kiwkiya«-- 21 (தனித்தமிழியக்க நூற்றாண்டு வெளியீடு) சமயம் - 2  சோமசுந்தரக் காஞ்சியாக்கம்  சோமசுந்தர நாயகர் வரலாறு  கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா ஆசிரியர் மும்மொழிச்செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் தமிழ்மண் முதல்பதிப்பு : 2015 பக்கம் : 32+304 = 336 விலை : 420/- மறைமலையம் - 21 ஆசிரியர் மும்மொழிச் செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் வெளியீடு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. bjh.ng.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: elavazhagantm@gmail.com  jhŸ : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 352 f£lik¥ò : இயல்பு  படிகள் : 1000 üyh¡f« : வி. சித்திரா   அட்டை வடிவமைப்பு : கவிபாகர்   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006, மற்றும் பிராசசு இந்தியா, திருவல்லிக்கேணி - 600 005. யான் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான நூல்களில் ஆராய்ந்து கண்ட முடிவுகளை நூல்களாக எழுதியிருக்கின்றேன். பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்தது போல, உண்மை காணும் உணர்ச்சியினால் நடுநிலை நின்று ஆராய்ந்திருக்கின்றேன். ஒருவர் தம் வாழ்நாள் முழுவதும் கற்றாலும் அறியமுடியாத உண்மைகளை எல்லாம் எளிதாக எழுதி வைத்திருக்கின்றேன். எல்லாரும் தமிழ் இலக்கியங்கள் யாவற்றையும் கற்கும் தொல்லையை மேற்கொள்ள வேண்டிய தில்லை, அது முடியவும் முடியாது, தேவையுமில்லை. எல்லா நூல்களிலும் உள்ள சிறந்த உண்மைகளை எல்லாம் பிழி சாறாக யான் வடித்துத் தந்துள்ளேன். என் நூல்களைப் படித்தாற்போதும், அதனால், தமிழ் முழுதுங் கற்ற பயனை அடையலாம். - மறைமலையடிகள் சான்றிதழ் நாகை - திரு. வேதாசலம் பிள்ளையவர்கள் ஒருபோது திருவனந்தபுரத்தில் ஒருவாரந் தங்கியிருந்த ஞான்று, அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்ததற்குச் சாலவும் மகிழ்கின்றேம். வருங்காலத் தமிழ் மக்களுக்கு மட்டற்ற தமிழ்ப்புலமை மிகுந்து வருமென்பதற்குச் சான்றாக இவர் இளமையிலேயே நுண்மாண் நுழைபுலம் உடையராயிருப்பது களிப்பூட்டுகிறது. மற்றும் தாய்மொழிப் பற்றுக் குறைந்த இக்காலத்தில், இவர் தமது நுண்ணறிவைத் தமிழ் நூல்களில் முற்றும் செலுத்தி நன்காராய்ந்துள்ளதும் பாராட்டற்குரியது. பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவகசிந்தாமணி முதலிய பழந்தமிழ் நூல்களில் ஆராய்ச்சியுடன் கூடிய இவர்தம் அறிவுடைமையே என்னை இவர்பால் மதிப்புறுமாறு செய்தது. தமிழாசிரியர்களின் தொகை சுருங்கிவரும் இக்காலத்தில் இவருக்குச் சிறந்த ஊக்கமளித்தால் இவர் ஒரு சிறந்த தமிழாசிரியராவாரென்று நாம் உறுதியாக நம்புகின்றேம். முன்னரே இரண்டாந்தரக் கல்லூரிகளில் தமிழ்கற்பிக்கப் போதுமான அளவு இலக்கண இலக்கியத்திற் சிறந்த தேர்ச்சி பெற்றவராயிருக்கின்றாரெனக் கருதுகின்றோம். Fiwªj msÉš v~¥, V., (F.A.) வகுப்புக்குரிய ஆங்கில அறிவு பெற்றாரானால் மேல்நாட்டு முறைப்படி தமிழ் நூல்களை வரலாற்றுச் சான்றுடன் ஆராயவும் எழுதவும் வல்லுநராவாரென்பது எம்முடைய சிறந்த எண்ணம். வண்ணாரப்பேட்டை மனோன்மணீயம் பெ. சுந்தரம்பிள்ளை திருநெல்வேலி தமிழ்த்தாய் வாழ்த்தின் ஆசிரியர் 2-12-1895 (இந்த நற்சான்று திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் சுந்தரம் பிள்ளையவர்கள் பேராசிரியராக இருந்தபோது கொடுக்கப் பெற்றது.) மறைமலையடிகளின் உலகியல் திறன் அடிகளுடைய சிவத்தொண்டு, தமிழ்த் தொண்டு என்றால், அவை அவ்வளவு எளிமையானவை அல்ல. உயர்ந்த இலக்கண, இலக்கிய தருக்க மெய்மைகளோடு இளமையிலேயே புலமை சிறந்து, தமிழகமும் உலகமும் பாராட்டும் முறையில், நூல்கள் பல எழுதிப் பெருந் தொண்டு நடந்திருக்கிறது. அடிகள் மிக இளமையிலேயே புலமையும், ஆராய்ச்சியும், பேச்சும், எழுத்தும் பெற்றுவிட்டதனால் அடிகளார் இளையவர் என்று எண்ணி, எதற்கெடுத்தாலும் மறுப்புக்கள் பாணங்கள் போல அடிகளைச் சூழ்ந்து கொள்ளும். சென்ற இடங்களிலெல்லாம் கேள்விகளுக்குமேல் கேள்வியாக அம்புப்பொதிகள் அவிழும். அத்தனை கேள்விக் கணைகளுக்கும் அடிகளார் தம் நுண்ணுணர்வினாலும் திருவருள் வலத்தாலும் தக்க விடைகள் பகர்ந்து எல்லாவற்றையும் முறியடித்து வீறி விளங்கி வென்று, உலகெங்கும் நலம் புரிந்திருக்கிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியிலும் இருபதாம் நூற்றாண்டின் முதலிலும் வாதம் புரிவதற்கென்றே ஒருவரை ஒருவர் கூட்டத்துக்கு அழைத்துக் களிப்பெய்துவார்கள். அடிகள் எதற்கும் அஞ்சுவதில்லை; உடையார் ஒருவர் தமர் நாம்; அஞ்சுவது யாதொன்றுமில்லை, அஞ்ச வருவதுமில்லை என்று அருள் உரங்கொண்டு தோள் தொட்டு ஆர்ப்பரித்துக் களம் புகுவர். ஞான இளஞ்சூரியனாய்த் தோன்றி அங்கங்கும் முதிர்ந்தெழுந்த அறியாமை இருட் படலங்களைக் கிழித்தொதுக்கியும், சிங்க ஏறுபோல் களத்தில் ஒரு தனிப் பேருருவாய் உலவியும், வீறு மிக்கவர்களாய் விளங்கினார்கள். அடிகள் காலத்தில், வாதத்துக் கழைத்தவரே அடிகளாரைக் கண்ட மாத்திரத்தில் வெருண்டு நிலைகலங்குவர். - சிவத்திரு அழகரடிகள் மறைமலையடிகள் நூற்றாண்டு நினைவு மலர் (பக். 1 - 10) மறைமலைய மாண்பு நுழைவுரை தனித்தமிழ் என்ற அளவில் முன் நிற்கும் முழுதுரு எழில்வடிவர் தவத்திரு. மறைமலையடிகளாரே ஆவர்! முந்தை அடிகள் ஆகிய இளங்கோவடிகள், `முத்தமிழ் அடிகள் என முழக்கமிட நின்றார்! இருபதாம் நூற்றாண்டு மறைமலையடிகளோ, தனித்தமிழ்த் தந்தை என்னும் தகவார்ந்த பெருமை பெற்றார். தமிழ் தனித்து இயங்காது என்றும், வடமொழி வழியது என்றும், வடமொழித் துணையின்றி இயங்காது என்றும், உலக மொழிகளுக் கெல்லாம் தாய்மொழி வட மொழியே என்றும் தமிழ்க் கல்வி வல்ல பெற்றியரும் முற்றும் மயங்கி யுரைக்க, வடமொழி உலக மொழிகளுக்குத் தாய்மொழி என்றால், அதற்கும் மற்றை மொழிகளுக்கும் தந்தை மொழி தமிழே என்று கூறிய வடலூர் அடிகளார் புகழ்பரப்பாளராய்ப் பொதுநிலைக் கழகம் கண்ட தவ அடிகளார், தனித்தமிழ்த் தந்தை என்னும் பெருமை பெற்ற மறைமலையடிகளார் ஆவர். சிவனியம் சார்ந்த பெருமக்களும், பேரறிவர்களும் கூட, ஒப்பாராய், `தனித்தமிழ் (தனித்து அமிழ்) என்று பழிக்கவும் இழிக்கவும், துணிந்து நின்று, அவர் வெள்க; வெள்ளிடை மலையாகத் `தனித்தமிழ் என்பதை நிலை நாட்டிய நிறைமலை, மறைமலையடிகளாரே! சிவனிய மடத்தினரும், வடமொழி வல்லாரும், `தொல் காப்பியக் கடல் எனப் புகழப்பட்டாருமாம் சாமிநாத தேசிகர், நாணமின்றி, ஐந்தெழுத்தால் ஒருபாடை என்று அறையவே நாணுவர் அறிவுடையோரே; யாமும் அதுவே என்றும், ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டோ? என்றும் - எழுதிப் பரப்பினாராக, ஒரு சொல் தானும் வேற்றுச் சொல் விரவா நூல் யாம் செய்வேம் என்று ஐம்பான் நான்கு நூல்கள் கலைமலி பேழையாய் எழுதிக் காட்சிப் படுத்திய மாட்சியர் மறைமலையடிகளார்! தொல்காப்பியக் காவல் தமிழ் மொழிக்கு வாய்த்த தொல்காப்பிய வளநூல், வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே (884) என்றும், மொழி பெயர்ப்புச் செய்தலிலும் முறைமை பேண வேண்டும் என்பதை, மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல் (1597) என்றும், பேச்சு வழக்கில் ஒரு கால் வேற்றுச்சொல் வந்து விடினும், மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை (1590) என்றும் - வரம்பாணை செய்தும், அச் செவ்வியல் வழித்தடம் சிதைந்தும் சீரழிந்தும், சேறும் சகதியும் நாறும் சிறுமையும் குறுமையும் வழிவழியே எய்த மூவாயிரம் ஆண்டுகளாய், அயலோர் சூழ்ச்சியாலும் திறவோர் மயக்காலும் ஏற்பட்ட அழிபாடுகளை எல்லாம் தாமே ஓர் இயக்கமாய் இருந்து, விழிப்பும் எழுச்சியும் ஊட்டியவர் மறைமலை அடிகளே என்பதால், ஆரியத்தினின்று தமிழை மீட்டெடுப்ப தற்காக அரும் பாடுபட்டு இலக்கிய இலக்கண மரபோடு யான் கற்ற மொழிகள் முப்பது என்னும் பாவாணர், மூவா யிரமாண்டு மோதும் வடமொழியால் சாவாம் தகைநின்ற தண்டமிழை - மேவாக் குமரித் தனிநிலைக்குக் கொண்டுவந்த அப்பர் அமரர் மறைமலை யார் எனப் பாடிப் பரவினார். `தனித் தமிழ்த் தந்தையார் என்ற பாராட்டும் இப் பாட்டின் தலைப்பில் வழங்கினார். நுண்ணிய நூல்பலவும் கற்பதே நோன்பாக எண்ணிய வாழ்நாள் எலாமளித்துப் - பண்ணிய செந்தமிழ்நூல் ஒவ்வொன்றும் செப்பும் கடலறிவை பைந்தமிழ் காக்கும் படை என அடிகள் கல்வி மேம்பாட்டையும் கலைத் திறப் படைப்புகளின் மேம்பாட்டையும் பாவேந்தர் பாரதிதாசனார் பாராட்டுகிறார். பல்துறை ஆற்றல் அடிகளின் பல்துறை ஆற்றலை 1. பேராசிரியர், 2. பெரும் புலவர், 3. பாவலர், 4. ஆராய்ச்சியாளர், 5. மும்மொழிப் புலவர், 6. மொழிபெயர்ப்பாளர், 7. சொற்பொழி வாளர், 8. எழுத்தாளர், 9. பல்கலைச் செல்வர், 10. தனித்தமிழ்த் தந்தையார் என்று பாவாணர் பகுத்துக் காட்டுகிறார். மேலும் அவர் தம் நுண்மாண் நுழைபுலத்தை பனிமலை முகட்டின் உயர்வும், நீல ஆற்றின் நீளமும் அமைதி வாரியின் ஆழமும் அமைந்தவர் மறைமலையடிகள் என்கிறார். (பனிமலை - இமயம்; நீல ஆறு - நைல்; அமைதிவாரி - பசிபிக்கு மாகடல்). அடிகளார் நூல்கள் அடிகள் பன்மாண் மாத்தமிழ் நூல்களை, நூலக இயக்கத் தந்தை அரங்க நாதரும், இந்நாள் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியரும் அந்நாள் நூலகருமாகிய திருமிகு இரா. முத்துக் குமாரசாமி அவர்களும் 14 வகைமைப்படுத்தி வைத்தமை பெரும் பாராட்டுக்கு உரியதாம் அவை, 1. மருத்துவம் 2. மறைபொருள் 3. இலக்கியம் 4. இதழ்கள் 5. சங்க இலக்கியம் 6. பாடல் 7. நாடகம் 8. புதினம் 9. கடிதம் 10. கட்டுரை 11. சமயம் 12. தத்துவம் 13. வரலாறு 14. சமூக இயல் என்பன. முதற் குறள் வாத நிராகரணம் என்னும் மறுப்பு நூலே, அடிகளின் முதல் நூலாக வெளிப்படுகின்றது (1898) அந்நூன் மறுப்பு நயமே நாகை அடிகளை - பல்லவபுர அடிகளாக -தனித்தமிழ் அடிகளாக ஆக்க அரும் பெரும் தூண்டல் ஆயிற்றாம். அடிகளார் வரலாறு: கீழ்கடல் சார் நாகப்பட்டினத்தைச் சார்ந்த சிற்றூர் காடம்பாடி, ஆங்கு வாழ்ந்த அருந்தவப் பெருந்தகையர் சொக்கநாதர் – சின்னம்மை யார்! இவ்விணையர் கொடையாய்த் தமிழன்னை செய்த தவப் பேற்றால் பிறந்தவர் வேதாசலம். பிறந்த பெரு மங்கல நாள் கி.பி. 15.07.1876. சொக்கநாதர், சித்தமலம் அறுவித்த சித்தமருத்துவர்; அறிவ மருத்துவம் என்பதும் அது. அத்தொழில் அவர்க்கு வளத்தை வழங்கியது. அதனால் வேதாசலம் குறைவற வாழ்ந்தார். நாகப்பட்டினத்து வெசிலியன் மிசன் பள்ளியில் ஐந்து வகுப்புவரை பயின்றார்; சிறந்த மாணவராக விளங்கினார். ஆறாம் வகுப்பில் சேரும் நிலையில், அருமைத் தந்தையார் இயற்கை எய்தினார். ஆயினும் அன்னையார் உறுதியால் கல்வியைத் தொடர்ந்தார். அப்பள்ளியில் ஆங்கிலக் கல்விக்கு இருந்த முதன்மை தமிழுக்கு இல்லை. கிறித்தவ சமயம் பற்றி அன்றிச் சிவனியம் பற்றி அறிய வாய்ப்பில்லை என்னும் இரண்டு குறைகளையும் இளமையிலேயே உணர்ந்தார். வீட்டிலேயே தமிழ் நூல்களைப் பயின்று முதற் குறையையும், நாகையில் இருந்த இந்துமதாபிமான சங்கம் வழி இரண்டாம் குறையையும் நீக்கினார். பள்ளியிலும் குறையறக் கற்றார். வருவாய்க் குறையால் வாடும் அன்னைக்குச் சுமையாய் இல்லாமல் தனியே பயில்வதே இனியவழி என எண்ணி, நாகையில் புத்தக வணிகராக விளங்கிய நாராயண சாமியார் புலமையாலும் சிறந்து விளங்கியவர். ஆதலால் அவரிடம் தனியே இலக்கிய - இலக்கண - சமய நூல்களைக் கற்றார். நாராயணரின் முன்னை மாணவர் பேரா. மனோன்மணீயம் பெ. சுந்தரனார் என்பதையும் அறிந்தார். ஒன்பதாம் வகுப்பொடு பள்ளிக் கல்வியை நிறுத்தித் தனிக்கல்வியே கற்றார். தொல்காப்பியம், தொகை நூல்கள், திருக்குறள், திருச்சிற்றம்பலக் கோவை, இறையனார் அகப் பொருள் எனக்கற்றார். அடிகளார் இயற்றிய திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை முகப்பில், எமது பதினைந்தாம் ஆண்டில் முறைப்படி துவங்கிய தமிழ்ப் பயிற்சியானது எமது இருபத்தோராம் ஆண்டிற்குள் தொல்காப்பியம், திருக்குறள், சிற்றம்பலக் கோவையார் என்னும் மூன்று நூல்களையும் முழுதும் நெட்டுருச் செய்து முடித்தேம் என்றும் வேறுசில நூல்களையும் முழுவதாக ஓதியதையும் கூறி, இங்ஙனமாக, விழுமிய தமிழ்ப்பழ நூல்களில் எமது கருத்து ஈர்ப்புண்டு நின்று பயின்ற பயிற்சியினாலேயே செய்யுளும் உரையும் தனிச் செந்தமிழ் நடையில் எழுதும் திறம் எமது இளமைப் பருவத்திலேயே எமக்கு வாய்ப்ப தாயிற்று என்கிறார். அவ்வாண்டு கி.பி. 1897. நாகை இந்து மதாபிமான சங்கத்திற்குச் சைவ சித்தாந்த சண்ட மருதம் என்னும் விருது பெற்ற சோமசுந்தர நாயகர் வந்து சொற்பொழிவாற்றினார். அவர் பொழிவில் வந்த கருத்தொன்றனை மறுத்து ஒருவர் எழுத, அதற்கு மறுப்பாக முருகவேள் என்னும் புனைபெயரில் மறுப்புரை எழுதினார். அதனைக்கற்ற நாயகர், மீளப் பொழிவுக்கு வருங்கால் முருக வேளைச் சந்திக்க விரும்பினார். அச்சந்திப்பின் பயனே உன்னை விரைவிலே சென்னைக்கு வருவிப்போம். நீ அந்தப் பக்கங்களில் இருப்பதே நல்லது என்று கூறினார். இதுவே அடிகளார்க்குச் சென்னை வாழ்வு அமைய முதல் தூண்டல் ஆயிற்று. அடிகளுக்குப் பதினேழாம் வயதில் (1893) திருமணம் நிகழ்ந்தது. துணைவி தம் மாமன் மகள் சவுந்தர வல்லி என்பார். திருவனந்தபுரம் நாராயணசாமி அவர்களின் முன்னை மாணவராம் பேரா. சுந்தரனார் திருவனந்த புரத்தில் இருந்தார். அவரியற்றிய மனோன்மணீய நாடக நூல் கற்று அதன் அருமை கண்டு, பேராசிரியரைக் காணவிரும்பினார். அதனால் தம் ஆசிரியரோடு திருவனந்தபுரம் சென்று பேராசிரியரோடு உரையாடினார். வேதாசலனார் இளம் பருவத்தையும் மூதறிவையும் அறிந்த சுந்தரனார் வியப்புற்றுத் தகுதிச் சான்று ஒன்று வழங்கினார். சிறிது காலம் திருவனந்த புரத்தில் ஆசிரியப் பணியும் செய்தார். அவ்விடத்தின் பருவநிலை ஒவ்வாமையால் நாகைக்கே திரும்பினார். சென்னை: சோமசுந்தரனார் முன்னே கூறியபடி வேதாசலரைச் சென்னைக்கு அழைத்து அறிஞர் நல்லுசாமி என்பார் நடாத்திய சித்தாந்த தீபிகை என்னும் இதழாசிரியர் ஆக்கினார். பின்னே சென்னை கிறித்தவக் கல்லூரிக்கு ஒரு தமிழ்ப் பேராசிரியர் வேண்டியிருத்தல் அறிந்த சோமசுந்தரனார் வேதாசலனா ர அக்கல்லூரிப் பேராசிரியராக்க முயன்றார். அதுகால் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர் வி.கோ சூரியநாராயண சாத்திரியார் என்னும் பரிதிமால் கலைஞர். கல்லூரி முதல்வர் வில்லியம் மில்லர் என்பார். 9.3.1898 இல் வேதாசலனார் பணியேற்றார். அங்குப் பதின்மூன்று ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அக்கல்லூரிக் காலத்தே இளங்கலை மாணவர்க்குப் பாடமாக இருந்த முல்லைப்பாட்டு (1903) பட்டினப்பாலை (1906) என்பவற்றுக்கு ஆராய்ச்சி உரை எழுதினார். அவ்வுரை நூலை வாங்கிக் கற்ற மாணாக்கரும் ஏனைத் தமிழறிஞரும் புதுமுறையாக எழுதப்பட்ட அவ்வுரைப் பாங்கினைப் பின்பற்றிப் பழைய தமிழ் நூல்களை ஆராய்வதில் கிளர்ச்சி பெறலானார். இப்புதுமுறை உரை, தமிழ் நூலாராயும் வகைகளை இனிது விளக்கி அறிஞர் பலர்க்கும் அக மகிழ்ச்சி யினை விளைத்தமை கண்டு இனி, இத்தகைய உரைகளையே எழுதுதல் வேண்டும் என எமதுள்ளம் பெரிதும் விழைந்தது என்கிறார். சென்னைப் பல்கலைக் கழகத்தார்ஆங்கிலமும் வட மொழியும் கட்டாயமாகப் படித்தல் வேண்டும் என்றும், தாய்மொழிப் பாடத்தை விருப்பப் பாடமாகக் கற்பிக்கலாம் என்றும் ஒரு தீர்மானம் ஆட்சிக்குழுவில் கொண்டு வந்தனர். ஒரு பாடம் விருப்பப்பாடம் எனப்பட்ட பின்னர் அதனைக் கற்க வருவார் எவர்? தமிழ் கற்கும் மாணவர் எண்ணிக்கை குறையவே ஆசிரியப் பணியிடமும் குறைய வேண்டுவதாகி, அடிகளார் 31.1. 1911 ஆம் நாளுடன் கல்லூரிப் பணியை முடிக்க வேண்டிய தாயிற்று. மாணவர்: இக்காலத்தில் அடிகளின் மாணவராக இருந்தாருள், தணிகைமணி செங்கல்வராயர், இரசிகமணி டி.கே.சி, நாவலர் ச.சோ. பாரதி, பேரறிஞர் ச. வையாபுரியார் முதலோர் சிலர். தணிகைமணியின், தேவார திருவாசகச் சொல்லடைவு ஒரு பிறப்பளவில் செய்யக் கூடியதா? நாவலர் ச. சோ. பாரதியாரின் ஆய்வுத் துணிவு எத்தனை கசடுகளை நீக்கியது? வையாபுரியார், கால ஆய்விலும், வடமொழிப் பிடிவாதத்திலும் தம்மைச் சால்பு ஆய்வில் இருந்து விலக்கினாலும், சங்க இலக்கியப் பதிப்பு, நிகண்டுப்பதிப்பு, பல்கலைக் கழக அகரமுதலிப் பதிப்பு இவற்றைச் செய்த அருமை என்ன? புறத்திரட்டு, களவியல், காரிகை ஆயவற்றின் பதிப்புச் சிறப்பு என்ன? இவர்கள் பணியும் அடிகளாரைத் தழுவுதல் உண்மை தானே! சமரச சன்மார்க்கம் கல்லூரிப் பணியில் இருந்து வீடுபெற்ற அடிகளார், பல்லவபுரத்தை வாழ்விடமாகக் கொண்டார். சமரச சன்மார்க்க நிலையம் தோற்றுவித்தார். எல்லாச் சாதியார்க்கும் எல்லாச் சமயத்தார்க்கும் அங்கீகாரமான சீவகாருணிய ஒழுக்கத்தையும், சமரச சன்மார்க் கத்தையும் பிற்காலத்தில் மிக வலியுறுத்திப் போதித்த ஆசிரியர் ஸ்ரீமத் இராமலிங்க சுவாமிகளே ஆவார். அச்சுவாமி கள் வலியுறுத்திய அவ்விரண்டு கொள்கைகளையும் எங்கும் வலியுறுத்தி விளக்கி அன்பர்களை ஒருங்கு கூட்ட வேண்டி அச்சுவாமிகள் இட்ட பெயராலேயே, `சமரச சன்மார்க்க நிலையம் என்னும் இது தாபிக்கலாயிற்று. இந்நிலையத்திற்கு முன் ஆசிரியர் திருவள்ளுவ நாயனார்; பின் ஆசிரியர் இராமலிங்க சுவாமிகள் ஆவர் என்று பெயரீடு செய்து கொள்கைகளையும் வகுக்கிறார். குடும்பம் 1898இல் அடிகளார் சென்னைக்கு வரும்போது அவர்தம் அன்னையார் சின்னம்மையார், துணைவியார் சவுந்திரம் அம்மை யார், செல்வி சிந்தாமணி, அடிகளார் என்னும் நால்வரைக் கொண்ட குடும்பமாக இருந்தது. 1911இல் பல்லவ புரத்தில் குடிபுகும் போது நீலாம்பிகை, திருஞான சம்பந்தம், மாணிக்கவாசகம், திருநாவுக்கரசு, சுந்தர மூர்த்தி என்னும் மக்களும் கொண்ட ஒன்பதின்மர் குடும்பமாக இருந்தது. பல்லவுரம் புகுந்த பின் திரிபுர சுந்தரி பிறக்கப் பதின்மன் குடும்பம் ஆயிற்று. இந்நிலையிலேயே 27.08.1911இல் சைவத் துறவியர்க்குரிய துறவாடை (காவி) கொண்டு சுவாமி வேதாசலம் ஆனார். சுவாமி வேதாசலம் என்பதன் தனித்தமிழாக்கமே மறைமலையடிகள் என்பது வெளிப்படை. முன்னேயே அவரை அடிகள் என்றது அவர்தம் மாண்பு கருதியேயாம். மீள்பார்வை நாம் மீள்பார்வை ஒன்றுபார்க்க வேண்டும். அடிகள் 21ஆம் அகவையிலேயே தனித்தமிழ் ஆய்வுத்திறம் கைவரப் பெற்றார். 1903, 1907 ஆகிய ஆண்டுகளில் முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய நூல்களுக்கு ஆய்வுரை வழங்குங்கால் இதிலுள்ள சொற்கள் இத்தனை; இவற்றுள் செந்தமிழ்ச்சொல் இத்தனை; வேற்றுச் சொல் இத்தனை - என அறுதியிடுகிறார். ஆதலால், தனித்தமிழ் என்னும் தோற்றம் 1916 ஆம் ஆண்டில் நீலாம்பிகையார் தூண்டலால் ஏற்பட்டமை என்பது, அகத்தே அமைந்து கிடந்த வித்து, முளை விட்டு வெளிப்பட்ட நிலையாம். அவ் வெளிப்பட்ட நிலையும் உடனே பற்றிப் படரவில்லை! மேலும் சில ஆண்டுகளின் பின்னரேயே சமசர சன்மார்க்க நிலையம், பொதுநிலைக் கழகமாகவும், ஞானசாகரம் அறிவுக் கடலாகவும், சுவாமி வேதாசலம் மறைமலையடிகள் ஆகவும் படிப்படியே கிளர்கின்றனவாம்! ஓர் அரிய அமைப்பு உருவாகும் நிலையும், ஓர் அரிய கண்டு பிடிப்பு உலகவர் அறிய வெளிப்படலும், அவை இயக்கமாகவும் பயனாகவும் ஆகின்ற நிலையும் பற்றிய விளக்கம், அடிகளார் தனித்தமிழ் இயக்க வரலாற்றில் அடங்கியுள்ளதாம்! எதிரிடைத் தூண்டல்: மேலும் ஒன்று: ஒரு நேரிடைத் தூண்டலினும் எதிரிடைத் தூண்டல் வலிமை மிக்கது என்பதும், உள்ளத்து உறுதியை வெள்ளப் பெருக்காய் வெளிப்படுத்த வல்லது என்பதும் தெளிவாம். ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டா? என்று கற்றறிந்த தமிழர் ஒருவரே வினாவி நகைத்தல், பெற்ற தாய் மொழிப் பிறவிக்கு உற்ற தகைமை ஆகாது என்பதும், அதனை உணர்ந்த அப்பிறவி பாம்பன் குருபாத அடிகள் போல் சேந்தன் செந்தமிழ் என்ன ஒரு நூலியற்றித் தமிழ் தனித்து இயங்கவல்ல தனி உயர் மொழி என்று நிலைநாட்டியிருப்பின் வழிபடத்தக்க பிறவியாய் அமைந்திருக்கும்! அப்பேறு அதற்கு வாய்க்காமை, துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம் (குறள் 263) என்னும் வள்ளுவர் வாய் மொழிப்படி, தனித்தமிழ்த் தந்தைப் பேறு மறைமலையடிகட்கு வர இருப்பதற்கே நேரிட்ட நேர்ச்சியாம் என்க. இயக்கம் அடிகள் இயக்கம் ஆலமரமெனக் கால்பல கொண்டு அகல அகல விரியத் தனித்தமிழ் இயக்கமாய், உலகத்தமிழ்க் கழகமாய், பாவலரேறு தமிழ்க் களமாய், சேரர் கொற்றமாய், தமிழ்க்காப்புக் கழகமாய், தமிழ்ப் பாதுகாப்புக் கழகமாய், தனித் தமிழ் இலக்கியக் கழகமாய், தமிழ் வளர்ச்சிக் கழகமாய், மறைமலையடிகள் மன்றமாய், தமிழ்க்காவல் குழுவாய், இயற்றமிழ்ப் பயிற்றகமாய், பாவாணர் தமிழ் இயக்கமாய் ஆங்காங்கு முகிழ்த்து முனைப்பொடு கடனாற்ற ஏவியதாம். நூலகம் அடிகள் நூற்றொகை, அருமணிக் குவையன்ன நாலாயிரம் நூல்களைக் கொண்டது. எதிரது உணர்ந்து, சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகத்திற்கு முற்கொடையாக வழங்கியதால், நாலாயிரம் நாற்பதாயிரமாய் மேலும் மேலும் விரிந்து மறைமலையடிகள் நூலகப் பெயரால், பெருமைமிகு வள்ளலார் முதற்கண் பொழிவு செய்த பெரியவர் சோமு அவர்கள் இல்லமே வாய்க்க உலக வளமாக்கியதாம்! அதன் வழியாகவே அடிகள் தாமே வெளியிட்ட நூல்களும், வெளியிடாமல் கழக வழி வெளிவந்த நூல்களும், அடிகள் காலத்திற்குப் பின் வெளிவந்த நூல்களும் ஆகிய முழுமைத் தொகுதிகளும் கி.பி. 1898 முதல் 1969 வரை முதற்பதிப்பாக வெளிவந்தவை. அவற்றுள் படிகள் கிட்டுதற்கு அரியவையும் உண்டு. அடிகள் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப் பட்ட பேற்றால், இன்று வாய்த்த நூல்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக வழங்கும் பெருவாய்ப்பைத் தமிழ்மண் பதிப்பகம் பெற்றதாம். வெள்ளச் சேதம் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு பதிப்பகத்துள் புகுந்து அச்சு அடிக்கப்பட்டதும், அடிக்கப்பட இருந்ததும், கணினிப்படுத்தி வைத்த குறுவட்டுகளும், மூலநூல்களும் என வாரி அள்ளிக் கொண்டு போனமை, களத்துக்கு வந்த கதிர் மணிகள், களஞ்சியத்திற்கு வாராமல் போய, பேரழிவு ஒப்பதாம். ஆதலால், நூல்களை மீளத் தேடவும், கணினிப்படுத்தவும், குறுவட்டு ஆக்கி அச்சிடவும் என மும்மடங்குப் பணியும் பேரிழப்பும் பெருத்த அவலமும் உண்டாக்கிற்றாம். அந்நிலையில், ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழா துஞற்று பவர் என்னும் வாய்மொழியை வாய்மை மொழியாக்கிய துணிவுச் செல்வர் இளவழகனாரும் அவர் குடும்பத்தவரும் ஆவர்! முன்னறிவிப்புத் திட்டப்படி நூலுக்கு ஆர்வமாய்ப் பணம் செலுத்தியோர்க்கும் நூல் காலத்தில் கிட்டா உளைச்சல் இல்லாமல் போகாதே! அவர்களும் அமைந்து தாங்கல், இயற்கை இயங்கியல் வழியதாம். வெளியீடுகள் தமிழ்மண் பதிப்பகம் தமிழ்மொழி இன மண்வளம் - வளர்ச்சி மீட்டெடுப்பு - என்பவற்றை முன்வைத்துத் தமிழ்ப் போராளி இளவழகனாரால் தொடங்கப்பட்டதால், பேரிழப்புக்காம் எனத் தெளிவாகத் தெரிந்தும், இசைக் கலைக்கு வாய்த்த ஒப்பற்ற களஞ்சியமாய் வாய்த்த - கருணாமிர்த சாகரத்தை வெளியிட்டதாம்! முன்னை வந்த முதற்பகுதி பேரிழப்பாக்கியும் அதன் பின்னைப் பகுதிகளையும் அரிதின் முயன்று வெளியிட்டது! மொழிஞாயிறு பாவாணர்; ஈழத்து அறிஞர் ந.சி. கந்தையா; வரலாற்றறிஞர் சாமிநாத சர்மா, உரைவேந்தர் ஔவை சு.து; நாவலர் ந.மு.வே; பண்டித வித்துவான் தி.வே. கோபாலர்; சாமி சிதம்பரனார்; மயிலை சீனி. வேங்கட சாமியார்; பேரறிஞர் க. வெள்ளை வாரணனார்; பாவலர் குழந்தையார்; பாவலர் முடியரசனார்; பாவேந்தர், தொல் பொருள் கல்வெட்டு ஆய்ஞர் சதாசிவனார், சாத்தன்குளம் இராகவன் நூல்களை யும் எளியேன் நூல்களையும் முழுமை முழுமையாக வெளியிட்டது. தொல்காப்பியம்- பாட்டு - தொகை - காப்பியம் - கீழ்க்கணக்கு - தமிழ்நாட்டு வரலாறு - ஆங்கிலம் வல்ல அறிஞர் இராம நாதனார் நூல்களையும், யாழ்ப்பாண அகராதி முதலாம் அகராதித் தொகுதிகளையும் வெளியிட்டது. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதிதொட்டு, இருபத்தோராம் நூற்றாண்டின் முற்பகுதி வரை வெளிவந்த - தமிழுக்கு ஆக்கமாம் நாட் டுடைமை ஆக்கப்பட்ட நூல்களை எல்லாம் - ஓரிடத்துப் பெற்று, ஒரு தனித்தமிழ் நூலகம் அமைக்கும் அளவுக்கு அச்சிட்டு வழங்கிய பெருமை இளவழகனார்க்கு உண்டு. அவரே அன்றி அவர் துணையையும் மக்களையும் உறவையும் அன்பையும் நண்பையும் ஒருங்கே இணைத்து, அறிஞர் பெருமக்கள் பலர் அரவணைப்பையும் வாய்ப்பக் கொண்டு வாழும் இயல்பு அவர்க்கு வாய்த்தலால் மட்டுமே, இவ்வாறு செயற்கரிய செய்ய வாய்த்ததாம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவரும் அவர். மறைமலைய மாண்பு மறைமலையம், தனித்தமிழ் இயக்கம்! தமிழ்த் தனிப் பெருவளம்! முத்தமிழ்ச் சுரப்பு! சீர்திருத்தச் செழுமை! வாழ்வியல் வளம்! கலைச் சொல்லாக்கக் களஞ்சியம்! பண்டைத் தமிழர் வரலாற்றுப் புதையல்! ஆய்வியல் வழிகாட்டி! பொழிவுப் பொலிவு! எழுத்தின் எழில்! மொழிக் காவல் முனையம்! முட்டறுக்கும் முழுதுறு கொடை! மீட்டெடுக்கும் மேதகைமை! அள்ள அள்ளக் குறையா அணிமணிக் குவியல்! எனல் மெய்மை விளக்கமாம்! புத்தகம் ஏற்றுப் பொலிவதே புத்தகம் வாழிய நலனே! வாழிய நிலனே! திருவள்ளுவர் நிலையம், இன்ப அன்புடன் 7, இராமன் தெரு, இரா. இளங்குமரன் திருநகர், மதுரை - 6 625006. மலைக்க வைக்கும் மறைமலையம்! பதிப்புரை மொழியே இனமக்கள் முன்னேற நல்ல வழியாம் அதனை வளர்க்க -பழியாய்த் தமிழயரத் தாழ்ந்தான் தமிழன் அவனே தமிழுயரத் தானுயர்வான் தான் மொழிப்பேரறிஞர் பாவாணர் அவர்கள் `மொழியின் வழியாகவே மொழிபேசும் மக்கள் முன்னேற முடியும் எனக் கூறுகிறார். உலகம் முழுதும் இவ்வுண்மை உணரப்பட்டுள்ளதை வரலாறு காட்டுகிறது. பாவாணரை அறிவுலகம் சரியாக அடையாளம் காண்பதற்குக் காரணமானது மறைமலையடிகளார் தந்த பாராட்டு! மறைமலையடிகள் (15.7.1876 - 15.9.1950) தேவநேயப் பாவாணர் (7.2.1902 - 16.1.1981) இருவரும் தனித்தமிழியக்கத்தைத் தாங்கி நிற்கும் தூண்களாகப் போற்றப்படுபவர்கள். மறைமலையடிகளார் 1916இல் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம், நூற்றாண்டை எட்டியுள்ள மகிழ்வான நேரம் இது! தனித்தமிழியக்க நூற்றாண்டை நினைவு கூரும் வகையில், தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளாரின் எழுத்து, சொற்பொழிவு, நாட்குறிப்பு, கடிதங்கள் அனைத்தையும் `மறைமலையம் எனும் பெருந்தொகுப்பாகத் தமிழ்மண் பதிப்பகம் வழி வெளிக்கொணரத் திட்டமிட்டோம். உலகம் முழுதும் பரவி வாழும் உணர்வு குன்றாத தமிழர்கள் தந்த ஊக்குவிப்பு, இந்தப் பெருந்திட்டத்தை நிறைவேற்றித் தீரவேண்டும் எனும் உறுதியை எனக்குத் தந்தது. தனித்தமிழ் இயக்க அறிஞர்களும் ஆர்வலர்களும் அடிகளாரின் அரிய படைப்புகள் பலவற்றையும் தேடித்தேடி வழங்கி வழிகாட்டினர்; வலிமை யூட்டினர். மறைமலையடிகளார் 1898ஆம் ஆண்டிலிருந்து எழுதி வந்துள்ளார். அறிவுக் கடல் (ஞானசாகரம்) இதழை 1902ஆம் ஆண்டிலிருந்து வெளியிட்டு வந்துள்ளார். அவரின் படைப்புகள் பெருவெள்ளமாய் வெளிவந்திருக்கின்றன. அச்சேறாதவை, பெயர் கூடக் கேட்டறியாதவை, பெயர் தெரிந்தும் பார்வைக்குக் கிட்டாதவை - எனப் பலவகையாய்க் கிடைத்தன அடிகளாரின் அரும்படைப்புகள்! அவற்றை `மறைமலையம் எனும் தலைப்பில் 34 தொகுப்புகளாக ஒருசேரப் பார்க்கும்போது, தமிழுலகம் வியப்படைவது உறுதி. மொழிநலம் இனநலம் பேணுதல் அன்றோ முழுநலம் பெறுவழி! நாம்பெறல் என்றோ? இப்படிக் கவலையோடு கேட்பார் பாவலரேறு பெருஞ் சித்திரனார் (10.3.1933 - 11.6.1995). அவரின் `தென்மொழி இதழ் 1.8.1959 இலிருந்து வெளிவரத் தொடங்கிய பின்புதான், தனித்தமிழ்த் திசை நோக்கி நூற்றுக்கணக்கானோர் நடைபோடத் தொடங்கினர். அதில் நானும் ஒருவன். பெருஞ்சித்திரனாரின் எழுத்து காட்டிய அடையாளத்தால், பாவாணர் நூல்கள் எனும் அறிவுப்புதையல் பலர் கைகளிலும் குடியேறியது. பாவாணர் நூல்கள் வலியுறுத்திப் பேசியதால், மறைமலை யடிகளாரைத் தேடிப்பயிலும் ஆர்வம் தமிழுலகில் புத்துயிர் பெற்றது. ஆரியத்தை எதிர்ப்பதிலும் சமற்கிருதத்தை விலக்கு வதிலுமே தமிழின மேம்பாடும் தமிழ்க் காப்பும் அடங்கியிருக்கிறது. அவ்வுணர்ச்சியைத் தமிழர் நெஞ்சங்களில் அரும்ப வைத்தது திராவிடர் இயக்கம்; மலர்ந்து விரியவைத்தது தனித்தமிழ் இயக்கம்! குமுக, அரசியல், பண்பாட்டு மலர்ச்சிக்கு இந்த ஈரியக்கங்களின் பேருழைப்புப் பயன்பட்டது. தமிழகத்தில் தனித்தமிழ் உணர்வு கி.மு. 7ஆம் நூற்றாண்டுக்குப் பின் தளரத் தொடங்கியது; 10ஆம் நூற்றாண்டுக்குப் பின் சரியத் தொடங்கியது. வடமொழி வெள்ளத்தில் தமிழ் இழுத்துச் செல்லப்பட்டு விடாமல் காப்பாற்றியோர் கம்பரும் பவணந்தியும்! பின்வந்தோருக்கு அந்தக் காப்புணர்ச்சி இல்லாமல், அயன் மொழிப் பற்றுக்கு அடிமையானதால் தமிழும் தமிழினமும் பெற்ற இழப்புகள் ஏராளம்! அயன்மொழிச் சேற்றிலிருந்து தமிழை மீட்கும் முயற்சி ஆங்கிலேயர் வருகையையொட்டிப் புத்துயிர் பெற்றது. வள்ளலார், பாம்பன் சாமிகள், வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள், சுப்பிரமணியசிவா, பரிதிமாற் கலைஞர் முதலிய பலரும் தொடக்க விதைகளாயினர். கோவை அவிநாசியில் பிறந்து விருதுநகரில் வாழ்ந்த விருதை சிவஞானயோகி 19.11.1908 ஆம் நாள் `திருவிடர் கழகம் தொடங்கித் தனித்தமிழ் உணர்ச்சிக்கு வேகங்கூட்டினார். அவ்வமைப்பில் உறுப்பினராயிருந்தவர் சுவாமி வேதாசலம் (மலைமலையடிகள்). மறைமலையடிகள் எனத் தம் பெயரைக் கொண்டு, 1916இல் அவர் தொடங்கியதே தனித்தமிழ் இயக்கம். `துறைமிகு ஆங்கிலம் மறைவட மொழியொடு தூய்தமிழ்ப் பேரறிஞர் - தனித்தமிழ் தோற்றிய ஓரறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடியதற்கேற்ப, மறைமலை யடிகளார் தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம் முதலிய பன்மொழியிலும் புலமை மிக்கவர். பன்மொழிப் பேரறிஞரான மறைமலையடிகளார் தமிழுக்கும் தமிழருக்கும் ஆதரவாக நின்றதால் எதிர்ப்புக்கும் இழப்புக்கும் ஆளாக்கப்பட்டார். ஆனாலும் உறுதி குன்றாமல் தமிழுக்கு ஆதரவாய் உழைக்கும் உள்ளத்தோடிருந்தார். அதனால், தமிழர் உள்ளங்களில் இன்றளவும் மாறாப் பெருமையோடு அவர் வீற்றிருக்கின்றார். வாழ்த்தாத நாளில்லை வையகம் மறைமலை யடிகள் மறையாத் திருப்பெயர் வாழ்த்தாத நாளில்லை வையகம் பாவேந்தர் பாரதிதாசன் அவர் மாண்பினைப் பாடி மகிழ்ந்ததும், தம் `குடும்ப விளக்கு நூலினை மறைமலை யடிகளுக்குக் காணிக்கையாக்கி வழங்கியதும், அவரின் உறுதி தளராத உள்ளமும் உழைப்பும் கண்டு போற்றிய நன்றிக் கடன் என்பதில் அய்யமில்லை. சென்னையில் கடந்த இருபது ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் தமிழ்மண் பதிப்பகப் பணிகளைத் தமிழுலகம் அறியும். வாழும் தலைமுறைக்கும் வருங்காலத் தலைமுறைக்கும் வழிகாட்டவல்ல தமிழறிஞர்கள் பலரின் நூல்களை முழுமுழுத் தொகுப்புகளாக வழங்கியிருப்பது தமிழ்மண் பதிப்பகத்தின் முடிப்பினை (சாதனை)யாகப் போற்றப்படுகிறது. தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட அறிஞர்களைக் கண்டறிந்து, அவர்களின் நூல்களை முழுமையான தொகுப்புகளாகத் தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டு வருகிறது. அவை காலம் முழுதும் பயன்படவல்ல கருவி நூல்கள் என்பதை அறிஞர் உலகம் அறியும்! தமது நலத்தை ஒதுக்கி வைத்து, தமிழ் நலத்தைக் காக்க வாழ்ந்த அறிஞர்களின் அனைத்து நூல்களையும் ஒரு சேரத் தொகுத்து முழுத் தொகுப்பாக வழங்குவது பெரும்பணி! அதனைத் தமிழ்மண் பதிப்பகம் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. தொகுப்பு நூல்களின் பட்டியலைப் பின்னிணைப்பில் காண்க. தமிழுக்காக உழைக்கும் உணர்வை இளமையில் எம்மிடம் ஏற்படுத்தியோருள் பெரும்புலவர் நக்கீரனாரும் அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலனாரும் குறிப்பிடத்தக்கோர்! எம் நன்றிக்குரியோர்! தனித்தமிழ் ஆர்வம், திராவிடர் இயக்க ஈடுபாடு எனும் இரு சிறகுகளால் எம்மை எழவைத்தவர் பெரும்புலவர் நக்கீரனார்! அவரை எண்ணிக் கண்பனிக்க நன்றி கூறுகிறது எம் நெஞ்சம். காலப்பழமையாலும் பராமரிப்புக் குறைவாலும் அழிய நேர்ந்த தமிழிலக்கியங்கள் அளவற்றவை! அவற்றில் ஒருபகுதியை யாவது மீட்டு நம் கைகளுக்கு வழங்கியோர் ஆறுமுகநாவலர், சி.வை. தாமோதரனார், உ.வே.சாமிநாதர் முதலிய சான்றோர் பெருமக்கள்! தமிழிலக்கியப் பெருஞ்செல்வத்தை மீண்டும் மீண்டும் அச்சாக்கி, அனைவர் கைகளையும் எட்டச் செய்த பெருமை - சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், உ.வே.சா. நூலகம், மணிவாசகர் பதிப்பகம் முதலிய பதிப்பாளர்களுக்கு உரியது. அச்சுத்துறை அறிமுகமான பின்பே, அறிவுத்துறை அனைவருக்கும் பொதுச்சொத்தாகும் வாய்ப்பு வந்தது. எட்டாக் கனியாக ஓலைச் சுவடிகளில் முடங்கிக் கிடந்த இலக்கியச் செல்வங்கள், எல்லோருக்கும் எளிதாய்க் கிடைக்கும் பணியைச் செய்த பதிப்பாசிரியர்களும், பதிப்பாளர்களும் நம் நன்றிக் குரியோர்! இரவு பகல் பாராது முதுமையைக் கருதாது உழைக்கும் மனவுரத்தை முன்னோடிப் பதிப்பாசிரியர்களின் பணியே எமக்கு வழங்கியது. அரசும், பல்கலைக் கழகங்களும், அறநிறுவனங்களும், சமய பீடங்களும் ,பெரும் இயக்கங்களும், பெரும் செல்வர்களும் செய்ய வேண்டிய பெருந் தமிழ்ப்பணி இது! எளியவர்களால் இயங்கும் தமிழ்மண் பதிப்பகம் பெருந்தமிழ்ப் பணிகளை இன்னல்களுக்கு இடையில் அருமுயற்சியோடு செய்து வருவது, உள்ளவுரம் ஒன்றினால்தான்! வல்லமை சேர்க்கும் வலிமையுண் டாக்கும்! வண்டமிழ் நைந்திடில் எதுநம்மைக் காக்கும்? காக்கும் தமிழைக் காக்கும் உணர்வைப் பாவேந்தர் பாடல் வரிகள் தந்தன. அச்சுக்கு எட்டாமலும் கைக்குக் கிட்டாமலும் இருந்த பேரறிஞர் பலரின் நூல்களை நாட்டுடைமையாக்கி திராவிடர் இயக்க அரசுகள் வழங்கின. அதனால், அறிவு பரவலாகும் வாய்ப்புகள் உருவாயின. `சரிவும் இழப்பும் நமக்கு வந்தாலும் தமிழுக்கு வரக்கூடாது என எண்ணி உழைக்கும் இயக்கங்களும் அமைப்புகளும் தமிழ் நாட்டில் வற்றாமல் வளர்ந்தபடி இருக்கின்றன. திருவிடர் கழகம் (1908) தனித்தமிழ் இயக்கம் (1916) தென்னிந்திய நலஉரிமைக் கழகம் (1916) சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் (1934) தமிழ்ப்பாதுகாப்புக் கழகம் (1937) தமிழறிஞர் கழகம் (1943) தமிழ்ப் பேராயம் (1959) தமிழ்க்காப்புக் கழகம் (1961) தனித்தமிழ்க் கழகம் (1964) உலகத்தமிழ்க் கழகம் (1968) தமிழியக்கம் (1972) தமிழ்ச் சான்றோர் பேரவை (1998) தமிழ் மலர்ச்சிக்கும் தனித்தமிழ் வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைத்த இத்தகு அமைப்புகளுக்கு மூல விசையாகத் திகழும் பெருமையைப் பெறுவோர் மறைமலையடிகளாரும் பாவாணருமே! தமிழ் வளத்திற்கும் தமிழர் நலத்திற்கும் சிவனிய மேம்பாட்டிற்கும் மறைமலையடிகளார் ஆற்றிய பணிகள் அளப்பரியவை. அவை தொடர்பாக அவர் ஆய்ந்தளித்த அறிவு முத்துகள் எண்ணற்றவை! அடிகளாரின் அனைத்துப் படைப்புகளும் பொருள்வழிப் பிரிக்கப்பட்டு, காலவரிசையில் 34 தொகுப்புகளாகத் தொகுக்கப் பட்டு `மறைமலையம் என உங்கள் கைகளில் இப்போது தவழ்கின்றது. பல தலைமுறைகளுக்குப் பயன்படும் அறிவுக் கருவூலம் இது! தமிழர் இல்லந்தோறும் இருக்கவேண்டிய அருந்தமிழ்ச் செல்வம் இது! அறிவுலகத்தால் `மறைமலையம் வரவேற்கப்படும் என்னும் நம்பிக்கை எமக்குண்டு. நூற் சுரங்கத்தில் நுழைய அழைக்கிறோம். தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழ்க்கென வாழ்வதே வாழ்வதாகும் எனும் பாவேந்தர் வரிகளை நினைவுக் கூறுகிறோம். - கோ. இளவழகன் இதுவரை வெளியிட்டுள்ள தமிழ்மண் பதிப்பகத்தின் நூல் தொகுப்புகள் 1. பாவாணர் தமிழ்க் களஞ்சியம் - 52 நூல்கள் 2. தொல்காப்பியம் - உரைகளுடன் 15 தொகுப்புகள் 3. பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் - 30 நூல்கள் 4. கோபாலையரின் தமிழ் இலக்கணப் பேரகராதி -18 தொகுப்புகள் 5. சாமிநாத சர்மா - 31 தொகுப்புகள் 6. ந.சி.க. நூல் திரட்டு - 24 தொகுப்புகள் 7. சாத்தன்குளம் இராகவன் நூற்களஞ்சியம் - 16 நூல்கள் 8. சதாசிவப் பண்டாரத்தார் - 10 நூல்கள் 9. நா.மு.வே.நாட்டார் தமிழ் உரைகள் - 24 தொகுப்புகள் 10. செவ்விலக்கியக் கருவூலம் - 15 தொகுப்புகள் 11. தேவநேயம் - 14 தொகுப்புகள் 12. திரு.வி.க. தமிழ்க்கொடை - 26 தொகுப்புகள் 13. உரைவேந்தர் தமிழ்த்தொகை - 28 தொகுப்புகள் 14. கருணாமிருத சாகரம் - 7 தொகுப்புகள் 15. பாவேந்தம் - கெட்டிஅட்டை - 25 தொகுப்புகள் 16. புலவர் குழந்தை படைப்புகள் - 16 தொகுப்புகள் 17. கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13 தொகுப்புகள் 18. நாவலர் சோம சுந்தர பாரதியார் நற்றமிழ் ஆய்வுகள் - 5 தொகுப்புகள் 19. முனைவர் இராசமாணிக்கனார் நூல்கள் - 39 நூல்கள் 20. தமிழக வரலாற்று வரிசை - 12 தொகுப்புகள் 21. உவமைவழி அறநெறி விளக்கம் - 3 தொகுப்புகள் 22. முதுமொழிக் களஞ்சியம் - 5 தொகுப்புகள் 23. சாமி சிதம்பரனார் நூற்களஞ்சியம் - 22 தொகுப்புகள் 24. மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 தொகுப்புகள் 25. அறிஞர் க. வெள்ளை வாரணனார் நூல் வரிசை - 21 தொகுப்புகள் 26. ஐம்பெருங் காப்பியங்கள் - 5 தொகுப்புகள் 27. பதினெண் கீழ்க்கணக்கு - 3 தொகுப்புகள் 28. நீதி நூல்கள் - 2 தொகுப்புகள் 29. பி. இராமநாதன் - 10 நூல்கள் 30. யாழ்ப்பாண அகராதிகள் - 2 தொகுப்புகள் 31. வெள்ளி விழாத் தமிழ்ப் பேரகராதிகள் - 3 தொகுப்புகள் 32. ந.சி. கந்தையா அகராதிகள் - 2 தொகுப்புகள் 33. முதுமுனைவர் இளங்குமரனார் தமிழ்வளம் - 40 தொகுப்புகள் 34. இளங்குமரனார் அகராதிகள் - 2 தொகுப்புகள் விரைவில் வெளிவர இருக்கும் அறிஞர்களின் நூல்கள் 1. மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை 2. வ.சுப. மாணிக்கம் 3. பெரியாரியம் (தந்தை பெரியார்) 4. தமிழர் மருத்துவக் களஞ்சியம் 5. தமிழ் - தமிழ் அகராதி பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம் எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம் என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் `உரத்தநாடு திட்டம் என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகச் சேர்த்து பொருள்வழிப் பிரித்து, கால நிரலில் ஒரே வீச்சில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். மறைமலையம் தொகுப்பில் இடம்பெறாத நூல்கள் முதற்குறள் வாத நிராகரணம் (1898), துகளறு போதம் (1898), சித்தாந்த ஞானபோதம் சதமணிக் கோவை குறிப்புரை (1898), வேத சிவாகமப் பிரமாண்யம் (1900), இந்த நான்கு நூல்களும் தமிழகத்தின் பல இடங்களில் தேடியும் எங்கள் கைக்குக் கிடைக்க வில்லை. ஆதலான், மறைமலையம் தொகுப்பில் மேற்கண்ட நூல்கள் இடம் பெறவில்லை. நூலுரை 1929 இல் முதல் பதிப்பாக வெளிப்பட்டது இந்நூல். அடிகளாரின் ஆங்கில முன்னுரை உடையது. கதை கேட்கும் விருப்பம் கற்றார் கல்லார் அனைவருக்கும் இருத்தலால், கடவுள் உண்மை, உயிர் உண்மை, தளையுண்மை, ஒழுகலாற்றுண்மை, அறம் பாவங்களின் உண்மை ஆயவற்றை இயற்கை உண்மை அறிவுக்கு மாறுபடாமல் அடிகளாரால் படைக்கப்பட்டது என்பது இரண்டாம் பதிப்பின் (1957) பதிப்புரை. அக்கதை நுட்பம் அறியா ஆரியர் அக்கதையை மனம்போல் எல்லாம் விரித்துக் கண்மூடித் தனத்தைப் பெருக்கிவிட்டமை கடவுள் நிலைக்கு மாறானது என்பதை விளக்குவதே இந்நூலாம். இதில் பிறவி எடுத்ததன்நோக்கம் முதலாக முடிவுரை ஈறாக 21 குறுங்கட்டுரைகள் உள. திருச்சிராப்பள்ளி சைவசித்தாந்த சபையின் ஆண்டுவிழாவில் பொழிந்த பொழிவு நூலாகும் இது. அறியாமை நீக்கமும் அறிவுப்பேறு அடைதலும் பிறவி நோக்கு என்பதை முதற்கண் விளக்கி, கடவுள் எல்லாவற்றையும் கடந்து நிற்கும் நிலையினது என்று கூறுகிறார். உலகையும் உயிர்களையும் கடந்துநிற்பது என விளக்கம் தருகிறார். தவம் என்பது உயர்ந்த பொருளில் நமது கருத்தை ஒருமுகப்படுத்தி உறைந்து நிற்றல் என்பதையும், ஐந்து முதற் பொருள்களில் அடங்கி நிற்பது உலகம் என்பதையும், பிறவா இறவாப் பெற்றியது கடவுள் என்பதையும், கடவுள் எங்கும் என்றும் இருப்பவர் என்பதால் மாந்தர்க்கு ஒழுக்க நிலை அமைவதையும், தக்கன் வேள்வி அழிப்பு என்னும் கதை சிறுதெய்வ வழிபாட்டை நீக்குவது என்பதையும், அம்மை தக்கன் மகள் என்பது எண்ணத் தக்கது என்பதையும், பிள்ளையார் பற்றிய கதைகள் அருவருக்கத் தக்க கதை என்பதையும், அவ்வாறே கந்தன் பிறப்புக் கதையும் எள்ளத் தக்கதே என்பதையும், பகலவன் விளக்கமே சிவம், செவ்வேள் என்பதையும், காலை 10 மணிவரையும், பகல் 2 மணிவரையும், மாலை 6 மணிவரையும் கதிர் ஒளி செய்வதே திருமால் மூவடியால் உலகளந்த கதை என்பதையும், கதிர்வரவை அறிவிக்கும் சேவலே முருகன் கொடி என்பதையும் விளக்குவது இந்நூலாம். இவற்றைப் போலிமை வயப்பட்ட சைவமும், புனைகதைப் புரட்டரும் ஏற்பது எளிதாமா? அடிகள் தெளிவும் உறுதிப்பாடும் இப்படிப் பொழியச் செய்தமை அந்நாளில் பெரும் புரட்சியாம். இரா. இளங்குமரன் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் ரோசா முத்தையா நூலகம் - சென்னை. புலவர் கா. இளமுருகன் - புன்செய் புளியம்பட்டி (மறைமலையடிகள் மன்றம்) மறை. தாயுமானவன் - சென்னை (மறைமலையடிகளின் பேரன்) பிழை திருத்த உதவியோர்: திரு. அ. மதிவாணன் (ஆங்கிலம்) திரு. க. கருப்பையா திரு. புலவர். த. ஆறுமுகம் புலவர். மு. இராசவேலு திரு. இராசுகுமார் திரு. நாக. சொக்கலிங்கம் முனைவர். க. சுப்பிரமணியன் திருமதி. அ. கோகிலா திருமதி. உசா செல்வி. அபிராமி நூல் உருவாக்கம் கணினி செய்தோர்: திருமதி சித்திரா திருமதி மலர் திருமதி செல்வி திருமதி ஹேமலதா திரு. ஆசம் திருமதி கலைவாணி பிராசசு இந்தியா திருமதி` புகழ்ச்செல்வி கயல்விழி (Process India), நூல் வடிவமைப்பு: திருமதி வி. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: கவி பாகர் நூலாக்கத்திற்கு உதவியோர் இரா. பரமேசுவரன், க. இளந்திராவிடன், வே. தனசேகரன், கு. மருது, இல. தருமராசன் தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை -1 எதிர்மம் (Negative): பிராசசு இந்தியா (Process India) சென்னை-5. அச்சடிப்பு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு மற்றும் பிராசசு இந்தியா `மறைமலையம் எல்லா நிலையிலும் செப்பமுற வெளி வருவதற்குப் பல்லாற்றானும் உதவியாக இருந்த இவர்களுக்கும் மற்றும் அறிஞர் பெருமக்களுக்கும் எம் நிறைந்த நன்றியும் பாராட்டும். சோமசுந்தரக் காஞ்சியாக்கம் 1914 இல் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட நூலினை மூலமாகக் கொண்டு இந்நூல் பதிப்பிக்கப்படுகின்றது. இந்நூலைப் பற்றிய குறிப்புரை... கையறுநிலை, தாபத நிலை, மன்னைக்காஞ்சி, என்னும் முக்கூறுகளாக இந்நூல் விளங்குகிறது. நாயகருக்கும் (அடிகளாரின் ஆசிரியர் சோமசுந்தர நாயகர்) அடிகளாருக்கு மிடையே இருந்த விழுமிய உறவு விளைத்த உணர்வாக இந்நூற் பாடல்கள் விளங்கு கின்றன. கையறு நிலைப்பாடல்களில் குறிப்பிடத்தக்க தாக விளங்கும் சோமசுந்தரக் காஞ்சியாக்கத்தின் முன்னுரைவழி அந்நாளைய சமய வேறுபாட்டு நிலைகளும் சமயச் சொற்போர் முறைகளும் புலப்படு கின்றன. சோமசுந்தரக் காஞ்சியாக்கத்தின் பாடல்கள் சங்கப் பாடல்களின் அழகும் செறிவும் இனிமையும் கொண்டவை. நாயகர் `விளங்கியதும் `வீழ்ந்ததும், `அவர் இல்லாததால் இயலாததும் உணர்ந்து பாடி யுள்ளார் அடிகளார். சோமசுந்தரக் காஞ்சியாக்கம் அவலச் சுவையுடன்முரணாகாத வகையில், அதன் உள்ளுறு சுவைகளாக, மகிழ்ச்சி, வியப்பு, இறும்பூது, துன்பம், ஆறுதல் எனப் பலவகை உளப்பாடு, மெய்ப் பாடுகளையும் படிப்படியாக ஏற்றிக்கொண்டு சென்று அழுகையையும் ஓர் அறிவார்ந்த பண்பார முகை யாக்கிக் காட்டுகிறது. அடிகளார் உணர்வுக் கோவை யில் ஒன்றிக் கலந்து பாடுதல் இந்நூல்வழி நன்குணரப் பெறும். - நா. செயப்பிரகாசு மறைமலையடிகளாரின் இலக்கியப் படைப்புகள் (பக். 3) பொருளடக்கம் பக்கம் 1. கையறு நிலை 5 2. தாபதநிலை 7 3. மன்னைக் காஞ்சி 9 4. முதற்பதிப்புக்கு நூலாசிரியர் முகவுரை 12 5. மூன்றாம் பதிப்பின் முகவுரை 14 5. நூலாராய்வாரியல் 16 6. ஆனந்தக்குற்றம் - 1 56 7. ஆனந்தக்குற்றம் -2 66 சிவமயம். திருச்சிற்றம்பலம் ஸ்ரீஜ்ஞானசம்பந்தகுருப்யோநம: சோமசுந்தரக்காஞ்சி வைதிக சைவசித்தாந்த சண்டமாருதம் ஸ்ரீஸ்ரீ-சோமசுந்தர நாயகரவர்கள்மே லியற்றிய கையறு நிலை சைவமெனப் படுசமய நலுண்மை தழைந்து செழித்திடவோ தாவறுநீ திவழிப்படு வாதிகள் சார்ந்து களித்திடவோ மெய்வழி பொய்வழி வேறுவேறாக விரிந்து விளங்கிடவோ வேதவே தாந்தவரம் பினியார்க்கும் விளங்க விளம்பிடவோ தெய்வமினிச் சிவமென்று தெளிந்து லகிங்கு திகழ்ந்திடவோ திப்பிய மெய்யருளிப் புவிவந்து சிறந்த திறம்படவோ துய்யவெண் ணீறுதுதைந்த தொழும்பர் கடன்மை சுடர்ந்திடவோ சோமசுந்தர னெனுநாம மொடிங்குநீ தோன்றிய தெங்குருவே (1) புத்தர்கரைந் திடுபொய்ம் மொழிகீழ்ந்த துபோதுவ தன்றென்றோ புன்சமணுக் கொருவன் கழுவீந்ததும் போதுவ தன்றென்றோ சுத்தசைவத் தொடுமுரணி யிழிப்புரை தோற்றுந ருண்டென்றோ சொல்வழி வாரலர்நல் வழிகண்டு துலங்குக வின்றென்றோ பித்துரை யாடுநரத் திறந்தீர்ந்து பிழைத்திட லொன்றென்றோ பேதுரை கூறுநர்வா துரைபோழ்ந்து பிறங்குவ தின்றென்றோ தொத்தலர் கொன்றையினான் புகழின்று தொடங்குது நன்றென்றோ சோமசுந்தர னெனுநாம மொடிங்குநீ தோன்றிய தெங்குருவே. (2) வான்மதி மீனினநீங்க வழுக்கியிம் மண்ணிடை வீழ்ந்ததுவோ மல்லலங் கற்பமரஞ் சிவம்வீசியிம் மண்ணிடை வீழ்ந்ததுவோ நான்முக னான்மறையுட் பொருள்கூற நலத்தக வந்ததுவோ நல்லகல்லா லமர்நம்பர் கைகாட்டுரை நாட்டவெ ழுந்ததுவோ மான்மக ணாமகடூ மகள்கூடி வளந்தர வந்ததுவோ மாதவவாழ் வொடுமில்வினை காட்டிட வள்ளுவர் வந்ததுவோ சூன்முதிர் வண்புயனூன் முறைதந்து சுரந்திட வந்ததுவோ சோமசுந்தர னெனூநாம மொடிங்குநீ தோன்றிய தெங்குருவே (3) நாயினிழிந் தவெம்புன்மை களைந்து நலந்தர வந்தனையோ நல்லது தீயது நன்றுபகுத்து நவின்றிட வந்தனையோ தாயினுமென் னுயர்தந்தை யினும்முயர் தன்மையில் வந்தனையோ தண்டமிழிற் படுவண்டுறை நன்றுநீ தந்திட வந்தனையோ காயினுமல் லதுவப்பினு மன்பது காட்டிட வந்தனையோ கன்மனமி யாவுமொர்நன் மனமாயெமைக் காத்திட வந்தனையோ தூயவுளத் தினர்சாம்பவ ரென்பது தோற்றிட வந்தனையோ சோமசுந்தர னெனுநாம மொடிங்குநீ தோன்றிய தெங்குருவே. (4) கண்ணுதலார் நெறிபண்ணின மொண்கழல் காணுது மினியென்றோ கௌணியர்தந் தலைவன் கழல்கண்டு களிக்குது மினியென்றோ எண்ணிலரன் பர்முனண் ணியநல்வழி யேகுது மினியென்றோ ஈசனற்றொண் டர்குழீஇய வெள்வெற்பி லிருக்குது மினியென்றோ மண்ணில்வரும் பொருடுய்த் துறைவாழ்வு மதித்தில மினியென்றோ மன்னரிறைஞ் சவரும்பெரு வாழ்வு மயங்கு வகைத்தென்றோ துண்ணெனவிவ் வுலகம் முதலென்று சுருங்குத லறிமென்றோ சோமசுந்தர னெனுநாமம் விடுத்து மறைந்தனை யெங்குருவே. (5) இங்கினிநின் கழல்கண் டிருகண் களுமின் புறலாகாதே ஏழையமுய் யமிழற்று நினின்னிசை யெய்துவ தாகாதே செங்குமுதம் புரைநின் றிருவாய்மொழி சேர்வது மாகாதே செம்மைதரும் முபதேச வழக்கினித் தேர்ந்திட லாகாதே கொங்கலர் கொன்றையினான் றிறமிங்கு குறிப்பது மாகாதே குன்றலிலன் பர்குணங் குறியிங்கு குறிக்கொள லாகாதே துங்கநலா கமநுட்ப முணர்ந்து சுகம்பெற லாகாதே சோமசுந்தர னெனநா முரையண்ண றுறந்து மறைந்திடவே. (6) குன்றிவிழிக் குயில்கா ளுயிரன்னவெங் கோவினைக் கண்டனிரோ கூம்புசிறைக் குருகே குருமாமணி கோலநீர் கண்டனிரோ பொன்றுகள்சிந் திடுகொன்றை களேசிவ போதனைக் கண்டனிரோ புந்திநிறைந் தவர்சிந்தை விளக்கினைப் புன்னையே கண்டனிரோ கன்றுமுளத் தொடுகண் கலுழெந்துயர் கண்டுரை யாடிரோ கைலைமலைத் தலைவன் கழல்வைகினற் கண்டது சொல்லீரோ துன்றுமெமெந் தையையென் றினிக்காண்குவந் தோகையே கூறீரோ சோமசுந்தர னெனுநாம னைக்கண்டு தொடர்ந்துசொ றூதுணமே. (7) வேதமொடா கமவித்தக நூல்கள் விரிந்து விளங்கிடுமோ வென்றவெண் ணீற்றொளி யிந்நிலமெங்கும் விரிந்து பரந்திடுமோ தீதறுநால்வர் திறம்படு மன்பு திகழ்ந்து சிறந்திடுமோ தேறருமெய்ப் பொருள்கண்ட வர்நூல்க டெளிந்து சிறந்திடுமோ மேதகவாக மொழிந்திட வல்லதொர் மெல்லியற் பைங்கிளியே மெல்லென விவ்வுரை யாவுமவற்கு விரித்து விளம்பிடினே தூதொடுவந் தநினின்மழ லைம்மொழி தூயதெனக் கொண்டே சோமசுந்தர னிவணாமுறு துன்பறத் தோன்றுவ னெம்முளமே. (8) தாபதநிலை அரைசே யெனுமா லருளே யெனுமால் உரைசேர் புகழா யுடையா யெனுமால் தரைநீ யொருவ றகுமோ வெனுமால் குருவே யெனுமால் குணநின் மனையே. (1) சிவமே கருதுந் திறலோ யெனுமால் அவநீ யெமைநீ யகலல் லெனுமால் தவமே திருவே தலைவா வெனுமால் குவிகை தொழுமாற் குணநின் மனையே. (2) அறிவோ பிறழு மலமந் தழுநின் குறியும் பிறவுங் குலவும் முளமே செறியா தொருவுந் திறமோ தெரியா தெறியுங் கரமே யிவணென் செயுமே. (3) எழிலார் மதியம் மியைநின் முகனே யழியா துளமே யடையும் மெனுமால் வழியா விழுதேன் வளர்நின் மொழியே பழியே மினியோ பருகல் லெனுமால். (4) உயிரே யுறவே யுலகாற் சிவநற் பயிரே தழையப் படுநன் முகிலே யெயிலார் புறவத் திளையார் திறமே பயில்வாய் தகுமோ பழியார் பிரிவே. (5) மறைநா வுடையாய் மறையோர் புகழ நிறையா ருரைக ணிரைப்பா யெனுமால் குறையா மதியாய் குணமா மலையே யிறையே பிரிய விரெனா னெனுமால். (6) கரவோ வறியாய் கணமும் பிரியாய் உரவோய் பிரிதல் கரவோ வுரையாய் அரவே ரிறைவ னடியே யுறைவாய் விரவுந் திறமோ விரியா யெனுமால். (7) கடலோ கரையுங் கருங்கல் லுருகு மடலார் மலர்க்கண் மலிநீர் சொரிய மிடலார் மரமும் மெழுகா யுருகும் அடலே றனையா யறியா யிதுவோ. (8) அருமை மகனை யகன்றா யெனுமால் திருவை நிகருஞ் சிறுமி யரையு மொருவா வுறைத லுறுமோ வெனுமால் பெருமா பிரியப் பெறுமோ வெனுமால். (9) மொழியப் படுமோ முனிவா மனையின் கழியாத் துயரங் கருத லரிதால் அழியாப் புகழென் னனையின் றுயர மொழியா யெனயா னுனைவேண் டுவெனே. (10) மன்னைக் காஞ்சி வாங்குகடல் குழிப்ப வண்புனன் முகந்து பாங்குபெற வுயரிய வோங்குமலை யேறி மன்னுயி ரஞ்ச மின்னுட னுரறி வரையாது பெய்த மழைக்குலம் போல, மறைநூற் பொருளுந் திருநெறித் தமிழு மரும்பொருள் பயப்ப வொருங்குடன் காட்டி, யுவலைச் சமயிகள் கவலை யெய்தச் சைவ சித்தாந்த மெய்யொடு கிளர வுரைமுறை நிறுத்தனை பலநாண் மற்றஃ தழுந்துதுயர் கூரக் கழிந்தன்று மன்னே, நீறினி தளைஇய வீறின தாகி யகன்றுநிவந் தொழுகிப் பரந்தநின் னுதலுங் கருகி முரிந்த திருவளர் புருவமும் பேரரு ணிரம்பு சீர்கெழு விழியு முல்லை முகிழன்ன மெல்லிய நாசியுங் கொவ்வை யன்ன செவ்விய விதழு முருந்தி னன்ன திருந்திய வெயிறு நவையறு கன்னற் சுவையின தாகிக் குயிலிசை யோடு பயிலுத லுடைத்தாய்க் காணினுங் கேட்பினும் கருதினுங் களிதரு முரையொடு பயின்ற புரையறு மொழியுஞ் செறிவோடு தசைந்த நறுவிய கதுப்புங் கத்தரிக் கொழுங்கடை யொத்திடு செவியுஞ் சுரிவளை போல வரியொடு திரண்டு பூதிமணி திகழுந் தீதறு மிடறு மெழுவெனத் திணிந்து முழவெனச் சரிந்துபின் னெழிலொடு கிளருங் கொழுவிய தோளு நான்முக னறியா வான்பொருள் வழக்கு முரைமுடிவு கடந்த விருபொருட் கல்வியு மொருவழி யெமக்குத் திருவொடு காட்டும் யாழ்நுனி யோடு வாழ்திருக் கையு நீறு சண்ணித்த நிகரறு மேனியு மருளது நீங்க வருளொடு காட்டி நாயினு மிழிந்த பேயின மாகிய வெம்மையு மாண்ட பின்னை யம்மைப் பண்டைய வுருவொடு சென்றனை மன்னே, நின்னடி சேர்குநர்க் கெல்லா மின்னரு டிரிவின்றிச் செய்குவை மன்னே, மருவலர் நின்முகங் கண்டொன் றிரக்குவ ராயினது வரையாது வழங்குவை மன்னே, யொருகால் வெகுண்டுரை யாடுவை யெனினு நகையொடு மெம்முறு விழுமங் களைவோய் மன்னே, தாயினு மெமக்குத் தலையளி புரிந்து தந்தையிற் பெரிய தயவினை மன்னே, காழியில் வந்த கௌணியக் கன்றின் மிகுத்துரை யெமக்குத் தொகுத்தனை மன்னே, மறைமுடி வெல்லாந் துறைபட நிறுவிக் குறையற வீந்த குரிசிலை மன்னே, மண்ணிடை வாழ்வும் விண்ணிடை வாழ்வு மதியாது வைகிய சிதைவறு திருவினை சிவன்றிரு வடியே சிவணிய குறிப்பி னவமது களைந்த தவமுறு தன்மையை கட்புலம் படராது விட்புலம் படர்ந்து கண்ணுத றிருவடி நண்ணினை யாயினும், பிரிவுறு துன்ப மரிதரி தாகலின் விழிநீ ருகுப்ப மொழியிடை குழற வானாத் துயர மடைது மன்றே, குருவே கண்ணே திருவே மணியே யறிவின் கொழுந்தே பொறையி னிறைவே யெம்முள மமர்ந்த வம்மணி விளக்கே புகழின் வடிவே பொலிவுறு மமுதே கலையின் றிறனே நிலையுமெ முயிரே யுயிரிடை நிரம்பு செயிரறு முணர்வே யுணர்வுக் குணர்வே யொப்பிலா முதலே யறிவொடு கூடாச் சிறியே முறுதுயர் பரிவொடு களைமதி யெனநின் றிருவடி நினைந்தொரு வரம்வேண் டுவலே, திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் நூலாசிரியர் முதற்பதிப்பு முகவுரை எமக்குச் சுத்தாத்துவித வைதிக சைவசித்தாந்த நூற் பொருள் செவியறிவுறுத்தி, இத்தொன்னாடு முழுவதூஉம் அச்சித்தாந்த சைவப் பொருண்மர பெல்லாம் வகுத்தெடுத்துக் கொண்டு உபந்நியாசங்களானும் நூல்களானும் பலகாற் பலரு முய்யுமாறு விளங்கக் காட்டி ஓர் அரியேறுபோல யாண்டும் நிகரற் றுலாவிய எங்குவரவர் சைவசித்தாந்த சண்டமாருதம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயக வள்ளல் சிவசாயுச்சிய முற்ற ஞான்று, அப்பெருந்தகையார் பிரிவாற்றாது எம்மிடை நிகழ்ந்த கையறவு தெரித்து யாமியற்றிய சோமசுந்தரக்காஞ்சி யின்மேல் ஒருசில போலிப்புலவன்மார் வழுவளைந்த போலி மறுப்பு ஒன்று வெளியிட்டனராக, மற்றதனைக் கண்ட எம் மாணக்கர் ஒருவர் அப்புலவர்க்குப் பொய்யறிவு களைந்து பொருளியன் மெய்யறிவு கொளுத்தல் வேண்டியும், அப்பொருளறிவின் மாட்சி தெரித்தல் வேண்டியும் தருக்க நூலி யைபும் பிரமாண நுட்பங்களு மிடையிடையே கொளுவியொரு கோவைப்படுத்துத் தமது மேற்கோ ளினிது விளங்க வெழுதிய அரியதோரெதிர் மறுப்பினை நாகைநீலலோசனி பிரபஞ்ச மித்திரன் தமிழ்ப்பிரதிநிதி முதலிய பிரபல சஞ்சிகைகளிற் பிரசுரித்தனர். அவ்வெதிர்மறுப்பு நியாய நெறிதழீஇயுரங் கொண்டுலாவுதலி னதனைக் கண்ட அப்புலவன்மார் வாய்வாளா தடங்கினர். அப்புலவன்மார் இவ்வெதிர்ப்பின் மேல் மறுப்பொன் றெழுதின ரெனவும். அம்மறுப்புப் பிரமாணப் பொருள் காட்டி நிறுவலாற்றாது பிறிது மொழிதல் என்னுந் தோல்வித் தானத் தோடியைந்து இகழுரை நிரம்ப நிகழ்த்தி மறுப்பட்ட தெனவும் எந்நண்பர் பல ரோடியா மொருங்கிருந்தவழி எம்மெதிரில் தமிழ்ப் பிரதிநிதிப் பத்திராதிபர் கூறினா ராயினும், அப்போலிமறுப்புத்தானும் இதுகாறும் புறம் போந்திலாமை யின், அவர்வெருட்டுரையை ஒரு பொருட் படுத்துவா மல்லே மென்றொழிக. இனி, இவ்வெதிர் மறுப்பினைப் பத்திரிகையி னின்றும் வேறு பிரித்தெடுத்துப் புத்தக வுருவமாகத் திரட்டிப் பலர்க்கும் பயன்படுமாறு புதுவது சில விரித்தெழுதி வெளியிடுகவென உள்ளுர் வெளியூர்களிலுள்ள நண்பர் பலரும் எம்மைப் பலகாற் கேட்டுக் கொண்டமையானும், அவருள்ளும் ஸ்ரீஸ்ரீ - நாயக ரவர்கள் மாணக்கரும் சிவாநுபூதிப் பெருஞ் செல்வம் வாய்ப்பப்பெற்றுச் சிவபெருமான் றிருவடியையன்றிப் பிரி தொன்றைக் கனவினு நினையாத முதிர்ந்த அன்பருமாகிய திண்டிவனம், சூபர் வைஸர் ஸ்ரீமாந்-சிங்காரவேல் ழதலியா ரவர்கள் அதற்கென்றே சில பொருடந்து உபகரித்தமையானும் அதனை யவ்வாறே செய்தற்கு முயல் வேமாயினேம். இதற்கிடையில் நண்பர் ஸ்ரீ வி. கோ. சூரியநாராயண சாதிரி யார் தமது ஞானபோதினிப் பத்திரிகையில் இதனை வெளி யிட்டு அதன் வாயிலாகச் சுருங்கிய செலவில் புத்தக மாக்கலா மென்றுரைப்ப, அதற்கிசைந்து யாமிதனை வேறுபிரித் தெழுதிக் கொடுப்பவும் அவர் தாமுரைத்தவாறு அப்பத்திரிக்கையி லிதனை வெளியிடாமற் பெரிதுங் காலந்தாழ்க்கச் செய்த மையின், இதனை யவரிடத்தினின்று பெயர்த்தும் வாங்கி வேறு அச்சிடுதற்கு நாளாயிற்று. இதுகிடக்க. இனி, இந்நூலின்கண் நூற்பொருளாராய்வாரினைய ராதல் வேண்டு மென்பதூஉம், பொருளிலக்கணமாவ திதுவென்ப தூஉம், அப்பொருட்கூறு பாட்டியலினைய தென்பதூஉம், காஞ்சித்திணை, கையறுநிலை, தாபதநிலை, மன்னைக்காஞ்சி முதலியவற்றின் பொருண்மரபு இவ்வாறா மென்பதூஉம், ஆனந்தக்குற்றமென வொன்று கோடல் போலியாமென்ப தூஉம் பிறவு நிறுத்தமுறையானே தந்து விளக்குவாம். சென்னை 1901 நா. வே. சோமசுந்தரக்காஞ்சியாக்கம் நூலாராய்வாரியல் அறிவைப் பண்படுத்து விளக்கமுறுவிக்க வேண்டு மென்னும் அவாவுடையா ரெல்லார்க்கும் நூலாராய்ச்சி யென்பது இன்றியமையாது வேண்டப்படுந் தலைமை யுடைத் தாம். தாமின்புறுவது குறித்தாயினும், பொருளீட்டியைம் பொறியானு நுகரப்படுவன இனிதடைந்து வாழ்வது குறித்தாயினும் பல நூற்பொருளை யுணர்ந்து சேறல் நூலா ராய்ச்சி யாகாது. அல்லது, இந்நிலவுலகிற் பலரும் தம்மைப் புகழ்ந்து நன்குமதித்தலையே குறிக்கொண்டு இரவும் பகலும் ஒருவாது பலவும் பயின்று கோடலே யதுவாமெனி னதுவு மன்று; என்னை? தம்மினுஞ் சிறந்தாரொருவர் புகழ்ப் பெருக்க முற்று வாழ்தலை நினைதொறு மனம் புழுங்கியறிவு திரிந்து மற்றவரொடு மறுதலைப்பட்டு நூற்பொருளைத் திரித்துத் தமக்கு வேண்டியவா றெல்லாங் குற்றங்கூறி யுழிதருவாராகலாற், புகழ் வேண்டுவார் நூற்பொரு ளாராய்ந்தாரெனப்படா ராகலி னென்பது. இங்ஙனம் புகழும் பொருளும் பெறுவது கருதி நூலுணர்ந்தார் நூற்பொருளாராய்ந்தாரெனப்படா ரென்பது தந்து எதிர்மறுப்பவே, மற்றது தம்மறிவு பரந்து விரிந்து திகழு மாறும், தம்மொழுக்கத்தைச் சீருறத் திருத்தி நல்வழிச் செல்லுமாறும், நூற்பொருட் சுவை கண்டு உவக்குமாறு மெல்லாம் வைத்து நடுநிலை திறம்பாது பல நூற்பொருளு நுண்ணிதாக வளந்து ஆராய்ந் துளங்கொளப் பயின்று புலமை நிரப்புவதாம். அது தான் நல்லிசைப் புலவரானும் பிறரானு மியற்றப்பட்டு ஒன்றோ டொன்று தலை மயங்கிக் கிடக்கும் நூற்கலவையுள் நல்லன தெரிந்தெடுத்துக் கோடற்கும் அல்லன வொழிதற்கு முதவுதன்மேலும், நன்மக்கள் பலரானும் வியந்தெடுத்துப் போற்றப்படுவனவாகிய விழுமிய நூலின்கண் நுட்பப்பொரு டேர்ந்து தாமின்புறுதற்கும் பிறரின்புறு வகையான் மற்றவைதம்மை யவர்க்கினிது விளக்குதற்குஞ் சிறந்த கருவியு மாவதாம். இங்ஙனம் நூலாராய்ச்சி செய்வாரும் வேறே, நூலறிவு கொள்வாரும் வேறே யென்பது உணரற்பாற்று. இனி யிப்பெற்றித்தாகிய நூலாராய்ச்சி செய்ய விரும்புவார்க் கெல்லாம் மிகுந்த நுட்பவுணர்வும் பரந்த நூலறிவு முளவாதல் வேண்டும். இந்நூட்ப வுணர்வுதானும் ஒருவர்க்குப் பிறவியிலே யினிதமைவதன்றி யிடையிலே யரும்பி மலர்வதன்று; அஃது ஒருவன் றன்றாய கட்டிற் கருக்கொண்ட வாறே யவனறிவிற் றான் கருக்கொண்டு சிறிது முகிழ்த்துப் பின்னைப் பயிற்சி வயத்தானும் நூற்புலமையானும் முறுக்குடைந்து விரைபரப்பி விரிவாதம். இவ்வருந் தகைமை யியற்கையிலேயே வாய்ப்பப் பெற்றா ரன்றி யேனையோ ரதனை யடைதுமென மேற் கொண்டு புகுதல் பெரிது மிடர்ப்படுதற் கேதுவாமென் றொழிக. நூலாராய்ச்சி யென்ப திவ்வாறெல்லா மமைந்து கிடப்ப, அதனியல்பை ஒருசிறிது முணரமாட்டா ராகிய இக் காலத்துப் புலவன்மார் சிலர் நடுநிலையிழந்து நூலாராய்ச்சி செய்யு முகத்தான் மூவேறு வகைப்படுவா ராயினர். அவர்தாம் பொறாமையான் நூலாராய்ச்சி செய்வாரும், புகழ் கருதி நூலாராய்ச்சி செய்வாரும், பகைமையான் நூலாராய்ச்சி செய்வாருமா மென்க. அவருட் பொறாமையான் நூலாராய்ச்சி செய்வார், ஒருவரெழுதிய நூல் பொருணயஞ் செறிந்து சொன்னுட்பம் பொருந்தி நடைகவின்று விளங்குறூஉம் பெற்றிகண்டு தமக்கு அங்ஙனம் வாய்ப்பப்பெறாமையா லுள்ளழுங்கிப் பொறாமை சுடர வெரிந்து தம்மறிவைக் கதுவலின், அதற் காற்றாராய் அப்புலவர் நூலை உண்மையோடு ஆராய்ந்து நலங்கொள மாட்டாமல் அதனுட் குற்றங்கண்டு கூறுவர். இன்பம் பயக்குந் தன்மையவாகிய எல்லாப் பொருள்களும் பொறாமையுடை யார்க்குத் துன்பத்தையே பயக்கும்; பிறரிடத்து அறிய சொற்செயல் காணலுறுவராயின் மகிழாது நிரம்பவும் வருந்துவர். பொறாமையின்றி யிருக்கும் அருந்தகையாளர்க்கு நலந்தருவன பலவும் இக்குணமுடையார்க்குத் தீதுசெய்யு மாயின், என்னே! நாம் உலகியற் பொருளை வெறுக்குமாறு. இடர்ப்படு குழியில் வீழ்ந்து தாந் துன்புறுவதற்கு இவர்தா மன்றே காணர ராயினர். இவர் தங்குறைவை நிறைவு செய்து யாவரிடத்து மன்புடையராய் வாழ வறியாது பிறரைப் புறங்கூறிப் பழித்து வாணாளை வாளாது கழித்த லென்னை! என்னை! தமக்குள்ள குறையினை நிரப்புதல் பிறரைப் பழித்தலானும், தம்மை யளவிறப்பப் புகழ்தலானும், தாங் கல்லாத நூல்களைக் கற்று வல்லார்போன்று ஆரவாரஞ் செய்தலானும், தமக்கில்லாதவற்றை யிருப்பனவாகப் பொய் யுரை கிளந்து பிறரை மயங்கப்படுப்பதனாலு மெய்துவதன்று; நல்லறிவுடைய நன்மக்களிடையடங்கி யொழுகி யவர் சொற்சுருங்க நவிலு மரும்பொருட் பகுதிகளை யுளங்கொளப் பலகாற் பழகி யறிதலானும், அவரது நலங்கெழுமொழுக்கங் களைத் தழுவி யொழுகுதலானும், விழுமிய நூற்பொருள் களைஅறிவு நுணுகி யாழ்ந்தாராய் தலானும், அங்ஙன மாராய்ந்தவற்றைப் பிறருவக்கும் வகையாற் பொலிவு தோன்ற முகமலர்ந் தினியவாகச் சொல்லு தலானுமே யெய்துவதாம். இனிப் பொறாமையுடையார் தாமின்புறுவ தெல்லாம் பிறரிடைக் காணப்படுங் குற்ற மொன்றானேயாம். பொறாமை யுடைய ஒரு புலவரிடத் தொருவன் சென்று பிறரொருவர் நூலை வியந்து சொல்ல, அக்கணத்தின் அவர் முகங்கருகி யழுங்குதலும், அந்நூலிலுள்ள சில குறைகளைக் காட்டவவர் முகமலர்ந்து மகிழ்தலு மறியவல்லார்க்குப் பொறாமை யுடையாரெய்து மின்ப மெல்லாம் பிறரிடைக் கண்ட குறைவுபற்றியேயா மென்பது இனிது விளங்கும். இங்ஙன மிழிக்கப்படும் பொறாமைக் குணமுடையார்க்கு ஒரு நூற் பொரு ளினிது விளங்காமை யானும், அப்பொருள் சிறந்து காட்டாமையானும் அவர் நூலாராய்ச்சி செய்தற்குரிய ரல்லர். அவராராய்ச்சி யறிவுடையோரால் வேண்டப்படுவதூஉமன்று. இனிப் புகழ்கருதி நூலாராய்வார் தம்மை மிக்க கல்வியுடையாரென்றும் புலமையுடையா ரென்றும் பிறரறிந்து புகழும் பொருட்டு ஏனைப் புலவர் நூல்களிற் குற்ற மாராய்ந்து கூறுவர். இவர் புலவர் பிறர்க்குவரும் புகழெல்லாந் தமக்கே வரல் வேண்டுமெனத் தன்னலங் கொண்டு பிறர் நலன் நோக்காமையின், பிற ஆசிரியரிடத்து வியந்து கொள்ளப்படும் நலம்படு பொருட் கூறுபாடுக ளெல்லாம் இருண்முழைஞ்சிற் புகுத்தித் தாழிட்டு அவரிடத்திருந்த வழுவிய பொருள்களை வேறுபிரித் தெடுத்துக் கொணர்ந்து துளங்கொளிப் பகலில் விளங்கக் காட்டி யின்புறுவாராகலா னவரதாராய்ச்சியுங் கொள்ளற் பாற்றன்று. இனிப் பகைமையாற் பொருளாராய்வர், பிறர்க்குந் தமக்குமொரு காலத் தொருகாரணம்பற்றி யொருபகைமை நிகழ, அதனைத் தம்மகத்திற் கரந்து வைத்துச் சமயம் வாய்த்துழி யவர்நூலிற் குற்றங்காணுது மென்று புகுந்து, குற்றமல்லாத வற்றையும் குற்றமென விகழ்ந்துரைத்துத் தம் பகைமை வெளிப்படுப்பர். ஒரு புலவர் ஒரு நூலியற்றினாராயின் அவர் தமக்குப் பகைவராயினும், அவரது நூலளவிற் பகைமை கொள்ளாது, அந்நூலிலுள்ள நலங் குறை யிரண்டனையும் ஒருங்கா ராய்ந்து நலங் கைக்கொண்டு குறைவினை விடுத்து நடுவு நிற்பார் தாம் அறிவின் மாட்சியுடையார். இந்நெறி கடந்து பொருளா ராய்வார் திறங்க ளெல்லாம் போலியா யொழி தலின், அவையு மறிவுடை யோராற் கொள்ளப்படா. இனி, யிம்முத்திறத்தாரு மொழிய வேறுவகையானா ராய்ச்சி செய்வாரு முளர். அவர் நட்பின் மிகுதி கொண்டு நூலாராய்வாரும் செந்தமிழ் மொழியிற் றமக்குள்ள அன்பின் பெருக்கால் அம்மொழிச் சிறப்பினைப் போற்றிக் கோடற் பொருட்டு நூலாராய்வாருமாம். அவருண் முன்னை யார் தம்முயிரனைய நண்பரெழுதிய நூலிற் குற்றமுள வாயினு மவற்றைப் பாராது குணஞ் சிறியவாயினும் அவை தம்மைப் பெரிதெடுத்துப் புகழ்ந்து கூறுவா ராதலானும், பின்னை யாருள் ஒரு சாரார் பழைய தமிழ் நூல்களே சிறந்தன; பிற் காலத் தாராலியற்றப்படுவன வெல்லாம் மறுக்கிளர்ந்து நெறிப் படாதனவா மென்று கூறுதலானும், பிறிதொரு சாரார் செந்தமிழ் மொழிக்குச் சிறுமையாமாதலாற் பிற்காலத்தார் நூல்களிற் குற்றமாராய்ந்து அவற்றைத் தூய்மை செய்வா மெனக் கொண்டு அவ்வாறு புரிதலானும் இவர்தாமும் உண்மை யாராய்ந்தா ரல்லரென விடுக்க. இவர் தொல்லாசிரிய ரென்றவர் நூலிற் குற்றங்காணா தொழிதலும், இவர் புதுவரென் றவர்நூலிற் குணங்காணா தொழிதலும் உண்மையாராய்ச்சி செய்வார்க்கு ஏலாதனவாமென்பது கடைப்பிடிக்க. இதுபற்றி யன்றே திருவருட் பெருஞ் செல்வராய் விளங்கிய உமாபதி சிவனார், தொன்மையவா மெனுமெவையு நன்றாகா வின்று தோன்றியநூ லெனுமெவையுந் தீதாகா துணிந்த நன்மையினார் நலங்கொண்மணி பொதியுமதன் களங்க நவையாகா வெனவுண்மை நயந்திடுவர் நடுவாந் தன்மையினார் பழமையழ காராய்ந்து தரிப்பர் தவறுநலம் பொருளின்கட் சார்வாராய்ந் தறித லின்மையினார் பலர்புகழி லேத்துவரே திலருற் றிகழ்ந்தனரே லிகழ்ந்திடுவர் தமக்கெனவொன் றிலரே. என்று திருவாய் மலர்ந்தருளுவா ராயின ரென்பதூஉ மென்க. ஈண்டெடுத்துக் கூறிய இவ்விருவேறு திறத்தாரும் மிகச் சிலராதலால், ஆராய்ச்சி செய்தற்குரிய ரல்லாரென யாம் பகுத்தெடுத்துக் கொண்ட முத்திறவரு ளடக்காது வேறு கூறினாம். அல்லதூஉம் இவ்விரு திறத்தாரும் அம்மூவரைப் போல் தீய கருத்தானாராயாமை யானும் வேறு சொல்லப் பட்டன ரென்றுணர்க. இது கிடக்க. இனி நடுநின்றுள்ளவா ராய்ச்சிசெய்வா ரினையராதல் வேண்டுமென்ப துடன்பாட்டானு மொருசிறிது காட்டுதும். இவர் பரந்த நுண்ணுணர்வும் பரந்தநூலுணர்வும் கருணையும் பொறையும் சீலமுமுடையவராய் உலகிற் குதவியாற்றுத லொன்றனையே குறிக் கொண்டு தாமாராய்தற் கெடுத்துக் கொள்வது தொல்லாசிரியர் நூலாயின், அதனுட்பொதிந்து கிடக்கும் அரிய மறைபொரு ணுட்பங்களை யாழவாராய்ந் தெடுத்தெடுத்து அறிவுடையோர் பலருங் கழியுவகை கொண்டு வியக்குமாறு பாகுபடுத் தமைத்து இனிது விளக்கிப் பின்வழுக்க ளுளவாயின் அவற்றையு மெடுத்துக் காட்டிப் பின்னவ் வழுக்களைக் காரணஞ் சொற்றொறும் விளங்க அமைத்து முடித்தலும், பிற்காலத்தார் நூலாயின் அவைதம்முட் கிடந்த நலங்களையும் முழு மணி பொறுக்கிப் பதப்பொற் றகட்டிற் குயிற்றிப் பொலி வடையச் செய்தல் போற் றிறம்படக் காட்டி, வழுக்க ளுளவாயின் அவற்றை ஆக்கியோர்க்கு எவ்வாறு எடுத்துக் கூறினா லவர் மனம் வருந்தா ரென்று தெரியுமோ அவ்வாறெல்லாம் நயம்பட இன்சொற்களாலினிது விளக்கி யவரையு மவர்நூலையுந் திருத்திப் பெருக்கி, இங்ஙனஞ் செய்வுழி யெல்லாம் அவ்வாக்கியோரினும் தம் புலமை சிறிதென்பது குறிப்பானும் வெளிப்படையானும் புலப்படுத்தி யுலகிற் குதவுதலை மேற்கொண்டொழுகற்பாலார். இங்ஙன மாராய்ச்சி செய்தலாலுலகம் பயனெய்தத் தமக்குப் பெரும்புகழ் வருதலல்லாமலும், பிற்காலத்துப் புலவரும் நூலெழுதுதற் கண் மனவெழுச்சி மிக்கு அரும்பெறனூல் பலவியற்றி நலம் பெருக்குவர். இவ்வாறன்றி யொருவர் நூலிற் குற்றமே யாராய்தல் அவர் மனவெழுச்சி களைந்து உலகிற்குத் தீங்கு பயப்பதாமன்றி வேறென்னை? அரியகற் றாசாற்றர் கண்ணுந் தெரியுங்கா லின்மை யரிதே வெளிறு என்னுந் திருவாக் குண்மை யறிய வல்லார்க்கு முழுமுதற்பெருங் கடவுளாகிய சிவபெருமானையும் அவனருள் வழிப்பட்ட மெய்யடியாரையு மொழித்து ஒழிந்த சிற்றுயிர்க ளெல்லாங் குற்றஞ்செறிந்த புல்லிய வியற்கையுடையனவயா மென்ப தினிது புலப்படும். இதுபற்றியன்றே ஆங்கிலநூலுள்ளும் (Dryden) திரைடன் என்னு நல்லிசைப் புலவர் பிழைகள் உள்ளீடில்லாத துரும்பைப்போல மேன்மிதக்கு மாதலால் அரிய மணிமுத்து வேண்டுவார் உள்ளுருவி நுழைந்து துருவுக என்றதூஉம், அடிசன் (Addison) என்னுமாசிரியர் ஒரு நூலிலுள்ள நலங்களையே பெரிது மாராய்ந்து அமைத்து வழுவிய பொருள்களை யாராயாது விடுதல் தலைமையாம். என்றும் வழுவாராய்ந்த விடத்தும் அத்தன்மை களைந் ததனை யாக்கிக் கோடல் நூலாராய் வார்க்குக் கடமையா மென்றுங் கூறியதூஉ மென்க. இன்னு மிதனை விளக்குதற்குக் கிரேக்க ரென்னு நன்மக்களிடத்து வழங்கும் ஒரு பழங்கதையினை இங்கெடுத்துக் காட்டுதும்; -நூலாராய்வாரொருவர் ஒரு புலவரெழுதிய நூலிற் கிடந்த குற்றங்களை அரிதினாராய்ந்து அவை தம்மைத் தொகுத்து அழகிய `அப்பாலோ (Appolo) என்னுங் கடவுளுக்கு அடியுறை கொடுப்ப, அதனைப் பெற்றுக் கொண்ட அக்கடவுள் குற்றிய நெற்பொதி யொன்றை யவருக்கு ஈந்து இம்மழுக் கலிலுள்ள முழு வெள்ளரிசியையும் உமி தவிட்டினையும் வேறு பிரித்து ஒருபுற மிடுக என்று பணித்தனர்; அக்கட்டளைப் படியே மிகமுயன்று செய்து அவரதனை யக்கடவுளுக்குத் தெரிவித்தலும் அவர் அந்நூலாராய்வார்க்கு உமி தவிட்டை யீந்து உனக்கு விருப்பமாவ திவையென்பது நீ தந்த அடியுறையாலியாம் அறிந்துகொண்டமையி னிவற்றை எடுத்துச் செல்க வென விடுத்தனர். இதனாற் குற்றமே யாராய்வார் பெறும் பயனினிது அறிவுறுக்கப்படுதலின், அவை தம்மை ஒருதலையான் நீக்கி நலங்கொளலே சிறந்த தென்றுணர்க.