kiwkiya«-- 20 (தனித்தமிழியக்க நூற்றாண்டு வெளியீடு) சமயம் – 1 திருவொற்றி முருகன் மும்மணிக் கோவை ஆசிரியர் மும்மொழிச்செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் தமிழ்மண் முதல்பதிப்பு : 2015 பக்கம் : 24+336 = 360 விலை : 450/- மறைமலையம் - 21 ஆசிரியர் மும்மொழிச் செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் வெளியீடு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. bjh.ng.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: elavazhagantm@gmail.com  jhŸ : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 352 f£lik¥ò : இயல்பு  படிகள் : 1000 üyh¡f« : வி. சித்திரா   அட்டை வடிவமைப்பு : கவிபாகர்   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006, மற்றும் பிராசசு இந்தியா, திருவல்லிக்கேணி - 600 005.  அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006, மற்றும் பிராசசு இந்தியா, திருவல்லிக்கேணி - 600 005. யான் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான நூல்களில் ஆராய்ந்து கண்ட முடிவுகளை நூல்களாக எழுதியிருக்கின்றேன். பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்தது போல, உண்மை காணும் உணர்ச்சியினால் நடுநிலை நின்று ஆராய்ந் திருக்கின்றேன். ஒருவர் தம் வாழ்நாள் முழுவதும் கற்றாலும் அறியமுடியாத உண்மைகளை எல்லாம் எளிதாக எழுதி வைத்திருக்கின்றேன். எல்லாரும் தமிழ் இலக்கியங்கள் யாவற்றையும் கற்கும் தொல்லையை மேற்கொள்ள வேண்டிய தில்லை, அது முடியவும் முடியாது, தேவையுமில்லை. எல்லா நூல்களிலும் உள்ள சிறந்த உண்மைகளை எல்லாம் பிழி சாறாக யான் வடித்துத் தந்துள்ளேன். என் நூல்களைப் படித்தாற்போதும், அதனால், தமிழ் முழுதுங் கற்ற பயனை அடையலாம். - மறைமலையடிகள் சான்றிதழ் நாகை - திரு. வேதாசலம் பிள்ளையவர்கள் ஒருபோது திருவனந்தபுரத்தில் ஒருவாரந் தங்கியிருந்த ஞான்று, அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்ததற்குச் சாலவும் மகிழ்கின்றேம். வருங்காலத் தமிழ் மக்களுக்கு மட்டற்ற தமிழ்ப்புலமை மிகுந்து வருமென்பதற்குச் சான்றாக இவர் இளமையிலேயே நுண்மாண் நுழைபுலம் உடையராயிருப்பது களிப்பூட்டுகிறது. மற்றும் தாய்மொழிப் பற்றுக் குறைந்த இக்காலத்தில், இவர் தமது நுண்ணறிவைத் தமிழ் நூல்களில் முற்றும் செலுத்தி நன்காராய்ந்துள்ளதும் பாராட்டற்குரியது. பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவகசிந்தாமணி முதலிய பழந்தமிழ் நூல்களில் ஆராய்ச்சியுடன் கூடிய இவர்தம் அறிவுடைமையே என்னை இவர்பால் மதிப்புறுமாறு செய்தது. தமிழாசிரியர்களின் தொகை சுருங்கிவரும் இக்காலத்தில் இவருக்குச் சிறந்த ஊக்கமளித்தால் இவர் ஒரு சிறந்த தமிழாசிரியராவாரென்று நாம் உறுதியாக நம்புகின்றேம். முன்னரே இரண்டாந்தரக் கல்லூரிகளில் தமிழ்கற்பிக்கப் போதுமான அளவு இலக்கண இலக்கியத்திற் சிறந்த தேர்ச்சி பெற்றவராயிருக்கின்றாரெனக் கருதுகின்றோம். Fiwªj msÉš v~¥, V., (F.A.) வகுப்புக்குரிய ஆங்கில அறிவு பெற்றாரானால் மேல்நாட்டு முறைப்படி தமிழ் நூல்களை வரலாற்றுச் சான்றுடன் ஆராயவும் எழுதவும் வல்லுநராவாரென்பது எம்முடைய சிறந்த எண்ணம். வண்ணாரப்பேட்டை மனோன்மணீயம் பெ. சுந்தரம்பிள்ளை திருநெல்வேலி தமிழ்த்தாய் வாழ்த்தின் ஆசிரியர் 2-12-1895 (இந்த நற்சான்று திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் சுந்தரம் பிள்ளையவர்கள் பேராசிரியராக இருந்தபோது கொடுக்கப் பெற்றது.) மறைமலைய மாண்பு நுழைவுரை தனித்தமிழ் என்ற அளவில் முன் நிற்கும் முழுதுரு எழில்வடிவர் தவத்திரு. மறைமலையடிகளாரே ஆவர்! முந்தை அடிகள் ஆகிய இளங்கோவடிகள், `முத்தமிழ் அடிகள் என முழக்கமிட நின்றார்! இருபதாம் நூற்றாண்டு மறைமலையடிகளோ, தனித்தமிழ்த் தந்தை என்னும் தகவார்ந்த பெருமை பெற்றார். தமிழ் தனித்து இயங்காது என்றும், வடமொழி வழியது என்றும், வடமொழித் துணையின்றி இயங்காது என்றும், உலக மொழிகளுக் கெல்லாம் தாய்மொழி வடமொழியே என்றும் தமிழ்க் கல்வி வல்ல பெற்றியரும் முற்றும் மயங்கி யுரைக்க, வடமொழி உலக மொழிகளுக்குத் தாய்மொழி என்றால், அதற்கும் மற்றை மொழிகளுக்கும் தந்தை மொழி தமிழே என்று கூறிய வடலூர் அடிகளார் புகழ்பரப்பாளராய்ப் பொதுநிலைக் கழகம் கண்ட தவ அடிகளார், தனித்தமிழ்த் தந்தை என்னும் பெருமை பெற்ற மறைமலையடிகளார் ஆவர். சிவனியம் சார்ந்த பெருமக்களும், பேரறிவர்களும் கூட, ஒப்பாராய், `தனித்தமிழ் (தனித்து அமிழ்) என்று பழிக்கவும் இழிக்கவும், துணிந்து நின்று, அவர் வெள்க; வெள்ளிடை மலையாகத் `தனித்தமிழ் என்பதை நிலை நாட்டிய நிறைமலை, மறைமலையடிகளாரே! சிவனிய மடத்தினரும், வடமொழி வல்லாரும், `தொல் காப்பியக் கடல் எனப் புகழப்பட்டாருமாம் சாமிநாத தேசிகர், நாணமின்றி, ஐந்தெழுத்தால் ஒருபாடை என்று அறையவே நாணுவர் அறிவுடையோரே; யாமும் அதுவே என்றும், ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டோ? என்றும் - எழுதிப் பரப்பினாராக, ஒரு சொல் தானும் வேற்றுச் சொல் விரவா நூல் யாம் செய்வேம் என்று ஐம்பான் நான்கு நூல்கள் கலைமலி பேழையாய் எழுதிக் காட்சிப் படுத்திய மாட்சியர் மறைமலையடிகளார்! தொல்காப்பியக் காவல் தமிழ் மொழிக்கு வாய்த்த தொல்காப்பிய வளநூல், வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே (884) என்றும், மொழி பெயர்ப்புச் செய்தலிலும் முறைமை பேண வேண்டும் என்பதை, மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல் (1597) என்றும், பேச்சு வழக்கில் ஒரு கால் வேற்றுச்சொல் வந்து விடினும், மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை (1590) என்றும் - வரம்பாணை செய்தும், அச் செவ்வியல் வழித்தடம் சிதைந்தும் சீரழிந்தும், சேறும் சகதியும் நாறும் சிறுமையும் குறுமையும் வழிவழியே எய்த மூவாயிரம் ஆண்டுகளாய், அயலோர் சூழ்ச்சியாலும் திறவோர் மயக்காலும் ஏற்பட்ட அழிபாடுகளை எல்லாம் தாமே ஓர் இயக்கமாய் இருந்து, விழிப்பும் எழுச்சியும் ஊட்டியவர் மறைமலை அடிகளே என்பதால், ஆரியத்தினின்று தமிழை மீட்டெடுப்ப தற்காக அரும் பாடுபட்டு இலக்கிய இலக்கண மரபோடு யான் கற்ற மொழிகள் முப்பது என்னும் பாவாணர், மூவா யிரமாண்டு மோதும் வடமொழியால் சாவாம் தகைநின்ற தண்டமிழை - மேவாக் குமரித் தனிநிலைக்குக் கொண்டுவந்த அப்பர் அமரர் மறைமலை யார் எனப் பாடிப் பரவினார். `தனித் தமிழ்த் தந்தையார் என்ற பாராட்டும் இப் பாட்டின் தலைப்பில் வழங்கினார். நுண்ணிய நூல்பலவும் கற்பதே நோன்பாக எண்ணிய வாழ்நாள் எலாமளித்துப் - பண்ணிய செந்தமிழ்நூல் ஒவ்வொன்றும் செப்பும் கடலறிவை பைந்தமிழ் காக்கும் படை என அடிகள் கல்வி மேம்பாட்டையும் கலைத் திறப் படைப்புகளின் மேம்பாட்டையும் பாவேந்தர் பாரதிதாசனார் பாராட்டுகிறார். பல்துறை ஆற்றல் அடிகளின் பல்துறை ஆற்றலை 1. பேராசிரியர், 2. பெரும் புலவர், 3. பாவலர், 4. ஆராய்ச்சியாளர், 5. மும்மொழிப் புலவர், 6. மொழிபெயர்ப்பாளர், 7. சொற்பொழி வாளர், 8. எழுத்தாளர், 9. பல்கலைச் செல்வர், 10. தனித்தமிழ்த் தந்தையார் என்று பாவாணர் பகுத்துக் காட்டுகிறார். மேலும் அவர் தம் நுண்மாண் நுழைபுலத்தை பனிமலை முகட்டின் உயர்வும், நீல ஆற்றின் நீளமும் அமைதி வாரியின் ஆழமும் அமைந்தவர் மறைமலையடிகள் என்கிறார். (பனிமலை - இமயம்; நீல ஆறு - நைல்; அமைதிவாரி - பசிபிக்கு மாகடல்). அடிகளார் நூல்கள் அடிகள் பன்மாண் மாத்தமிழ் நூல்களை, நூலக இயக்கத் தந்தை அரங்க நாதரும், இந்நாள் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியரும் அந்நாள் நூலகருமாகிய திருமிகு இரா. முத்துக் குமாரசாமி அவர்களும் 14 வகைமைப்படுத்தி வைத்தமை பெரும் பாராட்டுக்கு உரியதாம் அவை, 1. மருத்துவம் 2. மறைபொருள் 3. இலக்கியம் 4. இதழ்கள் 5. சங்க இலக்கியம் 6. பாடல் 7. நாடகம் 8. புதினம் 9. கடிதம் 10. கட்டுரை 11. சமயம் 12. தத்துவம் 13. வரலாறு 14. சமூக இயல் என்பன. முதற் குறள் வாத நிராகரணம் என்னும் மறுப்பு நூலே, அடிகளின் முதல் நூலாக வெளிப்படுகின்றது (1898) அந்நூன் மறுப்பு நயமே நாகை அடிகளை - பல்லவபுர அடிகளாக -தனித்தமிழ் அடிகளாக ஆக்க அரும் பெரும் தூண்டல் ஆயிற்றாம். அடிகளார் வரலாறு: கீழ்கடல் சார் நாகப்பட்டினத்தைச் சார்ந்த சிற்றூர் காடம்பாடி, ஆங்கு வாழ்ந்த அருந்தவப் பெருந்தகையர் சொக்கநாதர் - சின்னம்மையார்! இவ்விணையர் கொடையாய்த் தமிழன்னை செய்த தவப் பேற்றால் பிறந்தவர் வேதாசலம். பிறந்த பெரு மங்கல நாள் கி.பி. 15.07.1876. சொக்கநாதர், சித்தமலம் அறுவித்த சித்தமருத்துவர்; அறிவ மருத்துவம் என்பதும் அது. அத்தொழில் அவர்க்கு வளத்தை வழங்கியது. அதனால் வேதாசலம் குறைவற வாழ்ந்தார். நாகப்பட்டினத்து வெசிலியன் மிசன் பள்ளியில் ஐந்து வகுப்புவரை பயின்றார்; சிறந்த மாணவராக விளங்கினார். ஆறாம் வகுப்பில் சேரும் நிலையில், அருமைத் தந்தையார் இயற்கை எய்தினார். ஆயினும் அன்னையார் உறுதியால் கல்வியைத் தொடர்ந்தார். அப்பள்ளியில் ஆங்கிலக் கல்விக்கு இருந்த முதன்மை தமிழுக்கு இல்லை. கிறித்தவ சமயம் பற்றி அன்றிச் சிவனியம் பற்றி அறிய வாய்ப்பில்லை என்னும் இரண்டு குறைகளையும் இளமையிலேயே உணர்ந்தார். வீட்டிலேயே தமிழ் நூல்களைப் பயின்று முதற் குறையையும், நாகையில் இருந்த இந்துமதாபிமான சங்கம் வழி இரண்டாம் குறையையும் நீக்கினார். பள்ளியிலும் குறையறக் கற்றார். வருவாய்க் குறையால் வாடும் அன்னைக்குச் சுமையாய் இல்லாமல் தனியே பயில்வதே இனியவழி என எண்ணி, நாகையில் புத்தக வணிகராக விளங்கிய நாராயண சாமியார் புலமையாலும் சிறந்து விளங்கியவர். ஆதலால் அவரிடம் தனியே இலக்கிய - இலக்கண - சமய நூல்களைக் கற்றார். நாராயணரின் முன்னை மாணவர் பேரா. மனோன்மணீயம் பெ. சுந்தரனார் என்பதையும் அறிந்தார். ஒன்பதாம் வகுப்பொடு பள்ளிக் கல்வியை நிறுத்தித் தனிக்கல்வியே கற்றார். தொல்காப்பியம், தொகை நூல்கள், திருக்குறள், திருச்சிற்றம்பலக் கோவை, இறையனார் அகப் பொருள் எனக்கற்றார். அடிகளார் இயற்றிய திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை முகப்பில், எமது பதினைந்தாம் ஆண்டில் முறைப்படி துவங்கிய தமிழ்ப் பயிற்சியானது எமது இருபத்தோராம் ஆண்டிற்குள் தொல்காப்பியம், திருக்குறள், சிற்றம்பலக் கோவையார் என்னும் மூன்று நூல்களையும் முழுதும் நெட்டுருச் செய்து முடித்தேம் என்றும் வேறுசில நூல்களையும் முழுவதாக ஓதியதையும் கூறி, இங்ஙனமாக, விழுமிய தமிழ்ப்பழ நூல்களில் எமது கருத்து ஈர்ப்புண்டு நின்று பயின்ற பயிற்சியினாலேயே செய்யுளும் உரையும் தனிச் செந்தமிழ் நடையில் எழுதும் திறம் எமது இளமைப் பருவத்திலேயே எமக்கு வாய்ப்ப தாயிற்று என்கிறார். அவ்வாண்டு கி.பி. 1897. நாகை இந்து மதாபிமான சங்கத்திற்குச் சைவ சித்தாந்த சண்ட மருதம் என்னும் விருது பெற்ற சோமசுந்தர நாயகர் வந்து சொற்பொழிவாற்றினார். அவர் பொழிவில் வந்த கருத்தொன்றனை மறுத்து ஒருவர் எழுத, அதற்கு மறுப்பாக முருகவேள் என்னும் புனைபெயரில் மறுப்புரை எழுதினார். அதனைக்கற்ற நாயகர், மீளப் பொழிவுக்கு வருங்கால் முருகவேளைச் சந்திக்க விரும்பினார். அச்சந்திப்பின் பயனே உன்னை விரைவிலே சென்னைக்கு வருவிப்போம். நீ அந்தப் பக்கங்களில் இருப்பதே நல்லது என்று கூறினார். இதுவே அடிகளார்க்குச் சென்னை வாழ்வு அமைய முதல் தூண்டல் ஆயிற்று. அடிகளுக்குப் பதினேழாம் வயதில் (1893) திருமணம் நிகழ்ந்தது. துணைவி தம் மாமன் மகள் சவுந்தர வல்லி என்பார். திருவனந்தபுரம் நாராயணசாமி அவர்களின் முன்னை மாணவராம் பேரா. சுந்தரனார் திருவனந்த புரத்தில் இருந்தார். அவரியற்றிய மனோன்மணீய நாடக நூல் கற்று அதன் அருமை கண்டு, பேராசிரியரைக் காணவிரும்பினார். அதனால் தம் ஆசிரியரோடு திருவனந்தபுரம் சென்று பேராசிரியரோடு உரையாடினார். வேதாசலனார் இளம் பருவத்தையும் மூதறிவையும் அறிந்த சுந்தரனார் வியப்புற்றுத் தகுதிச் சான்று ஒன்று வழங்கினார். சிறிது காலம் திருவனந்த புரத்தில் ஆசிரியப் பணியும் செய்தார். அவ்விடத்தின் பருவநிலை ஒவ்வாமையால் நாகைக்கே திரும்பினார். சென்னை: சோமசுந்தரனார் முன்னே கூறியபடி வேதாசலரைச் சென்னைக்கு அழைத்து அறிஞர் நல்லுசாமி என்பார் நடாத்திய சித்தாந்த தீபிகை என்னும் இதழாசிரியர் ஆக்கினார். பின்னே சென்னை கிறித்தவக் கல்லூரிக்கு ஒரு தமிழ்ப் பேராசிரியர் வேண்டியிருத்தல் அறிந்த சோமசுந்தரனார் வேதாசலனா ர அக்கல்லூரிப் பேராசிரியராக்க முயன்றார். அதுகால் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர் வி.கோ சூரியநாராயண சாத்திரியார் என்னும் பரிதிமால் கலைஞர். கல்லூரி முதல்வர் வில்லியம் மில்லர் என்பார். 9.3.1898 இல் வேதாசலனார் பணியேற்றார். அங்குப் பதின்மூன்று ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அக்கல்லூரிக் காலத்தே இளங்கலை மாணவர்க்குப் பாடமாக இருந்த முல்லைப்பாட்டு (1903) பட்டினப்பாலை (1906) என்பவற்றுக்கு ஆராய்ச்சி உரை எழுதினார். அவ்வுரை நூலை வாங்கிக் கற்ற மாணாக்கரும் ஏனைத் தமிழறிஞரும் புதுமுறையாக எழுதப்பட்ட அவ்வுரைப் பாங்கினைப் பின்பற்றிப் பழைய தமிழ் நூல்களை ஆராய்வதில் கிளர்ச்சி பெறலானார். இப்புதுமுறை உரை, தமிழ் நூலாராயும் வகைகளை இனிது விளக்கி அறிஞர் பலர்க்கும் அக மகிழ்ச்சி யினை விளைத்தமை கண்டு இனி, இத்தகைய உரைகளையே எழுதுதல் வேண்டும் என எமதுள்ளம் பெரிதும் விழைந்தது என்கிறார். சென்னைப் பல்கலைக் கழகத்தார்ஆங்கிலமும் வட மொழியும் கட்டாயமாகப் படித்தல் வேண்டும் என்றும், தாய்மொழிப் பாடத்தை விருப்பப் பாடமாகக் கற்பிக்கலாம் என்றும் ஒரு தீர்மானம் ஆட்சிக்குழுவில் கொண்டு வந்தனர். ஒரு பாடம் விருப்பப்பாடம் எனப்பட்ட பின்னர் அதனைக் கற்க வருவார் எவர்? தமிழ் கற்கும் மாணவர் எண்ணிக்கை குறையவே ஆசிரியப் பணியிடமும் குறைய வேண்டுவதாகி, அடிகளார் 31.1. 1911 ஆம் நாளுடன் கல்லூரிப் பணியை முடிக்க வேண்டிய தாயிற்று. மாணவர்: இக்காலத்தில் அடிகளின் மாணவராக இருந்தாருள், தணிகைமணி செங்கல்வராயர், இரசிகமணி டி.கே.சி, நாவலர் ச.சோ. பாரதி, பேரறிஞர் ச. வையாபுரியார் முதலோர் சிலர். தணிகைமணியின், தேவார திருவாசகச் சொல்லடைவு ஒரு பிறப்பளவில் செய்யக் கூடியதா? நாவலர் ச. சோ. பாரதியாரின் ஆய்வுத் துணிவு எத்தனை கசடுகளை நீக்கியது? வையாபுரியார், கால ஆய்விலும், வடமொழிப் பிடிவாதத்திலும் தம்மைச் சால்பு ஆய்வில் இருந்து விலக்கினாலும், சங்க இலக்கியப் பதிப்பு, நிகண்டுப்பதிப்பு, பல்கலைக் கழக அகரமுதலிப் பதிப்பு இவற்றைச் செய்த அருமை என்ன? புறத்திரட்டு, களவியல் காரிகை ஆயவற்றின் பதிப்புச் சிறப்பு என்ன? இவர்கள் பணியும் அடிகளாரைத் தழுவுதல் உண்மை தானே! சமரச சன்மார்க்கம் கல்லூரிப் பணியில் இருந்து வீடுபெற்ற அடிகளார், பல்லவபுரத்தை வாழ்விடமாகக் கொண்டார். சமரச சன்மார்க்க நிலையம் தோற்றுவித்தார். எல்லாச் சாதியார்க்கும் எல்லாச் சமயத்தார்க்கும் அங்கீகாரமான சீவகாருணிய ஒழுக்கத்தையும், சமரச சன்மார்க் கத்தையும் பிற்காலத்தில் மிக வலியுறுத்திப் போதித்த ஆசிரியர் ஸ்ரீமத் இராமலிங்க சுவாமிகளே ஆவார். அச்சுவாமி கள் வலியுறுத்திய அவ்விரண்டு கொள்கைகளையும் எங்கும் வலியுறுத்தி விளக்கி அன்பர்களை ஒருங்கு கூட்ட வேண்டி அச்சுவாமிகள் இட்ட பெயராலேயே, `சமரச சன்மார்க்க நிலையம் என்னும் இது தாபிக்கலாயிற்று. இந்நிலையத்திற்கு முன் ஆசிரியர் திருவள்ளுவ நாயனார்; பின் ஆசிரியர் இராமலிங்க சுவாமிகள் ஆவர் என்று பெயரீடு செய்து கொள்கைகளையும் வகுக்கிறார். குடும்பம் 1898இல் அடிகளார் சென்னைக்கு வரும்போது அவர்தம் அன்னையார் சின்னம்மையார், துணைவியார் சவுந்திரம் அம்மை யார், செல்வி சிந்தாமணி, அடிகளார் என்னும் நால்வரைக் கொண்ட குடும்பமாக இருந்தது. 1911இல் பல்லவ புரத்தில் குடிபுகும் போது நீலாம்பிகை, திருஞான சம்பந்தம், மாணிக்கவாசகம், திருநாவுக்கரசு, சுந்தர மூர்த்தி என்னும் மக்களும் கொண்ட ஒன்பதின்மர் குடும்பமாக இருந்தது. பல்லவுரம் புகுந்த பின் திரிபுர சுந்தரி பிறக்கப் பதின்மன் குடும்பம் ஆயிற்று. இந்நிலையிலேயே 27.08.1911இல் சைவத் துறவியர்க்குரிய துறவாடை (காவி) கொண்டு சுவாமி வேதாசலம் ஆனார். சுவாமி வேதாசலம் என்பதன் தனித்தமிழாக்கமே மறைமலையடிகள் என்பது வெளிப்படை. முன்னேயே அவரை அடிகள் என்றது அவர்தம் மாண்பு கருதியேயாம். மீள்பார்வை நாம் மீள்பார்வை ஒன்றுபார்க்க வேண்டும். அடிகள் 21ஆம் அகவையிலேயே தனித்தமிழ் ஆய்வுத்திறம் கைவரப் பெற்றார். 1903, 1907 ஆகிய ஆண்டுகளில் முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய நூல்களுக்கு ஆய்வுரை வழங்குங்கால் இதிலுள்ள சொற்கள் இத்தனை; இவற்றுள் செந்தமிழ்ச்சொல் இத்தனை; வேற்றுச் சொல் இத்தனை - என அறுதியிடுகிறார். ஆதலால், தனித்தமிழ் என்னும் தோற்றம் 1916 ஆம் ஆண்டில் நீலாம்பிகையார் தூண்டலால் ஏற்பட்டமை என்பது, அகத்தே அமைந்து கிடந்த வித்து, முளை விட்டு வெளிப்பட்ட நிலையாம். அவ் வெளிப்பட்ட நிலையும் உடனே பற்றிப் படரவில்லை! மேலும் சில ஆண்டுகளின் பின்னரேயே சமசர சன்மார்க்க நிலையம், பொதுநிலைக் கழகமாகவும், ஞானசாகரம் அறிவுக் கடலாகவும், சுவாமி வேதாசலம் மறைமலையடிகள் ஆகவும் படிப்படியே கிளர்கின்றனவாம்! ஓர் அரிய அமைப்பு உருவாகும் நிலையும், ஓர் அரிய கண்டு பிடிப்பு உலகவர் அறிய வெளிப்படலும், அவை இயக்கமாகவும் பயனாகவும் ஆகின்ற நிலையும் பற்றிய விளக்கம், அடிகளார் தனித்தமிழ் இயக்க வரலாற்றில் அடங்கியுள்ளதாம்! எதிரிடைத் தூண்டல்: மேலும் ஒன்று: ஒரு நேரிடைத் தூண்டலினும் எதிரிடைத் தூண்டல் வலிமை மிக்கது என்பதும், உள்ளத்து உறுதியை வெள்ளப் பெருக்காய் வெளிப்படுத்த வல்லது என்பதும் தெளிவாம். ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டா? என்று கற்றறிந்த தமிழர் ஒருவரே வினாவி நகைத்தல், பெற்ற தாய் மொழிப் பிறவிக்கு உற்ற தகைமை ஆகாது என்பதும், அதனை உணர்ந்த அப்பிறவி பாம்பன் குருபாத அடிகள் போல் சேந்தன் செந்தமிழ் என்ன ஒரு நூலியற்றித் தமிழ் தனித்து இயங்கவல்ல தனி உயர் மொழி என்று நிலைநாட்டியிருப்பின் வழிபடத்தக்க பிறவியாய் அமைந்திருக்கும்! அப்பேறு அதற்கு வாய்க்காமை, துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம் (குறள் 263) என்னும் வள்ளுவர் வாய் மொழிப்படி, தனித்தமிழ்த் தந்தைப் பேறு மறைமலையடிகட்கு வர இருப்பதற்கே நேரிட்ட நேர்ச்சியாம் என்க. இயக்கம் அடிகள் இயக்கம் ஆலமரமெனக் கால்பல கொண்டு அகல அகல விரியத் தனித்தமிழ் இயக்கமாய், உலகத்தமிழ்க் கழகமாய், பாவலரேறு தமிழ்க் களமாய், சேரர் கொற்றமாய், தமிழ்க்காப்புக் கழகமாய், தமிழ்ப் பாதுகாப்புக் கழகமாய், தனித்தமிழ் இலக்கியக் கழகமாய், தமிழ் வளர்ச்சிக் கழகமாய், மறைமலையடிகள் மன்றமாய், தமிழ்க்காவல் குழுவாய், இயற்றமிழ்ப் பயிற்றகமாய், பாவாணர் தமிழ் இயக்கமாய் ஆங்காங்கு முகிழ்த்து முனைப்பொடு கடனாற்ற ஏவியதாம். நூலகம் அடிகள் நூற்றொகை, அருமணிக் குவையன்ன நாலாயிரம் நூல்களைக் கொண்டது. எதிரது உணர்ந்து, சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகத்திற்கு முற்கொடையாக வழங்கியதால், நாலாயிரம் நாற்பதாயிரமாய் மேலும் மேலும் விரிந்து மறைமலையடிகள் நூலகப் பெயரால், பெருமைமிகு வள்ளலார் முதற்கண் பொழிவு செய்த பெரியவர் சோமு அவர்கள் இல்லமே வாய்க்க உலக வளமாக்கியதாம்! அதன் வழியாகவே அடிகள் தாமே வெளியிட்ட நூல்களும், வெளியிடாமல் கழக வழி வெளிவந்த நூல்களும், அடிகள் காலத்திற்குப் பின் வெளிவந்த நூல்களும் ஆகிய முழுமைத் தொகுதிகளும் கி.பி. 1898 முதல் 1969 வரை முதற்பதிப்பாக வெளிவந்தவை. அவற்றுள் படிகள் கிட்டுதற்கு அரியவையும் உண்டு. அடிகள் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப் பட்ட பேற்றால், இன்று வாய்த்த நூல்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக வழங்கும் பெருவாய்ப்பைத் தமிழ்மண் பதிப்பகம் பெற்றதாம். வெள்ளச் சேதம் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு பதிப்பகத்துள் புகுந்து அச்சு அடிக்கப்பட்டதும், அடிக்கப்பட இருந்ததும், கணினிப்படுத்தி வைத்த குறுவட்டுகளும், மூலநூல்களும் என வாரி அள்ளிக் கொண்டு போனமை, களத்துக்கு வந்த கதிர் மணிகள், களஞ்சியத்திற்கு வாராமல் போய, பேரழிவு ஒப்பதாம். ஆதலால், நூல்களை மீளத் தேடவும், கணினிப்படுத்தவும், குறுவட்டு ஆக்கி அச்சிடவும் என மும்மடங்குப் பணியும் பேரிழப்பும் பெருத்த அவலமும் உண்டாக்கிற்றாம். அந்நிலையில், ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழா துஞற்று பவர் என்னும் வாய்மொழியை வாய்மை மொழியாக்கிய துணிவுச் செல்வர் இளவழகனாரும் அவர் குடும்பத்தவரும் ஆவர்! முன்னறிவிப்புத் திட்டப்படி நூலுக்கு ஆர்வமாய்ப் பணம் செலுத்தியோர்க்கும் நூல் காலத்தில் கிட்டா உளைச்சல் இல்லாமல் போகாதே! அவர்களும் அமைந்து தாங்கல், இயற்கை இயங்கியல் வழியதாம். வெளியீடுகள் தமிழ்மண் பதிப்பகம் தமிழ்மொழி இன மண்வளம் - வளர்ச்சி மீட்டெடுப்பு - என்பவற்றை முன்வைத்துத் தமிழ்ப் போராளி இளவழகனாரால் தொடங்கப்பட்டதால், பேரிழப்புக்காம் எனத் தெளிவாகத் தெரிந்தும், இசைக் கலைக்கு வாய்த்த ஒப்பற்ற களஞ்சியமாய் வாய்த்த - கருணாமிர்த சாகரத்தை வெளியிட்டதாம்! முன்னை வந்த முதற்பகுதி பேரிழப்பாக்கியும் அதன் பின்னைப் பகுதிகளையும் அரிதின் முயன்று வெளியிட்டது! மொழிஞாயிறு பாவாணர்; ஈழத்து அறிஞர் ந.சி. கந்தையா; வரலாற்றறிஞர் சாமிநாத சர்மா, உரைவேந்தர் ஔவை சு.து; நாவலர் ந.மு.வே; பண்டித வித்துவான் தி.வே. கோபாலர்; சாமி சிதம்பரனார்; மயிலை சீனி. வேங்கட சாமியார்; பேரறிஞர் க. வெள்ளை வாரணனார்; பாவலர் குழந்தையார்; பாவலர் முடியரசனார்; பாவேந்தர், தொல் பொருள் கல்வெட்டு ஆய்ஞர் சதாசிவனார், சாத்தன்குளம் இராகவன் நூல்களையும் எளியேன் நூல்களையும் முழுமை முழுமையாக வெளியிட்டது. தொல்காப்பியம்- பாட்டு - தொகை - காப்பியம் - கீழ்க்கணக்கு - தமிழ்நாட்டு வரலாறு - ஆங்கிலம் வல்ல அறிஞர் இராம நாதனார் நூல்களையும், யாழ்ப்பாண அகராதி முதலாம் அகராதித் தொகுதிகளையும் வெளியிட்டது. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதிதொட்டு, இருபத்தோராம் நூற்றாண்டின் முற்பகுதி வரை வெளிவந்த - தமிழுக்கு ஆக்கமாம் நாட் டுடைமை ஆக்கப்பட்ட நூல்களை எல்லாம் - ஓரிடத்துப் பெற்று, ஒரு தனித்தமிழ் நூலகம் அமைக்கும் அளவுக்கு அச்சிட்டு வழங்கிய பெருமை இளவழகனார்க்கு உண்டு. அவரே அன்றி அவர் துணையையும் மக்களையும் உறவையும் அன்பையும் நண்பையும் ஒருங்கே இணைத்து, அறிஞர் பெருமக்கள் பலர் அரவணைப்பையும் வாய்ப்பக் கொண்டு வாழும் இயல்பு அவர்க்கு வாய்த்தலால் மட்டுமே, இவ்வாறு செயற்கரிய செய்ய வாய்த்ததாம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவரும் அவர். மறைமலைய மாண்பு மறைமலையம், தனித்தமிழ் இயக்கம்! தமிழ்த் தனிப் பெருவளம்! முத்தமிழ்ச் சுரப்பு! சீர்திருத்தச் செழுமை! வாழ்வியல் வளம்! கலைச் சொல்லாக்கக் களஞ்சியம்! பண்டைத் தமிழர் வரலாற்றுப் புதையல்! ஆய்வியல் வழிகாட்டி! பொழிவுப் பொலிவு! எழுத்தின் எழில்! மொழிக் காவல் முனையம்! முட்டறுக்கும் முழுதுறு கொடை! மீட்டெடுக்கும் மேதகைமை! அள்ள அள்ளக் குறையா அணிமணிக் குவியல்! எனல் மெய்மை விளக்கமாம்! புத்தகம் ஏற்றுப் பொலிவதே புத்தகம் வாழிய நலனே! வாழிய நிலனே! திருவள்ளுவர் நிலையம், இன்ப அன்புடன் 7, இராமன் தெரு, இரா. இளங்குமரன் திருநகர், மதுரை – 625006. மலைக்க வைக்கும் மறைமலையம்! பதிப்புரை மொழியே இனமக்கள் முன்னேற நல்ல வழியாம் அதனை வளர்க்க -பழியாய்த் தமிழயரத் தாழ்ந்தான் தமிழன் அவனே தமிழுயரத் தானுயர்வான் தான் மொழிப்பேரறிஞர் பாவாணர் அவர்கள் `மொழியின் வழியாகவே மொழிபேசும் மக்கள் முன்னேற முடியும் எனக் கூறுகிறார். உலகம் முழுதும் இவ்வுண்மை உணரப்பட்டுள்ளதை வரலாறு காட்டுகிறது. பாவாணரை அறிவுலகம் சரியாக அடையாளம் காண்பதற்குக் காரணமானது மறைமலையடிகளார் தந்த பாராட்டு! மறைமலையடிகள் (15.7.1876 - 15.9.1950) தேவநேயப் பாவாணர் (7.2.1902 - 16.1.1981) இருவரும் தனித்தமிழியக்கத்தைத் தாங்கி நிற்கும் தூண்களாகப் போற்றப்படுபவர்கள். மறைமலையடிகளார் 1916இல் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம், நூற்றாண்டை எட்டியுள்ள மகிழ்வான நேரம் இது! தனித்தமிழியக்க நூற்றாண்டை நினைவு கூரும் வகையில், தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளாரின் எழுத்து, சொற்பொழிவு, நாட்குறிப்பு, கடிதங்கள் அனைத்தையும் `மறைமலையம் எனும் பெருந்தொகுப்பாகத் தமிழ்மண் பதிப்பகம் வழி வெளிக்கொணரத் திட்டமிட்டோம். உலகம் முழுதும் பரவி வாழும் உணர்வு குன்றாத தமிழர்கள் தந்த ஊக்குவிப்பு, இந்தப் பெருந்திட்டத்தை நிறைவேற்றித் தீரவேண்டும் எனும் உறுதியை எனக்குத் தந்தது. தனித்தமிழ் இயக்க அறிஞர்களும் ஆர்வலர்களும் அடிகளாரின் அரிய படைப்புகள் பலவற்றையும் தேடித்தேடி வழங்கி வழிகாட்டினர்; வலிமையூட்டினர். மறைமலையடிகளார் 1898ஆம் ஆண்டிலிருந்து எழுதி வந்துள்ளார். அறிவுக்கடல் (ஞானசாகரம்) இதழை 1902ஆம் ஆண்டிலிருந்து வெளியிட்டு வந்துள்ளார். அவரின் படைப்புகள் பெருவெள்ளமாய் வெளிவந்திருக்கின்றன. அச்சேறாதவை, பெயர் கூடக் கேட்டறியாதவை, பெயர் தெரிந்தும் பார்வைக்குக் கிட்டாதவை - எனப் பலவகையாய்க் கிடைத்தன அடிகளாரின் அரும்படைப்புகள்! அவற்றை `மறைமலையம் எனும் தலைப்பில் 34 தொகுப்புகளாக ஒருசேரப் பார்க்கும்போது, தமிழுலகம் வியப்படைவது உறுதி. மொழிநலம் இனநலம் பேணுதல் அன்றோ முழுநலம் பெறுவழி! நாம்பெறல் என்றோ? இப்படிக் கவலையோடு கேட்பார் பாவலரேறு பெருஞ் சித்திரனார் (10.3.1933 - 11.6.1995). அவரின் `தென்மொழி இதழ் 1.8.1959 இலிருந்து வெளிவரத் தொடங்கிய பின்புதான், தனித்தமிழ்த் திசை நோக்கி நூற்றுக்கணக்கானோர் நடைபோடத் தொடங்கினர். அதில் நானும் ஒருவன். பெருஞ்சித்திரனாரின் எழுத்து காட்டிய அடையாளத்தால், பாவாணர் நூல்கள் எனும் அறிவுப்புதையல் பலர் கைகளிலும் குடியேறியது. பாவாணர் நூல்கள் வலியுறுத்திப் பேசியதால், மறைமலை யடிகளாரைத் தேடிப்பயிலும் ஆர்வம் தமிழுலகில் புத்துயிர் பெற்றது. ஆரியத்தை எதிர்ப்பதிலும் சமற்கிருதத்தை விலக்கு வதிலுமே தமிழின மேம்பாடும் தமிழ்க் காப்பும் அடங்கியிருக்கிறது. அவ்வுணர்ச்சியைத் தமிழர் நெஞ்சங்களில் அரும்ப வைத்தது திராவிடர் இயக்கம்; மலர்ந்து விரியவைத்தது தனித்தமிழ் இயக்கம்! குமுக, அரசியல், பண்பாட்டு மலர்ச்சிக்கு இந்த ஈரியக்கங்களின் பேருழைப்புப் பயன்பட்டது. தமிழகத்தில் தனித்தமிழ் உணர்வு கி.மு. 7ஆம் நூற்றாண்டுக்குப் பின் தளரத் தொடங்கியது; 10ஆம் நூற்றாண்டுக்குப் பின் சரியத் தொடங்கியது. வடமொழி வெள்ளத்தில் தமிழ் இழுத்துச் செல்லப்பட்டு விடாமல் காப்பாற்றியோர் கம்பரும் பவணந்தியும்! பின்வந்தோருக்கு அந்தக் காப்புணர்ச்சி இல்லாமல், அயன் மொழிப் பற்றுக்கு அடிமையானதால் தமிழும் தமிழினமும் பெற்ற இழப்புகள் ஏராளம்! அயன்மொழிச் சேற்றிலிருந்து தமிழை மீட்கும் முயற்சி ஆங்கிலேயர் வருகையையொட்டிப் புத்துயிர் பெற்றது. வள்ளலார், பாம்பன் சாமிகள், வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள், சுப்பிரமணியசிவா, பரிதிமாற் கலைஞர் முதலிய பலரும் தொடக்க விதைகளாயினர். கோவை அவிநாசியில் பிறந்து விருதுநகரில் வாழ்ந்த விருதை சிவஞானயோகி 19.11.1908 ஆம் நாள் `திருவிடர் கழகம் தொடங்கித் தனித்தமிழ் உணர்ச்சிக்கு வேகங்கூட்டினார். அவ்வமைப்பில் உறுப்பினராயிருந்தவர் சுவாமி வேதாசலம் (மலைமலையடிகள்). மறைமலையடிகள் எனத் தம் பெயரைக் கொண்டு, 1916இல் அவர் தொடங்கியதே தனித்தமிழ் இயக்கம். `துறைமிகு ஆங்கிலம் மறைவட மொழியொடு தூய்தமிழ்ப் பேரறிஞர் - தனித்தமிழ் தோற்றிய ஓரறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடியதற்கேற்ப, மறைமலை யடிகளார் தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம் முதலிய பன்மொழியிலும் புலமை மிக்கவர். பன்மொழிப் பேரறிஞரான மறைமலையடிகளார் தமிழுக்கும் தமிழருக்கும் ஆதரவாக நின்றதால் எதிர்ப்புக்கும் இழப்புக்கும் ஆளாக்கப்பட்டார். ஆனாலும் உறுதி குன்றாமல் தமிழுக்கு ஆதரவாய் உழைக்கும் உள்ளத்தோடிருந்தார். அதனால், தமிழர் உள்ளங்களில் இன்றளவும் மாறாப் பெருமையோடு அவர் வீற்றிருக்கின்றார். வாழ்த்தாத நாளில்லை வையகம் மறைமலை யடிகள் மறையாத் திருப்பெயர் வாழ்த்தாத நாளில்லை வையகம் பாவேந்தர் பாரதிதாசன் அவர் மாண்பினைப் பாடி மகிழ்ந்ததும், தம் `குடும்ப விளக்கு நூலினை மறைமலை யடிகளுக்குக் காணிக்கையாக்கி வழங்கியதும், அவரின் உறுதி தளராத உள்ளமும் உழைப்பும் கண்டு போற்றிய நன்றிக் கடன் என்பதில் அய்யமில்லை. சென்னையில் கடந்த இருபது ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் தமிழ்மண் பதிப்பகப் பணிகளைத் தமிழுலகம் அறியும். வாழும் தலைமுறைக்கும் வருங்காலத் தலைமுறைக்கும் வழிகாட்டவல்ல தமிழறிஞர்கள் பலரின் நூல்களை முழுமுழுத் தொகுப்புகளாக வழங்கியிருப்பது தமிழ்மண் பதிப்பகத்தின் முடிப்பினை (சாதனை)யாகப் போற்றப்படுகிறது. தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட அறிஞர்களைக் கண்டறிந்து, அவர்களின் நூல்களை முழுமையான தொகுப்புகளாகத் தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டு வருகிறது. அவை காலம் முழுதும் பயன்படவல்ல கருவி நூல்கள் என்பதை அறிஞர் உலகம் அறியும்! தமது நலத்தை ஒதுக்கி வைத்து, தமிழ் நலத்தைக் காக்க வாழ்ந்த அறிஞர்களின் அனைத்து நூல்களையும் ஒரு சேரத் தொகுத்து முழுத் தொகுப்பாக வழங்குவது பெரும்பணி! அதனைத் தமிழ்மண் பதிப்பகம் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. தொகுப்பு நூல்களின் பட்டியலைப் பின்னிணைப்பில் காண்க. தமிழுக்காக உழைக்கும் உணர்வை இளமையில் எம்மிடம் ஏற்படுத்தியோருள் பெரும்புலவர் நக்கீரனாரும் அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலனாரும் குறிப்பிடத்தக்கோர்! எம் நன்றிக்குரியோர்! தனித்தமிழ் ஆர்வம், திராவிடர் இயக்க ஈடுபாடு எனும் இரு சிறகுகளால் எம்மை எழவைத்தவர் பெரும்புலவர் நக்கீரனார்! அவரை எண்ணிக் கண்பனிக்க நன்றி கூறுகிறது எம் நெஞ்சம். காலப்பழமையாலும் பராமரிப்புக் குறைவாலும் அழிய நேர்ந்த தமிழிலக்கியங்கள் அளவற்றவை! அவற்றில் ஒருபகுதியை யாவது மீட்டு நம் கைகளுக்கு வழங்கியோர் ஆறுமுகநாவலர், சி.வை. தாமோதரனார், உ.வே.சாமிநாதர் முதலிய சான்றோர் பெருமக்கள்! தமிழிலக்கியப் பெருஞ்செல்வத்தை மீண்டும் மீண்டும் அச்சாக்கி, அனைவர் கைகளையும் எட்டச் செய்த பெருமை - சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், உ.வே.சா. நூலகம், மணிவாசகர் பதிப்பகம் முதலிய பதிப்பாளர்களுக்கு உரியது. அச்சுத்துறை அறிமுகமான பின்பே, அறிவுத்துறை அனைவருக்கும் பொதுச்சொத்தாகும் வாய்ப்பு வந்தது. எட்டாக் கனியாக ஓலைச் சுவடிகளில் முடங்கிக் கிடந்த இலக்கியச் செல்வங்கள், எல்லோருக்கும் எளிதாய்க் கிடைக்கும் பணியைச் செய்த பதிப்பாசிரியர்களும், பதிப்பாளர்களும் நம் நன்றிக் குரியோர்! இரவு பகல் பாராது முதுமையைக் கருதாது உழைக்கும் மனவுரத்தை முன்னோடிப் பதிப்பாசிரியர்களின் பணியே எமக்கு வழங்கியது. அரசும், பல்கலைக் கழகங்களும், அறநிறுவனங்களும், சமய பீடங்களும் ,பெரும் இயக்கங்களும், பெரும் செல்வர்களும் செய்ய வேண்டிய பெருந் தமிழ்ப்பணி இது! எளியவர்களால் இயங்கும் தமிழ்மண் பதிப்பகம் பெருந்தமிழ்ப் பணிகளை இன்னல்களுக்கு இடையில் அருமுயற்சியோடு செய்து வருவது, உள்ளவுரம் ஒன்றினால்தான்! வல்லமை சேர்க்கும் வலிமையுண் டாக்கும்! வண்டமிழ் நைந்திடில் எதுநம்மைக் காக்கும்? காக்கும் தமிழைக் காக்கும் உணர்வைப் பாவேந்தர் பாடல் வரிகள் தந்தன. அச்சுக்கு எட்டாமலும் கைக்குக் கிட்டாமலும் இருந்த பேரறிஞர் பலரின் நூல்களை நாட்டுடைமையாக்கி திராவிடர் இயக்க அரசுகள் வழங்கின. அதனால், அறிவு பரவலாகும் வாய்ப்புகள் உருவாயின. `சரிவும் இழப்பும் நமக்கு வந்தாலும் தமிழுக்கு வரக்கூடாது என எண்ணி உழைக்கும் இயக்கங்களும் அமைப்புகளும் தமிழ் நாட்டில் வற்றாமல் வளர்ந்தபடி இருக்கின்றன. திருவிடர் கழகம் (1908) தனித்தமிழ் இயக்கம் (1916) தென்னிந்திய நலஉரிமைக் கழகம் (1916) சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் (1934) தமிழ்ப்பாதுகாப்புக் கழகம் (1937) தமிழறிஞர் கழகம் (1943) தமிழ்ப் பேராயம் (1959) தமிழ்க்காப்புக் கழகம் (1961) தனித்தமிழ்க் கழகம் (1964) உலகத்தமிழ்க் கழகம் (1968) தமிழியக்கம் (1972) தமிழ்ச் சான்றோர் பேரவை (1998) தமிழ் மலர்ச்சிக்கும் தனித்தமிழ் வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைத்த இத்தகு அமைப்புகளுக்கு மூல விசையாகத் திகழும் பெருமையைப் பெறுவோர் மறைமலையடிகளாரும் பாவாணருமே! தமிழ் வளத்திற்கும் தமிழர் நலத்திற்கும் சிவனிய மேம்பாட்டிற்கும் மறைமலையடிகளார் ஆற்றிய பணிகள் அளப்பரியவை. அவை தொடர்பாக அவர் ஆய்ந்தளித்த அறிவு முத்துகள் எண்ணற்றவை! அடிகளாரின் அனைத்துப் படைப்புகளும் பொருள்வழிப் பிரிக்கப்பட்டு, காலவரிசையில் 34 தொகுப்புகளாகத் தொகுக்கப் பட்டு `மறைமலையம் என உங்கள் கைகளில் இப்போது தவழ்கின்றது. பல தலைமுறைகளுக்குப் பயன்படும் அறிவுக் கருவூலம் இது! தமிழர் இல்லந்தோறும் இருக்கவேண்டிய அருந்தமிழ்ச் செல்வம் இது! அறிவுலகத்தால் `மறைமலையம் வரவேற்கப்படும் என்னும் நம்பிக்கை எமக்குண்டு. நூற் சுரங்கத்தில் நுழைய அழைக்கிறோம். தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழ்க்கென வாழ்வதே வாழ்வதாகும் எனும் பாவேந்தர் வரிகளை நினைவுக் கூறுகிறோம். - கோ. இளவழக நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் ரோசா முத்தையா நூலகம் - சென்னை. புலவர் கா. இளமுருகன் - புன்செய் புளியம்பட்டி (மறைமலையடிகள் மன்றம்) மறை. தாயுமானவன் - சென்னை (மறைமலையடிகளின் பேரன்) பிழை திருத்த உதவியோர்: திரு. அ. மதிவாணன் (ஆங்கிலம்) திரு. க. கருப்பையா திரு. புலவர். த. ஆறுமுகம் புலவர். மு. இராசவேலு திரு. இராசுகுமார் திரு. நாக. சொக்கலிங்கம் முனைவர். க. சுப்பிரமணியன் திருமதி. அ. கோகிலா திருமதி. உசா செல்வி. அபிராமி நூல் உருவாக்கம் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திருமதி மலர் திருமதி செல்வி திருமதி ஹேமலதா திரு. ஆசம் திருமதி கலைவாணி பிராசசு இந்தியா திருமதி` புகழ்ச்செல்வி கயல்விழி (Process India), நூல் வடிவமைப்பு: திருமதி வி. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: கவி பாகர் நூலாக்கத்திற்கு உதவியோர் இரா. பரமேசுவரன், க. இளந்திராவிடன், வே. தனசேகரன், கு. மருது, இல. தருமராசன் தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை -1 எதிர்மம் (Negative): பிராசசு இந்தியா (Process India) சென்னை-5. அச்சடிப்பு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு மற்றும் பிராசசு இந்தியா `மறைமலையம் எல்லா நிலையிலும் செப்பமுற வெளி வருவதற்குப் பல்லாற்றானும் உதவியாக இருந்த இவர்களுக்கும் மற்றும் அறிஞர் பெருமக்களுக்கும் எம் நிறைந்த நன்றியும் பாராட்டும். திருவொற்றி முருகன் மும்மணிக்கோவை 1972இல் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பதிப்பித்த நூலினை மூலமாகக் கொண்டு இந்நூல் பதிப்பிக்கப்படுகின்றது. இந்நூலைப் பற்றிய குறிப்புரை... எமக்கு உண்டான கொடிய நோய் தீர்த்த முருகப்பிரான் திருவருளை வியந்து இயற்றிய எமது மும்மணிக்கோவை என இரண்டாம் பதிப்பில் அடிகளார் எழுதிய எழுத்தால், இந்நூல் இயற்றப் பெற்ற நோக்கம் விளக்கமாகும். அடிகளின் பழந்தமிழ்ப் புலமையும் சமயத்திறமும் விளங்க அமைந்த நூல். அவற்றின் பிழிசாறாகத் திகழ்கீன்றது. அந்நாள் பெரும்புலவர்களான அரசஞ் சண்முகனார், மு. இராகவ ஐயங்கார் முதலியவர்கள் பாராட்டுப் பெற்றது இந்நூல். சோம சுந்தரத் தோமறு குருவன் நாராயணன் எனும் குருவனும் என்பன போன்றவற்றால் தம் ஆசிரியர்கள் மேல் அடிகள் கொண்ட பற்றுதல் வெளிப்படும். அடிகளின் மாணவர் இளவழகனார் இந்நூலுக்கு அரிய விரிவுரை வரைந்துள்ளார். இந்நூல் பாடி முடிக்கப்பட்டது 1900 செப்டம்பர் 29. - இரா. இளங்குமரன் இந்திய இலக்கியச் சிற்பிகள் இரண்டாம் பதிப்பும் அதன் உரையும் முகவுரை சாலிவாகன, 1820 ஆம் ஆண்டாகிய விளம்பி ஆனித்திங்கள், 15-ஆம் நாள் (1898 , ஜூன், 27) எமக்குண்டான கொடிய நோய்தீர்த்த முருகப்பிரான் றிருவருளை வியந்து இயற்றிய எமது மும்மணிக்கோவை அவன் றிருவடிக்குச் சாத்தப்பட்ட வரலாறு, இந்நூலின் முதற் பதிப்பு முகவுரையில் வரையப்பட்டுளது. மேற்சொன்ன நோயால் துன்புற்றநாளில் எமக்கு ஆண்டு, 21, மிக இளைஞனாயிருந்த காலம்; அப்போதுதான் யாம் சென்னைக்கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியராய் அமர்ந்து மாணாக்கர்க்குத் தமிழ் இலக்கண இலக்கியங்கற்பித்து வரலானதும். அந்நாளில் யாம் பழைய தமிழ் இலக்கண இலக்கிய நூற்பயிற்சியில் மட்டுப்படா விழைவு கொண்டு கருத்தூன்றி யிருந்தேம். எமது பதினைந்தாம் ஆண்டில் முறைப்படித் துவங்கிய தமிழ்ப்பயிற்சியானது எமது இருபத்தோராம் ஆண்டிற் பெரும்பாலும் நிரம்பிய தென்னலாம், இருபத்தோராம் ஆண்டிற்குள் தொல்காப்பியம். திருக்குறள், திருச்சிற்றம்பலக் கோவையார் என்னும் மூன்று நூல்களையும் முழுதும் நெட்டுருச்செய்து முடித்தேம்; கலித்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், நாலடியார் முதலிய நூல்களிற் பெரும்பகுதிகள் அங்ஙனமே நெட்டுருச்செய்து முடிக்கப்பட்டன; சிவஞான போதம், சிவஞானசித்தியார் என்னும் நூல்களிரண்டும் முழுமையும் நெட்டுருச்செய்து முடிக்கப்பட்டன; இவையேயன்றி, நன்னூல் விருத்தி, தொல்காப்பியச் சூத்திரவிருத்தி, யாப்பருங்கலக்காரிகை, இறையனாரகப்பொருளுரை, தண்டியலங்காரம் முதலான நூல்களும் முன்னமே முழுமையும் நெட்டுருச்செய்து முடிக்கப் பட்டனவாகும். கல்லாடம், சீவகசிந்தாமணி, பெரியபுராணம் என்னும் நூல்களின் சொற்சுவை பொருட்சுவைகளிற் பெரிதுமூழ்கியிருந்தும் அவற்றிலிருந்தெடுத்துப் பாடஞ்செய்த செய்யுட்கள் மிகுதியாயில்லை; என்றாலும், அவற்றின் சொற் பொருணயங்கள் எமதுளத்தில் வேரூன்றி நின்றன. இங்ஙனமாக, விழுமிய தமிழ்ப்பழ நூல்களில் எமது கருத்து ஈர்ப்புண்டுநின்று பயின்ற பயிற்சியினாலேயே, செய்யுளும் உரையுந் தனிச்செந்தமிழ் நடையில் எழுதுந் திறம் எமதிளமைப் பருவத்திலேயே எமக்கு வாய்ப்பதாயிற்று; எழுதும் திறம் வாய்ப்பவே. அவைக்களங்களிற் பேசுந்திறமும் அதனையொட்டி வாய்ப்பதாயிற்று. பழந்தமிழ்ப் பயிற்சியால் எமக்குண்டான சொற்பொருணலங்கள் அத்தனையும் இம்மும்மணிக்கோவையின் கண் விளங்கிக்கிடத்தல் எளிதில் அறியப்படும். இஞ்ஞான்றைத் தமிழ்மாணவரும் பிறரும் இந்நூலைக் கருத்தூன்றிக் கற்பராயின், அவர் பழந்தமிழ்நூற் சொற்பொருணயங்களை எளிதில் உணர்ந் தின்புறுதற்கு இஃதொரு வழிகாட்டியாமென்னும் நம்பிக்கையுடையேம். இனி, எமக்குவந்த கொடுநோய் தீர்த்த முருகப்பிரான் றிருவடிக்கு ஒரு பாமாலை தொடுக்க விழைந்த எமது கருத்து, அந்நோய் தீர்ந்த ஒன்றரையாண்டுகட்குப் பிறகுதான் நிறை வேறலாயிற்று. கல்லூரியில் உயர்வகுப்பு மாணவர்க்குத் தமிழ் நூல்கற்பிக்குந் தொடர்ந்த முயற்சிக்கிடையிடையே, அவைகளிற் சொற்பொழிவுகள் நிகழ்த்தும் முயற்சியும், எமதில்லத்தே போந்து தமிழ்கற்க விழைவு மீதூர்ந்த மாணவர்க்கு அது கற்பிக்கும் முயற்சியும், அஞ்ஞான்று நடைபெற்ற தமிழ்வெளியீடு ஆங்கில வெளியீடுகட்குத் தமிழ் ஆங்கிலக்கட்டுரைகள் எழுதிவிடுக்கும் முயற்சியும் பிறவும் நடைபெற்றுவந்தன. அவற்றிற் கிடையே எம் மனைவி இருமல் நோயால் துன்புற்றனர். யாம் அப்போ தீன்ற பெண்மகவுஞ் சிலந்திக்கட்டிகளால் நெடுநாள் துன்புற்றது; எமக்கப்போது கல்லூரியிற்கிடைத்த சம்பளமோ சிறிதாதலால் எமது வாழ்ககையுஞ் செழுமையாக நடைபெற்றிலது. ஆகவே, இத்தனை முயற்சிகட்குந் தொல்லைகட்கும் நடுவே, இந்நூற்பாக்கள் மனவமைதி பெற்ற ஒழிவுநேரங்களில் மட்டுமே தொடுக்கப்பட்டுவந்தன. எம்முடைய பழையநாட் குறிப்புகளைத் தேடிப்பார்த்ததில், இம்மும்மணிக்கோவை முடிக்கப்பட்டநாள் சார்வரியாண்டு புரட்டாசி, 13 (1900, செப்டம்பர், 28) என்பது புலனாயிற்று; இதன் 14ஆவது அகவற்பா. 1900, பிப்பிரவரி, 4இல் முடிக்கப்பட்டதென்னுங் குறிப்பு அகப்பட்டமையால், இந்நூல் துவக்கஞ்செய்யப்பட்டகாலம். 1899 இன் இடையில், அதாவது எமது இருபத்துமூன்றாம் ஆண்டின் துவக்கத்தின் கண்ணதாகல் வேண்டுமென்பதூஉம் உய்த்துணரப்படுகின்றது. இனி, இதற்குரையெழுத முயன்ற மாணவர் பலரின் முயற்சியிற் பாலசுந்தரம்பிள்ளை யென்னுந் திரு. இளவழக னாரின் முயற்சியே நிறைவேறலாயிற்று. இவர் பன்னிரண் டாண்டுகட்கு முன் எம்மிடந் தமிழ்நூல் கற்றுவந்தகாலத் திலேயே, இதற்குரையெழுதக் கருதிய தமது குறிக்கோளைத் தெரிவித்து, இதனை முறையாக எம்மிடம் பாடங்கேட்டு வந்தனர். யாஞ் சொல்லிவந்த உரைகளையுங் குறிப்புகளையும் அவ்வப்போது குறித்துக்கொண்டு வந்து பின்னர் அவைகளை யெல்லாம் ஓரொழுங்குபடுத்தெழுதி, எழுதிய கையெழுத்துப் படியினை 1932. மார்ச்சு, 28-ஆம் நாள் எம்மிடஞ் சேர்த்து, அதனை முழுதும் பார்த்துத்திருத்தி அச்சிட்டு வெளியிடும்படி எம்மை வேண்டிக் கொண்டனர். அங்ஙனமே அதனை முழுதுந்திருத்தி அச்சிட்டு முடிப்பதற்கு எட்டாண்டுகட்கு மேற் சென்றன. உரையின்கட் செய்யப் பட்ட திருத்தங்கள் பல: ஆக்கியோன் கருத்துக்கு மாறாய்க் காணப்பட்டவைகளை அம்மாறுகோள் நீக்கி இயைபு படுத்தியதும்; உரையெழுதாமல் விடப்பட்ட சில பகுதிகட்கு உரைவகுத்ததும்; சொற்பொருள் கட்குப் பிற்காலத்து நூல்களி லிருந்து எடுத்துக்காட்டிய மேற்கோள்களை நீக்கி, முற்காலத்துச் செந்தமிழ்ப் பழ நூல்களிலிருந்தே மேற்கோள்கள் காட்டியதும்; மேற்கோள் காட்டப்படாதவற்றுக்கு மேற் கோள்கள் காட்டியதும்; இலக்கணக் குறிப்புகள் பல மாற்றியதும், பல புதியவாய்ச் சேர்த்ததும்; உரைநயங்கள் பல மாற்றியதும் புதியவாய்ச் சேர்த்ததும்; சொற்களையுஞ் சொற்றொடர் களையுஞ் செந்தமிழ்ச்சுவை துளும்ப மாற்றியதும்; இன்னும் இவைபோன்ற நுண்ணிய திருத்தங்கள் பல உரைநெடுகச் செய்ததுமாகும். ஒரு நூலுக்கு எழுதப்படும் உரை அந்நூலாசிரியன் காலத்தே செய்யப்பட்டு அவனாலேயே முழுதுந்திருத்தப் பட்டு அமையு மானால், அத்தகைய உரையே நூலாசிரியன்றன் கருத்தறிந்த உரையாகும். அப்பெருநலம் இம்மும்மணிக் கோவைக்கு வாய்க்குமாறு முருகப்பிரான் றிருவருள் இயைத்தமைகண்டு இது தன்னைப் பயில்வரர் மிக மகிழற் பாலார். எமதிளமைக்காலத்தே இயற்றப்பட்ட இச்செய்யுள் நூல், நாற்பத்தோராண்டுகட்குப்பின் இப்போதுரையுடன் வெளிப்போந்து தமிழுலகுக்குப் பயன்படு மாறருள் புரிந்த முருகப்பிரான் றிருவடிப்போதுகட்கு எமது புல்லிய வணக்கம் உரித்தாகுக! எட்டாண்டுகட்கு மேலாக இந்நூலின் உரையினைத் திருத்துவதிலும், இதனை அச்சிடுவதிலும் எமக்குண்டான உழைப்புச் சிறிதன்று, பொருட்செலவோ ஐயாயிர ரூபாய்க்கு மேலாயிற்று. இப்பெருஞ்செலவில் ஒருபகுதிக்குப் பயன்படுமாறு, யாழ்ப்பாணந் தெல்லிப்பழையில் தமிழ்க்கலைவல்ல நுண்ணறி வினராய்த்திகழ்ந்த வழக்கறிஞரும் எம் நண்பருமான திருவாளர் தம்பையா பிள்ளையவர்களின் இளையபுதல்வியாரான திருமகள் சிவநாயகியம்மையாரும் அவர்தங்கணவரும் எம்பால் மெய்ப்பொருள் கேட்டஞான்று எமக்கு ஐந்நூறுரூபா காணிக்கை செலுத்தினர். அவர்கள் எல்லாநலங்களுடனும் நீடினிது வாழ்கவென்று அம்பலவாணரம்மை திருவடிகளை வேண்டுதும். பல்லாவரம், பொது நிலைக்கழக நிலையம், திருவள்ளுவர் ஆண்டு, 1972, மார்கழி, 18 (1942, ஜனவரி, 1) மறைமலையடிகள் ஓம் திருச்சிற்றம்பலம் திருவொற்றிமுருகர் மும்மணிக் கோவை காப்பு நீர்வளநன் றோங்குந் திருவொற்றி நீணகரிற் சூர்வளந்தின் வேலோற்குத் தூயநூல் - சீர்வளர எம்மா லியற்றுவதொன் றுண்டா லதுவாகுங் கைம்மா முகத்தன் கழல். நூல் 1. நெஞ்சொடுகிளத்தல் நீர்வளங் கவின்ற சீர்வளர் பழனத்து நெற்குரல் கௌவிய நற்குரற் பைங்கிளி கானற் காவிற் றான்விரைந் தெய்திப் பொன்வீ ஞாழற் பொலிந்தினி திருப்பவுங், 5 கருங்கழி வாரிய பெருமீன் குவைஇ வன்றிறற் பரதவர் முன்றிறொறு முணக்குந் துடிக்கட் டுணியல் கொடிக்குலங் கவர்ந்து மருதங் காவிற் பெரிது வைகவுங், குளனுறை வாழ்க்கை வளநீர்க் கோழி 10 மனையுறை நீங்கித் துணைகூப் பெயர்ந்து கால்வழி யோடிக் கழியிற் சேரவும், புலவுமண முனைஇய நிலவுறழ் குருகு கண்ணகன் விசும்பில் நண்ணிய முகின்மேல் இவர்ந்தெழு திங்கள் போலப் பரந்துகெழு 15 துணிநீர்த் தடத்தின் மணமலர் ஆரும் இரும்புதிரித் தன்ன அறன்மருப் பெருமை கரும்புற மருங்கி னொருங்கி நிற்பவும், பொறிகெழு வாளை வெறிபடப் பாய்ந்து முடைக்கழிச் சுறவொடு கறுவொடு மறியவுங், 20 காலெதிர்ந் தோடுங் கழிக்கயன் மருதச் சேலொடுங் கூடிச் சேர்ந்து துள்ளவும், முழுநெறி யவிழ்க்குங் கொழுங்கால் ஓடிப் பொன்னந் தாமரைப் பொலந்துகள் வாரிக் கோழி முட்டை போழ்படுத் தாங்கு 25 வெள்ளயிர்க் கானற் கொள்ளையின் வீசவும், வெள்ளிவெண் டோட்டுத் தாழையி னளைஇக் கையரிக் கொண்ட கடற்கா லோடி நீறுமெய் பூத்த நேரியோன் போலச் செந்தா மரைகள் சிறந்தினிது விளங்க 30. வெண்பொடி வீசிப் பண்பொடு முலாவவுந், தேமொழிச் செவ்வாய்த் திருமுக வுழத்தியர் காமரு கொழுஞ்சுவை வாழையின் பழனும் புன்செய் பயந்த பன்னிறப் பயறும் நன்செய் பயந்த பொன்னிற மணியும் 35 வட்டிகைப் பெய்து கட்டிய சுமட்டின் எடுத்துச் சென்றங் கடுத்துயர் பாக்கத்துக் குமிழிடை யுகளும் அமைவிழிப் பரத்தியர் பகுத்துணர் வின்றி மிகுத்துக் கொடுத்த தரளமும் மீனும் நிரல்பட அளந்துகொண் 40 டுவப்பொடு பெயர்ந்துதம் மிருக்கை சேரவும், மருதமும் நெய்தலும் மயங்கிய மரபின் உலக மெல்லாம் ஒருங்குவந் துறினுந் தொலையா வளத்தொடு நிலவுறு வைப்பின் ஒற்றி மாநகர்க் குற்றகண் ணெனவும், 45 அக்கணி னுள்வள ரருமணி யெனவும், அம்மணி யுள்ளுறை பாவையை யெனவும் பாவையி னகத்துப் பண்புபல காட்டி மேவி யாங்கது புடைபெயர்ந் தியங்கத் தக்க வாறு மிக்கது புரியும் 50 ஓரியல் பில்லா ஆருயி ரெனவும், இருவே றுலகினும் இரண்டற விரவி அறிவுந் தொழிலும் நெறியுற விளக்கும் மாதொரு கூறற் கோதிய முதல்வன், செல்லலுற் றழுங்கிய மல்லற் றேவர் 55 குழாம்பெரி துய்ய வழாவே லோச்சிப் பாடில் சூருக்கு வீடு நல்கி வேந்தன் பயந்த கூந்தற் குமரியை மணந்துல களித்த நிணந்திகழ் வேலன், ஐயன் செய்யன் பன்னிரு கையன், 60 வறியே மிடும்பை பொறிபடுத் தெதிரும் பெரியோன் பெரிய ரறிவினுக் கரியன் றிருவுரு வொருமையி னெழுவித் தருமையொடு வழிபா டியற்றி விழிநீ ருறைப்ப அன்புரு வாகி யின்புற லறியாது 65 புன்பொருள் கவருமென் மின்புரை மனனே! வரம்பறு மாற்றல் நிரம்பிய முருகன் றானெழுந் தருளும் வான்குடி லாக நின்னைத் தந்தன னாகப், பின்னை மண்டிரி வாகக் கண்டன சிலவும் 70 புனறிரி வாகப் புகுவன சிலவும் அனறிரி வாக அடைவன சிலவும் வளியிட னாகத் தெளிவன சிலவும் விசும்பிடனாக உசும்புன சிலவும் ஓவா திருப்ப மேவுநை, யதனாற் 75 றுன்பமுங் கவலையும் நின்புற னாக இன்புற லறியா திடர்ப்படு குனையே, யதாஅன் றுறுதுணை யாகச் செறியு மென்னையும் புற்சாய்த் தோடும் புனலே போல நின்வழிப் படீஇ யென்னுயிர்க் குயிராம் 80 அறுமுகத் தையனை மருவலொட் டாது வன்மை செய்தநின் புன்மையோ பெரிதே யினிநீ யிங்ஙன மொழியாது, பனிமலர்க் கடம்பு சூடிய தடந்தோண் முருகன் றிருவுருப் பொதியு மொருகல னாக 85 விழுமிதின் நீடு வாழ்மதி கொழுவிய நலங்கெழு நறும்பால் பெய்த பொலங்கலம் பொலியும் பெற்றியா லெனவே. (1) 2. அருளியல்புரைத்தல் பெற்றி யரிய பெருமான் பெரியதிரு வொற்றி நகர்வந்த வொள்வேலான் - நற்றவருங் காணா அரிய கழலா னெனதுளத்து நாணா தமர்ந்தவா நன்று. (2) 3. காமமிக்க கழிபடர்கிளவி நன்றன் றுனக்குத் திருவொற்றி வேலரை நாடியிடர் இன்றிங்கு நீகொள்ள லென்றுரை யீரக லீர்ங்கழிகாண்! மின்றங்கு நொய்சிறை வண்டினங் காளினி மேலெமக்கு நின்றிங்கு நீர்செய்யு நன்மையென் னோவொன்று நேர்வதின்றே. 4. தோழி விரவிக்கூறல் நேரிறை முன்கை வாரொலிக் கூந்த லரிகடை யொழுகிய பெருமதர் மழைக்கண் இலவுறழ் செவ்வாய் நிலவுறழ் திருநுதற் கொடிபுரை மருங்குற் கடிதிகழ் மேனிக் 5 கரும்பினு மினியவென் னரும்பெறற் பாவாய்! வழிவழிச் சிறக்குமெங் கழிபெருங் குலத்திற் பாற்கடற் றோன்றிய சீர்த்திரு வனையாய்! வலம்புரி யன்னவெங் குலம்புரி கோமகள் அரிதி னீன்ற பெருமுத் தனையாய்! 10 மிடியறி யாவெங் குடியெனு முற்றத் தன்புநீர் பாய்த்தி யின்புறக் கைசெய் தாயமு மியானுஞ் சீரிதின் வளர்க்கும் நற்பயன் கனிந்த பொற்சுடர்க் கொடியே! நக்கும் புக்கும் மிக்கமகிழ் செய்யுஞ் 15 செயிரற வெழுதிய வுயிரோ வியமே! அருமையின் மிகுந்தவெம் பெருமுதற் றந்தை யாற்றா விருப்பொடு மேற்றிப் பார்க்கும் விளிவற விளங்கிய வொளிமணி விளக்கே! நின்னரு ணாடித் துன்னி நின்றிங் 20 கடியேன் கூ று மொடியாச் சிறுமொழி வறிதென வொழியா தறிவுகொளல் வேண்டும், வயலுழவர் குவளைகட்டு வியல்வரம்பிற் றடிந்திட்ட கயலினிடைப் படவெறிய 25 மருதமகள் கருவிழிபோற் பொருவின்றித் திருவிளங்கச், செந்நெல் வித்திய பொன்னுறழ் வான்முளை புரியவிழத் தலைவிரிந்து பையத்தென்னப் பரந்திருப்பத், 30 தெள்ளொளிப் பளிங்கி னுள்ளயிர் பெய்து பாசிலையுஞ் சேதாம்பலுங் கட்குவளையும் முட்டாமரையும் ஒருங்குபட வெழுதி மருங்குவைத் தாங்கு நற்பூங் கயங்கள் பொற்பொடு மிமைப்பத் 35 தண்ணடை மருவிய தணியா விளையுள் ஒற்றிமா நகரின் முற்பட வமர்ந்த உட்குடை முருகனைக் கட்கண் டாங்குப், பார்த்தானாப் பயில்வடிவின் ஓர்த்தானா வுரனுணர்விற் 40 சொல்லானாப் பல்புகழிற் றாடொட வீழ்ந்த கையன், றோடொடு பொன்ஞாண் பிணித்த வில்லன் கணையன், மின்ஞாண் பிணித்த குஞ்சிய னிளைஞன், அரியன் பெரியன் றிருவளர் செல்வன், 45 குடியினுங் குலத்தினும் வடுவொன் றில்லான், பெறுவதொன் றுடையன் போல மறுவந்து பன்னா ளெனினுமென் சொன்னிலை தவறான், குறித்தது கிளவாது செறித்தலுஞ் செறிப்பன், உருமும் உளியமும் அரவும் பிரியா 50 ஆரதர் நீந்திச் சீரிதிற் போந்து திரிதரு நாள்களும் பலவே, யொருநாள்நம் மலையகன் சாரற் றலைமையொடு பொலியும் ஆரா மத்தினீ வாரா யாக, ஒருதனிச் சென்றேன் பரிவொடு புகுந்து 55 பானீர் வாவியின் மேவி நிற்ப, அவனுமாண் டெய்தியென் னொடுநின் றனனே, நொய்திற் றிரைபொரு கரையிற் புரையின் றோங்கிப் பசுங்குழை கலித்து நசைநனை யரும்பித் தென்றலொடு புகுந்த வண்டிசைப் பாணன் 60 இனிமையின் மிழற்றுந் தனியிசைக் குவந்து பொதியவிழ் மலரின் நறவுணக் கொடுத்து, நினைதொறுஞ் சுவைக்கும் நீனிறக் கனிகள் இலைதொறுங் குழும நலமிகப் பயக்குங் கோழரை நாவல் கோட்டி னுகுப்பப், 65 பாலிடை விழூஉம் நீலமணி கடுப்ப ஆமிடை விழூஉ மருஞ்சுவைக் கனிகள் அளையிடைத் துஞ்சு மரும்பெடைக் களிப்ப வேப்பின் கொழுநனை யேய்க்கும் நெடுங்கட் கவைக்கா லலவன் றாளிடை யிடுக்கி 70 யன்புடன் சென்றாங் கருத்த னோக்கி, என்னையு நோக்கினன் அன்னதும் நோக்கினன், உய்குவ தறியான் போலச் செய்குவ தொன்றுங் காணா தன்றுநின் றனனே, நீகண் டனையேல் நெஞ்சநெக் குருகி 75 யின்னுயிர் வாழலை மன்னே, கொன்னுறு பேய்கண் டனைய பெற்றிய னாகி நிறையும் அறிவும் முறைமுறை சாயத் துன்றுநிலை நீங்கா மரம்போற் கன்றிய நோக்கமொடு நின்றவ னிலையே. (4) 5. தோழிமுன்னுறவுணர்தல் நிலையுந் திரிந்து நிறையுங் கடந்து தலையுங் கவிழ்ந்த தகையண்- மலைநிவந்த தென்னப் பொலியும் எயிலொற்றிச் செவ்வேண்மேன் மன்னுங் கருத்துடைய மாது. (5) 6. பிரிவாற்றாத தலைவிக்குத் தோழிகூறல் மாதே பெரிதும் வருந்துவ தென்னை மனந்திரிதல் ஏதே யறியிற் கொடுமையன் றோவன்னை யீர்ம்பொதும்பிற் சூதேய் துணைமுலை யாகந் தழுவித் துயர்மிகுத்த போதேர் பொழிலொற்றிச் செவ்வேள் வரையப் புகுந்தனனே 7. இனநலனுரைத்தல் புகலரு நூழையிற் போக்கரும் பொருள்போல் இகலறு சைவத் திறஞ்செலா நெஞ்சினர்; நெறிப்படு மக்கட் கறிவு பேதுறுக்குங் கவலையிற் பிறரை மயக்குநர் உவலிடு 5 பதுக்கையிற் புன்பொருள் அகத்திடு கரவினர்; புனைமாண் கோதை பொருந்தச் சூட்டியும் வினைமாண் விளங்கிழை வீறுபடத் திருத்தியுங் கொழுங்கயன் மழைக்கண் பிறழ்தொறு மனந்திரிந்து செழுந்துவர்ச் செவ்வாய் முத்தங் கொண்டும் 10 நசைபிறக் கிடாது முலைதழீஇச் செல்லும் நெஞ்சமர் காதலர் பின்செலு மடவார் பஞ்சின் மெல்லடி பைதலுற் றுழப்ப உறுத்துக் கிழிக்கும் பரல்கெழி முரம்பிற், புலியத ளுடுக்கை தைஇ வலிகெழு 15 மூவிலை வடிவே லொருவயின் விளங்கக் கொன்றைநனை பிணைத்த மன்றலந் தொடலை பவளமலை யுறழும் மார்பிற் றுவள மலைதரு மடந்தை குறங்கின்மிசை யிருந்து வலம்படு கையாற் பெரும்புறங் கவைஇ 20 உலம்படு திரடோ ளொருமுலை யொற்ற நரையே றூர்ந்த புரைசா றோற்றம் நினைதொறுங் குழையு முரவோர்க்கு வைகலுங் கேடுபுரி நெஞ்சிற் பீடிலா வமணர், பீடுயர் செந்தமிழ்க் கூடலிற் றோன்றிப் 25 பொய்படு புன்பொருள் கான்றிருள் பரப்பி மெய்தரு சைவ நன்னெறி பிழைப்ப மாணா வழிப்படூஉங் கூன்பாண் டியன்முதல் ஆறுசென் மாக்களைச் சூறைகொண் டெறிந்து பெருந்துய ருறுக்குங் காலை, யருந்தவம் 30 நிற்பெறு பொருளிற் பற்பக லாற்றி வேண்டிய பெரியோர்க்கு வேண்டியாங் களிப்பக் கருக்குழிக் கிடக்குந் தன்மையை யன்மையின் உருப்பெற வருகுநை போல வவரகத் தொருபெரு மாயம் பெருகுறச் செய்து 35 புறம்பெயர்ந் தெய்தி யறந்தரு பெருமைச் சண்பையிற் றோன்றினை மாதோ, பின்பு கிண்கிணி யொலிப்பத் தந்தைபிற் சென்று தண்கழு நீருஞ் செந்தா மரையும் ஒருங்குதலை மயங்கிய பெருந்தட மருங்கின் 40 அரும்பெறற் றந்தையைத் தலைக்கூடினையே, அதற்புறம் முருந்துறழ் வெண்ணகைப் பெரும்பெய ரன்னை கரும்புங் கனியும் பெருஞ்சுவைப் பாலுந் திருந்திய தேனும் ஒருங்குறக் கூட்டிக் குழைத்தெடுத் தன்ன விழைவறா மரபின் 45 முலைபொழி யமிழ்தம் வள்ளத் தூட்டப் பவளவாய் மடுத்துத் திவளொளி சிறந்து பழகுறு தந்தைக்கு மழவிடை யமர்ந்த தந்தையைத் தாயொடுங் காட்டிப், பின்றைக் காண்டகு திருவிளை யாடன் மாண்டகச் 50 செய்திறம் அறியார் உய்திறம் நோக்கிப் பற்பக லியற்றிய பின்னர் முற்படர்ந் தருந்தமி ழாய்ந்த பெருந்தமிழ்க் கூடற் குலச்சிறை முனிவ னெதிர்கொளச் சென்று பாற்கடற் பிறந்த சீர்த்திரு வாகலின் 55 இருமுலைக் குடத்தின் ஒருவழி யடக்கி, மலைமக ளாதலின் முலைதரல் சுருங்க வள்ளத் தேந்திய சில்லமு தருந்தி ஆனா வேட்கையின் வருவோ னிவனென முலைமுகந் திறந்த வழிவழிப் போக்கிப் 60 பாற்கட லூட்டிய பவளச் செவ்வாய்த் தென்னவன் றேவிக்கும் பொன்போற் புதல்வன் ஆயினை யென்ப தறியத் தெருட்டி, வழுதி கொண்ட முழுநோய் தீர அன்னை யூட்டிய வமிழ்தை யின்னுரைச் 65 செந்தமி ழாக்கித் தந்தது கெடுத்துப், பாற்படு பூதமும் மேற்படு பொருளுந் தன்வழிப படூஉந் தன்மைய வாகலிற் றான்பிறி தாகல் வேண்டிற் றலைமயங்கித் தந்தொழில் திரிந்து நந்து மென்பதும், 70 இழிக்கும் பொருளுஞ் செழிக்கு மென்பதும் நீரினும் நெருப்பினுங் காட்டினை யொருதிறம் பனையினும் என்பினுங் காட்டினை மறுதிறம், இனியே அறிவொளி கொளீஇப் புரைநெறிப் பொய்ச்சமண் முறிய நூறி மெய்த்திறங் கிளக்கும் 75 மெய்ப்பொருட் சைவம் மெய்வகை விளக்கிப் பரங்குன் றமர்ந்தனை மாதே, அதுபெயர்ந் திரங்குவா லருவி நிரம்பத் தோன்றும் ஆவினன் குடியின் அசையினை மாதோ, அதற்புறம் ஏரகத் தெழுந்தனை மாதோ, நேரிதின் 80 ஒருமொழி வைத்த வுட்பொருள் விரிப்பத் திருவளர் தணிகையி னமர்ந்தனை, அதற்புறம் நின்கழற் கிடந்த அருகா அன்பிற் சைவம் வளர்க்கும் மெய்வகை மரபின் உடல்பொரு ளாவி யுனக்கென நிறுவி 85 நிற்குறித் தெழூஉம் அற்கும் இன்பத்து நின்பெய ரல்லது பிறிதொன்று நவிலா மன்பெரும் புலவோன், றந்தையைக் காட்டுந் தாயெனப் போந்து நாயினுங் கடைய என்னையு மொருபொருட் படுத்து நின்னியல் 90 பொருதுறைப் புகுத்தி யுரைக்கு முரவோன் சோம சுந்தர தேசிகப் பெயரின் ஏமுற வந்தோற் கருளக் காமுற்றுப் பொருளுட லாவி பொருள்பெற வழங்கி வேண்டுழி யெல்லாம் விரும்பிநின் றேத்த 95 அவற்கெளி வந்த தவப்பெருந் தன்மையை யொற்றியூர்ப் புகுந்து வைகினை, முற்றவும் நின்பெருந் தன்மையை யறிந்து நின்னடி யிரவொடு பகலும் ஒருவாது வணங்கி நாத்தழு தழுப்ப ஏத்துரை கிளந்து 100 நெஞ்சநெக் குடைந்து மெய்விதிர் விதிர்ப்பப் பெறுவதற் கெளியேன் அரியெ னாயினும் அவனொடு கெழூஉஞ் சார்பின் இவணது சிவணவும் பெறுகுவெ னன்றே, குவடுகெழு பெருநிறப் பொன்மலை யடைந்த 105 கருநிறக் காக்கைக் குறுவதா லெனவே. (7) 8. வள்ளன்மை கிளத்தல் உறுபொருள் காணா வுணர்விலார் மாட்டுப் பெறுபொருள் வேண்டல் பிழையால் - நறுநெஞ்சே யேந்துமுலை வள்ளி கொழுநன் எழிலொற்றிப் போந்து குடியிருக்கும் போது. (8) 9. தலைமகள் தோழிக்கு அறத்தொடு நிற்றல் போதாய்ந்து வெண்ணிலவொக்கும் பொடிமணற் பூஞ்சிற்றிலொன் றோதாயஞ் சூழ இழைத்தாடுங் காலை யொருவடிவேற் சூதான காளை திருவொற்றி யீசர் துணைப்புதல்வன் காதாருங் கண்ணி சிதைத்துநக் கோடிக் கரந்தனனே (9) 10. ஒப்புமைகூறி அருணிலை வேண்டல் கரவறு மாந்தர்க்கு விரவுறு பழியின் மறுவொடு விளங்கு நிறைகதிர் மதியம் வெண்கதிர் விரிக்குந் தண்ணென் காலைப் புலவுமணங் கமழும் பாக்கத்து நலங்கெழு 5 தெரிவின் மாக்கள் புரிதிமில் புகுந்து நிரைநிரை வகுத்த வகையமை விளக்கம் வான மீனின் வயின்வயி னிமைப்பவுஞ், சிறுதுடி மருங்கிற் கருங்கண் நுளைச்சியர் எழுவரும் எண்மரும் உழியுழிக் கைபிணைந் 10 தொருவா மரபிற் குரவை யயரவும், அவர்தரு சிறாஅர் சிறுமீன் முகந்து மணலகழ் கேணியின் முறைமுறை விடுத்தும் பொரிகெழு புன்னைப் பூந்துணர் வீழ்ப்பப் புரிவளை யெறியக் கோடு தாக்கிப் 15 பலவே றுடைந்த நலங்கிளர் நித்திலங் கொழுவிய நனையெனக் குஞ்சிப் பெய்து வழீஇ வீழக் கண்களுழ்பு பெயரவுங், கொழுமட லவிழ்ந்த குழூஉக்கொள் கைதை வான்சிதர் அளாய தேங்கமழ் ஆம்பல் 20 நீறுறு தழலே போலவும் பால்கெழு குறுநடைப் புதல்வர் துவரிதழ் போலவும், அறிவின் மாக்கட்கும் அறிவு பேதுறுக்கும் புனையாப் பொற்பின் முறைமுறை சிறப்பவும், நெய்தல் சான்ற கைதையங் கானல் 25 ஒற்றியூ ரமர்ந்த வெற்றிவேற் குரிசில்! கொன்னொன்று கிளக்குவென் கேண்மதி பெரும! நீயே, ஆருயிர்த் தொகுதிக்குப் பேறுதரல் வேண்டி ஐந்தொழில் இயற்றுவை மாதோ, யானே ஒருநெறி யின்றிப் பொறிவழி யோடி 30 ஐம்புலன் நுகர்ந்தாங் கமைகுவெ னன்றே, நீயே, மக்கண்மேற் கொண்ட பொச்சமி லன்பிற் றாயே யனைய வளியினை, யானே மனைவியும் மக்களும் பொருளெனக் கொண்டு நினைவதொன் றில்லாப் பேரன் பினனே, 35 நீயே, யானைவெண் மருப்புந் தேனின் இறாலும் மயிற்றழைப் பீலியும் விரைகமழ் சாந்தமும் ஒருங்குதலை மயங்கிய இரும்பெருங் குன்றத் தானா துறையும் இயல்பினை, யானே புலமில் கல்வியும் நலமில் புகழும் 40 வழுவிய வொழுக்கமுங் கழுவாக் குற்றமும் ஒருவழி யமைந்து பெருகிய செருக்கெனுங் கோடுகெழு குன்றிற் பீடுறு குவெனே, நீயே, அறல்நெறித் தன்ன செறிகுழற் கற்றையும் பிறைசெறித் தன்ன நறைகமழ் நுதலுங் 45 கயலிணைத் தன்ன அகலிரு விழியுங் குமிகைமுகிழ்த் தன்ன அமைவரு மூக்கும் பளிங்கின் அன்ன துளங்கொளிக் கதுப்பும் வள்ளை யன்ன தெள்ளொளிச் செவியுங் குலிகந் தோய்த்த இலவுறழ் இதழும் 50 முறுவல் பூப்ப மின்னென மிளிருங் குறுமுத் தன்ன சிறுமுள் ளெயிறுங் கொழுநீர்ப் பணிலத்து விழுமிய கழுத்தும் எமக்கருண் மரபிற் றமக்கமை கையுஞ் சிவிறிவிரித் தன்ன சிறுதிரு வடியும் 55 எம்முளம் நீங்காச் செம்மையிற் றோன்ற வீறுகெழு பகுதியின் வேறிரு மடவார் கூறுகொண் டிருபுடை விளங்கச் சீறிய மயின்மிசை வருகுவை மன்னோ, யானே கருநெறி மறமும் அருகிய வறிவும் 60 விரிவுறு மயக்கமுந் திருகிய சினமுந் தொண்டர்ப் பணியா நாணமும் எண்டோண் முக்கட் பெருமான் பெரும்புகழ் நக்குச் சமையக் கணக்கர் அமைவில கூறும் புல்லுரை கொள்ளும் பொல்லாக் கிழமையும் 65 வெகுளியொடு படூஉந் தகையின் மாற்றமும் அறிவோர் நகைப்ப மடவோர் திகைப்பப் பொருளொடு பொருந்தாப் புகுந்துசொன் மொழியும் உறுவரைப் பேணா தெழுமிறு மாப்பும் எளிவந் தோரும் இரவன் மாக்களும் 70 அழுவிளிக் கம்பலை கொள்ளக் குழைவின்றிப் பழுதுறச் சென்றாங் கெறிந்துநகு முருடும் அறிவொடு படாஅச் சிறுதொழின் முறைமையும் நீங்கா மரபின் ஓங்கிப் பொலிய யானென தென்னுங் கூனற் கிழத்தியர் 75 பெரும்புறங் கவவி வயின்வயின் அமைத்து மறந்தேர் வாழ்க்கை மயின்மிசைக் கொண்டு சிறந்ததோர் திறத்திற் சிவணுவெ னன்றே, நீயே, காந்தளங் கண்ணி யேந்திய மார்பத்துச் செஞ்சாந்து நீவிய சிறந்த கோலமொடு 80 குறவர் மகளிர் விழவொடு குழீஇ வெறியயர் களத்தில் விளங்குவை, யானே முல்லையந் தொடலை முருகெழ அணிந்து வெண்சாந்து பூசிய கேழ்கிளர் மார்பமொடும் இழிசின மகளிர் இயைந்த இன்ப 85 வெறியாடு களத்து வெளிப்படு குவெனே, எனவாங்கு நின்னொடு மென்னிடைப் பட்டவிவ் வியைபால் எனக்குநீ அருடரல் இயையுந், தனக்கு நிகரா குநரொடு நகைதரு கேண்மை செயலா குவதென மொழிகுவர், அதனால் 90 நுந்தையும் முனிகுவன் அல்லன் அன்னையும் நுந்தை வழிப்படூஉந், தகையண், மைந்துகெழு பொருப்பைப் போழ்ந்து விருப்பொடும் எதிர்ந்த அரிமா முகத்தனைப் பொரிபட நூறிக் காழுறு மரக்கரை நூழி லாட்டிப் 95 பொரியரை மாவாய் விரிகடன் மூடிய சூர்முதன் முதலற முருக்கிப் பேரருள் அழிவுபடும் உள்ளத்துப் பழியொடு பிறங்கும் உலையா வாழ்க்கைத் தேவர்க்குத் தலைமையொடு நல்குந் தமிழ்கிழ வோயே. (10) 11. பிரிவாற்றாத தலைவி மதியொடு வருந்தல் கிழமை நினையாத கேள்மதியே! ஒற்றிக் குழகன் பிரிந்த குறிப்பாற் - பொழுதறிந்து செல்லுமுயிர்ப் பேதைக்குத் தீங்கிழைப்பாய் நின்னையடும் வல்லரவைக் கொல்லா