தெடுத் தருளியவாறுங் காண்க. `திருவுத்தர கோசமங்கைக் கரசே என விளித்துக் கூறுவதெல்லாம் ஆங்குத் தழலுருவாய்த் தோன்றிய சிவபெருமானை யல்லது வேறில்லை யென்க. ஆகவே, உத்தரசோகமங்கை ஊரிலும் மாணிக்கவாசகர் காலத்திற் சிவாலயமிருந்ததில்லை யென்பது இனிது துணியப்படுவதாம். ராவ் அவர்களும் இவ்விரண்டு கோவில்களும் பழைய காலத்தன அல்ல என்கின்றார். அதுநிற்க. இனி மாணிக்கவாசகர் காலத்தும் அவர்க்குச் சில நூற்றாண்டு பிற்றோன்றிய அப்ப மூர்த்திகள் முதலான ஏனைச் சமயாசிரியன்மார் மூவர்காலத்தும் திருப்பெருந் துறையும் திருவுத்தரகோச மங்கையும் சிவாலயங்கள் உடையவாயில் லாமையால், சிவாலயமுள்ள தலங்களுக்கே சென்று திருப்பதிகங் கட்டளையிடும் கடப்பாடு உடையரான சமயாசிரியர் மூவரும் அவ் வூர்களைத் தம் திருவாக்கிற் குறியாது விட்டனர். ஆகையால் அவர்கள் குறியாது விட்ட காரணம் இன்னதென்று பகுத்துண ராமலும் மாணிக்கவாசகர் காலத்து அக் கோயில்கள் கட்டப்படவில்லை என்பதுணராமலும், தேவாரத்தில் அத்தலப்பெயர்கள் வராதது ஒன்றே பற்றி மாணிக்கவாசகர் அம் மூவர்க்கும் பிற்பட்டவரென்று கூறிய ராவ் அவர்கள் உரைப்பொருள் பொருத்த மின்றாமென விடுக்க. அற்றேல், திருப்பெருந்துறை, திருவுத்தர கோசமங்கை என்னும் அத்தலங்கள் உற்பத்தியாயவாறு தான் என்னை யெனிற் கூறுதும்: மாணிக்கவாசகர்க்கும் ஏனைச் சமயாசிரியர்க்கும் பிற்காலத்தே திருவாசகம் மிகுதியும் ஓதப்படுவதாயிற்று. அங்ஙனம் ஓதப்படுகின்றுழி அவ்விரண் டிடங்களும் பெருமானால் சிறந்தெடுத்துச் சொல்லப்படுத லாலும், ஒன்றிற் பிறவியறுக்கும் மெய்ப்பொருளுபதேசமும் மற்றொன்றில் நிட்டைகூடிப் பெற்ற மெய்யனுபவசித்தியும் அப் பெருமானுக்கு விளைந்தமையாலும்,இவையெல்லாம் பிறர் நினைவு கூர்ந்து உய்தற்பொருட்டுப் பிற்காலத்தரசர்கள் அவ் விரண்டிடத்தும் சிவாலயங்கள் விரிவுபடக் கட்டிவைப் பாராயினர். பிற்காலத்தினரான விஜயநகரத்தரசர் சிலாசாசனங்களும் பாண்டிய அரசர் சாசனங்களும் திருப்பெருந்துறையிலும் திருவுத்தர கோசமங்கையிலும் காணப்படு கின்றனவென்று ராவ் அவர்கள் எடுத்துக் காட்டிய பிரமாணங்கள் அவர் கொள்கையையே வேரற அறுத்து எமதுகொள்கையை வச்சிரத் தம்பம் போல் நாட்டுவவாயின. இன்னும் பிற்காலத்தின்கண் இருந்த விஜயநகரத்து நாயக்க மன்னர் கட்டிட அமைப்புக்களே பெரும்பாலுங் காணப்படுதலால் திருப்பெருந்துறைச் சிவாலயத்தின் கர்ப்பகிருகம் ஒன்றுதவிர ஏனையெல்லாம் அவர்களே அமைத்தன வென்று ராவ் அவர்கள் கூறுவதனால் எமது கொள்கை பெரிதும் வலிபெறல் காண்க. என்னை? நால்வர் காலத்திற்கும் பின் யாரோ சிறிதாகக் கர்ப்பகிருகம் ஒன்றுமே கட்டிவைத்தனராக அதனைச் சூழப் பின்னர் வந்த விஜயநகர மன்னர் கட்டிடங்களைப் பெருக்கினாரென்பது பெறப்படு தலின் என்க. இனி மாணிக்கவாசகர் திருவாசகம் முழுவதூஉம் தொண்டர் களையும் அடியார்களையும் பன்முறை