இது கிடக்க. இனியிக்காலத்தி லிச்செந்தமிழ் நாட்டில் ஒருசில போலிப் புலவன்மார் தொல்லாசிரியரா லியற்றப்படுவனதாம் நூல்கள்; அவைதாம் வழுவில; பிற்காலத்தாராற் செய்யப்படுவன வெல்லாம் மறுப் பொதிந்தனவா மெனக் கூறுவாரும், புதிய நூல்களி னெல்லாங் குற்றமே யாராய்துமெனத் திரிகுவாரும், ஒருவரிடத்துச் சிறந்த வொழுக்கமும் உயர்ந்த நூற்புலமையுங் காணி னெம்முளம் பொறா தென்றவரிடத்துப் பகைமை கொண்டு அவர்நூலிற் குற்றங்கண் டுரைப்பா மெனமடிதற்று நிற்பாரும், ஒருவர் புகழொளித்திகழ்குன்றின் குவட்டினின்று பொற்புற்று விளங்க யாம் இழிவுறு படுகரிற் கிடந்து பருவரலெய்துமோ வென்று மற்றவர்மே லிகழுரைப் பகழி சிந்திக் கலாம்விளைத் துழிதருவாருமாய்ப் பலவேறுபட்டுச் சிதர்ந்து போயினர். இவரிங்ஙனந் தம்முளே பெரிது மிகலி யொழுகுதலாற் கல்வி வளஞ் சுருங்கிச் செந்தமிழ்த் தென்னாடு திருத்தமுறாது பொலிவு குன்றிப்போம். அந்தோ! அந்தோ! இவர் தன்மையிருந்தவாறு இரங்கத்தக்க தொன்றாம். இதனா லிவரடைவதூஉம் பெருங்கேடன்றிப் பிறிது படுவதின்று. அருந் தமிழ்ப் புலவீர்! இப்பொருந்தாச் செயலொழிமின்! புகழ் பொருண் முதலியவற்றை ஒருசிறிதும் பாராது நீவிரீட்டும் பொருளளவி னுள்ளந் திருந்தி நிரம்ப வுவந்து பிற மக்களுக்கு நும்மா லியன்றவாறுதவி புரிந்து ஒழுகுதலைக் கடப்பாடாகக் கொள்ளுமின்! எதிலார் புகழ் பொருளெய்திக் களித்து வாழ்தலைக் கண்டு நீவிரு மவரோ டளவளாய்க் களிமின்! பண்டைக் காலத்திருந்த பரணர், கபிலர், பெருஞ்சித்திரனார் முதலிய புலவரைப்போற் கௌரவமாக நன்னெறிச் சென்மின்! யாமிவை கூறியதுபற்றி எம்மீது வெகுளன்மின்! நிற்க. இனி நூலாராய்வாரிய லிவ்வாறெல்லா மொருபுற மமைந்து கிடப்ப அவை தம்முள் ஒன்றுதானு மறிந்து கொள்ளும் மதுகையிலராகிய ஒருசில போலிப் புலவன்மார் யாமியற்றிய சோமசுந்தரக் காஞ்சியிற் குற்ற மாராய்துமெனப் புகுந்து, பகைமை அழுக்காறு முதலிய விழிகுண வயத்தா னறிவு மருண்டு குற்ற மல்லாதவற்றைக் குற்றமென முறை பிறழக் கொண்டுரைத்திட்டார். அவர் குற்றமாராய்ந்ததுபோற் குணஞ்சிறி தாராய்ந்து மறுத்திலாமையான் அவர் உள்ள வாறாராய்ச்சி செய்தற் குரிமையுடையா ரல்ல ரென்பதூஉம் அவரொரு போலிப்புலவ ரென்பதூஉ மறிவுடையார்க் கெல்லாம் புலனாமாதலின், அவரெழுதிய குற்றங்கண்டு பிறர் மயங்காமைப் பொருட்டு நிறுத்த முறையே யவற்றை யாராய்ந்து பரிகரித்திடுவாம். பொருளிலக்கணம் இனிப் பொருளிலக்கண மென்பது, மக்களுயிர்க் குறுதியென நல்லறிவுடைய தொல்லாசிரியர் வகுத்தெடுத்துக் கொண்ட அறம் பொருளின்பம் வீடென்பனவும், இந்நாற் பகுதியினு மடங்கி யடங்கு வனவாகிய* (நச்சினார்க்கினியம்) முதல்கரு வுரியும், காட்சிப் பொருளுங் கருத்துப் பொருளும் அவற்றின் பகுதியாகிய ஐம்பெரும் பூதமும், அவற்றின் பகுதியாகிய இயங்கு திணையும் நிலைத்திணையும் பிறவு மாகிய பொருண் முழுவதூஉம் ஒருங்கெடுத்துக்கொண் டவற்றைக் கூறுபடுத்துரைத்து விளக்க முறுவதாகிய விழுமிய இயலாகும். இதுதான் செந்தமிழ்த் தனி மொழியிலன்றிப் பிற மொழிகளி லித்துணை நுண்ணிதாக மதிவளம் பெருக்கி யெழுதப்பட்டதூஉ மின்று; அதனை யாராயு நூல்களுங் கிடையா. இதனாற் பண்டைக் காலத்துத் தமிழாசிரியர் நுட்ப வறிவும் பரந்த வுணர்ச்சியும் உலகிய லறிவும் நன்றறிவுறுக்கப் படுதல் காண்க. இனி, அங்ஙனம் விரிந்து கிடப்பனவாகிய நுண்பொருட் பரவை யெல்லாந் தமிழ்நூன்மரபு பற்றி யாராய்து மென மனவெழுச்சி கொண்டு புகுவார்க்குச் சிறுகிய வாழ்நாளும் பெருகிய பிணியு முண்மையின், பெருந்தவத் தொல்லாசிரியர் அருட்குறிப்பு நிகழ வவர்க்கவற்றைச் சுருங்க வறிவுறுத்துவார், அப்பொருட் பரவையை யிரண்டு கூறு படுத்து அகத்திணை, புறத்திணை யெனப் பெயர் நிறீஇ, அப்பகுதி யிரண்டனு ளுலகியற் பொருண் முழுவதூஉம் பிறவுஞ்செறியத் துறுத்து விளக்குவாராயினர். இங்ஙனம் பொருளிய றெரிக்கு மிலக்கணங்க ளெல்லாம் முடிய வெடுத்துக்கொண்டு முன்னொடுபின் மாறுகோளின்றி வரம்பு குறித்துரைக்கு நூல், கொழிதமிழ்த் துறைபழுதறக் கண்டு முழுமுத லறிவினராய் விளங்கிய, ஆசிரியர் - தொல்காப்பியனார் இயற்றிய தொல்காப்பியம் ஒன்றுமேயாம். இதன்றிற மீண்டு விரிப்பிற் பெருகுமாதலா லீண்டைக்கு வேண்டுமளவே தந்து நிறுத்தி வேறுசெல்வாம். அகப்பொருள் இனி அவற்றுள், அகப்பொரு ளென்பது* (நச்சினார்க் கினியம்) ஒத்த அன்பானொருவானு மொருத்தியுங் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம் அக்கூட்டத்தின் பின்ன ரவ்விருவரு மொருவருக் கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வா றிருந்ததெனக் கூறப்படாததாய் யாண்டும் உள்ளத் துணர்வே நுகர்ந்து இன்ப முறுவதோர் பொருள் கருதி நிற்பதாம். இங்ஙனம் புறம்படுதலின்றி யுண்ணிகழு மொழுக்கத்தினைப் பலவாறு கூறுபடுத்து விளக்குவதாகலி னிதனை அகத்திணை யென்றும் வழங்குப. இதனைக் களவொழுக்க மெனவுங் கற்பொழுக்க மெனவும் பகுத்தெடுத்துக் கொண்டவற்றிற்குக் கைகோளெனப் பெயர்நிறீஇ நூல்கள் விளக்குமாறுங் காண்க. இவ்விய லறிந்தார்க்கன்றி யேனை யோர்க்கு அறிவுப் பொருளாகிய ஆன்மாவின்க ணிகழும் பஃறலைப் பட்ட வுணர்வுகளி னியனுண்மை யறிதல் செல்லா தென்பதூஉம், இது பற்றியே ஆங்கில நூலாரும் பிற்காலத்தல் உளவியல் என்னும் அகப்பொருணுலைக் குறிக்கொண் டாராய்ந்து கொள்வா ராயின ரென்பதூஉம் உணர்ந்து கொள்க. இனி வட நூலாசிரியர் தாம் வேறு பகுத்துக்கொண் டுரைக்கும் அறமுதலிய நால்வகை யுறுதிப் பொருள்களு ளிவ்வகப் பொருணூல் எதன்பாற் படுவதெனின், இஃதின்பப் பகுதியினையே நுதலி யாராய்தலி னவ்வின்பப் பொருட்கண்ணதா மெனவும் எனைப் புறப் பொருணுல் அறம் பொருள் வீடாகிய ஏனை மூன்றனையு மொருங்காராய்தலி னப்பொருட் கண்ணதாமெனவும் பொருளிலக்கணம் வல்லா ரெல்லாரு மினி துணர்வ ரென்க. அல்லதூஉம் இன்பமேயன்றி யேனைப் பொருள்கள் அகத்தேகரந்து படுக்கப்படும் நீரவல்லவாய்ப் புறம்படுதல் காண்டுமாதலானும், இன்பப்பொரு ளொன்றுமே உரை வரம்பு நிறுத்திப் பிறரு ணருமா றுரைப்ப வாராமையானும், தெய்வப்புலமை நக்கீரனார், நச்சினார்க்கினியரை யுள்ளிட்ட ஆசிரியன்மா ரெல்லாரு மிங்ஙனமே கூறுதலானும் இன்பம் அகப் பொருணூலினும் ஏனை மூன்றும் புறப்பொருணூலினும் வைத்தாராயப் படுமா மென்பது கடைப்பிடிக்க. இன்னு மிவ்வகத்தினை நுண்பொரு ளெல்லாம் இறையனாராகப் பொருள், தொல்காப்பியம் முதலிய விரிந்த நூல்களிற் காண்க. புறப்பொருள் இனிப் புறப்பொருளென்பது * (நச்சினார்க்கினியம்) ஒத்த அன்புடையார் தாமே யன்றி யெல்லார்க்குந் துய்த்துணரப் படுதலானும், இவை யிவ்வா றிருந்ததெனப் பிறர்க்குக் கூறப்படுதலானும், அறம்பொருள்வீடென்னும் மூன்று பொருள்களை நுதலி நுவலுவதாம். அதுதான் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்டினை யென ஏழு பகுக்கப்பட்டு, வெட்சி முதல் வாகை யீறாகக் கிடந்த ஐந்திணையுள் அறக்கூறுபாடு பொருட்கூறுபாடுகளும், காஞ்சித் திணையுள் அவற்றது நிலையாமையும், பாடாண் டிணையுள் மக்களையுங் கடவுளரையும் பாடுதற்கண் வரும் பொதுவியற் பொருட் டொகையும் முறையுள்வைத் தாராயப் படும். இனி இவற்றின் பரப்பெல்லாம் தொல்காப்பியம், புறப்பொருட் பன்னிருபடலம், இதன் வழி நூலாகிய புறப்பொருள் வெண்பா மாலை முதலிய நூல்களிற் கண்டு கொள்க. புறப்பொருட் பன்னிரு படலம், புறப்பொருள் வெண்பா மாலையாகிய இரண்டுநூற் பொருள்களும் ஆசிரியர் தொல்காப்பியனார் பொருளியலோ டொருசில விடங்களிற் சொன்மாத்திரையின் மாறுகோ ளுறுவதுபோற் றோன்றுதலைக் கண்டு மருண்டு பொருளிய லறிவு வாய்ப்பப் பெறாதார் சிலர், அவற்றின் பொருணுட்ப முணர்ந்து பொருத்த மாட்டாமையிற் பெரும் பேதுற்றத் தமக்குத் தோன்றியவா ரெல்லாங் குழறுபடக் கூறுவர். அற்றேல், ஆசிரியர்-தொல்காப்பியனார் புறப் பொருளை எழு வகையாகப் பிரித்துக்கொண்டிலக்கணங் கூறாநிற்ப, மற்றதனொடு மலைந்து புறப்பொருட் பன்னிருபடல முடையாரும், வெண்பாமாலை யுடையாரும் அது தன்னைப் பன்னிரண்டு கூறுபடுத் திலக்கணங் கூறுமாறென்னை யெனக் கடாவுவார்க்கு, நிரைகவர்தலும் அதனை மீட்டலும் வெட்சித் திணையாமென நிறுத்திய ஆசிரியர் - தொல்காப்பியனாரொடு நிரைகவர்தலு மீட்டலுமாகிய அவ்விரண்டு வினைக்கும் வெட்சி கரந்தை யென வேறுவேறு பெயர் நிறீஇக் கூறிய ஏனை யாசிரியருரை முரணுறு மென்றல் சொன்மாத்திரையே யன்றிப் பொருள் வேறுபாடின்மையானும், அந்நூற்பொரு ளெல்லாம் மலைவற வொருங் குணர்ந்த ஆசிரியர்-சிவஞனா யோகிகள் இவை யிங்ஙனம் வேறுபடினும் புணர்ச்சி முடிபும் சொன் முடிபும் பொருண் முடிபும் வேறுபடாமையின் மரபுநிலை திரியாவாயின. இவ்வுண்மை யுணராதார் பன்னிருபடலம் முதலிய நூல்களை வழீஇயினவென் றிகழ்ந்து, பன்னிரு படலத்துள் வெட்சிப்படலந் தொல்காப்பியனார் கூறிய தன்றெனத் தொல்லாசிரியர் வழக்கொடு முரணித் தமக்கு வேண்டிய வாறே கூறுப என்று தொல்காப்பியப் பாயிர விருத்தியி லோதுதலானும் அந்நூல்களிப்பொருட் பரப் பெல்லாம் ஒருவழிக் கொண்டு நிறுவிவிளக்குதற்கண் ஒரு கருத்தினவா மென்று விடுக்க. இதுகாறும் பொருளிலக்கண வரலாற்றுள் ஈண்டைக்குப் பயன்படுவன சில தந்து காட்டினாம். இங்ஙன மெழுதிய விவை மற்றொன்று விரித்தல் போற் றோன்றினும பொருளிலக்கணப் பயிற்சி குன்றிய விக்காலத் திலிவ்வெதிர் மறுப்பினை யுணர்வாருண் மைப்பொருளெளி துணர்ந்து கோடற்பொருட்டும், இவ்வெதிர் மறுப்பின்கண் ஆண்டாண்டு அளவை நூன் முறையில் நடந்துசெல்லு நெறிக்கிடையே எடுத்துக் காட்டுதற் தேவியாதற் பொருட்டும் முன்மொழிந்து கோடல் என்னும் உத்தியா னிங்ஙன மெழுதினாமென்ப துண்மையா னோக்குவார்க் கெல்லா மினிது விளங்குமாதலி னேனையார் கூறுமுரையை யொரு பொருட்படுத்தா மென்றொழிக. இனி அப்பேலிப் புலவர் வரைந்து விடுத்த போலி மறுப்பினை முறையே யாராய்ந்து செல்வாம். காஞ்சித்திணை இனிக் காஞ்சித்திணை யென்பது உலக நிலையாமை புலப்படுக்கும் ஒழுக்கமாம். அதுதா னுலகியற் பொருள் கொண்டுவரும் நிலையாமைக் குறிப்பின்கண் வருவதூஉம், அந்நிலையாமைக் குறிப்பேதுவாக வுலக வொழுக்கத்தி னுவர்ப்புத் தோன்றி வீட்டிய னெறியறிந்துறுதி கூடுமா றறிவுறுத்தற்கண் வருவதூஉம்,* (நச்சினார்க்கினியம் + தொல் - புறத்திணையியல். எஅ. + தொல் - புறத்திணையியல் - எரு.) வீடுபேறு நிமித்தமாகப் பல்வேறு நிலையாமையைச் சான்றோர் சாற்றுங் குறிப்பின் கண் வருவதூஉ மென்னும் பாகுபாட்டான் மூன்றாம். இம்மூன்றும் உள்ளடங்கப் பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற் றானு, நில்லாவுலகம் புல்லிய நெறித்தே என்று ஆசிரியர் தொல்காப்பியனாருங் கூறுவா ராயினர். இதனுண்பொரு ளெல்லாம் ஆசிரியர் நச்சினார்க்கினியர் அச்சூத்திரத்திற் குரைக்கும் விழுமிய நல்லுரைக்கட் கண்டு கொள்க. இவ்வாறு இத்திணைப் பொருட் பாகுபாடும் பிறவும் அறிவுடையார்க் கெல்லா மினிது விளங்கிக் கிடப்ப, அவற்று ளொன்றுதானு மறிய மாட்டீராய் அவ்விலக்கணப் பொருளெல்லா மொருங்கு நிரம்பி முதிரப் பெற்ற பேரறி வுடையீர் போலப் பெரிது மிறுமாந்து மயங்கி யெதிர் புகுந்து நின்று காஞ்சித்திணை அறிவன் றேயமுந் தாபதப் பக்கமும் பற்றி யுரைத்தலாலஃதிரு வகைத்து என்ற அதற்குப் பாகுபாடு கூறினீர். இங்ஙனம் ஓராசிரியரு முரைப்பக் கேட்டிலம். வீடேதுவாக நிலையாமை யுணர்தலும், நிலையாமைக் குறிப்பேதுவாக வீடுபே றறிவுறுத்தலு மென்னு மிரண்டனுட் பின்னதாகிய நிலையாமைக் குறிப்பை யிரண்டு கூறுபடுத்துக் காட்டுதற்பொருட்டு ஆசிரியர் - நச்சினார்க்கினியர் விடேதுவாகலின்றி நிலையாமைக் குறிப்பேது வாகலுங்கொள்க. இஃது அறிவன் றேயமுந் தாபதப் பக்கமும் பற்றி நிலையின்மைக் குறிப்புப் பெற்றாம் என்று கூறினாரன்றிக் காஞ்சித்திணையே யவ்வாறு பகுக்கப்படு மென்று யாண்டு முரையாமையானும், வாகைத் திணைப் பகுதியாகிய அறிவன்றேயமுந் தாபதப் பக்கமும் பற்றிக் காஞ்சித் திணையைப் பகுத்துக்கோடு மென்றல் பொருளிலக்கண மறியாதார் குழறுபாட் டுரையா மாதலானும், நீவிர் அறிவு மயங்கிப் பகுத்த அவ்விரண்டனுட் சோமசுந்தரக் காஞ்சி எதன்பாற் படுவதெனக் கடாவுதல் போலியா மென்றெழிக. இனி ஆசிரியர் - தொல்காப்பியனாரும் நச்சினார்க் கினியருங் கூறுமாறு கிடக்க, காஞ்சித் திணையை அறிவன் றேயமும் தாபதப் பக்கமுமென விரண்டாகப் பிரித்துக் கோடலே பொருத்த முறுவதா மென்றுரைக்க ஒருப்படு வீராயின், மறக்காஞ்சி, பேய்க்காஞ்சி, வஞ்சினக்காஞ்சி, தொடாக்காஞ்சி, தாங்கரும்பையுள், முதுபாலை முதலியுவும் பிறவும் யாண்டடங்கு மெனக் கடாவுவார்க்கு இறுக்க லாகாமையின், அவ்வாறு கூறுதலுங் குன்றக் கூறல் மாறுகளைக் கூறல் முதலான குற்றங்கட் கிடனாமென்ப தினியேனு மறிந்து கொள்க. அற்றேல், நீவிர் கூறிய அம்முத்திறப் பகுதியில் அச் சோம சுந்தரக்காஞ்சி எதன்கட்படுவ தென்று உசாவுவிராயிற் கூறுதும். வாளா துலகியற்பொருணிலையாமை மாத்திரையே கிளந்து கூறுதலிற் சோமசுந்தரக்காஞ்சி உலகியற்பொருள் கொண்டு வரும் நிலையாமைக் குறிப்பினைக் காட்டுங் காஞ்சித் திணையின்பாற் படுவதாம். இதற்கு, மாற்றருங் கூற்றம் என்னுஞ் சூத்திரவுரை முகத்தில் ஆசிரியர் நச்சினார்க்கினியர் இது முற்கூறிய காஞ்சித்திணை வீடேதுவாக வன்றி வாளாது நிலையின்மை தோன்றக் கூறும் பகுதி கூறுகின்றது. என்று தெளியவெடுத்துக் கூறுதலே சான்றாமாகலின், இதுதானு முணரமாட்டாது நீவிர் பெரியதோர் ஆரவாரஞ் செய்தது தலையாய வறிவினோ ரெல்லாரானும் மைத்துனர் பல்கி மருந்திற் றெளியாத பித்தன் என்றெள்ளி நடையாடற் கேது வாமென் றொழிக. இனிக் காஞ்சி யென்பது உலகியற் பொருட் பெற்றி தேர்ந்த நல்லிசைப் புலவர் அதனியல்பு அறியமாட்டாதாரைத் தெருட்டி அவர்க்கு வீடுபேற் றுறுதிப் பயனையும் அதனை யெய்துதற்கு வேண்டுங் கருவிகளையு மொழிந் துறுதிபயக்கு மொழுக்கமாகலின், என் குருவே என்று விளித்துக் குருவுக்கு மிஞ்சிய சீடர்போல அவர்க்குக் கூறிய தென்னாய் முடியும்? என்று இடக்கருரைகளை மேன்மேற்றலைப்பெய்து வினாயினீர். மேலே, காஞ்சித்திணை யென்பது முத்திறப் பட்டு உலக நிலையாமை கூறுவதூஉம், அதுகொண்டு வீடுபேற்றுறுதிப்பய னறிவுறுப்பதூஉம், வீடுபேறு நிமித்தமாக உலகநிலையாமை புலப்படுப்பதூஉ மெனப் பெயர்பெறுமா மென்பது இனி தெடுத்து விளக்கினா மாதலின், அம்முக்கூற்றுள் உலக நிலையாமைக்கட் படுவதாகிய சோமசுந்தரக்காஞ்சியை ஏனைப் பகுதிக்கண் மயங்கப் படுத்து அவ்வாற்றானதனை வழுவுடைத்தெனக் கூறுதன்மேலும்,அதனாசிரியனையு மிழித்துக் கூறுவான் றலைப்பட்டது நுமக்குப் பெரிதும் ஏதமாய் முடிந்தது காண்க. அற்றன்று, உலக நிலையாமை தேர்ந்த தவமுது மக்கள் பிறர்க்கு வீடுபேற் றுறுதிப் பயனறிவுறுத்துதலே காஞ்சித்திணைப் பொருளென்பி ராயின், அதுவே அப்பொருள் முறையா மென்பதற்கு நீவி ரெடுத்துக் காட்டிய மேற்கோளியாது? யாங் கூறியதே மேற்கோளாமெனின், நீர் தழுவிக் கொண்டுரைத்த ஆஞ்சிக்காஞ்சி, தாங்கரும்பையுள், முதுபாலை என்பவற்றிற் கெல்லா மென்சொல்ல வல்லீர்? இவற்றை யுய்த்துணரவல்லார்க்கு நும் வாய்மொழியே நும் முரணை யறுக்குங் குலிசப் படையாய் முடிந்திடுதலின், நும் மாரவார விகழுரை யெம்மை யென்செய்ய வல்லும்? நுமது மேற்கோளைத் தாங்குந் திண்ணி வெழுவெனக் கனவுகண்டு நீவிரெடுத்துக் காட்டிய மதுரைக்காஞ்சியே நுமக்குமாறாகி நாம் மேலே விரித்து விளக்கிய முக்கூற்றுக் காஞ்சித்திணையுள் ஒன்றன்கட் படூஉங் காஞ்சியாய் முடிதலின், அஃதெமது மேற்கோளையே மேன்மேலும் வலியுறுத்துங் கருவியா யமைந்தவாறு காண்க. இங்ஙனம் விரிந்த காஞ்சித் திணைப்பொருட் பாகு பாடறியாது நீர் குழறிய புறங்கூற்றுரைகள் ஆசிரியர் - நச்சினார்க்கினிய ருரைப் பொரு ளோடு பிணங்கி ஆசிரியர் - தொல்காப்பியனார்க்கு மறியாமை யேற்றுதலின் நும்மோ டுரையாடுதலும் எமக்குப் பெரியதோ ரிழுக்காமென் றொழிக. கையறு நிலை இனி, நீவிர் கையறுநிலையைச் சுட்டி வழூஉப்பட மொழிந்த குழறுபாட் டுரையிய லொருசிறி தாராய்ந்து செல்வாம். மையன் மாலையாங் கையறு பினைய என்னும் புறநானூற்றுச் செய்யுளிற் போலக் கையறுதல் என்பது செயலறுதல் என்னும் பொருட்டாம்; எனவே, செயலறுதற் கேற்ற காரணந் தோன்றியவழி ஒருவன் கையற்று நின்ற தன்மை கையறுநிலையாம். இனி, அந்நிலையைப் புலப்படுத்துக் கூறுவதாகிய செய்யுளும் அப்பெயர்த் தாயிற்று. என்றிங்ஙன மெல்லா மிச்சொன் னிலையை நுணுகி யாய்ந்திடின், ஒருவன் கையற்றுக் கூறுவன வெல்லாங் கையறுநிலை யாதற் கேற்குமா மென்பதூஉம், அக்கையறுநிலை தான் றோன்றுதற்கு முன்னிகழுங் காரணம் ஆண்பாலாதல் பெண்பாலாத லவ்விருவரு மொருங்கேயாத லிறந்து படுவதா மென்தூஉம், இங்ஙனம் வரையறை யின்றிக் கையறுநிலை தோன்றுதற் கேற்ற காரண முள்வழி யெல்லாம் அது தோன்றுமென்பது பற்றியே புறநானூற்றுரையாசிரியர் இனி நினைந் திரக்க மாகின்று என்னுந் தொடித்தலை விழுத்தண்டினார் பாடிய செய்யுட் குறிப்புரையில் இளமை கழிந்து இரங்கிக் கூறுதலான் இதுவுங் கையறுநிலை யாயிற்று என்றுரை கூறினா ரென்பதூஉம் மினிது விளங்கும். இது கிடக்க. அங்ஙன மச்சொன் னிலையை நுணுகி நோக்கும் வழி வரையறையின்றி யஃதங்ஙனம் பொருள்படுதற் கேற்குமாயினும், ஆசிரியர் தொல்காப்பியனார்* (தொல் - புறத்திணையில்) கழிந்தோர் தேஎத் தழிபட ருறீஇ, யொழிந்தோர் புலம்பிய கையறு நிலையும் என்று வேறு அதனைப் பிரித்தெடுத்துக் கொண்டு பெண்பா லதிகாரப்பட்டு வருகின்ற விடத்து வைத் தோதினாராகலான், அம்முறைபற்றி ஆண்பாலும் பெண்பாலும் ஒருங்கு துஞ்சிய வழியே கையறுநிலை கூறப்படு மென்பது பெறாமோ வெனின்; பெறாமன்றே, என்னை? மூன்று கூறுபடுங் கையறுநிலை யுட் பெண்பாலு மாண்பாலு மொருங்கு துஞ்சிய வழித்தோன் றுங் கையறுநிலை மாத்திரையே கூறியதன்றி, அதனாற் பெண்பாலு முடன் றுஞ்சியவழித் தோன்றுவ தொன்றே கையறுநிலை என்னும் யாப்புறவு பெறப்படாமையி னென்பது. இனிச் சூத்திரத்தா லங்ஙனம் யாப்புறவு பெறப்படா தாயினும் ஆசிரியர் நச்சினார்க்கினியர் கணவனொடு மனைவியர் கழிந்துழி அவர்கட்பட்ட அழிவுபொரு ளெல்லாம் பிறர்க்கு அறிவுறுத்தித் தாம் இறந்துபடா தொழிந்த ஆயத்தாரும் பரிசில்பெறும் விறலியருந் தனிப்படருழந்த செயலறு நிலைமையானும் என்றுரை விரித்துக் கூறுதலின் அதன் கண் வைத்து அவ்யாப்புறவு கோடுமென் றுரைத்திராயின், அஃதாசிரியர் கருத்தறியாது கூறிற்றாம். என்னை? அவ்வாறு கூறுதலே ஆசிரியர் கருத்தாயின், முன்னுரைத்த வுரையோடு மாறுற்றுக் குறிப்புரையில் ஆண்பாற் கையறுநிலை மன்னைக் காஞ்சியு ளடங்கும் என்றும் இன்னனென் றிரங்கிய மன்னையானும் என்புழி இதனை ஆண்பாற் கையறுநிலை யெனினு மமையும் என்றும் உரைக்குமாறென்னை? இந்நுட்பப் பொருடேற மாட்டாது நீர் குழறிய அறிவில்லுரையால் ஆசிரியர் - நச்சினார்க்கினியரும் ஓரிடத்திலேயே யங்ஙனம் முன்னொடுபின் மலைவு படக் கூறுதலாகிய அத்துணை யறியாமை உடைய ரென்று பெறப்படுதலின், இத்துணைக்கு மிடஞ்செய்து கொண்ட நீவிர் மிகப் பெரியர்தா மென்றொழிக. இனி யாமெடுத்துக் கொண்ட மேற்கோளை வலியுறுத்தாது அதனை முதலறக் களைந்தெறியுங் கருவியா யெழுந்தமையின் ஆசிரியர் - நச்சினார்க்கினிய ருரை கொள் ளாம்; மற்று ஆசிரியர் - தொல்காப்பியனார் கூறிய சூத்திர யாப்புப் பற்றியே எமது மேற்கோளை நிறுவி விளக்குது மென்று கூறவும் ஒருப்படுவீர்; ஆகலான் ஆசிரியர் சூத்திர யாப்பும் நும்மத முழுமுதல் துணிக்கும் நவிய மாமாறும் ஒரு சிறிது காட்டுதும். கொழுநனொடு மனைவிய ரிறந்துபட்ட வழித் தோன்று வதாகிய செயலறுதலே கையறுநிலை என்பது ஆசிரியர் - தொல் காப்பியனார் கருத்தாயின், உலக வொழுக்கங்களை யெல்லாம் அகம் புறமென வகுத்து இலக் கணங் கூறுவான் புகுந்த ஆசிரியர்க்கு ஆண்பாலும் பெண் பாலுந் தனித்தனி யிறந்து பட்டவழி அவ்விறந்து பாடு காரண மாக நிகழும் ஒழுக்கங் களையும் அகப்படுத்து இலக்கணங் கூறாதொழிதல் குன்றக் கூறலாய் முடியுமாதலானும், *மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத் தென்மலை யிருந்த சீர்சான் முனிவரன் றன்பாற் றண்டமிழ் தாவின் றுணர்ந்த துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன்முதல் பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த பன்னிரு படலம் பழிப்பின் றுணர்ந்தோ னோங்கிய சிறப்பி னுலகமுழு தாண்ட வாங்குவிற் றடக்கை வானவர் மருமா னைய னாரித னகலிடத் தவர்க்கு மையறு புறப்பொருள் வழாஅலின்று விளங்க வெண்பா மாலை யெனப்பெயர் நிறீஇப் பண்புற மொழிந்தனன் பான்மையிற் றெரிந்தே என்னுஞ் சிறப்புபாயிரத்தானே, ஆசிரியர் - தொல்காப்பிய னாரை யுள்ளிட்டு ஆசிரிய ரகத்தியனார் மாணக்கர் பன்னிருவரும் ஒருங்கு கூடிச்செய்த புறப் பொருட் பன்னிருபடலத்தின் வழிநூலாகிய புறப்பொருள் வெண்பாமாலை, *செய்கழன் மன்னன் மாய்ந்தெனச் சேர்ந்தோர் கையற வுரைத்துக் கைசோர்ந் தன்று - என்பதனானும், கழிந்தோன் றன்புகழ் காதலித் துரைப்பினு மொழிந்தனர் புலவ ரத்துறை யென்ன - என்பதனானும் ஆண்பா றுஞ்சிய வழியுங் கையறுநிலை தோன்றுமென வைத்து அதனிலக்கணங் கூறுதலிற் றொல்காப்பியமும் புறப்பொருட் பன்னிரு படலமும் ஒன்றோடொன்று இணங்காமன் மாறுகொண்டு இரண்டும் மேற்கோளாகாவா யொழிதலே யன்றி, அவற்றின் பொருளொருமை யுணர்ந் துரைத்த ஆசிரியர் - சிவஞானயோகிகள் அளவையுரையோடும் புறநானூற்றுரையாசிரியர் தெரிந்து மொழி கிளவியோடும் பிணங்கி வேறுபடுதலானும், ஆண்பாற்பொருளும் பெண்பாற் பொருளும் வேறுவேறு தழீஇவந்த நினைக்குங் காலை மருட்கை யுடைத்தே யாங்குப் பெரிதாயினு நோயள வெனைத்தே என்னும் புறநானூற்றுச் செய்யுட்க ளெல்லாம் இலக்கண மின்றாய் முடியு மாதலானும் அஃதாசிரியர் கருத்தெனக்கொண்டு துணிவுபட வுரைத்தல் பருப்பொரு ளுருவொடு பருத்துவிளங்கு மடமையா மன்றிப் பிறிதென்னை யென்றொழிக. அல்லதூஉம், தொல்காப்பியமும் பன்னிரு படலமும் பொருள் பகைக்குமெனக் கொள்ளினும் அவை யிரண்டுந் தவமாட்சி யான் விரிதரு பேரறிவினராகிய தாபதத் தலைவர் நுண்பொருள் பொதுளப் பண்புற வியற்றிய முதனூல்க ளாகலான், அவை தம்மை ஒருமருங்குபட வைத்துப் பொருளிணங்கக் கொளீஇத் தழீஇக்கோட ல்லலது முழு முதனூல்க ளிரண்டினுள் இஃதாம், மற்றிஃதாகாதெனத் தமக்கு வேண்டியவா றெல்லாம் பழுதுற வுரைப்பது குற்றமா மென்றொழிக. இவ்வாறே வேதநூலினும் ஆகமநூலினும் மாறுகோள் வந்துழி அவைதம்மை அவிரோத நயனஞ்செய்து இணக்கிப் பொருளுரைக்குந் தொல்லாசிரியர் மரபுணர்ந்தீராயி னிவ்வாறெல்லாங் குழறுவீ ரல்லீர். இவற்று ளொன்றுதானும் அறிந்துகொள்ள மாட்டீராய் அழுக்காறுகொண்டு சோமசுந்தரக் காஞ்சிக்கு ஏதேனுங் குற்றங் கூறுதல் வேண்டு மென்னுந் தீய அவாவும்மைப் பிடர்பிடித்து முன் கடவுதலின், அச்சிடப்பட்ட பொருளதிகாரத்தை எளிதிற்பெற்று, அதிற் கையறுநிலை வருமிடனைத் தடவிப் பார்த்து அச் சொன்னோக்கம், பொருணோக்கம், அதனுரை நோக்கம் அவ்வுரையின் முன்பின்னுள்ள இயைபு ஏனைப் பொருளிலக்கண நூற்கருத்து முதலியவற்றுள் ஒன்றுதானுங் கண்டு தேறாது நுமக்குத் தோன்றியவா றெல்லாம் ஏதேதோ வெடுத்தெழுதித் தொல்லாசிரியர். மரபழித்தன் மேலும் அவர்க்குக் குற்றம் ஏற்றுதலுஞ்செய்து பெரியதோர் தெமெய்திய வும்மைக் கண்டு தூரவொதுங்கிப் போதலே செயற்பாலதாம். இனியிவை யெல்லாம் கிடக்க அத்தொல்காப்பியச் சூத்திரத்தையும் வெண்பாமாலைச் சூத்திரத்தையும் ஒருவழிவைத் திணக்கிப் பொருள் சொல்லுமாறு தானியாங்ஙனமென்று சாவுதி ராயின், யாம் மேலே விளக்கிப் போந்த பகுதிகளால் அது விளங்குமாயினும் இன்னுஞ் சிறிதுகாட்டுதும். கையறுநிலை என்பது பொது மொழித் தொகுதி; அத்தொகுதி செயலறுதல் என்னும் பொருள் தருவதாம். அதுதான் ஆண்பாலிறந்து பட்டவழியும், பெண்பாலிறந்து பட்டவழியும், அவ்விருபாலு மொருங்கு பட்ட வழியுந் தோன்றுதலாற் படும் பாகுபாடு நோக்கி மூன்றென்று கொள்ளப்படும். இம்மூன்றனுள் ஆண்பால் காரணமாக நிகழுங் கையறுநிலையும் பிறவும் பன்னிருபடலம், வெண்பாமாலை கூறினவெனவும், பெண் பாலும் அவ்விருபாலுங் காரணமாகக் கொண்டு நிகழுங் கையறுநிலை யும் பிறவும் ஆசிரியர் தொல்காப்பியனார் கூறின ரெனவும் பகுத்துணர்ந்து கொள்க. அற்றேல், ஆசிரியர் - தொல் காப்பியனார் ஆண்பாற் கையறுநிலை கூறப் பெறாரோ வெனின்; - நன்று சொன்னாய், அது மன்னைக் காஞ்சி யுளடங்குதல் பற்றிச் சொன்மாத்தரையின் வேறு கொண்டு மிகை படப் பிரித்தோதா ராயினா ரென்க. இதனை ஆசிரியர் - நச்சினார்க்கினிய ருரைக்கு மாற்றானு முணர்ந்து கொள்க. அவ்வா றாயினுங் கழிவுப் பொருட்டாகிய மன் அடுத்து நிற்பத் துஞ்சிய ஆண்மகன்செய்து போந்த அருஞ்செயல் பலவுந் தொகுத்துக் கூறும் மன்னைக்காஞ்சியும், அங்ஙனம் மன் அடாது அவனருஞ் செயலும் பிறவுங் கையறவு பட வுரைக்கும் கையறுநிலையுந் தம்முள் வேறுபாடுடைய வாமாறு அவை தம்மைப் புடைபட வொற்றி யளந்தாராய வல்லார்க்கு விளங்கு மாதலின் இந் நுண்பொரு ளெல்லா மறிதற்கு நீர் யார்? என்றிப்ப குதியாற் சோமசுந்தரக் காஞ்சி யிற்போந்த கையறுநிலை ஆண்பாற் கையறுநிலையா மென்பதூஉம், அதனை யறியாது நீர் கூறிய வெல்லாம் வெறுங் குழறலே யாமென்பதூஉம், நிறுத்தப்பட்டவாறு காண்க. தாபத நிலை இனி, நீர் தாபதநிலை மேற் சில குழறிக் கூறி வைத்த வாறுங் காட்டுதும். தாபதநிலை என்பது கொழுநனை யிழந்த மனைவி நிலைமை என்னும் பொருட்டாம். அந்நிலைமையை மனைவி தானே கூறவும் பெறும்; அந்நிலைமையை வாங்கிக் கொண்டு பிறர் கூறவும் பெறுப. தானே கூறியதற்கு மேற்கொள் * அளிய தாமே சிறுவெள் ளாம்பல என்னும் புறநானூற்றுச் செய்யுளும் (248) பிறரதனை வாங்கிக் கொண்டு கூறியதற்குக் கலந்தவனைக் கூற்றங் கரப்பக் கழியா தலந்தினையு மவ்வளைத் தோளி - யுலந்தவன் றாரொடு பொங்கி நிலனசைஇத் தான் மிசையுங் காரடகின் மேல்வைத்தாள் கை. என்னும் வெண்பாமாலைச் செய்யுளும் கபிலர் பாடிய மலைவான் கொள்கென வுயர்பலிதூஉய் (புறம் 143) என்னுஞ் செய்யுளும் பிறவுமா மென்க. இனிக் கணவனிறந்துபட்ட அப்பொழுதே மனைவி பிறிதெவ்வுணர்வு மின்றி யாற்றாமை தானேயாய் மொழிக்கருவி தன்வயமின்றிக் குழற மெய்விதிர் விதிர்ப்ப இருவிழியும் பெருநீ ருகுப்ப அறிவுமாழ்கிப் புலம்புறு நிலை மைக்கண் வருந் தாபதநிலையும், கணவ னிறந்துபட்ட சிலநாட் பின்னர்த் தவநிலைக்குவேண்டும் ஊணசையின்மை முதலிய எண்வகை யொழுக்கமொடு மரீஇத் தன்னுடற் குறு துயரும் உயிர்க்குறு துயரும் பொறுத்துத் தன்னறிவை யொருக்கி யிறைவன் றிருவடிக் கண் உய்த்து நோற்கு நிலைமைக் கண் வருந் தாபதநிலை யுமென நிகழ்ச்சி வேறுபாடு பற்றித் தாபதநிலை யைப் பகுத்து மிக நுண்ணிதாக வளந்தறிய வல்லார்க்குச் சோமசுந்தரக்காஞ்சியிற் போந்த தாபத நிலை கணவன் றுஞ்சியவழி மனைவி மாட்டுக்கது மென நிகழும் புலம்புறு நிலைமைக்கண் வருவதா மென்பதூஉம், அந்நுண் பொரு ளியல்பறியாது பருப் பொருளறிவே மிக்குடையி ரென்பதனை யினிது புலப் படுத்தற்கு எண்வகை யுறுப்பொடு கூடிய தவவியல் தழாது முழுவதூஉம் புலம்பற் பொருளே நுதலிவந்தமையி னிது தாபதநிலை யாதல் யாங்ஙன மென்று நீவிர் வினாவிய வெளிற்றுரை அறிவொடு படாக் குறுமொழி மாக்கள் குழறலுரையா மென்பதூஉம், இனிது விளங்கும். தெய்வப் புலமைக் கபிலர் பாடிய மலைவான் கொள்கென வுயர் பலி தூஉய் என்னுந் தாபதநிலைச் செய்யுண் முழுவதூஉம் புலம்பற் பொருளே நுதலி வந்து இன்னா, திகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாண் முலையக நனைப்ப விம்மிக் குழலினைவதுபோ லழுதனள் பெரிதே எனப் புலவர் கூற்றான் முடிந்ததூஉங் காண்க. இனி இங்ஙனங் காட்டிய நுண்பொருட் பரப்பெல்லாம் நுண்ணி தாக ஆழ்ந்தறிய வல்லார்க்கு இனிது விளங்காநிற்ப, அவற்று ளொன்றுதானு மறிந்தெடுத் தெழுதும் நுண்ணறி வாற்றல் நும்பா லொருசிறிது மின்றா யொழியவும், நீரதனையுமறி யாது உம்மை மருட்டிய அறியாமையினையே யறிவென மயங்கக் கொண்டிறுமாந்து களித்துத் தாபதநிலை மனைவி தானே கூறப்பெறுவதா மென்றும், அஃதெண்வகைத் தவவுறுப்புக்க ளொடுங்கூடி நிகழ்வதா மென்றும் நியதிகட்டி அந்நியதி காணாமையிற் சோமசுந்தரக் காஞ்சி யிற்போந்த தாபதநிலை அப்பெயர்க் குரியதாவான் செல்லாதென மறுத்தபோலியுரை தொல்லாசிரியர் இலக்கண நூற்கு மிலக்கியநூற்கு மெல்லாந் தோஷாரோபணங் கற்பித்தலின் அம்மறுப்பி னிழுக்கமும் நுமது போலி யளவை வுணர்வின் பெற்றியும் இனி எல்லாரு முணர்ந்து நகைப்பரென விடுக்க. இனி அகம் புறமென்னும் பொருட் கூறுபாடு மவற்றி னிலக்க ணங்களும் ஒருங்கு நன்றுணர்ந்தீர் போல வேறுசில எதேதோகுழறி வைத்தீராகலின், அவற்றையு மொருசிறிது ஆராய்வாம். சோமசுந்தரக் காஞ்சி யிற்போந்த தாபதநிலை செய்யுட்களை அந்நிலைக்குரிய வென்றே கோடுமாயிற் சடையா யெனுமால் என்றற் றொடக்கத்துத் தேவாரத் திருப்பதிகத் திருவாக்கு மங்ஙனங் கொள்ளப்படுமோ வெனவும், அஃது அகத்திணையின்பாற் படுவதன்றோ வெனவு மொருகடா வெழுப்பினீர். அகம் புறமென்னும் பொருட் பாகுபாடும் அவற்றினிலக்கணமுஞ் செவ்வனே யாராய்ந்தறிந்தீராயி னிவ்வாறு குழறுவீரல்லீ ராகலா னவையொருசிறிது மறியீ ரென்பதிதனாலின்றறிந்தோம். இதுகிடக்க. இனி, அகத்திணை பற்றி நிகழும் இரங்கற் பொருட்கும் புறத்திணைபற்றி நிகழும் இரங்கற் பொருட்கும் வேறுபாடு அறியமாட்டாமையின் அத்திருவாக்கு அகத்திணை பற்றி வந்ததென் றுரைசெய்தீர்.. அகத்திணைக்கண் நிகழும் இரங்கற் பொருள் சாக்காடு காரணமாக வருவதன்று. அது தலைவன் றன்னோ டொருங் கிருந்து இன்ப நுகர்தற் பயத்ததாங்காலத்து அங்ஙன மிருந்தின்பநுகராது * கால் - வட்டை (சக்கரம், கலம் - கப்பல்; காலினுங் கலத்தினும் பிரிந்த வழியும், ஓதன் முதலாகிய வினைப் பொருட்டுப் பிரிந்து வழியும் அப்பிரிவாற்றாமையாற் றலைவிமாட்டு நிகழுமாலைத்தாம். அங்ஙனம் நிகழும் இரங்கற்பொருடான் நெய்தற்றிணை பற்றிவரும். தலைமகன் பிரிவின்கட்டலைவி மாட்டு நிகழும் இவ்வேறுபாடு புறத் தார்க்குப் புலனாகாமையானும் தலைவி தானே ஒருசிறை யிருந்து மனம்புழுங்கிக் கடற்கானுங் கானற்கானுங் கூறும் பொருண்மைத் தாகலானும் அஃது அகத்திணையே யாமென்பது கடைப்பிடிக்க. தலைமகன் பிரிந்தவழித் தலைமகளிடத்துப் பிறக்கு மிவ்விரங்கற் பொருணுட்ப மெல்லாம் - ஆசிரியர் - நல்லந்துவனார் கோத்த கலித் தொகையில் நெய்தற்கலியைப் படித்தறிந்து கொள்ளுதிர். தெய்வப் புலமை நக்கிரனாரும் இறையனாரகப் பொருளுரையில் இவையெல்லாம் மிக நுண்ணதாக வெடுத்துக் காட்டினார். ஆண்டும் பிறாண்டுங் காண்க. இனி யிவ்வாற்றாற் கணவனிறந்து பட்டவழிப் புறத்தார்க்குப் புலனாமாறு தலைவியிடை நிகழ்ந்த செயலறு நிலைமை நோக்கிவரும் சடையாயெனுமால் என்னுந் தெய்வத்திரு வாக்கு அகத்திணை மேற்றெனல் பொருளிலக்கண மரபறியாதார் கூறும் போலியுரையாய் முடிந்தவாறு காண்க. அற்றேல் சடையாயெனுமால் என்னுந் தெய்வத்திருவாக்கு எத்திணைபற்றி வந்ததென் றுசாவுதிராயிற், கூறுதும். யாம் மேலே கிளந்து கூறிய வாற்றாற் கணவன் றுஞ்சியவழி மனைவி மாட்டுக் கதுமெனத் தோன்றும் தாபதநிலைப் பொருளே கொண்டு வருதலின் அத்திருவாக்குப் புறப்பொருட் டாபத நிலையா மென்பதூஉம், அத்தாபதநிலைப் பொருணுதலலொடு சிவபெருமானைப் பாடுதலாகிய அப்பொருளு முடன் கொண்டுவருதலி னத்திருவாக்குத் தேவபாடாண்டிணைக்கண் வந்த காஞ்சித்திணைத் தாபதநிலையா மென்பதூஉம், இவ்வாறு பாடாண்டிணையி லேனைப் புறப் பொருட்டிணை யுந் துறையும் விராய்வந்து முடிதல், *பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே நாடுங் காலை நாலிரண் டுடைத்தே என்னுஞ் சூத்திர வுரையில் ஆசிரியர் - நச்சினார்க்கினியர் அப்பொருட் கூறுபா டெல்லாம் பரக்கக்காட்டி விளக்கும் விழுமிய நல்லுரையால் நன்று தெளிவுறுக்கப் படுமாமென்பதூஉங் கடைப்பிடித்துணர்க. இங்ஙனந் தலையாய வறிவினார்க்கே விளங்கற்பாலனவாய் ஏனைப் புல்லறி வினார்க்கு விளங்கா திருண்டு கிடப்பனவாகிய பொருட்பால் நுண்பொருளெல்லா மறிதற்கு நீர் யார்? இவ்வா றறிதற்கரிய நுண்பொருட் பகுதி யெல்லாம் உள்ளுறை கருவாய்க்கொண்டு விளங்குத லாலன்றே, இக்காலத்துச் சாமானிய அறிவினராகிய தமிழ்ப் புலவர் பலர் பொருளதிகாரப் பயிற்சி குன்றியறிவு மழுக்கமுறுவா ராயினர். ஆசிரியர் - தொல்காப்பியனா ரியற்றியருளிய விழுமிய முழுமுதனூலை ஏனை யிலக்கண நூற்பொருளோ டொத்து நோக்கிப் பலகாற் பயிறலானும், அப்பயிற்சி கைவந்த பின்னர்க் கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பத்துப்பாட்டு, திருக்குறள், திருக்கோவையார் முதலிய தெய்வத் தமிழ் நூல்களை ஒருங்காராய்தலானும் நுண்மாணுழை புல முடைய ராகிய நன்மக்கள் பொருளியலறிவு நிரப்பப் பெறுவரென்க. இங்ஙனஞ் செய்ய வறியாது அவ்வாறெல்லாம் பொருளிய லறிவு நிரப்பி விளங்கு வாரைக் கண்டு பொறாமையுற்றுப் புறம்பழித்துத் திரிவாருரைகள் இளிவந்தன வென்று ஆன்றோர் கொள்ளா ரென்றொழிக. இனி எம்மாசிரியர் பிரிவுறுதலா லெம்மிடத்தே தோன்றிய கையறவு எமக்குப் பெரிதாய்த் தோன்றும் எமதுளநிகழ்ச்சி பற்றிக் கையறுநிலையை முன்வைத் ததன் பின்னர்த் தாபதநிலையை வைத்தாமென்பதூஉ மறியமாட்டாது, மனைவி துயர் பெரி தாகலி னதனை முன்வைத்தல் வேண்டுமெனக் கூறும் நீர் அத்திறமறியீரென விடுக்க. இனி அழியாப்புகழென் னனையின்றுயரம் என்பதிற் குற்றங் காணப் போந்து சிவபெருமா னொருவரே அழியாப் புகழுடைய ராதலாற் கலன்கழி மகளிரை யவ்வாறு கூறுதல் பொருந்தா தென்றீர். புனைந்துரை வகைபற்றி யியற்றப்படும் புலனெறி வழக்கிய லுணர்ந் தீராயின் இவ்வாறு குழறுவீரல்லீர். அதுதானு முணர மாட்டாமல் அணியிலக்கணப் பயிற்சியின்றி யார்ப்பரவஞ் செய்யும் நும்முரை கோழை யுரையா மென்க. அல்லதூஉம், இச்செந்தமிழ்த்தென்னா டெங்கணுஞ் சென்றுலவிச் சித்தாந்த சைவ வமிழ்தமழை பொழிந்து மக்கட்பயிர் கலித் தெழுந்து சிவானந்தப் பயன் விளைப்ப வருளிய எம்மாசிரியர் ஸ்ரீலஸ்ரீ-சோமசுந்தரநாயக வள்ளலுக் குரிமை மனைவியாராம் பெரு வாழ்வு பெற்ற எம் அன்னையார் அழியாப் புகழுடைய ரென்றலாற் படுமிழுக் கின்மையானும், அங்ஙனங் கூறுதலே சைவசித்தாந்த மரபாதலானும் அம்மரபறியாது புறங்கூறிய அப்போலிப் புலவர் சித்தாந்த சைவத்திற்குப் புறம்பென விடுக்க. *ஆனந்தக்குற்றம் இனி, முதலிற்போந்த சைவ மெனப்படு சமயந லுண்மை தழைந்து செழிந்திடவோ என்னும் பாவின் முதனின்ற சைவம் என்னுஞ் சொல்லிற் குற்றங் காணப் போந்து யாமளேந்திரர் முதலாயினர் பகுத்த மங்கலச் சொற்களி லஃதொன் றாகாமை யானும், அதனை யொழித்து வேறு பொருத்தங்களேனு முளவோ வென்றாராய்வுழி முதற்சீர் மூன்றெழுத்தானின் றமையின் எழுத்துப் பொருத்தமும் அம்முதன் மொழி முதலெழுத்துப் பாட்டுடைத் தலைவன் பெயர் முதலெழுத்தோ டிணங்காமையின் இடப்பொருத்தமும் இல்லாமையானும், அச்சொற் பாடாணவாத சைவம், பரிணாமவாத சைவம், பேதவாத சைவம், சங்கிராந்தவாத சைவம் எனப் பல தொடர் மொழிகளி லியைக்கப்பட்டுப் பொதுவுற நிற்றலி னதனை ஒழித்துச் சித்தாந்த சைவமெனக் கூறாது சைவமென்று தொடங்கிக் கூறுதல் பொருந்தாமையானும் அச்சொல் ஆனந்த மென்னுங் குற்றமுடைத்தாயிற்றென்று தமக்குத் தோன்றியவாறே கூறினார். இவை யொவ்வொன்றனையும் நிரலே வகுத் தெடுத்துக் கொண்டு பரிகரித்திடுதன் முன்ன ரவ்வானந்தக் குற்றத்தை யாராய்ந்திடுவாம். இனி, ஆனந்தக்குற்றம் என்பதில் ஆனந்தம் என்னுஞ் சொல் சாக்காடு என்னும் பொருட்டாம். இவ்வாறாதல் * கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச் செல்வோர் செப்பிய மூதானந்தமும் என்புழி ஆசிரியர் - நச்சினார்க்கினியர் உரைக்கு முரையாற் கண்டுகொள்க. எனவே, ஆனந்தக்குற்றம் என்பது இறந்து பாடுறுவித்தற் கேதுவாகிய குற்றம் என்பதாகும். ஒரு புலவன் தானியற்றுஞ் செய்யுளுள் ஒரு சொல் மங்கலப் பொருள் பயவாமல் அமங்கலப் பொருள் பயக்குமானா லச்சொற் பாட்டுடைத் தலை மகனுக்குத் தீதுசெய்யுமாகலின், அஃதானந்தக்குற்றமா மென்பது பிற்காலத்து மதிநுட்பம் வாய்ப்பப் பெறாதார் துணிவுரையாம். ஒரு புலவனுக்கு உலகியற் பொருள றிவு நிரம்ப, அவ்வறிவு முதிர்ச்சியான் இடர்ப்படாது செம்பொருள் வளந்துறும் அவனிடத்திருந்து எளிதிற்றிரண்டு போதருஞ் செய்யுட் டொகுதியின் விழுப்ப மும், அங்ஙன முலகியற் பொருளறிவு நிரம்பாது இடர்ப்படு மொருவன் அசை, சீர், தளை, அடி, தொடை, பா, மடக்கு, திரிபு முதலியவற்றை யுழன்றறிந்து வலிந்த மைத்துப் பத்துவகைப் பொருத்தங்களும் மிறைக்கவி நுட்பமும் கொளுத்தி மிகமுயன் றியற்றும் போலிச் செய்யுட்டொகுதியி னிழுக்கமு மணரவல்ல நுண்ணறி வாளர் இப்போலிப் புலவர் எமது காஞ்சியின்மே லேற்றிக் கூறிய குற்றத்தினியல் பறிந்து இதுவோ விவன் கண்டது எனக்கூறி நகையாடுவர். அல்லதூஉம், இச்சொல் உரைப்பின் நன்மையாம், இச்சொல் உரைப்பிற் றீமையாமென் றாராயாது ஒரு புலவன் கூறினானாயின் அச்சொற்றானே தன்பயனை நுகர்விக்குமா றியாங்ஙனம்? இங்ஙனம் ஒரு சொற் பயனாராயா துரைப்பி னது தானே பயன்றருமா றில்லை யென்பது பற்றியே வீரசோழிய நூலாரும் அறியாது மாராயாதுங் கொள்ளிற் பயன்கொடா தென்பது என்றுரைத்தது. அற்றேல் தொல்லாசிரியர் பிறரைச் சாவவும் பிழைக்கவும் பாடினா ரென்பது காண்டுமாகலின் நீவிர் கூறியது பொருந்தாதாம் பிறவெனின்; அறியாது கடாயினாய், மலவிருடுமித்து விரிதரு தமது தூய பேரறிவின்கண் இறைவன் றிருவருட் பேரொளி நிரம்பித் துளும்பும் பெருமாட்சியுடைய வவர் உலக மெல்லாந் தம்மாணைவழி நிறுத்த வல்லராகலி னவரது முழுமுத லாற்றல்பற்றி யச்சொற் பிழையாமை யல்லது அச்சொற்றானே தன்பயனை யெய்துவிக்குமா றில்லை யென்றொழிக. அப்பெரியார் நினைதன் மாத்திரையானே உலகமெல்லா மந்நினைந்தாங்கு தொழிற்படுமாயின் அவர் பெருமை கூறவரைப்படுமோ வென்பது. இதுபற்றி யன்றே * குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி, கணமேயுங் காத்த லரிது என்று செந்தமிழ்ப் பெருநாவலரும் ஒதுவாராயின ரென்பது. இனி, இங்ஙனஞ் சொற்றன்மை யாராயாது இறைவன் றிருவருட் பேரொளி வழிநின்று எழுதினமையின் சைவமெனப்படு சமயநலுண்மை தழைந்து செழித்திடவோ என்பதன் முதனின்ற முதன் மொழி மங்கலம் இலாதலும் அது தானே தன்பயனை நுகர்விக்கு மாறு மில்லை மென்ப தறிவுடையோ ருணர்வர். இது கிடக்க. இனி, இவ்வானந்தக் குற்றந்தான் தொல்காப்பியனாரை யுள்ளிட்ட முதுதவத் தொல்லாசிரியராற் கொள்ளப்பட்டதோ வென்ப தொருசிறி தாராய்வாம். ஆசிரியர் - தொல்காப்பியனா ராதல் அவர் வழிப்பட்டு நூல்செய்த ஏனை யாசிரியராதல் இங்ஙனமொரு குற்றமுண்டென் றாராய்ந்தா ரல்லர். ஆசிரியர் - தொல்காப்பியனார் ஒரு விழுமிய நூலின்கண் விலக்கற் பாலனவாகிய குற்றங்க ளிவை யென்பது தோன்ற, (தொல் மரபியல்) சிதைவெனப் படுபவை வசையற நாடிற் கூறியது கூறன் மாறுகொளக் கூறல் குன்றக் கூறன் மிகைபடக் கூறல் பொருளில மொழிதன் மயங்கக் கூறல் கேட்போர்க் கின்னா யாப்பிற் றாதல் பழித்த மொழியா னிழுக்கங் கூற றன்னானொரு பொருள் கருதிக்கூற லென்ன வகையினு மனங்கோ ளின்மை யன்ன பிறவு மவற்றுவிரி யாகும். என்று வகுத்துச் சூத்திரஞ் செய்தருளினார். தெய்வத் தமிழாசிரியர் கூறாத குற்ற மொன்றனைப் பிற்காலத்துப் போலி நூல்களிலிருந் தெடுத்துவந்து காட்டத் துணிந்த இப்போலிப் புலவர் அறிவுடையோரா லெள்ளப் பட்டொழிந்தன ரென்க. இதுபோலவே ஆளவந்த பிள்ளையென்பா ரொரு போலிப் புலவர் பெருங்கௌசிகனா ரென்னு நல்லிசைப்புலவரியற்றிய மலைபடுகடாத்திற் குற்றங் காணப்போந்து தீயினன்ன வொண்செங்காந்தன் என்பதற்கு ஆனந்தக் குற்றங் கூறினா ரெனவும், அப்பாட்டிற் குரையெழுதப் புகுந்த திருவருட்பெருஞ் செல்வராகிய ஆசிரியர் - நச்சினார்க்கினியர் அவ்வாளவந்த பிள்ளையை அறியார் என மறுத்து நூலிற் குற்றங் கூறுகின்ற பத்துவகைக் குற்றத்தே தன்னா னொருபொருள் கருதிக்கூறல் என்னுங் குற்றத்தைப் பின்னுள்ளோர் ஆனந்தக்குற்ற மென்ப தோர் குற்ற மென்று நூல் செய்ததன்றி அகத்தியனாரும் தொல்காப்பியனாரும் இக்குற்றங் கூறாமையிற் சான்றோர் செய்யுட்கு இக்குற்ற முண்டாயினும் கொள்ளாரென மறுக்க என்று அதனை யொழித் துண்மைப் பொருள் வலியுறுத்தினா ரெனவுஞ் செந்தமி ழியலறிவு வாய்ப்பப் பெற்றா ரெல்லாரு முணர்ந் திருக்கின்றமையின், அவ்வியலறிவு வாய்ப்பப் பெறாத இப்போலிப் புலவர் தொல்காப்பிய நல்லிலக்கண நூலை யிகழ்ந்து பிற போலி நூன் மேற்கோள் கொண்டு ஆனந்தக் குற்றஞ் சொல்லப் புகுந்தது குழறுபடையாய் முடிந்தது காண்க. இங்ஙனம் ஆசிரியர் - தொல்காப்பியனாரினுந் தம்மை நுணுகிய அறிவின ரென்று அறிவிலார் மயங்கிக் கொள்ளுதலை விரும்பி அப்பெருந்தவத் தொல்லாசிரியரொடு முரணித் தமக்கு வேண்டியவா றெல்லா மிலக்கணங் கூறப் புகுந்த பிற்காலத்துப் போலிப்புலவர் நூல்களை யுள்ளவா ராறாய்துமாயின் அவையெல்லாம் அளவை நெறிக்கண் நில்லாவாய் வழுப்படுமா றெளிது விளங்கும். அங்ஙனம் அம்முதுதவத் தொல்லாசிரிய ரொடு முரணிய பல போலிப் புலவர் கோள்களை யெல்லாம் ஒருங்கே களைந்தெறிந்து, அவ்வாசிரியர் மாட்சி விரித்து வெளிப்படையானுங் குறிப் பானுந் தமது நூல்களி லாங்காங்கு மேற்கோள் காட்டி நிலையிட்டு ரைத்தார் ஆசிரியர் -சிவஞானயோகிகளுமென்பது. ஆசிரியர் நச்சினார்க் கினியரும் இவ்வாறே யேனைப் போலியாசிரியர் மதங் களைந்து உரைவரம்பு நிறுத்திச் செல்லுமா றவருரை களிற் காண்க. இனி ஒருசாரார், ஆசிரியர் -தொல்காப்பிய னாரினும் நுண் கருத்து விளங்க மற்றவரோடு இணங்காமல் வேறு தாங்கொண்டு நிறுவி யெழுதிய பிற்காலத்துப் புலவர் நூல்களை யங்ஙன மிகழ்ந்து கூறுத லமையாதா மென்று தமக்காசிரியத் தலைமை நிகழுமிடங்களிற் பிதற்றுரை கிளந்து திரிகின்றமையி னதன் புரை சிறிது வெளிப்படுப்பாம். அங்ஙன மாசிரியரொடு முரணுவா ராயினும் நுண்பொருள் காட்டி இந்நாட் கேற்பவைத்து அவர் நிறுவ வல்லராயி னது பொருந்தும். இந்நாணிலமைக்கும் பொருந்தாது புரைபடுதலி னந்நூற் பொருள் கொள்ளாம். ஒன்று காட்டுவாம். பிற்காலத்தி லிலக்கண நூலெழுதிய பவணந்தியார், ஆசிரியர் - தொல்காப்பியனாரினும் அஃகி யறிவார்போன்று மக்க டேவர் நாக ருயர் திணை என்றுயர்திணைப் பொருள் காட்டினார். ஆசிரியர் - தொல்காப்பியனாரோ உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டேஎன்றதனை யுணர்த்தி யருளினார். தம்முட் பஃறலைப் பட்டு முரணிய பல வேறு சமயிகளும் பொதுநூ லெனக் கொண்டு போற்றி யாராயும் பொதுமைத் தாகலின் ஆசிரியர் - தொல்காப்பியனார் தமதிலக்கண நூலிற் காட்சி யளவை பற்றி உயர்திணையாவது மக்கட் பொருளென்று வைத்து இலக்கணஞ் சொல்லி வரம்பறுத்துப் பின் தெய்வஞ் சுட்டிய பெயர் நிலைக் கிளவியு, மிவ்வென வறியு மந்தந் தமக்கிலவே என வேறு சூத்திரத்தா லேனைத் தேவர், நாகர், நரகர் முதலிய பொருளியல் புலப்படுத் தோதினார். இந்நுண்மை தேற மாட்டாதபவணந்தியார் அவரினுந் தம்மைப் பேரறி வினராக மதித்து உயர்திணையாவார் மக்களோடு, தேவரு, நரகருமாவரென மேலுமிரண்டு கூட்டி யுரைத்துத் தம் அறியாமை புலப்படுத்திட்டார். என்னை? உலகாயத வுணர்ச்சிகொண் டொழுகுவா னொருவன் உயர்திணையாவார் மக்களேயன்றி வேறில்லை யெனக்கொண் டுரைக்குந் தனது கொள்கைக் கிணங்கவே பொருளாராய்வ னன்றிப் பிறிதாராய ஒருப் படானாகலின், அவன் மதத்திற்கும் பிறமதங்கட்கு மேற்ப வெல்லா மிலக்கணஞ் சொல்லும் முழுமுத லாற்றலுடைய தொல் காப்பிய நூலொடு மலைந்து பவணந்தியார் தாமியற்றிய நூலங் ஙன மேற்ப இலக்கணஞ் சொல்லாது மற்றவரால் விலக்கப் படுத லானும், ஆங்கில மொழியில் வல்லராய்த் திகழும் நுட்ப வறிவு டைய இக்காலத்து நன்மக்களுந் தொல்காப்பிய நுட்பமறிந் தின்புறுத லானுமென்பது. பவணந்தியார் தொல்காப்பிய முழுமுத னூலோ டிங்ஙன மாறுகொண் டுரைத்திட்ட விடங்க ளெல்லாம் புரைபட்டுப் பொய்யா யொழியுமாறு ஆசிரியர் -சிவஞானயோகிகள் புலமை மலிய வெழுதிய தொல்காப்பியச் சூத்திரவிருத்தி, இலக்கண விளக்கச் சூறாவளி முதலிய அரிய நூல்களி னெல்லா மினிது விளங்கும். பிறவுஞ் சமய நேர்ந்துழி யெல்லாம் விரிப்பாம். இது கிடக்க. இனி இவ்வானந்தக்குற்ற மென்பதொன் றுண்டென்று கோடு மாயினும் பல்வேறு வகைப்பட்ட சமயிக ளெல்லாரும் பொது நோக்கத்தா னதனைத் தழுவிக் கொள்ள ஒருப் படாமையின் அக்குற்றம் இலக்கண நூலின்கண் ஆராயப்படும் தலைமையுடைத் தன்றெனவும், அக்குற்ற மாராயும் பிற்காலத்து நூல்கள் மேற்கோளாகக் கொள்ளப்படுதற்கு ஏலாவெனவும் உணர்ந்து கொள்க. இப்போலி நூன்மேற்கோள் கொள்ளாமையா னன்றே, ஆசிரியர் சிவஞான யோகிகள் தாமியற்றிய காஞ்சிப் புராணப் பெருங்நூலிலவர் கூறும் மங்கலமொழி முதனிலையிட் டுரையாது வாளா இருகவுட் டுளைவாக்கு கார்க்கடங்க ளிங்குலிகம் என்று தொடங்கியதூஉம், அவர் முதன் மாணக்கராகிய கச்சிப்பமுனிவர் திருத்தணிகைப் புராணத்தினு மவ்வாறே மும்மதத்தனென் றொருபெயர் தனக்கு மொய் கூந்தல் என்று தொடங்கிய தூஉ மென்க. இவ்வாசிரியர் மங்கல மொழி முதனிலையிட் டுரையாமையி னிவர்க்கெல்லாங் குற்றஞ் சொல்லத் துணிவிரோ? புறநானூற்றில் கண்ணிகார் நறுங்கொன்றை என்று தொடங்கிய பெருந்தேவனார்க்குங் குற்றங்கூற ஒருப்படுவிரோ? ஆண்மையும் புலமையு முடை யிராயின் எதிர் வந்து நின்று சான்று கூறி நிறுவுமின். இவ்வாறன்றி நுமது போலிக் குழாத்தி னிடைனின்று மற்றவரை மயங்கப் படுத்து நுங் கைப்புரை கூறிப் புகழ்ந்து கொள்ளாதீர். அதர்வசிகோபநிடத மறை கேற்பச் சிவபெருமானை யன்றி ஏனைத் தேவரைக் கனவினும் பொருட் படுத்து நினையாது அவன் றிருவடி யிரண்டனையுமேயுளங் கொண்டு வழுத்துஞ் சித்தாந்த சைவ மரபுணர்ந்தீராயின் மங்கலங் கூறல் வேண்டு மென்று றுதி கட்டி யுரையீர். சித்தாந்த சைவர் திருவாய் மலர்ந்தன வெல்லாம் மங்கல மல்லவோ? இவற்றாற் பிற்காலத்தா ரியற்றிய போலி நூற் மேற்கோள் கொண்டு மங்கல மொழி முதனிறுத் துரைத்தல் வேண்டு மெனவும், அங்ஙன முரையாக்கா லஃதானந்த மென்னுங் குற்றமா மெனவுங் கூறும் நும்முரை ஆசிரியர் - தொல் காப்பிய னாரொடு மாறுபடுதலானும் சித்தாந்த சைவ மரபிற்கு ஏலாமை யானும் அது போலியா யொழியுமென்றுணர்க. அற்றேல், தெய்வப்புலமை நக்கீரனார் *உலக முவப்ப என்றும், இளங் கோவடிகள் திங்களைப் போற்றுதும் என்றும், மாணிக்க வாசகப் பெருமாள் திருவளர் தாமரைஎன்றும் சேக்கிழார் பெருமான்* உலகெலாம் என்றும் மங்கல மொழி முதனிறுத்துத் தொடங்குமா றென்னை யெனின், தொல்காப்பிய விலக்கணம் பற்றி நூல் செய்யப் புகுந்த வவரெல்லா மங்ஙனம் நியதி கொண் டுரைத்தாரென்று கோடுமாயின் அந்நியதி புலப்படக் கிளக்கும் விதி யந்நூலுள் யாண்டுங் காணப் படாமையானும், ஆசிரியர் நச்சினார்க் கினியர் மலைபடுகடாத் துரையி லதனை மறுத்துக் கூறினாரென்பது மேலே காட்டினா மாகலானும், இனி அவர் காலத்தில் இருந்த ஏனை நல்லிசைப் புலவர் தாமும் அறா அயாணர் நனந்தலை யுலகம் என்றற் றெடக்கத்து மொழி களான் முதலுதலானும், அங்ஙனந் தொடங்கி யுரைத்தல் வேண்டு மென்பதே யவர் கருத்தன்றென்பதூஉம், அத்தொல் லாசிரியர் கூறியவற்றுட் சில சொற்க டம்மையே பிற்காலத்தார் மங்கல மொழி யென வேண்டினா ரென்பதூஉம் பெறுது மாகலின் அது கடாவன் றென மறுக்க. இது கிடக்க. இனிச் சைவம் என்னுஞ் சொல்லில் அவரேற்றிய அவ்வானந்தக் குற்றந்தானு முளதோவென் றராய்வுழி யதுவு மில்லாது மங்கல நிறைந்து பொருத்த முறுகின் றமையின் அவர் கூறிய குற்றங்களை நிரலே யாராய்ந்து பரிகரித்திடுவாம். சைவம் என்னுஞ் சொல்யாமளேந்திரர் முதலாயினார் பகுத்த மங்கலச் சொற்களுளொன்றா காமையான், அதுமங்கல மில்லாச் சொல்லாமென்றீர். சைவஞ் சிவத்தொடு சம்பந்தம் என்னுந் திருவாக்கானே மங்கலப் பொருளாகிய சிவபெருமானொடு இயைபுடையது சைவ மென்பதாம். மங்கலப் பொருட் கெல்லாம் முதன் மங்களமாய், ஏனை மங்கலப் பொருளெல்லாம் பிறந் திறந் துழன்று மாறுதலாகிய மங்கலக்குவைளு யெய்தி யிழிக்கப் படுவவாக, அவற்றொடு படாது காலமுங் கற்பனையும் முதலு மீறுங் கடந்து ஒரு பெற்றியதாய் அறிவருளின்பவு வினதாய் யாண்டும் நிறைந்து எல்லா மறிந்து எல்லாம் வல்ல தாய் மனமொழி யிறந்த எட்டாப் பொருளாய் அருட் பெருங் கடலாய் இன்பநிறைந்து ததும்பு புனித நீர்ப்பாய் முழுமுதற் கடவுளாய் விளங்கும் சிவவருட் பொருட் டொடர்புற்று எல்லாச் சமயங்கட்கு மேலாய் நிலைபெற்ற சைவ மங்களச் சொல்லை மங்கலமில்லாச் சொல்லென்று கூறுதற் கமர்ந் திசைந்த பொய்படு புரை நாவுடைய நீவிர் தாமோ சித்தாந்த சைவர்! நீவிர் தாமோ சித்தாந்த மரபுணர்ந்தீர்! நீவிர் தாமோ சித்தாந்த நூல் வல்லீர்! இதனாற் சைவ கோலம் புனைந்து திரிதருங் கரவுடைப் புறச்சமயப் புன்மை யுடையீ ரென்பதின் றறிந்தாம். யாமளேந்திரர் முதலிய சமணப் போலிப் புலவர் கூறாதுவிடின் அஃது மங்கலமில் சொல்லாய் விடுமோ? யாமளேந்திரர் செய்த இந்திரகாளி வழித்தாகிய வச்சணந்தி மாலை யுடையார் கூறிய, சீரெழுத்துப் பொன்பூ திருமணிநீர் திங்கள்சொற் கார்பரிதி யானை கடலுலகந் - தேர்மலைமா கங்கை நிலம் பிறவுங் காண்டகைய முன்மொழிக்கு மங்கலமாஞ் சொல்லின் வகை என்னுஞ் செய்யுளிற் பிறவும் என்பதனா லின்னோ ரன்ன பிற மங்கலச் சொல் வரினும் அவையு மமைக்கப்படு மென்பது நன்று போதரவும் அதுதானு நீவிருணர மாட்டாது மங்கல மொழியி னிலக்கண மறிந்தீர் போன்று பெரியதோரார் ராரவாரஞ் செய்து சைவம் என்னும் மங்கலச் சொல்லை அஃதில்லாச் சொல்லென இழித்துரைக்கப் புகுந்தது சிறுமகாரானு மெள்ளி நகையாடற் பாலதா மென விடுக்க. இனிச் சைவ மெனப்படு என்பதின் மங்கல மொழி முதற்சீர் மூன் றெழுத்தா னின் றமையின் எழுத்தானந்த மாயிற்றென் றுரை செய்தீர். இதுதானோ நீவி ரிலக்கண மறிந்தவாறு! மங்கல மொழி முதற்சீர் மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது எழுத்துக்களா னியைந்து நிற்றன் மங்கலமாகிய எழுத்துப் பொருத்தமா மென்பது, தப்பாத மூன்றைந்தே ழொன்பான் றவறிலவென் றொப்பா முதற்சீர்க் குரைசெய்வர் - செப்புங்கால் தண்டாத நான்காறெட் டாகா தவிர்கென்று கொண்டா ரெழுத்தின் குறி என்னும் வச்சணந்திமாலைச் செய்யுளா லினிதறி வுறுக்கப் படுவதாகவும், இவ்வெள்ளிடைப் பொருடானும் அறியு முணர்ச்சியின்றி முறை பிறழக்கொண்டு மங்கலமாக நின்ற அம்முதற் சீருக்கு எழுத்தானந்த மென்னுங் குற்ற முண்டா யிற்றென் றுரைத்த நும் ஏழை மதியை யெண்ணிப் பெரிதும் பரிவுறுகின்றாம். எமது நூற்குக் குற்றங் கூறியது பற்றி யாமொரு சிறிதும் வருந்துகின்றிலம், சாமானிய இலக்கணங்கடானும் முறைதரக் கல்லாது அவற்றின் பொருளைத் திரித்துணர்தலே யன்றி, அத்திரிபுணர்ச்சியின் வலிகொண்டு ஒரு நூற்குக் குற்றங் கூறப் புகுந்தது தான் நுமக்குப் பெரிதும் ஏதமாயிற் றென்றுன்குகின்றோம். நும்போல இங்ஙனம் முறைபிறழக் கொண்டு புலம்பு வாரை வேறி யாண்டுங் கண்டிலம். இது நும் மூழ்வினைப் பயன் என் றெண்ணி யிரங்கி, இனியாயினு நுமக்கு இம்மயக்க வுணர்ச்சி நீங்கி நல்லறிவு விளங்குமாறு சிவபெருமான் றிருவருளை நினைந்து வழுத்துகின்றேம். இது கிடக்க. இனிச் சைவம் என்னும் முதன்மொழி முதலெழுத்துப் பாட்டுடைத் தலைவனாகிய சோமசுந்தர குரவன் என்னுஞ் சொன்முதலெழுத்தோடொன்றி மங்கலத் தானத்தி னில்லாது மரணத் தானத்தி னின் றமையிற் குற்றமாயிற் றென்று அறியாமையாற் குழறிவைத்தீர். சாதாரண இலக்கண நூலறிவேனுஞ்சிறி துமக் கிருக்குமென்று நினைந்திருந்தேம். அதுதானு முமக் கின்றென்பது வெள்ளிடை மலைபோ லின்று விளங்கிற்று. இம் மறுப்பெழுதா திருந்தா லுமக்குச் சிறிது கௌரவ மிருந்திருக்கும்; இதனை யெழுதி யக்கௌர வத்தினையு மொருங் கிழந்தீர். கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற, வல்லதூஉ மையந்தரும் என்னுந் திருவாக்கின் உண்மைப் பொருளை நும்மளவிற் கண்டேம். இனிச் சைவம் என்னும் மங்கலமொழி முதலெழுத்தாகிய சை என்பதிலுள்ள ஐகார வுயிர் சோமசுந்தரகுரவ னென்னும் பாட்டுடைத் தலைவன் பெயர் முதெலழுத்தாகிய சோ என்பதிலுள்ள ஓகார உயிர்க்கு அரசு நிலையினின்ற தென்பதூ உம், அதனை யறியாது நீர் குழறியது வறிதா மென்பதூஉங் காட்டுவாம். ஒரு பாட்டுடைத்தலைவன் பெயர் முதலெழுத்தில் அகர வுயிராதல் ஆகார வுயிராத லிருந்ததென்று கோடுமாயின், அவ்வகர வுயிர் தொடங்கி ஔகார வுயிரிறுதியாகக் கிடந்த பன்னிரண் டுயிரெழுத்தினையும் ஐந்து கூறாக்கி முதற் கூற்றைக் குழவிநிலை யென்றும், இரண்டாங் கூற்றை இளைஞன் நிலையென்றும், மூன்றாங் கூற்றை அரச நிலையென்றும், நான்காங் கூற்றை மூப்புநிலையென்றும், ஐந்தாம் கூற்றை இறப்பு நிலையை யென்றுங் கொண்டு முதன் மூன்று கூற்றுட்பட்ட எழுத்துக் களை முதலாகவுடைய மங்கலச் சொற்றொடங்கி யுரைப்பினது நிலைப் பொருத்தமாம்; மற்றிரண்டு நிலைகளிலுள்ள எழுத்துக் களாற் றொடங்கின் அது மங்கலமில்லதாமென்று வழங்கப்படும். அங்ஙனம் பன்னீ ருயிரெழுத்தினையும் ஐந்து கூறுபடப் பகுக்குங்காற் குற்றெழுத் தைந்துந் தமக்குரிய இனநெடிலோ டியைந்து நிற்ப ஐகாரவுயிர் இகரத்தினையும் ஔகாரவுயிர் உகரத்தினையுஞ் சேர்ந்து நிற்குமெனக் கூறுப. இதனை வச்சணந்தி நூலடையார், குறிலைந்துந் தந்நெடில்கொண் டி உ ஐ ஔசேர்ந் தறிபால னாதியா வைந்து - மிறைவன்பேர் முன்னெழுத்துப் பாலனில்வைத் தெண்ணிமூப் பேமரண மென்னுமிவை தீதென்றே யெண் என்று தெளிய வெடுத்துக் கூறதலானு முணர்ந்து கொள்க. இவற்றைப் பகுத்துங் காட்டுவாம். அ ஆ இ ஈ ஐ உ ஊஓள எ ஏ ஒ ஓ 1 2 3 4 5 இவற்றுள் இறைவன் பெயர் அகர ஆகாரமாயின் முதன் மூன்றிடங்களிலு முள்ள உயிரெழுத்துக்களை முதலாக வுடைய மங்கலச்சொற் றொடங்க நன்றாம்; இறைவன் யெயர் இகர ஈகார ஐகாரங்களாயின் அப்பகுதி முதன், மூன்றிடங்களு நன்றாம்; உகார ஊகார ஔகாரங்களாயின் அக்கூறு முதன், மூன்றிடங்களு நன்றாம்; எகர ஏகாரங்களாயின் அது முதன் மூன்றும் நன்றாம்; ஒகர ஒகாரங்களாயினது முதன் மூன்று நன்றாம். இனி, சோமசுந்தரகுரவன் என்னும் பாட்டுடைத் தவைன் பெயர் முதலெழுத்து ஓகாரமாகலான் அதற்கு மூன்றா மிடத்திலிருப்பதாகிய ஐகார உயிர் அரசிடமாவதன்றி நீர் குழறியவாறு சாவிட மாமாறு யாங்ஙனம்? இதனை யறியாது பருப்பொருளறிவான் மயங்கிக் கூறிய நுமக்கு இன்னுஞ் சிறிது புலனாமாறு பகுத்துக் காட்டுதும். சிறுவன் இளைஞன் அரசன் மூப்பு சாக்காடு ஒ ஒ அ ஆ இ ஈ ஐ உ ஊ ஓள எஎ 1 2 3 4 5 இங்ஙனம் பகுத்துக் காட்டிய வாற்றாற் சோ வென்னும் பாட்டுடைத் தலைவன் பெயர் முதலெழுத்திலுள்ள ஓகார வுயிருக்குச் சைவம் என்னும் மங்கல மொழிமுதற் சை என்னு மெழுத்திலுள்ள ஐகாரவுயிர் அரசிடத்தி னின்றமை விளங்க வறிந்து கொள்ளக் கடவீர். இவ்வாறறிவு நுணுகிப் பகுத்துக் கொண் டெண்ண வறியாமலும், நூற்பொரு ணுட்பங் கொள்ள மாட்டாமலும் ஐகார ஔகாரவுயிர்களைப் பிழைபட வெண்ணி வேறு கொண்டு மயங்கி அம்மயக்க வுணர்ச்சியை மெய்யுணர்ச்சியெனத் துணிந்து சோமசுந்தரக் காஞ்சிக்குக் குற்றங் கூறப் புகுந்த நும்மைக் கண்டு மைத்துனர் பல்கி மருந்திற் றெளியாத பித்த னென் றெள்ளி யறிவுடையா ரெல்லாரும் நகையாடுவா ராயினரென் றொழிக. இனிச் சைவம் என்னுஞ் சொற் பாடாணவாத சைவம், பேதவாத சைவம், சங்கிராந்தவாத சைவம் முதலியனவாகப் பல வேறு வகைப்பட வழங்கக் காண்டலிற் சித்தாந்த சைவமென் றுரையாது வாளா சைவமென்று கூறிய திழுக்காமென் றுரைத்தீர். நுமது சைவ சித்தாந்த வுணர்ச்சி சால வழிகிது! மெய்ஞ்ஞானம் அஞ்ஞானமென அடைமொழி கொடுத்து விசேடித்தவழி வேறு வேறு பொருள் பயந்து நின்ற ஞானம் என்னுஞ் சொல் அங்ஙனம் விசேடியாது நின்றவழி மெய்ஞ் ஞானம் எனவே பொருடரு முறைமை யுணர வல்லார்க்கு நும் முரையி னிரம்பிய வழுக்க ளெல்லா மினிது விளங்கும். இனி யங்ஙனமே சிவன் என்னுஞ் சொல்லும் பரமசிவன், சதாசிவன், நீலகண்ட சிவன், சுப்பிரமணிய சிவன், திரிபுர சங்கார சிவன், தத்புருட சிவன், அகோர சிவன், சத்தியோசாத சிவன் முதலியனவாகப் பல தொடர் மொழிகளி லியைக்கப்பட்டுப் பொதுமையின் வழங்கக் காண்டலின் அந்தச் சொல்லுஞ் சித்தாந்த சைவத்தில் வழங்குதற் கேலாதா மென்று சொல்ல வுடன் படுவிரோ? இனி ஆசிரியர் அருணந்தி சிவாசாரிய சுவாமிக ளோதியருளிய, புறச்சமய நெறிநின்று மகச்சமயம் புக்கும் புகன்மிருதி வழியுழன்றும் புகலுமாச் சிரம வறத்துறைக ளவையடைந்து மருந்தவங்கள் புரிந்து மருங்கலைகள் பலதெரிந்து மாரணங்கள் படித்துஞ் சிறப்புடைய புராணங்க ளுணர்ந்தும் வேதச் சிரப்பொருளை மிகத்தெளிந்துஞ் சென்றாற் சைவத் திறத்தடைவ ரிதிற் சரியை கிரியா யோகஞ் செலுத்தியபின் ஞானத்தாற் சிவனடியைச் சேர்வர் என்னுந் திருப்பாட்டிற் சித்தாந்த சைவமென் றோத வேண்டிய விடத்துச் சைவம் எனப் பொதுமையின் வைத் தோதுதன் மலைவா மென் றவர்மீது குற்றமேற்றப் புகுவிரோ? சித்தாந்த சைவத்தின் மரபுணர்தற்குத் தகுதி யிலராய்ப் புறம்பொதுங்கிய நீவி ரிவை யெல்லா மறிதற்கு யார்? என்றொழிக. சிவத்தொடு தொடர்புடைய சைவ மென்பது அடை கொடுத் துரையா வழி யெல்லாஞ் சித்தாந்த சைவமென்றே பொருடரு மென்பதூஉம், பாடாண வாதசைவம் முதலியவாக அடைமொழிகொடுத்துக் கூறும் வழியே வேறு வேறு பொருள் படுவான் செல்லு மென்பதூஉம் நோக்கி யன்றே இராசாங்கத்தி லமர்ந்தது வைதிக சைவ மழகி தந்தோ என்றும் சைவ சமயமே சமயம் என்றுஞ் சைவத்தின் மேற் சமயம் வேறில்லை என்றும் உண்மைப் பொருள் வலியுறுத்துவான் புகுந்த திருப்பாட்டுக ளெழுந்தன வென்க. இனி நீர் சொல்லும் கூற்றிற்கு ஒரு சிறிதும் பொருந்தாமல் இடர் செய்து நமது சித்தாந்தத்தினை நாட்டுதற்கு உதவி செய்வதா வெழுந்த சைவ சமயமே சமயஞ் சமயாதீதப் பழம்பொருளை என்னுந் திருப்பாட்டை யெடுத்துக் காட்டி யானு மறியே னவளும் பொய்சொல்லாள் என்பதனை மெய்ப்படுத்தினீர். இனி நீர் சைவம் என்பது சிவாகம மெனவும் பொருடரு மென் றும், சித்தாந்த ரத்தனாகரம் முதலியவாகப் பெயர் தந்ததன்றிச் சைவ ரத்தினாகரம் முதலியவாகப் பெயர் தராதவாறென்னை? என்றும் ஒருகடா வெழுப்பினீர். ஒரு சொல் லின் முதன்மைப் பொருளும் பிற பொருளும் அச்சொல்லின் பரவை வழக்கானும் அருகிய வழக்கானும் உறுதி செய்யபடு மாதலின், அச்சொல்லிற்குப் பலபொருளுள வாதல் பற்றி யச்சொ லப்பொருட் கெல்லாம் ஒரு பெற்றிப்பட வுரிமை கொள்ளுவான் செல்லுமெனச் சொல்லிலக்கண வியல்பறியாது நீர் குழறிய தீண்டைக்குப் பயன்படாதென் றறியக் கடவிர். பரவை வழக்கானும் அருகிய வழக்கானுஞ் சொற்பொரு டுணியுமாறு முனிமொழிப்பிரகாசிகையி லினிதெடுத்து விளக்கி னாம். ஆண்டுக் காண்க. சைவ மென்னுஞ் சொற் பரவை வழக்காற் சித்தாந்தப் பொருண்மைத்தா மாகலிற் சித்தாந்த ரத்தினாகரம் என்று பெயரிடினும் அஃது இழுக்காதென் றறிக. இங்ஙனமாகலிற் சங்கற்ப நிராகரண நூலோடும், ஏனை மெய்கண்ட நூற் பொருளோடுஞ் சைவமென்னுஞ் சொல் முரணுமாறில்லை யென்பது நிறுவப்பட்டவாறு காண்க. இனி நீர் கையறுநிலைப் பாட்டுக்க டோறுஞ் சில போலிக் குற்றங் கூறினீ ராகலா னவற்றை யெல்லாம் ஒருங்கே தொகுத்துப் பரிகரித்திடுவாம். ஆற்றாமை தோன்றக் கூறுவன வெல்லாங் கையறுநிலை யாவான் செல்லு மென்பது மேலே விளக்கினா மாகலிற் சைவ மெனப்படு சமயநலுண்மை என்னுஞ் செய்யுளி லாற்றாமை தோன்றவில்லை யெனக் கூறு நீர் அப்பொரு ணுட்ப மறிதற் குரியிரல்லீ ராகலாற் கணவனை யாதல் தமக்குரிய பிறரையாத லிழந்து புலம்புறு மகளிரிடைச் சென்று அந்நுட்ப மறிந்து கொளற் பாலி ரென்றும், புலம்பற் பொருணுதலி வருஞ் செய்யுட்களி ளெல்லாம் அவ்வத் தலை மகன் செய்து போந்த வென்றித் திறமாகிய வாகைத்திணைப் பொருளு மிடையிடையே விராய்வருத லியற்கையா மென்பது பொருளிலக்கண நுட்பவறிவு கொள்வார்க் கெல்லா நன்று புலனாமாதலி னதனை யுணர்தற்கு நுமக் குணர்ச்சி சாலா தென்றும், புனைந்துரை வகையாற் கூறிய வான்மதி மீனின் நீங்க வழுக்கியிம் மண்ணிடை வீழ்ந்ததுவோ என்னும் அணி யிலக்கண வுவமைக்கும் பொருளிய லறிவுறுத் துண்மை நிறுவுதற்கண் வரும் அளவைநூ லுவமைக்கும் வேறுபா டறியாது ஒன்றைப் பிறிதொன்றனொடு மயங்கப் படுத்துக் கூறும் நீர் வரலாற்று முறையா னெம்மைச் சார்ந்து உசாவு விராயி னவ்வேறுபாடு விளங்க நுமக்கறிவு கொளுத்துவா மென்றும், என்னுயர் தந்தையினும் என்பதில் உயர் என்பது தந்தை என்பதனொடு வினைத் தொகைப்பட முடிந்ததாகலின தனை யறியாது எம்புன்மை என்பதனொடு மற்றது மாறுபட்ட தென நீர் கூறியது மயக்கவறிவின் பெற்றியா மென்றும், ஓரடியில் உயர் என்னுஞ் சொற் பலவருதல் சொற்பின் வருநிலை யென்னு மணியாமா றுணராது கூறியது கூறலென்னுங் குற்றமா மெனக் கூறிய நீர் பாவக மேற்றானசத்தாம் என்னுந் திருப்பாட்டிற் கெல்லாம் வகை சொல்ல வறியாது விழிக்கு நீரராவி ரென்றும், ஐந்தாஞ்செய்யுளில் மாறுபா டிதுவென் றுரை யாமல் வாளாது மாறுபாடெனக் கூறுதல் தோல்விக் கிடமாமென்றும், மறைந்தனை என்னும் முடிபுவினை யிறந்தகாலப் பொருண்மையி னிற்றலி னதற்கேற்ப மதித்திலம் என இறந்தகாலத்தில் வைத்தோதியவா றறியாது அதனை மதிக் கிலம் என எதிர்காலப் பொருண்மையின்வைத் தோதல் வேண்டுமென நீர் கூறியது வழுவாமென்றும், அறியும் என்னுஞ் செய்யு மென்வாய்பாட் டேவல் வினைமுற்றுச் * செய்யு மென்னும் பெயரெஞ்சு கிளவிக்கு, மெய்யொடுங் கெடுமே யீற்றுமிசையுகரம் என்னும் சூத்திரத்தால் உகரம் மெய்யொடுங்கெட்டு அறிம் என நின்றவாறறியாமலும் நன்னூல் லிருத்தியுரைகாரர் காட்டிய * முதுமறை யந்தணிர் முன்னியதுரைமோ என்னும் எடுத்துக்காட்டுத்தானும் பார்த்த றியாமலும் துண்ணென விவ்வுலகம் முதலென்று சுருங்குத லறிமென்றோ என்னும் அவ்வாக்கியம் விரிந்து காரியப்பட்ட இவ்வுலகங் கதுமென மறைந்து முதற்பொருண் மாயையாகச் சுருங்குதலை உலகீர்! நீவிரறிந்து கொள்ளுதி ரென்பதனைக் காட்டுதற்கோ என்று செவ்வனே பொருள்படுதறானு மாராயாது நுமக்கு வேண்டியவாறே அவ் அறிம் என்பது தன்மைப் பன்மையெனவும் அஃதீற்றயல் கெடுதற்கு விதியின் றெனவுங் கூறியது குழறுபடையா மென்றும், முந்தியமோனை முதலாமுழுது மொவ்வா துவிட்டாற், செந்தொடைநாமம் பெறுநறு மென்குழற்றே மொழியே என்னும் விதிதழீ இச்செந்தொடையாக நின்ற சொற்றொடரியலுணராது மோனை யின்றென விகழுதல் சாலதா மென்றுமறிந்து கொள்ளக் கடவிர். இனி இன்றென்னோ என நின்றதைச் சிற்றறிவினரும் அச்சுப் பிழையாமென அறிந்து கொள்ளா நிற்பவும் இதுதானு முணராப் பருப்பொரு ளறிவினிராகிய நீர் ஒரு நூற்குக் குற்றங்கூறப் புகுதல் எல்லாரானும் எள்ளப்படுதற் கேதுவா மென் றொழிக. வழக்கிடுவா ரெதிர்முகமாக விருந்து வழக்கு நிகழ்த்துங்காற் சொல்லப்படுந் தோல்வி நிலையினியல்பறியாது, நுமக்குத் தோன்றியவாறெல்லாம் இயைபில்லா விடங்களி னெல்லா மதனை வழங்கி இழுக்குறுகின்றீர். அளவை நூலேனும் வரலாற்று முறையாற் பயின்றிருந் தீராயின் இங்ஙனங் குழறுவீரல்லீர். பிறரை மயங்கப் படுத்தற் பொருட்டுச் சொல்லாரவாரஞ் செய்யும் நும்புரை யறிவின் பெற்றியுணர்ந்து அறிவுடையோர் நகையாடுவ ரென்க. இனிச் சோமசுந்தரக்காஞ்சியின் மேலெழுந்த மறுப் பிற்குமேல் எதிர்மறுப்பாக வெழுந்த இஃது அப்போலி மறுப்பின் கட் சொல்லப்பட்ட குற்றங்கண் முழுமையும் பரிகரித்து அக்காஞ்சியினைத் தொல்லாசிரியர் இலக் கண நூலிலக்கியநூ லளவைநூன் மெய்ப்பொருணூன் முதலிய வற்றொடுபடுத்து ஆக்கிக்கொண்டமையிற் சோமசுந்தரக் காஞ்சியாக்கம் என்னும் பெயர்த்தாயிற்று. இவ்வாறு அப்போலி மறுப்பினை மறுக்கு முறையா லதனை யெழுதினவரது நூற்பொருளறிவு முழுவ தூஉம் வழுவிய மயக்க வறிவேயாமென்ப தினிது விளக்கினாம். இனியவரெழுதிய சொற்றொடர்கள் மேலே காட்டிய பத்து வகைக் குற்றங்களுஞ் செறிந்து சொற்றொறும் பிழை பட்டமையால் அவற்றை யாராய்தல் மணற்சோற்றிற் கல்லாய்தல்போற் பயனின்றாய் முடியு மென்பது பற்றி யவற்றை விடுத்தாம். என்றித்துணையுங் கூறியவாற்றால் நூலாராய்வா ரிலக்கணங் கூறி நிறுவு முகத்தான் நூலாராய்தற் குரிமையுடைய ரல்லாதார் பொறாமையானும் புகழ் நோக்கத்தானும் பகைமை யுணர்வானு மூவேறு வகைப்படுவ ரென்பது புகுத்தி விரித்து அப்பொருண் முடிவின்கண் உண்மையான் நூலாராய்ச்சி செய்ய விரும்புவா ரினையராதல் வேண்டுமென்பதூஉம், ஈண்டைக் குதவியாதற் பொருட்டெடுத்துக் கொண்ட பொருளிலக்கணமாவ திதுவென்பதூஉம், அப்பொருட் கூறுபாடாகிய அகம்புற மென்னும் ஒழுக்கங்களினியல் பிவையா மென்பதூஉம், சோமசுந்தரக்காஞ்சி அறிவன் றேயமுந் தாபதப் பக்கமுமெனக் கூறுபடுக்கப் படுங் காஞ்சித்திணைப் பகுதி யிரண்டனு ளெதன்பாற் படுவதா மெனக் கடாவுவாருரை வழுவுரையாதல் காட்டு முகத்தாற் காஞ்சித்திணையைத் தொல்லாசிரிய ருரைவழக்கோடும் புலனெறி வழக்கோடும் பொருந்துமாறெல்லாந் தந்துவிளக்கிப் பகுத்துக் கொண்ட முக்கூற்றுள் உலகநிலையாமை மாத்திரையே கொண்டு வரும் பொருடழுவி மற்றது வந்ததா மென்பதூஉம் கையறுநிலை யு மவ்வாறே முக்கூறுபடுதலி னக்கூறு மூன்ற னுண் மற்றிக் கையறு நிலை ஆண்பாற்பொருள் கொண்டு வந்த தென்பதூஉம், கையறு நிலையை யங்ஙனம் பொருட்டிறம் பற்றி மூன்றாக வகுத்தடக்குமா றறியாது கூறுவாருரை தொல்லாசிரியர் செம்பொருணுல் பலவற்றோடு முரணி வழூஉப் படுங் குழறுபாட்டுரையா மென்பதூஉம், தாபதநிலை யென்பது தவ நெறிக்கமைந்த வெண்வகை யுறுப்பொடு தழீஇப் பெண்பாற் கூற்றாகவே வருமென உறுதி கொண்டுரைப் பார்க்கு அவ்வுறுதியின்றி வரூஉம் புறநானூற்றுச் செய்யுளும் பிறவும் அடங்காமையின் அவற்றிற் கேற்பவைத்து அதனை யிருகூறு படுத்தி யிலக்கண முரைத்து இவற்றுளொரு கூற்றின்கட் சோமசுந்தரக்காஞ்சி யிற் போந்த தாபதநிலையை யடக்கல் வேண்டு மென்பதூஉம், மன்னைக்காஞ்சியும் ஆண்பாற் கையறு நிலையுந் தம்முள் வேறு பாடுடைமையினது பற்றி வேறு வேறுபெயர் கொடுத்துரைக்கப்படு மென்பதூஉம், அகம்புற மென்னும் பொருட்கூறுபாடு மவற்றி னிலக்கணமு மறியாது சடையா யெனுமால் என்னுந் தெய்வத் திருப்பதிகம் அகத்திணைப் பொருண்மைத் தென்று குழறல் அறிவொடு படாப் புன்மொழி மாக்க ழுக்குரையேயா மென்பதூஉம், அத்திருப்பதிகத்தைத் தேவ பாடாண்டிணையில் விராய்வந்த காஞ்சித்திணைத் தாபதநிலையின் பாற்படுத்துரைத்துக்கோடல் வேண்டு மென்பதூஉம், ஆனந்தக் குற்றமென வொன்று தொல்காப்பியனாரை யுள்ளிட்ட முதுதவத் தொல்லாசிரியன் மாரோதாமையினதனைப் பிற்காலத்தார் கூறினு மறிவுடையார் கொள்ளா ரென்பதற்கு ஆசிரியர் - நச்சினார்க்கினியர் வரம் பறுத் துரைக்கு முரையே சான்றா மென்பதூஉம், பிற்காலத்திற் பேரறிவினராய் விளங்கிய ஆசிரியர் - சிவஞானயோகிகள் முதலாயினாரு மதனைத் தழீஇயினா ரல்ல ரென்பதூஉம், அன்றிப் பிற்காலத்தா ரியற்றிய நூல்பற்றியே யங்ஙன மொன்று கோடுமாயினுஞ் சைவம் என்னு மங்கலமொழி ஒரு வாற்றானும் அவ்வானந்தக் குற்றமுடையதாவான் செல்லாமை யின் அதுதானு முணராது அப்போலிப் புலவர் குற்றஞ் சொல்லப் புகுந்தது நகையாடற்பாலதா மென்பதூஉம், சைவம் என்னுஞ் சொல் அடையடாது நின்ற வழியெல்லாஞ். சித்தாந்த சைவத் தினையே யுணர்த்துமா றறியாது அச்சொல்லைத் தொலைத்து விடல் வேண்டுமெனக் கூறுவார் சித்தாந்த சைவத்திற்குப் புறம்பாவ ரென்பதூஉம், அப்போலிப் புலவர் செய்யுட் கடோறுஞ் சொல்லிய குற்றங்கள் அவரறியாமையானும் அறிவு மயக்கமுறுதலானுங் கொண்டு குழறியனவா மென்பதூஉம் பிறவும் நன்று விளக்கி நிறுவப் பட்டன. இவ்வெதிர் மறுப்புச் செந்தமிழாராய்வார் பலர்க்கும் பயன்படுதல் வேண்டி ஒன்றின முடித்த றன்னின முடித்தல் என்னு முத்தி வகையால் இடையிடையே நுண்பொருள் பலவும் புகுத்தி விளக்கமாகவுஞ் சுருக்கமாகவுஞ் சிவபெருமான் றிருவருள் வழிநின் றியன்றவளவு எழுதியமைத்தாம். அடிக்குறிப்புகள் 1 Dryden. 2. Addison 3. Appolo. 4. நச்சினார்க்கினியம். 5. நச்சினார்க்கினியம். 6. நச்சினார்க்கினியம். 7. தொல் - புறத்திணையியல், 78. 8. தொல்-புறத்திணையில் - 75 9. தொல் - புறத்திணையியல். 10. புறப்பொருள் வெண்பாமாலை, சிறப்புப்பாயிரம். 11. புறப்பொருள் வெண்பாமாலை, பொதுவியற்படலம். 12. புறநானூறு - 245. 13. புறநானூறு - 243. 14. புறநானூறு - 248 15. பொதுவியற்படலம்; 16. புறநானூறு - 343. 17. தொல் - புறத்திணையியல்- 25. 18. இப்பகுதி யாமெழுதத் தொடங்கிய காலத்துச் சோமசுந்தரக் காஞ்சியினி மேன் மறுப்பெழுதினார் ஸ்ரீ திருமயிலை - சண்முகம் பிள்ளை யெனச் சிலரும், ஸ்ரீ நா. கதிரைவேற்பிள்ளை யென ஒரு சிலரும், ஸ்ரீ - வைத்தியலிங்கம்பிள்ளை யென வேறு சிலரும், அற்றன்று இம்மூவருமே ஒருங்கு சேர்ந்த தெழுதினாரென மற்றுஞ் சிலருந் தெரிவித்தனர். அப்போலி மறுப்பு கரவுபெயர் நிறுத்தி எழுதப்பட்டமையி னின்னாரென ஒருதலையாற் றுணியப்பட வில்லை. சிவபெருமான் றிருவருள் வழிநின் றொழுகாது ஆன்மபோதத்தா னறிவு மருண்டு செருக்கிப் பொறாமை கொண்டு திரிகுவார் யாவராயினு மென்? திருவருட் பெருந்துணை கொண்டொழுகும் யாம் அவரையு மவர்போலி மறுப்பினையும் ஒரு பொருட் படுத்துவாமல்ல மெனறொழிக. 19. தொல் - புறத்திணையியல் 20. திருமுருகாற்றுப்படை. 21. சிலப்பதிகாரம். 22. திருச்சிற்றம்பலக் கோவையார். 23. பெரியபுராணம். 24. பொருநராற்றுப்படை 25. முல்லைப்பாட்டு 26. தொல்காப்பியம் - சொல் - வினையியல். 27. மணிணூமேகலை. 28. யாப்பருங்கலக்காரிகை. சோமசுந்தரக் காஞ்சியாக்கம் முற்றும் அநுபந்தம் - 1 ஆனந்தக் குற்றம் (இது சோமசுந்தரக் காஞ்சி, காஞ்சியாக்கம் இவைகளைப் பாராட்டியும், ஆனந்தக் குற்றத்தைப் பற்றி ஒருசில தடை நிகழ்த்தியும் சோழவந்தான் வித்துவான் திரு. அ.சண்முகம் பிள்ளையவர்கள், ஸ்ரீலஸ்ரீ - சுவாமி வேதாசல மவர்கட்கு எழுதிய கடிதமாகும். இதனை ஞானசாகரம் முதற் பதுமத்திலிருந்து எடுத்துப் பதிப்பிட் டிருக்கின்றாம். - பதிப்பாசிரியன்.) சிவாநுபூதிச் செல்வரும், செந்தமிழ்ப் புலவரும், என் ஆப்த நண்பருமாகிய ஐயா அவர்கட்கு அநேக வந்தனம் செய்து எழுதும் விண்ணப்பம்:- எழுமையுந் தொடர்ந்த உழுவலன்புடைய ஐய, தாம் அன்பு கூர்ந்து விடுத்த தமது நூல்களும் ஞான சாகரத்து 4 -வது இதழும் பெற்று உள்ளுதொ றுள்ளுதொ றுள்ள முருகித் தமது தரிசனம் எஞ்ஞான் றெய்துங் கொலோ வென வரம்பிகந்த அவாவின்க ணமிழ்கின்றேன். அகல் வானத் தும்ப ருறைவார் பதியினும் இன்பமிக் கெய்தற் கேதுவான சான்றோர் நட்பையே பெரும் பொருளெனக் கருது மடியேற்குத் தமது கருணையால் மற்றைப் புலவரது மாண்புற்ற நண்பும் வாய்க்குமேல், அது சிந்தாமணி தெண்கட லமிர்தந் தில்லையா னருளால் வந்தா லதனை யொக்கு மன்றே. காய்த லுவத்த லகற்றி யொரு பொருட்க ணாய்த லறிவுடையார் கண்ணதே யாயினும், தமது ஆணையை மறுத்தற் கஞ்சித் தாம் விடுத்த வற்றுட் சில படித்து என் புல்லறிவிற் கெட்டிய வண்ணங் கொண்ட உண்மை யுட்கிடையை வெளியிடுகின்றேன். தாம் இயற்றிய மும்மணிக் கோவையும், நெஞ்சறி வுறூஉவும் படித்தேன். அவை பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பஞ்ச காவியம், பதிணென் கீழ்க்கணக்கு முதலிய சான்றோர் செய்யுட் கற்று வல்லுநர்க்கே பெருமகிழ் வுறுத்து மருமந்த நூலாகக் காணப்படுகின்றன. அந்நூல்களி னருமையை ஒன்று மறியா யானோ அறிய வல்லேன்? அவற்றுள் முன்னோர் மொழி பொருளே யன்றி அவர் மொழியும் பொன்னேபோற் போற்றுவ மென்பது கொண்டு இடையிடையே அமைக்கப் பெற்ற திருவள்ளுவர், திருக் கோவையார், திருமுருகாற்றுப் படை, சிந்தாமணி முதலிய நூல்களினுள்ள அல்லாந்து, பேய்கண் டனையது, கழல்கண், முழுநெறி முதலிய பல அரிய சொற்களுக்கு அந்நூல்களி னுரை யுதவியாற் பொருள் கண்டு பெரிதுவந்தேன். உரையிலா அகநானூறு முதலிய நூல்களி லிருந்தும் பல சொற்களும் சொற்றொடர்களும் சில அடிகளும் காணப்படுகின்றன; அவைகளுக்குச் சிறுபான்மை விளங்கினும் பெரும்பான்மை விளங்காமையாற் குன்று முட்டிய குரீஇப்போ லாயினேன். மதிநுட்ப நூலோடுடைய சிலர்க்கே பயன்படற் பாலவாய அவை ஏனோர்க்கும் பயன்படுமாறு ஒரு நல்லுரை விரைவிற் பெறல் வேண்டு மென்பது என் கருத்து. இங்ஙன நூலியற்றல் சங்கமிருந்து தமி ழாராய்ந்தார்க்கும், பின்னுள்ளாரிற் கல்லாட நூலார், ஞானாமிர்த நூலார், கச்சியப்ப முனிவர், குமர குருபார், முதலிய சிலர்க்கும், தமக்குமே யன்றி யேனையோர்க்கு எவ்வாற்றானும் அரிதரிது என்பது அழுக்கற்ற நெஞ்சத்த ரல்லாத நட்டார் பகைவர் நொதுமல ரென்னு முத்திறத்தாரு மொத்துக் கோடற் பாலதேயாம். இனிக் காஞ்சி யாக்கத்திற் கழறிய வெல்லாம் கற்றோர்க்குக் கழிபே ருவகை பயக்கு மென்பது எட்டுணையு மறுக்கற் பாலதன்று. கல்லாச் சிறு மகார் கூடிச் சிற்பம் வல்லார் வகுத்த மணி மாடத்தை யிகழ்ந்தாங்குச் சில்லோர் நவை தூற்றினும், காஞ்சி மலைமேலிட்ட தீபம்போல் விளங்குகின்றது. அதனு ளானந்தக் குற்றம் பரிகரிக்கும் மிடத்துப் பாட்டியன் மரபுப்படி சைவ மென்னுஞ் சொல் ஞான மங்கள வுருவாய சிவத்தொடு சம்பந்த மென்னும் பொருடரலாற் கங்கை நிலம் பிறவுங் காண்டகைய முன்மொழிக்கு மங்கலமாஞ் சொல்லின் வகை யென்பதனுட் பிற வென்பதனாற் றழீஇக்கோடற் பாற்றெனவும் தப்பாத மூன்றைந்தே ழென்னுஞ் செய்யுளின்படி எழுத்துப் பொருத்த முள்ள தெனவும், குறிலைந்துந் தந்நெடில்கொண் டென்னுஞ் செய்யுளின்படி தானப் பொருத்த முள்ள தெனவும் தம்மாலே நன்கு விளங்கப்பட்டன. இனி, வகையுளி சேர்தன் முதலிய வின்மையாற் சொற்பொருத்தமும், சகரம் அமுத வெழுத்தாதலி னுண்டிப் பொருத்தமும், இறைவன் பெயர் முதற்கணின்ற சோ என்னும் எழுத்துக்குரிய பரணி தொடங்கி முதற்சீர் முதற்கணின்ற சை என்னு மெழுத்துக்குரிய அச்சுவினி வரை எண்ண உபசென்மத்து ஒன்பதாம் நாளாதலின் நாட் பொருத்தமும், சகரந் தேவகதியாகலிற் காணப்பொருத்தமும், மங்கலங் குறித்துச் சொற் பொருத்த முதலிய சில வேறுபடினு மமையு மென்பது பாட்டியன் மரபாதலிற் பாற்பொருத்தமும், வருணப் பொருத்தமும், ஆக பத்துப் பொருத்தமும் சைவ மென்னுஞ் சொற்கண் வெள்ளிடை மலைபோல விளங்கிக் கிடப்பவும், இப்பரூஉப் பொருடானு முணராது நவை கூறினாரது புலமை குறித்துக் கவல்கின்றேன். இனி ஆசிரியர் அகத்தியனார், ஆசிரியர் தொல்காப்பிய னார் முதலாயினார் கூறாமையிற் பாட்டியலிற் கூறிய ஆனந்தக்குற்ற முதலிய கொள்ளப்படா வெனவும், அவை கூறிய பிற்காலத்து நூல்கள் பிரமாணமாகா வெனவும் அவை கூறிய யாமளேந்திரர் முதலியோர் சமணப் போலிப் புலவரெனவும், இப் போலிநூற் பிரமாணங் கொள்ளாமையாற் சிவஞான யோகிகள் முதலாயினார் மங்கல மொழி முதனிலையிட் டுரைத்தில ரெனவும், சங்கமிருந்து தமி ழாராய்ந்த நல்லிசைப் புலவர்தாமும் இந் நியதியின்றி அறாஅயாணர், நனந்தலை யெனத் தொடங்கினா ரெனவும், ஆயிடைக் காணப்படுஞ் சிலவுரைகண் மட்டுமே என் கருத்துக்கு மாறாகத் தோன்று கின்றன. அவற்றைச் சில பயன் கருதியும், உட்கோட்டமின்றி யுரைத்தல் வேண்டு மென்னுஞ் செப்பங் கருதியும், இனியவ ரென்சொலினுமின் சொல்லே யெனத் தம்போல்வா ரெல்லா முவத்த லுண்மை பற்றியும், முறையே மறுத் தெழுதத் துணிந்தேன். அவை யெல்லார்க்கு மொப்ப முடிந்தவோ அல்லவோ அறியேன். அவற்றுட் பொருந்துவன வுளவேற் றெளிவுறக் காட்டி யென்னைத் திருத்துமாறு நட்புரிமையாற் பிரார்த்திக் கின்றேன். இயற்பெயர் சார்த்தி யெழுத்தள பெழினே, யியற்பாடில்லா வெழுத்தானந்தம் எனவும் இயற்பெயர் மருங்கின் மங்கல மொழியத், தொழிற்சொற் புணர்ப்பினது சொல்லா னந்தம் எனவும், புகழச்சி என்னுஞ் சூத்திரத்து அவமொழி யாக்கும் பொருளா னந்தம் எனவும், முதற் றொடை யென்னுஞ் சூத்திரத்து, யாப்பா னந்தமென் றியம்பல் வேண்டு மெனவும், பாவகை யொருவனை என்னுஞ் சூத்திரத்து தூங்கினுஞ் சுழலினுந் தூக்கா னந்த மெனவும், அளபெடை மருங்கின் என்னுஞ் சூத்திரத்து, தொடை யானந்த மெனத்துணிதல் வேண்டு மெனவும், இவ்வாறு ஆசிரியர் அகத்தியனார் ஆனந்த வோத்துட் சூத்திரஞ் செய்தமையால் ஏனைப் பாட்டியல் மரபும் அவரது விரிந்த நூலின்கட் கூறப்பட்டே யிருத்தல் வேண்டு மென்பது, சிற்றகத்தியம்பேரகத்திய மிரண்டும் சிற்சில சூத்திரத்தளவின் முன்னோ ருரைகளிற் காணப்பட்டுக் கடைச்சங்கத்தார் காலத்தே யிறந்த வெனினும், அனுமானத்தாற் கொள்ளக் கிடக்கின்றது. ஆசிரியர் தொல்காப்பியனார் முத்தமிழும் விராஅய்ப் பரந்து கிடந்த முதனூலினின்றும் இயற்றமிழை வேறுபடுத்துத் தொகுத்து நூல் செய்யப் புகுந்தா ராகலின் இலேசானும், உத்திவகையானும், புறனடையானும், பிறவாற்றானும் எளிதி னுணரப்படுவனவும் சிறிது பயனுடையனவும் சிறப்பில்லனவு மாகிய இலக்கணங்களை யுணர வைத்துச் சிறப்பினவும் மிக்க பயனுடையனவும் அரிதினுணர் வனவுமாகிய இலக்கணங் களையே சூத்திரித்தார். முன்னிலை சுட்டிய வென்னுஞ் சூத்திரத்தானும், தாவி னல்லிசை யென்னுஞ் சூத்திரத்தானும் அகலக் கவியை முடிபு நோக்கியும் துறை நோக்கியும் விதந்து கூறலின் அகன்று பொருள் கிடப்பினும் என்னும் சூத்திரத் தானும் மாட்டு மெச்சமு மென்னுஞ் சூத்திரத்தானும், பொருட்டொடர் நிலைச்செய்யுளும் சொற்றொடர் நிலைச்செய்யுளும் பெறப்பட்டன. இனி, அகலக்கவிக்கே பெரும் பாலும் பயன்படுவனவாய்ச் சிறப்புடைச் சொல் லாராய்ச்சி க்குச் சிறிதும் பயன்படாவாய் நுட்பமிலவா யிருத்தலின் தசப்பொருத்த மின்மை முதலிய குற்றங்களை, அன்ன பிறவு மென்பதனாற் றழீஇ அவற்றுள்ளும் மங்கலச் சொல்லை முதற்கட் கோடல் எல்லா நூற்கு மின்றி யமையாமை யென்பது விளக்கற் பொருட்டு, எழுத்தெனப் படுப வென மங்கலச் சொல்லை முதற்க ணெடுத்து உடம்பொடு புணர்த்துக் கூறினார். அதனையே பிற்காலத்தார் வழக்கு நோக்கிப் பாட்டியலென விரித்துக் கூறினார். அன்றியும் முன்னுள்ள இசைத் தமிழ் நூல், நாடகத்தமிழ் நூல்க ளுரைத்தனவாக முன்னோருரைகளால் விளங்குகின்றது. இனி அவர் கூறிய அளவன்றி விரித்துக் கூறிய நூல்கள் பிரமாணமாகா வெனின், ஆவோ டல்லது யகர முதலாது எனத் தமிழ் வழக்கு நோக்கி வரையறுத்திருப்பப் பிற்காலத்து வடமொழி விராஅய வழக்கு நோக்கி அ, ஆ, உ, ஊ, ஒ, ஓள யம் முதல் என வெழுந்த நன்னூற் சூத்திரமும் பிரமாண மாகா தொழியும். ஒழியவே, நாக நறுமலருதிர யூகமொடு எனவும், பிணையூப மெழுந்தாட வெனவும், திருமுருகாற்றுப் படையினும், மதுரைக் காஞ்சியினும் வந்தன வழுவெனக் கொள்ளவும் படும். இன்னுந் தொல்காப்பியத்துட் கூறாமை பற்றி, கலம்பக முதலிய பல பிரபந்தங்கள் இலக்கணமின்றி யெழுந்தன வெனவும் படும்; ஆதலின் இன்னோரன்ன வெலாம் மரபுநிலை திரியா மாட்சிய வாகலின் பிரமாணமாதற் கிழுக்கா. தவத்தான் மனந் தூயராய அகத்தியனார், தொல்காப்பியனார், திருவள்ளுவனார், சமயகுரவர், ஆழ்வாராதியர், பட்டினத்தடிகள், இறையானார் முதலிய சில தெய்வப்புலவ ரன்றி ஏனைய நூலுரை போதகா சிரியர் மூவரும் முக்குண வசத்தான் முறை மறந்தறைத லியல் பாகலின், பின்னூல் களிடை முன்னூலொடு முரணிய சில வழுக்கள் காணினும் அதுபற்றி முழுதுங் தள்ளாது குணனாடிக் குற்றமு நாடி யவற்றுண் மிகைநாடி மிக்க கொளலே மாண்பு. முற்கூறிய தெய்வப் புலவரோ டொப்பா ரல்லராயினும் புலவர் சிகாமணிகளாகிய அடியார்க்கு நல்லார், குணவீரபண்டிதர், முதலிய பலர்க்கு மேற்கோளாகிய இந்திரகாளி யென்னும் இசை நூலைச் செய்த யாமளேந் திரரும் முன்னூ லொழியப் பின்னூ லெவற்றினுஞ் சிறந்த நன்னூல் செய்த பவணந்தியாரும், இன்னும் பிற நற் புலவரும் எவ்வாற்றானும் போலிப் புலவ ரென இகழப் படார். ஒவ்வோர் வழுக்கண்டு இப் பெரும் புலவரையும் இவரொப்பாரையும் போலிப் புலவரெனின், வழுவிலார் பின் யாவருளர்? ஒருவரு மிலரே? `அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கா, லின்மை யரிதே வெளிறு என்பது பொய்யா மொழி யன்றோ? இதனை நகுதற் பொருட் டன்று நட்ட லென்பது கொண்டெழுதினேன்; மன்னித் தருளுக. இனி யாமளேந்திரர் யாமளாகமம் செய்த ஒரு சித்தர்; சமணரல்லர்; இவரை அடியார்க்கு நல்லார் பராசைவ முனிவ ரென்பர். இந்திரகாளி, நன்னூல், வச்சணந்திமாலை முதலியவற்றுள் முன்னூலோடு முரணாதன வெல்லாம் பிரமாணமே. மரபு நிலைதிரிந்து முரணிய விடங்களு முள. அவை யீண்டுரைப்பிற் பெருகும். இனிச் சிவஞான யோகிகள் இந்திரகாளி முதலிய நூலைப் பிரமாணமாகக் கொள்ளாராயின், இலக்கண விளக்கச் சூறாவளி யின்கண் `மலையு மகளென அமங்கலப் பொரு டந்து தொகையார் பொருள் பலவாய்த் தோன்றிற் றெனக் குற்றங் கூறார். சங்கப் புலவரு ளொருவராகிய மாமூலரும் நீரது கணமே சீர்சிறப் பெய்தும் தீயின் கணமே நோயது சேரும் அந்தர கணமே வாழ்நா ளகற்றும் இந்திர கணமே பெருக்கஞ் செய்யும் சந்திர கணமே வாழ்நா டரூஉம் மாருத கணமே சீர்சிறப்பகற்றும் நிலக்கணந் தானே மலர்த்திரு விளங்கும் எனவும், `நட்பர ணெதிபகை மரண மைந்தனு, ளொப்புடைக் குறிக்கோ ளொருமூன் றாகும் எனவும் தானமுங் கணமுங் கூறிக் கணத்திற்குப் பயனுங் கூறினார். பன்னிரு பாட்டியன் முதலிய நூல்களாற் பொய்கையார் முதலிய நல்லிசைப் புலவரும் பாட்டியல் செய்திருப்பதாகக் காணப்படுகின்றது. ஆகவே, சங்கமிருந்த நல்லிசைப் புலவர் காலத்தும் பற்பல பாட்டியல் வழங்கிய வெனவே எண்ணுகின்றேன். ஆயின், மங்கல முதலியன சங்கத்தார் நூலினும் சிவஞான யோகிகள், கச்சியப்பர் முதலாயினார் நூலினும் உளவோ வெனின், உளவென்பதே தேற்றம். எங்ஙனமெனில், மங்கலச்சொல் தனித்தும், அடை யடுத்தும் முதற் பாட்டின்கண் முதற்சீரே யன்றி இடை கடையினும் வரப் பெறு மென்பது பாட்டியல் விதி யாதலின், பத்துப்பாட்டின் கண் 9-வது பாட்டில் புகழென்று மங்கலம் அடையடுத்து வந்தது. 