2 வெள்ளிவிழா தமிழ்ப் பேரகராதி JublieeTamilDictionary முதலாவது பெயரகராதி பாகம் - 2 சை முதல் க்ஷெள வரை மு த லா வ து பெயரகராதி பாகம் - 2 சை - இகழ்ச்சிக்குறிப்பு,ஓரெழுத்து, கைப்பொருள். சைகதம் - ஆற்றங்கரை, மணல், மணற்கரை. சைகதவுண்டை - மலை. சைகன் - ஒழுக்கந்தவறின பார்ப்பனப் புத்திரன்.சைகை, சைக்கினை - பயில், சாடை. சைங்கம் - சிங்கம். சைங்கிகேயம் - இராகு. சைங்கியம் - சைங்கம். சைசவப்பருவம் - குழந்தைப்பருவம். சைசவம் - இளமை, பதினாறு வயதிற்குள்ளானபருவம். சைதவாகிநி - ஓர்நதி. சைதனம் - ஆத்மா. சைதன்னியதரிசனம் - தானுந் தலைவனுமொன்றெனக் காண்டல். சைதன்னியம் - அறிவு, ஆத்துமா,கடவுள், தத்துவஞானம். சைதிதம் - பிரம்பு. சைதியமுகம் - கமண்டலம். சைத்தியம் - இறப்புக்கல்வெட்டு,குளிர்மை, பலிபீடம், புத்தாலயம். சைத்தியன் - சுக்கிரன். சைத்திரகம் - சித்திரைமாதம். சைத்திரம் - சித்திரவேலை, சித்திரைமாதம், வெற்றி. சைத்திராதம் - குபேரனந்தனம். சைத்திராதன் - வீரன். சைத்திராவலி - சித்திராபூரனை. சைத்திரி - சித்திரைமாதம், யாகமிருபத்தொன்றினொன்று. சைத்திரிகம் - சித்திரவேலை, சித்திரை மாதம். சைத்திரியஞானம் - சித்தஞானம்,பேரறிவு. சைத்திரியம் - தெளிவு. சைத்துவம் - செய்தல். சைநிகன் - சேனைத்தலைவன். சைந்தவம் - இந்துப்பு, சிந்துநதி,குதிரை, தலை. சைந்தவி - சயிந்தவி. சைந்யம் - சதுரங்கபலம். சைமானம் - வெகுமானம். சைமினி - உத்தரமீமாமிச நூலாசிரியன், ஓரிருடி, யமலோகம். சைமினிநகரோன் - நமன். சைமினிநகர் - இயமலோகம். சைம்மினி - இயமன் பட்டணம். சையகிரி - ஓர்மலை. சையம் - கல், குடகுமலை, செல்வம்,மலை. சையெனல் - இகழ்ச்சிக்குறிப்பு. சையை - சைகை. சையோகம் - கூட்டம், புணர்ச்சி, கலத்தல். சையோகித்தல் - கூடுதல். சையோகை - சத்தியினாற் சிவத்துக்குண்டாகுந்துன்பம், மனைவி.சையோத்தி, சையோத்திகம், சையோத் தியம் - அயிக்கம். சைரந்தரி - அன்னியன் வீட்டிலிருப்பவள். சைரிகம் - உழவெருது, கலப்பு. சைரிகன் - உழவன், ஏர்மாடு. சைரியம் - எருது, எருமை. சைரியம் - பெருங்குறிஞ்சி. சைரேயகம் - சயிரேகம். சைலகம் - மலையிருவேலி. சைலசிருங்கம் - மலைமுடி. சைலதரன் - கிருட்டிணன். சைலபதி - இமயமலை. சைலபித்தி - கல்லுளி. சைலம் - கல்லுள்ளது, சேலை, மலை. சைலாந்திரம் - மலைக்குகை. சைவகுரு - ஆகமமார்க்ககுரு. சைவசமயம் - சிவசமயம். சைவசாத்திரம் - சிவாகமம். சைவசித்தாந்தம் - ஓர்நூல், சைவ சமயத்தெளிவுண்மை, ஆகமமுடிவாகியமதம். சைவநூல் - சிவாகமநூல். சைவபூடணம் - ஓர்நூல். சைவம் - சிவசமயம், அஃது உட்சமயமாறினொன்று, பதினெண்புராணத்தொன்று, புலால்தின்னாமலிருக்கை. சைவரல் - இகழ்வுறல். சைவர் - சிவசமயத்தார், விசேடதீட்சை பெற்றோர். சைவலம் - பாசி, தாமரைத்தண்டு. சைவன் - சிவனைவழிபடுவோன்,புலால் தின்னாதவன். சைவாகமம் - சிவாகமம். சைவாசாரம் - சிவசமயவொழுங்கு. சைவியம் - சைவத்திற்குரியது. சைனர் - சமணர், சீனர். சைனன் - அருகசமயத்தவன், அருகன், புத்தன். சைனாபத்தியம் - சேனாபதித்துவம். சைனியம், சைன்னியம் - சேனை. சொ சொகுசா - உயர்ந்த செம்பு, தம்பாக்கு. சொகுசு - அழகு, சௌக்கியம்,நாகரீகம், நேர்த்தி. சொக்கட்டான் - ஓர்சூது. சொக்கட்டான்கவறு - பாச்சிகை. சொக்கட்டான்காய் - சொக்கட்டானாடவைக்குங்கருவி. சொக்கட்டான்பந்தல் - சொக்கட்டான்மணைபோற்செய்த பந்தர். சொக்கட்டான்மனை - சொக்கட்டான்விளையாடு மறைப் பலகைமுதலியன. சொக்கத்தேவன் - கூகை, கூகைக்கட்டு, பொன்னுக்கு வீங்கி. சொக்கநாதன் - சிவன். சொக்கப்பனை - விளைக்கீட்டி லெரிக்குமோர் செய்கை விருட்சம். சொக்கப்பையன் - வேலைக்காரன். சொக்கம் - அழகு, கலப்பின்மை, களவு,கெம்புக்கல், சிறப்பு, தூய்மை,நன்மை, மேன்மை, ஓர்கூத்து. சொக்கரை - குறை, சிறிய, அடைப்பு,மதில் முதலியவற்றின் துவாரம். சொக்கர் - அழகர். சொக்கலி - மூக்கிலிச்செடி. சொக்கலிங்கம் - சொக்கநாதன். சொக்கறை - சொக்கரை. சொக்கன் - சிவன், சொக்கப்பையன்,பொன்னை யுடையவன். சொக்கா - ஓர்வகையங்கி. சொக்காரன் - ஆஸ்திக்குப் பாத்தியஸ்தரான அண்ணன் தம்பிமுதலியவர்கள்.சொக்காலி, சொக்காளி - சிறுபூளைப்பூடு. சொக்கிடுவித்தை - களவுபண்ணமயக்கும் வித்தை. சொக்கு - அழகு, அறியாமை, கண்தூக்கம், கதும்பு, சொக்கன்,சைரந்தரிசொக்கென்னேவல், சோர்வு,பொன், மயக்கு. சொக்குப்பொடி - அயர்ந்து நித்திரையாகும்படி மேலிற்போடும்பொடி. சொக்குவித்தல் - மயக்குதல். சொக்குவித்தை - மயக்குவித்தை. சொங்காரன் - சொக்காரன். சொச்சம் - குறை, பணவட்டி,மாசின்மை, மிச்சம். சொச்சர்தொக்கி - லவங்கம். சொச்சேத்திரம் - கிரகங்களின்சொந்தவீடு. சொச்சோர் - சொற்சோர். சொடக்கு - கடுகு, கிலுகிலுப்பை,சோம்பற்றன்மை, நெட்டி. சொடித்தல் - குறைத்தல். சொடுகு - சொறி, பொடுகு. சொடுதலை - போகணி. சொட்டா - ஓர்வகைப் பட்டையம். சொட்டல் - அணாப்பல், இடித்தல்,குட்டல். சொட்டு - குட்டு, குற்றம், சொட்டென்னேவல், திவலை, துண்டு. சொட்டுதல் - அணாப்புதல், இடித்தல், குட்டுதல். சொட்டுத்தண்டம் - இடுவந்தி. சொட்டுப்போடுதல் - திவலை,விழுத்தல். சொட்டை - ஓராயுதம், கோணல்,நொன்னை, பரிகாசம், பள்ளம்,குறும்பிடி. சொட்டைத்தலை - வெண்டலை. சொண்டறை - சொண்டிலி. சொண்டி - உத்தியோகம், கடனுறுதி,வேர்க்கொம்பு, சுக்கு. சொண்டு - அற்பன், ஆயுதநுனி,உதடு, உத்தியோகம், கனத்தவிளிம்பு, தலையழுக்கு, நிந்தை,பறவைமூக்கு, பொடுகு. சொண்டுக்கதை - கோட்கதை,முகமன்கதை. சொண்டுத்தீன் - உருசியான சிறுதீன். சொண்டுபண்ணல் - இகழ்ச்சி பண்ணல். சொதை - ஐசுவரியம். சொஸ்தகம் - சுகம்.சொஸ்தம், சொத்தம் - சுகம்,சௌக்கியம். சொத்தலி - பனங்காயின் பொய்க்கொட்டை. சொஸ்தானம் - உயிர்த்தெழுதல்,சரியிடம். சொத்தி - நொண்டி, முடம். சொத்தியன் - முடவன்.சொத்திரி, சொஸ்திரி - குலஸ்திரி,மனைவி. சொத்து - உடைமை, குறை, பசை,பொருள். சொத்துவம் - உரிமை, சுயம்பு. சொத்தை - கதுப்பு, சீர்க்கேடு,சூத்தை, புழு, வண்டு முதலியனஅரித்தது. சொந்தம் - உரியது, சுயம். சொப்பம் - சேங்கொட்டை. சொப்பனம் - இரண்டாமவத்தை,கனா. சொப்பனாவத்தை - ஓரவத்தை. சொம் - ஆஸ்தி, உடைமை, உரிமைப்பொருள். சொம்மாளி - உரிமைக்காரன்.சொயம், சொயம்பு - சுயம். சொயாதீனம் - சுயாதீனம். சொரங்கம் - கச்சோலம். சொரசத்தோரசி - இலவங்கப்பட்டை, இலவங்கம். சொரடு - இரும்பு, கொடுக்கி,வளையத்தடி. சொரணை - சொருணை. சொரிகுரும்பை - ஓர் நெல். சொரிதரல் - சுழலல், பொழிதல். சொரிதல் - உதிர்தல், பொழிதல்,மிகவீழ்தல், மிக ஈதல். சொரிதல் சொரிவு - ஈவு, உதிர்வு, தாராளம்,பொழிவு. சொருகம்புல் - ஓர் புல். சொருகல் - சொருகுதல். சொருகுதல் - செருகுதல். சொருணை - சுவரணை. சொருணைகேடு - உணர்ச்சியின்மை. சொரூபஞானம் - பரமஞானம். சொரூபம் - அழகு, உடம்பு, சாயல்,பரம், வடிவு, விக்கிரகம்,இலக்கினம். சொரூபன் - கடவுள். சொரூபானந்தம் - ஓர் வேதாந்த நூல். சொரூபானந்தர் - ஓர் யோகி. சொரூபி - உரூபி, சுரூபி. சொர்க்கம் - சுவர்க்கம். சொர்ணபுட்பம் - அருச்சனைகாலத்தில் கொடுக்கும் தக்ஷிணை. சொர்ணம் - கோடாசுழி, பொன். சொர்ப்பனம் - கனவு. சொர்னமாக்கி - பவள பாஷாணம். சொர்னம் - சொர்ணம். சொர்ன்னக்கல் - இராசாவர்த்தக்கல். சொர்ன்னசீரம் - கரும்பு. சொர்ன்னம் - சொர்ணம்.சொலித்தல், சொலித்திடல் - இடந்திடல், சுவாலித்தல், பிரகா சித்தல். சொலிப்பித்தல் - சொலிக்கச்செய்தல். சொலிப்பு - சுவாலை, பிரகாசம். சொலியன் - முடக்கொத்தான். சொலுசொலுத்தல் - பொலுபொலுத்தல். சொலுசொலுப்பு - பொலுபொலுப்பு. சொலுசொலெனல் - பொலுபொலெனல். சொல் - எழுத்தினோசைச்சொல்,கட்டளை, கள், செந்நெல், செந்நெற்கதிர், சொல்லென்னேவல்,நெல், புகழ், பேச்சு, மொழி,வாக்கியம். சொல்லகம் - உத்தாமணி. சொல்லணி - சொற்றொடைவகைச்சிறப்பு. சொல்லலங்காரம் - சொல்லணி. சொல்லல் - உரைத்தல், பாடல்,சொல்லுதல். சொல்லளிபுள் - கிளி. சொல்லாகுபெயர் - ஓராகுபெயர்,அதுசொல்லின்பெயரதன் பொருட்கு வழங்குவது (உ-ம்)உரைசெய்தான். சொல்லாதசொல் - அசப்பியம்,இரகசியம், வசை. சொல்லானந்தம் - சொற்குற்றம். சொல்லிக்கொள்ளுதல் - எடுத்துப்பேசுதல், பிணைநீற்றல்,பொறுப்புச் சொல்லுதல். சொல்லிலக்கணம் - சொல்லினியல்பு. சொல்லின்பம் - சொற்சுவை. சொல்லின்முடிவினப்பொருண்முடித்தல்- ஓர் யுத்தி. சொல்லுதல் - புலமைபாடுதல்,மொழிதல். சொல்லுதவி - வாயுதவி. சொல்லுறை - சொற்பயன். சொல்லுவான்குறிப்பு - சொல்வோன்கருத்து. சொல்லுறுதி - மெய்வார்த்தை. சொல்லெச்சம் - சொல்லெஞ்சி நிற்பது. சொல்லெஞ்சணி - ஓரணி, அதுசொல்லெச்சம். சொல்லேருழவர் - புலவர், மந்திரிகள். சொல்லொடுபொருள் - சொற்றோறும் பண்ணும் பயன். சொல்லொப்பணி - ஓரணி, அதுசொல்லொத்து வருவது. சொல்வகை - நூலுரை பதினான்கினொன்று. சொல்வரை - சொற்பகுதி. சொல்வளம் - சொற்சாதுரியம்,சொன்னயம்.சொரிவு சொல்வன்மை - சொல்லுறுதி, சொற்சாதுரியம், வாக்குவல்லபம். சொல்விலக்கு - ஓரலங்காரம், அஃதுஆராயாது சொன்னதை விலக்கல். சொல்விளம்பி - கள். சொளுசொளுத்தல் - நீர்ப்பிடிப்பாயிளகிக் காட்டல். சொள்ளல் - குறைவு, வித்தை,சொத்தை. சொள்ளை - சொட்டு, பழுதுபட்டது, புழுவரித்தது. சொறங்கம் - கச்சோலம். சொறி - காஞ்சொறி, குட்டம்,சொறியென்னேவல், தினவு,சொறிசிரங்கு. சொறிகட்டை - ஆவுரிஞ்சுதறி. சொறிக்கல் - சுக்கான்கல், தவளைக்கல், மஞ்சட்கல். சொறிக்கிட்டம் - கீச்சுக்கிட்டம். சொறிதல் - அரித்தல், பிறாண்டல். சொறிமண்டலி - ஓர் பாம்பு. சொறியன் - தவளை. சொறிவு - தினவு. சொற்கப்பனை - சொக்கப்பனை. சொற்கம் - சுவர்க்கம், மாணிக்கம்,முலை. சொற்கருவி - உரைக்காரகவேது,அஃது உதடு, நா, பால், சொற்கலகம் - வாக்குவாதம், விபரீதம். சொற்காத்தல் - சொற்றவறாமை. சொற்குறி - சூதபாஷாணம். சொற்குற்றம் - சொற்பிழை. சொற்கோட்டன் - சொக்கட்டான். சொற்சந்தி - சொற்புணர்ச்சி. சொற்சாதுரியம் - வாக்குவிற்பன்னம். சொற்சித்திரம் - கருவானபேச்சு. சொற்சிமிட்டு - சொற்சாதுரியம். சொற்சீரடி - தளைகள் ஒன்றும்பலவுமடுத்து வருவது. சொற்சுவை - சொல்லின்பம்.சொற்சோர்வு, சொற்சோர் - சொல்லிழுக்கு. சொற்பம் - அற்பம், சிறியது. சொற்பயன் - சொற்பொருள். சொற்பனம் - சொப்பனம். சொற்பின்வருநிலை - மொழிந்தசொல்லே மொழியினும் பொருள்வேறுபட்டு நிற்பது. சொற்பொருட்பின்வருநிலை - சொல்லும் பொருளுமொன்றே மறித்துவருவது, (உ-ம்)வைகலும் வைகல்வரக்கண்டு. சொற்பொருள் - சத்தார்த்தம். சொற்பொருள்விரித்தல் - ஓர்யுத்தி,அஃது சொற்பொருள்விளங்கஉருபு முதலானவற்றை விரித்துச்சொல்லல். சொற்றல் - சொல்லல். சொற்றுணை - சொல்லுதவி. சொற்றொடர்நிலைச் செய்யுள் - ஓர்பிரபந்தம், அஃது சொல்லாற்றொடர்ந்து வருவது. சொனகு - பெரும்புல். சொனாகம் - உத்தாமணி, வேலிப் பருத்தி. சொன்மாலை - ஏற்றமொழி. சொன்மிக்கணி - ஓரலங்காரலம்அது வந்தசொல்லே மீண்டும்மீண்டும் வரத்தொடுத்தல். சொன்றி - சுக்கு, சோறு. சொன்றுக்குழிசி - சோற்றுப்பானை. சொன்னகாரர் - தட்டார். சொன்னசீரம் - கரும்பு. சொன்னதானம் - இரணியதானம். சொன்னபுட்பம் - சுவர்ணபுட்பம். சொன்னபேதி - ஓர் மருந்து. சொன்னமயம் - பொன்னிறம். சொன்னமாக்கி - பவளபாஷாணம். சொன்னம் - பொன். சொன்னல் - இரும்பு, சோளம்.சொன்னல் சோ சோ - அரண், உவமை, ஓரெழுத்து,வியப்புச்சொல், வாணாசுரன்நகர், மதில், அதிசயக்குறிப்பு. சோகநீக்கி - மாதவி. சோகம் - உண்டை, ஒட்டகம்,சோம்பல், சோர்வு, துன்பம்,தொடை, பஞ்சபாணத் தவத்தையினொன்று, அஃது வெதுப்புந்துய்ப்பன தெவிட்டலுமாயிருத்தல், கடுகுரோகிணி, திரட்சி,துக்கம், அதுநான், அவன்நான். சோகம்பாவனை - அப்பரம்பொருள், நான் என்று பாவிக்கை. சோகரிகன் - வேட்டைக்காரன்.சோகரியம், சோகரீயம் - சௌகரியம். சோகவிருத்தி - சத்தாவத்தையிலொன்று, அது சீவாவத்தையிற்சனனமரணதுக்கந் தனக்கிலையென்று தள்ளி நிற்றல். சோகாக்கினி - மிகுதுயர். சோகாத்தல் - துக்கப்படுதல், வதங்குதல், துன்பமுறல். சோகாபனோதன் - ஞானாசாரியன். சோகாப்பு - துயரம். சோகாரி - கடம்பு. சோகி - பலகறை, பிடாரன், விடவைத்தியன், சோகிகீரை. சோகித்தல் - அலசப்படல், துக்கப்படுதல். சோகு - பிசாசம். சோகை - அப்பிராணி, ஓர்நோய்,காமாலை. சோகையன் - காமாலையன். சோங்கம் - அகிலமரம், கிச்சிலிக்கிழங்கு. சோங்கு - ஓர்மரக்கலம், குருகு,துப்பாக்கி முதலியவற்றினடி,மலையின்கண் சோலை, மறத்தல். சோங்குவெட்டு - குதிவெட்டு. சோசகம் - மரப்பட்டை. சோசக்காய் - தேங்காய். சோசனம் - உள்ளி. சோசாக்கினி - மிகுதுயர். சோசியம் - சோதிடசாத்திரம். சோசியர் - சோதிடகாரர். சோச்சி - சோறு. சோச்சியகன் - கீழ்மகன். சோடசசைவம் - சைவபேதம்பதினாறு, பதினாறு பாதச்சைவம். சோடசமுத்திரை - சைவமுத்திரைபதினாறு. சோடசம் - பதினாறு, மரப்பட்டைநார். சோடசவுபசாரம் - பதினாறுவகைவழிபாடு, அஃது அடைகாய்தரல், அமுதமேந்தல், ஆசமனநீர்தரல், ஆடை சாத்தல், கருப்பூரதீபமேந்தல், கால் கழுநீர்தரல், கைகழுநீர்தரல், தவிசளித்தல், தேய்வைபூசல், நறும்புகை காட்டல்,நீராட்டல், மஞ்சளரிசி தூவல்,மந்திரமலரா னருச்சித்தல், மலர்சாத்தல், முப்புரிநூறரல், விளக்கிடல். சோடசாவதானம் - பதினாறுவிதஅவதானம். சோடசாவதானி - பதினாறுவிதஅவதானஞ் செய்வோன். சோடசி - யாகமிருபத்தொன்றினொன்று. சோடசோபசாரம் - சோடசவுபசாரம். சோடணம் - உமிந்துகுடித்தல்,உலர்த்தல்.சோடம், சோஷம் - சந்தோஷம்,பொறுமை, மார்ச்சட்டை. சோடன் - கீழ்மகன், சோம்பன்,மூடன். சோடி - சீக்கிராந்தூள், ஜதை,இரட்டை. சோடித்தல் - அலங்கரித்தல். சோஷித்தல் - களைத்தல், வற்றுதல்.