kiwkiya«-- 8 (தனித்தமிழியக்க நூற்றாண்டு வெளியீடு) இதழ்கள்  ஞானசாகரம் ஆசிரியர் மும்மொழிச்செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் தமிழ்மண் முதல்பதிப்பு : 2015 பக்கம் : 24+408 = 432 விலை : 540/- மறைமலையம் - 8 ஆசிரியர் மும்மொழிச் செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் வெளியீடு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. bjh.ng.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: elavazhagantm@gmail.com jhŸ : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 432 f£lik¥ò : இயல்பு  படிகள் : 1000 üyh¡f« : வி. சித்திரா   அட்டை வடிவமைப்பு : கவிபாகர்   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006, மற்றும் பிராசசு இந்தியா, திருவல்லிக்கேணி - 600 005. யான் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான நூல்களில் ஆராய்ந்து கண்ட முடிவுகளை நூல்களாக எழுதியிருக்கின்றேன். பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்தது போல, உண்மை காணும் உணர்ச்சியினால் நடுநிலை நின்று ஆராய்ந்திருக்கின்றேன். ஒருவர் தம் வாழ்நாள் முழுவதும் கற்றாலும் அறியமுடியாத உண்மைகளை எல்லாம் எளிதாக எழுதி வைத்திருக்கின்றேன். எல்லாரும் தமிழ் இலக்கியங்கள் யாவற்றையும் கற்கும் தொல்லையை மேற்கொள்ள வேண்டிய தில்லை, அது முடியவும் முடியாது, தேவையுமில்லை. எல்லா நூல்களிலும் உள்ள சிறந்த உண்மைகளை எல்லாம் பிழி சாறாக யான் வடித்துத் தந்துள்ளேன். என் நூல்களைப் படித்தாற்போதும், அதனால், தமிழ் முழுதுங் கற்ற பயனை அடையலாம். - மறைமலையடிகள் சான்றிதழ் நாகை - திரு. வேதாசலம் பிள்ளையவர்கள் ஒருபோது திருவனந்தபுரத்தில் ஒருவாரந் தங்கியிருந்த ஞான்று, அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்ததற்குச் சாலவும் மகிழ்கின்றேம். வருங்காலத் தமிழ் மக்களுக்கு மட்டற்ற தமிழ்ப்புலமை மிகுந்து வருமென்பதற்குச் சான்றாக இவர் இளமையிலேயே நுண்மாண் நுழைபுலம் உடையராயிருப்பது களிப்பூட்டுகிறது. மற்றும் தாய்மொழிப் பற்றுக் குறைந்த இக்காலத்தில், இவர் தமது நுண்ணறிவைத் தமிழ் நூல்களில் முற்றும் செலுத்தி நன்காராய்ந்துள்ளதும் பாராட்டற்குரியது. பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவகசிந்தாமணி முதலிய பழந்தமிழ் நூல்களில் ஆராய்ச்சியுடன் கூடிய இவர்தம் அறிவுடைமையே என்னை இவர்பால் மதிப்புறுமாறு செய்தது. தமிழாசிரியர்களின் தொகை சுருங்கிவரும் இக்காலத்தில் இவருக்குச் சிறந்த ஊக்கமளித்தால் இவர் ஒரு சிறந்த தமிழாசிரியராவாரென்று நாம் உறுதியாக நம்புகின்றேம். முன்னரே இரண்டாந்தரக் கல்லூரிகளில் தமிழ்கற்பிக்கப் போதுமான அளவு இலக்கண இலக்கியத்திற் சிறந்த தேர்ச்சி பெற்றவராயிருக்கின்றாரெனக் கருதுகின்றோம். Fiwªj msÉš v~¥, V., (F.A.) வகுப்புக்குரிய ஆங்கில அறிவு பெற்றாரானால் மேல்நாட்டு முறைப்படி தமிழ் நூல்களை வரலாற்றுச் சான்றுடன் ஆராயவும் எழுதவும் வல்லுநராவாரென்பது எம்முடைய சிறந்த எண்ணம். வண்ணாரப்பேட்டை மனோன்மணீயம் பெ. சுந்தரம்பிள்ளை திருநெல்வேலி தமிழ்த்தாய் வாழ்த்தின் ஆசிரியர் 2-12-1895 (இந்த நற்சான்று திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் சுந்தரம் பிள்ளையவர்கள் பேராசிரியராக இருந்தபோது கொடுக்கப் பெற்றது.) மறைமலைய மாண்பு நுழைவுரை தனித்தமிழ் என்ற அளவில் முன் நிற்கும் முழுதுரு எழில்வடிவர் தவத்திரு. மறைமலையடிகளாரே ஆவர்! முந்தை அடிகள் ஆகிய இளங்கோவடிகள், `முத்தமிழ் அடிகள் என முழக்கமிட நின்றார்! இருபதாம் நூற்றாண்டு மறைமலையடிகளோ, தனித்தமிழ்த் தந்தை என்னும் தகவார்ந்த பெருமை பெற்றார். தமிழ் தனித்து இயங்காது என்றும், வடமொழி வழியது என்றும், வடமொழித் துணையின்றி இயங்காது என்றும், உலக மொழிகளுக் கெல்லாம் தாய்மொழி வடமொழியே என்றும் தமிழ்க் கல்வி வல்ல பெற்றியரும் முற்றும் மயங்கி யுரைக்க, வடமொழி உலக மொழிகளுக்குத் தாய்மொழி என்றால், அதற்கும் மற்றை மொழிகளுக்கும் தந்தை மொழி தமிழே என்று கூறிய வடலூர் அடிகளார் புகழ்பரப்பாளராய்ப் பொதுநிலைக் கழகம் கண்ட தவ அடிகளார், தனித்தமிழ்த் தந்தை என்னும் பெருமை பெற்ற மறைமலையடிகளார் ஆவர். சிவனியம் சார்ந்த பெருமக்களும், பேரறிவர்களும் கூட, ஒப்பாராய், `தனித்தமிழ் (தனித்து அமிழ்) என்று பழிக்கவும் இழிக்கவும், துணிந்து நின்று, அவர் வெள்க; வெள்ளிடை மலையாகத் `தனித்தமிழ் என்பதை நிலை நாட்டிய நிறைமலை, மறைமலையடிகளாரே! சிவனிய மடத்தினரும், வடமொழி வல்லாரும், `தொல் காப்பியக் கடல் எனப் புகழப்பட்டாருமாம் சாமிநாத தேசிகர், நாணமின்றி, ஐந்தெழுத்தால் ஒருபாடை என்று அறையவே நாணுவர் அறிவுடையோரே; யாமும் அதுவே என்றும், ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டோ? என்றும் - எழுதிப் பரப்பினாராக, ஒரு சொல் தானும் வேற்றுச் சொல் விரவா நூல் யாம் செய்வேம் என்று ஐம்பான் நான்கு நூல்கள் கலைமலி பேழையாய் எழுதிக் காட்சிப் படுத்திய மாட்சியர் மறைமலையடிகளார்! தொல்காப்பியக் காவல் தமிழ் மொழிக்கு வாய்த்த தொல்காப்பிய வளநூல், வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே (884) என்றும், மொழி பெயர்ப்புச் செய்தலிலும் முறைமை பேண வேண்டும் என்பதை, மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல் (1597) என்றும், பேச்சு வழக்கில் ஒரு கால் வேற்றுச்சொல் வந்து விடினும், மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை (1590) என்றும் - வரம்பாணை செய்தும், அச் செவ்வியல் வழித்தடம் சிதைந்தும் சீரழிந்தும், சேறும் சகதியும் நாறும் சிறுமையும் குறுமையும் வழிவழியே எய்த மூவாயிரம் ஆண்டுகளாய், அயலோர் சூழ்ச்சியாலும் திறவோர் மயக்காலும் ஏற்பட்ட அழிபாடுகளை எல்லாம் தாமே ஓர் இயக்கமாய் இருந்து, விழிப்பும் எழுச்சியும் ஊட்டியவர் மறைமலை அடிகளே என்பதால், ஆரியத்தினின்று தமிழை மீட்டெடுப்ப தற்காக அரும் பாடுபட்டு இலக்கிய இலக்கண மரபோடு யான் கற்ற மொழிகள் முப்பது என்னும் பாவாணர், மூவா யிரமாண்டு மோதும் வடமொழியால் சாவாம் தகைநின்ற தண்டமிழை - மேவாக் குமரித் தனிநிலைக்குக் கொண்டுவந்த அப்பர் அமரர் மறைமலை யார் எனப் பாடிப் பரவினார். `தனித் தமிழ்த் தந்தையார் என்ற பாராட்டும் இப் பாட்டின் தலைப்பில் வழங்கினார். நுண்ணிய நூல்பலவும் கற்பதே நோன்பாக எண்ணிய வாழ்நாள் எலாமளித்துப் - பண்ணிய செந்தமிழ்நூல் ஒவ்வொன்றும் செப்பும் கடலறிவை பைந்தமிழ் காக்கும் படை என அடிகள் கல்வி மேம்பாட்டையும் கலைத் திறப் படைப்புகளின் மேம்பாட்டையும் பாவேந்தர் பாரதிதாசனார் பாராட்டுகிறார். பல்துறை ஆற்றல் அடிகளின் பல்துறை ஆற்றலை 1. பேராசிரியர், 2. பெரும் புலவர், 3. பாவலர், 4. ஆராய்ச்சியாளர், 5. மும்மொழிப் புலவர், 6. மொழிபெயர்ப்பாளர், 7. சொற்பொழி வாளர், 8. எழுத்தாளர், 9. பல்கலைச் செல்வர், 10. தனித்தமிழ்த் தந்தையார் என்று பாவாணர் பகுத்துக் காட்டுகிறார். மேலும் அவர் தம் நுண்மாண் நுழைபுலத்தை பனிமலை முகட்டின் உயர்வும், நீல ஆற்றின் நீளமும் அமைதி வாரியின் ஆழமும் அமைந்தவர் மறைமலையடிகள் என்கிறார். (பனிமலை - இமயம்; நீல ஆறு - நைல்; அமைதிவாரி - பசிபிக்கு மாகடல்). அடிகளார் நூல்கள் அடிகள் பன்மாண் மாத்தமிழ் நூல்களை, நூலக இயக்கத் தந்தை அரங்க நாதரும், இந்நாள் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியரும் அந்நாள் நூலகருமாகிய திருமிகு இரா. முத்துக் குமாரசாமி அவர்களும் 14 வகைமைப்படுத்தி வைத்தமை பெரும் பாராட்டுக்கு உரியதாம் அவை, 1. மருத்துவம் 2. மறைபொருள் 3. இலக்கியம் 4. இதழ்கள் 5. சங்க இலக்கியம் 6. பாடல் 7. நாடகம் 8. புதினம் 9. கடிதம் 10. கட்டுரை 11. சமயம் 12. தத்துவம் 13. வரலாறு 14. சமூக இயல் என்பன. முதற் குறள் வாத நிராகரணம் என்னும் மறுப்பு நூலே, அடிகளின் முதல் நூலாக வெளிப்படுகின்றது (1898) அந்நூன் மறுப்பு நயமே நாகை அடிகளை - பல்லவபுர அடிகளாக -தனித்தமிழ் அடிகளாக ஆக்க அரும் பெரும் தூண்டல் ஆயிற்றாம். அடிகளார் வரலாறு: கீழ்கடல் சார் நாகப்பட்டினத்தைச் சார்ந்த சிற்றூர் காடம்பாடி, ஆங்கு வாழ்ந்த அருந்தவப் பெருந்தகையர் சொக்கநாதர் - சின்னம்மையார்! இவ்விணையர் கொடையாய்த் தமிழன்னை செய்த தவப் பேற்றால் பிறந்தவர் வேதாசலம். பிறந்த பெரு மங்கல நாள் கி.பி. 15.07.1876. சொக்கநாதர், சித்தமலம் அறுவித்த சித்தமருத்துவர்; அறிவ மருத்துவம் என்பதும் அது. அத்தொழில் அவர்க்கு வளத்தை வழங்கியது. அதனால் வேதாசலம் குறைவற வாழ்ந்தார். நாகப்பட்டினத்து வெசிலியன் மிசன் பள்ளியில் ஐந்து வகுப்புவரை பயின்றார்; சிறந்த மாணவராக விளங்கினார். ஆறாம் வகுப்பில் சேரும் நிலையில், அருமைத் தந்தையார் இயற்கை எய்தினார். ஆயினும் அன்னையார் உறுதியால் கல்வியைத் தொடர்ந்தார். அப்பள்ளியில் ஆங்கிலக் கல்விக்கு இருந்த முதன்மை தமிழுக்கு இல்லை. கிறித்தவ சமயம் பற்றி அன்றிச் சிவனியம் பற்றி அறிய வாய்ப்பில்லை என்னும் இரண்டு குறைகளையும் இளமையிலேயே உணர்ந்தார். வீட்டிலேயே தமிழ் நூல்களைப் பயின்று முதற் குறையையும், நாகையில் இருந்த இந்துமதாபிமான சங்கம் வழி இரண்டாம் குறையையும் நீக்கினார். பள்ளியிலும் குறையறக் கற்றார். வருவாய்க் குறையால் வாடும் அன்னைக்குச் சுமையாய் இல்லாமல் தனியே பயில்வதே இனியவழி என எண்ணி, நாகையில் புத்தக வணிகராக விளங்கிய நாராயண சாமியார் புலமையாலும் சிறந்து விளங்கியவர். ஆதலால் அவரிடம் தனியே இலக்கிய - இலக்கண - சமய நூல்களைக் கற்றார். நாராயணரின் முன்னை மாணவர் பேரா. மனோன்மணீயம் பெ. சுந்தரனார் என்பதையும் அறிந்தார். ஒன்பதாம் வகுப்பொடு பள்ளிக் கல்வியை நிறுத்தித் தனிக்கல்வியே கற்றார். தொல்காப்பியம், தொகை நூல்கள், திருக்குறள், திருச்சிற்றம்பலக் கோவை, இறையனார் அகப் பொருள் எனக்கற்றார். அடிகளார் இயற்றிய திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை முகப்பில், எமது பதினைந்தாம் ஆண்டில் முறைப்படி துவங்கிய தமிழ்ப் பயிற்சியானது எமது இருபத்தோராம் ஆண்டிற்குள் தொல்காப்பியம், திருக்குறள், சிற்றம்பலக் கோவையார் என்னும் மூன்று நூல்களையும் முழுதும் நெட்டுருச் செய்து முடித்தேம் என்றும் வேறுசில நூல்களையும் முழுவதாக ஓதியதையும் கூறி, இங்ஙனமாக, விழுமிய தமிழ்ப்பழ நூல்களில் எமது கருத்து ஈர்ப்புண்டு நின்று பயின்ற பயிற்சியினாலேயே செய்யுளும் உரையும் தனிச் செந்தமிழ் நடையில் எழுதும் திறம் எமது இளமைப் பருவத்திலேயே எமக்கு வாய்ப்ப தாயிற்று என்கிறார். அவ்வாண்டு கி.பி. 1897. நாகை இந்து மதாபிமான சங்கத்திற்குச் சைவ சித்தாந்த சண்ட மருதம் என்னும் விருது பெற்ற சோமசுந்தர நாயகர் வந்து சொற்பொழிவாற்றினார். அவர் பொழிவில் வந்த கருத்தொன்றனை மறுத்து ஒருவர் எழுத, அதற்கு மறுப்பாக முருகவேள் என்னும் புனைபெயரில் மறுப்புரை எழுதினார். அதனைக்கற்ற நாயகர், மீளப் பொழிவுக்கு வருங்கால் முருக வேளைச் சந்திக்க விரும்பினார். அச்சந்திப்பின் பயனே உன்னை விரைவிலே சென்னைக்கு வருவிப்போம். நீ அந்தப் பக்கங்களில் இருப்பதே நல்லது என்று கூறினார். இதுவே அடிகளார்க்குச் சென்னை வாழ்வு அமைய முதல் தூண்டல் ஆயிற்று. அடிகளுக்குப் பதினேழாம் வயதில் (1893) திருமணம் நிகழ்ந்தது. துணைவி தம் மாமன் மகள் சவுந்தர வல்லி என்பார். திருவனந்தபுரம் நாராயணசாமி அவர்களின் முன்னை மாணவராம் பேரா. சுந்தரனார் திருவனந்த புரத்தில் இருந்தார். அவரியற்றிய மனோன்மணீய நாடக நூல் கற்று அதன் அருமை கண்டு, பேராசிரியரைக் காணவிரும்பினார். அதனால் தம் ஆசிரியரோடு திருவனந்தபுரம் சென்று பேராசிரியரோடு உரையாடினார். வேதாசலனார் இளம் பருவத்தையும் மூதறிவையும் அறிந்த சுந்தரனார் வியப்புற்றுத் தகுதிச் சான்று ஒன்று வழங்கினார். சிறிது காலம் திருவனந்த புரத்தில் ஆசிரியப் பணியும் செய்தார். அவ்விடத்தின் பருவநிலை ஒவ்வாமையால் நாகைக்கே திரும்பினார். சென்னை: சோமசுந்தரனார் முன்னே கூறியபடி வேதாசலரைச் சென்னைக்கு அழைத்து அறிஞர் நல்லுசாமி என்பார் நடாத்திய சித்தாந்த தீபிகை என்னும் இதழாசிரியர் ஆக்கினார். பின்னே சென்னை கிறித்தவக் கல்லூரிக்கு ஒரு தமிழ்ப் பேராசிரியர் வேண்டியிருத்தல் அறிந்த சோமசுந்தரனார் வேதாசலனா ர அக்கல்லூரிப் பேராசிரியராக்க முயன்றார். அதுகால் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர் வி.கோ சூரியநாராயண சாத்திரியார் என்னும் பரிதிமால் கலைஞர். கல்லூரி முதல்வர் வில்லியம் மில்லர் என்பார். 9.3.1898 இல் வேதாசலனார் பணியேற்றார். அங்குப் பதின்மூன்று ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அக்கல்லூரிக் காலத்தே இளங்கலை மாணவர்க்குப் பாடமாக இருந்த முல்லைப்பாட்டு (1903) பட்டினப்பாலை (1906) என்பவற்றுக்கு ஆராய்ச்சி உரை எழுதினார். அவ்வுரை நூலை வாங்கிக் கற்ற மாணாக்கரும் ஏனைத் தமிழறிஞரும் புதுமுறையாக எழுதப்பட்ட அவ்வுரைப் பாங்கினைப் பின்பற்றிப் பழைய தமிழ் நூல்களை ஆராய்வதில் கிளர்ச்சி பெறலானார். இப்புதுமுறை உரை, தமிழ் நூலாராயும் வகைகளை இனிது விளக்கி அறிஞர் பலர்க்கும் அக மகிழ்ச்சி யினை விளைத்தமை கண்டு இனி, இத்தகைய உரைகளையே எழுதுதல் வேண்டும் என எமதுள்ளம் பெரிதும் விழைந்தது என்கிறார். சென்னைப் பல்கலைக் கழகத்தார்ஆங்கிலமும் வட மொழியும் கட்டாயமாகப் படித்தல் வேண்டும் என்றும், தாய்மொழிப் பாடத்தை விருப்பப் பாடமாகக் கற்பிக்கலாம் என்றும் ஒரு தீர்மானம் ஆட்சிக்குழுவில் கொண்டு வந்தனர். ஒரு பாடம் விருப்பப்பாடம் எனப்பட்ட பின்னர் அதனைக் கற்க வருவார் எவர்? தமிழ் கற்கும் மாணவர் எண்ணிக்கை குறையவே ஆசிரியப் பணியிடமும் குறைய வேண்டுவதாகி, அடிகளார் 31.1. 1911 ஆம் நாளுடன் கல்லூரிப் பணியை முடிக்க வேண்டிய தாயிற்று. மாணவர்: இக்காலத்தில் அடிகளின் மாணவராக இருந்தாருள், தணிகைமணி செங்கல்வராயர், இரசிகமணி டி.கே.சி, நாவலர் ச.சோ. பாரதி, பேரறிஞர் ச. வையாபுரியார் முதலோர் சிலர். தணிகைமணியின், தேவார திருவாசகச் சொல்லடைவு ஒரு பிறப்பளவில் செய்யக் கூடியதா? நாவலர் ச. சோ. பாரதியாரின் ஆய்வுத் துணிவு எத்தனை கசடுகளை நீக்கியது? வையாபுரியார், கால ஆய்விலும், வடமொழிப் பிடிவாதத்திலும் தம்மைச் சால்பு ஆய்வில் இருந்து விலக்கினாலும், சங்க இலக்கியப் பதிப்பு, நிகண்டுப்பதிப்பு, பல்கலைக் கழக அகரமுதலிப் பதிப்பு இவற்றைச் செய்த அருமை என்ன? புறத்திரட்டு, களவியல், காரிகை ஆயவற்றின் பதிப்புச் சிறப்பு என்ன? இவர்கள் பணியும் அடிகளாரைத் தழுவுதல் உண்மை தானே! சமரச சன்மார்க்கம் கல்லூரிப் பணியில் இருந்து வீடுபெற்ற அடிகளார், பல்லவபுரத்தை வாழ்விடமாகக் கொண்டார். சமரச சன்மார்க்க நிலையம் தோற்றுவித்தார். எல்லாச் சாதியார்க்கும் எல்லாச் சமயத்தார்க்கும் அங்கீகாரமான சீவகாருணிய ஒழுக்கத்தையும், சமரச சன்மார்க் கத்தையும் பிற்காலத்தில் மிக வலியுறுத்திப் போதித்த ஆசிரியர் ஸ்ரீமத் இராமலிங்க சுவாமிகளே ஆவார். அச்சுவாமி கள் வலியுறுத்திய அவ்விரண்டு கொள்கைகளையும் எங்கும் வலியுறுத்தி விளக்கி அன்பர்களை ஒருங்கு கூட்ட வேண்டி அச்சுவாமிகள் இட்ட பெயராலேயே, `சமரச சன்மார்க்க நிலையம் என்னும் இது தாபிக்கலாயிற்று. இந்நிலையத்திற்கு முன் ஆசிரியர் திருவள்ளுவ நாயனார்; பின் ஆசிரியர் இராமலிங்க சுவாமிகள் ஆவர் என்று பெயரீடு செய்து கொள்கைகளையும் வகுக்கிறார். குடும்பம் 1898இல் அடிகளார் சென்னைக்கு வரும்போது அவர்தம் அன்னையார் சின்னம்மையார், துணைவியார் சவுந்திரம் அம்மை யார், செல்வி சிந்தாமணி, அடிகளார் என்னும் நால்வரைக் கொண்ட குடும்பமாக இருந்தது. 1911இல் பல்லவ புரத்தில் குடிபுகும் போது நீலாம்பிகை, திருஞான சம்பந்தம், மாணிக்கவாசகம், திருநாவுக்கரசு, சுந்தர மூர்த்தி என்னும் மக்களும் கொண்ட ஒன்பதின்மர் குடும்பமாக இருந்தது. பல்லவுரம் புகுந்த பின் திரிபுர சுந்தரி பிறக்கப்பதின்மன் குடும்பம் ஆயிற்று. இந்நிலையிலேயே 27.08.1911இல் சைவத் துறவியர்க்குரிய துறவாடை (காவி) கொண்டு சுவாமி வேதாசலம் ஆனார். சுவாமி வேதாசலம் என்பதன் தனித்தமிழாக்கமே மறைமலையடிகள் என்பது வெளிப்படை. முன்னேயே அவரை அடிகள் என்றது அவர்தம் மாண்பு கருதியேயாம். மீள்பார்வை நாம் மீள்பார்வை ஒன்றுபார்க்க வேண்டும். அடிகள் 21ஆம் அகவையிலேயே தனித்தமிழ் ஆய்வுத்திறம் கைவரப் பெற்றார். 1903, 1907 ஆகிய ஆண்டுகளில் முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய நூல்களுக்கு ஆய்வுரை வழங்குங்கால் இதிலுள்ள சொற்கள் இத்தனை; இவற்றுள் செந்தமிழ்ச்சொல் இத்தனை; வேற்றுச் சொல் இத்தனை - என அறுதியிடுகிறார். ஆதலால், தனித்தமிழ் என்னும் தோற்றம் 1916 ஆம் ஆண்டில் நீலாம்பிகையார் தூண்டலால் ஏற்பட்டமை என்பது, அகத்தே அமைந்து கிடந்த வித்து, முளை விட்டு வெளிப்பட்ட நிலையாம். அவ் வெளிப்பட்ட நிலையும் உடனே பற்றிப் படரவில்லை! மேலும் சில ஆண்டுகளின் பின்னரேயே சமசர சன்மார்க்க நிலையம், பொதுநிலைக் கழகமாகவும், ஞானசாகரம் அறிவுக் கடலாகவும், சுவாமி வேதாசலம் மறைமலையடிகள் ஆகவும் படிப்படியே கிளர்கின்றனவாம்! ஓர் அரிய அமைப்பு உருவாகும் நிலையும், ஓர் அரிய கண்டு பிடிப்பு உலகவர் அறிய வெளிப்படலும், அவை இயக்கமாகவும் பயனாகவும் ஆகின்ற நிலையும் பற்றிய விளக்கம், அடிகளார் தனித்தமிழ் இயக்க வரலாற்றில் அடங்கியுள்ளதாம்! எதிரிடைத் தூண்டல்: மேலும் ஒன்று: ஒரு நேரிடைத் தூண்டலினும் எதிரிடைத் தூண்டல் வலிமை மிக்கது என்பதும், உள்ளத்து உறுதியை வெள்ளப் பெருக்காய் வெளிப்படுத்த வல்லது என்பதும் தெளிவாம். ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டா? என்று கற்றறிந்த தமிழர் ஒருவரே வினாவி நகைத்தல், பெற்ற தாய் மொழிப் பிறவிக்கு உற்ற தகைமை ஆகாது என்பதும், அதனை உணர்ந்த அப்பிறவி பாம்பன் குருபாத அடிகள் போல் சேந்தன் செந்தமிழ் என்ன ஒரு நூலியற்றித் தமிழ் தனித்து இயங்கவல்ல தனி உயர் மொழி என்று நிலைநாட்டியிருப்பின் வழிபடத்தக்க பிறவியாய் அமைந்திருக்கும்! அப்பேறு அதற்கு வாய்க்காமை, துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம் (குறள் 263) என்னும் வள்ளுவர் வாய் மொழிப்படி, தனித்தமிழ்த் தந்தைப் பேறு மறைமலையடிகட்கு வர இருப்பதற்கே நேரிட்ட நேர்ச்சியாம் என்க. இயக்கம் அடிகள் இயக்கம் ஆலமரமெனக் கால்பல கொண்டு அகல அகல விரியத் தனித்தமிழ் இயக்கமாய், உலகத்தமிழ்க் கழகமாய், பாவலரேறு தமிழ்க் களமாய், சேரர் கொற்றமாய், தமிழ்க்காப்புக் கழகமாய், தமிழ்ப் பாதுகாப்புக் கழகமாய், தனித்தமிழ் இலக்கியக் கழகமாய், தமிழ் வளர்ச்சிக் கழகமாய், மறைமலையடிகள் மன்றமாய், தமிழ்க்காவல் குழுவாய், இயற்றமிழ்ப் பயிற்றகமாய், பாவாணர் தமிழ் இயக்கமாய் ஆங்காங்கு முகிழ்த்து முனைப்பொடு கடனாற்ற ஏவியதாம். நூலகம் அடிகள் நூற்றொகை, அருமணிக் குவையன்ன நாலாயிரம் நூல்களைக் கொண்டது. எதிரது உணர்ந்து, சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகத்திற்கு முற்கொடையாக வழங்கியதால், நாலாயிரம் நாற்பதாயிரமாய் மேலும் மேலும் விரிந்து மறைமலையடிகள் நூலகப் பெயரால், பெருமைமிகு வள்ளலார் முதற்கண் பொழிவு செய்த பெரியவர் சோமு அவர்கள் இல்லமே வாய்க்க உலக வளமாக்கியதாம்! அதன் வழியாகவே அடிகள் தாமே வெளியிட்ட நூல்களும், வெளியிடாமல் கழக வழி வெளிவந்த நூல்களும், அடிகள் காலத்திற்குப் பின் வெளிவந்த நூல்களும் ஆகிய முழுமைத் தொகுதிகளும் கி.பி. 1898 முதல் 1969 வரை முதற்பதிப்பாக வெளிவந்தவை. அவற்றுள் படிகள் கிட்டுதற்கு அரியவையும் உண்டு. அடிகள் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப் பட்ட பேற்றால், இன்று வாய்த்த நூல்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக வழங்கும் பெருவாய்ப்பைத் தமிழ்மண் பதிப்பகம் பெற்றதாம். வெள்ளச் சேதம் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு பதிப்பகத்துள் புகுந்து அச்சு அடிக்கப்பட்டதும், அடிக்கப்பட இருந்ததும், கணினிப்படுத்தி வைத்த குறுவட்டுகளும், மூலநூல்களும் என வாரி அள்ளிக் கொண்டு போனமை, களத்துக்கு வந்த கதிர் மணிகள், களஞ்சியத்திற்கு வாராமல் போய, பேரழிவு ஒப்பதாம். ஆதலால், நூல்களை மீளத் தேடவும், கணினிப்படுத்தவும், குறுவட்டு ஆக்கி அச்சிடவும் என மும்மடங்குப் பணியும் பேரிழப்பும் பெருத்த அவலமும் உண்டாக்கிற்றாம். அந்நிலையில், ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழா துஞற்று பவர் என்னும் வாய்மொழியை வாய்மை மொழியாக்கிய துணிவுச் செல்வர் இளவழகனாரும் அவர் குடும்பத்தவரும் ஆவர்! முன்னறிவிப்புத் திட்டப்படி நூலுக்கு ஆர்வமாய்ப் பணம் செலுத்தியோர்க்கும் நூல் காலத்தில் கிட்டா உளைச்சல் இல்லாமல் போகாதே! அவர்களும் அமைந்து தாங்கல், இயற்கை இயங்கியல் வழியதாம். வெளியீடுகள் தமிழ்மண் பதிப்பகம் தமிழ்மொழி இன மண்வளம் - வளர்ச்சி மீட்டெடுப்பு - என்பவற்றை முன்வைத்துத் தமிழ்ப் போராளி இளவழகனாரால் தொடங்கப்பட்டதால், பேரிழப்புக்காம் எனத் தெளிவாகத் தெரிந்தும், இசைக் கலைக்கு வாய்த்த ஒப்பற்ற களஞ்சியமாய் வாய்த்த - கருணாமிர்த சாகரத்தை வெளியிட்டதாம்! முன்னை வந்த முதற்பகுதி பேரிழப்பாக்கியும் அதன் பின்னைப் பகுதிகளையும் அரிதின் முயன்று வெளியிட்டது! மொழிஞாயிறு பாவாணர்; ஈழத்து அறிஞர் ந.சி. கந்தையா; வரலாற்றறிஞர் சாமிநாத சர்மா, உரைவேந்தர் ஔவை சு.து; நாவலர் ந.மு.வே; பண்டித வித்துவான் தி.வே. கோபாலர்; சாமி சிதம்பரனார்; மயிலை சீனி. வேங்கட சாமியார்; பேரறிஞர் க. வெள்ளை வாரணனார்; பாவலர் குழந்தையார்; பாவலர் முடியரசனார்; பாவேந்தர், தொல் பொருள் கல்வெட்டு ஆய்ஞர் சதாசிவனார், சாத்தன்குளம் இராகவன் நூல்களையும் எளியேன் நூல்களையும் முழுமை முழுமையாக வெளியிட்டது. தொல்காப்பியம்- பாட்டு - தொகை - காப்பியம் - கீழ்க்கணக்கு - தமிழ்நாட்டு வரலாறு - ஆங்கிலம் வல்ல அறிஞர் இராம நாதனார் நூல்களையும், யாழ்ப்பாண அகராதி முதலாம் அகராதித் தொகுதிகளையும் வெளியிட்டது. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதிதொட்டு, இருபத்தோராம் நூற்றாண்டின் முற்பகுதி வரை வெளிவந்த - தமிழுக்கு ஆக்கமாம் நாட் டுடைமை ஆக்கப்பட்ட நூல்களை எல்லாம் - ஓரிடத்துப் பெற்று, ஒரு தனித்தமிழ் நூலகம் அமைக்கும் அளவுக்கு அச்சிட்டு வழங்கிய பெருமை இளவழகனார்க்கு உண்டு. அவரே அன்றி அவர் துணையையும் மக்களையும் உறவையும் அன்பையும் நண்பையும் ஒருங்கே இணைத்து, அறிஞர் பெருமக்கள் பலர் அரவணைப்பையும் வாய்ப்பக் கொண்டு வாழும் இயல்பு அவர்க்கு வாய்த்தலால் மட்டுமே, இவ்வாறு செயற்கரிய செய்ய வாய்த்ததாம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவரும் அவர். மறைமலைய மாண்பு மறைமலையம், தனித்தமிழ் இயக்கம்! தமிழ்த் தனிப் பெருவளம்! முத்தமிழ்ச் சுரப்பு! சீர்திருத்தச் செழுமை! வாழ்வியல் வளம்! கலைச் சொல்லாக்கக் களஞ்சியம்! பண்டைத் தமிழர் வரலாற்றுப் புதையல்! ஆய்வியல் வழிகாட்டி! பொழிவுப் பொலிவு! எழுத்தின் எழில்! மொழிக் காவல் முனையம்! முட்டறுக்கும் முழுதுறு கொடை! மீட்டெடுக்கும் மேதகைமை! அள்ள அள்ளக் குறையா அணிமணிக் குவியல்! எனல் மெய்மை விளக்கமாம்! புத்தகம் ஏற்றுப் பொலிவதே புத்தகம் வாழிய நலனே! வாழிய நிலனே! திருவள்ளுவர் நிலையம், இன்ப அன்புடன் 7, இராமன் தெரு, இரா. இளங்குமரன் திருநகர், மதுரை - 6 625006. மலைக்க வைக்கும் மறைமலையம்! பதிப்புரை மொழியே இனமக்கள் முன்னேற நல்ல வழியாம் அதனை வளர்க்க -பழியாய்த் தமிழயரத் தாழ்ந்தான் தமிழன் அவனே தமிழுயரத் தானுயர்வான் தான் மொழிப்பேரறிஞர் பாவாணர் அவர்கள் `மொழியின் வழியாகவே மொழிபேசும் மக்கள் முன்னேற முடியும் எனக் கூறுகிறார். உலகம் முழுதும் இவ்வுண்மை உணரப்பட்டுள்ளதை வரலாறு காட்டுகிறது. பாவாணரை அறிவுலகம் சரியாக அடையாளம் காண்பதற்குக் காரணமானது மறைமலையடிகளார் தந்த பாராட்டு! மறைமலையடிகள் (15.7.1876 - 15.9.1950) தேவநேயப் பாவாணர் (7.2.1902 - 16.1.1981) இருவரும் தனித்தமிழியக்கத்தைத் தாங்கி நிற்கும் தூண்களாகப் போற்றப்படுபவர்கள். மறைமலையடிகளார் 1916இல் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம், நூற்றாண்டை எட்டியுள்ள மகிழ்வான நேரம் இது! தனித்தமிழியக்க நூற்றாண்டை நினைவு கூரும் வகையில், தனித் தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளாரின் எழுத்து, சொற்பொழிவு, நாட்குறிப்பு, கடிதங்கள் அனைத்தையும் `மறைமலையம் எனும் பெருந்தொகுப்பாகத் தமிழ்மண் பதிப்பகம் வழி வெளிக்கொணரத் திட்டமிட்டோம். உலகம் முழுதும் பரவி வாழும் உணர்வு குன்றாத தமிழர்கள் தந்த ஊக்குவிப்பு, இந்தப் பெருந்திட்டத்தை நிறைவேற்றித் தீரவேண்டும் எனும் உறுதியை எனக்குத் தந்தது. தனித்தமிழ் இயக்க அறிஞர்களும் ஆர்வலர்களும் அடிகளாரின் அரிய படைப்புகள் பலவற்றையும் தேடித்தேடி வழங்கி வழிகாட்டினர்; வலிமையூட்டினர். மறைமலையடிகளார் 1898ஆம் ஆண்டிலிருந்து எழுதி வந்துள்ளார். அறிவுக்கடல் (ஞானசாகரம்) இதழை 1902ஆம் ஆண்டிலிருந்து வெளியிட்டு வந்துள்ளார். அவரின் படைப்புகள் பெருவெள்ளமாய் வெளிவந்திருக்கின்றன. அச்சேறாதவை, பெயர் கூடக் கேட்டறியாதவை, பெயர் தெரிந்தும் பார்வைக்குக் கிட்டாதவை - எனப் பலவகையாய்க் கிடைத்தன அடிகளாரின் அரும்படைப்புகள்! அவற்றை `மறைமலையம் எனும் தலைப்பில் 34 தொகுப்புகளாக ஒருசேரப் பார்க்கும்போது, தமிழுலகம் வியப்படைவது உறுதி. மொழிநலம் இனநலம் பேணுதல் அன்றோ முழுநலம் பெறுவழி! நாம்பெறல் என்றோ? இப்படிக் கவலையோடு கேட்பார் பாவலரேறு பெருஞ் சித்திரனார் (10.3.1933 - 11.6.1995). அவரின் `தென்மொழி இதழ் 1.8.1959 இலிருந்து வெளிவரத் தொடங்கிய பின்புதான், தனித்தமிழ்த் திசை நோக்கி நூற்றுக்கணக்கானோர் நடைபோடத் தொடங்கினர். அதில் நானும் ஒருவன். பெருஞ்சித்திரனாரின் எழுத்து காட்டிய அடையாளத்தால், பாவாணர் நூல்கள் எனும் அறிவுப்புதையல் பலர் கைகளிலும் குடியேறியது. பாவாணர் நூல்கள் வலியுறுத்திப் பேசியதால், மறைமலை யடிகளாரைத் தேடிப்பயிலும் ஆர்வம் தமிழுலகில் புத்துயிர் பெற்றது. ஆரியத்தை எதிர்ப்பதிலும் சமற்கிருதத்தை விலக்கு வதிலுமே தமிழின மேம்பாடும் தமிழ்க் காப்பும் அடங்கியிருக்கிறது. அவ்வுணர்ச்சியைத் தமிழர் நெஞ்சங்களில் அரும்ப வைத்தது திராவிடர் இயக்கம்; மலர்ந்து விரியவைத்தது தனித்தமிழ் இயக்கம்! குமுக, அரசியல், பண்பாட்டு மலர்ச்சிக்கு இந்த ஈரியக்கங்களின் பேருழைப்புப் பயன்பட்டது. தமிழகத்தில் தனித்தமிழ் உணர்வு கி.மு. 7ஆம் நூற்றாண்டுக்குப் பின் தளரத் தொடங்கியது; 10ஆம் நூற்றாண்டுக்குப் பின் சரியத் தொடங்கியது. வடமொழி வெள்ளத்தில் தமிழ் இழுத்துச் செல்லப்பட்டு விடாமல் காப்பாற்றியோர் கம்பரும் பவணந்தியும்! பின்வந்தோருக்கு அந்தக் காப்புணர்ச்சி இல்லாமல், அயன் மொழிப் பற்றுக்கு அடிமையானதால் தமிழும் தமிழினமும் பெற்ற இழப்புகள் ஏராளம்! அயன்மொழிச் சேற்றிலிருந்து தமிழை மீட்கும் முயற்சி ஆங்கிலேயர் வருகையையொட்டிப் புத்துயிர் பெற்றது. வள்ளலார், பாம்பன் சாமிகள், வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள், சுப்பிரமணியசிவா, பரிதிமாற் கலைஞர் முதலிய பலரும் தொடக்க விதைகளாயினர். கோவை அவிநாசியில் பிறந்து விருதுநகரில் வாழ்ந்த விருதை சிவஞானயோகி 19.11.1908 ஆம் நாள் `திருவிடர் கழகம் தொடங்கித் தனித்தமிழ் உணர்ச்சிக்கு வேகங்கூட்டினார். அவ்வமைப்பில் உறுப்பினராயிருந்தவர் சுவாமி வேதாசலம் (மலைமலையடிகள்). மறைமலையடிகள் எனத் தம் பெயரைக் கொண்டு, 1916இல் அவர் தொடங்கியதே தனித்தமிழ் இயக்கம். `துறைமிகு ஆங்கிலம் மறைவட மொழியொடு தூய்தமிழ்ப் பேரறிஞர் - தனித்தமிழ் தோற்றிய ஓரறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடியதற்கேற்ப, மறைமலை யடிகளார் தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம் முதலிய பன்மொழியிலும் புலமை மிக்கவர். பன்மொழிப் பேரறிஞரான மறைமலையடிகளார் தமிழுக்கும் தமிழருக்கும் ஆதரவாக நின்றதால் எதிர்ப்புக்கும் இழப்புக்கும் ஆளாக்கப்பட்டார். ஆனாலும் உறுதி குன்றாமல் தமிழுக்கு ஆதரவாய் உழைக்கும் உள்ளத்தோடிருந்தார். அதனால், தமிழர் உள்ளங்களில் இன்றளவும் மாறாப் பெருமையோடு அவர் வீற்றிருக்கின்றார். வாழ்த்தாத நாளில்லை வையகம் மறைமலை யடிகள் மறையாத் திருப்பெயர் வாழ்த்தாத நாளில்லை வையகம் பாவேந்தர் பாரதிதாசன் அவர் மாண்பினைப் பாடி மகிழ்ந்ததும், தம் `குடும்ப விளக்கு நூலினை மறைமலை யடிகளுக்குக் காணிக்கையாக்கி வழங்கியதும், அவரின் உறுதி தளராத உள்ளமும் உழைப்பும் கண்டு போற்றிய நன்றிக் கடன் என்பதில் அய்யமில்லை. சென்னையில் கடந்த இருபது ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் தமிழ்மண் பதிப்பகப் பணிகளைத் தமிழுலகம் அறியும். வாழும் தலைமுறைக்கும் வருங்காலத் தலைமுறைக்கும் வழிகாட்டவல்ல தமிழறிஞர்கள் பலரின் நூல்களை முழுமுழுத் தொகுப்புகளாக வழங்கியிருப்பது தமிழ்மண் பதிப்பகத்தின் முடிப்பினை (சாதனை)யாகப் போற்றப்படுகிறது. தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட அறிஞர்களைக் கண்டறிந்து, அவர்களின் நூல்களை முழுமையான தொகுப்புகளாகத் தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டு வருகிறது. அவை காலம் முழுதும் பயன்படவல்ல கருவி நூல்கள் என்பதை அறிஞர் உலகம் அறியும்! தமது நலத்தை ஒதுக்கி வைத்து, தமிழ் நலத்தைக் காக்க வாழ்ந்த அறிஞர்களின் அனைத்து நூல்களையும் ஒரு சேரத் தொகுத்து முழுத் தொகுப்பாக வழங்குவது பெரும்பணி! அதனைத் தமிழ்மண் பதிப்பகம் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. தொகுப்பு நூல்களின் பட்டியலைப் பின்னிணைப்பில் காண்க. தமிழுக்காக உழைக்கும் உணர்வை இளமையில் எம்மிடம் ஏற்படுத்தியோருள் பெரும்புலவர் நக்கீரனாரும் அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலனாரும் குறிப்பிடத்தக்கோர்! எம் நன்றிக்குரியோர்! தனித்தமிழ் ஆர்வம், திராவிடர் இயக்க ஈடுபாடு எனும் இரு சிறகுகளால் எம்மை எழவைத்தவர் பெரும்புலவர் நக்கீரனார்! அவரை எண்ணிக் கண்பனிக்க நன்றி கூறுகிறது எம் நெஞ்சம். காலப்பழமையாலும் பராமரிப்புக் குறைவாலும் அழிய நேர்ந்த தமிழிலக்கியங்கள் அளவற்றவை! அவற்றில் ஒருபகுதியை யாவது மீட்டு நம் கைகளுக்கு வழங்கியோர் ஆறுமுகநாவலர், சி.வை. தாமோதரனார், உ.வே.சாமிநாதர் முதலிய சான்றோர் பெருமக்கள்! தமிழிலக்கியப் பெருஞ்செல்வத்தை மீண்டும் மீண்டும் அச்சாக்கி, அனைவர் கைகளையும் எட்டச் செய்த பெருமை - சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், உ.வே.சா. நூலகம், மணிவாசகர் பதிப்பகம் முதலிய பதிப்பாளர்களுக்கு உரியது. அச்சுத்துறை அறிமுகமான பின்பே, அறிவுத்துறை அனைவருக்கும் பொதுச்சொத்தாகும் வாய்ப்பு வந்தது. எட்டாக் கனியாக ஓலைச் சுவடிகளில் முடங்கிக் கிடந்த இலக்கியச் செல்வங்கள், எல்லோருக்கும் எளிதாய்க் கிடைக்கும் பணியைச் செய்த பதிப்பாசிரியர்களும், பதிப்பாளர்களும் நம் நன்றிக் குரியோர்! இரவு பகல் பாராது முதுமையைக் கருதாது உழைக்கும் மனவுரத்தை முன்னோடிப் பதிப்பாசிரியர்களின் பணியே எமக்கு வழங்கியது. அரசும், பல்கலைக் கழகங்களும், அறநிறுவனங்களும், சமய பீடங்களும் ,பெரும் இயக்கங்களும், பெரும் செல்வர்களும் செய்ய வேண்டிய பெருந் தமிழ்ப்பணி இது! எளியவர்களால் இயங்கும் தமிழ்மண் பதிப்பகம் பெருந்தமிழ்ப் பணிகளை இன்னல்களுக்கு இடையில் அருமுயற்சியோடு செய்து வருவது, உள்ளவுரம் ஒன்றினால்தான்! வல்லமை சேர்க்கும் வலிமையுண் டாக்கும்! வண்டமிழ் நைந்திடில் எதுநம்மைக் காக்கும்? காக்கும் தமிழைக் காக்கும் உணர்வைப் பாவேந்தர் பாடல் வரிகள் தந்தன. அச்சுக்கு எட்டாமலும் கைக்குக் கிட்டாமலும் இருந்த பேரறிஞர் பலரின் நூல்களை நாட்டுடைமையாக்கி திராவிடர் இயக்க அரசுகள் வழங்கின. அதனால், அறிவு பரவலாகும் வாய்ப்புகள் உருவாயின. `சரிவும் இழப்பும் நமக்கு வந்தாலும் தமிழுக்கு வரக்கூடாது என எண்ணி உழைக்கும் இயக்கங்களும் அமைப்புகளும் தமிழ் நாட்டில் வற்றாமல் வளர்ந்தபடி இருக்கின்றன. திருவிடர் கழகம் (1908) தனித்தமிழ் இயக்கம் (1916) தென்னிந்திய நலஉரிமைக் கழகம் (1916) சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் (1934) தமிழ்ப்பாதுகாப்புக் கழகம் (1937) தமிழறிஞர் கழகம் (1943) தமிழ்ப் பேராயம் (1959) தமிழ்க்காப்புக் கழகம் (1961) தனித்தமிழ்க் கழகம் (1964) உலகத்தமிழ்க் கழகம் (1968) தமிழியக்கம் (1972) தமிழ்ச் சான்றோர் பேரவை (1998) தமிழ் மலர்ச்சிக்கும் தனித்தமிழ் வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைத்த இத்தகு அமைப்புகளுக்கு மூல விசையாகத் திகழும் பெருமையைப் பெறுவோர் மறைமலையடிகளாரும் பாவாணருமே! தமிழ் வளத்திற்கும் தமிழர் நலத்திற்கும் சிவனிய மேம்பாட்டிற்கும் மறைமலையடிகளார் ஆற்றிய பணிகள் அளப்பரியவை. அவை தொடர்பாக அவர் ஆய்ந்தளித்த அறிவு முத்துகள் எண்ணற்றவை! அடிகளாரின் அனைத்துப் படைப்புகளும் பொருள்வழிப் பிரிக்கப்பட்டு, காலவரிசையில் 34 தொகுப்புகளாகத் தொகுக்கப் பட்டு `மறைமலையம் என உங்கள் கைகளில் இப்போது தவழ்கின்றது. பல தலைமுறைகளுக்குப் பயன்படும் அறிவுக் கருவூலம் இது! தமிழர் இல்லந்தோறும் இருக்கவேண்டிய அருந்தமிழ்ச் செல்வம் இது! அறிவுலகத்தால் `மறைமலையம் வரவேற்கப்படும் என்னும் நம்பிக்கை எமக்குண்டு. நூற் சுரங்கத்தில் நுழைய அழைக்கிறோம். தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழ்க்கென வாழ்வதே வாழ்வதாகும் எனும் பாவேந்தர் வரிகளை நினைவுக் கூறுகிறோம். - கோ. இளவழகன் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் ரோசா முத்தையா நூலகம் - சென்னை. புலவர் கா. இளமுருகன் - புன்செய் புளியம்பட்டி (மறைமலையடிகள் மன்றம்) மறை. தாயுமானவன் - சென்னை (மறைமலையடிகளின் பேரன்) பிழை திருத்த உதவியோர்: திரு. அ. மதிவாணன் (ஆங்கிலம்) திரு. க. கருப்பையா திரு. புலவர். த. ஆறுமுகம் புலவர். மு. இராசவேலு திரு. இராசுகுமார் திரு. நாக. சொக்கலிங்கம் முனைவர். க. சுப்பிரமணியன் திருமதி. அ. கோகிலா திருமதி. உசா செல்வி. அபிராமி நூல் உருவாக்கம் கணினி செய்தோர்: திருமதி சித்திரா திருமதி மலர் திருமதி செல்வி திருமதி ஹேமலதா திரு. ஆசம் திருமதி கலைவாணி பிராசசு இந்தியா திருமதி` புகழ்ச்செல்வி கயல்விழி (Process India), நூல் வடிவமைப்பு: திருமதி வி. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: கவி பாகர் நூலாக்கத்திற்கு உதவியோர் இரா. பரமேசுவரன், க. இளந்திராவிடன், வே. தனசேகரன், கு. மருது, இல. தருமராசன் தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை -1 எதிர்மம் (Negative): பிராசசு இந்தியா (Process India) சென்னை-5. அச்சடிப்பு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு மற்றும் பிராசசு இந்தியா `மறைமலையம் எல்லா நிலையிலும் செப்பமுற வெளி வருவதற்குப் பல்லாற்றானும் உதவியாக இருந்த இவர்களுக்கும் மற்றும் அறிஞர் பெருமக்களுக்கும் எம் நிறைந்த நன்றியும் பாராட்டும். ஞானசாகரம் 1902 இல் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பதிப்பித்த நூலினை மூலமாகக் கொண்டு இந்நூல் பதிப்பிக்கப்படுகின்றது. பொருளடக்கம் பக்கம் 1 வேதாகமோக்த சைவ சித்தாந்த சபை 5 2. சோமசுந்தர விஜயம் 8 3. சைவமும் சைவர் நிலையும் 41 4. ஞானசாகரம் 52 5. உள்ளது போகாது இல்லது வாராது 74 6. சந்தானகுரவர் வரலாறு 84 7. சகளோபாசனை 88 8. கேனோப நிடதக் கருத்துப்பொருள் விளக்கம் 108 9. திருவருளியல்புகூறி நெஞ்சறிவுறுத்தல் 173 10. இறையனாரகப்பொருளுரை வரலாறு 202 11. ஆனந்தக்குற்றம் - 1 209 12. சமாசாரக்குறிப்புகள் 213 13. மாணிக்கவாசகர்கால நிருணயம் 219 14. தமிழ்வேதபாராயணத்தடை மறுப்பு 238 15. வடமொழியிலுள்ள தமிழ்ச் சொற்களுக்குக் காரணம் 246 16. சிகந்திராபாத் சித்தாந்த ஞானபோத சங்கம் 256 17. சைவசித்தாந்த சபை 260 18. சுதேச பாஷாப்பியாச நிவர்த்தி 273 19. மெய்ந்நல விளக்கம் 280 20. நாலடியார் நூல் வரலாறு 297 21. ஆனந்தக் குற்றம் - 2 309 22. திருக்குறட் கத்தியரூபம் 316 23. முதற்பதுமம் 335 24. முனிமொழிப்பிரகாசிகை 339 25. பரிமேலழகியாருரை யாராய்ச்சி 353 26. ஆகமம் 386 27. அறிக்கை 401 1. வேதாகமோக்த சைவ சித்தாந்த சபை சொல்லியவற்றை மறந்தொழுகுவர். வேறு சிலர் சைவமாவது சிவமாவது நம்முடைய கைப்பொருளுக்கு நஷ்டமன்றோ நேருகின்றது, சபையும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று சொல்வாராயினர். நாயகரவர்களுக்குத் தொண்டு செய்து சித்தாந்த சைவ வுணர்ச்சி பெற்றுக் கொண்ட வேறு சிலர் தாந்தாமும் நாயகரவர்களாய்விடல் வேண்டுமென்று பேராசைகொண்டு தாமே யாங்காங்குப் பிரசங்கங்கள் செய்தலும் அப்பிரசங்கங்களிலும் வேறிடங் களிலும் நாயகரவர்களைப் புறம்பழித்துக் குருத்துரோகஞ் செய்வாருமாய் ஒற்றுமையழிந்துபோயினர். இனி நாயகரவர் களுக்குப் பின்பாவது அச்சைவர்கள் தம்முள் ஒற்றமை யுடையராய் வாழ அறியாமல் தமக்குள்ளேயே கலகங்கள் விளைத்துத் தாந்தாமே சைவப்பிரசாரகராதல் வேண்டுமென ஆவேசங் கொண்டு ஆங்காங்குப் பிரசங்கங்கள் செய்தார வாரிக்கின்றனர். இங்ஙனம் ஒழிவார் ஒழியச் சபையின் பலம் குறைந்திருப்பதனால் நாயகரவர்களிடத்தில் ஆசாரிய விசுவாசம் பாராட்டிச் சைவசமயப்பிரகாசத்தினையே விரும்பி யிருக்கும் சில உத்தம சிவாபிமானிகளோடு கலந்து யோசித்து இச்சபையை மறுபடியும் அபிவிருத்தி செய்தற்குரிய சில ஏற்பாடுகள் செய்திட்டோம். அவை வருமாறு: 1. ஞான சாகரம் எனப்பெயரி நமது பத்திரிகை வேதாகமோக்தசைவ சித்தாந்த சபை யின் பிரசுரமாகவே கொள்ளப்படும். 2. இச்சபைக்கென்றே வேறு மெம்பர்களைச் சேகரித்தல் கூடாமையால் இப்பத்திரிகையின் கையொப்ப நண்பர்களெல் லாரும் இச்சபைக்கும் மெம்பர்களாகக் கொள்ளப்படுவர். 3. இப்பத்திரிகையின் கௌரவாபிமான சீலர்கள் இச்சபைக்குக் காரிய நிர்வாக சபையா ராகவும், பத்ராதிபர் காரியதரிசியா ராகவுங்கொள்ளப்படுவர். 4. நாகப்பட்டினம் முதலிய இடங்களிலுள்ள சபை களெல்லாம் ஸ்ரீலஸ்ரீ நாயகரவர்கள் நன்முயற்சியினாலேயே ஏற்படுத்தப்பட்டு நிலவுதலானும், அச்சபையாரெல்லாரும் நாயகரவர்களுக்கு நன்றி செலுத்தக்கடமைப் பட்டிருத்த லானும் அச்சபைகளெல்லாம் இவ் வேதாகமோக்த சைவ சித்தாந்தசபைக்கு அங்கங்களாம் படி அச்சபையார் அனுமதி தருதல் வேண்டும். அவ்வாறு செய்தலால் அச்சபைகளெல்லா வற்றினுடைய சமூகமே வேதாகமோக்த சைவ சிந்தாந்த சபை எனப்பட்டு எல்லாச் சபையாரும் ஒற்றுமைகொண்டு சைவஸ்தாபனஞ் செய்வதாய் மதிக்கப்பட்டு உலகெங்கணும் சைவம்பரவும். 5. அவ்வச்சபையாரும் பிறரும் தங்கள் தங்களால் இயன்றவளவு பொருளுதவியிட்டால் அப்பொருள் கைக் கொண்டு இச்சென்னைமா நகரத்தின்கண் ஓர் அழகிய மாளிகை அமைத்து அதில் சமயாசிரியர் சந்தனாசாரியர் திருவுருவப்படங்களும் ஸ்ரீலஸ்ரீ நாயகரவர்கள் திருவுருவப் படமும் எழுந்தருளச்செய்து அதனுடன் இப்பத்திரிகா பிரகடனத் திற்கும் வேறுவேறு சைவநூற் பிரகடனத்திற்கும் உபகரணமாக ஓர் அச்சியந்திரசாலையும் ஸ்தாபிக்கலாம். 6. இச்சபையின் சார்பாக மாதமொருமுறை தலை நகராகிய இச்சென்னையில் ஒரு மகோபந்நியாஸஞ் செய்யப் படும். அங்ஙனஞ் செய்யப்படும் உபந்நியாஸங்கள் இப் பத்திரிகையில் வெளியிடப்படும். 7. வருடாந்தங்களில் எல்லாச்சபைகளும் ஏகோபவித்து எங்காவது தலைநகரங்களில் வேதாகமோக்த சைவ சித்தாந்த சபை என்னும் பொதுப்பெயராலொருங்கு கூட்டப்பட்டு உற்சவங் கொண்டாடப்படும். 8. இங்ஙனம் ஒழுங்குபடுத்தி நடத்தப்படும் வேதாக மோக்தசைவ சித்தாந்த சபை க்குத் தஞ்சபைகளை அங்கங் களாக்க விரும்புவார். இப்பத்திரிகையைக் கௌரவித் தபிமானிக்க வேண்டும். 9. இன்னுமிதனைப்பற்றி விவரமறிய வேண்டினாலும் இச்சபையிற் சேர வேண்டினாலும் எமக்குத் தெரிவித்துக் கொள்ளலாம். 2. சோமசுந்தர விஜயம் சுத்தாத்துவித வைதிகசைவ சிந்தாந்தத்துறைகளை அறியமாட்டாராகிய வேறு சமயிகள் அச்சித்தாந்த சைவத்தின் மேல் நியாயவிரோதமாக வெளியிட்ட துரூகவாதங்களை உபந்நியாசங்களானும் நூலுரைகளானும் மறுத்து ஒழித்துச் சிந்தாந்த சைவப்பொருண் மெய்ம்மை யாரும் எளிதில் அறிந்து உறுதி கூறுமாறு அரிய சைவம்பிரசாரகம் செய்து போந்து சிவசாயுச்சியமெய்திய வைதிகசைவசித்தாந்த சண்டமாருதம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரநாயகரவர்கள் சரிதம் மிகவும் அருமை பெருமையுடையது. ஆதலால் அதனை எழுதி முடிப்பிக்க வேண்டுமென்னும் அவா பெரிதுடையராகின்றார் பலர். அதனை அவ்வாறே முடிப்பதற்கு நமது பத்திரிகை பெருஞ் சாதனமாயிருத்தலால் இதனைப் பலப்படுத்திக்கொண்டு நாயகரவர்கள் சரிதத்தைச் சிறிதுசிறிதாக எழுதி இதன் கண்வெளியிடும் நோக்கமுடையோம். நாயகரவர்கள் தமது இளம்பருவமுதற்கொண்டு இதுகாறும் பிரிசுரித்த பத்திரிகை கள் புத்தகங்களையும் சரிதத்திற்குவேண்டும் பொருட் குறிப்பு முதலிய பிறகருவிகளையும் ஒருங்குதொகுத்து வருகின்றோம். நாயகரவர்களை நேரிற்கண்டு பழகியும் அவர்கள் ஆங்காங்குப் புறச்சமய நீராகரணஞ்செய்து சைவசித்தாந்தம் நிறுத்திய வரலாறு நன்குணர்ந்தும் இருக்கும் நண்பர்கள் தாம்தாம் அறிந்த வற்றை எழுதி எனக்கு உபகரிப்பார்களாயின் அவர் செய்யும் அந்நன்றியைப் பெரிதாக மதித்து இன்ன இன்ன விஷயம் இவரிவரால் உபகரிக்கப்பட்டது என்பதுடன் ஆங்காங்குக் குறிப்பிடுவோம். மறுபத்திரிகையில் எம்மிடத் திருக்கும் நாயகரவர்கள் புத்தகங்கள் பத்திரிகைகண் முதலிய வற்றின் பெயரட்டவணை வெளிவரும். அதிற் காணப்படாத வேறுபத்திரிகைகள் புத்தகங்கண் முதலியவற்றை வைத்திருக்கும் நண்பர்கள் அவற்றை எமக்குத் தருவாராயின், சரிதம் முடிந்தவுடன் திரும்பவும் அவற்றை அவர்கட்குச் சேர்ப்பித்து வந்தனஞ் செய்யக் கடமைப்பட்டுள்ளோம். சகளோபாசனை அசே தனவுருவமாகக் காணப்படும் இத்தூலவுலகம் போற் காணப் படுவதுமன்றாய், அசேதன வுருபொருள் களாகிய வாயு ஆகாயம் போலுணர்ந் துரைக்கப்படுவது மன்றாய்ச், சேதனவுருவ வான்மதத்துவம்போ லறிந்தனு பவிக்கப் படுவதுமன்றாய்க், காண்பதற்கெல்லாம் அப்பா லாய்க் கேட்பதற்கெல்லாம் அதீதமாய், உரையளவுசென்று முடிவிடங் கடந்ததாய் மனவுணர்வுசென்று பற்றுதற்கு அப்புறமாய், அறிவினுளறிவாய் ஆன்மாவினுள் அந்தரான்மா வாய்க், சருவவுலகங்களுஞ் சருவவண்டங் களுஞ்சருவ வான் மாக்களுந் தனது சிதாகாச வியாபகத்தின் கண்ணே மடங்கி யடங்கிக் கிடப்ப அவற்றின் மேல் விரிந்து சென்று முடிவிட மறியப்படாத வியாபகமுடையதாய், ஞான மங்கள சொரூப முடையதாய்ச் சருவசத்தியுடையதாய் ஆனந்த நிரம்பித் ததும்புந் திப்பியச் சரமாய்ப் பரமகருணாநிதியாய் விளங்கும் முழுமுதற் கடவுளைச் சிறுகிய அறிவுஞ் சிறுகிய தொழிலும் சிறுகியறிந்த தனையும் மறந்து மறந்தறிதலும் மயங்கியறிதலு முடைய கிஞ்சிஞ்சராகிய ஆன்மாக்கள் உணர்ந்து வழிபடுதல் கூடாமையால், அருட்பெருங்கடலாகிய அவ்விறைவன் தன்னை யவ்வான்மாக்களுணர்ந்து உபாசித்து உய்யும் பொருட்டு ஓரோர் காலங்களி லோரோரிடங்களில் ஓரோரன் பர்க்குக் கன்றை நினைத்து வரும் புனிற்றாப் போலவும் விறகின்கட்பிறந்த தீப்போலவும் மோரின் கட் டிரண்ட வெண்ணெய் போலவும் வித்தின்கட் பிழிந்தெடுத்த எண்ணெய் போலவும் வெளிப் பட்டு அவர்க்கு அனுக் கிரகஞ்செய்த அருட்கருணைத் திருக்கோலங்களை மெய் யன்புடையராகி மனவொருமைப் பாடு கொண்டு தியானஞ் செய்து நாவுரை குழறக் கண்ணீருங் கம்பலையுந் தங்குறிப் பின்றியே நிகழவுபாசித்து விழிபட்டுச் சீவபோத நிவர்த்திச் சிவபோதப் பிராப்தி பெறுஞ்சன்மார்க்க முறைதான் சகளோ பாசனையாம். இங்ஙனம், விறகின்கண் மறைந்து கிடந்த தீ அவ்விறகினை ஒன்றோடொன்று தேய்த்துக் கடைந்த வழி அதிற்றோன்றி நின்றவாறு போலவும் பாலின் கண் மறைந்து அளாவி நிறைந்த நெய் அதனைக் காய்ச்சிக் கடைந்தவழி யதன்கண் வெளிப்பட்டு நின்றவாறு போலவும் யாண்டும் பரந்து வியாபிக்கும் ஈசுரன், ஆன்மாவைக் கீழரணியாகக் கொண்டு பிரணவவுணர்ச்சியை மேலரணி யாகக் கொண்டு அன்பென்னுஞ் கயிறு கட்டியிழுத்துக் கடையவே வெளிப் பட்டுத்தோன்றிநின் றனுக்கிரகஞ் செய்வா னென்பது பற்றியே, விறகிற்றீயினன் பாலிற்படுநெய்போன், மறையநின்றுளன் மாமணிச்சோதியான், உறவுகோனட்டு ணர்வு கயிற்றினான், முறுகவாங்கிக்கடைய முன்னிற்குமே என்னுந் தேவாரத் திருவாக்கும், இரந்திரந்துருகவென் னத்துள்ளேயெழுகின்ற சோதியேயிமையோர், சிரந்தனிற் பொலியுங் கமலச் சேவடியாய் திருப்பெருந்துறையுறை சிவனே, நிரந்தவாகாய நீர் நிலந்த காலாயவையல்லையா யாங்கே, கரந்ததோ ருருவே தளித்தன்னனுன்னைக் கண்ணுறக்கண்டு கொண் டின்றே எனவும் சோதி யாய்த்தோன்றுமுருவமே யருவா மொருவனே சொல்லுதற் கரிய, வாதியேஎனவும் போந்த திருவாசகத் திருவாக்கும், நிறுத்திடு நினைந்த மேனி நின் மலனருளினாலே என்னுஞ் சிவஞான சித்தித்திருவாக்கும், --------------------------- என்னுங்கைவல்யோப நிடதத் திருவாக்கும், ------- --------- என்னுஞ் சுவேதாசுவதரோபநிடதத் திருவாக்கும் எழுந்தன. இங்ஙனம் காணவுங்கருதவும் வாராத முழுமுதற் பெருங்கடவுளைக் காணவுங்கருதவும் எளிதாகிய உருவத் திருமேனியிற்கொண்டு வழிபடுஞ் சன்மார்க்கச் சகளோ பாசனையியல்பு அறியமாட்டாத வேறு சமயத்தார்சிலர், இந்துக்கள் கேவலமாகிய விக்கிரகாராதனை செய்து ஈசுரனு டைய பெருங்கோபத்திற்கு ஆளாகின்றனர் என்று இழிவாகச் சொல்லா நிற்பர். ரோம், கிரீசு, எகிப்து முதலிய தேசங்களி லுள்ளவர்கள் செய்யும் விக்கிரகாராதனை போல்வதன்றிப், பரதகண்டவாசிகளாகிய ஆரியர்1 செய்து போதரும் சகளோ பாசனை ஆழ்ந்த கருத்துடையதாய் முதல்வன் ஓரோர் அன்பர் பொருட்டு ஓரோர் காலங்களில் தரித்துக்கொண்டு வந்த அருட்கருணைத் திருவுருவங்களை மெய்யன்புடையார் மெய்ம் மையான் வழிபடும் மேம்பாடுடைய தாம். பிறதேசங்களிலுள்ள பிறமக்கள் இறைவன் அங்ஙனம் திருமேனிகொண்டு அனுக் கிரகஞ்செய்யுந் திருக்கோலங்களை ஒரு காலத்துங் கண்டறியா மையான் அவர் தாந்தாம் அறிந்தவாறே ஒவ்வோர் சித்திரப்பிரதிமைகளை அமைத்துக் கொண்டும் , பூனை, பாம்பு, சுண்டெலி முதலிய பிராணிகளின் வடிவங்களைத் தாபித்துக்கொண்டும் வழிபட்டு அந்த அசேதன வுருவப் பொருள்களின் கண் அன்புடையராய் ஈசுரனையறிந்து வழிபடுதற்குரிய புண்ணிய மிலராய் வாழுவாராயினர். அப்பிறதேசங்களினும் ஒவ்வோர் காலங்களில் அபரஞான சித்தி கைவந்தவர்களாகிய சில தீர்க்கதரிசிமார் தோன்றி ஆங்காங்குள்ள மக்கள் உய்யும் பொருட்டாகச் சன்மார்க்க முறைகளையும் அபரஞான மார்க்கங்களையும் உபந்நியாஸித்து வந்தார்களென்பதை அவரவர் தேசசரிதங்களானும் சமய சாத்திரங்களானும் அறிந்துள்ளோமாயினும், அத்தீர்க்க தரிசிமாரெல்லாம், இறைவனுடைய திருக்கோலங்களை நேரே கண்டு வழிபடுதற்குரிய பெரும்புண்ணியமும் பரஞான முதிர்ச்சியும் உடையராகாமையால், அவர் தமக்கு அவ் விறைவன் மேகத்தில் மறைந்து நின்றனுக்கிரகஞ் செய்தா னென்றும் வனாந்தரங்களிலும் மலைக்குகைளிலுந் தாம் சஞ்சரித்துக்கொண்டிருந்த காலங்களிலிறைவன் தம்மோடு உரையாடிய ஞான சப்தங்கேட்டாரென்றும் அவர் சமய சாத்திரங்களிற் சொல்லப்பட்டதன்றி, அவ்விறைவனேயுருவங் கொண்டு அவர் கண்ணெதிரே தோன்றி யனுக்கிரகஞ் செய்தானென்றும் அவ்வாறு அனுக்கிரகஞ்செய்த முதல்வன் திருவடையாளங்களிவை என்றுங் குறிப்பிடப்படாமையான் அவரெல்லாம் ஈசுரனை அருட்கருணைக் கோலங்களான் வழிபடும் முறைமையறியாராயினர். அங்ஙனம் அறிய மாட்டாத அபரஞானத்தீர்க்கதரிசிமார் கூறிய உபதேச மொழிகளைக் கடைப்பிடித்தொழுகிய மக்கள் அவர் கூறிய சன்மார்க்க போதங்களை மனம் பொருந்த அமைத்து அவற்றின்வழி நடந்து, ஈசுரனைச் சகளமார்க்கத் தானறிந்து உபாசிக்கும் முறைமை தமக்கு விளங்காமையால் தமக்கு விளங்கிய வாறெல்லாம் வேறு பிறவுருவங்களை அவ்விறைவன் ஞானவுருவங்களாகப் பிறழக் கொண்டு அவை தம்மையே வழிபடுகின்றனர். இனிப் பரத கண்டவாசிகளாகிய நன்மக்களோ ஈசுரன் ஒவ்வோர் அன்பர் பொருட்டு ஒவ்வோர் காலங்களிற் கொண்ட சகள அருட் கோலங்களாகிய சதாசிவன், மகேசுரன், அர்த்தநாரீசுரன், காளி, துர்க்கை, உமை, விநாயகர், சுப்பிரமணியன், வைரவன் முதலிய வற்றையே உண்மையான் வழிபடுகின்றனர். அங்ஙனம் உபாசிக்கப்படுவனவாகிய சகள வருட் கோலங்கள் தாமும் மெய்யன்புடையார்க்கன்றி யேனையோர்க்கு எளி வந்து விளங்குவன அல்லவாகலான் அவை வெளிவந்து அனுக்கிரகஞ் செய்யப்பெற்ற மெய்யன்பர் தாங்கண்டவாறே அவ்வருட்கோல அடையாளங்களை அன்புததும்பிவழிய ஞானமயமாய் விளங்குந்தமது திருவாக்கால் வருணித்துக் கூறிய முறைபற்றிப் பிறமக்களெல்லாருந் தாமும் உய்யுநெறி தேடல்வேண்டிக் கல்லினாலுஞ்செம்பினாலுந் திருவுருவங்கள் அமைத்து அவற்றை அதிரகசிய நுட்பங்களோடு கட்டப்பட்ட ஆலயங்களில் எழுந்தருளச்செய்து உபாசனை செய்து வருகின்றனர். இனி இவ்வாறு இவர் உபாஸிக்கும் போதெல் லாம் கல்லினாலுஞ் செம்பினாலும் அமைக்கப்பட்ட ஐடமயமான அத்திருவுரு வங்கள் அவ்வடையாளங்களை யுடைய சின்மயமான சகள அருட்கோலங்களை நினைவூட்டி, அவ்வருட்கோலவழி பாட்டின்கண் அவர் அறிவைப்பதியச் செய்து அவருக்கு உறுதிதருதலான் அது சகளோபா rid(Symbolism) என்று வழங்கப்படுகின்றது. இனிப்பிற தேசங்களிலுள்ள மக்களுக்குச் சகள வருட்கோலங்கொண்டு இறைவன் அனுக்கிரகஞ் செய்ததில்லையென்பது மேலே இனிதெடுத்து விளக்கிக் காட்டினோமாதலால், அவர் தமக்குத்தோன்றியவாறெ ல்லாங்கற்பித்துக்கொண்ட சடமய மான அவ்வுருவங்கள் தம்மை முதலாகவுடையசின் மயமான சகள வருட்கோலங் களை அவர்க்கு நினைவி லெழுப்பி அவரறிவை அவற்றின் கட்பதியுமாறு செய்ய மாட்டா தொழியும். ஒழியவே, அவர் கல்லானுஞ்செம்பானு மியற்றிய வுருவங்களிற் செய்யும் வழிபாடெல்லாம் அச்சட ரூபத்தைக் கடந்து ஞானமயமான சித்ரூப ஈசுரசரீரத்தின்கட் செல்லா வாய் மடங்கி யச்சடரூப மான விக்கிரகத்தின் கண்ணேயே செல்லுதலால் அவை விக்கிரகாராதனை (Idolatory) என்று வழங்கப்படுகின்றன. இங்ஙனம் பரதகண்ட வாசிகளாகிய ஆரியர்கள் செய்து போதரும் சகளோபாச னையாகிய ஈசுரவழிபாடும், பிற கண்டங்களிலுள்ளவர்களாகிய மக்கள் மேற் கொண் டொழுகும் விக்கிரகாராத னையாகிய விக்கிரக வழிபாடுந் தம்முள் வேறு பாடுடையவாதல் உணராது இரண்டனையும் ஒன்று படுத்தி அவ்வாற்றாலாரியர் மேற் கொண்டு செய்யுஞ் சகளோ பாசனைச்சன்மார்க்க நன் முறையையே இகழுதல் பொருந்தாது. மேலும், ஆரியர்களாகிய நன்மக்கள் சூரியனை வழிபடும் போது அச்சூரியனை ஒரு சரீரமாகவும், பர்க்கன் என்னும் பெயரோடுகூடிய இறைவனை அச்சரீரத்தினுள் ஓர் ஆன்மாவாக வுங்கொண்டு உபாஸிப்பர். பிறர் அங்ஙனங் கொள்ள அறியாமல் சூரியனையே பரமான்மாவெனக் கொண்டு உபாஸிப்பர். ஆரியர் சந்திரனை வழிபடும் போது அதனை ஒரு சரீரமாகவும், சோமன் என்னும் பெயரோடு கூடிய இறைவனை அதனுள் வியாபித்த பரமான்மாவாகவுங் கொண்டு உபாஸிப்பர். பிறரோ சந்திரனையே பரமான்மாவாகத் துணிந்து உபாஸிப்பர். பிறரோ அச்சீவான் மாவையே பரமான்மாவெனத் துணிந்து உபாஸிப்பர். இவ்வாறே பிரிதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயமென்னும் ஐம்பெரும் பூதங் களையும் அவ்வைம் பெரும் பூதங்களின் தொகுதியாக விளங்கும் இப்பிரபஞ்சத் தினையும் பரமான்மாவின் சரீரங் களாகத்துணிந்து அம்முறை யாலவற்றை வழிபடும் ஆரிய நன்மக்கள் உபாசனா மார்க்கத்தினியல்பு உணராது, அவற்றையே பரமான்மாவென உபாஸிக்கும் அநாரியச மாயிகளோடுங் கூட்டி ஆரியநன் மக்களையிகழ்வார் உண்மை யறியாதவ ராவரென் றொழிக. இது பற்றியன்றே ஆங்கில நாட்டிற் பிரபல பண்டிதரா யிருந்த 2மாகீஸ்மூலர் ஜர்மானிய தொழிற் சாலைச் சிதர் துண்டுகள் முதற்புத்தக முகவுரையில் , பரதகண்டத்தில் தழுவப்படும் விக்கிரகாரா தனையும் வேறே, ரோம் முதலிய தேசங்களில் தழுவப் படும் விக்கிரகாராத னையும் வேறே, முன்னையதிற் பரமான் மாவின் சரீரங் களாக விக்கிரகங்கள் வணங்கப் படுகின்றன, பின்னையதில் விக்கிரகங் களே அவ்வாறு வணங்கப்படுகின்றன; இங்ஙன மாயின் இந்துமக்களை நாங்குறை கூறுதலென்னைஎன்னும் பொருள் தருமாறு எழுது வாராயினர். இன்னும், அவர் கடைசியாக வெளியிட்டதமது இந்தியர் ஆறு தத்துவ சாத்திரங்கள்3 என்னும் புத்தகத்தில் தீவ்யதாஸ்தத்தர் என்பவர் எழுதிய ஒன்றை அறிவதற்குச் சொற்களும் பொருள்களும் அடையாளங்களாக இடப்படுகின்றன; சொல் அடை யாளங்கள் செவியுணர்வுக்குக் கருவியாகின்றன; பொருள்கள் கண்ணறிவிற்குக் கருவியாகின்றன. இவையே இவையிரண் டற்கும் வேற்றுமை. சொல் அடை யாளங் களாகிய பாஷையை உபயோகிப்பதற்கு எந்தச் சமய வாதியும் ஆசங்கிக்க இடந்தராதபோது, இறைவனை வழிபடுதற்குக் கருவியாகிய பொருளடையாளங்களை ஆசங்கித்தல் என்னை? என்னும் விஷயத்தை எடுத்துக்காட்டித் தம் துணிபு நிலையிட்டனர். இவ்வாறு உண்மையாகச் சோதனை செய்ய வல்லார்க்கு ஆரிய நன்மக்கள் பண்டைக் காலந்தொட்டு அனுசரித்தொழுகுஞ் சன்மார்க்க முறையாகிய சகளோ பாசனை அநாரியசமயிகள் கொண்டு போற்றும் விக்கிர காராதனை போல்வதன் றென்பதூஉம், அது பல வேறு வகைப்பட்டதத்துவ நுண் பொருட் பரப்பெல்லாந் தன்னகத் தடங்கக்கொண்டு ஈசுரனை எளிதிலு ணர்ந்து வழிபட்டு ஆன்மாக்கள் முத்தியின்பம் பெறுதற்கு ஏதுவாகிய உபாசனா நிலையமாமென்பதூஉம் இனிது விளங்கும். இனி மேலே காட்டியவாதத்தில் அநாரிய கண்டங்களில் அபரஞான சித்தி பெற்றுத்தோன்றிய தீர்க்கதரிசிகளுக்கு முழுமுதற்பெருங்கடவுள் உருவமாகத் தோன்றி அனுக்கிரகஞ் செய்யவில்லை என்றும், ஆரியகண்டங்களிலுள்ள திருத் தொண்டர்களுக்குச் சகள அருட்கோலங்கொண்டு எழுந்தருளி வந்து அனுக்கிரகஞ் செய்தாரென்றுஞ்சொல்லிய விஷயத்திற் சந்தேகம் நிகழாமைப் பொருட்டு அதனை யீண்டெடுத்து விளக்கி ஒரு சிறிது வலியுறுப்பாம். இனி, இறைவன் சகளவருட்கோலங்ககொண்டு தமக்கு அனுக்கிரகஞ் செய்த முறைமையினையும், அங்ஙனம் அனுக்கிரகஞ்செய்யும் வழி இறைவன் கொண்ட திருவுருவ அடையாளங்களையுங் கண்டு அறிந்து அன்புவெள்ளம் தம்மிதயம் நிறைந்து துளிம்பு வழியப் பாட்டுக்களி லமைத்து வழிபட்ட திருத்தொண்டர் சரிதங்களை ஆங்கிலமொழியிற் பற்பல தேச சரிதங்களையும் ஒத்து நோக்கிப் படிக்கும் பிரபல பண்டிதர்களும் பிறரும் உண்மையாமெனத் துணிந்து தழுவி யொழுகுகின்றனர். இறைவன்றமக்குச்செய்த அனுக்கிரக முறையைத் தாமே தம் பாட்டுக்களில் வேறுகாரணமின்றி அவ்விறைவனை வழிபடுதல் காரணமாகவே அமைத்துப் பாடுதலா லங்ஙனம் அவர் சொல்லுந் தம்முடைய சரிதங்களை அப்பிரபல தத்துவசாத்திர பண்டிதர் உண்மையாமெனக் கொண்டு ஒழுகக் கடமைப்பட்டவராயினர். இனி, அவருள் ஒரு சாரார் இங்ஙனம் மெய்யன் புடையதிருத்தொண்டர் தாமே கண்டு கூறும் இறைவன் அனுக்கிரக முறையைப் பொய்யென்று ஒழித்துவிடுதற்குக் கூடாமையால், அவ்வடியவர் கண்ட அவையெல்லாம் 4உருவெளித்தோற்றங்களேயன்றிக் கடவுள் தாமே எழுந்தருளி வந்து அவர்க்கு அருள்செய்தனவாகாவென்று உணர்த்துப் பிரதிவாதந் தொடுக்கின்றனர். அவர் சொல்லும் அவ்வுரு வெளித் தோற்ற வியல்பை ஓர் உதாரணத்தின்கண் வைத்து விளக்கிக் காட்டுவாம். இராமனுடைய உருவ வழகைக்கண்டு விரும்பி அதனால் தண்டிக்கப்பட்டுத் திரும்பிப்போகிய சூர்ப்பனகை தன் மூத்தோனாகிய இராவணனைக்கண்டு அவனுக்குச் சீதையின் பேரெழிலைவருணித்து உரைப்ப, அதனைக்கேட்டு மோகாக் கிரந்தனாகிய அவ்விராவணனுக் குச் சந்திரனைப்போற் றெளிந்து விளங்கு சீதையின் முகமும், அம்முகத்திற் குழைச் செவியளவுங் கிழித்துச்செல்லும் கரிய பெரிய வரிகடை யொழுகு விழிகளும், முல்லை முகைபோற் குமிழ்த்த மூக்கும், பவளத்தை அறுத்துக்கடைந்து திரட்டி வைத்தாற் போலும் செவ்வாயும், அவ்வாயினகத்தே முத்து வரிசைபோல் திகழும் பற்களும், பளிங்கு போல் தெளி வாகியகன்னங்களும், கரிந்து சுரிந்து நீண்டுகிடக்கும் மயிர்க் கற்றையும், பிற அங்கங்களும் தன்விழியெதிரே தோன்றக்கண்டு பரவசமுடையனாகித் தன்னருகே நின்ற தங்கையை அழைத்து இதோ தோன்றும் இவள்தானோ சீதை என்பாள் என்று வினாயினானென்றும், அதற்கு அவள், தான் இராமன்மேற் சுழிபெருங்காதல் கொண்டிருந்தமையால் தன்னெதிரே தோன்றிய அவ்விராமன் உருவெளித்தோற்றத்தைச் செந் தாமரைக்கண்களும் செங்கனிவாயும் பரந்து திணிந்த மார்பும் முழங்கால் தடவுந் தடங்கைகளும் உடைய இவனே இவ்விராமனென்பானென்று மறுமொழி தந்தாளென்றும் பெறப்பட்டன. இவ்வாறு பெறப்பட்ட உருவெளித் தோற்றங் கள் அவ்வவர் காதன் மிகுதியால் தோன்றியன வாகை யால் அவை உண்மையாகவே வெளிப்பட்ட சகளகோலங் களாகமாட்டா; இதபோல, முழுமுதற்பெருங்கடவுளிடத்திற் றமக்கு நிரம்பிய அன்பின் பெருக்கால் அவ்வடியவர் தாம் கண்ட உருவெளித் தோற்றங் களை உண்மையா மெனக் கொண்டு தஞ்செய்யுட்களில் அமைத்துப் பாடினாராகலான், அவர் கண்ட அத்தோற்றங்கள் இறைவன் கொண்ட சகள அருட்கோலத் திருவுருவங்களா மென்று துணிந்துரைத்தல் யாங்ஙனமென்றால்; கண்ணுக்கு மாத்திரமேதோன்றி வேறு இந்திரியங்களுக்குப் புலனாகாத தோற்றங்களாயின் அவை அவர் கூறியவாறு பொய்யாயொழிந் திடும். அவ்வாறன்றிக் கண்ணினாற் காணப்படும் உருவமும், செவியினாற் கேட்கப் படும் ஓசையும், மூக்கினாற் கவரப்படுந் திவ்விய மணமும், கையினாற் பற்றப்படும் வடிவமும்கொண்டு பொருள் விளங்கச் சொற்சொல்லுதலும் நகுதலும் இயங்குதலுமுடைய தோற்றங் களாயின், அவையெல்லாம் அவர் கூறியவாறு உருவெளித் தோற்றங்களாமென்பதற்கு ஒருவாற்றானும் ஏலாவாய், இறைவன் அவ்வன்பர்க்கு அனுக்கிரகஞ் செய்தற்பொருட்டுக் கொண்ட ஞானசொரூப அருட்கோலங்களேயாமென்பது இனிது துணியப்படும். அப்படியன்று, அவ்வடியவர் தமக் குள்ள அளவிறந்த அன்பின் மிகுதியால் தம்மெதிரே தோன்றும் அவ்வுருவெளித் தோற்றங்களை நிற்பன போலவும் நடப்பனபோலவும் பேசுவனபோலவுஞ் சிரிப்பனபோலவும் பிற செய்வன போலவுமெல்லாங் காண்பா ராயினரெனின்; அது கிடக்க. இங்ஙனம் வாதம் நிகழ்த்தும் நீவிரும் நிற்பீர் போலவும் நடப்பீர்போலவுஞ் சிரிப்பீர் போலவும் உண்பீர் போலவும் உடுப்பீர்போலவுந் தோன்று கின்றமையின், நீவிரும் அங்ஙனம் பொய்யா யொழிந்திடுவீர் போலுமெனக் கடாவு வார்க்கு மறுமொழி கூறலாகாமையான் அவ்வாறு உலக வியற்கை யொடு மாறுபட்டு வினாதல் போலியா மென்றொழிக. இனி, இங்ஙனம் காட்டிய தருக்கப்பிரமாணங்களால் தமக்கெதிரே தோன்றும் உருவம் பஞ்சேந்திரியங்களானும் உணரப்படும் பெற்றியுடைய தாயின் அஃது உருவெளித் தோற்றமாவதன்றி, மெய்ம்மை வடிவுடைய தேவவடிவ மாமென்பது நன்றுவலியுறுக்கப்பட்டதாயினும், பரகண்டத்தி லுள்ள திருத்தொண்டர்க்கு வெளிப்பட்ட அக்கோலங்கள் அங்ஙனம் ஐம்பொறியானும் உணரப்படுங்கருணைக் கோலங் களாமென்பது அவ்வடியவர் திருவாக்கினின்றே எடுத்துக் காட்டி நுமது மேற்கோளைத் தாபித்துக் கொள்க என்பார் திருப்தியுறுதல்வேண்டி அதுவுந் தந்து விளக்குவாம். மதுரைமாநகரிற் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி அவைக் களத்தில் தெய்வப்புலவராய் அமர்ந்திருந்த ஆசிரியர். நக்கீரனார், சோமசுந்தரக்கடவுள் எழுதிய கொங்கு தேர்வாழ்க்கை5 என்னுஞ் செய்யுட்குக் குற்றஞ்சொல்ல, அக்குற்றத்தைப் பரிகரித்துக்கொள்ளும் பொருட்டும் அச் செய்யுளின் மெய்ம்மைப்பொருள் அவர்க்கு அறிவுறுத்தும் பொருட்டும் ஈசுரன் சகள அருட்கோலந் தழுவி வந்து அவர்க்கு அதனை உணர்த்தியும், அவரதனை உணராமல் தாஞ்சொல்லிய குற்றத்தைச் சாதிக்கப்புகுந்தவழி, இறைவன் அவரது அகங்காரத்தைக் கெடுத்து அவரைப் பரிசுத்தஞ் செய்து அனுக்கிரகிக்க எழுந்த கருணையால் தன் நெற்றிக் கண்ணைத் திறந்து விழிப்ப, அதனினின்றுங் கிளம்பித் தம்மைச் சுடும் அக்நிச் சுவாலையைப் பொறுக்கமாட்டாமல், மானிடவுருவங் கொண்டு வந்த அவ்வீசுரனை அறிந்து தம்பிழையைப் பொறுக்கும்படி நக்கீரனார் அவ்விறைவனைக் குறையிரந் தியற்றிய திருவெழு கூற்றிருக்கை என்னுஞ் செய்யுளில், சிறியோன் சொன்னவறிவில்வாசகம் வறிதெனக் கொள்ளாயாகல் வேண்டும் வெறிகமழ் கொன்றை யொடுவெண்ணிலவணிந்து கீதம் பாடியவண்ணல் பாதஞ்சென்னியுட்பரவுவன் பணிந்தே எனவும், அத் திருவெழுகூற்றிருக்கை இறுதி வெண்பாவில், ஆலவாயிலமர்ந்தாய் - தணிந்தேன்மேன், மெய்யெரிவு தீரப்பணிந்தருளுவேதியனே யையுறவொன்றின்றியமர்ந்து எனவும், பெருந்தேவபாணியில், பத்தியு நீயே முத்தியுநீயே சொலற்கருந்தன்மைத்தொல்லோய் நீயேயதனாற் கூடலாலவாய்க்குழகனாவது அறியாதருந்தமிழ்பழித்தனனடியே னீண்டியசிறப்பினிணையடிக்கீழ்நின்று வேண்டுமதுவினிவேண்டுவன்விரைந்தே எனவும், அதன் இறுதியிலுள்ள வெண்பாவில், விரைந்தேன்மற்றெம் பெருமான் வேண்டியதுவேண்டா திகழ்ந்தேன் பிழைத்தேனடியேன் - விரைந்தேன்மேற் சீற்றத்தைத் தீர்த்தருளுந்தேவாதிதேவனேயாற்றவுநீ செய்யுமருள் எனவுந் தாமே தமக்கு உண்மையறிவிக்கும் பொருட்டு ஈசரன் கருணைத்திருக்கோலங்கொண்டு வந்தானென்பதூஉம், அதன்மேல் இறைவன் விழித்த நெற்றிக்கண் நெருப்புத் தம்மைச் சுடவே அவ்விறைவனைத்தாமறிந்து கொண்டா ரென்பதூஉம் நன்றாக எடுத்து மொழிந்திட்டன். இங்ஙனம் எடுத்து மொழிந்ததூஉம் பிறரை வஞ்சித்தன்முதலிய காரணம் மட்டு மின்றி இறைவனை என்பெல்லாம் நெக்கு நெக்குருகி நெஞ்சம் நெகிழ்ந்து கரைய வழிபட்டு அவன் அனுக்கிரகத்தைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டேயாமென்பது சாதாரண அறிவுடை யார்க்கும் இனிது விளங்கும். இங்ஙனம் இறைவன் சகளவருட் கோலந்தழீஇ வந்து நக்கீரனார்க்கு அனுக்கிரகஞ் செய்த பேரற் புதமுறையை எந்த ஆங்கில நன்மக்கள் தாம் உருவெளித் தோற்றமென்றுரைக்க ஒருப்படுவார்? அல்லது, அவ்வாங்கில மொழியில் மனோதத்துவ நூற்பயிற்சி6 கைவந்த எந்தத் தத்துவசாத்திர பண்டிதர்தா மிதனை மறுக்க முந்திடுவார்? அல்லது, எந்த நிரீசுரவாத விற்பன்னர் தாம் இதனை மறுக்க வல்லராவர்? அப்படி அவர் பொய்யென்று மறுக்க விரும்பினா லிவற்றிற் கெல்லாம் வேறு என்ன கதிதான் சொல்லமாட்டுவார்? இன்னும் ஒன்று காட்டுவாம். உலகமெல்லாம் புகழ்ந் தேத்துஞ்சைவத் திருவாளராகிய ஸ்ரீமந் மாணிக்கவாசக சுவாமிகள் தாம் அமைச்சராயி ருந்துழிப் பாண்டியன்றந்த பொருள்கைக் கொண்டு குதிரைகொள்ளும் பொருட்டுப் போம்வழியிற் கிட்டிய திருப்பெருந்துறைப்பூங்காவிற்7 சிவபெருமான் ஒரு வேதியர் வடிவங்கொண்டு பல சீடர் புடைசூழவிருந்து தம்மை ஆண்டுகொண்டு அனுக்கிரகஞ் செய்த முறையைத் திருவண்டப் பகுதியில், என்னேரனை யோர்கேட்கவந்தியம்பி யறைகூவியாட் கொண்டருளி மறையோர்கோலங்காட்டியருளலும் எனவும், போற்றித்திருவகவலில், அருபரத்தொருவனவனியில்வந்து குருபரனாகியருளிய பெருமையை எனவும், ஆனந்தாதீதத்தில், ஈறிலாத நீயெளியையாகிவந்தொளிசெய் மானுடமாக நோக்கியுங் கீறிலாத நெஞ்சுடைய நாயினேன் கடையனாயினேன் பட்டகீழ்மையே எனவும் திருவம்மானையில் செங்கணெடுமாலுஞ்சென்றிடந்துங்காண்பரிய பொங்குமலர்ப்பாதம் பூதலத்தேபோந்தருளி யெங்கள் பிறப்பறுத்திட்டெந்தரமுமாட்கொண்டு தெங்குதிரள் சோலைத்தென்னன் பெருந்துறையா னங்கணனந்தணனாயறைகூவிவீடருளு மங்கருணைவார்கழலேபாடு துங்காணம்மானாய் எனவும், அருட்பத்தில், நீதியேசெல்வத்திருப்பெருந்துறையினிறைமலர்க்குருந்தமேவியசீ ராதியேயடியேனாதரித்தழைத்தாலதெந்து வேயெள்றருளாயே எனவும் பிரார்த்தனைப்பத்தில், கலந்து நின்னடியாரோடன்றுவாளாகளித்திருந்தேன் எனவும், பின்பு அவ்விறைவனாணைவழிநின்று பாண்டிய னிடத்திற் றிரும்பச்சென்று தாம் அங்கிருந்துழிக் குறிப்பிட்ட நாளிற்சிவபெருமான் நரிகளைப்பிடித்துக் குதிரைகளாக்கிக் கொண்டு ஒரு குதிரைமேற்கொண்டு தாமும் பாண்டிநாடு அடைந்து அவ்வரிய அருட்கணைத்திருக்கோலங் காட்டி யனுக் கிரகங்செய்த அருங்கருணைத்திறத்தை, திருவேசறவில், ஒருங்குதிரை யுலவுசடையுடையானேநரிக ளெல்லாம் பெருங்குதிரையாக்கியவாறன்றேயுன்பேரருளே எனவும், கீர்த்தித்திருவகவலில். அரியொடுபிரமற்களவறியொண்ணா னரியைக்குதிரையாக்கியநன்மையு மாண்டுகொண்டருளவழகுறுதிருவடி பாண்டியன்றனக்குப்பரிமாவிற்று எனவும், மதுரைப்பெருநன்மாநகரிருந்து குதிரைச்சேவகனாகியகொள்கை எனவும், அரியொடுபிரமற்களவறியாதவன் பரிமாவிள்மிசைப்பயின்றவண்ணமும் எனவும், திருவம்மானையில், சிந்தனை வந்துருக்குஞ்சீரார் பெருந்துறையான் பந்தம் பரியப் பரிமேற் கொண்டான் றந்த வந்தமிலா வரன்தம் பாடுதுங் காணம் மானாய் எனவும், திருப்பொன்னூசலில், சாலவமுதுண்டுதாழ்கடலின் மீதெழுந்து ஞாலமிகப்பரிமேற்கொண்டுநமையாண்டாள் எனவும், அன்னைப்பத்திற்சட்டையிட்டுக் குதிரைமேல் வந்தாரென்பது தோன்ற, பள்ளிக்குப்பாயத்தர்பாய் பரிமேல்கொண்டென் னுள்ளங்கவர்வராலன்னேயென்னும் எனவும், திருப்பாண்டிப்பதிகத்திலங்ஙனங் குதிரைமேற் சகளவருட்கோலங் கொண்டு வந்த இறைவனார் திருவுருவத் தையே தாம் தியானித்துக் கொண்டிருந்தமை இனிது புலப்பட, தெரிவரநின்றுருக்கிப்பரிமேற்கொண்ட சேவகனா ரொருவரையன்றியுருவறியாதென்றனுள்ள மதே எனவும், பாரின்பவெள்ளங்கொளப்பரிமேற்கொண்ட சேவகனாரோரின்பவெள்ளத்துருக்கொண்டுதொண்டரையுள்ளங்கொண்டார் எனவும், பரவியவன்பரையென் புருக்கும் பரம்பாண்டியனார் புரவியின் மேல்வரப்புந்திகொளப்பட்ட பூங்கொடியார் மரவியன்மேல்கொண்டு தம்மையுந்தாமறியார்மறந்தே எனவும், பின்னர்ச்சுவாமிகளைப்பாண்டியன் வையை யாற்றில் நிறுத்தி நலிந்தவழியிறைவன் அவரை நலிவுதீர்த்தற் பொருட்டு விடுத்த வெள்ளப்பெருக்கினால் வையையாற்றின் கரையுடைந்து நீர்பெருகுதலை அரசனுணர்ந்து அக்கரையை ஊரிலுள்ளார் அனைவருங் கட்டும்பொருட்டு நிலனளந்து கொடுப்ப, அங்ஙனந்தங்கடங்ட்குப் பிரித்துக்கொடுக்கப்பட்ட நிலங்களிற் கரைகோலிக்கொண்டு ஊரிலுள்ளாரெல்லாரும் முயன்று கொண்டிருக்கையில், உறவினர்யாருமின்றித் தனியனாய்ப் பிட்டுவிற்கும் பொருளைக்கொண்டு தன் வயிறுநிரப்பி அந்நகரில் வசித்துக் கொண்டிருந்த வளும், ஆலவாய்க் கடவுளிடத்திற் பெருகிய மெய்ப்பத்தியுடையளும், முதிர்ந்த வயதினளுமாகிய ஒருபிட்டுவாணிச்சி தனக்கு அரசனளந் திட்ட கரைநிலத்தைத்தானே திருத்திக் கட்ட மாட்டாமையானும் தனக்காகக் கூலியின்றித் தொழில் செய்வாரைப் பெறாமை யானும் பெரிதும் வருந்தி ஆலவாய்க் கடவுளிடஞ்சென்று அழுதுகுறையிரப்ப, அவள் குறையினைச் செவிமடுத்த கருணா மூர்த்தியாகிய பெருமான் ஓர் ஒட்டனைப் போல் வடிவங் கொண்டுபோந்து அம்மே! TÈ¡F MŸ nt©Lnkh? என்ன, அவள் அப்பா! நான் கூலிகொடுக்கப் பொருள் சிறிதுமில்லாத வறுமையுடையேன்; நாடொறும் பிட்டுவிற்று அதில் வரும் அற்ப இலாபப் பொருளைக் கொண்டு வயிறுவளர்க்கின்றேன்; பாவியேன் என்செய்வேன்! என்ன, அவர் அம்மே! நீ சுடும் பிட்டில் உதிர்ந்துபோகும் பாகங்களை யேனும் எனக்குக் கூலியாகக் கொடுக்க ஒருப்படுவையேல் உனக்காகத்தொழில் செய்வேன் என்று ரைப்ப அம்முதியோள் பெரிதும் அகமகிழ்ந்து அப்பனே! அவ்வாறே தருவேன், நீ தொழில்செய்துவாஎன்ன, அவர் அவ்வாறேதொழில் செய்வதுபோல் மாயஞ்செய்து இடை யிடையே யவளிடஞ் சென்று அம்மே! எனக்கு நிரம்பவும் பசிக்கின்றது. உதிர்ந்த பிட்டுணவுகொடு என்று கேட்டுப் பெற்றுண்டு பிச்சனைப் போற் கூத்தாடிக்கொண்டு கரை கோலாது நாளைப்போக்க, அன்றுமாலையில் அரசன் ஊரார் கரைகோலிய தனைக்காண வந்து எல்லார்க்கும் அளந்து விட்ட நிலந்திருத்தப்பட்டிருத் தலையும் பிட்டுவாணிச்சிபங்கு அங்ஙனந்திருத்தப் படாதிருத் தலையுங்கண்டு வெகுண்டு அதனைத்திருத்த வந்த கூலியாளாகிய ஒட்டனைத் தன்கை யிலிருந்த பிரம்பாலடித்தலும், அவ்வடி அடித்தவனாகிய பாண்டியனையுள்ளிட்டுச் சரஅசர பேதங் களாகிய எல்லாவற்றின் மேலும் உறைப்ப ஒரு கூடை மண்ணால் அக் கரையைத்திருத்தி ஒட்டவேடங் கொண்டு வந்த இறையனார் மறைந்து சென்ற கருணைத்திறத்தை நினைந்து நினைந்துருகி அவ்வரசன் பக்கத்தில் அமைச்ச ராயிருந்து நேரிற்கண்ட ஸ்ரீ மணிவாசகப்பெருமான் கீர்த்தித் திருவகவலில், ஆங்கதுதன்னிலடியவட்காகப் பாங்காய்மண்சுமந்தருளியபரிசும் எனவும், திருவம்மானையில், மண்சுமந்துகூலிகொண்டக் 8கோவான் மொத்துண்டு புண்சுமந்தபொன்மேனிபாடுதுங்காணம் மானாய் எனவும், திருப்பூவல்லியில், திண்போர்விடையான்சிவபுரத்தார்போரேறு மண்பான்மதுரையிற்பிட்டமுதுசெய்தருளித் தண்டாலேபாண்டியன்றன்னைப்பணிகொண்ட புண்பாடல்பாடிநாம்பூவல்லிகொய்யாமோ எனவும், திருக்கழுக்குன்றப்பதிகத்தில், பிட்டுநேர்படமண்சுமந்த பெருந்துறைப்பெரும் பித்தனே சட்ட நேர்படவந்திலாதசழக்கனேனுனைச்சார்ந் திலேன் எனவுந் தாமே தமது திருவாக்காலவ்வனுக்கிரக முறை யினையும், ஈசுரன் தம்பொருட்டுத் தாங்கிவந்த சகளமங்கள வருட்கோல மரபினையும், அவ்வருட்கோலங் கொண்டு வெளிப்பட்ட பெருமான் நிகழ்த்திய திருவிளை யாடன் மாட்சியினையும் விதந்து பலமுறை யெடுத்தோதி யருளிய வாறு காண்க. ஐம்புலங்களுக்கும் ஆர நுகர்ச்சியாம்படி திருகோலந் தரித்துக் காணவுங் கருதவும் உரைப்பவும் வாராத தன் பெருமைக்குணங்களைத் தன் அன்பர்க்கு அனுக்கிரகிக்கும்பொருட்டுக் காணவுங் கருதவு முரைப்பவு மெல்லாம் எளிவந்தனவாக்கி வெளிவந்த சருவேசுரன் பெருங் கருணைத் திறத்தை அன்புநிறைந்த திப்பிய வுள்ளத்தோடு ஆராயலுறுவார்க்கு, அவ்விறைவன் நிட்களமும் சகளமும் சகளநிட்களமுமாகிய எல்லா நிலையும் எய்தவல்ல சருவ சத்தியுடையனாமென்பது நன்கு புலப்படும். இங்ஙனம் விரிவாயெடுத்துக்காட்டிய பிரமாண வருள்வாக்கியங்களையும், அந்தப் பிரமாண வருள்வாக்கியங்களாற் பெறப்பட்ட சத்திய வருட்கோல வியல்புகளையும் தேச சரிதங்களிற் பழகிய எந்த ஆங்கில நம்மக்கள் தாம் தழுவாது ஒழிவர்? அல்லதூஉம், உலகவியற்கைக்கு மாறாக நடப்பன வொன்றுமில்லாமையால்,9அற்புதங்கள் நிகழ்ந்தனவென்றுரைத்தல் வெறும் பொய்யேயாமென்று வாய்ப்பறை யறைந்து திரியும் பிரமசமாசத்தார் இவற்றிற்கெல்லாம் யாது சொல்லவல்லார்? இனி யிங்ஙனந்தோன்றும் இறைவன் சகளவருட் கோலவியல்பு உணரமாட்டாது, அவை தம்மை 10மனோ பாவனையா னிகழ்ந்த உருவெளித்தோற்றங்களாமென்பார் தெளிந்துறுதிகூடுமாறு இன்னும் ஒன்று காட்டுவாம். 11மானுடரென்பார் எக்காலத்தும் எவ்விடத்தும் ஒருவரோ டொருவர் உறவு உரிமைபூண்டு வாழும் இயல்பினரேயாம். இவ்வாறு உறவுரிமைகொண்டு வாழு மியல்பினராகிய மக்கள் ஒருவரொருவரோடு அளவளாவி வாழும் முறையினால் அறிவு முதிர்ச்சியடைந்து உலகானுபவமும் ஈசுரவுணர்ச்சியு முடைய ராகின்றனர். அவ்வாறன்றி ஒவ்வொருவரும் பிறவி முதற் கொண்டு அளவளாவுதலின்றித் தாந்தாம் தனித்திருந்து வளர்ந்துவருவராயின் அவரெல்லாம் அறிவு சிறிதுமிலராய் மிருகங்களைப்போல் உழன்று திரிவர். இதற்கு எமது குழந்தைப்பருவமே சிறந்த எடுத்துக்காட்டாம். யாம், தாய் வயிற்றை யகன்று வெளிப் பட்டகாலத்தில் எம்மறிவு ஒரு சிறிதும் விளங்காது கிடந்தேம். அங்ஙனங் கிடந்தகாலத்தில் எம்முடைய உள்ளமானது, உலகவுருவ வண்ணங்கள் பிரதி பலிக்கப்படாத நிர்மலமாகிய பளிங்குபோலவும் முத்திரை யிடப்படாத மெழுக்குருண்டை போலவும் இருந்தது. மன மென்னுங் கண்ணாடியில் அவை விளங்காது ஒழியவே, அக்கண்ணாடியின் அப்பக்கத்தே யிருந்து அவற்றைக் காணும் ஆன்மாவும் அறிவுவிளக்கம் பெறாது கிடந்தது. அப்போது இறைவன் எமது தேகத்தைப் பல்வகை யுண்டிகளாற் போஷித்து அதன்வழியே கொண்டு போய் எமக்கு அறிவுவிளங்கச் செய்யும்பொருட்டுத் தான் கருணையான் எம் மகத்தே வைத்த பசித்தீயானது எம்மை வருத்த அதற்காற்றாது யாம் வாய் திறந்து அழஅதனைக்கண்டு அன்புடையளாகிய அன்னை எம்மை எடுத்துப் பாலூட்டி னாள். மிருகங்களோ தாம் பிறந்தவுடனே அங்ஙனந் தாயுதவியும் வேண்டாது தாமே யறிந்து தாய்முலை யுண்ணுகின்றன. இவ்வாறு மிருகங்களைக் காட்டினும் அறிவு விளங்கப்பெறாது கிடந்தாயாம், பயிற்சி வயத்தால் எம்மனம் சிறிது உலகவுருவத்தைப் பற்ற அதன் புறத்தேயிருந்த எம் ஆன்மவறிவு சிறிது விளங்கி, எமக்கு முலைதருவாள் இவளென்றுசிறிது காலமெல்லாம் அறிந்து, அதன் பின் அங்ஙனந்தருவாளுந் தாயென்றறிந்து, அவள் அவ்வாறு தருதலும் பசியெடுத்து யாம் அழுதலா லென்று மறிந்து, அதன்பின் யாம் உண்ணுவதும் பால் என்று அவள் பன்முறை யுரைப்பதனாலறிந்து, அதன்பின் எம் அன்னை யையும் எம்மையும் போஷிப்பானெல்லாந் தந்தை யென்பது மவள் அறிவிப்ப அறிந்து இவ்வாறு முறைமுறையே எம்மறிவு விளங்கப்பெறுவோமாயினேம். இதனால், எமக்கு அறிவு விளங்குதற்கு ஏதுவாயிருந்த முதன்முயற்சி பசி ஒன்றேயாம் என்பதூஉம் இனிது பெறப்படும். இனி இங்ஙனம் அறிவுவளருந் தோறும் யாம் புதுவதாக அறிந்தது அறிவாகவும், முதலி லெழுந்த பழைய வறிவு எமக்கு அறியாமையாகவுங் காணப் பட்டன. இதுபற்றியே, ஆசிரியர் - தெய்வப்புலமைத் திருவள்ளுவநாயனார், அறிதோறறியாமை கண்டற்றாற் காமஞ் செறிதோறுஞ் சேயிழை மாட்டு என்று திருவாய் மலர்ந்தருளினார். இனியிங்னங்குழவிப்பருவ முதற்கொண்டு முறைமுறை யாய் எமக்கு அறிவு விளங்கப்பெறுவதே உலக வியற்கை. இவ்வியற்கைக்குமாறாக யாம் பத்துவயதில் அறியவேண்டுவன வற்றை முதல்வயதிலேயே ஒருங்கறிந்திடு வேமாயின், அங்ஙன மறிதல் இயற்கை தந்த வரமாம். தமிழ் வடமொழியினின்று பிறந்ததாமா? உலகமெங்கணும் பல்வேறுபட விரிந்துகிடக்கும் பாஷைகளையெல்லாம் ஒருங்கே தொகுத்து அவற்றினிலக் கணங்களை மிக நுண்ணிதாக அளந்து, அவை தம்முட் காணப்படும் ஒற்றுமை இலக்கணத்தானும் வேற்றுமை யிலக்கணத்தானும் அவற்றை 12எழுபத்தாறுகூறாகப் பிரித்துக் கொண்டு பாஷாஞானவுண்மை புலப்படுக்கும் பிரபலதத்துவ சாத்திரபண்டிதர்களுக்கு, இங்ஙனம் ஒருவினா எழுப்புதலே மிகுந்த ஆச்சரியத்தை உண்டுபண்ணாநிற்கும். என்னை? தமிழ்மொழி ஒருவாற்றானும் வடமொழியோடு இயைபுடைய தன்றாகலான் வடமொழியை அதனோடினப்பட்ட வேறு சிலவற்றோடு உடன்சேர்த்து அவ்வாறு ஆக்கியும் அவரெல்லாம் ஆராய்ச்சிசெய்து வருகின்றாராகலின். இனித்தமிழ்மொழியில் ஆராய்ச்சிவல்ல பிரபல பண்டிதர்களும் தமிழ்மொழி சமஸ் கிருத பாஷையோடு ஒருவாற்றானும் ஓற்றுமையுறுதற்கு ஏலாத தனித்தியல் இலக்கணத்ததென்னும் உறுதிகொண்டு போதரு கின்றார். இஃதிவ்வாறாக, சமஸ்கிருதபாஷை ஒன்றே வல்ல சில பார்ப்பாரப்பண்டிதர் நியாயவுணர்ச்சி யும் பொருளுண்மை யறியும் அறிவாற்றலு மிலராய் எல்லாப் பாஷைகளும் எங்கள் சமஸ்கிருத பாஷையிலிருந்துதாம் பிறந்தன என்றுரைத்து அபிமானம் பாராட்டுகின்றார். வழக்கொன்று இயையாது மறுதலைப்பட்ட இரண்டு வேறுபாஷைகளை ஒன்றெனப் பாராட்டுதல் நியாயவறிவு இல்லாதார் அபிமான முறையாம். இவ்வபிமான முறைகளாற் சமஸ்கிருத பாஷை யினின்று பிறந்ததா மெனக்கூறும் சில ஆரியப்பண்டிதர் மயக்கவறிவின் பெற்றிகாட்டித் தமிழ் மொழியினுண்மை யிலக்கணங் கூறப் புகுந்தோ மாதலால் இவ்வாறு தலையுரை குறித்திட்டோம். இனிப்பாஷையின் உற்பத்திமுறையை ஒருசிறிது ஆராய வல்லார்க்கு ஒரு பாஷையிலிருந்து பிறிதொரு பாஷை பிறக்குமென்னும் வாதம் பொய்யாயொழிந்திடு மாகலின், அம்முறை ஈண்டு விரித்து அதனுண்மை நிலையிடுவாம். மானுடப் பிறவி எய்திய ஆன்மாக்களுக்கும் மிருக சென்மம் எய்திய ஆன்மாக்களுக்கும் வித்தியாசம் என்னை யென்று ஆராயப்புகுந்தவழி, மானுட யாக்கைப் பெருந்துணை யுடைய ஆன்மாக்களுக்கு ஐம்பொறி யுணர்வோடு அவற்றைப் பகுத்துணரும் மனவுணர்ச்சியும், மிருகயாக்கை யெய்திய ஆன்மாக்களுக்கு அங்ஙனம் பகுத்துணர்தலின்றிப் பஞ்சேந் திரிய வுணர்வு மாத்திரையாகச் சேடித்தலுமேயா மென்பது இனிது விளங்கிற்று. இதுபற்றியே, ஆசிரியர் தொல்காப்பியனாரும் விலங்கினங்களுக்கெல்லாம் பஞ்சேந்திரிய வுணர்வு மாத்திரமே கூறி, மக்கட்பிறவியுடைய ஆன்மாக்களுக்கு அவற்றொடு மனவுணர்வுங்கூட்டி மக்கடாமே யாறறிவுயிரே என்று ஓதியருளினாரென்பது. இந்நுண்மை தேறமாட்டாத ஆங்கில தத்துவ சாத்திரிகள் சிலர் மானுடர்நகைசெய்யும் விசேட குணமுடையாரென்றும், வேறு சிலர் ஒருசாதிக்குரங்குகள் நகைத்தலானும் நகைக்க முயலுதலானும் அஃது அவர்க்கு விசேடகுணமாகமாட்டாதெனமறுத்து அவர் தீயிற் சமைத்து உணவுகொள்ளும் விசேடவியல்புடையாரென்றும் மற்றுஞ் சிலர் கிரீன்லாண்டு முதலிய தீவுகளிலுள்ள மக்கள் சமைத்துணவு கொள்ளக்காணாமையான் அதுவும் பொருந்தா தென மறுத்து அவர் கல்மரம் முதலியவற்றாற் கத்தி முதலிய கருவி செய்து அவற்றைப்பயன்படுத்தி வாழும் விசேட முயற்சியுடையா ரென்றும், வேறுபிறர் அதனினும் மக்கள் பண்டைக் காலந்தொட்டுச் சொற்சொல்லுஞ் சாதுரிய முடையராகக் காணப் படுதலால் அதுவே அவர்க்கு விசேட விலக்கணமாவ தென்றுங் கூறித் தம்மதம் நிறுத்துகின்றார். பறவையினங்களிற் சில கூடுகட்டு தற்குவேண்டுங்கருவிகள் கொணர்ந்து அவற்றைப் பயன்படுத்தக் காண்டலானும், கிளி, நாகணவாய்ப்புள் முதலியன சொற்சொல்லுஞ் சாதுரிய முடையமை எல்லாரானும் அறியப்படுதலானும் அவையும் அவர் கூறிய வாறு மக்களுக்கே யுரிய விசேட குணங்களாக மாட்டா. அற்றன்று, அவைதாமே தமக்குவேண்டும் ஆயுத வகைகளைச் செய்து கொள்ள மாட்டாமைக்கும், அறிந்து சொற்சொல்லாமைக்கும் ஏதுவென்னையென்று ஆராயலுறு வார்க்கு அவற்றிற்குப் பகுத்துணர்ச்சியில்லாமை ஒன்றே காரணமாமென்பதூஉம் மக்களென்பாரவ்வாயு தவகைகளை அறிந்து செய்து பயன் கோடற்கும் உணர்வு மிகுந்து சொற்சொல்லுதற்கும் தாம் பகுத்துணர்ச்சி யுடையராதல் ஒன்றே காரணமா மென்பதூஉம் இனிது விளங்குதலின், ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியவாறு பகுத்துணர்ச்சி யுடைமையே மக்கட்கு விசேட விலக்கணமாமென்பது உமக்குங் கருத்தாவது போலு மெனமறுக்க, நகையாடுதல், சமைத்துண்டல், கருவியைத் தொழிற்படுத்தல், சொற் சொல்லு தலாவது முதலியவும் பிறவுமாகிய எல்லாம் பகுத்துணர்ச்சியையடியாகக் கொண்டே நிகழாதென்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்தமை யின், விலங்கினங்கட்கும் மக்கட் டொகுதிக்கும் வேறு பாடாவன முறையே பகுத்துணர்ச்சி யின்மையுண்மை யாமன்றிப் பிறி தில்லையெனவிடுக்க. இனி, மக்களுக்குள்ள இப்பகுத்துணர்வுதானுங் காலஞ் செல்லச்செல்ல உடன்வளர்ந்து வருவதாயிற்று. ஆன்மாக்கள் படைப்புக்காலந் தொடங்கிப் புல் முதலிய தாவர தேகங்களி லிருந்து அறிவுவிளங்கப்பெற்றும், அதன்பின் சங்க மங்களாகிய விலங்கினங்களின் தேகங்களிலிருந்து அறிவு விளங்கப் பெற்றும் இவ்வாறே பகுத்துணர்ச்சி மிகவுடையராய்ப் போது கின்றனர். இங்ஙனம் இவரறிவு வளருந்தோறும் நாகரிகமும் உடன்வளர்ந்து வராநிற்கும். இவர் நாகரிகப் பெருக்க முறுந்தோறும் இவர்க்குவேண்டும் பொருள்களும் பலப் பலவாய், அப்பொருள்களை ஈட்டுதற்கு வேண்டுங் கருவிகளும் பலப்பலவாய்ப்பெருக்கமுறும். இனி நாகரிகம் பெருக்கமுறாத காலத்தே அவை அவ்வாறு பலவாக வேண்டப்படா. ஆன்மாக்கள் பிறசென்மங்களை ஒழித்து மானுடசென்ம மெய்தி அறிவுமிக விளங்கப்பெறாது அநாகரிக முற்றிருந்த காலத்தில் காய்கனி கிழங்கு முதலிய உண் பொருளையன்றி வேறுவேண்டாராய் மிருகங்களைப் போல் நாட் கழித்தனர். இதற்கு, ஆப்பிரிக்கா, அமெரிக்கா முதலிய கண்டங்களில் வசிக்கும் பல்லாயிரக் கணக்கினராகிய மக்கள் உண்ணல் உறங்கல் இன்புறுதலையன்றி ஆடை யுடுத்தலும் வேண்டா ராய்க் காலங்கழித்தலே தக்கசான்றாம். இக் கண்டங்களில் வசிக்குஞ் சில சாதியார்க்குப் பாஷைகளுங்கிடையா. எனவே, மிகவும் அநாகரிக முற்றிருந்த காலத்தில் உலகத்திலுள்ள எல்லா மக்கட்கும் பாஷை என்பது ஒரு சிறிதுங் கிடையாது. தாம் உணவுகொள்ளும் பொருட்டு வேண்டும் பழங்காய் கிழங்கு முதலியனவெல்லாம் மரங்களிலுங் கொடிகளிலுஞ் செடிகளிலும் பறித்துண்டுகளிப்பர். பருகுதற்கு நீர் மலையருவி களிலுங் கான்யாறுகளிலும் நீரோடைகளிலும் பெறுவர். இங்ஙனம் எளிதிற் கிடைப்பனவாகிய இவற்றைப் பிறரிடம் வேண்டாமை யான் அவரோடு உரையாடுதலும் வேண்டா வாயிற்று. அன்றி ஒரோவழித் தாங்கருதிய தொன்றனைப் பிறர்க்குப் புலப்படுத்தல் வேண்டினாராயின் முகங்கைகால் முதலியவற் றாலதனைக் குறிப்பிடுவர்; அக் குறிப்பாலும் விளங்காதாயின் தாங்குறித்த பொருளிலுள்ள ஒலிக் குறிப்பைத் தாமும் நிகழ்த்தி அவ்வாற்றா லதனை அவர்க்கு உணர்த்துவர்; தாம் ஏதாவது ஒன்றால் துன்புற்றாராயினும் இன்புற்றாரா யினும் அந்நிகழ்ச்சியைத் தம்முகக்குறிப்பால் அவர்க்கு உணர்த்துவர். இவ்வியல் பெல்லாம் ஓருதாரணத்தின் கண் வைத்து விளக்கிக்காட்டுதும். மூன்று வயதுள்ள ஒரு குழந்தை தன்கையில் அப்பம் வைத்துக் கொண்டு உண்ணுகையில் அதனை ஒரு காக்கை பற்றிக் கொண்டுபோயது; போக, அழுது கொண்டே தன் அம்மை யிடஞ்சென்று தன் கையையுங் காட்டி ஆகாயத்தையுங் காட்டிற்று; அக்குறிப்பையுந் தன் அம்மை அறியாளாக அது திரும்பவும் மா! மா! என்று அவளை அழைத்துத் தன் கையைக் காட்டிக் கா - கா என்று சொல்லி ஆகாயத்தையுங்காட்டிற்று. இங்ஙனங்காட்டவே, கா - கா என்று ஒலி செய்யுங்காக்கை அப்பத்தைப் பறித்துக்கொண்டு ஆகாயத்திற் சென்றதென்பதை அன்னை அறிந்து கொண்டனள். இதுபோலவே, அநாகரிக நிலையிலிருந்த மக்கள் தாங்கருதியதனைப் பிறர்க்கு இனிது அறிவுறுப்பா ராயினார். இன்னும், யாம் வேறு பாஷை வழங்கும் மக்களொடு பழகப் புகுங்கால் அவர் கூறுஞ் சிலசொற்களையும் சிறிய வாக்கியங் களையுங் கற்றுக்கொண்டு அவரோடு அளவளாய்ப் பேசும் போது தெரிந்தசொற்களாற் றெரிந்த பொருள்களை அறிவித்தலும், தெரிந்தவற்றை அறிவுறுக்கும் சொற்கள் தெரியாவிடங் களினெல்லாம் முகங்கை முதலியவற்றாற் குறிப்பிடுதலுஞ் செய்து போதரு கின்றோம். இருந்த வாற்றால் நாகரிக நிலையி லிருந்த மக்களெல் லாரும் வேறு பாஷைகற்கும் எம்மைப் போலவும், தன்குறிப்பு வெளிப்படுக்குங் குழந்தை போலவும் ஒழுகலாறுடைய இயல்பினரேயாமென்பது தெற்றென விளங்கும். இனி இங்ஙனம் ஒழுகலாறுடைய அநாகரிக முதுமக்கள் ஒரோவழித்தங்கருத்தைப் பிறர்க்குப் புலப்படுத்தும் போ தெல்லாம் தாம்பெரிதும் இடர்ப்படுதலை உணருந்தோறு முணருந்தோறும், அங்ஙனம் இடர்ப்படாது எளிய முறையா லதனை வெளிப்படுக்கு நன்னெறி கடைப்பிடிக்கும் நோக்க முடையராயினார். அந்நோக்கம் நாளேற நாளேற முதிர்ந்து தங்கருத்தை ஒருவழிப்படுத்தலின் அவ்வப்போது தாங் குறிப்பிடும், பொருட்குணவிசேடம் பற்றி அவற்றிற்கெல்லாம் பெயர்களமைத்துப் பலவேறுபாஷைகள் பலவேறு காலங்களிற் பலவேறு மக்களாலியற்றி வழங்கப்படுகின்றன. எனவே, பாஷைஎன்பது மக்களாற் செய்துகொள்ளப் படுவதல்லது கடவுளராற் சிருட்டிக்கப்படுவதன் றென்பதூஉம், அங்ஙனம் அவராற் செய்துகொள்ளப் படுவதூஉம் பொருட் காரணம் பற்றி யியற்கையாகவே நிகழ்வதன்றிக் காரணம் பற்றாது செயற்கை யாகச் செய்துகொள்ளப் படுவதன் றென்பதூஉம், அப்பாஷைக ளியற்றப்படுவதற்கு முதற் காரணங்களாவன பிராணிகளின் ஒலிக்குறிப்பும் பொருள்களின் விசேட குணங்களும் ஆ ஒ முதலிய வியப் பிடைச்சொற்களும் சிறிய வாக்கியங்களுமா மென்பதூஉம் இனிது விளங்கும். இனி, ஒரு சாரார் தமிழ்மொழிக்கும் வடமொழிக்குமெல்லாம் இலக்கணஞ் செய்து அவற்றை அகத்தியனார்க்கும் பாணினிமுனிவர்க்கும் உபதேசித்தருளினார் சிவபெருமான் என்று கூறுபவாகலான், பாஷை களெல்லாம் மக்களாற் செய்து கொள்ளப்படுவனவேயாமென்று நியதி கொண்டு ரைத்தல் வழுவாம் பிறவெனின்; அறியாது கடாயினாய், செந்தமிழாரிய முதுமக்கள் தாம் இயல்பாகவே வழங்கிய மொழிவழக்கியல் வழிப்படுத்து இலக்கண நெறிவரம்பு கோலி மற்று அவை தம்மை இறைவனவர்க்குபதேசஞ்செய்ததல்லது தானே அதனைச்சிருட்டித்து உலகில் வழங்கப்படுத்தான் என்று யாண்டு முரைப்பக்காணாமையான் அவ்வாறு வினாதல் உலக நெறியொடு பொருந்தாத போலியுரையா மென்றொழிக. இது கிடக்க. இனி, தமிழும் வடமொழியுமாகிய பாஷைகள் மக்களா லியல்பாகவே செய்து கொள்ளப்பட்ட இருவேறு வகைப்பட்ட நெறிப்பாடுடையனவாம். அல்லதூஉம் அவையிரண்டனையும் வழங்கிய நன்மக்கள் இருவேறு தேயங்களி லிருந்தவர். தமிழர் இந்த இந்திய நாட்டிலிருந்தவர். ஆரியர் இவ்விந்திய நாட்டிற்கு வெகுதூரத்திலுள்ள மத்திய ஆசியாதேசத்தி லிருந்தவர். இங்ஙன மாக அவ்விருவர் பாஷைகளும் ஒன்றிலிருந்து மற்றொன்று பிறந்தது என்று கூறுமாறு யாங்ஙனம்? இன்னும், அவை யெல்லாம் அவ்வம்மக்களாலியற்கையாகவே செய்துகொண்டு வழங்கப்படு வனவாமென்பது இனி தெடுத்து விளக்கினோ மாதலால் தமிழர், ஆரியர் வருந்துணையுந் தாம் பாஷையின்றி ஊமராயிருந்து அவர் வருதன் மாத்திரையானே அவர் பாஷையைக் கற்றுத் தாமொரு பாஷை இயற்றிக் கொண்டு வழங்கினாரெனக்கூறுதல் உலக வழக்கோடும் ஆன்றோர் வழக்கோடும் மாறுகொள்ளும் பொய்யுரையா யொழிந்திடும். அல்லது, அவ்வாறு உலகவழக்கோடு முரணி இயற்றிக் கொண்டாரெனினும், அவ்வாரியமொழிச் சம்பந்தம் பெறாது அவ்வாரிய பாடையினும் பலவாகி விரிந்த சொற் களைத் தமிழ்மொழியுடைய தாமாறு யாங்ஙனம்? அற்றன்று தமிழர் மிக நுண்ணிய அறிவாற்றலுடையராகலான் அவ்வாறு நலம்பட விரிந்த மொழியொன்று செய்துகொண்டாரெனின்; அத்துணை நுண்ணிய அறிவுடையராயின் அவர் நாகரிக முடையராதலும் வேண்டும். வேண்டவே நாகரிகத்திற்கு ஒருதலையான் வேண்டப்படும் பாஷையும் முன்னரே யுடையராதல் வேண்டும். அல்லதூஉம், அத்துணை நுட்பவறி வாளர் தாமே ஒரு பாஷையியற்றிக்கொள்ளவறியாது ஆரியர் வருந்துணையும் ஊமராயிருந்தாரெனல் யாங்ஙனம்? அற்றன்று, ஆரியர் வருந்துணையும் ஊமராயிருந்து அவர் வந்ததுணை யானே அவரால் அறிவு பெற்றாரெனின்; அத்துணை அநாகரிக ராயிருந்த தமிழர், நாகரிகமுடைய ஆரியரைக் கண்டுழி அஞ்சி அவரை நெருங்காது அகன்று ஒழுகுவா ரென்பது நாகரிக வாழ்க்கையுடையராகிய ஆங்கில நன்மக்களைக்கண்டஞ்சி யகன்று ஓட்டம் பிடிக்கும் ஆப்பிரிக்கர் அமெரிக்கர் முதலிய அநாகரிக சாதியார் மாட்டுக் கண்டுகொள்ளப் படுமாதலின் அதுவும் பொருந் தாது. அற்றன்று, ஆங்கில நன்மக்கள் அவ்வந் நாகரிக சாதியாரை வலிந்து பிடித்துவைத்துத் திருத்து கின்றவாறு போல, ஆரியருந் தமிழரைப்பிடித்துவைத்துத் திருத்தித் தம் பாஷையை அவர்க்கு அறிவுறுத்தினா ராகாரோவெனின் நன்று சொன் னாய் அவ்வாறாயின் ஆங்கில நன்மக்களாற் றிருத்தப்படும் அநாகரிக சாதியாரிடத்தில் அவ்வாங்கில பாஷையே வழங்கப் படுதல்போலத் தமிழ் முதுமக்களிடத்தும் அவ்வாரிய பாஷையே வழங்கப்படுதல் வேண்டும். அவ் வாறன்றி அதனின் வேறாய்த்தனித்தியல் தமிழ்ச் சொலுடைய ராகலான் அதுவும் பொருந்தாது. எனவே, தமிழ் மொழி ஆரிய பாஷையினின்றும் பிறந்ததாமென்பது ஒருவாற்றானும் பெறப்படாமையான், நியாயவுரை நிகழ்த்தவறியாத அவர் கூற்று வெறும் போலியே யாமென்பது உணர்நது கொள்க. இது பற்றியன்றே பண்டிதர் மாக்ஸ்மூலர் பாஷாதத்துவம் என்னுந்தமது, கருத்தைக் கூறினார். தமிழ்ச்சொல்லுற்பத்தி ஒரு தமிழ்ச்சொல் ஒரு பொருளை யாங்ஙனமுணர்த் திற்று. அக்காரணத்தை நுண்ணிதாக ஆராய்ந்து அச்சொல்லுற் பத்தி முறைகாட்ட எடுத்துக்கொண்டமையான் இதற்கு இப்பெயர்தந்திட்டோம். இனித் தமிழ் மொழி ஒன்றேவல்ல பிற்காலத்துப் புலவோர் சிலர் அங்ஙனம் ஒவ்வொரு சொல்லின்கண்ணும் உற்பத்திக் காரணங்கண்டறியமாட்டா ராய்ச் சிலசொற்கள் மாத்திரம் காரணம்பற்றி வழங்குகின்றன, வேறு பலவெல்லாம் இப்பொருளை யறிதற்கு இச்சொல் லெனக் காரணம் வேண்டாது அறிவுடையோரால் இடப் பட்ட குறிகண் மாத்திரையேயாய் வழங்குகின்றன வாக லான், அவை ஒன்வொன்றும் உற்பத்திக்காரணமுடைய வென்று ரைப்பது பொருத்தமின்றாமென்று உரைக்கின்றார். மேலே, யாம் இனிதெடுத்து விவகரித்த தமிழ்வடமொழி யினின்று பிறந்ததாமா? என்னும் விஷயத்தில் சொற்றொகுதி யாகிய ஒரு பாஷை முழு முதற்கடவுளானும் அறிவுடை யோரானுஞ் செயற்கையாகச் சிருட்டித்து அளிக்கப் படுவதன்றி, மானுட நாகரிக விருத்திமுறைக்கு ஏற்ப மானுடசுபாவமேயாய் இயன்று நிகழ்வதா மென்பது நிறுவப்பட்டதாகலிற் கடவுள ரானும் அறிவுடையோரானும் அது காரணமின்றிச் செய்யப் பட்டதென்பாருரை ஒரு சிறிதும் பொருந்தாது. அல்லதூஉம் அறிவுடையோராயினார் அங்ஙனங் காரணம் பற்றாது செய்யவேண்டுவதுதான் என்னையென்று ஆசங்கிப் பார்க்குப் பிரதிமொழி கூறுதலாகா மையானும் அது பொருந் தாமை யறிந்துகொள்க. பிரபஞ்ச முழுவதூஉம் பரந்துகிடக்கும் மக்களெல்லாரும் வழங்கும் பாஷைகளொன்றாயினும் அங்ஙனங்காரணமின்றி ஒருவராற் செய்து கொள்ளப்படுவன வல்லவாய்ச் சுபாவகாரணங் கொண்டு நிகழ்தலானும் அது பொருந்தாமை கண்டு கொள்க. இனி இப்பெற்றியறியாத காரணச் சொற்களெனவும், காரணமின்றி வழக்குமாத்திரையாய் வரும் இடுகுறிச் சொற்க ளெனவுஞ் சொற்கள் இருவகைப்படு மென்றாராலெனின்; ஆசிரியர் தொல்காப்பியனார் எல்லாச் சொற்களுஞ் காரண முடையவென்றும், அக்காரணம் நுண்ணுணர்வுடையார்க் கன்றி யேனையார்க்கினிது விளங்கா வென்றும் ஓதிய மொழிப்பொருட் காரணம் விழுப்பத்தோன்றா என்னுஞ் சூத்திரவிழுமிய நுட்பப்பொருளொடு முரணித் தமக்கு வேண்டியவாறே கூறிய பவணந்தியாருரை இக்காலத்துப் பாஷாதத்துவ நூற்பொருளோடும் ஒற்றுமையுறாது மாறு கொள்ளுதலால் அது பொருந்தாதபோலியுரையா மென்று மறுக்க. யாங்கூறியதே ஆசிரியர் நச்சினார்க்கினியர்க்குங் கருத்தாதல் அவருரையிற்காண்க. ஆகவே, ஆசிரியர் தொல் காப்பியனார் தவமுழுமுதலியலறிவான் இனிதறிந்து நிறீஇய தமிழ்ச்சொல்லுற்பவமுறை கடைப்பிடித்து அதனை நன்கா ராய்ந்து பயின்றுகோடல் இன்றியமையாது வேண்டற் பால தொன்றாலின் அதனை யான் அறிந்தவாறே நெறிப்பட ஆராய்ந்து செல்வாம். இனிப்பாஷைகளெல்லாஞ் சொற்கோவைப்பட்டுப் பொருள் அறிவுறுக்கும் வாக்கியங்களையுடையன. அவ் வாக்கியங்களெல்லாம் பொருள் அறிவுறுக்குஞ் சொற்களை யுடையன. அச்சொற்களெல்லாம் முதனிலை அல்லது பகுதி, இ.றுதி நிலை அல்லது விகுதி, இடைநிலை முதலிய பல அங்கங்களையுடையன. இவ்வங்கங்களுள்ளும் முதனிலையை யொழித்து ஒழிந்தவெல்லாம் ஒரு காலத்து முழுமுதற்சொற்களாய்ப் பொருளறிவுறுத்திப் பின்னொரு காலத்து மக்கள் சொற் சோர்வுபட மொழிதலாற் பலவாறு திரிந்து மருவு இடைச் சொற்களென்று வழங்கப்படுவவாயின. இவற்றுள், முதனிலை யாகிய பகுதியும், ஒலிக்குறிப்பு, வியப்புக் குறிப்பு முதலிய காரணம்பற்றி வருவன சில ஒழியப் பிறவெல்லாம் முதன்முதல் நம்முதுமக்கள் சொற்சொல்லத் தொடங்கிய காலத்துப்பிறந்த சொற்கோவை சிதைந்து மருவிய சொற் களேயாம். நாகரிகம் விருத்தியுறுந்தோறும் விருத்தியுறுந்தோறும் அவ்வாறு அவற்றைச்சிதைத்து வழங்கும் மக்களுக்கு அசௌகரியங்கள் நிகழ, மேலும் அவற்றை அஞ்ஞனஞ் சிதைத்து வழங்காவாறு ஆசிரியர் அகத்தியனார், தொல்காப்பியனார் போன்ற நன்மக்கள் தோன்றி அச்சொற்களை மேல் வழங்குமுறைகாட்டி வரம்பறுத்து நூல்களெழுதிப்பாஷையை ஒழுங்கு படுத்தி நிறுத்துவாராயினர். இனி, இங்ஙனம் ஒழுங்குபடுத்தப்படாவழி அப் பாஷைகள் சிலகால மெல்லாம் சிதைந்து சிதைந்து வழங்கி இறுதியில் வழக்கமற்று ஒழிந்துபோம். இதற்குத் தாஸ் மானியா தேசத்திலுள்ள அநாகரிக மக்கள் வழங்கிய பாஷை இறந்தொழிந்ததே உறுசான்றாம். இன்னும் சைபீரியா, ஆப்பிரிகா, சீயம் முதலிய தேசங்களிலுள்ள அநாகரிகமக்கள் வழங்கும் பாஷைகள் இரண்டு மூன்று தலைமுறைக்கெல்லாம் பூருவவுருவம் மாறி முன்னையுருவத்தொடு பின்னையுருவ மியையாது முழுவதூஉம் வேறு பட்டு வேறு வேறுபோல வழங்குமாறும் எமது சித்தாந்தத்தை வலியுறுத்தும். பிரீசியன் தீவுகளில், இரண்டு மைல்கட்கு மேற்படாத நிலவெல்லை யிலிருக்கும் அநாகரிக மக்கள் தங்கள் கிராமங்களில் வழங்கும் பாஷைகளையன்றிப் பிறகிராமங்களில் வழங்கும் பாஷை களையறியார். ஒரு கிராமத்திலுள்ளார் வேறொரு கிராமத் திற்குச் செல்வ தில்லாமையால் அவர்கள் விசேட வேறு பாட்டுடன் தம் பாஷையை வழங்க, அவ்வாறேமற்றைக் கிராமத்தாரும் வழங்க இவ்வாற்றால் ஒருகாலத் தொன்றா யிருந்த ஒரு பாஷை தானே மற்றொரு காலத்தில் வேறு படவிரிந்து வித்தியாச முறுவதாயிற்று. இவ்வாறே நாகரிக மெய்திய எமது ஆரிய கண்டங்களிலும் ஒரு குடும்பத்தார் சொல் வழங்குமுறை ஒருவாறாகவும் வேறொரு குடும்பத்தார் சொல்வழங்குமுறை வேறொரு வாறாகவுந் திரிவுபடுகின்றன. நாகரிக விருத்திகொண்டு இலக்கண இலக்கிய வரம்புகடவாது எமது செந்தமிழ்ப் பெரும்பாஷை நடைபெறும்போதும், அதனைக்கல்லாத மாந்தர் அதன் சொற்களைத் தமது சௌகரியத்திற்கு ஏற்ற பெற்றியெல்லாந் திரித்துச் சொற் சோர்வுபட உரைநிகழ்த்துகின்றார். வாழைப் பழம் வாளப்பளம் வாயப்பயம் எனவும், ஆயிற்று ஆச்சு எனவும், இருக்கிறது இருக்குது, இருக்கு எனவும் பிறவும் வழங்கப்படுதல் காண்க. இவ்வாறு சொற் சோர்வுபட வழங்குதல் உலகத் திலுள்ள எல்லா மக்கட்கும் இயல்பாம். ஆங்கிலமக்கள் தம் பாஷையில் இலக்கண இலக்கியங் களெழுதி வளம்படுத்தும், அவர் பாஷை சாசர் என்னும் புலவர்காலத்து ஒருவாறாகவும், இக்காலத்தி லொரு வாறாகவும் இருவேறு வகைப்பட்டு ஒன்றனையறிந்தார் வேறொன்றனை யறியாவாறு வேறுபாடுறு கின்றது. இனி, தமிழ்ச்சொற்பகுதி யுற்பத்தி முறையும் அப்பகுதிப் பொரு ளொற்றுமை பற்றிவருஞ் சொற்றொகுதியினியல்பும் நுணுகி யாராயுமிடத்துத் தமிழ்ச்சொற்பகுதிகள் பலவும் பிராணிகளொலிக்குறிப்பியற்கைக் காரணங் கொண்டு வழங்கும் அற்புதவியலினிது விளங்கும். தமிழ்வழங்கு நிலத்திற் புருடசரீர சிருட்டி யெய்திய முதுமக்கள் சொற் சொல்லுஞ் சாதுரியம் பெறுதற்கு முன்னெல்லாம், பறவையினங்கள் சம்மாசாரக் குறிப்புகள் மாமிசபோஜனம் மனிதருக்காகாது: அமெரிக்காவில் பிரபலவைத்திய சாஸ்திர பண்டிதராகிய டாக்டர் ஆர். எச். பெர்க்ஸ் என்பவர் மாமிசபோஜனம் மனிதருடைய தேகத்திற்கு இசையாததென்னும் அபிப்ராயமுடையவர். அந்த அபிப்ராயத் தின் படியே தாமும் மாமிசபோஜனத்தை யொழித்துச்சைவ போஜனமே செய்து வாழ்கின்றார். அவர் தேகாரோக்கியமும் தேகபுஷ்டியுமுடையராய் இருக்கின்றார். இப்பிரபல பண்டிதர் அமெரிக்காவில் போஜன கிரம சங்கத்தார் ஒருவர் சைவபோஜன இயல்பைப்பற்றிச் சில விஷயங்கள் கேட்ட போது அவர் தாம் பின்வருமாறு கூறினார். 1. ஒருவன் தன் ஆயுள் முழுவதும் தேகாரோக்கிய முடையனாயும் தேகபுஷ்டியுடையனாயும் விவேகியாயும் இருக்கவேண்டினால், அவன் மாமிச போஜனத்தை அறவே யொழித்துச் சைவபோஜனங்களையே உட்கொள்ளல் வேண்டும். உயர்ந்த சன்மார்க்கமுறையை அனுசரித்துப்பரிசுத்த மாகவும் மனுஷ இயல்புக்கு இயைந்ததாகவும் உள்ள சைவ போஜனம் செய்வது ஒன்றே எங்கும் பரவி நிலை பெற்றிருப்பதற்குக் காரணமாகிய நன்மார்க்கமாம். 2. உலகமெங்கும் பரவி இருக்கும் வியாதிகளும் தேகதுர்ப் பலங்களும் வாயுரோகபாஷாண சம்பந்தமான வேறுபல வியாதிகளும் மாமிசபோஜனத்தினாலேயே உண்டாகின்றன. அல்லது, மாமிசபோஜனஞ் செய்தவர்களாகிய பூர்வீகர் களுடைய வம்சத்திற் பிறப்பதனாலும் உண்டாகின்றன. ஆயினும், முறையாகச் சைவபோஜனம் செய்துவரக் கூடுமானால் அவ்வியாதிகளெல்லாம் அறவே யொழிந்துபோம். நன்றாய்ச் சமைக்கப் படாததும் நோயுள்ளதுமாகிய மாமிசத்தைப் புசிப்பதனால் சொரி சிரங்கு முதலிய தொற்று வியாதிகள் உண்டாகின்றன. 3. இன்னும் ஆஸ்திரேலியாகண்டத்தில் உழைப்பாளி களான பக்குவமடைந்த இளம்பெண்கள் மாமிசங்களை விசேஷமாகத்தின்பதனால் அவர்களெல்லாருக்கும் பெரும் பாடு என்னும் உதிரப்பெருக்கு நோய் உண்டாயிருக்கின்றது. 4. சைவபோஜனத்தால் விளையும் நன்மைகளை நன்கு அறிந்த ஆங்கிலேய வைத்திய பண்டிதர்கள் எல்லாரும் தம் அபிப்பிராயங்களை வெளியிடுவதற்கு அஞ்சுகிறார்கள். மாமிசபோஜனத்தை நீக்கிவிடுவதனால் கெடுதியுண்டாகு மென்று நினைக்கும் ஜனங்களெல்லாரும் தம்மை அவமதிப் பார் என்றும், தமது பிழைப்புக்குக் குறைவுவருமென்றும் நினைப்ப தனாலே யாம் இனி இந்தத்தடைகள் எல்லாம் நீங்குமானால் அப்பண்டிதர்கள் தாராளமாய்த் தம் அபிப்பிராயங்களை வெளியிடுவார்கள். 5. மாமிசத்தைப்புசிப்பதனால் அஜீரணம் உண்டாகி வாயுரோக முதலிய பல வியாதிகள் உண்டாகின்றன. ஜீரண சக்தியை மிகவும் உண்டுபண்ணும் சைவபோஜனம் செய்வ தனால் அவ்வியாதிகள் எல்லாம் ஒழிந்து போகின்றன. 6. பிரபலவைத்திய சாலைகளில் யாம் உத்தியோகம் செய்தபோது அங்கங்கு யாம் தேகபரிசோதனையின் பொருட்டு வியாதியஸ்தர்களின் தேகங்களைப் பதின்மூன்று வருஷ காலங்களாக ஏறக்குறையப் பதினாயிரம் பேர்வழிகள் வரையில் அறுத்துப்பார்த்த போது அவர்களில் ஒருவராவது சைவ போஜனஞ் செய்பவர் அல்லர்; எல்லாரும் மாமிசபக்ஷணிகள் தாம். 7. சைவபோஜனஞ்செய்பவர்களாகிய இந்துக்களுக்கு கொடியகொடிய வியாதிகளால் பிடிக்கப்படாது பெரும்பாலும் தேக ஆரோக்கியம் உள்ளதாய் இருக்கின்றனர். 8. மாமிசபோஜனிகளுக்கு ஜீரணசக்தி குறைந்து போவதனால் அதனை நிவர்த்திக்கும் பொருட்டு மதுபான திரவியங்களை உபயோகப்படுத்து கிறார்கள். சைவபோஜனம் செய்பவர்களுக்கு ஜீரணசக்திகுறைவுபடாமையால் அவர்கள் மதுபான வஸ்துக்களை உபயோகிப்பதில்லை. நாம் அறிந்த மட்டிலும் சைவபோஜனஞ்செய்பவர்களுக்கு மதுபான திரவியங்கள் கொஞ்சமும் வேண்டப்படுவதேயில்லை. இதனால், சைவபோஜனம் எங்கும் விருத்தியாகுமானால் மதுபான வழக்கம் அறவே யொழிந்து போம். ******** நம் அரசருடைய உருவப்பிரதிமை: நமது மாட்சிமை தங்கிய எட்வர்ட் அரசர் மகுடமன்னராய் அமர்ந்திருக்கும் கோலக்குறிப்போடு ஒரு பிரதிமை அமைத்துச் சென்னை மாநகரத்தில் தாபிக்கப்போகிறார்கள். இஃது அவ்வரசர்க்குப் பட்டாபிஷேகமாகும் நாளில் பகிரங்கக்காட்சியொடு விளங்கும். மதுரைச் தமிழ்ச் சங்கம்: இப்பெயர் கொண்ட சங்கம் ஒன்று ஸ்ரீராமநாதபுரம் இராஜா அவர்களாலும் ஸ்ரீபாண்டித் துரைத்தேவரவர்களாலும் தாபிக்கப்பட்டிருக் கின்றது. தமிழை அபிவிருத்திசெய்யும் பொருட்டு இச் சங்கத்தாராற் செய்யப் பட்ட ஏற்பாடுகள் வருமாறு. 1. ஒரு கல்விச் சாலை தாபித்து அதிற் கல்வி பயிலும் மணாக்கர்களுக்கு நன்கொடையளித்தல் 2. பாண்டியன் புத்தகசாலை என்னும் புத்தகக் களஞ்சிய மொன்று தாபித்தல். 3. ஓர் அச்சியந்திரசாலை தாபித்து அதன் வழியாக ஒரு மாதாந்தரப்பத்திரிகையும் பிறவும் பதிப்பிட்டுப் பரிகடனஞ் செய்தல். 4. பழைய தமிழ் நூல்களுக்கு உரை எழுதுவித்தலும், வேறு பாஷைகளில் இருந்து அரிய நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்தலும் சரித்திரங்கள் பிரசுரித்தலும். 5. வருஷாந்தம் பண்டிதர்களைக்கூட்டி உற்சவம் நடப்பித்தல். 6. தமிழ் நூலுரைகள் வெளியிடுவதற்கு உதவி செய்தல். 7. உபந்நியாசங்கள் செய்வித்தலும் பிறவுமாம், அரசரவர்களதும் தேவரவர்களதும் நன்முயற்சியால் பெருந்தொகையான பொருள் திரட்டப்பட்டு இதற்கு நிதியாக வைக்கப்படும். இஃது அபிவிருத்தியுற்றுத் தமிழுலகத்திற்கு நன்மை செய்யுமென்று எதிர்பார்க்கின்றோம். மணியார்டர் கமிஷன்: பத்து ரூபாவுக்கு மேற்படாத தொகைக்கு இரண்டணா கமிஷன் ஏற்படுத்தியிருப்பதை மாற்றி ஐந்து ரூபாவுக்கு மேற்படாத தொகைக்கு ஓர் அணா கமிஷன் ஏற்படுத்தப்போவதாகத் தெரிகின்றது. காங்கிரெஸ் மகாசபை: இவ்விந்திய மகாசபை இவ்வருஷம் காளிகட்டம் எனப்படும் கல்கத்தா நகரத்தில் கூட்டப்பட்டது. நமது ஆரியகண்டத்தில் உள்ள கனவான்கள் தத்தம் அபிப்பிராயங்களை வெளியிட்டு உபந்நியஸித்தார்கள். இதற்கு அக்கிராசனாதிபதியாக அமர்ந்திருந்தோர் ஸ்ரீதீன்ஷாஇடல்ஜீவாச்சா என்னும் பாரசீக கனவானாம். திருநெல்வேலி, 7. 