8-வது பாட்டில் பிற என்பதாற் றழுவிய வாழி யெனும் மங்கலம் அவ்வாறு வந்தது. 6-வது பாட்டில் முந்நீர் அவ்வாறு வந்தது. 5-வது பாட்டில் உலக மென்பது அவ்வாறு நனந்தலை யென அடையடுத்து வந்தது.4-வது பாட்டில் பிற வென்பதாற் றழுவிய விசும் பென்பது அவ்வாறு வந்தது. 2-வது பாட்டில் மங்கலச் சொல்லின் பரியாய மாகிய யாண ரென்பது அறாஅ, வென அடையடுத்து வந்தது. மற்றைப் பாட்டின்கண் விதந்து கூறிய மங்கலச் சொற்களே முதற்கண் வந்தன. சிந்தாமணிக்கண் உலக மென்பது மூவா முதல்வா வென அடையடுத்து வந்தது. சில ஆசிரியர் நூன்முதற் கண்ணும், சில ஆசிரியர் நூற்குறுப்பாதல் பற்றிப் பாயிர முகத்தும், சிலர் ஈரிடத்தும் மங்கலங் கூறல் வழக்காதலின், மணிமேகலையின் பதிகத்தின்கண் இளங்கதிர் ஞாயிறென அடையடுத்தும், நூன் முதற்கண் உலகமெனத் தனித்தும் வந்தன. இனி, புறநானூற்றின்கண் மாலை யென்னு மங்கலச் சொல்லின் பரியாய மாகிய கண்ணி யென்பதே வந்தது. ஆண்டும் நியதிதப்பிலது. இனிக் காஞ்சிப் புராணத்தையும் தணிகைப் புராணத்தையும் நோக்கின் நூலகத் துறுப்பாகிய கடவுள் வாழ்த்திற் சேர்க்காது, புறத்தே இயற்றிய காப்புச்செய்யுளில் மங்கலங் கருதற்பாற் றன்று; காஞ்சிப் புராணத்துட் கடவுள் வாழ்த்தின் முதற்கண் சங்கு என்னு மங்கலச் சொல்லும், தணிகைப் புராணத்துக் கடவுள் வாழ்த்து முதற்கண் உலகு என்னும் மங்கலமும் நியதி தப்பாது வந்தன. முதற்கட் பாடுதல்பற்றி காப்புச் செய்யுளின் கண்ணும் மங்கலங் கருது மாசிரியருமுளர். இம்மங்கலங் கூறல் நூன்முதற்கண் அல்லது பொதுப்பாயிர முதற்கண் அல்லது சிறப்புப் பாயிர முதற்கண் என விதந்து கூறாது பொதுப்பட முதற்கண் எனக் கூறலால், இலக்கணக் கொத்துடையாரும் வடநூல் முறை பற்றி நூலு முரையும் பாயிரமும் தானே செய்வான் புக்குச் சிறப்புப் பாயிரம் நூற்கு முன்னிற்கு முறைபற்றி மதிவெயில் விரிக்கும் என மங்கலங் கூறினார். பிரயோகவிவேக நூலார் நீர்கொண்ட சென்னியென மங்கலங் கூறினார். ஒவ்வோர் முறைபற்றி முதலென்பது பலதிறப்படலின் மங்கலங் கூறுமிடனும் பலவாயின. இனிச் சிவஞான யோகிகள் மங்கலங் கூறுங் கருத்தாற் சங்கேந்துமெனக் கூறினரல்லர்; இயல்பா னமைந்தது எனின், அது பொருந்தாது. உலகெலா மெனச் சிவதத்துவ விவேகத்திலும், சீர்கொளென முதுமொழி வெண்பாவினும், சீருங் கல்வியுமெனக் குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதியினும், திருமால் பிரம னெனக் கலைசைப் பதிற்றுப்பத்தந்தாதியினும், கார் கொண்ட வெனவும் மணிபூத்த வெனவும் ஈரிடத்து விநாயகர் பிள்ளைத் தமிழினும், மணிகொண்ட சீர்கொண்ட என ஈரிடத்து அம்பிகை பிள்ளைத்தமிழினும், திருத்தங்கு என முல்லை யந்தாதியினும் தவறாது மங்கலங் கூறலான். இனிச் கச்சியப்பர் திருவானக்காப் புராணத்து விநாயகர் வணக்கத்தை யகத்துறுப்பாகக் கொண்டு நிலம் போற்று மென மங்கலங் கூறிப் பின்னும் பலவிடத்துக் கூறினார். பேரூர்ப் புராணத்தும் அவ்வாறே பலவிடத்து மங்கலங் கூறினார். பட்டினத்தடிகளது நான்மணி மாலை, மும்மணிக் கோவை முதலிய பிரபந்தங்களினும் மங்கலந் தவறாது காணப்படுகின்றன. மெய்கண்ட சாத்திர முதலிய வீட்டு நூலின் கண்ணும் நித்திய மங்கள வடிவனாகிய பரம்பொருளது நாமங்களாகிய மங்கலச் சொற்கள் நியதிதப்பாது வந்தன. பாட்டுடைத் தலைவனுக்கே பயன்படற் பாலவாய கண முதலிய பொருத்தங்கள் சில பொது நூலிடைக் காணப்பெறா. அது பற்றி அவை பாட்டியல் விதியின் வழீஇயின வெனல் பொருந்தாது. இறையனார் அன்பென்பது மங்கல மெனக் கொண்டமை குறித்துப் புகழேந்தியார் நேசரென்பதும் மங்கல மெனக் கொண்டார். உய்த்து நோக்கின் மங்கல மின்றி வந்தநூ லொன்று மிலை யென்றே யெண்ணுகின்றேன். முதலிடை யிறுதி சிதைந்த நூலும், முன்பின் மாறிக் கிடக்கு நூலும் சில வுள. அவை யீண்டைக்குப் பிரமாண மாகா. இனி நச்சினார்க்கினியர் கருத்து நோக்கின் மலைபடு கடாத்தில் தீயினன்ன வொண்செங் காந்த ளென்னு மிடத்து முதற்சீர்க் கயலும், தசாங்கத்தயலும் அமங்கல மாகா வென்னும் பாட்டியல் விதியை மாறாகக் கொண்டு தீயின் நன்ன வென இடர்ப்பட்டுப் பிரித்து இயற்பெயராகிய நன்னனை யடுத்துத் தீ யென்னும் மங்கலம் வந்தது என ஆளவந்த பிள்ளையார் குற்றங் கூறினார். அதனால் நச்சினார்க்கினியர் தீ என்பது இன் சாரியையும், அன்ன வென்பதையும் அடுத்து நின்றதேயன்றி இயற்பெயரை யடுத்ததில்லை யென்றும், இப்பாட்டுப் படர்க்கையாய் நிற்றலின் நன்ன வென முன்னிலைப் பெயராக்கிக் குற்றங் கூறலு மமையா தெனவும், நியாயங் கூறி இப்பாட்டகத்து ஆனந்தக் குற்றமில்லை யென மறுத்தாரே யன்றி ஆனந்தக் குற்றமே யில்லை யென மறுக்கவில்லை. பாடினோர் தீயின் அன்னவெனக் கருதிப் பாடினும் தீயின் நன்னவென பிரித்துக் கோடற் கிடமாக அமைத லாகிய குற்ற மில்லாத இன்னோரன்னவற்றையும் தொகையார் பொருள் பலவாய்த்தோன்ற லென்னு மானந்தக் குற்றமாகப் பின்னுள்ளோர் சேர்த்தார். இவ்வாறு அகத்தியனாருந் தொல்காப்பியனாருங் கூறாமையால் போலியாகச் சேர்த்த அவ்வானந்தக் குற்றத்தையே நச்சினார்க்கினியார் மறுத்தாரே யன்றி அகத்தியனார் தொல்காப்பிய னாராற் கொள்ளப்பட்ட ஏனை யானந்தக் குற்றங்களை மறுத்தா ரல்ல ரென்பது சங்கத்தார் அங்ஙன நீக்காது கோத்தற்குக் காரணம் ஆனந்தக் குற்றம் இச்செய்யுளுட் கூறாமையா னென் றுணர்க வெனவும், நன்னனென நகரமுதலும் னகர வொற்றீறுமாய் நிற்குஞ் சொல்லாயினன்றே அக்குற்ற முளதாவதென மறுக்க வெனவும் அவ்வுரையிற் கூறிய கூற்றானும், தொல்காப்பியப் பாயிரத்து மங்கலமாகிய வட திசையை முற்கூறினார். இந்நூல் நின்று நிலவுதல் வேண்டியென அவர் தாமே யுரைத்தலானும் நன்கு விளங்கும். சுபம்! தமதன்பன், சோழவந்தான் - அ.சண்முகம் பிள்ளை. ஆனந்தக்குற்றம்- II (இது சோழவந்தான் வித்துவான் திரு. அ. சண்முகம் பிள்ளையவர்கள் நிகழ்த்திய தடைகளைப் பரிகரித்து ஸ்ரீ ல ஸ்ரீ - சுவாமி வேதாசல மவர்கள் அவர்கட்கு எழுதிய விடையாகும். இதுவும் ஞானசாகரம் முதற் பதுமத்திலிருந்தே எடுத்துப் பதிப்பிக்கப்பட்டது. - பதிப்பாசிரியன்) சோமசுந்தரக் காஞ்சியாக்கம் என்னும் எதிர் மறுப்பின்கண் ஆனந்தக்குற்றம் பற்றி யாம் பரிகரித்துரைத்த உரைக்கூறு தமக்கு உடம்பா டில்லாமை காட்டி நம் உண்மை நண்பர் சண்முகம் பிள்ளையவர்க ளெழுதிய வழக்குரை எமக்கு உளந்துளும் புவகை தராநின்றது. அவ் வுரைமுகத்திலே நண்ப ரவர்கள், புழுத்தலை நாயிற் கடைப்பட்ட புல்லறிவோமையும், நா மியற்றிய நூல்களையும் பெரிதெடுத்துப் புகழ்ந் திட்டார்கள். அப்புகழ்ச்சியுரை, தன்கண் நலப்பாடுடைய தாயினும் அதற் கிலக்கா யமைத்துரைக்கப் பட்ட பொருள்களதற் கொருசிறிதுந் தகுதிப்பா டுடையனவாகா. அவ்வாறாகவும் அவை நலக்க வுரை நிகழ்த்திய நண்பரவர்கள் நற்குண மாட்சியினையும், ஒருமைப் பாட்டினையும் மிக வியந்து அவர்கண்மாட்டு எழுபிறப்புந் திரியா வுழுவலுரிமை யன்பு பாராட்டுங் கடப்பா டுடையேம். இன்னும் நட்பின் கெழுதகைமை பற்றி ஒருவர் மாட்டுச் செறிந்த மறுவை தூய்துசெய்தற் கஞ்சி நடுநிலை பிறழ்ந்து அந்நட்பிற் கிழுக்கந் தேடுவார் போலாது, எம்முரையிற் றாங் குற்றமெனக் கண்ட பொருளை யெடுத்து மறுத்து எங்கேளுரிமைக்குச் சிறப்புத் தேடிய நன்முறை, பொறாமை கொண்டு மயங்குந் தமிழ்ப் புலவோர் சிலர்க்கு நல்லறி வுறுப்பாம். இவ்வாறே நல்லறிவு நற்குண மாட்சியுடைய நம் உண்மை நண்பர்களான திரு. சவரிராய பிள்ளை யவர்களும், திரு. இராகவையங்கா ரவர்களும் கேண்மைத் திறமறிந் துண்மையான் ஒழுகுகின்றார்கள். இருந்தவாற்றால் நற்றமிழ்ப் பண்டிதர் தமக்கு ளிங்ஙனம் ஒருமித் துறுவ தாராய்ந்து கெழுதகைமை வழுக்காது கேண்மை போற்றி யொழுகுதல் தென்றமிழ் நாட்டிற் கினியுண் டாம் நன்மையினை விளங்கக் காட்டுகின்றது. இது நிற்க. இனி, ஆனந்தக் குற்றமென வொன்று முழுமுத லறிவினராய் விளங்கிய ஆசிரியர் தொல்காப்பியரானும், அவர் வழிப்பட்டு நூல் செய்த நல்லிசைப் புலவரானும், அந் நல்லிசைப் புலவர் நூல்கட்கு நல்லுரை கண்டு கூறிய நச்சினார்க்கினியர் முதலான உரையாசிரியரானுங் கொள்ளப்படாமையால், பிற்காலத்தார் கூறினும் அஃது எம்மனோராற்றழுவப்படுவ தன்றென நிறுத்திய எமது மேற்கோளை மறுத்து நண்பர் - சண்முகம் பிள்ளை யவர்கள் உரைத்த நுணுக்க உரையின்கட் கருத்தொருப்படுகின்றிலே மாதலால், அதனை நிரலே யாய்ந்து பரிகரித்து, எமது உண்மைக் கருத்து நிலையிடுவாம். ஆசிரியர் அகத்தியனார் ஆனந்த வோத்துள் ஆனந்தக் குற்றத்தினியல்பை விரித்தோதினா ரெனக்கொண்டு, நண்ப ரவர்கள் சில சூத்திரங்கள் எழுதினார்கள். அகத்தியங் கடைச்சங்க மொடுங்கிய பிற்றை ஞான்றே இறந்துபட்ட தென்பது முன்னூலாசிரியர் பின்னூலாசியர் எல்லார்க்கும் ஒப்ப முடிந்தமையின், அகத்தியனார் கூறிய வெனக்கொண்டு காட்டும் அச்சூத்திரங்கள் வந்த வரலாறு யாது? எனின், அற்றன்று; தொல்லாசிரியர் உரைகளி லாங்காங்கு இச்சூத்திரங்கள் காணக் கிடத்தலால் அவை அகத்தியனா ரியற்றிய வென்று கொள்ளவமையுமெனின்; - நன்று சொன்னாய், தொல்லை உரையாசிரிய ராவார் தெய்வப்புலமை நக்கீரனார், இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், கல்லாடர், பரிமேலழகியார், அடியார்க்கு நல்லார், சிவஞானயோகிகள் முதலியோ ரன்றே? இவ் வாசிரியன்மா ருரைகளில் யாமாய்ந்த வளவில் அச்சூத்திரங்கள் காட்டப்பட்ட தறிந்திலேம்; அல்ல தவை காணப்படு முரைப்பகுதியினை நண்பரவர்க ளெமக் கெடுத்துக் காட்டி அறிவு கொளுத்துவார்களாயின், அதன்மேல் நிகழும் நம்மாராய்ச்சியினையுங் குறித்திடுவோம். ஆண்டெழுதிய வழக்குரையில் அச்சூத்திரங்கள் காட்டப்பட்டவுரை மேற்கோள் காட்டாமல் நண்பரவர்கள் நெகிழ்ந்து போதலின், அச்சூத்திரங்களை யாரோ சிலர் கட்டி, அகத்தியனார் பெயரால் நடாத்தினா ரென்பது காட்டுவாம். ஆசிரியர் - அகத்தியனார் ஆனந்த வோத்துள் அங்ஙனஞ் சூத்திரங்களியற்றி யிட்ட துண்மையாயின், தொன்னூற் பரப்பெல்லாம் ஒருங் குணர்ந் துரை யெழு துவாரான ஆசிரியர் - நச்சினார்க்கினியர் மலைபடுகடாத் துரையில் பின்னுள்ளோர் ஆனந்தக்குற்ற மென்பதோர் குற்ற மென்று நூல் செய்ததன்றி, அகத்தியனாருந் தொல்காப்பியனாரும் இக்குற்றங் கூறாமையின் என்றும், தொல்காப்பியவுரையில் இனி ஆனந்தவுவமை யென்பன சில குற்றம் அகத்தியனார் செய்தாரெனக் கூறுப வாகலின், அவையிற்றை எவ்வாறு கோடுமெனின், அவைகள்தாம் அகத்துள்ளும் பிறசான்றோர் செய்யுளுள்ளும் வருதலிற் குற்றமாகா; அகத்தியனராற் செய்யப்பட்ட மூன்று தமிழினும் அடங்காமை வேறு ஆனந்த வோத்தென்ப தொன்று செய்தாராயின் அகத்தியமுந் தொல்காப்பியமும் நூலாக வந்த சான்றோர் செய்யுங் குற்றம் வேறுபடா வென்பது என்றுந் தடை விடைகளாற் காட்டி ஆனந்தவோத்து அகத்தியனார் செய்தாரென்பதிற் றமக் குடம்பாடின்மை கூறி மறுத்த லென்னை? இவர்தா மிங்ஙனம் மறுத்துக் கூறினும், ஏனையுரை யாசிரியரு மிவற்றை எடுத்தாளாத தென்னை? என்று கடாவுவார்க்கு இறுக்குமா றின்மையின், அச்சூத்திரங்கள் அகத்தியனார் செய்தவாதல் செல்லாதென்க. அகத்தியனார் பெயரானும் ஔவை யார், திருவள்ளுவர் பெயரானுங் கட்டி நடத்தப்படும் பாட்டுக்கள் போல் அவையுங் கொள்ளற் பாலனவேயாம். இனி ஆசிரியர் - தொல்காப்பியனார் பயனில்லவற்றைக் கிளந்து கூறாது புறனடையா லுய்ந்துணர வைப்பராகலின், அதுபற்றி அவ் வானந்தக் குற்றங் கொள்ள வமையுமெனின்; - அகத்தியனார் கூறிய தொன்றை அங்ஙனம் ஒழிபாற் கொள வைத்தாராயின், அவ்வாறு கோடலுமாம்; அகத்தியனாரே அங்ஙன மொன்று கூறினாரென்பதற்குப் பிரமாண மில்லா மையானும், பிராமண முண்டென்பாரை ஆசிரியர் - நச்சி னார்க்கினியர் மறுத்தலானும் அவ்வா றமைத்துக் கோடல் யாண்டைய தென்றொழிக. இனி, ஆசிரியர் - சிவஞானயோகிகள் இலக்கண விளக்க வாசிரியரை மறுத்து மலையு மகளென அமங்கலப் பொருடந்து தொகையார் பொருள் பலவாய்த் தோன்றிற்று என்று கூறுதலின், அவர்க்கு அவ்வானந்தக் குற்றங் கோடல் உடம்பாடா மென்று நண்ப ரவர்கள் மொழிந்தனர். அது பொருந்தாது. மங்கல மொழி முதல் நிறுத்துக் கூறினாமென் றுரைத்த இலக்கண விளக்க வாசிரியர் தாமேற்கொண்டதற் கேற்பக் குற்றம் படாது மங்கலம் வகுத்துக்கூறல் வேண்டும்; அங்ஙனங் கூறவறியாமற் றாம் மேற்கொண்டதற்கு மறுதலைப் பட அதனைக் குற்றம்பட வைத்தாராகலி னதனை யறிந்து, ஆசிரியர் - சிவஞானயோகிகள் மறுத்திட்டாரல்லது, அக் குற்றங் கோடல் நமக்கு முடன்பா டென்ப ததனா லறிய வைத்தா ரல்ல ரென்க. இனி, நண்பரவர்கள் மாழலனா ரியற்றிய வெனக் கூறிய சூத்திரங்கள், எந்நூலி லுள்ளன? அந்நூல் பதினெண் கீழ்க்கணக்கு முதலியவற்றிற் சேர்ந்த தொன்றா? அல்லது, வேறு தனிநூலாய் ஆன்றோரால் மேற்கோளாகக் கொள்ளப்படுவது தானா? அஃதிப் போது வழக்க முறுகின்றதா? வழக்கமின்றி யொழிந்ததாயின், அச்சூத்திரங் களைத் தொன்னூ லுரையாசிரியர் யாரேனு மெடுத்துக் காட்டினாரா? காட்டின ராயின் எவ்விடத்தே? என்று எமக்குப் பலதலையான் ஆராய்ச்சி நிகழ்தலின், நண்பவர்கள் அன்பு கூர்ந்து அவற்றை இனிது விளக்குவார்களாக வென்னும் வேண்டுகோளுடையேம். இன்னும் பொய்கையார் முதலான பண்டையாசிரியரும் பாட்டியல் செய்தார்க ளென்பது பன்னிருபாட்டியலால் தோன்றுகின்றது என்கின்றார்கள். அப்படியாயின், அவர் செய்த பாட்டியல் யாது? வேறு நூலுரையாசிரியர் யாரேனு மதனை எடுத்துக் காட்டினாரா? பன்னிரு பாட்டியலும், வச்சணந்திமாலையும் இவ்வழக்கினை முடிவு காண்டற்கேற்ற மேற்கோள் நூல்க ளாகமாட்டா. இவற்றின் சொற்பொருள்களில் ஐயம் வந்துழி யெல்லாம், எல்லார்க்கும் மேற்கோளா யொப்ப முடிந்த தொல்காப்பிய முதலான பண்டை நூற் கோள் பற்றியுங் களவியலுரை முதலான உரைக்கோள் பற்றியுமே துணிதல் வேண்டும். இவ்வளவை முறைவழாமல் நண்பரவர்கள் தாமெடுத்துக்கொண்ட பொருளைத் தாமே பலவகையா னாராய்ந்து மேற்கோள் காட்டி விளக்கியிருந்தால், நாம் மேற்குறிப்பிட்டவாறு பலவாறு வினாக்கள் நிகழ்த்த வேண்டிய தின்றாம். அது கிடக்க. இனி, மங்கலச்சொல் தனித்தும் வரலாம், அடையடுத்தும் வரலாம், முதற்சீரே யன்றி ஒரு செய்யுளி னிடையினுங் கடையிலுமுள்ள சீரினும் வரலாம், எடுத்துக் குறிக்கப்பட்ட மங்கலச் சொற்களே யன்றிப் பிற என்பதனால் வேறு பலவும் வரலாம், பரியாயச் சொற்களும் வரலாம். காப்புச் செய்யுளினும் வரலாம், காப்புச் செய்யுளொழிந்து நூற்செய்யுளினும் வரலாம், என்று நியதியின்றிக் கூறினார்கள். இப்படியும் ஒரு விதியுண்டா! இங்ஙனம் விதிகூறும் ஒரு நூலை இலக்கண மென்றுங் கூறலாமா!! இவ்வா றுரைத்தால் எந்த நூலுக்குத்தான் மங்கலங் கூறலாகாது? எந்தச் சொல்தான் மங்கல மாகமாட்டது? மிக அமங்கலமாய் நடக்கும் நூலுக்கும் மங்கலங் கூறலாமே? குன்றக் கூறல், மிகபடக் கூறல், மாறுகொளக்கூறல் முதலான குற்றங்கட் கிடனாய்க் கிடக்கும் இவ்வியங்கோளினையும், இவ்வாறு விதிக்கும் நூலினையுங் கற்றறிவுடையோர் மற்கோளாகத் தழுவ ஒருப்படுவரா? ஒருப்படார்! ஒருப்படார்! இனி, ஆன்றோர் செய்யுட்கணெல்லாம் மங்கலச்சொற்க ளுண்டெனக் கூறினார்கள். இதனைக் காஞ்சியாக்கத்தில் முன்னரே எடுத்துக் காட்டி மறுத் திருக்கின்றாம்; ஆண்டுக் கண்டுகொள்க. ஈண்டும் விரிப்பிற் பெருகும். இனி, ஆசிரியர் - நச்சினார்க்கினியர் ஆனந்தக்குற்றம் கொள்வாரை மறுத்து, அகத்தியனாருந் தொல்காப்பியனாரு மதுகொண்டிலரென யாப்புறுத் தோதுதல் மேலே காட்டினா மாகலின், அவர்க்கது கருத்தன்றென நண்பர் கூறியது இழுக்கா மென்க. நண்பரவர்கள் இந்திரகாளி செய்த யாமளேந்திரர் பராசைவ முனிவர், சமணரல்ல ரென்கின்றார்கள். இந்திரகாளி யென்னும் இசைநூல் செய்த யாமளேந்திரர் பராசைவ ரென்பது அடியார்க்கு நல்லாருரையிற் பெறப்படுவதன்றி பாட்டியல் செய்த யாமளேந்திர ரென்பது பெறப்பட வில்லை. ஆதலால் பாட்டியல் செய்த யாமளேந்திரரும் இசை நூல் செய்த யாமளேந்திரரும் வேறென்னுங் கருத்துடையேம். இது நிற்க. அற்றே லஃதாக நச்சினார்க்கினியருஞ் சிவஞான யோகிகளுந் தொல்காப்பியப் பாயிரவுரையினுஞ் சூத்திரவுரை யினும் வடக்கு எழுத்து என்பவற்றை மங்கலச் சொற்க ளெனக் கூறிய தென்னை யெனின், ஒரு நூல் தொடங்கும்வழி ஒரு நற்சொல் நிறுத்துத் தொடங்குதல் நன்றாகலின், அதுபற்றி அங்ஙன மொழிந்தா ரல்லது மங்கலச்சொல் நிறுத்தே தொடங்கல் வேண்டுமென யாப்புறுத்தானும், அங்ஙனங் கூறாதொழியின் அஃதானந்தமா மென்றானுங் கூறிற் றின்மையின் அதனான் ஈண்டைக் காவதோ ரிழுக்கில்லை. இம்முறையினை முன்னோர் யாப்புறுத்தாமையின் ஆன்றோரும் நற்சொற்றொடங்கியுந் தொடங்காமையும் வரையாது நூலியற்றினார். ஈண்டும் பிறாண்டும் யாமெடுத்துக்கொண்ட மேற்கோள் ஆனந்தக்குற்ற மென்பது தொல்லாசிரியர் யார்க்கு மொப்பமுடிந்ததில்லை என்பதேயாகலின், இதனை நண்பரும் பிறரும் பிறழ வுணராதிருக்கக் கடவர். இது கிடக்க. பவணந்தி முதலாயினாரை அறியார் போலிப் புலவர் என யாமெழுதியது பற்றி நண்பரவர்கள் வருந்து கின்றார்கள். யாஞ்செய்தது பிழையாயின் அதனைப் பொறுக்கும்படி வேண்டுகின்றேம். அவர்களை அங்ஙன மிகழ்ந்துரைக்க வேண்டு மென்பது கருத்தன்று. பண்டையா சிரியர் செய்த கற்புறு பொற்புடைய அரிய நூல்களைப் பயிலவொட்டாது தடையாயெழுந்து பொருத்தமில்லனவு மிடையிடையே கூறிய அப்பவணந்தி முதலாயினர் பெற்றிமைக் கிரங்கி யெழுதுகின்றுழி அச்சொல் வழங்க வொருப்பட்டாம். இனி, உண்மையான் நோக்க வல்லார்க்குப் பவணந்தி முதலாயினர் அறிவுடையோராற் பெரிது பாராட்டு தற்குரிய சீர்ப்பாடுடைய ரல்ல ரென்ப தினிது புலனாம். அவர் தொல்காப்பியனார் முதலான பண்டை நூலாசிரியர் நுட்பப் பொருள் பொதிந்து விளங்குமாறு நூல்செய்ததுபோலத் தாமும் அங்ஙனம் விளங்க நூலியற்றினரா? அல்ல தவரின் வேறாகவேனும் புதுப்பொருள் செறித்தெழுதினாரா? தாமெ ழுதியவற்றையேனும் முடித்து வரையறை தோன்ற வைத்தாரா? ஒரு சிறிது மில்லை. தொல்காப்பியனார் கூறிய அரிய பொருள்களுட் சிலவற்றை விடுத்துச் சிலவற்றை வைத்துத் தஞ்சொல்லாற் சூத்திரஞ் செய்தார். அங்ஙனஞ் செய்வுழியுந் தொல்காப்பியனார் கருத்துணர மாட்டாமல் ஒரோவிடங்களில் வழுவியுங் கூறினார். தமிழிலே ஐந்திலக் கணமும் வழுவின்றி மிகச் சுருங்காமலும் மிகப் பெருகாமலும் முற்ற வெடுத்து முடிவு தோன்றக் கூறிய நூல் தொல்காப்பியம் ஒன்றேயாம். இந்நூலுணர்ந்தார் தமிழியலறிவு நன்குவாய்ப்பப் பெற்றாராவர். இவ்விழுமிய நூலையும் மாணக்கர் பயில வொட்மல் பவணந்தியார் நன்னூலெழுதியது எற்றுக்கு? அற்றன்று, தொல்காப்பியம் உணர்தற்கரிதாய்ப் பெருகிக் கிடத்தலால் அதனைச் சுருக்கி நன்னூலியற்றினாரெனின்; - பெருக்க சுருக்கமென்பன அவ்விருவகைக் குணங்களுமுடைய இருநூல்கள் தோன்றினல்லாற் றாமே ஒருவர்க்கு விளங்கா. மக்கள் மனவியற்கை எளிய தொன்றனையே பற்ற முந்துறும். அஃது அதன்கண் இயற்கையாயுள்ள மடமைக் குணத்தினானே யாம். நன்னூலினுஞ் சுருங்கிய நூலொன்று ஏனை யொருவர் இயற்றிடுவராயின் அதனையே எவரும் பயில முந்துவார். எத்தனை பேர் மகாலிங்கைய ரிலக்கணம், போப்பையரிலக்கணம் முதலியவற்றின் பயற்சியோடு நின்று விடுகின்றார்! இனி, நன்னூல் சுருக்கமாவ தொன்றாயினும் அதன் பயிற்சி யொன்றானே தமிழறிவு நிரம்பு மெனின், அது சால்புடைத்தாம். அவ்வாறின்றி அதன்க ணடங்கா மல் வேறுணரற்பாலனவாம் பொருட் கூறுபாடுகள் பலவாகப் பெருகிக் கிடத்தலானும், அப்பலவு மொருங்கெடுத்து முடியக் கூறுநூல் தொல்காப்பிய மொன்றே யாதலானும் தமிழியலறிவு நிரம்பவேண்டுவார் தொல்காப்பியமொன்றே பயிலுதற்குரியர். தமிழியலறவு நிரம்புதற்குரிய பொருள்களின்றி வாளாது சுருங்கிக் கிடக்கும் நூல்களைச் சுருக்கஞ் சுருக்கமென்று பயின்றா லாவதென்னை? புலமை முற்றுதற்குரிய நூலறிவு இன்றியமையாத தொன்றாகலின் அது செயவல்ல தொல்காப்பியமே வாய்ப்புடைத்தாம். அயகோ! அது பெரிய தொரு நூலாயிற்றே என்று மறுக்க முறுவராலெனின்;- நூனுட்பமறியாது கடாயினாய், இஞ்ஞான்றை ஆங்கில மொழியில் பரந்த இயற்பொருள் மெய்ப்பொருள் நூலாராய்ச்சி செய்வார் பலர்க்கும் தொல்காப்பியநூல் மிகச் சுருங்கியதொன்றாய்த் தோன்றுமாகலின், அதன் பயிற்சி நீ மயங்குமாறுபோற் பெரிய தன்றென்று தெற்றெனத் துணிக. ஆகவே, தொல்காப்பியப் பயிற்சிக்கும் தமிழ் மொழிப் பெருக்கத்திற்கும் ஒரு பேரிடையூறாய்த் தோன்றிய பவணந்தியர் எம்மனோராற் பாராட்டப்படுதற்குரிய ரல்லர். பிறரவரை எங்ஙனம் பாராட்டினும் பாராட்டுக! அவரவர்க்குரிய மதிப்புப்பற்றி அவரவரைப் பாராட்டுவா மல்லது, வேறு கூறக் கடமைப் பட்டிலோம். ïJ Éf, ïJfhW« ah« F¿¤J Ãfœ¤âa tH¡Fiuia eLÃiy ãwHhJ K‹ngh‰ br›Éâ dhŒªJ jk jÇa fU¤ij btËÆLth®fshf bt‹W e« e©g® r©Kf« ãŸis at®fis nt©o¡bfhŸS »‹wh«.* சோமசுந்தரக் காஞ்சியாக்கம் - முற்றும் - *சுவாமியவர்கள் எழுதிய இவ்வழக்குரைமீது ஸ்ரீமாந். சண்முகம் பிள்ளையவர்கள் ஏதும் எழுதினார்க ளில்லை. - பதிப்பாசிரியன். 1. ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரநாயகர் வரலாறு தெண்ணீர்வயற்றொண்டை, நன்னாடு சான்றோருடைத்து - ஔவையார் இச்செந்தமிழ்த் தென்னாடுமுழுதுங் கல்வியறிவருளொழுக்கங்களிற் சிறந்த சான்றோர்களைத் தொன்றுதொட்டு உடையதாயினும், இத்தமிழ்நாட்டின் வடபகுதியாகிய தொண்டைநாடே சான்றோரை உடைத்தென்ற மேலைத் திருப்பாட்டில் ஏதோ ஓருண்மை இருக்கவேண்டு மென்பது நமக்குத் தோன்றுகின்றது. உலகமெங்கணுமுள்ள சான்றோர்களெல்லாம் புகழ்ந்தேத்துந் தெய்வப் புலமைத் திருவள்ளுவநாயனார் பிறந்தருளிய இடமாகிய திருமயிலை இத்தொண்டை நாட்டின் கண்ணதாயிருத்தலையும், மாணிக்கவாசகப்பெருமான் எல்லாம்வல்ல முழுமுதற்கடவுளை ஒளிவடிவிற்கண்டு தொழுத திருக்கோயிலாகிய திருக்கழுக்குன்றம் இத் தொண்டைநாட்டின் கண்ணதாகவே விளங்குதலையுந், திருஞானசம்பந்தப்பிள்ளையார் என்பைப்பெண்ணாக்கிய தெய்வஅருட்பெரும்புதுமை நிகழ்ந்த திருமயிலாப்பூரும் இந்நாட்டின் கண்ணதாயே திகழ்தலையுஞ், சுந்தரமுர்த்திநாயனார் சங்கிலியாரை மணந்துவைகிய திருவொற்றியூரும் இதன் கண்ணதாகவே பொலிதலையும், அறுபத்துமூன்று நாயன்மார் வரலாறு களையும் உண்மைவழாது துலங்கவிரித்துத் திருத்தொண்டர் புராணம் பாடிய சேக்கிழார் அடிகள் பிறந்தருளிய குன்றத்தூரும் இந்நாட்டின்கண்ணதாகவே வைகுதலையும் உற்று நோக்குங்கால் இத்தொண்டைநாட்டின் கண் இறைவனது அருள்விளக்கமும், அதனைப்பெற்ற பெரியார் தோன்றுதற் கேற்றதோர் இசைவும் உளவாதல் குறிப்பால் உணரப்படும். இன்னும் ஆங்கில அரசுக்கு இத்தென்றமிழ் நாட்டுத் தலைநகராய் வயங்குஞ் சென்னபட்டினமும் இத்தொண்டை நாட்டின் கண்ணே துலங்குதலும் இதன் பெருமையைப் புலப்படுத்துதற்குப் பின்னுமொரு குறியாம். இங்ஙனங் கல்வி அறிவு அருளொழுக்கங்களால் ஆன்ற பெரியார் தோன்றுதற்கும், அவர் இறைவனருள் விளக்கத்தை நேரே காட்டுதற்கும் ஏற்ற தகுதிவாய்ந்ததாகிய தொண்டை நாட்டினுக்கு இஞ்ஞான்று தலைநகராய் வயங்காநின்ற சென்னபட்டினத்தின் மேற்கெல்லையின்கண் உளதாகிய சூளை என்னும் ஊரிற் சோமசுந்தர நாயகர் பராபவ ஆண்டு, ஆவணித் திங்கள் 2 ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமையிற் (கி. பி. 1846 ஆகஸ்டு 16) பிறந்தனர் இவர்தந்தையார் பெயர் இராமலிங்க நாயகர் என்பது இவர்தம் அன்னையார் பெயர் அம்மணி அம்மையாரென்பது. இவர்தாம் மூத்த பிள்ளை இவர்க்குப் பின் திருவேங்கடசாமிநாயகர், நாதமுனிநாயகர் வரதராசநாயகர் என ஆண்பாலார் மூவருந், தாயாரம்மை எனப் பெண்பாலார் ஒருவரும் பிறந்தனர். இவர் பிறந்த குலம் நாய்கர் குலம் எனப்படும். நாய்கர் என்னுஞ்சொல் வாணிக வாழ்க்கை மேற்கொண்டொழுகின மக்கட்குழுவினார்க்குப் பண்டுதொட்டு வழங்கிய தொரு பெயராதல், இப்பர் பரதர் வைசியர் கவிப்பர் எட்டியர் இளங்கோக்கள் ஏர்த்தொழிலர் பசுக்காவலர் ஒப்பில்நாய்கர் வினைஞர் வணிகர் என்று அத்தகு சிலேட்டிகள் செட்டிகள் பெயரே என்னுந் திவாகர சூத்திரத்தால் நன்கு விளங்கும் திவாகரத்திற்குப் பின்னெழுந்ததும், இற்றைக்குச் சிறிதேறக்குறைய 800 ஆண்டுகட்கு முற்பட்டதுமாகிய பிங்கலந்தை நிகண்டு நாய்கர் என்பதனைத் தனவைசியர் பெயராக வைத்துரைக்கின்றது; அது, நாய்கர் எட்டியர் வணிகர் பரதர் தாமும் பிறவுந் தனவைசியர்க்கே எனக் கூறும் அதன் சூத்திரத்தாற்பெறப்படும். எனவே, பண்டைநாளில் வாணிக வாழ்க்கை மேற்கொண்டு வாழ்ந்த தமிழ்ப்பழங்குழுவினரே நாய்கர் எனவழங்கப்பட்டமை துணியப்படும். இன்னுங், கொங்குவேளிர் இயற்றிய பெருங் கதையில் (2,9,4,6) நாவாய் கவிழ்த்த நாய்கன் போல எனப் போந்த உவமைப்பொருளை உற்று நோக்குங்கால், நாய்கர் எனப்பெயரிய இக்கூட்டத்தார் சோமசுந்தரநாயகர் அந்நாளிற் கடன் மேற் கப்பலேறிச்சென்று வாணிகம் நடாத்திவந்தமை அறியப்படும். இந்நாய்கர் கூட்டத்தாரில் ஒரு பிரிவினர் வேங்கடமலைக்கு வடக்கே சென்று குடியேறி, நாய்கர் என்னுஞ் சொல்லை நாய்க்கர், நாயக்கர் நாயுடு எனத் தரித்துத் தமக்குரிய குடிப்பெயராக வழங்கி வருகின்றனர் . இங்ஙனம் வடக்கே சென்றுவைகித் தமிழைப் பல்வகையால் திரிபு படுத்திப் பேசிய தமிழ்மக்களே பின்னர் வடுகர் எனவும், அவர் மாற்றி வழங்கிய மொழியே வடுகு தெலுங்கு எனவும் பெயர் பெற்றமை ஆராய்ச்சியாற் புலனாகின்றது. நாய்கர் என்னும் பழைய குடிப் பெயரையே இஞ் ஞான்று நாயகர் என மாற்றி எழுதி வருகின்றனர். என்றாலும் உலக வழக்கில் அவரெல்லாரும் வழங்கி வருதலை உற்று நோக்குங்கால், அச்சொற் பழைய நாய்கர் என்னுஞ் சொல்லின் ஒரு சிறு மாறுதலாகவே காணப்படுகின்றது. இவ்வாறு வாணிகவாழ்க்கையிற் சிறந்திருந்தமை பற்றி இவர் நாய்கர் என வழங்கப்பட்ட வழக்கை ஆராயுங்கால், இச்சொற் சிறப்புப் பொருளுணர்த்தும் நகர இடைச்சொல்லினின்று உண்டானமை புலனாகின்றது. ஆண்மக்களிற் சிறந்தானை நம்பி எனவும், பெண்மக்களிற் சிறந்தாளை நங்கை எனவும் வழங்குதலும், நப்பின்னை நக்கீரன் என்னுஞ் சொற்களிலும் முதல் நின்ற நகரம் `சிறந்தபின்னை சிறந்த சொல்லன் எனப் பொருடருதலும் போல, நாய்கர் என்னுஞ் சொல்லிலும், நாயன், நாயனார், நாய்ச்சி, நாய்ச்சியார் முதலான சொற்களிலும் நகரம் முதல் நீண்டு நின்று சிறப்புப் பொருள் தலைமைப்பொருள்களைத் தரா நிற்கின்றது. எனவே, நாய்கர் எனப்பெயரிய பண்டைத் தமிழ் வகுப்பினர் அஞ்ஞான்று சிறந்த ஒரு குலத்தவராகப் பாராட்டப் பட்டுவந்தமை நன்கு புலனாகா நிற்கும். அத்துணைச் சிறந்த நாய்கர் குலமானது இந்நாளிற் பள்ளி குலம் எனக் கல்வியறிவாராய்ச்சியில்லாக் கசடர்களால் இழித்துப் பேசப் படுகின்றது. பள்ளி என்னுஞ் சொற்பொருள்வழக்கினை ஆராய்ந்து காண்பார்க்கு, அஃது யர்ந்த பொருளைத்தந்து, அப்பெயர்க்குரிய நாய்கர் குலத்தின் மேன்மை யினையே நன்கு விளக்காநிற்கும். பள்ளி என்னுஞ்சொல் முதலிற் பள்ளமான அல்லது சிறிது குழிந்ததோர் இடத்தை உணர்த்தியதாகும். மான், மரை, வரையாடு, காட்டா முதலான விலங்குகள் தாங்கன்று ஈனுங்காற் சிறிது பள்ளமான இடங்களை நாடிச்சென்று, அவற்றின் கட் கன்று ஈன்று அக்கன்றைப்பாதுகாத்து வெளிக்கொணருங்காறுந்தாம் அவற்றின் கண்ணே தங்கன்றுடன் துயின்று கிடப்பது வழக்கம். ஆகவே, முதலிற் சிறிது குழிந்த இடத்தை உணர்த்திய பள்ளி என்னுஞ் சொற்பிறகு விலங்கு துயிலிடத்தை உணர்த்துவதாயிற்று அதன்பின், அது மக்கள் துயிலிடத்தையும், அதன்பின் அது அரசன் துயிலும் அரண் மனையையும், அதன்பின் அஃது இறைவன் துயிலுந் திருக் கோயிலையும், அதன்பின், அது சிறார் கல்விபயிலும் பள்ளிக் கூடத்தையும் படிப்படியே பொருள் வளம் பெற்றுணர்த்தலாயிற்று. இனி இறைவனுக்கு விடியற்காலையிற் புதிதுமலர்ந்த பூக்களால் தொடுத்து அணியப்படும் மலர் மாலை திருப்பள்ளித்தாமம் எனத் தொன்றுதொட்டு வழங்கப்பட்டுவருகின்றது இது, திருத்தொண்டர்புராணம் எறிபத்தநாயனார் புராணத்திற்போந்த வைகறை யுணர்ந்து போந்து புனன் மூழ்கிவாயுங்கட்டி மொய்மலர் நெருங்குவாச நந்தன வனத்து முன்னிக் கையினிற் றெரிந்து நல்ல கமழ் முகையலரும் வேலைத் தெய்வநாயகர்க்குச் சாத்துந் திருப்பள்ளித்தாமங்கொய்து என்னுந் திருப்பாட்டினால் அறியப்படும். விடியற்காலத்தே திருக்கோயிலிற் பள்ளியறையில் அமர்ந்த இறைவற்கும் இறைவிக்கும் அணியப்படுவது பற்றி இம்மலர்மாலை திருப்பள்ளித்தாமம் எனப்பெயர் பெறலாயிற்றுப்போலும்! இங்ஙனம் விடியற்காலத்தே சாத்தும் மாலை யினைத்தொடுக்குஞ் சிறந்த தெய்வப்பணி, நாய்கர் குலத் தவரில் ஒருசாராராற் செய்யப்பட்டு வந்தமையின் அவர் பள்ளிப்பண்டாரம் எனப் பெயர் பெற்றனர். இஞ்ஞான்றும் பூமாலை தொடுக்குந்திருப்பணியைச் செய்யாநின்ற நாய்கர் குலத்தவர் பள்ளிப் பண்டாரம் என வழங்கப்படுவதும் யாங் கூறும் இவ்வுண்மையினை நிறுவுதற்கு ஒருவலிய சான்றா மென்க. இவ்வாறு நாய்கர் குலத்தவரில் ஒருவகுப்பார்க்கு வந்த பள்ளி பண்டாரம் என்னும் பெயரில் இறுதிக் கண் நின்ற பண்டாரம் என்னுஞ் சொல் விடப்பட்டு அதன் முதனின்ற பள்ளி என்னுஞ் சொல்மட்டும் அக்குலத்தவரெல் லார்க்கும் பொதுப் பெயராக இந்நாளில் வழங்கி வருகின்றது. இங்ஙனமாகப், பள்ளி என்னும் சொல்லின் வரலாற்றை நன்காய்ந்துப் பார்க்கும் வழி, அஃதிறைவற்குப் பூமாலை . தொடுக்குந் தெய்வத் திருப்பணியைச் செய்வார் மேலதாய் உயர்ந்ததொரு பெயராய் நிலவுகின்றதே யன்றி, அஃதெவ்வாற்றானும் இழிவு பொருடருவதாய்க் காணப்பட வில்லை. அங்ஙனமாகவும், இழிந்த ஒரு வகுப்பினர்க்குரிய பெயராக மற்றைவகுப்பினர் சிலர் அதனைப் பழித்துப் பேசுவது, அவரது கல்வியறி வாராய்ச்சி யில்லா மடமை யினையே காட்டுகின்றது. அற்றேல், உயர்ந்த பொருளையுடைய பள்ளி என்னும் சொல் இழிந்த பொருட்டாயதற்குத்தான் ஒரு காரணம் வேண்டுமன்றோவெனின்; அதுவுஞ் சிறிது காட்டுதும் நாய்கர்குலத்தவரிற் பெரும்பாலார் வாணிக வாழ்க்கையிற் சிறந்த செல்வர்களாயிருந்ததுமல்லாமல், அவரிற் சிறுபாலார் சிற்றரசர் களாகவும் இருந்தனர். இச்சிற்றரசர்கள் தமக்கு மேற்பெரிய வேந்தர்களாயிருந்த சேரசோழ பாண்டியர் கட்கு அடங்காமல் அவர்கட்கு இடையிடையே இடர் விளைத்து வந்தமையால், அவர்கள் இவர்களைக் குறும் பர்கள் என்னும் இழிவு பெயர் வைத்து வழங்கலாயினர் அதனாற் பள்ளியர் என்னுஞ்சொற் குறும்பர்கள் என்னும் இழிவு பொருளிலும் வழங்கப் படலாயிற்றென்றுணர்ந்து கொள்ளல் வேண்டும். இனி, நாயகரவர்கள் பிறந்த குடி வைணவமதத்தைத் தழுவிய தொன்றென்றும், அதனால் அவர்கள் பெயர் அரங்கசாமி நாயக்கர் என முதலில் வழங்கியதென்றும் அறிந்தார் சொல்கின்றனர். இஃதுண்மையே யென்றாலும், இவர்களின் தந்தையார் வைணவமதத்திற்குரியவரல்ல ரென்பது, அவர் இராமலிங்க நாயகர் எனப் பெயர் பூண்டிருந்தமையாற் றெளியப்படும். தந்தையார் சைவசமயத் தவராயிருக்க, அவர் ஈன்ற புதல்வர் புதல்வியர்க்கு மட்டும் வைணவர்க்குரிய பெயர் யாங்ஙனம் வந்தனவென்று ஆராயுங்கால், நாயகரவர்களின் அன்னையார் வைணவ குடும்பத்திற் குரியவராயிருக்கவேண்டுமென்பது உய்த்துணரப்படும். சைவ சமயத்தவர் தமது சமயப்பெயர்களையேயன்றி, ஏனைச் சமயப்பெயர்களையும் பூண்டு கொள்வர்; ஆனால், ஏனை மதத்தவரோ தம் மதப்பெயர்களையன்றி ஏனைமதப்பெயர்களைப் பூண்டு கொள்ளச்சிறிதும் ஒருப்படார். இராம சாமி கிருஷ்ணசாமி நாராயணசாமி பக்கிரிசாமி முதலான புறச்சமயப்பெயர்களைச்சைவ சமயத்தவர் புனைந்து கொண்டுலவுதலை இன்றைக்குங் காணலாம்; ஆனால், சிவன், சங்கரன், முருகன், விநாயகன், ஈசுவரன் முதலான சைவசமயப் பெயர்களை வைணவராதல் ஏனை மதத்தவராதல் புனைந் துலவுதலையாண்டுங் காணல் இயலாது. ஆகவே, நாயகரவர்களின் தந்தையார் சைவசமயத்தவ ராயிருந்தாலும் , அவர்தாம் வைணவ குடும்பத்தினின்றும் மணந்த மனைவியார் விருப்பப் படியே தம்மக்கட்கு வைணவப் பெயர்களையே புனைந்து விடலாயின ரென்பது உய்ந்துணரப்படும். யாம் எமது இளமைப் பருவத்தே நாயகரவர்களை அடுத்தகாலையில், அவர்களது இல்லத்தில் நாயகரவர்களின் தந்தையார் இராமலிங்கநாயகரைப் பார்த்து அவரோடு உரையாடியிருக்கின்றேம். அவர் சிறிதேறக்குறைய நாயக ரவர்களின் உருவத்தையே ஒத்திருந்தனர்; அவர் அப்போது எண்பதாண்டு கடந்தவராயிருக்கலாம்; ஆயினும், அவரது யாக்கை திண்ணிதாயிருந்தது; அவரது அறிவு துலக்க முடையதாய்த் தோன்றியது, அவர் எம்முடன் அன்பாக உரையாடிக் கொண்டுவருகையில் நாலடியார் லிருந்து ஒரு செய்யுளை எமக்கு எடுத்துக் கூறினார் அச்செய்யுள் இன்னதென்று இப்போதெமக்கு நினைப்பில் இல்லை. நாலடியாரிற் பயிற்சியுடைய ஒருவர் தமிழறிவு வாய்த்தவ ரகத்தான் இருக்கவேண்டும். யாம் அப்போதவருடன் உரையாடிக் கொண்டு வந்ததில், அவர் அறிவிற் சிறந்தவ ரென்றும், அவருடைய உடல்நலமனநலங்களையே அவர்தம் முதற் புதல்வராகிய நாயகரவர்கள் அடையப்பெற்றன ரென்றும் உணர்ந்து மகிழ்ந்தேம். அவர் இசை பாடுவதிலும் இசைக்கருவி இயக்குவதிலுந் தேர்ந்தவரென்றும், அவரைச் சேர்ந்தார் சிலர் சொல்லக்கேட்டேம். நாயகரவர்கள் குயிலெனமிழற்றுந்தமது இசையினிமையினைத் தந் தந்தையார்பானின்றே பெற்றனர். மேலும் அவர் முரணான முரட்டுக் குணமுடைய ரென்பதும், நாயகரவர்கள் எமக்குக் கூறிய சில சிறு குறிப்புகளாலும், பிறர் கூறிய சொற்களாலும் உணர்ந்தேம். நாயகரவர்களும், தந் தந்தையார்க்குரிய முரட்டுக் குணமுஞ் சிறு சினமும் உடையவர்களே; ஆயினும் இவை இரண்டும் இவர்கள் பாற்றக்ககாரணம் இன்றித் தோன்றா. இவை இரண்டும் இப்பெரியாரிடத்தில் நிலைபெற்று நின்ற மையினாலேதான், தமிழ் மொழியின் ஏற்றமுஞ் சைவ சமயத்தின் நுண்ணிய உண்மைகளும் இவர்கள் பானின்றுந் தோன்றிப்பெருகி, இத்தென்றமிழ் நாட்டினையும் இதன் வழியே இந்நில உலகம் முழுதினையும் புனிதமாக்குகின்றன; அனல் கொளுந்தும் வெங்காரம் வெய்தெனினும் நோய் தீர்க்கும் என்னும் ஆன்றோர் மெய்யுரையை நோக்குங்கால், அறிவிற் பெரியார்பாற் றீயனபோற் காணப்படுவனவும் உலகினுக்கு நன்மையையே பயக்கும் என்பது தெளியப்படுமன்றோ? இனி, நாயகரவர்களின் பிறப்பு வளர்ப்பு கல்விப்பயிற்சி முதலியவை களைப்பற்றி விரிவாகத் தெரிந்து எழுதுதற்கு வேண்டுங் கருவிகள் இல்லை. அவைகளைத் தெரிந்தவர்கள் தக்க சான்றுகளுடன் எழுதி அவைகளை எமக்கு உதவுவார்களாயின், நாயகரவர்களின் வரலாற்றை இன்னும் விரிவாக வரைந்து அதற்கு உதவி செய்தவர்களின் பெயர்களுடன் அதனை ஒரு தனி நூலாக வெளியிடுவேம். நாயகரவர்கள், சென்னையிலுள்ள அரசினர் கல்லூரியில் ஆங்கிலமுந் தெலுங்கும் பத்தாம் வகுப்பு வரையிற் பயின்று வந்தனரென்றும், அந்நாளிற் சூளைப்பட்டாளத்தில் நாய்கர் குலத்திற் பிறந்து சங்கராசாரியாரிடம் துறவாடையும் மாயாவாத உணர்ச்சியும் பெற்றுக் கல்வி கேள்விகளில் வல்லராய் வயங்கிய அச்சுதானந்த சுவாமிகளால் இவர்கள் வடமொழியுந் தமிழும் உடன் கற்பிக்கப்பட்டு வளர்ந்தனர் என்றும் திருவாளர் நின்றை தங்கவேலு முதலியாரவர்கள் சைவம் என்னுந் தமிழ் வெளியீட்டில் தாம் வரைந்து வெளியிட்ட நாயகரவர்களின் சுருக்கவரலாற்றிற் கூறியிருக்கின்றனர். யாம் எழுதும் இச் சுருக்க வரலாற்றுக் காலக்குறிப்புகள், முதலியாரவர்கள் காட்டிய காலக்குறிப்புகளை மெய்யெனக் கொண்டே வரையப்பட்டிருக்கின்றன. இவைகளிற் பிழைகள் இருப்பின், தக்க சான்றுகள் கிடைக்குங்கால் அவை திருத்தப்படும். இனி நாயகரவர்கள் மேற்காட்டியபடி தம் குலத்திற் பிறந்து தமக்குக் குருவாய் வாய்த்த அச்சுதானந்த சுவாமிகளால் வடமொழி தென்மொழியும் மாயாவாதவுணர்ச்சியும் அறிவுறுக்கப்பட்டு வந்ததுமல்லாமல் அரசினர் கல்லூரியிலும் ஆங்கிலமும் தெலுங்கும் ஒருங்கு கற்பிக்கப்பட்டு நான்கு மொழிகளில் அறிவுபெறலானார்கள் நாயகரவர்களின் வட மொழிப் பயிற்சி, அம்மொழிவல்ல பார்ப்பன ஆசிரியரின் பயிற்சியை ஒப்பதன்று ; இவர்களின் பயிற்சி ஒருவகையில் அவர்களின் வமொழிப்புலமைக்குத் தாழ்ந்ததென்றும், மற்றொரு வகையில் அதற்கு அஃது எத்தனையோ மடங்கு உயர்ந்ததென்றும் அறிஞர்கள் நன்குணர்வர். வடமொழி வல்ல பார்ப்பனப்புலவர்கள் அம்மொழியிலுள்ள இலக்கண இலக்கிய நூல்களையும், வேதங்கள் உபநிடதங்கள் சாங்கியம் முதலான தத்துவநூல்கள் புராணங்கள் முதலியவைகளையும் நன்கு நெட்டுருச்செய்து எழுத்தெண்ணிப்பாடம் ஒப்புவிக்க வல்லவர்கள் ;ஆனாலும், அவ்வந்நூல்களின் மெய்ப் பொருள்களையும், அவை ஒன்றி னொன்று மாறுபாடுறும் வழி அவற்றுட்பொருந்துவதிது பொருந் தாததிது வென்று சிக்கறுத்துணர்த்தும் முறைகளையும் அவர்களிற் பெரும்பாலோர் உணராதவர்கள்; அவர்கள் அவ்வடநூல்களை ஓதுவதெல்லாம் வெற்றார வாரத்தின் பொருட்டுந், தம்மை ஏனைமக்களினும் மிகுதி யாக உயர்த்துக்கொள்ளுதற் பொருட்டுமேயாம். மற்று, நாயகரவர்களோ வடமொழி நூல்களை நெட்டுருச்செய்து முழுப் பாடம் ஒப்புவிக்க மாட்டார்களாயினும், நால் வேதங்கள் நூற்றெட்டுஉபநிடதங்கள் காவியங்கள் புராணங் கள் முதலியவற்றின் உண்மைப் பொருள்களை உள்ளவாறு ஆய்ந்து தெளிந்தவர்கள்; அவைதம் முட்பொருண்முரண் நேர்ந்தக்கால், அவற்றுட்பொருந்துவதும் பொருந்தாதும் பிரிந் தினிதுவிளங்கக் காட்டி அவ்வந் நூற் கருத்தும் மெய்ப் பொருளுந் தெளித்துக் காட்டுந் திறத்தில் தமக்கு நிகரில்லாத வர்கள். இவர்கள்தோன்றி அவ்வடநூல்களின் கருத்துண்மை களைக் காட்டாதிருந்தால், தமிழ்மக்களேயன்றிவடநூல் வல்லாருங்கூட அவற்றையறியாதே போயிருப்பர். வடநூற் புலமைமலிந்த பார்ப்பனர்சிலர், சில புராண உபநிடத ஆகமப் பொருள் பற்றி நாயகரவர்களோடு உரையாடி, முடிவில் நாயகரவர்கள் கூறியகருத்தே மெய்யென உடன்பட்டு வியந்ததை யாம் நேரே கண்டிருக்கின்றேம். இன்னும், நாயகர வர்களை முன்பின் அறியாத வேதியர் சிலர், நாயகரவர்களைத் தற்செயலாய் எதிர்ப்பட்டு, அவர்களொடு வேதோபநிடதப் பொருள்களைப்பற்றி உரையாட நேர்ந்த போது, நாயகரவர்கள் மேற்கோளாக அவ்வடநூற்செய்யுட்களைச் சொல்லுமுறை பிழைபடாது மழையெனப் பொழிந்து அவற்றின் பொருண் மலைவு தீர்த்து உண்மையையெடுத்து விளம்ப அவையிற்றைக் கேட்ட அவ்வேதியர்கள் அவர்களைத் தம்மினத்திற்சேர்ந்த ஒரு பேராசிரியரெனவே கருதி வணங்கிச் சென்ற நிகழ்ச்சிகளும் பல. ஒரு கால் நாயகரவர்கள் ஓர் ஊருக்குத் தனியே செல்ல நேர்ந்து, அவ்வூரிற்றமக்குத் தெரிந்தார் எவரும் இல்லாமை யால், ஒரு பார்ப்பன உணவு விடுதியிற் சென்று அங்குணவு கொள்ளும் பொருட்டுச் சிறிது நேரம் அமர்ந்திருந்தார்கள். அந்நேரத்தில் அங்கேவந்து சேர்ந்த பார்ப்பன அறிஞர்சிலர், நாயகரவர்களின் தோற்றப்பொலிவைக் கண்டு, அவர்க ளொடு பேசுதற்கு விழைவுகொண்டு, அவர்களை அணுகிப் பேசாநிற்க, அவர்கள் அவ்வறிஞர்க்குத் தெரியாத பல வேத நுண்பொருள்களையெடுத்துரைப்ப, அவற்றைக் கேட்டு அவர்கள் பால் அன்பு மீதூரப் பெற்ற அப்பார்ப்பன அறிஞர் களும் அவ்விடுதிக்குரிய வரும் நாயகரவர்களை வணங்கி, அவர்களைத் தம்மவராகவே நினைந்து, நறுமணங்கமழச் சமைந்த அறுசுவையுணவூட்டி, அதற்காக அவர்கள் பாற் காசு ஏதும் பெறாமலே வழி விடுத்தனர். இனி, நாயகரவர்களின் தமிழ்மொழிப்பயிற்சியைக் குறித்துச் சில சொல்லல்வேண்டும். இவர்கள் இளைஞரா யிருந்த காலத்தில், அச்சிடப்பட்டு வழங்கிய நன்னூல், யாப்பருங்கலக்காரிகை முதலான தமிழிலக்கண நூல்களையும் பெரிய புராணம், கந்தபுராணம், திருவிளையாடல் புராணம், கம்பராமாயணம், வில்லிபுத்தூரார் பாரதம் முதலான இலக்கிய நூல்களையுந் திருக்குறள், நாலடியார் முதலான அற நூல்களையும், தேவாரம் திருவாசகம் முதலான பதினொரு திருமுறைகளையும், சிவஞானபோதம் சிவஞானசித்தியார் முதலான பதினான்கு சித்தாந்த நூல்களையும், ஒழிவிலொடுக்கம், வள்ளலார் சாத்திரம் திருப் போரூர் சந்நிதி முறை முதலான பிறநூல்களையும் நன்கு பயின்றிருந்தார்கள். மேலும், தமதிளமைக் காலத்தில் தங்குருவான அச்சுதானந்த மாயாவாத வேதாந்தங்கற்பிக்கப்பட்ட, ஞான்று கைவல்யம், ஞானவாசிட்டம், பிரபோத சந்திரோதயம், பிரபுலிங்கலீலை முதலான மாயாவாத நூல்களையுங் கற்றிருந் தார்கள். இவையேயன்றி வைணவ மதத்திற்குரிய நாலாயிரப் பிரபந்தமும் அவற்றின் உரைகளும் ஆராய்ந்தறிந்திருந்தார்கள். மற்று, இவர்களது இளமைக்காலத்தில் தனித் தமிழ்ப்பேரிலக்கணமான தொல்காப்பியமும் தனிச்செந்தமிப்பேரிலக்கிய நூல்களான பத்துப்பாட்டு, புறநானூறு, கலித்தொகை முதலானவைகளும் அச்சிற்பதிக்கப்பட்டு வெளிவந்தில. இவர்கட்கு 39 ஆம் ஆண்டு நடைபெறும் போதுதான் அதாவது கி.பி.1885ஆம் ஆண்டிற்றான் தமிழ்த் திருவாளர் சி. வை. தாமோதரம் பிள்ளையவர்களால் முதன் முதல்தொல்காப்பியப் பொருளதிகாரம் அரிது முயன்று அச்சிட்டு வெளிப்படுத்தப்பட்டது. கி. பி. 1887 ஆண்டில் திருவாளர் சி. வை. தாமோதரம் பிள்ளையவர்கள் தனிச் செந்தமிழ்ப் பேரிலக்கிய நூலான கலித்தொகையையுந், திருவாளர் உ. வே. சாமிநாதையரவர்கள் ஐம்பெருந்தமிழ்க் காப்பியங்களுள் ஒன்றாகிய சீவகசிந்தாமணியையும் வெளிப்படுத்திய ஞான்று நாயகரவர்கட்கு அகவை 41; 1889 - ஆம் ஆண்டில் ஐயரவர்கள் பத்துப்பாட்டு என்னுந்தன்னிகரில்லாத் தனிச் செந்தமிழ்ப் பெருநூலை வெளிப்படுத்திய போது, நாயகரவர்கட்கு அகவை 43; 1892 இல் அவர்கள் தமிழ்முதற்பெருங்காப்பியமான சிலப்பதிகாரத்தை வெளியிட்டபோது, நாயகரவர்கட்கு அகவை 46; 1893- இல் அவர்கள் புறநானூறு என்னும் அரும்பெருந்தமிழ்ப் பழ நாகரிகமாட்சி தெரிக்கும் விழுமிய நூலை வெளிப்படுத்திய போது நாயகரவர்கட்கு அகவை 47; இங்ஙனமாக இவ்வரும் பெருந் தமிழ் நூல்களெல்லாம் நாயகரவர்கட்கு முப்பத்தெட் டாண்டு அகவை சென்ற பின்னர் வெளிப்பட்டமையால், இவர்கள் தமது இளமைக் காலத்திலேயே இவைகளைப் பயின்று தனிச் செந்தமிழ் வளனும் விழுப்பமும் உணர்ந்தின் புறுதற்கு இடமில்லாமலே போயிற்று. அஃதொக்குமாயினும், அவர்கள் தமக்கு நாற்பதாண்டு நிறைந்தநாள் தொட்டேனும் வெளிப்போந்த அந்நூல்களைப் பயிலாமை என்னையெனின் அதன் உண்மையைச் சிறிது விளக்குவாம். நாயகரவர்கள் முதன்முதல் இயற்றிவெளியிட்ட நூல் வேதபாஹ்யசமாஜகண்டநம் என்று கருதப்படுகின்றது; அதுவெளிவந்த காலம் கி. பி. 1868 - ஆம் ஆண்டென்றுங் குறிக்கப்பட்டிருக்கின்றது .அங்ஙனமானால், அப்போது நாயகரவர்கட்கு ஆண்டு இருபத்திரண்டு தான் ஆக வேண்டும் . இந்நூல், வேதசமாஜம், பிரம்மசமாஜம் எனப்பெயர் பூண்ட புதுக் கூட்டத்தார் உருவவழிபாடு கூடாதென்று வரைந்து வெளியிட்ட ஒருசிறு நூலை மறுத்து உருவ வழிபாட்டின் உண்மையினையும் அதுமக்கள் எல்லார்க்கும் இன்றியமையாததாதலையும் விளக்குவான் வேண்டி இயற்றப்பட்டதாகும். ஆகவே, நாயக ரவர்கள் 22 - ஆண்டுள்ள இளைஞராய் இருக்கையிலேயே சமய வழக்குகளிற் புகுந்து பூசலிடுங் கடமையை மேற் கொண்டார்களென்பது தெள்ளிதிற்புலனாம். சமயப்போர் புரிதலிற் றலையிட்டார்க்கு, வடமொழிதென்மொழிகளிற் கடல்போல் விரிந்து கிடக்கும் அறிவு நூல்களை அல்லும் பகலும் இடைவிடாதாராய வேண்டியிருத்தலின் அவர் இலக்கண இலக்கிய நூல்களை மிகுதியாய் ஆராய்தல் இயலாது. நாயகரவர்கள் பிரம்ம சமாஜத்தாரை மறுக்கத் தொடங்கிய காலந்தொட்டுச், சமய ஆராய்ச்சியிலேயே தமது கருத்து முழுதும் ஈடுபட்டு நின்றார்களென்பது, இவர்கள் சிவாதிக்யரத்நாவளி எனப்பெயரிய சிறந்த நூலின் முதற்பாகத்தை இயற்றி, அதனைச் சுந்தரசிவாசாரியார் என்னும் பெரியவரொருவர்பெயராற் றமது 27-ஆம் அகவையில் வெளியிட்டமையால் நன்கறியக் கிடக்கின்றது. இந்நூல் கி. பி 1873 ஆம் ஆண்டு வெளிப்போந்தது; அதன்பின் எட்டாண்டுகள் கழித்து, அதாவது கி.பி. 1881 இல் சிவாதிக்யரத்நாவளியின் இரண்டாம் பாகம் அவர்களால் இயற்றப்பட்டு வெளிவந்தது. இந்நூல்களில் உண்மை வழாது நடுநின்றாராய்ந்து விளக்கி யிருக்குஞ் சமய நுண்பொருள் களையும் அவற்றிற்காக மேற் கோளாய் எடுத்துக் காட்டியிருக்கும் வடமொழி தென்மொழி நூல்களையும் உற்று நோக்குவார்க்கு, நாயகரவர்கள் தமது கட்டிளமைப்பருவம் முதல் எத்தனை சமயநூல்களை எவ்வளவுகருத்தாய்க் கற்றுத் தெளிந்திருக்க வேண்டுமென்பது தெற்றென விளங்கா நிற்கும் . இவ்வாறு தொடர்பாக இவர்கள் பரந்தாழ்ந்த சமய நூலாராய்ச்சியிலேயே முனைந்து நின்றமையால், தமது முப்பத்தொன்பதாம் ஆண்டிலிருந்து வெளிப்போந்த தொல்காப்பியம், கலித்தொகை, புறநானூறு முதலான பண்டைத் தனிச் செந்தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயிற்றலிற் கருத்தூன்ற மாட்டாதவாரா னார்கள். இவ்வரும்பெருங்கருவி நூல்களெல்லாம் ஒருவர் தமக்கு இருபதாண்டு நிரம்புமுன்னரே பயின்று தெளியற் பாலனவாம். இருபதாண்டிற்குப்பின் அறிவு நூல்களே ஆராய்ந்தறியற்பாலன. நாயகரவர்கள் தமக்கு இருபதாண்டு நிரம்புமுன்னே கிடைத்த நன்னூல் முதலான பிற்காலச் சிற்றிலக்கணங்களையுந், திருக்குறள், நாலடியார், பெரிய புராணம் முதலான இலக்கியங்களையும் நன்கோதி யுணர்ந்தமையால், இருபதாண்டுக்கு மேல் அறிவு நூற் பயிற்சியிலேயே தமது கருத்தைத் தோய்விப்பாராயினர். அறிவு நூற் பயிற்சியிற் கருத்து ஈர்ப்புண்டபின், அதனை மறித்துங் கருவி நூற் பயிற்சியிற் செலுத்துதல் இயலாது. தேமாங்கனியின் சுவைகண்டவர்க்கு, அதனிற் குறைந்த சுவை யுடைய கனிகளில் விருப்பஞ் செல்லாமை இயற்கையன்றே. ஆகவே, நாயகரவர்கள் பண்டைத் தனிச்செந்தமிழ் இலக்கண இலக்கியங் களைப் பயிலாத காரணம் இதுவாதல் கண்டு கொள்க. இவ்வாறு நாயகரவர்கள் பண்டைத் தனிச் செந்தமிழ் நூல்களைத் தமதிளமைப் பருவத்திலேயே பயின்று புலமை நிரம்புதற்கு இடம் வாயாமையால், தமிழுக்குந் தமிழ்நாட்டார்க்கும் நேர்ந்த இழப்புச் சிறிதன்று. நாயகரவர்களின் அரிய பெரிய ஆராய்ச்சியுரைகள் தனிச்செந்தமிழ் உரை நடையில் எழுதப் பட்டிருக்குமாயின் அவை தமிழுக்குப் பெரியதோர் அறிவுக் களஞ்சியமாய் இருந்திருக்கும். ஆனால் அவை வடசொற்கலப்பு மிகுதியும் உடைய உரைநடையில் அமைந்ததே தமிழ்மொழிக்கு ஒரு பேர் இழப்பாயிற்று. நாயகரவர்களைபோல் வடநூல்களைப் பரந்தாழ்ந்து ஆராய்ந்து, அவற்றின் உண்மைநுண்பொருள்கள் சைவசமயம் ஒன்றிலே மட்டுந்தான் பொதிந்துளதெனவும் ஏனை வைணவம் மாயாவாதம் பௌத்தம் சமணம் முதலான மதங்களெல்லாம் வடநூல் தமிழ்நூல் உண்மைக்குமுற்றும் மாறாய்ப் பிற்பிற்காலங்களிற்றோன்றி மக்கள் மெய்யறிவு பெற வொட்டாது தடுத்து அவரைப் பொய்ந்நெறியிற் புகுத்தி மாறாப் பிறவிக் கடலிலே வீழ்த்துவவாயினவெனவும் நன்கு விளக்கி நமதருமைத் தமிழ்மொழியிற் பலநூல்கள் இயற்றியும் பல்லாயிரஞ்சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் பேருதவி புரிந்த பெரியார் இத் தமிழ் நாட்டில் இவர்க்குமுன் எவருமே இல்லை. இவர்க்குப் பின்னும் இதுகாறும் எவருந்தோன்றவேயில்லை. யாங்கூறும் இவ்வுண்மை, நாயகரவர்கள் இயற்றிய நூல்களை நன்கு கற்றார்க்கும், அவர்கள் நிகழ்த்திய விரிவுரை களைக் கேட்டார்க்கும் விளங்காமற்போகாது. நாயகரவர் களின் விரிவுரையாலும் நூல்களாலுஞ் சமய உண்மைகளை உள்ளவாறறிந்து எல்லாம்வல்ல இறைவன் திருவடிக்கண் மெய்யன்புடையராய் ஒழுகுவார் இத்தென்னா டெங்கணும் இன்னும் உளர். அயல்மதங்களிலிருந்தோர் பலர் இவர்களின் மெய்யுரை கேட்டுத் தமது மதத்தைக் கைவிட்டுச் சைவ சமயம் புகுந்தனர். இவர்கட்கு மாயாவாத வேதாந்த குருவாயிருந்த அச்சுதானந்த சுவாமி என்பவரே தம் மாணவரான நாயகர வர்கள் ஆராய்ந்து நிகழ்த்திய மெய்யுரையால் மெய்யறிவு விளங்கு மாயாவாதத்தைவிட்டுச் சைவ சித்தாந்தம் புகுந்து, தமது பெயரையும் ஏகாம்பர சிவயோகிகள் என்று மாற்றிக் கொண்டனரென்றால் இவர்களுடைய மெய்யறிவின் மாட்சியையும் அதனை விளக்குஞ்சொற் பேராற்றலையும் வேறெங்ஙனம் புகலவல்லேம்! இவர்களாற் சைவசிந்தாந்த உண்மையும் மற்றைமதப் பொய்ம்மையும் பிரித்துணர்ந்து தெளிந்து சைவசித்தாந்தத்திற்கு உண்மைத் தொண்டாற்றிய பார்ப்பனரும் பலருளர். அவருள் வெங்கடரமணதாசர், குருசாமி சர்மா, குளித்தளை அரங்கசாமிஐயர் என்னும் வேதாகம சைவசித்தாந்தப் பெரியார் பெயர்களை அறியாத சைவர்கள் இத்தென்னாட்ட கத்திரார். இவ்வந்தணர் மூவரிற் குளித்தளைஅரங்கசாமி ஐயரவர்கள் இஞ்ஞான்றுஞ் சைவத்தெண்டாற்றி வருகின்றனர். வெங்கடரமணதாசரும், அரங்கசாமி ஐயரவர்களுஞ் சைவ சித்தாந்தம் புகுதற்குமுன் வைணவ மதத்தில் இருந்தோராவர். இளமைக்காலத்தில், அதாவது பதினேழாண்டு வரையில் மாயாவாத நூல் பயிற்சியிலே உழன்று, சைவசித்தாந்தவுண்மை சிறிதும் அறியாதிருந்த எளியேமும், நாயகர்வரகள் நாகைநீலலோசனி திருச்செங்கோட்டு விவேதிவாகரன் என்னுங்கிழமைத்தாள்களில் அஞ்ஞான்று வெளியிடுவித்த ஆராய்ச்சிக் கட்டுரைகளைக் கற்றும், அவர்கள் அஞ்ஞான்று நாகப்பட்டினத்தில் அடுத்தடுத்துப்போந்து தேன்மாரியெனப் பொழிந்த விரிவுரைகளைக் கேட்டும் மாயாவாதம் முதலான மதப்பொய்ம்மையுஞ் சைவசித்தாந்த மெய்ம்மையும் பகுத்துணர்ந்து தெளிந்து, சைவசித்தாந்தம் புகுந்து, எல்லாம்வல்ல தனிப்பெருந்தெய்வமான சிவபிரான்றிருவடிக்குத் தொண்டு செய்யும் பேறுபெற்றேம். இன்னுந், தங்கணவனையிழந்து கைம்பெண்ணாய்ப் போன ஒரு பார்ப்பன அம்மையார் தமக்கு ஒரே மகனாயுள்ள ஓர் இளைஞனை ஆங்கிலங்கற்பித்தற் பொருட்டு ஒரு கிறித்துவர் கல்லூரியில் விடுப்ப, அவ்விளைஞனும் அதில் நன்கு கற்றுத்தேறி, ஆங்கில மொழிப்புலமை யொடு நுண்ணறிவும் பெற்று விளங்கினான். அவன் கற்ற அக்கல்லூரிக் கிறித்துவப் பாதிரிமார் அவனுக்குக் கிறித்து சமய உண்மை களை நன்கெடுத்துப் புகட்டியதோடு, அவனைத் தமது மதத்திற் புகுமாறும் அழைத்தனர். அவ்விளைஞனுங் கிறித்துவ மதக் கொள்கைகள் தன்கருத்துக்கு மிகவும் இசைந்தன வாயிருத்தல் கண்டு, கிறித்துவ மதம் புகுதற்குமுனைந்து விட்டான். இதனைத் தெரிந்த அவன்றன் அன்னையாரான அப்பார்ப்பன மாது, தமது மரபில் வேத வியாகரணங்கள் பல்லாண்டு கற்றுப் புகழ் ஓங்கி விளங்கிய சமஸ்கிருத பண்டிதர்கள் பால் அவனை விடுத்து, அவர்களால் அவனைத் திருத்துதற்கு முயன்றார். ஆனால், அவ்விளைஞன், அப் பண்டிதர்கள் எடுத்துக்காட்டிய மாயாவாத வைணவக் கொள்கைகளையெல்லாம் மறுத்துக், கிறித்துமதக் கொள் கைகளே பொருத்தமுள்ளனவென்று நிறுவினான். இங்ஙன மாகச் சமஸ்கிருத பண்டிதர் எவராலும் இந்துமதமே உண்மை யானதென்று அவற்குக் காட்டப்படாது போகவே அவ் விளைஞன் கிறித்துமதம் புகுவது உறுதிப்படலாயிற்று. அவன்றன் அன்னையாரோ தன் ஒரே மகனை உயிரோடு இழந்து விடநேர்வதை நினைந்து நினைந்து அழுதகண்ணுஞ் சிந்திய மூக்கும் உடையவராய் ஆற்றொணாத் துயரம் அடைந்தனர். இது நிகழ்ந்தது திருச்சிராப்பள்ளியிலென்பது கேள்வி. அப்போது அவ்வூரில் நிறுவப்பட்ட சைவசித்தாந்த சபையினர் நாயகரவர்களை விரிவுரை செய்தற்கு அழைத்தனர். நாயகரவர் களும் அதற்கிசைந்து அங்கே சென்று சைவசித்தாந்த விரிவுரைகள் செய்யலானார்கள். அந்நேரத்தில் அப்பார்ப்பன மாதுபடும் ஆறாத்துயர்கண்ட சைவர் சிலர், அம்மே, இப்போது இவ்வூரில் வந்து விரிவுரை ஆற்றுஞ் சோமசுந்தர நாயகரவர்களின் சைவசித்தாந்தப் பொருள் விளக்கத்தைக் கேட்டால், நும்மகன் கிருத்துமதம்புகான்; ஆகையால் அவனை அவ்விரிவுரைகேட்க அழைத்துச் செல்க. எனக் கூறினர். அது கேட்ட அவ்வம்மையார், வழுக்கி வீழ்வானுக்கு ஒரு கொழு கொம்பு கிடைத்தாற் போல மிக மகிழ்ந்து, நாயகரவர்கள் நிகழ்த்திய விரிவுரைகளுக்குத் தம் மகனைக் கெஞ்சி அழைத்துச் சென்றார். அவ்விளைஞன் நாயகரவர்களின் ஒரு விரிவுரையைக் கேட்டதும் அதன்கண் உள்ளம் ஈர்க்கப்பட்டுப் பின்னும் அவர்களின் விரிவுரைகளைக் கேட்கலானான். அவை தம்மைக் கேட்கக் கேட்கச் சைவசித்தாந்தக் கொள்கையே மக்களைக் கடைத்தேற்றுதற்கேற்ற உண்மை உடையதாதல் நன்குணர்ந்து, பின்னர் நாயகரவர்கள் பால் நேரேயுஞ் சென்று, தனக்குள்ள ஐயமெல்லாம் எடுத்தியம்ப, அவர்கள் அவைகளையெல்லாம் முற்றும் நீக்க, அவன் அளவு கடந்த களிப்புடையனாய், உடனே அவர்களின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, அவர்கள் அளித்த திருநீற்றை அணிந்து தூய சைவ னானான். இதனைக் கண்ட அவ்விளைஞனின் அன்னை யார் சொல்லுக்கு அடங்கா மகிழ்ச்சி மீதூர்ந்து, எங்கள் பார்ப்பனச் சாதியிற் பல்லாண்டு சமஸ்கிருதம் படித்த சாஸ்திரிகளெல்லாம் என் மகனைத் திருத்த மாட்டாமற் போனார்கள். கடைசியாக நாயகரவர்களன்றோ என்மகன் கிறிஸ்துமதம் போகாமல் நமது சைவமதத்திலே நிலைப் பட்டான். என்று தம்மவரிடத்தெல்லாஞ் சொல்லிச் சொல்லி மகிழ்வதானார். அங்ஙனம் நாயகரவர்களாற்றிருத்தப்பட்ட இளைஞர் இன்னாரென்பது எமக்குத் திட்டவட்டமாய்த் தெரியாது. ஆனாலும் அவ்விளைஞர் தாங் குருசாமி சர்மா வாயிருக்கலாமென்று கருதுகின்றேம். இன்னும், நாகை வெளிப் பாளையஞ் சைவ சித்தாந்த சபைத் தலைவரும் மாப்பெரும் புராண நூற் பாவலரான மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள் முதலான அறிஞர்களாற் பாராட்டப்பட்டவரும், எமதிளந்தைப் பருவத்தில் எமக்குச் சைவநூல் உண்மைகள் பலவற்றை அறிவுறுத்தியவருமான சோ. வீரப்பசெட்டியார் என்னும் பெரியார் சைவவொழுக்கத்திற்றலை நின்றவரேனும் மாயாவாத வேதாந்த நூற் பயிற்சியிற் மிகச் சிறந்த வராயிருந்தார். இவரை ஆசிரியராகக் கொண்டு அப்பக்கத்தில் அக்காலத்தில் வேதாந்த நூலுணர்ச்சிபெற்றார் பலர். அஞ்ஞான்று சைவசித்தாந்தம் உணர்ந் தாரும், அதனைப்பிறர்க்கு உணர்த்துவாரும் மிக அரியர். யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலரவர்கள் சைவசித்தாந்தம் நன்குணர்ந்த பெரியாரேயாயினும், அவர் பெரும்பாலும் புராணப் பிரசங்கம் புரிவதிலேயே முனைந்து நின்றார். சைவ வைணவ மாயாவதாக் கொள்கைகளின் வேறுபாடுகளை விளங்கக் காட்டி, அவற்றுட் பொருந்து வதிது பொருந்தாத திதுவென்று பலரறிய மலைவறுத்துச் சொல்லிச் சைவ சித்தாந்தத்தைப்பரவச் செய்தவரல்லர். இறைவன் மேற்குழைந் துருகி இனிய எளிய செந்தமிழ்ப்பாக்கள் பாடிய இராமலிங்க வள்ளலாருஞ் சீவகாருண்யப் பிரசங்கங் கேட்பார். நெஞ்சங் கரையச் செய்து அதனையே எங்கும் பரவச்செய்தாரன்றித் தாம் மிக நுட்பமாய் அரிதினுணர்ந்த சைவசித்தாந்தப் பொருள்களையெல்லாம் எல்லார்க்கும் விரித்தெடுத்துச் சொல்லி விளங்க வைத்தாரல்லர். அதனால் அந்நாள் சைவவொழுக்கத்திற் சிறந்து நின்று சிவ வழிபாடு செய்தாருங் கூட சைவபுராணகதைகள் அறிந்தவரேயல்லாற் சைவ சித்தாந்தஞ் சிறிதும் அறிந்தவரல்லர்; அவரெல்லாம் விழுமிய ஞான நூலென்று பிழைபடக் கருதிப் பயின்றவை களெல்லாம் மாயாவாத வேதாந்த நூல்களே யல்லாற் சித்தாந்த நூல்கள் அல்ல. அத்தகையதான அக்கால நிலை மைக்கு ஏற்பவே வீரப்பசெட்டியாரவர்களுஞ் சிவபுராணங்கள் நன்கோதிச், சிவவழிபாட்டில் உறைத்து நின்றவர்களே யாயினும், மிக வுயர்ந்த ஞான நூல்களெனக்கருதி அவர்கள் பயின்றன வெல்லாம் மாயாவாத வேதாந்த நூல்களேயாகும் இப் பெரியார் பிறகு தமது முதுமைக்காலத்தில் நாயகரவர்கள் நாக பட்டினத்திற் பல காற்போந்து பலகால் நிகழ்த்திய அருமருந்தன்ன விரிவுரைகளை ஊன்றிக்கேட்ட பின்னரே, தாம் உயர்ந்த ஞானமெனக் கருதிக் கைக்கொண்ட மாயாவாத வேதாந்தத்தின் சிறுமையுஞ், சைவசித்தாந்தத்தின் பெருமையும் பிரித்துணர்ந்து தெளிந்து மிக உறைப்புள்ள சைவ சித்தாந்தச் செல்வரா யினர்கள். யாம் நாயகரவர்களின் விரிவுரைகளைக் கேட்கவும், அவர்களியற்றிய நூல்களைப் பயிலவுந் தெரியாச் சிறு பருவத்தே மாயாவாத நூல்களைப் பயின்று கொண்டிருந்த போது, அந்நூற் பொருள்களை நன்கெடுத்து விளக்கவல்லார் வீரப்ப செட்டியாரவர்களே யென அன்பர் சிலர் சொல்லக் கேட்டுச், செட்டியாரவர்கள் பால் அந்நூற்பொருள் கேட்க அடுத்தக்கால், அவர்கள் அவை மாயா வாதப்பொய்ப் பொருள் நிறைந்தவை; அவை தம்மை நீபாடங்ககேட்டல் ஆகாது எனக் கூறி, அவற்றை எமக்குப் பாடஞ்சொல்ல மறுத்துச் சைவ புராணங்களையே யாம் பயிலுமாறு செய்து வந்தார்கள். இவ்வாறாக, மாயாவாதத்தில் அழுத்தமாய் நின்ற சைவப்பெரியாராகிய வீரப்பசெட்டியாரவர்களே தாம் நீண்ட காலமாகக் கைக் கொண்டிருந்த மாயாவாத வேதாந்தத்தின் பொய்மை யுணர்ந்து, சைவசித்தாந்த மெய்ம்மைதேறிச் சைவ சித்தாந்த ஆசிரியரானதும் நாயகரவர்களின் விரவுரைகளைக் கேட்டு, அவர்களியற்றிய நூல்களையும் பயின்ற பயிற்சியினாலே யாம் என்பது. இன்னுந், தமிழ் நாட்டறிஞரில் நாயகரவர்களாற் சைவசித்தாந்தம் புகுந்தார் பலருளர்; அவரையெல்லாம் ஈண்டெடுத்துக்காட்டலுறின் இச்சுருக்கவரலாறு மிக விரியும். நாயகரவர்களின் பெருக்க வரலாறு எழுதல் நேருமாயின் அதன்கண் அவரையெல்லாம் எடுத்துக்காட்டுங் கருத்துடை யேம். அது நிற்க. இங்ஙனமாக வடநூல் தமிழ்நூல்களில் அரிதின் உணர்தற்பாலனவாய்க் கிடந்த சமய நுண்பொருள்களை யெல்லாம் எண்ணிறந்த சொற்பொழிவுகளானும், பற்பல நூல்களானும் வெளிப்படுத்தி, இத்தென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடரென உலவித் தமிழ்மக்கள் உள்ளத்துப் பரவிய அறியாமை இருளைப்போக்கி, அவர்க்கு அறிவொளிகாட்டிய சித்தாந்த ஆசிரியரான சோமசுந்தர நாயகரவர்கள் தாம் அரிது முயன்றெழுதிய பலநூல்களை யுந் தனிச்செந்தமிழ் உரை நடையில் எழுதியிருந்தனர்களாயின் அது தமிழுக்கு அவை தமிழ் மக்கட்கும் விலையிடுதற்கரிய முழுமணிகள் நிறைந்த கருவூலமாய்ச் சிறந்து திகழா நிற்கும். ஆனால், அப்பேறு எம்மனோர்க்கு வாய்த்திலது. விரும்பினால் நாயகரவர்கள் தனித் தமிழ் உரைநடையில் எதனையும் எழுதவல்லவர்களென்பது, அவர்கள் இயற்றிய பலதமிழ்ச் செய்யுட்களானும், ஆசார்யப்பிரபாவம் என்னுந் தமதரிய நூலின் பல இடங்களில் அவர்கள் செந்தமிழ்ச் சுவைபெருக வெழுதிய உரைப்பகுதிகளானும் நன்கறியப்படும். இதற்குச் சான்றாக, இவர்கள் ஆசார்யப் பிரபாவ நூலின் இறுதியில் திருஞானசம்பந்தப்பெருமான் மேற்பாடியிருக்குஞ் செய்யுட்களில் ஒன்றை ஈண்டெடுத்துக் காட்டுதும். உலக மெலாந் தொழ மன்றுள் ஒப்பில் நடங்குயிற்றும் உமை கேள்வன் உண்மை, இலக எமக் கருண்மாரி பொழி முகிலே! இன்ப நிலை ஏழையேனுக், கலகில் பெருங் கருணையினாய் அளித்தாய் நின் அருட்பெருமை யாரேகண்டு சொலற்குரியார்? வணிகனுயிர் மருகலில் அன்றழைத் தருளுஞ் சுருதி வாழ்வே! என்னும் இச்செய்யுளிற் கருணை சுருதி என்னும் இரண்டே வட சொற்கள்; மற்றையவெல்லாந் தனிச் செந்தமிழ் சொற்களாகும். செந்தமிழ் உரைநடைக்கு இரண்டு பகுதிகள் அந்நூலினின்றே எடுத்து இங்குவரைகுவாம். சம்பந்தப்பிள்ளையார் திருவாலவாய்த் திருக்கோயிற் கோபுர வாயிலில் அணையுங்கால், எதிர்ப்பட்ட பண்டி மாதேவியார் ஓர்புறம் ஒதுங்கி அஞ்சலி கூப்பிநின்றனர். அப்போது குலச்சிறையாராகும் மந்திரியார் அவரைச்சுட்டி, இவரே பாண்டிமாதேவியார் என்றஅளவில், சுவாமிவிரைந்து தமது மெல்லிய சிறிய பூம்பதங்கள் பூமியிற் பொருந்த நடந்து, நெற்றியிற் சுட்டி அணிந்து கண்களின் மைதீட்டி விளங்கிய தம் மிளங் ழவிப்பருவத் திருக்கோலம் அவர் கண்டு மகிழ்வெய்த அருகே சேரலுங் கண்களில் நீர்ததும்பத் திரு முலைகளிற் பால் சுரந்திட அவரைவணங்கி எம்பெருஞ் செல்வமேயென வாழ்த்தி யிருகரங்கள் ஆரவெடுத்தணைத்து உச்சிமோந்து முத்தமிட்டு மகிழ்வெய்தினர் இதன் கண் அஞ்சலி மந்திரி சுவாமி பூமி கரம் என்னும் ஐந்து வடசொற்கள் மற்றையவெல்லாந் தமிழ்; சம்பந்தம் என்னும் வடசொல் ஆளுடைய பிள்ளையார்க்கு இறைவனைக் கண்டபின் வந்த இயற்பெயர். குவிந்து நீண் டிருக்குங் கட்டிடங் கோபுரம் ஆதலானும், இது தமிழ் நாட்டுத் திருக்கோயில்களிலன்றிப், பழைய வடநாட்டுக்கோயில்களிற் காணப்படாமையானுங் கோபுரம் என்னுஞ் சொல் வடமொழிக்குரியதாகாது, தமிழ் மொழிக்கே உரித்தா வதாமென்க. பதம் நிலத்தே பதிவதென்னும் பொருளிற் காலடிக்குப் பெயராய் வந்த தமிழ்ச்சொல். மேற்காட்டிய செய்யுளாலும் உரைப்பகுதியாலும் நாயகரவர்கள் தாம் வேண்டுமென்று முனைந்தால் உரையும் பாட்டுந் தனித் தமிழிற்சுவைபெருக எழுதவல்லவர்களென்பது நன்குவிளங்கும். அங்ஙனமிருந்தும், அவர்கள் வடசொற்கள் மிகவிரவிய உரைநடையில் தம்முடைய நூல்களை இயற்றலானது ஏனெனில், அவர்களது காலத்தில் தனித்தமிழ் எழுதும் பழக்கம் பெரும் பாலும் மாறிப்போயிற்று. இற்றைக்கு அறுநூறு ஆண்டுகட்கு முன்னேயிருந்த உமாபதி சிவனார் என்னுஞ் சைவ சித்தாந்தக்குரவரில் நாலாமவர் காலம் வரையில் தமிழ்மொழி தூயதாகவே வழங்கப்பட்டு வந்தது. அஃது அக்காலம் வரையில் இயற்றப்பட்டு வழங்கிய தமிழ் நூற்பாக்களையும் உரைகளையும் உற்றுநோக்குவார்க்கு நன்குபுலனாம். இற்றைக்கு எழுநூறு ஆண்டுகட்கு முன்னிருந்த செய்யுள் நூல்களே யன்றி அந்நூல் உரைகளுங்கூட எத்துணை இனிய தனிச்செந்தமிழ் நடையில் ஆக்கப்பட்டுள்ளன வென்பதை நச்சினார்க்கினியர், பரிமேலழகர், அடியார்க்குநல்லார், சேனாவரையர், இளம்பூரணர், நக்கீரனார் முதலான உரையாசிரியன்மார் உரைகளைச் சிறிது பயில்வாரும் எளிதில் அறிவர். இடைக் காலத்துச் செய்யுள் நூல்களைவிட அக்காலத்தெழுந்த மேற்குறித்த உரையாசிரியரின் உரைகளே தனிச் செந்தமிழ் வளன் நிரம்பித் துளும்புகின்றன. மற்று, உமாபதி சிவனார் காலத்திற்குப் பின் வந்த தமிழ் நூல்கள் பலவுமோ வடமொழிக்கண் உள்ள புராணங்கள் காவியங் களினின்று மொழிபெயர்த்துச் செய்யப்பட்டனவாய் முடிந்த மையால் அந்நூல்களை ஆக்கியோர் வடமொழிச் சொற்பொருள் வழக்கையே மிகுதியுந் தழீஇப்பாட்டும் உரையும் இயற்ற லாயினர். வில்லிபுத்தூரர் பாரதச் செய்யுட்களில் வடசொற்கள் மிகுதியாய்க் கலந்திருக்கின்றன. பரஞ்சோதியாரின் திருவிளை யாடற்புராணம், கச்சியப்பரின் திருத்தணிகைப் புராணம் முதலியவற்றிலும் அங்ஙனமே. வைணவ ஆழ்வார்கள் பாடிய நாலாயிரப்பிரபந்தச் செய்யுட்கள் பெரும்பாலுஞ் செந்தமிழ்ச் சொற்களாற் றொடுக்கப்பட்டிருந்தும், அவை தமக்குப் பிற்காலத்தார் வகுத்த உரைகள் முக்காற் பங்குவடசொல்லுங் காற்பங்கே தமிழ்ச்சொல்லும் வாய்ந்தனவாய் இருக்கின்றன. சிவஞான சித்தியார்க்குச் சிவாக்கிரயோகிகளும் ஞானப் பிரகாசரும் வகுத்த உரைகளிலும் அங்ஙனமே முக்காற் பங்குக்கு மேல் வடசொற்கள் விரவியிருக்கின்றன. செந்தமிழ்ச் சொற்பொருள் வளந் துறுமத் தொல்காப்பியப் பாயிரவிருத்தி சூத்திரவிருத்தியுரைகளுஞ் சிவஞானபோதச் சிற்றுரை பேருரைகளுஞ் சிவஞான சித்தியுரையும் வகுத்த ஆசிரியர் சிவஞான முனிவருங்கூடச் சிவசமவாதவுரை மறுப்பாக வரைந்த வழக்குரை நூல்களில் வடசொற்களை நிரம்ப இயைந்திருக்கின்றார். என்றாலுஞ், சென்ற ஐந்நூறாண்டு களிற்றொடர்பாய்த் தோன்றிச் சைவ வைணவ நூல்கட்கு உரைகள் வரைந்து விட்ட உரைகாரரால் இறந்து போம் நிலைக்கு வந்த நந்தமிழன்னைக்குப் புத்துயிர் கொடுத்து, அவள் பண்டு போல் எல்லாநலங்களுந்துலங்கி வீறி உலவச் செய்த தனித்தமிழ்ப்பேராசியரியர் சிவஞான முனிவரரே என்பது உணரற்பாற்று. சிவசமவாத மறுப்பாக இவர்வரைந்த இரண்டொரு சிற்றுரை நூல் தவிர இவர்தம் ஏனையுரை நூல்களெல்லாந் தனித்தமிழ் மணங் கமழுந் திறத்தனவா யிருக்கின்றன. அஃதொன்றோ இவருடைய உரை நூல்களிற் பொதிந்து கிடக்கும் அரியநுண் பொருள்களும் உண்மைப் பொருள்களும் அவை தம்மைப் பயில்வாருள்ளத்தை அறிவொளி கொளீஇத் திகழச் செய்யும் பெறற்கரும் பயன்றருவனவாயும் மிளிர்கின்றன. இருந்த வாற்றால், நஞ்செந்தமிழ் தன்பண்டைப் பெருநலன் எய்தி விளங்கச் செய்தபெரியார் ஆசிரியர் சிவஞான முனிவர ரேயாவர் அஃது ணர்ந்து உண்மைத்தமிழ் மக்களனைவரும் அவரை நெஞ்சார வாழ்த்தி வழிபட்டு வருதலே செயற்பாலார். இங்ஙனந் தனித் தமிழ்ச் சுடரைத் தூண்டி ஒளிர்வித்த ஆசிரியர் சிவஞானமுனிவரரின் திருவடிச் சுவடு பற்றிப் பின்வந்ததமிழறிஞர், எல்லாரும் பாட்டும் உரையும் இயற்றியிருந்தனராயின் நஞ்செந்தமிழ் மொழி தன் பண்டை மாட்சிகுன்றாப் புத்தெழில் நலங்கனிந்து திகழ்ந்திடாநிற்கும். ஆனால் அதற்குப் பேரிடையூறாக மாயாவாத மதத்தினரும் வைணவ மதத்தினருந் தோன்றி, முக்காற் கூறுக்கு மேல் வடசொற்கலந்த போலித் தமிழுரை நூல்களே இயற்றி எங்கும் பரப்பிவரலாயினர் அவரை எதிர்ப்பான் புக்க சைவ சமய அறிஞர்களும் மற்று அச் சமயத்தவரைப்போலவே தாமும் வடசொற்கலந்த உரைநூல் எழுதுதலையே தமக்குப் பெருமை தரும் ஒருபேரொழுகலாறா மேற்கொண்டு வரலானார். தம்மையே வடமொழிக்குரியவராகப் பிழைபடக் கருதி வடமொழிப் பயிற்சியை உயர்வாகவுந் தமிழ் மொழிப் பயிற்சியை இழிவாகவுந் நினைந்தும் பேசியும் எழுதியும் வருவாரான பார்ப்பனர்களில் ஒரு பாதியார் மாயா வாதிகளாகவும் மற்றொருபாதியார் வைணவர்களாகவும் இருத்தலால் அவர்பால் வடசொற்கலந்த கொச்சைக் கலப்புத் தமிழையன்றித் தூய தனித் தமிழ் வழக்கைக் காண்டல் இயலுமோ? இயலாதன்றே. ஆகவே, பார்ப்பனர்களுக்குக் குருவான சங்கராசாரியாரிடம் மாயாவாத உணர்ச்சி பெற்று அவர்க்கு மாணாக்கராய் முதற்கண் ஒழுகிய அச்சுதானந்தசுவாமிகளும், அவ்வச்சுதானந்தரிடம் மாயாவாதங்கற்று முதலில் மாயாவாதியாய் ஒழுகிய நம் நாயகரவர்களுந் தங்குருவையும் அவர்தம் இனத்தவரையும் போற் றாமும் வடசொற் கலப்பு மிகுதியும் உடைய வழக்குரை நூல்கள் தமிழில் எழுதலானது ஒரு வியப்பு அன்று; அஃதவர்க்கு அந்நாளில் இயற்கை வழக்காய் இருந்தது. மேலும், நாயகரவர்கள் தமதிளமைக் காலத்திற்பயிலுதற்குப், பண்டைத் தனித் தமிழ் இலக்கியங்களிற் பெரும்பாலன அந்நாளில் அச்சேறி வெளிப் போந்திலாமையின், அவர்கள் அவற்றைக் கற்றுத்தனித்தமிழ் மாட்சி அறிதற்கு இடம் பெற்றிலர்களென்பதூஉம் மேலெடுத்துக் காட்டினாம் இவ்வாறாக நாயகரவர்கள் வரைந்த உரைநூல்கள் அத்தனையும் வடசொற்கலப்பு நிரம்ப வாய்ந்தனவாய் தமிழ் ஒன்றே அறிந்த தமிழ் மக்களால் எளிதில் அறியக் கூடாதனவாய் அமைந்ததற்குக் காரணங்கண்டு கொள்க. நாயகரவர்கள் இயற்றிய வழக்குரைநூல்களின் நடையில் வடசொற்கலப்பு மிகுதியும் உளதாதல், சிவாதிக்யரத்நாவளி என்னும் நூலின் முதற்பாகத்திற்போந்த, இவ்வுண்மையறியாமல் சிவாகமங்களுக்கு அப்பிரமாணியம் சொல்லுமிடத்துக் காயத்திரீ மந்திர ஜபபுரச் சரணவிதிகளையும், ஜபநியம ஹோமதர்ப்பணாதி விதிகளையும் விளங்கக் கூறுவது ஆகமமேயாதலான் சகலபிராஹ்மண்ய முக்கியமாகிய காயத்திரீ மஹாமந்திரங் களுடைய ஜபஹோமாதிகளும் அகாரியங்களாகும். இவற்றை விதித்த வேதமும் அப்பிரமாணியமென்பதுதானே பெறப்படும் என்னும் இவ்விருசொற்றொடர்களில் உள்ள நாற்பத்து நான்கு சொற்களில் இவ் உண்மை அறியாமல் சொல்லும் இடத்தும் விளங்க கூறுவது ஆகலான் ஆகிய உடைய ஆகும் இவற்றை என்பது தானே பெறப்படும் என்னும் பதினைந்து சொற்கள் மட்டுமே தமிழ் மற்றை இருபத்தொன்பது சொற்களும் வடமொழியாகும். இத்துணை வடசொற்கள் கலந்த ஒரு நூலைத், தமிழ் ஒன்றே அறிந்த எந்தத் தமிழ்மகனேனுங் கற்று எளிதில் அறிந்து கொள்ளல் இயலுமோ? இயலாதே. இதனாலன்றோ நாயகரவர்கள் மிகவும் ஆராய்ந்தெழுதிய அருமருந்தன்ன நூல்களிற் பல இஞ்ஞான்றுள்ள தமிழ்மக்களாற்றேடிப் பயிலாது கைவிடப்பட்டன? நாயகரவர்கள் இயற்றிய சிறந்த நூல்களிற் பெரும்பாலான இங்ஙனமே வடசொற்கலப்பு மிகுதியும் உடையவாய் இருத்தலால், அவை தமிழ் மக்களுக்குப் பயன் படாநிலையிலிருக்கின்றன என்றாலும், வடமொழிவல்லாரைக்கொண்டு நாயகரவர்கள் இயற்றிய நூல்களிற் போந்த வடசொற்கள் சொற்றொடர்களுக்குப் பொருள்தெரிந்துகொண்டு அவையிற்றைப் பயில்வார்க்கு அவை முழுமுதற்கடவுளைப்பற்றிய உண்மைகளையும், மலம் மாயை இருவினைகளைப் பற்றிய இலக்கணங்களையும், இவற்றின் மெய்ம்மைகளைத் தெரிந்து அன்பு அருள் நெறிகளைக் கடைப்பிடித்து ஒழுகுதலால் மக்கள் பெறும் பேறுகளையும், இவைதமக்கு முரணாகப் புரட்டுரை பகர்ந்தார் கோள்களின் பொய்ம்மைகளையும் நன்கு தெருட்டுந் திறத்தனவாய் விளங்கா நிற்கும் என்க. யாம் நாயகரவர்களின் நூல்களைப்பயின்று அவர்களை யடுத்த இளமைக்காலத்தில் நாயகரவர்களின் உரைநடையைப் போல், வடசொற்கலப்புமிகுதியும் உடைய ஓர் உரைநடை எழுத எமக்கும் ஒருசிறு விருப்பம் உண்டாயிற்று என்றாலும் நக்கீரர் சேனாவரையர் சிவஞானமுனிவர் முதலான உரையாசிரியன் மார் வரைந்த தனித் தமிழ்த் தீஞ்சுவையுரைநடையிற் பெரிது பழகிய எமதுளத்தை வடசொற்கலந்த நடைக்குத் திருப்புவது எளிதில் இயலவில்லை. ஆனாலும், நாயகர வர்கள் நடையினைச் சிறிது சிறிது பின்பற்றி, அஞ்ஞான்றெழுதிய எம்முடைய நூல்களின் இடையிடையே வடசொற்கள் சிற்சிலவற்றை இனியமுறையில் இயைத்திருக்கின்றேம். முற்றும் அவர்களைப் பின்பற்றி சொற்களை யாம் அந்நாளிலும் மிகக் கலவாமைக்கு நாயகரவர்களும் ஒரு காரணம் ஆவர். யாம் நாகப்பட்டினத்திலிருந்த அந்நாளில், நாயகரவர்கள் அகரமுதல எழுத்தெல்லாம் என்னுந் திருக்குறள் முதற்பாவுக்கு ஓர் அரிய விரிவுரை எழுதி விடுத்தார்கள். அதனைக் கண்டமாயாவாதியொருவர் அதனை மறுத்து, அதில் திருவள்ளுவர் கருத்துக்கு முற்றும் மாறான தமது மாயாவாதக் கொள்கையைப் புகுத்தி முதற்குறள் வாதம் எனப்பெயரிய ஒரு சிறு நூலை வெளியிட்டார். அதனைக் கண்ட யாம், முதற்றிருக்குறளின் உண்மைப் பொருளை விளக்கிய நாயகரவர்களின் உரையே திருவள்ளுவ நாயனாரின் உண்மைக்கருத்தறிந்த உரையாதலும், அம்மாயாவதியார் நாயகரவர்கள் உரையை மறுத்துத் தமது மாயாவாதக் கோளைத் திருவள்ளுவர் மேலேற்றிக் கூறியவுரை அவரது கருத்து அறிந்ததாகாப் பொருந்தாவுரை யாதலும் பிரிந்தினிது விளங்க ஒரு மறுப்புரை கி.பி. 