சோசோடிப்பு, சோடினை - அலங்காரத்திற்கு வேண்டுவன. சோடு - இரண்டு, கவசம், சரியொப்பு,தொடுதோல். சோடுகட்டுதல் - சரிவரவிணைத்தல்,சூதாட்டத்தொன்று. சோடுதோல் - பாதகுறடு. சோடை - சடைந்தது, சடைவு. சோஷை - சோர்வு, திரீவரட்சி. சோட்டா - வளைதடி. சோட்டை - ஆசை, பேராசை. சோணகிரி - அருணாசலம், திருவண்ணாமலை. சோணகிரிவள்ளல் - சிவன். சோணங்கி - ஓர்நாய். சோணசைலம் - சோணகிரி. சோணநதி - கங்கையின் ஓர் உபநதி. சோணம் - இரத்தம், ஓர்யாறு, கடல்,சிவப்பு, செங்கரும்பு, செந்தூரம்,தீ. சோணாகம் - பெருவாகை. சோணாசலம் - அருணாசலம். சோணாடு - சோழநாடு.சோணாட்டுமுகையலூர்ச் சிறுகருந்தும்பியார் - ஒரு புலவர். சோணாலு - விருத்தம். சோணிதபுரம் - அசுரரிருக்குமோர்பட்டினம். சோணிதம் - இரத்தம், சிவப்பு,சுரோணிதம், மஞ்சள். சோணேசன் - சிவன். சோணை - அருகு, அருணைமாநகர், காதினருகு, சோணாசலம்,சோணைநதி, புகையிலை,முதலியவற்றினடிப்புறம். சோதகம் - கழிக்குங்தொகை, சுத்திபண்ணல், துளி, மழைவிடல். சோதகர் - ஏழ்தலைமுறையளவுமிறந்த பிதிர், ஏழ்தலைமுறையிற்புத்திரர். சோதகும்பம் - சுத்தோதககும்பம். சோதம் - ஒழுகல், சுத்தமானநீர். சோதரம் - சகோதரம். சோதரன் - சகோதரன். சோதரி - சகோதரி. சோதனம் - சுத்தஞ்செய்தல், சோதித்தல், துரிசு, புடமிடுகை. சோதனி - துடைப்பம். சோதனை - அளவு, ஆராய்வு,கட்டளை, சோதிப்பு, பிரமாணம்,புடமிடுகை. சோதி - அருகன், இடிவு, உணர்வு,ஒளி, கடவுள், கருப்பூரம், சாதிலிங்கம், சிவன், சுவாதிநாள்,சூரியன், சோதியென்னேவல், தீ,பிரகாசம், பூநாகம், வான்மீன்,விட்டுணு, இரா எரிமரம். சோதிக்குட்சோதி - கடவுள். சோதிக்குண்மணி - முத்து. சோதிசக்கரம் - துருவசக்கிரம். சோதிசொருபிணி - அறுபத்தெட்டாவது மேளகர்த்தா. சோதிடகாரர் - சோசியர். சோதிடசாத்திரம் - கலைஞானமறுபத்து நான்கினொன்று. சோதிடநூலோர் - எண்கலைஞர். சோதிடநூல் - சோதிடசாத்திரம். சோதிடம் - சோதிடசாத்திரம், நன்னிமித்தம். சோதிடர் - சோசியர். சோதிடவாதம் - சோதிடவிசுவாசமார்க்கம். சோதிடவாதி - சோதிடமார்க்கி. சோதிதம் - அறிவிக்கப்பட்டது, நியமிக்கப்பட்டது, கழித்துவந்தபேறு. சோதித்தல் - ஆராய்தல், இலங்கல்,பரீட்சித்தல். சோதிநாயகன் - கடவுள். சோதிநூல் - சோதிடநூல். சோதிநீச்சடம் - முத்துச்சிப்பி. சோதிப்பிழம்பு - ஒளிப்பிழம்பு,கடவுள். சோதிப்பு - ஆராய்வு. சோதிப்பு சோதிமண்டலம் - வானசோதிகளின்மண்டலம். சோதிமயம் - ஒளியுருவம், மிக்கவொளி, வாலுளுவை. சோதிமயவேதி - பூநாகம். சோதிமா - சோதிமரம். சோதியம் - வாலுளுவை. சோதிராத்திரி - நடுராத்திரி. சோதிரூபம் - ஒளிவடிவு. சோதிவிருட்சம் - இரவெரி, இராஎரிமரம், சோதிவிழல் - இடிதல். சோதினி - செத்தை, துடைப்பம். சோத்தம் - ஸ்தோத்திரம், இழிந்தார்செய்யும் அஞ்சலி. சோத்தி - அத்தசாமம், சுழுத்தி,நித்திரை. சோத்தியம் - அதிசயம், கழிக்கப்படுந்தொகை, சுத்தம், சோதிக்கப்படுவது, தவறு, வினா. சோத்திரம் - காது, கேள்வி. சோத்திரியம் - தக்கோர்க்களித்தநிலம். சோத்திரியவிந்திரியக்காட்சி - சத்ததன் மாத்திரை. சோர்த்து - சோத்தம். சோநிசி - குகை. சோந்தை - உடந்தை, தடை. சோபகிருது - முப்பத்தேழாவதாண்டு. சோபதானம் - சோபாதானம். சோபபிரகாசன் - எல்லாவற்றையுமறிவாலறிபவன். சோபம் - அழகு, ஆயாசம்,இரக்கம்,ஒளி, கள், சோம்பல், சோர்வு,தாமதகுணத்தொன்று, பத்துக்கோடி, கோடாகோடி, பிரபை. சோபலம் - சோம்பு. சோபலாங்கி - சோம்பன். சோபனம் - அழகு, சந்தோஷம், சுபம்,தாமரை, நித்திய யோகத்தொன்று,அஃதுநன்மை, முகூர்த்தம், வாழ்த்து,பல்லாண்டு, ருதுசாந்தி. சோபாதானம் - முதற்காரண முள்ளது. சோபாலிகை - அடம்பு, அடுப்பு,சுவாலையுள்ளது, விரிதூறு,வெண்ணொச்சி. சோபானம் - கற்படி, தாழ்வாரம்,நன்னிமித்தம், வசதி, படி. சோபிதம் - சௌந்தரியம், பிரபை,அலங்கரிக்கப்பட்டது. சோபித்தல் - ஒளிசெய்தல், சோர்தல். சோபை - அழகு, ஒளி, ஒருநோய்,சோகை. சோப்பம் - அயர்வு, சோர்வு. சோப்பளாங்கி - சோம்பன். சோப்பறுதி - மிகுவாட்டம். சோப்பி - ஈச்சொப்பி. சோப்பு - அடி, சோப்பென்னேவல். சோப்புதல் - அடித்தல், வாட்டுதல். சோமகர்ப்பன் - விட்டுணு. சோமக்கொடி - ஓர்வகை யாகத்திற் கட்டுங்கொடி. சோமசம் - பால். சோமசித்தாந்தி - சோமசித்தாந்தமதஸ்தன். சோமசிந்து - விட்டுணு. சோமசுதன் - புதன். சோமசுதை - நர்மதாநதி. சோமசுந்தரன் - உமையோடு கூடியவழகன், ஓர்பாண்டியன், சிவன். சோமசூரியவமிசம் - சந்திரகுலமுஞ்சூரியகுலமுங் கலந்தவம்சம். சோமசேகரன் - ஓர்பாண்டியன்,சிவன். சோமதாரி - இந்துப்பு, சிவன். சோமதாரை - ஆகாயம். சோமதிக்கு - வடதிசை. சோமநாதன் - சிவன். சோமநாதி - ஓர் பெருங்காயம். சோமபந்து - ஆம்பல், சூரியன், புதன். சோமபானம் - மதுபானம். சோமமணல் - வெள்ளிமணல். சோமமண்டலம் - சந்திரமண்டலம். சோதிமண்டலம் சோமம் - ஆதாயம், ஓர் பூடு, ஓர்யாகம், கஞ்சி, கள், ஆட்டாங்கொடி,அமுதம். சோமயாகம் - பூரணாதினத்துச்செய்யுமோர் வேள்வி. சோமயாகன் - சோமயாககர்த்தா. சோமயாசி - சோமயாகம் செய்பவன். சோமயோநி - ஓர்வகைச் சந்தனம். சோமராகம் - இலைப்பண்ணின்றிறமைந்தனு ளொன்று. சோமலிங்கன் - சோமாரணியேசுரன். சோமவல்லரி - பொன்னாங்காணி. சோமவல்லி - சீந்தில். சோமவாரம் - திங்கட்கிழமை. சோமவுலுக்கம் - தேக்கு, வணங்கல். சோமனுப்பு - இந்துப்பு, பச்சைக்கருப்பூரம். சோமன் - அட்டவசுக்களி லொருவன்,அமுதம், ஓர்வள்ளல், கருப்பூரம்,காற்று, சந்திரன், சவக்காரம்,சிவன், சீலை, தூசு, நமன், நீலபாஷாணம், பன்னிரண்டு முழமுள்ள புடைவை, புதன், மலை. சோமன்சோடு - அங்கவஸ்திரமுமுடையும். சோமாக்கியம் - செவ்வல்லி, தாமரை. சோமாரணியம் - ஓர்வனம். சோமாசி - சோமயாசி, ஒருசிற்றுண்டி.சோமாறல், சோமாறுதல் - இரவல்வாங்குதல், ஒருத்தியைப் பலர்புணரல், சோர்மாறுதல், திருடல்,பண்டமாற்றல். சோமாற்று - சோர்மாற்று. சோமிகயாகம் - சோமயாகம். சோமுகன் - ஓரசரன். சோமேசுரன் - சிவன். சோமேசவெண்பா - சிவஞான யோகிகளியற்றிய நூல். சோமேசன் - சிவன். சோமேசுரன் - சிவன். சோமோத்பவை - நர்மதாநதி. சோம்பலம் - சேரான்கொட்டை. சோம்பல் - அழுங்கல், சோம்புதல்,மயக்கம், வசூரி.சோம்பரை, சோம்பறை - சோம்பு. சோம்பற்றழும்பு - அம்மைத்தழும்பு. சோம்பன் - சோம்பறைகாரன்.சோம்பாகி, சோம்பாயி - சமையற்காரன். சோம்பி - சோம்பன். சோம்பு - அழுங்கல், சோம் பென்னேவல், தாமதகுணத் தொன்று,பெருஞ் சீரகம், மடி அஃது மாயயாக்கை பதிணென் குற்றத்தொன்று, மந்தம். சோம்புதல் - உறங்கல், தாமதித்தல்,மடியாதல், வாட்டங் கொள்ளுதல். சோம்பேறி - சுவர்ணபேதி, சோம்பி. சோய்வு - சோர்வு. சோரகவி - ஒருவர் பாவையெடுத்துச்சில மாற்றுதல் செய்து வேறொருவர்க் குரைப்பவன். சோரகன் - கள்வன். சோரக்கதண்டு - கருவண்டு. சோரசத்துரு - சவ்வீரம். சோரணம் - விடுதல்.சோரத்தானம், சோரஸ்தானம் - ஆறாமிடம். சோரத்திரவியம் - கொள்ளையிட்டபொருள்.சோரத்திரீ, சோரஸ்திரீ - விபசாரி,வேசி. சோரத்துவம் - கள்ளத்தனம். சோரநாசம், சோரபஞ்சநம் - கள்வர்சேதம். சோரபயம் - கள்வர்பயம். சோரபாஷாணம் - ஓர்பாஷாணம். சோரபுட்பம் - விளாத்தி. சோரபுத்திரன் - விபசாரபுத்திரன். சோரபுருஷன் - கள்ளப்புருஷன். சோரபேதி - அஞ்சனபாஷாணம். சோரப்போடுதல் - ஆறப்போடுதல்,பின் போடுதல். சோரமார்க்கம் - தூர்த்தத்தனம். சோரமிடுதல் - களவெடுத்தல். சோரம் - களவு, வஞ்சனை, விபசாரம்,வைப்புப் பாஷாண முப்பத்திரண்டினொன்று. சோரம்போதல் - களவுப்போதல்,கற்பழிதல், தவறுதல். சோரர் - திருடர். சோரல் - சோருதல், தளர்தல். சோரவிடுதல் - இளகவிடுதல், காரியத்தைப் பின்போடுதல், தவறவிடுதல். சோரன் - ஆட்டுக்குட்டி, ஓர்வருடதேவதை, திருடன். சோராவாரி - கொள்ளை. சோரி - இரத்தம், மழை, சிறு செருப்படை. சோரிகை - களவு. சோருதல் - வாடுதல். சோர் - சோரென்னேவல், சோர்வு. சோர்ச்சி - அயர்ச்சி, சோகம், தளர்வு,சோர்வு. சோர்தல் - தவறுதல், தளர்தல்,பொசிதல், வதங்குதல், வாடல்,விழுதல், சொரிதல், கழலல். சோர்த்தல் - கவர்தல். சோர்பு - சோர்வு. சோர்மாறுதல் - நெகிழவிடுதல். சோர்மாற்று - நெகிழ்ச்சி. சோர்வாதம் - அயர்ச்சிநோய். சோர்வு - அயர்ச்சி, களவு, தவறு,தளர்வு, நிறையழிவு, நெகிழ்வு,மறதி, மெலிவு, வதக்கம். சோலி - காரியம், தொந்தரை, தோணியிலொதுங்கிடம், மார்க்கச்சு. சோலை - தோப்பு, மரச்செறிவு. சோலைமலை - சுப்பிரமணியர்ஸ்தலம், மதுரைக்கருகிலோர்விஷ்ணுதலம். சோவெனல் - ஒலிக்குறிப்பு. சோவை - நீர்க்கோவை. சோழகக்கச்சான் - தென் மேற்றிசை, தென் மேற்றிசைக் காற்று. சோழகக்கொண்டல் - தென் கீழ்த்திசை, தென் கீழ்த்திசைக் காற்று. சோழகம் - தெற்கு, தென்காற்று. சோழங்கபாஷாணம் - ஓர் பாஷாணம். சோழங்கன் - சோழன். சோழமண்டலம், சோழம் - சோழதேயம்,அஃது தேயமைம்பத்தாறி னொன்று. சோழன் - தமிழ்நாட்டு மூவேந்தரிலொருவன். சோழி - சோகி.சோழியக்கடகம், சோழியக்கூடை - சாட்டுக்கூடை, மண்ணள்ளுங்கடகம். சோழியப்பை - இரப்போர்பை. சோழியர் - ஓர்சாதியார். சோழியவணம் - இருபதினாயிரம்வெற்றிலை பாக்குக் கொண்டது. சோழியவேளாளர் - சோழியர். சோழியன் - ஓர்வேளாளன், மண்வெட்டி, சோழநாட்டான். சோழியாவணம் - சோழியவணம். சோளகம் - சௌளம். சோளம் - ஓர்பயிர், சங்கஞ்செடி,இசங்கு. சோளனா - ஓர்பை. சோளன் - சோளம்.சோளி, சோளிகை - ஓர்கூடை,பிச்சைக்காரர் பை. சோறு - அன்னம், கற்றாழஞ் சோற்றிமுதலியன, பரணிநாள், பூஞ்சுண்ணம். சோறுகொல்லி - அன்னபேதி, பெருந்தீனிக்காரன். சோறூட்டு - அன்னப்பிராசனம். சோற்றாலாத்தி - ஓராலாத்தி. சோற்றி - மரத்தினுட்சோறு, வயிரமற்றது. சோற்றிலை - கற்றாழை. சோற்றுக்கற்றலை - ஓர்மீன். சோற்றுப்பதம் - காய்கள் பழுக்கத் தக்க பருவம். சோற்றுப்பாளையம் - ஸ்திரீசனம். சோற்றுப்பை - இரைப்பை. சோனகம் - தேயமைம்பத்தாறினொன்று, பதினெண்பாடையினொன்று. சோனகர் - துலுக்கர், யவனர். சோனம் - இரும்பு, சிறுகரும்பு. சோனாமாரி - சோனாவாரி. சோனாமேகம் - பெருமழை பொழியுமுகில். சோனாவாரி - பெருமழை, விடாமழை. சோனை - சொரிதல், திருவோணநாள், விடாமழை. சோனைப்புல் - அக்கதேவி. சோனைமழை - பெருமழை. சோன்மதன் - பித்தன். சௌ சௌகசூத்திரன் - பள்ளியெழுச்சிபாடுவோன். சௌகதன் - சூனியவாதி, புத்தன். சௌகதிகம் - சந்தேகம். சௌகந்தம் - சுகந்தம். சௌகந்தி - கந்தபாஷாணம், ஒருமாணிக்கம். சௌகந்திகம் - கருங்குவளை, செங்குவளை, பதுமராகமணி, மாணிக்கத்தின் மூன்றாவது சாதி. சௌகந்திகை - ஓர்வகைத் தாமரை,நல்லமண முடையது. சௌகந்தியம் - சுகந்தம். சௌகம் - கிளி, துக்கம். சௌகரிகன் - வேடன். சௌகரியம் - சுகம், சோகரியம். சௌகாதிகம் - மகா யோகபீடம்,மங்கல சூத்திரம்.சௌகாத்தியம், சௌகார்த்தகம், சௌகிருத்தியம் - சினேகம். சௌக்கியம் - சந்தோஷம், சுகம்,வசதி. சௌகுமாரியம் - இளமை, சுகுமாரம். சௌசம் - சுத்தஞ்செய்கை, சுத்தம். சௌசவிதி - சுத்தஞ்செய்விதி. சௌசன்னியம் - அன்பு, இரக்கம்,சினேகம், பட்சம். சௌசன்னியன் - பட்சமுடையோன். சௌசாசாரம் - ஆசவுச நிவர்த்திசெய்விதி.சௌசி, சௌசிகன் - தையற்காரன். சௌசேயன் - வண்ணான். சௌடால் - இடம்பம். சௌடீரியம் - வீரம். சௌடு - சவுடு. சௌண்டி - ஓர் பிதிர், திப்பிலி. சௌண்டிகரணம் - சிராத்தக்கிரியையினொன்று. சௌண்டிகர் - கள்விற்போர். சௌதம் - அரண்மனை, சாலை,மலிவு, வெள்ளி, மாளிகை. சௌதாகிரி - குதிரை வியாபாரி. சௌதாக்கிரிக்குதிரை - விலைக்குதிரை. சௌதாசன் - இட்சுவாகு வமிசத்திற்பிறந்த ஓரரசன். சௌதாமனி - மின். சௌதாயம் - சீதனம், நன்கொடை,பந்தயப்பொருள். சௌதாயிகம் - சீதளம். சௌத்தி - சக்களத்தி, சதுர்த்தி. சௌத்திரன் - சூத்திரன். சௌத்திராந்திகம் - சவுத்திராந்திகம். சௌத்திராமணி - யாகமிருபத் தொன்றினொன்று. சௌநந்தம் - பலராமனுலக்கை. சௌநந்தி - பலதேவன். சௌந்தரநாயகி - சௌந்தரியவதி. சௌந்தரமுகம் - பூரித்த மகிழ்ச்சியான் மலர்ந்தமுகம். சௌந்தரம் - அழகு. சௌந்தரலகிரி - ஓர் நூல். சௌந்தரன் - அழகன், சிவன். சௌந்தரி - அழகி, பார்வதி.சௌந்தரிகம், சௌந்தரியம் - சௌந்தரம், அழகு. சௌந்தரியவதி - அழகுள்ளவள். சௌந்தரீகம் - பேரழகு. சௌந்தரேசன் - சிவன், மதுரைச்சொக்கநாதர். சௌபஞ்சனம் - புனன் முருங்கை. சௌபம் - அரிச்சந்திரன் பட்டணம். சௌபரி - ஓர் முநி. சௌபன்னம் - சுக்கு, மரகதம். சௌபத்திரன் - சுபத்திரை மகன். சௌபத்திரேயன் - அபிமந்யன். சௌபதிகம் - இராப்போர், பாரதத்திலோர் பருவம். சௌபாக்கியசிந்தாமணி - ஓர்ஒளஷதம். சௌபாக்கியம் - நித்தியயோகத்தொன்று, மிகுபாக்கியம். சௌபாக்கியவதி - மிகுபாக்கியமுடையவள். சௌபாஞ்சநம் - முருங்கைமரம். சௌபானம் - சோபானம். சௌபிகன் - இந்திரசாலிகன்மாந்திரிகன். சௌப்திகம் - துக்கத்தில் நிகழுஞ் செய்கை. சௌமநசை - சாதிபத்திரி. சௌமம் - சவுமம். சௌமனசியம் - பூரணம். சௌமன் - புதன். சௌமாரம் - இளமை. சௌமிகம் - சோமிக யாகம்.சௌமித்திரன், சௌமித்திரி - இலக்குமணன். சௌமித்திரை - சுமித்திரை. சௌமிய - நாற்பத்து மூன்றாவதாண்டு. சௌமியக்கிரகம் - சுபக்கிரகம். சௌமியதாது - கோழை. சௌமியத்துவம் - அழகு, சாந்தம்,மனவொடுக்கம். சௌமியநாராயணன் - விஷ்ணு. சௌமியம் - சௌமியத்துவம். சௌமியர் - சாந்தர், முனிவர். சௌமியன் - அருகன், சாந்தன்,பன்னோருருத்திரரி லொருவன்,புதன்.சௌமேசகம், சௌமேருகம் - பொன். சௌரகன் - நாவிதன். சௌரபம் - குங்குமம், பரிமளம். சௌரபேயம் - எருது. சௌரப்பியம் - சுகந்தம். சௌரப்பியன் - குபேரன்.சௌரமாதம், சௌரமானம் - சூரியன். சௌரம் - அட்டாதச வுபபுராணத்தொன்று, சூரம், சூரியமாதம்,சௌளம், நாள், மயிர்கழித்தல். சௌவரம் - வாசனை. சௌரன் - சனி, சூரியன், சோரன்.சௌராடி, சௌராட்டி - ஓர் பண்.