4. 02 எனது ஆப்தரத்தினமாகிய ஐயா, தாங்கள் அன்புடனனுப்பிய புத்தகங்களிரண்டனுள் சோமசுந்தரக்காஞ்சி யாக்கத்தைப் பார்த்தேன்; பார்த்தேற் கது தன்பகைவருங்கண்டக மகிழ்ந், தறிவுநிரம்பி, உறுதி சூழ்ந்துள்ளன்பு செய்துறவாடு மியல்புடையதாய்க் காட்டிற்று. இது தங்களிடை எனக்குள்ள நட்பின் மிகுதிகொண்டானும், செந்தமிழிடை எனக்குள்ள அன்பின் பெருக்கானுமன்றி, மெய்ப்பொருள்காண்டல் ஒன்றே பற்றி உற்றுநோக்கி யாராய்ந்து கூறியதொன்றாம். மும்மணிக்கோவையை விரைவிலாராய்வேன். இங்ஙனம், தங்கள் அன்பன் பா. சிவராமன் திருநெல்வேலி இந்து காலேஜ் தமிழ்ப்பண்டிதர். ***** சென்ட்மேரித்தோப்பு, 11. 11. 1901. அன்புள்ள ஐய, நான் தம்மிற்கலந்து பலநாட்கழிந்ததேனும், தங்கள் அருமை பெருமைகளை அன்றுதொட்டு என்றும் மறந்த வனல்லேன். நாடோறுமுள்ளன்பு பெருகுவது, சில தினங்களின் முன்னர் என் நண்பர் ஒருவர், தாங்களியற்றிய மும்மணிக் கோவையை, என் பார்வைக்கு அனுப்பினர். அதனைக் கண்டதுந் தங்களைக்கண்டாற்போலும் ஆனந்தமடைந்தேன். அது தங்கள் மீதுள்ள எனது அபிமானத்தை விருத்தி பண்ணிற்று. அச்சீரியநூல் சொற்சுவை பொருட்சுவைநிரம்பிக் கற்றோறுங்கருத்தைக் கவர்வது. பத்துப்பாட்டு, எட்டுத் தொகையாகிய சங்கச்செய்யுட்களின் றிறம்வாய்ந்து ஆக்கி யோனது, தமிழ் ஆராய்ச்சியைத் தெள்ளிதிற் காட்டுவது ஓசையுடைமை ஆழமுடைமை யமைந்து ஆன்றோர் செய்யுட்களின் அழகெலாங்க வர்ந்து, செந்தமிழ்ச்சொற்கள் செறிந்து நல்லொழுக்கம் பயின்றிருப்ப தொன்று; அதனைப் படித்தோற்குப் பெரிது வியப்பையும் உவப்பையும் பெருக்கிற்று. இக்காலத்துச் சீரியவல்லன சில நூல்களும் கலாசாலைப் பரீக்ஷைகட்குமாக ஏற்படுத்தப்படுகின்றன. அது சிற்சிலரது செல்வாக்கானே போலும் மும்மணிக்கோவை போன்றன நமது சர்வகலாசாலைகளிற் பாடமாக நின்று தகுதியை நிரம்பவுமுடைத்து. ஏனோ இந்நூல் பி. ஏ. வகுப்புப் பாடம் அம்மூன்றில் ஒன்றாதல் கூடாது. இதுவிஷயத்தில் தாங்கள் சிறிது முயற்சி செய்ய அனைத்தும் பிறக் ஸ்ரீளளஸ்ரீ தண்டலம், பாலசுந்தர முதலியாரவர்கள் இதில் எல்லாம் பிறர் உதவி புரிவார்களென்று நம்புகிறேன். அவர்கள் போன்றா தென்றே போதுமானது. தங்கள் டி. சவரி செயின்ட்ஜோசப் காலேஜ் தலைமைத் தமிழ்ப் பண்டிதர் கௌரவாபிமானசீலர்கள். நாகப்பட்டினம். வெளிப்பாளையம் சைவசித்தாந்தசபையார் ரூபா 10 ஸ்ரீமான் சி. த. மா. முனிசாமிப்பிள்ளையவர்கள் திண்டிவனம். ரூபா 10 ஸ்ரீமான் கு. சிங்காரவேலு முதலியாரவர்கள் ரூபா 10 ஸ்ரீமான் சி. அருணாசலசெட்டியாரவர்கள் ரூபா 10 டி.பி. டப்ளியூ காண்டிராக்டர். ஸ்ரீமான் செ. வேதகிரிச்செட்டியாரவர்கள் ரூபா 10 ஸ்ரீமான் ஆ. துரைசாமிக்கௌண்டரவர்கள் பிராஞ்சுபோஸ்டாபீஸ், வல்லம் ரூபா 10 ஸ்ரீமான் ஓமந்தூர் முத்துவேங்கடராமரெட்டியார் அவர்கள் கிளியனூர் ரூபா 10 ஸ்ரீமான் பெ- ராம- வேங்கடசுப்பா ரெட்டியாரவர்கள் கிளியனூர் ரூபா 10 ஸ்ரீமான் சேவூர் சுப்பாரெட்டியாரவர்கள் இரங்கூன் ரூபா 10 ஸ்ரீமான் டி. எம். பொன்னுசாமிப்பிள்ளையவர்கள் பேபர் கரன்சி ஆபீஸ், ரூபா 10 ஸ்ரீமான் ரெய்பகதூர் மதுரைப்பிள்ளையவர்கள், ஆனரரி மாஜிஸ்திரேட் சென்னை ரூபா 10 ஸ்ரீமான் திருமயிலை அரங்கசாமி நாயகரவர்கள் அபாதகிரி ரூபா 10 ஸ்ரீமான் பெ. முனிசாமி முதலியா ரவர்கள் சூபர்வைசர், இன்ஜினீயரிங் டிபார்ட்மெண்ட். ரூபா 10 ஸ்ரீமான் தண்டலம் பாலசுந்தர முதலியாரவர்கள் தமிழ் டிரான்ஸ்லேட்டர் ஆபீஸ், பரமக்குடி. ரூபா 10 ஸ்ரீமான் டி. ஆர். கிருஷ்ணசாமிராவ் அவர்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர், சிகந்தராபத்து ரூபா 10 ஸ்ரீமான் சோ. சிவ அருணகிரி முதலியாரவர்கள் ரூபா 10 சீப்சப்ளை ஆண்டு டிரான்ஸ்போர்டு ஆபீஸ், சிகந்தராபாத்து, நந்தியால். ரூபா 10 கமிஷன் ஜெ எம் நல்லசாமிப் பிள்ளையவர்கள். பி. ஏ, பி. எல். ரூபா 10 அணா கமி----- டிஸ்ட்ரிக்ட் முனிசீப், நந்தியால். கள்ளிக்கோட்டை. ரூபா 10 தியாகராஜமுதலியாரவர்கள் லோகல்பண்டு சூபர்வைசர். ரூபா 10 உபகரித்த கனவான்களன்றி மற்றைக் கனவான்களும் உபகரிக்கும் திரவியத்தை விரைவிலுதவி யூக்கமுறுத்துவார்களென இறையருளைச் சிந்திக்கின்றோம். சிவமயம். திருச்சிற்றம்பலம். ஸ்ரீ ஜஞாநஸம்பந்தகுருப்யோநம வாழ்கவந்தணாவானவரானினம் வீழ்கதண்புனல்வேந்தனுமோங்குக ஆழ்கதீயதெலாமரனாமமே சூழ்கவையகமுந்துயர்தீர்கவே 3. சைவமும் சைவர் நிலையும் சிவபெருமானொருவனே வழிபடற் பாலனாகிய முழுமுதற் கடவுளென்றும் அங்ஙனம் அவனை வழிபடுவார்க்கு இன்றியமையா அடை யாளங்களாவன விபூதி உருத்திராக்க தாரணமும் பஞ்சாக் கரமந்திரமுமேயாமென்றும், இவற்றை யெல்லாம் ஆன்மாக்கள் இனிதுணரு மாறு சருக்கமாகவும் விரிவாகவுந் தெரிக்கலுறும் நூல்கள் வடமொழியில் வேத சிவாகமங்களுந் தென்மொழியில் தேவாரதிருவாசக முதலிய பன்னிரண்டு திருமுறைகளும் சிவஞான போத முதலிய பதினான்கு சித்தாந்த அருளோத்துக்களு மா மென்றும் ஆணைவரம்பு நிறுத்தி அவ்வரம்பு கடவாது ஒழுகும் நல்லான்மாக்களுக்கு முத்தியின்பம் பயப்பது சைவசமயமாம்; இங்ஙனங் கிளந்தெடுத்துக்கூறிய சைவசமய வழிநின்று அச்சமயவிதிகளை வழுவாது அனுட்டித்து ஒழுகுங் கடப்பாடுடைய நன்மக்களெல்லாருஞ் சைவரென்று வேண்டப்படுவர். இனித்துரியப்பொருளாகிய சிவனை வழிபடுதலும், அவனடையாளங் களாகிய விபூதி உருத்திராக்கதாரணமும், இவற்றை யறிவிக்குந் தேவார திருவாசக முதலிய நூலாராய்ச்சி யுமாகிய மூன்றும் ஒன்றை ஒன்று இன்றியமையா நெறிப்பா டுடையனவாம். இங்கே சிவம் என்றதுரியப்பொருள் பிரமன் விண்டு உருத்திரன் என்று ஆண்டாண்டு உபநிடதங்களில் ஓதப்படும் முப்பொருள்களுள் இறுதியில் நின்ற உருத்திரபத வாச்சியப் பொருளன்று. மற்று அது குணப்பொருளாகிய அம் மூன்றனையுங் கடந்து மேல்விரிந்து செல்லும் நான்காவ தாகிய துரியப்பொருளாவதாம். இக்கருத்துப்பற்றியே அதர்வ சிகோப நிடதத்தில் இவையனைத்தும் பிறக்கின்றன; இப்பிரமன் விண்டு உருத்திரன் இந்திரனென்னுமவ ரெல்லாம் பிறக்கின்றனர்; பூதங்களோடு இந்திரியங் களெல்லாம் பிறக்கின்றன; காரணங்களைத் தோற்றுவிப் பானுந்தி யாதா வுமான காரணன்றான் பிறப்பானல்லான்; காரணப் பொருளும். ஐசுவரிய மனத்தையுமுடையானும் அனைத் திற்கும் ஈசுரனு மான சம்பு ஆகாயநடுவிற் றியானிக்கப்படும் என்றும், பஞ்சப் பிரமோபநிடதத்தில் மூன்றவத்தைகளைக் கடந்ததும் துரியப் பொருளும் சத்தியமும் ஞானமயமாக வுள்ளதும் பிரமன் விண்டு முதலியோராற்சேவிக்கப்படுவதும் எப்பொருளும் பிறத்தற்கு நிலைக்களமாவதும் மேலானதும் ஈசபதவாச்சியப் பொருள் என்றும் சுருதிவாக்கியங்கள் ஒருங்கெழுந்து அறுதி யிட்டன. இவ்வாறே தேவர்கோவறி யாத தேவதேவன் செழும் பொழில்கள் பயந்து காத்தழிக்கு மற்றை, மூவர்கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி மூதாதை மாதாளும் பாகத்தெந்தை என்று திருவாசகச்சுருதியினும் போந்தவாறு காண்க. இனிச் சுவேதாசுவதரவுபநிடதத்திற் போந்த எவன் தானொரு வனாயிருந்து கொண்டே எல்லாப் பொருள்களையு மயக்கு வானோஅவன் தன் சருவ வல்லமை யால் எல்லா வற்றையும் எல்லாவுலகங்க ளையும் ஆளுகின் றான்; எவன் உற்பத்தியாங் காலத்தும் சம்பவிக்குங்காலத்துந் தான் ஒருவனாகவே இருக்கின் றானோ அவனை அவ் வாற்றான் அறிபவர் மரணத்தைக்கடக் கின்றார்கள். ஏனெனில், இவ்வுலகங் களையெல்லாந் தன் முழு முதன்மையால் ஆட்சி செய்கின்ற உருத்திரக்கடவுள் ஒருவனேயாதலால், அவனுக்கு வேறாகப் பிறிதொருபொருள் உண்டென்று அறிவுடையோர் சொல்லார்கள்; அவன் சிருட்டி செய்வானொருவனை உண்டாக்கி எல்லா வுலகங்களையும் படைப்பித்துத் தான் அவ்வெல்லா ஆன்மாக்களினும் அந்தரான் மாவாய் வேறுவே றமர்ந்திருக்கின்றான்; அவன் சங்காரகாலத்தில் தன் கோபாக்கினியால் எல்லாவற்றையும் விழுங்குகின்றான். எல்லாப் பக்கங்களில்விழிகளும், எல்லாத் திசைகளின் முகங்களும், எல்லாத் திக்குகளிற்புயங்களும், எல்லா விடங்களிற் பாதங்களும் உடையனாய் ஆகாயத்தையும் பூமியையும் உண்டுபண்ணித் தன்கரங்களானும் சிறகு களானும் அவற்றை ஒழுங்குபடுத்துகிற அவன் ஒருவனே கடவுள்; இங்ஙனம் எல்லாவற்றிற்கும் முதல்வனும் மகருஷியும் சிருட்டி காரணனும் தேவர்களை எல்லாம் பிறப்பிக்கின்றவனும், அவருள்ளும் இரணியகருப்பனை முதலிற் படைத்திட்டவனு மாகிய உருத்திர மூர்த்தி எமக்கு மெய்ஞ் ஞானத்தை உதிப்பிக்கக் கடவன் என்னும் அருள்வாக்கியந் திரிமூர்த்தி களுட்பட்ட குணருத்திரர் மேற் செல்வதின்றித் தத்துவங்களை ஒடுக்கிக்கொண்டு அத்தத்துவங்களுக்கும் அதீதமாய் விளங்குந் துரியமுழு முதற் கடவுளான மாசங்காரஉருத்திரக்கடவுளை வழுத்துதற் பொருட்டு ஆண்டெழுந்ததொன்றாகலின் அதுபற்றி ஈண்டு வரக்கடவதோர் இழுக்கில்லையென்றொழிக. இனி அங்ஙனங்காட்டிய முத்திற முறையுள்ளும் சிலவழிபாடு ஏனை யிரண்டினுஞ் சிறந்ததொன்றாதலானும், அச்சிவவழிபாடு பற்றியே அதற்கங்கங்களான விபூதி யுருத்திராக்க தாரணம் பஞ்சாக்கரமந்திரம் வேதோபநிடத நூலாராய்ச்சியும் பிறவும் வேண்டப்படுதலல்லது அவ்வழி பாடில்வழி அவை பயப்பாடின்றி வறிது கழிதலானும் அச்சிவ வழிபாடு ஒன்று தானே ஏனையிரண்டினுஞ் சிறந்தெடுத்துப் போற்றப்படுந்தலைமை யுடைத்தாம். என்னை? கொழுநனை புடையளான ஒரு தலைமகள் தான் தனக்கினிய அக்காதலனை யுடையளாம் அவ்வியைபுபற்றியே அவடனக்கு இன்றியமை யாச் சிறப்பினவாகிய மங்கலநாண் மஞ்சட்பூச்சுக் கலவைச் சாந்து நறுமுறிக்கொழுந்து விரைமலர்த்தொடையல் செழும் பட்டாடை முதலியன வேண்டப்படுவதன்றி, அவனில்வழி அவை யொருசிறிதும் அவளால் விரும்பப்படா வாகலி னென்பது. இன்னும், இராச்சியவுரிமை பெற்றானோர் ஆண் மகன் தான் அங்ஙனமெய்திய அவ்வுரிமை பற்றியே அதற்கடை யாளங்களான அரதனமுடியும் வெண்கொற்றக் குடையும் அரச முத்திரையும் அரியணை வீற்றிருப்பும், ஒருங்கு பெற்று ஆட்சி செலுத்துதலன்றி, அவ்வுரிமையில்லா தானொருவன் அங்ஙனம் அடையாளங்கொள்ளானாக லானுமென்பது. இனிக்கொழுநனையிலளாகிய ஒரு பெண்மகள் மங்கல நாண் முதலிய அலங்காரமுடையளாம் வழி அவளைத் ----------- இராச்சியவுரிமை யில்லாதானொருவன் அஃதுடை யானே போல, அரதன முடிமுதலிய அடையாளங்கொள்வுழி அவனரசனால் ஒறுக்கப்பட்டுச் சிறைக்களத்திடப்படுமாறு போலவும் சிவவழிபாடு இல்லாதானொருவன் அஃதுடை யானேபோல விபூதியுருத்திராக்கந் தரித்துப் பிறரை வஞ்சித்தன் மேற்கொண்டவழி அவன் தன் செயலையுணர் வாரெல்லா ரானும், ஓ! ஓ! இவன் கொடியன், பாவி, வஞ்சகன், என்று இழித்துக் கூறப்படுதன் மேலும் மறுமையிற் சிவபெருமானா லொறுக்கப்படுதலும் உடையனாம். சிவபெருமானைத் தெய்வ மாகக்கொண்டு வழிபடும் நற் குலத்திற் பிறந்த சைவர்களே! எம்மரிய சகோதரர்களே! நமக்கு இந்த மானுடதேகமும் அதனினுஞ்சிறந்த சைவகுலமும் முற்சென்மங்களில் ஈட்டிய பெருந்தவப்பயனா வாய்ப்பப் பெற்றும் அவற்றாற் பெறும் பயனை நாம் ஒரு சிறிதும் யோசியாது வாளாது வாணாளைக் கழித்தல் நன்றோ? நாம் வழிபடும் முழு முதற்கடவுள் சிவபெருமான் ஒருவனே என்று துணிந்து அவனை உபாசிக்கும் நன்முறை அறியோமாயின், நாம் எவ்வளவுதான் விபூதி, யுருத்தி ராக்கந்தரித்தாலும் அவற்றால் நமக்குப் பிரயோசனம் வருவதன்று. சிவபெரு மானை உபாசிக்கும் பொருட்டாகவே அவன்றிருவடையாளங் களான திருநீறுங் கண்டிகையும் அணிகின்றோமென்று அறிந்து அவனை வழிபட்டான் மாத்திரம் நாம் வேண்டியவாறெல்லாம் நமக்கு இம்மை மறுமைப்பயன்களை யருளியிறுதியில் அவன்றன் றிருவடிப் பேரின்பத்தை யும் நமக்கு ஊட்டுவான். இனி, இங்ஙனங்கூறுதல் பற்றி நாம் ஏனைச்சமயங்களையும் அச்சமயிகள் வழிபடுந்தெய்வங்களையும் இகழ்ந் துரைக் கின்றோமென்று நினையாதீர்கள். அங்ஙனம் நாம் ஒரு காலத்துஞ் செய்யோம். நாம் முதற்சஞ்சிகையில் வரைந்த இவ்வுலகின் கட் பல்வேறுபடப் பரந்து கிடக்குஞ் சமயங் களெல்லாந் தம்மை அனுசரித்தொழுகும் ஆன்மாக்களின் பக்குவமுறைமைக் கேற்பவும், அப்பக்குவமுறைமையால் அவரறிவு விரிந்து செலுந்தன்மைக்கேற்பவுந் தாமும் ஒரு நெறிப்படாவாய்ப் பலநெறிப்பட அகன்று தாந்தாம் நுதலிய பொருளையே உண்மை யெனத் துணிந்து ஆராய்ந்து அவை தம்மா லுறுதிகொண்டு உய்யுநெறி தேடுகின்றன; இங்ஙனம் ஒன்றினொன்று மறுதலைப்பட்ட இலக்கணங்களுடைய வாயினும், ஒன்றினொன்று குறைந்த குணங்களுடைய வாயினும், ஒன்றினொன்றுயர்ந்த குணங் களுடைய வாயினும் எல்லாச்சமயங்களும் மெய்ச்சமயங்களே யாய், எல்லாம் வீடுபேற்றின்கண் உய்க்கும் வழிகளுந் துறைகளு மேயாய், முழுமுதற் பெருங்கடவுளாகிய தந்தையை ஆன்மாக்க ளாகிய பசுங்குழவிகள் சென்று அணையுங்காறும் அறிவூண் தந்து வளர்க்குந் தாய்மார்களேயாய் விளங்குவன என்னும் வாக்கியக் கூறுகளே அதற்குச்சான்றாம். மற்று நங்கருத்து யாதோவெனின்; எல்லாச்சமயிகளும் தாந்தாம் உண்மையெனக்கொண்டு உபாசிக்குந் தெய்வங்களைத் தாந்தாம் அனுசரித் தொழுகும் விதிபிறழாது தழுவக் கொண்டு உறுதிபெறல் வேண்டுமென்பதே நங்கருத்தா வதாம். இதனை விடுத்துச் சைவனொருவன் சிவவழிபாடு நீங்கி வேறு சமயிகள் உபாசிக்குந் தெய்வங்களைப் பாராட்டிப் போற்றுதலும், அவ்வாறே அவ்வேறுசமயிகள் தம்மதங்களுக்கி ணங்காத பிறசமயத் தெய்வங்களைப் பாராட்டிப் போற்று தலும் வரம்பழித்துச் செய்யு முறையாதலால் அவைபெரிதும் இடர்ப்படுதற்கேதுவாய் முடியுமென்றொழிக அற்றேல், சாக்கியநாயனார் தாந்தழுவிய பௌத்தசமயவழி நின்று உறுதி பெற மாட்டாராய்ச் சிவவழிபாடு இயற்றியது வழுவாம்போலு மெனின், அற்றன்று, அவர் மேலைச்சென்மங் களிற் செய்து போந்த தவமுதிர்ச்சியால் தமக்கு மெய்யறிவு விளங்கி அதிதீவிர பக்குவமுடையராகப் பெறுதலால், அப்பக்குவ நிலைக் கேலாத பௌத்தசமயம் விடுத்து அதற் கேற்பதான சைவம்புகுந்து சிவனை வழிபட்டு உய்ந்தாராகலின் அதுவழு வாமாறு யாண்டைய தென்றொழிக. அஃதாயின், அவர்தம் மேலைச் சென்மத் தவமுதிர்ச்சிக் கேற்பச் சைவ சமயத்திற் பிறந்து அவ்வாற்றாற் சிவனை வழிபடுதலன்றே மரபாமெனின் நன்று சொன்னாய் அவர் மேலைச் சென்மங்களில் அரிதாற்றிய தவவூழ் அவரைச் சைவசமயத்திற் பிறப்பித்து ஆண்டு நின்றவாறே அவர்க்கு அவ்வதிதீவிரபக்குவத்தைப் பயப்பிக்க மாட்டா தாய்ப் பௌத்தசமயத்தின் கண்ணே அவரைப் பிறப்பித்து ஆண்டு நின்றவாறே இடையொரு காலத்து அவ்வதிதீவிரபக்குவத்தைப் பயப்பிக்கும் பெற்றித்தாய் முற்கொண்டு அமைந்துகிடந்தது; பின் அக்கிடப்பின் படியே முடிந்ததாகலின் அதுகடா வன்றென மறுக்க. இனிப் பலவகைச் சமயமுடிபொருள் களையும் நுண்ணிதாக ஆய்ந்து அதனான் மெய்யறிவு மிகவிளங்கித் தாம் மெய்யெனக்கண்ட ஒரு சமயத்தை அனுசரித்தொழுகுங் கடப்பாடுடை யார்க்குத் தஞ்சமயவரம்பு கடந்து சேறல் குற்றமன்றாம். இனி இவ்வா றெல்லாமன்றித் தஞ்சமயப் பொருளுண்மையும் பிறசமயப் பொரு ளுண்மையும் அளந்தறிய மாட்டாதபுருடர் தஞ்சமய வரம்புகடந்து விவகரித்தல் பெரியதோர் அபசாரமா மென்றொழிக. இனிச்சைவ சமயத்திற்பிறந்து சிவனைவழிபடும் புண்ணிய முடைய நன்மக்கள் அந் நெறிகடைப்பிடியாது தன்மனம் போனவா றெல்லாம் புகுந்து தம்பெருமை யிழத்தல் நன்றன் றாம். சைவசமயிகள் சிவபெருமானையன்றி ஏனைச் சமயத் தெய்வங்களை உபாசிக்க இடம் பெறமாட்டார். இதற்கு ஸ்ரீமான், மாணிக் கவாசகசுவாமிகள் அருளிய, கொள்ளேன்புரந்தரன்மாலயன்வாழ்வுகுடி கெடினு உன்ளேனின தடியாரொடல்லானரகம்புகினு மெள்ளன்றிருவருளாலேயிருக்கப்பெறி னிறைவா வுள்ளேன்பிறதெய்வமுன்னையல்லா தெங்களுத்தமனே என்னுந் திருவாக் கேயுறுசான்றாமென்க. இனிச் சிவபெருமானை உபாசிக்குஞ் சைவர்களுக்குச் சிவவாராதனை ஒன்றே சாலுமாகலின், விபூதியுருத்திராக்க தாரணமும் பிறவும் அவர்க்கு இன்றியமையாதாமென் றுரைத்தவா றென்னையெனின்; நன்று வினாயினாய், கொழுநனையுடையளான மனைக்கிழத்திக்கு மங்கலநாண் முதலிய அடையாளங்களும், அரசுரிமையுடையனான ஓராண் மகனுக்கு அரதனமுடி முதலிய அடையாளங்களும் இன்றியமை யாது வேண்டப் படுகின்றனவாகலின், சிவனை உபாசிக்குஞ் சைவர்களுக்கு அவையும் இன்றியமையாது வேண்டற் பாலனவேயாம். இனி ஒருதலைமகட்கும் ஓர் அரசற்கும் அவ்வவர்க்குரிய அன்பும் அதிகாரமுமே சாலுமாகவும், அவற்றின்வேறாக அடையாளங்கள் பிறகோடறான் எற்றுக்கென்று ஆராய லுறுவார்க்குத் தந்நிலையில் நின்றவழி உணர்வின்றிக்கிடந்த ஆன்மாக்கள் எழுவகைத் தோற்றத்துட்பட்ட சரீரங்களையும் அச்சரீரங்களிற்போகநுகர்ச்சிக்கு ஏதுவாய்க் கிடந்த மெய் வாய் கண் மூக்கு செவி முதலிய புறக்கருவிகளையும் மனஞ்சித்தம் புத்தியகங்காரமுதலிய அகக்கருவிகளையும் ஒருங்குதலைக்கூடி உலகத்தோடு ஒருமைப்பாடுற்று அறிவு விரியப்பெறு பவென்பதும், இங்ஙன தேகத்தோடு இயைபுறு தன்மாத்திரை யானேகுறிவழிச்செல்லும் அறிவு முகிழ்க்கு மென்பதும் இனிது விளங்கும். குறியெனினும் அடையாளம் எனினும் ஒக்கும். இனிமானுடரெல்லாரும் ஆண்பெண் எனப்பகுக்கப்படும் பகுப்புடைய ராதலும்அப்பகுப் பாருள்ளும் இவனெமக்குத் தந்தை இவன் சகோதரன் இவன் புதல்வன் இவன் ஏதிலான் இவன் நண்பன் எனவுணர்ச்சி வேறுபா டுறுதலும் அவ்வவர்க் குரிய விசேட அடையாளங்கள் பற்றியே யாம். இனி அப்பெண் வகுப்பாருள்ளும் இவள் எமக்குத்தாய் இவளுடன்பிறந்தாள் இவள் புதல்வி இவள் ஏதிலாள் இவள் கிழமையுடையாள் என்றற் றொடக்கத்தான் வேறுவேறறிதலும் அவ்வவரிடைக் காணப்படும் விசேட அடையாளங்கள் பற்றியேயாம். இனி ஆங்கில நூலாரும் ஒரு பொருளொடு வேறொன்றனை ஒப்பிட்டுக்காண்டலானும், ஒன்றை ஒன்றின்வேறாகக் காண்டலானும் அறிவுமலர்ச்சி யுண்டாம் என்றுகூறுப. ஆகவே, உலகத்துட் டோன்றி அவ் வுலகியற் பொருளின்கண் அதுவதுவாய்ப்பதியும் அறிவுடைய ஆன்மாக்கள் அடை யாளங்கள் பற்றியுணர்ச்சி யுடையராகப் பெறுதல் இயற்கை யாகவே வாராநின்ற நிகழ்ச்சி யாதலின், அது தன்னோடு முரணி வேறு வேறாசங்கித்தல் பொருத்த மின்றாம். இனி இவ்வாறே ஒருவனைச் சைவனென்றும் ஒருவனை வைணவனென்றும் ஒருவனைப் பௌத்தனென்றும் ஒருவனை சமணனென்றும் அறியும் அறிவெல்லாம் அவ் வவர்க்குரிய ஈசுரவழிபாடு கருமவுறைப்பு நூலாராய்ச்சி முதலிய அடையாளங்கள் பற்றியே நிகழ்வதல்லது பிறிதன் றாம். இனி அவரவர்க்குரிய சமய அடையாளங்களும் அவரவர்க் குயிர் போற் சிறந்தனவாய் அவர் செய்யும் ஈசுரவழி பாட்டின் கண் நெஞ்சம் நெகிழ்த்திப் பத்திச்சுவைமிகுவித்து மேம் பாடுறுவன வாம் இப்பெற்றியவான அவ்வடையாளங்கள் அவ்வச்சமயத்தா ரெல்லாரானுங் குறிக்கொண்டு போற்றப் படுவன வாதலின் சைவர்க்கு விபூதி யுருத்திராக்கதாரணம் இன்றியமையா வடையாளச்சிறப்பினவென்பது தெற்றென விளங்கும். இனி, வடமொழியில் வேதாகமநூலாராய்ச்சியுந் தென் மொழியில் தேவாரதிருவாசக சிவஞானபோத நூலாராய்ச்சியும் வேண்டற்பால வென்றலென்னை, விபூதியுருத் திராக்கந்தரித்து ஐந்தெழுத்தோதி யுண்மை யன்பாற் சிவ வழிபாடு இயற்று தலொன்றே யமையுமெனின்; அற்றன்று, தாம்மாத்திரம் அங்ஙனம் வழிபட்டு உய்யுநெறியொன்றே கடைப்பிடித்தல் தன்னைப்பற்றுதலென்னுங் குற்றமாதன் மேலும் பிறசீவான் மாக்கள் பிழைத்துப்போம் மெய்ந்நெறி காட்டி வழிப்படுக்குஞ் கருணையின்றாய் முடிதலானும், கருணை யின்றாகவே சீலர்கட்குரிய ஏனைக்குற்றங்க ளெல்லாமும் ஒருங்குவந்து சேறலானும், அதனாற் பிறவி யறாமன் மேன்மேற்பெருகி வருதலானும் அவர்தாம் உண்மைச் சிவவழிபாடு செய்தாரல் லராவர்; இனித்தாமுய்யும் பொருட்டுச் சிவவழிபாடு இயற்றுதல் போலவே எல்லாச் சீவான்மாக்களும் உய்கவென்னுங் கருணைமிக்கு அவர்தமக் கெல்லாம் அச்சிவவழிபாட்டின் அருமை பெருமைகளை விரித் துரைத்து அறிவு கொளுத்தல் வேண்டுமாகலானும், அவ்வாறு அறிவு கொளுத்தற் பொருட்டுத் தம்முரையில் அவரைத் துணிபு ஒருப்படுத்தல் வேண்டுமாக லானும், அங்ஙனந் துணிபொருப்பாடு உறுவித்தற்கு வேதாகம நூலாராய்ச்சி இன்றியமையா நெறிப்பாடுடையதாம். அல்ல தூஉம், வேதாகமநூலுரைப்பொருள் செவ்விதின் ஆய்ந்து அவ்வாற்றான் முகிழ்க்கும் மெய்யறிவின் கட் பத்திச் சுவைத் தேன் ஓயாது சுரந்து இறைவன் றிருவடித்தியானத் தின்கண் மனவெழுச்சிமிகுக்கும் உரிமைப்பாடு விளைதலானும் அவ்வாராய்ச்சி தமக்கும் பயப்பாடு பெரிதுடைத்தாம். இருவழி யானுஞ்சிறந்த வடநூல் தென்னூலாராய்ச்சி சைவரெல்லா ரானும் ஒழுங்காகச் செயப்படுதல் வேண்டும். இங்ஙனம் மூவேறுவகைப்படுத்து எடுத்துக்கொண்ட சிவவழிபாடும் விபூதி யுருத்திராக்கதாரண பஞ்சாக்கர மந்திரமும் வேதாகமப் பொரு ணூலாராய்ச்சியும் சைவசமய நிலைக் குரியனவாம். இனி இக்காலத்து சைவர்களுட்சிலர் சிவனை வழிபடுதலறியாராய்ச் சிவனென்னவிண்டுவென்ன, எல்லாம் ஒன்றுதான்என்றுரைத்து அன்பிலராய் நாட்கழிக் கின்றார். வைணவசமயிகள் விண்டுவையே தாம் உபாசிக்கும் முழுமுதற் கடவுளென்று துணிந்து அவ்வாற்றான் வழிபடற் பாலார். சைவர் சிவனையே அங்ஙனந் துணிந்து வழிபடற் பாலார். இம்முறை திறம்பி இரண்டையு மொன்றெனக்கூறி அன்பிலராய் ஒழுகி நாட்கழித்தல் எந்தச்சமயிக்கும் நன்றாகாது. ஈசுர வழிபாட்டிற்கு ஒருதலையான் வேண்டும் உள்ள நெகிழ்ச்சி எல்லாத் தெய்வங் களையுஞ் சமமாகக்காணும் பொது நோக்கத்தான் வருவதன்று. மற்று அஃது, ஒருபொருளை ஏனைய வற்றினின்றும் வேறு பிரித்துத் தலைமைப்பாடுடைய தெனக்காணுஞ் சிறப்பு நோக்கத்தான் வருவதொன்றாம் இவ்வியல்பு பற்றியே உலகெங்கும் பலவேறு வகைப்பட்ட சமயங்களும் சமயத் தெய்வங்களும் பலப்பலவாய் விரிந்தன. அவ்வச்சமயத்தாருந் தத்தமக்கு உள்ள நெகிழ்ச்சி செல்லும் வகையான் தாந்தாம் விரும்புங் குணங்குறிமுதலியன கொண்டு தத்தமக்கியைந்த வழியா னெல்லாம் ஈசுரனை உபாசனை செய்து போதருகின்றார். இவ்வாறு விரிந்த சமயங்களை யெல்லாம் ஒருமைப்படுத்தலாவது, அல்லாதவற்றை யெல்லாம் அழிவு செய்து மெய்ச்சமய மொன்றனை நிறுத்தலாவது யார்க்கும் இயல்வதன்று. அங்ஙனஞ் செய்தல் ஈசுரனுக்குத் திருவுள்ளமுமன்று, அவர்க்குத் திருவுள்ளமானால் ஒரு கணத்திலவ்வெல்லாச்சமயங்களும் ஒருமைப்பாடுறு மன்றோ? ஆகலான் எல்லாச் சமயிகளுந் தத்தஞ்சாத்திர ஆணைவரம்பு கடவாது அவ்வச்சமயவிதிவழி யொழுகி அதனாலறிவு முதிர்ச்சியடைந்து மேன்மேற் சமயங்களிற் பிறந்து சித்தாந்த மாக நிலைபெறும் முடிநிலைச் சமயமொன்றால் நேரே ஈசுரன் றிருவடிப் பேரின்பமுத்தி பெறற்பாலார். இங்ஙனமின்றித் தஞ்சமயவரம்பு அழித்து அன்பிலராய் எல்லாம் ஒன்றுதான் எனக்கூறுதல் மக்கட் பிறவிப்பேறு இழப்பதொன்றாய்முடியும். அஃதுயாங்ஙனமோ வெனின்: பொருள்வேண்டி ஆடவர்பலர் தோள் முயங்கிக்கழித்த பொதுமகள் அவ்வாடவர் யாவரிடத்தும் அன்பிலளாம்; அன்பிலளாகவே இன்ப நுகர்ச்சியும் அவட்கின்றாம். இனித்தா னின்பந்துய்த்தல் குறித்தாளாயின் அவள் தனக்கு இயைந் தானோர் ஆடவனை ஏனைஆடவரிற் சிறப்பக் கொண்டு அவன்மாட்டுக் கழிபெருங் காதலுடையளாய் இன்பந்துய்ப் பாளாவது. இன்னும் முத்துப் பவளம் நீலம் பச்சை கோமேதகம் புட்பராகம் வைடூரியம் மரகதம் மாணிக்கம் முதலிய நவமணிகளையும் ஆராய்ச்சி செய்தலு றுவான் அத் தொகுதிக் கண் நல்லதொன்று கண்டவழி அதனை ஏனையவற்றினுஞ் சிறந்தெடுத்து அதன்கட் கழிபெருங் காதலுடையனாய் அதனைப்பொதிந்துவைத்துப் போற்றக் காண்கின்றோம். அங்ஙனமவற்றைப்பகுத்துக்காணும் அறிவின் மதுகையில்வழி அவனவற்றை ஒன்றுகூட்டி அவற்றின்கண் ஆசையிலனாய் ஒழுகுதலுங்காண்கின்றோம். இருந்தவாற்றால் அன்பென்னும் உள்ள நெகிழ்ச்சி யுண்டாதற்குப்பொது நோக்குக்கழித்துச் சிறப்பறிவு நோக்குக் கொளல்வேண்டுவது ஒருதலையாம். ஆகவே, சைவர்களாகிய நன்மக்கள் ஏனைச் சமயத்தெய்வங்களைக் கனவினும் நினைதற்கு ஒருப் படாராய்த் தான்கொழு னிடத்துக்கழிபெருங்காதலுடையளாய் இன்பந்துய்க்கும் மனைக்கிழத்திபோற் சிவபெருமானிடத்து அன்புநிகழப் பெற்று உபாசித்து உய்தல்வேண்டுமென்பது ஈண்டெடுத்துக் கூறியவாற்றா லினிதுவிளங்கும். இனிச்சைவ நன்மக்களிற்சிலர் விபூதி யுருத்திராக்க பஞ்சாக்கர மந்திரமுதலிய திருவடையாளங்களின்றி யாம் சிவவழிபாடு பெரிதுடையோ மாகலான் எமக்கு அவ்வடை யாளங்கள் வேண்டா என்றுரைக்கின்றார். அது பொருந்தா. இனி வேறு சில சைவ நன்மக்கள் வேதாகமமுதலிய வடநூலா ராய்ச்சியும் தேவாரதிருவாசக சிவஞான போதத் தென் நூலாராய்ச்சியும் அரியவாயிருத்தலின் அவற்றின்கண் எமக்கு மனவெழுச்சி சென்றிலது என்று கூறுகின்றார். வடநூலாராய்ச்சி யில்லாதொழியினுந் தமிழ் நுலாராய்ச்சி யேனுஞ் செய்து மென்றால் தமிழ் நூல்கள் செந்தமிழிலக்கண நெறி பிழையா நன்னடையில் எழுதப்பட்டிருத்தலால் அதன் கண்ணும் எமக்கு அறிவு சென்றிலது என்றும் உரைக்கின்றார். நல்லதங்கைக்கதை நளன்கதை இராமன்கதை பாண்டவர் கதைமுதலியன போல் அத்தனை இலேசாக வருத்தமின்றி அச்செந்தமிழ் நூல்கள் விளங்கற்பாலனவா? சிவபெருமான் திருவடிப்பேரின்பமுத்தி, கத்தரிக்காய், புடோலங்காய் முதலிய தாவரவுணவு கொள்ளுதலானும், யாம் சைவரென்று தருக்கிக் கூறுதலானும் எய்தும் எளிமைத்தன்று. அல்லாமலும், உலகவாழ்க்கைப் பெருந்துக்க சாகரத்தில் தம்மறிவுதேய்ந்து பெரிதுந்துயருழவாநிற்பவும் அதன்கண் எல்லாந் தமக்கு வருத்தம் இழையளவுந்தோன்றாது, இம்மை மறுமைப் பயன்றந்து உறுதிகூட்டும் ஞானநூலாராய்ச்சிக் கண் அவர்க்கு வருத்தந் தோன்றல் புண்ணிய முகிழ்ப்பு இல்லாக் குறைபாடாவ தன்றிப் பிறிதென்னை? விடியற் காலையில் உறக்க நீங்கி எழுந்து இரவில் துயில் கொள்ளு மளவும் மெய் வியர்வரும்பக்கொல், தச்சு, நெசவு, உழவு, பொறைச்சுமை, பகடு உய்த்தன் முதலான அருந்தொழில் பலவியற்றிப் பொருள்சிறிது ஈட்டுதற்கண் நம்மனோர்க்கு வருத்தந்தோன்று தலில்லை; ஒரு நாழிகைப் போதேனும் நன்மக்கள் குழுவி லிருந்து ஞானநூலாராய்ச்சி செய்தற்கண் அவர்க்கு வருத்தம் மிகத்தோன்றா நிற்கும். பொய்யுரைத்தும், பொருளுடை யாரைக் கண்டால் அவருவக்கும் வகை இச்சகம் பேசியும், நல்லோர் பெரியோரைப் புறம்பழித்தும், கலகவுரை நிகழ்த்தியும், விதண்டைபேசியும், வீணுரை கிளந்தும் நாளொழித்தற்கண் நம்மனோர்க்கு வருத்தந் தோன்றாது; அரைநாழிகைப் போதேனும் ஈசுர விஷயமான நல்லுரை யுரைத்து ஆனந்த முறுதற்கண் அவர்க்கு வருத்த மிகத் தோன்றா நிற்கும். நாட்டு வளங்கள் பலகண்டும் பருவதக் காட்சிகள் பலகண்டும், வனங்களிற்சரித்து ஆண்டுள்ளன பலகண்டும், கடற்காட்சி கண்டு உலாப்போயும், நகரவித்தியா சாலைகள், அறங்கூறு அவையங்கள், தொழிற்சாலைகள், ஓவியச் சாலைகள், சிருங்காரத்தோட்டங்கள், அறச்சோற்று மண்டபங்கள், யாவையுமலிந்த ஆவண வீதிகள் முதலான வருந்தித் திரிந்துகண்டும் நாட்கழித்தற்கண் நம்மனோர்க்குப் பிரயாசை தோன்றாது; நல்லறிவுடையோரைக் கண்டு அவரோடு அளவளாவுதற்கண்ணுந் தேவாலயங்களுக்குச் சென்று ஈசுரன்றிருவுருவத்தைக் கண்ணாரக்கண்டு களிப்பதன் கண்னும் அவர்க்குப் பிரயாசை மிகத் தோன்றா நிற்கும் புளுகுரை கேட்டும் புறம்பழிப்புரைகேட்டும் வம்புரைகேட்டும் வாதுரை கேட்டும் வாளாது நாட்கழித்தற்கண் நம்மனோர்க்கு மகிழ்ச்சிமிகத்தோன்றாநிற்கும், பெரியோர்சொல் நீதியுரையும் கேட்டற்கண் அவர்க்கு இகழ்ச்சிமிகத்தோன்றா நிற்கும். என்னே! என்னே! நம்மனோர் செயலிருந்தவாறு! ஆரிய நன்மக்களே! எம்மரிய சகோதரர்களே! சைவசமய அன்பர்களே! இனியேனும் இங்ஙனம் நாட்கழியாது ஞான நூலாராய்ச்சி செய்து கஷ்டமாயின், அவ்வாராய்ச்சிமுதிர்ந்த நல்லோரைக் கூட்டி அவருபதேசிக்கும் நல்விஷயங்களைச் செவிமடுத்துப் பிழைக்குநெறி தேடுங்கள்! முயற்சியுடையா ரிகழ்ச்சி யடையார் என்னும் ஔவைப்பிராட்டியார் அருள் வாக்கிய உபதேசத்தை ஞாபகத்தில் வையுங்கள்! 4. ஞானசாகரம் காகமுறவுலகந் துண்ணக்கண்டீர கண்டாகார சிவ போகமெனும் பேரின்பவெள்ளம் பொங்கித் ததும்பிப்பூரணமாய் ஏகவுருவாய்க்கிடக்குதையோ வின்புற்றிடநாமினி யெடுத்த தேகம் விழுமுன்புசிப்பதற்குச் சேரவாருஞ் செகத்தீரே திருச்சிற்றம்பலம். காப்பியம் காப்பியமாவது கவிஞனாற் செய்யப்பட்ட செய்யுள், வகரபகர வொற்றுமை பற்றித் திவ்யம் என்பது திப்பியம் எனவழங்கப்படுதல் போலக் கவியாற் செய்யப்பட்டது என்னும் பொருளுடைய காவ்யம் என்னுந் தத்திதாந்தபதமும் காப்பியம் என வழங்கப்பட்டது. சேற்றிற் பிறந்தது என்னும் பொருளுடையதாயினும் பங்கயம் என்பது ஆம்பல் முதலிய வற்றிற்குச் செல்லாது தாமரை ஒன்றினையே உணர்த்து மாறுபோலக் காப்பியம் என்பதும் பொருட் டொடர் நிலைச்செய்யுள் ஒன்றினையே உணர்த்தி நிற்கின்றது. இதுவும் பெருங்காப்பியம், சிறுகாப்பியம் என இருவகைப்படும். இவற்றுள்ளே பெருங்காப்பியமாவது வாழ்த்து வணக்கம் வஸ்து நீர்த்தேசம் என்னும் மூன்றனுள்ளே ஒன்றினை முன்னுடையதாய், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு பொருள்களையும் பயப்பது வாய், அழகு, புகழ், ஆண்மை, ஆக்கம், கொடை, குலம் முதலியன வமைந்த ஒரு தலைவனை யுடையதாய், நாடு நகரம் முதலியவைகளையும், விவாகம், முடிசூட்டு முதலியவை களையும், மந்திரம், தூது முதலியவைகளையும் சொற்சுவை பொருட்சுவைகளும் பிறவும் அமையுமாறு வர்ணித்துச் சொல்லுவதாம். இப்பெருங்காப்பியத்தின் இலக்கணம் வடமொழியிலே அலங்காரகாரர் களாகிய விசுவநாதபண்டிதர், போசதேவர், தண்டியாசிரியர் முதலியோரால் விரித்துக் கூறப்பட்டிருக்கின்றது. தமிழ்த்தண்டியலங்காரத்திலுங் கூறப்பட்டி ருக்கின்றது. விசுவநாத பண்டிதர் பெருங்காப்பியத்திற்கு மகா வாக்கியம் எனவும் பெயர் கூறுவர். வடமொழியிலே சிசுபாலவதம் என்னுங் காப்பியம் இவ்விலக்கணங்களெல் லாம் பரியாப்தி யாயமைந்த பெருங்காப்பியம் என்பர். அங்கே பொழில் விளையாட்டு, புனல் விளையாட்டு முதலிய வெல்லாந் தனித்தனி ஒவ்வொரு சருக்கங்களாற் கூறப்பட்டன. தென் மொழியிலே சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் முதலியவை களைப் பெருங்காப்பியம் என்பர். மலை வருணனை, நதி வருணனை முதலிய வருணனைகளுள்ளே சில கூறப் படாததுவும் பெருங்காப்பியமென்றே கொள்ளப்படும், அறம் முதலியன கூறாதொழிதற்பாலனவல்ல. சிறு காப்பியமாவது அறம் முதலியவைகளுள்ளே சில கூறப்படாமல் வருமியல்புடையதாம். கலம்பகம், பரணி, உலா முதலிய பிரபந்தங் களெல்லாம் சிறு காப்பியம் என்பர். இவ்விலக்கணமுடைய காப்பியங்களும் சொற்குற்றம், வாக்கியக் குற்றம், வாக்கியப் பொருட்குற்றம் என்னும் மூவகைக்குற்றங்களும் இல்லாதனவாய் இருத்தல் வேண்டும் என்றும், இக்குற்றங்களுந் தனித்தனி பதினாறு வகைப்படும் ------------- பற்றாததுவே காப்பியம் என்று மதிக்கப்படும் என்றும் போசதேவர் கூறுவர். அக்குற்றங்களுள்ளே பல நன்னூலாருந் தொல்காப்பியனாருங் கூறிய நூற்குற்றங்களுள்ளே அடங்கும். அவற்றுட் சில கூறுதும். 1. அப்பிரயுக்தம் சொற்குற்றம் பதினாறனுள் ஒன்று, அது, முன்னொரு காலும் நற்புலவராற் கொள்ளப்படாத சொற்பிரயோகமுடையது. இது தொல்காப்பியர் கூறிய பழித்தமொழியா னிழுக்கம்கூறல் என்பதன் பாலடங்கும். 2. கட்டம் - சொற்குற்றம் பதினாறனுள் ஒன்று; அஃது அடிகள் நிறையும்படி சேர்க்கப்பட்ட வீண்சொற்களுடையது; தொல்காப்பியர் கூறிய பொருளில மொழிதல் என்பதன் பாலடங்கும். 4. நேயார்த்தம் - இதுவும் அப்பதினாறனுள் ஒன்று; அது, கவியின் சங்கே தமானபொருளுடையது; தொல்காப்பியர் கூறிய தன்னானொருபொருள் கருதிக்கூறல் என்பதன் பாலடங்கும். 5. அபுட்டார்த்தகம் - இதுவும் அப்பதினாறனுள் ஒன்று; அது, ஓரற்பச் சொல்லினாலே அறியத்தக்கபொருளை அறிவிக்கும் வெகுசொற் பிரயோக முடையது. 6. அப்பிரதீதம் - இதுவும் அப்பதினாறனுள் ஒன்று; வேறுமத சாத்திரமின்றி அறியப்படாத சொல்லுடையது. இவை முதலிய சொற்குற்றங்களும், வாக்கியக் குற்றங்களும், பிறவுஞ் செய்யுள்களிலே வருமாயின், அவை, நற்புலவரால் அங்கீகரிக்கப்படா தனவேயாம், வாக்கியமாவது தகுதி, அவாய்நிலை, அண்மை என்பவற்றோடுகூடிய சொற் கூட்டம், காப்பியவிலக்கணமமைய வந்தவருணனை என்பதறி யார் வீண்வார்த்தையென்பர். சமயம் நேர்ந்துழிக் குற்றங்களும், பிறவும் விரித்துக் கூறப்படும். அ. குமாரசுவாமிப்பிள்ளை. சகளோபாசனை தலை ஆன்றோர் தெய்வீகம் என்று தம்முள்வழங்குவர். மேலும், உலகானுபவவுணர்ச்சியும், அவ்வுணர்ச்சியில்லாமை யாற் பாவனை செய்யுஞ் சக்தியும் வாய்ப்பப் பெறாத எமது குழவிப்பருவத்தே யாம் அற்புதமாகிய நவீன கோல மொன்றைக் கண்டு அதன் சொரூபத்தைப் பொருள் விழுப்பந் தோன்றப் பலவாறு வருணித்துச் செய்யுட்களானும் பிரபல பிரமாண வுரைகளானும் விரித்து உபந்நியாசஞ் செய்திடுவே மாயின், அதனைப் பொய்யென்றும் பாவனையென்றும் உருவெளித் தோற்றமென்றும் யாரேனுஞ்சொல்ல ஒருப்படு வரோ? ஒரு காலத்தும் ஓரிடத்தும் ஒருப்படவே மாட்டார். இங்ஙனம் எமது செந்தமிழ்நாட்டில் நிகழ்ந்த அரும்பேரற்புத மொன்றனை எடுத்துக்காட்டி நிறுவி, அவ்வாற்றாற் சகளோபாசனைச் சன்மார்க்க முறையின் உண்மைத்தன்மை காட்டுவாம். சீகாழியென்னுந் திப்பியதலத்திற் சிவபாதவிருதய ரெனும் பிராமணப் பெரியர் ஒருவர் ஏறக்குறைய ஆயிரத்து முந்நூறு வருடங்களுக்கு முன் இருந்தார். அக்காலத்திற் சமணசமயிகள் யாண்டும் விருத்தியடைந்து வந்தனர். அச்சமண சமயிகள் கொல்லாமை முதற்சிறந்த இலௌகிக தருமங்களைப் பிறழா மனவெழுச்சியுடன் அனுட்டித்து, அங்ஙனந்தாம் அனுட்டிக்கும் அச்சிறந்ததரும மேம்பாட்டைச் சாதாரண சனங்கட்கு உபந்நியசித்து அவர்க்கெல்லாம் உள்ளக்கவர்ச்சியை எழுப்பி அவ்வாற்றால வரைத் தம்மதத் திற்குத் திருப்பிக் கொண்டு செல்வாராயினார். இங்ஙனஞ் சிலநாளெல்லாஞ் செல்ல அச்சமணசமயம் யாண்டும்பரந்து விரிவதாயிற்று. தற்சமயம் இவ்வாறு விருத்தியடையவே மற்றைச் சமயங்களை அனுசரித் தொழுகுவோர் தொகை சுருங்குவதாயிற்று. சமணம் பௌத்தம் முதலிய அச்சமயங் களையொழித்து ஒழிந்த சைவம், வைரவம், பாசுபதம், சாத்தேயம், கௌமாரம், காணாபத்தியம் முதலிய சமயங்க ளெல்லாம் தெய்வம் ஒன்றுண்டெனக் கொண்டு வழிபடும் ஆத்திகசமயங்களாம். சமணம் பௌத்தம் என்பனவோ இலௌகிக தருமங்களிற் சிறந்தன சில அனுட்டித்து ஒழுகும் அம்மாத்திரையே யல்லது, அவை தெய்வம் ஒன்று உண்டெனக் கொண்டு வழிபடும் ஆத்திக சமயங்களல்லவாம். மற்று அவை தெய்வ மில்லென்று உரைக்கும் நாத்திக சமயங்களேயாம். இவ்வுண்மை தேற மாட்டாத ஆங்கிலதத்துவ சாத்திரிகள்சிலர் கௌதமர், ஈசுரவழிபாட்டைக் குறிப் பிட்டாயினும், ஈசுரனைக் குறிப்பிட் டாயினும் யாதும் உரையாமைபற்றி அவரை நாத்திகரெனக் கூறுதலமையாது, அவர் ஆத்திகருமாகலான் என்று உரைத்து இழுக்குறுகின்றார். பண்டிதர் மாக்ஸ்மூலர் பௌத்தமுனி ஆன்மாவையும் பரமான்வையும் மறுத்து ரைக்குஞ் சுதந்திரநிலையைச் சாங்கிய நூலார் தந்திட்டார் எனவும் பௌத்தசமயநூல்கள் பலவும் நிரீசுரவாதம் நிலையிட்டு ரைப்பனவாம் எனவுங் கூறுதலானும், பிராஞ்சு தேயத்துத் தத்துவசாத்திர விற்பன்னராகிய டாக்டர் பார்த் என்பவர் பௌத்தகுருவின் கோட்பாடு ஒருதலையாக நிரீசுரவாதம் போதிப்பதுவாம் எனத் துணிவுதோன்றக் காட்டுதலானும், பிரபல ஆராய்ச்சிசெய்து வடமொழி நூலுரைவரலாறு புதுவதாக எழுதிவெளியிட்ட மாக்டனல் பண்டிதரும் பௌத்தமும் சமணமும் சாங்கிய நூலைப் போலவே ஈசுரனிருப்பை நிராகரிக்குங் கோட்பாடுடைய வாம் என்று அங்ஙனமே துணிபு ஒருப்படுத்தலானும், சிவஞான போதம் சிவஞானசித்தியார் முதலிய தத்துவ முழு முதற்றமிழ் நூலுரைகளின் கண்ணும் அவ்வாறே அவர் நாத்திக சமயிகளென்று வைத்து மறுக்கப்படுதலானும் பௌத்தரும் சமணருமாகிய அவ்விருவகைச் சமயிகளும் நாத்திகசமயிகளே யாமென்பது ஒருதலை யென்றுணர்க. இங்ஙனம் நிரீசு ரவாத மேற்கொண்டு ஒழுகுவாராகிய சமணசமயிகள், ஈசுரனை உண்மையன்பான் வழிபடும் ஏனை ஆத்திக சமயிகளை வருத்தத்தொடங்கினார். தன் கட்டளை யாற் சட்டதிட்டங் களேற்படுத்தி அவற்றிற்கேற்ப ஒழுகு வார்க்கு நன்மையும், அவற்றிற்கு ஏலாதன செய்தொழுகு வார்க்குத் தண்டனையுந் தந்து நெறிப்படுத்துவானாகிய அரசனை யில்லாத குடிகள் தாந்தாம் விரும்பியவாறே சில சட்ட திட்டங்களேற்படுத்திக் கோடலும், தமக்கு அவை இணங்காத வேறு காலங்களில் தம் முன்னை விதிகளை மனம்போனவாறு புரட்டி வேறுவேறு இயற்றிக்கொண்டு தம்முட் கலகம் விளைத்தலும் நிகழக் காண்கின்றோம். இதுபோல, ஈசுரனொருவன் உண்டெனக் கொண்டு அவன் கட்டளை யிட்டருளிய நற்கருமங்களைச் செய்யின் நன்றாம், அவன் வேண்டாமென்று விலக்கிய தீக்கருமங்களைச் செய்யின் தீதாம் என்னும் மனவுறைப்பில்லாத நாத்திக சமயிகள் தாம் ஒரோ வொருகாலங்களிற் சில இலௌகிக தருமங்களை நெறி பிறழாது அனுட்டிக்க உடன்படுவா ராயினும், தமக்கு அத்தரு மங்களியையாத பிறகாலங்களில் தாந்தாம் விரும்பியவாறே முன்னைத்தரும வரம்பழித்துத் தீயகருமங்கள் நிகழ்த்துந் துணிவுடை யாராவர். இங்ஙனமே, சமணசமயிகள் அக் காலத்துத் தம்மோடு ஒருங்கு இருந்த சைவர், வைரவர், பாசுபதர் முதலிய ஆத்திகவைதிக சமயிகளுக்குப் பெருந் தீது செய்யும் வஞ்சனை பலவுடைய ராயினார். திருநாவுக்கரசு சுவாமிகள் சமணசமயந்துறந்து சைவசமயந்தழுவிய காலத்திற் சமண ரொருங்குகூடித் தம் மரசனால் அவரை நீற்றறையில் இடுவித்தும், கல்லிற் கட்டிக் கடலில் வீழ்த்தியும், யானைக் காலில் இடறுவித்தும், நஞ்சம் உண்பித்தும் புரிந்த தீதுகள் நம்மேற்கோளை இனிது நிறுத்தும் பிரமாணங்களாமன்றோ? சாந்தருணத்திற்கு ஓர் உறையுளாய் விளங்கிய அப்பமூர்த்திகள் தாம் சமணராற்பட்ட கட்டங் களைத் தாமே தந்திருப்பதிகங் களிலாங்காங்குக் குறிப்பிடு மாறுங்காண்க. இவ்வாறே, அவர்கள் தங்காலத்திருந்த பாண்டியனை யுள்ளிட்ட முடிவேந்தர்களையெல்லாந் தஞ் சமயங்களிற்றிருப்பி, அவ்வரசர் செல்வாக்கால் ஏனை ஆத்திக சமயிகள் வழிபடுந்தேவாலயங்களை அடைப்பித்தும், மடா லயங்களில் தீக்கொளுவி யும், அவரைக்கண்டால் கண்டு முட்டு என்றும், அவரைக்குறித்து ஏதேனுங் கேட்டால் கேட்டு முட்டு என்றும் பலவாறு இன்னலியற்றி வந்தனர். இங்ஙனஞ் செய்து போந்த சமணர்கள் கொல்லாமைமுதற் சிறந்த தருமங்களை மேற்கொண்டு ஒழுகினாரெனல் யாங்ஙனம்? ஆகவே, இவ்வாறெல்லாந் தீதுபுரியும் ஒழுக லாறுடைய ரானசமணர் யாண்டும் பரவி நிரம்புதலும், சைவ சமயிகள் தீயினால் வளைக்கப்பட்டு இடையிற் கிடந்து துடிக்கும் புழுப்போற் பெரியதோர் இடருழவா நின்றார். அக்காலத்திற் சிவ பெருமானிடத்து உண்மையன்புடையரான சிவபாத விருதயர் என்னும் அந்தச் சைவவேதியர் தீயரான சமணரொழி யவுஞ் சைவம் யாண்டும் பரந்து பிரகாசிக்கவுஞ் செய்யவல்ல தெய்வத்தன்மையுடைய மகப்பேறு தமக்குச் சித்திக்குமாறு தவங்கிடந்தார். அவர்க்குச் சிலநாட்களி னெல்லாம் ஓராண் மகப்பேறு சித்தித்தது. அவ்வாண்மகவுக்கு மூன்றுவயது செல்கின்றகாலத்தில் சிவபாதவிருதயர் என்றும் போல அச்சீகாழி நகரிலுள்ள சிவாலயதடாகத்தில் தம் நித்திய கருமங் களை முடிக்க வீட்டிலிருந்து புறம் போதுவார், சிறு குழந்தை யாயிருக்கும் அப்பிள்ளையாரும் அழுது கொண்டே பின்றொடர்தலைக் கண்டு பலவாறு சமாதனவுரைகள் சொல்லி யிருத்தியுங் கேளாமல்வர, வருகவென்று உடன் அழைத்துச் செல்வாராயினர். சென்று தடாகக்கரை சேர்ந்து அக்கரையின்மேல் பிள்ளையாரை யிருக்கச்செய்து, தாம் நீரிலிறங்கி நீர்க்குள் மூழ்கியிருந்து அகமருஷணம் என்னுங் கருமத்தைச் செய்வாராயினர். அங்ஙனந்தந்தை யார் நீருக்குள் மூழ்கி நெடுநேரமிருப்பவே, அவரைக்காணப் பெறாத பிள்ளையார் அம்மே! அப்பா! என்று கூவி அழத்தொடங்கினார். அவ்வழுகையைக்கண்டு மனம் பொறாராகி ஆலயத்தில் எழுந்தருளியிருக்குஞ் சிவபெருமானும் உமைப்பிராட்டி யாரும் பிள்ளையாரிடம் போந்து அவரழுகை தீர்த்துக் கண்ணீர் துடைத்து அம்மையார் தங்குமிழ் முலையிற் கொழும்பால் கறந்து அதிற் சிவஞானங்குழைத்துப் பொற் கிண்ணத்தா லூட்டவும் அப்பனார் அவரழுகை தீரத்தடவி இன்சொற் சொல்லவும்பிள்ளையார் பொற்கிண்ணத்திற் பாலுண்ட வண்ணமாய் மகிழ்ச்சியுற்றிருந்தார். இதற்குள் நீரில் முழுகியிருந்த தந்தையார் ஆண்டுத்தாஞ் செயற்பால வான கருமங்களை இனிது முடித்துக் கரையேறி வந்து பிள்ளையார் கையிற் பொற்கிண்ணம் வைத்திருத்தலும் அவர் உடம்பெல் லாம் பால்வழிந்திருத்தலுங்கண்டு வெகுண்டு அடா! நீயார் தந்த பாலை யுண்டாய்? உனக்கு எச்சின் மயங்கப் பாலூட்டினாரைக் காட்டுக என்று உரப்பிக் கையில் ஒரு சிறுகோல் எடுத்துக் கொண்டு கேட்டார். கேட்டலும், பிள்ளையார் அஞ்சி எனக்குப் பாலூட்டினார் இதோ! மழவிடையமர்ந்த பெருமானும் பிராட்டியாருமாம் என்று சுட்டி, தோடுடைய செவியன் விடையேறியொர் தூவெண்மதி சூடிக் காடுடைய சுடலைப்பொடிபூசியென்னுள்ளங்கவர்கள்வ னேடுடையமலரான் முனைநாட்பணிந்தேத்த வருள்செய்த பீடுடையபிரமாபுரமேவிய பெம்மானிவனன்றே என்று கட்டளையிட்டருளினார். இவ்வரலாறு, டாக்டர் ஹூல்ஸ் முதலான ஐரோப்பிய விற்பன்னர்களும் உண்மையாமெனக்கொண்டு தம்மாராய்ச் சிக்கு இன்றியமையாச் சாதனமாகத் தழுவும் பெரிய புராணத்தின் கண் விரிவாக எழுதப்பட்டிருத்தல் கண்டுணர்க. இனி, உலகானுபவவுணர்ச்சியும் பாவனை செய்யும் சக்தியும் வாய்ப்பப் பெறாத குழந்தைப்பருவத்தினராகிய ஞான சம்பந்தப்பிள்ளையார்க்கு எதிரே இறைவன் அவர்க்கு அனுக்கிரககிக்கும் பொருட்டுத் தாங்கி எழுந்தருளிய சகள மங்கள அருட்கோலங்கள், உருவெளித்தோற்றம்போற் பொய்யாய் ஒழிந்திடு மென்றல் யாங்ஙனம்? அல்லதூஉம் மூன்றுவயது செல்கின்ற அக்காலத்திலே செந்தமிழ்ச் சுவையுந் தத்துவ நுட்பமும் பொதுளத் தோடுடைய செவியன் என்னுந் திருப்பதிகங் கட்டளையிட்டருளியது தான் என்னை? சிற்றறிவுஞ் சிறிதொழிலுமுடையேமாகிய எம்முடைய குழந்தைகள் மூன்றுவயது செல்கின்ற அக்காலத்திலே தான் மழலைமொழிகள் சிலவுரைத்து எம்மையெல்லாம் உவப்பிக்கின்றன; அக்காலத்திலே தான் தளர்ந்து தளர்ந்து நடந்துசெல்லுகின்றன; அக்காலத்திலேதான் அம்மே என்றும் அப்பா என்றும் சேச்சி என்றும் பாச்சி யென்றுந் தமக்கு வேண்டும் பொருள்களைச் சுட்டுகின்றன; அக்காலத்திலே தெய்வம் உண்டு என்னும் உணர்ச்சி அவைகட்கு இன்றாம். அத்தெய்வமுஞ் சிவபெருமானேயா மென்னு முணர்ச்சியு மின்றாம்; அச்சிவபெருமான் றிருத்தேவியார் உமை என்னும் உணர்ச்சியுமின்றாம்; அச்சிவன் றிருவடையாளங்கள் தோடு விடை கொன்றை முதலியவா மென்னும் ஆராய்ச்சியு மின்றாம்; ஆதலின், இவ்வுணர்ச்சி வேறுபாடெல்லாம் நிகழ்ந்ததற்குப் பரிகாரம் வேண்டுமெனின், அற்றன்று; சிவபாத விருதயரென்னுந் தந்தையார் சிவபெருமானிடத்துமிக்க அன்புடையா ரென்பது பெறப்படுதலால் அவர் கிருகத்திலே சிவனை வழுத்துகின்ற காலங்களிற் சொல்லுஞ் சொற்களின் பொருள்கள் மிகத் தெளிவாகிய அப்பிள்ளையார் மூளையிற் பதிந்திருந்து பின்னொருநாட் புறம்போந்தன வென்பார்க்கு, அங்ஙனம் அவ்வுணர்வு மாத்திரமே புறம்படுதல் பொருந்து வதாமன்றி அம்மையார் தமக்குப் பொன்வள்ளத்திற் பால்கறந்து ஊட்டினாரென்றலும், அதுகண்டு தந்தையார் சிவபாத விருதயர் வெகுண்டு தம்மை வினாவியபோது இறைவனையும் இறைவியையுஞ் சுட்டிக்கட்டித் திருப்பதிகங் கட்டளை யிட்டருளினாரென்றலும் பிறவும் பொருந்துமாறு போதரா மையின் அவர் கூற்றுப்போலியாமென்று மறுக்க. அற்றேல் அஃதாக, தோடுடைய என்னும் அத்திருப்பதிகத்திற் பிள்ளையார் தமக்கு இறைவி அங்ஙனம் பொற்கிண்ணத்திற் பால்கறந்தூட்டினாளென்றும், சிவபாதவிருதயர் அஃதுணரா மற்றம்மை வெகுண்டு வினாவியபோது இறைவனையும் இறைவியையுந் தாஞ்சுட்டிக்காட்டினாரென்றும் ஓதிற்றில ரெனத் திருவனந்தபுரத்திற் பிரபல ஆங்கில தத்துவசாத்திர விற்பன்னராயிருந்த சுந்தரம்பிள்ளை கூறினாராலெனின், அவர் அறியாது அங்ஙனங் கூறினார், மண்ணினல்ல வண்ணம் போதையார் பொற்கிண்ணத்தடிசில்பொல்லாதெனத் தாதையார்முனிவுறத் தானெனையாண்டவன் காதையார் குழையினன்கழுமலவளநகர்ப் பேதையாளவளொடும் பெருந்தகையிருந்ததே என்னுஞ் செய்யுளிற்பிள்ளையார் தாமே தமக்கு இறைவன் செய்த அருட்கருணை யனுக்கிரகத்திறத்தைக் கிளந்தெடுத்து உரையாநிற்பவும், அதனை ஆராய்ச்சிசெய்து உணரமாட்டாது உரைத்த அவருரை இழுக்குரையா மென்று ஒழித்திடுக. இனி அச்செய்யுட்பொருள் ஒருசிறிது உரைக்கின்றாம். போதையார் பொன்கிண்ணத்து அடிசில் இதழ்விரிந்த தாமரைமலரைப் போல வாயகன்று செவ்வென விளங்கும் பொன்வள்ளத்தில் உமையம்மை கறந்து ஊட்டிய கொழும் பாலுணவை போதை என்பதில் ஐ காரம் குறவரை யார்க்குங் குளிர்மலை நாட என்னுந் திருச்சிற்றம்பலக்கோவை யாரிற்போல வந்த சாரியை, ஆர் என்பது செப்புற்ற கொங்கை தோளுற்றொர்தெய்வம் என்னுந் திருக் கோவையார் சிந்தாமணியிற்போல உவமவுருபின் பொருள்பட வந்தஉவமவாசகம்; மாற்றுயர்ந்தபொன் செவ்வென்று பொலிதலானும் வள்ளம் வாயகன்று வட்டமா யிருத்தலானும் உவமை வண்ணமும் வடிவும் விராய்வந்தது, இவ்வாறே பாண்டிலெடுத்த பஃறாமரை கீழும்பழனங்களே என்று திருகோவையாரினும் போந்ததுகாண்க. ஆசிரியர் நச்சினார்க் கினியரும் பலர்புகழ் ஞாயிறு கடற்கண்டாஅங்கு என்புழி வண்ணமும் வடிவும் விராய்வந்த வுவமையென்றுரை யுரைத்திட்டார். தாதையார் பொல்லா தெனமுனிவு உற.சிவ பாத விருதயரென்னுந் தந்தையார் இழிந்தாள் ஒருத்திதந்த எச்சிலாதலின் அது நுகர்தல் தீதாமென்றுரைத்து வெகுள; தான் என்னை ஆண்டவன் - தான் தன் அருட் கருணையான் விரும்பிவந்து என்னை ஆண்டுகொண்டான்; அங்ஙனம் ஆண்டுகொண்ட இறைவன், திருவடை யாளங்கள் யாவையோ வுடையானெனின் - காதையார் குழையினன் - காதிற் செறிய இடப்பட்ட வெண்டோடு உடையனாம்; அதுவன்றியும், பேதையாள வளொடும் - தான் ஞானசொரூபியாயிருந்தே உலகத்துப்பெண்டிர்க்கெல்லாம் அறியாமை கற்பித்தல் வேண்டுதலின் தானும் அறியாமையுடையாள்போற் றோன்றும் உமையம்மையுடன் பிரிவறக்கலந்து அறியாமை என்பது பெண்மைக்குணம் நான்கனுள் ஒன்றாம், அது தானொரு பொருட்டன்மை அறிந்தும் அறியாததுபோல் ஒழுகுதல், ஆசிரியர் நக்கீரனாரும் மடமென்பது கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை என்று உரைகூறினார். பெருந்தகை சிற்றறிவுஞ் சிறுதொழிலு முடையராகிய ஆன்மாக்கள் போலாது அவற்றையெல்லாந் தன்னகப்படுத்து வரையறை யின்றி விரிந்து செல்லும் வியாபகவுணர்ச்சியும் முழு முதலாற்றலும் உடையனாகிய காரணத்தினாலே பெருந்தகை யாய் விளங்குந் துரிய முழுமுதல்வனான சிவபெருமான்; இருந்தது ஆன்மாக்கள் தன்னை வழிபட்டு உய்யும்பொருட்டுத் தானே தன் பெருமைக்குணங்களைச் சுருக்கிக்கொண்டு கருணையே திருமேனியா வெழுந்தருளி யிருந்த திருநகரம்; கழுமல வளநகர் - தன்னை வந்தடைந்த ஆன்மாக்களின் மும்மலங் கழுவிச் சுத்தஞ்செய்கின்ற ஒரு பெருங் காரணத்தாலே கழுமலம் என்று பெயர் பெற்ற வளவிய நகரமாம் கழுமலநகர் / சீகாழி; பிள்ளையார் தமக்கு அனுக்கிரகிக்கும் பொருட்டு இறைவன் தரித்துவந்த சகள மங்கள அருட் கோலத்தின்கட் குழையிடப் பட்ட திருச் செவியைச் சுட்டித் தோடுடைய செவியன் என்று பதிகங் கட்டளை யிட்டருளிவாறுபோலவே, ஈண்டுங் காதையார் குழையினன் என்று குறிப்புரைத்தருளினார். இதுகிடக்க. இனி, நீர் கூறிய தருக்கவுரைகளெல்லாம் ஒக்குமன், சிவபாத விருதயர் பிள்ளையாரைத் தடாகக்கரையில் இருவித் தாம் நீரிலிழிந்து முழுகியிருந்த சமயத்திற் பிள்ளையார் அவரைக்காணாது அழுதலைக்கண்டு ஆண்டு வந்த புருடனும் மனைவியுமாகிய இருவர் அவர்க்கு இரங்கிப் பாலூட்டிப் போயினாரென்றும், தந்தையார் கரையில் வந்து வெகுண்டு வினாதலை அஞ்சிப்பாலூட்டி னாரிவர் என்றுரைப்பிற் பின்னும் வெகுள்வரெனக் கருதித் தமக்குச் சிவபெருமானும் உமையம்மையாரும் அங்ஙனம் பாலூட்டினா ரென்று பொய்யுரைத்தாரென்றுங் கொள்ளா மோவெனின்; நன்று கடாயினீர், நல்லது தீயது பகுத்துணர மாட்டாத பிள்ளைப்பருவத்தில் இஃது உரைப்பின் நன்றாம். மற்று இஃது உரைப்பிற்றீதாம் என்றுணர்ந்து பிறழக்கொண்டு பொய்யு ரைத்தாரென்றல் உலகவியல்பொடு மாறுபடுத லானும், உலக வியற்கையொடு முரணாமைப்பொருட்டுப் பிள்ளையார் நிகழ்த்திய அற்புதங்கட்கு வேறுவிவரணங் கூறப்புகுந்து வாதம் நிகழ்த்தும் நீவிரே அங்ஙனம் உலக வியற்கையொடு முரண்பாடு பெரிதுடையிராய் மசகக்கடிக் கஞ்சிப்புலி வாய்ப்பட்டது போற் பெரிதும் இடர்ப்படுவீராத லானும் அவ்வாறு கோடல் ஒருசிறிதும் பொருத்தமுறுவ தின்றா மென்பது உணரக் கடவீராக. அல்லதூஉம், சாதாரண மக்களாற் பாலூட்டப் பட்ட பிள்ளையார் அங்ஙனம் ஊட்டப்பட்ட அக்கணத்தே பேரறிவும் பேராற்றலும் உடைய ராய்ப் பிள்ளைப்பருவத்தில் வரற்பாலதன் றாய் மிகச்சிறந்த திருப்பதிகங் கட்டளை யிட்டருளியவாறு யாங்ஙனம்? எனக் கடாவுவார்க்கு நீர்கூறும் பரிகாரஞ் சிறிதுமின்றாம் அற்றன்று, பிள்ளையார் அறிவுகூடாச்சிறுபருவத்தின ராதலாற்றமக்குப் பாலூட்டிய சாதாரணமக்களையே அங்ஙனம் அறியாமையாற் சிவபெருமானென்றுரைத்திட்டா ரெனின்; நன்று சொன்னீர், பால்பருகிய அக்கணத்தே திருஞானசம்பந்தப்பிள்ளையாராய் வியாபக வுணர்ச்சியும் முழுமுதலாற்றலுமுடையராய்த் திகழ்ந்து உலகமெல்லாந் தம்மாணை வழி நிறுத்தவல்ல தெய்வப் பெற்றியாளரான அப்பெருமானார் சாதாரண மானுடரையுஞ் சிவபெருமா னையும் வேறுபிரித்து அறிய மாட்டாது மயங்கிக் கூறினா ரென்றலும் அறியாமை முதிர்ச்சியா யொழிந்திடு மென்க. இனி, இவையெல்லாம் ஒருபுறங்கிடக்க, நீவிரெடுத்துக் காட்டிய தோடுடைய செவியன் என்னும் திருப்பதிகத் திலும் மண்ணினல்லவண்ணம் என்னுந் திருப்பதிகத்திலும் பிள்ளையார் தாங்குழந்தைப்பருவத்தினரென்பது புலப்படக் கூறாமை யான், அப்பிள்ளைப்பருவ வலியுடைக்காரணம்பற்றி நீவிர் நிறுவப்புகுந்த இறைவன் சகளமங்கள அருட்கோல வியல்பு துர்ப்பலமாய் விடுமாலோவெனின்; அறியாதுகூறினீர், பிள்ளையார் அப்பர் சுவாமிகளோடு வேதாரணிய தலத்தில் எழுந்தருளியிருந்தபோது மதுரைமாநகரத்திற் சமணருடைய போதனையாற் சைவசமயம்வழிஇச் சமணமதந்தழீஇய தம் புருடரான பாண்டிய அரசனையுள்ளிட்டுப் பிரசைகளெல் லாரையுந் திரும்பச்சைவராக்குதல்வேண்டி மங்கையர்க்கரசி என்னும் பாண்டிமாதேவியார் பிள்ளையாருக்குத் திருமுகம் விடுத்தார். அதுகண்ட பிள்ளையாருந் தந்திருக்கூட்டத் தோடும் ஒருமடத்தில் எழுந்தருளி யிருக்கச்செய்தார். இதனை யறிந்த சமணக்குருக்களெல்லாருந் தெய்வப்பெற்றியுடைய இப் பிள்ளையாரால் நமது சமயம் அழிந்துபடும் எனப்பெரிதும் அஞ்சிப் பிள்ளையாரைத் திருக்கூட்டத்தோடுங் கொலை செய்ய எண்ணினார். ..... இதுதானோ கொல்லா விரதியாரான சமணருக்கு விரதமாவாது! அன்பர்களே! சிறிது ஆழ்ந்து சிந்தித்திடுங்கள் இங்ஙனம் கருதிய அக்குருக்கண் மாரெல்லாந் தம்முள் துணிபு ஒருப்பாடு உடையராய்க் கூன்பாண்டியனிடஞ் சென்று அவனுக்குத் தம்மெண்ணம் புலப்படுத்துக் காவுரை பலவால் அவனைத் தந்தொழிற்கு இயைவித்துக்கொண்டனர். பின் அன்று இரவு நள்யாமத்திற் பின்ளையார் திருக் கூட்டத்துடன் பள்ளிகொண்டிருக்கும் அமயங்கண்டு அச்சமணப்படுவர் எரிகொள்ளி கொண்டு மடத்தில் தீக்கொளுவினார். அந்தோ! அந்தோ! தீப்பற்றி மடம் எரிகின்ற காலத்தில் மடாலயத்தினுள்ளிருந்த அடியார்க ளெல்லாரும் மருண்டெழுந்து ஞானசம்பந்தப்பிள்ளை யாருக்கு விண்ணப் பித்துஅடைக்கலம்புகுந்து சிவத்தியானஞ் செய்து கொண்டிருந்தார். இதனை உணர்ந்த பிள்ளையார் சிவனடியார்களுக்குத் தீங்கு இழைக்க முந்துற்றுத் தீக் கொளுவிய சமணப்படுவர் பொருந்தாச் செய்கையைக் குறிப்பானறிந்து, இதற்குக் காரணமாயினான் பாண்டிய வரசனேயா மென்பதும் இனிது தெளிந்து, செய்யனே திருவாலவாய்மேவிய ஐயனேயஞ்சலென்றருள் செய்யெனைப் பொய்யாராமமணர் கொளுவுஞ்சுடர் பையவே சென்று பாண்டியர்க்காகவே என்னுந் திருப்பதிகங் கட்டளையிட்டருளி மடாலயத்திற் கொளுவிய தீப்பிழம்பு அத்தனையும் பாண்டியன்றே கத்திற்சென்று பற்றுகவென்று ஏவினார். ஏவுதலும், உருவமாகத்தோன்றிய தீப்பிழம்பு முழுவதும் அருவச்சுர நோயாய்ப் பாண்டியனைப்பற்றிக்கொண்டது. உடனே பாண்டியன் அந்நோய்பொறுக்கமாட்டானாய்ச் சமணக் குருமார்களை அழைப்பித்து அவர் தம் மந்திரவிச்சைகளானும் ஔடதமுறைகளானும் செய்வித்துக்கொண்ட பரிகாரங்கள் ஒருசிறிதும் பலியாமைகண்டு மிகவருந்தித் தம்மனையுரிமைக் கிழத்தியாராகிய மங்கையர்க்கரசியாரைத் தன்மாட்டு வருவித்து அவர்க்கு இதனைத் தெரிவித்தான். அரசியாரும் உடன்வருந்தித் தங்குறிப்பு நிறைவேறுங் காலமிதுவென்று எண்ணித் தங்கொழுநனை நோக்கிப் பிள்ளைப்பருவத்தே உமை திருமுலைப்பாலுண்டு ஞானசம்பந்த மூர்த்தியாய்த் தந்திருக்கூட்டத்தோடு இந்நகரத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமான் இங்கு எழுந்தருளினால் இந்நோய் தீரும். என்றுரைப்ப, அதனைக்கேட்ட அரசனும் அதற்கு உடன் பட்டுத் தம் அமைச்சரான குலச்சிறையாரைப் பிள்ளையாரிடம் போக்கினான். அமைச்சரும் நிகழ்ந்தவெல்லாம் பிள்ளையாருக்கு விண்ணப்பித்து அவர் பாண்டியனிடத் திற்கு எழுந்தருளச் செய்தார். பிள்ளையார் அருமைத்திரு வுருவைக்காண்டலும் பாண்டியன் ஆறுதல் பெரிதுடையனாயினான். இவ்வாறு ஞானசம்பந்தப்பெருமானார் பாண்டியனருகில் மங்கையர்க் கரசியார் குலச்சிறையார் பக்கத்தே எழுந்தருளியிருக்கும் அளவில் ஆண்டுக்குழுமியிருந்த சமணக்குருமார் பிள்ளை யாரைச்சுட்டிப் பலவாறு இகழ்ந்து சொல்லிக் குரைத்திட்டார். பக்கத்தேயிருந்து அதனைக்கண்டு பொறாராகிய மங்கையர்க் கரசியார் தங்கணவனை நோக்கி குழந்தையாயிருக்கும் பெருமானை இவர். பத்திராதிபர் குறிப்பு: சென்ற 1901 ஆண்டு அக்டோபர் மாதம் வெளிவந்த சித்தாந்ததீபிகை என்னும் ஆங்கில மொழிப்பத்திரிகையிற், திரிசிரபுரம் செயிண்ட் ஜோஸப் கலாசாலையில் தமிழ்ப்புலமை நடாத்தும் பண்டிதர் ஸ்ரீசவரி ராய பிள்ளையவர்களால் எழுதப்பட்ட ஓர் அரியவிஷயம் பிரசுரிக்கப்பட்டது. இது, பிரஞ்சு தேசத்துத் தலை நகராகிய பாரிஸ் பட்டனத்தில் பிரபலபண்டிதராகியஜுலியன் வின்சன் என்பவர் தமிழ்ப் பாஷையைப்பற்றியும், அதனைவழங்கும் நன்மக்களைப்பற்றியும் நிகழ்த்திய சில ஆசங்கைகளைப் பரிகரித்து உண்மைப்பொருள் வலியுறுக்கும் பொருட்டு எழுதப்பட்ட ஓரரிய விஷயமாம். அவ்விஷயம் பிரபல நியாயங் களால் தமிழ்பாஷை மாட்சிவிரிக்கும் பெற்றியுடைமையானும், அதனோடு பலநுட்பப் பொருள் இனிது அறிவறுத்தலானும் தமிழ்ப்பாஷை ஆராய்ச்சிசெய்வாரெல்லாம் இன்றியமையாது கவனிக்கற்பாலதேயாம். இவ்வாறே பண்டிதர் சவரி ராயரவர் கள் நுட்பப்பொருள்செறிந்து எழுதிப் பிரசுரித்த விஷயங்கள் பலவுள. இனிப், பண்டிதர் ஜுலியன் வின்சன் என்பவர் விஷயத்தின்மேல் பண்டிதர் சவரிராயர் எழுதிய அவ்விஷயத் தின் கண் தாம் தொல்காப்பியமுழுமுதல் இலக்கண நூலைப் பற்றி விவகரிக்கவந்தவிடத்து அவ்விலக்கண நூல் தொல் காப்பியனார் எழுதிய உருவத்தோடு இப்போது நடை பெறுவதின்றென்றும், அதன் கண் இடையிடையே செருகப் பட்ட சூத்திரங்கள் பலவுளவென்றும் அதுமுதன் முதற் செய்யப்பட்டகாலத்து அறுநூறு சூத்திரங்களுடையதா யிருந்ததென்றும் தம் அபிப்பிராயம் மொழிந்திட்டார்கள். இதனைக்கண்டயாம் செந்தழிழ்ப்பழைய இலக்கண விலக்கிய நூலுரைகளின் கண் அங்ஙனம் இடைச்செருகும் வழக்கம் இன்றென்பது ஒரு சிறிதுகாட்டி அவர் கட்கு ஓராப்தலிகிதம் விடுத்தோம். அதன்மேல் அவர்கள் எழுதியவிஷயம் வருமாறு: தொல்காப்பியத் தொல்லிலக்கணப் பரிசீலனம் அன்பார்ந்த ஐயா, சித்தாந்த தீபிகையில் வெளிவந்த பாரிஸ்மாநகரத்து, ஆசிரியர் ஜெ. வின்சன் (Prof. J.Vinson) என்பாரது சில விவாதாம்சங்கள் (Some Disputed Points) என்னும் தலைப்பெயரிய லிகிதத்திற்கு, அப்பத்திரிகையின் கண்ணே யானெழுதியவிடையின்மேல் தங்களது நல்லபிப்பிராயத்தை நேரிற்கடிதவாயிலாய்த் தெரிவிக்க அன்பு கூர்ந்ததோடு, அவ்வியாசப்பொருளுள் தொல்காப்பிய நல்லிலக்கண நூலைப்பற்றியபகுதி ஒன்றில் தங்களுடன்பாடின்று என்றும் அந்நூலின் கண்ணும் இடைச்செருகுதல் (Interpolation) உண்டென்ற என் கூற்றுக்கு ஏற்புடைக்காரணங்களை யெடுத்துரைப்பின் தங்கள் அபிப்ராயத்தை மாற்றிக் கொள் வீர்கள் என்றுங் குறிப்பித்தீர்கள். இத்தகையதங்கள் உண்மை நட்புரிமையொடு கூடிய உசாபவுதலுக்காக மிகநன்றியறிதற் கடப்பாடுடையேன். இவ்வாறே யாம் ஒருவர்க்கொருவர் கருத்து மாறுபட்டவிடத்து உசாவித் தழுவுவனதழீஇத் தவிர்வன தவிர்த்தலாகிய செயலே உண்மை நட்புக்குரிய இயலாம். அதுபற்றியென்னை வெறுத்த லாகாது என்றும் வரைந்தீர்கள். அத்திறஐயப்பாடு என்மாட்டுத் தங்களுக்கென்று மிருத்தல்வேண்டா. இவ்வழித்தாய ஆராய்ச்சிக்கண் கருத்து மாறுபாட்டைப் பெற்றிட்டதாயினும் அதுபற்றி யொருவரை ஒருவர் வெறுப்பா மல்லேம். யானெழுதிவரும் பற்பலவிஷய ஆராய்ச்சிகளுட் சிற்சில பிறர்க்குடம் பாடாகாமே அக்கோட் பாட்டின் கண் யானேதனிநிற்பல் என்றதுணிவு எமற்குளது. தன்னோடொருமைப் பாடுடைய ரல்லரென்று பிறர்பால் ஒருவன் மனங்கோணுவனெனின், அஃதன்னோன் அறியா மைக்கே சான்றாம். யானெழுதிவரும் எவ்விஷயங்களுள்ளும் தங்களுக்குடன் பாடல்லாதவற்றை எடுத்துக்காட்டி, அந்நெறிக் கென்னைத் தெருட்டற்கு வாய்ப்புடையவெனத் தங்களுக்குத் தோன்று நியாயங்களை லிகிதவாயிலா யேனும் பல்லோர்க்கும் பயன்படுமெனக் கருதின் பத்திரிகைவாயிலாயேனும் விளக்கிக் குறைபெய்க என்று தங்களையும் மற்றுந்தமிழபிமானசீல அன்பர்கள் அனைவரையுமே வேண்டுகின்றேன். கொண் டதே கொள்கை என்னும் பிடிவாததுர்க்குண மென்னை விட்டுத் தூரமகல்க. உண்மையை உள்ளவாறு உணர்தலும் உணர்த்தலுமே நம்போலியர்க்குரிய முறைமையுங் கடமை யுமாவன. இனி, தொல்காப்பியம் பின் வளர்ச்சியையும் இடைச் செருகுதலையு முடைய தோர்நூல் என்று யான்கூறியதில், தாங்கள் உடன்படாமைக்கு, ஒருநூலினிடை யிடையே வேறுபலவற்றை எழுதிச்செருகும் வழக்கம் பண்டைக்காலத் தமிழ்ப்புலவரிடங் கிடையாது. அங்ஙனம் அவ்வழக்கு நிகழ்ந்திருக்குமாயின் சிந்தாமணியிற் கந்தியார் பாட்டுக்கள் கலந்தனவென்ற ஆசிரியர் நச்சினார்க்கினியர் அவ்வா றேனைய நூல்களுக்குங் கூறியிருப்பர். இனித் தொல்காப்பியத் திற்கு உரைகண்ட இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர், கல்லாடர் முதலாயினாரும் இடைச் செருகு தலைப்பற்றி ஒன்றுங் கூறினாரல்லர் என்று காரணங்காட்டி, இங்ஙனமாகத் தாங்கள் எந்தமெய்ச்சான்று கொண்டு தொல்காப்பிய நல்லிலக்கணநூலின் கண்ணும் இடைச் செருகுதல் உண்டென்று கூறினீர்கள்? என்றும் வினவினீர்கள். இங்ஙனம் யான் ஆண்டுச் சுருங்கச்சொல்லியதை யீண்டு விரித்துவிளக்க ஓர் அமயநல்கியதன்பொருட்டுத் தங்களுக்கு இன்னொரு முறை நன்றி கூறுகின்றேன். இனி, பண்டைக்காலத் தமிழ்நூல்களிலு மிடைச் செருகுதல் உண் டென்பதைச் சிந்தாமணியிற் கந்தியார் பாட்டுக்கள் கலந்துள்ளனவென்பதைத் தாங்கள் ஒப்பியதே மெய்ப்பிக்கும். மற்றும், தொல்காப்பிய நல்லிலக்கண நூலில் சேர்க்கையும் செருகுதலுமுள்ளன என்பதில் தாங்கள் உடன் படாமைக்கு வலியுடைக்காரணமாயுள்ளது ஒன்றே என்றும் புலப்படுகின்றது. அது பூர்வ ஆசிரியர் ஒருவரும் அங்ஙனஞ் சொற்றனரல்லர் என்பது. அந்நூல் சேர்க்கையுஞ் செருகுதலும் உடையதொன்று என்றுயான் கொள்ளக்கிடந்த காரணங்கள் மூன்று, அவை பின்வருமாறு: 1. தொல்காப்பிய நல்லிலக்கணநூலின் முதற்றோற்றம் அஃது அறுநூறு சூத்திரங்கொண்டெழுந்த வடிவினது என்னும் ஐதீகம். பின்னர் அது மூன்றத்துணைப் பெருகியதன்காரணம் அதங்கோட்டாசாற்கு ஆசிரியர் தொல்காப்பியர் இறுத் தலிடை என்ப. இக்கூற்றுண்மை எவ்வாறாயினு மாகுக. பின்னையோ, தொல்காப்பியம் தன் முதனிலையினும், பின்னிலை பெருகிற்று என்பதற்கோர் மெய்ச்சான்று என்பது மறுக்கப்படாது. 2. இறையனாரகப்பொருளுரையில், பாண்டியனாற் கடைச்சங்க மேற்பட்ட ஞான்று, அரசன் நூல்வல்லாரைக் கொணர்கவென்று எல்லாப்பக்கமும் ஆட்போக்க, எழுத்த திகாரமும் சொல்லதிகாரமும், யாப்பதிகாரமும் வல்லாரைத் தலைப்பட்டுக் கொணர்ந்து பொருளதிகாரம் வல்லாரை எங்குந்தலைப்பட்டிலேம் என்றுவந்தார் வர, அரசனும் புடைபடக்கவன்றான். அரசனது கவலைதீர்ப்பான் ஆலவாய் இறையனாரகப் பொருட் சூத்திரம் அறுபது அருளினார். அதற்கு நக்கீரர் உரைகண்டனர். என்று அந்நூன்முகங் கூறுகின்றது. இறையனாரகப்பொருளுரைக்கு நூன்முகஞ் கூறினார் நக்கீரரது மாணவப்பரம்பரையில் எட்டாவது வந்துள்ளாராகிய முசிறியாசிரியராதல், அவ்வாசிரியர் நீலகண்டனாரது மாணாக்கருள் ஒருவராதல் ஆகற்பாலார். நக்கீரருக்கும் முசிறியாசிரியர்க்கும் இடை நிகழ்ந்தகாலம் ஒரு நூற்றாண்டிற்கு எவ்வாற்றானு மேற்படாது. ஆசிரியர் நச்சினார்க் கினியர்க்கு முசிறியாசிரியரோ பன்னூற்றாண்டு முன்னுள்ளார். இவர் இறையனாரகப்பொருளுரைக்கெழுதிய புனைந் துரையில், தனக்கிணையின்றி மிக விரிந்து பரந்து கிடக்கும் தொல்காப்பியப் பொருளதிகாரத்தைப்பற்றி ஒன்றுங்குறியாமை பெரிதுங்கவனிக்கற்பாலது, ஆகவே, அகப்பொருளுரை நூன்முகத்தால் யாம் உணரக்கிடப்பது யாதெனின் (A.) கடைச்சங்கத்தின் ஆரம்பத்தில் தொல் காப்பியப் பொருளதிகாரம் அச்சங்கத்தார் ஆராய்ச்சிக்குக் கிடைத்தில தென்பதும், (B.) பொருளதிகாரத்தின் பொருட்டு அரசனும் அவயத்தாரும் கவன்றனராக, அந்நாளுளொருநாள், அகத்திணைப்பொருட்டாய அறுபது சூத்திரங்கள் அடங்கிய தோர் சுவடி தெய்வாதீனமாய் அவர்க்கு வாய்த்தது என்பதும், (C.) அந்நூல் வரன்முறையறியப்படாமையானே, ஆலவாய்ப் பெருமானே அந்நூலையருளி மனக்கவற்சியைத் தீர்த்தனன் என அரசன் அகமகிழ்ந்து, அவ்வறுபது சூத்திரங்களையும் செப்பிதழகத்துப்பொதித்து இறைவனார் பீடத்தின்கண் சமர்ப்பித்து நன்றிபாராட்டி அன்று தொட்டு அரசனும் அவயத்தாரும் ஆலவாய்ப்பெருமானையே தங்கழகத்தின் றலைமைப்புலவர் (Chancellor) எனக் கொண்டொழுகினர் என்பதும் ஊகிக்கற்பாலன. இங்ஙனம் கடைச்சங்கத்தின் ஆரம்பத்தில், அச்சங்கத்தார் ஆராய்ச்சிக்குப் பொருளதிகாரம் கிடைத்திலதென்ப தால், தொல்காப்பியப் பொருளதிகாரம் பிற்காலத்த தென்றேனும், இறையனாரகப்பொருட்கு அந்நூல் பிந்தியதென்றேனுமாகாது. பின்னையோ, அந்நாளில் அரசனது பெருமுயற்சியால் தமிழ்நாடெங்குந் தேடியருமை யாய்க் கண்டடையப்பெற்ற பலபிரதிகளைக்கொண்டு பொருளதி காரம் கடைச்சங்கத்தாரால் தொகுத்துப் பூரண மாக்கப் பட்டதென்பது பெறப்படும். ஆகவே,தொல்காப்பியம் தன்பூர்வநிலையினும் மும்மடங்கு பெருகியது இக்கடைச் சங்ககாலத்து நிகழ்ச்சியேயன்றிப் பிறர்கூறுமாறு அஃது அரங்கேறியகாலத்து நிகழ்ந்ததோர் ஆக்கமன்று என்பதும் இதனால் பெறப்படுவதொன்றாம். 3. தொல்காப்பியம் பின்னர்ப்பெருகி வளர்ந்த நிலையது என்றற்கு முன்னையவிரண்டும் புறச்சான்றுகளாம்; பின்னை யதோ அதன் அகச்சான்றாம். அஃது அந்நூல் அமைப்புத் திறனே. ஏனைய இரண்டினும் மற்றிது மிக்குவலியுடைத்து. சரித்திரமரபொடு தமிழிலக்கியங்களைப் பொருந்த ஆராய் வார்க்குக் கடைச்சங்கத் தாரால் தொல்காப்பியத் தலைப்பின் கீழ்ச் சேர்த்துத்தொகுக்கப்பட்ட சூத்திரத் தொகுதிகள் யாவும் தொல்காப்பிய முனிவரருளிய சூத்திர யாப்புக் கடாமோ வென்பதில் ஐயுறவுண்டாகாமற் போகாது; என்னையெனின், அச்சூத்திரத்தொகுதிகளுட்சில மிகப்பழைய னவும் பல பின்னாளை வரம்பினவுமாகலின். ஆகவே பிற ஆசிரியர் இயற்றிய சூத்திரங்கள் பல,. இயல்கள் சில, ஒருங்குசேர்ந்து, அவையியற்றினார் இனையரெனத் துணியப் படாமையின், தொல்காப்பியப்பெயரின்கீழ்க் கொணரப் பெற்றன வென்றே துணியப்படும். இவ்வுண்மையைக் கீழ் ஆராய்வாம். தொல்காப்பியந் தென்னாடுகடல் கொள்ளப்படுமுன் எழுந்ததோர் பண்டை நூல்; அக்காலத்து ஆரியர் தென்னா டுற்றுத் தமிழரோடுறவாடினர் அல்லர், அந்தணர் எனத் தமிழ்நூலுட்கூறப்படுவோர் ஆரியப்பிராமணரல்லர், அவர் தமிழ் நாட்டறவோரே. அத்தகையரே அகத்தியரும் தொல் காப்பியரும். ஆரியங்கலவாத பண்டை நாளை நூலாகிய இதனுள் ஆரியமொழிகளும் ஆரியவழக்குகளும் ஆரிய ஆசார விபவங்களும் விரவிவந்தனவெனின், அவை எங்ஙனங் கலந்தன? பாருங்கள்! பிரம்ம க்ஷத்திரிய வைசிய சூத்திரர் எனுஞ் சதுர்வருணப் பாகுபாடு தமிழ் நாட்டினதன்று . அக்கொள்கை ஆரியதேயத்துப் பிறந்து ஆண்டே பெரு வழக்காயது; பின்னர் ஆரியக்கலவை யால் அக்கோட்பாடு தமிழ்நூலுள்ளும் புகுந்து வெளிப்பட்டது. ஆயினு மென்னை? அந்நாற்சாதிப் பாகுபாடு தமிழகத்து நூலியல்வழக்கா யொழிந்ததே யன்றி, உலகியல் வழக்காய் ஒரு காலும் முடிந்ததன்று. அங்ஙனமாக, அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும், ஐவகை மரபினரசர் பக்கமும், இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் என நால்வகைச் சாதியையும் இவர்க்குரிய தொழில்களையும் வகைப்படுத்து வற்புறுத்துக்கூறும் இத்தொடக்கத்துச் சூத்திரமுதலாயின பண்டைக் காலத் தனித்தமிழ் நுலாகிய தொல்காப்பியத்தின் கண் இடைச் செருகின வேயன்றி மற்றென்னை? இன்னுந் தொல் காப்பியத்தில், தமிழுலகின் எல்லை, வடவேங்கடந்தென்குமரி யாயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து என்றுவரையறுக்கப் பெற்றிருக்கின்றது. இக் கூற்றையுடைய பாயிரச்சூத்திரஞ் சொன்னார் தொல் காப்பியனார் என்றார் இறையனாரகப் பொருளுரைக்கு நூன் முகங்கூறினார்; உரையாசிரியர்களோ இது சொற்றார் தொல்காப்பியனாரோடு ஒருசாலைமாணாக்க ராகிய பனம்பாரனார் என்றனர். தொல்காப்பியனார் தமது நூலைச்சொற்றகாலம், குமரியாற்றின் தெற்கண் இருந்த நாற்பத்தொன்பது நாடுகளுங் கடலாற்கொள்ளப்பட்ட காலத்தின் முன்னரது. அங்ஙனமாகத் தமிழுலகின் தென் பெரும்பகுதி கடலாற்கொள்ளப் படு முன்னர்த்தென் பால் வடபால்களில் விரிந்து பரந்து கிடந்த தமிழகத்திற்கு நடுநாயகமாய் விளங்கிய கபாடபுரத்தின் கண்ணே வீற்றிருந்த சங்கத்தார்க்குத் தொல்காப்பியம் பிரதான்னியமும் பிரமாண் ணியமுமாயிருக்க, பாயிரச்சூத்திரத்தில், தொல்காப்பியனார் காலத்துத் தமிழுலகிற்குத் தெற்கெல்லைகுமரியாவைத்துக் கூறியது எங்ஙனம் பொருத்தற்பாலது? இது தென்பாலுள்ள நாடுகள் கடலாற்கொள்ளப் பட்ட பின்னர்க் கடைச்சங்கத்தார் காலத்துத் தமிழ் நாட்டிற்குத் தெற் கெல்லையாய் நிகழ்ந்த தொன்று அன்றோ? ஆதலான், தொல்காப்பியப்பாயிரச் சூத்திரம், இறையனாரகப்பொருளுரை நூன் முகத்தார் கூறுமாறு தொல் காப்பியனாராலாதல், உரையாசிரியர்கள் கூறியவண்ணம் தொல்காப்பி யனாரோடு ஒரு சாலைமாணாக் கராகிய பனம்பாரனாராலாதல் இயற்றப் பட்டதாயன்றிக் கடைச்சங்கத்தாரால் இந்நூல் தொகுத்துச்சேர்க்கப்பட்ட காலத்து இப்புலவருள் ஒருவரால் ஆதல், இக்காலத்துக்குச் சமீபகாலத்திருந்த பிறர் ஒருவராலாதல் இயற்றப்பட்ட தென்பதிற்றடையென்னை? ஆங்கிலந்தமிழ் இரண்டினும் வல்ல அறிஞரொருவர் ஐந்திரபாணிநீய வியாகரணங்களை நன்குணர்ந்து அகத்தி யனார் தமிழுக்கு இலக்கணநூலை எழுதினார் என்னுங் கருத்துப்படத் தாஞ்சொல்லிய பல முன்பின் முரணுறத் தமது பதிப்புரை ஒன்றிற் குறித்தனர். அங்ஙனம் ஆரிய விலக்கண மாகிய பாணிநீயத்திற்கும் பிற்பட்டன அகத்திய தொல்காப் பியங்கள் என்பார்க்கு யான் சொல்லக்கிடந்த தொன்றின்று. கால்டுவலாசிரியர், பர்நல் பண்டிதர் முதலாயினார் தமிழ் இலக்கியங்களைஆராய்ந்தமுறையுமிஃதே. இவ ரெல்லாம் தமிழ் இலக்கிய வரன்முறையை முறையே உணரமாட்டாதார். தாங்களோ ஆரியக்கலவைக்கு முன்னரே தமிழிலக்கண மெழுந்த தென்றொப்புகின்றீர்கள். எங்ஙனம்மெனின், வடமொழி மாக்களோடு தமிழ்மக்கள் மிக்குவிராய்ப் பழகத்தொடங்கிய பிற்காலங்களிலேதான் இடைச்செருகுதல் நிகழ்வதாயிற்று. ஒரு நூலிடையிடையே வேறுபல வற்றை எழுதிச்செருகும் வழக்கம் வடமொழிப் புலவர்களிடத்தன்றிப் பண்டைக்காலத் தமிழ்ப்புலவரிடங்கிடையாது என்று தாங்கள் கூறிய இன்னோரன்னவாக்கியங்களானே அது பெறப்படும். இன்னும், இடைச் செருகுதல் வடநூலாரது இழிவழக்கமே எனக்கொண்டு, அச்செயலைக் கடியுங்குறியை வடமொழி மாக்கள் தமிழ்மக்கள் என்ற தங்கள் குறியீடுகள் விளக்குகின்றன. உண்மையில், அச்செயல் வெறுக்கற்பாலதே. ஆயினும், தொல்காப்பியத்தின்சேர்க்கை செருகுதல் நிகழ்ந்த காரணம் இயற்கை நேர்ச்சியாம். தொல் காப்பியநூலுக்கு முந்திய பல இலக்கண நூல்களும் தமிழுக்கு இருந்தன. ஐந்திர நிறைந்த தொல்காப்பியன் முந்து நூல்கண்டு மொழிந் தனன் என்று கூறுகின்ற தொல் காப்பியப்பாயிரச் செய்யுள். அங்ஙனம் நெடுங்காலஅளவிற் றமிழுலகிற் றோன்றிய எண்ணிறந்த நூல்களும், முதலிரு சங்கங்களிருந்த இடங்களும், பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக்கோடுங் கொடுங்கடல் கொள்ளத் தமிழ்நாடெங்கும் பெருவழக்கி லிருந்த தொல் காப்பிய மொன்றே எஞ்சியது. எஞ்சிய அவ்வொன்றையே துணைக் கொண்டு பிற்காலத்து ஆசிரியர், இன்றியமை யாவிடத்து வேண்டும் விதிகளையும் அமைத்துத் தம்மாணாக் கருக்குத் தமிழிலக்கணஞ்சொல்லிவைத்தனர். இதுவே தொல்காப்பிய வளர்ச்சிக்குக் காரணம். ஆகவே தொல்காப்பித்தின் பூர்வ சொரூபமென்றும் முதலிரு சங்கங் களுக்கும் ஸ்தானமாயிருந்த குமரியின் தென்பாலுள்ள விரிந்த தமிழ்நாடு கடலாற் கொள்ளப்பட அதனால் எண்ணிறந்த நூல்கள் அழிந்தொழிய எஞ்சிய இவ்வொன்றையே துணைக்கொண்டு தமிழ் ஆசிரியர்கள் வேண்டும் விதிகளையும் தாமாங்காங்கு அமைத்துத்தந்து தம்மாணாக்க ருக்குத் தமிழிலக்கணம் போதித்து வந்தனர் என்றும், பின்னர்க் கடைச்சங்க காலத்துப் பாண்டியனது பெருமுயற்சியால் தமிழ்நாடெங்குந் தேடியகப் பட்ட பல பிரதிகளைக்கொண்டு தொல்காப்பியம் பூரண மாக்கப்பட்டபோது, பிற ஆசிரியர் இயற்றிய சூத்திரங்கள் பல இயல்கள் சில ஒருங்கு சேர்ந்து அவையியற்றினார் இனைய ரெனத் துணியப்படாமையின் ஒருங்கு திரட்டப்பட்டுக் கடைச் சங்கத்தாரால் தொல் காப்பியப் பெயரின் கீழ்க் கொணரப் பெற்றனவென்றும் மேலே விளக்கித் தொல்காப்பியநூல் பின் வளர்ச்சியுற்ற தொன்றென்று தெளிவித்தனன். இனி, அங்ஙனமாயின், தொல்காப்பியத்திற்கு உரை கண்ட பூர்வ ஆசிரியர் ஒருவரும் அவ்வாறெடுத்துக் கூறினா ரல்லரே எனின் நன்குகடாவினீர்கள். ஒவ்வோராய்ச்சியும் ஒவ்வோர் காலத்துக்கே உரியது. காலாந்தரமானது வெவ் வேறு கருவிகளை யமைத்து அவ்வவ்காலத்துக்குரிய நூதன ஆராய்ச்சிக்கு மனதைப்பண்படுத்து கின்றன. பாஷா விற்பத்தி சாஸ்திரமானது (Philology)ï¥bghGJ அரை நூற்றாண்டு காலமே தெரிந்து கொள்ளப்பட்டது. ஜர்மானிய சாஸ்திரிகள் அத்தத்துவத்தை 40 வருடங்களுக்கு முன்னர்த் தான் முதலில் கண்டு பிடித்தனர். அது தொட்டுப் பன்னாட்டுப் பண்டிதர் களும் பாஷாசரித்திரங்களை ஆராயவும் பாஷையினங் களையும் அவ்வப்பாஷைக்குரிய ஜாதியாரையும் பரீக்ஷிக் கவும் அவ்வவ்வினத்தாரின் ஜன்மஸ் தானங்களையும் அவ்வவ் வின மொழிகளின் மூலமொழி களையும் கண்டுபிடிக்கவும் பெரிதும் முயன்றனர்; முயல்கின்றனர். இத்திறவாராய்ச்சியும் அதற்குரிய கருவி அமைப்புக்களும் நமக்கிக்காலத்து வாய்ந்த வாறே நம் முன்னோர்க்கு அவர் காலத்து வாய்த்தில, இப்பரத கண்டத்துப் பண்டு தொட்டு வழங்கிய சீரும் சிறப்பும் வாய்ந்த தமிழ் ஆரியம் என்றிரண்டும் தனிமொழிகள் என்று பூர்வ ஆசிரியர்கள் உணர்ந்தனரேனும் அவ்விருமொழியும் ஒரே மூலபுருடரை யுடையனவென்றும் அவ்விரு பாஷைகளுக்கு முரிய பெருஞ் சாதியார் நாற்சாதிகளாகப்பின்னர் வகுக்கப் பட்டுள்ள ஒரே இனத்தார் என்றும், அவர் எல்லாம் சிருஷ்டி காலந்தொட்டு இங்கேயே பிறந்து வளர்ந்து இறந்து போனவர் களின் பிற்சந்ததியார் என்று மெண்ணினர். தமிழரும் ஆரியரும் வெவ்வேறினத் தார் வெவ்வேறிடத்தர். ஒருவர் முன்னும் மற்றவர் பின்னுமாக வந்து இப்பரத கண்டத்துக் குடியேறினர். பின்னர் ஒரு காலத்து வடநாட்டுச் சமஸ்கிருத முடையாரும் (அவர் அந்நாட்டுத் தமிழரும் ஆரியரும் கலந்துண்டான கலப்புச் சாதியார்) தென்னாட் டாரும் ஒருங்குகலந்தனர் என்ற உண்மை நமது பூர்வ ஆசிரியர்க்கு எட்டில. அதனாலே தமிழ்ப்பூர்வ நூல்களுள் இன்னபழைய, இன்னபுதிய, இன்னகலவை என்ற ஆராய்ச்சித்திறனும் அவர்க்கு வாய்த் திலது. ஆதலானே உரையாசிரியர் தொல்காப்பியத் தொல்லிலக்கண நூலின் கண் சேர்க்கை செருகுத லாதிய உண்டெனத்தாம் உணர்ந்தாருமல்லர்; எமக்கு உரைத் தாருமல்லர். ஆயினும், அக்குறை அவர் மேலேறாது அக்கால நிலைமையோடு கழிந்ததுணர்க. அறிவிற் சிறந்த தாங்களே இனியிவற்றை யாராய வேண்டுகிறேன். தங்கள் ஆப்தன், டி. சவரிராயன். ஸ்ரீஜ் ஞான சம்பந்தகுருப்யோநம வாழ்கவந்தணர்வானவரானினம் வீழ்கதண்புனல் வேந்தனுமோங்குக ஆழ்கதீய தெலாமரனாமமே சூழ்கவையகமுந்துயர்தீர்கவே ஞானசாகரம் 5. உள்ளது போகாது இல்லது வாராது இந்தப்பழமொழி சாதாரணமாய்த் தமிழ் நாட்டில் யாண்டும் பரவி வழங்குவதொன்றாயினும், அதன்பொருள் எந்தத்தேசத்திலுள்ள எந்தச் சாதியார்க்கும் எந்தச் சமயத் தார்க்கும் உடன்பாடான பொதுமையுடைய தேயாம். எளிதாக நாடோறும் வழங்கும் இப்பழமொழிப்பொருளருமை உற்று நோக்குவார்க்கு இனிது விளங்குமாயினும், அதனை ஆழ்ந்து ஆராய்வார் உலகில் ஒரு சிலரேயாவர். ஆகலின், உலக மெல்லாம் அங்கீகரித்து வழங்கும் இதன் அருமைப்பாடு ஒரு சிறிது விளக்கிக்காட்டுவாம். இனி, இதன்பொருள் முன்னைக்காலத்தும் நிகழ் காலத்தும் வருங்காலத்தும் இருப்புப்பெற்ற ஒரு பொருள் சூனியமாவதுமில்லை, மூன்றுகாலங்களிலும் இல்லாத சூனியப்பொருள் ஒரு காலத்து உண்டாவதுமில்லை என்பதேயாம். அவ்வாறாயின், ஆகாயத்தாமரை முயற் கொம்பு முதலிய சொற்பிரயோகங்கள் காணக்கிடத்தல் தான் என்னையெனின்; ஆகாயம் என்பதும் உள்பொருள்; தாமரைஎன்பதும் உள்பொருள், தாமரை தடாகத்தில் இருப்பது, தடாகத்தின் கண் இருப்புப்பெறுவதாகிய தாமரைக்கு ஆகாயத்தின்கண் நேர்ச்சியில்லாமையால் ஆகாயத்தாமரை என்பது, சொற்கள் தம்முள் இணங்கிப் பொருடருதற்கு ஏதுவாகிய தகுதிப்பொருத்தம் இல்லாமை காட்டித் தாமரையினிருப்பை ஆகாயத்தின்கண் எதிர் மறுத்த வாறாயிற்று. இவ்வாறே முயற்கொம்பு என்புழியும் முயல் (முயற்சி) என்பதோர் உள்பொருள், கொம்பு என்பது பிறிதோர் உள்பொருள். ஆடு, மாடு, மான் முதலியவற்றின்கண் இருப்புப் பெறுவதாகிய கொம்பு என்பதொருபொருள் தனக்குநிலைக் களமாகாத முயலின்கண் இருப்புப் பெறுத லாகாமையின் ஆண்டும் அதனை எதிர்மறுக்கும் பொருட்டாகவே அச்சொற் பிரயோகம் வழங்குமென்றுணர்க. ஆகலின், அச்சொற்பிர யோகங்கள் முக்காலத்துமில்லாத சூனியப் பொருளைக் குறிப்பன என்பது அடாது; மற்று அவை பொருள்கள் இவைகளுக்கு உரிய தேர்ச்சியில்லாமை மாத்திரையே விளக்கு வனவாம் என்றொழிய இந்த நூலாடையை நீரால்நனை என்பதேயன்றி அதனை நெருப்பால் நனை என்றல் ஏலாமையான், பொருள்கள் தம்முட்பொருந்துதற் குரிய சிநேக குணநெறி கடைப்பிடியாது, அச்சொற்பிரயோகங்கள் சூனியப்பொருள் குறித்து வந்தனவாமென்பாருரை குழறு பாட்டுரையாமென்று ஒழிக. இதுபற்றியே சேனாவரையரும் பொய்ப்பொருள் குறிப்பன வும் பொருளுணர்த்துவனவே யாம் என்று உரைகூறினார். எனவே, சூனியமாக நிற்பதோர் பொருளுமின்றாம்; அதனைக் குறிக்குஞ் சொல்லுமின்றாம். அற்றேல், சூனியம் என்பதுதான் என்னையெனின், உள் பொருளின் எதிர்மறையே அவ்வாறு சொல்லப் படுதலல்லது சூனியப்பொருளெனப் பிறிதுஒன்று இல்லையென்க. இங்கே குடமில்லை படமில்லை என்றவழிக் குடம்படம் முதலிய வற்றின் இருப்பை ஆண்டு மறுத்த வாறன்றிவேறில்லை யென்ப தூஉம் உலகவழக்கிற் கண்டு கொள்க. யாங்கூறியதே தருக்கநூலார்க்கு முடன்பாடாதல் பிரதியோகி யுணர்ச்சி யின்றி அபாவவுணர்ச்சி பெறப்படாது என்று அவர் கூறுமாற்றாற் காண்க. இதனால், தம்முள் நேர்ச்சி யில்லாத பொருள்கள் ஒன்றோடொன்று ஒற்றுமைப்பட்டுத் தோன் றுதல் இல்லையாமென்பதூஉம், இதற்கு முயலின் கண் நேர்ச்சி யில்லாத கொம்பு அதன் தலையில் யாண்டுங்காணப் படாது ஒழிதலே பிரமாணமாய் நிலைபெறு மென்பதூஉம் நன்று விளங்கும். இதுகிடக்க இனி, ஒருசாரார் தூலமாகக்காணப்படும் இந்த உலகங்களையும், இவற்றின் கண் அறிவுடையராய் இயங்கும் ஆன்மாக்களையும் ஈசுரன் ஒன்றுமில்லாத சூனியத்தினின்றும் படைத்திட்டான் என்பவாகலின் இல்லது வாராது என்றல் பொருந்தாதாம். பிறவெனின்; நன்று சொன்னாய், என்று மில்லாத பாழிலிருந்து உள்பொருளான இப்பிரபஞ்சங்களைப் படைத்திட்டானென்றல் முன்னேயுரைத்த நியாயவுரைக்கு ஒரு சிறிதும் பொருந்தாமையின் அவர் கூறும் பிரபஞ்சசிருட்டி கொள்ளற்பாலதன்று. அற்றன்று, ஈசுரன் அளவிறந்த ஆற்றலு டையான் என்பது நுமக்கும் ஒப்பமுடிந்தமையின், அப்பெற்றி யனான அவன் இவ்வுலகங்களையும் இன்னும் இவை போல்வன பிறவற்றையும் சூனியத்தினின்று படைத் திட்டா னென்றல் மாறுகொள்ளாதெனின்; ஆற்றல் என்பதன் இலக்கண மறியாது கூறினாய். ஆற்றல் சக்தியென்பன ஒரு பொருளே தரும். ஆற்றலென்பது அசையாது கிடக்கின்ற ஒரு பொருளை அசைவிப்பதும் அசைகின்ற ஒரு பொருளை அங்ஙனம் அசையாது நிறுத்துதலுமாம். கூட்டல், பிரித்தல், குறைத்தல், மிகுத்தல், திரித்தல், அறுத்தல் முதலிய கருமத் தொகுதிகளும் ஈண்டுக்கூறிய இலக்கணத்தில் அடங்கும். வழுவழுப்பான சமநிலத்திற் கிடக்கும் பருக்கைக் கல்லொன்று தானே இயங்காது. அதனையாம் எமது சிறுவிரலால் அசைவிக்க அஃது இயங்கும் இயக்கப்படுகின்ற அக்கல் மிகப்பருத்துக் கரடுமுரடான நிலத்திற் கிடக்குமாயின் அதனை எமது கைவிரலால் இயக்கல் கூடாது. அதனை எளிதில் இயக்கும்பொருட்டு ஏதாயினும் பிறிதொருகருவி கொண்டு தான் அவ்வாறு செய்தல்வேண்டும். அன்றி அக் கருவியும் வேண்டாமல் யாமே எமதுகைகளால் முயன்று எடுத்து அதனை இயக்குவேமாயின், எம்மைக் கண்டார் இவர் மிக்கதேகபலமுடை யார் என்று வியந்து பேசுவார். இவ்வாறே யாம் ஒன்றாய்க் கூட்டுதற்கு அருமையான இருப்புச் சலாகை களை ஒன்று கூட்டியும், இருகூறாக்குதற்கு அரிய பெருத்த மரங்களை இருகூறுபடுத்தியும், அறுத்துக் குறுக்குதற்கு அரியவற்றை அறுத்துக்குறைத்தும், திரிப்பதற்கு அரிய இருப்புக்கோல்களை நூல்போல்திரித்தும், பரிய இருப்புத் தூண்களைத் துகளாக்கியும் வன்மைசெய்தவழி எம்மைக் கண்டாரெல்லாரும் எம்மாற்றலை மிக வியந்தெடுத்துப் பேசுவர். ஆகவே எம்முடைய ஆற்றலளவு அவ்வாற்றலால் உய்க்கப்படும் கல்முதலிய பொருளளவுபற்றியே அறியப்படுவ தாம். அப்பொருள் சிறிதாயவழி அதனைச் செலுத்துவா னாற்றல் சிறிதென்றும், அது பெரிதாயவழி அதனைச் செலுத்துவானாற்றல் பெரிதென்றும் எல்லாரு முணர்ந்து கொள்வர், இங்ஙனம் பொருள்களின் நிலையை வேறுபடுத்தி அவற்றைத் தொழிற்கண் உய்ப்பதாகிய முயற்சியே ஆற்றல் அல்லது சக்திஎன்பதன்றி உள்பொருளை இல்பொருளாகவும் இல்பொருளை உள்பொருளாகவுஞ் செய்வதே ஆற்றலென யாண்டும் பெறப்படுமாறில்லை. யாங் கூறியதேபிரபலபௌதிக சாத்திரிகளாய பால்வர்ஸ்டூவர்ட் ஜோன்ஸ், பெஸன்டன் கூக் முதலாயினார்க்கும் உடன்பாடாதல் அவ்வவர் நூல்களிற் கண்டுகொள்க. இனி, அவ்வவர் ஆற்றன் மிகுதி அவர் உய்க்கும் பொருட்பரிமாணம் பற்றியே அளந்தறியப்படக்காண்டலால், நாம் வசிக்கின்ற இந்தப் பிருதிவி அண்டகோளகையினையும் இதனினும் எத்தனையோமடங்கு பெரிதாகிய சூரியமண்டல முதலான அனேக அண்டப்பகுதிகளையும் அதிவிசித்திரமாக நிருமித்து, அவை ஒன்றை ஒன்று இழுக்கும் ஆகருஷண சக்தியால் அந்தரத்தில் நெறிபிறழாது இயங்கும்படி செய்வித்து, அவ்வண்டங்கள் ஒவ்வொன்றிலும் அவ்வவற்றின் சீதோஷ்ண இயல்புக்கேற்ப எண்ணிறந்த ஆன்மாக்களை எண்ணிறந்த தேகங்களில் அமைத்து அறிவூட்டியும் அவ்வான் மாக்கள் செய்யும் வந்தனை வழிபாடுகளாகிய நற்கருமங்களையும் அவற்றின் வழுவி அவர்செய்யுந் தீக்கருமங்களையும் அறிந்து அவ்வவர்க்கு ஏற்ற கதி வழங்கியும் பேராற்றல் செய்கின்ற வனாகிய ஈசுரன் அவ்வாறு அளவிறந்த ஆற்றலுடையா னென்று சொல்லப் பட்டானல்லது, சூனியத்தினின்று ஒன்றனைச் சிருட்டித்தலானாதல் சிருட்டிப்பொருளொன்றைச் சூனிய மாக்கு தலானாதல் அவ்வாறு சொல்லப்பட்டா னல்லன் என்று உணர்க. அசேதன அருவ மாயாரூபமாகக் கிடந்த சூக்குமப்பிரபஞ்சத்தினையே இறைவன், ஆன்மாக்களுக்கு உபகார மாதற்பொருட்டு சேதனவுருவத் தூலப் பிரபஞ்சமாகச் சிருட்டி செய்தான். இத்தனையேயன்றிச் சூனியத்தினின்று இப்பிரபஞ்சங்களையெல்லாம் இறைவன் படைத்தருளினா னென்றல், பௌதிகசாத்திர வியல்பொடு மாறுபடுதலானும், அங்ஙனஞ்சூனியத்தினின்றும் எம்மை யெல்லாம் படைத்து ஒரு சிலரை இன்பப்பகுதியின் கண்ணும் ஒருசிலரைத் துன்பப் பகுதியின் கண்ணும் நிறுத்துதல் இறைவனுக்கு நடுவுநிலை யாகாதெனக் கடாவுவார்க்கு இறுக்கலாகாமை யானும் அது பொருந்தாதென் றொழிக. இது கிடக்க. இனி சிருட்டி என்பது தான் யாதோவெனின் அதனை ஒரு சிறிது விளக்குவான். சிருட்டி எனினும் ஒழுங்குபடுத்தல் எனினும் ஒக்கும். யாதினையோ ஒழுங்குபடுத்தலெனின் அவயவமின்றிப் பிண்ட மாகக்கிடந்த ஒரு பொருளை அவயவமுடைத்தாக நெறிப்படுத்து அமைத்தலாம். அவயவம் எனினும் உறுப்பு எனினும் ஒக்கும். இறைவன்றன் அரும் பேராற்றலால் நிகழ்த்துஞ்சிருட்டிக்கு உபமானமாக எடுத்துக் காட்டப்படும் பொருள் ஒன்று இவ்வுலகிலில்லையாயினும், ஈண்டெடுத்துக்கொண்ட தருக்கம் இனிது விளங்குதற் பொருட்டு ஓருதாரணம் வகுத்துக் காட்டுவாம். தச்சுத்தொழில் செய்வான் ஒருவன் பிண்டமாகக்கிடந்த முழுமரம் ஒன்றை வாளாற் பலதுண்டுகளாக ஈர்ந்து, அவற்றையெல்லாம் வழுவழுப்பாக இழைத்துத் திரட்டுவனவற்றைத் திரட்டிக் கடைந்தும், குறைக்குமிடங்களில் அவற்றைக் குறைத்தும் மிகுத்தும் பலவேறுபடுத்திப் பின் அத்தண்டுகளையெல்லாம் ஒன்றாக இயைத்து ஆணியறைந்து ஒரு நாற்காலிசெய்யக் காண்கின்றோம். இங்ஙனம் பிண்டமாகக்கிடந்த முழுமரம் ஒன்றைப் பலவாகத் திரித்து அவயவமுடைய நாற்காலியாக ஒழுங்கு படுத்து முயற்சியே சிருட்டியாவதாம். இது போல், இறைவனும் அவயவமின்றி யருவமாய்க் கிடந்த அதிசூக்குமப் பொருளாகிய மாயையை மலையுங் காடும் நாடுங் கடலு மாகிய அவயவமுடைய தூலவுருவப் பிரபஞ்சமாக ஒழுங்குபட நிருமித்து ஆன்மாக்களுக்கு உபகாரமாக வைத்தருளினான். இங்ஙனஞ் செய்யப் படுவதாகிய சிருட்டியும் அதிசூக்கும உள்பொருண் மாயையிற் செயப்படுவதல்லது சூனியத்தின்கட் செயப்படுவ தன்றாம். ஆகவே, சிருட்டி என்பது எக்காலத்தும் இருப்பதாகிய உள்பொருள் ஒன்றனையே வேறு வேறாக ஒழுங்குபடுத்து நிருமிக்கும் முயற்சியாமென்பது ஈண்டுக் கூறியவாற்றால் இனிது விளங்கும். அற்றேல், அழிப்பு அல்லது சங்காரம் என்னு முயற்சியாற் பிரபஞ்சங்களெல்லாம் சூனியமாய் அழிந்துபடக் காண்கின் றோமாதலின் உள்பொருள் சூனியமாயிற்றாம். பிறவெனின் அறியாது கடாயினாய், மலைகடனாடு முதலிய அவயவ வுருவங்களால் தூலமாகக் காணப்படும் இக்காரியப் பிரபஞ்சத்தைத் தத்தஞ்சூக்கும முதற்காரணமாகிய பரமாணு ரூபங்களாகவும், அதிசூக்கும முதற்காரணமாகிய மாயை யாகவுந் திரித்தருளுகின்ற இறைவன் றிருவருண் முயற்சியே அங்ஙனஞ் சங்கார கிருத்தியமென்று ஓதப்பட்ட தல்லது உள்பொருளை இல்பொருளாக்குவதே அதுவாம் என்பதன்று. இங்ஙனங் காரியரூபமாகக் காணப்படும் பிரபஞ்சங் காரண ரூபமாய் ஒடுங்குதல் பற்றியே அறிவுடையோர் அதனை அநித்தியமென்று ஓதுவர். இதனை ஓரு தாரணமுகத்தானும் விளக்குவாம். குயவன்தன் மதி நுட்பத்தால் மண்ணைத் திரட்டிக் குழித்து வாய்குக்கி வயிறு பெருக்கிச் சுள்ளையி லிட்டுச் செவ்வண்ணமாக்கி எமக்கு ஒரு குடந்தந்தான். தர, அதனை யாம் நெடுநாள் உபயோகித்து வருகையில் அதுவுஞ் சிறிது சிறிதாகத் தெய்வுண்டு கடைசியிற் குடமென்பதொன்று இல்லையாக முடிந்தது. பொன் ஆபரணஞ் செய்தல் வல்லா னொருவன் யாம் தந்த பத்துக்கழஞ்சு பொன்னையுஞ் செவ்விய ஓராபரணமாக நிருமித்து எம் புதல்விக்குப் பூட்டினான். அவ்வாபரணத்தைச் சில வருடங்கழித்துக் கழற்றி நிறுத்துப் பார்த்தபோது அஃது எட்டுக்கழஞ்சுதான் நின்றது. பின்னுஞ் சில வருடங்கழித்து நிறுத்தபோது ஐந்து கழஞ்சுதான் நின்றது. பின்னும் இவ்வாறே நிறுத்து நிறுத்துப்பார்க்கக் குறைந்து கொண்டே போய்க் கடைசியில் ஆபரணமென்பதே ஒன்று இன்றாய் முடிந்தது. இனி இங்ஙனங் காட்டியகுடமும் ஆபரணமும் இல்லையாய்ப்போன மாயந்தான் என்னை என்று ஒரு சிறுவனைக் கேட்பினும் அவன் தினைத் தினை யாகத் தேய்ந்து இறுதியில் அவையில்லையாயின வென்று மறுமொழி யுரைப்பான். இனித்தேய்தல் என்பதுதான் யாது என்று நுணுகியாராய்ந்து அவனைக் கேட்பினும் அச்சிறுவன் குடமாகவும் ஆபரணமாகவும் திரண்டெழுந்த மண்ணும் பொன்னுந் துகள் துகளாகப் பிரிந்து போயினவென்று அறிவுதோன்றக் கூறுவான். இனி அத்துகள்கள் தாம் எங்குச் சென்றனவென வினவின் அவன், அவை எங்குஞ் சென்றில சூக்கும அணுரூபமாக இங்கேதான் இருக்கின்றன என்றும் மொழிந்து எம்மை மகிழ்வித்திடுவான். ஆகவே, காரிய ரூபமாகத்தோன்றுங் குடமும் ஆபரணமுந் தேய்ந்து தேய்ந்து தத்தங் காரணசூக்கும அணுரூபமாக ஒடுங்கிய வழியும் அவற்றின் இருப்பு ஆண்டும் உளதாவதேயன்றிச் சூனியமாதல் ஒருவாற்றானும் இல்லை யாதலான், இதுபோற் பிரபஞ்ச இருப்பும் யாண்டும் உளதாவதேயன்றி இலதாதல் இல்லை யென்றொழிக. எம்முடைய ஊனவிழிகளுக்குத் தோன்றாமை பற்றிப் பிரபஞ்ச இருப்பை மறுத்துரைத்தல் பெரிதுங் குற்றமாம். ஊசிநுனியிற்றங்கிய நீர்த்துகளை ஆங்கிலேய தத்துவ சாத்திரிகள் உபகரித்திருக்கும் பெருக்கக்கண்ணாடி யால் நோக்குவார்க்கு அதன்கண் அடங்கிய அளவிறந்த புழுக்களும் அப்புழுக்களின் வேறுவேறான அற்புதசிருட்டி வடிவங்களும் அவற்றின்தொழில் வேறுபாடுகளும் பிறவும் மிக்க வியப்புடையனவாய் விளங்கும். அக்கருவியின் உபகாரமின்றி நோக்குவார்க்கு அவை ஒரு சிறிதும் விளங்கா. இங்ஙனஞ் சிற்றறிவுஞ் சிறுதொழிலுமே முகிழ்ப்பதற்கு ஏதுவான கருவிகளுடன் அமைந்த இம்மானுட யாக்கையின் கண் இருக்கப் பெறுவேமாகிய யாம் இறைவன் செய்யும் அற்புத கருணைக்கிருத்திய வியல்பை எங்ஙனங் காண்பேம்? எவ்வாறு உரைப்பேம்? சிருட்டிக்காலத்தின் முன்னும் மாசங்கார காலத்தின் பின்னும் அதிசூக்குமகாரணமாயா சொரூபமாய் ஒடுங்கி விளங்கும் இப்பிரபஞ்சங்களையும் இப்பிரபஞ்சங்களில் வைகிய ஆன்மாக்களையும் யாண்டும் வியாபித்து எல்லாப் பொருள்களையும் இருந்தவாறே கண்டறியும் ஞானக்கண் உடையனாகிய இறைவன் ஒருவனே காண்பான்; அக்காலத்தில் அதிசூக்கும காரண மாயாசொரூப மான இப்பிரபஞ்சங் களெல்லாம் வெள்ளிடையிற்றோன்றும் மலைபோல அவன் ஞானக்கண்ணெதிரே தூல ரூபமாகவே விளங்குவனவாம். இவ்வாறாகலிற் சங்காரகாலத்திலே இப்பிரபஞ்சங் களெல்லாஞ் சூனியமாய் ஒழியும் என்பார் வார்த்தை ஒருசிறிதும் அடாத போலியாய் முடியுமென்றுணர்க. உள்பொருளை இல்லாத சூனியப்பொருளாகத் திரித்தல் ஒருவரானும் ஒருகாலத்தும் முடிவதன்று என்பது பற்றியே பௌதிகசாத்திரம் வல்லராகிய ஆங்கில நன்மக்களும் பொருளழியாமை என்று தலைப் பெயரிட்டு இவ்விஷயத்தைத் தன் நூலுட் பரக்க ஆராய்ச்சி செய்வாராயினர். இனி, சங்கராச்சாரியர் வேதாந்தசூத்திர வுரையிலே பிரமம் ஒன்றே உள்ளதென்றும் அதற்கு வேறாக ஒரு பொருளில்லை என்றும், காணப்படுகின்ற இந்த வுலகங் களெல்லாம் மெய்யான அப்பிரமத்திலே பொய்யாகத் தோன்றும் பொய்த் தோற்றங்களே யாமென்றும் தமக்கு வேண்டியவாறேயுரைத்தார். இது பொருந்தாமை காட்டு வாம். யாம் அறிவு விளங்கப்பெறாதுகிடந்த குழந்தைப் பருவந் தொட்டு இதுகாறும் இவ்வுலகத்தோடு சம்பந்தமுறு கின்ற நெறியாலே சிறிது சிறிதாக கூறிவருகின்றேம். காணப்படும் இவ்வுலகியற் பொருளின்கட் பழகி முதிர்ச்சியடைகின்ற அறிவின் வல்லமையாற் காணப்படாத கடவுள் ஒருவன் உண்டென்றும் அனுமானஞ் செய்து போதருகின்றோம். என்னை? அனுமான வுணர்வெல்லாம் பிரத்தியக்க வுணர்வின் வழி நிகழ்வனவாகலான்; உண்டி சமைக்கின்ற அறையிலே தீமூட்டக்கண்டு புறம்போந்து மேல் நோக்கியவழிப் புகை செல்லுதலைப் பன்னாட் கண்டிருந்தான் ஒருவன் தான் வேறு ஓர் ஊர்க்குப் போம் நெறியில் ஒரு கூறையின் மேற் புகைசெல்லக்கண்டு ஆண்டு அதன் கீழ் நெருப்புண்டென்று முன்னை யறிவொடு சார்த்தியளந்துணர் வானாவது. இவ்வாறு தீமூட்டுந்தோறெல்லாம் புகையுண் டாதலை முன்னறியாதான் பின்னொருகாலத்துத் தான் கண்ட புகையினாற் றீயுண் டென்று அறியுமாறு யாங்ஙனம்? ஒன்றை மற்றொன்றோடு ஒப்பிட்டுக் காண்டலானும் ஒன்றைப் பிறிதொன்றின் வேறாகக் காண்டலானும் மக்களெல்லாம் அறிவுடையராகின்றா ரென்பது தருக்கநூலார்க் கெல்லாம் உடன்பாடாம். இங்ஙனங் காணப்படும் உலகத்தாற் காணப்படாத கடவுளை யுணர்தல் வேண்டுமென்பது பற்றியே தெய்வப்புலமைத் திருவள்ளுவ னாரும் ஆதிபகவன் முதற்றே யுலகு என்று உலகின்மேல் வைத்துக் கூறினார். இனி உலகமே பொய்யாய் ஒழிந்தவழி, அவ்வுலகின் மேல் வைத்து உணரப் படுவதாகிய பிரமமும் பொய்யாய் ஒழிந்திடுமாகலாற் பிரமம் மாத்திரம் உள் பொருளாய் நிலையுமென்று அவருரைத் தவாதம் போலியா யொழியும் அல்லதூஉம், காணப்படாத அருவ மாகிய பிரம்மத்தின் கண்ணே உருவமாகிய இப்பிரபஞ்ச வேறு பாடுகளையெல்லாங் காணுமாறு யாங்ஙனம்? அல்லதூஉம், பிரமத்தைத்தவிர வேறு இரண்டாம் ஒரு பொருளில்லை யாயின் அப்பிரமத்தின் கண்ணே அவ்வாறு காண்பான் தான்யார்? இவ்வாறு எழூஉம் பல்வகை யாசங்கைகளாற் சங்கராசாரியார் உரைப்பொருள் ஒரு வாற்றானும் பொருந்தா தென்பது இனிது விளங்கலானும், அவருரை, பிரத்தியக்க மாகக் கண்டறியப்பட்டு எல்லாரானுந் தழீஇக்கொள்ளப் படும் பௌதிக சாத்திரப்பொருளோடு இணங்காமன் மாறுகொண் டழிதலானும் சங்கரா சாரியாரைப்போலவே பிரமத்தைத்தவிர மற்றொழிந்த பொருளெல்லாம் பொய்யாமென்றுரைத்த கான்ட், ஈகிள், பிநோஸா முதலான ஐரோப்பிய வித்துவான் களின்கோட்பாடெல்லாம் பௌதிகசாத்திர வுண்மைப் பொருளோடு ஒற்றுமையுறுதலின்றிப் பொய்படுகின்றன வென்று அவையெல்லாம் நன்றாராய்ச்சிசெய்து நூலெழுதிய குரூம்பராபர்ட்சன் என்னுமாங்கில தத்துவசாத்திரியார் உண்மைதோன்ற நிலையிட்டு உரைத் தலானும் உலகம் பொய்யென்று அங்ஙனங் கூறுவாருரை பொய்யாமென்று மறுக்க. இனி, இங்ஙனம் சூனியத்தினின்று உலகைச் சிருட்டித்தான் என்றும், இறைவனே உலகமாய்த் தோன்றினா னென்றும், இறைவன்கண் இவ்வுலகமும் பிறவுமெல்லாம் அத்தியாசமாகத் தோன்றும் பொய்ப் பொருள்களா மென்றுங் கூறுஞ் சமயிகள் உரை தத்துவசாத்திரந் தருக்கசாத்திரம் பௌதிகசாத்திர முதலியவற்றி னுண்மைப்பொருளோடு ஒற்றுமைப்டாமை யான், அச்சமயிகளெல்லாம் சமய சாத்திரத்தொடு தத்துவ சாத்திரந் தருக்கசாத்திரம் பௌதிகசாத்திரம் முதலியவற்றின் பொருளியையா, மற்று அவை ஒவ்வொன்றுந் தத்தம் நிலையிற் பிரமாணமாம், இந்நான்கனையும் ஒன்று சேர்த்து இணக்கி யாராய்தல் பொருந்தாதென்று தமக்குத் தோன்றியவாறே கூறி இழுக்குறுகின்றார். யாதாயினும் ஒரு சமயம் மெய்ச்சமய மானால் அச்சமயப் பொருள் எல்லாச்சாத்திர வுண்மைப் பெருளோடும் ஒருமையுற்றுப் பிரமாணமாய் ஒன்று உண்டோ வெனின்; உண்டு. அதுதான் சித்தாந்தசைவ சமயமாம். யாங்ஙனமோ வெனிற் காட்டுதும், ஆசிரியர் மெய்கண்ட தேவநாயனார், சிவஞானபோதத்தில் ஈசுர நிச்சயம் பண்ணுகின்ற முதற்சூத்திரத்திலே உலகாய தசமயியை மறுத்துத் தோற்றமும் ஈறும் உள்ளதன்பாலே கிடத்தலின் என்று உலகத்தை எக்காலத்தும் உள்பொரு ளென்றே நிலையிட்டு உரைத்தலானும், உலகம் இல் பொருளாய்ச் சூனியத்தினின்றே தோன்றி நின்று அழியுமெனக் கூறும் புத்தரை மறுத்து உலகமுள்ளது, இல்லதற்குத் தோற்றமின்மையின் என வைத்துச் சித்தாந்தப்படுத்திக் கூறலானும் பிறவாற்றானும் என்பது. இவ்வாறே சித்தாந்தசைவம் போதிக்குஞ் சிவஞான போதத்தின்கட் போந்த மெய்ப்பொருள்களெல்லாம் ஏனைத் தத்துவசாத்திர தருக்கசாத்திர பௌதிகசாத்திர உண்மைப் பொருளோடொ ருமையுற்று இணங்கி மற்றைச்சமய முடிபொருட்கெல்லாஞ் சிரத்தானமாய் அமர்ந்தி ருக்குந் தெய்வப்பெற்றிமை தேறவல்லார்க்கு மெய்யாக நிலைபெறுஞ் சமயமொன்று ஏனை நன்பொருணூல்களோடு மாறுபாடு றுதல் ஒரு சிறிதுமில்லை யென்பது இனிது விளங்கும். இன்னுஞ் சமயநேரும்போ தெல்லாஞ் சைவசித்தாந்தப் பொருளொன்று மே ஏனை உண்மைப்பொருணூல்களோடு இணங்குமாறும், மற்றைச் சமயப்பொருள்கள் அவ்வாறு இணங்காமையும் முறையே தந்து காட்டுவாம். திருச்சிற்றம்பலம் 6. சந்தானகுரவர் வரலாறு செந்தமிழுலகமுய்யத் திருவவதாரஞ் செய்தருளிய சைவசமயகுரவருள் ஆளுடையவரசுகள் ஆளுடைய நம்பிகள் திருவவதாரஞ் செய்தருளிய நடுநாட்டின்கண் திருப்பெண்ணாக டத்திலே வேளாளர்குலத்திலே அச்சுதகளப்பாளரென்பா ரொருவரிருந் தனர். அவர் எல்லாப்பேற்றினை யுடையராயினும் புத்திரப் பேறில்லாராகிப் பெரிதுங் கவலெய்தித் தங்குலகுரு வாகிய சகலாகமபண்டிதரைச் சென்றணைந்து ஐயா! யான் பெறாப்பே றொன்றுமிலது, பெறுமவற்றுள் யாமறிவதில்லை யறிவறிந்த மக்கட்பேறல்லபிற என்றபடியான் மக்கட்பேறில் லேனாயினேன், அறத்தாற்றினில் வாழ்க்கையாற்றுவார் இறுக் கற்பாலவாய கடன் மூன்றனுள் தென்புலத்தார்கடன் சிறந்த தாமன்றே! என் செய்வல்! எனக்கரைந்த வரடிக்கீழ் நெடும்பனை போல் வீழ்ந்துபணிந்தனர். அவர் பெரிது மாய்ந்து நாஞ்செயத் தக்கதியாதென் றொருவாறு தேர்ந்து திருநெறித்தமிழ் வேதமாகிய ஆளுடைய பிள்ளையார் திருவாய் மலர்ந்தருளிய தேவாரத்திருவருள் முறையிற் கயிறு சாத்தக் கண்காட்டு நுதலானும் என்னுந் திருப்பதி கத்திலேபேயடையாவிரி வெய்தும் பிள்ளையினோடுள்ள நினை வாயினவே வரம் பெறுவரை யுறவேண்டா வொன்றும் வேயனதோளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர் தோய்வினையா ரவர் தம்மைத் தோயாவாந் தீவினையே என்னுந் திருப்பனுவ லுதயமாக வதன் செம்பொருளை நனிபெரிதும் விளக்கினர். அச்சுதகளப்பாளர் அத்திரவிடவேதச் செம்பொருளைக் கேட்டாங்குக் கழி பேருவகைகொளீஇக் கற்பினருந்ததியன்ன தன் காதலியோடு நாற்கோட் டும்பனம்பனைவழிபடும் சுவேதவன மெனும் வடமொழிப்பெயரிய திருவெண்காடெய்தி முச்சுடர்த் தீர்த்தமெனப்படுந் திருமுக்குளத்துறையி னீராடித் தருப்பித்து நியமங்கள் பலசெய்து நிகமாகமங்களனைத்தும் பரப்பிரமப் பொருளெனத் துணிந்தகுணா தீதப்பொருளையும் அவனொடும் பிரியாமடமயிலையும் வழிபாடுசெய்து வந்தனர். இவரிவ்வா றியற்றி வருஞான்று மரகதவல்லி பங்கராகிய சிவபிரான் ஒரு நாள் அவர் சொப்பனத்தின்கண்ணே தோன்றி, மைந்த! நீ கவலொழி, நினக்கு இத்தமிழுலகமுய்யும் வண்ணம் ஆளுடைய பிள்ளையாரென் றியாவருங்கருதவும் திராவிட சுருதிச் செம்பொருளைத் தன்னகத்தடங்கிய சைவசித்தாந்த சாத்திரத்தை வெளிப்படுத்தவும் சித்தாந்த தாபனஞ்செய்யவு மொருமகவைத் தருகின்றேம், அவன் ஆசிரியத்தலைமையெய்திச் சிறப்ப னென்றே கூறித் தம் முருக்க ரந்தனர். பின்னர்ச் சிலநாளில் அச்சு தகளப்பாளர் என்றும் போலத் தடாக கருமங்களை முடித்துக் கரையேறுகின்றவளவிலே, ஓரருமைக்குழவி அழுத வண்ண மாய்க் கிடப்ப இது பெருமான் அருளிச்செய்த தாகுமெனக் கொண்டு போந்து மகிழ்ச்சி யுடன் மனைவிகையிற் கொடுத்து இம்மகவு வெண்காட்டடிகளாற் பெற்ற பெறலரும் பேறாகலின் சுவேதவனப் பெருமாளென நாமகரணஞ்செய்து அங்கு நின்றும்போந்து திருப்பெண்ணாகடமடைந்தனர் இவர் காதலியோடுடன் பிறந்தார் இதனைக் கேள்வியுற் றாங்கடைந்து அம்மகவைத் தம்மனையகம் முன்னைஞான்று பிரமவிருடியாகிய வசிஷ்டமுனிவர் வியாக்கிரபாதமுனிவர் புத்திரராகிய உபமன்னுயு பகவானைக் கொணர்ந்து வளர்த்தது போன்று கொணர்ந்து தொட்டிலிலிட்டுத் தம்பதியாகிய திருவெண்ணெய் நல்லூரிலேயே வளர்த்து வந்தனர். இவர்க்கு மூன்றகவை நிரம்புமுன்னரேதாம் சாமுசித்தராதலின் மெய் யுணர்வுதலைக்கூடத் திருக்கயிலாய பரம்பரையில் நந்தி பெருமான்பாற் சித்தாந்த நெறியுபதேசம்பெற்ற சனற்குமார வடிகள் மாணாக்கராகிய பரஞ்சோதி முனிவர் தென்மலையத் தருந்தவரைக் காணுமாறுகருதிக் கயிலையை நீங்கி விண்வழிப் படர்ந்து காசிமுதலிய பலதலங்களையுந் தரிசித்துத் திரு வெண்ணெய் நல்லூரையணுகி நம்மடிகளிருந்த மனையகத்தின் வழியேபோத இவர்க்குக் கமனகுளிகைசெல்லுகை தவிர்ப்பக் கண்டு ஈண்டோர திசயமிருப்ப தென்னெயோ வென்றிறங்கிப் பார்த்துழி மணலிற் சிவலிங்கமியற்றி விளையாடல் புரிந்து இறைவனையே நாடியிருந்த அருமந்தமகவைக்கண்டு அவர்க்குத் தச்ணாமூர்த்தியாகிய பெருமான் றிருக்கரத்திற் பன்னிரு சூத்திரவடிவினதாகிச் செறிந்த சிவஞானபோதத்தை அற்றை ஞான்று போதவூர்நாடிய புண்ணியப் பெருந்தகையாம் வாதவூரர் அடிகட்கு வடவானிழலொரீஇத் திருப்பெருந்துறையிற் குருந்தின் நீழலிற் குருமணியருளுபதேசஞ்செய்தாங்கு அம் மெய்யுணர்ச்சி யுடையார்க்குப் பொய்கண்டகன்ற மெய் கண்ட தேவனேனத் திருநாமஞ் சாத்தியருளுபதேசஞ்செய்து கடைக்கணீந்தருளி நும்மையடைவார்க்குப் பரிபாகம் வந்தவாறே யுபதேசஞ்செய்க வென்றருளிச் சென்றனர். இவர் அச்சித்தாந்தோபதேசம் பெற்றவுடனே அச்சிவ ஞான போதத்தினுபதேசப் பொருளைக்கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து தமக்காசங்கை யெழுந்தவிடத்துப் பொல்லாப் பிள்ளையா ரருளிச்செய்த சூர்ணிக்கொத்தாற் றடைதீர்ந்து தென்றமிழுலக முய்ய அதனை வார்த்திகப் பொழிப்புடன் தம்மையடைந்த அதிபக்குவர்க்குபதேசித்துக்கொண்டுவந்தனர். இவ்வாறு நிகழ்கையில் அங்குத் தம்மாணாக்கர்பாலடைந்த தங்குலகுரு வாகிய சமகலாக பண்டிதர்மெய்கண்ட தேவர்தம்மை யடைந்த அதிபக்குவர்க் கெல்லாம் சித்தாந்தநிலைமையை யுபதேசித்து வருவது கேட்டறிந்து அவர் தம்முழைவாராமை கண்டு தாமேசென்று காணச்செருக்குடன் சென்றனர். தேசிகேசாகிய மெய்கண்டதேவர் பதி பசு பாசமென்னுந்திரி பதார்த் தத்துள் பாசபதார்த்தமாகிய ஆணவமல முதலிய பஞ்ச பாச விலக்கணங்கூறி மேற்கண்டவர்கட் கவ்வாணவ விலக்கணத்தை வருவாரைச் சுட்டிக் காட்டி அஃதின்னதா மெனக் குறித்தனர். அதையுணர்ந்த சகலாகமபண்டிதர் ஒன்றுமுரை யாடாது தேசிகர் திருநோக்கத்தானே அதி தீவிரபக்குவமெய்தி அழலதுகண்ட மெழுகெனக்குழைந்துருகி யடியற்ற பனைபோல் வீழ்ந்து யாமுய்ய வெழுந்தருளிய தம்பிரானே! யென வாழ்த்திநின்றனர். தேசிகேசரும் அவரை யுமாட்கொண்டருளிச் சிவஞான போதத்தின் மொழிபெயர்ப் பினை யுபதேசித்தனுக் கிரகஞ் செய்தனர். இவர் இதன்பொருள் செவ்விதின் விளங்கப் பரபக்கந்தடைவிடைகளாற் பரிகரித்துச் சுபக்கமாகிய சித்தாந்த மெனப்படுஞ் சிவஞான போதத்தினுக்கு வழி நூலாகப் பார்விரித்த நூலெல்லாம் பார்ததறியச் சித்தியிலே யோர் விருத்தப்பாதி போதும் என்றும். பாதி விருத்தத்தாலிப் பார்விருத்தமாக வுண்மைசாதித்தார் என்றும், சிவனுக்கு மேற்றெய்வமில்லை, சித்திக்கு மேற் சாத்திர மில்லை என்றும் வள்ளுவரன்பர்மொழி வாசகந் தொல் காப்பியமே தெள்ளுபரி மேலழகர்செய்தவுரை யொள்ளியசீர்த் தொண்டர் புராணந் தொகைச்சித்தி யோராறுந் தண்டமிழின் மேலாந்தரம்என்றும் அபியுத்தர்களெல்லாங்கூறத் திருவாய் மலர்ந்தருளித் தேசிகேசர் சந்நிதிக்கண் அறிவிக்க அதனைக் கடைக்கணித்தருளி அவருக்கு அருணந்தியென்னுந் தீக்ஷா நாமம்புனையவே அவர்மேல் தோத்திரமாகச் சாத்திரப் பொருளடங்கிய இருபா விருபஃ தென்னுமொருநூலையும் செய்தருளினர். பின்னும் வரும் திருமயிலை - சண்முகப்பிள்ளை 7. சகளோபாசனை இவ்வாறு இகழ்வதோ? என்று வருந்திக் கூற, அப்போது ஞானசம் பந்தப்பெருமானார் அரசியாரைப்பார்த்து. மானினேர்விழி மாதராய்வழுதிக்குமா பெருந்தேவிகேள் பானல்வாயொருபாலனீங்கிவனென்று நீபரிவெய்திடே லானைமாமலையாதியாயவிடங்களிற்பலவல்லல்சே ரீனர்கட்கெளியேனலேன்றிருவாலவாயரனிற்கவே என்னுந் திருப்பதிகங் கட்டளையிட்டருளினார். இதன் கண் ஞானசம்பந்தப்பிள்ளையார் மங்கையர்க்கரசியாரை நோக்கிப் பால்மணக்கும் நல்வாயையுடைய பாலன் நானென்று அம்மே! நீவருந்தாதே என்று உரைத்தருளினாரென்பது பெறப்படுதலால், அவர் பாண்டி நாட்டிற்குச்சென்று சமணரொடு வாது செய்தகாலத்திலேயே பாலறாவாயராகவே யிருந்தாரெனல் தெற்றெனவிளங்கும். இங்ஙனம் பிள்ளையார் மதுரை மாநகரி லிருக்கின்ற காலத்தே அவர்க்கு நான்கு அல்லது நாலரைவயது தான் சென்றதென்பதற்கு அவர் தம்மைப் பால்மணக்கும் நல்வாயர் எனக்கூறுதலே சான்று ரைக்கும். இனிப்பெரிய புராணத்தின்கண் ஓதப்பட்டமெய் வரலாறு ஒருசிறிது ஆராய்ந்து செல்வார்க்கும், மதுரை மாநகர்க்குச் செல்லுமுன்னரே பிள்ளையார் தெய்வப்பெற்றி யுடையராய்ச் சிவதலங் கடோறுஞ் சென்று திருப்பதிகங் கட்டளை யிட்டருளிச் செய்த காலம் ஒன்று அல்லது ஒன்றரை வருடமா கலாமென்பது விளங்கும். ஆகவே, பிள்ளையார் சிவபெருமான் றாங்கி வந்த சகளமங்கள அருட்கோலத்தை நேரே கண்டு அக்கோலத்தாற்றாம் அனுக்கிரகிக்கப் பட்டகாலம் தமக்கு மூன்று வயது செல்கின்ற பருவத்திலே யாமென்று பெரிய புராணங்கூறிய உண்மை வரலாறு மேன்மேல் உரங்கொண்டு திகழுமாறுகாண்க. இங்ஙனந் தருக்கநூற் பொரு ளொடுபடுத்து யாம் இனிதெடுத்து விவகரித்த வாத வொழுங்கின் முடி பொருளாய்ப் பிள்ளையார் தாம் மூன்று வயதுசெல்கின்ற அக்காலத்திலேதான் இறைவனும் இறைவியும் ஒருங்கெழுந்து வந்த அருட்கருணைத் திருக்கோலத் தை நேரே கண்டுபின் அவரால் அனுக்கிரகிக்கப்பட்டாரென்பது நன்று பெறப்பட்ட தாகலின், அதுபற்றி யாம் நிறுவப்புகுந்த சகளமங்கள வருட் கோல வியல்பு துர்ப்பலமாய் விடுமென்று நீர் கூறியது போலி யுரையே யாமென்று துணிக. இன்னும் தோடுடையசெவி எனக் கண்ணினாற் காணப்படும் உருவமும், பால்கறந்தூட்டுக என்னுஞ் செவியினாற்கேட்கப்படும் ஓசையும், மூக்கினாற் கவரப்படுந்திவ்விய பான்மணமும், வாயினாற் சுவைக்கப்படும் பாலும், அம்மையப்பரால் தொடப்படும் பரிசமுமுடைய அச்சகளமங்கள அருட்கோலங்கள் மெய்ப்பேறுடையவா மென்பது நன்று நிறுவப்பட்டது. இங்ஙனம் உலகானுபவ வுணரச்சியும் அதனாற்பாவனை செய்யுஞ்சக்தியும் வாய்ப்பப் பெறாத குழந்தைப்பருவத்திலே ஞானசம்பந்தப்பிள்ளையார் மதிமுகிழ் பிணித்த மாதியல் பாகனை நேரேகண்டு அனுக்கிர கிக்கப்பட்டுத் திருப்பதி கங்கட்டளையிட்டருளிய அற்புத நிகழ்ச்சியைத் தேசசரிதவுணர்வு பிறழாது உண்மையான் ஆழ்ந்தாராய்ச்சி செய்யவல்ல எந்த நிரீசுரவாதிதாம் பொய் யென்று மறுக்கமுந்திடுவார்? மக்களுக்கு அமைந்த மூளையின் சக்தியால் அதிவிசித்திர கருமங்களும் எளிதில் நிகழ்த்தப்படும் என்று தமக்குத் தோன்றியவாறெல்லாம் ஆகாயக் கோட்டை கட்டி அதன் கண் நின்று பிறரை அறைகூவி யாரவாரஞ்செய்யும் மனோதத்துவநூலார் தாம் பிள்ளையார் சரிதத்தின்கண் யாதுசொல்லவல்லார்? சரிதவியல்பொடு மாறுகோளுறாது நிகழ்ந்த இவ்வற்புதப்பெற்றியை அற்புதமே ஒன்றில்லை யெனக்கூறும் பிரமசமாசத்தார் தாம் எவ்வாறு கடந்து விவகரிப்பார்? இது நிற்க. இனிப்பிரமசமாசத்தார் உலகவியற்கைக்கு வேறாக அற்புதமென ஒன்று நிகழுமாறில்லை யெனக்கிளந்துரையாடி ஆரவாரஞ்செய்தலின் அவருரைப் பெற்றி ஒரு சிறிது ஆராய்ந்து அது போலியாமாறுகாட்டிப் பின் எடுத்துக் கொண்டு விஷயத்தின் கட்செல்வாம். பிரமசமாசத்தார் கூறுமாறு: வித்தினின்று முளை கிளம்பிப் பின் பலவருடஞ்சென்று மரனாதலும், ஒருதாய்க் கருப்பையுற்கருமுதிர்ந்து பத்து மாதங்கழியப் பிறந்து வளர்தலும், வளர்ந்தன ஒருகாலத்து இறந்தொழிதலும், பிருதிவி அப்புத் தேயுவாயு ஆகாயம் முதலியவுலகியற்பொருள்கள் தத்தம் நிலையிற் பிறழாது நின்று இயங்குதலும் பிறவுமாகிய தொழிற் பாடுக ளெல்லாம் இயல்பாகவருவனவாம்; இவற்றை இங்ஙனம் வகுத்தமைத்து நெறிபிறழாது நடாத்துகின்றவனாகிய முழு முதற்கடவுள் அவற்றினியல்பைப் பிறிதோர் காலத்து மறுத்து மாற்றினா னென்றல் அவனுடைய இறைமைக் குணத்திற்குப் பொருந்தாமை யான், உலகவியல்போடு மாறுபாடு பெரிதுற்று நிகழ்வதா மென்று ஒருசில சமயவாதிகள் கூறும் அற்புதவியல் பொய்யாம் என்பர்.