1898 ஆம் ஆண்டின் முதற்றிங்கள் முதல் நாளில் எழுதத்துவங்கி, ஆறாம் நாளில் அதனை முடித்து நாயகரவர்கள் பாற் கையெழுத்துப்படியைச் சேர்ப்பித்தோம். நாயகரவர்கள் அதனை முழுதும் உற்று நோக்கி ஆராய்ந்து, வடசொல்மிகக் கலவா அதன் செந்தமிழ் உரைநடையினை வியந்து பாராட்டியதோடு, அதனைத் தமது பொருட் செலவிலேயே அச்சிட்டும் வெளிப்படுத்துதவினார்கள். அதன்பின்யாம் சென்னைக்குப் போந்து, 1898 ஆம் ஆண்டு மூன்றாந்திங்கள் ஒன்பதாம் நாளிற் சென்னைக் கிறித்துவ கல்லூரியில் தமிழாசிரியராய் அமர்ந்த காலந் தொட்டு நாயகரவர்கட்கு அணுக்கராய் ஒழுகி வருகையில், வடசொல் மிகக் கலந்த அவர்களது உரைநடையைப் போல் யாமும் எழுதுவது நல்லதாமா? என்பதை அவர்கள்பால் வினவ, அவர்கள் வடசொற்கலவா உனது உரைநடையே இனியதாயும் எவர்க்கும் எளிதிற் பொருள் விளங்கத் தக்கதாயும் இருத்தலால், உனது நடைப் படியே எழுது, எனது உரைநடையைப் பின்பற்றாதே என்று ஆணை தந்தார்கள். அவர்களின் அக்கருத்தை அறிந்தபின் முன்னமே தொல்லா சிரியர் தந்தீந்தமிழ் உரைநடையிற் பழகி அதன் சுவைகண்ட எமதுளத்திற்கு, அவர்கள் இட்டகட்டளைமிகவும் பொருத்த முடையதாகவே காணப்பட்டது. அதுமுதல் தீந்தமிழுரை நடைஎழுதுவதில் எமது உள்ளம் உறைத்து நிற்கலாயிற்று. இது கொண்டு, நாயகரவர்கள் தாம் வடசொற்கலந்த உரைநடை எழுதுவதிற் பழகிவிட்டாலும் அந்நடையில் தமக்கு விருப்ப மில்லாமல், வடசொற்கலவாச் செந்தமிழ் உரைநடையிலேயே விருப்பம் மீதூர்ந்தமை அறியப்படும். அவர்கள் தம்மைப் போலவே வடசொன்மிகக் கலந்த நடையெழுதுதலை எமக்குச் சிறிது அழுத்திச் சொல்லியிருந்தால், யாமும் அங்ஙனமே எழுதித் தமிழுரை வனப்பை சிதைத்திருப்பேம். ஆனால், அங்ஙனம் ஆகாமல் இறைவன் றிருவருளே அவர்களிடை நின்று தடுத்துத் தமிழ் நலனை ஓம்பியது. இங்கு உன்னிக்கவேண்டுவதொன்றுண்டு. நாயகரவர்கள் எழுதுங்கால் வடசொற்களை மிகக் கலந்தெழுதி னாலும், அவைகளிற் பேசுங்காற் பெரும்பாலுஞ் செந்தமிழ் நடையிலேயே பேசிவந்தார்கள். அதனால், அவர்கள் நிகழ்த்திய ஆயிரக்கணக்கான சொற்பொழிவுகள் பலர்க்கும் பெரிதும் பயன்பட்டு உ ண்மையறிவை விளக்குவ வாயின. அவர்கள் இயற்றிய நூல்களாற் பயன்பெற்றவர் தொகையினும், அவர்கள் ஆற்றிய சொற் பெருக்குகளாற் பயன்பெற்றவர் தொகையே மிகப் பெரிது. சொற்பெருக்குகள் நிகழ்த்துங்காற் பேசிய செந்தமிழ் உரை நடையைப் போல் நாயகரவர்கள் தம்முடைய அரிய பெரிய நூல்களைச் செந்தமிழ் நடையில் ஆக்கியிருந்தால், அவை தழிழ்ப் பேழையிற் பொதிந்து வைத்த விலையிடுதற்கரிய மாணிக்கங் களாய்த் திகழ்ந்திடும். ஆனால் அத்தகைய பேறு தமிழ் மக்கட்கு வாயாதுபோயிற்று. இது காட்டியவாற்றால், நாயகரவர்கள் தமதிளமைக்காலத்தில் வடசொற்கலப்புமுக்காற் கூறுக்குமேல் உடைய மாயாவாத வைணவ நூலுரைகளைப் பயின்று அவைகளின் நடையைப் போல் தாமும் எழுதப்பழகியதும், அவர் நாற்பதாண்டு எய்தும் வரையில் பழைய தனிச் செந்தமிழ் இலக்கண இலக்கிய நூல்கள் அச்சாகி வெளிவராததுமே, அவர் வடசொல் மிகுதியாய் விரவிய உரைநடை நூல்கள் இயற்றுதற்குக் காரணங்களாய் நின்றமை இனிது விளங்கா நிற்கும். 2. நாயகரவர்கள் சைவசித்தாந்தம் அறிந்தமை நாயகரவர்கள் தமதிளமைக் காலத்தில் அச்சுதானந்த சுவாமிகள் என்னும் முனிவரரை அடுத்து, அவர்பால் தமி ழிலக்கண இலக்கிய அறிவும், மாயவாத வேதாந்த உணர்ச்சியும் பெற்று, அவர்க்குமிக அணுக்கராய் அன்புமிக்கு ஒழுகி வந்தனர். இவர்கள் தம் ஆசிரியரிடத்து அளவிறந்த அன்புபூண்டு ஒழுகிவந்தமை, இவர்கள் முதன்முதல் இயற்றிய வேதபாஹ்ய ஸமாஜகண்டனம் என்னும் நூன்முகத்தில், அச்சுதானந்தன் எனுந்தனிப்பேர் எய்தித் திணிவளரும் உலகுதித்த திறம்பாடி வல்வினைகள் தீர்ந்துவாழ்வாம் எனக் கூறிய குருவணக்கச் செய்யுளானும், அந்நூலின் ஈற்றிற் குருமான்மியவகவல் எனப் பெயர் தந்து அவர் மேலியற்றிய நீண்டதோர் அகவற்பாவில் உளங்கரைந் துரைக்கும் மொழிகளானும் நன்கறியப்படும். அதுவேயு மன்றித் தம் ஆசிரியர் அச்சுதானந்தரின் கையெழுத்தைப் போலவே, நாயகரவர்களுந் தமது தமிழ்க் கையெழுத்தை எழுதிவந்தமையும் இவர்கள்தம் ஆசிரியர்பால் வைத்திருந்த பேரன்பின்றிறத்தை நன்கு புலப்படுத்தாநிற்கும், இவர்களது கையெழுத்தையும், இவர்கள் ஆசிரியர் அச்சுதானந்தரின் கையெழுத்தையும் ஒருங்குவைத்து ஒப்புநோக்க, அவை யிரண்டற்கும் ஒரு சிறு வேற்றுமைதானுங் காணப்படாமை கண்டு எமதுள்ளம் பெரியதோர் இறும்பூதுற்றது. இன்னும், அச்சுதானந்தர் இயற்றிய தியானானுபூதி என்னும் பாமாலைத் திரட்டின் இறுதியில், நாயகரவர்கள் அவ்வச்சுதானந்தராகிய தம் ஆசிரியரின் வரலாற்றை எண்பத்தைந்து தமிழ்ச் செய்யுள்களிற்பாடிச் சேர்த்திருக்கின்றனர், தியானானுபூதி அச்சிற்பதிப்பிக்கப்பட்ட காலம் பிரபவ ஆண்டு பங்குனித் திங்கள் என்பது அதன் முக ஏட்டிற் குறிக்கப் பட்டிருக்கின்றது, அதனால், இற்றைக்கு எழுபதாண்டுகளுக்கு முன்னேமே அந்நூல் பதிக்கப்பட்டமையும், அதன் கட் டம், ஆசிரியரின் வரலாற்றினைச்செய்யுளாகப்பாடிச் சேர்த்த நாயகரவர்கள் அப்போது இருபத்திரண்டாண்டுள்ள இளைஞராயிருந் தமையும் அறியப்படும். அதேகாலத்திற்றான் நாயகரவர்களின்முதல் வழக்குரை நூலாகிய வேதபாஹ்ய சமாஜ கண்டனமும் வெளிப்பட்டது, இருபத்திரண்டாண் டுள்ள இளைஞராயிருக்கையிலேயே இவர்கள் தமிழில் உரை நூலுஞ் செய்யுணூலும் இயற்றி வெளியிடும் அத்துணை அறிவாற்றல் வாய்க்கப் பெற்றிருந்ததனைஉற்று நோக்குங் கால், இவர்கள் அதற்குமுன் மிகச்சிறியராயிருந்த பருவத்தி லேயே தமிழ்ப்புலமை வாய்க்கப்பெற்றிருந்தமையும் நன்கு புலனாகும், அறியாமையிருளாற் கவரப்பட்ட மக்கள் உள்ளத்திற்கு அதனைக் கீழ்ந்து அறிவொளியினைத் தோற்று விக்கவல்ல பெரியார், இறைவன் திருவருளாணையால் இடை யிடையே அரியராய் இம்மண்மிசைத் தோன்றுங்கால்,அவர் பெரியரென்பதூஉம், அவரால் அறிவொளி பரவித் துலங்கப் போகின்றதென்பதூஉம் அவரது பிள்ளைமைப்பருவத்தி லேயே அவர் பாற் காணப்படும் அறிவொளித் தோற்றத்தாற் புலனாய் விடுகின்றன. திருஞான சம்பந்தப்பிள்ளையார் தமது மூன்றாம் ஆண்டிலேயே இறைவன்மேல் மிக அழகிய இசைப்பாட்டுகள் பாடியருளியதூஉம் சுந்தரமூர்த்தி நாயனார் தாம் இறைவனாற் றடுத்தாட்கொள்ளப்பட்ட இளம்பருவத்தில் அங்ஙனமே மிகச்சிறந்த தேவார இசைப் பதிகங்கள் அருளிச் செய்ததூஉம் அவ்வுண்மை நிகழ்ச்சிக்கு உரிய உயர்ந்த சான்றுகளாகும். ஆங்கில நாட்டில் மிகச்சிறந்த ஆராய்ச்சியறிவினை ஒளிரச் செய்த ஜான் ஸ்டூவர்ட் மில் (Jons Stuart Mill) என்னும் பேராசிரியர் தாம் மூன்றாண்டுள்ள சிறுவராய் இருந்த ஞான்றே தமக்குரிய ஆங்கில மொழி நூல் களைக் கற்கலானதுடன், தமக்கு அயல் மொழியான கிரீக்கையுங் கற்றுவந்தமையும், ஓவியக்கலையாராய்ச்சியில் துறை போகக்கற்றுத் தேனினும்பாகினும் இனிய ஆங்கில உரைநடையில் விழுமிய நூல்கள் பற்பல இயற்றிய இரஸ்கின் (Ruskin) என்னும் உரைநூற்புலவர் பிரானுந் தமது நான்காம் ஆண்டுக்கு முற்றொட்டே விரிவுரை நிகழ்த்தும் ஆற்றல் பெற்றமையும் அவ்வுண்மை நாட்டும் அயற்சான்றுகளாகும். நாயகரவர்கள் தமது இருபத்திரண்டாம் ஆண்டில் இயற்றி வெளியிட்ட வேதபாஹ்யசமாஜகண்டனம் என்னும் நூலில், இருக்குவேதத்தின் உருத்திராத்தியாயத்தையும், எசுர்வேதத் தின் சதருத்திரீயத்தையும், சாமவேதத்தின் ஏகாதச ருத்திரத் தையும், அதர் வசிகை சுவேதா சுவதரம் என்னும் உபநிடதங் களையும், திருநாவுக்கரையர் தேவாரம், திருமூலர், திருமந்திரம், திருவாசகம், குலசேகர ஆழ்வார் பாடல், இராமலிங்க சுவாமிகள் பாடல், பக்தித்திரயப் பிரகாசிகை, சிவஞான போதம், சிவஞானசித்தியார், பட்டினத்துப் பிள்ளையார் பாடல், ஒழிவிலொடுக்கம், திருக்குறள், சாந்தலிங்க சுவாமிகள் பாடல், தாயுமானசுவாமிகள் பாடல் முதலானவைகளையும் நன்காராய்ந்த முறையில் எடுத்துக் காட்டியிருக்கின்றனர், இத்தனை நூல்களையும், மற்றை இலக்கண இலக்கியக் கருவி நூல்களுடன் ஒருவர் கற்றுப் பேசவும் எழுதவும் வல்லராதற்குக் குறைந்தபடி ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளாவது பிடிக்கும். ஆகவே, நாயகரவர்கள் தமது பதினைந்தாம் ஆண்டிலிருந்தே மேற்காட்டிய உயர்ந்த வடநூல் தமிழ் நூல்களை நன்கு கற்று ஆராய்ந்தறிந்தவர்களாக இருந்தாராகல் வேண்டும். ஆண்டின் முதிர்ந்தவர்களாலும் எளிதிற் கற்றுணர்தற்கியலாத இவ்வறிவு நூல்களையெல்லாம் நாயகரவர்கள் தமது இளம் பருவத்திலேயே நன்கு கற்றுப் புலமை நிரம்பினராயின், இவரது அறிவின்றிறத்தை என்னென்று சொல்லவல்லேம்! மேற்குறித்த வடநூல் தமிழ் நூல்களேயன்றி, ஆங்கில மொழியுந் தெலுங்கு மொழியுங்கூட இவர் ஒருங்கு சேர்த்துப் பயின் றிருந்தார்கள், இக் காலத்திற் போலக் கல்விகற்றற்கேற்ற ஒழுங்குகள் வாயாத அக் காலத்தில் நாயகரவர்கள் நான்கு மொழிகளைப் பயின்று, அவற்றுள் வடமொழி தென்மொழிகளிற் புலமை மிக்காராய் இளம் பருவத்திலேயே துலங்கினதனை நினைந்து பார்க்குங் கால், இவர்கள் தமதிளமைக்காலத்தில் உயர்ந்த கல்வி கற்பதில் எவ்வளவு விழைவும் எவ்வளவு முயற்சியும் எவ்வளவு அறிவும் உடையவர்களாயிருந்தாராகல் வேண்டு மென்பது நன்கு புலனாகா நிற்கும், மேற்சென்றபிறவிகளிற் பயின்று உளந்தூயராகி அறிவு முதிரப் பெற்றோர்க் கன்றி, ஏனையோர்க்கு இங்ஙனம் இளம்பருவத்திலேயே இயற்கை நுண்ணறிவுங், கல்வி வேட்கையும் உண்டாதல் சிறிதும் இல்லை, நூறாண்டு உயிர் வாழ்ந்துங் கல்லாப்புல்லறிவாளர் எத்தனை பேர்! சில்லாண்டுகளே உயிர் வாழினும் கல்விக் கடற்கோர் எல்லையாய் நின்றாருஞ்சிலர் ஆங்காங்குளர் அல்லரோ! ஆதலால், நாயகரவர்கள் சிறுவராயிருந்த காலந்தொட்டே இயற்கை யறிவிலுங் கல்வியறிவிலுஞ் சிறந்தாராய் வடநூல் தமிழ் நூற் புலமைமிக்கு நூலெழுதும் ஆற்றலும் விரிவுரை நிகழ்த்தும் ஆற்றலும் ஒருங்கே பெற்று விளங்கலானது, அவர்கள் பண்டைப் பிறவிகளிற் பயின்ற பயிற்சியின் விழுமிய பயனேயாம் என்க. இனி, நாயகரவர்கள் வேதபாஹ்ய சமாஜ கண்டனம் இயற்றி வெளியிட்டஞான்றும், தம்மாசிரியர் அச்சுதானந்தர் பாடிய தியானானுபூதி என்னும் பாமாலைத் திரட்டின் ஈற்றில் அவரது வரலாற்றை 85, செய்யுட்களிற் பாடிச் சேர்த்த ஞான்றும் சோமசுந்தரன் என்னும் பெயர் பூண்டிருந்தனர், தாம் பாடிய ஆசிரியர் வரலாற்றின் ஈற்றில், இது சோமசுந்தர அடியவர் இயற்றியது என்று குறிக்கப்பட்டித்தலால் இவ் வுண்மை அறியக் கிடக்கின்றது. எனவே, தம் அன்னையார் வைத்த அரங்கசாமி என்னும் பெயர் இவர்கள் இருபத் திரண்டாண்டு எய்துதற்கு முன்னமே மாற்றப்பட்டமை உணரப்படும். இவர்கட்குப் பிள்ளைமைப் பருவத்தில் இடப் பட்ட அரங்கசாமி என்னும் பெயர், இவர்கள் அச்சுதானந்த சுவாமிகளையடுத்துத் தீக்கை பெற்றபோது எடுக்கப்பட்டுச், சோமசுந்தரன் என்னும் பெயர் இவர்கட்குச் சூட்டப்பட்டமை, இவர்கள் இயற்றிய குதர்க்கவாத விபஞ்சிநி என்னும் நூலிலே காணப்படுங் குறிப்பொன்றால் நன்கு துணியப்படும். இனி, நாயகரவர்கள் வேதபாஹ்ய சமாஜ கண்டனம் இயற்றி வெளிப்படுத்திய காலத்திற், சங்கராசாரியார் கைக்கொண்ட மாயாவாத வேதாந்த மதத்தைப் பற்றியிருந்தமை, அதன்கண் இவர்கள் பரமகுருவணக்கம் எனப் பெயர்தந்து பாடியிருக்கும், சிற்பரகுரு வெம தற்புத சங்கரர் பொற்பத மலர்தொழு துற்பவமாற்றுதும் .என்னும் செய்யுளால் நன்குணரப்படும். இவர்கட்குக் குருவான அச்சுதானதருந்தாம் பாடிய தியானானுபூதி முதலிற் சங்கராசாரியாரையே தமக்குப் பரமகுருவாகக் கொண்டு பாடியிருக்கின்றனர். அதுவேயுமன்றி, அவர் தமது மாயாவாதக் கொள்கைக்கிசைய ஹரிநாம ஸங்கீர்த்தநம் எனப்பெயர் தந்து பத்துச் செய்யுட்கள் நாராயணன் மேற்பாடி வழுத்தி யிருப்ப தொடு, தாம் பற்றிய மாயவாதக் கொள்கைகளையும் இடை யிடையே இயைத்துப் பாடியிருக்கின்றனர். அங்ஙனமே நாயகரவர்களுங் குலசேகர ஆழ்வார் பாடல்களை மேற் குறித்த கண்டன நூலில் எடுத்துக் காட்டியிருப்பதுடன், திருமங்கையாழ்வார் வழிப்பறி கொள்ளை செய்ததனையுஞ், சங்கராசாரியார் கட் குடித்ததனையும் அதன்கண் உயர்த்துப் பேசியிருக்கின்றனர். என்றாலும், நாயகரவர்களும் அவர்களின் ஆசிரியர் அச்சுதானந்தரும், அந்நாளிற் றழீஇய மாயவாத வேதாந்தத் திற்கும், பார்ப்பனர் தாங்கைக் கொள்ளும் மாயாவாத வேதாந்தத்திற்கும் வேற்றுமைபெரிதுளது. பார்ப்பனர் பிரமத்தைத் தவிர ஏனையவெல்லாம் பொய்ப்பொருள்கள் என்று சொல்லளவிற் சொல்லிக் கொண்டாலுந், தாம் மற்றை மக்கள் எல்லாரையும்விட உயர்ந்தவரென்பதனைப் பொய் யென்று கொள்ளமாட்டார், தமது கொள்கைப்படி ஆரிய மறையுந்தமிழ் மறையும் தமக்கு ஒருங்கே பொய்யாகல் வேண்டுமாயினுந், தமக்குரியவாகக் கொள்ளும் ஆரிய மறையே இறைவன் அருளிச் செய்த அல்லது இறைவ னோடொப்ப நின்று தனித்து நிலவுந்தனிச் சிறப்பு வாய்தனவாகுமெனவுந், தமிழ்மறையோ அங்ஙனம் ஆகாமல் மக்களாற் செய்யப்பட்டுத் தம்மின் இழிந்தசூத்திரர் மட்டுமே ஓதுதற்குரியனவாகுமெனவும், இறைவனுக்குத் திருக்கோயில் களில் வழிபாடு ஆற்றுங்கால் தம்மவரால் ஓதத்தகுவன ஆரிய வேதங்களேயல்லால் மற்றைத் தமிழ்மறைகள் அல்ல வெனவுஞ், சமய ஆராய்ச்சி செய்யுங்கால் மேற்கோளாகக் கொண்டு பொருள் முடிவு காண்டற்குரியன ஆரிய நூல்களே ஆகுமன்றித் தமிழ் நூல்கள் ஆகாவெனவுங் கொள்ளாநிற்பர்; அதுவேயுமன்றித், தமது கோட்பாட்டிற் கிசையத்திருநீறு, சிவமணி, காவியாடை முதலானவைகளைப் பொய்யென்று கருதிக் கழிக்கவேண்டுவதிருக்க, அவைகளை அணிந்து கொண்டு, திருமாலையுந் திருமாலின் பிறவிகளாகக் கருதப்படுங் கண்ணனையும், இராமனையுமே எந்நேரமும் வாழ்த்துவதும் வணங்குவதுஞ் செய்வர்; அதுமட்டுமோ, கண்ணனும் இராமனும் பார்ப்பன தெய்வம், சிவன் சூத்திர தெய்வமென்றும் இழித்துப் பேசா நிற்பர். பார்ப்பனர் கைக்கொண்ட மாயாவாத வேதாந்தம் அவர் தஞ் சொல்லிலுஞ்செயலிலும் இங்ஙனம் முரண்பட்ட நிலை யினதாய் இருக்கப் பார்ப்பனரல்லாத தமிழறிஞர் கைக் கொள்ளும் மாயாவாத வேதாந்தமோ அவர் தஞ்சொல்லி லுஞ் செயலிலும் வேறொரு நிலையினதாய்க் காணப் படுகின்றது. மாயாவாதம் நுவலுந் தமிழ்க்குழுவினர் மறுமை வழக்கிற் பிரமத்தைத் தவிர மற்றையவெல்லாம் இல் பொருள்கள் எனக் கரையினும், இம்மை வழக்கில் எல்லாம் மெய்யெனக் கொண்டு எல்லா மக்களையும் ஒத்த நிலையில் வைத்துச் சாதிவேற்றுமை பாராட்டாது ஒழுகுவர்; ஆரியவேதங்களை உயர்த்துப் பாராட்டுதல் போலவே சைவ சமயாசிரியர் அருளிச் செய்த தேவார திருவாசங்களையும் அவற்றோடு ஒத்த நிலையில் வைத்துச் சிறந்தெடுத்துக் கொண்டாடுவர்; இறைவனை வழிபடுங்காலங்களில் ஆரிய மறைகளை ஓதுதல் போலவே தமிழ்மறைகளையும் ஓதா நிற்பர்; அங்ஙனமே சமய ஆராய்ச்சி செய்யுங்காலங்களிலும் அவ்விருவகை மறைகளையும் மேற்கோளாகக் கொண்டு பொருள் உண்மை தெளியா நிற்பர்; அஃதல்லாமலுந், திருநீறு சிவமணி காவியாடை முதலான சிவபிரான் திருக்கோல அடையாளங் களை மெய்யெனக் கொண்டு சிவபிரானுக்கே வழிபாடு ஆற்றா நிற்பர், சிவபிரானையே முழுமுதற்கடவுளாக வைத்து அங்ஙனம் வணங்கிவரினுந், திருமாலை இகழாது அவற்கும் வணக்கவுரை கூறா நிற்பர். இது மாயா வாதவேதாந்தழீஇய தமிழறிஞர் செயலாகும். இஃது இவரது செயன்முறையாதல், நாயகரவர்கள் மாயா வாத வேதாந்த வழியராய் நின்றதமதிளமைக் காலத்தில் இயற்றி வெளியிட்ட வேதபாஹ்யசமாஜ கண்டனம் என்னும் நூலினாலும், இவர்தம் ஆசிரியர் அச்சுதானந்த அடிகள் பாடிய தியா னானுபூதி என்னும் பாமாலைத் திரட்டினாலும் நன்கறியப் படும். நாயகரவர்கள் மேற்காட்டிய நூலில் சைவ சமயாசிரியர் நால்வரையும் அவரருளிச் செய்த தேவார திருவாசகங் களையும், அங்ஙனமே ஆரிய வேதோபநிடதங்களையும், பிற்காலத்திருந்த தாயுமான சுவாமிகள் இராமலிங்க சுவாமிகள் முதலான பெரியார் பாடிய பாடல்களையும் மொழி வேற்றுமை சாதிவேற்றுமை சிறிதும் பாராது மேற்கோளாக எடுத்துக்காட்டியிருப்பதுங், கள்வர் குலத்திற் பிறந்த திருமங்கையாழ்வாரையும் பார்ப்பனக் குருவான சங்கரா சாரியாரையும் அங்ஙனமே சாதி வேற்றுமை சமய வேற்றுமை கருதாது ஒக்கவைத்துப் பாராட்டியிருப்பதுந், திருநீறு முதலான சிவவடையாளங்கள் திருக்கோயில்கள் இறைவன் திருவுருவங்கள் என்னும் இவற்றின் உண்மைகளை அங்ஙனமே சிறந்தெடுத்தாராய்ந்து நிறுவியிருப்பதுஞ், சிவபெருமானையே முழுமுதற் கடவுளாகச் சிறந்தெடுத்துப் பகர்தலொடு திருமாலையும் இகழாமல் வணங்குகவெனக் கூறியிருப்பதுமெல்லாம் நெஞ்சிற் பதிக்கற்பாலனவாகும். மேலும், நாயகரவர்கள் பார்ப்பனர்க் குகந்த மாயாவாத வேதாந்தத்தை அந்நாளிற் றழுவி நிற்பினும், பார்ப்பனர்க் காகாத சைவ சமயத்திலுஞ் சைவசமய ஆசிரியர்களிடத் திலும், அளவிறந்த காதல் வைத்திருந்தார்களென்பது, அவர்கள் அக்காலத்தியற்றி வெளியிட்ட வேதபாஹ்ய சமாஜகண்டனம் என்னும் நூலை ஒரு சிறிது நோக்கு வார்க்கும், நன்கு விளங்கும். அதனோடு, யாமே பிரமம் என்னும் பார்ப்பனரின் மாயாவாதக் கொள்கையில், அப்போதே நாயகரவர்கட்கு வெறுப்புத்தோன்றலானமை பன்முகச் சமயநெறி படைத்தவரும் யாங்களே கடவுள் என்றிடும் பாதகத்தவரும் வாததர்க்கமிடு படிறருந்தலைவணங்கிட என்னுந் தாயுமான அடிகளின் திருப்பாட்டை அவர்கள் அந்நூலின் கண் எடுத்துக்காட்டியிருப்பதுகொண்டு உய்த் தறியப்படும். இதனால், தம்மாசிரியர் அச்சுதானந்தர் பால் மாயாவாத நூல்களை இவர்கள் பாடங்கேட்டு ஆராய்ந்து வருகையிலேயே அந்நூற்கொள்கைகள் பொருத்துமாறு யாங் ஙனம்? என வினாவி, அதற்கேற்ற விடை பெறாமையின்,வரவர அவற்றின் கண் அருவருப்புக் கொண்டு சைவ சமய நூல் களையே மிகுதியாய்ப் பயில லாயினரென்பதூஉம் புல னாகின்றது. எவர் எதைச் சொல்லினும் அதை அங்ஙனமே ஒப்புக் கொள்வது நாயகரவர்கட்கு இயற்கையன்று, ஒருவர் ஒன்றைச் சொன்னால், அதனைப்பற்றிப் பலவகையான வினாக்களை எழுப்பி அதனை முற்றுமாராய்ந்து தமக்குப் பொருத்தமாகக் காணப்படுவதனையே ஏற்றுக் கொள்வது அவர்கட்கு வழக்கமாய்விட்டது. அதனால், அவர்கள் பால்நெருங்கிய தொடர்புடையாருங்கூட அவர்களிடம் ஒன்றைச் சொல்ல மிகவும் அஞ்சுவர், இதனை யாம் பலகாலும் நேரேயிருந்து பார்த்திருக்கின்றேம், சிற்சிலகால்யாமும் அவர்களிடம் சிற் சிலவற்றைப்பற்றி உரையாடியக்கால், அவர்கள் அவையிற்றின்மேல் நிகழ்த்திய நுட்ப வினாக்கள் பலவற்றிற்குப் பொருந்த விடை சொல்லல் இயலாமல் இடர்ப் பட்டதுண்டு. ஆனாலும் அவர்கள் எளியேம் மீது வைத்த அருட் பெருக்கினால் தாமே அவை தமக்குத் தக்கன பகர்ந்து எமது இடர்ப்பாட்டை நீக்கியதுமுண்டு. ஆகவே, நாயகரவர்களைக் காணவரும் அறிஞர்கள் அவர்களின் அறிவின் நுட்பத்தையும் ஆழத்தையும் உணர்ந்து, அவர்கள் சொல்வனவற்றைக் கேட்டபடியாய் இருப்பார்களே தவிரத், தாம் ஏதுந்துணிந்து அவர்களைக் கேளார். இப்பெற்றியதான நுண்ணறிவு வாய்ந்த இவர்கள் தம்மாசிரியர்பால் மாயாவாத நூற்பொருள்களை ஆராய்ந்து வந்த அவ்விளமைக் காலத்தில், அவற்றின் கண் எவ்வளவு தடை நிகழ்த்தி அவர்களை நெருக்கினாராகல் வேண்டும்! இங்ஙனமாக மாயாவாத வேதாந்தக் கோட்பாடுகள் தமதறிவுக்குப் பொருத்தமாகக் காணப்படா தொழியினும், அவற்றிற்குமேற் பொருத்தமானதொன்றை எடுத்துக்காட்டு வார். இல்லாமையின். நாயகரவர்கள் இருபத்திரண்டாம் ஆண்டுக்குப் பிற் சிறிதுகாலம் வரையில் உண்மையான வேதாந்தப் பொருண் முடிபு தேரும் வகையின்றி அறிவு குழம்பிய நிலையிலிருந்தார்களென்பது அவர்கள் எமக்கு நேரே சொல்லிய சொற்களிலிருந்து தெரியலானேம். இவர்கள் இந்நிலையிலிருக்கையில், மதுரை நாயகம்பிள்ளையெனப் பெயரிய ஒரு பெரியார் சிவஞானபோதம் முதலான சைவ சித்தாந்த நூல்களை அச்சிடும் பொருட்டு அந்நாளிற் சென்னையில் வந்திருந்தார். அவரை அப்போதிளைஞரா யிருந்த நாயகரவர்கள் கண்டுரையாடல் நேர்வதாயிற்று. தாமறிந்த மாயாவாத வேதாந்தப் பொருள்களையும், அவற்றின் கண் தமக்குண்டான ஐயங்களையும் நாயகர வர்கள் அப்பெரியார்க்கு எடுத்தியம்ப, அவர் இவரது நுட்ப அறிவின் றிறத்தையும் பொருளுண்மை காண்பதிற் கொண்ட ஆராவேட்கையினையுங்கண்டு மிக வியந்தவராகித், தாம் அச்சிற்பதிப்பித்து முடித்த சிவஞானபோதம், சிவஞான சித்தியார் முதலான சைவசித்தாந்த நூல்களை இவரது கையிற் கொடுத்துச் சைவசித்தாந்தப் பொருண் முடிபுகளைச் சுருக்கமாகவே இவர்க்கு அறிவுறுத்தி, இந்நூன் முடிபு களைப் பலகாலும் ஆராய்ந்து பயின்று தெளிக எனக் கட்டளையிட்டுச் சென்றனர். கரைபுரண்டோடும் ஒரு பேரியாற்று வெள்ளத்தில் வழுக்கி வீழ்ந்து ஒரு பற்றுக்கோடுங்காணாது அதனால் ஈர்க்கப்பட்டுச் செல்லும் ஒருவனுக்குச் சடுதியில் ஒரு பெரு மரத்தின் நீண்டதொருகிளை கையிற் றெற்றுப்பட அவன் அதனைப் பற்றிக் கரையேறிப் பிழைத்துக் களிப்புற்று இறைவனை வழுத்தினாற்போல, மாயாவாதக் கொள்கையிற் றவறிவீழ்ந்து அது தமக்குத் தீது செய்வதாதல் உணர்ந்தும் அதனைவிட்டு மெய்மை காண்டற்குக் கருவி காணாது அலமந்த நாயகரவர்கள் திடுமெனத் தமக்கு வாய்த்த அச் சைவசித்தாந்த நூல்களைப் பெற்று ஈது இறைவன் எளியேற்குச் செய்த பேரருளாகும் எனவுணர்ந்து நெஞ்சம் நெக்குருகி அவனருளை வாழ்த்தி அந்நூல்களை அல்லும் பகலும் ஓவாது பயின்று, அந்நூன்முடிபுகளை ஒருங்கேயுணர்ந்து, இவையே எனது பிறவியைப் புனிதமாக்கும் மெய்ப் பொருளமிழ்தம் என உன்னி உன்னிக் களிப்புறலானார்கள். mj‹ã‹, ehafut®fŸ j« MáÇa® m¢Rjhdªj® jk¡F¢ irt á¤jhªjbkŒbghUisíz®¤jhkš, khahthj¥ bghŒ¥bghUisíz®¤âajid v©Â ba©Â tUªâ, mt® m›thW brŒjJ v‹bd‹W nf£gh‹ nt©o, mtiuaQ»¢ “RthÄ, ÔŠ RitÄ¡f btŸis¢ ÓÅ â‹d¥ nguth¡bfh©L nt©o tªj xUt‹ thÆš, btŸËa M‰Wkziy¤ bjŸËbaL¤J¥ bgŒjh‰nghy, c©ikahd j¤Jt Phd¤ij¥ bgwnt©Lbkd ÉiHªJ tªj vd¡F¥ bghŒahd khahthj¡ bfhŸifia m¿îW¤â Ü®fns!இதற்குத் தானா யான் தங்களை அடுத்தேன்? என ஆற்றாமையொடு வினவினார். திடுமென இங்ஙனங் கேட்ட தம் மாணவரைப் பார்த்து அச்சுதானந்தர் நெஞ்சந் திடுக்கிட்டு, அப்பா, நான் அறிந்ததை உனக்கு ஒளியாமற் சொன்னேனே யல்லாமல், வேறு வஞ்சனையான தொன்றும் என்னிடம் இல்லையே யான் உனக்கு உணர்த்தியதை மாயாவாதம் என்றும், அதனின் வேறான உண்மைஞானம் ஒன்று உளது என்றுங் கூறினையே. அவ்வகைகளையெல்லாம் விளக்கமாக எடுத்துச் சொல்! என்று கட்டளையிட்டார். அதன்மேல், நாயகரவர்கள் தமக்கு அவர் உணர்த்தியது உண்மை வேதாந்தம் ஆகாமல் மாயாவாதம் நுவலுவ தாதலுஞ், சிவஞானபோதம் சிவஞானசித்தியார் முதலான மெய்யறிவு நூல்களில் தெள்ளத் தெளிய விளக்கப்படுஞ் சைவ சித்தாந்தமே உண்மை வேதாந்தமாதலும் பிரிந்தினிது விளங்க விரித்து விளக்கினார். விளக்கிய அவ்வுரைகேட்டு அச்சுதானந்தர் மாயாவாதத்துக்குஞ் சைவ சித்தாந்தத்துக்கும் உள்ளவேறுபாட்டினை நன்குணர்ந்து, அது முதற் சிவஞான போதம் முதலான நூல்களை ஆழ்ந்தாராய்ப் புகுந்தார். அச்சுதானந்தரும் இயற்கையிலே நுண்ணறிவும் எதனையும் நடுவுநின்றாராய்ந்து உண்மை காணும் விழைவும் மிகுதியும் உடையராகையால், சைவ சித்தாந்த நூல்களை முற்றும் நன்றாராய்ந்து பார்த்துத் , தாம் நெடுங்காலங்கைக் கொண்டிருந்த மாயாவாதம் பொய்யா தலும், சைவ சித்தாந்தமே மெய்யறிவு காட்டி உயிர்களை இறைவன்றன் பேரருள்இன்ப வீட்டிற்கு உய்ப்பதாதலுந் தெற்றெனப் பகுத்துணர்ந்து, தம்மருமை மாணவரான நாயகரவர்களை ஆராமையுடன் தழுவி, அப்பா, உன்னால் யானுஞ் சைவசித்தாந்த மெய்பொருள் தேர்ந்து உய்ந்தேன். இனியான் மாயாவாத குருவான சங்கராசாரியரிடம் பெற்ற துறவை அவரிடமே சென்று ஒப்படைத்துவிட்டுவந்து, சைவ சித்தாந்தத் துறவு பூண்டு, உன்னுடன் கூடிச் சைவ சித்தாந் தத்தை எங்கும் பரப்புஞ் சிவத்தொண்டினைச் செயக்கடவேன் என உறுதி கூறினர். அதன்பின், அச்சுதானந்தர் சங்கராசாரியாரிடஞ் சென்று, தாம் சைவசித்தாந்த மெய்ம்மையுணர்ந்து, மாயாவாத வேதாந்தப் பொய்ம்மை கண்ட பரிசெல்லாம் விளக்கிச்சொல்லி, அவரதுடன்பாடுபெற்று, அவர் கொடுத்த மாயாவாதத் துறவை அவரிடமே ஒப்படைத்துவிட்டனர். அஞ்ஞான்றிருந்த கும்பகோணஞ் சங்கராசாரியாருந்தூய துறவுள்ளம் உடையராகையால், அச்சுதானந்தர் எடுத் தியம்பியவைகளையெல்லாம் அமைதியுடன் கேட்டுத், தாமுந்தம் முன்னோருங்கைக் கொண்ட மாயாவாத வேத வேதாந்தம் பழைய வேதோபநிடதக் கருத்துக்கு முற்றும் மாறாயிருப்பச், சைவசித்தாந்தக் கொள்கைகளே அவை யிற்றின் கருத்துக்கு முழுதும் ஒத்தனவாயிருத்தல் தேர்ந்து, அச்சுதானந்தரை நோக்கி, நீர் கூறுவனவெல்லாம் உண்மை யாகவேயிருக்கின்றன. நாங்கைக் கொண்டவேதாந்தம் நமக்கு உண்மை அறிவிப்பதாயில்லை, சைவசித்தாந்தமே உள்ளதை உள்ளபடி அறிவித்து நம்மைச் சிவத்தின் திருவருள் நெறியிற் செலுத்துந்தகையதாயிருக்கின்றது. ஆதலால், நீர் விரும்புகிற படி வேதாந்தத்துறவைக் கைவிட்டுச் சித்தாந்தத்துறவை மேற்கொள்ளலாம். எமக்குஞ்சித்தாந்தத் துறவையே மேற்கொள்ள விருப்பம் மேலெழுந்தாலும், இம்மடத்தின் முன்னோர் கட்டிய ஏற்பாட்டிற் சிக்குண்டிருக்கின்றே னாதலால், யான் இதனைவிட்டு வருதல் ஆகாது. ஆனாலுஞ், சைவசித்தாந்த முடிபான சந்திரமௌலீசுவரர்பூஜையையே யாங்கள் வழுவாது செய்து வருதலால், யான் இங்கிருந்த படியே சைவ சித்தாந்தக் கொள்கையை அகத்திற்கொண்டு, ஈசன் திருவடிக்கு ஆளாவேன் எனக் கண்ணீர் வார உரைத்து, அவர்க்கு விடைகொடுத்தனர். அதனை மகிழ்ந்தேற்றுக் கொண்ட அச்சுதானந்தர், நம் நாயகரவர்கள், பாற்றிரும்பிவந்து, சங்கராசாரியார்க்குந் தமக்கும் இடைநிகழ்ந்தனவெல்லாம் எடுத்துரைக்க, அவர்கள் அவைகளையெல்லாங்கேட்டு அளவிறந்த மகிழ்ச்சியுடையவராகிச் சிவபிரான் திருவருளை வியந்து வாழ்த்தினார். பின்னர் இருவருங்காஞ்சி மாநகர் சென்று, அங்கிருந்த ஆதிசைவப் பெரியாராகிய முத்துக்கச்சபேசுவரக் குருக்கள் பால் அச்சுதானந்தர் சைவசித்தாந்தத்துறவும் ஏகாம்பரசிவயோகி என்னும் பெயரும் பெற, நாயக ரவர்கள் சைவசித்தாந்த முறைப்படியே சிவதீக்கைபெற்றுக் கொண்டனர். அதன் பின்னர் ஏகாம்பரசிவயோகிகளும் அவர்தம் மருமை மாணவரான நம் சோமசுந்தர நாயகரவர் களும் ஒருங்கு கூடியே வடமொழி தென்மொழியிலுள்ள அறிவு நூல்களை யெல்லாம் பரந்தாழ்ந்தாராய்ந்து, அவற்றின் உண்மைப் பொருள்களைச் சென்னை மாநகரின் பற்பல இடங்களிலும் பற்பல சொற்பெருக்குகளால் தெற்றென விளக்கிச் சைவசித்தாந் தத்தைப் பரவச் செய்துவரலாயினர்கள். இவ்வாறு நாயக ரவர்கள் தாமுந்தம்மாசிரியரும் மாயா வாதத்தை அறவே யொழித்துச் சைவசித்தாந்தம் புகுந்த வரலாற்றினை எமக்குத் தந்திருவாய் மலர்ந்தருள, யாம் அதனை அவர்கள் பாற் கேட்டறிந்தபடியே இங்கு வரைந்திட்டே மென்பதனை அன்பர்கள் உணர்தல் வேண்டும். -----*****----- இனி முத்து வீரியம் என்னுந் தமிழ் ஐந்திலக்கண நூலொன்று இயற்றிய முத்து வீரிய உபாத்தியாயர்பால் தாம் இலக்கண இலக்கிய நூல் பயின்றதை நாயகரவர்கள் எமக்குப் பலகாற் சொல்லியதுண்டு. ஆனால் அஃது அச்சுதானந்தரை அவர்கள் அடைந்ததற்கு முன்னோ பின்னோ தெரியவில்லை. 3. நாயகரவர்களின் இல்வாழ்க்கை பின்னர், நாயகரவர்கள்சிவஞானம் எனப்பெயரிய அம்மையாரைத் திருமணஞ் செய்து கொண்டு இல்லற வொழுக்கத்தை இனிது நடத்திவரலானார்கள். இவர்கட்குத் திருமணம் ஆன காலம் எதுவென்று பலரை உசாவியும், அவரெல்லாந் தமக்கது தெரியாதென்றே சொல்லிவிட் டார்கள். ஆனாலும் நாயகரவர்கள் காலமானபோது அவர் களின் தலைமகளாரான ஜகதாம்பாள் அம்மையார்க்குச் சிறிதேறக்குறைய இருப்பத்தைந்தாண்டிருக்குமாதலால், நாயகரவர்கட்குச் சிறிதேறக்குறைய முப்பதாண்டு நெருங்கிய பொழுது தான் திருமணம் ஆகியிருக்கவேண்டுமென உய்த்துணரலாம். யாம் நாயகரவர்களின் இல்லத்திற்குச் சென்று, அவர் களின் அருமை மனைவியாராகிய சிவஞானத்தம்மையாரை முதன்முதற்கண்டு வணங்கியது. 1898ஆம் ஆண்டிலாகும். அப்போது நாயகரவர்கட்கு அகவை, 52, அம்மையார்க்கு அப்போது 40 ஆண்டிருக்கலாம். நாற்பதாண்டாகியும் அம்மையைர் அழகியராகவே காணப்பட்டார்; நீண்டுயர்ந்த ஒல்லியான யாக்கையினார்; அவரது உடம்பின் நிறம் ஆலம்பழுப்பின் நிறத்தை ஒத்ததாயிருந்தது. எல்லாரிடத்தும் மலர்ந்த முகத்தோடு இனிமையாகப் பேசும் இயல்பினர். தம் அருமைக் கணவரான நாயகரவர்கள்பால் மெய்யன்பும் அவர்கள் சொல்லுக்கு மிகக்கீழ்ப்படிந்து ஒழுகும் ஒழுக லாறும் உடையவர். நாயகரவர்கட்கு மிக எளிதிலே பெருஞ் சீற்றம் வருவதுண்டு; அந்நேரத்தில் அவர்கள் அம்மையாரைக் கடுஞ்சொற்களால் ஏசி விடுவர். அவ்வேச்சுரைகளைக் கேட்டும் அம்மையார் சிறிதும் மனம்வருந்தாராய், எதிர்த் தேதும் பேசாராய், அவர்கள் சீற்றந்தணியத்தக்க முறையில் அவர்கள் வேண்டியதை உடனே நகை முகத்துடன் செய்து முடிப்பர். திருவமுது கறியமுதுகள் இன்சுவை முதிர நறு மணங்கமழச் சமைப்பதிலும், அவை தம்மை அடியார்க்கும் விருந்தினர்க்கும் அகங்குளிரப் படைப்பதிலுந் திறமை வாய்ந்தவர். அம்மையார் நாயகரவர்கட்கு மிகவுங் கீழ்ப்படிந்தொழு கியதில் ஒரு தீங்குண்டு. பகற்பொழுதில் தலைமுழுகுதல், வழிபாடாற்றுதல், உணவெடுத்தல், ஓய்ந்திருத்தல் முதலிய இன்றியமையாக் கடமைகள் எல்லாம் நாயகரவர்கள் இல்லத்திற்பெரும்பாலும் வேளை தவறியே நடைபெறா நிற்கும். நண்பகல் ஒருமணிக்கு நடைபெறவேண்டிய இவை கிட்டத் தட்டச் சாயங்காலவேளையிலேதான் நடைபெறும். இதற்குக் காரணம் என்னென்றால், பகற்காலத்தில் நாயக ரவர்களைக் காணவருவாரும், அவர்களின் அருமருந்தன்ன ஆராய்ச்சியுரைகளைக் கேட்கவருவாரும் பலர், நாயகர வர்கள் அவர்களுடன் உரையாடத் துவங்கிவிட்டாற் காலம்போவது அவர்கட்குச் சிறிதுந் தெரிவதில்லை. ஒரே மூச்சில் நாலைந்து மணிநேரம் அவர்கள் பேசிக் கொண் டிருந்ததையும் யாங்கண்டதுண்டு. உச்சிவேளையில் அன்பர் கள் எவரேனுங் காணவந்தால், அவர்களை இருத்திப் பிற் பகல் மூன்று அல்லது நான்குமணி வரையிலுங்கூடப் பேசிக்கொண்டேயிருப்பார்கள். வெந்நீர் அடுப்பில் வெந்நீர் காய்ந்தபடியாகவேயிருக்கும். இறைவனை வழிபடுதற்குக் கொணர்ந்து வைத்த மலர்கள் வாடியபடியே யிருக்கும். செவ்விதின் அமைத்த சோறு, கறிகுழம்பு, மிளகுநீர் முதலியன வெல்லாம் ஆறிப் பதம் மாறியபடியாகவே இருக்கும். அம்மையாரும் பசி பொறுத்தபடியாய் நாயகரவர்கள் அடுக்களையுள் வரும்வரையில் வாளாதேயிருப்பர். நாயக ரவர்கள் வந்த அன்பர்களுடன் தொடர்ந்து உரையாடிக் கொண்டிருக்கையில், அம்மையாராவது வேறு யாராவது உணவெடுக்க அவர்களை உள்ளே அழைத்தால், அவர் களுக்குப் பெருஞ்சீற்றம் வந்துவிடும். அவர்களது சீற்றத்திற்கு அஞ்சியே அம்மையாராவது, வீட்டிலுள்ள பிறராவது நாயகரவர்கள் உரையாடுகையில் அவர்களை உள்ளே அழைப்பதில்லை. இந்தக் காரணத்தினாலேயே நாயகரவர்கள் முதன்மையான பகலுணவைப் பலநாளும் மிகவும் வேளை தவறியுட்கொண்டு இடையிடையே நோயாற் பற்றப்பட்டு, வரவர உடம்பின் நலம் பழுதுறலானார்கள். அவ்வப்போது செய்யவேண்டிய கடமைகளை ஒழுங்காகச் செய்து வந்திருந்தால், திண்ணியயாக்கையுடைய அவர்கள் நூறாண்டு உயிர் வாழ்ந்திருக்கலாம். ஓய்ந்திருக்குங்காலங்களில் அம்மையார் நாயகரவர்களை வேண்டி, உணவு கொள்ளும் நேரம் அணுகுங் கால், எவருடன் உரையாடிக்கொண்டிருந் தாலும் அதனை இடையே தடுத்து அவர்களை அழைத்துக் கொள்ளும் ஒரு சிறந்தஉரிமையைத் தமக்கு அளிக்கும்படி கேட்டு, அவர்களை அதற்கு இணக்கியிருக்கலாம். அங்ஙனம் வேண்டிக் கேட்டால் நாயகரவர்களும் அதற்கு இணங்கத் தக்கவர்களே. ஆனால். அம்மையார் அதுகேட்க அஞ்சி வாளாஇருந்ததுதான் அவரது இல்வாழ்க்கையில் ஒரு பெருங் குறைபாடாய் முடிந்தது. துவக்கத்தில் எமது இல்வாழ்க்கையிலும் இத்தகைய குறைபாடிருந்தது. ஆனால், எம் மனைவியார், யாம் வேளை தவறிஉணவெடுப்பதால், தாமும் எம்மக்கள் எழுவரும் நெடுநேரம் பசித்திருந்து, பசிஅவிந்த பின் உணவெடுத்து நோயால் துன்புற வேண்டியிருக்கின்றதே! என வருந்தித் தமது குறையை அறிவிக்க, எவரோடு எக்காலத்து எத்துணைச் சிறந்த பொருளைப்பற்றி யான் உரையாடிக் கொண்டிருப்பினும், அவ்வேளைக் கடமைகளைச் செய்தற்குரிய காலம் அணுகுகை யில், அவைகளைச் செய்தற்கு நீ என்னை அழைக்கலாம் என்று அவர்க்கு அவ்வுரிமையினை யாம் வழங்கிய காலந் தொட்டு, எமது இல்லியல் இடர்ப்பாடின்றி இன்றும் இனிது நடைபெறா நிற்கின்றது. .இங்ஙனமே சிவஞானத்தம்மையாருஞ் செய்திருந் தால், இத்தமிழ்நாடு, நாயகரவர்களால் இன்னும் எவ் வளவோ பெறற்கரும்பயன்களெல்லாம் பெற்றிருக்கும். இதுகொண்டு, பெண்பாலார் தங்கணவர் பால் அச்சம் மிகுதியும் உடையராய், வீட்டுக் கடமைகளைக் காலத்தோடு ஒட்டி ஒழுங்குற நடவாது விடுத்தல் எவ்வளவு பொல்லாங் குக்கு இடமாமென்பது நன்கு விளங்குகின்றதன்றோ? இனி, நாயகரவர்கட்கு நாற்பதாண்டு நிரம்பும் முன் மூன்று புதல்வியரும் ஒரு புதல்வரும் பிறந்தனர், அவருள்மூத்த புதல்வியார் பெயர்ஜகதாம்பாள் .இரண்டாம் புதல்வியார் பெயர் விசாலாட்சி; மூன்றாம் புதல்வியார் பெயர் லோகாம்பாள்;கடைசிப் புதல்வர் பெயர் சிவபாதம். யாம் நாயகரவர்களை அடைவதற்கு முன்னமே மூன்றாம் புதல்வியாரான லோகாம்பாள் காலமாய் விட்டனர். அதனால், அவரைத்தவிர மற்றை மூவரையுமே யாங்காணாப்பெற்றேம். புதல்வியரும் புதல்வரும் மிக அழகியர். மூத்த புதல்வியார் வெண்மையிற் பொன்மை கலந்த பொற்பாவை போல் திகழ்ந்தனர்; இவர் மிக்க சதையாயும் மிக ஒல்லியாயும் இராமல் நடுநிலைப்பட்ட அழகிய உடம்பினார்; ஆனால் வடிவம் சிறிது குள்ளமானது இரண்டாம் புதல்வியாரான விசாலாட்சி நறுந்தாமரை இதழிற் செம்மை கலந்தாற் போன்ற நிறம் வாய்ந்தவராய், வியக்கத்தக்க அழகிய சிறு செவ்வண்ணம் ஆற்றித் தீற்றிய சலவைக் கற்பாவைபோல் ஒளிர்ந்தனர். இவரதுடலம் சிறிது சதை கூடியதாய்க் கொழுகொழுவென்று எழில் கனிந்து இலங்கியது. இவரது வடிவம் மிக உயரமாயும் மிக குள்ளமாயும் இராமல் நடுநிலை வாய்ந்ததாய் விளங்கிற்று; பிறைவடிவு போற்றோன்றிய இவரது நெற்றிமேல் நெளி நெளியாய் வகிர்ந்து படர்ந்து நீண்ட கருங்கூந்தல் அவிழ்ந்து தொங்கச் சிலகால் இவர் தோன்றிய போது, இவர் வானுலகத்து அரம்பை மாதர்தாமோவெனக் கருதிவியக் கலானேம். இப்புதல்விமார் இருவருடைய முக அமைப்பும் பெரும்பாலும் நாயகரவர்களின் முகவமைப்பைத் தெளித் தெடுத்து வைத்ததுபோல் விளங்கிற்று. இவர்கள் இருவரும் உரிய காலத்தே மணஞ்செய்விக்கப்பெற்றுத், தங்கணவன் மாரோடு இணங்கித்தமது இல்வாழ்க்கையினை அமைதியாய் இனிது நடத்திவந்தனர். பெண்பாலார்க்குக் கல்விப் பயிற்சி ஆகாது என்னும் பொருந்தாக் கொள்கையில் நாயகரவர்கள் கடைப்பிடியாய் நின்றமையால், அவர்கள் தம் புதல்விமாரைக் கல்வியறிவு பெறாதநிலையிலேயே வைத்து விட்டார்கள்! என்றாலும், நாயகரவர்களின் இயற்கை நுண்ணறிவு அவர்தம் புதல்வியரிருவரிடத்தும் பதிந்து நின்றமையால், அவர்கள் இருவரும் உரையாடுங்காற் கல்வியறிவுடையார் போலவே காணப்பட்டனர். இனி, மூன்றாம் புதல்வியாரான லோகாம்பாளை யாங்க கண்ட தில்லையாயினும், நாயகரவர்களே, எம் மூத்த மகளிர் இருவரினும் பார்க்க அக்குழந்தை பேரழகு வாய்ந்தது. எந்நேரமுந் தெய்வநினைவே உடைய அஃது இறைவனுக்குத் தனியிருந்து வழிபாடு ஆற்றுங்காலங்களில் ஒவ்வொரு நாள் அது கடவுளொடு பேசும் ஒலிகேட்டு, யாங்கள் திடுக்கிட்டு, அஃதிருக்கும் அறையினருகே சென்று நோக்கினால், அது தன்னை மறந்திருக்கக் கண்டு திகைப்பதுண்டு. அது பெரிய பிள்ளை ஆன பின்னுங் கடவுள் நினைவே முதிரப்பெற்று, உலகியல் நினைவு வரவர நழுவலாயினமை கண்டு அது நீண்ட நாள் உயிர் வாழாதென்னும் எண்ணம் எங்களெல் லார்க்கும் உண்டாகி எங்கள் எல்லாரையுந் துயரக் கடலுள் ஆழ்த்தியது. இறைவனுக்கு வழிபாடு செய்யும்போது அது கடவுளுடன் பேசும் ஒலி கேட்டு யாங்கள் வெருக்கொண்டு அதனருகே சென்று அம்மா, யாருடன் பேசுகின்றாய்? என்று வினவினால், இதோ,ஆண்டவனுடன்பேசுகின்றேன், இதோ அவர் என்னுடன்பேசுகிறார், சிரிக்கிறார்! நீங்களும் பாருங்கள்! என்று எங்களுக்குச் சொல்லும்; ஆனால், எங்கள் கண்களுக்கு ஒன்றும் புலனாவதில்லை. இவ்வாறு, சிறிது காலம் நடந்துவந்தபின், அக்குழந்தைக்குச் சடுதியிற் காய்ச்சல் நோய் வந்தது. காய்ச்சலாயிருக்கும்போது, அஃது என் ஆண்டவன் பாற்போகின்றேன் என்று மகிழ்ச்சியுடன் சொல்லும். அது கேட்டு யாங்கள் மனம் நைந்து, அம்மா, அப்படிச் சொல்லாதே என்று வேண்டினால், அதற்கது, ஏன்? என் ஆண்டவனிடம் செல்வது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கின்றது. சற்றுப் பொறு, பொறு, அழைத்துக் கொள்ளு கிறேன் என்கிறார் என்று கூறுவதுகேட்டுப் பின்னும் எங்கள் மனம் பெரிதுங் கலங்கலாயிற்று! அக்குழந்தைக்கு வந்த அக்காய்ச்சல் நோய் தீர்ந்து அது பிழைத்திருக்க வேண்டு மென்று சிவபெருமானை வேண்டி வந்தோம். காய்ச்சல் நோயுந் தீர்ந்தது. பின்னர்ச் சிலநாட்கழித்து, அப்பிள்ளைக்கு நல்லெண்ணெய் தேய்த்துத் தலைமுழுக்குச்செய்வித்தோம், அங்ஙனந் தலைமுழுக்குச் செய்விக்கையில், வெளியூரிலுள்ள அன்பர் ஒருவரிடமிருந்து எனக்கொரு கடிதம் வந்தது. அதனைப் பிரித்துப் பார்க்க, எவரேனும் உங்கள் வீட்டிற் காய்ச்சல் நோயாய்க் கிடந்து அது தீர்ந்து எழுந்தால், விரைந்து நல்லெண்ணெய் முழுக்குச்செய்வியாதீர்கள் என்று எழுதப்பட்டிருந்தது! அக்கடிதம் சிறிது நேரத்திற்கு முன்னே கிடைத்திருந்தால், அக்குழந்தைக்கு நல்லெண்ணெய் முழுக்குச்செய்வித்திரோம்! ஆனால் அக்கடிதம் அதற்குப் பிந்திப் போயிற்று! சிவச்செயல் எண்ணெய் முழுக்குச் செய்வித்த சிறிது நேரத்திலெல்லாம் அக்குழந்தைக்கு மீண்டும் மிகக் கடுமையான குளிர் காய்ச்சல் கண்டது! அன்றிரவே அது சிவநினைவோடு உள்ளங்களித்து உயிர் நீத்தது! அம்மகள் மற்றை என் புதல்வியரைவிட என்பால் அளவிறந்த அன்பு பாராட்டி வந்தமையாலும், அதன் சிவ நினைவு எந்நேரமும் என் உள்ளத்தில் ஓர் அரிய தெய்வவுணர்ச்சியினையும் உருக்கத் தினையும் உண்டாக்கி வந்தமையாலும், அதன் பிரிவை யான் நெடுங்காலம் ஆற்றக் கூடவில்லை. edÉY§fdÉY« mj‹ mH»a cUt« vd¡F¥ gy fh‰nwh‹¿, ‘eh‹ ï§nf átãuhbdhL k»œªâU¡ifÆš Ú§fŸ V‹ v‹id¡ F¿¤J ï›tsî Jau¥gL»Ö®fŸ? என்று சொல்லிக் கொண்டுவந்து, கடைசியாக ஒருநாள் இனிமேல் நான் இங்கே வரமுடியாது, நாயனா, எனக்காக நீங்கள் இனி வருந்த வேண்டாம் என்று சொல்லி மறைந்து போயிற்று. அதன்பின் அக்குழந்தையின் உருவம் என் கண்களுக்குப் புலனாவதில்லை என்று எமக்கு நேரே ஆற்றாமைப்பட்டுக் கண்ணீர் வாரக் கரைந்துருகிக் கூறிய மொழிகளிலிருந்து, நாயகரவர்களின் மூன்றாம் புதல்வியாரான லோகாம்பாளின் அருமையினை யுணர்ந்து வியப்புற்றேம். இனி, நாயகரவர்களின் நான்காம் பிள்ளையும் ஒரே மகனுமான சிவபாதம் பொன்வடிவாய் நீண்டுயர்ந்த அழகிய பிள்ளை, அமைதியான இனிய குணம் வாய்ந்தவன். ஆனால், இவற்கு மூளை வலுவில்லை. இவனை உயர்ந்த தமிழ்க் கல்வியிற் பயிற்ற நாயகரவர்கள் எவ்வளவோ முயன்று பார்த்தும் அது கைகூடவில்லை. நாயகரவர்களின் விருப் பத்திற்கிணங்கியாம் இவற்குப் பெரியபுராணவுரை சிறிது காலங்கற்பித்து வந்தேம். சொன்ன சொற்பொருளைத் திருப்பிச் சொல்ல இயலாத அத்துணைமறதி இப் பிள்ளைக் கிருந்தமையால், யாம் நெடுகக் கற்பித்தலும் இயலாது கைவிடப்பட்டது. இவனது குரலோசை குயிலோசையினும் இனியது. இவன் தேவார திருவாசகச் செய்யுட்கள் சில பாடக் கேட்டாற் கருங்கன் மனமுங் கரைந்துருகும். நல்லியற்கையும், நல்வடிவும் வாய்ந்த இவ்வருமை மகன் கல்வியறிவு வாயா திருந்தது நாயகரவர்கட்கு ஒரு மனக்குறை. ஆனாலும், ஒன்றுக்கும் பற்றாத எம்மையும் நாயகரவர்கள் தம் அருமை மகனிலும் மேலாகப் பாராட்டி வந்தமையால். எமது கல்வியறிவின் ஏற்றத்தைக் கண்டு தமக்குள்ள அம்மனக்குறை தீர்ந்து போயிற்றென்று பலகாற்சொல்லியிருக்கின்றனர். அவர்கள் அங்ஙனம் எம்மைத் தம் மகனாக் கொண்ட உண்மை, அவர்களும், அவர்கள் அருமை மனைவியாரும் புதல்வியர் புதல்வர்களும் எல்லாம் எம்மையும் எம் மனைவியையும் அடுத்தடுத்துத் தம் இல்லத்திற்கு வருவித்தும் யாம் போக இயலாத நாட்களில் எமதில்லத்திற்குத் தாமே வந்தும் ஒருங்கு அளவளாவிப் பாராட்டிய பேரன்பினால் எல்லார்க்கும் நன்கு விளங்கியது. சிவநேயப்பெருஞ்செல்வம் நிரம்பிய அத்தெய்வக் குடும்பத் தாரோடு அன்பினால் உடன் கலந்து மகிழ்ந்த அந்நாட்களே எமதுவாழ்க்கையில் மிகச் சிறந்த நாட்கள், அத்தயை சிவநேய வாழ்க்கை இன்னும் ஒரு கணம் கிட்டுமோ என்பதனை நினைக்குந்தோறும் எந்நெஞ்சம் நீராய் உருகுகின்றது! மேற்குறிப்பிட்ட நால்வரைத் தவிர நாயகரவர்கட்கு வேறு மக்கள் இலர். இனி, நாயகரவர்கள் தமதில் வாழ்க்கைக்கு வேண்டும் பொருள் பெறுதற் பொருட்டுச் சென்னை நகராண்மைக் கழகத்தில் எழுத்தாளராய் அமர்ந்து வேலை பார்த்து வந் தனர். இவரது அறிவின் நுட்பத்தையும் வேலைசெய்யுந் திறமையையுங்கண்ட கழகத்தலைவரும் அவர்க்குக் கீழ் உள்ளவர்களும் இவரை மிக்க நன்கு மதிப்புடன் நடத்தி வந்தனர். வேலை பார்த்த கழகத்திலும், இவர்தமது சைவசமய ஒழுக்கத்திற்கு அஃது இடர் பயவாத முறையில்வைத்தே அதனைப்பார்த்து வந்தனர். ஒரு கால் ஒருவர் அக்கழகத் தினின்றும் ஓர்உதவிக் கடிதம் பெறுதற்குவந்து, முதலில் எழுத்தாளராயுள்ள நாயகரவர்களைப் பார்த்துப்பேச, நாயகரவர்களும் அதற்கிசைந்து, அக்கடிதத்திற் குறித்தற்கு உங்கள்பெயர் யாது? என்று வினவினார். வந்தவர் என் பெயர் சுந்தரமூர்த்தி சுவாமி என்று விடை கூறினார். அதனைக் கேட்ட நாயகர் மிக்க சினங்கொண்டு, சைவ சமயாசிரியராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் பெயரை நீர் அப்படியே வைத்துக் கொள்வது பிசகு, பெருங்குற்றம் . சுவாமி என்னும் பின்னுள்ள சொல்லைவிட்டுச் சுந்தரம் என்று தனியாகவேனும், அல்லது சுந்தரமுதலி பிள்ளை, செட்டி என ஏதேனும் வேறொரு சொல்லை அதனுடன் சேர்த்தேனுங் கூறுவீரானால் மட்டும் நீர் விரும்பும் உதவிக் கடிதங் கொடுக்கலாம், இல்லையேல் முடியாது என்று அழுத்தமாய்ச் சொன்னார். வந்தவர் அது கேட்டு வெகுண்டு, என் பெயரை நான் சொல்லுகிறபடி எழுதாமல், உமது விருப்பப்படி மாற்றச் சொல்வது தகாது எனப்புகன்றார். அதற்கு நாயகரவர்கள், அப்படியானால், நீர் விரும்புகிற கடிதம் எம்மால் தர முடியாது போம் என்று மறுத்துவிட்டார். உடனே அவர் அக்கழகத் தலைவராயிருந்த வெள்ளைக்காரத் துரையிடம் நேரே சென்று, தாம் தம் பெயர் சொல்லி எழுத்தாளரிடம் உதவிக் கடிதங் கேட்டதையும், அது கொடாமல் அவர் மறுத்ததையும் முறையிட்டுக் கொண்டார். அது கேட்ட துரை மகனார் நாயகரை உடனே தம்பால் வருவித்து, அவர் கேட்ட கடிதங் கொடாத காரணம் என்னென்றார். அதற்கு நாயக ரவர்கள்,எங்கள் சைவ சமயாசிரியர் பெயரைச் சிறிதும் மாற்றாமல் இவர் தமக்கு வைத்துக் கொண்டு அதனை அப்படியே எழுதச் சொல்கிறார். அஃது அவ்வாசிரியரை இகழ்ந்ததாகும்; ஆதலால், அவர் வேண்டியபடி யான் செய்யவில்லை என்று விடை கூறினார். அது கேட்டதுரை மகனார் நகைத்து,இவர் தமக்கு வழங்கும் பெயரைச் சொன்னால், அஃது உங்கள் சமயாசிரியர் பெயர், அதனை அப்படியே சொல்லக்கூடாது என்று நீர் சொல்வது பொருத்தமாயில்லையே என்றார். அதற்கு நாயகர், நல்லது! ஐய, உங்கள் மதத்தைச்சேர்ந்த ஒருவர் என் பெயர் கர்த்தர் ஏசு (Lord Jesus) என்று எழுதச்சொன்னால் தாங்கள் அதனை ஒப்புவீர்களா? என்று எதிர்வினாவினர், அவ்வறிவுரை செவிப்பட்டதும் அத்துரைமகனார், ஆ! m¥goah! கர்த்தர் ஏசு என்னும் பெயரை நம் போன்ற ஒருவர் அப்படியே தமக்கு வைத்துக் கொள்வது பெருங்குற்றம்! அப்படியே உங்கள் சமயாசிரியர் பெயரை இவர் சிறிதும் மாற்றாமல் வைத்துக் கொண்டதும் பெருங்குற்றந்தான்! என்று நாயகரவர்கள் கருத்தோடு உடன்பட்டுமொழிந்து அவர்களின் நுட்ப அறிவையுஞ் சமயப் பற்றையும் வியந்தனர். இன்னும், நாயகரவர்கள் நகராண்மைக்கழகத்தில் வேலையில் அமர்தற்குமுற், சிறிதுகாலம் ஒருதோற்கிடங்கிற் கணக்கு வேலை பார்த்து வந்தனர். அங்ஙனம் பார்த்து வருகையில், ஒருநாள்ஆட்டுத்தோல் மாட்டுத் தோல்கள் தாம் இருந்த கிடங்கிற் பெரும் பெருஞ் சுமையாய் வந்திறங்கின. அவைகளைக் கண்டதும் நாயகரவர்கள் தமது உள்ளங்கணக்கு வேலையிற் செல்லப்பெறாமல், ஐயோ! எத்தனை ஆடு மாடுகளைக் கொலை செய்து, இத்தோல்களைக் கொண்டு வந்து விற்பனை செய்து காசு தேடுகிறார்கள்! கொலைத் தொழிலால் வருங்காசுக்காகவா யானுங்கணக் கெழுதிப் பிழைக்க வேண்டும்! என எண்ணி வருந்தினார்கள். அதனால், நாயகரவர்கள் வேலையினின்றும் உடனே விலகிப், பிறகு சென்னை நகராண்மைக் கழகத்தில் எழுத்தாளராய் அமர்ந்தனர். இனி, நாயகரவர்கள் சென்னை நகராண்மைக்கழகத்தில் வேலை பார்த்து வந்தது தமது முப்பத்தைந்தாம் ஆண்டு வரையிலேயாம். அக்காலத்தில் வைணவமதத்தினரும் மாயாவாதமதத்தினரும் பெருந்தொகையினராய்ப் பெருகிப் பொய்யான கதைகளை மிகுதியாகப் புனைந்து கட்டிப், பொதுமக்கள் எவர்க்குந் தெரியாத சமஸ்கிருதமொழியிற் புராணங்கள் இதிகாசங்கள் என்னும் பெயர்களால் அவை தம்மை எழுதி வைத்துக்கொண்டு, சைவ சமயக் கோட்பாடு களையும் முழுமுதற்கடவுளாகிய சிவபெருமானையும், அவனடியார்களையும் வாய்கொண்ட மட்டும் ஏசியும் பழித்துங், கைகொண்ட மட்டும் அவ்வேச்சுரை பழித்துரை களை எழுதியும், பெரும்பாலுஞ் சைவ சமயத்தினராய் இருந்த பொதுமக்கள் உள்ளத்தை நிலைகலக்கி, அவரிற் பலரைத் தம்முடைய வைணவமதத்திலும் மாயாவாதமதத்திலுஞ் சேர்த்து வந்தார்கள். பண்டு தொட்டுப் பிறப்பு இறப்பு இல்லா ஒரே முழுமுதற்கடவுளாகிய சிவத்தை ஒளிவடிவில் வைத்து வணங்கி வந்த தமிழ்மக்கள் இவ்விந்திய நாட்டிலும், இதற்குப் புறம்பேயுள்ள நாடுகளில் மேற்கே ஆங்கில நாடு வரையிலுங் கிழக்கே மெகுசிகம் பேருவரையிலும் பரவியிருந்தார்கள். புலப்பட்ட ஒளியுருவாகிய தீக்கொழுந்தோடு ஒப்பச் சமைத்த சிவலிங்க வடிவங்கள் இவ்விந்திய நாடெங்கணும், இதற்குப் புறம்பேமேல் கடற்கரை கீழ் கடற்கரை வரையிலுள்ள எல்லா நாடுகளிலுந்தொன்று தொட்டு இன்றுகாறும் ஆங்காங்கு வைத்து வழிபாடு செய்யப்பட்டு வருதலே அதற்கொரு பெருஞ் சான்றாகும், மற்று, இவ்விந்திய நாட்டுக்கு வடக்கேயிருந்த ஆரியரும் அவரோடொத்த மக்களுமோ நாகரிகமில்லாதவர்களாய், எந்நேரமும் உண்டிக்கும் உறையுளுக்கும் மிகவும் மிடிப்பட்டு அலைந்து திரிந்தவர் களென்பது, அவர்கள் தம்மிற்றலைவர்களாய் இருந்து இறந்து பட்ட இந்திரன், வருணன், மித்திரன் முதலானவர்களின் ஆவிகளை வேண்டிப்பாடிய இருக்கு வேதப்பாட்டுகளால் நன்கறியக் கிடத்தலின், அம்மக்கள் அவ்வாவிகளையே தெய்வமாகக் கருதிவணங்கி, அவையிற்றுக்கு உயிர்க்கொலை வேள்விகள் வேட்டுவந்தாரல்லது, அவ்வாவிகளுக்கும் அவை போன்ற மற்றை எல்லா உயிர்களுக்கும் அவ்வுயிர்கள் உறையும் எல்லா உலகங்களுக்கும் முதல்வனான ஒருமுழுமுதற்கடவுளை அவர் ஒரு சிறிதும் உணர்ந்தாரல்லரென்பது நன்கு விளங்கா நிற்கின்றது. வடக்கேயிருந்த ஞான்று அவர்கள் எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளை அறியும்அறிவு விளக்கம் வாயா தொழியினும், வடக்கினின்றும் போந்து, இவ்விந்திய நாட்டுட் புகுந்து பண்டைத் தமிழ் மக்களின் பேருதவியால் நன்கு வாழத் துவங்கியபின்னாவது, தமிழரில் மேன்மக்களாயிருந்தார், வழிபாடு செய்து போந்த ஒரே முழுமுதற்கடவுளாகிய உருத்திர சிவத்தை நம்பி, அதன்கண் அன்புடையராகி அதனையே வழிபட்டுத் தம்முடைய சிறு தெய்வ வணக்கத்தையும், அதன்பொருட்டுச் செய்யும் உயிர்க்கொலை வேள்வியையுங் கைவிட்டனரோவென்றாற், சிறிதுமேயில்லை. பண்டைத் தமிழரில் நாகரிக வாழ்க்கையிற் சிறந்த பரதராகிய அரசகுடியினரும், அவர்க்குக் குருவான விசுவாமித்திரரும், தந்நாடு வந்து குடியேறிய அவ்வாரியரின் உயிர்க்கொலை வேள்வியை நிறுத்தி அவரது சிறுதெய்வ வணக்கத்தை ஒழித்து, அவரைக் கொல்லா அறவொழுக்கத்திலும், உருத்திர சிவவழிபாட்டிலும் நிலைபெறுத்துதற்கு எவ்வளவோ முயன்று பார்த்தும், தாம் உருத்திரன் மேல் இயற்றிய பதிகங்களையும் அவ்வுருத்திரற்கு உறையுளான பகலவன் திங்கள் தீ என்னும் மூன்றன்மேற்பாடிய பதிகங்களையும் அவர்கொணர்ந்த சிறு தெய்வப்பாட்டுகளுடன் ஊடே ஊடே சேர்த்து இருக்கு வேதம் முதலியவற்றை ஒழுங்கு செய்து கொடுத்தும், அவ்வுயர்ந்த தூய சைவவொழுக்கம், ஊனுங்கள்ளும் உண்டு சிறு தெய்வங்களுக்கு வெறியாடிப் பழகிய அவ்வாரியரது மூளையில் எள்ளளவும் ஏறாமையால், அவர்கள் தாங் குருவென ஏற்றி வைத்த வசிட்டரைக் கொண்டு, விசுவாமித்திர ரையும், அவரினத்தாரானதமிழரையும் அவருடைய சைவக் கோட்பாடுகளையும் பிறப்பிறப்பில்லா முழுமுதலான உருத்திர சிவத்தையும் வரையின்றியே இகழ்ந்து பாட்டுங் கதையும் படைக்கலாயினர். அதுமட்டுமோ! தமிழரசர்தமிழ்ச் செல்வர்களிற் சிலரை ஏமாற்றித்தம் வழிப்படுத்தி, அவர்களைக் கொண்டு பெரும்பொருள் செலவு செய்து அவ்வெறியாட்டு வேள்வி களை அடுத்தடுத்து நடைபெறுவித்து, அம்முகத்தால் ஆரியக்குருமார் தொடர்பாகத் தமது பிழைப்புக்கும் வழி செய்து கொண்டனர். ஆரியக் குருமாரின் சூழ்ச்சி இவ்வாறு தொடர்ந்து நடைபெற்றுத் தமிழிரின் பெருஞ்செல்வத்தைக் கவர்ந்து, ஆரியரைக் கொழுக்கவைத்து வருதலை, அவ் வாரியருந் தமிழருங் கலந்த கலப்பிற்றோன்றிய இரு பிறப்பாளர் என்னும் ஒரு தனிப்பட்ட குழுவினர் கண்டு, தாமும் அச்சூழ்ச்சியினைக் கையாளத் துவங்கித், தாம் அவ்வாரியக் குருமாருடன் சேர்ந்து கொண்டு, அவர் தம் ஆரியமொழியை நன்கு பயின்று, அவர் செய்யும் வெறியாட்டு வேள்விகளை இன்னும் பலமுகமாய்ப் பெருக்கிச் செய்தற்கு வேண்டும் முறைகளையெல்லாம் மேலுமேலும் விரித்துப் பிராமணங்கள் என்னும் வேள்வி நூல்கள் பலப்பல இயற்றினர். இங்ஙனமாக ஆரியக்குருமாரும் இரு பிறப்பாளரும் ஒருங்கு சேர்ந்து வெறியாட்டு வேள்விகளை அளவின்றிப் பெருக்கிப் பிராமணங்கள் எழுதிய காலத்திலேதான், அவ்விரு குழுவினரும் ஒன்று கூடித்தாம் மட்டுமே விராட் புருஷனது முகத்தினின்றுந் தோன்றிய பிராமணர் ஆவரென்றும், ஏனைஅரசரும், வணிகரும், ஏவலாளரும் அவன்றன் தோள், தொடை, அடிகளினின்றுந் தோன்றிப் பிராமணராகிய தமக்குக் கீழ் நின்று, தமக்காவன செய்தற்காக வகுக்கப் பட்டனரென்றும் ஒரு கதை கட்டி, அதனை இருக்குவேதத்தின் இறுதியிலும், அதற்குப் பின் வந்த நூல்களிலும் நுழைத்து விடுவாராயினார். இவ்வாறு ஆரியரும் அவருடன் கலந்து கொண்ட இருப்பிறப்பாளருந் தம்மைப் பிராமணரென்னும் மிக வுயர்ந்த ஒரு தனி வகுப்பினராக்கிக் கொண்டு மற்றை மக்களையெல்லாந் தமக்காவன செய்யுங்கீழ் மக்களாக எட்ட நிறுத்தி வைத்து, ஆரியச் சிறு தெய்வவணக்கத்தையும், அவற்றிற்காக எடுக்கும் வெறியாட்டு வேள்விகளையும் மேன்மேற்பெருக்கி, எங்கும் இரத்தக் காடாக்கிக் குடியுங் கொலையும் வரையில் காமமுமேயாண்டும் பரவ, அவ் வாற்றால் தமிழரது செல்வமெல்லாம் உரிஞ்சி, அவரையும் அவர் பாழ்படுத்தி வந்தமை கல்விவல்ல தமிழாசிரியர்க்குந் தமிழ்வேந்தர்க்கும் பிறர்க்கும் பெருந்துயரத்தை விளைப்ப தாயிற்று, அதனால், அத்தமிழறிவுமிக்க சான்றோர்கள் சாங்கியம், யோகம், உபநிடதம்,புராணம் முதலான நூல்களை அப்பார்ப்பனக் குழுவினர் வழங்கிய வட மொழி யிலேயே இயற்றி, பிறந்து இருந்து இறந்து போன மக்களின் ஆவிகளாகிய சிறு தெய்வங்களை வணங்குவதும், அவற்றிற் காக ஆடு மாடு குதிரைகளையும் மக்களையுங் கொலை செய்துங் கட்குடித்தும் மகளிர்ப் புணர்ந்தும் வெறியாட்டு வேள்விகள் வேட்பதும் பெருந்தீவினையாமென்றும், எல்லாம் வல்ல ஒரே முழு முதற்கடவுளாகிய சிவத்தை அன்பினால் அகங்குழைந் துருகி வாழ்த்துவதும் வணங்குவதுமே பிறவியைத் தூய்தாக்கு மென்றும், ஒரே கடவுளாற் படைக்கப்பட்டு அவர்க்குப் புதல்வர்களாம் பேருரிமை வாய்ந்த மக்களுட் பிறப்பினால் உயர்வு தாழ்வு சிறிதுமில்லை யென்றும், மக்கட்பிறவியைப் பாழாக்குங்குடி கொலை தீயகாமம் சிறு தெய்வவணக்கம் என்பவைகளை மிகுத்துப் பேசும் இருக்கு முதலான வேதப் பகுதிகளும் பிராமணப் பகுதிகளும் இழிக்கத் தக்கனவா மென்றும் அறிவுரை கூறி ஆரிய இனத்தார்க்கும் அவர் வலையிற் சிக்கிய தந்தமிழ் மக்கட்கும், நல்லறிவுச் சுடர் கொளுவுவாராயினர். இங்ஙனமாக, ஆரியக் குருமார்க்கும் அவரொடு கலந்து கொண்ட இரு பிறப்பாளர்க்கும் நல்லறிவுச் சுடர்கொளுவும் பொருட்டுத் தமிழாசிரியருந் தமிழ் வேந்தர்களும் வட மொழியில் ஆக்கிய நூல்களுள் உபநிடதங்கள் எனப் பெயரிய நூல்களே தலைசிறந்தனவாய் விளங்குகின்றன. அவ்வுப நிடதங்களிற் சொல்லப்பட்ட எல்லாம் வல்ல இறைவனாகிய சிவபிரான் தனிப்பெருஞ்சிறப்பினையும், ஓவாப்பிறப்பு இறப்பு வட்டத்திற் கிடந்து சுழன்று துன்புறும் மக்கள் தேவர் முதலான சிற்றுயிர்கள் அத்துன்பம் நீங்கி இறைவனோடு ஒன்றுகூடி அவன் றிருவருளின்பத்திற்றோய்ந்து மகிழ்ந்திருக்கு மாற்றினையும் அறிவின் மிக்காரேயன்றி, அதிற் குறைந்தார் உணர மாட்டாராயினர். அதனால், அவ்வுபநிடத காலத்திற்குப் பின் வந்த சூதர் வியாசர் முதலான தமிழாசிரியர்கள், கைக்கும் மருந்து தின்னாத தன் மகவுக்கு அன்னையானவள் அதனைக் கன்னலுட் பொதிந்து ஊட்டுதல்போலப், பலவேறு கதைகளைப் படைத்து, அவற்றின் வாயிலாகச் சிவத்தின் இயல்பும், உயிரின் இயல்பும், உயிரைப்பொதிந்த மும்மல இயல்பும், மும்மலக் கட்டுவிட்டு உயிர் சிவத்தைத் தலைக் கூடிப் பேரின்பம் நுகருமாறும் எல்லாம் அறிவிற்குறைந்த அப் பொதுமக்கட்கு நன்கினிது விளக்குவான் புகுந்து புராணங்கள் இதிகாசங்கள் முதலான நூல்களை, வடமொழி தென் மொழிகளில் இயற்றி வைத்தனர். ஆகவே, பழைய இருக்கு, எசுர் முதலான வேதங்களில் தமிழாசிரியர் சேர்த்து வைத்த பகுதிகளில் உருத்திர சிவவழிபாடும் அதன் ஏற்றமுமே காணப்படுமென்றும், தமிழாசிரியரே முழுதும் இயற்றிய சாங்கியம், யோகம், உபநிடதங்கள், பழைய புராணங் கள் இதிகாசங்கள் என்பவற்றிலெல்லாம் முழுமுதற் கடவுளாகிய சிவபிரான்றனிப் பெருஞ்சிறப்பும், உயிர்த் தொகுதியிற் சேர்ந்த ஆரிய தெய்வங்களின் இழிபும், அவற்றை வழிபடுதலால் உயிர்கள் பிறவித் துன்பம் நீங்கப்பெறாமையும், அவற்றின் பொருட்டு செய்யும் ஆரிய உயிர்க் கொலை வேள்விகள் பெருந்தீவினை பயப்பவாதலும், இறைவனடி சேர்ந்தார்க்கே பிறவித் துன்பம் அற்றுப் பேரின்பம் வாய்த்தலும், இன்னும் இவை போல்வன பிறவும் வற்புறுத்தப் படுகின்றனவென்றும் நினைவிற் பதித்தல் வேண்டும். இவ்வாறு பண்டைத் தமிழாசிரியர் முழுமுதற் கடவுள் இருப்பும் இயல்புந்தேற்றி வடமொழியிற் செய்து வைத்த நூல்களைப் பயின்றும், ஆரியரும் அவரை முழுதும் பின் பற்றிய பார்ப்பனரும் உயர்ந்த முழுமுதற் கடவுள் வணக்கத்தில் அறிவுசெல்ல மாட்டாத தீவினையுடையவராய், இழிந்த பல சிறு தெய்வவணக்கத்திலும் அவற்றின் பொருட்டு எடுக்கும் வெறியாட்டு வேள்விகளிலுமே மனம் ஈர்க்கப் பட்டுப் பின்னும் பின்னும் அவற்றையே கடைப்பிடியாய்க் கொண்டு ஒழுக லாயினர்! அதுமட்டுமோ! முழுமுதற் கடவுளாகிய சிவபிரான் வணக்கத்தைப்பொதுமக்கள் கைக்கொளாது தமது சிறு தெய்வ வணக்கத்தையே அவர்கள் இறுக்கமாய்ப் பிடித்துக் கொளல் வேண்டியும், தாம் எடுக்கும் வெறியாட்டு வேள்விகளே அவற்றைச் செய்வார்க்கு இம்மை மறுமை நலங்கள் எல்லா வற்றையும் ஒருங்கே பயக்கவல்லன என்னும் ஒரு பெரும் பிழையான எண்ணத்தை அவர்களுள்ளத்திற் பதித்தல் வேண்டியும் அவ்வாரியப் பார்ப்பனர் தாமும் பலப்பல கதை களைப் பிற்பிற்காலங்களிற் படைத்து முன்னே தமிழாசிரியர் இயற்றி வைத்த புராண இதிகாசங்களில் அவற்றை நுழைத்ததுமட்டுமல்லாமல், வேறு தனி நூல்களாகவும் அவையிற்றைச் செய்து வைத்தார்கள். அதுவேயுமன்றித் தமது சிறு தெய்வ வணக்கத்திற்குந் தாம் எடுக்கும் வெறியாட்டு வேள்விகட்கும் ஒத்து நின்றாரை முனிவர்கள் இருடிகள் என்றும், அவை தமக்குத் துணையாயும் உதவியாயும் நின்ற அரசர் சிலரை விஷ்ணுவின் அவதாரங்கள் என்றும், அவை யிரண்டிற்கும் மாறாய் நின்ற அரசர்களை ராக்ஷஸர்கள் என்றும் தாம் புதிது படைத்த வடநூல்களில் அவ்வாரியப் பார்ப்பனர் வரைந்து வந்தனர். முன்னரே, தமிழாசிரியர் இயற்றிய பாரதம் என்னும் இதிகாச நூல் சிவபிரான்றன் முழு முதன்மையும், அவனை வழிபட்டுய்ந்த அரசர் வரலாறுந் தெரிப்பதொன்றாகவும், ஏனை மாந்தரைப் போல் தாய் வயிற்றிற் பிறந்து, பகைவர்களாற் பெரிதும் நலியப் பெற்றுக் கடைசியில் ஒருவேடன் எய்த அம்பால் இறந்தொழிந்த கிருஷ்ணனை விஷ்ணுவின் அவதாரமென ஒரு பொய்யுரை புனைந்து கட்டி, அவன் செய்யாத ஆண்மைச் செயல்களை அவன் செய்தனவாகப் படைத்தெழுதி, அவை தம்மை யெல்லாம் அப்பாரத நூலின் இடையிடையே அப்பார்ப்பனர் நுழைத்துவிட்டனர். அஃதொன்றோ! தசரத மன்னனின் மகனான இராமன் என்பவன் இத்தென்னாட்டின் தெற்கேயுள்ள இலங்கைக்குச் சென்ற தில்லையாகவும், பத்துத்தலையும் இருபதுகைகளும் உடைய இராவணன் என்னும் ஓர்அரக்க அரசன் அவ்விலங்கையை அரசாண்டான் என்பதற்கு ஏதொரு சான்றும் இல்லையாகவும், அவ்வரக்க அரசனாற் கவர்ந்து கொள்ளப்பட்ட சீதையாகிய தன் மனைவியை மீட்டுக் கொள்ளற் பொருட்டு, அவ்விராமன் குரங்குகளைத் துணை கூட்டிச் சென்று அவ்வரக்கனை மடித்து அவளை மீட்டான் என்னும் ஒரு பெரும் பொய்யான கதையைப் புனைந்து கட்டி, இராமனும் விஷ்ணுவின் அவதாரம் என நாட்டுதற்கு இராமாயணம் என்னும் ஒரு புதிய இதிகாச நூலை அப் பார்ப்பனர் அதன்பின் இயற்றி வழங்கவிட்டனர். இங்ஙனமே, பிறப்பு இறப்பில்லாக் கடவுளுக்குப் பல பிறப்புகளை (அவதாரங்களை)க் கற்பித்துப் பாகவதம் முதலான பொய்ந் நூல்களைப் பின்னும் பின்னும் இயற்றி வைத்ததுமல்லாமற், பிறப்பு இறப்பு இல்லா முழுமுதற் சிவத்தையும் அவற்றின் கண் இகழ்ந்து பேசுவாராயினர். இவ்வாறு ஆரியப் பார்ப்பனரில் ஒரு சாரார் மக்களைக் கடவுளாக்கிப் பொய்யான கதைகளைப் பெருக்கிப் பொது மக்கள் எல்லாம் வல்ல ஒரே முழுமுதற்கடவுளான சிவத்தை வணங்கவொட்டாமற் றடை செய்துவர, மற்றொருசாரார் வடமொழிப்பழைய நூல்கட்கு முற்றும் மாறாக மாயா வாதம் எனப் பெயரிட்ட ஒரு பொல்லாத கொள்கையைப் புதிது படைத்து, அதற்கு வேதாந்தம் எனப் பெயர் புனைந்து, இந்து மக்களிற் சிறிது கற்றவர்களுந் துறவாடை பூண்டவர்களுமெல்லாம் அதனையே கடைப்பிடித்து ஒழுகு மாறு செய்துவிட்டனர். இம்மாயாவாதக் கொள்கையைப் பொல்லாததென்று ஏன் கூறினோமென்றால்; அறியாமை யிருளிற் புதைந்து தம்மையும் அறியாமல் தந்தலைவனையும் அறியாமற் பெரிதும் துன்புற்றுக் கொண்டிருக்கும் எண்ணிறந்தக் கோடியுயிர்களையும் எல்லாம் வல்ல இறைவன் கண்டு இரங்கி, அவை தம் அறியாமை நீக்கி, அவை தமக்கு அறிவும் இன்பமுந்தருதற்பொருட்டே புலனறிவுக்கு எட்டாத மிக நுண்ணிய நிலையிலிருந்த மாயை என்னும் உள்பொருளிலிருந்து, பலதிறப்பட்ட உடம்புகளையும், அவ்வுடம்புகளுலவுதற்கு இந்நிலவுலகம் போன்ற பல கோடியுலகங்களையும், அவ்வுடம்புகளில் வியக்கத்தக்க பல உறுப்புகளையும், அவ்வுறுப்புகளின் வாயிலாய் நுகர்தற்குப் பல்சுவைப் பண்டங்களையும் படைத்து, அவையிற்றை அவ்வுயிர்கட்குக் கொடுத்திருக்கின்றான். அங்ஙனங் கொடுத்தி ருக்கும் உடம்புகளில், மற்றையுயிர்களைப் போல் மக்கள் உயிருந்தங்கியிருந்து, இவ்வுலகத்துள்ள பல்சுவைப் பொருள் களையுந் தம்முடம்பின் அகத்தும் புறத்தும் அமைந்த மனம் விழி முதலான கருவிகளால் நுகர்ந்து அறிவும் இன்பமும் பெற்று வருகின்றன. 劉d« ïiwt‹ mUŸ T®ªJ bfhL¤j cl«ò, cl«ãDW¥òfŸ, cyf«, cyf¤J¥ bghUŸfshš msÉwªj gaid milªJ tU« k¡fŸ, ï›tik¥òfisbašyh« K‰W« kwªJ, ‘ïit bašyh« bghŒ! என்று வாய்ப்பறையறைதல் எத்துணைப் பொல்லாதது! மேலும், இவையெல்லாம் பொய்யாய் ஒழியினும், இவற்றைச் சான்றாக நின்று நோக்கிக் கொண்டிருக்குங் கடவுளாகிய நான் மட்டுமே மெய்! v‹Å‹ ntwhŒ¡ flîbs‹W xU jÅ¥ bghUŸ ïšiy! எனக் கரைவது இன்னும் எத்துணைப் பொல்லாங் குடையது! தன்னுடம்பின்கண் தான் அறியாமலே வளரும் ஒரு மயிரிழையைத் தானும் ஆக்க மாட்டாதவனான, தனக்கு வெளியே நிலத்தின் கண் முளைக்கும் ஒரு சிறு புல்லைத் தானும் படைக்கமாட்டாதவனான ஒரு புல்லியமகன், பிறக்குங்காலும் இறங்குங்காலுந்தன் நிலை இன்னதெனத் தானே அறியாதவனான ஒரு பேதைமகன், தான் இந் நிலத்தின் கண் வாழுஞ் சிறுவாழ்நாள் எல்லையிலும் பல்பிழை செய்து நோயுந்துன்பமுங் கவலையும் வறுமையும் எய்தி மடிவானான ஒரு மட்டி மகன் தன் உண்மை நிலையை முற்றும் மறந்து தன் இறைவன் தனக்குச் செய்த ஒப் புயர்வில்லாப் பெருநன்றியை முழுதும் மறந்து யானே கடவுளென்றும் என்னைத் தவிர வேறொரு கடவுளில்லை யென்றுங் கழறுவனாயின், அதனினும் பொல்லாங்கு மிக்கது பிறிதுண்டோ? கூறுமின்! இக்காரணம் பற்றியே மாயாவாதம் பொல்லாததென்றாம். மேற்சொல்லியவாறு, கடவுளை மக்களாக்கிய ஒரு சார்பார்ப்பனக் கொள்கையும், மக்களைக் கடவுளாக்கிய பிறிதொரு சார் பார்ப்பனக் கொள்கையும் பின்றைக் கால வடநூல்களிற் பெரிது கலந்து, நம் இந்து மக்களைப் பொய்ந்நெறியிற் புகுத்தி, அவர்தனித் தலைமைப் பெருங் கடவுளையுணர்ந்து அவன்றன் அருட்பேரின்பத்திற் படிந் திருக்கவொட்டாது தடை செய்த பிறழ்ச்சிகளெல்லாம், இத்தென்றமிழ் நாட்டிற் சோமசுந்தர நாயகர் தோன்றி யிராவிட்டால் எவர்க்குமே புலனாகாது போயிருக்கும். அதனால், நம்மனோர் தமது பிறவிப் பயனை இழந்தே போயிருப்பர்! ஆனால், அங்ஙனம் ஆகாமைப் பொருட்டு அவரை இறைவன் இங்ஙன்றோற்றுவித்தது ஒரு பேரருள்! நாயகரவர்கள் சைவசித்தாந்த உண்மைகளை விளக்கத் துவங்கிய காலத்தில், வைணவப் பார்ப்பனராற் சில நூற்றாண்டுகளாகக் கட்டிவிடப்பட்ட கட்டுக்கதைகளும் புரட்டுகளுமே எங்கும் பரவி வழங்கலாயின. வடமொழி யையும் அதன்கண் உள்ள நூல்களையும் பார்ப்பனரன்றி வேறு குலத்தவர் எவரும் ஓதலாகாது என்னும் ஒரு கற்பனையையுண்டாக்கி அதனை அவர்கள் மற்றையோர்க்கு வற்புறுத்திச் சொல்லி வந்தமையாலும், பார்ப்பனரல்லா தார்க்கு வடநூல் கற்பிக்கும் பள்ளிக் கூடங்களாதல் ஆசிரியர்களாதல் இல்லாமையாலும், பார்ப்பனரல்லாதார் வடநூலிற் பயிற்சி செய்வது சிறிதும் இயலாததாயிற்று. வடமொழி தென்மொழி ஆங்கில மொழிப் பயிற்சி எங்கும் பரவியிருக்கும்இந்நாளிலுங்கூடப் பார்ப்பனரல்லாதார் வடநூல் கற்றற்கு, வடமொழிக் கல்லூரிகளில் இடந்தரப் படாதிருக்கையில் வடமொழி தென்மொழிப் பயிற்சி அருகிய அந்நாளிற் பார்ப்பனரல்லாத தமிழ் மக்கள் அவற்றை எளிதிலே கற்றறிதல் இயலுமோ என்பதை நன்கு எண்ணிப் பாருங்கள்! ஆகவே, பார்ப்பனர்கள் தமதுயர் வுக்குந் தமது நலத்திற்குந் தமது கொள்கைக்கும் வேண்டு வனவெல்லாம் தாம் வேண்டுமட்டுங்காலங்கடோறும் படைத்து, அவை தம்மைப் பழைய வடநூல்களில் நுழைத்து வைத்ததுமல்லாமற், புதுப்புது நூல்களாகவும் இயற்றி, அவையெல்லாங் கடவுளால் அருளிச் செய்யப்பட்டவைகள் என மொழிந்து, தாஞ் செய்த புரட்டுகளிலுள்ள பொய்ம்மை களையுணர்ந்தவர்கள் கேட்கவொட்டாமல் அவர்கள் வாயையும் அடைத்துவிட்டார்கள். இவ்வாறு ஓராயிர ஆண்டுகளாக வைணவப் பார்ப்பனர்களும் மாயாவாதப் பார்ப்பனர்களுங் கட்டிய கட்டுக் கதைகளுங் கொள்கை களும் இத்தென்றமிழ் நாடெங்கும் பரவி வருகையில், மெய்கண்ட தேவ நாயனாரும் அவர் தம் மாணாக்கரும் அவர் வழிவந்த ஆசிரியர்களுந் தோன்றி அவற்றின் பொய்ம்மை காட்டிச் சைவசித்தாந்த உண்மை தேற்றிச் சிவஞானபோதம், சிவஞானசித்தியார் முதலான மெய்ந்நூல்கள் அருளிச் செய்து, தமிழ்மக்கள் உண்மை கடைப்பிடித்து உயர்நெறிதலைக் கூடச் செய்தனர். அவர்கட்குப் பின் சீர்காழிச் சிற்றம்பல நாடிகளும் அவர்தம் மாணாக்கருந்தோன்றிச் சைவசித்தாந்த உண்மை களை எங்கும் பரவச் செய்தனர். அவர்கட்குப் பின் குமர குருபரசுவாமிகள் தாயுமான சுவாமிகள் தோன்றிச் சைவ சித்தாத்த உட்பொருள்களை எங்கணும் விளங்கச் செய்தனர். இதே காலத்தில் அப்பையதீட்சிதரும் அரதத்த சிவா சாரியாருந் தோன்றி வடமொழி மெய்ந்நூற்பொருள்களை விரிவாக எடுத்துக் காட்டி அவை முற்றுஞ் சிவபிரான் முழு முதன்மையினையே விளக்குதலும், அவற்றிற்குமாறாகப் பின் வந்தாராற் செய்யப்பட்ட வடமொழிப் பொய்ந்நூல்கள் முழுமுதற்கடவுளாகிய சிவத்தைப் பழித்துப் பேசிப், பல பிறவியிற் பிறந்துழன்றுமாண்ட மக்களாகிய அரசர்களை முழு முதற் கடவுளாக்கித் தீவினை பெருக்குதலும் பிரிந் தினிது விளங்கத்தெருட்டினார்களாயினும், அவர்கள் இயற்றிய நூல்களெல்லாஞ் சொல்வழக்கில் இல்லாத வட மொழியில் ஆக்கப்பட்டிருத்தலின் அவை வடமொழி வல்லார்க்கன்றி அஃதறியாத ஏனைப் பொதுமக்கட்குந் தமிழாசிரியர் இயற்றிய நூல்களைப் போற், பயன்படுதல் இலவாயின. இனித் தாயுமான சுவாமிகளுக்குப் பின், வடமொழிக் கடலுந்தென்றமிழ்க் கடலும் ஒருங்கு நிலை கண்டுணர்ந்த மாதவச் சிவஞானமுனிவரர் தோன்றி வடமொழி மெய்ந் நூற்கருத்துஞ் செந்தமிழ் முடிபுந் தேற்றிச் சிவஞான போதச் சிற்றுரை பேருரைகளுந் தொல்காப்பியச்சூத்திர விருத்தியும் இயற்றியுதவினர். இவ்வருந்தவப்பேராசிரியர் அருளிச் செய்த உரை நூல்களே, தமிழின் முதன்மையுஞ்சிவத்தின் முதன்மையும் ஐயந்திரிபற உணர்த்தித் தமிழ்மக்கள் பொய்ச் சமயம்புகாமற் சைவசித்தாந்தத்துறையிற் படிந்து எல்லாம் வல்ல இறைவன்றன் திருவருட் பேரின்பவமிழ்தை ஆர நுகர்ந்து இன்புற்றிருக்கச் செய்யுந் திறத்தவாய்த்துலங் கலாயின. என்றாலும், வடமொழிப் பின்னூல்கள் இயற்றிய மாயா வாத வைணவக் கொள்கையினர், வடமொழிமுன்னூற் பெருங்கொள்கைகளுக்கு முழுமாறாகப் புனைந்து கட்டிய புனைசுருட்டுகள் அத்தனையும் ஒருங்கே தெரிந்து அவற்றால் எம் போல்வார் மயங்காமல் இருத்தற்கு ஆசிரியர் சிவஞான முனிவர் தம் உரை நூல்களும் உதவி செய்வன அல்ல. மற்று, ஆசிரியர் சோமசுந்தர நாயகர் இயற்றி வெளியிட்ட நூல்களே மாயாவாத வைணவக் குழுவினர் வடமொழியிற் செய்தி ருக்கும் புனை சுருட்டுகள் முற்றும் விளங்க எடுத்துக்காட்டி, அவற்றின் பொய்ம்மையில் எவரும் மயங்காதிருக்கச் செய்யும் அரும்பெருந்திறல் வாய்ந்தனவாய்த் திகழ்கின்றன. நாயகரவர்கள் இத்தகைய தம் அருமருந்தன்ன நூல் களிற் சிலவற்றைத் தாம் சென்னை நகராண்மைக் கழகத் தில் அமர்தற்கு முன்னும், அதன்கண் அமர்ந்து அதன் வேலையைச் செவ்வனே பார்த்துவந்த காலத்தும் இயற்றி வெளியிட்டு வந்தனராயினும், அவர்கள்தமது 35 ஆம் ஆண்டில் அவ் வேலையின்றும் விலகிய பின்னரேதான், தம்மறிவையும் முயற்சியையும் மாயாவாத வைணவ மறுப்புரை நூல்கள் இயற்றுவதிலும், இத்தென்னாடெங்குஞ் சென்று நூற்றுக் கணக்கான விரிவுரைகள் நிகழ்த்துவதிலும் முழுதுஞ் செலுத்தலானார்கள். நாயகரவர்கள் சென்னை நகராண்மைக் கழக வேலையி னின்றும் நீங்கிய காலம் கி. பி. 1881ஆம் ஆண்டென்று, சித்தாந்த தீபிகை என்னும் ஆங்கில வெளியீட்டின் நான்காம் மலர் ஒன்பதாம் இதழிற் குறிக்கப்பட்டிருக்கின்றது. அவ் வலுவலினின்றும் அவர்கள் நீங்க வேண்டி நேர்ந்த காரணத்தை அவர்களே எமக்கு நேரிற்றெரிவித்தனர்கள். அதுவருமாறு, நாயகரவர்கள் சிவபிரான் றிருக்கோயிற்றிரு விழாக்களுக்குச் சென்று இறைவனை வணங்குவதிலும் அவ்விழாக்களுக்கு வரும் பெருந்திரளான மக்கட்கூட்டத்தைக் காண்பதிலும் மிக்க விருப்பம் வாய்ந்தவர்கள். திருவொற்றியூர் மகிழடி விழாவுக்குந் திருமயிலாப்பூர் அறுபத்து மூவர் விழாவுக்கும் எம்மைத் தம்முடன் அவர்கள் அழைத்துச் சென்றதுண்டு. அக்காலங்களில் அவர்கட்குண்டான மனக் கிளர்ச்சியினைக் கண்டு யாம் மிகவும் வியப்புற்றோம். பெருந் திரளான மக்கட்கூட்டத்திடையே இறைவன் திருவுருவம் ஆடையணிகலங்களாலும் மலர்மாலைகளாலும் ஒப்பனை செய்யப்பட்டு, இசைக்கருவி முழக்கத்துடனும், அன்பர்களிடும் அரஅர என்னும் ஓசையுடனும் வருதலைக் கண்டபோது, அவர்களுடைய கைகளிரண்டுந் தலைமேற் கூம்ப, அவர்கள் கண்களிலிருந்து நீர்வரிவரியாய் ஒழுக முழுதும் அன்பின் வழியராய் அவர்கள் நின்ற நிலை எமது கன்னெஞ்சத்தையும் உருகச் செய்தது; நாயகரவர்கள் திருவுருவவழிபாட்டின் இன்றியமையாமையினை நன்குவிளக்கி அர்ச்சாதீபம் எனப் பெயரிய ஓர் அரிய நூல் எழுதிய வளவில் நில்லாது; தாம் எழுதியபடியே அவ்வழிபாட்டில் உள்ளம் ஈடுபட்டு நின்றமை, அவர்கள் தாம் உண்மையென ஆராய்ந்து கண்டதுறையிற் காட்சிமட்டில் அமையாது செய்கையிலும் அதனைப் புலப் படுத்தும் வாய்மையினர் என்பதைத் தெரிவிக்கின்றது. இவ்வாறு திருவொற்றியூர் திருமயிலாப்பூர்த் திருவிழாக் களுக்குச் சென்று இறைவனை வணங்குதலிற் கடைப் பிடியாய் நின்ற நாயகரவர்கள் 1881ஆம் ஆண்டு திருவொற்றியூரில் நிகழ்வதான மிகிழடித் திருவிழாவுக்குச் செல்லல் வேண்டி அன்றைப் பிற்பகலுக்கு விடுதி தருமாறு தமக்கு மேலுள்ள நகராண்மைக் கழகத் தலைவரை வேண்டினார். ஆனால், அத்தலைவரோ நோய்முதலான இன்றியமையாத காரணங்களாலன்றி, இத்தன்மையவாம் புல்லியகாரணங்கள் பற்றி விடுதி தரல் ஆகாதென்றார். அது கேட்ட நாயகர் உளம் வருந்தி, யான் பொய் சொல்ல மாட்டாமல் மெய்யே சொல்லி அரைநாள் விடுதி கேட்டால் அதனைக் கொடுக்கலாகாதென்றும், அது புல்லிய காரண மென்றும் புகலுகின்றீர்கள்! ஆனாற், பொய்க் காரணங் கற்பித்துச் சொல்லி விடுதி கேட்பாரெல்லாம் அதனை எளிதிலே பெறுகின்றனர்! பொய் கூறிப் பிழைப்பதிலும், அதற்கேதுவான இவ்வேலையினின்றும் யான் விலகுதலே தகுவது எனக் கூறி, அவ்வேலையை உடனே விட் டொழித்தார்கள். 4 தமது 35ஆம் ஆண்டிற்கு முன் நாயகர் ஆற்றிய சைவத் தொண்டு நாயகரவர்கள் மாயாவாத மதத்தைத் தழுவியிருந்த தமது இளமைக்காலத்தில் முதன்முதல் உரைநடையில் இயற்றி வெளியிட்ட மறுப்பு நூல் வேதபாஹ்ய சமாஜ கண்டன மாகுமென்பதும், அந்நூல் வெளிவந்த ஆண்டு கி.