மயில். (11) 12 . தோழி பருவங்காட்டி வற்புறுத்தல் மயின்மீ திவர்ந்து திருவொற்றி யூர்ச்சென்ற மன்னவர்தாம் அயின்மேல் அமர்த்தகண் ணாய்பிரிந் தாரல்லர் அன்புமிக்குப் பயினோடு சேர்த்திய கற்போற் றுணையைப் பயிர்ந்தகுரற் குயின்மா வொடுங்கும் பொழுதும்வந் தன்றினிக் கூடுவரே. (12) 13. அருள்நிலை வியத்தல் கூடிய இருளின் வாடுவ தொன்றோ பீடுயர் நின்புகழ் நாடா தொன்றோ பெறுவ தறியாச் சிறுமை யொன்றோ மருவரக் கிடந்த தெரிவில் காலத்துப் 5 பொருவில் இன்பந் தருவது குறித்துப் புன்முத லாகிய மெய்யிற் புகுத்தி ஓரறி வுறுத்தினை சிலநாட், சிலநாள் நந்துமுத லாகிய வுடம்பிற் புகுத்துத் தந்தனை ஈருணர் வன்றே, சிலநாட் 10 சிதன்முத லாகிய குரம்பையிற் செலீஇ மூவுணர் வுணர்த்தினை மன்னோ, சிலநாள் நண்டுமுத லாகிய பொன்றுடற் கடவி நான்கறி வோங்குறச் செய்தனை, ஈங்கு மாவும் மாக்களும் மேவிய பின்றை 15 ஐயுணர் வெங்கும் மெய்பெறக் கொளுவி ஒழுங்குற உணர்த்தினை யொருசில பகலே, ஆங்ஙனம் ஒழிந்த அளவில் காலத்து நிறைவுறு குற்றம் முறைமுறை தேயப் பகுத்துணர் காட்சி மிகுத்துத் தோன்ற 20 மக்கள் யாக்கையிற் றக்கவா நிறுவிப் பலபிறப் புறீஇய நாள்களும் பலவே, அவ்வா றொழிந்தன போகச், செவ்விய இந்நாள் எனக்கு நன்னெறி காட்டச் செவ்வந்திப் போந்த பொய்யா நாவிற் 25 செந்தமிழ் வரம்பு முந்துகண் டுணர்ந்து மெய்ப்பொரு ளறிவுஞ் சொற்பொருள் வன்மையும் பொறையுஞ் செறிவும் நிறையக் கொண்டு தமிழ்மா ணாக்க ரமிழ்தென நுகர விரித்துரை கிளக்குந் தெரிப்பரும் பெருமை 30 நாரா யணனெனுந் தோலாப் புலவோன் நேர்படு முளத்துச் சீர்பட வமர்ந்து கருவிநூ லுணர்த்தினை பலவே, யதற்பின் ஒருவா யாணர் மருவுறு சென்னைத் தவம்பெறத் தோன்றி நவையறு தமிழும் 35 வடநூற் பரப்பும் நிலைகண் டுணர்ந்தாங் குள்ளுறை கருவாய்த் தெள்ளொளி விரிக்குஞ் சைவ சித்தாந்த முடிபொரு ளெடுத்தீங் கறங்கரை நாவிற் றிறம்பட விளக்கிப் புறம்படு சமயப் பொய்ப்பொருள் நூறி 40 நலங்கிளர் தன்மையும் புலங்கொளாக் காட்சியும் இயைந்தொருங் கீண்டிய அமையாப் பெருமைச் சோம சுந்தரத் தோமறு குருவன் உடல்பொரு ளாவி யிடமெனக் கொண்டு பொருளார் சைவந் தெருளுறக் கொளீஇ 45 யதற்கமை பொருளும் நீயெனக் காட்டித் திறப்பட வுணர்த்தினை மிகவே, யதற்பின் தொழும்புபூண் டொழுகும் அழுங்கா வுள்ளத்துத் தொண்டரும் நரகரும் அண்டரும் பிறரும் வழிவழி யடிமை பெருகுற வெழுதிய 50 ஓலை கொண்ட வொருமர பானும் உலகிற் சிறந்துதா னொன்றே யாகியும் அலகி லாற்றல் தலைவரு மென்பது வல்லொற் றாக்கிய குறிப்பி னானும் ஒற்றை யியக்கும் உயிரே போல 55 நெற்றியங் கண்ணன் நிலவுத லானும் இறைவன் ஐந்தொழில் நிறையுயிர் மாட்டுப் பொருந்தச் செய்யும் அருந்திற லானும் ஐந்தொழிற் பட்ட ஆருயிர்த் தொகைகட் கந்தழிப் பொருத்தும் மைந்தி னானும் 60 ஒற்றியூ ரெனும்பெயர் முற்றத் தோன்றும் பெருநன் மாநகர் திருவிற் பொலிந்து, குவளை பூத்த பவளத் தாமரை செவிரமும் பணிலமும் புடைபட இடையிற் றோன்றி யன்ன காண்டகு திருமுகங் 65 கருநெறிக் கூந்தலும் பெருகிய கழுத்தும் மேலுங் கீழுந் தோன்ற வாலிய நறுமுத் தன்ன முறுவல் செறிதொறும் மின்னென மிளிரும் பொன்மா மேனி மகளிரொடு விளங்குந் தகைசால் தோற்றத்து 70 வடிவே லேந்திக் கடிமயி லூர்ந்தென் உள்ளத் தாமரை விள்ளற்வீற் றிருந்தனை, பகலொளி விளக்கும் பல்கதிர் ஞாயிறு மலைநிவந் தன்ன நிலையுயர் மாடத்துங் குடிகள் தங்காப் பழியொடும் இடிந்து 75 வெருப்பேய் சேர எருக்கு முளைத்துப் பாழ்படு பொல்லா வில்லினும் போழ்கதிர் விரித்துப் பொலிவதா லெனவே. (13) 14. தலைமகள் பிரிவாற்றாது புலம்பல் பொலியும் மதியும் புலிபோலத் தென்றல் நலியும் நமனானான் நல்வேள் - ஒலிதமிழ் ஓவா திசைக்குந் திருவொற்றி யொள்வேலான் மேவான் செயலறியேன் மேல் (14) 15. அருமைசெய்து அயர்ப்பத் தலைவி கூறல் மேலான முத்தே திருவொற்றி மேவிய வேலவனே கோலா கலங்செய்து கூடாம லேகல் குறைவுகண்டாய் நூலா வுடைகட்டி யேலாத குன்றினும் நோன்மைமிகுங் கோலா வுயர்குணக் குன்றினுஞ் சென்ற குறிப்பறிந்தே. (15) 16. அருணிலையுரைத்தல் அறிவும் அவாவும் ஒருவழிச் சென்றாங் கொருதிற னின்றிப் பலதிறப் படுமே; குய்கமழ் கறியும் நெய்கமழ் துவையும் பொன்னிறப் புழுக்கலுங் கன்னல்பெய் பாலுந் 5 தன்னிகர் குழம்பும் பண்ணிய வகையும் மிக்கெழு சுவையின் முக்கனி வகையுங் கோழரை வாழைக் குருத்தகம் விரித்துப் பால்கெழு தன்மையிற் பலவே றமைத்து, முரவை போகிய முழுவெள் ளரிசி 10 கைவன் மடையன் அடுதலின் நெய்கனிந்து விரலென நிமிர்ந்த அவையன் மென்பதம் முல்லை முகையென மெல்லிதிற் குவைஇப், புழுக்கலும பிறவும் அளாஅய் விழுத்தக நெய்யுடன் பெய்து மெய்ம்மறந் துண்டாங் 15 கானா துறைவோர் அளவில ரன்றே; முகிறொடு குடுமியும் முழைகெழு வாயும் அருவி யென்னும் அறுவையும் உடீஇ, யந்திக் காலத்து ஞாயிறொடு பொருது செவ்வா னென்னும் மெய்கால் குருதியுங் 20 கணைதொடு புண்ணின் முகுளித் தன்ன பவளமுஞ் சிதர்ந்த திவளொளி கெழூஉம் அரக்கன் அன்ன பொருப்பின் காட்சியும், மடமான் பிணைகள் கன்றொடு குழீஇக் கான்யாற் றொண்புனல் நிரைநிரை யருந்தக் 25 கானங் கோழி துணைகூப் பெயர்ந்து ஞாயிறு தோன்றுங் காலை யறிவிப்ப நிறங்கெழு தாராக் குறுங்கயம் மருங்கிற் குறுகுறு நடந்து நீந்த வெறிபடு தளவம் அரும்பி எயிறென விளங்கக் 30 கொன்றை பொன்வீ யுகுப்ப மன்றல் காவதங் கமழுங் காடுகெழு காட்சியுங், கொழுவளை யீன்ற செழுநீர் முத்தஞ் செந்தா மரையின் மிளிர்வன மங்கையர் திருமுகங் குறுவியர் பொடித்தன் மானக் 35 குடம்புரை செருத்தற் றடங்கண் மேதி இல்லுறை குழக்கன் றுள்ளுதோ றொழுகுந் தீம்பான் மாந்திப் பருவரால் உகள மலிபூம் பொய்கை மருதக் காட்சியுந்; தேற்றாப் புலவர் நூற்றிறங் கடுப்ப 40 எழுவாய் ஓங்கி முறைமுறை தேய்ந்து கரைசார்ந் தவியுந் திரையே, கரைதொடுத்து மறுகரை காணா தகன்றுநனி யாழ்ந்து நல்லிசைப் புலவர் செய்யுள் போலப் பல்பொருள் செறித்த கடலே, பொல்லா 45 ஒழுக்கந் தலைவந்த பழிப்புடை யாளரும் விழுக்குண மேவுவ ரென்பது நலத்தக முள்ளுடைக் குழையிடைக் கொள்ளைமணம் அவிழ்த்து வாலிதின் விரிந்த கைதையங் கழியே, மின்சிதர்ந் தன்ன பொன்சிதர் பரப்பி 50 எரிகிளர்ந் தன்ன விரிபூ ஞாழற் பொழிலே, யெனுமிவை யெழில்பெறத் தோன்றும் நெய்தற் காட்சியுங் கண்டு மெய்யென அறிவு மாழாந்து வாழ்வோரும் பலரே; காண்டகு சிறப்பிற் பாண்டின் மேலால் 55 ஐவகை யமளியுங் கூறுபட வமைத்துக் கால்களைந் தாய்ந்த வான்முகை முல்லை கடிமணங் கமழத் தூஉய் மடிபடு நுரைமுகந் தன்ன தூவெள் ளறுவை செறிவுற விரித்து நறுங்குற டுரைத்த 60 கேழ்கிளர் தேய்வையிற் கோழகில் நெய்யும் புழுகும் மான்மதமுஞ் செழுங்கருப் புரமுங் கொழும்பனி நீரும் வழுவறக் கூட்டி வேரியின் அமைத்த சிவிறியிற் றோய்த்து நிரைநிரை மங்கையர் முறைமுறை யிரட்ட 65 உறங்கும் வாழ்க்கையிற் பிறங்குவோர் பலரே; தந்நலம் பகரும் பொன்விலை மாதர் திவவியாழ் எழீஇ நவைநான் ககற்றி மிடற்றெழு மோசையும் நரம்பிமி ரொலியும் ஒருநெறிச் சென்றாங் கொருநிலை நிகழப் 70 புள்ளினந் துணைமறந் தொதுங்க வள்ளிய குழைமுகந் தோன்றி வறுமரம் உயிர்ப்ப விழுமிதின் எழூஉம் மிடற்றின் பாடலுங் கொன்றையங் குழலுங் குன்றமர் வேயுந் துருவி யூதும் பொருவி லோசையுஞ் 75 செவிவாய் மாந்திச் சிறந்தோரும் பலரே; பித்திகைக் கொழுநனை முத்தார் முல்லை நறுவிரைத் தாமரை துவர்க்கால் வகுளஞ் சண்பகங் குவளை பொன்மடற் றாழை கொழுந்தும் மருவுஞ் செழுந்தண் வேரியுந் 80 தொடலை யாக்கியும் விடுபூச் சிதறியுஞ் செண்டும் பந்துங் கொண்டு விளையாடியும் நறும்பொருள் விராஅய் மெய்யிற் றிமிர்ந்தும் வறிதின் வாழும் மக்களும் பலரே; ஐம்பொறி வழிச்சென் றிம்பரின் நுகரும் 85 ஐவகைச் சுவையும் ஒருகாற் காட்டும் மைவிழி மடவார் பொய்படு மின்பத்து மெய்படத் துளங்கும் விழலரும் பலரே, தாமுந் துவ்வாது பிறர்க்கும் ஈயாது வெருவரு பேயென உரவோர் இகழ 90 ஆனா தரும்பொருள் இவறிக் கூட்டி மாணா வாழ்க்கை மக்களுங் கள்வருங் கவர்ந்து செல்ல நிமிர்ந்துவான் நோக்கிச் செய்வ தறியாக் கையரும் பலரே; இவ்வா றொழிந்தனர் போகச் செவ்விய 95 மெய்ப்பொருள் உணர்துமென் றொப்புடன் புகுந்து கடவுட் டன்மையும் உயிரின் றன்மையும் புடைபட வொற்றி வரம்பளந் துணராது மயங்கக் கொண்டு மக்களைத் தலைவரென் றொக்கக் கூறி யுழிதரு வோரும், 100 அறிவாய் அருளாய்ச் செறியும் ஒருபொருள் சிறுமையும் மறுமையும் எய்தி வெறுவிதின் உயிரும் உலகமும் ஆகும் என்போருங், கட்புலன் ஆகுவ கருத்தின் றோற்றமாய் உட்புகுந் துணர்வோர்க்குப் பொய்ப்பொரு ளாகலிற் 105 கோயி லென்னே! மேவி யாங்குறையுந் தூய பேரொளிப் பிழம்பென லென்னே! வஞ்ச மாந்தர்பிறர் நெஞ்சம் பிணிக்கக் கல்லையும் மண்ணையும் வல்லிதிற் பொருத்திச் சூழ்ச்சியின் அமைத்த கீழ்த்திற மன்றோ 110 என்றுரை கூறுவோரும் ஆகப் பொன்றிய மாக்கண் மணலினும் பலரே; ஆங்ஙனம் ஒழிந்த அளவின் மாந்தருள் யானும் ஒருவ னாக நோனாது வேறு பிரித்தெடுத்துக் கூறுபடு மதியின் 115 மறைபுகழ் சைவம் நிறைவுற விரித்துத் தெளிவார் அளவையின் விளக்கி மலைவுதரும் மாறுபொரு தோட்டி வீறுறத் திகழுஞ் சோம சுந்தர குருவனொடு கூட்டி, இன்பம் என்ப தைம்பொறி யானுந் 120 துன்பமொடு முரணித் துய்ப்பதோ வன்றே, முகிழ்நகை மாதர் குழுவொடு கெழீஇ இதழ்சுவைத் திருக்குந் திறத்ததோ வன்றே, ஒன்றினும் பற்றாது தன்றிறத் தெழூஉங் குன்றலில் பொருளோ வன்றே, தொண்டரெனும் 125 வண்டினங் குழுமிக் கொண்டி கொள்ளும்நின் திருவடித் தாமரை யதுவென மொழிவித் தென்னையும் உய்யக் கொண்டு, பின்னும் மறைநவில் அந்தணர் வைகறை யுணர்ந்து வாவி குடைந்தார்க்குந் தீவிய வோதையுந், 130 தாமரைப் பள்ளித் துயிலுணர் புள்ளினம் பார்ப்பொடு கெழீஇச் சிலம்பும் ஓசையுஞ், சிறுநுதற் கருங்கட் குறுந்தொடி மகளிர் குங்குமச் சாந்துங் கொங்குலாங் கூந்தலும் பால்கெழு தன்மையிற் பலவே றழீஇ 135 நீனிற முகிலின் மறையும் மின்போல் நீர்மூழ் காடும் பேர்விலார்ப் பொலியுந், திருவின் செல்வி யருமையிற் பெற்ற குறுநடைச் சிறுவர் சிறுதே ருருட்டித் திறல்கெழு மறவர் மற்பயில் கழகத்துக் 140 கைபுடைத் தார்க்கும் இசையினுஞ் சிறந்து விட்டுவிட் டிசைக்கும் மட்டில் கம்பலையும் ஓவாது கறங்கும் ஒற்றி மாநகர் தாவா இளமை தலைத்தலை சிறப்பப் பன்னிரு விழியெனுங் கண்ணகன் சுனையில் 145 அருளெனும் அருவி விரிவுறப் பெருகி முழவுத் தோளெனுங் கொழுவிய குன்றிற் பன்முகம் பரந்து தண்ணெனச் செல்ல, நித்திலம் பெய்த விழுத்துவர்ச் செப்பின் மூய்திறந் தன்ன வாய்நகை தோன்ற, 150 வரைவிலங்கி யோடும் மின்னே போல அரம்பொரு வைவேல் உரங்கிடந் தொளிரத், திருமான் முகத்தின் இருவிழி யென்ன மஞ்ஞையிற் கிடந்த விருதாள் மலர, அஞ்ஞையர் இருவரும் இருமருங் கிருப்ப, 155 அமைத்த கையும் அருடரு கையும் இமைப்ப தில்லாத் தேவரும் பிறருங் கண்டுகண் டுவப்பக் கவின் றுநனி விளங்குங் காண்டகு கோலந் தழீஇ மாண்டக, என் கண்ணெதிர் பொலிந்தநின் இன்னருள் நினைப்பின் 160 வயாவுறு நோயும் பாரா தீன்ற புதல்வோற் கண்டு களிக்குஞ் சிதைவில் தாயின் அருளினும் பெரிதே. (16) 17. நெஞ்சறிவுறுத்தல் தேவா திருவொற்றிச் சேவார் புதல்வஎன நாவார வாழ்த்தி நடம்புரிவாய்! - ஆவா வியந்து பிழைசெய்யும் நன்னெஞ்சே வேலோன் நயந்துன் எதிர்தோன்று நாள். (17) 18. தன்னுட் கையா றெய்திடு கிளவி நாளான் மலர்ந்து மனக்கினி யான்சென்ற நாளறிந்து வாளார் மடலின் அளியேம் உயிர்போழ் வகையுமன்றிக் கோளான சொல்லிப் புணர்ந்தார் கரியுங் குறிப்பறியாய் கேளான மெய்யும் முடங்குமொற் றிக்கழிக் கேதகையே 19. அருணிலை பெறுத லரிதென மொழிதல் கேதகை பழித்த மாதொரு கூறற்கு நுதல்கிழித் திமைக்குங் கதங்கெழு விழியிற் பொறியெனத் தோன்றி வெறிகமழ் சுனையில் அறுவர் ஊட்டிய நறும்பான் மாந்தி 5 அறுவே றுருவின் விளையாட் டயர்ந்தாங் கம்மையும் அப்பனும் அணையச் செம்மையின் உலகு புரந்தருளும் உமைதிரு மடியில் அறுவேர் உருவும் ஒருவடி வாகி விளையாட் டமர்ந்த இளையோய்! உழைப்பிரிந்து 10 நற்றவர் ஓங்கும் ஒற்றி மாநகர் வெற்றி வைவேல் ஒருதிறம் பொலியப் பளிக்கறைப் புகுந்த ஒளிப்பரு மதியின் முறைமுறை மிளிர்நது நிறைகவின் பொழியூந் திருமுகச் செல்வியர் இருபுறம் விளங்க 15 உலகெலாம் விழுங்கும் அலகிலா வன்றிறற் களிக்கரு மஞ்ஞையின் நலப்பட அமர்ந்தென் விழியெதிர் தோன்றிய அழியாப் பெரியோய்! தீயிடை நின்றும், நீரிடை மூழ்கியும், மரமே லிவர்ந்து தலைகீழ்த் தொங்கியும், 20 அறுவகை யிருக்கையில் நெறிபட இருந்தும் புறம்படுத் திழுத்தாங் ககம்பட நிறைத்துத் தெளிநிலை முகிழ்க்கும் வளிநிலை யுழன்றுந், தன்றொழில் தபுத்துத் தனிமுதற் பொருளின் அருளெனும் வெள்ளம் வரம்பிற மிகுந்து 25 நிலையும் இடனென உலகெலாம் நோக்கியும், ஐம்பெரும் பூதமும் ஐம்புறம் நிறீஇ ஐவகைத் தேவும் ஆங்காங் கமைத்துப் பொய்ம்முறை யின்றி மெய்ம்முறை பரவியுங், கருவியும் புலனும் புரிவின்றி நிகழ 30 ஒருமுதற் பொருளொடும் அறிவினைக் கடவியும், இருவகை நிலையும் ஒருமுறை யிறந்து மேனிலை நின்று வான்பொரு ளுணர்ந்தும் ஊழி யூழியும் ஓவின்றி நோற்பப், போழ்மதிச் சடையோன் போதா னாகக், 35 கொழுங்குறை தன்மெயிற் பலமுறை தடிந்தும் உறுப்பினை யீர்ந்து நெறிப்பட வீசியும், பச்சிளங் குருதியை நச்சி யுகுத்தும், உயிர்ப்பலி வேள்வியிற் கடன்பல கழிப்பி யரிதின் முயன்ற பின்றையும் புரிசடைப் 40 பெரியோன் போந்தில னாக, எரிகிளர் வேள்வியாற்றும் ஆழ்குழியின் வைந்நுனைய எழுநிறீஇ முழுவுடம்பும் பழுதுபடப் போழ்ந்து படுத்துப் பொன்றத், தம்பியர் 45 பாய்வதற் கூக்கிய காலை, வேய்புரை பணைத்தோட் பாவையுந் தானுமாங் கெழுந்து வானவர் தலைவன் சீரிதின் அருளிய வரம்பெறு பெருமையின் உரம்பெரி தெய்திநின் சீறடித் தாமரை வேறின்றி வைகும் 50 அழியாப் பேற்றின் வழிவழிச் சிறந்த சூர்முதல் போலப் பேரன் பில்லேன்; ஆலவாய் அமர்ந்த அழனிறக் கடவுள் செந்தமிழ் வழக்கு முந்துநின் றிசைப்பக் கடாவிடை நிகழ்த்துந் தடாப்பெரும் பேறும், 55 இறைவன் கண்ட பொருள்வரம் பறிந்து சொன்னெறி மாட்சியும் பொருணெறி மாட்சியும் அளவையின் விளைவுந் தெளிவுற விரித்துச் சுவைபெற வுரைத்த நவையில் புலமையும், மறைப்பொருட் குறிப்பு நெறிப்பட ஆய்ந்து 60 சிவனையே முதலெனச் சிவணிய காட்சியுஞ், சீரிதின் இயைந்த கீரன் போலச், சொற்றொறுஞ் சுரக்கும், அற்றமில் இன்பமும் பட்டாங்கு கிளக்கும் முட்டறு சிறப்புங் கன்னெஞ்சு நெகிழ்த்தும் அன்புறு மொழியும் 65 ஒருவழிச் சிறப்ப வருமுறை கொளீஇ யாற்றுப் படைசொலும் ஆற்றலு மில்லேன்; ஆங்கதன் கருவாய் உள்ளுறை நுண்பொருள் விழுமிதின் எடுத்து வழுவற அமைத்துத் தொண்ட ராரத் தண்டாது கொடுத்து, நின் 70 றிருவடிக் கிடந்த பெருகிய அன்பினுந் தமிழ்வரம் புணர்ந்த கமழுறும் அறிவினும் உரைத்திறம் நிலையிடும் வரைப்படா விறலினுந் தானே தனக்கு நிகரென விளங்கிய நச்சினார்க் கினியனும் அல்லேன்; நிச்சலும் 75 வருக்கைச் சுளையும் பொருக்கரை மாவுங் கொழுங்கனி வாழையுஞ் செழுஞ்சுவைக் கன்னலும் ஒருங்குதலை மயங்கிய அரும்பெருங் கலவையின் அருஞ்சொல் வழக்கமுந் திருந்திய நடையும் வண்ண வேற்றுமையுந் தண்ணெனும் ஒழுக்கமும் 80 ஒன்று நிரம்பிய குன்றாத் திருப்புகழ் வேறுவே றியம்பிய வீறுறு தவத்தின் அருண கிரியெனும் பெரியனும் அல்லேன்; நூலிடை வைத்த வாலிய பொருளினும் உரையிடை விரிந்த புரையமை தெளிவினுங் 85 கேட்போர் உணரப் பாற்பட வகுத்து நின்புகழ் அனைத்துந் தன்பெரு மதியின் உளங்கொள விளக்கும் வளங்கெழு புலமை நாராயணன் எனுங் குருவனு மல்லேன்; களவியல் தனக்குப் பலபட வியம்பிப் 90 பளகறு நன்பொருள் தெளியா துழன்ற புலவோர் களிப்ப நலமுறத் தோன்றி மெய்ப்பொருள் காட்டித் தமிழ்வழிப் படுத்தும், புல்லமண் மிகுந்து நல்லுணர் வழிந்து பெரும்பெயர் வழுதியும் அருந்தமிழ்க் கூடலும் 95 உய்வழி காணா துழிதரு காலை ஒய்யெனப் போந்து மெய்ந்நெறி காட்டியுந், தண்அருள் புரிந்த நின்னே போலச், செந்தமிழ் வழக்கு முந்துற விரித்து முடிநிலைச் சைவம் விடிஞாயிறெனப் 100 பைங்கதிர் விரித்துக் கங்குலிற் கூம்பிய விரையவிழ் தாமரை புரையுர வோருளம் புரிஞெகிழ்ந் தலரத் தருமியல் சிறப்ப உரையினுங் கருத்தினும் வரையமை நோக்கினும் பொருந்தக் காட்டி வருந்திறன் மிகுத்து 105 மலைவுபடு முள்ளத் தறிவொடு கூடாச் சிறுபுன் மாந்தர் குறுமொழி களைந்து நின்புகழ் விரிக்கும் அன்பிற் சிறந்த சோம சுந்தர குருவனு மல்லேன்; பொருள்பெரி தீட்டப் பெருகுறும் அவாவினும் 110 ஈட்டிய ஒண்பொருள் இவறிக் கூட்டி மக்களும் மனைவியுந் துய்க்க நல்கி நின்கழல் வணங்கா இன்னா மடியினும் அரிய நாட்களை வறிதே போக்கி அறந்திறம் புளியிற் சிறந்தனென் மன்னே; 115 இனைய தீயென்நின் நினைவருந் திருவடி விழிநீர் உறைப்ப முழுமெயும் பனிப்ப நிரைநிரை வாரா துரைநனி குழறப் பொறிவழி அறிவுஞ் செறியும் உட்கருவியும் பலவழிக் கவரா தொருவழி நிகழ 120 அன்புரு வாகுநின் தொண்டர் போல நீங்கா அன்பின் நிலைநின் றியாங்ஙனம் பெறுவெனோ பாங்குபட மொழிமோ! (19) 20. தோழி கிள்ளையைத் தூதுவேண்டல் மொழியுங் குழற முழுவுடம்பும் பைத்து விழியுந் துயில்கூடா வெய்யோள் - பழியைத் திருவொற்றிச் சேயோற் குரையாய்! கிளியே யுருவுன்னை யொப்ப துணர்ந்து. (20) 21. அருணிலையுணர்த்தல் உணர்ந்தார் அறிவினுந் தோன்றா தொளிக்கும் ஒருமுருகன் இணர்ந்தார் சுரிகுழன் மங்கைய ரோடென் இருவிழியிற் புணர்ந்தா ரெயிலொற்றி மேவிய வாறு புனிறுசெல்லா வணந்தாழ் குழவியைத் தாய்சென்று புல்லிய வண்மையன்றே 22. எழினலங் கூறி நெஞ்சறிவுறுத்தல் வண்புனல் நிலையில் தண்ணறல் போலவுந் தாமரை மொய்த்த வண்டினம் போலவும் பளிங்கிற் றோய்ந்த நீனிறம் போலவுந் திருமுக மருங்கின் வருமுறை துணர்ந்தாங் 5 கிடையிடை சுரிந்து நீண்டு கடைகுழன்று கண்ணொளி கதுவுங் குஞ்சியை யன்னை இருபாற் கூறிட் டொருபாற் சூழியும், மற் றொருபாற் பனிச்சையுந் திருவதின் அமைப்ப நறுங்கதுப் பொளிரும் பெருஞ்சிறப் பானுஞ், 10 செம்மணிப் பலகையின் அம்மணி குயிற்றி வரம்புற விடுத்த வண்ணம் போலப் புருவக்கொடி படர்ந்த விரிநுத லானும், அந்நுதல் கிளர்ந்த பொன்போற் செவ்விழி உத்தி என்னுந் துத்திப் பையர 15 முடிமேன் மணியெனக் குடிகொள லானும், வெண்பனித் திரளைக் கண்ணுறப் போழ்ந்து துவர்நிறம் ஊட்டிச் சிவணுற அமைத்தாங் கிருபுறங் கதுப்பு மருவுத லானுங், குழையொடு கெழுமுந் தழைசெவி யிரண்டும் 20 ஓவெனும் வடிவொடு மேவுத லானும் நடுவிற் குழிந்து வட்டித் தமைந்த படுபொற் கிண்ணம் முகங்கவிழ்த் தன்ன மோவாய் நிவந்த முறைமை யானுங், கிளையரி நாணற் கிழங்கு மணற்கீன்ற 25 முளையும் முருந்தும் விளைநீர் முத்தமுங் கூர்ந்து நிரைந்து வல்லென ஒளிவிரிந் தெழுந்தொளி ரெயிற்றொடு பொருந்துத லானுங், கொவ்வைக் கனியுங் கொழுவிய பவழமுஞ் செவ்விய அல்லென இலவிதழ் புரையுஞ் 30 செந்நீர் இதழொடு மன்னுத லானும், முத்தக் கோவை முறைமுறை வைத்த நத்துவர்ச் செப்பு நன்கனந் திறந்தென அரக்குரு வூட்டிய ஆம்பல் நறுமுகை தளைநெகிழ்ந் தலர்ந்த தன்மைத் தென்ன 35 முள்ளெயி றிலங்க நகுதொறும் நகுதொறுஞ் செவ்வாய் தோன்றும் அவ்வாற் றானும், எழுமிடங் குழிந்து விழுமிதின் ஒழுகித் தளவரும் பென்ன வளங்கனிந் திலங்கி முன்னெழு மூக்கின் றன்மை யானும், 40 ஓரருட் கடலிங் கீருரு வாகிக் கரைபுணர்ந்து கிடந்த முறைமை போலப் புருவக்கொடி கடவாப் பெருவிழி யானும், விரையவிழ் தாமரை நறையுகுத் தென்னக் கேட்டொறும் இனிக்கும் பாட்டொடு தழீஇச் 45 செழுவாய் மலர்ந்த மொழியி னானும், வலம்புரி யன்ன வானறுங் கழுத்தொடும் ஏற்றினத் தெருத்தின் முரிப்பெடுத் தன்ன குவவிப் புடைத்த பிடரி னானும், முழவெனச் சரிந்துவல் உலமெனத் திரண்டு 50 வரையென நிமிர்ந்துபின் எழுவெனத் திணிந்து மலையொடு பொருத மால்களி றென்று புலவோர் கூறும் பொருண்மொழி காட்ட யானை யென்னும் பானகு திருமொழி கொங்கை மருப்பின் நுங்கக் குத்தி 55 ஒருபாற் பெரும்போர் விளைப்ப, ஒருபால் வள்ளி யென்னுங் கள்ளவிழ் குழலாள் தடமுலை வேதிற் படுபுண் ஒற்ற உளங்கொண் டெழீஇ யுறுமிடன் படாஅ தொருபுறம் ஒற்ற வருமுறை நோக்கிக் 60 கொழுநனை பிணைத்த மராநறுந் தொடலை முறுவலித் தென்ன முறுக்குடைந் தசைய வாள்வலி நிலையுந் தோளி னானுங் கைவல் வேகடி ஐதுறக் கடைந்து வழுவழுப் பாக்கிய கொழுந்துகிர்ப் பலகை 65 புணர்ந்தொருங் கிரண்டு கிடந்தது போலக் கண்ணகன் றோங்கிய கவின்கெழு மார்பத் தியானைமருப் புழுத சுவடு போலவும் வரையொடு படர்ந்த வல்லி போலவும் வரிமூன் றொழுகிய திருவி னானும், 70 மழையும் மரனுங் குழைந்தொருங் கோட விழுமிய பொருள்பல வேண்டிநர்க் குதவுந் தாடொடு தடக்கையிற் றாயுவந் தீத்த வாலிதின் விளங்கும் வேலி னானும், பானுரை முகந்த பரிசொடு பொரூஉந் 75 தூவெள் ளறுவை யசைஇ மூவகை மடியுடன் விளங்கி வடிவுடன் சரிந்து நடத்தொறுங் குலுங்கும் வயிற்றி னானும், எழுமிடந் தசைந்துபின் னொழுகுதொறும் மெலிந்து மழைக்கடக் களிற்றின் புழைக்கை யொத்துங் 80 கொழுங்கனி வாழையின் கோழரை யேய்ப்ப ஊறும் ஒளியும் வீறுறத் திகழும் நிறங்கெழு மரபிற் குறங்கி னானும், எப்பாற் பொருளுந் துப்புற வைகும் நிலைக்கள மென்பது பெயரிற் காட்டி 85 முளையிள ஞாயிற்றிற் றளைஞெகிழ்ந்து விரிந்த எரியகை தாமரை போல விரிபுகழ்த் தொண்டர்க ளெதிரிற் கண்டிட மலர்ந்து நிகரில் இன்ப நறைமுறை யொழுக்கிப் பெருமையொடு வைகுந் திருவடி யானும், 90 பெருமணல் எக்கர்ச் சிறுகுடி வாழ்க்கைக் குறுமொழி மாக்கள் உறுமீன் படுத்தும் ஆழ்திரை மூழ்கி வீழ்மணி யெடுத்துங் கருங்கட லூர்ந்த வெள்வளை வாரியும் நிரைநிரை கரையிற் குவையினர் செல்ல 95 மறிகய லுகளுந் திருமுக நுளைச்சியர், கொடிச்சி தந்த கடுப்புடை நறவுங் குடத்தி கொணர்ந்த பலப்படு முதிரையும் உழத்தி யெடுத்த விழுத்தகு பழனும் பெறுவிலை யாகச் சிறுமீ னொடுத்தும், 100 இடையிடை முத்தம் புடைபுடை யளந்துங், கோடு கொண்டு பீடுற மாறியும், ஒருசார் பேரொலி நிகழ்த்த, ஒருசார் பனிமலை நிவந்த பண்பு போலச் சேண்டொட வோங்கிய வுப்புக் குன்றந் 105 தலையழித் துமணர் பொதியுறச் சேர்த்திய ஒழுகை யுருளை முழுமணற் புதைதலிற் பிடர்கொடுத் தெழுப்பிக் கடும்பக டுரப்புந் தாளாண் மாக்கள் தலைப்படும் உஞற்றும், புலவுக்கழி முளைத்த துவரிதழ்த் தாமரை 110 புன்னை நுண்டாது பொறிப்பத் துன்னிய உருவொடு விளங்குந் தோற்றம் எரியிடை யுருகிய பசும்பொன் கவிழ்ப்ப ஓடிய திருவொடும் பொலியுஞ் செவ்வியும் மருவிய நெய்தலங் கானல் ஐதுறக் கிடந்த 115 ஒற்றிமா நகரிற் கற்றைத் தோகை மயின்மே லிருந்து பயிலுத லானுங், காண்டொறும் இனிக்குங் காட்சியு முடையன் உரைப்பத் தீராச் சிறப்பு முடையன் தம்முயிர்க் கினிய செம்மொழிப் புதல்வரை 120 நோக்க நோக்க மீக்கிளர் காதல் தந்தையர்க் கெழுதல் போலக் கண்டிடும் விழியள வமையாக் கழிபெருங் காதல் எய்தினர்க் குறுக்குஞ் செய்தியு முடையன், உருகெழு தோற்றம் மருவுவ னென்று 125 வெருவர லொழிதியா லின்றே, முருகன் குழவிக் கோலத்தும் விழுமிதி னமர்வன் மடவரன் மகளிர் தடமுலை குழைக்கும் இளமைக் கோலத்தும் வளமையொடு பொலிவன், அதனான் மின்னெனத் தோன்றிக் கொன்னுற மறைந்தும் 130 வாதுவன் நடவாக் கலிமா போலத் தீதுறு நெறியிற் றிறம்படச் சென்றும் பாகடு களிற்றின் பண்பு போல உறுதி கொள்ளாச் சிறுமையின் மிகுந்தும் ஒருவழி நிலையா தோடிப் 135 பலவழிக் கவர்க்குமென் னிலைமையின் மனனே. (22) 23. அருடர வேண்டல் மன்னு மொருயானை யூட மறுயானை தன்னுதவி வள்ளி தடமுலைகள் - துன்னுவிப்ப ஒற்றி நகர்வைகும் வேலாய்! ஒருபெரிதோ பற்றி யெனையாள் பரிசு. (23) 24. தோழி தலைவி குறிப்பறிதல் பரிசு பிறிதொன் றறியேன் பருமுத்தப் பைம்பணைசூழ் விரிபுக ழொற்றி வருவேலர் போலும் விடைக்களிறொன் றரிதிற் பெயர்ந்திங்கு வந்ததுண் டோவென்ப ரங்குசெல்வர் தெரிவிற் பெரியர் செயலோ சிறியரெஞ் சேயிழையே. (24) 25. கழற்றெதிர்மறை இழைநெகிழ் பருவரல் எய்திய மகளிரின் மழைத்தடந் தோள்க ளிளைத்துத் தோன்றப், பாற்கடல் போலத் தூத்தகப் பரந்த நூற்படு கேள்வியுஞ் சீர்ப்படா தொழியச், 5 சிறுநெறிச் செல்லும் அறியா மாந்தரும் நல்வழிச் செல்லத் தெள்ளிதிற் காட்டும் இழுக்கா நடையும் வழுக்கிப் போக, இந்நிலை நீயுந் திரியிற் பின்னொரு பௌவநீர் வெதும்பின் வளாவுநீ ருண்டோ? 10 குன்றுநிலை தவறிப் பந்துபோ லுருளிற் சென்றுவழி யடைக்குங் குன்றியு முண்டோ? கடுங்களிற் றொருத்தல் தொடுமடுத் துண்ணின் முருங்கா தோம்பும் பெருங்கல முண்டோ? என்றுபல கூறி நின்றெனை நெருங்கி 15 நன்மை நாடிய என்னுயிர் நண்பா! மறியிளங் கன்று முறியுணுந் தாயொடு குழைப்புதல் தோறுங் குழீஇ யுகள, வரையாடு வருடை யிடைவாய் தாண்டி யுள்ளஞ் செருக்கித் துள்ளித் திரிதர, 20 நிலந்தொட்டு வீழ்ந்த குலுங்குமயிர்க் கவரி மென்மெல அசைஇ மேதகச் செல்ல, முளவுமா தொலைச்சிய வன்கட் கானவர் ஞெலிகோற் பொத்திய நெருப்பிற் காய்ச்ச, ஓரி பரந்த தேனிறால் எடுமார் 25 கழைக்கண் குறைத்து நலத்தக இயற்றிய மால்புவைத் திடந்தொறுங் குறவ ரேறத், தினைக்குறு மகளிர் சுவைப்பட மிழற்றுங் கிள்ளை யுறங்கும் வள்ளை யொலிப்ப, மருப்பிடைச் சுற்றிய பொருப்புயர் வேழத்துப் 30 புழைக்கை யேய்ப்ப விழுத்தக முதிர்ந்த தாளொடு வளைந்த குரற்றினைப் புனத்துப் படுகிளி யோப்பும் விடுகவண் சுழற்றிக் கோல்வளைக் கொடிச்சி மேலிதண் அமர, இருங்கல் வியலறை வரிப்பத் தாஅய 35 நலமுறு வேங்கை பொலம்வீ யுகுப்பத், தேக்கிலை புய்த்த புன்றலைச் சிறாஅர் மீக்கிளர் கோட்டிற் பரிதியிற் றொடுத்த தேத்தடை பிறைக்கோ டுழுதெனக் கீண்டு மாயோன் மார்பிற் செஞ்சேறு கடுப்பப் 40 பாஅய் இழியும் படுநறவு முகந்து பசுந்தினைப் பிண்டியொ டசும்புற அளாய் நிரைநிரை வைத்து விரைவொடும் ஆரக், கண்களி கொள்ளும் பன்மலை யடுக்கத்து மரவமுங் குரவமும் பொரிகெழு புன்கும் 45 எரிகிளர் செயலையும் விரியிணர் மாவும் பராரைச் சாந்தும் பாவை ஞாழலும் விரிதலை வாழையும் வியன்சினைப் பலவுங் கொன்றையும் புன்னை யுந் துன்றிய நறவமுங் குழைமுகந் தோற்றிக் கொழுநனை யரும்பிப் 50 புரியவிழ் மலரிற் சிறுவடுக் கிளர்ந்து தீவளி யாகித் தீங்கனி தூங்கித் தண்ணிழல் பயந்து கண்கவர் வனப்பின் முகில்கண் ணுறங்கத் தலைமையொடு பொலிமே; ஒருபாற் சுளைநிரை யமைந்த கொழும்பழந் தூக்கிக் 55 குறுமல ரவிழ்ந்த நறுவிரை தெளித்து வீசுகா லசையும் பாசிலை நரந்தமும், நலனுறு மகளி ரிலவிதழ் கதுவிய முறுவ லன்ன சிறுவிதை பெய்த பொலன்குட மெடுத்த உலவை மாதுளையுங், 60 கருமணி புரையும் ஒருகனி நாவலும், உவர்க்கழி மணக்குந் துவர்க்கால் வகுளமும், பொற்றிரள் கடுப்பத் தெற்றென விளங்கும் எழிற்கனி பழுத்த எலுமிச்சம் புதலுங், காவதங் கமழ மேவுவ வன்றே; ஒருபாற் 65 குலிகம் ஊட்டிய தலைமையிற் றிகழ்ந்து நவ்வி நோக்கியர் செவ்வாய் போலக் கொழுங்கனி யுடைய கொவ்வைக் கொடியுங் கற்புடை மகளிர் முற்படச் சூடும் வரிசையின் மிகுந்த பரிசுடை முல்லையுந், 70 தின்பது கல்லாப் புன்றலை மந்தி கறித்துத் துள்ளுங் கறிவளர் கொடியும், அணிற்புறங் கடுக்கும் வரியுடைக் கொடுங்காய் கொள்ளையிற் காய்த்த வெள்ளரிக் கொடியுஞ், சொல்லுயர் மரபின் மெல்லிலைக் கொடியுஞ், 75 சிறுபளிக் குருண்டை செறிவுறுத் தனைய தீங்கனிக் குலைகள் தூங்க வயின்வயின் நந்தாது வளரும் முந்திரிக் கொடியும் இடையிடை தாஅய் மிடையுமால்; ஒருபால் நடுவிற், பாயொளி மதியம் பரிதி வெம்மையின் 80 இளகிப் புனலா யிழிந்தது கடுப்பத் தெளிநீர் வாவியொன் றுளதால்; மற்றது சிறுகால் தோறும் உறுநீ ரொழுக்கி வாலுகம் பரந்த கோலிய பாத்தியிற் பச்சிளம் புல்லை நிச்சலும் வளர்க்கும், அதா அன் 85 றன்னச் சேவ லணிமயிர்ப் பெடையொடும் பொன்னந் தாமரைப் பொலிந்துவீற் றிருப்பவும், நித்திலம் பயந்த நத்து வான்மடுவின், மீனினம் வளைஇய நாண்மதி போலப் பால்கெழு மரபிற் பரந்து செல்லவுங், 90 கொழுங்கயன் மாதர் விழியென மிளிரவுங், கருவெரிந் உடைய பருவரா லுகளவும், முற்றா மஞ்சட் சிறுபுறங் கடுக்கும் இறவு கரைமருங்கிற் சுரிந்து துள்ளவுஞ், சிறுவளி எடுப்பச் சிறுதிரை யெழீஇ 95 முறைமுறை யுராஅய்க் கரையினைச் சாரவுஞ், செழுநீர்க் குவளையுங் கழுநீர்ப் போதும் முழுநெறி ஆம்பலுங் கழியவுங் குழுமிக் காண்போர்ப் பிணிக்கும் மாண்பின தன்றே; ஆங்குப் பொதியச் சாந்தந் ததைய அசைஇ 100 அரும்பற விரிந்த நறும்பூ அளைஇ விரையுந் தாதும் நிறைய முகந்து தலைத்தலை வீசி நலத்தக உலாஅந் தென்றலும் என்றும் ஓவாது, அத அன்று குன்றிக் கண்ண குயில்கள் எங்குந் 105 துன்றிய மகிழ்வின் நன்றுகூ வும்மே, ஆடுவாற் சிரல்கள் நாடொறுங் கூடி யோடுமீ னருந்தி வீடுறா வன்றே, துகிர்கோத் தன்ன உகிருடைச் சிறுகாற் புறமரப் பொதும்பின் இறைகூ ரும்மே, 110 தூங்கணங் குரீஇப் பாங்குபடத் தெற்றிய அருந்தொழிற் குடம்பையிற் பொருந்து மன்றே, பைஞ்சிறைக் கிள்ளை ஒருகால் தூக்கிப் புன்சிறு கிளையிற் கண்டுயில் கொளுமே, அறுவைமடித் தன்ன பறைகெழு நாரை 115 சிறுகால் தோறும் வருமீன் நோக்கித் தொகுதி யாக மிகுதியொடு வதிமே, வண்டுந் தேனும் வரிக் கடைப் பிரசமும் இம்மென முரன்றுநன்மலர் தோறும், அளிநற மாந்திக் களிகூ ரும்மே, 120 பூவாக் கண்ண தோகை விரித்து முளையிள ஞாயிற் றிளவெயி லெறிப்பப் பீடுறு மஞ்ஞை யாடுறு மன்றே, இன்னுங் கூறல் வேண்டிற் பின்னுமென் சொல்லள வமையா மல்லலம் பொதும்பர்ப் 125 பல்பெருஞ் சிறப்புங் கண்டிலை மன்னோ! அன்றியாங் கனிச்சமேற் படினுந் தனித்துயர் உழக்குந் தழைமலர்ச் சீறடி குழைபட நடந்து பொழிலிடம் புகுந்து பூந்தட மருங்கின் விழைதக நின்ற பழுதில் பாவையை, 130 என்னுளம் என்னுந் தன்னமர் கிழியில் வழுவின் றெழுதிய எழிலோ வியத்தை, யமிழ்துபொதி துவர்வாய்க் கிளவிசில மிழற்றும் மாநிறங் கொண்ட தூநிறக் கிளியைக், காடுறை வாழ்க்கைத் தன்னினம் பிரிந்து 135 நாடுறை வாழ்க்கை நன்கனம் மருவிய குடமாண் கொங்கை மடமான் பிணையைக், கிளிச்சிறை யென்னும் பழிப்பறு பசும்பொன் கரைத்தீண் டெழுதிய தரைக்கிளர் வல்லியைக், காமக் கடும்பசி நாமுறக் களையும் 140 பெறுதற் கரிய உறுதுணை மருந்தைக், காண்டல் செல்லா அருவப் பொருளெனப் பூண்டோர் புகழுரை புரைபட்டு ஒழிய மின்னென மிளிர்ந்தென் கண்ணெதிர் பொலிந்த கரும்பினும் இனிக்குமென் னரும்பெற லுயிரை, 145 என்னுளம் மன்னிய துன்னிருள் நீங்க முற்படக் கொளுவிய பொற்சுடர்க் கொழுந்தைப், புலங்கொளக் காணும் பொறியும் இலையால்! ஆவண ஒலியும் அருங்கட லொலியும் ஒன்றுதலை மயங்கி என்றும் ஓவா 150 ஒற்றிமா நகரிற் றற்றகப் பொலிந்த பசியதோர் மஞ்ஞை மிசையமர் செவ்வேள், தேவரும் மயங்கு மூவா மாயம் பலமுறை இயற்றிய தலைமைதீர் சூரின் பேருரம் வசிந்த கூர்வடி வேலன் 155 நோனா வுள்ளத்து நான்முகன் றெளியத் தலையிற் குட்டிய நலனுறு குமரன், விண்ணவர்க் கரியன், எம்மனோர்க் கெளியன், பிறைமுடி புதல்வன், மறைமுடி முதல்வன், உமைதரு சிறுவன், எமையளி யுறுவன், 160 பன்னிரு கையன், என்னுயிர்க் கையன், திருவடி நினையா அறிவிலர் போல என்னெதிர் தோன்றிப் பன்முறை கழறினை! ஈங்கிது விடுத்துமற் றாங்குச் சென்று துடியிடை ஒருகை ஊன்றி வடிவிழி 165 திசைமுகம் பரப்பி நசைபடப் பார்க்கும் இருங்கண் மான்பிணை காணின் நெருங்கி நின்றிங் குரையலை யினியே. (25) 26. பிரிவாற்றாத தலைவி தோழியொடு கூறல் இனியா ரெனக்கிங் கினியா ரியைந்தார் முனியார் முனிந்து மொழியார் - பனிமொழியாய் புள்ளொன் றிவர்ந்து புகழொற்றித் தந்நகர்க்கு நள்ளிருட்கட் சென்றார் நமர். (26) 27. நெஞ்சறி வுறுத்தல் நமரா யிருந்துபின் ஏதில ராவர் நயமிலருந் தமராவ ரென்னிற் றமர்பிற ரென்று தகவுசொல்லி அமராடி நிற்றல் வறிதுகண் டாயலை யாழியொற்றிக் குமராவென் றோதிக் குடந்தங்கொண் டேத்தக் குறிக்கொணெஞ்சே 28. புலவராற்றுப்படை நெஞ்சுநெக் குடைந்து பஞ்சுகண் அடையா உடும்புரித் தன்ன கடும்பசி மருங்குற் பழுப்புடை தோன்றிச் செழிப்பின்றி வைக வறுமை யுழந்த உறுமனைக் கிழத்தியொடு 5 நாளும் நாளும் வாளாது கலாய்த்து நோனாப் பசியின் ஆனா தழூஉம் புன்றலைக் குழவி தன்றிறம் நோக்கிக் கனவுகாண் பொழுதும் நனவெனத் தோன்றும் அருந்துய ரென்றும் பெருந்துய ருறுப்ப 10 மிடிகெழு வாழ்க்கையிற் குடியா யிருந்து மழுங்கிய வுள்ளத் தொடுங்கிய புலவோய்! இயற்றமிழ் வரம்பு திறப்பட வாய்ந்து புலங்கொள நிரம்பிய நலங்கிளர் அறிவோய்! வழுவொன் றில்லா விழுமிய ஒழுக்கம் 15 உயிரினும் ஓம்புஞ் செயிரறு பெரியோய்! கொழுந்தமிழ் போலக் குளிர்மாண் குணத்தோய்! உழுந்துருள் அளவையிற் செழுந்தமிழ்ப் பாக்கள் நூறுநூ றியற்றுங் கூறுபடு மதியோய்! ஒளிச்செல வதனினும் வளிச்செல வதனினும் 20 நெறிப்படக் கிளக்கும் மிறைக்கவி வல்லோய்! அளவைநூன் மரபிற் பிறழா தியாண்டுங் கொளவுரை நிகழ்த்தும் வளமுறும் உணர்வோய்! பொருளியல் அறிந்து மருளறப் புனைந்து கேட்போர்ப் பிணிக்குங் காட்சிசால் உரவோய்! 25 பண்டைப் பிறவியிற் றண்டா தாற்றும் பெருந்தவ முடையை மன்னே! பொருந்தியின் றீங்கெனைத் தலைப்பட் டனையே; ஓங்கி ஊழி செல்லினும் நீடு வாழ்மதி! கீழ்த்திசை எழீஇ மேற்றிசைப் படருந் 30 தீத்தெறு ஞாயிறு வடதிசைப் புணர்ந்து தென்றிசை நோக்கித் திசைதடு மாறினும், வானக் கடலின் மீனென வயங்கும் உடுநிரை உதிர்ந்து கொடுமை யாயினும், உலவா வாழ்க்கையின் நிலைமதி சிறந்தே! 35 வறுமை களைந்து சிறுமை நீங்கி நன்னிலை பலவும் இன்னே பெறுதி! வரம்பறும் இன்பம் நிரம்பக் கோடி! நின்னுயிர்க் குறுதி நாடித் துன்னிநின்று நிரைநிரை கூறுமென் உரைபிழை யலையே! 40 இன்னுங் கேட்டல் வேண்டின் முன்னுமென் சொல்லள வமைந்து நலம்பல எய்தினர் பல்லோர் பல்லோர் பண்டும் உண்டால்; இனியொன்று கூறுவென் கேண்மதி! பனிகெழு முல்லையங் கொடிக்கு மல்லஞ் செழுந்தேர் 45 அருள்வர ஈத்த பெரியனோ இலனே! விழியாக் கண்ண செழுமயிர்த் தோகைக்கு நறும்படாம் வீசிய உறுவனும் இலனே! பவனமா உலகின் நவையறப் பெற்ற அமிழ்துபொதி நெல்லி ஔவைக் கீத்த 50 சிதையாப் பேற்றின் அதிகனும் இலனே! குறுநடைப் புறவின் றபுதிகண் டஞ்சிக் குருதிகெழு பைந்தடி முறைமுறை தடிந்து கன்னம்புக் கேறிய மன்னனும் இலனே! அருந்தமிழ்ப் புலவோர் பெருந்திறம் உணர்ந்து 55 பொன்னும் மணியுந் தண்ணடை நிலனும் வரையாது வழங்கிய அரசரும் இலரே! மெய்யொடு மிடையாப் பொய்பொருள் ஈட்டித் தாமறி அளவையிற் பிறர்க்கொன் றீயாது தாமே நுகருந் தீயரோ உளரே! 60 தமிழ்வழக் கறியா தமைவில கூறுங் கற்றறி வில்லார் மற்றினிப் பலரே! அதனான் மற்றவர் கடைதொறும் நித்தலும் படர்ந்து வாய்வா ளாது வல்லாங்குப் பாடிக் கொன்னே திரிதல் இன்னாது மன்னோ! 65 கொழுநனை அரும்பிய காஞ்சியங் கோட்டிற் புன்றலைச் சிறுவர் ஏறித் துன்றுகடற் சுரிதிரைப் பாய்ந்து விளையாட் டயரவும், வெண்டோடு விரிந்த கைதையந் தாது மெய்படத் திமிர்ந்த நொய்சிறை வண்டினம் 70 விலையறு முத்தமொடு தலைமயக் குற்றுக் கண்மயக் கேறி எண்ணில கிடப்ப நுளைச்சிறு மகளிர் வளைக்கையின் வாரிக் குடம்புரை பணிலம் நிரம்பப் பெய்து ஆமை யடுப்பில் ஆம்பல் நெருப்பிற் 75 றாமறி திறத்தால் அடுவுழி மயக்கற்றுத் துண்ணெனப் பறந்து விண்ணிடைச் செல்ல வியப்பிடை எழுந்த மயக்கொடு நிற்கவும், வேறுசில சிறுமியர் சாறுகெழு கரும்பின் மீன்சினை அன்ன வெண்மணல் குவைஇத் 80 தேம்பொதி மழலையொடு சிறுபாட்டிசைத்து வயின்வயின் நின்று மகிழ்வொடு குறுவவும் அழகுசால் நெய்தல் நலமுற மருவிய ஒற்றிமா நகரிற் பொற்றொழிற் பொலிந்து விண்டொட நிவந்த இஞ்சி வளைஇய 85 உருகெழு திருநகர் காண்டொறும் பரசி மலைகுயின் றன்ன நிலையுயர் தலைக்கடை அஞ்சுவரு நோக்கமொடு நின்றனென் ஆகச், சுருளிருங் குஞ்சி பொன்ஞாண் பிணித்து நிலன்றொட வீழ்ந்த பொலந்துகில் அசைஇச் 90 சாந்துபுலர் மார்பிற் பூந்தொடை புரள ஏறுசெல் செலவின் வீறுபடப் போந்து யாரையோ புலவோய்! அறுமுகத் தையன் புகுத்துக நின்னையென்று அருளினன், போதி! யென்று இன்னுரை ஒருவன் பகர, அதனெதிர் 95 சொல்லுவது அறியேன் மெல்லெனப் புக்குப் பொன்புனை விளக்கந் தங்கையில் ஏந்தி மின்புனை மகளிர் நிரல்பட நிற்பக், கைவல் பாடினி கறையறப் பெற்ற பயனுடை எழாஅல் நலனுற மரீஇ 100 விரல்நுதி தெறித்த நரப்பிசை நோக்கி மிடற்றொலி பொருத்தி நெறிப்பட மிழற்ற, உருமதிர்ந் தன்ன மண்கனை முழவமும் வரைவேய் துருவிய உரைகெழு குழலும் பேணுறு மரபிற் பாணியும் வல்லோர் 105 பால்கெழு மரபிற் சீரிதின் இயக்கச், செந்நெருப் பார்ந்த பொன்னுரைத் தடவில் அகினெய் பெய்து பலர்நின்று புகைப்ப, வடமலைப் பிறந்த வான்கேழ் வட்டத்துத் தென்மலைப் பிறந்த நறுங்குற டுரைத்து 110 விழுமிய திரட்டிய செழுநறுங் குழம்பில் ஐவகை விரையும் விராஅய் ஒய்யெனத் துருத்திப் பெய்து செறிப்பப் பலர்நின்று தலைப்பெயன் மாரியின் மலைச்சாந் துறைப்ப, வாழையுங் கமுகும் வயின்வயின் நாட்டி 115 ஓவிய நுட்பமும் ஒண்பணி நுட்பமும் மேவிய படாஅம் மேலுறக் கட்டிக் கழங்குபுரை நித்திலம் இலங்கத் தூக்கிக் கேழ்கிளர் பன்மணி காழ்பட நாற்றிப் `பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை 120 பால்வேறு மரபிற் பலபட இயற்றி எலிமயிர்க் கம்பலம் நிலனுற விரித்து விரியிடை எழுப்பிய அரியணை மீது, வெங்கதிர் ஞாயிறு மணிநெடுங் கோட்டில் தங்கி இருந்த தகைமை போலவும் 125 வான்கதிர் மதியம் மீன்குழாஞ் சூழத் தான்பொலிந் தெழுந்த தலைமை போலவும் அறுமுகத் தொருவன் குறுநகை இலங்க நசைகெழு விழிகள் திசைமுகம் பரப்பிக் குன்றாத் திருவொடும் விளங்கக், கண்டுநனி 130 மெய்ந்நிலைத் தொண்டர் தந்நிலை யறியார் விழிநீர் சிந்த மொழியிடை குழற உச்சிக் கூப்பிய கையினர் பழிச்சி அருட்குறிப் புணர்ந்தாங் கமைவொடு நிற்ப, வெருவரு நோக்கமொடு மரம்போ லாகி 135 அருணிலை உணரேன் றெருளின்றி யோடிக் குடந்தங் கொண்டெதிர் நின்றனெ னாக, மடத்தபு சின்மொழி மகிழக் கூறி அன்புறு புலவோய்! அஞ்சல் ஓம்புமதி! காலங் கடந்த கோல வைப்பில் 140 நிகரா இன்பம் மிகைபடை நுகர்ந்து கடைவழி இல்லா நிலையொடு பொலிகுவை! என்றுபல நல்லுரை பின்றையுங் கூறித், தன்மருங் கிருந்தோற் குறிப்ப, அவனுமென் அங்கை பற்றிச் சென்று கொங்குகமழ் 145 நீராடு துறையில் நிறுவிய அளவை, கார்மின் அனைய ஏர்கெழு மகளிர் குறுநகை மிளிரஎன் அருகிற் போந்து, மாசு பொதிந்து பாசி ஆகி ஈரும் பேனுந் தீரா துறையுமென் 150 புன்றலைக் குஞ்சி புணர்ப்பற உளரிப் புழுகுநெய் உரைத்துப் பனிநீ ராட்டி ஈரம் புலர இன்புகை யூட்டித் தாமெனை விடுத்துப் போக, ஏனோன் பிறிதோர் நல்லிடம் புகுத்த ஆண்டைக் 155 கவின்கெழு சிலதர் விரையினர் புகுந்து விண்ணோர் வேந்தன் கல்ணெனப் பொலிந்தஎன் றுன்னற் சிதாஅர் நீக்கி முன்னிய அரவுரி அன்ன ஆடை உடீஇக், கலவைச் சாந்தம் புலர அட்டி, 160 முகைநெகிழ்ந்து விரிந்த தகைசால் நன்மலர் பிணைய லாக்கி மணமுற மிலைச்சித், துளங்கொளிக் கலன்கள் விளங்க அணிந்து, மணித்தவி சிட்டதன் மிசையெனை இரீஇக், குமரி வாழையின் குருத்தகம் விரீஇ 165 அறுசுவைக் கறியும் அடிசிலுந் துவையும் வெறிகமழ் கனியும் நறுநெயும் பாலுந் தீஞ்சுமைத் தயிருந் தேங்கனி பழனுங் கன்னலும் பிறவுந் துன்ன இயற்றிக், கடும்பசி தீரயான் மிசைகொறும் மிசைதொறும் 170 இடும்பை இன்றி இடையிடை இடுபு பாழ்வயி றென்றும் நிரம்பப் பெய்தலிற் பெரும்பொருள் எய்திய வறிஞனின் அல்லாந் திருந்தபின் என்னைப் பொருந்தக் கூஉய் ஏனையோர் இடத்திற் றானெனைச் செலுவ, ஆங்குப் 175 பொழிநீ றிட்டு விழிமணி தாங்கிக் காந்தள் போலச் சேந்தொளிர் அங்கையிற் சிவஞான போதம் நலையறச் சிவணிப் பழுதறு மாணவர் குழுவொடு சூழ, வான்கதிர் மண்டிலம் ஈங்கு வந்ததுபோல் 180 திருவொடு விளங்கும் உருகுபொற் றவிசிற் கன்மனம் உருக்குங் காண்டகு கோலமொடும் என்மனம் உருக்கி எழுந்தினி தருளிய சோம சுந்தர குருவனைக் காணூஉச், செய்குவ தறியேன் மெய்தடு மாறி 185 நிலம்பட வீழ்ந்து கலங்கி நிற்ப, யாரையோ? எங்கள் அறுமுகத் தையன் தந்ததோர் அருளின் வந்தனை போலும்! நல்லை! நல்லை! எல்லையில் காலம் அழியாப் பேற்றின் நிலையினை! விழுமியை! 190 செவ்வியை! பெரியை! ஔவியம் இலையென் றினியன பலவும் பனிவரக் கிளந்துதன் மலர்க்கையென் புன்றலைச் சேர்த்திப் புலப்பட நீயே, உடம்புங் பொறியுங் கடம்படு கருவியும் அறிவும் வளியும் அல்லை; அறிவாய்ச் 195 செறியும் பெற்றியை; மற்றவை அறியாப் பண்பின; அனையை ஆயினும், முன்பே படலம் மூடிய கண்ணின் மிடைபடு மாசு பொதிந்த நீர்மையை; வீசிய ஒளிப்பிழம் பாகி வெளிப்படும் முருகன் 200 ஆனாது சுரந்த அருளினன் ஆகலின், நின்னை மறைத்த துன்னிரு டுரந்து தன்னருட் பொலிவான் நின்னறிவு கொளீஇ அருகா இன்பந் தருதற் பொருட்டு மெய்ந்நிலை இருத்தி மாசு போக்கித் 205 தன்னிலை நினக்குத் தந்தனன் கோடியென் றுறுதி கூறி விடுப்பத், தேறிப் பன்னிரு கையன் முன்னர் எய்தி இமயம் பூத்த பனிகெழு சுனையில் அமையா தாடிய உமைதரு புதல்வோய்! 210 எரிவிழித் திமைக்குந் திருநுதற் றந்தைக் கொருமொழி விரித்த தெருளுறும் உணர்வோய்! வானோர் உறுகண் தீர்ப்ப மேலோர் ஐவடி வேலைக் கையினில் எடுத்தோய்! வேந்தன் தந்த ஏந்தெழிற் செல்விக்கு 215 வரைபுரை மார்பம் வரையாது அளித்தோய்! குன்றவர் வளர்த்த பொன்றிகழ் வள்ளிக்குக் கொழுகொம் பாகிய விழுமிய தோளோய்! அருந்தமிழ்க் கீரனைப் பொருந்திக் காத்தோய்! எம்மனோர்க் கெளிவந்த செம்மை யாள! 220 ஒருவ! சிறுவ! கருமயின் முருக! மறைமுடி தன்னில் நிறைதிரு வுருவினை! கண்ணும் உணர்வுங் கதுவாப் பெற்றியை! ஐம்பெரும் பூதமும் ஆகி நின்றனை! உலகுநின் னுருவே, ஒளிகணின் வழியே, 225 அலகிலாச் சமயத் தவ்வவர் தமக்குப் பலவே றுருவின் நிலவுநை நீயே! ஆறுநின் முகமே, ஐந்துநின் வடிவே, நான்குநின் மொழியே, மூன்றுநின் கண்ணே, இரண்டுநின் றுணையே,ஒன்று நின் வேலே, 230 மருண்ட உணர்வொடு மாட்சிமை எய்தா முருட னேற்குந் திருவருள் தருநையென் றியானறி யளவையின் ஏத்தத் தான்உவந்து குறிப்பரு மின்பத்துப் பிறக்கினன் எனையே, அதுமுதல் இன்பம் ஆர்ந்தங் கிருத்தல் அல்லது 235 துன்ப மென்ப தறியேன், அன்பொடு நீயும் அவன்வயிற் செலினே பாயருள் ஒருவந்தந் தருகுவன் மன்ற; மருவந்து தலைப்பெயன் மாரியின் மலைப்படு நீத்தம் பைந்நிறப் பீலியுஞ் செந்நிறத் துகிரும் 240 வேழ மருப்புங் காழகிற் றுணியும் ஒருங்கு வரன்றி மருங்கு விரைஇக் குண்டுகட் படுகரின் மண்டி நிறைந்தாங்கு, அவலக் கவலையும் உவலைச் சுவையும் முரணுறு அறிவுந் திருகிய செருக்கும் 245 முதலறப் பெயர்த்துச் சிதையா தோடி அன்பின் நிறைந்த இன்ப வெள்ளத்துப் பழியாக் கடும்பொடும் விழுமிதிற் றுவன்றி ஏழுல கழியினும் அழியாது ஊழி யூழியும் வாழ்மதி சிறந்தே! (28) 29. காப்புக் கைம்மிக்குக் காமம் பெருகியுரைத்தல் சிறந்த பொருளொற்றிச் சேவ்வேள் இவரை மறந்திங் குயிர்வாழ மாட்டோம் - பறந்தோடித் திண்டோள் தழுவுவம் இன்றேற் செழுவரையைக் கண்டேறிக் கீழ்விழுவங் காண். (29) 30. அடியுறையிடுதல் காணப் பெறாததொர் காட்சியை யேனுங் கசிந்த அன்பாற் பேணப் பெறுமுக் கருவியிற் காண்பர் பிறங்கு மொற்றி வாணப் பெருந்தகை யென்பது கொண்டு வழங்குமன்பாற் பூணப் பெறுமிந்த மும்மணிக் கோவையுன் பூங்கழற்கே. (30) திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை முற்றும் ஓம் சிவம் திருவொற்றி முருகர் மும்மணிக்கோவை உரை காப்புச் செய்யுள் நீர் வளம் நன்று ஓங்கும் திருவொற்றி நீள் நகரில் - நீர்வளம் பெரிதும் ஓங்குகின்ற திருவொற்றியூ ரென்னும் புகழால்நீண்ட பட்டினத்தில் திருக்கோயில் கொண்ட, சூர்வளம் தின் வேலோற்கு - சூர்மாலினது செழுமையைத் தின்ற வேற்படையை யுடைய முருகக்கடவுளுக்கு, தூயநூல் - `முன்னமணிக் கோவை யென்னும் இக்குற்றமற்றநூலை, சீர் வளர - சிறப்போங்கும்படி, எம்மால் இயற்றுவது ஒன்று உண்டு - எம்மைக்கொண்டு செய்வது ஒன்று உள்ளது, அது கைம்மா முகத்தன் கழல் ஆகும் - அங்ஙனஞ் செய்யுங் கருவி யானைமுகக் கடவுளின் திருவடி யாகுமென்க. `நன்று பெருமைப்பொருளது; நன்று பெரிதாகும் என்னுந் தொல்காப்பியத்திற் காண்க. `சூர்வளந்தின் வேலோன் என்பது, சூரனுடைய வலிமை செல்வம் முதலியவைகளை அழித்த வேலோ னென்னும் பொருட்டு; உடையோன் றொழில் உடைமைமே லேற்றப்பட்டது. `தூயநூல் தூயனாகிய முருகக்கடவுளைப் பாடுதல்பற்றி இந்நூல் தூய என அடைகொடுக்கப்பட்டது. இந்நூலைப்பாடும் ஆக்கியோற்கும் இதனை ஓதுவார்க்குஞ் சிறப்புண்டாக என்னும்பொருட்டுச் `சீர் வளர வென்றார். `எம்மால் ஆல் கருவிப்பொருளில் வந்தது. ஆசிரியர் இந்நூலைத் தம் முனைப்பின்றி இறைவன் வழியாய் நின்று அவனியற்ற இயற்றுகின்றமையின், இயற்றுவது எனத்தன்வினையாற் கூறினார்; ஆல், அசை. `கைம்மா கையையுடைய விலங்கு; அஃது யானை. `அது கழல் ஆகும் என்று வினை முடிக்க. எடுத்துக்கொண்ட நூல் இனிது முடியுமாறு முதலிற் காப்புச் செய்யுள் கூறுதல் நூலாசிரியர்க்கு மரபாதலின், அடிகளும் இச்செய்யுளாற் காப்புக்கூறினர். பிற்கால வழக்கு யானைமுகக் கடவுள் மேல் நிற்றலின் இச்செய்யுளும் அவரையே பரவிற்று. இப்பாட்டு நேரிசை வெண்பா. இது `நீர் என்பது முதற் `கழல் என்பது இறுவாயாக முப்பது சொற்களாற் கூறப்படு தலால், இந்நூலும் முப்பது பாட்டுக்களா லாக்கப் பட்டதென்பது குறிப்பு. இதன்கண் இல் கு ஆல் என்னும் வேற்றுமை யுருபுகளும் ஏனைச் சொற்களொடு சேர்த் தெண்ணப்பட்டன. என்னை? அவ்வுருபுகள் தாமுஞ் சொற்களோடொப்பப் பொருளுணர்த்துத லுடைமையி னென்பது. அற்றாயின், அன் அ முதலிய பெயர் வினை விகுதிகளும் பொருளுணர்த்துத லுடைமையின், அவை தாமும் அவ்வுருபுகளைப் போலச் சொற்களொடு சேர்த் தெண்ணப்படல் வேண்டுமா லெனின், அற்றன்று, ஒரு சொற் றொடரினிடையே இல் கு ஆல் முதலிய வேற்றுமையுருபுகள் சொற்களினுள் நின்றும் பொருளுணர்த்துதற் கட் பிரிந்திசைத்தல் போல், அன் அ முதலிய பெயர் வினை விகுதிகள் அங்ஙனம் பிரிந்திசையாமையின், அவ் விகுதிகள் சொற்களொடு சேர்த் தெண்ணப்படுதற்கு உரியனவல்லவென் றுணர்ந்துகொள்க. இனி, இக்காப்புச்செய்யுள் `நீர் என்னுஞ் சொல்லை முதலாகவும், `கழல் என்னுஞ் சொல்லை இறுதியாகவுங் கொண்டு விளங்கலால், நூலும் அவ்வாறே `நீர் என்பதை முதலிலுங் `கழல் என்பதை இறுதியிலுங் கொண்டு விளங்கு மென்பதூஉங் குறிப்பா னுணரப்படும். இன்னும், இப்பாட்டின் முதலடியில் திருவொற்றிநகர்ச் சிறப்பும், இரண்டாமடியிற் சூரனழிவும், மூன்றாமடியில் தாமும் பிறரும் பயன் பெறுமாறும், நான்காமடியில் அவரைப் பயன் பெறுவிக்கும் இறைவன் திருவடிநிலையுங் கூறப்படுகின்றமையின், அவைதாம் முறையே பொருளறிவின் விரிவையும், அறியாமை யின் தேய்வையும், அவ்விரண்டையும் பெற்று விளங்குதற்குரிய உயிரின் தகுதியையும், அத்தகுதிக் கேற்ப அது பெறும் பேரின்பப் பேற்றையுங் குறித்து, அவ்வாற்றால் இத்திருவொற்றி முருகர் மும்மணிக்கோவையென்னும் நூலுந் திருவொற்றி நகரைச் சிறப்பிக்குமுகத்தால் உயிரினறிவைப் புறப்பொருள்களிற் செலுத்தி அகன்றுவிரியுமாறு செய்து, பின்னர் அம்முகத்தால் அறியாமைதேய்த்து அதன் உணர்வினை நுட்பமாக்கி, இறைவனது பேரின்பத்தினை நுகர்ந்து கிடக்கச் செய்யுமென்னும் முறை தெளிவித்தவாறு. மேலும், இச்செய்யுள் `ஆகும் என்னும் வினையையே முடிவிற் பெறுதற்குரித்தாயிருப்பவும், ஆசிரியர் அதனைச் `சீர்வளர் என்பதற்குங் `கழல் என்பதற்கும் இடையே யிட்டு முடித்திருத்தலால், இந்நூலுந் தன்னைப் பயில்வார்க்கு இம்மைப்பயன்களை முற்றுந் தந்து இறுதியில் இறைவன் திருவடிப்பேற்றைப் பயக்குமெனப் பயன் கூறியவாறாயிற்று. இவ்வாறெல்லாங் காப்புச் செய்யுளென்பது நூலின் கட்காணப்படும் நூலமைதிகளையும் பொருட்கூறுபாடுகளையும் பயன் முதலிய பிறவற்றையு மெல்லாங் குறிப்பாற் றன்கட்கொண்டு விளங்குதல் அதுதனக்கு இலக்கணமாமென்க. ஆசிரியர் சிவஞானமுனிவருந் தமது சிவஞானபோதமாபாடியத்து மங்கலவாழ்த்துச் செய்யுளின் உரையிறுதியிலும் இங்ஙனம் நூனுதல் பொருளெல்லாங் குறிப்பாற் றன்னகத் தடக்கிநிற்றல் மங்கலவாழ்த்துக்கு இலக்கணமென்றுணர்க என்று உரை கூறினர். கடவுள் வணக்கமென்பதும் மங்கலவாழ்த் தென்பதும் ஒருபுடையொப்புமையுடைய. 1. செஞ்சொடு கிளத்தல் நெஞ்சொடு கிளத்தல் என்பது தன் தலைவன் பெருமையும் அவன்றன் அருளுருவை நினைதலால் தனக்கு விளையும் நன்மையுந் தலைவி தன் நெஞ்சிற்கு எடுத்துக்கூறல்; இம்முறையினை `நெஞ்சறிவுறூஉ வெனவும் வழங்குப. இது முதல் நாற்பத்தோரடிகாறும் மருத நிலத்திற்கும் நெய்தனிலத்திற்குந் திணைமயக்கங் கூறுகின்றார். (1 முதல் 4 அடி) நீர் வளம் கவின்ற சீர் வளர் பழனத்து - நீர் வளத்தால் அழகுபெற்ற சிறப்போங்கிய கழனியில், நெல் குரல் கவ்விய நல் குரல் பைம் கிளி - நெற்பயிரின் கதிரைக் கௌவிய அழகிய குரல்ஒலியினை யுடைய பச்சைக்கிளி, கானல் காவில் தான் விரைந்து எய்தி - கடற்கரைச்சோலையில் விரைவாய்ப் பறந்துசென்று, பொன்வீஞாழல் பொலிந்து இனிது இருப்பவும் - பொன்நிறமான மலர்களையுடைய நாக மரத்தின்மேல் மனஎழுச்சியோடு அழகாய் உட்கார்ந்திருக்கவும். `வளங் கவின்ற மூன்றாம் வேற்றுமைத் தொகை, சீர் - விளைவின்பெருமை. குரல் - நெற்கதிர்; இது நெற்கதிரும்... குரலெனமொழிப என்னும் பிங்கலந்தையா லறியப்படும். இது, மருத நிலத்துக்கிளி நெய்தல் நாகமரத்திற் சென்றிருத்தல் கூறிற்று. (5-8) கரும் கழி வாரிய பெரு மீன் குவைஇ - கரியநிறத் தினையுடைய கழியிலிருந்து வாரியெடுத்த பெரிய மீன்களைக் குவித்து, வல் திறல் பரதவர் முன்றில்தொறும் உணக்கும் - வலிய உடலுரம் வாய்ந்த செம்படவர் தம்முடைய வீட்டு முற்றங்க டோறும் உலர்த்துகின்ற, துடிக்கண் துணியல் கொடிக்குலம் கவர்ந்து - உடுக்கையின் கண்களைப்போல் வட்டத்துண்டு களாயிருக்குங் கருவாடுகளைக் காக்கைக் கூட்டங்கள் திருடியெடுத்துக்கொண்டு, மருதங் காவில் பெரிது வைகவும் - மருத நிலத்து இளமரச்சோலையில் ஏகிப் பெருமிதத்துடன் அமர்ந்திருக்கவும், திறல் - உடம்பின் உரம். உலர்த்துதற்காக வகுந்து வெயிலில் விரித்துவைக்கப் பட்டுக்காயும் மீன் காண்பார்க்கு உடுக்கையின் கண்களைப்போல் இரண்டு வட்டத்துண்டுகளாய்த் தோன்றுதலால், அது `துடிக்கட்டுணிய லெனப்பட்டது. இஃதிவ்வாறு தோன்றுதல் கொழுமீன் குறைஇய துடிக்கட்டுணியல் என்னும் மதுரைக் காஞ்சியாலும் (320) ஆசிரியர் நச்சினார்க்கினியர் துடியின்கண் போலுருண்ட துணிகள் என்று அதற்குக் கூறிய உரையாலுந் தெளியப்படும். இது, நெய்தல்நிலத்துக் காக்கையும் மீனும் மருதநிலத்துச் சென்றமை கூறிற்று. (9-11) குளன் உறை வாழ்க்கை வள நீர்க்கோழி - மருத நிலத்துக் குளத்தின்கண் வாழும் வாழ்க்கையினையுடைய உடற்செழுமை வாய்ந்த நீர்க்கோழி, மனையுறை நீங்கித் துணை கூப் பெயர்ந்து - அவ்விடத்து உறைதலைத் தவிர்ந்து தனது பெடைப்பறவையைக் கூவியழைத்துக் கொண்டு, கால்வழி ஓடிக் கழியிற் சேரவும் - வாய்க்கால் வழியாக நீந்திச்சென்றுநெய்தனிலத்துக் கழிநீரிற் சேரவும். `வளம் என்பதை நீர்க்குக் கூறுதலுமாம். `உறை இரண்டனுள் முன்னது வினைத்தொகை, பின்னது முதனிலைத்தொழிற்பெயர். `துணை இச்சொல் இருபாற்கும் உரித்தேயாயினும், பெரும் பாலும் பெண்பால் மேற்றாகவே வழங்கப்படும். `கூப்பெயர்தல் ஒருசொல்; அழைத்தலென்னும் பொருட்டாம். இது, மருதநிலத்து நீர்க்கோழி நெய்தனிலத்துக் கழியிற் சேர்ந்தமை கூறிற்று. (12-17) புலவு மணம் முனைஇய நிலவுஉறழ் குருகு - நெய்தனிலத்துக் கழியில் மிகஇருந்தமையாற் புலால் நாற்றத்தை வெறுத்துவிட்ட நிலவையொத்த வெள்வ கண் அகல் விசும்பில் நண்ணிய முகில்மேல் இவர்ந்துளிய நாரைகள் எழுதிங்கள் - இடமகன்ற வானிற் பொருந்திய கரிய முகிலின் மேல் ஏறித் தோன்றுந் திங்களைப் போல, பரந்து கெழு துணிநீர்த் தடத்தின் மணம் மலர் ஆரும் - இடம்அகன்று உள்ள தெளிந்த நீரினை யுடைய மருதநிலத்துக் குளத்திலுள்ள மணங்கமழும் பூக்களை மேய்ந்துகொண்டிருக்கும், இரும்புதிரித்து அன்ன அறல் மருப்பு எருமை கரும்புறம் மருங்கில் - இரும்பை முறுக்கினாற்போல் அறுப்பு அமைந்த மருப்பை யுடைய எருமைகளின் கரிய முதுகாகிய இடத்தில், ஒருங்கி நிற்பவும் - கூம்பி நிற்கவும், `முனைஇய வெறுத்த; இஃதிப்பொருட்டாதல் சேற்று நிலை முனைஇய செங்கட் காரான் என்னும் அகநானூற்றிற் (4) காண்க. `நிலவு நிறத்திற் குவமை. `நண்ணிய பொருந்திய. `இவர்ந்தெழு ஒருசொல் நீர. `துணிநீர் என்பதற்குத் `தெளிந்தநீரென்றே ஆசிரியர் நச்சினார்க்கினியரும் துணிநீர் மெல்லவல் (மதுரைக்காஞ்சி, 283) என்புழி உரை கூறினார். `இரும்புதிரித்தன்ன வென்பது, மருப்பின் வலிமை யுணர்த்திற்று. இவ்வுவமையை இரும்புதிரித்தன்ன மாயிரு மருப்பு என்று குறுங்குடிமருதனாரும் அகநானூற்றில் (46) எடுத்தாண்டார். அறல், தொழிலடியாகப் பிறந்தபெயர். `புறமருங்கு புறமாகிய இடத்தில்; இங்கு மருங்கு என்பது இடப்பொருளுணர்த்தி நின்றது; `மருங்கின்கண் என நிற்கற்பாலது உருபு கெடச்சாரியையுடன் நின்றது; மெல்லெழுத்து மிகுவழி என்னுஞ்சூத்திரத்தில் மெய்பெற என்றமையால் இன்னோரன்ன முடிக்கப்படுமென்பர் உரைகாரர் நச்சினார்க்கினியர் (தொல்காப்பியம், எழுத்து, 157). விசும்பு நீர்க்குளத்திற்கும், முகில் எருமைக்கும், திங்கள் குருகுக்கும் உவமை; எருமைக்குக் கரும்புறங் கூறினமையால், அதன் உவமையாகிய முகிலுக்குங் கருமையுரைக்கப்பட்டது. இது நெய்தல் நிலத்து நாரை மருதநிலத்து வயலெருமை மேற்சென்று நின்றமை கூறிற்று. (18-19) பொறிகெழுவாளை - மருதநிலத்து நீர் நிலை களிலுள்ள விளக்கம் அமைந்த வாளைமீன், வெறிபடப் பாய்ந்து முடைக்கழிச்சுறவொடு கறுவொடு மறியவும் - மதர்ப்பினாற் சரேலெனப் பாய்ந்து முடை நாற்றத்தையுடைய கழிக்கணுள்ள சுறாமீனொடு சினத்துடன் புரளவும், `பொறி கெழு வாளை `ஒளி பொருந்திய வாளை யெனப் பொருடருதல் பொறி வரி வரால் என்புழி (சீவகசிந்தாமணி, 44) நச்சினார்க்கினியருரைத்த உரையாலறியப்படும். வெறி - மதர்ப்பு. `காலெதிர்ந் தோடுங் கழிக்கய லென்று பின்வருதலின், இவ்வாளை மீனுங் கால்வழிச்சென்று பாயுமெனக் கொள்க. `கால்வழியோடிக் கழியிற்சேரவு மென்று மேலே வந்தமையும் நினைவு கூரற்பாற்று. `ஒடு உருபுகள் இரண்டனுள்ளும் முன்னது கலப்புறு பொருளிலும், பின்னது அடைமொழிப் பொருளிலும் வந்தன. `முடைக்கழி புலால்நாற்ற முடைய கழி; ஏனையெல்லா நீர் நிலைகளினும் உப்பளத்துக்கழியே முடைமிகுதியும் இயல்பிலுடைமையால், இலக்கியங்களெல்லாம் அம் முடைநாற்றத்தைக் கழிக்கே ஏற்றிக்கூறுதல் மரபு. புலவுநாறிருங்கழி யென்று அகப்பாட்டிலும் (180) வந்தது. புலவுக்கழி யென்று அடிகளே மேலும் (22 - 109) உரைப்பர். இது மருதநிலத்து வாளை நெய்தல்நிலத்துச் சுறவொடு போர் புரிதல் கூறிற்று. (20-21) கால் எதிர்ந்து ஓடும் கழிக்கயல் - நீர்க்கால்களில் எதிர்முகமாய் ஓடும் நெய்தற்கழியின் கயல் மீன்கள், மருதச்சேலொடு கூடிச்சேர்ந்து துள்ளவும் - மருதநிலத்துச் சேல்மீன்களொடு கலந்து ஒன்றாய்க் குதிக்கவும், மருதநிலத்து வாய்க்கால்கள் கடற்பக்கம் நோக்கிச் செல்லுமாதலின், அக் கடற்பக்கத்திலிருந்து மருதநிலத்தை நோக்கி ஏகு கயல் மீன்கள் அக்கால்வாய்களை எதிர்ந்து ஓடினவென்றார். எதிர்ந்து, எதிர்த்து; இவ்வன்மை மென்மைகளிற் பொருள்வேறுபாடு உண்டு; முன்னையது எதிர்முகமாய்ச் செல்லுதலையும், பின்னையது போர்க்கு முனைதலையும் உணர்த்தும். கயலொடு சேலுந்துள்ளிற்றென்பார், `சேர்ந்து துள்ளவும் என்றார். இது நெய்தற்கழியின் கயல் மீன்கள் மருதநிலத்துச் சேற்கெண்டைகளொடு சேர்ந்து துள்ளுதல் கூறிற்று. (22-25) முழுநெறி அவிழ்க்குங் கொழுங்கால் ஓடி - மருத நிலத்து அரும்புகளை இதழவிழ்க்கும் அவ்விடத்துக் கொழுவிய காற்று ஓடிச்சென்று, பொன் அம் தாமரைப் பொலம் துகள் வாரி - பொன்னிறமான அழகிய செந்தாமரைப்பூக்களின் பொன்னிறமான பொடியை அள்ளி, கோழிமுட்டை போழ்படுத்தாங்கு - கோழிமுட்டையை உடைத்தாற்போல, வெள் அயிர்க் கானல் கொள்ளையின் வீசவும் - வெள்ளிய நுண்மணலையுடைய கடற்கரைச்சோலையில் மிகுதியாய்த் தூவவும், `முழுநெறி முறுக்குவிடாமுழுக்கட்டுடைய பூமொட்டு. நீர்வள நிலவளமுடைய மருதக் காற்றாகலின் `கொழுங்கால் எனப்பட்டது. துகள், இங்கு மகரந்தப்பொடி; அது பொன்னிறமா யிருத்தலின், `பொலந்துகளென அடை கொடுக்கப்பட்டது. கோழிமுட்டையை உடைத்தக்கால், மஞ்சட்கரு விரவிய வெண்குழம்பே நிலத்தின்கட்பரவுதலின், அது தாமரைப்பூவின் மஞ்சட் பொடியினை வெண்மணலிற் சிதறுதற்கு உவமை யாயிற்று. `ஆங்கு உவமச்சொல் லென்றார் பரிமேலழகர் (திருக்குறளுரை, 2: 5). `அயிர் நுண்மணலுக்குப் பெயராதலை இடிக்கலப் பன்ன ஈர் அயிர் (சிலப், 6 : 146) என்று ஆசிரியர் இளங்கோவடிகள் ஓருவமையின் வைத்து உரைத்தார். இது மருதநிலத்துக் காற்று அந்நிலத்துத் தாமரைமலரின் பூந்தாதுகளை அள்ளிக்கொண்டு நெய்தல் நிலத்துக் கடற்கரைச் சோலையிற்சென்று தூவுதல் கூறிற்று. (26-30) வெள்ளி வெண் தோட்டுத் தாழையின் அளைஇ வெள்ளித்தகட்டையொத்த வெள்ளிய மடல்களை யுடைய தாழம்பூ வைத்துழவி, கையரிக்கொண்ட கடல் கால் ஓடி - அதன் மகரந்தப் பொடியை வாரிக்கொண்ட கடற்காற்று மருத நிலத்துக்கு ஓடி, நீறு மெய்பூத்த நிமலன்போல - திருநீறு உடம்பெங்கும் பொலிவுபெறத் தோன்றிய மலத்தின் நீங்கின சிவபெருமானைப்போல, செம்தாமரைகள் சிறந்து இனிது விளங்க - சிவந்த தாமரைப் பூக்கள் நிறஞ்சிறந்து அழகாய்த் தோன்றுமாறு, வெண்பொடி வீசிப் பண்பொடும் உலாவவும் - அவ் வெண்பொடியைச் சிதறி இனிதாய் வீசவும், `தாழையின் இன் சாரியை, கண் உருபு தொக்கது. `கையரிக்கொள்ளல் கைநிரம்ப அரித்துக்கொள்ளல்; இங்கு வாளாவாரிக் கொள்ளல் என்னும் பொருளில் வந்தது; இவை ஒரு சொன்னீர்மைய. வடமொழி `உபசர்க்கங் களைப்போலத் தமிழ் மொழியிலுங் `கை யென்பது, உரிய பெயர் வினைச் சொற்களோடு இயைந்துவரும் இடைச்சொல்லாய் நிற்கும். களித்தறியே னென்பது கைவிடுக வென்பதிற்போல, (திருக்குறள் 93, 8). `பூத்தல் பொலிவுபெற்றுத்தோன்றல்: `மீன்பூத்தன்ன தோன்றலர் (திருமுருகாற்றுப்படை, 169). கடற்காற்று குளிர்ச்சியு மினிமையு முடைமையால், அவ்வினிமை யதன் `பண்பொடு மெனச் சுட்டப்பட்டது. `நிமலன் மலமில்லாதவன்; அவன் சிவபெருமான்; இச்சொல்லின் முதலில் இன்மைப்பொருளை யுணர்த்தும் `நிர் என்னும் வடமொழியிடைச்சொல் (உபசர்க்கம்) ஈறு கெட்டுப் புணர்ந்தது. அடிகள் சிவபிரான் மாட்டு இடையறா அன்புசெலுத்துஞ் சைவப் பெரியாராகலின், தமது அன்பிற்குரிய பொருளைக் கைதையந்தாது படிந்த செந்தாமரை மலருக்கு உவமை கூறினார்; ஈது அன்புமிக்கார்க்கு இயல்பேயாம். தொண்டர் சீர் பரவுவாரான ஆசிரியர் சேக்கிழார் கைதையந்தாது படிந்த கமலவண்டிற்கு நீறுபுனைந்த தொண்டரை உவமை காட்டிக் கமல வண்டலர் கைதைத், துன்று நீறுபுனை மேனியவாகித் தூயநீறுபுனை தொண்டர்களென்னச், சென்று சென்று முரல்கின்றன வென் றருளிச்செய்யும் அருண்மொழியிலும் இவ்வியல்பினைக் காண்க. (31-40) தேம் மொழிச் செவ்வாய்த் திருமுக உழத்தியர் - இனிய மொழிகள் நிரம்பிய, சிவந்த வாயினையுடைய அழகிய முகம் வாய்ந்த உழவர் மகளிர், காமரு கொழும் சுவை வாழையின் பழனும் - விருப்பம் மிகுத்தற்குரிய மிக்க சுவையினையுடைய வாழையின் பழங்களும், புன்செய் பயந்த பல் நிறப் பயறும் - கொல்லையில் விளைந்த பலநிறங்கள் வாய்ந்த பலவகைப் பயறுகளும் நன்செய் பயந்த பொன்நிற மணியும் - வயலில் விளைந்த பொன்னிறம் வாய்ந்த நென்மணிகளும், வட்டிகைப் பெய்து - கூடையிற் கொட்டி கட்டிய சுமட்டின் எடுத்துச்சென்று - வளைத்துக் கட்டிய சும்மாட்டின்மேல் எடுத்துக் கொண்டுபோய், அங்கு அடுத்து உயர் பாக்கத்து - அவ்விடத்தையடுத்து மணன்மேடாய் உயர்ந்துள்ள செம்படவர் சேரியில், குமிழ் இடை உகளும் அமைவிழிப் பரத்தியர் - குமிழம் பூவை யொத்த மூக்கின் அடியிற் புரளும் அமைந்த விழிகளையுடைய நெய்தல் மகளிர், பகுத்து உணர்வு இன்றி மிகுத்துக் கொடுத்த - இவ்வளவுக்கு இவ்வளவு என்று பிரித்து உணரும் உணர்ச்சியில்லாமல் மிகுதியாய்க் கொடுத்துவிட்ட, தரளமும் மீனும் நிரல்பட அளந்து கொண்டு - முத்துக்களையும் மீன்களையும் தாம் விற்ற பண்டங் களுக்கு ஒழுங்காக அளந்தெடுத்துக் கொண்டு, உவப்பொடு பெயர்ந்து தம் இருக்கை சேரவும் - தாம் மிகுதியாய்ப்பெற்ற மகிழ்ச்சியொடு திரும்பித் தம் இருப்பிடம் அடையவும், மொழி செவ்வாய் முகம் என்பவற்றிற்கு உம்மை விரித்தலு மாம். `தேம் மொழி என்பதற்குத் `தேனனைய மொழி யென்றும் பொருளுரைப்பர். `காமரு என்பதைக் காமம் மரு எனப் பிரித்து விருப்பம் பொருந்திய அல்லது விருப்பம் மிகுத்தற்குரிய எனப் பொருளுரைக்க; இனிக் காமரு குவளை யென்பதற்குக் `காமம் வருமென்பது விகாரத்தாற் காமருவெனநின்று விருப்பம்வரு மென்பதாயிற்று என்று ஆசிரியர் அடியார்க்கு நல்லார் உரைத்தார் (சிலப்பதிகாரம், அந்தி. 40). கொழுமை, சுவைமிகுதிமேற்று. பழன், ஈற்றுப் போலி, செய், விளைநிலம்; இது பொதுப்பெயர்; புன்மை சிறுமையாதலின், விளைச்சலிற் சிறுமையுடைய புலம் `புன்செ யாயிற்று; விளைச்சலிற் பெருமையுடையது `நன்செய், இதன்கண் நன்மைபெருமைப் பொருளது. `பல் லென்னும் அடை மொழியைப் பயற்றுக்குங்கூட்டுக. பச்சைப்பயறு. கருமையுழுந்து, பழுப்புக்கடலை, சிவப்புக்கொள்ளு, வெளுப்புமொச்சை முதலிய பலநிறப்பயறுகள் உளவாதல் காண்க. `வட்டிகை கூடைக்குப் பெயராதலை, வட்டிகை கூடை யென்னும் பிங்கலந்தையாலறிக. வயல்மேல் வினைசெய்வார் வைக்கோற் றாளைச் சுருட்டி வளைதுப்பளைநாராற் கட்டிச் சும்மாடெடுப்பராதலின், கட்டிய சுமட்டி னென்றார். இதன்கண் இன் என்னும் சாரியை நிற்க ஏழன் உருபு தொக்கது. பாக்கமென்பது நெய்தல் நிலத்தூர்; பாக்கத்துப் பரத்தியரென்க குமிழ், உவமையாகுபெயர். இடை, ஏழனுருபு. கொடுத்த பண்டங்கட்கு மாற்றாக மிகுத்துக் கொடுத்தமையிற் பகுத்துணர்வின்றி என்றார். (41-44) மருதமும் நெய்தலும் மயங்கிய மரபின் - இவ்வாறு மருதநிலப் பொருள்களும் நெய்தனிலப்பொருள்களும் ஒருங்கு கலக்குமியல்பினால், உலகம் எல்லாம் ஒருங்கு வந்து உறினும் - உலகத்தாரெல்லாரும் ஒன்றாய் வந்து சேர்ந்தாலும், தொலையா வளத்தொடு - அவர்கள் நுகர்வனவெல்லாம் வழங்கியும் அழியாத வளத்தொடு, நிலவுறும் வைப்பின் ஒற்றி மாநகர்க்கு - விளங்குகின்ற ஊரினையுடைய திருவொற்றியூ ரென்னும் பெரிய பட்டினத்திற்கு, மருதமும் நெய்தலும் ஆகுபெயராய் அவற்றின் கருப் பொருள்களை உணர்த்தி நின்றன. கருப்பொருள் இவையென்பது, தெய்வம் உணாவே மாமரம் புள் பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவும் கருஎன மொழிப (தொல். அகத். 