இதனை விசாரிப்பாம். இனித் தேசசரிதவுணர்ச்சிமிகவுடையார்க்கு இங்ஙனம் நடந்த அற்புத நிகழ்ச்சிகளைப்பொய்யென்று மறுத்தலாகாமை யான், இவ்வற்புதங்கட்கு வேறு கதிகற்பியாமல் வாளாதமக்குத் தோன்றியவாறே பொய்யென்று உரைத்தன் முறையாகாது. அல்லதூஉம், அவ்வற்புதங்கடாம் ஒருகாலத்து ஒருதேயத்தில் நிகழ்வதன்றி, எக்காலத்தும் எல்லாத் தேயத்தின்கண்ணும் நிகழா நிற்கின்றன. ஏசுநாதர் ஒரு சில அப்பங்களையும் மீன்களையும் பெருந்திரளான மக்கட்கு விருந்தளித்தாரெனவும், அத்திமரத்தை வற்றச்செய்தாரெனவும், இறந்தவனை எழுப்பினாரெனவும், ஏனைச்சமய நூல்களிலும் காண்கிறோம். இவ்வாரிய கண்டங்களிற் பரஞானமுதிர்ச்சி கைவந்தவராகிய சீவன் முத்தர் பலவேறு அற்புதங்கள் நிகழ்த்தியவாறு போலவே அநாரிய கண்டங்களில் அபரஞானசித்தியுடையரான தீர்க்கதரிசி மார்தோன்றிப் பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்தக்காண்டலால் இவையனைத் திற்கும் ஒருகதிகற்பிக்க அறியாமல் அவை யெல்லாம் பொய்யா மென்றுரைப்பார் கூற்று வெறுங்கூற்றா வதன்றிப்பிறிதென்னை? எம்மறிவுக்குப் பொருந்தவில்லை என்றும் எம்மனுபவத்திற்கு அஃது இயையவில்லை யென்றும் உரைத்து அத்தனை எளிதாக அவற்றைப் பொய்யென்றுரைப்பார் வேறு என் கடவரென்க. இக் காலத்தில், நீராவியந்திரங்களின் சகாயத்தாலும், மின்சார யந்திரங்களின் சகாயத்தாலும் அற்புத கரமான பலபொருள்களும், பலதொழிற்கூறுபாடுகளும் செய்யப் படுதல் காண்கின்றோம். இவையெல்லாம் ஓர் ஐந்நூறு வருடங்கட்கு முன்னிருந்த எம்முதுமக்கள் கனவினுங்கண்டறியார். அவர்காலத்தில் ஒருவர் தோன்றிப் பின்னொரு காலத்தில் நீராவியந்திரங்களும் மின்சாரயந் திரங்களும் ஏற்பட்டு அருமை யான பலகாரியங்கள் செய்யுமென்று உரைப்பின் அதனைக் கேட்ட ஒரு சிலர் அதுபேரற்புதமாயிருக்குமெனவும், வேறு சிலர் அஃது உலகவியற்கைக்கு மாறாகலின் அவ்வாறு நிகழாது எனவும் வேறு சிலர் எந்தக்கருமமுஞ் செய்கின்றவன் ஆற்றல் பற்றி நிகழ்வ தாகலின் பின் உற்பத்தியாகும் அறிவுநுட்பவாற்றல் மிக்குடையரான மக்கள் அது செய்தற்கு முரியராவரெனவும் உரைத்துத் தம் அபிப்பிராயம் மொழிந்திடுவார். இனி இவ்வியந் திரங்களின் சகாயத்தை நேரேயனுபவிக்கும் எமக்கெல்லாம் அங்ஙனங் ஆச்சரியம் நிகழ்த்தலின்றாய்ச் சாதாரணமாயிருக் கின்றது. இவ்வாறே, செம்பைப்பொன்னாக்கும் இரசவாதம் பொய்யா மென்று சொல்லிக்கொண்டிருந்த பௌதிகசாத்திரி களும் இப்போது அமெரிக்கா தேசத்தில் ஒருவர் செம்பைப் பொன்னாகத்திரித்து விற்றலைக்கண்டு அதனையும் உம்மை யாமென நம்புதற்குத்தலைப்பட்டு விட்டார்கள். மந்திர வொலிகட்கு வடிவமுண்டென்று சைசித்தாந்திகள் சொல்வதை மறுத்தோர் சிலர், அமெரிக்காவில் ஓரரிய தத்துவசாத்திரியார் ஒலிநுட்பங்கட்கெல்லாம் வடிவுண்டென்பதைப்பிரத்தியக்கமாக நிரூபணஞ் செய்தலையறிந்து அதனையும் நம்பத்தலைப்பட்டு விட்டார்கள். மின் சாரத்தந்தியின்றி மின்சாரம் இயங்கமாட்டா தென்று சொல்லிக்கொண்டிருந்த ஐரோப்பிய சாத்திரிகள் எல்லாரும், எம்முடைய ஆரியகண்டத்தின் மிக்க நுட்பபுத்தி மானாகிய போஸ் என்னும் வங்காளக்கனவான் புதுவதாகக் கண்டுபிடித்த முறையால் தந்தியின்றியும் மின்சாரமியங்கச் செய்யலாம் என்று தழுவிக் கொண்டார்கள். இவ்வாறே இக்காலத்திற் புத்திநுட்பத்தாற் பேராற்ற லுடையரான நன்மக்கள் பலர் தோன்றி முற்காலத்திற் கனவுகாண்டற்கும் அரியவாய்க் கிடந்த அரும்பேரற்புத காரியங்களை இயற்று கின்றார். இங்ஙனம் இவர் பிரத்தியக்கமாகச் செய்துகாட்டுஞ் செயற்கரிய காரியங்களையெல்லாம் நேரேகண்டு வைத்தும், தம்முடைய அறிவுக்குந் தம்முடைய அனுபவத்திற்கும் பொருந்த வில்லை யென்று அவற்றை யெல்லாம் பொய்யென்றல் பேதைநீரார் செயலேயாமென்று ஒழிக. இனிப்பெரியோர் நிகழ்த்திய அற்புதங்கள் உலக வியற்கைக்கு மாறுபாடுறுதல் இல்லை யென்பதூஉம் ஒரு சிறிது காட்டுவாம். ஞானசம்பந்தப்பிள்ளையார் திருமயிலாப்பூருக்கு எழுந்தருளின காலத்தே, சிவநேசர் என்பார் ஒருவர் வளர்த்த அரியபெண்பாம்புகடித்திறக்க, அப்பெண்ணின் தந்தை யாரானவர் அவ்வுடம்பைத் தீயிலிட்டுக் கொளுத்தி எலும்பு களையெல்லாம் ஒரு குடத்திற்பெய்து பொதிந்து பிள்ளையார் திருமுன்பே கொண்டுவந்து அவர்க்கு அர்ப்பணஞ்செய்து அருமையாக வளர்க்கப்பட்ட பூம்பாவை என்னும் என் மகள் இறந்தாளாயினும் சுவாமிகளுக்கே அர்ப்பணஞ் செய்துவிடல் வேண்டுமென்னுங் கடப்பாட்டால் அவள் எலும்பைத் திருவடிக்கு உறையாக உய்த்தேன்என்று நெஞ்சங்கரைய மொழிதலும், பிள்ளையாரும் அவ்வன்பர்க்கு மிக இரங்கிக் கபாலீசுரர் திருவாலயத்துட் புகுந்து அக்குடத்தையுஞ் சந்நிதியில் இருத்தி, மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக் கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தா னொட்டிட்ட பண்பி னுருத்திரப் பல்கணத்தார்க் கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய் என்னுந் திருப்பதிகங் கட்டளையிட்டருளினார். அருளலும், எலும்பாய்க் கிடந்த அப்பிண்டம் எழுவகைத் தாதுக்களுங்கூடித் திரண்டுருண்டு அழகிய பெண்வடிவாய்க் குடத்தினின்றும் எழுந்தது. இவ்வற்புதம் உலகவியற்கை யோடு இணங்குமாறு காட்டுவாம். அப்பெண்ணின் தேகம் அழிந்தது என்பதனாற் பெறப்பட்ட உண்மையாது? என ஒருங்கி ஆராய லுறுவார்க்கு, எழுவகைத்தாதுக்களாற் கட்டப்பட்டுத் தூல மாகக் காணப்படுந்தேகந் தத்தஞ்சூக்கும அணுரூபங்களாகப் பிரிந்து கட்புலனாகாது ஒழிந்தது எனத்தெளிவாய் விளங்கும். இங்ஙனந் தத்தஞ் சூக்கும அணுக்களாகப் பிரித்தற்கு நிமித்த காரணனான ஒருவனுடைய தொழில் இன்றியமையாததாம். அங்ஙனமே, எழுவகைத் தாதுக்களையும் ஒருங்குகூட்டுதற்கும் நிமித்தகாரணன் ஒருவன் வேண்டப்படும். அந்நிமித்த காரணன் றான் எல்லாம் வல்ல முழுமுதற்பெருங்கடவுளான ஈசுரன் ஒருவனேயாம். எவ்வாறு நிமித்த காரணனான குயவன் தன் சக்திக்கேற்பச் சிறிது சிறிதாக மண்ணைக்கூட்டிக் குடந் திரட்டு கின்றானோ அவ்வாறே எல்லாம்வல்ல முதல்வன் தன் பேராற்றற் கேற்ப அளவிறந்த அண்டங்களையும் அவ்வண்டங் களிற் பலவேறு வகைப்பட்ட ஆன்ம சரீரங்களையும் படைத்திட்டு ஆன்மாக் களுக்குப் போகம் நுகர்விக்கின்றான். இங்ஙனஞ் செய்கின்ற இறைவன் எல்லாந்தன் சுதந்திர முழுமுதலறிவாற்றல் பற்றியே செய்வ தல்லது, எம்மைப்போலப் பரதந்திரவயத்தனாய் நின்று செய்வானல்லன். அவனுடைய கருணைக்கும் செயலுக் கும் அளவில்லை. அவ்வியல்பினனாகிய இறைவன் றிருவருட் சக்தி பதியப்பெற்ற ஞானசம்பந்தப் பிள்ளையார், பூம்பாவை என்னும் பெண்மகள் சரீரம் சூக்கும அணுரூபங்களாகப் பிரிந்தழிய அங்ஙனம் அழிந்தவதனைத் திரும்பவும் முன்னைத் தூலசரீர மாம்படி இறைவன் றிருவருட்சக்தி கொண்டு செய்வித்திட்டார். அற்றேல் ஒருதாய் அகட்டிற் கருவை உற்பத்திசெய்து அதனைச் சிலகாலத்திற் புறம்படுத்தி வளர்த்து அழிக்கின்ற ஈசுரன் றிருவருட்செயல் அச்செயன் முறைதிறம்பி, இடையொரு காலத்து அழிந்ததோர் உருவைப் பெயர்த்தும் படைத்திடுதல் பொருந்துமோவெனின்: அற்றன்று, அழியும் பருவமன்றாகிய காலத்தே அழிந்துபட்ட அவ்விளம் பெண்ணைப் பெயர்த் துந்தந்து கருணை பெய்ததாகலின் அஃது இழுக்கன்றாம். அல்லதூஉம், சுதந்திர அறிவாற்றலுடைய னாகிய முதல்வன் தன்றிருவடிப்பத்திமை பேணும் அன்பர்க் கிரங்கி அவர் வேண்டியவாறே செய்திட்டானாக லானும், மலவயத்தராய்க் கிடந்துழலும் எம்பொருட்டாகவே விதி விலக்குக ளியற்றிய தன்றித் தன்னியல்பில் ஞானசொரூபியாய் விளங்கும் பெருமானுக்கு மங்ஙனம் விதி விலக்கியற்றல் பொருந்தாதாய் முடியுமாதலானும், விதிவிலக்குடைய ரெல்லாம் பரதந்திரராதல் காணக்கிடத்தலால் இறைவனுக்கும் அவையுண் டெனக் கூறுதல் சுதந்தரத்திற்கு இழுக்காமாதலானும் அவ்வாறு கடாதல் இறைவனொரு வனுண்டெனக்கொண்டு வழுத்தம் பிரமசமா சத்தார்க்கு ஒருசிறிதும் இணங்காதென்றொழிக. இதுபற்றி யன்றே விதியும் விலக்குங்கடந்தார்க்கு விதியா லொன்றை விதிப்பாரார் என்னுந் திருவாக்கு எழுந்ததென் றுணர்க. இன்னும், பௌதிக சாத்திரி ஒருவன் தனக்கிருக்கும் ஆற்றல் பற்றித் தன்மாட்டுள்ள கருவி கொண்டு தண்ணீரை இருவேறு சூக்குமவாயுக்களாகப் பிரித்தலும், அங்ஙனம் பிரிந்த வாயுக்களைப் பெயர்த்துந் தான்விரும்பியவாறே தூலவுரு வத்திரவமாகச் செய்தலுங் காண்கின்றோம். இவ்வாறே இறைவனும் அதிசூக்குமவணுக் களாகப்பிரித்த அவ்விளம் பெண்ணின் சரீரத்தைப்பெயர்த்தும் தூலவுருவ முன்னைச் சரீரமாகத்தன் முழுமுதற்றாற்றலாற் செய்திட் டானாகலின் அஃதுலகவியற்கையொடு முரணிற்று என்றல் யாங்ஙனம்? அவ்வவர்செய்யுந் தொழிற்கூறுபாடு களெல்லாம் அவ்வவர் ஆற்றின் மிகுதிபற்றியே சிறப்பனவாம். பௌதிக சாத்திரி தன்னாற்றலுட்பட்ட தொன்றை அவ்வாறு செய்தானாயின், எல்லாம் வல்ல தன்னாற்றலுக்கேற்ப இறைவன் தானும் அவ்விளம்பெண்ணை அங்ஙனம் எழுப்பினான். பிறந்தோரிறத்தலு மிறந்தோர் பிறத்தலும் அறந்தரு சால்பு மறந்தரு துன்பமும் என்றவாறு போலப் பிறத்தலு மிறத்தலு மியற்கையா வாராநின்ற இவ்வுலகத்தே, அவ்விளம் பெண்ணை இறக்கச்செய்தும் பின் குடத்தினின்று பிறக்கச்செய்துந் திருவிளையாடலியற்றிய முதல்வன் உலக வியற்கையொடு முரணிச்செய்தானென்றல் அமையாது. அற்றேல் அஃதாக, யாம் உலகவியற்கையொடு முரண்பாடு டையதென்றல், அவ்விளம் பெண்ணை ஒரு தாய் வயிற்றினின்று பிறப்பியாமல், இடையொருகாலத்துக் குடத்தினின்று எழுப்பியதையே யாகலின் அதனையுணராமல் நீர்மேலே யுரைத்த வாதம் புரைபடுமாம்; பிறவெனின் நன்று சொன்னாய், அதனை யுணராதேம் அல்லேம். அங்ஙனம் உலகவியற்கையொடு பொருந்தச்செய்தல் வேண்டினா னாயின் முதல்வன் அவ்விளம் பெண்ணைத் தாய்க்கருப்பை யுலுதிப்பிக்கக்கடவ னென நீ கூறிது ஒக்கும். இறைவன் அவ்விளம் பெண்ணை வேறு சரீரத்தின்கண் உய்த்தல் வேண்டினானாயின் அவ்வாறே செய்வான். அங்ஙன மின்றிச் சிவநேசரென்னும் அன்பர்க்கு மகளாய்ப்பிறந்த அந்தயாக்கையின் கண்ணே அவ்வுயிரை அவர் வேண்டுகோட்கு இரங்கிப் புகுத்தவேண்டின மையின், அவ்வாறு இடையொரு காலத்துச்சூக்குமமாய்ப்போன அவள் யாக்கை யைத் தூலமாகத் திரும்ப அருள்செய்தா னென்றுணர்க. அவ்வாறு திரும்ப அருள்செயல் வேண்டினா னாயினும் சிவநேசர் மனைவியின் கருப்பையிற்புகுத்தி அவ்வாற்றால் அவளைப் பிறப்பித்தலே முதல்வனுக்கு முறையாமாலெனின் அதனால் அவ்விளம்பெண் மறுபடியுங் கருப்பையிற் கிடந் துழலும் பெருந்துன்பமே போதரலானும், தாய்தந்தை முதலாயி னார்க்கும் அதனாற் பேரிடரே விளையுமாதலானும், மணங் கூடும் மங்கைப் பருவங்காறும் வளர்த்த முன்னைச் சிரமங்க ளெல்லாம் பயனின்றிப்போதலேயன்றிப் பெயர்த்தும் அச் சிரமங்கள் கிளைக்குமாதலானும், பெருங்கருணை யுடைய னாகிய பெருமான் இத்தனை துன்பங்கட்கும் தன்னன்பரை யுள்ளாக்குதல் அவனுக்குக் கருணை யின்றாமென்பது பட்டு இழுக்காய் முடிதலானும் அவ்வாறு வினாதல் பெரிதும் ஏதமாமென்றுமறுக்க. அற்றேலஃதாக, எழுவகைத் தாதுக் களையுங் கொண்டு அங்ஙனம் அவள் சரீரம் படைத்திடுதலே முறையாமன்றி, அவற்றுள் ஒன்றாகிய எலும்பைக்கொண்டு அவள் சரீரத்தைத்திரட்டி எழுவித்தானென்றல் அமையாதா மெனின்; அறியாது கடாயினாய், அண்டங்களெல்லாம் அணுவாக வணுக்களெல்லாம் அண்டங்களாக ஒரு நொடியில் நிருமிக்கவல்லனாகிய இறைவன் மாட்டும் அங்ஙனஞ் செய்கைத் திறங் குறைவுபாடுண்டாகவினாதல் அறியாமை முதிர்ச்சியாவதன்றிப் பிறிதில்லையெனவிடுக்க. அல்லதூஉம், எலும்பை யொழித்து ஒழிந்த தாதுக்களெல்லாந் திரவ நெகிழ்ச்சியும் மென்மையுமுடையனவாகையால் அவை யெல்லாஞ் சூக்குமரூபமாய் நின்றன; அவற்றைத் தூல மாத்திரித்து என்போடு ஒருங்குகூட்டிச் சரீரம்படைத் திட்டானா கலின் ஆண்டும் மாறுபாடில்லை யென்றொழிக. இது நிற்க. இனி, ஞானசம்பந்தப்பிள்ளையார் மூன்றாம் வயதிலேயே பேரறிவினராய் விளங்கினாரெனல் யாங்ஙனம்? அஃதுலக வியற்கை யன்றாலோவெனின்; அறியாது கடாயினாய். போப் முதலான முன்னை ஆங்கிலப்புலவர்களும் பாலப்பருவத்தி லேயே புலமைமிகவுடையராய் விளங்கினாரென்பது எல்லார்க்கும் ஒப்பமுடிந்தமையின் உலகவியற்கை. உலக வியற்கையென நீர் கூறுவன வெல்லாம் அவ்வியாத்தியென்னுங் குற்றமுடையதா யொதுங்குமாறு அறியக்கடவீராக. உலக வியற்கைக்கு நீர் வரைந்து சொல்லும் இலக்கணம் பெரும்பான்மையாய் நிகழ்வ தென்றுரைப்பீராயின் அப்போது அந்த அவ்வியாத்திக்குற்றம் வரமாட்டாது; யாங்கூறும் வாதங்களும் வாய்ப்புடையனவே யாமென்பதூஉம் எளிதிலுமக்கு விளங்கும். இன்னும், உலக வியற்கையென்பது ஈசுரன் ஆன்மாக்களின் பக்குவ முதிர்ச்சிக் கேற்பத் தன்சுதந்திர அறிவாற்றலால் நிகழ்த்துங் கிருத்திய வமைப்பேயாமென யாங்கூறும் இலக்கணத்தை நீர் ஒரு சிறிது உளங்கொளப் பொருத்தியாராய வல்லீராயின், பெரும் பான்மை யென அடைகொடுத்து இடர்ப்பட்டு நீர் இலக்கணங் கூறுதலும் வேண்டா. அல்லது அவ்வடைகொடுத்து இலக்கணஞ் சொலுவீராயினும் அதுவுமெம் வாதத்திற்கு அனுகூலஞ் செய்வதன்றிப் பிரதி கூலஞ்செய்யுமாறில்லை. இவ்வாறன்றி நீர் கூறும் இலக்கணங்களெல்லாம் போலியாய்ச்சான்றோராற் கொள்ளப்படாவென்றொழிக. ஆகவே, ஞானசம்பந்தப் பிள்ளையார் மூன்றாம் வயதிலேபேரறிவினராய் உலகை உய்வித் தது உலகவியற்கையொடு பொருந்துவதேயா மென்றுணர்க. இனி, நிரீசுரவாதிகளுள் ஒருசாரார் ஞானசம்பந்தப் பிள்ளையாரே தாம் நிகழ்த்திய அற்புதங்களைக் குறிப்பிட்டுப் பதிகங்கள் கட்டளையிட்டருளினாரென்பதற்கு அத்தாட்சி என்னையென்று ஆசங்கிப்பாராலெனின் உலகவழக்கும் ஆன்றோராசாரமுமே, அதற்கு உறு சான்றும், பிள்ளையாரோடு ஒருங்கிருந்த அப்பமூர்த்திகளும், அவர்க்குச்சிலகாலம் பின்னிருந்த சுந்தரமூர்த்திகளும் அவர்க்குச் சிலகாலம் பின்னிருந்த நம்பியாண்டார் நம்பிகளும், அவர்க்குச்சிலகாலம் பின்னிருந்த பெரியபுராணமுடைய சேக்கிழாரும் பிள்ளையார் அருமைபெருமைகளை மிகவிரித்துரைக்கும் வழக்கானும் ஆசாரத்தானும் முன்னெடுத்துக்காட்டிய பதிகங்களும் பிறவும் பிள்ளையார் கட்டளையிட்டருளியனவே யாமென்க. அற்றே லஃதாக, அவ்வான்றோர் உரையைத்தான் கொள்ளுதற்கு அத்தாட்சியென்னை யெனின், நன்று வினாயினாய், இத்தனை ஐயுறவுடை யாய்த் தெளியமாட்டாது ஆசங்கை நிகழ்த்து முனக்கு எத்தனைதான் யான் உரைப்பினும் மேன்மேலும் ஆசங்கை நிகழ்த்தி வரம்பிறந்தோடும் அநவத்திதை என்னுந் தோடத்திற்கு இடஞ்செய்வையாகலான் அவ்வாறெல்லாம் உனக்குப் பரிகாரந்தேட ஈண்டு யாஞ் சிரமமெடோம். ஆயினும் உன்னை, இலேசாக அறிவு பிரகாசிக்கும் உயர்நிலத்தின் கண் நிறுத்துதற்குச் சிறியதோர் மார்க்கங்காட்டுதற்பொருட்டு நின்மாட்டு யாமே --------------------------- . நீ குழந்தையாயிருந்த பருவத்திலே நின்தாய் இன்னாளென்று யாங்ஙனம் உணர்ந்தாய்? அவளுரைப்பவன்றோ உணர்ந்தாய். அவள்பாலுண்ணுக என்று சொல்லி உன்னை ஊட்டிய காலத்தினெல்லாம் நீ உணவுகொள்ளும் அப்பொருளை யாங்ஙனம் உணர்ந்தாய்? அவளுரைப்பவே யன்றோ உணர்ந்தாய். இவ்வாறே உலகியற் பொருள்கட் கெல்லாம் பெயரிடுமாறுந், அவற்றைத்தெரிந்து பயன்படுத்து மாறு மெல்லாம் யாங்ஙனம் உணர்ந்தாய்? அவளுரைப்பவே யன்றோ உணர்ந்தாய். அக்காலங் களினெல்லாம் நின் அன்னை சொல்லியவற்றை அவள் சொல்லியவாறே நீ நம்பினதன்றி, அவள்சொன்ன ஒவ்வொன் றனையும் ஆராய்ச்சி செய்து பின் நீ நம்பியதுண்டோ? இல்லையே, இப்போதுதான் என்ன! நீ கலைபயில் கழகஞ்சென்று கல்விபயிலுங் காலங்களினெல்லாம், உபாத்தி யாயர் சொல்லிய விஷயங்களை ஒருங்கே நம்பி, அந்நம்பிக் கையின்மேல் உன் அறிவெனுந் திண்ணிய அரணைக் கட்டுதலன்றி, உபாத்தியாயர் கற்பிக்கும் ஒவ்வொன்றிலும் நீ ஐயங்கொண்டு தெளிந்த துண்டோ? உபாத்தியாயர் ஒரு பொருளுக்கு நீர் என்றும் ஒன்றுக்கு நிலமென்றும் ஒன்றுக்குத் தீ என்றும் பலவாறாகப் பெயரிட்டுக் காட்டினால் அதற்கு ஏன் அப்பெயர் அமைத்தார் என்று நீ ஆராய்ந்ததுண்டோ? அல்லது அவர் சொல்வது பொருத்தந் தானோவென்று நீ சந்தேகம் நிகழப் பெற்றதுண்டோ? இவையெல்லாம் ஒரு புறங்கிடக்க, நீ தினந் தோறும் நண்பர்களோடுகலந்து பழகுங்காலும் பொருளீட்டுங் காலும் அவ்வவர் உரைக்குஞ்சொற்களையும் பொருள்களையும் பொருந்த ஆராய்ச்சிசெய்துதான் நம்புகின்றனையோ? ஒருவர் அமெரிக்காதேயம் ஒன்று இருக்கின்றது என்றுரைத்தால், அப்படி ஒருதேயத்தை நான்கண்டதில்லையால் அதுபொய் யென்பாயோ? ஒருகாலும் உரையாய் இருந்தவாற்றால், உன்னறிவு முதிர்ச்சியும் ஆராய்ச்சித்திறனுந் தொழிலொருமைப் பாடும் பிறவுமெல்லாம் பிறர்சொல்லின்கண் உனக்கு இயல்பாகவெழுந்த நம்பகம்பற்றியே மெய்யாய் நிகழ்வதல்லது வேறு இன்றாம். இனி, அங்ஙனம் உனக்கு நிகழ்வதாகிய நம்பகவுணர்ச்சியும் உனக்கு அதனை வருவிக்கின்றவர் மெய்யுரையியல்புபற்றியே உரம் பெற்றுத் தோன்றும். அவர் தூர தேயத்தில் நிகழ்ந்த சம்பவம் என்றனைத்தாம் நேரே கண்டிருந்ததாக உரைத்திடுவராயின் அச்சம்பவத்தின்கண் நம்பிக்கை மிக உறுதியாக உனக்குத் தோன்றாநிற்கும்; அவர் அதனைத் தாமே நேரிற்காணாமற் கண்டார்ஒருவர் தமக் குரைப்பத் தாங்கேட்டவாறே அதனை உனக்கு. தொல்காப்பிய முழுமுதன்மை சென்ற இரண்டாம். இதழிலே நம் ஆப்தரும் திரிசிரபுரம் செயிண்ட் ஜோசப் கலாசாலைத் தமிழ்ப்பண்டிதருமாகிய ஸ்ரீமான் சவரிராயபிள்ளையவர்கள் தொல்காப்பியத் தமிழ் முழுமுதனூலைக்குறிப்பிட்டு வரைந்த விஷயம் நம்முடைய நண்பரெல்லாருமறிவர் அதன்கட் பிரமதத்திலே பண்டிதர வர்கள் நட்பின் கிழமை பிழையாவாறு நாமெல்லாம் உண்மைப் பொருளறிதலின்கண் வேட்கைமிகவுடையேமாய்த் தருக்கம் நிகழ்த்தித் தெளிவுறுதல் வேண்டுவெனயாப்புறுத்த துறை எமக்குக் கழிபேருவகை ஊட்டாநின்றது. இக்காலைத் தமிழ்ப் புலவர் தமக்குள்ளே ஒருமைப்பாடுடையராய் வாதம் நிகழ்த்தி உண்மையுணர்வு பெறக்காண்டல் அரிதினுமரிதாம். இங்ஙனம் பொறாமையும் முரண்பாடும் பெரிதுடைய இக்காலத்தில், அவ்விழிதகவு களைந்து நியாய நெறிபிறழாது உரிமை பாராட்டியும் இன்சொல் அளாவியும் வாதநிகழ்த்தி மெய்ப் பொருட்பேறு உடையமாதல் வேண்டுமென உறுதியுரை மொழிந்த பண்டிதரவர்கட்கு எழுமையுந்தொடரும் உழுவலன்பு பாராட்டுங் கடப்பாடு பெரிதுடையோம். மக்களாய்ப் பிறந்த ஆன்மாக்கள் ஒவ்வொருவருக்குந் தத்தம் அனுபவமே லீடு பக்குவமுதிர்ச்சி அறிவுநுட்பம் முதலியவற்றிற்கேற்பவே ஆராய்ச்சியுணர்வும் பொருட்பேறும் பிறவா நிற்கும். ஒருவருக் குள்ள அனுபவவியல்பும் பக்குவமுறையும் அறிவு வளர்ச்சியும் ஏனை யொருவர்க்குள்ளவற்றோடு ஒவ்வா. இதனால் அவ்வவருந் தத்தம் அபிப்பிராயத்தின் கண்ணே நிலைபேறு மிகவுடைய ராவர். அங்ஙனம் நிலைபேறு பெரிதுற்று விளங்கும் ஒருவர் அபிப்ராயத்தினை அறக்களைந்து அந்நிலத்தின்கண் தன் அபிப்பிராயத்தினை நாட்டல் வேண்டுமென்னும் விழைவு ஒருவனுக்கு எழுதருமாயின் அஃது அவனறியாமையின் விளைவா வதன்றிப்பிறிதாமாறில்லை. அல்லதூஉம், அங்ஙனஞ்செய்ய முந்துறுவான் றன் அபிப்பிராயத்தை வேறுபடுக்க வேண்டுமென வேறொருவர்வற்புறுத்திடுவாராயின் அவருரைத்த அவ்வுரை கொண்டு தன்னபிப்பிராயத்தைப் புறம்படுக்க ஒருப்படுவானோ? ஆகலான், தம்முள்மறுதலைப் பட்ட அபிப்பிராயங்கள் நிகழ்தல் பற்றி நட்பின் கிழமை யுடையார், அக்கிழமைபோழ்ந்து பகைமை வித்திடுதல் பெரிதும் இரங்கற்பாடு பயப்பதொன்றாம். ஆயினுந் தமக்குஇனியவாகக் காணப்படும் தம்மாராய்ச்சித் திறங்களை உலகின்கட் பிரசித்தஞ் செய்து உலகைப் பயன் படுத்தல் வேண்டுமென்னுங்கருணை யுணர்வு நிகழ்ச்சியுடையார் ஒருவர் அங்ஙனமே அவற்றைப் பிரசித்தஞ்செய்தவழி, அவற்றின் கண் மாறுபாடுடையராய்த் தம்மொடுமலையுமோரை நல்லறிவு கொளுத்தித் திருத்துந் துணையும் பொறைமிகக்கொண்டு அவரைத்தெருட்டற்பாலார். இனித்தம்மொடு மலைந்து வாதநிகழ்த்துவார் உரைக்கும் பொருன்களே மெய்ம்மையுடைய வாயின் ஆண்டவற்றைத்தழீ இக்கொண்டு தம்மபிப்பிராயம் விடுதலும் நடுநிலையாளர்க்கு இன்றியமையாத கடமையாம். இங்ஙனமாகிய அரியகடமை மேற்கொண்டொழுகும் பண்டிதர் சவரிராயரவர்கட்கு வந்தனந்தந்து அவர்கள் விஷயத்தின்மேல் எம்மாராய்ச்சி சென்றவா றுரைப்பாம், இனிப்பண்டிதர் சவரிராயரவர்கள் சித்தாந்ததீபிகையிலே தமிழ்மொழி யியல் விரித்துரைத்த நுட்பவிஷயங்கள் பெரும் பாலான எமக்கு அங்கீகாரமாவனவேயாம். அவற்றுள் ஒருசில விஷயங்களின் மாத்திரம் எமக்கு உடன்பாடு கிடையாது. அவ்வொருசில விஷயங்களுள்ளும் தொல்காப்பியத்தமிழியன் முதனூல் இடையிடையே செருகப்பட்ட சூத்திரங்கள் பல உடையதாம் என்னும் பண்டிதரவர்கள் அபிப்ராயத்தில் முரண்பாடு பெரிதுடையோமாகலின், அங்ஙனம் முரண்படு தற்குரிய காரணங்கள் நிரலே நிறுத்துரைப்ப வெடுத்துக் கொண்டாம். இனிப்பண்டிதர் சவரிராயரவர்கள் அபிப்பிராயத்தை ஆசங்கித்து அவர்கட்கு நாம் விடுத்த ஆப்தலிகிதத்தில் ஒரு நூலிடையிடையே வேறு வேறு விஷயங்களை எழுதிச்செருகும் வழக்கம் பண்டைக்காலத்துத் தமிழ்ப்புலவர் பாலின்றாம். அல்லது அங்ஙனம் நிகழ்ந்ததாயிற் சிந்தாமணியிற் கந்தியார் பாட்டுக்களும் இடையிடையே கலரந்தன வென்றுரைத்த ஆசிரியர் நச்சினார்க்கினியர் தாமுரை கூறிய தொல்காப்பிய முதலான மற்றைநூல்களின்கண்ணும் அதனைத் தெரிந்து கூறிடுவார். அவரேயன்றித் தொல்காப்பியத்திற்கு உரைகண்ட இளம் பூரணர், சேனாவரையர், பேராசிரியர், கல்லாடர் முதலாயினாரும் அங்ஙனம் ஒன்று நிகழ்ந்ததாகக் கூறினாரல்லர். என்று நம் அபிப்பிராயந் தெரிவித்தோம். அவ்வபிப்ரா யத்தின் கண் யாமொழிந்த சிந்தாமணியிற் கந்தியார் பாட்டுக்களும் இடையிடையே கலந்தன என்னும் வாக்கியப்பொருளே பண்டைக்காலத்துத் தமிழ் நூலுரை களிலும் பிறபொருட் கலவையுண்டென்பதை நிறுத்தும் பிரமாணமாம் என்று ஆசங்கை நிகழ்த்தினார்கள். நாமெழுதிய அவ்வாக்கியத்தின் கருத்துறுபொருள் அதுவன்றாம். சிந்தாமணி ஆரியமொழிக் காப்பியவிலக்கிய ------------- வழக்கே முழுவதூஉந் தழீஇ வந்த அகம், புறம், கலி, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம் முதலியன போல்வதன்று. ஆரியமொழிக்கண்விரிந்த வேதோபநிடத நூலுரைகளின்கண் நிகழ்ந்த பிறபொருட்கலவை, அவ்வாரிய மொழிச்சம்பந்தம் பெரிதுற்று விளங்கிய சீவகசிந்தாமணியினும் போந்ததென்றல் ஓர் வியப்பன்று. அற்றேலஃதாக, ஆரிய வேதோபநிடதங்களிற் பிறபொருட்கலவை நிகழ்ந்த தென்றும் தமிழ் நூலுரைகளில் அங்ஙனம் நிகழ்ந்ததில்லையென்றுங்கூறிய தென்னை? ஒருநூல் பிறபொருட்கலவையுறுதல் உலகவியற்கை யாய் நிகழ்வதொன்றாலோவெனின் நன்று சொன்னாய், ஆரிய வேதோபநிடதங்கள் பொருள்வரம்பு அறுத்து அதனைப்பகுத்து ஒன்றோடொன்று இயைபுறுமாறு நெறிப்படுத்துரைத்து அப்பொருளியல் தெளிதரமொழியும் பெற்றிய வல்லவாம். ஆண்டாண்டு உரைக்கப்படும் பொருள்கள் அவ்வவ்விடங்களி லேயே உய்த்துணர்ந்து தெளியப்படுவனவாய் முன்பின்னுள்ள வற்றோடு பொருட்பொருத்தம் பெரிதுறுவனவல்லவாயுள்ளன. இதற்கென்னையோ காரணமெனின் வேறுவேறுகாலங்களில் வேறுவேறாசிரியராற் செய்யப்பட்ட அம்மந்திரவுரைகள் பின்னோர்காலத்து ஒருங்குதொகுக்கப்படுதலும், அங்ஙனம் ஒருங்கு தொகுக்கப்பட்டுழியும் அந்நிலையில் நிலையுதல் பெரிதின்றிப் பின்னுற்பத்தியாம் ஆசிரியர் சிலராற் செய்யப்பட்ட வேறுவேறு மந்திரவுரைகளோடும் ஒருங்குசேர்க்கையுற்றுப் பெருகுதலுமுடையனவாய் அவை ஒருதலையின்றிப் பஃறலைப் பட்டு வந்தனவாமென்பது காண்டலளவையானுங் கருதலளவை யானுந் தெற்றென விளங்குதலின் ஆண்டு அந்நூல் களினெல் லாம் பிறபொருட்கலவை நிகழ்தல் இயற்கையேயாம். மற்றுப் பண்டைக் காலத்துத் தமிழ் நூலுரைகள் பொருள்வரை யறுத்துப் பாகுபாடு நனிவிளங்கமுறைதெரித்துத் தெளித் துரைக்கும் மரபுபிழையா நீர்மையவாமென்பது, தொல் காப்பியம், திருக்குறள், திருக்கோவையார், சிலப்பதிகாரம், மணி மேகலை. கலித்தொகை முதலிய நூலாராய்ச்சி சிறிதுடை யார்க்கும் நன்றுணரக்கிடக்குமாகலின் அவை பிறபொருட் கலவை கொண்டு வடுப்படுதலின்றி உண்மைப் பொருட்பொலிவு பெரிதுடையவாய்ச் சுடர்ந்து விளங்கின. ஆகவே, ஆரியமொழி யில் வேதோப நிடதங்கள் நாளுநாளும் ஆசிரியர் பலராற் பெருக்கமுற்று ஒன்றோடொன்று வேறுபட்ட பொருட் கலவை திமிர்ந்து வந்த அவ்வியல்புபற்றியே அவரவர் தாந்தாம் வேண்டிய வாறெல்லாஞ் சுலோகங்களெழுதி அவற்றிடையே செருகுதற்கு இடம்பெற்றார். தமிழ் நூலுரைகள் அங்ஙனங் காலந்தோறும் வேறுபடும் விரவுப்பொருளுடையவாதலின்றித் தாந்தாமெடுத்துக் கொண்ட பொருளை நிரலே நிறுத்து மலைவின்றி யுரைமுடிவு காட்டுந் தன்மையவாய் நிற்றலின் அவற்றின்கட் பிறர் தாம்வேண்டியவாறே எழுதிச்செருக இடம்பெறாராயினார். இது பற்றியன்றோ, படலங்களையும் இயல்களையும் நிரல்பட வமைத்துச் சரிதவியல் பிறழாது தொகுத்தும் வகுத்தும் முடித்தும் பொருண்மரபு எழிலுறச்செய்த பெரியபுராணத்தின்கட் பிறவிடங்களில் இடைச்செருகுதற்கு அவகாசம்பெறாது, ஆண்டாண்டுப் புனைந்துரைபற்றி யெழுந்த அலங்காரப் பகுதிகளிற் பிற்காலத்து வெள்ளியம்பலத் தம் பிரானென்பார் ஒருவர் தாமும் அலங்காரமான சிலசெய்யுட் களியற்றி அவற்றிடையே செருகுவித்தார்; அங்ஙனஞ்செய்திட்ட அத்தம்பிரான் போலிச் செய்யுட்கடாமும் உலகவியற்கை தழாதுவரூஉம் அபூத அலங்காரவகை மிகக்கொண்டு சொன்னடை வேண்டாச் சொற்கண்மேன் மேற்றலைப்பெய்து செல்லுநெறித்தாய்ப் பொருளமைப்பு அறிவுடையோரால் நகுதற்கேதுவான புன்மையுற்று நிற்கப் புரைபடுகின்றன வாகலின், உலகவியற்கையொடு பொருந்துந் தன்மைப் புனைவுமிக் கொண்டு சொன்னடை வேண்டுஞ் சொற்கள் வேண்டுமிடங்களிலியைந்து எழிலூறியின்பம்பயப்பப் பொருள மைப்பு ஆராயுந்தோறும் ஆழ்ந்தாழ்ந்து செல்லச் சுவை மிகத்தந்துசெல்லும் பெற்றியவாய்த் திகழும் ஆசிரியர் சேக்கிழார் திருவாக்கான அலங்காரச் செய்யுட்களோடு வேறுபாடுற்று நவமணித் தொகுதியினிடை யிடையே கண்டெடுத்தெறியப்படும் பரல் போலப் பிற்காலத் தறிவுடையோரால் வேறு பிரித்திடப்பட்டன. எனவே, பிறபொருள் விராய்வருதற்கு இடம் பெறு நூலுரைகளெல்லாம் தம்முட்பொருட்சம்பந்த நெறிப்பாடின்றி வரும் ஆரியமொழி நூலுரைகளேயாமென்பதூஉம், பொருட்சம்பந்த நெறிப்பாடு பெரிதுடைய பழந்தமிழ் நூலுரைகள் அங்ஙனம் இடம்பெற வேண்டும் என்பதும் இனிது விளங்கும். இனித் தொல்காப்பிய விலக்கணமோ ஆண்டாண்டுப் புனைந்துரைவகை பற்றி யெழூஉஞ்செய்யுட்டொகுதி போலாது, சொற்களையும் பொருள் களையுங்கிடந் தவாறெடுத்துக் கொண்டு நெறிபிறழாது இலக்கணங் கூறுவதாகலின் அதன்கட் பிறர் தமக்குவேண்டியவாறே சூத்திரங்களெழுதி யிடை யிடையே செருகுதற்கு ஒருசிறிதும் அவகாசம் பெற மாட்டாரென்பது தேற்றமாம். அல்லது அவ்வாறு நிகழ்ந்த தென்றே கோடுமாயினும், அருகிய வழக்காய் யாண்டேனும் ஓரிடத்தே பயிலப் பெறுவதாகிய நூல்போறலின்றிப் பெருகிய வழக்காய்ச் செந்தமிழ்த்தனி முதன்மொழியாராயுந் தென்னாடு முழுவதூஉங் குறிக்கொண்டு பயிலப்பெறும் மாட்சி பெரிதுடைய தொல் காப்பியத்தின்கண் ஆசிரியராற் செய்யப் பட்ட சூத்திரங்களிவை, ஏனையோராற் செய்து சேர்க்கப்பட்ட சூத்திரங்களிவை யென்னும்பாகுபாடு பண்டைக்காலத்தே ஆராய்ச்சிப் பட்டிருக்கும். என்னை? பிரசித்தியாகிய ஒரு பொருட்கண்ணுள்ள குறைபாடு யாண்டும்பரந்து எல்லார்க்கும் புலனாமாதலினென்க. இவ்வுலகியல் பற்றியன்றே ஆசிரியர் திருவள்ளுவநாயனாரும் குடிப்பிறந்தார் கண்விளங்குங் குற்றம் விசும்பி, மதிக்கண் மறுப்போலுயர்ந்து என்றோ துவாராயினதூஉமென்க. இடைச்சங்கத்தார்க்குங் கடைச் சங்கத்தார்க்கு நூலாயிற்றுத் தொல்காப்பியமென்று களவியலு ரைப்பாயிரங் கூறுதலானும், இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர், கல்லாடர், நச்சினார்க்கினியரை யுள்ளிட்ட ஆசிரியன் மாரெல் லாரும் அத்துணைச் சிறப்புடையதாதல் பற்றியே யதற்குரை கூறப் புகுந்தாரல்லது பிறிதின்மையானும், நுண்மாணுழை புலமுடையரான அவ்வாசிரியரெல்லாம் அதன்கண் இடைச் செருகு தனிகழ்ந்ததெனயாண்டு முரை யாமையானும், அன்றி அஃதுண் டெனக்கொள்ளினுஞ் செந்தமிழுலகியல் வழக் கோடஃது ஒவ்வாமையானும் அவ்வாறு கூறுதல் அடாதென் றொழிக. இங்ஙனமாகலின் சிந்தாமணியிற் கந்தியார் பாட்டுக்களும் இடையிடையே கலந்தன என்னும் வாக்கியப் பொருளாற் பண்டைக்காலத்தமிழ் நூலுரைகளெல் லாவற்றின் கண்ணும் பிறபொருட்கலவை யுண்டென்னுங் கருத்துப் பெறப்படு மாறில்லை. அக்கருத்து எமக்கு உடன் பாடாவதூஉ மன்று இது கிடக்க. இனிப்பண்டிதர் சவரிராயரவர்கள், தொல்காப்பியம் ஆசிரியராற் செய்யப் பட்டகாலத்து அறுநூறு சூத்திர முடைதாயிருந்ததெனவும், அதனை அரங்கு கொண்டிருந்து அதங்கோட்டாசான் நிகழ்த்திய கடாக்களுக்கு விடையுள்ள றுத்து அரில்தபத்தெரிக்கின்றுழித் தெய்வப் புலமைத் தொல் காப்பியனார் இடையிடையே வேண்டுமிடங்களிற் செய்து சேர்த்த சூத்திரங்களானே அது முன்னையினும் மும்மடங்கு பெருகியதெனவும் வாராநிற்கும் ஐதிகத்தானே அந்நூல் முன்னிலையிற் பின்னிலைபெருக்கமுற்றதென்பது உய்த் துணர்ந்து கொள்ளற் பாற்று என்று உரைத்தார்கள். அங்ஙனம் உரைத்துழி அவ்வைதிகத் தினுண்மை எவ்வாறாயினுமாகுக என்று அதன் கட்டமக்கு உடம்பாடு மறுத்திட்டார்கள். இனிப் பண்டிதரவர்கள் தொல்காப்பியம் முன்னிலையிற் பின்னிலை பெருகியது என்னுந்தமது மேற்கோளை வலியுறுத்தற்பொருட்டு எடுத்துக் கொண்ட ஐதிக வேதுவின் சொருபவுண்மை தமக்கு இனிது விளங்காமையின், அவ்வேதுசொருபமுண்மை யறியப் படாத குற்றத்தால் ஏதுப்போலியாய்த் தாமெடுத்துக்கொண்ட மேற்கோளை வலியுறுத்தமாட்டாது வேறோராற்றாற் குற்றப் படும் போலியே துக்கூறி அதனால் உய்த்துணர்வாம் உய்த் துணர்வாம் என்று நெகிழ்ந்துபோதல் ஐரோப்பிய பண்டிதர்கள் பலர்க்கு இயற்கையாவதொன்றாம். அதற்கு அவர்கள் பாஷையும் இடந்தந்து நிற்கின்றது. அவர்களுரைக்கும் வாதங்கள் பெரும்பாலன தமிழ்பாஷையிலே எழுதப்படுமாயின் அவை துர்ப்பலமுடையவாமாறு நன்று விளங்கும். இங்ஙனமாக ஆப்தர் சவரிராயரவர்களும் அவ்வைரோப்பிய பண்டிதர் நெறிபற்றி அவ்வாறு வழூஉப்பட மொழிந்தார்கள். வாதம் நிகழ்த்தி யுண்மைப்பொருள் புலப்படுக்கவேண்டுமென்னும் விழைவுடை யாரெல்லார்க்கும் தாங்கூறும் ஏதுவை வலியுறுத்தி அவ்வாற்றால் தாமெடுத்துக்கொண்ட மேற்கோளைச் சாதித்தல் இன்றியமை யாத கடமையாம். ஈண்டுக்கூறிய தருக்கத்தில் நாம் நிரம்பக் கடுமையாகச் செல்கின்றோமென்று நம்மரிய ஆப்தர்களான சவரிராயரவர்கட்குத் தோன்றுமானால், அவர்கள தனைப் பொறுக்கும்படி வேண்டுகின்றோம். இனி அவர்களெடுத்துக்காட்டிய ஐதீகந் தானும் ஆகாயத்திலெழுதிய சித்திரபடாம்போல வெறும்போலியே யாமாறு ஒரு சிறிது காட்டுதும். அவ்வைதிகம், பண்டிதரவர்கள் சொல்லக்கேட்டதேயன்றி வேறியாரு முரைப்பக் கேட்டிலேம். யாந்தாமறியேமாயினும் பிரபலவித்துவான்களா யுள்ளோரறிவர் என்னுந் துணிவாலவரையெல்லாம் யான் வினாவியபோது யாமறியேம், இவ்வைதிகம் ஏதோபுதுவதாகத் தோன்றுகின்றது என்று அவரெல்லாந் தங்கருத்துண்மை அறிவித்துவிட்டார்கள். எமக்கு இலக்கண இலக்கிய நூலறிவு கொளுத்திப் பொறைக் கோ ருறையுளாய்த் திருவாரூரிலிப்போது அமர்ந்திருக்கும் எம்மாசிரியர் ஸ்ரீமத் வெ. நாராயண சாமிப் பிள்ளையவர்களும் இங்ஙனம் ஓரைதிகமுண்டெனக் கூறினாரல்லர். இனி, ஆசிரியர் நச்சினார்க்கினியரை யுள்ளிட்ட தொல்லாசிரியர் தாமும் இங்ஙனமோரை திகமுண்டென யாண்டுமுரைப்பக் கண்டிலம். இவ்வாறு சான்றோர் பரம்பரை வழக்கானாதல் தொல்லா சிரியர் உரைவழக்கானாதல் புலனெறி வழக்கானாதல் பெறப் படாமல், யாரோ சிலர் பொய்யாகக்கட்டி வழங்கிய புது வழக்காய் அருகிவரும் ஐதிகமொன்றானே, ஆன்றோர் வழக்கோ டொத்துவருந் தொல்காப்பிய முழு முதனூலின்கட் கலவை யுண்டென்றல் ஒரு சிறிதும் பொருந்தாதா மென்று மறுக்க, சரிதமுறைபிறழாது நிறுவவல்ல ஏதுக்கள் பரவை வழக்காய் ஆன்றோ ராசாரமுடையனவாய் வருதல் வேண்டு மென்பது ஒரு தலையாய் எல்லார்க்கும் ஒப்பமுடிந்தது. இம் முறை, பிரபல ஆங்கிலதத்துவசாத்திரியராகிய லாக் என்பவர் மக்களுணர் வுரை என்னுந் தம் நூலுள் விரித்தெடுத்து விளக்கு மாற்றானுங் காண்க. இதனானே நம் ஆப்தரவர்களெடுத்துக் காட்டிய ஐதிகவுரைக் காரணம் பொருந்தாதென்பது காட்டினாம். இனிப்பண்டிதரவர்கள் இறையனாரகப்பொருளுரை வகைபற்றி ஆசங்கை நிகழ்த்திய பகுதிநுட்ப முடையதாகையால் அதனை முறையே யாய்ந்துசெல்வாம். இறையனாரகப் பொருளு ரைக்குப் பாயிரஞ்செய்தார் தெய்வப்புலமை நக்கீரனார் பரம்பரையில்வந்த முசிறியாசிரியர் நீலகண்டனாரேயாம் என்று நம் ஆப்தரவர்கள் மொழிந்தவுரை பொருத்தமிகவுடைத்தாம். அதன்கண் எமக்கு நெடுநாண் முன்னரே ஆராய்ச்சி நிகழ்ந்து பாயிரவுரை நக்கீரனாரிய ற்றியதன்றென்னுந் துணிபுகொண்டு போதருகின்றோம்; என்னை? பொருளதிகார வுணர்ச்சியின்றிக் கவன்றிருந்த அக்காலைச்சங்கப்புலவருள் ஒருவரான நக்கீரனார் தாமே பாயிரவுரையுங் கூறினாராயின் ஆண்டுத் தம்மை யுள்ளிட்ட அப்புலவரெல்லார்க்கும் பொருளதிகார வுணர்ச்சி யின் றென்பது வெளிப்படையாற் கூறிவைத்துப் பின்சூத்திர வுரைகடோறும் பொருளதிகார நுண்பொரு ளெல்லாம் ஒருங்கெடுத்துத் தருக்கசெடிலமாக நிறுவி விளக்கலமை யாமையானும், தம்மெட்டாவது பரம்பரையில் வருவாராகிய முசிறியாசிரியர் நீலகண்டனாரை முன்மொழிந்து கோடல் சாலாமையானும், தம்மை யுள்ளிட்டார் கடைச் சங்கமிருந்து தமிழாராய்ந்தது ஆயிரத்தெண்ணுற்றைம் பதிற்றியாண்டென்ப: அவர்களைச்சங்கமிரீஇயினார் கடல் கொள்ளப்பட்டுப் போந்திருந்த முடத்திருமாறன் முதலாக உக்கிரப்பெருவழுதி யீறாக நாற்பத்தொன்பதின்மரென்ப என்று அதன் முதலுமீறும் ஒருங்கறிந்துரைத்தல் சங்கம் முடிவெய்திய பிற்காலத்திருந்தார்க் கன்றி அக்காலத்திருந்தார்க்கு ஆகாமையானு மென்பது. அல்லதூஉம், ஒரு நூற்குரையெழுதிய தாமே அந்நூலுரைக்குப் பாயிரங் கூறுதல் தம்மைப் புகழ்ந்ததாய் முடியுமாதலானும் அவ்வாறன்றி அந்நூலன்றி நூலுக்குப் பாயிரவுரை கூறினாரென் பார்க்குக் கணக்காயனார்மகனார் நக்கீரர் உரைத்தவிடத்துப் பதந்தொறுங் கண்ணீர் வார்ந்து மெய்ம்மயிர் சிலிர்ப்ப இருந்தான். இருப்ப ஆர்ப்பெடுத்து மெய்யுரைபெற்றாம் இந்நூற்கென்றார் எனவும் அதனால் உப்பூரிகுடிகிழார் மகனாவான் உருத்திர சருமனாவான் செய்தது இந்நூற்குரை யென்பாருமுளர். அவர் செய்திலர், மெய்யுரை கேட்டாரென்க. மதுரை ஆலவாயிற் பெருமானடி களாற் செய்யப்பட்ட நூற்கு நக்கீரனாரால் உரைகண்டு குமாரசு வாமியாற் கேட்கப்பட்ட தென்க எனவுங் கூறித்தம்மைப் புகழ்ந் தெடுத்தல் என்னையெனக் கடாயினார்க்கு இறுக்கலாகா மையானும், தாமெழுதிய நூலுரையைத் தாமே புகழ்ந்து பாயிரமுரைத்தல் வட நூலாரிடைக் காணப்படுதல் பற்றி அதனைத் தமிழ் நூலார் மேலும் ஏற்றிவிடுதல் பொருந்தா தென்பதற்குத் தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினுந், தான்றற்புகழ்தறகு தியன்றே என்னும் விதியே கரிபோக்கு மாதலானும் பாயிரவுரை நக்கீரனார் உரைத்ததன்றென்று துணிக. நக்கீரனாருரை கேட்டுவந்த பரம்பரையிலுள்ளாரான நீலகண்டனார்தாமே யவ்வுரைக்குப் புறமாகப் பாயிரவுரை யெழுதினாரென்க. என்னை? நூலுரைத்தபின்றை அதன் வரலாறுதெரிப்பப் பாயிரவுரை செயப்படுதலே தொல் லாசிரியர்மரபாதலானும், இதனுட்ப மெல்லாம் ஒருங்குணர்ந்த ஆசிரியர் சிவஞான யோகிகளும் சூறாவளியிற் பாயிரம் நூல்செய்த பின்னர்ச் செயப்படுவ தாகலின் என்று வரம்புகோலி யுரைத்தலானு மென்பது. இங்ஙனம், இறையனார் களவிய லுரைகண்டார் தெய்வப்புலமை நக்கீரனாரென்பதூஉம், அந்நூலுரைவரலாறு தெரிப்பப் பாயிரவுரைகண்டார் அவர் பரம்பரையில்வந்த நீல கண்டனா ரென்பதூஉம் நன்குணர்ந் தன்றே ஆசிரியர் சிவஞானயோகிகள் கேட்போன் யாப்பு என்பவற்றிற்கு நீலகண்டனாருரைத்த உரைப் பொருளை மறுத்துத் தொல் காப்பியச் சூத்திர விருத்தியிற் சிறந்ததோர் பொருள்காட்டித் தம்முரை நிறுத்துவா ராயினதூஉமென்க. இப்பெற்றிதேறாத ஸ்ரீமத்சபாபதி நாவலரவர்கள் பாயிரவுரை நக்கீரனா ருரைத்ததே யாமென மருண்டு அதனை அவ்வாறே பிறழக் கொண்டு நக்கீரனார் தெய்வப்பெற்றியுடையராகாத காலத்தே களவியலுக்கு உரைகண்டாராகலின், அஃதுணர்ந்து ஆசிரியர் சிவஞான யோகிகள் அவ்வுரைப் பொய்ம்மைகாட்டி மறுத்திட்டாரெனத் திராவிடப்பிரகாசியையில் தெய்வப்புலமை நக்கீரனார்க்கு அளவிறந்த குற்றங்கூறிப் பெரிதுமிடர்ப்படு வாராயினார். ஆசிரியர் சிவஞானயோகிகள், நாவலரவர்கள் கூறுமாறு வேதவழக்கும் ஆன்றோர் ஆசாரவரம்புங் கடந்து தெய்வப்பெற்றியுடையரான நக்கீரனாருரையைப் பழித்துப் பெரியதோர் அபசாரம்புரியும் நீரரல்லர். அப்பெரியார் களவியல் பாயிரவுரை நக்கீரனாருரைத்ததன்றென்னுந் துணிபுபற்றியே அதனை மறுக்க முந்துற்றார். இவ்வாறே ஸ்ரீமத்சபாபதி நாவலரவர்கள் ஒரோவிடங்களில் தொல்லாசிரியர் மெய்ம்மை வரம்பழித்துரைத்த வுரைகளையெல்லாம் ஆசங்கித் தெடுத்துக் கொண்டு நக்கீரனார் தெய்வப்புலமை மாட்சி என்னும் விஷயத்தின் கீழ் நின்று விரித்து விளக்குவாம் அங்ஙனஞ் செய்வுழியெல்லாம் நாவலரவர்களிடத்து உண்மை நட்புரிமை பாராட்டியே செய்வாமல்லது, அவர்களிடத்துப் பகைமை, அழுக்காறுமுதலிய இழிகுணவயத்தாற் செய்வோமல்லோம் என்பது கருத்தடைக்கும்படி அவர்களையும் பிறரையும் வேண்டு கின்றோம். இது நிற்க. ஈண்டுவிரித்த காரணங்கள்பற்றியே, பண்டிதர்சவரிராயரவர்கள் களவியல் பாயிரவுரைகூறினார். முசிறியாசிரியர் நீலகண்டனாரென்னுங் கருத்தின்கண் யாமொரு மைப்பாடு பெரிதுடையமாயினோம். இது கண்டு கூறிய நம் ஆப்தரவர்கள் நுட்ப மதியை மிக வியக்கின்றோம். இதுகிடக்க. இனி, இதன்மேற் பண்டிதரவர்கள் களவியல் பாயிர வுரையில் தொல்காப்பியப்பொருளதிகாரத்தைக் குறித்து ஒன்றும் பேசப்படாமையால் கடைச்சங்கத் தொடக்கத்தில் அவர் ஆராய்ச்சிக்குத் தொல்காப்பியங் கிடைத்திலது என்று யூகஞ் செய்தார்கள். அற்றேல், ஆசிரியர் நக்கீரனார் தம்முரை யிலாங்காங்குத் தொல்காப்பியப் பொருளதிகாரச் சூத்திரங்கள் மேற்கோள்காட்டி அப்பொருளதிகார நுட்பமெல்லாந் தாம் விரிவாய் மொழிந்து தம்முரை விழுப்பந்தோற்றுவிக்கக் காண்டலின், அவராராய்ச்சிக்குத் தொல்காப்பியம் அகப்படிலது என்றுரைத்தல் ஒரு சிறிதும் பொருந்தாது. அற்றன்று, அக் காலத்துவழங்கிய பொருளதிகாரச்சூத்திரங்கள் ஒரோ வொன்றைத் தம்முரையில் மேற்கோளாக மொழிந்து உரை யுரைத்தாரென லாகாதோவெனின் நன்றுசொன்னாய். பொரு ளதிகாரம் வல்லராகாத அவர் ஒரோவொரு சூத்திரங்கள் பற்றியே அப்பொருளதிகார நுண்பொருளெல்லாம் ஒருங் குணர்ந்து மிகச் சுருங்கிய அவ்விறையனார் களவியலுக்கு மிகவிரிந்த விழுமிய நல்லுரை கண்டருளினாரென்றல் உலக வழக்கில் தமிழ் கல்விவளஞ்சுருங்கிய தன்றெனலாம். சிவமயம் திருச்சிற்றம்பலம் ஸ்ரீஜ்ஞாநசம்பந்தகுருப்யோநம வாழ்த்து வாழ்க வந்தணர் வானவ ரானினம் வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக ஆழ்க தீயதெ லாமரனாமமே சூழ்க வையக முந்துயர் தீர்கவே ஞானசாகரம் 8. கேனோப நிடதக் கருத்துப்பொருள் விளக்கம் பிருகதாரணியகோபநிடத முகவுரையிலே சங்கராசிரியர் உபநிடதம் என்னுஞ்சொல்லை உபநி சத்என்று பகுத்துக் கொண்டு, அவற்றுள் உபநிஎன்பதில் உப என்பது அணிமை எனவும், நி என்பது நிச்சயம் எனவும் பொருடருதலானும், சத் என்பது அழி போ எனப்பொருடருதலானும் அவ்வுப நிடதம் என்னுஞ் சொல்லுக்குத் திரண்டபொருள் இவ்வுலகி னையும் அதன் கண்வரும் அறியாமையினையுங் கெடுத்துப் பிரமத்தை அணுகுதல் என்பதேயாம் என்று உரைத்திட்டார். எனவே அறியாமை நீக்கி உலகைப் பற்றறத் துறந்து பிரமத்தை அணுகுதற்கு ஏதுவாகிய ஞானத்தைப்போதிப்பது உபநிடதம் என்று அவ்வாறு கோடலுமாம். இது நிற்க. இனி இதன் முதற்கண்டத்தில் சீடன் வினவும் எவராற் கட்டளை யிடப்பட்டும் என்னுஞ் சுலோகத்திலே பிரதம பிராணன் என்றது முதன்முதல் அறிபொருளான ஆன்மா வுக்குச் சரீரத்தைத் தந்தருளி முதல்வன் சிருட்டி தொடங்கிய பண்டைக் காலத்தே தோன்றிய பிராணனேயாம். பிராண னென்றது பிராணவாயுவையன்று; உயிர் உடம்பகத்தே நிலைபெற்று இயங்குதற்கு ஏதுவாகிய தத்துவமேயாம். மனம், பிராணன், சொல், கண், காது முதலிய கருவி களெல்லாம் அறிவில்லாத சடப்பொருள்கள். சடப்பெருள் களெல்லாம் பிறபொருள்களால் இயக்கப்பட்டாலல்லது தாமே இயங்கமாட்டா. அறிவுடைய சித்துப்பொருள்கள் தாமே இயங்குதலும் பிறவற்றை இயக்குதலுமாகிய இயல்பினை யுடையவாம். இந்த நியதிப்பாட்டாலே யாண்டேனும் ஒரு சடப்பொருள் தானே இயங்கக்காண்டுமாயின், அதனை யியங்கச் செய்யும் மற்றைப்பொருள் நமது கண்ணுக்குப் புலனாயிற்றில்லை என்பது யார்க்கும் விளங்கும். அங்ஙனம் விளங்காதாயினும் அதன் இருப்பை நிராகரித்தற்கு யாரும் ஒருப்படமாட்டார். அப்பொருள் யாதென்று ஆராயமுயல்வார். அங்ஙனமே, ஒருவன் சரீரத்தின் கண்ணே மனம் முதலிய கருவிகள் இயங்கக்காண்டலால் அவற்றை யியக்குவது யாது என்று ஆராயலுறும் வேட்கை யுடையனான சீடன் அவ்வாறு வினாயினான். நன்று சொன்னீர், ஒரு சரீரத்தின் கண்ணே சோதனப்பொருளான ஆன்மாவிருத்தல் சிறுமகார்க்கும் அறியக்கிடந்ததொன்றாகலின், அதுவே அக்கருவிகளை இயக்குகின்றது என்பது அறிவோம், அதனின் வேறாக ஒன்றுள்ளதுபோல் வினாதல் பயனின்றாதலேயன்றி அறியாமையுமாமெனின் உயிரறிவு விளங்காது அயர்ந்து உறங்குங்காலத்தே பிராணன் முதலிய சில அகக்கருவிகள் இயங்கக்காண்டலானும், உயிரறிவு விளங்கி நிற்குங்காலத்தும் அவ்வறிவு அந்நின்றவாறேதான் நினைந்தாங்கு விளங்கி நில்லாது அறிவுமயங்கி உறங்குதலானும் அவ்வுயிரே அக்கருவிகளை இயக்குமென்பது ஒருவாற்றானும் பெறப்படுமாறில்லை. அதுவன்றியும், பிராணன் முதலிய கருவிகளோடு உடங்கு இயைந்து நிற்பினல்லது அறிவு விளங்காத உயிர் அக்கருவிகளை அறிந்து இயக்குமென்பது ஒரு சிறிதும் பொருந்தாது. இங்ஙனம் அக்கருவிகள் தாமே யியங்காமையானும், அவற்றை யியக்குவது ஆன்மாவேயாமென்பது பொருந்தாமையானும் இவை யிரண்டு மல்லா முதல்வனே அவற்றை யியக்குவானென்பது பொதுவகை யானுணர்ந்து அம்முதல்வனியல்பு மேலும் அறிந்து கொள்ளும் பொருட்டுச்சீடன் அவ்வாறு வினாயினா னாகலின் அது வழுவாதல் யாண்டையதென்றொழிக. இவ்வாறு சீடன் முதல்வனிருப்பை ஒருவாற்றானுணர்ந்து வினாயினா னென்று கொள்ளாக்கால் அவன் வினாவிற்போந்த எந்தக் கடவுள் கண்ணையுங் காதையுந் தத்தம் நிலையில் நிறுத்து கின்றார்? என்னும் வாக்கியம் பொருள்படுமாறில்லை. இனிப் பின்வருஞ் சுலோகங்களெல்லாஞ் சீடனுக்கு அக்கடவுட்பொருள் மெய்ம்மை யுணர்த்தி ஆசிரியன் விடையாய் எழுந்தன. அவற்றுள், செவியுனுட்செவியாயும் என்னுஞ் சுலோகம் அவனை விழியும் வாக்கு மனமுஞ்சென்று அணுகமாட்டா என்றற்றொடக்கத்தன வாகவருஞ் சுலோகப்பொருள் வலியுறுத்தி யவற்றிற்கு ஓர் ஏதுவாய் நிலை பெறுகின்றது. விழி, வாக்கு, மனம் முதலிய கருவிகள் முதல்வனை அணுக மாட்டாமைக்கு ஏது என்னை யென்றாராயும் வழி, அவ்விழி வாக்கு முதலிய கருவிகளுக்கு விடயமாகும் உலகியற்புறப் பொருள்போலாது அவ்விழி முதலியவற்றின்கண் உண்ணின்று விளங்குவான் முதல்வ னாகலின் அவை அவனை அறியமாட்டா வென்பதுபற்றி அவனை விழியும் வாக்கும் மனமுஞ்சென்று அணுகமாட்டா என்று அவ்வாறு தெளியவெடுத்தோதினார். புறப்பொருளைக் காணுங்கண் தன்னையுங் காணாது தன் உண்ணின்ற ஒளியையுங் காணாது; புறப்பொருளை யறியும் மனவுணர்வு தன்னையு முணராது தன் உண்ணின்ற ஆன்ம வுணர்வையு முணராது. எனவே செவியினுட் செவியாயும் உள்ளத்தினுள் உள்ள மாயும் சொல்லினுட் சொல்லாயும் இருக்கும் முதல்வனை அவைகண்டுணர்தல் செல்லாதென்பது பெற்றாம். இக்கருத்தே பற்றி அறிய விரண்டல்லனாங்கறிவு தன்னா, லறியப் படானறிவினுள்ளான் என்னுஞ் சிவஞான போதத்திரு வாக்கும் எழுந்ததென்றுணர்க. இவ்வாறே அவன் வாக்கி னாலும் மனத்தினாலும் கண்ணினாலும் பெறப்படு வானல்லன் எனக் கடோபநிடதத்தினும் கண்ணினாலும் வாக்கினாலும் மற்றைப் பொறிகளாலுந் தவத்தாலுங் கர்மத் தாலும் அவன் அறியப்படுவானல்லன் என முண்டகோப நிடதத்தினுங் கூறப்பட்டன. இது நிற்க. இனி ஐம்பொறிக்கு விடமாகுந் தூலப்பிரபஞ்சம் போல்வதன்றிச் சூக்குமமாய்த் தூலப்பிரபஞ்சத்திற்குங் காரண மாயிருக்கும் மாயை முதலிய தத்துவங்களே மனம் முதலிய அக்கருவிகளை யியக்குமென்று கொள்ளாமோவெனின்; கொள்ளாம். சித்துப்பொருளின் சம்பந்தமின்றிச் சடப்பொரு ளொன்றையொன்று இயக்கும் என்பது காண்டலளவை விரோதமாகலானும், மாயை முதலான எல்லாத் தத்துவங்களையு மியக்குவான் முதல்வனே யென்பார் அறியப் படுபொருளின் அது வேறாக வுள்ளது; அற்றேல், அறியப்படாத பொருளே யதுவாமென நீயுரைப்பின், அஃது அறியப்படாத பொருளையுங் கடந்து செல்வது என்று கூறினார். இனித் தூலசூக்குமமாய்க்கிடக்கும் எல்லாத் தத்துவங்களை யுந் தனக்குப் பல்வேறு வகைப்பட்ட சரீரங்களாகக் கொண்டு அவற்றுள் அந்த ரான்மாவாய் விளங்கும் பிரமப் பொருளின் பெற்றி தேறாது, அச்சரீரங்களையே பிரமமாகத் துணிந்து வழிபடும் ஒரு சாரார் மதம்பற்றி ஆசங்கித்துச் சொல்லினால் வெளிப்படுவதன்றாய்ச் சொல்லைத் தான் வெளிப்படுத்துகின்ற அந்தப் பொருளைப் பிரமமென்று நினைந்திடுக, இதுவென்று நினைந்து உபாசிக்கப்படும் அதனை அவ்வாறு நினையற்கஎன்று வலியுறுத்து ஓதினார். என்னை? இது இது என்று சுட்டப்படுகின்ற பொருள்களெல்லாம் ஐம்பொறிக்கு விடயமாதன்மேலும் வரையறைப்படுங்கண்டப் பொருள்களேயாம். சருவ வியாபகனாய் விளங்கும் ஈசுரனை அங்ஙனம் இதுஇதுவென்று கிளந்து சுட்டுதல் அமையா மையானும், செய்வானுக்குஞ் செயப்படு பொருளுக்குமுள்ள பேதமுணராது அவை யிரண் டனையும் ஒன்றென்று கோடல் இழுக்காமாதலானுமென்பது. அற்றேல், கல்லினாலுஞ் செம்பி னாலும் உருவங்கள் தாபித்துக்கொண்டு அவற்றின்கண் வழிபாடு இயற்றுதல் யாங்ஙனமெனின்; ஈசுரன் ஒரோர் அன்பர்க்கு அனுக்கிரகிக்கும் பொருட்டுத் தாங்கிவந்த சகளமங்கள அருட்கருணைத் திருவுருவ வடையாளமாய்ச் செய்துகொண்ட அவ்விக்கிரகங்களெல்லாம் அவ்வீசுரனுக்குச் சரீரங்களாக வழுத்தப்படுதலால் அவை குற்றமாமாறு இல்லை. சாத்தா, கொற்றாவென்று அழைத்தவழி அவ்வப்பெயர்களை யுடையோர் எதிர்வந்து நிற்பக் காண்கின்றோம்; சாத்தன், கொற்றன் எனுஞ் சொற்கள் அவ்வவ் வான்மாவைத்தாங்கிய சரீரத்திற்கு இடப்பட்ட பெயர்கள்; சரீரத்திற்குரிய அச் சொற்களால் அழைத்தவழி அவற்றை யுடையரான சரீரிகள் வந்து நிற்குமாறு போல ஈசுர சரீரத்தின்கட்செய்யப்படுகின்ற வழிபாடுகள் ஈசுரன்மாட்டு எய்துதற்கு ஓரிழுக்கில்லை; அங்ஙனம் உபாசித்த லாலே ஈசுரன் சரீரமாமாறு இல்லை, சரீரம் ஈசுரனாமாறில்லை, ஈசுரன் ஈசுரனே சரீரம் சரீரமே, அவ்வா றாயினும் ஈசுரன் சரீரமாயும் நிற்பன். அவற்றின் வேறுமாயும் நிற்பனென்றுணர்க. இவ்வாறு கல்லினாலுஞ் செம்பினாலுந் தாபித்து உபாசிக்கப்படுகின்ற விக்கிரகங்கள் சகளமங்களோபா சனைக் கேதுவாய் முடிந்திடுதலால் அவை அவ்வாறிகழப் படாவென் றொழிக. ஈண்டு இதுவென்று நினைந்து உபாசிக்கப்படும் அதனை அவ்வாறு நினையற்க என்று வலியுறுத்தெழுந்த வாக்கியம், ஈசுரனை வழுத்துவதற்கு அமைந்த விக்கிரக சரீரங்களையே அவ்வீசுரனாகக்கருதற்க என்று அறிவுறுத்துதலை நுதலிற்று. இஃதுணரமாட்டாது தமக்கு வேண்டியவாறே யுரை யுரைப் பாருமுளர். அவர் கூற்றுப் பொருந்தாமை சகளோபாசனை யில் விரித்துக் காட்டி விளக்கினாம். ஆண்டுக்காண்க. இனி, மாணாக்கன் ஐயந்திரிபின்றிப் பிரம சொரூப விலக்கணம் இனி துணர்ந்து கோடற்பொருட்டுச் சொல்லினால் வெளிப்படுவதன்றாய் என்பது முதல் இக்கண்ட முடிவுகாறும் மேலுமேலும் வலியுறுத்தோதினார். இனி இம்முதற்கண்ட முதன் முடிவுகாறும் பிரமமென்பது தூலசூக்கும அசேதன தத்துவங்கட்கு அதீதமாய் அவற்றைத் தானியக்குவதன்றித் தானவற்றால் இயக்கப்படுவதன்றென்பது கூறினார். இனி இரண்டாங் கண்டத்தில் சூக்கும சேதன தத்துவமாகிய ஆன்மஞானத்தானும் அஃது அறியப்படுவதன் றென்ப துணர்த்துகின்றார். இனி இரண்டாங்கண்டத்து ளோதுமாறே பிரமம் ஆன்மஞானத்தானும் அறியப்படுவதன்றாயின் அங்ஙனம் ஓர் பரம்பொருள் உண்டெனக்கோடலாற் போந்த பயன் என்னை யோவெனின்; அங்ஙனம் பிரமம் ஒருவாற்றானும் அறியப் படுவதன்றெனல் அவ்விரண்டாங்கண்டத்தின் கருத்தன்று. ஆன்மஞான விருத்தியெல்லாம் உலகியற் புறப்பொருள் பற்றியே எழுகின்றன; அவற்றின் வேறாய் வருதல் காட்சிவகையானுங் கருத்துவகையானுந் துணியப்படவில்லை. அப்பெற்றித்தாகும் ஆன்மஞானத்திற் பரப்பிரமப்பொருள் கோசரிக்கும் என்று கோடுமாயின் அதுவும் அவ்வுலகியற் பொருளுளொன்றாக வேவைத்தெண்ணப்படுதலன்றிப் பிறிதாமாறில்லை. அல்ல தூஉம், ஆன்மஞானத்தின் வேறாயறியப்படுதலின்றி அவ்வான்ம ஞானத்தின் கண்ணுஞ் சூக்குமமாய் விளங்கும் இறை முதற் பொருள் அறியப்படாதென்பதே யிக்கண்டத்தின் கருத்தாவது. இக்கருத்துப்பற்றியே ஆசிரியர் மெய்கண்ட தேவநாயனாரும் இவ்விரண்டு தன்மையுமின்றி வாக்கு மனாதீதகோசரமாய்நின்ற வதுவே சத்தாயுள்ள சிவ மென்றுணரற்பாற்று என்று வார்த்திகப் பொழிப்புரைத் தருளினாரென்க. ஆகவே, தூல சூக்குமமாகு மாயாகருவிகளைக் கொண்டுணரும் ஆன்மஞான மாத்திரைக்கே பரப்பிரமப் பொருள் விளங்காதென்பதூஉம், அக்கருவிகளினுதவியின்றியவற்றை யிறந்து நின்று அப்பரப்பிரமப்பொருளின் றிருவருணெறி சார்ந்தொழுகும் பதிஞானத்திற்கு ஞேய விசேடமாய் அஃது புலனாய் விளங்கு மென்பதூஉம் பெற்றாம். இந்நுட்பந் தெரித்தற்கன்றே ஊனக்கண் பாசமுணராப் பதியை, ஞானக்கண்ணினிற் சிந்தை நாடிஎனவும் பாசஞானத் தாலும் பசுஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரனைப் பதிஞானத்தாலே, நேசமொடு முள்ளத்தே நாடி எனவும் அருமைத்திருவாக்குகள் எழுந்தன வென்க. இனி, அப்பிரமப் பொருள் ஆன்மஞானத்தொடு சார்த்தி யங்ஙனம் அளந்தறிய முடியாதாயினும், தேவர்கள் பிரமத்தைத் தொட்டறிந்தார் களென ஆண்டாண்டு ஓதப்படுமாறு பற்றி மற்று அத்தேவர்களினு முயர்ந்தோனாய் விளங்குமவனே முழுமுதற் கடவுளென் றறிவோமெனின்; அவ்வாறு அறிவதூஉங் குறைபாடுடையதே யாமென்று பின் ஓருதாரணத்தின்கண் வைத்து விளக்குகின்றார். இங்ஙனம் ஆன்மஞானத்தானுந் தேவஞானத்தானும் பிரமப்பொருள் அறியப்படுவதன்றென்னு நுட்பந்தெரித்து ஆசிரியன் மொழிந்த நான் அப்பிரமத்தை நன்றாயறிவேனென்று நீ நினைப்பையாயின் ஆன்மவியல் பொடு சார்த்திப் பிரமசொரூபத்தை நீ அறிவதூஉம், தேவர்களுடன் வைத்து அதன் சொரூபத்தை நீ அறிவதூஉம் உண்மையிற் குறைபாடுடையனவாம்என்னும் வாக்கியஞ் சைவசித்தாந்த நுணுக்கப் பொருளுரைத் தொழுகுமாறு காண்க. இவ்வுபநிடதக் கருத்தறியாது மாயாவாதப் பொருள் பற்றி எழுந்தவுரைக ளெல்லாம் மூலப்பொருளோடு இணங்காமன் மாறுகொண்டு மூலமொரு பக்கமும் உரை யொருபக்கமுமாய் ஒழிதல் காண்க. இனியிதன் மேற் சீடனுரையாயெழுந்த அவன் அறியப் படுபொருளென நான் நினைப்பதல்லாமல், அவனை நன்கு அறிவேனென்று நான் நினைக்கின்றிலேன் என்னுஞ்சுலோகப் பொருள் ஒரு சிறிது ஆராய்வாம். அவன் அறியப்படுபொருள் என்றதுணையானே ஆன்மஞானத்திற்கும் அவன் விளங்கற் பாலன் என்று கோடல் பொருந்தாதென்பான் அவனைநன்கு அறிவேனென்று நான் நினைக்கின்றிலேன் என்று கூறினான். ஆன்ம ஞானத்திற்கு விளங்காமையானே அஃது அறியப்படு பொருளன்றா யொழியாதென்பான் அவன் அறியப்படு பொருளென நான் நினைப்பதல்லாமல்என்று கூறினான். இத்துணையினமையாமல் மேலுந் தன் கருத்தினிது விளங்கும் பொருட்டு அவனை யறியேனென்று நானறியேன்என எதிர்மறை முகத்தாற் கூறியொழிந்தான். இதனானும் மேலுரைத்ததே இவ்வுபநிடதத்தின் பொருளென்றுணர்க. அற்றேலஃதாக, ஆசிரியன் அநுவாதவுரையாய் வந்து மேலும் அதனையே வலியுறுத்துகின்ற பிரமம் அறியப்படுபொருளன்று என்று நினைபவனாற் பிரமம் அறியப்படுகிறது; பிரமம் அறியப்படுபொருளே யாமென்று நினைபவனால் அஃது அறியப்படுவதில்லைஎன்னும் வாக்கியங்கள் தம்முள் இயையாமை யான் அவற்றை யிணக்கி யுரைசொல்லுமாறு யாங்ஙனமெனிற் காட்டுதும். சீவபோதமுனைப்பான யான் என்னுமுணர்வு செல்கின்ற காலத்தெல்லாம் அறிவுருவா யொருபொருளோடு ஒருமையுற்று நிற்கும் அநுபவம் நிகழாது; இனி அப்பொருளோடங்ஙனம் ஒருமையுற்று அநுபவ நிகழும்போதெல்லாம் யானென்னு முணர்வு செல்லாது; இதுபற்றியன்றே ஆசிரியர் நக்கீரனாரும் ஆற்றாமை யென்பது பிறிதெவ்வுணர்வு மின்றி யவ்வாற்றாமை தானேயாவது என்றுரை யுரைப்பாராயினார். இதனை உதாரணமுகத்தானும் விளக்குவாம். அயர்ந்துறங்குங் காலத்தே யாணவமலசத்தியோடு ஒருமித்திருந்து இன்ப நுகர்ந்து கிடக்குமுயிர் அக்காலத்து நான் இன்ப நுகருகின்றே னென்றறியமாட்டாது; உறங்கி விழித்தெழுந்து நான் நன்றாய்த் தூங்கினேன் என்று தெரிதலுறுகின்ற காலத்தே அவ்வுயிர் உறக்கத்தின் கட்டுய்க்கும் இன்பத்தையறியாது. இவ்வாறே சுழி பெருஞ்சுவையுடைய ஓரரிய அமிழ்தம் நாவிற்றொட்டு உருசிகாண்காலத்து எனக்கு இஃது மிக உருசிக்கின்றதுஎன்று யாருமுரையார். அதனை உருசிகண் டறிந்த மற்றைக்கணத்திலே அதனை அவ்வாறறிவர். ஒருவனு மொருத்தியுங் காமச்சுவை விகற்பமெல்லாம் ஒருங்கு கொண்டு துய்க்கின்ற பொழுது உணர்வின்றியவசமுற்றுக்கிடந்து அது கழிந்த துணையானே அவ்வின்பம் இவ்வாறிருந்ததெனச் சிறிதே யறிந்து தம்முட்டாமே மகிழ்வர். இங்ஙனம் இன்பந் துய்த்து ஒருமையுற்று அறிவழிந்திருக்குங்காலமும் வேறே, இவ்வாறின்ப மெய்தினேனென்று அறிவுகொள்ளுங் காலமும் வேறேயாதல் அநுபவமாய் நிகழ்தலால், முழுமுதற் பரம்பொரு ளோடு ஒன்றி யொன்றறக்கலந்து இன்பமுதிர்ச்சியே அறிவாய் விளங்கப் பெறுகின்ற காலத்தே சீவபோதமுனைந்திருத்தல் இல்லையாம். இனிச் சீவபோதம் விரிந்து யானறிந்தேன் அறகின்றேன் அறிவேன் என்று அநுபவம் நிகழும்போது, முன் ஆன்மவுணர்வின் நடுவிற் கருக்கிடந்து முதிர்ந்து பெருகி அவ்வான்ம வுணர்வைக் கவர்ந்துகொண்ட சிவானந்தந்திரும்பச் சுருங்குதலுற்று அதனிடையே கரந்துபோகாநிற்கும். இவ்வுண்மை யுணர்த்துதற்கன்றே உணர்ந்தார்க் குணர்வரியோன் றில்லைச் சிற்றம்பலத் தொருத்தன் என்றதனை யுணர்ந்தோர் கூறிய ருளியதூஉமென்க. இருந்தவாற்றாற்குறியறவுணர்ந்து சலிப்பின்றி நிற்கும் ஞானமே சிவஞானமாம். அதுவே பிரமஞான மென்றுஞ் சொல்லப்படும். இதனையொழித்து ஒழிந்த ஞானங்களான் முதல்வனை யறிவேமென்பார். அறியாதவரே யாவரெனவும் அச்சிவஞான வழிநின்று இறைவனை யுணர்வார் அவனை யுண்மை யானுணர்ந் தாரே யாவரெனவும் நிச்சயித்தற் கெழுந்தன வாகலின் அவ்வாக்கியங்கள் தம்முள் முரண்படுமாறில்லை யென்றொழிக. இனி நினைக்கப்படுவன ஒவ்வொன்றும் என்னும் நான்காஞ் சுலோகம் அச்சிவஞானம் தலைப்படுதற்குரிய நன்மார்க்கம் இதுவென்று காட்டுதல் நுதலிற்று. அச் சிவபரம்பொருள் அண்டபிண்டங்க ளெல்லாவற்றுள்ளும் புறம்பும் ஒப்பவியாபித்து நிற்கும் முழுமுதன்மை யருள் விலாசத்தைக்கண்டு அதன் கண்ணே சலிப்பின்றி நிற்கப்பெறின் அவன் பிரமத்தைத் தலைப்பட்டு இறப்பினின்று விடுபடு கின்றான். இங்ஙனஞ் சகல சாக்கிரத்தின் கண்ணே நின்மல துரியாதீத நிலைகூடுமாறு அறிவுறுத்துகின்ற இச்சுலோகம் சைவசித்தாந்த முடிபொருள் தலைக்கணிந்து நனிவிளங்கு முண்மை இந்நிலை தானில்லையே லெல்லா மீசனிடத்தினினு மீச னெல்லாவிடத்தினினு மியன்ற, அந்நிலையை யறிந்து என்னுஞ் சிவஞானசித்தித் திருவாக்கானுங் காண்க. இனிவரும் சுலோகத்தாற் பிரமஞான மில்லாதவர் களுக்குப் பிறவித் துன்ப மிடையறாது நிகழுமெனவும், அஃதுடையார்க்கு அஃதின்றாமெனவும் வலியுறுத்தினார். இவ்வாறு இவ்விரண் டாங்கண்டத்தில், ஆன்மாவொடு சார்த்தியுந் தேவர்களோடு சார்த்தியும் பிரமத்தை யளந்தறிதல் செல்லாதென நுதலிப் புகுந்து, அவற்றுள் ஆன்மாவொடு சார்த்தி யளந்துணர்தல் கூடாதெனப் புகுத்துக்கொண்டு அதனை விரித்துக்கூறினார். இனித் தேவர்களோடு சார்த்தியளந் துணர்தலுங் கூடாதென விரித்துரைப்பான் புகுந்து மூன்றாங் கண்டத்திலோர் சரிதஞ் கூறுகின்றார். இனிப் பரப்பிரமப்பொருளான முதல்வன் செய்வன வெல்லாம் பிறர் பொருட்டேயாம், தன்பொருட்டல்ல. தன்பொருட்டுச்செய்யாமை யென்னையெனின்; தனக்கோர் குறைபாடின்மையாலென்க. தமக்குள்ள குறையினை நிரப்பவே யாரும் வினைசெய்யக் காண்கின்றோம். எல்லாவற்றானும் நிறைவுடையார்க்கு அங்ஙனமோர் முயற்சி வேண்டப்படாமை போல. எல்லாம்வல்ல கடவுளுக்குத் தன்பொருட்டு முயற்சி யில்லையென் றொழிக. அற்றேல் பிறர் பொருட்டுத்தான் அஃது இயற்று தலென்னையெனின்; தனக்குள்ள பெருங்கருணை பற்றியே யாமென்று விடுக்க. இது தெரிப்பவே மூன்றாங் கண்டத்து முதற்சுலோகத்தில் தேவர்கள் பொருட்டுப் பிரம மானது ஒருகாலத்து வெற்றிகொண்டது என்று சொல்லப்பட்டது. பிரமந் தம்மைக் காக்கும்பொருட்டு எய்துவித்த வெற்றியைத் தேவர்கள் தமக்குரியதென்று நினைதல் பெரிதும் ஏதமாம். பிறனொருவன் வருந்தி யீட்டிய பொருட்டொகுதியைத் தனக்குரிய தென்பான் போலப் பிரமத்திற்குரிய பொருளைத் தனதென்று பிறழ வுணர்தல் மயக்கவறிவாம். அந்த மயக்க வறிவையே விதையாகக்கொண்டு பேரிடர் விளைந்துறுதலால் அவ்வறிவைக் களைந்து அவ்வப் பொருண் மெய்ம்மை தெரிதல் எல்லார்க்கும் இன்றியமையாத கடமையாம். இக்கடப்பாடறி யாத தேவர்களுக்கு அறிவு கொளுத்தி அவரைக்காத்தல் வேண்டி அவன் அவரெதிரே ஓரியக்க வேடந்தாங்கித் தோன்றினான் என்றார். இனிக் கட்புலனாய் விளங்கிய முழுமுதற்கடவுள் அருட் கருணைக் கோலத்தைக்கண்டும் அங்கி வாயு இந்திரன் முதலான தேவர் அவனை அறிந்திலரென்றதனாலே, ஈசரன் றிருவருள்வழி நின்றாரன்றி யேனையோ ரவனைக் காண்டல் செல்லாதென்பது பெற்றாம். இனி மூன்றாங்கண்டத் திறுதிச் சுலோகத்தில் இனிது அலங்கரிக்கப்பட்டவளும் இமவான் புதல்வியுமான உமை தோன்றினாளெனவும், நான்காங்கண்டம் முதற் சுலோகத்தில் அவள் அது பிரமமெனமொழிந்து இந்திரனுக்கு அறிவு கொளுத் தினாளெனவுஞ் சொல்லப்பட்ட வாற்றால், திருவருள் விளக்கம்பெற்ற இந்திரன் மாத்திரம் அப்பிரமத்தை ஒரு வாற்றா லறிந்தானென்பது பெற்றாம், உமை தோன்றி யறிவுறுத்தாளென்பதனால் ஆண்டுத் தோன்றிய பிரமந்தானே சிவமென்பது பெறப்படும். சிவத்திலே தாதான்மிய சம்பந்தமுற்றுப் பிரிவற நின்ற திருவருட்சக்தி உமையென்று அவ்வாறு விதந்து சொல்லப்பட்டது. சிவன்றானே அப்பனாகவும் அவனொடு தற்கிழமையாய் நின்ற திருவருளே அம்மையாகவு மமர்ந்து ஆன்மாக்களாகிய பசுங்குழவிகளை யாண்டருளல் வேண்டினமையின் இருவருமே எழுந்தருளிப் போந்து தேவர்க்கு அநுக்கிரகிப்பாராயினார். அங்ஙனம் அநுக்கிரகிக்கின்ற விடத்தும் தாய் காட்டவே பிள்ளை தந்தையைக் காண்டல்போல் உமை யுணர்த்த இந்திரன் உணர்ந்தான். இதனால், ஆன்மாக் களெல்லாந்திருவருள் உணர்த்த உணருகின்றவரே யன்றித் தாமாகவே யுணருநீர ரல்ல ரென்பதும் பெறப்பட்டவாறு காண்க. தாய் கருணையே வடிவாகவுடைய ளென்பதும், அவளே பிள்ளைக்கு மிகநெருங்கிய பழக்க முடைய ளென்பதும் எல்லார்க்கு மொப்ப முடிந்த தொன்றாயினுந் தமிழ் முது மக்கண்மாத்திரம் அதனை விதந்தெடுத்து வழங்குகின்றார். இதற்குத் தமிழ் நூலுரைகளும் பழமொழி வாக்கியங்களுஞ் சான்று பகர்கின்றன. அன்னையும் பிதாவு முன்னறிதெய்வம் தாயினுநல்ல சங்கரா வுனக்கி வடகும் என்றற் றொடக்கத்துத் திருவாக்குகளும் ஈண்டுக் குறிக்கொளற் பாலனவாம். தமிழ் முதுமக்கள் ஈசுரனை உபாசிக் கின்ற காலத்தும் அம்மையப்ப ராகவெழுந்த சகள மங்கள வருட் கோலத்தினையே வழிபடு மாறும் இதனை வலியுறுத்தாநிற்கும். அவ்வாறெல்லாம் நியாய வாராய்ச்சி செய்கின்றவிடத்து அம்மாவென்னுந் தமிழ்ச் சொல்லே வடமொழியில் உமா எனத் திரிந்ததென்று ஊகிக்க இடமுண்டாகின்றது. `உமா என்னுஞ் சொல்லுக்கு வேறு வேறுற்பத்தி கூறுவாருமுளர். இது நிற்க. இந்திரன் அருள்வழிப் பட்டு நின்றானாயின் அவனறியு மாறு அப்பரப்பிரமப்பொருள் இனிது விளங்கல் வேண்டும்; அவ்வாறின்றி அவனெதிரே சடிதியில் மறைந்து போயிற்றென் றுரைத்ததென்னை யெனின் மற்றைத் தேவர்களினும் இந்திரன் முதன்மை யுடையானென்று சொல்லப்படுதலின், அத்துணைப் பெரியனான அவ்விந்திரன் ஆற்றலு மறிவும் பிரம்மத்தின்முன் விளக்கமின்றா யொழியு மென்பது காட்டுதற் பொருட்டு அவ்வாறு மறைந்தருளினா னென்க. அங்ஙனம் மறைந்தருளினும் அவன் மற்றைத் தேவர்களைப் போற்றிரும்பி வாளாது போகாமல், ஆண்டு நின்றவாறே தியானஞ் செய்து கொண்டிருந் தமையால் அவனுக்குத் திருவருட்பேறு சித்தித்ததென்றுணர்க. நிற்க. இனி இம்மூன்றாங்கண்டத்திறுதியிற் போந்த இமவான் புதல்வியான உமாதேவியார் செந்தமிழ் வழங்கு மக்கள் சிவபெருமானோ டொருங்கு கொண்டு வழிபட்ட தெய்வ மென்பதுணர மாட்டாதார், உமைசிவம் என்னுந் தெய்வ வழிபாடு இருக்குவேத முதலான பழைய வடநூல்களிற் காணப் படாமையான் இங்கே உமாவென்னுஞ் சொல் ஞானத்தைக் குறிக்குமெனவும், அற்றேல் இமவான் புதல்வி யென்ற தென்னையெனின், இமயமலைச்சாரலில் நூல்வல்லா ரெல்லா மொன்றுகூடிஞானநூலாராய்ச்சி செய்தமையானே உருவகத்தால் அவ்வாறு சொல்லப்பட்ட தெனவும் பிறவு மெல்லாந் தமக்கு வேண்டியவாறே கூறினார். கேனமுதலான பிராசீன உபநிடதங்களெழுதப்பட்ட காலத்தே ஆரியமக்கள் தமிழ் வழங்கு நன்மக்களோடு ஒருங்கு விராய்ப்பழகப் புகுந்தாராகலின், அநாகரிக நிலையிலிருந்த தம் சூரியோபாசனை அங்கியு பாசனை வாயுவுபாசனை முதலியவற்றை நீக்கி உன்னத நாகரிக நிலையிலிருந்த சிவோபாசனையைத்தழுவிக் கொண்டார். அங்ஙனந் தழுவிக்கொண்ட மாத்திரை யானே தாம்வழிபட்ட இந்திரன் முதலான தெய்வங்களினது இழிபுணர்ந்து சிவபரம் பொருட் பெற்றிதேர்ந்து தாமியற்றிய பின்னூல்களினெல்லாம் அச்சிவபரம்பொரு ளுபாசனையை விதந்தெடுத்து மொழிந் திட்டார். இன்னுமிதன் விரிவெல்லாஞ் சமயம்வாய்க்கும் போழ்து வேறு கூறுவாம். நிற்க. இனி நான்காங் கண்டத்து முதற்சுலோகத்தானே ஆண்டுத் தோன்றிய இயக்கனை உமாதேவியார் பிரமமென்று மொழிந்திடுதலின், அப்பிரம மென்னும் பொதுச்சத்த வாச்சியப் பொருள் சிவபெருமானே யாமென்பது தேற்றம். பிறவாறுரைப் பார்க்கு அவர் தம் மேற்கோளை நிறுத்தும் ஏதுவின்றா யொழிதன் மேலுஞ் சைவசித்தாந்தப் பொருள்பற்றி வந்த இவ்வுபநிடதக் கருத்து மாறுபடுமாம். இனி-2-ம்-3-ம் சுலோகங்களில் பலவேறு வகையான தேவர்தம்முள் அங்கி வாயு இந்திரன் என்னு மூவருமே மேம்பாடடைதலென்னை யென்னுங் கடாவை விடுத்தற்கு அவர்கள் ஒருவாறு பிரமத்தைத் தொட்டார்கள், பிரமத்தை முதலிலறிந்தார்களாதலின்என்றார்; அவருள்ளும் இந்திரன் மேம்பாடெய்தியது அம்மையார் உணர்த்தச் சிவனை உணர்ந்தானாகலின் மற்றைத் தேவர் சிவனைக்கண்டார், இந்திரன் சிவனையுணர்ந்தான். இனி இக்கண்டத்து நான்காஞ் சுலோகங்களாறுஞ் சிவபரம்பொருளைத் தேவர்களொடு சார்த்தி யளந்தறியுமாறு சொல்லி யொழிந்தார். தாம் நேரே காணாமல் ஏனையோர் காணும் வகைபற்றி யறிதல் தமக்குத்தெளிய விளங்காமையான் அதுவுங் குறைபாடுடையதென்றல் பொருத்தம் பெரிதுடைய தாமென்றுணர்க. இனி ஆன்மாவொடு குறிப்பிட்டு அறியுமாறு கூறுவா னெடுத்துக் கொண்டுரைக்கின்றார். முன்னெல்லாம் முதல்வன் வாக்குமனாதீத னென்றுரைத்து ஈண்டு மனம் அவனை யணுகுகின்ற தெனில் மாறுகோளாமெனின்; மாறுகொள்ளாது. மனம் புறப்பொருளை யறியுமாறுபோலத் தன்னின் வேறாய்க் காணாது தன்னுண்ணின்று தன்னையுமியக்குவானவனே யென்றுணரல் வல்லுமாயின் அஃது அப்பிரமத்தை அணுகிய வாறேயாம். சீவபோத முனைப்பான் முன்னிலைப்படுத்தி யுணர்கின்ற வுணர்வும், அங்ஙனம் முனைப்பின்றி நின்றவாறே நின்றுணருணர்வுமென உணர்ச்சியெல்லாம் இருவேறு வகுப்புறுகின்றன வாகலின் சீவபோதமுனைப்பின்றி யுணருமாறு விதிக்கின்ற இது மேலதனோடு மாறுபடுதலில்லை யென்றொழிக. இங்ஙனம் மரமேறுகின்றவனுக் குதவியாய்க் கீழ்நின்றூக்குவோன் ஏறுகின்றவன் மரத்தினுச்சி சென்று பற்றுங்காறும் மேன் மேலூக்கிப்பின் றான்கழியுமாறு போலச் சிவத்தைத் தலைக்கூடும் பொருட்டு ஊர்த்துவ முகமாய் மேனோக்கிச் செல்கின்ற ஆன்மாவுக்கு தவியாய் நிற்கும் மனம் அஃது அதனைச் சென்றணையுங்காறுங் கீழ்நின்றூக்கிப் பின்றான் தொழிலறுந்து கிடக்கு மென்றுணர்க. இனி ஆன்மாவாலறிதல்என்பது ஆன்மாவைப்போற் பரமான்மாவுஞ் சேதனப்பொருளே யாமென்று துணிந்து, அங்ஙனமாயினும் நான் அறியுஞ் சித்து அஃது அறிவிக்குஞ்சித்து, நான்பண்டே அறியாமையோ டுள்ளேன் அவன் பண்டே மெய்யறிவோடுள்ளானென்றிவ்வாறறிதல். வழிபடற் பாலதன் பெயரால் வழிபடற்பாலான் என்பது திருவருள் வழிநின்று தியானிக்க வென்றது. இனி எட்டாஞ் சுலோகத்தால் ஞானபாதத்தை யடைதற்குரிய சாதனமான கருமகாண்டத்தினுள்ளும் ஈண்டைக்கு வேண்டுவனவாகிய தபம்தமம் முதலியகருமங்கள் சிலவும் வகுத்துக் கூறினார். இதனாற் கருமங்கள் முத்திப் பெரும்பேற்றிற்கு இன்றியமையாச் சாதனங்களா மென்ப தூஉமுடன் பட்ட வாறாயிற்று. இனி ஒன்பதாஞ் சுலோகத்தாற் பயன்கூறி முடித்தார். இங்ஙனம் நான்கு கண்டங்களாக வகுத்துரைக்கப்பட்டுச் சாமவேதத்தைச் சார்ந்து நிற்கும் கேனோபநிடதஞ் சித்தாந்த சைவப் பொருளேபற்றி வந்தவாறு நன்கு விளக்கப்பட்டது. கிருஷ்ண எசுர் வேதத்தைச் சேர்ந்த சுவேதாசுவதரோப நிடத மொழிபெயர்ப்பு பிரமவிசாரஞ் செய்வோர் தம்முளே உரையாடுகின்றார். பிரமம் எந்தக்காரணமாயுள்ளது? நாம் எங்கிருந்து படைக்கப்பட்டோம்? யாரால் நாம் உயிர் பிழைத்திருக்கின்றோம்? சங்காரகாலத்தே நாம் யாண்டு இருப்போம்? எவரால் அதிட்டிக்கப்பட்டுச் சுகதுக்கவிதிவழிச் செல்லுகின்றோம்? ஓ பிரமஞானிகளே! (1) காலமோபிரமம்? அல்லது, சுவாவமோ? அல்லது கன்மகாரியமோ? சடிதிக்கரும நிகழ்ச்சியோ? பூதங்களோ? யோனியோ? புருடனோ? இதனைச் சிந்தித்தல்வேண்டும். ஆன்மாத்தனித்து நிற்றலாலே அவற்றினுடைய சேர்க்கையன்று. இன்பத்துன்பங்களுக்குப் பிறிதோர் காரணம் வேண்டப் படுதலால், ஆன்மாப் படைப்புத் தொழிலை யியற்றவல்லதன்று. (2) தியான யோகநெறிநின்றோர், பரமான்மாவின்கணுள்ள இயற்கைக் குணங்களாலே மூடப்படுகின்ற திருவருட் சக்தியே காலமுதலாக நிற்குங் காரணங்களையுஞ் சீவான்மாவையுந் தன்வழிநிறுத்தி நடாத்துகின்ற தென்றறிந்தார். (3) அவனை, மூன்றடுக்கான் மூடப்பட்டு ஒரே சுற்றுள்ளதாய் அச்சுற்றிற் பதினாறு துண்டுகளுள்ளதாய், அச்சுற்றிற்சென்று முடியும் ஐம்பது கால்களும் இருபது எதிர்கால்களுமுள்ளதாய், ஆறுகூறுள்ள எட்டாணிகள் தறையப் பட்டதாய்ப், பல்வேறு வண்ணமுடைய கயிறு பூட்டப் பட்டதாயுள்ள ஓர் உருளாகக் கருதுகின்றோம். அது செல்லும் நெறி மூன்றுவகையாயுள்ளது. அஃது இரண்டு சுவடுகள் பட ஒருதரம் உருளும். (4) அவனை, ஐந்து நீரோட்டங்களினின்றுந் தரப்படுகின்ற நீருடைய ஆறாகக்கருதுகின்றோம். அவ்வைந்து நீரோட்டங்களும் ஐந்து உற்பத்தித் தானங்களால் உக்கிரமாகவுங் கோணலாகவு மிருக்கின்றன. அவற்றின் அலைகள் ஐந்து பிராணவாயுக்களாம். அவற்றின் மூலத்தானமானது ஐந்தறிவுகளைத் தருகின்றது. அஃது ஐந்து சுழல்களை யுடையது. அவ்வைந்து சுழல்களும் ஐவகைத்துன்பங்களால் வேகமாகச் சுழற்றப் படுகின்றன. அத்துன்பங்கள் ஐந்தும் ஐவகைக்கிலேசங்களாற் பகுக்கப் படுகின்றன. அவை ஐந்து சுற்றுக்களுடையன. (5) சருவசீவர்களுக்கும் நிலைக்களனாயும் அவற்றிற்கு அந்தமாயும் அளவின்றி மிகப்பெரிதாயு முள்ள இந்தப் பிரமசக்கிரத்தில் திரிதரும் யாத்திரிகனான ஆன்மாவானவன் தன்னையுந்தன் றலைவனையும் வேறாகப்பாவிக்கின்றான். அவனாற் பற்றப்படுங் காலத்து அது மரணமில்லாமை எய்துகின்றது. (6) இதுவே பரம்பொருளென்று உறுதியுரை மொழியப் பட்டது. இவனிடத்தில் மூன்று முள்ளன. இவனே அழிவில்லாதவனுந் தானே எவற்றையும் நிலைபெறுத்து வோனுமாவன். பிரமஞானிகள்இவனை இதனின் வேறாக வுணர்தலாற் பிறப்பினின்று விடுபட்டுப் பிரமத்தின்கண் அழுந்தி ஒன்றாய் ஆண்டெழுந்த தியானவுறைப்பிற் சலிப்பின்றி நிற்கப்பெறுவர். (7) பிரிப்பின்றி நிற்குங்கால் விளங்கியும் விளங்காமலும் அழிந்தும் அழியாமலுமிருக்கும் இவ்வுலகத்தை ஈசன்றாங்கு கின்றான். அநீசனான ஆன்மாவானவன் போக்தாவாய் அநுபவிக்கின்ற முறைமையினாலே தளைக்கப்படுகின்றான். முதல்வனையறியு மறிவாலே அது சருவபா சங்களினின்றும் விடுபடுகின்றது. (8) அவற்றுள் ஒன்று ஞானவுருவாயுள்ளது, மற்றையது அஞ்ஞானவுருவா யுள்ளது; ஈசன் அநீசன் இருவரும் பிறவாதவர். அங்ஙனமாயினும் ஒன்று எல்லாம் வல்லது மற்றையது அவ் வாறாகாதது. உலகவியற்கை நுகர்வோனும் நுகரப்படுவன வற்றோடுங்கூடிப்பிறப்பின்றி யுள்ளது. ஆன்மாக்கள் அனந்தம், விசுவ சொரூப முடையமையினான் முதன்மையில்லாதன. இங்ஙனம் பிரமந்திரிவிதமாயுள்ள தன்மையுணர வல்லான் பாபங்களினின்று விடுபடுகின்றான். (9) பிரதானம் அழிதலுறுவது, அரன் அழிதலும் மரணமு மில்லாதவன். அழிதலுறுகின்ற இயற்கையினையும் ஆன்மா வினையும் ஒரே தேவனான ஈசனே ஆளுகின்றான். அவனையே தியானித்தலானும் அவனோடு யோஜித்து ஒருமை யுறுதலானுந் திரும்பத் திரும்பத்தன்னையுண்மையுருவாக நினைதலானும் விசுவத்தின் கண்ணாகவரும் மாயங்கள் அகலுகின்றன. (10) தேவனை யறிதலாலே சருவபாசங்களும் அழிதலுறு கின்றன. பிறப்பு மிறப்பும் எல்லாவிதத் துன்பங்களுங் குறைய ஒழிகின்றன. அவனை உலகுரு வாகத்தியானித்தலால் ஒருவனுக்குத் தேகத்தைப் பிரிகின்ற காலத்து மூன்றாவதான விராடபுருடனுடைய விசுவ ஐசுவரிய சக்தியானது பெறப்படு கின்றது. கேவலமாகத் தியானித்தலாலே ஒருவன்றான் வேண்டுவன வெல்லாம் எய்துகின்றான். (11) உலகினை யிறந்து நின்ற அப்பிரம சொரூபத்தை நித்தியமென்றும் ஒருவன் ஆன்மாவினுள்ளேயே யிருப்ப தென்றும் நினைதல் வேண்டும். இவனிற் பிறிதாக உணரப்படுவதொன்றுமில்லை. நுகர்வோனையும் நுகரப்படு பொருளையும் நுகர்விப்போனையும் அறிந்து, இவ்வாறு சொல்லப்பட்ட இம்மூன்றெல்லாம் பிரமமென் றுணர்வோன் முத்தியடைகின்றான். (12) விறகினுண் மறைந்து நின்றவழித் தீயின்றன்மையும் அத்தீயின் சூக்கும அனற் கொழுந்தின் அழிவுங் காணப்படாத வாறுபோலவும், தேய்த்துக் கடைந்தவழி அதன் கண்ணே அதுதிரும்பத் திரும்பக் கட்புலனாய் விளங்குமாறு போலவும், இங்ஙனம் இரண்டுங்காணப்படுதலும் படாமையும் போலவும், ஆன்மாவானது பிரணவத்தாற் சரீரத்தினுள்ளே காணப்படும். (13) ஒருவன் தன் சரீரத்தைக் கீழரணியாகவும் பிரணவத்தை மேலரணியாக வுங் கொண்டு தியான முதிர்ச்சிப் பெரும் பழக்கத்தால் தேய்த்துக்கடையவே மறைந்து நிற்கும் ஈசுரன் அனற் பிழம்பு வெளிப்பட்டுத் தோன்றினாற்போல விளங்கித் தோன்றக்காண்பன். (14) எள்ளின்கட் பிழிந்தெடுத்த எண்ணெயும் மோரின்கட் டிரட்டிய வெண்ணெ யும் நிலனகழ்ந்து வருவித்த ஆற்றினூற்றும் ஞெகிழி கடைந்து பொத்தியதீயும் போல் அந்தப்பரப்பிரமப் பொருளானது சத்தியக் கண்ணானுந்தவ விசேடத் தானுந் தன்னைக்காணவல்லோன் மாட்டு விளங்கித் தோன்றா நிற்கும். (15) பாலிற் பரந்தவெண்ணெய் போலவும் ஆன்மவறிவுந் தபோமூலமும் போலவும் யாண்டும் விரிந்து வியாபிக்கும் ஆன்மா யாது அது பிரமம், அதன் மேல் எல்லாவற்றின் அந்த முஞ்சார்ந்து நிற்கின்றது, (16) முதலத்தியாயம் முடிந்தது இரண்டாம் அத்தியாயம் உண்மைப் பொருளைப்பெறும் பொருட்டாகப் பிரமத்தில் மனத்தையும் ஐம்புலவுணர்வையும் ஒருக்கிக் கொண்டு சாவித்திரி அனற்சோதியைக் கண்டிருத்தலால் அதனை இந்நிலவுலகத்தினுங் கொண்டுவருக. (1) தைவிகமுள்ள சாவித்திரியின் திருவருளால் ஒடுங்கிய வுள்ளத்துடன் எம்முடைய ஆற்றலுக்கு இசைந்தவாறு வானுலகு பெறக்கடவேமாக. (2) வானுலகு பெறுதற்கு ஏதுவான ஐம்பொறிகளையும் உள்ளத்தோடும் உணர்வோடும் இயைவித்து, அவை அளவில்லாத தெய்வத் துளங்கொளிவிரிக்குமாறு சாவித்திரி செய்க. (3) தம்முள்ளத்தையும் ஐம்பொறியுணர்வையும் ஒருவழி நிறுத்திய விப்பிரரால் யாககருமங்களை ஒழுங்கு செய்தவளும், அறிவுள்ள எல்லா உயிர் வருக்கங்களையும் அறிபவளும், வரையறையின்றி யாண்டும் வியாபித்த ஞானமகளுமான சாவித்திரிக்குப் பெரும்புகழ் உரியதாக. (4) உமதுபண்டைப் பிரமத்தைப் பயபத்தியோடு வணங்கு கின்றேன்; நல்வழிச் செல்லும் நல்லோர் போல என் சுலோகங்கள் புகழப்படும்; தேவவுலகங்களில் வசிக்கின்ற அமிர்த புத்திரர் எல்லாருங் கேட்பாராக. (5) தீமூட்டப்பட்டிருப்பதும் வாயு வொலிப்பதும் சோம இரசந்தங்கியி ருப்பதுமான வேள்விக் களத்திலே உள்ளஞ் சென்று ஒருங்குகின்றது. சாவித்திரியினால் படைப்புக் கடவுளான பிரமத்தை அறிந்து ஏத்துமின்கள்; அவனிடத்தே மனம் ஒருங்குப்புகுந்து மின்கள்; நும்முன்னைக் கருமங்கள் உங்களைத் தடைசெய்யமாட்டா. (6) சரீரத்தின் மற்றையுறுப்புக்களுக்கு இசைய மேலுறுப்புகளை நேரொக்கப் பிடித்து, இதயத்தினுள் உள்ளத்தினோ டைம்பொறி யுணர்வையும் அடக்கி அறிவுடையோர் பிரமப் புணை பற்றிக்கொண்டு உக்கிரமான புனற்பெருக் கெல்லாங் கடந்து செல்வாராக. (7) பிராணனைக் கீழ்ப்படுத்தி அவர்களை யறுத்து நாசிகளின் வழியே மெல்லென உயிர்த்துத்தேர்ப்பாகன் துட்டக்குதிரை களிழுக்கும் இரதத் தினையே நோக்குமாறு போல அறிவுடையோர் தம்மனத்தினையே நோக்கிக் கொண்டு இருக்கற்பாலார். (8) கூழாங்கற்கள், தீ, வாலுகம் முதலியனவின்றிச் சமனொத்த தாய், ஒலிகளானும் நீர் நிழலானும் மனத்திற்கு இன்பம் பயப்பதாய்க் காட்சிக்கு வெறுப்பாவதின்றி யுள்ள நிலத்திற் காற்றினியக்கமில்லாதான ஓர் முழைஞ் சிற்புகுந்து ஒருவன் தன்மனத்தை ஒருக்கக்கடவன். (9) பிரமம் அபிவியக்தியுறுதற் கேதுவாகிய யோகத்திற்குமுன் இவ்வுருவங்கள் வேண்டப்படுகின்றன; உறைபனி, புகை, தீக்காற்று, காற்று, தீ, மின்மினிப்பூச்சி, மின்னல், பளிங்கு, திங்கள் முதலான வடிவங்களை அப்பிரமம் மேற்கொள்ளுகின்றது. (10) நிலம், நீர், ஒளி, வளி, ஆகாயங்களின் தொகுதியாதலின் யோகத்திற் கடையாளங்களான ஐவகைக் குணங்களும் புலனாய்த் தோன்றுங்கால், ஆண்டு நோயு முதுமையுந் துன்பமும் யோகாக்நிமயமாய் விளங்கும் அவன் சரீரத்திற்கு வருதலில்லை. (11) சரீரம் இலேசாகவும் ஆரோக்யமாகவும், மனம் அவாவில்லாமலும் வண்ணம் பிரகாசமாகவும் குரலினிதாகவும் மணம் கறிதாகவும் மூத்திர புரீடங்கள் குறைவாகவும் விளையுங் காலத்து யோகமார்க்கத்தின் முதற்பாதம் சித்தித்ததென் றுரைக்கின்றார்கள். (12) மண்மூடப் பட்டதோர் துண்டைத் துடைத்துத் தூய்தாக்கியவழி ஒளி விரிந்து விளங்கியவாறுபோல, மாசுபொதிந்த உயிர் தன் உண்மைத் தன்மை இனிதறிந்தவழி ஒன்றாய் உண்மைப் பெரும்பேறெய்தித்துன்பங்களினின்று விடுபடுகின்றது. (13) இவ்வியோக சமாதியின் கண்ணே அழுந்தப்பெறுகின்ற விடத்துத் தன்கட்சோதியாய் விளங்கப்பெறுந் தன் ஆன்ம வுண்மைத் தன்மையோ டொட்டித்தத்துவாதீத நித்தியமான பிறப்பில் பிரமத்தின் உண்மைத் தன்மை கண்டு எல்லாப் பாசங்களினின்றும் விடுபடுகின்றான். (14) எல்லாத்திசைகளின் முன்னும் இடைவெளியின் முன்னும் பிறந்திருக் கின்ற அவனே கடவுள் அவன் உண்மையாகவே கருப்பை யினுள்ளிருக் கின்றான், அவன் பிறந்திருக்கின்றான், அவன் பிறப்பான்; எல்லாவடிவத் துடனும் எல்லாப் பிராணிகளினும் அவன் அமர்ந்திருக் கின்றான். (15) இரண்டாமத்தியாயம் முடிந்தது. மூன்றாம் அத்தியாயம் ஜாலவானாய்த் தானொருவனேயாய் விளங்கும் அவன் தன் ஆட்சி முதன்மையால் ஆளுகின்றான், தன் ஆட்சி முதன்மையாற் சருவவுலகங்களையும் படைத்துந் திதித்தும் என்றும் ஒன்றாயிருக்கின்ற தானே யாளுகின்றான். அவனை யறிவோர் மரணத்தைக் கடக்கின்றார்கள். (1) தன்ஆட்சி முதன்மையால் இவ்வுலகங்களை ஆள்கின்றவனும், ஒவ்வொருவருள்ளும் உறைகின்றவனும், இவ்வெல்லா வுலகங்களையுந் தோற்றுவித்து நிறுத்தி யிறுதிக் காலத்தில் வெகுள்கின்றவனுமான உருத்திரன் ஒரு வனேயுளன்; இரண்டாமவன் உளனென்றியாரும் ஒருப்படுகின்றிலர். (2) எல்லாவிழிகளும் அவனே, எல்லாமுகங்களும், எல்லாத் தோள்களும், எல்லாப்பாதங்களுமவனே, அவ்வொரு வனான முழுமுதற் கடவுள் விண்ணையும் மண்ணையும் படைக்குங் காலத்து மனிதனைத் தோளின் கண்ணும் பறவையைச் சிறையின் கண்ணும் தலைக் கூடுகின்றான். (3) விசுவாதிகனும் மகாவிருடியுந் தேவரைப்படைப்பித்து அவர்க்குப் பெருமை தந்திட்டவனும் முன்னே இரணிய கருப்பனைத் தோற்றுவித்தவனுமான உருத்திரக் கடவுள் நமக்கு நல்லறிவு கொளுத்தி உரப்படுத்துவானாக. (4) ஓ உருத்திரனே! மங்களவடிவினதாய்ப் பயங்கர மில்லதாய்ப் பரிசுத்தந் தருவதாயுள்ள உன் திருக்கோலத்தோடு, எல்லாக் கருணையு நிரம்பிய அக் கோலத்தோடு மலையிலிருந்தவாறே நலந்தருவோனே! எம்மைக் கடைக்கணித்திடுக. (5) மலையிலிருந்தவாறே நலந்தருவோனே! சீலர்கண்மேல் விட்டெறிய நின் கரத்திற் பற்றியிருக்குங்கணையை நீ மங்கல முடையதாக்குக. காவலோய் மனிதனுக்கும் உலகிற்கும் தீங்கு செய்யற்க. (7) உலகத்தினும் பெரிதாய்ப் பரம்பொருளாய் அகண்டமாய் எல்லாவுயிர்களின் சரீரங்கட்கேற்ப அவைகளினுள்ளொளிந் திருப்பதாய்ச் சருவவுலகங்களினும் வியாபகமாய் முதல்வனா யுள்ள பிரமத்தை அறிகின்றவர் மரணத்தைக்கடக்கின் றார்கள். (7) இருளுக்குப்பின் விளங்கும் ஞாயிறுபோன்ற அந்த முழுமுதலகண்ட சித்துப்பொருளை நானறிகின்றேன். அவ்வாறு அவனை யறிதலால் ஒருவன் மரணத்தைச் செயிக்கின்றான். முத்திப்பெரும்பேறெய்துதற்கு வேறுவழியில்லை. (8) எவனைக்காட்டிலும் பெரியதில்லையோ எவனைக் காட்டினுஞ் சிறியதில்லையோ எவனிலும் பழையதில்லையோ எவன்தானொரு வனேயாய் முத்தியுலகில் அசைவற்ற மரம்போல் நிற்கின்றானோ அவனால் அம்முழுமுதற்சித்துப் பொருளால் இவையெல்லாம் வியாபிக்கப்படுகின்றன. (9) அவனை அதன் காரணத்திற்கு வேறாகவும் உருவமுந் துன்பமுமில்லா தாகவும் உணருகின்றவர்கள் மரணத்தைக் கடக்கின்றார்கள்; ஏனையோர்க்குத் திரும்பத்துக்கமே வகுக்கப்பட்டிருக்கின்றது. (10) சருவ ஆனனங்களுஞ் சருவ சிரங்களுஞ் சருவ கிரீவங்களும் அவனேயாம்; சருவபூதங்களின் இதய குகையிலே அவன் வசிக்கின்றான், யாண்டும் வியாபிக்கின்றான் பகவானா யிருக்கின்றானாதலாற் சிவன் சருவஞ்ஞனாம். (11) அவன்மகான், பிரபு, முழுமுதல்வன், எல்லாவற்றிற்கும் பிரேரகன், நின்மலானந்தத்திற்குத் தலைவன், சோதியன், நித்தியனாம். (12) ஒவ்வொரு மனிதனுடைய இதயத்தின்கண் வசிக்கின்ற வனும் அறிவை நெறிப்படுத்துகின்றவனும், இதயத்தானும் மனத்தானும் பொதிந்து வைக்கப் பட்டவனும் முழுமுதற் சித்துமான அந்தரான்மா அங்குட்ட மாத்திரையாக விருக்கும் புருடனேயாம். (13) உலகமியாங்கணும் வியாபித்து நிற்கும் முழுமுதல்வன் ஆயிரஞ் சிரங்களும் ஆயிரங்கண்களும் ஆயிரம் பாதங்களு முடையனாய் இதயத்தின் உந்திக்குப் பத்தங்குலத்தின்மேல் வசிக்கின்றான். (14) இருக்கின்ற எல்லாவற்றிற்கும், இருந்த அவ்வெல்லா வற்றிற்கும், இருப்பனவற்றிற்கும், உணவால் வளருகின்ற வற்றிற்கும், மரணமில்லா நித்தியப்பொருளுக்கும் அம்முழு முதல்வன் இறைவனாம். ம-ள-ளஸ்ரீ ஞானசாகரம் பத்திராதிபரவர்கட்கு ஐயா! இக்கடிதத்திற்குத் தங்களரும்பத்திரிகையின் ஓர் மூலையிலிடந் தந்துவகரிக்க வேண்டுகிறேன். சித்தாந்த தீபிகை ஐந்தாம்புத்தகம் பிப்ரவரி மார்ச்சு மாதத்திய 9. 10 சஞ்சிகையில் ஓர் கடிதர் கடவுள்கருப்பவழிப் பிறந்திறத்தலுக்கும் சிலாலிங்கமுதலியவிடங்களில் தோன்றி மறைதலுக்கும் பேதமில்லையென்றும், கருப்பவழிப் பிறந்திறத்த லினால் கடவுட்டன்மைக் கிழுக்காதென்றும் மற்றுஞ் சில மாறுபடுங் கருத்துகளையும் வெளி யிட்டுள்ளார். அதைக் கண்ணுற்ற எமக்குண்டாய மயக்கநீக்குதற்பொருட்டுக் கீழ்வரும் வினாக்கள் நிகழ்த்தப்பட்டன. வேதாகம சாஸ்திரபுராண விதிகாசங்களின் உண்மைப் பொருளுணர்ந்த மேலோர் அவ்வினாக்களுக்குப் பிரமாண சகிதமாய் விடையெழுதி யுபகரிப்பாரென வேண்டுகின்றேன். 1. கருப்பாசயத்திற்றங்கிப் பத்துமாதம் வளர்ந்து யோனி வழிப்பிறந் திறத்தலுக்கும் சிலாலிங்கம், மரத்தம்பம், கற்றூண், ஆகாய முதலியவிடங்களிலிருந்து தோன்றி மறைதலுக்கும் வித்தியாசமில்லையா? இல்லையெனில் அதற்குச் சுருதிப் பிராமாணமென்னை? உண்டெனில் அதுயாது? 2. இரண்டுஞ் சமமெனில் சாஸ்திரங்களில் யோனிவாய்ப் பிறத்தலுக்கு மாத்திரம் ஆசௌசம் (தீட்டு) விதித்துச் சிலாலிங்க முதலியவற்றில் தோன்றுதலுக்கு அங்ஙனம் விதியாததென்னை? 3. பரம்பொருளாயுள்ள கடவுள் கருப்பாசயத்திற் றங்கி யோனி வழிப் பிறந்திறக்கலாமா? பிறந்திறக்கலாமெனில் அப்போது கடவுளுக்கும் ஜீவாத்மாவுக்கும் வித்தியாசமென்னை? பிறந்திறக்கலாமென்பதற்குச் சுருதிப்பிரமாணம் யாது? பிறக்கின்றவர்கள் ஜீவர்களென்றும் பிறப்பிக்கின்றவர் கடவுளென்றும் வருஞ் சாஸ்திரக்கருத்துப் போங்கதியென்னை? 4. கருப்பாசயத்திற் றங்கிவளர்ந்து ஜனனாவஸ்தைப் பட்டுப் பிறந்து இறத்தல் கடவுளிலக்கணமாமா? ஆமெனில் அதற்குச் சுருதிப் பிரமாணம் யாது? கருப்பத்தில் வளர்ந்து பிறக்கு முருவம் மாயாகாரியம். கடவுளெடுக்கும் உருவமும் மாயாகாரியமாமோ? 5. உலகில் தருமத்தை நிலைநிறுத்தல்வேண்டில் பரம்பொருளாயுள்ளவர் கருப்பவழிவரும் மாயாகாரியதேகந் தாங்கி அறிவறியாமைகளின் வயப்பட்டுச் சுகதுக்கங்களில் மொத்துண்டுழன்றே நிலைநிறுத்தவேண்டுவது ஆவசிய கமோ? வேறுவழிகளிலங்ஙனஞ் செய்யமுடியாதா? 6. ஏகதேசமின்றி எல்லாப்பொருள்களிடத்தும் அருவமாய் வியாபித்துத் தோய்வறநிற்குங் கடவுளது சர்வவியாபகதர்மத் தோடு, கருப்பத்திலுரு வெடுத்து ஏகதேசப்பட்டு வசித்தலையுஞ் சமப்படுத்திக் கூறலாமா? கூறலாமெனில் அதற்குப் பிரமாணம் யாது? 7. திரிமூர்த்தி பேதம் சுருதியாதிகளிற் கேட்கப்பட வில்லையா? அம்மூர்த்திகளும் ஆன்மாக்களேயென்பதும் அவர்கள் சிவாராதன மகிமையால் சிவாநுக்கிரகம்பெற்று அந்த அதியுன்னதபதவிகளையடைந்து லோகவுந்திதர்களாகி லோகா நுக்கிரகத்தின் பொருட்டுச் சிருஷ்டியாதி முத் தொழில் நடத்து வார்களென்பதும் வேதபடிதமல்லவா? இம்மூர்த்திகள் லயோற்பத்தி காலங்களில் முறையே ஒருவரிலொருவர் ஒடுங்கியும் ஒடுங்கினமுறையே யுதித்தும் வருவரென்பதும் இந்த நியாயத்தால் அவர் தம்மிற்றாரதம்மிய முடையாரென்பதும் வேதாகம புராணாதிகளிற் பெறப்பட வில்லையா? திரிமூர்த்தி களுக்கு மேலகத்துரியமூர்த்தியொருவர் உபநிடதங்களிற் கேட்கப்பட வில்லையா? அவருக்கு உமாசகாயத் துவாதி யடையாளங்கள் அவ்வுபநிடதங்களிற் படிக்கப்பட வில்லையா? இவரே நான்காவது பொருளும் (சதுர்த்தம்) குணாதீதரும், திரிமூர்த்தி சேவியரு மாயிருந்து தமது சத்தியால் 1திரிமூர்த்தி களை யதிஷ்டித்து முத்தொழில் நடாத்தும் பரமகாரணராகிய த்யேயப்பொருளாவரென்று சுருதியாதிகளில் துதிக்கப்பட வில்லையா? இத்துரியமூர்த்தியே போகமோக்ஷப் பிரதாய கரென்பதும் போகமளிக்குமுறையில் தம்மை வழிபடுமான் மாக் களெண்ணியாங்கு அவரவர் பக்குவத்துக்கீடாக அவர்களை யீஸ்வரராம்படி யுயர்த்தி உலகந்தொழ நிற்கக்செய்யும் அதியுன்னத போகங்களை ஆன்மாக்களுக்கு வைத்தருளுவ ரென்பதும் வேதாகமங்களிற் கூறும் உண்மையன்றோ? இங்ஙனம் பழமையாயுள்ள வேதாகம சாஸ்திர புராணாதி களிலேயே மூர்த்திபேதம், அவர்கள் தாரதம்மியம், தவத்தாலவர் களுயர்ந்து உலகந்தொழநிற்குந் தன்மை, அவரவர் தத்துவநிலை முதலியவைகள் நிர்ணயித்திருக்குமெனில் இப்பேதங்கள், ஒருவர்மேலொருவரை யுயர்த்தி மகிழுந் துராசையால் பிற்காலத்துச் சைவர்களால் கற்பித்துக்கூறல் வழக்கமென்று அக்கடிதர் சைவர்களையிழுத்து நிந்தைகூறியது அவருக்கு நீதியாமா? 