பி.1868 ஆகையால் அப்போது அவர்கட்கு அகவை 22- ஆய தென்பதும் முன்னரே குறிப்பிட்டிருக்கின்றேம். அதற்குப் பின் ஐந்தாண்டுகள் கழித்து 1873 ஆம் ஆண்டிற் சிவாதிக்ய ரத் நாவளி என்னும் மிகச் சிறந்த ஆராய்ச்சி மறுப்புரை நூல் நாயகரவர்களால் இயற்றப்பட்டுச் சுந்தர சிவாசாரியசுவாமி என்னும் ஒரு துறவி பெயரால் வெளியிடப்பட்டுள்ளது. நாயகரவர்கள் தாம் இயற்றிய நுல்களைத் தமது பெயராலுந் தம் நண்பர் மாணாக்கர் பெயராலுந் தாம் வெளியிடும் வழக்கத்தைத் தமது ஆசாரிய பிரபாவ நூலில் ( 194ஆம் பக்கம்) குறிப்பிட்டிருக்கின்றார்கள். அப்போது நாயகருக்கு அகவை 27. இவ்வைந்தாண்டுகட்கிடையில் எப்போது நாயகரவர்கள் மாயாவாதத்தை விட்டொழித்துச் சைவ சித்தாந்தக் கொள்கையினைத் தழுவினார்கள் என்பது புலப்படவில்லை. என்றாலுஞ் சிவாதிக்ய ரத்நாவளி முதற்பாகத்திலேயே அவர்கள் வடநூற் கடலுஞ் சைவசித்தாந்த நூற் கடலுந்துருவி ஆராய்ந்தெடுத்து விளக்கியிருக்கும்அரும்பெரும் பொருட் பரப்பின்றன்மையினை உற்று நோக்குங்கால், அவர்கள் வேதபாஹ்யசமாஜ கண்டனம் எழுதி வெளியிட்ட ஒன் றிரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே மாயவாதமருள் நீங்கிச் சைவசித்தாந்தத்தெருள் தலைக் கூடப் பெற்றாராகல் வேண்டுமென்பது உய்த்துணரக் கிடக்கின்றது. இனி, நாயகரவர்கள் சைவ சித்தாந்த உண்மை தெளிந்து, பிறப்புஇறப்பு இல்லா முழு முதற் கடவுட்டன்மை சிவ பிரான் ஒருவர் மேற்றாகவே வைத்துப் பழைய வடநூல்கள் தமிழ் நூல்களெல்லாம் ஒரு முகமாய் நின்று ஒத்துரைக்கக் காண்டலானும், மற்று விஷ்ணுவோ பத்துப் பிறவிகளிற் பிறந்துழன்று பின் மாய்ந்தாரென்று அவருடைய அருஞ் செயல்களைக் கூறுவான் புகுந்த பாகவதம் முதலான விஷ்ணு புராணங்களே வெளிப்படையாய்க் கூறக்கண்டலானும், அங்ஙனமே நான்முகன் இந்திரன் முதலான ஏனைத் தேவர்களும் பிறந்து வளர்ந்து மாண்டாரென அவரவரைச் சிறப்பித்துக் கூறும் புராணங்களே தெற்றென விளம்பக் காண்டலானும், மக்களெல்லாருந் தம் போன்ற மக்களைக் கடவுளராகப் பிறழ நினைந்து அவரையே வழிபட்டு, உண்மை முழுமுதற் கடவுளாகிய பிறப்பிறப்பு இல்லாச் சிவத்தை வழிபடாமல் தமது பிறவிப் பயனை இழந்து பொய்ந்நினைவில் மாண்டு போதலாகாதென உள்ளத்தெண்ணி, அவரைப் பொய்ந்நெறியின்றுந் திருப்பிச் சைவசித்தாந்த மெய்ந்நெறியிற் செலுத்திச் சிவவழிபாட்டில், தலைப்படுவிக்க முனைந்தார்கள். இவ்விந்திய நாட்டிற் சிவபிரானை வழிபடுஞ் சைவ சமயமும் விஷ்ணுவை வழிபடும் வைணவசமயமும் அன்றி வேறு சமயங்கள் இல்லாமை நினைவிற் பதிக்கற்பாற்று. பண்டை நாளிலிருந்த மக்கள் இறைவனை அப்பனாகவும் இறைவியை அம்மையாகவும் வைத்து வணங்கி வந்தார்கள். அங்ஙனம் வணங்கி வந்தவரையில் அம்மக்களுள் ஏதொரு வேற்றுமையும் உண்டாயதில்லை. மற்றுக் காலஞ்செல்லச் செல்ல இறைவியை வணங்கிவந்த குழுவினர், கடவுளைப் பெண் வடிவில் வைத்து வணங்குதலை இழிவாகக் கருதி, அதனையும் திருமால் என்னும் ஆண்வடிவாக்கி வணங்கத் தலைப்பட்டு, முன்னமே கடவுளை ஆணுருவில் வைத்து வணங்கி வந்த குழுவினரிலிருந்துந் தம்மைவேறு பிரித்துக் கொண்டார்கள். இங்ஙனம் பிரிவும் வேற்றுமையும் உண்டாகவே, இறைவனை வணங்கிய குழுவினர் சைவர் எனவும், இறைவியை விஷ்ணுவென்னும் ஆண் வடிவாக்கிய குழுவினர் வைணவர் எனவும் வேறு வேறு பெயர் பெறலாயினர். அங்ஙனம் வைணவர் இறைவியை ஆண் வடிவாகக் கற்பித்துக் கொண் டாலும், விஷ்ணுவோ தமக்குரிய பெண்வடிவை இடையிடையே மேற்கொண்டு சிவபிரானைக் கூடி ஐயனார் முதலான பிள்ளைகளைப் பெற்றாரெனவும் நான்முகனாகிய பிரமன் திருமாலின் கொப்பூழினின்றும் பிறந்தானெனவும் வடமொழிப் புராண நூல்களே நன்கெடுத் துரைப்பக் காண்டலின் திருமால் இறைவியாகிய பார்வதி யேயல்லாமற் பிறர் அல்லரென்பது ஐயுறவின்றித் துணியப்படும். இறைவியாகிய உமை இறைவனோ டொத்த சிறப்பினளே யன்றி அவனிற் சிறிதுங் குறைந்தவள் அல்லள். இறைவனாகிய சிவபிரான் சிவந்த ஒளிவடிவினன், இறைவியாகிய உமை நீல ஒளி வடிவினள். தூய ஒளிவடி விற்றிரண்ட இரண்டு உருவுகளில் எஃது உயர்ந்தது; எது தாழ்ந்தது? எம்போற்றாய் வயிற்றிற் பிறக்கும் மக்களல்லரோ ஊனுங்குருதியும் மலமும் முடை நாற்றமும் நிரம்பிய அருவருப்பான உடம்பு உடையவர்கள்? நம் மக்களுள் ஆண்பாலார் பெண்பாலார் அனைவரும் அருவருப்பான உடம்புடையரேயாவர்; இவருள் ஆண்பாலாரை உயர்ந்த வரெனவும், பெண்பாலாரைத் தாழ்ந்தவரெனவும் நம்மனோர் பிழையாகக் கருதுவது போலச் சிவபிரானை உயர்ந்த வரெனவும், அம்மையைத் தாழ்ந்தவ ளெனவும் பண்டிருந்த நம் முன்னோரில் ஒரு சாரார் எண்ணியது பெரும் பிழை; மன்னிக்கப்படாத பெருங் குற்றமுமாம். அங்ஙனம் பிழையாக எண்ணியதோடு இறைவியை ஆண்வடிவான திருமால் ஆக்கி, அவ்வளவில் அமையாமல், அத்திருமாலினுஞ் சிவபிரானைத் தாழ்ந்தவ ராக்குதற்குப் பல பொய்யான புராண கதைகளையும் பின் நாட்களில் வந்த வைணவர்கள் புதிய புதிய வாய்ப் படைத்து, நம் மக்களுட் பண்டிருந்த ஒற்றுமையினையும் அன்பையுஞ் சிதைத்தார்கள். வைணவர்களால் தொழப்படும் முதலாழ்வார்கள் மூவரிற் பொய்கையாழ்வார் பேயாழ்வார் காலம் வரையிற் சைவத்திற்கும் வைணவத்திற்கும் ஏதொரு வேற்று மையும் உண்டாகவில்லை. இவ்வாழ்வார்கள் இருவரும் அருளிச் செய்த பாடல்களில், இறைவன் திருவுருவம் வலது புறத்திற் சிவபிரான் வடிவும் இடது புறத்தில் திருமால் வடிவும் ஒருங்கு கலந்து ஒன்றாகவே துலங்காநிற்கின்றது என்று தெளிவாகவே எடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றது. பொய்கை யாழ்வார் அருளிச் செய்தமுதற்றிருவந்தாதியில், அரன் நாரணன் நாமம் ஆன்விடைபுள் ஊர்தி உரைநூல் மறை உறையுங்கோயில் - வரைநீர் கருமம் அழிப்பு அளிப்புக் கையதுவேல் நேமி உருவம் எரி கார்மேனி ஒன்று எனவும் பொன்திகழுமேனிப் புரிசடையம் புண்ணியனும் நின்றுலகந் தாய நெடுமாலும் - என்றும் இருவர் அங்கத்தால் திரிவரேனும் ஒருவன் ஒருவன் அங்கத் தென்றும் உளன் எனவுஞ் சிவவுருவுந்திருமாலுருவும் ஓர் உருவாய் வைத்துக் கூறப்பட்டிருத்தல் காண்க. இங்ஙனமே பேயாழ்வார் அருளிச் செய்த மூன்றாந்திருவந்தாதியிலுந், தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவுஞ் சக்கரமும் சூழ்அரவும் பொன்நாணுந் தோன்றுமால் - சூழுந் திரண்டருவி பாயுந்திருமலை மேல் எந்தைக்கு இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து என்று சிவபிரான் திருவுருவுந் திருமால் திருவுருவும் ஓர் உருவாய் வைத்துரைக்கப்பட்டிருத்தல் கண்டு கொள்க. இவ்வாறு முதலாழ்வார் இருவர் காலம் வரையிற் சைவமும் வைணவமும் மிகவும் ஒற்றுமையான உயர்ந்த நிலையில் வைகிச் சிறந்து திகழாநிற்க, அவ்விருவர்க்குஞ் சிறிது காலம் பிற்பட்டுத் தோன்றிய பூதத்தாழ்வார் காலத்தில் அவ்விரண்டற்குள்ளுஞ் சிறிது வேற்றுமையும் பகைமையுந் தலைக்காட்டத் தொடங்கின. சிவபிரானை இகழ்ந்து கூறும் நான்குபாட்டுகள் பூதத்தாழ்வார் இயற்றிய அந்தாதியிற் காணப்படுகின்றன. இனிப் பூதத்தாழ்வார்க்குப் பின் வந்த ஆழ்வார்களிற் சிலர் சிவபிரானை ஓரோவிடங்களில் உயர்த்தியும் ஓரோவிடங்களில் தாழ்த்தியும், வேறு சிலர் இழித்தே பேசியும். மற்றுஞ்சிலர் சிவபிரானைப் பற்றி ஏதுமே கூறாதுவிட்டும் பாட்டுக்கள் பாடியிருக்கின்றனர். சிவபிரானை இகழ்ந்து பேசுவதில் முதல் நின்றவர் திருமழிசையாழ்வார் ஒருவரேயாவர். இவற்றின் விரிவுகளை யாம் பெரிதாராய்ந் தெழுதிய மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் நூலின் இரண்டாம் பகுதியிற் காண்க. இனிச், சைவத்திற்கும் வைணவத்திற்கும் வேற்றுமையும் பகைமையும் அங்ஙனம் பிற்பட்ட ஆழ்வார்கள் காலத்தில் உண்டாவதற்குக் காரணமென்னென்றால், அதனையும் ஒரு சிறிது காட்டுதும். பண்டை நாளிற் சிவபிரான் பிறப்பு இறப்பு இல்லா முழுமுதற் கடவுளாக வைத்து வணங்கப்பட்டு வந்தாற்போலவே, திருமாலும் பிறப்பு இறப்பு இல்லா முழுமுதற்கடவுளாகவே வைத்து வணங்கப்பட்டு வந்தனர். அக்காலத்தில் அவர்கள் திருமால் என வைத்து வழிபட்ட தெய்வம் இறைவியாகிய பார்வதியேயல்லாமல் வேறு பிறர் அல்லர். இற்றைக்கு இரண்டாயிர ஆண்டுகட்கு முன்னமே பாடப்பட்ட பரிபாடலிற் போந்த திருமால் வணக்கப் பாட்டொன்றில், முதன்முறை இடைமுறை கடைமுறை தொழிலிற் பிறவாப் பிறப்பினை பிறப்பித்தோர் இலையே என்று திருமால் பிறவாத கடவுள் என்று நுவலப்பட் டிருக்கின்றனர். மற்ற ஆழ்வார்கள் காலத்திலோ, நம் போற்றாய் வயிற்றினின்றும் பிறந்து உழன்று மாய்ந்த அரசர் களும் பிறருமாகிய கண்ணன், இராமன், வாமனன் முதலான மக்கள் திருமாலின் பிறப்புகளாக உயர்த்து வைத்து வைணவர்களால் வணங்கப்படுவாராயினர். கடவுளுக்குப் பிறப்பு இறப்புச் சொல்ல ஒரு சிறிதும் ஒருப்படாத வர்களும். மக்களாய்ப் பிறந்து மாண்டவர்களைத் தெய்வங் களாக வைத்து வணங்கக் கடுகளவும் இசையாதவர்களுமான சைவ சமயத்தவர்களோ பிற்காலத்து வைணவக் கொள்கைக்கு உடன்படாதவராய் அதனை மறுக்கவே, வைணவர் உண்மை யுணராமல் அவரை மிகுதியாய்ப் பகைக்கலாயினார். ஆனாற், சைவர்களோ மூலப்பொருளாகிய திருமாலைச் சிறிதும் இகழ்தலின்றி இன்றுகாறும் அவரை வழிபட்டே வரு கின்றனர். திருப்பதி, திருவரங்க முதலான திருமால் கோயில் கட்குச் சென்று நேர்த்திக் கடன் செலுத்தும் மக்களின் தொகையை ஊன்றிநோக்கினால், அவர்களில் முக்காற் பங்குக்கு மேற்பட்டவர் சைவ சமயத்தைச் சேர்ந்தவர் களாகவேயிருத்தலை இன்றுங் காணலாம், மேலும், வைணவ மதத்திற்குரிய கண்ணன். இராமன், நாராயணன் முதலிய பெயர்களைச் சைவ சமயத்தவர்களில் எத்தனையோ பலர் பூண்டிருத்தலை நாளுங் காணலாம். அதுபோல, வைணவமதத்தினரில் ஒருவராவது சிவன், முருகன், சங்கரன், சம்பு, ஆறுமுகன், விநாயகன் வீரபத்திரன் முதலான சைவ சமயப் பெயர்களை பூண்டிருத்தல் சிறிதாயினுங்காணல் இயலுமோ? இயலாதே சைவ சமயிகள் எல்லா மதத்திலும் விளங்குபவர் ஒரே கடவுள் என்னுங் கொள்கையினராதலால், அவர்கள் எந்த மதத்தினர் கோயில்களுக்குஞ் சென்று, அங்கங்கே அவரவர் வணங்குந் தெய்வங்களையுந் தந் தெய்வமாகவே கருதி வழிபட்டு வருகின்றனர். மகமது மதத்தினர் நாகூர்ப் பள்ளி வாசலில் வைத்து வணங்கும் மீரா சாயபு ஆண்டவர் கோயிலிற் சென்று வழிபடும் பெருந் தொகை யினரான கூட்டத்தாரிற் பெரும்பாலார் சைவ சமயத்திற் சேர்ந்தவரேயாவர். வேளான் கண்ணியில் உரோமன் கத்தோலிக் கிறித்துவர் வைத்து வணங்கும் மேரியம்மையை நேர்ந்து கொண்டு, அவ்வம்மையை வணங்கச் செல்லும் பெருந்தொகையினரான மக்களுஞ் சைவசமயத்திற் சேர்ந்தவ ரேயாவர். இங்ஙனமாகப் பண்டிருந்தே சைவ சமயிகள் ஏனைச் சமயத் தெய்வங்களையும் வழிபடுந் தன்மைய ராயிருத்தலால், அவர்கள் எந்தச் சமயத்தையும் இகழ்வது மில்லை, எந்தச் சமயிகளையும் பகைப்பதுமில்லை, மற்றைச் சமயிகளைத் தமது சைவ சமயத்திற் புகுமாறு வற்புறுத்து வதுமில்லை. இவ்வியல்பினரான சைவ சமயிகளை இடைக் காலத்து வைணவர்கள் மிகுதியாய்ப் பகைத்துச் சிவபிரானை இகழ்ந்து கீழ்ப்படுத்துதற்குப் பொய்யான பல கட்டுக்கதை களையும் பொதுமக்களுக்குத் தெரியாத வடமொழியிற் புனைந்து வைத்து, அவைகளையெல்லாஞ் சூதர் வியாசர் முதலான முனிவர்களே இயற்றினார்களெ னவும் பொய்யுரை பகர்ந்தனர். அதுமட்டுமோ, ஆழ்வார்கள் காலத்துக்கு முன்னும் ஆழ்வார்கள் காலத்திலும் எல்லாஞ் சிவபிரானை வழிபடு வாருந் திருமாலை வழிபடுவாரும் வழிபாடு ஆற்றுங் காலங்களில் தம் நெற்றியிலும் உடம்பிலுந் திருநீற்றையே பூசி வந்தனர். இவ்வுண்மை, கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும் பெரிய கோலத் தடங்கண்ணன் எனவும் நீறு செவ்வேஇடக் காணின் நெடுமாலடியார் என்று ஓடும் (ஏறியபித்தினோடு என்னும் செய்யுள்) எனவும் நம் ஆழ்வார் தாம் பாடிய பாடல்களிற் கூறுமாற்றால் நன்கு விளங்கா நிற்கும். இன்னுந் தமிழ்நூல்களின் மட்டுமேயன்றி, வடமொழியிற் சிறந்த அறிவுநூல்களாக வைத்துப் பாராட்டப்படும் அதர்வசிரசு அதர்வசிகை, கைவல்யம், காலாக்நிருத்ரம், சுவேதாசுவதரம், பஸ்மஜாபாலம், ருத்ராக்ஷஜாபாலம், ப்ருஹஜ்ஜாபாலம் முதலான உப நிடதங்களுந் திருநீறு, உருத்திராக்கம் அணிதலையே புகழ்ந்தெடுத்துப் போற்றுகின்றன. அதுவேயுமன்றி, ராமரஹஸ்யோபநிஷத் இராமர் தமது உடலமெங்குந் திருநீறு பூசியிருத்தலையும், ஸான்டில் யோபநிஷத் தத்தாத்திரேயர் அங்ஙனமே தமது திருமேனி முழுதுந் திருநீறு அணிந் திருத்தலையுஞ் சிறந்தெடுத்துக் கூறுகின்றன. இவ்வாறாக வடமொழி தென்மொழிப் பழைய நூல் களும், வைணவ ஆழ்வார்கள் பாடிய பாட்டுகளும் எல்லாந் திருநீற்றுப் பூச்சினையே சைவ வைணப் பெரியார் அனைவரும் மேற்கொண்டிருந்த வரலாற்றினை விளக்கமாய் எடுத்துக் கூறா நிற்கவும், ஆழ்வார் கட்குப் பின் வந்த இராமாநுசர் முதலான வைணவ ஆசிரியர்கள் அவற்றிற்கு மாறாக, நெற்றியில் மண்பூசும் ஒரு புதிய வழக்கத்தை உண்டாக்கித் தெய்வ வழிபாட்டின் மட்டுமேயன்றிப் பழக்கவழக்கங்களிலும் வேற்றுமையின்றி ஒரு தொகுதியினராயிருந்த நந்தமிழ் மக்களைத் தெய்வவழிபாட்டில் வேறாக்கி ஒருவரையொருவர் பகைத்துப் போராடுமாறு செய்து வைத்ததுமல்லாமல், அவர்களில் ஒரு குழுவினர் நெற்றியில் மண் பூசி வேறு தனியராய் நின்று கலாம் விளைக்குமாறுஞ் செய்துவிட்டனர். நெற்றி மண் பூசுவாரிலும் ஒரு கூட்டத்தினர் நடுவிற் செம்மண்ணும் அதன் இருபுறத்தும் வெள்ளை மண்ணும் பூசா நிற்க, மற்றொரு கூட்டத்தினர் நடுவில் மஞ்சள் மண்ணும் பக்கங்களில் வெள்ளை மண்ணுங் குழைத்து இடுகின்றனர்! இன்னும், வைணவரில் ஒரு பெரும் பகுதியினர் நெற்றியிற் காலிழுத்த நாமந் தீட்டிக் கொண்டு தம்மைத் தென்கலையார் என்று சொல்லிக் கொள்ள, மற்றொரு பகுதியினர் கால் இன்றி வளைத்த நாமம் தீட்டிக் கொண்டு தம்மை வட கலையார் என்று வழங்கிக் கொள்கின்றனர். அதுவேயுமன்றி, இத் தென்கலை வடகலைக் கூட்டத்தினர் தத்தங் கொள்கையே உண்மையெனப் பகர்ந்து தமக்குப் பெரிதும் இகலித் தீராப் பெருபோர் புரிந்தும் வருகின்றனர். இங்ஙனமெல்லாஞ் சைவ சமயத்தொடுமாறுபட்டும், அங்ஙனம் அதனொடு மாறு பட்டாலுந், தமக்குள்ளாவது ஓர் ஒற்றுமையுடையவராய் வாழாமல் தமக்குள்ளேயே பலவேறு வகையினராய்ப் பிளவு பட்டுக்கலாம். நிகழ்த்துவாரான இப்பல்வேறு வைணவக் குழுவினருந், தாந்தாம் புதிய புதிய வாய்ப் படைத்த கொள்கை களையும் பழக்கவழக்கங்களையும் நிலைநிறுத்துவான் புகுந்து அவைகளுக்கேற்ற பொய்யுரைகளையும் பொய்க்கதை களையும் வரவர மிகுதியாய்ப் படைத்து வடமொழியிற் பல நூல்களை இயற்றியுஞ் சிலவற்றை வடமொழிப் பழைய நூல்களில் நுழைத்தும் பெரியதொரு குழப்பத்தையுந்தலை தடுமாற்றத்தையும் உண்டாக்கலாயினர். தென்றமிழ் ஆரிய நூற்பழங் கொள்கைகளையும் பண்டைக்கால நன்மக்களின் பழக்க வழக்கங்களையும்உண்மையான் ஆராய்ந் துணர்ந்த சைவ சமயப் பெரியார்கள் பிற்காலத்து வைணவர்கள் செய்யுஞ் சமயப்புரட்டுகளைக் கண்டு அருவருத்து, அவையிற்றைச் சிறிது சிறிதா எடுத்து வெளிப்படுத்தி உலகில் உண்மையை விளக்கத் துவங்கவே, சைவ சமயத்திற்கும் வைணவத்திற்கும் வேற்றுமையும் பகையும் விளையலாயினவென்று அறிந்து கொள்ளுதல் வேண்டும். இச்சமயப் பூசலில் வைணவர்கள் சைவர்களைப் பகைத்தாற்போற், சைவர்கள் வைணவர்களைப் பகைத்திலாமை இருவர்தம் பழக்க வழக்கங்களையுஞ் சிறிது நோக்கினாலும், நேரே நன்கறியலாம். ஆகவே, வடமொழியில் வைணவர்களாற் புதியவாய் படைத்து நுழைக்கப்பட்ட புராணப் புரட்டுரைகளை எடுத்துக்காட்டிப் பிறப்பு இறப்பு இல்லா முழுமுதற் கடவுளிலக்கணங்களை உலகிற்கு விளக்கிக் காட்டுதலே தமக்குரிய இன்றியமையாக் கடமையாக நினைந்து நாயக ரவர்கள் தமது இருபத்தேழாம் ஆண்டிற் சிவாதிக்ய ரத்நாவளி முதற்பாகத்தை இயற்றி வெளியிடலானார்கள். இந்நூலுக்கு முன்னும் இராமாநுஜமதசபேடிகை எனப் பெயரிய ஒரு நூல் நாயகரவர்களால் இயற்றப்பட்டு வெளி வந்தமை, சிவாதிக்யரத்நாவளி முதற்பாகத்தில் அதனை அவர்கள் குறித்திருப்பதனால் அறியப்படுகின்றது. ஆயினும், அந்நூல் எமக்குக் கிடைத்திலாமையின், அதனைப் பற்றி ஏதுஞ் சொல்லுதல் இயலவில்லை. இனிச் சிவாதிக்யரத்நாவளி முதற்பாகம் நாயகரவர் களது புத்திளமைக் காலத்திற் பெரிதாராய்ந்தெழுதப்பட்ட அரிய மறுப்புரை நூலாக விளங்குதலால், அதன்கட் பொதிந்த அரும்பொருள்கள் சிலவற்றை ஈண்டெடுத்துச் சுருக்கிக் காட்டுதும், அவைகொண்டு நாயகரவர்களின் அரும்பெரும் புலமையும் ஆராய்ச்சித் திறனும் அவர்கள் சைவ சமயவிளக்கத்திற்கு ஆற்றிய பெருந்தொண்டின் விழுப்பமும் எவரும் எளிதிலுணர்ந்து பயன் பெறலாமாகலின், சென்னையிலிருந்த பொன்னப்பபிள்ளை யென்னும் பெரியார் ஒருவர், அக்காலத்திருந்த வைணவர் சிலர் சிவபிரானை இழித்துப் பேசிய இழிப்புரைகளைக் கேட்டு மனம் பொறாராய், மூடமதிகண்டனம் எனப் பெயரிய ஒரு மறுப்பு நூல் எழுதி வெளியிட்டனரென்றும், அது கண்ட நாக பட்டினம் இராமாநுஜ சித்தாந்த சபையார் தூண்டுதலின் மேல் ஒரு வைணவர் நன்மதி விளக்கம் எனப் பெயர் தந்து அதற்கோர் எதிர் மறுப்பு வெளியிட்டனரென்றும், அவ்வெதிர் மறுப்புக்குப் பெருமறுப்பாகவே நாயகரவர்கள் சிவாதிக்ய ரத்நாவளி இயற்றி வெளியிடலாயிற்றென்றும் நாயகரவர் களே இந்நூற் றுவக்கத்தில் இந்நூல் வரலாறு தெரிவித்திருக் கின்றார்கள். 5. வேதாந்த சூத்திரத்தில் விலக்குண்ட பாசுபத பாஞ்சராத்திர மதங்கள் வேதாந்த சூத்திரத்தில் பத்யுரசாமஞ்ஜஸ்யாத் என்னுஞ் சொற்றொடரால் இறைவனை நிமித்த காரணன் எனக் கூறும் பாசுபதமதத்தை வியாசர் மறுத்துக் கூறுதலின், பாசுபதமுஞ் சிவாகமங்களும் ஒப்புக் கொள்ளற்பாலன அல்ல என்று சங்கராசாரியர் அதற்கு உரை கூறியிருத்தலை அவ் வைணவர் எடுத்துக் காட்டினர். அதற்கு நாயகர் கூறும் மறுப்பு: இறைவன் உலகின் வேறாய் நின்று அதனைப் படைப்பான் எனப் பகர்வாரை வியாசர் மறுத்தனரேயன்றிச் சிவபிரானையுஞ், சிவாகமங் களையும், அதன்கண் எள்ளளவுங் குறைத்துப் பேசிற்றிலர். அங்ஙனமாகவுஞ், சங்கராசாரியர் கடவுளும் உலகமும் ஒன்றேயென்னுந் தமது மாயாவாதக் கொள்கையை அச்சூத்திரத்தில் நுழைத்தல் வேண்டிப் பாசுபத மதத்தை அங்கே கொணர்ந்து அதனை அவர் மறுத்தாற்போலவே, 2-ஆம் அத்தியாயத்து 2-ஆம் பாதத்து 44ஆஞ் சூத்திர வுரையில் வைணவ மதத்தையுங் கொணர்ந்து மறுத்திருத் தலின், சங்கராசாரியாருரை, சைவர் வைணவரிருவர்க்கும் உடம்பாடாகாதென்பது அறியற்பாற்று. மேலுங், கடவுளை நிமித்த காரணராகக் கொள்வார் எவராயினும் அவரெல்லாரையும் வியாசர் ஒருங்கே மறுத்திருக்கின்றனர். சைவர்களிலிருந்து புதிது தோன்றிய பாசுபதர் என்னும் ஒரு சாரார் கடவுளை நிமித்த காரணராக மட்டும் வைத்துரைப்பது பொருந்தாதாகலின், அவரை மறுத்தற்குப் பத்யுரசாமஞ்ஜஸ்யாத் என்னுஞ் சூத்திரம் எழுந்ததெனக் கூறினவர்கள் நீலகண்ட சிவாசாரியார் சங்கராசாரியார் முதலான உரைகாரரேயாவர், அவர் கூறிய அவ்வுரைகொண்டு, சைவசித்தாந்தமுஞ் சிவாகமங்களும், வேதாந்தமான உபநிடதங்களுக்கு மாறாகும் எனக் கரைவது பொருந்தாது. இன்னுஞ் சங்கராசாரியார்க்கு முன்னே வேதாந்த சூத்திரத்திற்கு உரை வருத்தவரான நீலகண்ட சிவாசாரியாரே, யாம் வேத சிவகமங்களுக்கு வேற்றுமை கண்டிலம், வேதமுஞ் சிவாகமம் எனப்படும் என 38ஆஞ் சூத்திரவுரையில் நன்கெடுத்துக் கூறினர். இனி, வேதங்களிலுஞ் சிவாகமங்களிலுங் கூறப்பட்ட பொருள்கள், பதிபசு பாசம் என்னும் முப்பொருள் இலக்கணங்களும், பஞ்சப் பிரமமந்திரங்களும் ஆறு அத் துவாக்களினியல்புகளும், இவ்வழிபாட்டிலக்கணங்களும் சிவபிரான் திருக்கோயில் இலக்கணங்களும் அத்திருக் கோயிலிற் செய்யப்படுந் திருவிழாச் சிறப்புகளும் ஆம் என்பதனை நாயகரவர்கள் விளக்குவான் புகுந்து, முதலில் வேதவுரைகளை எடுத்துக் காட்டுன்கிறார்கள். இரண்டு காலும் நான்கு காலும் உள்ளவைகள் பசுவெனப்படும் அப்பசுக்களுக்குப் பதியாவான் உருத்திரமூர்த்தியேயாகும் (இருக்குவேதம் 10, 121, 3) பதியாகிய சிவபிரானை அறிந்தவர்கள் எல்லாப் பாவங்களினின்றும் நீங்கி, எல்லாக் கவலைகளும் ஒழிந்து, பிறப்பு இறப்புக்களைக் கடந்து வீடு பேறெய்துவர். (சுவேதா சுவதரோபநிடதம், 1-11) சிவஞானத்தை எய்தின புலவர்கள் குடும்பபாசத்தைக் கொளுத்துவர் (கைவல்யோபநிடதம், 11) இனி, எசுர் ஆரணியகத்தில் அடங்கியுளதான நாராயண பிரசி நசத மந்திரத்தில் சத்யோஜாதம் முதலான சதாசிவ மூர்த்தியின் ஐந்து முகங்களை நோக்கி வழிபடும் வணக்கங் காணப்படுதலின் பஞ்சப் பிரம மந்திரங்கள் வேதத்தினும் உளவாதல் தெளியப்படும். அங்ஙனமே, ஆறத்துவாக்களுக்குப் பதியாகிய உருத்திரரே! எனவேதம் இறைவனை விளித்தலின், ஆறத் துவாக்களும் ஆண்டுக் கூறப்பட்டமையும் இனிது விளங்கா நிற்கும். இனி, இருக்குவேத வழியதான போதாயந கற்ப சூத்திரத்தில் முப்புரம் எரித்த இறைவன் வழிபாடு முதலியன நுவலப்படுதலின், சிவவழிபாடுஞ் சிவபிரான் திருக்கோயில் அத்திருக்கோயிற் றிருவிழா முதலியனவும் வேதத்திற் குறிப்பிக்கபட்டனவேயாதல் பெறப்படும். இவ்வாறு வேதங்களிற் சுருக்கமாக வைத்துரைக்கப் பட்ட சைவ சமயப் பொருள்கள் ஆறுஞ் சிவாகாமங்களில் விரிவாக விளக்கிச் சொல்லப்படுதலின், வேதமுஞ் சிவாகமும் இவ்வாற்றால் ஒன்றேயாதல் பெறப்படும். இனிக், கூர்மபுராணத்திற் சிவபிரானுந் திருமாலும் மயக்க நூல்களை உண்டாக்கினார்களென்பது சொல்லப் பட்டமையின், சிவபிரான் அருளிச் செய்த சிவாகமங்கள் கொள்ளற்பாலன அல்லவெனின், அக்கூர்மபுராணமே, பாசுபதவிரதத்தைத் தெரிவிக்கும் ஆகமமந்திரங்கள் வேதத்தி னின்றும் பிழிந்தெடுத்த சாறாமென்றும், வீடுபேற்றை விரும்பினவர்கள் அவற்றை ஓதற்பாலராவரென்றுங் கூறு தலின், அப்புராணத்தால் விலக்கப்பட்ட மயக்கநூல்கள் சிவாகமங்கள் அல்லாமை தெற்றென விளங்கா நிற்கும். அற்றேல், அதனால் விலக்கப்பட்ட மயக்கநூல்கள் யாவையோ வெனின், பிணச்சாம்பல், மக்களின் எலும்பு தலையோடு முதலியவைகளை உடல் மேல் தாங்குதல் வேண்டுமெனக் கற்பிக்கும் வாமபாசுபதம் என்னும் மதத் தையும், ஆசிரியன் மனைவியைப் புணர்தல் முதலான கொடிய செயல்கள் குற்றம் ஆகாவெனக் கிளங்கும் சௌம மதத்தையும், மண்டையோடுகைக் கொளல் கட்குடித்தல் முதலிய தீயசெயல்களைச் செய்யுமாறு நுவலும் லகுலீச பைரவமதங்களையும் பற்றிய நூல்களே மயக்க நூல்களென அதனால் விலக்கப்பட்டமை பகுத்தறிந்து கொள்ளற்பாற்று. அற்றாயின், இத்தகைய தீய நூல்களை இறைவனே அருளிச் செய்தானெனக் கரைந்தது ஏன் எனின், தீய ராய அசுரர் களை மயக்கி அழித்தற்பொருட்டு இறைவனே அவற்றை அருளினனென்க. அங்ஙனமே, அது பாஞ்சராத்ரமும் அரக்கர்களை மயக்குதற் பொருட்டுச் செய்யப்பட்ட நூலாகலின் அதுவுங் கொள்ளற் பாற்றன்று எனக் கூறுதல் காண்க. மஹீம் நாஸ்தவத்திற் புஷ்பதந்த முனிவரால் தழுவப்பட்டது. சங்குசக்கிரங்களைச் சூடுஏற்றித் தோள்களிற் பொறிக்கும் புதிய வைணவமல்லாததும், சைவசமயத்துக்கு மாறாகாமல் திருமாலை உமையம்மையின் வடிவமாக வைத்து வழி படுவதும் ஆன பழைய வைணவமேயாகும். சங்குசக்கிரகங் களைச் சூடேற்றிச் சுடும் புதியவைணவம் இராமாநுசரால் உண்டாக்கப்பட்டதும், வேதங்களுக்கு முற்றும் முரணாவது மாகும். 6. வேத ஆகம விளக்கம் இனி, வேதங்களாவன, இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என நான்காதலும், அவற்றுள் இருக்கு 21, எசுர் 101, சாமம் 1000, அதர்வணம் 9 சாகைகள் உடையவாதலும், அவை அற்பசுருதிவாக்கியம், பிரபலசுருதிவாக்கியம் என இருதிறப் படுதலும், அவற்றுள் முன்னைய வேள்வியாற்றுதல் முதலான வினைகளையும், பின்னைய பதி பசு பாசஞானங்களையும் அறிவுறுப்பனவாதலும், வேதம் என்னுஞ்சொல் அறிதற் கருவி யெனப் பொருள் தருதலும். வேதப்பொருளை உணர்தற்குக் கருவியாவன சிட்சை, வியாகரணம், நிருத்தம், சோதிடம், கற்பம், சந்தோவிசிதி என ஆறாகுதலும், இவற்றின் விளக்கங்களும் காட்டப்படுகின்றன. அதன்பின், சிவாகமங்கள் காமிகம் முதல் வாதுளம் ஈறாக இருபத்தெட்டாதலும், இவை மந்திரம், தந்திரம், சித்தாந்தம் என முப்பகுதியவாதலும், இவையொவ் வொன்றுஞ் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நாற் பொருளைக் கூறுவனவாதலும், ஆகமம் என்னுஞ் சொற்பதிபசு பாச இயல்களை யுணர்த்துவதென்றேனும், உயிர்களுக்கு அறியாமை தீர்த்து மெய்யுணர்வு பிறப்பித்து வீடுபேற்றினை நல்குவிப்பதென்றேனும் பொருள் படுவதாதலும், இவ்விருபத் தெட்டாகமங்களின் வழித்தோன்றிய உபாகமங்கள் விசுவகன்மம் முதல் 207ஆதலும், இவையிற்றின் விரிவுகளும் நுவலப்படுகின்றன. இனிச், சிவாகமங்களின் சிறப்பும், பயனும், இரத்தினத் திரயம், ஸ்காந்தம், வாயுசங்கிதை ஆலஸ்யமான்மியம், அதர்வசிரசு சூதசங்கிதை சங்கரசங்கிதை சைவபுராணம் முதலான நூல் மேற்கோள் கொண்டு நிறுவப்படுகின்றன. சிவாகமங்கள் சுருக்கமான வேதவுரைகளுக்கு விரிந்த விருத்தி யுரை போல் விளங்கலானும், வேதங்களில் நுவலப்பட்ட காயத்திரி மந்திர உருவேற்றுமியல் சரலிங்க தாவர லிங்கங்கள். நிலைபெறுத்தி வழிபாடாற்று முறைகள் எரியோம்பும் வகைகள், திருக்கோயில் அமைக்கும் முறைகள் போல்வன பலவுஞ் சிவாகமங்களாலன்றி வேதங்களால் உணர்தல் இயலாமையானும், வேதப்பொருளை மெய்யாகத் தெளிந்து கோடற்குச் சிவாகமப் பயிற்சி இன்றியமையாது வேண்டற்பாலதாயிருத்தல் காண்க. நீலகண்ட சிவாசாரியார் வேதாந்த சூத்திரத்திற்குத் தாம் வகுத்த பேருரையில் இறைவன்றன் முற்றறிவு இயற்கை யுணர்வு தன்வயத்தனாதல் முதலான ஆறு இயல்புகளையும், உயிர்கள் எய்துதற்குரிய முக்காலவுணர்ச்சி அணிமா முதலான பேறு அமைதி முதலான குணங்களையுஞ் சிவாகம மேற் கோள்கள்கொண்டே விளக்கியிருத்தலும், பாஸ்கராசாரியார் லலிதாஸஹஸ்ரநாமத்திற்குத் தாம் இயற்றிய விருத்திரை யுரையிலுஞ் சிவாகமவுரைகளை எடுத்துக்காட்டி அம்மை யின் பெயர்ப் பொருளை விளக்கியிருத்தலுஞ் சிவாகமங்கள் வேதத்தினும் பார்க்கச் சிறப்புப் பயனும் மிகுதியும் உடைய வாதல் தெளியப்படும். எனவே, சங்கராசாரியார் தமது வேதாந்த சூத்திரவுரையிற் சிவாகமங்களை இழித்துப் பேசியதும், அதனை வைணவரொருவர் தமக்குத் துணையாக எடுத்துக் காட்டியதும் பொருத்தமில் செயல்களா மென் றுணர்ந்து கொள்க. இனிச், சங்கராசாரியார் சைவ சமயத்தை மறுத்தா ரெனக் கரைவாரது கூற்றைக் களைதற்கு நாயகரவர்கள், நீலகண்ட விஜயத்த்திலிருந்து ஒரு நிகழ்ச்சியினை எடுத்துக் காட்டுகின்றார்: மாயாவாத வேதாந்தத்தைப் பரவச் செய்வாரான சங்கராசாரியார் ஒருகாற் சித்தாந்த ஆசிரியரான நீலகண்ட சிவாசாரியாரைக் காணாப்போயினர். கண்டு தாம் வேதாந்த சூத்திரத்திற்கு எழுதிய உரைப்பொருள்களை எடுத்துக் கூறிக் கொண்டே வந்தனர். அவைகளைக் கேட்ட நீலகண்டர் தாம் வேதாந்த சூத்திரத்திற்கு எழுதிய உரைப்பொருள்களையும் எடுத்துச் சொல்லித், தாம் உரைத்த வுரையே சூத்திரக் கருத்தை நேரே இனிது விளக்குதலுஞ் சங்கராசாரியார் இயற்றியவுரை சூத்திரப்பொருளை நேரே விளக்காமை யோடு அதன் கருத்துக்கு மாறாவன கூறுதலும் எடுத்துக் காட்டினர். அவ்வாறு நீலகண்டர் நிகழ்த்திய தடைகளுக்கு விடை சொல்லல் இயலாமல் வாய் அவிந்த சங்கரர் மனம் புழுங்கி நரசிங்க மூர்த்தியை அலறி அழைக்க, உடனே நரசிங்கர் அஞ்சத்தக்க கொடிய வடிவத்துடன் தோன்றி, நீலகண்டரைக் கொல்லுதற்குச் செல்லா நின்றனர். அது கண்ட நீலகண்டர், சரபப் பறவையின் உருவங்கொண்ட வீரபத்திரரை நினைந்து அழைத்து, அந்நினைவில் உறைத்து நிற்க, உடனே சரபப் பறவையானது தோன்றி அந்நரசிங்கத்தைத் தன் நகங்களால் இரு கூறாக்கிக் கொன்றது. அதனைக் கண்டு திகில் கொண்ட சங்கரர் தாஞ்செய்த பிழையினைப் பொறுக்கும் படி வேண்டி நீலகண்டர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர். நீலகண்டர் அவரை மன்னித்து, அவர்க்குச் சிவதீக்கை செய்து, சிவபிரானைப் பாடுக என்று கட்டளையிடச் சங்கரர் சிவானந்தலகரி, சௌந்தரியலகரி, சிவபுஜங்கம் முதலான நூல்களை இயற்றிச் சிவபெருமானையும் அம்மையையும் உளங்குழைந்து வழுத்தியதுடன், அந்நூல்களில், திருஞான சம்பந்தப் பெருமான், கண்ணப்பர், சிறுத்தொண்டர், இயற்பகையார், சண்டேசுரர் முதலான சிவனடியார் செய்த சிவத்தொண்டின் அருமை பெருமைகளையும் வியந்தெடுத்துச் சொல்லினர். இங்ஙனமாகலின், சங்கரர் சைவ சித்தாந்தத்தை மறுத்தன ரென வைணவர் கூறும் உரை அடாதவுரையாமென்க. இன்னும், மாணிக்கவாசகப் பெருமான் திருவாசகச் செந்தமிழ் மாமறையில், பிரமன் அரியென் றிருவருந்தம் பேதைமையாற் பரம மியாம்பர மென்றவர்கள் பதைப்பொடுங்க அரனார் அழலுருவாய் அங்கே அளவிறந்து பரமாகி நின்றவா தோணோக்க மாடாமோ என்றருளிச் செய்த திருப்பாட்டில் திருமாலை இகழ்ந்து பேசினாரென அவ்வைணவர் குறை கூறினர். திருமால் சிவபிரான் திருவடியைத் தேடியலுத்த நிகழ்ச்சி பழைய வடநூல்களில் நுவலப்பட்டிருத்தலின், அதனையே மாணிக்கவாசகர் எடுத்துக் கூறினர். அது குறையாதல் யாங்ஙனம்? அவ்வைணவர் தமக்குத் துணையாய்க் கொண்ட சங்கராசாரியாரே சிவானந்த லகரியில், திருமால் பன்றியுருவெடுத்துச் சிவபிரான்றிருவடியைத் தேடியலுத்த கதையைக் கூறியிருக்கின்றார். அதுவேயுமன்றித் திருமால் சிவபிரான் கையில் அம்பாகவும், அவர் ஏறும் எருதாகவும், அவர்க்கு வழிபாடு செய்யும் அர்ச்சகராகவும், அவர்க்கு மனைவியாகவும், அவர் அம்பலத்தில் திருக்கூத்தாடியபோது மத்தளம் அடிப்பவராகவும் பலவகையாற் றொண்டு செய்து பாராட்டிய பேரன்பின் றிறத்தை வியந்து பேசியிருக்கின்றார். இன்னும், அவர் தமது சௌந்தர்யலகரியில், நான்முகன், திருமால், இந்திரன், இயமன், குபேரன் முதலான எண்டிசைக் காவலர் எல்லாம் அழிந்தொழிந்த காலத்தும், அம்மே, நின் காதலராகிய சிவபிரான் அழிவின்றி என்றும் உளராயிருக்கின்றனரல்லரோ, எனக் கிளந்ததும் என்னை , மேலும், பைபலாதம் எல்லாப் பேறுகளும் பெறுதற் பொருட்டு உருத்திரப் பெருமானை வழிபடுதல் வேண்டு மென்பது நுவன்று, அங்ஙனம் அவரை வழிபட்டுத் தாம் விரும்பிய பேற்றினை அடைந்தாரில் திருமாலை முதற்கண் எடுத்துக் காட்டலுற்று, அவர் சிவபிரான் கையில் அம்பாக அமர்ந்து தொண்டு செய்ததனையும், தமது கண்ணைப் பிடுங்கிச் சிவபிரான் திருவடிகளில் அதனை மலராக இட்டு வணங்கி ஆழிப்படை பெற்றதனையும் பிறவற்றையும் நன் கெடுத்துக் கூறுதலால், சைவசமயாசிரியருஞ் சங்கராசிரி யரும் அவ்வுபநிடதப் பொருள்களையே தாமும் எடுத்துக் காட்டினாரன்றி, அவர் திருமாலை இகழ்ந்தனராதல் செல்லுமோ? இன்னுஞ், சங்கராசிரியர் சிவாகமங்களை இகழ்ந் தனரென்றலும் பொருந்தாது, என்னை? அவர் திருஞான சம்பந்தப் பிள்ளையாரை வழுத்துகின்றுழி, அம்மே, செந்தமிழ்க் குழவியாகிய திருஞானசம்பந்தரென்னும் முகில் நின்றிருமுலைப்பௌவத்திற்படிந்து அதன்கண் நிறைந்த ஞானவமிழ்தினைப் பருகித் தேவார ஆகமப்பொருள்களைப் பொழிந்ததன்றோ? என்று பாடினாராகலின், திருஞான சம்பந்தர் அருளிச் செய்த தேவார திருப்பதிகப் பொருளுஞ் சிவாகமஞானபாதப் பொருளும் ஒன்றேயாகையாற், சங்கரா சிரியர் இவ்விரண்டையும் பெரிது பாராட்டினவரென் பதிற்றட்டுண்டோ? இனிக், காஞ்சிமான்மியம் 24-ஆம் இயலிலுந் திருமால், திருஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகங்களையோதிச் சிவவுருவினை எய்துமாறு சிவபிரானாற் கட்டளையிடப் பெற்ற வரலாறுங் கூறப்பட்டிருத்தல் காண்க. இனிச், சைவசமயத்தின் உட்பகுப்பிற் சேர்ந்த பாசுபதம் முதலிய மதங்களைச் சங்கராசிரியர் இழித்துப் பேசியதென்னென்றால், அவர் நீலகண்ட சிவாசாரியாரைக் கண்டு அவராற் சைவசமய மெய்ப்பொருளைத் தெளிந்து உறுதி கூடுதற்குமுன், தாஞ் செய்த வேதாந்த சூத்திரவுரையில் அங்ஙனஞ் செய்தாராகலின், அது கொள்ளற்பாலதன்று. மேலுஞ், சங்கராசிரியர் சைவசமயத்தையுஞ், சிவாக மங்களையும் இகழ்ந்ததற்கு ஒரு காரணம், நீலகண்ட விஜயத்திற் சொல்லப்பட்டிருக்கின்றது. அதுவருமாறு, ஒரு காற் சங்கரர் தம்மாணாக்கர் குழுவுடன், காஞ்சி மாநகர்க்குச் சென்று, சிவபிரான்றிருக்கோயிலிற் புகுந்ததும், அங்கே ஆயிரக்கால் மண்டபத்தில் ஆதிசைவக்குருக்கள் பலர் சிவாகமம் ஓதிக்கொண்டிருத்தல் கண்டு அவரை அணுகினர். இவரைக் கண்டதுங் குருக் கண்மார் சிவாகமம் ஓதுதலை நிறுத்திவிட்டனர். அதன்மேற் சங்கரர் அவற்றை அவர்கள் ஓதும்படி வேண்ட, நீர் சிவதீக்கை பெறாதவராகலின் நீர் கேட்கச் சிவாகமங்களை ஓதுதல் ஆகாது என ஆதிசைவர் அதற்கிணங்காது மறுத்து விட்டனர். சங்கரர் அவர் கூறிய தன் உண்மையுணராமல் அவர்களொடு மாறுகொண்டு, ஆதிசைவர்களையுஞ் சிவாகமங்களையுஞ் சைவசமயத்தை யும் இழித்துப் பேசிவந்ததுடன், அக்காலத்திருந்த அரசர் களைத் தமக்குத் துணை கொண்டு, தமக்கு இயன்ற இடங்களிலிருந்த சிவபிரான் திருக்கோயில்களில் வைதிகரை வழிபாடு செய்யுமாறும் ஏற்படுத்தினர், பின்னர்ச் சிறிது காலங்கழித்து நீலகண்ட சிவாசாரியாரைக் கண்டு வணங்கி, அவராற் சிவதீக்கை செய்யப் பெற்றுச், சைவ சமயமெய்ப் பொருள் உணர்ச்சி கைவரப் பெற்றாராய்த் திகழ்ந்தன ரென்பது. இதற்குச் சான்றாகச், சங்கரர் தமது பிற்காலத்தில் இயற்றிய பிரபஞ்ச சாரம் என்னும் மாந்திரிக நூலிற் சிவ மந்திரங்களை உருவேற்றும் வகைகளுக்கெல்லாஞ் சிவாகமங் களிலிருந்தே மேற்கோள்கள் எடுத்துக் காட்டி நிறுவியிருப்பதும் நினைவிற் பதிக்கற்பாற்று. ஆகவே, சைவமதங்களைச் சங்கரர் இகழ்ந்தது அவற்றின் உண்மையுணராத் தமது முற்பருவத்தேயாகலின், அதனை எடுத்துக்காட்டி வைணவர்கள் சைவசமயத்தை இகழ்ந்து தீவினைக்கு ஆளாகலாகாது, சிவபிரானிடத்துஞ் சிவாகமங் களிடத்தும், திருநீறு சிவமணி தாங்கும் அடியார்களிடத்தும் இறைவற்குப் படைத்த பண்டங்களிடத்தும் எவர் தீய வெண்ணங்கொள்கின்றனரோ அவர் கீழ்மக்களாவர் என்ற காந்தபுராணமுஞ், சிவபிரானையுஞ் சிவாகமங்களையும் எவன் இழித்துப் பேசுகின்றானோ அவனுக்கு எவ்வகையான கழுவாயும் (பிராயச்சித்தமும்) நூல்களிற் சொல்லப்படவில்லை என்று சிவதருமோத்தரமுங் கூறுதலை எல்லாரும் நினைவில் இருத்தக் கடவர். அரனைப் பழித்துத் திரிபவரைப் பாராதே என்றார் சந்தான குரவராகிய உமாபதி சிவாசாரியாரும்... வடநூற்கடலை நிலைகண்டுணர்ந்த அப்பையதீக்கிதர் சைவசமய ஏற்றமுஞ் சிவபிரானே முழுமுதற் கடவுளாதலும் நன்குணர்ந்தன்றே சைவவொழுக்கம் மேற்கொண்டு ஒழுக லாயினார். சிவாகமச் சான்றோராகிய அகோர சிவாசாரியார். அப்பையரின் சைவநடையை வியந்தன்றே அவர்க்குச் சிவதீக்கை செய்து அவரைச் சிவவழிபாடு செய்யப் பணித்துத் தம் மாணாக்கருள் ஒருவராக அவரைச் சேர்த்துக் கொண்டனர். நீலகண்டபாடியாமே வேதாந்த சூத்திரக் கருத்தறிந்த உரையாதல் கண்டு, தம்மாசிரியர் இட்ட கட்டளைப்படி, அப்பைய தீக்கிதர் அப்பாடியத்திற்குச் சிவார்க்கமணி தீபிகை: என்னும் ஓர் உரை வகுக்கலாயின ரென்பதனாலும், அங்ஙனமே பிரமவித்யாத்வரர் முதலான முன்னாசிரியர்களும் அப் பாடியத்திற்குத் தர்ப்பணம் தாராவளி சீகண்ட பாஷ்ய சமர்த்தநம் முதலான விளக்கவுரைகள் வரையலாயின ரன்பதனாலும் நீலகண்ட பாடியமே வேதாந்த சூத்திரத்திற்கு மெய்யுரையாதலும், சங்கரபாடியம் அங்ஙனம் அதற்கு மெய்யுரையாகாமையும் நன்கு விளங்கா நிற்கும். ஆகவே, மெய்யுரையல்லாத சங்கரபாடியத்தை ஒரு துணையாகக் கொண்டு வைணவர் சிலர் சைவ சமயத்தை மறுக்கப் புக்கது, உமிக்குற்றிக் கைசலிப்பார் கதையாகவே முடிந்தமை காண்க. 7. திருமங்கையாழ்வார் திருஞானசம்பந்தர் காலத்தவர் அல்லர் இனி, வைணவரிற் சிலர் சிறிதும் ஆராய்ச்சியுணர் வின்றித், திருமங்கையாழ்வார் திருஞானசம்பந்தரை எதிர்ப் பட்டு அவர் கையிலிருந்த வேலைப்பிடுங்கி விட்டார் எனுங் குருட்டுக் கதையொன்றைச் சொல்லி, அவ்வாற்றாற் சைவத் திற்கு ஓர் இழிவுந் தமது வைணவத்திற்கோர் உயர்வுங் கற்பித்து விடப் பார்க்கின்றார். இது சிறிதும் பொருந்தாது. திருஞானசம்பந்தர் தாம் மூன்றாண்டுள்ள சிறு பிள்ளையாயிருந்த ஞான்றே உமை அம்மை பொன்வள்ளத் தேந்திய அருண்முலைப்பால் பருகி, எல்லா நூற்பொருள் களும் ஓதாது ஒருங்குணர்ந்த ஞானாசிரியராய், இறைவன் அளித்த பொற்றாளங்கையில் ஏந்தித், திருப்பதிகங்கள் பாடி யருளிய வண்ணமாய்ச் சிவபிரான் றிருக்கோயில் கடோறுஞ் சென்று, அம்மையப்பரை வணங்கி வந்தனரென்று, நம்பி யாண்டார் நம்பி திருவந்தாதி பெரியபுராணம், காஞ்சி மாந்மியம், சீகாழிமாந்மியம், ஆலாசியமாந்மியம், உப மந்யுபக்தவிலாசம், அகஸ்தியபக்த விலாசம், சௌந்தரிய லகரி, சிவரகசியம், முதலான சிறந்த நூல்கள் உரைப்பக் காண்டுமன்றி, அவர் கையில் வேல் ஒன்று உளதென்று அவற்றுள் எந்தநூலும் உரைப்பக் காண்கிலேம். அங்ஙன மாகவும் அவர் கையில் வேல் ஒன்று இருந்ததென்றும், அதனைத் திருமங்கை மன்னன் பிடுங்கிக்கொண்டன னென்றும் வைணவர் கட்டிவிட்ட கதைக்கு ஏதொறு சான்றுங் காணாமையின் அதுவெறும்பொய்க் கதையேயாதல் திண்ணம். திருமங்கை மன்னன் திருஞானசம்பந்தர் காலத்தவன் அல்லனென்பதே உண்மையென்க. என்று நாயகவரர்கள் மேலே ஆராய்ந்து காட்டியபடி, திருமங்கையாழ்வார், திருஞானசம்பந்தர்க்கு முந்நூறு ஆண்டு பிற்பட்டுக் கி.பி.பத்தாம் நூற்றாண்டின் துவக்கத்தே இருந்த வராகலின், அவர் திருஞான சம்பந்தர் காலத்தவ ரல்லரென்பதனைப் பல மெய்ச்சான்றுகள் கொண் டாராய்ந்து, மாணிக்கவாசகர் வரலாறுங்காலமும் என்னும் எமது பெருநூலில் விளக்கிக் காட்டியிருக்கின்றேம். திரு ஞானசம்பந்தர் காலம் கி.பி.ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதிக் கண்ணதாகுமென்பதனைக் கல்வெட்டாசிரியர்களும், பிறரும் நன்காராய்ந்து நிறுவியிருக்கின்றனர். திருவாளர் சுந்தரம் பிள்ளையவர்கள் ஆங்கிலத்திற் பெரிதாராய்ந்தெழுதிய திருஞானசம்பந்தர் காலம் (The Age of Thirujnanasambandha) என்னும் நூலில் இம்முடிபைக் கண்டு கொள்க. 8. வைணவர் கட்டிய வேறு சில பொய்க் கதைகள் இனி, அறிவாளிகள் கண்டு நகைத்து அருவருக்கத் தக்க வேறு சில பொய்க்கதைகளையுங் கற்பித்து, அவ்வாற்றாற் சைவசமயத்தை இழிவுபடுத்த முயன்ற வைணவரின் தகாச் செயல்கள் சிலவற்றை நாயகரவர்கள் எடுத்துக் காட்டி மறுத்திருக்கின்றனர். அவை வருமாறு. அவற்றுள் வைணவ ஆழ்வார்கள், சிவவாக்கியர் என்னுஞ் சிவஞான முனிவரைத் திருத்தி வைணவராக்கினர் எனக் கட்டிய கதை ஒன்று; இதற்கு ஏதேனும் ஒரு சான்றுண்டா? சிறிதுமே இல்லை. சிவவென்னும் மூலமந்திரத்தை எந்நேரமுஞ் சொல்லிக் கொண்டிருந்த காரணம் பற்றியே சிவவாக்கியர் சிவவாக்கியர் என்னுஞ் சிறப்புப் பெயர் பெற்றார். இம் முனிவர், பார்ப்பனரின் பொருள் அற்ற புல்லிய வினைகளையும், அவர் தஞ் சாதிச் செருக்கையும் அவர் செய்து போதருஞ் சிறு தெய்வ வணக்கத்தையும் பலவகையாலும் மறுத்து, எல்லாம் வல்ல சிவத்தை வழிபட்டு, உய்யும் உண்மை ஞானத்தையே வலியுறுத்திப் பல தண்டமிழ்ப் பாடல்களைப் பாடியிருக் கின்றார். அவற்றுள் ஒன்று இது, குண்டலங்கள் பூண்டு நீர் குளங்கடோறும் மூழ்குவீர் மண்டுகங்கள் போல நீர் மனத்து மாசு அறுக்கிலீர் மண்டையேந்து கையரை மனத்திருத்த வல்லிரேற் பண்டைமால் அயன்றொழப் பணிந்து வாழலாகுமே இதனையொத்த பல உண்மை ஞானப் பாடல்களைப் பாடிச் சிவவழிபாட்டின் ஏற்றத்தை எடுத்தியம்பி வந்த சிவவாக்கியரைப் பிறந்து இறந்து உழன்ற கண்ணனையும் இராமனையும் பாடிய ஆழ்வார்கள் திருத்தினரென்பது அறிஞரால் எள்ளி நடையாடற் பாலதாயிருக்கின்றதன்றோ? சிவவாக்கியர் தம் வாழ்நாள் முழுதுஞ் சிவஞானச் செல்வராய் விளங்கினமையாலன்றோ தாயுமான சுவாமி களும். கண்டது பொய் என்று அகண்டா கார சிவம் மெய்யெனவே விண்ட சிவவாக்கியர் தாள் மேவுநாள் எந்நாளோ என்று தமதருமைத் திருப்பாட்டில் அவரைச் சிறந்தெடுத்துப் பாராட்டினர். இதனாற் சிவவாக்கியர் உண்மைச் சிவஞான முனிவராதலும், அவர் தாயுமான சுவாமிகள் காலத்திற்கு முன்னிருந்தவராதலும் நன்கு பெறப்படுதல் காண்க. மற்றுச் சிவவாக்கியர் வைணவ ஆழ்வார்கள் காலத்து இருந்தனர் என்பதற் காதல், அவர் ஆழ்வார்களாற்றிருத்தப்பட்டு வைணவ மதத்தைத் தழீ இயினார் என்பதற் காதல் வைணவர்கள் ஏதொரு சான்றுங் காட்டாமல், தாமாகவே கட்டிச் சொல்லும் பொய்க்கதையை ஆராய்ச்சி வல்ல அறிஞர் ஒரு பொருட்டாகக் கொள்ளா ரென்பது. இனி, மேற்காட்டிய கட்டுக் கதையினும் பார்க்க நகையாடி இழிக்கத் தக்க மற்றொரு பொய்க் கதையினை வைணவர் புனைந்திருக்கின்றனர். அதாவது, ஓர் ஆழ்வார் தமது காலிலிருந்த கண்ணாற், சிவபிரானது நெற்றிக் கண்ணைப் பழுதுபடுத்தி அவரை வென்றனராம். எல்லார்க்கும் முகத்திலே தான் கண்ணிருக்கக் காண்கின்றோம். மற்று இல்வாழ்வார்க்கோ காலிலே கண்ணாம், ஈது எத்துணைப் படுபொய்! எல்லா உலகங்களையும் இயங்கியற் பொருள் நிலையியற் பொருள் களையும் நெற்றிக் கட்பொறியொன்றினாற் சுட்டுச் சாம்பராக்க வல்லவன் என்று பைபலாத உபநிடதத்தில் வழுத்தியுரைக்கப் பட்ட பிறப்பு இறப்பு இல்லா எல்லாம் வல்ல சிவத்தின் நெற்றிக் கண்ணைக், கடவுள் இலக்கணமே இன்னதென்றறியாமற் பிறந்திறந்து எய்த்த மக்களைக் கடவுளாக வணங்கிப் பாடிய ஓர் ஆழ்வார் பழுதுபடுத்தி வென்றனரெனக் கரைந்தது எத்துணை இறுமாப்பும் பேதைமையுமாயிருக்கின்றது! இன்னும், இங்ஙனமே ஓர் ஆழ்வார் பாண்டியன், அவைக் களத்தே சென்று அவன் அங்கே தூக்கியிருந்த பொற்கிழியை அறுத்துத், திருமாலையே முழுமுதற் கடவுள் என்று நாட்டின ரெனவும், இன்னும் ஓராழ்வார் தாம் பாடிய பாடல்களைக் கொண்டு மதுரையில் வீற்றிருந்த சங்கப் புலவர்களை வென்றன ரெனவும் வைணவர்கள் பொருந்தாப் பொய்க் கதைகள் கட்டி விட்டிருக்கின்றனர். இக்கதைகளுக்கு ஒரு சிறு சான்று தானும் நூல்களிலாவது கல்வெட்டுகளிலாவது காணப் படாமை யினாலும்; வைணவர்கள் பாண்டியன் அவையில் திருமாலையே முழுமுதற் கடவுளென நாட்டியது மெய்யாயின் பாண்டிய மன்னன் வைணவ மதத்தைத் தழுவி மதுரை யிலுள்ள சிவபிரான் கோயிலைத் திருமால் கோயிலாக மாற்றி யிருப்பானாகலானும்; ஆழ்வார்கள் காலத்திற்கு முன்னும் பின்னும் இன்றும் மதுரையிலுள்ளது. சிவபிரான் கோயிலே யாதல் நூல்களாலுங் கல்வெட்டுகளாலும், நன்கு விளங்கு தலாலும், சங்கத்தவர்களை வெல்லத் தகுந்த செந்தமிழ்ச் சுவையும் முழுமுதற்கடவுள் நம்பிக்கையும் ஆழ்வார்கள் பாடல்களிற் காணப் படாமையோடு அவை அவ்விரு வகையிலுஞ் சங்கத்தார் மெய்யே கிளந்து பாடிய செந்தமிழ்ச் செய்யுட்களுக்கு இறப்பத் தாழ்ந்த நிலையின வாயுமிருத்தல் தெற்றென விளங்கலானும் வைணவர் கட்டிய இக்கதைகள் முழுப் பொய்யேயாதல் துணியப்படும். மேலுஞ், சங்கத்தார் காலத்திலெல்லாந் திருமால் வணக்கஞ் சைவ சமயத்தின் உள்ளடங்கியேயிருந்தது. சங்க காலத்து நூல்களிலெல்லாஞ் சிவபிரானுக்கே முதன்மை சொல்லப்பட்டிருக்கின்றது. ஏற்று வலனுயரிய எரிமருள் அவிர்சடை, மாற்றாருங்கணிச்சி மணிமிடற்றோனும் என்னும் புறநானூற்றுச் செய்யுளையும், தொடங்கற் கட்டோன்றிய முதியவன் முதலாக, அடங்காதார் மிடல் சாய அமரர் வந்து இரத்தலின் என்னுங் கலித்தொகைச் செய்யுளையும் உற்று நோக்குக. சங்கத்தார் காலத்தை அடுத்துத் தோன்றிய சிலப்பதிகாரம் மணிமேகலை என்னுஞ் செந்தமிழ்ப் பெருங்காப்பியங்களிலுஞ் சிவப்பிரான் முதன்மையே சொல்லப்பட்டிருத்தல் காண்க. வைணவஞ் சைவத்தினின்று வேறாய்ப் பிரிந்ததும், வைணவத்திற்கென்று தனிநூல்களுந் தனியாழ்வார்களுந் தோன்றியதுஞ் சைவ சமயாசிரியர் காலத்திற்குப் பின்னரே யாம், அதாவது கி.பி. எட்டாம் நூற்றாண்டிலிருந்தேயாம். இவ்வெட்டாம் நூற்றாண்டு முதற்றோன்றிய ஆழ்வார்கள், கி.பி.முதல் நூற்றாண்டுக்கு முன்னிருந்த சங்கத்தார்களை வென்றாரென்பது, யான் என்முப்பாட்டன் திருமணத்திற் பந்தற்காலைப் பிடித்துக் கொண்டு நின்றேன் என்னும் ஒரு சிறுவனின் பொய்யுரையினும் பார்க்கப் படுபொய் நிறைந்த தாயிருக்கின்றது! இன்னும் வைணவ ஆழ்வார்களின் கால நிலையுஞ், சைவ சமயத்தின் பண்டை மாட்சியும் மாணிக்க வாசகர் வரலாறுங் காலமும் என்னும் நூலில் மிக விரித்து விளக்கப்பட்டிருக்கின்றன. இனிச், சிவனடியாராகிய குலோத்துங்க சோழ வேந்தனைக் கூரத்தாழ்வார் வென்றுவிட்டதாக வைணவர்கள் ஒருபொய்யுரை கூறிவருகின்றனர். ஆனால், உண்மையாக நடந்தது வருமாறு: குலோத்துங்க சோழ வேந்தன் ஒட்டக் கூத்தர் பாற்றமிழ்க் கல்வி பயின்று அதிற் பெரும்புலமை வாய்ந்து திகழ்ந்ததுடன், சைவசித்தாந்தப் பொருள்களையும் தென்மொழி வடமொழிகளில் நன்காராய்ந்து அவற்றின் முடிவு கண்டவன். அவ்வேந்தன் காலத்திருந்த இராமாநுசர் என்பவர், வடமொழி தென்மொழிகளில் முன்னாசிரியர் அனைவருஞ் சிவபெருமான் ஒருவரே முழுமுதற் கடவுளென ஆராய்ந்து தெளித்து வைத்த மெய்ந்நூல்களின் மெய் வழக்கிற்கு முற்றும் மாறாகத், திருமாலையே முழுமுதற் கடவு ளென நாட்டுதற்கு விழைந்து, வேதங்கள் உபநிடதங்கள், இதிகாசங்கள் புராணங்களிற் போந்த சொற்கள் சொற் றொடர்கள் கதை நிகழ்ச்சிகள் முதலானவைகளை யெல்லாந் தாம் விரும்பியபடி திரிபு படுத்திச், சிவபிரான் மேலனவாயிருந்தவைகளுக்கெல்லாந் திருமால் மேலன வாகப் பொருள் செய்து பொய்யான கொள்கைகளை இத்தமிழ்நாடெங்கணும் பரப்பி வரலாயினர். இது தெரிந்த குலோத்துங்க சோழன் சிவபிரானுக்கு மேலதாய் ஏதுமில்லை என்னும் ஒரு சொற்றொடரை எங்குமெழுதிப் பரப்பி, அதற்கு மாறாகப் பேசுவார்எவராயினும் அவரைப் புலவர்பேரவையில் வருவித்து, அவரொடு நடுவுநிலை பிறழாது வழக்கிட்டு, அவர் அவ்வழக்கிற்றோல்வியடைந்த பின், அங்ஙனம் தோல்வி யுற்றார் பாற் சிவத்துக்கு மேல் ஏதுமில்லை என்று எழுதி வாங்கி வந்தான். இவ்வாறு குலோத்துங்கவேந்தன் செய்து வருதலை நன்கறிந்தும், இராமாநுசர் அம்மன்னனுடன் நேரே சென்று வழக்கிட்டால் தமது கொள்கைவெற்றிபெறாதெனக் கண்டு, அவன் பாற்செல்லாமலே மறைவாய்த் தமது கொள்கையைப் பரவச் செய்து வந்தனர். இது கண்ட மன்னர்பிரான், இராமாநுசருடன் நேரே வழக்கிட்டு அவரது கொள்கையின் பொய்ம்மையை உலகிற்கு வெளிப்படுத்தி உதவிபுரிதல் வேண்டித், தன் வேவுகாரரை அவர் பால் விடுத்தனர். அரசன் தம்மை அழைத்தற்கு வேவுகாரரை விடுத்திருத்தலை, முன்னதாகத் தம் மாணவர் வாயிலாகத் தெரிந்ததும், இராமாநுசர் தாம் பூண்டிருந்த காவியுடை யினைக் கழற்றி விட்டு, வெள்ளாடையுடுத்து வேறுநாடு சென்று விட்டனர். அது தெரிந்த தம் மாணவர் கூரத்தாழ்வார் இராமாநுசரைப் போல் உடை முதலியன பூண்டு, பெரிய நம்பியென்பவரைத் தம்மைப்போல் உடை அணியச் செய்து, தமக்குரிய வைணவர் கூட்டத்துடன், குலோத்துங்க சோழன் அவைக்குச் சென்றனர். அவர்களைக் கண்டதும், அரசன், திருமால் முழுமுதற் கடவுள் அல்லாமையுஞ் சிவபிரானே முழுமுதற்கடவுளாதலுந் தெற்றெனப் பிரிந்து விளங்க அரதத்தாசாரியார் இருப்புப் படியேறி உறுதிப்படுத்திச் சொல்லிய பொருள்களை ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்லி அவைகளை மறுக்கும்படி, உடையவர் கோலத்தில் நின்ற கூரத்தாழ்வாரையுங், கூரத்தாழ்வார் கோலத்தில், நின்ற பெரிய நம்பியையுங் கேட்க, அவ்விருவரும் அவற்றிற்கு விடை கூற மாட் டாராய்க் கலங்கி நின்றனர். அது கண்ட அரசன், சிவத்துக்கு மேல் ஏதும் இல்லை என்று எழுதித் தரும்படி அவர்களைக் கேட்க, அவர்கள் குறும்பாய்ச் சிவத்துக்கு மேற்பதக்கு என்று எழுதித்தந்தனர். சிவம் என்னுஞ் சொல்லுக்குக் குறுணி என்னும் ஓர் அளவுப்பொருளும் உண்டாகலின், அதற்கு அரசனுங் கற்றார் அனைவருங் கொண்ட முழுமுதற் கடவுள் என்னும் பொருளை ஏளனஞ் செய்தொழித்து, அச்சொல்லுக்கு அருகி எங்கோ கொள்ளப்படுங் குறுணியென்னும் பொருளை வினையமாய்க் கொண்டு, சிவத்துக்கு மேற்பதக்கு என்று அவர்கள் இகழ்ச்சியாய் எழுதித் தந்ததைப் பார்த்து அரசன் பெருஞ்சினம் மூண்டவனாய்த் தன் ஏவலர்களை அழைத்துச் சிவத்தைப் பழித்த இவர்களைக் கொலை செய்தலே தக்கது அவர்களைக் கொண்டு போய் வெட்டி விடுக! என்று கட்டளை இட்டனன். அது கேட்டு நடுநடுங்கிய கூரத்தாழ்வார் அரசனே, யான் இராமாநுசர் அல்லேன். இவருங் கூரத்தார் அல்லர். எங்கள் குருவான இராமாநுசர் தங்களுடன் வழக்கிடுதற்கு அஞ்சி எங்கோ போய்விட்டனர். அவரது மானத்தைக் காக்க யாங்கள் இங்ஙனம் வந்தோம். எங்களைக் காப்பாற்றும் என்று இரந்து கேட்க, அரசன் சினந் தணிந்து, இவர்களைக் கொல்ல வேண்டாம். ஆனாலும், முறையாக வழக்குப் பேசித் தமதுகொள்கையை நாட்டமாட்டாத இவர்கள் தமது தோல்வியினை ஒப்புக் கொண்டு சிவத்தை வணங்காமல், அதனை முறை வழுவி இகழ்ந்து பெருந்தவறு இழைத் தமையால், இவர்களை வேறு ஒரு வகையிலாவது ஒறுத்தலே தக்கது. ஆகவே, இவர்களை ஒரு காட்டிலே கொண்டு போய்க் கண்களைப் பிடுங்கிவிட்டு விடுக என்று மீண்டுங் கட்டளைத் தந்தனனெனவும், அவ்வாறே அவர்கள் கண் பிடுங்கப்பட்டதிற் பெரியநம்பி உயிர்மாளக் கூரத்தார் மட்டும் உயிர் பிழைத்திருந்தனரெனவுங் குலோத்துங்க சோழ விஜயம் கூறாநிற்கின்றது. வைணவர் எழுதிவைத்த குருபரம்பராப் பிர பாவம் என்னும் நூலும் பெரும்பாலும் அதனோடொத்தே இதனை நூவல்கின்றது. இனிச் சோழநாடு கடந்து மறைந்தொழுகிய இராமாநுசர் குலோத்துங்கவேந்தன் காலமானபின், மீண்டுந் தென்னாடு போந்து, கீழ்மக்களாகிய ஒட்டர் உப்பரவர் முதலியோரையும் வடமாள் சிலரையுந் தமது வைணவமதத்தைக் கைப்பற்றும் படிசெய்து, இதற்குமுன் இந்துமக்கள் எவராலும் அணியப் படாததும் வடமொழி தென்மொழி நூல்களில் எங்குஞ் சொல்லப்படாததுமான பட்டைநாமத்தைப் புதிதாக அவர்தம் நெற்றிகளிற் பரக்கச்சாத்தித், தமது கொள்கையைப் பரவச்செய்துவந்தனர். அதுவேயுமன்றித், தமது புதிய வைணவக் கொள்கைக்கு மேற்கோளாக ஒரு நூல்செய்வான் புகுந்து, வட மொழிக்கண் உள்ள வேதாந்தசூத்திரத்திற்கு நீலகண்ட சிவாசாரியார் இயற்றியருளிய நீலகண்டபாடியத்தைப் பலகாலும் பயின்று, அதனோடொப்ப `விசிட்டாத்து விதபாடியம் என்னும் பெயரால் ஓர் உரைநூலும் வரைந்து வைத்தனர். இதனால், இராமாநுசர் சைவ சமயக் கொள்கை களையே ஆங்காங்கு மாற்றித் தமது விருப்பம்போல் ஓர் உரைநூல் இயற்றினரன்றி, இவராதல், வேறே ஆழ்வார்களாதல் சைவசமயத்தவரை வென்றனரென்பது வெறும் புளுகேயா மென்க. இன்னும், வைணவசமய முன்னோர் பலர், சிவனடியார் சிலருடன் வழக்கிட்டுத் தோல்வியுற்ற வரலாறுகள் சிலவற்றை நாயகரவர்கள் பின்வருமாறு எடுத்துக் காட்டுகின்றனர்: கஞ்சனூரில் மதுசூதனாசாரி எனப்பெயரிய வைணவர் ஒருவர், சிவபிரானைப் பழித்தலையே ஒரு தொழிலாக் கொண்டு, மாந்தர்பலரைப் பொய்ந்நெறியிற் புகுத்தி வந்தனர். அத்தன்மையினார்க்குப் பிறந்த தவப்புதல்வன் ஒருவன் கல்வியில் வல்லனாய் வளர்ந்து வடநூல் தென்னூல்களைப் பழுதற ஓதியுணர்ந்து தெளிந்தபின், தன் தந்தையின் வைணவக் கொள்கையை மறுத்து, வைணவக்குறிகளை இடானாய்த் திருநீறுஞ் சிவமணியும் அணிந்து, தன்னை அரனுக்கு ஒப்படைத்துவிட்டகாரணத்தால் `அரதத்தன் எனப்பெயர் பூண்டு, சிவனடியார் குழுவிற் சேர்ந்து சைவசமய உண்மையை எங்கும் பரவச் செய்துவந்தனன். அதுகண்ட அவ்விளைஞரின் தந்தையான மது சூதனாசாரி அக்காலத் திருந்த அரசனிடஞ் சென்று, தன் புதல்வன் தனக்குமாறாய் ஒழுகுதலைக் கூறி முறையிட, அவ்வரசன் அரதத்தரைத் தனது அவைக்கு வருவித்து, அவர்தங் கொள்கையை ஒவ்வொன்றாச் சொல்லி நாட்டும்படி கேட்ப, அவரும் நெருப்பிட்டுப் பழுக்கக் காய்ச்சிய இருப்புப்படிகள் ஒவ்வொன்றன்மேல் ஏறியிருந்து தம்முடைய சைவ உண்மைகளை ஒவ்வொன்றாய்ச் சொல்லிவர, அவர்தந் தந்தையும் அவருடன்போந்த வைணவக்குருமாரும் அவ் வுண்மைகளை மறுக்கமாட்டாமல் தோல்வியுற்றனர். அங்ஙனம் அரதத்தர் நாட்டிய சிவபிரான் முழுமுதன்மைகளிற் சில வருமாறு. இருக்குவேத மூன்றாம்மண்டிலத்தில் உள்ளதும், அந்தணர்களாற் காலை நண்பகல் மாலை என்னும் முப்போதும் ஓதப்படுவதுமான காயத்திரி மந்திர உறையுளிற் `பர்க்கன் என்னும் பெயரால் வழுத்தப்படும் முழுமுதற் கடவுள் சிவபிரானேயென்பது மைத்திராயணி யுபநிடதத்தினாலும், அமர நிகண்டினாலுந் துணியப்படும் உண்மையாகும். 9. சிவபிரானே முழுமுதற் கடவுள் சிவபிரான் வழிபாட்டிற் சிறந்தவனான இராவணனைக் கொன்ற பாவம் நீங்கும்பொருட்டு, இராமன் சிவலிங்கத்தை அமைத்து வழிபட்ட காரணத்தால் `இராமேசுரம் எனப் பெயரிய திருக்கோயில் அன்றிருந்து இன்றுகாறும் இத் தென்றமிழ்நாட்டில் நிலவுதல் இமயம் வரையிலுள்ள மக்கள் அனைவரும் அறிந்த தொரு வாய்மையன்றோ? கண்ணன் கயிலைமலையை நண்ணிச் சிவபிரானை நோக்கித் தவம்புரிந்து தனக்குப் பிள்ளைப் பேறுண்டாகும்படி வேண்ட, அங்ஙனமே சிவபிரான் அவற்கு அருள்செய்ததை அறியாதார் யார்? திருமால் தன்னால் வெல்லப்படாத அரக்கரை அழிக்குங் கருவியாக ஆழிப்படை (சக்கராயுதம்) ஒன்றனைப் பெறுவான் வேண்டிச் சிவபிரானை நாடோறும் ஆயிரந் தாமரைமலர் தூவி வழிபாடாற்றிவருகையில், ஒருநாள் ஆயிரம் பூக்களில் ஒருபூக்குறைய, உடனே அதற்கு ஈடாகத் தாமரையிதழ்போன்ற தன் கண்களில் ஒன்றைப் பிடுங்கி அதனைச் சிவபிரான் திருவடிகளில் இட்டு வணங்கச் சிவபிரான் திருமாலின் மனவுறைப்புக்கு மகிழ்ந்து அவர்க்கு அவர் வேண்டிய ஆழிப்படையினை நல்கினரென்பதும் நூல்களால் அறியக் கிடக்கின்றதன்றோ? சிவபிரான் சனகர் முதலான முனிவர்க்கு வாய்வாளாத் தவநிலையினை அறிவிக்கும்பொருட்டு, உமைப்பிராட்டி யாரைப் பிரிந்து தவநிலையில் அமர, உலகத்துள்ள எல்லாவுயிர்களும் ஆண் பெண் சேர்க்கையின்றி முயற்சியவிந்து கிடத்தலால் உலகியல் நடைபெறாமை கண்டு, தேவர்கள் திருமால்மகனான காமவேளை இறைவன்பால் விடுத்தாராகக், காமவேளும் இறைவனை அணுகி அவற்குக் காமவிருப்பினை எழுப்ப முயலவே, இறைவன் நெற்றிக் கண்ணால் அவனை வெகுண்டு நோக்கக் காமவேள் வெந்து சாம்பராயினதூஉம் அறியாதார் யார்? தேவர்கள் தாம் அரக்கரோடு இடும்போரிற் சாவாதிருத்தல் வேண்டித் திருமாலின் துணைகொண்டு திருப்பாற் கடலைக் கடைந்து அமிழ்தம் எடுக்க முயல்கையில், அதன்கண் முதலில் எழுந்து பெருகிய நஞ்சின் தாக்குதலால் திருமாலும் மற்றைத் தேவர்களும் உடல்கரிந்து ஓடிச் சிவபிரானை அடைக்கலமாய்ப் புகப், பிரான் அந் நஞ்சினைத் தான் பருகித் தேவர்களைக் காத்த அருட்பெருஞ் செயலும் இருக்குவேதத்திலேயே ஓதப்பட்டிருக்கின்றதன்றோ? தன்னை ஓவாது வணங்கி வழுத்துதலையே தவமாய்க் கொண்ட மார்க்கண்டேய ருயிரைக் கொள்ளைகொள்ளவந்த கூற்றுவனைக் காலால் உதைத்துக் கீழ்வீழ்த்தி, இளைஞரான அம் மார்க்கண்டேயரை என்றும் இளைஞராயிருக்கப் பணித்த சிவபிரான்றன் அருட்பெருஞ்செயல் எவர்தாம் அறியாதவர்? சிவபிரான் முப்புரங்களை நெற்றிக்கண்ணால் எரித்துத் தேவர்களைக் காத்த அரும்பெருஞ் செயலும் இருக்கு வேதத்திலேயே நன்கெடுத்து நுவலப்பட்டிருக்கின்றதன்றோ? சிவபிரானைப் பழித்துத் தக்கன்வேட்ட வேள்வியானது, சிவபிரான் ஏவிய வீரபத்திரரால், அழிக்கப்பட்டதுடன், தக்கனுந் தலைவெட்டுண்டு இறந்துபட, அவனுக்குத் துணைநின்ற விஷ்ணு பிரமன் முதலான தேவர்களும் அவரால் ஒறுக்கப்பட்ட செய்தி `தைத்திரீய சங்கிதை, `சதபதபிராமணம், `இராமாயணம், `மாபாரதம், `காந்தம், முதலான நூல் களிலெல்லாம் மிகப் பழைய காலந்தொட்டு ஓதப்பட்டு வருகின்றதன்றோ? தனது கையிலுள்ள படைக்கலங்களைக் கொண்டு பகைவரை வேறல் இயலாதெனக் கண்ட அருச்சுனன், கண்ணன் அறிவுறுத்தியபடி சிவபிரானை நோக்கிக் கடுந்தவம் புரியச் சிவபிரான் அவனது தவத்திற்கு உவந்து பாசுபதப்படை அவனுக்கு வழங்க, அவன் அதனாற் பகைவரை வென்ற செய்திமா பாரதத்தில் விளக்கமாகச் சொல்லப் பட்டிருக்கின்ற தன்றோ? இரணியனைப்பிடித்துப் பிளந்து அவனது செங்குருதி யினைப் பருகிய நரசிங்கன், அதனால் வெறிகொண்டு உலகத்தையே அழித்துவிடுதற்கு ஆரவாரஞ் செய்தல்கண்ட தேவர்கள் வெருக்கொண்டு சிவபெருமானை வழுத்த, அவரது ஆணையால் வீரபத்திரர் ஒரு சரபப்புள்ளின் வடிவில் வந்து அந் நரசிங்கனைப் பிடித்துக் கிழித்த செய்தி `சரபோப நிடதத்திற் கூறப்பட்டிருக்கின்றதன்றோ? தாருகவனத்து முனிவர்கள், வேள்விவேட்டலே எல்லா நலனும் அளிக்கவல்லது, சிவபிரானை வணங்குதல் வேண்டாச் செயலேயாம் என்று பகர்ந்து இறுமாந்தொழுகியகாலையிற், சிவபிரான் ஓர் ஆண்டியாகவும் அவரது ஏவலால் திருமால் அழகிற் சிறந்த ஒரு மோகினிப் பெண்ணாகவும் போந்து அம் முனிவரின் இறுமாப்பைக் குலைத்தபின், சிவபிரான் அம் மோகினிப் பெண்ணைக்கூடிச் `சாத்தன் எனப் பெயரிய `ஐயனாரை ஈன்ற வரலாறு இவ்விந்தியநாடு ழுமுதும் அறிந்ததொன்றன்றோ? திருமாலும் நான்முகனுந் தாந்தாமே பெரியரென வழக்கிட்டுப் போர்புரியுங்கால் அவ்விருவரின் நடுவே சிவபிரான் தழற்பிழம்பு வடிவாய்த் தோன்றி, எமது முடியையாதல் அடியையாதல் எவர் தேடிக் கண்டு பிடிக்கின்றனரோ அவரே பெரியர் எனக் கூறியருளத், திருமால் பன்றிவடிவெடுத்து அவ்வழற்பிழம்பின் அடியையும், நான் முகன் ஓர் அன்னப்புள்ளின் வடிவெடுத்து அதன் முடியையுங் காணப்புக்குப் பன்னெடுங்காலம் முயன்றும், இருவரும் அவை தம்மைக் காணமுடியாமல் அலுத்துத் தருக்கு அடங்கிய வரலாறு பழைய நூல்களிலும் உலகவழக்கிலும் பண்டு தொட்டு வழங்கி வருகின்றதன்றோ? திருமால், நான்முகன், இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும் பிறந்தார்கள் இறந்தார்கள் என்னுங் கதை அவரவர் பெருமை கூறும் புராணங்களிலேயே வெளிப்படை யாய்ச் சொல்லப்பட்டிருக்கச், சிவபிரான் பிறந்தார் இறந்தார் என்னுங் கதை குறிப்பாலேனும் எந்த நூலினும் நுவலப்படாமை யின், சிவபிரான் ஒருவரே பிறப்பு இறப்பு இல்லா முழுமுதற் கடவுளாதலுந், திருமால் முதலான ஏனையோரெல்லாம் பிறந்திறக்குஞ் சிற்றுயிர்களேயாதலும் உள்ளங்கை நெல்லிக்கனி போற் றெள்ளிதின் விளங்குகின்றதன்றோ? காசியின்கட் கங்கைக்கரையிலே நின்று வியாசன் அறிவு மயங்கித் தன் மாணாக்கரெதிரே தன் கைகளை உயர வெடுத்துத் திருமாலே முழுமுதற் கடவுள் என ஆணை யிட்டுரைப்ப, உடனே வியாசனுடைய கைகள் மரத்துப்போய் மடக்க இயலாமல் நின்று நோவினை விளைவியா நிற்கவே, திருமால் அவன்பாற்போந்து, அறிவற்ற மடையனாகிய வியாசனே! யான் உலகிற்குத் தலைவன், எனக்குத் தலைவன் சிவபெருமானேயாவன் என்றறிந்து அவனையே வழிபடக் கடவாய் என்றறிவுறுத்திய வரலாறு பழைய நூல்களிற் சொல்லப்பட்டதொன்றன்றோ? முப்புரங்களைச் சிவபிரான் எரித்தகாலையில் திருமால் ஓர் எருதின் வடிவெடுத்து இறைவனைத் தாங்கிய செய்தியும் பண்டை நூல்கள் மொழிந்ததேயன்றோ? இங்ஙனமாகச், சிவபெருமான் ஒருவரே முழுமுதற் கடவுளாம் உண்மைகளை அரதத்தர் ஒவ்வொன்றாகச் சொல்லிவர, அவர் தந்தையாகிய மதுசூதனாசாரியும் அவருடன் அரசவையிற் போந்து குழுமிய வைணவரும் அவை தம்மை ஒருசிறிதும் மறுக்கமாட்டாமல் வாய்அவிந்து அவரை வணங்க, அரதத்தர் அவரெல்லாரையுந் திருத்திச் சிவதீக்கை செய்து மெய்வழிப்படுத்தினர். இவ்வரலாறு அப்பையதீக்கிதர் இயற்றிய ஹரதத்தமாந்மியம் என்னும் நூலில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. 10. சைவாசிரியரால் தோல்வியுற்ற வைணவர்கள் இன்னும் இங்ஙனமே சிவபெருமானைப் பழித்துத் திருமாலையே முழுமுதற் கடவுளாக்க விழைந்த வைணவக் குருமார் மற்றுஞ் சிலருஞ் சைவாசிரியரால் வெல்லப்பட்ட வரலாறுகளை நாயகரவர்கள் எடுத்துக்காட்டியிருக் கின்றார்கள். அவையெல்லாம் ஈண்டெடுத்துக் காட்டலுறின் இது மிக விரியுமாகலின் அவற்றை இங்கே சுருக்கிக் காட்டுவாம். காஞ்சிமா நகரிலிருந்த `தாத்தாசாரி என்னும் வைணவகுரு தங்காலத்திருந்த அப்பையதீக்கிதர் என்னுஞ் சைவாசிரியரைத் தாம் எந்தவகையிலும் வெல்ல முடியாமை கண்டு, மனம் பெரிது புழுங்கி, நஞ்சங் கலந்தபாலை அவர் பருகுமாறு கொடுக்க, அவர் `சிவதத்வவிவேகம் என்னும் நூலை யியற்றிச் சிவபெருமானை வழுத்தி அதனைப் பருக அந்நஞ்சு அவரைக் கொல்லமாட்டாதாயிற்று. அதன்பின் தாதாசாரி தங்காலத்திருந்த அரசனதவைக் களத்தில் அவரை வருவித்து வைத்து, வியாசபட்டர், பராசரபட்டர் என்னும் மத்துவ மதகுருமார்களை நடுநின்று தீர்ப்புச் சொல்பவராக நிறுவி, அப்பையதீக்கிதருடன் பலநாள் வழக்காடியுங் கடைசியில் தோல்வியுற்றார். நடுவர் இருவரில் வியாசபட்டர் எழுந்து, அப்பையதீக்கிதரால் வைணவமதத்தின் பொய்ம்மை புலப்படுத்தப்பட்ட வகைகளை எடுத்து மொழிந்து தீக்கிதருக்கு மாணவராய்ச் சைவசமயந்தழீஇயினார். அதுகண்டு பராசர பட்டர் வயிறெரிந்து தாமே தீக்கிதருடன் ஏழுநாள் வரையில் வழக்கிட்டு முடிவில் தாமுந் தோல்வியுற்றுத் தீக்கிதரை வணங்கிச் சைவராயினர். அதன்பின் பௌத்தகுரு ஒருவரும் அவருடன் வழக்கிட்டு வாய்அவிந்தனர். அதன்பின் மாயாவாதிகளாகிய சுமார்த்தர் சிலர் சிவாகமங்களை இகழ்ந்துபேச, அவர்களை மறுத்து `வைதிகா சாரநிர்ணயம் என்னும் நூலொன்றை யியற்றி அவர்கட்கு அறிவு தெருட்டினர். இங்ஙனம், மத்வராமாநுஜ பௌத்த மாயவாத மதங்களை மறுத்துத் துகளாக்கியது போலவே, சைவசமயத்திற்கு மாறான ஏனை எல்லா மதங்களையும் பொடிபடுத்தி அப்பையதீக்கிதர் `பரமத திமிர பாநு என்னும் நூலொன்றியற்றினர். இவ்வாறு எந்தவகையிலுந் தொலைக்கமுடியாத சைவசமய கோளரியாய்த் தீக்கிதர் வீறி விளங்குதல்கண்ட தாத்தாசாரி கொலைகாரர் சிலரை ஏவித், தீக்கிதர் ஆற்றில் நீராடித் தனியே வரும் நேரம் பார்த்து அவரைக் கொல்லுதற்கு முயலத், தீக்கிதரைச் சூழச் சூலம் ஏந்திய கையினராய்ச் சிலர் நிற்கக்கண்டு, அக்கொலைஞர் பெரிதும் வெருக்கொண்டு, தம்மைத் தாத்தாசாரி ஏவியதனைத் தீக்கிதருக்குத் தெரிவித்து, அவரைப் பணிந்தேகினர். உடனே தீக்கிதர், நடுநிலைவழீஇச் சிவனடியார்க்குத் தீங்கிழைக்குந் தாத்தாசாரி மாண் டொழிகவெனச் சிவபிரானைவேண்டி வசவு கூறத், தலையில் இடிவிழுந்து தாத்தாசாரி மாண்டனரெனச் சிவஞான சுவாமிகள் இயற்றிய தீக்ஷிதமாந்மியம் என்னும் நூல் நுவல்கின்றது. இன்னுந், தஞ்சைமாநகரிற் சிவாக்கிரயோகிகள் என்னுஞ் சைவப்பெரியார் ஒருவர் சைவசமயவுண்மைகளை எங்கும் விளங்கச் செய்து கொண்டு வருங்காலத்தில், `மணவாள மாமுனி என்னும் வைணவகுரு ஒருவர், அந் நகரில் அரசு செலுத்திவந்த சரபோஜி மன்னர்பாற்சென்று, `யாம் சிவாக்கிரயோகியுடன் வழக்கிட்டுச் சைவத்தைப் பொய்யாக்கல் வேண்டும்; அதற்கு நீர் ஓர் அவை கூட்டல்வேண்டும் என்று வற்புறுத்த, அது தக்கதன்றென்று அரசன் மறுத்துரைத்தும், அவர் கேளாமையின், சிவாக்கிரயோகிகளின் உடம்பாடு பெற்றுச் சரபோஜி மன்னன் தனதரண்மனையிலேயே ஒரு பேரவை கூட்டுவித்து, `எவர் தோல்வியடைகின்றனரோ அவர் வெற்றிபெற்றவரின் மதத்தைச் சார்தல்வேண்டு மென ஆணை தந்தனன். சமயவழக்கானது பதினெட்டுநாள் மட்டும் நடைபெறல் வேண்டுமென்பதும் அறிஞரால் வரையறுக்கப் பட்டது. அதன்பிற் சிவாக்கிரயோகிகட்கும் மணவாள மாமுனிக்குஞ் சமயவழக்கு நடந்து வருகையில் ஒவ்வொரு நாளுஞ் சிவாக்கிரயோகிகள் பக்கமே வெற்றியுண்டாகி வரலாயிற்று; கடைசியாகப் பதினேழாம் நாளிலுஞ் சிவாக்கிரயோகிகள் வெற்றிபெற்று விளங்க, அரசனும் அரசவையிலுள்ள அறிஞர் பலரும் அதுகண்டு மிக மகிழ்ந்த வுள்ளத்தினாரா யிருத்தலுணர்ந்து, மணவாளமாமுனியும் அவர்தம் வைணவக் கூட்டத்தினருந் திகிலடைந்து, `நாளைப் பதினெட்டாம்நாள் வழக்கு நடக்குமுன்னமே யோகியாரைத் தொலைத்துவிடல் வேண்டுமென்று தமக்குள் உறுதிசெய்து, அன்றிரவே சிவாக்கிரயோகிகள் இருந்த திருமடத்தைத் தீவைத்துக் கொளுத்திவிட்டனர். மறுநாள் அதனையறிந்த அரசன் பதைபதைத்துச் சென்று திருமடத்தை நோக்கத் திருமடம் முற்றும் எரிந்து சாம்பராய்க் கிடக்க, அதன்கண் வேகாத ஓர் அறையில் மட்டுஞ் சிவாக்கிரயோகிகள் பழுது ஏதுமின்றித் தவத்தில் அமர்ந்திருக்கக் கண்டு மகிழ்ந்து, அவரை வணங்கினன். பின்னர் அரசன் தேர்ந்து பார்த்துத் திருமடத்தை நெருப்பிட்டுக் கொளுத்தினவர்கள் மணவாளமாமுனியும் அவரைச் சேர்ந்தவர்களுமே என்பதனை நன்கறிந்து, அவர் களெல்லாரையும் ஓர் அறையிற் புகுத்தித் தீவைத்துக் கொளுத்தி விட்டனனெனச் `சிவாக்கிரயோகிகள் மாந்மியம் புகலா நிற்கின்றது. இச்சிவாக்கிரர் `சிவஞானபோதம் `சிவஞான சித்தியார் என்னும் அறிவுநூல்கட்குச் சிறந்த உரைகளும் வேறுசில நூல்களும் இயற்றியிருக்கின்றனர். இன்னுங், கொப்பூரிலேயிருந்த பிப்பபாச்சையர் என்னும் பெரியார் ஒருவர் தாம் சிவனடியார்களை அமுது செய்வித்தபின் எஞ்சிய உணவுப்பண்டங்களை வண்டிகளில் ஏற்றிக்கொண்டு தமது திருமடத்தை நோக்கிச் செல்லுகையில், தெருவின் இருபுறத்துமுள்ள வீடுகளின் திண்ணைகண் மேலிருந்த சுமார்த்த வைணவப் பார்ப்பனர்கள், `எங்கள் அக்கிரகாரத்தின்வழியே இவ்வெச்சிற் பொருள்களைக் கொண்டுசெல்லல் ஆகாது என வழிமறிக்கப் பிப்பபாச்சையர் தம்முடைய கைகளால் அவ் வண்டிகளிலிருந்த பண்டங்களை வாரியெடுத்து, அப் பார்ப்பனர்களின் இல்லங்களின் மேல் வீசியெறிய, அவ் வில்லங்களெல்லாந் தீப்பற்றி யெரிந்தன. அதுகண்ட அப் பார்ப்பனர்கள் பெரிதும் அஞ்சி அவரை வணங்கி உயிர்பிழைத்தனரெனச் `சைவபுராணங் கூறா நிற்கின்றது. இன்னுங், காசிமாநகரில் மஞ்சிதேவர் என்னுஞ் சைவப்பெரியார் ஒருவர் சைவவுண்மைகளை எடுத்து மக்களுக்கு விளக்கி வருதல்கண்டு மனம்புழுங்கிய வைணவர் சிலர் அவரைத் தம்முடன் வழக்காடும்படி அழைக்க, அவர் `யான் நுங்களுடன் வழக்காடுவதினும், நுங்கள் பெருமாளே கோயிலினின்றும் எழுந்தருளி வந்து எங்கள் விசுவநாதப் பெருமாளை வணங்கும்படி செய்வேன் என்று மொழிந்து, அங்ஙனமே அங்குள்ளதொரு திருமால் கோயிலினுட் சென்று திருமாலின் றிருவுருவத்தை அழைக்க, அத்திருவுருவந் தெருவிலுள்ளார் அனைவருங் கண்டு வியப்புறத் தெருவழியே நடந்துசென்று காசிப்பிரான் றிருவுருவின்முன் வீழ்ந்து வணங்கிற்றென அச் `சைவபுராணமே மீண்டும் நுவலா நிற்கின்றது. இன்னுந், `திக்விஜயம் எம்பா வையங்கார் என்னும் வைணவர் ஒருவர் `அதர்வசிகா விலாசம் என்றொரு நூலெழுதிச் சைவத்தைப் புறம்பழிக்க, அதற்கு மறுப்பாக `அதர்வசிகா விலாச நிரசனம் எனப் பெயரிய ஓர் அரியநூலை மைசூர் வீரபத்திரா ராத்யர் என்னுஞ் சிவனடியார் எழுதி வெளியிட்டனர். அதைக் கண்டவுடன் ஐயங்கார் மனம் வெந்து ஆராத்யர்பாற் போந்து வழக்காட, அவ் வழக்கிலுந் தோல்வி யுறவே, ஐயங்கார் மெய்யறிவு விளங்கி, ஆராத்யர்க்கு அடிமை யாகிச் சைவரான வரலாறு சங்கர பட்டர் இயற்றிய `சகலவேத சிகாமணி என்னும் நூலில் எடுத்துக் காட்டப்பட்டிருக் கின்றது. இன்னும், `இந்திரத்தூய்மன் என்னும் வைணவ னொருவன், சிவனடியாரான அகத்திய முனிவரைப் பழித்த காரணத்தால் அவராற் காட்டானையாகும்படி வசைகூறப் பட்டுக் காட்டானையாகித் துன்புற்றமை பாகவதநூலிற் சொல்லப்பட்டிருக்கின்றது. இன்னும், பிரகலாதன் தன்றந்தை இரணியனுக்குப்பின் அரசு செலுத்தி வருங்கால், அவனது அவைக்குச் சிவனடியார் ஒருவர் போதத், தான் திருமாலடியவன் என்னுஞ் செருக்கால், அவரை வரவேலாது குறைவுபடுத்தவே, அவர் வருந்தி, `மாயவனடியான் என்னுஞ் செருக்கால் நீ எம்மைத் தாழ்வு படுத்தினமையின், நீயும் அம் மாயவனுந் தீராப் பகைவராகக் கடவீர்கள் என வசைகூறிச் சென்றனர். அங்ஙனமே, பிரகலாதன் சிலநாளில் மனந் திரிபெய்தி, என் தந்தையைக் கொன்ற மாயவனை நான் வணங்குவதென்ன பேதைமை! இப்போதே நான் மாயவனை எதிர்த்துப் பழிக்குப்பழி வாங்குவேன்! எனக் கூறித் திருப்பாற் கடலை அணுகித், தன்னொடு போர்செய்ய வரும்படி திருமாலை அழைக்க, அவர் வியப்புற்று, `இவன் சிவனடியார்க்குப் பிழைசெய்த காரணத்தால் இங்ஙனம் மனந் திரிபெய்த லானான்; ஆகலின், இவனை அறிவு புகட்டிப் போகவிடுதலே தக்கது எனக் கருதி, அவனொடு நெடுநாட் போர் இயற்றி, அவனைப் புறங் கண்டோடச் செய்தனரெனக் `கூர்மபுராணங் கூறாநிற்கின்றது. அதன்பிற், பிரகலாதன், மாயவனிடம் அன்புபாராட்டு தலொழிந்து, காசிமாநகர் சென்று சிவலிங்கம் வைத்து வழிபாடியற்றி உய்ந்தனனெனக் `காசி கண்டம் உரையா நிற்கின்றது. இன்னும், வைணவர் `பெரிய திருவடி எனப் பாராட்டி வணங்குங் கருடன் ஒருகால் மிகவுஞ் செருக்குற்று நந்திதேவர் முன்னிலையிற் செல்ல, அவர் தமது மூச்சினைக் கடுவிசையுடன் செலுத்தி அவனைத் துரும்புபோல் முன்னும் பின்னுமாய் அலைத்து அவனுடைய சிறகுகள் முறிந்துபோகும்படிசெய்து அவனது செருக்கினை அடக்கிய வரலாறும்; `சிறிய திருவடி என வைணவராற் கொண்டாடப்படும் அநுமானை, இராமர் தாம் இராவணனைக் கொன்ற கொலைப்பாவந் தீர்தற் பொருட்டுச் சிவலிங்க வழிபாடு செய்தல்வேண்டிச் சிவலிங்கம் ஒன்று கொணரும்படி ஏவ, அவன் நந்திதேவரது உடம்பாடு பெறாமலே இறுமாப்புடன் திருக்கைலாய மலைக்குச் செல்ல, அதுகண்டு அவர் வெகுண்டு அவனை உதைக்க அவன் கீழ்விழுந்து இரத்தங் கக்கிய வரலாறும் `காந்தம், `வேதாசலமாந்மியம், `காளிகா கண்டம் முதலான நூல்களில் நன்கெடுத்து நுவலப்பட்டிருக்கின்றது. 11. திருமாலுஞ் சிவனடியாரால் ஒறுக்கப்பட்டமை இங்ஙனமாகச் செருக்குற்று மயங்கிச் சிவனடியாரையுஞ் சிவபிரானையும் புறம்பழித்த வைணவர்கள் அச் சிவனடி யாரால் ஒறுக்கப்பட்டுச் செருக்கொழிந்தவாறு போலவே, திருமாலுஞ் சிவனடியாரைப் பகைத்து அவர்க்குத் தீங் கிழைக்கப் புக்ககாலையில் அவரால் ஒறுக்கப்பட்டு அறிவு திருந்திய வரலாறுகள் சிலவும் நாயகரவர்களால் எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன; அவை வருமாறு: `சுபதேவன் எனப் பெயரிய வைணவ மன்னன் ஒருவன் சிவபிரான்றன் அடியவரான `ததீசி முனிவர்மேற் பகை கொண்டு அவரைக் கொல்வான் வேண்டி மாயவனை நோக்கித் தவம்புரிந்தனன். அவனது தவத்திற்கு உவந்த திருமால் அவனெதிர் தோன்றி, அவன் வேண்டியவாறே ததீசி முனிவரை அழிக்கும் பொருட்டுத் தமது ஆழிப்படையினை ஏவ, அஃது அம் முனிவர் பெருமானுக்கு ஊறுசெய்யமாட்டாதாய்க் கூர்மழுங்கி அவரை வலஞ்செய்து போயது. அது கண்ட மாயவன் பெரிதுஞ் சீற்றங்கொண்டு தனது வில்லிற் றொடுத்துப் பல்லாயிரங் கொடுங்கணைகளைச் செலுத்த, அவற்றைக் கண்டு புன்னகை கொண்ட அம்முனிவர் தருப்பைப் புல் ஒன்றை எடுத்து அவற்றெதிர் எறிய, அஃது அத்தனை அம்புகளையும் விழுங்கி விட்டது. அதன்மேல், மாயவன் பேருருக்கொண்டு எண்ணிறந்த மாயவர்களாகி அம் முனிவரைச் சூழ்ந்துகொள்ள, அது கண்டு அவர் தமது திருவடியொன்றைத் தூக்கி அதன் பெருவிரலை அசைத்தலும், அதன் கணிருந்து எண்ணிறந்த மாயவர்கள் சங்கும் ஆழியுங் கதையும் வாளும் வில்லும் பிடித்தவர்களாகி வெளிவர அதுகண்ட மாயவன் மிக வெருக்கொண்டு அம் முனிவர் பிரானை வணங்கி யுய்ந்த வரலாறு `பாத்மபூர்வத் திலும், `காந்தத்திலும் விளக்கமாகச் சொல்லப்பட்டிருக் கின்றது. இனி, அகத்திய முனிவர் திருக்குற்றாலத்திற்கு எழுந்தருளிய ஞான்று, அங்கிருந்த திருமால் கோயில் வைணவர்கள் அவரை யிகழ்ந்து தருக்கினமை கண்டு, அவர் அக் கோயிலினுட் சென்று கருவறையிலிருந்த திருமாலுரு வினைச் சிவலிங்க வுருவாகத் திரிபு படுத்திய செய்தி `குற்றால மாந்மியம், `காந்தம் முதலான நூல்களிற் காணப்படுகின்றது. இன்னுஞ், `சங்கு வர்ணர் என்பவரொடு தொடுத்த பெரும் போரில் மாயவன் தன் தலைமயிர் அறுப்புண்டு மானம் அழிந்த செய்தி `காந்தத்திலும், `சங்கர தாசையர் என்னுஞ் சிவனடியாரொருவர், காசிமாநகரிலிருந்த வைணவரின் கொடுமை தாங்கமாட்டாமல் அவர்க்குரியதாயிருந்த திருமால் கோயிலை நெற்றிக் கண்ணால் எரித்து விட்டனரென்றும், எரிந்து பாழாய்க் கிடக்கும் அக் கோயில் `சூந்யாலயம் என இஞ்ஞான்றும் வழங்கப்பட்டு வருகின்றதென்றும் போந்த செய்தி `சைவபுராணத்திலுங் காணப்படுகின்றன. 12. சிவன் சிவனடியார்பால் திருமால் அருள் பெற்றமை இனித், திருமாலின் சிறந்த பிறவிகளாகக் கொள்ளப்படும் இராமனுங் கண்ணனுமாகிய இருவரில், இராமன் தன் காதன்மனையாளான சீதையை இழந்து கானகங்கடோறும் அவளைத் தேடி அலைந்துகொண்டு செல்கையில், அகத்திய முனிவரின் இருக்கையினை அடைந்து அவரை வணங்கித், தனக்கு நேர்ந்த இடுக்கணை எடுத்தியம்பிக் கண்ணீர் உகுத்துத், தான் உற்ற குறையினைத் தீர்த்து அருள்செய்யும்படி வேண்ட, அம் முனிவர் பிரான் இராமனுக்கு இரங்கி அவற்கு `விரஜாதீக்ஷை செய்து, சிவலிங்க வழிபாடுபுரியும்படி அறிவுறுத்தினராக, இராமனும் அங்ஙனமே சிவலிங்க வழிபாட்டினை மெய்யன் புடன் ஆற்றி வந்தனனென்றும், சிவபிரான் அதற்கு உவந்து அவன் முற்றோன்றி அவற்குப் பாசுபதம் முதலான சிறந்த படைக்கலங்களுஞ் சீதையை மீண்டும் பெறும் வரமும் வழங்கினரென்றும் `பாத்மோத்தரமும், `வான்மீகி ராமாயண மும் புகலா நிற்கின்றன. பின்னர், இராமன் இராவணனைக் கொன்று சீதையை மீட்டுக்கொண்டு அயோத்திமாநகர்க்குப் போம்வழியிற் கோதவரியாற்றங்கரைக் கண்ணதான `பஞ்சவடி என்னும் ஆலந்தோப்பினிடம் வந்து சேர்ந்தபோது, இராமன் சீதையை நோக்கி, இவ்விடத்தில் முன்னே மகாதேவரான சிவபெருமான் எனக்கு அருள்செய்தார் என்னும் பொருள்பட அத்ர பூர்வம் மஹாதேவம் எனக் கூறியதாக `வான்மீகி ராமாயணம் இயம்பா நிற்கின்றது. இச் சொற்றொடர்க்கு வைணவர் பொருந்தாப் பொருள் கூறுவான் புகுந்து, மகாதேவன் ஆன வருணன் தனக்கு அருள்செய்ததனையே இராமன் குறிப்பித் தான் எனக் கரைந்தனர். வேதங்கள் உபநிடதங்கள் புராணங்கள் இதிகாசங்கள் முதலான எவ்விடங்களிலும் `மகாதேவன் என்னும் பெயர் காரண இடுகுறியாய்ச் சிவபிரான் மேற்றாகவே வருதலானும், இராமன் அகத்தியராற் சிவதீக்கை செய்யப் பெற்றுச் சிவலிங்க வழிபாடு செய்த பின்னரே சிவபெருமான் இராமன் முற்றோன்றிப் படைக்கலங்களும் வரமும் நல்கின ரென்று `பாத்மோத்தரம் நன்கெடுத்து மொழிதலானும் அவர் அதற்கு வயிறெரிந்து ஏற்றும் புன்பொருள் பொருந்தாப் பொருளேயாதல் திண்ணமாமென்க. இனிக், கண்ணனுக்கு உபமந்யு முனிவர் சிவதீக்கை செய்து, சிவலிங்க வழிபாடு செய்யக் கற்பித்தபடியே அவன் வழிபாடு செய்து தான் வேண்டிய பேறுகளையெல்லாம் பெற்றானென்று `சைவபுராணம், `மகாபாரதம், `கூர்மபுராணம் முதலான நூல்கள் நன்கெடுத்து நுவல்கின்றன. இனித், திருமால் திருஞானசம்பந்தர் அருளிச் செய்த தேவாரத் திருப்பதிகங்களை ஓதிச், சிவபிரான்றிருவுருவத் தோடொத்ததோர் உருவினைப் பெற்றமை மேலெடுத்துக் காட்டப்பட்டது. இன்னுந், திருவஞ்சைக் களத்திற் சுந்திரமூர்த்தி நாயனாரைத் திருமால் நான்முகன் முதலான தேவர்கள் தெய்வயானையுடன் எதிர்கொண்டுவந்து திருக்கைலாயத்திற்கு அழைத்துச்சென்றமை, இந்திரன்மால் பிரமன் னெழிலார்மிகு தேவரெல்லாம் வந்தெதிர் கொள்ளஎன்னை மத்தயானை யருள்புரிந்து அந்தர மாமுனிவர் இவன்ஆர்என வெம்பெருமான் நந்தம் ஆரூரன்என்றான் நொடித்தான்மலை யுத்தமனே. எனச் சுந்திரமூர்த்திகளே அருளிச் செய்திருக்குமாற்றால் நன்கு புலனாம். இவ்வாறாகத் திருமாலும் அவர்தம் பிறவிகளான இராமனுங் கண்ணனும், எல்லாம்வல்ல சிவபெருமானையும் அவன்றன் அடியார்களையும் வழிபட்டுப் பேறுகள் பலவும் பெற்று உய்ந்தமை, பழைய விழுப்பெரு நூல்களால் நன்கு தெளியக் கிடப்பவும், அவற்றுக்கெல்லாம் முழுமாறாக வைணவர்கள் பொருந்தாக் கோள்கூறித், தனித் தலைமைப் பெருங்கடவுளுக்குப் பிழைசெய்தல், அவர் தமது பிறவிப் பயனை இழப்பதாமன்றி மற்றென்னை? 13. யாகபதி சிவபிரானே யாவன் இனி,ஏகோஹீருத்ரோநத்விதீயாயததுர்ய:இமாந்லோகாந்ஈசதே(சுவேதாசுவதரோபநிடதம்3..2)என்னு«வேதாந்த¢சொற்றொடரானJஇவ்வுலகங்கsயெல்லாªதன்னாற்றலாšஇயக்கு«இறைவனாdஉருத்திர‹ஒருவdயுளன்;அவனுக்Fவேறாகஇரண்டhம்இறைtன்ஒருtன்இல‹எdத்தெளிபொUள்தªதுஉருத்திரnனமுழுமுjற்கடவுŸ,அவனு¡குவேறாfப்பிறிதெhருகடîள்இல்iலஎ‹றுவலியுறுத்âக்கூwநிற்பவு«,வைணtர்சிyர்அதனெhடுமுரÂ,வேள்Éக்களத்nதஎல்லhத்தேவர்களுக்Fம்அவியுzவுகொடுத்தபி‹,கடைசியhகஅதdப்பெறுதற்குரியhன்எவனுsன்vனவேள்வியாசிரிaன்வினாயத‰குஉருத்திரdத்தÉரவேறெவUம்இyர்எdப்பிறர்கூ¿aவிடையிd mச்brற்றொடர்உzர்த்துவதாகஒUgரும்gய்யுரையினைப்புiனந்துகட்டிச்rல்லினர்;இ§ஙனஞ்rல்லுமிடத்து,யhகபதியாகியவிZணுவுக்குஅÉயுணவைமுjலில்அËத்து,அjற்குப்பி‹நhன்முகன்இªதிரன்முjலானம‰றைத்jவர்கட்கெல்லாம்அjனைஅËத்து,அtரெல்லாரினுந்தhழ்ந்தஉUத்திரனுக்குஅjனைக்கiடப்படியாகஅËத்தமையினையேஅ¢rற்றொடர்கு¿¥பித்தலால்உரு¤திரனானசிவãரான்எல்yத்தேtர்களிYங்கlப்பட்டவனாவன்என அவ் வைzவர்புக‹றனர். இனி, அவர் அச் சொற்றொடர்க்கு அவ்வாறு பொருள் செய்து சிவபெருமானைக் கடைப்பட்ட தேவராக்குதற்கு, அச் சொற்றொடரும் அதனையுடைய சுவேதாசுவதர உபநிடதமுஞ் சிறிதாயினும் இடந்தருமாவென ஆராயற்பாற்று. அச் சொற்றொடர் சுவேதா சுவதரோப நிடதத்தின் மூன்றாம் இயலின் இரண்டாம் மந்திரத்தின்கட் போந்ததாகும். இம் மூன்றாம் இயலோ இறைவனைப் பற்றிய மெய்யுணர்வினை (பிரமஞானத்தினை) விளக்குவதாகும். இதன் முதன்மந்திரம் வருமாறு: மாயைக்குத் தலைவனான ஈசன் தனது முழுமுதலாற்ற லால் எல்லா உலகங்களையும் நடாத்துகின்றான்; இறைவனாக அவன் ஒருவனேயுளன். படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழில்களையும் புரிபவன் அவன் ஒருவனே யாவன்; இவ்வியல்பினனான இறைவனையுணர்பவர் இறவா நிலையினையடைகின்றனர். இம் முதல் மந்திரத்தின்கண் வேள்விவேட்டலைப் பற்றியாவது, வேள்விக்குத் தலைவன் விஷ்ணுஎ‹பதை¥பற்றியாtது,தேவர்fட்குஅÉயுணவு அளித்தyப்பற்றியாtதுஏதொரு குறிப்புÄல்லாkதெற்றெdவிளங்கா நிற்கின்றJ.