18) என்னும் சூத்திரத்தாற் றெளியப்படும். இச்சூத்திரத்தான் நுவலப் படாவாயினும், இங்கு அடிக ளெடுத்தாண்ட நீர்வாழ்வனவும் வளி நிலையும் பூவும் நிலமக்களும், `அவ்வகைபிறவு மென்பதனால் அடக்கிக் கொள்ளப்படும். என்னை? பிறவு மென்றதனால் நிலமக்களும் நீர் நிலையும் வார்கொடியும் பூவுங் கொள்ளப்படு மென்று அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரப்பதிக உரையிற் கூறினாராதலின். `மயங்கிய மர பென்றது, திணைமயக்கம். உலகு, மக்களுலகு; அன்றி ஆகுபெயரென்றலும் பொருந்தும். `தொலைதல் முன்பு உண்டாய்ப் பின்பு இல்லை யாதலாம் என்பர் நச்சினார்க்கினியர் (பாலைக்கலி, 1). வைப்பு - ஊர். வில்லுடை வைப்பின் என்னும் பெரும்பாணாற்றுப் படையிற் காண்க (82). இருப்பவும் வைகவும் சேரவும் நிற்பவும் மறியவும் துள்ளவும் வீசவும் உலாவவும் சேரவும் மயங்கிய மரபின் நிலவுறு வைப்பின் நகரென்று முடிக்க; இருப்பவும் முதலாயின உம்மையேற்ற வினையெச்சங்கள். இதுகாறும் மருதத்துக்கும் நெய்தலுக்குந் திணைமயக்கம் கூறுமுகத்தால், திருவொற்றியூரின் சிறப்புக் கூறப்பட்டது. எனவே, திருவொற்றியூ ரென்பது வயல் வளம் வாய்ந்து கடற்கரை யோரத்தில் அமைந்திருக்கு முண்மை இதனாற் பெறப்படும். (44 - 46) உற்ற கண் எனவும் - பொருந்திய கண்ணெனவும், அக்கணின் உள் வளர் அரு மணி எனவும் - அக்கண்ணின் உள்ளே ஒளிவளரும் அரிய கருமணியெனவும், அம்மணி உள் உறை பாவையை எனவும் - அக்கருவிழியினுள்ளே உறையும் பாவை யெனவும், பாவையை, ஐ சாரியை; இறவரையும்பர் என்னுந் திருக் கோவையாரிற்போந்த `குறவரை யார்க்கும் என்பதற்குப் பேராசிரியர் கூறிய வுரையைக்காண்க. இறைவனை முதன்மையும் அருமையும் நோக்கி இங்ஙனங் கண்ணெனவும் மணியெனவுங் கூறினார். இங்ஙனமே கண்ணே கண்ணிற் கருமணியே மணியாடு பாவாய் (திருவாவடுதுறை) என்று அப்பர் பெருமானும் அருளிச்செய்தனர். `அருமணி யென்றது கருமணியேயா மென்பதும் இதன்கட் பெறப்படுதல் காண்க. ஒற்றியமாநகர்க்குக் கண்ணெனவுமென்று தொடர்க. (47-50) பாவையின் அகத்துப் பண்பு பலகாட்டி மேவி - அப்பாவையிலுள்ளே இயல்புகள் பல விளங்கக் காட்டியுறைந்து, ஆங்கு அது புடை பெயர்ந்து இயங்க - அக் கருவிழியினுள் அது பக்கம் பெயர்ந்து அசைய, தக்கவாறு மிக்கது புரியும் - நேரத்திற்குத் தகுந்தபடி சிறந்தது செய்யும், ஓர் இயல்பு இல்லா ஆர் உயிர் எனவும் - ஓரியல்பின்றிப் பல்வேறு இயல்புகள் உடைய அரிய உயிரெனவும், என்றுரைத்து மேல் `விளங்கும் என்பதனொடு கூட்டுக. பண்பு, உயிர்ப்பண்பைக் காட்டும் நுண்ணிய செயல்கள், மேவி. உயிரின்வினை; அது, பாவை, `பாவையினகத்து மேவி அது இயங்க மிக்கது புரியும் ஆருயி ரென்க. `தக்கவாறு மிக்கதுபுரியும் என்றது நேரத்திற்கு இசைந்த வாறு செய்யும் உயிரின்திறத்தை; எனவே `பண்பு உயிரின் பல்வேறியற் கையினை யுணர்த்திற்று. `மிக்கது அறிவின் சிறப்பைக் காட்டிற்று. `மிக்கது ஒரு தொகுதிப்பட்ட சிறந்த செயல்களை யுணர்த்துதலின் ஒருமைப் பன்மை மயக்கம். உயிர், விழைவு அறிவு செயல்கள் (இச்சா ஞானக்கிரியை) பல உடையவாதல்பற்றி ஓரியல்பில்லா ஆருயிர் என்றார். (51-53) இருவேறு உலகினும் - உயிர்ப்பொருள் உலகம் உயிரில் பொருள் உலகம் என்னும் இரண்டு வேறுபட்ட உலகங்களிலும், இரண்டு அற விரவி - அவை வேறு தான் வேறு என இரண்டாய்ப் பிரிந்து நிற்றல் இல்லையாம்படி அவற்றோடு ஒருங்கு கலந்து, அறிவும் தொழிலும் நெறி உறவிளக்கும் மாது ஒரு கூறற்கு - உயிர்களின் அறிவையும் உயிரில்லனவற்றின் செயலையும் முறைபொருந்த விளங்க வைக்கும் உமையம்மையை யொருபாகமா வுடைய சிவபிரானுக்கு, ஓதிய முதல்வன் - ஓமெனும் ஒருமொழி மறைப்பொருளை ஓதியருளிய முதற்கடவுள், இருவேறுலகு; அறிவுள்ள உயிர்த்தொகையும் அஃதில்லா மண் நீர் தீ முதலான உயிரில் பொருட்டொகையும், `இரண்டறவிரவி யென்றார், கலப்புத் தன்மையால் ஒன்றாயும் பொருட்டன்மையால் இரண்டாயும் விரவி ஒன்றென்றும் இரண்டென்றுங் கூற முடியாமைக் கலந்து நிற்றலின்; இவ்விரவுதலையே `இரண்டன்மை (அத்துவிதம்) என்று சைவசித்தாந்த நூல் கூறும். இறைவன் அம்மையின் வாயிலாகப் பிரிப்பின்றி நின்று இவற்றை விளக்குதலின், அவனை `மாதொரு கூறனென்று விதந்தார். இங்கு அம்மையொன்றது அருள். விளக்குங் கூற னென்று கொள்க. இவ்வடிகள், அவையே தானே யாய்இரு வினையீற் போக்கு வரவு புரிய ஆணையின் நீக்கம் இன்றி நிற்கு மன்றே என்னுஞ் சிவஞானபோத நூற்பாவைப் பெரிதொத்துத் தெளிந்த தமிழில் விளங்கிநிற்றல் பெரிதும் வியந்து மகிழற்பாலது. `பாவையினகத்து... ஆருயிரெனவும் என்று மேல்வந்த ஆருயிர்ச்செயலை இரட்டுறமொழிந்து `இருவேறுலகினும்... மாதொரு கூற னென்னும் இவ் இறைவன் செயலுக்கு உவமித் தலுஞ் செயற்பாலது. உடம்பையியக்கும் உயிரை உலகுயிர்களை யியக்கும் இறைவனுக்கு உவமைகாட்டும் முறை. கட்டு முறுப்புங் கரணமுங் கொண்டுள்ள மிட்டதொரு பேரழைக்க வென்னென்றாங் கொட்டி யவனுளமா கில்லா னுளமவனா மாட்டா தவனுளமா யல்லனுமா மங்கு என்று ஆசிரியர் மெய்கண்ட தேவ நாயனாரருளிச்செய்த சிவஞானபோத வெண்பாவிற் காணப்படும். இனிக் `கண்ணெனவும் `மணியெனவும் `பாவையை யெனவும் என்பவற்றையும் இங்ஙனமே உவமித்துரைக்கலாமோ வெனின், திருவொற்றிமாநகர் மாதொரு கூறனைத் தொடர்ந்து, `முதல்வன் என்ற முருகவேளைத் தொடராதொழியுமாகலின், அவ்வாறுரைத்தலா காது. இனி `விளக்கு மென்பதை முதல்வனுக்குக் கூட்டி முடித்து மாலோவெனின், உலகுயிர்களுக்கெல்லாம் அறிவுந் தொழிலும் விளக்கும் மாதொரு கூறனுக்கே ஓமெனு மொருமொழி ஓதினான் முதல்வனென்னும் பெருஞ்சிறப்பு ஆண்டுப் பெறப்படாமையின், அதுவும் உரையன்றென்க. மேலும், `முதல்வன் என்பதன் சொற்பொருளாற்றல் அதன்கட் சிறவாமையும், அதனால் அதனைப் பெய்து நிறுத்திய அடிகளின் கருத்து ஆண்டு நிரம்பாமையுங் கண்டுகொள்க. (54-58) செல்லல் உற்று அழுங்கிய மல்லல் தேவர் குழாம் பெரிது உய்ய - துன்பமடைந்து இரங்கி முறையிட்ட விண்வளம் பொருந்திய தேவர் கூட்டம் நீண்டு உயிர்வாழ, வழா வேல் ஓச்சிப்பாடு இல் சூருக்கு வீடு நல்கி - குறி தவறாத வேற்படையை யெறிந்து அழிதலில்லாத சூரபதுமனுக்கு வீடுபேறளித்து, வேந்தன் பயந்த கூந்தற்குமரியை மணந்து உலகு அளித்த - தேவர்க்கு அரையன் ஆன இந்திரன் பெற்றெடுத்த தெய்வ யானையைத் திருமணம் பொருந்தி உலகவர்க்கு அருள் புரிந்த, நிணம் திகழ் வேலன்- கொழுப்புக் கறை விளங்கும் வேலை யுடையவன்,. செல்லல், துன்பம்; அழுங்கல், இரங்கல்; இவற்றைச், `செல்லலுற் றிரங்கி யென்னும் மணிமேகலையிற் காண்க (2, 9). `மல்லற் றேவ ரென்றது, `செல்வப்பேற்றில் வைகுந்தேவ ரென்னும் பொருட்டு; தாம் தேடாமலே எல்லா நுகர்பொருளும் பெற்ற தேவரென்க; மல்லல் - வளம், செல்வும்; மல்லல்வளனே என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார் (உரி - 7). `பெரிது காலப் பெருமை யுணர்த்திற்று; `பெரிது வைகவும் என்பதிற்போல (இவ்வகலின் 8ஆம் அடி) `பாடில் சூர் என்றார், சூரன் தனது தவ வலிமையால் அழியாத நிலையைப் பெற்றிருந்தானாதலின்; இவன்றன் றவவலிமையை அடிகள் மேற் பத்தொன்பதாம் பாட்டிற் பதினெட்டாம் அடிமுதல் ஐம்பத்தோராம் அடிவரையில் மிகவும் விரித்துரைப்பர்; ஆங்கு அவன் தவச் சிறப்பின் வகைமைகளை விளங்க உரைப்பாம். பாடு, முதல் நீண்ட முதனிலைத் தொழிற்பெயர். சூர், ஈறுகெட்டது. `வீடுநல்கி யென்றமையின், சூரனது ஊனுடம்பை வேலோச்சிக் கொன்றன ரென்பது தெளியப்படும். `ஓச்சி யென்னும் வினையெச்சத்துக்குக் `கொன் றென்பது அவாய் நிலை. சூரன் பகைவனாய் எதிர்த்துப் பொருதானாயினும், அவனுயிர் வினைவி னீங்கி இறைவன் றிருவடிநிலையை யுறுதற்கேற்ற முற்றிய தவப்பேறும் நல்வினையும் உடைமையின், இறைவன் அவனைத் தன்றிருவடிக்கட் சேர்த்தமை குறித்து `வீடுநல்கி யென்றார். `வேந்தன் மருத நிலக் கிழவன், அஃது ஈண்டு வானோர் தலைவனை யுணர்த்திற்று. பயத்தல் ஈன்றெடுத்தல். `கூந்தற் குமரி கூந்தலையுடைய குமரி யாகிய தெய்வயானை. `உலகளித்த வென்பதைச் சூரனைக் கொன்றமையால் தேவரையும், அம்முறையே மக்களையும் பாதுகாத்த வெனக் கொள்க. இறைவன் அருளொடு புணர்ந்து உலகத்தை யளிக்கும் உண்மை பற்றிக், `கூந்தற் குமரியை மணந்து உலகளித்த வேல னென்று ஓதினார்; இனி அது வரலாற்றுண்மையுமாம். (59-65) ஐயன் - எவ்வுயிர்க்குந் தந்தை, செய்யன் - செந்நிற முடையவன், பன்னிரு கையன் - பன்னிரண்டு கைகளை யுடையவன், வறியேம் இடும்பை பொறிபடுத்து எதிரும் பெரியோன் - ஏழையேமாகிய எம் துன்பத்தைத் துகளாக்கி எதிர்தோன்றும் பேராற்றலுடையோன், பெரியர் அறிவினுக்கு அரியன் - தவத்தாற் பெரியராயினா ரறிவுக்கும் எட்டாதவன் (ஆகிய முருகப்பெருமானது), திரு உரு ஒருமையின் எழுவித்து - திருவுருவத்தை நெஞ்சொருமையுடன் எழுந்தருளச்செய்து, அருமையொடு வழிபாடு இயற்றி - சிறப்புடன் வணக்கவழிபாடு செய்து, விழி நீர் உறைப்ப அன்பு உருவாகி இன்பு உறல் அறியாது -கண்ணீர்துளிப்ப அன்பு வடிவாகி இன்பம் அடைதல் அறியாமல், புன்பொருள கவரும் என் மின்புரை மனனே - சிறுமையுடைய பொருள்களைப் பிறரறியாமற் கொள்ளும் வேட்கை வாய்ந்த என் மின்னலை யொக்க நெஞ்சே. சிவபிரான் பிள்ளையார் முருகப்பிரான் என்பாரெல்லாம் உண்மையான் நோக்குங்கால் ஒரே முழுமுதற் கடவுளாய் முடிதலிற் சிவபிரானைச் செம்மேனி யெம்மான் என்றாற்போல முருகக்கடவுளையும் ஈண்டுச் `செய்யன் என்றார். `பன்னிருகையன் என்றது, அவனது ஆற்றலுணர்த்தியபடி யென்க. `வறியேமென்பது இங்கு இன்பத்தின் ஏழைமையைக் குறித்தது; திருஞானசம்பந்தப் பெருமான் முதலியோர் அடியார் பெருமக்களை ஏழையடியார்கள் (திருவைகாவூர்த் தேவாரம், 1) என்று அருளிச்செய்ததும் அது. வறியேமென்னுந் தன்மைப் பன்மை, தன்னினமான ஏனையோரையுந் தழுவி நின்றது. இது போல்வனவற்றை உளப்பாட்டுத்தன்மை (தொல்காப்பியம், வினையியல் 5) யென்பர் சேனாவரையர்; தனக்கு ஒருமையல்ல தின்மையிற்றன்மைப் பன்மையாவது தன்னொடு பிறரை உளப்படுத்ததேயாம் என்று அவரதற்கு ஏது உரைத்தலும் ஆண்டுக்காண்க. எதிர்தல், எதிர்வரல்; ஆவது எதிர்தோன்றல். `தவத்தான் முற்றிய பெரியர்க்கும் அரியனாய முருகன் வறியே மிடும்பையைப் பொறிபடுத்தெதிரும் பெரியனாயிருத்தலின், அவனை வழிபாடியற்றி இன்புறலறியாது புன்பொருள் கவர்கின்றனையே நெஞ்சே யென்று இரங்கிக் கூறினாரென்று கொள்க. `உறைப்ப துளிப்ப; `உறைப்பவென்றதனைத் துளிப்ப வென்று ஆசிரியர் நச்சினார்க்கினியரும் பெரும்பாணாற்றுப் படை (379) யுரையில் உரைப்பர். `புன்பொருள் சிறுமையையுடைய சிற்றின்பப் பொருள்கள். அவை `மண்டிரிவாகக் கண்டன சிலவு மென்பது முதலாக மேலே கூறப்படும் பொருள்களென்க. `கவரு மென்றார், பிறரறியாமற் கொள்ளுதலின்; இனி `விரும்பு மென்றுரைத்தலுமாம். எந்நேரமும் எதனையேனும் நெஞ்சம் சடுதியிற் சடுதியில் மாறி மாறி நினைத்துக்கொண்டிருத்தலின், மனனை `மின்புரைமனன் என்றார். ஈது தொழிலுவமம். மனன், ஈற்றுப்போலி; ஏ, விளியுருபு. `ஒற்றிமாநகர் முதல்வன் திருவுரு எழுவித்து வழிபாடியற்றி யின்புற லறியாது புன்பொருள் கவரு மனனே யென்க. (66-76) வரம்பு அறும் ஆற்றல் நிரம்பிய முருகன் - அளவு இல்லாத அறிவாற்றல் நிரம்பப் பொருந்திய முருகப் பெருமான், தான் எழுந்தருளும் வான்குடில் ஆக நின்னைத் தந்தனன் ஆக - தான் வீற்றிருந்தருளுந் தூய சிறு வீடாக நின்னை எனக்குக் கொடுத்தானாக, பின்னை - அதன்பின்பு, மண்திரிவு ஆகக் கண்டன சிலவும் - மண்ணின் திரிபுகளாகக் காணப்படும் உடம்பு முதலாகிய சில பொருள்களும், புனல்திரிவாகப் புகுவன சிலவும் - நீரின் திரிபுகளாக மாறித் தோன்றும் பால் முதலாகிய சில உணவுகளும், அனல்திரிவாக அடைவன சிலவும் - தீயின் திரிபுகளாகப் பொருந்தும் மணியின் ஒளி முதலாகிய சிலவும், வளி இடனாகத் தெளிவன சிலவும் - காற்றே தோற்றுவாயாகத் தெளியப்படும் மணம் முதலாகிய சிலவும், விசும்பு இடனாக உசும்புன சிலவும் - வானம் பிறப்பிடமாக இயங்கும் இசை முதலாகிய சிலவும், ஓவாது இருப்ப மேவுநை - ஒழிவில்லாமல் வந்திருக்க விரும்புகின்றனை, அதனால் துன்பமும் கவலையும் நின்புறன் ஆக- அக்காரணத்தினாலே துன்பமுங் கவலையும் நின்பக்கத்தனவாக, இன்பு உறல் அறியாது இடர்ப்படுகுநையே - இன்பம் நுகர்தலறியாமல் நீ இடர்ப்படுகின்றனையே, அது அன்று - அதுவல்லாமல், `குடில் சிறுவீடு; அதாவது குடிசை; இறைவனது எல்லையற்ற பெருமைக்கு உள்ளம் ஒரு குடிலாவதேயாயினும் அவன் எழுந்தருளுதற்கேற்ற அன்புரிமை அதற்குண்மையின், அது `வான்குடிலாயிற்று. நெஞ்சம் மெய் முதலான ஐம்பொறிகளின் வாயிலாய் மண் முதலான ஐம்பொருள்களிலும் பொருந்தி ஊறு முதலான ஐம்புலன்களையும் நுகருமென்று இங்குக் கூறியவாறாம்; இவ்வுண்மையை, ஓசைநற் பரிச ரூப விரதகந் தங்க ளென்று பேசுமாத் திரைக ளைந்தும் பிறக்கும்பூ தாதிகத்தி னேசவிந் திரியங் கட்கு நிகழறி விதனாற் காண்டு மாசைசேர் மனாதி தன்மாத் திரைபுரி யட்டகந்தான் (சிவஞானசித்தி, 2-ஆஞ் சூத்திரம், 64) என்னும் அருணந்தி சிவனார் திருமொழியிலுங் காண்க. `உசும்புதல் இயங்குதல்; ஓசையணுக்கள் ஒன்றையொன்று உந்தி இயங்கிச் செவிப்புலனாமென்று இயற்கைப்பொருணூலார் கூறுவர். `கண்டன முதலிய ஐந்தும் வினைப்பெயர்களாய்ச் `சிலவும் என்பதனொடு பண்புத் தொகையாய் நின்றன. `மேவுநை யென்பதில் ஐகாரம் முன்னிலை வினைமுற்று விகுதியெனவும், நகரமெய் அஃதூர்ந்து வருதற்கேற்ற எழுத்துப் பேறேனவுங் கொள்க. `இடர்ப்படுகுநை யென்பதில் இவற்றொடு `கு சாரியையென்றறிக. ஏகாரம், இரக்கப்பொருளது. `நீ யென்னுஞ் சொல் மேல் `இனி நீ யிங்ஙன மொழியாது என்ற விடத்துள்ளது. புறம், பக்கம். `அதாஅன்று, அது அன்று; வருமொழி முதல் நீண்டு அளபெடுத்துப் புணர்ந்தது; (77-81) உறுதுணை ஆகச் செறியும் என்னையும் - உனக்கு உற்ற துணையாகப் பொருந்தும் என்னையும், புல் சாய்த்து ஓடும் புனல்போல - தான் துணையாதற்குரிய புல்லைத் தன்வழிச் சாய்த் தோடும் வெள்ளம் போல,நின் வழிப்படீஇ - நின் வழிப்படுத்தி, என் உயிர்க்கு உயிராம் அறுமுகத்து ஐயனை மருவலொட்டாது - என் உயிர்க்கு உயிராகும் ஆறு திருமுகங்களையுடைய தலைவனை அணையவொட்டாமல், வன்மை செய்த நின் புன்மையோ பெரிது - கொடுமை செய்த நின் சிறுமையோ மிகப்பெரிது, புன்மை, இங்கு வஞ்சித்தொழுகுஞ் சிறுமை யுணர்த்திற்று. ஏகாரமிரண்டும் அசை. `மனனே! முருகன் நின்னைப் படைத்த அருட்குறிப்பினை யறியாமல் இடர்ப்படுகுநையே; அதாஅன்று, என்னையும் நின்வழிப் படீஇ ஐயனை மருவலொட்டாது வன்மை செய்த நின் புன்மையோ பெரிது என்று இணைத்துக்கொள்க. (82-87) இனி நீ இங்ஙனம் ஒழியாது - இனி நீ இவ்வாறு அருட்குறிப்பினின்றும் நீங்காமல், பனிமலர்க்கடம்பு சூடிய தடம் தோள் முருகன் - குளிர்ந்த மலர்களையுடைய கடம்பமாலையைச் சூடிய பெரிய தோள்களையுடைய முருகப்பெருமானது, திரு உருப் பொதியும் ஒரு கலனாக விழுமிதின் நீடு வாழ்மதி - திருவுருவினைப் பாதுகாத்து வைக்கும் இணையற்ற கலனாகச் சீருடன் நீடு வாழ்வாயாக; கொழுவிய நலம் கெழு நறும் பால் பெய்த பொலம் கலம் பொலியும் பெற்றி என - இனிய சுவைபொருந்திய நல்லமணமுடைய பாலை இட்டு நிரப்பிய பொன்னாலான கலம்விளங்குந் தன்மையை யொப்பவென்க. `கடம்பு மாலையை யுணர்த்துதலின் ஆகுபெயர். `தடம் பெருமைப் பொருட்டாதலைத் தடவுங்கயவும் நளியும் பெருமை என்னுந் தொல்காப்பியத்தால் (உரி 22) அறிக. விழுமஞ் சீர்மையுஞ் சிறப்பு மென்று தொல்காப்பியனார் (உரி. 55) கூறுதலின், `விழுமிதி னென்பதற்குச் சீருடனென்று உரையுரைக்கப்பட்டது. `வாழ்மதி, மதி, முன்னிலையசை. பொலம், பொன்; `பொன் னென்னுஞ்சொல் ஈறுகெட்டு லகரமும் மகரமும் முறையே பொருந்திப் `பொலம் எனத்திரிந்து முடிந்ததென்று ஆசிரியர் தொல்காப்பியனார் பொன்னென் கிளவி (புள்ளிமயங்கியல், 61) யென்னும் நூற்பாவிற் கட்டளை யிடுவர். `என உவமச்சொல்; இதனைப் பின்னுள்ளோர் உவமவுருபென்றே கொண்டனர். என்ன விகல விழைய வெதிர வென்பது தண்டியலங்காரம் (பொருளணி 33.) `பெற்றியென ஒருகலனாக வாழ்மதி யென்று முடிக்க. எனவே `ஒற்றிமாநகர் முதல்வன் திருவுரு எழுவித்து வழிபாடியற்றி யின்புற லறியாது புன்பொருள் கவரு மனனே யென்று நெஞ்சை விளித்து, `முருகன் தானெழுந்தருளும் வான்குடிலாக நின்னைத் தந்தனனாகக் கண்டன சிலவும் புகுவன சிலவும் அடைவன சிலவும் தெளிவன சிலவும் உசும்புன சிலவும் மேவுநையதனால் துன்பமுங் கவலையும் நின்புறனாக இன்புறல் அறியாது இர்ப்படுகுநையே, அதாஅன்று என்னையும் நின்வழிப்படீஇ ஐயனை மருவலொட்டாது வன்மைசெய்த நின் புன்மையோ பெரிது என்று அதன் பிழைபாட்டுச்செயலை யெடுத்துக்கூறி, `இனி நீ இங்ஙனம் ஒழியாது நறும்பால் பெய்த பொலங்கலம் என முருகன் திருவுருப்பொதியும் ஒரு கலனாக நீடுவாழ்மதி யென்று அறிவுரை கிளந்தாராதலின், இது நெஞ்சொடு கிளத்த லானமை காண்க. 2. அருளியலுரைத்தல் `பெற்றி அரிய பெருமான் என்பதை அரியபெற்றிப் பெருமான் என மாறி, உயர்ந்த இயல்புகளையுடைய என் தலைவன் என்றுரைகூறுக; பெரிய திருவொற்றி நகர் வந்த ஒள்வேலான் - பெரிய திருவொற்றி நகரத்தில் எழுந்தருளிய ஒளிமிக்க வேற்படையை யுடையவன்; நல் தவரும் காணா அரிய கழலான் - மிக்க தவமுடையாருங் காணமாட்டாத அரிய திருவடியை யுடையவன் ஆகிய முருகன், எனது உளத்து நாணாது அமர்ந்தவா நன்று - ஏழையேனுள்ளத்திற் கூசாது எழுந்தருளிய வாறு மிக நன்று! `அரிய பெற்றிப்பெருமா னென்க. அரியபெற்றி யாவன, `தன்னுரிமையனாதல் முதலிய எட்டியல்புகளுமாம். தன்னுரிமை யனாதல், தூய வுடம்பினனாதல், இயற்கை யுணர்வினனாதல், முற்று முணர்தல், இயல்பாகவே வினைகளி னீங்குதல், பேரரு ளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்ப முடைமை எனவிவை. `அரிய இயல்புகள், வாய்ந்த திருவொற்றியங்கடவுள் தவமுடையாரானுங் காண்டற்கரிய கழலுடையனாயிருந்தும், ஏழையேனுள்ளத்தும் எழுந்தருளியவாறு ஆ, மிகநன்று என்று வியந்துரைத்தபடியாம்; எனவே அவன் அருளியல்புரைத்தா ராயிற்று. `காணா, `அமர்ந்தவா, என்பவற்றில் ஈறு குறைந்தன. `எனதுளத்து மென்று இழிவுசிறப்பும்மை விரித்துரைத்தலு மொன்று; `நற்றவரும் என்பதன் உம்மை உயர்வு சிறப்பு. `நாணாது, `நன்று என்னுஞ் சொற்கள் உயிரின் தாழ்வையும் இறைவன் உயர்வையும் விளக்காநின்றன. `பெருமான் வேலான் கழலான் என்றவும், `முதல்வன் வேலன் செய்யன் கையன் பெரியோன் அரியன் என்று முன் வந்தனவும் ஒரு பொருள் குறித்த வேறுபெயர்க் கிளவி (தொல்காப்பியம் கிளவியாக்கம், 42) 3. காமமிக்க கழிபடர் கிளவி அகல் ஈர்ம் கழிகாள் - அகன்ற குளிர்ந்த கழிகளே, மின் தங்கு நொய் சிறைவண்டு இனங்காள் - மின்ஒளி பொருந்திய மெல்லிய சிறகுகளையுடைய வண்டுக் கூட்டங்களே, நன்று அன்று உனக்குத் திருவொற்றி வேலரை நாடி இடர் இன்று இங்கு நீ கொள்ளல் என்று உரையீர் - `திருவொற்றி நகரிலுள்ள வேலுடை முருகரை விரும்பி இங்கிப்பொழுது நீ துன்பங்கொள்ளுதல் உனக்கு நல்லதன்று’ என்று சொல்கின்றிலீர்!, இனிமேல் எமக்கு நின்று இங்கு நீர் செய்யும் நன்மை என்னோ - இனிமேல் எனக்கு நீங்கள் அருகிருந்து செய்யும் நன்மை என்னவோ, ஒன்றும் நேர்வது இன்று - ஏதும் உங்களால் ஆவது இல்லை.`நன்று, பெயர். `நீ எமக்கு, ஒருமைப்பன்மை மயக்கம். நொய்மை, மென்மை. ஓ ஒழியசை; ஏ ஈற்றசை. `கழிகாள் வண்டினங்காள் உரையீரென்றது ஞாயிறு திங்கள் அறிவே நாணே மென்பதனாற் கொள்ளப்படும் (தொல்காப்பியம், செய்யுள் 202). காமம் மிக்க உறுதுயர்ச் சொல்லாதலிற், கழிகளையும் வண்டுகளையும் விளித்து இவ்வாறு கூறினார். 4. தோழி விரவிக் கூறல் `தோழி விரவிக்கூறல் என்றது, தலைவனது குறையிரப்புக்கு மதியுடம்பட்ட தோழி, தன் தலைவியையும் அதற்கு இசைவித்தல் கருதி, மென்மையும் வன்மையும் விரவிக்கூற லென்பது, முதலில் மென்மையாற் கூறியதோழி, தலைமகள் தனது நாணத்தாற் குறை நேராமை கண்டு, இங்ஙனம் விரவிக் கூறுகின்றாளென்க. திருச்சிற்றம்பலக்கோவையாருள் (84) `விரவிக்கூற லென்று வருந்துறைக்கு ஆசிரியர் பேராசிரியர் மென்மொழியொடு சிறிது வன்மொழிபடக் கூறாநிற்றல் என்று இங்ஙனமே விளக்கமுரைத்தார். (1 முதல் 5 அடி) நேர் இறை முன்கை - ஒத்த வரிகளையுடைய முன்கைகளையும், வார் ஒலிக் கூந்தல் - நீண்ட தழைத்த கூந்தலையும், அரிகடை ஒழுகிய பெருமதர் மழைக்கண் - செவ்வரிகள் முனைவரையில் ஓடிய பெரிய களிப்புப்பொருந்திய குளிர்ந்த கண்களையும், இலவு உறழ்செய்வாய் - இலவின் இதழையொத்த சிவந்த வாயிதழ்களையும், நிலவு உறழ் திருநுதல் - எட்டாம்பிறைத் திங்களைப்போன்ற அழகிய நெற்றியையும், கொடிபுரைமருங்குல் - வஞ்சிக்கொடியை நிகர்க்கும் இடையினை யும், கடிதிகழ்மேனி - ஒளிவிளங்கும் நிறமமைந்த உடம்பினையும் உடைய, கரும்பினும் இனிய - கருப்பஞ்சாற்றினும் இனிய இயல்பினையான, என் அரும்பெறல் பாவாய் - என் பெறலரிய பாவையையனையாய்! என்றது, தோழி தலைவியையென்க. `நேர்இறை முன்கை என்றது ஒத்தவரிகளை (இரேகைகளை) யுடைய முன்கையை; இறை என்பது வரியெனப் பொருடருதல் பிறங்குவரி பொறிவரை இறையாகும் என்னும் பிங்கலந்தையிற் காண்க (ஆடவர்வகை). `ஒலிகூந்தலென்றது, கூந்தலின் அடர்த்தி கூறியவாறு. ஒலிமென் கூந்தல் என்னுங் குறிஞ்சிப்பாட்டுத் (2) தொடர்க்கு ஆசிரியர் நச்சினார்க்கினியருரைக்கும் உரையில் இவ்வுண்மை காண்க. ஒலித்தல், தழைத்தலென்னும் பொருட்டு. விளங்கும்நுதல் ஓர் அரைவட்டம்போற் றோன்றலால், `நிலவென்றற்கு ஈண்டு எட்டாம்பிறைத் திங்களென்று உரைக்கப்பட்டது. மாக்கடல் நடுவண் எண்ணாட் பக்கத்துப் பசுவெண் டிங்க டோன்றி யாங்குக் கதுப்பயல் விளங்குஞ் சிறுநுதல். என்று குறுந்தொகைப் பாட்டிலும் (129) இவ்வியல்பு ஆசிரியர் கோப்பெருஞ்சோழரால் விளக்கமாய் எடுத்துக்காட்டப் பட்டிருத்தல் அறியற்பாலது. மாதரிடைக்கு வஞ்சிக்கொடியுவமையாதல், வஞ்சிம் மருங்குல், வஞ்சியஞ்சும் இடை என்னுந் திருக்கோவையாரிற் (22, 32) காண்க. மேனியை நிறமெனவும் உடம்பெனவும் இரட்டுறமொழிந்து கொள்க. என்னை? நிறமமையாது உடம்பின்கண் விளக்கந் திகழாதாகலினென்பது. `கையுங் கூந்தலுங் கண்ணும் வாயும் நுதலும் மருங்குலும் மேனியும் உடைய பாவாயென எண்ணும்மை விரித்துத் தொடரியைத்துக் கொள்க. பாவாய், உருவகம்; அவற்றுள் இ ஈயாகும் ஐஆய் ஆகும் (தொல்காப்பியம், சொல், 4) என்னுந் தொல்காப்பியத்தான் இதன்கண் ஐயீறு ஆயெனத்திரிந்து விளியேற்றது. (6-7) வழிவழிச் சிறக்கும் எம் கழிபெரும் குலத்தின் - தலைமுறை தலைமுறையாகப் பெருமையிற் சிறந்துவரும் எமது மிகஉயர்ந்த குலத்திற்பிறந்த, பால்கடல் தோன்றிய சீர்த்திரு அனையாய் - திருப்பாற்கடலினின்றும் எழுந்த அழகிய திருமகளையொத்தவளே; வழி, கால்வழி; அடுக்குப் பன்மைப்பொருளது. எம், தன்மைப்பன்மை; உளப்பாட்டுத் தன்மைப் பன்மையன்று. `அனையை யென்னும் முன்னிலைமுற்றுச்சொல் ஈறுதிரிந்து விளியேற்றது. (8-9) வலம்புரி அன்ன - வலம்புரிச் சங்கினையொத்த, எம்குலம்புரி கோமகள் - எங்கள் குலத்தோர் விரும்புகின்ற கோப்பெருந்தாய், அரிதின் ஈன்ற பெருமுத்து அனையாய் - அருமையாய்ப் பெற்றெடுத்த முத்தையொப்பவளே; வலம்புரி, வலமாகச் சுழிந்தமைந்த சங்கு; இதனையே சங்கினங்களில் மிகவும் உயர்ந்ததென்ப. இலங்குநீர்ப் பரப்பின் வளைமீக்கூறும் வலம்புரி யன்ன வசைநீங்கு சிறப்பின். என்னும் பெரும்பாணாற்றுப்படை யடிகளிலும், (34-35) விளங்குகின்ற நீரையுடைய கடலிடத்துப் பிறந்த சங்கில், மேலாக உலகங்கூறும் வலம்புரிச்சங்கையொத்த குற்றநீங்குந் தலைமையினையும் என்று அவ்வடிகட்கு ஆசிரியர் நச்சினார்க் கினியருரைக்கும் உரையிலும் இஃது அறியற்பாலது, இங்கும் `வலம்புரியன்ன கோமக ளென்பதற்கு இத்தலைமைப்பொருளே பொருளாம். எனவே இது பண்புவமையென்க. குலத்துக்கேற்ற ஒழுக்கமுடைமையிற்,கோமகளைக் `குலம்புரி கோமக ளென்றார். குலம், ஆகுபெயர். கோமகளென்றது நற்றாயை. நற்றாயை வலம்புரி யென்றமையின், அவள் அரிதின் ஈன்றமகள் பெருமுத் தெனப்பட்டாள். இவ்வாறு சிறப்பித்துக் கூறுதல் இலக்கியமரபு; இது, தீம்பால் சுமந்து முலைவீங்கித் திருமுத்தீன்ற வலம்புரிபோற் காம்பேர் தோளார் களிறீன்றார் என்னுஞ் சிந்தாமணிச் செய்யுளானும் (முத்தியிலம்பகம், 104) அறியப்படும். முத்துக்களுள்ளும் பருமுத்தங்களே சிறந்தனவாதல் பரூஉக்காழ் ஆரம் (சிலப்பதிகாரம், 4, 41) என்னும் இளங்கோவடிகள் திருமொழியிலும், கிம்புரிப்பகுவாய்க் கிளர்முத்து (சிலப். 5, 150) என்னுமிடத்துக் `கிளர்முத் தென்பதற்குப் `பருமுத்து என உரைக்கும் அடியார்க்கு நல்லார் உரையிலும் அறியப்படும். (10 - 13) மிடி அறியா எம் குடி எனும் முற்றத்து - வறுமையென்பதறியாத எமது குடும்பமென்னும் முன்றிலில், அன்புநீர் பாய்ச்சி - அன்பு என்னும் நீரை நாடோறும் பாய்ச்சி, இன்புஉறக்கைசெய்து - நீயும் நின்னைக் கண்டாரும் மகிழ்ச்சி பொருந்தும்படி ஒப்பனைசெய்து, ஆயமும் யானும் சீரிதின் வளர்க்கும் - தோழியர் கூட்டமும் யானுஞ் செல்வமாய் வளர்த்துவரும், நல்பயன்கனிந்த பொன் சுடர்க்கொடியே - நல்லவாகிய பயன்கள் முதிர்ந்த பொன்னிறமான ஒளிமிக்க பூங்கொடியனையாய்; முற்றம், வீட்டுக்கு முன்னிடம்; இதனை `முன்றிலெனவும் உரைப்ப. நெகிழ்ச்சி, இடங்கண்டவழி விரைந்தோடல், அடைத்தும் அடைபடாமை, உயிர்களை வளர்த்தல், ஈரமுடைமை முதலிய ஒத்த வியல்புகளான், அன்பை நீரெனவே எல்லாத் தமிழிலக்கியங் களும் ஒத்து உருவகப்படுத்துரைப்பவாயின. உரையாசிரியர் பரிமேலழகர் மூன்றாம் பரிபாடலுரையில் (65) அன்பினை மென்மையென்றுரைத்தமையும் இங்கு நினைவுகூரற்பாற்று. கொடிகளுக்குக் கைசெய்தலாவன: கொழுகொழும்புகளை அருகணைத்து அவற்றின் மேல் அவைகளை எடுத்துவிடல், முட்களால் நெருக்குண்டு மடிந்துகிடக்கும் இலைகளையும் மலர்களையும் கொழுந்து வருங் கொடிகளையும் நிமிர்த்திவிடல் முதலாயினவென்க. `ஆயமும் யானும் என்று தன்னை ஆயத்தினின்றும் பிரித்துக் கூறினாள், முதன்மை கருதி. மங்கைப்பருவத்திற் பெண்டிர்க்கு நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு முதலான இனிய பெண்மையியல்புகள் விளைதலின், அவைதாமே ஈண்டுத் தலைவிக்கு `நற்பயன் எனப்பட்டன வென்பது. முற்றம், நீர், பயன், கொடிமுதலானவெல்லாம் உருவகச்சொற்கள். (14-15) நக்கும் - சிரித்தும், புக்கும் - எம் ஆயத்திடைப் புகுந்தும், மிக்க மகிழ்செய்யும் - எமக்கு மிக்க மகிழ்ச்சியை விளைக்கின்ற, செயிர் அற எழுதிய உயிர் ஓவியமே - குற்றம் இல்லையாக எழுதிய உயிருடைய ஓவியமனையாய். காட்சிக்கு இனிதாகிய ஓர் ஓவியம் நகுதலும் அசைதலு மான உயிர்ச்செயலும் உடையதாயின், அது கண்டார்க்கு மிக்க மகிழ்ச்சியை விளைத்திடுமாகலின், இங்ஙனங் கூறப்பட்டது. மகிழ், முதனிலைத் தொழிற்பெயர். (16-18) அருமையின் மிகுந்த எம்பெருமுதல் தந்தை - அருமையினாற்சிறந்த எங்கள் பெருமைமிக்க முதல்வனான கோமகன், ஆற்றா விருப்பொடும் ஏற்றிப்பார்க்கும் - தாழாத விருப்பத்தோடும் ஏற்றிப் பார்க்கின்ற, விளிவுஅற விளங்கிய ஒளிமணிவிளக்கே - அவிதலின்றி என்றும் ஒரு பெற்றித்தாய் விளங்குஞ் செம்மணியின் ஒளிவாய்ந்த விளக்கனையாளே; கல்வி, கேள்வி, செல்வம், செல்வாக்கு, நல்லொழுக்கம், ஈகை, தலைமை, முதலியவற்றாற் பிறரெல்லாரினும் அரியனாய்ச் சிறந்தவனென்றற்கு `அருமையின் மிகுந்த வெனப்பட்டது. விளக்கிலெரியுந் தீப்பிழம்பு செம்மணியின் வடிவத்தை ஒத்திருத்தலின், மணிவிளக் கென்று உவமிக்கப்பட்டது. அன்றி அழகிய விளக்கெனலும் ஆம். விளக்கேற்றிப் பார்த்தலைத் தலைவிக்கு உரைக்கும்போது, `தந்தை அவளை ஈன்றெடுத்துக்காண்டலென்று கருத்துக் கொள்க. ஒவ்வொரு குடியிலும் நன்மக்களைப் பெற்றெடுத்த லென்பது அக்குடிக்கு விளக்கேற்றி வைத்தல் போலாம் எனக் கொள்வது தமிழ்நாட்டார் வழக்கு. இவ்வுண்மை, வருநாளென் றும்பிழையாத் தெய்வப் பொன்னி வளம்பெருக்க வளவர்குலம் பெருக்குந் தங்க டிருநாடு போற்செழியர் தென்னாடு விளக்குஞ் சீர்விளக்கின் செய்யசீ றடிகள் போற்றி என்று சேக்கிழார் பெருமான் மங்கையர்க்கரசியாரைச் `சீர்விளக்கு எனக்கூறி மகிழும் அருளுரையினும் நன்கு பெறப்படும். (19-21) நின் அருள் நாடி - நினது அருளிச்செய்கையை எதிர்விரும்பி, இங்குத் துன்னி நின்று - நின்னை அணுகி நின்று, அடியேன் கூறும் ஒடியாய்ச் சிறுமொழி - அடியேன் சொல்கின்ற கேடில்லாச் சிறுமொழியை, வறிதுஎன ஒழியாது அறிவுகொளல் வேண்டும் - சிறியதென்று நீக்காமல் திருவுளம்பற்றல் வேண்டும்; இங்கு `அருள் என்றது, குற்றங்கண்டவழிப் பொறுக்கும் அருளை. `துன்னி நின்றிங் கென்பது, உள்ளத்தின் அணுக்கத்தை உணர்த்துதற்கெழுந்தது; உடலணுக்கமும் அதன்வழித் தாகலின். `ஒடியாய்சிறுமொழி பயன் விளைத்தலிற் கெடாத சிறுசொல்; என்றது பொருளுரையாகுமென்றற்கு; ஒடியா இப்பொருட்டாதல் ஒடியாவுள்ளம் என்பதனுரையிற் காண்க (பரிபாடல், 2, 36). வறிதுசிறிதாகும் (தொல். உரியியல், 40). பணிவுகாட்டல் கருதிச் சிறுமொழியென்றாள். `அறிவுகொளல் வேண்டு மென்றது, ஆராய்தல் வேண்டுமென்றற்கு; சிறு மொழியை ஏற்றொழுகல் வேண்டுமென்பது குறிப்பு. அடிகண் முன்னர் யானடி வீழ்ந்தேன் வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும் என்னுஞ் சிலப்பதிகாரவடிகள் (13) இவ்வடிகளோடு ஒத்துநோக்கி யுணரற்பாலன. `பாவாய், திருவனையாய், முத்தனையாய், சுடர்க்கொடியே, உயிரோவியமே, மணிவிளக்கே, அடியேன் கூறும் ஒடியாய்ச் சிறுமொழி அறிவுகொளல் வேண்டு மெனத் தொடர்புபடுத்துக. இனி, மேல் `வயலுழவர் முதல் `விளையுள் ஈறாகப் பதினான்கடிகாறும் ஒற்றிமாநகரைச் சிறப்பிக்கு முகத்தால், மருதநிலவளன் கூறுகின்றார். (22- 26) வயல்உழவர் குவளைகட்டு - கழனியிலுள்ள உழவர்கள் குவளைப்பூடு களைந்து, வியல்வரம்பில் - அகன்ற வரம்பின்மேல், தடிந்திட்ட கயலின் இடைப்பட எறிய - கொன்றுபோட்ட கயல்மீன்களின் நடுவில் விழும்படி எறிய, மருதமகள் கருவிழிபோல் பொருவு இன்றித் திருவிளங்க - அக்குவளையின் மலர்கள் மருதநில மகளின் கருவிழியைப்போல் ஒப்பின்றி அழகுவிளங்கவும், `வெள்ளை வெளே லென்று மின்னிக்கிடக்குங் கயல் மீன்கள் மருதமகளின் வெள்விழியாக, அவற்றிடையிற் பொருந்திய குவளை மலர்கள் அவட்குக் கருவிழியாய் விளங்கினவென்க. வயலுழவர், - வயற்கண் உழவர். கட்டல், களைதல்; என்றது `களைகட்ட லென்க; கள் என்னும் முதனிலை இடைநிலையும் வினையெச்ச விகுதியுமான தகரவுகரஞ் சேர்ந்து, ணளவென் புள்ளிமுன் டணவெனத் தோன்றும் (தொல். எழுத்து, 150) என்னும் புணர்ச்சி விதிப்படி ளகரதகரங்கள் டகரமாய் இடைதிரிந்து `கட்டு என முடிந்தமை காண்க. வியல், உரிச்சொல்; வியலென் கிளவி யகலப் பொருட்டே என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார் (உரி. 68). மருதநிலம், வயலும் வயல்சார்ந்த இடமுமாம். இந்நிலம் இங்கு `மகள் என்று உருவகப்படுத்தப்பட்டது. (27-29) நெந்நெல் வித்திய பொன் உறழ் வான்முளை - சின்னாட்குமுன் வித்திய செந்நெல் விதையின் பொன்னொக்குந் தூய முளைகள், புரி அவிழத் தலை விரிந்து - முறுக்குடையத் தாள் விரிந்து, பைத்துஎன்னப் பரந்து இருப்ப - பச்சைப் பசேலெனப் பரந்து திகழவும்; `வித்திய செந்நென்முளையென மாறுக. `செந்நெல், நெற்களுள் உயர்ந்தது; இதனால் இதற்கு `நன்னெல் எனவும் ஒரு பெயருண்டு; இது, செந்நெ னன்னெல் செஞ்சாலிப் பெயர் என்னும் பிங்கலந்தை (மரப்பெயர்) யிற் காண்க. `பொன் பசும்பொன்; இங்கு நிறத்திற்கு உவமை. `பைத்து, பசுமையென்னும் பண்புப்பெயரின் றிரிபு; ஈறுகெட்டு முன்னின்ற மெய்திரிந்து தன்னொற்றிரட்டி முடிந்ததெனக் கொள்க; இது பசுமைநிறத்தை யுணர்த்துதல் திவாகரத்திற் (8) காண்க. (30-34) தென்ஒளிப் பளிங்கினுள் - தெளிந்த ஒளியையுடைய ஒரு பளிங்குப்பேழையுள், அயிர்பெய்து - நுண்மணலையிட்டு, பாசிலையும் சேதாம்பலும் கள் குவளையும் முள் தாமரையும் - பசிய இலைகளையுஞ் சிவந்த ஆம்பன் மலர்களையுந் தேன் பொருந்திய குவளைப்பூக்களையும் முள்ளுள்ள தாமரை மலர்களையும், ஒருங்குபட எழுதி மருஞ்கு வைத்தாங்கு - ஒன்றாய் எழுதிப் பக்கலில் வைத்தாற்போல, நல்பூம்கயங்கள் பொற் பொடும் இமைப்ப - அழகிய பூக்கள் நிறைந்த நீர்க்குளங்கள் ஆங்காங்கு அழகாய் விளங்கவும். பளிங்கு குளத்தின் தெளிநீருக்கு உவமை. `அயிர் நுண்மணற் பொருட்டாதல் `வெள்ளயிர்க்கானல் (இந்நூல், 1, 25) என்புழிக் காட்டப்பட்டது. பசுமை இலை `பாசிலையெனவுஞ், செம்மை ஆம்பல் `சேதாம்ப லெனவுந் திரிந்து புணர்ந்தன. இதனை `ஈறுபோதல் (நன்னூல், பத. 9) என்பதனால் முடிக்க. குளத்தின் நீரைப் பளிங்கெனக்கொண்டு, அதன் அடியிலுள்ள மணற்றரை `அயிர்பெய்து என்னுந்தொடராற் கண்ணுக்குக் காணப்படுவதாக உரைக்குமுகத்தாற் குளத்தின் அடிமுதல் மேல்வரையில் எடுத்துக்காட்டுதலே ஈண்டு ஆசிரியர் கருத்து. ஆம்பல், குவளை, தாமரை, முதலாகுபெயர். `ஆங்கு உவமவுருபு; கடற்கண்டாங்கு (திருமுருகாற்றுப் படை, 2) என்புழிப்போல. ஆசிரியர் ஈண்டுச் சேதாம்பலுங் கட்குவளையும் முதலாயின வெடுத்துக்காட்டிப் பொய்கையினியல்பை விளக்குதல்போலவே, முட்டாள சுடர்த்தாமரை கட்கமழு நறுநெய்தல் வள்ளித ழவிழ்நீல மெல்லிலை யரியாம்பலொடு வண்டிறை கொண்ட கமழ்பூம் பொய்கை. என்று ஆசிரியர் மாங்குடிமருதனாரும் மதுரைக்காஞ்சியில் (249- 253) உரைத்தல் கண்டுகொள்க. (35) தண்ணடைமருவிய தணியாவிளையுள் - மருதநிலங்கள் பொருந்திய குறையாத விளைவினையுடைய, திருவொற்றியூ ரென்று மேலடியோடு ஒட்டுக. தண்ணடை, மருதநிலம்; இஃதிப்பொருட்டாதல், தலையளித்தான் தண்ணடையுந் தந்து என்னும் புறப்பொருள் வெண்பா மாலையிற் (2, 12) காண்க. `விளையுள் உள் விகுதிபெற்ற தொழிலடியாகப் பிறந்த பெயர்; பெயலும் விளையுளும் என்பது திருக்குறள் (545). விளங்கவும் (26), பரந்திருப்பவும் (29), இமைப்பவும் (34) தண்ணடை மருவிய விளையுள் `ஒற்றிமாநகர் என்று வினையெச்சங்கட்கு உம்மைவிரித்துக் கூட்டிக்கொள்க. (36-44) ஒற்றிமாநகரின் - திருவொற்றிமாக் கோயிலின்கண், முற்பட அமர்ந்த - சிவபிரானெழுந்தருளிய கருவறைக்குநேரே முன்னிடத்திற் குடிகொண்டெழுந்தருளிய, உட்கு உடை முருகன் - தெய்வத்தன்மையாற் கண்டார் அஞ்சுதற்கு உரிய முருகப் பிரானை, கண்கண்டாங்கு - கண்ணெதிரே கண்டாலென்ன, பார்த்து ஆனாப் பயில்வடிவின் - கண்ணாற் கண்டு அமையாத அகக்கண்ணெதிரே பலகாலுந் தோன்றும் வடிவினையும், ஓர்த்து ஆனா உரன் உணர்வின் - ஆராய்ந் தமையாத சிறந்த அறிவினையும் உணர்ச்சியினையும், சொல் ஆனாப் பல்புகழின் - சொல்லியமையாத மிக்க புகழினையும் உடைய, தாள்தொட வீழ்ந்த கையன் - முழந்தாளிற் பொருந்தும்படி வளர்ந்த கையினனும்; தோள்தொடு பொன்ஞாண் பிணித்த வில்லன்- தோளிற்பொருந்தும் பொற்கயிறுகட்டிய வில்லினனும்; கணையன் - அவ்வில்லிற் றொடுக்கும் அம்புகளையுடையவனும்; மின்ஞாண் பிணித்த குஞ்சியன் - மின்னுகின்ற பொன்ஞாணால் வளைத்துக்கட்டிய மயிர்முடியினனும்; இளைஞன் - கட்டிளம் பருவத்தினனும்; அரியன் - யாவராலும் அணைதற்கரியவனும்; பெரியன் - அதற்கேற்பப் பெருந்தகைமையுடையவனும்; திருவளர் செல்வன் - செல்வங்கள் ஓங்குகின்ற நிறைவுடையவனும் ஆன அவன், வடிவின் உணர்விற் புகழிற்கையன்; வில்லன்; கணையன்; குஞ்சியன்; அரியன்; பெரியன் செல்வன் என இயைக்க. இந்நூல்கொண்ட முருகப்பெருமான் திருவொற்றியூர்ச் சிவபிரான் திருக்கோயின் முகப்பில் எழுந்தருளியிருப்பவ னென்பார், முற்படவமர்ந்த வென்று கிளந்தார். ஆனா, ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்; அமையாத வென்பது பொருள்; அமைதிப்படாத வென்றுகொள்க; கொலையானாக் கூற்றம் என்பது புறப்பொருள் வெண்பாமாலை (காஞ்சி, 13). பயிலல், பலகாலுந்தோன்றல்; பயிற்றி என்பதற்குப் பலகாலுங்கூறி என்று புறநானூற்றுரைகாரர் (34) பொருளுரைத் தமையால் அச்சொற் பலகால் நிகழும் நிகழ்ச்சியினை யுணர்த்துதல் அறியப்படும். வடிவு, உணர்வு, புகழ் என்பவற்றிற்கு இரண்டாவது விரிக்க. இன், சாரியை. `தாடொட வீழ்ந்தகை என்பது தாடோய் தடக்கை (புறநானூறு, 90) என்று இலக்கியங்களிற் பயின்றுவரலறிக. கையன், வில்லன் முதலாயின குறிப்புவினைப் பெயர்கள். `செல்வம் நிறைவு; செல்வமென்பது சிந்தையிநிறைவே யென்னும் மணிமேகலையடிகள் இங்கு நினைவுகூரற்பாலது. (45) இன்னுங், குடியினாலுங் குலத்தினாலுங் குற்றமொன்று மில்லாதவன். குடியென்பது குடும்பம், அதாவது ஒருவனைச் சூழ்ந்த அகச்சுற்றம்; குலமென்பது புறச்சுற்றம். குடியின் கண்ணுங் குலத்தின் கண்ணுமென ஏழனுருபு விரித்தலுமாம். (46-47) பெறுவது ஒன்று உடையன்போல - என் மாட்டுப் பெறுவதொரு பொருளுடை யான்போல, மறுவந்து - சுழன்று, பல்நாள் எனினும் என்சொல் நிலைதவறான் - அதனைப் பெறுதற்குப் பலநாட்கள் கழிந்தனவேனும் யான் எனது சொல்லால் நிறுத்திய நிலையினின்றுந் தவறான். மறுவந்து, மறுவா பகுதி; சுழன்று, இஃதிப்பொருட்டாதல் மறுவந்துமயங்கி என்னும் பெருங்கதையிலும் (33, 127), மறுவரற்பொழுதில் என்னும் அகநானூற்றினுங் (22) காண்க. (48) குறித்தது - தான் சொல்லுவதற்கு உள்ளத்திற் குறித்ததை, கிளவாது செறித்தலும் செறிப்பன் - வெளிப்படச் சொல்லாமல் தன்னுள்ளத்தே அடங்குதலுஞ் செய்வன். குறித்தது, செயப்பாட்டு வினைப்பொருளின் வந்த வினைப்பெயர் கிளத்தல் -வாய்விட்டுச் சொல்லல்; செறித்தல், உள்ளடக்குதல்; இப்பொருட்டாதல் செறிவறிந்து சீர்மை பயக்கும் என்னுந் திருக்குறளிற் (123) காண்க. செறித்தலுஞ் செறிப்பன் என்றதிற் பின்னின்றது செய்வன் எனக் காரியவாசக மாய் நிற்றல் நச்சினார்க்கினியருரையிற் (தொல்காப்பியம், 112) காண்க. (49-51) உருமும் உளியும் அரவும் பிரியா - இடியோசையும் கரடிகளும் பாம்புகளும் விட்டுநீங்காத, ஆர்அதர் நீந்திச் சீரிதின் போந்து - கொடிய காட்டுவழியைக் கடந்து நலமாய் வந்து, திரிதரும் நாள்களும் பல - நாம் இருக்கும் புனங்களிற்றிரிகின்ற நாள்களும் பலவாகும்; உளியம் - கரடி; கோள்வல் உளியம் என்பது சிலப்பதிகாரம் (13, 5). அதர் - வழி, ஆனினங் கலித்த அதர் என்பது புறநானூறு (138); ஆர்கொடுமை மேற்று; அன்றிக் கடத்தற்கரிய வழியெனலுமாம், நீந்தி, கடந்தென்றற்கு; ஆவது கடந்துவருதலின் அருமையைக் குறித்தது, உம்மை முற்று. (51-56) ஒருநாள் - ஒருநாளன்று, நம் மலை அகன்சாரல் - நமது அகன்ற மலைப்பக்கத்தில், தலைமையொடு பொலியும் ஆராமத்தின் - முதன்மையுடன் விளங்குஞ் சோலைக்கண், நீ வாராயாக ஒருதனிச் சென்றேன் - நீவரவில்லையாகத் தனியே சென்ற யான், பரிவொடு புகுந்து - வருத்தத்தோடு உள்நுழைந்து, பால்நீர்வாவியின் மேவிநிற்ப - பாலைப்போலுந் தெளிநீரை யுடைய குளத்தின்கரையிற்சென்று நிற்க, அவனும் ஆண்டு எய்தி என்னொடு நின்றனன் - அத்தலைமகனும் அவ்விடத்தில் வந்து என்னொடு நின்றான்; `ஆராமம், மலைச்சோலை; இப்பொருட்டாதல் பிங்கலந்தையிற் காண்க. `வாராயாக வென்பதன் ஆக, செயவென் வினையெச்சவீறு சென்றேன், வினைப்பெயர். பரிவு - வருத்தம்; பரிபாடல், 8. மண்வளமும இனிமையும் மிக்க நீர் பால்போல் வெண்ணிற முடையதாய்க் காணப்படுமாகலின், `பானீர் எனப்பட்டது. உம்மை, எச்சம். (56-64) நொய்தின் திரைபொரு கரையில் புரை இன்று ஓங்கி - இலேசாக அலைகள் மோதுகின்ற அக்குளக்கரையிற் குற்றமில்லாமல் வளர்ந்து, பசும்குழை கலித்து - பசியதளிர்கள் தழைத்து, நசை நனை அரும்பி - விருப்பம் உண்டாக்கும் பூமொட்டுகள் அரும்பெடுத்து, தென்றலொடு புகுந்த வண்டு இசைப்பாணன் இனிமையின் மிழற்றும் தனி இசைக்கு உவந்து - தென்றற்காற்றொடு நுழைந்த வண்டென்னும் இசைமிக்க பாட்டுவல்லான் இனிதாக இசைக்கும் ஒப்பற்ற இசைக்கு மகிழ்ந்து, பொதி அவிழ் மலரின் நறவு உணக்கொடுத்து - அதற்குப்பரிசிலாக இதழ்க்கட்டு அவிழ்ந்த தன் மலர்களின் தேனை அவை உண்ணும்படி ஈந்து, நினைதொறும் சுவைக்கும் நீல்நிறக் கனிகள் இலைதொறும் குழும நலம் மிகப்பயக்கும் கோழரைநாவல் - நினைக்குந்தோறும் நாவூறுகின்ற நீலநிறப் பழங்கள் இலைகள்தோறுந் தொகுதியாய்ப் பழுத்திருத்தலால் தன்னை அணுகினார்க்கு நன்மையை மிகவும் விளைக்கின்ற வழுவழுப்பான அடியினையுடைய நாவன்மரம், கோட்டின் உகுப்ப - இசைகேட்ட மகிழ்ச்சியினாற் கிளைகள் அசைந்து அப்பழங்களைச் சொரிய; நொய்மை, இலேசு; கலித்தல், தழைத்தல்; இதற்கு இப்பொருளுண்மை தூவற்கலித்த தேம்பாய் புன்னை என்னும் புறநானூற் (24)றுரையில் காண்க. `வண்டிசைப் பாணன் இடையே பண்பொட்டு விரித்துக் கொள்க. நீல், கடைகுறைந்தது; நீனிறவிசும்பு (பட்டினப்பாலை, 67) என்பதிற்போல, நாவற்பழங்கள் தொகுதி தொகுதியாய்க் காய்த்துப் பழுத்திருத்தலாற் `குழும வென்றார். குழுமல் தொகுதிப் பொருட்டாதல் திவாகரத்திற் (8) காண்க. மரத்தின் அரைகள் கோழரை, பொகுட்டரை, முள்ளரை, பொரியரையென நான்கு வகைப்படும்; நாவல் கோழரையினது. `ஓங்கி கலித்து அரும்பி உவந்து கொடுத்த நாவல் உகுப்ப வென்க. (65-73) பால் இடை விழூஉம் நீலமணி கடுப்ப - பாலினுள் விழுகின்ற நீலநிறமான மணியை ஒப்ப, ஆம் இடை விழூஉம் அரும் சுவைக்கனிகள் - குளத்து நீரினுள் விழுகின்ற மிக்க சுவையினை யுடைய அப்பழங்களை, அளைஇடைத் துஞ்சும் அரும்பெடைக்கு அளிப்ப - வளையினுள் துயில்கொண்டிருக்கும் அருமையுடைய தன் பெட்டை நண்டுக்குக் கொடுக்கும் பொருட்டு, வேப்பின் கொழுநனை ஏய்க்கும் நெடும் கண் கவைக்கால் அலவன் தாள் இடை இடுக்கி - வேம்பின் செழுமையான அரும்பையொத்த நீண்ட கண்களையும் இருபிளவான கால்களையும் உடைய ஆண்ஞெண்டு தன் கால்களினிடையில் இடுக்கியபடியாய், அன்புடன் சென்று ஆங்கு அருந்துதல் நோக்கி - அன்பொரு போய் அவ்வளையின்கண் உள்ள தன்பெடை நண்டுக்கு ஊட்டுதலைப் பார்த்து, என்னையும் நோக்கினன் அன்னதும் நோக்கினன்- அதன் காதலை வியந்து என்னையும் பார்த்தான் அதனையும் பார்த்தான், உய்குவது அறியான்போலச் செய்குவது ஒன்றும் காணாது அன்று நின்றனனே - உயிர்பிழைப்பதற்கு வழி யொன்றும் அறியாதவன் போலச் செய்வதொன்றும் அறிய மாட்டாதவனாய் அன்று அலமந்து நின்றான். பானீர்வாவியின் நீனிறக்கனிகள்விழுதலிற், `பாலிடை விழூஉம் நீலமணிகடுப்ப வென்று உவமை கூறினார். `ஆம், நீர்; இஃதிப்பொருட்டாதல் அறுநீர்ப்பைஞ்சுனை ஆம் அறப்புலர்தலின் என்னும் அகநானூற்றடியிற் (1, 12) காண்க. அருமை, ஈண்டு மிகுதிமேற்று. கனிகள் செயப்படு பொருளுருபு விரித்துக்கொள்க. துஞ்சுமென்று இன்றுயில் குறிக்கப்பட்டது, இங்குக் காட்டப்படுங் காமவின்பத்துக் கேற்ப; `வேப்பு, இடைவலித்தது. வேம்பின் நனை அலவன் கண்களுக்கு உவமையாதல் பழைய இலக்கியங்களிற் பெருவரவிற்று; வேப்புநனை யன்ன நெடுங்கட் கள்வன் என்பது ஐங்குறுநூறு (கள்வன் பத்து, 10 ). ஞெண்டுக்குப் பிளவுபட்ட கால்களுண்மையிற், `கவைக்காலலவன் என்றார்; இவ்வியற்கை யுண்மை. மிதியுலைக் கொல்லன் முறிகொடிற் றன்ன கவைத்தா ளலவ னளற்றளை சிதைய (பெரும்பாணாற்றுப்படை, 208) என ஆசிரியர் உருத்திரங்கண்ணனார் ஓரரிய உவமையுடன் எடுத்துக் கூறி விளக்குதலின்வைத் தறிந்துகொள்ளப்படும். ஞெண்டுவின் வளைக்கு `அளை யென்னும் பெயர் வழக்காதலும், இவ்வடிகளில் `அளைசிதைய வென வருமாற்றாற் கண்டுகொள்க. அருத்தல், அருந்தும்படி செய்தல்; பிறவினை. `ஆண்ஞெண்டு தன் பெடைக்குக் காதல் அன்புடன் அருத்தி மகிழ்தல் கண்டு, அம்முகத்தால் முருகனுந் தன் தலைவியின் நினைவெழப்பெற்றுக் காதலன்பில் உருகி ஆற்றானாய்த் தனதெண்ணத்தை முடித்துவைக்குமாறு என்னை நோக்கினன்; மீண்டும் வேட்கைமிகுதியால் அஞ்ஞெண்டையும் நோக்கினன்; அங்ஙனம் நோக்கினமை எனக் கதனைக் குறிப்பித்தமை போலாயிற்று என்பது. ஒருகாற் கண்டு தரிக்குந் தன்மைத் தன்றாம் வேட்கை என்னும் இறையனாரகப் பொருளுரை (30-ஆம் நூற்பாஉரை;) இங்கு நினைவுகூரற்பாலது. `உய்குவதறியா னென்றது, வேட்கைமிகுதி கருதி; அவ்வேட்கையின் மயக்கத்தாற் செய்குவதொன்றுங் காணாது நின்றனன். செய்குவது, குசாரியை; நின்றனனே, ஏ இரக்கப் பொருளது. (74-79) கொன் உறு பேய்கண்ட அனைய பெற்றியன் ஆகி - அஞ்சுதல் பொருந்திய பேயினைப் பார்த்தாற்போல்வதொரு தன்மையனாய், நிறையும் அறிவும் முறைமுறை சாய - உளத்தை ஒருவழி நிறுத்துதலும் அறிவும் ஒன்றன் பினொன்றாய்க் கெட, துன்று நிலை நீங்கா மரம்போல் - பொருந்தும் நிலையினின்றும் நீங்காத மரத்தைப் போல், கன்றிய நோக்கமொடு நின்றவன் நிலை - நைந்த நோக்கத்தொடு நின்றவனது நிலையை, நீ கண்டனையேல் நீ - பார்த்தனையானால், நெஞ்சம் நெக்குஉருகி - உள்ளம் உடைந்து உருகி, இன் உயிர் வாழலை - நினது இனிய உயிரொடு வாழ்தல் செய்யாய். அவன் எங்ஙனம் வாழ்தல் செய்வான் என ஒழிந்தபொருளை யுணர்த்தலின், மன், ஒழியிசைப் பொருளது; ஏகாரங்களிரண்டும் அசைகள். `வாழலை எதிர்மறைக் கண் வந்த முன்னிலை முற்று. கொன் அச்சப்பொருட்டாய்ப் பேயினை அடுத்துவந்தது. இஃதிப்பொருட்டாதல் திவாகரத்திற் காண்க. பேய்கண் டன்னதுடைத்து என்னுந் திருக்குறளுக்குப் (565) பரிமேலழகியார் கூறியவுரையையுங் காண்க. நிறை, தொழிலடியாகப் பிறந்த பெயர்; கருதிய வழியெல்லாம் உள்ளத்தைச் செல்லவிடாமல் நிறுத்துத லென்பது; கண்டுழியெல்லாம் உள்ளத்தைச்செலீஇ உள்ளத்தின் வழி ஓடுமாகலான் நிறையிலனாம் எனவருங் களவியலுரை யிலும் (35) இவ்வுண்மை காண்க. `துன்று நிலை, பொருந்திய நிலை; ஆவது நின்றநிலை யென்க. `நின்றவன் நிலை நீ கண்டனையேல் உயிர்வாழலை மன்னேயென்க. 65 ஆம் அடிமுதல் இவ் ஈற்றடிகாறும் உரைக்கப்பட்ட இப்பொருள், நீகண் டனையெனின் வாழலை நேரிழை யம்பலத்தான் சேய்கண் டனையன்சென் றாங்கோரலவன்றன் சீர்ப்பெடையின் வாய்வண் டனையதோர் நாவற் கனிநனி நல்கக்கண்டு பேய்கண் டனையதொன் றாகிநின் றானப் பெருந்தகையே என்று திருச்சிற்றம்பலக் கோவையாருள் (84) `தோழி விரவிக் கூறல் என்னும் இத்துறைமேலதாகவே சொல்லும் பொருளும் ஒப்ப உணர்த்தப்பட்டிருத்தல் அறியற்பாலதாகும். இச்செய்யுளை, `அரும்பெறற்பாவாய்! (5) திருவனையாய் (7) முத்தனையாய் (9) சுடர்க்கொடியே (13) உயிரோவியமே (15) மணிவிளக்கே (18) அடியேன் கூறுஞ்சிறுமொழி அறிவுகொளல் வேண்டும் (18-21), குவளை கருவிழிபோல் (25) திருவிளங்க (26), வான்முளை (27) பைத்தென்னப் பரந்திருப்ப (29), நற்பூங்கயங்கள் பொற்பொடும் இமைப்பத் (34) தண்ணடை மருவிய தணியாவிளையுள் (35) ஒற்றிமாநகரின் (36) முருகனைக் கண்டாங்கு (37); கையன் (41), வில்லன், கணையன் (42), குஞ்சியன், இளைஞன், (43) அரியன் பெரியன், திருவளர்செல்வன் (44), வடுவொன்றில்லான்; பெறுவதொன்றுடையன் போல மறுவந்து (46) என்சொன்னிலை தவறான் (47); குறித்தது கிளவாது செறித்தலுஞ் செறிப்பன் (48); சீரிதிற் போந்து (50) திரிதருநாள்களும் பல; ஒருநாள் நம் (51) மலையகன்சாரல் (52) ஆராமத்தில் நீ வாராயாகத் (53)தனிச்சென்றேன் புகுந்து (54) வாவியின் மேவிநிற்ப, அவனும் ஆண்டு (55) எய்தி என்னொடு நின்றனன் (56); அங்குக் கரையின் ஓங்கி (57) நலமிகப் பயக்கும் (63) நாவல் உகுப்ப (64); ஆமிடைவிழூஉம் அருஞ்சுவைக் கனிகளைப் (66) பெடைக்களிப்ப (67) அலவன் இடுக்கிச் (69) சென்று அருத்தல் நோக்கி (70), என்னையும் நோக்கினன் அன்னதும் நோக்கினன் (71), செய்குவதொன்றுங் காணாது நின்றனன் (73); நின்றவன்நிலை (79) நீ கண்டனையேல் (74), இன்னுயிர்வாழலை (75); யென்று வினைமுடிவு செய்துகொள்க. 5. தோழி முன்னுறவுணர்தல் என்றது, தோழி, தலைவிக்கு முன்இயற்கைப்புணர்ச்சி யுண்மையைக் குறிப்பாலுணர்தல்; என்னை? முன்னுற வுணர்தல் குறையுற வுணர்தல் இருவரு முள்வழி யவன்வர வுணர்தலென் றம்மூன் றென்ப தோழிக் குணர்ச்சி என்பது களவிய(7)லாதலின், `முன்னுற வுணர்தல் என்பதனை `முன் `உறவு `உணர்தல் என மூன்று சொல்லாகப் பிரித்து, `முன்னே தலைவிக்குந் தலைவற்கும் உண்டான உறவாகிய இயற்கைப் புணர்ச்சியினை யுணர்தல் என்று பொருளுரைத்துக் கொள்க; முன்னுற்றதனை யுணர்தலானே இதற்கு முன்னுற வுணர்தலென்று பெயராயிற்று என்றார் பேராசியரும், (திருக்கோவையார், 62). நிலையுந் திரிந்து நிறையுங் கடந்து தலையுங் கவிழ்ந்த தகையண் - மலைநிவந்த தென்னப் பொலியு மெயிலொற்றிச் செவ்வேண்மேன் மன்னுங் கருத்துடைய மாது. (இ-ள்) மலைநிவந்தது என்னப் பொலியும் - மலை உயர்ந்த தன்மைத்து என்னும்படி விளங்குகின்ற, எயில் ஒற்றிச் செவ்வேள்மேல் - மதில்களையுடைய திருவொற்றியூரில் திருக்கோயில் கொண்டருளிய முருகப்பெருமான்மேல், மன்னும் கருத்துஉடையயை மாது - நிலைபெற்ற உள்ளம் உடைய தலைவி, நிலையும் திரிந்து - பெண்மை நிலையும் மாறி, நிறையும் கடந்து - மனத்துள்ள மறைபொருளையுந் தன்வயமின்றியே வெளிவிட்டுச் சொல்லி, தலையும் கவிழ்ந்த தகையள் - பின் அது சொல்லினமை நினைந்து நாணத்தால் தலையுங் குனிந்த தன்மையளாவள். செவ்வேண்மேன் மன்னுங் கருத்துடையமாது தலையுங் கவிழ்ந்த தகையளென்க. நிலைதிரிதலாவது, பெண்மையெனப்படும் நாணம் மட மச்சம் பயிர்ப்புகள் தன்வய மின்றியே மாறுதல். நிறை, உள்ளத்துள்ள மறைவினைப் புலப்படாது நிறுத்துதலென்பது. தலைவி, மறைவிலொழுகிய களவொழுக்கத்தால் நிலையும் நிறையுங்கடந்து நாண்மிக்குத் தலையுங் கவிழ்ந்ததகைய ளாயினாளென்க. உம்மைகள், எச்சம். மலை, உவமை; நிவந்த, உயர்ந்த; ஓங்கிய வொருகுடை யுருகெழு மதியினிவந்து என்பர் ஆசிரியர் கோவூர்கிழாரும் (புறநானூறு, 31). மேல்: ஏழாம்வேற்றுமை இடப்பொருளது. `மன்னும் நிலைபேறுணர்த்தும் மன்னென்னும் இடைச் சொல்லடியாகப் பிறந்த செய்யு மென்னும் வாய்பாட்டுப் பெயரெச்சவினை (5). 6. பிரிவாற்றாத தலைவிக்குத் தோழி கூறல் மாதே பெரிதும் வருந்துவ தென்னை மனந்திரித லேதே யறியிற் கொடுமையன் றோவன்னை யீர்ம்பொதும்பிற் சூதேய் துணைமுலை யாகந் தழுவித் துயர்மிகுத்த போதேர் பொழிலொற்றிச் செவ்வேள் வரையப் புகுந்தனனே (இ-ள்) மாதே - என் அருமைத் தலைமகளே, பெரிதும் வருந்துவது என்னை - நீ மிகவுந் துன்புறுவது என், மனம் திரிதல் ஏது அன்னை அறியின் கொடுமையன்றோ - நினது நெஞ்சந் திரிதற்கான ஏதுவைத்தாய் அறியுமானால் தீங்கு நேருமன்றோ, ஈர்ம் பொதும்பில் - குளிர்ந்த பொழிலில், சூது ஏய் துணைமுலை ஆகம் தழுவித் துயர்மிகுத்த - சூதுக்காய்களை மாறுபடுக்குங் கொங்கைகள் நெருங்கிய நின்மார்பை அணைந்து இத்துன்பத்தை விளைத்த, போது ஏர்பொழில் ஒற்றிச்செவ்வேள் - மலர்களின் அழகு விளங்குகின்ற சோலைகள் சூழ்ந்த திருவொற்றிப் பெருமான், வரையப் புகுந்தனன் - வரைதற்கு வந்துவிட்டனன்; எனவே நீ வருந்தற்க வென்பது. மனந் திரிதலேது, ஏதுப் பொருளின் வரும் நான்கனுருபும் பயனும் விரித்துக்கொள்க. ஓகாரம், வினா; ஈது அறிபொருள் வினாவின் கணடங்கும்; இளம் பூரணர் இன்னோரன்னவற்றை `அறிவொப்புக்காண்டல் வினா என்பர். இவ்வியல்புகளெல்லாம் செப்பும் வினாவும் வழாஅ லோம்பல் என்னுந் தொல்காப்பியச் சொல்லதிகார நூற்பா (13) வுக்குப்போந்த இளம்பூரணர் சேனாவரையருரை களிற் கண்டுகொள்ளப்படும். அன்னை, ஈண்டு நற்றாய்; அன்றிச் செவிலித்தாய் எனினும் அவரிருவரெனினும் அமையும். பொதும்பெனப்பட்டது, மரச்செறிவு மிக்க சோலையாதலின்; ஈண்டுக் கூறப்படும் ஆகந்தழுவிய செய்தி குறியிடத்து நிகழ்ச்சியை யுணர்த்துகின்றமையான், அந்நிகழ்ச்சிக் கேற்பப் பொதும்பு கூறப்பட்டது. இப் பொதும்பினியல்பை நல்லிசைப்புலமை வாய்ந்த ஆசிரியர் நக்கீரனார். சந்தனமுஞ் சண்பகமுந்தேமாவுந் தீம்பலவும் ஆசினியும் அசோகுங் கோங்கும் வேங்கையுங் குரவமும் விரிந்து, நாகமுந் திலகமும் நறவும் நந்தியும் மாதவியும் மல்லிகையும் மௌவலொடு மணங்கமழ்ந்து, பாதிரியும் பாவை ஞாழலும் பைங் கொன்றையொடு பிணியவிழ்ந்த பொரிப்புன்கும் புன்னாகமும் முருக்கொடு முகைசிறந்து, வண்டறைந்து, தேனார்ந்து, வரிக்குயில்க ளிசைபாடத் தண்டென்றல் இடைவிராய்த் தனியவரை முனிவுசெய்யும் பொழில் என்றும், வண்டுந் தும்பியும் வரிக்கடைப் பிரசமுங் கொண்டுபுணர் நரம்பென்று முரன்று, ஐந்து வாயிலானுங் கொள்ளப்படுந் துப்புரவினைத் தன்னகத்துடைத்தாய்ப் பல்வகைப்பட்ட மரங்களானும் பொலிவுடைத்தாய்ப், புறத்தார் அகத்தாரைக் காண்பதரிதாய் அகத்தார்புறத்தாரைக் காண்பதெளிதாய் விழைவு விடுத்த விழுமியோரையும் விழைவு தோற்றுவிக்கும் பண்பிற்று (இறையனாரகப் பொருள், 2, 18). என்றும் மிக அழகாக உரைத்து விளக்குகின்றமை இங்குப் பெரிதும் நினைவுகூர்ந்து மகிழற்பாலதாகும். ஏய், உவமவுருபு; கஞ்சுகமேய்க்குங் கனங்குழையே (திருக்கோவையார், 15) என்பதிற்போல. `போது காலவாகுபெயராய் மலரை யுணர்த்திற்று. `புகுந்தன னென்றது, இனிப்புகுவானை; இங்ஙனங் கூறினாள், புகுதலின் விரைவு உணர்த்தித் தலைமகளைத் தேற்றுதற்பொருட்டு; விரைவின்குறிப்புத் தோன்று இறந்த காலத்தின் வைத்து இவ்வாறு கிளத்தலெல்லாம் வாராக்காலத்து (தொல்காப்பியம், வினையியல், 46) மென்பதனான் முடிக்கப்படும். ஏகாரங்கள் மூன்றனுள் முன்னது விளியெனவும் ஏனைய அசைகளெனவுங் கொள்க 7. இனநலனுரைத்தல் அடிகள், தமக்குச் சமயநூலுண்மைகள் அறிவுறுத்த சமயாசிரியரையே `இனநலன் எனக்கொண்டு, அவரது சார்பால் தமக்குத் திருவருளுணெறிசாரும் வாயில் வாய்த்தமை இதன்கண் உரைத் தருளுகின்றார். (1-2) புகல் அரு நூழையில் - புகுதல் அருமையான சிறிய நுழைவாயிலில், போக்கு அரும் பொருள்போல் - நுழைத்தல் அருமை யான பெரிய பொருளைப்போல், இகல் அறு சைவத் திறம் செலா நெஞ்சினர் - மாறுபாடற்ற சைவக்கோட்பாடு கள் ஏறாத நெஞ்சினையுடையவரும்; `புகலும், போக்கும் தொழிற்பெயர்கள்; இகல், தொழிலாகு பெயர்; நுழையும் வாயில் `நூழை யெனப்பட்டது; இப்பொருட்டாதல் பிங்கலந்தை (4) யிற்காண்க. சைவசமயம் ஏனைச் சமயங்களொடு மாறுபடாமல், அவையனைத்தையுந் தனக்கு உறுப்புக்களாகக்கொண்டு அவற்றொடு பொருந்தியமைதலின், `இகலறுசைவம் எனப் பட்டது; இவ்வரிய உண்மை, ஓதுசம யங்கள்பொரு ளுணரு நூல்கள் ஒன்றோடொன் றொவ்வாம லுளபலவு மிவற்றுள் யாதுசம யம்பொருணூல் யாதிங் கென்னி னிதுவாகு மதுவல்ல தெனும்பிணக்க தின்றி நீதியினா னிவையெல்லா மோரிடத்தே காண நின்றதியா தொருசமய மதுசமயம் பொருணூ லாதலினா லிவையெல்லா மருமறையா கமத்தே யடங்கியிடு மவையிரண்டு மரனடிக்கீ ழடங்கும் எனச் சிவஞானசித்தியா (8,13) ரென்னுஞ் சைவசமய நூலில் தெளிவாய் எடுத்தோதப்படுதல் காண்க. ஈதுணரமாட்டாப் பிறசமயத்தார் சைவசமயந் தத்தஞ் சமயங்கட்குமாறாவதென்று பிழைபடக்கருதி, அதனை ஏலாதொழிவராகலின், அவர் கருதுமாறுபோற் சைவசமயம் அத்தன்மைய தன்றென்று இங்குத் தெளிவாய் உணர்த்தியவாறு. `திற மென்னுஞ் சொல் ஈண்டுச் சைவசமயத்தின் பொருட் கூறுபாடு குறித்து நின்றது; திறம் - கூறுபாடு; நிற்றிறஞ்சிறக்க என்றார் புறத்தினும் (6). `செலா நெஞ்சின ரென்றது, நுண்பொருள் செல்லுந் தகுதியற்ற பருப்பொருணினைவினை யுடையா ரென்றற்கு. (3-4) நெறிப்படு மக்கட்கு - வழிச்செல்லும் மக்கட்கு, அறிவு பேதுறுக்கும் - அவரறிவை மயங்கச் செய்கின்ற, கவலையின் - கவர்த்த வழியைப்போல், பிறரை மயக்குநர் - பிறரை மயங்கச் செய்கின்றவரும்; `நெறிப்படுமக்கள் என்னுங் குறிப்புச் சைவநெறியிலொழுகா நிற்குஞ் சைவ நன் மக்களைக் குறித்தது; பிறரை என்றதும் அவரையே; ஈது அதிகாரத்தாற் பெறப்படும். `கவலை யென்றது ஈண்டுச் சமண் சமயத்திற்குவமை. மேல்வருவனவும் அன்ன. `பேதுறுத்தல் அறிவை மயங்கச்செய்தல். `மயக்குநர் என்பதில் நகரவொற்றுப் பெயரிடை நிலை. (4-5) உவல் இடு பதுக்கையின் - தழைகள் பெய்து மூடப்பட்ட கற்குவியல்போல், புன்பொருள் அகத்து இடு கரவினர் - இழிந்தகருத்துக்களை நெஞ்சினுள் இட்டுவைத்த கள்ள முள்ளவருமான, `உவல் தழையென்னுப் பொருட்டாதல் புறநானூறிற் காண்க (262). `பதுக்கை, மறைப்பிடம்; பதுக்கிவைத்தலின் வந்த தொழிலாகு பெயர்; வழிப்பறிகாரர் தம்மாற் கொல்லப் பட்டார்மேற் கற்களைக் குவித்து அக்குவியல்மேல் தழை பெய்து மூடிவைக்கும் உண்மை, செந்தொடை பிழையா வன்கண் ஆடவர் அம்புபட வீழ்ந்தோர் வம்பப் பதுக்கை என்னும் புறநானூற் (3) றினாலும் பெறப்படும்; பதுக்கை, அகத்துக்கு உவமை. பொருளென்றது, கருத்து; நிற்பெறு பொருளில் என்று மேல் (39) வருதலுங்காண்க. (6-13) புனைமாண்கோதை பொருந்தச் சூட்டியும் - புனைதல் மாட்சிமைப்பட்ட பூமாலையைக் கூந்தலுக்குப் பொருந்துமாறு சூட்டியும், வினைமாண் விளங்கு இழை வீறுபடத் திருத்தியும் - தொழில் நலஞ் சிறந்த ஒளிவிளங்கும் மணிகளிழைத்த அணிகளைத் தனிச்சிறப்புண்டாகத் திருத்தமாய் அணிந்தும், கொழும்கயல் மழைக்கண் பிறழ்தொறும் மனம்திரிந்து - கொழுவிய கயல் மீன்களையொத்த குளிர்ந்த கண்கள் புரளுந்தோறும் அறிவு மயங்கி, செழும்துவர்ச்செவ்வாய் முத்தம் கொண்டு - செழுவிய பவளம்போன்ற சிவந்த வாயின் முத்தம் பெற்று, நசைபிறக்கிடாது - வேட்கை பிற்படாமல், முலைதழீஇச் செல்லும் நெஞ்சு அமர்காதலர் பின் செலும் மடவார் - முலையணைத்துப் பிரிந்து பிறகு முன்னே செல்லும் நெஞ்சுவிரும்பிய தம் காதலரின் பின்னே உடன் செல்லும் மகளிருடைய, பஞ்சின்மேல் அடி - பஞ்சைப் போன்ற மெல்லிய அடிகள், பைதல் உற்று உழப்ப - துன்பம் அடைந்து வருந்தும்படி, உறுத்துக் கிழிக்கும் பரல் கெழு முரம்பின் - குத்திக் கீறும் பருக்கைக் கற்கள் நிரம்பிய மேட்டு நிலத்தைப்போல்; புனை, முதனிலைத் தொழிற்பெயர். நசை, இங்கு வேட்கை; நந்நசை வாய்ப்ப என்னும் அகநானூற் (22) றுரையில் இஃதிப் பொருட்டாதல் காண்க. `நெஞ்சமர் காதலர் என்பது உள்ளம்விரும்பிய காதலரை; முகத்தான் அமர்ந்தினிதுநோக்கி என்னுந் திருக்குறளிற் (93) போல. `பஞ்சின், முரம்பின் என்னும் ஐந்தனுருபுகள் ஒப்புப் பொருளன. பைதல், துன்பம்; பதிமருண்டு பைதலுழக்கும் என்பது திருக்குறள் (12-29). தலைவன் தன் தலைவியைப் பிரியுங்கால், அவன் அவட்குக் கோதைசூட்டி, இழைதிருத்தி, முலைதழீஇச் செல்லும் இவ்வியல்புகளெல்லாம். வலிமுன்பின் வல்லென்ற வென்னும் பாலைக்கலியின் நன்கெடுத்துரைக்கப் படுதல் காண்க. பரல்கெழு முரம்பு மடவாரடிகளை வருத்து மியல்பினதாதல், ஒளிச்செஞ் சீறடி யுருக்கரக் கேய்ப்ப உளித்தலை வெம்பர லூன்றுபு நலிய வெனவரும் பெருங்கதை (53: 163-4) யடிகளால் நன்குணரப்படும். (14-23) புலி அதன் உடுக்கை தைஇ-புலியின் தோலாகிய உடையினை உடுத்து, வலிகெழு மூஇலை வடிவேல் ஒருவயின் விளங்க - வலிமைபொருந்திய மூன்று இலைகளைப் போன்ற வடிவமைந்த கூர்வேல் ஒருபக்கத்தே தோன்ற, கொன்றை நனை பிணைத்த மன்றல் அம்தொடலை - கொன்றை முகைகளைத் தொடுத்துக்கட்டிய மணம் பொருந்திய அழகியமாலை, பவளமலை உறழும் மார்பில் துவள - பவளங் களாலான மலையை ஒக்கும் சிவந்தமார்பிற் புரண்டசைய, மலைதரு மடந்தை குறங்கின் மிசை இருந்து - மலையரசன் ஈன்றெடுத்த உமைப்பிராட்டியார் தமது தொடையின்மேல் அமர்ந்து, வலம்படுகையால் பெரும்புறம் கவைஇ -வலிமை பொருந்திய வலக்கையால் அகன்ற முதுகைத்தழுவி, உலம்படு திரள்தோள் ஒருமுலை ஒற்ற - உருண்ட கல்லுக்கு நிகரான திரண்டதோளை ஒருபக்கத்துக் கொங்கையால் ஞெமுங்க, நரை ஏறு ஊர்ந்த புரைசால்தோற்றம் நினைதொறும் - வெண்ணிறமான விடையின் மேல் ஏறிய உயர்வுமிக்க சிவபிரானது தோற்றத்தை எண்ணு தொறும், குழையும் உரவோர்க்கு நெஞ்சுருகும் அறிஞரான சைவர்க்கு, வைகலும் கேடுபுரி நெஞ்சின் பீடுஇலா அமணர் - நாளுந் தீமைசெய்யும் நெஞ்சையுடைய பெருமையில்லாத சமணர்கள்; அதள், தோல்; உடுக்கை தொழிலாகுபெயர். இதை, அளபெடை இசைநிறைத்தற்பொருட்டாய் வந்தது; ஈகைக்கண்ணியிலங்கத் தைஇ என்புழிப் (புறநானூறு, 353) போல. `வலம்படுகையாற் பெரும்புறங் கவைஇ யென்னுங் குறிப்பால் உமையம்மையார் சிவபிரானது இடப்பக்கத்துத் தொடைமிசை அமர்ந்திருத்தல் உணரப்படும். `உலம்படுதிரடோள் என்னும் வழக்கு உலந்தருதோளினாய் எனச் சீவகசிந்தாமணியிலும் (நாமக, 175) வருதல் காண்க. `புரை ஈண்டு உயர்வின்மேலது; அரசுவீற்றிருந்து புரையோர்ப் பேணி (25: 81) என்பது மணிமேகலை. `நெஞ்சினர், மயக்குநர், கரவினர், சமணர் எனத் தொடர்ந்து கொள்க. `பரல்கெழு முரம்பின் (13) கேடுபுரிநெஞ்சிற் பீடிலாவமணர் என ஈண்டுக் கூட்டியுரைத்துக்கொள்க. (24-29) பீடு உயர் செந்தமிழ்க் கூடலில் தோன்றி - பெருமைமிக்க செந்தமிழ்மொழிப்பயிற்சி விளங்கிய மதுரைமாநகரிற் புதிது வந்து, பொய்படு புன்பொருள் கான்று இருள்பரப்பி - பொய்மை நிரம்பிய தம் புல்லிய சமண் கோட்பாடுகளைக் கக்கி எங்கும் இருளைப்பரப்பி, மெய்தரு சைவ நல்நெறி பிழைப்ப - மெய்மைபொருந்திய சைவம் எனப்படும நல்வழிதவறி, மாணாவழிப்படூஉம் கூன்பாண்டியன் முதல் - சிறவாத தீயவழியில் அகப்படுங்கூன்பாண்டியன் முதலான, ஆறுசெல் மாக்களைச் சூறைகொண்டு எறிந்து - வழிச்செல்லும மாந்தரை வழிபறித்து ஊறுசெய்து, பெரும்துயர் உறுக்குங்காலை - மிக்க துன்பத்தை விளைக்கும்பொழுது; கூடலில் தமிழ்ச்சங்கங்கள் நிறிஇப் புலவர்பெருமக்கள் தமிழாராய்ந்து வந்தனராகலிற் `பீடுயர் செந்தமிழ்க்கூடல் என்று மதுரை சிறப்பிக்கப்பட்டது. மதுரைக்கு உரிய ஏனைச் சிறப்புகளினுந் தமிழாராய்ந்தசிறப்பே அதற்குப் பெருஞ் சிறப்பாகும். கூடன்மாநகரில் தமிழாராய்ந்த பெருமையை மாணிக்கவாசகப்பெருமானும் உயர்மதிற் கூடலினாய்ந்த ஒண்டீந்தமிழ் (திருக்கோவையார், 20) என்றருளிச் செய்தல் காண்க. சமண்கோட்பாடுகள் `பொய்படு புண்பொரு ளெனப்பட்டன, அவை கடவுட்கோட்பாட்டின் வழிப்படாமை யின்; அங்ஙனமே சைவ சமயமும், `மெய்தருசைவ மெனப் பட்டது; என்னை, அது கடவுட் கோட்பாட்டையே தனக்கு உயிரெனக்கொண்டு நிற்றலினென்பது. சமணரை முன் `முரம்பு என்றுரைத்தமையிற், சைவசமயங்கள் `ஆறுசென்மாக்க ளெனவும், அவர்கள் சைவமொழுகுதலைத் தடைசெய்து நெறியல்லா நெறிபுகுத்தி ஊறுசெய்தல் `இருள்பரப்பி நெறிபிழைப்பச் சூறைநொண் டெறித லெனவும் ஏற்றபெற்றி இங்கு உருவகஞ்செய்யப்பட்டன. இனி `முரம்பின் (13) துயருறுக்குங்காலை (29) யென வினைமுடிவுசெய்தல் ஒக்குமெனின், அஃதமையாது; ஏனென்றால், `பின்செலு மடவார் (11) குழையுமுரவோர்க்கு (22) உவமை யாதலினென்பது. (29-36) அருந்தவம் நின்பெறுபொருளின் பல்பகல் ஆற்றி - நின்னைத்தமக்கு மகவாகப்பெற்றெடுக்கும் நோக்கத்தால் அரியதவத்தைச் `சிவபாதவிருதயர் பலநாளும் இயற்றி, வேண்டிய பெரியோர்க்கு வேண்டியாங்கு அளிப்ப - விரும்பிய சான்றோர்க்கு அவர் விரும்பியவாறே வேண்டுவன ஈய, கருக்குழிக்கிடக்கும் தன்மையை அன்மையின் - கருப்பை என்னுங் குழியிற்கிடந்து வருந்தும் இயல்புடையை அல்லையாகலின், உருப்பெற வருகுநை போல - உருவுண்டாக இம்மண்ணுலகில் எழுந்தருளுவோய்போல