சௌராஷ்டிரம், சௌராட்டிரம் - ஓரிராகம், ஓர் தேயம். சௌரி - கருடன், கன்னன், சனி,தாருகன்மனைவி, திருமால்,துர்க்கை, நமன். சௌரிகம் - மோக்கம். சௌரிகன் - கள் விற்போன். சௌரிகை - சோரம். சௌரியப்பிரதாபம் - இராச மகிமை. சௌரியம் - களவு, பலம், வீரம். சௌரியவான் - சூரன், பலசாலி,வீரவான். சௌரியன் - கன்னன், சூரபன்மன்,சூரியபுத்திரன், சௌரியவான். சௌரியார்ச்சிதம் - சோராத் திரவியம். சௌரிரத்நம் - நீலமணி. சௌரு - சவர். சௌவம் - கட்டளை. சௌவர்ணம் - சுக்கு, மரகதம். சௌவஸ்திகன் - புரோஹிதன். சௌவிதன் - அண்ணகன், அந்தப்புரக் காவற்காரன். சௌவீரகம் - இலந்தைமரம். சௌவீரம் - இலந்தைக்கனி, ஓர் மருந்து. சௌளகருமம் - குடுமிச்சடங்கு. சௌளகம், சௌளம் - மயிர் கழித்தல்,குடுமிவைத்தல். சௌளாம்பரம் - பட்டாடை. சௌனகன் - ஓரிருடி. சௌனகீயம் - உபநிடத முப்பத்திரண்டி னொன்று. சௌனந்தி - பலராமன். சௌனிகன் - ஊன்விற்போன்,புலைஞன். ஞ ஞஃகான் - ஞகரம். ஞண்டு - கற்கடகவிராசி, நண்டு. ஞமகண்டன் - காணாக்கிரகத்தொன்று. ஞமலி - கள், நாய், மயில். ஞமன் - யமன். ஞயம் - நயம். ஞரலுதல் - ஒலித்தல், முழங்கல். ஞரல்வு - ஒலி. ஞப்தி - அறிவு. ஞலவல் - மின்மினிப்பூச்சி, நுளம்பு. ஞறா - மயிற்குரல். ஞா ஞாங்கர் - இடம், இனி, பக்கம்,முன்பு, மேல், வேல், கரை, முன். ஞாஞ்சில் - கலப்பை, மதிலுறுப்பு,நாஞ்சில். ஞாட்பு - கூட்டம், படை, பாரம்,போர், போர்க்களம், வலி. ஞாணோதை - ஞாண்டெறிக்குமொலி. ஞாண் - கயிறு, வின்னாண், நாண். ஞாதசித்தாந்தம் - அறிவிற்றேற்றம். ஞாதசித்தாந்தன் - சோமசூரியசித்தாந்தங்களை யறிந்தவன். ஞாதம் - அறியப்பட்டது, அறிவு. ஞாதவியம் - அறிதற்குரியது. ஞாதா - அறிவுடையோன். ஞாதி - சுற்றம், தந்தை, தாயத்தான். ஞாதிகருமம் - சுற்றத்தார்க்குச் செய்யுங்கருமாதி. ஞாதிகள் - தாயத்தார், பங்காளிகள். ஞாதுரு - அறிவு, காண்போன், அறிகிறவன். ஞாதேயம் - பந்துத்துவம். ஞாத்தல் - கட்டுதல். ஞாபகக்கருவி - அறிவிற்குத் தாரகமாய கரணங்களும் பொறிகளும். ஞாபகசூத்திரம் - எளிதினியற்றற்பாலவாயதனையரிதாய்ப் பிறிதொரு பொருளாலறிவிப்பது. ஞாபகத்துணைக்கருவி - அறிவிற்குக்காரணமாயகருவி, அஃது கண்,செவி, மூக்கு, மெய், வாய். ஞாபகநிமித்தகருவி - ஆத்துமா. ஞாபகப்படுதல் - நினைவு கூருதல். ஞாபகப்படுத்தல் - அவதானப்படுத்தல், நினைப்பித்தல். ஞாபகமுதற்கருவி - சீவசாட்சி. ஞாபகம் - அரும்பொருள், அறிவு,இலக்கிய வெடுத்துக்காட்டு,நினைவு, புறனடை. ஞாபகவேது - அறிவிற்குக் காரணமாயது, கருவிமுதலிய காரணமாறு மன்றிப் பிரகாரணத்தானுய்த்துணரக் கூறுவது. ஞாபகி - நினைப்பாளி. ஞாபநம் - மோதிப்பு.ஞாபிதம், ஞாபிதை - அறிவித்தல். ஞாயம் - நியாயம். ஞாயில் - மதிலுறுப்பு, மதில். ஞாயிறு - ஆதிவாரம், சூரியன்,சங்கிலி நாச்சியாரவதரித்த திருவொற்றியூருக்கருகாமை யிலுள்ளஓரூர். ஞாயிறுதிரும்பி - சூரியகாந்தம். ஞாயிறுவணங்கி - கொழுஞ்சி. ஞாலமாது - ஊமத்தை, பூமிதேவி. ஞாலமுண்டோன் - திருமால். ஞாலம் - ஊமத்தை, பூமி, உலகம். ஞாலம்படைத்தோன் - பிரமன்.ஞாலல், ஞாலுதல் - தொங்குதல்,நாலுதல். ஞாழல் - குங்குமமரம், குங்குமம்,கோங்குமரம், சங்குபுட்பம்,பலினி, பொன்னாவிரை, மயிர்க்கொன்றை, வைரம். ஞாழி - வள்ளைக்கொடி. ஞாழல்மாது - ஊமத்தை. ஞாளம் - படர்பொடி. ஞாளி - கள், நாள்.ஞாளிகம், ஞாளிதம் - வள்ளைக்கொடி. ஞாளியூர்தி - வயிரவன். ஞாற்சி - தொங்குதல். ஞானகாண்டிகர் - மூவகைப் பக்குவரிலொருவர். ஞானகுரு - காரணகுரு, பரமகுரு,ஞானோபதேசஞ்செய்யுங் குரு. ஞானக்கண் - தேவஞானம், பிரத்தியட்சப்படாதவற்றை யறியத்தகுமறிவு, அறிவாகிய கண். ஞானக்களை - ஞானசாதனத்தாலுண்டாகுங்குறி. ஞானக்காட்சி - சைதன்னிய தரிசனம். ஞானசத்தி - ஞானாசத்தி. ஞானசமாதி - ஞானநிட்டையினொன்று. ஞானசரிதர் - ஞானிகள்.ஞானசாதனம், ஞானசாதனை - ஞான பயிற்சி. ஞானசாத்திரம் - ஞான நூல். ஞானசுகம் - பேரின்ப சந்தோஷம். ஞானசூட்சம் - பரமரகசியம். ஞானசைவம் - ஓர் சைவம். ஞானதிசை - ஞானாசாரத்தினிற்குங்காலம்.ஞானதிட்டி, ஞானதிருட்டி - ஞானக்கண். ஞானதீட்சை - ஞானவுபதேசம். ஞானத்தகப்பன் - ஞானஸ்நானப்பிதா. ஞானத்தாய் - ஞானஸ்நானத்தாய்.ஞானஸ்தானம், ஞானஸ்நானம் - அகஸ்நானம், கிரீஸ்து மார்க்கத்தோர் சடங்கு.ஞானத்தில்கிரியை, ஞானத்தில் சரிதை,ஞானத்தில்ஞானம், ஞானத்தில்யோகம் - சைவநிலை பதினாறுபாதத்துளொன்று. ஞானநாயகன் - கடவுள், சிவன். ஞானநிட்டை - ஞானானுட்டிப்பு. ஞானநிலை - ஞானமார்க்கம். ஞானநூல் - ஞானசாத்திரம். ஞானபரன் - கடவுள், குரு. ஞானபாகை - வேதநூற் பொருள்களினொன்று. ஞானபாதம் - நான்குபாதத் தொன்று,அஃது சிவனுஞ்சீவனுமொன்றெனக் கண்டு நிற்கை. ஞானபாரகன் - ஞானவறிவிலேதெளிந்தவன். ஞானபுத்திரன் - சீஷன். ஞானபூசை - மனோபூசை. ஞானபூரணி - பார்வதி. ஞானபூருவம் - முன்னறிவு. ஞானபூர்த்தி - மிகுஞானம்.ஞானப்பிராந்தி, ஞானப்பைத்தியம் - ஞானமயல். ஞானமார்க்கம் - ஞானநிலை. ஞானநித்திரை - தேவதியானமுத்திரை. ஞானமூர்த்தி - கடவுள், சரச்சுவதி,சிவன். ஞானம் - அறிவு, இராசதகுணத்தொன்று, கல்வி, சாத்துவிககுணத் தொன்று, தெளிவு, நல்லொழுக்கம், இலக்கினத்திற்குஐந்தாமிடம், பத்தாமிடம். ஞானரேகை - கைவரையி னொன்று. ஞானவடிவம் - பஞ்ச விகாரங்கட் கன்னிய ரூபம். ஞானக்கட்டளை - ஓர் வேதாந்த நூல். ஞானவதி - ஞானமுள்ளவன். ஞானவஸ்து - கடவுள். ஞானவல்லி - பார்வதி. ஞானவழி - சைவநிலை நான்குபாதத்தொன்று. ஞானவாசிட்டம் - இரமானுக்குவசிஷ்டராற் கற்பிக்கப்பட்ட ஓர்வேதாந்த நூல். ஞானவான் - ஞானி. ஞானவிரல் - ஆழிவிரல். ஞானன் - கடவுள், பிரமன். ஞானவெட்டி - ஓர் நூல். ஞானாகாயம் - பரவெளி. ஞானாசத்தி - பஞ்ச சத்தியி னொன்றுஅஃது ஐம்பொறி யுணர்ச்சியாகநின்று கருமங்களையறிந் தூட்டுவது. ஞானாசாரம் - ஞானவொழுக்கம். ஞானாசாரியன் - ஞானபோதகன். ஞானாதிக்கம் - ஞானாதிகாரம். ஞானாதிக்கர் - கடவுளைக் குறித்தஞானத்திலாதிக்கம் பெற்றோர். ஞானாதுரம் - ஞானவேடணை. ஞானாத்துமா - சுத்தாத்துமா. ஞானாமிர்தம் - ஒரு சைவசமயசாத்திரம். ஞானார்த்தம் - உட்பொருள், ஞானபரமான பொருள். ஞானாவரணியம் - அறிவுமறைப்பு. ஞானானந்தம் - பேரின்பம். ஞானானந்தன் - கடவுள். ஞானானுட்டானம் - ஞானநிட்டை. ஞானானுபவம் - ஞானபோகம். ஞானானுபானம் - திரவியம், திருவிருந்தவஸ்து. ஞானி - அருகன், கோழி, பிரமன்,பேரறிவுடையோன், கேது. ஞானியண்டம் - கோழிமுட்டை. ஞானேந்திரியம் - அறிகருவி, அஃதுமெய், வாய், கண், மூக்கு, செவி. ஞானோதயம் - ஒரு வேதாந்த நூல். ஞானோபதேசம் - ஞான போதகம். ஞான்று - ஓரிடைச்சொல், காலம்,நாள். ஞி ஞிமிர் - ஒலி, நிமிரென்னேவல். ஞிமிர்தல் - ஒலித்தல், நிமிருதல். ஞிமிறு - வண்டு, பொன்வண்டு,தேனி. ஞெ ஞெகிழம் - பொற்சிலம்பு, சிலம்பு. ஞெகிழி - கொடுவேலி, சிலம்பணி,சிலம்பு, தீ, தீப்பொறி, நெருப்புக்கொள்ளி, தீக்கடைகோல், விறகு. ஞெகிழ்தல் - அலையல், அவிழ்தல்,வாடுதல், நெகிழ்தல், மலர்தல். ஞெண்டு - கற்கடகவிராசி, நண்டு. ஞெண்டுகம் - பெருவாகை. ஞெப்தி - ஞாபகம். ஞெமர்தல் - பரத்தல். ஞெமிர்தல் - ஒடிதல், நெரிதல்,பரத்தல். ஞெமிர்த்தல் - ஒடித்தல், நெரித்தல்,பரப்புதல். ஞெமுக்கம் - அழுந்துகை.ஞெமுங்கல், ஞெமுங்குதல் - அழுந்தல். ஞெரி - ஞெரியென்னேவல், நெரிவு. ஞெரிதல் - நெரிதல். ஞெரித்தல் - நெரித்தல். ஞெரேலெனல் - அச்சக்குறிப்பு, அனுகரணவோசை, ஒலிக்குறிப்பு,சீக்கிரக் குறிப்பு. ஞெலிகோல் - தீக்கடைகோல். ஞெலிதல் - கடைதல், குடைதல். ஞெலுவல் - செத்தல். ஞெலுவன் - தோழன். ஞெளிர் - உள்ளோசை, ஒலி, ஞெள்ளல் - உடன்படல், ஒலித்தல்,சீக்கிரம், சோர்பு, தவறு, பள்ளம்,மிகுதி, மேன்மை, வீதி. ஞெள்ளெனல் - அனுகரணவோசை. ஞே ஞேயம் - அறியப்படுவது, நெய், நேயம். ஞேயர் - அறிவுடையோர், நேயர். ஞேயா - பெருமருந்து. ஞை ஞை - இகழ்ச்சிக்குறிப்பு. ஞொ ஞொள்குதல் - அச்சக்குறிப்பு, அலைதல், இளைத்தல்,சோம்பல், குத்தல். த த - ஓரெழுத்து, குபேரன், பிரமன். தகசு - ஓர் மிருகம். தகடு - அடர்பு, இலை, இலைத்தட்டு, ஐமை, வடிவு, கம்மாறுவெற்றிலை, மண்படை, இதழ்,புறவிதழ், மின்னும்பொன். தகடூர்யாத்திரை - ஓர்நூல்.தகட்டரிதாரம், தகட்டுத்தாளகம் - ஓர்மருந்து. தகண் - தட்டு, தடை. தகதகெனல் - ஒலிக்குறிப்பு. தகப்பன் - ஈன்றோன், தந்தை. தகமை - தகைமை. தகம் - உட்டணம், எரித்தல்,நித்திரை, நீர், வேகம். தகரடி - சிதறவடிக்குமடி. தகரப்பொடி - வாசனைப்பொடி. தகரம் - இரும்பின் மேற்பூசும் ஓர்லோகம், ஈயம், ஓரெழுத்து,தகரமரம், அஃது பஞ்சவிரையினொன்று, மயிர்ச்சாந்து,வாசனைப்பண்டம், விலங்கின்பிள்ளை, ஒரு வித்தை. தகராறு - தடை. தகரு - புன்முருக்கு. தகரை - ஓர் சிறு செடி. தகர் - சுறாவினாண், செம்மறிக்கடா, தகரென்னேவல், துண்டு,துரு வாட்டேறு, பராகம், பலாசு,பூமி, மேடவிராசி, யாளி, யானையிவற்றினாண், மேட்டு நிலம். தகர்ச்சி - உடைவு. தகர்தல் - உடைதல், நெரிதல்,நொறுங்கல். தகர்த்தல் - அடித்தல், உடைத்தல்,குட்டுதல். தகர்ப்பு - உடைப்பு, குட்டு. தகர்வு - உடைவு. தகல் - தகுதல், திராய், தடை. தகல்பாசி - எத்தன், மோசக்காரன். தகவல் - உதாரணம். தகவு - அறிவு, உரிமை, உவமை,ஒழுக்கம், கிருபை, குணம், தகுதி,தெளிவு, நன்மை, நீதி. தகழி - அகல். தகழிகை - உண்கலம். தகழிச்சி - கருப்பூரம். தகளி - தகழி. தகனக்கிரியை - ஈமச் சடங்கு. தகனசேதனம் - புகை. தகனபலி - தீயிலிடும் பலி. தகனப்பிரியை - சுவாகாதேவி. தகனம் - எரித்தல், சுடல். தகனன் - அக்கினிதேவன், துட்டன்,நெருப்பு. தகனாராதி - நீர். தகனித்தல் - தகனம்பண்ணுதல். தகனை - உலோக கட்டி. தகனோபலம் - சூரியகாந்தம். தகன் - அக்கினி, திராய், பூரான். தகா - தந்திரம், தாகம், பேராசை,மோகம். தகாக்காட்டுதல் - ஆசைபதங்காட்டல். தகாதது - ஒழுங்கற்றது. தகாதவன் - ஒழுக்க மில்லாதவன்,பொருத்தமில்லாதவன். தகாதா - வழக்கு. தகாமை - ஒவ்வாமை, தகுதியின்மை. தகாவி - மரமஞ்சள். தகித்தல் - சீரணித்தல், சுடுதல். தகிப்பு - சுடுகை, பட்சிப்பு. தகிலன் - வஞ்சகன். தகிலாயம் - சினேகம், நன்றி. தகிலித்தல் - உட்செலுத்தல், பலப்பித்தல், விதித்தல், வஞ்சித்தல். தகிலிப்பு - உட்செலுத்துகை, மத்திப்பு. தகிலிமா - சேரான்மரம். தகுணிச்சம் - ஒருவகைத்தோற்கருவி. தகுணிதம் - வாச்சியப்பொது, ஒருதோற்கருவி. தகுதல் - இயலுதல், உரிமை,ஏற்குதல் . தகுதி - அறிவு, உரிமை, ஒழுக்கம்,குணம், சனக்கூட்டம், நடுநிலைமை, பொறுமை, பாத்திரம். தகுதிப்பொருள் - தக்கபொருள்.தகுதியர், தகுதியோர் - அறிஞர்,தமர், பெருமையிற் சிறந்தோர்,நடுவு நிலைமையோர். தகுந்தவர் - ஒழுக்கமுடையோர். தகுவ - இயன்றவை. தகுவர் - அசுரர். தகுவல் - தகவல். தகுவியர் - அசுரமகளிர். தகுளம் - மகளிர் விளையாட்டு. தகை - அழகு, அன்பு, இளைப்பு,கவசம், குணம்,தகுதி, தகையென்னேவல், தளர்வு, தாகம், துண்டு,பெருமை, முகடு, மேன்மை,அருள், தடை, கூறுபாடு. தகைதல் - ஆணையிடல், இளைத்தல்,தடுத்தல். தகைத்தல் - ஆணைசெய்தல்,இளைத்தல், தடுத்தல், வாட்டுதல்,கட்டுதல். தகைத்து - தன்மையுடையது. தகைப்பு - இளைப்பு, தடுப்பு, மதிற்சுற்று,தகைமை -அழகு, ஒழுங்கு, குணம்,தகுதி, தன்மை, பெருமை. தகையணங்குறுத்தல் - களவுப்புணர்ச்சி செய்த தலைவியைக்குறிப்பினாலச் சுறுத்தல். தகைவிலான் - அடைக்கலாங்குருவி. தகைவு - தடை, தளர்ச்சி. தக்ககன் - அட்டநாகத்தொன்று. தக்கசங்காரன் - சிவன். தக்கடி - குதர்க்கம், துரோகம், மூர்க்கம்,வஞ்சனை. தக்கடை - தராசு. தக்கணம் - தாளத்தின்மார்க்க சடப்பிரமாணத்தொன்று, அஃது எட்டுமாத்திரையோர் களையாகக்கொண்டது, தெற்கு, வலப்பக்கம்.தக்கணாக்கினி, தக்கணாக்கினியம் - வேதாக்கினி மூன்றி னொன்று. தக்கணாயணம், தக்கணாயனம் - தெட்சணாயனம். தக்கணை - தெட்சனை. தக்கது - தகுதியானது. தக்கம் - ஓர்விளையாட்டு, தருமநூல்பதினெட்டி னொன்று. தக்கராகம் - பாலைப்பண்ணின்றிறமைந்தனுளொன்று. தக்கர் - சாடி, தக்கார். தக்கயாகப்பரணி - சைவசமய அருமைகளையும் திருத்தொண்டர் பெருமைகளையும் கூறும் ஓர் நூல். தக்கல் - தக்கை. தக்கவர் - தகுதியுடையோர். தக்கனை - தக்கபடி. தக்கன் - அட்டநாகத்தொன்று,நவப்பிரமாவி லொருவன். தக்காரி - தழுதாழை, வாதமடக்கி, தக்கார் - அறிஞர், உறவோர், தகுதியுடையோர், பெருமையிற் சிறந்தோர், நடுவு நிலைமையுடையோர், காரியமுடிக்குந் திறலோர். தக்காளி - ஓர் செடி. தக்காளிப்பழம் - பழவர்க்கத்திலொன்று. தக்காளிப்பிள்ளை - பிள்ளைப்பூச்சி. தக்காள் - சிறந்தவள். தக்கானியம் - கொத்துமல்லி.தக்கிணம், தக்ஷிணம் - தெற்கு, வலப்பக்கம்.தக்கிணாமூர்த்தி, தக்ஷிணாமூர்த்தி - சிவன் மூர்த்தி பேதம்.தக்கிணை, தக்ஷிணை - காணிக்கை. தக்கிஷராயன் - பொன்னம்பர். தக்கிரம் - மோர். தக்கிராடம் - மத்து. தக்கு - தாழ்ந்த சுரம். தக்குதல் - அரக்குதல், ஆட்சிக்குட்படுதல், எல்லைகூட்டுதல், தகுதியாயிருத்தல், நயப்படல், வசப்படுதல்.தக்குத்தக்கெனல், தக்குபொக்கெனல் - ஈரடுக்கொலிக்குறிப்பு. தக்குவித்தல் - ஆட்சிக்குட்படுத்தல். தக்கெனல் - ஒலிக்குறிப்பு, தக்கேசி - ஓர்பண். தக்கை - காதிடுதக்கை, கிடைச்சி,குதம், தப்பை, தெப்பம், பம்பைவாச்சியம், பலவகைப்பறை. தக்கையுருவம் - சடவுருவம். தக்கோர் - அறிஞர், தக்கார். தக்கோலம் - ஓர்செடி ,அஃது பஞ்சவாசத்தொன்று, சிறுநாவற்பூ,வால்மிளகு, காட்டுவெற்றிலை. தங்கக்காசு - ஓர்நாணம். தங்கசாலை - அக்கசாலை. தங்கச்சி - தங்கை. தங்கஞ்சலமாக்கி - சொன்னபேதி. தங்கப்பட்டை - சேணங்கட்டுங்கச்சு. தங்கப்பூச்சு - ஓர் மருந்துப்பூச்சு. தங்கமலை - மகாமேரு. தங்கமழுத்தல் - தங்கமழுத்துதல். தங்கமிருதியாதி - தங்க சிந்தூரம். தங்கமிழைத்தல் - தங்கமழுத்துதல். தங்கமோறா - ஓர் நாணயம். தங்கம் - உயர்ந்தபொன், சுத்தம்,பயம். தங்கரேக்கு - பொன்னினாற்செய்தவிதழ். தங்கல் - தங்குதல், தங்குமிடம்,தரங்கல், தங்கால்பூட்கோவலனார் - புறநானூறு பாடிய புலவர்களிலொருவர். தங்காள் - தங்கை. தங்கான் - அரை. தங்கு - தங்குதல், தங்கென்னேவல்.