இதனையL¤J வரும் இரண்டாம் மந்திரம்: உருத்திரன் ஒருவனேயுளன்; அவனுக்கு இரண்டாவதாக ஏதொன்றும் நிற்கவில்லை; தன் இறைமைச் செயலால் இவ்வுலகங்களை நடாத்தும் அவன் இவ்வுலகங்களையெல்லாம் படைத்து, எல்லா உயிர்களுக்கும் உயிராய்த் திகழ்கின்றான்; அவை உயிரோடு உலவுங்காறும் அவைகளைக் காப்பவனும் அவனே; முடிவுகாலத்திற் சினந்து அவற்றை அழிப்பவனும் அவனேயாவன் என நுவல்கின்றது. இனி, இதற்குப் பின்னதான மூன்றாம் மந்திரம் வருமாறு: அவன் எவ்விடங்களிலுங் கண்கள் உடையன்; எவ்விடங் களிலும் முகங்கள் உடையன்; எவ்விடங்களிலுந் தோள்கள் உடையன்; எவ்விடங்களிலும் அடிகள் உடையன்; ஒளிவடிவின னான அவன் ஒருவனே மண்ணையும் விண்ணையுந் தோற்றுவிக்கின்ற காலத்து, மக்களுக்குத் தோள்களையும் பறவைகளுக்கு இறக்கைகளையும் அமைத்தனன். ஒன்றன்பின் ஒன்றாய்ப் போந்த இம் மூன்று மந்திரங்களும், எல்லா உலகங்களுக்கும் எல்லா உயிர்களுக்கும் முதல்வனாய் உள்ளான் ஒரு கடவுளேயல்லால் மற்றுமொரு கடவுள் இல்லை யென்றும், இவை தம்மைப் படைத்துக் காத்து அழிப்பவன் அவன் ஒருவனேயாகவும் அம் முத்தொழில் களையுஞ் செய்தற்குத் தனித்தனியே மூன்று கடவுளர் உளர் எனக் கூறுவாருரை எல்லாம்வல்ல இறைவனது வரம்பிலாற்ற லுக்கு மாறாய்ப் பொய்ப்படு மென்றும், இங்ஙனம் முத்தொழில்களையும் ஒருங்கே புரியும் முதல்வன் ஈசன், உருத்திரன் என்னுஞ் சிறப்புப் பெயர்களால் வழங்கப்படுவன் என்றும், அம் முதல்வன் எங்கும் நிறைந்த ஒளி வடிவினனாய் எல்லா உயிர்களின் கண்களுக்கும் என்றும் புலனாய் விளங்கிக்கொண்டிருப்பவன் என்றும் மிக வற்புறுத்தித் தெருட்டா நிற்கின்றன. வடமொழியுணர்ந்தார்க்கெல்லாம் மேலை உபநிடத மந்திரப்பொருள் தெற்றென விளங்கிக் கிடப்பவும், பகலவனை இருட்படலம் மறைக்க முயன்றாற் போல வைணவர் சிலர் இதனை மறைத்து, முழுமுதற் கடவுளல்லாத மாயவனை முழுமுதற் கடவுளாக்கி முழுமுதற் கடவுளான சிவபிரானைத் தேவரினுங் கடைப் பட்டவனாக்க முயன்றது, அவர் செய்த தீவினையால் அவரது சிற்றறிவுதானும் ஆணவவல்லிருளிற் புதைந்து மயங்கின மையினையே விளங்கக் காட்டுகின்றது; வடமொழியறியாத பொது மக்களை ஏமாற்று தற்பொருட்டு வைணவர் மேலை இரண்டாம் மந்திரத்திற்குக் கட்டிச்சொன்ன பொருள் வடமொழியுணர்ந்தார் எதிரில் வெறும் பாழாய் முடியுமென்க. நாயகரவர்கள் இவ்விடத்தே சுருங்கச் சில சொற்களில் மறுத்துக்கூறிய மெய்யுரை மெய்ப்பொருள் பொதிந்ததாதலை மேலே யாமுஞ் சுருக்கமாகவே விளக்கிக் காட்டினாம். இதன்விரிவை யாம் இயற்றிய மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும், சைவசித்தாந்த ஞானபோதம், தமிழர்மதம் என்னும் விரிந்தநூல்களிற் கண்டு கொள்க. இனிச், சிவபெருமானே வேள்விமுதல்வன் (யாகபதி) ஆவன் என்னும் உண்மையினை ஆரியத்தில் மிகப் பழையநூலாகிய இருக்குவேதத்தி லிருந்தெடுத்த காதபதிம் மேதபதிம் ருத்ரம் ஜலாஷபேஷஜம், தத்சம்யோ: சம்நம் ஈமஹே (1, 43, 4) என்னும் மந்திரத்தால் நாயகரவர்கள் நன்கு வலியுறுத்திக் காட்டியிருக்கின்றார்கள். இம் மந்திரமானது, `பாட்டுகளுக்குத் தலைவனும் வேள்விகளுக்கு முதல்வனும், நோய்தீர்க்கும் மருந்துகளுக்கு உடையவனும் ஆன உருத்திரனது திருவருளைப் பெறும்பொருட்டு அவனை நாடுகின்றோம் எனப் பொருள்பயந்து சிவபெருமானே பாட்டுகளுக்கும் வேள்விகளுக்குந் தலைவனாதலுடன், அவனே மும்மலப் பிணிதீர்க்கும் மருந்துகள் உடையானுமாய் (வைத்திய நாதனாய்)த் திகழ்தலையும் நன்கு விளக்கிக் காட்டுதல் நினைவிற் பதிக்கற்பாற்று. இவ்விருக்குவேத மந்திரத்தினுஞ் சிறந்ததும் பழமையாவதும் பிறிதில்லை. இன்னும் அவ் விருக்குவேதமே, ஆவோராஜா நமத்வரயருத்ரம்...... அவஸேக்ருணுத்வம் (4, 3, 1) என்னும் மந்திரத்தால் வேள்விகளுக்கு வேந்தனாவான் உருத்திரனேயென்றும், உங்களைக் காக்கும்பொருட்டு அவனையே நாடுதல் வேண்டுமென்றும், அறிவுறுத்துகின்றது. இன்னும், அது சிவபெருமானை விளித்து இருபத்தொரு வேள்விகளும் உம்மிடத்தே வைக்கப்பட்டிருக்கின்றன (1, 72, 6) எனப் பகர்கின்றது. மேலும், அக்நியேருத்ரன் என அவ் வேதம் புகல்வதாலும், அதற்கிணங்கவே திருநாவுக்கரசுநாயனாரும். எரிபெருக்குவர் அவ்வெரி ஈசன துருவருக் கமதாவ துணர்கிலார் என அருளிச்செய்திருத்தலானும், தீயையின்றி வேள்வி வேட்டல் இன்மையானும், வேள்வியென்பது ஒளிவடிவாக விளங்கும் உருத்திரனைத் தீவடிவின்கண் வைத்து வழிபாடு ஆற்றுதலே யன்றி வேறின்மையானும் யாகபதி சிவபெருமானேயாவனென இருக்குவேதம் பலகாலும் எடுத்து வற்புறுத்துரைத்தது வாய்வதே யாம் என்க. இவ்வாற்றால், வேள்விமுதல்வனாந் தன்மை சிவபெருமானுக்கே உரித்தாவதன்றி, நம்போற் பிறந்திறக்கும் மாயவன் நான்முகன் முதலான ஏனையோர்க்கு உரித்தாகாமை யுணர்ந்து கடைப்பிடிக்க. இன்னம், எவரெவர் எந்தெந்தத் தேவர்களை நோக்கி வேள்வி வேட்பினும், அவை தம்மையெல்லாம் வேள்வி முதல்வனான சிவபிரானே ஏற்று, அங்ஙனம் ஏற்குமாற்றால் அத் தேவர்களின் உயிர்க்குயிராய் நிற்குந் தானே அவர்களை உவப்பிப்பன் என்னும் உண்மையினையும் பின்னர் நாயக ரவர்கள் நன்கு விளக்கியிருக்கின்றார்கள். அருச்சுனன் தான் சிவபிரான் வழிபாடு செய்தற்குரிய காலம் அண்முதலுஞ், சிவலிங்க வடிவம் இல்லாக் குறையினை நினைந்து வருந்தக், கண்ணன் தன்னையே சிவலிங்கவடிவாய்க் கருதி வழிபாடு ஆற்றுக என்று கற்பிக்க, அவனும் அங்ஙனமே செய்து, பின்னர்த் திருக்கைலாயஞ் சென்று சிவபிரான் திருவுருவத்தை நோக்கியவழித், தான் கண்ணன்மேலிட்ட போதுகள் அத்தனையுஞ் சிவபிரான் திருமேனிமேல் இருத்தல் கண்டு வியப்புற்றனன் என மாபாரதங் கூறுதலின், எந்தத் தேவரை நோக்கி எவ்வழிபாடு செய்யினும், அவ் வழிபாட்டை அத் தேவரின் உயிர்க்குயிராய் நிற்கும் மாதேவனே ஏற்று அருள்செய்வனென்பது பெறப்படும். இன்னும், உருத்திரமூர்த்தியாகிய சிவபெருமானை, இந்திரன் நான்முகன் நாராயணன் முதலான ஏனைச் சிறுதெய்வங்களோடு ஒப்பவைத்து வணங்குதலாலுந் தீய வாழ்த்துதலாலும் அழைத்தலாலும் அவரது சீற்றத்திற்கு யாம் ஆளாகமாட்டோம் எனக் கிளக்கும் இருக்குவேத இரண்டாம் மண்டிலத்து 33-ஆம் பதிகத்து நான்காம் மந்திரமாகிய, மாத்வா ருத்ர சுக்ருதாம நமோபிர் மாதுஷ்டுதீ வ்ரிஷபமா ஸஹூதி என்பதனை எடுத்துக்காட்டிய நாயகரவர்கட்குச் சைவவுலகம் யாது கைம்மா றியற்றவல்லது? இவ்விரண்டாம் மண்டிலத்து மூன்றாம் மந்திரம், சிரேஷ்டோ ஜாதயருத்ர ச்ரியா ஸிவதம தவஸாம் வஜ்ர பாஹோ என்பது உருத்திரமூர்த்தியே எல்லாத் தேவர்களினும் மேலான புகழுடையரெனவும், வலியவர்கள் எல்லாரினும் மேலான வலிமை வாய்ந்தவரெனவும் நன்கெடுத்துக் கூறுதலால், உருத்திரசிவத்திற்கு மேலான அல்லது ஈடான தெய்வம் ஏதுமே இல்லையென இருக்குவேதமே அறுதியிட்டு விளக்குதலாலும், இவ் வேதத்தினுஞ் சிறந்த பழைய வடநூல் ஏதுமில்லாமை யாலும், பண்டைக் காலந்தொட்டு நம்மிந்துமக்கள் சிவபெருமானை ஒளிவடிவில் வைத்து வணங்கிவருதலாலும் அவனைத் தவிர வேறொரு தெய்வத்தை வேள்விமுதல்வன் (யாகபதி) எனக் கோடல் அவர்க்குடம் பாடாகாமை உள்ளங்கை நெல்லிக்கனிபோற் றெள்ளிதில் விளங்கா நிற்குமென்க. இங்ஙனமாக எல்லாத் தேவர்களினும் உயர்ந்த சிவபெருமானே முழுமுதற் கடவுளும் வேள்விகளுக்குத் தலைவனும் ஆதலால், எந்தத் தேவரை நோக்கி எத்தகைய வேள்வி வேட்பினும் முதலிற் சிவபிரானை அழைத்து அவற்கு அவியுணவு செலுத்திய பின்னரே, மற்றைத் தேவரை வருவித்து அவர்க்கு அவியுணவு தரும் வழக்கம் வேள்வியாசிரியராற் கையாளப்பட்டு வருகின்றது. இதனாலும், உருத்திரனே வேள்விமுதல்வனென்பது பெறப்படாநிற்கும். இன்னும், நான்முகன் மாயன் இந்திரன் முதலான தேவர்களின் துணையை நம்பிச் சிவபெருமான்மேற் பகைகொண்டு தருக்கிய தக்கன், சிவபெருமானை இகழ்ந்து ஒதுக்கிச் செய்த பெருவேள்வியானது, அவரால் தகர்த்து அழிக்கப்பட்ட செய்தி, நால் வேதங்களில் ஒன்றான கிருஷ்ண யஜுர் வேதத்தின் `தைத்திரீய சங்கிதையிலும் (2, 6, 8, 3) சுக்ல யஜுர் வேதத்தைச் சேர்ந்த `சதபத பிராமணத்திலும் (1, 7, 3, 1) நன்கெடுத்து நுவலப்பட்டிருக்கின்றது. வைணவ மதம் உண்டாதற்குப் பல்லாயிர ஆண்டுகளுக்கு முற்பட்ட இப் பழைய நூல்களிற் சொல்லப்பட்ட இச் செய்தி, சிவபிரானே முழுமுதற் கடவுளாதலை நன்கு நிறுவி, அவனை விலக்கியோ அல்லது அவனை மறந்தோ மற்றைத் தேவரை நோக்கிச் செய்யும் எத்தகைய வேள்வியும் அழிந்து பாழாதலைத் தெற்றென விளக்கா நிற்கின்றது. இவ் வேதநூற் பொருளுக்கு முழுதும் ஒத்தே, இடைக்காலத் தெழுந்த மாபாரத அநுசாசன பர்வமும் அந் நிகழ்ச்சியினைக் கூறுகின்றது; அது வருமாறு: கண்ணபிரான், தருமன் புதல்வனான உதிட்டிரனை நோக்கிக் கூறுவான்: சடைமுடியைத் தாங்கினவரான மகாதேவரைக் கீழ்வீழ்ந்து வணங்கி, யான்பெற்ற பேற்றினையும் பெரும்புகழையும் நுமக்கெடுத்துப் புகல்கின்றேன். ஓ வேந்தனே, கேளும், யான் காலையில் எழுந்தவுடனே கைகளைச் சேர்த்துக் கூப்பிக்கொண்டு சதருத்ரீயத்தை மன வொருமையுடன் பாராயணஞ் செய்கின்றேன். சிறந்த அடியவனான பிராசாபதி தான் ஆற்றிய தவமுடிவில் அவ்வணக்கவுரையினை உண்டாக் கினன். சங்கரனே இயங்கு முயிர், நிற்குமுயிர் எல்லாவற்றையுந் தோற்றுவித்தனன். ஓ மன்னனே, மகாதேவனுக்கு மேலானது ஏதுமே யில்லை; ஏனென்றால், இம் மூவுலகங்களிலும் அவனே எல்லாரினும் மேலானவன். இம் மேலான தேவனுக்குமுன் எதிர்த்து நிற்கவல்லதும் ஏதுமே யில்லை: ஏனென்றால், இம் மூவுலகினும், அவனுக்கு ஒப்பானவரும் எவருமேயில்லை. போர் முனையில், அவனுக்குச் சிறிது சினத்தை மூட்டினாலும், அவனைப் பகைத்தவர் நடுக்கம் எய்தி உணர்விழந்து கீழே விழுந்து விடுகின்றனர்; பெரும்பாலும் உயிர் போக்கவும் படுகின்றனர். நடுங்கத்தக்க அவனது குரல் முழக்கம் இடி யேற்றின் முழக்கத்தை ஒத்ததாயிருத்தலின், அதனைக் கேட்ட தேவர்களின் நெஞ்சமும் அழிந்து படுகின்றது. தேவர்களா யினும், அசுரர்களாயினும், கந்தருவர்களாயினும், பன்னகர் களாயினும், வேறெவராயினும் அவரைப், பிநாக பாணியான மகாதேவர் தமது செயிர்த்த வுருவத்தொடு நோக்குகின்றாரோ, அவர்கள் தம்மை எங்கே ஒளித்துக் கொண்டாலும், அவர் சீற்றங் கொள்ளும்போது அவர்கள் மனஅமைதியுடன் இருத்தல் இயலாது. தக்கப் பிரசாபதி யானவன் வேள்வி வேட்கப் புகுந்து, அதற்காங் கிரியைகளை ஒழுங்குபடுத்திய காலையில், மகாதேவர் சீற்றங்கொண்டு அவனது வேள்வி யினை அழிக்கக் கருதித், தமது வில்லினின்றும் ஒரு கணையினை விடுத்து, ஓர் உரத்த ஓசையினை விளைத்தனர். தேவர்கள் அதனைக் கேட்டு உளங் கலங்கிச் சோர்வுற்றனர். உடனே, வேள்வியானது அழிந்தமையாலும், மகாதேவர் பெரிதுஞ் சீற்றங் கொண்டமையாலும், அவரது வில்லின் நாண் ஓசைகேட்டு எல்லா வுலகங்களும் நிலைதடுமாறின; தேவர்களும் அசுரர்களும் துணையற்றவர்களாய்க் கீழே வீழ்ந்தனர்; நீர்நிலைகள் குழம்பின; நிலம் அதிர்ந்தது; மலைகள் நுறுங்கின; வானம் பலமுகமாய்ப் பிளவுண்டது; இருளால் மூடப்பட்டு உலகங்கள் ஒளி இலவாயின; ஒளிதரும் உலகங்களும் ஞாயிறும் ஒளி அவிந்தன. இதனால், மிகவும் உளம் மருண்ட முனிவர்கள் தமது நன்மையையும் ஏனையெல்லா உயிர்களின் நன்மையையுங் கோரி, மகாதேவரின் சீற்றத்தைத் தணிப்பான் வேண்டி மறைமொழிகளைச் சொல்லி வழுத்தினர். அப்போது, அஞ்சத்தக்க ஆற்றலுடையவரான உருத்திரர், தேவர்கள்பால் ஓடிப், பெருஞ் சீற்றமுடையராய்ப் பகனுடைய கண்களை வெளியே தெறிக்கும்படி புடைத்தனர். மேலுஞ் சினம் மூண்டு தமது திருவடியாற், பூஷன் வேள்விப் பலியைத் தின்றுகொண்டிருக்கையில், அவனை எட்டி யுதைத்து அவனுடைய பற்களைத் தகர்த்தனர். தேவர்கள் அப்போது நடுக்கமுற்றுச் சங்கரனை நிலத்தே கிடந்து பணிந்தனர். அதனாலும் அவன் சினம் அடங்கானாய்த், தனது வில்நாணில் நன்கு தீட்டி மிளிரும் ஒரு கணையினைத் தொடுத்தனன். உருத்திரப் பெருமானின் வரம்பிலாற்றலைக் கண்ட தேவர்களும் முனிவர்களும் பெருந்திகில்கொண்டு, அவனது சீற்றத்தைத் தணிப்பான் வேண்டிக் கூப்பிய கையினராய்ச் `சதருத்ரீயத்தைச் சொல்லி அவனைத் தொழுதனர். உருத்திரனும் தேவர்களது வழுத்துரையினைச் செவிமடுத்து உளம் உவந்தனன். அத் தேவர்களுந் தாம் வேட்ட வேள்விப் பலியிற் சிறந்த ஒரு பங்கினை அவற்கு அளித்து, அச்சத்துடன் அவனையே அடைக்கலமாக அடைந்தனர். அதன்பிற் பெருமான் உளம் உவந்து அவ் வேள்வியினைச் சீர்திருத்தி, அதன்கண் அழிவுண்டவர்களையெல்லாம் மீள உயிர்ப்பித்து முன்போல் இருக்க அருள் செய்தனன். இவ்வாறு, தருமபுத்திரனான உதிட்டிரனுக்குக் கிருஷ்ண பகவான் எடுத்துக் கூறிய மெய்யுரையாற் சிவபெருமானே வேள்வி முதல்வனாதலும், அவனை வழுத்தாது செய்யும் எத்தகைய வேள்வியும் பயன்றராது அழிதலுடன், அவ் வேள்வியினை ஆற்றுவோரும் அழிந்துபடுதலுந் தெற்றென விளங்குதல் காண்க. அற்றாயினும், மாபாரதத்திற் போந்த கண்ணனது அறிவுரையில் விஷ்ணுவும் பிரமாவும் நுவலப்படாமையின், அவ்விருவரும் உருத்திரனிலும் மேலான கடவுளரெனவும், அவ்விருவரும் உருத்திரனால் ஒறுக்கப்படுதற்கு எளியரல்ல ரெனவுங் கொள்ளாமோ வெனிற்; கொள்ளாம்; என்னை? பழைய வேதநூல்களையும் பிராமணங்களையும் ஆழ்ந் தாராய்ந்து பாராதவர்களே அங்ஙனம் உரைப்பரன்றி, அவற்றைத் தீர ஆராய்ந்து பார்த்து, விஷ்ணுவும் பிரமனும் அப் பழைய வேதநூல்களிற் சிறந்த தெய்வங்களாக எடுத்துச் சொல்லப்படாமையினாலேயே, அந் நூல்களை யொட்டித் தக்கன் வேள்வியினைக் கூறிய மாபாரதமும் அவ்விருவரையும் அங்கு ஒரு பொருட்டாக வருவித்து வைத்து உரையாதாயிற் றென்று அதன் உண்மை கண்டவர் அங்ஙனம் உரையாராக லினென்க. இருக்கு முதலான பழைய வேதநூல்களிற், பின்றைக் காலப் புராண விஷ்ணுவைப் பற்றிய குறிப்புச் சிறிதுமே காணப்படவில்லை. இருக்குவேதத்தில் விஷ்ணுவென்னும் பெயரால் அழைக்கப்பட்டவன் பகலவனே யல்லாமல் மாயவன் அல்லன். பகலவன் காலை நண்பகல் மாலை என்னும் மூன்று பொழுதுகளிலும் இயங்கும் இயக்கத்தினையே விஷ்ணு மூன்றடியால் உலகினை அளப்பதாக இருக்குவேதம் நுவலுகின்றதென அந்நூலுக்கு உரை வகுத்த பழைய உரை யாசிரியரான அவுர்ணவாபர் கூறுகின்றனர். சாகபூணி என்னும் உரையாசிரியர், விஷ்ணுவென்னுஞ் சொல் நிலவுலகத்தே காணப்படுந் தீ வடிவினையும், வானின்கட் டோன்றும் பகலவனையும், இடைவெளியிற் காணும் மின்வடிவினையும் உணர்த்தா நிற்கின்றதென உரைக்கின்றனர். வேதநூல்களுக்கு `நிருக்தம் எழுதிய யாகாசாரியாரும் அப் பழைய உரைகாரர் இருவர் கருத்தினையுந் தமது நூலுள் (12, 19) நன்கெடுத்துக் காட்டி, விஷ்ணுவென்னுஞ் சொல் ஒளிவடிவினையன்றிப் பிறிதெதனையும் உணர்த்தாமை நன்கு தெளிவித்தார். இனி, வேதம், பிராமணம், உபநிடதம், இதிகாசம், புராணம் முதலான வடமொழிநூல்களை எழுத்தெண்ணி யாராய்ந்த ஆங்கிலப் பேராசிரியரான மியூர் (Dr. J. Muir) என்னுந் துரைமகனார் தாம் அந் நூல்களை ஆழ்ந்தாராய்ந்த ஆராய்ச்சியின் முடிபாக விஷ்ணுவைக் குறித்தெழுதிய கருத்துரையினை ஈண்டு மொழிபெயர்த்து வரைகின்றாம்: முற்சென்ற பக்கங்களில் எடுத்துக் காட்டப் பட்டிருக்கும் மேற்கோளுரைகளால், இருக்கு வேதத்திலேனும் பிராமணங் களிலேனும் விஷ்ணு (மாயவன்) ஒரு முழுமுதற் கடவுளாக எண்ணப்படவில்லையென்பது தெற்றென விளங்கா நிற்கின்றது. இப் பழைய நூல்களில் அவர் தேவர்களில் ஒருவராக மட்டுங் கருதப்பட்டிருக்கின்றனரே யல்லாமல் மற்றையோருக்கு மேலானவராகக் கருதப்படவே யில்லை. நிருக்தத்திலிருந்து (12, 19) யான் எடுத்துக் காட்டியிருக்கும் மேற்கோளுரைகளால்; யாகாசாரி யாராவது, அவரால் எடுத்துக் காட்டப் பட்டவரும் வேதங்களுக்கு உரைகள் வகுத்த பழைய ஆசிரியருமான சாகபூணி, அவுர்ணவாபர் என்பவர்களாவது இந்திய தேவர் குழாத்தவர்களைவிட உயர்ந்த ஒரு நிலையினை விஷ்ணுவுக்குக் கொடுக்கவில்லை யென்பது நன்கு புலனாகா நிற்கும். (Dr. J. Muir’s Original Sanscrit Textsï Vol. IV, (1873) p. 156. இங்ஙனம் வேதநூல்களை முற்றும் ஆராய்ந்து நடுநிலை வாழாது முடித்துக் கூறிய ஆங்கிலப் பேராசிரியரின் மெய்யுரையால் வேத காலத்தில் விஷ்ணு ஓர் உயர்ந்த தேவராகக் கருதப்படாமை உறுதியாகப் பெறப்படுகின்ற தன்றோ? மேலும், வேதகாலத்தை யடுத்துப் பிராமணங்கள் தோன்றிய காலத்திலும் விஷ்ணு ஓர் உயர்ந்த கடவுளாகக் கொள்ளப்படாமை காட்டுதும்: விஷ்ணு தேவர்களின் உதவியால் தான் பெற்ற வெற்றியினைப் பொதுவாகக் கருதாமற் றனக்கே யுரியதாகக் கருதி இறுமாந்து நாணேற்றிய தனது வில்லின் மேன்முனையின்மேல் தனது மோவாயினை அழுத்திக்கொண்டு நிற்ப, அதுகண்ட மற்றைத் தேவர்கள் செருக்குற்ற அவனைக் கொல்வான் வேண்டி எறும்புகளை ஏவ, அவை அவ் வில்லின் அடியிற் பூட்டப்பட்ட நாணைக் கடித்து அறுக்கவே, அவ் வில்லின் மேன்முனை மிக்க விசையுடன் நிமிர்ந்து, அவனது தலை அறுபட்டுத் தொலைவே சென்று விழச் செய்தது. என்னும் இச் செய்தி `சதபத பிராமணத்திலும் (14, 1, 1, 1) `தைத்திரீய ஆரண்யகத்திலும் (5, 1, 1-7), `பஞ்சவிம்ச பிராமணத்திலும் (7, 5, 6) நன்கெடுத்து நுவலப்படுகின்றது. விஷ்ணு ஓர் உயர்ந்த தேவனாகவாவது, முழுமுதற்கடவுளாக வாவது இருந்தால் அங்ஙனம் அவன் தலையறுபட்டு வீழ்தல் ஆகாமையாற், பழைய காலத்தில் விஷ்ணு ஒரு சிறந்த தேவனாகத் தானுங் கொள்ளப்படவில்லை யென்னும் உண்மை உள்ளங் கை நெல்லிக்கனிபோல் தெள்ளிதின் விளங்கா நிற்குமென்க. இனி, நான்முகனாகிய பிரமாவும் ஓர் உயர்ந்த கடவுள் அல்ல னென்பதூஉம் வேதநூல்களால் நன்கறியக் கிடக்கின்றது. பிரமன் தான் படைத்த தன்மகள் சரசுவதி மிக அழகியளாய் இருத்தல் கண்டு அவள்மேற் பெருங்காமங் கொண்டு அவளைப் புணர்ந்தனன். அதனைக் கண்டு அவன்மேற் சினங்கொண்ட தேவர்கள், தன்மகளைப் புணர்ந்து தகாத செய்த நான்முகனை ஒறுக்கும்படி உருத்திரப்பெருமானை வேண்ட, அவர் அவனைப் பாசுபதக் கணையாற் குத்தி ஒறுத்தனர். என்னும் இச் செய்தி `சதபத பிராமணத்திலும் (1, 7, 4, 1), `ஐதரேய பிராமணத்திலும், `மற்ச புராணத்திலுங் கூறப்பட்டிருக்கின்றது. இதனால், நான்முகன் முழுமுதற் கடவுளாகாமையும், அவன் சிவ பிரானால் ஒறுக்கப் பட்டமையும், அவன் தேவர்களில் ஒருவனே யாதலும் மிகப் பழைய வேத நூல்களிலேயே பெறப்படுதல் காண்க. இங்ஙனமாக, விஷ்ணுவும் பிரமனுந் தேவர்களுட் சிறந்த வராகப் பழைய வேதகாலத்துச் சான்றோர்களாற் கொள்ளப் படாமையின், தக்கன் வேட்ட வேள்விக் களத்தில் அவர்களிரு வரையும்பற்றிய செய்தி ஏதும் பழைய வேதநூல்களிற் குறிக்கப்பட்டில தென்றறிந்துகொள்க. பழைய வேதநூல் களிலெல்லாம் உருத்திர சிவத்தின் முழுமுதற் கடவுட் டன்மையே நன்கெடுத்துக் காட்டப்பட்டிருத்தல் மேற்போந்த வேதநூன் மேற்கோள்களால் இனிது விளங்காநிற்குமென்பது. இனி, வேதநூல்களுக்குப் பல்லாயிர ஆண்டு பிற்பட்டுச் சைவ வைணவ மதங்கள் தோன்றியகாலையில், அம் மதங்களை மேற்கொண்ட குருக்கண்மார் தத்தங் கடவுளரை உயர்த்தல் வேண்டிப் படைத்தெழுதிய சைவ வைணவ புராணங்களில் மட்டுமே தக்கன்வேட்ட வேள்வியில் விஷ்ணுவும் பிரமனும் வந்திருந்த செய்தி புதிதுபுனைந்து நுழைக்கப்பட்டிருக்கின்றது. அதுவேயுமன்றி, வேதநூல்களுள் எல்லாவற்றிற்கும் மிக முந்தியதும் மிகப் பழையதுமான இருக்குவேதம் (1, 43, 1), காதபதிம் மேதபதிம் ருத்ரம் ஜலாஷபேஷஜம் தத்ஸம்யோ: சம்நம் ஈமஹே ய: ஸுக்ர: இவசூர்யோ ஹிரண்யம் இவரோசதே ரேஷ்டோ தேவாநாம் வசு: என்னும் மந்திரத்தால், பாட்டுகளுக்குத் தலைவரும், வேள்வி களுக்குத் தலைவரும், நோய்தீர்க்கும் மருந்துகளை வைத்திருப்ப வரும் ஆன உருத்திரமூர்த்தியை, அவர்தமது இன்னருளைப் பெறும்பொருட்டு நாடுகிறோம்: பகலவனைப்போற் பேரொளி யுடன் விளங்குபவரும், பொன்னைப்போல் திகழ்பவரும், எல்லாத் தேவர்களினுஞ் சிறந்தவரும் வரம் அளிப்பவருமான அவர்பால் இதனைப் பெறவேண்டுகிறோம் என்று சிவபிரானை முழுமுதற் பெருங்கடவுளாகவைத்து வழுத்தியிருக்க, மதவெறிபிடித்த பிற்காலத்தவர்கள், கடவுளர் அல்லாத விஷ்ணு பிரமன் என்னும் இருவரோடு உருத்திரப் பெருமானையும் ஒன்றுசேர்த்து, அம் மூவரையும் மும்மூர்த்திகளாக்கிப் புராண கதைகள் பலவற்றைப் படைத்து மதச் சண்டைகளைப் பல்க வைத்துத் தீவினைக்காளா யினர். இதுகாறும் விளக்கியவாற்றால் முழுமுதற் கடவுளாகிய சிவபிரானே வேள்விகளுக்குத் தலைவராயிருந்து அருள் செய்பவ ரல்லாமல் முதற்கடவுள் அல்லாத மாயவனும் நான்முகனும் யஞ்ஞபதிகளாயிருந்து அருள்செய்யமாட்டுவார் அல்லரென நாயகரவர்கள் எடுத்துக்காட்டிய உண்மை அறிஞர்கள் உள்ளத்திற் பதிக்கற்பாலதாம் பெருமாட்சி யுடையதாதல் கண்டுகொள்க. 14. சிவநின்மாலியம் இனிச், சிவபிரானுக்குப் படைத்த பண்டங்களைத் தூயராயிருப்பவர்கள் நுகர்தலாகாதென்றும், அவற்றைத் தூயர் அல்லாதவர்களே நுகர்தற்குரியரென்றும் வசைகூறிய வைணவருரை பொருந்தாப் பொய்யுரையாதலை நாயகரவர் கள் காட்டுவான் புகுந்து, சிவபிரானுக்குப் படைத்த உணவையே அருந்தல் வேண்டும், உருத்திரனுக்கு ஏற்பித்த நீரையும் பாலையுமே பருகல் வேண்டும், சிவபெருமானுக்குச் சார்த்திய மணப்பொருள் மலர்களையே அணிந்துகொள்ளல் வேண்டும் என்று கட்டளையிட்ட ஜாபால உபநிடதத்தையும், அதனைத் தழீஇக் கூறிய `இலிங்க புராண `பிரமாண்டபுராண உரைகளையும் மேற்கோள்களாக எடுத்து விளக்கி யிருக்கின்றனர். மேலும், உருத்திரப்பெருமானுக்குப் படைத்தவைகளைத் தூயராயிருப்பவர்களே நுகரற்பாலரன்றித், தூயர் அல்லாத வர்கள் நுகரற்பாலரல்லரெனக் காமிகாகமமும் `சைவ புராணமுங் கூறும் உரைகளையும் நாயகரவர்கள் எடுத்துக் காட்டினர். இவ்வாற்றாற், சிவபிரானுக்குப் படைத்தெடுத்த `நின்மாலியம் தூயர்க்கு ஆகா தென்றுந், தூயரல்லாதார்க்கே ஆவதென்றுங் கூறிய வைணவருரை புரைபட்டுப் பொய்யா யொழிதல் காண்க. சைவசமயத்தைப் புறம்பழித்தற் பொருட்டு மாயாவாதிகளும் வைணவர்களும் பிற்காலத்தே புனைந் தெழுதிய பொய்நூற் பொருள்கொண்டு, பழைய வேதாந்த நூலாகிய ஜாபால உபநிடதம் உயர்த்துப் பேசிய சிவநின்மா லியத்தை இழித்துப் பேசுவார் தீவினையாளராவரேயன்றி, நல்வினையாளர் ஆவரல்லரென்பது கடைப்பிடிக்க. இன்னும் இதுபற்றி நாயகரவர்கள் விரித்தெழுதியிருக்கும் பகுதிகளை ஈண்டெடுத்துக் காட்டின் இது மிக விரியுமாதலின் இதனை இவ்வளவில் நிறுத்துகின்றாம். 15. கண்ணன் பிறவி இனித், திருமாலே கண்ணனாகப் பிறவியெடுத்தார் என வைணவர் சிலர் விடாப்பிடியாய்க் கூறிக், கண்ணனை வழிபட்டவர் வீடுபேற்றை எய்தினரென்றும், பித்தனான சிவனை வழிபட்டவர் வீடுபேற்றை எய்தாமல் உருத்திர பதத்தையே பெற்றனரென்றுங் கரைந்ததனை நாயகரவர்கள் மறுத்திருக்கும் பகுதியும் நினைவிற் பதிக்கற்பால தொன்றா யிருக்கின்றது. திருமாலே கண்ணனாகப் பிறந்தாரென்று பழைய நூலாகிய மாபாரதம் உரைப்பக் காணேம். மற்று, அந்நூலின் `ஆதீபர்வத் தின்கண்ணே (7306) தேவர்கள் தமக்கு அசுரர் களால் நேரும் இடுக்கண் தீர்ப்பான்வேண்டி விஷ்ணுவைக் குறையிரப்ப, அவர் தமதுடம்பின்கண் உள்ள கறுப்புமயிர் ஒன்றையும் வெள்ளைமயிரொன்றையும் பிடுங்கிப் போக்க, அவை யதுகுலத்தவராகிய தேவகி, உரோகிணி என்னும் மாதர் இருவர் கருப்பையினுள்ளும் நுழைந்து வெள்ளைமயிர் பலதேவனாகவுங், கறுப்புமயிர் கிருஷ்ணனாகவும் பிறந்தன வென்னும் வரலாறு நுவலப்பட்டிருக்கின்றது. இவ்வாறு கண்ணன் பலராமன் பிறப்புக்களைக் கூறும் மாபாரத உரைக்கிணங்கவே `விஷ்ணுபுராணமும் (5, 1, 12) அவர்தம் அவ்வரலாற்றினைக் கூறாநிற்கின்றது. இதனால், விஷ்ணுவே கண்ணனும் பலராமனுமாகப் பிறந்திலர்; அவர்தம் மயிர்கள் இரண்டே அவ்விருவருமாகப் பிறந்தனவென்பது நன்கு விளங்கி நிற்கின்றது. ஆகவே, விஷ்ணுவே கண்ணனாகப் பிறந்தன னென்னும் வைணவரின் கூற்று, பழைய நூல் வரலாற்றுக்கு முற்றும் முரணாய்ப் பொய்பட்டொழிதல் காண்க. மேலும், இந்நூல் வரலாற்றினால் விஷ்ணு வினுடம்பில் நரைமயிரும் உளதென்பது பெறப்படுதலால், அவர் நரை திரை மூப்புப் பிணி சாக்காட்டுக்கு உள்ளாகும். மக்கள் யாக்கையுடையவரே யல்லாமல், அக் குற்றங்களில்லா ஒளியுடம்பு வாய்ந்த முழுமுதற் கடவுளாகரென்பது தானே போதரும்; மற்றுச் சிவபெருமானோ நரைதிரை முதலான குற்றங்கள் சிறிதும் அணுகப்பெறா ஒளியுருவினரென்று மிகப்பழைய இருக்குவேதம் முதற் றொடர்பாக வந்த எல்லா நூல்களும் ஒரு முகமாய் நின்று ஒத்துரைப்பக் காண்டுமன்றி, அவர் அக்குற்றங்களுடையராய்ப் பிறந்தார்ல இந்தாரென்று யாண்டும் உரைப்பக்காண்கிலேம். அங்ஙனமாக மக்கள் யாக்கையினரான விஷ்ணுவையும் அவரது கறுப்பு மயிரின் பிறவியான கண்ணனையும் நிகழும் முழுமுதற் கடவுளான சிவபிரான் தொழுதார் உருத்திரவத்தினை யெதுவரெனயும் புரட்டிப்பேசிப், பொய்யை மெய்யாகவும், மெய்யைப் பொய்யாகவும் திரித்துவிட முயன்ற வைணவரின் முயற்சி உண்மை யாராய்ச்சிக்கு முன் பஞ்சாய்ப் பறந்தொழிதல் காண்க. சோமசுந்தர நாயகர் வரலாறு - முற்றும் - PREFACE The religious and philosophical matter that appears in the following pages form the substance of my presidential speech delivered on the 15th October, 1927, at the 42nd annual meetingof the Saiva Siddhanta Sabha at Trichi Rock Fort. What was briefly treated in the course of the delivery is now expanded into its full final form; and to a few Puranic legends then quoted to illustrate the degenerated notions about God and religion, some more are now added to make the treatment of the subject complete within its bounds. The object of this little book is to disclose the vast difference that lies between the ancient form of Saiva religion and its modern form. In very ancient times the theoretical side of Saivism had been purely philosophical. while its practical side/ which consisted in bringing into an intimate relation of love the human and the Divine selves, tended to a worship of luminous bodies such as the Sun and the Moon and also fire which constitutes the essence of all bright objects. God was conceived to be a subtle spiritual light which manifests itself in the chief physical luminary the Sun, so that all rites, religious observances, and original myths in Saivism clung around this resplendent body. For us who have come to think of the appearances of the sun and the moon as so many natural occurrences that uniformly take place in the realm of dead matter, they have lost their high purpose and significance. But to our ancestors who lived in close relationship with Nature, they had been a great wonder, and to their then more clear, vivid, quick and penetrating intuitive sense they revealed the gracious presence of a loving heavenly Father. What they preceived by means of their intuiton, and what they loved so ardently in the manifestation of light, had not been a mere figment of their imagination, but a reality informed with infinite love and intelligence and capable of readily responding to the prayers of a fervent heart. It is this love, this intelligence inthe Supreme Being which is otherwise transcendental and incomprehensible to the finite understanding of the human selves, that impels it to manifest itself to those who are pious and devoted. Fortunately for us we are in possession of rare internalevidences in the heart-melting hymns sung by St. Manickavachakar and other Saivite Saints in glory of Lord Siva, sufficient to convince us of the reality of God’s sudden manifestation to them in tangible form. From the reference made by them in several of their hymns, we are in a position to study the essential nature of the personality of God and how it blesses the few fit, pious, sincere souls. Except the inspired utterances of such exceptionally pure and favoured saints of Saivism, others can give us no clue to a clear, and definite conception of God’s personality. So far as my knowledge of other religious saints is concerned, I dare say that I could get not even a single glimpse from their hymns and sayings (whose genuineness though I do not call in question as modern critics and commentators do) with reference to the vision of God they had, if they had any, and the nature and description of the personality they had thus seen. But in the case of the Saiva Saints as St. Manickavachakar and St. Thirujnanas ambandha, we are extremely glad to say that we are left in no uncertainity either with regard to their authorship of their sacred hymns or with regard to the vision of God they had and the definitely clear description they give of the Hevenly Father and Mother that had come to them. When we enter the region of the sacred Saiva literature, we find ourselves to our great wonder and pleasure that we are on the safe, solid ground of genuine historical facts. From our most ancient sage Tholkappiar whose age goes back to 3500 B.C. to St, Thiruvalluvar and the founders and teachers of Saiva religion, all have left behind them their valuable literary and religious works which embody their thoughts on arts, ethics, psychology, philosophy and religion. Although the Aryan, Buddhist and Jain immigrants came and settled in the Tamil country as early as the 1st century of the Christian era, their influence could not touch even the fringe of the Tamilian mind, So strongly did the mind of the cultured Tamil people cling to the realities of life and existence, that the Aryan rites and myths, and the Buddhist and Jain nihilism could find no entrance into it, great as had been their efforts to achieve it. But the modern Mayavada Vedanta and Vaishnavism which came to spread here after the 8th century A.D., achieved what their predecessors could not achieve, simply by fabricating fictitious, obscene, and licentious Puranic stories and thus catching the fancy of the Tamil people. This influx of the Aryan falsehood into Tamil led to the formation of a class of literature which is notorious for the most degraded type of Puranic religion Saiva, Sakta and Vaishnava. To the best of my ability I have endeavoured in the following treatise to sift this mongrel mixture and disentangle the golden truths of Saiva religion from the empty falsehoods of other novel religions. The task is no easier one and it cannot further be appreciated even by the Saivites whose mind is dyed deep in the Aryan myths. Still I have candidly executed it in the interest of the ancient, and genuine. Tamilian thought, and am emboldened in its execution by the prospect of a rising generation devoted solely to the cause of truth. May the glory of Lord Siva the almighty God of the universe shine for ever! The Sacred Order of Love VEDACHALAM. Pallavaram, 12th May, 1929. பொருடளக்கம் பக்கம் 1. பிறவி எடுத்தன் நோக்கம் 201 2. கடவுள் எல்லாவற்றையும் கடந்து நிற்கும் நிலை 203 3. மாணிக்கவாசகர் அருளிச்செய்த `கேட்டாரும் அறியாதான் என்னும் செய்யுளின் உரை 211 4. பௌத்த சமண மதங்களின் ஒழுக்க முறைகள் 238 5. பௌத்த சமண ஒழுக்க முறைகள் உலகத்தவரைத் திருத்தமாட்டாமை 240 6. சைவசமயம் நல்லொழுக்கத்துக்குக் கடவுள் உணர்ச்சி முதன்மை என்கின்றது 243 7. நல்லொழுக்கம் இன்னது என்னும் ஆராய்ச்சி 244 8. நல்லொழுக்கத்துக்குக் கடவுள் உணர்ச்சி இன்றியமையாமையும் அதற்குச் சில எடுத்துக்காட்டுகளும் 249 9. கடவுளிடத்து அன்பும் அச்சமும் உடையோர் நல்லராய் ஒழுகுதல் 254 10. கடவுள் நிலைக்கு மாறான புராணங்களும் மாறாகாத சில பழம்புராணங்களும் 257 11. கடவுளைப்பற்றி அறிவுடையோர் கதைகள் அமைத்த கருத்து 260 12. புராணகதைகள் முற்றும் பொய்யென்பாருரை பொருந்தாமை 262 13. தக்கன்வேள்வி அழித்த கதையின் உண்மையும் பொய்ம்மையும் 265 14. விநாயகக்கடவுளைப் பற்றிய கதைகளின் பொய்ம்மை 271 15. கந்தன் பிறப்பினைக் கூறும் கதைகளின் ஆராய்ச்சி 279 16. முருகப்பிரான் திருவுருவ வழிபாட்டின் உண்மை 293 17. திருமாலின் திருவுருவ உண்மை 299 18. சிவபெருமுன் திருவுருவ வழிபாட்டின் உண்மை 300 19. விநாயகர் வழிபாட்டின் உண்மை 301 20. முருகப்பிரானுக்கு ஆறுமுகமும் கோழிக் கொடியும் கூறிய கருத்து 302 21. முடிவுரை 304 1. பிறவி எடுத்ததன் நோக்கம் அன்பர்களே! இச்சபையார் கேட்டுக் கொண்டதற் கிணங்கிக் கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா என்பதனைப் பொருளாகக் கொண்டு ஒரு விரிவுரை நிகழ்த்தலாமென்று துணிந்தேன். இக்காலநிலைக்கு ஏற்றபடி, எதனைப்பற்றிப் பேச லாம் என்று ஆராய்ந்து பார்க்கையில், மெய்யல்லாத கோட்பாடு களைச் சைவசமயமாகப் பிறழ உணர்ந்து அவற்றையே சைவ சமயமென நம்மனோர் மயங்கிக் கிடத்தலானும், பொய்யை மெய்யாக மயங்கிக் கிடக்கும் வரையில் அம்மயக்க உணர்ச்சிக்கு ஏதுவான அறியாமை நம்மை விட்டு நீங்காமையின் நாம் எல்லாம்வல்ல சிவத்தின் நிலையை உணர்ந்து இப் பிறவித் துன்பத்தை நீக்குத லாகாமையானும், இந்தப் பொருளையே பேசுவது இன்றியமையாததாக எனக்குத் தோன்றியது. ஏனென்றாற், பிறவி நீங்காதவரையில், அப்பிறவியை நீக்கும் முயற்சி உண்மையில் நடவாத வரையில், அம்முயற்சி நடை பெறுதற்கு மெய்யுணர்ச்சி பெறாதவரையில் நாம் இப்பிறவி எடுத்ததன் நோக்கம் நிறைவேறாமலே போய்விடும். நமக்கு அரிதிற் கிடைத்திருக்கும் மக்கட் பிறவியின் நோக்கம் நிறைவேறாதாயின் நாம் பிறவிப்பயனை அடுத்தடுத்து இழந்து பிறவித் துன்பத்திற் கிடந்து சுழலுவதோடு, நமக்குப் பிறவிகளை ஓயாது கொடுத் தற்கு ஏதுவாயுள்ள பலர்க்கும் நாம் மீளாத துன்பத் தையுங் கொடுத்தவராவோம். எம்மை ஈன்றெடுக்குந் தாய்மார் எத்தனைமுறை எம்மைத் தம் வயிற்றகத்தே சுமந்து சுமந்து துன்புறு கின்றனர்! எம்மைப் பெற்றெடுத்து வளர்ப்பதற்கு எத்தனைமுறை அலக்கணுறு கின்றனர்! இது மட்டுமோ, எம்மைப் படைக்கும் இறைவன் எத்தனைமுறை எம்மைப் படைத்துப் படைத்துக் கைசலிக்கின்றான்! இது பற்றியன்றோ, பட்டினத்தடிகளும், மாதா உடல்சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன் வேதாவுங் கைசலித்து விட்டானே--நாதா அருப்பையூர் வாழ்சிவனே இன்னுமோர் அன்னைக் கருப்பையூர் வாராமைக் கா என்று அருளிச் செய்தனர்கள். இவ்வுலகத்தில் நாம் வந்து பிறந்ததெல்லாம் மெய்யுணர்வு பெறுதற்கேயாம். இவ் உலக வாழ்க்கையானது நமக்கு ஒரு பள்ளிக்கூடாமா யிருக்கின்றது. பள்ளிக்கூடத்திற் கல்விபயிலும் மாணவர்கள் ஆசிரியன் உதவி கொண்டு மெய்ந்நூல்கள் பலவற்றைப் பயின்றும், தம்மொடு பயிலும் மாணாக்கர்களுடன் கல்வித்துறைகளை உசாவி ஐயந் தீரப்பெற்றும் அறிவு விளங்கி வருதல் போல, நாமும் இவ் உலக வாழ்க்கைத் துறைகள் ஒவ்வொன்றிலும் பேரறிஞர் பற்பலரின் உதவியால் உண்மைகள் பற்பலவற்றை உணர்ந்தும், நம்மோ டொத்த மக்கள் ஓவாது செய்யும் பலதிற முயற்சிகளாற் பல திற வாழ்க்கை நலங்களைப் பெற்றும் நாளுக்கு நாள் அறிவிலும் இன்பத்திலும் மேன்மேற் சிறந்து வருகின்றனமல்லமோ? இவ்வாற்றால் நம்மைப் பழமை தொட்டுப் பற்றிக் கொண்டு வரும் அறியாமையும் அதன் வாயிலாக வருந் துன்பமும் படிப்படியே நீங்கப் பெற்று வருகின்றோம். இங்ஙனமாக அறியாமை நீக்கமும் அறிவுப்பேறும் அடைதலே இப்பிறவி எடுத்ததன் நோக்கமாய்க் காணப்படுதலின், அவ் அறியாமையைக் களைந்து அறிவு பெறுதற்குரிய உண்மைக் கோட்பாடுகளையே நாம் ஆராய்ந்து கைக்கொள்ளல் வேண்டும் என்பது பற்றிக் கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா என்பதனை நுங்கள் முன்னிலையிற் பேசத் துணிந்தேன். 2. கடவுள் எல்லாவற்றையும் கடந்து நிற்கும் நிலை இனி, எடுத்துக் கொண்ட இப்பொருளைக் கடவுள் நிலை யாதெனவும், அந்நிலைக்கு மாறான கொள்கைகள் யாவை யெனவும், அம்மாறான கொள்கைகள் சைவ மாகாதவாறு யாங்ஙனமெனவும் மூன்றுவகையால் ஆராய்ந்து பார்த்தல் வேண்டும். இங்ஙனம் ஆராயும் இவ் ஆராய்ச்சி மிக உயர்ந்த உண்மைப் பொருள்களைத் தெளிவதில் நமது கருத்தை ஈடுபடுத்தி நிற்றலால், இப்போது நாம் தவ முயற்சியைச் செய்யப் போகும் நிலையில் இருக்கின்றோம். ஏனென்றால் தவம் என்பது உயர்த பொருளில் நமது கருத்தை ஒருமுகப்படுத்தி உறைத்து நிற்றலேயாதலால், இப்போது நாம் தவ முயற்சியைத் துவங்கி நிற்கின்றோம் என்பதனை நினைந்து, ஒருவரோடொருவர் பேசாமலும் மற்ற வீணெண்ணங்களை எண்ணாமலும் நாம் பேசும் பொருளிலேயே கருத்தை நிறுத்தி அமைதியாய் இருத்தல் வேண்டும். இனி, முதலாவதாகக் கடவுள் நிலையை ஆராய்ந்து பார்ப்போம். கடவுள் என்னுஞ் சொல்லைக் கேட்ட அளவானே அஃது எப்பொருளையுங் கடந்து நிற்பது என்னும் பொருள் புலனாகா நிற்கின்றது. இனிக் கடவுள் எப்பொருளைக் கடந்து நிற்கின்றார் என்று ஆராய்ந்து பார்க்குமிடத்து இவ் உலகத் தையும் இவ் உலகத்தில் வாழும் உயிர்களையும் கடந்து நிற்கின் றார் என்றே நாம் சொல்லுதல் வேண்டும். நம்மறிவால் முதலில் அறியப்படுவது இவ்உலகமேயன்றிப் பிறிதில்லை. இவ் உலகந் தான் எங்ஙனம் ஆக்கப்பட்டிருக்கின்றது என்று மேலும் ஆராய்ந்து பார்க்குமிடத்து மண்ணுந் தண்ணீருந் தீயுங் காற்றும் வானு மென்னும் ஐம்பெரு முதற்பொருள்களால் ஆக்கப்பட்டி ருத்தல் விளங்கும். இவ் உண்மையை இற்றைக்கு ஐயாயிரத்து ஐந்நூறு ஆண்டுகட்கு முன்னமே இருந்த நம் பழந் தமிழாசிரி யரான தொல்காப்பியனார், நிலந் தீ நீர் வளி விசும்போடு ஐந்துங் கலந்த மயக்கம் உலகமாதலின். என்றும், இவர் காலத்துக்கு ஐந்நூறு ஆண்டு பிற்பட்டு வந்த தலைச் சங்கத்து நல்லிசைப் புலவரான முரஞ்சியூர் முடிநாகராயர், (புற - நா - 2) மண்திணிந்த நிலனும் நிலனேந்திய விசும்பும் விசும்புதைவரு வளியும் வளித்தலைஇய தீயுந் தீமுரணிய நீருமென்றாங்கு ஐம்பெரும்பூதத்து இயற்கைபோல. என்று கூறுதல் கொண்டு உணர்ந்து கொள்ளல் வேண்டும். இவ்வாறு ஐயாயிர ஆறாயிர ஆண்டுகட்கு முன்னமே இவ் உலகத்தினியல்பினை நன்காராய்ந்து ஐந்து முதற் பொருள் களிலடக்கிய நம் பழந்தமிழாசிரியரின் பேரறிவுப் பெற்றியை என்னென்று கூறுவேன்! எங்ஙனம் புகழ்வேன்! அன்பர்களே! இனி, இங்ஙனம் பகுக்கப்பட்ட இப்பொருள்கள் ஐந்தையும் நாம் எங்ஙனம் அறிகின்றோம் என்றாற், செவியின் உதவி கொண்டு ஓசையை உணர்கின்றோம். இவ் ஓசையோ வானின் தன்மை. ஒசையை உணரவே அவ் ஓசைக்கு நிலைக் களனாய்க் கட்புலனாகாத வானத்தையும் அறிகின்றோம். கண்ணினுதவி கொண்டு தீயின் தன்மையான ஒளியை உணர்கின்றோம். இத் தீயில் ஒளியேயன்றிச் சூடு முண்டாத லின் அச் சூட்டினை உடம்பி னெல்லா வுறுப்புக்களாலும் உணர்கின்றோம். இனிக் காற்றின் தன்மையினையும் அங்ஙனமே உடம்பின் எல்லா வுறுப்புக்களாலும் உணர் கின்றோம். வாயின் உதவி கொண்டு நீரின் சுவையினையும் மூக்கின் உதவிகொண்டு மண்ணின் நாற்றத்தினையும் உணர்கின்றோம். இவ்வாறாக வான் வளி தீ நீர் மண் என்னும் ஐம்பெரும் பொருள்களையும் நாம் அறிந்து கொள்ளுதற்கு உதவியாக மெய் வாய் கண் மூக்குச் செவி யென்னும் ஐம்பொறிகளையும், அவ் ஐம்பொறிகளமைந்த இவ் வுடம்பினையும் எல்லாம்வல்ல இறைவன் நமக்குப் படைத்துக் கொடுத்திருக்கின்றார். இவ் ஐம்பொறிகள் இல்லாவிட்டாலும் அல்லது இவை சிறிது பழுதுபட்டாலும் நாம் உலகத்துப் பொருள்களை அறிதலும் அவற்றாற் பயன் கொள்ளுதலுஞ் சிறிதும் இயலா. செவி இல்லையாயின் அல்லது செவியிருந்தும் அது பழுதுபட்டுப் போனதாயின் நாம் ஓசையை உணர்வ தெங்கே! கண் இல்லையாயின் அல்லது கண்ணிருந்தும் அது பழுதுபட்டுப் போகுமாயின் ஒளியினையும் அவ் ஒளியினால் விளக்கப்படும் பலதிறப் பொருள்வடிவங் களையும் நாம் காண்ப தெங்கே! இங்ஙனமே மற்றைப் பொறிகள் இல்லையாயின் அல்லது அவை யிருந்தும் பழுதுபட்டன வாயின் அப்பொறி களால் அறியப்படும் பொருள்களை நாம் அறிந்து கொள்ளுதல் இயலாதன்றோ? அன்பர்களே! இங்ஙனம் பொறிகளின் உதவியின்றி அறிய மாட்டாத நிலையி லிருக்கும் ஏழை மக்க ளாகிய நாம் சிற்றறிவுஞ் சிறுதொழிலுமுடைய சிற்றுயிர்களே யல்லாமற் கடவுளாதல் யாங்ஙனம்? சிலர் உயிர்களே கடவு ளென்று வாய்கூசாமற் சொல்லுகின்றார்கள். உயிர்களோ கடவுளாயின் ஐம்பொறி களின் உதவியின்றியே அவ் வுயிர்கள் ஐம்பொருள்களையும் உணர்தல் வேண்டுமன்றோ? ஆதலால் உயிர்களே கடவுள் என்னும் கொள்கை பிழைபாடுடைத்தாகும். இனி, இங்ஙனம் ஐம்பொறிகளால் ஐம்பொருள்களை அறியுமிடத்து அங்ஙனம் அறியும் அறிவு அவற்றை அறிந்த அளவிலே அற்றுப் போகுமானால் நமக்கு அறிவு விளக்க முண்டாகாது; அறியாமை நீங்காது; விலங்குகளினும் நாம் கீழ்ப்பட்டவர்களாய் விடுவோம். நாம் பொருள்களை அறிந்த அறிவு அவ்வளவிலே அற்றுப் போகாமல் நம் நினைவிலே பதிந்து நின்று அப்பொருள்களின் தன்மைகளை நம் நினையில் தொடர்பாக வைத்து அறிவித்து வருகின்றது. நேற்று நாம் கேட்ட சொற்களையும் நேற்று நாம் கண்ட காட்சிகளையும் உண்ட உணவுகளையும் நேற்றளவிலேயே மறந்து, இன்று கேட்குஞ் சொற்களையுங் காணுங் காட்சிகளையும் உண்ணும் உணவுகளையும் புதிது புதிதாக அறிந்து அறிந்த அந் நொடியி லேயே அவை தம்மை மறந்து விடுவோமாயின் நமது நிலை எவ்வளவு உதவியற்றதாய், எவ்வளவு இரங்கத்தக்கதாய் இருக்கும்! பார்மின்கள் அன்பர்களே! இங்ஙனம் மறவாதபடி, எல்லாம் வல்ல ஆண்டவன் நாம் அறிந்தவைகளை மறவாத நினைவினை எவ்வளவு இரக்கத்தோடு நமக்கு அளித்திருக்கின் றான்! நாம் பொறிகளால் அறிந்த பொருள்கள் அழிந்து மறைந் தாலும், அப் பொருள்களைப் பற்றிய நினைவுகள் எம் உள்ளத் தில் எவ்வளவு வேரூன்றி நிற்கின்றன! யாம் எங் கண்ணெதிரே காணும் இம் மண்டபம் ஒரு காலத்தில் இல்லையாய் மறைந் தாலும் , இதனைப் பற்றிய நினைவு எம் அகக் கண்ணெதிரே இதனை எமக்குத் தெளிவுறக் காட்டுமன்றோ? அல்லது இம் மண்டபத்தை விட்டு வேறோரிடத்திற் சென்ற பின்னும் எமக்கு இம் மண்டபத்தைப் பற்றிய நினைவு வருமன்றோ? இங்ஙனமே இம்மக்கள் வாழ்க்கையில் இதுவரையிற் கழிந்துபோன முன்னாட்களிலே நாம் அறிந்தறிந்து வந்த பொருள்களின் நினைவுகளெல்லாம் நம் உள்ளத்தில் அழுத்தமாய்ப் பதிந்து நாமொன்றை நினைப்பதற்கு அறிவை ஒருமுகப் படுத்திக் கண்மூடியிருக்குங்கால், அப் பழைய நினைவுகள் ஒன்றன்பின் ஒன்றாய் ஒரு தொடர்பாயுந், தொடர்பின்றிக் கலைந்தும் பல திறப்பட்டு மாறி மாறி வரப்பெறுகின்றன மல்லமோ? இதனாலன்றோ, உண்பது நாழி உடுப்பது நான்குமுழம் எண்பது கோடிநினைந் தெண்ணுவன என்று ஔவையாரும், கண்டன எலாம் அல்ல என்றுகண் டனைசெய்து கருவிகர ணங்க ளோயக் கண்மூடி ஒருகண மிருக்கவென் றாற்பாழ்த்த கர்மங்கள் போராடுதே என்று தாயுமான அடிகளும் அருளிச்செய்வாராயினர். என்று இத்துணை ஆராய்ந்தவளவில் நம்மால் அறியப் படும் பொருள்களென்பன மண் புனல் அனல் கால் வான் என்னும் உலகத்துப் பொருள்களைந்தும், பொறிகளின் வாயிலாக நம் உள்ளத்தில் வந்து பதியும் இவ் ஐம்பொருள் களைப் பற்றிய நினைவுகளும் என்னும் இரண்டுமே யல்லாமல் வேறில்லை என்பது இனிது விளங்காநிற்கும். ஆகவே, கடவுள் எல்லாப் பொருள்களையுங் கடந்து நிற்பவரென்றால், நம் ஐம்பொறிகளுக்கு விளங்கும் ஐம்பெரும் பொருள்களையும் அப் பொருள்களைப் பற்றி யெழும் நினைவுகளையுங் கடந்து நிற்பவரென்றே முடிவு செய்யப்படும். ஏனென்றாற் கடவுள் நாமறிந்த மண்ணில் ஒருவரா? அல்லது நீரில் ஒருவரா? தீயில் ஒருவரா? காற்றில் ஒருவரா? அல்லது இடைவெளியா யிருக்கின் றனரா? என்று கேட்போமாயின் எவரும் இப் பொருள்களைக் கடவுளென்று சொல்ல ஒருப்படமாட்டார். அல்லது இப் பொருள்களைப் பற்றி நம் உள்ளத்தி லெழும் எத்தனையோ கோடி நினைவுகளில் வந்த நினைவு கடவுளாகும் என்று கேட்டால், எந்த நினைவினையுங் கடவுளென்று சொல்ல எவரும் ஒருப்படமாட்டார். எனவே, உலகத்துப் பொருள்கள் எதனுள் ளுங் கடவுள் அடங்காமல், அவைகளையெல்லாம் அவர் கடந்து நிற்பவர் என்பதே எல்லா மக்கட்கும் உடம்பாடான பொது உண்மையாகும். நம் சமயாசிரியரான திருநாவுக்கரசு நாயனாரும், விரிகதிர் ஞாயிறல்லர் மதியல்லர் வேத விதியல்லர் விண்ணு நிலனுந் திரிதரு வாயுவல்லர் செறிதீயு மல்லர் தெளிநீரு மல்லர் என்று இவ்வுண்மையை இனிது விளக்கி அருளிச் செய்தி ருக்கின்றார்கள். இனி, இவைகளையெல்லாம் இறைவன் கடந்து நிற்பவன் என்றால், எந்த வகையினால் இவைகளைக் கடந்து நிற்பவன் என்பது ஆராய்ந்து தெளிதல் வேண்டும். கடத்தலென்பதை மூன்று வகையாகப் பாகுபடுத்தல் வேண்டும். அவை: இடத்தைக் கடப்பதுங், காலத்தைக் கடப்பதும், பொருட் டன்மைகளைக் கடப்பதும் என்பனவாம். அவற்றுள் இடத்தைக் கடப்பதாவது பொருள்களெல்லாமிருக்கும் எல்லா இடத்தையுங் கடந்து நிற்பதேயாகும். நம்மா லறியப்பட்ட எந்தப் பொருள்களின் எல்லையில் அல்லது எந்த இடத்தின் எல்லையிற் கடவுளை அடக்கலாம் என்று எவரைக் கேட்பினுங் கடவுள் எந்தப் பொருளின் எல்லையிலும் அடங்கார், எந்த இடத்தின் எல்லையிலும் அடங்கார் என்றே விடை கூறா நிற்பர். ஆதலாற் கடவுள் இடத்தைக் கடந்து நிற்பவர் என்பது எல்லா மக்கட்கும் ஒப்ப முடிந்ததேயாகும். இனிக், காலத்தைக் கடந்தவர் என்பது முக்காலத்தையுங் கடந்து நிற்பவர் என்பதேயாம். அவர் எந்தக் காலத்தில் தோன்றினவர், எந்தக்காலத்தில் வளர்கின்றவர், எந்தக் காலத்தில் முடிவடைபவர் என்று எவரைக் கேட்பினும், அவர் ஒருகாலத்திற் றோன்றியவருமல்லர், மற்றொருகாலத்தில் வளர்பவருமல்லர், பிறிதொருகாலத்தில் முடிபவருமல்லர் என்றே எல்லாரும் விடை கூறாநிற்பர். அது பற்றியே, எல்லார் பிறப்பும் இறப்பும்இயற் பாவலர்தம் சொல்லாற் றெளிந்தேம்நஞ் சோணேசர்-இல்லிற் பிறந்தகதை யுங்கேளேம் பேருலகில் வாழ்ந்துண்டு இறந்தகதை யுங்கேட்டி லேம். என்று ஆன்றோர் திருமொழியும் எழுந்தது. இறைவன் எல்லாவற்றிற்கும் முற்பட்ட காலந்தொட்டே இருப்பவன் என்று கூறுதலுங்கூட அவனது இறைமைத் தன்மைக்கு இழுக்காம் என்பது பற்றியே மாணிக்கவாசகப் பெருமான், முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே என்றும், மூப்பான் இளையவன் முன்னவன் பின்னவன் முப்புரங்கள் வீப்பான் என்றும் அருளிச் செய்வாராயினர். இனிப் பொருள்களின் தன்மையைக் கடந்தவரென்பது, அவ்வப் பொருள்களின் இயல்புகளிலுந் தம் மியல்பு அடங்காமல் அவ்வெல்லாவற்றின் இயல்புகளையும் முற்றுங் கடந்து நிற்பவர் என்பதேயாம். இனிப் பொருள்களின் இயல்பு களாவன எவையென்று ஆராய்வோமாயின், அவை வண்ணம் வடிவு அளவு சுவை யென்னும் நால்வகையில் அடங்கும். வண்ணமாவது சிவப்பு, நீலம், மஞ்சள், கறுப்பு, ஊதா, பச்சை, வெள்ளை என்னும் எழுவகை நிறங்களேயாகும். வடிவாவது வட்டம், நாற்கோணம், முக்கோணம் முதலியனவாகும். அளவாவது எண்ணலளவை, எடுத்தலளவை, முகத்தலளவை, நீட்டலளவையென நான்காம். சுவையானது தித்திப்பு, புளிப்பு, கார்ப்பு, கைப்பு, உவர்ப்பு, துவர்ப்பு என அறுவகைச் சுவை களேயாகும். இங்ஙனம் வகுத்துக் கொண்ட இயல்புகளுள் கடவுள் எந்த நிறத்தினர், எந்த வடிவினர், எந்த அளவினர், எந்த சுவையினர் என்று எவரைக் கேட்பினும், அவர் இன்ன நிறத்தின ராயிருப்பர், இன்ன வடிவினராயிருப்பர், இன்ன அளவினரா யிருப்பர், இன்ன சுவையினராயிருப்பர் என உறுதிப்படுத்திச் சொல்ல மாட்டுவாரல்லர். ஆகவே கடவுள் பொருள்களின் எல்லையினையும் இடத்தினெல்லையினையுங் காலத்தினெல் லையினையுங் கடந்து நிற்பவராதலோடு, அவ்வப் பொருள் களின் இயல்புகளிலேயும் அடங்காதவராய் அவற்றை யுங் கடந்து நிற்றல் எல்லார்க்கும் ஒத்த கருத்தேயாதல் இனிது விளங்குகின்றதன்றோ? இங்ஙனமாக எல்லாவற்றையும் எல்லா வற்றினியல்புகளையுங் கடவுள் கடந்து நிற்பவராய் உள்ளவர் என்பது கடவுள் என்னுஞ் சொற்பொருளால் நன்கு தெளியக் கிடக்கின்றமையின், இவ் வுண்மையைப் பல்லாயிர ஆண்டு களுக்கு முன்னமே ஆராய்ந்துணர்ந்த நம் பழந் தமிழாசிரியர்கள், நம்மா லறியப்பட்ட பொருள்வகைகளிலும் உயிர்வகைகளிலும் அவ் உயிர்களின் தோற்ற ஒடுக்க வகை களிலும் ஒன்றாக அக் கடவுளைக் கீழ்க் கொணர்ந்து வைத்துச் சொல்லுதற்கு ஒரு சிறிதும் மன மிசையாதவர்களாய் அவனைப் பிறவான் இறவான் என்றே யாண்டும் வலியுறுத்திச் சொல்வா ராயினர். ஆசிரியர் தொல்காப்பியனார், பிறப்பு இறப்புக்களுக்கு வித்தாகிய வினையினின்றும் இறைவன் நீங்கி நிற்பவன் என்பதை வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் என்றும், பிறப்புக்கு முதல்வரான தாயுந் தந்தையும் இல்லாதவன் இறைவன் என்பதை மாணிக்கவாசகப் பெருமான், கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை தாயுமிலி தந்தையிலி தான்தனியன் காணேடி என்றுந், திருஞானசம்பந்தப் பெருமான், வெந்த சாம்பல் விரையெனப் பூசியே தந்தை யாரொடு தாயிலர் தம்மையே சிந்தி யாஎழு வார்வினை தீர்ப்பரால் எந்தை யார்அவர் எவ்வகை யார்கொலோ, என்றுஞ், சமண்சமய முனிவரான இளங்கோவடிகள், பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் என்றும் அருளிச் செய்வாராயினர். பிற்காலத்து வைணவ சமயத்தில் உறைத்துநின்ற வில்லிபுத்தூராழ்வாருங் கூட வேட்டு வன்வடியில் வந்து அருச்சுனனொடு போர்புரிந்து அவன் கைவில்லால் அடியுண்ட இறைவனைப் பற்றி மொழியும் போது, வேதமடி யுண்டன விரிந்தபல ஆகம விதங்களடி யுண்டன ஓரைம் பூதமடி யுண்டனவி நாழிகைமு தற்புகல்செய் பொழுதொடு சலிப்பில் பொருளின் பேதமடி யுண்டன பிறப்பிலி இறப்பிலி பிறங்கல் அரசன்றன் மகளார் நாதம்அம லன்சமர வேடவடி வங்கொடு நரன்கையடி யுண்ட பொழுதே. என்று இவ் உண்மையை ஒளியாமல் நன்கெடுத்துக் கூறினார். 3. மாணிக்கவாசகர் அருளிச்செய்த கேட்டாரும் அறியாதான் என்னுஞ் செய்யுளின் உரை இவ்வாறெல்லாம் இவ் உலகத்திலுள்ள எல்லா மக்கட்கும் இசைந்ததாகிய கடவுளின் பொது இலக்கணத்தையும், அங்ஙனம் எவர்க்கும் எட்டாதவராய் எல்லாம்வல்ல இறைவன் இருப்பினும் எம்போன்ற சிற்றறிவினார்க்குக் காணவுங் கருதவும் படாத அக் கடந்த நிலையிலேயே அவன் நிற்பனாயின் அவனது திருவரு ளுதவியின்றி இப்பிறவித் துன்பத்தை, இப்பிறவி வித்துக்கு மூலமான அறியாமையை யாமே நீக்கிக் கொள்ள மாட்டாமையால் அவன் தாயினும் மிக்க இரக்கமும் அன்பும் வைத்து எம்மனோர்க்கு எளிவந்து தோன்றி அருள் செய்யும் சிறப்பிலக்கணத்தையும் ஒருங்கு விளக்கி நம் சைவ சமய முதலாசிரியரான மாணிக்கவாசகப் பெருமான் அருளிச் செய்திருக்கும் ஒரு திருப்பாட்டினை ஈண்டு ஆராய்ந்து பார்ப்போமாக. அத் திருப்பாட்டு வருமாறு: கேட்டாரு மறியாதான் கேடொன் றில்லான் கிளையிலான் கேளாதே எல்லாங் கேட்டான் நாட்டார்கள் விழித்திருக்க ஞாலத் துள்ளே நாயினுக்குத் தவிசிட்டு நாயி னேற்கே காட்டா தனவெல்லாங் காட்டிப் பின்னுங் கேளா தனவெலாங் கேட்பித் தென்னை மீட்டேயும் பிறவாமற் காத்தாட் கொண்டான் எம்பெருமான் செய்திட்ட விச்சை தானே. அருமருந்தன்ன இச் செய்யுளின்கண் நாமெடுத்துக் கொண்ட இவ்விரிவுரைப் பொருளின் முதற்கண்ணதாகிய கடவுள் நிலையை மாணிக்கவாசகப் பெருமான் நன்கு விரித்து விளக்கியிருக்கின்றா ராதலின், இச்செய்யுட் சொற்பொருளை ஒவ்வொன்றாய் ஆராய்ந்து பார்ப்பது நமக்குப் பெரிதும் பயன்படுமெனக் கருதி அவற்றை ஆராயப் புகுகின்றாம். முதலிற் கேட்டாரு மறியாதான் என்னுஞ் சொற்றொடர் அறிவிற் சிறந்த எத்தகையினரை வினவியும் இறைவன் அறியப்படாதவன் என்பதனை விளக்குகின்றது. இறைவனிருக் கும் ஊரேது, அவன் பேரேது, அவனைப் பெற்றார் யார்? அப் பெற்றோரின் பெயர் என்னை? என்று நாம் எவரை வினாவினாலும் அவரெல்லாம் அவற்றிற்கு விடை சொல்ல மாட்டாமையின், வினாவியவர் அங்ஙன மெல்லாம் வினாவியும் அவனை அறிந்து கொள்ளாத நிலையிலேயே இருக்கின்றனர். இன்னுந் தவமுயற்சியிற் றேர்ந்த முனிவர்களுங் கூட இறைவன் இயல்புகளைக் கேட்டறியப் புகுந்து தமக்குமேல் நிற்கும் முனிவர்களைக் கேட்க, அவர்களும் அவற்றைத் தமக்குத் தெரியாது என்று தமக்கு மேற்பட்ட முனிவர்களைக் கேட்க, அவருந் தமக்குத் தெரியாது என்று தமக்கு மேற்பட்டாரைக் காட்டிக் கைவிட, இங்ஙனமே எவர் எவரைக் கேட்பினும் அவரெல்லாம் அவன்றன் முழுமுதற்றன்மைகளை எடுத்துக் காட்ட முடியாமல் வருந்தி நிற்றலின் கேட்டாரு மறியாதான் என்று முதற்கிளந் தோதினார். இனிக், கேடொன்றில்லான் என்னுஞ் சொற்றொடர் இறைவன் எக்காலத்தும் எத்தகைய அழிவும் எத்தகைய ஊறு பாடும் இல்லாதவன் என்பதை அறிவுறுத்துகின்றது. அவன் ஒரு காலத்தில் இல்லாமலிருந்து பின்னையொரு காலத்துத் தோன்றினவனாய் இருப்பினன்றோ அவ்வாறு ஒருகாலத்துத் தோன்றினவன் பின்னே ஒரு காலத்து இறந்து கேடுறுவா னென்று கொள்ளல் வேண்டும். கடவுளுக்குத் தாய் தந்தை யாவார் யாவரென்று எவரைக் கேட்பினும் அவரெல்லாம் அவற்குத் தாய்தந்தையர் இலரென்றே சொல்லுதலால், எவராலும் அவன் பிறப்பைக் கேட்டறிய முடியாமையின் அவன் பிறவாதவன் என்பது தெளியப்படும். அவ்வாறு தெளியப் படவே அவனுக்கு இறப்பும் இல்லையென்பது தானே போதரும். எவ்வெவ்வுயிர் பிறக்கின்றனவோ அவையெல்லாம் இறக்கின்றன. பிறவி யெடுத்த உயிர்களுக்கே இறப்பும் நிகழக் காண்கின் றோமேயல்லது பிறவாதவைகள் இறத்தலை யாண்டுங் கண்டிலேம். பிறப்புண்டேல் இறப்புண்டாம், இறப்புண்டேல் பிறப்புண்டாம் என்னும் மூதறிஞர் மொழியும் இவ் வுண்மை யினையே வலியுறுத்துகின்றது. பிறந்திறப்பனவெல்லாஞ் சிற்றறிவுஞ் சிறு தொழிலுமுடைய உயிர்களென்றும், பிறந்திற வாதவன் ஒருவனே இறைவன் என்றும் பகுத்துணர்ந்து கொள்வது மிகவும் இன்றியமையாததாகும். இவ்வாறு உயிர் களுக்கும் இறைவனுக்கும் உள்ள வேறுபாட்டினையும் அவ் வேறுபாட்டுக்கு ஏதுவான இலக்கணங்களையுங் கடைப் பிடியாக உணர்ந்து கொள்ளவேண்டுவது பெரும்பயன் பெற வேண்டும் மக்களின் மெய்யுணர்ச்சிக்கு முதன்மையாகும். இவ்வேறுபாட்டினைக், கடவுளுக்குரிய பிறந்திறவாச் சிறப்பிலக் கணத்தை முதன்முதற் கண்டறிந்தவர்கள் சைவசமய நன்மக்களே யாவர். பழைய யூதர்களும், மகமதியர்களுந் தவிர மற்றச் சமயத்தவர்களெல்லாரும் பிறந்திறக்கும் உயிர்களையே அவ்வவர்பாற் காணப்பட்ட சில ஆண்மைச் செயல்களாற் கடவு ளாகப் பிறழ உணர்ந்து அவை தம்மையே கடவுள் நிலையில் வைத்து வணங்கி வருகின்றார்கள். ஆனால் இத் தமிழ்நாட்டின் கண் உள்ள சைவசமயத்தவர்கண் மட்டும் பண்டைக்காலந் தொட்டுப் பிறந்திறவாத் தன்மையனே முழுமுதற் கடவுளாவன் எனத் தெளிய உணர்ந்து இன்றுகாறும் அக் கொள்கையிற் சிறிதும் வழுவாதவர்களாய் நிலைபேறுற்று வருகின்றனர். பிறப்பிறப்பில்லா இக் கடவுளிலக்கணத்தை நம் சைவசமய ஆசிரியரும் பிறரும் வலியுறுத்திப் பாடிய பாட்டுக்களை முன்னரே நுங்கட்கு எடுத்துக்காட்டினேம். இன்னும் நம் சந்தானாசிரியராகிய அருணந்தி சிவனாரும், யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகி ஆங்கே மாதொரு பாக னார்தாம் வருவர்மற் றத்தெய் வங்கள் வேதனைப்படும் பிறக்கும் இறக்கும் மேல்வினையுஞ் செய்யும் ஆதலால் இவைஇ லாதான் அறிந்துஅருள் செய்வ னன்றே என்று வரையறுத்துக் கூறிய அருமைத் திருப்பாட்டும் நம்மனோர் ஒவ்வொருவர் உள்ளத்திலுங் கன்மேற்செதுக்கிய எழுத்துப்போல் நிலைபெற்று நின்று நினைவுகூரற் பாலதாகும். அங்ஙனமாயினும், முன்னே யூதர்களும் மகமதியர் களுங்கூடக் கடவுளுக்குப் பிறப்பிறப்புச் சொல்லவில்லை யென்றமையாற் சைவ நன்மக்களே அக் கடவுளிலக்கணத்தை அறிந்தார்களென்பது யாங்ஙனமெனின், அவர்கள் கடவுளுக்குப் பிறப்பிறப்புச் சொல்லாவிட்டாலுங் கடவுள் பிறந்திறவாதவன் என்பதனையும் உயிர்களே பிறந்திறப்பன என்பதனையுஞ் சைவசமய ஆசிரியர்களைப் போலப் பிரித்துக் காட்டி அவர்கள் ஆசிரியன்மார் எவருந் தமது விவிலிய வேதத்திலாதல் குரானி லாதல் வலியுறுத்திச் சொல்லி விளக்கினாரில்லை. மற்றுத் தமிழாசிரியர்கள் நூல்களிலோ மிகப் பழையகாலந் தொட்டே கடவுள் வினையின் நீங்கிய வனென்றும், அவன் பிறவா யாக்கைய னென்றுந், தந்தை தாய் இல்லாதவனென்றும், எல்லா உயிர்களும் இறந்த சுடுகாட்டில் தான் என்றும் இறவாது நின்றே ஆடுவானென்றும் பலகாலும் வற்புறுத்திச் சொல்லும் மெய்யு ரைகள் அடுத்தடுத்துக் காணப்படுகின்றன. ஏனைச் சமயத்தவர் நூல்களிலோ இங்ஙனம் வரையறுத்துரைக்கும் மெய்யுரை யினைக் காண்டலியலாது. இறைவனிலக்கணத்தைத் தெளிய உணர்தலும் இயலாது. ஆகவே, பிறப்பு வளர்ப்புகள் ஒருவாற்றா னுங் கேட்டறியப்படாத முதல்வனுக்கு எவ்வகை யான கேடும் எக்காலத்தும் எவ்விடத்தும் நிகழாதென்பது தெரித்தற் பொருட் டாகவே கேடொன்றில்லான் என்னுஞ் சொற்றொடரைக் கேட்டாரு மறியாதான் என்னுஞ் சொற் றொடர்க்குப் பின்னே பெரிதும் இயைபுபடவைத்து மாணிக்க வாசகப் பெருமான் அருளிச் செய்வாராயினர். இனிக், கிளையிலான் என்பது சுற்றத்தாரை இல்லாத வன் என்று பொருள்படும். உறவினரைக் குறிக்குஞ் சுற்றம் கேள் உறவு முதலான பல தமிழ்ச் சொற்களிருக்கவும் அவற்றை யெல்லாம் விட்டுக் கிளையென்னுந் தமிழ்ச் சொல்லால் அடிகள் அதனை அருளிச் செய்திருக்கும் நுட்பம் ஆராயற்பாலது. கிளை யென்னுஞ்சொல் ஒருவர்க்கும் அவரோடு உடம்பின் தொடர்பு உடையார்க்கும் உள்ள நெருங்கிய இசைவினைத் தெரிவிக்கு மாறுபோல் மற்றச் சொற்கள் தெரிவிக்கவில்லை. கிளை யென்பது முதன் முதல் மரத்தின் கோடுகளுக்கே பெயராக வழங்கப்பட்டதாகும். ஒரு மரமும் அம் மரத்தினின்று பல கவர்களாகப் பிரியுங் கிளைகளும் ஒன்றைவிட்டொன்று வேறாகாமற் பெரிதும் இயைந்து நிற்கின்றன. இங்ஙனமே ஒருவனுக்குக் கிளைகள் போல் நெருங்கிய தொடர்புடையராதற் குரியார்; அவன் தான் பிறத்தற்கு இடமான தாய் தந்தையருந், தன்னோடுடன் பிறந்த தமையன் தம்பி முதலியவருந், தம்மினின்று பிறக்கும் மக்களும், அம் மக்களினின்று பிறக்கும் மக்களுந், தன்னோடுடன் பிறந்தாரினின்று பிறக்கும் மக்களும், அம் மக்களுக்கு மக்களும் என அவனோடு நெருங்கிய உறவு வாய்ந்தாரே யாவர். மற்றச் சுற்றத்தார் உறவினர் கேளிர் என்பவரெல்லாம் அவனுக்கு அத்துணை நெருக்கம் உடையா ரல்லர். அதுபற்றியே தான் ஒருவனுக்கு மிக நெருங்கிய உடம்பின் தொடர்புடையாரைக் குறித்தற்கு மாணிக்க வாசகப் பெருமான் கிளையென்னுஞ் சொல்லைச் சிறந்த தொன்றாக எடுத்துக் கொண்டார். இனி, இறைவன் தான் பிறத்தற்கு இடனான தாய் தந்தையருந், தன்னோ டுடன்பிறந்தாருந், தனக்கு மக்களா வாரும், அம் மக்களுக்கு மக்களாவாருந், தன்னுடன் பிறந் தார்க்கு மக்களாவாரும், அம் மக்களுக்குப் புதல்வராவாரும் இல்லாதவ னென்பது முன்னமே பெறப்பட்டமையால், அத்தகைய நெருங்கிய சுற்றத் தொடர்பு சிறிதுமில்லாதவன் என்பதை அறிவித்தற்கே கிளையிலான் என்றார். கிளைஞராகிய பெருந்தொடர்பு இல்லாதவர்களுக்கு அத் தொடர்பு பற்றி வரும் மற்றைச் சுற்றத்தாரும் இல்லாமை தானே பெறப் படுமாதலால், இறைவனுக்கு வேறு அகன்ற சுற்றத்தாரும் இல்லை என்பது இது கொண்டு முடிக்கப்படும். நெருங்கிய உடம்பின் தொடர்பி லிருந்தே ஏனை எல்லாச் சுற்றங்களும் அச் சுற்றங்களைப் பற்றி வரும் பல்வேறு அல்லல்களும் ஒன்றிலிருந் தொன்றாய்க் கிளைக்கக் காண்டலால், அவ் வெல்லாவற்றிற்கும் அடிப்படையான உடம்பின் தொடர்பினை இறைவன் ஒரு சிறிது மில்லாதவன் என்பது தெரித்தற்கே உடம்பின் தொடர்பு க்குப் பெயரான கிளையென்னுஞ் சொல்லை எடுத்தாண்டு அச் சொல்லால் எவ்வகைத் தொடக்குமில்லாத இறைவனியல்பைச் சுருங்கச் சொல்லல் ஆழமுடைத்தாதல் என்னும் அழகு பெறக் கூறிய அடிகளின்அறிவின் திறத்தை என்னென்பேன்! அங்ஙனமாயின், எண்ணிறந்த உயிர்கள் இறைவன் என்றுள்ளானோ அன்றுதொட்டே அவனிடத்தில் தாமும் தம்மிடத்தில் அவனுமாக நெருங்கிய தொடர்புடையராய் இருத்தலால் உயிர்களை அவனுக்குக் கிளைஞராகக் கூறுதல் பொருத்தமன்றோ எனிற், கிளைஞரென்பார் ஒருவருக் கொருவர் உதவியுந் துணையுமாய் இருக்குந் தன்மையராவர். இது கிளையென்னுஞ் சொல்லின் முதற்பொருளினாலேயே இனிது விளங்கா நிற்கும். எங்ஙனமெனின், மரத்தாற் கிளையுங் கிளையால் மரமும் உயிர்வாழ்கின்றன. அடிமரத்தை வெட்டி னாற் கிளைகள் பட்டுப்போம். கிளைகளையெல்லாம் வெட்டி னால் மரமும் பட்டுப்போம். இது பெரும்பாலும் எல்லா மரங் களிடத்துங் காணப்படும் உண்மை நிகழ்ச்சியாம். இதுபோலவே தாய்தந்தையர் தம் மக்கள் இளைஞராயிருக்கும் பொழுது அவர்க்கு உதவியுந் துணையுமாய் நின்று அவரைப் பாதுகாத்து உயிர்வாழச் செய்கின்றனர். மக்கள் வளர்ந்து பெரியராம் பொழுது தம் தாய்தந்தையர் ஆண்டின் முதிர்ந்து வலிவுகுன்றப் பெறுதலால் மக்கள் அவர்க்கு உதவியுந் துணையுமாய் நின்று அவரை உயிர்வாழச் செய்கின்றனர். இங்ஙனமே உடன் பிறந்தாரும் ஒருவருக்கொருவர் உதவியுந் துணையுமாய் நின்று உயிர்வாழ்தலை நேரே காண்கின்றோம். ஆகவே, கிளைஞராவா ரெல்லாரும் ஒருவருக்கொருவர் உதவியுந் துணையுமாய் நின்று ஒழுகினால் மட்டும் அவர் கிளைஞரென்று பெயர் பெறுதற் குரியாரென்பது பெறப்படும். இந்த முறையில் வைத்துக் கடவுளுங் கடவுளொடு தொன்று தொட்டு இருக்கும் உயிர் களும் ஒருவருக்கொருவர் உதவியுங் துணையுமாயிருந்து உயிர் வாழுந் தன்மையராயின், அவர் தம்மையுங் கிளைஞரென்று மொழிதல் பொருந்தும். கடவுள் உயிர்களுக்கு உற்ற துணையும் உதவியுமாய் நிற்றல் போல உயிர்களுங் கடவுளுக்கு உற்ற துணையும் உதவியுமாய் நின்று அவரை உயிர் வாழச் செய்கு வராயின், அவரை அவர்க்குக் கிளைஞரென்று கூறுதல் பொருத்தமாம். மற்று உயிர்களோ பண்டு தொட்டே அறியாமை யென்னும் பேரிருளால் விழுங்கப் பட்டுத் தம்மையும் உணராமல் தம் உயிர்க்குயிராய் நின்று தமக்குப் பேருதவி செய்துவரும் முதல்வனையும் உணராமல் வலியற்ற நிலையினராய் இருத்த லாலும், இறை வனுடைய உதவியைப் பெற்று அறிவு விளங்கித் தம்மையுந் தலைவனையும் உணரும்நிலை வந்த ஞான்றுந் தம்முடைய அறிவுஞ் செயலும் இறைவன்றன் பேரறிவு பேராற்றல்களின் முன் வலிவிழந்தன வாயே இருப்பதல்லது அவ் விறைவற்குத் தம் அறிவாலுந் தம் செயலாலுஞ் செய்யத்தக்க உதவி சிறிது மில்லாமையாலும், எல்லாச் செல்வமுஞ் செயலும் உடைய இறைவனுக்குமுன் அவ் உயிர்கள், செயலிழந்த வறிய இரவலரே யாவரல்லது அவனுக்குக் கிளைஞராதல் ஒருவாற்றா னுஞ் செல்லாது. இங்ஙனம் எண்ணிறந்த அவ் உயிர்த் தொகை களை யெல்லாம் எல்லாம்வல்ல இறைவனுக்குக் கிளைஞராகச் சொல்லுதல் ஒருவாற்றானும் இசையாமையால், இவ் உண்மையை நன்குணர்ந்த மாணிக்கவாசகப் பெருமான் கிளையிலான் என்று அருளிச்செய்தாரென்பது. இனிக், கேளாதே எல்லாங் கேட்டான் என்னுஞ் சொற்றொடர் பிறர் சொல்வனவற்றைச் செவியென்னுங் கருவியாற் கேட்டு அறியும் நம்மனோர் போலாது, அக் கருவியில்லாமலே உலகின் கண்ணுள்ள எல்லா மக்களுஞ் சொல்லுஞ் சொற்களையும் நினைக்கும் நினைவுகளையும் அறிய வல்லான் எனவும், வாயென்னுங் கருவி கொண்டு பிறர்பால் அறிய வேண்டுவனவற்றைக் கேட்டறியும் நம்மனோர் போலாது அக் கருவியின் உதவியில்லாமலே பிறர் உள்ளத்து நிகழும் நிகழ்ச்சிகளையெல்லாந் தன் நினைவினாலேயே உணர வல்லான் எனவும் இருபொருள் தருவதாம். மக்கட்பிறவி யினராகிய நாம் செவியினுதவியின்றிப் பிறர் சொல்வனவற்றைக் கேட்டுணரும் ஆற்றலில்லாதவர்களாயிருக்கின்றோம். வாயினு தவியின்றிப் பிறரை வினாவித் தெரிய வேண்டுவனவற்றைத் தெரிந்து கொள்ள இயலாதவர்களாயிருக்கின்றோம். செவியும் வாயு மில்லாத செவிடரும் ஊமரும் அக் கருவிகள் இல்லாமையாற் படுந் துன்பத்தைக் கண்டு எவ்வளவு இரக்கமுறு கின்றோம். தம்மினும் அறிவிற் சிறந்தவர்களில்லையெனவுந், தம்மினும் வலிமையிற் சிறந்தவர்களில்லையெனவும் இறுமாந்து நின்றோர் குருடர் ஊமர் முதலான உறுப்பறைகளைக் கண்டு தாமும் அவர்களைப் போற் பழுதுபட்டிருந்தால் தம்முடைய நிலையும் எவ்வளவு துன்புறத் தக்கதா யிருக்குமென்று நினைந்து அதனால் தமது சிறுமையும் எல்லாம்வல்ல இறைவன்றன் பெருமையும் உணர்ந்து நெஞ்சம் நெக்குருகுதலைக் காண்கின்றோமல்லமோ? இங்ஙனமே இவ்வரிய உடம்பில் அமைந்த மற்றைப் பொறிகளும் மற்றை உறுப்புக்களும் பழுதுபட்டுப் போகுமானால், அவ்வுடம் பின்கண் நிற்கு முயிர் அதனால் அறிவு விளங்கப் பெறாது ஏதொரு செயலுமின்றி வெறுங்கல்லைப் போற் கிடக்குமன்றோ? இறைவன் அருள்கனிந்து அளித்தருளிய இவ்வுறுப்புகளின் உதவியை முழுதும் பெற்று உயிர் வாழுஞ் சிலர் அவ்வுதவியைத் தினைத்துணையும் நினைந்துபாராமல் யாமே கடவுளென்று செருக்கிப் பேசா நிற்பர். அவருடைய செருக்கெல்லாம் அவர்தம் உறுப்புகள் சீர்குலைந்து போனால் நிலைக்குமோ சொன் மின்கள் அன்பர்களே! இவ்வாறாக உடம்பினுதவியும் உடம்பிலமைந்த உறுப்பு களினுதவியும் இன்றி அறிவுஞ் செயலுங் கைகூடப் பெறாத நம்மனோர் நிலைமைக்கும், இவ்வுறுப்புகளின் உதவி சிறிதும் வேண்டாமலே எண்ணிறந்த உலகங்களையும் அவ்வுலகங்களி லுள்ள எண்ணிறந்த கோடி உயிர்களையுங் காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி வரும் எல்லாம் வல்ல ஐயனுடைய நிலை மைக்கும் ஒப்புமை எங்கே! தொன்று தொட்டே பேரிருளாகிய அறியாமையிற் கிடந்து அறிவொளி மழுங்கிப் பின்னர் இறைவன் தந்த உடம்பாலும் அவ்வுடம்பின் உறுப்புகளாலுஞ் சிறிதுசிறிதாக அறிவு விளங்கப் பெற்று வரும் நம்மனோர்க்கே ஊனுடம்பின் கருவிகள் வேண்டப்படுவதன்றி, இக் கருவிகளைப் படைத்துக் கொடுக்கும் எல்லாம்வல்ல இறைவனுக்கு இக் கருவிகளும் இவற்றினுதவிகளுஞ் சிறிதும் வேண்டப்படா; இது பற்றியே, செவியினாற் கேளாததாய்ச் செவியினைக் கேட்பிப்பதாய் உள்ளதெதுவோ அதுவே பிரமம் என்றும், வாயினாற் பேசாததாய் வாயினைப் பேசுவிப்பதாய் உள்ள தெதுவோ அதுவே பிரமம் என்றும் அறி; அதன் பக்கத்தேயிருந்து அதனால் இயக்கப்படுகின்ற நீ பிரமமாகாய். எனக் கேநோபநிடதம் வற்புறுத்துக் கூறுவதாயிற்று.. இவ்வுண்மையினையே மாணிக்கவாசகப் பெருமான், கேளாதே எல்லாங் கேட்டான் என்னுஞ் சொற்றொடரால் தெளியக் கூறினார். என்று இதுகாறுங் கேட்டாரு மறியாதான், கேடொன்றில் லான், கிளையிலான், கேளாதே யெல்லாங் கேட்டான் என்பனவற்றாற் பெறப்பட்ட கடவுள் இலக்கணங்கள் அவ்வள வும் இந் நிலவுலகத்துள்ள எல்லா மக்களாலும் எல்லாச் சமயத்தாராலும் ஏற்றுக் கொள்ளப்படுவனவேயாகும். ஆகவே எல்லார்க்கும் உடன்பாடான இவை கடவுளுக்குரிய பொது இலக்கணங்க ளெனப்படும். இப்பொது இலக்கணங்களால், இப் பொது விலக்கணங்களை உடையவராக நம்மால் ஆராய்ந்தறியப் பட்ட கடவுள்நிலை, சிற்றறிவினராகிய நமது சொல்லுக்கும் நினைவுக்கும் எட்டாததாயிருக்கின்றது. எப்பொருளுங் கடந்த முதல்வனை, எவராலுங் கேட்டறியப்படாத தலைவனை, எவ்வகை அழிவுக்கும் அகப்படாத ஆண்டவனை, எவ்வகைப் பட்ட கிளைஞருமில்லாத தன்னந் தனியனை, யாமறியாதே யாம்கேளாதே இருக்கவும் எமக்கு வேண்டுவனவெல்லாந் தந்து தலையளித்துவருந் தோன்றாத் துணையை ஏழையேம் எங்ஙனங் காண்பேம்? mtdJ mU£nguÄœj¤ij v§‡d« gUFnt«?எம்மை இடையறாது பற்றித் தொடர்ந்துவரும் பிறவித் துன்பத்தை எங்ஙனம் நீக்குவேம்? என்று எண்ணி எண்ணி நெஞ்சங் குழையாநின்ற நேரங்களில் அவனது எட்டா நிலைமை யில் எம் மனம் பற்றுவதின்றாய் அவன் திருவுருவினைக் காண வும் அவன் திருவடிகளைப் பற்றிக் கொண்டு தேம்பவும் விழைந்து என்பில்லாப் புழுவினுங் கடைப்பட்ட எம்மையும் கடைக்கணிப்பனோ என்று எமதுள்ளம் ஏங்குகின்றதன்றோ? அத்தகைய அடங்கா ஏக்கத்தின்பாற்பட்ட எம் சிற்றுயிர்க்குக் கடவுளின் எட்டா நிலைமையைச் சொல்லிச் சொல்லிக் காட்டுவதால் எம் ஏக்கங் தீருமோ? தீராதன்றே! அவன், தன்னில் எவ்வளவு பெரிய னாயினும் எவ்வளவு எட்டா நிலைமை யனாயினும் எம் போன்ற சிற்றுயிர்களுக்கு இரங்கி எளிவந்து தோன்றி அருள் செய்யினன்றோ எமது ஏக்கந் தீரும், அப்போதன்றோ எம துள்ளம் இவ்வுலகத்தை மறந்து, இங்குள்ள தொடர்புகளை மறந்து மேலெழும்பி அவன் திருவடிகளிற் படியும்; அப்போதன் றோ கடவுளின் உண்மை நிலை எமக்கு விளங்கும். அதுகாறுஞ் சருக்கரையைக் கண்டறியாதவன், அதன் சுவையைச் சுவைத்தறியாதவன் அதன் இனிமையினை வியந்து வியந்து பேசிச் சலிப்படைவதல்லது அதனைப் பெற்றுச் சுவைத்து மகிழும்வகை அவற்குக் கைகூடாதவாறு போல், யாமும் கடவுளின் எட்டாத நிலைகளை, அவன்றன் பேரின்பப் பெருஞ்சுவையைப் பேசிப்பேசி எண்ணி எண்ணி வாடுவதல்லது அவனைப் பெற்று அவனது பேரின்பவயமாய் நிற்கும் பெரும்பேறு எமக்குக் கைகூடுமோ? கடவுள் தாமே தோன்றியவ ரென்பதும், அவரது இருப்பு இன்றியமையாத தென்பதும், மாயையைக் கடந்தவரென்பதும், அவர் எளியர் என்பதும், சிற்றுயிர்களிற் காணப்படும் வரிசைக்கும் உள்வேற்றுமைக்கும் அவர் மேம்பட்டவ ரென்பதும், பகுக்கப்படாதவ ரென்பதும், உயிருள் பொருள் களிலும் இயக்கங்களிலும் இன்றியமையாத் தன்மைகளிலும் அவையல்லாத தன்மைகளிலும் மறைந்துள்ள செயல்களிலும் வெளிப்பட்ட செயல்களிலும் உள்ள வேற்றுமைகள் அவர் உடையரல்லர் என்பதும், அவர் ஓரினத்திற் சேர்க்கப்படுதலில் லாதவ ரென்பதும், மெய்ம்மை வாய்ந்த அளவிலாத் தன்மைய ரென்பதுந், தாம் காட்டும் நல்லியல்புகளுக்கு வேறான திருவுருவம் வாய்ந்தவரென்பதுந், தீமையின் இருப்புக்கு இடந்தருவரே யன்றி அத் தீமையினை உண்டு பண்ணுபவர் அல்லரென்பதுந், தாமே எல்லா முடையரென்பதுந், தம்பா லன்பினர் என்பதுந், தம்பால் தனித்த பேரின்பத்தை உடைய ரென்பதும் ஆகிய அவருடைய இயல்புகள் எமது வாழ்க்கை யோடு எவ் வகையான தொடர்பு கொண்டு நிற்கின்றன? அவருடைய இவ்வியல்புகள் தனித்தனியே தமக்கு ஒத்த வகையாக எமது ஒழுகலாற்றினைத் திருத்திக் கொள்வதற்கு இடஞ் செய்யாவாயின், அவை உண்மையே யாயினும் அல்ல தவை பொய்யேயாயினும் அவை ஒருவனுடைய சமய வாழ்க் கைக்கு எந்தவகையில் வேறுபட்ட பயனைத் தரக்கூடும்? என்னளவில் மேற்குறிக்கப்பட்ட கடவுள் இயல்புகளைப் பற்றிய நினைவுகளுக்கு மாறானவைகளைச் சொல்வதில் யான் வெறுப்புடையேனாயினும், இவைகள் குற்றமில்லாதனவாகவே எடுக்கப்படுமாயினும் நமது சமய வாழ்க்கைக்கு இவை தினைத் துணையாவது பயன்படுமென்று கருதக்கூடவில்லை என்பதைத் திறந்து சொல்கின்றேன். ஆகவே, இவை ஒன்றும் உண்மை யாவன அல்ல. கடவுள் எளிமையுடையராயிருந்தால் அந்த இயல்புக்குப் பொருத்த மாம்படி யான் எவ்வகையான ஒழுக லாற்றில் ஒழுகக்கூடும், அதனை சொன்மின்கள்! அவர் தனிப் பட்ட நிறைவான இன்பமுடையரானால், அதனை உணர்வத னால் யான் எனது நடக்கையை எவ்வாறு வகுத்துக் கொள்ளக் கூடுமோ அதனைச் சொன்மின்கள்! அத்தகைய இயல்புகளைப் பற்றிய சொற்றொகுதிகள் கடவுளைப் பற்றிய உண்மையான உணர்ச்சியை எமக்குத் தருகின்றனவா? கடவுளிருப்பினை நம்பிய கோட்பாடுகள் தொடர்பாக நிலவு மாயினும், உண்மைச் சமயமானது இந் நிலவுலகத்தில் இல்லாமற் பறந்தோடி விடும். ஆனாற், பயன்படத்தக்க சமய வாழ்க்கை யிலிருந்து நோக்கு வேனானால், மேற்குறித்த வெற்றியல்புகள் கல்விப் புலமை மிக்கோர் கட்டிவிட்ட சிறிதும் பயன்படாத கட்டுப்பாடுகளே யல்லாமல் அவற்றை வேறென் னென்று விளம்புவேன்! இனி, அவை அங்ஙனமிருக்க நமது ஒழுக்கமுறைக்கு ஒத்த கடவுளின் இயல்புகளைச் சிறிது ஆராய்வாம். இவ்வியல்பு களோ அச்சத்தையும் நம்பிக்கையினையும் நிலைபெறச் செய்து தூய துறவு வாழ்க்கைக்கு அடிப்படை கோலுகின்றன. யாங்ஙன மெனிற், கடவுள் தூயதன்மை யுடையரென்று கொண்டால், அவர் உயிர்களின் நன்மையினையன்றி வேறொன்றனையுங் கருதார். அவர் எல்லாம் வல்லரென்று கொண்டால் அவர் அந் நன்மையினை உயிர்களுக்கு முடித்துத்தர வல்லுநராவர். அவர் எல்லாம் உணர்பவர் என்று கொண்டால் அவர் இருளிலும் நம்மைக் காண வல்லுநராவர். அவர் நடுநிலையாளரென்று கொண்டால் நம்முடைய தவறுகளைக் கண்டு அவர் ஒறுக்க வல்லுநராவர். அவர் அன்புடையரெனக் கொண்டால் நம் இழுக்கங்களை அவர் மன்னிக்கவும் வல்லுநராவர். அவர் மாறாத இயற்கையரென்று கொண்டால் அவரது உதவியில் நாம் நம்பியிருக்கக் கூடும். இத்தகைய இயல்புகளே நமது வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புடையனவாக இருத்த லால், இவைகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்வது மிகவும் இன்றியமையாததாகும். கடவுள் உலகத்தைப் படைத்ததன் நோக்கம் அவர் தமது பேரருட் சிறப்பினை உயிர்களுக்கு வழங்க வேண்டு மென்பதே யாகையால் இவ்வியல்பும் நமது வாழ்க்கை யோடு திட்டமான தொடர்புடையதாக விளங்காநிற்கின்றது1 எனவும், கடந்த நிலையினைக் கூறும் மாயாவாத ஆராய்ச்சி யுரைகள் சமய உண்மையினை உலகமெல்லாந் தழுவும்படி செய்ய மாட்டாதவனவாய் வழுவுகின்றன2 எனவும் அமெரிக் காவில் மெய்யுணர்வி னராய் விளங்கிய உ.