அவர் அகத்து ஒரு பெருமாயம் பெருகுறச்செய்து - அவர் மாட்டுக் கருவிலமர்ந்தாற்போல் ஒருபெரிய மாயச்செய்கையை மிகவஞ் செய்துகாட்டி, புறம் பெயர்ந்து எய்தி - அவர் மடியகத்தினின்றும் வெளிப்போந்து வந்து, அறம் தரு பெருமைச் சண்பையில் தோன்றினை - அறத்தைப் பிறர்க்கு அருளும் பெருமையினை யுடைய சண்பையென்னுந் திருப்பதியில் தோன்றியருளினை; பகல், நாள்; ஆற்றலோடு இயற்றுதலின்; `ஆற்றி யெனப்பட்டது. `அவ ரென்றது, இங்குச் `சிவபாதவிருதயரும் அவர்தங் கற்பிற் சிறந்த காதன் மனைவியார் பகவதியாருமென்க. வினையினீங்கிய முழுமுதலிறைவனான முருகப்பெருமான் பிறவியுட்படும் இயல்பினன் அல்லனாகலிற், பகவதியார் மணிவயிற்றிற் கருத்தங்கி உருப்பெற்றது ஈண்டு ஒருமாயமாகக் கிளந்துரைக்கப்பட்டது. எல்லாம் வல்ல முருகப்பெருமானே திருஞானசம்பந்தராய்ப் பிறந்தருளினாரென்பது புராணவழக்கு. பூதல மதனிற் காழிமா நகரிற் புண்டரீ கன்றடத் தொருசார் மாதவம் புரிவோன் முன்னிளங் கதிர்போன் மதலையாய் வந்தனன் கந்தன் என்று சீகாழித் தலபுராணம் `திருஞானசம்பந்தப் பிள்ளையார் திருவவதார வத்தியாயத்தில் (6) இங்ஙனங்கூறுதல் காண்க. `புறம்பெயர்ந் தென்பது, ஈண்டுப்பிறத்தல். `சண்பை யென்றது `சீகாழியை, சீகாழிக்குரிய பன்னிரண்டு திருப்பெயர்களிற் `சண்பை யென்பதும் ஒன்றாதல் சண்பைநகர் வளர்காழி (திருஞானசம்பந்தர் புராணம், 14) திருத்தொண்டர் புராணத்தாலறியப்படும். `மாது, ஓ அசைகள். (36 - 40) பின்பு - அங்ஙனந்தோன்றிய பின்னர் மூன்றாமாண்டி லொருநாள், கிண்கிணி ஒலிப்பத் தந்தைபின் சென்று - சதங்கை ஒலி செய்யத் தம் தந்தையின்பின்னே போய், தண் கழுநீரும் செந் தாமரையும் ஒருங்கு தலைமயங்கிய பெரும் தடமருங்கின் - குளிர்ந்த கழுநீர் மலரும் சிவந்த தாமரைமலரும் ஒன்றாய்க்கலந்து விளங்கிய அகன்ற திருக்குளத்தின் கரைப்பக்கத்தில், அரும்பெறல் தந்தையைத் தலைக்கூடினை - பெறலரிய தந்தையினை எதிர்ப்பட்டுக் கூடியருளினை. `கிண்கிணி ஈரடுக்கொலிக்குறிப்பினால் வந்த காரணப் பெயர். `ஒருங்கு தலைமயங்குத லாவது, ஒன்றோடொன்று பிரிவு தோன்றாமற் கலத்தல். தடமருங்கு, கரை; மருங்கின்கண் என நிற்கற்பாலது மருங்கி னெனச்சாரியைநிற்க உருபுகெட்டது. தந்தையென்றது, ஈண்டு இறைவனை; திருஞானசம்பந்தரை முருகப்பிரானென் றுரைத்தலின், அவர்க்குச் சிவபிரான் தந்தை யெனப்பட்டார்; மேலும் இங்ஙனமே கொள்க. `தலைக்கூடுதல், என்பது ஓரிடத்து ஒருங்குகூடுதல். (40-48) அதற்புறம் அதன்பிறகு, முருந்துஉறழ் வெள்நகைப் பெரும்பெயர் அன்னை- மயில் இறகினடிமுள்ளைப்போலும் வெள்ளிய பற்களையுடைய பெரிய புகழ்மிக்க திருவருட்டாயான உமைப் பிராட்டியார், கரும்பும்கனியும் பெரும்சுவைப்பாலும் திருந்தியதேனும் ஒருங்குறக்கூட்டி - கருப்பஞ்சாறும் பழச்சாறும் மிக்கசுவைபொருந்திய ஆவின்பாலுந் தெளிந்ததேனும் ஒன்றாய் விரவச்சேர்த்து, குழைத்து எடுத்து அன்ன - இளகுபதமாய்க் காய்ச்சியெடுத்தாற்போல, விழைவுஅறா மரபின் முலைபொழி அமிழ்தம் வள்ளத்து ஊட்ட - வேட்கைதீராத சுவைத் தன்மையினையுடைய தமது திருமுலையிற் சுரந்தொழுகிய பாலைப் பிராட்டியார் பொற்கிண்ணத்தினால் ஊட்ட, பவளவாய் மடுத்துத் திவள் ஒளி சிறந்து - தமது பவளம்போன்ற செவ்வாயினால் உட்கொண்டு அசையும் ஒளியால் மிகுந்து, பழகுறு தந்தைக்கு மழவிடை அமர்ந்த தந்தையைத் தாயொடும்காட்டி - பழகுதல் பொருந்திய தந்தையாரான சிவபாதவிருதயருக்கு இளைய ஏற்றின்மேல் எழுந்தருளிவந்த உரியதந்தையாரான சிவபெருமானை அம்மையொடுஞ் சுட்டிக் காட்டியருளி; முருந்து, பற்களின் வெண்மைக்குங் கூர்மைக்குஞ் சிறுமைக்கும் உவமை; இஃதிவ்வாறு உவமிக்கப்பட்டுவருதல், முருந்தேரிளநகை (துயிலெழுப், 88) என்னும் மணிமேகலை யானும், முருந்தேய்க்கு முட்போலெயிற்றினாய் என்னும் ஏலாதி (8) யானும் அறியப்படும். `பெயர், இங்குப் புகழ்; பெரும்பெயர்த் தலைத்தாண் மன்பெருஞ்சிறப்பின் மாநிதிக்கிழவன் என்னுஞ் சிலப்பதி காரத்திற் (16: 84) போலவென்பது. குழைத்தெடுத்தலாவது, குழையக்காய்ச்சி யெடுத்தலென்க. `வாய்மடுத்தல், உண்ணுதல்; மதியுணரமகளென வாம்பல் வாய்மடுப்ப வென்னும் பரிபாட லடியினும் (78) இப்பொருண்மை தெளியப்படும். `திவளொளி, அசையும் ஒளி; நிலந்திவள என்னுஞ் சிந்தாமணி (3022) யாற்பெறப்படும். சிவபாதவிருதயர் பழகுறு தந்தையெனப்பட்டார், அவர் சிறிது காலம் மட்டுமே தந்தையென உறவு பயிறலின்; அடிகள் சிவபெருமானை வாளாத் தந்தையெனக் குறித்தல் கொண்டு, அவரே திருஞான சம்பந்தர்க்கு உரிமைத் தந்தையாராவரென்பது இனிதுணரப்படும். (48-51) பின்றை - பின்பு, காண்தகு - திருவிளையாடல் - காண்டற்குத்தக்க செயற் கருஞ்செயல்களை, மாண்தக - மாட்சிமையுண்டாக, செய்திறம் அறியார் உய்திறம்நோக்கி - தவஞ்செய்தற்குரிய வகைகளைத் தெரியாதவர்கள் உய்யும் வகைகருதி, பல்பகல் இயற்றியபின்னர் - பற்பலநாட்கள் செய்தருளியபின்; காண், முதனிலைத்தொழிற்பெயர்; திருஞானசம்பந்தர் செய்தருளிய திருவிளையாடல்கள் ஒவ்வொன்றும் அறிவான் அளந்துகாண்டற்குரிய அருமைபெருமை வாய்ந்தனவா மென்றற்குக் `காண்டகு வென அடைகொடுத்தோதப்பட்டது. காண்டகு சிறப்பிற் கண்ணகி யென்னுஞ் சிலப்பதிக ரத்துக்கு (2, 90) உரைகாரர் அடியார்க்கு நல்லார் `காட்சிதகுஞ் சிறப்பினையுடைய கண்ணகி யென்றுரைத்ததூஉம் இங்கு உற்றுநோக்கற் பாலதாகும். பிள்ளையர் செய்த திருவருட்செயல்கள் பிறர்க்கெல்லாஞ் செயற்கருஞ் செயல்களேயாயினும், அவர்க்கவை எளியவாதல் பற்றி, அடிகள் அவற்றைத் `திருவிளையாட லெனச் சுட்டி மகிழ்ந்தார். அவையாவன; `பொற்றாளம் பெற்றமை, முத்துச்சிவிகையும் முத்துக்குடையும் முத்துச்சின்னங்களும் பெற்றமை, கொல்லிமழவன் புதல்விக்கு முயலகநோய் தீர்த்தமை, குளிர்காய்ச்சல் நீக்கியருளினமை, முத்துப்பந்தர் நிழற்றப் பெற்றமை, ஆயிரம்பொன் அடைந்தமை, வணிகனுக்குப் பாம்பின்நஞ்சு தீர்த்தமை, வாசிதீரக் காசு பெற்றமை, திருமறைக்கதவு அடைத்தருளினமை முதலியன. இவற்றை யெல்லாந் திருஞானசம்பந்தர்வரலாறு கூறுந் திருந்தொண்டர் புராணத்துட் கண்டுகொள்க. `உய்திறம் என்றவிடத்துத் திறம் வகை என்னும்பொருட்டு. (51-53) முன்படர்ந்து - முன்விரைந்துசென்று, அருந்தமிழ் ஆய்ந்த பெரும்தமிழ்க்கூடல் - அரிய செந்தமிழ்ச் சங்க மிருந்து ஆராய்ந்த பெரிய தமிழ்வளம் வாய்ந்த மதுரையின்கண் ணிருந்த, குலச்சிறை முனிவன் எதிர்கொளச்சென்று - குலச்சிறையென்னுந் தவமுடையோன் தம்மை எதிர்கொண்டழைக்க அங்கு எழுந்தருளி; முற்படர்ந்து, முற்சென்று; என்றது, நாளுங்கோளும் நல்ல வல்லவென அப்பர்பெருமான் தடுத்துந், திருஞானசம்பந்தர், திருவருட்டுணை இருப்பின் அடியார்க்கு எல்லாம் நல்லனவே யாமெனக் கூறிப் பாண்டிநாடு சென்றமை குறித்ததென்க. கூடன் மாநகர்க்குச் செந்தமிழடைகொடுத்துச் சிறப்பிக்குமுண்மை `பீடுயர் செந்தமிழ்க்கூட லென்புழி (24) யுரைக்கப்பட்டது. `தமிழ்க்கூட லென்று மீண்டுந் தமிழடைகொடுத்தது, தமிழ்வளர்ச்சிக்குக் கூடன்மாநகரே உரித்தாயிருந்தமை வலியுறுத்தற்கு. அன்றியுந், தமிழ்நாட்டுநகர்களுள் எல்லாச் சிறப்புகளாலுந் தலைமை பெற்று விளங்கினமையானும் சான்றோர்களானியன்ற செந்தமிழ்ப் பாட்டுகள் நிரம்ப உடைமையானுந், திருஞானசம்பந்தர் தேவாரம் முதலிய தமிழ்வேதங்கள் தன்மாட்டே அருநிகழ்ச்சிகள் வாயிலாய் மெய்ப்பிக்கப்பட்டமையானும் `பெருந்தமிழ்க்கூடல் எனச் சிறப்பிக்கப்பட்டது. குலச்சிறை முனிவன், பாண்டிமன்னற்கு அமைச்சர். (54-62) பால்கடல்பிறந்த சீர்த்திரு ஆகலின் - திருப்பாற் கடலில்தோன்றிய புகழ்பொருந்திய திருமகளாதலின், இருமுலைக்குடத்தின் ஒருவழி அடக்கி - அப்பாற்கடலிருந்த பால் முழுமையும் தன் இரண்டு கொங்கைகளென்னுங் குடங்களில் ஒருமிக்க அடக்கிவைத்து, மலைமகள் ஆதலின் முலைதரல் சுருங்க வள்ளத்து ஏந்திய சில்அமுது அருந்தி ஆனாவேட்கையின் வருவோன் இவன்என முலைமுகம்திறந்தவழி - சீகாழியின்கண் திருமுலைப்பாலூட்டிய உமையம்மையார் மலையரசன் புதல்வியாகலின் அவர்தம் திருமுலைகளிற்பாற் சுரப்புக்குறைய அவ்வாற்றால் அவற்றின்கண் இருந்தவரையில் ஒரு பொற் கிண்ணத்திற் கறந்தெடுத்த சிறிதானபாலைப் பருகி அதனால் அடங்காத பெருவேட்கையுடன் வருகின்றவன் இவனென்று தன்முலைகளின் காம்புநுனிகள் வாய்திறந்த விடத்து, வழிப்போக்கிய பால்கடல் ஊட்டிய பவளச் செவ்வாய்த் தென்னவன் தேவிக்கும் - அத்திறந்தவழியே யொழுகச் செய்து தான் அடக்கிவைத்திருந்த பாற்கடல்முழுமையும் ஊட்டிய பவளத்தை யொத்த சிவந்த வாயிதழ்களையுடைய பாண்டியன் மனைக்கிழத்தியாரான மங்கையர்க்கரசியாருக்கும், பொன்போல் புதல்வன் ஆயினை என்பது அறியத்தெருட்டி - பொன்னைப் போன்ற அரிய புதல்வனாயினை யென்பதை எல்லாரும் அறியும்படி தெளிவித்தருளி. திருமாலின் கூறான அரசன் றேவியாகலின், மங்கையர்க் கரசியார் `திரு வென உருவகப்படுத்தப்பட்டார். பாற்கடலிற் பிறந்தமையின் அரசியார்க்குப் பால் மிகுந்திருந்ததெனவும், மலையகத்துப் பிறந்தமையான் உமைஅம்மையார்க்கு அது குறைந்திருந்த தெனவும், அங்ஙனங் குறைந்திருந்தமையால் அம்மையார் தம்மகத்திருந்த அச்சிறிதளவு பாலினையே வள்ளத்தேந்தி யூட்டினாரெனவும், அவ்வாற்றால் திருஞானசம்பந்தப் பிள்ளையார் பாலுண்ணும் வேட்கை தணியாராய் அவாமிக்குப் போந்தாரெனவும், அதுகண்டு திரு முலைப்பால்நிறைந்த பாண்டிமாதேவியார் முலைமுகந்திறந்து தானே பெருக்கெடுத்து வழிந்தபாலை அவர்க்குவேண்டுமளவும் ஊட்டி வேட்கை தணிவித்தா ரெனவும், அதனாற்பிள்ளையார் அவ்வரசியார்க்கும் பொன்போலும் புதல்வராயினாரெனவும் ஆசிரியர் திறம்படக் கற்பித்துக் கூறினமை நுண்மாணுழைபுல மிக்க புலவரனைவரானும் பெரிதும்பாராட்டி மகிழற்பாலதாகும். மங்கையர்க்கரசியார்க்குத் திருமுலைசுரந்த உண்மை, சுரந்த திருமுலைக்கே துய்யசிவ ஞானஞ் சுரந்துண்டார்; பிள்ளையெனச் சொல்லச் - சுரந்த தனமுடையாள் தென்பாண்டி மாதேவி தாழ்ந்த மனமுடையாள் அன்பிருந்த வாறு என்னுந் திருக்களிற்றுப் படியாராலும் (54) இனிது தெளியப்படும். `சில்லமுது சிறிதளவான அமுதெனக; தேனெனப் பாலெனச் சில்லமிர் தூற்றென என்னுஞ் சீவகசிந்தாமணி யினும் (நாமக, 163) இஃதிப்பொருட்டாய் வருதல் அறியற்பாற்று. `வேட்கையின் என்றவிடத்து, இன் ஒடுப்பொருளது; `பொன்போற் புதல்வன்; என்றது, பொன்னைப்போற் போற்றப்படும் புதல்வனென்றற்கு. `சென்று, தெருட்டி யெனத்தொடுத்துக்கொள்க. (63-65) வழுதிகொண்ட முழுநோய் தீர - பாண்டியன் நெடுமாறன் அடைந்த நோய் முழுமையுந் தீரும்பொருட்டு, அன்னை ஊட்டிய அமிழ்தை - உமையம்மையார் சீகாழியில் உண்பித்த திருவருட்பாலை, இன் உரைச் செந்தமிழ் ஆக்கித் தந்து - இனிய சொற்களால் தொடுக்கப்பட்ட செந்தமிழ்ப்பாட்டுகளாக இயற்றிக்கொடுத்து, அதுகெடுத்து - அந்நோய் முழுமையும் நீக்கியருளி, `நோய் என்றது ஈண்டு `வெப்புநோய் முதலியவற்றையென்க. சமண்குருமார் தீர்த்தற்கென்று பகுத்துவிடப்பட்ட உடம்பின் இடப்பாகத்து நோயையும் அவர் தீர்க்கமாட்டாமையிற் பிள்ளையார் தாமே தீர்த்தருளினமையொடு பாண்டியற்குப் பிறவிதொட்டே இருந்தகூனையும் நிமிர்ந்திட்டமைதோன்ற, `முழுநோய் தீர வென்றார். அருட் கருத்துகளைத் தமிழாலிசைத்தாரென்றற்கு, `அமிழ்தைத் தமிழாக்கித்தந்து என்றார். அது, நோய். (66-69) பால் படு பூதமும் மேல்படுபொருளும் ஐந்து கூற்றிற்பட்ட முதற்பொருள்களும் அவற்றிற்கு மேற்பட்ட நுண்பொருள்களும், தன் வழிப்படூஉம் தன்மைய ஆகலின் - தன்நினைவின்வழியே நடைபெறும் இயல்புடையன வாகையால், தான் பிறிது ஆகல் வேண்டின் - ஒருகால் ஒருபொருள் பிறிதொரு பொருளாக மாறுதலைத் தான் திருவுளத் தெண்ணினால், தலைமயங்கி - அவைமுன்னிலைமை மாறி, தம்தொழில் திரிந்து நந்தும் என்பதும் - தமக்கு இயல்பாக உள்ள தொழில்களும் மாறுபட்டுக் கெடும் என்பதும்; `பாற்படு பூதமென்றது மண் புனல் அனல் கால் வான் என்னும் முதற்பொருள்கள் ஐந்தும் ஐந்து வகையாகப்பிரிந்து நிற்றலையுணர்த்திற்று. `மேற்படு பொரு ளென்று வேறு கூறினமையின், ஈண்டுப் பூதமெனப் பட்டவை தூவா மாயையிற் றோன்றி மண்முதலாக எண்ணப்பட்ட இப்பருப்பொருள்கள் ஐந்துமேயாம் என்பதும், இனிமேற்படுபொருள்க ளெனப்படுவன இவ்வைம்பெரும் பொருள்களுக்கும் வேறாகத் தூயமாயைக்கட்டோன்றும் விந்துவும் நாதமும் முதலான நுண்பொருள்களாமென்பதுந் துணியப்படும். தான், இறைவன். (70) இழித்துக் கொடுக்கப்படும் பொருள்களுஞ் செழித்துத் தோன்றுமென்பதும்; இழிக்குமென்பது செயப்பாட்டு வினை. (71) முறையே நீரிலும் நெருப்பிலும் வைத்து ஒருபால் விளக்கிக்காட்டினை; நீர், பாண்டிநாட்டின் வைகையாற்று நீர். நெருப்பு, திருஞானசம்பந்தப் பிள்ளையார் கட்டளைப்படி பாண்டியன் அரசவைக்குமுன் ஒரு தீக்குழியில் வளர்க்கப்பட்ட தீயாகும். நிகழ்ந்த முறையே இவற்றை நெருப்பினு நீரினுமென மாற்றிப் பொருளுரைப்பினுமாம். திறம், ஈண்டுப் பால்: பக்கம். நீரினும் நெருப்பினு மென்புழிச் சாரியை நிற்க உருபு தொக்கது. மேல் வருவனவற்றிற்கும் இஃதொக்கும். (72) காயாத பனைமரத்திலும் எலும்பிலும் வைத்து மற்றொருபால் விளக்கிக்காட்டினை; `பனை யென்பது திருவோத்தூரிற் சிவனடியாரொருவர் வளர்த்த பனைகள்; அவை காயாத ஆண்பனைகளாய் நின்றன. `என்பினு மெனப்படுவது பூம்பாவையினெலும்பு. நீரினுநெருப்பினுங் காட்டினை யொருதிறமென்பது, `தந்தொழிறிரிந்து நந்துதலை யெனவும், பனையினுமென்பினுங் காட்டினை மறுதிறமென்றது `இழிக்கும்பொருள் செழித்தலை யெனவும் நிரனிறை யாகவைத்துப் பொருளுரைத்துக்கொள்க. பாண்டிமாநாட்டு மதுரைமாநகர்க்குச் சென்ற பிள்ளை யார், தமக்கு மாறாய்நின்ற சமண்குருமார் விரும்பியபடி சொற்போரிலன்றி நிகழ்ச்சிப்போரிலும் வெல்வான்கருதி ஒரு தேவாரப்பாட்டெழுதிய திருவேட்டை எரியிலிட, அது வெந்தழியாமற் பச்சென்றிருந்தது. அங்ஙனமே பின்னும் அவர், மிகவும்விரைவாய் ஓடுகின்ற வைகையாற்று நீரில் மற்றொரு தேவாரச் செந்தமிழெழுதிய ஏடுஇட, அது நீரோடும் வழியே செல்லாமல் எதிரேறி நீரைக்கிழித்துக்கொண்டு சென்றது. `நெருப்பினு நீரினுங் காட்டிய ஒருதிறம் இவையாம்; இவற்றால் நீருந்தீயுமென்னும் முதற்பொருள்கள் தலைமயங்கித் தந்தொழில் திரிந்து நந்தினமை காண்க. இனிப், பாண்டிநாட்டை விட்டு நீங்கிப் பிற திருப்பதி களையும் வணங்கிக்கொண்டுவந்த திருஞானசம்பந்தப் பிள்ளை யார், தொண்டை நாடு போந்து திருவோத்தூரின்கண் எழுந்தருளி யிருந்த ஞான்று, ஆண்டிருந்த சிவனடியாரொருவர் சிவ பெருமானுக்காக வளர்த்துவந்த பனைமரங்களெல்லாம் ஆண்பனைகளாய் வளர்ந்து காயாவாய் நிற்ப, அதுகண்டு அவ்வடியாரொடு மாறுபட்ட அவ்வூர்ச் சமண்மாந்தரனைவரும் அவரை அதுவே ஏதுவாகக் கொண்டு இழித்துரைத்தார்; பிள்ளையார் அஃதறிந்து உடனே ஒரு தீந்தமிழ்த்திருப்பதிகம் ஓதி அவ்வாண்பனைகளெல்லாங் குரும்பைக் குலைகளுடன் பெண்பனைகளாக மாறித் தோன்றுமாறு செய்தார். பின்பு திருமயிலாப்பூரின் கண்ணுஞ் சிவநேசரென்னும் மெய்யன்ப ரொருவர் பாம்புகடித்தமையால் உயிர் நீங்கிய தன் அருமைப் புதல்வியின் உடம்பெலும்புகளை எடுத்துவைத்துக் கொண்டு திருஞான சம்பந்தரின் நல்வரவு நோக்கியிருப்ப, அவரும் அங்கெழுந் தருளியக்கால் அந்நிகழ்ச்சியறிந்து அவ்வெலும்பு களைத் திருக்கோயிலின் முன்னர்க் கொணர்வித்து, அரியதொரு திருப்பதிகம் பாடிப் `பூம்பாவாய் என அழைத்து அத்திருமகளை எழுப்பியருளினார். `பனையினும் என்பினுங் காட்டிய மறுதிறம் இவையாம். இவற்றால், இழிக்கப்பட்டு நின்ற பனைமரங்களும் எலும்புகளும பிள்ளையாரது திருவருணோக்கத்தாற் பெண் பனைகளாகவும் பூம்பாவையாகவுஞ் செழித்தமை தெளியப்படும். (72-76) இனியே - அதன்மேல், அறிவு ஒளி கொளீஇ - அறிவு விளக்கத்தை எல்லாருங் கொள்ளவைத்து, புரைநெறிப் பொய்ச் சமண்முறிய நூறி - குற்றம்பொருந்திய முறைமையினை யுடைய பொய்யான சமண்மதத்தை இடையற்று விழத் துகளாக்கி, மெய்த்திறம் கிளக்கும் மெய்ப்பொருள் சைவம் மெய்வகைவிளக்கி - மெய்ப்பொருள் வகைகளைக் கிளந்துகூறும் மெய்ம்மையையே பொருளாக்கொண்ட சைவ சமயத்தின் கோட்பாடுகளை மெய்ம்முறைகளால் விளக்கிக்காட்டி, பரங்குன்று அமர்ந்தனை - திருப்பரங்குன்றென்னுந் திருப்பதியின்கண் எழுந்தருளி யிருந்தனை; கொளீஇ, கொள்ளச்செய்து; ஆவது விளங்கச்செய்தல்; `புரை யென்பது, பருப்பொருளறிவினார்க்கு உண்மை போல் மேல்தோன்றிச், சிறிது நுண்ணறிவுடையராய் உள்நோக்கு வார்க்கும் அங்ஙனம் ஏதோருண்மையும் உடைய தன்றாய்ப் புரை படுதலாகும். எனவே, அது `பொய்ச்சமண் எனப்பட்டதென்க. `நூறுதல் பொடிபடுத்தல், இடித்தல்; திவாகரத்திலும் எழுதெழின் மாடத் திடனெலா நூறி யென்னும் புறப்பொருள் வெண்பாமாலை (உழிஞை, 26) யிலும் இதற்கு இப்பொருள்கள் உண்மைகாண்க. திருப்பரங்குன்று; திருமுருகனது ஆறு படைவீடுகளு ளொன்று; ஏனைய திருவாவினன்குடி (பழனி), திருவேரகம் (சுவாமி மலை), திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்), குன்று தோறாடல், பழமுதிர்சோலை யென்பனவாம். இந்நான்கு அருந்திறல்நிகழ்ச்சிகளுந் திருவருட்கோட் பாட்டால் இயற்கைக்கு வேறாகவும் நிகழ்ந்தமையால், அத்திருவருட்கோட்பாடு வாயாத சமண்மதம் இவ்வாற்றால் தானே அழிந்தொழியா நின்றதென் றறிந்துகொள்ளப்படும். உயிருடைப்பொருள்கள் அல்லாத நீரினுநெருப்பினுங் காட்டிய திறத்தை `ஒருதிற மென்று முன்னோதி உயிருடைப் பொருள்களிற் காட்டிய ஏனையிரண்டனையும் மறுதிறமெனப் பின்னோதினார் ஆசிரியர். (76-81) அது பெயர்ந்து - பின்னர்த் திருப்பரங்குன்றினின்று நீங்கி, இரங்குவால் அருவி நிரம்பத்தோன்றும் ஆவினன் குடியின் அசையினை - ஒலிக்கின்ற வெள்ளிய அருவிகளின் வீழ்ச்சி குன்றெங்குங்காணப்படுந் திருவாவினன் குடியென்னுந் திருப்பதிக்கண் இருந்தனை; அதற்புறம் ஏரகத்து எழுந்தனை - அதன்பிறகு திருவேரகமென்னுந் திருப்பதியின்கண் எழுந் தருளினை; நேரிதின் - நுட்பமாக, ஒருமொழிவைத்த உட்பொருள் விரிப்பத் திருவளர் தணிகையின் அமர்ந்தனை - ஓமென்னும் ஒருமொழி தன்கட்பொதிந்துவைத்த உட்பொருள்களை விரித்து விளக்கும்பொருட்டுச் சிறப்பு ஓங்குகின்ற திருத்தணிகைமலையி லமர்ந்தனை. `இரங்குதல், ஒலித்தல், `இரங்குவாலருவி யென இதன்கண் வருமாறுபோலவே, இலங்குவெள்ளருவி (மதுரைக்காஞ்சி, 299) யெனவும், வால்வெள்ளருவி (அகநானூறு, 308) யெனவும் பழைய இலக்கியங்களில் வருதல் காண்க. `அசைதல் இருத்தலென்னும்பொருட்டு; ஆவினன்குடி யசைதலு முரியன் (திருமுருகாற்றுப்படை, 176) என்புழி நச்சினார்க்கினியருரைக்கும் உரையானும் ஈதறியப் படும். `நேரிதின் விரிப்ப வெனக்கூட்டுக. முருகக்கடவுள் தம் தந்தையாரான சிவபெருமானுக்கு `ஓம் என்னும் ஒருமொழியை ஆசிரியர் முறைலியிருந்து செவியறி வுறுத்து தற்பொருட்டுத் திருத்தணிகை மேவினாரென்பது. (81-96) அதற்புறம் அதன்பின், நின்கழல் கிடந்த அருகா அன்பின் - நினது திருவடிக்கட் பதிந்துகிடந்த கெடாத அன்பினால், சைவம் வளர்க்கும் மெய்வகை மரபின் - சைவசமயத்தை நாடெங்கும் பரப்புகின்ற மெய்க்கூற்றின்கட்பட்ட முறைமை யினாலே, உடல் பொருள் ஆவி உனக்கு என நிறுவி - தம் உடலும் பொருளும் உயிரும் உனக்கே உரியவென நிறுத்தி, நின்குறித்து எழூஉம் அதற்கும் இன்பத்து - அவ்வாற்றால் நின்னைக்குறிக் கொண்டு எழுகின்ற நிலையான இன்பத்தினால், நின்பெயர் அல்லது பிறிதுஒன்று நவிலா - நினது புகழையல்லாமற் பிறரொருவர் புகழை நாவாற்கூறாத, மன்பெரும் புலவோன் - மிகப்பெரிய புலமையினையுடையவனும், தந்தையைக் காட்டும் தாய் எனப்போந்து நாயினும்கடைய என்னையும் ஒருபொருள் படுத்து நின் இயல்பு ஒருதுறைப்புகுத்தி உரைக்கும் உரவோன் - ஏதும் அறியாத ஒருமகவுக்குத் தந்தையைக்காட்டி யுணர்த்துந் தாயைப்போல் எழுந்தருளிவந்து நாயினுங்கீழ்ப்பட்ட ஏழை யேனையும் ஒருபொருளாகத் திருவுளத்தடைத்து நின் என் பெருங்குணங்களையும் யாம் அறியத்தக்கதொரு துறையிலே யமைத்து அறிவுறுத்தும் பேரறிவினையுடையவனும், சோமசுந்தர தேசிகப்பெயரின் ஏமுறவந்தோற்கு அருள - `சோமசுந்தர வாசிரியனென்னுந் திருப்பெயரோடு எல்லாரும் பேரின்ப நெறியை அடையுமாறு தோன்றினவனுமான என் அருமை ஆசிரியனுக்கு அருள்செய்ய, காமுற்று - விரும்பி, பொருள் உடல் ஆவி பொருள்பெற வழங்கி - நின்பொருளும் உடலும் உயிரும் உண்மைநிலையிற் பொருந்தக்கொடுத்தருளி, வேண்டுழி எல்லாம் விரும்பிநின்று ஏத்த அவற்கு எளிவந்த தவப்பெருந்தன்மையை - விரும்பியபோதெல்லாம் அவன் அன்புகொண்டெழுந்து வழுத்த அவனுக்கு எளிதாய் வெளிப்போந்த மிகப்பெரிய அருளியல் பினையுடையையாய், ஒற்றியூர்ப்புகுந்து வைகினை - திருவொற்றியூரிற் போந்து அமர்ந்தருளினை; `அருகா கெடாத, இப்பொருட்டாதல், பருகுவன்ன அருகா நோக்கமோடு என்னும் பொருநராற்றுப்படை (77) யுரையிற் காண்க. மரபு - முறைமை; புறப்பொருள் வெண்பாமாலை (1, 1) தொல்குடிமரபின் என்பதன் உரையைக் காண்க. `அற்கல், நிலைபெறல்; அற்கா இயல்பிற்றுச்செல்வம் என்னுந் திருக்குறளைக் காண்க. `என, உவமஉருபு. திருவருணெறியின் கண்ணும் வீடுபேறு நண்ணும் உயிர்க்கு அம்மையே அப்பனைக் காட்டியருளு முண்மை, மாயநட் போரையும் மாயா மலமெனு மாதரையும் வீயவிட் டோட்டி வெளியே புறப்பட்டு மெய்யருளாந் தாயுடன் சென்றுபின் தாதையைக் கூடிப்பின் தாயைமறந்து ஏயும தேநிட்டை யென்றான் எழிற்கச்சி யேகம்பனே என்னும் பட்டினத்தடிகள் (திருவேகம்பமாலை, 10) திருமொழியினாற் றெளியப்படும். `சோமசுந்தரவாசிரியன் தன்னுடைய உடல்பொருளுயிர் களை நினக்கே உரியவெனவழங்கி அன்புசெய்தமையின், நீயும் அவனன்புக்கு உவந்து நின்னுடைய உடல்பொருளுயிர்களை அவனுக்கு வழங்கி அருள்காட்டினை யென்னும் இவ்வன்புமுறை என் உடலுயிராதிய வெல்லாம் நீ யெடுத்துக்கொண்டு உன் உடலுயிராதியவெல்லாம் உவந்தெனக்கே அளிப்பாய். என்னும் இராமலிங்க அடிகளின் (6, பிரியேனென்றல், 3) திருவருட் பாவினும் எடுத்துக்காட்டப் படுதல் இங்கு நினைவுகூரற்பாலது. `சோமசுந்தரகுரவ னென்றது, தமக்குச் சமயநுண்பொருள் செவியறிவுறுத்திய ஆசிரியரை. தன்மையை, முற்றெச்சம். (96 - 105) முற்றவும் நின்பெருந்தன்மையை அறிந்து - முழுதும் நினது மேலான அருட்டகைமையைத் தெரிந்து, நின் அடி இரவொடு பகலும் ஒருவாது வணங்கி - நினது திருவடியை இரவொடு பகலுமாய் ஒழியாமல் வணக்கஞ்செய்து, நா தழுதழுப்ப ஏத்துஉரை கிளந்து - நாக்குத் தழுதழுப்படையுமாறு வணக்கவுரைகள் சொல்லி, நெஞ்சம் நெக்குடைந்து உள்ளம் உருகி, மெய்விதிர்விதிர்ப்பப் பெறுவதற்கு - உடம்பு நடுநடுங்க அருள்பெறுதற்கு, எளியேன் - ஏழையேன், அரியென் ஆயினும் - அருமையுடையேனானாலும், குவடுகெழு பெரு நிறப் பொன்மலை அடைந்த கருநிறக்காக்கைக்கு உறுவதுஎன - குடுமி பொருந்திய மிக்க ஒளிவாய்ந்த பொன்நிறமான மலையை நண்ணிய கருநிறமமைந்த காக்கைக்கு அப்பொன்னிறமே பொருந்தல்போல, அவனொடு கெழூஉம் சார்பின் இவண் அது சிவணவும் பெறுகுவென் - அச்சோமசுந்தர குரவனொடு சார்கின்ற சார்பினால் இங்கு அவ்வருணிலையை யடையவும் பெறுவேனென்பது. நாத்தழுதழுத்தல், நாக்குழறல் நெக்குடைந்து, உருகி, விதிர் விதிர்த்தல், நடுநடுங்கல், சிவணல், பொருந்தல். `காக்கைக் குறுவதாலெனச் சிவணவும் பெறுகுவ னென்று தொடரை மாற்றியியைத்துப் பொருளுரைத்துக்கொள்க. `மெய்விதிர்விதிர்ப்பப் பெறுவதற்கு என்பதன் இடையில் அவாய்நிலையால் அருள் என்னும் ஒருசொல் வருவித்துரைக்க. பெறுகுவென் என்பதிற்கு சாரியை, அன்று, ஆல், ஏ அசைகள். மலையின் பொன்மை இறைவனருளுக்கும், காக்கையின் கருமை உயிரின் மலத்துக்கும் உவமையாம்; `பொன் மலையடைந்த கருநிறக் காக்கைக்குப் பொன்னிறமுறுதல்போ லென்றுரைக்க. 8. வள்ளன்மை கிளத்தல் உறுபொருள் காணா வுணர்விலார் மாட்டுப் பெறுபொருள் வேண்டல் பிழையா - னறுநெஞ்சே யேந்துமுலை வள்ளி கொழுந னெழிலொற்றிப் போந்து குடியிருக்கும் போது. (இ-ள்) நறு நெஞ்சே - நல்ல நெஞ்சமே! ஏந்துமுலை வள்ளிகொழுநன் - உயர்ந்துநிற்குங் கொங்கைகளையுடைய வள்ளியின் கணவனான ஆறுமுகன், எழில் ஒற்றிப்போந்து குடியிருக்கும்போது - அழகிய திருவொற்றித் திருப்பதியின்கண் எழுந்தருளிவந்து குடியாய் அமர்ந்திருக்கும்போது, உறுபொருள் காணா உணர்வு இலார்மாட்டு - தம்முயிரொடு வருவன நல்வினை தீவினையேயல்லாமல் வேறு அல்லவென்று அறிய மாட்டாத பகுத்துணர்வு கூடாதவர்களிடத்தில், பெறுபொருள் வேண்டல் பிழை - நீ அடைதற்குரிய பொருளை விரும்பிக் கேட்டல் குற்றமாகும். ஆகவே, எல்லாம் வல்ல ஆறுமுகப்பெருமானே நமக்குவேண்டு வனவெல்லாம் உவந்தளிப்பானென்பது கருத்து; எனவே அவனது சிறந்த வள்ளன்மை கிளந்தவாறாமென்க; பொய்ம்மையாளரைப் பாடாதேயெந்தை புகலூர்பாடுமின் புலவீர்காள் இம்மையேதருஞ் சோறுங்கூறையு மேத்தலாமிடர் கெடலுமாம் அம்மையேசிவ லோகமாள்வதற் கியாதுமையுற வில்லையே என்னுஞ் சுந்தரமூர்த்தி நாயனாரது தேவாரத்திருமொழியும் இங்கு நினைவுகூரற் பாலது. `உறுபொருள், ஈண்டு நல்வினை தீவினை. `பெறுபொரு ளென்பதற்குச் சிறிது முயற்சியெடுத்தால் எவரானும் எளிதிலடைதற்குரிய செல்வப்பொருளென் றுரைப்பினுமாம். `நறுநெஞ்சே யெனப்பட்டது, அறிவுறுப்பதை ஏற்குந் தகுதியுடைய நெஞ்சமென்றற்கு. `ஏந்துத லாவது, தாழாது உயர்ந்து அல்லது நிமிர்ந்து நிற்றல். இல்வாழ்வாரே எவர் எதை விரும்பினாலும் இல்லை யென்னாமல் அளிக்கு நிலையராகலான், இங்கு முருகப் பெருமானது வள்ளன்மை கிளந்தோதும் அடிகள் அவனை இல்வாழ்வானாகக் குறிப்பான் கருதிக் `குடியிருக்கும் போது எனக்கூறி மகிழ்வாராயினர். ஆல் அசை. 9. தலைமகள் தோழிக் கறத்தொடு நிற்றல் போதாய்ந்து வெண்ணில வொக்கும் பொடிமணற் பூஞ்சிற்றிலொன் றோதாயஞ் சூழ விழைத்தாடுங் காலை யொருவடிவேற் சூதான காளை திருவொற்றி யீசர் துணைப்புதல்வன் காதாருங் கண்ணி சிதைத்துநக் கோடிக் கரந்தனனே. (ï-Ÿ) fhJ MU«f©Â - fhJfŸtiuÆš Ú©L Ãiwí§ f©fisíila njhÊ!, போது ஆய்ந்து - மலர்களை ஆய்ந்துதெரிந்து, வெள்நிலவு ஒக்கும் பொடிமணல் பூம் சிறி இல் ஒன்று - வெள்ளிய நிலவினை யொத்த பொடி மணலால் அழகிய சிறு வீடொன்று, ஓது ஆயம் சூழ - மழலைமொழிகள் ஓதுகின்ற தோழியர்கூட்டங்கள் உடன்சூழ, இழைத்து - அமைத்து, ஆடுங்காலை -நான் விளையாடும்பொழுது, ஒரு வடிவேல் சூதான காளை- ஒரு கூரிய வேலையுடைய வஞ்சகமான காளைப் பருவ முடையோனும், திருவொற்றிஈசர் துணைப் புதல்வன் திருவொற்றிநகரில் எழுந்தருளியிருக்குஞ் சிவபெருமான்றன் இரண்டாம் புதல்வனுமான ஆறுமுகன், சிதைத்து நக்கு ஓடிக் கரந்தனன் - அதனை அழித்து நகைத்து ஓடி ஒளித்தனன். போது ஆய்ந்தும் சிற்றில் இழைத்தும் விளையாடுதல் மகளிர் செயலாம்; போது ஆய்ந்தபின்னர் ஈண்டுத் தலைவி சிற்றில் இழைத்தாளென்று கொள்க. பொடிமணல் வெளேலென்றிருத்தலின், அதனை நிலவோ டொப்பிட்டுக் கூறுதல் மரபு; நிலவுமணல் வியன்கானல் (புறநானூறு, 17) எனவும், `நிலாமணல் (மணிமேகலை, 8, 11) எனவும் பழைய இலக்கியங்கள் வருதல்காண்க. கண்ணி, இயல்பாய்நின்ற விளி. சிறுபருவத்தில் தான் இழைத்தாடிய மணற்சிற்றிலைத் தன்காதலன் அழித்துக் குறும்புசெய்த இயல்பினைத் தலைவி தன்தோழிக்கு எடுத்துக்கூறி அறத்தொடுநிற்றல், சுடர்த்தொடீஇ கேளாய், தெருவினா மாடு மணற்சிற்றிற் காலிற் சிதையா வடைச்சிய கோதை பரிந்து வரிப்பந்து கொண்டோடி நோதக்க செய்த சிறுபட்டி என்னுங் கலித்தொகைக் கண்ணுங் (குறிஞ்சிக்கலி, 15) கூறப்படுதல் இங்கு நினைவுகூரற்பாலது. அறத்தொடு நிற்றலாவது: அறம் என்பது தக்கது; தக்கதனைச் சொல்லிநிற்றல்.... அல்லதூஉம், பெண்டிர்க்கு அறமென்பது கற்பு, கற்பின்றலை நிற்றலென்பதூஉமாம். இனித் `தோழிக்கும் உரித்து என்ற உம்மையால் தலைமகட்கும் அறத்தொடுநிலை உரித்தென்பது, அஃதாமாறு இயற்கைப் புணர்ச்சி புணர்ந்தானும் பாங்கற் கூட்டங் கூடியானுந் தெருண்டுவரைதலுற்றுத் தமரை விடும்; விட்ட விடத்து அவர்மறுப்ப; அஃது இலக்கணமாகலான், அங்ஙனம் மறுத்த விடத்துத் தலைமகள் வேறுபடம். எம்பெருமான் மறுக்கப் பட்டமையான் மற்றொருவாறாங் கொல்லோவெனக் கலங்கி வேறுபாடு எய்தின பொழுதே தோழிக்குப்புலனாம்; புலனாயின விடத்து எம்பெருமாட்டி, நினக்கு இவ்வேறுபாடு எற்றினான் ஆயிற்று? என்னும், என்றவிடத்து, இஃதெனக்குப் பட்டது; இன்னவிடத்து நீயும் ஆயங்களுந்தழையுங் கண்ணியுங் கோடற்கு என்னிற் சிறிது நீங்கினாய்; யான் நின்று ஒரு மணிச்சுனை கண்டேன்; கண்ட அம்மணிச்சுனைதான் ஆம்பலே குவளையே நெய்தலே தாமரையே என்றிப்பூக்களால் மயங்கி மேதக்கது கண்டு வேட்கையான் ஆடுவான் இழிந்தேன்; இழுக்கிக் குட்டம் புக்கேன்; புக்குத்தோழியோவென, நீ அங்ஙனங்கேளாயா யினாயாக, ஒருதோன்றல் தோன்றிவந்து எனதுதுயர் நீக்குதற்காகத் தன் கை நீட்டினான்; நீட்டினவிடத்து மலக்கத்தான் நின்கையெனப் பற்றினேன்; பற்ற வாங்கிக் கரைமேல் நிறீஇ நீங்கினான்; நீ அன்று கவலுதியெனச்சொல்லேனாயினேன்; நீ எவ்வெல்லைக்கண்ணுங் கைவிடாதாய் அஞ்ஞான்று கைவிடலினை ஆக்கிற்று விதியாகாதே? இனிப், பிறிதொன்றாங் கொல்லோ வெனக்கலங்கி வேறுபட்டே னென்று தோழிக்குத் தலைமகள் அறத்தொடுநிற்கும் என்று ஆசிரியர் நக்கீரனார் உரைத்த உரையால் (இறையனாரகப்பொருள், 29 - ஆஞ்சூத்திரம்) அறத்தொடு நிற்றல் இன்னதென்றுணர்ந்து கொள்க. 10. ஒப்புமைகூறி அருணிலை வேண்டல் இதன்கண் அடிகள் தமக்கும் இறைவனுக்குஞ் சில கற்பனை ஏதுக்கள் கொண்டு ஒப்புமைவறி, அவ்வொப்புமை யுண்மையின் அவன் தம்பாற் கேண்மைபொருந்தி அருள்தரல் இயையுமென வழக்காடி அருணிலைவேண்டல் கூறப்படுகின்றது. (1-3) கரவு அறு மாந்தர்க்கு விரவுறுபழியின் - கள்ளம் நீங்கிய சான்றேர்பாற் கலந்து தோன்றும் பழியைப்போல், மறுவொடு விளங்கும் நிறைகதிர் மதியம் - களங்கத்தொடு விளங்கும் நிறைந்த கதிர்களையுடைய முழுநிலா, வெண்கதிர் விரிக்கும் தண் என் காலை -வெள்ளிய ஒளியை எங்கும் விரிக்கின்ற குளிரும் முன்னிராப்பொழுதில்; கரவென்றது, இங்குக் கள்ளத்தனமான தீய எண்ணங்களை; மாந்தர்க்கு, வேற்றுமையுருபு மயக்கம். சான்றோர்மாட்டுக் காணப்படுங் குற்றமே யார்க்கும் விளங்கித் தோன்றுதல்பற்றிக் கரவறுமாந்தர்தம் பழி உவமைகூறப்பட்டது. இங்கு உவமையும் பொருளுமாக வந்த மாந்தரும் மதியமும் முறையே பொருளும் உவமையுமாகவே வரல் வழக்காம்; ஏனெனிற், கரவறு மாந்தரினும் மறுவொடுவிளங்கு மதியமே எவர்க்கும் விளக்கமாய்த் தெரிந்ததொன் றாதலினென்பது; மற்று அவை இங்குப் பொருள் உவமமாகவும் உவமம் பொருளாகவும் வழக்கிற்கு மாறாக வழங்கப்பட்டுள்ளன; இங்ஙனம் மாறிவழங்குத லெல்லாம் இலக்கியச்சுவை மிகுத்தற்காம்; இன்னோரன்னவற்றைப் பிற்காலத்தார் `விபரீதவுவமை (தண்டியலங்காரம், பொருளணி யியல், 2, 14) யெனக்கூறா நின்றனர். விரவுறல், ஒருசொல். (4-7) புலவுமணம் கமழும் பாக்கத்து - புலால் நாற்றம் நாறுஞ் செம்படவர் சேரியில், நலம் கெழு தெரிவு இல் மாக்கள் புரிதிமில் புகுந்து - நன்மைமிக்க பகுத்தறிவு இல்லாத செம்படவர் கட்டுகள் அமைந்த தோணியில் ஏறி, நிரைநிரைவகுத்த வகை அமை விளக்கம் - வரிசைவரிசையாகப் பகுத்துவைத்த முறை யமைந்த விளக்குகள், வானமீனின் வயின் வயின் இமைப்பவும் - விண்மீன்களைப்போல் இடந்தோறும் ஒளிவிடவும்; கடலினின்றுங் கொணரப்படும் மீன்களாற் செம்படவர்சேரியில் எஞ்ஞான்றும் புலானாற்றம் நாறுதலின், அச்சேரி `புலவுமணங்கமழும்பாக்கம் எனப்பட்டது; கமழ்தல் - நாறுதல், கமழ்கடாஅத்து (புறம், 3) என்புழிப்போல, திமில்புகுந்து மீன் பிடிக்குஞ் செம்படவர் தாஞ்செய்யுந் தொழில் தீதெனத் தெளிந்துகொள்ளாமையின், அவர் `தெரிவின்மாக்கள் எனப்பட்டாரென்க. விளக்கம், ஈண்டுச்சுடர்; இது தொழிலாகுபெயர். நீல நிறமான வானத்தில் மின்நிறமான விண்மீன்கள் ஒளிவிடுதல்போலவே, நீனிறமான கடனடுவில் மின்னிறமான விளக்கொளிகள் ஒளிவிட்டுப்பொலிதலின், கடற்படகுகளின் விளக்குகளுக்கு வான்மீன்கள் உவமையாயின. (8-10) சிறுதுடி மருங்குல் கரும் கண் நுளைச்சியர் - உடுக்கையைப்போன்ற நுண்ணிய இடுப்பினையும் கரியகண் களையும் உடைய நெய்தல் நிலமகளிர், எழுவரும் எண்மரும் உழிஉழிக் கை பிணைந்து - எழுவரும் எண்மருமாய் இடந்தோறுங் கைகோத்து, ஒருவாமரபின் குரவை அயரவும் - ஒருவரை விட்டொருவர் நீங்காத தன்மையொடு குரவைக்கூத்து ஆடாநிற்பவும்; குரவையென்பது காமமும் வென்றியும் பொருளாகக் குரவைச் செய்யுள்பாட்டாக எழுவரேனும் எண்மரேனும் ஒன்பதின்மரேனுங் கைபிணைந்தாடுவது என்று அடியார்க்கு நல்லார் கூறியவுரையானும் (சிலப்பதிகாரம், அரங்கேற்றுகாதை, 12), அவரெடுத்துக்காட்டிய குரவை யென்ப தெழுவர் மங்கையர் செந்நிலை மண்டலக் கடகக் கைகோத் தந்நிலைக் கொட்பநின் றாட லாகும் என்னும் மிகப்பழைய தமிழ்ப்பாட்டானும் (சிலப்பதிகாரம், பதிகம், 77) இனிதுணரப்படும். அயர்தல் - ஆடுதலைச்செய்தல். (11-17) அவர்தரு சிறாஅர் சிமீன் முகந்து மணல் அகழ்கேணியில் முறைமுறை விடுத்தும் - அந்நெய்தல்நில மகளிர் பெற்றெடுத்த சிறுவர் கழிகளிற் கிடக்குஞ் சிறுமீன்களைக் குடுவையிற் பற்றி முகந்துகொண்டுவந்து அருகே மணல்நிலத்தில் அவர்களாற் றோண்டியெடுக்கப்பட்ட ஊற்றுக்கிணற்றிலே ஒருவர்பின் ஒருவராய் விட்டு, (அதன்பின்) பொரிகெழு புன்னைப் பூந்துணர் வீழப்பப் புரிவளை எறிய - நெற்பொரிபோலும் பூக்களையுடைய புன்னைமரத்தின் பூங்கொத்துக்களை வீழ்த்தும் பொருட்டு முறுக்குண்ட சங்கினை மேல் வீச, கோடு தாக்கிப் பலவேறு உடைந்த நலம் கிளர் நித்திலம் - அவ்வாற்றால் அம்மரத்தின் கிளைகள் முட்டுதலாலே பலவாய் வேறு வேறாய் உடைந்து சிதறிய நன்மைமிக்க அச்சங்கின் முத்துக்களை, கொழுவிய நனை எனக் குஞ்சிப்பெய்து - செழுமையான அப்புன்னை மரத்தின் மொட்டெனக்கருதித் தமது தலைமயிரிற் செருகி, வழீஇ வீழக்கண் கலுழ்பு பெயரவும் - அவை மழமழ வென்றிருத்தலால் வழுவிவிழ அதனாற் கண்கலங்கி யழுது அங்கு நின்று நீங்கவும்; முகந்தென்றமையின், குடவையில் முகந்தென்று கொள்க. கேணி - நெய்தல்நிலத்துச் சிறுகிணறு. புன்கமரத்தின் பூ நெற்பொரியை யொத்திருக்கு மென்பது, `பொரிப்பூம்புன்கின் என்னும் ஐங்குறுநூற்றுச் செய்யுளிலும் (368) காண்க. சங்கின்வடிவு, முறுக்குண்டாற்போ லிருத்தலிற் `புரிவளை யெனப்பட்டது. சங்கு உடைந்தால் அவை முத்துக்களாய்க் காணப்படுதலின் `நித்திலம் எனப்பட்டன. வலம்புரியினின்றும் முத்துப் பிறக்குமுண்மை முன் (4: 8-9) காட்டப்பட்டது. வீழ்ப்பவென்பது பிறவினை; குஞ்சி, ஆண்பான் மயிர். கலுழ்பு, செய்புவென் வாய்பாட்டு வினையெச்சம். `சிறாஅர் இசை நிறை அளபெடை, `வழீஇ சொல்லிசை யளபெடை. புன்னைப் பூங்கொத்தினை வீழ்த்தும்பொருட்டு அதன்மே லெறிந்த சங்குகள் குறிதப்பிக் கிளை களிற்றாக்குண்டமையின், உடைந்து சிதறின; அவற்றை அந்நெய்தலஞ் சிறார் புன்னை நனைகளே உதிர்ந்தனவென மயங்கித் தந்தலைமயிரிற் செருகினாராக, அவை மழமழ வென்றிருத்தலால் அம்மயிற் பொருந்தாமல் வழுவிவீழ்ந்தன; அவற்றை அவர் மீண்டுமீண்டுஞ் செருகுதலும் அவைதாமும் மீண்டு மீண்டு நழுவிவீழலின், அதுகண்டு அச்சிறார் அழுது கண்கலங்கி அங்குநின்றும் பெயர்ந்தாரென்பது. (18-23) கொழுமடல் அவிந்த குழூஉக்கொள் கைதை வான் சிதர் அளாய தேம்கமழ் ஆம்பல் - செழுமையான இதழ்விரிந்த கூட்டங் கொண்டதாழையினுடைய வெள்ளிய பூந்தாதுகள் கலந்த தேன்மணக்குஞ் செவ்வாம்பன்மலர்கள், நீறு உறு தழலே போலவும் - நீறு பூத்த நெருப்பைப்போலவும், பால்கெழு குறுநடைப்புதல்வர் துவர் இதழ் போலவும் - பால் ஒழுகுங் குறுகுறுவென்னுஞ் சிறுநடையினையுடைய புதல்வர்களின் சிவந்த வாயிதழ்களைப் போலவும், அறிவு இல் மாக்கட்கும் அறிவுபேதுறுக்கும் புனையாப் பொற்பின் – மெய்யறிவு பெறாத மக்கட்கும் அவரது உலகுணர்வினை மயக்குங் கையாற் புனைதல்செய்யாத இயற்கையினால், முறைமுறை சிறப்பவும் - ஒன்றின்மேலொன்றாய்ச் சிறந்துவிளங்கவும்; தாழம்பூவின் இதழ்கள் ஏனைமலர்களின் இதழ்களைவிடப் பெரிய வாயுஞ் செழியவாயுமிருத்தலின், `மட லெனவுங் `கொழு வெனவும் ஆசிரியர் அடைகொடுத்தோதினார். தாழஞ்செடிகள் புதர்புதராயிருத்தலாற், `குழூஉக்கொள் கைதை யெனப்பட்டது. `வால் வான் எனத்திரிந்தது; `வான்கதிர்திருமணி (புறம், 150) என்புழிப்போல. `தேங்கமழ் என்புழித் `தேன் என்னுஞ்சொல் ஈறுகெட்டு வருமொழி வன்மைக்கேற்ப மென்மை மிக்கது. இது தேனென் கிளவி வல்லெழுத் தியையின் மெல்லெழுத்து மிகினு மானமில்லை. (தொல்காப்பியம், புள்ளிமயங்கியல், 45, 46) என்பவற்றாற் கொள்ளப்படும். `நீறுறுதழல் என்பதில், நீறு கைதையின் பூந்தாது எனவும், தழல் ஆம்பலெனவுங்கொள்க; இங்ஙனமே பால் கைதைத்தாதெனவும், துவரிதழ் ஆம்பலெனவும் அதற்கடுத்த உவமையிலும் உணரற்பாற்று. `பால்கெழு துவரிதழ் என்று கூட்டுக. குழந்தைகள் குறுநடையின ரென்பதைப் பாண்டியன் அறிவுடை நம்பியுங் `குறுகுறு நடந்து சிறுகைநீட்டி எனப் புறத்திற் (188) கூறினார். துவர், சிவப்பு. `மாக்கள் என்பார் மக்களுட் பகுத்தறிவு இல்லாதவர்; மரபியலுரைகாரர் மாவுமாக்களும் ஐயறிவினவே. (தொல்காப்பியம், மரபியல், 32) என்னும் நூற்பாவுக்கு உரை கூறுகின்றுழி மாக்களெனப்படுவார் மனவுணர்ச்சி யில்லாதார் என்று உரைப்பர். இனி `அறிவுபேதுறுக்கு மென்பது அத்தகைய மாக்களுக்கு உலகியற்பொருள்களையுணரும் பொறியுணர்வே உளதாகலின், அவர்க்கு அவ்வுலகியலுணர்வினையும் மயக்குமென்பதாம். எவ்வாறெனின், கைதையந் தாது படிந்த செவ்வாம்பன் மலர் சிவபிரானது நீறுபூத்த தழலுருவத்தை அவர்க்கு நினைப்பூட்டனமையின் `மாக்கட்கும் என்பதன் உம்மை இழிவு சிறப்பு. இயற்கைத் தோற்றத்திற் காணப்படும் அழகு மக்கள் கையாற் புனையப்படாத தகாலிற் புனையாப் பொற்பு என்றார்; மேற் கூறிய நெய்தல் நில அழகுகள் புனையாப் பொற்பின என்றபடி. (24-26) நெய்தல் சான்ற கைதை அம் கானல் ஒற்றியூர் அமர்ந்த வெற்றிவேல் குரிசில் - இவ்வாறாக நெய்தனிலத்தின் அழகு நிறைந்த தாழைகள் வாய்ந்த கடற்கரையினை யுடைய திருவொற்றியூ ரென்னுந் திருப்பதியில் திருக்கோயில் கொண் டெழுந்தருளியவெற்றி மிக்க வேற்படையினைத் தாங்கிய செம்மலே! கொன் ஒன்று கிளக்குவென் கேண்மதி பெரும! - பெருமையானதோர் ஒப்புமைச் செய்தி சொல்லுவேன் கேட்டருள்க, பெருமானே; `கைதையங் கானல், அம் சாரியை; குரிசில், ஆண்டகை; இஃது இயல்புவிளி; கொன், பெரியது; இஃதிப்பொருட்டாதல் `கொன்னொன்று கிளக்குவல் என்னும் மதுரைக்காஞ்சியடிக்கு (207) அதன் உரைகாரர் கூறும் உரையாற் பெறப்படும்; `கேண்மதி இதன்கண் மதி முன்னிலையசைச்சொல்; `உறைமதி பெரும (மதுரைக்காஞ்சி, 781) என்புழிப் போல. (27-30) நீயே ஆர் உயிர்த் தொகுதிக்குப் பேறுதரல் வேண்டி ஐந்தொழில் இயற்றுவை - தேவரீர் அரிய உயிர்க்கூட்டங்கட்கு நுமது திருவடிப் பேற்றை அளித்தல் கருதிப் படைத்தல் முதலான ஐந்தொழில்களைச் செய்வீர், யானே ஒருநெறி இன்றிப் பொறிவழி ஓடி ஐம்புலன் நுகர்ந்தாங்கு அமைகுவென் - ஏழையேன் ஓர் அருள் நெறியில் நிற்றலில்லாமல் மெய்வாய் முதலான ஐந்து பொறிகளின் வழியே பாய்ந்து அவற்றின் ஊறு சுவை முதலான ஐந்து புலன்களை நுகர்ந்தபடியே அமைந்திருப்பேன்; `ஐந்தொழில் என்பன, படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளலாகும். `படைத்தல் என்பது, அறியாமையால் மூடுண்டு கிடந்த உயிர்களுக்கு உடம்பைக் கொடுத்து, அவ்வாற்றால் அவற்றிற்கு அறிவைத் தோற்றுவித்தல்; `காத்த லென்பது, உடம்பெடுத்து உயிர்களுக்கு வரவர அறியாமை தேய்ந்து கழிய, அவற்றின் அறிவை வளரச்செய்தல்; `அழித்தல் என்பது உயிர்கள் தம்முடைய இருவினைப் பயன்களைத் தொடர்ந்து நுகருதலால் அவற்றின் உடம்பு வலிகுறைய அவைதாமும் இளைப்புறுதலால், அவற்றின் பழவுடம்பு கழித்து, மீண்டும் அவ்வுயிர்களைப் புத்துடம்பிற் பிறப்பிக்குமுன் சில காலம் இளைப்பாறச் செய்தல். `மறைத்தல் என்பது ஒவ்வொரு பிறவியிலும் உயிர்கள் மேலும்மேலும் இருவினைப் பயன்களை அவாவுடன் நுகரும் பொருட்டு அவைதமக்கு முற்பிறப்புக்களில் நிகழ்ந்த இருவினை நுகர்ச்சிகளை மறைத்து மறக்கும்படி செய்தல். `அருளல் என்பது இம்முறைகளால் அறியாமை முற்றுந் தேய்ந்து பேரறிவு கிளரப்பெற்ற உயிர்களுக்கு வீட்டின்பத்தை வழங்குதலாகும். எல்லாம் வல்ல இறைவன் ஆருயிர்த்தொகுதிகள் பொருட்டுச் செய்யும் இவ்வைந்தொழி லியல்புகள், அழிப்பிளைப் பாற்ற லாக்க மவ்வவர் கன்ம மெல்லாங் கழித்திட னுகரச் செய்தல் காப்பது கன்ம வொப்பிற் றெழித்திடன் மலங்க ளெல்லா மறைப்பருள் செய்தி தானும் பழிப்பொழி பந்தம் வீடு பார்த்திடி னருளே யெல்லாம் எனச் சிவஞானசித்தியாரில் (1: 37) விளக்கமாய்க் கூறப்பட்டிருத்தல் காண்க. `பொறிகள் எனப் பொதுவாகக் கூறினமையால் ஐம்பொறிகளுமென உரைக்கப்பட்டது; அவையாவன, மெய் வாய் கண் மூக்குச் செவி; ஐம்புல னென்பன அவ் வைம்பொறிகளின் உணர்வுகள்; அவை ஊறு சுவை ஒளி நாற்றம் ஓசை யென்பன; பொறிவழியோடி அவ்வுணர்வுகளை நுகர்த லென்க. ஆண்டவன் படைத்தல் முதலான ஐந்தொழில்களையும் என்றும் இயற்றுதல் போல், ஆசிரியர் தாமும் உறுதல் முதலான ஐந்தொழில்களையும் ஓயாது இயற்றுவதாகக் கூறி ஒப்புமை காட்டினார். `ஓடி யெனப்பட்டது, பொறிவழிச் செல்லுதலில் உள்ளத்துக்கு உள்ள விரைந்த விருப்பத்தை வெளிப்படுத்துதற்கு. (31-34) நீயே மக்கள்மேல் கொண்ட பொச்சம் இல் அன்பில் தாயே அனைய அளியினை - தேவரீர் தம் மக்கள்பால் வைக்கும் பொய்மையில்லாத அன்பில் தாயையே ஒத்த அன்பினை யுடையீர்; யானே மனைவியும் மக்களும் பொருள் எனக்கொண்டு - ஏழையேன் மனைவியையும் மக்களையுமே உறுதிப் பொருள்களெனக் கருதி, நினைவது ஒன்று இல்லாப் பேர் அன்பினனே - ஏனையொரு பெரும்பொருளிருப்பதாகவும் நினைதல் சிறிது மில்லாத பேரன்பினை உடையேன்; `பொச்சம், பொய்; பொக்கம் என்பதன் திரிபு (பிங்கலந்தை); பொச்சமிலன்பு மன்னர் (திருநாட்டுப்படலம், 31) என்பது திருவிளையாடற் புராணம். `தாயே என்பதன் ஏகாரம், பிரிநிலையொடு தேற்றம். `அளியினை, குறிப்பு வினைமுற்று, `அன்பினென் என்பதும் அது; `ஒன்று ஈண்டுச் சிறிதென்னும் பொருளில் வந்தது; இஃதிங்ஙனம் வருமாறு, `மாயைக் குணர்வொன்று மில்லை யென்றே வைத்திடுமதனால் (சிவஞானசித்தியார், 1, 17) என்பதிற் காணப்படும். மக்களு மென்பதன் ஈற்றிலும் பிரிநிலைத் தேற்றேகாரம் விரித்துரைத்துக் கொள்க. இதன்கண், நீ நின்மக்கள்மேல் அன்புடையையாதல்போல், யானும் என் மனைவிமக்கள்மேல் அன்புடையே னென்று ஒற்றுமை காட்டியவாறாம்; இறைவனுக்கு மக்களாவன உயிர்களென்க. (35-42) நீயே - தேவரீர், யானைவெண் மருப்பும் தேனின் இறாலும் மயில் தழைப்பீலியும் விரைகமழ் சாந்தமும் ஒருங்கு தலைமயங்கிய இரும்பெருங்குன்றத்து - யானையின் வெள்ளிய கொம்புகளும் தேனின் கூடுகளும் மயிலின் தழைதலையுடைய தோகைகளும் மணங்கமழுஞ் சந்தனக்கட்டைகளும் ஒருங்கு கலந்துகிடக்கும் மிகப்பெரிய மலையில், ஆனாது உறையும் இயல்பினை - விருப்பம் நீங்காது எழுந்தருளியிருக்கும் இயல் பினையுடையீர்! யானே - ஏழையேன், புலம் இல்கல்வியும் நலம் இல்புகழும் வழுவிய ஒழுக்கமும் கழுவாக்குற்றமும் ஒருவழி அமைந்து பெருகிய செருக்கு எனும் கோடுகெழுகுன்றில் - பகுத்தறிவில்லாத படிப்பும் நன்மையில்லாத புகழும் தவறிய ஒழுக்கமுங் கழுவியகற்றாத குற்றமும் ஒன்றாய்ப்பொருந்திப் பெரிதான ஆணவம் என்னும் உச்சிகெழுமிய மலைமேல், பீடு உறுகுவென் - அமர்ந்து பெருமை பெறுவேன்; இறால், `தேன்கூடு; `இறாறேன் கூடே என்பது திவாகரம் (விலங்கின் பெயர்த்தொகுதி). `தழைப்பீலி, இரண்டாம் வேற்றுமைத்தொகை; `தழை முதனிலைத்தொழிற்பெயர். `தலைமயங்குதல் ஒன்றோடொன்று கலந்துகிடத்தல்; `வகை தெரிவறியாவளந்தலை மயங்கிய (சிலப்பதிகாரம், 14, 178) வென்புழிப்போல. `ஆனாது, ஈண்டு நீங்காது என்னும் பொருட்டு; கொள்ளை மாந்தரினானாது என்னும் அகநானூற்றின் கண்ணும் (3) இச்சொல் இப்பொருட்டாதல் காண்க. `புலம், அறிவு; இங்குப்பகுத்தறிவினை யுணர்த்தும். `பெருகியகுன்று எனத்தொடுத்துக்கொள்க. தீய இயல்புகளெல்லாம் ஈண்டு மலையாக உருவகப்படுத்தப்பட்டன; திருக்குறளில் (3:9) நல்லியல்புகளெல்லாங் `குணமென்னுங் குன்று என உருவகப்படுத்தப்பட்டாற்போல வென்பது. இதன்கண், முருகப்பெருமான் குன்றுகண்மேல் எழுந்தருளி யிருத்தல்போல, ஆக்கியோர்தாமுந் தீமையென்னுங் குன்றுகண் மேல் ஏறியுறைவதாக ஒற்றுமை தேற்றியவாறு காண்க; முருகப் பெருமான் குன்றுகண்மேல் அமர்ந்தருளும் உண்மை, அவனெழுந் தருளுதற்குரிய ஆறுபடை வீடுகளுட் `குன்றுதொறாடல் என்பதும் ஒன்றாதல் கொண்டும், `குன்றுதொ றாடலு நின்றதன் பண்பே என்னுந் திருமுருகாற்றுப் படையின் (217) றிருமொழி கொண்டும் நன்கு துணியப்படும். பீடு, பெருமை. (43-58) நீயே - தேவரீர், அறல் நெறித்தன்ன - செறிகுழல் கற்றையும்- கருமணல் முடங்கினாற்போல் நெளிதல் உள்ள மயிர்த்தொகுதியும், பிறை செறித்தன்ன நறைகமழ் நுதலும் - எட்டாம் பிறைத் திங்களைப் பொருத்தினாற் போன்ற மணம்வீசும் நெற்றியும், கயல் இணைத்தன்ன அகல் இருவிழியும் - இரண்டு கெண்டை மீன்களை முகஞ்சேர்த்து வைத்தாற்போல் அகன்ற இரண்டு கண்களும், குமிகை முகிழ்த்தன்ன அமைவரு நாசியும் - இளைய எள்ளின் மொட்டு அரும்பினாற்போல் அமைந்த மூக்கும், பளிங்கின் அன்ன துளங்கு ஒளிக்கதுப்பும் - பளிங்கிற்போல அசைந்து நிழலாடும் விளக்கத்தினையுடைய கன்னங்களும், வள்ளை அன்ன தெள் ஒளிச் செவியும் - வள்ளைத்தண்டை ஒத்த தெளிந்த ஒளியையுடைய செவிகளும், குலிகம் தோய்த்த இலவு உறழ் இதழும் - இங்கு லிகத்திற் றோய்த்தெடுத்த இலவம் பூவை ஒக்கும சிவந்த வாயிதழும், முறுவல் பூப்ப மின் என் மிளிரும் குறுமுத்து அன்னசிறுமுள் எயிறும் - புன்னகை மலருங்கால் மின்போல் ஒளிவிடுகின்ற குறிய முத்துப்போன்ற சிறிய முள் ஒக்கும் பற்களும், கொழுநீர்ப் பணிலத்து விழுமிய கழுத்தும் - செழுமையான நீர்வாழ் சங்கை ஒக்குஞ் சிறந்த கழுத்தும், எமக்கு அருள் மரபின் தமக்கு அமை கையும் - ஏழையேங்கட்கு அருள் செய்யும் இயல்பினால் தமதருட்டன்மைக்கு இசைந்த அருட்கையும், சிவிறி விரித்து அன்ன சிறு திருவடியும் - சிவிறியை விரித்து வைத்தாற் போன்ற சிறிய திருவடிகளும், எம் உளம் நீங்காச் செம்மையின் தோன்ற வீறு கெழு பகுதியின் வேறு இருமடவர் கூறுகொண்டு இருபுடை விளங்க - எளியேங்கள் உள்ளத்தினின்றும் நீங்காத செவ்வியில் இடையறாது தோன்றுமாறு மேன்மை கெழுமிய இடவலப் பக்கங்களில் வேறுவேறாக மங்கையர் இருவர் பங்குகொண்டு இருபக்கங்களிலும் விளங்க, சீறிய மயில்மிசை வருகுவை - சீற்றங் கொண்டுவந்த மயிலின் மேல் எழுந்தருளி வருவீர்! நெறித்தல், முடங்குதல், நெளிதல், நெறிகொள் வரிக்குடர் (புறம், 160) என்பதன் உரையைக் காண்க. மக்கள் உடம்புபோல் வாலாமையும் அதனால் தீய முடைநாற்றமும் இல்லாமல், எல்லாம் வல்ல இறைவியின் அருளுடம்பு நறுமணங் கமழ்தலே உடைமையின் நுதல், `நறைகமழ் நுதல் எனப்பட்டது; சாந்தும் நீறும் அணிதலுடைமையின் அங்ஙனங் கூறப்பட்ட தென்றலுமொன்று. மகளிர் நெற்றிக்குப் பிறை உவமையாதலின் வகை முன்னரே விளக்கப்பட்டது. குமிகை - இளையென், (பிங்கலந்தை) கன்னங்களின் துளங்கொளி அவற்றின் பக்கத்தே யமைந்த செவியின் மேலும்பட்டு ஒளிசெய்தலின், அச்செவியுந் தெள்ளொளியுடைய என்றார். மற்று விளக்கம் மிக்க மணிகளால் இழைக்கப்பட்டதோடு அணிந்த செவிகளாகலின், அங்ஙனந் தெள்ளொளியுடைய வாயின வென்றலும் ஒன்று, அன்றி; இவ்விருவகை யொளிகளாலும் அவை விளங்கின வெனலுமாம். இயற்கையே செந்நிற முடையதாகிய இலவமலர் இங்குலிகத்திற் றோய்த்தெடுத்தவழி மேலுஞ் சிவந்த நிறத்தின தாய் விளங்கலின் அஃது அம்மையரின் வாய் இதழுக்கு உமையாயிற்று. அத்துணைச் சிவந்த இதழ்கள் திறந்தவழித் தோன்றும் பற்கள் முத்துபோல் வெண்ணிறத்தின வாயினும், அச்சிவந்த இதழ் ஒளியுடனும் விரவுதலின், அவை மின்னொளியொடு மிளிரும் என்றார், முத்து வெண்மைக்கும் ஒளிக்கும் வன்மைக்கும் உவமை. பணிலம், மழமழப்புக்கு உவமை; நீரின்கண் இருந்து உண்டாதலின், `நீர்ப்பணிலம் எனப்பட்டது; `நல்ல நீர்மையுள்ள பணில மெனலுமாம். `சிவிறி விரித்தன்ன வென்னுங் குறிப்புத் திருவடி விரல்கள் தனித்தனி நெருங்கி நிற்றலைக் குறித்தவாறாம். வீறு - `வேறொன்றற் கில்லா அழகு என்பர் நச்சினார்க்கினியர் (சீவக சிந்தாமணி, 489) மடவார், இங்கு வள்ளி தெய்வயானையம்மையார். சீறியமயில் - சீற்றத்துடன் வந்த சூரனாகிய மயில்; கடைப்படியாக முருகப்பிரானது வேலால் இருகூறாகப் போழப்பட்ட சூரனது உடல் சேவலும் மயிலுமாகிப் பிரானொடு பொருதற்குப் பெருஞ்சீற்றத்துடன்வர, இறைவன் சேவலைக் கொடியாக நிறுத்தி, மயிலை ஊர்தியாகக் கொண்டனெனக் கந்தபுராணங் கூறும். அது, தாவடி நெடுவேன்மீளத் தற்பரன் வரத்தால் வீடா மேவலன் எழுந்து மீட்டு மெய்பகிரிரண்டு கூறுஞ் சேவலுமயிலுமாகிச் சினங்கொடு தேவர் சேனை காவலன் றன்னைநாடி யமர்த்தொழில் கருதி வந்தான். என்னுஞ் சூரபன்மன் வதைப்படலச் செய்யுளால் (492) அறியப்படும். மன், ஓ அசைநிலை. (59-77) ahnd - ViHna‹, fUbe¿ kwK« - fUâa be¿Æidíila ghtK«, mU»a m¿î« - FW»a m¿î«, ÉÇîW ka¡fK« - ÉǪj ka¡fK«, âU»a ádK« - KW»a ádK«, bjh©l®¥gÂah ehzK« - moah®fis tz§fhj ehzK«, v©njhŸ K¡f© bgUkh‹ bgU«òfœ e¡F¢ rka¡ fz¡f® mikî ïyTW« òš ciu bfhŸS« bghšyh¡ »Hikí« - v£L¤ njhŸfS« _‹W f©fS« cila átbgUkhdJ bgU«òfiH VsdŠ brŒJ maškj¤jh®fŸ MuhŒªJ mikjš ïythf¡ TWŠ á¿a T‰Wfis nk‰bfhŸSª Ôa ïašò«, btFËbahL g^c« jif ïš kh‰wK« - ád¤bjhL Toa jFâ Æšyhj ng¢R«, m¿nth® eif¥g klnth® âif¥g¥ bghUbshL bghUªjh¥ òFªJbrh‹ bkhÊí« - m¿P® eif¥gî« m¿Éyh® âif¥gî« bkŒ«iknahL ïirahj K‹ÉiuªJ bkhÊíŠ brhšY«, cWtiu¥ ngzhJ vG« ïWkh¥ò« - bgÇahiu¥ ngh‰whJ vG»‹w brU¡F«, vËtªnjhU« ïut‹ kh¡fS« mGÉË¡ f«giy bfhŸs¡FiHÉ‹¿¥ gGJw¢ br‹wh§F v¿ªJ eF« KUL« - t¿atU« ïu¤j‰bwhÊiy¢ brŒthU« mGJ ãwiu miH¡F« Xy« ïl beŠás¡fÄšyhk‰ bghšyh§ F©lhf¢ br‹W m§nf mt®fis mo¤J m›th‰whš ct¡F« KU£L¤ j‹ikí«, m¿bthL glhm¢ áWbjhÊš Kiwikí« - m¿bthL Tlhj òšÈa braštifí«, Ú§fhkuã‹ X§»¥bghÈa- ãÇahj Éašãdhš Ä¡F És§f, ah‹ vdJ v‹D« Tdš »H¤âa® bgU«òw« ftÉ tÆ‹ tÆ‹ mik¤J - ah‹ vdJ v‹D§ T‹bfGÄa kidah£okhÇ‹ gU¤j KJif¤ jGÉ ïl¥g¡f¤J« ty¥g¡f¤J« mik¤J¡ bfh©L, kw« nj® thœ¡if kÆšÄir¡ bfh©L - ÔÉidna njL« thœ¡if ba‹D« kÆÈ‹nkš mk®ªJ, áwªjnjh® âw¤âš átQbt‹ m‹nw - ï›tif¥g£l bgUik ahd bjhU tifÆš Ãd¡F ÃfuhFnt dšyndh!; கருநெறி, கருகிய நெறி; ஆவது பொருண்மறைந்த நெறி. கருகல், பொருண்மறைதல்; எனவே இங்குப் புண்ணியப் பொருண்மறைந்த நெறியென்க. `திருகிய சினம் முறுகிய சினம்; ஆவது மிகுந்த சினமென்க; உரவுச் சினந்திருகிய என்றார் புறநானூற்றிலும் (25). தொண்டர்ப் பணியா நாணம், திருத்தொண்டரைப் பணிய வொட்டாதபடி தடைசெய்யும் நாணமென்பது. சிவபெருமான் உலகமெங்கணும் நிறைந்த முழுமுதலாகலின் உலகத்தின் எட்டுத் திசைகளையும் அவனுக்கு `எண்டோள்க ளெனவும், ஞாயிறுந் திங்களுந் தீயும் அவனுக்கு `முக்கண்க ளெனவும் அறிந்தோர் உரைப்ப. `சமயக் கணக்கர், சமயநூல் வல்லுநர்; சமயக் கணக்கர்தம் மதிவழி கூறாது (கல்லாடம், 15) என்பது காண்க. அமைவில, குறிப்பு முற்றெச்சம். `கிழமை, இங்கு இயல்பு, இஃது இப்பொருட்டாதல் வாரமுங் குணமுங் காணியுங் கிழமை யென்னும் பிங்கலந்தையால் (3370) அறியப்படும். பிறர் விரும்பாத நிலையில் தானே முன்விரைந்து பதறிமொழியுஞ் சொல் `புகுந்து சொன் மொழி யெனப்பட்டது. `பொருளொடு பொருந்தா என்பதிற் பொருள் மெய்ம்மையினை யுணர்த்திற்று; பொய்யுரையே யன்று பொருளுரையே என்பதிற் போல (சிலப்பதிகார, 9, 18) உறுவர், மேலோர்; உறுவர்ப் பேணல் என்னுஞ் சீவக சிந்தாமணித் தொடர்க்கு (2816) `மிக்கோரை விரும்புதல் என்று உரைகாரர் நச்சினார்க்கினியர் கூறுதல் இங்கு உற்று நோக்கற்பாலது. `இரப்போர் மாக்கள் எனப்பட்டார், இரத்தலின் இழிவு கருதி, `அழுவிளிக் கம்பலை அழுது எதிர்ப்பட்டாரை விளித்து இடும் ஓலஒலி; `கம்பலை யென்பது ஒலி; இது. கம்பலை சும்மை கலியே யழுங்க லென்றிவை நான்கு மரவப் பொருள என்னுந் தொல்காப்பிய உரியியல் (53) நூற்பாவால் உணரப்படும். அழு என்னும் முதனிலை வினையெச்சப் பொருளில் வந்தது; வரிப் புனை பந்து என்பதிற்போல (திருமுருகாற்றுப்படை, 68). `எறிதல் ஆவது `அடித்து வருத்துதல் முதலியன வென்க. `முருடு விறகு (திவாகரம்); விறகையொப்ப ஈரமில்லாக் கொடுநெஞ்சப் பான்மையினை யுணர்த்திற்று; வன்பராய் முருடொக்கு மென் சிந்தை என்றார் திருவாத வூரடிகளும் (திருவாசகம், செத்திலாப் பத்து, 4). கூனற்கிழத்தியரின் முதுகு குவிந்து தோன்றுமாகலிற் `பெரும்புறம் என்றார். `கவவல் அகத்தே அடங்கும்படி தழுவல், கவவுக்கை ஞெகிழாமல் என்பதன் உரையை உற்றுநோக்குக (சிலப்பதிகாரம், 1, 61). (78-85) நீயே - தேவரீர், காந்தள் அம்கண்ணி ஏந்திய மார்பத்து - காந்தட் பூக்களாற் றொடுக்கப்ட்ட மாலையைத் தாங்கிய மார்பில், செம்சாந்து நீவிய சிறந்த கோலமொடு - சிவந்த சந்தனக் குழம்பைத் தடவிய சிறந்த திருக்கோலத்துடன், குறவர் மகளிர் விழவொடு குழீஇ - குறவர் பெண்கள் எடுக்கும் விழாவொடு கலந்து, வெறி அயர் களத்தில் விளங்குவை - வெறியாடு மிடத்தில் முனைந்து தோன்றுவீர்! யானே - அடியேன், முல்லை அம் தொடலை முருகு எழ அணிந்து - முல்லை யரும்புகளாற் பிணைக்கப்பட்ட மாலையை மணங்கமழும்படி அணிந்து, வெண்சாந்து பூசிய கேழ்கிளர் மார்பமொடு - வெண்சந்தனம் பூசிய விளக்கம் மிக்க மார்புடன், இழிசின மகளிர் இயைந்த இன்ப வெறியாடு களத்து வெளிப்படுகுவென் - இழிந்த மகளிரொடு பொருந்திய சிற்றின்ப மென்னும் வெறியாடு களத்தில் வெளிப்பட்டுத் தோன்றுவேன். ஏ: அசைநிலை. `காந்தளங் கண்ணி `முல்லையந் தொடலை என்பவற்றில் அம், சாரியை. `கண்ணியுந் `தொடலையும் இங்குப் பொதுப் பெயராய்நின்று மாலையை யுணர்த்தின. `செஞ்சாந் தென்பது குங்குமப் பூ முதலான சிவந்த மணப்பண்டங்களாற் கூட்டப்படுங் கூட்டு; நீவிய - தடவிய; இப்பொருட்டாதல் `திவாகரத்திற் காண்க. `வெண்சாந்து பச்சைக் கருப்பூரமும் பனிநீரும் முதலான நறுமணப் பொருள்களாலான கலவை. வெண்சாந்து பூசிய மார்பின்கண் செஞ்சாந்து பூசிய மார்பைவிட நிறம் விளங்குதல் இல்லாமையின், `கேழ் என்பதற்கு `விளக்கமென உரைத்தலே வாய்வதாம்; `கேழ் -ஒளி, (பிங்கலந்தை). குறவர்கள் தாம்வழிபடும் முருகக் கடவுட்கு விழாவெடுக்குங்காற் பெரும்பான்மையும் அவர் மகளிரே ஆங்குக் குழுமி ஆடுதலும் பாடுதலுஞ்செய்து வெறி அயர்வர். என்னை? மகளிர்க்கே அவ வாடுதலும் பாடுதலுஞ் சிறத்தலின் என்பது. குறவருந் தங்குறத்தியரொடு கூடிக் குரவை அயர்வரென அகநானூற்றிற் (232) பெறப்படு மாயினும், ஆண்டு அஃது அக்குரவை யயர்வைக் குறத்தியர்க்கே பெரும்பான்மையும் எடுத்தோதுதலாலும், அஃதொப்பவே சிலப்பதிகாரத்தில் வரும் `குன்றக்குரவை யென்னுங் காதையும் மகளிர் கூற்றாகவே பெரிதுங் கூறப்பட்டிருத்தலாலும், மேலும் வள்ளியின் கோலம் பூண்டு குறவர்மகளிர் `வள்ளிக்கூத்து என ஒன்று ஆடுதலுடையராய் முருகனுக்கு விழவயர்வரென்னுங் குறிப்புத் தொல்காப்பியம் (புறத்தினையியல், 5), பெரும்பாணாற்றுப் படை (370) முதலான பண்டைத் தண்டமிழ் நூல்களிற் கூறப்படுதலாலும், பண்டைச் செந்தமிழிலக்கண இலக்கியங்கள் பெரும்பாலனவற்றிற்கு உரைகண்ட ஆசிரியர் நச்சினார்க் கினியரும் இக்கூத்து மகளிர்க்கே உரித்தெனத் துணிபுரைத்தலாலும், இற்றை ஞான்றும் `வேடர்பலி முதலாக விழவெடுக்கு மிடங்களில் மகளிரே வள்ளிக் கோலம் பூண்டு முருகனொடு விழவயர்தல் உலகவழக்கினுள்ளும் எங்குங் காணப்படுதலாலும், குறவர் தம்மிலும் அவர் மகளிர் மாட்டே முருகக்கடவுள் முனைத்து விளங்குவானென்பது சிறிதும் ஐயுறவின்றி நன்கு தெளியப்படும. அதுபற்றியே ஈண்டுக் குறவர்மகளிர் விழவொடு, குழீஇ வெறியயர்களத்தில் விளங்குவை யெனப்பட்டதென்க. வெறி தெய்வமயக்கம்; அயர்தல். ஆடல்; களம், இடம்; எனவே `வெறியயர் களம் என்பது `தெய்வ மேறியாடுமிட மெனக் கொள்ளப்படும். `இழிசினமகளிர், இழிந்தமகளிர்; இழிசின இப்பொருட் டாதல் இழிசினர்க்கே யானும் பசித்தார்கணீதல் என்னுஞ் `சிறுபஞ்ச மூலத்திற் (77) காண்க. சான்றோர்கள் நூல்செய்யப் புகும்வழி உலகவர்பாற் காணப்படுங் குற்றங்களையெல்லாந் தம்மேலேற்றி அவர் திருந்தும் பொருடடுத் தந்நூற்கண் உரையாநிற்பர். இது, தேவார திருவாசக முதலான திருமறைத் தமிழ்நூல்களால் நன்கு பெறப்படும்; இங்கு அடிகளும் அம்மரபேபற்றி இப்பாட்டின்கண் மிகப்பல குற்றங்களை யெல்லாந் தம்மேலனவாக ஏற்றிக் கூறியருளுவாராயினரென்பது. பிறாண்டு வருமிடங்களிலும் இக்கருத்தேகொள்க. மகளிரை யடுத்து `ஒடுவுருபு விரித்துக்கொள்க. `இன்பவெறி, சிற்றின்ப மயக்கம்; இம்மயக்கத்திற் றிளைத்தாடு மிடம் `பரத்தையர் சேரி யென்க. (85-87)எனவாங்கு - என்றங்ஙனமாக, நின்னொடும் என்னிடைப்பட்ட இவ் இயைபால் - நினக்கும் எனக்கும் இடையே உண்டான இத்தொடர்பினால், எனக்கு அருள்தரல் இயையும் - எளியேற்குத் தேவரீர் தமது அருளை வழங்குதல் பொருந்தும்; நின்னொடு மென்பது நினக்கும் என உருபுமயக்கமாயிற்று. (87-91) தனக்கு நிகராகுநரொடு நகைதருகேண்மை செயலாகுவதென மொழிகுவர் அதனால் - தனக்கு ஒப்பவாரோடு ஒருவன் மகிழ்ச்சிதரும் நட்புச்செய்தலே ஆக்கந்தருவது எனச்சான்றோர் ஆணை தருவாராகலின், நுந்தையும் முனிகுவன் அல்லன் - நும் தந்தையாகிய சிவபெருமானும் நும்மை அதற்காக வெறுப்பான் அல்லன்; அன்னையும் நுந்தை வழிப்படூஉம் தகையள் - நும் தாயாகிய உமையம்மையும் நும் தந்தையின் வழிநிற்குங் கற்புடையள்; நட்பு ஒத்தார்கண்ணதென்பது உணர்ச்சிதான் நட்பாங்கிழமை தரும் என்னும் அருமைத் திருமொழியால் (திருக்குறள், 785) இனிதுபெறப்படும். `நுந்தை முன்னிலை முறைப்பெயர், தை முறைப்பெயர் ஈறு; `நும் தந்தை என்பது திரிந்ததன்று; குற்றியலுகர முறைப்பெயர் மருங்கின் என்னுஞ் சூத்திரத்தை நோக்குக (தொல்காப்பியம், எழுத்து, 34.) `நுந்தையு முனிகுவ னல்லன், அன்னையும் நுந்தை வழிப்படுந் தகைய ளாதலால், எனக்கு நீ அருடரற்கு ஏதும் இடுக்கில்லையெனக் கூறியவாறாம்; இஃது அவாய் நிலையாற் கொள்ளப்படும். (91-99) மைந்து கெழு பொருப்பைப்போழ்ந்து - வலிமை பொருந்தி `கிரவுஞ்ச மலையைப்பிளந்து, விருப்பொடும் எதிர்ந்த அரிமா முகத்தனைப் பொரிபடநூறி - போர்விருப்பத்தோடும் எதிர்ந்துவந்த `சிங்கமுகாசுரன் என்பவனைப் பொரிந்துபோகப் பொடிபடுத்தி, காழ் உறும் அரக்கரை நூழில் ஆட்டி மனவைரங்கொண்ட அரக்கர்களைக் கொன்றுகுவித்து, பொரியரை மாவாய் விரிகடல் மூடிய சூர்முதல் முதலற முருக்கி - பொரிந்த அடியினையுடைய மாமரமாகி அகன்ற கடலினை மூடிய சூரர்தலைவனை முதலறும்படி முறித்துவீழ்த்தி, பேர் அருள் அழிவுபடும் உள்ளத்துப் பழியொடு பிறங்கும் உலையா வாழ்க்கைத் தேவர்க்கு - தேவரீரது பேரருளை அழிவுபட்ட உள்ளத்தோடும் `சூரர்க்கு ஆற்றாதார் என்னும் பழியினால் மிகுந்தும் கெடாத உயிர்வாழ்க்கையினையுடைய தேவர்களுக்கு, தலைமையொடு நல்கும் - அரசுசெலுத்துந்தலைமையுடன் கொடுத்தருளுகின்ற, தமிழ்கிழவோயே - தமிழ்மொழிக்கு உரியையான முருகக்கடவுளே; `பொரிபடநூறி, பொரிந்துபோகப் பொடிபடுத்தி; `நூறு பொடி, (திவாகரம்). `நூழிலாட் டென்பது, கொன்றுகுவித்தல் (தொல்காப்பியம், புறத்திணையியல், 17). பொரியரை, மரங்களின் நால்வகையரைகளுள் ஒன்று; அது பொரிந்த அடிமரம். முதலற, அடியோடு; முருக்கி, முறித்து; இதற்கு இப்பொருள் உண்மை காப்புடைய வெழு முருக்கி (14) என்னும் புறாநானூற்று ரையிற்காண்க; ஆவது இங்குக் கொன்றென்னும் பொருட்டு. பிறங்கு தல் - மிகுதல் (புறம், 49). `உலையா வாழ்க்கையைத் தேவர்களுக்கு ஆளுகை செய்யும் உரிமையுடன் வழங்கினான் என்றற்குத் `தலைமையொடு நல்கும் எனப் பட்டது; உலையா - கெடாத (புறப்பொருள் வெண்பாமாலை, 10, 10). மானம் அழிந்தும் உயிர் நீக்கமாட்டாச் சாவா வாழ்க்கையுடைய தேவர்க்கு மீண்டும் அரசுரிமை நல்கி அவரது மானத்தை நிலைநிறுத்தினமை கூறியபடி. இன்னோசை நலங்கருதித் தமிழ் கிழவோயே எனமிகாது இயல்பாய் வந்தது. பழமுதிர்சோலை மலைகிழவோனே (திருமுருகாற்றுப்படை, 317) என்புழிப் போல. `தமிழ்க்கிழவோயே, தனக்கு நிகராகுநரொடு கேண்மை செயலாகுவதென மொழிகுவரதனால் நுந்தையு முனிகுவனல்லன் அன்னையும் நுந்தைவழிப்படூஉந் தகையள், ஆகவே நின்னொடும் என்னிடைப் பட்ட இவ்வியைபால் எனக்கு நீ யருடரலியையும் என வினைமுடித்துக் கொள்க. (10) 11. பிரிவாற்றாத தலைவி மதியொடு வருந்தல் கிழமை நினையாத கேழ்மதியே யொற்றிக் குழகன் பிரிந்த குறிப்பாற் - பொழுதறிந்து செல்லுமுயிர்ப் பேதைக்குத் தீங்கிழைப்பாய் நின்னையடும் வல்லரவைக் கொல்லா மயில். (இ-ள்). கிழமை நினையாத கேழ்மதியே - உரிமை கருதாத நிறங் கிளர்ந்து விளங்கும் நிலவே, ஒற்றிக்குழகன் பிரிந்த குறிப்பால் - திருவொற்றிமுருகன் என்னைப்பிரிந்த குறிப்பினால், பொழுது அறிந்து - நேரந்தெரிந்து, செல்லும் உயிர்ப்பேதைக்குத் தீங்கு இழைப்பாய் - பிரிவாற்றாமையால் உடம்பினின்றும் பிரிந்து செல்லுகின்ற உயிரையுடைய பேதையாகிய எனக்குத் தீமை புரிகின்றனை; நின்னை அடும்வல் அரவை மயில் கொல்லா - இவ்வாறே நீ செய்வையாயின் நின்னை விழுங்கும் வல்லமை வாய்ந்த `இராகு என்னும் பாம்பை என் தலைவன் ஊர்ந்துவரும் மயில் கொல்லாது என்க. திங்களும் ஞாயிற்றுக்கு மனைவியாயமைந்த பெண் பாலாகலான் தன்னோடொத்த பெண்பால் இவளன்றே என்னும் உரிமை கருதாமல் அது வருத்துதலிற் `கிழமை நினையாத என்றும், அங்ஙனங் கிழமை நினையாது வருத்துகின்றுழி ஒளிகிளர்ந்து நிற்றல் பெண்மைக்கு இழுக்காமாகலிற் `கேழ்மதியே என்றுங்கூறினாள். `குழகன், இங்குக் கட்டிளமையுடையவன்; அவன் முருகன்; `முருகன் என்னுஞ்சொற்கும் அதுவே பொருளாகலான், `குழகன் என்பதற்கு முருகன் எனவே உரைகூறப்பட்டது. `குழவு இளமைப் பொருட்டாதல், மழவுங் குழவு மிளமைப்பொருள (தொல்காப்பியம், சொல் 312) வென்பதனா லறியப்படும். `குறிப்பாற் பொழுதறிந்து எனப்பட்டது, பிரிந்த குறிப்பினால் வருத்தும் நேரமறிந்து என்றற்கு. `தலைவன் பிரிவைப் பொறுக்கலாற்றாமையால் வருந்தி உயிர் நீங்கிக்கொண்டிருக்குந் தறுவாயில், அவ்வுயிர் பின்னும் விரைந்து நீங்கிச்செல்லுமாறு மதியே, நீ தீங்கிழைக்கின்றனை, யென்றமையால், வருந்துவாரைப் பின்னும் வருத்துங் கன்னெஞ்சமும், எளியாரை வருத்தும் பேடித்தன்மையும் ஆகாஎனக் கூறினாளாயிற்று. தலைவன் பிரிவைப் பொறுமையுடன் ஆற்றிக் கொண்டிருக்கும் அறிவாற்றல் இல்லாமையின் இங்குத் தலைவி `பேதை யெனக் குறிக்கப்பட்டமை அறிந்து மகிழற்பாலதாகும். திங்கள் இழைக்குந் தீங்காவது காமநோய்மலரும் மாலை நேரத்தில் தம் தலைவரைப்பிரிந்து பிரிவாற்றாமையால் வருந்தும் மகளிர்மேல் தன் தண்கதிர்களைச்சொரிந்து அவ்வாற்றால் அவர்க்கு அவர்தங் கேள்வரின் இனிய காதல்நினைவை மேலும் மேலு எழுப்பி வருத்துதலாகும். அந்நேரத்தில் அம்மகளிர் நிலவினொளியால் வருத்தம் எய்துதலின், அந்நிலவு தமக்குத் தீங்கிழைப்பதாய் அவர் கருதுவாராயினரென்க. இது கருதியே நந்தமிழிலக்கியங்கள் அத்தண்ணென்கதிரை வெய்தென அனலாக உருவகப்படுத்துரைப்பதும் மரபாயிற்று. செப்பிளங் கொங்கைமீர் திங்கட் சுடர்பட்டுக் கொப்புளங் கொண்ட குளிர்வானை - இப்பொழுது மீன்பொதிந்து நின்ற விசும்பென்ப தென்கொலோ தேன்பொதிந்த வாயால் தெரிந்து. என்னும் நளவெண்பாப்பாட்டு (சுயம்வரகாண்டம், 104) இங்கு நினைவுகூரற்பாலது. `கொல்லாது என்பது ஈறுகெட்டுக் `கொல்லா என நின்றது. நீ எனக்குத் தீங்குசெய்தாய் என்பதை என் தலைவனது ஊர்தி அறியுமாயின், அது நின்மேற் பகைகொண்டு நின்னை விழுங்கும் வல்லரவைக் கொல்லாமல் விட்டு அவ்வரவு நின்னை விழுங்குதலையும் அதனால் அப்போது நீ வருந்துதலையுங் கண்குளிரப் பார்த்துக் கொண்டிருக்கும் எனத் தலைவி கருதிக்கூறினாளென்பது ஈற்றடியின் கருத்து. (11) 12. தோழி பருவங்காட்டி வற்புறுத்தல் மயின்மீ திவர்ந்து திருவொற்றி யூர்ச்சென்ற மன்னவர்தா மயின்மே லமர்த்தகண் ணாய்பிரிந் தாரல்ல ரன்பு மிக்குப் பயினோடு சேர்த்திய கற்போற் றுணையைப் பயிர்ந்தகுரற் குயின்மா வொடுங்கும் பொழுதும்வந் தன்றினிக் கூடுவரே (இ-ள்) மயில்மீது இவர்ந்து திருவொற்றியூர் சென்ற மன்னவர்தாம் - மயில்மேல் எழுந்தருளித் திருவொற்றியூருக்குச் சென்ற நின்தலைவர், அயில்மேல் அமர்த்த கண்ணாய் - வேலொடு மாறுபட்ட கண்களையுடையாய், பிரிந்தார் அல்லர் - உண்மையில் நின்னைப்பிரிந்து சென்றனர் அல்லர்; அன்புமிக்கு - அன்புமிகுந்து, பயினோடு சேர்த்திய கல்போல் துணையை - அரக்கொடு சேர்க்கப்பட்ட கல்லை ஒக்கும் உள்ளம் பிரியாப் பெடைப்பறவையை, பயிர்ந்தகுரல் குயில் மா ஒடுங்கும் பொழுதும் வந்தன்று - அழைத்த குரலையுடைய குயிற்சேவல் மாமரத்திற் சென்றொடுங்குதற்கு ஏதுவாகிய கார்காலத்து மாலைப் பொழுதும் வந்தது; இனிக்கூடுவர் - ஆதலால் நின் தலைவரும் இனி வந்து நின்னைச்சேர்வர் என்பது. அழகியவாய்க் காண்பார்க்கு மகிழ்ச்சிமிகப் பிறழும் மாதர்கண்களின் இயற்கை, புரளுந்தோறுங் காண்பார்க்கு அச்சத்தினை விளைக்கும் வேற்படைக்கு இன்மையின் வேலொடு மாறுபட்ட என்றார்; வடிவத்தால் வேலோடு ஒப்பினுஞ் செயலில் அதனோடொவ்வா கண்கள் என்றவாறு; அமர்த்தல் - மாறுபடல், பெண்டகைப் பேதைக் கமர்த்தனகண் என்னுந் திருக்குறளிற்போல (1084). பயினொடு சேர்த்திய கல் பிரிவறியாத் துணைக்கு உவமையாதல், சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய கற்போல் என அஃது அக நானூற்றில் 1, 356 ஆஞ் செய்யுட்களில் இருகாற்போந்தமையாற் கண்டுகொள்க. `மிக்கு என்னும் வினையெச்சம் `பயிர்ந்த வென்னும் பெயரெச்ச வினைகொண்டு முடிந்தது. பயிர்தல் - அழைத்தல்; துய்த்தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும் என்னும் புறநானூற்றின் (158) உரையைக் காண்க. வந்தன்று, வந்தது; அன்சாரியை. `ஒடுங்கும்பொழுது என்றது கார்காலத்து மாலையை; குயில்கள் வேனிற்காலத்தில் மகிழ்ந்து கூவுதலும் மாரிகாலத்தில் வருந்தி வாயவிதலும் இயல்பு; இவை மாமரத்திலேயே விரும்பியுறையும். வினைமேற் சென்ற தலைவன் வினைமுடித்து மீண்டு தன் தலைவியைச் சேருநேரம் இதுவே யென்பது பெரும்பெயல் பொழிந்த சிறு புன்மாலை (6) என முல்லைப்பாட்டிற் குறிக்கப்படுதல் இங்கு நினைவுகூரற் பாலது. எனவே, தலைவன் வருங்கார் காலத்து மாலைப் பொழுது வந்ததென்று தோழி தலைவிக்குப் பருவங்காட்டி அவளை ஆற்றாமை தணியுமாறு வற்புறுத்தினாளாயிற்றென்க. (12) 13. அருணிலை வியத்தல் எல்லாம் வல்ல இறைவன் தமக்குப் பிறவிகடோறுஞ் சிறிதுசிறிதாக மெய்யறிவு தோற்றுவித்துப், பின்னர்த் தன் இன்னருளை வழங்கியருளிய அருணிலையை அடிகள் வியந்துரைத்தல் இப்பாட்டின் பொருள். (1-7) கூடிய இருளின் வாடுவது ஒன்றோ - இயற்கையே பொருந்திய மலவிருளின்கண் அழுந்தி வருந்துவது ஒன்று மட்டுமோ; பீடு உயர் நின்புகழ் நாடாது ஒன்றோ - பெருமை மிகுந்த தேவரீரது அருட்புகழை விரும்பாமை ஒன்றுமட்டுமோ, பெறுவது அறியாச் சிறுமை ஒன்றோ - பெறுதற்குரிய நிலையை அறிந்து கொள்ளமாட்டாத சிறுமையுடையமை ஒன்று மட்டுமோ, மருவரக்கிடந்த தெரிவு இல்காலத்து - இங்ஙனம் இந்நிலைகள் எல்லாம் பொருந்தக்கிடந்த ஏழையேனது தெரிதல் இல்லாதகாலத்தில், பொருவு இல் இன்பம் தருவது குறித்து - ஒப்பில்லாத பேரின்பம் அளிப்பது திருவுளங்கொண்டு, புல் முதலாகிய மெய்யில் புகுத்தி ஓர் அறிவு உறுத்தினை சிலநாள் - புல் முதலான நிலையியற்பொருளுடம்பு களிற் செலுத்திப் பிறவிகளைத் தோற்றுவித்து அவ்வாற்றால் `ஊற்றுணர்வு என்னும் ஓர் அறிவினைச் சிலகாலம் அறிவுறுத்தாநின்றாய்; `இருள், ஆணவமலவல்லிருள் அஃது உயிர்களை இயற்கையே பிணித்திருத்தலாற் `கூடிய இருள் எனப்பட்டது. ஆணவ இருள் உயிர்களை இயற்கையே பொருந்திநிற்கும் உண்மை, அருளுடைய பரமென்றோ அன்று தானே யானுளனென்றும் எனக்கே யாண வாதி பெருகுவினைக் கட்டென்று மென்னாற் கட்டிப் பேசியதன்றே யருணூல் பேசிற் றன்றே என்று தாயுமானச் செல்வனார் (ஆகாரபுவனம் சிதம்பர ரகசியம், 29) சிக்கறுத்துத் தெளித்துக் கூறியருளிய செம்மொழிப் பாட்டால் இனிது விளங்காநிற்கும். `ஒன்றோ வென்பது எண்ணிடைச்சொல்; இஃது அறனொன்றோ ஆன்ற ஒழுங்கு என்னுந்திருக்குறள் (148) அடிக்குப் பரிமேலழகருரைத்த வுரையானும், மாநகர் சுடுதலொன்றோ மதனனை யழித்தலொன்றோ என்னுஞ் சீவகசிந்தாமணிச் செய்யுளானும் அறியப்படும். நாடாதது எனற்பாலது `நாடா தென நின்றது தொகுத்தல்; இது தொழிற்பெயர்; `பெறுவது வினையாலணையும் பெயர். சிறுமை, இங்குச் `சிறுமையுடைமை யென்க; உடைமையாந் தன்மை உடைமைமேல் ஏற்றிக்கூறப்பட்டது. `வாடுவதொன்றோ, நாடாதொன்றோ, சிறுமையொன்றோ என்பன முறையே உயிர்களின் மலமறைப்பையும், அம்மறைப் பினாலான அறியாமையையும், அவ்வறியாமையாலான சிறுமையையும் உணர்த்தாநின்றன. `மருவர என்பதன்முன், `இங்ஙனம் அல்லது `இவ்வாறு என ஒருசொல் வருவித்துக்கொள்க. மருவரல், மருவல்; `கிடந்த வென்னுஞ் சொல் இங்குச் செயலற்றுக் கிடந்தமையினை யுணர்த்திற்று. உயிர்கள் பிறவிக்கு வராததன்முன் ஆணவமலவல்லிருளால் முழுதும் விழுங்கப்பட்டு, அறிவுவிளக்கந் தினைத்தனையு மின்றித், தம்மையுந் தம்மையுடைய, தலைவனையுந் தம்மைவிழுங்கிய மலவிருளினையும் அறியமாட்டாமல், இயற்கையேயுணர் வில்லாக் கல்லுங்கட்டையும்போற் கிடத்தலின், அக்காலம் இங்குத் `தெரிவில் காலம் எனப்பட்டது. உயிர்களுக்கு அஃதோர் இருள்நிலையாகும். சமயச் சான்றோர் இதனைக் `கேவலநிலை யென்ப. `பொருவில் இன்பம் வீடுபேற்றின்பம்; தருவது, தொழிற் பெயர்; குறித்து, குறிக்கொண்டு. `புல் என்றது இங்கு உடம்புக்கு; ஏனைய வற்றிற்கும் இஃதொக்கும். `சிலநாள் என்பது இங்கு எத்தனையோ ஆண்டுகளைக் குறியா நின்றது. ஏனைப்பல பிறவிகளின் அளவில்லாக் காலவெல்லையை நோக்கப் புன்முதலாகிய மெய்யிற்புகுத்தி ஓரறிவுறுக்கும் அளவில் நாட்கள் சிலநாட்களாயினவென்க. மேல்வருவனவும் இங்ஙனமே கொள்ளற்பாலன. வினையிலே கிடக்கும் உயிர்களை அவ்வினையினீங்கிய இறைவன் இவ்வாறெல்லாம் புன்முதலான மெய்யிற்புகுத்திப் பிறவியுட்படுத்து மாற்றால் அவற்றின் அறிவைக் கிளர்ந்தெழுமாறு செய்து ஆட்கொள்ளும் அருட்டிறமெல்லாம் மெய்யருள் நிலை கைவந்த பொய்யில் திருவாதவூரர், வினையிலே கிடந்தேனைப் புகுந்துநின்று போதுநான் வினைக்கேட னென்பாய் போல இனையனான் என்றுன்னை யறிவித் தென்னை யாட்கொண்டெம் பிரானானாய் (திருவாசகம், திருச்சதகம், 22) என்று மிகத்தெளிவாக எடுத்தோதியிருத்தல் பெரிதுங் கருத்திற் பதிக்கற்பாற்று. (7-9) சிலநாள் - சிலகாலம், நந்து முதலாகிய உடம்பில் புகுத்து- நத்தைமுதலான உடம்புகளிற் புகுத்திவைத்து, தந்தனை ஈர் உணர்வு - இரண்டறிவுகள் கொடுத்தருளினை; `நந்து ஈரறிவுயிராதல், நந்தும் முரளும் ஈரறிவினவே என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்திற்காண்க (மரபியல், 29). ஈருணர் வென்பன, மெய்யினால் தொட்டறியும் அறிவும், நாவினாற் சுவைத்தறியும் அறிவுமாம். (9-11) சிலநாள் - சிலகாலம் சிதல் முதலாகிய குரம்பையில் செலீஇ- கறையான் முதலான உடம்புகளிற்செலுத்தி, மூ உணர்வு உணர்த்தினை -மூன்று வகையான உணர்வுகளை உணர்த்தி யருளினை; எறும்பு முதலானவைகளுஞ் சிதலினத்திற் சேர்க்கப்படும்; சிதலும் எறும்பும் மூவறிவினவே என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார் (மரபியல், 30). செலீஇ- பிறவினை, வினையெச்சம்; இசைநிறையளபெடை, இது பிறவினைக்கண்வருதல், மேல்கொண்டவை செலீஇ என்னும் புறப்பொருள் வெண்பாமாலைச் செய்யுளடியிற் காண்க. (12, 13); இது சென்று எனத் தன்வினை வினையெச்சமாயும் வரும். மூன்றுவகை உணர்வுகளாவன, மேற்காட்டிய இருவகை யுணர்வுகளொடு மூக்கினால் முகந்துணரும் உணர்வுமாகும். மன்னும் ஓவும் அசை. (11-13) சிலநாள் - இன்னுஞ் சிலகாலம், நண்டு முதலாகிய பொன்று உடல் கடவி - நண்டு முதலாகிய அழியும் உடம்புகளிற் செலுத்தி, நான்கு அறிவு ஓங்குறச் செய்தனை - நான்கு அறிவுகள் கிளர்ந்தெழுமாறு செய்தருளினை; நண்டோடு இனப்பட்ட நான்கறிவு உயிர்கள் தும்பி முதலாயினவாதல், நண்டுந் தும்பியும் நான்கறிவினவே (தொல்காப்பியம், மரபியல், 31) என்பதனான் அறிக. ஏனைய உடம்புகளும் அழியும் பெற்றியவேனும், மாந்தரில் ஊன் உண்பார் கூட்டம் பெரும்பான்மையும் இந்நண்டு முதலான உடம்புகளைக் கொன்றழிக்கின்றதாகலிற், `பொன்றுடம்பு எனக் கிளந்தோதினார். `கடவல் செலுத்தல்; இஃதிப்பொருட்டாதல் கையொளிர் வேலவன் கடவ எனபுழிக் காண்க (புறப்பொருள் வெண்பாமாலை 12, 1, கொளு). இதன்கட் கூறப்படும் நான்காவது அறிவு கண்களாற்கண்டு அறியும் அறிவாகும். ஓங்குற, ஒருசொல். (13-16) ஈங்கு - இப்பால், மாவும் மாக்களும் மேவிய பின்றை - விலங்குடம்புகளும் மாக்களுடம்புகளும் பொருந்தியபின், ஐஉணர்வு எங்கும் மெய்பெறக் கொளுவி ஒழுங்குற உணர்த்தினை ஒரு சில பகல் - ஐந்து உணர்வுகள் முழுமையும் மெய்யாகவே நிலவப் பொருத்தி ஒழுங்குபெற உணர்த்தியருளினை ஒருசிலநாட்கள். `ஈங்கு, என்பது அங்ஙனமெல்லாம் மேற்சென்ற பிறவிகளிற் பிறப்பித்து அறிவுவளரச்செய்து பிறகு இப்பால் எனப்பொருள் பயந்தது; இஃது ஐயறிவுடைய பிறவிக்கு வந்ததன் அருமையுணர நின்றது. `மா வென்பது விலங்கு; `மாக்க ளென்றது, அவ்விலங்குப் பிறப்பினும் உயர்ந்து ஏனை மக்கட்பிறப்பிற் றாழ்ந்து அவ்விரண்டின் நடுவணதாய் அவற்றிற்கு வேறானதொரு பிறப்பாம். இப்பிறவியுட்படும் `மாக்கள் என்னும் உயிர்கள் விலங்கின் உருவமும் மக்களுருவமுங் கலந்ததோருருவத்தை உடையவாயிருக்குமென்ப. இங்ஙனமொரு படைப்பு விலங்குப் பிறப்பிற்கும் மக்கட்பிறப்பிற்கும் இடையே ஆண்டவனாற் படைக்கப்பட்டிருத்தல் வேண்டுமென இக்காலத்து உயிர் நூல்வல்லாரும் உய்த்துணர்ந்து, அங்ஙனந்தாம் உணர்ந்தவாறே யிருப்பதொரு படைப்பினை `ஆத்திரேலியா (Australia) என்னும் நாட்டில் நேரிற்கண்டு, தமது துணிபினை மெய்ப்படுத்து வாராயினர். இற்றைக்கு ஏறக்குறைய ஐயாயிரத்து ஐந்நூறு ஆண்டுகட்கு முன்னரே நம் முதுதமிழ்ப்பேராசிரியராய் விளங்கிய தொல்காப்பியனார் இவ்வுண்மையை நன்கு தெளிந்து, அவ்வினத்தவாம் உயிர்கட்கு ஐந்து அறிவுகள் உண்டுஎன அறிவு வரையறைகாட்டி மாவும் மாக்களும் ஐயறிவினவே. (மரபியல், 32) எனத் தமது அரும்பெறல் நூலில் நூற்பா யாத்துரைத்தது பெரிதும் நினைவுகூர்ந்து மகிழற்பாலதாகும். முற்கூறப்பட்ட நான்கு உணர்வுகளுடன் செவியாற்கேட்டு உணரும் உணர்வுங்கூட இங்கு ஐயுணர்வுகளுண்டாயின. `எங்கு மென்றது, முழுமையுமென்னும் பொருட்டு. செவியுணர்வு பெற்றபின்னரே உயிர்கள் சேய்மைக்கணிருந்து தமக்குவரும் ஏதம் உணர்ந்து உயிர் பிழைக்கின்றனவாகலின், ஐயுணர்வுகளும் மெய்யாக நிலைபெற்று நிலவல் மாவும் மாக்களுமாகப் பிறவி யெடுத்த பின்னரேயாதல் தேற்றுதற்கு மெய்பெறக்கொளுவி என்றார்; கொளுவல், பொருத்தல், கலை நலங்கொளுத்தி யிட்டான் என்புழிப்போல (சீவகசிந்தாமணி, 673). பகல், நாள்; இங்குக் காலம் என்னும் பொருட்டு. (17-21) ஆங்ஙனம் ஒழிந்த அளவு இல் காலத்து - அவ்வாறு கழிந்த அளவில்லாத காலத்தின் எல்லையில், நிறைவுறு குற்றம் முறை முறை தேய - இயற்கையே நிறைந்திருந்த துகள் அடை வடைவே குறையே, பகுத்து உணர் காட்சி மிகுத்துத்தோன்ற - அவ்வாற்றாற் பகுத்துஉணரும் அறிவு மிகுந்து விளங்க, மக்கள் யாக்கையில் தக்கவா நிறுவி - மக்களுடம்பில் தகுதியாக நிறுத்தி, பல பிறப்பு உறீஇய நாள்களும் பல - பல பிறப்புகளில் அடியேனை உறுவித்த காலங்களும் பலவாம். குற்றம் - மல அழுக்கு. முறைமுறை - அடைவடைவே, (புறநானூறு, 29). `பகுத்துணர் காட்சியாவது, எவற்றையும் நல்லது இது, தீயது இது எனப் பிரித்து உணரும் ஆறாவது அறிவாகும். `காட்சி, அறிவென்னும் பொருட்டாதல் மருடீர்ந்த மாசறு காட்சியவர். (திருக்குறள், 199) என்பதனால் அறியப்படும். `உறீஇய: பிறவினைப் பெயரெச்சம்; (பதிற்றுப்பத்து 44). எனவே முதலடிமுதல் இவ்விருபத்தோராம் அடிகாறும் இயற்கையே வினையிற்கிடந்த உயிர்கள் ஆண்டவன் றிருவருளாற் புன்முதலான பல பிறவிகளிற் பிறந்து பிறந்து ஓரறிவுமுதலாக ஆறறிவுகள் விளங்கபெறுமாற்றை ஆசிரியர் தம்மேல் வைத்துரைத்தமை காண்க. வினையிலே கிடந்த உயிர்கள் இவ்வாறெல்லாம் பற்பல காலமாகப் பல்வகைப் பிறவியுட்பட்டு உழலுமாற்றால் முறைமுறையே அறிவுபெறுவதான உண்மை பண்டைத்தமிழ்ப் பேராசிரியரான தொல்காப்பியனார் மேலெடுத்துக்காட்டிய மரபியற் சூத்திரங்களில் ஓதிய வாற்றானும், சமயப் பேராசிரியரான மாணிக்கவாசகப் பெருமான், புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தே னெம்பெருமான் மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் (திருவாசகம், சிவபுராணம்) என அருளிச்செய்தவாற்றானும் நன்கறியப்படும். (22-32) அவ்வாறு ஒழிந்தனபோகச் செவ்விய இந்நாள் எனக்கு நல் நெறி காட்ட - அங்ஙனம் முடிந்தகாலங்கள் கழிய இஞ்ஞான்று எளியேற்கு நல்வழி காட்டும்பொருட்டு, செவ்வந்திப்போந்த திருச்சிராப்பள்ளியில் தோன்றியருளிய, பொய்யாநாவின் செந்தமிழ் வரம்பு முந்துகண்டுணர்ந்து - பொய்த்தல் அறியாத நாவினாற் செந்தமிழெல்லையை முற்படத் தான் ஓதி உணர்ந்து, மெய்ப்பொருள் அறிவும் சொற்பொருள் வன்மையும் பொறையும் செறிவும் நிறையக்கொண்டு - மெய்ப்பொருள் உணர்வும் சொற்பொருள் ஆராய்ச்சியும் பொறுமையும் அடக்கமும் நிரம்பப்பெற்று, தமிழ்மாணாக்கர் அமிழ்துஎன நுகர விரித்துரை கிளக்கும் தெரிப்பரும் பெருமை - தமிழ்கற்கும் மாணாக்கர்கள் `இஃது அமிழ்தாகும் எனச் சுவைத்துணரும்படி விரித்து உரைகூறுந் தெரிதல் அரிய பெருமையையுடைய, நாராயணன் எனும் தோலாப்புலவோன் நேர்படும் உளத்துச் சீர்பட அமர்ந்து - நாராயண சாமிப்பிள்ளை என்னுந் தோலாத புலவனது செவ்விய திருவுள்ளத்திற் சிறப்புறவீற்றிருந்து, கருவிநூல் உணர்த்தினை பல -கருவி நூல்களாகிய இயற்றமிழ் நூல்கள் பல உணர்த்தியருளினை; கீழ்ப்பிறவிகளின் துன்பநிலையும் இழிவுங் கருதி அப்பிறவிகளைக் கொண்ட காலங்கள் `ஒழிந்தன வென வெறுத்துக்கூறப்பட்டன. அங்ஙனமே பகுத்தறிவு மேம்பாட்டால் மக்கட்பிறவிக்கு உரிய பெருமை கருதிச் `செவ்விய இந்நாள் என அப்பிறவியைக்கொண்ட காலங்கள் சிறப்பிக்கப்பட்டன `செவ்வந்தி, திருச்சிராப்பள்ளி; செவ்வந்திப்புராணம் என்னும் வழக்கால் ஈதுணரப்படும். இது `திரிசிரபுரம் எனவும் வழங்கும். `கண்டு, ஓதி யென்னும்பொருட்டு. மொழியறிவு கொண்டு மக்கள் அறிந்து கொள்ளுதற்குரிய கருத்துகள் இங்கு `மெய்ப்பொருள் எனப்பட்டன. சொற்பொருள்வன்மை யெனப்படுவது, சொல்லும் அச்சொல்லுக்கு உரிய பொருளுமான இலக்கண இலக்கிய மொழியாராய்ச்சி. `செறிவு அடக்கம்; இஃது இப்பொருட்டாதல் செறிவறிந்து சீர்மை பயக்கும் என்னுந்திருக்குறளுரையிற் காண்க. மெய் மொழி மனங்கள் தீநெறிக்கட்செல்லாது அடங்குதல் அடக்கமெனவும், காரணம்பற்றியாதல் மடமையா னாதல் ஒருவன் தமக்கு மிகை செய்தவழித் தாமும் அதனை அவன்கட் செய்யாது பொறுத்தல் பொறையெனவும் திருக்குறள் (அடக்கமுடைமை, பொறையுடைமை) உரைகாரர் பரிமேலழகர் கூறுகின்றமை இங்கு நினைவுகூர்ந்து பொறையும் செறிவும் வேறுவேறாதல் உணர்ந்துகொள்க. `விரித்துரை கிளத்தல் என்றது, ஈண்டுப்புலமை தோன்ற உரையாடலை, ஆவது `சொல்வன்மையென்க. `தெரிப்பு தொழிற்பெயர். `நாராயணன் என்பது அடிகளுக்குத் தமிழிலக்கண இலக்கியங்கள் செவியறிவுறுத்திய இயற்றமிழாசிரியரின் பெயர்; `தோலாப் புலவோன் தோல்வியடையாத புலவன். `தோலா மொழித் தேவர் எனப் பிறரும் இப்பொருட்டாய்ச் சிறப்பிக்கப் படுதல் காண்க. `புலவன், `ஈறுதிரிந்து `புலவோன் என்றாயிற்று. மெய்ப்பொருட்கருத்துகள் அறியவேண்டும் ஒருவன் அவற்றை ஒருமொழியின் வாயிலாகவே அறிதல் வேண்டு மாகலின், ஈண்டுத் தமிழ்மொழியின் இலக்கண இலக்கிய நூல்கள் `கருவிநூல் எனப்பட்டன. அவையாவன, தொல்காப்பியமும் பத்துப்பாட்டு எட்டுத் தொகை பதினெண்கீழ்க்கணக்கு ஐம்பெருங்காப்பியம் முதலாயினவுமாம். அடிகள் இப்பகுதியில் தமக்குத் தமிழ்செவியறிவுறுத்திய தம் இயற்றமிழாசிரியரின் அருமைபெருமைகளை இனிதெடுத்துக் கூறி மகிழ்ந்தமை கருத்திற்பதிக்கற்பாலது. (32- 46) அதன்பின் - அதன்பின்பு, ஒருவா யாணர் மருவுறு சென்னைத் தவம்பெறத் தோன்றி - நீங்காப் புதுவருவாய் மருவுதலுடைய சென்னைமாநகரின் கண் தவமுண்டாகத் தோன்றியருளி, நவை அறு தமிழும் வடநூல் பரப்பும் நிலை கண்டு உணர்ந்து - குற்றம் அற்ற தமிழ்நூல்களும் வடநூற் பரவையும் ஆழம்வரையிற்சென்று தெரிந்து, ஆங்கு உள் உறை கருவாய்த் தெள்ஒளி விரிக்கும் சைவசித்தாந்த முடிப்பொருள் எடுத்து - அவற்றின்கண் உட்கிடக்கும் முதற் பொருளாய்த் தெளிந்த அறிவொளிவிரிக்குஞ் சைவசித்தாந்தம் என்னும் முடிந்தபொருளையெடுத்து, ஈங்கு அறம் கரை நாவின் திறம்பட விளக்கிப் புறம்படு சமயப் பொய்ப்பொருள் நூறி - இத்தமிழகத்தில் தமது அறத்தையே நவிலும் நாவினால் திறம் உண்டாக விளக்கி அவ்வாற்றாற் புறமாய் ஒழியும் புறச்சமயங்களின் பொய்மைப் பொருள்களை அழித்து, நலம் கிளர் தன்மையும் புலம்கொளாக் காட்சியும் இயைந்து ஒருங்கு ஈண்டிய அமையாப்பெருமைச் சோமசுந்தரத் தோம் அறுதேசிகன் - நன்மைமிக்க இயல்பும் எளிதில் அறிதலியலாத அறிவுஞ் சேர்ந்து ஒன்றாய்த்திரண்ட அடங்காப் பெருமையை யுடைய சோம சுந்தரன் என்னுங் குற்றமற்ற ஆசிரியனுடைய, உடல்பொருள் ஆவி இடம் எனக் கொண்டு - உடலும் பொருளும் ஆவியுந் தேவரீர் அமருந் திருக்கோயிலெரனக்கருதி எழுந்தருளி, பொருள் ஆர் சைவம் தெருளுறக் கொளீஇ - உண்மை நிரம்பிய சைவசமயப்பொருளை அறிவிற் பொருந்தும்படி அறுவுறுத் தருளி, அதற்கு அமை பொருளும் நீ யெனக்காட்டித் திறம்படி உணர்த்தினை மிகவே - அச்சைவசமயத்துக்கு உரிய முழு முதற்பொருளுந் தேவரீரே எனத்தெளிவித்துத் திறமுண்டாகப் பெரிதும் உணர்த்தி யருளினை; அதன்பின் - அதன் பின்பு; xUfhš tªj tUthŒ xÊíK‹dnu Û©L« Û©L« òJ¥òJ tUthŒ¥bghUŸfŸ fy¤jhD§ fhyhD« nkYnkY« tªJ nr®jYilikÆ‹, <©L¢ br‹d g£od« “xUthahz® kUîW br‹id” bad¥g£lJ; `ahz®’ v‹DŠbrhš `òJtUthŒ’ vd¥bghUluš, “òâJgl‰ bghU£nl ahz®¡»sÉ’ (bjhšfh¥ãa«, cÇÆaš., 81) என்பதனாலறியப்படும். பிரசம் தூங்கும் அறாஅ யாணர் வரையணி படப்பை நல்நாட்டு என்னும் புறநானூற்றில் (375) கண்ணும் இச்சொல் இப்பொருட்டாய் வருதலும், அடிகள் இங்கு `ஒருவாயாணர் என்றாற்போலவே, `அறாஅ யாணர் என அடையடுத்து வருதலும் நினைவுகூரற்பாலன. தமிழ்மொழியின்கண் உள்ள நூல்கள் சிலவேயாயினும் அவை பொய்ம்மை நவிலுங் குற்றம் அற்றுப் பட்டாங்கு கிளப்பனவாயிருத்தலின் `நவையறுதமிழ் எனவும், வடமொழி யின்கண் அவ்வாறின்றி நூல்கள்மட்டும் நிரம்பக் காணப் படுதலின் வாளா `வடநூற்பரப்பு எனவும் அவ்விருபெரு மொழிகளின் வேற்றுமை தேற்றி அடிகள் இங்கெடுத்துக் காட்டிய திட்பநுட்பம் பெரிதும் அறிந்து மகிழற் பாலனவாம். `கரு முதற்பொருள்; `சைவ சித்தாந்தம் என்னும் மெய்ப்பொருள், முடிந்த அறிவு ஆராய்ச்சிகள் வாய்ந்து அவற்றின்வடிவாய் அமைந்திருத்தலின், அஃது `ஒளிவிரிக்குஞ் சைவசித்தாந்தம் எனவும், `முடிபொருள் எனவுங் கிளந்தோதப்பட்டது. `ஒளி யென்பது ஈண்டு `அறிவு ஒளி யென்க. ஏனைச்சமயப்பொருள்கள் அத்தனையும் அங்ஙனம் முடிந்த அறிவாராய்ச்சிகளான் இயலாது அறியாமையிருளும் உடன்விராய் மங்குதலின் இச்சைவ சித்தாந்தம் மட்டும் அவற்றின் உள்ளுறை கருவாய்க்கிடந்து தெள்ளொளிவிரிக்கும் முடிபொரு ளாயிற்றென்றுணர்ந்து கொள்க. தமிழ்நான் மறைகளிலும் வடநூன்மறைகளிலும் சைவசித்தாந்தம் இங்ஙனம் முடிந்த நிலையில் வைத்து அறிவுறுக்கப்பட்டிருக்கும் அரிய உண்மை. வேத மென்னும் பாதவம் வளர்த்தனை பாதவ மதனிற் படுபயன் பலவே அவற்றுள், இலைகொண்டு உவந்தனர் பலரே இலையொரீஇத் தளிர்கொண் டுவந்தனர் பலரே தளிரொரீஇ அரும்பொடு மலர்பிஞ் சருங்கா யென்றிவை விரும்பினர் கொண்டுகொண் டுவந்தனர் பலரே அவ்வா றுறுப்பு மிவ்வாறு பயப்ப ஓரும் வேதாந்தமென் றுச்சியிற் பழுத்த ஆரா வின்ப அருங்கனி பிழிந்து சாரங் கொண்ட சைவசித் தாந்தத் தேனமுது அருந்தினர் சிலரே எனக் குமரகுருபர அடிகள் திருவாய் மலர்ந்தருளிய பண்டார மும்மணிக் கோவை (10) யடிகளாலும் இனிது விளங்குகின்றமை காண்க. `அறம் கரை நா, நன்றாவனவே எடுத்துப் பேசும்நா; அறம் நல்லது, தக்கது; அறமென்பது தக்கது என்பர் இறையனாரகப் பொருளுரையாசிரியர் (29). `புறம்படுசமயங்கள் என்பன: உலகாயதம், நால்வகைப் பௌத்தம், ஆருகதம் என அறுவகைப்படும் புறப்புறச்சமயங் களும்; தருக்கம், மீமாஞ்சை, ஏகான்மவாதம், சாங்கியம் யோகம், பாஞ்சராத்திரம் என ஆறுவகைப்படும் புறச்சமயங்களுமாம்; இனிப், பாசுபதம், மாவிரதம், காபாலம், வாமம், வைரவம், ஐக்கியவாதசைவம் என அறுவகைப்படும் அகப்புறச்சமயங்களும்; பாடாணவாதசைவம், பேதவாத சைவம், சிவசமவாத சைவம், சிவசங்கிராந்தவாத சைவம், ஈசுவர வவிகாரவாத சைவம், சிவாத்துவித சைவம் என ஆறுவகைப்படும் அகச் சமயங்களும் ஆகும். இவை குறைபாடுகள் பல உடையவாகலின், அவையும் சித்தாந்த சைவத்திற்குப் `புறம்படுசமயப் பொய்ப்பொருள் களாயின வென்பது. புறப்புறம், புறம், அகப்புறம், அகம் என்னும் புறச்சமயங்களின் கோட்பாடுகள் எல்லாம் சிவஞான போதமா பாடியத்தில் (சிவஞான போதம், அவையடக்கம்) ஆசிரியர் சிவஞான முனிவராற் சமய இலக்கண அளவைநூனெறிகள் வாழாமல் நன்கெடுத்து விளக்கப்பட்டிருக்கின்றன. இங்கு விரிப்பிற் பெருகும். நூறி - அழித்து; அருஞ்சமந்ததைய நூறி (புறம். 93). இனி இவ்வெல்லாச் சமயங்கட்கும் முடிந்தநிலையில் அமர்ந்து தெள்ளொளிவிரிக்குஞ் சித்தாந்த சைவத்தின் சிறந்த கோட்பாடுகளை விளக்கும் வாயில் பின்னே புலவராற்றுப் படையில் (193 - 205) வருதலின், அவைதம்மை அங்கே கண்டுகொள்க. ஏனையோ, ரறிவுக்கு எட்டாத அகன்றஅறிவு இங்குப் `புலங் கொளாக்காட்சி யெனப்பட்டது. ஈண்டிய - திரண்ட, (புறம், 17). `அமையாவென்றது, எண்ணுதற்குஞ் சொல்லுதற்கும் அடங்காத வெனக்கொள்க. தோம் - குற்றம்; தோமறுகடிகை (சிலப்பதி காரம், 10, 98). `சோமசுந்தரதேசிகன் என்பார் அடிகளுக்குச் சைவ சித்தாந்த மெய்ப்பொருள் அறிவுறுத்தருளிய சமயாசிரியராவர். `பொருள் ஆர் சைவம், மெய்மை நிறைந்த சைவசமயம்; மெய்மையாவன ஆண்டவனுக்குப் பிறப்பிறப்புக்கூறாமையும், மாயையும் உயிரும் இறைவனேயெனக் கிளவாமையும் போல்வன. தெருள் - அறிவு, (பிங்கலந்தை). முருகப்பெருமான் பிறப்பிறப்பில்லா முழுமுதற் செம்பொருளாகிய சிவத்தின் இளமைக்கோலமேயாகலின், அவன் சைவசமயத்துக்கு உரியபொருளானானென்பது. இனித் `தொழும்பு பூண் டென்பது தொட்டு `ஒற்றியூரெனும் பெயர் முற்றத்தோன்று மென்பது வரையில் ஐவகை ஏதுக்கள் காட்டித் திருவொற்றியூரென்னும் பெயரமைப்பு எடுத்தோதப்படு கின்றது. (47-50) தொழும்பு பூண்டு ஒழுகும் அழுங்கா உள்ளத்து - தொண்டு செய்தலை மேற்கொண்டு நடக்கும் அழியாத திருவுள்ளத்தையுடைய, தொண்டரும் நரகரும் அண்டரும் பிறரும் - அடியாரும் நாகரும் தேவரும் ஏனையோரும், வழிவழி அடிமை பெருகுற எழுதிய ஓலைகொண்ட ஒருமரபானும் - தாம் வழிவழி அடிமையாயிருத்தலை மேலும் மேலும் பெருகும்படி ஒற்றிவைத்தெழுதிய ஒற்றி ஓலையினைக் கைக்கொண்டருளிய ஒருதன்மையானும். தொண்டு பூண்டொழுகுதலிற் சிறிதுந் தளர்வடையாமல் மிக்க உறைப்பொடு நிற்கும் உள்ளமே இங்கு `அழுங்காஉள்ளம் எனப்பட்டது; அழுங்கல் - அழிதல், பிணன் அழுங்க புறம், 98. தொழும்பு அடிமை; ஆளுந்தொழும்பும் அடிமையாகும் திவாகரம். `நரகர் கீழுலகத்தவராவர்; அவர் `நாகர், `அண்டர் மேலுலகத்தவர்; அவர் தேவராவர்; சூடாமணிநிகண்டு. `பிற ரென்பது இவரல்லாத ஏனை மேன்மேலுலகங்களிலிருப்பவர். அவர் `விஞ்ஞானகலர் முதலியோராவர். இவரெல்லாரும் ஆண்டவனுக்குத் தலைமுறை தலைமுறையாக அடிமைப் பட்டிருத்தலின், இனிமேல் வருந் தலைமுறைகளிலும் அங்ஙனமே அடிமைப்பணி புரிவதாகத் தமது அடிமையை அவன்றிருவடிக்கு ஒற்றிவைத்து எழுதிக்கொடுத்த ஓலையென்பது விளங்க `வழிவழி யடிமை பெருகுற எழுதிய ஓலை எனப்பட்டது. `ஒற்றி ஓலை கொண்டமையின் ஒற்றியூராயிற்றென்பது. மரபு - தன்மை; தெறலருமரபு புறம், 126. `ஆன் என்னும் மூன்றனுருபு ஏதுப்பொருளது. (51- 53) உலகில் சிறந்து தான் ஒன்றே ஆகியும் - உலகம் எங்கணும் உள்ள ஏனைத்திருப்பதிகளினும் பார்க்கத் தெய்வத் தன்மையாற் சிறந்து அங்ஙனஞ் சிறக்குந் தனிமையால் தான் ஒன்றேயாயிருந்தும், அலகு இல் ஆற்றல் தலைவரும் என்பது - அளவில்லாத தெய்வ வலிமை தலைமையாக் கூடுமென்பது விளங்க, வல்ஒற்று ஆக்கிய குறிப்பினானும் - மெல்லினமெய் வல்லினமெய் ஆக்கின குறிப்பானும்; இணையில்லாமையின் தனிமையாயிற்று, அதாவது ஒன்றாயிற்றென்பது; அங்ஙனந் தனிமையாய் ஒன்றேயாயினும், பேராற்றலுடையதாகுமென்பது தோன்ற இடைநின்ற னகர ஒற்று வலித்து வல்லொற்றாய் ஒற்றெனப்பட்டுப், பின்னர்ப் பெயர் விகுதியாகிய இகரம் மருவி `ஒற்றி யாயிற்றென்பது. அலகு- அளவு; ஆற்றல் - வலிமை; பிங்கலந்தை. தலை - தலைமை, (இரேவணாசித்தர் சூத்திரம்). (54-55) ஒற்றை இயக்கும் உயிரே போல - ஒற்றெழுத்தை இயங்கச்செய்யும் உயிரெழுத்தேபோல், நெற்றி அம் கண்ணன் நிலவுதலானும் - நெற்றிக்கண் உடையவனான சிவபெருமான் இத்திருப்பதியை இயக்கிக்கொண்டு ஆங்கு விளங்குதலானும்; ஒற்றெழுத்தோடொத்தலின் தானும் `ஒற்றி யென்னும் பெயர்த் தாயிற்றென்பது. முன்போற் பெயர்விகுதி புணர்த்துக் கொள்க. மேல்வருவனவற்றிற்கும் இஃதொக்கும். ஏகாரம் இசைநிறை; அம்சாரியை. (56-57) இறைவன் ஐந்தொழில் - படைத்தல் காத்தல் அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் இறைவனுடைய ஐந்தொழில்களையும், நிறைஉயிர்மாட்டுப் பொருந்தச் செய்யும் அரும் திறலானும் - உடம்புகளில் நிறைந்துநிற்கும் உயிர்களின் பாற் பொருந்தும்படி செய்யும் அரியவல்லமையானும்; இறைவனைந் தொழில்களின் இயல்புகள் `நீயே, ஆருயிர்த் தொகுதிக்குப் பேறுதரல்வேண்டி யைந்தொழி லியற்றுவை மாதோ (27-8) என்றவிடத்து விளக்கப் பட்டுள்ளன. `நிறையுயிர் உடம்புகளில் நிறைந்து காணப்படும உயிர்கள்; அன்றிக் கணக்கில்லாத உயிர்கள் எனலுமாம். உயிர்கள் திருவொற்றியுரின் கண் வாழ்தலான் ஆண்டவன் றிருவருளைப் பெறுதற்குரிய தகுதியை யடைந்து அவன்றன் ஐந்தொழில்கள் பொருத்தப் படுகின்றன. அங்ஙனம் அவ்வுயிர் கட்கு அவ்வைந்தொழில்களையும் ஒன்றச்செய்யும் ஆற்றல் உடைமையின் இவ்வூர் ஒற்றியூரெனப்படுவ தாயிற்றென்பது. ஒன்றியூர் என்பது ஒற்றியூரென வலித்தது. (58-59) ஐந்தொழிற்பட்ட ஆருயிர்த் தொகைகள் - மேற் கூறிய அவ்வைவகைத் தொழில் களிற் பொருத்தப்பட்ட நிறைந்த உயிர்க்கூட்டங்களை, கந்தழிப் பொருத்தும் மைந்தினானும் - `கந்தழி யென்னுந் தீப்பிழம்பாகிய சிவத்தின் திருவருளில் தலைக்கூட்டும் வலிமையினானும்; `கந்தழி யென்பது தீப்பிழம்பு; எல்லாம் வல்ல முழுமுதற் சிவபிரானுடைய தெய்வவியல்புகள் பெரும்பான்மையும் மண்முதலான ஐம்முதற்பொருள்களுள் தீயின்கண் மட்டுமே நன்கு விளங்குதல்பாற்றிக் `கந்தழி யென்பது இங்குச் சிவபெருமானை உணர்த்துவதாயிற்று. கொடிநிலை கந்தழி வள்ளி யென்னும் வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றுங் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே. (தொல்காப்பியம், புறத்திணையியல், 33) என்னுஞ் சூத்திரத்தின்கண்ணுங் `கந்தழி யென்னும் இச்சொல் தீப்பிழம்பை உணர்த்துமுகத்தால் முழுமுதற் சிவத்தின் வழிபாட்டுக்கு ஓர் ஒப்பற்ற வாயிலாய் நிற்றல் அறியற்பாலது. அடிகட்கு இக்கருத்துண்மை, அடிகளே தாம் பெரிதாராய்ந்து இயற்றியருளிய மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் மிகப்பெரிய அரியநூலில் (பக்கம், 487-492) இத்தொல்காப்பிய நூற்பாவையே யெடுத்து மிக நுணக்கமான விளக்கவுரை விரித்துரைத்தல்கொண்டு நன்கு தெளியப்படும். `மைந்து வலிமை; `மைந்துடைக் கழைதின் யானை (புறம், 73) என்பதனுரையிற் காண்க.. கந்தழியில் உயிர்த்தொகைகளை ஒற்றும் ஊராகலின், ஒற்றியூரெனப்பட்டது. (60-61) ஒற்றியூர் எனும்பெயர் முற்றத்தோன்றும் - என இவ்வாற்றால் திருவொற்றியூர் என்னும் பெயர் முடியவிளங்கும், பெருநன் மாநகர் திருவின்பொலிந்து - பெரிய நல்ல அழகிய நகரத்தில் சிறப்புடன் விளங்கி; `முற்ற என்பது முற்றத்துறத்தல், முற்றக்கடிதல் எனுஞ் சொற்றொடர்களிற்போல முழுதும் என்னும் பொருட்டு; அஃதாவது எஞ்சாமை; `ஒற்றியூர் எனும் பெயர்க்குரிய பொருள்களெல்லாம் எஞ்சாமைப் பெறுதல். (62-63) குவளைபூத்த பவளத்தாமரை- இரண்டு சிறிய குவளைப் பூக்கள் தன்கண் பூக்கப்பெற்ற பவளநிறம் வாய்ந்த ஒரு பெரிய செந்தாமரை மலர், செவிரமும் பணிலமும் புடைபட - பாசியுஞ் சங்குந் தன் மேல்கீழ்ப் பக்கங்களிற் பொருந்த, இடையில் தோன்றியன்ன - அவற்றினிடையே தோன்றினாற் போல, கருநெறிக் கூந்தலும் பெருகிய கழுத்தும் மேலுங் கீழுந்தோன்ற - நெளியினையுடைய கரியகூந்தல் மேலும் பெருத்த கழுத்துக் கீழுமாய் விளங்க, காண்டகு திருமுகம் - அவற்றினிடையிற் காணப்படும் அழகிய திருமுகத்தின்கண், வாலிய நறுமுத்து அன்ன முறுவல் செறிதொறும் மின் என மிளிரும் - வெள்ளிய நல்ல முத்தையொத்த இளநகை தோன்றிமறையும் போதெல்லாம் மின்னலைப்போல் ஒளிவீசும், பொன்மாமேனி மகளிரொடு விளங்கும் தகைசால் தோற்றத்து -பொலிவுகொண்ட அழகிய திருமேனியையுடைய வள்ளி தெய்வயானை என்னும் மகளிரோடு இணைந்து விளங்குகின்ற அழகு நிரம்பிய காட்சியுடன்; குவளை கண்களுக்கும், பவளத்தாமரை சிவந்த முகத்துக்கும், செவிரம் கூந்தலுக்கும், பணிலம் கழுத்துக்கும் உவமையாகும். `திருமுக மென்பதற்கும், `தோற்றத்து என்பதற்கும் முறையே ஏழனுருபும் மூன்றனுருபும் விரித்துக்கொள்க. அலையொழுங்குபோல் நெளிநெளியாய்க் காணப் படுதலின், `நெறிக்கூந்தல் எனப்பட்டது. `வால் வெண்மைப் பொருட்டாதல் வால் வளைமேனி வாலி யோன் (5: 171) என்னுஞ் சிலப்பதிகாரத்தா லுணரப்படும். செறிதொறும் - தோன்றி மறையுந்தோறும், `தோன்றி அவாய் நிலையான் வந்தது; `செறிதல் இப்பொருட்டாதல், நளிமலர்ச் செறியவும் (சிலப்பதிகாரம், 2, 56) என்பதனுரையிற் காண்க. மிளிரும் என்னும் பெயரெச்சம் `மகளிர் என்னும் பெயர் கொண்டு முடிந்தது. (70-77) வடிவேல் ஏந்திக் கடிமயில் ஊர்ந்து - கூரிய வேற்படையைத் திருக்கையிற்பற்றி விரைவுமிக்க மயிலின்மேல் இவர்ந்து வந்து, என் உள்ளத்தாமரை விள்ள வீற்றிருந்தனை - அடியேனது உள்ளமென்னுந் தாமரைமொட்டு மலர ஆண்டு எழுந்தருளினை, பகல்ஒளி விளக்கும் பல்கதிர் ஞாயிறு - பகலாகிய ஒளியை எங்கும் விளங்கச்செய்யும் பலவாகிய கதிர்களையுடைய கதிரவன், மலைநிவந்து அன்ன நிலை உயர் மாடத்தும் - மலையுயர்ந்தாற்போல் எழுநிலையுயர்ந்த பெரிய மாளிகையிலும், குடிகள் தங்காப் பழியொடும் இடிந்து வெருப்பேய் சேர எருக்குமுளைத்துப் பாழ்படு பொல்லா இல்லினும் - குடியிருப்புப் பொருந்தாத பழிப்பினையுடைமை யோடுஞ் சுவரெல்லாம் இடிந்து அச்சந் தரற்குரிய பேய்க்கூட்டங்கள் நடமாட எருக்கஞ் செடிகள் முளைத்துப் பாழ்பட்ட தீய குடிலின்கண்ணும், போழ்கதிர் விரித்துப் பொலிவதால் என - இருட்பிழம்பைப் பிளக்குந் தன் ஒளிக் கதிர்களை விரித்து விளங்கினாற் போலவென்க. பொலிவதாலென விள்ளவீற்றிருந்தனை யென வினைமுடிக்க, அருள்செய்தற்பொருட் விரைந்துவருதலிற் `கடிமயில் என்றார். மக்களின் உள்ளம் தாமரை முகைபோல் அமைந்திருத் தலால் `உள்ளத்தாமரை எனப்பட்டது. அன்புமுதலிய நல்லியல்புகளால் அவ்வுள்ளத்தாமரை மலருமாயின் அப்போது அஃது ஆண்டவன் எழுந்தருளி விளங்குதற்குரிய இடமாகும். மலர்மிசை ஏகினான் (திருக்குறள் 3) என்று தெய்வத் திருவள்ளுவர் கூறியருளினமையுங் காண்க. மேலும் இந்நூலாசிரியர் இங்ஙனமே `விரையவிழ்தாமரை புரை உரவோர் உளம் புரி நெகிழ்ந்து அலர (19-102-3) என்று அவ்வுள்ளத்தின் மலர்ச்சியிலேயே கருத்துடையராய்ப் பிறாண்டும் அருளிச்செய்தல் காண்க. `விள்ளல் மலர்தல், இப்பொருட்டாதல் பிங்கலந்தையிற் காண்க. `நிவத்தல் ஈண்டு உயர்தல், இது முன்னும் வந்தது. `வெரு வென்பது அச்சப்பொருட்டு, குடியில்லாத வீடு இடிந்து குட்டிச்சுவராய் எருக்கு முளைத்துப் பேய்கட்கே இருப்பிடமாய்ப் பாழாய் ஒழிதல் கண்கூடு. எனினும், எங்கும் ஒளிவிளங்குங் கதிரவன், எழுநிலை மாடத்தின்கண் எங்ஙனந்தன் ஒளிகாட்டி விளங்குகின்றானோ, அங்ஙனமே அப்பாழான வீட்டிலும் ஓரமில்லாமல் வெயில் காட்டி விளங்குகின்றான். அங்ஙனமே நடுநிலை வழாத ஆண்டவன் எல்லா நல்லியல்புகளும் ஒருங்கு பொருந்திய சான்றோர் திருவுள்ளத்தின்கண் எழுந்தருளி யிருத்தல்போலவே, அந்நல்லியல்புகளுள் ஒன்று தானுமில்லாத ஏழையோன் உள்ளத்தின்கண்ணும் எழுந்தருளினன் என்றருளிச்செய்தார். இங்ஙனங் கூறியது ஆண்டவனுடைய பெருமையையும் நடுநிலைவழா அருட்டன்மையை யும் விளக்கியபடியாம். 14. தலைமகள் பிரிவாற்றாது புலம்பல் பொலியு மதியும் புலிபோலத் தென்றல் நலியூ நமனானான் நல்வே - ளொலிதமி ழோவா திசைக்குந் திருவொற்றி யொள்வேலான் மேவான் செயலறியேன் மேல் (இ-ள்) பொலியும் மதியும் - திங்களும் நிலவு விரித்து விளங்கும், புலிபோலத் தென்றல் நலியும் - புலியைப்போல் தென்றற் காற்றும் மெல்லென வீசி வருத்தும், நமன் ஆனான் நல்வேள் - இனிய காமனுங் கூற்றுவனானான். (ஆனால்) ஒலிதமிழ் ஓவாது இசைக்கும் திருவொற்றி ஒள்வேலான் - இன்னொலி மிக்க தமிழ்மொழியின்கண் ஆக்கப்பட்ட தமிழ் நான்மறைகள் இடையறாமல் ஓதப்படுந் திருவொற்றி நகர்க்கண் எழுந்தருளியிருக்கும் ஒள்ளிய வேற்படையையுடைய முருகனோ, மேவான் - என்பால் அணுகான்; செயல் அறியேன் மேல் - இனிச்செய்வது அறியேன் என்பது. திங்கள் நிலவு விரித்தலும், தென்றல் குளிர்ந்து வீசுதலும், வேள்காம வேட்கை எழுப்புதலுந் தனக்குத் துன்பம் பயத்தல் பற்றித் தலைவி அவற்றை இன்னாதனவாக உரைத்தனள். தென்றல், நமன் என்பவற்றில் உம்மை விரித்துக்கொள்க. தென்றல் தன்னைநோக்கி வீசிவருதல், புலியே சீறிவருதல் போல் அப்போது அவட்குத் தோன்றினமையாற் `புலிபோலத் தென்றல் நலியு மென்றாள். `நலிதல் இங்குப் பிறவினைப் பொருளது; நடுங்கஞர் நலிய என்றார். புறப்பொருள் வெண்பாமலையிலும் (12, 15). காதலன் தனக்கருகில் இருக்குங்கால் இன்பம் விளைத்தல்பற்றி `நல்வேள் எனவும், பின் பிரிந்தக்கால் உயிரை வருத்துதல்பற்றி `நமனானான் எனவுங் காமவேள் கூறப்பட்டான். இயற்கையான மெல்லோசை தமிழ்க்கு உளதாதல் பற்றி `ஒலி தமிழ் என விதந்தோதப்பட்டது. `தமிழென்றது இசைக்கு மென்னுங் குறிப்பால் ஈண்டு நான்மறைகளை உணர்த்தின. நான்மறைகளாவன: மூவர் தேவாரமும் மாணிக்கவாசகர் திருவாசகமுமாம். தலைமகள் தன் காதலனைப் பிரிந்து பிரிவாற்றாமற் புலம்பும் பொருள் இதன்கண் வெளிப்படுதல் காண்க. (14) 15. அருமைசெய் தயர்ப்பத் தலைவி கூறல் மேலான முத்தே திருவொற்றி மேவிய வேலவனே கோலாகலஞ் செய்து கூடாம லேகல் குறைவுகண்டாய் நூலா வுடைகட்டி யேலாத குன்றினும் நோன்மைமிகுங் கோலா வுயர்குணக் குன்றினுஞ் சென்ற குறிப்பறிந்தே (இ-ள்). மேலான முத்தே - சிறந்த முத்துப் போன்றவனே, திருவொற்றி மேவிய வேலவனே - திருவொற்றி நகரைப் பொருந்திய வேன்முருகனே, கோலாகலம் செய்து கூடாமல் ஏகல் குறைவு கண்டாய் - காமவேட்கை மிகுதற்கு உரியனவெல்லாஞ் செய்து பின் அவ்வேட்கை தணிதற்கான கூட்டத்தை நல்காமற் செல்லுதல் நினது அருட்டன்மைக்கு ஓர் இழுக்காகுங்காண், நூலா உடைகட்டி - மக்கள் கையால் நூற்கப்படாத ஆடையினை யுடுத்து, ஏலாத குன்றினும் - தனது வன்றன்மையால் நின்மென் றன்மைக்கு இசையாத கன்மலை மேலும், நோன்மைமிகும் - பொறுக்கும் ஆற்றல் மிக்க, கோலா உயர் குணக்குன்றினும் - அமைக்கப்படாத உயர்ந்த குணமாகிய மலைமேலும், சென்ற குறிப்பு அறிந்து - போய் அமர்ந்த அருட்குறிப்பை அறிந்து வைத்தும் என்க; ஏ அசை. இச்செய்யுள், தலைமகன் தன்னைக் காதலித்த தலைவிக்கு எளியனாய் வந்தான்போற் கலவிக்குமுன் செய்வன வெல்லாஞ் செய்து பின் கலத்தலைச் செய்யாது அதற்கு அரியனாகித் தனக்கு மனக்கவற்சியினை விளைவித்த வன்கண்மையினைத் தலைமகள் தன் றலைமகற்கு எடுத்துரைக்கும் நிலையில் வைத்துப் பாடப்பட்டது. திருவொற்றி நகர் கடலையடுத்துளதாதல் உட்கொண்டு கடலுள் மறைந்துகிடந்த முத்து மக்கட்குப் பயன்படுதற் பொருட்டுக் கரை மேல் வந்தாலென்ன, உலகெங்கும் மறைந்து நிறைந்து நிற்கும் இறைவன், தன்னை வேண்டும் அடியாக்கு அருள் புரிதற் பொருட்டு இந்நகரின்கண்ணே திருவுருக் கொண்டு விளங்கினான் என்பது குறிப்பிப்பார் `மேலானமுத்தே என்றார். கோலாகலம் - முறைபிறழ்ந்தநிலை; இச்சொல் `கோலாலம் எனத் திருவாசகத்தில் வந்தது; கோலாலமாகிக் குரைகடல்வாய் அன்றெழுந்த, ஆலாலமுண்டான் (திருச்சாழல், 8). இஃது ஒலிக்குறிப்பு, வடசொல் அன்று. `நூலாஉடை என்பது ஒருவர் கையான் நூற்கப்படாமல் அடியார் பொருட்டுத் தோற்ற மாத்திரையாய்த் தோன்றும் ஆடை; இறைவன் கொண்ட உருவும் அவ்வுருவின்மேற் காணப்படும் ஆடை அணிகலம் முதலியனவுமெல்லாம் அவனருளிற் றோற்ற மாத்திரையேயாய்க் காணப்படும் இயல்பு, உருவருள் குணங்களோடும் உணர்வருள் உருவிற் றோன்றுங் கருமமும் அருள் அரன்றன் கரசரணாதி சாங்கந் தருமருள் உபாங்கமெல்லாந் தானருள் தனக்கொன்றின்றி அருளுரு வுயிருக் கென்றே ஆக்கினன் அசிந்த னன்றே என்னுஞ் சிவஞான சித்தியார் சுபக்கச்செய்யுளால் (1, 47) உணர்த்தப்படுதல் காண்க. நூலா உடை இப்பொருட்டாதல் பதிற்றுப்பத்தில் நூலாக்கலிங்கம் வாலரைக்கொளீஇ (12, 21) என்பதனுரையிலுங் காணப்படும். கோலல் - வளைத்துச் செய்தல், இஃதிப்பொருட்டாதல், நெடுங்காழ்க் கண்டங் கோலி என்னும் முல்லைப்பாட்டிலுங் (44) காண்க; கையால் வளைத்து அமைக்கப்படுஞ் செய்குன்றின் வேறு பிரித்தற்குக் கோலா உயர் குணக்குன்று என்றார்; குணமென்னுங் குன்றேறி நின்றார் என்பது திருக்குறள். மாயையில் உருவுகொள்ளாமல் அருளில் உருவுகொண்ட இறைவன் மெய்யன்பர் பொருட்டு, மாயையில் உருக்கொண்ட கன்மலை மேலும் எழுந்தருளினானென அவனது அருளிரக்கங் கூறினார். அத்துணை அருளிரக்கமுடைய இறைவன் எளியேன் மேல் இரக்கமிலனாய் தென்னையென்பதாம். (15) 16. அருணிலை யுரைத்தல் நிலையில்லா இன்பங்களை நிலையினவாக எண்ணி அவற்றின்கட் படிந்து மாந்தர் வீணே கழிகின்றாராகவுந், தமக்குமட்டும் நிலையான இன்பம் ஈதெனத்தெரிவித்துத் தனது திருக்கோலக் காட்சியினையும் நன்கு புலனாக்கியருளிய எல்லாம் வல்ல ஆண்டவனது பேரருணிலையினை அடிகள் வியந்து கனிந்தேத்தும் பொருளியல் இதன்கண் நுவலப்படுகின்றது. (1-2) அறிவும் அவாவும் ஒரு வழிச்சென்றாங்கு - அறிவும் அதன் வழி அவாவும் ஒரு நெறியிற் சென்றாற்போற் றோன்றி, ஒருதிறம் இன்றிப் பலதிறம் படும் - ஒரு வகையின்றிப் பலவகைப்படுமென்பது. `தோன்றியென ஒருசொல் வருவித்துரைக்க. (3-15) குய் கமழ் கறியும் -தாளிப்பு மணக்குங் கறிகளும், நெய் கமழ் துவையும் - நெய் மணக்குந் துவையலும், பொன்நிறப் புழுக்கலும் - பொன்னிறமான பருப்பும், கன்னல் பெய் பாலும் - சர்க்கரைபெய்த ஆவின்பாலும், தன்நிகர் குழம்பும் - தனக்குத் தானே ஒப்பான குழம்பும், பண்ணிய வகையும் - வடை இன்னுண்டை இன்னடை முதலான தின்பண்ட வகைகளும், மிக்கெழு சுவையின் முக்கனிவகையும் - மிக்குத் தோன்றுகின்ற சுவையினையுடைய மா, வாழை, பலா என்னும் மூன்று பழவகைகளும், கோழ் அரை வாழைக் குருத்து அகம் விரித்து - வழுவழுப்பான அரையினையுடைய வாழையின் குருத்தை உள்விரித்து, பால்கெழு தன்மையின் பலவேறு அமைத்து - பரிமாறவேண்டும் முறையிற் பலவேறு வகையாக வைத்து, முரவை போகிய முழு வெள்அரிசி கைவல் மடையன் அடுதலின் - கீற்றுகள் அற்ற முரியாத வெள்ளிய அரிசியைக் கைதேர்ந்த சமையற்காரன் சமைத்தலால், நெய் கனிந்து விரல் என நிமிர்ந்த அவையல் மென்பதம் - நெய்கசிந்து விரல்போல் நெடுகிய குற்றலரிசியின் மெல்லிய சோற்றை, முல்லை முகை என மெல்லிதின் குவைஇ-முல்லை யரும்புகள் என்னும்படி மென்மையாய்க் குவித்து, புழுக்கலம் பிறவும் அளாஅய் - முன்னர் இலையிலிட்ட பருப்புங் கறிகள் குழம்புகள் முதலானவுங் கலந்து, விழுத்தக நெய்உடன் பெய்து - மணமுஞ் சுவையுஞ் சிறக்க ஆவின் நெய்யும் உடன்கூட்டி, மெய் மறந்து உண்டாங்கு - தன்னை மறந்து உண்டபடியே, ஆனாது உறைவோர் அளவிலர் - பின்னும் மனமமையாமல் வாழ்வோர் அளவில்லாதவராவர்; `பொன்னிறம் என்பது ஈண்டு மஞ்சள் நிறம்; ஆதலாற் `பொன்னிறப் புழுக்க லென்பது பொன்னிறமான துவரம் பருப்பின் புழுக்கல்; புழுங்க வெந்தபருப்புப் புழுங்கல் எனப் பட்டது; அவரைவான் புழுக்கு என்றார் பெரும்பாணாற்றுப் படையிலும் (195). பாலை இலையில் தனியே பெய்தல் ஆகாமையிற் கிண்ணத்திற் பெய்து வைத்து காண்க. தின்பண்டங்கள் வட்டம், உருண்டை, தட்டை முதலிய பலவேறு வடிவங்களில் விரல்களை யியக்கிப் பண்ணப்படுதலின் அவை `பண்ணிய மெனப்பட்டன. அரை, அடிமரம்; கோழரை, பெரியாரை, பொகுட்டரை, முள்ளரையென்னும் நால்வகை மரவகைகளுட் சோழரையும் ஒன்றென்க. கோழரை, வழுவழுப்பான அரை. `பால்கெழு தன்மையிற் பலவேறு அமைத்து என்றது, பருப்பு பச்சடி அவியல் பொரியல் வறல் கூட்டு முதலியவைகளை இலையில் வைக்கவேண்டும் முறையிற் பரிமாறுதலை உணர்த்திற்று. `முரவை, அரிசியிற் காணப்படும் வரி; மிக்க வேக்காட்டினாலுங் காய்ச்சலாலும் அரிசியின்கட் கட்டுவிட்டுக் காட்டும் வரிகளும் `முரவை யெனப்படுமென்பாருமுளர். `அவையல் குற்றலரிசி; ஆய்தினை யரிசி யவைய லன்ன பொரநராற், 16) என்புழி உரைகாரர் நச்சினார்க்கினியர் `அவையல் என்பதற்கு இப்பொருளே உரைத்தமை காண்க. பதம், சோறு. விரலென நிமிர்ந்த சிறுவெண் சோறு முல்லை முகைகளையே முழுதொத்திருத்தலின், ஏனை இலக்கியங்களும் அம் முல்லை முகைகளையே சிறப்பாயெடுத்து அதற்கு உவமை காட்டுவவாயின. முல்லைமுகை சொரிந்தாற்போன் றினிய பாலடிசில் (2623), `முல்லைமோட் டிளமுகையின்........ வெண்சோறு (2972) எனச் சீவகசிந்தாமணியின் கண் வருதலும் இங்கு நினைவு கூரற்பாலது. `விழுத்தக இன்னும் மேம்பட நெய்யும் உடன்பெய்து என்றவாறு. `முரவைபோகிய முழுவெள்ளரிசி கைவன் மடையனடுதலின் விரலென நிமிர்ந்த வவையான் மென்பதம் முல்லைமுகையென மெல்லிதிற் குவைஇ என்னும் பகுதி, முரவைபோகிய முரியா வரிசி விரலென நிமிர்ந்த நிரலமை புழுக்கல் என்னும் பொருநராற்றுப்படையடிகளொடு (113-4) பெரும் பான்மையும் ஒத்துநிற்றல் காண்க. இவ்வகையாக வயிறுபுடைப்ப இனிய உண்டு அம் மகிழ்வினால் மயங்கிக் கிடப்பதே அறிவின் பயனாமென அதுசெய்து கிடப்பாரும் உலகத்திற் பலரென்க. இனி, 16-ம் அடி முதல் 53 ம் அடிகாறும் உலகக் காட்சிகளைக் கண்டு அறிவு மாழ்குவார் நிலையை எடுத்துரைக்கு முகத்தால் நானிலக் காட்சிகள் நன்கு விரித்தோதப்படுகின்ன. (16-22) முகில் தொடுகுடுமியும் - தீண்டுகின்ற முகிலாகிய குடுமியும், முழை கெழு வாயும் பொருந்துகின்ற குகையாகிய வாயும் உடைத்தாய், அருவி என்னும் அறுவையும் உடீஇ - அருவிகள் என்னும் உடையும்உடுத்து, அந்திக்காலத்து ஞாயிறொடு பொருது - சாய்ங்காலத்திற் கதிரவனொடு போர்செய்து அவ்வாற்றாற் காணப்பட்ட, செவ்வான் என்னும் மெய்கால் குருதியும் - செவ்வானம் என்னும் மெய்பொழியுஞ் செந்நீரும், கணைதொடு புண்ணின் முகுளித்தன்ன பவளமும் - அம்புகள் பட்ட புண்ணினின்றுங் கொப்புளித்தாற்போன்ற பவளங்களும், சிதர்ந்த - சிந்திய, திவள் ஒளி செழூஉம் அரக்கன் அன்ன பொருப்பின் காட்சியும் - விளங்கிய ஒளிகள் பொருந்திய அரக்கனை ஒக்கும் மலையின் தோற்றமும்; இது குறிஞ்சி நிலத்தின் காட்சியை எடுத்து விரித்தோது கின்றது. இதன்கட் குறிஞ்சிநிலத்து மலை ஓர் அரக்கனுக்கு ஒப்பாக வைத்து அழகாகப் புனைந்துரைக்கப் பட்டிருக்கின்றது. மலையுச்சியில் வந்து தவழுங் கருமுகில் அம்மலையென்னும் அரக்கனுக்குக் குஞ்சியாகவும், குகைகளின் சந்து வாயாகவும், அருவி உடையாகவும், செவ்வான் செந்நீராகவும், செந்நீர்க் குமிழி பவளமாகவும் எடுத்துக்காட்டிய அழகு பெரிதும் உணர்ந்து மகிழற்பாலதாகும். பெரிய தோற்றமுங் கரிய நிறமுடையதாய் முட்செடிகளுங் கற்பாறைகளும் மலிந்து தோன்றுதலின், மலை அரக்கனுக்கு நிகராயிற்று. மலை அரக்கனோடு ஒப்பவைத் துரைக்கப் பட்டமையின் அதற்கேற்பப் போர்நிகழ்ச்சியும் பொருத்தமாய் எடுத்துக்காட்டிய நுட்பங் குறித்துணர்க. இடையே சிலசொற்கள் வருவித்துக்கொள்க. செவ்வான் என்னுங் குருதி யென்பது. குருதியும் பவளமுஞ் `சிதர்ந்த வென்பதன் வினைமுதல்வன். ஒளிகெழூஉம் பொருப்பின் காட்சியெனக் கூட்டுக. `அறுவை, உடை; காம்பு சொலித்தன்ன அறுவை உடீஇ என்பது சிறுபாணாற்றுப்படை (236) காலல், பொழிதல். (23-31) மடமான் பிணைகள் கன்றொடுகுழீஇக் கான்யாற்று ஒண்புனல் நிரைநிரை அருந்த - மென்றன்மை வாய்ந்த பெண் மான்கள் தத்தங் கன்றுகளுடன் கூடிக்கொண்டு காட்டாற்றின் கண் உள்ள விளக்கம் மிக்க தண்ணீரை வரிசை வரிசையாய் நின்று பருகவும், கானம்கோழிதுணை கூப்பெயர்ந்து ஞாயிறு தோன்றும் காலை அறிவிப்ப - காட்டுக்கோழிகள் வைகறையில் எழுந்து தத்தம் பெடையினங்களைக் கூவி அழைக்குமுகத்தால் ஞாயிறு தோன்றும் விடியற் காலத்தினை மக்கட்குத் தெரியப்படுத்தவும், நிறம் கெழு தாரா குறும்கயம் மருங்கில் குறுகுறு நடந்தது நீந்த - நிறம் பொருந்திய தாரா என்னும் நீர்ப்பறவை சிறிய குட்டையின் அருகிற் குறுகுறுவென நடந்து நீரிற் பாய்ந்து நீந்தவும், வெறிபடுதளவம் அரும்பி எயிறு என விளங்க - மணம் வீசும் முல்லை மொட்டுகள் அரும்பி வெண்பல் என விளங்குதலானும், கொன்றை பொன்வீஉகுப்ப - கொன்றை மரங்கள் பொன்னிறமான மலர்களை உதிர்த்தலானும், மன்றல் காவதம் கமழும் காடுகெழு காட்சியும் -காவதத் தொலைவு நறுமணங் கமழுங் காட்டின்கட்பொருந்திய தோற்றமும்; இப் பகுதியின்கண் முல்லை நிலத்தின் காட்சி விரித்துரைக்கப்படுதலின் அந் நிலத்திற்கு உரிய மான்பேடுங் கான்யாறுங் கானங் கோழியுந் தாராவுந் தளவமுங் கொன்றையு முதலான கருப்பொருள்கள் இனிதெடுத்துக் காட்டப்பட்டன. மடம் - மென்றன்மை; தெறிநடை மடப்பிணை (புறம், 23) என்பதன் உரையிற் காண்க. கவரிமா, மான் முதலிய கான்விலங்குகளின் பெண்ணினங்கள் `பிணை எனப்படும். இப்பொருண் மரபின் உண்மை. புல்வாய் நவ்வி யுழையே கவரி சொல்வாய் நாடிற் பிணையெனப் படுமே என்னுந் தொல்காப்பியர் மரபியல் நூற்பாவால் (57) இனி துணரப்படும். தெளிந்த நீர் இங்கு `ஒண்புனல் எனப்பட்டது. `துணைகூப்பெயர்ந்து என்பது முதற்பாட்டினும் (10) வந்தமை காண்க. `குறுங் கயம் சிறிய குளம்; ஆவது குட்டையென்க. அருந்த, அறிவிப்ப, நீந்த என்னும் வினையெச்சங்கள் கொண்டு முடியுந் `தோன்றும் என்னும் ஒருசொல் வருவிக்க. `விளங்க, `உகுப்ப வென்னும் வினையெச்சங்கள் காரணப் பொருளன. `காவதம் என்பது எண்ணாயிர முழத்தொலைவு; ஆவது இரண்டேகாற் கல்லும் எண்பது முழங்களுமென்க. இச் சொல் இவ் அளவினையே குறிக்குமென்பது, அடிகளே தாம் அரிதின் ஆராய்ந்து எழுதிய மாணிக்க வாசகர் வரலாறுங் காலமும் என்னும் உரைநடை நூலில் (பக்கம், 570.) மிகவிரிவாக ஆராய்ந்து விளக்கப்பட்டிருத்தல் காண்க. (32-38) கொழுவளை ஈன்ற செழுநீர் முத்தம் செந் தாமரையின் மிளிர்வன - கொழுவிய வலம்புரிச் சங்குகள் ஈன்ற செழுநீர்மை வாய்ந்த முத்துகள் செந்தாமரை மலர்களின்மேல் விளங்குவனவான தோற்றம், மங்கையர் திருமுகம் குறுவியர் பொடித்தல் - மான -மங்கைப் பருவத்துப் பெண்களின் அழகிய முகங்கள் சிறுசிறு வியர்வைத் துளிகள் அரும்புதலை ஒப்பவும், குடம்புரை செருத்தல் தடங்கண் மேதி - நீரின்கட் படிந்துள்ள குடம் ஒக்கும் மடியையும் அகன்ற கண்களையும் உடைய எருமைகள், இல்உறை குழக்கன்று உள்ளு தொறும் ஒழுகும் தீம் பால் - வீட்டில் உறையுந் தம் இளங்கன்றுகளை நினைக்குந்தோறும் அவற்றின் மடிகளிலிருந்து சுரந்தொழுகுந் தித்திப்பான பாலை, மாந்தி - பருகி, பருவரால் உகள - பரிய வரால்மீன்கள் புரளவும், மலிபூம் பொய்கை மருதக் காட்சியும் - இவ்வகையான அழகுகள் மலிந்த மலர்ப் பொய்கைகள் ஆங்காங்கு விளங்கும் மருதநிலத் தோற்றமும்; நீர், நீர்மை; இயல்பென்னும் பொருட்டு; `மிளிர்வன வானதோற்றம் என ஒருசொல் வருவித்துரைக்க; மிளிர்வன வினையாலணையும் பெயர்; பொடித்தல், அரும்புதல். `செருத்தல், எருமை, ஆன் என்பவற்றின் மடியை உணர்த்தி வரும். `குடம்புரை செருத்தற் குவளைமேய் கயவாய்க் குவிமுலைப் படர் மருப் பெருமை என்றார் சீவக சிந்தாமணியிலும் (2102). இங்குக் கூறப்படும் மருதநிலக் காட்சி மிக அழகிது. (39-52) தேற்றாப் புலவர்நூல் திறம்கடுப்ப - தெளிவடையாத புலவரது நூலி னியல்பை ஒப்ப, எழுவாய் ஓங்கி முறைமுறை தேய்ந்து கரைசார்ந்து அவியும் திரையே - எழுமிடத்திற் பெரிதாய்ப் பின் வரவரக் குறைந்து சிறிதாகிக் கரைசேர்ந்து அழியும் அலையும், கரை தொடுத்து மறுகரை காணாது அகன்று நனி ஆழ்ந்து - ஒருகரை தொடங்கிமறுகரை காணவொட்டாமல் அத்துணைப் பரந்து மிகவும் ஆழமுடைத் தாய், நல்லிசைப் புலவர் செய்யுள் போல- மறுவற்ற நல்ல புகழையுடைய புலவரது செய்யுளைப் போல், பல்பொருள் செறித்த கடலே - முத்து சங்கு முதலான பல அரிய பண்டங்கள் நிரம்பிய கடலும், பொல்லா ஒழுக்கம் தலைவந்த பழிப்புடை யாளரும் - தீயவொழுக்கத்தில் முன்வந்த பழிப்பினையுடைய தீயோரும், விழுக்குணம் மேவுவரென்பது நலத்தக - சிறந்த நல்லியல்பினை உடையராவர் என்னும் உண்மை நன்கு பொருந்தும்படி, முள் உடைக் குழையிடைக் கொள்ளைமணம் அவிழ்த்து வாலிதின் விரிந்த கைதை அம்கழியே - நுனியிலும் ஓரங்களிலும் முட்கள் உடைய பசிய மடல்களினிடையில் மிக்க மணம் பரப்பி வெள்ளிதாய் அலர்ந்த தாழம்பூவினையுடைய கழியும், மின் சிதர்ந்து அன்ன பொன் சிதர் பரப்பி - மின்னொளி சிதறினாற்போலப் பொன்னிற மான பூந்தாதுகளை எங்குஞ் சிந்தி, எரி கிளர்ந்தன்ன விரிபூஞாழல் பொழிலே - தீப் பிழம்பு ஒளிர்ந்தாற்போல இதழ்விரிந்த பூக்களையுடைய ஞாழன்மரங்கள் நிரம்பிய சோலைகளும், எனும் இவை எழில்பெறத் தோன்றும் நெய்தல் காட்சியும்; நெய்தல் நிலமென்பது கடலுங் கடல்சார்ந்த இடமுமாகும்; அந்நிலத்துக் காட்சி இப் பகுதியின்கண் இனிதெடுத்துக் காட்டப்படுகின்றது. அரைகுறையாகக் கற்றுத் தெளிவெய்தாத புலவர் ஈண்டுத் `தேற்றாப் புலவர் எனப்பட்டார். அவரியற்றும் நூல்களெல்லாந் தொடக்கத்தில் மட்டும் ஆங்கு வேண்டும் பொருட் பரப்பெல்லாந் தேடிக்கொணர்ந்து உரியசொற்களுடன் இனிதடக்கி அமைத்து எழுச்சியாய் இயற்றப்பட்டுப், பின் வரவர அவ்வெழுச்சியும் அவ்வெழுச்சியின் வழிக் கிளர்ந்துவருஞ் சொற்பொருட் பரப்புமெல்லாம் முறைமுறையே சுருங்கி அவை முடிய வேண்டும் வரம்புக்கு வரு முன்னரே இற்றுப்போம். புலவன் நூலின்கட் செய்யுங் குற்றங்கள் பத்தனுள் இதுவும் ஒன்று; இது `சென்றுதேய்ந் திறுதல் என்னுங் குற்றமாம்; இங்ஙனமே கடலின்கண் உண்டாகும் அலைகள் முதலில் மிக உயரமாய்க் கிளம்பி வரவரத் தேய்ந்து அவிந்துபோதல் காண்க. எழுவாய், எழுகின்ற இடம்; ஆவது தொடக்கமென்க. நல்லிசைப் புலவர்கள் இயற்றுஞ் செய்யுட்களெல்லாம் நூல்நுட்பங்களால் மிக ஆன்றும் மிக ஆழ்ந்தும் அரும்பெருங் கருத்துக்கள் நிரம்பிக் கிடக்குமாகலின் அங்ஙனமே கரைகாணாது அகன்று நனி ஆழ்ந்து பல்பொருள் செறித்த கடலுக்கு அவை ஒப்பாயின. `செறித்த கடல் அடக்கிய கடல் என்க. செறுத்த செய்யுட் செய்செந் நாவின் வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன் என்னும் புறநானூற்றின் (53) கண்இச்சொல் இப் பொருட்டாதல் காண்க. ஒழுக்கம் என்பதற்கு ஏழாவது விரித்துரைக்க; `தக, தகும்படி; நலத்தக, நன்கு பொருந்தும்படி; ஒரு சொல். குழை, இங்குப் பசிய இலை; கொள்ளைமணம் - கூட்டுமணம்; அதாவது `மிக்கமணம் என்பது; `வால், வெண்மை, வாலிணர் மடற்றாழை (118) என்பது பட்டினப்பாலை. `ஞாழல், மிகுந்த மஞ்சட் பூம்பொடிகளும் சிவந்த இதழ்களும் உடைய வட்டமான பூக்கள் நிரம்பிய ஒருவகையான பரியமரம்; இது புன்னைமரத்துக்கு இனமான நெய்தல்நிலத்து மரம்; பொன் இணர் ஞாழல் முனையிற் பொதியவிழ் புன்னையம் பூஞ்சினை சேக்குந் துறைவன் என்னும் ஐங்குறு நூற்றுச்செய்யுளால் அஃதுணர்க (169). திரையே கடலே கழியே பொழிலே என்னும் ஏகாரங்களெல்லாம் எண்ணுப்பொருளன. (52-53) கண்டு - ஆன இந் நானிலக் காட்சிகளையும் பார்த்து, மெய் என அறிவுமாழாந்து - அவையே தங்கட்புலனாற் காண்டற்குரிய மெய்க்காட்சியாம் போலுமென அறிவுமயங்கி, வாழ்வோரும் பலர் - கவலையின்றி வாழ்கின்றவர்களும் உலகத்திற் பலராவர். மாழாத்தல், மயங்குதல்; பொருப்பின் காட்சியும் (22), காடுகெழு காட்சியும் (31) மருதக்காட்சியும் (38) நெய்தற்காட்சியும் கண்டு (52) வாழ்வோரும் பல (53) ரென்க. (54-65) காண்தகு சிறப்பின் பாண்டின்மேல் - காண்டற்குரிய சிறப்பினையுடைய அழகிய கட்டிலின்மேல், ஐவகை அமளியும் கூறுபட அமைத்து - ஐந்துவகையான படுக்கைகளையும் வகைபட விரித்து, கால்களைந்து ஆய்ந்த வான் முகை முல்லை கடிமணம் கமழத்தூஉய் - காம்புகள் கிள்ளி ஆராய்ந்து எடுத்த சிறந்த முல்லைப்போதுகளை அவற்றின்மேல் மிக்க மணம் வீசத்தூவி, மடிபடு நுரை முகந்தன்ன தூவெள் அறுவை செறிவுற விரித்து - மடிக்கப்பட்டுப் பால் நுரையினை ஏந்தினாலொத்த அழுக்கற்ற வெள்ளிய உடையினை அதன் மேல் நெருங்கிப் பொருந்தும்படி விரித்து, நறும்குறடு உரைத்தகேழ்கிளர் தேய்வையில் கோழ் அகில் நெய்யும் புழுகு மான்மதமும் செழும் கருப்புரமும் கொழும் பனிநீரும் வழுவறக்கூட்டி - நல்ல சந்தனக் கட்டையினால் தேய்த்தெடுத்த நிறம் விளங்குங் குழம்பில் வழுவழுப்பான அகிற்கட்டையின் நெய்யும் புழுகுங் கத்தூரியும் செழுமையான பச்சைக் கருப்புரமும் கொழுமையான பனிநீரும் அளவு பிழையாதபடி கலந்து, வேரியின் அமைந்த சிவிறியில் தோய்த்து- வெட்டி வேரினால் அமைக்கப்பட்ட சிவிறிகளில் தோய்ந்து, நிரைநிரை மங்கையர் முறைமுறை இரட்ட - வரிசைவரிசையாக மங்கைப் பருவத்து இளம்பெண்கள் கட்டிலருகில் நின்று முறைமுறையே விசிற, உறங்கும் வாழ்க்கையில் பிறங்குவோர் பலர் - அதன்மேல் மெல்லெனப் படுத்து உறங்கும் வாழ்க்கையில் மேம்படுவோர் பலராவர்; `காண்டகு சிறப் பென்பது, அழகு; அதாவது கட்டிலிற் பொருத்திய யானைமருப்பிற் செதுக்கப்பட்டிருக்கும் ஓவிய அழகும், துணிகளானும் மணிகள் முதலியவற்றானும் புனைவுசெய்யப்பட்டிருக்கும் ஒப்பனையழகு மென்க. `பாண்டில் கட்டில்; மேலால் என்பதில் ஆல் அசை, ஐவகை அமளியாவன, சிறுபூளைப் பஞ்சினாலான மெத்தை யும், செம்பஞ்சினாலான மெத்தையும், வெண்பஞ்சினா லான மெத்தையும், மகளிர் மென் கூந்தலாலான மெத்தையும், அன்னச்சேவலின் மென்மயிரினாலான மெத்தையுமென்ப; இது சிறுபூளை செம்பஞ்சு வெண்பஞ்சு சேண, முறு தூவி சேக்கையோ ரைந்து (நச்சினார்க்கினியருரை மேற்கொள், நெடுநல், 133.) என்பதனானும் அறியப்படும். இவ்வைவகையமளியும், மயிர்ச்சேணம் பஞ்சுமெத்தை வண்படாந் தூவி பயிற்றுந்தண் வீப்பாய் பஞ்சசயனம் எனப் பிங்கலந்தையில் (383) வேறுவகையாகக் கூறப்படுகின்றன. எனினும் செய்யுளில் மலர்ப்பாயலும் வண்படாமும் ஐவகை யமளியின் வேறாய் வைத்துரைக்கப் பட்டிருத்தலின், அடிகள் கருதிய ஐவகையமளி முன்னதேயாதல் வேண்டுமென்பது. வீப்பாய் - மலர்ப்பாய்; வண்படாம் - துணிமடி; கட்டிற்கு உரிய காண்டகு சிறப்பு, பொருதொழி நாக மொழியெயி றருகெறிந்து சீருஞ் செம்மையு மொப்ப வல்லோன் கூருளிக் குயின்ற வீரிலை யிடையிடுபு தூங்கியன் மகளிர் வீங்குமுலை கடுப்பப் புடைதிரண் டிருந்த குடத்த விடைதிரண் டுள்ளி நோன்முதல் பொருத்தி யடியமைத்துப் பேரள வெய்திய பெரும்பெயர்ப் பாண்டில் மடைமா ணுண்ணிழை பொலியத் தொடைமாண்டு முத்துடைச் சாலேக நாற்றிக் குத்துறுத்துப் புலிப்பொறிக் கொண்ட பூங்கேழ்த் தட்டத்துத் தகடுகண் புதையக் கொளீஇத் துகள்தீர்ந்து என்னும் பகுதியானும், அக்கட்டிலின்மேல் விரிக்கப்படும் அமளிகளினியல்பு. ஊட்டுறு பன்மயிர் விரைஇ வயமான் வேட்டம் பொறித்து வியன்கட் கானத்து முல்லைப் பல்போ துறழப் பூநிரைத்து மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்படத் துணைபு ணரன்னத் தூநிறத்தூவி யிணையணை மேம்படப் பாயணை யிட்டுக் காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத் தோடமை தூமடி விரித்த சேக்கை என்னும் பகுதியானும் நெடுநல்வாடையின்கண் (117-135) விளக்கப்பட்டிருத்தல் இங்கு நினைவுகூரற்பாலது. `கால் களைதல் காம்பு கிள்ளுதல்; இஃதிப்பொருட்டாதல் அனிச்சப்பூக் கால் களையாள் பெய்தாள் (திருக்குறள், 1115). என்பதனால் அறியப்படும். வெண்மைக்குந் தூய்மைக்கும் மென்மைக்கும் அறுவைக்கு நுரை உவமையாம். நுரையென விரிந்த நுண்பூங் கலிங்கம் (சிலப்பதி, 22:21) தீம்பா னுரைபோற் றிகழ்வெண்பட்டுடுத்து (சிந்தாமணி, 3046) எனச் சான்றோ ரிலக்கியங்களிலும் இவ்வுவமை வரும். செறிவுற, இணைவுற. `நறுங்குற டுரைத்த கேழ்கிளர் தேய்வை என்பதற்கு ஈங்குரைத்த பொருள் நறுங்குற டுரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை யென்னுந் திருமுருகாற்றுப்படையடி (33) யுரையிலுங் காண்க. `கோழ் வழுவழுப்புப் பொருட்டாதல், `கோழரை என்பதனால் அறிக. கருப்புரத்துக்குச் செழுமையும், பனிநீருக்குக் கொழுமையு மாவது மணச்செழுமையாம்; செழுமை கொழுமை யென்பன ஒருபொருட் கிளவிகள். சிவிறியைத் தோய்த்தெனற்பாலது சிவிறியிற் றோய்த்தென வந்தது உருபு மயக்கம். இரட்டல், விசிறல். `பிறங்குத லென்பது ஈண்டு மேன்மேலும் உயர்தலென்னும் பொருட்டு. (66 - 75) தம் நலம் பகரும் பொன் விலைமாதர் - பொருடருவாரி யாவராயினும் அவர்க்குத் தமது இன்பத்தை விலைகூறும் அழகிய பொருட்பெண்டிர், திவவு யாழ் எழீஇ - நரம்பினது வார்க்கட்டினை யுடைய யாழோசையை எழுவித்து, நவை நான்கு அகற்றி - குற்றங்கள் நான்கையும் நீக்கி, மிடற்று எழும் ஓசையும் நரம்பு இமிர் ஒலியும் ஒரு நெறிச்சென்று ஆங்கு ஒருநிலை நிகழ - தொண்டையிலிருந்து தோன்றுகின்ற குரலோசையும் நரம்பிலிருந்து ஒலிக்கின்ற யாழோசையும் ஒருவழியே சென்று இரண்டற்ற அவ்விடத்தில் ஒருதன்மைப் பட்டு நிகழ, புள்இனம் துணைமறந்து ஒதுங்க - அவ்வினிய இசையைக் கேட்டுப் பறவைக் கூட்டங்கள் தத்தம் பெடையினங்களை மறந்து ஒருபக்கத்தே ஒதுங்கி உருகிநிற்பவும், வள்ளியகுழைமுகம் தோன்றி வறுமரம் உயிர்ப்ப - வளவிய தளிர்முனைகள் தோன்றி வற்றல் மரங்களெல்லாந் தளிர்ப்பவும், விழுமிதின் எழூஉம் மிடற்றின் பாடலும் - இனிமையாய் எழுகின்ற குரற்பாட்டும், கொன்றை அம் குழலும் - கொன்றைக் காயினால் ஆன ஊதுகுழலும், குன்று அமர்வேயும் - குன்றத்தின்கண் இருக்கின்ற மூங்கிலால் ஆன வேய்ங்குழலும், துருவி ஊதும் பொருவில் ஓசையும் - துளைத்தூதுகின்ற ஒப்பில்லா இன்னிசை யொலியும், செவ்வாய் மாந்திச் சிறந்தோரும் பலர் - செவியே வாயாய்ப் பருகி மகிழ் சிறந்தோரும் பலராவர்; நலம், இன்பம்; `திவவு என்பது நரம்புகளை வலிபெறக் கட்டும் வார்க்கட்டு (சிறுபாணாற்றுப்படையுரை, 222). `திவவுயாழ் என்பன முற்றுமற்றொரோவழி (நன்னூல், 164). என்பதனால் `திவவியாழ் எனப்புணர்ந்தது. திவவியாழ் மிழற்றி யெனச் சான்றோரிலக்கியங்களில் வருதலுங் காண்க. நவை நான்காவன: வெயிலுங் காற்றும் நீரும் நிழலும் மிகுதல் என்பர் நச்சினார்க்கினியர் (சீவகசிந்தாமணி, 720) இவையாழுக்கு ஆகா. குரலோசையும் யாழோசையும் வேறுவேறு நெறிப்பட்டுப் பிரிந்துசெல்லாமல் ஒரு நெறிப்பட்டு ஓரோசைபோல் நிகழ்தலின், `மிடற்றெழு மோசையும் நிரம்பிமிரொலியும் ஒரு நெறிச் சென்றாங்கு ஒரு நிலை நிகழ வெனப்பட்டது. துணையோசைக ளெல்லாங் குரலோசையோடு இணைந்து இணங்கி நிற்றலே இசையினிமைக்குச் சிறப்பாம். இவ்வியல்பினை ஆசிரியர் இளங்கோவடிகளும், குழல்வழி நின்ற தியாழே யாழ்வழித் தண்ணுமை நின்றது தகவே தண்ணுமைப் பின்வழி நின்றது முழவே முழவொடு கூடிநின் றிசைத்த தாமந் திரிகை யாமந் திரிகையோ டந்தர மின்றி (சிலப், 3: 139 - 143). என்று மிகவும் அழகாய் எடுத்துக் காட்டினர். அரிய இன்னிசையைக் கேட்டலாற் புள்ளினங்கள் உணர்வொழிதல் முதலான உண்மைகள். ஊடுசெவி யிசைநிறைந்த வுள்ளமொடு புள்ளினமு மாடுபடிந் துணர்வொழிய என்பது முதலான பெரியபுராணப்பாட்டுகளானும் (ஆனாய, 31) உணரப்படும். `அமர்தல், ஈண்டு இருத்தலென்னும் பொருட்டு. `துருவி ஊதுதல் ஓசை உள்விராய்ப் பாய்ந்தொழுமாறு துளைத்தூதுதலென்க. (76-83) பித்திகைக் கொழுநனை - பிச்சிச்செடியின் கொழுவிய மொட்டுகளும், முத்துஆர் முல்லை - முத்துக்களைப் போல் நிறைந்த முல்லையரும்புகளும், நறுவிரைத் தாமரை - இனிய மணங் கமழுஞ் செந்தாமரை முகைகளும், துவர்க்கால் வகுளம் - சிவந்த காம்புகளையுடைய மகிழம்பூக்களும்; சண்பகம் குவளை பொன்மடல் தாழை -சண்பக மலர்களுங் குவளைப் போதுகளுஞ் செம்பொன்போலுஞ் சிவந்த மடல்களையுடைய செந்தாழம் பூக்களும், கொழுந்தும் மருவும் - மருக்கொழுந்தும் மருவும், செழும் தண்வேரியும் - செழுமையான குளிர்ந்த வெட்டிவேரும், தொடலை ஆக்கியும் - என இவற்றை மாலையாகத் தொடுத்து அணிந்தும், விடுபூச்சிதறியும் - விடுபூக்களாகத் தூவியும், செண்டும் பந்தும் கொண்டு