8. பிரமாணவாயிலானன்றி அபிமானங்காரணமா யவரவர் மனம் போனவாறெல்லாங் கூறுங் கருத்துகள் உண்மையுணரும் விருப்பமுடை யோராற் கொள்ளற்பாலனவாமோ? தினகரன் சகளோபாசனை இதுவென்று சுட்டியறியப்படுவதன் றாகலானும், அவன் அன்பர்க்கு அனுக்கிரகிக்கும் பொருட்டுத்தரித்து வரும் அருட்கருணைத் திருக்கோலம் அவன் சருவ வியாபக முழுவதூஉம் இயைபுடைய தாகலானும் அஃது அவைபோல வரையறைப்படுங்கண்டப் பொருளன்று; மற்றவரையறைப் படாது விரிந்த அகண்டப்பொருளேயாம். இவ்வாறாகலின், வாக்கு மனாதீதமான அப்பரம்பொருள் அவ்வாக்கு மனத்திற்கு எளிவந்து கோசரித்தலாற் போந்த இழுக்கொன்றுமில்லை யென்றுணர்க. அற்றன்று, வாக்கு மனத்திற்குப் புலனாம் பொருளெல்லாம் அழியக் காண்டலால் அங்ஙனம் மனத்திற்கு விளங்கித் தோன்றும் அக்கருணைத் திருவுருவும் அழிதல் வேண்டும், அழியவே விகாரமின்றி யிருக்கும் ஈசுரன் விகார மெய்தினானென்று கொள்ளப்பட்டு மாறுபாடாமெனின்; மாறுபாடில்லை. மனத்தினாற் பற்றப்படும் உலகியற் பொருண்மாத்திரமே அங்ஙனம் அழியக்காண்டு மன்றி, அறிபொருளாய் உலகியற் பொருளைக்கடந்து செல்லும் பிரமப்பொருளும் அங்ஙனம் அழிதல் வேண்டுமென்னும் யாப்புறவு அதனாற் பெறப்படாமையின் அவ்வாறு கூறுதல் அடாதென் றொழிக. மேலும், மனத்திற்குப் புலனாம் அத்துணையே பற்றி உலகியற்பொருளையும் உலகினை யிறந்து நின்ற பிரமப்பொருளையும் ஒன்றென்று கூற ஒருப்படுதல் பெரிதும் ஏதமா மென்று மறுக்க. மனவுணர்வின்கட் கோசரிக்கும் ஈசுரன் கருணைத்திருக்கோலம் அவன் சருவ வியாபக முழுவதூஉம் இயைபுடையதா மென்பதற்குப் பிட்டுவாணிச்சி பொருட்டு ஒட்டவேடங்கொண்டு எழுந்தருளிய பெருமான் றாங்கிய பிரம்படி சராசரப் பிரபஞ்சங்கள் யாண்டும் பட்ட அற்புத சரிதமே கரிபோக்கி யினிது விளக்கு மென்க. இச்சரித மெய்ம்மையில் ஐயுறவுகொள யாரும் இடம்பெற மாட்டா ரென்பது மேலே சரிதவியல் வாழாமை யுரைத்து நிறுத்தினாம்; ஆண்டுக்காண்க. அற்றேல், வாக்குமனாதீதன் என்று அவ்வாறு ஈசுரனை ஓதியது தான்என்னை யெனிற் கூறுதும். பாச வழிப்பட்டுச் சீபோத முனைப்பால் ஈசுரனையாமறிந்து வழிபட மாட்டுவேமென்று தருக்குவார்மனவுணர்வுக்கு ஒருவாற் றானுங்கோசரிப்பதின்றிப்பரந்து பட்ட வியாபக முழுமுதன்மை யுடையனாகலின் அவ்வாறு சொல்லப்பட்ட தென்க. அருள்வழிப்பட்டுச் சிவபோதமுனைப்பாற் சிவகரணங்களாய்த் திரிந்த மனத்தின் கண்முதல்வன் விளங்கியவழித் தருக்கறுந்து சலனமின்றி யின்பநுகர்ந்து கிடக்குஞ் சீவன்முத்தர்க்கு அவன் கருணைத் திருக்கோலங் கோசரமாதல் ஒருதலையா மென்றுணர்க. எனவே, வாக்குமனாதீதமான சிவபரம்பொருள் நெக்குநெக்குக் குழைந்துருகு மெய்யன்பர் திருவுள்ளத்தின்கட் கோசரிக்குமாறு பற்றிவரக்கடவதோர் இழுக்கில்லை யென்பதூஉம், இழுக்கின்றாகவே உருவத்திருமேனியிற் கொண்டு வழிபாடியற்று மன்பர்க்கு மனவொருமையுண்டாய் அத்துவிதமுத்திப் பெரும்பேறு சித்திக்கு மென்பதூஉம் பெறக்கிடந்தவா றுணர்க. இதுகிடக்க. இனி உலகமியாங்கணும் பரந்துபட்டுக்கிடக்கும் மக்கட் பரப்பில் நாகரிக விருத்தி மிகப்பெற்றுடையோர் முதல் அநாகரிகப் பெருக்கத்தால் விலங்கினத்தோ டொப்பவைத் தெண்ணப்படும் மாக்களீறாக யார்க்கும் இறைவனுளன் என்னும் உணர்ச்சியும், அவ்வுணர்ச்சியோடு உலகத்தின்கட் காணப்படும் பொருள் வாயிலாக அவனை வழிபடுதல் வேண்டுமென்னும் மனவொருமையும், அவ்விக்கிரக வழி பாட்டினின்றியமையாமைக் கடப்பாடும் இயற்கையிலேயே அமைந்து கிடக்குமுண்மை ஒரு சிறிது காட்டி ஈசுரனை உருவத்திருமேனியிற் கொண்டு உபாசிக்கு முறையேதான் பொருத்தமாமென்றுவலியுறுப்பாம். நாகரிக விருத்தியடையு ராதாதமாக்களெல்லாம் தமக்குந் தம்மைச் சார்ந்தார்க்கும் அச்சம், துக்கம், சுகம் முதலியன நிகழ்தற்கேதுவாகப் புறத்தே தோன்றும் உலகியற் பொருள் களையெல்லாங் கடவுளாகக் கொண்டு வழிபாடு இயற்றி வருகின்றார். ஆகவே, தமக்கு உறுதுயர் நீக்கி நலம்பயப்பதாக அவர் தாங்கருதிய புறப்பொருளையே ஈசுரதானத்தில் வைத்து உபாசிக்கக் காண்டலாலே, அவர்தங் கருத்துவகையால் அவையும் ஈசுரோபாசனையாய் முடிந் திடுதற்கு ஓரிழுக் கில்லை. நாம் சுதந்திரரல்லோம் நம்மினும் வல்லதான பிறிதோர் பொருளையே சார்ந்து நிற்கும் பரதந்திர முடையோமென்னும் உணர்ச்சி நிகழப் பெற்றுச் செய்யும் வழிபாடெல்லாம் எத்துணை யிழிந்தன வாயினும்அவ்வவர் பக்குவ வேறுபாட்டால் அவையும் பொருத்த முடையனவே யாம். அது பற்றி அவை எள்ளற் பாலனவல்ல. மற்று அவ்வுணர்ச்சியின் அருமைப்பாடும் அது முறைமுறையே முதிருமாறும் உலகமியாங்கணும் அஃதொன்று தானே வேறு வேறாய் நிகழுமாறும் பிறவும் நன்றாராய்ந்து கோடல் சமயப்பொருட்பொதுமையுணரும் வேட்கை யுடையரான தத்துவஞானிகளுக்கு இன்றியமையாத கடமையாம். இங்ஙனம் அநாகரிக மிகவுடையரான சிலமக்களின் சமயநிலையும் பிறவும் ஒருசிறிது காட்டிப் பின் அவர் செய்யும் விக்கிரகாராதனையை எடுத்து விதந்து தருக்கிப்பாம். ஆஸ்திரேலியாக் கண்டத்திலிருக்கு மாக்கள் உலக சிருட்டி, உலகவியற்கை, சமயவியல்பு முதலியவற்றை உணரு முணர்ச்சியில் ஏனை யெல்லாரினுங் கடைப்பட்ட வராவர். அவர்க்குச் சிருட்டி கர்த்தா ஒருவனுளன் என்னும் அறிவு இன்றாம். ஆயினுந்தீங்கு செய்யும் பேய்களுள வென்றும் அவை இரவிலே காணப்படுமென்றும் உரையா நிற்பர். அவற்றால் நோய்வந்தவிடத்து மந்திரவாதிகளை அழைத்து அவராற் சடங்குகள் பலவியற்றி அதனைக் கழிப்பிக்கின்றார். அம்மந்திரவாதிகள் தெய்வீகத் தன்மை கைவந்தோரெனவும், அது தம்முன்னோர் வழிவருகின்ற தெனவும், அவர்தாமே ஆகாயத்தின் கண் இயங்கல் கூடுமெனவும், காற்று மழை இடி மின்னல் முதலாயின வெல்லாந் தம் ஆணைவழி நிற்பனவா மென்றுங் கூறாநிற்பர். இவ்வாஸ்திரேலிய நாட்டார் கனவில் நிகழ்வனவெல்லாம் உண்மை யாமென்றும், தாமுறங்குங் காலத்தே தஞ்சீவன் புறம்புபோய் மற்றைச் சீவர்களைச் காணுமென்றும், சில உலகியற் பொருள்கள் தாமே உற்பத்தியாய் அவ்வாறான அச்சில ஏனையவற்றை உண்டுபண்ணுகின்றன வென்றும், மேகங்களிடையே வசிக்கின்ற தந்தை ஒருவன் அவன் மூன்று குமாரர்களுடை யான் அவன் எல்லாவற்றையும் படைக் கின்றானென்றும், ஒருபெரும்பாம்பு எல்லாவற்றிற்குங் காரணமா மென்றும், சூரியன் சந்திரன் நட்சத்திரங் களெல்லாம் ஒரு காலத்து இப்பூமியில் வசித்த உயிர்ப் பொருன்களே யாமென்றும் உரைக்கின்றார். சடிதியில் நிகழும் மரணங்களெல்லாம் தமக்குப்பகைவராயினார் செய்யுஞ் சூனியத்தால் வருகின்றன வென்று கொண்டு அங்ஙனஞ் செய்தோரைத் தெரிந்து கொல்கின்றார்; அவர் அவரைத் தெரியுமாறு இறந்தவன் புதைகுழியைச் சுற்றிய நிலத்தை வட்டமாய்ச் சமன்செய்து வழுவழுப்பாக்கி வைத்துப்போவர். மற்றைநாள் வந்து காணும்போது யாதேனும் ஒருபிராணியின் அடிச்சுவடு ஆண்டுக்காணப் படுமாயின், அச்சுவடுகிடந்த திசை நோக்கி யிறந்தவனுக்கு உரிமைச்சுற்றத்தான் ஒருவன் சென்று அங்குள்ளாரோடு உறவாடி, அவர்க்குத்தான் கொடுக்கும் உணவை அவர் உண்ணுகின்றகாலையில் எவன் இருமுகின்றானோ அவனே கொன்றவ னெனத் தெரிந்து அவனைப் பழிக்குப்பழிவாங்கித் திரும்புவான். அவர்கள் ஒருவன் இறந்த பின் வெண்ணிற மடைகின்றான் என்கின்றார்கள். அவர்களில் ஒருசிலர் பிணத்தை நிலத்திற் புதைக்கின்றார், ஒருசிலர் மரத்தின் மேலதனை வைக்கின்றார், ஒருசிலர் எரித்து விடுகின்றார். அவர்கள் துக்கங்கொண்டாடு மிடத்து வெண்ணிறமுள்ள களிமண்ணை உடம்பெங்கும் பூசிக்கொள்ளுகின்றார். இறந்தவர் தகுதிக்கேற்பப்பாட்டுக்கள் பாடுகின்றார். இறந்தவர் ஆன்மா உயிரோடிருப் பவர் தேகத்திற் புகுதுகின்ற தெனவும், அது வானுலகிற் சென்று மண்ணுலகைக் காணுமெனவும் பிறவு முரைப்பர். இனித் தாஸ்மானியா நாட்டிலுள்ளோர் மறுமை உண்டென்றும், தாமிம்மையிற் பெறநினைந்தவெல்லாம் அம்மறுமையிற் பெற்றுக் கழிபேரின்பநுகர்தற்கா மென்றுங் கூறுவர். அவருட் சிலர் தாமிறந்தபின் நட்சத்திர மண்டலஞ் செல்வதாமெனவும், சிலர் தம்பூர்வீகர் இருக்கும் தீவொன்றிற் செல்வதாமெனவும், ஆண்டு வெண்ணிற முடையராய் மாறுதல் சித்திக்கு மெனவுங் கூறுவர். அவர்கள், குகையினுங் காட்டினுந் தீங்கு செய்யும் பேய்கள் உளவென நம்புத லுடையர். அவர்கள் இரவில் இயங்கார். இறந்தவர் புதை குழியைச் சுற்றிச் சமாதி எழுப்புவர். அல்லது, இறந்தவர் தம் உறக்கத்திற் போரியற்ற ஓர் வல்லையம் வைப்பர். இறந்தவர் மனைவியார் தலையைச் சிரைத்துக் களிமண் அப்பிக் கொழுப்பையுங் கரியையுங் குழைத்து முகத்திற்பூசிக் கூர்ங் கற்களால் உடம்பைக் கிழித்துக் கொண்டு அழுவர்; புதை குழியிற் பூவும் பெண்களின் சிரைத்தமயிரும் எறிகின்றார்கள். இறந்தவர் எலும்புகள் சிலவற்றை மூட்டையாகக்கட்டிக் கழுத்தில் தொங்கவிட்டுக் கொள்வார்கள். தஞ்சினே கரினிறந்தவுயிர் தம்மை வருத்தவும் வருமென நம்புதலு டையர். இனிப் புதுக்காலி டோனியா தேசத்திலிருக்கும் மக்கள் முன்னையோரினுஞ் சிறிது சமயவுணர்ச்சி மிகப் பெற்றுடைய ராவர். அவர்கள், இறந்தொழிந்த தம் முன்னோரை ஒரு விதமான தெய்வமெனக் கொண்டு பராவுகின்றார்கள். அவர்களில் தலைவனாயிருப்போன், இறந்தோரைத் தெய்வமாக வழுத்துங் காலங்களிற் குருத்துவம் மேற்கொண்டு அன்புள்ள தந்தையே! உனக்காக இங்கே சிறிதுணவு வைக்கப்பட்டிருக்கின்றது; அதனை உண்டு அதன் பொருட்டாக எம்மீது அன்புகூர்ந்திடுக என்று பிரார்த்திக் கின்றான். இச்சடங்கு செய்து கழிந்ததும் விருந்தியற்றலுங் கூத்தாடுதலுமுண்டு. சீவன் தேகத்தை விட்டுப்பிரிந்ததும் அது தீவின் றெற்குமுனைசென்று கடலிற் குளித்து நீந்திச் சீவர்கள் கூடியிருக்கும் உமத்மஸ் என்னு மிடத்திற்குச்செல்லுகின்ற தென்றும், ஆண்டுச் செல்லலும் அங்கு நல்வர்கட்கென்றுந் தீயவர்கட்கென்றும் இரண்டாகப் பகுக்கப்பட்ட இடங்களி லொன்றிற் செல்கின்ற தென்றுங் கூறுகின்றார். முத்தியுல கென்பது அபரிமிதமான செழுஞ்சுவை யுணவு தொகுக்கப்பட் டிருக்குமிடமா மென்றுங் கூறு கின்றார். ஐந்து மாதத்திற்கு ஒருதரம் இரவில் இறந் தோர்க்குத் திவசஞ் செய்கின்றார்கள். அப்போது குவியல் குவியலாக உணவு சேகரிக்கின்றார்கள். கிழவருங் கிழவியரும் மலைக்குகைகளில் ஒளிந்து கொண்டு, புறத்தேதிவசஞ் செய்து ஆரவாரிக்கும் இளைஞருக்கு இறந்தோர் ஆவிகள் போலத்தம்மைக்காட்டி அவர்க்கு நம்பகம் வருவிக்கின்றார். ஈசுரனை உபாசிக்குஞ் காலையில் பகைவரெறியும் வல்லையங்களைத் தாம் இனிதுகாணும் பொருட்டுக் கண்ணுக்கு ஒர் கடவுளையும், பகைவர் வருஞ் சத்தத்தைத் தெரிந்து கொள்ளும் பொருட்டுக் காதுக்கு ஓர் கடவுளையும் வழுத்துகின்றார். புதுக் காலிடோனியா தேசத்திலுள்ள தன்னா எனும் ஊரில் விக்கிரகங்களில்லை யாயினும், சனங்கள் ஆலமரத் தோப்புகளைப் பரிசுத்த முடைய இடமாக நினைந்து ஆண்டுத் தூய்மையுள்ள கற்களை நிறுத்தி வணங்குகின்றார்கள். மாலிகோலா புது ஈபிரீட்ஸ் என்னு மூர்களில் ஒவ்வொரு சிறுகிராமத்தினும் பரிசுத்தமான வீடுகளில் வண்ணந்தீட்டி ஆடவரைப்போல் உடையிட்ட பதுமைகள் மூன்று நான்கு நிறுத்தி வழிபாடு செய்கின்றார். எல்லாத் தெய்வங்களுந் தீதுசெய்யுந் தன்மையுடையன வென்கின்றார். மந்திரமுஞ் சூனியமும் எல்லாராலும் நம்பப்படுகின்றன. அவர்களில் தலைவோன் இறந்து பட்டால் அவன் புதைகுழியின்மேல் கணை, வல்லையம், மண்வெட்டி முதலியவற்றைச் செங்குத்தாய் நிறுத்தி அலங்கரித்து வைக்கின்றார். பிணத்தின் கைவிரல் கால்விரல்களை ஞாபகார்த்தமாக நறுக்கிக் கொண்டு போய்ப் போற்றிவைப்பர். புதைகுழியிற் பாய்விரித்து அதிற்பிணத்தைக் கிடத்தித் தலைதவிர மற்றை யுறுப்புக் களைப் புதைத்து விடுகின்றார்; பத்துநாட்கழிய இறந்தோன் சினேகிதர் சிலர் போந்து தலையைத் திருகிக்கொண்டு போய்ப் போற்றிவைக்கின்றார்; சிலர் பற்களைப் பிடுங்கிக் கொண்டுபோய் அவ்வாறு செய்கின்றார்; மண்டை ஓட்டையும் அங்ஙனஞ் செய்தலுண்டு. இனிச் சாலமன் தீவுகளிலுள்ளோர் இறந்தோர் ஆன்மாக்களையே பெரிதெடுத்துப் போற்றி வழிபடுகின்றார். முக்கியமாய் மூதாதைக்கு முன்சென்றோரை அங்ஙனம் வழிபடுதலில்லை. நொதுமலர் இறந்துபட்டால் அவர் அருகேயுள்ள ஓர் தீவில் ஓர் குறிப்புமின்றி அலைந்து கொண்டிருப்பரெனவும், சிறந்தோர் இறந்துபட்டால் அவர் தம் நண்பர்பக்கத்தே யிருந்துகொண்டு அவர் வேண்டிய போதெல்லா நன்மை செய்வரெனவுஞ் கூறாநிற்பர். தந்தை மகற்குரைப்ப வருகின்ற உபாசனைப்பண்களை முணுமுணு வென்று சொல்வர். மந்திர சூனியங்களை நம்புகின்றார். சுறாமீன் அவராற் பெரிதுங் கௌரவிக்கப்படுகின்றது. மரங் குடைந்து செய்த வீடுகளைப் பரிசுத்தமுடைய இடமாக வெண்ணி அங்கு மரங்களில் ஈர்ந்து செய்த பேய்வடிவங் களைத் தாபித்து வழிபடுகின்றார். இனிப்புதுச் சீலண்டு தேசத்தில் மாரிஸ் என்னு மூரிலுள்ளோர் ஓர் கூடையில் வேர்களையிட்டு உயரத்தூக்கி அஃது ஈசுரவுணவாமென்று, அது நல்லதானிய விளைவைக் கொடுக்கு மென்றுங் கூறுகின்றார். அவர்களில், தலைமக்கள் தைவிகமுடைமையால் தேவர்கள் கருத்தைத் தமக்கு வெளியிடுவரெனச் சொல்வர். ஐரோப்பிய பாதிரியா ரொருவர் இத்தீவுக்குச் சென்று அங்கு அவர்களிற்றலைவ னான குருவைக்கண்டு பேசுகையில், அவன் என்னை மனிதனென்று நினையற்க, நானிம்மண்ணுலகிற் பிறந் தேனல்லேன், நான் வானுலகினின்று வருகின்றேன், என்முன்னோ ரெல்லாரும் ஆண்டுள்ளார், அவர்கள் தேவர், நான்திரும்பவும் அவர்களிடத்துச் செல்வேன் என்றுரைத் தனனாம். மாய் என்பவர் அவர்களிற் பூர்வீகப் பெரியோராம்; அப்பெரியவர் தாமிருக்குந் தீவைக் கடலிலிருந்து தூண்டிலா னிழுத்து விட்டனராம். தெய்வத்தன்மை யடைந்ததம் முன்னோர் ஆன்மாக்கள் பல்லிசிலந்தி பறவைகளாக இங்குவருகின்றனவென நம்புகின்றார். மேலும், ரங்கியும் பப்பாவும் அல்லது வானும் மண்ணும் ஆறுபுதல்வரையுந் தந்தையரையும் தந்தனர்; அவை 8, மக்களும் யுத்தமும், பயிரின்றிப்பெறும் உணவும் மீனும் ஊர்வனவும், காற்றும், புயலும், பயிரிடப்படும் உணவும், காடும் பறவையுமாம்; இத்தெய்வங்கள் செய்த சதியாலோசனையால் வானும் நிலனும் பிரிந்து போயினவென்று புராணகதையுஞ் சொல்லு கின்றார்கள். தீயகருமங்கள் செய்வோர் இவ்வுலகத்தே ஒறுக்கப்படுகின்றனரெனவும், அங்ஙனம் ஒறுப்போர் தெய்வத்தன்மையுடைய தம்முன்னோரா மெனவுங் கூறுகின்றார். இதிந் தங்காத்தீவு களிலுள்ளோர் முன்னையோரினுந் திருந்திய சமயவுணர்ச்சியுடையர். அவர், சிறந்த கடவுளருள ரென்றும், அக்கடவுளர் அவ்வவர் செய்திறங்கட்கேற்பப் புண்ணிய பாவங்களை வகுக்கின்றனரென்றும் கூறுகின்றார். அவர்கள் ஆன்மாவொன்றுண்டென்றும், மக்களெல்லாருந் தேவவுலகத்தி லிருந்து வந்தாரென்றுங் கூறுவர். அவர்கள் கடவுளருக் கெல்லாந் தனித்தனி ஆலயங்களும், தனித்தனி குருமார்களும் உண்டு. இனிச் சாமோன் தீவுகளிலுள்ளோர் எண்ணிறந்த கடவுளரை வழிபடுகின்றார். ஒவ்வொருவரையுங் காப்பாற்று கின்ற தனித்தனி தேவரும், ஒவ்வொருகிராமதேவர்களும் உண்டு. அக்கடவுளர் பெயர்கள் அவர்கள் பாஷையில் விரைந்துசெல்வோம் தூய்மையுடையோன் அழிவு ஆகாயக்கடவுள் என்னும்பொருள் தருகின்றன. அத் தேவர்கள் மிருகங்களாகவும் வானவில்லாகவும் எரி மீன்களாகவும் வருகின்றன ரெனநம்புகின்றார். கல்லாற் செய்த மழைக்கடவுளை வணங்குகின்றார், மழை மிகுந்து விட்டால் அக்கற்பதுமையை நெருப்பில் வீழ்த்தி வறட்டுவார்கள், மழையில்லாவிடின் அதனையெடுத்து நீரில் நனைப்பார்கள். இனி எர்வீத் தீவுகளிலுள்ளமக்கள் இவ்வுலகந் தேங்காயோடு போலிருப்பதெனவும், அதனத்துக்கு மேல்திறப்பில் தாம் வசிப்பதாகவும், அதன் அடிப்படையில் தடித்த தண்டுண்டென்றும், அது பெரியதோர் பேய் என்றும், அஃதிருக்கும் இடத்திற்குச் சிறிதுமேலே உயிர் என்னும் மற்றோர் பெரும்பேய் உளதென்றும், அதற்கு மேலே நெடுநாள் வசிப்போன் எனுந்தடிப்பேய் பிறிதொன்றுண் டென்றும், இம்மூன்று பேய்களுமே உலகைத் தாங்குகின்றன வென்றும், இந்தத் தேங்காய் நடுவில் பெண் பேய் ஒன்றிருக்கின்ற தென்றும், அது படைத்தற் றொழிலை நிகழ்த்துகின்ற தென்றும் உரைக் கின்றார். ஒருநாள் அப்பெண் பேய் தன்வலது விலாவெலும்பு களிலொன்றைப் பிடுங்கி யெடுத்து அதனை மனிதனாகப் பிரதமசிருட்டி செய்தனள். இன்னுமிவள் இட வலப் பக்கங்களிலிருந்து எல்லாவற்றையும் படைத்தனள். இவர்கள் கூறும் புராணக்கதைகளெல்லாம் கிரேக்கர் கூறுவனவற்றொடு ஒத்தொழுகுகின்றன. பறவைகளும் மீன்களும் ஊர்வனவும் பூச்சிகளும் குருமாரும் முதலியன தேவாவதாரங்களாகவும் தேவதூதர்களாகவுங் கருதப் பட்டன. அவர்கடவுளை ஐயோ என்று அழைக்கின்றார். அச்சொற்பொருள் மரத்தின் உள்ளீடு என்பதாம். மரத்தினுள்ளகடுபோல் மனிதனோடியைந்து நிற்றலாற் கடவுளை அவ்வாறு வழங்குகின்றார். நாணற்புல் வேய்ந்த குடிலினுட் புகுந்தால் மேளத்தினோடுபோன்ற உருவத்துடன் ரங்கோ எனும் வடிவம் நிற்கும்; அதனை யடுத்து மேட்டரோ என்பதன் வடிவமிருக்கும்; அதனை யடுத்துப் பதினொரு பதுமைகளிருக்கும். இவர்கள் நன்றாய்க் கடைந்து திரட்டிய பதுமைகளை வழிபடுதற்கு இயற்றிக் கொண்டார்கள். இன்னுமிச்சாதியார் செய்யுஞ் சவக்கருமங் களும் பிறவும் ஈண்டு விரிப்பிற் பெருகும்; விரிந்த நூல்களிற் கண்டு கொள்க; ஆயினும் அவர்கள் முற்காலங்களில் மனிதரைப் பலியிட்டு வந்தார்களென்பது மாத்திரம் ஈண்டுக் குறிக்கொளல் வேண்டும். இனிச் சொசைடித் தீவுகளிலுள்ளோர் அனேக தெய்வங் களை உபாசித்து வருகின்றனர். அவைகளிற் சில போர்க் கடவுள் சமாதானக் கடவுளாகவும், ஏனைச் சில மக்கட்குந் தேவர்கட்கும் இடைநின்று தூதுபோவன வாகவும், மற்றுஞ் சில ஆரோக்கியந் தருவனவாகவுஞ் கொண்டு வழுத்தப் படுகின்றன. பலவேறு வகைப்பட நிகழ்த்தும் விளையாட்டுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் கடவுளுண்டென்று கருதி அவ்விளையாட்டுகள் தொடங் குங்காலும் நிறுத்துங்காலும் அவற்றைப் பூசிக்கின்றார். அதற்கென்றே நியமிக்கப்பட்ட ஓர் தெய்வத்தின் ஆணைவழி நின்று பூகம்பங்களுண்டா கின்றனவென்று முரையா நிற்பர். மீன்களும் பறவைகளுங் கூட இவர்களாற் றெய்வங்க ளென்று கொள்ளப்படுகின்றன. ஆமை மிகப் பரிசுத்த முடைய தென்றெடுத்து ஆலயத்தினுள் அக்நியிலதனைச் சமைத்து அதனில் ஒரு கூறு விக்கிரகத்திற்கு நிவேதிக் கின்றார்கள். தம்மிற் றலைவோருங்குருமாரும் இறந் தொழியின் அவர் ஆன்மாக்கள் சில வேறுபாட்டுடன் அவர்களால் வழுத்தப்படுகின்றன. பிரசித்தியடைந்த ஒவ்வொருவரான்மாவுக்கும் ஒவ்வொருவிக்கிரகங்கள் நிலத்தின் மேலுயர்த்திக் கட்டப்பட்ட வீடுகளில் அமைக்கப் படுகின்றன. அவர்கள் மறுமையுண்டென்றும், அக்காலத்து ஓரான்மாவனது மற்றையான்மாக்களாற் செலுத்தப்பட்டு இருளிற் செல்லு கின்றதென்றும், ஆண்டது முறைமுறையே தேவர்களால் உண்ணப்படு கின்றதென்றும், அங்ஙனம் உண்ணப்படாதொழிந்தசில அத்தேவர்களைப் போற்றெய்வத் தன்மையுடைய வாகின்றனவென்றுங் கூறுகின்றார். ஒரு மலைக்குப் பக்கத்தே மிகவழகிதான ஓர் முத்தியுலகுண் டென்று நினைக்கின்றார். ஆயினும், இவ்வுலகு நல்லோரான் மாத்திரம் பெறப்படுவதெனவாதல், இவ்வுலகத் தின்கணியற்றிய கருமங்களின் பயனை மற்றையுலகில் நுகரவேண்டு மெனவாதல் அவர் கொள்வதில்லை. ஒரு விக்கிரகந் தமக் கொன்று செய்யுமாறு வேண்டித் தாஞ்செய்யும் பூசனைகட் கேற்பத் தாம்விரும்பியது பெறப்படாதாயின், அவர் அவ்விக்கிரகத்தினை வீசியெறிந்து அவ்விடத்தில் தாம் வேண்டுவதொன்றை நிறுத்துவர். இன்னும் இவர் ஒழுக்கங் கள் விரிப்பிற் பெருகும். இனிச் சாண்ட்விச் தீவுகளிலுள்ளோர் ஆண்டுள்ள எரிமலைகளாற்றாம் நுகருந்துன்பங்களை நினைந்து அவ்வெரிமலைகட்கு அதி தெய்வமொன்றுள தென்றும், அஃதெவற்றினும் பெரிதான மான்மிய முடையதென்றும் உரைத்து அதனை உபாசிக்கின்றார். விக்கிரகங்கள், ஆலயங்கள், அரசன், அவன்பெயர், குருமார், அரசன் குரு, இவர்களுடைய சுதந்திரப்பொருள்கள், ஓர் விக்கிரகத்தின்கட் பத்தியுடையரான அடியவர் இவரெல்லாம் டபு என்னும் பரிசுத்தமுடைய ரென்று சொல்லுகின்றார். வேள்வியிற் றேவர்க்கு அவியாகக் கொடுக்கப்பட்ட பன்றி கோழி ஆமை முதலியவற்றின் இறைச்சியும் தேங்காய்களும் பெண் மக்களுண்ணப்படா வென்று விலக்கியிருக்கின்றார். வேனின் முதலான சிலபருவங்களும் அவர்களாற் பரிசுத்த முடையன வென்று கொள்ளப்படுதலால், ஐந்து முதல் நாற்பது நாள் அப்பருவங்கழியுந்துணையும் அவர் ஒன்றுஞ் செய்வதில்லை, எல்லா நெருப்பும் விளக்கும் அவிக்கப்படுதல் வேண்டும், படகுகள் நீரிற் செலுத்தப்படா, யாருந்தலைமுழுகல் கூடாது; ஆலயத்திற் பூசிப்போ ரொழிய மற்றையோர் வெளிவரக் கூடாது; நாய்குரைக்கக் கூடாது, பன்றி உருமப்படாது; சேவல்கூவுதல் கூடாது. அக்காலத்திற் பன்றி நாய் முதலிய வற்றினுடைய வாய்கள் கட்டப்படுகின்றன. அரசருங் குருமாரும் எதனையுந் தொடுதல் கூடாது. பிறரால் அவர் உணவு ஊட்டப்படுவர். இந்நியதி பிழைத்துச் செய்வோனுக்கு மரணதண்டனை விதிக்கின்றார்கள். இனி இவ்வாஸ்திரேலியாக் கண்டத்திலுள்ள பிஜிறர் என்னு மற்றோர் சாதியார் மறுமையுண்டென்றும், அது மனிதருக்கே யன்றி மிருகங்கள், புற்பூண்டுகள், வீடுகள், கருவிகள், படகுகள் முதலிய வெல்லாவற்றிற்கு முளதென்றுங் கூறினார். மனிதருக்கு இருவேறாவிகள் உளவெனவும், அவற்றுள் ஒன்றான அவன் நிழல் ஏட்ஸ் என்னுமிடத் திற்குப்போவதெனவும், நீரிற்றோன்றும் பிரதிபலன் மற்றோர் உருவம் அவனிறக்குமிடத்தேவசிப்ப தெனவுமுரைத்தார். அவர்கள் பகைவரை வெல்வதெல்லாம் நரமாமிச பக்ஷண விருப்புடைய அவர் தெய்வத்திற்கு நரபலியிடுதலான் மாத்திரம் வருமென்று அவர்குருமார் வற்புறுத்திக் கூறுதலால் இந்தச்சாதியார்மாட்டு நரபலி விசேடமாய் நிகழ்ந்தது. அவர்களிற் றலைவராவார் தம் மனைவியரை வெட்டிப் பலியிட்டனர். அவர்களுக்கு அச்சத்தை விளைப்பன வெல்லாம் தெய்வங்களாக வழிபடப்பட்டன. அவர்களுடைய தெய்வங் களில் ஒன்றுக்கு எட்டுப்புயங்களும் ஒன்றுக்கு எட்டு விழிகளும், ஒன்றுக்கு எண்பது வயிறுகளும் உண்டு. இவர் திறம் இன்னும் விரிப்பிற் பெருகும். இனிப்புதுக்கினியாவில் டோரி என்னுமூரிலுள்ள பாபுவர் என்போர் ஒவ்வொரு வீட்டினுள்ளிருப்பதாயும், ஒழுங்கின்றிச் செதுக்கப்பட்டதாயும், பதினெட்டடி உயரமுள்ளதாயுமுள்ள கார்வர் என்னும் விக்கிரகத்தை ஆராதித்து வருகின்றார். அவ்விக்கிரகத்தினெதிரே சப்பாணி கொட்டியிருந்துந் தலைமேற்கைகுவித்துந் திரும்பத்திரும்ப வணங்கியுந் தங்குறைகளை அச்சமயங்களிற் சொல்லிக் கொண்டும் ஒழுங்காய் அதனை வழிபடுகின்றார்கள். குழந்தைகள் பிறக்கும்போதும், மணஞ்செய்யும்போதும், சாக்காடு நிகழ்ந்த விடத்தும் அவ்விக்கிரகம் வந்திருத்தல் வேண்டுமென நினைக்கின்றார்கள். பீடிஷ் என்று சொல்லப் படுவனவாகிய செதுக்குப் பிரதிமைகள் பலவைத்திருக் கின்றார்கள். அவைகள் பெரும்பாலும் ஊர்வனவற்றின் வடிவங்களேயாம். இனிப்போர்னியோ தீவுகளிலுள்ளோர் பிரதான மாகக் கொண்டு வழிபாடியற்றுங் கடவுள் பவா என்னும் பெயரினதாம். இச்சாதியார் முன்னொருகாலத்து ஜாவான் என்னும் சாதியாரோடு சம்பந்த முடையராயிருந்தாரென்பது இவர் தெய்வங்களின் பெயரானும் வழக்கவொழுக்கங் களானும் இனிது துணியப்படும். இவர்கள் எண்ணில்லாத பிசாசங்களை வழிபடுகின்றனர். அவைநல்லனவென்றுந் தீயனவென்றும் பகுக்கப்பட்டிருக்கின்றன, அவர்களிடும் அடியுறையிற் பெரும்பாகம் தீயவற்றிற்குச் செல்கின்றன வாம், நோய், துரதிர்ஷ்டம், சாக்காடு முதலியனவெல்லாம் இவைகளா லுண்டாகின்றனவென்றுஞ் சொல்லு கின்றார். சிலபருவங்களிற் பிசாசங்களோடு இரகசியமாய்ச் சம்பாஷிக்கும் பொருட்டுக் காடுகளுக்குச் செல்லுகின்றார். இவர்கள் வழிபடும் போர்த் தெய்வங்கள் கொடுந்தோற்றமுங் குரங்குபோற் சிவந்த உரோமமுள்ளனவென்று கூறாநிற்பர். இனி மலகசி என்போர் ஒவ்வொரு குடும்பத்தினும் வேறுவேறாம் விக்கிரகங்கள் பலவுடையர். அவைகளிற் பெரும்பாலன மானுடவடிவமும், சிறுபாலன வடிவமில்லாத முழுமுதற் பிண்டங்களுமாம். பாம்புகள் கடவுளரான் நியாமகஞ் செய்யப்பட்ட தலைவரென அவற்றை மிகவிநய மாய் வணங்குகின்றார்கள். முதலையையும் அவ்வாறே மடமையாற் பத்திசெய்கின்றார்கள். இறந்தவர்கட்குப் பலிதரும் வேள்வித்திண்ணைகள் மலைகளின் மேற் காணப் படுகின்றன. இதுவரையில் ஆஸ்திரேலியாக்கண்டத்தார் சமய வரலாறு ஒருவாறு சொல்லப்பட்டது. இனி ஆப்பிரிக்காக் கண்டத்திலுள்ளோர் சமயப்பெற்றிமையும் ஒரு சிறிது காட்டுவாம். ஆட்டண்டாட் என்னுஞ் சாதியார் கடவுளொருவ ருண்டென்றும், அதன்பெயர் ஈட்ஜிபிப் என்பதாமென்றும், அஃதிறந்தோர் புதைகுழிதோறும் வசிக்கின்றதென்றும் உரைக்கின்றார். அவர்களுள் ஒருவர் புதைகுழியின் பக்கத்தே செல்லும்போது அதன் மேல் தம்பத்திமைதோன்றக் கல், செடி முதலியவற்றுளொன்றை எறிந்து தம்மை இரட்சிக்கும் படி பிரார்த்திருக்கின்றார்கள். இனித்தமராஸ் எனப்படுவோர் பூர்வகாலத்தின் தொடக்கத்திலே ஒருமரம் இருந்ததென்றும், அதிலிருந்து தமராஸ், ஆடுமாடுகள் முதலானவெல்லாம் உற்பத்தியாயின வென்றும் கூறி மரங்களைப் பயபத்தியோடு பாராட்டு கின்றார்கள். இறந்தோர் ஆன்மாக்கள் தம்மியற்கைவடிவம் ஒழித்து நாய்வடிவத்தோடு வருகின்றனவென்று சொல்லு கின்றார்கள். பிகுவானஸ் என்போர் மரத்தானுங் களிமண்ணானுஞ் செய்யப்பட்ட விக்கிரகங்களை வழிபட்டு அதனாற் றமக்குத் தெய்வத்தன்மை சித்திப்பதாக வுரைக்கின்றார். இனிக் காப்பிரிகளென்போர் முதன்முதலுள்ளோன் ஒருவனுள னென்றும் அவன் பெரியதிற் பெரியோன் என்றும் உரையா நிற்பர். தம்முன்னோர் ஆன்மாக்கள் பாம்புடன் கலக்கின்றன வென்றுரைத்து அவற்றைப்பெரிது போற்றுகின்றார்கள். செல்வப்பெருக்கமுற்று வாழ்வ தெல்லாந் தம்முன்னோர் அருளால் வருகின்றன, வறுமையுறுதலெல்லாம் அவர் கோபத்தினால் வருகின்றனவென்றும், தம்வழிவருவோரை யெல்லாம் அவர் பாதுகாத்து நிற்கின்றனரென்றுங் கருதி அவர்க்கு மிருகங்களைப் பலியிடுகின்றார்கள். இனி ஆப்பிரிக்காவின் கீழ்ப்பாகங்களிலுள்ளோர் மேலான பொருள் ஒன்றுளது, அதன்பெயர் முலுங்கு என்பதாம். அஃது இடி, விண், நோய்செய்வது என்பனவாக விவரிக்கப்படுகின்றது என்று கூறுகின்றார். தம்முடைய உறவினர், நண்பர், ஆடுமாடுகள் முதலியவற்றைக் கொல்லுதலால் அந்தப் பழிக்குப் பழிவாங்க அக்கடவுளைக் காணுதல் வேண்டுமென விரும்புகின்றார். இறந்தோர் ஆன்மாக்கள் தமக்குக் கனவில் விளங்கித் தோன்றுகின்றன, அவற்றுள் நல்லன மருந்து, கள், உணா முதலியன கொடுத் தலாற்சாந்தமடைகின்றனவென்று கூறுகின்றார். இனிப் பாலண்டா சாதியார் ஒரு கொம்பில் மனிதர் தலையைக் கட்டித் தூக்கியும், கல்லானுங் களிமண்ணினானு மியற்றப்பட்ட சிங்கம், முதலைமுதலியவற்றின் வடிவங்கள மைத்தும் அவற்றைவழிபடுகின்றார். இவற்றிற்குப் பலியிடுத லால் வருங்கால உணர்ச்சி உண்டாமென்று நினைக்கின்றார். இனி இக்கண்டத்தின் மேற்பாகங்களிலுள்ள நிகிரோவர் காற்றுக்குப் பிட்டிஷ் என்னும் ஓர் உருவும், இடிக்கொன்றும், ஆற்றுமீன் கடல்மீன்கட்கு ஒவ்வொன்றும், காலில் முள்தையாதிருக்க ஓர் உருவும், காட்டுமிருகங்கள் தீது செய்யாதிருக்கவென்று ஓர் உருவும், அசௌக்கியம் வராதிருக்க வொன்றும், நல்லதிஷ்டத்திற்கொன்றும், கண்கள் தெளிவாயிருக்கவுங் கால்கள் வலிவாயிருக்கவும் நயமாய் விலைப்பொருள்கொள்ளவும் ஒவ்வொன்றும் வைத்து வழிபடுகின்றார்கள். ஒருவன் எதாவதோர் குற்றஞ்செய்தல் வேண்டினானாயின் தான்வழிபடும் பீட்டிஷ் உருவத்தை மூடிவைத்து அஃதறியாதென் றெண்ணிச் செய்கின்றான். அவ்வுருவம் மனித வடிவத்தை யாதல் மற்றைப்பிராணிகளின் வடிவத்தையாதல் குறிக்க வேண்டுமென்னும் நியதியில்லை. சாதாரண ஓர் உருச் சிவந்ததுணியாற் சுருட்டிச் செய்யப்பட்டதாயிருக்கும். கிராமங்களிலிருக்கும் உருக்கள், உடம்பெல்லாம் இரும்புத் துண்டுகள் பறவைச் சிறகுகள் பழங்கந்தைகள் முதலியன ஒட்டிச் செய்யப்பட்ட மனித வடிவங்களாம். அவற்றுட் சில எருமைமயிர் அழுக்கேறிய கந்தைகள் முறுக்கிய வளார்களானுஞ் செய்யப்படுகின்றன. இன்னும் அம்மேற்பாகங்கள் சிலவற்றில் இம்புரி என்னுந் தெய்வோபாசனையானது காணப்படுகின்றது. ஒருமரம் ஆறுமுதலியனவும் அப்பெயர்பெறாநிற்கும். ஒவ்வோர் ஆடவரும் பெண்டிரும் ஒவ்வோர் இம்புரி உருக்கள் வைத்திருப்பர். கெட்டகாலம், நோய், அபாயம் நிகழுங்காலங்களில் அவைகட்குப் பலியிடுகின்றார்கள். இந்த உருக்கள் வைக்கப்பட்டிருக்குங் குடில்களில் நுழைந்தால் ஆண்டுமானுடவடிவமாக வைக்கப்பட்ட ஓர் உருவும், அதனெதிரே நிலத்திலூன்றிய பிசின்றீவர்த்தியும் காணக் கிடக்கும். சமயப்பொறுமை திருவனந்த புரத்தில் ஸ்ரீவள்ளல் சோ சிவஞான தேசிகரவர்களாற் பிரசுடனஞ் செய்யப்படும் அறிவுவிளக்கப் பத்திரம் 1901-ஆம் வருடம் மார்ச்சு மாதம் 10 தேதி வெளிவந்த சஞ்சிகைமுதல் அக்டோபர் மாதம் பிரசுரமான சஞ்சிகை ஈறாக இடைக்கிடந்தவற்றுள் ஒருநண்பர் மதக்ஷமை அல்லது சமயப்பொறுமை என்னும் விடயத்தை விரித்துரைக்கப் புகுந்து, ஒருசில நன்கெடுத் துரைத்து ஒருசில நன்காராய்ந் துரைக்கு மதுகையின்மையின் வேண்டியவாறே கூறித் தருக்கம் நெகிழ மொழிந்து முடித்திட்டார். இப்பரத கண்ட நன்னாட்டை யொழித்து ஒழிந்த கண்டங்களினுள்ள மக்களெல்லாருந் தம்முட் பலவேறுபட நிகழுஞ் சமயப் பொருள்பற்றித் தம்முண் முரண்பாடு பெரிதுற்றுப் போரியற்றி மலைந்து கணக்கின்றி யிறந்துபட்டாரெனவும் நமது பரதகண்டத்திலுள்ள நன் மக்கள் பலவேறுபட நிகழுஞ் சமயப்பொருள் பற்றிப் பிணங்காது பொறுமை மேற்கொண் டொழுகினமையால் அங்ஙனஞ் சமயப்போர் விசேடமாய் நிகழ்தலின்றாயிற் றெனவுங் கூறிச்சரிதங் காட்டித் தம்மேற் கோள் நிறுத்து வாராயினார். இனியிப்பரத கண்டத்தின் கண்ணும் பொறுமையின்றி மலைந்து மற்றைச் சமயிகளைக் குரூரமாய்க் கொல்வித்த ஒரோவொரு சம்பவங்கள் நிகழ்ந்தன வென்றுரைத்து, அவ்வுரைப் பொருளை நிறுத்தற் பொருட்டுப் பாலறாவாய ரென்னும் பிள்ளைத் திருநாமம் பெற்ற ஞானசம்பந்தப் பெருமான் தன்னால் ஜெயிக்கப்பட்ட சமணரை ஒருங்கே கழுவேற்று வித்த லோரதிபாதகச் செய்கை யன்றோ. சமணரிற் சிலர் துஷ்டர்க ளென்றாலும் இக்குரூர தண்டனையை ஒருங்கே அனைவருக்குங் கூறல் அவர்தம் பெருமைக்கழகோ, ஞானசம்பந்தர் சைவசமயமே சமயமென ஸ்தாபிக்க மிக உழைத்தாரென்பதும் அவர் தமிழ் வல்லாரென்பதும் மிக்கசொல்வன்மை மனவன்மைகள் உடையா ரென்பதும் ஐயுறக் கிடந்ததன்றாயினும் ஜீவகாருண்ய மின்றித் தம்போலிய ஜீவராசிகளை உயிர்துறக்கச் செய்தல் அவர்தம் பேராற்றலுக் கோரிழுக் கன்றோ; எனமுன்னொடுபின் மலையுமாறு தமக்குத் தோன்றியவாறே குழறினார். இனி இங்ஙனங் கூறிய விவருரை பொருத்தமின்றிக் குழறு படையாய் முடிதல் ஒருசிறிது காட்டுவாம். ஞானசம்பந்தப்பெருமான் சமணரெய்திய தண்டனை யிற் சம்பந்த முறுதல் பற்றியே அவர்க்குத் தோடாரோபணஞ் செய்தல் நியாயவுணர்ச்சி கொளமாட்டாதார் முறையாம். என்னை? கொலைஎன்னுஞ் சொற்கேட்டதுணையானே கொலை தீ தென்றலும் வருத்தமென்னுஞ் சொற்கேட்ட துணையானே வருத்தந் தீதென்றலும் அமையா, மற்றவை நல்லவாமாறும் உண்டாகலானும், அங்ஙனங் கொள்ளாக் கால் ஒருவேந்தன் குற்றஞ் செய்தோ னொருவனைத் தூக்கிடுதலும் ஒருவனை வருத்தி ஒறுத்தலும் போல்வன வெல்லாம் நடுவின்றாய்ப் பிறழ்ந்துபடு மாகலானுமென்பது. அற்றன்று, ஒருவேந்தன் குற்றஞ்செய்தோரையே அங்ஙனம் ஒறுக்கக் காண்டுமாகலான் அதுபற்றி யவற்கு வரக்கடவ தோரிழுக்கில்லை, மற்று ஞானசம்பந்தர் தஞ்சமயந்தழாது அவர் பிணங்குமாறே பற்றிச் சமணரைக் கழுவேற்றுவித்தல் நியாயமாமாறு யாங்ஙனமெனின் அறியாதுகடாபினாய், ஞானசம்பந்தர் தாம் பிரசாரகஞ் செய்து போந்த சைவ சமயத்தை அவர் தழாமை பற்றியவரைக்கழு வேற்று வித்தாரெனலடாது, தஞ்சமயஞ் சார்ந்து நிற்கும் பெரியோரை அச்சமணர் பெரிதும் நலிந்து அவர்க்கெல்லாம் பெருந் தீங்கிழைத்தமையானே அவ்வாறு ஒறுப்பித்தார். கொல்லா விரதம் பூண்டொழுகின சமணர் அங்ஙனம் பிறர்க்குத் தீதுசெய்வரோவெனின்; செய்தாரென்பதை நிறுவுதற்குச் சகளோபாசனையில் யாமுரைத்த ஓர் பகுதியை யீண்டெடுத்துக் காட்டுவாம். அக்காலத்திற் சமணசமயிகள்யாண்டும் விருத்தி யடைந்து வந்தனர். அச்சமணசமயிகள் கொல்லாமை முதற் சிறந்த இலௌகிகதருமங்களைப் பிறழா மனவெழுச்சியுடன் அனுட்டித்து அச்சிறந்த தரும மேம்பாட்டைச் சாதாரண சனங்கட்கு உபந்நியசித்து அவர்க்கெல்லாம் உள்ளக்கவர்ச்சியை எழுப்பி அவ்வாற்றாலவரைத் தம்மதத்திற்குத் திருப்பிக்கொண்டு செல்வாராயினர். இங்ஙனஞ் சிலநாளெல்லாஞ் செல்ல அச்சமணசமயம் யாண்டும்பரந்து விரிவதாயிற்று. தஞ்சமயம் இவ்வாறு விருத்தியடையவே மற்றைச் சமயங்களை அனுசரித் தொழுகுவோர் தொகைசுருங்குவதாயிற்று. சமணம் பௌத்தம் முதலிய அச்சமயங்களையொழித்து ஒழிந்த சைவம், வைரவம், பாசுபதம், சாத்தேயம், கௌமாரம், காணாபத்தியம் முதலியசமயங்களெல்லாம் தெய்வம் ஒன்றுண்டெனக் கொண்டுவழிபடும் ஆத்திகசமயங்களாம். சமணம் பௌத்தம் என்பனவோ இளெகிகதருமங் களிற்சிறந்தனசில அனுட்டித்து ஒழுகும் அம்மாத்திரையே யல்லது, அவை தெய்வம் ஒன்று உண்டெனக்கொண்டு வழிபடும் ஆத்திகசமயங்களல்லவாம். மற்று அவைதெய்வ மில்லென்று உரைக்கும் நாத்திகசமயங் களேயாம். இவ்வுண்மை தேறமாட்டாத ஆங்கிலதத்துவ சாத்திரிகள் சிலர் கௌதமர் ஈசுரவழிபாட்டைக் குறிப்பிட் டாயினும், ஈசுரனைக் குறிப்பிட்டாயினும் யாதும் உரையாமை பற்றி அவரை நாத்திகரெனக் கூறுதலமையாது, அவர் ஆத்திகருமாகலான் என்று உரைத்து இழுக்குறுகின்றார். பண்டிதர் மாக்ஸ்மூலர் பௌத்தமுனி ஆன்மாவையும் பரமான்வையும் மறுத்துரைக் குஞ் சுதந்திரநிலையைச் சாங்கியநூலார் தந்திட்டார்.vdî« பௌத்த சமயநூல்கள் பலவும் நிரீசுரவாதம் நிலையிட் டுரைப்பனவாம் எனவும் கூறுதலானும், பிராஞ்சு தேயத்துத்தத்துவ சாத்திர விற்பன்ன ராகிய டாக்டர் பார்த் என்பவர் பௌத்த குருவின் கோட்பாடுஒருதலையாக நிரீசுரவாதம் போதிப்பதுவாம் எனத்துணிவு தோன்றக் காட்டுதலானும், பிரபலவாராய்ச்சி செய்து வடமொழி நூலுரை வரலாறு புதுவதாக எழுதி வெளியிட்ட மாக்டனல் பண்டிதரும் பௌத்தமும் சமணமும் சாங்கிய நூலைப் போலவே ஈசுரனிருப்பை நிராகரிக்குங் கோட்பாடுடையவாம் என்று அங்ஙனமேதுணிபு. ஒருப்படுத்த லானும், சிவஞான போதம் சிவஞானசித்தியார் முதலிய தத்துவமுழுமுதற்றமிழ் நூலுரைகளின் கண்ணும்அவ்வாறே அவர் நாத்திகசமயி களென்று வைத்து மறுக்கப்படுதலானும் பௌத்தரும் சமணருமாகிய அவ்விருவகைச்சமயிகளும் நாத்திக சமயிகளேயாமென்பது ஒருதலையென்றுணர்க. இங்ஙனம் நிரீசுரவாத மேற்கொண்டு ஒழுகுவாராகிய சமணசமயிகள் ஈசுரனை உண்மையன்பான் வழிபடும் ஏனை ஆத்திக சமயிகளைக்காண்டொறும் மனஞ்சிறிதும் பொறாராகி மற்று அவரை யெல்லாந் தஞ்சமயத்தின்கட் படுக்கும் நோக்கம் பெரிதுடையராயினார். அந்நோக்கம் முதிரவே கொல்லாமை, பொய்யாமைமுதலாகத் தாமனுட்டித்துப் போந்த சில இலௌகிக தருமவரம்புகடந்து, தீயமார்க்கத்தா னெல்லாம் ஏனை ஆத்திக சமயிகளை வருத்தத்தொடங்கினார். தன் கட்டளையாற் சட்ட திட்டங்களேற்படுத்தி அவற்றிற்கேற்ப ஒழுகுவார்க்கு நன்மையும், அவற்றிற்கு ஏலாதன செய்தொழுகு வார்க்குத் தண்டனையுந்தந்து நெறிப்படுத்துவானாகிய அரசனையில்லாத குடிகள் தாந்தாம் விரும்பியவாறே சில சட்டதிட்டங்களேற்படுத்திக்கோடலும், தமக்கு அவை இணங்காத வேறு காலங்களில் தம் முன்னை விதிகளை மனம்போனவாறு புரட்டி வேறுவேறு இயற்றிக்கொண்டு தம்முட் கலகம் விளைத்தலும் நிகழக்காண்கின்றோம். இதுபோல, ஈசுரனொருவன் உண்டெனக்கொண்டு அவன் கட்டளையிட்டருளிய நற்கருமங்களைச்செய்யின் நன்றாம். அவன் வேண்டாவென்று விலக்கிய தீக்கருமங்களைச் செய்யின் தீதாம் என்னும் மனவுறைப்பில்லாத நாத்திக சமயிகள் தாம் ஒரோவொருகாலங்களிற் சில இலௌகிக தருமங்களை நெறி பிறழாது அனுட்டிக்க உடன்படுவா ராயினும், தமக்கு அத்தருமங்களியையாத பிறகாலங்களில் தாந்தாம் விரும்பியவாறே முன்னைத்தரும வரம்பழித்துத்தீய கருமங்கள் நிகழத்துந்துணிவுடையாராவர். இங்ஙனமே, சமணசமயிகள் அக்காலத்துத் தம்மோடு ஒருங்கு இருந்த சைவர், வைரவர், பாசுபதர் முதலிய ஆத்திகவைதிக சமயிகளுக்குப்பெருந்தீது செய்யும் வஞ்சனை பலவுடைய ராயினார். திருநாவுக்கரசு சுவாமிகள் சமணசமயந் துறந்து சைவசமயந்தழுவியகாலத்திற்கு சமண ரொருங்கு கூடித்தம் மரசனால் அவரை நீற்றறையில் இடுவித்தும், கல்லிற்கட்டிக் கடலில் வீழ்த்தியும், யானைக்காலில் இடறுவித்தும், நஞ்சம் உண்பித்தும் புரிந்த தீதுகள் நம்மேற்கோளை இனிது நிறுத்தும் பிரமாணங்களாமன்றோ; சாந்தகுணத்திற்கு ஓர் உறையுளாய் விளங்கிய அப்பமூர்த்திகள் தாம் சமணராற் பட்ட கட்டங்களைத் தாமே தந்திருப்பதிகங் களிலாங்காங்குக் குறிப்பிடுமாறுங்காண்க. இவ்வாறே, அவர்கள் தங்காலத் திருந்த பாண்டியனை யுள்ளிட்ட முடிவேந்தர்களையெல்லாந் தஞ் சமயங் களிற்றிருப்பி, அவ்வரசர் செல்வாக்கால் ஏனை ஆத்திகசமயிகள் வழிபடுந் தேவாலயங்களை அடைப்பித்தும், மடாலயங்களில் தீக்கொளுவியும், அவரைக்கண்டால் கண்டுமுட்டு என்றும் அவரைக்குறித்து ஏதேனுங் கேட்டால் கேட்டுமுட்டு என்றும் பலவாறு இன்னலியற்றிவந்தனர். இங்ஙனஞ்செய்து போந்த சமணர்கள் கொல்லாமை முதற்சிறந்த தருமங்களை மேற்கொண்டு ஒழுகினாரெனல் யாங்ஙனம்? ஆகவே, இவ்வாறெல்லாந்தீது புரியும் ஒழுகலாறுடையரான சமணர்யாண்டும் பரவிநிரம்புதலும், சைவசமயிகள் தீயினால் வளைக்கப்பட்டு இடையிற் கிடந்து துடிக்கும் புழுப்போற் பெரியதோர் இடருழவாநின்றார் இஃது இங்ஙனம் நிற்க. இனிப்பிள்ளையார் அப்பர் சுவாமிகளோடு வேதாரணியதலத்தில் எழுந்தருளியிருந்த போது மதுரைமாநகரத்திற் சமணருடைய போதனையாற் சைவசமயம் வழீஇச் சமணமதந்தழீஇய தம் புருடரான பாண்டிய அரசனை யுள்ளிட்டுப் பிரசைக ளெல்லாரையுந் திரும்பச் சைவராக்குதல்வேண்டி மங்கையர்க்கரசி என்னும் பாண்டிமாதேவியார் பிள்ளையாருக்குத் திருமுகம் விடுத்தார். அது கண்ட பிள்ளையாருந் தந்திருக்கூட்டத் தொடு மதுரைமாநகர்க்கு எழுந்தருளப் பாண்டிய வரசன் மந்திரியாராகிய குலச்சிறை என்பார் அவரை எதிர்கொண் டழைத்துச்சென்று பிள்ளையாரைத் திருக்கூட்டத்தொடும் ஒருமடத்தில் எழுந்தருளியிருக்கச் செய்தார். இதனையறிந்த சமணகுருக்களெல்லாருந் தெய்வப்பெற்றியுடைய இப் பிள்ளையாரால் நமதுசமயம் அழிந்துபடும் எனப்பெரிதும் அஞ்சிப் பிள்ளையாரைத் திருக்கூட்டத்தோடுங் கொலை செய்ய எண்ணினார். அந்தோ! அந்தோ! இதுதானோ கொல்லாவிரதியரான சமணருக்கு விரதமாவது! அன்பர்களே! சிறிது ஆழ்ந்து சிந்தித்திடுங்கள்! இங்ஙனம் கருதிய அக்குருக்கண்மாரெல்லாந் தம்முள் துணிபு ஒருப்பாடு உடையராய்க் கூன்பாண்டியனிடஞ்சென்று அவனுக்குத் தம்மெண்ணம் புலப்படுத்துக் கரவுரை பலவால் அவனைத் தந்தொழிற்கு இயைவித்துக்கொண்டனர். பின் அன்று இரவு நள்யாமத்திற் பிள்ளையார் திருக்கூட்டத்துடன் பள்ளி கொண்டிருக்கும் அமயங்கண்டு அச்சமணப்படுவர் எரிகொள்ளிகொண்டு மடத்தில் தீக்கொளுவினார். அந்தோ! அந்தோ! தீப்பற்றி மடம் எரிகின்றகாலத்தில் மடாலயத் தினுள்ளிருந்த அடியார்களெல்லாரும் மருண்டெழுந்து ஞானசம்பந்தப் பிள்ளையாருக்கு விண்ணப்பித்து அடைக்கலம்புகுந்து சிவத்தியானஞ் செய்துகொண்டிருந்தார். இதனை உணர்ந்த பிள்ளையார் சிவனடியார்களுக்குத் தீங்கு இழைக்க முந்துற்றுத் தீக்கொளுவிய சமணப்படுவர் பொருந்தாச் செய்கையைக் குறிப்பானறிந்து, இதற்குக் காரணமாயினான் பாண்டிய வரசனேயாமென்பதும் இனிது தெளிந்து, செய்யனேதிருவாலவாய்மேவிய ஐயனேயஞ்சலென்றருள் செய்யெனைப் பொய்யராம மணர்கொளுவுஞ்சுடர் பையவேசென்று பாண்டியற்காகவே என்னுந் திருப்பதிகங் கட்டளையிட்டருளி மடாலயத்திற் கொளுவிய தீப்பிழம்பு அத்தனையும் பாண்டியன் றேகத்திற் சென்று பற்றுகவென்று ஏவினார். ஏவுதலும், உருவமாகத் தோன்றிய தீப்பிழம்பு முழுவதும் அருவச் சுரநோயாய்ப் பாண்டியனைப் பற்றிக்கொண்டது. உடனே, பாண்டியன் அந்நோய் பொறுக்கமாட்டானாய்ச் சமணக்குருமார்களை அழைப்பித்து அவர் தம் மந்திரவிச்சைகளானும் ஔடத முறைகளானும் செய்வித்துக்கொண்ட பரிகாரங்கள் ஒருசிறிதும் பலியாமைகண்டு மிகவருந்தித் தம் மனையுரிமைக் கிழத்தி யாராகிய மங்கை யர்க்கரசியாரைத் தன்மாட்டு வருவித்து அவர்க்கு இதனைத் தெரிவித்தான். அரசியாரும் உடன்வருந்தித் தங்குறிப்பு நிறைவேறுங் காலமிதுவென்று எண்ணித் தங்கொழுநனை நோக்கிப் பிள்ளைப்பருவத்தே உமை திருமுலைப்பாலுண்டு ஞானசம்பந்த மூர்த்தி யாய்த் தந்திருக் கூட்டத்தோடு இந்நகரத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமான் இங்கு எழுந்தருளினால் இந்நோய் தீரும். என்றுரைப்ப அதனைக்கேட்ட அரசனும் அதற்கு உடன் பட்டுத் தம் அமைச்சரான குலச்சிறையாரைப் பிள்ளையாரிடம் போக்கினான். அமைச்சரும் நிகழ்ந்தவெல்லாம் பிள்ளை யாருக்கு விண்ணப்பித்து அவர் பாண்டியனிடத்திற்கு எழுந்தருளச் செய்தார். பிள்ளையார் அருமைத்திருவுருவைக் காண்டலும் பாண்டியன் ஆறுதல் பெரிதுடையனாயினான். இவ்வாறு ஞானசம்பந்தப்பெருமானார் பாண்டியனருகில் மங்கையர்க்கரசியார் குலச்சிறையார் பக்கத்தே எழுந்தருளி யிருக்கும் அளவில் ஆண்டுக்குழுமியிருந்த சமணக்குருமார் பிள்ளையாரைச் சுட்டிப் பலவாறு இகழ்ந்து சொல்லிக் குரைத்திட்டார். பக்கத்தேயிருந்து அதனைக்கண்டு பொறாராகிய மங்கையர்க்கரசியார் தங்கணவனைநோக்கிக் குழந்தையாயிருக்கும் பெருமானை இவர் இவ்வாறு இகழ்வதே என்று வருந்திக்கூற, அப்போது ஞானசம்பந்தப் பெருமானார் அரசியாரைப்பார்த்து, மானினேர் விழிமாதராய் வழுதிக்குமாபெருந் தேவிகேள் பானல்வா யொருபாலனீங்கிவனென்று நீபரிவெய்திடே லானைமாமலையாதியாயவிடங்களிற்பலவல்லல்சே ரீனர்கட் கெளியேனலேன்றிருவாலவாயரனிற்கவே என்னுந் திருப்பதிகங் கட்டளையிட்டருளினார். இதன்கண் ஞானசம்பந்தப் பிள்ளையார் மங்கையர்க்கரசியாரை நோக்கிப் பால்மணக்கும் நல்வாயை யுடைய பாலன் நானென்று அம்மே! நீவருந்தாதே என்று உரைத் தருளினாரென்பது பெறப்படு கின்றது. இங்ஙனமெல்லாங் குழந்தைப்பருவத்தினரா யிருந்த பிள்ளையார்க்கும் அவரைச் சார்ந்துநின்ற பல்லாயிரஞ் சிவனடியார்க்கும் பெருந்தீதியற்றிய சமணரை ஒப்பநாடி யத்தகவொறுக்கும் நடுவின்றி யவர்ப்பக்கல்நின்ற கூன் பாண்டியன், பின்பிள்ளையார் செய்த அற்புதங்களானே அவர் வஞ்சகந்தேறி அரசுமுறைகோடாது அவரை யொறுத்தல் வேண்டி யங்ஙனங் கழுவேற்றினானா கலின் செங்கோன்முறை வழிப்பட்ட அந்த நியாயதண்டனையைப் பிள்ளையார் மேலேற்றி அவ்வாற்றா லவரை யிகழ்ந் துரைத்தல் பெரியதோர் அபசாரமா மென்றொழிக. மேலேகாட்டிய மெய்வரலாற் றானே தஞ்சமயந்தழாது வேறுநின்றொழுகு வாரை வலிந்து நலிவுசெய்யுநீரார் சமணராவ ரென்பதூஉம், அங்ஙனந்தழாமை பற்றி அவர்மேற் பிணங்கு நீரரல்லர் சைவரென்பதூஉம், இனிது விளங்குமாகலின் அந்நண்பர் நவீனநாகரிக வழிப்பட்டு மெய்யறிவு திறம்பி யுரைத்த மாறுகோளுரை குழறு படையாய் முடிதல்காண்க. ஆங்கிலபாடையில் மகாவித்துவானாய்ப் பிரசித்தியுற்று விளங்கிய பாபிங்டன்மெக்காலே என்பாரும் இப்பெற்றியுணர்ந் தன்றே குற்றஞ்செய்தோனையாதல் குற்றஞ் செய்தோனாகத் தோன்றுவோனையாதல் அநியாயமாகத்தான் தண்டனை செய்யினும் அது சமய தண்டனையாதல் செல்லாது. மற்று ஒருவன் ஒருசமய நெறிவழி யொழுகுதல் பற்றியாதல் அல்லதவனைச் சார்ந்து நிற்போர் கருத்தோடொட்டி அவன் ஒழுகுதல் பற்றியாதல் அவன் இனியொருகாலத்துக் குற்றஞ் செய்வானென உய்த்துணர்ந்து அவனைத் தண்டித்தல் சமய தண்டனையாம், அதுபெரியதோர் அறியாமையுங் கொடுமை யுமாம் என்று அதனுண்மையுணர்ந்துரைத்திட்டார். ஆங்கில மொழிவல்ல இவ்வாசிரியர் கூறுமாறே சிறிதாராய்ச்சி செய்திடினும் ஆங்கிலமொழிப்பொருள் பற்றிச்சமயப் பொறுமை ஆராய்ச்சி செயப்புகுந்த அந்நண்பர் அதன் பெற்றிதேர்ந் துரைத்திடுவார். அதுதானு முணரமாட்டாமல், தாமெடுத்துக் கொண்ட மதக்ஷமை என்னும் மேற்கோள் கடைப்பிடித் துரையாது விடுத்துத் தாமெடுத்துக் கொண்ட விடயத்தோ டியைபில்லாத மதஹிம்சை என்பதனை விரித்து மேற்கோள் விடுதல் என்னுந் தோல்வித்தான மெய்தினார். இனிமத ஹிம்சை கூறப்புகுந்தவர் அதன்வழிநின்று அதனையாயினுஞ் செவ்வனே இலக்கணங் கூறி விளக்கி யுதாரணமுரையாது, வாளா மதஹிம்சை மதஹிம்சை யென்று தமக்குத் தோன்றியவாறே கூறினார். மதஹிம்சை யென்பதிதுவா மென்றுரைப்பவறியாத விவர் அருட்கருணை வள்ளலாய் விளங்கிய ஞானசம்பந்தப்பிள்ளையாரைக் `காருண்யமிலர் எனக்கூறியது அந்தோ கொடிது! எடுத்த விடயத்தைப் பாகுபடுத்து இலக்கணங்கூறி நிரலே தருக்க முரைப்பவறியாச் சுருங்கிய வாற்றலுடையரான விவர் எல்லாம் வல்ல பிள்ளையா ராற்றலுக்குங் குறைகூறியது அறியாமையாவ தன்றி மற்றென்னை? இதுகிடக்க. இனி ஞானசம்பந்தப்பிள்ளையார் சமணர் வேறுதரத் தராய் ஒழுகுதல்பற்றியேயவர் மேற் பிணங்கி யவரைக் கொல்வித்தாரென லாகாதோவெனின்; - சமணசமயந்தழீஇச் சமணர்வழிப்பட்ட கூன்பாண்டியன் செம்மைநெறிபிறழாத தன் சமயிகளை அங்ஙனங் கொலைபுரித லமையாமை யானும், அன்றி யங்ஙனங்கொலைபுரிந்தா னென்று கொள்வுழி அவர் தம்மை அரசன் வெறுக்குமாறெல்லாம் பெருந்தீதியற்றி வந்தனரென்பது தானே பெறப்படுதலானுங் கூன்பாண்டியனை யின்றி யமையா அத்தண்டனையைப் பிள்ளையார் தாம்வேண்டியவாறே செய்வித்தாரெனல் போலியாமென்றொழிக. அற்றேலஃதாக, இனிச்சமணர் தாமங்ஙனங்கொடியராயினும் அரசன் அவரைக் கழுவேற்றத் துணிபு கொண்டகாலையில் அவனருகேயிருந்த பிள்ளையார் தாம்தம் அருட்கருணைவிளங்க அரசனை அதுசெய்யற் கவென மறாதவாறென்னையெனின்; - இலௌகிக தந்திர வரசியல் வழிநின்று முறை செய்யுமரசனை அங்ஙனந் தடைசெய்தல் வைதிகவழிநின்று இறைபணிபேணும் பிள்ளையார்க்கு அமையாமையானும், அன்றியங்ஙனந்தடை செய்வுழி முறைநெறிவழுவா அப்பாண்டியன் அதுவழுவலின வரைப்பிள்ளையார் மறுத்தருளினாரென்றுல கந்தேறி அந்த நீதிமன்னனைப் பழித்திடுமாகலானும், தமக்கன்றித் தம்மைச்சார்ந்து கிடந்த பல்லாயிரஞ் சிவனடியாரையும் ஓரிரவில் தீக்கொளுவி மாய்க்கப்புகுந்த அவர்க்கு அத்தண்டனை சாலுமெனத்தாங் குறிக்கொண்டருளுத லானும் பிள்ளையார் மறாதிருந்தாராகலின் அது குற்றமாதல் யாண்டையதென்றொழிக. இங்ஙனம் பெரியராயினார் தம்மை யிகழ்ந்தமை தாம் பொறுப்பதன்றித் தம்மைச் சார்ந்தாரை அங்ஙனம் பிறரிகழின் அதனை ஒருசிறிதும் பொறுக்கலாரென்றுணர்க. இனி அதனையும் பொறுத் தலாற் போந்த விழுக் கென்னையெனின்; - வலியோரான் மெலியோர் நலியப்படுதன் முதலான தீயகருமங்கள் பல்கி உலகு வரம்பழியுமென்றுணர்க. இப்பெற்றியெல்லாம் ஆசிரியர் - சேக்கிழார் ஒருங்குணர்ந்தன்றே. மன்னவன் மாறன்கண்டு மந்திரியாரை நோக்கித் துன்னிய வாதிலொட்டித் தோற்ற விச்சமணர்தாங்கண் முன்னமே பிள்ளையார்பா லனுசித முற்றச்செய்தார் கொன்னுனைக் கழுவிலேற்றி முறைசெய்க வென்றுகூற புகலியில் வந்தஞானப் புங்கவரதனைக் கேட்டும் இகலில ரெனினுஞ் சைவரிருந்துவாழ் மடத்திற் றீங்கு தகவிலாச் சமணர் செய்த தன்மையாற் சாலுமென்றே மிகையிலா வேந்தன் செய்கை விலக்கிடா திருந்தவேலை என்று ஓதுவாராயின தூஉமென்க. இவையெல்லாம் ஒருசிறிதும் பார்த்துணரமாட்டாமற் சிறுமகாரைப் போற் சமணர் கழுவேறினாரென்னுஞ் சொற்கேட்ட துணையானே யதனை யாய்ந்துபாராது குற்றங் கூறப்புகுந்த நண்பர் திறம்பெரிதும் இரங்கற்பாலதொன்றாம். இதுகிடக்க. இனிச் சைவதிதாந்திகடாம் சமயப் பொறுமை யுடையரென்ப தென்னை பிறருமஃதுடையராலோவெனின்; - சைவசித்தாந்த நுட்பப்பொருளுணர வல்லார்க்கு எல்லாச் சமயங்களிலுள்ள எல்லாவான்மாக்களுந் தத்தம்பக்குவ வேறுபாட்டிற்கேற்பப் பல்வேறு சமயவழிநின்று அதனை வழுவாத நுட்டித்தொழுகி ஆண்டிருந்தவாறே அபரமுத்திப் போகந் துய்த்துப் பின்னையொருகாலத்துப் பரமுத்தி தலைப்படுவர் ஆகலின் எல்லாம் மெய்ச்சமயங்களேயாய் ஈசுரனுக்கு அங்கீகாரமாவனவாமென்னுஞ் சித்தாந்தவுரைப் பொருள் இனிது விளங்காநிற்கும். இதனையே அப்ப மூர்த்திகள் விரிவிலா வறிவினார்கள் வேறொரு சமயஞ் செய்தே, எரிவினாற் சொன்னாரேனு மெம்பிராற் கேற்றதாமே எனக் கூறியருளினார்கள். இனி அருணந்தி சிவாசாரிய சுவாமிகள் அறுவகைச் சமயத்தோர்க் குமவ்வவர் பொருளாய் ஓதுசமயங்கள் பொருளுணரு நூல்களொன்றோ டொன் றொவ்வாமலுள பலவுமிவற்று, ளியாது சமயம் பொருணூலியாதிங்கென்னி லிதுவாகு மதுவல்ல வெனும் பிணக்கதின்றி, நீதியினா லிவையெல்லா மோரிடத்தே காண நிற்ப தியாதொருசமய மதுசமயம் புறச்சமயநெறி நின்றுமகச் சமயம் புக்கும் புகன் மிருதிவழி யுழன்றும் புகலுமாச்சிரம, வறத்துறைகளவை யடைந்து மருந்தவங்கள் புரிந்து மருங்கலைகள் பலதெரிந்து மாரணங்கள் படித்துஞ், சிறப்புடைய புராணங்க ளுணர்ந்தும் வேதச் சிரப்பொருளை மிகத்தெளிந்துஞ் சென்றாற் சைவத், திறத்தடைவரிதிற் சரியைகிரியாயோகஞ் செலுத்திய பின் ஞானத்தாற் சிவனடியைச் சேர்வர் என அவ்வச்சமயவிதி வழிநின்று வழிபடுவார்க்கெல்லாம் அனுக்கிரகிக்கு முழுமுதற் கடவுளொருவனேயாமாறும், எல்லாச் சமயப் பொருளுந் தன்வயினடங்கக் கொண்டு தானவற்றிற் கதீதமாய் நிற்பது விழுமிய பொதுச் சமயமாமாறும், ஏனைச் சமயங்களெல் லாஞ்சைவவுன்னத நிலையின்கட் செலுத்துஞ் சோபான மார்க்கங்களாயமைந்து கிடக்குமாறும், கிளந்தெடுத்துக் கூறியருளினார். இங்ஙன மெல்லாச் சமயங்கண் மாட்டும் ஒற்றுமை பூண்டொழுகுஞ் சைவ சமயிகள் மற்றையோரை வலிந்து சென்று நலிந்து அவரைத்தஞ் சமயத்தின்கட்படுக்கு நோக்கமுடைய ரல்லரென்பதற்கு அவர் ஏனையோரைத் தஞ் சமயத்திற் புகுது மாறுவலியுறுத் தாமையே உறுசான்றா மென்க. இனி மற்றைச் சமயிகளோவெனின், தஞ்சமயத்திற் சேர்வார்க் கொழிய வேனையோர்க்கு முத்தி சித்தியாதென வலியுறுத்துக் கூறிப் பிறரை யெல்லாந் தஞ்சமயத்திற் றிருப்பமுயலுமாறுங் காண்க. என்றிவ்வாறு சைவசமயப்பொருட் கூறுபாடுகளையும் பிறசமயக் கோட்பாடுகளையும் புடைபட வொற்றியளந் துணர வல்லார், ஞானசம்பந்தப் பிள்ளையார் கருணை யின்றிச் சமணரைக் கழுவேற்றினாரென வாய்ப்பறை யறைந்து பிதற்றிட மாட்டார். மற்று அஃது அரசியல்வழிப்பட்ட நியாய தண்டனை யாமென்றுகண்டு, தெய்வப்பெற்றி யுடையரான பிள்ளையார் அற்புதவருள்வழி நின்று உய்குவார். நாவீன நாகரிக வழிப்பட்டு மெய்யறிவு திறம்பியுரைத்த அந்நண்பர் மாறுகோளுரைகண்டு, பிறர் மயங்காமைப்பொருட்டும், இது காறு மதனை யாரு மெடுத்துத் தருக்கித்து ஒழித்திடாமையின் அதுநிலையுதலுறு மென வஞ்சி யதனைக் களைதற்பொருட்டு மற்றிஃதெழுதி னாமாகலின், இது பகைமை முதலிய விழிகுணவயத்தான் எழுதியதன்றென வுலகந்தேர்ந்திடக் கடவதாக. இலக்கணவாராய்ச்சி தமிழ்ப்பாஷைக் குரியனவாகச் செய்யப்பட்ட இலக்கண நூல்களும் எண்ணில்லாதன. அவையெல்லா வற்றுள்ளும் அகத்தியமென்னும் இலக்கணநூலே முன்னர்த் தோன்றியதென்பது பலர் கருத்து. அகத்தியம் முன்னும் குமரக்கடவுளாற் செய்யப்பட்டுக் குமரம் என்னும் பெயருடைய ஓரிலக்கணநூல் இருந்ததென்பது சிலர் கருத்து. தொல்காப்பியத்திலே வினையினீங்கி என்றத னுரையிலே அகத்தியமே முற்காலத்து முதனூலென்பதூஉம், அதன் வழித்தாகிய தொல்காப்பியம் அதன் வழிநூலென்பதூஉம் பெற்றாம் என்று கூறினர் நச்சினார்க்கினியர். அகத்திய மென்பது அகத்தியரென்னும் முனிவராற் செய்யப்பட்டமை பற்றி வந்த பெயர். இதன் கண் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் கூறப்படும். இதன் கண்ணுள்ள இயற்றமிழைத் தொல்காப்பியர் வேறுவிரித்து வழிப் படுத்தார். இங்ஙனமே தமிழ்க்கு இலக்கணமன்றித் தமிழ்ப் பாஷையையும் அகத்தியரே ஆக்கினாரென்பது சிலர் கருத்து. அகத்தியன்பயந்தசெஞ்சொல் என்பது பாரதம். தமிழெனு மளப்பருஞ் சலதிதந்தவன் என்பது இராமாயணம். தமிழ்ப் பாஷைக்கு இலக்கணஞ் செய்தா ரென்பதே துணி பென்பர். இவ்வகத்தியம் முதல், இடை, கடை என்னும் முச்சங்கத்தின் கண்ணும் நின்று நிலவிக் கடைச்சங்கமுடிவிலே இறந்தொழிந்த தென்பது சிலர் கருத்து. கடைச்சங்கப் புலவரு ளொருவராகிய நக்கீரரும் அகத்தியத் தினையே இலக்கணமாகக் கொண்டா ரென்பது இணைவறு குறுமுனி யிலக்கணம்பெறப் புனை தருமிலக்கியப் புலவர் சிங்கமே என்னுங் காளத்திப் புராணத்தாற் பெறப்படும். பிற்காலத்தன வாகிய நன்னூல் விருத்தியுரை, இலக்கண விளக்கவுரை முதலியவைகளிலே சில பல சூத்திரங்கள் அகத்திய சூத்திரங்களென்று காட்டப் படுகின்றன. திராவிடப் பிரகாசிகை 27-ஆம் பக்கத்திலே அகத்தியங் கடைச்சங்கம் ஒடுங்கிய பிற்றை ஞான்றே நிலவரைப்பில் வழங்கற்பாடின்றி இறந்துபட்டதென்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்த பட்டாங்காதலினென்க என்கின்றது. திராவிடப் பிரகாசிகை 18ஆம் பக்கத்தில். அகத்தியத்திலே இயற்றமிழுள், எழுத்தாமாறும், அவற்றாற் சொல்லாய்ப்பொருளுணர்த்துமாறும், அப்பொருள் அகம் புறமென்னும் பதினாற்றிணைப் பகுதியவாமாறும் அச்சொற்பொருள்களாற் செய்யுள் யாக்குமாறும், அவை அணியுறுமாறுங் கூறப்படும் எனவும், இசைத் தமிழுள்................ சட்சம், இடபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிடாதமென்று மேழிசைகள் பிறக்கு மாறும்,...... பிறவுங்கூறப்படும் எனவும், நாடகத்தமிழுள் கூத்துவிகற்பமும், அவிநய விகற்பமும் ....... பிறவுங் கூறப்படும் எனவும் .... கூறுகின்றது. அகத்தியத்திலே கூறப்பட்டனவாக இங்கே வரைந்த விடய விவரங் களெல்லாம் அகத்தியங் காணாதவர் எங்ஙனங் கூறுவர்? கடைச்சங்க மொடுங்கிய பிற்றை ஞான்றே இறந்து பட்ட அகத்தியம் இங்ஙனமெல்லாங் கண்டு கூறுதற்கு எங்ஙனம் அகப்பட்டது? அகத்தியத்திலே தொல்காப்பியத் திற்போல உவமையணி யன்றி வேறணிகளுங் கூறப் பட்டனவா? அகத்தியம் தொல்காப்பியத்திற்கு முதனூல் என்பதனாலும், தொல்காப்பியத்திலே அறுவகைப்பட்ட பார்ப்பனப்பக்கமும் என்னுஞ்சூத்திரத்திலே நச்சினார்க் கினியர் கூறிய எழுத்துஞ்சொல்லும் பொருளு மாராய்ந்து இம்மைப்பயன் தருதலின் அகத்தியம் தொல்காப்பியம் முதலிய தமிழ்நூல்களும் என்பதனாலும் தொல்காப்பியம் போலவே விடயங்களுடையதாகும் என்பது பெறப்படும். பெறப்படவே பொருளின்பின் உவமையும், அதன்பின் யாப்பும் கூறப்படும் என்பது துணியப்படும். பிரகாசிகை செய்யுள் யாக்குமாறும், அவை அணியுமாறும் கூறப்படும் எனக்கூறுவதும் பொருந்துமா? சட்சம், இடபம், காந்தாரம் முதலியன வடமொழி யினின்று மொழி பெயர்க்கப்பட்டனவா? அல்லவா? மற்றை அங்கக்கிரியைகள், சந்தி, விருத்தி முதலியன எவ்வியல்பின? இவையெல்லாம் வடமொழியிலே தசரூபகம் முதலியவை களிலே காணப்படவில்லையா? இங்ஙனமாகவும் மேற்படி பிரகாசிகை 26ஆம் பக்கத்திலே முத்தமிழ் வழக்கு முதனூலாகிய அகத்தியத்துண் மொழி பெயர்த்துக் கூறிய இலக்கணம் யாதுமின்றென்றுணர்க எனவும், வடமொழிக் கண்ணுள்ள அச்சத்தநூல், கீதநூல், நாடக நூற்பொருள் களை மொழிபெயர்த்தெடுத்துக் கூறுவதன்றென வுணர்க எனவும் கூறியது பொருந்துமா? பிரகாசிகை, 56-ஆம் பக்கத்திலே மதிவாணனார் நாடகத்தமிழ்நூல் முதலிய நாடகத் தமிழ் நூல்களும் கடைச்சங்கத்தின் பிற்றை ஞான்று தோன்றியன வென்றறிக என்கிறது. இது சிலப்பதிகாரவுரைப்பாயிரத்திலே கடைச் சங்கமிரீஇய பாண்டியருட் கவியரங்கேறிய பாண்டியன் மதிவாணனார்செய்த முதனூல்களிலுள்ள வசைக்கூத்திற்கு மறுதலையாகிய புகழ்க்கூத்தியன்ற மதிவாணர் நாடகத் தமிழ்நூல் என்பதோடு முரணாதா? இதனைக் கடைச் சங்கத்தின் பின்தோன்றினதென்பது பொருந்துமா? இது செய்தோன் அச்சங்கமிரீஇய பாண்டியருள்ளே ஒருவனல்லனோ? மேற்படி பிரகாசிகை 29-ஆம் பக்கத்திலே தலைச்சங்க வரலாற்றிலே அப்புலவர் தொகையும் பிறவுங் கூறியபின் அவர்களாற் பாடப்பட்டன வேத்துணையோர் பரிபாடலும் முதுநாரையும், முதுகுருகும் களிரியாவிரையுமென இத்தொடக்கத்தன என்கின்றது. இவற்றுள்ளே வேத்துணை யோர் பரிபாடலாவது யா? வேத்துணையோர் யாவர்? 82-ஆம் பக்கத்திலும் வேத்துணையோர் பரிபாடல் என்பது காணப்படுகின்றது. இது சிலப்பதிகாரத்திலே வேனிற் காதையிலே நெடியோன் குன்றமும் என்பதனுரையிலே வரும் எண்ணிறந்த பரிபாடலும் என்பதனோடு மாறு படாதா? வேத்துணையோர் பரிபாடல் என்பது இறையனார் களவியற்கண்ணும் ஈண்டுமன்றி வேறிடத்துங் காணப்படுமா? பாடப்பட்டன என்பதன்பின் வகரவுடம்படுமெய்யோ டெழுத்துப்பட்டதாய், எண்ணிறந்த பரிபாடல் என்பதற்கு, விரோதமில்லாதாய் நின்ற எத்துணையோ பரிபாடல் என்பது களவியற் பரிசோதகராலே முதல் வேத்துணையோர் பரிபாடல் எனப் படிக்கப்பட்டுப் பிரகடனமாய் இங்ஙனங் கொள்ளற் கிடனாயிற்றெனல் பொருந்தாதா? சிவஞானமுநிவர் இலக்கண விளக்கச் சூறாவளியிலே `அல் என்பது விகுதியே யன்றிச் சாரியையாகாதென்று மறுத்துரைத்தார். அது வருமாறு:- 7. அன்னானின்னல் தொடையலென்புழி அல் விகுதியென்றொழிக. அற்றுச்சாரியை பொருணிலைக் குதவிசெய்யுஞ் சிறப்புத்தோன்ற நல்லற்று என்ற நன்னூலார் கருத்தறியாது, அச்சாரியையெனக் கொண்டார் இங்ஙனமாக 9-ஆம் பக்கத்திலே மான், கோன், தொடையலெனச் சாரியைப் பொருள் குறித்து என்புழித் தொடையல் என்பதிலே அல் சாரியை எனத்திராவிடப் பிரகாசிகை கொண்டதென்னோ? இவற்றுள்ளே கொள்ளத் தக்கது யாது? பிரகாசிகை 71-ஆம் பக்கத்திலே கடைச்சங்கத்தின் பிற்றை ஞான்று தொல்காப்பியத்திற்கு இளம்பூரணர், கல்லாடர், பேராசிரியர், சேனாவரையர், நச்சினார்க்கினிய ரென்பார் தனித்தனி உரையியற்றினார். இவருள் இளம்பூரணர் இதற்கு முதற்கணுரையியற்றினமையின் உரையாசிரிய ரென்றவ்வாறு வழங்கப்படுகின்றார் என்கின்றது. கல்லாடர் கடைச்சங்கப் புலவரு ளொருவரா? அல்லரா? அவருரை கடைச்சங்கத்தின் பிற்றைஞான் றெழுதினார் என்பதற்குப் பிரமாணம் யாது? இளம்பூரணர் கல்லாடர்க்கு முந்தினவரா? பேராசிரியரா வார் யாவர்? இங்ஙனம் இலக்கண விடயங்களை ஆராய்ச்சிசெய்தல் மெய்ப்பொருள் பெறுதற்கும் பிறவற்றிற்குங் காரண மென்னுங் கருத்தால் இவைகளை எழுதினேன். அறிஞர்கள், தங்கருத்தினையும் பிரசாரணஞ் செய்வாராயின், மிக நல்லதாகும். சாகுந்தலநாடகம் பிரமாவினுடைய பிரதமசிருட்டியாகிய நீரும், விதிப்பிரகாரம் ஓமஞ்செய்யப்பட்ட அவியைத் தாங்குவ தாகிய அக்கிநியும், யசமாநனும், இராப்பகல்களை உண்டாக்குகின்ற சந்திரசூரியர்களும், சத்தகுணமுடைய தாய் எங்கும் வியாபித்தலுடைய ஆகாசமும், எல்லாப் பதார்த் தங்களுக்குங் காரணமான பூமியும், பிராணிகள் பிராணனுடையன வாதற்குக் காரணமாயுள்ள வாயுவுமாகிய பிரத்தியட்சமான எட்டு மூர்த்தங்களோடுங் கூடிய ஈசன் உங்களைக் காக்கக்கடவர். நீர் முதலாஞ் சிருட்டி என்பதை மநுமிருதியாலுந் துணியப்படும். இஃது அட்டமூர்த்தமாகிய வியாபகங் கூறியது. நாந்திச் சுலோகம் படித்து முடிந்தபின் சூத்திரதாரன் வேஷசாலைக் கெதிரே பார்த்து, ஆரியையே! வேடங்கள் தரித்து முடிந்ததாயின்; இவ்வழியே வருக. (நாந்தி - வாழ்த்து. சூத்திரதாரன் - நாடகத்தை நடத்துவோன்.) நாட்டியதிரீ பிரவேசித்து, ஆரியனே! இங்கே இருக்கிறேன். ஆரியனே! ஆஞ்ஞைசெய்க. சூத்திரதாரன்! ஆரியை! இந்தச்சபை பண்டிதர்களாலே நிறைந்திருக் கின்றது. காளிதாச கவிசெய்த புதிய பொருளுள்ள நாடகத்தினாலே நாங்கள் இச்சபையை இன்றைக்கு மகிழ்விக்கவேண்டும். பாத்திராபாத்திரங்களை அவதாநித்து முயற்சியோடு பிரயோகிக்குந் தன்மையினால் யாதொருகுறையும் வாராது. சூத்திரதாரன்! ஆரியை! உனக்கு உண்மைப்பொருளைச் சொல்லுகிறேன். வித்துவான்கள் மகிழ்ச்சியடையும் வரையும், நாடகப்பிரயோக சாமர்த்தியத்தை நல்லதென்று நான் நினைக்கமாட்டேன். நன்கு பயின்றவர்களுடைய இருதயம் பெலனுடையதாயிருந்தாலும் தன்னிலே தளருகின்றது. சாணக்கியசதகம் வடமொழியிலுள்ள இந்நூலிலே அநேக நற்புத்திகள் கூறப்பட்டிருக் கின்றன. அவற்றுள்ளே சில இங்கே எழுதப் படுகின்றன. வித்துவானும் அரசனும் வித்துவானுடைய தன்மையும், அரசனுடைய தன்மையுந் தம்முள்ளே ஒருகாலுஞ் சமத்துவமுடையனவல்ல; அரசன் தன் தேசத்திலே பூசிக்கப்படுகிறான்; வித்துவான் எவ்விடத்திலும் பூசிக்கப்படுகிறான். கல்வி நட்சத்திரங்களுக்குச் சந்திரனே அலங்காரம்; பெண்களுக்கு நாயகனே அலங்காரம். பூமிக்கு இராசாவே அலங்காரம்; எல்லாச்சனங்களுக்குங் கல்வியே அலங்காரம். சந்திரனாலே நட்சத்திரங்களும், நாயகனாலே பெண்களும், அரசனாலே பூமியும், கல்வியாலே சகல சனங்களும் சிறக்கும் என்பது கருத்து. விசுவாசம் நகமுள்ள மிருகங்களிடத்திலும், நதிகளிடத்திலும், கொம்புள்ள மிருகங் களிடத்திலும், கைகளிலாயுத முள்ளவர் களிடத்திலும், பெண்களிடத்திலும், இராசகுலத்தவர்களிடத் திலும் நம்பிக்கை செய்தலாகாது. பிராணனைக் கெடுப்பன காய்ந்த இறைச்சியை உண்ணுதலும், வயோதிக முடையபெண்ணைப் புணர்தலும், கந்நிராசியினிற்குஞ் சூரியகிரணத்தை யடைதலும், புதுத்தயி ருண்ணலும், உதயகாலப் புணர்ச்சியும், நித்திரையுமாகிய ஆறும் பிராணனைக் கெடுப்பனவாகும். குக்குடம் போர்புரிதல், உதயத்திலெழுதல், சுற்றத்தோ டுண்ணுதல், ஆபத்தடைந்த திரீயைக்காத்தல், என்னும் நான்கினையுங் கோழியினிடத்தினின்று கற்கவேண்டும். அச்சம் காற்றினாலே மரங்களுக்குப் பயமும், பனிக்காலத் தினாலே தாமரை களுக்குப் பயமும், வச்சிரத்தினாலே மலைகளுக்குப் பயமும், துர்ச்சநர் களாலே சற்சநர்களுக்குப் பயமுமுண்டு. சுன்னாகம், இங்ஙனம் சுபகிருது வருடம் அ. குமாரசுவாமிப்பிள்ளை சித்திரைமாதம் 26ஆம் நாள் தொல்காப்பிய முழுமுதன்மை இனி ஒரு தமிழ்நூல் அல்லதோர் செய்யுள் குமரிநாடு கடல்கொள்ளப் படுமுன் செய்யப்பட்டதெனத் துணிவு காண்டற்கு அக்குமரிநாடாக அக்குமரிநாட்டகத்தே கிடந்த பஃறுளி அல்லது குமரியாறாக அவற்றின்கண் மொழியப் படுதல் வேண்டுமென்பது எல்லார்க்கும் ஒப்பமுடிந்தது. பலவேறு காலங்களிலிருந்த பலவேறு புலவர்கள் பாடிய செய்யுட்களைச் சிதர்ந்து போகவிடாமல் ஒருங்குதொகுத்து அவற்றை அகம்புறமெனக் கடைச்சங்கத்தார் வகுப்ப வழக்க முற்றுவருகின்றவற்றுட் புறநானூற்றிலே ஒருசில செய்யுட் களிற் கடல் கொள்ளப்படு முன்னிருந்த பஃறுளியாறு கிளந்தெடுத்துக் குறிக்கப்படுதலால், அச்செய்யுட்புலவர் காலமும் அப்புலவரோடொருங்கிருந்து செய்யுள்கொண்ட அரசர்காலமும் குமரிநாடிருந்தகாலமேயாமென்ப தினிது விளங்கும். பாண்டியன் பல்யாகசாலை முது குடுமிப்பெரு வழுதியை நெட்டிமையார் என்னு நல்லிசைப்புலவர் தாம் பாடிய ஆவுமானியற்பார்ப்பனமாக்களும் என்னுஞ் செய்யுளில் அவனை வாழ்த்துகின்றுழி முந்நீர்விழவினெடியோன், நன்னீர்ப் பஃறுளிமணலினும்பலவே எனப் பஃறுளியாற்றைக் கிளந்தெடுத்துக் கூறக்காண்டலால் அவர்காலம் பஃறுளி யாறு கடல்கொள்ளப்படு முன்னதாதலினிது துணியப்படும். இனித்தொல்காப்பியத்திற்குப் பாயிரஞ்செய்த ஆசிரியர் பனம்பாரனார் வடவேங்கடந் தென்குமரி யாயிடை எனக்குமரியாற்றைக் கிளந்தெடுத்துக் கூறுதலானும் அதுகுமரியாறு கடல்கொள்ளப்படுமுன் பெழுந்த தொன்றாம். இங்ஙனங் குமரியாறு தெற்கு எல்லையாக வைத்துரைக்கப் பட்ட தன்கண் ஐயுறவுகொண்டு, ஆப்தர் - சவரிராயரவர்கள் குமரிநாட்டிற்கு நடுநாயகமாய்விளங்கிய கபாடபுரத்தி லிருந்து தமிழாராய்ந்த சங்கத்தார்க்குக் குமரியை எல்லை யாக வைத்துக் கூறுதல் யாங்ஙனம் பொருந்துமெனக் கடாவெழுப்பித் தென்னாடு கடல்கொள்ளப்பட்ட பிற்காலத்து மற்றது தெற்கெல்லையாக நிகழ்ந்ததாகலின் அவ்வெல்லைகூறிய அப்பாயிரச் செய்யுள் பனம்பாரனார் செய்ததன்றெனவும், இதற்குக் களவியல் பாயிரவுரையில் இப்பாயிரந் தொல்காப்பியனார் செய்ததென்றும் பிரவுரை யாசிரியர் அது பனம்பாரனாரியற்றியதென்றுந் தம்முண் மாறு கொண்டுரைத்தலே கரியாமெனவுங் கூறினார்கள். கடல் கொள்ளப்பட்ட குமரிநாட்டின் வடவெல்லை பஃறுளியா றெனவும் தெற்கெல்லை குமரியாறெனவும் இதனிடைக் கிடந்த நாடு எழுநூற்றுக்காவதப் பரப்புள தெனவுந் தொல்லாசிரியர் இனிதெடுத்தோதுதலால் அப்பெரிய தமிழ் நாட்டிற்குக் குமரியாறு தெற்கெல்லை கூறியது பொருத்த மிகவுடையதேயாம். குமரிநாடு கடல் கொண்ட பிற்காலத்தே செய்யப்பட்ட பாயிரமாயின் வடக்கண்வேங்கடம் ஒன்றுமே எல்லைகூறி மேல்கீழ்த்திசை கட்குக் கடலெல்லை கூறியவாறு போலத் தென்றிசைக்குங் கடலெல்லைகொண்டு வாளாது ஒழிவார். கடல்கொள்ளப் பட்டபின் நூலெழுதிய சிறுகாக்கை பாடினியாரும் இவ்வாறே வடதிசைமருங்கின் வடுகுவரம் பாகத், தென்றிசையுள்ளிட்டெஞ்சியமூன்றும், வரைமருள் புணரி யொடு பொருதுகிடந்த எனப்பாயிரமுரைத்தார்; அவ் வாறன்றிக் கடல்கொள்ளப்படாமுன் பரந்துகிடந்த செந்தமிழ்நிலம் வரையறுக்கின்றாராதலின் குமரியாற்றைத் தெற்கெல்லையாகவைத்துக் கூறினார். அதனை இப்போதுள்ள குமரிமுனையெனமருண்டு பாயிரச்செய்யுள் பனம்பாரனார் செய்ததன் றென்றுரைத்த ஆப்தரவர்களுரை பொருத்தமின்றாம். அற்றேல், குமரிநாடு கடல்கொள்ளப் பட்டபின் பலவாயிர வருடங்கழித்தெழுந்த நன்னூற்பாயிரச் செய்யுளிற் `குணகடல் குமரிகுடகம் வேங்கடம் என நிலவெல்லை கூறியதென்னையெனின்; - செந்தமிழ்த் தனிமொழிப்புறஞ் சிறிது மலையாளங் கன்னடம் துளுவம் முதலிய மொழிகளாகத் திரிந்து வேறுபடத் தென்றமிழ்த் தனி யகஞ்சிறிது குறுகுங்காலத்தே அந்நூலெழுதப்பட்டதாகலின் அதற்கேற்பச் செந்தமிழ் மணங்கமழாநிற்கு நிலவெல்லை வரையறுத்தற்பொருட்டு அங்ஙனங்குறுக்கி நான் கெல்லை கூறினாராகலின் அஃது ஈண்டைக்கேலா தென்றொழிக. தொல்காப்பியஞ் சிறு காக்கைபாடினியம் எழுதப்பட்ட காலத்தே செந்தமிழ்மொழிப்பெருமை மேல்கீழ்பாலெல்லா மொருங்கு கவர்ந்து விரிந்ததாகலின், அவர்நூற்பாயிரங் கட்குக் கடலெல்லை கூறினாரென்க. இனித் தொல்காப்பியத் தின்கட் காணப்பட்ட அப்பனம்பாரனர் பாயிரச் செய்யுளையே தொல்காப்பியனார் செய்ததெனக் களவி யலிற் காணப்பட்டது அச்சியற்றினோரால் நிகழ்ந்த பிழை பாடாகலின் அஃதீண்டைக்குப் பயன்படாமையறிக. அல்லதூஉம், அது பனம்பாரனார் செய்ததன்றாயின் உரையாசிரியன்மாரெல்லாரும் அதனை ஏன் அவ்வாறு கூறினார்? என்றுய்த்துணரவல்லார்க்கு அப்பாயிரச்செய்யுள் செய்தார் பனம்பாரனாரென்பது தேற்றமாம். இனிப்பஃறுளி யாற்றைக் கிளந்தெடுத்துக்கூறிய நெட்டிமையார் செய்யுளிற் `பார்ப்பனமாக்கள் விதக்கப்படுதலால் அவர்காலத்திற் பார்ப்பன வகுப்பிருந்ததென்பது பெற்றாம். ஆப்தர் சவரிராயரவர்களும், அந்தணரெனத் தமிழ்நூலுட் கூறப்படுவோர் ஆரியப்பிராமணரல்லர், அவர் தமிழ் நாட்டற வோரே என்று கூறுதலால், அவர் கட்கும் இதுவே கருத்தாம்போலும். இங்ஙனமாகலின் ஆசிரியர் - தொல் காப்பியனார் கூறிய அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் என்னுஞ் சூத்திரத்தை `இடைச்செருகல் என்று ரைப்பதற்கு ஒருப்படுவார்மற்றியார்? இன்னுந் தொல்காப்பியம் எழுதப் பட்டகாலத்தே செந்தமிழ்நாட்டின் கண் வழங்கிய செந்தமிழ் மறைகள் நான்காமென்பதும், அந்நான்மறைவல்ல துறவோரா லறிந்து வழிபடப்பட்ட கடவுள் சிவபெருமானே யாமென்பதும், அத்தெய்வச் செந்தமிழ்மொழி விரிந்துபரந்த நிலவெல்லை பனம்பாரனார் கூறியவாறே நான்காமென்பதும் விளங்க அந்நெட்டிமையா ரென்னு நல்லிசைப்புலவரோ டொருங் கிருந்த காரிகிழார் நான்மறை முனிவரேந் துகையெதிரே எனவும், முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே எனவும், வடாஅதுபனிபடு நெடுவரை வடக்குந், தெனாஅதுரு கெழுகுமரியின் றெற்குங், குணா அதுகரை பொருதொடு கடற்குணங், குடா அதுதொன்று முதிர் பௌவத்தின் குடக்கும் எனவுங் கூறுதலானுங் கண்டுகொள்க. எனவே, நாற்சாதிவகுப்பு, நாலெல்லைவகுப்பு, நான்மறை வகுப்பு முதலாயினவெல்லாஞ் செந்தமிழ்நிலத்தே பண்டைக் காலத்துத் தமிழ்மக்களாற் செய்யப்பட்டுப் பின்போந்து கலப்புற்ற ஆரியராற்றழுவி வேறுவேறாக அவர்படையினுஞ் செய்துகொள்ளப்பட்டன வென்றறிக. இதுநிற்க. இனி, ஆரியநால்வகை வருணப்பாகுபாட்டிற்குந் தமிழியற்சாதிவகுப்புக்குந் தம்முள்வேறுபாடுபெரிதுண்டாம். ஆரியர் பிறப்புவகையாற் றமக்கு விழுப்பந்தோற்றுவித்தற் பொருட்டு அங்ஙனம் பாகுபாடியற்றினார். தமிழர் ஒழுக்க வகையான் உலகவியற்கைக் கருமங்களினிது செல்லும் பொருட்டு அவ்வாறு சாதிவகுத்திட்டார். ஆரியர் ஒரு பிராமணனுக்கும் அவன்மனைவிக்கும் பிறப்பவன்றான் பிராமணனென்பர். தமிழர் நான்மறை நெறிவழா தொழுக்க நிகழ்த்தி யுலகிற்குறுதிபயப்பவன்றான் பார்ப்பானென்பர். ஆரியர் இவ்வாறே ஏனை க்ஷத்திரிய வைசிய சூத்திரர்க்குங் கூறாநிற்பர். தமிழர் குறும்புகடிந்து போரியற்றி யரண் காவலமைத்துத் தன்கீழ்வாழ்வார்க்கு ஒருபாற் கோடாது ஒப்பவிருந்து நடுவியற்றி யுலகுபுரந்தருளும் அரசனும் அவ்வரசற்குறுதுணையாயிருந்து போரியற்றுஞ் சுற்றத்தாரும் மறவர் அல்லது க்ஷத்திரியராமெனவும், ஆநிரைகாத்தலுழுது வித்திடுதல் அருமபொருண்மாறுதன் முதலிய வொழுக்கம் நிகழ்த்தி நாடுவளம்படுப்பார் வேளாளர் அல்லது வைசியரா மெனவும், இம்மூவர்க்கும் உறுதுணையாயுடனிருந்து அவர்க்கு வேண்டுவ வறிந்துறுதி சூழுந்து தொழும்பியற்றுவோர் ஏனையோர் அல்லது சூத்திரரெனவுஞ் சொல்லா நிற்பர். இந்நால்வகுப்பாருந் தத்தங்கருமவகையால் வேறுபடுவா ராயினும் ஒருமித்திருந்து உறுவதாராய்தற்கண் ஒருவரேயா மென்னுங் கடப் பாடுடையர்; ஆரியவகுப்பாரைப்போல் வேறுவேறிருந்து ஒருமைபோழ்ந்து பேரிடருறூஉம் நீரரல்லர். இன்னுந் தென்றமிழ் நாட்டுச் சிவாலயங்களிற் சிவவழி பாடியற்றும் ஆதிசைவவகுப்பாரே தென்றமிழ்நாட்டுப் பார்ப்பாராவர். இவரின்னராதல் பற்றியே ஆரியமார்த்தப் பிராமணர் இவரைவெறுக்கின்றனர். இவரவரைவெறுப்பா ராயினும் ஆதிசைவத் தமிழ்ப்பார்ப்பார்க்குரிய மேம்பாடு ஒரு சிறிதுங் குறைவுபாடெய்துகின்றிலது. ஆரியமார்த்தப்பிராமணர் தென்றமிழ்நாட்டிற்குரியரன்றாதல் பற்றியும், அவர் சிவ வழிபாடியற்றுதற்குரிய அறிவுமுதிர்ச்சியில்லாமை பற்றியு மன்றே அவரெல்லாந் தமிழச் சிவாலயங்களிற் பூசனை யியற்றுதற்கு இடம்பெறாராயினதூஉம், அவரைச் சிவாகமங் களெல்லாம் `அதீக்ஷிதேணவிப்ரேண என்றொதுக்கியதூஉ மென்க. ஆதிசைவத்தமிழப் பார்ப்பனமக்களைப்போலவே விழுமிய வொழுக்கமுடைய ஏனை நன்மக்களுஞ் சிவவழி பாடியற்றுதற் குரிமையுடையராகலான், வேளாள வகுப்பிற் சிறந்தோர்சிலர் ஆசிரியத்தலைமைபூண்டு போதருகின்றார். இங்ஙனம் ஒருவகுப்பார்க்குரிய சிறந்த கருமங்களை வேறோர்வகுப்பார் செய்தற்கிடம்பெறுதல் ஆரியருளின்றாம். ஆகவே, செந்தமிழ்த்தனி முதன்மக்கள் வகுத்துநிறுத்திய சாதிநெறி ஆரியமக்கள் வகுத்துநிறுத்தியதுபோற் கொடிய தூஉந் தன்னலம்பாராட்டுவதூஉ மன்றாமென்பது கடைப் பிடிக்க. இனி, ஆரியமக்கட்குரிய பண்டைப்பனுவலான இருக்குவேத இறுதிப் புருடசூத்த மந்திரத்திலேயே அந்நால் வகை வருணப்பாகுபாடு காணக்கிடத்தலானும், அவ் விருக்குவேதங் குமரிநாடுகடல் கொள்ளப்படு முன்னெழுந்த தொன்றாதலானும், மேலே நீர்கூறிய வாதங்களெல்லாந் துர்ப்பலமாய் விடும்போலுமெனின்; - அறியாது கடாயினாய், அப்புருட சூத்தமானது புருடன் ஆயிரஞ்சிரங்களும் ஆயிரம் விழிகளும் ஆயிரம்பாதங்களு முடையனாயிருக்கின்றான். இந்நிலவுலகமுழுவதூஉந் தன் வியாபகத்தின்கண்ணே அடக்கி அதனைப் பத்தங்குலப் பரப்பானே மேற்கடந்துசென்றான். இருக்கின்றதும் இருப்பது மாகிய சருவமும் அப்புருடனேயாம். அவனே மரணத்தைக் கடந்து அதற்கு இறைவனாய் அமர்ந்திருக்கின்றான், அன்னத்தினாற் பூரிக்கின்றான். அவன்பெருமை இத்தகையது, புருடன் இதற்குமேலானவன் உளவாவனவெல்லாம் அவனிற் காற்கூறாவனவேயாம். அவனில் மற்றை முக்காற்கூறும் ஆகாயத்தில் மரணமின்றி யிருப்பதாம். புருடன் முக்காற் கூற்றுடன் மேலெழுந்து சென்றான். அவனிற்காற்கூறு மறுபடியும் ஈண்டுப்படைக்கப் பட்டது. உண்பனவும் உண்ணாதனவுமாகிய எல்லாப்பொருள் களிலும் அவன் உள்நிறைந்து யாண்டும் விரிந்தான். விராச் அவனிலிருந்து பிறப்பிக்கப்பட்டான், விராசிலிருந்துபுருடன் பிறப்பிக்கப் பட்டான். அங்ஙனம் பிறந்துழி அவன் முன்னும் பின்னுமுள்ள இவ்வுலகத்தின்மேற்சென்று விரிந்தான், தேவர்கள், புருடனையே பலியாகக்கொண்டு வேள்வி செய்தபோது வசந்தகாலம் நெய்யாகவும் வேனிற்காலம் விறகாகவும் மழைகாலம் அவிசாகவுமிருந்தன. முதற்பிறந்த வனான இப்புருடனை அவர்கள் தருப்பையிற் கிடத்திப் பலியிட்டார்கள். தேவர்களும், சாதியர்களும், இருடிகளும் அவனை வேட்பித்தார். அந்தச் சருவயாகத்திலிருந்த தயிரும் நெய்யுஞ் சேகரிக்கப்பட்டன. அவையே நல்லமிருகங்களுந் தீயமிருகங்களுமாயின. அந்தச் சருவயாகத்திலிருந்த இருக்குச் சாமசுலோகங்களும், செய்யுட்களும், பசுவுந் தோன்றின. அதிலிருந்து குதிரைகளும் பற்களை இரண்டு வரிசை யிலுமுடைய உயிர்வருக்கங்களுந் தோன்றின. தேவர்கள் புருடனைப் பகிர்ந்த போது, எத்தனை கூறாக அவனை அறுத்தார் அவன் வாய் யாது? புயங்கள்யாவை? எவை அவனுடைய தொடைகளும் பாதங்களுமாகச் சொல்லப் படுகின்றன? எனின்; - பிராமணர் அவன்வாயாவர், (இங்கு ராஜந்யர் என்று சொலப்பட்ட வகுப்பர் தாம் தமிழ ரென்றுணர்க) இராஜந்யர் அவன்புயங்களாக்கப்பட்டார், வைசியர் அவன்தொடைகளாவர், சூத்திரன் அவன் அடியிற்றோன்றினான். அவன் மனத்திலிருந்து திங்களுண் டாயிற்று, ஞாயிறு அவன் விழியிற்றோன்றிற்று, இந்திரனும் அக்நியும் அவன் வாயிற் பிறந்தனர், வாயு அவனுயிர்ப்பில் தோன்றினான், அவனுந்தியிலிருந்து காற்றும், அவன் சிரத்திலிருந்து ஆகாயமும், அவனடியிலிருந்து மண்ணுலகமும், அவன் காதிலிருந்து நான்குதிசைகளுமாக இவ்வாறு உலகங் களுண்டாயின. யாகஞ்செய்யுந் தேவர்கள் புருடனைப் பலியிடும் பொருட்டுக் கட்டியகாலையில், ஏழுகொம்புகளும் மூவேழுசுல் லிவிறகும் உண்டுசெய்யப்பட்டன. தேவர்கள் வேள்வியால் வேள்விமுடிப்பித்தார். இவைதாம் பூர்வ காலத்துக் கருமங்கள். இந்த வலியகருமங்கள் துறக்க வுலகத்தைத் தருகின்றன, ஆண்டு முன்னைச் சாதியர்கள் தேவர்களா யிருக்கின்றார் என்று கூறுகின்றது. இம்மந்திர வுரையின் உண்மைதேற வல்லார்க்கு, இவ்விருக்குவேத மேற்பாகங் களெல்லாம் விடியற்காலம், சூரியன், வருணன், மித்திரன், சாவித்திரி, பூஷன், இந்திரன், மருத்துக்கள், வாயு, நிலம், தீ, சோமா முதலான உலகியற் புறப்பொருளுபாசனை நெறிவழாது செல்ல அதன்கீழ்ப் பாகமாய்நின்ற இவ்விறுதிப் புருடசூத்தமந்திரமாத்திரந் தத்துவ நுண்பொருணிறைந் தொழுகு முறைமையானே இம்மந்திர வுரை ஆரியர் செந்தமிழ் மக்களோடொருங்கு கூடிய பிற்காலத்தே எழுதிச் சேர்த்து வைக்கப்பட்டதென்னு மியல்பினிது விளங்காநிற்கும். இவ்வாறே இப்புருட சூத்தமந்திர மானது இருக்குவேதத்தின் மற்றைப்பாகங்களைப்போல் பிற்காலத்தே எழுதிச் சேர்த்து வைக்கப்பட்டதென்னு மியல்பினிது விளங்காநிற்கும். இவ்வாறே இப்புருட சூத்திரமந்திர மானது இருக்குவேதத்தின் மற்றைப்பாகங்களைப் போல் அத்தனை பிராசீனமாவ தன்றென்றும், வடமொழி யுரைநடைச் சுவைபெரிது முதிர்ந்த பிற்காலத்தே எழுதி மொழித்திறம் விளங்கச் சேர்த்துவைக்கப் பட்ட தொன்றென்றும் பண்டிதர் மாக்மூலர், கோர்புரூக், வீபர் முதலாயினாருங் கருத்தொருப்பட்டுரையா நின்றார். இன்னும் இதனை விதந்துரைக்கப்புகுதுமாயின் எடுத்த பொருள் பெருகிடுமாதலாலித்துணையினமைந்தாம்; இவ் வுரைப்பொருளிற் பண்டிதர் - சவரிராயர்க்காதல் மற்றை யோர்க்காதல் ஐயுறவுதோன்றுமாயின் அதனைப் பிறிதோர் கால் விரித்துரைத்துப்பொருள் நிறுத்துவாம். எனவே, இப்புருடசூத்தமந்திரவுரையின்கண் ஆரிய நால்வகை வருணப்பாகுபாடு காணக்கிடத்தல்பற்றி நாமெடுத்துக் கொண்ட மேற்கோள் துர்ப்பலமுறுதல் ஒருசிறிதுஞ் செல்லா தென்றொழிக. என்றிதுகாறும் உரைமொழிவிரிந்த தருக்கத்தானே சிந்தாமணியிற் கந்தியார் பாட்டுக்களிடையிடையே நுழைந் தனவென்னு மெமதுரைபற்றிப் பண்டைத் தமிழ்ப் பனுவ லினெல்லாங் கலவையுண்டாயிற்றென்பது எமக்குமுடன் பாடாமென்னும் ஆப்தரவர்கள் உட்கோள் வழுக்கலுறு மாமென்பதூஉம், அச்சிந்தாமணிக் காப்பியந் தமிழ் முது மக்கள் ஆரியக்காப்பிய விலக்கணம்பற்றி அவ்வழக்குமிகத் தழீஇநூலியற்றிய காலத்தே எழுதப்பட்டதொன்றாகலின் ஆண்டுக்கலவையுண்டாதற்கு அவகாச முளதா மென்பதூஉம், ஆரியமக்கள் வழக்குமிக விரவப்பெறாத பண்டைக்காலத்தே தமிழியன் மாட்சிவகுத்துப் பாகுபாடு நனிவிளங்க இயைபு காட்டி அரும்பெறல் நிதியமாய் ஆசிரியர் தொல்காப்பியனார் ஈட்டிவைத்த தொல்காப்பிய முழு முதனூலின்கட் கலவைகாண்டல் ஒருவாற்றானும் பொருந் துமாறில்லை யென்பதூஉம், யாரோசிலர் பொய்யாகக்கட்டி வழங்கிய வோரைதிகம் பற்றித் தொல்காப்பியம் முன்னிலையிற் பின்னிலை பெருக்கமுற்ற தென்னுமுரை திட்பமின்றி நுறுங்குமாமென்பதூஉம், இறையனாரகப் பொருளுரைக்குப் பாயிரங்கண்ட முசிறியாசிரியர் நீலகண்டனார் கூறுங் களவியல் வரலாறு ஒரோவிடங்களிற் சரிதவுரையியல் பிறழக்காண்டலின் அவ்வரலாற்றினையோ ரேதுவாகக்கொண்டு பண்டைக் காலத்தே தொல்காப்பியம் வழக்கமின்றி வீழ்ந்ததெனவும், அதனைக்கடைச் சங்கத்தார் திரும்பவெழுப்பிப் பெருக்கி வழங்கப்படுத்தாரெனவுங் கூறுந்துணிபுரை முன்பின் மாறுகோள் பெரிதுற்றுப் போலியாயழிந்து படுமென்பதூஉம், தொல்காப்பிய மெழுதப் பட்டகாலத்தே ஆரியர்தென்றமிழ் மக்களோடு சிறிது பழகப்புகுந்தாராகலின் அந்நூலுள் வடமொழிக்குறியீடுகள் சிலவுஞ் சொற்கள் சிலவும் வருத லறியாது மற்றவை காணக்கிடத்தல்பற்றியே தொல்காப்பியங் கலவை கொண்டதாமெனுமுரை வாய்ப்புடையதாமா றில்லை யென்பதூஉம், நால்வகைச்சாதி வகுப்புக் கடல்கொள்ளப்படு முன்னெழுந்த பழந்தமிழ்ப்பாட்டுக்களிற் காணக்கிடத்த லானும் வடமொழிப் பண்டைப்பனுவல்களி லங்ஙனங் காணப்படாமையானும் அவ்வகுப்புத் தமிழ்நாட்டின்கண் உலகியலொழுகலாறுபற்றிச் செய்துகொள்ளப்பட்டதா மென்பதூஉம், அதனைப்பின் வந்தனுசரித்தொழுகி னோரான ஆரியமக்கள் தமக்கு நலம் பெருகுமாற்றால் அவ்வியல் திரித்து அதன்பண்டைக்கருத்து வேறுபடுத்து ஒருமை யழிக்கின்றாரென்பதூஉம், இங்ஙனமாகலின் தொல்காப்பிய நூலிற் காணப்படுஞ் சாதிவகுப்புச் சூத்திரங்கள் செருகப் பட்டனவாதல் செல்லாதென்பதூஉம், இருக்குவேதப் புருடசூத்தமந்திரவுரை பிற்காலத்தே செய்யப்பட்ட தொன்றாகலின் ஆண்டதுபற்றிச் சாதிவகுப்புத் தமிழ்நாட் டிலுண்டாயிற்றென்னு முரைபழுதாமாறில்லையென்பதூஉம் இனிது விளக்கித் தொல்காப்பிய முழுமுதனூலின்கட் கலவை யுண்டென்னும் நஞ்சகோதரர் - சவரிராய பிள்ளையவர்கள் கருத்துப் பொருத்தமிலதென்று காட்டிக் களைந்து தொல்காப்பியம் முழுமுதனூலாமென்பது நிறுவினாம். இத்தருக்க வுரையிலே பிழைபாடுளதாயின் ஆப்தர் - சவரி ராயராதல் ஏனைவித்துவசிகாமணிகளாதல் அதனை யெடுத்து வலியுறுத்தி எமக்கு அறிவு கொளுத்துவாராக; இதன் கட்டாமுங் கருத்தொருப்பாடுறு வாராயின் அவ்வொருப் பாடு தெரித்து எம்மை ஊக்கமுறுத்தி யுவப்பிப்பாராக வென்னும் வேண்டு கோளுடையோம். உலகம் உண்மைப் பொருள் தேற்றக்கடவதாக. சமாசாரக்குறிப்புகள் பிரமரகீடநியாயம் இவ்வடமொழிச் சொற்றொடர் குளவி புழுவைத் தன்னினமாக்குகிற தென்றபழைய அபிப்பிராய மேற் கோளாய்க்கொண்டது. நியாயமெனினும் நயம் எனினு மொக்கும். இக்கொள்கை, குளவி பக்குவமடைந்த வோர் புழுவைத் தன் கூட்டிற்சேர்த்ததைக் கொட்டுதலாற் புழுவுக்குக் குளவியைப்பற்றிய ஞாபகந்தவிர வேறின்றாகிறது; ஆகவே சிலநாளில் புழு தன்னெண்ணத்தின்படி குளவியாய் வெளிவருகிறதென்பது. இதனையே கரன்வதைப்படலத்தில் அஞ்சிறையறுபதமடைந்தகீடத்தைத், தஞ்செனத் தன்மய மாக்குந்தன்மைபோல் எனக் கம்பரும், கைவல்லியத்தில் அடங்கிய விருத்தி யானென்றறிந்தபின் செறிந்த மண்ணின், குடம்பையுட் புழு முன்னூதுங் குளவியின் கொள்கைபோல் எனத் தாண்டவமூர்த்தியாருங் கூறியுள்ளார். ஆசிரியர் சிவஞான யோகிகளுஞ் சிவஞான போதவுரையி லிப்படியே கூறுவதாலிதனைப் பிற்காலத்தோரதிகமாகப்பாராட்டி வந்தனரென்பது தெளிவாகின்றது. சிவஞான சித்தி யுரையாசிரியர் ஞானப்பிரகாச ரொருவர் மட்டுமே யிதனை யொப்புக்கொள்ளாதொழிந்தார். இனி யிதனுண்மையை யாராயுங்கால் ஞானப்பிரகாச ரபிப்பிராயமே பொருந்துமெனக் கிருமீ யாராய்ச்சிசெய்த எவருங்கொள்கின்றனர். குளவியின் முட்டைக்கு முதலில் வெப்பந்தருவதாய்ப் பின் பொரிக்கப்பட்ட குஞ்சுக்குப் புழு இரையாகிற தென்பதே யவர்கள் கோட்பாடு. இப்படியே கிருமி சாதிரவல்லராய லப்பக் என்பவரும், பொருளகராதி யுடையாருங் கூறுகின்றார். இனி, பட்டுப்பூச்சியு மீயும்போல் குளவியும் புழுவி னின்று பிறக்கக் கூடாதோ என்னு மாசங்கை விடுப்பார்க்கு, அற்றே லிரண்டுமூன்று புழுக்காணுங்கா லொரே குளவி வருவதேனென விடுக்க. திருவலங்கற்றிரட்டு இராமேசுரத்தைச் சேர்ந்த குமரகுரு பரதாச சுவாமிக ளருளிச்செய்த இந்நூல் பாவியல்பை உதாரணவகையானுந் தோத்திர முறையானுந் தெரிக்கப்புகுவது. இது வெள்ளை யியல், ஆசிரியவியல், வஞ்சியியல் என மூன்று பகுதிகளை யுடைத்தாய் ஆசிரியரின் மதி நுட்பத்தையு மறிவு விளக்கத்தையுங்காட்டாநின்றது. ஆசிரிய வியலின்கணுள்ள சில சித்திரக்கவிகள் விநோதமாய்க் காணப்படினும் பொருள் நிரம்பியுள்ளன. ஆகவே, இலக்கணத்தை யறவே நெகிழவிடு மிக்காலத்திதுபோன்ற நூல்களின்றி யமையாதனவே. இதனைப் படிப்போர்க் கிதிற் செலவிடு நேரத்திற்குத் தகுந்த பலன் கிடைக்கு மென்பதற்கு, இதிற் குற்றங் காணப் புகுவோருஞ் சில வோசை குன்றலுந் தத்தளித்துச் செல்லலுமே காட்டல் தக்க சான்றாம். பா.ரா. பத்திரிகைகள் நிறைந்த இக்காலத்தில், மொரக் கோராச்சியமட்டு மொரு பத்திரிகைகூட இன்றியிருப்பதைக் கேட்க ஆச்சரியப்படுகிறோம். இக்காலத்திய கணக்குகளின்படி இவ்வுலகத்தைச் சுற்றிவர அல்லும்பகலு மோய்வில்லாமல் நடக்கிற மனிதனுக்கு 428 நாட்கள் செல்லுகின்றனவாம். வேகமாய்ப் போகிற ரயில்வண்டிக்கெனின் 40 நாட்கள் போதும். மேலுஞ் சத்தஞ்செல்ல 32 மணியாகுமென்றும், ஒளிக்காயினுந் தந்திக்காயினுஞ் சற்றேறக்குறைய 10 சக்கெண்டுக்குமேல் வேண்டாமென்றுங் கணக்கிட்டிருக் கின்றார்கள். தமிழ் நாகரிகம் தங்கள் அரிய பத்திரிகையை வாசிக்கும் நண்பர்களில் எவரேனும், இப்பத்திரிகை வாயிலாய், அடியில் வரும் வினாக்களுக்கேற்ற உத்தரமெழுதி உண்மையை விளக்குவார் களாயின் அவர் மாட்டுப்பெரிதுங் கடப்பாடுடையே னாவேன்: 1. இந்துதேசத்தி னெப்பாங்கில் இந்துக்களின் உயர்தர சங்கீதசாதிரம் விர்த்தி செய்யப்படுகிறது? தென்னிந் தியாவின் கர்னாடகராகம் சாதிரரீதியை அநுசரித்ததா? அது பரதகண்ட மெங்கணும் பரவியிருக்கின்றதா? சங்கீத சாதிரம் ஆரியோற்பத்தியை யுடையதாயின், மகாராஷ்டிரத் தலைவனாகிய சீவாஜி தனது ஆரியக்குடிகளுக்குச் சங்கீத சாதிரங் கற்பிக்கத் தமிழ்ச்சங்கீத வித்வான்களைத் தருவித்த தென்னை? 2. சென்ற இரண்டாயிரம் வருஷங்களாக, இந்தியாவிற்றோன்றிய தத்துவ ஞானிகளிற் பெரும்பாலார் தென்னிந்தியாவிற் பிறந்தவர்கள் தாமென்பது வாதவமா? 3. தமிழ் இலக்கண நூலாசிரியரான அகத்தியர் தமிழரோ அல்லது ஆரியரோ? அவர் ஆரியராயின், அதற் காதாரமென்னை? அவரது இலக்கணம் முதல் நூலா? ஓர் பாஷைக்கு இலக்கியங்க ளில்லாதிருப்பின், அப்பாஷைக் குரிய சிறந்ததோர் இலக்கணத்தை அமைத்தல் சாத்தியமா? 4. இராவணன் தமிழனா? அன்றெனின் திருநெல்வேலிச் சான்றார் குலத்தார், தங்கள் முன்னோர்கள் இராவண னுடைய பிரஜைகளென்று பாராட்டி வருகிற பாரம்பரியக் கொள்கைக்குப் பொருளென்னை? 5. புலத்தியமுனிவர் இராவணனுடைய மூதாதை யன்றோ? அங்ஙனமாயின், அவரது குடிநாடு இலங்கைத் தீவேயன்றி வடநாடன்றென்பது அங்கீகரிக்கற்பாலதல்லவா? 6. அகத்தியர் சமகிருத நூல்கள் எழுதியிருக் கின்றாரா? ஆமெனின், அந்நூல்கள் எக்காலத்தனவென்று விற்பன்னர்களால் குறிக்கப்படுவன? அவை சமகிருத வேதங்களோடு சமகாலத்தனவாமா? இங்ஙனம், கொழும்பு, ஓர் தமிழன். சிவமயம் திருச்சிற்றம்பலம். ஸ்ரீஜ்ஞாநசம்பந்தகுருப்யோநம: 9. திருவருளியல்புகூறி நெஞ்சறிவுறுத்தல் தன்றோ ணான்கி னொன்று கைம் மிகூஉங் களிறுவளர் பெருங்கா டாயினு மொளிபெரிது சிறந்தன் றளியவென் னெஞ்சே வளிகுலாம் வெளியி லெளிதெனக் கறங்கும் விளம்பழ நிகர்தவிவ் வளம்பொலி ஞாலத்து வேறுவேறு குழீஇய வெறும்பினம்போல வரிதுமுயன் றூக்குந் தெரிவுறு மாந்தரில் விழியிதழ் முகிழ்ப்பிற் கழாய்பல வுருட்டுங் கைவல் லொருவன் போல மெய்பெற வெப்பெரும் புவனமு மெண்ணிலா வுயிரு மப்பெரும் பரிசா லமைந்தாங் கியங்கப் பேதுற லின்றி மாதுட னமர்ந்த வண்ணலார் திருவரு ணண்ணுவழி யறிந்து தருக்குற லின்றி யிருக்குநர் சிலரே, எம்முடை யறிவாற் செம்மைபெரி துறுவே மெம்முடை யறிவா னலம்பல பெறுவே மெம்முடை யறிவினுஞ் சிறந்ததீண் டுண்டுகொ லியாமே யெமக்கீங் குறுதுணை யென்னா வெறும்பல மொழிந்து கழியுநர் பலரே, ஈங்ஙன மொழியாத விளையோ னொருவன் கருமாண் குஞ்சியன் றிருவிய னோக்கின னருமைசால் குணத்தின னொருவழிப் புகழின்றி யொருவா றிருந்து மருவுமோர் குடியி லொருதனித் தோன்றிய மரபினன் றிருவரு டுணைநின் றுய்க்கும் பெற்றி யல்லது பிறிதுதுணை யில்லாச் செறிவுபெரி துடையோ னகன்கண் ஞாலத் தியாருமி லொருசிறை நினைந்தாங்குத் திரிதரூஉ மளவை முனைந்தொரு காண்டகு சிறப்பி னான்ற கேள்விப் பல்புகழ் நிறுத்த வொடியாப்படிவத்துப் பெரியோ னொருவ னருள்வரத் தோன்றி யருணெறிச் செலவு தெருளுற வேண்டு மழியா வுள்ளத்துக் கழிபே ரிளையோய்! இந்நெறிச் செலவு பிழையா தோம்பிற் பொன்னகர்ச் செல்வமும் பொருளன் றாக மன்னியசெல்வத்து வதிகுவை யெனாஅ நன்பல மொழிந்த போகப் பின்பல நினையா தொருங்கிய வறிவின னாகி விழைதகக் கலித்த கொழும்புன் னிலத்து வாலுகம் பரந்த கோலமா நெறியிற் கதிர்தெறக் குழைந்து வியர்முக மரும்ப விடுகிய நோக்கமொடு கடிதுசெல லுற்றுப் படுகதி ரமையத்து நெடிதோங்கு பொழிலிற் களிதுளும் புள்ளமொடு தெளிவுபெரி தெய்தி யானா விருப்பொடு தான்சென்று புகுதலும் பொதியத் தென்ற றதையரும் பவிழ்த்துக் கையரிக் கொணர்ந்த பல்விரை தெளிப்பவு மொருசா ரோடும் பொருபுனற் காலிற் சிறுவளி தாவலி னிழுமென வொலிப்பவும் புதுமனம்விரிக்குங் கொழுநனை தோறும் வரிச்சிறைத் தும்பி யுருக்குபாண் மிழற்றலொடு குரூஉக்கட் குயிலினங் கூஉமிசை விராயச் சுவைமிகப் பயக்கவு மிவையெலாங் கேளா வென்றுங் காணாத் துன்றுமகிழ் சிறந்து நெட்டிலை வாழையிற் கட்டுகோட் பழமும் பொரியரை மாவினுருகுதேம் பழமுங் கடும்பசி தீரக் குடும்பொடு பறித்துண் டுலைக்களத் துருகி யோடுபொன் போல நனிதெளிந் தியங்கும் பனிநீர்க் காலின் கரைமருங் கெய்திக் குடங்கை சேர்த்தி விழைவறு மளவு முழைமுகந்து பருகி யாறுசெல் வருத்தம் பாறிய பின்றை மாழையஞ் சிதரு மணங்கெழு நறவும் விரைசெறி முகிழு நிரைநிரை வீசிப் போதுபொதுண் மரங்கண் மீதுநிழல் செய்யத் தூவியிடு தளிம மேவி யாங்குப் புற்பொழி நிலத்துப் புறமிடைந் துறுவான் வயினோக் குறுதலுங் குயின்வழக் கின்றி மறுவிகந்து விளங்கிய தன்றே யவ்விடைப் பிறைமதிப் பிள்ளை நிறைமீ னித்திலங் கதிர்க்கை வாரி விதிர்த்துநக் கன்றே யீங்கிது காண்டலு மோங்கறிவு காழ்கொள வாய்மையே நினைதன் மேயினன் புகுந்து மக்க ளென்போர் மிக்கபல் லுயிரினுந் தலைமைபெரி துடைய நிலைமைய ரென்ப தறிவா லென்னி னறிவொடு வரூஉங் கடுந்துய ருறுத்து கவலையோ பலவே விலங்கின மென்ப நலங்கிள ரறிவு தழுவுத லின்மையி னிழிசின வென்னி னகழ்கிழங் குண்டு முகிழ்நறா மாந்தியும் பைங்குழை மென்றும் பானீர் குடித்து மலையினு பொதும்பினு நிலையாக் கூட்டினும் வருந்துத லின்றிப் பொருந்தி யிருந்து மொருதுய ரின்றி யுறுநலன் பலவே யதாஅன்று மக்கடம் மறிவான் முடிந்தன விலவே போக்கறு முணர்வு மாக்களுக் கின்மையி னெனைநிலத்து முடியா வினைகளு மிலவே யறிவறி யாமையிற் பெறுவதென் னென்று சூழ்ந்திட லுறினொன்று போந்ததூஉ மின்றே யகன்கண் ஞாலம் பொதுவின்றிப் புரந்த விகலறு வேந்தரு மிறந்தொழிந் தனரே பொய்யுரை கிளந்தும் புறம்பழித் தலைந்து கையறி யாமையிற் கடுங்கொலை புரிந்து நல்லோர் தொகுத்த பல்பொருள் வௌவியும் பாழ்வயிறு நிரப்பிய கீழ்களு மிலரே யுடம்பினை யோம்புங் கடம்படு பல்லுணா மலையினுங் காட்டினு மிலைமலி மரத்தினுந் தவப்பல வாகி யிருப்பன தேறாது நாளு நாளு மாள்வினைக் கழித்து வாளாது கழித ல்வருந்துநீர் மைத்தே நானிது செய்தே னெனதிது வென்னும் பேதைமை கந்தாப் பேரிடர் வருமே யறிவுறு பொருளையு மறியாப் பொருளையு மொப்ப நாடி யத்தக வியக்குந் திருவருட் பெற்றி தேர்தொறுந் தேர்தொறு முவட்டெழு மின்பந் தலைப்படு மன்றே யெல்லு மெல்லியு மெழிலுற விளக்கி யந்தரத் தியங்கு நந்தா விளக்கமுங் காலமொடு திறம்பா வளந்தரு மழையு மழையா லுயிர்க்கு மாண்பொருட் டொகுதியு முழுமுத லறிவின் முதல்வன் செய்த வலகிலா வருளா னிலவுறு மன்றே யருட்பெரு வள்ளலா மத்தகை யோனை மருட்படு முணர்வினேன் றலைப்பட லென்றோ நெஞ்சுநெக் குருகிச் செஞ்சொற் குழற மெய்விதிர் விதிர்ப்ப மயிர்முனை நிறுத்த நாத்தழும் பேற வேத்துரை மொழிந்து விழுந்தருள் வெள்ளத் தழுந்துநா ளென்றோ என்னை! என்னை! நா னிவ்வுழிவந்து பொச்சாந் திருந்து பொழுது கழித்தே னள்ளிடை யாமமா யினதே தெள்ளிய விளமதி சாயுமு னிவணின் றகன்று வளமுறு நிதிய வைப்புக் காண்ப லென் றோடுகான் மருங்கி னீடு செல்வுழிப் பளிங்குருக் கன்ன துளங்குநீ ரோடையிற் பால்புரை பிறைக்கதிர் மேன்மிளிர்ந் தாடலு மெழுந்திரை கிழியக் கொழுங்கயன் மறிதலும் வானிடு வில்லின் வாளைமே லுகளலும் பாசடை நிவந்த நெறியவி ழாம்ப லிரவெனு மணங்கு திரைமடி யிருவிப் பாற்கதி ரூட்டும் பாலன் போறலு மன்பிடை நெகிழா வன்றிலு மகன்றிலுந் தூதுகல் லுண்ணுங் காதன்மிகு குரீஇயு மன்னமு மயிலும் பொன்னுரை கிள்ளையு மாடுவாற் சிரலும் புறவும் பிறவுங் கூடுதொறுங் குழீஇத் துணையொடு துயிறலு மருப்பமா யயனின்ற பொருப்பகந் தோறுங் கழல்கட் கூகை குழறலோ டுளிய முரற்றலும் பிறவுங் கருத்துற நோக்கி யல்லாந் தெழுந்த வுணர்வின னாகி மல்லலங் காவிற் செல்லுங் காலை வைகறை யாமஞ் சிறிது கழிந்தன்றே யரனா ரருளொளி விரிதலு மருவிய வாணவ வல்லிருள் காணா தொழிந்தாங் கங்கதிர் ஞாயிறு கீழ்பா லெழுதலு நிறையிருட் படல முறைமுறை கழிய வழகுறு புள்ளினந் துழனியெடுத் தனவே முழுநெறித் தாமரை புரிநெகிழ்ந் தனவே யிமையாக் கண்ண சுமைமயிர்த் தோகை பீலிவிரித் தொருபா லாலு மன்றே யின்னன பலவும் பன்முறை நோக்கிக் கவலைதீ ருள்ளமோ டுவகைபெரி துறுவோன் றன்னுயிர் தன்னெதிர் தான்கண் டதுபோற் பொன்முகடு வேந்த பொற்பம ரம்பலங் கண்ணெதிர் தோன்றக் கரையறு மின்பத்துக் குடைந்தனன் போல வடங்கா மதர்ப்புட னோடுவழி யோடி யீடுபெற லில்லா வச்சிரப் பலகையை நச்சி யீர்ந்து தகைபெறு மணிகள் வகைவகை தெரிந்து குயிற்றுமிடங் குயிற்றிப் பூத்தொழில் கனியக் கடவுட் டச்சன் புடைபட வகுத்த விலைவரம் பறியா நிலையுயர் வாயி லுழைநுழைந் துறுதலு மழைமதர் நோக்கமொடு விரிந்தொழுகு நுதலில் வரிந்தநீ றிலங்க வால்வளை லோலப் பால்கெழு கழுத்தில் விரிமணிக் கோவை யழகொடு துவள நுரைமுகந் தன்ன நொறில்கெழு மறுவை யரைமருங் கசைய வொருகர மதனா லரிய வத்துவிதக் கலவையுங் காட்டிச் சிவஞான போதச் செம்பொரு டெளித்துப் பண்புறு சீடரைப் பார்வையி லாண்டுகொண் டுருவுடன் வைகிய குருவனைக் கண்டு கழுமிய நோக்கமோ டழுதுகுறை யிரப்ப மன்னா வுலகத்து மின்னலின் மறையும் பொய்வளர் யாக்கையிற் பொருந்துபல் லுயிரு மெய்மெய் யென்று பொய்படு குநவே பொய்ப்பொரு டம்மின் மெய் விராயருட் டேறிப் புதுநல னெய்தும் ......................... புகுந்தநின் றன்மை யன்புடைக் கு............... கட்புலன் கதுவாத் திப்பிய மெய்யரு டிரளுரு வாக வருதன் மேயினம் வேறுவே றியற்கை கூறுபல் லுயிரு முய்வது காணச் செய்குவ மாதலின் றாங்குநல் லுருவமீ தொன்றோ வன்றே நிலனும் யாமே நீரும் யாமே தீவளி விசும்புட னியாவு நாமே திங்களும் யாமே யெங்குமா முயிரும் வெங்கதிர் ஞாயிறு நங்கிளர் வடிவே யீங்ஙன மாயினு மிவற்றின் வேறாய் நாங்கொளு முருவமு முண்டே பாங்குபெற நம்மியல் பறிந்துநம் மருள்வழி நிற்போ ரிம்மையே நீங்கா வின்ப மெய்தி யம்மைநம் மடிநிழல் வைகுவ ரன்றே யன்புடைத் தோன்றா லிங்குநம் மருளொடு பிரிவறக் கெழுமி யமர்நிலை நோக்கி யொருபே ரின்பத் துறைமதி சிறந் தென் றுருவங் குருவாய் மருவிய முதல்வ னொளிபிழம் பாகிக் களிப்புறு விடையி லிமையம் பூத்த வுமையுடன் றோன்றி யீதுநம் முண்மை வடிவா மாதலி னிளையோ யிவ்வுல குளையாங் காறும் பிறழா நினைவின் முறைமுறை யுயரி மறுமைநம் மடிநிழ லுறுக வென் றருளி நிதிக்கோ னிதியு மதிப்ப நல்கிக் கரந்தன னென்ப வாகலி னிரந்தவம் முதல்வன் றிருவருண் முனியாது வெஃகி யதற்பட வொழுக லாற்றிசி னெஞ்சே வருவன யாவுந் திருவருட் குறிப்பே வாரா தனவும் பேரா வருளே வந்தவா வழுத்தி வல்லாங்குப் பாடி வணங்குதும் வாழிய நெஞ்சே யணங்குடன் மழவிடை யமர்ந்து வழிபடுமடியார் வேண்டிய வேண்டியாங் காண்டுகொண் டருளிப் புலியத ளுடீஇ மதிமகிழ் பிணித்து மொழியள வமை முறை கே வெளியி லொருகால் புரிவார்....... திருநடங் குயிற்றலுங் ............... - நா. வேதாசலம் பிள்ளை சிவமயம். திருச்சிற்றம்பலம். ஸ்ரீஜ்ஞானசம்பந்த குருப்யோநம: வாழ்த்து b வாழ்க வந்தணர் வானவ ரானினம் வீழ் தண்புனல் வேந்தனு மோங்குக ஆழ்க தீயதெ லாமர னாமமே சூழ்க வையக முந்துயர் தீர்கவே தமிழ் மிகப்பழைய மொழியாமென்பது பரந்துகிடக்கும் இந்நிலவுலகத்தின்கண்ணே பண்டைக் காலந் தொட்டு இலக்கண விலக்கிய வரம்புடைமையாற் சீர்திருந்தி வழக்கமுற்று வாராநின்ற மொழிகள் தமிழ், வடமொழி, இலத்தீன், கிரேக்கு, இப்புரு முதலியனவாம். உலகத்தின்கட் பேசப்படுவனவாகுந் தொள்ளாயிர மொழி களுள் இவ்வைந்தும் வேறுசிலவும் அங்ஙனந் தொன் மொழி களென் றுயர்த்துக் கூறப்படுதற்கு இடம் பெறுவதல்லது ஏனைய அவ்வாறு சொல்லப்படா வென்றுணர்க. இவற்றுள், தமிழ் மொழியை ஒழித்து ஒழிந்த வடசொல், இலத்தீன் முதலிய வற்றையெல்லாம் ஐரோப்பிய பண்டிதர்கள் நன்காராய்ச்சி செய்து அவற்றைப் பண்டைக்காலத்து மொழிகளெனப் பெரிதும் பாராட்டிப்போற்றுகின்றார்கள். இனித் தமிழையோ வெனின் அங்ஙன முண்மை யாராய்ச்சி செய்யமாட்டாது நெகிழவிட்டு, அதனைப்பற்றி யுரை யுரைக்கும் வழியெல்லாந் தாந்தா மனம்போனவாறு சொல்லி யுண்மைப்பொருள் காணாது ஒழிகின்றார். இதற்கென்னையோ காரணமெனின், வடமொழி முதலான சொற்குரிமை பூண்டு அவற்றை வழங்குவாரான நன்மக்கள் அபிமான மிகவுடையராய் அவற்றை விருத்தி செய்தலோடு, பிறருந் தமக்கநுகூலமாய்நின் றதனை யவ்வாறு விருத்தி செய்யுமாறு தூண்டுதலுஞ் செய்து போதருகின்றார். இனித் தென்றமிழ் நாட்டில் தமிழ் வழங்கு மக்களோ அங்ஙனம் நல்லபிமானங் கொளவறியாமல் உண்டிப் பொருட்டுப் பொருள் தொகுத்தலின் கண்ணே நிலைபேறு மிகவுடைய ராய் மொழியாராய்ச்சியிற் சோம்பலுற்று உறங்கிக் கழிகின்றார். இனி யிங்ஙனம் ஒழிவாரொழியத் தமிழ் நல்லபிமான மிக்குடைய தமிழ்ப் பண்டிதர் ஒருசிலரும், ஆங்கிலமுந் தமிழும் வல்லார் ஒருசிலரும் மனவெழுச்சியான் முன்வந்து நின்று உண்மையாராய்ச்சி செய்து போதருகின்றமை யின், அந்நல்லார் வழிநின்று யாமும் எம்மாராய்ச்சியிற் கண்டவற்றை விளங்கக்காட்டத் துணிந்து இன்றிதனை விரித்துரைப்பப் புகுந்தாம். இது நிற்க. இனி மேலே காட்டிய பண்டைமொழிகளான தமிழ் முதலான சொற்களுள் இன்றுகாறும் பரவைவழக்காய் வருவது தமிழ் ஒன்றேயாம். அற்றன்று, இலத்தீன் முதலான சொற்களும் ஆண்டாண்டுப் பயிற்சி செய்யப்படுதலும், கற்றறிவுடை யோராற் பேசப்படுதலுமுடையனவாய் வருதலின் அவை வழக்கு வீழ்ந்தனவாகா வெனின்; - நன்று சொன்னாய், ஒரு சொற் பரவை வழக்குடையதோ அன்றோ வெனத் துணிவு காண்டல் அவ்வாறன்று, மற்று அது கற்றறிவில்லாச் சிறுமகாரானும் பெண்டிரானும் ஆடவ ரானும் இல்லந் தோறும் உரைவழக்குற்றுப் பெருகி நடைபெறுதலொன்றானே அவ்வாறாதல் இனிது துணியப்படுமென்பது. இனி இலத்தீன் முதலிய சொற்கள் அங்ஙன மில்லந்தோறுஞ் சிறுமகாரானும் பிறரானும் வழங்கப்படுதல் காணாமையானும், தமிழோ அவ்வாறின்றி யாண்டும் பெருகிய வழக்காய்த் தென்றமிழ் நாட்டகத்தே நடைபெறுதலானும் அவ்விலத்தீன் முதலான சொற்கள் உலகவழக்கு வீழ்ந்தனவா மென்பதூஉந், தமிழொன்றே உலகவழக்குடையதாமென்பதூஉந் தேற்றமாம். எனவே, தமிழ் மொழிப்பயிற்சி செய்தல் அவ்விலத்தீன் முதலான ஏனை மொழிப்பயிற்சியினும் பயப்பாடு பெரிது டையதாமென்பது இனிது விளங்கலின், இப்பெற்றியறியாத சென்னைச் சருவ கலாசங்கத்தார் தமிழ்ப்பயிற்சி செய்தலை அறவே களைந்துவிடல் வேண்டுமென்றுரைத்தவுரை பெரிய தோர் இழுக்குமாம் ஏதமுமாம். இதுகிடக்க. இனி அத்தமிழ்மொழி, வடமொழி இலத்தீன் முதலான மற்றவ்வெல்லாச் சொற்களினும் முற்பட்டுத் தோன்றிய பழமை யுடைத்தென்பது ஒருசிறிதுரைப்பாம். தமிழ் மொழியிலே யுள்ள சொற்களெல்லாம் அ,ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ என்னும் பன்னீருயிரெழுத்துக்களையும், இவ்வுயிர் களோடு கூடிய க், ச், த், ந், ப், ம், வ், ய், ங், ஞ் என்னும் பத்து மெய் யெழுத்துக்களையும் முதற்கொண்டு தொடங்குகின்றன; ட், ண், ர், ல், ழ், ள், ற், ன் என்னும் எட்டு மெய்யெழுத்துக் களைக்கொண்டு அவ்வாறு தொடங்கு கின்றில. ஆரியம், இலத்தீன் முதலிய மொழிகளோ இவ்வெழுத்துக்களையும் முதலிட்டுத் தொடங்குஞ் சொற்களுடையனவாய்க் காணப்படு கின்றன. ஆரிய மொழியிற் காணப்படும் டம்பம், ரத்நம், லவணம் முதலிய சொற்களை அம்மொழியிற் கிடந்தவாறே கூறாது, இடம்பம், அரதனம், இலவணம் முதலியனவாகத் திரித்துத் தமிழ்மக்கள் வழங்குகின்றனர்.. அச்சொற்களை அம்மொழியிற் கிடந்தபடியே கூறாது அங்ஙனந் திரித்துக்கூறல் வேண்டுவதென்னை யெனவும், தமிழ்ச்சொற்கள் ட், ண் முதலான அவ்வெட்டு மெய் யெழுத்துக்களை முதல் நிறுத்துத் தொடங்காமை என்னை யெனவும் நுணுகி யாராயும்வழித் தமிழ்மொழி மற்றெவ் வெல்லாப் பாடைகளினும் பழைதாமென்னு முரைப்பொருள் தெற்றென விளங்காநிற்கும். அவ்வாறாதல் காட்டுதும். இனி, ஒருபாடையி னுற்பத்திக்கிரமத்தை நோக்கவல்ல நுண்ணறி வாளர்க்கு, விலங்கினங்களைப்போல் அநாகரிக நிலையிலிருந்து சொற்சொல்லுமாறறியாது குறிப்பானு ணர்த்திப் பின்னும் விளங்காமையான் இயற்கையினிகழும் ஒலிவகைப் பற்றிக் கூற்று நிகழ்த்திச் சிறிதுசிறிதாய்ச் சொற்சொல்லு மாறறிந்து அறிவுகூடப் பெற்றுவரும் மக்கட்டன்மையும், தாய்தந்தையர் கூட்டுறவானே சொற் சொல்லுமாறறிந்து அறிவுகூடிவருஞ் சிறுமகாரியல்புந் தம்முளொத்த பெற்றிமை யுடையவாமா றினிது விளங்கும். எனவே, ஒருபாடையினுற்பத்தி முறை நன்காராய்ந் தளந் தறிதற்கு இன்றியமையாப் பெருஞ்சாதனமாய் முன்னிற்பது சிறுமகார் வளர்ச்சி முறையை யுற்றுநோக்கி யுணர்தலேயாம். உயிரெழுத்துக்களொழிய மெய்யெழுத்துக்களுட் சிறும காரான் முதன்முதன் மொழியப் படும் ஒலி யெழுத்து இதழிரண்டனையுஞ் சிறிது மெல்லென்று கூட்டுதலானே பிறக்கும் ம என்பதேயாம். அங்ஙனம் இதழ் கூட்டித் தந்தாயைக் கூவும்வழி அடுத்தடுத்த மா மா என்று சொல்லுதலானே அம்மா எனுஞ் சொற்றோன்றுவதாயிற்று. இனி அவர் அம்மா எனு மச்சொற்கற்றதுணையானே, தம்மிதழை மேலுஞ் சிறிது வலிந்து இயக்குமாறறிந்து தந்தையைக் காண்டொறும் பா பா என்றழைத்தலானே அப்பா எனுஞ் சொல் உற்பத்தியாயிற்று. இங்ஙனம் மெல்லென் றொலிக்கும் ஒலி நுட்பம்பற்றி மகரத்தையும் அதனோடோ ரினப்பட்ட எழுத்துக்களையுந் தமிழ் நூலார் மெல்லெழுத் தென்பவா றோதுவாராயினார்; வல்லென்றொலிக்கும் வகைபற்றிப் பகரத்தையும் அதனோ டோரினப்பட்ட எழுத்துக்களையும் வல்வெழுத்தென்றவ் வாறோதினார். இங்ஙனஞ் சிறுமகாரான் முதன் முதன் மொழியப்படும் மெய் ஒலியெழுத்துக்கள் மகரமும் பகரமு மாதல்பற்றியே, உலகத்தின் கட்பரந்து வேறுவேறு வழங்கப்படும் மொழி களினெல்லாம் தாய் தந்தையரை யழைக்குஞ் சொற்கள் அம்மா அப்பா எனுமிரண்டேயாயின. உலகவியற்கைத் திறம்பற்றி மொழியப் படும் அம்மா அப்பா வென்னுஞ் சொற்பெற்றி தேறமாட்டாத வடநூல்வல்லார் சிலர் அவையிரண்டும் மாதா பிதா வென்னும் வடமொழி களின் சிதைவாய்த் திரிந்து தமிழில் வழக்கமுறுகின்றன வென்றுரைத்து ஏதம்படுகின்றார். இதுகிடக்க. இனி மேலே காட்டிய ட்,ண் முதலிய வெட்டு மெய்யெழுத்துக்களும் கா மேலண்ணத்தைத் தொடுதலானே பிறக்கும் நாவெழுத்துக்களாம்இ அங்ஙனம் மேலண்ணந் தொட் டுச்சரித்தாற் பொருட்டு வேண்டப்படுமுயற்சி உறுப்புக்கள் வலிவேறி வேண்டியவாறியக்கப்படுங்காலத்தே வருவதொன்றாம். இதழ் நாப் பண்ணத்தொழில்கள் வருந்தி நிகழாக் குழவிப்பருவத்தே யரிதுமுயவமாட்டா தெளிது செல்லும் முயற்சியே தோன்றா நிற்கும். அங்ஙனம் முயற்சி யெல்லா மெளிதுசெல்லாநிற்குங் குழவிப்பருவத்தே நாவினாற் பிறக்குஞ் சொற்றோற்றம் காண்டலரிதினும் அரிதாம். யாமொரு நாள் மூன்றுவருடஞ் செல்லாநின்ற ஒருபிள்ளை எனைச் சிறுமகார் சிலரோ டொருங்குவிளையாடிக்கொண்டிருத்தலை யுற்றுநோக்கி யிருந்தோம்; அப்போது அப்பிள்ளை ராமன் என்னும் பெயருடைய மற்றோர் சிறுவனை ஆம ஆம என்றழையா நின்றது; அதனைக் கேட்டலும் எம்முணர் வெல்லாம் ஒருவழி யொருங்கி யதன்கண் உருவி நுழைந்தா ராய்வான் புகுந்தன. அங்ஙன மாராய்ச்சி நிகழ்ந்த காலத்திலேதான் சிறுமகார்பால் நாவினாற்பிறக்குஞ் சொற்காண்ட லரிதென்ப தெமக்கினிது விளங்கிற்று. இனி, நாவினாற் பிறக்கு மொலிகொண்டு தமிழ்ச்சொற்கள் தொடங்காமை யென்னை யென்னு மேலையாசங்கையினை ஈண்டாராயலுறின், தமிழ் மொழி யுற்பத்தியான பண்டைக் காலத்தே அதனை வழங்கிய மக்கள் உறுப்புக்களுரமேறி யரிது முயற்சி செல்லாத இளம்பருவத்தே சொற்சொல்லுஞ் சாதுரிய மறிதலுறுவா ராயினாரன்பதூஉம், அப்பருவத்தே முற்பட்டுத் தோற்றமுற்ற மொழி தமிழேயா மென்பதூஉம் நன்றுணரக் கிடக்கின்றன. இனி, வடமொழி, இலத்தீன், கிரேக்கு, இப்புரு முதலான பாடைகளிலே நாவினாற் பிறக்கு மொலியெழுத்துக்கள் முதற்கொண் டெழுந்த சொற்கள் காணக்கிடத்தலின், அம்மொழிகளெல்லாந் தம்மை வழங்கிய மக்கள் உறுப்புரம் பெற்று வேண்டியவா றியக்கும் பிற் பருவத்தே தோற்றமுற்றெழுந்த வியல்பினவாதல் வெள்ளிடை மலைபோல் விளக்கமுடைய தாகின்றது. எனவே, வடமொழி முதலான நாற்பெரும் பாடைகளும், உற்பத்தியுற் றெழுதன் முன்னரே, தமிழ்ச் செஞ்சொல் தோற்றமுற்றெழுந்த தொன்மை மாட்சி யினிது விளங்கலின், தமிழ் ஏனை எல்லா மொழிகளிலும் பழைதாமென நிறுவுதற்கு யாமெடுத்துக் கொண்ட மேற்கோள் வாய்ப்புடையதாமாறுகாண்க. அற்றேலஃதாக, ட்,ண் முதலான அவ்வெட்டு மெய் யெழுத்துக்கள் தமிழ்மொழியிற்காணப்படுதலும் அதன் றொன்மை மாட்சிக்கு ஓரிழுக்காமாலெனின்;- அறியாது கடாயினாய், தமிழ்வழங்கமக்களுறுப் புரமேறிய பிற்காலத்தே தோற்றமுற்றெழுந்த அவ்வெழுத்துக்கள் மொழியிடைப் படுத்து வழங்கக்காண்டலினஃதிழுக்காது. அல்லதூஉம், மொழி முதலிலே நாவெழுத்துக்கள் தொடங்கியுரைத்தற்கு வேண்டப் படும். அத்துணைமுயற்சி, அவற்றை மொழியிடைப் படுத்துரைக்கும்வழி வேண்டப்படாதென்பது ராமன் இராமன் என்னு மிரண்டனையுந் தெரிந்துரைத்துக்காண்க. இங்ஙனம் மொழியிடைப் படுத்தற்கண் முயற்சி சிறுகுதலின், அச்சிறு முயற்சியாற் பிற்காலத்தே உற்பத்தியாய் நடை பெறலுற்ற அந்நாவெழுத்துக்கள்பற்றித் தமிழின் றொன்மை மாட்சிக்கு வரக்கடவதோர் குற்றமில்லை யென்றுவிடுக்க. இதுநிற்க. இன்னுமிவ்வாறே தமிழின்கட் காணப்படும் பலநுட்ப வேதுக்களால் தமிழ்மொழிமற்றெல்லாச் சொற்களினும் பழைதாமாறு சமயநேர்ந்துழி யெல்லாம் விரித்து விளக்குவாம்; நமக்கு ஆப்த நண்பர்களாயுள்ள வித்துவசிகாமணிகளுந் தாந்தா மாராய்ந்திட்ட தமிழ்த்தொன்மை மாட்சி விரித்து எழுதும் படி அவர்களைவேண்டிக்கொள்ளுகின்றோம். எல்லாவிடங்களிலும் கைகால்களுடையனாய், எல்லா விடங்களிலும் விழிகளும் முகமுமுடையனாய், எல்லாவிடங் களிலும் செவிகளுடையனாய் அவன் உலகத்தினுள் யாண்டும் வியாபிக்கின்றான் (16) சருவ இந்திரிய குணங்களோடும் பிரகாசிக்கின்ற அவன் அவ்வெல்லா இந்திரியங்களுமின்றி யிருக்கின்றான். எல்லா வற்றிற்கும் பிரபுவும் ஈசனும் அடைக்கலமாவானும் அவனே யாம். (17) ஒன்பதுவாயில்களோடுங் கூடிய பட்டினத்தின் உள்ளுறைகின்ற ஆன்மாவானது சராசரபேதங்களான உலக முழுவதூஉந் தன் கீழ்ப்படுத்துப் புறப்பொருள்களில் உலாவு கின்றது. (18) கைகால்களின்றி அவன் வினாகின்றான், எடுக்கின்றான்; கண்களின்றியே காண்கின்றான், செவிகளின்றியே கேட் கின்றான்; அறியப்படுவன வெல்லாவற்றையும் அறிகின்றான்; ஆயினும் அவனையறிகின்றதொன்றும் ஆண்டில்லை. அவர்கள் அவனைப் பெரியனான புருடனென்று சொல்லுகின்றார்கள். (19) அவன் சிறியதினெல்லாஞ் சிறியனாயும் பெரியதி னெல்லாம் பெரியனாயும் இப்பிராணியின் இதயகுகை யினுள்ளே வசிக்கின்றான். படைப்புக்கடவுளான ஈசன் திருவருட்கண்ணால் எல்லாம்வல்ல அவ்விறை வனைத் தொழிலற நோக்கவல்லார் துக்கத்தினின்றும் விடுபடுகின்றார். (20) அழிவில்லாதவனும் பழையோனும் எல்லாவுயிர்க்குயிரா வானும் யாண்டும் வியாபிக்கின்ற தன்றன்மையாற் சருவஞ்ஞனும் அவனென அறிகின்றேன். பிரமஞானிகள் அவனைப் பிறப்பிலியென்றும் நித்தியனென்றுங் கூறாநிற்பர். மூன்றாமத்தியாயம் முடிந்தது நான்காம் அத்தியாயம் தானொருவனேயாய் வேறுபாடின்றியிருந்து தன் அளவிறந்த சக்திகளோடு ஒற்றுமையுறுதலால் அவ்வவற்றின் இன்றியமையா நிலைக்கேற்ப அளவிறந்த வேறுபாடுகளைப் படைத்திடுவோனாயும், சங்காரகாலத்திலே உலகந்தன் கண் ஒடுங்கப்பெறுவோனாயும் உள்ள அவனே கடவுள். அவன் நமக்கு மங்களகரமான அறிவைத்தந்தருள்வானாக. (1) அவன் தீயும் ஆவன், அவன்சூரியன், அவன் வாயு, அவன் சந்திரன், அவன்பிரகாசிக்கும் விண்மீன், அவன் பிரமம்; அவன் நீர், அவன் பிரசாபதி.(2) நீமகடூஉ, நீஆடூஉ, நீ இளைஞன், நீகுமரி, தண்டூன்றித் தளர்ந்து நடக்கு முதியோனும்நீ, நீபிறந்திருக்கின்றாய், சருவமும் உன்முகம். (3) கரியவண்டுநீ, சிவந்தவிழிகளுடைய பச்சிளங்கிள்ளையுநீ, மின்னலும் பருவங்களும் கடல்களும் தன்கருப்பையிற் கிடந்துறங்கவிளங்கும் மேகமுநீ; தொடக்கமின்றியே எல்லா வற்றையுந் தழுவிநின்றாய்; என்னை? நின்னால் எல்லா வுலகங்களும் படைக்கப்படுகின்றனவாகலின். (4) பிறவாத ஒன்று தன் இன்பநுகர்ச்சிப்பொருட்டாகச் செம்மை வெண்மை கருமை நிறங்களுடன் ஒரேயுருவாய் எண்ணிறந்த பிரசைகளைத் தருவதாய்ப் பிறவாதாயுள்ள மற்றொன்றைச் சமீபிக்கின்றது. பிறவாத ஏனையொன்று அவளிடத்தின்பநுகர்ந்தொழிந்தபின் அவளைவிட்டு நீங்குகின்றது. (5) எப்போதும் ஒரேபெயரான் வழங்கப்படும் இரண்டு பறவைகள் அந்த ஒரேமரத்தின்மேல் வசிக்கின்றன. அவற்றுளொன்று அவ்வத்திமரத்தின் இனிய பழத்தை நுகருகின்றது, மற்றொன்று சாட்சிமாத்திரையாய்ச் சுற்றிலும் நோக்கிக்கொண்டிருக்கின்றது. (6) அந்தமரத்தின்கண்ணே வசித்து மயங்கும் புருடனா னவன் உலகிடையழுந்திச் சக்தியின்மையால் வருந்துகின்றான்; ஆயினும், அது வழிபடற்பாலனாகிய முதல்வனையும் அவன் றன்றிருவருளையும் வேறாக அறிதலாலே துக்கத்தினின்றும் விடுபடுகின்றது. (7) என்றும் நிலைபெறுவதான இருக்கின் எழுத்தாகவும் எல்லாத் தேவர்களும் தங்கும் நிலைக்களனான பரமவியோம மாகவும் அவனை யறியமாட்டாதவர்க்கு அவ்விருக்குவேத மந்திரவுரைகள் என்னபயனுடை யவாம்? ஆனால், அவனை யறியவல்லார் பரமுத்தி தலைக்கூடுகின்றார். (8) சந்தசுகள், வேள்விகள், பலிகள், விரதங்கள், இருந்தது, இருப்பது, மறைமொழி முதலியனவெல்லாம் அதனினின்று உண்டாயின. அவன் மாயையோடு ஒற்றித்து நின்று உலகைப் படைத்திடுகின்றான்; இதற்கு மற்றை யான் மாவானது மாயையால் தளைக்கப்படுகின்றது. (9) மாயையைப் பிரகிருதியெனவும் அவளோடொற்றித்து நிற்போனை மகேசுரனெனவும் அறிக; இவ்வுலகமுழுவதூஉம் வாய்மையாகவே அவனுடைய அவயவங்களால் வியாபிக்கப் படுகின்றது (10) யார் அவனை யறிகின்றார்களோ அவர் ஒருவர்மாத்திரம் இவை யெல்லாம் ஒடுங்கியுமீண்டும் வருகின்ற பிரகிருதி மாயை யினையும் அவற்றின் காரியங்களையும் தம் வழிப்படுத்து ஆளா நிற்பர்; வேண்டிய வெல்லாம் நல்கும் ஈசனைப் புகழப்படுங் கடவுளை யார் அறிகின்றார்களோ அவர் என்றும் நிலைபே றுடைய சாந்தியடைகின்றார். (11) விசுவாதிகனும் மகாவிருடியும் தேவர்களைப் படைப் பித்து அவர்க்குப் பெருமை தந்திட்டவனும் இரணியகருப்பன் பிறப்பைநோக்கி யிருந்தோனு மான உருத்திரக்கடவுள் எமக்கு மங்களகரமான அறிவையளித்துப் பலப்படுத்துவானாக. (12) தேவர்கட்கு அதிபனும், எல்லாவுலகங்கட்குங்களை கணா வானும், துவிபாதசதுட்பாத உயிர்வருக்கங்களை யாளுமீசனு மான கடவுளுக்கு நாம் அவியுணாக் கொண்டுவருதுமாக. 13) சூக்குமத்தினுஞ் சூக்குமமாய் உள்நுழையப் படாததனுள் ளிருப் போனாய், உலகசிருட்டிகருத்தாவாய், அநேகரூபமுடை யோனாய், விசுவத்தினிடை யுருவி நுழைந்திருக்குமொரு வனாய்ச் சிவனாயுள்ளோனை யாரறிகின்றார் களோ அவர் என்றும் நிலைபேறுடையசாந்தியடைகின்றார். (14) உரியகாலத்திலே இவ்வுலகினை இரட்சிக்கின்றவனும், சருவபூதங் களினுங் கூடமாயிருந்து இவ்வுலகிற்கு அதிபனா வானும், பிருமவிருடிகளும் தேவர்களும் தன்மாட்டு மனவொரு மையாற் றலைக்கூடி நிற்ப விளங்கு வோனுமான அவனை யார் அறிகின்றார்களோ அவர்கள் மரணபாசத்தை அறுக்கின் றார்கள். (15) வெண்ணெயின்கண் நெய்போல அதிசூக்குமமாய்ச் சருவபூதங்களினும் கூடமாயிருக்கின்றவனும், தானொருவனே யாய் இவ்வுலகினுள் வியாபிக் கின்றவனுமான சிவனை யார் அறிகின்றார்களோ அவர்கள் சருவபா சங்களினின்றும் விடுபடுகின்றார்கள். (16) எவனுடைய சிருட்டியாய் இந்தவுலக மிருக்கின்றதோ அந்தக்கடவுளும், எவன் சருவசீவர்களின் இதயத்திலே என்றும் வசிக்கின்றானோ அந்தப் பரமான்மாவுமானவன் உள்ளத்தின் கண்ணே மநீஷா எனப்படும் பகுத்துணர்ச்சியானும் மநஸா எனப்படுந் தியானத்தானும் வெளிப் படுகின்றான். யார் அவனை யறிகின்றார்களோ அவர்கள் மரணத்தைக் கடக்கின்றார்கள். (17) இருளில்லையானபோதே பகலுமில்லை யிரவுமில்லை உள்ளதுமில்லை யில்லதுமில்லை, சிவனொருவனே கேவல னாய் உளன்; அவன் என்று முள்ளோன், பிரமத்தையுணரும் பண்டை யறிவானது அவனிடத்திருந்தே எழுதலால் சவித்திரி யினால் அவன் அறிந்து வழிபடற்பாலான். (18) மேலேயுள்ள இடத்தினும் கீழேசென்ற இடத்தினும் இவை யிரண்டற்கும் இடைவெளியினும் அவனையறிய வல்லார் யாருமிலர். இவ்வுலகின்கட் புகழ் மேம்பட்ட திருநாம முடையனான அவனுக்குச் சமமாக எடுக்கப்படுவ தொன்றுமில்லை. (19) யாருமவனைக் கண்ணாற் கண்டறியமாட்டாமையின் அவனுருவங் கண்ணோக்கிலமைவதன்று. இதயத்தானும் மனத்தானும் இதயத்தின் கண்ணேயுறைகின்ற அவனை யறிகின்றவர்கள் மரணத்தைக்கடக் கின்றார்கள். (20) இடருழக்கின்ற யாரும் அவன்பிறவாதவன் என்று நினைந்து ஓ உருத்திரனே! மங்களகரமான நின் தட்சிணமுகம் எம்மை என்றுங் காக்கக் கடவதாக என வழுத்துமாறு காணப்படும். (21) அவியுணவுகளான் நின்னையாம் என்றும் வழிபடு கின்றோமாதலால், எம்மக்களையும் எம்பேரர்களையும் எம் முயிர்களையும் எம் குதிரைகளையும் வருத்தாதே, கோபத் தினால் எம்முடைய வீரர்களையுங் கொன்றுவிடாதே. (22) நான்காமத்தியாயம் முடிந்தது. ஐந்தாம் அத்தியாயம் எவனிடத்தில் அறிவறியாமை விளக்கமின்றாய்க் கிடக்கின்றனவோ - அறியாமை உண்மையாகவே அழித லுறுவது அறிவோ உண்மை யாகவேநிலைதலுறுவது - எவன் அறிவையும் அறியாமையையும் ஆளுகின்றானோ அவன் அட்சரமான அந்த வரம்பில்லாப் பரப்பிரமப் பொருளை மற்றவற்றின் வேறாயிருக்கின்றான். (1) தானொருவனேயாயிருக்கின்ற அவன் சிருட்டி காரணமான ஒவ்வொன்றனையும் ஒவ்வோருருவங்களையும் இன்னுமற்றை எல்லாக் காரணங்களையும் ஆளுகின்றான்; தன் புதல்வனான கபிலவிருடிக்குப் படைப்புத்தொழில்தொடங்கிய காலத்தே எவ்வகையறிவையுந் தந்து அவன்பிறக்கின்ற காலையில் அவனை நோக்கினான். (2) அந்தப்பழனத்தின்கண்ணே பலவேறுவகையாற் பலவேறு திரிவுபாடுகள்செய்த அந்தக்கடவுள் அதனைத் திரும்ப அழிக்கின்றான்; அவ்வாறே தைவிகமுடைய முனிவோரைத் தோற்றுவித்த மகான்மாவான அம்முதல்வன் எல்லாவற்றிற்குந் தலைவனாயிருந்தாட்சிசெய்கின்றான். 