வில்லியம் ஜேம் என்னுஞ் சான்றோர் ஆழ்ந்து ஆராய்ந்து உரைத்த அறிவுரைகள், கடவுளின் பொதுவியல் பாகிய கடந்த நிலைமையினை வற்புறுத்து உரைக்குங் கோட்பாடுகள் சிற்றுயிர்களாகிய நமக்கு எவ்வாற்றானும் பயன்படா என்பதையும், அவர் சிற்றுயிர்க ளெல்லாவற்றிற்கும் வேண்டுவதாகிய அழியாப் பெரும் பேற்றை நல்குதற்கும் அதனை நல்குதற்பொருட்டு எளியராய் வந்து அவை தம்மை ஆட் கொள்ளுதற்கும் அவர்க்கு இயற்கையாயுள்ள அன்பும் அருளும் இரக்கமுமாகிய அரும் பேரியல்புகளே எமக்கு எவ்வாற்றானும் பயன்படுமென்ப தையும் இனிது விளக்குகின்றன. கடந்த நிலைமையனாய் நிற்கும் இறைவனைச் சிற்றுயிர் களாகிய எம்முடன் நெருங்கத் தொடர்பு படுத்துவன, அன்பும் அருளும் இரக்கமுமாகிய இவ்வியல்புகளேயாம். சிற்றுயிர் களாகிய எமது இவ் வுலக வாழ்க்கையி னுள்ளும் ஒருவரோடு ஒருவரை மனமகிழ இசைவித்து உயிர்வாழச் செய்வதும் அன்பும் அருளும் இரக்கமும் அல்லவோ? அன்பில்லாதவர்கள், பிற உயிர்களின் துன்பத்தைக் கண்டு இரங்காதவர்கள் ஒருவரோ டொருவர் கூடி உயிர்வாழ்தலும் உதவி வேண்டும் உயிர்களுக்கு உதவிபுரிதலும் உலகத்தில் நிகழக் கண்டதுண்டோ சொன் மின்கள்! இது பற்றியன்றோ ஆசிரியர் தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார், அன்பிலார் எல்லாந் தமக்குரியர் அன்புடையார் என்பு முரியர் பிறர்க்கு. என்று அருளிச் செய்வா ராயினர். தானீன்ற குழந்தை நோய் வாய்ப்பட்டு வருந்துகையில் ஊணும் உறக்கமுமின்றி அதன் பக்கத்தே இருந்து தாயானவள் கவலை கொண்டு வருந்துமாறு செய்வது எது? போர்மேற் சென்ற தன் கணவன் இறந்தான் எனக் கேட்டு ஏங்கி உயிர்துறந்த காதலியை அங்ஙனம் உயிர் துறக்கு மாறு செய்தது எது? தான் வழிபடுகடவுளின் திருவுருவக் கண்ணினின்று செந்நீர் வடிய நோக்கிய ஆற்றாது தம் கண்ணை இடந்து அக் கடவுள் வடிவத்தின் கண்ணில் அப்பிய கண்ணப் பரை அங்ஙனம் அப்புமாறு செய்தது எது? ஈன்று அணிய பன்றிக் குட்டிகள் தம் தாயினை இழந்து நிலைக்களன் காணாது தத்தளித்தலைக் கண்டு தாங்காமல் தாய்ப்பன்றி வடிவெடுத்து அவற்றின் துன்பத்தைப் போக்கிய இறைவனை அங்ஙனம் செய்யு மாறு ஏவியது ஏது? வேடனால் துரத்தப் பட்டுத் தன்னகம் புகுந்த புறாவின் அல்லல்கண்டு, அப்புறாவின் எடைக்கு ஈடாகத் தன்னு டம்பின் சதையினை அறுத்துக் கொடுத்த சோழ மன்னனை அங்ஙனஞ் செய்யுமாறு தூண்டியது எது? என்று நன்கு ஆராய்ந்து உணரின் அன்பும் அருளும் இரக்கமுமே அவ்வா றெல்லாம் செய்வவாயின என்பது புலப்படுகின்றதன்றோ? ஆகவே சிற்றுயிர்களுக்குச், சிற்றுயிர்களின் அறிவுக்கு, நினைவுக்கு எட்டாத நிலையில் நிற்குங் கடவுளை அவ்வுயிர் களின் அறிவுக்கும் நினைவுக்குங் காட்சிக்குங்கூட எட்டிய நிலையிலே எளிதாகக் கொண்டு வந்து காட்டவல்லது கடவுளி டத்துள்ள அருட்டன்மையே என்பது நன்கு விளங்கற் பாலதாம். கடவுள் மற்றை எல்லா உயர்ந்த தன்மைகளும் உடையரா யிருப்பினும் அவ்வருட்டன்மை ஒன்று மட்டும் இலராயின் இவ்வுலகத்தையும் இவ்வுலகத்துற்ற உயிர்களையும் நாம் காண்டலியலாது. பிறர்படுந் துன்பத்தைக் கண்டு இரக்கப்படாத ஒருவர் அவர்கட்கு ஏதோர் உதவியுஞ் செய்யக் கண்டதுண் டோ? இரக்கமும் ஈர நெஞ்சமும் இல்லாதவர்கள் பிறரோடு அன்பாய்ப் பேசினும் எங்கே அவர்க்கு உதவி செய்ய நேர்ந்து விடுமோ என்று நெஞ்சம் நடுநடுங்கிப் பிறரொடு பேசாதும் அவரோடு அளவளாவாதுந் தனித்துறவு நிலையை அடை தலைக் கண்டாமன்றோ? இத்தகைய துறவிகளுள்ளே கடவுளும் ஒருவராய் விடுவராயின், எமது உயிர்வாழ்க்கை இவ்வுலகத்தில் நடைபெறுமென்று கனவிலும் நினைதல் கூடுமோ? ஆதலினா லன்றோ, நம் சைவசமயத் தெய்வமாகிய சிவபிரான் தன்னை இத்தகைய துறவுநிலையிற் சேர்த்துக் கொள்ளாது கங்கையும் உமையுமாகிய இருமனைவியரையும், பிள்ளையார் முருக னென்னும், இரண்டு மக்களையும் உடையனாய்த் தனக்கு அன்பே வடிவென்பதை உணர்த்தலா யினான். இவ்வரும் பேருண்மை மற்றோரிடத்தும் நம் மாணிக்க வாசகப் பெருமா னால், தென்பால் உகந்தாடும் தில்லைச்சிற் றம்பலவன் பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடீ பெண்பால் உகந்திலனேற் பேதாய் இருநிலத்தோர் விண்பாலி யோகெய்தி விடுவர்காண் சாழலோ. என்று அறிவுறுத்தப்பட்டது. அன்பர்களே! இங்கே யாம் கூறியது கொண்டு எல்லாம் வல்ல முதல்வனுக்கு மனைவிமாரும் மக்களும் உளர்போலும் என நினைந்து நமது முழுமுதற் றெய்வத்தை இழிவாக நினைந்து விடேன்மின்! மனைவி மக்களென்ற தொடர்பெல்லாம் அன்பினைப் புலப்படுத்தும் அடையாளங்களேயாம். அன்பும் இன்பமுமாகிய தன்னியல்புகள் தன்னோடு தொடர்புடையாரி டத்துப் புலனாவனவன்றி வேறு தாமாகவே புலனாவனவல்ல. இறைவனுடைய அன்பையும் இன்பத்தையும் பெறுதற்கு உரிமை உடையராய் அவனை நெருங்கி நிற்கும் நாமெல்லாம் அவனுக்கு மனைவியரும் மக்களுமேயாவம். மனைவி மக்களென்ற தொடர் புகளின் உண்மையை ஆழ்ந்து ஆராயுமிடத்து அவை அன்பென் னும் விதையில் முளைத்தெழுந்து ஓங்கிப் படர்ந்த தேமாவின் தேனொழுகு கனிகளேயாம். இன்னும் இதனை நுணுகி நோக்கு மிடத்து உலகமெங்கணும் புலனாகாது மறைந்து நிற்கும் ஒளி யினையுங் கத கதப்பினையும் புலனாகக் காட்டுந் திங்களும் ஞாயிறுமே அத் தொடர்புகளாம் என்று கருதுதலும் இழுக் காது. இந்த முறையிலேதான் கடவுளுக்குஞ் சிற்றுயிர் களாகிய எமக்கும் உள்ள தொடர்பு கருதற்பாற் றென்பதற்கே, சிவ பெருமானுக்கு மனைவியரும் மக்களும் உளராக வைத்துப் புனைந்துரை வகையால் ஆன்றோர் கூறுவாராயினர். இது கொண்டு கடவுள் தாம் எட்டா நிலையினராயினுந், தாம் அந் நிலையிலேயே இருக்கும் விருப்பு இலராய், எமக்குந் தமது பேரின்பத்தை வழங்குதற் பொருட்டு எழுந்த பேர் அருட்டன் மையால் எமக்கு எளியராய் எமக்கு அணுக்கராய் யாம் வேண்டியவாறெல்லாம் வந்து உதவி செய்யுஞ் சிறப்பியல்பு வாய்ந்தவரென்பதே அறிதல் வேண்டும். இது வெறுஞ் சொல்லளவில் நில்லாது உண்மையாக நிகழ்வதாதலை, மாணிக்கவாசகப் பெருமான் தமக்கு இறவன் கட்புலனாக எழுந்தருளி வந்து அருள் செய்த உண்மை அருள் நிகழ்ச்சியை ஓரெடுத்துக் காட்டாய்க் கூறுவான் புகுந்து, நாட்டார்கள் விழித்திருக்க ஞாலத் துள்ளே நாயினுக்குத் தவிசிட்டு நாயி னேற்கே காட்டா தனவெல்லாங் காட்டி. என்று அருளிச் செய்வாராயினார். இதன்கண் நாட்டார்கள் விழித்திருக்க என்றது உலகத்திலுள்ள மக்களெல்லாரும் இறைவனைக் காண்டற்கும் அவன்றன் அருள் உதவியைப் பெறுதற்கும் வேட்கை பெரிதுடையராய் இறைவன் தமக்குமுற் புலப்படும் நேரத்தை எதிர்பார்த்து அதிலே கண்ணுங் கருத்துமுடையராய் முனைந்து நிற்றலை விளக்கா நிற்கும். மக்களுள் எத்துணை இழிந்தோருங் கடவுளென்னுஞ் சொல்லைக் கேட்ட அளவானே அவனைக் காண்டலில் வேட்யுங் கருத்தும் உடையரா யிருக்கின்றனர். அவ்வாறவர் வேட்கை மிகுந்துள்ளாராயினும், அவ் வேட்கையின்படி கடவுளைக் காணும் முயற்சியிலேயே அழுந்தி நிற்கமாட்டாமல் உலக இன்பங்களில் இழுப்புண்டு போதலின், அவர் கொண்ட வேட்கை கைகூடாது ஒழிகின்றது. இவரங்ஙன மொழிய, இப் பொது மக்களின் வேறான சிலர் பெருவேட்கையும் பெருமுயற்சியும் உடையராய்த் தவமுயற்சியிற் புகுந்து கடவுளைக் காண்டலிலேயே கருத்து ஒருங்கி நிற்பர். அங்ஙனம் நிற்பார்க்குங் கூட இறைவன் கட்புலனாய்த் தோன்றி அருள் செய்யாது, தமக்கு அவன் நேரே தோன்றி அருள் செய்த அருட்பெருந் திறத்தை மாணிக்கவாசகப் பெருமான் ஞாலத்துள்ளே நாயினுக்குத் தவிசிட்டு நாயினேற்கே, காட்டாதன வெல்லாங் காட்டி என்று அருளிச் செய்வாராயினர். இங்ஙனமே பிறிதோரிடத்தும், மரகதக் குவாஅல் மாமணிப் பிறக்கம் மின்னொளி கொண்ட பொன்னொளி திகழத் திசைமுகன் சென்று தேடினர்க் கொளித்தும் முறையுளி ஒற்றி முயன்றவர்க் கொளித்தும் ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்து உற்றவர் வருந்த உறைப்பவர்க் கொளித்தும் மறைத்திற நோக்கி வருந்தினர்க் கொளித்தும் இத்தந் திரத்திற் காண்டுமென் றிருந்தோர்க்கு அத்தந் திரத்தின் அவ்வயின் ஒளித்தும் முனிவற நோக்கி நனிவரக் கௌவி ஆணெனத் தேமான்றி அலியெனப் பெயர்ந்து வாணுதற் பெண்ணென ஒளித்தும் சேண்வயின் ஐம்புலன் செலவிடுத்து அருவரை தொறும்போய்த் துற்றவை துறந்த வெற்றுயி ராக்கை அருந்தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும் ஒன்றுண் டில்லை யென்றறிவு ஒளித்தும் பண்டே பயில்தொறும் இன்றே பயில்தொறும் ஒளிக்குஞ் சோரனைக் கண்டனம், ஆர்மின் ஆர்மின் நாண்மலர்ப் பிணையலிற் றாடளை இடுமின் சுற்றுமின் சூழ்மின் தொடர்மின் விடேன்மின் பற்றுமின் என்றவர் பற்றுமுற் றொளித்தும் தன்னே ரில்லோன் தானேயான தன்மை என்னே ரனையோர் கேட்கவந் தியம்பி அறைகூவி யாட்கொண் டருளி மறையோர் கோலங் காட்டி யருளலும் (திருவண்டப்பகுதி 124 - 149) என்று அடிகள் திருவாய் மலர்ந்தமை காண்க. அற்றேல், தவமுயற்சியிற் புகுந்த முனிவரராலும் அறியப்படாத முதல்வனை அத் தவமுயற்சியின்றி அரச வாழ்க்கையிலிருந்த மாணிக்கவாசகர் அவனது அருளை நேரே பெற்றனரென்றலும், தம்மை நோக்கித் தவம்புரிந்த முனிவரர்க்கும் அருள் வழங்காது அம் முயற்சிக்குப் புறம்பாய் நின்ற அடிகளுக்கு அவ்வருளை வழங்கினானென்றலும் இறைவனது அருட் டன்மைக்கு இழுக்காகாதோ எனின் கூறுதும் : தவ முயற்சியைச் செய்வார்களெல்லாந் தாஞ் செய்யும் அம் முயற்சியினாலேயே தாங்கள் எண்ணியவைகளை எண்ணியபடியே பெறுதல் கூடுமென்றும், பிறரை வாழ்வித்தலுந், தாழ்வித்தலுந் தம் சொல்லளவினாலேயே நிகழுதல் கூடுமென்றும், வேறு எம் முயற்சிக்குங் கிட்டாத கடவுளைத் தமது தவமுயற்சியினாலேயே எளிதிற் கிட்டச் செய்தல் கூடுமென்றும் முனைப்புடன் நினைந்து செருக்குடை யராய் நிற்றலால், அவ் வருந்தவத்தோர் காட்சிக்குங் கடவுள் புலப்படாதவனாய்த் தன்னை ஒளிப்பன். தெய்வப் புலமைத் திருவள்ளுவநாயனாரும் யான் எனது என்னுஞ் செருக்குடையவர்கள் செய்யுந் தவமுயற்சி களெல்லாந் தேவர்களுறையுந் துறக்கவுலகங்களிற் செலுத்து மென்றும், அவ்விருவகைச் செருக்கும் அற்று முழுதும் அன்புருவாய் நின்றவர்களே வானோர்க்கும் மேலான இறைவன்றன் பேரின்ப வுலகப்பேற்றினை யெய்துவரென்றும் நன்கு வலியுறுத்தி யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் என்று அருளிச் செய்தனர். நமது உலகிய லொழுக்கத் திலுந் தம்மையுந் தமதறிவையுந் தமது முயற்சியையுமே பெரியனவாகக் கருதி இறுமாந்து நிற்பவர்கள் பிறர்பால் அன்புடையராய் ஒழுகுதலைக் காண்கிலமன்றோ? அன்பும் செருக்கும் ஒளியும் இருளும்போலத் தம்மில் மாறுபட்ட இயற்கையினவாகும். அன்பு நிகழுமுள்ளத்தில் இறுமாப்பு உண்டாகமாட்டாது; இறுமாப்பு மீதெழுந்து நிற்கு முள்ளத்தி லோ அன்பு ஓரெட்டுணையுந் தலைக்காட்ட மாட்டாது. ஆதலால் தவமுயற்சியானது மிகவும் பாராட்டற்பால தொன்றே யாயினும், அஃது ஏனை உலகியல் முயற்சிக ளெல்லாவற்றையும் விட மிகச் சிறந்ததே யாயினும் அது நிகழுங்கால் யான் எனதென் னுஞ் செருக்கும் அதனோடு உடன் நிகழுதலின் அம்முயற்சி யுடைய முனிவர்க்கும் இறைவன் புலப்பட்டுத் தோன்றாது ஒளிப்ப னென்றார். இவ்வுண்மை ஆசிரியர் திருமூல நாயனாராலும் என்பே விறகா இறைச்சி யறுத்திட்டுப் பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும் அன்போ டுருகி அகங்குழை வார்க்கன்றி என்பொன் மணியினை யெய்தவொண் ணாதே என்று நன்கெடுத்துக் காட்டப்பட்டது. பிற்காலத்திருந்த தாயுமானச் செல்வரும், அருளா லெவையும்பா ரென்றான்-அத்தை அறியாதே சுட்டியென் னறிவாலே பார்த்தேன் இருளான பொருள்கண்ட தல்லாற்-கண்ட என்னையுங் கண்டிலென் என்னேடி தோழி. என்றருளிச் செய்தார். யானென தென்னுந் தலையெடுப் புடையவர்களுக்கு உலகத்தவர் நேசத்தைப் பெறுதலும் இயலாதிருக்கையில், அதைச் சிறிதேனும் உடையவர்கள் அவ்விருளுக்குள் மறைந்த ஒளிபோற் புலப்படாது நிற்கும் இறைவனை யாங்ஙனம் காண்பர்? அன்பினால் அகங்கரை வாரிடத்து எத்தகைய இறுமாப்பும் இல்லாமையின், அவர்பால் எல்லாரும் அன்பு நிகழப் பெறுகின்றனர். இந்நிகழ்ச்சியோ டொப்பவே எல்லாம் வல்ல இறைவனும் அன்புடையார்க்கு மட்டுமே அணுக்கனாய் நின்று அருள் புரியும் நீர்மையனாவன். இவ்வாற்றால், அன்புநிலை யொன்றே தவநிலையினும் மேற் பட்டதாகும். அன்புநிலையொன்றே தவநிலைக்கு மெட் டாத முதல்வனைத் தன்னகப் படுத்து வதாகும். தவநிலையோ முயற்சி யுடையது. அன்புநிலையோ முயற்சியற்றது முயற்சி யுடையார் முயன்ற பொருளைப் பெறுவது இயல்பாயிருக்கத் தவமுயற்சி யுடையார் கடவுளை யெய்தாமையும் அத்தகைய முயற்சி யில்லாத அன்பராயினார் ஆண்டவனைக் காண்டலும் வியக்கற் பாலனவா மல்லவோ? ஆயினும் முயற்சியாற் பெறப்படு வன வெல்லாம் காலத்தி னெல்லையிலும் இடத்தினெல்லை யிலும் அகப்பட்ட வரம் புடைப் பொருள்களாய் அழியுந் தன்மைய வாய் இருத்தலால், காலத்தைக் கடந்தும் இடத்தைக் கடந்தும், அழிவின்றியும், மாறுதலின்றியும் வரம்பிலனாய் விளங்காநின்ற முதல்வனை அத்தகைய முயற்சிகள் எத்துணைச் சிறந்தனவா யிருப்பினும் அவை யாங்ஙனஞ் சென்று பற்றும்? மற்று, அன்போ அத்தகைய முயற்சியின் பாற் படிவதின்றிக் காலத் தானும் இடத்தானும் வரையறுக்கப் படாததாய் அழிவின்றி மாறின்றி என்றும் ஒருபடித்தாய் நிறைந்து நிற்கும்வழி, அந்நிலையில் தன்னோடொத்த இறைவனை அது தான் பெற்று இன்புறுதலும் இயற்கை யாகும். இப் பெற்றித்தாகிய பேரன் பால் விழுங்கப் பெற்றவர் எவ்வகைச் செயலுமின்றி எவ்வகை முயற்சியுமின்றிப் பெருஞ் சோம்பராய்க் கிடப்பினும் அவரே இறைவன்றன் அருட்பெரு விளக்கங்களெல்லாம் எளிதிற் காண்பர் என்பது தெரிப்பார், சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே சோம்பர் கிடப்பது சுத்த வெளியிலே சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடம் சோம்பர் கண்டார்அச் சுருதிக்கட் டூக்கமே என்றும், தூங்கிக் கண்டார்சிவ லோகமுந் தம்முள்ளே தூங்கிக் காண்டார் சிவ யோகமுந் தம்முள்ளே தூங்கிக் கண்டார்சிவ போகமுந் தம்முள்ளே தூங்கிக் கண்டார்நிலை சொல்வ தெவ்வாறே. என்றுந் தெய்வத் திருமூலரும் அருளிச் செய்தார். ஆகவே, தவ முயற்சியில் நின்ற முனிவரர்க்கும் புலனாகாத முதல்வன் அத்தவ முயற்சிக்கும் மேம்பட்ட பேரன்பின் பெருக்கான மாணிக்க வாசகப் பெருமானாலி ழுக்கப்பட்டு அவர்க்கு எளி வந்து அருள்புரிந்தது பெரிதும் பொருத்தமே யாமன்றோ? எல்லாம் வல்ல இறைவன் இங்ஙனமாக நான்முகன் முதலான சிறந்த தேவர்களுக்குந் தவமுயற்சியிற் சிறந்த முனிவர்களுக்கும் எட்டாத அருவத் தன்மையனா யிருந்தும், தன்னை அன்பாற் குழைந்து குழைந்துருகும் மெய்யடியார்க்கு மிக எளியனாய் உருவு கொண்டு வந்து அருளும் இயல்பினன் என்பதை நம் சமயாசிரியர் மெய்வரலாறுகளில் மட்டுமே ஐயமின்றித் துணியப் பெறுகின்றோம். நம் சமயாசிரியர்களுள்ளுந் திருஞான சம்பந்தப் பெருமானுக்கும் மாணிக்கவாசகப் பெருமானுக்கும் இறைவன் தன் உண்மையுருவில் வந்து அருள் செய்தமையே மிகவும் போற்றற்பாலதொன்றாயிருக்கின்றது. உலகியலறிவு நிரம்பப் பெறாத மூன்றாண்டுச் சிறு குழந்தையாயிருந்த போதே திருஞான சம்பந்தப் பெருமான் இறைவனையும் இறைவியையும் நேரேகண்டு அவர் தம்மால் அருட்பால் ஊட்டப் பெற்று எல்லாம் வல்ல ஞானாசிரியராய்த் திகழ்ந்து தாம் பெற்ற அவ் வருளமிழ்தத்தைச் செந்தமிழ்த் தெய்வப் பாக்களில் நிரப்பி அவை வாயிலாக நம்மனோரெல்லாம் அவ்வருளமிழ்தத்தைப் பருகி உய்யச் செய்தனரன்றோ? அங்ஙனமே மாணிக்கவாசகப் பெருமானுந் தாம் அமைச்சராயிருந்த காலத்தை இறைவனையும் இறைவியையும் நேரேகண்டு அவர் தம்மால் ஆட்கொள்ளப் பட்டனரென்பது, கருவாய் உலகினுக்கு அப்புறமாய் இப்புறத்தே மருவார் மலர்க்குழன் மாதினொடும் வந்தருளி அருவாய் மறைபயில் அந்தணனா யாண்டுகொண்ட திருவான தேவற்கே சென்றூதாய் கோத்தும்பி. நானும்என் சிந்தையு நாயகனுக் கெவ்விடத்தோம் தானுந்தன் தையலுந் தாழ்சடையோ னாண்டிலனேல் வானுந் திசைகளு மாகடலு மாயபிரான் றேனுந்து சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ. என்று அவர்தாமே அருளிச் செய்த அருமைத் திருப் பாட்டுக்களால் இனிது விளங்கா நிற்கின்றது. இவ்வாறு கடவுளை நேரே கண்டதும், கண்ட அக்காட்சி யினைக் கண்டவர்தாமே தெளித்தெடுத்துச் சொல்லுதலும் நம் ஆசிரியன் மாரிடத்தன்றி மற்றச் சமய குரவர்கள் பாற் சிறிதுங் காண்ட லியலாது. நம் ஆசிரியன்மார் கடவுளை நேரேகண்ட அருங்காட்சிகளே உண்மையானவை. இவ்வாறாகவும் ஆரியர் வழிப்பட்ட பார்ப்பனர்கள் கடவுள் அதோ அவருக்கு நேரே வந்து அருள் புரிந்தார். இதோ இவருக்கு நேரே வந்து அருள் புரிந்தார் என்னும் பொய்யான புராணக்கதைகள் பலவற்றைக் கட்டிவிட்டு அவைதம்மால் நம் சமயாசிரியர் கடவுளைக் கண்ட அருங்காட்சிகளையும் மிக எளியனவாகவுஞ் சிறப்பில்லாதன வாகவும் பலர் கருதும்படி செய்து விட்டனர். என்றாலும், நம்மாசிரியன்மார் கண்ட தெய்வக் காட்சிக்கு அவர்தம் அருட்செம் பாடல்களிலேயே மெய்ச்சான்றுகள் இருத்தல் போலப் புராணகதைகளிற் கடவுளைக் கண்டவராகச் சொல்லப்படுவோர் தங் காட்சிகளுக்கு மெய்ச்சான்றுகள் சிறிதுமில்லையென்பதை உண்மையாராய்ச்சி செய்பவர்கள் தெளிந்து கொள்ளல் வேண்டும். மாணிக்கவாசகப் பெருமான் எவ்வளவு உறுதியாக எவ்வளவு உண்மையாக இறைவனும் இறைவியுந் தமக்குக் காட்சியளித்ததை மேலைச் செய்யுட்களில் எடுத்துக்காட்டி, எம்போல்வார்க்குங் கடவுளின் எளிவந்த அருட்டன்மையை விளக்கியிருக்கின்றார்! இனி, மாணிக்கவாசகப் பெருமான் கண்ட இத்தெய்வக் காட்சியானது அதனைக் காண்டலில் வேட்கை மீதூர்ந்து விழிப்பாயிருந்த ஏனை எத்திறத்தார்க்கும் எட்டாதாயிற் றென்றும், அங்ஙனம் விழிப்பாயிருந்தார்க்கு உள்ள முயற்சியுந் தகுதிப் பாடுஞ் சிறிதுமில்லாத் தமக்கு அத் தெய்வக் காட்சி தோன்றுவதாயிற்றென்றும், அவ்வாறு தோன்றிய அத்தெய்வக் காட்சியாற் பிறரெவர்க்குங் காட்டப்படாத அருட்பெரும் புதுமைகளெல்லாம், பிறரெவருங் கேளாத அருமறைப் பொருள்களெல்லாந் தமக்குக் காட்டப்பட்டன, சொல்லப் பட்டன என்றும், நாட்டார்கள் விழித்திருக்க ஞாலத் துள்ளே நாயினுக்குத் தவிசிட்டு நாயினேற்கே காட்டா தனவெல்லாங் காட்டிப் பின்னுங் கேளா தனவெல்லாங் கேட்பித் தென்னை மீட்டேயும் பிறவாமற் காத்தாட் கொண்டா னெம்பெருமான் செய்திட்ட விச்சை தானே. என்னுஞ் சொற்றொடர்களால் நன்கெடுத்து அருளிச் செய்திருக்கின்றார். இன்னும், இத்திருப்பாட்டின்கண் நாயினுக்குத் தவிசிட்டு நாயினேற்கே, காட்டாதனவெல்லாங் காட்டி என்று அடிகள் தம்மை நாயினுக்கு ஒப்பிட்டுச் சொல்லி இருப்பதன் நுட்பமும் உற்று நோக்கற்பாலதாகும். எத்துணையும் பெரிய இறைவன் எத்துணையுஞ் சிறிய மக்கட்குத் தானே வலியவந்து தனது பேரருளை வழங்கும் பேரிரக்கத்தின் இயல்பையும் அப் பேரருளைப் பெறுவாரான மக்களின் பிறப்பிழிபையும் நன்கு விளங்க வைத்தற் பொருட்டு மக்களை நாய்ப்பிறவிக்கு ஒப்பிடு வாராயினார். நாய்ப்பிறவியினிடத்து நன்றியறித லாகிய ஒரு சிறந்த இயல்பு இருப்பினும், அதனிடத்துக் காணப்படும் மற்றைப் பல இயல்புகள் மிக இழிந்தன வாயிருக்கின்றன. எல்லா உயிர்க்கும் பசியுங் காமமும் இயல்பாகவே அமைந்துள்ளன; என்றாலுஞ், சில சிற்றுயிர்கள் அப்பசியைத் தீர்த்துக் கொள்ளும் முறையிலுங் காமத்தைத் தீர்த்துக் கொள்ளும் முறையிலும் அன்பும் நாகரிக ஒழுக்கமும் வாய்ந்தனவாயிருக்கின்றன; மற்றைச்சில உயிர்களோ அத்தகைய அன்பும் நாகரிகமும் வாயாதன வாயிருக்கின்றன. இவ்வகையிற் காக்கையின் நடையானது மிகவும் பாராட்டற் பாலதாகும். யாங்ஙனமெனின், ஒரு காக்கையானது தனது கொடும்பசியினைத் தீர்க்கும் இரையினைக் கண்டவிடத்தும், அஃது அதனைத் தானாகவே உண்ணாது! தன்னினமான மற்றைக் காக்கைகளையுங் கூவி யழைத்து அவற்றோடு ஒருங்கிருந்து அதனை உண்ணாநிற்கும். இவ்வாறு தன் இனத்தோடுண்ணும் இச்சிறந்த இயற்கையை ஏனைப் பல்லுயிர்களிடத்துக் காண்டல் அரிதினும் அரிது. இங்ஙனமே, தன் காமத்தைத் தீர்க்க அது தன் துணை யோடன்றிப் புணராதும், அங்ஙனம் புணருங்காலும் பிறவுயிர் களின் கண்ணிற் படாதும் ஒழுகும் இயற்கையையும் பிற சிற்றுயிர் களிடத்துக் காண்டல் அரிது. ஆனால் நாய்ப் பிறவியிலோ இத்தகைய அன்பும் இத்தகைய நாகரிகமுங் காணப்படுதல் சிறிதுமில்லை. ஒரு நாய் தனக்குக் கிடைத்த எச்சிற் சோற்றைத் தான் விரைந்து கௌவி உண்ணுங்காலையில், தன் மருங்கே பிறநாய்களைச் சிறிதும் அணுகவிடாமல் உறுமும்; அல்லது அவை அணுகுமாயின், அவற்றைச் சண்டையிட்டுத் துரத்தும். இவ்விழிந்த இயற்கையோடு, ஆணும் பெண்ணுமாய்ப் புணருங் காலத்தும், பலருங்காணப் புணர்ந்து துன்புற்று சிறுவர்களால லைக்கப்படுதலுங் காண்கின்றோம். மேலும், நாய்ப்பிறவி யானது எளிதிலே சொரியும் புண்ணுங்கொண்டு புழுத்து அழிவதாயும் உள்ளது. இங்ஙனமாக மக்களினுந் தாழ்ந்த சிற்றுயிர்ப் பிறவிகளுள் நாய்ப்பிறவியினும் இழிந்ததொன் றனைக் காண்டல் யாண்டும் இயலாது. ஆனால் ஆறறிவு வாய்ந்த மக்கட்பிறவி எடுத்தாருட் பெரும்பாலாரோ நாய்ப்பிறவியிற் காணப்படும் இழிந்த இயற்கை மூன்றும் உடையவராயிருக்கின்றனர். தமக்குக் கிடைத்த உணவைத் தாம் உண்ண நேருங்காலத்திற் பசித்துவரும் ஏனையோரைத் தம்பால் அணுகவிடாமற் கதவடைத்துக் கொண்டு தாமாகவே இருந்துண்கின்றனர். ஒரோ ஒருகால் தமக்குரிய சுற்றத்தவரோடு உடனிருந்து அவர் உண்ணுதலையுங் காண்கின்றோமே என்றால், மக்கட் பிறவி எடுத்தாரெல்லாம் ஒரே வகையான உடம்பினமைப்பும் ஒரேவகையான பகுத்தறிவுணர்ச்சியும் உடையராயிருக்க, அப்பெருந் தொகையினரில் ஒருசிலரைத் தமக்குச் சுற்றத்தவ ரென்றும், ஏனைப்பலரைத் தமக்குச் சுற்றமல்லாதவரென்றும், ஒரு சிலரை உயர்ந்த சாதியாரென்றும், ஏனைப்பலரை இழிந்த சாதியாரென்றுந், தமக்குள்ளே பலபிரிவுகளையும், பல வேற்றுமைகளையுந் தாமாகவே கற்பித்துக் கொண்டு, உயர்ந்த நோக்கமும் உயர்ந்த செயலுமின்றி வெறுஞ் சோற்றுப் பேச்சுப் பேசிப் பெருஞ் சோற்றுச்சண்டையிடுதலையும், அதனால் ஒன்றுகூடி உழைத் தலும் பொது நன்மைக்காகப் பாடுபடுதலும் இலராய் வாணாளை வீணாளாய்க் கழித்து மாள்கின்றன ராதலின், அன்பில்லா இத்தகையமக்கட் பிறவி நாய்ப்பிறவியோ டொப்ப இழிந்ததாத லைக் காண்கின்றன மல்லமோ? இங்ஙனமே அவர்கள் காமப்பசிதீர்க்க முயலும் முயற்சி யிலும் ஒரு பெண்னை அவளுக்கேற்ற கணவனொடு பொருத்தா மலும், ஓராணை அவனுக்கேற்ற மனைவியொடு பொருத்தா மலுந், தத்தம் இனத்திலேயே தத்தஞ் சுற்றத்திலேயே பெண் கொள்ளலுங் கொடுத்தலும் வேண்டுமெனத் தாந்தாமே கற்பித்துக் கொண்ட போலிக் கட்டுப்பாட்டாற், கற்றுவல்ல ஓர் இளைஞனுக்குக் கல்லாதவளொருத்தியையுங், கற்றுவல்ல ஒருத்திக்குக் கல்லாதானொருவனையும், அழகுமிக்க ஒருவனுக்கு அழகில்லாளொருத்தியையும், அழகுமிக்க ஒருத்திக்கு அழகில் லான் ஒருவனையும், பேதைப் பருவச் சிறுமிக்குக் காதலில்லாக் கிழவனையும் பிணைத்துவிட்டு அவர் தம்மையெல்லாஞ் சாகுமளவும் நாய்போற் சண்டையிட்டு நலமிழந்து நிற்கச் செய்கின்றனர்களல்லரோ? இன்னும் பலர் பிறர்க்கு அடிமையாகி அவரிட்ட எச்சிற் சோற்றையுண்டும், அவர்பொருட்டு அவர்க்குப் பகையாயினா ரொடு போர் செய்து அவர்களைச் செந்நீர் ஒழுக மடித்தும் நாய்ப் பிறவியோடொப்ப நாட்கழிக்கின் றார் களல்லரோ? இன்னும் பற்பலர் பிறவுயிர்களின் துன்பத் தைச் சிறிதுங் கருதிப் பாராது, அவ்வுயிர்களைக் கொன்று அவ்வாற்றால் வரும் ஊனையுண்டு உண்டு வன்னெஞ்சராய் வாணாட் கழிக்கின்றன ரல்லரோ? மேலும் பலர் தமக்கியைந்த மனைவியரோடு அன்பால் அளவளாவி வாழாது வரை துரையின்றி வேசி யரையும் பிறரையும் கூடிக்களித்துப் புண்ணும் படையுந் தொழுநோயுங் கொண்டு புழுத்தழிகின்றன ரல்லரோ? இவ்வாறெல்லாம் மக்கட் பிறவியெடுத்தார் அப்பிறவிப் பேற்றைப் பாழாக்கி நாய்ப் பிறவியோடொப்ப நலனிழந்து நிற்றலை நாம் நம் கண்ணெதிரே காண்கின்றன மாகலின், இத்தகைய மக்கட் பிறவியானது நாய்ப் பிறவி யோடொப்ப இழிந்ததாதல் கண்டே, நம் பெருமான் மாணிக்க வாசகர் இம்மக்கட் பிறவியை நாய்ப்பிறவியோடொப்புமைப் படுத்திக் கூறுவாராயினர். அங்ஙனங் கூறியவிடத்தும், அத்தன்மையரான மக்களைத் தாம் இழித்துப் பேசுதற்கு மனம் பொருந்தாராய், அவர்களின் இயற்கையைத் தம்மேலேற்றித் தம்மையே இழித்துப் பேசி அவர் பாடியிருப்பது மிகவும் பாராட்டற் பாலதாயிருக்கின்றது. கடவுளிடத்து மெய்யன்பு பூண்டு ஒழுகும் அருளாளர்கள் எல்லா உயிர்களிடத்தும் எல்லா மக்களிடத்தும்--அவர்கள் எத்துணை இழிந்தோராயினும் அல்லது எத்துணை உயர்ந்தோ ராயினும் அவர்கள்பால் விருப்பு வெறுப்புக் கொள்ளாது, அன்பும் இரக்கமுமே கொண்டு ஒழுகுவரென்பதற்கு ஈது ஒரு பெருஞ் சான்றாய் விளங்குகின்றது. மாணிக்கவாசகர் மக்களு டம்பில் தோன்றினாராயினும் அவர் ஏனை மக்களைப் போலாது, அம் மக்களின் வேறான தனிப் பெருஞ்சிறப்புந் தனிப்பெருந் தெய்வமாட்சியும் உடையரென்பது அவரருளிச் செய்த திருவாசகத்தை ஒரு சிறிது உற்று நோக்குவார்க்கும் நன்குபுலனாம். மாணிக்கமுங் கூழாங்கல்லுங் கல்வடிவில் ஒத்திருப்பினும், மாணிக்கங் கூழாங்கல்லின் வேறான தனி ஒளியும் அழகும் பெருவிலையும் உடைத்தாதல் போலவும், நெகிழ்ந்தவடிவில் நீருந் தேனும் ஒத்திருப்பினுந் தேனானது நீருக் கில்லாத தீஞ்சுவையுந் தெளிவும் நிறனு முடைத்தாதல் போலவும், ஒளியுடன் மின்னும் வான்மீன்களும் முழுமதியும் ஒரு சிறிது ஒப்புமையுடையவாயினும் முழுமதியானது வான் மீன்களுக்கு இல்லாக் குளிர்ந்த தனிப்பேரொளியும் அழகு முடைத்தாய் விளங்குதல் போலவும், மாணிக்கவாசகப் பெரு மானும் ஏனைமக்களுக்கில்லா அருட்பேரொளிவீசி அருள் விசும்பிற் குறையாது திகழும் முழுமதியமே ஆவரென்பது திண்ணம். எல்லாம்வல்ல சிவத்தைக்கண்டு சிவமாயே அமர்ந்த இப்பெருந்தகையாரே தம்மோடொத்த மக்களுடம்பிலிருக்கும் உயிர்களை ஒருசிறிதும் இழித்துப் பேசுதற்கு மனம் ஒருப் படுதலில்லாராய் அவர்க்குள்ள குறைபாடுகளை யெல்லாந் தம்மேலேற்றிக் கொண்டு, இறைவனைக் குறையிரந்து அழுதழுது பாடாநிற்க, எல்லாக் குற்றங்களுமுடைய மக்களுட் சிலர் இப் பெருந்தகையாரையும் இவரை யொத்த மற்றைப் பெரியார்களையும், பொறுமையும் நுண்ணறிவுங் கொண்டு ஆராய்ந்து பார்க்கும் நல்வினையும் நல்லறிவுமிலராய்த் தமக்குத் தோன்றியவாறெல்லாம் இகழ்ந்து பேசிப் பழிபாவங்களுக்கு ஆளாய் ஒழிகின்றனர். அது கிடக்க. இனி, எல்லாவகையாலும் நாய்ப்பிறவியோடொத்த மக்கட் பிறவியினரையும் இறைவன் அருவருத்துத் தள்ளி விடாமல் அவரையும் பதப்படுத்தி அவர்க்குந் தனது அருட் பெருஞ் செல்வத்தை வழங்கும் அருள்வள்ளலாய்த் திகழும் பெற்றியினை மாணிக்கவாசகர் நாயினுக்குத் தவிசிட்டு நாயி னேற்கே, காட்டாதனவெல்லாங் காட்டி என்னும் முழுமணிச் சொற்றொடரால் நன்குதெருட்டி அருளினார். கடவுள் எல்லாப் பொருள்களையும் எல்லா உயிர்களையுங் கடந்து நிற்குந் தன்மையர் என்னும் பொது இலக்கணத்தை உலகத்தின்கட் பரந்துபட்டுக் கிடக்கும் எல்லாச் சமயத்தவரும் உடன்பட்டுக் கூறுவாராயினும், அங்ஙனங் கடந்த நிலையினனாகிய இறைவன் மக்களாகிய நம்பொருட்டு நம்போல் வடிவு கொண்டு வந்து நம்மை ஆட்கொள்வன் என்னும் உண்மையினைக் கண்டறிந்தா ரல்லர். அவ் வரும் பேருண்மையானது மாணிக்க வாசகர் திருஞானசம்பந்தர் முதலான பெருந்தகையார் ஒருசிலர்க்குக் கட் புலனாய்த் தோன்றி அவரை ஆட்கொண்ட மெய் வரலாறுகளி னாலே தான் ஐயுறவுக்குச் சிறிதும் இடனின்றி நன்கு தெளியப் படுவதா கின்றது. இவரல்லாத எனையோர் கடவுளைக் கண்டார், கண்டு அவனருளை முற்றப்பெற்றார் என்பதற்குத் தக்க சான்று களில்லாமையால் ஏனைச் சமயத்தார் கூறுவன எல்லாம் வெறுங்கதைகளாகவே இருக்கின்றன. மற்று, மாணிக்கவாசகர் தாங்கண்ட கடவுட் காட்சியி னையும் அக்காட்சியாற் பெற்ற அரும்பெரும் பேறுகளையுந் தமது திருப்பாட்டில் வலியுறுத்திக் கூறி எம்போல்வாரை வாழ்வித்த அரும்பேருதவியினை எங்ஙனம் புகழ்வேன்! எவ்வாறு வாழ்த்துவேன்! எங்கும் எக்காலத்துங் காணலாகாத காட்சி யினைத் தாங் காணக் கிடைத்த அஞ்ஞான்றே, இதற்குமுன் தாங் கண்டிராத மேலுலகக் காட்சிகளையும், ஆங்காங்கு இறைவனருள் விளக்கந் திகழும் வகைகளையும், உயர்பதம் பெற்ற சான்றோர் அவ்வுயர்பதங்களில் இன்புற்று வைகும் வரலாறு களையுங், குழலொலி யாழொலியினும் இனிய தீங்குரலால் அச்சான்றோர் உரையாடும் மெய்ப் பொருள்களையுந் தாம் கண்டுகேட்ட புதுமைகளைக் குறிப்பாகக் காட்டாதன வெல்லாங் காட்டி கேளாதன வெல்லாங் கேட்பித்து எனனுஞ் சொற்றொடர் களால் அடிகள் அறிவுறுத்தருளிய தனை அன்பர்களே உற்றுக் காண் மின்கள்! இவ்வளவு உறுதியோடு, இவ்வளவு உண்மை யோடு, இவ்வளவு மனவுருக்கத் தோடு, அருளிச்செய்த அடி களின் அருளுரைகளை நல்வினை வாய்ந்த எந்த அறிஞனேனும் எள்ளளவும் ஐயுறுதற்கு உடன் படுவனோ? கூறுமின்கள்! இத்துணை உறுதியான, இத்துணை மெய்யான தெய்வ மொழி களை வேறெங்கேனும், வேறெந்த மொழியிலேனும், வேறெந்தச் சமயத்திலேனுங் காணல்கூடுமோ ஆராய்ந்து பார்மின்கள்! இனி, எல்லாப் பொருள்களையுங் கடந்து நிற்குங் கடவுளை, எத்தகையோர் நினைவுக்குஞ் சொல்லுக்கும் எட்டாத இறைவனைச் செயற்கருந் தவங்களைச் செய்த முனிவர்களின் முயற்சிக்கும் அகப்படாத முதல்வனைக் கட்புலனாற் காணவும் அவன் திருவாய்மலர்ந்த அருமறை மொழிகளைச் செவிப் புலனாற் கேட்கவும் பெற்ற பெரும்பேறுடையார்க்கு வருவ தாகிய பெறலரும் பயன் ஈதென்பது உணர்த்துவார் என்னை மீட்டேயும் பிறவாமற் காத்தாட்கொண்டான் என்னுஞ் சொற்றொடரை அருளிச் செய்தார். பிறவிவட்டத்திற் கிடந் துழலும் உயிர்களிற் பிறவித் துன்பத்தை உணர்தற்குரிய அறிவு வாய்ந்தோர் மக்கட் பிறவியினர் மட்டுமேயாவர். என்றாலும், அடுத்தடுத்து வரும் பிறவிகளாற் பிறந்தும் இறந்தும் நோய் கொண்டுங் கவலை கொண்டும் மூத்தும் படும் அளவிறந்த துன்பங்களை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் நுகர்ந்து கொண்டே அத்துன்பங்களைத் துன்பங்களாகக் கருதாமல் இன்பங்களாக மயங்கி நினைந்து அவற்றிற் கிடந்துழலுதலையே மக்களெல் லாரும் மிக விழைந்து நிற்கின்றனர். இப்பிறவித் துன்பத்தை உள்ளத்தில் உறுத்த நினைந்து அதனினின்றும் விடு படுதலை வேண்டுவார் மிக அரியராய்க் காணப்படுகின்றனர். ஓரோ வொருகாற் பிறவியை அஞ்சி அதனை ஒழிக்க விரும்புவார் ஒருசிலர் இடையிடையே காணப்படினும், அவர்தாமும் அப்பிறவி நோய் தீர்த்தற்குரிய மெய்ம் மருந்தினை யறியாராய் மெய்யல்லாதவற்றைச் சொல்லித், தாமுந் தஞ்சொற் கேட்பாரும் அந்நோய் தீரப் பெறாது மீண்டும் மீண்டும் அப்பிறவி நோயி னாற் பற்றப்பட்டே துன்புறா நிற்கின்றனர். 4. பௌத்த சமண மதங்களின் ஒழுக்க முறைகள் பௌத்தசமயத்தைத் தோற்றுவித்த கௌதமசாக்கியருஞ் சமண் சமயத்தைத் தோற்றுவித்த மகாவீரரும் பிறவித் துன்பத்தை ஒழித்தல் வேண்டும், அதனை வேரறக்களைதல் வேண்டும் எனப் பலகாலும் வற்புறுத்திச் சொல்லி அதற்கு நல்லொழுக்க மொன்றே மருந்தாவதெனக் காட்டினராயினும், அவர் காட்டிய அம்மருந்து பிறவிநோய் தீர்க்கவல்லதன்று. யாங்ஙனமெனின், அவர் காட்டும் நல்லொழுக்கமாவன: மனத்தாற் பிறர்க்கு நல்லனவே நினைதலும் அவர்க்கு நலமாவனவே சொல்லுதலும் அவர்க்கு நன்மையாவனவே செய்தலும் என்னும் மூன்று வகையுள் அடங்கும். இவ்வாறு பிறர்நலம் பேணவே தாமுந் தூயராவர் என்பது அவர் கருத்து. இனிப், பிறர்க்கு நல்லவற்றை நினைவதென்பது என்னை யென்றாற் பிறர் படுந் துன்பங்களை நீக்குதற்குத் தக்கவழிகளை ஆராய்ந்து பார்த்தலேயாம். இனி அவ்வழிகள் தாம் யாவை யோவெனின், பிறர்துன்பங்களைக் களையுங் கொல்லாமை பொய்யாமை திருடாமை குடியாமை காமுறாமை முதலிய அறங்களேயாகும். இவ்வறங்களைச் சொல்லுதலே பிறர்க்கு நலங்கூறுவதாகும். இவ்வறங்களிற் பிறழாமல் அவர்களை அவற்றின்கண் நிலைபெறச் செய்தலே அவர்க்கு நலஞ் செய்வதாகும். இனி இவ்வாறன்றி வேறு ஏதும் நினையாதும் வேறுஏதுஞ் சொல்லாதும் வேறு ஏதுஞ் செய் யாதும் ஒழுகுவார்க்கு அவ்வொழுக்கமே தூய்மையைத் தரும்; இங்ஙனமன்றித் தம்மையும் பிறரையுந் தூய்மைசெய்தற்கு வேறு கடவுள்நினைவும் கடவுள் வணக்கமும் வேண்டா என்பதும், ஒழுக்கத்தால் தூயரானவர்க்குப் பிறவி தானே அற்றுப்போ மென் பதும் பௌத்த சமணசமயத்தார்க்கு ஒத்த கருத்தாகக் காணப் படுகின்றன. மேற்காட்டிய நல்லொழுக்கங்கள் மக்களுயிரைத் தூய்மை செய்யுமென்பது, பௌத்த சமண சமயத்தவர்க் கேயன்றி நிலவுலகத்தின்கண் பண்டுதொட்டு உள்ள பலவகை மக்கட் பிரிவினர்க்கும் பலவகைச் சமயப் பிரிவினர்க் கும் நன்கு விளங்கக் கிடந்ததொன்றேயாம். இதனை அவ்வத் தேயமக்களின் ஒழுகலாற்றானும் ஆங்காங்குள்ள சமயத்தவர் எழுதிவைத் திருக்கும் நூல்களைப் பயிலுதலானும் நன்கறிந்து கொள்ளலாம். 5. பௌத்த சமண ஒழுக்கமுறைகள் உலகத்தவரைத் திருத்தமாட்டாமை ஆனால், இந் நல்லொழுக்கங்களில் தம்மை நிலைபெறச் செய்வதும் பிறரை நிலைபெறச் செய்வதுமே கைகூடாத முயற்சியாய்த் தொன்றுதொட்டுக் காணப்பட்டு வருகின்றன. எத்தனையோ அறிஞர்களும் எத்தனையோ சான்றோர்களும் எத்தனையோ முனிவர்களும் எத்தனையோ சமயகுரவர்களுங் காலங்கடோறுந் தோன்றித் தோன்றி நல்லொழுக்க முறை களையும் அவற்றின் நலங்களையும் மக்கட்குப் பலகாலும் பலவிடத்தும் பலவழியும் எடுத்தெடுத்துச் சொல்லிச் சொல்லி மிகமிக வற்புறுத்தியும் எண்ணிறந்த மக்களுள் விரல்விட்டு எண்ணிச் சொல்லத்தக்க ஒருசிலரன்றி மற்றைப் பெரும் பகுதியோரெல்லாம் நல்லொழுக்கத்தின் கண் நிலைநிற்க மாட்டாராயுந் தீயவொழுக்கத்தையே விரும்பிச் செய்வாராயும் நடந்துவருதலை இன்றுகாறுங்கண்டு வருகின்றனமல்லமோ? ஆகவே, நல்லொழுக்கமானது மக்களைப் புனிதப்படுத்து மென்பது உண்மையேயாயினும், அந்நல்லொழுக்கத்திற் பிறழாமல் மக்களை அதன்கண் நிலைப்பிக்கச் செய்யும் பேராற்றல் ஒன்று தோன்றினாலன்றி அந்நல்லொழுக்கம் மக்களுக்குச் சிறிதும் பயன்றராதென்பதனை இனிது காண் கின்றாமல்லமோ? எனவே, நல்லொழுக்கத்தைக் கற்பிப்பதோடு அந்நல்லொழுக்கத்தில் நிலைப்பிக்கும் ஆற்றலையும் உடன் வருவித்தலே இன்றியமையாது செயற்பால அறிவுமுறையாகும். மேற்காட்டிய பௌத்த சமண சமயத்தவர் ஏனையோரைப் போல் நல்லொழுக்கத்தை மட்டும் எடுத்துக் காட்டினரேயல்லா மல் அந்நல்லொழுக்கத்தில் நிலைப்பிக்கும் ஆற்றலைக் காட்டி னாரல்லர். அதனாலன்றோ அவர் காட்டிய நல்லொழுக்க அறிவு பயன்படாதொழிந்ததோடு அவர்தம் சமயத்தைப் பின்பற்றுவார் தொகையும் இவ்விந்தியநாட்டின் கண் வரவரச் சுருங்கி ஒழிவதாயிற்று. இந்திய நாட்டுக்குப் புறம்பேயுள்ள இலங்கையிலும் பர்மா, சீயம், ஐப்பான், சீனம் முதலிய இடங்களிலும் பௌத்த சமயத்தைப் பின்பற்றுவோர் தொகை மிகுதியா யிருப்பினும் அவர்கள் பேரளவிற் பௌத்தர்களாகக் காணப்படுகின்றனரேயன்றி, உண்மையிற் பௌத்த சமயக் கோட் பாடுகளைச் சிறிதுந் தழுவினவர் களாயில்லை. எந்த உயிர்க்கும் எந்த ஏதுவினாலும் எவ்வகைத் தீங்கும் செய்யலாகாதென்று பௌத்த சமயத்தைத் தோற்று வித்த கௌதம சாக்கியர் தம்வாழ்நாள் எல்லையளவும் மடித்து மடித்துச் சொல்லி வந்தாராயினும், மேற்கூறிய நாடுகளில் இப்போதுள்ள பௌத்த சமய மக்கள் அவர் சொன்ன அறிவுரையைச் சிறிதாயினும் பின்பற்றி நடப்பவர்களாய் இல்லை. அவர்களெல்லாரும் எந்தவகையான சிற்றுயிரையுங் கொன்று அவற்றின் ஊனைத் தின்பதில் மிகுந்த முயற்சி யுடையவர்களா யிருக்கின்றார்கள்; அதுவேயுமன்றித், தம் போன்ற மக்களையுஞ் சிறிது சினம் வந்தாலும் முன்பின் பாராமற் குத்திக் கொலை செய்து விடும் இரக்கமில்லா வன்னெஞ்சர் களாயு மிருக்கின்றார்கள்; அவர்க் குள்ள காமவேட்கையோ, அவ்வேட்கையால் உண்டாகுந் தீங்கு களோ எம் ஒரு நாவினாற் சொல்லியடங்கா. இங்ஙனமாக இப் பௌத்த சமயமக்கள் வரைதுறையின்றித் தீய செயல்களைச் செய்துவரும்போது இவர்களைப் பௌத்த சமயிகள் என்று சொல்லலாமோ? அறிஞர்களே கூர்ந்து பார்மின்கள்! இவ் விந்திய நாட்டின் கண்ணுள்ள சைவசமயத்தவரிற் பெரும் பாலார் உயிர்க்கொலை செய்யாதவர்களாயும், ஊனுண்ணாத வர் களாயுங், காம வேட்கை மிகுந்தில்லாதவர்களாயும், அன்பும் இரக்கமுந் தூய்மையும் வாய்ந்து இனிய வாழ்க்கை உடையவர் களாயிருக்க, மற்றை அயல்நாடுகளிலுள்ள பௌத்தரும் பிறரும் கொலைக்கஞ்சாக் கொடுநெஞ்சர்களாய் இருப்பதேன்? சைவ சமய ஆசிரியர்களும் நல்லொழுக்கத்தை எல்லாருங் கடைப் பிடித்தல் வேண்டுமென்று வற்புறுத்திக் கூறியிருக்கின்றார்கள். பௌத்த சமய ஆசிரியர்களும் அங்ஙனமே நல்லொழுக்கத்தை வலியுறுத்திப் பேசியிருக்கின் றார்கள். ஆனாற், சைவசமய மக்கள் மட்டும் இன்று காறுங் கொல்லாமை, புலாலுண்ணாமை முதலான அறவொழுக் கத்தின்கண் மாறாமல் நின்று அமைதி யாய் வாழ்ந்துவரப், பௌத்தசமய மக்களோ அவ்வொழுக்கத் தின் கட் சிறிதும் நிலைநிற்க மாட்டாராய் வன்னெஞ்சராய் வாழ்வதேன்? இப்போதுள்ளபடி இவ்விருதிறத்தார் நிலை களையும் சீர்தூக்கி ஆராய்ந்து பார்ப்போமாயின் ஒரு திறத்தார் தூயவொழுக்கத்தின்கண் நிலைபெற்று வாழ்தற்கும், மற்றொரு திறத்தார் அதன்கண் நிலைபெற்று வாழாமைக்கும் முதன்மை யான ஏது வேறொன்று இருக்க வேண்டுமென்பது புலனாகின்ற தன்றோ? வெறு நல்லொழுக்கத்தை மட்டும் அறிவுறுத்தும் பௌத்தசமயமானது தன்மக்களை நல் லொழுக்கத்தின் கண் நிலைப்பித்துக் கொள்ளமாட்டா தாயின், வெறு நல்லொழுக் கத்தை மட்டும் எடுத்துரைக்கும் எந்தமதமும் மக்கட்குச் சிறிதும் பயன்படாதென்பது தெற்றென விளங்குகின்ற தன்றோ? மற்றுச், சைவசமயமோ நல்லொழுக்கத்தை வலியுறுத்திச் சொல்வதோடு அமையாது, அந்நல்லொழுக்கத்துக்குத் தலைவனும், அந்நல் லொழுக்கத் தின் பயனைக்கொடுப்பவனும் அவ்வொழுக்கத்தி னின்று தவறுவாரைத் துன்புறுத்துபவனும் ஆகிய எல்லாம் வல்ல முழுமுதற்கடவுள் ஒருவன் உளன் என்பதையும், அவன் பால் எல்லாமக்களும் அச்சமும் அன்புங் கொண்டு ஒழுகுதல் இன்றியமையாததென்பதையும் உடன் வலியுறுத்திச் சொல்லா நிற்கின்றது. அதற்கேற்றபடியாகவே சைவசமய நன்மக்களும் இறைவன்பால் அச்சமும் அன்புங் கொண்டு ஒழுகுதலின் அறவொழுக்கத்தின் வழுவாராய் அமைதியாய் வாழ்ந்துவரா நிற்கின்றனர். எனவே, அறவொழுக்கத்தை வற்புறுத்துவதோடு, அவ்வறவொழுக்கத் தில் வழுவா தொழுகும் ஆற்றலைத்தருங் கடவுள் நினைவில் மக்களை நிலைபெறச் செய்தலும் இன்றி யமையாததாகும். இவ்வாறு செய்யவல்ல மதமே மக்கள் வாழ்க்கைக்கு மெய்யாகவே பயன்படுவதுடன், தானும் என்று மழியாதாய் நீடுநின்று விளங்கும். 6. சைவ சமயம் நல்லொழுக்கத்திற்குக் கடவுள் உணர்ச்சி முதன்மை என்கின்றது இவ்வுண்மையை நன்கு ஆராய்ந்து உணரமாட்டாதார் சிலர் அறவொழுக்கத்திற்குங் கடவுள் நினைவுக்கும் யாது தொடர்பு உளது? கடவுளை எவருங் காணாதிருக்கையிற் கடவுளை நினைத்தல் எங்ஙனம்? அங்ஙனம் நமது நினைவுக்கு எட்டாத ஒரு பொருளை நினைத்தலால் நாடோறும் நமது நினைவோடு கூடிச்செய்யும் ஒழுக்கங்களைச் சீர்திருத்துதல் எப்படி? என்று எல்லாம் வினாவி நல்லொழுக்கத்தில் நிற்றற்குக் கடவுள் நினைவு ஒரு சிறிதும் வேண்டாம் எனக் கிளந்து ஆரவாரம் புரிகின்றனர். ஆதலின், அவர்தங் கூற்றினை ஆராய்ந்து அது பொருந்தாமையைச் சிறிது விளக்கிக் காட்டுவாம். 7. நல்லொழுக்கம் இன்னது என்னும் ஆராய்ச்சி இந் நிலவுலகத்தின்கண்ணுள்ள மக்களெல்லாரும் பசி காமம் என்னும் இருபெரு வேட்கையுடையவர்களாய் அவ் வேட்கைகளை நிறைவேற்றிக் கொள்ளுதலிற் பெரு முயற்சி யுடையவர்களா யிருக்கின்றனர். தமது பசிவேட்கையைத் தணித் தற்கு உணவுப் பண்டங்களைத் தேடுதலிலுந், தேடிய அவற்றாற் பசி தணிந்தபின் எழும் காம வேட்கையைத் தணித்தற்குத் தமக்கி யைந்த மகளிரைக் கூடுதலிலுமே இவ்வுலகத்தின்கண் உள்ள எல்லாமக்களின் எல்லாவகையான முயற்சிகளும் வந்தடங்கு கின்றன. தமது வாழ்க்கைக்கு வேண்டும்பொருளைத் தேடித் தொகுத்துக் கொள்வதிலும், தமக்கிசைந்த மகளிரைக் கூடுத லிலும் முயன்று முனைந்து நிற்கையில், மக்களெல்லாருந் தமது நலத்தையே கருதி நிற்கின்றாரல்லாமற் பிறர்நலத்தை ஒரு சிறிதுங் கருதுகின்றாரில்லை. தாம் செய்யும் இவ்விருவகை முயற்சிக்கும் இடையூறாய் இருப்பவர்களைக் காலமும் இடமும் வாய்த்தால் தொலைத்துவிடுதற்குஞ் சிறிதும் பின் வாங்கு கின்றார்களில்லை. எவ்வளவு அறிவிற் சிறந்தவர்களும், எவ்வளவு நல்லியற்கையிற் சிறந்தவர்களும், எவ்வவு நன்னிலை யிற் சிறந்தவர்களுந் தமது கருத்து நிரம்பும் பொருட்டுத், தமது வாழ்க்கை இன்பமாய் நடைபெறும் பொருட்டுப் பிறரது கருத்துக்கு மாறாய்ப் பிறரது வாழ்க்கைக்குத் துன்பம் விளைப்பவர்களாய் ஒழுகிவிடுகின்றனர். மிகுந்த செல்வமும், அதனால் மிகுந்த ஆட்களின்றுணையும், அதனால் மிகுந்த வலிமையும் படைத்தவர்கள் எத்தகைய தீயசெயல்களையுந் தாம் விரும்பியபடியே செய்துவிடுகின்றார்கள்! எத்தனை குடி களையுந் தாம் வேண்டியபடியே கெடுத்துவிடுகின்றார்கள்! எத்தனையோ நன்மக்களின் வாழ்க்கைகளையெல்லாம் பாழாக்கிவிடுகின்றார்கள்! தமக்கு மேற்பட்ட ஆற்றலும் அறிவுஞ் செல்வமும் நிலைமையும் வாய்ந்தவர்கள் இல்லாதபோது, எவரும் எத்தகைய தீங்குஞ் செய்யப் பின்னிடாமையினையும், அந் நான்கினுந் தமக்கு மேற்பட்டவர்கள் தம்பக்கத்தே இருக்கும்போது அவர்கட்கு அஞ்சி நல்லராய் ஒழுகுதலையும் மக்கள் வாழ்க்கையில் நாம் நாடோறுங் கண்டுவருகின்றனம் அல்லமோ? இவ்வியற்கையை உற்றுநோக்குங்கால், மக்கள் நல்லொழுக்கமுடையவர்களாய் நடப்பதெல்லாம், அவர்கள் தம்மோடொத்த அல்லது தமக்கு மேற்பட்ட மக்களால் தாம் சூழப்பட்டிருப்பது பற்றியேயாம். பிறர்க்கு அஞ்சவேண்டுவ தில்லாத காலத்திலும், பிறராற் சூழப்படாத இடத்திலும் மக்கள் நல்லொழுக்க முடைய வர்களாய் நடப்பர்களாயின், அப்போது தான் அவர்களை உண்மையான நல்லொழுக்கமுடையவர் களென்று சொல்லுதல் தகும். Mdhš, ‘k‰w k¡fË‹ nr®¡ifí« mt®fS¡F mŠR« m¢rK« ïšyhjnghJ, eh« ÉU«ãagona V‹ el¡f¡ TlhJ? என்று ஒவ்வொரு வனும் ஒவ்வொருத்தியும் எண்ணுவராயின், உலகத் தில் நல்லொழுக்கமென்பதே தலைகாட்டாதொழியும். மேலும், அஞ்சத்தக்க மக்களும் அஞ்சத்தக்க அரசும் இருந்த விடத்தும், அம் மக்களும் அரசும் அறியாமல் தாம் வேண்டிய படி நடக்கத் தக்க கள்ளமுஞ் சூழ்ச்சியும் நாளுக்கு நாள் புதிய புதியவாய்க் கண்டுபிடித்துப், பலர் பலகாலுந் தமது தீய எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளுதலையும் நாம் நாடோறுங் கண்டு வருகின்றோம். இங்ஙனந், தீய எண்ணத் துக்குந் தீயசெயலுக்கும் ஏற்ற கள்ளமுஞ் சூழ்ச்சியும் பெருகப்பெருக, உலகின்கண் நல்லொழுக்கம் நிலைப்பது எங்ஙனம்? அறிஞர்களே கூர்ந்து பார்மின்கள்! இவ்வாறு மக்கள் தமது தீய எண்ணத்தை நிறை வேற்றிக் கொள்ளு வதற்குக் கள்ளத்தையுஞ் சூழ்ச்சியையுந் தமக்குத் துணை யாகப் பற்றுதல் ஏனென்று ஆராய்ந்து பார்ப்போமாயின், மற்றவர்கள் தமது கள்ளத்தையுந் தமது சூழ்ச்சியையுங் கண்டுகொள்ள மாட்டார்களென்னுந் துணி வினாலேயாம். ஒருவருள்ளத்தில் நிகழ்வனவற்றை மற்றொருவர் அறிய மாட்டாதவராயும், ஒரு காலத்தில் நிகழ்வனவற்றை மற்றொரு காலத்திலிருப்பவர் தெரிய மாட்டாதவராயும், ஓரிடத்தில் நிகழ்வனவற்றை மற்றோரிடத்தி லிருப்பவர் உணர்ந்துகொள்ள மாட்டாதவராயும், எல்லா மக்களுங் காலத்தினாலும் இடத்தினாலும் அறியாமை யினாலும் மறைக்கப்பட்ட சிற்றறிவு வாய்ந்தவர்களாய் இருக்கின்றனர், அதனால், ஒருவர் மற்றொருவர் அறியாமல் தமது தீய விருப்பத்தைத், தமது தீய எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள இடம் பெறுகின்றார்கள்; அதற்கேற்ற கள்ள ஏற்பாடுகளையுங், கள்ளச் சூழ்ச்சிகளையுஞ் செய்யத் துணிவு கொள்கின்றார்கள். இனி, இவ்வாறன்றி, எவ்விடத்திலும் எக்காலத்திலும் எத்தகையோருஞ் செய்யுஞ் செயல்களையும் அவர் எண்ணும் எண்ணங்களையும் அக்காலத்திலும் அவ்விடத்திலும் அவருள் ளத்திலும் நிறைந்துநின்று பார்க்கக்கூடிய பெரும் பார்வையும் பேரறிவும் பேராற்றலும் வாய்ந்த ஒருவன் இருப்பனாயின், அவன் எதிரே தீயதொன்றை எண்ணவுந் தீயதொன்றைச் செய்யவும் எவரேனுங் கனவினுந் துணிவரோ சொன்மின்கள்! மக்களிற் பெரும்பாலார் பிறர்பால் வைத்த அச்சத்தினாலேயே தீது செய்யாது நல்லராய் ஒழுகுகின்றனரென்பது, ஆசிரியர் தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார், அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம் அவாஉண்டேல் உண்டாம் சிறிது. என்று அருளிச் செய்தமையாலும் நன்கு விளங்காநிற்கும். இவ்வாறு பிறர்க்கஞ்சி நல்லராய் ஒழுகும் மக்கள் அங்ஙனந் தாம் அஞ்சி ஒழுகவேண்டாதபோது, நல்லொழுக்கத்தில் நிற்க மாட்டாரென்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெள்ளிதின் விளங்கி நிற்றலால், இப் பெற்றியினரான மக்கட்கு வேறு நல்லொழுக்கத்தைமட்டும் எடுத்துக் கூறுவதாற் சிறிது பயன் றானும் விளையுமோ சொன்மின்கள்! தமக்குள்ள செல்வச் செருக்கினாலும் ஆட்களின் துணையாலும் நிலையின் உயர் வாலும் பிறர்க்கு அஞ்சவேண்டுவது இல்லாத செல்வர்களும் அரசர்களும் மடங்களின் றலைவர்களும் எவ்வளவு கொடுமை யான தீச்யெல்களையெல்லாஞ் சிறிதுமஞ்சாமற் செய்து விடுகின்றனர்! அவர்கள் செய்யுந் தீச்செயல்களை அறிந்து வைத்தும், எவரேனும் அவர் எதிரேசென்று, அவரைக் கடிந்து பேச ஒருப்படுகின்றனரா? அவர்க்கு இடித்து நல்லுரை கூறத் துணிகின்றனரா? ஒருசிறிதும் இல்லையே, அவர்பாற் பொருள் பெறவேண்டும் புலவர்களும் பிறரும் அவர் முன்னிலையிற் சென்று, அவர்தங் காலில் வீழ்ந்துவணங்கி அவரைப்புகழ்ந்து பாடியும் பேசியும் பாராட்டியல்லவோ வருகின்றனர்! கல்வியுங் கடவுளுணர்ச்சியும் வாய்ந்து உலகத்துக்கு நன்றாற்றும் நல்லோர் சிலர் செல்வமும் ஆள் வலியும் அரசியல் நிலையும் இலராயின், மேற் சொன்ன புலவரும் பிறரும் அந்நல்லோர்பாற் குற்றங் களைத் தேடியாராய்ந்து, சிறுகுறைகளிருந்தால் அவற்றைப் பெருங் குறைகளாக்கி வாய்ப்பறையறைந்து, அவர் தம்மைப்பழி தூற்றி அலகைகளாக வல்லவோ திரிகின்றனர்! இத்தன்மைய ராகிய மக்கள் நிறைந்த இவ்வுலகத்தில், வெறு நல்லொழுக் கத்தை மட்டும் எவ்வளவு தான் வற்புறுத்திப் பேசினாலும், அதனைக் கடைப்பிடித்து அந்நல்லொழுக்கத்தின்கண் உண்மை யாகவே நிற்பார் உளரா வரோ சொன்மின்கள்! நல்லொழுக்கத்தான் வரும் நன்மை உடனே இன்பந் தருவதன்றாய் நீண்டகாலஞ் சென்று தனது அழியாப் பேற்றினை நல்குவதாயிருத்தலின், அதனை அளந்துபார்த்து, அவ்வழியி லொழுகுவார் மிக அரியராகவே இருக்கின்றனர். மற்றுத், தீயொழுக்கமோ தன் பயனான சிற்றின்பங்களை உடனே தந்து மக்களை ஏமாற்றிவிடுதலின், அவர்கள் எல்லாரும் அதன் வழி நடத்தலில் முயற்சியுஞ் சுறுசுறுப்பும் மிகுதியும் உடையராய் நிற்கின்றனர். இதுபற்றியன்றோ, குமரகுருபர அடிகளும், சிற்றின்பம் சின்னீர தாயினும் அஃதுற்றார் மற்றின்பம் யாவையுங் கைவிடுப. என்று அருளிச் செய்தனர். இங்ஙனந் தீயொழுக்கமாகிய கொடுவேங்கைப் புலி பசித்து அலையும் இவ்வுலகின்கண், நல்லொழுக்கமாகிய அழகுசால் இளமான்கன்று எங்ஙனம் உயிர் வாழும்? ஆகவே, அக் கொடும்புலியைத் தொலைக்கும் வகை கண்டபின்னன்றோ அவ் விளமான்கன்றை வளர்க்கும் வகையுண்டாம்? கொலைக்கஞ்சாக் கொடும்புலியைத் தொலைப்பது எவர்க்கும் எளிதில் முடிவதன்று. விற்றொழிலிற் கைதேர்ந்த ஒருவன் றுணையாலன்றி அதனைத் தொலைத்தல் மற்றையோரால் முடிவதன்று. அதுபோற் சிற்றின்ப வேட்கை யை அடக்குதற்குத் தக்கதொரு பெருந்துணை கிடைத்தாலன்றி, எவரும் நல்லொழுக்கத்தில் நிலை பெற நிற்றல் இயலாது. சேற்று நிலத்திற் செல்வோனுக்குத் தக்கதோர் ஊன்றுகோல் கிடைத்தா லன்றி, அவன் அதனைக் கடக்க மாட்டாதவாறு போலவும், கொடுநோய் கொண்டு வருந்துவோன் ஒருவனுக்கு விழுமிய மருந்தூட்டும் சிறந்த மருத்துவன் ஒருவன் றுணை யின்றி அவன் அந் நோயைத் தீர்த்துக் கொள்ள மாட்டாமை போலவுங், கொடு விலங்குகளும் பலவகை மரங்களு மடர்ந்த ஒரு கருங்காட்டினுள் வழிச்செல்வோனொருவனுக்கு அதன்கண் வழிகாட்டுவான் றுணையின்றி அவன் அதனைக் கடந்து செல்லல் இயலாமை போலவும், சிற்றின்பப் பொருள்கள் நிறைந்த இந் நிலவுலகின் கண் உயிர்வாழுஞ் சிற்றறிவுஞ் சிறுகிய ஆற்றலும் உடைய நம்ம னோர்க்குப், பேரின்பப் பொருளைக் காட்டுவான் ஒருவன் துணையின்றி நல்லொழுக்கத்தின்கண் நிலைநிற்றலும் இயலா தாம். 8. நல்லொழுக்கத்துக்குக் கடவுள் உணர்ச்சி இன்றியமையாமையும் அதற்குச் சில எடுத்துக்காட்டுகளும் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்வளவு மறைவான ஏற்பாடு களிலுந்தான் மறைக்கப்படாமல் நின்று, யாம் எண்ணும் எண்ணங்களையும் யாஞ் செய்யுங் செயல்களையும் எப்போதுங் கண்டு கொண்டு இருப்பானாகிய எல்லாம் வல்ல முழுமுதற் கடவுள் ஒருவன் எங்குமுளன் என நினைந்து அவனுக்கு அஞ்சி னாலன்றி, யாம் நல்லொழுக்கத்தில் வழுவாமல் நிலை நிற்க மாட்டுவேமோ? எம்மால் அன்பு வைக்கப்படுவாரும் எம்பால் அன்பு வைப்பாரும், எம்மால் இன்பம் அடைவாரும் எனக்கு இன்பந் தருவாரும் ஆகிய எல்லாரும் பிணிப்பட்டும் வறுமை யுற்றும் மூத்தும் மடிந்தும் போக, யாம் துன்பத்துக்கே ஆளாகி உழல்கின்றோமாதலால், அங்ஙனம் எம்மனோரைப் போற் பிணிப்படாதும் வறுமை யுறாதும் மூவாதும் மடியாதும் நிற்கவல்ல ஒரு முழுமுதற் கடவுளால் அடையப்படும் அழியாத பேரின்பம் ஒன்று உண்டென்பதனை நினைந்து, அதனை எளியேமுக்குத் தரவல்ல அம் முதல்வன்பால் யாம் ஆரா அன்பு மீதூரப் பெற்றாலன்றி, யாம் நல்லொழுக்கத்தில் மாறாமல் நிற்க மாட்டுவேமோ? அன்பர்காள் ஆராய்ந்து சொன்மின்கள்! ஆகவே, சிற்றறிவுஞ் சிறு தொழிலுஞ் சிற்றின்பவேட்கையும் உடைய நிலையில்லா மக்கட் பிறப்பினேமாகிய யாம், எல்லா அறிவும் எல்லா ஆற்றலும் எல்லா முதன்மையும் எல்லா இன்பமும் ஒருங்குடைய ஆண்டவனுக்கு அஞ்சி அவன்பால் அன்பு பூண்டு ஒழுகினா லன்றி, எம்போன்ற மக்களிடத்தும் ஏனைச் சிற்றுயிர் களிடத்தும் இரக்கமும் அன்பும் எமக்கு உண்டாகா; இப் பேருண்மை யினைத் தெளிய உணர்ந்தே, ஈசனுக்கு அன்பில்லார் அடியவர்க்கு அன்பில்லார் எவ்உயிர்க்கும் அன்பில்லார் தமக்கும் அன்பில்லார் பேசுவதென் அறிவில்லாப் பிணங்களைநா மிணங்கில் பிறப்பினிலும் இறப்பினிலும் பிணங்கிடுவர் விடுநீ ஆசையொடும் அரனடியார் அடியாரை அடைந்திட்டு அவர்கருமம் உன்கரும மாகச் செய்து கூசிமொழிந்து அருண்ஞானக் குறியி னின்று கும்பிட்டுத் தட்டமிட்டுக் கூத்தாடித் திரியே. என்று அருணந்தி சிவனாரும் சிவஞானசித்தியாரில் அருளிச் செய்தார் என்க. என்று இத்துணையும் விரித்து விளக்கியவாற்றால், மக்களாகிய நாம் கடவுளுணர்ச்சியுடையராய் அக் கடவுளிடத்து அன்பும் அச்சமும் உடையராய் ஒழுகினாலன்றி, நாம் நல்லொழுக்கத்திற் பிறழாது நிற்றல் இயலாதென்பது நன்கு பெறப்பட்டது. இதற்கு உண்மையாக நடந்த சில நிகழ்ச்சி களையும் இங்கு எடுத்துக் காட்டுவாம்: ஒருகாற் பள்ளிக்கூடத்திற் கல்வி பயிலும் ஒரு சிறுவன் தன்னூர்க்குப் புறத்தேயுள்ள ஒரு மாந்தோப்பினுட் புகுந்தான். அப்போது, அங்குள்ள மாமரங்களில் தேனொழுகக் கனிந்த மாம்பழங்கள் குலைகுலையாய் தொங்கக் கண்டான்; கண்டதும், அவனுக்கு வாய் ஊறியது. ஆனாலும், அவன் தான் படித்த பள்ளிக்கூடப் பாடம் ஒன்றிற் பிறர்க்குரிய பொருள் எதனையுந் திருடாதே என்று கற்பிக்கப்பட்ட அறிவுரை அவனது நினை வுக்கு வந்தது. அந் நினைவு வந்ததும், அவன் இம் மாம்பழங்கள் பிறர்க்கு உரியன ஆகையால் இவற்றை நாம் திருடுதல் கூடாது என்று முதலில் எண்ணினான். ஆனாலும், அம் மாம்பழங்களிற் சிலவற்றைத் தின்னவேண்டும் என்னும் அவா அவனால் அடக்க முடியாமல் மேன்மேல் எழுந்தது. பிறகு நினைப்பான்: இத் தோப்பிற்கு உரியவர்கள் எவரையுங் காணேன். வேறு ஆட்கள் எவரும் இங்கு நடமாவுமில்லை. ஆதலால், யாருங்காணாத இந் நேரத்தில் யான் இவற்றிற் சில பழங்களைப் பறித்துண்டாற் குற்றமென்னை? குலை குலையாய்த் தொங்கும் இப்பழங்களிற் சிலவற்றை யான் பறித்துத் தின்றாலும் அதனை எவருமே கண்டுபிடிக்க முடியாது. ஆதலால், இவற்றிற் சில பழங்களை என் அவா அடங்கும்மட்டும் பறித்துத் தின்னக்கடவேன் என்று தனக்குள் தீர்மானித்துக் கொண்டு, ஒரு மரத்தின்மேலேறி ஒரு பழத்தைப் பறிக்கக் கைநீட்டினான். அந்நேரத்தில், தான் படித்த பள்ளிக்கூடத்துப் பாடத்திலிருந்து மீண்டுமோர் அறிவுரை நினைவுக்கு வந்தது. எவருங் காணவில்லை என்று பிறர்க்குரிய எதனையுந் திருடாதே, ஏனென்றால், எங்குமுள்ள கடவுள் நீசெய்யுந் திருட்டுச் தொழிலைப் பார்த்துக் கொண்டிருக் கின்றார் என்பதே அவ்வறிவுரையாம். இது நினைவுக்கு வந்ததும் அச்சிறுவன் உளம் நடுநடுங்கி நீட்டின கையை மடக்கிக் கொண்டு, கடவுளே என் பிழையைப் பொறுக்க வேண்டும் என்று சொல்லி வணங்கினவனாய் அத் திருட்டுத் தொழிலுக்குத் தப்பி நல்லவனாய் இல்லஞ் சேர்ந்தான். பார்மின்கள் அன்பர்களே! இவ் உண்மைக்கதையிற் கடவுள் நினைவினால் தீச்செயலுக்குத் தப்பி அச் சிறுவன் நல்லொழுக்கத்தில் நிலைபெற்றமைபோல, எல்லாம்வல்ல எங்குமுள்ள கடவுளை நினைந்தொழுகுவார்க்கே நல்லொழுக் கத்தில் நிலைநிற்றல் கைகூடுமென்பது பெறப்படு கின்றதன்றோ? இன்னும், மேனாட்டில் அரசாண்ட ஒரு மகமதிய மன்னன் காதலிற்சிறந்த தன் அழகிய மனைவிமேல் தானுங் காதல் கொள்ளாமல் தன்மனைவியின் றோழியான மற்றுஓர் அழகிய மாதின்மேல் மையல் கொண்டான். அந்த மாதோ மணமாகாத கன்னிப்பெண்ணாயினும் அவள் அம் மன்னன் மேற் சிறிதுங் காதல் கொண்டிலள். அது தெரிந்தும், அவ்வரசன், அவள்மேல் ஆராத மையலுடையனாய் அவளை எப்படியாவது வலிந்து பற்றிப் புணர்வதற்குக் காலம் பார்த்திருந்தான். இப்படியிருக்க, ஒருநாள் அத் தோழிப்பெண் அவ்வரசன் இருந்த மாளிகையிற் சில ஒழுங்குகள் செய்வ தற்கு வந்து அவ் வேலையைச் செய்து கொண்டிருந்தாள். அப்போது அம் மாளிகையிலிருந்த மற்ற வேலைக்காரர் களெல்லாருந் தத்தம் வேலையைச் செய்து முடித்து விட்டு வெளியே போய் விட்டனர். அதனாலும், அத் தோழிப்பெண் அங்கே செய்யவேண்டிய ஒழுங்குகள் இன்னுஞ் செய்து முடிக்கப் படாமையாலும் அவளும் அம் மன்னனும் அங்கே தனியிருத்தல் நேர்ந்தது. இவ்வாறு தனக்கு நேரம் வாய்த்ததைக் கண்டு மகிழ்ந்த அவ்வரசன் அப் பணிப்பெண்ணை அருகழைத்து நங்காய்! யான் நெடுநாளாய் நின்மேல் மையல் கொண்டேன். அம் மையலை நிறைவேற்றிக் கொள்ளுதற்கு இப்போது தக்கநேரம் வாய்த்திருத்தலால் நீ என் கருத்துக்கு இணங்குதல் வேண்டும் என்றான். மன்னன் இங்ஙனங் காமவெறி கொண்டு பேசுவதைக் கண்ட அம் மாது இப்போது இவனை மறுத்தால் என்னைத் துன்புறுத்துவான் என நினைந்து அவனுக்கு உடன்படுவாள் போல் அவனை நோக்கி மன்னர்பெருமானே! அதற்கென்ன தடை? அடியேன் தங்கள் கருத்தின்படி நடக்கக் காத்திருக்கின்றேன். இப்போது யான் யாது செய்தல் வேண்டும்? என்று வினாயினாள். அதற்கு அவ்வரசன் அம்மாளிகையின் நாற்புறத்துமுள்ள கதவுகளை யெல்லாம் நம்மை எவருங் காணாதபடி அடைத்துவிடு என்றான். mtŸ m›thnw všyh¡ fjîfisí« mil¤JÉ£L mt‹ vânu tªJÉf, mt‹ mtis neh¡», ‘všyh¡ fjî fisí« mil¤J tªjidah? என்று கேட்டான். அதற் கவள் ஆம் மன்னனே! எல்லாக் கதவுகளையும் அடைத்து விட்டேன்; ஆனால், ஒரு கதவை மட்டும் என்னால் அடைக்க முடியவில்லை. அதன்வழியாக நம்மை ஒருவர் மட்டும் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார். v‹brŒnt‹! என்றாள். அச் சொற்கேட்டு அரசன் திடுக்கிட்டு, மாதராய்! அங்ஙனம் அடைக்கக்கூடாமலிருப்பது எந்தக் கதவு? mj‹tÊahf c‰W¥ gh®¥gt® ah®? என்று வெருண்டு வினாயினான். அதற்கவள் எங்குமுள்ள கடவுளின் கண்களாகிய கதவுகளை என்னால் அடைக்க முடியவில்லை. அவற்றின் வழியாக அவர்தாம் நம்மை உற்று நோக்குகின்றார், என்று அமைதியாக மொழிந்தாள். அதனைக் கேட்டதும், அவ்வரசன் கடவுள் நினைவு வரப் பெற்று, அச்சமுடையவனாகி நங்காய்! நீ இவ்விடத்தை விட்டுப் போய்விடு என்று சொல்ல, அவளும் அவன் கொடுமைக்குத் தப்பி மீண்டாள். பாருங்கள் அன்பர்களே! அந்நேரத்தில் அப் பெண் தன் கூர்த்த அறிவினாற் கடவுள் நினைவை அவ்வரசற்கு வருவித்தமை யாலன்றோ, தான் விரும்பியதை எவ்வகையாலேனும் முடித்தற்கு அஞ்சாத அவ்வரசன் கடவுளுக்கஞ்சித் தான் கொண்ட தீய கருத்தை அறவே விட்டொழிப்பானானான். அந்நேரத்தில் அவன் கடவுள் நம்பிக்கை இல்லாதவனா யிருந்திருப்பானாயின், தான் கருதிய தீச்செயலைக் கட்டாயம் முடித்திருப்பானல்லனோ! ஆனதுபற்றியே மக்களியற்கையை நன்கு ஆராய்ந்துணர்ந்த நம் தொல்லாசிரியர்கள் நல்லொழுக்கத்தை எடுத்து வற்புறுத்துங்கால், தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைக் சுடும். (குறள் - 293) என்றும், வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும். (குறள் - 293) என்றும், வஞ்சித் தொழுகும் மதியிலிகாள் யாவரையும் வஞ்சித்தோ மென்று மகிழன்மின்-- வஞ்சித்த எங்கு முளனொருவன் காணுங்கொல் லென்றஞ்சி அங்கங் குலைவ தறிவு. (நீதிநெறி - 94) என்றும் தன் உள்ளத்து உள்ளுணர்வாய் மறைக்கப் படாமல் விளங்கி நின்று நல்லது தீயது பகுத்துக்காட்டும் இறைவ னொருவன் உளன் என்பதை நினைந்து அஞ்சி ஒழுகுக என்று அருளிச் செய்வாராயினார். எனவே, நம் சைவ ஆசிரியன்மார் எல்லாம்வல்ல இறைவனைச் சான்றாக வைத்து நல்லொழுக்க முறைகளை அறிவுறுத்திய அறிவுரைகளே மக்களுக்கு உண்மையிலே பயன்படுவனவாதலும், பௌத்த சமண் ஆசிரியர் எங்கும் எல்லாருள்ளத்திலுஞ் சான்றாய் உள்ள இறைவனை அறவே விடுத்துக்கூறிய அறிவுரைகள் மக்கள் நல்லொழுக் கத்தில் நிலைபெறுத்துதற்கு ஒரு சிறிதும் பயன்படுவன ஆகாமையுந் தெள்ளிதின் விளங்கா நிற்கும். 9. கடவுளிடத்து அன்பும் அச்சமும் உடையோர் நல்லராய் ஒழுகுதல் இவ்வாற்றால், நல்லொழுக்கமானது மக்களுயிரைத் தூய்மை செய்யுந் திறத்ததேயாயினும், அது கடவுளுணர்ச்சி உடையாரிடத்தன்றி நிலைபெறமாட்டாமையால் அதற்கு ஆற்றலையும் நிலைபேற்றினையுந் தருவது கடவுள்பால் வைத்த மெய்ந்நம்பிக்கையும் அச்சமும் அன்புமேயாமென்று கடைப் பிடித்தல் வேண்டும். உயிர்கள் தாமேயறிந்து கேளாதிருக் கையிலும், அவர்கட்கு வேறு எவராலுந் தர முடியாத அரிய உடம்புகளையும், அவ்வுடம்புகளோடு கூடிய அவை உயிர் வாழ்தற்கு எண்ணிறந்த அரும் பண்டங்களையும் படைத்து வகுத்துக் கொடுத்திருக்கும் ஆண்டவன்றன் எல்லையற்ற இரக்கத்தையும் அருளையும் ஆற்றலையும் ஆராய்ந்து ஆராய்ந்து நினைந்து நினைந்து உருகுவார்க்கு எல்லா உயிர்கள் மாட்டும் அன்பும் இரக்கமுங் கொண்டு ஒழுகும் நல்லெண் ணமும் நன்முயற்சியுமே வாய்க்குமல்லா மற் பிறவுயிர்க்குத் தீதுசெய்யுந் தீய எண்ணமுந் தீயமுயற்சியும் ஒரு தினைத் தனையும் உண்டாகா; கடவுளை நம்பாதவர்க்குக், கடவுளி டத்து அன்பில் லாதவர்க்குக், கடவுளிடத்து அச்சமில்லாத வர்க்குத் தாமுந் தம்மைச் சார்ந்தாரும் நலமெய்துதலிலேயே எண்ணமும் முயற்சியும் முனைந்து நிற்குமல்லாமற் பிற உயிர்களின் நலத்தை எண்ணும் எண்ணஞ் சிறிதும் உண்டாகாது; அதுவேயுமன்றித், தமது நலத்துக்குத் தமது கருத்துக்குத் தமது முயற்சிக்கு மாறான எவரையும் எவ்வகையினாலேனுந் தொலைத்து விடுந் துணிவும் எண்ணமுங் கடுமுயற்சியும் அவர்பாற் குடி கொண்டு நிற்கும். ஆகவே, அவர் நல்லெண்ணமுடையராதலும் நல்லொழுக்க முடையராதலும் யாங்ஙனம்? தீய எண்ணங்களைத், தீய வினை களைக் கோடிக்கணக்காய்ப் பெருக்கும் அவர்க்குப் பிறவித் துன்பம் அறுதலும் யாங்ஙனம்? கடவுள்பால் மெய்யன் பிலார்க்கு, நல்லொழுக்கம் இல்லையாமாகலானும், அஃதில் லையாமாகவே அவர்க்கு அடுத்தடுத்து வரும் பிறவித் துன்பம் அறுதலும் இல்லையாமாகலானும், அவரெல்லாம் மீண்டும் மீண்டும் பிறவாது இரார். மற்றுக், கடவுள்பால் மெய்யன்பு டையார்க்கோ நல்லொழுக்கம் நிலைபெறுதல் திண்ண மாதலின், அவர் அதனால் மனந் தூயராகி, அதனாற் பிறவித் துன்பம் வேரோடு அறப்பெற்று இறைவன் திருவருள் இன்பத்தைப் பெறுதல் திண்ணம். இது தெரித்தற்கே, நம் பெருமான் மாணிக்கவாசகர் என்னை மீட்டேயும் பிறவாமற் காத்தாட்கொண்டான் எம்பெருமான் செய்திட்ட விச்சை தானே என்று அருளிச் செய்தார். கடவுளை நேரே கண்டு, அவர் அருளை நேரே பெற்று, அவர்பால் வைத்த மெய்யன்பால் நெஞ்சம் நெக்கு நெக்குருகி, அதனால் எல்லா உயிர்கள் மாட்டும் எல்லையற்ற அன்பும் இரக்கமும் நிகழப் பெற்று, அதனால் இனிப் பிறவி எடாத அரும்பெரும் பேற்றினையும் பெற்றுத் தாம்பெற்ற அவ்வுண்மைப் பேற்றினையும் ஐயந்திரிபுக்குச் சிறிதும் இடனின்றி நம்பால் வைத்த அருட் பெருக்கால் நம் பெருமான் வலியுறுத்திச் சொல்லியிருக்கும் இம்மெய்யுரை கொண்டே, கடவுளருளைப் பெற்றார்க்கு அவ்வருளே பிறவியறுக்கும் உண்மை மருந்தாதல் கண்டு கொள்ளப்படும் என்று, இதுகாறுங் கூறியவாற்றால், எல்லாம் வல்ல முழுமுதற்கடவுள், எல்லாப் பொருள்களையும் எல்லா உயிர்களின் உணர்ச்சி களையுங் கடந்து நின்று இருவினை யற்றவராய், அவ்விரு வினையால் வரும் ஊனுடம்பு இல்லாத வராய் ஊனுடம்பு இல்லாமையாற் பிறப்பு இறப்புகள் இல்லாத வராய்ப், பிறப்பிறப்புகளில்லாமையால் தாய் தந்தையர் சுற்றத்தவர் முதலான தொடர்புகளில்லாதவராய், என்றும் விளங்கிய அறிவினராய், என்றும் மாறாத இன்பத்தி னராய், எங்குமுள்ள வராய், எல்லா ஆற்றலும் வாய்ந்த வராய், எல்லா முதன்மையும் உடையவராய் இருப்ப ரென்பதூ உம்; அங்ஙன மிருப்பாராகிய அவர் அறியாமை இருளிற் புதைந்து கிடந்தே மாகிய யாமும், எம்மினுந் தாழ்ந்த சிற்றுயிர்களுந் தம்மையறிந்து தம்மை வேண்டிக் கேளா திருக்கையிலும், எமது அறிவை விளக்கி எமக்கு இன்பத்தைத் தருதற்கு, மிகவும் வியக்கத்தக்கவான இவ்வுடம்புகளையும், உடம்புகள் உலவுதற்கு இவ்வுலகத் தையும், இன்பத்தை நுகர்தற்குப் பலவேறு அரும் பண்டங் களையும் அமைத்துக் கொடுத்தி ருக்கும் வகை களை உற்று நோக்க நோக்க, அவர் உயிர் களெல்லாரிடத்தும், அளவிறந்த அன்பும் இரக்கமும் அருளும் உடையராயிருக்கும் உண்மை விளங்குமென்பதூஉம்; அங்ஙனமவர் உயிர்களிடத்து அளவிறந்த இரக்கமுடைய ராயிருத்தலால் தம்மையுந் தமது இயல்பையும் நன்கு உணர்ந்து காணமாட்டாத நம்ம னோர்க்குத் தாயினுஞ் சிறந்த தலையளி உடையராய் அவர் தாமே ஓர் அருளுருக்கொண்டு நம்மனோர் கண்ணுக்கு நம்மனோரை யொப்பத் தோன்றி நம்மை யாட் கொண்டருளு வரென்பதூஉம்; மாணிக்கவாசகப் பெரு மானுக்குக் குருவடிவிற்றோன்றி அவரை யாட் கொண்டு மின்னொளி தோன்றி மறைந்தாற்போல் அறைந்தருளின மெய்ந் நிகழ்ச்சி அடிகள் தாமருளிச் செய்த திருவாசகச் செந்தமிழ்ச் செழும் பாடல்களில் திண்ணமாக எடுத்து அறிவுறுத்தினமையே அரும் பெருஞ்சான்றாமென் பதூஉம்; அவ்வாறு இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு இறைவனருளிற் றோய்ந்தபின் பிறவியும் அப்பிறவியால் வருந்துன்பங்களும் முற்றும் அற்றொழியு மென்பதற்கு அடிகளே தாம்பெற்ற அவ்வரும் பேற்றினைக் கட்டுரைத்துச் சொல்லுதலே சான்றாமென்பதூஉம்; இவ் வாறன்றி வெறு நல்லொழுக்கத் தினாலேயே பிறவிநோய் தீருமா கலின் இதன் பொருட்டுக் கடவுளுணர்ச்சியுங் கடவுள் வழி பாடும் வேண்டாமென்பாருரை ஒருசிறிதும் மக்கட்குக் பயன்படாத வெற்றுரையேயாமென்ப தூஉம் நன்கு விளக்கப்பட்டன. இவ்வாற்றாற், கடவுளின் உண்மை நிலையாவது இன்னதென்ப தனை எவரும் நன்குணரற்பாலர். 10. கடவுள் நிலைக்கு மாறான புராணங்களும் மாறாகாத சில பழம் புராணங்களும் இனிக் கடவுள்நிலைக்கு மாறாவன இவை என்பதை ஒரு சிறிது எடுத்து விளக்குவாம். இஞ்ஞான்று புராணங்களென்று வடமொழியிலெழுதப்பட்டும், வடமொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டும் வழங்கும் நூல்களிற் பெரும்பாலன, கடவுள் நிலைக்கு மாறான கதைகளைக் கட்டிச் சொல்லுவன வாய்க், கடவுளின் உண்மையை யறிய வொட்டாமல் மக்களறி வைத் தடைசெய்து, அவர்களை அறியாமைப் படுகுழியி லாழ்த்தி, அவர்கள் ஒருவரோடொருவர் அன்பினால் அளவ ளாவி வாழாமல் தம்முளே இடைவிடாது கலாம் விளைத்துத் துன்பவாழ்க்கையிற் கிடந்துழலச் செய்வனவாய் இருக்கின்றன. புராணங்களுட் பெரும்பாலன இத்தகைய தீய தன்மை யுடையவாயினும், ஏனைச் சில பழம் புராணங்கள் கடவுள் உண்மையை நுண்ணறிவில்லார்க்கு விளங்கச் செய்தற் பொருட்டு அறிவுடை மேன்மக்களாற் கட்டப்பட்ட நல்ல கதைகளை உள்ளடக்கினவாகவும் இருக்கின்றன. இச் சிறந்த பழம் புராணங்கள் சிலவற்றின் நல்ல கதைகளையும், பின்வந்த தீய அறிவினர் தத்தம் தீய கருத்துக்கு வேண்டியபடியெல்லாந் திரித்து அவற்றின் உயர்ந்த நோக்கங்களையும் பாழ்படுத்தி விட்டனர். இப்போது வழங்கும் புராணங்களெல்லாம் பழைய சில புராணங்களின் உயர்ந்த கருத்துக்களைத் திரிபு செய்தவை களும், அவற்றுக்கு மாறாய் எழுந்தவைகளும், அவற்றின் உண்மை நோக்கத்தைப் பாழ்படுத்த முனைந்தவைகளுமே யாகும். இப் புராணப் பெருங் குப்பைக் குவியல்களிற் பழம் புராண உண்மைக் கருத்துக்களாகிய விழுமிய மணிகள் சிற்சில புதைந்து கிடக்கின்றன. இப் பெருங் குப்பையைக் கிளறி, அவ்வரும்பெறல் மணிகளைப் பொறுக்கி எடுத்தல் உண்மை அறிவு நூலாராய்ச்சி யில் நெடுக ஆழ்ந்து பயின்று தேர்ச்சி பெற்றார்க்கன்றி ஏனை யோர்க்கு எளிதில் முடியாது. முடியாதாகவே, இஞ்ஞான்றுள்ள வர்கள் சைவரென்றும் வைணவரென்றும் வேதாந்திகளென்றும் சாத்தேயர் என்றும் கௌமாரரென்றும் காணாபத்திய ரென்றும் பல்வேறு பிரிவினராகிப், பல்வேறு கொள்கை யினராகி ஒருவரோ டொருவர் பெரிதும் மாறுபட்டுத் தத்தமக்கு ஏற்ற புராணங் களைக் கணக்கில்லாமற் பெருக்கியெழுதியிருக் கின்றனர்கள். இங்ஙனம் அச் சமயப் பிரிவினர் தாந்தாம் கற்பித்துக் கொண்ட புராணங்களில் தாந்தாம் வழிபடும் கடவுளர்களை உயர்த்துதற்பொருட்டுப் பழம் புராணங்களில் எல்லாம் வல்ல ஒரு முழுமுதற் கடவுள்மேல் வைத்து எழுதப்பட்ட கதைகளைத் தமக்கேற்றபடியெல்லாந் திரித்தும், முன்னில்லாதவைகளைப் புதிது புகுத்தியும், முன்னுள்ளவைகளுக்கு மாறானவைகளைச் சேர்த்தும், முன்னுள்ள இறைவனியல்புகளை முற்றும் இழிவு படுத்தியும் புரட்டுகள் செய்வாராயினர். இப் பொல்லாப் பெரும் புரட்டுகளையும் முன்னுள்ள பழம் புராணங்களின் நற்பெருங் கதைகளையும் வேறு பிரித்துக் காணும் பகுத்தறிவும் ஆராய்ச்சி யுமின்றி, முன்னுள்ள சிறந்த கதைகளையும் பின்வந்த புரட்டுக் கதைகளையும் பின் வந்தோர் ஒன்று சேர்த்து எல்லாவற்றையும் ஒரே வகையாக வைத்துப் பாராட்டப் புகுந்தமையாற் புராணங்கள் என்னும் பெயர்க்கே புரட்டுகள் என்னும்பொருள் சிறிது ஆராய்ச்சியுடையார் குழுவிலும் வழங்கிவரா நிற்கின்றது. கடவுள் நம்பிக்கை இல்லாருங் கடவுளைப் பற்றிய எல்லாக் கதைகளையும் பொய்யென்று இகழ்பவராயிருத்தலால், அவரும் ஆராய்ச்சி யுணர்வின்றிப் பின்வந்த புரட்டுக் கதைகளோ டொப்பவே முன்னிருந்த நற்பெருங் கதைகளையும் இழித்துப் பேசிவிடுகின்றனர். இவ்வாறாகக், குருட்டு நம்பிக்கையுடையார் எல்லாக் கதைகளையும் வரைதுறையின்றிக் கொண்டாடுங் கொண் டாட்டும், சிறிதாராய்ச்சியுடையார் பலகதைகள் புரட்டா யிருத்தல் கண்டு சிலநற் கதைகளையும் விலக்கிவிடும் விலக்கும், கடவுள் நம்பிக்கை இல்லாதார் எல்லாவற்றையும் ஒருங்கு சேர்த்து இகழ்ந்தொதுக்கும் ஒதுக்கும், மக்களின் அறிவு வளர்ச்சி அன்பு வளர்ச்சிக்குத் தீதுபயப்பனவாய் இருத்த லாற், பொது மக்களின் நன்மையையும் முன்னேற்றத் தையுங் கருதும் நல்லறிஞர்கள் அக் கதைகளை நன்கு ஆராய்ந்து பார்த்துக் கொள்ளத் தகுவன கொண்டும், தள்ளத்தகுவன தள்ளியும், இவ்வாறு கொள்ளத்தகுவன தள்ளத்தகுவன இவ்விவை என்பதைப் பொதுமக்களுக்கு நன்கு எடுத்துக் காட்டியுந் தமக்கும் பிறர்க்கும் பயன்பட ஒழுகுதல் இஞ்ஞான்று இன்றியமையாது செயற்பாலதோர் அரும்பெருங் கடமை யாகும். ஆனதுபற்றி, இப்புராண கதைகளுட் கொள்ளத்தகும் பழங் கதைகள் சில இவையென்பதூஉந், தள்ளத்தகும் பிற் கதைகள் இவையென்பதூஉம் ஈண்டு ஒருசிறிது விளக்கிக் காட்டுவாம். 11. கடவுளைப் பற்றி அறிவுடையோர் கதைகள் அமைத்த கருத்து முதலில் முழுமுதற்கடவுளைச் சிவன் என்னும் பெயரால் வழிபட்டுவந்த பண்டைச் சான்றோர்கள், அவ்விறைவன் உயிர்களுக்கு உதவியாகச் செய்துவருஞ் செயற்கருஞ் செயல் களை ஆழ்ந்தறியும் நுண்ணறிவில்லாத பொதுமக்களுக்கு உணர்த்தும் பொருட்டாகவே, அவை தம்மைக் கதைகளாக அமைத்து வைப்பாராயினர். ஏனென்றாற், கைக்கும் மருந்து உண்ணாத சிறு குழந்தைக்கு, அதன்தாய் அம் மருந்தை ஒருசிறு கருப்பங்கட்டியின் உள்வைத்து ஊட்டி அக் குழந்தையின் நோய்தீர்த்தல் போலப், பழைய அறிஞர்களுங் கடவுளைப் பற்றிய உயர்ந்த உண்மைகளை உணர மாட்டாத பொது மக்களுக்கு அவர்கள் எளிதிலே உணரத்தக்க இனிய நல்ல கதை களிலே அவ்வுண்மைகளைப் பொதிந்துவைத்து அமைத்துப் புகட்டுவாராயினர். ஏனெனிற், கற்றவர்முதற் கல்லாதவர் ஈறான எத்திறத்தவர்க்கும் கதைகள் கேட்பதில் மிகுந்த ஆவல் இருக்கக் காண்கின்றோம். எல்லாத் தேயத்தின் கண் உள்ள எல்லா மக்களும் பண்டைக்காலந் தொட்டுக் கதைகளைக் கேட்டு மகிழ்வதிலும் அக்கதைகளைத் தொடர்ந்த செய்யுள்வடிவில் எழுதிப் பயின்று மகிழ்வதிலும் மிகுந்த கருத்துடையவர்களாய் இருந்து வருகின்றனர். கிரேக்க தேயத்தில் இவ்வாறு எழுதப்பட்டு வழங்கும் இலியட் (lliad) ஓடிசி (Odyssey) என்னும் இரு பெருஞ் சிறந்த காவியங்களும், உரோம தேயத்தில் வழங்கும் ஈனிட் (Eneid) டிவைன் காமடி (Divine Comedy) என்னும் இரு பெரு விழுமிய காவியங்களும், ஐலாந்து தேயத்தில் வழங்கும் சாகாக்கள் (Sagas) என்னுங் காவியங்களும், ஆங்கிலதேயத்தில் ஷேக்பியர் (Shakespeare) எழுதிய நாடகக் காவியங்களும், மில்டன் எழுதிய துறக்க நீக்கம், துறக்கப்பேறு (Paradise Lost and Paradise Regained) என்னும் இருபெருந் தீஞ்சுவைக் காவியங் களும், ஆரிய நாட்டில் வழங்கும் பாரதம், இராமாயணம், பதினெண் புராணங்களும், செந்தமிழ்நாட்டில் வழங்கும் சிலப்பதிகாரம், மணிமேகலை, சூளாமணி, சிந்தாமணி, பெரிய புராணம் முதலிய அருந்தமிழ்க் காவியங் களும், இஞ்ஞான்று எல்லாத் தேயங் களிலும் எல்லா மொழிகளிலுங் கணக்கில் லாமல் உரை நடை யில் எழுதப்பட்டு வெளிவந்து வழங்கும் நாவல்களென்னும் புதுக்கதைகளும், ஆகிய இவையெல்லாங் கதைகள் கேட்பதிலுங், கதைகள் படிப்பதிலும் மக்கள் மட்டுக் கடங்கா ஆர்வமுடைய ராயிருத்தலை இனிது புலப்படுத்து கின்றன அல்லவோ? இவ்வாறு கதைகள் கற்பதில் ஆர்வம் மிகுதியும் உடைய ராயிருக்கும் மக்களின் மன இயற்கையை நன்கு உணர்ந்து பார்த்தே பௌத்த சமயத்தைப் பரப்பிய ஆசிரியர்கள் ஜாதக காதைகள் என்னுங் கதைத் தொகுதியினையும் உண்டாக்கி னார்கள். கிறித்துவ மதத்தை நாட்டிய ஏசுகிறித்து என்னும் ஆசிரியரும் தாம் அறிவுறுத்துதற் கெடுத்துக் கொண்ட அரிய பெரிய உண்மைகளைச், சிறுசிறு கதைகளிலமைத்து அவை தம்மை மக்களுக்கு மொழிந்திட்டார். இங்ஙனமே ஒவ்வொரு சமய ஆசிரியருந் தாந்தாம் அறிவுறுத்தும் உண்மை களில் மக்கள் உள்ளமானது பதிந்து நிற்றற் பொருட்டு, அவை தம்மை எல்லாரும் எளிதில் உணரத்தக்க இனிய கதைகளில் அமைத்து அறிவுறுத்திவந்திருக்கின்றனர். ஆகவே, மக்களின் இம் மனைவியற்கையினை நன்கு ஆராய்ந்துணர்ந்தவர்களான சைவசமயக் சான்றோர்களுந் தாம் அறிவுறுத்துதற் கெடுத்துக் கொண்ட இறவனருள் நிகழ்ச்சிகளையும் அரும்பேருண்மை களையும் உயர்ந்த பல கதைகளின் வாயிலாகவே அமைத்து வைத்து மக்களுக்குணர்த்துவாராயினர். இவ்வாறு பண்டைக் காலந்தொட்டு இன்றுகாறும் அறிவுடையோரெல்லாருங் கதைகளின் வாயிலாகவே தாம் ஆராய்ந்து கண்ட அரும் பேருண்மைகளை அறிவுறுத்தி வந்திருக்கின்றனர்களாதலால், மக்களுள்ளத்தில் இம்மை மறுமை வாழ்க்கையின் உண்மை களை எளிதிலே பதிய வைத்தற்குக் கதைகள் பெரிதும் பயன்படுவன என்பது பிறர்நலங் கருதும் அறிஞர்கள் கருத்திற் பதித்தல் வேண்டும். 