விளையாடியும் - மலர்ச்செண்டுகளாகவும் பந்துகளாகவுங் கட்டிக் கைக்கொண்டு விளையாட்டயர்ந்தும், நறும் பொருள் விராஅய் மெய்யில் திமிர்ந்தும் - மணப்பண்டங்களை ஒருங்கு குழைத்து உடம்பிற் பூசியும் மகிழ்ந்து, வறிதின் வாழும் மக்களும் பலர் - வீணாய் வாழ்நாள் கழிக்கும் மக்களும் பலராவர்; `பித்திகை யென்பது பிச்சி அல்லது சாதிமல்லிகை. வகுளம், மகிழ்; பொன் என்னுங் குறிப்பால் தாழை செந்தாழை எனப்பட்டது. மேலும் வெண்டாழையினுஞ் செந்தாழையே மணமிக்க தாதலுங் காண்க. மருக்கொழுந்தும் மருவும் வேறு வேறாதல் விளங்கக் `கொழுந்தும் மருவும் என்றார்; கொழுந்து மருக்கொழுந்தின் தலைக்குறை. `தொடலை தொழிலடியாகப் பிறந்தபெயர்; தொடுக்கப் பட்டது தொடலை; ஐ செயப்படுபொருள் விகுதி. இச்சொல் மாலையென்னும் பொருட்டாதல் தொடலைக்குற்ற சிலபூவினரே (நெய்தற் பத்து, 7) என்னும் ஐங்குறுநூற்றடியானுந் தெளியப்படும். `வறிதின் என்றமையின், வாழும் என்பது வாழ்நாள் கழித்தலையே உணர்த்து மென்பது. (84-87) ஐம்பொறி வழிச்சென்று இம்பரில் நுகரும் - மெய்வாய் கண் மூக்குச் செவி யென்னும் ஐந்து பொறிகளின் வழியாகவும் உள்ளம் பாய்ந்து இவ்வுலகத்தின்கண் நுகருகின்ற, ஐவகைச்சுவையும் - ஊறு சுவை ஒளி நாற்றம் ஓசையென்னும் ஐந்து சுவைகளையும், ஒருகால் காட்டும் மைவிழிமடவார் பொய்படும் இன்பத்து - ஒரே நேரத்தில் தம்பாற் புலனாகக் காட்டும் மையணிந்த விழிகளையுடைய பெண்மக்களது நிலையுதல் இல்லாத சிற்றின்பத்தின்கட் படிந்து, மெய்படத் துளங்கும் விழலரும் பலர் - அதனை நிலையுதலுடையதாகக் கருதி உடலும் உயிரும் நிலைகலங்கும் வீணரும் பலராவர்; ஐவகைச் சுவையும் மடவார் மாட்டு ஒருகாற் றோன்று மென்னும் உண்மை, கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனு மொண்டொடி கண்ணே யுள என்னுந் திருவள்ளுவர் பொன்மொழிக்கு (புணர்ச்சி மகிழ்தல், 1) உரைகாரர் பரிமேலழகர், வேறு வேறு காலங்களில் வேறுவேறு பொருள்களான் அனுபவிக்கப்படுவன ஒருகாலத்து இவள் கண்ணே அனுபவிக்கப்பட்டதாம் என்று மிகத் தெளிவாய்ப் பொருளுரைத்தமை கொண்டு தெளியப்படும். `பொய்படு மின்பத்து என்புழிப் `பொய் யென்பது `நிலையுதலின்மை என்னும் பொருட்டாம்; மற்றிதற்கு ஒருசாரார் `பாழ் எனப் பொருளுரைப்பர்; உலகவியற்கைகளில் முதலற இல்லாமலொழிதலாகிய பாழாந் தன்மை யாண்டும் இன்மையின், அப்பொருள் சிறிதும் பொருந்தாது என்க. `துளங்குதல் இங்கு நிலைகலங்குதல் என்னும்பொருட்டு; கடிமரந் துளங்கிய காவும் (புறநானூறு, 23: 9). என்புழியும் அதன் உரைகாரர் இங்ஙனமே பொருளுரைத்தார்; சிற்றின்பத் தின்கண் மிகப் படிந்தார்க்கு உடல்வலிகுன்ற, அதன்வழியே உயிர்வலியுங் குன்றுதலின் `துளங்க என்றார். விழற்பூடு எத்துணைதான் மிகச்செழுமையாய் உயர்ந்தோங்கி அடர்ந்து வளர்ந்தாலும், இறுதியில் அஃது ஏதுங் கதிர்சாய்த்து மக்கட்குப் பயன்படுத லில்லாமையால் அதன் செழுமை வீணாவதேயாகும். ஆதலால் மக்களிலும் அங்ஙனம் ஏதும் பயன்படுதலில்லாதார்க்கு ஆன்றோர் அதனை உவமை உருவங்களாகக் கொண்டுரைப்பது மரபு. (88-93) தாமும் துவ்வாது பிறர்க்கும் ஈயாது - தாமும் நுகராமற் பிறர்க்குங் கொடாமல், வெருவரு பேய்என உரவோர் இகழ- அஞ்சுதற்குரிய பேய்உருவமேயென அறிஞர்கள் இகழ்தலைச்செய்ய, ஆனாது அரும்பொருள் இவறிக்கூட்டி - மேன்மேலும் மனமமையாமற் கிடைத்தற் கருமையான செல்வப்பொருளை எவர்க்குங் கொடாமல் மேன்மேற் சேர்த்து, மாணா வாழ்க்கை மக்களும் கள்வரும் கவர்ந்து செல்ல - மாட்சிமைப்படாத தீயவாழ்க்கை யினையுடைய தம் புதல்வர்களுந் திருடர்களும் அப்பெரும்பொருளை உரிமையாகவுங் கொள்ளைகொண்டுஞ் செல்ல, நிமிர்ந்து வான்நோக்கிச் செய்வது அறியாக் கையரும் பலர் - அம்முகத்தாற் பொருளிழந்து போனமையின் அண்ணாந்து வானத்தைப் பார்த்து இனி இன்னதுதான் செய்வது என்பது அறியமாட்டாத பயனில் செயலுடையாரும் பலராவர். `துவ்வல், நுகர்தல்; இச்சொற்கு இப்பொருளுண்மை துறந்தார்க்கும் என்னுந் திருக்குறளிற் (42) காண்க. மிகவும் அரும்பாடுபட்டு ஈட்டிய பொருளை மேன்மேலும் பெருகச்செய்தல்வேண்டு மென்னும் பேராவலினாற் றாஞ் செவ்வையாய் நுகராமையினாலும், துறந்தார், கற்றார், வறியார்க்கு அவருளம் உவப்ப ஈயாமையினாலும், வீணே பொருள் தொகுத்தாரது நிலை, உடம்பிளைத்து என்புதோன்றிச் சதையுலர்ந்து கன்னம் வற்றி, உதடுவெளுத்து நாச்செத்துக் கண்குழிந்த பேய் தான்கைக் கொண்ட புதையலைத் தானும் பயன்படுத்தாமற் பிறர்க்குங் கொடாமற் காத்துநிற்கும் நிலையோடு ஒப்பதாகவைத்து, `வெருவருபேய் என அறிஞர் இகழ்தலைச் செய்வரென்க. அவர் அறிஞரின் இகழ்ச்சிக்குரிய ராவரென்றற்கு உரவோர்மேல்வைத்து `உரவோர் இகழ வெனப் பட்டது; அறிவிலார் ஈயாச்செல்வரையும் ஏத்திப் புகழ்வராயினும், அறிவுடையார் பிசினரைப் புகழாது இகழ்தலே செய்வர்; அறிஞராற் பாராட்டப்படாத அவர் நடைப்பிணமேயாவ ரென்பது குறிப்பித்தாராயிற்று. நல்லார் கைப்படின் இன்பமும் அறமும் அவற்றால் மறுமைநலமும் அளித்தற்குரியதாகலிற் செல்வம் அரும் பொருள் எனப்பட்டது. இவறல் - வேண்டும்வழிப் பொருள் கொடாமை என்றார் பரிமேலழகியார் (திருக்குறள், 432). மாணா வாழ்க்கை யென்பது நல்லியல்பினால் மாட்சிமைப்படாத தீய வியல்பினை யுடைய வாழ்க்கையென்க: இதனை மக்களுக்குங் கள்வருக்குங் கொள்க. நினைவு மயக்கமுடையா ரெல்லாரும் நிமிர்ந்து வான் நோக்குதல் இயல்பாகலின், இங்குப் பொருளிழந்த வருத்தம் ஒருபக்கமும், இனிச் செய்வதொன்றுந் தோன்றாத நினைவுக் குழப்ப மொருபக்கமுமிகுந்து தலைமயங்குதலின் இவரும் நிமிர்ந்து வான்நோக்குவாராயினர். கையார் - கீழ்மக்கள் (திவாகரம்). பொருளானா மெல்லா மென் றீயா திவறு மருளானா மாணப் பிறப்பு என்னுந் திருக்குறள் பொன்மொழியும், அதற்குப் பரிமேலழகர் பிறர்க்கீயாது பற்றுள்ளஞ் செய்யும் மயக்கத்தாலே ஒருவனுக்கு நிறைதலில்லாத பேய்ப்பிறப் புண்டாம் என்னும் நுண்ணரை மணிமொழியும். உண்ணா னொளிநிறா னோங்குபுகழ் செய்யான் றுன்னருங் கேளிர் துயர்களையான் - கொன்னே வழங்கான் பொருள்காத் திருப்பானேல் அஆ இழந்தானென் றெண்ணப் படும் என்னும் நாலடியார் (1:9) திருமொழியு மெல்லாம் இப்பகுதியின் கண் வருஞ் சொற்பொருட் கருத்துகளொடு பெரிதும் ஒத்து நிற்றல் நினைவுகூரற் பாலது. (94-111) இவ்வாறு ஒழிந்தனர் போக - என்றிவ்வாறெல்லாம் இம்மையின்பம் நுகரப்புக்குத் தம் வாழ்நாட்களைக் கீழ்நெறியிற் கழித்து மாண்டோர் போக, செவ்விய மெய்ப்பொருள் உணர்தும் என்று ஒப்புடன் புகுந்து - நேர்முகமாய்விளங்கும் மெய்யான பொருளை அறிவேமென மனவொருமையுடன் ஆராயத் துவங்கி, கடவுள் தன்மையும் உயிரின் தன்மையும் புடைபட ஒற்றி வரம்பு அளந்து உணராது மயங்கக்கொண்டு மக்களைத் தலைவர் என்று ஒக்கக் கூறி உழிதருவோரும் - இறைவனியல்பையும் உயிரினியல்பையும் பக்கத்தே பக்கத்தே வைத்துப் பொருத்தி அதன்தன் எல்லையினை அறிவான் அளந்துபார்த் துணராமல் அவ்விரண்டனையும் ஒன்றினொன் றாய் மயங்க உணர்ந்து அம் மயக்க உணர்ச்சியினால் மக்களெல்லாரையும் அவர் தமக்கு முதல்வனான இறைவனேயாவரெனக் கீழோர்க்கு மனம் இசையக் கூறித் திரிகின்றவரும், அறிவாய் அருளாய்ச் செறியும் ஒருபொருள் சிறுமையும் மடமையும் எய்தி வெறுவிதின் உயிரும் உலகமும் ஆகும் என்போரும் - அறிவுருவாயும் அருளுருவாயும் யாண்டும் நிறைந்துள்ள ஒருமுழுமுதற் பொருள் தானே தன் பெருமையிழந்து சிறுமையும் அறியாமையும் அடைந்து ஓர் ஏதுவும் இன்றி வாளாப் புன்முதலான சிற்றறிவுயிர்களும் மண்முதலான ஐம் முதற்பொருள்களுமாய்த் திரிபெய்து மென்று கூறுகின்றவரும், கண் புலன் ஆகுவ கருத்தின்தோற்றமாய் உள்புகுந்து உணர்வோர்க்குப் பொய்ப்பொருளாகலின் கோயில் என்னே மேவி ஆங்கு உறையும் தூயபேரொளிப் பிழம்பெனல் என்னே வஞ்சமாந்தர் பிறர் நெஞ்சம் பிணிக்கக் கல்லையும் மண்ணையும் வல்லிதின் பொருத்திச் சூழ்ச்சியின் அமைத்த கீழ்த்திறம் அன்றோ என்று உரை கூறுவோரும் ஆக - புறத்தே கண்ணுக்குப் புலனாவனவெல்லாம் அவற்றை எண்ணுகின்ற எண்ணத்தின் றோற்றமாய்த் தமது அகத்தே புகுந்து ஆராய்வார்க்கு வெறும் பொய்ப்பொருள்களாய்ப் போய் முடிதலின் `வெளியே கட்புலனாகும் பொருள்களான திருக்கோயில் என்பன எத்தன்மைய! அத்திருகோயிலின்கட் பொருந்தியிருக்கும் மாசற்ற பெரிய ஒளிப்பிழம்பென்பதுதான் எத்தன்மையது! jª ea« ÉU«ò§ fuîila k¡fŸ áy® ãwuJ cŸs¤ij¤ j«ta¥gL¤J« bghU£L¡ fšiyí« k©izí« nt©Lbk‹nw 劉d« ïU¤â¢ Nœ¢áÆdhš V‰gL¤âa jhœªj brašfsšynth ïit! என்று தமக்கேற்ற சொற்களையே பேசுகின்றவருமாக, பொன்றிய மாக்கள் மணலினும் பலர் - உலகத்தில் இறந்துபட்ட அறிவிலா மக்கள் ஆற்றுமணலினும் பலராவர்! `செவ்விய மெய்ப்பொருளென்பது அவரவர் கருதிய வாறெல்லாம் வேறு வேறாய்த் தோன்றாது மெய்யுணர் வினார்க்கெல்லாந் தன்னிலையினை நேரே ஒரு படித்தாய்க் காட்டும் உண்மைப்பொருள்; தேம்பா வெழுத்தோலை செவ்வனே நோக்கினாள் (சீவகசிந்தாமணி, 1040) என்புழியுஞ் செவ்வன் என்பது நேர்மைப்பொருட்டாதல் காண்க. மலத்தாற் பற்றப்படாமல் யாண்டுந் தூயனாய் விளங்கும் எல்லாம்வல்ல தனித் தலைமைக் கடவுளின் பேரியல்பும், அங்ஙனமின்றி மலத்தாற் பற்றப்பட்டு அத்தலைவற்கு யாண்டும் அடிமையாய்க் கிடந்துவாழ்தற்குரிய புன்முதல் மக்கள் தேவர் ஈறான சிற்றுயிர்களின் சிற்றியல்பும் வேறுவேறாய் நனி விளங்கவும், அவ்வேறுபாட்டினை உள்ளவாறே உணரும் மெய்யறிவு வாயாமல் இறைவனும் உயிர்களும் ஆன அவ்விரு பொருள்களும் எங்கும் ஒன்றுபோற் கலந்து ஒன்றாய்க் காணப் படுதலே பற்றி அவையிரண்டும் ஓரியல்புடைய ஒருபொருளே யாமென்று மயங்க உணர்ந்து, அம் மயக்க உணர்ச்சியினால் மக்கள் ஈறான உயிர்களெல்லாம் உண்மையான் நோக்குங்கால் தமக்குத் தலைவனாய் விளங்கும் இறைவனே யாகும் எனப் படுபொய்யுரை கூறுவார் சிலரை முதலிற் கூறினார். உழிதரல், திரிதல்; பாஞ்சராத்திரர் உடையன் அல்லாதானை உடைய னெனக் கோடலின் அவரும் இவருள்அடங்குவர். அருளாயும் அறிவாயும் விளங்கி யாண்டும் நிறைந்துநிற்கும் இறைவன், அவ்வருள் வண்ணங் கெட்டு மருள்வண்ணமாகுஞ் சிறுமையும், அவ்வறிவியல்பு கெட்டு அறிவில்லாததாகும் மடமையும் எய்தி, ஒரு காரணமுமின்றி முறையே உயிரும் உலகமுமாய்த் திரிந்தனன் எனக் கரைவார் சிலரை அதன்பிற் கூறினார். அருளாய் அறிவாய் என மாற்றி அருளும் அறிவும், சிறுமையும் மடமையும், உயிரும் உலகமும் என நிரை நிரையாகக் கொண்டுரைத்துக்கொள்க. உலகமென்பது ஈண்டு மண், நீர், தீ, காற்று, வான் என்று கூறப்படும் அறிவற்ற ஐம்பெரு முதற்பொருள்களென்க. வெறுவிது - பயன் இலாதது. புறத்தே கண்ணுக்குப் புலனாவன வெல்லாங், கருத்தளவாய் ஆராய்ந்துணரப் புகுவார்க்குக் கனவின் றோற்றம்போல் வெறும் பொய்யாகவே முடியுமாகலின், புறத்தே ஓர் உருவாய்க் காணப்படுங் கோயிலென்பதும், அக்கோயிலினுட் காணப்படுஞ் சிவலிங்கமென்பதும் உண்மையில் உள்ளனவல்ல என்பார் பின்னுஞ் சிலரை அதன் பிற் கூறினார். என இங்ஙனங் கூறுவார்; பாஞ்சராத்திரரும், ஏகான்மவாதம் பரிணாமவாதம் மித்தியா வாதம் புகலும் மாயாவாதக்குழுவினரும் ஆவர். பாஞ்சராத்திரர் நம்போல் மங்களாய்ப் பிறந்திறந்தாரைக் கடவுளாய்க் கொள்வர். இவற்றின் விரிவெல்லாஞ் சிவஞானசித்தியார் பரபக்கத்தும், மாதவச் சிவஞானமுனிவர் இயற்றிய சிவஞானபோத மாபாடியத்துங் காண்க. `என்னே என்பதன் ஏகாரம் இரண்டிடங்களிலும் இகழ்ச்சிக் குறிப்பின்மேல் வந்தன; தூயவென்றது, மலமாசற்ற வென்னும் பொருட்டு; சைவத்திருக்கோயில் களிலெல்லாங் கருவறையுள் நிறுத்தப்பட் டிருக்குஞ் சிவலிங்கக்குறி தழற்பிழம்பின் அடையாளமே யாகும்; தழற் பிழம்பு நீண்டுகுவிந்திருத்தல்போற் சிவலிங்கத் திருவுருவமும் நீளமாய் நுனிகுவிய அமைக்கப் பட்டிருத்தல் காண்க. `ஆகுவ என்பதில் `கு விரித்தல் விகாரம்; `நெஞ்சம் பிணிக்க, தம்வயப்படுத்த; என்றது வஞ்சமுள்ள மாந்தர் சிலர் தமது வயிற்றை நிரப்பிக்கொள்ளும்பொருட்டுப் பொருள் வருவாய் ஒன்றே கருதிப் பிறரைத் தம்வயப் படுத்துவர் என்றற்கு. `சூழ்ச்சி யென்பது ஈண்டுச் சூது; கீழ்த்திறம், கீழறுக்குந் திறம்; புறத்தே நன்மைதோன்ற ஒழுகி அகத்தே தீமைசெய்யுங் கரவொழுக்கம்; அளவில் எண்ணிக்கைக்கு மணலினை உவமித்தல் பழைய நூல் வழக்கு; இவ்வழக்குண்மையை நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே யென்னும் புறநானூற்றடியிலுங் காண்க (9). `அளவிலரன்றே (15), வாழ்வோரும் பலரே (53), பிறங்குவோர் பலரே (65), சிறந்தோரும் பலரே (75, மக்களும் பலரே (83), விழலரும் பலரே (87), கையரும் பலரே (93), மணலினும் பலரே (111) என்று தொடர்பு படுத்துக்கொள்க. (112-118) ஆங்ஙனம் ஒழிந்த அளவில் மாந்தருள் யானும் ஒருவனாக நோனாது - என அவ்வாறெல்லாஞ் சிற்றின்ப நுகர்ந்தும் பொய்ப்பொருளுணர்ந்தும் மாய்ந்தொழிந்த எண்ணிறந்த மக்களுள் அடியேனும் ஒருவனாய் ஒழியத் தேவரீர் திருவுளம் பொறாது, வேறு பிரித்து எடுத்து - என்னை அவர்களினின்றும் வேறாய்ப் பிரித்தெடுத்து, கூறுபடுமதியின் மறைபுகழ் சைவம் நிறைவுற விரித்துத் தெளிவு ஆர் அளவையின் விளக்கி மலைவுதரும் மாறுபொருது ஓட்டி வீறு உறத் திகழுஞ் சோமசுந்தர குரவனொடு கூட்டி - பொருள்களைப் பகுத்தாராயுந் தமது இயற்கையறிவினால் நால் வேதங்களாலும் புகழ்ந்து கூறப்படுகின்ற சிந்தாந்த சைவ சமயத்தை ஒருவகையினுங் குறைபாடின்றி எல்லாவகையினும் பொருந்த விரித்துத் தெளிவு பொருந்திய அளவை யிலக்கணங்களால் நன்குவிளக்கி யாண்டுஞ் சொன்மாரி பொழிந்து உண்மைக்குமாறாய்ப் பேசின பகைவர் களை எதிர்த்து ஓடச்செய்து அம்முகத்தாற் பிறர்க்கில்லாத கல்விச்சிறப்புத் தனக்கு அமைய விளங்குஞ் சோமசுந்தர வாசிரியனொடு சேர்த்து; நோனாமை - மனம் பொறாமை. `கூறுபடுமதி யென்பது, பகுத்தறியுங் கூர்த்தமதி. மாறு, ஆகுபெயரால் உண்மைக்கு மாறாயினாரை உணர்த்திற்று. `மாறு எனப் பகைமைப் பொருடரு சொல் முதல் நிறுத்தினமையின், மற்று அதற்கேற்பப் `பொருதுஓட்டுந் தொழில் பின் நிறுத்தப்பட்டன. வீறு - `வேறொன்றற்கில்லா அழகு என்று பொருளுரைப்பர் நச்சினார்க்கினியர் (சீவகசிந்தாமணி, 489). மறைத்திரு. சோமசுந்தர நாயகரென்பவர் அடிகட்குச் சைவசித்தாந்த முணர்த்திய குரவராவர்; `குரவனொடு என்பதை ஏழன் மயக்கமாகக்கொண்டு `குரவன்பால் மாணாக்கனாய்ச் சேர்த்து என்றுரைப்பினும் அமையும். (119-127) இன்பம் என்பது ஐம்பொறியானும் துன்பமொடு முரணித் துய்ப்பதோ அன்று - இன்பம் எனப்படுவது மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும் ஐந்துபொறிகளாலுந் துன்பத்தொடு மாறாக நுகரப்படுவதோவெனின் அன்று முகிழ்நகை மாதர் குழுவொடு கெழீஇ இதழ்சுவைத்திருக்குந் திறத்ததோ அன்று - அரும்பனைய சிறுபற்களையுடைய மாதர் கூட்டத்தொடு கூடி அவரது வாயிதழைச்சுவைக்குந் தன்மையதோவெனின் அதுவு மன்று, ஒன்றினும் பற்றாது தன்திறத்து எழூஉம் குன்றல் இல் பொருளோ அன்று - புறத்துப்பொருள்களுள் ஏதொன்றனோடும் பொருந்தாமல் தன்னியல்பிலேயே எழுகின்ற குறைதலில் லாததோ ரியல்போவெனின் அதுவும் அன்று, தொண்டர் எனும் வண்டினம் குழுமிக் கொண்டிகொள்ளும் நின் திருவடித் தாமரையது - மற்றுத் தொண்டர்கள் என்னும் வண்டுக் கூட்டங்கள் ஒருங்குகூடிக் கொள்ளைகொள்ளுந் தேவரீரது திருவடியாகிய தாமரைமலரின் கண் உள்ளதே அவ்வின்பமாம், என மொழிவித்து என்னையும் உய்யக்கொண்டு -என்று திருவாய் மலர்ந்து அறிவுறுக்கும்படி செய்து ஒன்றுக்கும் பற்றாத ஏழையேனையும் உய்ய ஆட்கொண்டு, பின்னும் - மேலும், `முரணி யென்பதை `முரண வெனத் திரித்துககொள்க. `துய்ப்பதோ வென்னும் ஓகாரம் ஐயப்பொருட்டு; ஏனையவும் அன்ன. நிலையாப் பருப்பொருள்களாயுங் கருவிகளாயும் உள்ள மெய்முதலிய ஐம்பொறிகள் அங்ஙனமே நிலையாப் பருப் பொருள்களாயுங் கருவிகளாயும் உள்ள மண்முதலான ஐம்பெரு முதற்பொருள்களையே பற்றி நுகருமியல்பினவாகலின், அங்ஙன மவற்றால் நுகரப்படும் இன்பமும் அவ்வாறே நிலையாததாயும் மற்றோரின்பத்துக்குக் கருவியாயு மிருக்கும் பெற்றியதே யல்லாமல் என்றும் அழியாததாயும் முடிந்த நிலையினதாயும் இருக்கும் நிலையிற்றன்று. ஆதலால் இவ்வைம்பொறிகளானுந் துன்பத்துக்கு முரணாக நுகரப்படும் இன்பம் முடிந்த இன்பமாகாதென்பது தெளியப்படும். இது பருப்பொருள்களை நுகர்வதால் விளையும் இன்பவியல்பு கூறியபடியாம். இனி, மடவாரது இதழ் சுவைத்து நுகருமின்பம் அறிவுப் பொருளொடு கூடி நுகருமின்பமாம். என்னை? இதழென்னும் அறியாமைப் பொருளைச் சுவைப்பதனாலேயே அவ்வின்பம் எழுவது போற் றோன்றுமாயினும், மடவாரது உயிர் என்னும் அறிவுப் பொருள் இல்லாக்கால் அவ்விதழ்ச்சுவையினால் ஆண்டு ஏதோரின்பமும் பிறவாதாகலானும், உண்மையில் அவ்வறிவுப் பொருளின் அன்புகாரணமாகவே ஆண்டு அவ்வின்பம் நுகரப் படுதலானுமென்பது. இது சிற்றறிவு உயிர்களொடு கூடிநுகருஞ் சிற்றின்பவியல்பு புலப்படுத்தியவாறாம். இனிப் புறப்பொருட் டொடர்புகள் ஏதுமின்றித் தன்னியல் பினானே எழுவதுதான் இன்பமோவெனின் அதுவுமன் றென்பதும், ஆனால் எல்லாம் வல்ல பேரறிவுப் பொருளாகிய இறைவன்றன் இணையடியின்பமே இன்பமென்பதும் மேலடிகளால் உணர்த்தப்படுகின்றன. வண்டுக்கூட்டங்கள் தாமரை மலரை வேட்கையுடன் மொய்த்து அதன்கண் இருந்து பெருக்கெடுத்துவழியும் இனிய நறுந்தேனை ஆர்வமுடன்உண்டு பெரிது மகிழ்தல்போல, அடியவர் கூட்டமுந் தடுக்கொணா அன்புடன் இறைவன் றிருவடிமலர்களைச் சூழ்ந்து கொண்டு ஆண்டுப் பெருகும் பேரின்ப ஆரமுதை ஆரஉண்டு, அவ்வின்பவெள்ளத்திற் றிளைக்குமாகலின், தொண்டரினம் இங்கு வண்டினமாக உருவகப்படுத்தப்பட்ட தென்க. இங்ஙனமே தொண்டரினங்களை வண்டினங்க ளாகவும், இறைவன்நல்கும் பேரின்பப் பேற்றை அவ் வண்டினங்கள் நுகருந் தேனாகவும் வைத்துச் சேக்கிழார் பெருமான், மன்று ளாடுமது வின்னசை யாலே மறைச்சு ரும்பறை புறத்தின் மருங்கே, குன்று போலுமணி மாமதில் சூழுங் குண்டகழ்க்கமல வண்டலர் கைதைத் துன்று நீறுபுனை மேனியவாகித் தூய நீறுபுனை தொண்டர்க ளென்னச், சென்று சென்று முரல் கின்றன கண்டு சிந்தை யன்பொடு திளைத்தெதிர் சென்றார் (திருத்தொண்டர் புராணம், தடுத்தாட், 96) என்று மிக அழகாக விளக்கிக் கூறுதல் பெரிதும் நினைவுகூர்ந்து மகிழற்பாலது. கொண்டி, கொள்ளை; தொல்கொண்டித் துவன்றிருக்கை யென்னும் பட்டினப்பாலையில் (212) இச்சொல் இப் பொருட் டாதல் காண்க. (128- 142) மறை நவில் அந்தணர் வைகறை உணர்ந்து வாவிகுடைந்து ஆர்க்கும் தீவிய ஓதையும் - தேவார திருவாசக மென்னுந் தமிழ் நால்வேதங்கள் ஓதுஞ் சிவ அந்தணர் விடியல் நேரத்தில் துயிலுணர்ந்து திருக்குளத்தில் நீராடி ஒலிக்கும் இனிய ஓசையும், தாமரைப் பள்ளித் துயில் உணர் புள் இனம் பார்ப்பொடு கெழீஇச் சிலம்பும் ஓசையும்- தாமரை மலராகிய அணையினின்றுந் துயிலெழுந்த பறவைக் கூட்டங்கள் தத்தங் குஞ்சுகளுடன் கூடி ஆர்க்கும் ஒலியும், சிறுநுதல் கரும்கண் குறுந்தொடிமகளிர் குங்குமச்சாந்தும் கொங்கு உலாம் கூந்தலும் பால்கெழு தன்மையின் பலவேறு அழீஇ நீல்நிற முகிலில் மறையும் மின்போல் நீர்மூழ்கு ஆடும் பேர்வுஇல் ஆர்ப்பு ஒலியும் - சிறிய நெற்றியுங் கரியகண்ணுங் குறியவளையலும் உடைய இளமகளிர் தமது இளமுலை முன்றிலில் முந்தின இரவு தங் காதற்கணவராற் கழும அப்பித் தொய்யிலு மெழுதப்பட்ட குங்குமப்பூக் கலந்த செஞ்சந்தனச் சேற்றையும் நறுமணம்வீசும் கூந்தல் முடிப்பு களையும் அவை பலபகுப்புகள் பொருந்திய வியல்பினால் அவற்றைப் பல்வேறு முறையாக அழித்துக் கழீஇக் கருநீல நிறம்வாய்ந்த புயலினிடையில் மறைந்துஒளியும் மின்னற் கொடிகளை ஒப்ப நீரில் மூழ்குதல் செய்யும் நீங்குதல் இல்லாத ஆரவாரிப்பொலியும், திருவின்செல்வி அருமையின் பெற்ற குறுநடைச்சிறுவர் சிறு தேர்உருட்டித் திறல்கெழுமறவர் மல் பயில் கழகத்துக் கைபுடைத்து ஆர்க்கும் இசையினும் சிறந்து விட்டுவிட்டு இசைக்கும் மட்டில் கம்பலையும் - திருவுக்குச் செல்வியாகிய திருமகளை யொத்தமகளிர் அருமையாற்பெற்ற சிறிய நடையினை யுடைய சிறார்கள் சிறியதேரைத் தெருவில் உருட்டுதலால் வலிமை பொருந்திய மறவர்கள் மற்போர் பழகுகின்ற கழகத்தில் தம்முடைய தோள்களிற் கைதட்டி ஒலிசெய்யும் ஓசையினும் மிகுந்து இடைவிட்டுவிட்டு ஒலிக்கும் அளவில்லாத ஓசையும், ஒவாது கறங்கும் ஒற்றிமாநகர் - ஓயாமல் ஒலிக்குந் திருவொற்றி மா நகரின்கண்; `வைகறை உணர்தலாவது வைகறையில் துயிலுணர்தல்; `குடைதல் இங்கு நீராடுதலென்னும் பொருட்டு; உரையினி மாதராய்.... புனல்குடைந்து (சிலப். குன்றக்குரவை,) என்பதிற்போல; ஓதையும் ஓசையும் ஒன்று. `நீல் கடைக்குறை; `மின் மகளிர்க்கும், `முகில் கூந்தற்கும் உவமமாகக் கொள்க. எனவே `நீலவான் நீருக்கு உவமையாதல் கூறாமலே பெறப்படும். `மூழ்காடு ஒரு சொல் நீர்மையுமாம். செல்வக் குடியிற் பிறந்த சிறாரென்றற்குத் `திருவின்செல்வி அருமையிற்பெற்ற சிறுவர் என்றார்; செல்வி, சிறார் என்பன ஒருமையிற் பன்மைமயக்கம்; ஏவலிளையர் தாய்வயிறு கரிப்ப என்று சேனாவரையர் காட்டியதூஉங் காண்க; (தொல்காப்பியம், எச்சவியல், 65). `சிறுதே ருருட்டி விட்டுவிட் டிசைக்கும் மட்டில் கம்பலை யெனக் கொள்க. உருட்டுதலால் இசைக்குங் கம்பலையெனப் பொருள் தோன்ற நிற்றலின், `உருட்டி யென்னும் வினையெச்சம் இங்குக் காரணப்பொருளதாம். `கழகம் என்பது கலைபயிலிடம். பெரியோர் பெருந்தேர் உருட்டுங்கால் வருத்தந் தெரியாமைக்காகக் கைகொட்டியும் வாய்ப்பாட்டு இசைத்தும் பறைமுழக்கியும் ஒலிசெய்வர்; சிறிதுதொலைவு தேர் உருண்டு சென்று வழியில் முட்டுண்டு நின்றக்கால் மீண்டும் அங்ஙனமே அவர் ஒலிசெய்யாநிற்பர்; அவரை ஒப்பவே சிறாரும் விளையாட் டாய்ச் சிறுதேர் உருட்டும் போது விட்டுவிட்டு ஒலிசெய்து மகிழ்வராகலின், ஈண்டுச் சிறுதேர் உருட்டி விட்டுவிட் டிசைக்கும் `மட்டில்கம்பலை யென்றார். மட்டென்பது அளவு; மதுவும் அளவும் மட்டெனலாகும் என்பது பிங்கலந்தை. `நகர் என்புழி `நகரின்கண் என ஏழனுருபொன்று விரித்துக் கொள்க. (143 - 158) தாவா இளமை தலைத்தலை சிறப்ப - கெடாத கட்டிளமை மேலுக்குமேல் மிகுதிப்பட, பன்னிரு விழி எனும் கண்ணகன் சுனையில் அருள் எனும் அருவி விரிவுறப்பெருகி முழவுத்தோள் எனும் கொழுவிய குன்றில் பல்முகம் பரந்து தண்எனச் செல்ல - பன்னிரண்டு விழிகள் என்னும் இடம் அகன்ற நீர்ச்சுனையில் அருள் என்னும் நீர் அருவி மிகவும் பெருக்கெடுத்து முழவினை ஒத்த தோள் என்னுஞ் செழுமையான மலையின் மேற்பலமுகமாகப் பரவிக் குளிர்ச்சிமேவி யொழுக, நித்திலம் பெய்த விழுத்துவர்ச் செப்பின் மூய் திறந்தன்ன வாய்நகை தோன்ற - முத்துக்கள் வரிசையாய்ப் பெய்து வைக்கப்பட்ட மேலான பவளத்தினாற் சமைக்கப்பட்ட சிமிழின் மூடி திறந்தாற்போன்ற வாயின்கண்ணே பற்கள் தோன்றா நிற்ப, வரைவிலங்கி ஓடும் மின்னேபோல அரம்பொரு வைவேல் உரம் கிடந்து ஒளிர - ஒருமலையினைக் குறுக்கிட்டு ஓடும் மின்னற் கொடியை ஒப்ப அரத்தால் அராவப்பட்ட கூரிய வேற்படை மார்பின் குறுக்கே கிடந்து ஒளிசெய்ய, திருமால் முகத்தின் இருவிழியென்ன மஞ்ஞையில் கிடந்த இருதாள் மலர - நீலமேனியை யுடைய திருமாலின் முகத்திற் செந்நிறமான இரண்டு கண்மலர்கள் அமைந்து விளங்கினாற்போல் நீலநிறத்தினையுடைய மயிலின் உடம்பின்மேற்றங்கிய இரண்டு திருவடிகளும் மலர்ந்து தோன்ற, அஞ்ஞையர் இருவரும் இருமருங்கு இருப்ப - வள்ளியுந் தெய்வயானையும் என்னும் அம்மையர் இருவரும் வலத்திலும் இடத்திலுமாக இரண்டு பக்கங்களிலும் விளங்க, அமைத்த கையும் அருள் தரு கையும் - மவமாயைகளிற் கிடந்து நிரம்பவுந் துன்புற்றுக் களைகண் இன்றித் துடிக்கும் எண்ணில் உயிர்கட்கும் `அஞ்சேல் என அமைத்துக்காட்டுந் திருக்கையும் பின்னர் அங்ஙனமே அச்சந்தீர்ந்துத் தன்பால் அணுகுவிக்கும் ஆருயிர்கட்கு அருள் தருகின்ற திருக்கையுங் கொண்டு, இமைப்பது இல்லாத் தேவரும் பிறரும் கண்டுகண்டு உவப்பக் கவின்று நனிவிளங்கும் காண்டகு கோலம் தழீஇ- விழிகள் இமைத்தல் இல்லாத விண்ணவரும் அவர் அல்லாத மற்றை மண்ணவரும் விடாமற் பார்த்துப் பார்த்து மனமகிழும்படி அழகுற்று இங்ஙனம் மிகவிளங்குங் காண்டற்கு ஏற்ற திருக்கோலம் பொருந்தி; `தலைத்தலை யென்றது, மேலுக்குமேல் மிகுதிப்பட என்னும் பொருட்டு; தாழ்விலுள்ளந் தலைத்தலை சிறப்ப என்றார் அகநானூற்றிலும் (29). குன்றுக்குக் கொழுமையாவது: தக்கோலந் தீம்பூத் தகை சால் இலவங்கங், கர்ப்பூரஞ் சாதியோடைந்து (சிலப்பதிகாரம், 5, 26) என அடியார்க்குநல்லார் காட்டிய ஐம்பொருள்வளன் உடைமை. அருளருவி பன்னிருதோட் குன்றிற் பன்முகம் பரந்து செல்லலாவது: தன்னைச் சுற்றியுள்ள எல்லா உயிர்கட்கும் எம்முகத்தும் அருள் செய்தல். `மூய், மூடி; `மூடியிருந்து வேவதோர் கொள்கலம் மூய் திறந்த விடத்து (18-ம் நூற்பாவுரை) என்பது இறையனாரகப் பொருளுரை. `அரம் பொரு வைவேல் எனப் பிள்ளையார் கைவேலுக்கு அடை கொடுத்தல் ஆகாதேனும் வேல் என்னும் பொதுமை நோக்கி அது கொடுத்தார். `முகத்தின் இருவிழி யென்பதை ஆறன்றொகையாகக் கொள்ளலுமாம். ஆயினும் உவமிக்கப்படும் பொருட்டொடர் மஞ்ஞையிற் கிடந்தவென ஏழாவதாய் வருதலின், இவ்வுவமப் பொருட்டொடரும் அவ்வேழன் றொகையாய் வரப் பொரு ளுரைத்தலே சிறக்குமென்பது. `மலர வென்றது, மலர்ந்தாற்போற் றோன்ற வென்றற்கு. `அஞ்ஞையர் அம்மையர் என்னும் பொருளுடையது; மென்றோள் அஞ்ஞை சென்றவாறே (அகநானூறு, 15) என்பதன் பழைய வுரையைக்காண்க. `அருடருகையும் என்பதன்பின் `கொண்டு என ஒருசொல் வருவித்துக்கொள்க. `தழீஇ யென்னும் வினையெச்சம் மேலடியில் வரும் பொலிந்த வென்னும் பெயரெச்சம் கொண்டு முடிந்தது. (158-162) மாண்தக என் கண்ணெதிர் பொலிந்த நின் இன் அருள் நினைப்பின் - மாட்சிமைப்பட ஏழையேனுடைய ஊனக் கண்களின் எதிரில் விளங்கிக் காட்சி கொடுத்தருளிய தேவரீரது இனிய திருவருளை எண்ணினால், வய உறு நோயும் பாராது ஈன்ற புதல்வோன் கண்டுகளிக்கும் சிதைவு இல் தாயின் அருளினும் பெரிது - கருவுயிர்க்கும் நோயினால் உண்டாகும் துன்பத்தையும் எண்ணாமல் தான் ஈன்றெடுத்த புதல்வனைப் பார்த்து மனம் மகிழ்கின்ற கெடுதலில்லாத தாயினது அருளினும் மிகப் பெரியதாகுமென்பது. மாண்தக, மாட்சிமை ஏற்க என்றது மாட்சிமைப்பட. `வயா கருவுயிர்க்குங்கால் உண்டாகும் வயிற்றுளைவு (பிங்கலந்தை, 10 :999); `வயுவுறு நோய் என்றது, இங்கு அவ் வயிற்றுளைவினால் உண்டாகுந் துன்பம், பாராது, எண்ணாமல். தாய்மை மாறாதவள் என்றற்கு அவள் சிதைவில் தாய் எனப்பட்டாள். உம்மை உயர்வின் மேற்று. குழந்தைகள் எத்துணைதாம் தீங்குகள் உடையவாயினும் அவற்றைச் சிறிதும் பாராட்டாமற் பரிவுகூர்தலானும், அப்பரிவு கூர்தறானுங் கைம்மாறு கருதாமல் நிகழ்தலானும், அங்ஙனம் நிகழ்ந்தவழியும் அஃது இயற்கையா யெழுதலானந் தாயின் அருள் எல்லாம்வல்ல இறைவனது இன்னருளை ஒருவாற்றால் ஒக்குமென்பது. அறிவும் அவாவும் (1) பலதிறப்படும் (2); உண்டாங்கு ஆனாது உறைவோர் அளவிலர் (14-5); கண்டு மெய்யென அறிவு மாழாந்து வாழ்வோரும் பலர் (52-3); உறங்கும் வாழ்க்கையிற் பிறங்குவோர் பலர் (65); ஓசையுஞ் செவிவாய் மாந்திச் சிறந்தோரும் பலர் (75); வறிதின் வாழும் மக்களும் பலர் (83); பொய்படு மின்பத்து மெய்படத் துளங்கும் விழலரும் பலர் (86-7); செய்வதறியாக் கையரும் பலர் (93); இவ்வாறொழிந்தனர் போகச் செவ்விய மெய்ப்பொருளுணர்துமென் றொப்புடன் புகுந்து (94-95) பொன்றிய மாக்கள் மணலினும் பலர் (111); ஆங்ஙனம் ஒழிந்த அளவில் மாந்தருள் யானும் ஒருவனாக நோனாது (112-3) வேறு பிரித்தெடுத்துச் (114), சோமசுந்தர குருவனொடு கூடடி (118), இன்பமென்பது (119) நின் திருவடித்தாமரையது என மொழிவித்து என்னையும் உய்யக் கொண்டு பின்னும் (125-7) ஒற்றிமா நகரின்கண் (142) காண்டகுகோலந் தழீஇ என் கண்ணெதிர் பொலிந்த நின் இன்னருள் நினைப்பின் (158-9) தாயின் அருளினும் பெரிதே (162) என இச்செய்யுள் கொண்டு முடிதலின் இறைவனது அருணிலையினை அடிகள் இதன்கண் இனிது விளக்கியவாறு கண்டுகொள்க. (16). 17. நெஞ்சறிவுறுத்தல் தேவா திருவொற்றிச் சேவார் புதல்வவென நாவார வாழ்த்தி நடம்புரிவா - யாவா வியந்து பிழைசெய்யு நன்னெஞ்சே வேலோ னயந்து னெதிர்தோன்று நாள். (இ-ள்) ஆஆ வியந்து பிழைசெய்யும் நஞ்நெஞ்சே ஆஆ! வியக்கத்தக்க நலம் இல்லாத நீ அந்நலம் உடையைபோல் நின்னை நீயே பாராட்டி அதனாற் பிழையாவன செய்யும் நல்லநெஞ்சமே, வேலோன் நயந்து உன் எதிர்தோன்றும் நாள் - வேல்தாங்கிய முருகப்பெருமான் விரும்பி உனக்கு எதிரில் தோன்றுகின்ற நாளில், தேவா - ஒளிவடிவாகிய பெருமானே, திருவொற்றிச் சேவார் புதல்வ - திருவொற்றியூரின்கண் எழுந்தருளி யிராநின்ற விடையுடைய பெருமானுக்குப் புதல்வ! என நா ஆர வாழ்த்தி நடம்புரிவாய் - என்று நாத்தழுதழுப்ப வழுத்திக் களிப்பாற் கூத்தாடுவாயாக வென்பது. நெஞ்சிற்கு நலம் இன்மையாவது: அழுக்காறு அவா வெகுளி யுடையதாதல்; தன்னைவியத்தலாவது; நெஞ்சு தனக்கில்லாத நலனை இருப்பதாகக் கருதித் தன்னை நன்குமதித்தல்; அது பிழை செய்தலாவது; தன் உண்மை நிலை உணராமையிற் பிறருடைமை கண்டு அழுக்கறுத்தலும், அதனைக் கவர்ந்துகொள்ள அவாவு தலும், அதற்கிடையூறு செய்வார்மேல் வெகுளுதலும் ஆகும். இத்துணைத் தீய இயல்புள்ள நினக்கும் இரங்கி இறைவன் நின்முன்னே அருள்செயவருங்கால், அத் தீயஇயல்புகளை அறவேமறந்து, அவனை வாழ்த்தி வணங்குதலிலேயே நின் எண்ணத்தைச் செலுத்தக் கடவாய் என்றவாறு. சே-காளைமாடு; அதன்மேல் இவருஞ் சிவபிரான் `சேவார் எனப்பட்டார். சொல்வது கேட்டுத் திருந்துதல்வேண்டி `நல்நெஞ்சு எனநயம்பட உரைக்கலாயிற்று. ஆஆ `ஆவா ஆயின; வியப்புக் குறி. (17). 18. தன்னுட்கையா றெய்திடு கிளவி தலைவி தன்னை வரையாது களவின்கண் வந்து ஒழுகுந் தன் தலைவனால் தனக்கு நேர்ந்த துன்பத்தை ஒரு தாழைமேலிட்டு வருந்திக் கூறுவது. நாளான் மலர்ந்து மனக்கினி யான்சென்ற நாளறிந்து வாளார் மடலி னளியே முயிர்போழ் வகையுமன்றிக் கோளான சொல்லிப் புணர்ந்தார் கரியுங் குறிப்பறியாய் கேளான மெய்யு முடங்குமொற் றிக்கழிக் கேதகையே. (இ-ள்) நாளால் மலர்ந்து விடியற்காலையே மலர்ந்து, மனக்கு இனியான் சென்ற நாள் அறிந்து - எமது உள்ளத்துக்கு இன்பம் அளிப்பவனான எம் தலைவன் எம்மை விட்டுப் பிரிந்து சென்றநேரந் தெரிந்து வாள்ஆர் மடலின் அளியேம் உயிர்போழ் வகையும் அன்றி - வாளை ஒக்குங் கூரிய நினது மலரின் ஏட்டினால் அருள்செயத்தக்க எமது உயிரினைப் பிளந்து வருத்தும் வகையும் அல்லாமல், கோளான சொல்லிப் புணர்ந்தார் கரியும் குறிப்பு அறியாய் - தம் மனத்தின்கண் உள்ளது ஒன்றாகப் பிறிதொன்று சொல்லி மகிழ்வித்து எம்மைப் புணர்ந்தவர்க்குச் சான்றாக நீ நின்ற குறிப்புத் தானும் அறிந்திலை, கேள்ஆன மெய்யும் முடங்கும் ஒற்றிக் கழிக் கேதகையே - அதனால் நினக்கு உறவான உடம்பும் கூனாகி வளையப்பெற்ற திருவொற்றிமா நகர்க் கடற்கரையடுத்த கழிக்கானலில் நிற்குந் தாழஞ்செடியே என்றவாறு. நாள் - விடியற்காலை; நாள் ஆ தந்து என்புழி (பெரும் பாணாற்றுப்படை, 141) இச்சொல் இப்பொருட்டாதல் காண்க; `நாளால் நாளில் என ஏழன் பொருளில் மயங்கியது. `மனக்கு என்பது அத்துச்சாரியையின்றி வந்தது; நலக்குரியார் யாரெனில் (திருக்குறள், 149) என்புழிப்போல. தாழம்பூவின்ஏடு, வாள்போற் கூர்ம்பற்கள் வாய்ந்திருத் தலின், `வாளார்மடல் எனப்பட்டது. காதலனைப் பிரிந்து ஆற்றாதே வருந்தும்யாம் நின்னால் இரங்கி அருளற்பாலேம் என்பது குறிப்பிப்பாள் `அளியேம் என்றாள். உடம்பைமட்டுமே பிளக்கவல்ல நினது மடலைக் கொண்டு எமதுயிரையும் நீ போழவல்லையாயது அறக்கொடி தென்பாள் உயிர் போழ்வகை என்றாள். காதலன் சொன்ன கோளாவது: நின்னிற்பிரியேன், பிரியின் ஆற்றேன் என்பது. கரி - சான்று. நெய்தல்நிலத்துக் கானற் சோலையின் கண்ணதான ஒரு புன்னைமர நீழலிலே எம்மை எங்காதலர் புணர்ந்தபோது அதனைச் சான்றாகக் கண்டு நின்ற நீ, திரும்ப எங்காதலர் இருங்கு வந்து நின்றபோது, அவர்க்கு எமது பிரிவாற்றாமையினைச் சொல்லாதுவிட்ட வன்கண்மை, எமது யிரைப்போழும் வன்கண்மையினுங் கொடிதென்பாள் `கோளான சொல்லிப் புணர்ந்தார் கரியுங் குறிப்பறியாய் எனக் கடிந்துரைத் தாள். சொன்னசொல்லை நம்பி ஏமாந்த எம் பக்கல்நின்று நீ சான்று பகரவேண்டுவதாயிருக்க, அது செய்யாது பொய்கூறிய அவர் பக்கலாக நின்று வாய்வாளாதிருந்த நின் வன்கண்மை யினை அறக்கடவுள் கண்டு நின்னை ஒறுத்ததனாலேயே நின்னுடல் வளையப்பெற்றனை யென்றாள்; இது தற்குறிப்பேற்றம், என்னை? இயற்கையாய் அமைந்த தாழையின் வடிவுக்குத் தலைமகள் தான் கருதிய குறிப்பினை ஏற்றிக் கூறினமையின்; தமிழ்த்தண்டியாரும், பெயர்பொருள் அல்பொரு ளென இருபொருளினும் இயல்பின் விளைதிறன் அன்றி அயலொன்று தான்குறித்தேற்றுதல் தற்குறிப் பேற்றம் என்றார் (தண்டியலங்காரம், பொருளணியியல், 28). தன்னுட் கையா றெய்திடுகிளவி யாகிய இதனைத் திருவாதவூரடிகள், விண்டலை யாவர்க்கும் வேந்தர்வண் டில்லைமெல் லங்கழிசூழ் கண்டலையே கரியாக் கன்னிப் புன்னைக் கலந்தகள்வர்க் கண்டிலையே வரக் கங்குலெல்லாம் மங்குல்வாய் விளக்கும் மண்டிலமே பணியாய் தமியேற் கொரு வாசகமே எனத் திங்கள்மேல் வைத்தருளிச் செய்தமை காண்க (திருக்கோவையார், 177). இவ்வுலகவாழ்க்கையினூடு நின்று இறைவன் றிருவருளின் பத்தை ஒரோவொருகால் நுகரும் ஒரு புலவன் அதனை யிடையறாது பெற்று நுகரும் வேட்கையால் இங்ஙனங் கூறியதாக இதற்குப் பேரின்பப்பொருள் உரைத்துக்கொள்க. புலவன் தலைவி, இறைவன் தலைமகன், புன்னையங்கானல் வீட்டுலகம், தாழை விந்துமாயை; பிறவும் இங்ஙனமே ஒட்டிக்கொள்க; விரிப்பிற் பெருகும். (18). 19. அருணிலைபெறுத லரிதென மொழிதல் (1-9) கேதகை பழித்த மாது ஒரு கூறற்கு - தாழம்பூவை வெறுத்த உமையொருபாகராகிய சிவபெருமானுக்கு, நுதல் கிழித்து இமைக்கும் கதம் கெழு விழியில் - நெற்றியைப் பிந்து ஒளிவிடுகின்ற சினம் பொருந்திய விழியில், பொறிஎனத் தோன்றி - தீப்பொறிபோற் றோன்றி, வெறிகமழ் சுனையில் அறுவர் ஊட்டிய நறும்பால் மாந்தி அறுவேறு உருவின் விளையாட்டு அயர்ந்து - மலரால் மணங் கமழ்கின்ற இமயச் சுனையிற் கார்த்திகைப் பெண்கள் அறுவரும் ஊட்டிய இனிய முலைப்பாலை உண்டு ஆறுவேறு திருவுருவங்களொடு விளையாடல் செய்து, ஆங்கு - பின்னர் அச்சுனைக்கரையில், அம்மையும் அப்பனும் அணைய - உமைப்பிராட்டியுஞ் சிவபெருமானும் எழுந்தருள, செம்மையின் உலகு புரந்தருளும் உமை திருமடியின் - இனிதாக இவ்வெண்ணிறந்த உலகங் களையும் பாதுகாத்தருளுகின்ற உமைப் பிராட்டியின் திருமடியின்கண், அறுவேறு உருவும் ஒருவடிவாகி விளையாட்டு அமர்ந்த இளையோய் அவ்வாறு வேறு திருவுருவங்களும் ஓர் உருவாகி விளையாடல் மேவிய இளைய பெருமானே; முருகப் பெருமானது பிறப்பு வரலாறு கந்த புராணத்துட் கூறப்பட்டவாறே இங்குக் கூறப்படுவதாயிற்று. அயர்ந்து - செய்து; இப்பொருட்டாதல், களிறுமணன் அயர்பு (பரிபாடல், 2, 33) என்புழிக காண்க. கதம், சினம்; (புறம், 33). `அமர்தல் இங்குப் `பொருந்துதல் என்னும் பொருட்டு, வள்ளியொடு நகையமர்ந்தன்றே (திருமுருகாற்றுப்படை, 102) என்புழிப் போல. (9 - 17) உழைப் பிரிந்து பின்பு ஆங்கு நின்றும் பிரிந்து, நற்றவர் ஓங்கும் ஓற்றிமாநகர் - நல்ல தவமுடைய மேன் மக்கள் சிறந்தோங்குகின்ற திருவொற்றி மாநகரின்கண், வெற்றி வைவேல் ஒரு திறம் பொலிய- வெற்றிதருங் கூரிய வேல் ஒருபால் விளங்க, பளிக்கறை புகுந்த ஒளிப்பரு மதியின் முறைமுறை மிளிர்ந்து நிறைகவின் பொழியும் திருமுகச்செல்வியர் இருபுறம் விளங்க - பளிங்குச் சுவரானமைந்த ஓர் அறையின் உட்புகுந்த ஒளித்தல் அரிய மதியம் பேல் முறை முறையே ஒளிவிளங்கி நிறைந்த அழகினைச் சொரிகின்ற அழகிய முகத்தினையுடைய வள்ளி தெய்வயானையர் இருபக்கங்களிலும் விளங்க, உலகு எலாம் விழுங்கும் அலகிலா வன்திறல் களிக்கரு மஞ்ஞையில் நலப்பட அமர்ந்து உலகங்களெல்லாவற்றையும் ஒருங்க விழுங்கவல்ல அளவில்லாத வலிய ஆற்றலமைந்த களிப்பினையுடைய கரிய மயிலின்மேல் அழகாக எழுந்தருளி, என்விழி எதிர் தோன்றிய அழியாப் பெரியோர் - எனது கண்முன்னே தோன்றியருளிய அழிதலில்லாத பெரிய பெருமானே என்பது. முருகப் பெருமானை முன்னர் `இளையோய் என்றதும, ஈண்டுப் `பெரியோய் என்றதும் முறையே இளமையும் பெருமை யுங் கருதியவாற்றானென்க. திறம் - பக்கம்; பெண்ணுரு வொருதிறன் ஆகின்று என்றார் புறத்திலும் (1). ஈண்டு, வலப்பக்கம்; வேல் கைக்கொண்டது அப்பக்கத்தேயாகலின், வள்ளி தெய்வயானையர் தம்முள் ஒருவரை யொருவர் பொறாமையால் நோக்குதலாலுந், தங் காதலனாகிய முருகப் பிரானை அடுத்தடுத்துக் காதலொடு நோக்குதலாலுந் திரும்பித் திரும்பி விளங்கும் பளபளப்பான அவர் தம் முகங்களின் காட்சி, பளிக்கறையு ளிருந்து காணப்படும் இருமதியங்களின் காட்சியை ஒத்திருந்ததென்றார். பளிங்கு முகத்தின் பளபளப்புக்கும், மதி முகத்திற்கும் உவமை; முறைமுறை மிளிர்தலாவது; வள்ளி இறைவனை நோக்குங்கால் தெய்வயானை அவளை நோக்குதலும், தெய்வயானை இறைவனை நோக்குங்கால் வள்ளி அவளை நோக்குதலும். இதுகாறும் முருகப் பெருமானைச் சிறப்பித்து விளித்த படியாம்; இனி அவன்பால் அன்பராயினார் பெருமைகளை விரிக்கப் புகுந்து, முதலிற் சூரனைக் கூறு முகத்தால் அவன் ஆற்றிய தவவொழுக்க வியல்பு கூறுகின்றார். (18-34) தீயிடை நின்றும் நீரிடை மூழ்கியும் மரம் மேல் இவர்ந்து தலைகீழ்த் தொங்கியும் அறுவகை இருக்கையின் நெறிபட அமர்ந்தும் - தீயின் நடுவே நின்றும் நீரினுள் மூழ்கியும் மரத்தின்மேல் ஏறி அம்மரத்தின் கிளையிலிருந்து தலைகீழாகத் தொங்கியும் ஆறு வகையான தவ விருக்கைகளில் ஒழுங்கு தவறாமல் வீற்றிருந்தும், புறம்படுத்து இழுத்தாங்கு அகம்பட நிறைத்துத் தெளிநிலை முகிழ்க்கும் வளிநிலை உழன்றும் - உள்ளே உலவுங் காற்றை முதலில் வெளிவிட்டுப் பின்பு வெளிக் காற்றை உள்ளிழுத்துக் கொப்பூழின்கீழ் உள்ளேபொருந்த நிறைந்து அவ்வாற்றால் மனம் ஒருவழி நிற்றலின் அறிவு தெளிவெய்தும் நிலைதோன்றப்பெறுகின்ற மூச்சை நிறுத்தும நிலையில் வருந்திப் பழகியும், தன் தொழில் தபுத்துத் தனி முதற்பொருளின் அருள் எனும் வெள்ளம் வரம்பு இற மிகுந்து நிலையும் இடன் என உலகெலாம் நோக்கியும் - தன் செயல் கெடுத்துத் தனக்கு ஒப்பும் உயர்வும் இல்லாமையிற் றனித்த முழுமுதற் பொருளாகிய ஆண்டவனது அருள் என்னும் வெள்ளம் அளவு கடப்ப மிகுந்து நிலையுறும் இடங்களென்று உலகம் முழுமையும் அருளாகவே கண்டும், ஐம்பெரும் பூதமும் ஐம்புறம் நிறீஇ ஐவகைத்தேவும் ஆங்கு ஆங்கு அமைத்துப் பொய் முறை இன்றி மெய்முறை பரவியும் - நிலம் நீர் முதலான ஐந்து முதற்பொருள்களையும் அடி முதல் முடிகாறுமாக ஐந்திடங்களில் அமைத்து அவ்வவற்றிற்குரிய ஐவகையினரான தேவரையும் அங்கங்கும் எழுந்தருளுவித்துப் பொய்வழிகளில்லாமல் மெய்யான வழிகளில் அகவழிபா டாற்றியும், கருவியும் புலனும் புரிவின்றி நிகழ ஒரு முதற்பொருளொடும் அறிவினைக் கடவியும் - மெய் முதலிய புறக்கருவிகளும் மனம் முதலிய அகக்கருவிகளுந் தத்தம் உணர்வுகளினின்றும் அவாவின்றி ஒருமுகமாய்நடைபெற ஒருமுதற்கடவுளாகிய ஆண்டவனது திருவுருவத்தோடு ஒருமித்து நிற்குமாறு தனது அறிவினைச் செலுத்தியும், இருவகை நிலையும் ஒரு முறை இறந்து மேல் நிலை நின்று வான்பொருள் உணர்ந்தும் - தான் அவன் எனப் பிரித்துக்காணும் வேற்றுமை நிலையினை அவனே தானெனக் காணும் ஒற்றுமை நிலையாற் கடந்து பிறைமண்டிலத்தில் உணர்வு நிலைபெற்றுத் தூயசிவத்தோடு ஒன்றியுணர்ந்தும், ஊழி ஊழியும் ஒ இன்றிநோற்ப - ஊழி ஊழி காலமாக ஒழிதல் இல்லாமல் தவம் முயன்றும், போழ் மதிச் சடையோன் போதானாக - பிளவுபட்ட மூன்றாம் பிறையை யணிந்த சடைமுடியையுடைய சிவபிரான் தோன்றிலனாக: தவஞ் செய்வார்க்குத் தீயிடை நிற்றல் நீரிடை முழ்கல் முதலியன உரியவாதல், தவஞ் செய்வார்க்கு உரியன ஊண்நசை யின்மை நீர்நசையின்மை வெப்பம்பொறுத்தல் தட்பம்பொறுத்தல் இடம் வரையறுத்தல் ஆசனம் வரையறுத்தல் இடையிட்டு மொழிதல் வாய்வாளாமை என எட்டும்; இவற்றிற்கு உணவினும் நீரினுஞ் சென்ற மனத்தைத் தடுத்தலும், ஐந்தீநாப்பணும் நீர் நிலையினும் நிற்றலுங், கடலுங் காடும் மலையும் முதலியவற்றில் நிற்றலுந், தாமரையும் ஆம்பலும் யாமையும் முதலிய ஆசனத் திருத்தலும், உண்டற்காலை உரையாடாமையுந், துறந்த காற்றொட்டு வாய் வாளாமையும் பொருளென்றுணர்க. என்று உரை யாசிரியர் நச்சினார்க்கினியர் விளக்கியவாற்றால் அறியப்படும் (தொல்காப்பியம், புறத்திணையியல், 20). இனி, யோகஞ் செய்வார்க்குரியன: இயமம் நியமம் ஆசனம் வளிநிலை தொகைநிலை பொறைநிலை நினைதல் சமாதி என எட்டும். என அவ்வாசிரியர் ஆண்டுக் கூறியவற்றுள் ஆசனம் முதலான ஆறுறுப்பும் முறையே கூறினார். ஆசனம் என்பதற்குத் தமிழ் இருக்கை; இவை ஆறு என்பர் பிங்கலந்தை ஆசிரியர்; அவை: `பத்திரங் கோமுகம் பங்கயங் கேசரி, சுவத்திகஞ் சுகாதனம் என்பவாதனம் என அவர் கூறுமாற்றால் அறியப்படும்; அவற்றுட், பத்திராசனமாவது: விதையின்கீழேயுள்ள நரம்பின் இருபக்கங்களிலுங் காற்பரடுகளைச் சேர்த்தல்; கோமுகமாவது: இடது பொம்மையின் கீழ் வலதுகாற் பரட்டையும்வலது பொம்மையின் கீழ் இடது காற் பரட்டையுஞ் செவ்வனே சேர்த்தல்; பங்கயமாவது செவ்வனே கால்களை மடித்திருந்து, பின்புறமாக இரண்டு கைகளையுஞ் செலுத்தி, இரண்டுகாற் பெருவிரல்களையும் பிடித்துக்கொண்டு, நெஞ்சினுக்கு அருகே நால்விரல் இடைவெளி யிருக்குமாறு மோவாயை வைத்து மூக்கின் நுனியைப் பார்த்திருத்தல்; கேசரி யாவது: விதையின்கீழ் நரம்பின் இருபக்கங்களிலும் வலத்தே இடது பரட்டையும் இடத்தே வலது பரட்டையுஞ் சேர்த்தி, முழந்தாளிரண்டின்மேல் இரண்டு முழங்கைகளையும் வைத்துக், கைவிரல்களை விரித்து, நாவை நீட்டி, ஒருமுகப்பட்ட நினைவுடன் மூக்கின் நுனியைப் பார்த்தல்; சுவத்திகமாவது: தொடைக்கும் முழந்தாளுக்கும் நடுவே இரண்டு அடிகளையும் ஏற்றி உடல் நிமிர்ந்து செவ்வனே யிருப்பது; சுகாதனமாவது; எங்ஙனமிருந்தால் மனவொருமையும் இன்பமும் உண்டாகுமோ அங்ஙனமிருத்தல். இனி, ஆசிரியர் திருமூலர் எழுவகையிருக்கைகள் கூறி, அவற்றின் மேலும் எட்டும் பத்தும் அறுபத்துநாலும் நூறுமாக இருக்கைகள் பற்பல உள என்பர்; அது, பத்திரங் கோமுகம் பங்கயங்கேசரி சொத்திரம் வீரஞ் சுகாதனம் ஓர் ஏழும் உத்தமமாம் முதுவாசனம் எட்டெட்டுப் பத்தொடு நூறு பலவாசனமாமே (திருமந்திரம், 593) என அவர் அருளிச் செய்திருத்தலால் அறியப்படும். மேலே பிங்கல முனிவர் கூறிய இருக்கைமுறை பெரும்பாலும் ஆசிரியர் திருமூலர் முறையைத் தழுவிநிற்றலும் நோக்கற்பாலது. அதன்பின், வளிநிலையாகிய `பிராணாயாமம் புகன்றார். உடம்பின் உள்நின்ற காற்றைக் கழித்தல் `இரேசகம் என்றும், அங்ஙனங் கழித்தபின் வெளிநின்ற காற்றை உள்ளிழுத்தல் `பூரகம் என்றும், உள்நிறைந்த காற்றைக் கொப்பூழின் கீழுறுப்பில் நிறுத்தல் `கும்பகம் என்றும் யோகநூலார் கூறுவர். அஃது ஆசிரியர் திருமூலர், வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே ஏமுற்ற முப்பத்திரண்டும் இரேசித்துக் காமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண் டோமத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே (திருமந்திரம், 573) என அருளிச் செய்திருக்குமாற்றால் அறியப்படும். இதனை நச்சினார்க்கினியர், உந்தியொடு புணர்ந்த இருவகைவளியுந் தந்தம் இயக்கந் தடுப்பது வளிநிலை என்னுந் தமது உரைச் சூத்திரத்தால் விளக்குவர். அதன்பின், தொகைநிலையாகிய, `பிரத்தியாகாரங் கூறினார். இதனியல்பு, ஒருக்கால் உபாதியை யொண்சோதிதன்னைப் பிரித்துணர்வந்த உபாதிப்பிரிவைக் கரைத்துணர் வுண்ணல் கரைத்தல் உண்ணோக்கல் பிரத்தியாகாரப் பெருமையதாமே என்னுந் திருமந்திரத்தானும் (585), பொறியுணர் வெல்லாம் புலத்தின் வழாமல் ஒருவழிப்படுப்பது தொகைநிலைப்புறனே என்னும் நச்சினார்க்கினிய ருரைச்சூத்திரத்தானும் விளங்கா நிற்கும். அதன்பிற், பொறைநிலை என்னுந் `தாரணை கூறினார். ஐம்பூதங் களால் ஆக்கப்பட்ட இவ்வுடம்பில் அடிமுதல் முழங்கால்வரையிலுள்ள பகுதி நிலப்பகுதியின்பாற் படும்; முழந்தாள் முதல் எருவாயில் வரையிலுள்ள இடம் நீரின் பகுதியாகும்; எருவாயில்முதல் நெஞ்சம் வரையிலுள்ள இடந் தீயின் பகுதியாகும்; நெஞ்சம் முதற் புருவநடுவு வரையிலுள்ள பகுதி காற்றின்பாற் படும்; புருவநடு முதல் தலையின் உச்சி வரையிலான இடம் வான்பகுதியிற் சேர்ந்ததாகும். இவ்வாறு ஐம்பூதப் பகுப்பில் அடக்கப்பட்ட இவ்வுடம்பினுள் நிலத்தின் பகுதியில் நான்முகக் கடவுளையும், நீரின் பகுதியில் திருமாலையும், நெருப்பின்பகுதியில் உருத்திரப் பெருமானையுங், காற்றின் பகுதியில் மகேசுவரனையும், வானின்பகுதியில் சதாசிவக் கடவுளையும் வைத்து நினைவளவில் வழிபாடு ஆற்றுதலே `தாரணை என்னும் பொறைநிலை யாகுமென்று யோகதத்து வோபநிடதங் கூறாநிற்கும். ஆசிரியர் திருமூலர், அரித்தவுடலை யைம்பூதத்தில் வைத்துப் பொருத்த வைம்பூதஞ் சித்தாதியிற் போந்து தெரித்த மனாதி சத்தாதியிற் செல்லத் தரித்தது தாரணை தற்பரத்தோடோ எனத் தாரணையின் இயல்பைத் திருமந்திரத்தில் (597) எடுத்தோதினார். நச்சினார்க்கினியர், தாரணை யென்னும் பொறைநிலைக்கு மனத்தினை யொரு வழிநிறுப்பது பொறையே எனவும், அதன்பிற் போந்த தியானம் என்னும் நினைவுநிலைக்கு, நிறுத்திய அம்மனம் நிலைதிரியாமற் குறித்த பொருளொடு கொளுத்தல் நினைவே எனவும், அதன் பிற்போந்த சமாதி என்னும் இரண்டற்றநிலைக்கு, ஆங்ஙனங் குறித்த அம்முதற் பொருளொடு தான் பிறன் ஆகாத் தகையது சமாதி எனவும் உரைச்சூத்திரங்கள் வகுத்தமை காண்க. இவற்றின் விரிவுகள் `யோகதத்து வோபநிடதத்துந், `திருமந்திரத்துங் கண்டுகொள்க. விந்து வென்னும் மின்னொளி மண்டிலம் எருவாய்க்குங் குறிக்கும் நடுவேயுள்ள மூலத்துக்குமேல் நிலவுவதெனவும், நாதம் என்னும் பிறை மண்டிலந் தலையுச்சிக்கண் நிற்பதெனவும், இவையிரண் டற்கும் இடையே தொடர்ந்து நிற்குஞ் சுழுமுனை யென்னும் அனல் நாடியின் ஊடே விந்துவினொளி மேலெழுந்துசென்று உச்சிக் கண்ணதான பிறை மண்டிலத்தை அளாவ அவ்வளாவு தலில் உணர்வு தோய்ந்து ஒன்றி யுருகித் தன்னை விழுங்கிக் கிளரும் சிவவொளியாய் உயிர் நிற்கப் பெறுதலே சமாதியாமெனவும் ஆசிரியர் திருமூலர், விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடிற் சந்தியிலான சமாதியிற் கூடிடும் அந்தம்இலாத அறிவின் அரும்பொருள் சுந்தரச் சோதியுந் தோன்றிடுந்தானே என்று திருமந்திரத்தில் (619) அருளிச்செய்திருத்தல் நினைவிற் பதிக்கற்பாற்று. தபுத்தல் - கெடுத்தல், உள்ளம் அழிய ஊக்குநர் மிடல்தபுத்து என்னும் பதிற்றுப்பத்தில் (13, 18) இச்சொல் இப்பொருளில் வருதல்காண்க. `பொய்ம்முறை இன்றி மெய்ம்முறை பரவு தலாவது; நான் முகனை அவற்குரிய நிலையிலன்றி அவற்குமேற்பட்ட திருமால் நிலயில் வைத்து வணங்காமையுந், திருமாலை அவற்குரிய நிலை யிலன்றி அவற்கு மேற்பட்ட உருத்திரன் நிலையில் உயர்த்து வைத்து வணங்காமையும், உருத்திரனை அவற்கு மேற்பட்ட மகேசுரன் நிலையிலும் மகேசுரனை அவற்கு மேற்பட்ட சதாசிவன் நிலையிலுஞ் சதாசிவனை அவற்குமேற்பட்ட முழுமுதற் சிவத்தின் நிலையிலும் வைத்து வணங்காமையும், அவ்வவரை அவ்வர்க் குரிய நிலையின்மட்டுமே வைத்து வணங்குதலும் ஆகும். `கருவியும் புலனும் புரிவின்றி நிகழ என்பதிற் கருவி யென்றது மெய்வாய் கண் மூக்குச் செவி என்னும் புறக்கருவிகள் ஐந்தனையும், புலனென்றது மனம், நினைவு (சித்தம்), அறிவு (புத்தி), முனைப்பு (அகங்காரம்) என்னும் அகவுணர்வுகள் நான்கனையும்; புரிவு - அவா, விருப்பம்; புரிமாண் புரவியர் என்புழி (பரிபாடல், 19, 13) இப்பொருள் காண்க. கருவியும் புலனும் புரிவின்றி நிகழ்தலாவது: கண் முதலிய பொறிகளால் உணர்ந்த பொருள் களை ஒருவர் தமக்கும் பிறர்க்குந் தீங்கு பயவாமுறையில் நுகர்தல்; பிறர்க்குரிய தொரு பொருள் காட்சிக்கு இனிதாதல்பற்றி அதனைப் பெரிதும் அவாவிஅதனைத் தாம் பற்றிக்கொள்ள முனைதல் ஒருவர்க்கு ஏதமாம்; மற்று, அங்ஙனம் பிறர்க்கு உரித்தாகாத தொன்றனைக் கொள்ளுமுறையாற் கொண்டு நுகர்தல் ஏத முடைத்தன்றாம். இனி, மாயாவாத நூலாரும் அவரோடொத்தார் பிறருங், கொள்ளு முறையிற் கொண்டு பொருள்களை நுகர்தலுங் குற்றம்; ஆதலாற், பொறிவழி உணர்வு செல்லாமல் முழுதும் அடக்குதலே வாய்மையாமெனக் கரையா நிற்பர். பொறிவழிச்செல்லும் உணர்வு அவ்வப் பொறிகளால் நுகர்தற்குரிய பண்டங்களை நுகருமுறையில் வைத்து நுகராக்கால், உயிர்கள் அறிவும் இன்பமும் எய்தாவாய் உணர்வில்லாக் கற்போல் ஆய்விடுமாகலின் அவர் கூற்றுப் பொருந்தாது; அல்லதூஉம், அங்ஙனங் கரையும் அவர்தாமுந் தாங் கரையுமாறே நடவாது, தாம் வேண்டுவன வெல்லாந் தாம் வேண்டுமட்டும் நுகர்ந்து செல்லக் காண்டலால், அவரது கோள் அவர்க்கே பயன்றராதாதலுந் தெரிந்து கொள்க. இவ்வுண்மை தேற்றுதற் கன்றே ஆசிரியர் திருமூலர், அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலார் அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை; அஞ்சும் அடக்கில் அசேதனமா மென்றிட் டஞ்சும் அடக்கா அறிவறிந்தேனே (திருமந்திரம், 2033) என்றருளிச் செய்ததூஉம் என்க. முழுமதியை இருகூறாகப் பிளந்து வைத்தாற்போற் காணப்படுதல் பற்றிப் பிறைமதி `போழ்மதி எனப்பட்டது. (35-40) கொழும்குறை தன்மெயில் பலமுறைதடிந்தும் - கொழுவிய தசையினைத் தன்உடம்பிலிருநது அறுத்து இட்டும், உறுப்பினை ஈர்ந்து நெறிப்பட வீசியும் - உடம்பின் உறுப்புகளை அறுத்து முறையாய் எறிந்தும், பச்சிளம் குருதியை நச்சி உகுத்தும் - தனது உடம்பின் புதிய செவ்விய செந்நீரை விரும்பிச்சொரிந்தும், உயிர்ப்பலி வேள்வியில் கடன்பல கழிப்பி - உயிர்க்கிடமான உடம்பையே பலியாக இடும் வேள்வியிற் கிரியைகள் பலவும் முடித்து, அரிதின் முயன்ற பின்றையும் கடுமையாகத் தவம் முயன்ற பின்னும், புரிசடைப் பெரியோன் போந்திலனாக- புரிந்த சடைமுடியை யுடைய பெரியோனான சிவபெருமான் முன் தோன்றிலனாக, `கொழுங்குறை, தசை, காழிற் சுட்ட கோழூன் கொழுங் குறை என்பது பொருருராற்றுப்படை (105). தடிந்து, அறுத்து, இப் பொருட்டாதல் பரிபாடலிற் (5,4) காண்க. அரியுந்தோறும் இறைவனருளால் வளர்தலிற் `கொழுங்குறை என்றார். செவ்விய நலன் வாய்ந்தமைந்த குருதியென்றற்குப் `பச்சிளங் குருதி யெனப்பட்டது. உயிர் நிற்றற்கிடனாகிய உடல் ஈண்டு உயிர் எனப்பட்டது; இது தத்தம் பொருள்வயிற் றம்மொடு சிவணும் ஆகுபெயர் (தொல்காப்பியம், சொல், 116). உடல் முதலிய எதனையும் ஒரு பொருளாகக் கருதாது வெறுக்குந் தனது துறவு நிலையைப் புலப்படுத்தும் பொருட்டும், மிகப் பெருந் துன்பங்களை யெல்லாந் தான் ஏற்று வருந்துதலைக் காட்டு முகத்தால் இறைவனுக்கு ஒரு பேரிரக்கம் வருவித்தற் பொருட்டுஞ் சூரன் இத்தகைய கடுந்தவங்கள் புரிந்தானென்க. துன்பம் பொறுத்தலே தவத்திற் கடையாளம் என்னும் உண்மை, உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு என்னுந் தெய்வத் திருக்குறளால் (261) நன்கு தெளியப்படும். உலகினர் பொருட்டாக எல்லாம்வல்ல கடவுள் தன் அடியவர் தன்பாற் காட்டும் அன்பின் றிறங்களெல்லாம் முற்றவும் புலனாம் வரையிற் காத்திருந்து, பின்னரே அவர்முன் எழுந்தருளி அவர்க்கு வேண்டும் பேறுகள் அருளுவனாகலின் இங்ஙனம் விரைவிற் போந்திலனென்றார். புரிசடை - முறுக்குண்ட சடை (புறம். 135). (40-51) எரிகிளர் - தீ மிகுகின்ற, வேள்வி ஆற்றும் ஆழ்குழியின் - வேள்வி செய்யும் ஆழ்ந்த வேள்விக் குழியில், வைநுனைய எழுநிறீஇ - கூரிய நுனியினையுடைய இருப்புத்தூணை நிறுத்தி, முழுஉடம்பும் பழுதுபடப் போழ்ந்து படுத்துப் பொன்ற - சூரன் தனது முழுஉடம்பும் பழுதாகும்படி அதன்கட் பாய்தலாற் பிளந்தழித்து இறக்க, தம்பியர் பாய்வதற்கு ஊக்கிய காலை - தம்பிமாரும் அங்ஙனமே பாய்ந்தழிவதற்கு முயன்றெழுந்த பொழுது, வேய் புரை பணைத்தோள் பாவையும் தானும் ஆங்கு எழுந்து- மூங்கிற் றண்டினை ஒக்கும் பருத்த தோள்களையுடைய உமைப்பிராட்டியுந் தானுமாக ஆங்கு விரைந்து தோன்றி வானவர் தலைவன் சீரிதின் அருளிய - தேவர்கட்குத் தலைவனான சிவபெருமான் சிறப்பாக ஈந்தருளிய, வரம்பெறு பெருமையின் உரம் பெரிது எய்தி - அரிய வரங்களைப் பெற்ற பெருமையினால் வலிமை மிக அடைந்து, நின் சிறு அடித்தாமரை வேறு இன்றி வைகும் அழியாப் பேற்றின் வழிவழிச்சிறந்த சூர் முதல்போலப் பேரன்பு இல்லேன் - தேவரீருடைய சின்னஞ் சிறிய திருவடித் தாமரை மலர்களிற் பிரிவில்லாமற் பொருந்திவாழும் அழியாத திருவடிப்பேற்றின்கண் முறைமுறையே பெருமையடைந்து வரும் சூரர் தலைவனான சூரபதுமனைப்போல் ஏழையேன் பேரன்புடையேனல்லேன் என்பது, வை, நுண்மை; நுனைய, குறிப்புப் பெயரெச்சம்; எழு - தூண்; சூரபதுமனுக்குத் தம்பியர் சிங்கமுகன் முதலியோர். சிவபிரான்பாற்சூரன் இங்ஙனமெல்லாந் தவங்கிடந்து பல பெறலரும் வரங்கள் பெற்ற வரலாறுகளெல்லாங் கந்தபுராணத்து அசுரர் யாகப் படலத்திலும் வரம்பெறுபடலத்திலுங் காண்க. `வானவர் தலைவன் தானும் பாவையும் ஆங்கெழுந்து எனக் கூட்டுக. உரம், இங்குப் பெருமிதத்தின் வன்மையென்க. `சிறுமைஅடி யென்பது `சீறடி யெனப் புணர்ந்ததாகலின், அது `சிறிய திருவடி யெனப் பொருள்படும். இறைவன் இளைஞ னாகலின் அதற்கேற்ப அவன்றிருவடி சீறடி யெனப்பட்டது. `சூர் அச்சம், அதனை விளைக்கும் அசுரனுக்கு ஆனது ஆகுபெயர்; `சூர் அச்சப்பொருட்டாதல் திவாகரத்திற் காண்க. (52-66) ஆலவாய் அமர்ந்த அழல்நிறக் கடவுள் - திருவால வாயின் கண் திருக்கோயில்கொண் டெழுந்தருளியுள்ள தீமேனியுடைய சிவபிரானே, செந்தமிழ்வழக்கு முந்துநின்று இசைப்ப - தொன்று தொட்டுவருஞ் செவ்விய தமிழ்வழக்கி னியல்பினைத் தன் எதிரே வந்து நின்று சொல்லவும், கடாவிடை நிகழ்த்தும் தடாப்பெரும் பேறும் - இறைவன் வினவியவற்றிற்கு விடையாக அதனை மறுத்து உரை நிகழ்த்துந் தடுத்தற்கரிய பெரிய திறமைப்பேறும், இறைவன் கண்ட பொருள் வரம்பு அறிந்து - கடவுள் அருளிச்செய்த களவியற் பொருளளவு தெரிந்து, சொல்நெறி மாட்சியும் - சொல் லொழுங்கின் பெருமையும், பொருள்நெறி மாட்சியும் - பொரு ளொழுங்கின் சிறப்பும், அளவையின் விளைவும் அவற்றை ஆராயும் அளவை முறைகளின் முடிபும், தெளிவுஉற விரித்து - தெளிவு உண்டாகும்படி விரித்து விளக்கி, சுவைபெற உரைத்த நவை இல் புலமையும் - சொற்சுவை பொருட்சுவை கெழும உரை கூறிய பழுதில்லாத புலமைப்பாடும், மறைப்பொருள் குறிப்பு நெறிப்பட ஆய்ந்து - நான்மறைகளின் உட்பொருட் குறிப்புகளை முறையாக ஆராய்ந்து , சிவனையே முதல் எனச் சிவணிய காட்சியும் - சிவபிரானையே முழுமுதற் கடவுளெனத் தெளிந்த அளாவிய அறிவும். சீரிதின் இயைந்த கீரன்போல - செம்மையாகப் பொருந்திய நக்கீரதேவரை ஒப்ப, சொல்தொறும் சுரக்கும் அற்றம் இல் இன்பமும் - சொல் ஒவ்வொன்றிலும் ஊற்றெடுக்குஞ் சோர்தலில்லாத இன்பமும், பட்டாங்கு கிளக்கும் முட்டுஅறு மாட்சியும் உள்ளதை உள்ளவாறே கிளந்துகூறுங் குறைவு நீங்கிய சிறப்பும், கல்நெஞ்சும் நெகிழ்த்தும் அன்புஉறு மொழியும் - கல்லொக்கும் உள்ளங்களையும் உருக்குகின்ற அன்பு நிறைந்த சொற்களும், ஒரு வழிச் சிறப்ப வருமுறை கொளீஇ - ஒருங்கே மேம்பட வருகின்ற வகையினைப் பொருத்தி, ஆற்றுப்படை சொலும் ஆற்றலும் இல்லேன் - தேவரீருக்குத் `திருமுருகாற்றுப் படை போல்வதோர் ஆற்றுப்படை நவிலுந் திறமையும் இல்லேன். தருமிக்குப் பொற்கிழி யளித்தற்பொருட்டு ஆலவாய் அமர்ந்த அழல்நிறக் கடவுள் அமைத்துக்கொடுத்த அருந்தமிழ்ப் பாட்டிற்குத் தாங்கூறிய குற்றங் களைதற்கு அக்கடவுள் எதிர்தோன்றிய காலத்தும், நக்கீரர் வினாவிடைகளால் அஞ்சாது குற்றங் கூறியதான வரலாறு இங்குக் `கடாவிடை நிகழ்த்தும் என்னுந் தொடரினாற் குறிக்கப் பட்டிருக்கின்றது. இவ்வுண்மை திருவிளையாடற் புராணத்துள் தருமிக்குப் பொற்கிழி யளித்த படலத்தானுங், குறுந்தொகையின் முதற்செய்யுளானுந் தெளியப்படும். செந்தமிழ் வழக்காவது பலவாற்றானும் உயர்ந்த இயல்புகள் வாய்ந்த நங்கையர் கூந்தல் மலரின் சேர்க்கையின்றியே நறுமணங் கமழ்த லுண்டென்னும் நல்லிசைப்புலவர் வழக்கு. இறைவன் கண்ட பொருள் `இறையனாரகப் பொருள். தமிழ் மொழியின்கண் இப்போது காணப்படும் உரைகளெல்லா வற்றுள்ளும் இறையனாரகப் பொருளுக்கு ஆசிரியர் நக்கீரனார் விரித்துரைத்த தெள்ளுதமிழுரையே எல்லாநலங்களும் ஒருங்கு கெழுமிச் சாலச்சிறந்து முதன்மைபெற்று விளங்குவதாதல் தமிழ்ச்சுவையறிந்தா ரெல்லார்க்கும் ஒப்ப முடிந்ததொன்றாம். இவ்வுண்மையினை அடிகளே தாம் இயற்றிய உவரா அமிழ்தன்ன அரிய உரைநடைநூல்களில் ஆசிரியர் நக்கீரனாரையே பலபடப் பாராட்டிக் கூறியிருத்தலே சான்றாகும். அவற்றுட் சில பகுதிகள் வருமாறு. சூத்திரங்களின் சொற்பொருளை விடாமல் அவற்றைக் கௌவிக்கொண்டே சென்று பேருரை விரிப்பார் ஆசிரியர் நக்கீரனாரைத் தவிர வேறொருவரைக் காண்டல் இயலாது. நக்கீரனாரது உரை நெகிழவேண்டும் பதத்து நெகிழ்ந்தும், இறுகவேண்டும் பதத்து இறுகியும் நல்லிசைப் புலமை மலிந்த செய்யுட்போல்..... எண்வகை மெய்ப்பாடு தோற்றுவிக்கும் எண்வகைச்சுவை வாய்ந்தது. அவைக்களத்தே கேட்டார்ப் பிணிக்குந் தகைத்தான பேருரை நிகழ்த்தும் பேராற்றல் வாய்ந்தோர் தாங் கூறும் பொருளை வினாவும் விடையுமாய் வைத்துத் தருக்க நூன்முறை வழாது தொடர்புபடுத்து விளக்கிச்செல்லு மாறு போலவும்...... ஆசிரியர் நக்கீரனாரது உரை யினமைப்பும் பொலிந்து திகழ்கின்றது. இத்தகையதொரு விழுமிய அமைப்பு ஏனையுரையாசிரியர் எவரிடத்தும் முற்றக் காணப்படுகின்றிலது. ஆசிரியர் நக்கீரனார் விரித்த இவ்வுரைப் பகுதி தருக்க இயைபுஞ் சொற்பொருளடுக்கு முடைத்தாய்ப் பாச்சுவை விராய உரை நடைத்தாய்ப் பண்டைக்காலச் செந்தமிழ் வளந்துறுமி அகன்று ஆழ்ந்து தெளிந்துநிற்றல் காண்க. பளபளப்பான பலநிறச் சலவைக்கற்கள் அழுத்திப், பொன் மினுக்குப் பூசிப், பலபல அடுக்குமாடங்கள் உடைத்தாய் வான் முகடு அளாய்க், காண்பார் கண்ணுங் கருத்துங் கவரும் நீர்மைத் தாய் உயர்ந்தோங்கி நிற்கும் எழுநிலை மாடம்போல் ஆசிரியர் நக்கீரனாரதுரை நிவந்து நிற்றலும், அம் மாடத்தின் அருகே புல்வேய்ந்த குடிலும் ஓடு மூடியதொரு சிற்றிலும் ஏழமைத் தோற்ற முடையவாய்த் தாழ்ந்து நிற்றல்போல் ஏனையுரை யாசிரிய ருரைகள் பீடுகுறைந்து நிற்றலும் பிரிந்தினிது விளங்கா நிற்கும். நக்கீரனார் சொற்றொடர்களை அமைக்கும் முறையோ..... ஏனை உரைகாரர் அவற்றை அமைக்கும் முறைக்கு முற்றும் வேறான தொரு தன்மைத்தாய் இருக்கின்றது. ஒருபொருண்மேல் வரும் பல சொற்றொடர்களை அவர் ஒரு வரிசைப்படத் தொடுக்குந் திறமும் அழகும் பெரிது பாராட்டற் பாலவான தனிச்சிறப்பு வாய்ந்து மிளிர்கின்றன. சான்றோர்தம் முதுமொழிகளை இடையிடையே மடுத்து உரையெழுதுதலில் ஆசிரியர் நக்கீரனார் வேட்கை மிகுதியும் உடையராதல்போல் ஏனை உரைகாரர் இருப்பக் காணாமையின், அவ்விரு பாலார்க்குமுள்ள இயற்கை வேறுபாடுகளைப் பகுத்துணர்ந்து கடைப் பிடித்துக்கொள்க. (மாணிக்கவாசகர் காலம், 452 - 463) என்பன காண்க. செந்தமிழ் வழக்கு முந்துநின் றிசைத்த வரலாறு: பாண்டிய னொருவன் மனைவி தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாப் பேரழகு வாய்ந்தவள். அவளுடன் ஒருநாள் அவ்வரசன் தனது இளமரப் பூங்காவில் உலவுகையில் அவளது கூந்தல் அவிழ்ந்து காற்றில் அலைய அதன்கணிருந்து ஒருவகையான நறுமணங் கமகமவென்று கமழ்ந்தது. அதனை யுணர்ந்த அரசன் அக் கூந்தலின் மணம் பூவின் சேர்க்கையாலன்றி, அதன்கணின்றும் இயற்கையாய் எழுதல் கண்டு `மகளிர் கூந்தற்குப் பூவின் சேர்க்கையின்றி இயற்கையிலேயும் மணம் உண்டுகொல்! என்று ஐயுற்றவனாய்த், தன் அவைக்களத்துள்ள புலவரை விளித்து, `மகளிர் கூந்தற்குள்ள சிறப்பு என்னை? என்று வினாவ, எவரும் அதற்கு விடை கூறமாட்டாராயினர். அதன்மேல் அவ்வரசன் பொன்பொதிந்த கிழியொன்றனைத் தனது அவையிலே தூக்கி, `மகளிர் கூந்தற்குள்ள இயற்கைச் சிறப்பினை நுவன்று எவர் ஒரு தமிழ்ச்செய்யுள் பாடித்தருவரோ அவர் இப்பொற்கிழியினைப் பெறுதற்குரியர் என அறிவித்ததனன். வறியனான தருமி என்னும் ஓர் இளைஞன் அப் பொற்கிழியினைவேண்டி இறைவனைக் குறையிரப்ப, அவன் கையில் ஒரு தமிழ்ச்செய்யுள் வரைந்த நறுக்கொன்று வந்து வீழ்ந்தது. mjid mt‹ gh©oa‹gh‰ br‹Wfh£l, mj‹f© cŸs brŒí£ bghUŸ jh‹ Édhaj‰F ÉilahŒ mikªâU¤jš f©L gh©oa‹ m¡»ÊÆid mt‹ mW¤bjL¤J¡ bfhŸSkhW Vt, m¥nghJ e¡Ñu® v‹D« òyt® bgUªjif m¢ brŒíˉ bghU£F‰w« csbj‹W T¿kW¥g¤, jUÄ »Ê bgwhdhŒ¥ bgÇJ« cs« ieªJ ïiwtid ÃidªJ mH, clnd mªneu¤âš m›tit¡ fs¤âš xU òyt‹ tªJ njh‹¿, `vkJ gh£o‰F¡ F‰wŠ brh‹dh® aht®? என, உடனே நக்கீரர் `மகளிர் கூந்தற்குப் பூவும் பூவின் நெய்யுஞ் சேர்ந்தாலன்றி இயற்கையே அது மணம் உடைத்தாகாது. அங்ஙனம் இருக்கக், கொங்குதேர் வாழ்க்கை என்னும் நுமது செய்யுளிற். செறி எயிற் றரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீ அறியும் பூவே என மகளிர் கூந்தல் மலரினும் மிக்க இயற்கை மணம் உடைத்தென நீர் கூறியது குற்றமாம் என்றேம் யாம் என்றனர். mJnf£l m¥òyt® `kfËlj áwªj e§ifkh® Tªj‰F ïa‰if kz« csj‹nwh? எனவினவ, நக்கீரர் `நங்கையர் கூந்தலும் பூ முதலியவற்றின் சேர்க்கையினாலேயே மணம் உடைத்தாம் என விடை கூறினர். mj‹ã‹ m¥òyt® `mu«ig khjuh® Tªjš ïa‰if kz« cil¤j‹nwh?’ vd Édt, e¡Ñu® `mtuJ TªjY« ïa‰ifkz« cil¤j‹W’ vd Éil ÆW¥g¥, ã‹D« m¥òyt® `Ú® tÊgL« cik¥ãuh£oah® TªjYŠ bra‰if kzªjh‹ cilanjh? என, நக்கீரர் `அதுவும் அந் நீர்மையதே என்று விடை நுவன்றனர். வந்த அப்புலவர் இறைவனே யாதலால் நக்கீரரின் செருக்கை அடக்குவான் கருதித் தமது நெற்றிக் கண்ணைத் திறக்க, அப்போதும் நக்கீரர் தமது பிழையுணராராய் `நெற்றிக்கண்ணைக் காட்டினுங் குற்றங் குற்றமே எனக் கரைந்தனர். இறைவன் உடனே மறைய, நக்கீரர் நெற்றிக்கண் வெப்பந் தாங்காமையால் ஒருகுளத்தில் இறங்கித், தாஞ்செய் பிழையினைப் பொறுக்கும்படி வேண்டி இறைவன்மேற் செந்தமிழ்ப்பாடல் பாடி யுருகப், பின்னர் இறைவன் அவர்க்கு அவ் வெப்பத்தினை நீக்கித், தன் படைப்பின் வியத்தகு அமைப்பின் றிறங்களையும், மக்களிற் சிறந்த நங்கைமார் கூந்தலும், அரம்பையர் கூந்தலும், உலகன்னையின் கூந்தலும் இயற்கைமணங் கமழும் வகைகளையும் நக்கீரர் நன்குணருமாறு தெருட்டினனென நம்பியார் திருவிளையாடல் கூறுதல் காண்க. இறைவன் கண்டபொருள் என்பது