நினைந்து நினைந்து உருகிக் கூறக் காண்டலாலும், அவ் வாக்கியங்களை உணரும்போது அப்பரையும், ஞானசம்பந்தரையும், சுந்தரரையுமே குறிக்கின்றா ரென்பது புலப்படுதலாலும் மாணிக்கவாசகர் அம் மூவர்க்கும் பின்னையோர் என ராவ் அவர்கள் மொழிகின்றனர். இத்தருக்கம் என்நுட்ப முடையது! புராணங்களானும், திருவாசகத் திருவாக்கானும், ஏனை ஆன்றோர் பரம்பரை உரையானும் நரிபரியானது மாணிக்கவாசகர் பொருட்டே எனக் கூறப்பட்டிருப்ப, அதனைப் பொருந்தாதென்று மறுத்த ராவ் அவர்கள் `அடியார் என்று பொதுப்படக் கூறும் சுவாமிகள் திருவாக்குக்கு ஏனை மூவர் என்று பொருள் கொண்டது பெரியதொரு தலைதடுமாற்ற வுரையன்றிப் பிறிதென்னை? கழுமல மதனிற் காட்சி தந்தருளியதையும் ஞானசம்பந்தரையும் சுந்தரரையுங் குறித்தனவாக ராவ் அவர்கள் பொருள்படுத்தற்குக் கொண்ட ஆதார மென்னையோ? அவ்வாதாரம் ராவ் அவர்கள் சுவாமிகள் காலத்தைப் பிற்படுத்த வேண்டு மென்று கொண்டு முதிர்வித்த கனவு நிலையில் உளதுபோலும்! ஞானசம்பந்தரைத் தவிர வேறடியார்க்குக் கழுமலத்திற் காட்சி கொடுத்திலன் நம்பெருமா னென்பதற்கும், திருவாரூரில் ஞானம் நல்கப்பட்டவர் சுந்தரமூர்த்திகளைத் தவிர வேறடியார்இலர் என்பதற்கும் பிரமாணங் காட்டினாலன்றி ராவ் அவர்கள் உரை புரைபடுதல் திண்ணம் என்க. அற்றேல், மாணிக்கவாசகர் தமது திருவாக்கில் அடியார் அடியார் எனப் பலகாலும் உரைப்பது யார்தம்மை எனிற் கூறுவாம் : திருப்பெருந்துறையில் எழுந்தருளிய குருநாதனைப் புடைசூழ்ந்திருந்த அடியார்கள், அக்குருநாதன் பிரியும்போது மிகவும் வருந்தாநிற்பப் பின் அக்குருநாதன் அவர் தம்மை நோக்கி `இம் மடுவினிடையே சோதிமயமான தழற்பிழம்பு ஒன்று தோன்றும், அதில் நீவிர் போய்ப் படிந்து சிவபதம் பெறுகுவீர் என்று கட்டளை யிட்டனன். இட்டவாறே அவர்களும் மாணிக்கவாசகரை விடுத்துப் போய் அத்தழற் பிழம்பிற் படிந்து மறந்துபோயினார். தாம் அவ்வடியார் குழாத்தோடு அளவளாவி வரம்பிகந்த மகிழ்ச்சியுற்றிருந் ததனையே சுவாமிகள் கலந்து நின்னடி யாரோடு அன்றுவாளா களித்திருந்தேன், புலர்ந்து போன காலங்கள் என நினைந்து அருளிச் செய்ததும், பின் அவ்வடியார் தம்மைப் பிரிந்து சோதியில் மறைந்ததனையே, ....òFªJ நின்றது இடர் பின்னாள் உலர்ந்து போனேன் உடையானே உலவா இன்பச்சுடர் காண்பான் அலந்து போனேன் அருள்செய்யாய் ஆர்வங்கூர அடியேற்கே (அ.பிரார்த்தனைப் பத்து, 1.) என்றுருகி அருளிச் செய்ததுமாம். இன்னுந் தம்மோடு அங்ஙனம் அளவளாவியிருந்தஅடியார்கள்சிவபதவிbபறயன்அதனைப்bபறாமற்புறம்nபானேனேஎனஉள்ளங்கசிந்துசுவாமிகள்“சிவமாநகர்குறுகப்போனார்அடியார்யனும்bபாய்யும்புறமேnபாந்தோமேஎன்றும்,nபராஉலகம்புக்கார்.