3) மேலுங்கீழுமிடையுமுள்ள எல்லாவிடங்களினும் விளங்கித்தோன்றிப் பிரகாசிக்குஞ்சூரியனைப்போல, எல்லாப் புகழ்மையும் எல்லாவாற்றலு முடைய வழிபடுகடவுளான அவனொருவன் தன்முதற்காரணத் தோடொற் றித்து நிற்கு மெல்லாவற்றையும் ஆட்சிசெய்கின்றான். (4) விசுவயோனியாயிருக்கும் அவன் சுபாவத்தைப்பக்குவ முதிர்ச்சி யடைவிக்கின்றான்; அங்ஙனம் பக்குவமுதிர்ச்சி யடைய வல்ல எல்லாப்பிராணிகளையும் திரித்துக் கொண்டிருக் கின்றான்; அவனொருவனே இவ்வுலகமெல்லாம் ஆட்சி செய்கின்றான்; எல்லாக்குணங்களையும் பகுத்தி டுகின்றான். (5) வேதங்களில் மறைபொருளாயிருக்கும் உபநிடதங்களில் அவன்மறைந் திருக்கின்றான். வேதங்கட்கு அவனே காரண னென்று பிரமனுணர்ந்தான். அவனையறிந்த முன்னைத் தேவர்களும் இருடிகளும் அவன்மயமாய் விளங்கினார், மரணத்தைக்கடந்தார். (6) குணங்களையுடையனான ஆன்மாவானவன் கருமபலன் களின் பொருட்டும் அக்கருமங்களை நுகருதற்பொருட்டும் அவற்றைச் செய்கின்றான்; அநேக ரூபங்களுடையனாய் முக்குணங்களான் விசேடிக்கப் பட்டோனாய் மூன்று நெறிகளில் ஒன்றனைத்தெரிந்துகொள்ளும் விசுவாதிபன் தன்கருமங் களானே ஒருபிறப்பினின்று மற்றோர்பிறப்புக்குச் செல்கின்றான். (7) கருவிகளில் பலவேறு வகைப்பட்ட எறிகருவிகள் படைகள் வெளிறின சிவப்புப் பூசித் தொங்கவிட்டிருக்கும். உபாசிக்கின்ற காலையில் உபாசகன் திருத்தமில்லா மணி போன்ற ஓர்கருவியை அசைப்ப மற்றையோர் மற்றைக் கருவிகளை யெறிந்து விக்கிரகத்தின் முன்விளையாடல் செய்வார். இனிக்காங்கோ தேசத்திலுள்ளோர் வீடுகள் உள்ளும்புறமும் விக்கிரகங்களும் உருக்களும் நெருங்கவைக்கப் பட்டிருக்கின்றன. அவற்றுட் சில மின்னலைத் தம் ஆணைவழி நிறுத்துகின்றனவாம், சில காற்றை நிறுத்துகின்றனவாம், சில மழையையாம். சில புல்லுருக்களைப்போன் மற்றைப் பிராணிகளை விலக்குகின்றனவாம். மற்றையன மந்திரங் கற்பிக்கவும், தீதுநீக்கவும், தேகாரோக்யம் கட்பார்வை யுண்டாக்கவும், ஆடுமாடுகளைக்காப்பாற்றவும், ஆற்றினுங் கடலினும் மீன்களைப்பெருக்கவும் வல்லனவாம். இனிச் சீராலியோன் தேசத்திலுள்ளோர் மேலானவுங் கீழானவுமென இருவேறு வகைப்படும் பேய்களுளவென்றும், அவற்றுண் மேலானபேய்கள் மலைக்குகையினுள்ளும் பெரிய மரங்களினும் ஆற்றினடுவிற்றோன்றும் மலைகளினும் இருக்கின்றன வென்றும் நம்புகின்றார்கள். அவர்கள் பயிரிடுவதற்குமுன் இவ்விடங்களிலுள்ள பேய்களுக்குச் சில பிராணிகளைப் பலியிடுகின்றார்கள். அவ்வாறு பலியிடா விட்டால் விளைதலில்லையாம். கீழான பேய்கள் கிராமாந்தங் களினும் கிராமங்களினும் வசிக்கின்றனவாம். இன்னும் அவர்களிற் சிலர் ஏரிகளையும் ஆறுகளையும் மிகவுமன்போடு வணங்குகின்றனர். இஃதல்லாமலும் எண்ணிறந்த விலங்குகளும் பாம்புகளும் தேவாவதாரமாக உபாசிக்கப்படுகின்றன. சிலவிடங்களில் முதலைகளை வணங்குகின்றனர், வேறுசில விடங்களில் சிறிய தோராலயத்தில் ஈக்களைத் தொகுத்து வைத்துக்கொண்டு அவற்றை வணங்குகின்றனர். இனிப்பொற்கரைப் பக்கங்களிலுள்ளோர் பூர்வீகர்களை வழிபடுகின்றனர். யாகங்களும் பலிகளும் வேட்டுஇடுகின்றனர். இறந்தோருருவங்களைக் களிமண்ணாற் சமைத்துக் கிராமத்தி லுள்ள ஓர்மரத்தின்கீழ் வைக்கின்றார்கள். இறந்தோர் மற்றை ஓர் உலகத்திற்குச் செல்கின்றாரெனவும், ஆண்டு இங்கிருந்த வாறே யிருப்பரெனவும், இங்கு அவர் தமக்கு உறவாயினோர் இடும் அவிப்பலியைப் பயன்படுத்துகின்றனரெனவுங் கூறாநிற்பர். மற்றை யுலகத்தில் இன்பத்துன்பநுகர்ச்சி யுண்டென்னுங் கருத்து அவர்க்கு இல்லை. விக்கிரகத்திற்கு அதிருப்தி உண்டாதலால் நோய்முதலான துன்பங்கள் உற்பத்தியாகின்றன வென்கின்றார்கள். இவர்களுடைய வழக்கவொழுக் கங்கள் பெரும்பாலும் ஆதிரேலியாக் கண்டத்திலுள்ளோரை ஒத்திருக் கின்றன. இவர்கள் நர பலியிட்டுவந்தனர். அவர்கள் வழிபடுந் தெய்வங்களுள் சாசா போன்சம் என்பது மிகக்கொடிய தென்றும், வழிச்செல்வோரை அது தின்று விடுகின்றதென்றுஞ் சொல்லுகின்றார். அஃது ஒருதரம் வெகுண்டால் பின் அதனைச் சாந்தப்படுத்தல் மிகவரிதாம். அது சிவந்த நிலத்தில் வசிக்குமாம். அந் நிலத்திற்குச் செவ்வண்ணம் அதுகொலைசெய்த மக்களின் இரத்தத்தால் உண்டானதாம். முன்நரபலியிட்டுவந்த விவர் ஐரோப்பியர் கூட்டுறவால் மிருகபலியிடுகின்றனர். இந்தத் தெய்வம் பூகம்பத்திற்கு அதிட்டான தேவதையென்று சொல்லப் படுகின்றது. ஒருதரம் குமாசி என்றவிடத்தில் சிறியதோர் பூகம்பமுண்டாய் அரசனிருப்பிடத்தின் ஒரு பக்கத்துச் சுவர் விழுந்துபோகவே, அரசன் குருமாரை அழைப்பித்து இஃதென்னென்று வினாவ, அவர் இது சாசாபோன்சம் என்னுந் தேவதையால் நிகழ்ந்தது. கன்னிப் பெண்கள் இரத்தத்திற் சேறுகுழைத்துத்தான் அழிந்த இச்சுவரை எழுப்பல்வேண்டு மெனக் கூறவே அரசன் ஐம்பது இளம்பெண்களைக்கொன்று அவ்வாறே செய்வித்தனனாம். இன்னும் பொற்கரைப்பக்கங்களிலுள்ளோர் வழிபடுந் தெய்வங்களில் போக்சம் என்னுந் தெய்வம் மிகச்சிறந்ததாம். அது துன்பங்கள் பலவற்றைப் பயப்பதொன்றாம். நரபலி யிடுதலும் வியரிபிசரித்தலும் ஏனைக்கொடுந் தொழில்கள் பலவும் இவருள் விசேடமாயிருக்கின்றன. சிலபலநாட்கள் அவர் களுடைய கிராமதெய்வங்கட்குப் பரிசுத்த முடையன வாமென்றும், அந்நாட்களில் அவர்களுள் யார் என்ன வேண்டினும் அவற்றை முடிப்பித்தற்கு அவர்கள் குருமார் சித்தமாயிருப்பரென்றும் சொல்லுகின்றார். கிராம தெய்வ மொன்று வசிக்கின்ற வோரிடத்திலுள்ள செடி, மரம், நிலன் இவற்றை யார்கெடுக்கின்றார்களோ அவர்கள் பெரியதோர் அபசாரம் செய்தாராதலால் அவர்கள் மரண தண்டனைக் குள்ளாகல் வேண்டுமாம். ஒவ்வோர் கடவுளும் தனக்கியைந்த ஒவ்வோராற்றால் தன்னை வழிபடுவார்க்கு உதவிபுரிகின்ற தெனவும், அவற்றுட் போர்க்கடவுள் அவர்கட்கு மனவெழுச்சி மிகுவித்து மாற்றாரையழிக்கின்றதெனவும், கொள்ளைநோய் வருவிக்குங் கடவுள் பகைவர்பால் அந்நோயை விளக்கின்ற தெனவும், யாற்றுக்கடவுள் அப்பகைவர் யாறுகடந்து மேற் செல்லாமை அவரை ஆண்டேநீரிலமிழ்த்துகின்றதெனவுங் கூறாநிற்பர். இன்னும், பட்டினங்களிற் சந்தைகளிலிருக்கும் வகுப்பார் தம்மைப் பாதுகாக்குங் கடவுளரைக் குருமார் வழியே கிராமதெய்வங்களினின்றும் பெற்றுக் கொள்ளு கின்றார்களாம். அவர்கள் அத்தெய்வங்களைப் பெறுமாறு; ஒருபட்டினத்திற் சிலர் ஒருவகுப்பாய்ச் சேர்ந்தகாலத்தில், அவர் கிராம தெய்வத்தை வழிபடுவானான ஒரு குரவனிடஞ்சென்று அவன் திருத்தியுறுமாறு அடியுறை கொடுத்துத் தங்கருத்துப் புலப்படுப் பார்களாம். அவர்களிடும் அடியுறை தனக்குப் பிரீதிகரந்தரு மாயின் அவனவர்களோடு உடன்சென்று கிராம தெய்வத்திற்குத் தன்கருத்தை மந்திரவொலிகளானும் சடங்குகளானும் வெளியிடுவானாம்; பின் அக்கிராம தெய்வத்தினின்று உத்தரவு பெறப்படுவதான ஒருநாளில் அக்குரவன் மந்திரநடன மியற்றியும் வாய் நுரைதள்ளக் கண்கள் உருள மந்திரவொலி களெழுப்பியுந் தெய்வமேறினோன்போல் ஆடுவானாம். அப்போழ்து அவன்வாயிற்பிறக்குஞ் சொற்படி ஓரிடத்திற்குச் சென்று அங்குள்ள ஒருகல்லையாவது மண்ணையாவது மரக்கட்டை களையாவது கொண்டுபோந்து, அவற்றால் உருக்கள் அமைத்து அக்கூட்டத்தார் வசிக்கின்ற இடத்தில் தாபிப் பார்களாம்; அங்ஙனந் தாபித்த உருக்களைச் சுற்றறி மரக் கிளைகள் நிறுத்தி வேலிகோலுவார்களெனவும், அவ் வேலியிலுள்ள கிளைகள் மரங்களாய் வளர்ந்தபின் அவையும் பீடிஷ்மரங்களாக உபாசிக்கப்படுகின்றனவெனவும் அறி கின்றாம். அம்மரங்கள் என்றாயினுங் கீழ்விழுமாயின், அக் கூட்டத்தார் அக்கடவுளரின் பாதுகாப்புத் தம்மால் நேர்ந்த பிழைகளால் இல்லையாயிற்றெனவும், அக்குற்றத்தைக் கழுவும் பொருட்டுக் குரவனுக்கு அறிவித்து அவனாற் சடங்குகள் பலவியற்றிக் கடவுளருக்குப் புதியவோர் உறையுள் அமைக் கின்றார்களெனவுந் தெரிகின்றோம். இன்னும், ஒரு குடும்பத்திற்குத் துக்க சம்பவநிகழ்வதாயின் அதனை யாராய்ந்தறிதற்கு அவர்கள் வழிபடும் போக்சம் என்னும் உருவைக் குரவன் நெருப்பிலிட்டுப் பார்ப்பான். அவ்வுருத் தீயில் வேவாதிருக்குமாயின் அஃதுண்மையான தெய்வமென்றுட் கொண்டு அதற்குப்புதிய புதிய சடங்குகளியற்றா நிற்பார்; அவ்வாறின்றிச் சிறிதாயினும் அது வெந்திருக்குமாயின் அதனையெறிந்து புதிய தொன்றைத் தெரிந்தெடுப்பர். அவ்வுருவத்திற்குத் திருவிழாக் கொண்டாடு நாட்களில் எல்லாரும் வெள்ளாடையுடுத்துக்கொண்டாதல் வெள்ளை வண்ணம் பூசிக்கொண்டாதல் பலியிடுகின்றார்கள். இனிப்பொற்கரைப் பக்கங்களிலுள்ள அம்மக்கள் ஒவ்வொருவருந் தாந் தனித்தனியே வழிபடும்பொருட்டுச் சுக்மன் என்னும் உருவை வைத்திருக்கின்றார்கள். இதனைக் குருவின்வழியாகவன்றித் தானே பெறலாமென்று கூறுவர். இந்த உருவைப்பெறும் பொருட்டு ஒருவன் சாசாபோன்சம் வசிப்பதான கரியதோர் காட்டினுட் குகைக்குச்சென்று, கரும்பிரசத்தை நிலத்திற்பெய்து மரத்தினின்றோர் சிறுகொம்பு துணித்து மக்களுருவத்தைப்போல் அதிற் செதுக்கிவைத்துக் கொண்டாதல், ஒருகல்லையெடுத்ததனைச் சுற்றி மூங்கில்நார் கட்டியாதல், ஒருசெடியின் வேரைக் கல்லியெடுத்தாதல், செம் மண்ணைத்திரட்டிக் கரும்பிரசம் அல்லது இரத்தத்தால் கிளியின் தோகைகளை ஒட்டி ஓர் உருவாக்கியாதல் அவற்றின் கண் காசாபோன்சம் என்பதனை நுழைந்துறையு மாறு வேண்டிக் கொள்ளுகின்றார். பின்னர்ச் சில இலைகளை நறுக்கிப் பிழிந்தெடுத்த இரசத்தை அவ்வுருவின் முன்வைத்து இதனையுண்டுபேசுக என்றுரைக் கின்றார். அவ்வாறே அஃது அதனுள் நுழைந்ததாயின் மெல்லியதோ ரொலிகேட்கப்படு கின்றதாம். பின் அவ்வுருவத்தை இவ்விவ்வாறுவைத்து வழிபடல்வேண்டுமென்பதனைப்பற்றிச் சிலவினாய் விடை பெறுகின்றனராம். இங்ஙனமெல்லாஞ் செய்தும் அதில் தனக்கநுகூலமில்லையாயின், அவ்வுருவின்கண் அத்தெய்வம் நுழையவில்லையென்றெண்ணி யதனை வீசியெறிகின்றார். சுக்மன் என்னும் இவ்வுருவத்தைவைத்து வழிபடுவோர் மற்றையோராற் பெரிதும் அஞ்சப்படுகின்றார்; அவ்வுருவவழி பாடுடை யோர் தம்மேற் பகைகொள்வோர்க்கு மரணத்தை யுண்டுபண்ணுவரென்பதனால், இன்னும் அப்பொற்கரைப் பக்கங்களிலுள்ளோர் இங்ஙனம் உருவங்கள் தாபித்துக் கொண்டு அவற்றிற்குப் பலியிட்டு வழிபடுங் காலங்களி னெல்லாம் அவ்வுருவங்களையன்றி அவ்வுருவங்களுள் வசிக்குந் தெய்வங்களையே துணிந்துபாசிக்கின்றனர். தாமிடும்பலிகள் கன்முதலான அசேதனப்பொருளின்கட் சாரமாட்டா வெனவும், அவற்றுள் வியாபிக்கின்ற கடவுளே யவற்றை யேன்றுகொள் கின்றாரெனவுங் கூறுகின்றார். இச்சாதியார் மாட்டு நிகழும் விக்கிரக வழிபாட்டை யுண்மை யான் ஆராய்ந்தறிய வல்லார் சேதனைப் பொருளையும் அசேதனப் பொருளையும் வழிபடுதற் கண் நிகழும் வேறுபாடு பெரிதா மென்றுணர்ந்து, அவ்வழிபாடு எத்துணையிறப்ப இழிந்த தாயினும் அது பற்றியஃதெள்ளற்பால தன்றென்று கடைப் பிடித்து, அவ்வவர் பக்குவக்கூறுபாடுகளை நோக்கி மற்றவை யெழுந்தனவாமென்றறியாநிற்பர். இவ் வுண்மை காணமாட்டா தார் அவரெல்லாம் அறிவானிழிபுடை யராதல் ஒன்றேபற்றி யவர்செய்யு மவ்வழிபாடுகள் அசேதனமான கன்முதலிய வற்றின்கட் செய்யப்படுகின்றன வென்று தமக்குத் தோன்றிய வாறே யுரைப்பாராயினார். மேஜர் எல்லீ என்கின்ற துரையும் பொற்கரைப் பக்கங்களிலுள்ள மக்களுண்மையாற்செய்து போதரும் இவ்வழிபாட்டைப்பற்றி மிக மேலாக மொழிந் 7திட்டார். இதுநிற்க. இனி நரபலியிடுதன் மிக விசேடமாய்க் கொண்டாடப் படு நாடு தாகொமே என்பதாம். அளவிறந்த மக்கள் இன்றும் பலியிடப்பட்டு வருகின்றார். தாய்தந்தையர் மாட்டு வைத்தொழுகும் விசேட அன்புடைமையானே அவரெல்லாம் அங்ஙனம் நரபலி யிட்டுவருகின்றார். அந்தத்தாகொமே தேசத்திற் செங்கோலோச்சுவானான அரசன் யமலோகஞ் செல்லுங்கால், தன்பரிவாரம் புடைசூழப்போகல்வேண்டு மென்னுங் கருத்துப் பற்றி அவன் முதன்மனைவிமார், பிறவிநாண்மனைவிமார், அலிகள், பாடகர், மேளகாரர், போர்வீரர் முதலாயினாரெல்லாங் கொலைசெய்யப்படு கின்றார். இங்ஙனங் கொல்லப்படுவோர் தொகை ஐந்நூறாகு மாயின் அதுமிகச்சிறந்த பழையவாசாரமாமென்று புகழ்ந்து போற்றுகின்றார்கள். வருடந்தோறுந் தாமடையும் வெற்றிப் பொருள்களுங் குற்றவாளிகளும் இங்ஙனஞ்செல்லும் அரசபரி வாரத்திற்கென்று திரட்டப்படுகின்றனர். அரசனோரி டத்திருந்து மற்றோரிடத்திற்குப் பெயர்ந்துசெல்லல்வேண்டு மாயின் அதனைத் தந்தையின் ஆன்மாவுக்கு அறிவிக்கல் வேண்டித் தூதன் தூதியாக ஒருவனையன்றி ஒருத்தியைக் கொலைபுரிகின்றார்கள். ஒருநாள் இத்தேயத்தரசன் நான்கு பேருடைய தலைகளையும், ஒருமான் ஒருகுரங்கு இவற்றின் றலைகளையும் வெட்டிப்பலிதந்தனனாம்; அங்ஙனம் வெட்டுண் டோருள் ஒருவனுயிர் சந்தைகளில் வசிக்கும் மற்றை யான்மாக்களுக்குத் தன் அரசன் றந்தையின்பொருட் டிது செய்யப் போகின்றானெனத் தெரிவிக்கச் செல்கின்றதாம்; ஒன்று நீர் நிலைகட்குச்சென்று ஆண்டுள்ள பிராணிகட்க தனைத் தெரிவிக்குப் பொருட்டுப் போகின்றதாம்; ஒன்று வழிகளிற்போய் ஆண்டுறையும் வழிப்போக்குயிர்களுக் கதனை யறிவிக்கின்றதாம்; மற்றொன்று ஆகாயத்திற்சென்று ஆண்டுள்ள எல்லாவான் மாக்கட்கும் அதனைத்தெரிவிக் கின்றதாம்; இனி, மான் காட்டிற்குச்சென்று ஆண்டுள்ள விலங்கினங்கட்குத் தெரிவிக்குமாம்; குரங்கு சதுப்புநிலங் களினும் மரங்களினுஞ்சென்று ஆண்டுள்ள பிராணிகளுக்கு அதனை யறிவிக்கின்றதாம். இனி யிவர்கள் வழிபடுங்கடவுள் அறியப்படாத மௌ என்பதாம். பெண்டன்மையுள்ள மௌ என்பது திங்களுமாம்; அது ஞாயிற்றைக் குறிப்பிடாநிற்கும் ஆண்டன்மையுடைய லீசா என்பதைக்கூடி மனிதனை யுண்டுபண்ணிற்றாம். மௌ என்னு மக்கடவுள் மனிதனினும் மிகச் சிறந்த தாகையான் அது மனிதரை நோக்குத லில்லை யெனவும், ஆதலால் அதனை வேண்டுவாரும் அஞ்சுவாரு மில்லையெனவும், அங்ஙனமாயிறும் பீடிஷ் என்னும் உருவவழிபாடுகளானே அதனை வயப்படுத்தலாமெனவுங் கூறாநிற்பர் புதிதாக வொருகருமஞ் செய்யத் தொடங்குவோன் தெய்வத்துணைபெறுதற்பொருட்டுத் தான் முதன்முதலிலே காணும் பறவை, விலங்கு, கட்டை, கல் முதலியவற்றுள் ஏதேனும் ஒன்றைக் கொண்டுபோய் அதனை விக்கிரகமாக நிறுத்தி வழிபடுகின்றான். அவ்வாறு வழிபடுவோன் றனக்குக் கருமங்கள் அநுகூலமாய் முடிந்திடுமாயின் வேறு துணைநாடுகின்றான். மௌ என்னுங் கடவுளுக்கு உதவியாய் நின்று நல்லோர்செய்யும் நற்கருமங்களையுந் தீயோர்செய்யுந் தீயகருமங்களையும் ஒருகழியின் இரண்டுமுனைகளினுங் குறித்திடுகின்ற மற்றோர் கடவுளுண்டென்றுரைக்கின்றார். யாரேனும் இறந்தொழிந்தால் அவர் சரீரத்தை மேற்சொன்ன கழியில் நிறுத்துப்பார்த்து நற்பக்கந்தாழுமாயின் அதனை இடுகாட்டிற் கொண்டுபோய்ப் புதைப்பர்; தீயபக்கந்தாழு மாயின் அதனைக்கண்ட துண்டமாகச் சேதித்து அழித்து அதிலிருந்த ஆன்மாவுக்கு வேறோர் சரீரஞ்செய்து வைக்கின்றார். இதுநிற்க. இனி விடா நாட்டிலுள்ளோர் பிராசீனகாலந்தொட்டுச் சர்ப்ப வழிபாட்டின் கண்ணே தலைநின்று வருகின்றார். ஆயிரம்பாம்புகளை மனைவியராக வுடைய தங்கீ என்னும் ஒருபெரும்பாம்பை உபாசிக்கின்றார். இப்பாம்புகளில் ஏதேனும் ஒன்றைக்கொல்பவர் மரணதண்டனைக்குள்ளா வராம். இப் பாம்பு தன்னடியார்க்கு அளவிறந்த நலங்களை விளைவிக்கின்ற தெனவுட்கொண்டு, எந்தக்காரியமும் அதற்குப் பலியிடாமல் தொடங்குதலில்லை. அங்ஙனமான பெரும்பாம்புகளை யெல்லாம் பிடித்துப் பிரபல ஒவ்வோர் ஊரினுமுள்ள பாப்புவீட்டில் வைத்து வளர்த்து வழிபாடியற்றி வருகின்றார். உபாசகன் பாப்பு வீட்டிற்குச் சென்று அங்குள்ள குரவனுக்குத் தனது காணிக்கை கொடுப்பின், அக்குரவன் அவன் வேண்டு கோள் கேட்கப்படுமென்றுரைக்கின்றனன். இனி இவருள் ஒருசாரார் மிகவுயர்ந்தோங்கி வளர்ந் தழகா யிருக்கும் மரங்களை வணங்கிவருகின்றார். இலவமரங் களையும் நச்சுமரங்களையும் விசேடமாய் வழிபடுகின்றார். அவைகள் நோய்களை நீக்கிச் சுகம்பயக்க வல்லனவாம். சமகிருத பாஷையிலுள்ள தமிழ்ச்சொற்களாவன பலகை பலகம் கட்டில் கட்கா நத்தம் நஷ்டம் விசிறி வியஜனம் நிகளம் (யானைச்சங்கிலி) நிகள: ஆணி அணி: சூமணம் சூர்ண: அசி (வாள்) அசி: கார்முகம் (ல்) கார்முக: வாணம் பாண: ஆசுகம் (அம்பு) ஆசுக: தோட்டி (அங்குசம்) தோத்ரம் மாடம் (உளுந்து) மாஷா தோணம் (வில்) த்ரோணம் பாசனம் (உழவுகோல்) ப்ராஜனம் முதிரை (பயறு) முக்த: உரற்கல் உலூகல: மிரியல் (மிளகு) மரீசம் சுண்டி (சுக்கு) சுண்டி கஞ்சி காஞ்சிகம் சருக்கரை சர்க்கரா ஓதனம் ஓதா: அடுப்பு அந்திகா துத்தம் (பால்) துக்தம் ஆதன் (உயிர்) ஆத்மா தாமணி (கயிறு) தாமனீ மத்து மந்த: ஒட்டகம் உஷ்ட்ர: குடுவை குடுப: செம்பு சுல்பம் கண்டிகம் (திப்பிலி) க்ரந்திகம் (க: சுண்டிகன் (கள்விற்போன்) சௌண்டி அலசல் (சோம்பல்) ஆலயம் வேடன் வியாத: சவரர் (வேடர்) சபர: குணம் (நாணி) குண: பேழை (பெட்டி) பேடா கத்தி கர்த்தரீ அளி (கள்) ஹலி சுரை (கள்) சுரா பாய்ச்சிகை (சூதாடுகருவி) பாசக: பூடணம் பூஷணம் பாடியம் பாஷியம் விருகம் மிருகம் தட்டை தஷ்டை தோள் தோசி நனி (மிக) நாநா கணக்கு கணிதம் நாவாய் (கப்பல்) நாவியம் மீன் மீன: அதர் (வழி) அத்வா குட்டிகை (சிறுசுவர்) குட்யம் குரகம் (வீடு) க்ருஹம் அக்கரம் அக்ஷரம் சிரங்கம் (விலங்கின்கொம்பு) சார்ங்கம் ககனம் (காடு) கஹனம் அணோக்கம் (மரம்) அநோகஹ: செவ்வியம் (மிளகின்கொடி) சவ்யம் காரவல்லி (பாகல்) காரவெல்ல: துடி (ஏலம்) த்ருடி: ஓதி (பூனை) ஓது: ஆகு (எலி) ஆகு: (த: கச்சோதம் (மின்மினிப்பூச்சி) கத்யோ கலிங்கம் (ஊர்க்குருவி) கலவிங்க: கலுழன் கருடன் காசம் (கோழை) கச: கயம் (இருமல்) க்ஷயம் மயல் (பித்தம்) மாயு: வாந்தி வமி: வட்டம் விர்த்தம் புருவம் ப்ரூ தொந்தி துந்தம் கோணம் (மூக்கு) கோணா பிட்டம் ப்ரஷ்டம் வாசி (குதிரை) வாஜீ நாழிகை நாடிகா கோடகம் (குதிரை) கோடக: சிக்கம் (உறி) சிக்யம் சுண்டைக்காய் கண்டா சுணங்கன் (நாய்) சுந: விக்கல் ஹிக்கா குடிசை குடீ: எலி இலி: மயில் மயூரம் தட்டு தட: கோணி (பை) கோணி கமுகு (பாக்குமரம்) க்ரமு: பட்டம் பட்ட: கும்பல் (கூட்டம்) கும்ப: புல் பூல: வாளைமீன் வால: மூங்கை (ஊமை) மூக: வால் பாலம் மை (அஞ்சனம்) மஷி: வலை வல: மல்லை (மண்கிண்ணி) மல்லி மூசை (குகை) மூஷா தோணி த்ரோணி கோட்டை கோட்ட: கோடரி குடார: வாளி (காதோலை) பாளி: அனல் (தீ) அகல: உழமண் ஊஷா புடலை புடோலிகா வசம்பு வசா கட்டை காஷ்ட்டம் கத்தரிக்கோல் கர்த்தரீ சீரகம் ஜீரக: தூண் தூணா கந்தை கந்தா கூவல் (கிணறு) கூப: சுல்லி (அடுப்பு) சுல்லி: சால்பு (மிகவும்) சால: சிவிகை சிபிகா தொட்டில் டோலி வாவி வாமீ திகை திசா மாதம் மாசம் அரத்தம் ரக்தம் சுவல் குதிரை சுவர்க்கம் தசை தம்ச: விதங்கம் (பறவை) விஹங்க: இவையேயன்றி இன்னும் உளவாம். அற்றேல் பலக முதலிய வடமொழிச் சொற்கள் பலகை முதலியன வாகத்திரிந்தன எனின் என்னை? பலகை முதலியன தென்மொழிக்கண் தொன்றுதொட்டுக் காரணக்குறி மரபுப் பெயராக வழங்கலின் அக்கூற்றுப் பொருந்தாதென்க. வடமொழியார் கூறுங் காரணங் கட்குப் பரம்பரைச் சம்பந்த முதலியன வின்மையின் அவை நிலைபெறுமாறில்லையாம். மற்றும்விரிக்கிற்பெருகும். இங்ஙனம் மாகறல் - கார்த்திகேயமுதலியார். 10. இறையனாரகப் பொருளுரை வரலாறு தங்களால் வெளிப்போந்துலவும் ஞானசாகரப் பத்திரிகையுள் தொல்காப்பிய முழுமுதன்மை யென்னுந் தலைச்சாத்திட்டுப் பண்டிதர் சவரிராயரவர்கட்கு விடை யளிப்பான் புக்கு நிறுத்த சொல்லுடனுங் குறித்துவரு கிளவியுடனும் தாங்கள் வரைந்துள்ள வியாசத்தின் கண்ணுற்றுப் பெரிது மகிழ்வடைந்தேன். அவையாவுஞ் சரிதவியல் பிறழாது உள்ளுறவாராய்வாரெவர்க்கும் ஒரு தலையான் உவகை யூட்டற்பாலவா மென்பது சொல்லாதே யமையும். அவ்வியாசத்துள் இறையனாரகப் பொருளுரை நூன்முகம் முசிறியாசிரியர் நீலகண்டனாராலாதல் அவர்தம் மாணாக்கருளொருவராலாதல் இயற்றப்பட்டதன்றி நக்கீர னாரி யற்றியதன்றென நுட்பங்கண்டு உய்த்துணரவைத்த நண்பர் சவரிராயரவர்கள் கூற்றைத் தாங்கள் நியாயங்காட்டி வலியுறுத்துமொழிந்தவை, இறையனாரகப்பொருளுரை யாராய்ச்சிசெய்வார் பெரும்பாலார்க்கு முண்டாவதோர் ஐயப்பட்டினை ஒருவாற்றொனொழித்தற் பயத்தவாயுள்ளன. ஆயினும், அப்பொருளுரை முற்றவும் சரிதவியலோடு நுனித் தாராயவல்லார்க்கு, வேறுசில வையங்களுங் கருத்து மாறு பாடுகளும் ஒருதலையாக நிகழ்தல் கூடுமென்றே நினைக் கின்றேன். ஆதலின் அவை நீங்குமாறு அந்நூலாராய்ச்சி யான் யானறிந்த சிலவிஷயங்களை ஈண்டு எழுதத்துணிந்தேன். நிற்க. இனித்தாங்கள் எழுதிய அவ்வியாசத்தினுள் இறை யனார் களவியலுரைகண்டார் தெய்வப்புலமை நக்கீரனா ரென்பதூஉம், அந்நூலுரை வரலாறு தெரிப்பப் பாயிரவுரை கண்டார் அவர் பரம்பரையில்வந்த நீலகண்டனா ரென்ப தூஉம் நன்குணர்ந் தன்றே ஆசிரியர் சிவஞானயோகிகள் கேட்போன் யாப்பு என்பவற்றிற்கு நீலகண்டனார் உரைத்த வுரைப்பொருளை மறுத்துத் தொல்காப்பியர் சூத்திரலிருத்தி யுட் சிறந்ததோர் பொருள் காட்டித் தம்முரைநிறுத்துவா ராயினதூஉமென்க என்று எழுதப்பட்டுள்ளது. அற்றேல், அச்சூத்திரவிருத்தியுள் கடைச்சங்கத்தாருட் களவியற் பொருள்கண்ட கணக்காயனார் மகனார் நக்கீரர் கடைச் சங்கத்தார்க்கு மிடைச்சங்கத்தார்க்கு நூலாயிற்றுத் தொல் காப்பியம் என்றுரைத்தாராகலின் என அம் முனிவரர் நக்கீரனாருரைத்ததாகக் கூறியது களவியற் பாயிரத்துள்ள தனைத் தொகுத்து மொழிந்ததன்றி வேறின்றா மாகலானும், திராவிடமாபாடியத்து என்மனார் என்னுஞ் சொற்குச் சேனாவரையருரைத்தாங்குச் சொன்முடிபு கூறிய முனிவார் கருத்தோடு, களவியல் முதற்சூத்திரத்தின்கண் அச்சொற்கு நக்கீரனார் காட்டியமுடிபு மாறுபடுதலானும், நச்சினார்க் கினியர், அடியார்க்கு நல்லாரை யுள்ளிட்ட ஆசிரியர் பலரும் பாயிரத்தோடு கூடிய களவியலுரையினையே நக்கீரனார் கண்டதென வுரைத்தலானும், பாயிரப்பொருள் கண்டாரும் சூத்திரப்பொருள் கண்டாறும் வேறுவேறாவ ரெனக் கோடலும், அஃதுணர்ந்து நீலகண்டனாரைச் சிவஞான முனிவர் மறுத்தாரெனலும் யாங்ஙனம் பொருந்தும்? இங்ஙன மன்றி வித்துசிரோமணியாகிய ஸ்ரீமத் சபாபதிநாவல ரவர்கள் கூறியாங்கு நக்கீரனார் தெய்வப்பெற்றியுடையராகாத காலத்தே களவியலுக்குரை கண்டாராகலின், அஃதுணர்ந்து அம்முனிவர் அவருரையை மறுத்திட்டாரெனக்கொள்ளல் ஒருவாற்றான் அமையுமேனும், அது சரிதமுறையினை இக்காலமுறைக்கேற்ப ஆராய்வாரெல்லார்க்கு மொப்ப முடிவதன்றாகலானும், குமாரசுவாமியாற் கேட்கப்பட்டு மெய்யுரைபெற்றதாகச் சிறப்பித்துக்கூறும் பாயிரவுரை வரலாற்றோடு மாறுபடக் கூறலாமாகலானும், அகத்தி யனாரைத் தொல்காப்பியனார் சபித்திட்டாரெனக்கூறும் நச்சினார்க் கினியர் கூற்றுப் போன்று, ஆன்றோர் வழக்கின்மை காட்டப்படுமாகலானும் பொருந்தாதென்பது. இதனைத் தாங்களே நன்கு விளக்கி யுள்ளீர்கள். அற்றேல், ஈண்டுக்கூறிய வாற்றால் ஆசிரியர் சிவஞானமுனிவர், களவியற்பொருள் பாயிரத்தோடு கண்டார் நக்கீரனாரே யெனக் கொண்டு, அத்தெய்வப்புலமையுடையார் கூற்றுட் சிலவற்றைத் தங்கருத்து மாறுபாட்டான் மறுத்துரைத் தாராலெனின்; - நன்று கூறினாய்; தெய்வப்புலமையுடையா ரெனத் தாந் துணிந்துவைத்து அவருரைப்பொய்ம்மை காட்டி மறுத்திட்டா ரெனல் முரணுவதாமாகலான் அதுகருத்தன் றென்க. வேறியாதோ வெனிற் கூறுவல்; கணக்காயனார் மகனார் நக்கீரர் இறையனா ரருளிய களவியற்கு உண்மைப் பொருள் கண்டு அதனைத் தம்மகனார் கீரலிகொற்றனார்க் குரைத்தார். அவர் தம் மாணாக்கர்க்கும் அவர் தம் மாணாக்கர்க்குமாக இங்ஙனம் முசிறியாசிரியர் நீலகண்டனார் காறும் அவ்வுரைப் பொருள் எழுதப்பட்டதன்றி மறைமொழி போல் வரலாற்று முறையின் வழங்கி வரலாயிற்று. அங்ஙனம் நடந்துவந்த அவ்வரும்பெறற் பொருள் உலகில் என்று நின்று நிலவுதல் வேண்டிப் பின்வந்த அம்முசிறியாசிரியர் அதனை உரை நடையிற் றெளிவுற எழுதிவைத்தார். அங்ஙனமாய வவ்வுரை பலர் வாய்ப்படலான் மிகுந்துங் குறைந்தும் பிறழ்ந்தும் சிறிது மாறுபட்டு எழுதப் படுதலுங் கூடுமன்றே. ஆதலான் இதனுண்மையுணர்ந்தே ஆசிரியர் சிவஞானமுனிவர் அங்ஙனம் பிறழ்ந்தனவற்றுட் சிலவற்றை உய்த்துணர்ந்து, அவைமறுத்து உண்மைப்பொருள் காட்டி விளக்கியதன்றி, நக்கீரனாரது தெய்வப்புலமைக் கட்டவறிழைத்தவரல்லரென வுணர்ந்து கொள்க. இக்கூறிய வாற்றால் களவியற்பொருளுணர்ந்து ரைத்தவர் நக்கீரனா ரென்பதூஉம் வரலாற்றுமுறையின்வந்த அவ்வுரைப் பொருளைப் பாயிரத்தோடு உரைநடைப்படுத்தார் நீலகண்ட னாரென்பதூஉம் பெறப்பட்டன. இதுபற்றியன்றே ஆசிரியர் நச்சினார்க்கினியரும் வினையினீங்கி என்னுந் தொல்காப்பிய மரபியற் சூத்திரவுரையில் பாயிர வரலாறும் நக்கீரனார் முதலாகவந்ததெனக்கொண்டு கடைச் சங்கத் தாருட் களவியற் பொருள் கண்ட கணக்காயனார் மகனார் நக்கீரர் கடைச் சங்கத்தார்க்கும் இடைச் சங்கத்தார்க்கு நூலாயிற்றுத் தொல் காப்பியம் என்றாராகலானும் பிற் காலத்தார்க்கு உரையெழுதி னோரு மதுகூறிக் கரிபோக்கினா ராதலானும் என்றும் குறிப்பினுணரவைத்தூஉமென்க. அற்றேல் ஆசிரியர் நச்சினார்க்கினியாரும், அடியார்க்கு நல்லாரும், சிவஞான முனிவரரும் முறையே நக்கீரரென வுரையெழுதினோன்பெயர் கூறுதலும் எனவும், நக்கீரர் உரைத்த இறையனார் பொருளுரை யெனவும், கடைச்சங்கத் தார்க்கு மிடைச் சங்கத்தார்க்கு நூலாயிற்றுத் தொல்காப்பிய மென நக்கீரனாருரைத்தா ரெனவும் கூறிப்பாயிரவுரையோடு சூத்திரப்பொருள் செய்தார் நக்கீரனாரெனத் தங்கருத்து வெளிப்படுத்தலான், வரலாற்று முறையின் வந்தபொருளை நீலகண்டனார் உரைநடைப்படுத்தாரென்றலும், அங்ஙன மாயினும் அது நக்கீரனார்உரையென வழங்குதலும், ஆன்றோர் வழக்கின்மையோடு பொருந்தாமையுமாம் பிறவெனின் - அற்றன்று; உரைநடந்துவாராநின்றமை நோக்கி எனவும், இனிஉரைநடந்தவாறு சொல்லுதும் எனவும், இங்ஙனம் வருகின்றதுரை எனவும் வரலாற்று முறைப்பட்டதனைப் பாயிரத்துட்குறிப்பிட்டா ராதலானும், எமது சம்பிரதாயத் துள்ளும் நம்மாழ்வாரருளிய திருவாய் மொழிக்கு நம்பிள்ளை யென்பார் ஓர் பேருரையைப் பிரசங்க வாயிலாகப் புலப்படுத்த அதனை வரலாற்று முறையிற் கேட்ட அவர் மாணாக்கர் வடக்குத் திருவீதிப்பிள்ளையென்பார் உலகிற்குபகாரப்படுதல் வேண்டி அப்பொருளை உரை நடையில் எழுதிவைத் திருத்தலும், அங்ஙனமாயினும் அவ்வுரை நம்பிள்ளையீடு எனப்பெயர் கொண்டு நிலவுதலும், அதனுள் உரைநடைப் படுத்தார் தங்கருத்துக்களையும் ஆண்டாண்டுக் கூறியிருத்தலும், மற்றும் இராமாநுஜபாஷ்யத்திற்குக் கேட்டவைபோற்றி வெளிப் படுத்தல் என்னும் பொருள் கொண்ட சுருதப் பிகாசிகை எனப்பெயரிய பேருரைவழங்கி வருதலுமாகிய இன்னோரன்ன வழக்கு முற்காலத்து உண்மையானும், அங்ஙனமே இறையனார் களவியலுக்கு நக்கீரனார் பொருள் காண, வரலாற்று முறைப்பட்ட வதனை முசிறியாசிரியர் உரைநடைப்படுத்தா ராயினும் அவ்வுரை நக்கீரனாரியற்றிய தென்றேகொண்டு போற்றி அங்ஙனம் ஆசிரியர் பலரும் உரைத்தாராகலின் வழக்கின்மையும் பொருந்தாமையும் ஆகாவென வுணர்ந்து கொள்க. இங்ஙனம் யான்கூறியவாறுகொள்ளாது பாயிரவுரை கண்டார் நீலகண்டனார் சூத்திரவுரைகண்டார் நக்கீரனா ரெனக் கொள்ளின் அது நாகரிக சரிதவராய்ச்சி முறையோடு மாறுபடுதலின் ஆகாதென்பது; என்னை? அவ்வகப்பொருட் சூத்திரவுரை முழுவதூஉம், பொறிகெழு கெண்டை வடவரை மேல்வைத்துப்பூமியெல்லா, நெறிகெழுசெங்கோனடா நெடுமாறனெல்வேலி வென்றான் என்றும் நெல்வேலி யொன்னார் போர் வண்ணம் வாட்டியபூழியன் என்றும் பாண்டியன் நெடுமாறனைக்குறித்த மேற்கோட் செய்யுட்கள் பலவிடத்தும் உரையாசிரியரால் எடுத்தாளப்படுதலானும், அப்பாண்டியன் வடபுலத்தினின்றும் வந்த பகைஞரை நெல்வேலிக்கண் வென்றுவாகைசூடித் தமிழ் முந் நாட்டி னையுந் தன்னடிப்படுத்தாண்ட திறத்தினை அவ்வெடுத்துக் காட்டுக்கள் விளக்குதலானும் பல்லவநாட்டரசனாகிய நந்திவன்மனுடைய போர்த்தலைவனாகிய உதயசந்திர னென்பானுக்கும் அப் பாண்டிய அரசனுக்கு நெல்வேலிக்கும் யுத்தநடந்தமை உதயசந்திரசாதனத்தால் நன்கு விளங்குத லானும், கி.பி. 733 ஆண்டு முதல் 747 வரை ஆட்சிபுரிந்த மேனாட்டுச் சாலூக்கிய அரசனாகிய இரண்டாம் விக்ர மாதித்தனும் அப்பல்லவ அரசனாகிய நந்திவன்மனும் ஒருகாலத்தவராதல் சாதனங்களாற் பெறப்படுதலானும், ஈண்டுக்கூறியவாற்றால் நெல்வேலியுத்தம் நிகழ்ந்தகாலம் நோக்குவார்க்கு இனிதுவிளங்கக் கிடத்தலின், அவ்வமரில் வெற்றிகொண்ட பாண்டிய னெடுமாறனைப் புகழ்ந்துரைத்த முசிறியாசிரியர் நீலகண்டனாருஞ் சிறிது முன்னாகப் பின்னாக அக்காலத்தினராதல்வேண்டும். அங்ஙன மாகவே சங்கத்தார் காலத்துக்கும் பாண்டியன் நெடுமாறன் காலத்துக்கும் பன்னூற் றாண்டு வேறுபாடுண்மை யான் முற்பட்ட நக்கீரனாருரைக் கண் பின்னிகழ்ந்த நெல்வேலிச் சமரைப்பற்றிய செய்யுட்கள் மேற்கோள்பட நிற்றல் யாங்ஙன மெனமறுக்க. ஆகவே அப்பாண்டியன் காலத்தினராக வெண்ணப்படு நீலகண்ட னாரே அவ்வுரைமுற்றவுமெழுதி வைத்தாராற் பாலார். யானீண்டுக்கூறிய சாதவியலையும் மற்றும் அதன் விரிவையும் வித்துவசிரோமணி ம-ள-ள-ஸ்ரீ கனகசபைபிள்ளையவர்கள் மெட்ரா ரிவ்யூ என்னும் ஆங்கிலப்பத்திரிகையில் எண்ணூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழர் என்னுந் தலைப் பெயரிய அரிய வியாசத்தின்கீழ் எழுதிப்போந்த நுட்ப வுரையானுணர்க. அற்றேல் ஓர் அரசனைப்புகழ்ந்து கூறுவார் அவன் முன்னோரது அருஞ்செயலை அவன்மேலேற்றிக் கூறுதல் பண்டைவழக்காதலின், கடைச்சங்கத்தாருட் சீத்தலைச் சாத்தனார் காலத்திருந்த பாண்டியனெடுஞ்செழியன் அல்லது நெடுமாறனிடத்து, அவன் முன்னோரியற்றிய முன்னிகழ்ந்த தொரு நெல்வேலிச் சமரினையேற்றிப் புனைந்து கூறியன இவ்வெடுத்துக் காட்டுக்கள் என்றாற்படு மிழுக்கென்னை யெனின் - சிலப்பதிகார நெடுஞ்செழியனுக்கு முற்பட்டாயினும் அவன்காலத்தாயினும் அங்ஙனம் ஓர்யுத்தம் நடந்தேறியதாக யாண்டும் புலப்படாமையானும் பாண்டியனெடுமாற னென்றும், அரிகேசரியென்றும் அம்மேற்கோட் செய்யுளாற் பலவிடத்தும் பெறப்படும் பெயர்கள், அந் நெடுஞ் செழியனுக்கு வழங்காமையானும் நெல்வேலிவென்ற நின்றசீர் நெடுமாறன் எனத் திருத்தொண்டத்தொகையினும் நம்பி யாண்டார் நம்பி திருவந்தாதியினுங் கூறப்பட்டிருத்தலன்றி விரிநூலாய பெரிய புராணத்து நெடுமாறனாயனார்சரிதத்தும், பாண்டியன் நெடுமாறனெனக்குறித்தும் அவர்வடபுலத்துப் பகைஞரை வெற்றிகொண்டதனைக்குறித்தும் நன்கு கூறப் படுதலானும் அவ்வரசர் திருஞானசம்பந்த சுவாமிகள்காலத் திருந்தோராத லால், எட்டாநூற்றாண்டிலிருந்தாராக ஊகித் தற்குப்பெரிது மேற்புடைய அச்சுவாமிகள் காலமும், சாதனங்களாற் பெறப்பட்ட நெல்வேலிச் சமர்க்காலமுந் தம்மு ளொருபுடை யொத்துக் களவியற்பொருண் மேற்கோட் செய்யுட்களிற் கூறப்பட்ட பாண்டியன் நெடுமாறனும், பெரியபுராணத்துக் கூறப்படும் நெடுமாறனாயனாரும் ஒருவரேயெனத் துணிவுபட நிற்றலானும் அங்ஙனம் கூறலமையாதென்பது. இதுகாறுங்கூறிப்போந்தவாற்றால் இறையனாரகப் பொருட் சூத்திரவுரை கண்டார் மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனாரென்பதூஉம், வரலாற்று முறையின்வந்த அவ்வுரைப்பொருளை உரைநடையிற் பாயிரத்தோடு எழுதிவைத்தார் முசிறியாசிரியர் நீலகண்டனாரென்பதூஉம், அங்ஙனமது பலகாலஞ்சென்ற பின்னர்ஒருவராலெழுதி வைக்கப் பெற்றதாயினும் அதனை நக்கீரனார்செய்ததாகவே ஆசிரியர்பலரும் கொண்டுபோற்றி வந்தாரென்பதூஉம், ஆசிரியர் சிவஞானமுனிவரும் அங்ஙனமேகருதி அப் பொருளுட் சில பிறழ்ந்துவந்தமை உய்த்துணர்ந்து அங்ஙனம் வந்தமைக்கேது பல்லாசிரியர் கருத்தொடும் வந்தமையே யெனக் கொண்டு மாறியவற்றை மறுத்துநக்கீரனாரது உண்மைக் கருத்துக் கண்டு நிறீஇயினாரென்பதூஉம் அதனால் இறை யனாரகப் பொருளுரை கேட்டவை போற்றிவிளக்கல் என்னு மோர்வகை வரலாற்றுரையேயாமென்பதூஉம் பெறப்பட்டன. இங்ஙனம் யானக்களவியற்பொருளுரையைப் பற்றி யாராய்ச்சிசெய்த காலத்து என்னிடை நிகழ்ந்த சிலகருத்துக் களை ஒருவாறு எழுதித் தங்கட்கு விடுத்துவைத்தேன். இதனுட்குற்றங்கள் உளவாயின், அவற்றைத்திருத்தி வைப்ப தோடு, தங்களது நல்லபிப்பிராயத்தினையும் எழுதிவிடுப்பீர் களென வெண்ணுகின்றேன். இங்ஙனம் மு. இராகவையங்கார் மதுரைப்புதுத்தமிழ்ச்சங்கத்துப்பலவர் 11. ஆனந்தக்குற்றம் - 1 நட்பரணெய்திபகைமரணமைந்தனு, ளொப்புடைக் குறிக்கோளொரு மூன்றாகும் எனவும் தானமுங்கணமுங்கூறிக் கணத்திற்குப் பயனுங் கூறினார். பன்னிருபாட்டியன் முதலிய நூல்களாற்பொய்கையார் முதலிய நல்லிசைப்புலவரும் பாட்டியல் செய்திருப்பதாகக் காணப்படுகின்றது. ஆகவே சங்கமிருந்த நல்லிசைப்புலவர் காலத்தும் பற்பல பாட்டியல் வழங்கிய வெனவே எண்ணுகின்றேன். ஆயின்மங்கலமுதலியன சங்கத்தார் நூலினும் சிவஞானயோகிகள் கச்சியப்பர் முதலாயினார் நூலினும் உளவோவெனின் உளவென்பதே தேற்றம். எங்ஙனமெனில் மங்கலச்சொல் தனித்தும் அடையடுத்தும் முதற் பாட்டின் கண் முதற்சீரேயன்றி இடைகடை யினும் வரப்பெறுமென்பது பாட்டியல் விதியாதலின் பத்துப் பாட்டின்கண், 9 - வது பாட்டில் புகழென்று மங்கலம் அடையடுத்துவந்தது. 8-வது பாட்டில் பிற என்பதாற் நழுவிய வாழியென்னும் மங்கலம் அவ்வாறுவந்தது. 6-வது பாட்டில் முந்நீர் அவ்வாறு வந்தது 5-வது பாட்டில் உலகமென்பது அவ்வாறு நனந்தலையென அடையடுத்துவந்தது. 4-வது பாட்டில் பிறவென்பதாற் நழுவிய விசும்பென்பது அவ்வாறு வந்தது. 2-வது பாட்டில் மங்கலச்சொல்லின் பரியாயமாகிய யாணரென்பது அறாஅவென அடையடுத்து வந்தது. மற்றைப் பாட்டின்கண் விதந்துகூறிய மங்கலச்சொற்களே முதற்கண் வந்தன. சிந்தாமணிக்கண் உலகமென்பது மூவாமுதல்வாவென அடையடுத்துவந்தது, சில ஆசிரியர் நூன்முதற்கண்ணும் சில ஆசிரியர் நூற்குறுப்பாதல்பற்றிப் பாயிரமுகத்தும் சிலர் ஈரிடத்தும் மங்கலங்கூறல் வழக்காதலின் மணிமேகலையின் கண் பதிகத்தின்கண் இளங்கதிர் ஞாயிறென அடையடுத்தும் நூன்முதற்கண் உலகமெனத் தனித்தும் வந்தன. இனி, புறநானூற்றின்கண் மாலையென்னு மங்கலச் சொல்லின் பரியாய மாகிய கண்ணியென்பதே வந்தது. ஆண்டும் நியதிதப்பிலது. இனிக்காஞ்சிப் புராணத்தையும் தணிகைப் புராணத்தையும் நோக்கின் நூலகத்துறுப்பாகிய கடவுள் வாழ்த்திற் சேர்க்காது புறத்தே யியற்றிய காப்புச் செய்யுளில் மங்கலங்கருதற்பாற்றன்று; காஞ்சிப்புராணத்துட் கடவுள் வாழ்த்தின் முதற்கண் சங்கு என்னு மங்கலச் சொல்லும் தணிகைப்புராணத்துக்கடவுள் வாழ்த்து முதற்கண் உலகு என்னுமங்கலமும் நியதி தப்பாது வந்தன. முதற்கட்பாடுதல் பற்றிக் காப்புச்செய்யுளின் கண்ணும் மங்கலங் கருது மாசிரியரு முளர். இம்மங்கலங் கூறல் நூன்முதற்கண் அல்லது பொதுப் பாயிர முதற்கண் அல்லது சிறப்புப்பாயிரமுதற்கண் என விதந்துகூறாது பொதுப்பட முதற்கண் எனக்கூறலால் இலக் கணக்கொத்துடை யாரும் வடநூன்முறைபற்றி நூலு முரையும் பாயிரமும் தாமேசெய்வான்புக்குச் சிறப்புப்பாயிரம் நூற்கு முன்னிற்கு முறைபற்றி மதிவெயில் விரிக்கும் என மங்கலங் கூறினார். பிரயோக விவேகநூலார் நீர்கொண்டசென்னியென மங்கலங்கூறினார். ஒவ்வோர் முறைபற்றி முதலென்பது பல திறப்படலின் மங்கலங் கூறுமிடனும் பலவாயின. இனிச் சிவஞான யோகிகள் மங்கலங் கூறுங்கருத்தாற் சங்கேந்து மெனக்கூறினா ரல்ல ரியல் பான மைந்தது எனின் அது பொருந்தாது. உலகெலாமெனச் சிவதத்துவலிவேகத்திலும், சீர்கொளென முதுமொழி வெண்பாவிலும், சீருங் கல்வியுமெனக் குளத்தூர்ப் பதிற்றுப்பத் தந்தாதியினும் திருமால் பிரமனெனக் கலைசைப் பதிற்றுப்பத் தந்தாதியினும் கார்கொண்ட வெனவும் மணிபூத்த வெனவும் ஈரிடத்து விநாயகர் பிள்ளைத்தமிழினும் மணி கொண்ட சீர்கொண்ட என ஈரிடத்து அம்பிகை பிள்ளைத் தமிழினும் திருத்தங்கு என முல்லையந்தாதியினும் தவறாது மங்கலங் கூறலான். இனிக் கச்சியப்பர் திருவானைக்காப் புராணத்து விநாயகர் வணக்கத்தை யகத்துறுப்பாகக் கொண்டு நிலம் போற்று மென மங்கலங்கூறிப் பின்னும் பலவிடத்துக் கூறினார். பேரூர்ப் புராணத்தும் அவ்வாறே பலவிடத்து மங்கலங் கூறினார். பட்டினத்தடிகளது நான்மணிமாலை மும்மணிக்கோவை முதலிய பிரபந்தங்களினும் மங்கலந் தவறாது காணப்படு கின்றன. மெய்கண்ட சாத்திர முதலிய வீட்டுநூலின் கண்ணும் நித்திய மங்கள வடிவனாகிய பரம்பொருளது நாமங்களாகிய மங்கலச் சொற்கள் நியதி தப்பாது வந்தன. பாட்டுடைத் தலைவனுக்கே பயன்படற் பாலவாய கண முதலிய பொருத்தங்கள் சில பொது நூலிடைக் காணப் பெறா. அதுபற்றி அவைபாட்டியல் விதியின்வழீஇயினவெனல் பொருந்தாது. இறையனார் அன்பென்பது மங்கலமெனக் கொண்டமை குறித்துப் புகழேந்தியார் நேசரென்பதும் மங்கலமெனக் கொண்டார். உய்த்துநோக்கின் மங்கல மின்றி வந்த நூலொன்று மிலையென்றே யெண்ணுகின்றேன். முதலிடை யிறுதி சிதைந்த நூலும் முன்பின் மாறிக் கிடக்குநூலும் சிலவுள. அவை யீண்டைக்குப் பிரமாண மாகா. இனி நச்சினார்க்கினியர்கருத்து நோக்கின் மலைபடு கடாத்தில் தீயினன்ன வொண்செங்காந்த ளென்னுமிடத்து முதற் சீர்க்கயலும் தசாங்கத்தயலும் அமங்கலமாகா வென்னும் பாட்டியல் விதியை மாறாகக்கொண்டு தீயின் நன்னவென இடர்ப்பட்டுப் பிரித்து இயற்பெயராகிய நன்னனை யடுத்துத் தீயென்னும் மங்கலம் வந்தது என ஆளவந்த பிள்ளையார் குற்றங்கூறினார். அதனால் நச்சினார்க்கினியர் தீ என்பது இன்சாரியையுந் அன்னவென்பதையும் அடுத்து நின்றதேயன்றி இயற்பெயரை யடுத்ததில்லை யென்றும் இப்பாட்டுப் படர்க்கையாய் நிற்றலின் நன்னவென முன்னிலைப் பெயராக்கிக் குற்றங்கூற லுமமையாதெனவும் நியாயங்கூறி இப் பாட்டகத்து ஆனந்தக் குற்றமில்லை யென மறுத்தாரேயன்றி ஆனந்தக் குற்றமே யில்லையென மறுக்கவில்லை. பாடினோர் தீயின் அன்னவெனக் கருதிப் பாடினும் தீயின் நன்னவெனப் பிரித்துக் கோடற்கிடமாக அமைதலாகிய குற்றமில்லாத இன்னோ ரன்னவற்றையும் தொகையார் பொருள் பலவாய்த் தோன்ற லென்னு மானந்தக் குற்றமாகப் பின்னுள்ளோர் சேர்த்தார். இவ்வாறு அகத்தியனாருந் தொல்காப்பியனாருங் கூறா மையால் போலியாகச் சேர்த்த அவ்வானந்தக் குற்றத்தையே நச்சினார்க்கினியர் மறுத்தாரேயன்றி அகத்தியனார் தொல் காப்பியனாராற் கொள்ளப்பட்ட ஏனையானந்தக் குற்றங்களை மறுத்தா ரல்லரென்பது சங்கத்தார் அங்ஙனம் நீக்காது கோத்தற்குக் காரணம் ஆனந்தக் குற்றம் இச்செய்யுளுட் கூறாமையா னென்றுணர்க வெனவும், நன்னனென நகரமுதலும் னகரவொற்றீறுமாய் நிற்குஞ் சொல்லாயினன்றே அக் குற்றமுளதாவதென மறுக்கவெனவும் அவ் வுரையிற்கூறிய கூற்றானும் தொல்காப்பியப் பாயிரத்து மங்கலமாகிய வடதிசையை முற்கூறினார். இந்நூல் நின்று நிலவுதல் வேண்டி யென அவர் தாமே யுரைத்தலானும் நன்கு விளங்கும். சுபம். இங்ஙனம், தமதன்பன் சோழவந்தான் - அ - சண்முகப்பிள்ளை, மதுரைச் சேதுபதி கலாசாலைத் தலைமைத் தமிழ்ப் பண்டிதன். 12. சமாசாரக்குறிப்புகள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுன்னாகத்திலே மகா வித்துவானாய் விளங்கும் ஸ்ரீமது அ - குமாரசாமிப் பிள்ளையவர்களிடமிருந்து அவர் களாலியற்றப்பட்ட இலக்கண சந்திரிகை ஏகவிருத்தபாரதம் முதலியனவும் வரப் பெற்றோம். அவற்றுள் இலக்கணசந்திரிகை என்னும் அரிய கிரந்தத்தை நாம் உற்றுநோக்கியகாலையில் எம் முள்ளத்தே அங்குரித்துப்பின் பெரிதா யெழுந்த மகிழ்ச்சியை என்னென்பேம்? இப்புத்தகம் 45-பக்கங்களடங்கிய தொன்றா யினும் அதன்கட்சொல்லப்பட்ட நுட்பவிஷயங்கள் மிகப் பலவாக விரிந்தன. இதன்கண், வடசொற்கள் தமிழில் வடிவுதிரிந்து வழங்குமாறும், வடமொழி தென்மொழியில் எழுத்துக்கள் ஒற்றுமைப்பட்டு நடக்குமாறும், இவ்விரு மொழியினுங் காணப்படும் உபசருக்க வகுப்பும் அவற்றின் மாறுபடும், இடைச்சொற்கூறுபாடும், தத்தி தாந்தவகையும், பெயர் வினை உரிச்சொற்பாகுபாடும் இனிதுவிளங்க மிக நுட்பமாய் எடுத்துக்காட்டப்படும் ஒவ்வொரு சொல்லாராய்ச் சிக்கும் தொல்லாசிரியர் பிரயோக வாக்கியங்கள் நூற்பெயர் களோடு நன்கெடுத்து மொழியப் பட்டன. இங்ஙனம் பிரயோகங் காட்டிச் சொல்லாராய்ச்சி செய்யுநெறி, ஆங்கில நூல்வல்லார் செய்துபோதரும் பிலாலஜி என்னுஞ் சொல்லாராய்ச்சி யோடொத்தொழுகி யதனினுஞ் சிறப்புறு தலின் தமிழாராய்வா ரெல்லாரும் பிள்ளையவர்கள் செய்திட்ட இவ்வரிய நூலைப் போற்றிப்பயிறல் இன்றியமை யாதகடமை யாம். நன்னூற்பயிற்சி செய்வாரினும் இந்நூற்பயிற்சி செய்வார் நுட்பவுணர்வு டையராவரென்பது இதனைப் பயின்றார்க்கன்றி ஏனையோர்க்கு விளங்காது. இனிப்பிள்ளையவர்களுடைய அருமைபெருமைகளை இனிதுணர்ந்து அவர்களை யபிமானித்து இந்நூலியற்றும்படி யவர்களை ஊக்கிய, ஊர்காவற்றுறைக்கோட்டு நீதிபதி ஸ்ரீமாந் - கு - கதிரைவேற்பிள்ளையவர்கள் வள்ளன்மையுந் தமிழபி மானமும் எம்மனோராற் பெரிதும் வியக்கப்படுவனவாம். கொழும்புச் சைவபரிபாலனசபையின் உபந்நியாசகரும் சிவபுராணப் பிரசாரகருமாகிய யாழ்ப்பாணத்து நல்லூர்ப் பண்டிதர் பிரம்ஹஸ்ரீ ந-வே-கனகசபாபதி ஐயரவர் களிடமிருந்து அவர்களாலெழுதப்பட்ட சைவசமயவிளக்கம் முதற்புத்தகம் திருவாதிரை மகோற்சவப்பிரபாவம் சைவ பரிபாலனசபை மகோற்சவ விளக்கம் முதலியன வரப்பெற்றோம். இவையெல்லாஞ் சைவசித்தாந்த நுணுக்கப்பொருளுரைத்து ஒழுகும் பெற்றிமை யானும், செந்தமிழ்நெறி வழாச் செவ்வியநடையி லெழுதப் பட்டிருத்தலானும் சைவ சமயிகளானும் தமிழ்விருப்புடை யோரானும் ஆராய்ந்தறியற் பாலனவாம். ஐயரவர்கள் பெருகிய வாயுளுந் தேகாரோக்யமு முடையராக வமர்ந்து இத் தன்மையவான நூல்கள் பலவியற்றி உலகிற்குபகரித்து அதனைக் கடமைப்படுத்துவாராகவெனத் திருவருளைச் சிந்திக்கின்றோம். தூத்துக்குடிச் சிவஞானப்பிரகாசசபையின்கண் ஓர் புத்தகக் களஞ்சியம் தாபிக்கப்பட்டிருக்கின்றது. இதிற் றொகுக்கப்படும் புத்தகங்கள் பலரும் எளிதிற் பார்த்துணர அமைதலால் தமிழ்நாட்டு வித்துவசிகாமணிகள் தாந்தாமி யற்றிய நூல்களில் ஒவ்வொன்று இதற்கு உபகரித்தல் மிகநன்றாம். வேறுபிராசீன கிரந்தங்கள் தருதலும் பேருபகார மாம். நாமும் நம்முடைய நூல்களிற் சில இதற்கு அளித்திட்டோம். கற்கத்தாமாநகரிற் பரமகஞ்ச சந்நியாசவருட் கோலந் தாங்கி யுமை வழிபாட்டின் கட்டலைநின்று முத்தியடைந்த ஸ்ரீமது - இராமகிருஷ்ணருக்குப் பிரதம மாணாக்கராயிருந்து, அமெரிக்கா முதலான பாகிய கண்டங்களிலுள்ள மக்கள் உய்தல்வேண்டி அவர்க்கு நம்வேதசாரமாய் விளங்குஞ் சிவயோகநிலை விளங்கக்காட்டி யுபந்நியசித்து அவரை யெல்லாம் ஆண்டு கொண்டருளி அட்டாங்கயோக சமாதி நிலை தலைக்கூடிய ஸ்ரீமத் விவேகாநந்தசுவாமிகள் சிவராஜ யோகத்தானே சிவபதப்பேறெய்திய விஷயத்தை யறிந்து துக்கசாகரத்து அமிழ்ந்தினோம். சிகந்தராபாத்தென்னும் நகரிலே சைவாபிமானம் மிக்க நண்பர்கள் மனவெழுச்சிமிகுந்து சித்தாந்த சைவ வாராய்ச் சியின் பொருட்டு இரண்டு சங்கங்கள் தாபித்து நடத்தா நின்றமை கேட்டுக் களிப்புறுகின்றோம். இவ்விரு வகைச் சித்தாந்த சங்கத்தாரும் சைவசமயாபிவிர்த்தினையே கோரி ஒற்றுமை பூண்டு உலகிற்குபகரிப்பார்களென்று திருவருளைச் சிந்திக்கின்றோம். வைதிக சைவசித்தாந்தசண்டமாரும் ஸ்ரீலஸ்ரீ சோம சுந்தர நாயகரவர்கள் சரிதம் எழுதி முடிப்பிக்கவேண்டு மென்றும், அச்சரிதத்திற்கு வேண்டும் வரலாற்றுக் குறிப் புகளையறிந்த நண்பர்களெழுதி யுபகரித்தல் வேண்டு மென்றும் முதற் பத்திரத்திலேயே சுட்டிக்காட்டினோம். இரண்டோர் நண்பர் தவிர மற்றியாரும் அங்ஙனம் இதுகாறும் உபகரித்திலர். இதுதானோ சைவாபிமானம்; இவர்கள்தாமோ சைவப்பிரசார கரிடத்து அன்புபூண் டொழுகுவோர்; ஸ்ரீலஸ்ரீ நாயகரவர் களருமை பெருமைகளை நன்குர்ந்த நண்பர்கள் இத் தென்னாட்டின்கட் பலருளராகவும் அவருள் ஒருசிலராயினும் இதனைக் கவனித்திலாமை பெரிதும் இரங்கற்பாலதொன்றாம். அன்பர்களே! இனியேனும் நீங்கள் நாயகரவர்களைப்பற்றி யறிந்த வரலாறுகளை எழுதியனுப்பினால், அதுபேருபகார மாம். உங்கள் அரியபெயரோடு அவற்றை வெளியிடுவோம்; உங்கட்குப்புகழும் பெருமையும் உண்டாம்; சிவபுண்ணியமு மாம். சிறிது கவனித்திடுங்கள். நமது ஞானசாகரப்பத்திரிகைபெறுங் கலாசாலை மாணாக்கர்களும் ஏனைக் கையொப்ப நண்பர்களிற் சிலரும் 8-வது இதழ் பிரசுரமாதற்கு முன்னரே தாந்தாம் உபகரிக்க வேண்டிய கையொப்பத்தொகையை உபகரிக்கற்பாலார். நமது பத்திரிகை பிரசுரித்தற்குத்தொடங்கி இப்போது ஏழுமாதங்கள் கழிந்தன. இதுகாறும் அவ்வவர் சௌகரியங்கருதிக் கையொப்பத் தொகைக் கட்டணத்தைப்பற்றி வற்புறுத்தா திருந்தேம். இனியங்ஙன மிருத்தல் கூடாமையா லவர்கள் விரைதற்பாலார். நம்கையொப்ப நண்பர்களிற் பெரும்பாலார் முன்னரே தத்தங் கட்டணங்களை உபகரித்து நம்மையும் நம் பத்திரிகையினையும் அபிமானித்தமை பற்றிப் பெரிதுங் களிப் புறுகின்றோம். திருவருள் என்றும் அவ்வாறே நடாத்துவதாக. சுருங்கச் சொல்லிற் றன்னை ஓர்த்துணர்வார்க்கு, அது தன் பெயர்ப் பொருள் துணியப் பெரிதும் விளக்கித் தன்னாக்கி யோனைத் தண்டமிழ்க்கடலிற் றாவின்றெழூஉ மலர்கதி ரிளஞாயிறென் றறிவிப்பது. இது என்றுணிபு. இங்ஙனம் தங்களாக்கத்தையே என்றும் விரும்பும் தங்கள் அன்பன் த-பா-சிவராமன். இந்துகாலேஜ் தலைமைத் தமிழ்ப்பண்டிதர், திருநெல்வேலி. என் அன்பிற்சிறந்த ஐய அன்புகூர்ந்து வரவிடுத்த சோமசுந்தரக்காஞ்சியாக்கம், திருவொற்றியூர் முருகர் மும்மணிக்கோவை முதலியவற்றைக் கண்ணுற்றனனாக. சோமசுந்தரக்காஞ்சியாக்கம் நுங்கள் தொல்காப்பியப் பொருளதிகார வாராய்ச்சியை இனிது புலப்படுக்குந் திறத்தது. இற்றை ஞான்றும் பொருளதிகாரம் ஆராய்வார் அரியராவர்; அவருள்ளும் நீயிர் ஒருவராகின்றீர்கள். திருவொற்றியூர் முருகர் மும்மணிக் கோவை சொற்பொழிவு பொருட்பொலிவு பொதியப்பெற்றுச் சங்கத்தமிழை நினைவு கூட்டலின் அஃது மும்மணிக்கோவையேயாம். நுங்களால் தமிழுலகம் விழுப்ப மெய்து மெனக்காண்டலின் நுங்கள் வாழ்நாட்செல்வ முதலியன நெடிது வளர்ச்சிபெறுக. இவ்விளமைப் பருவத்து முயற்சி முதுமைப்பருவத்தும் சோர்வின்றியுயர்ந்து மேம் பாடடைக. தம்மிற்றம்மக் களறிவுடைமை மாநிலத்து, மன்னுயிர்க்கெல்லா மினிது இங்ஙனம் அன்பன் சுபகிருது ஆண்டு மாகறல் - கார்த்திகேயன், கடகமதியம் 62. மிஷனெரி டிரெயினிங் கூல்தமிழ்ப்பண்டிதர், சைதாப்பேட்டை. சோமசுந்தரவிலாசம் உள்ளூர் வெளியூர்களிலுள்ள நண்பர்கள் நமது அச் சியந்திர சாலையில் தமிழ்நூல்கள், விளம்பரங்கள், பத்திரிகை முதலாயின பதிப்பிட வேண்டினால் அவற்றைத் திருத்த மாகவும், அழகாகவும், நயமாகவும் முத்திரீகரித்துத் தரச் சித்தமாயிருக்கின் றோம். வேண்டுவோர் நமக்கு நேரே எழுதித் தெரிவிக்கலாம். ஞானசாகரம் நமது பத்திரிகை உள்ளூர் வெளியூர்களிற் பரவும் பொருட்டு முயற்சி செய்வோர் வேண்டும். அவர்கள் செய்யும் முயற்சி யளவுக்குத் தக்கவாறு திரவிய சகாயஞ் செய்யச் சித்தமாயிருக்கின்றோம். இந்தியா, இலங்கை, பர்மாவுக்கு ஒரு வருடவிலை இரண்டு ரூபா. நா. வேதாசலம்பிள்ளை, நெ.6. கந்தப்பசெட்டித்தெரு, சென்னை கௌரவாபிமானசீலர்கள் நாகபட்டினம் வெளிப்பாளையம் - சைவசித்தாந்தசபையார் ரூபா 10 ஸ்ரீமான். சி - த - மா. முனிசாமிப்பிள்ளையவர்கள் 10 திண்டிவனம் கு - சிங்காரவேலுமுதலியாரவர்கள் 10 சி - அருணாசலரெட்டியாரவர்கள் 10 டி-பி-டப்ளியூ-காண்டிராக்டர் வேதகிரிச்செட்டியாரவர்கள் 10 அ - துரைசாமிக்கௌண்டரவர்கள் வல்லம் 10 ஓமந்தூர் - முத்துவேங்கடராமரெட்டியார் அவர்கள் கிளியனூர் 10 பெ-ராம்-வேங்கடசுப்பாரெட்டியாரவர்கள் 10 சேவூர் - சுப்பாரெட்டியாரவர்கள் 10 இரங்கூன் டி.எம். பொன்னுசாமிப்பிள்ளையவர்கள் 10 பேபர்கரன்சி ஆபீ, ரெய்பகதூர் - மதுரைப்பிள்ளையவர்கள், ஆனரரிமாஜிதிரேட், சென்னை 10 திருமயிலை - அரங்கசாமிநாயகரவர்கள் அபாதகிரி, 10 பெ-முனிசாமி முதலியாரவர்கள் சூபர்வைசர், இன்ஜினீரிங் டிபார்ட்மெண்ட் 10 தண்டலம் - பாலசுந்தரமுதலியாரவர்கள் தமிழ் டிரான்லேட்டர் ஆபீ, பரமகுடி 10 டி.ஆர். கிருஷ்ணசாமிராவ் அவர்கள் போலீ இன்பெக்டர், சிகந்தராபாத்து 10 சோ - சிவஅருணகிரிமுதலியாரவர்கள் சீப்சப்ளை அண்டு டிரான்போர்டு ஆபீ 10 சித்தாந்தசங்கத்தார், நந்தியால் 10 ஜே - எம் - நல்லசாமிப்பிள்ளையவர்கள், பி-ஏ, பி-எல்,. டிட்ரிக்ட் முனிசீப், நந்தியால், கள்ளிக்கோட்டை 10 பி. தியாகராஜமுதலியாரவர்கள் லோகல்பண்டு சூபர்வைசர் 10 ஸ்ரீமந்-ஞானசித்தசுவாமிகள், திருவானைக்கா 10 தொகை உபகரித்த கனவான்களன்றி மற்றைக் கனவான்களும் தாந்தாம் உபகரிக்கும் திரவியத்தை விரைவிலுதவி யூக்கமுறுத்து வார்களென்று திருவருளைச் சிந்திக்கின்றோம். சிவமயம் திருச்சிற்றம்பலம். ஸ்ரீஜ்ஞானசம்பந்த குருப்யோநம: வாழ்த்து வாழ்க வந்தணர் வானவ ரானினம் வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக ஆழ்க தீயதெ லாமர னாமமே சூழ்க வையக முந்துயர் தீர்கவே ஞானசாகரம் 13. மாணிக்கவாசகர்கால நிருணயம் சைவசமயகுரவருள் ஒருவரான மாணிக்கவாச சுவாமிகள் காலநிருணயஞ் செய்தற்பொருட்டு ஆங்கில மொழிவல்லார் ஆங்காங்கு வாதநிகழ்த்தி வருகின்றார். அவருள், திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி-யூ-போப் என்பார் அம்மொழிபெயர்ப்பின் முதலிலே சேர்த் திருக்கும் பொருட் குறிப்பொன்றில், மாணிக்கவாசக சுவாமிகள் காலம் இனிது துணியப்பட வில்லையாயினும், அவர்காலம் கிறிதுபிறந்த பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத் திலேயா மென்றுகோடல் உத்திநியாயங்கட்குப் பொருத்தமாவதொன் றென்றுரை கூறுகின்றார். இனி இவர் காலத்திற்கு ஒரு நூற்றாண்டு கழிந்து ஞானசம்பந்தர் முதலான மற்றைக் குரவர்தோன்றினாரென்றும் உரைப்பாராயினார். இனி, மாணிக்கவாசகர் காலநிருணயஞ் செய்தற் பொருட்டு ஆங்கில மொழியில் ஓருரை நூலெழுதிய நம் ஆப்த நண்பர் ஸ்ரீமாந்-திருமலைக் கொழுந்து பிள்ளையவர்கள், மாணிக்கவாசகர் கடைச்சங்கநிலைபெற்று விளங்கிய ஞான்றிருந்தாரெனவும், அக்கடைச்சங்கத்தில் ஆசிரியர்-திருவள்ளுவநாயனார் தமது நூலை அரங்கேற்றியகாலம் கிறிது பிறந்த முதனூற்றாண்டாகலான் மாணிக்கவாசகர் காலமும் அந்நூலரங்கேறிய காலத்திற்குச் சிறிது பின்னாவதா மெனவும் அரியபெரிய நியாயங்கள் பலகாட்டித் தம்முரை நிறுத்துகின்றார். இனி, ஆங்கிலமகனான இன்ஸ் என்பார் ஏஷியாடிக் குவார்டர்லி ரிவியு என்னும் பத்திரிகையில், நம் அபிமான ஆப்தநண்பராயிருந்த ஸ்ரீமத்-பெ-சுந்தரம்பிள்ளையவர்கள் பிரபல வாராய்ச்சிசெய்து கி.-பி ஏழாவது நூற்றாண்டின் றொடக்கத்திலேயாமென்று துணிந்துரை நிறுத்திய ஞான சம்பந்தர் காலத்தை உடன்பட்டு, ஞானசம்பந்தப் பிள்ளை யாராதல் அவரோடுடனிருந்த அப்பமூர்த்திகளாதல் அவர்க்குப் பின்னிருந்த சுந்தரமூர்த்திகளாதல் மாணிக்க வாசகரைத் தம் திருப்பதிகங் களுட் குறிப்பிடாமையானே, மாணிக்கவாசகர் காலம் அச் சைவசமயகுரவர் மூவர்க்கும் பின்னதாதல் துணியப்படுமெனக் கொண்டு போலியாகச் சிலமொழிந்திடு கின்றார். இனி, நம் ஆப்தநண்பராயிருந்த ஸ்ரீமத் - பெ - சுந்தரம்பிள்ளையவர்கள் ஞானசம்பந்தப்பிள்ளையார் காலநிருணயஞ்செய்து ஆங்கில மொழியி லெழுதிய மிக அரியதோருரைநூலில் மாணிக்கவாசகர் காலநிருணயம்பற்றி விசேடமாய் ஏதுமெடுத்து மொழிந்ததில்லையாயினும், அந்நூன் முகவுரையில் மாணிக்கவாசகர் ஞானசம்பந்தப் பிள்ளையார்க்கு முன்னிருந்தா ரென்பதன்கண் ஐயம் நிகழாநிற்கின்ற தெனவுரை குறித்தொழிந்தார். இனி, சரிதவாராய்ச்சியினுட்பமும், அதனையாயு முறையும் அறிய மாட்டாத தமிழ் ஒன்றேவல்லார் சிலர் ஞானசம்பந்தப் பிள்ளையார் நாலாயிர வருடங்கட்கு முன்னிருந்தாரெனவும், மாணிக்கவாசகர் அப்பிள்ளையார்க்கு முன்னிருந்தாரெனவுந் தமக்குத் தோன்றியவாறே கூறி நெகிழ்ந்துபோய் உண்மை காணாது ஒழிவர். இது நிற்க. இனி மேலே காட்டிய நால்வர் கருத்துக்களும் ஒன்றோ டொன்று பெரிதும் மாறுபட்டு மயங்கிக்கிடத்தலான், அவற்றைப்புடைபட வொற்றி யளந்தாய்ந்து யாம் எம்மறிவில் மெய்யெனக்கண்டவற்றை ஈண்டுத்தந்து காட்டுவாம். முதன்மொழிந்த போப்புத்துரை, மாணிக்கவாசகர் கி.பி. பத்தாம் நூற்றாண்டின் றொடக்கத்திலே யிருந்தாரெனவும், அவர்க்குப் பின் ஒரு நூற்றாண்டு கழிந்து பதினோராவது நூற்றாண்டில் ஞானசம்பந்தப்பிள்ளையார் தோன்றினா ரெனவுஞ் சரிதவரம்பினில்லாது அதனியல்வழுவத்தமக்குத் தோன்றியவாறே பெரிதும் பிழைபடக்கூறினார். சரிதவாராய்ச்சி யின் மிக்குப் புலமை யுடையேமென்று கூறிக்கொள்ளும் ஆங்கிலவமிசத்திற்பிறந்து அவ்வாங்கில மொழிப்புலமையும் பெற்றுள்ள இத்துரைமகனார் தாமங்ஙனங்காலநிருணயஞ் செய்தற்கேற்ற காரணங்கள் நன்கெடுத்து மொழிந்திடா மற்சரிதவியல் பிறழத் தமக்குவேண்டியவாறே கூறியதுபற்றிப் பெரிதும் வியப்படைகின்றோம். சரிதவாராய்ச்சி யின்ன தென்றறியமாட்டாத தமிழ்ப்புலவர் அங்ஙனங் கூறினாராயின், அஃது அவர்க்கிழுக்கன்றாம். அவ்வாராய்ச்சியில் முதிர்ந்த வுணர்ச்சி யுடையரான ஆங்கில மக்களே அங்ஙனம் பிறழவுரையாடுவராயின் அதுபற்றி யுலகம் அவரைப்பழியா தொழியுமோ? இதுநிற்க. டாக்டர் ஹூல் முதலான ஆங்கிலவித்துவ சிகாமணிகளாற் பிரசுரிக்கப்பட்டுவரும் தென்னாட்டுக் கல்வெட்டுப் பட்டையங்களானே, தேவாரத் திருமுறைவகுப்புச் செய்த நம்பியாண்டார் நம்பி. நம்பியோடொருங்கிருந்த இராசராச அபயகுலசேகர சோழன் அரியணைவீற்றிருப்புப்பெற்றுச் செங்கோலோச்ச உலகுபுரந்தருளத் தொடங்கியவருடம் கி-பி 984ஆம். ஸ்ரீவெங்கையரவர்களும் சென்னைக்கிறிதவன் கலாசாலைப் பத்திரத்தில் அவ்வரசன் கால மவ்வாறாதல் நியாயப் பிரமாணங்கள் பலகாட்டி மிக நுட்பமாக விரித்துரைத்து நிறுத்தினார். ஸ்ரீமத்-சுந்தரம்பிள்ளையவர்களும் அக்காலவள வையை நன்காராய்ந்துபார்த்து அதுபொருத்தமாவதேயா மென்று ஒருப்பட்டுத் தழுவிக்கொண்டார். பிற ஆங்கில வித்துவான்களும் அதன்கண் ஐயுறவுகொள்ள இடம் பெறுகின்றிலர். இங்ஙனமெல்லாரும் ஒருங்கேதழீஇக் கொண்டு நிறுத்திய இராசராசசோழன்காலம் கி-பி பத்தாம் நூற்றாண்டின் இறுதிக்கண்ணதாதல் இனிது விளங்குதலின், அவ்வரசன் காலத்தே முறை வகுப்புச்செய்யப்பட்டுப் பெரிதும் பிரசித்தி யுற்றுவழங்கிய தேவாரப்பதிகங்களும் அவற்றை யுலகுய்ய மொழிந்தருளிய குரவரும் அப்பத்தாம் நூற்றாண் டிற்குமுன் நிலவியவாறு மலைவின்றித் துணியற்பாற்று. இனி, அச்சமயகுரவன்மாருள்ளுஞ் சுந்தரமூர்த்திசுவாமிகள் காலம் கி-பி ஒன்பதாம் நூற்றாண்டின் கட் படற்பாலதென்றுகோடு மாயினும், அச்சுவாமிகளால் திருத்தொண்டத்தொகையில் நன்கெடுத்து மொழிந்திடப்பட்ட திருஞானசம்பந்த சுவாமிகள் காலம் எட்டாம் நூற்றாண்டிலாதல் ஏழாம் நூற்றாண்டிலாதல் கொள்ளற்பாற்றென்பது சொல்லாமலே விளங்கும். இங்ஙனஞ் சொல்லுதற்குப் பெரிதும் வாய்ப்புடைய ஞானசம்பந்தப் பிள்ளையார் காலவளவைகுறித் துரையாட மாட்டாமன் மற்றது பதினோராம் நூற்றாண்டின் கண்ணதாமென்று கூறிய போப்புத்துரை சரித்திரவாராய்ச்சி யின்மிக வல்லர்போலும்! அல்லதூஉம், திருமுகம் வகுத்திட்ட நம்பியாண்டார்நம்பிகளும், அத்திருமுறையினையருளிச் செய்த சமயகுரவரும் அவருள்ளும் சுந்தரர்க்கு முன்னிருந்த பிள்ளை யாரும் எல்லாம் பதினோராம் நூற்றாண்டின் கணிருந்தா ரென்று கோடல்தான் மிக நுணுங்கிய சரிதவாராய்ச்சி போலும்! அம்மம்ம! இங்ஙனம், ஒருதமிழ்ப்புலவர் வாய்பிழைப்பக் கூறினும் அவரைப்பித்த ரென்றெள்ளி நகையாடாநிற்பர். தாமங்ஙனங்கூறின் அது நியாயவுரையாமென்று மகிழ்வர். மேலும், பத்தாம்நூற்றாண் டிலிருந்தாராகப் பெறப்பட்ட நம்பியாண்டார் நம்பிகளுக்குப் பின்றைக் காலமான பதினோராம் நூற்றாண்டிலே ஞான சம்பந்தப்பிள்ளையார் இருந்தாராகக்கூறும் போப்புத்துரையின் மயக்கவுரையினுஞ் சிறப்புடைத்தாவதோர் கயக்கவுரை பிறாண்டுக்கண்டிலம். இனி, அப்போப்புத்துரைமகனார் தாமங்ஙனம் கூறல்வேண்டிற் றென்னையென நுணுகி நோக்கும்வழி, பண்டைக்காலத்தே தமிழ்முதுமக்கள் நாகரிக விருத்திப்பேறு மிகவுடையராய் இலக்கணஇலக்கிய சாத்திர நூன்முறைபோற்றிவந்தாரெனக் கூறுதலானே, அங்ஙனம் பண்டைக் கால நாகரிகவிருத்திப் பேறின்றி இற்றைக்கு நாலைந்து நூற்றாண்டிற்கு முன்னதான நவீனகாலத்தே நூன்முறைபேணுமாறறிந்த ஆங்கிலேயரான தமக்கெல்லாம் இளிவரவுண்டாமெனக்கருதியே அவ்வாறுண் மைச் சரித வியல்பிறழமொழிந்து ஏதம்படுவாராயினாரென்பது தெற்றென விளங்காநிற்கும். இனி, எப்பொரு ளெத்தன்மைத் தாயினு மப்பொருண் மெய்ம்மைதேறி யுலகைத் தேற்றவல்ல பெரியார்க்கு இவைபோலு அபிமானவுரைகள் ஒருசிறிதும் பொருந்தாவாம். இன்னும் போப்புத் துரையவர்கள் நாலடியார் திருக்குறள் முதலியவற்றின் மொழிபெயர்ப்பின் கணெல்லாம் இவ்வாறே மெய்ம்மைதிறம் பியுரைத்த மாறுகோளுரை களையெல்லாஞ் சமயநேர்ந்துழி எடுத்து மறுத்துண்மைப்பொருள் நிலையிடுவாம். இனி, ஞான சம்பந்தப்பிள்ளையார்காலம் ஏழல்லதெட்டாம் நூற்றாண் டொன்றன்கட் படுவதன்றி இரண்டினும் ஒப்பச்சேறல் கூடாமை யான், அக்காலவரையறைதான் யாதென்றறிய வேண்டுவார்க்கு அது காட்டுவாம். இனி, உண்மைச் சரிதவியல்பிறழாதுரைக்கும் பெரிய புராணஞ் சிறுத்தொண்டநாயனார் வரலாற்றில், பரஞ் சோதியாரென்னும் பெயருடைய அச்சிறுத்தொண்டர் திருச்செங்காட்டங்குடியிற் பிறந்தவரெனவும், அவர் போர்த் தொழில்பலவுங்கற்று மிகவல்லராய்ச் சிவபெருமான் றிருவடிக்கண் மெய்ப்பத்தி பூண்டொழுகித் தம் மரசனிடத்துத் தண்டத்தலைமை மேற்கொண்டவற்கு அணுக்கராயிருந்தா ரெனவும், அங்ஙனமமருங்காலத்து வடநாட்டில் வாதாவி என்னுநகர்மேற் படையெடுத்துச் சென்று அதன் மன்னனை வெற்றிகண்டு வாகைசூடித் திரும்பத் தம்நாடடைந்து தம்மரசற்குப் பெரும்புக ழெய்து வித்தாரெனவுங் கிளந்துரையா நின்ற ஈசனடி யார்க்கென்று மியல்பான பணிசெய்தே யாசில்புகழ் மன்னவன்பா லணுக்கரா யவற்காகப் பூசன்முனைக் களிறுகைத்துப் போய்வென்று பொருமரசர் தேசங்கள் பலகொண்டு தேர்வேந்தன் பாற்சிறந்தார் மன்னவற்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாவித் தொன்னகரந் துகளாகத் துளைநெடுங்கை வரையுகைத்துப் பன்மணிபு நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையு மின்னனவெண் ணிலகவர்ந்திங் கியலரசன் முன்கொணர்ந்தார் என்னுஞ் செய்யுட்பிரமாணத்தானே அவர்மெய்வரலாறு இனிது விளங்கு தலுடன், அவர்வடபுலத்து வாதாவி என்னும் நகர்மேற்படையெடுத்துச்சென்று அதனைத் தம்மரசற்கு வயமாக்கினாரென்னுஞ் சரிதநுண்பொருளும் புலப்படுவ தாயிற்று. இனி, வடநாட்டின்கட் டொகுக்கப்படுங் கல்வெட்டுப் பட்டையங்களானே நரசிம்மவருமன் முதலாவான் என்னு மரசன் மேலேயுரைத்த வாதாவி நகரை யழித்துத் தன்வயப்படுத்தினாரென்பதும், அப்போது அந்நகர்வேந்தனா யிருந்தோன் புலிகேசன் இரண்டாமவனென்பதும் பெறப்படு கின்றன. இந்த நரசிம்மவருமனென்னுமரசன் பல்லவவேந்தர் மரபில் வந்தோனாவன். புலிகேசனென்னுமரசன் மேனாட்டுச் சாளுக்கியவேந்தர் மரபில்வந்தோனாவன். இனி, இப்பல்லவவேந்தர்க்கும் மேனாட்டுச் சாளுக்கிய வேந்தர்க்கும் பலமுறையாலும் போர்நிகழ்ந்தனவென்பதும் அப்பட்டையங்களானே பெறப்படும் உண்மையாம். மேலே மொழிந்தவாதாவிநகர்வெற்றி நரசிம்மவருமனை யொழித் தொழிந்த பல்லவவரையர்மேற் செல்லாமையான், தம்மரசற்குத் தண்டத் தலைவராய்ப் படையெடுத்து மேற்சென்ற சிறுத் தொண்டரை அவ்வாறுடையனான வரசன் நரசிம்மவருமன் முதலாவானேயாமென்பதொருதலை. பெரிய புராணத்தி லிவ்வரசன் பெயர்ச்சொல்லப்பட்டதில்லையாயினும், வாதாவி நகரிற் காணப்படும் பல்லவவரையன் கல்வெட்டுப்பட்டைய மொன்று அவ்வெற்றிக்குரியோன் அவ்வரசனென்றுரைக்கும் உறுதிமொழிபற்றிச் சிறுத்தொண்டர்தம் மரசன் நரசிம்ம வருமன் முதலாவானேயாமென்பது உய்த்துணர வல்லார்க்கு நன்குபுலனாம். இனி, மேலேகாட்டிய புலிகேசன் இரண்டா மவனான மேனாட்டுச் சாளுக்கியவேந்தன் செங்கோ லோச்சிய காலவளவை வடநாட்டுச் சிலா சாதனங்கள் கொண்டு டாக்டர் ஹூல் என்னுஞ் சிலாசாதன பரிசோத கராற் கி-பி 609 முதல் 642 இறுதியாகவென நன்று குறித்திடப் பட்டது. இங்ஙனம் கி-பி ஏழாம் நூற்றாண்டின் றொடக்க முதலதனீடை யளவுஞ் செங்கோலோச்சிய புலிகேசவாசனைப் புறங்கண்ட நரசிம்ம வருமன் முதலாவோனும் அந்நூற்றாண்டின் றொடக்க முதலிடையளவு மிகுந்திருக்கற்பாலனாம். இனி, அந்த நரசிம்ம வருமனென்னும்வேந்தற் குறுதுணைத் தண்டத் தலைவரான சிறுத்தொண்டரும் அந்நூற்றாண்டின் முற்பகுதியி லிருந் தாராகற்பாலார். இதுகிடக்க. இனி, ஞானசம்பந்தப்பிள்ளையார் திருச்செங்காட்டங் குடிக்கு எழுந்தருளியகாலையில் ஆண்டிருந்த சிறுத்தொண்ட ராற்றாம் பெரிதும் மெய்யன்போடுபசரிக்கப்பட்டு அவரோடள வளாவினாரென்பது அந்நாளிற் சண்பைநக ராண்டகையா ரெழுந்தருவ முன்னாக வெதிர்கொண்டு கொடுபுகுந்து முன்னூல்சேர் பொன்மார்பிற் சிறுத்தொண்டர் புகலிகா வலனார்த நன்னாமச் சேவடிகள் போற்றிசைத்து நலஞ்சிறந்தார் என்பதனானும், சண்பையர்தம் பெருமானுந் தாங்கரிய பெருங்காதற் பண்புடைய சிறுத்தொண்ட ருடன்பயின்று மற்றவனர மண்பாவுந் திருப்பதிகத் தினில்வைத்துச் சிறப்பித்து நண்பருளி யெழுந்தருளத் தாமினிது நயப்புற்றார் என்பதனானும் நன்குபெறப்படுகின்ற. இஃதல்லாமலும், ஞானசம்பந்தப் பிள்ளையார் தாமே சிறுத்தொண்ட நாயனாரைச் சிறப்பித்துச் செடிநுகருஞ் சமணர்களுஞ் சீவரத்த சாக்கியரும் படிநுகரா துயருழப்பார்க் கருளாத பண்பினான் பொடிநுகருஞ் சிறுத்தொண்டர்க் கருள்செய்யும் பொருட்டாகக் கடிநகராய் வீற்றிருந்தான் கணபதீச் சாத்தானே எனவும், செந்தண்பூம் புனல்பரந்த செங்காட்டங் குடிமேய வெந்தநீ றணிமார்பன் சிறுத்தொண்ட னவன்வேண்ட வந்தண்பூங் கலிக்காழி யடிகளையே யடிபரவுஞ் சந்தங்கொள் சம்பந்தன் றமிழுரைப்போர் தக்கோரே எனவுந் திருப்பதிகங்கட்டளையிட் டருளியவாற்றானும் அவர்கட்பின் கிழமைத்திறந் தெற்றெனவுணரப்படும். இதனா னே, அச்சிறுத் தொண்டரோடொருகாலத்தினரான ஞான சம்பந்தப்பிள்ளையார் காலமும் நரசிம்மவருமனென்னும் பல்லவவேந்தன் காலமும் ஒன்றேயாதல்பெற்றாம். பெறவே, ஞானசம்பந்தப்பிள்ளையார் கி-பி ஏழாம் நூற்றாண்டின் முற்பாதி யிலே யிருந்தருளினாரென மலைவின்றி நிறுத்தப் பட்டவாறுகாண்க. இன்னும், திரிசிரபுரமலைமுழைஞ்சிற் காணப்படுங் கல்வெட்டுக்களானே நரசிம்மவருமன் முதலாவானுக்குத் தந்தையான குணபாரனென்னும் மகேந்திரவருமன் முதலாவான் காலத்திலே திருநாவுக்கரையரென்னும் அப்பர் சுவாமிகளிருந்தா ரென்பது டாக்டர் ஹூல் என்னுந் துரைமகனார் நிறு வியவாற்றால் இனிதுவிளங்குதலின், அவ்வப்பர்சுவாமிகள் கி-பி. ஆறாம் நூற்றாண்டின் பிற்பாதியினும் ஏழாம் நூற்றாண்டின் முற்பாதியினும் இருந்தா ரென்பது தேற்றமாம். இதனானெ, அப்பர்சுவாமிகள் 80-வயதளவு மிருந்தாரெனக் கூறுந் தமிழ்நூல் வரலாற்றுண்மை பெரிதும் வலியுடைத் தாமாறுகாண்க. இனி, எடுத்துக்கொண்ட மாணிக்கவாசகர் காலநிருணயஞ் செய்தற் பொருட்டு மேலே காட்டிய அப்பர் ஞானசம்பந்தப்பெருமான் முதலியோர் காலம் கி-பி ஆறாம் நூற்றாண்டின் பிற்பாதிமுதல் ஏழாம் நூற் றாண்டின் முற்பாதி யீறாகவாமென்பது பெறப்படுதலின், அதுகொண்டு மாணிக்கவாசகர் காலம் கி-பி ஆறாம் நூற்றாண்டின் முற்செல்லுமாறு காட்டுவாம். அப்பர் சுவாமிகள் அருளிச் செய்த பாடிளம்பூதத்தினானும் என்னுந் திருவாரூர்ப் பதிகத்தில், நரியைக் குதிரை செய்வானு நரகரைத் தேவுசெய்வானும் விரதங் கொண்டாட வல்லானும் விச்சின்றி நாறுசெய்வானும் என்னுஞ் செய்யுளில் மாணிக்கவாசகர்பொருட்டு இறைவன் நரியைக் குதிரையாக்கிய திருவிளையாடல் நன்கெடுத்துக் குறித்திடப்பட்டது. தம்பொருட்டே பெருமான் நரிகளை யெல்லாங் குதிரைகளாகத் திரித்துக் கொண்டு போதருவானா யினானென மாணிக்கவாசகசுவாமிகள், நரியைக் குதிரைப் பரியாக்கி ஞால மெல்லாம் நிகழ்வித்து எனவும், நரிகளெல்லாம்பெருங்குதிரையாக்கியவாறன்றேயுன்பேரருளே எனவும், அரியொடு பிரமற் களவறி யொண்ணான் நரியைக் குதிரை யாக்கிய நன்மையும் எனவுந் தாமே தம் அருட்டிருவாக்கான் மொழிந்திடுதலின், இறைவன் செய்தருளிய அத்திருவிளையாடல் மாணிக்கவாசகர் பொருட்டேயாமென்பது இனிது தேறப்படும். இப்பெற்றி தேறாத ஆங்கிலமகனான இன் என்பவர் சிலப்பதிகாரத் தானும் திருவிளையாடலானும் வன்னியுங்கிணறுமழைத்த அற்புத நிகழ்ச்சி யிரண்டாதல்போல நரியைக் குதிரையாக்கிய இவ்வற்புதமும் மாணிக்கவாசகர்பொருட்டொன்றும் அதற்கு முன்னே நிகழ்ந்த வேறொன்று மாக இரண்டாகலாமெனவும், அங்ஙனமஃதிரண்டாகவே அப்பர்சுவாமிகளாற் குறித்திடப் பட்ட அவ்வற்புதநிகழ்ச்சி மாணிக்கவாசகர் மேலதாமாறில்லை யெனவுந் தமக்குத் தோன்றியவாறேதருக்க வரம்பு பிறழ்ந்தெழு வாராயினார். வன்னியுங் கிணறு மழைத்த திருவிளையாடல் இரண்டாதல்போல நரியைக் குதிரையாக்கிய திருவிளை யாடலும் இரண்டாகல்வேண்டுமென்னும் யாப்புறவு யாங்ஙனம்பெற்றீரெனக் கடாவுவார்க்கு அத்துரைமகன் இறுக்குமாறின்றாம். வன்னியுங் கிணறுமழைத்த திருவிளை யாடல் இரண்டாதற்குப் பிரமாணம் யாண்டுங் கண்டிலம். சிலப்பதிகாரத்தினும் திருவிளையாடலினுங் கண்டாம். அவ்வாறே நரியைக் குதிரையாக்கிய திருவிளையாடலு மிரண்டாதற்குப் பிரமாணம் யாண்டுங் கண்டிலம். இங்ஙனம் பிரமாணப்பொருள் காட்ட வல்லாதார் தாமும் தமக்குத் தோன்றிய வாறெல்லாங் குழறி உண்மையாராய்ச்சிசெய்வா மெனப் புகுதல் மைத்துனர் பல்கி மருந்திற்றெளியாத பித்த னென்றெள்ளி நகையாடுதற்கேதுவாம். இங்ஙனந் தருக்கநெறி பிழைத்தெழுதப்படும் போலிப்பொருள்களும் ஆங்கிலப் பாடையில் வரையப்படுதலிற் சிறந்தெடுத்துப் பாராட்டப்படு கின்றன. அரசியன்மொழியல்லாத தமிழ் முதலிய சொற்களி லெழுதப்படும் அரியபெரிய வுண்மைப் பொருள்களுஞ் சிறவாதொழிகின்றன. என்னை! என்னை! இம்மயக்கவுல கின்றன்மை யிருந்தவாறு! இது கிடக்க, நரியைக் குதிரையாக்கிய திருவிளையாடல் மாணிக்கவாசகர் பொருட்டன்றிப் பிறிதாகவும் இயற்றப்பட்டதுண் டென்பதற்குப் பிரமாணம் யாண்டுங் காணப்படாமையானும், அத்திருவிளையாடல் தம்பொருட்டே நிகழ்த்தப்பட்டதென மாணிக்கவாசக சுவாமிகள் தாமேதம் அருமைத் திருவாக்காற் கிளந்தெடுத்து மொழிந்தருளுதலானும், கல்லாடம் முதலான தொன்னூல் களும் அத்திருவிளையாடல் மாணிக்கவாசகர் பொருட்டே நிகழ்த்தப்பட்டதெனத் துணிவு தோன்றக்காட்டு தலானும் அத்திருவிளையாடல் பிறிதொன்றுளதெனக்கோடல் ஒருவாற்றானும் பொருந்துமாறில்லை. ஆகவே, மாணிக்க வாசகர் பொருட்டுச் செய்யப்பட்ட அத்திருவிளையாடல் அப்பர்சுவாமிகளான் மொழிந்தருளப்பட்டமையானே, மாணிக்கவாசகர் காலம் ஆறாம்நூற்றாண்டின் முன்னதாதல் இனிது துணியப்படும். இது கிடக்க. இனி, நம்ஆப்தநண்பர் திருமலைக்கொழுந்துபிள்ளை யவர்கள், மாணிக்கவாசகர் காலம் கடைச்சங்க நிலைபெற்று விளங்கிய கி-பி முதனூற்றாண்டின்கட்படுவதாமெனக் கூறிய உரைப்பொருளிற் கருத்தொருப்பாடுறுகின்றிலம். என்னை? கடைச்சங்கத்தார் காலத்துச் செய்யுளியல்வழக்கின்கட் படுவதன்றாய், அக்காலைத் தமிழ்க்குப் புறம்பாய்க் கிடந்த விருத்தப்பாட்டுக்கள் திருவாசகத்தின் கட்காணப்படுதலா னென்பது. கடைச்சங்கத்தார் செந்தமிழ்ச்செய்யுளியல் வழக்கின் கண்ணே விரவப்பெறாத விருத்தப்பாக்கள் உலகியலாறாய் மற்றுத் தமிழ்ப் புலனெறிவழக்கிற் புகுதப்பெறுதற்கு அச் சங்கத்தார் காலத்தின்பின் இரண்டு மூன்று நூற்றாண்டு கழிதல் வேண்டுமாதலான் மாணிக்கவாசகர் கடைச்சங்கத்தார்காலத் திருந்தாரெனக்கோடல் சரிதவழுவாமென்றுணர்க. அற்றேல், விருத்தப்பாக்கள் பெருகிய செய்யுள்வழக்காய் நடைபெறு தற்குத் தொடங்கிய அப்பர்சுவாமிகளிருந்த ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியிலே மாணிக்க வாசகரிருந்தாரெனக் கொள்ளாமோவெனின்; - கொள்ளாம், திருவாசகத்தின்கண் விருத்தப்பாக்கள் மிக்கு விரவப்பெறாது ஒருசிலவே காணக் கிடத்தலானும், தமிழ்ச் செய்யுளியல் வழக்கிற்கே சிறப்பாவன வாகிய அகவலுங்கலியும் பெரிதுமயங்கிக் கிடத்தலானும் தமிழ்ச்செய்யுட்கள் முறைமுறையே வழக்குவீழ்ந்துவிருத்தப் பாக்களிடையிடையே விரவப்பெறுகின்ற காலத்தே திருவாசகமருளிச் செய்த மாணிக்கவாசகரிருந்தாரெனல் ஒருதலையாம். அக்காலந்தானியாதென்று நுணுகி நோக்கு வார்க்கு அது கி-பி மூன்றாம் நூற்றாண்டாமென்ப தினிது விளங்கும். அல்லதூஉம், மாணிக்கவாசகர், நக்கீரர் முதலான தெய்வப்புலவர் விளங்கிய காலத்திருந்தாராயின் அவரைக் குறித்தேதும், மொழிந்திடுவர்; அங்ஙனமொன்றுஞ் சொல்லா மையானும், மதுரையிலாய்ந்த தமிழைப்பற்றிப்பேச வந்த விடத்தும் உயர்மதிற்கூடலி னாய்ந்த வொண்டீந்தமிழின்றுறை என்று இறந்தகாலத்தானுரைத்துக் கடைச்சங்க காலந்தமக்கு முன்னதாதல் குறிப்பானுணாவைத்தலானும் அவர்காலமும் வேறே கடைச்சங்ககாலமும் வேறே யென்பதுணரற்பாற்று. கடைச்சங்ககாலத்திருந்தாராயின் உயர்மதிற்கூடலி னாயு மொண்டீந்தமிழின் றுறை என்று கூறிவிடுவார்; அங்ஙனங் கூறுதலாற் செய்யுள் சிதையுமாறுமின்று. இதுகிடக்க. இனிக் கல்லாடம் சங்கச்செய்யுளாதலின் அதன்கட் குறிப்பிடப்பட்ட பிட்டுக்குமண்சுமத்தன் முதலியவற்றானே அவ்வற்புதங்கள் நிகழ்தற்கேது வாயிருந்த மாணிக்கவாசகர் காலம் கடைச்சங்ககாலமெனத் துணியப்படுமாம் பிறவெனின்;- நன்று கடாயினாய், கல்லாடம் சங்கச்செய்யுளேயாமென்று துணிதற்குப் பிரமாணம் யாண்டுங்காணப்படாமையானும், அல்லது சங்கச் செய்யுளென்றே கோடுமாயினும் அது பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு முதலியவற்றின்கட்சே ராமை யென்னையெனுங்கடா நிகழ்தலானும், சங்கச்செய்யுண் மேற்கோள்கொண்டுரை யெழுதுவாரான இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், பரிமேலழகியார் முதலான உரையாசிரியன் மார் யாரும் அதன்கண் மேற்கோள்கொண்டு தம்முரையிற் குறித்திடாமையானும், சங்கத்தார் காலத்து அகவற்செய்யு ளமைப்பிற்குங் கல்லாடவகவற்செய்யுளமைப் பிற்கும் வேறுபாடு பெரிது காணக்கிடத்தலானும் பிறவாற்றானுங் கல்லாடநூல் சங்கத்தார் காலத்ததாதல் செல்லாதென்பதூஉம். செந்தமிழ்நாட்டின்கட்பரவியுலாவும் ஞானசாகரத்தி னருமைபெருமை யித்தன்மைத்தென்றியாம் புகலமாட்டுவே மல்லேம். அதன்கட் கலைவல்லபண்டிதர்களாலெழுதப்பட்ட உயர்தரவிஷயங்கள் பல்லோர்க்கும் பயன்றருவனவாமென்பது அதனைப் படிப்பார்க்கேநன்குதோன்றும். அச்சீரியப் பத்திரிகை எம்போன்ற சிற்றறிவினர்க்கு அறிவுகொளுத்தி இந்நிலவுலகின் யாண்டும் பரவிஎன்றும் நின்று நிலவத்திருவருளைச் சிந்திக் கின்றேம். அவாவொன்றே மேற்கொண்டு இத்தகையமாட்சி நிறைந்த பத்திரிகை வாயிலாய் எம் புல்லறிவுக்கெட்டிய சிறியதோர் வியாசத்தை யெழுதத்துணிந்தே மாயினும், பெரியோர் சொற் சுவைபொருட்சுவை குன்றிய விதன்கண் குறைகாணா தெம்மைக்கடைக்கணிக்கவேண்டுகின்றேம். மெய்ந்நலவிளக்கம்: மெய், நலம், விளக்கம் ஆகிய மும்மொழிகளடங்கிய ஒருதொடர். இவற்றில், மெய்யெனினும் உடம்பெனினுமொக்கும், நலமெனினும் சுகமெனினுமொக்கும், விளக்கமென்பது விளக்கிக் காட்டுவதொன்றாம். ஆகவே உடம்பின் சுகத்தைப்பேணியொழுகும் விதியை விளக்கிக் காட்டுவதான் இப்பெயர்த்தாயிற்று. அற்றேல், சரீரசுகம்பேணு வதவசியமாமோவெனின், மக்கட்கு ஆன்மாசரீரமென விரண்டுளவேனும், ஆன்மாவின்றிச் சரீரமியங்கவும், சரீரமின்றி ஆன்மா வியங்கவுங் கூடற் பாலனவல்ல. ஆன்மாவுக்கறிவே சிறந்தது. யாந்திருவருளைச்சிந்திக்கவும், பிறர்க்குதவவும், நமக்குரிய தொழிலை யெட்டுணையுங் குறைவின்றி யியற்றவு மறிவே காரணமாம். ஆகையான், இத்துணைச்சிறப்பினதாகிய அறிவைப்பெருகச்செய்வது நம்மொவ்வொரு வருக்குமின்றி யமையாக் கடப்பாடாம். சரீரசுகம்பேணுது பல வேறுநூற் பயிற்சிசெய்து கலைகள்கற்றுக் கல்வியறிவை வளரச்செய்வோ மென்பாருளராலோவெனின், அற்றன்று. என்னை? அங்ஙன முரைப்பரேற் சுவரின்றிச் சித்திரம் வரையப்புகுவாரின் பெற்றியடைவர்; அறிவு சரீரத்துடனொருமித்து அபிவிர்த்தி யடையற்பாலது. சரீரசுகத்தைக் கவனியாது பின்னாட்பிணி யுற்றுப் படுகிடையாய் வாழ்நாளெல்லாம் துன்பத்திலே செலுத்துபவரெங்ஙன மறிவையோங்கச் செய்வர்? சரீரபலங் குன்றக்குன்ற அறிவின்விரிவுங் குன்றுமென்பதறியார் யாரோ! உடல்வலியுள்ளவன் ஊன்றிய அறிவைக்கொள்வான்; அஃதில்லாதான் பேதையனாவான். பிணிகள்விதியினாலாதல், தற்செயலாலாதல், பேய்க் கோளாற்றினா லாதல் வருமென்றுரைக்கும் பேதையருமுளர். அவனன்றியணுவு மசையாதாகையான், நோயுமவனாலேவப் படுவதெனின், யாம் என் செய்வோம். பட்டே தீரல் தகுதி யென்றுரைப்பாருமுளர். யாம் சுகதேசி களாகவும், மனவெழுச்சி யுடைய வர்களாகவு மிருக்கக் கடவுள் விரும்புவதின்றோ? அவனாற் படைப்புண்ட இயற்கைப்பொருள்கள் யாவும் நம்பொருட்டே யமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் நற்குணந் தீயகுண மிரண்டுமுள. அப்பொருள்களைத் தக்கவாறு கையாடாமல் வீணிலவைகளை யழித்தலால் என்றும் யாம் நோயுற்றுத் துன்புறுகின்றோம். கொழுந்து விட்டெரியும் விளக்கைக் கைப்பற்றமுயன்றகுழந்தை தன்கை சுடப்படுதலால் கையை வாங்கிக்கொள்வதுமன்றிப் பின்னரங்ஙனஞ்செய்யத் துணிதலுமில்லை. அதுபோன்று வருந்தும் நோயினரும் ஔடதந்தேடுவது மன்றிக் காரணத்தைத் தேடி அதனைவிலக்கி யொழுக முயலுகின்றனர். இவ்வாறு நோயைத் தள்ளற்குங் கொள்ளற்குமிடமாகிய இயற்கைப்புறப் பொருள்கடாம் யாவை? அவை எவ்வாறு சுகவழிகளை யேற்றவுந் தாழ்த்தவும் வல்லனவாமென்பதையெடுத்துரைக்கப் பெறுவ திவ்விஷ யத்தின் கருத்தாமென்றுணர்க. இனி, புறப்பொருள்களை இரண்டுகூறாகவகுப்பாரு முளர். அவை: வாயுமண்டலம், நீர், பலவேறுணவுப் பொருள் கள், மா, புட்கள் முதலியவும் பிறவுமாகிய அசையும் பொருள்களும்; நிலம், புல்பூண்டுமுதலான தாவரவர்க்கங்கள் இல்லங்கள் முதலியவும் பிறவுமாகிய அசையாப் பொருள் களுமாம். இனி, சாத்திரவழியாக ஆராயுமிடத்து எல்லாப் பொருள்களும் கனபதார்த்தங்கள், திரவபதார்த்தங்கள், வாயுபதார்த்தங்கள் என முப் பகுப்புடையனவாம். இவற்றுள்ளும் வாயுபதார்த்த மாகிய வாயுமண்டலமே மக்கட்கு நிரம்ப அவசியமுடைய தாகும். என்னை? உணவின்றி நாலைந்துநாளும், பானமின்றி ஒரு நாளும் உயிர்பிழைக்கினும், வாயுமண்டல மின்றி யோரைந்து நிமிஷமு முயிரோடிருப்பதரிது. தாய்க்கருப்பையினின்று புறந்தோன்றின ஒருகுழவி, பிராணனுக்காதரமாக அக்கணத்தே கொள்வது வாயுவேயாம். நாம்பிறப்புமுதலிறப்புவரையும், விழித்திருப்பினும், தூங்கினும் இடைவிடாமல் வாயுவை யுள்ளிழுத்தும் புறம்போக்கியும் வாழ்கின்றோமாதலால் அது நம்மவர் உயிர்வாழ்க்கைக் கெவ்வளவு அவசியமாமென ஈண்டு விரித்துரைக்கப்புகுவது அநாவசியமென விடுத்தேம். ஆயினும், அச்சிறந்த வாயுமண்டலம் மிகவும் மாசற்றிருக்கவேண்டு மென்பது கவனிக்கற்பாலதாம். என்னையெனின், இப்பூமண்டல மனைத்தும் பரந்து நூறுமைல் ஆழங்கொண்டு அசைந்து திரியும் வாயுமண்டலம் மக்கட்கென்றே அமைந்திருக்கையில் எங்ஙன மசுத்தமாகுமென்று வினவுவார்க்கு அஃதசுத்தம் பெறுமா மென்பது காட்டிவிடுப்பாம். மக்களானும் ஏனைப்புறப் பொருளானும் அசுத்தம் பெறுகின்ற வாயுமண்டலந்திரும்பவு மப்பொருள் களானே சுத்திகரிக்கப்படுவதெங்ஙனமாமென்பது ஈண்டுக்காட்டுவாம். அதைமுற்றிலும் நன்குணரும்பொருட்டு வாயுமண்டலத்தினியல்பு இனைத்தென ஆராய்வாம். வாயுமண்டலத்தின்கண்ணுள்ள சுத்தவாயு, நிறம்சுவை நாற்றமுதலியன வின்றி, நிறை, அளவு, விரிதல் முதலான குணங்கள் பெற்றுளது. அதன்கண் தொகுப்பாயுள்ள வாயுக்களாவன; உயிர்வாயு, உப்புவாயு, கரிவாயு, நீர்வாயு என்பனவாம். இவைகளில் உயிர்வாயுவே அதிமுக்கியமானது மவசியமானதுமாம். உயிர்களுக்காதாரமாவதிவ்வொன்றே யென்றுதெளிக. இஃதின்றி உயிர்கள் ஒருகணமும் பிழைத்திரா. நெருப்பிற்குங்காரணமிதுவே. நாம் நாடோறு மருந்துகின்ற நீரும் உயிர்வாயுவின் சம்பந்தத்தினாலே யேற்பட்டுளதாம். 9-பங்குநீரில் 8-பங்கு இவ்வாயு உண்டென்றே உணர்ந்து கொள்க. இனி, உப்புவாயுவின் றன்மையென்னவெனின், வாயு மண்டல மடங்கலும் உயிர்வாயு ஒருபங்கானால் உப்புவாயு நாலுபங்கதிமுளதாம். இவ்வாயு உயிர்வாயுவுடன் கலந்திரா விடின், இவ்வுலகின்கண்ணுள்ள எல்லாப்பொருள்களுமுடனே நீராய்ப்போகுமென்பது நிச்சயம். உயிர்வாயுவின் வலியைத் தணிப்பதற்கென்றே கடவுளிதை இப் பிரபஞ்சத்திலமைத்து வாயுமண்டலத்திற் பொருத்தினாரென்று நாம்கோடற்பாலது. அவரது ஞானமும் மாட்சியுமித்தன்மையவாமென அறிவீன ராகிய யாமளந்தறிய மாட்டுவேமல்லேம். உலகிலுள்ள எல்லா உயிர்ப்பொருள்கண்மாட்டும் இவ்வாயுவை மிகுதியுங் காணலாம். தீக்கொழுந்தையிதனுட் புகுத்தினால் அஃதுடனே யணைந்துபோகாநிற்கும். இனிக்கரிவாயுவென்னவென்றாராய்வாம். வாயுமண்டலத் தின் எப்பகுதியிலேனும் சிறிதளவு வாயுவை எடுத்துப்பிரித்துச் சீர்தூக்கின் 2500 பங்கிலிஃதோர் பங்காகக் காணப்படும். இதனமைப்புத் திறனென்னையெனின், உலகியற் பொருள்கள் யாவும் கரியென்ற ஓர்முதற் பொருளை யுள்ளடக்கியதாம். அவைகள் தீப்பற்றி எரியுங்கால் இக்கரி, அவைகளின் மற்றைய அம்சங்களினின்று வேறுபிரிக்கப்பட்டு வாயுமண்டலத்தின் உயிர் வாயுவோ டொற்றித்துக் கரிவாயுவைப் பயப்பதாமென அறிகின்றோம். இது மற்ற வாயுவினும் மிக்க நிறையுள்ளது. உப்புவாயுப்போன்று இதுவும் நெருப்பெரியப் பண்ணாது. மக்கள்புறம்போக்கும் வாயு, பூமியினின்று வெளிப்படும்வாயு, எரிமலை, அடுத்தவாயு, முதலியன இவ்வாயுவை மிகுதியும் உடையனவாம். மேலேகூறிய அளவோடுவாயுமண்டலத்தில் இது பொருந்தியுள்ளதாயின், மக்கட்கோர் தீங்கும் பயவாதா மெனின்,- அற்றன்று அளவுக்குமிஞ்சிய அமுதும் நஞ்சாம் ஆகையான் இவ்வாயு தன்னளவுக்கோர் சிறிதேனும் அதிகப்படின் உடனே பலவேறு பிணியையும் தேகவலிக்குறை வையும் பயப்பதொன்றாமென்க. இனி, நான்காவது அம்சவாயுவாகிய நீர்வாயுவென்பது என்னையெனிற் கூறுவாம். தண்ணீர் நிறைந்த ஓர்கலத்தை வாயுமண்டலத்தின்கண் வைப்போமாயிற் கொஞ்சம் கொஞ்சமாக நங்கட்புலனுக்குத் தோன்றாமலே அக்கலத்தின் நீர் ஓர்துளியுமின்றி மறையுமாறு காணப்படும். கடனீரும் அருவி நீரும் ஏரிநீரும் அத்தன்மையனவேயாகும். ஞாயிற்றின் கதிரால் ஆவியாயெழும்பிய இவ்வாயு, வாயுமண்டலத்தால் இழுத்துக் கொள்ளப்படுவனவாம். முகிலும், பனியும், மழையும், உண்டாவதற்குக் காரணமுமிதுவேயாம். இந்நீராவியினளவு சீதோட்டின நிலையைச்சார்ந்து நிற்கின்றது. அஃதெவ்வா றெனின், வெயில்வெப்பம் மிகுந்திருக்கும் நாளில் நீர்வாயு அதிகமாகஎழுப்பப்பட்டும், குறைந்த நாளில் குறைவாக எழுப்பப்படுவதுமாம். ஆகையானே, நம்மவர் உரக்கவெயிற் காய்ந்தால் அன்றுமழையை எதிர்நோக்குகின்றனர். இந்நீர்வாயு வின்றி மக்கள் தேகமும் புல்பூண்டுகளும் உலர்ந்து வற்றிப்போம். ஆகையால் வாயுமண்டலத்தொகுப்பின் அம்சங்களாகிய உயிர்வாயு, உப்புவாயு, கரிவாயு, நீர்வாயு என்பவைகளின் தன்மை இன்னவென ஒருவாறு ஆராய்ந்தோம். ஈண்டுமேலும் விரித்துரைப்பிற் பெருகுமெனவிடுத்தாம். இதுநிற்க. இனி, வாயு, நிறை, அளவு, விரிதல் முதலிய குணங்கள் உடைத்தென்றுமுன்னரே கூறியுள்ளோம். மூன்றாவது குணமாகிய விரிதல் ஒன்றையே ஈண்டு ஆராய்வது அவசிய மெனக்கண்டு ஏனைய இரண்டினையும் விரியாது விடுத்தாம். வெப்பத்தால்பொருள்கள் விரிவடைகின்றன; குளிர்ச்சியால் சுருங்குத லுறுகின்றன என்பது அறிவோமன்றோ? அஃது அவ்வாறாதல் ஓர் உதாரணத்தால் விளக்கிக் காட்டுதும், கொல்லன் சக்கரத்தினின்று சுழன்ற ஓர் இருப்புப்பட்டையை அதனுடன் பொருத்தவிரும்பின் முன்னர் அப்பட்டையை யனலிற்காய்ச்சிப்பின்னர் அதனுட்சக்கிரத்தைப் புகுத்திச் சுற்றிலும் தண்ணீர்வார்க்கின்றான். இதையுற்றுநோக்குங்கால் நம்மாராய்ச்சியிற் றோன்றுவதியாதெனின், வெப்பத்தினால் விரிதலைப்பெற்றுச் சக்கிரம் தன்னுள்ளடங்கவிடங் கொடுத்துப் பின்னர்க்குளிர்ச்சியினாற் சுருங்கி அதையிறுகப் பற்றிக் கொள்ளும் நுட்பத்தையறிவதொன்றாம். அவ்வாறே பூமியின் ஒருபாகத்தின்வாயு வெப்பமடைந்து விரிதல்பெற்று இலேசாகி மேலேசெல்லச்செல்ல அப்பகுதியை நிரப்பப்புறப் பக்கத் திலுள்ள புதிய குளிர்ந்தவாயு விரைந்துசெல்கின்றதென்ப தனைத் தெளிவாயறியலாம். ஆகவே, நமதில்லங்களிலும் இத்தன்மைய இயற்கை விதிகள் நாமறியாமலே ஓய்வின்றி நடந்துவருமாறும் பின்னர் ஓரிடத்துத் தெளிவுறக்காட்டுவாம். இனிவாயுமண்டலம் அசுத்தமாவதெங்ஙனம் என்று விசாரிக்கப்புகுவாம். நம்மைச் சுற்றியிருக்கும் சாதாரணவாயு முன்னேயுரைத்த தொகுப்பாயுள்ள வாயுக்களைத் தன்னகத்தே கொண்டிருப்பதுமன்றி, அளவுக்கதிகமாய்க் கரிவாயுவானும் அழுகிய விலங்கு, புல், பூண்டு முதலியவற்றின் அணுக்களானும், கரியோடுகூடிய அழுக்கு வாயுக்களானும், கட்புலனுக்குத் தோன்றாத தூசி, துரும்பு நுண்ணிய புழுக்களானும் அங்கணத்தி னின்று வெளிப்படும்வாயுக்களானும், இன்னும் சொல்லற்கரிய பலவேறு அசுத்தங்களானும், நிரம்பப்பெற்றுள தாமென உற்றுணர்வார்க்கு இனிதுவிளங்கும். இனி, இவ்வாறு அளவுக்கதிகமாக அசுத்தங் களுண்டாவதன் காரணங்கள் பல உளவேனும், ஈண்டு அவற்றுள் ஒருசில எடுத்துக்காட்டுவாம். நமது நெஞ்சில் எண்ணிலடங்காவணுத்துவாரங்களைப்பெற்ற சுவாசப்பை ஒன்று அமைந்திருகின்றது. வாயினுட் பக்கமிருந்து ஒருசுவாசக் குழாய் இப்பையினுட் செல்லுகின்றது. நாமுட்கொள்ளும் வாயு நாசிவழியானும் வாய்வழியானும் இச்சுவாசப்பையினுட் சென்று அத்துவாரங்களை நிரப்புகின்றது. இப்பையைச் சுற்றிமெல்லிய இதழ்போன்ற ஓர்தசையினாற் பிரிக்கப்பட்டு மிகச்சிறிய அநேக இரத்தக்குழாய்கள் யாண்டும்பரந்து கிடப்பதைக்காணலாம். தேகமெங்குமுள்ள அசுத்தவாயுக் கணிறைந்த இரத்தம் இக்குழாய்களை நிரப்பவிரைந்து வருகின்றதையும் பார்க்கலாம். இவ்வாறுவாயுவும் இரத்தமும் மெல்லிய தசையினானே பிரிக்கப்பட்டுச் சமீபித்தணைய அன்னப்புள் எங்ஙனம்பாலும் நீரும் கலந்தபானத்தில் பாலைநீரி னின்றும் பிரித்துப்பருகும் இயல்பினதோ, அங்ஙனமே இவ்விரத்தம் வாயுவின் தொகுப்பினுள் ஒன்றாகிய உயர்வாயு வைப்பிரித்துத் தான் கவர்ந்து, தன் அசுத்தங்களை வாயுவுக்கீந்து போதரும் இயல்பினதா யிருக்கின்றது. இச்செயல் இத்தகைய விநோதமாயின் இதனை இயக்குகின்ற பரமான் மாவின் நுட்ப ஞானத்துக்கோரளவுண்டோ சொல்லுமின்! இதுநிற்க. இனி, இவ்வாறுவெளிப்போந்த வாயுவின் தன்மை இன்னதென ஆராயப்புகின், இதன்கண்ணுள்ள கரிவாயு இயற்கைக்கு நூறுபங்குக்கு மேற்பட்டும், நீர்வாயுமிகுந்தும், உடலிற்கொள்ளத்தகாத அழுக்குகள் பலவாயுவும் விரவிக் கிடப்பதைக் கண்டுணரலாம். ஒருசிற்றில்லின்கட் பலர்கூடிச் சிறிதுகாலங்கழிப்பரேல், அவர்களுக்கோர் வகையான இளைப்பும், மயக்கமுந், தலைநோயுமுண்டாவதைக் காண்போம். கற்கத்தாவில் இருணிறைந்த ஓர்சிற்றறை யிலோரிரவில் 46-மக்களடைபட்டுக்கிடந்து மற்றைநாட் காலையில் தளர்ந்துயிர்த் தோர் இருபத்து மூவரானவாறு நாம் சரிதவாயிலா கிவின்றோம். இச்சரித நிகழ்ச்சி அசுத்தவாயு மண்டலத்தினால் வருங் கேட்டையுணர்த்துமோர் அத்தாக்ஷி யாகுமெனின் வேறு கூறுவதென்னை? கரிவாயுவொன்றே இக்கேட்டைப் பயந்ததா மெனின். அற்றன்று; போதுமான உயிர்வாயுவின் அளவு குன்றியதனாலும் வெளிவந்த கந்தகத்துக் கொப்பானவிஷ வாயுக்கள் முதலியனவற்றின் சேர்க்கை யானுமே அது நிகழ்ந்ததென்று ணரற்பாற்று. இனி, ஒருகண்ணாடியைக் கையிற்கொண்டு, அதில் மூச்சு விடுவோமாயின் அக்கண்ணாடி யீரம்பட்டு மங்குதலைக் கண்ணுறுகின்றோம். ஆகையான், யாம்புறம்போக்கும் வாயுவின் கண் நீர்வாயுமிகவு முண்டென்று தெளிந்துணர்க. மக்கள் இரவுகதவடைத்துத் தூங்கும் ஓரறையில் மற்றை நாட்காலையில் ஒருவன் கதவைத்திடீரென்று திறப்பானாயின், ஆண்டு ஒருவகையான நாற்றமுண்டாதலை யுணர்வான், சுத்தவாயுக்கு நாற்ற மென்றகுணமில்லையாகவும் இந்நாற்றம் அவ்வீட்டில் கண்ணுள்ள வாயுவுக்கமைந்ததெவ்வாறெனின், இரவெல்லாம் அவ்வீட்டார் புறம்போக்கிய வாயுவின் அசுத்தம் ஆங்குநிறைந்துள்ள சுத்தவாயுவினுயர்வையழித்து அசுத்த மாகினதென்பதேயாமென உணர்ந்துகொள்க. இவ்வாறெல்லா முணர்ந்தும், அந்தோ! நம்மவருள் ஒருவன் பிணியுற்றிருப் பானேல் தமரெல்லாமவனைச் சூழ்ந்துநின்று அவன்மீது சுத்தவாயு வீசுவதைத்தடுத்துத் தம்சுத்தவாயுவை அவன்பால் விடுத்து நாலு நாளின் பின் நீங்குமுயிரை ஒரேநாளிற் போகச் செய்வது பேதைமையன்றோ? இனி தீ மூண்டெரிவதனால், எரிபொருளிலுள்ள கரி, வாயுமண்டலத்துயிர் வாயுவோ சேர்ந்து கரிவாயுவாகி நம்மில்லத்தெல்லாம் பரந்துலாவும். அழிவுற்ற புல்,பூண்டு முதலியன உயிர்வாயுவோடு சம்பந்தமுறுதலால் உப்புவாயு சம்பந்தமுடையவாயுக்களும், கரிவாயுவும்இவைபோல்வன பிறவு முண்டாவதற்கிட முண்டாகின்றது. அங் கணத்தினின்று புறப்படும்மிக்க துர்க்கந்தமுள்ள கந்தவாயு, வேறு பல நச்சுவாயுக்கள் முதலியவற்றை யளவின்றி யுண்டுபண்ணும். இவ்வாறு வாயுமண்டலம் யாண்டும் அசுத்தமாவதால் வருந்தீங்கு யாதென வினவுவார்க்கு அது பலவேறு பிணிகளைப் பயப்பதாகுமென விடுப்பாம். இத்தீமையால் வரும் நோய்கள் பலவுளவேனும் ஈண்டுச் சிலவற்றைத்தந்து சொல்வாம்; அவையாவன இருமல், காசம், கயம், சுரம், முறைக்காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மலக்கட்டு, வயிற்றுளைச்சல், பலக்குறைவு, தொண்டைப்புண், பெருமூச்சு மேல்மூச்சு முதலியனவும் பிறவுமாம். இத்தன்மையவான நோய்களுக் கிடமாகிய வாயு மண்டலத்தைச் சுத்திசெய்ய முயல்வ தெவ்வளவு அவசிய மென்றுணர்ந்தவ்வாறு செய்யும் வழிகாண்க. இனி நம்மவர் முயற்சியாலொருவாறு வாயு சுத்திகரிக்கற் பாலதெனினும் இறைவன் இயற்கையிலேயே யனேகமுறையால் அதனைச் சுத்திசெய்யுமாறு காட்டுவாம். புல் பூண்டு முதலிய தாவரவர்க்கங்கானும் காற்றோட்டத்தினாலானும் மழை பனியினாலானும் ஒரு வாயுமற்றொன்றோடு கலத்தலானும் பூமிக்குப் பொருள்களைத் தன்னிடம் இழுக்கும் சக்தியுள தாதலானும் வாயுமண்டலம் சுத்தியடைகின்றது. புல்பூண்டு முதலிய தாவரங்கள் ஞாயிற்றின் ஒளியில் கரியைக் கரிவாயு வினின்றும் பிரித்துத்தான் உட்கொண்ட உயிர்வாயுவை வெளிப்போக்கும் சக்தியுடையதாகின்றது. ஆகையால் புல் பூண்டுகள் கரிவாவின் பெரும்பாகத்தைத் தன்னியக்கத்தால் ஒழித்து உயிர்வாயுவைப் பெருகச் செய்து அது வாயுமண்டலத் தோடொற்றித்து மக்கட்குப் பயன்படச் செய்யுந்தன்மை மிக நுட்பமான முதல்வன் மகிமையை உணர்த்துமாறு அறிக. காற்றோட்டத்தினால் ஆவது என்னவெனின், யாம் முன்னர்க்கூறியவாறு, நம்மைச் சுற்றிலுமுள்ளவாயு இலேசாகி உயரச் செல்லுந்தோறும் புதியதும் குளிர்ந்ததுமாகிய சுத்தவாயு நம்மீது வீசி நமக்குச் சுகத்தை யுண்டு பண்கின்றது. இனி வாயுமண்டலத்திற் பரந்து திரியும் தூசிதுரும்பு கண்ணுக்குப் புலப்படாத நுண்புழுக்கன் முதலியனவும் மற்றும் ஆடி ஓடிதிரியும் அணுப்போன்ற பொருள்களும் மழைபனியினால் அடிபட்டு நிலத்தில் தாழ்த்தப்பட்டுத் தண்ணீர் வெள்ளத்தாலப் பாற்கொண்டு விழுத்தப்படுகின்றன. டி. நல்லதம்பிப்பிள்ளை. 14. தமிழ்வேதபாராயணத்தடை மறுப்பு மதுரைச்சில்லா பெரியகுளந்தாலுகாவைச் சேர்ந்த சின்னமனூரில் இவ்வருடம் வைகாசி நடந்த பிரமோற் சவத்தில் சுவாமி வீதிக்கு எழுந்தருளிவருங்காலத்தில் அங்கே உள்ள சிவதீக்ஷைபெற்ற வேளாளர்கள் தமிழ்வேத மாகிய தேவாரதிருவாசங்களைப் பாராயணம் பண்ணிக்கொண்டு வந்தார்கள். வருங்காலத்தில் சுவாமி பிராமண அக்கிரகாரத் தில் எழுந்தருளுங்காலத்தில் எங்களுடைய அக்கிரகாரத்தில் இவ்வேளாளர்கள் தமிழ்வேதபாராயணம்பண்ணி வரக்கூடா தென்றும் அச்சொற்கள் எங்கள் காதிலேவிழக்கூடா தென்றுஞ்சொல்லி போலீசு இனிசுபெக்டர் மாஜிட்ரேட் இவர்கள் சகாயங்களைக் கொண்டு லாவுக்கு விரோதமாய் நோட்டீசுகொடுத்து தடுத்திருக்கின்றார்கள். சற்கார் வீதியில் சுவாமிக்குப்பின் அவரவர்கள் கடவுளைத்தோத்திரம் பண்ணிக் கொண்டு வருவதைத் தடுத்தற்கு இவர்கள் உரியரல்லர். நமது மார்த்தப்பிராமணர்கள்செய்த அறியாமைச் செய்கை அந்தோ கொடிது! கொடிது! இதுநிற்க. சிவபிரான்செய்த காமிகாதி ஆகமவிதிப்படியே உற்சவம் பூசை முதலிய கிரியைகள் ஒவ்வொரு சிவாலயங்கள் தோறும் நடத்தப்பெற்றுவருகின்றன. இவ்வாகமம் எங்களுக்குப் பிரமாணமில்லையெனக் கூறுவாராயின் அவ்வாக மவிதிப்படி நடக்கின்ற ஆலயங்களில் இவர்கள்போய் வணங்கவும் உற்சவங் களில் சிவபிரானைத் தங்கள் வீதியில் வரவழைக்கவும் ஆதிசைவர் களைக்கொண்டு தீபாராதனை செய்விக்கவும் அவர்கள் கையில் விபூதிவாங்கவும் உரியரல்லர். வைதிகரி லொருசாரார் வேதம்பிரமாணநூல் என்றும் சிவாகமம் பிரமாணநூலன்றென்றும் சைவரிலொருசாரார் சிவாகமம் பிரமாண நூலென்றும் வேதமதுபோல்வதொர் பிரமாண நூலன்றென்றும் கூறுவர். நீலகண்டசிவாசாரியார் அப்பயதீக்ஷதர்முதலிய ஆசிரியர்கள் நீலகண்டபாடியம் சிவாதித்தமணிதீபிகை சிவத்தத்துவவிவேகம் முதலிய வற்றில் அவ்வைதிகரைமறுத்துச் சிவாகமப்பிராமாணியம் வலியுறுத் துரைத் திருக்கின்றார்கள். வேதமும் சிவாகமும் தம்முள் வேறுபடா வேதசிவாக மங்களுக்கு பேதங்கண்டிலேம் வேதந்தான் சிவாகமம் இரண்டுக்குங் கர்த்தாஒருவரே ஆதலாலும் ஒருபொருளுடையனவாதலாலும் இரண்டும் பரப்பிரமாணங்களே வயந்துவேத சிவாகமயோர்பேதம் நபயாம வேதோபிசிவாகம வேதத்தில் விபூதிதாரணம் உருத்திராக்கதாரணம் பஞ்சாட்சரசெபம் சிலலிங்கார்ச்சனம் தியானம் செபம் திரிபதார்த்த லக்ஷணங்கள் பஞ்சப்பிரமம் பிரணவம் பிராசாதமந்திரம் கூறப்பட்டிருப்பது போல ஆகமத்திலும் விரிவாய்க் கூறப்பட்டிருக்கின்றது. வேதங் களுக்கு ஈசுவரன் எப்படிக்கர்த்தாவோ அப்படியே காமிகாதி ஆகமங்களுக்கும் கர்த்தா ஈசுவரன் என்று சூதசம்மிதை சிவமான்மியகண்டத்தில் முதலாவது அத்தியாயத்தில் கூறப்பட்டிருக்கின்றது. சூதசங்கிதை சுலோகம் காமிகாதிப்ரபேதயயதாதேவோமஹேவர: ததாஸர்வபுராணாநாம்கர்தாஸத்யவதீஸுத மநுமிருதி ப்ரத்யக்ஷமநுமாநஞ்சசாச் த்ரஞ்சவிபியாகமம் த்ரயம்ஸுவிதிதம்கார்யம்தர்மஸித்திமபீப்ஸிதேதி சூதசங்கிதையை ஸ்ரீசங்கராசாரியர் பதினெண்முறை பார்த்துப் பாஷ்யஞ் செய்தார் என்று ஸ்ரீவித்தியாரண்ணிய சுவாமிகள் சூதசங்கிதா தாற்பரியதீபிகையில் கூறியிருக் கின்றார்கள்- அற்றேல் வேதம் நித்தியமென்னுஞ்சுருதிகளோடு முரணும் பிறவெனின், முரணாது; நித்தனாகிய பரமசிவனாற் செய்யப் பட்டமையானும் இறுதிக்காலத்துப் பரமசிவனிடத் தொடுங்கிய வேதம் படைப்புக்காலத்து முன்போலவே தோன்றுதலானும் நித்தமென்றுபசரித்துக்கூறப்படுமாகலின் சிவாகமங்களை நித்தமென்பதும் இக்கருத்தே பற்றியென்க. அங்ஙனமல்லாக் கால் வேதம் பரமசிவனாற்செய்யப்பட்டது என்னுஞ்சுருதி களோடும் அட்டாதசவித்தைக்கு முதற் கருத்தாவாகிய இச்சூலபாணி என்றற் றொடக்கத்துப் புராணவசனங்களோடு முரணுமாறறிக. வேதம் அறிதற்கருவி வித்தை பதினெட்டாவன இருக்குமுதலிய வேதநான்கும், சிக்கை கற்பசூத்திரம் வியாகரணம் நிருத்தம் சந்தோவிசிதி சோதிடமென்னும் அங்கமாறும், புராணம் நியாயநூல் மீமாஞ்சை மிருதி யென்னு முபாங்கநான்கும், ஆயுள்வேதம் வில்வேதம் காந்தருவவேதம் அருத்த நூலென்னுமிருக்கு முதலியவற்றிற் குபவேதநான்கும் எனவிவை. இவற்றுள் வேதநான்கும் பிரமகாண்டமும் பிரமஞானத்திற்கு நிமித்தமான கரும காண்டமும் முணர்த்துவனவாம். சிவாகமங்களும் பிரமகாண்ட மாயடங்குமென்பர். இப்பதினெட்டு வித்தை களுள் சிவாகமம் கூறப்படவில்லையேயெனின் அப்பயதீக்ஷதர் புராணசப்தத்தில் சிவாகமும் அடங்குவனவாமென்று பொருள்படுத்தினார். வேதங்களை யெடுத்தல் படுத்தல் முதலிய விசை வேறுபாட்டா னுச்சரிக்குமாறுணர்த்துவது சிக்கை வேதங்களிற்கூறுங் கருமங்களை யநுட்டிக்குமுறைமை யுணர்த்துவது கற்பசூத்திரம். வேதங்களினெழுத்துச் சொற்பொருளியல் புணர்த்துவது வியாகரணம். வேதங்களின் சொற்பொருளுணர்விப்பது நிருத்தம். வேதமந்திரங்களிற் காயத்திரி முதலிய சந்தங்களின் பெயரும் அவற்றிற்கு எழுத்து இனைத்தென்றலும் உணர்த்துவது சந்தோவிசிதி. வேதத்திற்கூறுங் கருமங்கள் செய்தற்குரிய காலவிசேடங்களை உணர்த்துவது சோதிடம். இங்ஙனமாகலின் இவையாறும் வேதத்திற்கு அங்கமெனப் பட்டன. பரமசிவன் உலகத்தைப் படைக்குமாறு முதலாயின கூறும் வேதவாக்கியப் பொருள் களை வலியுறுத்து விரித் துணர்த்துவது புராணம். இதிகாசமும் ஈண்டடங்கும் வேதப்பொருளை நிச்சயித்தற்கனுகூலமான பிரமாண முதலியவற்றை உணர்த்துவது நியாயநூல். வேதப் பொருளின்றாற்பரிய முணர்தற்கு அநுகூலமான நியாயங்களை ஆராய்ச்சிசெய்துணர்த்துவது மீமாஞ்சை; அதுபூருவ மீமாஞ்சை உத்தரமீமாஞ்சையெனவும் முன்னையது வேதமெனவும் பின்னையது வேதாந்தமெனவும்படும். அவ்வவ் வருணங்கட்கு நிலைக்குமுரிய தருமங்களை யுணர்த்துவது மிருதிநூல். புராணமுதலிய நான்கும் வேதத்திற் குபாங்கமெனப் படும். எல்லாம நுட்டித்தற்குச் சாதநுமானயாக்கையை நோயின்றி நிலைபெறச்செய்வது ஆயுள்வேதம். பகைவரானலி வின்றி யுலகங்காத்தற்கு வேண்டப்படும். படைக்கலம் பயிறலையுணர்த்துவது வில்வேதம். எல்லாக்கடவுளர்க்கு மூவகைவரச் செய்யுமிசை முதலியவற்றை யுணர்விப்பது காந்தருவவேதம். இம்மைக்குமறுமைக்கு மேதுவாகிய பொருள்களையீட்டு முபாயமுணர்விப்பது அருத்தநூல். இவை நான்குமுபவேத மெனப்படுமென்றுணர்க. வேதமெனப்படும் பூருவமீமாஞ்சை பன்னிரண் டத்தியாயமாகச் சைமிநிமுநிவராற் செய்யப்பட்டது. வேதாந்தமெனப்படும் உத்தரமீமாஞ்சை நான்கு அத்தியாயங்களையும் பதினாறுபாதங்களையும் நூற்றைம்பத்தாறு அதிகரணங்களையும் ஐஞ்ஞூற்றைம்பத் தைந்து சூத்திரங்களையும் உடையது. இந்த வேதாந்த சூத்திரம் வியாசமுநிவராலே துவைதவாக்கியரூபமாகச் செய்யப்பட்டது. என்னை வேதத்தைமூலமாகவுடைய சிவாகமசாரபூதமான பன்னிரண்டு சூத்திரங்களையுடைய சிவஞானபோத சாதிரத்தை திருநந்திதேவர் அடைந்ததுபோல மநுவந்தரங் களிலே யுகந்தோறும் உண்டான வியாசமுநிவர்கள் பரம சிவஞானசித்தியின்பொருட்டு விபூதி ருத்திராக்ஷங்களை உடல் முழுவதும் அணிந்தவர்களாகித் திருக்கைலாசமலையை யடைந்து சிவபிரான் றிருவடித்தியானத்தினாலே அப்பெரு மானிடத்தினின்று சூத்திரங்களை அடைந்து பிராமாணிய வாதங்களைச் செய்கின்றார்கள் என்றும் இவ்விடத்திலே சூத்திரங்களென்பது சிவஞானபோதசாதிரத்து வாதச் சூத்திரங்களே. பாணிநிமுநிவர்அகதியமகாமுநிவர் முதலி யோர்களால் அடையப்பட்ட மகேசுவர சூத்திரந்திரமிடசூத்திர முதலியவைகளால் உபநிடத சித்தாந்தத்தை அறிதற்குக்கூடா மையால் என்றும் மணியசிவனார் இயற்றிய வித்தியாவிருத்தி யிலே கூறப்பட்டமையால் துவைதவாக்கிய ரூபவேதாந்த சூத்திரத்துக்கு அவ்வாறே ஸ்ரீகண்டசிவாசாரியர் பதி பசு பாச மென்னு முப்பொருளும் முத்திநிலையினு முண்மைவிளங்க முதலிலே பாஷ்யஞ்செய்தார். சங்கராசாரியர் சைவசித்தாந்தத் தில் உண்மைக்கருத்துடையராயினும் மாயாவாதிகள் வேண்டு கோளுக்கு இசையத் தமது வித்தியாசாமர்த்தியம் விளங்கக் கேவலாத்துவிதபரமாகப் பாஷ்யஞ்செய்தார். மகாபாரதம் ஸாங்க்யயோக: பாஞ்சராத்ரம்வேதா: பாசுபதம் ததா ஜ்ஞாநாந்யேதாநிராஜருஷேநஹந்தவ்யாநிஹேதுபி என்பதனால் சிவாகமம் பிரமாணமென்பதுசித்தித்தது. சிவபிரான் உமாதேவியாருக்கு உபதேசித்தருளிய பரமேதி காசமாகிய சிவரகசியத்தில் ஆறாவது அம்மிசத்தில் சூத்திரவிதிக்கிரமத்தில். வ்யாஸாமந்வந்தரேஷுப்ரதியுக ஜநிதாச்சாம்பவஜ் ஞாநஸித்தை பமாப்யக்த ஸமதகாத்ராநிவஹாருத்ராக்ஷ மாலாய கைலாஸம்ஸமவாப்யசங்கரபதத்யாநேந ஸூத்ராண் யமாகாந்தாத் ப்ராப்யவிதந்தவதேவகதியாப்ரமாண்யவா தாந்யஹோஇதி என்பதனால் வியாசமுநிவர்கள் சிவஞான சித்தியின்பொருட்டுச் சிவபிரானிடத்தினின்றும் சிவாகமசார பூத சிவஞானபோதசாதிரத்து வாதச்சூத்திரங்களை அடைந்து பிராமாணிய வாதவேதாந்த சூத்திரங்களைச் செய்கின்றார்கள் என்பது சித்தித்தது. சைவாகமங்கள் வைதிகவாக்கியமாதலில் அப்பிரமாணங் களென்று சில மூடர் கூறுவர். வேதாந்தநிஷ்டைபெற்றுக் களங்க மற்றஞானிகளும் எனது சிவாகமத்திலே தற்பரர்களாகி ஞானபாதத்திலே நிலைநின்றோருமாகிய இருவகையோரும் பெறற்கரிய சாயுச்சியம்பெறுவர்கள். கருமத்தையும் பிரமத்தையு மனைத்தும் வேதாகமம் என்று பிரசித்தம்பெற்ற இரண்டு மார்க்கங்களிலும் நில்லாதபாவிகள் சாத்திரத்திற் கூறிய நால்வகைத் தண்டங்களாலும் தண்டிக்கப் பாலர்கள் என்னும் காந்தசம்பவசிதம்பர மான்மியத்திலே சிவபிரான் அருளிய பொருளையுடைய வியாசவாக்கியத்தினாலே அதுபேதைமை யாம் என மறுக்க. வேதநெறிவழுவியமாந்தர்க்கே தந்திரங்கள் கூறப்பட்டன எனச்சிலநூல்களிற் கூறியதென்னையெனின், ஆண்டுக்கூறியது வாம சோமலாகுள பைரவமுதலிய தந்திரங்களையன்றிச் சிவசித்தாந்தத்தை அன்றென்க. அது அப்பதீக்ஷிதர் இயற்றிய சிவதத்துவ விவேகவிருத்தியிலே பலபிரமாணங்கொண்டு சாதிக்கப்பட்டது. சிவார்க்கமணிதீபிகாசகாரரும் வேதசிவாகமங் களுக்குக் கர்த்தாஒருவரேயாமாயினும் பிருகபதிசொல்லிய மிருதியும் உலோகதாயத சூத்திரமும் முறையே பிராமாணி யமும் அப்பிராமாணியமுமாய் முற்றுமாறுபோல வேதசிவாக மிரண்டும் பேதமுறாவோவென ஆக்ஷேபித்துச் சமாதானங் கூறுகின்றார். அவ்விரண்டும் ஒரேபொருளுடையனவாம். எங்ஙனமெனின் பிரணவம் ஓம்எனச் சாந்தோக்கியாதி உபநிடதங்களிலும் பசுபாசபதி வியவகாரங்கள் சுவேதாசுவதர மந்திரோபநிடதத்தினும் பஞ்சாக்கரமந்திரம் யசுர்வேதசங் கிதை யாலும் பஞ்சப்பிரமம் சர்வ வித்தைகளுக்கும் ஈசானர் என்றற் றொடாக்கத்து யசுர்வேத ஆரணியகத்திலும் அதர்வசிரசு காலாக்கினிருத்திரம் பிருகசாபாலமுதலிய உபநிடதங்களில் பமோத்தூளன திரிபுண்டாருத்திராக்ஷ தாரணங்களும் இருக்குவேதத்தில் இலிங்கார்ச்சனமும் சிவாகமங்களிற் போலக் காணப்படுதலில்லை. வேதசிவாகம மிரண்டும் ஒரு பொருளுடையனவாய்ப் பரமப் பிராமாணியங்களாம். அற்றேல் முதல்வனால் வேதம்என ஒன்றுபடுத்துக் கூறாது வேதம் ஆகமம் என இருவகைப்படுத்துக் கூறியது. என்னையெனின் அஃதொக்கும் முதல்வன் பெருங்கருணையாளனாகலின் உலகத்தார் உய்தற்பொருட்டும் சத்திநிபாதமுடையார் உய்தற்பொருட்டும் திருவுளத்திற் கருதிப் பொருள்பலபடத் தோன்றுஞ் சூத்திரமும் அதனை அவ்வாறாக வொட்டாது தெளித்துரைக்கும் பாடியமும்போல முறையே வேதமும் சிவாகமும் செய்யப் பட்டன. அவ்விரண்டும் முறையே பொதுநூல் என்றும் சிறப்பு நூல்என்றும் கூறப்படும். அவ்வாகமம் சிரௌதம் சுதந்திரம் என இருவகைப்படும். வேதத்திற்கூறிய படியே கூறுவது சிரௌதம் கூறியதேயன்றி விசேடமாக கூறாததையும் விரித்துக்கூறுவது சுதந்திரம். இப்படிப்பட்ட உத்கிருஷ்டமாகிய சிவாகமங்களுள் முதலாவது ஆகமமாகிய காமிகாகமத்தில் நான்காவது படலத்தில் 437, 438, 439வது சுலோகங்களால் வேதாத்திய யனகவுடபாஷா தோத்திரங் களோடு திராவிடபாஷையில் அடியார்கள் தோத்திரமும் செய்யுமாறு கூறப்பட்டிருக் கின்றன. அன்றியும் சிவாலயங் களிலும் மடாலயங்களிலும் சிவபக்தர்களைப் பிரதிட்டைபண்ணிப் பூசிக்கவேண்டு மென்றும் அவர்களுக்கு உற்சவாதி முதலிய நைமித்திகக்கிரியை களையும் நடத்தவேண்டு மென்றுங் கூறப்பட்டிருக்கின்றன. சிவபக்திஸமோபேதாஜீவந்தோவாம்ருதாதுவா தேஷாம்ப்ரதிக்ருதிம்க்ருத்வாப்ரதிஷ்டாப்யஸமேர்ச்சயேத் பக்தோத்ஸவம்ப்ரகுர்விதம்பக்சாத்ப்ரக்வாசிவயது சகலாகமசங்கிரகத்தில் நித்தியபூசாபிராயச்சித்த விதியில் ஆராதனை உற்சவ முதலிய காலங்களில் வேத பாராயணம் பஞ்சாங்கசிரவணம் அன்பர்கள் துதிசெய்ய வேண்டு மென்றுங் கூறப்பட்டிருக்கின்றன. அப்படிச்செய்யாத பட்சத்தில் மகாமாரி முதலிய நோயால் உலகத்துக்குக்கெடுதி விளையு மென்றுங் கூறப்பட்டுள்ளது. அதற்காகச்சாந்தி ஓமமுதலிய பிராயச்சித்தம் செய்யவேண்டுமென்றுங் கூறியிருக்கின்றன. ஆதலால் மனிதர்களில் உயர்ந்த சிவபக்தர்கள் யாவர்என்று ஆலோசிக்கும் பட்சத்தில் சிவரகசியம் உபமன்னியு பக்தவிலாசம் அகத்திய பக்தவிலாசமுதலிய நூல்களிற்கூறிய அறுபத்துமூவர் களேயாம். வேதபாராயணே ஹீநேபஞ்சாங்கச்ரவணேததா பக்தாதிதோத்ரஹீநேதுமஹாமாரிப்ரவர்த்ததேதத்தோஷி சமாநார்தாயநபநம்சாந்திஹோமகம் ஸ்ரீ சங்கராசாரியசுவாமிகள் சௌந்தரியலகரியிலே பூதரகுமாரியே தயாவதியாகிய உன்னாலே கொடுக்கப்பட்ட பாலை ஞானசம்பந்தர்பருகி நிபுணகவிகளுள்ளே விரும்பத் தக்க கவிசெய்வாராயினார் எனத்துதிக்கப்பட்டார் என்றும் பஞ்சாக்கரத்தைப் பத்துத் திருப்பாடல்களினால் அருளினார் என்றும் திருச்செங்காட்டங்குடியில் பத்துத்திருப்பாடல்கள் அருளினார் என்றும் பத்தவிலாசத்தில் அங்கங்கே கேட்கப் படுதலானும் அகத்திய சங்கிதையில் குற்றமில்லாத திராவிட கானங்களால் சம்புவைத்துதித்தாரெனக் கேட்கப்படுதலானும் ஆன்மார்த்த பரார்த்த பூஜோற்சவகாலங்களில் வேதாத்தி யயனத் தோடு திராவிடதேவாராதி தோத்திரமும் அவசியஞ் செய்ய வேண்டுமென்பது பெறப்படுகின்றது. இவைகளை யெல்லாம் நோக்கியே ஆன்றோர்கள் ஒவ்வொரு சிவாலயங் களிலும் பூசை உற்சவமுதலிய காலங்களில் தேவாரமுதலிய அருட்பாக்களை ஓதும்படி ஓதுவார்களை ஏற்படுத்தி யிருக்கின்றார்கள். அப்படியே உற்சவத்தில் திருவையாறு சிதம்பரம் மதுரை திருவாரூர் முதலிய சிவஷேத் திரங்களில் வேதபாராயணத் துக்குப்பின் தேவார முதலிய அருட்பாக்களை ஓதி வருகின்றார்கள். இவைகளை யெல்லாம் நமது மார்த்தப் பிராமணர்கள் தெரிந்திருப்பார் களாயின் தடைசெய்திருக்க மாட்டார்கள். இனிமேலாவது மேற்குறித்த சிவஷேத்திரங் களுக்குச் சென்று அங்கங்கே நடக்கும் உற்சவங்களில் வேத பாராயணஞ்செய்துவருவதையும் கண்கூடாகப்பார்த்துவந்து தங்கள்ஊரில் நடக்கும் தமிழ்வேத பாராயணத்தைத் தடை செய்வதாகிய சிவத்துரோகத்துக்கு ஆளாகாதிருப்பர்களென்று நம்புகின்றேன். தமிழ்வேதபாராயணத்தடைமறுப்பு முற்றிற்று. சுபகிருதுவருஷம் இங்ஙனம் ஆனிமீ 12 மதுராபுரிவாசி சுப்பிரமணியபிள்ளை 15. வடமொழியிலுள்ள தமிழ்ச் சொற்களுக்குக் காரணம் ஏழாவது இதழில் பலகைமுதலியன தென்மொழிக்கண் தொன்று தொட்டுக் காரணக்குறி மரபுப்பெயராக வழங்கலின் என்றதை யீண்டுவிளக்குகின்றாம். பலகை, பால் (பிரிவு) பலகை; பகு பாகு பாகம் பலகம்; பகு பகல் பகலம் பலகம்; ஒருமரத்துண்டைப் பலவாகப் பகுப்பது. வல்லுப்பலகை, கேட்கப் பலகையென்ப வற்றுக்குத் தனித்தனி தாது வேறாகும். கட்டில், அறைக்கட்டில் (அறைக்குட்கட்டுவீடு; என்பது) அறைக்கட்டிலுற்சவம் என்ற வழக்குமுளது நத்தம் நந்துதல் (கெடல்) விசிறி விசறற்கருவி, அது விசிறியென மரீஇயது. நிகளம் கரு காளம் (இரும்பு) இருப்புவிலங்கு, இருப்புச் சங்கிலி, யானைச் சங்கிலி, நி, உபசர்க்கம் ஆணி அள் (கூர்மை) கூரியது சூரணம் தூள் சூள் சூணம் சூரணம் அசி (வாள்) அள் கூர்மை கூரியது கார்முகம் (வில்) கால் (கூர்மை) கூரியமுகமுடையது கரமஞ்சரி கரவாளம் காரைச்செடி காறுமுதலியனவும் அத்தாதுவிற் பிறக்கும். வாணம் வள் (கூர்மை) கூரியது ஆசுகம் (அம்பு) அள (கூர்மை) தோட்டி (அங்குசம்) தொள் தொளைப்பது மாடம் (உளுந்து), மால் (கருமை) கரியது தோணம் (அம்பு) தொள் தொளைப்பது, அதுவில்லுக்காயிற்று. பாசனம் (உழவுகோல்) வள் (கூர்மை) வாசம் (அம்பு) பாசம் (ஊசி, ஊசித்துளை) பாசனம், கூரியது முதிரை (பயறு) முதை முதில் முதிரை கொல்லையில் விளைவது. மிரியல் மிளகமென்பதன் சிதைவு; கோல் (சிவப்பு) கோளம் குமிளம் மிளகு அதன்கணிரும்பிருத்தலின் அப்பெயர்த்து, மால் மாசம் மரீசம் எனில் வேறு சொல்லுமாம், மால் கருமை சுண்டி (சுக்கு) நீர்சுண்டியது கஞ்சி கசிவது சருக்கரை செருக்கு (கரும்பு) செருக்கரை சருக்கரை செருகல் செருகு செருக்கு ஓதனம் ஓதம் (நீர்) நீராலாவது அடுப்பு அடுக்களை அடுப்பங்கடை அடுப்பு; அடுக்களை மடைப்பள்ளி துத்தம் (பால்) தோல் (உட்டுளை) உள்ளிருந்து சுரப்பது ஆதன் (உயிர்) அள் (அணு) நுண்ணிது தாமணி (கயிறு) தா (வலிவு) தாம்பு தாமணி வலியுடையது மத்து வள் (வட்டம்) வட்டு மத்து; வட்டமுடையது, வளைந்து வளைந்து சுழல்வது; ஒட்டகம் கனகதமுடையது, ஓட்டம் கதி, கனகதம் ஓட்டை குடுவை குள் சிறிது செம்பு செம்மை (சிவப்பு) செந்நிறமுடையது செந்நிறத்தைக்கெம்பு என்பர் கன்னடர். செம்பென்பதே செம்பாயிற்று. கண்டிகம் (திப்பிலி) கண் (கணு) கணுவுடையது சுண்டிகன் (கள்விற்போன்) தோல் (உட்டுளை) தொண்டி சுண்டி (கள்) உள்ளிருந்து வருவது, சுண்டி சுண்டிகம் சுண்டிகன் அலசல் (சோம்பல்) அலைதல் அலசல்; அலையச் செய்வது வேடன் வில் வில்லி சவரர் (வேடர்) கால் (கூர்மை) சரம் சவரம் சரமெய்ய வல்லோர் குணம் (நாணி) கூன்; குனிப்பது கத்தி கால் (கூர்மை) கூரியது அளி (கள்) ஆம்பல் (உட்டுளை) ஆம்பல் ஆம்பிலம் ஆலம் ஆலி அளி கரை (கள்) தோல் (உட்டுளை) சொல்சுலோகி சுரை. பாய்ச்சிகை பாய் பாய்ச்சுவது பூடணம் பொன்பூண் பூணம் பூடணம், பூல் (சிவப்பு) பூடணம், செம்பொன்னாலாயது பூவல் பூலா புல்லாந்தி புல்லாஞ்சி பூப்பு புலிபம் (ஆவிரை) புரசு புலி முதலியவற்றுக்கும் அப்பூல் என்பதேதாது. புலிக்கண் சிவப்பாகலின் அப்பெயர்த்து. பாடியம் (பாழி அகலம், உரை) விரித்துரை, அகலவுரை; அது பாடி பாடியம் பாசியம் பாஷியம் எனவாயிற்று. பாளி (பாசறை, ஓர்பாஷை) பாளை (விரிவு) பாளையம், பாடி (ஊர்) பாடிலம் (நாடு) பாடிவீடு பாடு (பெருமை, குணம்) பாடை (சொல்) பாணி (சொல்) முதலியனவும் அப்பாழியிற் பிறப்பனவாம். விருகம் விலங்கல் (மலை) விலங்கு விலங்கம் விலகம் விருகம் மிருகம், மலையில்வசிப்பது தட்டை (தாள்உட்டுளை) தண்டு தட்டை (மூங்கில்) மூங்கில்போல் பிளவுபட்ட மனமுடையானென்பது தோள், (கை) தோல் (பிரிவு) விரற்பிரிவுடையது; தொழல் தொழில் துதி துதித்தல் முதலியன அத்தோளிற்பிறக்கும். அது புயத்துக்காயிற்று நனி, (மிக) நாலம் (ஞாலம்) நனி நன்றுபெரிது ஞாலம் போற்பெரிது; மகா மகி மிக என்பவற்றானுமுணர்க. கணக்கு, கால் (நுண்மை) நுணுகியறிவது நாவாய், (கப்பல்) நா (நடு) கடனடுவில் வாய்ந்துசெல்வது மீன், மின் மின்னுவது; மீனமென்னும் சொல் பழைய வடமொழி நிகண்டுகளில் இல்லையென்பர், அது வடமொழி யாயின் மீனென் கிளவி வல்லெழுத்துறழ்வே எனச்சூத்திரியார் தொல்காப்பியர் அதர் அள் (நெருக்கம்) இடுக்குவழி, அத்தம் (விசாலம்) அத்வா எனலும் ஒக்கும் குட்டிகை (சிறுசுவர்) குள் சிறிது குட்டி குட்டிச்சுவர் குட்டிகைச்சுவர், குரகம் (வீடு) குகம் (குகை); அனுக்குரகம்; அனுக்கிரகம், கிருபம், கிருபை, கிருபாலு என்பன அதிற்பிறக்கும், என்னெனின் அது முனிவர்வாசகமாகலின் என்க. தானித்தன்மை தானத்துக் காயிற்று. அக்கரம், அகரமென்பதன் திரிபு, அகரமென்னும் ஓரெழுத்தினின்றே எல்லா வெழுத்துக்களும் பிறத்தலின் அப்பெயர்த்து, அட்சரமென்பது அக்காமாயின தன்று. இனி அக்கரம் கரம் ரகம் ரேகம் ரேகை லேகம் லேகை, லேகிணி, லேக்கன்; லேகம் லிகம் லிகிதம் கரலிகிதம் ககிதம் காகிதம் கடிதம்; லிகிதம் லிபி லி முதலியனவும் பிறவும் பிறத்தலின் அக்கரமென்பதே அட்சரமாயிற்றென்க. அகரத்தின்பெருமை அளப்பரிதாகலின் அகரமுதல வெழுத் தெல்லாம் அகர முதலாவானை, அகரவுயிர்போல் எனப் பெரியாருரைத்தனர். அதனையீண்டுக் கூறப்புகின் மிகவிரியும். அச்சரம் அச்சு (எழுத்து) அச்சுக்கூடம் அத்தாரம் முதலியவும் அதன்திரிபு. ஆதி (முதல்) ஆடித்திதி ஆடிமரூஉ அடி அச்சாரம் (முதற்பணம்) அசல் அசற்பத்திரம் என்பனவும் அதிற்பிறக்கும். அகரம் முதற்கண் நிற்கின்றமையின், அகரம், அகரன் அகாரி அரன் அரி எனின் மிகப்பொருத்தமாகின்றது. அச்சு உயிரெழுத்து எழுத்து அடையாளம் என்ற இம்முறைமையிற்பொருட்பேறாகும். சிரங்கம் (விலங்கின்கொம்பு) சிரேசம் தலையில் முளைப்பது ககனம் (காடு) காழ் (வயிரம்) கான் கானம் ககனம்; வயிரங் கொள்வது அணோக்கம் (மரம்) அண்ணம் நோக்கம் மேனோக்கி வளர்வது செவ்வியம் (மிளகு, மிளகின் கொடி) செம்மை சிவப்புற்றது இரும்புள்ளது இதன்கொடி சிவப்பு கூளி (எருது) கூளம் கோளம் கோளகம் (மிளகு) கூளம் குமிளம் மிளகு எனல்பொருத்தமே. இடபச் சோயாற் பூத்துக்காய்ப்பது; கருநிறமுடையது உருட்சியுடையது எனவும் கூறலாம். காரவல்லி (பாகல்) காழ் (பொன்) காழவல்லி, காரவல்லி, பொன்னிறக் கனிகளடர்ந்து தூங்குங் கொடியுடையது காளம் என்பது கசப்பாகலிற்காளவவ்லி காரவல்லி யெனலும் பொருந்தும் துடி (ஏலம்) கோலம் (வாசனை) வாசமுடையது தமாலம், தமோலம் உதமோலம் தபோலம் தக்கோலம், கோலம் (இலந்தி கோலி கோல் (இலந்தை) கோளம் கோளகம் தக்கோலம் தச்சோலம் (வாசனைப்பண்டம்) (வால்மிளகு) கோலகம் (தக்கோலம்) கோடம் (திப்பிலி) கோசம் (சாதிக்காய்) கோளேசம் குங்குமப்பூ கோசம் கோசிகம் கௌசுகம் (குங்கிலியம்) கோலம் கோல் தோல் துடி (ஏலம்) தோளம் தோடகம் (தாமரை) தோசை சோல் சுள்ளி (குங்குமம்) ஓதி (பூனை) உந்தி (உயர்ச்சி) உதி ஓதி உயரத்திலேறுவது ஆகு (எலி) ஆகு (உட்டுளை) உட்டுளைசெய்து அதில்வசிப்பது கச்சோதம் (மின்மினி) கச்சளம் (இருள், மறைவு) இருளில் மின்னுவது; மறைந்து மின்னுவது கலிங்கம் (ஊர்க்குருவி) கம் (ஆகாயம்) சுகம் (புள்) கங்கம் கங்கு (பருந்து) கங்கை (சுரநதி) கம் ககம் (புள்) கங்கம் கங்கு (பருந்து) ககே (சுரந்தி) கன்கம் கலிங்கம் கங்கம் உகலிங்கம் ஆகாயத்திற்பறப்பது கம் (தலை) கங்கம் (சீப்பு) கலுழன் (கருடன்) காழ் (பொன்) பொன்னிறமுடையவன்; கால் (நுண்மை) சேய்மையினின்று நுணுகி நோக்குதலு டையவன் காசம் (கோழை) களம் (மிடறு) மிடற்றிலுண்டாவது கயம் (இருமல்) காசம் (கோழை) கயம் கோழை யாலுண்டாவது மயல் (பித்தம்) மால் (மயக்கம்) மயக்குவது வாந்தி வாளம்; நேர்வாளத்தாலுண்டாவது வட்டம் வள் (வட்டு) வள்ளம் (வட்டில்) வள்ளி (கைவளை) வளையல், வாளி (வட்டமாயோடல்) வளைவுமுதலியவற்றால் அச்சொலுண்மை பெற்றாம் புருவம் புள் (பிரிவு) இரண்டு பிரிவுடையது தொந்தி தோல் (உட்டுளை) உட்டுளையுடையது கோணம் (மூக்கு) குழல் (உட்டுளை) பிட்டம் பிள் இரண்டுபிரிவுடையது தானப்பிரஷ்ட்டம் (இடம் விட்டுப் பிரிதல்) வானப்ப்ர்ஷ்ட்டம் (வனத்துக்குப் பிரிதல்) வானப்ப்ர்தம் முதலியவும் அதிற்பிறக்கும். வாசி (குதிரை) வள் வட்டகதியுடையது நாழிகை நால் (நுண்மை) நுணுகியறிந்து கணிப்பது. நாழிகை நாடிகை நாடி விநாடி (நாழிகையிற் குறைந்தது) கோடகம் (குதிரை) கோளம் (வட்டம்) வட்டகதியுடையது சிக்கம் (உறி) சிரங்கம் சிக்கம் உயர்த்திக்கட்டுவது சுண்டைக்காய் நீர்சுண்டியது சுணங்கன் (நாய்) சுல்மிகுந்த சூடுள்ளது விக்கல் (வெப்பம் விக்கம் விக்கல் வெப்பத்தாலுண் டாவது; நீரருந்தின் அவ்வெப்பந்தணிதலின் பொருத்தமாம் குடிசை குள் குடில் குடிசை சிறிது எலி இளி (சிறுமை) சிறிது சிற்றெலி மயில் ஞமலி (மயில்) மஞலி மயில் மஞலி மஞ்ஞை தட்டு தட்டு (வட்டம்) வட்டமுடையது கோணி (பை) கொள், கொள்ளுவது கமுகு (பாக்குமாம்) கம்பு (நீர்) கம்பு கமுகு அடுத்தடுத்து நீர்வேண்டுவது பட்டம் பண்டம் (பொன்) பொன்னாலாயது கும்பல் குவால் குப்பல் கும்பல்; கூடியிருப்பது புல் புழல் (உட்டுளை) புழல் புல் வாளைமீன் வார் (நீளம்) நீண்டிருப்பது மூங்கை (ஊமை) மூக்கு - கை மூகை மூங்கை மூக்காலி சைத்துக்கை யாற் குறிப்பவன். இங்ஙனமே இருமருங்கு சுழல்வது இருசு, பாவம் ராகம் தாளம் தெரிப்பது பரதம் எனக்கொள்க. வால் வார் (நீளம்) மை மேகம் மே, மை வலை வாள் (வளைவு) மீன் வளைப்பது மல்லை வள் (வட்டம்) மூசை (குகை) மூல் (சிவப்பு) உலையிற்சிவப்பது; மூலநாள் மூலிகை முதலியனவும் அதிற்பிறக்கும், மூலநாள், சிலப்பு டையது மூலிகை செம்பொன்னாக்குவது தோணி தோணி (நீர்) நீரிலோடுவது கோட்டை கோடு (அரணிருக்கை) கோடரி கோடளி கோடரி மரங்களைப்பிளப்பது வாளி, (காதோலை) வள் (வட்டம்) வட்டித்துச்செருகுவது அனல் தணல் தீ (அணல்) அனல் தண்டு (மூங்கில்) தணல், மூங்கிலிற் பிறப்பது. உழமண் உவளகம் (உப்பளம்) உவளகமண் உளமண் உடிமண், உவருடையது புடலை புழல் (உட்டுளை) உட்டுளைக்காயுடையது வசம்பு வாசம் (மணம்) வாசமுடையது; வாசம் விவாசம் விசுவாசம் விவாசம் (நேசம்) அடுத்து வசிப்பதாலுண்டாவது, விவம் (உலகம்) உயிர்கள் வசிப்பது, விவம் (சுக்கு) மணமுடையது சோல் (மணம்) சுண்டியெனலும் பொருந்தும் கட்டை காழ் (வயிரம்) கத்தரிக்கோல் கால் (கூர்மை) சீரகம் சீரம் (விலாமிச்சை, மணம்) சீரகம் மணமுடையது தூண் துணித்தல் துணிதூண் கந்தை கந்தல் (கெடல்) கெட்டது சுல்வி (அடுப்பு) சுல், நெருப்புடையது சால தாலம் (பூமி) சால சிவிகை கஞ்சிகை சிகை சிவிகை தொட்டில் தொடர் (சங்கிலி), திகை தீல் (ஒளி) சூரியனாலறிவது; திகை திக்கு திசை. மாதம் மதி (சந்திரன்) மதியாலுண்டாவது, திங்கள் (சந்திரன்) மாதம் நிலா நில நெல் தெலுங்கர் மாதத்தை நெல் என்பர் மதி மதியம் மாதம் மாசம் அரத்தம் (சிவப்பு) அத்து (சிவப்பு) அத்தம் (பொன்) அலத்தம், அலத்தகம் (செம்பஞ்சு) ஆலத்தி ஆலாத்தி, அரத்தன் (செவ்வாய்) ஆலம் அலம் (விருச்சிகராசி) ஆடவன் அணங்கு அரிவை (பூப்புற்றவள்) ஆலம் (மழு) அரத்தம் அரக்கு, அரங்கம் (போர்க்களம்) ஆடகம் (துவரை பொன்) ஆடி ஆனி வி - ஆலம், வியாளம் (புலி) வியாழன் (குருவாரம்) ஆர்த்தவம் (பூப்பு) ஆத்ரேயி (பூப்புற்றவள்) அர்த்த: (பொன்) அலக்த: (அரக்கு) என இருமொழிக் கண்ணும் உள்ள சொல்லும் பொருளும் பிறவும் உய்த்துணரிற் அர்த்த மென்பதே முதற்சொலாகின்றது; ரக்தம் என்பது அரத்தமாயினதன்று அலத்தம் அலத்தகம் லதகம் லிஹிதகம் லோஹீதகம் லோஹிதக: (கெம்புக்கல்) லோஹ: (இரும்பு) உலோகிதம் (சிவப்பு) அரத்தம் ரக்தம் ருக்தம் (பொன்) ரிக்தம் (பொன்) ரா: (பொன்) ருக்மகாரகன் (தட்டான்) ருக்மாங்கதன் ருக்மணி ருக்மம் (பொன்) ரக்தா ராக்ஷா லாக்ஷா (அரக்கு) ரஜ: (பூப்பு) ரஜவலா (பூப்புள்ளவள்) ரஜனி வேளை ரஞ்சனம் (செஞ்சந்தனம்) முதலியனவும் அதிற் பிறப்பனவாம் வியாளம் (புலி) சிவந்தகண்ணுடையது. வியாழன், செம்பொன்னிறத்தோன். வி-ஆலம் - வியாளம் (பாம்பு) நஞ்சுடையதுமாணிக்கமுடையது. கோபிப்பது என்க. (ஆடி உத்திராடம் ஆனி மூலம் அவைசிவப்பு) சுவல் (குதிரை) சுல் சூடுள்ளது தசை தடி (ஊன்) தசை விசுங்கம் (பறவை) கங்கம் விசுங்கம் ஆகாயத்திற் பறப்பது ஈண்டுக்கூறிய படு வள் நால் கால் பூல் முதலிய தாதுக்களெல்லாம் காரணமுடையனவாய் ஓரியற்கைத் தாதுவினின்றும் பிறந்து அனுசூத சம்பந்தம் பெற்றுத் தொடர்ந்து வருகின்றன. ஓர்தாதுவினின்று பலசொற்கள் பிறந்து தொடருங்கால் எழுத்துக்கள் பலவாறு திரிந்து வருவதற்குக் காரணமுளது. ஓரசையாகிய ஓர்தாது ஈரசை மூவசை நாலசைவரை நீளினும் அவ்வோரசைப் பொருளையே பயக்குகிற்கும் என்பதை இயற்சீர் உரிச்சீர் பொதுச்சீர்வரை பகுத்த அப்பாகுபாடே யுணர்த்தலின், நாலசையின்மிக்க தனிச்சொற்கள் இலவாம் எனக்கொளல்வேண்டும்; உ-ம் பூரட்டாதிபூல் (சிவப்பு) அற்றேல் ஏனைய அசைகள் நின்று பயனின்மையோ எனின் அவ்வோரசைப்பொருள் மற்றைய அசைகளிலும் வியாபித்து நிற்றலின் அக்குற்றமாகாதென்க. பேழை வாவி முதலிய சொற்களுக்கு ஏதேனும் பொருந்தக்கூறல் கூடும். உண்மையறிந்து கூறல்வேண்டி எழுதாதுவிட்டனம். இன்னும் வரும் இங்ஙனம் மாகறல் - கார்த்திகேயமுதலியார். சமாசாரக் குறிப்புகள். 