தங்குடிச்சுற்றம், தங்குடித்தமர் - ஞாதியர். தங்குதல் - இருத்தல், தடைப்படல்,தரித்தல், தாமதித்தல், விடுதிவிடல், நிலைபெறுதல். தங்குதுறை - தரிக்கத்தக்கவிடம்,தங்கத்தக்க இடம். தங்குலம்வெட்டி - தங்கள் வமிசத்தைக் கெடுப்போன்.தங்கை, தங்கைச்சி - இளையாள்,குவளை. தங்கையைக்கொல்லி - சிறியாநங்கை. தசகண்டசித்து - இராமன். தசகண்டன் - இராவணன். தசகம் - பத்து. தசகரம் - தசவியசனம், அஃது, அபாவனை, காமம், சிற்றின் பக்கவி,சூது, நடனம், பகற்றுயில், மதுவூண், மாயம், விளையாட்டு,வேட்டம். தசகுணம் - பதின்மடங்கு. தசகூலி - உழவுக்கூலி. தசக்கிராமம் - பத்து கிராமங்கொண்டவூர். தசக்கிராமினி - பத்துக்கிராமாதிகாரி. தசக்கிரீவன் - இராவணன். தசதானம் - பத்துத்தானம், அவை,உப்பு, எள், நெய், நெல், பசு, பூமி,பொன், வத்திரம், வெல்லம்,வெள்ளி. தசநாடி - அத்தி, அலம்புடை, இடை,காந்தாரி, குகு, சங்கினி, சுகுவை,சுழி முனை, பிங்கலை, புருடன். தசபலன் - புத்தன். தசபிராதுர்ப்பாவம் - தசப்பிராதுற்பவம்.தசபூமிகன், தசபூமீசன் - புத்தன். தசப்பிராதுற்பவம் - விஷ்ணுவின்பத்தவதாரங்களை விவரிக்கும் ஓர்பிரபந்தம். தசப்பொருத்தம் - செய்யுட் பொருத்தம், மணப்பொருத்தம். தசமபாகம் - பத்திலொருபங்கு. தசமஸ்கந்தம் - பாகவதத்தில் பத்தாவது பாகம். தசமம் - தசமஸ்கந்தம், பத்தினொன்று. தசமி - பத்தாந்திதி , பத்தாவது. தசமுகன் - இராவணன். தசமுகாந்தகன் - ஸ்ரீராமன். தசமூலம் - பத்துவகை மருந்துவேர்,அவை கண்டங்கத்திரி, சிறுமல்லிகை, சிறுவழுதுணை, தழுதாழை, நெரிஞ்சி, பாதிரி, பெருங்குமிழ், பெருமல்லிகை, வாகை,வில்வம். தசம் - சிவிகை, பத்து. தசரதன் - இராமன்பிதா. தசராத்திரம் - பத்துநாள். தசரூபவிருத்தி - திருமால். தசலட்சம் - பத்துலட்சம். தசவவதாரம் - தசாவதாரம். தசவாஜி - சந்திரன். தசவாயு - தேகத்தினிற்கும் பத்துவாயு, அவை அபானன், உதானன்,கிருகரன், கூர்மன், சமானன்,தனஞ்சயன், தேவ தத்தன், நாகன்,பிராணன், வியானன். தசனப்பொடி - பற்காவி. தசனம் - பல், போர்க்கவசம், மலைமுடி. தசனவாசம் - உதடு. தசனாங்கம் - தந்தரேகை. தசனோச்சிட்டம் - சும்பனம், தந்தமின்மை. தசாகம் - பத்துநாள்.தசாகரிசம், தசாகரிசி - விளக்கு. தசாக்கரி - ஆசான் பண்ணின் அருகுசாதி. தசாங்கத்தயல் - ஓர் பிரபந்தம், அஃதுஅரசன்றசாங்கத்தினை யாசிரியவிருத்தம் பத்தினாற்பாடுவது. தசாங்கப்பத்து - ஓர் பிரபந்தம், அஃதுநேரிசை வெண்பாவா லரசர்க்குரிய தசாங்கத்தினைப் பத்துச்செய்யுளாற் கூறுவது. தசாங்கம் - அரசர்க்குரிய பத்துறுப்பு, அவை ஊர், கரி, கொடி,செங் கோல், நாடு, பரி, மலை,மாலை, முரசு, யாறு. தசாசியன் - இராவணன். தசாசுபன் - சந்திரன். தசாட்சரி - ஓரிராகம். தசாபலம் - பிராயத்திற்கடுத்தபலம். தசாரகன் - அருகன், புத்தன். தசார் - ஆயத்தம். தசாவதாரம் - திருமாலவதாரம்பத்து, அவை இராமன், கண்ணன்,குதிரை, கூர்மம், நரசிங்கம், பரசிராமன், பலபத்திரன், மச்சம்,வராகம், வாமனம்.தசானனன், தசானன் - இராவணன். தசியு - அநீதன், கள்வன், கீழ்மகன்,சத்துரு. தசிரதேவதை - அச்சுவினி தேவதை. தசிரம் - உட்டுளை, மழைத்தூறல். தசிரர் - தேவ மருத்துவர். தசுகரம் - தஸ்கரம். தசுமம் - தீ. தசுமன் - கள்வன், யாகஞ்செய்விப்போன். தசும்பர் - குடம். தசும்பு - குடம், கொப்பரி, பொன், மிடா. தசேந்தனம் - விளக்கு. தசேந்திரியம் - உடலுறுப்புப் பத்து,அவை ஆக்கிராணம், உபத்தம்,சட்சு, சிங்ஙுவை, சுரோத்திரம்,தொக்கு, பாணி, பாதம், பாயுரு,வாக்கு. தசை - ஊன், தாது, நிலைமை,புலால். தசைதல் - தசைபூரித்தல், தசைவைத்தல். தசைத்தல் - கொழுத்தல், தசைபிடிப்பாதல். தசைநார் - தசைநரம்பு.தசைபிடி, தசைப்பற்று - மிகுதசைகொண்டிருத்தல். தசைப்பு - கொழுப்பு, தசைபிடி. தசைமுற்றுதல் - கொழுப்பேறுதல். தசையடைப்பு - சலத்துவார நோயினொன்று. தசையூறுதல் - தசைவைத்தல். தஸ்கரம் - களவு. தஸ்கரன் - திருடன். தச்சகன் - குடும்பத் தலைவன். தச்சன் - சித்திரைநாள், மரவேலைக்கம்மாளன். தச்சன்குருவி - ஓர் குருவி. தச்சிச்சி - தச்சப்பெண். தச்சு - தச்சன், தச்சன்றொழில். தச்சுவை - வஸ்திரம். தஞ்சக்கேடு - பலவீனம். தஞ்சம் - அடைக்கலம், எளிமை,தாழ்வு, துணை, பற்றுக்கோடு,பெருமை, புகலிடம். தஞ்சன்பொளி - துருசி. தஞ்சை - தஞ்சாவூர். தஞ்சைவாணன்கோவை - பொய்யாமொழிப்புலவரியற்றிய நூல். தஞ்ஞனம் - தன்னையறிந்தவன். தஞ்ஞன் - அறிஞன். தட - பெருமை. தடகம் - ஏரி.தடக்கம், தடக்கு - தடை. தடக்குதல் - தடைபண்ணல், தட்டுதல். தடக்கை - விசாலமான கை. தடங்கண் - பெரியகண். தடங்கண்ணி - பெரிய கண்ணுள்ளவன். தடங்கல் - அடைப்பு, தடை, தாமதம்,வறிதிருக்கை. தடங்குதல் - தாமதப்படுதல். தடதடத்தல் - நடுக்கத்தாற் றளம்பல்நாக்குத்தட்டல். தடதடப்பு - தள்ளாட்டம். தடதடெனல் - தள்ளாடுதல், நடுக்கக்குறிப்பு.தடத்தம், தடஸ்தம் - அருகு, இலௌகீககவலைவிட்டிருத்தல், கரை, பொதுவியல்பு. தடஸ்தன் - ஞானி, பாரபட்ச மற்றவன். தடந்தேடுதல் - கெடுக்கவகைபார்த்தல். தடபடத்தல் - தளம்பல். தடபடெனல் - தள்ளாட்டக் குறிப்பு. தடபுடல் - விரைவுக் குறிப்பு, இடம்பம். தடமண் - சுதைமண். தடம் - ஓமகுண்டம், ஓர்மரம், கண்ணி,கரை, குளம், தராசு, துலாராசி,பெருமை, மலை, மலைப்பக்கம்,வரம்பு வழி, வளையம், விசாலம்,வெளி. தடம்புரளுதல் - தடமாறுதல், நிலைகெடுதல். தடயம் - பலபண்டம், ஆபரணம். தடல் - சிதள், பலாப்பழச்செதிள்,வாழை நார்த்தன்மையானது,வாழை மடல். தடவரல் - தடவுதல், யாழ்வாசித்தல்,வளைவு. தடவல் - அருமை, ஆறு, தடவுதல்,இஃது மெய்ப்பரிச மெட்டினொன்று, வீணைவாசித்தற்றொழிலி னொன்று. தடவற்புலு - அறுபது. தடவு - தடவென்னேவல், தூபக்கால்,பெருமை, வளைவு, ஓமகுண்டம்,சுனை. தடவுச்செவி - பெரியகாது, யானைக்காது. தடவுதல் - பூசுதல், வருடல், வீணைவாசித்தல். தடவை - எல்லை, தரம், முறை. தடறு - ஆயுதவுறை. தடா - பானை, மிடா, பெருமை. தடாகம் - குளம். தடாதடி - குழப்பம், மாறுபாடு. தடாரம் - இரண்டொத்துடையதாளம். தடாரி - தடாரி யென்னேவல், பம்பை,பேரிகை, மத்தளம், வாச்சியப்பொது. தடாரித்தல் - அடித்தல், ஊடுருவுதல். தடானனம் - செங்கிலுகிலுப்பை. தடி - அளவுக்கோல், ஆற்றங்கரை,உடும்பு, உலக்கை, ஊன், சிறு வயல்,தடியென்னேவல், தண்டு, பற்றுக்கோடு, பாத்தி, மின், வயல், வளைதடி, வில். தடிகை - மின்னல். தடிதல் - அறுத்தல், குறைத்தல்,கொல்லல், தறித்தல், மின்னுதல்,வெட்டல், தடித்தல் - கனத்தல், காரியம்பலத்தல், புடைத்தல், மின்னுதல்,வீங்குதல், வெட்டுதல். தடித்து - மின்னல். தடித்துபதி - மேகம். தடிநி - நதி.தடிப்பம், தடிப்பு - கனப்பு, தழும்பு,பருமை, வீக்கம். தடிமம் - ஓர்பூடு, சளி. தடிமல் - சலதோஷம். தடிமன் - சலதோஷம், தடிப்பம். தடிமிண்டன் - முரடன், வசையாதவன். தடிமூக்குள்ளான் - ஓர்குருவி. தடியன் - முரடன், வசையாதவன்,பருத்தவன். தடிவு - கொலை, வெட்டு. தடினி - யாறு. தடுக்கல் - தடை. தடுக்கு - சிறுபாய், தவிசு. தடுக்குதல் - தடைசெய்தல். தடுதல் - இசைதல். தடுத்தல் - தம்பித்தல், மறித்தல், விலக்கல். தடுத்தாளி - அவசரம். தடுத்தாளுதல் - மீட்டிரட்சித்தல். தடுபடை - மாற்றுப்படை. தடுபொடுதாயம் - அவசரம். தடுபொடுத்தல் - அவசரப்படுதல்,ஒலிக்குறிப்பு. தடுபொடெனல் - ஒலிக்குறிப்பு. தடுபொறி - மிகுசுருக்கு. தடுப்பு - தடுத்தல். தடுமன் - தடிமல்.தடுமாறல், தடுமாறுதல் - கலங்குதல்,குழம்புதல், தள்ளாடுதல். தடுமாற்றம் - கலக்கம், மாறாட்டம். தடை - கவசம், தடக்கு, தடையம்,மறியல், விக்கினம். தடைசெய்தல் - தடுத்தல்.தடைதல், தடைத்தல் - தடுத்தல். தடையம் - கத்திப்பிடி தடை, தட்டுமுட்டு. தட்சகன்னியை - பார்வதி. தட்சகன் - அட்டநாகத்தொன்று,தக்ககன், தச்சகன், விசுவகர்மன். தட்சசங்காரன் - சிவன். தட்சஜாபதி - சந்திரன், சிவன்.தட்சசை, தட்சஜை - துர்க்கை. தட்சணதுருவம் - தென்முனை. தட்குதல் - தடுத்தல். தட்சணம் - உடனே, தெற்கு, நிதானம், வலப்பக்கம். தட்சணாக்கினி - தேவாக்கினி. தட்சணாஸ்தம் - வலக்கை. தட்சணாமூர்த்தம் - குருமூர்த்தம். தட்சணாமூர்த்தி - அகத்தியன், சிவன். தட்சணாயணம் - சூரியன், றெற்கில்சஞ்சரிக்கும் ஆடி ஆவணி புரட்டாசி ஐப்பசி கார்த்திகை மார்கழிஎன்னும் ஆறுமாச காலம். தட்சணை - காணிக்கை, சிட்சை. தட்சதம் - அடித்தட்டை. தட்சப்பிரசாபதி - தக்கன். தட்சன் - இடபன், சிவன், சேவல்,தக்கன், தீ, பரஸ்திரீதனன், புலவன். தட்சாபன்னி - ஓர்மனு. தட்சாயம் - கருடன். தட்சாரி - வீரபத்திரன். தட்சிணஸ்தன் - தேர்ப்பாகன். தட்சிணபதம் - தெட்சணவீதி, தென்பக்கம். தட்சிணம் - தாராளம், தெற்கு, வலப்பக்கம், விவேகம். தட்சிணாக்கினி - தக்கணாக்கினி. தட்சிணாசலம் - பொதியமலை. தட்சிணாசாபதி - நமன். தட்சிணாசை - தெற்கு. தட்சிணாதீசன் - யமன். தட்சிணாயனம் - சூரியன் மூவகை வீதியினொன்று. தட்சிணாவர்த்தம் - வலம்புரிச் சங்கு. தட்சிணை - தட்சணை. தட்டை - பூமி. தட்டகப்பை - சட்டகப்பை. தட்டத்தினி - யாதொரு துணையுமில்லாததனிமை. தட்டம் - அல்குல், உண்கலம், தட்டையான பாத்திரம், தாடி, பல், பாம்பினச்சுப்பல், மக்கட் படுக்கை,நீர்நிலை, யானை செல்புறவழி,வயல், வெள்ளை, பாம்பு, பாம்புக்கொல்லி, தட்டுதல். தட்டல் - அடித்தல், அபகரித் தெடுத்தல், ஆணையிடல், ஐந்து, கிட்டல், தடுத்தல், நறுக்குதல், மறுத்தல், முட்டுதல், மெய்ப்பரிச மெட்டினொன்று, வீணை வாசித்தற்றொழிலி னொன்று. தட்டவைத்தல் - பொறுக்கவிடுதல். தட்டழிதல் - நிலைகுலைதல். தட்டழிவு - நிலைகுலைவு. தட்டற்புலு - ஐம்பது. தட்டாத்தி - பொன்வினைமாக்களின்பெண். தட்டாரப்பூச்சி - ஓர் பூச்சி. தட்டாரப்பொட்டு - வெளிவேஷம். தட்டானுப்பி - ஓர்கொடி. தட்டான் - ஓர்பூச்சி, கோஷ்டம்,புடோல், பொற்கொல்லன். தட்டான்கொட்டோசை - புடோல். தட்டி - காவல், கேடகம், கோட்டம்,படல், பலகை, வெற்றிலைக் கட்டு,கதவு, உடும்பு. தட்டிச்சிந்து - ஓர்சிந்து. தட்டிலம் - சதகுப்பி. தட்டு - உட்கட்டு, கண்ணியேற்றுந்தட்டு கம்புமுதலிய புன்பயிர்த்தாள், குறை குற்றம், தகடு, தட்டென்னேவல், தந்திரம், தராசுமுதலியவற்றின் தட்டு, திரிகை,தேர், நடு, பரிசை, மரவட்டனை,முட்டு, முற்றம்,வட்டம், வளைவு,விலக்கு, தீங்கு. தட்டுக்காரன் - தந்திரி. தட்டுக்கிளிபாய்தல் - ஓர் விளையாட்டு. தட்டுக்கெடுதல் - கலங்குதல், நிலைதளம்பல். தட்டுக்கேடு - இல்லாமை, நிலையழிதல், முட்டு. தட்டுகொடி - ஓர் கடுதாசிப் படம். தட்டுக்கோட்டு - கொட்டுமுழக்கு,தந்திரம். தட்டுச்சுளகு - வட்டச்சுளகு. தட்டுண்ணல் - குறைந்துபோதல்,தவறிப்போதல். தட்டுதல் - அடித்தல், அபகரித்தெடுத்தல், ஏற்றுதல், தப்புதல்,திருப்புதல், மறுத்தல், முட்டுதல். தட்டுப்பாடன் - தட்டிமினுக்கினபுடவை. தட்டுப்பாய்தல் - ஓர் விளையாட்டு. தட்டுமணி - உட்கட்டு. தட்டுமாறுதல் - நிலைமாறுதல். தட்டுமுட்டு - தளபாடம். தட்டுருவுதல் - ஊடுருவுதல். தட்டுவாணி - சிறுகுதிரை, வேசி. தட்டுவிக்கினம் - தட்டம், மேனிலை. தட்டை - அரிதாள், கவண், கிளிகடிகோல், தினைத்தாள், தீ, பரந்தவடிவுள்ளது, மூங்கில்,மொட்டை, கரடிகைப் பறை. தட்டைக்காரை - ஓர்மீன். தட்டைச்சீட்டு - ஓர் சீட்டு. தட்டைத்திருப்பு - ஓர் பனி. தட்டையம்மை - ஓர்வசூரி. தட்டோடு - தட்டையோடு. தட்பம் - குளிர்ச்சி, அன்பு. தணக்கு - தணக்கமரம், நுணாமரம். தணத்தல் - நீங்கல், பிரிதல், போகல். தணப்பு - செலவு, பிரிவு, நீங்கல். தணலம் - எருக்கு. தணல் - தழல். தணல்விழுங்கி - தீக்குருவி. தணவம் - அரசமரம். தணிகை - திருத்தணிகைத்தலம்,திருத்தணிகை மலை. தணிசு - கவிசு, குறைவு, தாழ்ச்சி. தணிதல் - ஆறுதல், இளகுதல், குளிர்தல், குறைதல், பருத்தல். தணித்தல் - அறிவித்தல், இளக்குதல்,குறைத்தல், சாந்தப்படுத்தல், நீக்குதல். தணிப்பு - ஆற்றி, குறைப்பு. தணியல் - கள், தணிதல். தணிவு - ஆறுதல், கீழ்மை, குறைவு. தண் - குளிர்ச்சி, நீர், அருள். தண்கதிர் - சந்திரன். தண்கான் - இழிந்தகாடு. தண்சுடர் - சந்திரன். தண்டகநாடு - காஞ்சி. தண்டகமாலை - ஓர் பிரபந்தம், அஃதுவெண்பாவான் முந்நூறு செய்யுள்கூறுவது, புணர்ச்சி மாலை, தண்டகம் - ஆபரணம், கரிக்குருவி,ஓர் வனம், குறுந்தறி, தொண்டைமண்டலம், நுரை, வடமொழியினோர் செய்யுள், தண்டனை. தண்டகன் - ஓரரக்கன், ஓரரசன். தண்டகாகம் - செம்போத்து. தண்டகாரணியம் - தண்டகவனம். தண்டகிரகணம் - தண்டுதாங்கல். தண்டகை - தண்டகவனம், நஷ்டம். தண்டசம் - கொல்லுலை. தண்டட்டி - தண்டொட்டி. தண்டதரன் - அரசன், குயவன்,தண்டேசன், தண்டேந்தி, நமன்,வீமன். தண்டதாசன் - அடிமை. தண்டதாமிரி - சலமுட்புகுதலினானாழி கையறிவிக்குமோர் பாத்திரம். தண்டதாரணம் - ஆக்கினை, தண்டுதரித்தல். தண்டநாயகன் - அரசன், சேனாபதி,நந்தி, தண்டநீதி - கட்டளைச்சட்டம். தண்டநீயத்துவம் - தண்டத்திற்குநீங்கல். தண்டபாசிகன் - கொலைகாரன். தண்டபாணி - தண்டதரன், தண்டேசன், நமன், விஷ்ணு, பழனிமுருகன். தண்டபாலகம் - வாயிற்பால். தண்டபாலன் - துவாரபாலன். தண்டமானம் - தண்டைமானம். தண்டமிழ் - இனியதமிழ். தண்டம் - அரசன் கொடுங்கோன்மையானிறையிறுத்தல், அறப்பான்மூன்றனு ளொன்று, அஃது ஒழுக்கத்தினும் வழக்கத்தினுந்திறம்பினோரை யவற்றினெறியே நிறுத்தத்தண்டித்தல், உபாயநான்கினொன்று, ஊன்றுகோல், ஒருநாழிகைநேரம், ஒரு புருடப்பிராமணக்கோல், கடைதறி,குடைக்காம்பு, தண்டிப்பு, தெண்டம், தேசம், நாடு, படை, பண்டாரம், பற்றுக்கோடு, பெருமை,யானை, செல்வழி, யானைத்துதிக்கை, வணக்கம், வளைதடி,குதிரை. தண்டயம் - தண்டியம், பல்லக்குத்தண்டயம். தண்டயாமம் - தினம். தண்டயாமன் - அகத்தியன், இயமன். தண்டயாமி - அகத்தியன், இயமன்,தினம். தண்டலர் - சத்துருக்கள். தண்டலாளர் - தண்டஞ்செய்வோர். தண்டலை - ஓரூர், சோலை, பூந்தோட்டம், தண்டல் - அறவிடுதல், கெடுதல், சேகரிப்பு, தோணித்தலைவன், குறிஞ்சி,தண்டுதல். தண்டவாசி - துவாரபாலன். தண்டவாலதி - யானை. தண்டவால் - தண்டமானம். தண்டவாளம் - உருக்கிரும்பு. தண்டற்காரன் - அறவிடுவோன்.