அடியார் புறமே போந்தேன்யான் என்றும், பழைய அடியார்க்குன் அணியார் பாதங் கொடுத்தி என்றும், பண்டைப் பரிசே பழஅடி யார்க்கீந் தருளும் என்றும், நின்கழற் புணைகொண்டு, இழிகின்ற அன்பர்கள் ஏறினர்வான் யான் இடர்க்கடல் வாய்ச் சுழிசென்று என்றும் அருளிச்செய்தனர்கள். பின்னர்ச் சுவாமிகள் சிவநிட்டைகூடி அருள் வயமாய் நின்ற காலத்து அங்ஙனம் முன்னர்ப் பிரிந்துபோன அவ்வடியாரை யெல்லாம் மறித்தும் அவ் வருள் வெளியிற் கண்டு ஆனந்தமெய்தி, அப்பனான சிவபெருமான் தம்மைத் திரும்பவும் அவரோடு கூட்டிய பேரருட்டிறனை வியந்து அப்பன் ஆண்டு தன்னடியாரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே என்று அதிசயப் பத்து முழுவதும் அருளிச் செய்தனர்கள். இங்ஙனமெல்லாம் சுவாமிகள் திருவாக்கிற் குறித்திடப்பட்ட அடியார்கள் திருப்பெருந்துறையிற் குருநாதன் பக்கல் மேவியிருந்த அடியார் குழாமன்றி ஞானசம்பந்தர் முதலாயினா ரல்லரென்பது. இந் நுட்பம் ஆய்ந்துணர வல்லார்க் கெல்லாம் வெள்ளிடைமலைபோல் விளங்கிக் கிடந்தது. இஃது இப்பெற்றியதாக இதன் வரலாறு சிறிதுமோராது சுவாமிகள் இங்கு `அடியார் என்றது, ஞானசம்பந்தர் முதலாயினாரையே யாமென்று கூறி, அதனாற் சுவாமிகள் ஏனை மூவர்க்கும் பிற்காலத்தினரெனக் கூறிய ராவ் அவர்கள் திரிபுணர்ச்சி பெரிதும் இரங்கற் பாலதொன்றாம் என்க. இனி மாணிக்கவாசக சுவாமிகள் பல்வேறு திருவிளை யாடல்களைக் குறித்துப் பாடா நிற்ப, ஏனைமூவரும் அவற்றிற் சிலவே கூறுதலாலும், அங்ஙனம்அவை பலவாய்ப் பெருகிய காலம் பிற்காலத்தின் கண்ணதாக வேண்டு தலாலும், அத் திருவிளையாடல்கள் பலவற்றையும் எழுதின வேம்பத்தூரார் திருவிளையாடற் புராணத்திற்கும் பரஞ்சோதிமுனிவர் திருவிளையாடற் புராணத்திற்கும் சிறிதுமுன்னராயினும் பின்னராயினும் மாணிக்கவாசக சுவாமிகள் காலத்தை வரையறுக்க வேண்டுமென ராவ் அவர்கள் கூறுகின்றார்கள். இவர்கள் கூறியது பெரிதும் பிழைபடுவ தொன்றாம். மாணிக்கவாசக சுவாமிகள் தமது அருமைத்திருவாக்கில் எடுத்துக் கூறினவெல்லாம் மிகப் பழைமையான திருவிளை யாடல்களேயாம். ஞானசம்பந்த சுவாமிகளுக்குப் பின்னே மாணிக்கவாசக சுவாமிகள் இருந்தனராயின், மூன்று வயதிலே உமைதிருமுலைப்பாலுண்டு பேரற்புதஞான மூர்த்தியாய்ச் சைவம் எங்கணும் விளக்கிச் சமணரை வாதில் வென்ற ஞானசம்பந்தப் பெருமானைப் பற்றிய திருவிளை யாடலைக் கூறாது விடுவரோ? இஃதொன்றானே மாணிக்கவாசகர் ஞானசம்பந்தர்க்கு முன்னிருந்தா ரென்பது சிறுமகார்க்கும் இனிது விளங்கிக்கிடப்பதாக, இதுதானு முணராது ராவ் அவர்கள் காலவரையறை செய்யப் புகுந்தது நகையாடற் பாலதொன்றாம். மேலும் அப்பர் திருஞானசம்பந்தர் திருவாக்குகளில் திருவிளையாடல்கள் பலவந்திருக்கின்றனவே யல்லாமல் ராவ் அவர்கள் கூறியபடி சிலவே வந்தில. இவ்வுண்மை தெரியவேண்டுபவர் ஸ்ரீமத்வே. சாமிநாதைய ரவர்கள் தமிழுலகத்தைக் கடமைப்படுத்தி வெளியிட்ட வேம்பத்தூரார் திருவிளையாடல் முகப்பிலே மாணிக்கவாசகர் திருவாக்கினும் மூவர் திருவாக்கினும் போந்த திருவிளையாடல் களையெல்லாம் மிக்க