16. சிகந்திராபாத் சித்தாந்த ஞானபோத சங்கம் அன்பார்ந்த ஐய! இத்தலைப்பெயரிய ஓர் சற்சங்கம் இம்மாநகரத்தில் 1892 ஜூன் 15-ந்திகதி கூடிய சுபதினமாகிய பாநுவாரத்தில் சிவஞானதானவள்ளலாகிய ஸ்ரீமத் சோ. சிவ அருணகிரி முதலியா ரவர்களால் தாபிக்கப்பட்டது. அன்று அழைப்புப் பத்திரத்தில் கண்டபடி சிவாபிமானச்செல்வர்கள் பலரும் ஏனைய சமயிகளும் திரள்திரளாகக்கூடியபோது எமது வள்ளலாரானவர் மானிடப் பிறவி யினருமையைப்பற்றி அற்புதமாகப் பிரசங்கஞ் செய்தனர். அதனைச் செவிமடுத்த யாவரும் ஆநந்தப்பரவசராய் மெய்மறந்து விளங்கினார்கள். பின்னர் முதலியாரவர்கள் ஒவ்வொரு ஆதிவாரமும் சங்கத்தில் சிவஞானத்தேனை யூட்டுவதாகவும், முதல்முதல் திருத் தொண்டர் புராணத்தின் ஓர் பகுதியாகும் அப்பூதியடிகளார் திவ்விய சரித்திரத்தைப் பிரசங்கஞ்செய்வதாகவும், மாதமொரு முறை சித்தாந்த நலங்கள் அடங்கப்பெறும் துண்டுப்பத்திரிகை எழுதி வெளிப்படுத்துவ தாகவும் வாக்களித்தனர். அப்படியே புராணபடனம் கிரமமாக நடந்தேறி வருகையில் வாதவூர்ப் பெருமான் திருநட்சத்திரம் அணிமைத்தாக அன்று அவ்வாசிரிய சிகாமணியாரது திவ்வியசரித்திரப் பிரபாவத் தையும் பக்தியின்றிறத்தையும் வீடுபேற்றினருமையையும் யாவருங் கேட்டுக் கண்ணீரும் கம்பலை யுமடையும்படி பிரகாசப்படுத்தினர். அதனைச் சிரவணித்த அன்பர்கள் யாவரும் பேரானந்தப் பெருவாழ் வளிக்கும் சிவஞானத்தேனின் பிரபாவம் இனைத்தென வியம்பல் எளிதோவென்று புகழ்ந்தார்கள். பிரசங்கமுடிந்த வநந்தரம் சித்தாந்த ஞான போதவிளக்கம் என்னும் இரண்டாவது துண்டுபத்திரிகை விநியோகஞ் செய்யப்பட்டது. பிறகு கிரமமாக அப்பூதி யடிகளார் புராணம் முடிவுபெற ஸ்ரீமதி காரைக் காலம் மையார் சரித்திரம் துவக்கப்பட்டது. அம்மையாரது தலையன்பின் பிரபாவம் பிரசங்கிக்கப்பட்டு வருகையில் நமது வேந்தராகிய எட்வர்ட் சக்கரவாத்தியாரது பட்டா பிஷேகதினங்குறுக அன்று (9-ஆகட்-1902) காலை 11 மணிக்கு சுமார் 150 ஏழைகளுக்குமேல் அன்னமளிக்கப்பட்டது. சாயரட்சை 6-30 மணிக்குமேல் நமது மன்னரது செங்கோல் நீடூழி நிலைத் திருக்கவும் அவருக்கு நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் நீடித்தவாயுளும் உண்டாகவும். ஸ்ரீநடராஜப் பெருமானது சந்நிதானத்தில் தமிழ்வேத பாராயணம் நடத்தப்பட்டது. அடுத்தநாள் ஸ்ரீ சுந்தரமூர்த்திசுவாமிகள் திருநட்சத்திர மாதலால் அன்றைய தினமும் எமது ஞானதானவள் ளலாரானவர் வன்றொண்டப் பெருமானது சரித்திரப் பிரபாவத்தை யாவரும் எளிதிலுணரு மாறு சுருக்கமாக விளக்கி அமிர்தவாரிபெய்தனர். அன்றியும் லோகோபகாரமாக தாம் எளியநடையிலெழுதிய வேதாந்த சித்தாந்த சமரசநிலை விளக்கம் என்னும் மூன்றாவது துண்டுப் பத்திரிகையையும் சிரவணஞ்செய்த அன்பர்கள் யாவருக்கும் விநியோகப் படுத்தினர். இவரது சிவஞானதானம் யாவராலும் வியக்கத் தக்கதாய்ப் பிரகாசித்தொளிர்கின்றது. இவராலே தாபிக்கப் பட்ட இச்சங்கத்துக்கு இரண்டு திங்களுக் குள்ளாகவே 30 அங்கத்தவர்களும் சில கௌரவாபிமான சீலர்களும் சேர்ந்துள்ளார்கள். இவர்கள் யாவரும் ஒருங்குசேர்ந்து இச்சங்கம் நீடித்திருக்கவேண்டு மென்று திருவருளையுன்னி நீங்கா முயற்சியும் தூங்காத் துணிவும் கொண்டுள் ளாரென்றால் இதன் பெருமையைச் சொல்லவும் எளிதோ. சங்கத்துக் காரியதரிசியாராகிய ஸ்ரீமான் ஆ. கங்காதர முதலியார் அவர்களது நன்முயற்சி எல்லாராலும் கொண்டாடத் தக்கது. சங்கத்தின் முக்கியகருத்துகளாவன:- 1. ஆதிவாரந்தோறும் புராணப்பிரசங்கஞ்செய்தல். 2. சுக்கிரவாரந்தோறும் தமிழ்வேதபாராயணஞ்செய்தல். 3. சோமவாரம், புதவாரம் சனிவாரங்களில் சித்தாந்த சாதிரங்களை யோது வித்தல். 4. கிர்த்திகைநட்சத்திரந்தோறும் குகப்பெருமானது ஆலயத்துக்குச்சென்று தமிழ்வேத பாராயணஞ்செய்தல். 5. மாதமொருமுறை ஏழைகளுக்கு அன்னமளித்தல். 6. பிரதிமாதம் சித்தாந்த ஞானமணம்வீசும் துண்டு பத்திரிகையை வெளிப்படுத்தல். 7. ஒவ்வொரு அங்கத்தவர் இல்லந்தோறும் பிடிஅரிசிக் கலையம் வைத்து வாரமொருமுறைத் திரட்டி காசி முதலிய க்ஷேத்திர யாத்திரைகாரர்களுக்கும் அமுதளித்தல். சிகந்திராபாத் இங்ஙனம் 12-8-02. ப. கதிர்வேலு முதலியார். உதவிகாரியதரிசி. ஐய, நீங்கள் அன்புடனனுப்பிய திருவொற்றி முருகர் மும்மணிக்கோவையும் கடிதமும்பெற்று எல்லாம் தெரிந்து கொண்டேன். மும்மணிக்கோவையிற் சிலபாகம் படித்தேன். அது உங்களுக்குப் பத்துப் பாட்டு முதலியவற்றுள் மிக்க பயிற்சியையும் ஞாபகசக்தியையும் நன்குபுலப்படுத்தி, மகிழ்ச்சியை விளைவித்தது. மற்றவற்றை அவகாசத்திற் பார்ப்பேன். கும்பகோணம் வே. சாமிநாதன். அன்புமருமையுமுடைய ஐய, காஞ்சியாக்கம் கண்டுமகிழ்ந்தேன். அதன் நியாய தண்டத்தால் பிறர்போலிக் கண்டனங்கள் பொடியாயின வென்பது திண்ணம். போலிப் புலவர்தம் பொய்யுபசாரங்கள் குறிப்பிட்டுத் தாங்கள் எழுதியவையுண்மை; அதுவேயான் கொண்டபொருளும் டி.சவரிராயன். மும்மணிக்கோவையும் (காஞ்சியும்) வரப்பெற்று மிகமகிழ்ந்தேன். சங்கமருவிய நூல்களுக்கோர் திறவுக் கோலாமிதுவெனவென் சிற்றறிவால் மதித்தேன். அன்பன் சரவணம். சேலம்காலேஜ் தமிழ்ப்பண்டிதர். பத்திரிகாசிரியர் ஒருவாரமாய்க் கடுமையான சுர நோயால் வருந்தினர். அவர்கள் பத்திரிகையின்கண் பிரசுரிக்கப்பட்ட விஷயங்களைக் கவனிப்பதற்குக் கூட வில்லை. அவர்களுக்குச் சகாயமாக நாமே அவ்விஷயங்களைக் கவனித்துவந்தோம். ஆதலால் இப்பதிப்பின்கண் பிழைகள் மலிந்திருத்தல் கூடும். அவைகளைத் திருத்தி மன்னிக்கும்படி நமது நண்பர்களைப் பிரார்த்திக்கின்றோம். வா - அண்ணாமலை மானேஜர். சிவமயம் திருச்சிற்றம்பலம் ஸ்ரீஜ்ஞாநஸம்பந்தகுருப்போநம வாழ்த்து வாழ்க வந்தணா வானவ ரானினம் வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக ஆழ்க தீயதெ லாமர னாமமே சூழ்க வையக முந்துயர் தீர்கவே. 17. சைவசித்தாந்த சபை இது நாகபட்டினத்தைச் சார்ந்த வெளிப்பாளையத்திற் சைவாபிமானம் மிக்குடைய சைவ நன்மக்களால் தாபிக்கப் பட்டு நடைபெறுகின்றது. இதன்கண் நடராசமூர்த்தியின் திருவுருவம் நன்கமைத்து எழுதிய அழகிய படமும், திருஞான சம்பந்தர் முதலிய சைவசமயாசாரியர் திருவுருவப் படங்களும், பிறவும் பிரதிட்டிக்கப்பட்டுத் தினந்தோறும் பூசிக்கப்படு கின்றன. நித்திய நைமித்திக கருமங்களெல்லாம் வழுவாது முறைப்படி நடத்தப்படுகின்றன. வாரந்தோறும் புராண படனம், தேவார திருவாசகம் இசையுடன் ஓதல், சித்தாந்த சைவ நூலாராய்ச்சி முதலியன ஒழுங்காகச் செய்யப்படுகின்றன. வருடோற்சவங்களில் ஆதிசைவர்கட்கும் பிறர்க்கும் ஆடையளித்தல் அன்ன மிடுதன் முதலிய தருமங்களும், விசேட பூசனையும், சித்தாந்தநூற் புலமை நிரம்பிய நல்லாசிரியரைக் கொண்டு அரிய பெரிய உபந்நியாசங்கள் செய்வித்தலும் மேற்கொண்டு மிகச் சிறப்பாக நடத்தப்படுகின்றன. இதற்கு அக்கிராசனாதிபதி யாவார் ஸ்ரீமத், சோ. வீரப்ப செட்டியாரவர்கள். இவர்கள் சைவவேளாண் டலைமைக் குலத்துதித்து நற்குண நற்செய்கைகளும் பெருகிய சிவபத்தியும், பலசைவநூலாராய்ச்சியும், கேட்போர்க்கு இனிது விளங்க அரிய பெரிய சைவசித்தாந்த நுட்பங்களை விரித்துரைக்குஞ் சொல்வன்மையும், சைவவேடப்பொலிவும், அவ்வேடப் பொலிவிற்கு ஏற்ற முதுமைப் பருவமும், உலகானுபவ வுணர்ச்சியும் உடையவர்கள். நம் சொல்லளவிலமையாத அருமை பெருமை யுடைய இப்பெரியாரைத் தமது சபைக்கு அக்கிராசனாதிபதியாகப் பெற்றுக்கொண்ட இச்சைவசித்தாந்த சபையார் சிவபுண்ணிய மிகுதியைப் பெரிதும் பாராட்டு கின்றோம். இதற்குக் காரியதரிசியாவார் ம-ள-ள-ஸ்ரீ, வைத்திய லிங்க முதலியாரவர்கள்; இவர்களும் சிவாபிமானமும் இச்சபையினபிவிர்த்தியின் பொருட்டு உழைக்கும் மனவுறுதி யும் மிகவுடையவர்கள். இனி இச்சபையில் அவயவிகளாய்ச் சேர்ந்திருக்கும் நன்மக்களெல்லாம் உண்மைச் சிவாபிமானமும் சிவபத்தியு முடையவர்கள். இவர்களுள்ளும், ஸ்ரீமாந், மதுரைநாயகம் பிள்ளையவர்களும், ஸ்ரீமாந், மகாதேவபிள்ளையவர்களும் இச்சபையி னபிவிர்த்தியின் பொருட்டு இரவும் பகலும் அரிது முயன்றுழைத்து அதனை முன்னுக்குக் கொண்டுவந்தவர்கள்; இவர்களுடைய சிவபத்தியும் மனவெழுச்சியும் நாம் பெரிதும் பாராட்டற் பாலனவாம். இதுகிடக்க. இதுகாறும் இச்சபை நடந்தேறுவதற்கு ஒரு சிவாபிமானியின் கிருகம் முழுவதும் உபயோகமா யிருந்தது; ஆயினும், சபைக்கென ஒரு சொந்தக்கட்டிட மில்லாமை இதற்கு ஒரு பெருங்குறையாயிருந்தது. இக்குறையை இராம நாதபுர அரசர் ஸ்ரீமாந், பாகரவேந்தர் நாகபட்டினத் திற்குச் சமீபத்தில் விஜயஞ் செய்த காலையில் உற்று நோக்கி யுணர்ந்து அதனை நீக்கிச் சபைக்கென்றே ஒரு கட்டிடம் உரிமை செய்தற் பொருட்டுச் சபையார்க்கு ஐந்நூறுரூபா அளித்திட்டார்கள். சபையார்கள் மாட்சிமை நிறைந்த சேது மன்னர் நன்கொடையை வந்தனத்தோ டேற்றுச் சபைக்குக் கட்டிடம் உரிமைப்படுத்தி விட்டார்களென்று கேள்வியுற்றுப் பேரானந்த மடைகின்றோம். இத்தென்னாடு முழுவதூஉஞ் சைவசித்தாந்த மழை பொழிந்துலாவி எம்போல்வாரையுங் கடைக்கணித்தருளிச் சிவசாயுச்சிய மடைந்த எம்மாசிரியர் வைதிக சைவ சித்தாந்த சண்டமாருதம் ஸ்ரீலஸ்ரீ, சோமசுந்தரநாயகரவர்களால் அரிய பெரிய மகோபந்நியாசங்கள் இச்சபையின்கண்ணே செய்யப் பட்டன. நாயகரவர்கள் அருமை பெருமைகளை இச்சபையார் என்றும் பாராட்டி வருகின்றார்கள். இச்சபையின்கண் நாமும் ஓரவயவியாய் இருக்கும் புண்ணியமுடையோ மாகையால், இதனபிவிர்த்திப்பொருட்டு நன்கொடை யுதவிய சேதுவேந்த ரவர்களின் விதரண மாட்சியை மிக வியந்து அவர்களிடத்து நன்றி பாராட்டுங் கடப்பாடுடைய மாகின்றோம். மாணிக்கவாசகர்கால நிருணயம் இனி இச்சபைக்கென்றே சொந்தக் கட்டிடம் ஒன்று ஏற்பட்டு விட்டமையால் இச்சபையிற் சேர்ந்திருக்கும் சைவ நன்மக்களெல்லாரும் மனவெழுச்சி மேன்மேற் கிளரப் பெற்றுத் தாமியற்கையாகவே நடாத்தி வரும் சிவகைங்கரியங்களைப் பெருக்கி நடப்பித்து வருவார்களென்று நம்புகின்றோம். இன்னும், நாகபட்டினத்தினும் வெளிப்பாளையத்தினும் இச்சபையிற் சம்பந்தமின்றி யிருக்கும் சைவ நன்மக்க ளெல்லாரும் இச்சபையிலொருங்கு சேர்ந்து இச்சபாலயத்தின் கண் தரப்படும் சைவ வமிழ்தத்தை உண்டு பிறவிப் பிணி நீங்கித் திருவருட்பேற்றிற்கு உரியராய்ச் சிவனை வழிபட்டு உய்வார் களாகவென்று திருவருளைச் சிந்திக்கின்றோம். திருச்சிற்றம்பலம் மாணிக்கவாசகர் காலநிருணயம் அக்கல்லாட நூலையே பெரியதோர் நிலைக்களனாகக் கொண்டு மாணிக்கவாசகர் காலநிருணயஞ் செய்யப் புகுந்த நம் ஆப்தர் திருமலைக்கொழுந்து பிள்ளையவர்கள் உரை வாய்ப்புடையதாமா றில்லை யென்பதூஉம் நுணுகியாராய வல்லார்க் கெல்லாம் நன்றுணரக் கிடக்கும். இன்னுங் கல்லாடநூற் காலநிருணய மென்று தலைக்குறியிட்டு யாமெழுதும் ஆராய்ச்சியுரையில் இவற்றின் பரப்பெல்லாம் நன்கெடுத்துக் காட்டுவாம்; இன்னும் நம் ஆப்தரவர்கள் தாமெழுதிய அவ்வுரை நூலின்கண் மேலே காட்டிய உரை யாசிரியன்மார் யாரும் தம்முரையில் தேவாரத் திருவாக்குக் களை மேற்கோளாக மொழிந்ததில்லை யெனவும், சரிதமுறை பிறழாத பெரிய புராணமும் ஒரோ விடங்களில் அம்முறை வழுவுகின்ற தெனவும் பிறவுங் கூறாநிற்பர். ஆசிரியர், நச்சினார்க்கினியர்க்கு முன்னிருந்தோரான பேராசிரியர் திருச்சிற்றம்பலக்கோவையா ருரையில் அப்பர்சுவாமிக ளருளிச்செய்த அண்ட மாரிரு ளூடு கடந்தும்ப ருண்டு போலுமோ ரொண்சுட ரச்சுடர் கண்டிங் காரறி வாரறி வாரெல்லாம் வெண்டிங் கட்கண்ணி வேதிய னென்பரே என்னுந் திருவாக்கை எடுத்துக்காட்டுதலானே உரையாசிரியர் யாருந் தேவாரத் திருவாக்கை மேற்கோளாக எடுத்து மொழிந்திலரென்னும் நண்பருரை பொருத்தமின்றா மாறுணர்க. இனிப் பெரியபுராணம் இவ்விவ்விடங்களிற் சரிதமுறை வழுவுகின்றதென நண்பரவர்கள் தயை செய்து காட்டுவார்களாயின், அதன்மேல் நம்மாராய்ச்சி செறிந்து நிகழும். மற்று நண்பரவர்களியற்றிய உரைநூல் மாணிக்க வாசகர் காலநிருணயஞ் செய்யுமுகத்தானே, சென்னைச் சருவகலா சாலையில் வடமொழிவல்ல பண்டிதராயிருந்த ஸ்ரீசேஷகிரி சாதிரியார் சரித மெய்ம்மைப்பொருள் தேறாது கடைச்சங்க விருப்பை நிராகரித்த போலியுரை களைந்து, அதனிருப்பு உண்மைப் பிரமாணங்கள் பலவற்றான் இனிது நிறுவிய பகுதி மிக்க மேம்பாடுடையது. தமிழ்ப்பண்டைப் பனுவலாராய்ச்சி செய்வார்க்கெல்லாம் நண்பர் திருமலைக் கொழுந்து பிள்ளை யவர்கள் ஆங்கிலமொழியிற் சொற் பொருட்டிறம் விளங்க எழுதிய இவ்வுரைநூல் இன்றியமை யாச் சிறப்பினதாம். இனி, நண்பரவர்கள் பிரமாணமா யெடுத்த அக்கல்லாட நூல், பட்டினத்தடிகள் அருளிச்செய்த அகவற்செய்யு ளமைப்பி னோடு ஒருங்கொத்து ஒழுகு நீரதாய்க் காணப்படுதலின், அது பட்டினத்தார் காலத்திற்குச் சிறிது முன்னாதல் பின்னாதல் எழுதப்பட்டதா மென்னுந் துணிபு கொண்டு போதருகின்றாம். இவ்வாற்றால், கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் கண்ணதான அக்கல்லாட நூலையே கருவி யாகக்கொண்டு மாணிக்கவாசகர் கடைச்சங்க நிலைபெற்று விளங்கியஞான் றிருந்தாரெனக் கூறுதல் ஒரு சிறிது மடாதவுரையா மென்ப தினிது பெறப்படும். இது கிடக்க. இனி, ஆங்கில மகனான இன் என்பவர் ஞானசம்பந்தர் முதலான குரவன்மார் மூவருள் யாரும் மாணிக்கவாசகரைத் தம்பதிகத்துட் கிளந் தெடுத்துக் குறித்திடாமையான் அவர் அம்மூவர்க்கும் பின்னிருந்தாரென்பது உய்த்துணரற்பாற் றென்றல் தருக்கநெறி பிறழாது வாதிடுவார்க்கு யாங்ஙனம் பொருந்தும்? ஒருவர் ஒருவரைத் தந்நூலுட் கிளந்து கூறாமை யானே அவர் அவர்க்கு முன்னிருந்தார் பின்னிருந்தாரெனத் துணிபு தோன்ற வுரையாடுதல் சரிதமுறையாகுமா? ஞான சம்பந்தர் முதலானகுரவன்மார் பண்டைத் சிவனடியார் வரலாறு களெல்லாம் நெறிப்படவெழுதிவந்து இடையே அவரைக்குறித் தேதும் மொழிந்ததில்லையாயின், அது கொண்டு மாணிக்க வாசகர் அவர்க்குப் பின்னிருந்தாரென ஒருவாறு கூறிடலாம்; மற்று ஞானசம்பந்தர் முதலான குரவன் மாரோ அங்ஙனமேதும் வரலாறுரைத்து நூலெழுதினா ரில்லை; தாஞ் செல்லுஞ் சிவாலயங்களுள் அருட்குறி தோன்ற வெழுந்தருளிய பெருமானைக் குழைந்துருகி வழுத்தித் திருப்பதிகங்கள் கட்டளையிட்டருளிச் செல்லுங் கடப்பாடு மேற்கொண் டொழுகினார்கள்; அங்ஙனம் ஒழுகலாறுடை யரான அவர் திருப்பதிகங்களுள் முன்னைக்காலத்துச் சிவனடியார் சிலர் மொழியப்படினும் படுவர், மொழியப்படா தொழியினு மொழிவர்; திருவருள் தம்மை இயக்குமா றெல்லாஞ் சென் றியங்கவல்லரான அக்குரவன்மார் நியதி கொண்டு அங்ஙனஞ் சிவனடியார் பெயரோதாமையான், அவரோதாமைபற்றியே மாணிக்கவாசகர் அவர்க்குப் பின்னிருந்தாரெனக் கூறுதல் ஒரு சிறிதும் அடாத போலி யுரையா யொழியும், அல்லதூஉம், யாம் மேலே காட்டிய நரியைக் குதிரை செய்வானு நரகரைத்தேவு செய்வானும் என்னும் அப்பர் சுவாமிகள் திருவாக்கானே மாணிக்கவாசகர் பொருட்டியற்றப்பட்ட அற்புதத் திருவிளையாடல் இனிது விளங்குதலின், மாணிக்கவாசகர் அக் குரவன்மார் யாரானு மொழியப்படவில்லை என்பதும் யாண்டைய தென்றொழிக. அற்றன்று, முன்னைக்காலத்துச் சிவனடியார் தம்மை யெல்லாந் தொகுத்தோதிவழுத்துவான் புகுந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் மாணிக்கவாசகரையும் அங்ஙனம் எடுத்து மொழிந்த தில்லை யாலோவெனின்; நன்றேவினாயினாய், மாணிக்க வாசகர் அதெந்துவே யென்றருளாயே என்னுட விடங் கொண்டாய் என்னும் வாக்கியக் கூறுகளானே கன்னட நாட்டு வீரசைவ குலத்துதித்த பெரியாரென்பது பெறப்படுதலின், அக்குலநெறி பிழையாது நின்று சிவவழிபாடி யற்றிச் சிவசாயுச்சிய முத்திப்பெரும் பேறுதலைக்கூடிய அவரைச் சித்தாந்த சைவ மரபின்கண் அவதரித்துச் சித்தாந்த சைவத் துறைவழி நின்று இறை பணிபேணிச் சிவசாயுச்சிய முத்திப் பெரும் பேறுதலைக் கூடிய சுந்தரமூர்த்திசுவாமிகள், சித்தாந்த சைவத் துறைவழி நின்று அங்ஙனமே இறைவன் றிருவரு ணெறிதலைக்கூடிய ஏனைச் சித்தாந்த சைவப் பெரியாரைத் தொகுத்தோதுந் தந்திருப்பதி கத்தினுட் கிளந்தெடுத்துக் கூறுதற்கு அமர்ந்திலராய்ப் பத்தராய்ப் பணிவார்க ளெல்லார்க்கு மடியேன் என்பதனாற் குறிப்பாற் கொளவைத்து ஒழிபு கூறியருளினார். மாணிக்கவாசக சுவாமிகள் வீரசைவ குலத்திற்குரியரே யாமென்பது வீரசைவ குலத்தா ரெல்லாரும் அச்சுவாமிகளைத் தமக்குரியராகக் கொண்டு பெரிது வழிபாடியற்றி வருதலானும், புதுச்சேரி முதலான விடங்களி லுள்ள வீரசைவ மடாதீனங் களெல்லாம் மாணிக்கவாசகர் பெயர்கொண்டே நிலவுதலானும் இனிது துணியப்படும். இப்பெற்றி தேறாத சைவசித்தாந்த நன்மக்களில் ஒரு சிலர் நடுநிலை திறம்பி மாணிக்கவாசக சுவாமிகளைச் சைவசித்தாந்த மரபின்கண் அவதரித்தவரேயா மெனக் கொண்டு, ஏனைச் சைவ சித்தாந்த குரவன்மார் அவரைத் தந்திருப்பதி கங்களுட் குறிப்பிடாமை யென்னையென்று எதிர் கடாவுவார்க்குச் செவ்வனே இறுக்கலாகாமையின் ஏதேதோ தமக்குத் தோன்றியவா றெல்லாங்கூறிப் பெரிதும் இடர்ப்படு வாராயினார். சமயாதீத நிலையாய் விளங்கு மெய்கண்ட சந்தானச் சித்தாந்த சைவ மரபு பேணும் புண்ணியம் பெரிதுடையோ மாயினும், நடுநிலை பிறழாது உண்மைப் பொருளை யுலகிற்குத் தெளித்தல் வேண்டு மென்னும் மனவுறுதிப்பாடு உடையோ மாகலின், மாணிக்கவாசக சுவாமிகள் சரிதத்தை உண்மை யாராய்ச்சி செய்து, அவ் வாராய்ச்சியில் யாம் மெய்யெனத் துணிந்துகொண்ட பொருட் கூறுபாடு பற்றி அச்சுவாமிகள் வீரசைவ குலத்தின ரேயாமென உலகின்கட் பிரசித்தஞ் செய்யுந் துணிபுடையோ மாயினோம். இதனைக் காணும் நம் ஆப்த நண்பர்களான சைவசித்தாந்தச் செல்வர்கள் இதுபற்றி நம்மேற்கதுமென வெகுட்சி கொள்ளாது, அதனைப் பொறுமையுடன் ஆய்ந்து பார்த்துத் தம் உண்மைக் கருத்தை யுலகின்கண் வெளிப்படுப் பார்களாக வென்னும் வேண்டு கோளுடையோம்; எப் பொருள் ளெத்தன்மைத் தாயினு மப்பொருண், மெய்ப் பொருள் காண்பதறிவு என்னுந் திருவாக்குண்மை கடைப்பிடிக்க வல்லார்க்கே யாங்கூறிய உரைவாய்மை நன்கு புலப்படா நிற்கும். இனி, மாணிக்கவாசக சுவாமிகள் அங்ஙனம் வீரசைவ குலத்தின்கண் அவதரித்தா ராயினுஞ் சைவசித்தாந்த முடி பொருளுணர்ந்து அப் பொருணெறி வழாதொழுகிச் சிவவழிபாடி யற்றிச் சிவமுத்திதலைக் கூடினா ரென்பது அவர் அருளிச்செய்த திருவாசகத் திருமுறையானே நன்கு பெறப் படுதலின், அவர் வீரசைவ குலத்துதித்தாரென்பது பற்றியே ஈண்டைக் காவதோ ரிழுக்கில்லை யென விடுக்க. அற்றேல், சுந்தரமூர்த்தி சுவாமிகள் அவர் குலவுரிமை கருதாமல் அவரைத் தந்திருப்பதிகத்திற் கிளந்தோத வமையுமாம் பிறவெனின்; அற்றன்று, சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலத்தே மல்கிக்கிடந்த வீரசைவமரபினர் மாணிக்கவாசகரைத் தமக்குரிய குரவராகக் கொண்டு பேணி வழிபட்டு வந்தார்களாதலின் அவர் தம்மைத் தந்திருப்பதிகத் தினுட் கிளந்தோத ஒருப்பட்டிலர். அற்றேல், நம்பியாண்டார் நம்பிகள் தாந் திருமுறை வகுப்புச் செய்தருளிய காலத்துத் திருவாசகத்தை ஏனைக்குரவன்மார் அருளிச்செய்த திருமுறை களோடு ஒருங்கு வைத்து ஒன்பதாந் திருமுறையாக வகுத்தா வாறென்னை யெனின், நம்பியாண்டார் நம்பிகள் காலத்தே வீரசைவ மரபு சுருங்கி வருதலானும், திருவாசகத்தின் கட் காணப்படுஞ் சொன்னயம் பொருணயங் களுஞ் சித்தாந்த சைவக் கோட்பாடுகளும் எல்லாரானும் பெரிது போற்றப் படுதலின் அதன்கட் காணப்படும் வீரசைவப் பொருணுட் பங்கள் உணர்வாரின்மையின் மறைந்து போதலானும், சித்தாந்த சைவரெல்லாருந் தமக்கும் அத் திருவாசக முரியதென்று போற்றுதலானும் அதனை அவ்வாறு ஒன்பதாந் திருமுறை யாகக் கோத்தாரென மறுக்க முற்காலத்து வீரசைவ மரபினர் பெருக்கமுற்றிருந்தா ரென்பதற்குப் பிரபுலிங்கலீலை முதலான நூல்களே சான்றாம். இங்ஙன மாகலின், ஏனைக்குரவன்மார் தந்திருப்பதிகங்களுள் அவரைக் கிளந்தெடுத்து மொழிந் திடாமை கொண்டே அவர் அக் குரவன்மார் மூவர்க்கும் பின்னிருந்தாரெனக் கூறுதல் போவியா யொழியு மென்று ணர்க. இது கிடக்க. இனி, நாம் மேலே விளக்கிய தருக்கவுரையின்கட் கருத்தொருப் பாடிலராய் யாம்பிடித்த முயலுக்குக்கால் மூன்றே என்னும் வழக்குப் பற்றி ஏனைக்குரவன்மார் மூவரும் மாணிக்கவாசகரைத் தந்திருப்பதிகங்களுட் கிளந்தெடுத்துக் கூறாமையான் அவர் அம்மூவர்க்கும் பின்னிருந்தாரென்பது தேற்றமாமென வுரைப்பார், அற்றேல் அம்மூவர்க்கும் பின்னிருந்த மாணிக்கவாசகர் தாமருளிச்செய்த திருவாசகந் திருக்கோவை யாருள் அம்மூவரையுங் குறிப்பிட்டு ஏது முரையாமை யென்னையென எதிர்கடாவுவார்க்கு விடுக்கு மாறறியாது விழிக்குநீரரவராகலின், அங்ஙனம் அழிவழக்குப் பேசுதல் பெரியதோர் ஏதமாமென் றுணர்ந்து கொள்க. அல்லதூஉந், திருவாசகந் திருக்கோவையாரின் கட் காணப்படும் தமிழ்ப்புலனெறி வழக்கிற்கும், தேவாரத் திருமுறையின் றமிழ்ப் புலனெறி வழக்கிற்கும் வேறுபாடு பெரிதாகலானும், அவற்றுள்ளும் முன்னையவற்றில் தமிழ்த் தொன்மை வழக்கே பெரும்பான்மையும் பயின்று வருதலானும், அவ்விரு வழக்கிற்கும் இடையிட்ட காலம் சிறியதாதல் செல்லாது. தமிழ்த் தொன்மை வழக்கே தழீஇ வந்த திருவாசகந் திருக்கோவையா ரென்பன, தமிழ்ப் புதுவழக்கு இடையிடையே விராய்வந்த தேவாரத் திருமுறைக்குப் பின்னெழுந்தன வென்றல் பெரியதோர் தலைதடுமாற்றமாய் அங்ஙனங் கூறிவிடுவார் தமிழ் வழக்கு ஒரு சிறிது மறியாரென்பதனைப் பெறுவிக்கும். ஆகலின், அவ்வாறு கூறுதல் எவ்வாற்றானும் பொருத்த மில்லாத போலியுரையா மென்க. ஈண்டுக்கூறியவாற்றால் போப்புத்துரை யுரைத்தவாறு ஞானசம்பந்தப் பிள்ளையார்காலம் கி.பி. பதினோராம் நூற்றாண்டின் கண்ணதாதல் ஆங்கில நூல்வல்லார் செய்து போதருஞ் சரிதவாராய்ச்சிக்கு மாறுபாடாய் முடிந்திடுதலின் அவர்காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பாதிக் கண்ணதென்று கோடலே உண்மைச் சரிதமுறையா மென்ப தூஉம், ஞான சம்பந்தப் பிள்ளையாரோ டொருங்கிருந்த அப்ப மூர்த்திகள் காலம் கி.பி. ஆறாம் நூற்றாண்டின் பிற்பாதி முதற்கொண்டு தொடங்குதலின் அவ்வப்பமூர்த்திகளாற் குறித்தருளப்பட்ட நரியைக் குதிரையாக்கிய திருவிளை யாடனிகழ்ச்சியும் அந்நிகழ்ச்சிக் கேதுவாயிருந்த மாணிக்க வாசகர் காலமும் அவ்வாறாம் நூற்றாண்டின் முற்செல்லுமா மென்பதூஉம், திருவாசகச்செய்யுள் வழக்குக் கடைச்சங்கத் தார் காலத்துச்செய்யுள் வழக்கோடு பெரிதொத்துச் சிறிதொவ்வா மையானும் தேவாரச்செய்யுள் வழக்கோடு சிறிதொத்துப் பெரிதொவ்வாமையானும் அஃதவ் விருவகை வழக்கும் விராய்வருதற்கேற்ற கி.பி. மூன்றாம் நூற்றாண்டின்கண் எழுந்ததெனலே வாய்ப்புடைத்தாமென்பதூஉம், ஞான சம்பந்தர் முதலான சமயகுரவர் தந்திருப்பதிகங்களுள் மாணிக்கவாசகரைக் கிளந்தெடுத்து மொழியாமைபற்றி அவர் அம்மூவர்க்கும் பின்னிருந்தாரெனக் கூறுதல் ஒருவாற்றானும் பொருந்தாத போலியுரையாமென்பதூஉம் இனிது விளக்கப்பட்டன. தமிழ்ப் புலமைமலிந்த வித்துவசிகாமணிகள் இன்னோரன்ன சரிதவாராய்ச்சியைப் பழித்துச்சோரவிடாது கைக்கொண்டாய்ந்து நலம் பெருக்குவரென்னுந் துணிபால் இதனை யொருதூண்டுதற்கருவியாக முன்னெழுதிவிடுத்தாம். சுவேதா சுவதரோபநிடத மொழியெர்ப்பு அங்குட்ட மாத்திரையாய் ஞாயிறுபோற் சுடர்ந்து விளங்கும் அவன், சங்கற்பமும் அகங்காரமும் அறிவுத் தன்மையும் தன் சரீரத்தின் றன்மையும் உடையோனாய்க், கசை நுனியிலுள்ள இரும்பு அக்கசையின் வேறாய்க் காணப்படுமாறு போல மற்றையதின் வேறாகக் காணப்படுகின்றான். (8) நூறு கூறிடப்பட்ட ஒரு மயிர்முனையின் நூறில் ஒருபாகம் போலச் சீவன் கருதப்படற் பாலதாம்; அவன் அளவறியப்படாதவனாவன். (9) அவன் பெண்ணுமல்லன், ஆணுமல்லன், அலியுமல்லன், அவன் தானெடுக்கும் உடம்பின்றன்மையாய் விளங்குகின்றான். (10) உண்ணல் பருகுதலாற் சரீரம் வளர்ச்சியுறுமாறு போலச், சங்கற்பம், பரிசம், திருட்டி, மயக்கமுதலியவற்றாற் சீவான் மாவானது தன் கருமத்திற் கீடாகப் பலவேறு தேகங்களைப் பலவேறிடங்களில் முறைமுறையே எய்துகின்றது. (11) சீவான்மாவானது தன் குணங்களாலேயே பலப்பல வானதூல சூக்கும தேகங்களை அடைகின்றது; தன்னிலே வேறுபாடுடையதன்றாயினும், தன்னுடைய கன்மவியல் பானும் உடம்பினியல்பானும் அஃது அவ்வுரு வங்களோடு ஒற்றுமை யுறுதற்காரணந் தோன்றுகின்றது. (12) ஆதியந்த மில்லோனாய், உண்ணுழையப்படாத விதனுள்ளிருந்து உலகைப் படைத்திடுவோனாய், அநேகரூப முடையோனாய், விசுவைகனாயுள்ள ஈசுரனையார் அறிகின் றார்களோ அவர்கள் எல்லாப் பாசங்களினின்றும் விடு படுகின்றார்கள். (13) அறிவினாலறியப்படுவோனாய்ச், சேதனனாய், உள்ளது மில்லதுமாய் எல்லாவற்றிற்குங் காரணனாய்ச் சிவனாய்ப், பாகங்களெல்லாம் உற்பத்தியாதற் காரணானாயுள்ள அக்கடவுளை அறிகின்றவர்கள் தந்தேகங்களை விடுகின் றார்கள். ஐந்தாம் அத்தியாயம் முடிந்தது. ஆறாம் அத்தியாயம் துறவிகளிற்சிலர் மயக்க வுணர்ச்சியாற் பொருள்களின் சுபாவத் தன்மையே உற்பத்திக்குக் காரணமாமென்பர், வேறுசிலர் காலமேகாரணமா மென்பர், ஆனால், உலகத்தில் இறைவன் முதன்மையாற்றான் பிரமசக்கிரஞ் சுழலுகின்றது. (1) நித்திய வியாபகனாய்ச் சருவஞ்ஞனாய்க் காலகாலனாய் எல்லாக் குணங்களு முடையோனாய் எல்லா மறிவோனாய் உள்ள அவனாலே ஆளப்பட்டு நிலநீர் தீவளிவிண் என்று நினைக்கப்படுவதாகிய சிருட்டியானது சுழலுகின்றது. (2) இக்கருமத்தினை யியற்றி அதன்கண் திரும்பவும் ஒற்றித்து நின்று ஒன்று இரண்டு மூன்று அல்லது எட்ட னோடும், காலத்தோடும், ஆன்மாவின் சூக்கும குணங்களோ டுமாக ஒருதத்துவத்துடன் மற்றொரு தத்துவத்தினை அவன் இயைத்துவிடுகின்றான். (3) குணங்களோடு கூடிய கருமங்களைச் செய்து முடித்தபின் யார் அவற்றையும் தம் அன்பு முழுவதினையும் இறைவன் மாட்டுப் பதியவைக் கின்றார்களோ அவர்கள் அவை யின்மையின் காரியங்களுமில்லா தொழி கின்றனவாகலான் - சருமவொழிவினால் தத்துவங்களின் வேறாய் நிற்பதனை எய்துகின்றார்கள். (4) அவன் சையோக நடத்தற்குரிய காரணங்களுக்கு நிமித்த காரணனாய் ஆதியாயிருக்கின்றான், மூன்றாகப் பகுக்கப்படுங் காலதத்துவத்தினைக் கடந்து அவன் காலமின்றி விளங்கு கின்றான்; பவபூதனாய்த் தன்னிதயத்தில் வசிப்போனாய் விசுவரூபனாயிருக்கின்ற வழிபாடு கடவுளை உள்ளத்தின் கண் யார் உபாசிக்கின்றார்களோ அவர்கள் தத்துவங்களின் வேறாய் நிற்பதனை எய்துகின்றார்கள். (5) மாயாமரங் கால மிவற்றினுருவங்களினும் பெரி யோனாய், அவற்றின் வேறுமாய்ப் பிரபஞ்சஞ்சுழன்று செல்லு நிலைக் களனாய், அறத்தை நிறுத்திப் பாவத்தை அழிப்போனாய், ஒருவனான்மாவினுள் விளங்குஞ் சோதி முதல்வனாயுள்ள அவனை யார் அறிகின்றார்களோ அவர்கள் மரணத்தைக் கடக்கின்றார்கள். (6) அவனைத் தேவர்கட்கெல்லாம் மேலான மகேசுர னென்றும், பதி யென்றும், பெரியதினெல்லாம் பெரிய னென்றும், சோதியனென்றும், புகழப்படும் புவனேச னென்றும் அறிகின்றோம். (7) அவனுக்குக் காரியமுமில்லை காரணமுமில்லை; அவனை யொப்ப தூஉம் மிக்கதூஉம் யாரானுங்காணப்பட வில்லை; அவனுடைய பராசத்தியானது பலவேறியற்கை யுடையதென்று சொல்லப்படுகின்றது; அஃது அவன்கட் சுபாவமாய்ச் சார்ந்து நிற்றலேயன்றி ஞானங்கிரியைகட் கேற்ற வாறுந் தொழிற்படு கின்றது. (8) இவ்வுலகத்தின்கண் அவனுக்கு மேலான பதியுமில்லை, மேலான ஈசனுமில்லை, காரணமுமில்லை, அவனே காரணன், காரணனான அதிபதிக்கும் அவன் அதிபனாவன்; அவனைப் பிறப்பிக்கின்றவனும் அவனுக்கு - அதிபனுமில்லை. (9) தன்னியற்கையினாலே பிரதானத்தினாற் றரப்படும் பல நூலிழைகளைத் தன்னகத்தே பொதிந்துவைக்குஞ் சிலந்தியைப் போன்ற ஏகனான இறைவன் பிரமத்தோடு யாம் ஐக்கிய முறுதலை அருளக் கடவன். (10) சருவபூதங்களினுங் கூடனாய்ச் சருவவியாபியாய்ச் சருவபூதாந்தரான் மாவாய்ச் சருவகருமங்கட்கு முதல்வனாய்ச் சருவபூதங்களுள்ளுஞ் சாட்சி மாத்திரையா யிருப்போனாய்க் கேவலஞ் சேதனனாய் நிர்க்குணனாயுள்ள தேவன் ஏகனே. (11) தொழிலறுந்து கிடக்கும் பலவற்றுள்ளும் ஏகனாய் வசிப்போன் வித்து ஒன்றனையே பலவாகச் செய்கின்றான். தம்முடைய ஆன்மாக்களுள் வைக்கப்படுவோனாக அவனை அறியவல்ல பெரியோர் நிலையான இன்பத்தைப் பெறு கின்றார்கள், ஏனையோரல்லர். (12) நித்தியர்க்குள் நித்தியனாய்ச் சேதனர்க்குட் சேதனனாய் விரும்பும் பொருள்களை நுகர்தலுறும் பலவற்றுள்ளும் ஏகனாய் அவனிருக்கின்றான். சாங்கியத்தானும் யோகத்தானும் அறியப்படுங் கடவுளின் இந்தக் காரணத்தை அறியவல்லோர் சருவபாசங்களினின்றும் விடுபடுகின்றார்கள். (13) சூரியனும் விளங்குதலில்லை, சந்திரனுந் தாரகைகளும் விளங்குத லில்லை, அந்த மின்னல்களும் விளங்குதலில்லை, அப்படியானால் இந்த நெருப்பு எவ்வாறு தானே விளங்கும். அவன்றானே வெளிப்படுவானாயின் அவனைச் சார்ந்து நின்று ஏனையவெல்லாம் வெளிப்பட்டு விளங்குகின்றன. அவனுடைய விளக்கத்தினால் இவையெல்லாம் விளக்க முறுகின்றன. (14) இப்புவனத்தின் மத்தியில் அவன் ஒருவனே அஞ்சன், நீரினுள் தீயுமாய்ப் புகுந்திருக்கின்றான். அவனை அறிகின்றவர் மிருத்துவைச் சயிக்கின்றார்கள். அப்பேற்றினை யடைதற்கு வேறு வழியில்லை. (15) அவன்விசுவத்தைச் சிருட்டிக்கின்றான், விசுவத்தை அறிகின்றான் அவன் ஆன்மயோநி, காலகாலன், குணி, சருவவித்தியன், பிரதானத்திற்கும் ஷேத்திரஞ்ஞனுக்கும் பதி, குணங்களுக்கு ஈசன், உலகினைச்சார்ந்து வரும் மோக்கந்திதி பந்தமென்பவற்றிற்குக் காரணன். (16) அவன் அவனைப் போலவே மரணமில்லான், எல்லாவறிவும் எல்லா முதன்மையும் உலகை இரட்சித்தலு முடைய இறைவன் சரீரத்தில் வசிக்கின்றான். இவ்வுலகை என்றும் ஆட்சிசெய்கின்றான்; இவ்வுலகிற்கு வேறு காரணனில்லை. (17) ஆதியிலே பிரமனைப்படைத்து அவனுக்கு வேதங்களை வழங்கித் தன்னுடைய ஞானத்தினையும் விளக்கியருளிய முதல் வனிரட்சிப்பை முத்தியடைதல் வேண்டி அணுகிச் செல்லக் கடவேனாக. (18) நிட்கலனாய் நிட்கிரியனாய்ச் சாந்தனாய்க் குற்றமிலனாய் நிரஞ்சனனாய் இறப்பில்லாமை யடைதற்குக் கடைப்பாலம் போல்வானாய் விறகுண்ணுந் தீக்கொழுந்துபோல்வானாய் உளன். (19) மானவன் ஆகாயத்தைத் தோல்போற் சுருட்ட வல்லனாங் காறும் சிவனை யறியுமறிவா லன்றித் துக்கசாந்தி யுண்டாக மாட்டாது. (20) தன்தபோ வல்லமையானுந் தேவப்பிரசாதத்தானுஞ் சுவேதா சுவதர முனிவர் மிகச்சிறந்த நிலையிலுள்ள அத்தியாச் சிரமிகளுக்கு, எல்லா விருடிகளானும் எல்லாவற்றினு மெல்லாமாய்த் தியானிக்கப்படும் மேலான சுத்த பிரமத்தி னியல்பை வகுத்துரைத்தார். (21) பரம இரகசியமாயுள்ள வேதாந்தமானது, அடக்க மில்லாத புதல்வனுக்காவது சீடனுக்காவது உபதேசிக்கற் பாலதன்று. (22) தேவனிடத்துப் பரமபத்தி பண்ணுவோனாய் அங்ஙனம் பண்ணுதலானே குரவனிடத்தும் அவ்வியல் புடையோனா யிருக்கும் மகான்மாவுக்கு ஈண்டுணர்த்தப்பட்ட இரகசியார்த் தங்கள் தாமே விளங்குகின்றன, அவ்விரகசியார்த்தங்கள் தாமே விளங்குகின்றன. (23) ஆறாம் அத்தியாயம் முடிந்தது. சுவேதா சுவதரோபநிடத மொழிபெயர்ப்பு முற்றும். திருச்சிற்றம்பலம். 18. சுதேச பாஷாப்பியாச நிவர்த்தி சென்னைச் சருவகலாசாலைச் சங்கத்தார் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் முதலிய பாஷைகளை அப்பியசித்தலாலே பயனில்லாமையின், உயர்ந்த வகுப்பி லிருந்து கொண்டு ஆங்கில மொழிப்பயிற்சி செய்யும் மாணாக்கர்களுக்கு அவற்றைப் போதித்தல் வேண்டா வெனவும், அவற்றிற்குப் பிரதியாக வடமொழியினை ஆங்காங்குக் கற்பித்தலே போதுமெனவும் ஆரவாரஞ்செய்து போதருகின்றார். (பெண்டிர், ஆடவர், சிறாரென்னும் முத்திறத்தாருள்ளும் வழக்கமுற்று நடைபெறுகின்ற சுதேச பாஷாப்பியாசத்தை ஒழித்துவிட்டு, உலகவழக்கொழிந்திறந்த வடமொழியினை மாத்திரம் அப்பியசித்தல் போதுமெனக் கூறும் அவருரை சிறிதும் நியாயமாகக் காணப்படவில்லை). ஒருவர் கருத்தினைப் பிறரொருவர்க்குத் தெரிவித்து ஒருமையுற்று வாழ்வதற்கு இன்றியமையாது வேண்டப்படுங் கருவியாயுள்ளது ஒருபாஷையாம், அந்தப் பாஷைதானும் தன்னை வழங்கும் மாந்தருடைய நாகரிக விருத்திக் கேற்பச் சிறிது சிறிதாய் மாறுதலுற்று அபிவிர்த்தியாய் வருதலும், அவர் தம் அநாகரிக விருத்திக் கேற்பச் சிறிது சிறிதாய்த் தேய்ந்து போய் இறுதியில் இறந்தொழிதலும் இயற்கையாகப் பெற்றுவரும். சில நூற்றாண்டுகளுக்கு முன்னே அநாகரிக நிலையிலிருந்த ஆங்கில மக்களுக்குள்ளே ஒரு மூலையில் அருகி வழங்கிய ஆங்கில பாஷையானது அம்மக்கள் பிற்காலத்தே செய்துவரும் பெருமுயற்சியானும் நூலறிவாற் றலானும் பெருக்கமுற்று உலகமியாங்கணும் பயிலப்படுகின்றது. பல்லாயிர வருடங்களுக்கு முன்னே நாகரிக நிலையிலிருந்த ஆரியமக்கள் பின்னர்த் தம் முயற்சியிழந்து நாகரிக விருத்தி குன்றிப்போதலால் அவர் வழங்கிய இலத்தீன், ஆரியம் முதலிய பாஷைகள் சிறிது சிறிதாய்த் தேய்ந்து உலகவழக்கமற்று ஒழிந்தன. அங்ஙனம் இறந்தொழிந்த பாஷாப்பியாசத்தால் அப்பாஷையினை வழங்கிய ஆரியமக்கட் பண்டை ஆசார வியல்புகளும், சமய நிலைகளும் ஒரு சிறிது விளங்குமேயன்றி, இக்காலத்து வேறு அப்பாஷாப்பியாசத்தாற் பெறப்படும் பயன் பெரிதில்லை. இனி, உலகவழக் குடையவான தமிழ் முதலான சொற்களோ பண்டைக்காலந்தொட்டு இன்று காறும் வழக்கு வீழாது நடைபெறுதலால், இப்பாஷாப்பியாசங்கொண்டு பண்டைக் காலத்துத் தென்றமிழ் நாட்டியல்புகளும், சமயநிலை முதலாயினவும் அறியப்படுதலேயன்றி இக்காலத்து ஆங்கில நூலறிவு விருத்திப் பேற்றினை இத்தென்னிந்திய அகனாட் டுள்ளார் இனிதடைந்து வாழுதலும் உண்டாகும். இப்பாஷாப்பி யாசத்தால் ஆங்கிலமக்கள் நூதன நூதனமாய்க் கண்டு வெளியிடும் அரியபெரிய விஷயங்கள், உபந்நியாசங் களானும், நூலியற்றுதலானும், மாணாக்கர்க்குப் போ தித்தலானும் தென்னாட்டகத்துள்ளார் எல்லார்க்கும் இனிதுபுலனாய் அவரியற்கை நல்லறிவினை மிகுதிப்படுத்தும். பிறதேசங்களின் அரியபெரிய நாகரிக வரலாறுகள் இச்சுதேச பாஷாப்பியாசத்தால் நன்குணர்த்தப்படுதலின், அவ்வுணர்ச்சி யால் மக்களெல்லாரும் ஒற்றுமை யடைந்து வாழுங்கடப்பாடும், தம்முடைய பாஷைகளை வளம்படுத்துந் துரைத்தனத்தார் மாட்டு நன்றியறிதலும் செழித்தோங்கும். இனி, இந்தமுக்கிய நன்முறையை விடுத்து உலகவழக்கு வீழ்ந்த வடமொழி முதலான பாஷைகளைப் பயிற்சி செய்தலாற் பெறப்படுவன யாவையோ வெனின்; - ஒவ்வொரு சொல்லையும் புதிது புதிதாக அறியவேண்டும் முயற்சியும், அங்ஙனம் வருந்தியறிந்த சொற்களும் அவ்வாறு அறிந்தார்க் கன்றி மற்றையோர்க்கு விளங்காதன வாகையால் நாடோறும் அவற்றைப் பயின்று ஞாபகத்திற் பதிக்கவேண்டும் இடுக்கணும், பதித்தவழியும் அவற்றாற் பிறரைப் பயன்படுத்துமாறின்மையும், சுதேசபாஷாப் பியாசஞ் செய்தார் மாட்டு ஒற்றுமை யின்மையும் பிறவுமேயாம். அற்றன்று, வடமொழி முதலான முன்னைக் காலத்து மொழிகளைப்பயிற்சி செய்தலானே அவற்றின்கட் பொதிந்து கிடக்கும் அரியபெரிய விஷயங்கள் புலப்பாடாக அறிவு உரமேறிக் கொழுமதி யடையுமாகையால், அவை உலகவழக்கு வீழ்ந்தமை கொண்டே அவற்றின் பயிற்சி வாய்ப்புடைத் தன்றென மறுத்தல் பொருந்தா தாமெனின்:- நன்று சொன்னாய், பண்டைக் காலந்தொட்டுவழக்குடைத்தாய் வருந் தமிழ் முதலான பாஷைகளின் கண்ணும் அவ்வாறே அறியப்படுவன வாய்க் கிடக்கும் அரியபெரிய விஷயங்கள் பலவாதலான், அப்பெற்றிப்பட்ட பாஷைகளுள் ஒன்றை மாத்திரம் பயிலல் வேண்டும் ஏனையவற்றை யொழித்தல் வேண்டுமெனக் கூறுதல் நடுவுநிலையுரை யாகாதென்றொழிக அல்லதூஉம், (வட மொழியைக் காட்டினும் எத்தனையோ மடங்குயர்ந்த தமிழ்முதலிய பாஷைகள், அவ்வாரிய மொழியோடு ஒற்றுமை யுறுதற்குமுன் உயர்ந்த உண்மைக் கருத்துக்களும், உலகியல் பிறழாதசெய்யுள் வழக்கும், எளிய முறையாற் சொற்கோப்ப மைந்த செய்யுளுரை நடையும், உய்த்துணர்ந் துலகியலாறு தெரிக்கும் விரிந்தவுணர்ச்சியும், அறிவுநுட்பத்திற் கியைந்த தத்துவ இரகசியார்த்தங்களும், உண்மைச் சரிதமுறைவழுக்கா வரலாறுகளும் உடையனவாய்ப் பெரிதுவிளங்கிப், பின்னைக் காலத்து அவ்வாரியமொழிச் சம்பந்தம் பெறுதலால் அவ்வருமை பெருமைகளை ஒருங்கிழந்து அவ்வாரிய மொழியின்கட் காணப்படும் பிள்ளைமைக் கருத்துக்களும், உலகியலாறு கடந்துரைக்குஞ் செய்யுள் வழக்கும், அரிதுணரப் படுவனவாய்ச் செயற்கைத்திற மமைந்த செய்யுளுரை நடையும், உய்த்துணர்ச்சியின்றி மேனோக்காய் உலகியலாறு கடந்து செல்லுஞ் சிறுகிய வுணர்ச்சியும், இயற்கையறிவு நுட்பத்தோடி யையாத தத்து வார்த்தங்களும், சரிதவுண்மைத் திறம் பிழைத்த கட்டுக் கதைகளும் இடையிடையே விரவப் பெற்றுப் பொலிவு குன்றுகின்றன. ஆரியபாஷாப் பியாசம் பெருகாத இத் தென்றமிழ் நாட்டகத்தேயே அவ்வாரிய மொழிவழக்குகள் ஆரிய மக்கள் கூட்டுறவாற் பையநுழைந்து கேடுபயக்கு மாயின், அவ்வாரிய பாஷையைக் கலாசாலைகளில் முறையே கற்பிக்கவும், சுதேசபாஷாப்பியாசத்தை நீக்கவும், நம்கௌரவ துரைத் தனத்தார் கட்டளையிடுதலால் சுதேச பாஷைகட்கும் அவற்றை வழங்கும் நன்மக்கட்கும் நேருங்கேட்டினை நாங்கிளந்து கூறுதல் வேண்டா. இனி, இறந்தொழிந்த அவ்வாரிய பாஷையினைப் பயிலும் மாணாக்கர்களும் அதன்கண் இடர்ப்பா டுடையராய்ச் சருவகலாசாலையிற் றேர்ச்சி பெறும் பொருட்டுச் சிலகற்றுப் பின் அப்பயிற்சி யினைச் சோரவிடுவர். இதனால், சுதேச பாஷாப் பியாசமும் ஆரியபாஷாப்பியாசமும் அம்மாணாக்கர் கட்கு இல்லையாய்ப் போதலின், நங்கௌரவ துரைத்தனத்தார் இந்து மக்கட்குக் கலைப்புலமை நிரப்புதல் வேண்டு மெனக்கருணை மேற் கொண்ட எடுப்புப் பயனின்றி யொழியும். இப்பரதகண்ட மாதேயத்தின்கட் கலைப்புலமை நிரம்பினோரை எண்ணிப் பார்க்கும்வழி ஆயிரவருள் ஒருவரைக் காண்டலும் அரிதாம். அங்ஙனம் அரித்தெடுத்துப் பார்ப்பினும் அவர்தாமுங் கலைப்புலமை சிறிதே நிரம்பப் பெற்றாராவர். ஏனைஎல்லாருங் கல்வியறிவு சிறிதும் வாய்ப்பப் பெறாதவராவர். கல்வியறிவில்லாத அம்மாந்த ரெல்லாரும் தமிழ் முதலிய பாஷைகளைச் சுத்தமாய் வழங்கி வாழ்க்கை நடாத்து கின்றார். அங்ஙனம் அவர் மேற்கொண்டொழுகும் தமிழ்வாழ்க்கையின் கண்ணே சிறிதுஞ் சம்பந்தம் பெறாத ஆரியம் ஆங்கிலம் முதலான பாஷாப்பியாசஞ் செய்தோர் அவ்வாழ்க்கை யினையுடைய மக்கள்மாட்டு யாங்ஙனங் கலந்தொழுகுவார்? யாங்ஙனந் தாமறிந்த கலைப்பொருள் நுட்பங்களை அவர்க்கு அறிவுறுப்பார்? அவரை அவர் சீர்திருத்து முபாயம்யாது? இன்னோரன்ன காரியங்களை நன்காராய்ந்தறிய வல்லரான நங்கௌரவ துரைத்தனத்தார் சுதேசபாஷாப் பியாசத்தை நிவர்த்தி செய்ய எண்ணுவது வியக்கப்படுவதொன்றாம். அற்றன்று, சென்னைச் சருவகலா சாலைகளிற் சுதேசபாஷாப் பியாசம் நிரம்பச் சீர்கேடா யிருத்தலால், அங்ஙனம் அப்பியசிப்பது பயனின்றாமெனின்; அறியாது சொன்னாய், எப்-ஏ வகுப்பில்தவிர மற்றை வகுப்புக்களிற் போதிக்கப்படும் சுதேசபாஷாப் பியாசம் மிகவுந் திருத்தமா யிருத்தலால் அவ்வாறு சொல்லுத லடாது. அல்லதூஉம், சீர்கெட்டிருக்குஞ் சுதேச பாஷாப்பி யாசத்தினைத் திருத்திப் பண்படுத்துதலே முறையாமன்று. அப்பயிற்சியினை அறவே ஒழித்துவிடல் வேண்டுமெனக் கூறுதல் நியாயவுரையாகாது. நாமறிந்த வளவிற் சென்ற நான்கைந்து வருடங்களாக எப்-ஏ வகுப்புக்குப் பாடங்களாக நியமிக்கப்பட்ட நூல்கள் மிகவுஞ் சாமானியமானவை. ஆழ்வார் சரித்திரம், இராமாயண வெண்பா, போச சரித்திரம், அரிசந்திரன் சரிதை, சூளாமணி வசனம் முதலிய நூல்கள் சொற்பொருணுட்பங்களும் பயில்வோர்க் கின்பம் பயப்பது மின்றி உரை வளங்குன்றி விழுப்பமுறாதனவாம்; பயில்வோர்க்குத் தமிழின் மாட்டு இகழ்ச்சி விளைத்து அவர் நல்லபிமானத்தைக் கெடுப்பனவாம், தமிழ்மொழியி னுயர்ச்சியினைக் குறுக்குவனவாம். இன்னோ ரன்ன போலிநூல்களைச் சருவகலா சங்கத்தார் எப்-ஏ வகுப்புக்குப் பாடங்களாக நியமித்தலாலேதான் தமிழ் மொழிப்பயிற்சி இகழப்படுகின்றது. கலாசாலைகளில் உபாத்திமைத்தொழில் பூண்டிருக்கும் தமிழ்வல்ல பண்டிதர் களும், ஏனைத்தமிழ்ப் புலவோரும்நாம் ஈண்டு வெளியிட்ட அபிப்பிராயமேகொண்டு போதருகின்றார். இப்பெற்றியவான போலிநூல்களைப் பாடமாக நியமித்த லொழிந்து சொற்பொருட்டிற மினிதுடைய அரியநூல்களைச் சருவகலா சங்கத்தார் பாடமாக நியமிப்பார்களாயின் தமிழ்முதலான சுதேசபாஷைகள் மிகச் செழித்தோங்கும். அற்றன்று, ஆரியபாஷாப் பியாசத்தானே சுதேச பாஷைகள் தாமே உரங்கொண்டு வளர்ச்சி பெறுமாதலால் அவற்றை வேறாக அப்பியசித்தல் வேண்டாவெனின், சுதேசபாஷையினையும் ஆரியபாஷையினையும் ஒருங்கு கொண்டு பயிற்சி செய்தாலன்றி, ஆரியபாஷையினை மாத்திரம் பயிறலாற் சுதேசபாஷைகள் பெருக்கமுறு மென்பார் கூற்றுப்பொருத்த மின்றிப் போலியாயொழியும். அற்றேல் உயர்ந்த வகுப்புக்களிற்பயிலும் மாணாக்கர் சுதேச மொழி பெயர்ப்பிற்1 பரிசோதனை செயப்படுவராகலின், சுதேச பாஷாப்பியாசம் முழுவதூஉம் நீக்கப்படுதலில்லை யாலோ வெனின்; நன்றுகூறினீர்; இலக்கண இலக்கிய நூற்பொருள் போதித்து, அவற்றின்கட் பரிசோதனை நிகழ்த்தித் தேர்ச்சி பெறுவோர்க்குப் பட்டாபிதானம் வழங்கும் இக்காலத்தே சுதேசபாஷாப்பியாசஞ் சுருங்காநிற்ப, அவ்விலக்கண விலக்கிய நூற்பொருட் போதனையின்றிச் சுதேசமொழிபெயர்ப் பொன்றானே சுதேச பாஷாபிவிர்த்தி யுண்டாமெனக் கூறுவாருரை இழுக்குடைத்தாமென்க. அற்றன்று, சுதேச மொழிபெயர்ப்பிற் சித்தஞ்செய்யப்படும் பரிசோதனைப் பத்திரங்கள் அரிதினுணர்தற் பாலனவாயிருக்கு மாதலால், அவற்றின்பெற்றிதேர்ந்து மாணாக்கர் தாமே தஞ்சுதேச பாஷையினைப் பயின்று கொள்வரெனின், அரியபெரிய அச்சுதேச பாஷாப்பியாசத்திற்கு வேண்டுஞ் சாதனங்களை அமைத்தலில்லாது, தமக்குத் தோன்றிய வாறெல்லாஞ் சருவகலாசங்கத்தார் மாணாக்கர்களை அவற்றின்கண் அங்ஙனம் பரிசோதித்து இடர்ப்படுத்தல் நியாயமுமுறையு மாகாது. அல்லதூஉம், அம்முறையாற்சுதேச பாஷையினை விருத்திசெய்தலே கௌரவ துரைத்தனத்தார்க்குக் கருத்தாயின், அம்முறை பற்றியே வடமொழி பெயர்ப்புப் பரிசோதனை பத்திரத்தான் ஆரியபாஷையினையும் அப்பியாசஞ் செயவிட லாமன்றே? ஆரிய பாஷையினை மாத்திரம் இலக்கண இலக்கிய நூற்பொருளோடு போதித்தலென்னை? சுதேச பாஷையினை அங்ஙனங் கற்பித்துப் பரிசோதிக்கக் கருத் தொருப்படாதவாறு என்னை? இவற்றை யெல்லாம் ஆய்ந்துணரும்வழி நங்கௌரவ துரைத்தனத்தார் சுதேச பாஷாப்பியாசத்திற் கொண்ட கருத்து ஐயுறற் பாலதொன்றா யிருக்கின்றது. இனி, நாமிங்ஙனந் தருக்கித்தலானே ஆரியபாஷாப் பியாசமின்றிச் சுதேசபாஷையினை மாத்திரம் ஆங்கிலத்தொடு கூட்டிக் கற்பித்தல் போதுமென்பது நங்கருத்தாமாறில்லை. ஆரியவாங்கில சுதேசபாஷைகள் மூன்றனையும் ஒருங்கு போதித்தல் வேண்டுமென்பதே நங்கருத்தாவதாம். ஒன்றற் கொன்று உபகாரப்படும் அம்மூன்று பாஷைகளையுஞ் சேர்த்து அப்பியசித்தலானே ஒருமை யுணர்ச்சியும், ஒற்றுமை வாழ்க்கையும், பிறநுட்பப் பொருள்களும் அரும்பிமுதிரும். கௌரவ துரைத்தனத்தார் அம்முறையாற் பல்லாயிர இந்து நன்மக்களை விரைவிற் கல்விபயிற்றி நாகரிகவிருத்தியினை உண்டுபண்ணுவர். அத்துரைத்தனத்தார் அதிகார நீழற் கீழிருந்து வாழுங்குடிமக்களும் அவர்செய்யும் அந்நன்றி மறவாராய் அவர் இவ்விந்திய நாட்டை நீடூழிசெங்கோலோச்சி வாழ்கவென நாத்தழுதழுப்ப வாழ்த்துரைப்பர். இவ்வாறன்றிச் சுதேசபாஷாப் பியாசத்தின் அருமை பெருமையும், அவற்றை வழங்கும் நன்மக்களின் நாகரிக நிலையும் அறியமாட்டாராய் உன்னத நிலைகளின் மாத்திரங் கௌரவமாயிருந்துவாழும் பிரபுக்களின் சொற்களை உண்மையெனத்தேறி விரைந்து சுதேசபாஷாப்பியாச நிவர்த்தியிற்பிரவேசியா திருக்கும்படி நங்கௌரவதுரைத் தனத்தாரை மிகப்பணிந்து வேண்டிக்கொள்ளுகின்றோம். பிரதான நகரங்களிற் குடி மக்களை ஒருங்கு கூட்டி அவரபிப்பிராயங் கேட்டு ஏற்ப முறைசெய்தலே நந்துரைத் தனத்தார் இவ்வமயத்துச் செயற்பாலதாங் கருணையென் றெண்ணு கின்றோம். நம்இந்து நன்மக்களிற் சிறந்தோர்பலர் நல்லபிப்பிராயத்தினை யறிந்தே இவ்விஷயத்தினை யெழுதி நங்கௌரவ துரைத்தனத்தார்க்கு விண்ணப்பித்துக் கொள்ளுகின்றோம். சுதேச பாஷாப்பியாச நிவர்த்தி முற்றும். 19. மெய்ந்நல விளக்கம் பூமிக்குப் பொருள்களைத் தன்னிடமிழுக்குஞ் சக்தி யுளதாகலான், வாயுமண்டலம் சுத்தியடைகின்றதென்பது யாங்ஙனமெனின்:- இருணிறைந்த ஓரறையி னுட்பக்கம் பலகணி அல்ல தொருதொளையின்வழி ஞாயிற்றின் கதிர்வீசினால், அக்கதிரோட்டத்தில் அநேகதூசி, துரும்பு, புழுதி முதலியன ஆடி அசைந்து திரியுமாறுங்காணலாம். பின்னர் அவ்வறையின் சுவர் தளமுதலிய எப்பகுதிகளையும், மேசை நாற்காலி முதலிய பொருள்களையும் நன்றாய்த் துடைத்துச் சுத்திசெய்து, கதவு பலகணி துவார முதலிய எல்லாவற்றையு மடைத்துச்சென்று மற்றைநாட்காலையில் கதவைத் திறந்து பார்ப்போமாயின், தளத்தின் மீதும் மேசை முதலிய பொருள்களின் மீதும் புழுதி படிந்திருக்கின்றவாறு மறியலாம். இத்தன்மையவானது யாதென விசாரிக்கப்புகின் முன்னர்க் கண்ணுற்ற தூசி துரும்பு முதலியவற்றிற் சில பூமியினாலிழுக்கப்பட்டுக் கீழே தாழ்த்தப் பட்டன வாமென்பது இனிது விளங்கும். இதுகாறும், இறைவனியற்கைப் பொருளான வாயுவைச் சுத்திசெய்யு முறையைக் காட்டினோம். இனி நம்மவர் முயற்சியால் அஃதங்ஙனமாதலை ஆராயப்புகுவாம். மக்கள் வசிக்கும் இல்லத்தினுள்ளுலாவும் வாயுவின் சுத்தமும், அசைவும், வெளிவாயுவின் சுத்தத்தையும் ஓட்டத்தை யுஞ்சார்ந்து நிற்கற்பாலனவாம். சார்ந்து நிற்றலான், புறவாயு வீட்டின் சுற்றுப்பக்கங்களிலும் வீடுதோறு மெவ்விடத்தும் தடையின்றி யோடியுலாவி அதன் தூய்மை குன்றாவண்ணம் முயற்சிக்க நம்மாற் கூடுமோவெனின்; பட்டினங்களிற் பல விடங்களிலும் திறந்தவெளிகளை யேற்படுத்துதலானும், வீதிகளை யகலமா யமைப்பதனாலும், குறித்த அளவுக்கு மேலிட்ட உயரமான மாளிகைகளையுஞ் செறிவான வீடுகளை யுஞ் சமையாதிருத்தலானும், முடிவிலடைபட்ட தெருக்கள் சந்துக்களை நீக்குதலானும், காற்றோட்டம் ஒருவாறு தடையின்றி நடந்துவரும். இன்னும் தெருக்களில் புழுதியடங்க நீர் தெளித்தும், இல்லத்தினின்றும் பலவேறு யந்திரசாலை களினின்றும் புறப்படும் புகைமுதலியவற்றை உயரமான புகைவாயின் வழியாக மேலே செல்ல விடுத்தும், கழிகால், தூம்பு, அங்கணம், மலவறை முதலியவற்றை நாடோறும் பரீக்ஷைசெய்து சுத்தப்படுத்தியும், குப்பைக்குவியல் மலம் முதலிய அசுத்தங்களைத் தெருக்களினின் றுடனுக்குடனே அப்புறப்படுத்தியும், துர்க்கந்தம் பயக்கத்தக்க வியாபாரத் தொழில்களைப் பட்டினத்துக்கப்பால் நிகழச்செய்தும், இன்னும் இவைபோன்ற பல முறையானும் வாயுவைச்சுத்தி செய்யலாகும். இனிப், புறவாயுவின் ஓட்டம் சுத்தம் இவைகளைக் கவனித்த பின்னர், அவ்வாயு நம்மில்லத்தினுள் போதுமான வளவுக்குப் புகுந்து பரவி, அதன் கண்ணுள்ள அசுத்த வாயுவைச் சுத்தி செய்து போதருமியல்பினதாக முயற்சிக்குமாறு ஈண்டுவிரித்துரைக்கப் புகுவாம். சுத்தவாயுவைச் சுவாசித்து வெளியே யிருந்துவரும் ஒருவன் ஓர் இல்லத்தினுண்ணுழைந்த வளவில், சிறிதும் நாற்றமுணராவிடின் ஆண்டுள்ளவாயு மிகத் தூயதாயிருக்கு மென்று முன்னரோரிடத்துக் கூறியுள்ளோம். அத்தன்மை யாகவே, உள் வாயுவின் அழுக்கைக் களையவும், வாயுவீசும் வேகத்தை நம்மெய்யிற் பரிசியாமல், புறப்பாலுள்ள சுத்த வாயுவை உட்புகுத்த வேண்டிய தவசியமென் றறிந்துகொள்க. இதனை விளங்கச்சொல்லு முன்னர், நம்மில்லத்தின்கண் ணுள்ளவாயு அசுத்த மடைகிற விகிதமும், அவ்வசுத்தத்தைப் போக்கிச்சுகத்தை யுண்டுபண்ணவும் பேணவுந்தக்க வாயுவின் பரிமாணமும், அப்பரிமாணத்தை யடையக்கூடிய வழியையும், ஈண்டெடுத் தொரு சிறிது விளக்குவாம். இல்லத்தின்வாயு அசுத்தமடைகிற விகிதம்:- கரிவாயுவின் ஏற்றத்தாழ்வைக் கொண்டே, வாயுவின் ஏனைய அழுக்குகளை யாம் அளந்தறியக்கூடும். இனி, வாயுமண்டலத்தின் 2500 பங்கில் இக்கரிவாயு ஒரு பங்காக எக்காலத்து மிருப்பக் காணலா மென்றும், நாம் புறம்போக்கும் வாயுவிலிது மிகுதியுமுள தென்றும் கூறியுள்ளோம். ஆகையால்,2500 கனவடியுள்ள வாயுவின்கண் ஒரு கனவடி கரிவாயுவும், அல்லது 1000 கனவடிகொண்டவாயு வில், இஃதேறக்குறைய அரைக் (த) கனவடிவாயுவுமுளதாகும். அற்றேல், ஒருமனிதன், 10 அடி நீளம், 10 அடி அகலம், 10 அடி உயரங்கொண்ட 1000 கன அடியுள்ள ஓரறையினுள் ஒரு மணிநேர மடைபட்டிருந்த பின்னர், அவ்வறையின் வாயுவைச் சீர்தூக்கிப்பார்க்கின், அதன்கண் 1000 கனவடிக்கு ஒன்றேகால் (கவ) கனவடி கரிவாயுவைப் பிரித்தெடுக்கலாம். பிரித் தெடுக்கின், நாம் ஒவ்வொருவரும் ஒருமணி நேரத்தில் நம் உடம்பினின்றும் 1000 கனவடியில் முக்கால் (தெ) கனவடி கரிவாயுவைப் போக்குகின்றோமென அறிந்து கொள்ளு கிறோம். அம்மனிதனை 3000 கனவடிகொண்ட ஓரறையில் ஒருமணி நேரம் அடைத்துப் பின்னர் அதன்கண் வாயுவைச் சீர்தூக்கின், அவ்வாயுவில் இயற்கையாயுள்ள கரிவாயு ஒன்றரை (கத) கனவடியும், அவன் புறம்போக்கின் கரிவாயு முக்கால் (தெ) கனவடியுஞ் சேர்ந்து, இரண்டேகால் (உவ) கனவடி கொண்டதாகும். இம்முக்கால் கனவடியையும், மூன்று பங்காகப் பிரிக்கின், ஒரு 1000 கனவடிக்குக்கால் (வ) கனவடி கரிவாயு சேரும். ஆனால் 1000 கனவடி கொண்ட வாயுவில் கால் கனவடி கரிவாயு மிகுந்திருப்பின் யாதொரு கெடுதியும் பயவாதா மென்பது சுகநூல் வல்லார் யாவருக்கு மொப்ப முடிந்திருக் கின்றது. அற்றேல், ஒருவன் சுவாசிக்க ஒருமணிக்கு 3000 கனவடி கரிவாயு அத்தியாவசியமென்பது மேற்கூறிய நியாயப் பிரமாணத்தான் நன்கு விளங்கும். ஆயினும் நாங்கடினமான தொழில் புரியுங்காலத்து அதிகமாய்க் கரிவாயுவைப் புறம் போக்குவதனால், அதிகமான சுத்தவாயுவை உட்கொள்ள வேண்டும். ஆகவே நம்மவர் தேகமுயற்சி செய்யுங் காலத்தும் திறந்த வெளிகளில் அவை செய்யற்பாலர். நம்மவருட்சிலர் அறையின் திறப்புகளெல்லா மடைத்துள்ளிருந்து தேகமுயற்சி செய்கின்றனர். அது அவர்கள் அறியாமைக்குச் சான்றாம்; மேலும், நோயினரும் அதிகமான கரிவாயுவையும், அழுக்கு களையும் தம்மினின்று புறம் போக்குவதால், அவர்களுக்கு ஏறக்குறைய 4500 கனவடி சுத்தவாயு வேண்டும். குதிரை, மாடு, எருமை முதலிய பெரிய விலங்குகளுக்கும் மணிக்கு 10000 முதல் 20000 கனவடி வாயு அவசியமாதலால், அவைகள் திறந்த வெளியிலேயே அதிகமாய் வசித்து வரல் வேண்டும். இதனால், அவைகளின் தொழுவும் திறந்த வெளியி லமைக்கப்பட்டிருக்க வேண்டு மென்பது தெற்றென விளங்கும். இது நிற்க, 3000 கனவடிகொண்ட அறை ஒருவனுக்கு வாய்ப்ப தரிதாதலானும், மணிக்கு மூன்று தடவை புதிய வாயுவை மாற்றிக் கொள்ள லாமாதலானும் 1000 கனவடியுள்ள அறை நம்மவ ரொவ்வொரு வருக்கும் அவசியமென்பது ஈண்டு சொல்லாதே அமையும். அவ்வாறாயின் 1000 கனவடிக் கதிகமான ஓரறையி லொருவன் வசிப்பின், அன்னவனடையும் பயன் யாவையோ வெனின் கூறுதும்:- 1. சிற்றறையின் றன்மைபோல வாயுவை அடிக்கடி மாற்ற லநாவசியம். 2. இல்லத்தின் வாயு மிகுந்து பரந்து கிடத்தலால் ஒரு வாயில் வழிப்புகுந்த வெளிவாயு தன்வேகம் உள்வாயுவால் பலவாகப் பிரிக்கப்பட்டு உள்ளிருப்போன் உணராதவாறு வலிமை குன்றுகின்றது. 3. வாயுவின் ஓட்டம் சிறிது நேரம் தடைப்படினும், உள்வாயு அசுத்தமாகும் விகித மதிகப்படாது. 4. மிகுந்த பரப்பை வியாபிக்க வேண்டியிருப்பதால் சிற்றறையினும் பேரறையில் புகும் புறவாயு அதிகமாய் உபயோகிக்கப்படுகின்றது. இவற்றால் பேரறையே மிக்கபயன் விளவிப்பதா மென்றுணர்ந்து கொள்க. இனி நாம் புறம்போக்கும் வாயுவின் கண்ணுள்ள அசுத்த வாயுக்களிற் சில துரிதமாய் 12. 14. அடிக்குயரமாய் வியாபித்துச் செல்லுந் தன்மையன வாகாமையான், 14. அடிக்குயரமான சுவரை எழுப்புவது பொருளுக்கு வீணழிவேயாம். ஆகையால் 1000 கனவடி அறை ஒருவனுக்கவசிய மாதல்போல (1000 / 14) 72. சதுர அடியுள்ள தளமும் அவசியமாம். இல்லத்தின் வாயு அசுத்த மடைகிற விகிதத்தையும், சுகத்தைப் பேணவேண்டிய வாயுவின் பரிமாணத்தையும் எடுத்துரைத்தாம். இனி, அப்பரிமாணமுள்ள வாயுவை இல்லின் கண் புகுத்தும் வழியையா ராய்வாம். வாயுவினியக்கம்:- மணிக்கு இரண்டு மைல் விகிதம் வாயு வீசுமாயின் அவ்வாயு ஈரம் அல்லது வெப்பமுடையதாயினும் அதன்வலிமை யுணரமாட்டுவோ மல்லோம். அவ்வாறு விரைதலுடைய வாயு 10. அடி உயரம், 4 அடி அகலங்கொண்ட ஓர் வாசல்வழி உட்புகுமானால், 150. சுகதேகிகளுக்குப் போதுமான சுத்தவாயுவைத்தரும். அதினும் விரைவாய் உலாவுமாயின் சுவர் செங்கல் கதவுமுதலியவற்றை யூடுருவி உட்புகு மென்றுஞ் சொல்வர். இதுகிடக்க. ஆனால் வாயு தாராளமாய் உண்ணுழைந்து வெளிப்போக எதிர்முகமான கதவுகளையும், பலகணிகளையும் அமைப்பதுடன் அவைகள் வீட்டின் நிகளப்பரப்பைச் சார்ந்திருக்கவேண்டும். என்னை யெனின், உட்புகுந்த வாயுவோடு நன்றாய்க்கலந்து எங்கும் பரவியபின்னர் அசுத்தத்தை யப்புறப்படுத்து மியல்பினதா யிராவிடின், ஓட்டத்தின் விரைவினால் ஒருவழி நுழைந்தவாயு மற்றொரு வழியேசென்று நாங்கோரியபயனைப் பயவாதாம். கூறையினுச்சியில் காற்றோட்டத்தை நோக்கிக் குழாய்களை வளைவாயமைத்தலானும், ஒருவாறு வாயுவினோட்டத்தை மறித்து உள்நுழைக்கலா மென்பாருமுளர். அவைகள் அநேகமாய் மரக்கலங்களுக்கே பயன்படுதலால் ஈண்டு அவைகளை விரியாது விடுத்தாம். இனிவாயு வேகமாய் உடம்பிலுறைத்தால் கெடுதி பயக்குமென்றும் மேலே கூறினோம். இனிவேகமாய்க் காற்றுவீசினும், அக்காற்றுக் குளிர்ச்சி யாகவாதல் வெப்பமாக வாதலிருக்கினும் நம்மவர் கதவுபலகணியாவை யுமிறுக வடைத்து உள்நித்திரை செய்கின்றார்கள். செய்யின் இல்லத்தின் வாயு அசுத்த மடையுமென்றும், சுத்தவாயு உட்புகலிடமில்லை யென்று மறிந்தும், அறியாதார் போலிருந் தொழுகுவதுமுண்டு. ஆகையால் வாயுவிரைந்து செல்வதைத் தடுக்கவும், ஒரே ஓட்டத்தைப் பலவேறு ஓட்டமாகப் பிரித்து அதன் கதியைக் குறைக்கவும் வேண்டும். ஓரறையின் ஒரு துவாரத்தினுழைந்து செல்லும் சூரியன் கதிர் ஒன்றாயினும், அஃதவ்வறை யினெப்பகுதியையும் பிரகாசிக்கச் செய்கின்ற தன்மைபோல அவ்வாயு அறையின் நாலாபக்கமும் பரவிச்செல்லவும் சிலமுறைகள் தந்துகாட்டுவாம். கதவுகளிலும், பலகணிகளிலும் இலைப்பலகைக ளமைத்தலானும், சிற்சில துவாரங்கள் மிகுந்துள்ள கம்பிவலையானும் வேண்டிய அளவு உயர்த்தவுந் தாழ்த்தவுங்கூடிய ஒன்றன்பின்னொன்றுள்ள இரட்டைப் பலகைகள் பெற்ற பலகணிக ளமைத்தலானும், இன்னும் பலவேறு உத்தியினானும், வாயுவின் வேகத்தைக் குறைத்துப் பலவே றோட்டமாகப் பிரித்து, நாம் நமதில்லத்திலென்றும் சுகமான வாயுவீசிக்கொண்டிருக்கச் செய்யலாம். வாயுவின் இவ்வியக்கமே நம்தேசத்துக்கும் சீதோட்டின நிலைமைக்குந் தகுந்ததாம். ஆயினும் வாயுவினியற்கை ஓட்டங் குன்றி வாயு அசைவற்றிருக்கின் மேலே காட்டிய யாவையும் பயனற்றனவாம். இனி, வாயு அத்தன்மைத்தான் விடின், இது வேறு முறையா லியங்குமாறு எப்படியெனின் கூறுதும். வெப்பத் தினால் விரிதல்பெற்ற ஒரு கனவடிகொண்ட ஓரிருப்புக் கட்டி பத்துப்பவுண் நிறை கொடுத்தால், அம்மாறுபாடுறாத அவ்வடிகொண்ட பிறிதொருகட்டி 10. பவுண் நிறைக்கதிகங் கொள்ளுமென்பது யாவருமறிவாரன்றோ? எண்ணெயையு நீரையும் ஒருபாத்திரத்திற்கலந்து வார்த்தால் எண்ணெய் மேலும், நீர் கீழுமாகுமாறு மறிவோம். என்னை? நீர் எண்ணெயினுங் கனத்தபொருளாதலால் கீழே தாழ்ந்து செல்லும், நீரினும் இலேசான பொருள்நீரின்மேல் மிதக்கும் பெற்றியுடைத்து. அக்குணங்களே வாயுக்களுக்கும் பொருத்த மாம். அற்றேல், நம்மில்லத்தின்கண் ணுள்ள வாயு, நாம்புறம் போக்கும் வாயுக்களானும், எரியுநெருப்பினானும் மிக்கவெப்ப முறுகின்றது. வெப்பம் பெறுதலால், தன்னிறையிற் குன்றி யிலேசாகி மேலேசெல்லுந் தன்மை யடைகின்றது. அடைய, நிறையிலுயர்ந்த புறவாயுவும், நிறைகுன்றிய அகவாயுவும் சீதோட்டின நிலையான் இம்மாறுபாடுறு கின்றன. மாறுபாடுள்ள இரண்டுஞ் சமமான நிறைபெற ஒன்றோ டொன்று உராஞ்சுகின்றன. ஆகையான் புறவாயு உட்புகுமா றறிந்துகொள்க. இனிமேலேசென்ற வெப்பவாயு சுவரின்றலையில் அல்லது முகட்டிலமைக்கப்பட்ட துவாரத்தினுட் புகுந்து, வெளிப் போந்து, புறவாயுவோடுகலந்து வியாபித்துத் தன் வெப்பத்தைக் களைந்து அதனுடன் ஒற்றுமை யடைகின்றது. உட்புகுந்த வாயுவும் இவ்வியல்படையற் பாலதெனின், நம்மில்லங்களி லிவ்வாறு வாயுசுற்றி யுலாவுதல் நாமறியாமலே நடந்து வருகின்றது. அற்றாயினும், இவ் வியக்கம் கார்கூதிர்காலங்களில் நம்நாட்டிற்கும் குளிர்ச்சி பொருந்திய வடநாடுகளுக்கும் வாய்ப்புடைத் தாகுமேயன்றி, இளவேனில் முதிர்வேனிற் காலத்தில் வெப்பம் பொருந்திய தென்னாட்டிற்கு அமையா தென்று முணர்க. எனினும் இவ்வியக்க நடந்தேறச், சுத்தவாயு உட்புகச் சுவரின் அடியிலும், அசுத்தவாயு புறம்போகச் சுவரின் தலையிலும் அல்லது முகட்டிலும் துவாரங்களேனும் சிறுபலகணிகளேனு மறைக்கப்பட்டிருப்ப தவசியம். இத்துவாரங்கள் அறையின் வசிக்குமக்கட்குத் தக்கவாறு, ஒருவர் வசிப்பதற்கு 24. சதுர அங்குலமளவாக அமைக்கப்படுதல் வேண்டும். அவைகள் வாயுவினியக்கத்தின் பகுதியிற் சொன்னவாறு வாயுவின் வேகத்தைக் குறைக்கும் விதிகளை யனுசரித்து, அசுத்த வாயுவை வெளிவிடுக்குந் துவாரங்கள் வட்டவடிவுளவாயு, மிருதுவாயும் மழையும் வெயிலும் உறையாத வண்ணம் தடைகள் பெற்றுளவாயு மிருத்தல் வேண்டும். இன்னும் வரும். டி. நல்லதம்பிப் பிள்ளை வடமொழியிலுள்ள தமிழ்ச்சொற்களுக்குக் காரணம் படனம் - வாசித்தல் பாண் என்பதில் பாட்டு பாடம் படனம் படித்தல் என்பன பிறக்கும். பண்ணொடு ஓதுவது, வாசியென்பது இசைப் பாட்டாகலின் வாசித்தலென்பதற்கும் அதுவே பொருள், வாசம் என்பது மூங்கில், உட்டுளை; அது வாசியென்றாயிற்று. வாசியெனினும் புல்லாங்குழலெனினும் ஒக்கும்; வள் என்பது வட்டம் கூர்மையென்னும் பொருளைத் தரலின் அதினின்றும் வாசமென்னும் சொல் பிறந்தது. மூங்கிற்புதர் வட்டித்துவளரும் தன்மைத்து; வாசம் - மூங்கில், அம்பு, வேகம் இறகு எனு மிம்முறைமையிற் பொருட்பேறாகும். அம்பின் வேகத்துக்கு, அதிற்கட்கும் இறகும் ஓர்காரணம். வாசம் வயமெனத்திரிந்து குதிரையையும்; பறவையையும்; வமிசமெனத் திரிந்து மூங்கிலை யும் உணர்த்தும். வாத்தியம் வாசியென்பது இசையாகலின் வாசியம் வாச்சியம் வாத்திய மென்றாயிற்று. இசைமுழக்கமென்பது அதன்பொருள். அவ்வாசியென்பது வசு பசு எனத்திரிந்து எருதையும் ஆவையும் தெரிக்கும் இசையாற் குவிவது. வசுவைக்காப்போன் வசுதேவன் அவன் மகன் வாசுதேவன். வீரம் வில் வீரம்; வில் எய்வதாலுண்டாவது; அது மன வுறுதியின் செயலாகலின் வீரம் வைரம் வசிரம் வச்சிரம் எனத்திரிந்து வைரக்கல்லினையும், வீரம் விரணமெனத்திரிந்து அவ்வில்லின் காரியமாகிய போரினையும் புண்ணையும் குறிக்கும்; விரணம் போர்க்களத்துக்குமாம். விரணகளம் என்பது ரணகள மெனவும், விரணகளத்தின் காரியம் துன்ப மாகலின் ரணம் ருணமெனவும் வடமொழியில் வழங்கும்; ருணமெனினும் கடனெனினும் ஒக்கும். ரணம் ருணம் என்பன வற்றை நிகண்டில் இரணம் இருணம் என எழுதியிருக்கின்றனர். அதிலேயே விரணமென்னும் சொல்லுமுளது. பல்ல;= கரடி கரடியின் பல் மிக வெண்ணிறமுடையதாகலின் அது வெண்பல்லம் என்னும் பெயர்த்து. வெண்பல்லம், பல்ல; பல்லுக; பல்லூக; பாலூக; எனத்திரிந்தது. தமிழில் பல்லூகம் வல்லூகம் எனவழங்குகிறது. கோக: - செந்நாய். குரு என்பது செந்நிறமாகலின் அது குருகம் யோகம் எனவாயிற்று. செந்நாய் அப்பொருளைத்தரும். கொக்கு என்பதும் அக்கோகம் என்பதன்திரிபேயாம். கோகில; = குயில் சிவந்த கண்ணையுடையது. கோலம் என்பது சிவப்பு, குயில் என்பதற்கும் அப்பொருளே. கீர;= கிளி கீள் என்பதன்திரிபு. கனிமுதலியவற்றைக் கிழித்துத் தின்பது. கீள் = கிழித்தல், கிளியென்பதற்கும் அப்பொருளே. சுக; = கிளி அதன் மூக்குச் சிவப்பாகலின் அப்பெயர்த்து. கிஞ்சுகம் = சிவப்பு. அதுமுதற் குறையாயிற்று. கீச;=குரங்கு கீசகம் என்பதன் சிதைவு, கீசகம் = மூங்கில், நெருப்பு, சிவப்பு, குரங்கு எனுமிம்முறைமையிற்பொருட்பேறாம். குரங்கின்முகம் சிவப்பாகலின் அப்பெயர்த்து. நெருப்பினை யுணர்த்தும் கிச்சு என்பது கீசகமென்பதன்திரிபு, இலைமுதலிய வற்றைக் கிழித்தெறிவது குரங்கின் தன்மையாகலின் கீள்கீசம் கீசகம் எனினும் ஒக்கும். இனிக் கீசகம் சிவப்பாகலின் கீசகன் என்பதற்குக் கோபிப்பவன் எனலும் பொருந்தும். கோபம் என்பதற்கும் அப்பொருளே. கோபம், சிவப்பு, இந்திரகோபம் என்பதனாலும் உணர்க. அது இருசொல் லொருமொழி. இந்திரம், கோபம்; இந்திரம் = சிவப்பு இந்து (கரடி) இந்துளம் (கடப்பமரம்) முதலிய சொற்களான் அப்பொருள் உண்மை பெற்றாம். முசலீ = பல்லி. முசலி முசலீ யென்றாயிற்று. முசலி என்பதற்கு முதற்பொருள் ஓணான்; அதன்தலை சிவப்பாகலின் அப்பெயர்த்து மூல்=சிவப்பு; பல்லி, உடும்பு முதலை, அவ்வோணானினத்தைச் சேர்ந்தமையின் அவையும் அம்முசலிப்பெயர் பெற்றன. முதலை முசலியின் திரிபு. முசலி செந்தாழைக்கும் ஆம். இனி முசலி யென்பது முசலிகை, முசல், முசுக்கை முசுமுசுக்கை எனத்திரியும். முசலின்கண் சிவப்பாகலின் அப்பெயர்த்து. முசுக்கை முசுமுசுக்கை யென்பன ஒரு பொருள்; அதன்பழம் சிவப்பு; முயல் முசலின்திரிபு. முசலியென்பது முகரியென்றாய்த் தாழையைத் தெரிக்கும். முசலம் = உலக்கை, செம்மரத்தாலாயது. குரங்க: = மான் குடாவென்னும் சொல்லிற் பிரிகின்றது, குடாவென்பது வளைவு, வட்டமுதலிய பல பொருளில்வரும். இரவில் மான்கள் கூடித் தமக்குவருங் கேட்டினை நாற்புறத்தும் அறிதற்பொருட்டு ஒவ்வொன்றும் தலையை முன்பக்கமாக வைத்துக்கொண்டு கண்டுயில் செய்வது அவற்றின் இயற்கையாகலின் அப்பெயர்த்து, குரங்கம் விலங்கின் பொதுவுமாம், அது கூலமென்னும் சொல்லிற்பிறந்து மறைப்பதென்னும் பொருளில் வரும்; கூலம் = மறைவு, விலங்கின்வால்; விலங்கினங்களுக்குத் தத்தம்வால் ஈ முதலிய வோட்டுதற்குப் பிரிவில்லாத் துணையாயிருத்தலின் அனு வென்னும் உபசர்க்கம் பெற்று அனுகூலமென்றாயிற்று. சாத்தன் எனக்கு அனுகூலன் அல்லன் எனில் விலங்கின்வால்போல் பிரிவில்லாத்துணை அல்லன் என்பது பொருள்; பிரதிகூலன் என்பது. தரக்ஷூ: = புலி தரக்குஎன்பதன்திரிபு. தரக்கு=சிவப்பு பக: = கொக்கு, கூபகம் பகம்:= நீர்; நீர்ச்சார்பில் வசிப்பது. சூத்திரம் = யந்திரம் சுள் என்னும் தாதுவிற்பிறந்தது. சுள் எனினும் நுட்பமெனினும் ஒக்கும்; அது நுணுகிநின்று பெரியனவற்றை நடாத்துதலின் அப்பெயர்த்து. கடிகாரத்திலுள்ள முதற் சுழற்சியால் அதனைத்தெளிக. சுழல் என்பதும் அப்பொருளில் வரும்; சுள்-சுழல் இதினின்றே சுழம்பல் என்னும் வினை பிறந்தது. அவனென்னவோ சுழல்வைத்திருக்கின்றான். இராமசந்திர மூர்த்தி தென்கடலில் சுழல் வைத்திருக்கின்றார் என்னும் வழக்கால் சுழல் என்பதற்கு அப்பொரு ளுண்மைகாண்க. அச்சுழலல் எனும் வினையினின்றே உழலல், உழத்தல், உழவு, உழுதல் முதலியனபிறக்கும். உழுதலென்பதற்கு வட்டித்து வருவது என்பது பொருள். எத்தனை சாலாயிற்று எத்தனை வளைப்பாயிற்று எனும் வழக்கால் தெளிக. சால்என்பது வட்டம்; சூத்திரர் என்பது தச்சரைக்குறிக்கும். அதனைச் செய்யவல்லார் அவர் ஆகலின்; தேரினைச் சுளுக்கறிந்து செலுத்துவது தேர்ப்பாகர்தம் அரியதோராற்ற லாகலின் அவரைச் சூதர் என்பர்; சுள்சூதர், இவர் நிலத்திலோடும் தேர்ப்பாகரல்லர் ஆகாயத்திலோடுந் தேர்ப்பாகராவர். வானம், வாகனம், விவானம், விமானம் ஆகாயத்திலோடுவது என்பது பொருள். வாகனமென்னும் சொல்லினின்றே வகித்தல் என்னும் வினைபிறந்தது, இவ்வகித்தலென்னும் வினையில் விவாக முதலிய சொற்கள் பிறக்கும்; அதன்பொருள் குடும்பபாரத்தை வகிக்கத் தொடங்குவது, வகித்தல் சுமத்தல், நூற்பாவை யுணர்த்தும் சூத்திரமென்பதற்கும் இச்சுள் என்பதே தாது, பல சொற்பொருளைச் சுருங்கக்கூறுவது என்பது. சூத்திரம் பஞ்சி னூலையுங் குறிக்கும், நுணுகியுள்ள பஞ்சினா லாயது என்பது. சிற்றறிவுடைமையின் நான்காம் வருணத் தானைச் சூத்திரன் என்பர். சுள் - சிறுமை, சுளுவு - சுளுக்கு, சுள்ளாணி, சுள்ளி, சுண்டுவிரல், சுண்டெலி முதலியவற்றுக்கும் சுள் என்பதே தாது. வதிரம் = துணி இது வத்திரமென்பதன்திரிபு, வட்டத்தை யுணர்த்தும் வள் என்பது இதன் தாது, வட்டமாகக் கட்டுதற்குரியது என்பது பொருள். முகத்தையுணர்த்தும் வத்திரமென்னும் சொல்லுக்கும் இத்தாதுவே; வட்டமுடையது என்பது. இன்னும் அவ்வள் என்பதில் வாதம், வாதனம், வானம், வாணம் என்பனபிறக்கும். வாதம் = காற்று; சுழன்று சுழன்றுவீசுவது, வாதனம் = சீலை, வானம் = ஆகாயம், வட்டமுடையது, வாணம் = சீலை; இது நிர் என்னும் உபசர்க்கம்பெற்று நிர்வாணம், நிர்மாணம் எனவும், மாணம் மணமெனக்குறுகி அ என்னும் உபசர்க்கம் பெற்று அம்மணம் எனவும் ஆம். அம்மூன்று சொற்கும் ஆடையில்லா திருத்தல் என்பதே பொருள். நிர்வாண தீட்சை யென்பதற்கு இப்பொருள் கொள்ளற்க. அது சமயம் விசேடமென்னும் அளவினைக் கடந்தது என்னும்பொருட்டு. மாணம் வாணம் நிர்வாண மெனலாயிற்று; மாணமெனினும் அளபெனினும் ஒக்கும். முற்கூறிய வாதனமென்பது வதனம் வசனம் எனத்திரிந்து முகத்தையும் முகத்தின்கணுண்டாகும் வாக்கை யும்தெரிக்கும்; உபசர்க்கம் எதிர்மறைப்பொருளது. பாக்கியம் = செல்வம் இதன் முதற்சொல் பகு என்பது; இப்பகு என்பதில் பங்கு என்பதும் இப்பங்கு என்பதில் பாக்கி என்பதும் வரும். ஈண்டுப் பாக்கி என்பதற்குப் பங்கு என்பதே பொருள். அஃதாவது ஆறிலொருபாக மென்பதாம். குடிகள் அரசனுக்குப் பாக்கி கொடுத்தற்குரியர்; அரசன் குடிகளிடம் பாக்கி பெறுதற் குரியன் எனில், ஆறிலொரு பங்கென்பதே பொருளாகலின் பாக்கியம் என்பது அப்பங்கின் மிகுதியைக் குறிக்கின்றது; அவன் பாக்கியவான் எனில் அப்பங்கின் மிகுதிப் பாட்டைப் பெற்றவனாம் என்க. இச்சொல் பண்டைநாள் வழக்கை விளக்குகின்றது. இக்காலத்தும் அரசர்கள் தம் நிலுவைப் பொருளைப் பாக்கியென்பர். ஏனோரும் என் பாக்கியைச் செலுத்துக என்பர். அது தீதின்றிவந்த பொருளாகலின் சுபாக்கியம் சௌபாக்கியம் எனவும் அதனையுடையானையும் அவன் மனைவியையும் சௌபாக்கியவான் சௌபாக்கியவதி யெனவும் கூறுவர்: தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கறா னென்றாங், கைம்புலத்தாறோம்பறலை இக்குறள் ஆறிலொரு பங்கென்பதைக் குறிக்கும். பரிமேலழகர் உரையானும் உணர்க. இனி 8-வது இதழில் விட்ட சொற்களை யெடுத்துக் கூறுதும். வாபீ=நீர்நிலை. காலையுணர்த்தும் தாள் என்னும் சொல்லில் தாவல் என்பதும் தாவல் என்பதன் இறுதியிலுள்ள வல் என்பதில் வாவல் என்பதும் வாவலினின்றும் வாலி யென்பதும் வரும். வாவி பாவி வாபீ என்றாயிற்று. தெலுங்கர் கிணற்றினைப்பாவி என்பர். காலினாலே தாவி இரங்குதற்குரிய நீர்நிலை யென்பது பொருள். நடைவாவி நடைபாவி என்பதனானும் உணர்க. பேடகம் பேடம் பேழை; கூபகம் கூபம் கூவம் கூவல் எனக்கூறலே தகுதி. மேழை யென்பதற்கு மறைப்பது என்பது பொருள். நீர்நிலையைத் தெரிக்கும் ஆவியென்பது வாவி யென்னும் சொல்லிற் பிறந்தது. தச்சோலம் என்பதைக் கச்சோலம் எனவும் ஆடலன் என்பதை ஆடவன் எனவும் கோல் என்பதைச் சோல் எனவும் திருத்திக்கொள்ளவேண்டும். இன்னும் வரும், இங்ஙனம். மாகறல் - கார்த்திகேய முதலியார் சகளோபாசனை என்று இங்ஙனங் காட்டிய அநாகரிக மக்கள் சமய வரலாறுகளானே பெறப்படு முதன்மை ஈதென வாராய்வாம். அறிவு விளங்கப் பெறாது விலங்கினத்தோடு ஒப்பவைத் தெண்ணப்படும் அத்துணை அநாகரிக நிலையி லிருந்த மக்கட் சாதியார் மாட்டும் சமய வுணர்ச்சி நிகழ்தல் மேற்கூறியவாற்றா லினிது விளங்கும். அச்சமய வுணர்ச்சி தானும் அவர்க்கு முன்னே நிகழ்ந்த அச்சங்காரணமாகத் தோன்றுவதாயிற்று. அவ்வச்சந்தானும் இடி, மழை, மின்னல் முதலாக உலகியற் புறப்பொருள் விரைந் தியங்கும் இயக்கத்தானும், நோய், சாக்காடு முதலாகத் தம்மாட்டுத் தோன்றும் பீழைகளானும் அவர்க்குத் தோன்றா நிற்கும். அவ்வச்சம் நிகழ்ந்தவழி அவர் அவ்வச்சத்தினீங்கி நலம் பெறுமாறு எங்ஙன மென்று ஆராய்வாராயினார். அங்ஙனம் ஆராய்ந்த விடத்து அந்தரத்தின்கண்ணே ஒரோவொரு காலத்து விரைந்தியங்கும் இடி, மழை, மின்னல் முதலிய வையெல்லாம் மிகவல்லதான மற்றோர் பொருளின் பேரதிகார வழி நின்று இயங்குகின்றன வென்றும், அவற்றை அங்ஙனம் இயக்கும் அப்பொருள் அந்தரத்தில் நிலைதிரியா தியங்கும் ஞாயிறு திங்களையன்றி வேறு கட்புலனுக்கு விடயமாகாமையால் அவை தாம் உபாசிக்கப்படும் பரம்பொருளென்றும் அறிவாராயினார். இம்முறைபற்றியே சூரியனை வழிபடுஞ் சௌரமதமும் சந்திரனை வழிபடுஞ் சந்திரமதமும் உற்பத்தியாயின. மழையினுப காரத்தைப் பெரிது வேண்டி நிற்குந் தேயங் களினுள்ளார் அம்மழையினையும் உபாசித்து வந்தார். இங்ஙனம் அந்தரத்தின்கண்ணே அச்ச நிகழ்த்தும் அப்பொருள்களை வழிபடுமா றுணர்ந்தபின், இந் நிலவுலகத் தின்கண்ணேயும் அங்ஙனம் அச்சநிகழ்த்தும் பிராணிகளை உபாசிக்கத் தலைப்பட்டார். தம்மினத்தாரிற் சிலர் பாம்புகடித் திறக்கக்கண்டு பாம்பினை வழிபடுவாராயினார். தம்முட் சிலர் தறுகணாளராய்ப் பலரை நலிந்து தலைமை செலுத்திப் பின் இறந்தொழிந்தவழி அவரையுந் தெய்வங்களாகக் கொண்டு பரசினார். தம்முள் வேறுசிலர் நல்லறிவுடையோராய்ப் பலர்க்கு நல்லன பலவுஞ் செய்து இறந்து பட்ட வழி, அந்நல்லோரை வணங்கா தொழியின் யாது நேருமோ வென வெருக்கொண்டு அவரையும் வணங்குவாராயினார். இவ்வாறெல்லாம் அவர் வழிபாடு செய்தற்குக் கருத்தொருப் பட்டு அது செய்யப் புகுதுகையில் தம்மறிவும் உணர்வும் ஒருவழிப்பட்டு நில்லாது சிதர்ந்து பலதலைப்படுதலின் அவர் அதன்கண் இடர்ப்பாடு பெரிதடை வாராயினார். அவ்விடர்ப் பாடு அவரறிவை நுணுக்கி விளங்கச் செய்தலின், அவர் தாம் வழிபடக் கருதும் பொருளினுருவத்தைக் கல், மரம் முதலிய பிறபொருளின்கட் செதுக்கி அவற்றை எதிர்நிறுத்தி அவற்றிற்குத் தம்வழிபாடு கடன் செலுத்துவாராயினார். அங்ஙனம் வழிபடும் போதெல்லாம் அவரறிவு முன் போற்சிதர்ந்து போகாமல் ஒருங்கி அவ்வுருவத்தின் கண்ணே சென்று பதிதலால், அவர் அவ்விக்கிரக வாராதனையின் நலப்பாடுணர்ந்து அதனைக் குறிக்கொண்டு போற்றுகின்றார். இங்ஙனம், எத்துணை யிறப்ப இழிந்த சாதியாராயினும் அவர் மாட்டும் விக்கிரக வாராதனை காணப்படுகின்றது. இனிக் கல்வி யறிவான் மிகச் சிறந்த நன்மக்களும், இயற்கை யறிவாற்றன் மிகமுதிர்ச்சி யடைந்து விளங்கும் பெரியோரும் உருவத் திருமேனியிற்கொண்டு முதல்வனை வழிபடுவார்க் கன்றி ஏனையோர்க்கு அம் முதல்வனை வழிபடுமாறு ஒரு சிறிதும் செல்லா தென்னுங் கருத்துடையர். அற்றன்று, கிறித்தவருள் ஒரு சாராரும் முகமதிய மதத்தாரும் இறைவனை உருவத்திருமேனியிற் கொண்டு வழிபடுதல் பொருந்தாதெனக் கூறுபவாலெனின்; -நன்று கடாயினாய், பண்டைக்காலந் தொட்டு வருஞ் சமயிகளெல்லாந் தம்மியற்கை நல்லறிவால் விக்கிரக வாராதனை செய்து போதரக் காண்டலானும், இக்காலத்து இடையே தோன்றிய ஒரு சில சமயிகளே தஞ் செயற்கை யறிவால் தாம் வேண்டியவாறு பொருளில மொழிந்து விக்கிரக வாராதனை மறுத்தலானும் அதுபற்றி ஈண்டைக் காவதோர் இழுக்கில்லை யென்றொழிக. அல்லதூஉம், உருவத் திருமேனியிற்கொண்டு வழிபடுதல் பொருந்தா தெனக்கூறும் மற்றவர் தாமும் முதல்வனை யாங்ஙனம் வழிபடமாட்டு வாரென்று நுணுகி நோக்க வல்லார்க்கு அவருரை வஞ்சம்பொதிந்த வழுவுரையாமென்ப தினிதுவிளங்கும். தேவாலயங்களில் அவர் விழிபொத்திக் கொண்டு விசும்பு நோக்கி நிற்ப, அவர் உள்ளம் அவர் வயப்படாமல் காடுங்கரையும் அலைந்து திரியும்; அல்லாதவர் இறைவன்மாட்டு மெய்யன்புடையராயின் அவருள்ளந் தன்கண் அவ்விறைவற்கு ஓருருவத்தை எழுப்பி அவரறிவினை அதன்கட் பதித்துவிடும். கண்ணறிவிற்குப் புலனாம் வடிவத்தை வழிபடுதற்கு அவர் உடம்படுகில ராயினும், உள்ள வறிவின்கட் கோசரிக்கும் ஓருருவத்தை அவர் யாங்ஙனம் நீக்கவல்லார்? உள்ள வறிவின்கண்ணும் அவ்வுருவங் கோசரியாமல் நீக்கி வழிபட வல்லே மென்பாராயின், அவர் செய்யும் அவ்வழிபாடு தம் பெண்டிரை நோக்கிச் செய்யும்வழிபாடாம், தம் புதல்வரை நோக்கிச் செய்யும் வழிபாடாம், தம் நண்பரை நோக்கிச் செய்யும் வழிபாடாம், மற்றுஞ் சிலரை நோக்கிச் செய்யும் வழிபாடாம்; அவர் அங்ஙனஞ் செய்யும் வழிபாடு இறைவனை நோக்கிச் செய்ததாகமாட்டாது. ஆன்மாக்களின் உள்ளவறிவு சார்ந்த பொருளின் வண்ணமாய் வீறி விளங்குதலன்றி, தான் அவற்றின் வேறாய்ப்பிரிந்து விளங்கு மியல்பினதன்று. மனோதத்துவ1 நூற்புலமை கைவந்தோரும் உள்ளத்தி னியற்கை அவ்வாறாதல் இனிது விளங்க விரித்துக் காட்டுவர். ஐம்பொறிகளுக்குப் புலனாகாத பொருள் மனத்தின்கட் புலப்படு மாறில்லை. கட்புலனாய் விளங்கும் ஓருருவத்தைப் பற்றி நின்று தியானஞ் செய்யா தொழியின், அம்மனம் வேறு பிறவுருவங்களைப் பற்றிக்கொண்டு அவர்க்குத் தியானவுணர்வு செல்ல வொட்டாமல் தடைசெய்வது ஒரு தலை. இப்பெற்றியெல்லாம் மேலே விரித்துக்காட்டினாம். பின்னும் விரிப்பிற் பெருகு மாதலின் இத்துணையினமைகின்றாம். ஈண்டுக்காட்டிய வாற்றால் ஈசுரனை உருவத்திருமேனியிற் கொண்டு உபாசிக்கு முறையேதான் அறிவின் நுட்பத்திற்கும், மக்கள் மனவியற் கைக்கும் மிக வியைந்ததாமென்பது பெறப்படுதலின், அருவமாக ஈசுரனை உபாசிக்கற்பாற்றென்று வாளாது தருக்கிப்பார் போலிவாதங்கள் பொருட்பேறிலவா யொழியுமென்றுணர்க. இனிப் பிரமசமாசத்தாரில் ஒருசாரார் ஆரிய வேதோபநிடத நூல்களைப் பிரமாணமாகக்கொண்டு ஆண்டு விக்கிரகாராதனை பெறப்படாமையின் அந்நூற்பிரமாண வழிநின் றொழுகுவார்க்கு விக்கிரகாராதனை செய்தன் முறை யாகாதென்று கூறுகின்றார். உலகியற் பொருள்களில் வெள்ளிடை மலைபோல் விளங்கித்தோன்றும் ஞாயிறுதிங்கண் முதலியவற்றின் வழிபாடு இருக்குவேத பூர்வபாகங்களில் இனிது காணக்கிடத்தலானும், இருக்குவேதவிறுதிப் புருட சூத்த மந்திரவுரையின்கண்ணே இறைவனுக்கு அவயவப் பாகுபாடுகள் நன்றெடுத்துச்சொல்லப்பட்டமையானும், மிகப்பழைய கேனோப நிடதத்தில் முதல்வன் இயக்கவுருவந் தாங்கித் தோன்றித் தேவர்க்கு அருள்செய்த வரலாறு விரித்துக்காட்டப் படுதலானும், பின்னெழுந்த கைவல்லியம், அதர்வசிகை முதலிய வுபநிடதங்களினும் உமாசகாயம் பரமேசுவரந் திரிலோசனம் நீலகண்ட முதலிய வுருவத்திருவடை யாளங்கள் கிளந்தெடுத்து மொழிந்திடப்பட்டமையானும், புறத்தே அண்டசரீரத்திற்கு இதயத்தானமான சிதம்பரத்திற்றிரு நடங்குயிற்றும் முதல்வனை வழிபடுமாறுபோல அகத்தே பிண்டசரீரத் தினிதயத் தானத்துள்ள பரமலியோமத்தின் கண்ணே நடமிடும் ஆனந்தத் தாண்டவ மூர்த்தியையறிந்து வழிபடுமாறு விதிக்குந் தகரவித்தையி னியல்பு சாந்தோக்கிய முதலான பிராசீன உபநிடதங்களில் வகுத்துக் கூறப்படுத லானும், யோகநூல் செய்த பதஞ்சலிபகவானும் பிரத்தியா காரந் தாரணை முதலான யோகப்பயிற்சியி னெல்லாம் இறைவனைக் குறிகளானறிந்து வழிபட்டு உள்ளத்தை ஒருமையுறுத்துகவென்று விதித்தலானும், மக்களின் அளவை யுணர்வைப் பாகுபடுத்துக் கூறிய நியாயம் வைசேடிகம் முதலான நூலுடையார்க்கும் அஃதொப்ப முடிந்தமையானும், வேதாந்த நூல்செய்த வாதராயண ரெனப்படும் வியாசபக வானுந் தமது பிரமமீமாஞ்சையின் பிரதமோத்தியாயந் துவிதீயபாதம் 11-வது என்னுஞ் சூத்திரத்தானே இதயக் குகையின் கண் இறைவனை வழிபடுந்தகரோபாசனை எடுத்து மொழி தலானும், வேதோபப்பிருங்கணங்களான பதினெண் புராணங் களினும் சிவரகசியம் பாரதம் இராமாயணம் முதலான விதிகாசங்களினும் முதல்வனருட்குறிநிறுத்த வாலயவழிபாடு காணப்படுதலானும், தேவரும் முனிவரும் இறைவனுடைய அருளுருவத்திருமேனியை வழிபட்டு ஆங்காங்குப் பிரதிட்டை செய்த தேவாலயங்கள் இப்பரத மாகண்டமியாங்கணும் பரந்துபட்டுக் கிடத்தலானும், அத்தேவாலய வழிபாடுதானும் பிற்காலத்ததன்றிப்பல்லாயிர வருடங்கட்கு முன்னதான பண்டைக்காலந்தொட்டு நடைபெற்று வருதலானும், ஆரியப்பிராமணர் நாடோறும் அத்தியயனஞ்செய்து போதரும் காயத்திரி மந்திரவுறையுளில் இரண்மயவுருவனான இறைவன் பர்க்கனென்னுந் திருநாமத் தோடுகூடி விளங்கலானும், ஞானசம்பந்தப் பிள்ளையார் முதலான அருட்குரவரும் முதல்வனருளுருவத் திருமேனி வழிபாட்டிற் றலைநின்றமை எல்லாரானு மறியப்படுதலின் அஃதான்றோராசாரமாய் நிலையுதலானும், பிறவாற்றானும் அங்ஙனங்கூறும் பிரமச மாசத்தாருரை பொய்படுபோலி யுரையாதல் தெளியப்படு தலின் அவரார வாரவுரை பற்றி மயங்குவார் ஈண்டு யாருமிலர். இவர்கூறும் போலிவாதப் பொய்ப்பொருளெல்லாம் மிக நுண்ணிதாகவெடுத் தாராய்ந்துமறுத் துண்மைப்பொருள் காட்டி அர்ச்சாதீபம் என்னும் ஓரரிய பெரியநூல் பிரகடனஞ் செய்தார் எம்மாசிரியர் ஸ்ரீலஸ்ரீசோமசுந்தரநாயகரவர்கள். அவ்வரிய நூன்மேல் வேறு சொலவறியாமற் பிரமசமாசத் தாரும் வாய்வாளாதடங்கினர். சகளோபாசனை யியல்புபற்றி இன்னும் விசேடமாயறிய வேண்டும் அன்பர்கள் அர்ச்சாதீப மென்னும் அவ்வரிய பெரியநூலை ஆராய்ந்தறியற்பாலார். இனி இதுகாறும் விரித்ததருக்கவுரையால் இப்பரதமா கண்டத்தின்கணுள்ள நன்மக்களீசுரனருளுருவத் திருமேனியிற் செய்து போதரும் வழிபாடு சகளோபாசனை யாவதன்றி விக்கிரகவாராதனையாதல் ஒரு சிறிதுஞ் செல்லாதா மென்பதூஉம், சகளகோலத்தின்கட்செய்யும் வழிபாடுபற்றி இறைவனது வியாபகமுழுமுதன்மை இறைமைக் குணத்திற்கு வரக்கடவதோ ரிழுக்கில்லை யென்பதூஉம், அருவமாக ஈசுரனைத் தியானிக்க வல்லோ மென்பாருரை மக்கள் மனைவியற்கைக்குத் தினைத்துணையு மியைதல் செல்லாமை யால் அது வெறுஞ்சொன்மாத்திரையாகவே முடிதலல்லது பொருணிறைந்த தாகாதென்பதூஉம், உலகத்தின்கண் அநாகரிய விருத்தியுடையரான மக்களுள்ளும் உருவ வழிபாடே காணக்கிடத்தலின் அவ்வியற்கைக்கு வேறாக மொழிதல் முரண்பாடாமென்பதூஉம், ஆரியவேதோப நிடதங்களினும் அவற்றின் உபப்பிருங்கணங்களினும் அருளுருவத்திருமேனி வழிபாடே பெறப்படுதலின் அவ் வுண்மை யறியமாட்டாது திறம்பியுரையிடுவாருரை வழுக்குரையா மென்பதூஉங் காட்டப்பட்டன வென்க. சகளோபாசனை முற்றும். 20. நாலடியார் நூல் வரலாறு பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு எனக்கடைச்சங்கத்தாரான் முப்பாலாக வகுத்துத் தொகுக்கப் பட்ட விழுமிய இயற்றமிழ் நூல்களுட் பதினெண் கீழ்க் கணக்கின்பாற்பட்ட நாலடியார் நூல்வரலாறு பிற்காலத் தாராற் பிறழவுணரப்பட்டது. சென்னைச்சருவகலா சங்கத்தார் எப் - ஏ முதலிய வகுப்புகளுக்கு நியமிக்குந்தமிழ்ச் செய்யுட் பாடங்களுக்குத் தமிழியலறிவு வாய்ப்பப்பெறாத புலவோர் சிலர் உரைக்குறிப்புக்களெழுதி வெளியிடுகின்றார். அவர் இயற்றமிழ்ச்செய்யுட் பருப்பொருடானும் உணர மாட்டா தாராய் ஆண்டாண்டுப்பிழைபட வுரை வுரைத்தலை மேற் கொண்டு, தம்முரைக்குறிப்புக்களைப்பயிலும் மாணாக்கர் களுக்குத் திரிபுணர்ச்சியைப்பயந்து அவர்க்கும் பிறர்க்குங்கேடு சூழ்ந்துவருகின்றார். இப்பெற்றியரானலிவர் பண்டைக்காலத்து நல்லிசைப் புலவர் தெண்டமிழ்த்திறம் விளங்கவியற்றிய நாலடியார் முதலானநூனுட்பமுந்திட்பமுமறிந்து உரையெழுத மாட்டுவாரல்லர். வில்லிபுத்தூரார் பாரதமுங் கம்ப ராமா யணமும் நன்னூலும் செய்யுளணியிலக்கணக் குறிப்புக்கள் சிலவும் பயிறன்மாத்திரையானே பண்டைத்தமிழ்ப் பனுவன் மாட்சி தமக்கினிது விளங்குமெனக்கருதித் தருக்கி அகங்களிப் பாரியலறிவுமயக்கவறிவேயாம் வடநூன் மரபின் வழிப்பட்ட வில்லிபுத்தூரார் பாரதமுதலிய நூற்பயிற்சி, செந்தமிழ் நூன்மரபின் வழிபிழையாப் பண்டைத்தமிழ் நூன்மாட்சி யினையுணர்தற்குச்சிறிதும்பயன்படாது. நச்சினார்க்கினியர், சிவஞானயோகி கண்முதலான உரையாசிரியர் நுண் பொருளுரைப் பயிற்சியானும், தொல்காப்பியவியல் நூலறி வானும், சங்கத்தமிழ்நூற் பழக்கத்தானுஞ் செந்தமிழ்ப் புலமை செவ்விதினிரம்பப்பெற்று, அதனோடு தம்மியற்கை மதிநுட்ப வாற்றலுமுடையரான நற்றமிழ்ப்புலவோரே நாலடியார் முதலான நூலுண்மையறிந் துரையுரைக்கு முரிமையு டையராவர். ஏனையோரது செயப்புகுதல் கற்றறிவுடையோ ருண்ணகுதற்கேதுவாம் புன்மையாயொழியுமென்க. இது கிடக்க. இனி, அப்போலியுரைகாரரில் ஒருசாரார்தாம் நாலடியார் நூல்வரலாறுரைக்கின்றுழிப்பின்வருமாறு கூறுகின்றார். பண்டைக்காலத்தே கொடியதொரு வற்கடமுண்டா யிற்று, அதனான் நேர்ந்த வறுமை பொறாத சமண் புலவர் எண்ணாயிரவர் பாண்டி நாட்டிற் றமிழ் வளம்படுத்தும் பாண்டியனைக் களைகணாகப் புகுந்தார். புகுத, அவனும் அவரையெல்லாமேற்றுக்கொண்டு தமிழ்வளர்ப்பானா யினான். இஃதிவ்வாறிருப்ப, அவர்நாட்டில் நிகழ்ந்தவற்கடமு நீங்குவதாயிற்று. தந்நாடுமலியமழைபெற்றுச் செழித்தமை தேர்ந்த அச்சமண்புலவர் எண்ணாயிரவரும் பாண்டியனைக் கூய்த் தலைவ, எம்நாடு பண்டுபோற் செழிப்படைந்தது, யாங்கள் எந்நாடு போதற்கு விரும்புகின்றோம், விடைதரல் வேண்டும் எனக்கேட்பப் பாண்டியன் அவரைப்பிரிய மாட்டானாய்ப் புடைபடக்கவன்று அதற்குஒருப்படானா யினான் படவே, அச்சமண்புலவோர் மற்றைநாளிரவிற் பாண்டியனுக்குணர்த் தாதேதத்தம் நாடு நோக்கிச்சென்றனர். செல்லவே, பாண்டியன்வருந்தி அவரிருந்தவிருக்கைகளை ஆய்ந்துபார்ப்ப ஒவ்வொருபீடத்தின்கீழும் ஒவ்வொரு நறுக்குச்செய்யுள்கிடந்தது. கிடப்ப, அவற்றையெல்லாம் ஒருசேரத்திரட்டி வையையாற்று வெள்ளத்திற்கொண்டு போய்ச் சொரிந்திட்டான். சொரிந்த அவ்வேடுகளுள் நானூறேடுகள் நீரொழுக்கை எதிரூடறுத்து நான்கடி மேற்சென்றமையால், அந்நானூற்றினையும் அரித்தெடுத்துக் கோத்துஒரு நூலாக்கி நாலடியாரெனப் பெயர்தந்து போற்றினான், என்றிதனையே இன்னுஞ்சொற்பல்க வாளாது விரித்தெழுதினார். இனி, இங்ஙனமொருவரலாறு பண்டை நூலாசிரிய ராதல், நச்சினார்க்கினியரை யுள்ளிட்ட உரையாசிரியராதல் உரைப்பக் கண்டிலம். பிற்காலத்துச்சிறந்து விளங்கிய ஆசிரியர் சிவஞான யோகிகளும் அங்ஙனமொருவரலாறுண்மை யாண்டுங் குறித்திலர். இஃதிவ்வாறாக, அப்போலியுரை காரரிதனை எங்கிருந்து எடுத்தெழுதினார்? எனின், அற்றன்று, இவ்வரலாறு ஒருவர் ஒருவர்க்குரைப்பத் தொன்றுதொட்டு வருகின்றமையின், இதனுண்மைக்குச்சான்றுவேறுதேடுதல் வேண்டாவெனின்;- அற்றேல், அவ்வரலாறுமற்றைஉண்மை வரலாறுகளொடு மாறுபடாதாதல் வேண்டுமாகலானும், மற்றொருசார் போலியுரைகாரர் இவ்வரலாற்றினை வேறொரு வகையான் மொழிந்திடுதலின் ஒருபெற்றிப்பட நிகழ்ந்த ஓருண்மைவரலாறு அங்ஙன மிருதிறம்படநடைபெற லியாண்டு மின்மையானும் அதனைப்பரம்பரையின்வந்த உண்மை வரலாறுகளொடு முரணுமாறு யாங்ஙனமெனிற் கூறுதும். கடைச் சங்கத்து வீற்றிருப்புப்பெற்ற மதுரைக்கூல வாணிகன் சாத்தனார் தாமியற்றிய மணிமேகலைக் காப்பியத்திற் பன்னீரியாண்டு பாண்டி நன்னாடு, மழைவளங்கரப்ப மன்னுயிர்மடிந்தது என வற்கடகால நிகழ்ச்சியினைத் தாங் கண்டிருந்தவாறே நிலையிட்டுக் கூறுதலின் அக்காலத்துப் பாண்டிநாட்டிலேயே வறம்மிகுந்த தென்பது இனிதறியப் படும்; இறையனாரகப்பொருளுரைக்குப் பாயிரவுரைகூறிய முசிறி யாசிரியர் நீலகண்டனாரும் இவ்வாறே பாண்டிநாட்டிற் பஞ்சமுண்டாயிற்றென்றுரைத்தார்; திரு விளையாடற் புராணமுடையாரும் இவ்வாறே ஒன்றவுரைத் தார். பாண்டிநாடு அக்காலத்துவறங்கூர்ந்த தெனவுரைக்கும் மெய்வரலாறு யாங்ஙனம் பொருந்தும்? இன்னும், பாண்டி நாட்டில் அங்ஙனம் வற்கடம் நேர்ந்தவழிப்பாண்டியன் தன்மாட்டிருந்த புலவோரை யெல்லாங்கூவி வம்மின்! யான் உங்களைப் புறந்தரகில்லேன்; என்றேயம் பெரிதும் வருந்து கின்றது; நீயிர் நுமக்கறிந்த வாறுபுக்கு நாடு நாடாயின ஞான்று என்னையுள்ளிவம்மின் எனமொழிந்திட அவரெல்லாம் பன் முகமாய்ப்போயினா ரென்பது களவியல் பாயிர வுரையிற் பெறப்படுகின்றது. இவ்வுண்மை வரலாற்றொடு திறம்பி அக்காலத்துத்தான் மற்றைநாடுகளிற் பஞ்சத்தான் வருந்திய சமண்புலவோர் பாண்டியனை நிலைக்களனாக அடைந்தா ரெனக்கூறும் பொய்வரலாறு யாங்ஙனம் பொருந்தும்? இன்னும், சமண் புலவர் ஞானசம்பந்தப் பிள்ளையாரொடு கலாய்த்து அவரொடு தாமும் ஏடெழுதி வையையில் விடுப்பப்பிள்ளை யாரிட்ட ஏடு யாற்றொழுக்கினை எதிர்கீண்டுசென்ற தென்பதும், அவருய்த்த ஏடுகள் நீர்வழியே சென்றொழிந்தன வென்பதும் பிள்ளையார் கட்டளை யிட்டருளிய திருப்பதிகத் திருவாக்குகளானும் பெரியபுராணம் முதலானஉண்மை வரலாறுதெரிக்கும் நூல்களானும் பெறப்படுகின்றன. இம்மெய் வரலாற்றொடு மாறுபட்டு அந்நறுக்குச் செய்யுட்கள் நாலடிகாறும் மேலேறிச்சென்றன வெனக்கூறும் பொய் வரலாறு யாங்ஙனம் பொருந்தும்? இங்ஙனம் ஆண்டாண்டுப் பிரமாணங்களாகப் பெறப்படும் உண்மைவரலாறுகளோடு அப்போலி யுரைகார ருரைக்கும் போலிவரலாறு பெரிது முரணித்தன பொய்ம்மை புலப்படுத்தலின், அது பரம்பரை வழக்கின்வந்த உண்மை வரலாறாதல் யாண்டைய தென்றொழிக. இனி, வேறொருசாருரைகாரர் இவ்வரலாற்றினை வேறுபடக்கொண்டு வழங்குமாறுங் காட்டுதும். ஞான சம்பந்தப்பிள்ளையாரொடு கலாய்த்து அவரோடு இயற்றிய அனல் வழக்கிற் றோல்வியடைந்த சமண் புலவர் பின் புனல்வழக்கி லவரை வென்று கோடல் குறித்து வையையாற்றில் அவரொடு தாமெழுதியிட்ட ஏடுகள் நாலடி மேலேறிச் சென்றமையால் அவரெழுதியிட்ட செய்யுட்கள் நானூறும் நாலடி நானூறென்று வழங்குவவாயின என்று பிறழக் கூறி விரித்தார். இங்ஙன மிவ்விருவகைப் போலியுரைகாரரும் அவ் வரலாற்றினை இருவேறு படக்கொண் டுரைக்கின்றமையின், அவ்வரலாறு உண்மை யாகாதென்பது கடைப்பிடிக்க, அது கிடக்க, பின்னை யுரைகாரர் கூறும் வரலாறுதான் உண்மை யெனத் தேறாமோவெனின்; தேறாம், என்னை? கி.பி முதனூற்றாண்டின் றொடக்கத்திலே கடைச்சங்கத்தாராற் பதினெண்கீழ்க்கணக்கிற் நோக்கப்பட்ட நாலடியார்க்குக் கடைச்சங்க மொடுங்கிய பிற்றை ஞான்று கி.