தண்டனம், தண்டனை - ஆக்கினை. தண்டனைத்தானம் - எட்டாமிடம். தண்டன் - அரசன், குயவன், நமன்,வணங்கல். தண்டா - தொந்தரை. தண்டாகதம் - மோர். தண்டாகாரம் - கணிதவாக்கியம்வைத்துக்கணிக்கு முறையினொன்று. தண்டாச்சிறப்பினள் - சரச்சுவதி. தண்டாமரைக்கோரை - ஓர் புல். தண்டாமை - நீங்காமை. தண்டாயம் - கந்தாயம், காத்தண்டு. தண்டாயுதபாணி - சுப்பிரமணியர். தண்டாயுதம் - தண்டம், வளைதடி. தண்டாயுதன் - ஐயன், வயிரவன்,வீமன். தண்டாரம் - குலாலசக்கிரம், மதயானை, யானம், வில். தண்டி - ஓர் புலவன், தண்டற்காரன்,தண்டியென்னேவல், தண்டேசுரன், தரம், நமன், பருப்பம்,வாயில்காப்போன், வானப்பிரத்தன், தடி, நிறைவு, தண்டிகம் - ஓர்மீன், முத்துச்சரம். தண்டிகை - ஓர் கழுத்தணி, சிவிகை. தண்டிகைக்குச்சு - தாழ்வாரந்தாங்கி. தண்டிதரம் - திராணி. தண்டித்தல் - தண்டனைபண்ணல்,வெட்டுதல். தண்டிப்பு - தண்டனை, வருத்தம்,வெட்டல். தண்டியம் - தண்டு, ஊன்றுகோல். தண்டியலங்காரம் - ஓர் நூல். தண்டியல் - தண்டிகை. தண்டிலம் - திண்ணை, வேதிகை. தண்டினம் - நீர்மேற்படர்கொடி. தண்டு - ஆண்குறி, ஆயுதப்பொது,ஓந்தி, கீழ்க்காதுச்சோணை, சவளமரம், சிவிகை, சேனை, தடி, தண்டாயுதம், தண்டென்னேவல், தண்டேசன், தராசுக்கோல், துளையுடைப் பொருள், பச்சோந்தி,படை, பூவிற்றாள், மிதுனவிராசி,மூங்கில், வரம்பு, வளைதடி,வாழைத்தாறு, வில், வீணை. தண்டுக்கீரை - ஓர் கீரை. தண்டுதல் - தண்டல், விலகுதல்,செரித்தல், கோடுதல், தணிதல். தண்டுப்பிளவை - ஆண்குறியில்வருமோர் சிலந்தி. தண்டுப்புற்று - ஆண்குறியினோர்நோய். தண்டுமிண்டு - அடாதது. தண்டுரீணம் - அரிசிக்கழுநீர். தண்டுலபலை - திப்பிலிச்செடி. தண்டுலம் - அரிசி, வாயுவிளங்கம்,சிறுகீரை. தண்டுலம்பு - அரிசிக்கழுநீர். தண்டுலீகம் - ஓர் செடி, நெல்முதலியன, வாயுவிளங்கம். தண்டுலேரம் - ஓர் கீரை. தண்டுலோதகம் - தண்டுலாம்பு. தண்டூலியம் - சிறுகீரை. தண்டெலும்பு - முதுகென்பு.தண்டேசன், தண்டேசுரன் - ஓர் சிவ தொண்டன். தண்டேறு - எலும்பு. தண்டை - தொந்தரை, பிரப்பங்கேடகம், மாதர் காதணியி னொன்று,வால், பரிசை, ஆதண்டை. தண்டைக்காரன் - எத்தன்.தண்டைமாரம், தண்டைமானம் - வால்முறுக்குதல். தண்டொட்டி - காதணியினோருப்பு. தண்ணடை - நாடு, பச்சிலை, மருதநிலத்தூர். தண்ணம் - ஓர் கட்பறை, காடு, குளிர்,பறைப்பொது, மழு. தண்ணவன் - சந்திரன். தண்ணளி - இரக்கம், கிருபை. தண்ணனவு - தண்ணெனவு. தண்ணி - கச்சோலம். தண்ணியகுலம் - கீழ்ச்சாதி. தண்ணியது - குளிர்ந்தது, தாழ்ந்தது. தண்ணீர் - குளிர்ந்தநீர், நீர். தண்ணீர்கட்டுதல் - கொப்புளங்கொள்ளல், நீர் பிடித்தல். தண்ணீர்காட்டுதல் - எய்த்தல்,கெடுத்தல், சேதப்படுத்தல். தண்ணீர்ச்சாலை - நீர்ச்சாலை. தண்ணீர்மாறுதல் - நீர்ப்பாய்ச்சுதல். தண்ணீர்விட்டான் - சாத்தாவாரி. தண்ணுமை - உடுக்கை, உறுமிமேளம், ஓர்கட்பறை, பேரிகை,மத்தளம். தண்ணெனல் - குளிர்தல், சீதக்குறிப்பு. தண்ணெனவு - குளிர்ச்சி. தண்பதங்கொளுந்தலைநாள் - புதுப்புனல் விழவு கொண்டாடுந் தலைநாள். தண்பதப்பெருவழி - புதுப்புனலாடப்போம் பெரிய வீதி. தண்மை - இகழத்தகுபொருள்,இன்பம், எளிமை, குளிர்ச்சி,அஃது எண்வகையூறினொன்று,சாந்தம், தாழ்வு, புல்லறிவு. ததகம் - காற்று. ததச்சதை - வாழைமரம். ததபத்திரி - வாழை. ததம் - அகலம், பின்பு, விரிவு. ததர் - செறிவு. ததர்த்தல் - சிதறல். ததர்ப்பணம் - கொடுத்ததை யபகரித்தல். ததர்முகம் - தொடக்கம். ததல் - நிலை. ததனந்தரம் - அதன்பின். ததநம் - தாநம். ததா - அப்படி. ததாகதன் - புத்தன். ததாகாரம் - அநந்தரூபம், விஸ்தாரம். ததாஸ்து - அப்படியாகட்டும். ததாமுகம் - ஆரம்பம். ததி - ஓர்பிசின், கிரகம், தத்துவம்,தயிர், நிரை, பருவம், கூட்டம்,சமயம். ததிகூர்ச்சிகை - தயிரன்னம். ததிகேடு - பலக்குறைவு. ததிசம் - வெண்ணெய். ததிசாரம் - தயிர்கடை, தறி, வெண்ணெய். ததிசி - ததீசி. ததிசுவேதம் - மோர். ததிசோணம் - செங்குரங்கு. ததிபலம் - விளாமரம். ததிமண்டம் - மோர். ததிமண்டோதம் - தயிர்க்கடல். ததிமுகன் - சுக்ரீவன் மாமன்,மதுவனங்காவலன். ததியை - திரிதிகை. ததியோதனம் - தயிரன்னம். ததிரம் - யாகமிருபத்தொன்றினொன்று. ததீசி - ஓரிருடி. ததீசியஸ்தி - வச்சிராயுதம். ததுமண்டரம் - ஆமணக்கு. ததுமல் - குழப்படி, சந்தடி.ததும்பல், ததும்புதல் - அசைதல்,நிறைதல், மூடிப்பாய்தல், வழிதல்,முழங்கல். ததுளன் - இளைஞன், காற்று. ததேகநிட்டை - அசைவறத் தியானித் திருத்தல். ததைதல் - நெருங்கல், மிடைதல்,வெளிப்படாதிருத்தல், சிதறல்,சிதைத்தல். ததைத்தல் - கூடுதல், நெருக்கல். ததைவு - ததைதல். தத்தநன் - அதிலோபி. தத்தபுத்திரன் - சுவீகாரஞ்செய்யப்பட்ட புத்திரன். தத்தம் - ஈகை, சுவீகாரம், கொடுக்கப்பட்டது. தத்தரம் - நடுக்கம், மிகுவிரைவு. தத்தல் - தவளை, தாண்டல், பாய்தல். தத்தளித்தல் - தடுமாறுதல், தடுக்கிடல், முட்டுப்படுதல். தத்தளிப்பு - தடுமாற்றம், முட்டுப்பாடு. தத்தாங்கி - மகளிர் விளையாட்டு. தத்தாத்திரயன் - ஓரிருடி, இவன்திருமால் பதினைந்தவதாரத்தொருவன். தத்தாபகாரம் - கொடுத்ததையபகரித்தல். தத்தாபிகாரம் - பார்த்தல். தத்தி - கொடை, பலம். தத்திகாரம் - பொய். தத்திதம் - பகுபதம். தத்தியம் - மெய். தத்தியன் - மெய்யன். தத்தியோதனம் - ததியோதனம். தத்திரம் - பதில். தத்தினம் - நடுநாள், நாடோறும். தத்து - அவமிருத்து, கண்டம், கிரகவொழுங்கு, சுவிகாரம், தப்பிச்சரித்தல், தத்தென்னேவல், பாய்தல்,மோசம். தத்துக்கிளி - கடத்தல், பாய்தல். தத்துப்புரட்சி - கிரகநடையினோர்விகாரம். தத்துப்பூச்சி - தத்துவண்டியன். தத்துவக்கடுதாசி - ஒருவனுடையதத்துவத்தைப் பெற்ற வுறுதி. தத்துவக்கட்டளை - ஓர் நூல். தத்துவசாத்திரம் - தத்துவ பேதங்களையறிவிக்கு நூல். தத்துவசாலி - அதிகாரம் பெற்றோன், பலசாலி. தத்துவஞானம் - உண்மை ஞானம்,கடவுளை யறியுமறிவு, தத்துவங்களை யறியுஞானம். தத்துவஞானி - தத்துவங்களைப்பிரித்தறிந்தோன். தத்துவண்டியன் - ஓர் பூச்சி. தத்துவதரிசனம் - தத்துவக்காட்சி. தத்துவதி - ஓர்வகைக் கழு. தத்துவத்திரயம் - மூவகைத் தத்துவம்அஃது ஆத்தும தத்துவம், சிவதத்துவம், வித்தியா தத்துவமெனப்படும். தத்துவநிரூபணம் - ஓர் ஞான நூல். தத்துவப்பிரகாசம் - ஓர் நூல். தத்துவப்பிரகாசர் - தத்துவப் பிரகாசமியற்றியவர். தத்துவப்பொருள் - கடவுள். தத்துவமசி - அது நீயாகிறாய். தத்துவராயர் - அநேக வேதாந்தநூல்களியற்றிவர். தத்துவம் - அதிகாரம், உண்மை,சுபாவம், தத்துவத்திரயம், பலம்,புத்தி, பூதியம். தத்துவயம் - குருணியென்னு மோர ளவை. தத்துவவாதம் - ஓர் சமயம். தத்துவ வாதி - ஓர் சமயி. தத்துவவிளக்கம் - தத்துவபேதமறிவிக்கு நூல். தத்துவன் - அதிகாரி, அரசன்,அருகன், உண்மையுள்ளோன்,உருத்திரன், கடவுள், பிரமன்,விட்டுணு. தத்துவாதி - ஓர்வகைப் பார்ப்பான். தத்துவாதீதன் - கடவுள். தத்துவெடியன் - ஓர் பூச்சி. தத்தெறிதல் - அலையெறிதல், ஓர்விளையாட்டு. தத்தேயன் - இந்திரன். தத்தை - கிளி, முன்பிறந்தாள். தநம் - சந்தனம், மனம். தநுச்சாயை - சரீர நிழல். தநுத்திராணம் - கவசம்.தநுத்துவசம், தநுத்துவசை - சிறுநெல்லிச்செடி. தநூநபம் - நெய். தநூருகம் - உரோமம், குருவி, மயிர்.தந்தகரிசம், தந்தகரிசனம் - சுண்ணாம்பு. தந்தகாட்டம் - தந்ததாவனக்குச்சு. தந்தக்காரி - வாதமடக்கி. தந்தக்குறி - பற்குறி. தந்தக்கோரை - ஓர் புல். தந்தசடம் - எலுமிச்சமரம், எலுமிச்சை, விளாமரம். தந்தசடை - புளியாரை. தந்தசம் - பல், யானை முதலியவற்றின் கொம்பு. தந்தசிரம் - பன்முரசு. தந்தசிரை - பல்லீறு. தந்தசுத்தி - பல் விளக்கல். தந்தசூகம் - பாம்பு. தந்தசூகன் - துட்டன். தந்தசூலை - ஓர் நோய். தந்ததாவனம் - தந்தசுத்தி, பற்குச்சி. தந்தந்தண்ணீர் - அத்திபேதி. தந்தபத்திரம் - ஓர் மல்லிகை. தந்தபத்திரி - வாழை. தந்தபலம் - விளாமரம். தந்தபலை - திப்பிலி. தந்தபாகம் - யானைமத்தகம். தந்தபீஜகம் - மாதுளை. தந்தப்பூண் - கிம்புரி. தந்தமலம் - பல்லழுக்கு. தந்தமாமிசம் - பன்முரசு. தந்தமுத்து - யானைத் தந்த முத்து. தந்தம் - தாடி, பல், மலைச்சாரல்,மலைமுடி, யானைக்கொம்பு,பற்பாடகம். தந்தயாவனம் - கருங்காலி. தந்தரீணம் - அரிசிக் கழுநீர். தந்தரோகம் - ஓர் நோய். தந்தவக்கிரன் - இடையெழு வள்ளலினொருவன், சிவன். தந்தவத்திரன் - சிவன்.தந்தவஸ்திரம், தந்தவாஸா - உதடு. தந்தவேட்டம் - பன்முரசு. தந்தாயுதம் - பன்றி. தந்தாலிகை - கடிவாளம். தந்தாவளம் - யானை. தந்தி - ஆண்யானை, கம்பி, நரம்பு,நெய்வோன், நேர்வாளம், பாம்பு,யாழ் நரம்பு, யானை, யானைமீன். தந்திகர்ணி - மெருகன் கிழங்கு. தந்திபீசம் - நேர்வாளம். தந்திப்படல் - எரிச்சற்படல். தந்திமதம் - யானைமதம். தந்திமுகன் - வினாயகன். தந்தியம் - பல்லழுக்கு. தந்தியுரியோன் - சிவன். தந்திரகம் - சீந்தில், நூதந வஸ்திரம். தந்திரகலை - ஆகமத்தினோர் பகுதி. தந்திரபாலன் - படைத்தலைவன். தந்திரபணம் - மிருது நடை. தந்திரமா - நரி. தந்திரம் - அலங்கரிப்பு, உபாயம், ஓர்குளிகை, கல்விநூல், கிரியை,கூட்டம், திருட்டாந்தம், நூல்,படை, புடைவை, மிகுகளிப்பு,முதனூல், யாழ்நரம்பு, வீடு,வேதத்தி னோர் பகுதி, பிரதானம்,காரணம்,செல்வம், ஆகமம்,படை. தந்திரயுத்தி - நூலுத்தியானமைக்கப்படு பொருள். தந்திரர் - கந்தருவர், தந்திரக்காரர்தந்திரியார். தந்திரவாதம் - ஓர் சமயம். தந்திரவாயன் - சிலம்பி, நெய்வோன். தந்திரவிபன் - நெய்வோன். தந்திராகமம் - தந்திரகலை. தந்திரி - தந்திரக்காரன், படைத்தலைவன், மந்திரி, யாழ்நரம்பினோசை, யாழ் நரம்பு. தந்திரிகரம் - செங்கோட்டியாழுறுப்பினுளொன்று. தந்திரிகை - கம்பி, சோம்பு. தந்திரை - சோம்பல், நித்திரை. தந்திவந்தநம் - சுதலலோகம். தந்திவீழுரியோன் - சிவன். தந்து - கல்விநூல், சந்ததி, தந்திரம்,தந்தென்னெச்சம், நூல், பஞ்சிநூல், பல காற்கேட்டல், கயிறு. தந்துகடம் - சிலம்பிப்பூச்சி. தந்துகம் - கடுகு. தந்துகி - நாடி. தந்துகீடம் - சிலம்பிப்பூச்சி. தந்துசாரம் - கமுகு. தந்துசாலை - நெசவு வீடு.தத்துநாபம், தந்துபம் - கடுகு, பசுவின்கன்று. தந்துமந்து - குழப்படி, சந்துமந்து. தந்துரம் - தாமரைக்கொடி. தந்துரன் - உயர்பல்லன். தந்துரை - பாயிரம். தந்துரைத்தல் - கொணர்ந்துபுணர்த்திச் சொல்லல். தந்துலம் - தாமரைக்கொடி. தந்துவர் - நெய்வோர்.தந்துவாபன், தந்துவாயன் - சிலம்பி,நெய்வோன். தந்துவாயி - நெய்வோன். தந்துவிக்கிரியை - வாழை. தந்தை - பிதா. தபகிருஷன் - தபத்தி. தபசம் - பறவை. தபசன் - சந்திரன். தபசி - தவசி. தபசியம் - பங்குனிமாசம், முல்லைப்பூ. தபசியன் - அருச்சுநன். தபசு - தவம். தபதாபிகாரம் - அக்கினியைப் பார்த் தல். தபதி - சூரியன்புத்திரி, சூரியன்மனைவி, தச்சன். தபதியர் - கம்மாளர், தச்சர். தபத்தர் - தபோதனர். தபத்தி - தவத்தி. தபநதநயை - யமுனையாறு, வன்னிமரம். தபநாத்துமசை, தபநி - கோதாவரி. தபநேஷ்டம் - தாமிரம். தபம் - தவம், மாசிமாதம், வெப்பம்,வெய்யிற்காலம். தபலை - சருவக்குடம், தவலை, ஒருவாத்தியம். தபலோகம் - தபோலோகம். தபனகரம் - சூரியகிரணம். தபனமணி - சூரியகாந்தம். தபனம் - தாகம், மனத்துயர்,வெப்பம், வெய்யிற்காலம். தபனற்கஞ்சி - மஞ்சள். தபனன் - அக்கினிதேவன், கொடுவேலி, சூரியன், நெருப்பு. தபனியம் - பொன்.தபனீயகம், தபனீயம் - பொன். தபன் - சூரியன். தபா - தடவை. தபாது - தப்பிதம். தாபத்தியம் - மாரிகாலம். தபால் - அஞ்சல். தபித்தல் - தவித்தல், சுடுதல். தபிலை - தபலை. தபுதல் - கெடுதல், சாதல்.தபுதாரநிலை, தபுதாரம் - ஊடியதலைவியைத் தலைவன் காதலித்திருத்தல், மனைவிக்காப்புலம்பல், தாரம் இழந்த நிலை. தபுதி - அழிவு தபோதனர் - முனிவர். தபோதினி - முனிவன். தபோதி - தவத்தி. தபோதுக்கம் - உலகவெறுப்பு. தபோநிதி - தபத்தி, முனிவன்.