12. புராணக்கதைகள் முற்றும் பொய்யென்பாருரை பொருந்தாமை நன்று சொன்னீர்கள்! கதைகளெல்லாம் பொய்யும் புளுகும் புனைந்துகட்டிச் சொல்வனவாதலால், அவை தம்மை வழங்கவிடுதல் குற்றமாம்; ஆதலாற், கதைகளெல்லாவற்றையும் ஒருங்கே நெருப்பிலிட்டுக் கொளுத்தி விடுதலே வேண்டுமென, எல்லார் அறிவினுந் தம்மறிவையே பெரிதாகக் கருதி இறுமாந்திருக்கும் இஞ்ஞான்றைச் சீர்திருத்தக்காரர் சிலர் புகலா நிற்கின்றனர். இவர் தந் துணிவுரைகள் மக்கள் மனப் பான்மையினைச் சிறிதாயினும் உணர்ந்துபாராக் குறைபாடு டையனவாதலால், அவை மக்களுக்குப் பெருந்தீங்கு பயப்பன வாகும். இனிக், கதைகள் எல்லாம் பொய்யும் புளுகுமே நிறைந்தன என்று சொல்லும் அவர் கூற்று உண்மையன்று. ஏனென்றாற், கதைகளின் அமைப்புப் பலதிறப்பட்டதாகும். சில கதைகள் உண்மையாக நிகழ்ந்த நிகழ்ச்சிகளையே திறம்பட அமைத்து, அவற்றின் வாயிலாக அரிய உண்மைகளை உணர்த்துவனவாகும்; இவ்வகையிற் சேர்ந்த காவியங்கள்: சிலப்பதிகாரம், பெரிய புராணமாகும். வேறு சில கதைகள் உண்மையாக நிகழ்ந்த சில நிகழ்ச்சிகளை வைத்து மற்றுஞ்சில புனைவுகள் கூட்டி உயர்ந்த உண்மைகளை உணர்த்துவன வாகும்; இவ்வகையிற் சேர்ந்தவை: மணிமேகலையும், ஓமர் எழுதிய கிரேக்க காவியங்களுமாகும். ஒருகாலத்தில் இக் கிரேக்க காவியங்களிற் சொல்லப்பட்டவை முற்றும் பொய்யென நினைந்த ஆசிரியர்கள், பின்னர் நிலத்தின் கீழ்ப் புதைந்து கிடந்த பண்டைக்கால அரண்மனைகளைக் கிளறிக்கண்ட ஆராய்ச்சி யிலிருந்து அக் காவியங்களின் முதன்மையான பகுதி உண்மையே யென்றும், அதனொடு பிற்சேர்க்கையாய் வந்தவைகளே புனைவுகளென்றும் அறிந்து மகிழ்வாராயினர். இன்னுஞ் சில கதைகள் முற்றும் நடவாத நிகழ்ச்சிகளை நடந்தனபோல் வைத்துப் பலவாறு அவை தம்மைப் புனைந்து உரைப்பன வாகும்; இவ்வகையிற் சேர்ந்தவை: சூளாமணி, சிந்தாமணி, முதலிய செந்தமிழ்க் காப்பியங்களும், வடமொழியிற் பிற்காலத் தெழுந்த சைவ வைணவ புராணங்களும், தலபுராணங் களுமாகும். இனி, மற்றுஞ் சில கதைகள் கடவுள் நிலை, உயிர் நிலை, மலங்களின் நிலை என்னும் மெய்ம்மைகளை உருவக வகையாற் பலபடப் புனைந்து உரைப்பனவாகும்; இவ்வகையிற் சேர்ந்தன: மிகப்பழைய சைவபுராணங்களும், பிரபுலிங்கலீலை, பிரபோத சந்திரோதய நாடகம் முதலியனவும் ஆகும். இங்ஙனம் இந் நால்வகையில் அமைக்கப்படுங் கதைகளின் கூறுபாடுகளை நம் ஆசிரியர்கள் முன்னரே நன்கறிந்திருக்கின்றனர். இது, சிலப்பதிகார அரங்கேற்று காதையின் உரையில், உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் இந் நால்வகைக் கதையமைப்புகளையும் உள்ளோன் தலைவனாக உள்ளதோர் பொருண் மேற் செய்தலும், இல்லோன் தலைவ னாக உள்ளதோர் பொருண் மேற் செய்தலும் உள்ளோன் தலைவனாக இல்லதோர் பொருண்மேற் செய்தலும், இல்லோன் தலைவனாக இல்லதோர் பொருண் மேற் செய்தலும் என நால்வகைப் படுத்து அடக்கினமை கொண்டு நன்கு உணரப்படும். இவ்வாற்றால் நம் முன்னாசிரியர்கள் எல்லாக் கதைகளையும் மெய்யெனவாவது பொய்யென வாவது கொள்ளாமல், மெய்யை மெய்யென்றும் பொய்யைப் பொய்யென்றும் பகுத்தறிந்து ஒழுகினார்க ளென்பது இனிது புலனாகின்ற தன்றோ? மற்று, இக் காலத்த வரோ ஆழ்ந்த கல்வியும் உண்மையாராயும் அறிவும் உடைய ரல்லாமையால் எல்லாக் கதைகளையும் மெய்யென்று குருட்டுத் தனமாய் நம்பிக் கைக்கொள்வாரும், அல்லது அங்ஙனமே குருட்டுத் தனமாய் எல்லாக் கதைகளையும் பொய்யென்று இகழ்ந்து ஒதுக்கு வாருமாய்ப் பிளவுபட்டு நிற்கின்றனர். எனவே, புராண கதைகள் எல்லாவற்றையும் ஒருங்கே மெய்யென நம்புதலும் அல்லதவற்றை ஒருங்கே பொய்யென இகழ்தலும் உண்மை யறிவு பெறவேண்டுவார்க்கு ஒரு சிறிதும் இசை யாமையால், இப்போது வழங்குங் கதைகள் பலவற்றுள் உண்மை யாவன சிலவும் பொய்ம்மையாவன சிலவும் இங்கே சுருக்கமாக எடுத்துக்காட்டுவாம். இச் சிறுநூலிற் சுருக்கமாகக் காட்டப் பட்டவைகளின் விரிவுகளை மாணிக்கவாசகர் வரலாறுங் காலமுமென்னும் எமது பெருநூலிற் கண்டுகொள்க. 13. தக்கன் வேள்வி அழித்த கதையின் உண்மையும் பொய்ம்மையும் பண்டைக் காலத்திருந்த அறிவான்மிக்க சான்றோர்கள், பிறப்பு, இறப்பு இல்லா எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளைச் சிவம் என்னும் பெயரால் வைத்து வணங்கியும் வாழ்த்தியும் வந்த வரலாற்றினை மேலே நன்குவிரித்து விளக்கி இருக்கின்றாம். இங்ஙனம் அச் சிவத்தை வழிபட்டுவந்த சான்றோர்கள், அச் சிவத்துக்கு மாறாகச் சிறு தேவர்களை வணங்கி, அவர் பொருட்டு வெறியாட்டுவேள்விகளெடுத்த ஆரியரின் ஒழுக லாறுகள், பொதுமக்களுக்குப் பெருந் தீங்குபயப்பன வாயிருத் தலை உணர்ந்து, சிவ வணக்கமே நன்மை பயத்தலும் சிவத்துக்கு மாறாகச் செய்யுஞ் சிறுதெய்வ வணக்கம் அதனைச் செய் வார்க்கும் பிறர்க்குந் தீங்குபயத்தலும் பொதுமக்களுக்குத் தெளி வாக உணர்த்தும் பொருட்டே தக்கன்வேள்வி யழித்த கதையை அமைத்து வைத்தார்கள். தக்கன் என்னும் ஓர் அரசன் ஆரியர் வலையிற் சிக்கி, அவர் வணங்கிய இந்திரன் முதலான சிறு தெய்வங்களைத் தானும் வணங்கி, அத் தெய்வங்களுக்கு ஊனுங் கள்ளும் படைத்தற்பொருட்டு அவ் வாரியர் சொல் வழியே சிவபிரானை இகழ்ந்து பெரியதொரு வெறியாட்டு வேள்வி எடுத்தான். எடுக்க, அதனையுணர்ந்த சிவபிரானடியவரான வீரபத்திரரென்னும் பேராற்றல்மிக்க ஒரு முனிவர் பெருமான், அவன் செய்த வேள்வியினைத் தகர்த்து அவனுக்கு நல்லறிவு வருவித்தார்; என்னும் அத்துணையே அக் கதையாகும். இவ்வளவே பழைய எசுர்வேத தைத்திரிய சங்கிதையிலும் சதபதபிராமணத்திலும் மகாபாரதத்திலும் சொல்லப் பட்டிருக்கின்றது. இப் பழநூல்களிற் கூறப்பட்ட அளவில் இக் கதையின்கண் கடவுள்நிலைக்கு மாறானது ஏதுங் காணப் படுகின்றிலது. ஆனால், அந்நூல்களுக்குப் பல்லாயிர ஆண்டு கட்குப் பின்னெழுதப்பட்ட கந்தபுராணத்திலோ கடவுள் நிலைக்கு மாறான பல புதுக்குறிப்புகள் புகுத்தப்பட்டிருக் கின்றன. சிவபிரான்றன் அருள்வடிவான உமையம்மையார் தக்கனுக்கு மகளாய்ப் பிறந்தனளென்றும்; அம் மகளைச் சிவபிரான் மணந்து கொண்டனரென்றும்; பிறர் அருவருக்கத் தக்க எலும்பையும் பாம்பையும் மாலையாகப் பூண்டு புலித்தோல் உடுத்துக் கையில் மண்டையோடு தாங்கித் தேவர்கள்பால் ஐயம் ஏற்று உழல்பவராகலின், அவரை யான் எனக்கு மருமகனாகக் கருதேன் என்று இகழ்ந்து அவரையும் அவர்தம் மனைவி யாரான அம்மையையுந் தக்கன் தான் செய்த வேள்விக்கு வருவித்தில னென்றும்; தன் தந்தை செய்த இவ் விகழ்ச்சியினால் அம்மை மனம் வருந்தித் தானாகவே தக்கன் அரண்மனைக்கு வலிய வந்தனளென்றும்; வந்த அவளைக் கண்டு தக்கன் வெகுண்டு நீ சிவன் மனைவி யாதலின் என் வேள்வியைப் பார்த்தற்குத் தகுதியுடையையல்லை; நின் கணவனும் எனக்கு மருமகன் அல்லன்; நீ என் புதல்வியும் அல்லை; உன் கணவனுக்குச் சிறந்த அவிசைக் கொடுப் பேனல்லேன்; ஆதலின், நீ பேசாது போய்விடு என்று கடிந்து கொண்டனனென்றும்; இவ்வாறு தக்கன் இகழ்ந்த இகழ்ச்சியுரைகளைத் தெரிந்து கொண்ட சிவபிரான் தக்கன் மேற் பெருஞ்சினங் கொண்டு தன் மகனான வீரபத்திரனை யேவ, அவன் தக்கனது வேள்விக் களத்திற் போந்து அங்கிருந்த தேவர்களையுந் தக்கனையுஞ் சின்னபின்னமாகச் சிதற அடித்து, அவ் வேள்வியினை அழித்தனனென்றும்; கந்தபுராணம் கட்டிச் சொல்லுகின்றது. கந்தபுராணம் கூறும் அக்குறிப்புகள் அத்தனையும் பழைய எசுர்வேதத்திலும் சதபதபிராமணத்தி லுங் காணப்படாமையின், அவை பின் வந்த குறும்பர்களாற் புதிது சோர்க்கப்பட்டன வேயல்லாமற் பழைய சான்றோர் களால் அமைக்கப்பட்டன அல்ல என்பது எவர்க்கும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெள்ளிதின் விளங்கா நிற்கும். பாருங்கள் அன்பர்களே! இப் புதுக் கந்தபுராணப் புளுகுகள், முழுமுதுற் கடவுளான சிவத்தின் நிலைக்கு எவ்வளவு மாறுபட்டனவா யிருக்கின்றன! சிவமும் சிவத்தின் அருள் வடிவமான அம்மையும் பிறப்பு இறப்பில்லா முழு முதல் களாகும். இங்ஙனமிருக்க, இரக்கமில்லா வன்நெஞ்சக் கொடிய னாகிய தக்கனுக்கு அம்மையார் மகளாய்ப் பிறந்தன ளென்பது யாங்ஙனம் பொருந்தும்? பிறவாத அருள் வடிவில் நிற்கும் அம்மை இருவினையிற் பட்டுழலும் எம் போல் ஊனுடம்பிற் புகுந்து பிறத்தல் கூடுமோ சொன்மின்கள்! நம் சைவ சித்தாந்தத்தின் முதற்பெருங் கொள்கையாவது: இறைவன் பிறப்பு இறப்பில்லான் என்பதேயன்றோ? மாணிக்கவாசகப் பெருமான் தாயுமிலி தந்தையிலி தான்றனியன் காணேடி என்று அருளிச் செய்ததனையுந், திருஞானசம்பந்தப் பெருமான் தந்தையாரொடு தாயிலர் தம்மையே, சிந்தியா எழுவார்வினை தீர்ப்பரால் என்று அருளிச் செய்ததனையும் உற்று நோக்கு மின்கள்! இறைவன் எங்ஙனம் பிறப்பிறப் பில்லானாய்த் தூய அறிவுவடிவாய் இருக்கின்றனனோ, அங்ஙனமே அம்மையும் பிறப்பு இறப்பு இல்லாளாய் அவனின்வேறின்றி அருள் வடிவாய் நிற்பள். இவ்வுண்மை, சைவ சித்தாந்த நூலாகிய திருக்களிற்றுப் படியாரில், பொன்னிறங் கட்டியினும் பூணினும் நின்றாற்போல் அந்நிறம் அண்ணலும் அம்பிகையும்-செந்நிறத்தள் எந்நிறத்த ளாயிருப்பள் எங்கள் சிவபதியும் அந்நிறத்த னாயிருப்ப னாங்கு. என்றும், சிவஞான சித்தியாரில், மாயைதான் மலத்தைப்பற்றி வருவதோர் வடிவ மாகும் ஆயஆ ணவம் அகன்ற அறிவொடு தொழிலை ஆர்க்கும் நாயகன் எல்லா ஞானத் தொழில்முதல் நண்ண லாலே காயமோ மாயையன்று காண்பது சத்தி தன்னால், வரும்வடி வெல்லாஞ் சத்தி சத்திதான் மரமுங் காழ்ப்பும் இருமையும் போல மன்னிச் சிவத்தினோ டியைந்து நிற்கும். யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகி யாங்கே மாதொரு பாகனார்தாம் வருவர் மற்றுஅத்தெய் வங்கள் வேதனைப் படும் இறக்கும் பிறக்கும்மேல் வினையுஞ் செய்யும் ஆதலால் இவையி லாதான் அறிந்துஅருள் செய்வ னன்றே. என்றும் நன்கெடுத்து வலியுறுத்தப்பட்டமை காண்க. இங்ஙனம் வலியுறுத்தப்பட்ட இச் சைவ சித்தாந்தப் பேர் உண்மைக்கு முழுமாறாக, முழுமுதற் றெய்வமாகிய சிவசத்தியே தக்கனுக்கு மகளாய்ப் பிறந்தனளென்று சைவ சித்தாந்தம் நன்குணர்ந்த எந்த அறிஞனேனுங் கூறத் துணிவனோ சொன் மின்கள்! அல்லாமலும், எல்லாம் வல்ல அம்மையை அவன் மகளாகப் பெற்றது உண்மையாயின், அவன் எவ்வளவு தவமும் எவ்வளவு மெய்யுணர்வும் எவ்வளவு அன்பும் உடையவனா யிருந்திருக்க வேண்டும்! அங்ஙனமின்றி, முழுமுதற் கடவுளாகிய சிவத்தின் முதன்மையையும் அம்மையின் அருமையையுஞ் சிறிதும் அறியாது, அவர் தம்மை இகழ்ந்துரைத்தான் என்பத னால் அவன் அம்மையை மகளாகப் பெறுந் தகுதியுடைய னல்லன் என்பது புலனாகின்றதன்றோ! இன்னும், அவன் கூறிய இகழ்ச்சியுரையைக் கேட்டுச் சிவபிரான் தம் புதல்வராகிய வீரபத்திரரையேவி, அவனையும் அவன் வேள்வியையும் பாழ்படுத்தினரென்பதுங் கடவுளிலக் கணத்துக்கு மாறாய்க் காணப்படுகின்றது. ஏனென்றால், எல்லா ஆற்றலும் எல்லா அறிவும் எல்லா முதன்மையும் இயல்பாகவே உடைய இறைவனைச் சிற்றறிவும் சிறுவாணாளுமுடைய எம்மனோர் இகழ்ந்து பேசுதலால் அவற்கு ஏதேனுங் குறைபாடு வந்து விடுமோ? அன்றி அவனை எம்மனோர் புகழ்ந்து பேசுதலால் முன்னில்லாத பெருமை அவற்கு வந்துவிடுமோ? மாய்ந்து போம் மக்களின் இழிவுரைகளைக் கேட்டு, அவன் மனம் வருந்துதலும், அவர் தம் புகழுரைகளைக் கேட்டு அவன் மனம் மகிழ்தலும் உண்டுகொலோ! கடவுள் வேண்டுதல் வேண்டாமையிலான் என்பதை அறியாதார் யார்! ஆதலால், தக்கன் கூறிய இகழ்ச்சியுரைகளைக் கேட்டுச் சிவபிரான் மனம்வருந்தி அவனை மாய்ப்பதற்கு வீரபத்திரரை ஏவினா னென்பது சிறிதும் பொருந்தாது. இஞ்ஞான்று உள்ளாரிற் பலர் தக்கனிலுங் கொடுமையாகச் சிவபிரானை இகழ்ந்து பேசா நிற்க, அவ்விகழ்ச்சிகளையெல்லாம் ஒரு பொருட்டாக எண்ணி அவர்களை அழிப்பதற்கு வீரபத்திரரை அடிக்கடி ஏவுகின் றனனா? சிறிதுமில்லையே. இகழ்வாரும் புகழ்வாரும் இந் நிலவுலகத்திருக்க, அவர்களெல்லார்க்கும் பொதுமையனா யன்றோ இறைவன் இருக்கக் காண்கின்றோம். ஐயனை இகழ்வார் தமக்குத் தாமாகவே தீங்கு தேடிக் கொள்ளுகின்றன ரல்லாமல், ஐயனே அவர்கட்குத் தீங்கு செய்கின்றிலன் என்பதும், அங்ஙனமே அவனைப் புகழ்வாருந் தமக்குத் தாமாகவே நன்மை தேடீக் கொள்கின்றனரல்லாமல், அவர் புகழ்ச்சிக்கு உவந்து ஏமாந்து அவர் வேண்டியவைகளை யெல்லாங் கொடுக்கின்றில னென்பதும் மெய்யுணர்வினர் நன்கு அறிந்தனவேயாம். ஆகவே சிவபிரான் தக்கன் இகழ்ந்ததைக் கேட்டு வெகுண்டு வீர பத்திரரை ஏவினானென்பது எட்டு ணையுங் கொள்ளற் பாற்றன்று. ஆகவே, இக் கதையின் உண்மை யாதென்றால் எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளையன்றி வேறெதனையும் வணங்காத பண்டைத் தமிழ்ச் சான்றோர்க்கு மாறாய் ஆரியர் வலைப்பட்ட தக்கன் என்பான் ஒருவர் புரிந்த வெறியாட்டு வேள்வியை அத் தமிழ்ச் சான்றோரில் ஒருவர் அழித்தொழிந்தார் என்பதேயாகும். இங்ஙனமே தாருகாவனத்தில் இருந்த ஆரியக் குருக்கள் மார் முழுமுதற்கடவுளை இகழ்ந்து ஆற்றிய வெறியாட்டு வேள்வியினையும், ஆற்றலிற் சிறந்த தமிழ் முனிவர் ஒருவர் சென்று அழித்தமையும் நினைவு கூரற்பாற்று. இவ்வாறெல்லாம் ஆரியர் எடுத்த இரக்கமற்ற வெறியாட்டு வேள்விகளைச் சிவனடியார்களான தமிழ்முனிவர்களுந் தமிழ் வேந்தர்களும் அழித்த நிகழ்ச்சிகளையே சிவபிரான் செய்தனவாகப் புராண நூல் எழுதினோர் கதைகள் கட்டி வைத்தனர். அங்ஙனம் முதலிற் சுருக்கமாய்க் கட்டிவைத்த கதைகளை, வரவரப் பெருக்கி யெழுதிய பின்னவர்கள், கடவுளிலக்கணங்களை நன்காராய்ந்து பார்க்கும் அறிவாற்றலில்லாமையால், அவ் விலக்கணங்களுக்கு மாறான பலவற்றையுஞ் சேர்த்து விடுவாராயினர். சைவ சித்தாந்த உணர்ச்சியில்லாத சைவர் களும் இன்னோரன்ன கதைகள் கடவுளிலக்கணத்திற்கு முற்றும் மாறாயிருந்தும், அவை சைவ புராணங்களென்னும் பெயரால் வழங்குதல் பற்றி அவை தம்மை முன்பின் ஆய்ந்து பாராமல் முற்றும் உண்மையாகவே நம்பி வருகின்றனர். இதனால் உண்மையான சைவசமயத்துக்கு வந்த கேடுகள் பல. மெய்யுணர்விற் சிறந்த ஆராய்ச்சி வல்லுநர்கள், போலிச் சைவர்கள் கூறும் இப் பாழுங்கதைககைக் கேட்டாற் சைவத்தைப் பழியாது ஒழிவரோ? ஆகவே சிவபிரான் முழுமுதற்றன்மைக்கும், அவனோடு இரண்டறக் கலந்து நிற்கும் அம்மையின் தூய அருட்பெரு நிலைக்கும் முற்றும் மாறான இன்னோரன்ன கதைகளைச் சைவ சித்தாந்தக் கொள்கைக்கு உடன்பாடென்று கொள்ளன்மின் அன்பர்களே! 14. விநாயகக் கடவுளைப் பற்றிய கதைகளின் பொய்ம்மை .இனி, மூத்த பிள்ளையாராகிய விநாயகக் கடவுளைப் பற்றிக் கட்டிவைத்திருக்குங் கதைகளின் குழறு படைகளையும் அவைகள் சைவத்துக்கு முற்றும் மாறாயிருத்தலையும் அன்பர் கள் ஆராய்ந்து அறிந்து கொள்ளல் வேண்டும். அவை யெல்லாம் இங்கு முற்றுமெடுத்துக் காட்டுதல் இயலாது. ஆயினும், அன்பர்கள் எமது சொல்லின் உண்மையை உணரும்பொருட்டு ஒருசில இங்கு எடுத்துக்காட்டுதும். ஆறறிவு உடைய மக்களின் மன உணர்வு மேன்மேல் விளங்கி எல்லையற்ற இன்பத்தைத் தருதற்கு ஒரு பெருங் கருவி யாயிருப்பது ஒலிகளின் றொகுதி யாகிய தமிழ் ஆங்கிலம் முதலான மொழிகளேயாகும். இம் மொழிகளாகிய கருவிகளே இல்லாவிட்டால் ஒருவர் தாம் எண்ணிய எண்ணங்களைப் பிறர்க்குத் தெளிவாகத் தெரிவிப் பதும், பிறரறிந்தவைகளைத் தாம் தெளிய அறிந்து அறிவு விளங்கப் பெறுதலுந் தினைத் தனையுங் கைகூடா. ஆகவே, மக்களின் அறிவு வளர்ச்சி முழுதும் மொழிகளின் வாயிலாகவே நடைபெறுகின்றதென்று ஓர்ந்து கொள்ளல் வேண்டும். இத்துணையின்றியமையா தனவான ஒலிகளின் தோற்றமும் இயக்கமும் நம் உடம் பினகத்தும் அதன் புறத்துங் கடவுள் அமைத்திருக்கும் மிக வியப்பான அமைப்புகளினாலேயே நடை பெறுகின்றன. நமது மூளையில் ஒரு கடுகளவு பகுதி பழுது பட்டாலும், அல்லது தொண்டைக் குழாயில் அமைந்த அமைப்புச் சிறிது பழுது பட்டாலும், அன்றி நமது செவியினுட் சமைந்த நுண்ணிய அமைவுகள் சிறிது சீர் குலைந்தாலும் நாம் சொற்களைப் பேசவும் பிறர் பேசியவைகளைக் கேட்கவும் வலியற்றவர்களாய் விடுவமல்லமோ! ஆக, ஒலியின் தோற்ற இயக்கங்களின் அமைப்புகள் அத்தனையும் இறைவனால் வகுக்கப்பட்டிருத் தலானும், புறத்தும் அகத்தும் நிகழும் ஒலியின் றோற்ற இயக்கங்கள் எல்லாம் இறைவன் அருளாலன்றி நிகழப் பெறாமையானும், இறைவனுக்கு ஒலி அல்லது பிரணவமும் ஒரு வடிவெனச் சைவ சித்தாந்த நூல்கள் நுவலாநிற்கும். எல்லா ஓசைகளுக்கும் எல்லா ஒலிகளுக்கும் முதலோசையாய் நிற்பது ஓ என்று இரையும் ஒலியேயாகும். இங்ஙனம் இயற்கையாய் நிகழும் இவ்வொலியினைக் காதிற் கையை வைத்து அடைத்த லாலுஞ், சங்கைக் காதில் வைத்து உணர்தலாலுங், கடலொலி யினை உற்றுக் கேட்டலாலும் எவரும் நன்கறியலாம். இவ்வாறு எல்லா ஓசைக்கும் முதலோசையாய் நிகழும் இவ் வோங்கார ஒலி இடைவெளியிலுள்ள அணுக்களின் இயக்கத்தால் உண்டாவதாகும். அணுக்களோ புள்ளி வடிவின வாகும். அவ்வணுக் களின் இயக்கமோ ஒரு வரி வடிவின தாகும். இங்ஙனம் புள்ளியும் வரியுஞ் சேர்ந்த சேர்க்கையே, பிள்ளையார் சுழி எனவும், வரியை வளைத்தெழுதி ஓங்கார எழுத்தெனவுங் கொள்ளப்படா நிற்கின்றது. இங்ஙனம் வட்டமும் வரியுங் கூடிய அமைப்பே சிவலிங்கமெனவும் நுவலப்படுகின்றது. யானையின் முகமும் அம் முகத்திலிருந்து தொங்குந் தும்பிக்கையும் வட்ட வடிவும் வரிவடிவுஞ் சேர்ந்த ஓகாரவடிவாயிருத்தலின், அவ் ஒலிவடிவில் நிற்குங் கடவுளை யானைமுக முடையராக வைத்து அறிவு நூல்கள் கூறா நிற்கின்றன. நல்ல பாம்பின் படம் வட்ட வடி வாயும் அதன் உடம்பு நீண்ட வரிவடிவாயும் இருத்தல் பற்றி நமதுடம் பினகத்தே நிகழும் இவ்வோங்கார ஓசையின் இயக்கத்தைப் பாம்பாட்டமென்று சிவராச யோக நூல்கள் புகலா நிற்கும். இறைவன் பாம்பை அணிகலனாய்ப் பூண்டன னென்பதும், அவன் பாம்பின் மேற் பள்ளி கொண்டன னென்பதும், அவன் ஓங்கார வடிவினனாய் இருக்கின்றான் என்பதனையே அறிவுறுத்துவனவாகும். இவ்வாறெல்லாம் ஓங்காரவடிவின் மேன்மையும் பயனும் உணர்ந்த சான்றோர்கள், அவ் வடிவின் கண் இறைவனை வைத்து எளிதாக வழிபட்டு உய்தற்பொருட் டாகவே யானைமுகமுடைய பிள்ளையார் வழிபாட்டை உண்டாக்கினார்கள். இவ்வளவிற் கடவுளிலக்க ணத்துக்கு மாறான தொன்றும் பிள்ளையார் வணக்கத்திற் காணப்பட வில்லை. ஆனாற், பின்வந்தவர்களோ மெய்யுணர்வுக்கு இடமாகிய இதனை அறிவுடையோர் அருவருக்கத் தக்கதான ஒரு கதை வடிவிற் கட்டி விட்டார்கள். யாங்ஙனமெனிற் கூறுதும்: திருக்கைலாயத்தின்கட் சிவபிரானும் அம்மையும் மகிழ்ச்சி யோடு அமர்ந்திருக்கையிற், கோயிலின் ஒரு பக்கத்துச் சுவரில் ஆண் பெண் யானைகளின் வடிவங்கள் தீட்டப்ட்டிருந்தனவாம். அவற்றைப் பார்த்ததும் அவ்வியானை வடிவெடுத்து அம்மை யைப் புணர வேண்டுமென்னுங் காம விருப்பம் இறைவனுக்கு உண்டாயிற்றாம். அக் குறிப்பினைத் தெரிந்து கொண்ட அம்மையார் உடனே ஒரு பெண்யானை வடிவெடுக்க, இறைவனும் ஓர் ஆண் யானை வடிவெடுத்து அவளைப் புணர்ந்தனனாம். அப் புணர்ச்சி முடிவில் யானை முகமுடைய பிள்ளையார் பிறந்தனராம். இவ்வாறு கந்த புராணத்தின்கட் சொல்லப்பட்டது. பாருங்கள் அறிஞர்களே! உணர்ந்து பார்க்கும் எந்த உண்மைச் சைவர்க்கேனும் இக் கதை அருவருப் பினையும் மானக் குறைவினையும் விளைவியாது ஒழியுமோ? மக்களுள்ளும் இழிந்தவர் செய்யாத இக் காமச் செயலினை இறைவன் செய்தானென்பது எவ்வளவு அடா தாயிருக்கின்றது! தேவவடிவில் நின்று புணருமின்பத்தை விட, இழிந்த விலங்கு வடிவில் நின்று புணருமின்பம் சிறந்ததென்று கூற எவரேனும் ஒருப்படுவரோ? அத்தகைய இழிந்த காம இன்பத்தினை இறைவன் விரும்பினானென்றால், பேரின்ப உருவாயே நிற்குங் கடவுளிலக்கணத்துக்கு எவ்வளவு மாறு பட்டதாய், எவ்வளவு தகாததாய், எவ்வளவு பழிக்கத்தக்கதாய் இருக்கின்றது! உணர்ந்து பார்மின்கள்! இக் கதை, விலங்கின் புணர்ச்சியைக் கண்டு வரம்பு கடந்து காமங்கொண்ட ஒரிழிந்த ஆரியனால் வடமொழியிற் கட்டப்பட்டு வழக்கத்தில் வந்துவிட்டது. திருஞானசம்பந்தப் பெருமானுங்கூட இக் கதையைப், பிடியதன் உரு உமைகொள மிகு கரியது வடிகொடு தனதுஅடி வழிபடும் அவரிடர் கடி கணபதி வர அருளினன். என்று தாமருளிய அருமைத் திருப்பதிகத்தில் அமைத்துப் பாடியிருக்கின்றார். அற்றேல், ஓதாதுணர்ந்த இப்பெருமானும் இவ் அருவருப்பான கதையைத் தழுவிப் பாடியது குற்றமன்றோ வெனிற், குற்றமன்று. புள்ளி வடிவான விந்துவும் வரிவடிவமான நாதமும் சேர்ந்த ஒலியின் சேர்க்கையை இழிந்தவனான ஆரிய னொருவன் யானையின் புணர்ச்சியில் வைத்துக் கட்டி விட்டா னாயினும், உயர்ந்தோனாகிய ஞானசம்பந்தப் பெருமானுக்கு அக் கதையின் மேற்பரப்பிலிருந்த அருவருப்பின் கட் கருத்துச் செல்லாதாய், அதன் கட்பொதிந்து கிடந்த உயர்ந்த உண்மை யிலேயே கருத்துச் சென்றமையின் அவன் அதனைத் தழுவிப் பாடுவானாயினன். இவ்வாற்றால், உயர்ந்தோனுக்கு இழிந்த வற்றிலும் உட் பொதிந்த உயர்ந்த உண்மையிலேயே நாட்டஞ் செல்லுமென்பதூஉம், இழிந்தோ னொருவனுக்கோ உயர்ந்த வற்றிலும் இழிந்த பொருளே தோன்றுமென்பதூஉம், இனிது அறியக் கிடக்கின்றன. உலகத்தின்கண் நிகழும் இழிந்த நிகழ்ச்சி களை ஓர் உயர்ந்தோன்பால எத்துணைமுறை எடுத்துச் சொல்லினும், அவன் அந் நிகழ்ச்சிகளில் உயர்ந்தவற்றையே ஆராய்ந்து கொண்டு நிற்பன். மற்று, இழிந்தவனோ உயர்ந்த நிகழ்ச்சிகளைப் பலமுறை காணினும், அவற்றின்கண் எல்லாம் இழிந்தவற்றையே எடுத்து ஆராய்ந்து கொண்டிருப்பன். இவ்விரு வேறு நாட்டங்களும் அவரவர் உயர் விழிவிற்கேற்ப நடைபெறு வனவாகும். ஞானசம்பந்தப் பெருமான் உலகத்து இழிபுகளைச் சிறிதுமே உணராத தூய உள்ள முடையோ னாதலால், அவன் தன்காலத்து வழங்கிய இக்கதையின் மேலுள்ள இழிவினைக் காணாது, அதன்கண் ஊடுருவி நிற்கும் விந்துநாத உண்மை யினையே கண்டு பாடியருளினன் என உய்த்துணர்ந்து கொள்க. இனிப், பிள்ளையார் பிறப்பினைக் கூறுங் கதைகள் இன்னும் அருவருக்கத் தக்கனவாய்க், கடவுளிலக்கணத்திற்குப் பெரிதும் மாறுகொண்டனவாய் நிற்கின்றன. அவற்றுள் இரண்டு கதைகளை .இங்கு எடுத்துக் காட்டுவாம்: ஒரு காலத்தில் அம்மையார்க்கு மூத்தபிள்ளையார் ஒருவர் பிறந்தனராம். அப்பிள்ளையைக் காணும் பொருட்டுத் தேவர் களெல்லாரும் அங்கு வந்தனராம். வந்த அவருட் சனியனெனுந் தேவனும் ஒருவனாம். இச் சனியன் தான் அப்பிள்ளையப் பார்த்தால் அதற்குத் தீதுண்டாகுமென்று நினைந்து, தலைகுனிந்து அதனைப் பாராதிருக்க அவன் கருத்தறியாது அம்மை அவன் தன்மகவினைப் பாராது இகழ்ந்தன னென்று சினங்கொள்ள, அதற்கஞ்சி அவன் அப் பிள்ளையைப் பார்த்தனனாம். பார்த்த உடனே, அப்பிள்ளையின் தலை எரிந்து சாம்பலாய் போயிற்றாம். ஐயோ! அதனைக் கண்டதும் ஆற்றாமை மிகப் பெற்ற உமையம்மையார் அச் சனியன்மேல் மிகுந்த சினங்கொளல் ஆயினராம். அது கண்ட நான்முகன் முதலான தேவர்களெல்லாரும் அம்மையை வேண்டி அவனை மன்னிக்கும்படி அவனுக்காகப் பரிந்து பேசினராம். அதன்மேற் சிவபிரானும் அம்மையின் சினத்தைத் தணிவித்து வடக்கு நோக்கிப் படுத்திருக்கும் ஒரு யானையின் றலையை வெட்டிக் கொணரும்படி தேவர்களுக்குக் கட்டளையிட, அவர்களும் அவ்வாறே சென்று ஓர் யானையின் தலையைக் கொண்டுவர, அத் தலையை அப் பிள்ளையின் முண்டத்திற் பொருத்தி அதனை உயிர்பெற்றெழச் செய்தனராம். அதுமுதற்றான் பிள்ளையார்க்கு யானைமுகம் உண்டாயிற்றென்பது ஒரு கதை. இங்ஙனமாக இக்கதை பிரமவைவர்த்த புராணத்தின்கட் சொல்லப்பட்டது. இக் கதையின்கண் உள்ள மாறுபாடு களையும் இழிவுகளையும் ஒரு சிறிது உற்று நோக்குமின்கள் அன்பர்களே! எல்லாம்வல்ல சிவபிரானுக்கும் அம்மைக்கும் ஒரு பிள்ளை பிறந்ததென்றால், அஃது எவ்வளவு தெய்வத் தன்மையும் எவ்வளவு பேராற்றலும் உடையதாயிருக்க வேண்டும்! m¤ Jiz¢ áwªj bjŒt¥ ãŸisia¢ rÅa‹ v‹D« X® ïʪj njt‹ neh¡»d clnd mj‹ jiy vǪJ rh«g uhŒ¥ nghƉbw‹whš m¥ãŸis bjŒt¤ j‹ikíila jhFnkh T®ªJ ghU§fŸ!மேலும், அத் தெய்வப் பிள்ளையை விடச் சனியன்றோ வல்லமையிற் சிறந்த பெருந் தெய்வமாய் விடுகின்றான்? அதுவேயுமன்றி, முழுமுதற் கடவுளான அம்மையப்பர் தம் பிள்ளையைப் பார்த்த சனியனின் பார்வைக் கொடுமையைத் தடை செய்ய மாட்டாமற் போயின ரென்றால், அச் சனியனல்லனோ அவர் களிலும் மேலான தெய்வமாய் விடுகின்றான்? அல்லாமலும், சனியனின் பார்வையால் எரிந்து போன தம் பிள்ளையின் தலையை மீண்டும் உண்டாக்கிக் கொள்ளும் ஆற்றல் அம்மையப்பர்க்கு இல்லாது போயிற் றென்றன்றோ சொல்லல்வேண்டும்? அது வல்லாமலும், அழகிற் சிறந்த தேவவடிவங்களின் தலைகளெல்லாமிருக்க, அவை தம்மை யெல்லாம் விட்டு அழகற்ற ஓர் யானையின் தலையை வெட்டிக் கொணர்வித்துப் பொருத்தினானென்பது கடவுளின் இறைமைத் தன்மைக்கு இழுக்கன்றோ? இத்துணை மாறு பாடுகளும் இத்துணை இழிபுகளும் இத்துணைப் பொல்லாங்கு களும் நிறைந்த இப் பொல்லாத கதையை நம்புவோ னெவனும் உண்மைச் சைவ னாவனோ சொன் மின்கள்! ஆழ்ந்து பார்க்குங்கால் எல்லாத் தேவர்களினும் மேலாகச் சனியனைக் கொண்டாடி அவனை உயர்த்துதற்கு விரும்பிய ஓர் ஆரியப் பார்பனனே இக்கதையைக் கட்டிவிட்டு எல்லாம்வல்ல சிவ பெருமானையும் உண்மையிற் சிறந்த சைவ சமயத்தையும் இழிவு படுத்தி விட்டானென்பது உங்களுக்குப் புலப்பட வில்லையா? இவ்வாறு சைவத்துக்கும் சிவபிரான் றன் முழுமுதற் றன்மைக்கும் முழுமாறான பொல்லாக் கதைகளை நம்ப வேண்டாமென்னும் எமது அறிவுரையினைக் கண்டு குறைகூறுங் குருட்டுச் சைவர் களே உண்மைச் சைவத்துக்குப் பெரும்பகைவர்களென்று தெரிந்து கொண்மின்கள்! இனிப் பிள்ளையார் பிறப்பு சிவமகாபுரணத்தின் கண் வேறொரு வகையாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. அதனையும் அதன் மாறுகோளினையும் இங்கு ஒருசிறிது காட்டுதும். ஒருகால் உமையம்மையார் குளிக்கப் போயினராம். போகுமுன் தமது உடம்பிலுள்ள அழுக்கையெல்லாந் திரட்டி எடுத்து, அதனைத் தமது கையாற் பிடித்துத் தமது குளியலறையின் முன்வாயிலில் வைத்துச், சிவபிரான் வந்தனராயின் அவரை உள்ளேவிடாது தடை செய்க என்று கட்டளையிட்டுத், தாம் உள்ளே குளிக்கச் சென்றனராம். அங்ஙனம் பிடித்து வைக்கப்பட்ட அவ்வழுக்குத் திரளை உடனே உயிருள்ள பிள்ளையாராகி,. அக்குளியல றையின் வாயிலிற் காவலாய் இருந்தததாம். இருக்கச் சிவபிரான் அம்மையைத் தேடிக் கொண்டு அங்குவந்தனராம். அவரைக் கண்டதும் அவ் வழுக்குப் பிள்ளையார் அவரை உள்ளே போகவேண்டா மெனத் தடைசெய்ய இருவர்க்கும் போர் மூண்டதாம். நெடுநேரம் பேராடிக் கடைசியாகச் சிவபிரான் அப்பிள்ளை யாரின் தலையை வெட்டிவிட்டனராம். அப்போது உள்ளிருந்து வந்த உமையம்மையார் ஐயோ! v‹ ãŸisia bt£o É£ldnu! என்று கரைந்து ஆற்றாமல் அழுதனராம். அது கண்ட சிவபிரான் தாமும் ஆற்றாதவராகி நம் பிள்ளை என்று அறியாமல் இவனை வெட்டிவிட்டேன். ஆயினும் நீ வருந்தாதே. இப்போது இதனை உயிர்பெற் றெழச் செய்வம் என ஆறுதல் மொழிந்து, வடக்கு நோக்கிப் படுத்திருந்த ஒரு யானையின் தலையை வெட்டிக் கொணர்வித்து அதனை வெட்டுண்ட அப்பிள்ளையின் உடம்பிற் பொருத்தி உயிர் பெற்றெழச் செய்தனராம். அங்ஙனம் எழுந்த பிள்ளையாரே விநாயகக் கடவுளாம். அன்பர்களே! இக்கதை எவ்வளவு அருவருக்கற் பாலவான மாறுபாடுகள் நிறைந்ததாய் இருக் கின்றது! எல்லாம் வல்ல இறைவியான உமைப் பிராட்டியார், வினைவயத்தாற் பிறக்கும் நம்போல் ஊனுடம்பு உடையரல்லர்; அவர்தம் திருமேனி சொல்லொணா அருளொளி வீசித் துலங்குவதென்று கேனோப நிடதம் நன்கெடுத்து மொழியா நிற்க, அவ் வறிவு நூலுக்குங் கடவுளிலக்கணத்துக்கும் முற்றும் மாறாக அம்மையார் திருமேனியில் அழுக்கு நிரம்பி இருந்த தென்றும், அவ் வழுக்கினைத் திரட்டி எடுத்துப் பிள்ளை யாரைச் சமைத்தன ளென்றுங் கூறும் அழுக்குப்புராணம் சிவமகா புராண மெனப் பெயர் பெறுதற்குத் தகுதியுடைய தாமோ? ஆராய்ந்து கூறுமின்கள்! ஊனுடம்பு படைத்த மக்களுள்ளும் அழகும் நாகரிமுந் தூய்மையும் வாய்ந்தார் சிலரின் உடம்புகள் அழுக்கில்லாதனவாய் மினுமினு வென்று மிளிராநிற்கத், தூய அருட்பேரொளிவடிவாய் விளங்கும் அம்மையின் திருமேனி அழுக்குடையாதாயிருக்குமோ? சொன்மின்கள்! மேலுந், தம் மனைவியரைத் தேடிக் கொண்டு வந்த சிவபிரான், தமக்குப் பிள்ளையென்று அறியாமல் அதன் தலையை வெட்டி விட்டன ரென்பது கடவுளிலக்கணத்துக்கு எவ்வளவு முரண்பட்டதாய் இருக்கின்றது. எல்லா உயிர்க்கு முயிராய்,. எல்லார் அறிவுக்கு மறிவாய் எல்லா உலகங்களிலும் எல்லாக் காலங்களிலும் நிகழும் நிகழ்ச்சிகளை யெல்லாம் ஒருங்கே உணரும் பெருமான் தம் பிள்ளையைத் தாமே அறியாமல் வெட்டினரென்றால் அஃது அறிவுடையோரால் ஒப்பத்தகுந்ததாமோ? இன்னும் பாருங்கள்! வெட்டுண்ட பிள்ளையைத் தலையும் உடம்பும் பொருத்தி உயிரோடு எழுப்பிவிடலாகாதா? bt£L©l jiyia ÉL¤J ntnwh® ahid¤ jiyia tUɤJ¥ bghU¤âd bu‹gJ v›tsî jfhj brayhŒ ïU¡»‹wJ! இத்துணைத் தகாததொன்றை இறைவன் செய்தனனென்பது கடவுளிலக் கணத்துக்கு அடுக்கு மா? உண்மையான் நோக்குங் காற், சிவபிரானையும் அருள் வடிவான பிராட்டியையும் ஓங்கார ஒலிவடிவில் விளங்கும் இறைவனையும் இழித்துப் பேச விரும்பின எவனோ ஓர் ஆரியப் பார்ப்பனன் இக் கதையைச் சிவமகா புராணம் என்னும் பெயராற் கட்டி விட்டனன் என்பது வெள்ளிடைமலைபோல் விளங்கா நிற்கும். இப் பொல்லாத பார்ப்பனச் சூழ்ச்சியினை ஆராய்ந்து பார்க்கும் அறிவு மதுகை இல்லாத குருட்டுச் சைவர்கள் இவ் வழுக்குப் புராணத்தைச் சிவமகாபுராணமெனக் கொண் டாடிச் சைவ சமயத்துக்குக் கேடு சூழ்வது பெரிதும் வருந்தற்பாலதாயிருக்கின்றது. அதுநிற்க. 15. கந்தன் பிறப்பினைக் கூறும் கதைகளின் ஆராய்ச்சி இனிக், கந்தன் பிறப்பினைக் கூறும் புராணக்கதைகள் சிலவற்றின் இழுக்கினைச் சிறிது இங்கு எடுத்துப் பேசுவோம். கந்தன் அல்லது கார்த்திகேயன் அல்லது சுப்பிரமணியன் என்னுங் கடவுளின் பிறப்பைக் கூறும் நூல்களில் மிகவும் பழமையானது தமிழிலுள்ள பரிபாடலேயாகும்; அதற்கு அடுத்த பழமையுடையது வடமொழியிலுள்ள மாபாரதக் கதை யாகும்; அதற்கடுத்த பழமையுடையது வடமொழி வான்மீகி இராமாயணக் கதையாகும்; அதற்குப் பின் வந்தது கந்தபுராணக் கதையாகும்; இந் நான்கு நூல்களிலும் வந்த கந்தன் கதையின் மாறுபாட்டினை இங்கு அடைவே எடுத்துக் காட்டுவாம். முதற்கண் தமிழிலுள்ள பரிபாடல் ஐந்தாம் பாட்டிலும் பத்தொன்பதம் பாட்டிலுஞ் சொல்லப்பட்ட கதையினை எடுத்துரைப்பாம். ஒரு காலத்திற் சிவபெருமான் உமையம்மையை நீண்டநாள் தொடர்பாகப் புணர்ந்து கொண்டிருப்ப, அதனைக் கண்ட இந்திரன் அச்சமுடைய னாகிச் சிவபெருமான் பாற் சென்று வணங்கி இப் புணர்ச்சி யாற் றோன்றிய கருவை அழித்தருள்க என்று வேண்டினானாக, அவனதுவேண்டு கோளுக்கிசைந்த பெருமானும் தோன்றிய அக் கருவைப் பல துண்டங்களாக வெட்டி எறிந்து விட்டன னென்றும், அதனைக் கண்ட தெய்வமுனிவர்கள் எழுவரும் இக் கரு தேவர்களின் படைக்குத் தலைவனாதற்கு உரித்து என்றுணர்ந்து, அதனை எடுத்துப் போய்த் தம் மனைவியர் கையிற் கொடுக்க, அவருள் அருந்ததி ஒழிய, ஏனை மகளிர் அறுவரும் அதனை விழுங்கிச் சூன்முதிர்ந்து இமையமலை உச்சியிலுள்ளதொரு புல்லடர்ந்த சுனைக்கண்ணதான ஒரு தாமரைப் பூவிலே ஈன்றனரென்றும், அங்ஙனம் ஈன்ற அவ்வாறு மகவும் ஒன்று சேர்ந்து, ஓருருவாகித் தன்னைக் காணவந்த இந்திரனைப் புடைக்க, அவன் அப் பிள்ளைக்குத் தோற்று அப் பிள்ளையைத் தன் படைக்குத் தலைவனாய் அமைத்துக் கொண்டனென்றும், பின்னர் அப்பிள்ளை தென்கடலகத்து மாவின் வடிவாயிருந்த சூர் என்னும் ஒரு கொடிய உயிரை மாய்த்தனனென்றும், அதன்பின் இந்திரன் மகள் தெய்வயானை என்பாளையுந் தமிழ்நாட்டு ஒரு வேட்டுவன் மகள் வள்ளி என்பாளையும் மணந்து கொண்டனனென்றும் அக் கதை நுவலா நிற்கின்றது. மிகப் பழையதாகிய அக்கதையின் உண்மையை ஆராய்ந்து பார்க்குங்கால் இஃது ஓர் அரசன் மகனைப் பற்றிய உண்மைக்கதையாய்க் காணப்படுகின்றதே யல்லாமற் கடவுளைப் பற்றிய கதையாய்ச் சிறிதுங் காணப்பட வில்லை. ஏனென்றாற் , சிவபிரானும் உமையும் ஊனுடம்பு வாய்ந்த நம்மனோரைப் போற் புணர்ந்து கொண்டிருந்தன ரென்பதும், இந்திரன் என்னும் ஒருவன் வேண்டுகோளுக் கிரங்கிச் சிவபிரான் அப் புணர்ச்சியிற் றோன்றிய கருவைத் துண்டுதுண்டுகளாக வெட்டி வீசின னென்பதும் ஊனுடம் பில்லாது அருள்வடிவாய் அருவாய் நிற்குங் கடவுளிலக்கணத் துக்கு எங்ஙனம் பொருந்தும்? அதுவே யுமன்றி, வெட்டுண்ட அக் கருவை முனிவர் மனைவியர் அறுவரும் விழுங்கிச் சூல் முதிர்ந்து ஒரே காலத்தில் ஒரு சுனையிலுள்ள தாமரைப்பூவில் ஈன்றன ரென்பதும் எவ்வளவு பொருத்தமற்றதா யிருக்கின்றது? உலகத் தில் ஆண் பெண் புணர்ச்சியாற் பெண் கருக்கொண்டு மகவு ஈனக் காண்கின்றன மேயன்றி ஆண்கருவைப் பெண் வாயினா லுண்டு சூன்முதிர் தலை எங்குங் கண்டிலமன்றோ? இன்னும், இலங்கையிற் சூரபத்மன் என்னும் அரக்கன் தேவர்களுக்குப் பகைஞனாய் அரசு புரிந்தனனென்றும், அவனையே வடக் கிருந்து வந்த கார்த்திகேயன் போர்புரிந்து கொன்றன னென்றும் பிற்காலத்துக் கந்தபுராணங் கட்டி விட்டகதை, பழைய பரி பாடலிற் சிறிதுங் காணப்படவில்லை. அதன்கட் சொல்லப்பட்ட தெல்லாந்: தென்கடற்கண் ஒரு தீவகத்தில் விலங்கு வடிவாயிருந்த சூர் என்னும் ஒரு கொடிய உயிரை முருகவேள் மாய்த்தனன் என்பதேயாகும். மிகப் பழைய காலத்தே, இப்போதுள்ள யானையினும் நூறுமடங்கு பெரிய யானை களும், ஒரு பட்டாக் கத்தியின் அகல, நிகளமுள்ள பற்கள் வாய்ந்த பெரும்புலிகளும், ஒன்பதடி நிகளமும் அதற்கேற்ற அகல உயரமும் வாய்ந்த கடல் தேள்கள் நிலத் தேள்களும் இருந்தன. அவைகளால் அக் காலத்திருந்த மக்களுக்கு வந்த இடர்களும் துன்பங்களும் எம் ஒருநாவால் எடுத்துரைத்தல் இயலாது. அத்தகைய மிகப் பெரிதான உருவமுங் கொடுஞ்செயலும் வாய்ந்த விலங்குகளில் மிகப் பொல்லாத தொன்றை வடக்கிருந்துவந்த கார்த்திகேய னென்னும் ஓர் அரசிளைஞன் கொன்று தொலைத்துத், தென்னாட்டிலிருந்த பண்டைத் தமிழ்மக்களுக்கு நன்மை புரிந்த வனாதல் வேண்டும். அதுபற்றியே பேராற்றலுடைய அவ் விளைஞனைச் சிவபிரான்றன் மகனாக வைத்து வழிபாடு ஆற்றுவா ராயினர். இத் துணையேதான் பழைய பரிபாடற் கதையாற் புலப்படும் உண்மை நிகழ்ச்சியாகும். இனி, மாபாரதக் கதையிற் போந்த கந்தன் பிறப்பினை எடுத்துக் காட்டுதும், ஒருகாலத்தில் தீக்கடவுளானவன் (அக்நிதேவன்) தெய்வமுனிவரர் எழுவர் மனைவிமாரின் பேரழகைக் கண்டு அவர்மேல் அளவிறந்த காதல் கொண்டன னாம். என்றாலும், அவர்கள் முனிவரின் கற்பிற் சிறந்த மனைவிமாராய் இருத்தலினாலும், தாம் அவர்கள்மேற் காதல் கொண்டது போல் அவர்கள் தம்மேற் காதலுறாமையாலும், அவர்களைப் பெறும் விருப்பத்தை விட்டுக் காட்டுக்குப் போயினனாம், அப்போது தக்கன் மகளாகிய சுவாகா என்பவள் அத் தீக் கடவுளைக் கணவனாகப் பெறுதற்கு மிக விழைந்து அவன்மேற் பெருங் காதல் கொண்டனளாம். அத் தீக்கடவுளோ முனிவரரின் மனைவியர்மேற் பெருங் காதல் கொண்டிருந்த மையின் சுவாகா என்பவளை விரும்பிற்றிலனாம். அது தெரிந்த சுவாகா என்பவள் அம் முனிவர் மனைவியர் எழுவரில் அருந்ததி என்பவள் வடிவை மட்டும் அவள் தான் எடுக்க முடியாமையால், ஏனை அறுவரின் வடிவை அடுத் தடுத்துப் பெற்று அவனைப் புணர்ந்து அப் புணர்ச்சியால் வந்த கருவை ஆறுமுறை அவள் ஒருகலத்தில் இட்டு வைத்தமையின், அவ் ஆறு கருவும் கந்தன் எனப் பெயரிய ஒருமகவாய் ஆறு திருமுகங்களு டனும் பன்னிரண்டு கைகளுடனுந் தோன்றிற் றாம். இதுவே பழைய மாபாரதத்திற் போந்த கந்தன் பிறப்பாகும். இக்கதை முன்சொன்ன பரிபாடற் கதைக்கு எவ்வளவு மாறு பட்டதாய் இருக்கின்றது. அதுவேயுமன்றித், தீக்கடவுள் கந்தனுக்குத் தந்தையாயின், கந்தனை யொப்ப அவனும் முழு முதற் கடவுளாக வன்றோ இருத்தல் வேண்டும்? ஆனால், தீக் கடவுளோ முனிவர் மனைவியரைக் காதலித்தான் என்று சொல்லப்படுகின்றான். வேண்டுதல் வேண்டாமை இல்லாத கடவுள் ஊனுடம்பு வாய்ந்த முனிவர் மனைவியரை விழைந்தா னென்றல் எவ்வளவு இழிந்ததாய்க் கடவுள் நிலைக்கு மாறான தாய் இருக்கின்றது! அல்லாமலும் முனிவர் மனைவியர்போல் வடிவெடுத்த சுவாகா என்பவளைக் கூடிப் பெற்ற கந்தனென்னும் மகவு முழுமுதற் கடவுளாதல் யாங்ஙனம்? இவ்வாறெல்லாங் கடவுளிலக்க ணத்துக்குப் பலவகையால் மாறுபட்டு நிற்கும் இக் கதை, களவுப் புணர்ச்சியிற் பிறந்த ஒரு முனிவர் மகன்றன் கதையாய் இருக்கக் காண்டுமே யன்றிப், பிறப்பு இறப்பு இல்லா முழுமுதற் கடவுளான முருகப் பிரான்றன் தெய்வ முழு முதன்மையை அறிவிக்கும் உண்மைக்கதை யாகுமோ? கூர்ந்து பார்மின்கள் அறிஞர்களே! இத்தகைய பொல்லாக் கதையை நம்புங் குருட்டுச் சைவர் தம் பாழ்த்த உரை சைவத்துக்குப் பகை மையா, இதுபோன்ற ஆரிய அருவருப்புகளைத் தொலைத்து, முருகப் பிரான்றன் உண்மை இயல்பை யறிந்து அவனை வழி படல் வேண்டும் என்றுரைக்கும் எமது மெய்யுரை சைவத் துக்குப் பகைமையா என்பதை ஆராய்ந்து தெளிமின்கள்! இனி, வான்மீகி இராமாயணத்திற் சொல்லப்பட்ட கார்த்திகேயன் பிறப்பை இங்கு எடுத்துக் காட்டுதும், முன்னொருகாலத்திற் சீகண்டராகிய சிவபிரான் உமாதேவியை மணந்து கொண்டபின், ஆயிரம் தேவயாண்டுகள் வரை யில்அம்மையைப் புணர்ந்து கொண்டிருந்தனராம். அப் போதும் உமையம்மையார்க்கு மகன் பிறந்திலனாம். ஆனாலும், இனி மகாதேவர்க்குப் பிறப்பதாகிய பிள்ளையின் அஞ்சத் தக்க பேராற்றலை நினைந்து பெருந்திகில் கொண்ட தேவர்கள் சிவபிரானையும் அம்மையையும் புணர்ச்சி தவிர்கவென்று வேண்டிக் கொண்டனராம். அதற்கியைந்த சிவபெருமான் அவர்களை நோக்கி முன்னமே வெளியாக்கப் பட்ட கருவை என்செய்வது என்று தேவர்களைக் கேட்டனராம். அப்போது தேவர்கள் அக்கிநிதேவனையும் வாயுதேவனையும் அக்கருவை ஏற்கும்படி வேண்டினராம். அவ்விருவரும் அவ்வாறே செய்ய, உடனே ஒரு வெள்ளைமலை உண்டாக, அம் மலையின்கட் கார்த்திகேயன் பிறந்தனனாம். தேவர்கள் அம்மையைப் புணர்ச்சி தவிர்கவென்று வேண்டினமையின், அவள் அவர்கள்மேற் சினந்து நும் மனைவிமார் எல்லாரும் வறடிகளாகுகவென்று சபித்தனளாம். அதன்பிற் சிவபிரான் தவத்திலமரத், தேவர் களெல்லாரும் நான்முகனை யணுகிச் சிவபிரான் தவத்தில மர்ந்தமையின், எம்முடைய படைகளுக்குத் தலைவ னிலன்; ஆதலால், எமக்கு வேறொரு படைத்தலைவனைத் தந்தருள்க என வேண்டினராம். அப்போது நான்முகன் உமைப் பிராட்டியின் சாபத்தால் நும்மனைவிமார் எவரும் புதல்வர்ப் பெறார்; என்றாலும், அக்நிதேவன் மட்டுங் கங்கையின்கண் ஒருபுதல்வனைப் பிறப்பிக்க வல்லன்; அப் புதல்வனே நும்படைக்குத் தலைவனாவன் என மொழிந்தன னாம். அது கேட்ட தேவர்கள் கயிலை மலைக்குச் சென்று தமது கருத்தை நிறைவேற்றுமாறு அக்கிநிதேவனை அமர்த்தி வைத்தனராம். அக்கிநிதேவனும் அவர் வேண்டியபடியே கங்கையைக் கருவேற்றி வைக்கக் கங்கையானவள் கார்த்தி கேயனைக் கருவுயிர்க்கக், கருவுயிர்த்த மகவைக் கிருத்திகைகள் என்னுந் தேவமாதர்கள் பாலூட்டி வளர்க்க, அதுபற்றி அப்பிள்ளை கார்த்திகேய னெனப் பெயர் பெற்றனனாம் என்று இவ்வாறு கார்த்திகேயன் பிறப்பை வான்மீகி இராமாயணம் நுவலா நிற்கின்றது. இக் கதையின்கண் ஆயிரந் தேவயாண்டுகள் வரையிற் சிவபிரான் உமைப்பிராட்டியைப் புணர்ந்திருந்தன னென்பது கடவுள் இலக்கணத்துக்குப் பெரிதும் மாறாய் நிற்கின்றது. ஏனென்றால், இறைவனும், இறைவியும் எஞ்ஞான்றும் இன்ப உருவினராயே பிரிப்பின்றி நிற்குந் தன்மையர் ஆவர். அங்ஙன மிருப்ப, ஆயிரந் தேவயாண்டுகள் மட்டும் அவர் இன்பம் நுகர்ந்தனரென்பது யாங்ஙனம் பொருந்தும்? அங்ஙனம் புணரும் முன் இன்பமின்றி இருந்தனராயினன்றோ, அவர் புணர்ச்சி யின்பத்தை விழைதல் வேண்டும்? எக்காலுமே இன்ப உருவினரா யிருப்பார்க்குப் புணர்ச்சியின்பம் எற்றுக்கு? ஊனுடம்புடைய எம்மனோர் பெரும்பாலுந் துன்பவயத்தராய் இருத்தலினா லன்றோ அவர் புணர்ச்சியின்பத்தை இடையி டையே வேண்டு கின்றனர். துன்பமே இல்லாது இன்பமேயாய் நிற்கும் இறை வற்கும் புணர்ச்சியின்பம் நிகழ்ந்த தென்னு மிக்கதை கடவுளின் இன்பநிலையைக் குலைப்பதாய் இருக்கின்றதன்றோ! மேலும், எம்போன்ற சிற்றுயிர்க ளெல்லாம் நிலையின்றி மறைந்துவிடும் ஊனுடம்பின் வாயிலாகவன்றி இன்பநுகர்தலை அறியமாட்டா. எல்லாம் வல்ல முதல்வனோ ஊனுடம்புடையன் அல்லன். அவன் அருளையே திருமேனியாக வுடையன். அவ்வருளே அம்மை வடிவாய் அப்பனை எஞ்ஞான்றும் பின்னி நிற்கு மென்பது, அருளுண்டாம் ஈசற்கு அது சத்தியன்றே அருளும் அவனன்றி இல்லை-அருளின்று அவனன்றே இல்லை அருட்கண்ணார் கண்ணுக்கு இரவிபோல் நிற்கும்அரன் ஏய்ந்து. என்னும் சிவஞானபோதத் திருவெண்பாவால் நன்கு வலியுறுத்தப்பட்டமை காண்க. இவ்வாறு பிரிப்பின்றி எஞ்ஞான்றும் இன்ப உருவாய் நிற்கும் இறைவனையும் இறைவி யையும் பிரித்து வைத்து, ஊனுடம்பில்லா அவர் ஊனுடம்பு டைய எம்மனோரைப்போற் புணர்ந்து கிடந்தாரென்னும் இவ்விராமாயண கதையின் பொய்யுரை எவ்வளவு இழிக்கத் தக்கதா யிருக்கின்றது பார்மின்கள்! இன்னும் எல்லா உயிர் களையும், எல்லா உலகங்களையும் படைத்துக் காத்து அழிக்கும் பேராற்றல் வாய்ந்த அப்பனும் அம்மையும் நெடுநாட் புணர்ந்தும் புதல்வர்ப்பேறு வாய்ந்திலரென்பதும், பின்னர் அம்மை வயிற்றிற் கருப் பாய்ந்திருந்த தென்பதும், அதனையறிந்து தேவர்கள் பெருந்திகில் கொண்டனரென்பதும் எவ்வளவு இழிவான கதைகளாயிருக்கின்றன. மேலும், பேராற்றலும் பேரருளும் வாய்ந்த இறைவன்றன் பேராற்றலும், பேரருளும் உடையதாய் இருக்குமன்றோ! அங்ஙனமிருக்க, அத்துணைச் சிறந்த மகப்பேற்றை யுணர்ந்து தேவர்கள் மகிழ வேண்டிய வராயிருக்கத் திகில்கொள்ள வேண்டுவதென்னை? அல்லதூ உம், அம்மை வயிற்றினிலிருந்த கருவை அக்கினி தேவனும் வாயுதேவனும் ஏற்றல் எங்ஙனம்? ஏற்றுக் கொண்டுபோய் வெள்ளை மலையின்கட் கார்த்தி கேயனைப் பிறப்பித்தன ரென்பதூஉம் யாங்ஙனம் பொருந்தும்? அக்கினி வாயுவென்னுந் தேவர்களிருவரும் ஆண்களா பெண்களா? ஆண்களாயின் அம்மையின் வயிற்றிலிருந்த கருவை அவர்கள் ஏற்பதும் பிறப்பிப்பதும், ஒரு கருவை இருவர் ஏற்றுப் பிறப்பிப்பதும் ஆகிய இவை எல்லாம் எவ்வாறு செய்தல் கூடும்? பெண்க ளாயின் ஆணொடு கூடியல்லது கருவேற்றல் இயலாதா யிருக்க, இவர்கள் மட்டும் அக் கருவை ஏற்றனரென்பது எத்துணைப் பெரும் புளுகா இருக்கின்றது! அல்லாமலும், அம்மையின் ஒரு கருவை மாதரிருவர் ஏற்றனரென்பது தான் எவ்வாறு பொருந்தும்? மேலுந், தேவர்களின் வேண்டுகோளின்படி அக்கினி தேவன் கங்கையைக் கருவேற்றினான் என்பதும் எவ்வாறு பொருந்தும்? கங்கை என்பது வெறுந் தண்ணீரா? அல்லது தண்ணீர்க் கரையிலிருந்த ஒரு பெண்ணா? கங்கை கார்த்திகேயனைப் பெற்றனளென்றால், பெற்ற அம் மகவுக்கு அவளே பாலூட்ட வேண்டி யருக்கக், கிருத்திகைகளென்னுந் தேவமாதர் அறுவர் அம் மகவுக்குப் பாலூட்டி வளர்த்தன ரென்பது யாங்ஙனம் பொருந்தும்? ஈன்ற கங்கைக்குப் பாலில் லாமற் போயிற்றா? ஊனுடம்புடைய மக்கட் பெண்டிரெல்லாம் தாம் ஈன்ற மகவினை வளர்க்கத் தாமே பாலூட்டக் காண்டு மன்றோ? ஊனுடம்பு உடையார்க்குள்ள பால்வளந்தானும் இல்லாத கங்கையைத் தேவமாதென்றலும், அவள் வயிற்றில் எல்லாம்வல்ல இறைவனான கார்த்திகேயன் பிறந்தன னென்றலும் எத்துணைப் பொருத்தமற்ற பொய்க்கதைகளா யிருக்கின்றன! இனிக் கிருத்திகை மாதர்கள் அறுவரால் வளர்க்கப்பட்டமை பற்றிக் கார்த்திகேயன் அறுமுகக் கடவுள் எனப்பட்டனனா? அல்லது முதலில் ஆறு குழந்தைகளாயிருந்து பிறகு ஒரு திருவுருவங் கொண்டமையால் அப் பெயர் பெற்றனனா என்பதும் ஆராயற்பாற்று. கதையின் போக்கையும் மற்றைப் புராணங்கள் கூறும் அறுமுகன் பிறப்பையும் உற்று நோக்குமிடத்து, முதலில் ஆறு குழந்தைகளாயிருந்து, பின்னர் அவ் ஆறும் ஒன்றாய்க் கூடி ஆறு திருமுகங்களுடைய பிள்ளை யாயிற்றென்பதே புலனாகா நிற்கின்றது. இவ்வாறு கொள்ளு மிடத்துத், தனித்தனி ஆறு குழந்தைகளாய் இருந்தபோது ஆறு உடம்புகளில் நின்ற ஆறுஉயிர்கள் ஓருயிராகி ஓருடம்பின்கண் நிற்றல் எவ்வாறு பொருந்து மென்பது வினாவப்படுமன்றோ? ஏனென்றால், உடம்புகள் அருவல்லா மாயையிற் றிரட்டப் பட்டன ஆகும், ஆகையால் அவற்றுள் ஒன்று மற்றொன்றாய்த் திரிதல் கூடும்; ஆனால் உயிரோ உருவில்லாத அறிவுப் பொருளாதலால் அது மற்றொன் றாய்த் திரிதல் யாங்ஙனம் பொருந்தும்? சைவ சித்தாந்த நூற்படி ஒவ்வோருயிரும் எக்காலத்தும் அழிவுபடாதுள்ள தனித்தனி முதல்களல்லவோ? இவ்வுண்மை ஆசிரியர் மெய்கண்ட தேவநாயனார். அவ்வுடலில் நின்றுயிர்ப்ப ஐம்பொறிகள் தாம் கிடப்பச் செவ்விதின் அவ்வுடலிற் சென்றடங்கி--அவ்வுடலின் வேறொன்று கொண்டு விளையாடி மீண்டதனை மாறல்உடல் நீயல்லை மற்று. என்று சிவஞானபோதத்தின்கண் தெளித்து உரைத்தமை யால் நன்கு விளங்கும். எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளாகிய சிவத்துக்கு அணுக்கராய், அச் சிவத்தோடொத்த முழுமுதல் உரிமைகள் பெரும்பாலும் உடையராய், மிக நுண்ணிய தூய மாயா உலகங்களில் வைகும் விஞ்ஞான கலர், பிரளயாகலர் என்னுந் தூய கடவுளருங் கூடத் தனித்தனி முதல்களாம் உயிர்களே ஆவர் என்று ஆசிரியர் அருணந்தி சிவனார், உரைதரும்இப் பசுவர்க்கம் உணரின் மூன்றாம் உயரும்விஞ் ஞானகலர் பிரளயா கலர்சகலர் நிரையின்மலம் மலங்கன்மம் மலங்கன்மம் மாயை நிற்குமுதல் இருவர்க்கு நிராதார மாகிக் கரையில்அருட் பரன்துவிதா சத்தினிபா தத்தால் கழிப்பன் மலம் கசலர்க்குக் கன்ம ஒப்பில் தரையில்ஆ சான்மூர்த்திஆ தாரமாகித் தரித்தொழிப்பன் மலம்சதுர்த்தா சத்திபா தத்தால். என்று வற்புறுத்தி இருக்கின்றமையின், பிரளயாகல விஞ்ஞானகல தத்துவக் கடவுளரில் ஒருவராகக் கார்த்தி கேயரைக் கொள்ளினும், அவர் ஓர் உயிர்முதலே யாகவேண்டு மல்லாமல் ஆறுயிர் சிதைந்து மாறிய ஓருயிராவர் என்றல் எவ்வாற்றனும் அடாது. ஆகவே, ஆறுஉயிர்கள் கூடி ஓருயிராய் ஆறுமுகன் ஆயின என்னும் இப் பாழும் பொய்க் கதை சைவசித்தாந்த மெஞ்ஞானப் பொருளுக்கும், முருகப் பிரான்றன் முழுமுதற் றன்மைக்கும் முழுமாறாய் நின்று அவர்தம் தெய்வத்தன்மை யைச் சிதைக்கும் இயல்பினதா யிருத்தலின், இப் பொல்லாக் கதையை ஆராயாது அப்படியே நம்புங் குருட்டுச் சைவர்கள் சைவத்துக்குப் பெரும்பகைவராதலோடு, தமிழ்ப் பெருந் தெய்வமாகிய முருகப் பிரான்றன் தெய்வமாட்சியினைக் குறைக்குந் தீவினையாளராவ ரென்றும் ஓர்ந்து கொள்க. இனி, மேற்காட்டிய மூன்று புராண கதைகட்கும் மிகப் பிற்பட்டகாலத்தே எழுந்ததாகிய கந்தபுராணத்தின்கண் நுவலப்பட்ட கந்தன் பிறப்பினை இங்கே எடுத்துக்காட்டி அதன் மாறுபாட்டினையும் ஒரு சிறிது விளக்குவாம். சூரன் சிங்கமுகன் தாருகன் என்னுங் கொடிய அசுரர்களால் மிகவுந் துன்புறுத்தப் பட்ட தேவர்கள் சிவபிரானை அடைக்கலம் புகுந்து அவ் வசுரர்களைத் தொலைத்தருளுமாறு வேண்டின ரென்றும், அதற்குத் திருவுளம் இசைந்த இறைவன் ஆறு திருமுகங்க ளோடும்விளங்கிய ஒரு திருமேனி உடையராய்த் தன்மருங்கிருந்த அம்மையைக் காதல் மிகுந்து நோக்க, உடனே அவர்தம் விந்துவானது மேல்நோக்கி எழுந்து, அவர்தம் நெற்றிக்கண்கள் ஆறிலும் ஆறு ஓளியாய் வெளிப்பட்டு அவர்க்கு எதிரே வந்து நின்றதென்றும், அவ்ஆறு ஒளிவடிவினையும் நோக்கிய இறைவன் அக்கினிதேவனையும் வாயுதேவனையும் அழைத்து இவ்ஆறு ஒளிவடிவினையும் நீவிர் இருவீருங் கங்கையின்கட் கொண்டுபோய்ச் சேர்ப்பித்தல் வேண்டும் என்று கட்டளை யிட, அவ் விருவரும் அவற்றை மாறி மாறிச் சுமந்து சென்று கங்கையின்கண் உய்த்தனரென்றும், அங்ஙனஞ் சேர்ப்பிக்கப் பட்ட அவ்ஆறு விந்து ஒளியுங் கங்கை நீரினை உரிஞ்சிவிடக் கங்கையானவள் பெரிதுந் திகில் கொண்ட அவ் வொளிகளைத் தன்னருகிருந்த ஒரு புல்லடர்ந்த வாவியின் (சரவணப் பொய்கை) நடுவிலுள்ளதொரு தாமரை மலரில் ஒதுக்கிவிட, அதன் கட்கிடந்து அவ்ஆறும் ஒன்றுகூடி ஒரு திருஉருவாய் ஆறுமுகமும் பன்னிரண்டு கையும் உடையதாகி விளங்கிற் றென்றும் போந்த கதையே அதுவாம். இக் கதையின்கண் கடவுளிலக்கணத்திற்கு மாறு கொண்டனவாய் இருப்பனவும் இங்கெடுத்துக் காட்டுதும்: தேவர்களின் வேண்டுகோளுக்கு இசைந்த இறைவன் ஒரு மகவினைப் பிறப்பிக்க வேண்டி ஆறுமுகங்களோடு இருந்து அம்மைமேற் காதல் கொண்டமை எற்றுக்கு? ஒருமுகத் தோடி ருந்து காதல் கொண்டாற் போதாதோ? அற்றன்று, ஆறுமுக முடைய பிள்ளைப்பேறு வேண்டி அங்ஙனங் கொண்டா ரெனின், ஆறுமுகமுடைய பிள்ளை எற்றுக்கு? அது மிகுந்த ஆற்றல் உடையதாகும் பொருட்டு ஆறுமுகம் வேண்டினா ரெனின் அப்போது ஒருமுகமுடைய தாம் அவரினும் ஆற்றலிற் குறைந்தாராய் விடுவரோ? ஒருமுகம் உடைய சிவபிரானே ஆறுமுகம் உடையராய் வேண்டியபடி மாறும் ஆற்றல் உடைய ரென்றால், அங்ஙனமே அவர்தம் மகவாய் ஒருமுகத்துடன் பிறக்குங் கந்தனும் வேண்டிய போது ஆறுமுகமும் ஆறுக்கு மேற்பட்ட முகமும் எடுக்க வல்லனாம் அல்லனோ? எனவே, ஆற்றல் மிகுதியின் பொருட்டு இறைவன் பலவேறு முகங்களை வேண்டினானென்றல் பெரிதும் இழிக்கற் பாலதா யிருக்கின்றது. ஒருவருடைய ஆற்றல்அவர்தம் மன வன்மையிலிருந்து வருவதே யன்றி, உடல்வன்மையி லிருந்து வருவதன்று. ஏனென்றால், உடல்வன்மையுடையாரிற் பலர் மனத்திட்பம் இல்லாமையின் வலிவற்றவரா யிருக்கின்றனர். உடல்வலிமை இலரேனும் மனத்திட்பம் மிகுதியும் உடையார் பிறராற் செய்யலாகாத அரிய பெரிய ஆண்மைச் செயல் களையும் ஆற்றியிருக்கின்றனர். இது, பேராண்மையிற் சிறந்த நெப்போலியன் போன்ற மன்னர் சிலரின் வரலாறுகளை உற்று நோக்குதலால் நன்கு அறியலாம். இனிச், சிவபிரான் தமது விந்துவினை வெளிப்படுத்தும் பொருட்டு அம்மையைக் காதலுடன் நோக்கினர் என்றும், அதனால் மேலெழுந்து நெற்றிக் கண்களின் வழியாக வெளிப் போந்த ஆறு விந்துவடிவே ஆறுமுகனாயிற்றென்றும் சொல் லுங்கதை மிகவும் பொருத்தமற்றதா யிருக்கின்றது. அம்மை பெண்வடிவும் ஐயன் ஆண்வடிவும் உடையராயிருக் கையில், அவர்தம் புணர்ச்சியினாலன்றோ மகப்பேறுண்டாதல் வேண்டும். அவ்வாறின்றி, அப்பனிடத்துள்ள விந்துவின் வெளிப் பாட்டினாலேயே பிள்ளைப் பேறுண்டாகுமெனின், புணர்ச்சி க்கும் பிள்ளைப் பேற்றுக்கும் இசைந்த பெண் வடிவுடைய அம்மையை அவருடன் பொருத்துவது எற்றுக்கு? அம்மையின் வயிற்றிற் கருவமைத்துப் பின் அவர் குறிவழியே அதனைப் பிறப்பித்தல் அருவருக்கற் பாலதாகலின் இறைவன் அவ்வாறு செய்யாமல் தன்னுடம்பினின்றே அம் மகவினைத் தோற்று வித்தானெனின், அப்பனுடம்பினும் அம்னையி னுடம்பு தாழ்ந்த தென்றும், அஃது அருவருப்புடைய வாலாமை (அசுத்தம்) யுடையதென்று மன்றோ கொள்ளல் வேண்டும். வினைவயத்தாற் பிறக்கும் எம்மனோர்க்குள்ள ஊனுடம்புகளே வாலாமை யுடையனவாகுமன்றி, வினைவயப்படாது இயற்கையிலேயே அருளொளிவடிவாய் விளங்கும் அம்மையினுடம்பும் வாலாமை யுடையதாகுமோ? அவளுடம்பு சொல்லுக்கும் நினைவுக்கும் எட்டா எல்லையற்ற தூய்மையுடையதென்று கேனோபநிடதம் கிளத்தலை மேலெடுத்துக் காட்டினமே. அத்துணை அருட்டூ ய்மை வாய்ந்த அம்மையின் திருவயிற்றில் அக் கருவைப் புகுவித்துப் பிறப்பித்தலன்றோ முறையாம். அதற்கு மாறாக இறைவனே அக் கருவைத் தோற்றுவித்தனனென்பது எவ்வளவு இயற்கைக்கு மாறாய் இருக்கின்றது! அதுவேயுமன்றி, அப்பனு டம்பிலும் அம்யினுடம்பு தாழ்ந்த தொன்றாயின், அத்தகைய உடம்பினளை அவன் கூடியிருத்தலுந் தாழ்ந்ததா மன்றோ? அப்பன் அம்மையைப் புணர்தல் அருவருக்கத் தக்க தாயின், அம்மையின் சேர்க்கையின்றி அப்பன் தனியனாயல்லனோ இருக்கற்பாலன். அத்துணை தான் ஏன்? புணர்ச்சியானது குற்ற முடையதென்பார்க்குப், பெண்டெய்வம் ஒன்றுளதெனக் கோடலுங் குற்றமாமன்றோ? மேலும், அம்மையைக் காதல் கொண்டு நோக்கிய பின்னரே அப்பனுக்கு விந்து வெளிப்படு வதாயிற்றென்றலும், அவ்விருவர்க்கும் புணர்ச்சியுண்டென் பதை அறிவிக்கின்றது. புணர்ச்சியின்பத்தை வேண்டியே பெண் பாலார் மேல் ஆண்பாலார் காதல் கொள்கின்றனரன்றி, அதனை வேண்டாது காதல் கொள்வாரை யாண்டுங் காண் கிலேம். அற்றன்று, புணர்ச்சி வேண்டாது காதல் கொள்ளுதலே சிறந்ததாமெனின், ஆண்மக்கள்மேல் ஆண்மக்கள் காதல் கொள்ளுதலே அமையும். பெண்மக்கள் வேறு எற்றுக்கு என்று வினா நிகழுமன்றோ? அல்லதூஉம், பெண்மக்களைக் காதலித் தலும் அவரொடு புணர்தலும் அருவருக்கற் பாலவெனின், பிள்ளைப் பேறு வேண்டுதலும் அருவருக்கற்பாலதன்றோ? பிறர் நலத்தின் பொருட்டுப் பிள்ளைப்பேறு இன்றியமையாத தாயிற் றெனின்; அங்ஙனமே பிள்ளைப்பேற்றின் பொருட்டும் ஆண் பெண் புணர்ச்சியும் இன்றியமையாததாய் இரு பாலார்க்கும் இன்பத்தைத் தரும் பெற்றியதாகு மன்றோ! அவ்வாறிருக்கப், புணர்ச்சியைக் குற்றமென்றும், அப் புணர்ச்சியாலுண்டாகும் மகப்பேற்றை மட்டும் நல்லதென்றும் ஆராயாது மடமையாற் கூறுவோர், இறைவன் வகுத்த ஆண் பெண் அமைப்பு முறையின் உண்மையைச் சிறிதும் உணராதவரே ஆவர். ஆகவே, அம்மை யைப் பக்கத்தே வைத்துக் கொண்டு அவளொடு புணராதே அக் கருவினை இறைவன் தோற்றுவித்தானென்றல் ஒருவாற்றானும் பொருந்தாத பொய்க் கதையேயாம். அம்மையைப் புணராதே அங்ஙனம் அதனைத் தோற்றுவிக்க வல்லவன், அதனைத் தோற்றுவித்தற்கு வாயிலாக அவளைக் காதல் கொண்டு நோக்குதலும் பழுதாமன்றோ? இங்ஙனமெல்லாம் இக் கதையின் பொய்ம்மையினை ஆராய்ந்து பார்க்குமிடத்து, அப்பனிலும் அம்மையை இழிவாக நினைந்து, அக் கருவினை அவள்பாற் பிறப்பித்தலையுங் குற்றமாகக் கருதிவிட்ட ஆராய்ச்சி அறிவில் லாக் கயவன் எவனோ ஒருவன், எல்லாம் வல்ல அம்மையப்பரின் இலக்கணத்துக்கும், முழுமுதற் றெய்வம் வகுத்த இயற்கை முறைக்கும் முற்றும் மாறாக இக் கதையைக் கட்டிவிட்டன னென்பதே நன்கு புலனாகா நிற்கின்றது. இனி, இறைவன் ஆறுமுகனைப் பிறப்பிக்கும் பொருட்டு அம்மையைக் காதலிக்க, அவனது விந்து மேல்நோக்கி எழுந்து அவன் கண்களின் வழியே வெளியாயிற்றென்றலுங் கடவுளிலக் கணத்துக்கு மாறாய் நிற்கின்றது. ஏனென்றால், உடம்பின் மூலத்தில் இருக்கும் விந்துவை மேலெழுப்பி மூளையிற் சுவறு வித்தல் தவமுறையாகிய யோகமார்க்கம் ஆமென்றும், அதனை அங்ஙனம் மேலெழ விடாது குறிகளின் வழியே கீழ்ச் செல விடுத்தல் புணர்ச்சிக்குங் கருத்தோற்றத்திற்கும் உரிய போக மார்க்க மாமென்றும் நூல்வழக்காலும் உலக வழக்காலும் அறிவுடையோர் நன்குணர்வர். தவமுறையால் விந்துவை மூளைக்கு ஏற்றுதல் கருத்தோற்றத்திற்கு இடை யூறாகுமே அல்லாது அஃது அதற்குச் சிறிதும் உதவியாகாது. அங்ஙன மிருக்கப், பிள்ளைப்பேறு வேண்டிய இறைவன் தன் விந்துவினை மேன்முகமாக எழுப்பினானென்றால் எத்துணை மாறுபாடாய் இருக்கின்றது! வயிற்றின் அடிக்கீழ் இருக்கும் விந்து ஆண்குறி வாயிலாகக் கீழிறங்கி ஒரு பெண்ணின் கருப்பையிற் புகுந்தா லன்றிக் கருவுண்டாதல் வேறு எவ்வாற் றானுங் கூடாதாகும். இவ்வியற்கை முறையொடு திறம்பி இறைவன்றன் விந்து மேலெழுந்து அவன் கண்களின் வழியே வெளிப்போந்து கருவாயிற்றென்றல், அறிவில்லாருஞ் சிறிது நினைந்து பார்ப்பின் ஏற்றுக் கொள்ளாத தொன்றாம். இக் கதைப் பொய்ம்மையினை ஆராய்ந்து நோக்குங்கால், இறைவனது உடம்பின் மேற்பகுதி யினை உயர்வாகவுங், கீழ்ப்பகுதியினைத் தாழ்வாகவும் நினைந்து விட்ட புல்லறிவி னனான எவனோ ஓர் இழிஞன் இக் கதையினைக் கட்டி விட்டானென்பது தெற்றென விளங்கா நிற்கும். மாற்றற்ற தங்கத் தினாற் சமைக்கப்பட்ட ஒரு வடிவத்தில் மேற்பகுதி உயர்ந்த தென்றுங், கீழ்ப்பகுதி தாழ்ந்ததென்றுங் கூறுதல் பொருந்தாமை போல, அளவிலாத் தூய அருள் வடிவாய் நிற்கும் இறைவன்றன் திருமேனியில் உயர்ந்ததெது? தாழ்ந்ததெது? திருமேனி முழுதும் அளக்கலாகாத் தூய்மையும் விழுப்பமும் வாய்ந்ததாமன்றோ? இவ்வளவு தானும் ஆய்ந்து பாராமல் அத் திருமேனியின் கீழ்ப்பகுதியை இழிந்ததாகப் பிழைபடக் கருதி, அவ்வாற்றால் ஆறுமுகன் பிறப்பைப் பின்னும் பலவாற்றாற் பிழைபடுத்திய கீழ்மகன் புல்லறிவுமாட்சியை என்னென் றுரைப்பேம்! இனி, இறைவன் தன் நெற்றிக் கண்களின் வழிப்போந்து தன்னெதிரே நின்ற ஆறுகருவினையும் உடனே ஏற்று வளர்த்துக் கொள்ளாது, அவற்றைக் கங்கையின்கட் கொண்டுபோய்ச் சேர்ப்பிக்கச் செய்தமையும், அங்கு அவை தனியே கிடந்த வான்மீன்களாற் பாலூட்டப் பெற்று வளர்ந்தமையும், அவ் விறைவனுக்குத் தன்மகவின்பால் அருளிரக்க மில்லாக் குறை பாட்டினை ஏற்றுகின்றதன்றோ? எத்துணை இழிந்த உயிர் களையுந் தோற்றுவித்து, அவற்றை ஒவ்வொரு நொடியுங் கண்ணுங் கருத்துமாய்ப் பாதுகாத்து வளர்த்துவரும் அம்மை யப்பர், தாம் ஈன்ற அறுமகவினை அங்ஙனம் அருள் இரக்க மின்றிக் கங்கையின்கண் எறிந்து விடுவரோ? உற்று நோக்குங் கால், நம் ஊனுடம்பின் தோற்ற வளர்ச்சியிற் பழகின அழுக் கறிவைக் கொண்டு, எல்லாம் வல்ல முருகன் பிறப்பினைக் கூறப் புகுந்த எவனோ கீழ்மகன் ஒருவன், அவன் பிறப்பினுக்குத் தூய்மை கற்பிப்பான் புகுந்து கடவுளிலக்கணத்துக்குப் பெரிதும் மாறான இத்துணைப் பொய்க்கதைகளையுங் கட்டிவிட்டா னென்பது நன்கு அறியக் கிடக்கின்றது. இங்ஙனம், பேதை யாயினான் மேற்கொண்ட ஒரு முயற்சி பொய்பட்டுப் பெரிதும் இடர் பயத்தல் கண்டன்றோ, ஆசிரியர் தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார், பொய்படும் ஒன்றோ புனைபூணுங் கையறியாப் பேதை வினைமேற் கொளின். என்று அருளிச் செய்தார். இவ்வாறெல்லாம் முருகன் பிறப்பைப் பற்றிப் பேதையாயினார் கட்டி விட்ட கதைகள் நான்கும் ஒன்றோடொன்று பெரிதும் மாறுகொண்டு முழுமுதற் றெய்வ இலக்கணத்தையும், அத் தெய்வத்தால் வகுக்கப்பட்ட அருளியற்கை முறையினையுஞ் சிதைப்பன வாயிருத்தலின், இன்னோரன்ன பொய்க்கதைகளைக் கொண்டு இறைவன்றன் அருட்டன்மைகளை ஆராயப்புகுதல். ஒப்பிலா மலடிபெற்ற மகன் ஒருமுயற்கொம்பேறித், தப்பிலாகாயப் பூவைப் பறித்த மைக்கே ஒப்பாய் முடியுமென்க. ஆதலால், இவைபோன்ற பொய்க்கதைகள், இறைவன் அருளிலக்கணத்தை வற்புறுத்துஞ் சைவ சித்தாந்தத் தனிப்பெருங் கோட்பாட்டுக்குச் சிறிதும் உடம்பாடாக என்று உணர்தலும், உணர்ந்து அவ்வழி ஒழுகு தலுமே உண்மைச் சைவர்க்குரிய உண்மை நெறியா மென்று உணர்ந்து தெளிந்து கொள்க. 16. முருகப்பிரான் திருவுருவ வழிபாட்டின் உண்மை அற்றேல், முருகன் திருவுருவ வரலாற்றினைப் பற்றிய உண்மை உரைதான் யாதோவெனிற் கூறுதும். கடவுள் மிக நுண்ணிய அருள்ஒளி வடிவாய் விளங்குந் தன்மையரென்பதும், அவரது அவ்வருவொளி வடிவினைக் காணுதற்கு ஏற்ற அறிவும் ஆற்றலும் இல்லாத மக்கட் பிறவியினரான நம்மனோர்க்குத் தமது அவ் வடிவினை ஒரு சிறிதாயினுங்காட்டி, நமது அறிவை விளக்குதல் வேண்டும் என்னும் பேரிரக்கத்தால் அவர் தமது ஒளிவடிவோடு ஒரு புடையொத்த தீ ஒளிவடிவில் தம்மை நமக்கு விளங்கக் காட்டுகின்றார் என்பதும், நமக்குப் புலனாகுந் தீயொளி வடிவுகள் திங்களும் ஞாயிறும் நெருப்புமேயாம் என்பதும், இவற்றுள்ளும் ஞாயிறு ஒன்றுமே இயற்கைத் தனிப் பேரொளியாய் விளங்குவதாமென்பதும், அதுபற்றியே பண்டைத் தமிழர்க்கு முதலாசிரியரான விசுவாமித்திர முனிவர் தாம் வகுத்த இருக்குவேத மூன்றாம் மண்டிலத்தின் கட் பகலவனில் வைத்து இறைவனை வணங்குங் காயத்ரி மந்திரமாகிய, ஓம்தத் சவிதுர்வரேண்ம் பர்க்கோ தேவய தீமஹீ தீயோ யோந: ப்ரசோதயாத். என்பதனை இயற்றியருளினரென்பதும், அவரை முத லாகக் கொண்டுவந்த பிற்காலத்துச் சான்றோர்களும் பகலவனை முதன்மையான உடம்பாகக்கொண்டு சிவம் என்னும் மேலான பொருள் விளங்கா நிற்கின்றது என்னும் பொருள்படச் சூர்யோ முக்ய சரீரந்து சிவயபரமாத்மந: என்று அருளிச் செய்தன ரென்பதும், இவ் வடிப்பட்ட சான்றோர் கொள்கைக்கு இணங் கவே சைவ சமயாசிரியராகிய திருநாவுக்கரசு நாயனாரும், அருக்கன் பாதம் வணங்குவ ரந்தியில் அருக்கன் ஆவான் அரன்உரு அல்லனோ இருக்கு நான்மறை ஈசனை யேதொழுங் கருத்தினை யறியார் கன்ம னவரே என்று அருளிச் செய்தன ரென்பதும் மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் முதலான எம்முடைய நூல்களிற் பலகாலும் பலவிடத்தும் எடுத்து விளக்கிக் காட்டியிருக் கின்றேம். பாருங்கள் அன்பர்களே! பகலவன் ஒளி ஒன்று மட்டும் இல்லையாயின், இந்த நிலவுலகத்தின் நிலை எத்தன்மைய தாயிருக்கு மென்பதைச் சிறிதாயினும் உற்று உணர்மின்கள்! நாடோறும் பகலவன் ஒளி விளக்கம் வருதலும் போதலுமாய் மாறி மாறி இடையறாது நிகழ்ந்து வருதல்பற்றி நாம் அதன் அருமைப்பாட்டினை உணர்ந்து பாராது நாட்கழித்து வருகின் றோம். பகலவன் இல்லாது ஒழியின் நிலவொளியும் இல்லை யாம். நிலவொளி என்பது பகலவன் ஒளியின் எதிரொளி யன் றோ? பகலும் நிலவும் இல்லையாயின் எங்கும் இருள் சூழ்ந்திருப் பதன்றி, வெளிச்சத்தைக் காண்டல் சிறிதுமே இயலாது. ஞாயிற்றின் வெப்பம் இல்லையாயின் எங்குங் கடுங்குளிருங் கொடும் பனியும் மிகுந்து விடும். ஆதலால், நெருப்பை உண்டாக் குதலும் ஒருவாற்றானும் இயலாது. ஞாயிற்றின் சூடும் ஒளியும் இல்லையாயின், புற்பூண்டுகள் மரஞ்செடி கொடிகள் முதலிய நிலையியற் பொருள்களும், விலங்குகளும் மக்களும் ஆகிய இயங்கியற் பொருள்களும் உளவாகா. எங்கும் வெறும் பாழா கவே, இருளாகவே, பனி யாகவே, குளிராகவே இருக்கும். இத் தன்மைத்தாகிய பாழ் நிலைமையின் கொடுமையினை ஒருவாறா யினுந் தெரிதல் வேண்டின், இந் நிலவுலகத்தில் வடகோடிக்கண் உளவான பசுநிலப் (Green Land) பகுதிகளைச் சென்று பார்த்தல் வேண்டும், அந் நிலப்பகுதிகளில் மூன்று திங்கள் வரையில் மூடியிருக்கும் பேரிருளோ அப்பகுதிகளிலுள்ள மக்களால் தாங்கமுடியாத தாய்ப், பெருந்துன்பத்தையும் பேரிடர்ப் பாடுகளையும் விளைவிப்பதாய் இருக்கின்றது. அவ்வாறு அம் மூன்று திங்களுங் கொடிய அவ்விருளிலுங் குளிரிலுங் கிடந்து துன்புறும் அம் மக்கள் அம் மூன்று திங்கள் முடிவில் வானின் கட்டோன்றும் ஒரு பெரு மின்னொளியினைக் கண்ட அளவிற் சொல்லுக் கடங்கா மகிழ்ச்சியினராய், அவ்வொளியினை வணங்கி வாழ்த்துதலையும், அம் மின்னொளியும் மறைந்து சென்றபின் அடுத்துத் தோன்றும் பகலவனொளியினைக் கண்டு அவர்கள் எல்லையற்ற களிப்புடையராய் ஆடிப் பாடி அதனை வழிபடுதலையுங் காணவல்லார்க்கே, ஞாயிற்றின் அருமையும் பெருமையுந் தெய்வத்தன்மையும் இனிது விளங்காநிற்கும். ஏனையோர்க்கு அதன் மாட்சியுங் கடவுட்டன்மையும் அத் துணையாக விளங்கா. ஏனெனின், நாளும் பாலே பருகுவானுக்கு, நாளும் நெய்யடி சிலேயுண் பானுக்கு, நாளுங் குளிர்ந்த பூங் கொடிப் பந்தரிலேயே இருப்பானுக்கு, நாளும் பொன்னிலேயே புழங்குவானுக்கு, நாளும் மென் பஞ்சின் அமளியிலேயே துயில்வானுக்குப் பாலினினிமையும் நெய்யடி சிற்சுவையும் கொடிப்பந்தரின் குளிர்நிழலும் பொன்னினரு மையும் அமளியின் மென்மையும் புலனாகாமை போல, நாளும் பகல வனது தெய்வ ஒளி விளக்கத்திலேயே பயில்கின்ற நம்ம னோர்க்கும் அதன் தெய்வமாட்சி விளங்காமற் போகின்றது; மற்றுப் புளிங்காடி நுகர்வானும், புளிங்கூழ் அயில்வானும், மணல்வெளியிற் கடுவெயிலால் வெதும்பு வானும், பொன்னை யே காணாது மிடிப்பட்டு வருந்துவானும், பரற் கற்களிற் படுத்துத் துன்புறுவானுமே அச் சிறந்த பொருள் களை நுகரப் பெற்றக்கால், அவற்றின் அருமை பெருமை யுணர்ந்து, அவை தம்மைப் பாராட்டுவான். அதுபோலவே, பகலவனில் லாப் பாழ் நிலத்திற் கிடப்பாரே பகலவனருமையும் அவன்றன் றெய்வ மாட்சியும் நன்குணர்வாராவர். இஞ்ஞான்று பகலவன் வெளிச்சத்தில் இடைவிடாது பயிலும் நம்மனோர், அவன்றன் றெய்வத் தன்மையினை நன்கு உணராராயினும், பல்லாயிர ஆண்டுகளுக்குமுன் நிலத்தின் தென் கோடியினை யடுத்த குமரிநாட்டின் கண் உயிர்வாழ்ந்த நம்முன்னோர்கள் இடையிடையே சில திங்கள் இருளிற் கிடந்து வருந்தினவராதலின், அவர் பகலவனைக் கண்ட அளவானே சொல்லுக்கடங்காக் களிப்புடையராய், அவனை வணங்கியும் வாழ்த்தியும் உயிர் வாழ்வாராயினர். குமரி நாட்டை அரசாண்ட செங்கோன் என்னும் வேந்தன் மேற் பாடப்பட்ட பண்டைத் தமிழ்ப் பெரும்பனுவலாகிய செங்கோன்தரைச் செலவு என்னும் நூலின் முகத்திற் கதிரவன் தெய்வமாக வைத்து வழிபாடு செய்யப்பட்டிருப்பதே யாங் கூறும் உண்மைக்கு உறுபெருஞ்சான்றாம். இங்ஙனமாக, நம் பண்டைத்தமிழ் நன் மக்கள் கீழ்பாற்றோன்றுங் கதிரவன் விளக்கத்தைக் கண்ட காலத்து, அக் கதிரவன்மேனி சிறந்த நிறமுடையதாய் மினுமினு வென்று திகழா நிற்கவும், அவனுக்குக் கீழே தோன்றுங் கடலானது பச்சை மஞ்சள் ஊதா கறுப்பு பொன்மை முதலான பல நிறங்களும் ஒருங்கு கலந்த கொழுவிய நீல நிறமுடைத்தாய்த் தோன்றவும், இக் கடலுக்குங் கதிரவனுக்கும் இடையிலும் பின்னும் மேலும் உள்ள வான்வெளியெல்லாம், அப் பல்வேறு நிறங்களொடு விராய பச்சைப் பொன்நிறமுடைத்தாய் விளங்கா நிற்கவும் நோக்கி வியந்து, அத் தோற்றம், அழகிய நீலத் தோகை மயில்மேல் அமர்ந்து விளங்கும் எழில் மிக்க ஓர் இளைஞன்றன் றோற்றத்தோடு ஒத்திருத்தலை உணர்ந்தனர். இவ்வாறு அத் தோற்றத்தின் அழகானது தமதுள்ளத்தைக் கவர்ந்து, அதன்கண் நிலைபெற நிலைபெற, அவர்கள் மயின்மேலிருக்கும் ஓர் இளைஞனாகவே கொண்டு இயற்கையில் விளங்கும் அத் தெய்வ ஒளியினை வழிபட்டு வரலாயினர். விடியற்காலையிற் கீழ்பாற்றோன்றும் ஞாயிற்றின் எதிரே கீழ் நிற்கும் பசுங்கடலானது ஒருமயிலினுருவத்தை ஒத்திருத்தலும், அதன் மேற் றோன்றுஞ் சிவந்த இளவளஞாயிறு அம் மயின்மேல் அமர்ந்திருக்கும் ஒரு தெய்வ இளைஞனை ஒத்திருத்தலுங் கண்டன்றோ, ஆசிரியர் நக்கீரனார் தாம் அருளிச் செய்த திருமுருகாற்றுப்படை முதலிய முருகப்பிரான் மயின்மேன் அமர்ந்திருக்குந் தோற்றத்திற்குக் காலை ஞாயிறு கடல்மேற் றோன்றுங் காட்சியினையே உவமையாக எடுத்து, உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு ஒவற இமைக்குஞ் சேண்விளங்கு அவிரொளி, என்று ஓதுவாராயினர். உலகத்தைப் படைத்த முதல்வன் அவ்வுலகத்தின் வேறாகவே நில்லாது, அவ் வுலகத்தோடு உடனுமாய் நிற்பன் என்பதே சைவ சித்தாந்த முடிபாம். இஃது, உலகேழுஎனத் திசைபத்தெனத் தானொருவனுமே பலவாகி நின்றவா தோணோக்க மாடாமோ. என்று மாணிக்கவாசகப் பெருமான் அருளிச் செய்த வாற்றானும், உலகமே உருவமாக யோனிகள் உறுப்பதாக. என்று அருணந்தி சிவனார் அருளிச் செய்தவாற்றானும் அறியப்படும். உலகமே உருவமாய் நிற்கும் முதல்வன் அவ்வுலகத் தினுள்ளும் ஒளிவடிவங்களையே திருமேனியாய்க் கொண்டு முனைந்து நிற்பனென்பது, தேயமா ரொளிக ளெல்லாஞ் சிவனுருத் தேச தென்னார். எனப்போந்த சிவஞான சித்தித் திருச் செய்யுளானும், அவனன்றி வான்மீன்களும் விளங்குதலில்லை; ஞாயிறு திங்களும் விளங்குதலில்லை எனப்போந்த சுவேதாச்சுவதர உபநிடத உரையானும் நன்கு தெளியப்படும். ஆகவே, மயில்மேல மர்ந்த முருகன் வழிபாடு கீழ்கடல்மேல் அமர்ந்த தெய்வ ஞாயிற்றின் வழிபாடே ஆதல் தெற்றெனப் பெறப்படும். காலையிற்றோன்றும் புதுஞாயிறு இளமைச் செவ்வியுடைய தாதலால் அதன்கண் நிற்கும் இறைவன் முருகனெனப் பட்டான். முருகனென்பது இஞைனென்னும் பொருளைத் தருந் தனித் தமிழ்ச் சொல்லாகும். இங்ஙனம், பகலவனொளியில் அமர்ந்து உலகத்துள்ள மன்னுயிர்கட்கு அருள் வழங்கும் எல்லாம்வல்ல இறைவனே, பண்டைத்தமிழ்ச் சான்றோரால் முருகனாக வைத்து வழிபடப்பட்டமை காண்க. இவ்வாறு இயற்கைத் தோற்றத்தின் கண் விளங்கும் முதல்வனாகிய முருகன் வழிபாடு எல்லாச் சமயத்தார்க்கும் எல்லாத் தேயத்தார்க்கும் ஒத்த உரிமைப்பாடு உடையதாதலின், அதன்கட் கடவுளிலக்கணத் துக்கு மாறாவது ஏதுமில்லாமை தானே விளங்கும். இவ் வாறன்றிப், பிறப்பு இறப்பு இல்லா முழுமுதற்கடவுளாகிய முருகப் பிரானுக்கு அருவருக்கத் தக்க பிறப்பினை ஏற்றும் மேற்காட்டிய கதைகள் சைவ சித்தாந்தத்துக்கு ஒரு சிறிதும் உடம்பாடாகாமையால் அவை அறிவுடையோரால் தழுவற் பாலன அல்ல என்பதூஉம், விடியற்காலையிற் கீழ்க்கடற்பாற் றோன்றும் பகலவனில் இறைவனை வழிபடும் இயற்கை முருகப்பிரான் வழிபாடே அறிஞர்களால் உவந்து ஏற்றுக் கொள்ளப்படுமென்பதூஉம் நன்கெடுத்து விளக்கப் பட்டன. 17. திருமாலின் திருவுருவ உண்மை இனிக், காலையிலெழுந்து ஞாயிறு காலைப் பத்துமணி வரையில் வான்வெளியை ஒருகூறு அளந்து, பத்துமணி முதல் இரண்டு மணி வரையில் அவ்வொளியின் நடுக் கூற்றினை அளந்து, இரண்டு மணி முதல் மாலை ஆறுமணி வரையில் அதன் மற்றொரு கூற்றினை அளந்து இயங்குவதாகிய இயக்கமே திருமால் மூவடியால் மூன்றுலகு அளந்தார் என்னுங் கதையின் உண்மைப் பொருளாம். எனவே, வான்வெளியினை மூன்று பொழுதில் மூன்று கூறாய் அளக்கும் பகலவனில் விளங்கா நின்ற முதல்வனே திருமாலெனப்பட்டனனன்றி வேறல்லன். இவ்வாறன்றி மாவலி பால் மூவடிமண் இரந்து கேட்டு அவனை ஏமாற்றிக் கீழும் நடுவும் மேலுமென்னும் மூன்றுலகுந் திருமால் தன்னடியால் அளந்தானென்னுங் கதையும், அவன் பத்துப்பிறவி களெடுத்தான் என்னுங் கதையும் இறைவனிலக் கணத்துக்கு ஏலாவாய் அருவருப்புகள் பல நிறைந்திருத்தலின் அவை அறிவுடையோரால் விலக்கற்பாலனவாமென்க. வான் வெளியை மூன்றுகூறாய் அளக்கும் பகலவனே விஷ்ணு என்னும் பெயரால் இருக்கு வேதத்தின் கண்ணும் நுவலப்படுதலின், பகலவனில் விளங்கும் இறைவன் வழிபாடே திருமால் வழிபாடாய்ப் பண்டைக்காலத்துச் சான்றோரால் தழுவப் பட்டமை கண்டு கொள்க. 18. சிவபெருமான் திருவுருவ வழிபாட்டின் உண்மை இனிக், காலையிலெழுந்து நடுப்பகலில் இயங்கி மாலையில் மேல்பால் வயங்கும் ஞாயிற்றில் நிற்பானான முதல்வனே சிவபெருமானென வைத்துப் பண்டைச் சான்றோரால் வழி படப்பட்டனன். மாலை ஞாயிற்றின் ஒளி செக்கச் செவேலெனச் சிவந்து நிற்றலின் அதில்வைகும் இறைவன் சிவந்த நிறத்தை யுடைய சிவனெனப்பட்டான். அஞ் ஞாயிற்றினொளி தோய்ந்து நெருப்பெனச் சுடர்ந்து விளங்கும் மேல்பால் வானிற் பரந்த முகிற் குழாங்களே அப் பெருமானுக்குச் செக்கச் சிவந்த சடைக்கற்றைகளாக வைத்து மொழியப்பட்டன. அம் முகிற்குழாங்களினிடையே மிளிரும் பிறைத்திங்களே அப் பெருமான் சடைக்கற்றைமே லுறையும் வெண்பிறையாக வைத்து விளம்பப்பட்டது. அம் முகிற்குழாங்களில் தோய்ந்த நீராவியே அப்பெருமான் சடைமேலுறையுங் கங்கை நீராக வைத்துக் கூறப் பட்டது. இங்ஙனமெல்லாம் மாலைக் காலத்தில் தோன்றும் செஞ்ஞாயிறும், அஞ் ஞாயிற்றின் ஒளிவிராய் விளங்கும் வானின் தோற்றமுமே சிவபெருமானாக வைத்து வழிபாடு ஆற்றப்பட்டமை அறியவல்லார்க்கு இஃது எல்லாச் சமயத் தார்க்கும் எல்லாத் தேயத்தார்க்கும் உரிய இயற்கைத் தெய்வ வழிபாடேயாவதன்றி இதன்கட் கடவுளிலக்கணத்துக்கு மாறாவது ஏதும் இல்லாமையும் வெள்ளிடைமலைபோல் விளங்கா நிற்கும். 19. விநாயகர் வழிபாட்டின் உண்மை இனி, மக்களின் அறிவு விளக்கத்திற்கு இன்றியமையாத தாய் நிற்கும் ஒலியின்கண் முனைத்துத் தோன்றும் இறைவனே யானைமுகமுடைய பிள்ளையாராக வைத்துப் பின்றைக் காலத்துச் சான்றோரால் வழிப்படப்பட்டனனென்பதை முன்னரே விளக்கிப் போந்தாம். ஒலிவடிவெல்லாம் வட்டமும் வரியுங் கூடிய கூட்டமேயாகும். ஆகவே, வட்டமாகிய முகமும், அம் முகத்தினின்று வரிவடிவாய்த் தொங்கும் தும்பிக்கையும் உடைய யானையின்வடிவு, ஒலி வடிவில் நின்ற இறைவனைக் கற்றா ரேயன்றிக் கல்லாரும் எளிதில் உணர்ந்து வழிபடுதற்கு ஏற்ற அடையாளமாதல் கண்டே நம் ஆசிரியர்கள் எல்லாம் வல்ல முதல்வனை யானை முகமுடைய திருமேனியில் வைத்து வழிபட லாயினார். இவ்வுண்மை உணராத கயவர்கள் பிறப்பு இறப்பு இல்லா நம் விநாயகப் பெருமானுக்கு மிக அருவருப்பான பிறப் பிறப்புக் கதைகளைக் கட்டிச் சைவசமயத்துக்குப் பெருங்தீங்கு இழைக்கலாயினர். ஆதலால், மெய்யறிவு வேட்கும் மேன் மக்கள் அப் பொய்க் கதைகளை அறவே தொலைத்து ஓங்கார வடிவில் நிற்கும் இறைவன் வணக்கமே யானை முகமுடைய பிள்ளையார் வணக்கமாம் என்று கடைப்பிடித்தல் வேண்டும். 20. முருகப்பெருமானுக்கு ஆறுமுகமும், கோழிக்கொடியும் கூறிய கருத்து இவையெல்லாங் கூறியது ஒக்கும்; முருகப்பிரானுக்கு மட்டும் ஆறு திருமுகமும் பன்னிரண்டு கைகளுங் கூறுதல் எற்றுக்கெனின்; நான்கு திசைகளும் வானும் பாதலமும் என்னும் ஆறிடங்களிலும் நிகழும் எல்லா நிகழ்ச்சிகளையும் இறைவன் காணவல்லன் என்பது அறிவித்தற்கே ஆறு திருமுகங்களும், அவ்வாறு திருமுகங்களுடைய ஆறு மேனிகளுக்கு ஏற்பப் பன்னிரு திருக்கைகளும் இறைவனுக்கு உளவாக வைத்து, வணங்குதற்கு எளியதோருருவம் நம்பொருட்டு ஆன்றோர் களால் வகுக்கப்பட்டது. இக்கருத்துப் பற்றியே இறைவன் ஆயிரந்தலைகளும், ஆயிரங் கண்களும் ஆயிரம் அடிகளும் உடையனென வடமொழி உபநிடதமுங் கூறுவதாயிற்று. அற்றாயினும், முருகப் பிரானுக்குக் கோழிக்கொடி யொன்றுளதெனக் கூறுதல் என்னையெனின்; விடியற்காலையிற் றோன்றும் ஞாயிற்றின்கண் முனைத்து விளங்கும் இறைவனே முருகனெனப்பட்டான் என்பதை முன்னரே விளக்கிப் போந்தாம். அவ்விடியற்காலையில் ஞாயிறு கீழ்பால் எழுகின்ற நேரத்திற் கோழிகூவுதலை எவரு மறிவர். இங்ஙனம் இறைவனது வருகையைப் புலரிக் காலையில் முன்னறிவிக்கும் இயைபுபற்றி அக் கோழியின் உருவானது அவன்றன் கொடியின்கண் உளதாக வைத்து இயைபுபடுத்தப் பட்டது. தொலைவிலொருவன் தேரூர்ந்து வருங்கால் அவன்றன் தேரிற்கட்டிய கொடியே முதலிற் கண்ணுக்குப் புலனாதல் போல, இறைவன் ஞாயிற்று மண்டிலமாகிய தேரூர்ந்து வருங்கால் அவனது வருகையினைக் கூறி முன்னறிவிக்குந் தொடர்பு பற்றிக் கோழியானது அவன் கொடிக்கண் உளதாக வைத்துச் சொல்லப்பட்டதென்று ஓர்ந்து கொள்க. இங்ஙனமே சிவபிரான், திருமால், பிள்ளையார் முதலான தெய்வத் திருவுருவங்களின் ஊர்தி, கொடி, படை முதலிய அடையாளங்களும் இயற்கை நுண்பொருள் நிரம்பியிருத்தலை உய்த்து அறிந்து கொள்க. அவையெல்லாம் ஈண்டு எடுத்து உரைக்கப்புகின் இந்நூல் வரம்பின்றி விரியும். 21. முடிவுரை இதுகாறும் விளக்கியது கொண்டு, இறைவன் தவத்திற் சிறந்த முனிவர்களாலுங் கேட்டறியப்படாதவனாய்ப் பிறப்பில்லாமையின் இறப்புமில்லாதவனாய்ப், பிறப்பால் வருஞ் சுற்றத் தொடர்புமில்லாதவனாய் ஐம்பொறிகளின் உதவி யின்றியே எல்லாவற்றையும் அறிபவனாய் இருப்பனென்பதூ உம், அங்ஙனம் எல்லாங் கடந்த ஆண்டவன் தானாகவே இரங்கிவந்து தன் அருளுருவைக் காட்டினாலன்றி அவன்றன் அருமைத் திருவுருவினை நம்மனோர் காண மாட்டுவார் அல்லரென்பதூஉம், மாணிக்கவாசகரை யொத்த நம்மாசிரியன் மார் ஒருசிலர்க்கு இறைவன் அவர் தங் கட்புலனாய்த் தோன்றிக் காட்டிய திருவுருவே அவன்றன் உண்மையுருவாய் எம்மனோர் வழிபாட்டை ஏற்று எமக்கு இப் பிறவித் துன்பத்தை யறுத்து மீளா வீடுபேற்றின்பத்தில் எம்மை நிலைப்பிக்கும் என்பதூஉம், இவ்வாறு நம்மாசிரியன் மார்க்குத் தோன்றிய இறைவன் அருளுருவம் மின்னொளி போற் றோன்றிச் சடுதியில் மறைவ தாதலின் அதனைப் பிறப்பு இறப்புக்களுட் படுத்துப் பொருந்தாப் பொய்யுரை கிளக்கும் புராணப்புல்லுரைக ளத்தனையும் ஒருங்கே விலக்கற்பாலனவா மென்பதூஉம் இனிது உணரப்படும் என்க. ஓம்சிவம். கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா - முற்றும் -