பி ஏழாம் நூற்றாண்டின் முற்பாதியிலே யிருந்தாரான ஞானசம்பந்தப் பிள்ளையார் அற்புத அருட்சரித முறைபற்றி வரலாறுரைத்தல் ஒரு சிறிதும் பொருந்தாமையானும், அவ்வரலாறுதானும் ஞானசம்பந்தப்பிள்ளையாரது அற்புத அருட்சரிதவழி நில்லாது வழுவுதலானும் என்பது. இது கிடக்க. இனி, நாலடியார் வந்த வரலாறுதான் பெறப்படுதல் வேண்டுமாலோவெனிற் கூறுதும்; கடைச்சங்கத்தார் காலத்துத் தொகுத்து வகைப்படுத்தப்பட்ட நூல்களுள் ஒரு சில அச்சங்கத்துப் புலவர்களாலே இயற்றப்பட்டன; ஒரு சில பிறராலியற்றப்பட்டன; ஒரு சில முன்னோரும் பின்னோரு மியற்றிய செய்யுட்கள் விராய்வந்தன; திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி போல்வன கடைச்சங்கத்துப் புலவராலேயே இயற்றப்பட்டன; திருக்குறள், பழமொழி, நான்மணிக்கடிகைபோல்வன பிறராற் செய்யப்பட்டன; அகநானூறு, புறநானூறு போல்வன முன்னோரும் பின்னோரும் பாடிய செய்யுட்கள் விராய்வந்தன. அவற்றுள் நாலடிநானூறு முன்னோரும் பின்னோரும் மக்களுயிர்க் குறுதிப்பொருள்களான அறம்பொரு ளின்பவீடுபேறுகளை விரித்துரைத்த செட்யுட் டொகுதியாம். அறப்பொருட் பகுதிபற்றி முன்னோரும் பின்னோருமியற்றிய செய்யுட்களைப் புறநானூறெனவும், இன்பப்பகுதிபற்றி அன்னோர்பாடிய வற்றை அகநானூ றெனவும் வகுத்தவாறுபோல, அறம் பொரு ளின்பம் வீடென்னு நான்கு திறனும் விளங்க அன்னோர் மொழிந்த செய்யுட்களை நாலடிநானூறென வகைப்படுத்தினார். வகைப்படுத்துகின்றுழி, அறம் பொரு ளின்பவீடுபேற் றுறுதிப் பயன்களைச் சுருங்கிய குறள் வெண்பா யாப்பான் விழுப்பந் தோன்ற விரித்துக்கூறுந் திருக்குறள்போல இதுவும் அவ்வுறுதிப் பொருட்பயன்களை நாலடிவெண்பா யாப்பான் அங்ஙனங் கூறுதலின் நாலடி நானூறென்னும் பெயர்த் தாயிற்று. அதுவே அப்பொருட் காரணமாயின் திரிகடுகம், நான்மணிக்கடிகை, பழமொழி முதலியனவும் அப்பொருள் களை அங்ஙனமே நாலடிவெண்பா யாப்பான் விளங்கக் கூறுதலின் அவையும் அப்பெயர்க் குரியவாவான் செல்லு மாகலின், அப்பெயரில் விசேட மில்லையாலோ வெனின்;- நன்றுகடாயினாய், மூன்று விடயங்களை யுணர்த்தும் மூன்றுவாக்கியங்கள் உளவாதல் பற்றித் திரிகடுகம் எனவும், நான்குவிடயங்களுணர்த்தும் நான்குவாக்கியங்களுள வாதல் பற்றி நான் மணிக்கடிகை யெனவும், எடுத்துக்கொண்ட பிரமேயத்தை விளக்குதற்குரிய பழமொழி வாக்கியங் களுடைமை பற்றிப் பழமொழி யெனவும் பெயர் மிலைச்சி, அன்னவிசேடங்கள் பிற இதன்கட் காணப் படாமையான் ஒழிபளவைபற்றி அவற்றின் வேறாக நாலடி யென்னும் பொதுப்பெயரினையே இதற்குரிமையுடைய சிறப்புப் பெயராகச் சூட்டினார்; அவ்வவற்றின்கட் சிறப்பாகக் காணப்படுங் குறிகள்பற்றி அவ்வவற்றிற்குப் பெயரமைக்கப் படுதலின், அவற்றின் வேறாகக் காணப்படுஞ் சிறப்பில் லாமையே இதற்கோர் சிறப்பாகலின் அது பற்றியமைந்தபெயர் விசேடமில்லையாதல் யாண்டை யதென்றொழிக. ஈண்டுக் கூறியவாற்றால், நாலடியாரென்பது அளவினாற் பெயர்பெற்ற இயற்கைக்காரண முடையதாகலின், இக்காரணமெய்ம்மை தேறமாட்டாது தமக்குத் தோன்றியவாறெல்லாம் பொய்க் கதைகள் கட்டியுரைத்துத் தமிழின்மெய்ம்மை வரம்பழிப்பார் சொற்கள் உண்மையெனத் தேறற்பாலனவல்ல வென்பது தெளிந்திடுக. இவ்வாறே அப்போலியுரைகாரர் சொற்பொருணுட்ப முணரமாட்டாமல் தமக்குத் தோன்றியவாறெல்லாம் வழூஉப்படவெழுதி வெளியிட்ட உரைப்பீறல்களை முழுது மாய்தல் மணற்சோற்றிற் கல்லாய்தல்போற் பயனின்றி யொழியு மாதலின் விசேடமாகவெடுத்து மறுக்கற்பால வற்றையே ஆங்காங்கெடுத்துக்குறித்திடுவாம். இன்றியமையா விடங்களில் உரையெழுதும் மதுகையின்றி வாளா வெறும் பீறல்களை அளந்தளந்தேடுகளை நிரப்பி மாணாக்கர்க்குத் தமிழின் மாட்டு வெறுப்பினையும் அவமதிப்பினையும் உண்டு பண்ணும் அவர்திறங் கற்றறிவுடையோரால் அருவருக்கற் பால தொன்றாம். இங்ஙனமெல்லாம் யாங்கடிந்தெழுத வொருப் பட்டது. மாணாக்கர்மாட் டுள்ள இரக்கத்தானும், தமிழின் மெய்ம்மை வரம்பழிதல் நோக்கி எழுந்த பரிவானும், நற்றமிழ்ப் பண்டிதர் ஒருங்குகூடி உரைகள் நுட்பந்தோன்ற வெழுதுதற்கு இஃதோர்தூண்டுதலாமென்னுங் கருத்தானுமேயாகலின், யாம் பகைமை பொறாமை முதலான விழிகுணவயத்தா னிஃதெழுதினேமென் றுலகங்கொள்ளா திருக்கக்கடவது. இனியவரென்சொலினு மின்சொல்லே யின்னார் கனியு மொழியுங் கடுவே - நீதிநெறி விளக்கம் இறையனாரகப் பொருளுரை வரலாறு நம் ஆப்தர் சவரிராயரவர்கள் நுட்பவாராய்ச்சியின்மேல் எழுந்த தொல்காப்பிய முழுமுதன்மை என்னும் விடயத்தின் கண் இறையனாரகப்பொருளுரைவரலாறு பற்றி யாமொழிந்த பொருண்மே லாசங்கை நிகழ்த்தி நம் ஆப்தர் இராகவையங் காரவர்கள் எழுதிய அரிய வழக்குரை 7 - ஆம் இதழிற் பிரசுரிக்கப்பட்டது. அவ்வுரையின் றொடக்கத்திலே ஆப்தரவர்கள் நாமெழுதிய ஆராய்ச்சி யுரையினை விதந்து கூறிய நல்லபிப்பிராயத்திற்கு அவர்கள்பா லெழுமையும் மறவாவுரிமை யன்புபாராட்டுங் கடப்பாடுடையோம். இது கிடக்க. இனி, இறையனாரகப்பொருள் பாயிரவுரை செய்தார் முசிறியாசிரியர் நீலகண்டனாரே யாமென்னு மெமது கூற்றைப் பல நுட்பவேதுக்களான் ஆசங்கித்து ஆப்தர் - இராகவையங்கா ரவர்களெழுதிய தருக்கவுரை அரும்பொரு ணிறைந்து திகழுகின்றது. அப்பாயிரவுரை யியல்புபற்றி யாங்கூறியனவும், ஆப்தரவர்கள் கூறியனவுஞ் சொன்மாத் திரையின் வேறு பாடுறுவன போற் றோன்றினும், அவற்றைப் புடைபட வொற்றி யளந்துணர வல்லார்க்கு அவை யிரண்டும் பொருண் முடிவான் ஒத்த கருத்தினவென்பது இனிது விளங்கும். என்னை? ஆசிரியர் நக்கீரானாராலுரையிடப்படாத சிலபொருள் அவ்வுரை யினிடையிடையே விராயின வென்பதவர்க்கு மெமக்குமொப்ப முடிந்ததாகலினென்க. அவ்வுரையினிடை யிடையே ஆண் டாண்டு எடுத்துக்காட்டுக் களாகப்பிரயோகஞ் செய்யப்பட்ட கட்டளைக் கலித்துறைப் பாட்டுக்களும், வேறுசில உரை வாக்கியங்களும், பாயிர வுரையும் நீலகண்டனாராற் சேர்க்கப் பட்டனவென்னும் அபிப்பிராய நெடுநாளாக யாமேற்கொண்டு போதருகின்றோம். அவ்வபிப்பிராயத் தினையே ஆப்தரவர்கள் மேலுமேலு நனிவிளக்கி வற்புறுத்து மொழிந் தமையால் அவர்களபிப்பிராய நம்மொடுமாறுபடு மாறில்லையென்பது தெளியப்படும். அற்றாயினும், அவர்கள் ஒரு கோவைப் படுத்து மொழிந்த வழக்கி லொரோவிடங்களிற் கருத்தொருமை உடையமல்லே மாதலின் அவற்றின்மேலுஞ் சிலவாசங்கை நிகழ்த்தி எழுத வெடுத்துக்கொண்டாம். இனி, ஆசிரியர் சிவஞானயோகிகள், களவியல்பாயிர வுரையியற்றினார் யாரென்றாராயமுனைந் திடாமையான் ஆண்டும் பிறாண்டுந் தங்கருத்தொடு மாறுபடுவனவாக விளங்கித்தோன்றும் உரைப்பொருள்களெல்லாம் தெய்வப் புலமை நக்கீரனா ரியற்றியவல்லவென்னுந்துணிபு மேற் கொண்டு அவற்றை எடுத்துமறுத்தருளினார். அவர்களங்ஙனங் குறிப்பானறிந்தமைகண்டே பாயிரவுரை நக்கீரனாரியற்றிய தன்றென்னு மபிப்பிராயஞ் சிவஞானயோகிகட்குமுண்டென் றுரைத்தாமல்லது, அவர்கள் அப்பாயிரவுரையிலுள்ள ஒவ்வோரெழுத்துஞ்சொல்லும் நக்கீரனாருடையவல்லவென் றுணர்ந்தாரென்னுங் கருத்துற்று அங்ஙனங் கூறினோ மல்லோம். நச்சினார்க்கினியரையுள்ளிட்ட முன்னையுரை யாசிரியன்மாரெல்லாம் அப்பாயிரவுரையினை ஆராயமுனைந் திடாமல் நக்கீரனாரியற்றியதென்றே கூறியொழிந்தமையால், ஆசிரியர் - சிவஞானயோகிகளுங் கெதானுகெதிகநயம்பற்றி அப்பாயிர வுரையு ளொரோவிடங்களை நக்கீரனார் திருவாக் கெனவுங் கொண்டு மொழிந்திட்டார். அவ்வுரைவரலாற்றை யாமுமா ராயமுனைந்திலமாயின் எமக்கும் அப்பாயிரவுரை யியல்பு விளங்காதொழியுமன்றே? இங்ஙனம் இதனை முனைந்தா ராய்தற்கு அவகாசமின்றி அரியபெரிய கருமங்களை முடித்தற் கண் அறிவொருங்கிக்கிடந்த நச்சினார்க்கினியர், சிவஞான யோகி கண்முதலான ஆசிரியன்மார் அப்பாயிர வுரையிலுள்ள ஒரோவொரு வாக்கியங்களை நக்கீரனார் திருவாக்குக்களாகக் கொண்டுரைக்கு மாறுபற்றியாம் நுணுகி முனைந்தாராய வெடுத்துக்கொண்ட தருக்கவுரையின் கண் வரக்கடவதோரிழுக் கில்லை. மேலும், பாயிரவுரை நீலகண்டனா ரியற்றியதேயா மென்னுமெமதுமேற்கோளை வலியுறுத்தற்குச் சிவஞானயோகி களுரைத்தவுரை இன்றியமையா வேதுவாகா மையான், அது பற்றி அம்மேற்கோள் துர்ப்பலமுறுமாறில்லை. பாயிரவுரை நக்கீரனாரி யற்றியதன்றென்பதற்கு இன்றியமையாது வேண்டப்படு மேதுக்கள் முன்னெழுதியவுரையில் விளங்கக் காட்டினாம். அவ்வேதுக்களுள் ஒன்றுதானும் நம் ஆப்தரவர் களாற்களை யப்படாமையின் அம்மேற்கோள் வாய்ப்புடைத் தாவதொன்றேயாமென்று தெளிக. அற்றன்று, மேற்பாயிரத் துளுரைத்தாம் என்னுஞ்சொற்றொடர் நக்கீரனாருரை யிடையிற் காணக்கிடத்தலான் பாயிரவுரை செய்தாரு மவரேயா மென்பதுபெறப்படுமாம். பிறவெனின்;- நன்று கடாயினாய், ஆசிரியர் - நக்கீரனார் தம்முரையி லாங்காங்கு விழுப்பந்தோன்ற விரித்துரைநிகழ்த்திய பொருட் கூறுபாடுகளுட், பாயிரத்திற்குவேண்டுவன சில பிரித்தெடுத்து முன்னெழுதிய நீலகண்டனார்தாமே நக்கீரனாருரை யிடையினும் மேற் பாயிரத் துளுரைத்தாம் என்பதனை எழுதிச் சேர்த்தாராகலின் அச்சொற்றொடர் பற்றியே அங்ஙன மெமதுமேற்கோளுக்குக் குற்றஞ்சொல்லுதலடாது. மேலும், நூல்செய்தபின்னே பாயிரஞ்செயப்படுவது தொல்லாசிரியர்க் கெல்லாம் ஒப்ப முடிந்தமையின் நூலிடையே மேற்பாயிரத் துளுரைத்தாம் என நக்கீரனார் கூறினாரென்றல் ஒருசிறிதும் பொருந்துமாறில்லை. இதுகிடக்க. இனி நம் ஆப்தர் இராகவையங்காரவர்கள், இறைய னாரகப்பொருளுக்கு ஆசிரியர் நக்கீரனார்கண்டவுரை நான்மறையின் மந்திரவுரைபோல எழுத்திடைப்படாமல் வரலாற்று முறையின் வரப்பெறுதலால், அதுமிகுந்துங் குறைந்தும் பிறழ்ந்தும் அவ்வாறு திரிபுற்று வாராநிற்பப் பின் வந்த நீலகண்டனார் அவ்வுரையினை எழுத்திடையிட்டுப் போற்றினாரென் கின்றார்கள். பண்டைக்காலத்து ஆரியமாந்தர் தாம்வழங்கும்வடசொற்களை எழுத்திடையிட் டெழுதுமாறு அறியாமையின், தம்மந்திரவுரைகளை யெல்லாம் மூளையிற் பதியவைத்து வரலாற்றுமுறையில் வெளியிட்டு வந்தார்கள். அவ்வாறின்றித்தமிழ்முதுமக்கள் பண்டுதொட்டுத் தாம் வழங்குஞ் சொற்களை எழுத்திடைப்படுத்து வழங்குமாறறிந்த மையின் அவரங்ஙனமிடர்ப்பட்டு வரலாற்றுமுறையிற் களவிய லுரையை வழங்கவிடுத்தாரெனல் வரலாற்றுமுறை திறம்பு முரையாம். பண்டைக் காலத்தே தமிழெழுத்துக்களுண் டென்பதற்கு ஆசிரியர் - தொல்காப்பியனார் தம்மிலக்கண நூலில் அவற்றிற்கு வடிவுகூறுதலும், களவியல் பாயிரவுரையிற் போந்த இவ்வறுபது சூத்திரத்தையுஞ்செய்து மூன்று செப்பிதழகத்தெழுதிப் பீடத்தின்கீழிட்டான் என்னும் வாக்கியமுமே உறுசான்றாம். அற்றேல், உரைநடந்து வாரா நின்றமை நோக்கி எனவும் இனி உரைநடந்தவாறு சொல் லுதும் எனவும் இங்ஙனம் வருகின்றதுரை எனவும் அவ்வுரை யிற்காணப்படுஞ்சொற்றொடர்களானே அஃதெழுத் திடைப் படா வரலாற்றுமுறையின் வந்ததென்றல் ஒருதலை யாகப் பெறப்படுமாம். பிறவெனின்;- நன்று சொன்னாய், அச்சொற் றொடர்ப்பொரு ளதுவாயினன்றே அங்ஙனந்துணிபு தோன்றக் கூறல் பொருத்தமாம். பண்டேபனையேடுகளி லெழுத்துப் பொறிக்கு முயற்சி யுண்டென்பதுகாட்டினா மாகலின் அச்சொற் றொடர்க்குப் பொரு ளதுவன்றாம். மற்றுக் களவியலறுபது சூத்திரங்களும் வினையினீங்கி விளங்கிய வறிவனாற் செயப்படுதலானும், அவ்வறுபது சூத்திரப் பொருளும் அவ்விறைவன தாணை யருள் வழிநிற்குந் தெய்வப் புலமை நக்கீரனாரால் வரையறுத் துரைக்கப் படுதலானும், அவ்வுரையின் றெய்வப் பெற்றிமை உருத்திரசருமரென்னு மூமைச்செட்டிப் பிள்ளையா லற்புதமுறையால் விளக்கப் படுதலானும் அது பரிசுத்தம் பெரிதுடையதாய்த் திகழா நின்றது; அம்மாட்சி யுடைமையின் அஃதெல்லார்க்கும் உபதேசிக்கற்பால தன்றாயிற்று; இலக்கணவிலக்கிய சாத்திரவியலறிவு முற்ற நிரம்பி, இயற்கை நல்லறிவும் ஒழுக்கவிழுப்பமு முடைய ராயினார்க்கே உபதேசிக் கற்பாலதாம் அந்தரங்க வுரிமையுற்று நின்றது; அவ்வந்தரங்க வுரிமைவழாமற் பக்குவம் பெரிதுடைய அதிகாரிகளுக்கு அருகி உபதேசிக்கப்பட்டுப் பரம்பரை வழக்காய் வந்தமையின் மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார் தம்மகனார் கீரவிகொற்றனார்க்குரைத்தார்; அவர்தேனூர் கிழார்க் குரைத்தார்; அவர்படியங்கொற்றனார்க் குரைத்தார் என்று அதனை அங்ஙனந்தெரித்தோதினார். ஆகலின், அச்சொற் றொடர்ப்பொருள் உபதேசமுறையின் வந்தமை உணர்த்துவதே யாமென்க. இவ்வாறே, திரு வெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவநாயனார் தாமியற்றிய சிவஞானபோதம் பன்னிருசூத்திரங் களையும் வார்த்திகப் பொழிப்பொடு தம்மாணாக்கர் அருணந்திதேவர்க் கறிவுறுத் தருளினார்; அவ்வருணந்திதேவர் அச்சிவஞானபோதப் பன்னிருசூத்திரத் தினையும் அவற்றிற்கு விரிந்தவோ ருரைபோற் றாமியற்றிய சிவஞானசித்தியினையும் தம் மாணாக்கர் மறை ஞான சம்பந்தர்க்கறிவுறுத்தருளினார்; அம்மறைஞானசம்பந்தர் அவற்றைத் தம்மாணாக்கர் உமாபதி சிவனார்க் கறிவுறுத் தருளினார்; அவ்வுமாபதி சிவனார் அவற்றைத்தாமியற்றிய சிவப்பிரகாசம் முதலான எட்டு நூல்களோடும் நமச்சிவாய தேசிகர்க்கு அறிவுறுத் தருளினார். இங்ஙனம் அச்சிவஞான போதவுபதேசம் முறை முறையே வாராநின்றது. இவ்வுபதேச முறைபோல் இறையனாரகப் பொருளுரையுபதேச வரலாறுங் கொள்ளற்பாற்று. இனித்திருவாய்மொழிக்கு உரையெழுதல் வேண்டு மென்னுங் கருத்தானன்றி அதன்மேலுபந்நியாசங்கள் நிகழ்த்துங் குறிப்பான் நம் பிள்ளையென்பவர் செய்த பிரசங்கப் பொருளைக் கேட்டிருந்த வடக்குத்திருவீதிப்பிள்ளை யென்பார் அவற்றின் அருமைபெருமையுணர்ந்து உரைநடைப்படுத் தெழுதிவைப்ப அது பிரசங்க நிகழ்த்தினோர் பெயரால் நம்பிள்ளையீடு என்று வழக்குற்றுவருத லிதுபோற் பரம்பரை வழக்கின் வந்ததெனப்படாமையால் அவ்வுதாரணம் ஈண்டைக் கேலாதெனவிடுக்க. பாண்டியன் இவ்வறுபது சூத்திரங்கட்கும் பொருள்காண்மின் எனப்புல வரையேவ, அவர்தனித் தனியே யுரை கண்டு உருத்திரசருமர்க்கவற்றை யுரைத்து ஒன்றை மெய்யுரையெனத்தேறிப்பின்னதன் தெய்வப்பெற்றிமைநோக்கி உபதேசமுறையின் வழங்கவிடுத்தாராகலின் இங்ஙனம் வருகின்றதுரை எனக்கூறினாரென்றுணர்க. இங்ஙனம் நூலுமுரையும் பெரிதும் போற்றி உபதேசிக்கப்பட்டு வந்த மையின், ஆப்தரவர்கள் கூறியவாறு இடையிடையே திரிபுற்றுவந்தது களவியலுரையெனுங்கூற்றுப் பொருத்தமாகக் காணப்படவில்லை. அப்பரம்பரையி னிறுதியில் வந்தோரான முசிறியாசிரியர் - நீலகண்டனாரே அதற்குப்பாயிரவுரையுந், துறைப்பாட்டுக்களும், ஆண்டாண்டியைபுவிளக்குஞ் சில வுரைப்பொருள்களுஞ்சேர்த்து முன்போலுபதேச முறையின் வழங்கவிடாமல் யாரும்பயின்று பெருகவைத்தார். ஆதலின், தெய்வப்புலமை நக்கீரனாரியற்றியவுரை பலவாறுசிதைந்து போயிற்றென்றல் பெரியதோ ரிழுக்காமென்று துணிகின்றோம். என்றிதனாற் பாயிரவுரையும் பிறசிலவு மெழுதிக் களவிலுரையொடு சேர்த்து அதனை வழங்கப்படுத்தார் முசிறியாசிரியர் நீலகண்டனாரேயா மென்பது காட்டி நிறுவினாம். ஆப்தர் - இராகவையங்காரவர்கள் தம்நுட்ப மதியால் ஈண்டு நாமாராய்ந்த பொருளை அளந்துபார்த்து நடுநிலை திறம்பாமற் றம்அபிப்பிராயம் மொழிந்திடுவார்களாக வென்னும் வேண்டுகோளுடையோம். 21. ஆனந்தக் குற்றம் - 2 சோமசுந்தரக்காஞ்சியாக்கம் என்னும் எதிர்மறுப்பின் கண் ஆனந்தக்குற்றம் பற்றி யாம் பரிகரித்துரைத்த உரைக்கூறு தமக்கு உடம்பாடில்லாமை காட்டி நம் ஆப்த நண்பர் சண்முகம் பிள்ளையவர்க ளெழுதிய வழக்குரை எமக்கு உளந்துளும்பு வகை தராநின்றது. அவ்வுரைமுகத்திலே நண்பர வர்கள், புழுத்தலை நாயிற் கடைப்பட்ட புல்லறிவோமையும் நாமியற்றிய நூல்களையும் பெரிதெடுத்துப் புகழ்ந்திட்டார்கள். அப் புகழ்ச்சியுரை தன்கண்நலப்பாடுடைய தாயினும் அதற் கிலக்கா யமைத்துரைக்கப்பட்ட பொருள்க ளதற்கொருசிறிதுந் தகுதிப்பாடுடையனவாகா. அவ்வாறாகவும் அவை நலக்க வுரைநிகழ்த்திய நண்பரவர்கள் நற்குணமாட்சியினையும் ஒருமைப்பாட்டினையும் மிகவியந்து அவர்கண்மாட்டு எழு பிறப்புந் திரியாவுழுவலுரிமையன்பு பாராட்டுங் கடப்பாடுடை யோம். இன்னும் நட்பின் கெழுதகைமைபற்றி ஒருவர் மாட்டுச் செறிந்த மறுவைச் சுத்திகரித்தற்கஞ்சி நடுநிலை பிறழ்ந்து அந்நட்பிற் கிழுக்கந் தேடுவார் போலாது, எம்முரையிற் றாங்குற்றமெனக்கண்ட பொருளை யெடுத்து மறுத்து எங்கேளுரிமைக்குச் சிறப்புத்தேடிய நன்முறை பொறாமை கொண்டு மயங்குந் தமிழ்ப் புலவோர்சிலர்க்கு நல்லறி வுறுப்பாம். இவ்வாறே நல்லறிவு நற்குண மாட்சியுடைய நம் ஆப்தர்களான ஸ்ரீமத் - சவரிராயபிள்ளை யவர்களும், ஸ்ரீமத் - இராகவையங் காரவர்களும் கேண்மைத் திறமறிந் துண்மை யான் ஒழுகுகின் றார்கள். இருந்த வாற்றால் நற்றமிழ்ப்பண்டிதர் தமக்குளிங்ஙனம் ஒருமித் துறுவதாராய்ந்து கெழுதகைமை வழுக்காது கேண்மை போற்றி யொழுகுதல் தென்றமிழ் நாட்டிற் கினியுண்டாம் நன்மையினை விளங்கக் காட்டு கின்றது. இது நிற்க. இனி, ஆனந்தக் குற்றமென வொன்று முழுமுத லறிவினராய் விளங்கிய ஆசிரியர், தொல்காப்பியரானும், அவர் வழிப்பட்டு நூல் செய்த நல்லிசைப் புலவரானும், அந் நல்லிசைப்புலவர் நூல்கட்கு நல்லுரை கண்டுகூறிய நச்சினார்க் கினியர் முதலான உரையாசிரியரானுங் கொள்ளப்படாமை யால், பிற்காலத்தார் கூறினும் அஃது எம்மனோராற்றழுவப் படுவதன்றென நிறுத்திய எமது மேற்கோளை ஆசங்கித்து ஆப்தர் - சண்முகம்பிள்ளையவர்கள் உரைத்த நுணுக்கவுரை யின் கட் கருத்தொருப்படுகின்றிலோமாதலால் அதனை நிரலே பாய்ந்து பரிகரித்து எமது உண்மைக்கருத்து நிலையிடுவாம். ஆசிரியர் அகத்தியனார் ஆனந்தவோத்துள் ஆனந்தக் குற்றத்தினியல்பைவிரித்தோதினாரெனக் கொண்டு நண்பரவர் கள் சில சூத்திரங்கள் எழுதினார்கள். அகத்தியங் கடைச்சங்க மொடுங்கிய பிற்றை ஞான்றே இறந்து பட்டதென்பது முன்னூலாசிரியர் பின்னூலாசிரியர் எல்லார்க்கும் ஒப்ப முடிந்தமையின், அகத்தியனார்கூறிய வெனக்கொண்டுகாட்டும் அச்சூத்திரங்கள் வந்தவரலாறு யாது? எனின், அற்றன்று, தொல்லாசிரியர் உரைகளி லாங்காங்கு இச்சூத்திரங்கள் காணக்கிடத்தலால் அவை அகத்தியனாரியற்றியவென்று கொள்ள வமையுமெனின்;-நன்று சொன்னாய், தொல்லை உரையாசிரியராவார் தெய்வப்புலமை நக்கீரனார், இளம் பூரணர், பேராசிரியர், சேனாவரையர், நச்சினார்க் கினியர், கல்லாடர், பரிமேலழகியார், அடியார்க்கு நல்லார் சிவஞான யோகிகள் முதலியோரன்றே? இவ்வாசிரியன்மா ருரைகளில் யாமாய்ந்த வளவில் அச்சூத்திரங்கள் பிரயோகிக்கப்படுவ தறிந்திலேம். அல்லதவை காணப்படு முரைப்பகுதியினை நண்பரவர்களெ மக்கெடுத்துக்காட்டி அறிவுகொளுத்து வார்களாயின் அதன்மேல் நிகழும் நம்மாராய்ச்சியினையுங் குறித்திடுவாம். ஆண்டெழுதிய வழக்குரையில் அச்சூத்திரங்கள் பிரயோகிக்கப்பட்ட வுரைப் பிரமாணங் காட்டாமல் நண்பரவர்கள் நெகிழ்ந்து போதலின், அச்சூத்திரங்களை யாரோ சிலர் கட்டி அகத்தியனார் பெயரால் நடாத்தினா ரென்பது காட்டுவாம். ஆசிரியர் - அகத்தியனார் ஆனந்த வோத்துள் அங்ஙனஞ் சூத்திரங்களியற்றியிட்ட துண்மை யாயின், தொன்னூற் பரப்பெல்லாம் ஒருங்குணர்ந் துரை யெழுதுவாரான ஆசிரியர் - நச்சினார்க்கினியர் மலைபடு கடாத்துரையில் பின்னுள்ளோர் ஆனந்தக்குற்ற மென்பதோர் குற்றமென்று நூல் செய்ததன்றி, அகத்தியனாருந் தொல்காப்பிய னாரும் இக்குற்றங் கூறாமையின் என்றும், தொல்காப்பிய வுரையில் இனி ஆனந்த வுவமை யென்பன சிலகுற்றம் அகத்தியனார் செய்தாரெனக் கூறுபவாகலின் அவையிற்றை எவ்வாறு கோடுமெனின், அவைகள் தாம் அகத்துள்ளும் பிறசான்றோர்செய்யுளுள்ளும் வருதலிற் குற்றமாகா; அகத்தியனாராற்செய்யப்பட்ட மூன்று தமிழினும் அடங்காமை வேறு ஆனந்தவோத் தென்ப தொன்று செய்தாராயின் அகத்தியமுந் தொல்காப்பியமும் நூலாகவந்த சான்றோர் செய்யுங்குற்றம் வேறுபடா வென்பது என்றுந் தடைவிடை களாற் காட்டி ஆனந்தவோத்து அகத்தியனார் செய்தா ரென்பதிற் றமக்குடம்பாடு மறுத்த லென்னை? இவர்தா மிங்ஙனம் மறுத்துக்கூறினும் ஏனை யுரையாசிரியரு மிவற்றை எடுத்தாளாத தென்னை? என்று கடாவுவார்க்கு இறுக்கு மாறின்மையின் அச்சூத்திரங்கள் அகத்தியனார் செய்தவாதல் செல்லாதென்க. அகத்தியனார் பெயரானும் ஔவையார் திருவள்ளுவர் பெயரானுங் கட்டி நடத்தப்படும் பாட்டுக்கள் போலவையுங் கொள்ளற் பாலனவாம். இனி ஆசிரியர் - தொல்காப்பியனார் பயனில்லவற்றைக் கிளந்து கூறாது புறனடையா லுய்த்துணரவைப்பராகலின் அதுபற்றி அவ்வானந்தக் குற்றங்கொள்ள வமையுமெனின்;- அகத்தியனார் கூறியதொன்றை அங்ஙனம் ஒழிபாற் கொள வைத்தாராயின் அவ்வாறு கோடலுமாம்; அகத்தியனாரே அங்ஙன மொன்று கூறினாரென்பதற்குப் பிரமாண மில்லாமை யானும், பிரமாண முண்டென்பாரை ஆசிரியர் - நச்சினார்க் கினியர் மறுத்தலானும் அவ்வாறமைத்துக்கோடல் யாண்டை யதென் றொழிக. இனி, ஆசிரியர் - சிவஞானயோகிகள் இலக்கணவிளக்க வாசிரியரை மறுத்து மலையுமகளென அமங்கலப் பொருடந்து தொகையார்பொருள் பலவாய்த்தோன்றிற்று என்று கூறுதலின் அவர்க்கு அவ்வானந்தக்குற்றங் கோடல் உடம்பாடா மென்று நண்பரவர்கள் மொழிந்தனர். அதுபொருந்தாது மங்கலமொழிமுதல் நிறுத்துக்கூறினாமென்றுரைத்த இலக்கண விளக்க வாசிரியர் தாமேற்கொண்டதற் கேற்பக் குற்றம்படாது மங்கலம் வகுத்துக் கூறல்வேண்டும்; அங்ஙனங் கூறவறியாமற் றாம்மேற்கொண்டதற்கு மறுதலைப்பட அதனைக் குற்றம்பட வைத்தாராகலி னதனையறிந்து ஆசிரியர் - சிவஞான யோகிகள் மறுத்திட்டாரல்லது, அக்குற்றங் கோடல் தமக்கு முடன் பாடென்ப ததனாலறியவைத்தா ரல்லரென்க. இனி, நண்பரவர்கள் மாமூலனா ரியற்றியவெனக் கூறிய சூத்திரங்கள் எந்நூலிலுள்ளன? அந்நூல் பதினெண் கீழ்க்கணக்கு முதலியவற்றிற் சேர்ந்ததொன்றா? அல்லது, வேறு தனிநூலாய் ஆன்றோராற் பிரமாணமாகக் கொள்ளப்படுவது தானா? அஃதிப்போது வழக்கமுறுகின்றதா? வழக்கமின்றி யொழிந்த தாயின் அச்சூத்திரங்களைத் தொன்னூலுரை யாசிரியர் யாரேனுமெடுத்துக்காட்டினாரா? காட்டினா ராயின் எவ்விடத்தே? என்று எமக்குப் பலதலையான் ஆராய்ச்சி நிகழ்தலின், நண்பரவர்கள் அன்பு கூர்ந்து அவற்றை இனிது விளக்குவார் களாக வென்னும் வேண்டுகோ ளுடையோம். இன்னும், பொய்கையார் முதலான பண்டையாசிரியரும் பாட்டியல் செய்தார்களென்பது பன்னிருபாட்டியலால் தோன்றுகின்றது என்கின்றார்கள். அப்படியாயின், அவர் செய்த பாட்டியல்யாது? வேறு நூலுரையாசிரியர் யாரேனு மதனை எடுத்துக் காட்டினாரா? பன்னிருபாட்டியலும், வச்சணந்தி மாலையும் இவ்வழக்கினை முடிவுகாண்டற்கேற்ற பிரமாண நூல்களாகமாட்டா. இவற்றின் சொற்பொருள்களில் ஐயம் வந்துழியெல்லாம், எல்லார்க்கும் பிரமாணமா யொப்பமுடிந்த தொல்காப்பிய முதலான பண்டைநூற் பிரமாணம்பற்றியும், களவியலுரை முதலான உரைப் பிரமாணம் பற்றியுமே துணிதல் வேண்டும். இத்தருக்கமுறை வழாமல் நண்பரவர்கள் தாமெடுத்துக்கொண்ட பொருளைத் தாமே பலவகையா னாசங்கித்துப் பிரமாணங்காட்டி விளக்கியிருந்தால் நாம் மேற்குறிப்பிட்டவாறு பலவாறு வினாக்கள் நிகழ்த்தவேண்டிய தின்றாம். இது கிடக்க. இனி, மங்கலச்சொல் தனித்தும் வரலாம். அடையடுத்தும் வரலாம், முதற்சீரேயன்றி ஒரு செய்யுளினிடையினுங் கடையினு முள்ள சீரினும் வரலாம். எடுத்துக் குறிக்கப்பட்ட மங்கலச் சொற்களே யன்றிப் பிற என்பதனால் வேறு பலவும் வரலாம். பரியாயச்சொற்களும் வரலாம். காப்புச்செய்யுளினும் வரலாம், காப்புச்செய்யு ளொழிந்து நூற்செய்யுளினும் வரலாம் என்று நியதியின்றிக் கூறினார்கள். இப்படியும் ஒருவிதியுண்டா? இங்ஙனம் விதிகூறும் ஒரு நூலை இலக்கணமென்றுங் கூறலாமா? இவ்வாறுரைத்தால் எந்த நூலுக்குத்தான் மங்கலங் கூறலாகாது? எந்தச் சொல்தான் மங்கலமாகமாட்டாது? மிக அமங்கலமாய் நடக்கும் நூலுக்கும் மங்கலங் கூறலாமே. அவ்வியாத்தி, அதிவியாத்தி, அசம்பவதோடங்கட்கிடனாய்க் கிடக்கும் இவ்விதியினையும், இவ்வாறுவிதிக்கும் நூலினையுங் கற்றறிவுடையோர் பிரமாணமாகத் தழுவ ஒருப்படுவரா? ஒருப்படார்! ஒருப்படார்!! இனி ஆன்றோர் செய்யுட்கணெல்லாம் மங்கலச்சொற்க ளுண்டெனக் கூறினார்கள். இதனைக் காஞ்சியாக்கத்தில் முன்னரே எடுத்தாசங்கித்துப் பரிகரித்திருக்கின்றாம். ஆண்டுக் கண்டுகொள்க. ஈண்டும் விரிப்பிற் பெருகும். இனி, ஆசிரியர் - நச்சினார்க்கினியர் ஆனந்தக்குற்றங் கொள்வாரை மறுத்து, அகத்தியனாருந் தொல்காப்பியனாரு மதுகொண்டிலரென யாப்புறுத்தோதுதல் மேலே காட்டினா மாகலின், அவர்க்கது கருத்தன்றென நண்பர் கூறியது இழுக்காமென்க. நண்பரவர்கள் இந்திரகாளிசெய்த யாமேளந்திரர் பராசைவமுனிவர், சமணரல்லரென்கின்றார்கள். இந்திர காளியென்னும் இசைநூல் செய்த யாமளேந்திரர் பரா சைவரென்பது அடியார்க்கு நல்லாருரையிற் பெறப்படுதலன்றி, பாட்டியல் செய்த யாமளேந்திரரென்பது பெறப்படவில்லை. பாட்டியல்செய்த யாமளேந்திரரும், இசை நூல் செய்த யாமளேந்திரரும் வேறென்னுங் கருத்துடையோம். இது நிற்க. அற்றேலஃதாக நச்சினார்க்கினியருஞ் சிவஞான யோகிகளுந் தொல்காப்பியப் பாயிரவுரையினுஞ் சூத்திரவுரை யினும் வடக்கு எழுத்து என்பவற்றை மங்கலச் சொற் களெனக் கூறியதென்னையெனின், ஒரு நூல் தொடங்கும்வழி ஒரு நற்சொல் நிறுத்துத் தொடங்குதல் நன்றாகலின் அதுபற்றி அங்ஙனமொழிந்தாரல்லது, மங்கலச்சொன்னிறுத்தே தொடங் கல் வேண்டுமென யாப்புறுத்தானும், அங்ஙனங் கூறா தொழியின் அஃதானந்தமாமென்றானுங் கூறிற்றின் மையின் அதனான் ஈண்டைக்காவதோ ரிழுக்கமில்லை. இந்நியதியின் மையின் ஆன்றோரு நற்சொற்றொடங்கியுந் தொடங் காமையும் வரையாது நூலியற்றினார். ஈண்டும் பிறாண்டும் யாமெடுத்துக்கொண்ட மேற்கோள் ஆனந்தக் குற்றமென்பது தொல்லாசிரியர் யார்க்குமொப்ப முடிந்த தில்லை என்பதே யாகலின், இதனை நண்பரும் பிறரும் பிறழவுணரா திருக்கக்கடவர். இது கிடக்க. பவணந்தி முதலாயினாரை அறியார் போலிப்புலவர் என யாமெழுதியது பற்றிநண்பரவர்கள் வருந்துகின்றார்கள். யாஞ்செய்தது பிழையாயின் அதனைப் பொறுக்கும்படி வேண்டுகின்றோம். அவர்களை அங்ஙன மிகழ்ந்துரைக்க வேண்டுமென்பது கருத்தன்று. பண்டை யாசிரியர்செய்த அற்புதப்பொற்புடைய அரியநூல்களைப் பயிலவொட்டாது தடையாயெழுந்து பொருத்தமில்லனவு மிடையிடையேகூறிய அப்பவணந்தி முதலாயினார் பெற்றிமைக்கிரங்கி யெழுது கின்றுழி அச்சொற்பிரயோகஞ் செய்ய வொருப் பட்டாம். இனி, உண்மையான் நோக்க வல்லார்க்குப் பவணந்தி முதலாயினார் அறிவுடைய யோராற் பெரிதுபாராட்டுதற்குரிய சீர்ப்பாடுடையரல்ல ரென்ப தினிதுபுலனாம். அவர் தொல் காப்பியனார் முதலான பண்டை நூலாசிரியர் நுட்பப்பொருள் பொதித்து விளங்குமாறு நூல்செய்தது போலத் தாமும் அங்ஙனம் விளங்க நூலியற்றினாரா? அல்லதவரின் வேறாகவேனும் புதுப் பொருள்செறித் தெழுதினாரா? தாமெழுதியவற்றை யேனும் முடித்து வரையறை தோன்ற வைத்தாரா? ஒரு சிறிதுமில்லை. தொல்காப்பியனார் கூறிய அரியபொருட் களுட் சிலவற்றை விடுத்துச் சிலவற்றை வைத்துத் தஞ்சொல்லாற் சூத்திரஞ் செய்தார். அங்ஙனஞ் செய்வுழியுந் தொல்காப்பியனார் கருத்துணர மாட்டாமல் ஒரோவிடங் களில் வழுவியுங்கூறினார். தமிழிலே ஐந்திலக் கணமும்வழுவின்றி மிகச்சுருங் காமலும் மிகப்பெருகாமலும் முற்றவெடுத்துமுடிவுதோன்றக் கூறியநூல் தொல்காப்பியம் ஒன்றேயாம். இந்நூலுணர்ந்தார் தமிழியலறிவு நன்குவாய்ப்பப் பெற்றா ராவர்; இவ்விழுமிய நூலையும்மாணாக்கர் பயில வொட்டாமல் பவணந்தியார் நன்னூலெழுதியது எற்றுக்கு? அற்றன்று, தொல்காப்பியம் உணர்தற்கரிதாய்ப் பெருகிக் கிடத்தலால் அதனைச் சுருக்கி நன்னூலியற்றினாரெனின்:- பெருக்கசுருக்கமென்பன அவ்விரு வகைக் குணங்களுடைய இரு நூல்கள் தோன்றினல்லாமற் றாமே ஒருவர்க்கு விளங்கமாட்டா; மக்கள்மனவியற்கை எளியதொன்றனையேபற்ற முந்துறும்; அஃது அதன்கண் இயற்கையாயுள்ள மடிமைக்குணத்தினா னேயாம்; நன்னூலினுஞ் சுருங்கியநூலொன்று ஏனையொருவர் இயற்றிடுவாராயின் அதனையே யாரும் பயிலமுந்துறுவார்; எத்தனைபேர் மகாலிங்கையரிலக்கணம், போப்பைய ரிலக்கணம் முதலிய வற்றின் பயிற்சியோடு நின்றுவிடுகின்றார்! இனி, நன்னூல் சுருக்கமானதொன்றாயினும் அதன் பயிற்சி யொன்றானே தமிழறிவு நிரம்புமெனின் அது சால்புடைத்தாம். அவ்வாறின்றி அதன்க ணடங்காமல் வேறுணரற் பாலனவாம் பொருட் கூறுபாடுகள் பலவாகப்பெருகிக் கிடத்த லானும், அப்பலவுமொருங்கெடுத்து முடியக்கூறுநூல் தொல்காப்பிய மொன்றேயாதலானும் தமிழியலறிவு நிரம்ப வேண்டுவோர் தொல்காப்பியமொன்றே பயிலுதற் குரியர். தமிழியலறிவு நிரப்புதற்குரிய பொருள்களின்றி வாளாது சுருங்கிக்கிடக்கும் நூல்களைச் சுருக்கஞ் சுருக்கமென்று பயின் றாலாவதென்னை? புலமைமுற்றுதற்குரிய நூலறிவு இன்றி யமையாத தொன்றாகையால் அதுசெயவல்ல தொல் காப்பியமே வாய்ப்புடையதாம். அந்தோ! அது பெரியதொரு நூலாயிற்றே என்று மறுக்க முறுவராலெனின்:- நூனுட்ப மறியாது கடாயினாய், இஞ் ஞான்றை ஆங்கிலமொழியில் மிகவிரிந்து பரந்த பூத பௌதிகதத்துவ நூலாராய்ச்சி செய்வார்பலர்க்கும் தொல் காப்பியநூல் மிகச்சுருங்கிய தொன்றாய்த்தோன்று மாகலின் அதன்பயிற்சி நீமயங்குமாறு போற் பெரியதன்றென்று தெற்றெனத்துணிக. ஆகவே, தொல்காப்பியப்பயிற்சிக்குந் தமிழ்மொழிப் பெருக்கத்திற்கும் ஒருபேரிடையூறாய்த் தோன்றிய பவணந் தியார் எம்மனோராற் பாராட்டப் படுதற்குரியரல்லர். பிறரவரை எங்ஙனம் பாராட்டினும் பாராட்டுக. அவரவர்க்குரிய மதிப்புப்பற்றியே அவரவரைப் பாராட்டுவாமல்லது வேறுகூறக் கடமைப் பட்டிலோம். இது நிற்க. இதுகாறும் யாம்குறித்து நிகழ்த்திய வழக்குரையை நடுநிலைபிறழாது முன்போற் செவ்விதினாய்ந்து தமதரிய வபிப்பிராயம் வெளியிடுவார் களாகவென்று நம் ஆப்தர்-சண்முகம்பிள்ளை யவர்களை வேண்டிக்கொள்ளுகின்றோம். ஆனந்தக்குற்றம் முற்றும். 21. திருக்குறட் கத்தியரூபம் முகவுரை தேவர் குறளுந் திருநான் மறைமுடிவு மூவர் தமிழு முனிமொழியுங் - கோவை திருவா சகமுந் திருமூலர் சொல்லு மொருவா சகமென் றுணர். வள்ளுவர்நூ லன்பர்திரு வாசகந்தொல் காப்பியமே தெள்ளுபரி மேலழகன் செய்தவுரை - யொள்ளியசீர்த் தொண்டர் புராணந் தொகைச்சித்தி யோராறுந் தண்டமிழின் மேலாந் தரம். என்னும் ஆன்றோர் திருவாக்குக்களால் தமிழ் நூல்களிலும் உரைகளிலும் தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயானர் திருவாய்மலர்ந்தருளிய தமிழ்வேதமாகிய திருக் குறளும் பரிமேலழகியாருரையுமே சிறந்தனவென்று எச் சமயத்தாரும் மெச்சும்படி நிச்சயிக்கப்பட்டன. பாண்டியராஜாக்களாலே தாபிக்கப்பட்ட தமிழ்த்தலைச் சங்கம் இடைச்சங்கம் கடைச்சங்கம் என்னு முச்சங்கங்களும் ஓங்கப்பெற்ற மதுரையம்பதியிலே சிவபெருமானுடைய பிரதிபிம்பமாகத் தோன்றினவரும் பிரமவிஷ்ணுக்களாலும் அணுகலாற்றாத ஆலகாலவிடத்தைத் திருக்கரத்தில் ஏந்தின வரும், சைவசமய குரவர்களில் ஒருவருமாகிய ஸ்ரீமத் - சுந்தர மூர்த்திநாயனாராலே திருத்தொண்டர்தொகையிலே துதிக்கப் பட்ட சரசுவதியின் அவதாரமாகிய பொய்யடிமை யில்லாப் புலவர்கள் நாற்பத்தொன்பதின்மரும் ஸ்ரீமத் - சோமசுந்தரக் கடவுளாலே கொடுத்தருளப்பட்ட சங்கப் பலகையிலே கடைச்சங்கத்தாராக வீற்றிருந்து தமிழ் ஆராய்ந்துள்ள காலத்திலே திருவள்ளுவதேவர் திருக்குற ளென்னும் உத்தரவேதத்தை அருளிச்செய்து அக்கடைச் சங்கத்திலே அரங்கேற்றியருளினார். அப்பொழுது அசரீரி வாக்கின்படியே சங்கப்பலகை அத்திருவள்ளுவநாயனாருக்கும், முருகக் கடவுளது திருவவதாரமாய் மதுரை வைசியர் மரபிற்றோன்றிய உருத்திரசன்மருக்கும்மாத்திரமே இடங் கொடுத்தது. அது, திருத்தகு தெய்வத் திருவள் ளுவரோ டுருத்தகு நற்பலகை யொக்க - விருக்க உருத்திர சன்ம ரெனவுரைத்து வானி லொருக்கவோ வென்றதோர் சொல். என்னு மசரீரியான வாக்கான் அறியப்படும். அதன்மேல் சரசுவதியும், அம்மெய்ப்புலவர்கள் அனைவரும் கலையுணர் புலமையிற் றலைமைபெற்றோங்கி விதிமுறையாக முதுநிலம் புரக்கும் உக்கிரப்பெருவழுதியாரும், அத்திருக்குறளுக்குச் சிறப்புப் பாயிரம் செய்ததேயன்றி ஸ்ரீமத் -சோமசுந்தரக் கடவுளுஞ் செய்தருளினார். நாமகள் நாடா முதனான் மறைநான் முகனாலிற் பாடா விடைப்பா ரதம்பகர்ந்தேன் - கூடாரை யெள்ளிய வென்றி யிலங்கிலைவேன் மாறபின் வள்ளுவன் வாயதென் வாக்கு. சோமசுந்தரக்கடவுள் என்றும் புலரா தியாநணர்நாட் செல்லுகினு நின்றலர்ந்து தேன்பிலிற்று நீர்மையதாய்க் - குன்றாத செந்தளிர்க் கற்பகத்தின் றெய்வத் திருமலர்போன் மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல். உக்கிரப்பெருவழுதியார் நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன் றான்மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த - நூன்முறையை வந்திக்க சென்னிவாய் வாழ்த்துக நன்னெஞ்சஞ் சிந்திக்க கேட்க செவி. என, தன்னிகரில்லா மன்னவர்பெருமான் தான் மேற்கொண்ட சிறப்பைப் பலரும் அறிந்து மேற்கொள்ள இவ்வாறு வழிபாடுகூறினான். மன்னனெப்படி மன்னுயிரப்படி ஆகலின், இப்புத்தகத்தை முன்னேபூசித்து மெய்மொழி மனங் களால் வணக்கஞ்செய்து பின்கேட்க வேண்டுமென்று சொல்லியபடி மற்றக்கபிலர், பரணர், நக்கீரர் முதலிய சங்கப்புலவரெல்லாரும் பலவாறு புகழ்ந்தெடுத்துப்போற்றி யிதன் றெய்வ மாட்சிமை நிலையிட்ட அத்திருப்பாட் டெல்லாம் ஈண்டெடுத்துரைக்கிற் பெருகும், இதன் சிறப்புப் பாயிரமான திருவள்ளுவமாலையிற் காண்க. இத்துணைச் சிறப்பினையுடைய திருக்குறளுக்குத் தருமர் முதல் பரிமேலழகியார் ஈறாகப் பதின்மர்கள் செய்த உரைகளில் பரிமேலழகர் செய்தவுரையே சிறந்துள்ளது; அவ்வுரையுங் கற்றோர்க்கேயன்றி மற்றோர்க்குப் பயன்படுவதாயில்லை. ஆதலால் மற்றோர்க்கும் பயன்படும்வண்ணம் எண்ணிப் பரிமேலழகியார் உரைக்கருத்தின்படியே திருக்குறட் கத்திய ரூபஞ் செய்யத்தொடங்கினேன். அதிலுள்ள குற்றங்கணீக்கிக் குணங்கொண்டு பாராட்டுவது கற்றல், கேட்டல்களின்வல்ல ஞானச்செல்வர்கள் கடமை. உரைப்பாயிரம் இந்திரன்முதலிய தேவர்களுடைய பதமுத்திகளையும், முடிவில்லாத இன்பத்தையுடைய அழிவில்லாத பரமுத்தி யையும் வழியறிந்து அடைதற்குரிய மாநுடருக்கு உறுதியென உயர்ந்தோராலே எடுக்கப்பட்ட பொருள்கள் நான்கு: அவை அறம்பொருள் இன்பம் வீடுபேறு என்பனவாம். அவைகளுள் வீடுபேறெனப்படுவது மனத்தால் நினைக்கவும் வாக்கால் வசனிக்கவும் கூடாத நிலைமையை உடையதாகலால் துறவற மாகிய காரணவகையாற் கூறப்படுவதல்லது இலக்கண வகையாற் கூறப்படாமை யின் நூல்களாலே சொல்லப்படுவன மற்றை மூன்றுமேயாம். அவற்றுள் அறமாவது: மநுமுதலிய நூல்களில் விதிக்கப் பட்டவை களைச் செய்தலும் விலக்கப்பட்டவைகளை ஒழித்தலு மாம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம், என மூவகைப்படும். அவற்றுள் ஒழுக்கமாவது: பிராமணர், க்ஷத்திரியர், வைசியர்,1. சூத்திரராகிய வேளாளர் என்னும் நான்கு வருணத்தார் தத்தமக்கு விதிக்கப் பட்ட பிரமசரியம், கிருகதம், வானப்பிரதம், சந்நியாசம் என்னும் ஆச்சிரமங் களினின்று அவ்வவ்வாச் சிரமங்களுக்கு எடுத்து ஓதிய அறங்களிலே தவறாது ஒழுகுதல். வழக்காவது: ஒருபொருளைத்தனித்தனியே எனது எனது என்றிருப்பவர் அது காரணமாகத் தம்முள்ளே மாறுபட்டு அப் பொருளைப்பற்றி நியாயசபையிலே சொல்வது அதுகடன் கோடல், உபநிதி, கூடிமேம்படல், நல்கியதை நல்காமை, ஒப்பிப் பணி செய்யாமை, கூலிகொடாமை, உடையனல்லான் விற்றல், விற்றுக்கொடாமை, கொண்டுள்ள மொப்பாமை, கட்டுப்பாடு கடத்தல், நிலவழக்கு, மாதராடவர்தருமம், தாயபாகம், வன்செய்கை, சொற்கொடுமை, தண்டக்கொடுமை, சூது? ஒழிபு எனப் பதினெட்டுப் பதத்ததாம். தண்டமாவது: அவ்வொழுக்கவழியிலும் வழக்கு வழியிலும் வழுவினவரை அவ்வழியிலே நிறுத்துதற்பொருட்டு ஒப்பநாடி அக்குற்றத்திற்குத் தக்கபடி தண்டித்தலாம். இவற்றுள் வழக்கும் தண்டமும் உலகவழியிலே நிறுத்து வதேயன்றி, ஒழுக்கம் போல மக்களுயிர்க்கு உறுதியைத் தருஞ் சிறப்புடையனவல்ல வாகலானும், அவைதாம் நூலினாலன்றி உணர்வுமிகுதியானும் தேயவியற்கையானும் அறியப்படு தலானும் அவற்றை ஒழித்து இங்கே தெய்வப்புலமைத் திருவள்ளுவநாயனாராற் சிறப்புடைய ஒழுக்கமே அறமென எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்நாயனாருக்குத் திருவள்ளுவர் என்ற நாமம் சாதிபற்றி வந்ததன்று, திருவென்பது உயர்வையும், வள்ளுவரென்பது உண்மையையுடைய ரென்பதையும் விளக்கி நின்றன வாகலின், அது வேதத்தில் இலைமறை காய்கள்போல் பலவிடங்களினும் மறைந்து வெளிப்படாதிருந்த மெய்ப்பொருள்களையெல்லாம் தொகுத்து உலகத்தாருக்குக்கொடுத்தருள்செய்தவரென்னுங் காரணம்பற்றிவந்த பெயராயிற்று. வள் - பகுதி, அர் - விகுதி, உ - சாரியை, அப்பகுதிக்குப்பொருள், ஈகை. அவ்வறந்தான் நால்வகை ஆச்சிரமங்களையுடையதாய் வருணந் தோறும் வேறுபாடுடைமையின் சிறுபான்மையாகிய அச்சிறப்பியல்புகளை ஒழித்து அனைவர்க்கும் ஒத்திருத்தலாற் பெரும்பான்மையாகிய பொதுவியல்புபற்றி இல்லறந் துறவறமென இருவகை நிலையாற் கூறப்பட்டது. அவற்றுள் இல்லறமாவது இல்வாழ்க்கை நிலைக்குச் சொல்லுகின்ற வழியினின்று அவ்வில்வாழ்க்கைத் துணை யாகிய கற்புடைமனைவியோடுஞ் செய்யப்படுவதாகலின், அவ்வில்லறத்தை முதலிற்சொல்லத்தொடங்கி எடுத்துக் கொண்ட இலக்கியம் இனிது முடித்தற்பொருட்டுச் சாத்துவிகம், இராஜசம், தாமசம் என்னும் முக்குணங்களாலே அறம் பொருள் இன்பமென்னும் மூன்றாகிய உறுதிப் பொருட்கு அக்குணங்களாலே மூவராகிய முதற்கடவுளரோடு சம்பந்தம் உண்டாயிருக்கையால் அம்மூன்று பொருளையுங் கூறலுற்ற நாயனார்க்கு அம்மூவரையும் வாழ்த்துதல் முறைமை யாதலின் அம்மூவர்க்கும் பொதுப்படக் கடவுள் வாழ்த்துக் கூறுகின்றார். 1. வேளாளர் ஆரியநால்வகைவருணப் பாகுபாட்டின் கட்படுவா ரல்லரென்பது தமிழ்வரலாறுணவார் துணிபு; முதலாவது கடவுள்வாழ்த்து உலகிற்கு முதல்வன் ஒருவனே திராவிடம் ஆரியமுதலிய பாடைகளில் தந்ததாலோட்ட முதலிய விகாரவகையாற்பிறக்கும் எழுத்துக்களெல்லா வற்றிற்கும் நாதமாத்திரையாகிய இயல்பாற்பிறக்கும் அகர மாகிய முதல் ஒன்றேபோலச் செயற்கை யறிவினையுடையவை களாய்க் காணப்பட்டவுடம்புகளோடு கூடியவைகளாய் அநேகமாயுள்ள ஆன்மவர்க்கங்கட்கு இயற்கையறிவால் முற்றுமுணர்ந்து உணர்த்துதலையும், ஐசுவரியம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்னும் ஆறுகுணங்களையு முடைய ஆதிபகவனாகிய காணப்படாத முதற்கடவுள் ஒருவனே உண்டு. இதற்கு உதாரணம்:- ஸ்ரீமத் - உமாபதி சிவாசாரியர் திருவருட்பயனில் அகரவுயிர்போ லறிவாகி யெங்கு - நிகரிலிறை நிற்க நிறைந்து எனக் கூறியவாற்றால் உணர்க. இங்ஙனம், ஆதிபகவனாகிய முதற்கடவுளை எழுத்துக் களினிறைந் தவைதமக்கு முதலாய்நிற்கும் பொதுவியல்புபற்றி அகரத்தோடு ஒப்புக்கூறினும் அப்பரம்பொருள் ஞானரூபமாய் எங்ஙணு நிறைந்து எல்லாப்பொருள்களுக்கும் ஆதாரமாய் நிற்கு முழு முதற்கடவுளாதலின், உண்மையிற் றன்னுடைப் பொருளாகிய பசுபாசங்கள் ஒன்றனோடும் உவமிக்கப்படா னென்பதே நாயனாருக்குக் கருத்தென்பது அறிவிப்பார் அறிவாகி யெங்குநிகரிலிறை நிற்குநிறைந்து எனத் தெளிவுபடுத்துக் கூறியருளினார். ஐசுவரிய முதலிய ஆறுகுணங்களும் முதற்கடவுளுக்குரிய பகவநாமத்திற்கே யுரியனவென்பதற்குப் பிரமாணமென்னை யெனின், அவற்கு ஐசுவரியமுண்மைக்கு ஈசுவரபதச் சுருதியும், வீரிய முண்மைக்கு உக்கிரபதச்சுருதியும், புகழுண்மைக்குச் சிவபதச்சுருதியும், திருவுண்மைக்கு இருக்சங்கிதையும், ஞானமுண்மைக்குச் சருவஞ்ஞ சுருதியும், வைராக்கிய முண்மைக்குக் காமரிபுபதச்சுருதியும்; பிரமாணமாமென்க. திருவினாற் சிரேட்டர் திருவையெய்தும்பொருட்டுப் பரம சிவனது விசித்திரமான லிங்கந்தேவராற் பூசிக்கப்பட்டது என்று இவ்வாறு இருக்குவேதத் தோதப் பட்டது. அதர்வண வேதம் சிவநாமங்களுட் பகவனாமந் தலைப்பெய்தெடுத் தோதிற்று. சுவேதாச்சுவதரோபநிடதஞ் சிவபிரானைப் பகேசனென் றெடுத்தோதிற்று. இவ்வாறு ஓதியவாற்றால் பகவனாமப் பொருளாயுள்ளோன் பரமசிவனேயென்பது கடைப்பிடிக்க அரதத்தாசாரியரும் உமாபதிசிவாசாரியரும் சதுர்வேத தாற்பரிய சங்கிரகத்தினும் பவுட்கராகம விருத்தி யினும் இங்ஙனம் பகவப்பெயர் சிவபரமாதலை நன்குவிளக்கி யிட்டரு ளினார்கள். ஆசாரிய சரணராகிய ஸ்ரீ அரதத்தசிவாசாரிய சுவாமிகள் திருவாய்மலர்ந் தருளிய சுருதிசூக்திமாலை யென்னும் சதுர்வேத தாற்பரிய சங்கிரக சுலோகங்களின் மொழி பெயர்ப்பு:- அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் பகவனே மேலாமை சுவரியமே யோர்நிமித்தம் பற்றலின்றித் தகவனோய் திருவெலா ஞானமிகு வீரியமே தாவில்கீர்த்தி இகழுமவா வின்மையே யென்னுமறு குணங்களுமே பகநாமத்தாற் புகறலாலவை நினக்குண்மையினீயே பகவனென்னுந் திருப்பேர்பூண்டாய் புரப்பகைவ வற்றுளீசுரவுரையை சுவரியத்தைப்போதலில்லா உரப்பொருளை யுக்கிரனாமொருகிளவி சிவபதமொண்புகழைநன்கு தெருட்சருவக்கிய காமரிபு மொழிகண்முறையி னெலாந்தெரியுஞானம் பரப்பொருளின் வாவின்மைதமையமைய வுணர்த்துகின்ற பரமயோகீ. விருப்பமொழிந்துளநினக்குத் திருவினொருபயனுமிலை விளம்புசெல்வப் பெருக்கமுடைய யவனாகவிருக்கின்சங் கிதைகளினாற் பேசப்பெற்றாய் திருத்தவதி சயவடிவ நின்னதருட் குறித்தோற்றத் திருவையெய்த மருத்துவரா லருச்சிக்கப்பெற்றதெனச் சொற்றிடுமா மறைகண்மாதோ எனக்கூறிய வாற்றாலுணர்க. ஆசிரியர் சிவஞான யோகிகள் இப்பெற்றியெல்லா மாராய்ந்து தெளிந்தன்றே சீர்கொளிறை யொன்றுண்டத் தெய்வநீயென்றொப்பாற் - சோர்விலடையாற்றெளிந் தோஞ் சோமேசா என்று முதுமொழி வெண்பாவில் எடுத்தோதி யருளி னாரென்க. முதல்வனை வழிபடுதல் இருக்குமுதலிய வேதங்கள் காமிகாதி ஆகமங்கள், சிக்ஷை, கற்பசூத்திரம், வியாகரணம், நிருத்தம், சந்தோவிசிதி, சோதிடம் என்னும் அறுவகை வேதாங்கங்கள், புராணம், நியாயநூல், மீமாஞ்சை, மிருதி என்னும் நால்வகை உபாங்கங்கள், ஆயுள் வேதம், தநுர்வேதம், காந்தர்வவேதம், அருத்தநூல் என்னும் நால்வகை உபவேதங்கள், மற்றுங் கலைஞானங்கள் முதலிய எல்லாநூல்களையும் கற்றுணர்ந்தார்க்கு அக்கல்வியறி வென்னும் அபரவுணர்வாலாகும்பயன் மெய்யுணர்வினை யுடைய அநாதி நித்தியமாயுள்ள அம்முதல்வனது பிறவிப் பிணிக்கு மருந்தாகிய நல்லதிருவடிக்கமலங்களை மனம் வாக்குக்காயங்களாகிய முக்கரணங்களாலும் பேரன்போடு வழிபட்டுப் பிறவியை அறுத்தலாம்:- இதற்கு உதாரணம். திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் தேவாரம் கல்லார்நெஞ்சி, னில்லானீசன் சொல்லாதாரோ, டல்லோநாமே. திருநாவுக்கரசுநாயனார் தேவாரம் பின்னுவார் சடையான்றன்னைப் பிதற்றிலாப்பேதைமார்க டுன்னுவார் நரகந்தன்னுட் டொல்வினை தீரவேண்டின் மன்னுவான் மறைகளோதி மனத்தினுள் விளக்கொன்றேற்றி யுன்னுவா ருள்ளத்துள்ளே யொற்றியூ ருடையகோவே. திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா கற்றவர்விழுங்குங் கற்பகக்கனியைக் கரையிலாக் கருணைமாகடலை மற்றவரறியா மாணிக்கமலையை மதிப்பவர்மன மணிவிளக்கைச் செற்றவர்புரங்கள் செற்றவெஞ்சிவனைத் திருவீழிமிழலை வீற்றிருந்த கொற்றவன்றன்னைக் கண்டுகண்டுள்ளங் குளிரவென்கண்குளிர்ந் தனவே எனக் கூறியவாற்றாலுணர்க. மனத்தினால் வழிபடுதல் அரக்கானது வெயிலின்முன் வெதும்புதல் போன்ற மந்ததர அன்பும், மெழுகானது வெயிலுக்கு எதிர்ப்படின் உருகுதல் போன்ற மந்தஅன்பும், நெய்யானது சூட்டுக்கு இளகுதல்போன்ற தீவிர அன்பும் இன்றித் தைலதாரையானது சிறிதும் இடையறாது ஒழுகுதல்போல ஆவியோடாக்கை ஆனந்தமாய்க் கசிந்துருகுந் தீவிரதர அன்பினாற் கருதுவாரது இருதய தாமரையின்கண் அவர்கருதிய திருவுருவோடு விரைந்து சென்றருளும் முதல்வனது மாட்சிமைப்பட்ட திருவடிகளை இடைவிடாது மனத்தினால் நினைத்தவர் தேவலோகம் இந்திரலோகஞ் சத்தியலோகம் வைகுண்டலோகம் கந்த லோகம் கணபதிலோகம் சத்தியலோகம் சிவலோகம் என்னும் பதமுத்தி தானங்களைக் கடந்த பரமுத்திதானமாகிய வீட்டுலகின்கண்ணே நித்தியராய் நிரதிசயவின்பத்தை அனுபவித்து வாழ்ந்திருப்பர். மாயாகாரியமாகிய உலகத்தின்கண்ணே சத்தம், பரிசம், உருவம், இரதம்? கந்தங்களாகிய ஐந்தனுள் ஒரு பொருளையும் விரும்புதலும் வெறுத்தலும் இல்லாதவனது ஸ்ரீபாதார விந்தங்களை எவ்விடங்களினும் எக்காலங்களிலும் இடை யறாது தியானித்தவர்க்கு விருப்புவெறுப்புக்களாகிய அவ் விரண்டு மின்மையின் அவைகாரணமாகவரும் ஆத்தியான் மிகமாகிய தன்னைப்பற்றி வருவனவும் ஆதிபௌதிகமாகிய பிறவுயிர்களைப் பற்றிவருவனவும் ஆதிதைவிகமாகிய தெய்வத்தைப்பற்றி வருவனவுமாசிய மூவகைப்பிறவித் துன்பங்களும் எக்காலத்தும் உண்டாகமாட்டா. அசுத்தம், துக்கம், அநித்தியமாகிய உலகியல்பை நினையாது சுத்தம், சுகம், நித்தியம் என்னும் இறைவன்றிரு வடியாகிய புணையை இடையறாது சிந்தித்தலினால் அணைந்தார் காரணகாரியத் தொடர்ச்சியாகிய பிரவாகா நாதியாய் அநித்தியமாய் துக்கமாய்க் கரையின்றிவரும் பிறவிப் பெருங்கடலைநீந்தி நித்தியமாய் ஆனந்தமாயுள்ள முத்திக் கரையை அடைவர். ஒருவிதத்தானும் தனக்கு ஒப்பில்லாதவனது பாத தாமரைகளை இடையறாது சிந்தியாதவர் பிறவிக்கேதுவாகிய காமவெகுளி மயக்கங்களை மாற்றக்கூடாமையின் நால்வகைத் தோற்றம் எழுவகைப்பிறவி எண்பத்துநான்கு நூறாயிரயோனி பேதத்துப்பிறந்து அவைகளால்வருந் துன்பங்களுள் அழுந்துவர். பல வேறுவகைப்பட்ட அறங்களெல்லாவற்றையும் தனக்குத் திருமேனி யாகவுடையவனும், எவ்வகை உயிர்கண் மாட்டுஞ் செல்வியதண்ணளி யுடையவனுமாகிய முதல்வனது திருவடியாகிய தெப்பத்தைச்சேராதவர் ஏனைப்பொருளும் இன்பமுமென்னுங் கடல்களைநீந்தி முத்தியாகிய கரை காணாது அக்கடல்களினுள்ளே அழுந்துவர். இறைவன் றிருவடியை நினையாது உலகியல்பை நினைப்பவர் ஐநநசாகரத்துள் மூழ்கிக்கிடப்பர். வாக்கினால் வழிபடுதல் ஞானம் வாயிலாக வீடுபேற்றைத்தரும் சரியை கிரியை யோகங்கள் போலன்றி வீட்டுக்குநேரே வாயிலாகிய தத்துவஞானம் நிகழவொட்டாது தடைசெய்து நிற்பனவும், அநித்தியமாகிய சுவர்க்கவின்பமுதலிய காமியங்களைப் பயப்பனவும், இத்தன்மைத்தென ஒருவராலும் ஓதப்படாத அவிச்சையென்னும் மயக்கத்தைப்பற்றி - வருவனவும், பிறவிக்கு ஏதுவுமான வேள்விமுதலிய நல்வினை தீவினையென்னும் இரண்டுவினையும் தலைமைக்குணங்கள் இல்லையாயினாரை உடையரெனக்கருதி அறிவிலார் கூறுகின்ற பொய்மைசேர்ந்த புகழ்கள்போலாது அவ்விறைமைக்குணங்கள் முற்றவுமுடைய முதல்வனது மெய்மைசேர்ந்த புகழை எப்பொழுதும் வாக்கினால் வாழ்த்துவார்மாட்டு உளவாகா. காயத்தினால் வழிபடுதல் தன்வயத்தனாதலாகிய சுவதந்திரத்துவம், தூயவுடம் பினனாதலாகிய விசுத்த தேகம், இயற்கையுணர்வின னாதலாகிய நிராமயான்மா, முற்று முணர்தலாகிய சர்வஞ் ஞத்துவம், இயல்பாகவே பசாங்களினீங்குதலாகிய அநாதி போதம், பேரருளுடைமையாகிய அலுப்தசத்தி, முடிவிலாற் றலுடைமை யாகிய அநந்தசத்தி, வரம்பிலின்பமுடைமை யாகிய திருப்தி என்று சிவாகமங்கள் எடுத்தோதும் எண்வகைக்குணங் களையுடைய முதல்வனது திருவடிகளை வணங்காத முடிகள் தத்தமக்கேற்ற சத்தம், பரிசம், உருவம், இரதம், கந்தங்களாகிய விடயங்களைக் கொள்கையில்லாத சுரோத்திரம் துவக்குசட்சு, சிகுவை ஆக்கிராணங்களாகிய பஞ்சேந்திரியங்களைப்போலப் பயன்படுதலுடையனவல்ல. திருநாவுக்கரசுநாயனார் தேவாரம் எட்டுமூர்த்தியாய் நின்றியலுந் தொழில் எட்டுவான்குணத் தீசனெம் மான்றனை எட்டுமூர்த்தியு மெம்மிறை யெம்முனே எட்டுமூர்த்தியு மெம்மூ ளொடுங்குமே. சுந்தரமூர்த்திநாயனார் தேவாரம் இரும்புயர்ந்த மூவிலையசூலத்தினானை யிறையவனை மறையவனை யெண்குணத்தினானைச், சுரும்புயர்ந்தகொன்றை யொடு தூமதியஞ்சூடுஞ் சடையானைவிடையானைச் சோதி யெனுஞ்சுடரை, அரும்புயர்ந்தவரவிந்தத் தணிமலர் களேறி யன்னங்கள் விளையாடு மகன்றுறையினருகே, கரும்புயர்ந்து பெருஞ்செந்நெ னெருங்கிவிளை கழனிக் கானாட்டுமுள்ளூரிற் கண்டுதொழுதேனே. முதல்வன் அருளிய வழிநிற்றல் மெய், வாய், கண், மூக்கு, செவியென்னும் பஞ்சப் பொறிகளை வழியாக வுடைய ஐந்து ஆசையினையும் அறுத்த நித்த முத்த சுத்த சித்துருவாகிய முதல்வன் திருவாய் மலர்ந் தருளிய வேதசிவாகமங்களிற்கூறும் மெய்யான ஒழுக்க வழியிலே வழுவாது நின்றவர் பிறப்பின்றி எக்காலத்தும் ஒருதன்மையராய் வாழ்வார். முதலாவது அதிகாரமாகிய கடவுள் வாழ்த்து முடிந்தது. இன்னும் வரும். மதுரை, இங்ஙனம், திருஞானசம்பந்தசுவாமிகள் மடம். சுப்பிரமணியபிள்ளை. சமாசாரக் குறிப்புகள் ம--ள--ள-- ஸ்ரீ ஞானசாகரம் பத்திராதிபரவர்கட்கு ஐயா, வந்தனம் கண்கொண்ட நெற்றியெம்மண்ணல் இடங்கொண்ட இந் நாகைக்காரோணத் திடப்பாகமான வெளிப்பாளையத்தி லுதித்துள்ள சைவசித்தாந்த சபையார் தங்களரிய பத்திரிகையின் கௌரவாபிமான சீலர்களில் தலையாவரென யாங்களறியத் தங்கள் பத்திரிகை இன்புறமாறாது விளக்கு தலால், அச்சபை நல்லோர் தாமின்புற்ற பின் மேலும் இன்புறுதல் அவ்வாறே உலகின்புறக் கண்டபின்னே யாமெனக் கொண்டு ஆங்குச்செய்யும் பல புண்ணியப்பணிக ளிவையெனத் தாங்களறிவீர்கள். அவர்கள் அரும்பெருஞ் செயல்களை யானறிவனாகையால் இசைக்குந் தருணம் வாய்த்தமையால் ஞானசாகரம் வாயிலாகப்பிரசுரிக்கக் குறித்தனன். நேர்ந்த தருணம் சபையார்க்கு இடமாக மகாமாட்சிமைதங்கிய இராமநாதபுரம் சேதுபதி மஹாராஜா அவர்கள் கொடுத் தருளிய கொடையின் விசேஷம் கூறும் அவசிய சந்தர்ப்பமே. பரிபாகிகளாகிய சபையோர் உய்யவந்தவர்கள்; மெய்யே கறைக்கண்டத்தெம் மண்ணல் பாதம் நண்ணி அவன்பூசை அவனடியவர் வழிப்பூசை பண்ணியே உய்வார்கள் எனக்கண்டோர்கள் சோதிக்கவேண்டாமல் சுடர்விட்டுள எங்கள் சோதியுண்மையையே வாதிக்கும் பலமிண்டர் வாய்மதமாயவும், சைவாமிர்தம் பரவிப்பாயவும். சைவத்திரு முறைகள், திவ்ய சாத்திரங்கள் ஈட்டிநோக்கக்கொடுத்து நுதலிய வுண்மைகளைப் புகட்டிப்பிரசங்கித்தலாற் சித்தந்தெளியவும், சமையகுரவர்கன் முதலியமெய்யடியவர் திருநாள்கள் கொண்டாடவும், கொண்டாட்டங்கண் டுலகமுய்யவும், அங்ஙனஞ் செய்வித்து வரும் அப்பெரியோர்கள் ஒருங்கு சேர்ந்து அளவளாவவும், தம்மயமாக்கப்படும் நாள்குறுகில் குறுகுமேனை யோர் சாருமிடமாகவும், அரிய திருமுறைகளாம் சைவத்திருமுறைகள் சாத்திரங்கள் தோத்திரங்கள் அமையுஞ் சாலையாகவும், அடிகள் அடியார்கள் திருவுருக்களி னழகிய படங்கள் பிரதிட்டிக்கப்படும் ஆலயமாகவும் இவர்களுக்கு வாய்த்தநல்லகம் நாகைவெளிப் பாளையத்தில் வாழ்வாங்கு வாழும் ஸ்ரீமான் கணபதியாபிள்ளை யவர்களின் பல இல்லங்களில் ஒன்று. இதைச் சைவசித்தாந்த சபைக்குரிய சபாக்கிரகமாக்க இராமநாதபுரம் சமதானம் மஹா இராஜா சேதுபதி மஹாராஜா அவர்கள் பொருளுதவும் பாக்கியங் கொண்டனர். இச்சபையோர்களின் அக்கிராசனாதிபதி ஸ்ரீமத் - வீரப்ப செட்டியாரவர்கள், மஹாராஜா அவர்கள் கொடுக்கக்கருதிய பொருளையேற்குமுயற்சியில் தளராது அடுத்துக் கேட்டுப் பெற்றுச் சபைக்கிடம் உரிமைப்படுத்தித் தாமும் தாம் வகித்த அக்கிராசனாதிபத்தியம் சிறக்கப்பெற்றனர். இவர்களில் எவ்வெவர் பெற்றபேறும் எம்போலிகளின் சீருக்குவந்ததே யாகையால், பயன்பெற நிற்பவர்களில் கடையனேன் மகிழ்ச்சியில் தலைதடுமாறி யெழுதின இதில் குற்றம் பாராமல் பத்திரிகையில் பிரசுரிக்கில், நாகைவெளிப் பாளையம் சைவ சித்தாந்த சபையோர் பெரிதுங் தங்கட்குக் கடமைப்பட்டவராவர். இங்ஙனம், மதுரைநாயகம்பிள்ளை. திருக்கோவையாருண்மைச் சிவநாயிகாவாதியார் ஸ்ரீமத் காசிவாசி செந்திநாதையரவர்களுக்கு ஓர்கடா. ஐயா, தங்கள் திருக்கோவையாருண்மை விளக்கத்தில் வதூவரபாவம் பேசப்படாத விடத்துத் திருவாசகத்துத் திருப்படையாட்சியிலே சிவபெருமான் நாயகராக அவருக்கு ஆன்மா நாயகியாகச்சொல்லப்படவில்லை யென்று ஒரே பிடியாகச்சாதிக்கின்றீர்கள். அப்படியானால் அத்திருப்படையாட்சியிலேதானே சேலனகண்களவன் றிருமேனி திளைப்பனவாகாதே என்றும், என்னணியார் முலையாகமளைந்துடனின்புறுமாகாதே என்றும், போந்த இவ்விரண்டு வாக்கியங்களையும் பார்த்தீர்களா? இல்லையா? இந்த இரண்டுவாக்கியங்களு மெந்தப்பாவத்தை யுணர்த்தவந்தன? வதூவரபா வத்தையன்றெனில் சேலன கண்க ளென்றும் திருமேனிதிளைத்தல் என்றும் என்னணியார் முலை என்றும், ஆகமளைதல் என்றும் உடனின்புறுத லென்றும் போந்தவிடயங்களுக்குக் கதிமற்றென்னை கொல்லோ? வதூவரபாவத்தையன்றெனில் இந்த இரண்டு வாக்கியங்களும் யார் கூற்றுச்சொல்லோ? இவ்வாக்கியங்கள் குறித்தபொருள் வதூவர பாவமாகும் விஷயத்தில், இவற்றையுட் கொண்ட அதேபதிகத்திற்றானே சிவனுக்கு நாயகசப்தம் பெறப்படுமெனில், அது வதூவரபாவத்தினாலே பெறப்பட்ட நாயகசப்தமென்றற் கண். அந்தோ! தங்களுக்கு நிகழ்ந்தவெறுப்பு என்னை கொல்லோ? சாகசர்ய நியாயத்தை இதில்வைத்துப் பாராத காரணம் என்னைகொல்லோ? திருப்படையாட்சியிலே வதூவரபாவம் பேசப்பட்டது உண்டா? இல்லையா? என்றும், பேசப்படாத விடத்துச் சிவபெருமான் நாயகராகச் சொல்லப்பட்டது உண்டா? இல்லையா? என்றும், குதர்க்கதூஷணங்களின்றி உள்ளவாறு சொல்வீர்களானால் தங்கள் சிவநாயிகாவாதத்தில் மேல் விவகாரஞ்செய்ய யாந்தலைப்படுவோம். அன்றேல், விருதா காலக்ஷேபமெனக் கழித்துவிடுவோமென்க. இங்ஙனம், ஸ்ரீமத் அம்பலவாண நாவலரவர்கள் மாணாக்கர், திருவாரூர் - சிவசூரிய மூர்த்தித்தேசிகர் ஞானசாகரப் பத்திராதிபரவர்கட்கு, அன்புள்ள ஐயா, சென்ற செப்டம்பர் வெளிவந்த ஞானபோதினி ப் பத்திரிகையைப் படித்து வருங்கால் பத்திராதிபர் குறிப் பொன் றில் பின்வரும் விநோத உரையொன்றைக் கண்ணுற்றேன். சித்தாந்ததீபிகைப் பத்திரிகையின் மேமாதச் சஞ்சிகையிற் பாரிநகரத்துத் தமிழ்ப் புலவர் ஜூலியன் வின்ஸன் என்பவர் எழுதிய சிலவிவாத விஷயங்கள் என்றது மிக விநோதமாயிருக் கின்றது. அவற்றிற்கு விடை எழுதிய பண்டிதர் சவரிராய பிள்ளையவர்கள் கூற்று அதனினும் மிக விநோதமாயிருக் கின்றது என்பதே. அப்பத்திராதிபர் விநோதம் விநோத மென்றாரே, என்னவிநோதத்தைக்கண்டார்? ஆழ்ந்தாய்ந்து கூறிய பண்டிதர வர்களின் அரியவிடயங்களோ அவர்க்கு விநோதமாயின! தமக்கு நுட்பவிஷயங்களின்மேல் ஆராய்ச்சி செல்லாவிடின் இவ்வாறு வெற்றுரை மொழிவதேன்? தங்கூற்றுக்குப் பிரமாணங்காட்டினார் அல்லர். பல்லோர்க்கும் பயன்படு மென்றுகருதிப், பத்திரிகாசிரியர் ஒரு விஷயத்தின் மேல் வலியுடைக்காரணத்தாற் றம்அபிப்பிராயத்தை வெளியிடுவர். இஃதுலகவழக்கம். அவ்வாறின்றி மொழியின் அஃதவர்க்கோர் இழுக்காம். அங்ஙனமாயின், ஞானபோதினிப் பத்திராதிபர் விநோதமென்று வெறும்போலியுரை மொழிந் திட்டதென்னை? அவ்வுரை அழுக்காறு கொண்டெழுந்ததோ அன்றோ என்ற ஐயப்பாடு எனக்குப்பெரிதும் உண்டாயிற்று. ஆகையால், பத்திராதிபர் தாங்கூறிய கூற்றுக்கேற்புடைய காரணங்காட்டி என்னையத்தை யறவேயொழிப்பாரென்று நம்புகின்றேன். மண்ணடி, சென்னை இங்ஙனம், 21.10.02. நல்லதம்பி. (பத்திராதிபர் குறிப்பு:- நம் ஆப்தசிகாமணிகளான பண்டிதர் சவரிராயரவர்கள் மிக நுட்பமாக ஆய்ந்து சித்தாந்த தீபிகையின்கண் வெளியிட்ட அரியவிடயங்களின்மேல் நம்முடைய நண்பர்களான ஞானபோதினிப் பத்திரிகாசிரியர் மதிப்பின்றி யங்ஙனமெழுதியதற்கு நாமும் பரிகின்றாம். சவரிராயபிள்ளையவர்கள் விடயத்தின் கண் தமக்குக் கருத்தொருப்பாடில்லையாயின், அந்நண்பர் அங்ஙனமொருப் படாமைக்கு வேண்டுங்காரணங்கள் நாட்டித் தங்கருத்தறி வித்தலே முறையாம். அம்முறை நடந்தங்ஙனமெழுதினால் அதனை அழுக்காறுபற்றி எழுந்ததெனவே உலகந்துணிந்திடும். அறிவுவிளக்கப் பத்திரிகாசிரியரும் இவ்வபிப்பிராயமே கொண்டெழுதினார். இனி நம் நண்பர் ஞானபோதினி ப் பத்திரிகாசிரியர் அங்ஙனம் நடுநிலைதிறம்பி யுரையிடா திருப்பாராகவென்னும் வேண்டுகோளுடையோம்.) ஸர்வம்குஹமயம்ஜகத் பிறப்பிறப்பாதி, உயிர்க்குணமில்லாத ஸர்வதேவதா வாமியாகிய ஸ்ரீசுப்பிரமணியக்கடவுள் கிருபாகடாக்ஷத்தி னாலே ஸமத திவ்வியமங்களகுணகணாலங்கிருத வித்வசிரோ மணியும் சென்னைக்கிறிடியன்காலேஜ் தமிழ்ப்பண்டிதரு மாகிய மகா புருஷ செல்வச்சிரஞ்சீவி ஸ்ரீமந் - நா. வேதாசலம் பிள்ளை அவர்களுக்கு, சிவஞானமும் தீர்க்காயுளுஞ் சிந்திதமனோரதசித்தியும் சந்தான சமர்த்தியும் அரோகதிடகாத்திரமும் ஐவரியா திக்கமும் தேவகுரு பிராமணப்பிரசாதமும் அபிவிருத்தியாகுக வென ஆசீர்வாதஞ் செய்து எழுதும் விஞ்ஞாபநம். தங்களுடைய நித்தியானந்தவைபவங்களை அடிக்கடி அறியவிரும்புகின்றேன். தங்களாலனுப்பப்பட்ட திருவொற்றியூர் முருகர்மும்மணிக்கோவை சோமசுந்தரக் காஞ்சியாக்கம் என்னும் நூல்களிரண்டை வாசித்து ஆராய்ந்தேன். மும்மணிக்கோவையிலே அமைந்த சொற்களை யும் சொற்றொடர்களையும் பொருளையும் உற்றுநோக்கிய போது பத்துப்பாட்டு, சிந்தாமணி, சிலப்பதிகாரம், புறநானூறு முதலிய பழைய செந்தமிழ் நூல்களின் ஆக்கியோர்களே ஒருங்கு தங்கள்வடிவா அவதாரஞ் செய்தார்கள் போலும் என்று அநுமானஞ்செய்தேன். அதுமட்டோ! மேற்படி பிரபந்தத்தில் 41-ம் பக்கத்திலுள்ள புலவராற்றுப்படையை நான் படித்துக் கொண்டிருக்கும்போது எனது சகபாடியாகிய பிரம்மஸ்ரீ, ச.சிவானந்த சுப்பிரமணியஐயர் கேட்டு இஃது இக்காலத்துப் பாடலன்று சங்கத்தார்காலத்துப் பாடலேயா மென்று என்னுடன் வாதிட்டார். இப்புத்தகத்தை அவர் பெற்றுத் தங்கள் பெயரைப்பார்த்தபின்பே, உடன்பட்டுத் தங்கள் வித்வத் தன்மையைவியந்து மிகவும் பாராட்டினார். அவருக்கே அப்புத்தகத்தை உபகரித்துவிட்டேன். சோமசுந்தரக்காஞ்சியாக்கம் பூருவபக்ஷிகள் கூறிய அபவாதங்களை யெல்லாம் பலிஷ்டப்பிரமாணங்கள்காட்டி, திக்காரஞ்செய்ய எழுந்ததே யாயினும் தொல்காப்பியம் முதலிய நூல்களிலுள்ள பொருணுட்பங்களைச் செவ்வனே யறிதற்கும் கையறியாமை நீங்குதற்கும் அப்பூர்வபக்ஷிகட்கும் ஏனை யோர்க்கும் மிகவுமுபயோகமாகுத லொருதலையாம். நிற்க. தாங்கள் வெளியிட்ட முனிமொழிப்பிரகாசிகையில் ஒரு பிரதி அனுப்பும்படி கேட்கின்றேன். இங்ஙனம், Pandit. ந.வே. கருகசபாபதி ஐயர். வைதிகசைவ உபந்நியாசகர். சிவபுராணப்பிரசாரகர், சைவவைஷ்ணவ கதாப்பிரசங்கி, நல்லூர் யாழ்ப்பாணம். கௌரவாபிமான சீலர்கட்குங் கையொப்ப நண்பர் கட்குஞ் செய்துகொள்ளும் பிரிய விண்ணப்பம்:- கழிந்த புரட்டாசி ஐப்பசி மாதங்களில் அடுத்தடுத்து நேர்ந்த சுரநோயால் மிகவருந்தினோம். அச்சுரநோய் உடம்பில் நிரம்பக்கடுமையாகப்பற்றி உடம்பின் வளத்தை உரிஞ்சி வருகையிற் சுதேச மருத்துவ முறையில் மிகத் தேர்ச்சியடைந்து விளங்கும் நம் ஆப்தநண்பர் ஸ்ரீமத் குப்புசாமி முதலியாரவர்கள் நுட்பமாகப் பிரயோகித்த மருந்தின் வன்மையால் அது சிறிது சிறிதாகக் குறைந்தொழிந்தது. அஃதொழிந்தும், மூளையின் சுறுசுறுப்பு மழுக்கமும் உறுப்புக்கள் இயக்கமின்மையுங் குறைந்தபாடில்லை. பின்னுமுண்ட மருந்தின் பெருமையாலுந் திருவருட்குறிப்பானும் மூளையின் சக்தியும் உறுப்புக்களின் இயக்கமும் இப்போது பெருகிக்கொண்டே வருகின்றன. இங்ஙனந் தளர்ச்சியுற்றிருக்குங் காலங்களில் பத்திரிகையினை நடாத்துதற்குதவி செய்வாரில்லாமையால் இரண்டுமாதங்கட் குரிய இதழ்களிரண்டு முழுநெறி யவிழ்ந்தில. பின் இடை யிடையே நாம் அரிதின்முயன்று 9,10 இதழ்களிரண்டினையும் இப்போது நெறியவிழ்ந்து வெளிவிடுகின்றாம். இதுகாறும் நேர்ந்த தாமதத்தினைப் பொறுக்குமாறு அவர்களை வேண்டிக் கொள்ளுகின்றோம். நம்முடைய ஞானசாகரத்தின் கண்ணே முதற்பதுமம் முளைத்தெழுந்து பத்து கடிதங்களும் பத்திழ்கள் விரித்தன. ஏனை இரண்டிதழ்களையும் இன்னுமிரண்டு வாரத்துள் விரித்திடும். இவ்விதழ்களிற் பொறிக்கப்பட்ட விடயங்களின் அருமை பெருமைகளை நன்குணர்ந்தும் கையொப்ப நண்பர் சிலர் இன்னுந் தாந்தாஞ்செலுத்தல் வேண்டிய இரண்டு ரூபாவையுஞ் செலுத்தினாரில்லை. அங்ஙனமிருக்கும் நண்பர்கள் பத்திரிகையின் ஆக்கத்தைக்கோரி விரைவில் அதனை உபகரித்திடுவார்களென்று பிரார்த்திக் கின்றோம். ஏனைக்கையொப்ப நண்பர்களெல்லாரும், அடுத்த இரண்டாம் பதுமம் நன்கு முளைத்தெழுந்து ஏடவிழ்த்துச் சொற்பொருணயம் பொதுளியவிரை தெளித்து விளங்கு மாறுதத்தமக்குரிய கையொப்பத் தொகையினை முன் உபகரித்திடுவார்களாகவென வேண்டுகின்றோம். இங்ஙனம், 1. நாகப்பட்டினம் - வேதாசலம் பிள்ளை, தமிழ்ப்பண்டிதர், சென்னைக் கிறிடியன் காலேஜ். 1. கடிதங்கள் முதலாயின எழுதுவோரெல்லாரும் இந்த முகவரிப்படியே அனுப்புதல் வேண்டும். இப்பத்திரிகாசிரியரியற்றிய நூல்கள் திருவொற்றி முருகர் மும்மணிக்கோவை இது சங்கஞ் செய்யுட் சொற்பொருள் நயங்கொண்டு விளங்குவது. பிற்காலத்துச் செய்யுள் நூல்களுள் தனக்கொப்பதும் மிக்கது மில்லாதது. வித்துவான்கள் பலரானும் புகழப்பெற்றது. விலை - 8 அணா. சோமசுந்தரக் காஞ்சியாக்கம் சோமசுந்தரக்காஞ்சியின்மேல் பொறாமைகொண்டு குரைத்தோர்க்கு அறிவு கொளுத்துமுகத்தாற் பொருளதிகார நுட்பந்தெரிப்பது வித்துவான்களால் உயர்த்துக் கூறப்பட்ட உரைநூல் - விலை - 4 - அணா. வா. அண்ணாமலை. My Dear Brother, I thank you fervently for your kindness in sending me your valuable literary productions. I have perused your சோமசுந்தரக்காஞ்சி with very great pleasure; and your metrical composition under the heading ifaWÃiy, reminds me of Milton’s Lyoidas.’ The jealous critic who has ‘frowod’ has, I am sure, only whistled for the wind; and, whoever he may be, his arguments are as silly as they are malicious. I am inclined to think that your கையறுநிலை is, in fact, one of the great pillars of your fame, and that it, in itself, suffices to prove your genius for poetry. The felicities of diction sparkling throughout the piece, the fervid imagination which has given birth to golden thoughts so many in number, the pathos which moves the reader with a veritable mesmeric effect, the grace and elegance of your style and the religious rudder of calm resignation which guides your poetic vessel as it glides on the troubled waters of bereavement-all these mark you out as the Tamil Elegist and one of the greatest poets of the day. I am perfectly sanguine that your கையறுநிலை is destined to live as long as our language itself lives; and, thought, if I were to criticise your opponents, I would proceed from a different stand-point altogether, I am glad to find that you have already put a spoke in your critics wheel even from the orthodox point of view - of course, I refer to your சோமசுந்தரக்காஞ்சி யாக்கம் My thanks are also due to you for your having sent me the first two issues of your valuable journal ஞானசாகரம். However much I may differ from you in the views you advocate therein, I sincerely acknowledge that many interesting topics are therein discussed in a very interesting way - a metritious intellectual pabulam it verily furnishes. In the interest of our language, I request you will not rest on your laurels, but will dole out to us by instalments the fine poetical web your intellect may weave from time to time, particularly in the language, though not in the spirit of your கையறுநிலை - for, in my opinion it best show what the Tamil language of the present day ought to be like, at any range in poetry. VEPERY, Very Affectionatley Yours, 1st April. 1902 T. BHAKTAVATSALAM, B. சிவமயம் திருச்சிற்றம்பலம் ஸ்ரீஞானஸம்பந்த குருப்யோநம வாழ்த்து வாழ்க வந்தணர் வானவ ரானினம் வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக ஆழ்க தீயதெ லாமர னாமமே சூழ்க வையக முந்துயர் தீர்கவே 23. முதற்பதுமம் ஞானசாகரத்திற் சென்ற தைமாதம் முளைத்தெழுந்த முதற்பதுமம் நிகழும் மார்கழிமாத இறுதிவரையிலும் பன்னிரண்டு இதழ்கள் விரித்துத் திப்பிய ஒளிதிகழ அலராநின்றது. ஞானசாகரத்தைக்கவிந்து வியாபிக்கும் பாமவியோமத்தின்கண்ணே கோடி சூரியப் பிரகாசமுங் குன்ற விளங்குஞ் சிவசூரியநாயகனைக் காண்டலும், கரைகடந்த களிப்புடையளான இப்பதுமநாயகி தன்னகத்தே பொதிந் துளைத்த நிகரில்லாச் சைவமணத்தை யாண்டும் பரப்பிப் பக்குவமுதிர்ச்சி யடைந்து சிவபதப்பேற்றிற்கு உரியரான நல்லன்பர்களென்னும் வண்டினங்களைப்பேரின்ப விருந்து கூட்டுண்ண அழைத்து, அரக்கிதழ்கள்தோறும் அப்பேரின்பத் தேறலைச் சுரந்து ஒழுக்காநின்றனள். மாலைக் காலத்தே தன்நாயகனைப்பிரிந்து வருந்திக்கூம்பும் உலகத்துத் தாமரை போலாது, இப்பதுமநாயகி சிவபெருமானான தன் அருமை நாயகனை ஒழியாது முயங்கித் தன்னைவந்து அணுகும் நல்லன்பர்க்கு நித்தியானந்தத்தை நுகர்வியாநின்றாள். இனிஇது சமயசாத்திர தத்துவசாத்திர பௌதிகசாத்திர இலக்கண இலக்கியப்பொருள் நுதலுவது என்றற்கு ஏற்பச் சமயவுண்மைகட்படுங் கேன முதலான உபநிடதப்பொருள் விரிவும், தத்துவவுண்மைக்கட்படும் உள்ளது போகாது இல்லது வராது, சகளோபாசனை என்பனவும், பௌதிக நூற்பொருளின் கட்படும் மெய்ந்நலவிளக்கம் என்பதும், இலக்கண இலக்கியப் பொருட்பகுப்பின்வழிப்படும் வடமொழி யிலுள்ள தமிழ்ச் சொற்காரணம், தொல்காப்பிய முழு முதன்மை, நாலடியார் வரலாறு முதலாயினவும் இனிது எடுத்து விளக்கலுற்றது. இங்ஙனந்தான் செல்லலுற்ற நெறிபிறழாது இப்பத்திரிகை பிரசுரிக்கப்படுதலை உணர்ந்து பொறாமையுற்று அவம்படு வாரான போலிப்புலவர் இரண்டொருவரும் ஒரோ வொரு பத்திராதிபரும் இதனைப் புறம்பழித்துத் தமக்கு வந்தவா றெல்லாம் கூறினார். தமது பத்திரிகையும் சமயசாத்திர தத்துவசாத்திர பௌதிகசாத்திர இலக்கண இலக்கியப் பொருள் விரிப்பதென முன் ஒன்று மொழிந்து பின் அவ்வரிய பொருள்களுள் ஒன்று தானுஞ்செவ்வனே விளக்கமாட்டாமல் வழுமலிந்தனவும் பயன்பெரிதில்லனவும் தற்பெருமை நிரம்பினவும் பிரசுரித்துத் தம்பத்திரிகைக்கு இழுக்கந்தேடும் அப்பத்திராதிபர் பொறாமையுரைபற்றி ஈண்டுவரக்கடவதோர் குற்றமில்லை. இன்னுந் தத்துவ இரகசியார்த் தங்களெல்லாம் அறிவொருங்கி நியாயமாகக் காணமாட்டாத இரண்டோர் போலிப்புலவர் புறங்கூறுங் குரைப்புரைகளை அறிவுடையார் செவிமடாது அகன்று ஒழுகுவாராகலின், அப்போலிப்புலவர் தம் மோடொத்த போலிமாக்களைக் கூட்டிவைத்துக்கொண்டு நம்மையும் நம் பத்திரிகையினையும்பற்றிக் குரைத்து ஆரவாரிக்கும் அவர் குழறுபாட்டுரையினை ஒருபொருளாக வெண்ணி அவற்றிற்கு எல்லாம் மறுமாற்றம் மொழிந்திலம். அவர் கூவலாமை குரைகடலாமையைக் கூவலோ டொக்குமோ கடல் என்பதேபற்றித் தம்மையுந் தம்மினத்தையும் வியந்து தம்முள்தாமே மகிழ்ந்து ஒழிக. இதுகிடக்க. இனி இப்பத்திரிகை மேற்கொண்ட கருத்துக்கு இணங்கநுண்பொருள் கோத்து உரைகளெழுதி இதன்கண் அவற்றைப்பிரசுரிக்க உதவிபுரிந்த நம் ஆப்தவித்துவாசிகாமணி களான ஸ்ரீமது அ-குமாரசுவாமிப்பிள்ளை, ஸ்ரீமத், டி-சவரிராயபிள்ளை, ஸ்ரீமத்-திருமயிலை-சண்முகம்பிள்ளை, ஸ்ரீமந்-மாகறல்-கார்த்திகேய முதலியார், ஸ்ரீமந்-மு-இராக வையங்கார், ஸ்ரீமது, அ-சண்முகம்பிள்ளை, ஸ்ரீமத், டி.நல்ல தம்பிப்பிள்ளை, ஸ்ரீமத்-சுப்பிரமணியபிள்ளை, ஸ்ரீமது-அ-சதாசிவதேசிகர் முதலான பெரியோர்க்கெல்லாம் நாம் வந்தனஞ் செய்கின்றோம். இனி இப்பதுமத்தின் இதழ்கள்சில உரியகாலத்தில் விரிந்தில. நமக்கு இடையிடையே நேர்ந்த பிணிகளானும் பிற அசௌகரியங்களானும் அங்ஙனந் தாமதம் நிகழ்ந்ததென்பதை அவ்வப்போது தெரிவித்திருக்கின்றோம். எம்போல்வார் இன்னோரன்ன அரியகருமங்களிற் புகுந்தால் எமக்குப்பின் நின்று உதவிசெய்வார் இச்செந்தமிழ்நாட்டில் மிக அரியர். எம்முடைய மனவுறுதியைக் குறைத்து அக்கருமத்தினைச் செய்ய வொட்டாமல் தடைசெய்து நிற்பார் மிகப்பலர். இவரால் நேர்ந்த இடையூறுகளை யெல்லாம் நீக்கித் திருவருட் சகாயத்தால் இம்முதற்பதுமம் முட்டின்றிவிரிந்தது. இனி இரண்டாம்பதுமம், நம்முடைய கையொப்ப நண்பர்கள் தாந்தாம் செலுத்தற்கு உரியதொகையினை விரைவிற்செலுத்தினால் தானும்விரைய முளைத்தெழுந்து தன் செவ்விய இதழ்களைக் காலந்தோறும் தவறாமல் விரித்திடும். ஒரோவொரு சமயங்களில் இரண்டுமாதத்திற்குரிய இரண்டு இதழ்கள் ஒன்றாகவும் வெளிவரும். இது நிற்க. இனி நம்முடைய கையொப்ப நண்பர்கள்சிலர் நம் பத்திரிகையின் உரைநடை கடினமாயிருக்கின்றதெனக் கூறு கின்றார்களாம். இச்செந்தமிழ்நாட்டில் தமிழ்க்கல்வி யுடை யோர் மிகச் சிலர்; இப்பத்திரிகையின்கண் எடுத்து எழுதப்படும் பொருள்களோ மிக அரியன; பொருளருமைக்கேற்ப அதனை விரித்துரைக்கும் உரைநடையும் அருமையுடையதாயிருக்கும். எல்லார்க்குஞ் சாமானியமாய்த் தெரிந்த பயனில் பொருள்களை எடுத்தெழுதினால் மக்கள் அறிவு விருத்தியாகாமையால், அவர் அறிவு விரிதற்கு ஏற்ற நுட்பமான பொருள்களைச் சிறந்த நடையில் எழுதிவருகின்றோம். இவற்றின் பயிற்சியால் அவர்க்கு அறிவுவிருத்தியாகும் என்பதில்சந்தேகமில்லை. அறிவுபெருகிப் பெருமையடைய வேண்டுமாயின் ஒவ்வொரு வரும் அரிய முயற்சிசெய்து தெரிந்தோரைக் கொண்டு நம் பத்திரிகையின் நாலைந்து இதழ்களைப் படித்துணர்ந்து கொள்வார்களாயின், அவர்க்கு மற்றை இதழ்கள் எல்லாம் எளிதிலே விளங்கும். இதுதான் செயற்பாலது. அரிய விடயங்கள் சிறந்தநடையிலெ ழுதப்பட்டு வெளிவருந் தமிழ்ப் பத்திரிகை. இச்செந்தமிழ் நாட்டில் நம்பத்திரிகையினைத்தவிர வேறில்லையென்பது கற்றறி வுடையோர்க்கெல்லாம் தெரிந்த தொன்றாம். சாமானிய பத்திரிகைகள் வேண்டுமாயின் நூற்றுக்கணக்காகப்பெறலாம்; அரியபத்திரிகை ஒன்றனை அங்ஙனம் பெறுதல்கூடாது. சாமானிய பத்திராதிபரெல்லாம் பொருள் சம்பாதிக்கும் முயற்சியில் தலைப்பட்டுச் சாதாரண சனங்கட்குத்தெரிந்த எளிய விடயங்களைப்பிரசுரித்துப் பொருள் ஈட்டுகின்றார். நாமோ அங்ஙனம் பொருளீட்டுந் தன்னயங்கருதாது தமிழ் மக்கட்கு அறிவு விருத்தியாக வேண்டுமென்னுங் குறிப்பால் இப் பத்திரிகையினைப் பிரகடனஞ்செய்து வருகின்றோம். இதனருமைஉணர்ந்து இப்பத்திரிகையினை எளியவிலைக்குப் பெற்று அறிவு விருத்திசெய்ய மாட்டாமல் சோம்பலுற்றக் கடினங் கடினமென்று சொல்லிவிடுவார்களாயின், அது நம்முடைய தமிழர்க்குப் பெருங்குற்றமாம். நாமும் இப் பத்திரிகையினைப் பிரசுரித்தற்கண் மனவெழுச்சியின்றி இதனை நிறுத்திவிட ஒருப்படுவோம். இது கிடக்க. இனி இரண்டாம்பதுமம் முதற்கொண்டு நம்முடைய கையொப்ப நண்பர்கள் எளிதிற்படித்துணர்ந்து மகிழ்ச்சி யடைதற்குரிய இரண்டோர் விடயங்களைத் தொடர்ச்சியாக எழுதக்கருதியிருக்கின்றோம். அவை சாகுந்தலநாடக மொழி பெயர்ப்பும், ஒரு புதுக்கதையுமாம். ---------------------- (ப-பு) முன் அச்சிட்ட பிரதிகளெல்லாம் செலவழிந்தமை யானும் பலர் இதனைப் பின்னும் வேண்டும் வேண்டுமென அடுத்தடுத்துக் கேட்டலானும் ஈண்டிதனைப் பெயர்த்தும் பதிப்பிட நேர்ந்தாம். 24. முனிமொழிப்பிரகாசிகை தேவர் குறளுந் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியுங் - கோவை திருவா சகமுந் திருமூலர் சொல்லும் ஒருவா சகமென் றுணர் எனும் ஔவையார் திருவாக்கிற்போந்த முனிமொழி என்பதற்கு வியாசசூத்திரம் என்று பொருளுரைத்த ஆன்றோரைப் பொருளொடு பிணங்கி, அப்பொருள் வழக்கின்கண்ணாகல், செய்யுட் கண்ணாதல், நிகண்டு முதலிய நூல்களின்கண்ணாகல் பெறப்படாமையாற் செம்பொரு ளென்றலும், முன்னும் பின்னுமுள்ள சொற்கடம்முளிணங்கிப் பொருள் பயவாவழி யொருசொற் றன்பொருளிற்றீர்ந்து பிறிதுபொருள்பயக்கும் இலக்கணைப்பொரு ளென்றலும், வியாசர் மாயாவாதப் பொருள்விளங்கச் சூத்திரஞ்செய்த கருத்தறிந்து ஸ்ரீசங்கராசாரியர் பாடியஞ்செய்தாராகலிற், சித்தாந்த சைவப்பொருள்போதிக்கு நெறிக்கிடையே வழீ இச்செல்லும் அம்மாயாவாத சூத்திரத்தை ஏனைச் சித்தாந்த சைவ நூல்களோ டொப்ப வைத்துரைத்தல் ஔவையார்க்குக் கருத்தன்றாகலின் குறிப்புப்பொருளென்றலும் செல்லாமை யான், அதனை வாதவூர் முனிவர் என்று பிரசித்தியுற்று விளங்கும் ஸ்ரீமந் - மாணிக்கவாசகசுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய வெனப் பெயரெச்சத்தொடராகவைத்துப் பொருளுரைத்துக் கோவை திருவாசகமும் என்பதனோடு கூட்டிக் கோடல் வேண்டுமெனப் புதுவதாக வொருபொருள் கூறுவார். அச்செய்யுட்பொருளை நுணுகியாராயு மதுகையின்றி அங்ஙனங் கூறினாரென்பதும், அதற்குத் தொல்லா சிரியர் கூறுமுரையே நடுக்கின்றி நிலையுறுவதா மென்பதும் போதரச் சிறிதுகாட்டுதும். பிரமசூத்திரம், வேதாந்தசூத்திரம், வியாசசூத்திரம் என்பன ஒரு பொருட்கிளவிகளாம். அது முதலில் அதாதோ ப்ரஹ் மஜிஜ்ஞாஸா என்று தொடங்கிப் பிரமப்பொருளை அறிதல்வேண்டுமென உபக்கிரமோபதேசஞ் செய்து பிரமத்தைக் கூறுவதனால் பிரமசூத்திர மெனவும், கணாத சூத்திரம், கௌதமசூத்திரம், காபிலசூத்திர முதலியவற்றைப் போல் வைசேடிகம், நியாயம், சாங்கிய முதலிய வேறு விடயங்களை யுணர்த்தாது, வேதாந்த மெனப்பட்டு உபநிடதங் களிற் பொருள்பெறக் கிளந்தோதப் படும் ஞானத்தையே விரித்து விளக்குஞ்சிறப்பால் வேதாந்த சூத்திர மெனவும், ஆக்கியோன் பெயரால் வியாச சூத்திரமெனவும் வழங்கப்படும். இஃது யாது பயன்கருதி யியற்றப்பட்ட தோவெனின், வேதத்தின் பூர்வபாகத்திற் கூறப்படும் கர்மத்தையே பிரமப்பொருளாக நிறுவித் தம்மாணாக்கராகிய ஜைமினியா லியற்றப்பட்ட சூத்திரப்பொருளை மறுத்து, அவ்வேதத்தின் உத்தரபாகமாகிய உபநிடதங்களிற் கூறப்படும் ஞானத்தை விளக்குதற்பொருட் டியற்றப்பட்டதாமென்பது. இங்ஙனம் கர்மத்தையே பிரமமாகக் கூறி யெழுந்த ஜைமினி சூத்திரத்தையும், ஞானத்தையே பிரமமாகக் கூறி எழுந்த வேதாந்த சூத்திரத்தையும் உற்றுநோக்குவார்க்கு, ஞாக்கிரியா சொரூபராகிய சிவபரஞ் சுடரின் திவ்ய சக்திகளான கிரியையை விளக்கவொன்றும், ஞானத்தை விளக்க மற்றொன்றும் எழுந்த வுண்மை நன்கு விளங்கும். இதனாற் சிவபெருமானது கிரியைத் திறத்தை விளக்கும் ஜைமினி சூத்திரமும், ஞானத்திறத்தை விளக்கும் வேதாந்தசூத்திரமும் இன்றியமை யாதனவா மென்பதூஉம், இவற்றுள்ளும் ஞானத்திறத்தை விளக்கும் வேதாந்த சூத்திரம் ஏனையதினும் மிகச் சிறந்ததா மென்பதூஉம் பெறப்படும். ஏனைச் சூத்திரங்களாற் கூறப்படாததும், அச்சூத்திரப் பொருள்களினுந் தலைமையுற்று மக்களுக்குறுதி பயக்குஞ் சிறப்புடையதுமான ஞானத்தை விரித்துரைக்கும் வியாச சூத்திரமே வேதாந்த சூத்திரம் எனப்படுவதன்றி ஏனைய அப் பெயர்க்குரியவாதல் செல்லாமை யுணர்ந்து கொள்க. உபநிடதப்பொருளையே முதலாகக்கொண் டெழுந்து உண்மை ஞானத்தை யுள்ளவாறே யினிதுவிளக்கும் வேதாந்த சூத்திரத்தை எடுத்தோதுதல் ஔவையார்க்குக் குறிப்பு வேறுபடுவதன்றென்பதற்கு அவர் அதன் முதனூலாகிய திருநான் மறைமுடிவைக் கிளந்தோதலே சான்றாதல் காண்க. இனி, முனிமொழியும் என்பதில் முனி என்னுஞ் சொல்லுக்கு வியாதமுனி என்று பொருள்கோடல் யாங்ஙனம்? அகத்தியர்முதற் பிறருமுளராலோவெனின்; - அற்றன்று, உலகமெல்லாம் ஒருங்குதிரண்டு பழிச்சும் பெருமையராயினும் அவர்க்கு வேத அகத்தியர் வேதவசிட்டர் வேதகௌதமர் எனப் பெயர்வழங்கக் கண்டிலம். வியாதமுனிவரையே வேதவியாசர்-வேதமுனிவர் என்று வழங்கக் காண்டலானும், வேதத்தி லிவர்க்குள்ளவுரிமை வேறுபிறர்க்கிருப்பக் காணாமையானும், சைவ எல்லப்ப நாவலர் மிக்க வேதவியாசர் விளம்பிய எனவும், வில்லிபுத்தூரார் முனிராஜன் மாபாரதஞ் சொன்னநாள் எனவுங், கச்சியப்பசிவாசாரியார் கரையறுவேதமாங் கடலை நான்கவாய்ப், பிரிநிலையாக்கியே நிறுவுபெற்றியாற், புரைதலிர் முனிவரன் புகழ்வியாதனென், றொருபெயர்பெற்றனனுலகம் போற்றவே எனவும், கூறுதலானும் முனி என்னுஞ் சொல்லுக்கு வியாதமுனிவர் என்றுகோடலே பொருந்துவதா மன்றி வேறு கூறுதல் ஒருவாற்றானும் பொருந்தா தென் றொழிக. அல்லதூஉம், பரந்துகிடந்த வேதப்பொருளை யெல்லாம் ஒருங்குதிரட்டிப் பாகுபடுத்துதவிய அவ்வியாசரை வேதமே ஸஹோவாசவ்யாஸ: பாராஸாய: என்னும் வாக்கியத் தால், பராசரகுமாரராகிய வியாசர் பொய் சொல்லாதவ ரென்றினிது புகழ்ந்தோதுதலானும், ஸ்ரீமத் கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் இவரை ஆல்வரு கடவுளை யனையதன்மையான் என்றுரைத்தலானும் அங்ஙனம் பொருள்கோடலே ஔவை யார்க்குக் கருத்தாமென்பது இனியேனுமுணர்ந்து கொள்க. குணமென்னுங் குன்றேறிநின்றவிவ் வியாத முனிவர் இயற்றிய சூத்திரமும் அதன்முதனூலாகிய, வேதாந்தமும் ஒரு நெறிப்பட்டுச் சைவ சித்தாந்தப்பொருளே போதிக்குமென்பதனை விளக்கிய வன்றே ஔவையார் அவற்றை ஏனைச்சைவநூல்களோ டொருங்கு தலைப்பெய்து ஒருவாசக மென்றுணர் என்று கூறுவா ராயிற்றென்பது. இனி, வேதாந்தசூத்திரம் மாயாவாதப்பொருளையே போதிக்குமென்பார்க்கு, அவ்வேதாந்த சூத்திரத்தின் முதனூ லாகிய உபநிடதங்களும் அப்பொருளையே போதிக்கு மென் றுரைத்தல்வேண்டும். அதனையும் அவ் வாறுரைப்பவே, ஔவையார் பாகுபாட்டுணர்ச்சியின்றி, மாயாவாதநூல்களைச் சைவசித்தாந்த நூல்களோ டொப்பவைத் தோதினாரென்னுங் குற்றமுண்டாம். அல்லதூஉம், மாயாவாத நூல்களோ டொப்பவைத்தோதப்பட்ட தேவாரதிருவாசக முதலிய திருவாக்குகளும் மாயாவாதநூல்களே யாமென்று பெறப் பட்டுச் சைவ சித்தாந்தப் பொருளெல்லாம் திலதர்ப்பணம் பண்ணப்பட்டுப்போமன்றே? இத்துணைக்கு மிடஞ்செய்யும் அப்பொருள் ஈண்டைக்கு ஒரு சிறிதும் இயையுமாறில்லை. அற்றன்று, வேதாந்த சூத்திரம் மாயாவாதப் பொருளே நுதலுவதென்பதற்குச் சங்கராசாரியர் அதன் கருத்தறிந்து கூறிய விழுமியவுரையே சான்றாமாலெனின்;-அவர்க்குமுன் அதற்கங் ஙனமே சிறந்தவோருரை விரித்த நீலகண்ட சிவாசாரியார் உரைப்பொருள்பற்றி வேதாந்த சூத்திரப் பொருட்டுணிவுகோடு மென்பார்க்கு இறுக்க லாகாமையின் அது பொருந்தாது. அல்லதூஉம், நூலாசிரியர் கருத்தறி வதற்குச் சங்கரர் பாடிய பொருளைக் கருவியாகக் கோடல் பிரகாணசமம் என்னும் ஏதுப்போலியாம். அல்லதூஉம், நீலகண்ட சிவாசாரியர் முதலான தொல்லாசிரியரா னுரை யெழுதப்படாத தசோப நிடதங்களுக்குச் சங்கரர் உரை யெழுதியிருப்பதனால், மற்றவ்வுரைப்பொருளையே கருவி யாகக்கொண்டு ஆண்டும் மாயாவாதக்கருத்தையே யேற்றி, அவற்றையும் ஒழித்தல் வேண்டும். ஆதலால், நூலாசிரியர் கருத்தைத் துணிதற் பொருட்டுச் சங்கரர் பாடிய பொருளையே கருவியாகக்கோடல் பல வழூஉக்களுஞ் செறிந்து மேன்மேற் கிளைத்தற்கேதுவா மென்றொழிக. இனி, சங்கரர்வேதாந்த சூத்திரக் கருத்தறிந்து உரையெழுதினாரென்றலும் பொருந்தாது; என்னை? ஸ்ரீ நீலகண்டர், பண்டிதாராத்தியர், இராமாநுஜர், ஆனந்ததீர்த்தர் முதலிய ஆசிரியரெல்லாரும் சூத்திரப்பொருளுரைக்கும்வழி யொருவகையாவிணங்கிச் சொல்லும்பொருளும் ஒரு நெறிப்பட்டுச் செல்லவுரைத்து, அஃதியாண்டும் சீவபரபேதங் களை விரித்துவிளக்குவதென்றே வலியுறுத்துக் கூறுவாராக. இச்சங்கரர்தாமாத்திரம் அவரொடுமுரணிச் சூத்திரப் பொருளைக் கிடந்தவாறெடுத்துத் தம்மதத் தோடிணக்கி யுரைக்கமாட்டாமையான், அச்சூத்திரங்களிற் சிலவற்றை அலைத்து ஈர்த்துப் பொருளுணர்த்தியும், சிலவற்றிற்குச் சொல்லும்பொருளும் மிக வருவித்துரைத்தும், சிலவற்றிற்குத் தாற்பரியங்கற்பித்தும், சிலவற்றிற்கு மாட்டுறுப்புப்பட நிகழ்த்திச் சொற்களைத் துணித்தியைத்துப் பொருள் கொண்டும், சிலவற்றிற்குக் கௌணப்பொருளுரைத்தும் இவ்வாறெல்லாம் சூத்திரங்களை நலிந்து பொருள்சொல்லிப் பெரிது மிடர்ப் பாடுறுவர். இங்ஙன மெல்லாமிடர்ப்பட்டும் முயற்சியளவு பயன் பெறுதலின்றி மலைகல்வி யெலிபிடித்த வாறு போல ஜீவபரங்களை யபேதமென்று கூறி வாளா போயினார். இன்னும் சங்கராசிரியர் தமது பாடியத்தின் கண்ணே அபரேதுவாதிநா எனமொழிந்து தாமுரைக்குஞ் சூத்திரவுரையோடு மாறுபடுமாசிரியர் பலருளரெனத் தாமே கிளந்துகூறுதலும், அவர்க்குப் பின் வேதாந்தசூத்திரவுரை கூறிய இராமாநுசர் தாமுரைப்பனவெல்லாம் முன்னை யுரையாசிரியரான போதாயன தங்க திரமிட குகதேவ கபர்திந் பருசி முதலியோர் வழிப்பட்டனவென்றலும், அம் முன்னையுரையாசிரிய ருள்ளும்போதாயனர் சங்கராசிரியர்க்கு முன்னுரை கூறிய பூருவவாசிரிய ராதலால் அவருரைத்த வுரைவழியே யாமுரை எழுதுகின்றாம் எனஇராமாநுசர் பின்னும் வலியுறுத்தலும், அங்ஙனந் தொகுத்தோதப்பட்ட பழையவாசிரியன்மாருள் திராவிடர் எனப்படுவோர் எல்லாவாசிரியர்க்கும் பிராசீனராய் வேதாந்தசூத்திரவுரை கண்டருளிய தமிழ்முனிவராதலும் உணரும்வழிப் பின்னை யுரையாசிரியரான சங்கரருரைதான் வியாசசூத்திரக் கருத்தறி விக்கும் மெய்யுரையெனத்துணிபு காட்டுதல் நல்லறிவுமாட்சி யுடையார்க்குச் சிவணுவதன்றாம். முன்னே சொல்லப்பட்ட திராவிடரென்னும் பிராசீனவாசிரியர் வேதாந்தசூத்திரம் சைவசித்தாந்தப்பொருண் மெய்பெறக் கிளக்கும் அரியதோர் நூலாதல்கண்டு விழுப்பமுடைய மெய்யுரையதற்குரைத் தருளினாராக, அதற்கிணங்காது அவரோடும் பிறவாசிரியன் மாரோடும் பெரிதும் முரணித் தமக்குவேண்டியவாறே சூத்திரப்பொருளை நலிந்து புதுவதோருரை எழுதிய சங்கரர் மாட்டுவெகுட்சியு மிரக்கமுமுடையோராய் இராமாநுசர் முன்னையாசிரியரு ரைக்குப் பெரும்பான்மையும் பொருந்தத் தாமோர் நல்லுரை கண்டாரென்க. சங்கரருரை முன்னை யாசிரியருரைக் கிணங்குமாயின் இராமநுசர் தாமோர் புத்துரை எழுதவேண்டிற்று இல்லையாம். அவ்வாறின்றி அவருரை சூத்திரக்கருத்தோடு பெரிதும் மாறுபட்டுக் கிடத்தலினன்றே தாமவருரையினை ஆண்டாண்டு மறுத்து வேறுரையிடு வாராயினார்? அதுகிடக்க, சர்வமான்மசம்பு சிவாசாரியார் சித்தாந்தப் பிரகாசிகையில் மாயாவாதநூல் செய்தவன் வியாதன் என்று கூறுதலும், வடமொழி தென்மொழி மாப்பெருங்கடல் நிலைகண்ட ஆசிரியர்-சிவஞான யோகிகளும் அவ்வாறே திராவிடமாபாடியத்தின்கண் உரைத்தலும் என்னையெனின்:- நன்றுகடாயினாய், ஆண்டு மாயாவாதநூல் செய்தவன் வியாதனென்றதன்றி வேதாந்த சூத்திரம் மாயாவாதம் போதிப்பதென்று அப்பெரியார் யாண்டும் ஓதாமையின் அவர்க்கது கருத்தன்றென்க. அது கருத்தாயின் ஆசிரியர் - சிவஞானயோகிகள் மறையினா லயனால் என்னுஞ் சித்தியார் செய்யுளுரையிலே அவ் வேதத்தைக் கருமகாண்டம் ஞானகாண்ட மென்றிரு வகைப் படுத் தெடுத்துக்கொண்டு அதன்பொருளை நிச்சயித்து ரைக்கும் சாத்திரமாகிய பூருவமீமாஞ்சை உத்தரமீமாஞ்சை களையும் என்னும் உரைக்கூற்றால் வேதத்தில் ஞானகாண்டப் பொருளைத் தெளித்துரைப்பது உத்தரமீமாஞ்சையெனப்படும் வேதாந்த சூத்திரமென்றலென்னையெனக் கடாவுவார்க்கு விடுக்கலாகா தென்பது. இனி அங்ஙனம் ஞானகாண்டப் பொருளை நிச்சயித்துரைக்கும் உத்தரமீமாஞ்சை மாயாவாதம் நுதலுவதென்றே கொள்ளற்பாற்றெனின், அவ்வேதத்தின் ஞானகாண்டமும் அப்பொருளே பயப்பதென்று கோடற்கு இடஞ்செய்யுமாகலானும், அங்ஙனங்கோடலும் ஆசிரியர்-சிவஞானயோகிகள்கருத்தோடு பெரிதுமுரணுவதாகலானும் அவ்வாறுசொல்லுதல் அடாதென்றொழிக. அல்லதூஉம், வேதவியாதர் வேதாந்தசூத்திரம் ஒன்றேசெய்தாராயின் மாயாவாதநூல் செய்தவன் வியாதன் என்றன் மாத்திரை யானே அங்ஙனம் பொருள்கோடலாம். அவர் ஆன்மாக்கள் பரிபாகத் தின்பொருட்டு இதிகாசங்கள், புராணங்கள் முதலாகப் பலதிறப்படும் நூல்களியற்றினாராகலானும், அவற்றுள் இக்காலத்து வழக்கமின்றாய் இறந்துபட்டன பலவாதலானும் அங்ஙனந் துணிபொருள் கூறல் ஏதமாம்என மறுக்க. மேலும், பாணினிமுனிவர் தமது அட்டாத்தியா யியின்கண் வியாதர் பிக்ஷுசூத்திரங்கள் இயற்றினாரெனக் கூறுகின்றார். பிக்ஷுக்க ளெனப்படுவோர் பௌத்த சந்நியாசி களாவர்; ஆகவே, அவர்க்குரிய பௌத்தசமயநெறியினை விளக்கும் பொருட்டு எழுதப்பட்டன பிக்குசூத்திரங்கள் என்று கோடலுமாம்; மாயாவாதம் பிரசன்னபௌத்தமென வழங்கப்படு மாதலின், அங்ஙனம் நூல்செய்தமைநோக்கி மாயாவாதநூல் செய்தவன் வியாதன் என்று சொல்லப் பட்டதென்று கோடலே பொருத்த மாமென்க. இன்னுங் கந்தபுராணம் இயற்றிய கச்சியப்பசிவா சாரியார் இப்பெற்றி யெல்லாம் இனிதுணர்ந் தன்றே ஏத்திடுசுருதிகளிசைக்கு மாண்பொருள், மாத்திரைப் படா வெனா மாசில்காட்சியர், பார்த்துணர் பான்மைபாற் பலவகைப் படச் சூத்திரமானவுஞ் சொற்றுவைகினான் என்று அதனியல்பு வரையறுத் தோது வாராயினதூஉமென்க. இதனுள், சுருதிப் பொருள் நிச்சயம் பெறாமல் பலரும் பலவகையாலு ணருமாறு இடஞ்செய்து கிடந்தமையால், அஃதங்ஙன மாகாமை உண்மைப்பொருள் தெளித்தற் பொருட்டு அதனுண் பொருளெல்லாம் ஒருபிண்ட மாகத் திரட்டி வேதாந்தசூத்திரம் செய்தருளினாரென்றும், அது சீவபரபேதங்களை விளக்கும் பல வகுப்புடையதாய்ப் பொலிவுபெற்றதென்றும் சொல்லப்பட்ட வாறுகாண்க; ஈண்டுப் பலவகை என்றது மறைமொழிபோற் றலை மயங்கிக்கிடவாமல் அது பல அத்தியாயவகுப்புடைத்தாய் நிற்றலை. இங்ஙனம் பொருள் கொள்ளவறியாது பலவகைப் பட என்பதற்குப் பல்சமயத்தாருந் தத்தமக்கிணங்கப் பல பொருள்கொள்ளுமாறு என்று பொருளுரைப்பார்க்குச் சுருதிப் பொருள் பஃறலைப்பட்டு மயங்கிக்கிடத்தலின் அதனுண்மைப் பொருள் தேற்ற மற்றிவ்வேதாந்தசூத்திர மியற்றுவாராயின ரென்னும் மேலை வாக்கியப்பொருளோடு அஃதியையாமை யானும், அச்சுருதிப் பொருளைப்போலவே மயக்கந் தருதற் கேதுவாகப் பின்னும் ஓர் நூலியற்றினா ரென்றல் அவர் பெருமைக் கேலாமையானும் அன்றி அங்ஙனமியற்று தலாற்போந்த பயன்றான் என்னை யெனுங்கடா நிகழுமாத லானும் அது பொருந்தாதென மறுக்க. அது கருத்தாயிற் பலபொருள் என்று தெளியக் கூறுவார்மன். இங்ஙனமெல்லா நுணுகியாராய வல்லார்க்கு ஆசிரியர் சிவஞானயோகிகள் கருத்தினிது புலப்படுமாதலின், அவர் கருத்தறியாது கூறுவாருரை பற்றி ஈண்டைக்காவதோர் இழுக்கில்லை என்க. வேதாந்த சூத்திரத்தைச் சங்கர பாடியத்தோடும் ஆங்கிலேயபாடையில் மொழி பெயர்த் துரைத்துப் பிரசித்தியுறும் தீபாவென்னும் ஆங்கில மகாவித்து வான் தமது முகவுரையில் சங்கரபாடியப் பொருள் வேதாந்த சூத்திரக்கருத்தோ டொருசிறிதும் இயையாமையை விரித்து விளக்கி, பின் அச்சூத்திரப் பொருளிவையென்று விடுப்பன வெல்லாம் சித்தாந்தசைவப் பொருளோ டொற்றுமை யுறுதலுணரவல்லார்க்கு யாமீண்டு ரைப்பன வெல்லாம் வாய்மையேயாமென்பதினிதுவிளங்கும்.அல்லதூஉம், வேதாந்த சூத்திரம் சங்கரருரைப்பொருளோ டியைந்து, சீவப் பிரமவாதத்தைக் கிளந்தோதும் வழியதெனிற் றொடங்குழியே அதரதோப்ரஹ்மஜிஜ்ஞாஸா என்றுரை யாமல் அதாதோ ஜீவஜிஜ்ஞாஸா என்று மயக்கறக்கூறும்; அங்ஙனமின்றிப் பிரமப்பொருளையே யாராய்வதாக வெழுந்தமையால், அது மாயாவாதப் பொருளோ டொற்றுமை யுறுதல் யாண்டைய தென்றொழிக. வேதாந்தசூத்திரம் மாயவாதப்பொருளையே கருக் கொண்டு கிடத்தலின், அந்நுணுக்கமுணர்ந்து மாயாவாதப் பொருளே பயப்ப உரையெழுதிய சங்கராசாரியரை அதுபற்றி மாயாவாதியெனவைத் தெள்ளுதலமையாதா மெனவும், பிருகற்பதி உலகாயதநூலும், சுக்கிரன்-மாயாவாதநூ லுமியற்றிய வாறுபோலத் தாமும் ஓரோர்கோட்பாடுபற்றி யங்ஙனமுரையெழுதினா ரெனவும், விபூதி, ருத்ராக்ஷதாரணம், பஞ்சாக்ஷர ஜபம், சிவபூஜை முதலிய அருஞ்சைவநெறிமேற் கொண்டு சிவபுஜங்கம், சிவாநந்தலஹரி, சௌந்தரியலஹரி முதலிய பலவேறுவகைப்பட்ட சைவகிரந்தங்களியற்றிச் சைவசமயத்தை நிறீஇப் புறச்சமயநெறிகடிந்துவிளங்கும் சைவப்பெரியா ரெனவும் உரையாமோவெனின்:- உரையா மன்றே. வியாழவெள்ளிகள் அங்ஙனம் உலகாயதநூலும், மாயாவாதநூலு மியற்றுதற்குக்காரணம் புராணங்களுரைப்பக் காண்டும். பிருகற்பதி யிந்திரன்பொருட்டும் சுக்கிரன் சூரன் முதலாயினார் பொருட்டும் அவ்வாறியற்றினர். சங்கராசாரியர் எவர் பொருட்டு யாதுகாரணம்பற்றி மாயாவாத பாடிய மியற்றினாரெனக்கடாவுவார்க்கு இவர்பொருட்டு இக்காரணத் தான் இயற்றினாரெனக்கூறியிறுக்க லாகாமை யுணர்க. உலகை மயக்குதற்பொருட் டஃதியற்றினாரெனின், அதனை யொரு நூலாகத் தாமே யியற்றுவதல்லது, பிறிதொருவர் நூற்குரை யெழுதி அதனை யம்முகத்தான் விளக்குதல் பெரிதும் இழுக்குடைத்தாய் முடியுமென்பது, உயர்ந்தபொருளை யுயர்ந்ததோராற்றாற் றெரித்துணர்த்திய வேதவியாதரை மாயாவாதியெனவும், அவ்வுயர்ந்த நூற்பொருளை யிழிந்த தாகத்திரித்துணர்ந்து இழிந்ததோராற்றால் விளக்கிப் பெரியதோர் அபசாரஞ்செய்த சங்கராசாரியரைச் சித்தாந்த சைவரெனவும் மயங்கி முறைபிறழ்ந்துரைத்தல் நியாயமன்றாம். அற்றாயினும், சங்கராசிரியர் மாயாவாத பாடிய முரைத்தது பற்றி, அவரை மாயாவாதியாகத் துணிதல் அமையாதாம் பிறவெனின்:- நன்றுகடாயினாய், அவ்வுரைப் பொருளால் அவரை அம்மதவாதியாகத் துணியாதொழியின், வேறு அவர் தமது சித்தாந்தசைவமரபு தெற்றென விளங்க வெழுதிய நூல் யாதோவெனவும், அத்தகைய நூலொன்றுள் வழி அதனால் அவர் சித்தாந்தசைவரென்பது இனிது துணியப்படுமன்றே யெனவுங் கடாநிகழ்ந்துழி அதனை விடுத்தல்வேண்டும். அங்ஙனம் விடுத்தற்குக் கருவியாய் அவராற்றனிமுதலாய் விரிவாகவாதல் சுருங்கவாத லெழுதப் பட்ட நூலொன்றின் மையின் அவரை யங்ஙனஞ் சித்தாந்த சைவரென்றலடா தென்றொழிக. அற்றேலஃதாக, இனிச் சிவ புஜங்க முதலிய சைவநலந்திகழும் அரியநூல் களியற்றினா ராலெனின்:- அதுவும் பொருந்தாமை காட்டுதும். அவர் அப்பெற்றியவாஞ் சைவகிரந்தங் களியற்றியவாறு போலவே, விஷ்ணு புஜங்கம் - பஜகோவிந்தசுலோக முதலிய நூல்களு மியற்றி, மற்றிவ்விரு வகை நூல்களையும் விவகாரத்திற் சத்திய மெனக் கொண்டு, பரமார்த்தத்தில் மிச்சைப்பொருள் களாமென் றொழித்த லானும், அவர் வழியொழுகும் ஏனை மாயாவாதிகளும் விபூதிருத்திராக்ஷ பஞ்சாக்ஷர சிவபூஜாதி களையும், வெள்ளை மண் கோபீசந்தனம் துளசீகாஷ்ட தாரணம் அஷ்டாக்ஷரம் விஷ்ணுபூஜாதிகளையும் ஒத்து நோக்கி யனுட்டித்து, மற்றிவ்வனுட்டானத்தையும், பரமார்த்தத்திற் பொய்ப் பொருள்களாமென்று கழித்தலானும், சங்கராச் சாரியரைச் சைவரெனத் துணிவமென்பார்க்கு அஃதியாம் இவ்விவ் வேதுக்களால் வைணவரெனத் துணிது மென்பாரை நீக்கா மறுதலைப்பொருளை யுடன் கொண்டு வரும் ஏதுப்போலியாய் முடிதலானும், அவர் பரம்பரையில் வருவாரெல்லாரும் மாயாவாதிகளாகவே யிருப்பக் காண்டலன்றி, வேறு பிறராகக் காணாமையானும் அவரைச் சைவரென்று கூறுதல் போலி யென்றொழிக. வெளுத்த தெல்லாம் பால், கறுத்ததெல்லாந் தண்ணீர் என்றுணருந் தமக்கென வொன்றிலாரைப்போல், மாயாவாதிகளிடும் புறவேடமாத்திரையான்மயங்கிச் சங்கரா சாரியரைச் சைவரெனக்கூற லுண்மைமுறைதிறம்பு முரையாம். மாயா வாதிகள் படிற்றொழுக்கத்தை நன்றுணர்ந்த எம்மாசிரியர் ஸ்ரீலஸ்ரீ நாயகரவர்கள் உத்தமவாத தூலவாதூலத்தில் ஏசுவெனுஞ்சொல்லுமெழினான் மறைகூறு, மீசனெனுஞ் சொல்லு மினிதொன்றாப்-பேசவுனக்; கென்னோகெடுமதி தான் என்றிழித்துக் கூறுதலானும் இவ்வுண்மை கடைப்பிடிக்க, அன்னோர்க்கு ஈசன் - விஷ்ணு - ஏசு - அல்லாவெனுஞ்சொற்கள் ஒரு பொருளவாமென்றுணர்க இனி முனிமொழியும் என்பதில் முனி என்னுஞ் சொல்லுக்கு வாதவூர்முனிவர் என்று பொருள்கோடல் ஈண்டைக்கேலாதென்பதூஉஞ் சிறிதுகாட்டுதும். சொற்சுருங்கிய வாய்பாட்டானோதிப் பொருள்விளக்குவான் புகுந்த ஔவையார் இயற்பெயரானும், அவ்வியற்பெயர்போலத் தாங்கருதிய பொருளை யினிதுவிளக்குஞ் சிறப்புப்பெயரானும் தேவர் குறள் நான்மறை மூவர்தமிழ் முனிமொழி கோவைதிருவாசகம் திருமூலர்சொல் எனத் தெளிய வெடுத்தோதினார். இவற்றுள், தேவர்குறள் மூவர்தமிழ் என்னுந் தொகைகளில் தேவர் மூவர் என்னும் அடை மொழிகள் வழக்குப்பயிற்சியாற் றிருவள்ளுவரையும், திருஞானசம்பந்த சுவாமிகள், திருநாவுக்கரசுசுவாமிகள், சுந்தரமூர்த்திசுவாமிகள் முதலாயி னோரையும் நிரலே குறித்து நின்றன. இனி, வாதவூரடிகளைப் பேராசிரியர் திருவாதவூர் மகிழ் செழுமறை முனிவர் என்று சுட்டியோதுதலின் அவரையே ஔவையார் முனி என்றாரெனின்;- அற்றன்று, அருகியவழக்கா யாண்டேனு மோரிடத்து ஓரவசரம்பற்றி அச்சொல் அவ்வாறு பிரயோகிக்கப்படுவதன்றித் திருவாத வூரடிகள், ஸ்ரீமந்-மாணிக்க வாசகசுவாமிகள் என்பனபோற் பரவைவழக்காய் நிகழ்வதின்மையானும், சிறப்புப்பெயராற் றாங்குறித்த பொருளைச் செறித்துவிளக்குவான் புகுந்த ஔவையார்க்கு அந்நியதிதப்பி யருகியசொல்லாற்கூறுத லிழுக்காய் முடிதலானுமென்பது. அல்லதூஉம் வாதவூரடி களுக்குமாத்திரம் முனி என்னுஞ் சொல் வழங்குவதாயின், அங்ஙனம் பொருள்கோடல் சிறுபான்மைபொருந்தும். முலையமுத முண்டமுனி வாகீசமுனி வன்றொண்டமுனி என வேறு பிறர்க்கும் அப்பெயர் வேறுவேறு நூல்களில் வழங்கக் காண்டலின் அதுவுமமையாது. இதுவன்றியும், ஔவையார் எடுத்தோதிய இத்திருவெண்பாவில் வேதவியாத முனிவரைத் தவிர வேறு முனிவரிலர். அல்லதூஉம், திருவள்ளுவமுனிவர், சம்பந்தமுனிவர், திருநாவுக்கரசுமுனிவர், திருமூலமுனிவர் என்று சைவசித்தாந்திகள் தம்முள் வழங்குவதுஞ்செய்யார். அது தமது சம்பிரதாயநாமங்களொடு மாறுகொள்ளுமாதலின். அற்றேல், அப்பர்சுவாமிகளை வாகீசமுனிவர் என்று வழங்குதலென்னை யெனின், அஃதவர் பூர்வசன்மவிசேடம் பற்றி யவ்வாறு வழங்கப்படுவதாகலின் அவ்வாறு வினாதல் கடாவன்றென மறுக்க. இனி முனி என்னுஞ்சொல்வழக்குச் சடகோபமுனி, மணவாளமாமுனி, வரவரமுனி, நாதமுனி முதலியவாக வைணவர் குழுவில் மிக்குநிகழக் காண்டலின், இச்சொல்லைத் திருவாதவூர்ப் பெருமானிடமேற்றிக் கூறுதலாற்போந்த விசேடமென்னை யெனக் கடாவி மறுக்க. சைவசமயிகள் வைணவப்பெரியோரை முனியென்றுகூற வொருப்படார். வைணவரும் சைவப்பெரியாரை முனிவர் என்று கூறார். பாரிசேடத்தாற் சைவரும், வைணவரும், மாயா வாதிகளும், பிறரும் வேதவியாசரை வேதவியாசமுனிவர் என்றே வழங்குப. இங்ஙனம், முனியென்னுஞ் சொல்வழக்கு வாதவூரடிகளுக்குப் பெயராய்ப் பரவை வழக்கிற் பயிலக் காணாமையானும், அது வியாதருக்கே யவ்வழக்காய் நிகழ்வதானும் முனிமொழி என்பதற்கு வாதவூர் முனிவர் சொல் எனப்பொருளுரைப்பார் கூற்று வெறும்போலியே யாமென் றுணர்ந்துகொள்க. அல்லதூஉம், தேவர்குறள் மூவர் தமிழ் திருமூலர்சொல் என முன்னும்பின்னு மெல்லாம் செய்யுட்கிழமைக்கண் வந்த ஆறாம்வேற்றுமைத் தொகைப்பட வுரைத்து முனிமொழியுங் கோவைதிருவாசகம் என்புழி மாத்திரம் பெயரெச்சத்தொடராக வைத்துக் கூறுதல் நியமமுறை பிறழ்ந்தொழிதலென்னும் வழூஉக்கிடனாய், இதனை எண்ணுப்பொருட்டாக வைத்தாரோ, பெயரெச்சப் பொருட்டாக வைத்தாரோவென்றையுறுதற் கேதுவாய் முடிதலி னங்ஙனங்கூறுதல் ஒருவாற்றானும் பொருந்தாதா மெனமறுக்க. செய்யுள் செய்வார்க்குத் தாங்கொண்ட நியமமுறை பிறழ்தல் வழுவாமென்பது ஆசிரியர் சிவஞானயோகிகள் சூறாவளி யிலாங்காங்குக் கூறுமாற்றானு முணர்க. அல்லதூஉம் தேவர்குறள் மூவர்தமிழ் திருமூலர் சொல் என்புழி யெல்லாஞ் சொற்சுருங்கவுரைத்து, ஈண்டு மாத்திரம் முனி மொழியும் எனக்கூறுதல் சொற்பல்குதல் என்னுங் குற்றத்திற் கிடமாமாதலானும் அங்ஙனம் பொருள் கூறலாகாமை யுணர்க. அல்லதூஉம், நிரல்படக்கோத்தெண்ணிச் செல்லுநெறிக் கிடையே, ஒன்றனைப் பெயரெச்சமாக வைத்துரைத்தல் கட்டுரைச்சுவை குன்றுமாறு அஃகிய செவியுடையார்க்கெல்லா மினிதுபுலனாம். நன்றுசொன்னீர், நீருநிலனு நிலம்பொதியு நெற்கட்டும் என்புழி ஔவையார் தாமே நீரும், நிலனும், நெற்கட்டும் என்றெண்ணிச் செல்லுதற்கண் இடையே பொதியும் என்பதனைப் பெயரெச்சமாக வைத்து நெற்கட்டை விசேடித்தல் தெற்றெனக்காண்டு மாகலின் அவர் எண்ணுநியமம் பிறழாரென நியதிகூறுதல் பொருத்தமின்றா மெனின்:- அதன் நுட்பந் தேறாது கடாயினாய், முன்னே சிலவற்றை நெறிப்பட வெண்ணிப் பின் தொகைகொடுத்து முடித்தலும், தொகை கொடாமல் முன் சிலவற்றை எண்ணி வாளாதொழிதலுமென எண்ணுநியமமிரண்டாம். அவற்றுள் முன் எண்ணிப்பின் தொகை கொடுத்து முடிப்பதன்கண் இடையே பிளவுபடுத்து நியமம் பிறழ வேறுஉம்மைதலைப் பெய்து நல்லிசைப்புலவ நியாண்டுமோதார் பின் தொகை கொடாது கூறும் எண்ணும்மை வாக்கியத்தின்கண் அந்நியமம்பிறழ் தலாலிழுக் கில்லாமையின் வேண்டியவாறே வேறுவேறும்மையும் இடையிட்டுமொழிவர். இங்ஙனமே ஔவையார் தேவர்குறள் முதலியவற்றைநெறிப்பட வெண்ணிப்பின் ஒரு வாசகம் என்னுந்தொகைகொடுத்து முடிக்கின்றாராகலின் இடையே வேறும்மைதலைப்பெய்து கூறார்; நீருநிலனும் என்புழிப் பின்றொகுத்தோதுத லின்றி வாளாவெண்ணிப் போதலின் ஆண்டிடையே வேறுமமை தலைப்பெய்தல்பற்றி நியமம் பிறழ்ந்தாரெனல் இல்லையாம். ஆகவே, அச்செய்யுளெண்ணு முறைபற்றித் தேவர்குறளும் என்னுஞ் செய்யுளின்கண் யாங்கண்டு கூறிய நியமம் பிறழ்ந்து வழுவாமாறில்லை யென்றொழிக. இனி, சங்கரர் எழுதியபாடியவுரை, இவ்வுலகின் பொய்ம்மையுணர்ந்து அதன்கண் வெறுப்பெய்தித் துறவற நெறியிற் சேறற்கேதுவாம் வலிவுதோன்ற நுட்பப்பொருள் தேற்றும் கடப்பாடுடையதாய் அஃதறிவுடையார்க்கெல்லாம் இன்றியமையாச் சிறப்பினையுடைய நிதியமாய்ப் பயன்படற் பாலதாகலின் அது வேதாந்த சூத்திரத்திற்கியையாத் திரிபுரையென அங்ஙனம் வைத்திகழ்தலமையாதெனின் - நன்று சொன்னாய், பிரமத்தையொழித் தொழிந்தனவெல்லாம் பொய்யென்னும் அவருரைதேறுவார்க்கெல்லாம் தாமே பிரமமென்னும் உணர்வுதோன்றி அகங்காரமிகுதலானும், அவ்வகங்காரவுணர்வால் அவர் நல்லது தீயதுபகுத்துணர மாட்டாமல் தாம் வேண்டியவாறெல்லாம் உலகிற்கு இடர் பயப்பராதலானும் அவ்வாறு சொல்லுதல் பொருந்து மாறில்லை, இது கிடக்க. இனி முனிமொழியும் என்பதில் மொழியும் எனுஞ் சொல்லை நடுநிலைத்தீவகமாகவைத்து ஒவ்வொன்றோடுங் கூட்டியுரைத்துக் கோடற்பாற்றென்றலும் பொருந்தாமை காட்டுதும் தேவர்மொழியுங் குறள் மூவர்மொழியுந்தமிழ் திருமூலர்மொழியுஞ் சொல் எனக்கூட்டியுரைத்தல்போலத் திருநான்மறைமுடிவு என்புழியும் அவ்வாறு கூட்டிப் பொருளுரைத்தல் வேண்டும். அவ்வாறியைத்துப் பொருள் கோடலாகாமையின் மொழியும் எனுஞ்சொல் ஆண்டு நின்று பொருள்வற்றும். அதுவேயுமன்றித் திருமூலர்மொழியுஞ் சொல் எனவுரைக்கும் வழி மொழியும் என்பதுஞ் சொல்லும் என்னும்பொருளேபயப்பச் சொல் என்பதும் சொல் என்னும்பொருளேபயப்ப வொருபயனுமின்றி யொரு பொருண்மே விரண்டுசொல்வந்தன வெனப்படுமாகலின் அதுவும் போலியாமென்றொழிக. என்றித்துணையுங் கூறியவாற்றால், முனிமொழியும் என்பதற்கு வேதாந்த சூத்திரம் எனப் பொருளுரைத்தல் ஔவையார் குறிப்பொடு படுத்துக் கொள்ளப்படுவதா மென்பதூஉம், முனி என்னுஞ் சொல்லுகீண்டு வேதவியாத முனிவர் என்று கொள்வதேயன்றிப் பிறவாறு கூறுதல் வழூஉப்படுமென்பதூஉம், வேதாந்தசூத்திரம் மாயாவாதப் பொருளே போதிக்குமென்பார்க்கு உபநிடதமுதலிய வெல்லாக் கலைகளையும் அவ்வாறு கூறவேண்டுதலின் அது வெறுங் கூற்றேயாமென்பதூஉம், சங்கரர்வேதாந்தசூத்திரக் கருத்தறிந் துரையெழுதினாரென்றல் தொல்லைமரபு மாறுபாடா மென்பதூஉம், சங்கரர் சைவசித்தாந்தப் பெரியரென்றல் உலக வழக்கொடும் புலனெறிவழக்கொடும் மாறுகொள்ளுதலின் அதுகொள்ளற் பாற்றன்றென்பதூஉம், முனிமொழியும் என்பதில், முனி என்னுஞ் சொல்லுக்கு வாதவூர் முனிவர் எனவுரை விரித்தல் மூவகைப்பொருளில் ஒன்றுமாவான் செல்லாதென்பதூஉம், சங்கரர் பாடியபொருளுணர்ச்சி யுலகின்கண் உவர்ப்புணர்ச்சிதோன்றித் துறவறநெறியிற்சேறற் கேதுவாமென்றல் சைவசித்தாந்தப்பொருளொடு பிணங்கு மேனைச் சமயத்தார் கூறும் ஆரவாரவுரைகளாதலின் அவையீண்டைக்கேலாவென்பதூஉம், மொழியும் என்ப தனை நடுவுநிலைத் தீவகமாகவைத்துப் பொருள்சொல்லுதல் ஏலாதென்பதூஉம் இனிது விளக்கப்பட்டனவென்க. திருச்சிற்றம்பலம். பரிமேலழகியாருரை யாராய்ச்சி குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே யுடம்போ டுயிரிடை நட்பு (குறள் - 338) திருக்குறள் நிலையாமை அதிகாரத்தில் யாக்கைக்கும் உயிர்க்குமுளதாம் இயைபு இனைத்தென வறிவுறுத்துகின்ற மேலைத்திரு வாக்குக்குப் பரிமேலழகியாருரைக்கு முரையே சிறந்ததெனவும், அவர்க்குமுன்னே தொல்லாசிரியர் கூறிய வுரை அதற்கு இணக்கமின்றாய் வழுப்படுகின்றதெனவும் இஞ் ஞான்றைத் தமிழ்ப்புலவர் கடைப்பிடித்துப் போதருகின்றார். அதுவேயுமன்றிப் பரிமேலழகியார் இச்செய்யுட்கு உரை உரைக்கின்றுழி இவரோடொருங்கிருந்து அதனைக்கேட்ட ஆசிரியர்-நச்சினார்க்கினியர் தாமதற்குரைத்த வுரை இயைவதன்று மற்றிதுவே யதற்கியையும் விழுமியவுரை யாமென மொழிந்து அவரைத் தழீஇக்கொண்டாரெனவும், இங்ஙனம் இந்நுட்பவுரை விரித்தவழிப் பரிமேலழகியார் இவர்ந்த வெண்கலப்பரி அடிபெயர்த்தியங்கிற்றெனவும் ஒரு பொய் வரலாறு புகலுகின்றார். ஆசிரியர் - நச்சினார்க்கினியர் திருக்குறளுக் குரையெழுதியிட்டாரென அவருரைப்பாயிரங் கூறாமையானும், அவரும் பரிமேலழகியாரும் ஒருகாலத்தின ரேயாமென்பதனை நிறுத்தும் ஆதாரம் பிறிதின்மையானும், அவரிவருவரும் ஒருகாலத்தினரல்ல ரென்பதற்குச் சில பலகாரணங்கள்புலப்படுதலானும் அவ்வரலாறு உண்மை யன்றாம். சமயம் வாய்க்கும் வழி ஆசிரியர் நச்சினார்க்கினியர் பரிமேலழகியார்க்கு முன்னிருந்த பெரியாரென்பது இனிது காட்டுவாம். ஈண்டு அத்திருக்குறட் செய்யுட்குப் பரிமேல ழகியார் கூறுமுரை பொருந்தாதென்பதும், தொல்லா சிரியருரையே அதற்கிணங்குவதாமென்பதும் சிறிது காட்டுவாம். அதற்குப் பரிமேலழகியார் கூறுமுரைவருமாறு:- முன்றனியாக முட்டை தனித்துக்கிடப்ப அதனுள்ளிருந்த புள்ளுப் பருவம்வந்துழிப்பறந்து போனதன்மைத்து; உடம்பிற்கும் உயிர்க்குமுளதாயநட்பு - தனித்தொழிய வென்ற தனான் முன்றனியாமை பெற்றாம்; அஃதாவது கருவுந்தானும் ஒன்றாய்ப்பிறந்து வேறாந்துணையும் அதற்காதாரமாய் நிற்றல்; அதனால் அஃது உடம்பிற் குவமையாயிற்று. அதனுள் வேற்றுமையின்றி நின்றே பின் புகாமற்போகலின் புள் உயிர்க்குவமையாயிற்று. முட்டையுட் பிறப்பன பிறவு முளவேனும் புள்ளையே கூறினார், பறந்து போதற் றொழிலான் உயிரோடொப்புமை யெய்துவது அதுவேயாகலின். நட்பென்பது ஈண்டுக் குறிப்பு மொழியாய் நட்பின்றிப் போதலுணர்த்தி நின்றது. சேதனமாய் அருவாய் நித்தமாய் உயிரும், அசேனத மாய் உருவாய் அநித்தமாய் உடம்புந் தம்முண் மாறாகலின் வினைவயத்தாற் கூடியதல்லது நட்பில வென்பதறிக. இனிக்குடம்பை யென்பதற்குக் கூடென்றுரைப் பாருமுளர்.