தாபோபலம், தபோபுண்ணியம் - தவப்பலன். தபோபுத்திரன் - தவத்தினாற் பெற்றபிள்ளை. தபோமகிமை - தவமேன்மை. தபோமயம் - ஓர்வனம், தவத்தின்றன்மை, தபோராசி - தவத்தி. தபோலோகம் - மேலேழுலகினொன்று. தபோவனம் - தவவனம். தப்தசிலாசயனம் - காய்ந்த பாறையிற்படுத்தல். தப்தாயபிண்டம் - காய்ந்த இரும்புருண்டை. தப்பட்டை - ஓர் பறை. தப்பல் - தப்புதல். தப்பவைத்தல் - தீங்கினின்று விலக்கிக்காத்தல். தப்பளை - ஓர்மீன், சளியல், தவளை,பெருவயிறு. தப்பறை - கபடம், கெட்டமொழி,தப்பு, பொய். தப்பிதம் - குற்றம், தப்பு. தப்பிலி - தப்பில்லாதவள், தப்பில்லாதவன், போக்கிரி. தப்பு - ஓர் மேளம், கபடம், குற்றம்,தப்புதல், தப்பென்னேவல், வழு. தப்புதல் - சப்பளித்தல், சீலைதப்புதல், தவறுதல், பிழைத்தல்,விலகுதல். தப்புத்தண்ணீர் - பரவுதண்ணீர். தப்புமேளம் - ஓர் பறை. தப்புவிணை - ஓர் வீணை. தப்பை - முரிந்தவென்பு பொருந்தவைத்துக்கட்டுமட்டை, மூங்கிற்பற்றை. தமகன் - கொல்லன். தமக்குதல் - தணித்தல், நிரப்புதல், தமக்கை - அக்காள். தமசம் - உருள், கிணறு, பட்டினம். தமசு - இருள், தாமசம், ஆணவமலம். தமனையணி - வீதி. தமதமெனல் - ஒலிக்குறிப்பு. தமதை - ஓர்நதி. தமதம் - பஞ்சேந்திரியநிக்கிரகம்,விருப்பம். தமதன் - விருப்புள்ளோன். தமது - தடி, தம்முடையது தமப்பன் - தகப்பன். தமப்பிரவை - ஏழ்நரகவட்டத்தொன்று, அஃது இருணிலம். தமம் - இராகு, இருள், கன்மேந்திரியங்களிற்போகாது மனதைமறித்தல், கீழ்ப்படுதல், ஞானேந்திரியம், சேறு, தன்னையடக்கல்,துக்கம், நிக்கிரகம், பஞ்சமாயையினொன்று, அஃது சீவசை தன்னியத்தை மறைக்கை, பாவம்,யாகசாலை, புறக்கரண மடக்கல். தமயந்தி - நளராசன்மனைவி,மல்லிகையிலோர் பேதம். தமயன் - மூத்தோன். தமரகம் - உடுக்கு, வங்கம். தமரகவாயு - நெஞ்சடைப்பு. தமரகவொலி - கிலுகிலுப்பை. தமரத்தை - ஓர் மரம். தமரம் - அரக்கு, ஈயம், பேரொலி. தமரல் - பெரிதொலித்தல். தமராசம் - ஓர்வகைச் சர்க்கரை. தமராணி - துளையாணி. தமரிடுதல் - துளைத்தல். தமரித்தல் - ஆர்த்தல், விருப்பம். தமரிப்பு - ஆர்ப்பு, விருப்பம். தமருகம் - உடுக்கு. தமருதல் - ஒலித்தல். தமரூசி - துளையூசி. தமரோசை - கிலுகிலுப்பை. தமர் - உறவோர், துளை, மூடர். தமர்ப்படுதல் - இணங்கல், விரும்பல். தமள் - தம்மவள். தமனகம் - மருக்கொழுந்து. தமனகன் - ஓர் நரி. தமனம் - தவனம், மருக்கொழுந்து. தமனன் - பண்டிதன், வீரன். தமனி - வன்னிமரம். தமனியம் - பொன். தமனியன் - இரணியன், சனி, பிரமன். தமன் - இராகு, கடவுள், கிருட்டிணன், சந்திரன், தம்மவன். தமாசு - கேலி, பரிகாசம், வினோதம். தமாஷ் - தமாசு. தமார்க்கவம் - பீர்க்கு. தமாலகிரி - கீழ்வாய்நெல்லி. தமாலதளம் - பச்சிலை. தமாலபத்திரம் - திலகமரம். தமாலம் - இலை, நுதற்குறி, பச்சிலைமரம், பட்டயம், மூங்கிற்றோல். தமி - இரவு, ஏகம், ஒப்பின்மை,தவனம், தனிமை. தமிசிரப்பக்கம் - அபரபக்கம். தமிசிரம் - குறைவு. தமிசு - வேங்கைமரம். தமிதம் - குருசிட்டி. தமித்தல் - தணித்தல். தமியம் - கள். தமியன் - தனித்தவன், வறியவன். தமிழத்தி - தமிழப்பெண். தமிழர் - ஓர் பாடைக்காரர். தமிழிச்சி - தமிழத்தி. தமிழெல்லை - தமிழ்வழங்கு மெல்லை. தமிழோர் - தமிழப்புலவர். தமிழ் - இனிமை, ஓர் பாடை, நீர்மை. தமிழ்க்கூத்தர் - தமிழ்நாடகர். தமிழ்நடவை - தமிழ் வழங்குமிடம். தமிழ்நாடன் - பாண்டியன். தமிழ்நாடு - பாண்டி . தமிழ்மலை - பொதியமலை. தமிழ்முனி - அகத்தியன்.தமிழ்வாணர், தமிழ் வாழ்நர் - தமிழ்ப்புலவர். தமிழ்வேதம் - திருவள்ளுவர்குறள்,திருவாசகம், தேவாரம், நாலாயிரப்பிரபந்தம். தமுக்கம் - யானையைப் போருக்கனுப்புமிடம். தமுக்கு - ஓர் பறை. தமை - புறக்கரணதண்டம். தமையந்தி - நளன்றேவி. தமையம் - அரிதாரம். தமையன் - அண்ணன். தமோகரன் - சந்திரன். தமோக்கினன் - அக்கினி, சந்திரன்,சிவன், சூரியன், புத்தன், விட்டுணு. தமோபகம் - வெளிச்சம். தமோபகன் - சந்திரன், சூரியன், புத்தன். தமோமணி - மின்மினி. தமோவிகாரம் - நோய். தமோனுதன் - சந்திரன், சூரியன், விளக்கு. தம் - அசைச்சொல், கொடை,சாரியை, தற்காத்தல், நன்முகுர்த்தம், பங்கிடுதல், புண்ணியம்,மகவாக்கிய நான்கினொன்று,மனையாட்டி. தம்பட்டம் - ஓர் பறை. தம்பட்டை - ஓரவரை. தம்பதி - ஸ்திரீபுருடர். தம்பபினுஷியம் - கிடைத்ததை யுண்ணல். தம்பம் - வஞ்சனை, கவசம், கோபம்,சங்கீதம், தூண், நிலை, பற்றுக்கோடு, பாவம், யானைத்தறி. தம்பலடித்தல் - பயிருழவுழுதல். தம்பலப்பூச்சி - இந்திரகோபம். தம்பலம் - இந்திரகோபம், வெற்றிலைச்சாரம், வெற்றிலை, தாம்பூலம். தம்பலாடுதல் - சேறாக்குதல். தம்பலி - மருதமரம் . தம்பலை - நிலவிந்தை, பாக்குவெட்டிமரம். தம்பல் - சேறு, தம்பலம், தம்புதல். தம்பளகம் - மண்வெட்டி, மரக்கொத்து. தம்பனகாரன் - தம்பனவித்தைக்காரன். தம்பனம் - தம்பித்தல், அஃது அட்டகருமத்தொன்று, மண்வெட்டி,மரக்கொத்து. தம்பாக்கு - சொகுசா. தம்பி - தம்பியென்னேவல், பின்னோன். தம்பித்தல் - தடுத்தல், நிறுத்தல். தம்பிராட்டி - உடன்கட்டையேறுபவள், தலைவி. தம்பிரான் - கடவுள், கட்டளைப் படிநடத்துவோன், திருக் கூட்டத்தலைவன். தம்புதல் - கிட்டமாதல். தம்புரு - ஓர்வீணை. தம்போலி - வச்சிராயுதம். தம்மம் - தருமம். தம்மவன் - சுற்றத்தான். தம்மனை - தாய். தம்மிடுதல் - தடைப்படல், தணிதல். தம்மிலம் - மயிர்முடி. தம்முன் - தமையன். தம்மை - தாய். தயக்கம் - அசைவு, ஒளிதரல்,கலக்கம், பிரபை, விளக்கம். தயங்கல் - அசைதல், இளைத்தல்,ஒளிசெய்தல், திகைத்தல், விளங்குதல், கலங்குதல். தயமணற்குன்றம் - கருமணல். தயவு, தயா - தயை. தயாகரம் - இரக்கம். தயாகூர்ச்சன் - புத்தன். தயாசீலம் - தயையானகுணம். தயாபரன் - கடவுள், கிருபையுடையோன். தயாமூர்த்தி - கிருபாரூபி, கிருபைக்கடவுள். தயார் - ஆயத்தம். தயாலு - தயாளன். தயாலுத்துவம் - உருக்கம். தயாவம் - தயை. தயாவிருத்தி - தயைசெய்தல். தயாளம், தயாளத்துவம் - கிருபை. தயாளன் - கிருபையுடையோன். தயாளு - கிருபாளு. தயிதம் - பிரியவஸ்து. தயித்தியமந்திரி - சுக்கிரன். தயிதை - ஸ்த்ரி, மனைவி. தயிரியம் - தைரியம். தயிரேடு - பாலாடை. தயிர் - உறைந்தபால், அஃது பஞ்சகௌவியத்தொன்று. தயிர்கடைதறி - மத்துப்பிடி. தயிர்கடைதாழி - தயிர்கடை பாத்திரம், மத்து. தயிர்க்கடல் - சத்தசமுத்திரத்தொன்று. தயிர்ச்சாதம் - சித்திரான்னத்தொன்று. தயிர்தோய்த்தல் - பாலுறைய வைத்தல்.தயிர்வளை, தயிர்வேளை - தைவேளைப்பூடு. தயிலகித்தம் - பிண்ணாக்கு. தயிலசாதனம் - நாவிநெய். தயிலபாணிகம் - வெண்சந்தனம். தயிலபிபீலிகை - எறும்பு. தயிலபீதம் - அத்திப்பிசின். தயிலமாடுதல் - எண்ணெய் பொருத்துதல். தயிலமாலி - எண்ணெய்த்திரி.தயிலமிறக்குதல், தயிலமெடுத்தல் - சத்துவாங்குதல். தயிலமெரித்தல் - சுடர்த்தயில மிறக்குதல். தயிலம் - எண்ணெய், சத்து. தயிலம்வைத்தல் - அடக்குதல்,எண்ணெய்ப்பொருத்துதல். தயிலகாரன் - எண்ணெய்க்காரன். தயினியம் - எளிமை. தயை - கிருபை, இரக்கம். தயைதாட்சிண்ணியம் - உருக்கமானவிரக்கம். தயோமித்தம் - தசநாடகத்தொன்று. தரகண்டிகை - யானைநெருஞ்சில். தரகன் - விற்பன கொள்வனவைபொருத்துவோன். தரகு - ஓரளவு, ஓர் புல், தரவு. தரகுகாரன் - தரகன். தரக்கு - புலி, புலிக்குடத்தி.தரங்கம், தரங்கர் - இக்கட்டு, கடல்,கலக்கம், நீர்த்திரை, அலை. தரங்கன்பாடி - ஓர் பட்டினம்,கடலைச் சார்ந்தவூர். தரங்கிணி - யாறு. தரங்கு - ஈட்டிநுனி, தங்கல், வழி. தரசம் - மாமிசம் தரணம் - அரிசி, இமயமலை, சூரியன்,தரித்தல், தாண்டல், பாவம், பூமி,கடத்தல். தரணி - சூரியன், நீர்ப்பெருக்கு, பூமி,மலை, மேனைபுத்திரிகளிலொருத்தி, ஓடம், மருத்துவன்,சூரியகாந்தி. தரணிகீலகம் - மலை. தரணிதரன் - அரசன், திருமால். தரணிரத்திநம் - மாணிக்கம். தரணிவாரிக்கல் - கானக்கல். தரணீசுதை - சீதை. தரணீசுவரன் - அரசன், சிவன், மலையரசன். தரணீதரம் - ஆமை. தரணீதரன் - அரசன், ஆமை,திருமால். தரணீபூரம் - சமுத்திரம். தரந்தம் - கடல்,தவளை, விடாமழை. தரபடி - நடுத்தரம். தரம் - அச்சம், அரக்கு, குண்டு,கூட்டம், சங்கு, சமானம், தரிக்கை,தலை, தெப்பம், பக்குவம்,பருத்திப்பொதி, மலை, முறை,வகை, வலி, வீதம், உயர்வு, தரல் - தருதல், தாராயென்னுமுற்று. தரவழி - நடுத்தரம். தரவாய் - சமயம். தரவிணைக்கொச்சகக்கலிப்பா - ஒருதரவு பெற்றுவருங் கொச்சகக்கலிப்பா. தரவு - தண்டற்காரன், தலைவன்கட்டளை, பிடரி, வண்ணகவொத்தாழிசைக் கலிப்பா அம்போதரங்க வொத்தாழி சைக்கலிப்பாகட் காறடியாயும், மற்றைக்கலிப்பாக்கட்கு மூன்றடி முதலியபல வடிகாளயுந் தாழி சைக்குஇரண்டடி முதனான்கடியளவாயும் வருவது, விற்பன கொள்வனவைப் பொருத்துதல், தரகு. தரவுகொச்சகக்கலிப்பா - ஒருதரவுபெற்றுவருவது. தரவுவண்ணம் - சொற்சீரடித்தாயநூலுடன் பயிலுவது. தரவை - கரம்பு, களைமூடிய உவர்நிலம். தரளம் - அசைவு, திரட்சி, முத்து, ஒளி. தரளை - கஞ்சி, கள். தரன் - அட்டவசுக்களிலொருவன்,தரித்தவன். தரா - ஓர் கசப்புக்கீரை, சங்கு, பூசநாள், பூமி, பொன்னாதி யேழுலகத் தொன்று, இரீதி. தராகதம்பம் - கடம்பு. தராங்கம் - மலை. தராசம் - ஒளிசலித்தல். தராசு - சமானம், துலாராசி, நிறைகோல், பரணிநாள், வெள்ளெருக்கு, துலாக்கோல். தராசுக்குண்டு - நிறைகல். தராசுக்கொடி - பெருமருந்து, முல்லை. தராசுக்கோல் - தராசுத்துலா. தராசுத்தட்டு - கன்னத்தட்டு. தராசுநா - தராசூசி. தராசுப்படி - நிறைகல். தராசுமுள் - தராசூசி. தராதரம் - இனம், தரம், திறம், மலை,உயர்வு, தாழ்வு. தராதரன் - திருமால். தராதலம் - கீழேழுலகினொன்று,திறம், பூமி. தராத்துமசன் - செவ்வாய். தராபதி - இராசா. தராமான் - பூதேவன், பூமிதேவி. தராய் - மேட்டுநிலம். தராலயம் - சவாசநம், பாடை. தராவலயம் - பூகோளம். தரி - தரிப்பு, தரியென்னேவல். தரிசபூரணமாசம் - யாகமிருபத்தொன்றினொன்று. தரிசயாமினி - அமாவாசியிரவு. தரிசவிபத்து - சந்திரன். தரிசனபேதி - காட்சியிலிரும்பைப் பொன்னாக்கு மருந்து. தரிசனம் - அறிவு, கண், கண்ணாடி,கனா, காட்சி, நிறம், பளிங்கு,யாகம், வழிப்பாடு, சாத்திரம். தரிசனவேதி - தரிசனபேதி. தரிசனாவரணியம் - எண்குற்றத்தொன்று, அஃது காட்சி மறைப்பு. தரிசனீயம் - அழகுள்ளது, காணப்படுவது. தரிசனை - கண்ணாடி, காட்சி,வழிபாடு. தரிசி - தரிசியென்னேவல், தரிசிப்பவன். தரிசிதம் - அறியப்பட்டது, விடயம். தரிசித்தல் - காண்டல், வழிபடல். தரிசியம் - தரிசனீயம். தரிசு - சரிசு, விரையாநிலம், சாகுபடியில்லாத நிலம். தரிடயாமினி - அமாவாசை, இருட்டு. தரிஞ்சகம் - அன்றில். தரிதம் - அச்சம், பீறல். தரிதன் - பயந்தவன். தரித்தல் - அணிதல், சகித்தல், தங்கல்,தாங்குதல், தாமதித்தல். தரித்திரம் - வறுமை. தரித்திரன் - வறியன். தரித்திராயகன் - எளியவன். தரித்திரி - பூமி, வறியவள். தரித்திரிதன் - எளியவன். தரித்திரியம் - வறுமை. தரித்துவம் - தரித்தல். தரிப்பித்தல் - அணியச்செய்தல்,தரிக்கப்பண்ணல். தரிப்பு - இருப்பிடம், கைப்பணம்,ஞாபகம், தரித்தல், நிறுத்து மிடம்,பொறுக்கை.தரியலர், தரியலார் - பகைவர். தரியாமை - ஆற்றாமை. தரியார் - பகைவர். தரு - ஓர்சந்தம், ஓர்வகைச் சுதிப்பிரமாணம், தேவதாரம், மரம். தருகை - ஈகை. தருக்ககன் - கேட்கிறவன், தருக்கி,மன்றாட்டக்காரன், தருக்கசாத்திரம் - நியாயநூல். தருக்கசிந்தாமணி - தர்க்கசாத்திரத்தொன்று. தருக்கம் - நியாயசல்லாபம், வாது. தருக்கல் - அகங்கரித்தல், சிலாநாகக்கல். தருக்கவித்தியை - தருக்கசாத்திரம். தருக்கன் - தருக்கி. தருக்கி - செருக்கன், தருக்கசாலி. தருக்கித்தல் - தற்கித்தல். தருக்கு - அகங்காரம், எழுச்சி, கதிர்,களிப்பு, சௌரியம், தருக்கென்னேவல். தருக்குதல் - அகங்கரித்தல், களித்தல்,வீரங்கொள்ளுதல். தருசணம் - அவசங்கை, கோபம்,புணர்ச்சி. தருசணி - வேசி. தருசம் - ஊணம், பெருமை, பொறாமை. தருசாயி - பறவை. தருசாரம் - கற்பூரம். தருசீவநம் - மரவேர். தருசு - இழையொத்திருக்கை. தருச்சகன் - கலைஞன், வாயில்காப்போன், தருச்சனம் - குற்றப்படுத்தல், கோபம்,நிந்தைப்படுத்தல். தருச்சாரம் - கருப்பூரம். தருச்சிதம் - தாகம், விருப்பம். தருணதை - தருணி. தருணநாரி - சிறுநன்னாரி. தருணம் - ஆமணக்கு, இளமை,எண்ணம், சமயம், புதுமை,பெருஞ்சீரகம், மோட்சம். தருணர் - காளைப்பருவத்தோர். தருணன் - காளை, பாலியன், பிரமன். தருணாஸ்தி - கொழுப்பு. தருணி - இளம்பெண், கற்றாழை,சூரியன், தெப்பம், பெண்பருவநான்கினொன்று, அஃது பதினாறுவயது தொடங்கி முப்பது மட்டும். தருணீகணம் - இளம்பெண்கள்கூட்டம். தருணை - தருணி. தருதல் - உண்டாக்கல், கொடுத்தல். தருத்தமனி - மரமஞ்சள். தருத்தரம் - மலை. தருநகம் - முள். தருநிறப்பஞ்சரம் - காந்தம். தருப்பகம் - தாழ்மை. தருப்பகன் - காமன். தருப்பசயனம் - ஓர்தலம், தவத்தோர்,தவசினொன்று. தருப்படன் - ஊர்க்காவற்காரன். தருப்பணம் - ஓமவிறகு, ஓர்சடங்கு,ஓர்தாளம், கண்ணாடி, சுவாலை,திருத்தியாக்கல், மந்திர நீரிறைத்தல், மனத்திருத்தி. தருப்பம் - நாவிச்சட்டம், பெருமை,வெப்பம், கர்வம், அகங்காரம். தருப்பன் - துட்சணன். தருப்பி - அகப்பை, சருப்பபடம். தருப்பித்தல் - கடவுளுக்குத்தன்னையொப்புவித்தல், சருப்பணஞ்செய்தல். தருப்பு - ஓர்கல். தருப்பை - தெர்ப்பை, குசை. தருமக்கட்டை - அநாதப்பிள்ளை,ஆவுரிஞ்சுதறி. தருமக்கருத்தர் - நீதிதீர்க்குநடுவர். தருமகருத்தா - தருமத்தைப்பரிபாலிப்பவர். தருமக்கிழத்தி - தருமதேவதை. தருமக்கிழவர் - தருமவான்கள்,வைசியர் பொது. தருமசங்கடம் - காரியமுட்டுப்பாடு,ஒரு வழியும் துணிவு பிறவாதுஇடர்ப்படும் நிலை. தருமசங்கிதை - நீதிசாத்திரம். தருமசத்திரம் - அறச்சாலை. தருமசபை - தருமச்சங்கம், நீதித்தலம். தருமசமஸ்காரம் - அனாதப் பிரேதஞ்சுடுதல். தருமசாதனம் - தருமங்கொடுத்தபொருளினுறுதி. தருமசாது - நற்குணன். தருமசாத்திரம் - கலைஞான மறுபத்து நான்கினொன்று, தருமநூல்,ஸ்மிருதி. தருமசாலி - தருமஞ் செய்வோன். தருமசாலை - தர்மசாத்திரம், நியாயஸ்தலம். தருமசாவனன் - ஓர்மனு. தருமசிந்தனம் - தருமச்சிந்தை. தருமசிவாசாரி - வைசியகுரு. தருமசீலன் - தருமசாலி. தருமசுதன் - உதிட்டிரன். தருமசேத்திரம் - பாரதர் பொருதவிடம். தருமச்சக்கிரம் - அருகனுடையதருமசாதனச்சக்கிரம். தருமச்சங்கம் - அறச்செயற்கடுத்தகூட்டம். தருமச்செல்வி - தருமதேவதை. தருமச்சேத்திரம் - குருக்கேத்திரம். தருமணற்சுக்கான் - கருமணற்சுக்கான்கல். தருமதேவதை - இயக்கிதேவி, உத்தமி,நந்தி, இயமன். தருமஸ்தானம் - ஒன்பதாமிடம். தருமத்திரவி - கங்கை. தருமத்துவம் - சன்மார்க்கம், தேவபத்தி. தருமநடை - புண்ணியவொழுக்கம். தருமநந்தனன் - தருமபுத்திரன். தருமநாள் - பரணிநாள்.