இறையனாரகப் பொருள் என்னும் அகப்பொரு ளிலக்கணநூல்; அதற்குப் பேருரை வகுத்தவர் நக்கீரர். சிவணல் - அளவளாவல், பொருந்தல் (பிங்கலந்தை). `கீரன் என்பது பெயர்; அது செந்தமிழ் வழக்கிற் சிறப்பு நோக்கி வரும் நகரமாகிய இடைச்சொல்லொடு சேர்ந்து `நப்பூதன் என்றற் றொடக்கத்தனபோல் `நக்கீரன் என வழங்குவது; கீர் - சொல் (திவாகரம்); நக்கீரன் - நல்லசொல்லன் அல்லது சொல்வன்மையுடையன். `அற்றம் மெலிவு, சோர்வு (திருக்குறள் பரிமேலழகருரை, 1186). `பட்டாங்கு, பட்டபடி, நிகழ்ந்தபடி, அதாவது உண்மை. `ஆற்றுப்படை ஈண்டுத் திருமுருகாற்றுப்படை. (67-74) ஆங்கு அதன் கருவாய் உள் உறை நுண்பொருள் - அத் திருமுருகாற்றுப் படையின்கண் அதன் கருப்பொருளாய் அகத்தே கிடக்கும் நுட்பக் கருத்துகளை, விழுமிதின் எடுத்து வழுவு அற அமைத்து - சிறப்பாகத் துருவி யெடுத்துக் குற்றம் இன்றாக அமைத்து, தொண்டர் ஆரத் தண்டாது கொடுத்து - செந்தமிழ்த் தெய்வத் தொண்டர்கள் நுகர்ந்து நிறையத் தணியாமற் கொடுத்து, நின் திருவடிக் கிடந்த பெருகிய அன்பினும் -நினது திருவடியின்கட் கிடந்த மிகுந்த அன்பினாலும், தமிழ் வரம்பு உணர்ந்த கமழுறும் அறிவினும் - செந்தமிழ் எல்லை தெளிந்த மணம் விளங்கிய அறிவினாலும், உரைத்திறம் நிலை யிடும் வரைப்படா விறலினும் - உரைவன்மை நிலைகாணும் அளவுபடாத ஆற்றலினாலும், தானே தனக்கு நிகர் என விளங்கிய நச்சினார்க்கினியனும் அல்லேன் - தானே தனக்கு நிகர் என்னும்படி புகழ் விளங்கிய நச்சினார்க்கினியன் என்னும் உரையாசிரியனும் அல்லேன்; `கரு, கருக்கொண்ட பொருள்; என்னுளக் கருவை யான் கண்டிலேன் (திருவாசகம், திருச்சதகம், 41) என்னும் அருண்மொழியைக் காண்க. தண்டாது - தணியாது; தண்டா ஈகைத் தகைமாண் குடுமி புறம், 6. `ஆர்தல் நுகர்தல், உண்ணுதல்; இச்சொல் இப்பொருட் டாகவே மணமலர் ஆரும் இரும்பு திரித்தன்ன அறல் மருப்பு எருமை என முன்னும் (1, 15-6) வந்தமை நினைவுகூர்க. உரைத்திறம் நிலையிடலாவது, தொல்லாசிரியர் பாட்டு கட்கு இதுவோ அதுவோவென ஏதும் நிலைப்படாமல் மயங்கக் கிடக்கும் பல்வேறு வகையான உரைப் பொருள்களில் வன்மையுள்ளது இதுவே யெனத் துணிந்து நூலாசிரியர் கருத்தை நிலையிடுதல் என்க. ஆசிரியர் நக்கீரனார் இயற்றிய திருமுரு காற்றுப்படைக்கு உரையாசிரியர் நச்சினார்க்கினியர் எழுதிய உரையே இஞ்ஞான்றுஞ் சிறந்து விளங்குதல்கொண்டும் இது தெளியப்படும். (74-82) நிச்சலும் - நாடோறும், வருக்கைச்சுளையும் பொருக்கரை மாவும் கொழுங்கனி வாழையுஞ் செழுஞ்சுவைக் கன்னலும் ஒருங்கு தலைமயங்கிய அரும்பெரும் கலவையின் - பலாச்சுளையும் பொருக்கரை மாம்பழமுங் கொழுமையான வாழைக்கனியும் வளமான இனிய சுவையுள்ள சருக்கரையும் ஒன்றுசேர்ந்து கலந்த அருமை பெருமையுடைய இன்சுவைக் கூட்டை ஒப்ப, அருஞ்சொல் வழக்கமும் - அரிய செஞ்சொற் கோப்பும், திருந்திய நடையும் - திருத்தமான செய்யுள்நடையும், வண்ணவேற்றுமையும் - பலப்பல வண்ணப்பாட்டுகளின் வகைகளும், தண் எனும் ஒழுக்கமும் - அவற்றின் குளிர்ந்த ஓசைநடையும், ஒன்று நிரம்பிய குன்றாத் திருப்புகழ் வேறுவேறு இயம்பிய வீறு உறுதவத்தின் அருணகிரி எனும் பெரியனும் அல்லேன் - ஒருங்கு நிறைந்த நலங் குறையாத திருப்புகழ் என்னுந் தேவரீரது புகழ்மாலையைப் பலவேறு வகைப்படத் திருவாய் மலர்ந்தருளிய மேன்மைமிக்க தவப்பெருமையினை யுடைய அருணகிரிநாதர் என்னுஞ் சான்றோனும் அல்லேன்; `நிச்சலும் இயம்பிய வென்க; `நிச்ச எனுஞ் சொல் நாடோறும் என்னும் பொருட்டாதல் நிச்சமும் பெண்பாற்குரிய வென்ப என்னுந் தொல்காப்பியக்களவியற் சூத்திரத்திற் காண்க (8); `நிச்ச நிச்சல் எனத் திரிந்தது; `நிச்சல் ஏத்து நெல்வாயிலார் எனத் தேவாரத்தும் போந்தது; இச்சொல் வடமொழியிற் சென்று `நித்ய என வழங்கும். பொருக்கு - தகட்டுவடிவாய் வெடிக்கும் வண்டல், மாமரத்தின் அடி அதுபோல் வெடித்திருத்தலிற் பொருக்கரைமா என்றார்; இதனைப் பொரியரை யென்றுங் கூறுப. பலாச்சுளைபோல் ஒவ்வொரு சொல்லும் அடைவே பதிந்து நிற்றலும், மாங்கனிபோல் எல்லாச்சொல்லுந் திரண்டு ஒரு பொருண் மேலவாய் இனிமை பயந்து நிற்றலும், வாழையங்கனி சீப்புச்சீப்பாய்ப் பிரிந்து காணப்படுதல்போற் செய்யுடோறும் வண்ணங்கள் வேறு வேறாய்ப்பிரிந்து இனிது திகழ்தலுங், கரம்பின் பாகுபோல் அவ்வண்ணங்கள் குளிர்ந்த ஓசையினவாய் ஒழுகுதலும் நால்வேறுவமைகளாற் குறித்தார். வீறு சிறப்பு (திருக்குறள், 665): வீறு உறுதவம் - மேன்மேற் சிறக்குந் தவம். (83-88) நூல் இடை வைத்த வாலிய பொருளினும் - நூல்களினிடையில் நூலாசிரியராற் பெய்து வைக்கப்பட்ட தூய பொருள்களையும், உரையிடை விரிந்த புரை அமை தெளிவினும் - அந்நூல்கட்கு உரையாசிரியர்களால் எழுதப்பட்ட உரைகளினுள் விரிந்துள்ள உயர்வு பொருந்திய தெளிவுணர் வினையும், கேட்போர் உணரப் பாற்பட வகுத்து - பாடங்கேட்கும் மாணவர்கள் தெளிவாய் உணரும்படி அவற்றைப் பல பகுதிகளாக வகுத்துக்கொண்டு, நின்புகழ் அனைத்தும்தன்பெரு மதியின் தேவரீருடைய புகழ்தக்க இயல்புகளை யெல்லாந்தமது அகன்ற அறிவினால் உளம்கொள விளக்கும் வளம் கெழு புலமை நாராயணன் எனும் குருவனும் அல்லேன் - அம்மாணவரின் உள்ளங் கொள்ளும் முறையில் விளக்கவல்ல வளமைசான்ற புலமையினையுடைய நாராயணசாமிப் பிள்ளை யென்னுந் தமிழாசிரியனும் அல்லேன்; `வாலிய,இங்குத் தூயவென்னும் பொருட்டு; (பிங்கலந்தை, 4058) பொருளினும் தெளிவினும் என்பன இரண்டன் றொகை; `புரை உயர்வின் மேலது. புரை யுயர்வாகும் (தொல்காப் பியம், சொல், 302). புலமைக்கு வளமையாவது, ஐயமின்றித் தெளிதலுந் தெளிவுண்டாக விளக்குதலுமாகும். `நாராயணசாமிப் பிள்ளை யென்பார் அடிகட்குச் செந்தமிழ் அறிவுறுத்திய தமிழாசிரியராவர். குருவன். ஆசிரியன்; வானோர் குருவனே போற்றி எனத் திருவாசகத்தில் (5, 68) இச்சொல் இப்பொருட்டாய் வந்தது. `குருசில் என்னுஞ் சொல்லுங் குருவென்னும் முதனிலையிற் னோன்றியதாகும். குரு = ஒளி, அறிவொளியை யுடையவன், அதனைத் தருபவன் குருவெனப் பட்டான். வடமொழிக்கட் சென்ற பல தமிழ்ச் சொற்களுள் இதுவும் ஒன்று. (89-97) களவியல் தனக்குப் பலபட இயம்பி- `களவியல் என வழங்கும் இறையனாரகப் பொருளுக்குப் பல வகையாகப் பொருள்கூறி, பளகுஅறு நன்பொருள் தெளியாது உழன்ற புலவோர் களிப்ப நலமுறத் தோன்றி - அவற்றுட் குற்றம் நீங்கிய நல்லுரை ஈதெனத் தெளியமாட்டாமல் உள்ளம் அலைவுற்ற கடைச்சங்கப் புலவர்கள் தமது வருத்தம் நீங்கிக் களிக்குமாறு அவர்முன் நன்மையுண்டாக எழுந்தருளிவந்து, மெய்ப்பொருள் காட்டித் தமிழ் வழிப்படுத்தும் - உண்மையுரை இதுவேயென ஆசிரியர் நக்கீரதேவர் எழுதிய உரையைக் காட்டுவித்து அகத்தமிழ்ப் பொருளை ஒரு வழிப்படுத்தியும், புல் அமண் மிகுந்து நல்உணர்வு அழிந்து- முழுமுதற் கடவுளிருப்பை உணராமையின் இழிபுற்ற சமண் சமயம் பரவி இறைமுதற் பொருளறிவு வாய்ந்த சைவசமய நல்லுணர்வு கெட்டு, பெரும் பெயர் வழுதியும் அருந்தமிழ்க் கூடலும் உய்வழி காணாது உழிதருகாலை - பெரிய புகழ்வாய்ந்த பாண்டிமன்னனும் அரிய செந்தமிழ்ப்பயிற்சி மிக்க மதுரையம்பதியும் நன்னெறிப்பட்டு உய்யும் வகைகள் காணாமல் அலைவுற்றுக் கிடந்தபொழுது, ஒய் எனப் போந்து மெய் நெறி காட்டியும் - திருஞானசம்பந்தப் பெருமானாக விரைந்து வந்து தோன்றிச் சைவமெனப்படும் மெய்வழி தேற்றி விளக்கியருளியும், தண் அருள் புரிந்த நின்னே - போல இனிய திருவருள் செய்த தேவரீரே போல; இறைவ னருளாற் பெற்ற இறையனாராகப் பொருள் என்னும் அகத்தமி ழிலக்கணத்திற்கு அஞ்ஞான்றைப் புலவர் பலருங் கண்ட உரைகளுள் நக்கீரனாருரையே சிறந்ததெனப் புலப்படுத்திய உருத்திரசன்மர் முருகப்பிரான் பிறவியே யென்னும் அக்களவியல் உரைப்பாயிரம். தன், சாரியை; பளகு, குற்றம்; பளகறுத்துடையான் கழல் பணிந்திலை (திருவாசகம், திருச்சதகம், 35) என்பதிற்போல. `ஒய், விரைவுப்பொருளது; இஃதிப்பொருட்டாதல் நுங்கையது கேளா வளவை யொய் யென என்னும் பொருநராற்றுப் படை (152) யடியிற் காணப்படும். `நின்னே, ஏகாரம் தேற்றம்; இங்குக் கூறப்படும் பாண்டிய மன்னன் நெடுமாறன் என்னுங் கூன்பாண்டிய னாவன். முருகப்பெருமானே திருஞானசம்பந்தப் பெருமானாக எழுந்தருளிவந்து பாண்டிநாட்டுக்குச் சென்று அமண் அழித்துச் செந்தமிழ்த் தேவாரத்தாற் சைவம் விளக்கியருளினாரென்று நம்பியாண்டார் நம்பிகள், மயிலேந்திய வள்ளல் தன்னை யளிப்ப மதிபுணர்ந்த எயிலேந்திய சண்பை நாதன் என்றற் றொடக்கத்துச் செய்யுட்களில் நுவலுதல் காண்க (திருஞான சம்பந்தர் திருவந்தாதி, 64.) (98-108) செந்தமிழ் வழக்கு முந்துற விரித்து - செந்தமிழ் மொழியின் இலக்கண இலக்கிய வழக்குமுறைகளை முதலில் விரித்து விளங்கச்செய்து, விடி ஞாயிறு என - விடியற்காலத்தில் எழுகின்ற பகலவனைப்போல, முடிநிலைச் சைவம் ஏனை எல்லாச்சமயங்கட்கும் முடிந்த நிலையில் வீற்றிருப்பதான உயர்ந்த சைவசமயத்தின், பைம் கதிர் விரித்து - புதியவான அறிவொளி களை எங்கும் விரித்து, கங்குலில் கூம்பிய விரை அவிழ்தாமரை புரை உரவோர் உளம் புரிஞெகிழ்ந்து அலரத் தரும் இயல் சிறப்ப - இரவின்கட் குவிந்த மணம் பரப்புந் தகையவான தாமரை மொட்டுகளை ஒக்கும் அறிஞர் உள்ளங்கள் கட்டவிழ்ந்து மலரும்படி செய்யும் ஆற்றல் சிறந்துதோன்ற, உரையினும் கருத்தினும் வரை அமை நோக்கினும் பொருந்தக் காட்டி வருந்திறன் மிகுத்து - சொல்லாலும் அச்சொல்லின் கருத்தாலும் அளவமைந்த நோக்காலும் பொருத்தமாக விளக்கி வரும் வலிமை யினை மிகுத்துக்கொண்டு மலைவுபடும் உள்ளத்து அறிவொடு கூடாச் சிறுபுன் மாந்தர் குறுமொழி களைந்து - முன்பின் அறிவு மாறுபடும் உள்ளங்களை யுடைமையின் மெய்யறிவொடு பொருந்தாத சிறியரான இழிந்த மக்களின் சிறு சொற்களை நீக்கி, நின் புகழ் விரிக்கும் அன்பில் சிறந்த சோமசுந்தர குருவனும் அல்லேன் - தேவரீருடைய அருட்புகழ்களையே விரித்துரைக்கும் பேரன் பிற் சிறந்த சோமசுந்தர ஆசிரியனும் அல்லேன்; செந்தமிழ் நூல் அறிவினின்றி அந்நூலின்கட் செறித் துணர்த்தப்பட்டிருக்கும் முடிநிலைச் சைவவுண்மைகளை விளக்குதல் ஏலாதாகலின், `செந்தமிழ் வழக்கு முந்துற விரிப்பா ராயினரென்பது. தகுதி வாய்ந்த மக்கட்கன்றி ஏனையோர்க்குச் சமய வறிவுநூற் பொருள் அறிவுறுக்கப் படாவாகலின், அங்ஙனந் தகுதி வாய்ந்து கேட்பாரை ஏனைத் தகுதியில்லா மக்களினின்றும் வேறு பிரித்துச் சிறப்பித்தல் வேண்டுமாகலின் அவர் `உரவோர் என்றும், அவரது நல்லுள்ளம் `விரையவிழ் தாமரை யென்றுஞ் சிறப்பிக்கப்பட்டன. ஆயினும் அவரச்சமயவறிவுநூற் பொருள் களை ஆராய்ச்சி முறையிற் கேட்டு அருள்மணம் விரியப் பெறாமையின், அவருடைய தகுதி வாய்ந்த விழுமிய உள்ளங்கள் மலருந் தகுதியி லுள்ள முகைகளை ஒப்பவே உள்ளனவென்றற்குக் கங்குலிற் கூம்பிய விரையவிழ் தாமரை புரை உரவோர் உளம் எனப்பட்டது. இவ்வரிய உவமைகளின் நுட்ப அழகு இங்குப் பெரிதும் உள்ளுணர்ந்து மகிழற் பாலதாகுமென்க. உரையினும் கருத்தினும் நோக்கினு மென்பவற்றிற்கு மூன்றனுருபு விரித்துக்கொள்க; உரை-சொல்; கருத்து - சொற்பொருள்; நோக்கு - பொருளை நுனித்துக் காண்டல். `சிறுபுன் மாந்தர் ஏனைச் சமயத்தவர்; குறுமொழி, அவரது பொருள் நிரம்பாச் சிறுமையுடைய சொல், முடிந்த மெய்ச்சமய மாகிய சைவத்தின் மேன்மையை யுணரும் பேரறிவின்றி வேறு சமயப் பொய்ப் பொருள்களை யெல்லாம் வீண் பற்றுள்ளத்தால் வறிதே விரித்து வழக்கிட்டுத் திரிதலின் அவரெல்லாஞ் `சிறுபுன் மாந்த ரெனவும், அவரது பொருளில் மொழி `குறுமொழி யெனவும் இங்குக் கூறப்பட்டன. இப் பகுதியிற் சோமசுந்தர குரவர் திருஞான சம்பந்தரோடு உவமிக்கப்படுதல் கண்டுகொள்ளப்படும, சோமசுந்தர குரவர் திருஞான சம்பந்தரேபோல், இத்தென்னாடெங்கும் மாயாவாத வேதாந்தம், பாஞ்சராத்திரம் முதலான அயல் மதங்கள் தலையெடுக்க வொட்டாமல் அவற்றின் சிறுமையை எடுத்துக காட்டிச் சிறந்த சித்தாந்த சைவத்தின் பெருமையை நன்கு விளக்கி அஃது இனிது தழைத்தோங்குமாறு செய்த பெரியாராவர். இவரது சமயத் தொண்டின் விழுப்பம் அடிகள் இயற்றிய சோமசுந்தரக் காஞ்சிச் செய்யுட்களால் நன்கறியப்படும். (109-114) பொருள் பெரிது ஈட்டப் பெருகுறும் அவாவினும் - செல்வத்தை நிரம்பவுஞ் சேர்ப்பதற்கு மிகுகின்ற அவாவின் கண்ணும், ஈட்டிய ஒள் பொருள் இவறிக் கூட்டி மக்களும் மனைவியும் துய்க்க நல்கி நின்கழல் வணங்கா இன்னா மடியினும் - அங்ஙனந் தொகுத்த மேன்மையான பொருளை மேலும் அவா மிகுந்துபெருக்கித் தம் புதல்வர்களும் மனைவியும் நுகரக்கொடுத்துத் தேவரீருடைய திருவடிகளை வணங்காத தீய சோம்பலின் கண்ணும், அரிய நாட்களை வறிதே போக்கி - ஏழையேனுடைய அரிய வாழ் நாட்களை வீணாய்க் கழித்து, அறம் திறம்புளியில் சிறந்தனென் மன் - அறநிலை பிறழும் இடத்து மிகுதியுஞ் சிறந்த விளங்கினேன்; இம்மை மறுமைப் பயன்களைப் பயத்தலிற், பொருள் `ஒண்பொருள் எனப்பட்டது; ஒண்பொருள் காழ்ப்ப இயற்றி யார்க்கு என்னுந் திருக்குறளுக்குப் பரிமேலழகியார் கூறிய உரையைக் காண்க (760). `இவறல், அவா மிகல்; ஈட்டமிவறி இசைவேண்டா ஆடவர் (1003) என்பது திருக்குறள். `மக்களும் மனைவியுந் துய்க்க நல்கி யென்னுங் குறிப்பு அப்பொருளைக் கடவுள் வணக்கம் முதலிய நல்வழிகளிற் செலவழியாமையைக் குறித்தது. `திறம்பு உளி திறம்பும் இடத்து; உளி இடத்து என ஏழனுருபி ணன் பொருளில் வந்தது; இயல்புளிக் கோலோச்சும் என்னுந் திருக்குறளிற்போல (545) உளி மூன்றாவதன் பொருள் படுவதோர் இடைச்சொல் என்ற பரிமேலழகியாருரையை மறுத்து நச்சினார்க்கினியர் மந்திர விதியின் மரபுளிவழா என்புழி முறைமையின் வழுவாத அந்தணரென ஐந்தாவது விரிதலானும், `இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் என்புழி முறைமையிலே செங்கோல் நடாத்தும் என ஏழனுருபு விரிதலானும் உளி யென்பது மூன்றனுருபின் பொருள்பட வந்ததன்று. எனக் கூறுமுரை நினைவிற் பதிக்கற்பாற்று. `சிறந்தனென் என்பதில் என் தன்மை யொருமை வினைமுற்று விகுதி (தொல்காப்பியம், வினையியல், 6). அறந்திறம்பா நெறியிற் சிறந்து நிற்கவேண்டுவதாயிருக்க அது செய்திலேன் என ஒழிந்த பொருளை யுணர்த்துதலின் `மன் ஒழியிசைக்கண் வந்தது. (115-122) இனைய தீயென் நின் நினைவரும் திருவடி - இத்தகைய தீமையுடையேன் தேவரீருடைய நினைத்தற் கெட்டாத் திருவடிகளை, விழிநீர் உறைப்ப - கண்ணீர் துளிப்ப, முழுமெயும் பனிப்ப - முழு உடம்பும் நடுங்க, நிரை நிரை வாராது உரை நனி குழற - முறை முறையேவராமற் பேச்சுகள் மிகவுந் தலைதடுமாறி வர, பொறிவழி அறிவும் செறியும் உட்கருவியும் பலவழிக் கவராது ஒருவழிநிகழ - மெய்வாய் முதலிய ஐம்பொறிகளின் வழியே அறிவும் அவ் வைம்பொறிகளொடு நெருக்கமுறும் மனம் முதலிய அகக் கருவிகளும் பலவழியாகப் பிரிந்து போகாமல் ஒரேவழியாய் நிகழ, அன்பு உருவாகும் நின் தொண்டர் போல - அன்பின் உருவமாய் அமையுந் தேவரின் திருத்தொண்டர்களை ஒப்ப, நீங்கா அன்பில் நிலைநின்று - அறாத பேரன்பில் உறுதியாய் நிலைத்து, யாங்ஙனம் பெறுவெனோ பாங்குபடமொழிமோ - எங்ஙனம் அடைவேனோ உரிமையுண்டாகக் கூறுவீராக வென்பது. இச்செய்யுள் ஆண்டவனையே விளித்துத் தமது தாழ்நிலை கூறுமுகத்தால், அவரது அருள்நிலை பெறுதல் அரிதெனக் கூறிய வாறாம். `மொழிமோ வென்பதில் `மோ முன்னிலை யசைச்சொல் (தொல்காப்பியம், இடைச்சொல்லியல், 26); காமஞ் செப்பாது கண்டது மொழிமோ என்னும் குறுந்தொகைச் செய்யுளிற் போல (2). நின் நினைவருந் திருவடி (115) அன்புருவாகு நின் தொண்டர் போல அன்பில் நிலைநின்று (120-1) யாங்ஙனம் பெறுவெனோ (122) எனக் கூட்டுக. `உறைத்தல், துளித்தல்; இச்சொல் இப்பொருட்டாதல் தெண்பனி யுறைக்குங் கால் என்னுங் கலித்தொகையால் (15) தெளியப்படும். பனித்தல் நடுங்குதல்; நரைமுக வூகம் பார்ப்பொடு பனிப்ப எனக் குறுந்தொகைச் செய்யுளில் (249) இச்சொல் இப்பொருட்டாய் வருதல் காண்க. `கவர்தல், பலவேறாகப் பிரிவுபடல்; அந்தண் காவிரி வந்துகவர்பு ஊட்ட (புறநானூறு, 35) என்புழிப் போல. விழிநீருறைத்தலும் மெய்பனித்தலும் உரை குழறலும் அறிவும் ஏனை உட்கருவிகளும் ஒரு வரி நிகழ்தலுமெல்லாம் அன்புருவாகுந் தொண்டர்கட்கு அடையாளமாகு மென்பது. மெய்தா னரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென் கைதான் றலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பியுள்ளம் பொய்தான் றவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றியென்னுங் கைதா னெகிழ விடேனுடை யாயென்னைக் கண்டுகொள்ளே என்னும் மணிவாசகப் பெருமானது திருவாசகத் தேனுரையின் கண் (திருச்சதகம், 1) இனிது விளங்குதல் காண்க. பாங்கு - உரிமை (திவாகரம்); நின்றிருவடிகளைப் பெறுதற் குரிமை யில்லாத எளியனேன் அதனைப் பெறுதற் குரிமையுடையனாமாறு கூறுவீராக என்றவாறு. (19) எனவே, `இளையோய் (9) பெரியோய் (17) என எல்லாம் வல்ல இறைவனை விளித்துச் `சூர் முதல்போலப் பேரன்பில்லேன் (51) கீரன்போல (61) ஆற்றுப்படை சொலும் ஆற்றலு மில்லேன் (66) தானே தனக்கு நிகரென விளங்கிய நச்சினார்க்கினியனு மல்லேன் (73-4) அருணகிரியெனும் பெரியனு மல்லேன் (82) நாராயண னெனுங் குருவனு மல்லேன் (88) சோமசுந்தர குருவனு மல்லேன் (108)அறந் திறம் புளியிற் சிறந்தனென் மன் (114) இனைய தீயென் நின்நினைவருந் திருவடி (115) யாங்ஙனம் பெறுவெனோ (122) என்று அவனது அருள்நிலை பெறுதல் அரிதெனக் கூறியவாறு. 20. தோழி கிள்ளையைத் தூதுவேண்டல் மொழியுங் குழற முழுவுடம்பும் பைத்து விழியுந் துயில்கூடா வெய்யோன் - பழியைத் திருவொற்றிச் சேயோற் குரையாய் கிளியே யுருவுன்னை யொப்ப துணர்ந்து. (இ-ள்) மொழியும் குழற- சொல்லும் தடுமாற, முழு உடம்பும் பைத்து - முழுஉடம்பும் பசந்து, விழியும் துயில் கூடா வெய்யோள் - தன்னை விரும்பிய என் அருமைத் தலைவியின் கண்களுந் தூக்கம் பொருந்தா; பழியை - ஊரவர் அலருக்கு ஏதுவான அடக்குதற்கரிய இத்துயர நிலைகளை, திருவொற்றிச் சேயோற்கு உரையாய் - திருவொற்றி முருகற்கு எடுத்துச் சொல்வாயாக, கிளியே உரு உன்னை ஒப்பது உணர்ந்து - அருமைக் கிளியே! தெளிவின்றிச் சொல்லாடலாலும் முழு வுடம்பும் பசந்து நிற்றலாலுங் கண்ணிமைகள் துயில் கூடாமையாலும் என் தலைவியின் உருவும் உன்னையே ஒத்து உனக்கு இனமாதல் உணர்ந்து என்பது; `உணர்ந்து உரையாய் எனக் கொள்க. `பைத்து பசுமை என்பதனடியாகப் பிறந்த வினையெச்சம்; `பை என்பதே பச்சைநிறத்தை யுணர்த்தும் என்னும் பிங்கலந்தை. முருகப்பிரானை விரும்பி நின்றாளாகலின், தலைவி வெய்யோளெனப் பட்டாள்; வெம்மை, விருப்பம்; அன்றிக் காதல் வெப்பம் உடையாள் எனினும் பொருந்தும்; அங்ஙனமாயின் அச் சொல்லுக்கு `வெப்பமெனப் பொருள் கூறிக்கொள்க. இனி இவ்விரண்டு பொருள்களுமே இங்குப் பொருந்து மாகலின் அதனை இரட்டுற மொழிந்து கொள்ளலுமாம். கிள்ளை தூதுபோதற்கு இயையுமெனக் காரணங் கற்பித்த திறம் இதன்கண் மிக அழகிதாதல் கண்டு மகிழ்தல்வேண்டும் (20) 21. அருணிலை யுரைத்தல் உணர்ந்தா ரறிவினுந் தோன்றா தொளிக்கு மொருமுருக னிணர்ந்தார் சுரிகுழன் மங்கைய ரோடென் னிருவிழியிற் புணர்ந்தா ரெயிலொற்றி மேவிய வாறு புனிறுசெல்லா வணந்தாழ் குழவியைத் தாய்சென்று புல்லிய வண்மையன்றே (இ-ள்) உணர்ந்தார் அறிவினும் தோன்றாது ஒளிக்கும் ஒரு முருகன் - தான் முழுமுதற் கடவுளாந் தன்மையை உணர்ந்தவ ரறிவினுக்கும் வெளிப்படாமல் ஒளிக்கும் ஒப்பற்ற முருகப்பிரான், இணர்ந்துஆர் சுரிகுழல் மங்கையரோடு என் இருவிழியில் புணர்ந்து - நெருங்கி நிறைந்த சுருண்ட கூந்தல்களையுடைய வள்ளி தெய்வயானையென்னும் அம்மையர் பாகராய் எழுந்தருளிவந்து என் இரண்டு கண்களிலுங் கலந்தவராய், எயில் ஒற்றி மேவியவாறு - மதில்கள் உயர்ந்த திருவொற்றிநகரைச் சேர்ந்தவகை, புனிறு செல்லா வணம் தாழ் குழவியைத் தாய்சென்று புல்லிய வண்மை யன்றே - ஈன்றணிமை கழியாத பச்சிளந்தன்மை பொருந்திய குழந்தையைத் தாயே விரும்பிச் சென்று தழுவிய அருட் டன்மையேயாமன்றோ; என்பது. கடவுளின் உண்மையுணர்ந்தாலும் அவனை மெய்யன்பாற் கரைந்துருகி வழிபடாதார்க்கு அவன் நேரே தோன்றா தொளிந்திருந்தே அருள்புரிவனாகலின், உணர்ந்தா ரறிவினுந் தோன்றாதொளிக்கு மொரு முருகன் என்றார்; உணர்ந்தார்க் குணர்வரியோன் தில்லைச் சிற்றம்பலத்தொருத்தன் என்னுந் திருக்கோவையாருரையும் இக்கருத்தே பற்றி வந்தது. இணர்ந்து - நெருங்கி; இணரிய ஞாட்பினுள் என்றார் களவழியிலும் (34). உணர்ந்தாரறிவினுந் தோன்றாதொளிக்கும் ஒருமுருகன் ஏதுமறியா ஏழையேன் இருவிழியிற் புணர்ந்தாரென்று தம்மைத் தாழ்த்துரைத்தல் கருதிப், `புனிறுசெல்லா வணம் தாழ் குழவி யென்று குழவியை ஏதுமறியாப் புனிற்றணிமைப் பருவத்தில் வைத்து விதந்தருளினார். குழந்தையைத் தாய் சென்று புல்லிய வண்மையை இங்கு உவமையாகக் கொள்க. வண்மையை ஒப்பதன்றே யென்று உரைத்துக்கொள்க. (21) 22. எழில் நலங்கூறி நெஞ்சறிவுறுத்தல் (1-9) வண்புனல் நிலையில் தண்அறல் போலவும் - வளமான நீர் நிலைகளின் அடியிற் காணப்படுங் குளிர்ந்த கருமணலை ஒப்பவும், தாமரை மொய்த்த வண்டினம் போலவும் - தாமரை மலர்களை மூசிய கரிய வண்டுக்கூட்டங்களை ஒப்பவும், பளிங்கில் தோய்ந்த நீல்நிறம் போலவும் - ஒரு பளிக்குக் கண்ணாடியின்கண் ஊடுருவித் தோன்றுங் கருநீலநிறத்தை ஒப்பவும், திருமுக மருங்கின் வருமுறை துணர்ந்து - திருமுகத்தின் பக்கத்தே ஒழுகி வரும் வகையில் அடர வளர்ந்து, ஆங்கு இடைஇடை சுழன்று நீண்டு கடை குழன்று - அங்ஙனமே இடையிடையே சுழிந்து நீளமாய் வளர்ந்து நுனிசுருண்டு, கண் ஒளி கதுவும் குஞ்சியை - கண்ணொளியைக் கவருந் தலைமயிரினை; அன்னை இருபால் கூறிட்டு ஒருபால் சூழியும் மற்றொருபால் பனிச்சையும் திருவதின் அமைப்ப - உமைப்பிராட்டியாரான தாயார் இருபிரிவாக வகுத்து ஒருபிரிவில் உச்சிக்கொண்டையும் மற்றொருபிரிவில் பின்னல் முடிப்புஞ் செவ்விதின் அமைப்ப, நறும்கதுப்பு ஒளிரும் பெரும் சிறப்பானும் - அவ்வாற்றால் இனிய அத் தலைமயிர் மேன்மேலும் விளங்குகின்ற பெரிய மேன்மையினாலும்; புனல் நிலை, நீர்நிலைகள்; அவை `வண்புனல்நிலை யெனப்பட்ட மையின், என்றும் அறாத வளமான நீரொழுக்கும் நீர்ப்பெருக்கும் உடைய ஆறுகளின் மடுக்கள் வாவிகள் முதலான நீர்நிலைகளே ஈண்டுக் கொள்ளப்படும்; அவற்றின்கீழ் இடையிடையே கருமணற் பரப்புகள் காணப்படுதலும் இங்கு நினைவுகூரற்பாற்று. புனலும் பளிங்கும் முகத்தின் தெளிவுக்குந், தாமரை முகத்தின் செவ்விய வடிவுக்கும், அறலும் வண்டினமும் நீனிறமும் அத் திருமுகத்தின் பக்கலிற் சரிந்துகிடக்குந் தலைமயிருக்கும் உவமைகளாய் நின்றன. `குஞ்சி, ஆண்பான் மயிர்; மேற் கதுப்பென வருதலும் அது. இடையிடை சுரிந்து நீண்டு கடை குழலலுங் கண்ணொளியைக் கவருமாறு கருமையிற் பளபளப்புடைமையும் அழகிய தலைமயிரின் இயல்பாகும். `துணர்ந்தாங்கு என்பதில், ஆங்கு, அங்ஙனமே என்னும் பொருட்டு; துணர்ந்து - கொத்தாக நெருங்கிவளர்ந்து; `தூமருளிருள் துணர்ந்தனைய குஞ்சியன் என்றார் சூளா மணியிலும் (குமாரகாலச் சருக்கம், 6). கதுவல் - கவர்தல்; பழனவாளைக தூஉம் ஊரன் என்றார் குறுந்தொகையிலும் (8). `சூழி யென்பது உச்சிக்கொண்டை (பிங்கலந்தை); `பனிச்சை யென்பது பின்னி வளைத்து முடித்தலாம்; இஃது ஐவகை முடிப்புகளுள் ஒன்றென்க (திவாகரம்). திருவது, செவ்விது, என்றாற்போல் ஈறுபெற்று வந்தது; திருவத்தவர் (நாலடியார், 57) எனப் பிறவாறும் வருதல் காண்க. இப்பகுதி முருகக் கடவுளின் அழகிய தலைமயிர்ச் சிறப்பினைக் கூறி மகிழ்ந்தவாறாம். (10-12) செம்மணிப் பலகையின் - சிவந்த மாணிக்கக் கல்லாலாகிய ஒரு பலகையின்கண், அம்மணிகுயிற்றி - அழகிய நீலமணிகளை அழுத்தி, வரம்பு உற விடுத்த வண்ணம்போல - அப்பலகையின் ஓரத்திற் பொருந்த அமைத்த வகைபோல, புருவக்கொடி படர்ந்த - கருநிறமான புருவமென்னுங் கொடியானது ஓடிய, விரிநுதலானும் - அகன்ற நெற்றியினாலும்; செம்மணி, மாணிக்கமணி, அது சிவந்திருததலின். அம்மணி - அழகிய நீலமணி; `மணி என்னுஞ் சொல் தன்னியல்பில் நீலமணியினையே யுணர்த்தல் மணி நீலமணியே என்னுந் திவாகரத்திற் காண்க. அம் - அழகு (பிங்கலந்தை). குயிற்றி - அழுத்தி; இஃதிப்பொருட்டாதல் மரகத மணியொடு வயிரங் குயிற்றிய என்புழிக் காண்க (சிலப்பதிகாரம், 5, 147, அடியார்க்கு நல்லாருரை). செம்மணிப் பலகைக்குக் கருநிற வரம்பு அமையுங் காட்சி அழகிதாதல் நினைவுகூர்க. வண்ணம், வகை. (13-15) அந்நுதல் கிளர்ந்த பொன்போல் செவ்விழி - அந்நெற்றியின்கண் எரியும் பொன் ஒத்த சிவந்த நெற்றிக் கண்ணானது, உத்தி என்னும் துத்திப் பை அரவு முடிமேல் மணி என - பிள்ளையாரது நெற்றிமேல் உமைப் பிராட்டியார் தொங்கவிட்ட உத்தி யென்னும் அணிகலமானது பொறிகள் வாய்ந்த படத்தினையுடைய ஒரு சிறு நாகம்போற் றோன்றாநிற்க அந்நாகத்தின் தலைமேற் காணப்படுஞ் சிவந்த மாணிக்க மணியினை யொப்பத் தங்கி யிருத்தலானும்; பிள்ளையாரது நெற்றிக்கண், அவரது நெற்றிமேற் றொங்கவிடப் பட்ட உத்தியென்னும் அணிகலத்தின் முனையிற் பதித்த மாணிக்க மணிபோற் சிவப்பாய் ஒளிர்ந்ததென்றும், அவ்வுத்தியாகிய அணிகலம் ஒரு சிறு நாகப்பாம்பினையும் அவ்வணிகலத்தின் முனையிற் பதித்த செம்மணி அந்நாகத்தின் உச்சிக்கண்ணதான மாணிக்கத்தினையும் ஒத்திருந்தனவென்றுங் கூறியபடி. உத்தி - அணிகல (ஆபரண)த் தொங்கல் (திவாகரம்). துத்தி - பொறி (திவாகரம்). பை - படம் (பிங்கலந்தை). (16 - 18) வெள் பனித் திரளை - வெண்ணிறமான பனிக் கட்டியை, கண்ணுறப்போழ்ந்து - இடம் இடைப்படப் பிளந்து, துவர் நிறம் ஊட்டி - அதன்கட் சிவந்த நிறத்தையும் ஏற்றி, சிவணுற அமைத்தாங்கு - பொருத்தமுற அமைத்தாற் போல, இருபுறம் கதுப்பு மருவுதலானும் - முகத்தின் இரண்டு பக்கங்களிலுங் கன்னங்கள அணைந்து தோன்றுதலாலும்; `போழ்ந்தென்றது வெட்டுவாயிற் றோன்றும் பளபளப் பினை உவமித்தற்கென்று கொள்க. துவர் நிறம், செந்நிறம்; இதன்கண் எச்சவும்மை தொக்கது. `துவர் சிவப்பு நிறத்தை யுணர்த்துதல் துவரிதழ்ச் செவ்வாய்த் துடியிடையோயே (சிலப்பதிகாரம், 6, 26) என்பதிற் காண்க. `கதுப்பென்றது கன்னங்களை (திவாகரம்). (19-20) குழையொடு கெழுமும் தழை செவி இரண்டும் - குண்டலங்களொடு பொருந்தும் வளர்ந்த காதுகள் இரண்டும், ஓ எனும் வடிவொடு மேவுதலானும் - ஓ வெசன்னும் ஓங்கார வடிவத்துடன் அமைந்து விளங்குதலானும்; குழை - குண்டலம்; மின்னுக்குழையும் பொற்றோடும் மிளிர என்றார் சீவகசிந்தா மணியிலும் (16 58). ஓடுவுருபு அதனோடியைந்த ஒப்பலெராப்புரை (தொல்காப்பியம், சொல், 75). (21 - 23) நடுவில் குழிந்து வட்டித்து அமைந்த - புறத்தே நடுவிற் குழியாகி வட்டமா யமைந்த, படுபொன் கிண்ணம் - செம்பொன்னாலான கிண்ணமானது, முகம் கவிழ்த்து அன்ன - முன்பக்கம் கவிழ்த்து வைத்தாற்போல, மோவாய் நிவந்த முறைமையானும் - வாயின் மோவாய் நடுவிற் சிறிது குழியாகிச் சுற்றி உயர்ந்துவிளங்கும் வகைமையாலும், வட்டித்தல், வட்டமாதல் மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்து (புறம், 42). `படுபொன் கிண்ண மென்பதைப் `பொன் படுகிண்ண மெனக் கொண்டு, `பொன்னாற் செய்யப்பட்ட கிண்ணம் எனப் பொருளுரைத்துக் கொள்க; `நிவத்தல் உயர்தல்; ஆவது இங்கு எடுத்துத்தோன்றுதல். (24 - 27) கிளை அரி நாணல் கிழங்கு - கப்புகள் அரியப்பட்ட நாணற்புல்லின் கிழங்கானது, மணற்கு ஈன்ற முளையும் - மணலின் கண் விட்ட வெள்ளிய முளையும், முருந்தும் - மயிலிறகினடியும், விளைநீர் முத்தமும் - கடல்நீரில் விளையும் வெண்முகத்துக்களும், கூர்ந்து நிரைந்து வல்லெரன ஒளிவிரிந்து எழுந்து ஒளிர் எயிற்றொடு பொருந்துத லானும - கூர்மையாயும் வரிசையாயும் வலிமையாயும் அமைந்து வெளேலென்று ஒளிவிட்டு நின்று விளங்கும்பற்களோடு ஒன்றியமைதலானும், மேற் கப்புகளை யரிந்து நட்ட நாணற் கிழங்கு விரைவில் முளைவிடுதலாலும், அம்முளை கூர்மையாய் வெண்ணிறத்தவா யிருத்தலாலுங் கிளையரி நாணற் கிழங்கு மணற் கீன்ற முளை உவமையாக எடுக்கப்பட்டது; இவ்வடி அகநானூற்றில் தாவில் நன்பொன் (212) என்னுஞ் செய்யுளிலிருந்தெடுத்த மேற்கோள். `மணற்கு இதிற் குவ்வுருபு ஏழன் பொருளில் வந்த வேற்றுமை மயக்கம்; நாணற் கிழங்கின் முளையும் முருந்தும் முத்தமும் முறையே வெண்மையிற் கூர்மைக்கும், வெண்மையில் வரிசைக்கும், வெண்மையில் வன்மைக்கும் உவமைகளென்க. ஈண்டு வரும் `ஒடு வுருபு ஒப்புமைப்பொருளதாகும்; இது சேனாவரைய ருரைறியற் காண்க (தொல்காப்பியம், சொல் 13). (28 - 30) கொவ்வைக் கனியும் கொழுவிய பவழமும் - சிவந்த கொவ்வைப் பழமும் செழுமையான செந்நிறம் அமைந்த பவழமும், செவ்விய அல்லென - தமக்கு நிகரான சிறந்த செந்நிற முடைய வல்ல வென்று, இலவு இதழ் புரையும் செந்நீர் இதழொடு மன்னுதலானும் - இலவமர மலரினிதழ்களை ஓக்குஞ் சிவந்த தன்மையையுடைய உதடுகளொடு பொருந்துதலானும், கொவ்வைப் பழத்தைக் கிள்ளை கோதுதலானும், பவழக்கல்லைக் கடைந்துதுளையிட்டு மகளிரணிதலானும் அவைபிள்ளையா ரிதழ்களுக்கு ஒப்பாகத் தகா; மற்று இலவமலரின் இதழோ அங்ஙனம் ஊறுபடுதலின்மையின் அதுவே அவரிதழுக்கு ஒப்பாகத் தக்கதென்றவாறு; இலவிதழ்ச் செவ்வாய் இளமுத் தரும்ப என்றார் சிலப்பதிகாரத்திலும் (14, 136). நீர்மை இயல்பாகிய குணம், நின்னுடை நீர்மையும் என்னுந் திருக்கோவையாரில் இச்சொல் இப்பொருட்டாதல் காண்க. (31 - 36) முத்தக் கோவை முறைமுறை வைத்த நத்துவர்ச் செப்பு நன்கனம் திறந்தென - முத்து மாலைகள் வரிசை வரிசையாய் வைக்கப்பட்ட நிறஞ் சிறந்த பவழச் சிமிழின் பொருத்து வாயானது அழகிதாகத் திறந்தாற்போலவும், அரக்கு உரு ஊட்டிய ஆம்பல் நறுமுகை தளை நெகிழ்ந்து அலர்ந்த தன்மைத்து என்ன - செந்நிறத்தைத் தோய்வித்த அல்லியின் நல்ல பூமொட்டானது கட்டு அவிழ்ந்து மலர்ந்த வியல்பினது போலவும், முள் எயிறு இலங்க - கூரிய பற்கள் ஒளிகாட்டி விளங்க, நகுதொறும் நகுதொறும் செவ்வாய் தோன்றும் அவ்வாற்றானும் - நகைக்கும்போது நகைக்கும் போதெல்லாம் அப்பெருமானது சிவந்த வாயானது விளங்கித் தெரியும் அவ்வகையினாலும்; நகுதொறும் நகுதொறும் முள்ளெயிறு இலங்கச் செவ்வாய் தோன்றுமெனத் தொடரிசைத்துக் கொள்க. உவமைகளில் முன்னையது பற்களுக்கும் பின்னைய வாய்க்குமெனத் தெளியற்பாலன. `நத்துவர் என்பதில் ந - சிறப்புப்பொரு ளுணர்த்துவதோரிடைச் சொல்; நச்செள்ளை, நப்பாலத்தன், நக்கீரன் என்றாற்போல என்றார் நச்சினார்க்கினியர் (சீவக சிந்தாமணி, 482). நன்கனம் -நன்றாக, அழகிதாக; நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த என்புழி (மணிமேகலை, 2, 30) இப்பொருட்டாதல் காண்க. என, உவமப் பொருளில் வந்தது. `அரக்கு, சிவப்பு; உரு, நிறம்; அரக்குண் பஞ்சிகள் திரட்டி (கனகமாலை, 8) என்னுஞ் சிந்தாமணியில் இச்சொல் இப் பொருட்டாதல் காண்க. (37-39) எழும் இடம் குழிந்து -முதற்கண் எழுகின்ற இடத்திற் குழியாகி, விழுமிதின் ஒழுகி - சீரிதாக நீண்டு, தளவு அரும்பு என்ன வளம் கனிந்து இலங்கி - முல்லை அரும்பை ஒப்ப அழகு முதிர்ந்து விளங்கி, முன் எழு மூக்கின் தன்மையானும் - முகம் எழும்பிய மூக்கின் றன்மையினாலும்; வளம், அழகு; கனிதல், இங்கு `முதிர்தல் என்னும் பொருட்டு; கன்னிமை கனியாக் கைக்கிளைக் காமம் என்னும் பரிபாடலில் (11, 136) இச்சொல் இப்பொருளில் வந்தது. (40-42) ஓர் அருள் கடல் இங்கு ஈர் உரு வாகிக் கரை புணர்ந்து கிடந்த முறைமைபோல - ஓர் அருட்டன்மையுடைய கடலானது இங்கு இரண்டு உருவங்களாய்ப் பிரிந்து கரை பொருந்திக் கிடந்த வகைமைபோல புருவக்கொடி கடவாப் பெருவிழியானும் - புருவமாகிய ஒழுங்கினைக் கடந்து செல்லாது அமையும் பெரிய விழிகளாலும், `அருட்கடல் எனப்பட்டது, கண்களின் அருட் டன்மையை எண்ணி; உவமையைக் கருத்தூன்றுக. கொடி - படர்கொடி, ஒழுங்கு என இருபொருளும் உரைத்துக் கொள்க; புருவத்தை நோக்கியவழி அவை படர் கொடியை யொத்திருந்தன; கண்ணாகிய கடலை நோக்கியவழி அவை அக் கடலுக்கு வகுத்த கரையொழுங்கை யொத்திருந்தன வென்க. (43-45) விரைஅவிழ் தாமரை நறை உகுத்தென்ன - மணம் விரிக்குஞ் செந்தாமரை மலர் தேன் சொரிந்தாற்போல, கேட்டொறும் இனிக்கும் பாட்டொடு தழீஇச் செழுவாய் மலர்ந்த மொழியினானும் - கேட்கும் போதெல்லாந் தெவிட்டாது சுவைக்கின்ற இசைகளுடன் சேர்ந்து அழகிய மலர்வாயின் கணிருந்து தோன்றுஞ் சொற்களாலும்; பாட்டு, இசை; பிள்ளையாரது மலர்வாய்ப் பிறக்குஞ் சொற்கள் இசையினிமை வாய்ந்தன என்றபடி. இது காறும் முருகப் பிரான்றன் பிள்ளைமைக் கோலத்தை நினைந்து அணிந்துரைத்ததாகும்; மேல் வருவன அவன்றன் கட்டிளமைக் கோலத்தையுந் திருமணக் கோலத்தையும் நினைந்து புனைந்துரைத்ததாகும் என்க. (46-48) வலம்புரி அன்ன வால் நறும் கழுத்தொடும் - வலம் புரிச் சங்கை ஒத்த வெண்மையான நல்ல கழுத்தோடும், ஏற்றினத்து எருத்தின் முரிப்பு எடுத்ததன்ன குவவிப் புடைத்த பிடரினாலும் - சிறந்த ஏறுகளின் இனத்தைச்சேர்ந்த எருத்து மாட்டின் இமில் உயர்ந்தாற் போற் றிரண்டு பருத்த பிடரினாலும்; திருமேனியெங்கும் நீறு பூசப்பட்டிருத்தலின் வெண்மை யான கழுத்தென்றார்; இனி, வான் நறுங் கழுத்து எனப்பிரித்து அழகிய நல்ல கழுத்தெனலுமாம்; அழகாவது சங்குபோல் வழுவழுப்பான வடிவுடையதாயிருத்தல். எடுத்தென்றது, இங்கு உயர்ந்தென்னும்பொருட்டு; காளையாந் தன்மைமிகுந்த இமிலேறு என்றற்கு `ஏற்றினத் தெருத்தின் எனப்பட்டது. `பிடரென்பது, புறங்கழுத்து, முரிப்பு - இமில் (சிலப்பதிகார உரை, 17). (49-62) முழவு எனச் சரிந்து - மத்தளம் போற் சரிவுடைய தாய், வல் வலம் எனத் திரண்டு - வலியதிரள் கல்லை ஒப்பத் திரட்சியுடைய தாய், வரை என நிமிர்ந்து - மலையைப்போல் உயர்ந்து, பின் எழு எனத் திணிந்து - பின்னும் இருப்புத் தூண்போல் திட்பம் வாய்ந்து, மலையொடு பொருத மால்களிறு என்று புலவோர்கூறும் பொருண்மொழி காட்ட - மலையினொடு போர்செய்த பெரிய ஆண்யானை யென்று புலவர்கள் உரைக்கும் மெய்யுரைக்கு இலக்கியமாக, யானை என்னும் பால்நகு திருமொழி கொங்கை மருப்பின் நுங்கக் குத்தி ஒருபால் பெரும்போர் விளைப்ப - தெய்வயானையென்று சொல்லப்படும் அமிழ்தத்தையும் இகழும் இன்சொல்லினை யுடைய அம்மையார் தமது கொங்கையாகிய கூர்ங் கொம்பினால் முருகவேள் மார்பந் தன்னை விழுங்க அழுத்தி ஒருபக்கத்தில் மிகுந்த காதற்போர் செய்ய, ஒருபால் - மற்றொரு பக்கத்தில், வள்ளி யென்னும் கள் அவிழ் குழலாள் - வள்ளியம்மையார் எனப்படுந் தேன்சிந்துங் கூந்தலையுடைய பிராட்டியார், தடமுலை வேதின் - தமது அகன்ற கொங்கையாகிய ஒற்றடத்தால், படுபுண் ஒற்ற உளம் கொண்டு எழீஇ - தெய்வயானை யம்மையார் முன்பு காதற்போர் செய்தமையால் உண்டான புண்ணை ஒற்றுதற்கு உளம் நினைந்து எழுந்து, உறும் இடன் படாஅது ஒருபுறம் ஒற்ற வரும் முறை நோக்கி - அப் புண்ணுற்ற இடத்திற் படாதபடி மற்றோரிடத்தில் ஒன்றுதற்கு வருந் தன்மையைக் கண்டு, கொழுநனை பிணைத் தமரா நறும் தொடலை - அம் முருகவேள் மார்பிற் பொருந்திக் கிடக்கின்ற கொழுமையான மொட்டுகளால் தொடுக்கப்பட்ட மணங்கமழுங் கடப்ப மாலையானது, முறுவலித்து என்ன முறுக்கு உடைந்து அசைய - புன்னகை புரிந்தாற்போலக் கட்டுவிட்டு மலர்ந்து புரள, வாள்வலி நிலையும் தோளினாலும் - வாட்படையின் வல்லமை நிலைத்த தோள்களாலும்; உலம் - திரள்கல் (திவாகரம்). எழு - இருப்புத்தூண் (திவாகரம்). மலையொடுபொருத மால்யானை இளம்பூரணர் உரை (தொல்காப்பியம், சொல், 73) புலவோர் கூறும் பொருண்மொழி காட்டத் தெய்வயானை கொங்கைகள் முருகவேள் மார்பொடு பொருதனவென்க; வள்ளி மேலுள்ள சீற்றத்தால் தெய்வயானை முருகப்பிரான் மார்பொடு பொருதனளெனவுந், தன் காதலற்கு அவள் செய்த ஊறு பாட்டினைத் தீர்ப்பாள்போல் வள்ளி தன் தடமுலை வேது கொண்டு ஒற்றினாளெனவும் ஒருநயந் தோன்ற உரைத்தார். நுங்க - விழுங்க; மார்பின்கண் அழுந்திய குத்தினை அம்மார்பு ஏற்று விழுங்கியதை யொத்ததென முருகப்பிரானுக்கு அதன்கண் உள்ள வேட்கையினைக் குறிப்பிட்டார்; நுங்கல் விழுங்குதற் பொருட்டாதல் சீவகசிந்தாமணி (4, 244) நச்சினார்க் கினிய ருரையிற் காண்க. இடப்புறம் அமர்ந்திருக்கும் தெய்வயானையம்மையாரால் நேர்ந்த இடதுபக்கத்துப் புண்ணை ஒற்றி ஆற்றாது, வலப்புறம் அமர்ந்திருக்கும் வள்ளியம்மையின் கொங்கை பெருமானுக்கு வலது புறத்திலேயே பொருந்துமாகலின், உறும் இடன் படாஅது ஒருபுறம் ஒற்ற வருமுறை நோக்கி என்றருளிச் செய்தார். வேது - வெம்மை ஒற்றடம்; முலைவேதின் ஒற்றி என்றார் கலித்தொகையிலும் (106). `கள்ளவிழ் குழலாள் எழீஇ ஒருபுறம் ஒற்ற வருமுறை நோக்கி எனத் தொடர் கூட்டுக. `எழுதல், இங்கு உள்ளவெழுச் சியைக் குறித்தது. கடப்பமாலையின் மலர் மலர்ந்திருக்குந் தோற்றத்தை நகுவதாகக் கூறியது தற்குறிப்பேற்றம். மரா- வெண்கடம்பு (திவாகரம்); பிள்ளையார் உவந்தது கடப்ப மாலையாதல் உருளிணர்க்கடம்பின் ஒலிதாரோயே என்னும் பரிபாடலாலும் (5, 81), மராஅத் துருள் பூந்தண்டார் புரளும்மார்பினன் என்னுந் திருமுருகாற்றுப்படையாலும் (10-11) அறியப்படும். இப்பகுதிகளின் உருவக உவமைக் கற்பனையழகுகள் பெரிதும் மகிழற்பாலன வாகும். (63-69) கைவல் வேகடி - கைவன்மை யுடைய மணியிழைப் போன், ஐது உறக் கடைந்து - அழகு கெழுமத் திரட்டி, வழுவழுப்பு ஆக்கிய - மழமழப்பாகச் செய்த, கொழும் துகிர்ப் பலகை - வளமாள பவளப்பலகைகள், புணர்ந்து ஒருங்கு இரண்டு கிடந்ததுபோல - இரண்டு சேர்ந்து ஒன்றாய்ப்பொருந்திக் கிடந்ததுபோல, கண்அகன்று ஓங்கிய கவின் கெழு மார்பத்து - இடம் அகன்று வளர்ந்த அழகு பொருந்திய மார்பின்கண், யானை மருப்பு உழுத சுவடுபோலவும் - யானையின் கொம்பு உழுதமை யால் உண்டான அடையாளம் போலவும், வரையொடு படர்ந்த வல்லிபோலவும் - மலையின்மேற் படர்ந்த வள்ளிக் கொடி போலவும், வரி மூன்று ஒழுகிய திருவினானும் - மூன்று கோடுகள் நீண்டு கிடந்த மேன்மையினாலும்; வேகடி - மணிமாசு அகற்றுவோன்; திருமணிகுயிற்றுநரை வேகடிகள் என்பர் சிலப்பதிகார உரைகாரர் (5, 46). `வேகடி தமிழ்ச்சொல், இது வடமொழிக்கண்ணுஞ் சென்றது. ஐது - அழகு, (சிலப்பதிகாரஉரை, 3, 152). பிள்ளையார்தந் திருமேனி நிறஞ் சிவப்பாகலின் அவரது திருமார்பத்திற்குப் பவளப்பலகையினை உவமை கூறினார். யானையென்னுங் குறிப்பினாலும் `வல்லி யென்னுங் குறிப்பி னாலும் அவையிரண்டும் முறையே `தெய்வயானை `வள்ளி யென்னுங் காதற் கிழத்தியரின் கொங்கைமுகடு உரிஞ்சிய காதற்செயல்களைக் குறிப்பவாயின. மார்பின்கண் வரிமூன் றொழுகுதல் சிறந்த ஆடவரின் நல்லிலக்கணமாகும்; பெருமையையுடைய மார்பிற் கிடக்கின்ற உத்தம இலக்கணமாகிய சிவந்த மூன்று வரியினையும் (திருமுருகாற்றுப்படையுரை, 106) என்று நச்சினார்க்கினியர் இவ்வுண்மையை நன்கெடுத்துக் கூறுவர். வரையகன் மார்பிடை வரியு மூன்றுள (கேமசரியா ரிலம்பகம், 51) என்பது சிந்தாமணி. (70-73) மழையும் மரனும் குழைந்து ஒருங்குஓட - நீர் சுரந்த புயலுங் கற்பகமரமுஞ் சோர்ந்து உடன்குலைய, விழுமிய பொருள்பல வேண்டிநர்க்கு உதவும் - சிறந்த பொருள்கள்பலவும் வேண்டிய அடியார்க்கு அளிக்கும், தாள் தொடு தடக்கையில் முழந்தாளைத் தொடும் அளவு நீண்ட பெரியகையில், தாய் உவந்து ஈத்த - அன்னையாகிய உமைப்பிராட்டி மகிழ்ந்து கொடுத்த, வாலிதின் விளங்கும் வேலினானும் வெள்ளிதாக மிளிரும் வேற்படையினாலும்; `மரன் ஈண்டுக் கற்பகமரம்; அஃது இந்திர னுலகில் உள்ளது; மழையுங் கற்பகமும் இந்திர னுலகிற்குக் கீழ் மண்ணுலகிற் பயன்படும் பொருள்களை மட்டுமே தரவல்லன வன்றி, வானுலகிற்கு மேலுள்ள உயர்ந்த தேவர் நிலைகளையும் அவையிற்றிற்கும் மேலான பேரின்ப வீட்டுலகினையுந் தரவல்லன அல்ல. மற்றுப், பிள்ளையார் தந்திருக்கைகளோ மண்ணுலக வின்பங்களொடு, விண்ணுலக வின்பங்களும் அவற்றிற்கும் மேலாக வீட்டுலக வின்பமும் அளிக்க வல்லன என்றவாறு. ஆண்மக்களிற் சிறந்தார்தங் கைகள் முழந்தாளளவும் நீண்டிருத்தல், தாட்டாழ் தடக்கைத் தனிமதி வெண்குடையான் என்னும் புறப்பொருள் வெண்பாமாலைச் செய்யுளான் உணர்க. `ஈத்த கொடுத்த எனப் பொருள் தரல் செம்பொன் வயிரியர்க்கு ஈத்த (புறம், 9) என்புழியுங் காண்க. (74-77) பால்நுரை முகந்த பரிசொடு பொரூஉம் - பாலின் நுரையை அள்ளி எடுத்த தன்மையை ஒக்கும், தூவெள் அறுவை அசைஇ - தூய வெள்ளிய ஆடையை உடுத்து, மூவகை மடியுடன் விளங்கி - மூன்று வகையான மடிப்புகளுடன் விளங்கி, வடிவுடன் சரிந்து - அழகிய வடிவுடன் சரிவுடையதாய், நடத்தொறும் குலுங்கும் வயிற்றினானும் - நடக்குந்தோறுங் குலுங்கி யசைகின்ற வயிற்றினாலும்; `பால்நுரை, தூய்மைக்கும் வெண்மைக்கும், மென்மைக்கும் உவமையாகலின், `தூவெள்ளறுவை யென அறுவை விதந்துரைக்கப்பட்டது. `அறுவை, தறியில் நீளநெய்தது பின் துண்டுதுண்டாய் அறுக்கப்படுதலின் வந்த பெயர். `அசைஇ, உடுத்து, இஃதிப்பொருட்டாதல், புலித்தோலை அரைக்கு அசைத்து (மழபாடி, 1) எனவருஞ் சுந்தரர் தேவாரத்தால் தெளியப்படும். `மடி, என்றது, இங்கு வயிற்றின் சதைமடிப்புக்கு. (78-82) எழும் இடம் தசைந்து - எழுகின்ற இடம் தசை கொண்டு, பின் - அதற்குமேல், ஒழுகுதொறும் மெலிந்து - நீளுமிடமெல்லாம் வரவர மெலிவுடையதாய், மழைக் கடக் களிற்றின் புழைக்கை ஒத்தும் - மழைக்கு நிகராய் ஒழுகும் மதத்தினையுடைய யானையின் துதிக்கைக்கு ஒப்பாகியும், கொழும் கனி வாழையின் கோழ் அரை ஏய்ப்ப ஊறும் ஒளியும் வீறுஉறத் திகழும் - கொழுவிய பழங்களையுடைய வாழை மரங்களின் வழுவழுப்பான அடிமரங்களை ஒப்ப மழமழ வென்னும் ஊறும் பளபளவென்னும் ஒளியும் சிறப்புற விளங்கும், நிறம் கெழு மரபின் குறங்கினானும் - செந்நிறம் பொருந்திய தன்மையினையுடைய தொடைகளாலும்; எழுமிடம், தோன்றும் முதலிடம்; மழைக்கடம், உவமத் தொகை; புழைக்கை, தொளையுடைய கை. ஊறு, தொட்டுணர்வு. பிள்ளையார் திருமேனி செந்நிறத்ததாகலின் `நிறங்கெழு குறங்கு என்றார்; நிறம் ஈண்டுச் செந்நிறம். (83-89)எப்பால் பொருளும் துப்புற வைகும் நிலைக்களம் என்பது பெயரின் காட்டி - எவ்வகையான பொருளுந் தன்பால் அணுகின் அவை அழுக் ககன்று தூய்தாகி நிலைபெறுதற்குரிய நிலைக்களமாம் உண்மையைத் தன் பெயரினாலேயே விளக்கி, முளை இள ஞாயிற்றின் - கீழ்பால் எழுகின்ற இளைய கதிரவ னெதிரே, தளை ஞெகிழ்ந்து விரிந்த - முறுக்கவிழ்ந்து மலர்ந்த, எரி அகை தாமரை போல- நெருப்புத் தழைத்ததென விளங்குந் தாமரைமலரை ஒப்ப, விரிபுகழ்த் தொண்டர்கள் எதிரில் கண்டிட - பரவிய அருட்புகழை யுடைய அடியார்கள் எதிரே கண்டிடலும், மலர்ந்த நிகர் இல் இன்ப நறை முறை ஒழுக்கி - உடனே மலர்ந்து ஒப்பில்லாப் பேரின்பமென்னுந் தேனைத் தொடர்பாக ஒழுகச் செய்து, பெருமையொடு வைகும் திருவடியானும் - அருட் பெருமையொடு வீற்றிருக்குந் திருவடியினாலும்; துப்பு - தூய்மை (பிங்கலந்தை), `ஞாயிற்றின் என்பதன் பின் எதிரே என ஒரு சொல் வருவித்துரைக்க. `முளை, இங்கு வினை. `எரியகை தாமரையென இங்கு வந்தாற்போலவே எரியகைந்தன்ன வேடில் தாமரை யெனப் பொருநராற்றுப்படை (159) யின் கண்ணும் வருதல் காண்க. எரியகைந்ததென வென்று சில வருவித்துக் கொள்க. ஞாயிற்றி னெதிரே தாமரை மலர்ந்தாற்போல அன்பொளி ததும்புந் தொண்டர்களெதிரே பிள்ளையார் தந் திருவடித் தாமரை மலராநிற்கு மென்க. `அடி எல்லாவற்றிற்கும் அடிப்படையாவது. தாட்டாமரை காட்டித் தன்கருணைத் தேன்காட்டி என்ற திருவாசகத் திருமொழியும் இங்ஙனமே நுவன்றமை யறிக (திகுவம்மானை, 6). (90-102) பெரு மணல் எக்கர்ச் சிறுகுடி வாழ்க்கைக் குறுமொழி மாக்கள் - உயரமான மணற்குன்றின் கண்ணே சிறிய குடிவாழ்க்கையினையுடைய புன்சொற்பேசும் மக்களாகிய நெய்தல்நிலத்து ஆடவர், உறுமீன் படுத்தும் - கடலிலுள்ள பெரிய மீன்களை வலையிலே அகப்படுத்தும், ஆழ்திரை மூழ்கி வீழ்மணி எடுத்தும் - ஆழமான கடலின் கண் மூழ்கி விரும்பத்தக்க முத்துச் சிப்பிகளை எடுத்தும், கரும் கடல் ஊர்ந்த வெள்வளை வாரியும் - கரிய கடல்நீரின்மேன் மிதந்து வந்த வெள்ளிய சங்குகளை அள்ளியும், நிரைநிரை கரையில் குவையினர் செல்ல - வரிசை வரிசையாகக் கரையின்கண் அவற்றைக் குவித்தனராய் ஏக, (அஞ்ஞான்) மறிகயல் உகளும் திருமுக நுளைச்சியர் - ஓடி மீளுங் கயன்மீன்களாகிய கண்கள் தன் இருபுறமும் புரளுகின்ற அழகிய முகத்தையுடைய அவர்தம் நெய்தல் நிலத்துப் பெண்டிர், கொடிச்சி தந்த கடுப்புடை நறவும் - குறிஞ்சி நிலத்துப் பெண்கள் கொணர்ந்து கொடுத்த கடுத்தலையுடைய கள்ளும், குடத்தி கொணர்ந்த பலப்படு முதிரையும் - முல்லைநிலத்துப் பெண்டிர் கொண்டுவந்து தந்த அவரை காராமணி முதலிய பலவாகிய பயறுவகைகளும், உழத்தி எடுத்த விழுத்தகு பழனும் - மருதநில மகளிர் சுமந்துவந்த சிறப்புமிக்க வாழை முதலிய பழங்களும், பெறுவிலையாக - தாம் பெறுகின்ற விலைப் பொருளாக, சிறுமீன் நொடுத்தும் - அவற்றிற்கு ஈடாகத் தம் நிலத்து வளங் களாகிய சிறிய மீன்களை விற்றும், இடைஇடை முத்தம் புடைபுடை அளந்தும் - அதனோடு அதனிடையிடையே முத்துக் களை பக்கங்கடோறும் அளந்து கொடுத்தும், கோடுகொண்டு பீடுஉற மாறியும் - சங்குகளை யெடுத்துப் பெருமைபெற மாற்றிக்கொண்டும், ஒருசார் பேர்ஒலி நிகழ்த்த- இங்ஙனமாக ஒருபக்கத்தில் இப் பண்டமாற்றுப் பேரோசையை விளைக்க; எக்கர் - மணற்குன்று (புறநானூறு, 177). குறுமொழி; பிறரை யிகழ்ந்துபேசுஞ்சொல் என்பர் அடியார்க்குநல்லார் (சிலப்பதிகாரம், 6, 63). `மக்களென்னாது `மாக்க ளெனப்பட்டார் அவர் சிறுசொற்பேசுதலின். `திரை ஆகுபெயர் வீழ் - விரும்பப்படும்; தாம் வீழ்வார் மென்றோள் என்புழிப்போல (திருக்குறள்). `மணி ஈண்டு முத்து மணிகளையுடைய சிப்பியினை யுணர்த்தியது ஆகுபெயர். `குவையினர் முற்றெச்சம்; செல்ல, கடல்படு பொருள் களைக் கரையிற் கொணர்ந்து குவித்தப்படியாய் நீருக்குங் கரைக்குஞ் சென்று கொண்டிருக்க வென்க. தேட்கடுப் பன்ன நாட்படு தேறல் (புறநானூறு, 392) என்பதனால் ஈண்டுக் கூறிய நறவின் கடுப்புத் தேளின் கடுப்பை யுடைய தாதல் அறிக. நறவு- கள், நனைமுதிர் சாடி நறவின் என்றார் புறத்திலும், (297). நொடுத்தல் - விற்றல், மீன்நொடுத்து நெற்குவைஇ (பறம், 343). புடை -பக்கம், ஒருபுடை பாம்பு கொளினும் (நாலடியார், 148). (102-108) ஒரு சார் - மற்றொரு பக்கத்தில், பனிமலை நிவந்த பண்புபோல - பனியினால் மூடப்பட்ட மலைகள் உயர்ந்துள்ள தன்மையை ஒப்ப, சேண்தொட ஓங்கிய உப்புக் குன்றம் - வானம் தொடும் படி உயர்ந்த உப்பு மலைகளை, தலையழித்து உமணர் பொதியுறச் சேர்த்திய - உச்சியிலிருந்து அவற்றை யழித்து உப்பு வாணிகர் உப்பை மூட்டைகளாக்கிச் சேர்த்த, ஒழுகை - வண்டியின், உருளை - சக்கரங்கள், முழுமணல் புதைதலின் - சுமையினால் அவ்விடத்து நிறைந்த மணலினுள் அழுந்துதலின், பிடர்கொடுத்து எழுப்பிக் கடும்பகடு உரப்பும் - அவற்றைத் தம் புறங்கழுத்துக் கொடுத்து மேல்தூக்கியபடியாய் அவ்வண்டியிற் பூட்டிய வலிய எருதுகளை வாயால் அதட்டுகின்ற, தாளாண் மாக்கள் தலைப் படும் உஞற்றும் - முயற்சியிற் சிறந்த மக்களின் மேம்படும் உழப்பும். நிவந்த - உயர்ந்த, மாக்கடல் நிவந்து எழுதருஞ், செஞ் ஞாயிற்றுக் கவினை என்றார் புறத்திலும் (4). `சேண் ஆகுபெயராய் வானத்தை உணர்த்தும்; `சேர்த்திய, `செய்த வென்னும் பெயரெச்சத் திரிபு. உமணர் - உப்பு விற்பார்; `ஒழுகை, வண்டி; இச்சொற்களுக்கு இப்பொருளுண்மை நோன் பகட்டுமண ரொழுகையொடுவந்த என்னுஞ் சிறுபாணாற்றுப் படை (55) யிற் காண்க. `கடும்பகடு என்புழிக் கடுமை வலிமையை யுணர்த்தா நின்றது. `நெய்தல் நிலமாகலின், கழியிடத்து மணலில் உருளை கள் புதைதல் கூறப்பட்டது. `தாள் முயற்சி; `தலைப்படும் என்பதை இங்குச் `செய்யு மென்னும் எச்சமாகக் கொள்க. `தாளாண்மாக்கள் என்றது ஈண்டுவண்டி யோட்டுவாரை. `உஞற்று முயற்சி; மாண்ட உஞற்றிலவர்க்கு (64) என்பது திருக்குறள். (109-112) புலவுக் கழி முளைத்த துவர் இதழ்த் தாமரை - புலால்நாற்றம் நாறுகின்ற கழியின்கண் வளர்ந்த சிவந்த இதழ்களையுடைய செந்தாமரை மலரில், புன்னை நுண்தாது பொறிப்ப - புன்னை மலரின் பொன்னிறமான நுண்ணிய மகரந்தப்பொடிகள் மேலிருந்து சிந்த, துன்னிய உருவொடு விளங்கும் தோற்றம் - அஃது அப்பொடிகளால், நிறைந்த பொன்னுருவுடன் விளங்குகின்ற காட்சியானது, எரியிடை - எரியும் நெருப்பின்கண், உருகிய பசுபொன் கவிழ்ப்ப - நீராய் உருகிய பசும்பொற் குழம்பைக் கீழ்முகமாகக் கவிழ்த்திடுதலும், ஓடிய திருவொடும் பொலியும் செவ்வியும் - அஃது ஒழுகிய அழகோடு ஒப்ப விளங்கும் அழகும்; `பொறிப்ப, இங்குச் சிந்திய வென்னும் பொருட்டு; இதற்குத் `தெறிப்ப வெனச் சிந்தாமணி (46) உரையில் உரைகாரர் நச்சினார்க்கினியர் எழுதுவர். `துன்னிய வென்பது `நிறைந்தவெனப் பொருடரல், துன்னிக் குழைகொண்டு தாழ்ந்த குளிர்மரம் என்னும் நாலடியாரிற் காண்க. (167). `எரி செந்தாமரை மலருக்கும், `பசும்பொன் புன்னைநுண் தாதுக்கும் உவமையாகும். செவ்வி - அழகு (சூடாமணிநிகண்டு, 11). பசும்பொன்னைப் போலவே புன்னைத்தாதும் மஞ்சள்நிற முடையதாதல் காண்க. திருவொடும், ஓடு ஒப்புமைக்கண் வந்தது. (113-115) மருவிய - பொருந்திய; நெய்தல் அம் கானல் ஐது உறக்கிடந்த ஒற்றிமாநகரில் - கடற்கரைக்கண் உள்ள கழியடுத்த சோலை அழகுமிகக் கிடந்து திருவொற்றிமா நகரின்கண். கானல் - கழிக்கரைச்சோலை (பிங்கலந்தை). `ஐது, அழகு; பிறவியள் ஆயினள் பெற்றியும் ஐதென என்பது மணிமேகலை (10,2). ஒருசார் பேரொலி நிகழ்த்த, ஒருசார் (102) தாளாண்மாக்கள் தலைப்படும் உஞற்றும் (108) திருவொடும் பொலியுஞ் செவ்வியும் (113) மருவிய நெய்தலங் கானல் கிடந்த திருவொற்றி மாநகரெனக் கொள்க. `நிகழ்த்த, உஞற்றும் செவ்வியும் மருவிய, கானல் கிடந்த திருவொற்றி மாநகர் என வினைமுடிக்கப்படும். திருவொற்றியூர் நெய்தலும் மருதமும் மயங்கியதாகலின், இங்குத் திணை மயக்கங் கூறப்பட்டது. இது முதற்செய்யுளிலும் எடுத்துக் காட்டப்பட்டமை நினைவுகூர்க. (115-116) கற்றைத் தோகை மயின்மேலிருந்து பயிலுதலானும் - கற்றையா யிருக்கும் பீலியினை யுடைய மயிலின்மேல் எழுந்தருளியிருந்து பலகாலும் விளங்குதலாலும்; `பயிலுத லென்பது பலகால் நிகழ்ச்சியினை யுணர்த்தல் கரப்பிலுள்ளமொடு வேண்டுமொழி பயிற்றி (புறம், 34) யென்னுமிடத்துப் பலகாற் கூறி யெனவரும் பழைய உரைகொண்டு இச்சொற்கு இப்பொருளுண்மை தெளியப்படும். (117-118) காண்டொறும் இனிக்கும் காட்சியும் உடையன் - பார்க்கும்போதெல்லாம் மகிழ்வைத் தருகின்ற தோற்றமும் உள்ளவன்; உரைப்பத் தீராச் சிறப்பும் உடையன் - சொல்லி முடியாப் பெருமையும் உள்ளவன்; உரைப்பத் தீராச் சிறப்பென்பது, எவ்வளவு சொன்னாலும் முடிதலில்லாத பெருமையென்க. `உம்மை, எச்சம்; (119-123) தம் உயிர்க்கு இனிய செம்மொழிப் புதல்வரை நோக்க நோக்க - தமது உயிர்க்கினிய இன்சொற் புதல்வர்களைப் பார்க்கப் பார்க்க, மீக் கிளர் காதல் தந்தையர்க்கு எழுதல்போல் - மேன்மேன் மிகுகின்ற அன்பு தந்தைமார்க்கு விளைதல்போல, கண்டிடும் விழி அளவு அமையாக் கழிபெரும் காதல் - தன்னைக் காணுங் கண்களின் அளவில் அமையாத நிறைந்த பேரன்பினை, எய்தினார்க்கு உறுக்கும் செய்தியும் உடையன் - தன்னை அணுகிக்காணும் பேறுபெற்ற அடியார்கட்கு விளைக்குஞ் செய்கையுமுள்ளவன்; `செம்மொழி யென்புழிச் `செம்மை யென்பது இங்குத் தந்தையர்க்கு இனிதாகுந் தன்மையைக் குறியாநின்றது. `உறுக்கும் உண்டாக்கும். (124 - 125) உருகெழு தோற்றம் மருவுவன் என்று - அச்சம் பொருந்திய தோற்றத்தை மேற்கொள்வனோ என நினைந்து, வெருவரல் ஒழிதி இன்றே - நின் அஞ்சுதலை ஒழிப்பாயாக இப்பொழுதே; உரு - அச்சம், உரு உட்காகும் (தொல்காப்பியம், உரியியல், 4); இறைவன் தன் அடியார் அஞ்சுதற்கேதுவான தன் றெய்வ வடிவைக் காட்டாது அவர் கண்டு மகிழ்தற்குத்தக்க அழகிய இளவடிவினையே காட்டி அருள் செய்வனென்பது, அணங்குசால் உயர்நிலை தழீஇப் பண்டைத்தன் மணங்கமழ் தெய்வத் திளநலங்காட்டி என்னுந் திருமுருகாற்றுப்படை அடிகளால் (289-290) அறியப் படும். வெருவரல் - அஞ்சுதல், (திருமுருகாற்றுப்படை, 241). `ஆல் அசை. (125-128) முருகன் குழவிக் கோலத்தும் விழுமிதின் அமர்வன் - முருகப்பெருமான் குழந்தை யுருவத்திலுஞ் சிறந்து திகழ்வன்; மடவான் மகளிர் தடமுலை குழைக்கும் இளமைக் கோலத்தும் வளமையொடு பொலிவன் - மடப்பத்தினை யுடைய பெண்களின் பெரிய கொங்கைகளைக் குழையும்படி செய்யுங் காளைப் பருவத்திலுஞ் செல்வப் பொலிவுடன் விளங்குவன்; அதனான் - அதனால்; `மடவரல் மகளிர் - `மடப்பத்தினையுடைய மகளிர் எனப் பொருளுரைப்பர் நச்சினார்க்கினியர் (நெடுநல்வாடையுரை, 39). (129-135) மின் எனத் தோன்றிக் கொன்னுற மறைந்தும் - மின்னல்போற்காணப்பட்டுப் பயனில்லாமற் கழிந்தும், வாதுவன் நடவாக் கலிமா போலத் தீதுஉறு நெறியில் திறம்படச் சென்றும்-குதிரைப் பாகனால் நடத்தப்படாத செருக்குமிக்க குதிரையைப் போல் தீமை மிகுக்கும் வழியில் திறமையாக ஓடியும், பாகு அடு களிற்றின் பண்புபோல உறுதிகொள்ளாச் சிறுமையின் மிகுந்தும் - யானைப் பாகனைக் கொன்று நெறிப்படாது மீறும் யானையின் இயல்பைப் போல் ஒரு நன்மையை மேற்கொண்டொழுக மாட்டாக் கீழ்மையில் மிகுதிப்பட்டும், ஒருவழி நிலையாது ஓடிப் பலவழிக் கவர்க்கும் என் நிலைமை இல் மனனே - ஒரு முறையிலும் நிலைப்பதில்லாமல் ஓடிப் பலவகையிலும் பிளவுபட்டொழுகு கின்ற எனது நிலைத்தலில்லாத நெஞ்சமே யென்பது. மனனே என்பதன் ஏகாரம் விளி; `மின் திடுமெனத் தோன்றதலுக்கு உவமை; `கொன் பயனின்மைப் பொருளது; கொன்னே வழங்கான் (நாலடியார், 1, 9,) என்புழிப்போல. வாதுவன், குதிரை ஓட்டுவோன் (திவாரகம்). `கலி, இங்குச் செருக்கினை உணர்த்தும் (புறம். 15). பாகு, பாகன், (சிலப்பதிகாரம், 15, 46). சிறுமையின், சிறுமை யின்கண்; கவர்த்தல், பிளவு படுதல் (புறம், 35). ஆவது, ஒரே நினை வாயில்லாமற் பல நினைவுகளுடையதாதலைக் கூறியவாறாம். மனனே (135) அதனான் (128) வெருவர லொழிதியால் (125) என முடிக்க. எனவே, மனனே (135) எனத் தலைவி தனது நெஞ்சத்தை விளித்து, நறுங் கதுப்பொளிரும் பெருஞ் சிறப்பானும் (9) விரிநுத லானும் (12) முடிமேன் மணி எனக் குடிகொளலானும் (15) கதுப்பு மருவுதலானும் (18) ஓவெனும் வடிவொடு மேவுதலானும் (20) மோவாய் நிவந்த முறைமையானும் (23) எயிற்றொடு பொருந்து தலானும் (27) இதழொடு மன்னுதலானும் (30) செவ்வாய் தோன்று மவ்வாற்றானும் (36) மூக்கின் றன்மையானும் (39) பெருவிழியானும் (42) மொழியினானும் (45) பிடரினானும் (48) தோளினானும் (62) வரிமூன்றொழுகிய திருவினானும் (69) வேலினானும் (73) வயிற்றினானும் (77) குறங்கினானும் (82) திருவடியானும் (89) மயின்மேலிருந்து பயிலுதலானும் (116) காட்சியுமுடையன் (117) சிறப்பு முடையன் (118) செய்தியும் உடையன் (123) தோற்றம் மருவுவன் என்று (124) தன் தலைவனாகிய திருவொற்றிச் செவ்வேளின் எழில் நலங்கள் கூறிக், குழவிக் கோலத்தும், அமர்வன் (126) இளமைக் கோலத்தும் பொலிவன தனான் (128) என்றும் அவன் குழவிக்கோலத்திலேயே இருப்ப வனல்லன்; அவன் கட்டிளமைக் கோலத்தின் கண்ணும் பொலிந்து நம்பால் அணுகி நங் காதற்றுயரத்தையுங் கட்டாயந் தீர்ப்பான் காண் எனத் துணிவு விளக்கி, வெருவரல் ஒழிதியால் இன்றே (125) என அறிவுறுத்தியவாறு தெளியற்பாலது. எனவே இச்செய்யுள் எழில் நலங் கூறி நெஞ்சறிவுறுத்தற்கண் வந்தமை காண்க வென்பது. (22) 23. அருடர வேண்டல் மன்னு மொருயானை யூட மறுயானை தன்னுதவி வள்ளி தடமுலைக - டுன்னுவிப்ப வொற்றி நகர்வைகும் வோலோ யொருபெரிதோ பற்றி யெனையாள் பரிசு (இ-ள்). மன்னும் ஒரு யானை ஊட - தனக்கு ஒரு கூறாய்ப் பொருந்துந் தெய்வயானை என்னும் ஒருத்தி தன்னுடன் ஊடுதல் செய்யும்படி, மறுயானை தன் உதவி - தனக்கு முன்னோனான யானை முகக் கடவுளினது அருளுதவியானது, வள்ளி தட முலைகள் துன்னுவிப்ப - வள்ளியம்மையாரின் பெருத்த கொங்கைகளைப் பொருந்துவிப்ப, ஒற்றி நகர் வைகும் வேலோய் - இத்தகைய காதல் விளையாட்டுகளுடன் திருவொற்றி நகரில் எழுந்தருளியிருக்கும் வேற்படையை யுடைய முருகப்பெருமானே, ஒருபெரிதோ பற்றி எனை ஆள் பரிசு - அணுகி ஏழையேனை ஆண்டருளுந் தன்மை தேவரீருக்கு ஒரு பெரிதாகுமோ வென்பது. யானை முகக் கடவுள் இங்கு `யானை யெனப்பட்டார்; அவர், தம் இளவலாகிய ஆறுமுகக் கடவுளுக்கு வள்ளியம்மையை மணங் கூட்டிவைத்த வரலாறு கந்த புராணத்து `வள்ளியம்மை திருமணப் படலத்தில் 110-வது செய்யுளிலிருந்து 115-வது செய்யுள் வரையிற் கூறப்படுதல் காண்க. பரிசு - பண்பு, தன்மை (திவாகரம்); போரும் பரிசு புகன் றனரோ என்றார் திருக்கோவையாரிலும் (182). 24. தோழி தலைவி குறிப்பறிதல் பரிசு பிறிதொன் றறியேன் பருமுத்தப் பைம்பணைசூழ் லிரிபுக ழொற்றி வருவேலர் போலும் விடைக்களிறொன் றரிதிற் பெயர்ந்திங்கு வந்ததுண் டோவென்ப ரங்குசெல்வர் தெரிவிற் பெரியர் செயலோ சிறியரெஞ் சேயிழையே. (இ-ள்) பரிசு பிறிது ஒன்று அறியேன் - உண்மை வகை வேறொன்றுந் தெரிந்திலேன், பருமுத்துப் பைம் பணைசூழ் விரிபுகழ் ஒற்றி வருவேலர் போலும் - பருமையான முத்தங்கள் உள்ள பசியவயல்கள் சூழ்ந்த பரந்த புகழினையுடைய திருவொற்றி நகரின்கண் எழுந்தருளி விளங்கிவரும் வேலவர் போலும் இங்குவந்து என்னை வினாவியவர், விடைக்களிறு ஒன்று - ஆண் யானையொன்று, அரிதின் பெயர்ந்து இங்கு வந்தது உண்டோ என்பர் - எய்த என் அம்பினுக்கு அருமையாகத் தப்பி யோடி இப்பக்கம் வந்ததுண்டோவென என்னை வினவுவர், அங்கு செல்வர் - யான் இல்லை யெனவே அப்பக்கம் போவர், தெரிவில் பெரியர் செயலோ சிறியர் - அவர் அறிவிற் பெரியரா யிருந்தும் அடுத்தடுத்துப் போந்து அங்ஙனம் வினவுஞ் செயலிற் சிறியராயு மிருக்கின்றார்; எம் சேய் இழையே செவ்விய நகைகளை யணிந்த எம் தலைவியே என்பது. இங்குக் கூறப்படும் முத்தம் வயல்களில் விளையும் முத்தமென்க. இங்ஙனமெல்லாங் கூறுங்கால் தலைவிக்கு நெஞ்சங் கடுத்தது காட்டும் வெளிக் குறிப்புகள் கொண்டு தோழி அவளது காதற்கருத்தைத் தெரிந்துகொள்வள். இங்ஙனங் கூறிக் குறிப்பறியு மியல்பு இருங்களியாயின்றியா னிறுமாப்ப என்னுந் திருச்சிற்றம்பலக் கோவையாரினாலும் (52) உணரப்படும். 