அது புள்ளுடன் றோன்றாமையானும், அதன்கண் அது மீண்டு புகுதலுடைமை யானும் உடம்பிற்கு உவமையாகா மையறிக என்பது. பரிமேலழகியார் கூறுமிவ்வுரை நுட்பமுடைய தொன்றாயினும், திருவள்ளுவனார் கருத்தறிந்தெழுதப் படாமை யான் அஃதீண்டைக்கு ஒரு சிறிதும் இயையாது. குடம்பை என்னுஞ் சொல்லுக்கு முட்டையென்னும் பொருள் பரிமேலழகி யார் காலந்தொட்டு வழங்குவதாயிற்று. தொல்லாசிரியர் நூலுரைகளினெல்லாம் அச்சொற்பொருள் கூடு என்று வழங்குவதன்றி முட்டையென்பதில்லை; புறநானூற்றில், பறவைகளும் உயர்ந்த மரக்கிளையின்க ணுள்ள கூடுகளி லிருந்து குரலொலி நிகழ்த்தின என்று பொருள்படும் புள்ளும், உயர்சினைக் குடம்பைக்குரறோற்றினவே என்னும் அடியில் குடம்பை யென்னுஞ்சொல் கூடு என்று பொருள் தந்தவாறு காண்க. அல்லதூஉம், பண்டைக்காலத்துத் தமிழாசிரியர் உலகியற் பொருள்களைத் தாமே ஆண்டாண்டுச் சென்று கண்டு, பின்கண்டாங்கு அவ்வியல்பு பொருந்த வமைத்துச் செய்யுள் பாடும் நல்லிசைப்புலமை மலிந்த தெள்ளியோராம் பெற்றி காணுமிடத்து, அவர் இளமரக்காவினுங் கானற் பொழிலினும் முல்லை நிலக்காடுகளினுந் திரிதருங்கால் அங்குப் புட்களெல்லாந் தாம் வேண்டாப்பருவத்துக் கூண்டொழியப் பறந்து போதலைப் பன்முறையானுங் கண்டுவைத்து மற்றதனை உயிருடலொழியப் போதற்கு ஒப்புமையாகக் கடைப்பிடித்துக் கூறுவாராயினரென்னு முண்மை இனிது விளங்காநிற்கும்; இதுபற்றியன்றே நாலடியாரென்னும் பழந்தமிழ் நூலில் சேக்கைமரனொழியச் சேணீங்கு புட்போல், யாக்கை தமர்க்கொழிய நீத்து என்று சொல்லப்பட்ட தூஉமென்க. பழம் நுகர்ந்து கோடுகளில் இனிதுவைகியும், கவலையின்றித் தான் வேண்டுமிடந்திரிந்தும் பொழுது கழியா நிற்கும் புள் தான் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பருவம் வந்த துணையானே தான் ஒதுங்குதற்குக் கூடுமுடைந்து முட்டையிட்டு அடைகிடந்து குஞ்சு பொரித்து அவற்றை வளர்த்துப்போக்கித் தானும் அக்கூட்டை விட்டுப் போமாறுபோல, ஆணவ விருளின்கண் அறிவு மயங்கித் திரிதரும் உயிர் தானிருவினைப் போகநுகருதற்பொருட்டு இடையே வேண்டப்படுங் குடியில் அவ்வினை பரிபாகமாங் காறும்வைகிப் பின்பதனை விட்டுக் கழியும். இடையொருகாலத்து வேண்டுந்துணையும் ஒன்றில் வதிந்து பின் அதனை யொழித்தொழியும் அம்மாத்திரையே உவமைக்கும் பொருட்கும் உள்ள இன்பமாம்; என்ன? இது தொழிலுவமமாகலின் இங்ஙனங்கொள்ள லறியாது இதன்கண் வேறுவேறினியைபு காணுவான்சேறல் ஆவிரம் பூப்பொன்னோ டொக்குமென்றவழி அதுபோலடித்து நீட்ட வருமோ என்று வினாவுதல் போல் நகையாடுதற் கேதுவாம். அற்றன்று, கூட்டைவிட்டுப் போன புள் மீண்டும் தன்கட் புகுதலுண்மை யால் அதன்கண் அத்தொழிலுவமங்கோடலா காதாமெனின்; அவ்வியல் பறிந்திலாய் புட்கள் எக்காலத்துங் கூடுகட்டு மாறில்லை; தாமடைகிடக்கும் பருவம் வருதலும் அது செய்து அது கழிந்ததுந் தாமுமக்கூட்டினை விட்டுப் போம்; அவை யங்ஙனம் அப்பருவக்கழிவில் அதனையறவே யொழித் தொழித்தலே ஈண்டைக்குவமையாயன்றி நாடோறும் அவை இரைதேடச்சேறலும் பெயர்த்து மதன்கட் புகுதலும் அல்லவாம். அதுவே யுவமையாமென்பதெற்றாற் பெறாது மெனின்; ஆசிரியர், குடம்பைவிட்டு என்னாமற் குடம்பை தனித்தொழிய என்றமையானே பெறுது மென்பது; அக் குடம்பை தன்னுண் ஒன்றுமின்றி வறிதாய்த் தனித் தாழிந்து கிடப்ப என்னும் அச்சொற்களின் ஆற்றலை ஆயுங்கால். அதுவே யாசிரியர் கொண்ட பொருளாமென்பது நன்றுபெறப் படும். அங்ஙனம் பொருள் கொள்ளாக்கால், சுருங்கிய சொல்லாற் பொரு டெரிக்கும் ஆசிரியர் கருத்துக்கு மாறாம் இரண்டு சொற்கள் வெறிதேமிகைபட நின்றுவற்று மென்க. ஆசிரியர் யாண்டும் பயனின்றியே ஒருசொல் நிறுத்தாராகலின் யாங் கூறியதே அவர்கருத்தாமென்று துணிக. அற்றாயின், நீயிருரைத்த பொருளும் பொருந்து மென்றதோடும் பரிமேலழகியார் பொருளும் நுட்பமாயிருத் தலின் அதுவும் பொருந்துமென்று கோடுமெனின்:- பரிமேலழகியார் உரைப்பொருள் ஈண்டைக்கு ஒருசிறிதுமியை யாமையின் அதனையுமங்ஙனம் பொருந்தக் கோடல் சாலாது. அது பொருந்தாமைகாட்டுதும், குடம்பை என்பதற்கு முட்டையென்று பொருள் கோடலே ஆசிரியர் கருத்தாயின் அதற்கியைய முட்டையினின்று குஞ்சு வெளிப்பட்ட தன்மைபோல் என்று பொருள்படுமாறு குடம்பை தனித்தொழியப்பார்ப்பெழுந்தற்றே என்றோதல் வேண்டும். அங்ஙனங் கூறுதலாற் செய்யுள் சிதைதலும் இன்றாம். அது கருத்தாயின் ஆசிரியர் அங்ஙனமே கூறிடுவாரென்பதற்கு ஸ்ரீமந் மாணிக்கவாசகசுவாமிகள் அக்கருத்துக் கூறிய பார்ப்பெனப் பாணனேன் படிற்றறாக்கையைவிட்டுனைப் பூணுமாற்றியேன் என்னுந் திருவாக்கே உறுசான்றாமென்க. அங்ஙனங் குடம்பை யென்னுஞ் சொல்லோடு புள்ளென் பதிணங்காமையின் அதற்கியையப் புள் என்பதாகுக குஞ்சு என்று பொருளுரைத்து இணக்கலே முறையாமெனின்:- ஆசிரியர் தொல்காப்பியனார் பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்றிளமை என்னுஞ் சூத்திரத்தாற் பறவைக்குஞ்சைப் பார்ப்பு என்றும் பிள்ளை யென்றும் வழங்கலேமாகலாமென நிறுவி ஆணைகளும் அவ்வாணைவரம் பழித்து அங்ஙனம் பொருள்கோடல் ஏதமேயாகலானும் பொருந்துவழிக் கௌணப்பொருள் உரைத்தலே நியாயதூவார் துணிபாமன்றி மயரழித்தெல்லா மங்ஙனங் கௌணப்பொருள் கற்பித்தல் அவர்க்குத் துணிபன்றாதலானும்; மரபழித்துப் பொருள் கோடலும், ஆமெனின் நூல்வரன் முறை சிதைந்து பெரியதோர் கலை தடுமாற்றமாய் முடியுமாதலானும் அவ்வாறிணக்கி யுரைத்தல் யாண்டையதென்க. மேலும், புள் என்பதற்குக் குஞ்சு என்ன பொருளுரைத்துமாயினும் அதுகொள்ளும் புறத்தற்று வென்னும் வினை இறக்கையில்லா அப்பார்ப்பினங் கட்குப் பொருந்தாமையானும் அவ்வாறு பொருள் சொல்லுதலா மாதென்பது. அற்றன்று பறந்தற்று என்னும் வினைக்கும் விரைவில் வெளிவந்தவாறு போலாம் எனக் கௌணப் பொருளுரைத்து இயைத்துக்கோடுமாம் பிறவெனின்:- சொற்களின் வன்மைமென்மையறிந்து பொருளுரைத்தல் வேண்டும் என்னும் மீமாஞ்சை நூற்பொருளறியாது கூடா யினாய் புறந்தற்று என முள் இலேகிலிணங்கிய பொருள் பயக்கும். இவ்விரண்டு சொற்களுக்கேற்பக் குடம்பை என்னும் ஒரு சொல்லுக்கு வழிவிடல் வேண்டுமே யன்றி குடம்பை என்னும் இவ்வொரு சொல்லுக்கேற்ப அவ்விரண்டு சொற்களுக்கும் முக்கியப்பொருள் சொல்லி இடர்ப்படுதல் பெரியதோரிழுக்காம். அதுஎல்லாமலும், குடம்பை என்னுஞ் சொற்குத் தொல்லாசிரியர் நூலுரைகளில் கூடு என்னும் பொருளேயன்றி வேறு பொருள் காணப் படாமையானும் அச்சொல்லுக்கும் முக்கியப் பொருளை விடுத்து முட்டை என்னுங் கௌணப்பொருள்சொல்லி இங்ஙனம் அவ்வவம டக்கியமுழுதுமுள்ள சொற்கட் கெல்லாம் ஏதுவு நியதி கூறிக் கொண்டுபொருள் சொல்லி மவுபடுக் கொரியதோர் திரிபுணர்ச்சியாய் முடியுமென்றொழிக. இன்றின்மை பாவி டத்து ஒரு இலக்கியத்துள் ஏனைச் சொற்களின் வன்மைக்கேற்ப, யாதேனுமொரு சொல்லுக்குப் பொருந்து மாற்றாற் கௌணப் பொருள் கூறுதல் தொல்லாசிரியர் வழக்காவதன்றித் தமக்குத் தோன்றியவாறெல்லாம் அங்ஙனஞ் செய்தலன்றென்பது கடைப்பிடிக்க. இங்ஙனம், தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார் கருத்துறுபொருளை இனிது விளக்கும். இத் திருவாக்கின் பெற்றிதேறாது தமக்கு வேண்டிய வாறேபொருள் கூறிய பரிமேலழகிய உரையினை, மிக நுணுக்கிய அறிவும் நிகரில்லாப் பழந்தமிழ் நூற்புலமை யுமுடையவர் ஆசிரியர் நச்சினார்க்கினியர் மிறாதுகேட்டிருந்த ரென்றலும், அதுவே யன்றி அளவுரைக்குந்து அவரைத் தழீஇக் கொண்டா ரென்றலுங் கொள்ளற் பாலனவல்ல. இதனாற் பரிமேலழகியார் நுட்பவுரையாசிரியரல்லரெனவாதல். அவருரையெல்லாம் புரைபடுவன வென்றாதல்கோடல் எம்முடைய கருத்தா மாறில்லை. பெரும்பான்மையாற் சொற்பொருட்டிட்ப நுட்பமுடைய விழுமியவுரை மற்றதுமா மென்பது அவ்வுரை யெழுதிய பரிமேலழகியார் எம்மனோரால் விழுத்தப்பட்டு அறிவுரை நற்பெரும் புலவரோமென்பதும் எமக்குத் துணிபு. ஆயினும், ஒரோவிடங்களில் ஆசிரியர் கருத்தறியாது உரையிட்டார்; என்னை நூலுரை போத்தாசிரியர் மூவரும், முக்குணவசத்தான் முறைமறந் துரைத்தலியல்பாகலின், அவர் இங்ஙனம் ஆசிரியர் கருத்தறியா துரைத்தனவெல்லாம் சமயம் வாய்க்கும் போழ்து சிறிதுசிறிதுகாடலறுத்து உண்மைப் பொருள் நிலையிடுங்கடப்பாடுடையோம். இங்ஙனம் இருவ ராசிரியர் சீறுகொண்டோர்க்கும் பொருள்களுள் ஒருதலை துணிதலென்னு மதம்பற்றியிதனை யிழுக்கவொரு... இனி, இவ்வாராய்ச்சியால் குடம்பை தனித்தொழிய என்னுந்திருவாக்குப் பரிமேலழகியார் கூறுமுரை ஒருவாற் றானும் பொருந்துமாறில்லை யென்பதூஉம், அதற்குப் பண்டை யுரையாசிரியர்கூறிய கூடுதலளித்தொழிந்து கிடப்ப அதனுள் முன்வைகிய பறவை பறந்துபோனவாறு போல் என்னுமுரையே தொன்னூலாசிரியர் வழக்கறிந்த மெய்யுரையாமென்பதூஉம், நிகரில்லா பண்டை யுரையாசிரியரான நச்சினார்க்கினியர் அவரோ சீடருகிருந்து கேட்டாராயின் அதனை அவர் மருமொழியாராகலான் அவர் அவரோடொரு காலத்தவர்க் கொப்பதூஉம் இனிதெடுத்து விளக்கப்பட்டன. தமிழ் வடமொழியினின்று பிறந்ததாமா? (முதலிதழ்த்தொடர்ச்சி) நூலிற் பயிற்சி செய்யப்படும் எந்தப் பாஷையும் பிறிதொரு பாஷைக்குத்தாயகமாதல் ஒருவாற்றானுமில்லை எனத் தந்துணிபுநிலையிட்டார். இது கிடக்க. இனி, ஒரு பாஷை பிறிதொன்றிலிருந்து பிறந்ததென்றுரைப்பார். உண்மைக் கருத்தும், ஒன்று ஒன்றற்கு இனமாமென்பதை யறியுமாறும் வடமொழியிலிருந்து சில சொற்கள் தமிழிலுந் தமிழிலிருந்து சில சொற்கள் வடமொழியிலும் வழங்குதல்பற்றி ஒன்று ஒன்றினின்று பிறந்ததென் றுரைப்பாருரை பாஷா தத்துவ ஞான முடையரல்லாதார் கூறும் வழுவுரையாமாறும், தமிழிலிருந்து வடமொழியில் வழங்குஞ் சொல்லுற்பத்தி முறையுஞ் சிறிது விளக்குவாம். ஒரு பாஷை ஏனையதொன்றிற் பிறந்ததென்பார் கருத்துண்மை யாராயுமிடத்துப் பண்டொரு காலத்து ஒருமொழியினை வழங்கிய மக்கள் தாம் ஒருமித்து உறைந்த இடம்விட்டுப் பெயர்ந்து பல்தேய நோக்கிச்சென்று ஆங்காங்கு வதிதருங்கால் தத்தமக்கியைந்தவாறு தஞ்சொல்லை வேறு படுத்து வழங்க, அவ்வழங்கல் வேறுபாட்டால் அவர் முன் பேசிய ஒரு சொற்றானே பிற்காலத்து வேறுவேறு சொற்களாய் நிலைபெறுவதாயிற்றென்னும் நியதி இனிது விளங்காநிற்கும். எமது செந்தமிழ் நாட்டின் கண்ணேயும் மதுரை நெல்வேலி முதலான பாண்டிநாட்டின் தமிழ்ச்சொல் வழக்கு ஒருவாறு நிலைபெறுகின்றது. செங்கற்பட்டு சென்னை முதலான தொண்டை நாட்டின் வழக்குப் பிறிதொருவாறாய் நடைபெறு கின்றது. கொழும்பு யாழ்ப்பாணம் முதலான ஈழநாட்டின் வழக்கு வேறொருவாறாய் நிலையுதலுறுகின்றது. இந்நாற்பெருந் தேயத்தார் தமக்குள்ளும் ஓர் ஊரார் சொல்வழங்குமுறை ஒன்றாம். மற்றோர் ஊரார் வழங்குமுறை மற்றொன்றாம். இவ் ஓரூராருள்ளும் ஒரு குடியிலுள்ளார் ஒருவகையானும் பிறிதொரு குடியிலுள்ளார் பிறிதொரு வகையானுந் தத்தமக் கியைந்தவாறு சொற்களை வழங்குகின்றார். இங்ஙனம் ஒரு குடியிலுள்ளார் மற்றோர் குடியிலுள்ளாரோடும், ஓரூரிலுள் ளார் மற்றோர் ஊரிலுள்ளாரோடும், ஒரு நாட்டிலுள்ளார் பிறிதொரு நாட்டிலுள்ளாரோடும் உறவுரிமையானும், உழவுரிமையானும், வாணிக வுரிமையானும் அளவளாவு தலின்றித் தனித்தனியே யிருந்து காலங்கழிக்க நேருமாயின், இவர் தத்தம் விசேட வேறுபாட்டுடன் வழங்குஞ் சொற்கள் நெடுங்காலங் கழிந்த பின்னை வேறுவேறு பாஷைகளாய்க் காணப்படுமென்பது தேற்றமாம். அதிட்டவசத்தாற் றமிழ் அங்ஙனந் திரிவுபடாமை அதனை வழங்கும் மக்களெல்லாரும், நீராவியந்திர சகாயத்தானும் கடிதப்போக்குவரவானும் பிறவாற்றானும் ஒருவரோடொருவர் விராயத் தத்தமக்குரிய விசேட வழக்குவேறுபாடு தோன்றாவண்ணம் அதனைப் போற்றிப் பொதுவகையாலொத்து வழங்கும் ஒழுகலாற்றாற் செந்தமிழ் தன் பண்டைவழக்குச் சிதையா இளமைக்கோலத் தொடு வளமிகப் பொலிகின்றது. இனிப்பல்லாயிர வாண்டுகட்கு முன்னதான பண்டைக்காலத்தே பழந்தமிழ் வழங்கிய மக்கள் தந்நாடு துறந்து புறம்போந்து பல நாடுகளிற் சென்று வைகியனார்; வைகியபின், இக்காலத்திற்போல அஞ்ஞான்று இலேசிலே ஊர்ப்பயணம் போதற்குபகாரப்படும் நீராவி யந்திரங்களும் சமாசாரங்கள் போக்குதற்குதவியாகுந் தவால் நிலைகளும் பிறவுமில்லாமையால் தத்தமக்கேற்ற பெற்றியால் தமிழ்ச்சொற்களைத் திரித்து வழங்கினார்; இங்ஙனம் ஒருவரை யொருவரறியாமல் தத்தம் நாடுகளி லிருந்தவாறே வாழ்க்கை நிகழ்த்திவந்தமையால் பிற்காலத்தே அவர்பேசும் பாஷைகள் தமக்குள் இனமுடையன வல்லபோல் தோன்றுகின்றன; கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு முதலிய பாஷை களெல்லாம் இங்ஙனந் தமிழ் வழங்கிய தொன்மக்கள் வேறு பிரிந்து வேறிருந்து வாழ்ந்தமையா லுற்பத்தியான பழைய தமிழ்ச் சொற்றிரிவுகளேயாம்; வேறு அவை தனித்தனிப் பாஷைக ளல்லவென்று துணிக. இவ்வாறே வடநாடுகளினும் பண்டைக்காலத்தொன்றாயிருந்த ஆரிய மொழி யொன்று தானே இலத்தீன், கிரேக்கு, சமக்கிருதம், ஆக்கன், அம்பிரியன், ஆங்கிலோகாக்கன், பழையபிரிசியன், காதிரு முதலான பல்வேறு சொற்களாகப் பிளவுபட்டதென்க. இதனால், ஒருமொழியிற் பிறந்தன என்பதன்கருத்துப் பழைய நிலையில் ஒன்றாயிருந்த ஒரு பாஷைதானே புதுநிலையிற் பலவாறாகப் பிரிதலுறு வதாயிற்றென்பதும் அதனால் அவையொன்றோ டொன்று இனப்படுதலும் நனிவிளங்குதலின் ஒரு பாஷையிலிருந்து பிறிதோர் பாஷை பிறக்குமென்று உண்மையுணராது வாதிடுவார் கூற்றுப்பொருந்தாமைகாண்க. இது நிற்க. இனி, ஒரு சொல் மற்றொன்றோடினமாமென்பதனை யறியுமாறு காட்டுவாம். பிண்டொருநாள் மக்களெல்லாம் சொற்சொல்லுமாற்றியாது மிக்கதோர் அநாகரிக நிலையி லிருந்தார். அப்போது அவர் தங்கேளிரோடு செறியவிருந்து தங்கருத்தினை அவர்க்குப் புலப்படுத்தலெல்லாங் குறிகளாற் செய்துபோதருவாராயினார். அங்ஙனம் பேர் தருங்கால் இடர்ப்பாடுடையராய் இலேசிலே தங்கருத்துத் தெரிக்குங் கருவியுணர்ந்து சொற்சொல்லத் தொடங்கினார். அங்ஙனந் தொடங்குகின்றுழித் தமக்கு அவ்வநாகரிக நிலையினும் இன்றியமையாது வேண்டப்படும் பொருடெரிப்பதற்கே சொற்குறிதருதற்கு ஒருப்படுவாராதலால் அவ்வநாகரிக நிலையில் முதன்முதற் றோற்றமுற்றெழுந்த சொற்களானேதாம் பிற்காலத்தவற்றினை அடிப்படையாகக் கொண்டெழுந்த பாஷைகள் தம்முளினமுடையவாதல் உணரப்படும். அவ்வாறு அவ்வநாகரிகநிலையில் உற்பத்தியான சொற்கடாம் யாவையோ வெனிற் காட்டுதும். அநாகரிக மக்கள் முதன் முதற் சொல்லு ரைப்பத் தொடங்கிய காலையில் பேசுகின்ற தம்மையும், தாய்மொழி அது முன்னின்று கேட்போரையும், தாம் பிறர் ஒருவரைச் சுட்டியே முன்னின்றா ரொடு பேசவேண்டியி ருத்தலால் அங்ஙனம் பேசப்படுவோரையுங் குறிப்பிடுதற்குரிய சொற்களறிந்துரைத்தார். அவைதாம், நான், நாம் என்னுந் தன்மைப்பெயரும்; நீ நீர், என்னும் முன்னிலைப்பெயரும், அவன், அவள், அவர், அது, அவை என்னும் படர்க்கைப் பெயருமாம். ஆதலின், இவ்விடப்பெயர்கள் ஒப்புமையாற் பாஷைகள் தம்முள் இனமுடையவாதல் தெளியப்படும். பின்னர், அம்மக்கள் அங்ஙனமுரையாடுங்கால் இவரெமக்கு இன்ன கேளுரிமையுடையார். நுமக்கு இன்னவுரிமை யுடையா ரென்று அறிவுறுத்துகின்ற சொற்களறிந்துரைப்ப. அவை, அம்மை, அப்பன், பிள்ளை, கணவன், மனைவி, அண்ணன், தம்பி, அக்கை, தங்கை முதலானவாம்; இம்மறைப் பெயர் களானும் பாஷைகள் இனமுடைமை தேறப்படும். பின்னர், தாம் உய்யும்பொருட்டு வேண்டப்படும் பொருட்பெயர் அறிந்து வழங்குவர். அவை காய், கனி, கிழங்கு, இலை, நெல், தினை, வரகு, நீர், பால், தேன் முதலியனவாம். முவ்வுணவுப்பொருட் பெயரானும் பாஷை ஒற்றுமை நன்கறியப்படும். பின்னர், இவ்வுணவுப்பொருள்களை இத்துணையென அளந்தறிதற்கு வேண்டப்படும் பெயர்களை அறிந்து சொல்வர். அவை, ஒன்று, இரண்டு, மூன்று முதலான எண்ணலவைச் சொற்களும், தோடி, பலம், விசை முதலான எடுத்தலளவைச் சொற்களும் சாண் அடி, முழம் முதலான நீட்டலளவைச் சொற்களும், ஆழாக்கு, உழக்கு, படி, குறுணி, பதக்கு முதலான முகத்தலளவைச் சொற்களுமாம். ஆகவே, இவ்வெண்ணுப்பெயர்களானும் பாஷை போற்றுமை கண்டறியலாம். பின்னர், இவ்வுணவுப்பொருளை வைத்துண் ணுங் கலங்கள் வேண்டப்படுமாதலின் அக்கலங்களின் பெயர் தோன்றாநிற்கும். அவை குடுவை தாழி, பானை, கலயம், அகப்பை முதலியனவாம். ஆக, இக்கலப்பெயரானும் பாஷை யினியைபு காணக்கிடக்கும். பின்னர், இவர் மழையினும் வேனிலினும் ஒதுக்கும் இடங்களின் பெயர் தோன்றும். அவை, குடில், முழை, வீடு முதலியனவாம். எனவே இவ்வுரையின் பெயரானும் பாஷாசம்பந்தம் அறியப்படும்; பின்னர் இவர்க்கு நாடோறும் பொருந்தவேண்டும் ஐம்பெரும் பூதங்களின் பெயர் தோன்றும். அவை, மண், நீர், தீ, கால், வான் என்பனவாம். இப்பூதப் பெயரானும் அவற்றினியைபுவிளங்கும். பின்னர், இவ் நாடொறுங்காணும் விலங்கினங் களின் பெயர் உண்டாகும். அவை, ஆடு, மாடு, எருமை, நாய், பூனை, பன்றி, புலி, யானை முதலியனவாம் என இவ்விலங்கின் பெயரானுஞ் சொல் லொற்றுமை புலப்படும். பின்னர், தம்முடம்பின்கண் உள்ள உறுப்புக்களைக் குறிப்பிட வேண்டுதலின் அவற்றிற்குப் பெயரிடுவர். அவை, தலை, முகம், கழுத்து, மார்பு, கை, வயிறு, தொடை, கால் அடி முதலியனவும் கண், காது, மூக்கு, வாய், நா, விரல், உதிர், மயிர் முதலியனவுமாம்; ஆகவே, இவ்வுறுப்புப் பெயரானும் மொழியொற்றுமை தேறப்படும். இனி, இவ்வாறெல்லாம் இவர் பொருள்கட்குப் பெயரமைக்குமாறு அறிந்தபின் தாமி னிகழ்த்தும் வினைகட்குப் பெயரிடுவர். அவை நட, இரு, போ, வா, உண், தின், குடி, பார், கேள், சொல் முதலியன வாம். ஆகையால், இவ்வினைப்பெயரானும் பாஷைகளினப்படு மாறு தெரியலாம். இவ்வாறெல்லாம் யாம் பகுத்துக்காட்டிய தொகுதிப்பெயர்கள் பத்தானும் இருவேறு பாஷைகள் ஒப்புமையுடையவாதல் காணப்படுமாயின். அவை யிரண்டும் முன்னொருகாலத்து ஒரு சொல்லாயிருந்து பின் வேறுபட்டன வாமென்பது நன்குபெறப்படும்; மற்று இப்பத்துவகைப் பெயர்களானும் அவை யிரண்டும் இயைபுடையவல்லவாதல் துணியப்படு மாயின். அவை யிரண்டும் பிற்காலத் தொன்றோ டொன்று பெரிதுமருவி வழங்குமாயினும் அதுபற்றி அவை யினமுடையவென்று கொள்ளுதற் கிடம்பெறாவாய் வேறு வேறு நிலையுமிலக்கணத் தவாமென்பது துணியப்படுமென்க. இது நிற்க. இனிமேலே காட்டிய பரிசோதனையால் தமிழும் வடமொழியுந் தம்முள் ஒரு சிறிதும் இயையாத வேறு வேறு பாஷைகளாமென்பது நிறுத்தமுறையானெடுத்து விளக்கு வாம். முன்னர் அவ்விருமொழிகளின் இடப்பெயர்களை யாராய்வாம். தமிழில் நான், நாம் என்பன நன்மைப்பெயர். வடமொழியில் அகம், வயம் என்பன தன்மைப்பெயர். தமிழில் நீ நீர் என்பன முன்னிலை வடமொழியில் தவம், யூயம் என்பன முன்னிலை, தமிழில் அவன், அவள், அவர், அது, அவை என்பன படர்க்கை வடமொழியில் அஸௌ அமி அமூ: அத: அமுனி என்பன படர்க்கை; இவை வேறாதல்காண்க. இனி முறைப்பெயர்கள் வருமாறு:- தமிழில் அம்மை அப்பன் வடமொழியில் மாதா, பிதா, தமிழ் பிள்ளை வடமொழி சுக, பால; தமிழ் கணவன் மனைவி, வடமொழி, பதி; வல்லபபார்யா; தமிழ் அண்ணன் தம்பி வடமொழி அக்ரஜா ப்ராதா; தமிழ் அக்கை - தங்கை, வடமொழி ஸவஸா இவை வேறாயின; பின்னர் உணவுப்பெயர்:- தமிழ் காய், கனி; வடமொழி சலாடு பலம், தமிழ் நீர் பால் தேன் வடமொழி ஜலம் பய மது; இவையும்வேறாதல்காண்க. இனி, எண்ணுப்பெயர்:- தமிழ் ஒன்று, இரண்டு, மூன்று, வடமொழி ஏகம், த்விதம், த்ரிதம்; இவையும் வேறாதல்காண்க. இனிக்கலப் பெயர்:- தமிழ், குடுவை தாழி பானை, வடமொழி குண்டம் மந்திரி கடம்; இவையும் வேறாதல் காண்க. இனி, உறையுளின் பெயர்:- தமிழ் முழை, வீடு, வடமொழி குகர, திருதம்; இவையும் வேறாம் இனி, பூதப்பெயர்:- தமிழ் மண், நீர், தீ, கால், வான், வடமொழி பிருதிவி அப்பு தேயு வாயு, ஆகாயம், இவையும் வேறாம் பின்னர் விலங்கின் பெயர்:- தமிழ் ஆடு, மாடு, எருமை, நாய், பூனை, பன்றி, புலி, யானை, வடமொழி அஜம் மகிஷ சுநக மார்ஜ் ஜாலம் வராகம் வியாத்ரம் தந்தி; இவையும் வேறாயின பின் உறுப்பின்பெயர்:- தமிழ் தலை, முகம், கழுத்து, வடமொழி சிர, வதநம், கண்டம்; இவையும் வேறாயின. இனி வினைப்பெயர்:- தமிழ் நட, இரு, போ, உண், தின், குடி, பார், கேள், தொல் வடமொழி சர், அ, கம், ஏ, அத், பக்ஷ், ப, ளு, வத், இவையும் வேறாயின. இங்ஙனம் எடுத்துக்காட்டிய முதல் சொற்கள் இவ்விருவகை மொழியினும் ஒரு சிறிதும் இயைபுபடுதலின்றி வேறு வேறாக நிற்றல் இனிது காணப்படுதலின் இவை ஒன்றோடொன்று இனப்படும் பாஷைகளல்லவென்பது பிடிக்க, இனி. மேலே குறிப்பிட்ட பத்துவகையான தமிழ் முந்துற்பத்திச் சொற்க ளெல்லாம் கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளுவு, குறும்ப, இருள், எர்க்கலர் ஏனாதி முதலான பாஷைகட்கெல்லாம் பொதுவாய் ஒரு பெற்றிப்பட நிற்றலின் அப்பாஷை தம்முள் ஒழுக்க முடைய ஒரு தொகுதியாமென்பதூஉம். இத்தொகுதி மொழியு மானு தொன்னாளில் ஒரு மொழியான தமிழ் மொழி யாயிருந்து பிற்காலத்து வேறு வேறு பிரிந்தனவா மென்பதூ உம் இவ்வியைபு பற்றி உணர்ந்துகொள்க. இது நிற்க. இனி, தமிழும் வடமொழியும் முதலுற்பத்திச் சொற்களிற் றம்முளியையாமை காண்டுமாயினும், வடமொழிச் சொற்கள் பல இஞ்ஞான்றைத் தமிழிற் பெரிதுகல்வி வழங்கலென்னை யெனின்:- வடநாடுகளில் இருந்து ஆரியர் அந்நாடுவிட்டுப் பெயர்ந்து தமிழ்நாட்டகத்தே குடிப்புகுந்தார். புகுதலும் விருந்தோம்பல் வாழ்க்கையிற் சிறந்தோரான தமிழ் நன்மக்கள் அவரையேற்று அவரோ டொருமித்து வாழ்வாராயினார். அவ்வாறு ஒருமித்து வாழுநாளில் ஆரியர் வழங்கிய வட மொழிச் சொற்கள் தமிழினும், தமிழர் வழங்கிய செந்தமிழ்ச் சொற்கள் வடமொழியினுங்கலந்து நிலைபெறுவவாயின வென்க. இங்ஙனங்கலத்தல் உலகவியற்கையாம். இஞ் ஞான்றும், ஆங்கிலமக்கள் எம்மோடு விரய வாழ்தலால் கோப்பி விலில் போத்தல், புத்தான், தாலகிராமம், கோப்பை கோட்டு முதலான அவர் பாதைச் சொற்கள் தமிழினும் கட்டுமரம், தோப்பு, கஞ்சி, பஞ்சு முதலான தமிழ்ச்சொற்கள் ஆங்கிலத்தினும் நடைபெறு கின்றன. முன்னும் மொகலாயர் இந்நாடுகளை அரசாண்ட காலத்து அவர் சொற்களும் விராயின; துருக்தர் கொடுங்கோ லோச்சியபோதும் அவர்க்குரிய சொற்கள் அவ்வாறே கலந்தன; மகாராட்டிரர் அரசுபுரிந்த நாளினும் அங்ஙனமே அவர் சொற்களும் இங்கே இடை, நுழைந்து வழங்கின. ஆரியர் மிக நெருங்கிப்பழகாத பண்டைநாளில் எழுதப்பட்ட தமிழ் நூலுரைகளில் வட சொற்கள் காணப்படாமையும், அவர் சிறிது நெருங்கத் தொடங்கிய நாளில் எழுந்த தமிழ் நூலுரைகளில் அதன் சொற்கள் அருகி ஒரோவிடத்து வருதலும், அவர் மிக நெருங்கிய பிற்காலத்து அச்சொற்கள் மிக விராவுதலும் யாங்கூறும் உரையினை நிறுத்தும் பிரமாணங் களாம். அற்றேல் அஃதாக, வடமொழிச்சொற்கள் தமிழிற் பெருவரவினவாய்ப் புகுந்தவாறுபோலத் தமிழ்ச்சொற்களும் அதன்கட்புகுதாமை யென்னை யெனின்:- பண்டே வடமொழி உலகவழக்கொழிந்து இறந்து பட்டமையால் பிற்காலத்து அதன்கட்டமிழ்ச் சொற்கள் புகுதற்கு இடம் பெறாவாயின், யாண்டும் உலகவழக்கொழியா இருமொழிகள் ஒருங்கு சேர்ந்தா லவற்றின் சொற்கள் தம்முள் விராவுதலல்லது, உலக வழக்கிறந்த சொற்கள் அங்ஙனம் விராவுதலில்லையாம். அற்றேல், வடமொழி யிறந்து பட்டமையின் அதன் சொற்கள் தமிழில் வந்து புகுதலென்னை யெனின்:- அறியாது கடாவுகின்றாய்; இறந்துபட்ட ஒருமொழி நெடுக ஒழுகாது ஓரிடத்து அமைந்து நிற்கும் நீர்நிலை போல்வதாம்; உலகவழக்குடையமொழி நீர்ப்பெருக்குற்று இனிது ஒழுகும் யாறு போல்வதாம்; யாற்று நீர் வறக்கும்வழி நீர்நிலையின் வரம்பை ஒரு புடையறுத்து யாற்றுக்கு நீரூட்டிப் பின் அவ்வரம்பைத்தடைசெய்தல் போல், உலகவழக்கின்கட் செல்லும் பாஷை காலத்திரிபுக்கும் நாகரிக வளர்ச்சிக்கும் ஏற்பச்சொற்கள் பெறும்பொருட்டு இறந் தொழிந்த பாஷைச் சொற்களைக் கையரிக்கொண்டு அவ்வாற்றாற் றான்பயப்பாடு பெரிதுடைத்தாய் இனிது நடை பெறாநிற்கும். இவ்வியல்பிற் கிணங்கவே உலகவழக்குடைய தமிழ் உலகவழக்கில்லா வடசொற்களைக் கொடுத்துத் திரித்துப் பயன்படுத்து அவ்வடமொழிக்கும் ஒருபெருமை தோற்றுவிக்கின்றது. இவ்வாறே ஆங்கிலபாஷை, இலத்தின் கிரேக்கு முதலான இறந்தொழிந்த பாஷைச்சொற்களை எடுத்துப் பயன் படுத்துதலும் இதனோடொத்து நோக்கற் பாலதாம். இவ்வியல் பறியவல்லார் வடசொற்கள் பிற் காலத்துத் தமிழிற் பெரிது புகுதல்பற்றி இழுக்கில்லை யென்பதுணர்வர் என்க. இஃதிங்ஙனமிருப்ப, முன்னாளில் ஆரியர் தமிழரோ டொருங்குறைந்த காலத்துத் தமிழ்ச்சொற்கள் பல வடமொழி யிற் புகுந்து நடைபெறுவன வாயின. அவை தமிழ்ச் சொற் களென்று அறியமாட்டாது ஆரியபண்டிதர் சிலர், அவை வடசொற்களேயாமென்றும், அவ்வடசொற்களையே தமிழர் எடுத்து வழங்கினாரென்றும் மொழிகளின் இயற்கையறியா துரைத்து ஏதம்படுகின்றார். அங்ஙனம் உரைப்பாருரை அறிவுநுண்மையின்றிப் போலியாதல் தெரிக்குமுகத்தான் வடமொழியிற்புகுந்த தமிழ்ச்சொற்களிற் சிலவற்றை ஈண்டுத் தந்துகாட்டி அவற்றிற் குற்பத்தி கூறுவாம். அவ்வாறு உற்பத்திகாண்பதற்கு உரிமையுடைய கருவிகள் கண்டாலல்லது. இருமொழியினும் ஒப்பவழங்கும் ஒரு சொல்லை ஒரு மொழிக்கே உரியதெனக்கிளத்தல் நியாயவுரை யாகாமையான் அக்கருவிகள் சில ஈண்டுக்குறித்திடுவாம். ஒருசொல் வடமொழியில் அருகிய வழக்கமுடையதாய்த் தோன்றித் தமிழிற் பெருகிய வழக்குற்று நிகழுமாயினும் அச்சொல்லு ணர்த்தும் பொருளைச் சுட்டுஞ்சொற்கள் வடமொழியிற் பலஇருப்பத் தமிழில் அப்பொருளையுணர்த்த அச்சொல் ஒன்றே வழங்குமாயினும், அச்சொல் வடமொழியோடினப் பட்ட பாஷைகளிற் காணப்படாதாகத் தமிழோடினப்பட்ட பாஷைகளில் அதுபெரிது காணப்படுமாயினும், அச் சொல்லுக்கு வடமொழி வல்லார் கூறும் உற்பத்திப்பொருள் உலக வியற்கைக்கும் அறிவு நுட்பத்திற்கும் இயையாதொழியத் தமிழ் நூன்முறைப்படி சொல்லும் அப்பொருள் அவ் விரண்டிற்கும் மிகப் பொருந்துமாயினும், அச்சொல்லுக்கு வடநூலார் கூறும் முதனிலையிலிருந்து வடசொற்கள் பல தோன்றாவாகத் தமிழ் நூன்மரபிற்கேற்ப அதற்குச் சொல்லப் படும் முதனிலையினின்று பல தமிழ்ச்சொற்கள் தோன்றி நடைபெறுமாயினும், அச்சொற்பொருள் வட மொழியில் உவம உருவக இயைபான் வழங்கப்படுவதாகத் தமிழில் அம்முதனிலைப்பொருளே பொருந்தக்கொண்டு நிலவு மாயினும் அவ்வொருசொல் வடமொழிக்குரியதன்று மற்றுத் தமிழிற்கே உடைமை யாமென்க. இனித்தமிழிலிருந்து வடமொழியிற்போய் நடைபெறுந் தமிழ்ச்சொற்கள் சில வருமாறு:- ஆணி, அடவி, கடு, கலா, குடி, குண்டம், கூனி, குளம், கோட்டை, சவம், சாயா, பட்டினம், பாகம், மீனம், வளையம், நாரங்கம், முகம் முதலியன. இவற்றுள் ஆணி அடவி என்னுஞ்சொற்கள் அள் என்னும் முதனிலையிற் பிறந்தனவாம்; அள் என்னும் முதனிலை நெருங்கு என்னும் பொருளை உணர்த்துவது, இப்பொருட் டாதல் அள்ளூறித்தித்திக்கும் என்னுந் திருவாக்கினும் ஆசிரியர் நச்சினார்க்கினியர் சிந்தாமணியுரை யினுங்கண்டு கொள்க. விரல்களை நெருக்கி நீர்முகத்தலால் அள்ளல் முகத்தலென்னும் பொருளும்உணர்த்தும்; இம்முகத்தற் பொருளும் அதன்கண் உண்மைபற்றிஅளவு அளவை என்பனவும் அம்முதனிலையிற் பிறக்கும்; ஒருவரோடொருவர் நெருங்கிப்பழகுதலால் அளவுதல் அளாவுதல் என்பன கலத்தல் என்னும்பொருளை உணர்த்தி அதனினின்றே பிறந்தன; குறுகிய இடமுடைத்தாதல் பற்றி அளை என்பதும் இம்முதனிலையில் தோன்றிற்று, இது பற்றியே மிகக்குறுகிய இடத்தை நெரிசலான இடம் என்றுவழங்குப. ளகரம் ணகரமாகத் திரியுமியல் புடைமையால் அள் எனும் முதனிலை அண் என்றாய் அருகு என்னும் பொருளை உணர்த்தும்; இம்முதனிலையினின்று அண்ணல் என்பது உண்டாயிற்று. இதன்பொருள் தன்னுடன் நெருங்கப் பிறந்தவன் என்றால் தன்னுடன் பிறந்தானென்பது, இவ் வண்ணல் எனுஞ்சொல் பிற்காலத்து லகரம் னகரமாய்த் திரிந்து அண்ணன்என வழங்குகின்றது; இன்னும் இம் முதனிலை யினின்று அணவுதல், அணில், அணு, அணை என்பன உண்டாம்; முறையே இவற்றின் பொருள் நெருங்குதல், மரக் கிளையில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு விலங்கு, மிகச்சிறியது, நீரை நெருக்கித்தடைப்படுத்துவது அல்லது தழுவு தழுவப் படுவது என்பனவாம்; இவ் அண் என்னும் முதனிலை நீண்டு ஆண் என வாய்க்கருவிப் பொருளையுணர்த்தும் இவ்விகுதி புணர்ந்து ஆணி என நின்று மாத்தில் நெருங்கும் இரும்பினை உணர்த்தும். இனி, இவ் அள் என்னும் முதனிலை நெருங்கு என்னுந் தன்வினைப்பொருளை யுணர்த்துதலால் இதனைப் பிறவினைப் படுத்தும்பொருட்டுத் தகரவிகுதிபுணர அம் முதனிலை அட் என நின்று பிறவினைப் பொருளை உணர்த்தும்; இதிலிருந்து அடகு, அடல், அடலி, அடி, அடுக்கல், அடுப்பு, அடை, முதலியன பிறக்கும்; முறையே இவற்றின் பொருள் ஒருவனிடத்து ஈடாக நெருக்கப்பட்ட பொருள், பகைவனை நெருக்கிக்கொல்லல், மரங்களால் நெருக்கப்பட்ட காட்டிடம், நிலத்தொடு பொருத்தப்பட்ட உறுப்பு, ஒன்றொ டொன்று நெருக்கப்பட்ட பக்கமலை, தீயினை நெருக்கி எரிப்பது, இரண்டுதரம் நெருக்கப்பட்ட அப்பம் என்பனவாம். ஒரோவொருகால் இம்முதனிலையின் பிறவினைப் பொருளை மறந்து அர்விகுதி கூட்டித்தன்வினைப் பொருள்பட அடர்தல் எனவும் வழங்குப; இஃதருகிய வழக்கமாதலானும் அட் என்னும்பகுதி பிறவினைப்பொருள்பட நிற்றலே பெருவரவின தாகலானும இதற்குரிமையுடையது பிறவினைப் பொருளா மென்றே துணிக. இவ்வாற்றால் ஆணி, அடவி யென்னுஞ் சொற்கள், தமிழிற் பெருவரவிற்றாய் நடைபெறும் அள் என்னும் முதனிலையினின்று பிறந்து தமிழில் நடைபெறுதலானும், வடமொழியிலவற்றிற்கு இங்ஙனம் உற்பத்திகூறலாகாமை யானும், இவை தமிழோடினப்பட்ட எல்லாமொழி களினுங் காணக் கிடப்ப வடமொழியோ டினப்பட்டவற்றுட் காணப் படாமையானும் இவை தமிழுக்கே உரியனவா மென்க. இனிக்கடு என்பது கள் என்னும் முதனிலையிற் பிறந்தது. தென்னை, பனை, ஈந்து முதலான மரங்களினின்று இறக்கப்படும் இரசம் கள் எனப்படும். இது காரமுடைய பொருளாதலால் இம்முதனிலையினின்று பிறக்குஞ்சொற்களெல்லாம் அப் பொருண் மேலாகவே வருவனவாம். இதிற்பிறப்பன களர் களா களிமுதலியன; முறையே இவற்றின்பொருள் காரமான உவர்நிலம், உவர்ப்பான ஒருகனி, காரத்தினாலுண்டான மதர்ப்பு என்பன. இனி இக்கள் என்னும் முதனிலை வினையாய்ப் புடைபெயர்ச்சி உணர்த்துங்கால் பறித்தல் என்னும் பொருளுந்தரும்; இப்பொருட்பேறுள்ள சொற்கள் கள்வன் களைமுதலியன; கள்வன் பிறர்பொருளைப் பறிப்பவன்; களை பறிக்கப்படுவது, காரமுடைமை யுணர்த்துங் கள் என்னும் பெயரை வினைப்படுத்தும் பொருட்டு இ விகுதி புணர்ந்து இரண்டுங் களியென வேறோர் முதனிலையாய் நின்று களிப்பு, களித்தல் முதலான சொற்களைப் பிறப்பிக்கும். பறித்தற் பொருளை யுணர்த்துங் கள் எனும் வினைப்பகுதியோடு ஐ யென்னும் பகுதிப்பொருள் விகுதிபுணர இரண்டுங் களை என்னும் வேறோர் முதனிலையாய் நின்று களைதல் களைவு முதலிய சொற்களைப்பிறப்பிக்கும். இனிக் கள் என்னும் பெயர் முதனிலையை வினைப்படுத்திக் காரமுடைமை என்னும் அதன்பொருளை மிகுதிப் படுத்துந் தகரவிகுதிபுணர இரண்டும் கட் என்னும் முதனிலையாய்க் கடம், கடி, கடு, கடுகு, கடுப்பு, கடுமை முதலிய சொற்களைத் தோற்றுவிக்கும்; இவற்றுள், கடம் என்பது செல்லுதற்கு அரியநெறியினை யுணர்த்தும்; கடியென்பது கரிப்பு களிப்பு முதலிய பொருளை உணர்த்தும்; கடு என்பது காரமுடைய கடுக்காய், கைப்பானபொருள், கடுகுரோகணி முதலியவற்றை உணர்த்தும்; கடுகு என்பது காரமுள்ள ஐயவியினை யுணர்த்தும்; கடுப்பு காரமுடைமை யால் உடம்பின்கட்டோன்றும் ஒரு தொழிலினை யுணர்த்தும்; கடுமை யென்பது காரமுடைமையோடொப்புமையுடைய வன்குணத்தை உணர்த்தும். இம்முதனிலையினின்றே கடிகம், கடூரம் முதலான வடசொற்களுந் தோன்றுதல்காண்க. இவ்வாற்றாற் கடு வென்னுஞ் சொல் தமிழிற்கே யுரித்தாதல் தெற்றெனப் புலப்படும். இனிக் கலா என்பது கல் என்னும் முதனிலையிற் பிறந்த தொன்றாம். இம்முதனிலை அறிவுகொள் என்னும் பொருளைத் தெரிக்கும். கல்வி, கல்லூரி, கற்பு, கழகம் முதலிய சொற்கள் அதிற்றோன்றியனவாம். இவற்றுள், கல்வி என்பது கற்கப் படுவது எனவும், கல்லூரி என்பது அறிவுதரப்படுமிடம் எனவும், கற்பு என்பது ஒருவன் விதித்த விதிவழியொழுகும் ஒழுக்கம் எனவும், கழகம் என்பது கலைபயிற்றப்படும் இடமெனவும் பொருள் குறிக்கும். இவற்றிற் கழகம் எனுஞ்சொல் களகம் என்றாய்ப் பின் களம் எனத்திரிந்து இடத்தினையுணர்த்தும். இவ்வாறு, கலா வென்னுஞ் சொல்லுக்கு வடமொழியிலுற்பத்தி கூறலாகாமையானும், அது தமிழ்ப்பகுபத வுறுப்புப்பெற்றுப் பொருந்த முடிதலானும் அது தமிழுக்கே யுரியதாம். கலை யென்னுந் தமிழ்ச்சொல்லையே கலா வெனத்திரித்து வழங்கினார் வடநூல் வல்லாரென்றுணர்க. இனிக்குடி, குண்டம், குளம், கூனி, கோட்டை முதலியன கு என்னும் முதனிலையிற் பிறந்தன. இது குலிவு, கு என்னும் ஒலி இவற்றைக் காட்டும். மக்கள், இதழ்களைக் குவிக்குமிடத்துத் தோன்றுங் கூம்பலுருவத்தினையும், அங்ஙனங் குவித்துக்கூறும் வழிப் பிறக்கும் ஒலியினையும் இயற்கையாற் பலமுறை கண்டு வைத்து, அவ்வியற்கைக்காரணம்பற்றிப் பொருள்கட்குப் பெயர் கூறிவருகின்றார். குவிந்தவடிவத்தை உணர்த்தும் இக்கு என்னுமுதனிலையினின்று குகை, குட்டம், குடம், குடந்தம், குடம்பை, குடா, குடி, குடில், குடுவை, குடை, குண்டம், குணில், குப்பை, கும்பம், குமிழி, குலம், குலை, குவடு, குவவு, குவளை, குவால், குவிவு, குழல், குழாம், குழாய், குழி, குழிகி, குழுவு, குழை, குள்ளம், குளம், குற்றம், குற்றி, குறங்கு, குறள், குறில், குறும்பு, குறை, குன்றம், குனிவு என்பன பிறக்கும். இங்ஙனம் இப் பகுதி யினின்று பிறக்குஞ் சொற்களின் வேறுபாடு தோற்றவித்தற் பொருட்டு க், ட், ண்,ம்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் முதலான ஒற்றெ ழுத்துக்கள் அம்முதனிலையோடு கூடித்தொகுதி தொகுதியாக மேற்கிளந்த சொற்களைப் பிறப்பிக்கு மியல்பினவாம். க் என்னும் ஒற்றொடுகூடிய குக் என்னும் முதனிலையிற் குகை என்பது தோன்றி உள்ளே குவிந்து செல்வது என்னும் பொருளை உணர்த்தும். இனி ட் என்னும் ஒற்றோடு கூடியகுட் என்னும் முதனிலையிற் பிறந்த சொற்பொருள் கூறுவாம். நிலத்தின் உள்ளே குவிந்திருப்பதுபற்றிக் குட்டம் என்பது நிலவாழத்தை உணர்த்தும்; குவிந்த வடிவுடைமையால் குடம் என்பது பானையினை உணர்த்தும்; உடம்பைக் குவித்து வளைதலாற் குடந்தம் என்பது வணக்கத்தை உணர்த்தும்; உள்ளே குவியக் கட்டப்படுதலாற் குடம்பை என்பது கூட்டினை உணர்த்தும்; நிலத்திலொரு பக்கத்தை யறுத்துக் குவிந்துசெல்லுதலாற் குடா என்பது வளைந்த கடற்பாகத்தை உணர்த்தும்; உள்ளே குவிந்திருத்தலாற் குடி குடில் என்பன உறையுளை உணர்த்தும்; உட்குழிந்திருத்தலாற் குடுவை சிறு மட்கலத்தை உணர்த்தும்; குவிக்கப்படுதலாற் குடை கலிகையினை யுணர்த்தும். இவ்வாற்றாற் குடி, குடம் என்பன தமிழ்ச் சொற்களே யாதல் காண்க. இப்பெற்றி யினிதுணர்ந் தன்றே ஆசிரியர் சிவஞான யோகிகள் திராவிடமாபாடிய வுரையிற் குடம் என்பதனைத் தமிழ்ச் சொல்லெனக்கொண்டு குடாகாயம் குளாம்பல் போன்மருவின தமிழ்நூன் முடிபாமென்று கட்டுரைத்ததூஉ மென்க. இந்நுட்பந்தேற மாட்டாதார் குடம் என்பதனை வடசொல் லெனக்கொண்டு உற்பத்திகூறமாட்டாமையிற் பெரிது மருள்வர்; அப்பொருளை யுணர்த்துங்கடம் என்னுஞ் சொல் வடமொழியிற் பெரிது வழங்கக்காண்ட லானும், குடம் என்பதவ்வாறன்றித் தமிழிற் பெருகியும்வட மொழியிலருகியும் நடைபெற லானும் அது தமிழியற்சொல்லேயாம் என்பது துணிபு. இது நிற்க. இனி, ணகரவொற்றோடுகூடிய குண் என்னும் முதனிலையிற் பிறந்த குண்டம் குணில் என்பன குவிந்த வடிவுடைமையாற் பானை, குறுந்தடி என்பவற்றை உணர்த்தும். பகரவொற்றோடு கூடிய குப் என்பதிற்பிறந்த குப்பி, குப்பை என்பன குவிந்தவாயுடைய போத்தலையும், குவிந்துகிடக்கும் அழுக்கின் குவியலையும் உணர்த்தும். மகரவொற்றோடு கூடிய கும் என்பதிற்பிறந்த கும்பம், குமிழ், குழிழி என்பன குவிந்த பாண்டத்தினையும், குவிந்த மலர் முகிழினையும், நீரிற்குவியும் மொக்குளினையும் உணர்த்தும். லகரவொற்றோடு கூடிய குல் என்பதிற்பிறந்த குலம், குலை என்பன ஓரினமாய்க்குவிந்த உறவினரையும், ஒருங்குசேர்ந்த காய், கனித்தொகுதியினையும் உணர்த்தும். வகரவொற்றோடு கூடிய குல் என்பதிற் பிறக்குங் குவடு என்பது குவிந்தமலை முகட்டினையும், குவவு குவிதற்றன்மையினையும், குவளை குவிந்த நீலோற்பலத்தையும், குவால் குவியலையும் உணர்த்தும். இனி ழகரவொற்றோடு கூடிய குழ் என்பதிற் பிறப்பவற்றின் பொருள் வருமாறு:- குழல், குழாய் உட்டொளை யுடைமையால் வேய்ங்குழலை உணர்த்தும் குழாம், குழுவு பல்பொருட் டொகுதியை உணர்த்தும். குழி உட்குழிந்திருத்தலால் அப்பெயர்த்தாயிற்று. குழிசி மேற்புடைப் புடைமையால் வயிறு பெரிய மிடாவினை உணர்த்தும். குழை திரண்டிருத்தலாற்குண்டலத்தை உணர்த்தும்; இதனாற் குண்டலம் என்பதும் இம்முதனிலைப்பொருளே தரக் காண்டலின் அதுவுந் தமிழ்ச் சொல்லாமென்றே துணியப்படும். இனி ளகரவொற்றோடு கூடிய குள் என்பதிற்றோன்றிய குள்ளம் என்பது வடிவின் குறுமையினையும், குளம் என்பது உள்ளாழமுடைய விடத்தினையும் உணர்த்தும். இனி, றகரவொற்றோடு கூடிய குற் என்னும் முதனிலையிற்றோன்றிய சொற்பொருள் வருமாறு:- ஒருவர்க்குச் சிறுமையினைத் தருதலால் வழு வினைக் குற்றம் என்றும், ஆவுரிஞ்சு தறி குறிதா யிருத்தலாற் குற்றி என்றும், முறை முறையே குறுகிப் போதலால் தொடை குறங்கு என்றும், சிறுகியவடிவுடையது குறள் என்றும், சிறுகிய வோசையுடையது குறில் என்றும், குவிந்த மலைமேற்கட்டப் படுதலால் அரணிருக்கை குறும்பு என்றும், குறுகிக் குவிந்தது குறை என்றும் பெயருடைய வாயின. இனி னகரவொற்றோடு கூடிய குன் என்னும் பகுதியிலிருந்து பிறக்குங் குன்றம் என்பது குறுகிக் குவிந்த சிறுமலையினையும், குனிவு என்பதுவளைந்த விரிந்து குவிந்த வடிவத்தினையும் உணர்த்தும். இக்குன் என்னும் முதனிலை கூன் என நீண்டு வளைவினை யுணர்த்தும்; அவ் வளைவினை யுடையோன் கூனன் எனவும் வளைவினை யுடையோள் கூனி எனவுஞ் சொல்லப்பட்டாரென்க. மேலே காட்டிய குட் என்னும் முதனிலை கூட் எனத் திரிந்து பல சொற்களையும், கொட் எனத் திரிந்து பல சொற்களையும், கோட் எனத் திரிந்து பல சொற்களையும் பிறப்பிக்கும். அவையெல்லாம் ஈண்டொருங்கே எடுத்துக்காட்டப் புகின் இவ்வுரை வரம்பின்றிப் பெருகுமாதலால், ஈண்டைக்கு வேண்டுவன மாத்திரையே எடுத்துக்காட்டுவாம். கோட் என்னும் முதனிலையிற் பிறந்து கோட்டை என்பது வளையக் கட்டப்பட்ட அரணினை உணர்த்துதலால் அச்சொல்லுந் தமிழ்ச்சொல்லாமென்பது தெளியற்பாற்றென்க. கோணம் என்னுஞ்சொல் குண் கோண் எனத் திரிந்த முதனிலையிற் பிறந்து வளைவினை உணர்த்தலால் அதுவுந் தமிழ்ச்சொல் லென்பது தேற்றமாம். இங்ஙனங் கோடுங் கொம்பும் வளரும் இலையும் பூவுங் காயும் பழமும்போல் விரிந்த சொற்கட் கெல்லாந் தான் நிலைக்களனாய் அடிப்படையிற் கிடக்கும் அடிவேர்போல் நிற்பதான கு என்னும் முதனிலை முதலிற் குவிதலென்னும் இயற்கைப் பொருளையும், பின்னர் அதனோடொப்புமையுடைய உட்குழிதற்பொருளையும், பின்னர் உட்குழிதலோடொப்புமையுடைய வளைதற்பொருள் உட்டொளைப்பொருள் குறுகுதற் பொருள் முதலிய பிறவற்றை யுந் தந்து அவ்வச்சொற்பொருள்களோடு பெரிது மிணங்கி நிற்றலெல்லாம் நுணுகிய வுணர்வாற் கண்டுகொள்க. இவ்வாறேஅக் கு என்னும் முதனிலைக்குரிய இயற்கை ஒலிப் பொருட் காரணம் பொருந்தக்கொண்டு அதன்கட் பிறக்குஞ் சொற்கள் அளவிறந்தனவாம். அவையெல்லாம் சமயம் வாய்க்கும்போது தனித்தனிச் சொல்லாராய்ச்சி யாகக் கொண்டு எடுத்து விளக்கிப் போதருங்கடப்பாடுடையோம். இது நிற்க. இனிச்சாயா, சவம் என்பன சா என்னும் முதனிலையிற் பிறந்தனவாம். இம்முதனிலைப்பொருள் ஒன்றிற் சார்த லென்னும் புடைபெயர்ச்சியாம். நிலத்திற் சார்தலாற் சாயா என்பது நிழலினை உணர்த்தும். சாயை என்னுந் தமிழ்ச் சொல்லினை வடநூலார் சாயாவெனத் திரித்தார். இம்முதனி லையிற் பிறக்குந் தமிழ்ச் சொற்கள் சாடுதல், சாத்து, சாதல், சாம்பல், சாய்வு, சாயல், சாயங்காலம், சார்பு, சாரணர், சாரர், சாரியை, சாழல், முதலியன. சாடுதல், சாயப்பண்ணுதல்; சாத்து, ஒன்றன்மேற் சார்த்தப்படுங்கோடணை; சாதல், நிலத்திற் சார்ந்துகிடத்தல், இறந்தார் எழுதலின்றி நிலத்தே கிடத்தலின் இப்பெயர்த்தாயிற்று; சாம்பல், தன்றன்மைதிரிந்து ஒடுங்குதல், தீயால் நீற்றப்பட்ட பொருள் தன்றன்மைதிரிந்து ஒடுங்குதலின் சாம்பலென்பது நீறு எனவும் பொருளுணர்த்தும்; சாய்வு, சாய்தல், சாயல், நிலத்திற்படும் நிழல் அல்லது நிறம்; சாயங்காலம், ஞாயிறு மேற்றிசையிற் சாயுங்காலம்; சார்பு, ஒன்றன்கட்சாய்தல், ஒன்றற்கு நிலைக்களம்; சாரணர், சாரர் பிறர் புரைசல்களை ஒன்றியிருந்து கேட்டு அறிந்துவந்துரைக்கும் வேவுகாரர்; சாரியை, ஓரெழுத்திற்குச் சார்பாய் வரும் பிறிதோரெழுத்து; சாழல், சாய்ந்தாடும் ஒருவகை மகளிர் விளையாட்டு இனிச் சா என்னும் முதனிலை குறுகிச் ச என நின்று சவம் என்பதனைப் பிறக்கும். இம்முதனிலை செ எனத் திரிந்து செத்தான் என்பதனைப் பிறப்பிக்கும். இவையெல்லாம் நுண்ணுணர்வாற் கண்டுகொள்க. இங்ஙனமாகலிற் சாயா, சவம் என்பன தமிழ்ச்சொற்களென்றே கொள்கவென்பது. இனிப்பட்டினம் என்பது பண் என்னும் முதனிலையிற் பிறந்தது. பண் என்பது அறிவொருங்கித் திருந்தச்செய்தல் வினையை உணர்த்தும். பண்டம், பண்ணியம், பணம், பணி, பணை முதலிய பல அதன்கட்டோன்றும். அவற்றுள், பண்டம் என்பது அரிது செய்து முடிக்கப்பட்ட பொருளை உணர்த்தும். பண்ணியம் என்பது திருந்தச்செய்யப்பட்ட இனியதோர் அப்பத்தைக் குறிக்கும். பணம் முத்திரையிடப்பட்ட பொற் காசை உணர்த்தும். பணி முற்றச்செய்யப்பட்ட அணிகலத்தை உணர்த்தும். பணை எருவிட்டு உழுது வளம்படுத்தப்படும் வயல் நிலத்தைக்காட்டும். இனி இப்பண் என்னும் முதனிலை தகரவொற்றோடு புணர்ந்து பட் என நின்று பட்டினம் என்பதற்கு முதனிலையாம். பட்டினம் என்பது நாகரிக மிகுதியாற் றிருந்தச் செய்யப்பட்ட நகரத்தினை உணர்த்தும். காடுகெடுத்து நாடாக்கி என்பதனானும் இவ்வியல்புணர்ந்து கொள்க. இப்பகுதியிற் பிறந்து ஊரினைக் குறிப்பதான பட்டு என்னுஞ் சொல் ஆதனப்பட்டு, செங்கற்பட்டு, விருதுப்பட்டு, கொட்டாம்பட்டு எனப் பல தொடர்மொழிகளிலியைந்து நின்று அப்பொருளே தருமாறு கண்டுகொள்க. இதனாற் பட்டினம் என்பது வடசொலன்மையும், அது தமிழ்ச் சொல்லாதலைத் தெரிக்கும் பட்டினப்பாலை முதலான ஆன்றோர் பிரயோகமுண்மையுங்காண்க. இனிப் பாகம் என்பது பக் என்னும் முதனிலையிற் பிறந்ததொன்றாம். இதழ் இரண்டும் பிளவுபடுங்கால் ஆண்டு இயற்கையிற் பிறக்கும் ஒலி பகரமாதலின் ப என்னும் முதனிலை பிரிதலென்னும் புடை பெயர்ச்சியை யுணர்த்தும் இம்முதனிலை யோடு ககரவொற்றுக் கூடி நின்று பக்கம், பக்கு, பங்கு, பகம், பகர்வு, பகல், பகிர்தல், பகுப்பு, பகை, பரிதல், பலகை முதலிய சொற்களைத் தோற்றுவிக்கும். இவற்றுள் பக்கம் இரண்டு கூறாக்கப்பட்டதனுள் ஒன்று; பக்கு, பிளவு, பங்கு, கூறு; பகம், இரண்டு பிளவாயுள்ள குறி; பகர்வு, வாயைப்பிளந்து சொற்சொல்லவேண்டியிருத்தலாற் சொல்லல் என்பதனை உணர்த்தும்; பகல், ஞாயிற்றினாற் பகுக்கப்பட்டதினம்; பகிர்தல், கூறிடுதல், பகுப்பு, பிளப்பு; பகை, உறவோர் இருவர் தமக்குள் நேரும் பிரிவினைபற்றி நிகழ்வாதலால் விரோதம் என்னும் பொருளைத்தரும்; பரிதல், பிரிவு; பலகைவாளினாற் பகுக்கப் பட்ட மரத்துண்டு என்பது, இப் ப என்னும் முதனிலை பா என நீண்டு பாகம், பாகுபாடு, பாங்கு, பாதீடு, பாத்தி, பாத்து, பால், பான்மை முதலியவற்றைப் பிறப்பிக்கும். இவற்றுள், பாகம் என்பது கூறிடப்பட்ட பொருளையும், பாகுபாடு கூறுபாட்டி னையும், பாங்கு கூறிடப்பட்ட நிலத்தினையும் பாதீடு பங்கிடுதலையும், பாத்தி சிறிது சிறிதாக வகுக்கப்பட்ட பயிர் நிலத்தையும், பாத்து விருந்தினர்க்குப் பகுத்துக் கொடுக்கப்பட்ட உணவினையும், பால் பகல் போல வெண்மையாயிருக்கும் பொருளையும் பகுத்திடப்பட்ட நிலத்தினையும், பான்மை பகுக்கப்படுந் தன்மையினையுங் குறிக்கும். இனி இப்ப என்னும் முதனிலை வ எனத் திரிந்து வகிர், வகை, வகுப்பு முதலிய சொற்களைத் தோற்றுவிக்கும். அவையெல்லாம் ஈண்டெடுத் துரைப்பிற் பெருகும். இவ்வாற்றாற் பாகம் என்பது தமிழ்ச் சொல்லாதல்காண்க. இனி மீனம் எனுஞ் சொல் மின் என்னும் பகுதியிற் றோன்றியதாம். கரிய கடலின்கண்ணே மீன் பிறழுங்கால் அதன் அகட்டிலுள்ள வெண்மை பளீரெனக்கட்புலனாதல்பற்றி அஃதப்பெயர்த்தாயிற்று. ஆகாயத்தினும் நட்சத்திரங்கள் அங்ஙனமே பிரகாசிக்கக் காண்டலால் அவையும் வான்மீன் என உழக்கப்படுகின்றன. இம்முதனிலையினின்று மின்னல், மின்மினி, மினுக்கு, மீனாம்பூச்சி முதலிய சொற்கள் மிளிர்ந்த லென்னும் பொருள் கொண்டே வருதல்காண்க. மீனைச்சுட்டு வதற்கு மீன் என்னும் அவ்வொரு சொல்லையன்றி வேறுசொல் தமிழிற் காணப்படாமையானும், வடமொழியில் மற்சம் என்பது பெருவழக்காய் அப்பொருளைச் சுட்டிவருதலானும் அம் மீனம் என்னுஞ் சொல் தமிழேயாமென்க. இனி, வளையம் எனுஞ் சொல் வள் என்னும் முதனிலையிற் பிறந்ததொன்றாம். இம்முதனிலை வளைத லென்னும் புடைபெயர்ச்சியை யுணர்த்தும். இதிற்றோன்றுவன, வள்ளம் என்பது வட்டமாகவுள்ள கிண்ணத்தை உணர்த்தும்; வளவு வளைத்துக்கட்டப்படுங் கொல்லையினை உணர்த்தும்; வளாகம் சூழவுள்ள தினைப்புனத்தை உணர்த்தும்; வளார் வளைந்துள்ள சிறிய கொம்பினை உணர்த்தும்; வளையம் சூழவளைத்திடப்பட்ட பொற்கம்பியினை உணர்த்தும்; வளையல் மகளிர் கைக்கணியும் போத்தலோட்டை உணர்த்தும். இவ்வள் என்னும் முதனிலை வழ் எனத்திரிந்து செம்மை மாறுபடுதலை உணர்த்தும் இதிற்றோன்றுஞ் சொற்கள்வழு வழுக்கு முதலியன; இவை குற்றம், தவறுதல் என்னும் பொருளைக்காட்டும். இன்னும், இவ்வள் என்னும் முதனிலை வட் எனத்திரிந்து வட்டகை, வட்டணை, வட்டம், வட்டிகை, வட்டில், வடு, வடை முதலியவற்றைப் பிறப்பிக்கும்; முறையே இவற்றின் பொருள் வட்டமான சிறு கிண்ணம், வட்டமா யுள்ளதாளம், வட்டவடிவம், வட்டமாயுள்ள உடை, வட்ட மான ஓர் உண்கலம், செம்மைதிரிந்தகுற்றம், வட்டமாகச் செய்யப்படும் உழுந்துணா என்பனவாம். இவ்வாற்றால் வருத்தம் வட்டம் எனத்திரிந்ததென்பார். கூற்றுப்போலியாதல்காண்க. இன்னும், இவ்வள் என்னும் முதனிலை வண் எனத்திரிந்து வண் சிறை, வண்டல், வண்டில், வண்டு, வண்ணம், வணக்கம், வணர் முதலியவற்றைத் தோற்றுவிக்கும். முறையே இவற்றின் பொருள் வளைத்துக் கட்டப்படும் மதில், சுழிந்துசெல்லும் நீர்ச்சுழல், உருள்களுடைய சகடம், வளையல், சுழிந்து சுழிந்து செல்லும் ஓசை, உடம்பின் வளைவு, வளைவு என்பனவாம். இவ்வாற்றால் வளையம் தமிழ்ச்சொல்லாதல் தெளியக்காண்க. இனி, நாரங்கம் என்பது நல் என்னும் முதனிலையிற் றோன்றி நல்ல மணமுடைய நாரத்தையினை யுணர்த்தும். நன்மையினை உணர்த்தும் நல் என்னும் முதனிலையிற் பிறந்த சொற்கள் அளவிறந்தன. அவைகிடக்க, இந்நல் என்பது நாசிக்கினிமையினை உணர்த்துங்கால் நர் எனவும் நற் எனவுந் திரிந்து நல்ல மணத்தைக் குறிக்கும். நர் என்னும் பகுதியில் நரந்தம் என்பது தோன்றி நறிய மணத்தைச் சுட்டுதல் காண்க. இனி நற் என்னும் பகுதியில் நறவு, நறுமை, நறை என்பன பிறந்து நன்மணமுடைய தேனினையும், நன்மணத்தையுங் காட்டும். இனி நர் எனும் பகுதி ஒரோவொருகால் நார் எனத் திரிந்து நாரங்கம், நாரத்தை, நாரி முதலியவற்றைப் பிறப்பிக்கும். இவற்றின் பொருள் நன்மணமுடைய ஒரு புதல், நன்மண முடையவேர்; கள் முதலியவாம். இனி நற் எனும் பகுதி நாற் என நீண்டு நாறல், நாறி முதலியவற்றைத் தோற்றுவிக்கும்; நாறல், மணத்தல், நாறி நன்மணமுள்ள கற்றாழை. இவ்வாற்றால், நாரங்கம் தமிழ்ச் சொல்லாமென்றே கடைப்பிடிக்க. இனி முகம் என்பது மு என்னும் முதனிலையிற்றோன்றிய தாம். மு என்னும் ஒலி தோன்றுங்கால் இதழ் குவிந்து முன் நீளுதலால் அவ்வியற்கைக் காரணம்பற்றி அம்முதனிலை முன் தோன்றுதலென்னும் புடைபெயர்ச்சி உணர்த்தும். இதன்கட் டோன்றுஞ் சொற்கள் வருமாறு:- முகதலை, முகப்பு, முகம், முகவை, முகனை, முகிழ், முகுளம், முகை, முகப்பு, முதன்மை, முதியர், முதிர்ச்சி, முத்தம், முந்தி, முயற்சி, முன், முனிவு, முனை முதலியன. இவற்றுள், முகதலை என்பது முன் நெய்யுஞ் சீரைத்தலை; முகப்பு, கலத்தை முன்னே செலுத்திமொள்ளல்; முகம், முன்றோன்றுவது; முகவை, முற்சென்று அள்ளும் அகப்பை; முகனை, யார்க்கும் முன்நிற்கும் முதன்மை; முகிழ்; முகுளம்; முகை, முன்றோன்றுகின்ற மலரரும்பு; முசுப்பு, எருத்தின் முதுகின்முன் புடைப்பாய்த் தோன்றுந் திமில்; முதன்மை, முதலாந்தன்மை, முதியர், அறிவால் வயதால் முன் நிற்போர்; முதிர்ச்சி, முற்றிமுதலாய் நிற்றல்; முத்தம், முதன்மைச் சிறப்புடையநித்திலம், இங்ஙனம் இதற்குப் பொருள் காணமாட்டாதார் இது முச் என்னும் வடமொழித்தாதுவிற் பிறந்து சிப்பியினின்று விடுபடுவது என்னும் பொருடரும் முக்தம் என்பதன்றிரிபு என்பர், அத்தாதுப்பொருள் மனோ பாவனையாயிருத்தலல்லது இயற்கைப்பொருளாகாமை யானும், வடமொழியில் அப்பொருளைக் குறிக்குந்தரளம் எனுஞ்சொற் காணப்படுதலானும் முத்தம் எனுந் தமிழ்ச் சொல்லையே வடநூலார் முக்தம் எனத் திரித்துக்கொண்டா ரென்க; முந்தி, முன்றானை; முயற்சி, மடிந்துகிடவாமல் முன்னேறிச் சென்று வினைநிகழ்த்தல்; முன், முன் இடம், காலம்; முனிவு, முன்றோன்றுவதான வெகுளி; முனை, முன்இடம், இனி இம் மு எனும் முதனிலை நீண்டு மூ என நின்றவழி அதினின்று மூக்கு, மூச்சு, மூடு, மூதாகை, மூப்பு, மூரி, மூலம், மூலை, மூழி, மூழை, மூளை முதலியன பிறக்கும். இவற்றுள், மூக்கு என்பது முன் நீண்டிருக்கும் உறுப்பு; மூச்சு, முன்தோன்றும் உயிர்ப்பு; மூடு, ஒன்றை முன்னே மறைத்து நிற்பது; மூதாதை, முன்றோன்றிய அப்பன்; மூப்பு, வயதினான்முன்னான தன்மை; மூரி, எருத்தின் முதுகிற் புடைத்து முன்றோன்றுந்திமில்; மூலம் பூண்டிற்கு நிலைக் களனாய் முன்றோன்றும் வேர் அல்லது கிழங்கு, இதனான் மூலம் என்பது வடசொலன்மையுமுணர்க; மூலை, இரண்டு சுவர் ஓடிக் குவியுங்கோணம்; மூழி, மூழை முற்சென்றுமுகக்கும் அகப்பை; மூளை, உயிர்நிலைக்கு இன்றியமையாதாய் முன் உள்ள முதற்பொருள். இங்ஙனம், இம் மு மூ என்னும் முதனிலை களை அசைத்து விகுதி முதலிய வற்றோடு பொருத்துதற் குபகாரமாய் இடையிலே வரும் ஒற்றுக்கள் அப்பகுதிப் பொருளே தம்பொருளாகப் பெற்று வருதல் காண்க. இவ் வாற்றால் முகம் என்பது தமிழ்ச்சொல்லே யாதலும், அதனைக் குறிப்பதற்கு வடமொழியில் ஆநநம், வதனம் முதலான பல சொற்கள் உண்மையுந் தெளிந்து கொள்க. இன்னு மிவ்வாறே வடமொழியில் வழங்குந் தமிழ்ச் சொற்கட்கெல்லாம் உற்பத்திகண்டு கூறப்புகுந்தால் இவ்வுரை மிக விரிந்திடுமென அஞ்சி நிறுத்தினாம் வித்துவசிகாமணியான நம் ஆப்தர் ஸ்ரீமத், கார்த்திகேய முதலியாரவர்கள் இவ் விஷயத்தை விரிவாயெழுதுதலால் அவர்களெழுதுபவற்றுட் பொருந்துவனவெல்லாங்கொள்க. ஈண்டிதுகாறுங் கூறியவாற்றாற் சொற்கள் முதன்முதலுற் பத்தியாம் முறையும், அம்முறைதானும் உலகவியற்கையாய் நடைபெறுதலும், இவ்வியற்கையினை யறிவொருங்கி யாராயுமிடத்து ஒருமொழி பிறிதொன்றற்குப்பிறப்பிடமாகா மையும், ஒருமொழி பிறிதொன்றுக்குத் தாயென்பார் கருத்து அவ்வொன்றுதானே பிற்காலத்துப் பலவாய் விரிந்தமரபு நோக்கி எழுந்தவாறும், அங்ஙனம் விரிந்த அப்பலவுந் தம்முளினமுடைய வாதலறியுமாறும் அங்ஙனம் நுணுகி யறியும்வழித் தமிழும் வடமொழியுந் தம்முள் ஒரு சிறிது மியையாமையும், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளுவு, எர்க்கலா முதலியன தம்முள் இயைபு பெரிதுடைய வாதலும், தம்முள் மறுதலைப் பட்ட இருமொழிகள் ஒன்றோடொன்று பிற்காலத்து விராவுமாறும், அங்ஙனம் விரவுதன் முறை யுணரும் வழி வடமொழியிற் புகுந்த தமிழ்ச்சொற்களும், அவற்றின் உற்பத்தியும் இனிது விளங்கல் காண்க. திருக்குறட் கத்தியரூபம் இனியம்முதற்கடவுளது ஆணையினால், உலகமும் அதற்கு நன்மையாகிய அறம் பொருள் இன்பங்களும் நடத்தற்கு ஏதுவாகிய மழையினது சிறப்புக்கூறுகின்றார். 2- வது வான்சிறப்பு உலகம் நடத்தற்கு மழை ஏதுவாதல் மழையானது இடைவிடாது நிற்க உயிர்கள் நீங்காமற் பிறப்பினை யுறுதல் பற்றி எந்நாளும் உடம்பொடு காணப்பட்டு வருதலால், அம்மழை உலகத்திற்குச் சாவாது நிலைபெறச் செய்கின்ற அமிழ்தமென்று அறியுந்தன்மையை உடையது. உணவுகளை நுகர்கின்ற உயர்ந்த மாநுடர்க்கும் தாழ்ந்த மற்றை யுயிர்கட்கும் பசியைப்போக்கும் நன்மையாகிய அவ் வுணவுகளை உண்டாக்கி, தானும் உண்ணப்படுவதாகிய தண்ணீராய்நீர்வேட்கையை நீக்கி உலகந்தழைத்தோங்கச் செய்வது மழை. மழையானது பெய்யவேண்டுங்காலத்துப்பெய்யாது பொய்க்குமாயின்கடலாற் சூழப்பெற்றிருந்தும் அகன்ற வுலகத்தின்கண்ணே உணவின்மையினாலே பசிநிலை பெற்று நின்று வருத்த அதனாலே நோயுற்று உயிர்கள் இறக்கும். மழையென்னும் வருவாயினது பயன்குறையுமாயின் உழவர் உணவுக்குக் காரணமாக ஏரினாலே உழுதலைச் செய்யார்; பூமியின்கண்வாழும் மாநுடரை முயற்சி வேறு பாடுகள் பற்றி, பெய்யாது நின்று கெடுப்பதும், அவ்வாறு கெட்டவர்க்குத் துணையாய்ப் பெய்து முன்கெடுத்தாற்போல் எடுப்பதும் இவையெல்லாம்வல்லது மழை. மேகத்தினின்றும் துளிகள்விழின் காண்பதல்லது, வீழா தாயின், அப்பொழுதே ஓரறிவுயிராகிய பசும்புல்லினது தலை யையுங் காணுதலரிது. மழைக்கு முதலாகிய அளவில்லாத கடலும், நீர்வாழு முயிர்கள் பிறவாமையும், மணிமுதலாயின உண்டாகாமையு மாகிய தன்னியல்புகுறையும், மேகமானது அக்கடலை முகந்து அதன்கட் பெய்யாது விடுமாயின். அறம்பொருள் இன்பங்கள் நடத்தற்கு மழை ஏதுவாதல். மழை பொழியாதாயின் தேவர்கட்கும் இவ்வுலகத்தின் கண்ணே நித்தியத்தில் வரும் தாழ்வு தீரும்வண்ணம் மக்களாற் செய்யப்படும் நைமித்திகமென்னும் திருவிழாவோடு பூஜையும் நடவாது. நிமித்தத்தாலாவது நைமித்திகம். இதனால் விக்கிரக ஆராதனை பொருந்தாதென்பார் மதம் போலியாயிற்று. மழை வருஷியாதாயின் விரிந்தவுலகத்தின்கண்ணே பெரும்பான்மையும் இல்லறத்தார் அறவழியால்வந்த பொருள்களைப் பெரியராயினார்க்கு அகமகிழ்ச்சியோடு கொடுப்பதாகிய தானமும், துறவறத்தார் மனம் ஐம்பொறிவழி ஒழுகாது நிற்றற்பொருட்டு விரதங்களால் உண்டி சுருக்குதன் முதலிய தவமுமாகிய இரண்டறமும் நிலைபெற மாட்டாவாம். ஆசிரியர் சிவஞானயோகிகளும் இவ்வருமைத் திருக்குறளை மேற்கோளாகக் கொண்டு முதுமொழி வெண் பாவில் நேயபுகழ்த்துணையார் நீராட்டுங்கைதளர்ந் துன்றூய முடிமேல்வீழ்ந்தார் சோமேசா-வாயுங்கால்-தானந்தவமிரண்டுந் தங்காவியனுலகம், வானம்வழங்காதெனின் என்று கட்டளை யிட்டருளினார்கள். இதன்பொருள் அவனையுடைய புகழ்த் துணைநாயனார் அபிடேகஞ்செய்யுங்கை தளர்ச்சியடைந்து உனது பரிசுத்தமாகிய திருமுடியில் வீழ்ந்துவிட்டார்; சோமோ என்னுந் திருநாமத்தினையுடைய சிவபெருமானே ஆராயு மிடத்து மழைபொழியாதாயின் விரிந்தவுலகத்தின் கண்ணே தானமுந்தவமுமாகிய இரண்டறங்களும் நிலைபெற மாட்டாவாம். புகழ்த்துணைநாயனார் சரித்திர சங்கிரகம் செருவிலிபுத்தூரிலே வாழும் சிவப்பிராமணகுலத் துற்பவராய்ப் புகழ்த்தும் யாரென்னும் திருப்பெயர்கொண்டு மிகுந்த சிவநேசத்துடன் சிவலிங்கப்பெருமானை ஆகம விதிப்படி பூசைசெய்து வருநாளில் மழைபெய்தலொழிந்து தேசமெங்கும் பஞ்சம் நேரிட்டு உணவுகிடைப்ப தருமையாய்ப் பசிவருத்தவும் அன்பினுறுதிப்பாட்டிலே சிவபூசை நியதி தவறாம லிரவும் பகலுங் செய்துவந்தனர். இப்படியிருக்க ஒருநாள் திருமஞ்சனஞ் செய்யும்போது பசிவருத்துஞ் சரீர தளர்ச்சியினால் கையிலிருந்த திருமஞ்சனக்குடந்தவறிச் சுவாமி திருமுடியில் விழுந்துவிடவே மிகுந்ததுயரங்கொண்டு சோர்வுற்றவருக்குச் சிவகிருபை யினாலே நித்திரைவர அப்போது பரமசிவன் அவனுடைய சொப்பனத்தி லெழுந் தருளி இந்தப்பஞ்சம் நீங்குமளவும் உனக்கொரு காசு வழங்கு கிறோமென்று அருளிச்செய்ய இடர்தீர்த் தெழுந்து பரம சிவத்தின் றிருவருளால் பீடத்தின்கீழொரு பொற்காசு இருக்கக்கண்டு எடுத்துக்கொண்டு மகிழ்ச்சி யடைந்து சிவ பூசை தவறாமல் செய்துகொண்டிருந்து சிவலோகஞ் சேர்ந்தனர். எவ்வகை மேம்பாட்டார்க்கும் நீரையன்றி இம்மைக்கண் அநுவிக்கப்பட பொருள் இன்பங்களாகிய உலகியல் அமையாதென்பது எல்லாரானும் எளிதாக தெரியப்படுதல் போல, அந்நீர் எக்காலத்தும் எவ்விடத்தும் உளதாகல் மழையையின்றி அமையாதென்பதுந் தெளியப்படும். 2-ம் அதிகாரம் சத்தியரூபம் முடிந்தது இனி அவ்வற முதலிய பொருள்களை உலகிற்கு உள்ளவாறு உணர்த்தும் ... குரவராகிய முற்றத்துறந்தமுனிவரது பெருமை கூறுகின்றார். இங்கே துறந்தவரென்றது தபசுவி, விவிதீஷு, வித்துவான் என்னும் சந்நியாசிகள் மூவருள் நடுநின்ற விவிதீஷு என்பவரை தனிமையாக வமர்ந்து ஞான பூசையும் இரந்துண்டலுஞ் செய்து இடையறாது நிட்டைகூடுவோர் தபசுவி யென அறம்பொருள் இன்பம் வீடுபேறு என்பவற்றை மாணாக்கர்கட்கு உணர்த்த லோடு மற்.றைய கிருத்தியங்களையுமுடையவர் விவிதீஷு எனவும் அறநூல் முதலியவற்றில் வியாக்கியானம் பண்ணுதலோடு மற்றைய கிருத்தியங்களையும் உடையவர் வித்துவான் எனவுங் கொள்க. இங்ஙனம் எல்லாச்சமயத் தார்க்கும் ஒத்ததுணிபாக விசேட குருத்துவம் உண்டென்று நாயனார் நவின்றருளியவிதி சிவாகமங்களிற் றலைமைபெற்ற காமிகாமத்தில் நான்காம் வருணத்து விரத்தருக்கே குருத்துவம் சாதித்த விசேடவிதி ஒத்துச் சாதுர்வருணத்தின் மேலதாகவும் அதனைத் தமதுமதி நுட்பத்தால் ஆராயாது நான்காம் வருணத்து விரத்தருக்குக் குருத்துவம் இல்லையென்றும் கிரகதர்க்கே குருத்துவம் உண்டென்றும் சிலர்கூறுவா ராயினர். அவர் காமிகாகம சுலோகமொழி பெயர்ப்பாகச் சைவ சமயநெறி நூலுடையார்- சூத்திரனுந் தேசிகனாவான் மரணாந்தந் துறவி, சாத்திரத்தின் மூன்றுமுணர்ந்தால் என்றுகூறிய திருக்குறளும் நான்காம் வருணத்திலே துறவறத்தி னராய் திருநாவுக்கரசு நாயனார் சைவசமய பரமாசாரிய ராகவும் மெய்கண்டதேவர் திருக் கைலாய சந்தான பரம குரவராகவும் எழுந்தருளி யிருந்தமையும் நான்காம் வருணத்து விரத்தருக்கே விசேட குருத்துவம் உண்டென் பதற்குச் சான்றாதலை சித்த சமாதானத்தோடு உணர்ந்து தெளிவாரா. நான்காம்வருணத்துக் கிரகதருக்கும் குருத் துவம் உண்டென்பது ஆசரணை முதலியவற்றால் கொள்ளற் பாற்று. இன்னும் இதன் விரிவெல்லாம் ஆசிரியர் சிவஞான யோகிகள் செய்தருளிய சிவஞானபோத திராவிட மாக பாடியத்திற் காண்க. ஈண்டுரைப்பிற் பெருகும். இங்ஙனந் துறவறத்தார் பெருமைகூறவே இல்லறத்தார் இத்துணைச்சிறப்பிலராந்தன்மை கூறியதூஉமாயிற்று. வைராக்கியதீபம் நிறந்தருந் தெய்வப்புலமை வள்ளுவனார் நீத்தவர் பெருமை நூன்முகப்பாற் - சிறந்திடவமைத்தாங்கது கொடிய வாழ்க்கைச்சிறுமை தூற்றினாரதுதெரியார்க் - கறந்தவாதி யற்றினவெனிலுங் கோடியதிகமாமென மனமறாது-துறந்து ளோனையும் பட்டினத்தெமதடிகள் தொகுத்த கட்டுரை திகழ்த்திடுமே. 3-வது, நீத்தார்பெருமை எல்லார்பெருமையினுந் துறந்தார்பெருமையே மிக்கதாதல். தத்தம் வருணத்திற்கும் ஆச்சிரமத்திற்கும் உரிய ஒழுக்கங்களிலே வழுவாதொழுக அறம்வளரும், அறம்வளரப் பாவந்தேயும், பாவந்தேய அறியாமை நீங்கும், அறியாமைநீங்கச் சித்தம் சுத்தியாம், சித்தம் சுத்தமாக இது நித்தியம் இது அநித்தியமென்னும் பகுத்துணர்வும் அநித்தியமாகிய இம்மை மறுமை யின்பங்களிலே வெறுப்பும் பிறவித் துன்பங்களுந் தோன்றும், அவைதோன்ற நித்தியமாகிய முத்தியின்கண் ஆசை யுண்டாம். அஃதுண்டாகப் பிறவிக்குக்காரணமாகிய வீண் முயற்சிகளெல்லாநீங்கி முத்திக்குக்காரணமாகிய யோக முயற்சி யுண்டாகும், அஃதுண்டாகமெய்யுணர்வுபிறந்து புறப் பற்றாகிய எனதென்பதும் அகப்பற்றாகிய யானென்பதும் விடும். ஆதலால் மமகார அகங்காரங்களாகிய இவ்விரண்டு பற்றையும் இம்முறையே துறந்தாரது பெருமையை மேம்பட்ட பொருள்கள் பலவற்றுள்ளும் இதுவே மேற்பட்டதென ஒன்றையொன் றொவ்வாத சமயநூலாரனைவரும் நிச்சயமாக விரும்புவர். மமகார அகங்காரங்களாகிய இருவகைப்பற்றினை விட்டாரது பெருமையை இவ்வளவென்று எண்ணினாற் கூறி அறிதலுறின் அளவுபடாமையால் இவ்வுலகத்துப் பிறந்திறந்த வரை எண்ணி இத்துணையினரென அறியலுற்றாற்போலும். ஆக்கினாசக்கிரத்தைச்செலுத்தி உலகமுழுதும் ஆண்ட அரசர் முதலாயினார் பெருமையினும் பிறப்பு வீடென்னும் இரண்டினது துன்பவின்பப்பகுதிகளை ஆராய்ந்தழிந்து அப் பிறப்பினை யறுத்தற்கு இப்பிறப்பின்கண்ணே துறவறத்தைப் பூண்டவரது பெருமையே உலகின்கண் உயர்ந்தது. ஐம்பொறியடக்கல் துறந்தாரது பெருமைக்கு ஏதுவாதல் அறிவென்னும் அங்குசத்தினால் பொறிகளாகியயானை ஐந்தனையும் தத்தம்புலங்கண்மேற் செல்லாமற்காப்பவன் எல்லாநிலத்தினும் மிக்கதென்று சொல்லப்படும் வீட்டு நிலத்திற்சென்று முளைக்கும் லித்தாதலன்றி இவ்வுலகத்தின் கண்ணே பிறந்திறந்து வரும் மகன் அல்லன். விடயங்களிற் செல்கின்ற ஆசையைந்தனையும் அடக்கி னானது வலிமைக்கு அகன்றவிண்ணுலகத்துள்ள தேவர்கட்குத் தலைவனாய் ஐந்தவாவினையும் அவியாது வானப் பிரத மாகிய துறவறத்தினின்று கௌதமமுனிவரது சாப மெய்திய இந்திரனே அமையுஞ் சான்றாகும். யோகமுயற்சி துறந்தார் பெருமைக்கு ஏதுவாதல் ஒத்தபிறப்பினராகிய மாநுடருள்ளே மனம் வேண்டியவாறே அம்மனத்தை ஐம்பொறிவழிகளால் ஐம்புலன் களிற் செலுத்தலும், விரும்புதலும், வெகுளுதலும் முதலியன வாகிய செய்தற்கு எளியவற்றைச்செய்யாது, இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்னும் செய்தற்கு அரியவற்றைச் செய்வார் பெரியர்; அவ்வெளியவற்றைச்செய்து அரியவற்றைச் செய்யமாட்டாதார் சிறியர். இயமம் இயமமாவது, கொல்லாமை, சத்தியம், அத்தேயம், பிரமசரியம், தயை, ஆர்ச்சவம், க்ஷமை, திருதி, மிதாசாரம், கவுசம் எனப்பத்துவகைப்படும். அவற்றுள் (1.) கொல்லாமையாவது வேள்வியாதிகளிற் செய்யுங் கொலை தவிர மற்றையுயிர்களைக் கொலைபுரிய மனத்தும் நினையாமையாம். உடல் பொறிகரண முதலியவற்றை நானென்று மதித்தலாகிய கொலைசெய்யாது உயிரின் உண்மையறிவதும் கொல்லாமையாம். (2) சத்தியமாவது - கண்ணாலும் காதாலும் கண்டும் கேட்டும் உள்ளவைகளைக் கூறுதலாம். பிறந்திறக்கும் பொய்த்தெய்வங்களை மதியாது நித்தியமாகிய முதல்வனையே மெய்த்தெய்வமென்று நம்புவதுஞ் சத்தியமாம். (3) அத்தேயமாவது அயலார் பொருளைச் சிறிதும் அபகரிக்க நினையாமையாம் - தேகாதிப்பிரபஞ்சத்தை நானென்று மதியாததெளிவும் அத்தேயமாம். (4) பிரமசரியமாவது - பிறர்மனைவிழையாமை; வரைவின் மகளிர் விழையாமை முதலிய ஆண்டகைமையாம். முதல்வன் றிருவடிகளிற் சிந்தையைச்செலுத்தலும் பிரமசரியமாம். (5) தயையாவது - தன்னுயிர்போல மன்னுயிர்களையும் ஒப்பக்காண்டலாம் (6) ஆர்ச்சமாவது - மக்கள் மனைவி முதலிய உறவினரிடத்தும் பகைவரிடத்தும் தன்னிடத்தும் சமபாவனை வைத்தலாம். (7) க்ஷமையாவது - பகைவர் முதலியோராற் றுன்பஞ் சம்பவித்தாலும் பொறுத்தலாம். (8) திருதியாவது முதல்வன் றிருவாய்மலர்ந்தருளிய வேதசிவாகமங்களை முத்திபெறுதற்கு ஏதுவாமென்று நம்புவதாம். முதல்வனது அஷ்டமூர்த்தங்களில் ஒனறாகிய யான் அம்முதல்வனின் வேறல்லனென் றெண்ணுதலுந் திருதியாம். (9) மிதாகாரமாவது தேவாமிர்தத்துக்கு ஒப்பாகிய உணவையும் கூழையுஞ் சமமாகக்கொண்டு உண்பதாம். அதிகமாகவுங் குறைவாகவுங் கொள்ளாது அன்னம் அரைக்கூறும் நீர்காற்கூறும் உண்டு காற்கூறிடம் வாயுசஞ்சரிக்க விடுவதும் மிதாகாரமாம். (10) சவுசமாவது உடம்பினை மண்ணாதிகள்கொண்டு விதிப்படி நீரினாற் சுத்திசெய்வதாகிய பாகிய சவுசமும் அறிவினாலே வேதமுடிபாகிய சித்தாந்தப்பொருளை மனத்திற் பொருந்த நினைத்துப் பாசங்கழியும்வண்ணம் நிற்பதாகிய மானதசவுசமுமென இருவகையாம். இன்னும்வரும். இனி நியமம். மதுரை இங்ஙனம் திருஞானசம்பந்தசுவாமிகள் சுப்பிரமணியபிள்ளை மடம் 26. ஆகமம் ஆகமம் என்பது, பரமாப்தரினின்றும் வந்தது எனப் பொருள்படும். இன்னும், ஆ என்பது பாசம் எனவும், க என்பது பசு எனவும், ம என்பது பதி எனவும் பொருள் படுதலால் ஆகமம் என்பதற்குத்திரிபதார்த்த லக்ஷணத்தை உணர்த்தும் நூல் என்பதே சிறந்தபொருளென்க. ஆ, என்பது சிவஞானமும், க, என்பது மோக்ஷமும் ம, என்பது மலநாசமுமாம். ஆதலால் ஆன்மாக்களுக்கு மலத்தை நாசம்பண்ணிச் சிவஞானத்தை உதிப்பித்து மோக்ஷத்தைக்கொடுத்தல்பற்றி, ஆகமம் எனப் பெயரா யிற்றென்று கூறுதலுமொன்று. இவ்வாகமம் காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம், அசிதம், தீப்தம், சூக்குமம், சகச்சிரம்,அஞ்சுமான், சுப்பிரபேதம், விசயம், நிச்சுவாசம், சுவாயம்புவம், ஆக்கினேயம், மீரம், ரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞாநம், முகலிம்பம், புரோற்கீதம், லளிதம், சித்தம், சந்தானம், சர்வோக்கிதம், பாரமேசுரம், கிரணம், வாதுளம், என இருபத்தெட்டாம்; இவ்வாகமங்கள மாந்திரம் எனவும், தந்திரம் எனவும், சித்தாந்தம் எனவும் பெயர்பெறும். இவ்விருபத் தெட்டுச் சிவாகமங்களுக்கும் ஒவ்வொன்றுக்குக் கோடி கிரந்தமாக இருபத்தெட்டுக்கோடி கிரந்தங்களாம். இவை ஞானபாதம், யோகபாதம், கிரியாபாதம், சரியாபாதம் என்று தனித்தனி நான்குபாதங்கள் உடையனவாயிருக்கும். இவற்றுள் ஞானபாதம் பதி, பசு, பாசம் என்னுந் திரிபதார்த்தங்களின் வரூபத்தையும், யோகபாதம் பிராணாயாமம் முதலிய அங்கங்களோடுங்கூடிய சிவயோகத்தையும், கிரியாபாதம் மந்திரங்களின் உத்தாரம், சந்தியாவந்தனம், பூசை, செபம், ஓமம் என்பனவற்றையும், சமயவிசேட நிருவாண ஆசாரியாபிடோ கங்களையும் சரியாபாதம் சமயாசாரங்களையும் உபதேசிக்கும் இவ்வாகமங்களுக்கு வழிநூல் நாரசிங்கம்முதல் விசுவான்மகம் ஈறாகிய உபாகமங்கள் இருநூற்றேழாம். ஆகமம் என்பது ஆப்தவாக்கியம் ஆகமங்கள், லௌகிகம், வைதிகம், அத்தியான்மகம் அதிமார்க்கம், மாந்திரம் என ஐவகைப்படும். தற்காலத்திற் பயன்றருவது லௌகிகம்; காலாந்தரத்திற் பயன்றருவது வைதிகம்; ஆத்துமவிசார; வியற்கையது அத்தியான்மகம்; யோகவியற்கையது அதிமார்க்கம்; சிவஞான வியற்கையது மாந்திரம் எனப்படும். அவற்றுள், மாந்திரம் பிறநூல்களைப் பூர்வபக்ஷமாகக் கீழ்ப்படுத்தி, மேற்பட்டு விளங்கும் காமிகம் முதலிய சைவாகமங்கள். காமிகத்திலே சித்தாந்தம் மந்திரதந்திரமாகும்; அதிமார்க்கம் அதனிற் றாழ்ந்தது: அத்தியான்மகம் அதனிலுந்தாழ்ந்தது; அதனிலுந் தாழ்ந்தது வைதிகம்: வைதிகத்தினும் தாழ்ந்தது லௌகிகம் என்று சொல்லப்பட்டது. சைவாகமங்கள் வைதிகவாக்கியம் ஆதலின் அப்பிரமாணங்களென்று மூடசிரோன்மணிகள் சிலர் கூறுவர். அது, வேதாந்த நிஷ்டைபெற்றுக் களங்கமற்ற ஞானி களும்எனது சிவாகமத்திலே தற்பரர்களாகி ஞானபாதத்திலே நின்றோருமாகிய இருதிறத்தாரும் பெறற்கரும் சாயுச்சியம் பெறுவார்கள். இப்போதுசொல்லிய இருவகைமார்க்கங்களின் நெறியி னில்லாதவர்கள் நால்வகைத்தண்டத்திற்காளாவர். என்னும் சிவன்கூறிய பொருளையுடையவியாசவசனத்தினால் அது பேதைமை என மறுக்க. விரிப்பிற் பல்குமென்க. இத்தகைய வசிட்டம்வாய்ந்த சிவாகமங்களைச்சிவதீக்ஷை பெற்றே ஓதல்வேண்டும். இதற்குப்பிரமாணம் சுப்பிரபேதம் இந்தச்சைவாகம மெல்லார்க்குங் கொடுக்கத் தக்கதுமன்று. விளக்கத்தக்கதுமன்று; தீக்ஷைபெற்றவனாய், நிலையுடை யோனாய், சிவபக்திமானாய் இருப்பவனுக்கே விளக்கத்தக்கது. ஏனையோர்க்கு விளக்கல் குற்றமென்க. என்பதனால் அறிக. இக்கலிகாலத்திலே இச்சிவாகமங்களைத் தங்கடங்கள்மனம் போனவாறு தீக்ஷைமுதலியனவின்றிக் கற்கவும், அவ்வாகமங் களிற் கூறிய பொருளைச் சற்குருசந்நிதானத்தில் கேட்காது தங்கடங்கள் யுக்திக்கிசைய விபரீதப்பொருளைக் கற்பித்தலும் ஆகிய இன்னோரன்ன தீநெறிகளையே அநேகர் கடைப் பிடிக்கின்றார்கள். (இன்னும் வரும்) இணுவில் இங்ஙனம் இந்துகுமாரசபை அ.சதாசிவதேவர் இ.கு. சபைப்பிரசாரகர் இலக்கியவாராய்ச்சி இலக்கியமாவது யாது? இலக்கியம் என்னுந் சொல்லின் பொருள் யாது? உற்பத்தி யாது? இலக்கியம் எனப்படுவன யாவை? நீதி முறைகளை உணர்த்தும் வாக்குண்டாம் நன்னெறி முதலியனவும் இலக்கியம் எனப்படுமா? தோத்திரரூபமாயுள்ள தேவாரம் முதலியனவும் இலக்கியம் எனப்படுமா? திராவிடப் பிரகாசிகைகாரர் அக்கம் பக்கத்திலே திருமுறையிலக்கியம், சங்கவிலக்கியம் முதலியனவாகப் பலதிறப்படும் என்கிறார். தொல்காப்பியப் பொருளதிகாரத்திலே அறுவ கைப்பட்ட பார்ப்பனப்பக்கமும் என்பதனுரை யிலே நச்சினார்க்கினியார் இராமாயமும் பாரதமும் போல்வன இலக்கியம் என்ற தென்னை? பெரியபுராணம் என்னும் பெயர்க்காரணம் யாது? தொண்டர்கள் மற்று யாவரினும் மிக்காரல்லரோ! அதுபற்றி அவரைப் பெரியர் என வழங்குதல் பொருந்தாதா? பெரியர் + புராணம் என்பது சிலவிகாரமாமுயர்திணை என்னும் நன்னூல் விதிப்படி பெரியபுராணம் என்பதை விளக்கிநின்றது என்று கொள்ளுதற்குத் தடையாது? திராவிடப் பிரகாசிகை காரர் 114-ம் பக்கத்திலே இது பெரியபுராண மெனவும் திருத்தொண்டர் புராணமெனவும் வழங்கப்படும். இவ்விரு திருனாமங்களும் இதற்கு ஆசிரியரேயிட்டனவென்பது எடுக்கு மாக்கதை எனவும், இங்கிதநாமங்கூறின்- செங்கதிரவன் போனீக்குந் திருத் தொண்டர் புராண மென்பாம் எனவும் போந்தபாயிரத்தாலறிக. பெரியபுராணம் பெருமையை யறிவுறுக்கும்புராணம் என்கின்றார். பெரியபுராணம் என்பதும் ஆசிரியரிட்ட பெயராயின், இங்கிதனாமங்கூறின் என்னுஞ் செய்யுளிலே சேர்த்துக் கிளந்து கூறாததென்னையோ! ஒரு நூலுக்கு ஒருபெயரன்றி இருபெயரிடுவதும் ஆசிரியர்க்கு வழக்காகுமா? எடுக்குமாக் கதை என்பதனாற் பெரியபுராணம் என்பதும் அவரிட்ட நாமமெனக்கொள்ளுதல் பொருந்துமா? சேதுபுராண காரர் அவையடக்கத்திலே திகழுமாக்கதை செய்திடுஞ் செய்யுடான் பகர்விருத்தமதாகும் என்றார். பாரதகாரரும் குருகுலச்சருக் கத்திலே அங்கண்மாநிலத்தரசர் பல்கோடி யவ்வரசர் - தங்கண்மாக்கதை யானறியளவையிற் சமைக்கேன் என்றார். இவ்விருநூல்களிலும் மாக்கதை என ஆசிரியர்கள் கூறுதலால் பெரியபுராணம் என இவைகட்கும் வழங்கப் படுமா? மாக்கதை என்பது எங்ஙனம் விரித்துப் பொருள் சொல்லப்படும். மேலுந் திராவிடப்பிரகாசிகை 121ம் பக்கத்திலே திருத்தொண்டத் தொகையுள் அத்திருத்தொண்டத்தொகை திருவாய்மலர்ந்தருளிய சமயாசாரியரான திருநாவலூரர் பெருமானாரும், அவர் தந்தைதாயாராகிய சடையனார் இசைஞானியார் என்பாரும் அடங்காமையின் அவர் தந்திருநாமபாராயணமு முடனெய்தல்வேண்டிச் சிவஞான யோகிகள் திருத்தொண்டர் திருநாமக்கோவை என்று அங்ஙனம் வேறுநூல் அருளிச் செய்தாரென்க என்றார். திருநாவலூரர்பெருமானார், சடையனார், இசைஞானியார் என்னும் மூவர் திருநாமங்களும் பாராயணஞ் செய்தற் கெண்ணித் திருத்தொண்டர் திருநாமக்கோவை செய்ததாயின்; சிவஞானசுவாமிகள் பிரபந்தத்திரட்டின் முகத்திலே எழுதப் பட்ட சிவஞானயோகிகள் வரலாற்றிலே 19ம் பக்கத்திலே நித்தநியமமந்திரமாகத் திருத்தொண்டர் திருநாமத்தை ஓதியுய்யவேண்டுவோர் கருத்துத் தடையுறாவண்ணந் திருத்தொண்டர் திருநாமக்கோவை செய்தருளினார் என்றார் கருத்துத் தடையுறாதோ? 129-ம் பக்கத்திலே திருக்குறள் வரலாற்றிலே இதுகுறள் வெண்பாவா லருளிச்செய்யப்பட்டமையின், திருக்குற ளென்றாயிற்று என்றார். குறள்வெண்பாவாற் செய்யப்படுதல் திரு என்னும் விசேடணம் பெறுதற்குங் காரணமாகுமா? 190-ம் பக்கத்திலே எடுத்துக்காட்டென்னு முவமையினை வடநூலார் நிதரிசனாலங்காரமென்றுரைப்பார் என்றார். குவலயானந்தகாரர் திருஷ்டாந்தாலங்காரத்தை எடுத்துக் காட்டுவமையணி எனவும் நிதரிசனாலங்காரத்தைக் காட்சியணி எனவும் மொழிபெயர்த்தவாறென்னோ? இரண்டும் ஒன்றாயின் வெவ்வேறு கூறுவாரா? 173-ம் பக்கத்திலே இரகுவமிசவரலாற்றிலே இரகுதிக்கு விசயங்கொண்ட வரலாறும், அவற்கு மகனாயுதித்த அயன் படையோடெழுந்துபோய்ப் பஃறேயமன்னர் திறைகொண்டு எனவும், குசனயோத்தியெய்தியவரலாறும், அவன் நாகராஜன் றந்த வாகுவலயங்கொண்டு நாககன்னியை மணந்து, முடிசூடி யுலகாண்ட வரலாறும் எனவுங்கூறினார். பஃறேயமன்னர் திறைகொண்டவன் இரகுவா? அயனா? இரகுமிசத்திற்கூறிய முடிசூட்டு வரலாறு அதிதியைக் குறித்ததா? குகனைக் குறித்ததா? திறைகொண்டவன் அயன் எனவும், முடிசூட்டு படலம் குசனைக்குறித்தது எனவுங் கூறுதற்குப் பிரமாணங்கள் யாவை? 179-ம் பக்கத்திலே இராமாயண வரலாற்றிலே ஆண்டு வாலியைக்கொன்று சுக்கிரீவனட்பெய்தி எனவும் இதன் உத்தரகாண்டம் ஒட்டக்கூத்தராற் றமிழின் மொழிபெயர்த்துப் பாடப்பட்டது. இது இராமச்சந்திரன் முடிசூடிப் பரிவேள்வி யாற்றியதும், பிறவும்கூறும் எனவுங் கூறினார். ஸ்ரீராமன் சுக்கிரீவனட்பெய்தியபின் வாலியைக்கொன்றானா? நட்பெய்த முன்கொன்றானா? இராமாயணம் எங்ஙனம் கூறும்? ஸ்ரீ ராமனுடைய முடிசூட்டுவரலாறு யுத்தகாண்டத்திலே திருவபிடேகப் படலத்திலே கம்பராலே பாடப்பட்டிருக்கின்றது. உத்தரகாண்டத்திலும் ஸ்ரீராமனுடைய முடிசூட்டுக்கூறப் பட்டுள்ளதோ? ஒட்டக்கூத்தர்பாடிய உத்தரகாண்டம் இலங்கையழித்தன் முதலிய பூர்வகதையும் பிறவுங் கூறுகின்றது. சுன்னாகம் இங்ஙனம் அ.குமாரசுவாமிப்பிள்ளை வடமொழியிலுள்ள தமிழ்ச்சொற்காரணம் பார்த்திபன் இது அரசன் என்னும் பொருளில்வரும். பிருதிவிசம்பந்தம் பார்த்திபமாகலின் அதனையுடையான் பார்த்திபன் என்க. புவியென்பது பூமியாகலின் அதுபுடவி புருடவி பிருடவி பிருதிவி யெனவாயிற்று. பூமியும் புவியின் திரிபே. வகரமகர மாகும். பூவல் (கிணறு, நீர்) புவலம் புவனம் புவனி புவி பூமி பூ எனவாம். புவனம் - நீர், பூமி உலகம் இம்முறைமையிற் பொருட் பேறாம். நீராற் சூழப்பட்டது என்பது பொருள். புவலம் புவனம் லகரம் னகரமாகும். ஜானு இது முழந்தாள் என்னும் பொருளில்வரும். கணு என்பது சாணு சானு எனவாம். ககரம் சகரமாகும். மூட்டுடையது என்பது. மூட்டெனினும் சந்திப்பெனினுமாக்கும். சாணென்னும் அளவுப்பெயர்க்கும் இக்கணுவென்பதே முதற்சொல்லாம். மூங்கிலில் ஒரு கணுமுதல் மற்றோர் கணுவரையில் உள்ள அளவு சாண் என்க. அக்காலமுறைமைப்படி பத்து அங்குலமாகும். சானுவென்பது சானம் சகனம் எனத்திரிந்து முடிந்தால் முன்பக்கத்துள்ளதாகலின் முன்பக்கத்தை யுணர்த்தும்; சகனம் - முன்பக்கம், அரையின்கீழ்பாகத்துக்காயிற்று. வேணி இது பின்னல் என்னும் பொருளில்வரும் பின்புறத்தை யுணர்த்தும் வென்என்பது இதன் முதற்சொல்லாம். அது வேணி வேணி எனவாயிற்று. பின்புறத்தே தொய்வது என்பது பொருள். சூரியன் உதிக்குந்திசை முதற்றிசையாய் முன்பக்கத்திருத்தலின் பின்பக்கத்துள்ளது மேற்காம். வென் என்பது வெற்கு மேற்கு எனவாயிற்று. முன் - பிரிவு, பின் முதுகு, வென் எனவாகும். முதுகு இருபிரிவுடையதாகலின் அப்பெயர்த்து வென் வெரின் எனவாம். வெந் வெரிந் எனல் பின்னை முதலாசிரியர் ழவ.. கு. பின்னல் என்பது பின் என்பதிற் பிறந்தது. மண்ட இது ஆமணக்கென்னும் பொருளில்வரும், ஆடம் என்பது ஆமணக்காகலின் அது ஆமடம் ஆமண்டம் மண்டம் மண்ட: எனவாயிற்று. ஆமணக்கென்பதும் ஆமண்ட என்பதன் சிதைவு. ஆமணக்கு உட்டுளையுடையதாகலின் அப்பெயர்த்து ஆளம் ஆடம் என்பனவாம். ஆளம் உட்டுளை, ஆளம் ஆலம் (அம்புக்கூடு) ஆணம் (கள்) ஆணகம் (சுரை) ஆளகம் (சுரை) ஆணம் ஆனம் எனவாய்க் கள்ளையே யுணர்த்தும் உள்ளிருந்து வருவது என்பது பொருள். கள்ளையுணர்த்தும் யான மென்பதும் ஆனமென்பதன் திரிபு. உட்டுளையுடையதாகலின் யானம் மரக்கலத்துக்குமாம். அவ்யானம் என்பதில் யாணம் யாத்திரை பிரயாணம் முதலியன பிறக்கும். பிர உபதுர்க்கம், வி யென்பது பிரவெனவாயிற்று. பிசிதம் என்பதாலுணர்க. பிசிதம்வெண்மை. பி+சிதம். யானமென்பதில் யாதனம் என்பது பிறந்து தெப்பத்தையும் மரக்கலத்தையு முணர்த்தும் வடமொழி யார் யா என்னுந் தாதுவில் யாத்திரை முதலியன பிறக்கும் என்பர். அத்தாதுவுக்குக் காரணம் கடயூர் ஆகலின் பொருந் தாது. யானமென்பதே யாவென்றாயிற்று, யகரமுதன் மொழி யெல்லாம் இயற்கையல்லவென்க. போஜனம் போனகமென்ப துணவாகலின் அது போனசம் போசனம் என நிலைமாறிற்று. மணமுடையது என்பதுபொருள். வாசனையுணர்த்தும் போளமென்பது போளகம் போனகம் எனவும் போனகமென்பது புன்கம் எனவும் போனகம் என்பது புளகமெனவும் இதுநிலைமாறிப் புகர்வு எனவும் புளகமென்பது புழுக்கலெனவும் திரியும்; இவற்றுக்கெல்லாம் உணவென்பதே பொருள். போளம் ஓர்வாசனைப்பொருள். போளி பொழில் முதலியனவும் அதிற்பிறக்கும். பொழில் = பூஞ்சோலை தக்கோலம் சோலை சோறு சொன்றியெனவாம். ஈண்டும் சோறு சொன்றியென்பனவற்றுக்கு மணமுடையது என்பதே பொருள். தாளித்த குழம்பு முதலியவற்றோடு கலத்தலின் மணமுண்டாம். போசனம் என்பதில் பொசித்தல் புசித்தல் என்பன பிறக்கும். புஜு என்பதும் அதன் திரிபு. போனகம் என்பதில் போகம் போகி முதலியன பிறக்கும். போகி இந்திரன் போக மிகுதியானென்பது. போகி = பாம்பு, வாசனைவிரும்புவது. போகன் போசன் போசராசன். தக்கோலத்தின் விரிவை அ - ம் இதழிற்காண்க. புதகம் இது புத்தகமென்பதன் திரிபு, பந்தோபபந்தம் பந்தோபத்து பந்தோபது என இங்ஙனம் திரிதல் பல. புள் என்பதற்கு முதற்பொருள் மயிலிறகு. அது செம்மையும் பொன்மையு முணர்த்தும் பூல் என்னும் தாதுவிற் பிறந்தது. மயிலிறகில் செம்மை நிறமும் பொன்மைநிறமு மிருத்தலின் அப்பெயர்த்து ஏனைப்பறவைகளி னிறகிலும் மயிலிறகின் சாயலிருத்தலின் அப்புள் என்பது பொதுப்பட இறகுக்காய்ப் பறவைக்காயிற்று. இப்புள் என்பதில் புட்டம் புட்டகம்; என்பன பிறந்து, மயிற்றோகைக்கண் போலும் அழகிய புள்ளி செறிந்த சீலையையுணர்த்தும்; சித்திரப்படாத்தை யுணர்த்தும் புத்தகம் என்பது புட்டகம் என்பதன் திரிபு. இனிப்புத்தகம் எழுதிய புத்தகத்துக்குமாம்; இதன்முதற்சொல் இறகினையுணர்த்தும் புள் ஆகலின், இறகினால் எழுதப்பட்டது என்பது பொருள். அற்றேல் அக்காலத்தில் காகிதம் உண்டோ எனில் போகர் ஏழாயிரத்தில் காகிதயந்திர முதலியன கூறலின் அக்காலத்தும் காகிதமுண்டெனத் தெளிக. செந்தமிழ் தன் சீர்குலைந்த காலத்தில் எழுதியதாகலின் சித்தர் நூல்களை யிகழற்க. அக்காலகதியாம். புத்தகம் மயிலிறகையு முணர்த்தும். எட்டுத்திப்பிலி யீரைஞ்சு சீரகம் கட்டுணுந்தேனிற் கலந்துகொண் டுண்ணவே விட்டுப்போகும் விக்கலும் விடாதேற் சுட்டுப்போகு புத்தகந் தன்னையே இதனால் அச்சொற்கு அப்பொருளுண்மை அறிக. விக்கலும் வாந்தியும் நிற்க மருந்து கூறப்பட்ட இடமாகலின் ஈண்டுப் புத்தகம் என்பதற்கு மயிலிறகு என்பதே பொருள். சுபம் இது நன்மையை யுணர்த்தும், இதன்முதற்சொல் பொன்மைப் பொருளிலும் வரும் சும் என்பதாகலின் அது சுபம் எனவாம். மங்களமென்பது பொன்மையெனவே மஞ்சளைக் கொள்க. சொம்பொனார்தரு மெழில்திகழ் எனும் சம்பந்தர் தேவாரத்தாலும் அச்சொலுண்மை பெற்றாம். செம்பொன் - செம்பொன். சும்சுகம் சுபம், சும் சொம் சொத்து. அதிகற்றாதி இஃது சித்திரமூலத்தை யுணர்த்தும்; அதிகல் + தாதி இரண்டுபதம்; அதிகல் என்பது அத்து என்னும் சொல்லிற் பிறந்தது. தாதி யென்பது தாது என்னும் சொல்லிற்பிறந்தது. அவ்விரண்டற்கும் சிவப்பென்பது பொருள். சித்திரமூலம் சிவப்பாகலின் அப்பெயர்த்து; ஈண்டுச்சிவப்புச் சித்திரமூல மெனக் கொள்க. அதிகும்பை இது கையாந்தகரையை உணர்த்தும்; கும்பை என்பது கும்பியென்னும் சொல்லிற்பிறந்தது, கும்பி என்பது நீர், அதி உபசர்க்கம். நீர்ச்சார்பிலுள்ளது என்பது அதன் பொருள். கும்பியென்பது சேற்றையும் குறிக்கும். நீரொடுகலந்தது என்பது அதன் பொருள். அதிசாரணம் இது மாவிலிங்கையை யுணர்த்தும், சாரணம் என்பது தாளம் என்னும் சொல்லிற்பிறந்தது. அது, தாலம் தாரம் தாரணமம் சாரணம் எனவாம். அதி உபசர்க்கம். அம்மரப் பட்டை சிவப்பாகலின் அப்பெயர்த்து தாளமென்பது மஞ்சணிறத்தையும் குறிக்கும், தாளம் = தாளகம், தாரம் - இங்குலிகமுமாம். தாரம் = சிற்றரத்தை, இது சிவப்பு நிறம் தாலம் - ஆவிரை. அதிட்டச்செல்வி இது இந்திரபாஷாணத்தை யுணர்த்தும், இந்திரன் அதிட்டச்செல்வன் ஆகலின் அம்பொருட்குறிப்புடைத்து. அதிதல் இது சிலேட்டுமத்தை யுணர்த்து த்வயாதிகம் என்பதனிறுதியிலுள்ள அதிகம் என்பதன் சிதைவு. வாத பித்த சிலேட்டுமம் என்பவற்றுள் இரண்டாவதாகிய பித்தத்துக்கு மேற்பட்டதென்பது பொருள். த்வயாதிக மெனினும் சிலேட்டும மெனினும் ஒக்கும். சில் என்பது இருமையை யுணர்த்துமாகலின் சிலேட்டுமம் என்பதற்கு மப்பொருளே, சிலேட்டுமம் சிலேத்துமம் சேத்துமம் என ஆயிற்று. சிலேடை, ஔபச்சிலேடம் சிலுபம் சவலைவெண்பா சவலைப்பிள்ளை முதலியவற்றுக்கும் அச்சில் என்பதே முதற்சொல்லாம். சிலேடையெனினும் இரட்டுறமொழித லெனினும் ஒள்பசிலேட மெனினும் ஓரிடநிற்றலெனினும்; சிலுமம் எனினும் சிலுபா எனினும்; சவலைவெண்பாவெனினும் இணைக்குறள் வெண்பாவெனினும்; சவலைப்பிள்ளை யெனினும் இரண்டாவதுபிள்ளையெனினும் ஒக்கும். ஈண்டு இரண்டாவது என்பது குறைவைத் தெரிக்கும். ஔபசிலேடம் என்பதில் மாத்திரம் சில் என்பது சிறிதிடம் என்னும் பொருளில்வரும். சில் (சிறிதிடம்) சிலேடம் உபச்சிலேடம்; ஔபச்சிலேடம்; இது ஏழாவது பொருள்களு ளொன்றாம்; சிலுபம் இரண்டுபக்கம் சிகை வைப்பது பத்திராகராமென்பதற்கு மிப்பொருளே. அதிபறிச்சம் இது வாலுழுவையை யுணர்த்தும், பறிச்சம் பதிச்ச மென்பதன்திரிபு, அதில் சர்க்கம், பதிச்சம் என்பது பல் என்னுந் தாதுவிற்பிறந்தது. அதன்பொருள் மஞ்சணிறமென்பது; வாலு ழுவை சிறிது மஞ்சணிறமுடையதாகலின் அப்பெயர்த்து. அரைவன் இது செங்காந்தளை யுணர்த்தும் ஆலமென்பது சிவப்பாகலின் அது ஆரம் அரசு அரைவன் என ஆம். அதன்பூ சிவப்பாகலின் அப்பெயர்த்து அரைவல் எனலகரமென பெற்றுப் பிறகு னகரமாகத் திரிந்தது. அனாவிலன் இது சுக்கிரனை யுணர்த்தும், ஆலமென்பது நீராகலின் அது ஆவிலம் ஆவில ஆனாவிலன் எனஆம். நீர்க்கோள் என்பது பொருள். சுக்கிரனென்பதற்குமிப்பொருளே. அநிமாவினம் இது மரணத்தை யுணர்த்தும், மாலென்பது மறை வாகலின் அது மாலி மானம் நிமாலினம் அநிமாலினம் என வாயிற்று, மாலினம் - மரணம்; நிமாலினம் = மரணமின்மை; அநிமாலினம் = மரணம்; இரண்டெதிர் மறையுடன் பாடாம். அ.நி உபசகங்கள் எதிர்மறைப் பொருளில்வரும். கருமையை யுணர்த்து மாலென்பது மறைவிற்காயிற்று. இன்னும் அம்மாலி யென்பது மாரியெனவும் மாலையெனவும் திரிந்து மரணத்தையும் மாலைப்பொழுதையும் உணர்த்தும். மாலை சூரியன் மறையுங்காலம், மால் -... லம் (பேய்) மாரம் மாரணம் மரணம்; மாரம்; மாரகம் மரணமென்பதன் சிதைவு மிர்த் என்பது. அந்தகோரம் இது நெல்லியை உணர்த்தும்; அந்தம் + கோரம் இரண்டு பதம், அல், குள் என்னும் தாதுவில் முறையே அந்தம் கோளம் என்பனபிறந்து ஒருசொல்லாய் அந்தகோசம் அந்தகோரம் அத்தகோரம் எனத்திரியும். அந்தோரென்பதும் அந்தகோர மென்பதன் சிதைவு. நெல்லிக்காயில் கருநிறமிருத்தலின் அப்பெயர்த்து. குள் (கருமை) கோலம் - சனி, பன்றி, அந்தலை இது முடிவுப்பொருளில்வரும். அந்தமென்பது முடி வாகலின் அது அந்தல். தலையெனவாம். இங்ஙனமே கற்றாழையை யுணர்த்தும் குமரியென்பதும் மரல் அ... அரலை எனத்திரியும். அள் (பிரிவு) அந்தம் - சாவு, கடை முடிவு; இம்முறைமையிற்பொருட்பேறாம். அந்தம் அந்தரம் -முடிவு; மரல், அரலையென்பன ஓர் கற்றாழையை யுணர்த்தும். அந்தரிலயம் இது துரியாதீதமென்னும் பொருளில்வரும்; அந்தரி + லயம், இரண்டு பதம் அந்தரியென்பது அந்தலையென்பதன் திரிபு. கருமையையுணர்த்தும் நீலம் என்பது மறைவிற்காய் நிலயம் லயம் ளயம் பிரளயம் எனவாம். பிரளயகாலம் - மறைகின்றகாலம். பிரளயாகலர்-ஒருமலமறையப் பெற்றவர். மனோலயம்-மனமிறத்தல், துரியாதீதம் பஞ்சாலத்தையில் இறுதியாகலின் அப்பெயர்த்து. பிரஉபசர்க்கம். அன்னனியன் இது திருமாலென்னும் பொருளில்வரும் பாஞ்ச சன்னியம் அன்னியன் அனன்னியன் என ஆம். ஈண்டும் அப்பொருளே. அநாகலன் இது ஓரிழிகுலத்தானென்னும் பொருளில்வரும், நாகு எனினும் சிறுமை யெனினும் ஒக்குமாகலின் அது நாகல் நாகலன் ஆநாகலன் அநாகலன் எனவாம். ஆ - உபசர்க்கம் சிற்றறிவோன் என்பதுபொருள்; சிறுதொழிலைச்செய்வோ னெனலு மொக்கும். அநாதகி இது சந்நியாசியென்னும் பொருளில்வரும். மலையை யுணர்த்து நாகமென்பது நாதகம் நாதகி ஆநாதகி அநாதகி யெனவாம். ஆ உபசர்க்கம், மலைக்குகையிலுள்ளோனென்பது பொருள். அநுத்தேகம் இது விருப்பின்மையென்னும் பொருளில்வரும். அநுத்தேசம் அநுத்தேகமென்றாயிற்று. அந் + உத்தேசம் = உத்தேசமின்மை; அந் எதிர்மறை உபசர்க்கம். அநூகன் இது பிறப்பில்லானென்னும் பொருளில்வரும் பிறப்பினையுணர்த்தும் சம் என்பது கம் எனவும் அது உ என்னும் உபசர்க்கம். பெற்று உகம் அந் + உகம் அநுகம், அநூகம் அநூகன்எனவும் ஆம். அந் எதிர்மறை உபசர்க்கம் உதும்பரம் உய்யானம் உத்யானம் உய்யானனம் என்பனவற்றிலும் உ உபசர்க்கம். அநூகம் இது ஆமோதித்தலென்னும் பொருளில்வரும் ந+ஊகம் = நோகம்; அ+நோகம் அநோகம்; அநூகம் - ஊகித்துக் கொள்ளல் என்பது பொருள். நுணுகியறிந்தபின் உடன்பட லெனலும் ஒக்கும். அ ந இரண்டும் எதிர்மறை யுபசர்க்கம். அநிமாலினம் போலுடன்பாடாம். அதங்கம் இது ஈயமென்னும் பொருளில்வரும்; ஈயத்தை யுணர்த்தும் வங்கம் என்பதில் அங்கம் (கொன்றை) அதங்கம் என்பன பிறக்கும். வங்கம் - சிவப்பு செம்பு ஈயம் வெள்ளி; வங்கம் - செம்பு, நாவாய்; வங்கம் - ஈயம், கத்தரிக்காய்; இம்முறைமையிற் பொருட்பேறாம். நாவாயினடியில் செப்புத் தகடும் கத்தரிக்கா யிலீயமு முண்மையின் அப்பெயரவாம். வங்கக்காய் என்பதனை வங்காயலு என்பர் தெலுங்கர். வங்கச்சொல் பொன்மையு முணர்த்துமாகலின் அங்கம் கொன்றைக்காயிற்று. அதன்பூ பொன்னிறம், செம்பின் மேலீயம் பூசுவதனா லப்பெயர்த்து. இங்ஙனம், மாகறல் - கார்த்திகேயமுதலியார் மெய்ந்நல விளக்கம் அகவாயுவும் புறவாயுவும் ஒரேவெப்பம் கொண்டாலும், வாயு அசைவற்றிருந்தாலும், புதிய குளிர்ந்தவாயு நம்மில்லத் தினுட் புகவும் அசுத்தம்பெற்ற அகவாயு வெளிப்போகவுங் கூடிய தன்மையில்லையாகின்ற தென்பதை மேற்கூறியவாற்றால் அறிந்தோம். அவ்வாறாயின் நமக்கொரு வகையான இறுக்கமும் புழுக்கமும் சுகவீனமுமுண்டாவதியற்கை. உடம்பெங்கும் வியர்வை துளிக்கின்றது. ஆகையால் இவ்வமயத்து நாம் நம் முயற்சியாலே வாயுவினியக்கம் நடைபெறச்செய்தலவசியம். அஃதெங்ஙனமெனின் கூறுதும். அடுப்பில் நெருப்பெரியும்போது அப்பாகமெங்கும் வெப்பமடைகின்றது; வெப்பமடையவே சுற்றுப்பக்கங் களிலுள்ள வாயுவும் வெப்பம்பெற்று இலேசாகிமேலே செல்லுகின்றது. எவ்வளவு விரைவாய் இவ்வாயுமேலே சென்று வெளிப்படுகின்றதோ அவ்வளவு விரைவோடு புறவாயு உட்புகுமென்பது மேலேகாட்டிய நியதியாலறியலாம். இம்மூலத்தத்துவத்தை மேற்கொண்டு அநேக பெரிய கட்டிடங் களில் வாயுவினியக்கத்தை நடத்திவருகின்றார்கள். சுரங்கங் களில் வேலைசெய்கிறவர்களுக்கும் இவ்வாறே சுத்தவாயுவை உட்புகுத்துகின்றார்கள். பெரியகட்டிடங்களினுள்ளே மேல் தளத்துக்கருகில் கொதிக்குநீர்நிறைந்தகுழாய்களேனும் அல்லது நெருப்புத்தணல் கணிரம்பிய யந்திரங்களேனும் அமைக்கப் பட்டால், மேற்பாகமுள்ள வாயு சூடுகொண்டு தளத்தின்கண் அமைக்கப்பட்ட துவாரங்களின் வழியாய் மேலேசென்று வெளிப்பட கட்டிடங்களின் மற்றப்பாகங் களிலுள்ள வாயுக்கள் அவ்விடத்துக்கு வந்து சேருகின்றன. புறவாயுவும் உள்விரைந்து செல்லுகின்றது. இவ்வாறு வாயுவினியக்கம் நடைபெறச்செய்ய வேண்டுமாயின் பொருள் செலவாகும். இது எளியோர் கைக்கொள்ளத்தக்க முறையுமன்று பெரியகட்டிடங்களிலும், சபாமண்டபங்களிலும் பிரபுக்களின் மாளிகைகளிலும், இவ்வியக்கம்செய்துகொள்ளக் கூடுமேயன்றிச் சாமானிய சனங்களுக்கு இது சிறிதுமுப யோகமன்று. இவ்வியக்கத்தின் பிரயோகத்தை இப்பொழுது காண்பதரிது. இனி, விசிறி, பங்கா, முதலியகருவிகளின் பிரயோசனம் யாது? இக்கருவிகளால் நிலைபெற்றவாயுவுக்கு அசைவு கொடுக்கலாமேயொழியப் போதுமான அளவு அசுத்த வாயுவைப் போக்கிப் புதியவாயுவை உட்புகுத்தல் கூடுமோ வென்பது சந்தேகம். இதனையாராய்ந்து சுகநூல்வல்லார் இன்னும் ஒரு முடிவுக்கும் வந்திலர். எனினும், சென்னைப் பொது வைத்தியசாலையில் யந்திரங்களின் உதவியால் மிகஉன்னதமாய் ஓட்டப்படும்பங்கா வாயுவினியக்கத்தின் பயனை முற்றிலுந் தருகின்றதென்று டாக்டர் கிரான்ட் (Dr. grant) அபிப்பிராயங் கொள்கிறார். இதுகிடக்க. இனி, நாம் விசிறிகொண்டு வீசும்போது, நம்தேகத்தின் மேற்பரப்பிலுள்ள வெப்பவாயு அப்புறப்படுவதோடு, நம் தேகத்தின் வியர்வைத்துளிகள் ஆவியாகமாறி நமக்குக் குளிர்ச்சியையும், ஒருவகை ஆற்றலையும் தருகின்றன. குளிர்ச்சி யுண்டாவ தெவ்வாறெனின், நீர் ஆவியாகமாற வெப்பம் வேண்டும்; சரீரத்தின் மேலுள்ள வியர்வை ஆவியாகமாற அச்சரீரத்தின் மேற்பரப்பிலுள்ள வெப்பமும் அதனைச் சூழ்ந்திருக்கும் புறவாயுவின் வெப்பமும் ஒன்று சேர்ந்து அவ்வாறு வியர்வையைப் போக்குகின்றன. இன்னிறைந்த மமதை காரணமாக, அற்றை ஞான்றணியதோர் லிங்க வடிவாகியண்ட கடாகத்தை யூடுருவிப்பாற் போந்து பற்பன் ஞான்றாக வழன்றுழன்ற சதுர்முகனாலுங்காண்டற்கரிய தமதருமைத் திருமுடியை யாசைத்தருளிய வவ்விறைவ னேயன்றி, தங்கள் பிரபந்தங்களின் சொன்னயம் பொரு ணயத்தைக்கேட்டுத் தலையசைப்பார் இந்நிலவுலகின்கண் ணொருவருமின்றா மென்றோர்ந்தாம். அல்லதூஉம், துரியாதீதனாகிய விறைவனுக் கோரெல்லை கூறின் அது அவ்விறைமைக்குணத்திற்கு வழுவாம்போல, சில வாழ்நாட்பலபிணிச்சிற்றறிவேம், ஒன்றேயூரு மொற்றியூரிறை வன்றிருவருள் காரணமாகத் தாங்களியற்றிய நூல்களின் மாட்சிக்கோர் புகழ்மொழி கூறுதலும் அவைகட்கோர் மாசாமென விடுத்தாம். இனி, தாபதநிலையைப்பற்றித் தாங்களுரைத்தவைகளை, மறுப்பார் கூற்று இப்பொய்யுலகவாழ்க்கையுட் பிணிப்புண்டு அதன்கட் பொய்பல நினைந்து பொய்பல பேசி பொய்பல செய்து, பொய்யினும் பொய்யாகிய விப்பொய்யுடலை மெய்யென நினைத்துழலும் பபுட்சுக்களவைக்கணன்றி, வீடு காதலித்துக் கோகனதன் முதற்குலவு பதமெல்லாம் வெறுத்து நெறியறுவகையும் மேலொடு கீழடங்கவெறும் பொய்யென நினைந்திருந்து, மேலொடு கீழில்லான், நிறுத்துவதோர் குணமில்லான்றன்னை யொருவருக்கும் நினைப்பரியான் ஒன்று மில்லான் நேர்பட வந்துள்ளே பொறுப்பரிய பேரன்பையருளி யதன்வழியே எங்குமில்லாப் போகத்தைப்புரிந்து புகுந்திடுமாறு பெற்ற அம்முமுட்சுக்களவைக்கட் பயன்படுமாறு ஒரு சிறிது மில்லையென்க. கையறு நிலையைப்பற்றியும் தாங்கள் நிராகரித்தது மிகவும் வியக்கற்பாலதே. இவ்விந்துகுமாரசபைப்பிரசாரகருளொருவரும் தணிகைப்புராண வுரையாசிரியர் ஸ்ரீலஸ்ரீ, அம்பிகைபாக உபாத்தியாயர் குமாரருமாகிய பண்டிதர் ஸ்ரீமத் சபாபதிப் பிள்ளை அவர்கள் தங்கள் நூல்களின் இலக்கணமாட்சியைப் பார்த்தபோது, அகத்தியர் வரத்தாற்செகத்திலுற்பவித்து அவரொரு கடலையுண்டால் யாமிருகடலை யுண்பாமென்று வடமொழி தென்மொழிக்கடலை யுண்டுகுசை நுனியதனினும் கூர்மதி பெறீஇயமாதவச் சிவஞானயோகீவரர்தானோ, இந்நூலாசிரியரென்று வியந்தார்கள். இங்ஙனம், இந்துகுமார சபையார். அ.க. வயித்தியலிங்க உபாத்தியாயர் மானேஜர் அ.மா. தியாகராஜ பிள்ளை இ.கு. சபை. உபகாரியதரிசி. 27. அறிக்கை பூலோக நண்பன் பத்திரிகையிலே ம--ள--ள--ஸ்ரீ, நா. கதிரைவேற் பிள்ளை யென்பவர் நியாய விசாரணை செய்யும் ஆற்றலும் அறிவுமின்றிப் பொறாமையாற் பெரியதோர் தலை தடுமாற்றங்கொண்டு எம்மையும் எமது பத்திரிகையினையுந் தமக்குத் தோன்றியவாறெல்லாம் புறம்பழித் தெழுதினா ரென்று சிலர் சொல்லக் கேட்டேம். அக்கேட்ட பொருளைப் பொருட்படுத்தாது யாம் நூலாராய்ச்சியிற் றோய்ந்து ஆண் டெழும் இன்பநுகர்ச்சியின்கண்ணே உவகைதுளும்பு நாட் களில், ஒருநாள் ஒருவர் அப் பூலோக நண்பன் பத்திரிகையின் 9-ஆவதிலக்கப்பத்திரிகையினை எடுத்துவந்து அதிலவரெம்மைச் சுட்டி எழுதிய பகுதியினைப் படித்துக் காட்டினார். அதனை முழுவதுங் கேட்டபின் கதிரைவேற்பிள்ளை மாட்டு எமக்குப் பரிதாபம் நிகழ்வதாயிற்று. என்னை? எம்மிடத்து மிக்கதோர் பொறாமையும், பகைமையுங் கொண்டு உண்மை காண மாட்டாமல் ஏதேதோ வெழுதி அப்பத்திரிகைக்குந் தமக்கும் இழுக்கந்தேடினாராகலின், தொன்னூலாசிரியர் நுண்ணிய கருத்தும் தமிழிலக்கண இலக்கியமரபும் நன்காய்ந்தெழுதும் மதுகையின்றி பிள்ளை நமது காஞ்சியின்மேல் மருண்டுரைகள் மயக்கவுரைகளின் பெற்றி தேற்றித் தொல்லாசிரியர் கருத்துணர்த்து முகத்தால் நியாய விசாரணை செய்து வெளியிட்ட சோமசுந்தரக்காஞ்சி யாக்கத்தி லுள்ள பொருள்களைக் கூறு கூறாகப் பிரித்துக் கொண்டு தருக்கித்து மறுக்க மாட்டாமல், அவதூறு தூஷணைசெய்யத் தலைப்பட்டதனால் அவர்க்கு வந்த பயன் யாது? எடுத்திதனை நெகிழலிட்டு இங்ஙனந் தூஷணைசெய்தல் ஒரு தோல்வித்தான மென்பதனை அவரறியார்போலும்? யாம் மூக்குக்கண்ணாடி யிட்டுச் செல்கின்றேம், உள்ளங்கி நிலையங்கியிட்டு உலாவுகின்றேம். தொடுதோன்மாட்டித் தலைநிமிர்த்துச் செல்கின்றேம், என்று அவரெம்மைப் புறம்பழித்தால் இலக்கண இலக்கிய வாதத்தில் வரெம்மை வென்றராவரோ? இங்ஙனஞ் சொற்பிரயோகஞ் செய்தால் நமக்கு வெற்றி யுண்டாமென்று அகங்கரிக்கும் வெறும் புல்லறிவினாரைத் தெருட்டுதல் எம்போல்வார்க்கு இயைவ தன்று. இன்னோர்க்குக் கௌரவ அரசாங்கத்தார் அறிவு கொளுத்துவர். இவர் இங்ஙனமே எடுத்த வாதத்தினை விடுத்து எம்மைப் புறம்பழித் தெழுதுவாராயின் இனியாம் இவர்க்கு அரசாங்கத்தாரால் அறிவுதெருட்டுங் கடப்பாடுடையோ மென்பதனை அறியக்கடவர். இது நிற்க. இனி, இவரிவ்வாறின்றி நம்மோடு தருக்கித் துண்மைப் பொருளறிதல் வேண்டினாராயின் எடுத்தபொருள் பிறழாது தருக்கிப்பாராக. இவர் பத்திரிகை வாயிலாகத் தருக்கிக்க வேண்டினும், புலவர் சபைகூட்டித் தருக்கிக்கவேண்டினும் யாம் அவற்றிற்கெல்லாம் சித்தமாயிருக்கின்றோம். சபை கூட்டித் தருக்கித்தலென்றவுடனே இவர் தமக்கு இச்சகம்பேசுந் தம்மையொத்த சாமானியரைச் சேர்த்துவைத்துக்கொண்டு கதுமென எம்மை வாதிட அழைத்தலும், அதற்கிணங்கி வாராவிடிற் பகடிபண்ணுதலுஞ் செய்வர்; அங்ஙனஞ் செய்த லவரியற்கை. ஆகையால், தொல்காப்பியம், பத்துப்பாட்டு, கலித்தொகை முதலான தொல்லிலக்கண இலக்கிய நூலுரை களில் வல்லராய் யாழ்ப்பாணத்தும், தென்னாட்டும் விளங்கும் வித்துவசிகாமணிகளை ஒருங்கு கூட்டி அவர் முன்னிலையில் வாதநிகழ்த்துதலே முறையாமாதலின் அவர் அவ்வாறு செய்கவென்று அதனை வற்புறுத்தவே இஃதீண்டெழு தினாமென்க. இன்னோரன்ன இலக்கண இலக்கிய வாதங்களைச் சீர்தூக்கி யளந்துபார்த்து முடிவுரை கூறவல்லார் பிரபல வித்துவசிகாமணிகளேயாவர். இது நிற்க. இனி, யாழ்ப்பாணத்தும் பிறாண்டுமுள்ள வித்துவ சிகாமணிகள் பலர் நம்முடைய சோமசுந்தரக்காஞ்சியாக்கத் தினை ஆய்ந்துபார்த்து நடுநிலை திறம்பாது அதன்கட் சொல்லப்பட்ட வாதங்கள் நியாயமுடையனவேயாமென்று உறுதியுரைமொழிந்திட்டார்கள். அவர்களுறுதியுரைகள் சில இப்பத்திரிகையின் புறவிதழின்கட் பிரசுரிக்கப்பட்டன. இவையெல்லாங் கண்டுவைத்தும் அறிவுதிருந்தாது குறும்பு செய்வாரென்கடவரென்க. பிள்ளை நாம் ஆங்கில நூல்களைத் தழுவி எழுதுதலைப்பற்றிப் பரிகாசஞ் செய்கின்றார். ஆங்கில வித்துவான்களின் நுண்ணிய அறிவும், பெருகிய அற்புத வாராய்ச்சியுங் கண்டறியும் பேறுபெறாதமற்றிவர் அவரையும் எம்மையுமிகழ்தல் முறையேயாம். கொடிமுந்திரி பழத்தை உண்ணுதற்கு எட்டி எட்டிப்பார்த்துங் கிட்டாமையா லதனை யிகழ்ந்துசெல்க. இவர் தமக்கு ஆங்கிலபாஷாப்பியாசங் கிட்டாமையால் ஆங்கில வித்துவசிகாமணிகளின் அருமை பெருமை யுணரப்பெறாது இகழ்ந்திட்டார். அவ்வாங்கில வித்துவ சிகாமணிகளின் நுட்பவறிவால் நம் இந்திய நாட்டிற்கு எய்திய அரும்பெறற் சௌகரியங்கள் பலவற்றையும் இவர் அனுபவித்துக் கொண்டே அவர்களைப் புறங்கூறுவது பெரியதோர் அறியாமையும் நன்றிமறந்த குற்றமுமாம். யாம் அன்னியநூலின் விதியவிரோதமேல், உன்னேல், பழுதென்று ளத்து என்னும் ஆன்றோர்வாக்குண்மை கடைப்பிடித்து அரியபொருள்கூறும் நுண்ணறிவினார் யாரா யினும் அவரைத் தழுவிச் செல்லும் ஒழுகலாறுடையேம். எப் பொருள் யார்யார்வாய்க்கேட்பினும் அப்பொருள், மெய்ப் பொருள் காண்பதறிவு என்பது திருவருட் கட்டளை யாதலி னென்க. பிள்ளை எழுதிய அவ்விஷயத்தின்மேன் மறுப்பொன் றெழுதும்படி பலர் எம்மை வேண்டியும் அது செய்தற் கமர்ந்திலம். என்னை? அதன்கணெடுத்து மறுக்கற் பாலதாம் நுண்பொருள் ஒன்றுதானுங் காணப்படாமையானும், வாக்கியங்கள் பல செவ்வனே முடிவுபெறாமல் நிற்றலல் லாமலும் வழுச்சொற்கள் பலப்பல காணக்கிடத்தலானும், அவற்றை யெடுத்துக் காட்டுதலாற் பெரும்பயமின்மையானு மென்பது அல்லதூஉம், எம்மாப்தரிரண்டொருவர் அவ் விஷயத் தினைக் கண்டு சாமானியர் மயங்காமல் எம்மைப்பொருட்டு ஒரு மறுப்புச் சித்தஞ் செய்தலானும் யாமதன்கட்புகுந்திலம். புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல் அறங்கூறு மாக்கந் தரும் (குறள் 83) பத்திராதிபர். நா.வே. பொழுதுகள் : பெரும்பொழுது, சிறுபொழுது பெரும்பொழுது : 6 பருவங்கள் பருவங்கள் மாதங்கள் 1. கார் காலம் : மடங்கல் (ஆவணி), கன்னி (புரட்டாசி). 2. கூதிர்காலம் : துலை (ஐப்பசி), நளி (கார்த்திகை). 3. முன்பனிக் காலம் : சிலை (மார்கழி), சுறவம் (தை). 4. பின்பனிக் காலம் : கும்பம் (மாசி), மீனம் (பங்குனி). 5. இளவேனில் காலம் : மேழம் (சித்திரை), விடை (வைகாசி). 6. முதிர்வேனில் காலம் : ஆடவை (ஆனி), கடகம் (ஆடி). சிறுபொழுது வைகரை (நள்ளிரவு) : 2-6 காலை : 6 -10 நண்பகல் : 10 - 2 எற்பாடு(சாயுங்காலம்) : 2-6 மாலை : 6-10 இரவு (யாமம்) : 10-2 தமிழில் மாதங்கள் தை - சுறவம் மாசி - கும்பம் பங்குனி - மீனம் சித்திரை - மேழம் வைகாசி - விடை ஆனி - ஆடவை ஆடி - கடகம் ஆவணி - மடங்கல் புரட்டாசி - கன்னி ஐப்பசி - துலை (துலாம்) கார்த்திகை - நளி மார்கழி - சிலை தமிழ்க் கிழமைகள் திங்கள் - திங்கள்கிழமை செவ்வாய் - செவ்வாய்க்கிழமை புதன் - அறிவன் கிழமை வியாழன் - வியாழக்கிழமை வெள்ளி - வெள்ளிக்கிழமை சனி - காரிக்கிழமை ஞாயிறு - ஞாயிற்றுக்கிழமை பிழைதிருத்தக் குறியீடுகள் தொடர்ச்சியாக வரச் செய் திருப்பிப்போடு இடநிரப்பியை அழுத்து மொக்கை எழுத்தை மாற்று X நீக்கி விடு d/ விட்டுப்போனதைச் சேர் இடம் விடு # இடவெளியை ஒன்றுபோல் செய் சிறிய இட நிரப்பியைப் போடு சொற்களை இணை இறங்கியிருப்பதைத் தூக்கு தூக்கியிருப்பதை இறக்கு வரியை நேர்செய் /// புள்ளியைப் போடு . காற்புள்ளியைப் போடு , அரைப்புள்ளியைப் போடு : முக்காற் புள்ளியைப் போடு ; / ஒற்றை மேற்கோள்குறி போடு இரட்டை மேற்கோள் குறி போடு இணைப்புக் குறியை சேர் _ இட அல்லது வலப்புறம் நகர்த்து [ or ] ஆசிரியரின் விளக்கம் தேவை ? ஓர் `எம் இடநிரப்பி போடு ஓர் `எம் கோட்டைப் போடு இரண்டு `எம் கோட்டைப் போடு புதிய பத்தி பிரி பத்தி வேண்டியதில்லை no தவறான எழுத்து wf அப்படியே இருக்கட்டும் stet மாற்றி அமை trs பெரிய தலைப்பெழுத்தைப் போடு caps சிறிய தலைப்பெழுத்தைப் போடு sc கீழ்வகுப்பு எழுத்தைப்போடு lc சாய்வெழுத்தைப் போடு itals ரோமன் எழுத்தைப் போடு rom புரட்டிப் போடு t.o