தருமநியாயம், தருமநீதி - தருமமுறை. தருமநூல் - தருமசாத்திரம். தருமபத்தினி - இல்லொழுக்கிற்றிறம்பா மனைவி. தருமபாகினி - இல்லொழுக்கத்திற்குரிய மனைவி. தருமபாடகன் - வேதபோதகன். தருமபிரவத்திரு - வேதவியார்த்திகாரன். தருமபுத்திரன் - பாண்டவரின் மூத்தோன், முதுமையில் தந்தையைப்போற்றுவோன். தருமபுரம் - இயமலோகம், ஓர்தலம். தருமபுருஷன் - தருமசீலன். தருமம் - அம்பு, அறம், அஃது இராசத குணத்து ளொன்று, இயல்பு,உபநிடதம், ஒப்பு, சுத்தம், தொழில், நல்லொழுக்கம், நியாயப்பிரமாணம்,யாகாதி கருமம்,வேதம், நீதி, நல்வினை. தருமராசன் - அருகன், குந்திமுதற்புதல்வன், நமன், பாலைமரம்,புத்தன். தருமவாகனன் - சிவன். தருமவாசரம் - பூரனை. தருமவாட்டி - தருமசீலி. தருமவாளி, தருமவான் - தருமசீலன். தருமவிலபவம் - துன்மார்க்கம். தருமன் - எமன், குந்திபுதல்வரிலொருவன், சன்மார்க்கன், பதினைந்தாம்புத்தன். தருமாசனம் - நீதாசனம். தருமாதிகரணம் - நியாயஸ்தலம். தருமாதிகாரி - நியாயவிசாரணைக்காரன், தருமகர்த்தா. தருமாத்தி - தருமச்சங்கத்தலைவன். தருமாத்திகாயம் - புண்ணியவுடம்பு. தருமாத்தியட்சன் - நீதியதிபன். தருமாத்துமா - சுத்தன். தருமாபேதம் - நியாயத்தவறு. தருமி - தருமவாட்டி, தருமவான். தருமிட்டான் - நன்மைப்பிரியன். தருமிருகம் - குரங்கு. தருமோபதேசகன் - குரு. தருராகம் - தளிர். தருராஜம் - பனைமரம். தருவாய் - தறுவாய். தருவாரி - கல்லுப்பு. தருவி - சட்டுவம், அகப்பை. தருவித்தல் - தரச்செய்யல். தருவிராசன் - பனைமரம். தருடம் - தாமரைப்புட்பம். தரை - ஆணித்தலை, கருப்பாசயம்,நரம்பு,பூமி, மூலை. தரைப்பங்கு - நிலவாரம். தரைமட்டம் - நிலவொப்பரவு. தரையிலாக்குருவி - ஓர்குருவி. தரைவாரம் - தரைப்பங்கு. தரோதரம் - சூது, பந்தயம். தரோதரன் - சூதாடுவோன். தர்க்கம் - தருக்கம். தர்ச்சனி - சுட்டுவிரல். தர்ப்பகன் - தருப்பகன், மன்மதன். தர்ப்பணம் - தருப்பணம். தர்ப்பம் - கர்வம், கஸ்தூரி. தர்மம் - தருமம். தலகபாடம் - இலைக்கதவு, முகை. தலகம் - தடாகம். தலகாணி - தலையணை. தலகிருதயம் - உள்ளங்கால். தலசுத்தி - தலபுனிதம். தலசூசி - முள். தலதரிசனம் - புண்ணிய nக்ஷத்திரக்காட்சி. தலத்தாது - நிலப்பனை. தலத்தார் - புண்ணிய சேத்திரத்தார். தலநம் - மான். தலபம் - சாத்திரம், பொன். தலபுஷ்பம் - தாழை. தலபுராணம் - தலவிசேட முரைக்குஞ்சரித்திரம். தலபோடகம் - ஆவிரை. தலமகிமை - nக்ஷத்திர மகான்மியம். தலம் - ஆழம், இடம், இலை, உலகின் பொது, உள்ளங்கால், கருவியுறை, கலப்பு, காடு, கீழ், குவியல்,கைகொட்டல், துவாரம்,நிமித்தம், பனைமரம், பாதி,பிளப்பு, பூமி, விரித்தகை. தலரூபகத்தாதி - ஆமணக்கு வேர். தலவிசேக்ஷம் - nக்ஷத்திர முக்கியம். தலன் - தலம். தலாகவம் - போர்க்களம். தலாகிநி - நிலநெல்லிச்செடி. தலாடகம் - அகழ், காட்டெள், சுழல்காற்று, யானைச்செவி. தலாடகன் - யானைப்பாகன். தலாடம் - அணில். தலாதலம் - கீழேழுலகத் தொன்று.தலாதிபதி, தலாதிபன் - அதிகாரி,இராசா. தலாமலம் - தவனம், மருக்கொழுந்து. தலிகம் - விறகு. தலிதம் - பிளந்தது, மலர்ந்தது. தலிநன் - பலவீநன். தலை - அதிகாரம், ஆகாயம், ஆதி,இடம், ஏழாம் வேற்றுமையுருபு,ஓராள், சிரசு, தலைவன், தலைமை,திசை, நுனி, பெருமை, முதல்,பொடுதலை, இலக்கினம். தலைகட்டுதல் - மயிர்முடித்தல்,முற்றச்செய்தல். தலைகவிழ்தல் - அதோமுகமாதல்,நாணித்தல். தலைகாட்டுதல் - தன்னைக் காட்டுதல். தலைகாணி - தலையணை. தலைகுலைதல் - நிலைகுலைதல். தலைகொடுத்தல் - காரியத்திலேமுன்னிற்றல். தலைகொண்டுபுரவியாடுதல் - வல்லபம் பண்ணி வருந்தல்.தலைக்கடை, தலைக்கடைவாயில் - முதற்பிரதான வாயில். தலைக்கண்விருத்தி - பதுமாசனம். தலைக்கல் - ஆட்டுக்கல், பிரதானகல். தலைக்கனப்பு - தலைப்பாரம். தலைக்காவல் - முக்கியக்காவல். தலைக்கிறுகிறுப்பு - தலை நடுக்கம். தலைக்குடி - முதற்குடி. தலைக்குத்தலைநாயகம் - ஆளுக்காட்டலைமை. தலைக்குத்து - தலை இடி. தலைக்குலை - குலையின்றலை,முதற்குலை. தலைக்குறை - கவந்தம், சொல்லின்முதல் குறைதல். தலைக்கூடுதல் - ஒன்றித்தல். தலைக்கூலி - தோணியி லாளேற்றுவோர் வாங்குங் கூலி. தலைக்கொம்பு - சிவிகையின் முன்கொம்பு, முதன்மை யுள்ளவன். தலைக்கொள்ளுதல் - அதிகப்பட்டுமேலேறுதல், ஏற்றுக் கொள்ளுதல். தலைக்கோடை - முதற்கோடை. தலைக்கோலம் - தலையணி. தலைக்கோல் - கணிகையர் பெறும்சிறந்த பட்டம்.தலைசாய்தல், தலைசாய்த்தல் - நாணித்தல், வணங்குதல். தலைசீவுதல் - மயிர்கோதுதல்.தலைசுருளி, தலைசூடுவல்லி - பெருமருந்து பூண்டு. தலைச்சன் - முதற் பிள்ளை. தலைசார்த்து - தலைப்பா, தலையிற்சீலை. தலைச்சீரா - தலையிலணியுங் கவசம்.தலைச்சுருணி, தலைச்சுருள்வள்ளி - பெருமருந்து.தலைச்சுழல், தலைச்சுழற்சி - ஓர்நோய். தலைச்செய்தல் - பலன்படல், வாழ்ந்துதழைத்தல். தலைச்சேரி - ஓர் பட்டினம். தலைச்சோடு - தலைச்சீரா. தலைச்சோழகம் - முற்சோழகம். தலைதடவுதல் - கெடுத்தல். தலைதடுமாறுதல் - ஒழுங்குமாறுதல்,கலக்கடி. தலைதடுமாற்றம் - கலக்கம். தலைதட்டுதல் - பறைவெட்டுதல். தலைதல் - மழையோய்தல். தலைதாழ்தல் - நாணித்தல், வணங்கல். தலைதாழ்த்தல் - வணங்கல். தலைதீதல் - அழிதல். தலைதொட்டபிள்ளை - சுவிகாரபுத்திரன். தலைதோஷம் - தலைவிறைப்பு. தலைதோய்தல் - நீராடல். தலைத்தாது - நிலப்பனை. தலைத்திராணம் - தலைச் சீரா. தலைத்திருப்பு - ஓர் நோய். தலைத்தூக்கம் - அமைவு, தலைதாழ்தல், நாணித்தல். தலைநடுக்கம் - கிறுகிறுப்பு. தலைநாள் - அச்சுவினிநாள். தலைநிமிர்த்தல் - தலையுயர்த்தல். தலைநிம்பம் - சிவனார் வேம்பு. தலைநீட்டுதல் - முன்னிடுதல். தலைநோ - தலைக்குத்து. தலைபோகுமண்டிலம் - இசைப்பாவகையுளொன்று. தலைபோடம் - பொடுதலை.தலைப்படல், தலைப்படுதல் - எதிர்த்தல், தொடங்கல், வளர்தல், வாழ்தல். தலைப்படுதாளம் - முத்தானத்தொன்று அஃது அறத்தா லீட்டியபொருளை முக்குற்ற மற்ற நற்றவத்தோரைக் கொள் கெனப்பணிந்து குறையிரந்து தம்முள்ளமுவந்தீதல். தலைப்படுத்தல் - வளரச்செய்தல்,வாழ்வித்தல். தலைப்பட்டை - தலைக்கிடும் பட்டை. தலைப்பணி - முடி. தலைப்பந்தி - பந்தியின் முதலிடம். தலைப்பற்று - தளப்பற்று. தலைப்பனி - முன்பனி.தலைப்பா, தலைப்பாகு, தலைப்பாகை - ஓர்வித தலைச்சீலை. தலைப்பாடு - கூடுதல், பொறுப்பு,வளர்ச்சி. தலைப்பாரம் - தலைக்கனம், தலைச்சுமை. தலைப்பாளை - தலைப்பாவினோருறுப்பு. தலைப்பிரட்டு - தொந்தரை. தலைப்பிரட்டை - கடற்றவளை. தலைப்பிரிதல் - விட்டுப்பிரிதல். தலைப்பிள்ளை - முதற்பிள்ளை. தலைப்பு - காரியமுடிவு, நுதி,விடுதலைப்பு. தலைப்புக்கிள்ளுதல் - கொழுந்துநுள்ளுதல். தலைப்புச்சாய்த்தல் - தலைப்பு வதக்கிவிடுதல், தலைப்பு வெட்டல். தலைப்புரட்டு - தொந்தரை. தலைப்புரட்டை - ஓரெறும்பு. தலைப்புரளுதல் - மேன்மேல் மிகு தல். தலைப்புறம் - முற்புறம். தலைப்புற்று - ஓர் நோய். தலைப்பெயல் - முதல் மழை. தலைப்பெய்தல் - ஒன்றாய்க் கூடுதல். தலைப்போடுதல் - கையிட்டுக் கொள்ளுதல். தலைப்போர் - முகனை. தலைமகள் - தலைவி, மனைவி,முதற்புத்திரி, நாயகி. தலைமகன் - அதிகாரி, சாதிமான்,நாயகன், பெருமையிற் சிறந்தோன்,முதற்புத்திரன், வீரன். தலைமக்கள் - மேன்மக்கள், வீரர். தலைமடக்கம் - அடக்கம். தலைமடக்கு - ஆதிமடக்கு. தலைமடங்கல் - கீழ்ப்படிதல், தணிதல் வளைதல். தலைமடை - வாய்க்காற்றலை. தலைமண்டை - தலையோடு. தலைமயக்கம் - இடந்தடுமாற்றம்,கலக்கம், தலைச்சுழற்சி, மதிமயக்கம். தலைமயங்குதல் - எங்கும்பொலிதல்,கலத்தல், கூடுதல், தலை தடுமாற்றம். தலைமயிர் - சிரோருகம். தலைமாடு - தலைப்புறம். தலைமாணாக்கர் - முதன் மாணாக்கர். தலைமாலை - சிரமாலை. தலைமுடி - சிகை. தலைமுழுகுதல் - சருவாங்க ஸ்நானம்பண்ணல், முற்றாக நட்டப்படுதல். தலைமுழுக்கு - சருவாங்க ஸ்நானம்,மகளிர் சூதகம். தலைமுறை - ஒருவரிருந்து வாழுங்காலம்.தலைமூச்சினை, தலைமூர்ச்சனை - தீராக்கலக்கம். தலைமேற்கொள்ளுதல் - அதிகரித்தல்,பயபத்தியா யேற்றுக் கொள்ளுதல். தலைமை - அதிகாரம், பெருந்தன்மை, முதன்மை. தலைமைப்பொருள் - வினைகொண்டுமுடிகிற பொருளினுயர்புடையது.தலையடி, தலையடிப்பு - தலைக்கதிரடித்தல், தொந்தரை. தலையணை - உபாதானம், தலைக்குஅணை. தலையணைதாங்கி - கட்டிலினோருறுப்பு. தலையல் - நீந்துபுனல், புதுநீர்வரவு,மழை பெய்துவிடுதல், மிகுதி,முதல்மழை. தலையழிதல் - கெடுதல். தலையளி - அன்பு. தலையளித்தல் - காத்தல், பேரன்புசெய்தல். தலையனுமானம் - ஓரளவை, அது சூன்முகில் கண்டு மழைபெய்யுமென்றறிதல். தலையாகுமோனை - ஓரடியின் முதற்சீர்மற்றையடியினு முதற்சீராய்வருவது. தலையாகெதுகை - அடிகளின் முதன்மொழிமுதலெழுத்தொழிய ஒருபடித்தாய் வருவது. தலையாடி - தலைப்புத்துண்டு. தலையாயார் - பெரியோர். தலையாய்ச்சல் - முதலாய்ச்சல். தலையாரி - காவற்காரன். தலையிடி - தலைக்குத்து. தலையிடுதல் - ஏற்படுதல் . தலையிலெழுத்து - விதி. தலையில்லாச்சேவகன் - நண்டு. தலையிறக்கம் - தலைத்தூக்கம், அவமானம். தலையிற்சீலை - தலைசுற்றும்புடைவை. தலையீற்று - முதலீற்று. தலையுலாஞ்சல் - தலைநடுக்கம். தலையுவா - அமாவாசி. தலையெடுத்தல் - ஆட்படுதல், தலைநிமிர்தல். தலையெடுப்பு - அதிகப்படல், நிமிர்ச்சி. தலையெழுத்து - விதி. தலையேறுதண்டம் - வில்லங்கம். தலையோடு - தலைமண்டை. தலைவடி - முதல்வடி. தலைவணக்கம் - தலைவளைத்தல்,மடக்கம், வணக்கம். தலைவணங்கல் - வணங்கல்,வளைந்து சாய்தல். தலைவலி - தலைக்குத்து. தலைவன் - அண்ணன், அரசன், எப்பொருட்கு மிறைவன், குரு, புருடன்,மூத்தோன், நாயகன். தலைவாசகம் - தலையோட்டு வசனம்.தலைவாசல், தலைவாயில், தலை வாய்தல் - முதல்வாய்தல், வாய்தன்மண்டபம்.தலைவாரை, தலைவாரைப்பட்டை - ஓர் தலைப்பெட்டி. தலைவார்தல் - மயிர் சீவுதல். தலைவி - எப்பொருட்குமிறைவி,மனைவி, நாயகி. தலைவிதி - தலையெழுத்து, விதி. தலைவிரிகோலம் - அலங்கோலம். தலைவிரிச்சான் - சாரணை, செருப்படை, தலைமயிர் முடியாதவன். தலைவிரிச்சான்கூட்டம் - ஸ்த்ரீசனம். தலைவிரித்தான் - சாரணை, செருப்படி. தலைவிரியன் - மூளிவாய்ப்பெட்டி. தலைவிலை - முதல்விலை. தலைவீச்சு - தலைச்சுழற்சி. தலைவைத்தல் - தலைப்போடுதல்,முன்னிடுதல். தலோதரி - மனையாட்டி. தலோதை - நதி. தல்லம் - குழி, நீர்க்குண்டு. தல்லி - தாய். தல்லிகை - துறப்பு. தல்லு - புணர்ச்சி. தல்லுமெல்லு - இழுபறி. தல்லை - இளம்பெண், தெப்பம். தவ - குன்றல், மிகுதி, மிக. தவக்கம் - தடை, தாகம், தேவை,வாட்டம், விருப்பம். தவக்களை, தவக்கை - தவளை. தவங்கம் - துக்கம். தவங்குதல் - துக்கித்தல், வாடுதல்,தடைப்படுதல். தவசம் - தானியம், பலபண்டம். தவசி - தவத்தோன், பண்டாரி. தவசிப்பிள்ளை - குருவின் வேலைக்காரன். தவசு - தவம், விரதம். தவசுமுருங்கை - ஓர் பூடு. தவச்சாலை - தவம்பண்ணுமிடம். தவஞ்செய்தல் - தவசுபண்ணல். தவடை - தாடை. தவணை - எல்லை, கெடுவு, நீந்துவோர்க்கிடு மிதவை. தவணைச்சீட்டு - காலங் குறித் தெழுதுஞ் சீட்டு. தவண் - தடை. தவண்டை - ஓர்வாத்தியம், தவிப்பு,துகளிதம்.தவண்டையடித்தல், தவண்டையாடுதல் - தவித்தல், துளித மாடுதல். தவண்மந்திரம் - தடை மந்திரம். தவத்தர் - முனிவர். தவத்தல் - தவற்றுதல். தவத்துதல் - தவத்தல். தவத்தி - தவசி. தவநிலை - தவவேடம். தவந்து - தானியம். தவப்பற்று - தவவிருப்பு, அஃதுமனத்தினற்குண மூன்றினொன்று. தவப்பெண் - தவஞ்செய்பவள். தவம் - காடு, காட்டாக்கினி, தவசு,அஃது இராசத குணத்தொன்று,சாத்துவித குணத்து மொன்று,புண்ணியத்தோற்ற நான்கினுமொன்று, தீ, வெப்பம், ஒன்பதாமிடம், தோத்திரம், நோன்பு. தவராஜம் - வெள்ளைச்சர்க்கரை. தவருதல் - சிந்துதல், தப்புதல்,தொளைத்தல். தவர் - தவரென்னேவல், தொளை,முனிவர், வில். தவலபட்சம் - அன்னப்புள், சுக்கிலபட்சம். தவலபாடலி - வெண்பாதிரி மரம். தவலமிருத்திகை - வெள்ளைப்பாஷாணம், வெள்ளைமண். தவலம் - அவுபல பாஷாணம். தவலாங்கி - சரச்சுவதி. தவலி - எருது, ஓர்மீன், வெண்ணிறம். தவலுதல் - குன்றல், சாதல். தவலை - தபலை, பெரிய பித்தளைப்பாத்திரம். தவலோகம் - தபோலோகம். தவலோத்பலம் - வெள்ளாம்பல். தவல் - குறைவு, கெடுதல், பிழைபடுதல், இறத்தல். தவவேடம் - தவச்சொரூபம், தவத்திற்குரிய கோலம், தவழவாங்குதல் - கூனவாங்குதல். தவழ்சாதி - தவழுயிர்வருக்கம். தவழ்தல் - நகருதல், பரத்தல். தவழ்புனல் - ஆற்றுச்சலம். தவழ்வன - தவழ்சாதி. தவளச்சத்திரம் - வெண்குடை. தவளபக்கம் - சுக்கிலபக்கம், வெண்ணாரை. தவளமிருத்திகை - சுண்ணாம்பு. தவளம் - கருப்பூரம், சங்க பாஷாணம், வெண்மிளகு, வெண்மை,அழகு. தவளாங்கம் - வெள்ளைமேனி. தவளாம்பரம் - வெள்ளை வஸ்திரம். தவளிதம் - வெண்மை. தவளை - தப்பளை. தவளைக்கல் - சொறிக்கல். தவளைக்குறங்கு - ஆபரணத்தினோர்பூட்டு.