பிரயாசை யோடு தொகுத் தெடுத்துப் பிரசுரித் திருக்கின்றார்களாதலின் ஆண்டுக் கண்டு கொள்க. அங்ஙனம் காணவல்லவர் ராவ் அவர்கள் கூறியது முழுப்பொய்யுரையே யாமென்று தேர்வர். மாணிக்கவாசக சுவாமிகள் தங்காலத்தும் தம் காலத்திற்கு முன்னும் நடந்த திருவிளையாடல்கள் பலவற்றை விதந்தெடுத்துக் கூறுதல் போலவே, ஏனைச் சமயகுரவன்மாரும் தங்காலத்துந் தமக்கு முன்னும் நடந்த பலவற்றை எடுத்துக் கூறுகின்றனர். அது கிடக்க. இனிக் கி.பி.904 இல் அரசாண்ட பராந்தகச் சோழன் தில்லைச் சிற்றம்பல முகட்டைப் பொற்றகடு வேய்ந்து சிறப்பித்த பின்னரே அவ் வம்பலத்திற்குப் பொன்னம்பலம் என்று பெயர் வந்ததென்றும், மாணிக்கவாசக சுவாமிகள் கீர்த்தித்திருவகவலில் அம்பொற் பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடம் நவில் எனவும், திருக்கோவையாரில் சேணிற் பொலி செம்பொன் மாளிகைத் தில்லைச்சிற் றம்பலத்து எனவும் கூறுதலோடு கோயில் மூத்த திருப்பதிகம் முழுவதூஉம் இப்பெயரே வரப் பாடுதலாலும் அச்சுவாமிகள் பராந்தகச்சோழன் காலத்திற்கும் பின்னரேதான் இருந்திருக்க வேண்டுமென்றும் கூறிய ராவ் அவர்கள் அப் பராந்தகனுக்கு முன்னிருந்த அப்பர் சுவாமிகளும் `செம்பொன்னம்பலம் எனக் கூறியிருத்தலை உணர்ந்து குன்று முட்டிய குரீஇப் போலப் பெரிதும் இடர்ப்பட்டு அதனை விலக்கி விடுவார் போல்அப்பர் திருவாக்கில் வந்த `பொன்னம்பலத்திற்குப் பொன்னனைய அம்பலம் என்பது பொருள்போலத் தோன்றுகின்றதென நெகிழ்ந்துரையாடிப் போனார். ராவ் அவர்களுக்கு இங்ஙனம் நடுநிலை வழீஇ ஓரம பேசி இழுக்குறும் திரிவுபாடு வந்ததென்னை யெனின்; தமிழ்த் தேயத்துப் பெரியாருள் யாரும் பழைய காலத்திருந் திலர் என்று நாட்டவும், தம்மை யொத்த ஆரியப் பெரியாரே பழைய காலந்தொட்டு நாகரிகமுடையரா யிருந்தன ரென்று காட்டவுமே புக்காராகலின் அங்ஙனந் தன்னைப் பற்றுதல் என்னுங் குற்றத்திற்பட்டுப் பொருள் உண்மை தேராது ராவ் வழுக்கினார் என்க. அது கிடக்க. அப்பர் சுவாமிகள் திருவாக்குக்குப் பொன்போன்ற அம்பலம் என்று பொருள்பண்ணவந்த ராவ் அவ்வாறே மாணிக்கவாசக சுவாமிகள் திருவாக்குக்கும் பொன்னனையை அம்பலம் என்று பொருள் செய்யாது விட்டதென்னை? ஒரே வகையான ஒரு சொற்றொடர்க்கு ஒருகால் ஒருவாறும் பிறிதொருகாற் பிறிதொருவாறும் பொருள் பண்ணுதற்கு இவர்கொண்ட காரணம் யாது? காரணமின்றித் தமக்கியைந்த வாறெல்லாம் பொருள்செய்தால் இவர்போற் றிரிபடையாத நல்லறிவுடையார் இவருரைக்கு இணங்குவாரா? மேலும் அப்பர் சுவாமிகள் பொன்போன்ற அம்பலம் என்று பொருள் செய்வதற்கு இடந்தராமல் `உரையாணி மாற்றுள்ள செம்பொன்னாற் செய்த அம்பலம் என்றும் `கதிர்விரியும் செம்பொன் அம்பலம் என்றும் `பரிசுத்தமான செம்பொற்ற கடு எழுதி மேல்மூடிய சிற்றம்பலம் என்றும், `பொன்னாற் செய்யப்பட்ட அம்பலம் என்றும், இனிது பொருள் விளங்குமாறு