25. கழற்றெதிர்மறை தெரிவு, அறிவு; இப்பொருட்டாதல் தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர் என்னுஞ் சிலப்பதிகாரத்திற் காண்க. (30, 185). (1-15) இழை நெகிழ் பருவரல் எய்திய மகளிரின் - தாம் அணிந்த அணிகலங்களைக் கழலச் செய்தற்கு ஏதுவான தங் காதலர்ப் பிரிந்த துன்பமுறும் மகளிரைப்போல், மழைத்தடம் தோள்கள் இளைத்துத் தோன்ற - குளிர்ச்சி பொருந்திய பெரிய தோள்கள் மெலிந்து தோன்றவும், பால் கடல்போலத் தூத்தகப் பரந்த நூல்படு கேள்வியும் சீர்ப்படாது ஒழிய - பாற்கடலைப் போல் தூய்மைப்படவிரிந்த நூலாராய்ச்சியின் கண் அடிப்படு கின்ற நினது கேள்வியறிவும் செம்மைப் படாமல் தவறி யொழியவும், சிறுநெறிச்செல்லும் அறியா மாந்தரும் நல்வழிச் செல்லத் தெள்ளிதின் காட்டும் இழுக்கா நடையும் வழுக்கிப் போக - சிறுமையான தீயவழிகளிலே ஒழுகும் நன்மை யறியா மக்களும் நல்ல வழியிலே திருந்தி யொழுகும்படியாக அத்துணை விளங்கக் காட்டும் நினது பழுதுபடாத ஒழுக்கமும் வழுவிப் போகவும், இந்நிலை நீயும் திரியின் - இத்தகைய இழிநிலையில் நீயும் நிலைதிரிவதனால், பின் அதற்குமேல், ஒரு பௌவநீர் வெதும்பின் வளாவுநீர் உண்டோ - ஒரு கடல்நீர் வெப்பங் கொள்வதனால் அதனை வளாவுகின்ற அதனினுங் குளிர்ந்த பெருநீரும் வேறு உண்டோ? இல்லையே; குன்று நிலைதவறிப் பந்துபோல் உருளில் சென்று வழி அடைக்கும் குன்றியும் உண்டோ - ஒரு மலையே தன் இருப்பினின்றும் பிறழ்ந்து பந்து போல் உருண்டு ஓடுமானால் அதனை அதன் எதிரிற்சென்று வழியடைத்து நிலைப்பிக்குஞ் சிறிய குன்றிமணிதானும் உண்டோ? இல்லையே; கடும் களிற்று ஒருத்தல் தொடு மடுத்து உண்ணின் முருங்காது ஓம்பும் பெருங்கலம் உண்டோ - வலிய ஆண்யானை ஒன்று வயலின் உட்புகுந்து உணவு கொள்ளுமானால் அஃத ழியாதபடி பாதுகாக்கும் பெரிய மூடுகலம் ஒன்று உண்டோ? இல்லையே; என்று பல கூறி நின்று - என்று பல அறிவுரை களெல்லாம் எனக்குக் கூறிநின்று, எனை நெருங்கி நன்மை நாடிய என் உயிர் நண்பா - என்னைக் கழறி என் நன்மையை விரும்பிய என் உயிர் நண்பனே என்பது. பிரிவாற்றாத் துன்பம் மகளிரை மெலிவித்தலின் இதற்கு முன் அவருறுப்புகளில் இறுக்கமாயிருந்த அணிகலன்கள் நெகிழ்தல் பற்றி `இழை நெகிழ் பருவரல் எய்திய மகளிரின் என்றார். பருவரல், துன்பம்; தூ, தூய்மை; தூத்தக, தூய்மைப்பட; நீயும் என்னும் உம்மை உயர்வு. வளாவு நீருண்டோ, குன்றியுமுண்டோ, பெருங்கல முண்டோ வென்றது, பாங்கன் தலைமகனைப் பார்த்து, `எல்லா முணர்ந்தொழுகும் பெரியையாகிய நீயே நிலைதவறி நின்றால் நின்னிற் சிறியராகிய ஏனையோருள் நின்னைத் திருத்துவாரும் உளர்கொல் என்று அறிவுறுத்துங் குறிப்புத் தோன்றுதற் பொருட்டு. இவை இங்ஙனமே, குன்றம் உருண்டாற் குன்றி வழியடை யாகாதவாறு போலவும், யானைதொடு உண்ணின் மூடுங் கலம் இல்லது போலவும், கடல் வெதும்பின் வளாவுநீர் இல்லது போலவும் எம்பெருமான் நின் உள்ளம் அறிவு நிறை ஓர்ப்புக் கடைப்பிடியின் வரைத்தன்றிக் கைமிக் கோடுமே யெனின் நின்னைத் தெருட்டற் பால நீர்மையர் உளரோ நீ பிறரைத்தெருட்டினல்லது என இறையனாரகப்பொருள் (3 -ம் நூற்பா) உரையிலும் ஆசிரியர் நக்கீரர் மிகவும் அழகாக உரைத்திருத்தல் நினைவு கூரற்பாலது. `ஒருத்தல், யானை முதலிய விலங்குகளின் ஆணுக்குப் பெயர். இப்பொருள். புல்வாய் புலியுழை மரையே கவரி சொல்லிய கராமோ டொருத்த லொன்றும் வார்கோட் டியானையும் பன்றியு மன்ன என்னுந் தொல்காப்பிய நூற்பாக்களால் (மரபியல், 35, 6) உணரப்படும். களிறுக்குக் கடுமையாவது வலிமை; `கடுமை, வலிமை; `தொடு, வயல்; மருத நிலமும் .............. தொடுவெனலாகும் (10:656) என்பது பிங்கலந்தை. யானை யென்னுங் குறிப்பால் இவ்வயலைக் கரும்பு விளை வயல் எனல் ஒக்கும். `முருங்கல், அழிதல்; குன்றியும், இதன் உம்மை எதிர்மறை. `நெருங்கி யென்றது, இங்கு அருகில் நின்றென்பதன்று, இடித்துரைத்து அல்லது கழறி என்னும் பொருட்டு; தொல் காப்பியங், கற்பியலில் (150) பிழைத்து வந்திருந்த கிழவனை நெருங்கி என்புழி நெருங்கி என்பதற்கு நச்சினார்க்கினியர் `கழறி எனப் பொருளுரைத்ததூஉங் காண்க. (16-17) மறி இளம் கன்று - மான் கன்றுகள், முறி உணும் தாயொடு - தளிரிலைகளைக் கறித்துத் தின்னுந் தத்தந் தாயுடன், குழைப் புதல்தோறும் - இளந்தளிர்கள் நிறைந்துள்ள சிறு தூறுகளிலெல்லாம், குழீஇ உகள - கூடித் துள்ளித்துள்ளிப் பாய்தலாலும்; மறி என்பது மானுக்கும் பெயராதல் யாடுங் குதிரையும் நவ்வியும் உழையும், ஓடும்புல்வாய் உளப்பட மறியே என்னுந் தொல்காப்பிய மரபியற் சூத்திரத்திற் (12) காண்க. புதல், சிறு தூறுகள்; பைம்புதல் எருக்கி (25) என்பது முல்லைப்பாட்டு, `குழீஇ அளபெடை, இங்குச்சொல்லிசை; உகள, உகளலாலுமெனக் காரணப்பொரு ளுரைக்க; மேல் வருவனவெல்லாமும் இங்ஙனமே உரைக்கற்பாலன. உகளல் - துள்ளல், திரிமருப்பிரலை புல்லருந் துகள என்றார் அக நானூற்றிலும் (14). (18-19) வரையாடு வருடை இடைவாய் தாண்டி-மலைகளில் விளையாடுகின்ற `வருடை யென்னும் ஒருவகை மான் இனம் அங்குள்ள மலைப்பிளவுகளைத் தாண்டி, உள்ளம் செருக்கித் துள்ளித் திரிதர - உள்ளம் எழுச்சிகொண்டு குதித்து உலாவு தலாலும்; `வருடை இது `வருடைமான் என ஒருவகை மான். இது வரையாடு வருடைத் தோற்றம் போல (139) என இங்ஙனமே வரும் பட்டினப்பாலையடியின் உரையால் இனிதறியப்படும். `செருக்குதல், இங்கு `எழுச்சிகொள்ளுதல் எனக்கொள்க. மலைகளில் திரிதரும் வேறொருவகை மானினங்கள் மகிழ்ச்சியால் மலைவெடிப்புகளைத் தாண்டி விளையாடுதல் இங்குக் குறிக்கப்பட்டது. (20-21) நிலம்தொட்டு வீழ்ந்த குலுங்கு மயிர்க் கவரி - நிலத்திற் பட்டுக் கீழ்த்தொங்கிய குலுங்குகின்ற மயிர்க்கற்றையை யுடைய `கவரிமா வென்னும் ஒருவகை விலங்கினங்கள், மெல் மெல அசைஇ மேதகச் செல்ல - மெல்ல மெல்ல அசைந்து நடந்து பெருமைப்பட ஏகுதலாலும்; (22-23) முளவுமா தொலைச்சிய வன்கண் கானவர் - முள்ளம் பன்றிகளைக் கொன்ற வன்கண்மை மிக்க வேட்டுவர், ஞெலிகோல் பொத்திய நெருப்பில் காய்ச்ச - அவற்றின் இறைச்சி களைத் தீக்கடை கோலால் உண்டாக்கிய நெருப்பில் இட்டு வதக்குதலாலும்; `முளவு என்பது, முள்ளம் பன்றியின் பெயர்; மூண்டெழு சினத்துச்செங்கண் முளவு முள்ளரிந்து கோத்த (கண்ணப்ப, 20) என்னுந் பெரியபுராணத் திருமொழியில் இப்பொருள் இனிது விளங்குதல் காண்க. முளவுமா தொலைச்சிய என மலைபடு கடாத்தின் கண்ணும் (176) இத்தொடர் இங்ஙனமே வருதல் நினைவு கூரற்பாலது. ஞெலிகோல் - தீக்கடைகோல் எனவும், `பொத்துதல் - கொளுத்துதல் எனவும் பொருடரல், ஒலிகழை பிசைந்த ஞெலிசொரி யொண்பொறி, படுஞெமல் புதையப் பொத்தி என்னும் அகநானுற்றிற் (39) காண்க. (24-26) ஓரி பரந்த - நீலநிறம் பரவிய, தேன் இறால் எடுமார் - தேன்கூட்டினை அழித்தெடுத்தல் வேண்டி, கழைக்கண் குறைத்து - மூங்கிற் கணுக்களைத் தறித்து, நலத்தக இயற்றிய -நன்றாகச் செய்த, மால்பு வைத்து இடந்தொறும் குறவர் ஏற - கண்ணேணி பொருத்தி அம் மலைக்காட்டிடங்களெல்லாங் குறவர் ஏறுதலாலும்; `ஓரி, நீலநிறம்; இப்பொருளுண்மை நீனிறவோரி பாய்ந்தென (524) என்னும் மலைபடுகடாத்தடியாலும், ஓரியென்பது தேன் முதிர்ந்தாற் பரக்கும் நீலநிறம் என்னும் புறநானூற் (109) றுரையாலும் அறியப்படும். `இறால், தேன்கூடு; `எடுமார், வினையெச்சம்; `தீதுமறுங் கறுமார் என்புழிப்போல (புறநானூறு, 93). குறைத்து, தறித்து; `மால்பு மூங்கிலேணி; கண்ணேணியென்பதும் அது; மால்பு கண் ணேணியின் பேர் (7, 54) என்பது சூடாமணி நிகண்டு. `இடந்தொறும், தேன்கூடுகள் தொங்குஞ் செங்குத்தான மலைப்பாறைகளின் இடமெலாமென்பது. குறவர், குறிஞ்சிநில மக்கள்; அவர் வேடர். (27-28) தினைக் குறு மகளிர் - தினைநெல்லை உலக்கையாற் குத்தும் பெண்கள், சுவைப்பட மிழற்றும் கிள்ளை உறக்கும் வள்ளை ஒலிப்ப - செவிக்கு இனிமை யுண்டாகும்படி இசைக்கும் கிளிகளையும் உறங்கவைக்கும் படியான உலக்கைப் பாட்டினை ஒலித்தலாலும்; குறுதல் - குத்துதல் கொல்யானைக் கோட்டால் வெதிர் நெற்குறுவாம் நாம் என்றார் கலித்தொகையிலும் (42). மிழற்றல் - சொல்லல் (திவாகரம்), இங்கே பாடுதல் என்னும் பொருளில் வந்தது. ஊழ்முறை யுலக்கை யோச்சி வாழிய, தகுமனைக் கிழவர் தம் வளங் கூறி, மகளிர் பாடுவது வள்ளைப்பாட்டே என்னுந் திவாகரத்தால் வள்ளை யின்னதென்றுணர்க. `உறக்கும், மென்மை வலித்துப் பிறவினைப்பொருள் பயந்தது. தினைகுறு மகளிர் இசைபடு வள்ளையும் என்னும் மலைபடுகடாத்தடியோடு (342) இதனை யொப்பிட்டு நோக்குக. (29-33) மருப்பு இடைச் சுற்றிய பொருப்பு உயர் வேழத்துப் புழைக்கை ஏய்ப்ப - தந் தந்தங்களிடத்துச் சுற்றிய மலைபோல் உயர்ந்த யானையின் துதிக்கையை ஒப்ப, விழுத்தக முதிர்ந்த தாளொடு வளைந்த குரல் - தினைப்புனத்து நன்றாக முற்றிய தாள்களுடன் நுனிவளைந்த கதிர்களையுடைய தினைப்பயிர்கள் உள்ள புனத்தின்கண், படுகிளி ஓப்பும் விடுகவண் சுழற்றி - அப்புனத்திலே விளைந்த தினைக்கதிர்களைக் கொண்டுபோக வந்து விழுகின்ற கிளிகளை ஓட்டுகின்ற கல்விடு கவணைக் கையிற் சுற்றியபடியாய், கோல்வளைக் கொடிச்சி - திரட்சி யமைந்த வளையல்களை யணிந்த குறத்தியர், மேல் இதண் அமர - உயர்ந்து மேலே உள்ள பரணிற் பொலிவுடனிருத்தலாலும்; `சுற்றிய புழைக்கை யெனக் கொள்க. மருப்பிடைச் சுற்றிய புழைக் கை, தாளொடு வளைந்த குரல் தினைப்பயிர்க்கு உவமை; குரல், கதிர்; `நெற்குரல் கௌவிய (2) வென முதற்செய்யுளின் கண்ணும் இஃதிப்பொருளில் வந்தமை காண்க. `ஒப்புதல், ஓட்டுதல்; விடுகவண், எறிகவண்; ஆவது கல்லெறி கவண். `கோள்வளை திரட்சி பொருந்திய வளையல்; ஆய்கோ லவிர் தொடி என்னும் மதுரைக்காஞ்சியில் (563) இச் சொல் இப்பொருளில் வருதல் காண்க. `இதண், பரண்; நெட்டிதண் ஏறும் இப் புனத்தினளே (53) என்பது கல்லாடம். இப் பகுதியைக் குறிஞ்சிப்பாட்டிற் போந்த நெற்கொள் நெடுவெதிர்க் கணந்த யானை முத்தார் மருப்பின் இறங்குகை கடுப்பத் துய்த்தலை வாங்கிய புனிறுதீர் பெருங்குரல் நற்கோட் சிறுதினைப் படுபுள் ஓப்பி என்னும் பகுதியோடு (35-38) ஒப்பிட்டு நோக்குக. (34-35) இரும்கல் வியல் அறை வரிப்ப - பெரிய அகன்ற கற்பாறைமேல் தங்கிளைகள் பட்டுக் கீறும்படியாக, தாஅய நலம்உறு வேங்கை பொலம் வீ உகுப்ப - பரந்த அழகுமிக்க வேங்கைமரங்கள் பொன்னிறமான தம் பூக்களைக் கீழே சொரிதலாலும்; வரித்தல் - கீறல், கோலஞ்செய்தல், எழுதல் என்னும் பொருளது; தாய- பரந்த; இச்சொற்கள் காயாஞ்செம்மல் தாஅய்ப் பலவுடன், ஈயன்மூதாய் வரிப்ப என அகநானூற்றில் (14) இப்பொருளில் வருதல் காண்க. `இருங்கல்வியலறை என்னும் இச் சொற்றொடர் குறுந்தொகையில் நிரைவளை முன்கை (335) என்னுஞ் செய்யுளில் வருதல் காண்க. நலம், இங்கு அழகு, இளநலம் காட்டி (திருமுருகாற்றுப் படை, 290) என்புழிப்போல. பொலம், பொன்னிறம். (36-42) தேக்குஇலை புய்த்த புன்தலைச் சிறாஅர் - தேக்கிலைகளைப் பறித்த புல்லிய தலையினையுடைய குறச் சிறுவர்கள், மீக்கிளர் கோட்டில் பரிதியின் தொடுத்த தேத்தடை பிறைக்கோடு உழுதெனக் கீண்டு - மேலே வளர்ந்து விளங்கிய மலையின் கொடுமுடியில் ஞாயிறு போற் கட்டப்பட்ட தேனடையினை நிலாவின் வளைந்த நுனியானது உழுதுவிடவே அதனாற் கீறுண்டு, மாயோன் மார்பில் செஞ்சேறு கடுப்பப் பாயிழியும் படுநறவு முகந்து - திருமாலின் மார்பின்மேற் பூசிய சிவந்த நறுமணக்குழம்பை ஒப்பப் பாய்ந்தொழுகுகின்ற இனியதேனை ஓர் ஏனத்தில் முகந்துவந்து, பசும் தினைப் பிண்டியோடு அசும்புஉற அளாய் - புதிய தினைமாவுடன் அத் தேன் துளிக்கும்படி கலந்து, நிரைநிரை வைத்து விரைவொடும் ஆர - வரிசைவரிசையாக வைத்து விரைவாக உண்ணுதலாலும்; `புய்த்தல், பறித்தல்; கோடுபுய்க்கல்லாதுழக்கும் நாடகேள் (38) எனக் கலித்தொகையில் இஃதுஇப்பொருளில் வருதல்கண்டு கொள்க; இச்சொல் இக்காலத்திற் `பிய்த்தல் என வழங்குகின்றது. வேட்டுவச்சிறார் எண்ணெய் முழுக்குக் காணாமையின் அவர் தந்தலைமயிர் பழுப்புநிறமா யிருத்தல் பற்றிப் புன்றலைச் சிறார் என்றார்; புன்மை - பழுப்பு நிறம் (பிங்கலந்தை). `பரிதியும் பிறைக்கோடுங் கூறியது மலையின் உயர்ந் தோங்கிய உச்சியைக் குறித்தற் பொருட்டென்க. தேன், அடை என்பன ஒற்றுமிகு தகரமொடு நிற்றலும் உரித்தே என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்தால் (புள்ளி மயங்கியல், 49) நிலைமொழிஈறு கெட்டு இடையே தகரவொற்று இரண்டுபெற்றுத் `தேத்தடை யெனப் புணர்ந்தன. `கீண்டு, கீறுண்டு (திவாகரம்); கீண்ட பாறொறும் (அசுரர்தோ. 15) எனக் கந்தபுராணத்தும் போந்தது. திருமகள் ஞெமுங்கப் புல்லுதலின், அவள் மார்பத்தின் செஞ்சேறு திருமால் மார்பின்கண்ணும் பொருந்துவதாயிற்று. படுநறவு, சுவைபடுநறவு; பிண்டி-மா; `அசும்பு நீர்த்துளி; அசும்பினிற் றுன்னி என்னுந் திருச்சிற்றம்பலக்கோவை யாரில் (1`49) இப்பொருட்டாய் வருதல் காண்க. இப்பகுதியின் கட் காட்டப்பட்டுள்ள உவமைகள் மிக்க புலமைத் திறம் வாய்ந்தவை. (43) கண்களி கொள்ளும் பன்மலையடுக்கத்து - கண்கள் கண்டு மகிழ்ச்சியடைகின்ற பலமலைகளை யடுத்த மலைச்சாரலில், அடுக்கம் - மலைச்சாரல், (புறநானூறு, 168). `அடுக்கத்து ஏழன் உருபு விரித்துக்கொள்க. உகள (17) திரிதர (19) செல்ல (21) காய்ச்ச (23) ஏற (26) ஒலிப்ப (28) அமர (33) உகுப்ப (35) ஆர (42) கண்களிகொள்ளும் பன்மலையடுக்கத்து (43) எனத் தொடர்ந்துகொள்க வென்பது. (44-53) மரவமும் - குங்கும மரமும்; குரவமும் - குராமரமும், பொரிகெழு புன்கும்- நெற்பொரிபோன்ற பூக்களையுடைய புன்க மரமும், எரிகிளர் செயலையும் - தீ எரிதலை ஒப்ப விளங்கும் அசோக மரமும், விரி இணர் மாவும் - விரிந்த பூங் கொத்து களுடைய மாமரமும், பராரைச் சாந்தும் - பருத்த அரைகளை யுடைய சந்தன மரமும், பாவை ஞாழலும் - சித்திரப் பாவைபோல் விளங்கும் மலர்களையுடைய அழகிய கோங்க மரமும், விரிதலை வாழையும் - தலைவிரிதலுள்ள வாழை மரமும், வியன் சினைப் பலவும் - பெரிய பெரிய கிளைகளையுடைய பலாமரமும், கொன்றையும் - கொன்றை மரமும், புன்னையும் - புன்னை மரமும், `துன்றிய நறவமும் - அடர்ந்துள்ள அனிச்ச மரம், என இவைகள், குழைமுகம் தோற்றி - தளிர் நுனிகளைத் தோற்றி, கொழுநனை அரும்பி - கொழுமையான மொக்குகள் அரும்பெடுத்து, புரிஅவிழ் மலரில் சிறுவடுக் கிளர்ந்து - அவ்வரும்புகள் கட்டவிழ்ந்து மலர்ந்த மலர்களிற் சிறிய வடுக்கள் விளங்கி, தீவிளியாகி - பசுங்காய் ஆகி, தீம் கனி தூங்கி - இனிய பழங்கள் தொங்கவிட்டு, தண்ணிழல் பயந்து - குளிர்ந்த நிழலைத் தந்து, கண் கவர் வனப்பின் - கண்களைக் கவர்கின்ற அழகுடையதாய், முகில் கண்ணுறங்கத் தலைமையொடு பொலிமே ஒருபால் - மேகங்கள் தன் உச்சியில் அமர்ந்து உறக்கங் கொள்ளுமாறு அம்மலைச்சாரற் சோலை உயர்வுடன் விளங்கும் ஒரு பக்கலில் என்பது. மரவம் - குங்குமமரம் (திவாகரம்). குரவம் - பாவைபோன்ற பூக்களுடைய ஒருவகைமரம், நறமலர்க் குரவம்பாவை, நிறையப் பூத்தணிந்து என்றார் சிந்தாமணியிலும் (1270). புன்கமரத்தின் பூக்கள் நெற்பொரி போன்றிருத்தலின் `பொரிகெழுபுன்கு என்றார்; பொரியெனப் புன்கு அவிழ் அகன்றுறை என்பது அகநானூறு (116). தீக்கொழுந்து எரிதல்போல் அத்துணைச் செவ்வொளியுடன் அசோகின் தளிர்கள் விளங்குதலால் `எரிகிளர் செயலை எனப்பட்டது. அத்தச் செயலைத் துப்புறழ் ஒண்தளிர் (273) என்னும் ஐங்குறுநூற் றடியின்கண்ணும் இவ்வியல்பு துப்பு உறழ் ஒண்தளிர் என்று கிளந்தோதப்படுதல் காண்க. ஞாழல் - கோங்கமரம் (திவாகரம்). நறவம் - அனிச்சமரம் (திவாகரம்). பருமை அரை, பராரையெனத் திரிந்தது; பராரை மராஅத்து (திருமுருகாற்றுப்படை, ) என்புழிப்போல. `வடு வென்பது, இங்குப் பிஞ்சுகள் தோன்றும் வடு. தீவிளி - பசுங் காய் (பிங்கலந்தை). `தூங்கல் தொங்கலென்னும் பொருட்டு. முகில்கள் தவழும்படி அத்துணை உயரமாய்ச் சோலைகள் விளங்கினவென்க. `பொலிமே யென்னுஞ் செய்யுமென்னு முற்றில் ஈற்றயல் உகரத்தொடுங் கெட்டது. (54-64) சுளைநிரை அமைந்த கொழும் பழம் தூக்கி - சுளைகள் வரிசையாய் அமைந்த கொழுவிய கனிகளைத் தொங்கவிட்டு, குறுமலர் அவிழ்ந்த நறுவிரை தெளித்து - தன் சிறிய பூக்கள் மலர்ந்தமையால் இனிய மணம் பரப்பி, வீசுகால் அசையும் பாசிலை நரந்தமும் - வீசுகின்ற காற்றினால் அசையும் பசுமையான இலைகள் நிரம்பிய நாரத்த மரங்களும், நலன்உறு மகளிர் இலவு இதழ் கதுவிய முறுவல் அன்ன - அழகு வாய்ந்த மகளிரின் இலவம்பூவி னிதழை ஒக்கும் இதழ்களின் செந்நிறத்தைப் பற்றிய முளைப்பற்கள் ஒப்ப, சிறுவிதை பெய்த பொலன் குடம் எடுத்த உலவை மாதுளையும் - சிறிய வித்துக்கள் உள்ளிட்ட பொற்குடம் ஒக்கும் பழங்கள் தூக்கிய கோடுகளையுடைய மாதுள மரங்களும், கருமணி புரையும் ஒரு கனி நாவலும் - கருமையான மணியை ஒக்கும் ஒப்பற்ற பழங்களையுடைய நாவன் மரங்களும், உவர்க்கழி மணக்கும் துவர்க்கால் வகளமும் - உவர்த்த நீருள்ள கழியிடங்களும் மணக்குமாறு நறுமணங் கமழுஞ் சிவந்த காம்புகளுள்ள பூக்கள் நிறைந்த மகிழ மரமும், பொன்திரள் கடுப்பத் தெற்றென விளங்கும் எழில்கனி பழுத்த எலுமிச்சம் புதலும் - பொன்னுருண்டை ஒப்பத் தெளிவாய் விளங்கும் அழகிய கனிகள் பழுத்த எலுமிச்சம் புதர்களும், காவதம் கமழ மேவுவஅன்றே ஒருபால் - காவதத்தொலைவு மணங்கமழும்படி அம்மலைச்சோலையி னொரு பக்கலிற் பொருந்தி நிற்பனவாகும்; அன்று ஏ அசைநிலை. நிரை, வரிசை; பசுமைஇலை, பாசிலை; `நரந்தம் நாரந்த மரம், (குறிஞ்சிப்பாட்டு, 94). நலன், `அழகு; பூநலம் என்பதற்குப் `பூவினாகிய அழகு என்று பரிமேலழகியார் உரைகூறினார் (பரிபாடல், 16, 18). இலவிதழ் மாதுளவிதைகளின் ஒருபாற் செம்மைக்கும் முறுவல் ஒருபால் வெண்மைக்கும் உவமைகள். `பொலன்குட் மென்பது ஈண்டுச் சிறு பொற்குடம் போற்றோன்றும் மாதுளம்பழத்திற்கு ஆயது உவமையாகுபெயர். உலவை மரக்கொம்பு (திவாகரம்). வகுளம் - மகிழமரம் (திவாகரம்); துவர்க்கால் - பவளநிறம் உள்ள காம்பு; அதனையுடைய மலரும் அம்மலரையுடைய மரமும் ஈண்டு `வகுளம் எனப்பட்டன; இப்பவளக்கால் மல்லிகை யினையுந் தமிழ் நாட்டவர் `மகிழ் என்கின்றனர்; பவளநிறக்காம்பு இல்லாத வேறொரு வகையினையும் `மகிழ் என்கின்றனர். `காவத மென்பது இரண்டேகாற்கல்; இது முன்னுங் காட்டப்பட்டது. (65-78) குலிகம் ஊட்டிய தலைமையின் திகழ்ந்து - செந்நிறம் ஏற்றிய மேன்மையில் விளங்கி, நவ்வி நோக்கியர் செவ்வாய்போல - மான் பார்வையினரான மகளிரது சிவந்த வாய்போன்ற, கொழும் கனி உடைய கொவ்வைக் கொடியும் - கொழுவிய பழங்களையுடைய கொவ்வைக் கொடிகளும், கற்பு உடை மகளிர் முற்படச் சூடும் வரிசையின் மிகுந்த பரிசு உடை முல்லையும் - கற்பொழுக்கமுள்ள மாதர் முதன்மையாகச் சூடிக்கொள்ளுந் தகுதியின் மேம்பட்ட பெருமையினையுடைய முல்லைக் கொடிகளும், தின்பது கல்லாப் புன்தலை மந்திகறித்துத் துள்ளும் கறிவளர் கொடியும் - வகைதெரிந்து தீனி தின்னுதலை இன்னுந் தெரியாத சிறிய தலையினையுடைய குரங்குக்குட்டிகள் தம்பற்களாற் கடித்து உறைப்பினைத் தாங்காமல் துள்ளுகின்ற மிளகுகாய்கள் வளர்கின்ற மிளகுகொடிகளும், அணில் புறம் கடுக்கும் வரியுடைக் கொடும்காய் கொள்ளையில் காய்த்த வெள்ளரிக் கொடியும் - அணிற்பிள்ளையின் முதுகினை ஒக்கும் மூன்றுவரிகளுள்ள வளைந்த வெள்ளரிக்காய்கள் மிகுதியாகக் காய்த்த வெள்ளரிக்கொடிகளும், சொல்உயர் மரபின் மெல் இலைக் கொடியும் - புகழ்மிக்க தன்மையினையுடைய வெற்றிலைக் கொடிகளும், சிறுபளிக்கு உருண்டை செறிவுறுத்தனைய தீம் கனிக் குலைகள் தூங்க வயின்வயின் நந்தாது வளரும் முந்திரிக் கொடியும் - சிறிய கண்ணாடி உருண்டைகள் ஒரு கொத்தாக நெருக்கி வைத்தாற்போல இனிய பழக்குலைகள் தொங்கா நிற்க இடந்தொறுங் கெடாது வளர்கின்ற கொடிமுந்திரிக் கொடிகளும், இடைஇடை தாஅய் மிடையுமால் ஒருபால் - இடையிடையே தாவிப் பின்னித் தோன்றும் மற்றொருபக்கத்தே என்பது. குலிகம், செந்நிறம் (திவாகரம்). `நோக்கி யென்பதன் இகரம் பெண்பால் விகுதி. கணவனைப் பிரிந்து அவன் பிரிவுன்னித் தங் கற்பினைப் பேணும் மகளிரது ஒழுக்கமே முல்லையொழுக்கமாகலின், `கற்புடை மகளிர் சூடும் முல்லை யென அஃதிங்குக் கிளந்து கூறப்பட்ட. கற்பொடு பொருந்திக் கணவன்சொற் பிழையாது இல்லிருந்து நல்லறஞ் செய்தல் மகளிரது இயற்கை முல்லை யாதலின் அது முற்கூறப்பட்டது என்பர் நச்சினார்க்கினியர் (தொல்காப்பியம், அகத்திணையியல், 5). வரிசை - தகுதி (சிறுபாணாற்றுப்படை, 217). மிளகுகாய்கள் காரமுடையவாகலின் அவற்றைத் தின்றால் நா எரியும் என்பதைத் தெரியா இளங்குட்டிகள் என்பார் தின்பது கல்லாப் புன்றலை மந்தி என்றார். `துள்ளுங்கறி துள்ளுதற்கேதுவாகிய கறி எனக் காரிய காரணப் பொருட்டு. வெள்ளரிக்காய் அணில் முதுகுபோல் வரிகள் உடைமை, அணில்வரிக் கொடுங்காய் என்னும் புறநானூற்றினாலும் (246) அறியப்படும். மெல்லிலை - வெற்றிலை, (சீவகசிந்தாமணி, 62); வாயினுட் பெய்து மெல்லப்படுதலின் வெற்றிலை `மெல்லிலை எனப் பெயர் பெறலாயிற்று; வினைத்தொகை; எல்லாச் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் வெற்றிலை வழங்கப்படும் புகழுடையதாகலிற் `சொல்லுயர் மரபின் என்று அடைகொடுத்தார். செறிவுறுத்தல் - நெருங்கச்சேர்த்தல், செறவினைப் பொலிந்த செம்பூங் கண்ணியன் (பரிபாடல், 22, 21) என்புழிப்போல. `நந்தாது, கெடாமல்; நந்தாவிளக்கு (சிந்தாமணி, 3144); நாடற்கரிய நலத்தை நந்தாத் தேனை (திருவாசகம், திருப்பொற் சுண்ணம், 15) என்றருளிச்செய்வர் மணிவாசகப்பெருமான். தாஅய் - தாவி, கலைதாய உயர்சிமையத்து என்னும் மதுரைக் காஞ்சியிற் (332) போல. (79-81) நடுவில் - இத்தகைய சோலையின்நடுவில், பாய்ஒளி மதியம் - பரவிய ஒளியினையுடைய திங்களானது, பரிதிவெம்மை யின் - கதிரவன் வெம்மையினால், இளகிப் புனலாய் இழிந்தது கடுப்ப - உருகி நீராய்க் கீழே ஒழுகிப் பரவியதுபோல, தெளிநீர் வாவி ஒன்றுஉளது - தெளிந்த நீரினையுடைய குளம் ஒன்று உள்ளது; மதியமே இளகி நீராய் இழிந்ததென்றது, நீரின் குளிர்ச்சி தூய்மை சுவை நன்மை மினுமினுப்பு தெளிவு முதலியவற்றிற் கென்க. `கடுப்ப உவமஉருபு; தேங்கமழ் மருதிணர் கடுப்ப (திருமுருகு, 34) என்புழிப்போல. இவ்வுவமை மிக அழகிது. (81-84) அது சிறுகால்தோறும் உறுநீர் ஒழுக்கி - அந்தக் குளம் சிறுசிறு வாய்க்கால் கடோறும் மிகுந்த நீரினை ஒழுகச்செய்து, வாலுகம் பரந்த கோலிய பாத்தியில் - வெண்மணல் நிரம்பிய வளைத்தமைக்கப்பட்ட பாத்தியின்கண், பச்சிளம்புல்லை நிச்சலும் வளர்க்கும் - பசுமையான இளம்புல்லை என்றும் வளரச் செய்யும்; அதான்று, அதுவுமல்லாமல்; மற்று, அசை; உறுநீர், மிக்கநீர்; வாலுகம் - வெண்மணல்; வேலைவாலுகத்து என்னுஞ் சிலப்பதிகாரத்திலுங் காண்க. (6, 131). பாத்தி, சிறுவயல்; கரும்பின் பாத்தி என்பது பதிற்றுப் பத்து (13, 3). `நிச்சல் என்னுஞ் சொல்லும் பொருளும் முன்னே விளக்கப் பட்டன. (85-98) அன்னச் சேவல் அணிமயிர்ப் பெடையொடும் பொன்னம் தாமரை பொலிந்து வீற்றிருப்பவும் - அன்னப் பறவையின் ஆண் அழகிய தூவியினையுடைய தனது பெண் அன்னத்துடன் பொன்போன்ற அழகிய செந்தாமரை மலரின் மேற் காதலினால் விளங்கி ஒன்றாய் மகிழ்ந்திருக்கவும், நித்திலம் பயந்த நத்து-முத்துகளீன்ற சங்கங்கள், வான் மடுவில் - வானமாகிய நீர் நிலையில், மீன்இனம் வளைஇய நாள்மதிபோல - விண்மீன் கூட்டங்கள் சூழ்ந்த முழுநிலாப்போல, பால் கெழு மரபின் பரந்து செல்லவும் - தன்பக்கத்தே பொருந்திய தன்மையுடன் பரவி ஏகவும், கொழும் கயல் மாதர் விழி என மிளிரவும் - கொழுமை யான கெண்டை மீன்கள் மகளிருடைய கண்கள் போற் புரளவும், கருவெரிந்உடைய பருவரால் உகளவும் - கரிய முதுகினையுடைய பருத்த வரால் மீன்கள் அங்குமிங்கும் புரளவும், முற்றாமஞ்சள் சிறுபுறம் கடுக்கும் இறவு கரை மருங்கில் சுரிந்து துள்ளவும் - முற்றாத பசுமஞ்சட் கிழங்கின் சிறிய முதுகினை ஒக்கும் இறாமீன் கரையருகிற் சுருண்டு துள்ளவும், சிறுவளி எடுப்பச் சிறுதிரை எழீஇ முறைமுறை உராஅய்க் கரையினைச் சாரவும் - சிறுகாற்று எழுப்ப அதனால் மெல்லிய சிற்றலைகள் எழுந்து ஒன்றன்பின் ஒன்றாய்ப் பரந்துசென்று கரையினைப் பொருந்தவும், செழுநீர்க் குவளையும் கழுநீர்ப்போதும் முழுநெறி ஆம்பலும் கழியவும் குழுமிக் காண்போய் பிணிக்கும் மாண்பினது - செழுமையான நீர்க்குவளையென்னும் நீலப்பூவும் செங்கழுநீர்மலரும் அல்லி பாட்டும் மிகுதியும் நிறைந்து காண்பவர் உள்ளத்தைத் தன்வயப் படுத்தும் மாட்சியினை யுடையதாகும் அக்குளம் என்பது. அன்னத்தின் தூவி மருவுதற்கு மென்மைதரு மாகலின், `அணிமயிர்ப்பெடை யென இங்குச் சிறப்பிக்கப்பட்டது. `பொலிந்தெனற்குக் `காதலால்விளங்கியென உரை கொள்ளல் சிறப்பு. `வீற்றிருத்தல், இங்கு `மகிழ்வுடனிருந்த வென்னும் பொருட்; புறப்பொருள் வெண்பாமாலை யுரையிற் `செம்மாந்திருத்த லென்பர் (9,20). சேவல், ஆண்; பெடை, பெண். நாண்மதி, பருவநாளின் மதி; ஆவது முழுநிலா. மிளிர்தல். புரளல் (சிந்தாமணி, 13, 84). சுரிதல், சுழித்தல். இறாமீன் முதுகு, முற்றாத மஞ்சட்கிழங்கின் முதுகுபோன் றிருத்தல், முற்றாமஞ்சட் பசும்புறங்கடுப்பச் சுற்றியபிணர சூழ்கழி யிறவின் என்னும் நற்றிணைச் செய்யுளுள்ளுங் காண்க. (101). உராய் - பரந்துசென்று, (மதுரைக்காஞ்சி, 125). கழுநீர்ப் பிணையன் முழுநெறி பிறழ (மனையறம், 34) எனவருஞ் சிலப்பதிகாரத்துக்கும் உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் `இதழொடியாது கட்டின கழுநீர்ப் பிணையலுங் குலைந் தலைய என்று முழுநெறிக்கு இதழொடியாமைப் பொருள் கிளப்பர். `பிணித்தல் தன்வயப்படுத்தல் என்னும் பொருட்டாதல், கேட்டார்ப்பிணிக்குந் தகையவாய் என்னுந் திருக்குறளால் (643) அறியப்படும். (98-103) ஆங்கு - அம்மலைச்சாரலிடத்தே, பொதியச் சாந்தம் ததைய அசைஇ - பொதியமலையின் சந்தனமணம் நிறைய உலாவி, அரும்பு அற விரிந்த நறும்பு அளைஇ - முகையாந்தன்மை நீங்க மலர்ந்த மணமுள்ள மலர்களைத் துழாவி, விரையும் தாதும் நிறையமுகந்து - முறையே நறுமணமும், மகரந்தமும் நிரம்ப அள்ளிக்கொண்டு, தலைத்தலை வீசி நலத்தக உலாஅம் தென்றலும் என்றும் ஓவாது - இடந்தொறும் வீசி இனிமையாக அசையுந் தென்றற்காற்றும் எந்நேரமும் நீங்காது; அதாஅன்று - அதுவுமன்றி; சாந்தத்தினின்று விரையும், நறும்பூவினின்று தாதும் முகந்தென நிரல் நிரையாக் கொள்க. `ததைய, நிறைய, ததை இலை வாழை (47, 10) என்பது ஐங்குறுநூறு. (104-125) குன்றிக் கண்ண குயில்க ளெங்கும் துன்றிய மகிழ்வின் நன்று கூவும்மே - குன்றிமணியின் செந்நிறமுங் கரும் புள்ளியும்போற் சுற்றச் செந்நிறமும் நடுவிற் கருநிறமும் வாய்ந்த விழிகளை யுடையவான குயிற் பறவைகள் அச்சோலை யெங்கும் மிகுந்த களிப்பினால் இனிதாகக் கூவாநிற்கும்; ஆடு வால் சிரல்கள் நாடொறும் கூடி ஓடுமீன் அருந்தி வீடுறா - ஆடுகின்ற வாலையுடைய சிச்சிலியென்னும் ஒருவகைக் குருவிகள் நாடோறும் ஒன்றுசேர்ந்து அந்நீர் நிலையில் ஓடுகின்ற சிறு மீன்களைக் கௌவி விழுங்கி என்றும் அவ்விடத்தைவிட்டு நீங்கா; துகிர் கோத்த அன்ன உகிருடைச் சிறுகால் புற மரப் பொதும்பின் இறைகூரும்மே - பவளங்களை ஒன்று கோத்தாற்போன்ற நகங் களையுடைய சிறுகாலினையுடைய புறாக்கள் மரப்பொந்தின் கண் தங்காநிற்கும், தூங்கணம் குரீஇப் பாங்குபடத் தெற்றிய அருந்தொழில் குடம்பையின் பொருந்தும் - தூக்கணங் குருவிகள் தாம் அழகுபடப் பின்னிய அரிய வேலைப்பாடுடைய கூடுகளில் அடையும், பைம் சிறைக்கிள்ளை ஒருகால் தூக்கிப் புன்சிறு கிளையில் கண்துயில் கொளுமே - பசுமையான இறக்கைகளை யுடைய கிளிகள் தமது ஒருகாலைத் தூக்கிக் கொண்டு மெல்லிய சிறு கிளைகளில் நின்று கண்கள் தூக்கங்கொள்ளும், அறுவை மடித்தன்ன பறைகெழு நாரை சிறுகால்தோறும் வரும் மீன் நோக்கித் தொகுதியாக மிகுதியொடு வதிமே - மெல்லிய வெள்ளைத் துணியை மடித்தாற்போன்ற இறக்கைகள் பொருந்திய நாரைகள் சிறிய வாய்க்கால்கடோறும் ஓடிவருகின்ற மீன்களை எதிர்பார்த்துக் கொண்டு கூட்டமாக மனக்கிளர்ச்சியுடன் தங்கியிருக்கும், வண்டும் தேனும்வரிக்கடைப் பிரசமும் இம்மென முரன்று நன்மலர்தோறும் அளிநற மாந்திக் கலிகூரும்மே - வண்டும் தேன்வண்டும் வரிவண்டும் தேனீயும் என்பன இம்மென்னும் ஒலியுண்டாக ஒலித்து நல்ல மலர்கள் தோறுஞ் சென்று முதிர்ந்த தேன் பருகி மகிழ்ச்சிமிகும், பூவாக்கண்ண தோகை விரித்து முளை இள ஞாயிற்று இளவெயில் எறிப்பப் பீடுறு மஞ்ஞை ஆடுறும் - இயற்கையே திறந்திருப்பதல்லது இடையே திறவாத கண்களையுடையவான தம் தோகைகளை வட்டமாய் விரித்துக் காலையிற் றோன்றும் இளங்கதிரோனது மென்மையான வெயில்ஒளி வீச அப்போழ்து பெருமை மிக்க மயிலினங்கள் விளையாடா நிற்கும், இன்னும் கூறல்வேண்டின் - இன்னும் எடுத்துச் சொல்ல வேண்டுமானால், பின்னும் - மேலும், என் சொல் அளவு அமையா - எனது சொல்வரம்பிலமையாத, மல்லல் அம்பொதும்பர்ப் பல்பெரும் சிறப்பும் கண்டிலை - அத்துணைச் செழுமையான அழகிய அம் மரச்சோலையின் பல பெருஞ்சிறப்புக்களும் நீ கண்டனையல்லை யெனவே கூறல் தகும் என்பது. இப் பகுதியிற் சோலைவளம் மிக அழகாகக் கூறப் பட்டிருக்கின்றது. கண்ண, குறிப்பு முற்றெச்சம்; கண்ணவான குயில்களெனக் கொள்க. `துன்றுதல், நெருங்குதல்; அஃதிங்கு `மிகுந்த வென்னுங் கருத்துப்பட வந்தது. குயிற்பறவையின் கண் குன்றிமணியைப் போலிருத்தல், குன்றிச் செங்கண் இன்றுணைப்பேடை என்னும் பெருங்கதை யினுள்ளுங் காணப்படும் (3,6, 11). `சிரல் என்பது சிச்சிலிக்குருவி; இது மறிந்து நீங்கு மணிச் சிரல் காணென (பளிக்க, 24) என மணிமேலையின் கண்ணும் வருதல் காண்க. வீடு விடுதல்; நீங்கல்; உயிர்க்கொலை புரிதலால் இறைவனது வீட்டுலகினை எய்தா என ஒரு பொருள் தோன்று தலுங் கண்டுகொள்க. அன்றும் ஏவும் அசை மேல்வருவனவும் அன்ன. புறாவின் கால் பவளங் கோத்தாற்போ லிருத்தல், கொள்ப வளங் கோத்தனைய கால என்னுஞ் சிந்தாமணியுள்ளுங் காணப்படும். (70). `துகிர் கோத்த அன்ன உகிர் என்னும் உவமை பெரிதும் உணர்ந்து இன்புறம் பாலது. `இறைகூரல் தங்கல் என்னும் பொருட்டு; இறைகூரும் (142) என ஐங்குறுநூற்றின் கண்ணும் வந்தது. குரீஇ - குருவி, உள்ளிறைக்குரீஇ (நற்றிணை, 181) தெற்றுதல், பின்னல்; குடம்பை, பறவைக்கூடு; பிங்கலந்தை. கிள்ளை, கிளி; கொளுமே, ளகரம் தொகுத்தல்; பறை-இறகு, பிங்கலந்தை. வதியுமே யென்பது ஈற்றய லுகரம் மெய்யொடுங் கெட்டு `வதிமே யென்றாயிற்று. வண்டினங்களில் நால்வகை வண்டினங்கள் இங்குக் கூறப்பட்டன; தேன், தேன்வண்டு; வரிக்கடை - வரிவண்டு (திவாகரம்). பிரசம் - தேனீ (பிங்கலந்தை). அளி, முதிர்ச்சி, அளிந்த தீம்பழம் (சிந்தாமணி, 2682). நறா, தேன். மயிற்றோகையின் கண்கள் திறந்துமூடும் மக்கள் கண் போலாது இயற்கையிற் றிறந்தபடியே யிருத்தலின் பூவாக் கண்ண என்றார். முளை, வினைச்சொல்; அப்போழ்து என ஒருசொல் வருவிக்க ஆடுறும், - ஆடும்; ஈற்றிற் கண்டிலை எனவே கூறல் தகும் எனச் சிலசொற்கள் எச்சமாக வருவித்துக்கொள்க. மல்லல் - செழுமை. (125-147) அன்றி ஆங்கு - அல்லது அப்பொதும்பரின்கண், அனிச்சம் மேல் படினும் தனித்துயர் உழக்கும் தழைமலர்ச் சீறடி குழைபட நடந்து - அனிச்சமலரின்மேற் பட்டாலும் மிக்க துன்ப மடையுந் தழைந்த செந்தாமரை மலரனைய சிறிய திருவடிகள் தசைமெல்ல நடந்து, பொழிலிடம் புகுந்து - சோலையுள் நுழைந்து, பூம் தடமருங்கில் - பூக்கள் நிறைந்த அக்குளத்தருகில், விழைதக நின்ற பழுதில் பாவையை - விருப்பமுண்டாகும்படி நின்ற குற்றமில்லாத பாவை போல்வாளை, என்உளம் என்னும் தன் அமர் கிழியில் - எனது உள்ளமென்னுந் தனக்குப்பொருந்திய இரட்டுத் துணியில், வழுவின்று எழுதிய எழில் ஓவியத்தை - பிழையில்லாமல் எழுதிய அழகு சித்திரம் போல்வாளை, அமிழ்து பொதி துவர்வாய்க் கிளவி சில மிழற்றும் - அமிழ்தம் நிறைந்த தனது சிவந்த வாயிலிருந்து சொற்கள் சில பேசும், மாநிறம் கொண்ட தூ நிறக் கிளியை - பசுமை நிறம் கொண்ட தூய உருவினையுடைய கிளிபோல்வாளை, காடு உறை வாழ்க்கை தன் இனம் பிரிந்து - காட்டில் வாழ்கின்ற வாழ்க்கையை யுடைய தன் கூட்டத்தை விட்டு நீங்கி, நாடு உறை வாழ்க்கை நன்கனம் மருவிய - நாட்டின்கண் வாழும் வாழ்க்கையை நல்லபடியாகப் பொருந்திய, குடம் மாண் கொங்கை மடமான் பிணையை - குடங்கள் போன்ற பெரிய கொங்கைகளை யுடைய இளமான்பேடு போல்வாளை, கிளிச்சிறை என்னும் பழிப்புஅறு பசும்பொன் கரைத்து - கிளிச்சிறை என்னும் மாசற்ற ஒருவகைப் பசும்பொன்னை நீராய் உருக்கி, ஈண்டு எழுதிய தரைக் கிளர் வல்லியை - அதனால் இந்நிலவுலகில் எழுதி யமைத்த நிலத்தினின்றும் எழுந்த பொன்னிறமான வல்லிக் கொடி போல்வாளை, காமக் கடும் பசி நாம் உறக் களையும் - காமம் என்னும் கொடிய பசியானது அச்சம் அடையும்படி அதனை நீக்கும், பெறுதற்கு அரிய உறுதுணை மருந்தை - அடைவதற்கு அருமையான சிறந்த துணையாயுள்ள மருந்துபோல்வாளை, காண்டல் செல்லா அருவப்பொருளென - காண்டல் இயலாத உருவமில் பொருளென்று கூறும், பூண்டோர் புகழ்உரை புரைபட்டு ஒழிய - பேர் பூண்ட பெரியோர்களது புகழ் தக்க உரையானது பழுதுபட்டொழியு மாறு, மின் என மிளிர்ந்து என் கண் எதிர் பொலிந்த - மின்னல்போல் பிறழ்ந்து ஒளி வீசி என் கண்கள்முன் விளங்கிய, கரும்பினும் இனிக்கும் என் அரும்பெறல் உயிரை - கரும்பைப் பார்க்கினும் இனிக்கின்ற என் பெறற்கரிய உயிர் போல்வாளை, என் உளம் மன்னிய துன் இருள் நீங்க - எனது உள்ளத்தில் நிலைபெற்ற செறிந்த மலவிருளானது ஒழியுமாறு, முற்படக் கொளுவிய பொன்சுடர்க் கொழுந்தை - என்னெதிரிற் பொருத்திய பொன்னிறமான ஒளிக்கொழுந்துபோல் வாளை, புலம் கொளக் காணும் பொறியும் இலையால் - காட்சியாக காணும் நல்வினை யும் நினக்கில்லை யென்பது. தழைமலர், வினைத்தொகை; சிறுமை அடி, சீறடி. கிழி, எழுதுபடம்; ஈசன சாந்து மெருக்கு மணிந்தோர் கிழிபிடித்து ( திருக்கோவையார், 74) என்பர் மணிவாசகனார்; அஃதிங்கு அப்படமெழுதுந் துணியை உணர்த்தாநின்றது. அமர்தல் - பொருந்துதல், (புறப்பொருள் வெண்பாமாலை, 4, 5). உண்மையுடையளாகலின், சிலசொற்களே அவள் வாயி னின்றும் எழுவவாயின. அன்றி முள்ளெயிறுபோழ்தல் அஞ்சிச் சிலசொல்வே பேசுவளென உரைத்தலுமாம். மிழற்றல், நிரம்பா மென்சொற் கூறல்; தலைவி புத்திளமையுடைய மடவரலாகலின், இங்ஙனம் `மிழற்று மெனப்பட்டது. உருவகமாய் வந்த கிளியினியற்கைக்கும் இச்சொற்பொருள் ஒக்கும். `அமிழ்து பொதி வாய் என்றமையின், அவ்வாயினின்றெழுங் கிளவிகளெல்லாம் அமிழ்தமாகுமென்பது குறிப்பாற் பெறப்படும். நிறம் இரண்டனுள் முன்னது வண்ணமும் பின்னது உருவமும் உணர்த்தும். `நன்கனம் என்பதற்கு `நன்றாக என்று பொருளுரைப்பர் பரிபாடலுரையில் (15:25). தலைவி பொற்கொடிபோல் உள்ளாள் என்பது கருத்து. கிளர்தல் - எழுதல் (திருமுருகு. 82). நாம் - அச்சம் (தொல்காப்பியம், உரி, 67); பசியே அச்சமுறும்படி அதனைக் களையும் மருந்தென்க. கடுமை, இங்குக் கொடுமை மேற்று; கண்ணீர் நனைக்குங் கடுமைய காடென்றால் (6) என்னுங் கலித்தொகையிற்போல. காமம் விளைப்பவளே காமத்தை நீக்கும் மருந்தாதலும் வேண்டுமாகலின், `உறுதுணை மருந்து எனப்பட்டாள். இக்கருத்துட் கொண்டே. இருநோக் கிவளுண்க ணுள்ள தொருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து என்று தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனாரும் (திருக்குறள், குறிப்பறிதல், 1) கூறுதல் இங்கு நினைவு கூரற்பாலது. உயிரென உருவகப் படுத்தினமையின், `காண்டல் செல்லா அருவப்பொருளென அதன் இயல்புரைத்துப் பின் வியந்து மொழியப்பட்ட தென்க. உற்றுநோக்குங்காற் கணவனும் மனைவியும் ஒருவருக் கொருவர் அவரவருயிரைச் செறிந்த பொல்லாப் பழமலவிருளை நீக்கிக்கொள்ளும் இயற்கையுறவினராவர்; இதனானன்றே திருக்குறள் வேதத்தினும் மனையாள் வாழ்க்கைத்துணை (அதி. 6) எனப்பட்டதூஉ மென்பது. இதனை விளக்குதற் பொருட்டே இலக்கியங்களிலெல்லாம் `மனைக்கு விளக்கு மடவார் என்றற் றொடக்கத்துரைகளால் வாழ்க்கைத் துணையாவார் மலவிருள் நீக்கும் ஒளிவிளக்காக வைத்துப் பாராட்டப் படுகின்றனர். இது முன்னுங் காட்டப் பட்டுள்ளது (இந்நூல், 4: 18 உரை). பாவை, ஓவியம் முதலியன உருவகங்கள். (148-162) ஆவண ஒலியும் அரும் கடல் ஒலியும் ஒன்று தலைமயங்கி என்றும் ஓவா ஒற்றிமாநகரில் - கடைத்தெருவின் விற்பனை ஒலியும் அளத்தற்கரிய கடலொலியும் ஒன்று கலந்து என்றும் நீங்காமலிரா நின்ற திருவொற்றிமா நகரின்கண், தன் தகப்பொலிந்த பசியதோர் மஞ்ஞைமிசை அமர்செவ்வேள் - தனது அழகிய இளமைச் செவ்விக்குத் தகும்படி விளங்கிய பசுமைநிற முள்ளதொரு மயிலின் மேல் எழுந்தருளாநின்ற செம்மை நிறம் பொருந்திய முருகன், தேவரும் மயங்கும் மூவா மாயம் பலமுறை இயற்றிய தலைமை தீர்சூரின் பேர் உரம் வசிந்த கூர்வடிவேலன் - தேவர்களும் மயங்கும்படி யான அழியாத மாயச் செயல்களைப் பலதடவை செய்த தலைமை நீங்குந் தகையனான சூரனது அகன்ற மார்பைப் பிளந்த கூர்மையுள்ள செவ்விய வேற்படையை யுடையவன், நோனா உள்ளத்து நான்முகன் தெளியத் தலையில் குட்டிய நலன்உறு குமரன் - `ஓம் என்னும் ஒருமொழியின் உண்மைப்பொருள் நாணுந் தவம் வாயாத உள்ளத்தையுடைய நான்முகன் அதன் பொருள் தெளியும்படி அவன் தலையிற் குட்டிய அழகு பொருந்திய இளம்பருவமுள்ள முருகப்பெருமான், விண்ணவர்க்கு அரியன் - தேவர்கட்குங் கிடைத்தற் கருமை யானவன், எம்மனோர்க்கு எளியன் - ஆனால் அடியேன்போன்ற எளியோர்க்குக் கிடைத்தற் கெளிமையானவன், பிறைமுடி புதல்வன் - பிறை தங்கிய சடைமுடியை யுடைய சிவபெருமானுக்குப் புதல்வன், மறை முடி முதல்வன் - நான் மறைகளின் முடிவிடத்துக்குத் தலைவன், உமைதரு சிறுவன் - உமைப் பிராட்டியார் ஈன்றெடுத்த புதல்வன், எமை அளி உறுவன் - எளியேமை அருள்கூர்ந்து காக்கும் மிக்கோன், பன்னிரு கையன் - பன்னிரண்டு திருக்கைகளை யுடையவன், என் உயிர்க்கு ஐயன் - எனது ஆருயிர்க்கு உயிராயுள்ள தலவைன் என்னும் முருகப் பெருமானுடைய, திருவடி நினையா அறிவிலர்போல - திருவடி களை எண்ணும் பேறுபெறாத அறிவில்லா மக்களைப்போல், என் எதிர்தோன்றிப் பன்முறை கழறினை - என்முன் வந்து பலதரம் இடித்துரைத்தனை; தலைமைதீர், தலைமைதீர்ந்த; முருகனைப் பகையாமுன் னிருந்த தலைமை அவனைப்பகைத்தபின் தீர்ந்தமையின் தலைமைதீர் சூர் என்றார். வசிந்த, பிளந்த; வசித்ததைக் கண்டமாக (5: 38) என்பது பரிபாடல். `நோனா உள்ள மெனப்பட்டது, ஓங்காரத்தின் மெய்ப் பொருளை உணருந் தவமியற்றப் பெறாத உள்ளத்தை யுடைய நான்முகனென்க; நோனாமை - தவம்புரியாமை; நோன்றல் என்னுஞ் சொல்லின் எதிர்மறை. நான்முகன் ஓங்காரத்தின் கருத்துணராமைக்காக முருகப்பெருமான் அவன் தலையிற் குட்டிய வரலாறு, எட்டொணாத அக்குடிலையிற் பயனிலைத் தென்றே கட்டுரைத்திலன் மயங்கலும் இதன்பொருள் கருதாய் சிட்டி செய்வது இத்தன்மையதோ எனாச் செவ்வேள் குட்டினான் அயன்நான்குமா முடிகளுங்குலுங்க என்னுங் கந்தபுராணச் செய்யுளால் (அயனைச் சிறைபரிபடலம், 11) அறியப்படும். பிறை முடி, ஆகுபெயர்; மறைமுடி, மறைகளின் முடிந்த கருத்து. உறுவன் - மிக்கோன் (சிலப்பதிகாரம், 9, 53). இறைவன் றிருவடி நினையா அறிவிலார் உண்மைகாணும் நீரரல்லராகலின், அவர்போல் நீயும் எங்கள் இயற்கைக் காத லுண்மையையும் அக் காதற்பேற்றை நல்கிய என் காதற் செல்வியின் அருமை பெருமையையும் உணராது கழறுகின்றனை யெனத் தலைவன் தன்பாங்கனை நோக்கிக் கூறுங்கருத்து விளங்க இங்குத் `திருவடி நினையா வறிவிலர்போல வென்றருளிச் செய்தார். கழறுதல், இடித்து உறுதியுரைத்தல்; அன்பில கடிய கழறி (14: 8) என்பது ஐங்குறுநூறு. (163 - 167) ஈங்கு இது விடுத்து - இங்கு நீ இங்ஙனங் கழறலை ஒழித்து, ஆங்குச்சென்று - அம்மரப் பொதும்பரின் குளத்தருகிற் சென்று, துடிஇடை ஒருகை ஊன்றி வடிவிழி திசைமுகம் பரப்பி நசைபடப் பார்க்கும் இரும்கண் மான்பிணை காணில் - உடுக்கை போன்ற தன் இடுப்பின்கண் தனது ஒருகையை வைத்துக் கொண்டு வடுவகிர்போலுந் தன் கண்களை நாற்புறங்களிலும் போக்கிக் கண்டார்க்கு விருப்பமுண்டாகும்படி பார்க்கும் பெரிய பார்வையை யுடைய மான்பேடுபோலும் என் தலைவியைப் பார்த்தால், நெருங்கி நின்று இங்கு உரையலை இனி - இத்துணை அணுகிநின்று இங்ஙனம் இனிமேல் உரைப்பாயல்லையென்பது. வடி மாவடுவின்பிளவு, வடிக்கஇவை என்னுந் திருக்கோவையாருரையை நோக்குக. நசை, விருப்பம், நசைதர வந்தோர் நசைபிறக்கொழிய (புறநானூறு, 15) என்புழிப்போல. `இருங்கண் என்புழி `இருமை பெருமையெனவும், `கண் பார்வையெனவும் பொருள்படும். நெருக்கம், மனநெருக்கம். நண்பா (15) பன்முறை கழறினை (162) மான்பிணைகாணில் (166) நெருங்கி நின்றிங்கு உரையலை இனி (167) என முடிக்க, (25) 26. பிரிவாற்றாத தலைவி தோழியொடு கூறல் இனியா ரெனக்கிங் கினியா ரியைந்தார் முனியார் முனிந்து மொழியார் - பனிமொழியாய் புள்ளொன் றிவர்ந்து புகழொற்றித் தந்நகர்க்கு நள்ளிருட்கட் சென்றார் நமர். (இ-ள்) இனி யார் எனக்கு இங்கு இனியார் இயைந்தார் - இனி மேல் யார் எனக்கு இங்கு இனியராய் இணங்கியுள்ளவர், முனியார் முனிந்து மொழியார் - நம்மவர் சினவார், சினந் தொன்று பேசார்; பனிமொழியாய் - குளிர்ந்த இன்சொல் உடைய உயிர்த்தோழீ, புள் ஒன்று இவர்ந்து புகழ் ஒற்றித் தம் நகர்க்கு - மயிலென்னுந் பறவை ஒன்றன்மீது மேற்கொண்டு புகழ்மிக்க திருவொற்றியூரெனும் தம் திருநகரத்துக்கு, நள் இருள்கண் சென்றார் நமர் - செறிந்த இருளில் நங் காதலர் சென்றார் என்பது. ஒருகாலத்திலும் முனிதலும் முனிந்து பேசுதலு மில்லா அத்துணை அன்பினரான நமர், புள்ளொன் றிவர்ந்து தம் நகர்க்குச் சென்றார்; இனி யாரெனக்கு இங்கு இனியராய் இயைந்தார் இருக்கின்றனர் என்பது கருத்து. இயைந்தார் வினையாலணையும் பெயர்; காதலராய் இயைந்தவர் என்னும் பொருட்டு. இவர்தல் - மேற்கொள்ளல், இவர்தந் தென்மேனிமே லூரும்பசப்பு என்பதற்குப் பரிமேலழகியா ருரைத்த வுரைகாண்க (திருக்குறள், 1182). நள் இருள், நடு இரா. (26) 27. நெஞ்சறி வுறுத்தல் நமரா யிருந்துபின் ஏதில ராவர் நயமிலருந் தமராவ ரென்னிற் றமர்பிற ரென்று தகவுசொல்லி அமராடி நிற்றல் வறிதுகண் டாயலை யாழியொற்றிக் குமராவென் றோதிக் குடந்தங்கொண் டேத்தக் குறிக்கொணெஞ்சே (இ-ள்) நமராய் இருந்து பின் ஏதிலராவர் மக்களிற் சிலர் சில காலம் நமக்குச் சுற்றத்தாராயிருந்து பின் அயலவராய் விடுவர், நயமிலரும் தமராவர் - அன்பில்லாத அயலவரும் ஒருகால் நமக்கு வேண்டியோராவர், என்னில் - என்றால், தமர் பிறர் என்று தகவு சொல்லி அமராடி நிற்றல் வறிது கண்டாய் - உலகத்தில் நம்மவரென்றும் அயலவரென்றும் பெருமை பேசிப் போராடி நிற்றல் வீணென்றறிவாய், அலை ஆழி ஒற்றிக் குமரா என்று ஓதி குடந்தம் கொண்டு ஏத்தக் குறிக்கொள் நெஞ்சே - ஆதலால் அலைமிக்க கடலை அணித்தாகவுடைய திருவொற்றிமுருகா என்று சொல்லிக் கைகூப்பி மெய்வளைத்து வழுத்தத் துணிவுகொள்வாய் நெஞ்சமே என்பது. `நயம், ஈரம், நண்பாற்றாராகி நயமிலசெய்வார்க்கும் (திருக்குறள், 998). தகவு - பெருமை, தகவேயுடையான் றனைச் சார என்னுந் திருவாசகமாமறையில் (யாத்திரைப்பத்து, 2) இப்பொருட்டாதல் காண்க. `குடந்தமென்பது ஒருவகை அஞ்சலி; அதாவது `கைகூப்பி மெய்வளைத்து வணங்கல்; குடந்தம்பட்டுக் கொழுமலர் சிதறி எனத் திருமுருகாற்றுப்படையிலும் (229) இதுவரும்; குடந்தங் கைகூப்பி மெய்கோட்டிநிற்றல் என்றார் திவாகரத்திலும். குறிக்கொளல், மனத்துள் வைத்துச் செயல் முடிக்குந் துணிவு கொள்ளுதல்; குறிக்கோட்டகையது கொள்கெனத் தந்தேன் என்பது சிலப்பதிகாரம், 30, 63. (27) 28. புலவராற்றுப் படை அஃதாவது, பரிசுபெற்றுத் திரும்பும் புலவன் ஒருவன் அது பெறுங் கருத்துடன் எதிர்வரும் புலவனொருவனை வழியிற் கண்டு தனக்குப் பரிசளித்த அரசனது பெருமையும் அவன்பால் அது பெறவேண்டும் வகைமையும் பிறவுந் தெளியஉணர்த்தி, உணர்த்திய அந்நெறியே அவனை உய்ப்பதாகும். எனவே `ஆற்றுப்படை யென்பது எதிர்ப்பட்டாரைத் தாம் பரிசுபெற்ற வாற்றிற் படுப்பிப்பது எனப் பொருள்தருமென்க. இவ்வியல்பு. ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச் சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும் என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்தாற் (புறத். 36) பெறப்படும். (1-11) நெஞ்சு நெக்கு உடைந்து - நெஞ்சம் நெகிழ்ந்துதளர்ந்து, பஞ்சு கண் அடையா -கண் பஞ்சடைந்து, உடும்பு உரித்தன்ன கடும்பசி மருங்குல் பழுப்புடைதோன்றிச் செழிப்பின்றி வைக - உடும்பைத் தோலுரித்தால் ஒப்பக் கொடிய பசியினையுடைய வயிற்றின் பக்கத்துள்ள விலா எலும்புகள் தசையில்லாமையாற் பக்கங்களிற்றோன்றிச் செழுமையில்லாமலிருக்க, வறுமைஉழந்த உறுமனைக் கிழத்தியொடு - அவ்வாறெல்லாம் வறுமையில் வருந்திக்கிடக்கும் அன்பின் மிக்க மனைக்கிழத்தியுடன், நாளும் நாளும் வாளாது கலாய்த்து - நாடோறுங் காரணமின்றியே சண்டையிட்டு, நோனாப் பசியின் ஆனாது அழூஉம் புன் தலைக் குழவிதன் திறம் நோக்கி - பொறுத்தற்கரிய பசியினால் இடை விடாது அழுகின்ற அழுக்குற்ற தலையினையுடைய தம் குழந்தை களின் நிலையைக்கண்டு, கனவு காண்பொழுதும் நனவு எனத் தோன்றும் அருந்துயர் என்றும் பெரும் துயர் உறுப்ப - அவற்றை யெல்லாம் இடையறாது எண்ணுதலாற் கனவுகாணுங் காலங்களிலும் நனவுபோலவே தோன்றும் உன்னுதற்கும் அரிய துயரங்கள் எந்நாளும் மிக்க வருத்தத்தை மிகுத்திடாநிற்ப, மிடிகெழுவாழ்க்கையில் குடியாயிருந்து - அங்ஙனம் வறுமை பொருந்திய ஏழைமை வாழ்க்கையிலேயே குடியிருப்பாயிருந்து, மழுங்கிய உள்ளத்து ஒடுங்கிய புலவோய் - கிளர்ச்சியவிந்த உள்ளத்தினையுடைமையாற் செயலொடுங்கிய புலவோய்! என்பது. `அடையா செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்; நிலங்கிளையா நாணிநின்றோள் (அகநானூறு, 16) என்புழிப் போல. `உடும்புரித் தன்ன மருங்குல் எனப்பட்டது, பசியால் வயிறு முதுகொட்டி விலா எலும்பெழுந்து நிற்றலின். பழு - விலா எலும்பு, பொருவில்யானையின் பழுப்போற் பொங்குகாய்க் குலையவரை என்றார் சிந்தாமணியிலும் (1561). உடும்புரித்தன்ன என்பெழுமருங்கிற், கடும்பின் கடும்பசி எனப் புறநானூற்றினும் (68) போந்தமை நோக்குக. உறுமனைக்கிழத்தி, அன்பின்மிக்க நன்மனைக்கிழத்தி; வறுமையின் கொடுமையால் இல்லத்தில் அடிக்கடி காரண மின்றியே சண்டைகள் உண்டாதல் இயல்பாதலால், `நாளும் நாளும் வாளாது கலாய்த்து எனப்பட்டது; கலாய்த்தல் - சண்டையிடுதல், சிந்தாமணி 1950. வறுமையில் உழலுஞ் செழுமையில்லாக் குழந்தைகட்குத் தலைசடைத்து அழுக்கேறிக், காண அருவருப்பாயிருக்கு மாதலின் அவை `புன்றலைக் குழவிகள் எனக் குறிக்கப்பட்டன. திறம் - நிலைமை; மிடிமை - தீராவறுமை. (12-13) இயற்றமிழ் வரம்பு திறப்பட ஆய்ந்து - இயற்றமிழ் நூன் முடிவைத் திறம்பட ஆராய்ந்து, புலம்கொள நிரம்பிய நலம் கிளர் அறிவோய் - உள்ளத்தின் இடம் முழுதுங் கொள்ளுமாறு நிறைந்த நன்மைமிக்க அறிவுடையோய்; `இயற்றமிழ் என்பது, முத்தமிழ்களுள் ஒன்று; ஏனைய இசைத்தமிழ் `நாடகத்தமிழ் என்க. இயற்றமிழாவது திருந்திய வழக்காய் நாம் பேசுவதும் எழுதுவதுமான செந்தமிழாகும். வரம் பென்றது, இங்கு நூல் வரம்பு. (14-15) வழுஒன்று இல்லா விழுமிய ஒழுக்கம் - பிழைபாடு சிறிது மில்லாத சிறந்த ஒழுக்கத்தை, உயிரினும் ஓம்பும் செயிர் அறுபெரியோய் - தன் ஆருயிரினும் பெரிதாக மதித்துக் காக்குங் குற்றமற்ற பெருமை யுடையோய்; ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்று பொய்யா மொழியுங் கட்டுரையாநிற்கும். `ஒன்று இங்குச் சிறிதென்னும் பொருட்டு; மாயைக்கு உணர்வொன்று மில்லையென்றே வைத்திடும் (சிவஞான சித்தியார், 1: 17) என்புழிப்போல. செயிர் - குற்றம். (16) கொழுந்தமிழ் போலக் குளிர்மாண் குணத்தோய் - செழுந்தமிழ் மொழியைப்போற் குளிர்ச்சியும் மாட்சியும் மிக்க இயல்பினோய்; சுவைநிரம்பிய மென்சொற்களாலும் ஆழ்ந்தகன்ற சிறந்த கருத்துக்களாலும் நமதரிய செந்தமிழ்மொழி தன்னை மேவுவார்க்குக் குளிர்ச்சியும் மாட்சியுமா யிருத்தல்போற், புலவருந் தம் இன்சொற்களாலும் நல்லொழுக்கங்களாலுந் தம்மை நச்சுவார்க்குத் தண்ணென்னு மாண்புடையராய்க் காணப்படுவரென்க. தமிழுக்கு இத்தண்மையும் மாட்சியு மிருத்தல், உயர்மதிற்கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனையோ என மாணிக்கவாசகப் பெருமான் அருளிச் செய்த திருக்கோவையார் திருமொழி யானுந் தெளியப்படும். (17-18) உழுந்துருள் அளவையிற் செழுந்தமிழ்ப் பாக்கள் நூறுநூறு இயற்றுங் கூறுபடு மதியோய் - உழுந்து உருளுகின்ற அவ்வளவு விரைந்த நேரத்திற் செழுந்தமிழ்ப் பாட்டுகள் நூறுநூறாகச் செய்யும் பகுத்தறியும் மதிநுட்ப முடையோய்; அளவை, இங்குக் காலவெல்லை. கூறுபடுமதியாவது நல்லதன் நலனுந் தீயதன் தீதும் பகுத்துணரும் அறிவு. (19-20) ஒளிச்செலவு அதனினும் வளிச்செலவு அதனினும் - ஒளியோட்டத்தின் விரைவைப் பார்க்கினும் காற்றோட்டத்தின் விரைவைப் பார்க்கினும் மிகுவிரைவாக, நெறிப்படக் கிளக்கும் மிறைக்கவி வல்லோய் - ஒழுங்குபட இசைக்குஞ் சித்திரக்கவி வல்லபுலவோய்; ஒளிச்செலவென்பது ஞாயிறு திங்கள் தீ முதலியவற் றினின்று புறம்போதரும் ஒளியோட்டங்கள். `செலவு, செல்கை; இங்கு விரைவுநோக்கி ஓட்டமெனக்கொள்க. வெருவருஞ் செலவின் வெகுளிவேழம் (பொருநராற்றுப்படை, 172). (21-22) அளவைநூல் மரபில் பிறழாது - தருக்கநூல் முறையில் தவறாது, யாண்டும் கொள உரை நிகழ்த்தும் வளம் உறும் உணர்வோய் - எங்குங் கேட்போர் உளங்கொள உரை விரிக்கும் வளமுற்ற உணர்வுடையோய்; அளவைநூல், தருக்கநூல்; வளம், ஆராய்ந்துகண்ட நூற்பொருள்வளம். (23 - 24) பொருளியல் அறிந்து - எடுத்துக்கொண்ட விரிவுரைப்பொருளின் வகைமை தெரிந்து, மருள் அறப் புனைந்து - மயக்கமற அழகுப்படுத்துக் கூறி, கேட்போர் பிணிக்கும் காட்சிசால் உரவோய் - கேட்பவர்கள் உள்ளத்தைத் தன் வயப்படுத்தும் மெய்யுணர்வு நிரம்பிய அறிவுவலியுடையோய்; `புனைதல் சொற்களையுங் கருத்துக்களையும் இடம் நோக்கிச் சுருக்கியும் பெருக்கியும் உவமித்தும் உருவகித்து மெல்லாம் அழகுபடுத்திக் கேட்பார்க்கு இன்பம் விழைவு வேட்கை முதலான மெய்ப்பாடு உண்டாகச் சொல்லுதல்; இங்ஙனம் அழகுபடுத்துச் சொல்லப்பட்டனவே பண்டைக் காலத்தில் `இலக்கியம் எனவும், `நூல் நயம் எனவுங் கூறப்பட்டு வந்தன. `நவிறொறும் நூல்நயம் போலும் எனத் திருவள்ளுவரும் இதனைச் சிறந்தெடுத்துப் பாராட்டுவர். ஆனால், இடைக் காலத்தோ அவ்வழகுபடுத்தும் உரை `கற்பனை யெனக் கூறப்பட்டுப், பிற்காலத்தே அதுவும் நிலைமாறி `இயற்கைக்கு மாறாகப் பொய்யுரை புனைதல் என்னும் இழிவுபொருளில் வந்து வழங்கிப் பெருமை குன்றுவதாயிற்று. (25-28) பண்டைப் பிறவியில் தண்டாது ஆற்றும் பெரும் தவம் உடையை மன்னே - பழம் பிறவிகளில் தவறாம லியற்றும் பெருமையான தவத்தினை நிரம்பவும் உடையை; பொருந்தி இன்று ஈங்கு எனைத் தலைப்பட்டனையே - பொருந்துதல்வர இன்று இங்கு வந்து என்னை எதிர்ப்பட்டனையே, ஓங்கி ஊழிசெல்லினும் நீடு வாழ்மதி - மேம்படச் சிறந்து ஊழிகழியினு நெடுங்காலம் வாழ்வாயாக; தண்டல் - தவறுதல் (பிங்கலந்தை); அதன் எதிர்மறை `தண்டாமை; இவை `தள் என்னும் முதனிலையிற் பிறந்தன; கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை என்றார் திருவள்ளுவரும். மன், மிகுதிக்கண் வந்தது. தலைப்படல் - எதிர்ப்படல். பொருந்துதல் வரத் தலைப்பட்டமையாவது வறுமையுழந்து அது தீர்ந்த ஒரு புலவனை, வறுமையுழக்கும் மற்றொரு புலவன் அதுதீர்தற் பான்மையில் வந்து எதிர்ப்பட்டமை என்க. (29-34) கீழ்த்திசை எழீஇ மேற்றிசைப் படரும் தீத்தெறு ஞாயிறு வடதிசைப் புணர்ந்து தென்திசை நோக்கித் திசைதடு மாறினும் - கிழக்குப் பக்கத்தில் தோன்றி மேற்குப் பக்கத்திற் செல்லும் நெருப்பெனச் சுடும் ஞாயிறு வடக்குப் பக்கஞ் சேர்ந்து தெற்குப் பக்கம் நோக்கிச் சென்றபடியாய் இங்ஙனந் திசை தடுமாறினாலும், வானக் கடலின் மீனென வயங்கும் உடுநிரை உதிர்ந்து கொடுமையாயினும் - வானமென்னுங் கடலின்கண் மீன்களென விளங்கும் உடுக்குலங்கள் உதிர்ந்த விழுதலால் உலகத்திற் கொடிய நிகழ்ச்சிக களுண்டாயினும், உலவா வாழ்க்கையின் நிலைமதி சிறந்தே - கெடாத நல்வாழ்க்கையிற் சிறந்து நிலைப்பாயாக; படரல் - செல்லல்; உடு - விண்மீன்; நிரை, கூட்டமென்னும் பொருட்டு; உலகின்கட் கேடுகள் விளையினும் நின் நல்வாழ்வு கெடாது இனிதூழி வாழ்ந்து இன்புறுகவென்பது இப்பகுதியின் கருத்து. (35-36) வறுமை களைந்து சிறுமை நீங்கி - வறுமையைநீக்கி எளிமை ஒழிந்து, நன்னிலை பலவும் இன்னே பெறுதி - நல்ல நிலைமைகளெல்லாம் இப்பொழுதே பெறுவாயாக; நிலை, இன்பங்கள் பலவுந் துய்த்தற்கேற்ற நிலைமை. `இன்னே இப்பொழுதே எனப் பொருள் படுதல், உற்றதின்னே இடையூறு என்னுஞ் சிந்தாமணியுள்ளுங் (226) காண்க. (37) வரம்பறும் இன்பம் நிரம்பக் கோடி - எல்லையற்ற இன்பம் நிரம்பக் கொள்வாயாக; எல்லையற்ற இன்பம், அளவற்ற இன்பம்; `கோடி என்பதற்குக் `கொள் பகுதி; அது முதல் நீண்டு தகரம் விரித்தலும் வியங்கோள் ஈறும் பெற்றுக் `கோடி யென்றாயிற்று. கோடி, கொள்ளுதி; `வாழ்மதி, நிலைமதி, பெறுதி, கோடி யென்பன வாழ்த்துதற் பொருண்மைக்கண்வந்த வியங்கோள் வினை முற்றுகள். (38-39) நின் உயிர்க்கு உறுதிநாடி - நினது உயிர்க்கு நன்மை பயத்தற்குரியவைகளை ஆராய்ந்தறிந்து, துன்னி நின்று - நின்னை அணுகி நின்று, நிரைநிரை கூறும் என் உரை பிழையலை - முறை முறையாகக் கட்டுரைத்துச் சொல்லும் என் சொற்களைத் தவறவிடாதிருப்பாயாக! நாடி - ஆராய்ந்து; நாடாது நட்டலிற் கேடில்லை திருக்குறள். (40-42) இன்னும் கேட்டல் வேண்டின் - இன்னும் நான் எடுத்துரைத்தலை நீ கேட்டல் விரும்பினாயானால், முன்னும் என் சொல் அளவு அமைந்து நலம் பல எய்தினர் பல்லோர் பல்லோர் பண்டும் உண்டு - நான் நினைத்துக் கூறும் என் மொழிகளின் எல்லையில் நின்று நன்மைகள் பலவும் அடைந்தவர் பலர் பலர் முன்னும் உண்டு; (43) இனியொன்று கூறுவென் கேண்மதி - ஆதலால் இனி ஒன்று சொல்லுவேன் அதனைக் கேட்பாயாக! வென்பது `கூறுவென் என்பதில் `என் ஈறு தன்மையொருமை வினை முற்று (தொல்காப்பியம், வினையியல், 6); கொன்னொன்று கிளக்குவென் கேண்மதிபெரும என முன்னும் வந்தமை நினைவு கூர்க. (43-45) பனிகெழு முல்லைஅம் கொடிக்கு - குளிர்ச்சி பொருந்திய முல்லையின்கொடிக்கு, மல்லல் அம் செழும்தேர் - செல்வத்திற் சிறந்த அழகிய தேரை, அருள்வர - தனக்கு இரக்க முண்டாக, ஈத்த- அதற்குக் கொழுகொம்பாகும்படி நிறுத்தி உதவிய, பெரியனோ இலனே - ஈகையிற் பெரியனாகிய பாரியோ இஞ்ஞான்று வாழ்ந்திலனே! வள்ளலிற் சிறந்த பாரியின் இவ்வரிய பெரிய ஈகைச்செயல், சுரும்புண் நறுவீ யுறைக்கு நாக நெடுவழிச் சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய பிறங்குவெள் ளருவி வீழுஞ் சாரற் பறம்பிற் கோமான் பாரியும் எனச் சிறுபாணாற்றுப்படையின்கட் (87 - 91) பெரிது பாராட்டப் படுதலும் இங்கு நினைவுகூரற்பாலது. `அம் ஈரிடங்களினுஞ் சாரியை; ஈற்றேகாரம் இரக்கப் பொருளது; மேல்வருவனவும் அன்ன. (46 - 47) விழியாக் கண்ண செழுமயிர்த் தோகைக்கு - இமையாக் கண்களுள்ள நிறத்தாற் சிறந்த மயிர்கள் வாய்ந்த மயிலுக்கு, நறும்படாம் வீசிய - குளிரனுகாமைப் பொருட்டுத் தனது இனிய போர்வையை அதன்மேல் எறிந்த, உறுவனும் இலனே - தக்கோனாகிய பேகனும் இஞ்ஞான்று வாழ்ந்திலனே! இவ்வள்ளலின் அருஞ்செயலும், வானம் வாய்த்த வளமலைக் கவாஅற் கான மஞ்ஞைக்குக் கலிங்க நல்கிய வருந்திற லணங்கி னாவியர் பெருமகன் பெருங்க னாடன் பேகனும் எனச் சிறுபாணாற்றுப்படையின்கண் (84-87) வரும். தோகை, ஆகுபெயர். (48-50) பவனமா உலகில் நவை அறப் பெற்ற அமிழ்து பொதி நெல்லி - பாதாள உலகத்தினின்று பழுதறப்பெற்ற அமிழ்தம் நிறைந்த கருநெல்லிக் கனியை, ஔவைக்கு ஈத்த - ஔவையென்னும் நம் செந்தமிழ்ப் பிராட்டிக்கு அவர் நீடு வாழுமாறு உதவிய, சிதையாப் பேற்றின் அதிகனும் இலனே - அழியாப் புகழாகிய பேற்றினை எய்திய அதிகமானும் இன்று வாழ்ந்திலனே! அதியர் கோமானின் இவ்வருஞ்செயலும், மால்வரைக் கமழ்பூஞ் சாரற் கவினிய நெல்லி யமிழ்துவிளை தீங்கனி யெளவைக் கீத்த வுரவுச்சினங் கனலு மொளிதிகழ் நெடுவே லரவக்கடற் றானை யதிகனும் என்று (சிறுபாண், 99-103) கூறப்படுதல் காண்க. `பவனமாவுலகு நாகருலகு; சாக்காடு கெடுத்தமையின், அஃது `அமிழ்துபொதி நெல்லி யெனக் கிளந்தோதப்பட்டது. இக் கருநெல்லிமரம் ஒரு பெரிய மலைமுழைஞ்சின் அடியிலே நின்றமை, தொன்னிலைப் பெருமலை விடரகத்து அருமிசைக் கொண்ட, சிறியிலை நெல்லித் தீங்கனி என்னும் ஔவையார் பாடலால் (புறநானூறு, 91) அறியப்படுதலின், அதன்கனி பாதாளவுலகினின்று பெறப்பட்டதென்றார். பவனம் - பாதாளம். (51-53) குறுநடைப் புறவின் தபுதி கண்டு அஞ்சி - தன்னை அடைக்கலமாய்ப்புக்க சிறிய நடையினையுடைய ஒரு புறாவின் அழிவினைக்கண்டு அதற்கு அஞ்சி, குருதி கெழு பைம்தடி முறைமுறை தடிந்து - செங்குருதி தோய்ந்த தனது உடம்பின் பச்சைத் தசையை அதற்கு ஈடாகும்படி சிறிது சிறிதாக அறுத்துவைத்து, கன்னம் புக்கு ஏறிய மன்னனும் இலனே - அங்ஙனம் வைத்தும் அஃது ஈடாகாமையின் முடிவில் தானே நிறைத்தட்டில் தாவியேறி அம்முகத்தால் ஈடுசெய்து அதனைப் பிழைப்பித்த ஒரு சோழவேந்தனும் இன்று வாழ்ந்திலனே! இங்ஙனம் உயிர்கொடுத்துப் புறவுகாத்த பெருங்கொடைத் திறம், தன்னகம் புக்க குறுநடைப் புறவின் றபுதி யஞ்சிக் சீரை புக்க எனப் புறநானூற்றின்கண்ணும் (43) சிறப்பிக்கப்படுகின்றது. தபுதி - அழிவு. தடி- தசை; கன்னம் - நிறைத்தட்டு. (54-56) அரும் தமிழ்ப் புலவோர் பெரும் திறம் உணர்ந்து - அருமைவாய்ந்த தமிழறிஞர்களின் பெரியமேன்மையை உணர்ந்து பார்த்து, பொன்னும் மணியும் தண்ணடை நிலனும் வரையாது வழங்கிய அரசரும் இலரே - அவர்கட்குப் பரிசாகப் பொன்னும் மணியும் மருதநிலத்தூர்களும் வயல்களும் ஏராளமாய் உதவிய புரவலர்களும் இஞ்ஞான்று வாழ்ந்திலரே! திறம் - மேன்மை, சோதி திறம்பாடி, திருவாசகம், 7, 57. தண்ணடை - மருதநிலத்தூர் (திவாகரம்). `வரையாது வழங்கிய வென்றது, அளவுபாராமல் ஈந்தவென்னும்பொருட்டு. இங்ஙனம் வரையாது வழங்கிய அரசர்கள் பண்டிருந்தன ரென்னும் உண்மைக்குச் சான்று வருமாறு; `பதிற்றுப்பத்து என்னும் நூலில் ஏழாம் பத்துப் பாடிய கபிலர் என்னும் புலவர் பெருமானுக்குச் சேரமான் செல்வக் கடுங்கோவாழியாதன் என்னும் வள்ளல் நூறாயிரங் காணமும் ஒரு குன்றேறிக் கண்ட நாடும் பரிசில் கொடுத்தான். ஆசிரியர் உருத்திரங் கண்ணனார் என்னும் மாப்பெரும் புலவர்க்கு அவர் இசைத்த `பட்டினப்பாலை யென்னும் நூலின் செழுந்தமிழ்த் திறம் உணர்ந்து சோழன் கரிகாற் பெருவளத்தான் பதினாறு நூறாயிரம்பொன் பரிசு அளித்தான். `பரணர் என்னும் புலவர்பிரான் `பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்துப் பாடிக், கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனிடம் உம்பற்காட்டு வாரியையும் அவன் மகன் குட்டுவன் சேரலையும் பரிசில் பெற்றான். இன்னோரன்ன பழைய பரிசில் வரலாறுகள் கணக்கற்றன உள; அவையெல்லாம் இங்கு விரிப்பிற் பெருகும். முந்நூ றூர்த்தே தண்பறம்பு நன்நாடு முந்நூ றூரும் பரிசிலர் பெற்றனர் எனவரும் (புறநானூறு, 110) பழந்தமிழிலக்கியத் திருமொழிகளும் இங்கு நினைவுகூரற்பாலன. (57-59) மெய்யொடு மிடையாப் பொய்பொருள்ஈட்டி மெய் வழிகளொடு கலவாத அழியும்பொருள்களைத் தொகுத்து, தாம் அறி அளவையில் பிறர்க்கு ஒன்று ஈயாது - தாமறிந்தவரையில் தக்கார்க்கு ஒன்று கொடாமல், தாமே நுகரும் தீயரோ உளர்- தாமே நுகர்கின்ற தீய இயல்பினரோ மிகப்பலராய் இருக்கின்றனர். `தீயரோ என்பதில் ஓகாரம் மிகுதிப்பொருள். மிடையா - கலவாத; மிடைதல் - கலத்தல், பொய்யோ டிடைமிடைந்தசொல் (நாலடியார், 80) என்புழிப்போல. `தம் மனச்சான் றறிய ஒன்றுங் கொடார் என்றற்குத் `தாமறி யளவையிற் பிறர்க்கொன் றீயாது என்றார். அன்றி அதற்குத் `தமக்குத் தோன்றிய அளவிலாயினும் ஏதேனுங் கொடாமல் என்று பொருளுரைத்தலுமாம். `பொய்பொருள் என்புழிப் பொய்மை நிலையாமைப் பொருளில் வந்தது. (60-61) தமிழ்வழக்கு அறியாது - செந்தமிழ் வழக்குகளின் நுட்பமும் ஆழமும் பரப்பும் விழுப்பமும் அறியமாட்டாமல், அமைவு இல கூறும் - பொருத்தமில்லாதவற்றைப் பேசும், கற்றறிவு இல்லார் இனிப் பலர் - கற்றறிவில்லாதவரே இப்பொழுது மிகப் பலராவர்; ஏகாரந் தொக்கது. `மற்று அசை. செந்தமிழைக் கல்லாதவர் அதன் றிறமறியாராகலின், பொருந்தாதனவெல்லாம்பேசி இகழ்தலுஞ் செய்வர். செந்தமிழுக்கு நன்மை செய்யாமையொடு தீமையுஞ் செய்வாரே உலகில் மிக உளரென்று இதன்கட் குறிப்பித்தவாறாம். (61-64) அதனால் ஆதலினால், அவர்கடை தொறும் நித்தலும் படர்ந்து - அவ் வியல்பினாருடைய இல்லின் கடைவாயில் தோறும் நாளுஞ்சென்று, வாய்வாளாது வல்லாங்குப்பாடி - வாய் சும்மா இராமல் வல்லவாறெல்லாம் பாட்டுகள் பாடி, கொன்னேதிரிதல் இன்னாது மன் - வீணே அலைதல் தீயதாம் மிகவும்; மற்று, ஓ அசை. வல்லாங்கு - வல்லபடி; வடியநாவின் வல்லாங்குப்பாடி (47) என்பது புறநானூறு. பயனும் இன்றி இழிவும் நேர்தலின், அங்ஙனம் படர்ந்து பாடித்திரிதல் இன்னாதாயிற்று. என்றிதுகாறுந், தம்மை எதிர்ப்பட்ட புலவனைநோக்கி, அறிவும் ஈகையறங்களும் உள்ள செல்வர்களாதல் அறிஞர் களாதல் இல்லையாய்க், கல்வியறிவில்லாதவரும் பிசுனருமே பலராய் நிரம்பிய இஞ்ஞான்று நிலையுதல் இல்லாப் பொருள்பெற வேண்டி அத்தகையோரை நச்சிநச்சி உயர்ந்த செந்தமிழ்ப்பாக்கள் பாடி அவர்பாற் செல்லுதல் பெரிதுந் தீதாதல் கூறினார். அதன்பின் எல்லாம்வல்ல முருகப்பெருமான் றிருவருளை விழைந்து சேறலே நன்றாமெனக் கூறுவான் றொடங்கி முதற்கண் அப்பெம்மான்றிருக்கோயில் கொண் டெழுந்தருளியிருக்குந் திருவொற்றிமாநகர்ச் சிறப்பினை நுவல்கின்றார். (65-67) கொழுநனை அரும்பிய காஞ்சி அம் கோட்டில் - கொழுமையான மொட்டுகள் அரும்பிய காஞ்சிமரக் கிளையில், புன்தலைச் சிறுவர் ஏறித் துன்றுகடல் சுரிதிரைப்பாய்ந்து விளையாட்டயரவும் - எளிய தலையினையுடைய நெய்தற் சிறுவர்கள் ஏறி அக்கிளையின் அருகிலுள்ள கடலின்கட் சுருளும் அலையிற் குதித்து நீர் விளையாடுதலைச் செய்யவும்; `காஞ்சி இது மருதநிலத்திற்குரியமரம் என்பது சிறுபாணாற்றுப்படையாற் (179) புலனாகின்றது; அஃது இங்கு நெய்தல் நிலத்துக்கண் வந்தது கருப்பொருள் மயக்கம்; இது திணைமயக்குறுதலுங் கடிநிலையிலவே என்னுந் தொல் காப்பிய அகத்திணையியற் சூத்திரத்தால் அமைக்கப்படும். புன்றலைக்கு விளக்கம் முன்னர்க் கூறப்பட்டுள்ளது. அயர்தல் - செய்தல், (திவாகரம்) (68-77) வெண்தோடு விரிந்த கைதை அம் தாது மெய்படத் திமிர்ந்த நொய்சிறை வண்டினம் - வெண்ணிறமான மடல்கள் விரிந்த தாழம்பூவின் மகரந்தப்பொடிகள் உடம்புமுழுதும் படும்படி பூசிக் கொண்ட மெல்லிய சிறகுகளையுடைய வண்டுக் கூட்டங்கள், விலை அறு முத்தமொடு தலைமயக்குற்றுக் கண்மயக்கேறி எண்ணிலகிடப்ப - அந்நிலத்தில் உண்டான விலையில்லா முத்துக்களுடன் ஒருங்குகலந்து தேன் உண்ட மயக்கந் தலைக்கேறி எண்ணற்றன ஒரே நிறமாய்க் கிடப்ப, நுளைச் சிறு மகளிர் வளைக்கையின் வாரி - நெய்தல் நிலத்துச் சிறு பெண்கள் தம்முடைய வளையலணிந்த கைகளால் அவற்றை அள்ளிச் சேர்த்து, குடம்புரை பணிலம் நிரம்பப் பெய்து - குடத்தை ஒக்குஞ் சங்குகளினுள்ளே நிறையச் சொரிந்து, ஆமை அடுப்பில் ஆம்பல் நெருப்பின் தாம் அறி திறத்தால் அடுவுழி ஆமை ஓட்டினாலான அடுப்பின்கண் செவ்வாம்பற் பூவாலான நெருப்பில் தாமறிந்த வகையாற் சமையல் செய்யும்பொழுது, மயக்கு அற்றுத் துண்ணெனப் பறந்து விண்ணிடைச் செல்ல - அவ்வண்டுகளெல்லாம் கள்ளுண்ட மயக்கம் ஒழிந்து திடுமெனப் பறந்து வான்வெளியிற் செல்ல வியப்பிடை எழுந்த மயக்கொடு நிற்கவும் - அம்மகளிரெல்லாம் வியப்பூடெழுந்த மதிமயக்கத் தொடு நிற்கவும்; `திமிர்தல், பூசிக்கொள்ளுதல், (மணிமேகலை, 19, 86). நொய்மை - மென்மை; வண்டுகள் தாதுதிமிர்ந்து வெண்ணிற மாய்த் தேனும் உண்டு அறிவுமயங்கி முத்துக்களோடு முத்துக் களாய் வேற்றுமை அறியப்படாமற் கிடந்தன. தலைமயங்கல் - ஒருங்குகலத்தல், புகையவுஞ் சாந்தவும் பூவிற் புனைநவும், வகைதெரி வறியா வளந்தலை மயங்கிய (சிலப்பதிகாரம், 14, 177, 178.) இங்குக் காட்டப்பட்ட நெய்தல்நிலச் சிறாரின் விளை யாட்டியல்புகள் பெரிதும் உற்றுணர்ந்து மகிழற்பாலன. (78-81) வேறுசிலர் சிறுமியர் - வேறுசிலரான நெய்தல்நிலச் சிறுபெண்கள், சாறுகெழு கரும்பின் - சாறு நிரம்பிய கரும்பையே உலக்கையாகப்பற்றி, மீன்சினை அன்ன வெண்மணல் குவைஇ- மீன் முட்டைகளைப்போன்ற வெண்ணிறமான நொய்ய மணல்களை நெல்லாகக் குவித்து, தேம்பொதி மழலையொடு சிறுபாட்டு இசைத்து - இனிமை நிறைந்த மழலைமொழிகளுடன் சிறுசிறு வேடிக்கைப்பாட்டுகள் பாடி, வயின்வயின் நின்று - இடங்கடோறும் நின்றபடியாய், மகிழ்வொடு குறுவவும் - மகிழ்ச்சியொடு மணல்நெல் குற்றவும் கரும்பையே உலக்கையாகக் கைப்பற்றி மணலையே நெல்லாகக் குவித்து அதனாற் குற்றிச் சிறுமியர் விளையாட்டயர்வர் என்றவாறு வெண்மணலையொப்ப மீன்சினைகளும் வெண்மையும் மென்மையும் நுண்மையும் உடையவாதல் இங்கு நினைவுகூரற் பாலது. குறுதுல் குற்றுதல், இடித்தல்; மெல்லியற் குறுமகள் பாடினள் குறினே என்றார் குறுந்தொகையிலும், 89: கொல் யானைக் கோட்டால் வெதிர்நெற் குறுவாம்நாம் என்றார் கலித்தொகையிலும், 42. (82-83) அழகுசால் நெய்தல் நலம் உற மருவிய ஒற்றி மாநகரில் - இங்ஙனமெல்லாம் அழகு நிரம்பிய நெய்தல்நில இயல்புகள் செம்மையாகப் பொருந்திய திருவொற்றி மாநகரின் கண்; (83-87) பொன்தொழில் பொலிந்து விண்தொட நிவந்த இஞ்சி வளைஇய உருகெழு திருநகர் காண்டொறும் பரசி - பொற் பூச்சுக்களாலான தொழிற்பாடுகள் அழகுபெற விளங்கி வானந்தொட்டு உயர்ந்த மதில்கள் வளைந்த தோற்றஞ் சான்ற திருக்கோயிலைப் பார்க்கும் போதெல்லாந் தொழுது, மலை குயின்று அன்ன நிலை உயர் தலைக் கடை - மலைகளைத் துளைத்து அமைத்தாற்போன்ற வாயில்நிலைகள் உயர்ந்த திருக்கோபுரவாயிற்படியின்கண், அஞ்சுவரு நோக்கமொடு நின்றெனனாக - அஞ்சுதலுள்ள பார்வையுடன் ஒதுங்கி நின்றேனாக இஞ்சி- மதில், திவாகரம். குயின்று என்பதில் முதனிலை குயில் அது துளைத்தல் எனப் பொருள்படும், குன்று குயின் றன்ன ஓங்கு நிலை வாயில் என்பது நெடுநல்வாடை, 88. `நகர் இங்குக் கோயில்; முக்கட்செல்வர் நகர்வலஞ் செயற்கே எனப் புறநானூற்றின்கண்ணும் (6) வந்தது. (88-95) RUŸ ïU« FŠá - fil FH‹w fÇa jiy kÆiu, bgh‹Ph© ã¤J - bgh‹dhyhd fƉwh‰ f£o Ãy«bjhl 圪j bghy«J»š mirï - Ãy¤ij¤ bjhLgil 圪j bgh‰g£lhilÆid cL¤J, rhªJ òy® kh®ãš ó bjhil òus - óáa rªjd«