ஆணியைச் செம்பொனம்பலம் சுடர்ச் செம்பொனம்பலம் தூய செம்பொன்னினால் எழுதி வேய்ந்த சிற்றம்பலம் என்று திருக்குறுந் தொகையிலும், பொன்னாகிய தில்லைச் சிற்றம்பலவன் என்று திருவிருத்தத்தினும் அருளிச்செய்திருப்ப இவற்றை யறிந்து பொருள்கொள்ளுமா றறியாத ராவ் அவர்கள் தமிழ் நூலாராய்ச்சியிற் புகுந்தது என்னாம்! அற்றேல், பராந்தகச் சோழன் பொன்வேய்ந்த பிறகு செம்பொன்னம்பலம் என்று பெயர் வந்ததென்னுங் கூற்று எவ்வாறாமெனின்; அஃது அறிவில் கூற்றாமென்றே மறுக்க. பராந்தகன் பிற ஆலயங்களுக்குச் செம்பொன் முகடு வேயாது இத்தில்லைச் சிற்றம்பலத்திற்கு மாத்திரம் அங்ஙனம் பொன்முகடு வேய்ந்த காரணம் என்னையென்று நுணுகியாராய வல்லார்க்கு, அவ்வம்பல முகடு பண்டைக்காலந் தொட்டு அங்ஙனம் பொன் வேயப்பட்டு வந்த காரணத்தானே பராந்தக வேந்தனும் தன் காலத்து அதனைப் புதுப்பித்து அங்ஙனம் பசும்பொற்றகடு வேய்வானாயிற் றென்பது தெற்றென விளங்காநிற்கும். பராந்தகனுக்கு முன்னரிருந்த பெருந்தமிழ் வேந்தர் பொன்வேயாது விட்டிருந்தனர் என்பதனை ராவ் எந்தச் சிலாசாசனத்திற் கண்டரோ அறியேம். ஆரிய அபிமானத்தாற் கட்டி இறுகிய தம் மனோபாவகச் சிலையிற் கண்டார் போலும்! அப்பர் சுவாமிகள் திருவாக்கால் பராந்தகனுக்கு முன்னும் தில்லைச்சிற்றம்பல முகடு பொன்வேயப் பட்டிருந்த தென்னும் உண்மை உள்ளங்கை நெல்லிக்கனி போலினிது பெறப்படுதலின், மாணிக்கவாசக சுவாமிகள் பொன்னம்பலம் என்று தந்திருவாக்கிற் கூறியது கொண்டே அவர் பராந்தகனுக்குப் பின்னிருந்தாரெனும் ராவ் அவர்கள் உரை பொருளோடு புணராப் போலியுரை யாமென்க. இனித் தசூக்ஷிணா மூர்த்தியுபாசனை மாணிக்கசு வாமிகளுக்குப் பின்னர்தான் தோன்றியதென ராவ் அவர்கள் ஊகம் செய்கின்றனர். அவ்வூகம் காரணமின்றி அவரது வெறும் பாவனைக்கட் டோன்றுதலின் அதனை அறிவுடையோர் கொள்ளாரென்பது. தக்ஷிணாமூர்த்தம் ஜனகர் முதலான முனிவர் நால்வர்க்கு அத்துவித உண்மை உணர்த்துதற் பொருட்டுக் கொண்ட பழைமை அருட் கோலமென்பது எல்லார்க்கும் ஒப்பமுடிந்ததாகலின், அதனைப் பிறிதாகக் கூறுதல் பொருந்தாதென மறுக்க. இன்னும் முதலாம் குலோத்துங்கசோழன் தக்ஷிணா மூர்த்திக்கு மானியம் விட்டான் என்று கூறிய திருக்கண்டேசுர ஆலய சாசனத்தைக் கொண்டு அப்போதுதான் மூர்த்தி உபாசனை தொடங்கியதென்றல் பெரியதோர் குழறுபடை யாம். அது மானியம் விட்டமை கூறியதே யன்றி அப்போது தான் அவ்வுபாசனை தோன்றிய தெனக் கூறிற்றிலது. அவ்வாறாக ஒரு நியதியுமன்றித் தம்மனம் போனவாறு அதற்குப் பொருள் செய்தலில் நம் ராவ் அவர்களேயன்றி வேறு ஏவர் வல்லார்! இனிப், புத்தரோடு சுவாமிகள் தில்லைச் சிற்றம்பலத்தில் வாது புரிவதைப் பார்க்கப் பாண்டியனும் ஈழமன்னன் ஒருவனும் வந்து அப்போதங்குவந்த சோழனை வணங்கித் திறை தந்தனரென்பது திருவாதவூரர் புராணத்திற் குறிக்கப்பட்டிருக் கிறதென்றும், அங்ஙனம் பாண்டியர் சோழமன்னர்க்குக் கீழ்ப்பட்ட காலம் 10 நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண் டிறுதி வரையுமாம் என்றும், அதனால் மாணிக்கவாசகர் காலமும் அவ் விடைப்பட்ட காலத்திலே தான் வைக்கற்பாற் றென்றும் ராவ்அவர்கள் கூறுகிறார்கள். தில்லைச் சிற்றம்பலத்திற் சோழனுக்குப் பாண்டியன் திறைகொணர்ந்து செலுத்தினான் என்றது முழுப் பொய்யுரையாம். அத் திருவாதவூரர் புராணத்தை யாம் பன்முறையும் படித்துப் பார்த்தோம். அதன்கண் ஈழமன்னன் ஒருவன் திறை கொணர்ந்து வைத்துச் சோழவேந்தனை வணங்கினதாக மாத்திரம் சொல்லப்பட்டிருக்கின்றது; அது, ஈழவன நாடனு மெழுந்தடி பணிந்து திறையிட்ட குறைநல்கி என்னும் அப் புராணச்செய்யுட்களால் அறியப்படும். இவ் விலங்கை மன்னனைத் தவிர வேறு மன்னர்கள் அங்கு வந்ததாகவேனும், பாண்டியன் வந்து சோழனைப் பணிந்ததாகவேனும் அப் புராணம் எங்கும் தேடித் தேடிப் பார்த்துக்கண்டிலேம். இவ்வாறாக இல்லாத தொன்றனை இருப்பதாக வைத்துப் பொய்யுரைகூறித் தருக்கம் நிகழ்த்த முன்வருதலில் ராவ்அவர்கள் முன்னதாக அறிவுடையோரே கூறக்கடவர். இனி, வரகுணபாண்டியனொருவனை மாணிக்கவாசகர் தம் திருவாக்கிற் குறிப்பிடக் காண்டலானும், அவ் வரகுணன் காலம் 9 ஆம் நூற்றாண்டென்று துணியப்படுதலானும், சுவாமிகள் காலம் அவ்வொன்பதாம் நூற்றாண்டிற்குப் பின்னரேதான் பெறப்படுதல் வேண்டும் என்கின்றார் ராவ். இன்னும் சேஷகிரி சாத்திரியார் காட்டிய பாண்டிய வமிசாவளிப் பட்டியில் ஒரே வரகுணன் காணப்படுதலால் அவனையேதான் சுவாமிகள் குறிப்பிட்டிருக்கவேண்டு மென்றும் ராவ் ஊகஞ்செய்கின்றார். இப்போது சரித்திர ஆராய்ச்சிக்குப் பயன்படும் சிலா சாசனங்களும் வமிசாவளிகளும் கி.பி. எட்டாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட பாண்டிய சோழ அரசர்களையே எடுத்துப் புகலுகின்றன. கி.பி. எட்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட பழைய பாண்டிய சோழ சேர மன்னர்கள் பலப் பலர் உளராகப் பழைய செந்தமிழ் நூல்களால் அறியப்படவும். அவ் வரசர்களைப்பற்றிய சிலாசாசன செப்புப் பட்டயங்களுள் ஒன்றேனும் இப்போது அகப்படக் காண்கிலேம். சிவாலயங்கள் எண்ணிறந்தன கட்டுவித்த சோழன் கோச்செங்கண்ணானைப் பற்றிய சாசனமே அகப்பட்டிலதாயின் மற்றை அரசர்களைப் பற்றிக் கேட்பானேன்? இங்ஙனஞ் சிலாசாசனங்கள் எட்டாம் நூற்றாண்டிற்குப் பின்னரே தோன்றியதற்கும் அதற்குமுன் தோன்றாமைக்குங் காரணம் முன்னரே கூறிப்போந்தாம். ஆகவே, பிற்காலத்திய சிலாசாசன ஆராய்ச்சி பண்டைநாட் டமிழ் மன்னர் காலந் தேர்தற்குச் சிறிதும் பயன்படாத தொன்றாமென விடுக்க. எனவே, பிற்காலத்து அரசர் பரம்பரையினைக் கூறும் சேஷகிரி சாத்திரியார் வமிசாவளிப் பட்டி ஈண்டைக்குச் சிறிதும் பயன்படா தென்றுணர்க. குலோத்துங்கச்சோழன், கரிகாற்சோழன் முதலான பெயர்கள் மன்னர்கள் பலர்க்கிருந்தாவாறுபோல வரகுணபாண்டியன் எனும் பெயரும் மன்னர்கள் பலர்க்கிருந்திருக்க வேண்டும். இதுகாறுங் குறித்துவருங் காரணங்களானும் பின்னே காட்டப்படும் காரணத்தானும் பின்னிருந்த வரகுண பாண்டியனுக்கு மூன்று நூற்றாண்டு முற்பட்டிருந்த அப்பர் சுவாமிகளுக்கும் முற்பட்டவராக மாணிக்கவாசக சுவாமிகளிருத்தலால் அவர்களாற் குறிக்கப்பட்ட வரகுணபாண்டியன் வேறென்பதே துணி பொருளாம். இனி, மாணிக்கவாசக சுவாமிகள் புத்தகாலத்தினரா மென்று கூறுவாருரையை மறுத்துச், சைனமதம் புத்தர் காலத்திற்குப் பிந்தியதன் றென்றும், புத்தகாலம் 9ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரும் நீண்டதென்பதற்குக் கி.பி. 984 முதல் 1012 வரையில் செங்கோலலோச்சிய இராசராசன் காலத்தில் நாகபட்டினத்தின்கண் ஒரு பௌத்தப் பள்ளியிருந்தமையே சான்றாமென்றும் ராவ் அவர்கள் கூறுகின்றனர். புத்தசமய மிருந்தகாலத்தே சமண மதமும் உடனிருந்ததாயினும் அது மிகவும் செழிப்புற்று ஓங்கியது ஐந்தாம் நூற்றாண்டின் பின்னரேயாம். ஐந்தாம் நூற்றாண்டிற்கு முன்னெல்லாம் புத்தமதமே மேலோங்கியிருந்தது. இதற்குச் சான்று மணிமேகலையும் சீவகசிந்தாமணியுமேயாம். மணிமேகலை பௌத்தம் மேலோங்கிய முதல் நூற்றாண்டிலும், சீவகசிந்தாமணி சமணம் மேலோங்கிய ஏழாம் நூற்றாண்டிலும் எழுதப்பட்ட நூல்களாம். ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின்னும் ஒரோவிடத்துப் பௌத்தமதம் இருந்ததென்றதனால் ஈண்டைக்கு ஆவதோர் இழுக்கில்லை. என்னை? அது பிற்காலத்துத் தன்பெருமை சுருங்கி ஒளிமழுங்கிக் கிடந்ததாகலின், இனி மாணிக்கவாசக சுவாமிகளிருந்த காலத்துப் பௌத்தமதம் மிகவும் விரிந்து வலிபெற்றிருந்ததென அறியப்படுதலால் அக்காலமும் மாணிக்கவாசகர் காலமும் ஐந்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்டனவா மென்பது ஒருதலை. ஆகவே, இவ்வுண்மை யொடு முரணி ராவ் அவர்கள் கூறியது பொருத்தமில் போலியுரையாமென மறுக்க. இவ்வாறு இதுகாறும் கூறிய மறுப்புரைகளால், ஸ்ரீ. து.அ. nfhãehj uh›mt®fŸ, v«., மாணிக்கவாசக சுவாமிகள் காலம் கி.பி.பதினோராவது நூற்றாண்டின் துவக்கம் அஃதாவது இற்றைக்கு எண்ணுற்றெட்டு வருடங்களுக்குமுன் என்று நிலையிடுதற் பொருட்டுக் காட்டிய ஆதாரங்கள் அவ்வளவும் உள்ளீடில்லா வெறும் பதடியா மென்பதனைப் பகுத்துப் பகுத்துக்காட்டி விளக்கினேம். இனி யாம் 1890 ஆம் ஆண்டு ஞானசாகர முதற்பதுமத்திற் பிரபல காரணங்கள் பலவாற்றால் மாணிக்கவாசக சுவாமிகள் கி.பி. மூன்றாவது நூற்றாண்டு அஃதாவது இற்றைக்கு ஆயிரத்து அறுநூற்றெட்டு வருடங்களுக்கு முன் இருந்தார்களென்று நாட்டியதே பொருத்தமுறுவதாம். அதனை இங்கு மற்றுமோர் ஆதாரங் காட்டி முடிப்பாம். மாணிக்கவாசக சுவாமிகள் அப்பர் சுவாமிகளுக்கு முன்னிருந்தா ரென்பதனை நிலைபெறுத்தவே அவர் காலம் இதற்குமுன் னென்பது நாட்டப்பட்ட வாறாகும். அப்பர்சுவாமிகள் நரியைக் குதிரை செய்வதாகும் என்றது மாணிக்கவாசகர் பொருட்டு நிகழ்ந்த திருவிளையாடலைக் குறித்த தென்பதனை முன்னரே காட்டினேம். திருப்பூவணத் திருப்பதிகத்தினும் அப்பர் சுவாமிகள் மணியார் வைகைத் திருக்கோட்டி னின்றதோர் திறமுந் தோன்றும் என்று அருளிச்செய்து மாணிக்கவாசகர் பொருட்டாகவும் சிவபெருமான் வையையை யடைக்க மண்சுமந்து அதன் கரையில் நின்ற திறத்தை விளக்கி அருளினார். மேலும், அப்பர் சுவாமிகள் தமது அருமைத் தனித்திருத்தாண்டகச் செய்யு ளொன்றில் குடமுழ நந்தீசனை வாசனாக் கொண்டார்? என்று சுவாமிகளின் பெயராகிய வாசகன் என்னுஞ் சொல்லையும் வெளிப்படையாக எடுத்துக் கூறியருளினார். இம் மூன்று அரிய குறிப்புக்களானும் மாணிக்கவாசகர் அப்பர் சுவாமிகள் காலத்திற்கும் முற்பட்டவராதல் தெற்றென விளங்குகின்றது. இனி மாணிக்கவாசகப் பெருமானிருந்த காலவரம்புதான் யாதோவெனின்; அஃது இற்றைக்கு ஆயிரத்து அறுநூற்றெட்டு வருடங்களுக்கு முற்பட்ட மூன்றாம் நூற்றாண்டிலாமென ஞானசாகர முதற்பதுமத்தின்கண் இனிது விளக்கினாம்; ஆண்டுக் கண்டுகொள்க. குறிப்பு: பெருந்துறை என்னுந் தலம் அப்பர் சுவாமிகள் முதலானாராற் குறிக்கப்படவில்லை யென்பதூஉம் பொருந்தாதாம். அப்பர் சுவாமிகள் தாம் அருளிச் செய்த க்ஷேத்திரக் கோவைத் திருத்தாண்டகத்தில் பேரூர் பிரமபுரம் பேராவூரும் பெருந்துறை காம்பிலி பிடவூர் பேணும்1 என்று அத்தலத்தை எடுத்தருளிச் செய்தனர்கள். அற்றேல் அதற்குத் தனிப்பதிகங்கள் காணப்படாதவா றென்னையெனின்; யாம் முன்னரே காட்டியவாற்றால் அது மாணிக்கவாசக சுவாமிகள் குருநாதனைக் கண்டு உபதேசம் பெற்ற மாட்சிமையானே சிறப்பெய்திய தன்றி, அதன்கட் சிவாலயம் முன்னில் லாமையால் அதற்குத் தனித்திருப்பதிகம் இல்லாதாயிற் றென்க. இவ்வாராய்ச்சிக்கு அரண் செய்யும் அப்பர் அருட்பாடல் திருவாதவூரடிகளின் திருவரலாற்றையும், காலத்தையும் சிறிதும் ஐயத்திற்கு இடமின்றித் துணிவுபெறுத்தும் சான்றுகள் பலவற்றுள்ளும் முதன்மைபெற்று விளங்குவன திருநாவுக்கரசு நாயனார் அருளிய நரியைக் குதிரைசெய் வானும்(4-4-2) என்னும் திருப்பாட்டும், குராமலரோ டராமதியஞ் சடைமேற் கொண்டார் குடமுழநந் தீசனைவா சகனாக் கொண்டார் (6-69-11) என்னும் திருப்பாட்டும் ஆகிய இரண்டுமே யாகும். இவற்றைப் பற்றிய விளக்கம் ஆசிரியர் மறைமலை யடிகளாரால் 167, 277, 906, 918, 920, 940, 941, முதலிய பக்கங்களிற் காணப் படுகின்றது. `நரியைக் குதிரை யாக்கிய இறையனார் திருவருட்செயல் அத் திருநாவுக்கரசு நாயனார் அருளிய திருக்குறுந்தொகைத் திருப்பாட்டின் கண்ணும் காணப்படுகின்றது. அது வருமாறு: எரிய னாரிறை யாரிடு காட்டிடை நரியி னார்பரி யாமகிழ் கின்றதோர் பெரிய னார்தம் பிறப்பொடு சாதலை விரிய னார்தொழும் வீழி மிழலையே. - 5.112 - 8 பெரியனார் -மாதேவர். விரியினார் -நீங்கினார்.