தவளைப்பாய்ச்சல், தவளைப்பாய்த்து - சூத்திரநிலை நான்கினொன்று,தவளைத் தத்து. தவளோற்பலம் - வெள்ளாம்பல். தவறல் - கடத்தல், குறைதல், சாதல்,தப்புதல், தவறுதல், தவறு - குற்றம், தப்பு, தவறென்னேவல். தவறுதல் - அழிதல், சாதல், தப்புதல்,வழுவுதல். தவற்றுதல் - விலக்கல். தவனகம் - மருக்கொழுந்து. தவனம் - ஆசை, தாகம், வெப்பம்,தபனம். தவனன் - சூரியன், நெருப்பு. தவன் - எத்தன், தவத்தி, புருடன். தவாக்கினி - காடாக்கினி. தவாதயம் - உபத்திரம், நிலைகலங்கல். தவாணகம் - காற்று. தவாநிலை - வழுவாநிலை. தவால் - அஞ்சல். தவாவினை - தவறாச்செயல், மலை,முத்தி. தவாளித்தல் - துவாளிப்பாய்த்தோண்டல். தவாளிப்பு - கண்ணறை, துவாளிப்பு. தவிசம் - சமுத்திரம், மோட்சம். தவிசு - ஆசனம்,தடுக்கு, திராவகம்,தொட்டில், பாய், மெத்தை, பீடம். தவிடு - அரிசியின்றுகள். தவிட்டான் - ஓர் மரம். தவிட்டுக்கிளி - ஓர் தத்துக்கிளி. தவிட்டுச்செடி - மலைக்கொய்யா. தவிட்டுப்பாற்சோற்றி - ஓர் பூண்டு. தவிட்டுப்புறா - ஓர்புறா. தவிட்டுமேனி - சவட்டுப்பு. தவிட்டை - ஓர் மரம், தவிட்டுப்புறா. தவித்தல் - இளைத்தல், தாகப்படல். தவித்திரம் - மான்றோலினாற்செய்தவிசிறி. தவிப்பு - இளைப்பு, தாகம். தவிப்புவைத்தல் - தகாவைத்தல். தவிர்தல் - ஒழிதல், வற்றுதல், விலகுதல், வெறுத்துவிடுதல். தவிர்த்தல் - விட்டுவிடுதல், விலக்குதல்,நீக்கல். தவிர்ப்பு - ஒழிவு, தடை, விலக்கு. தவிர்வு - ஒழிவு, விலக்கு. தவிலை - ஓர் பாத்திரம். தவில் - ஓர் பறை. தவிழ்தல் - தவிர்தல். தவீசம் - தவிசம். தவுக்கார் - சுண்ணச்சாந்து. தவுசயம் - முருக்கு. தவுசெலம் - முருங்கை. தவுடு - தவிடு. தவுட்டை - ஓர் செடி. தவுதல் - குன்றல், கெடுதல், சாதல்,தபுதல். தவுரிதகம் - தௌரிதகம். தவுரிதம் - தௌரிதம். தவ்வல் - இளைது, தவ்வுதல். தவ்வி - அகப்பை, சட்டுவம், தர்வி. தவ்வு - சிதைவு, தவ்வென்னேவல்,துளை, பாய்ச்சல். தவ்வுதல் - குந்திநடத்தல், கெடுதல்,ஒடுங்குதல். தவ்வெனல் - குறைதல். தவ்வை - அக்காள், செவிலித்தாய்,மூதேவி.தழங்கல், தழங்குதல் - ஒலித்தல். தழம் - தயிலம், புறவுருபு.தழலல், தழலுதல் - அழலல். தழல் - கவண், கார்த்திகை நாள்,கிளிகடிகோல், கொடுவேலி,தழலென்னேவல், தீ, வெப்பம். தழற்கல் - சுக்கான்கல். தழற்சி - அழற்சி. தழற்பூமி - உவர்மண். தழனிறமணி - சாதுரங்கப்பதுமராகம். தழாத்தொடர் - உருபும் பயனிலையுந்தழுவாது புணரும் புணர்ச்சி. தழால் - தழுவல். தழிஞ்சி - சாய்ந்தார் மேற்படராமை,தோற்றவர்மேல் ஆயுதஞ் செலுத்தாமை. தழீந்தழீமெனல் - ஈரடுக்கொலிக்குறிப்பு. தழுதணை - படர்மேகத்தடிப்பு. தழுதழுத்தல், தழுதழுப்பு - நாத்தடுமாறிப்பேசல். தழுதாழை - ஓர் மரம், அஃதுதசமூலத்தொன்று, வாதமடக்கி. தழும்பு - காயம், குற்றம், நாத்தழும்பு,மறு. தழும்புபடுதல் - குற்றப்படுதல், மறுப்படுதல். தழுவணை - அணைக்குந் தலையணை, கடலட்டை, சாய்மானமெத்தை. தழுவல் - தழுவுதல். தழுவாவட்டை - கடலட்டை. தழுவு - ஆலிங்கனம், கொடுங்கையளவு. தழுவுதல் - ஏற்றுக்கொள்ளுதல்,கட்டியணைத்தல், கலத்தல். தழுவுதொடர் - உருபும்பயனிலையும்விரிந்து புணரும் புணர்ச்சி. தழூஉம் - தழுவுவிக்கும். தழை - இலை, தழையென்னேவல்,தளிர், பீலிக்குடை, மயிற்றோகை. தழைக்கை - தழைத்தல். தழைதல் - செழித்தல், தளிர்த்தல்,வாழ்தல். தழைத்தல் - தளிர்த்தல், வளர்தல்,வாழ்ந்திருத்தல். தழைப்பு, தழைவு - செழிப்பு, தளிர்த்தல், பெருக்கம், மிகுதி, வாழ்வு. தளகத்தன் - சேனைத்தலைவன். தளதளத்தல் - இளகல், சோபித்தல். தளதளப்பு - இளக்கம், சோபை, முகமலர்ச்சி. தளதளெனல் - இளகக்குறிப்பு,சோபைக் குறிப்பு. தளநார் - தளர்நார். தளபதி - தளகர்த்தன். தளபாடம் - தட்டுமுட்டு. தளப்படி - ஆயாசம், நிலைதளம்பல்,முட்டுப்பாடு. தளப்பம் - தளப்பற்றுமரம், தளர்வு. தளப்பற்று - சீதாளியோலை. தளப்பற்றுக்காரன் - தளப்பற்றுப்பிடிக்குங் கையாள். தளப்பற்றுமீன் - ஓர் மீன். தளமெடுத்தல் - படையெடுத்தல். தளம் - இலை, உப்பரிகை, கப்பலின்தட்டு, கூட்டம், சாடி, சாணைபிடியாத கெம்ப, சாந்து, தடிப்பு,நிலத்தின்றளம், படை, பரந்தவடிவு, பூவிதழ், வீட்டின் றளம். தளம்பல் - அசைதல், ததும்பல், நடுங்கல், நிலைகுலைதல், முட்டுப்படல். தளம்பு - மதகு, சேறுகுத்தி. தளம்புதல் - அசைதல், ததும்புதல்,நடுங்குதல், நிலைகுலைதல், முட்டுப்படுதல். தளரவிடுதல் - தொய்யவிடுதல், நெகிழவிடுதல். தளருடை - நுகைந்தவுடை, நெகிழ்ந்தவுடை.தளர், தளர்ச்சி - சோம்பல், சோர்வு,தரித்திரம், மெலிவு, வருத்தம்,நெகிழ்ச்சி. தளர்தல் - தளர்ச்சி, நுகைதல்,விருத்தாப்பியமாதல். தளர்த்தல் - நுகைத்தல், பலவீனப்படுத்தல். தளர்நடை - தள்ளாட்ட நடை, மிருதுவான நடை. தளர்நார் - மரமேற்றக்காரர் காலுக்கிடுநார். தளர்பாடம் - தாராளமான பாடம். தளர்வு - சோர்வு, நுகைவு. தளவம் - முல்லை, முல்லைக்கொடி. தளவரிசை - கற்படுக்கை, நிலத்திற்பரவுங்கல். தளவாடம் - தளபாடம். தளவாய் - ஆராய்ச்சி, படைத்தலைவன். தளவாய்க்கோவை - ஓர் கோவை. தளவாய்த்துவம் - சேனாபதித்துவம், தளவாளம் - தளபாடம். தளவியை - தளவரிசை. தளவு - முல்லை. தளி - குளிர், கோயில், நீர்த்துளிமழைத்துளி, விளக்குத்தகழி,விளக்குத்தண்டு, மேகம். தளிகை - உண்கலம், புற்கைக்கட்டி,பிரசாதம். தளிசை - புற்கைக்கட்டி. தளிமம் - அழகு, கட்டில், திண்ணை,மக்கட்படுக்கை, மெத்தை, வாள்,வீடுகட்டற்கெத்தனிக்கும் நிலம். தளிரடி, தளிரியல் - பெண். தளிர் - தழை, தளிரென்னேவல். தளிர்த்தல் - துளிர்த்தல், மகிழ்தல். தளிர்ப்பு - துளிர்ப்பு. தளுகன் - புளுகன். தளுகு - புளுகு. தளுக்கிடுதல் - அழுத்தமாகுதல்,மினுக்குதல். தளுக்கு - ஒளி, தளுக்கென்னேவல்,மினுக்கம், மூக்குத்தி. தளுக்குணி - உரோசமில்லாதவன். தளுக்குதல் - அப்புதல், ஒப்பரவுபண்ணல். தளும்புதல் - தளம்புதல். தளை - ஆண்மயிர், கட்டு, கால்விலங்கு, காற்சிலம்பு,சிறை, தளையென்னேவல், யாப்புறுப் பெட்டினொன்று, அஃது நின்ற சீரீற்றசையோடுவருஞ் சீர்முதலசையொன்றியு மொன்றாதுங் கூடிநிற்பது, வரம்பு, கயிறு. தளைதட்டு - தளைபிழைப்பு. தளைதட்டுதல் - யாப்பிற்றளைபிழைத்தல். தளைதம் - தளை. தளைதல் - கட்டுண்ணல், கட்டுதல். தளைத்தல் - பிணித்தல். தளைநார் - தடநார்.தளைபடுதல், தளைப்படுதல் - சிறைப்படல், கட்டுப்படுதல். தளைப்பு - கட்டு. தளைப்பொருத்தம் - செய்யுட்டளையினிணக்கம். தளையல் - கட்டுதல், மறியற் படுத்துதல். தளையவிழ்தல் - கட்டுவிட்டு விரிதல்,பூ மலருதல். தளையன் - குயவர் சான்றார்மறவரிவர்களிற் றலைவன். தள்ளம்பாறுதல் - தத்தளித்தல்,தள்ளாடுதல். தள்ளல் - தவறு, தள்ளுதல், பொய்.தள்ளாடல், தள்ளாடுதல் - அசைதல்,தள்ளம்பாறுதல், தத்தளித்தல், தள்ளாட்டம் - அசைவு, தடுமாற்றம். தள்ளாமை - இயலாமை, இல்லாமை,தளர்ச்சி. தள்ளிச்சி - பூநீறு. தள்ளு - கழிவு, நீக்கு, தள்ளென்னேவல். தள்ளுண்ணல் - தள்ளப்படுதல். தள்ளுதல் - இடங்கொடுத்தல்,இயலுதல், ஒட்டுதல், கக்குதல்,கழிக்குதல், தாங்குதல், நெருக்குதல், விட்டுவிடுதல், நீக்குதல்,தவறுதல். தள்ளுநூக்குப்படுதல் - இழுபறிப்படுதல். தள்ளுபடி - குறைவு, நீக்கம், விலக்கு. தள்ளுமட்டம் - யானையினிளங்கன்று, தள்ளுமெள்ளு - இழுபறி. தள்ளை - மாதா. தறதறத்தல், தறதறெனல் - ஈரடுக்கொலிக் குறிப்பு. தறி - கட்டுத்தறி, கோடரி, தறியென்னேவல், தூண், நெய்வோர் தறி,முளை, வெட்டு, ஆப்பு. தறிகிடங்கு - ஆலைக்கிடங்கு. தறிகை - உளி, கோடரி, தறி, மழு. தறிக்கால் - கொடிக்காற் கால்வாய். தறிதல் - தறிபடல். தறித்தல் - வெட்டல். தறிப்பு - தறித்தல், தறித்தது. தறியாணி - வெட்டிரும்பு. தறுகணாளன் - குரூரன், படை வீரன். தறுகண் - அஞ்சாமை, குரூரம், மறம். தறுகண்ணன் - தறுகணாளன். தறுகண்மை - தறுகண்.தறுகல், தறுகுதல் - தடைப்படல்,தவறுதல். தறுகுறும்பன் - துர்ச்சனன்,வணக்கமில்லான். தறுகுறும்பு - தப்பிதம், துட்டத்தனம்,வணக்கமின்மை. தறுக்கணித்தல் - கற்போலாதல்,கன்றுதல். தறுக்கணிப்பு - கன்றிப்பு. தறுசு - இழைக்குளிர்த்தி. தறுதலை - தறுகுறும்பு.தறுதலையன், தறுதும்பன் - தறுகுறும்பன். தறுதும்பு - தறுதலை. தறுப்பு - தருப்பு. தறும்பு - நீரணை, வரம்பு. தறுவாய் - உற்றசமயம், சமயம். தறுவி - மருந்து முதலிய பூசுமோர்கருவி. தறுவுதல் - குறைதல். தறை - ஆணியின்சடை, தரை, தறைதல், தறையென்னேவல். தறைதல் - ஆணி முதலியவற்றையிறுக்கல், சடைதல், தைத்தல். தறையாணி - கடையாணி. தற்கம் - தருக்கம். தற்கரன் - கள்வன். தற்காத்தல் - இரட்சித்தல், தன்னைக்காத்தல், பாதுகாத்தல். தற்காத்தற்கடுதாசி - அறிவித்தற்காகிதம். தற்காப்பு - தற்காவல், பாதுகாப்பு. தற்காலகிரகநிலை - குறித்தகாலத்துக் கிரகநிற்கும் நிலை. தற்காலசுத்தபுடம் - குறித்த காலத்துக்கிரகங் கணிற்கும் நிலையைச்சரியாயறியுஞ் சுத்த கணிதம். தற்காலமத்திமம் - குறித்தகாலத்துக்கிரகங் கணிற்கும் நிலையைப்பொதுவாக வறியு மத்திம கணிதம். தற்காலம் - தற்சமயம் , நிகழ்காலம். தற்காலவிலை - அக் காலக்கிரயம்,தற் சமயவிலை. தற்காலித்தல் - தற்கால புடம்வைத்தல். தற்காலீகம் - கிடைத்ததை யுண்ணல். தற்காவல் - கற்புநிறை, தற்காப்பு. தற்கி - தருக்கம்பண்ணுபவன், தற்கியென்னேவல். தற்கித்தல் - நியாய முத்தரித்தல்,வாக்கு வாதம் பண்ணல். தற்கிப்பு - தருக்கம். தற்கிழமை - ஒற்றுமையாயுரியது. தற்குணம் - சுயகுணம். தற்குணாகம் - சத்தாதிவிடயம். தற்குறி - கைக்கீறு, தற்குறிப்பு. தற்குறிப்பணி - ஓரலங்காரம், அஃதுஒருபொருளை மற்றொரு பொருளின் தரும சம்பந்தத்தினா லிஃதஃதன்றெனத் தெரிந்து மப்பொருளாகத் தற்குறிப்புச் செய்தல். தற்குறிப்பு - தானாய் நியமிப்பது. தற்குறிப்பேற்றம் - ஓரலங்காரம்,அஃது ஒரு பொருளின்கணியல்பாய் நிகழ்வது தவிரப் பிறிதொன்றை யேற்றிச் சொல்லுதல். தற்குறைச்சல் - குறைவு, தேய்வு. தற்கொலை - தன்னைத்தான் கொல்லுதல். தற்கோலம் - தக்கோலம். தற்சணம் - உடனே. தற்சமம் - வடமொழிக்கும் பிறபாடைக்கும் பொதுச் சொல், ஆரியத்திற்கும் தமிழுக்கும் பொதுவெழுத்துக்களானியன்று தமிழில்வந்து வழங்கும் ஆரிய மொழி. தற்சமயம் - அச்சமயம், உற்றசமயம். தற்சனி - சுட்டு விரல். தற்சாட்சி - பரமாத்துமா, மனச்சாட்சி.தற்சிவம், தற்சிவன் - பரமேச்சுரன். தற்சினேகம் - தன்னைச் சினேகிக்குஞ்சினேகம். தற்சுட்டு - தற்குறிப்பு. தற்சுதந்திரம் - தனக்குரியது. தற்சுபாவம் - சுயகுணம். தற்சுரூபம் - சுயரூபம். தற்செயல் - தானாய் நிகழ்வது. தற்செய்தல் - பலித்தல், வாய்த்தல். தற்செல்வம் - வலி. தற்பகன் - தருப்பகன். தற்பகீடம் - மூட்டைப் பூச்சி. தற்பணம் - தருப்பணம், பளிங்கு,முதுகெலும்பு, யானை முதுகு. தற்பதம் - கடவுள், தன்னையுந்தலைவனையு மறிதல். தற்பதி - கமுகு. தற்பம் - அகந்தை, கஸ்தூரி, சில,பாவம், மக்கட்படுக்கை, மனைவி,மெத்தை, மேனிலை, வஞ்சனை.தற்பரம், தற்பரன் - கடவுள் , சிவன். தற்பரை - ஒரு மாத்திரையில்முப்பதிலொன்று, சிவசத்தி. தற்பலம் - வெள்ளாம்பல். தற்பவம் - வடமொழியிற்றிரிந்தசொல், தமிழுக்கேற்பத் திரிந்துவழங்கும் ஆரியமொழி. தற்பாடி - வானம்பாடி. தற்பி - இந்திரன், இந்திரன்கொடி,தற்பியென்னேவல். தற்பித்தல் - தருப்பித்தல். தற்பிரகாசம் - சுயம்பிரகாசம். தற்புகழ்ச்சி - தன்மேம்பாடு கூறல். தற்புணர்ச்சி - சுயபுணர்ச்சி. தற்புருடம் - சிவனைம் முகத்தொன்று. தற்பெருமைப்புகழ்ச்சி - ஓரணி, அதுதன் பெருமையைக் காட்டிப்புகழ்தல். தற்பெருமையிகழ்ச்சி - ஓரணி, அதுபுகழுடையோர் தம்மைத்தாமேயிகழ்ந்து கூறல். தற்பொழிவு - தன்னயம். தற்போதம் - தன்னறிவு, பிரமஞானம். தற்றுதல் - இறுக உடுத்தல். தனகரன் - கள்வன், குபேரன்,சுதந்தரன். தனகு - உள்ளக்களிப்பு, தனகென்னேவல். தனகுதல் - களித்தல், சருவுதல். தனகேலிகன் - குபேரன். தனக்காரர் - ஓர் சாதியார். தனசித்திரம் - பொற்பணி. தனஞ்சயன் - அருச்சுநன், உயிர்போகினும் போகாதுடலை வீக்கித்தலைகிழித்தகலும் வாயு, தீ. தனதற்பம் - செல்வவிடம்பம். தனதன் - ஈகையாளன், குபேரன். தனதானுசன் - இராவணன். தனதிருட்சணம் - பொருளாசை. தனது - சினேகம், தன்னுடையது. தனபதி - குபேரன். தனபதித்துவம் - உதாரகுணம். தனபாரம் - கொங்கை. தனபோகம் - சையோகம். தனம் - எண்ணிலோ ரடையாளம்,சம்பத்து, தன்மை, பசுக்கன்று,பொன், முலை, இரண்டாமிடம். தனயன் - புத்திரன். தனயை - புத்திரி. தனரேகை - கைரேகையி னொன்று. தனலக்குமி - அட்டலக்குமியினொன்று. தனவசியர் - தனவைசியர். தனவந்தன் - செல்வன். தனவனா - ஆச்சாமரம். தனவான் - செல்வன். தனவை - சிறுகாஞ்சொறி. தனவைசியர் - மூவைசியரி லொருவர்,அவர் வணிகர். தனவையாதம் - சிறுகாஞ்சொறி. தனாட்டி - தனவாட்டி. தனாட்டியன் - தனவான். தனாதிகிருதன் - பொக்கிஷகாரன்.தனாதிபன், தனாதியட்சன் - குபேரன்,பொக்கிஷகாரன். தனாது - தன்னுடையது. தனாபாரம் - தனம். தனாயனம் - கிரக சுற்றோற்றவழி,நீண்ட வழி. தனாற்சனம் - திரவியாற்சிதம். தனி - ஒப்பின்மை, ஒற்றை, கலப்பில்லாதது, சுத்தம், தனிமை, தனியென்னேவல். தனிகம் - கொத்தமல்லி. தனிகன் - கடன்றியாகி, கணவன்,தனவான், கடன் கொடுப்பவன். தனிகா - கொத்தமல்லி. தனிகை - இளம்பெண், பதிவிரதை,பெண். தனிக்குடை - தனியரசாட்சி. தனிக்குறில் - தனிநிற்குங் குற்றெழுத்து. தனிக்கோலான் - கடவுள், சுயாதிபதி. தநிசு - கடன், மாதிரி. தனிச்சபை - இராச சபை. தனிச்சொல் - தனிமொழி. தனிட்டை - அவிட்டநாள். தனிதம் - முழக்கம். தனித்தல் - உதவியற்றிருத்தல்,தனியாதல். தனித்தியலிடுகுறி - ஒன்றிற்கும், பலவற்றிற்கும் பொதுவாய் வழங்குமிடுகுறிப்பெயர். தனித்திருத்தல் - ஒன்றியா யிருத்தல்,தனிமையா யிருத்தல். தனிநிலை - ஆய்தவெழுத்து, தனித்துநிற்கை. தனிப்பாடு - தனிமை, முத்தகம் அஃதுஒன்றன்பேரிற் சொன்னஒற்றைக்கவி. தனிப்பால் - கலப்பில்லாத பால். தனிப்பாடற்றிரட்டு - புலவர்கள்பாடிய ஓர் நூல். தனிப்பு - தனிமை. தனிப்புடம் - ஓரிருக்கை. தனிப்புரத்தல் - தனியரசாளல். தனிப்புரம் - அரண்மனை. தனிப்புறம் - ஏகாந்த தலம், மறைவிடம். தனிப்பெறுதல் - தனிப்படுதல். தனிப்போர் - தனிப்படை. தனிமகவு - பட்டத்துப் பிள்ளை. தனிமகள் - பட்டத்தரசி. தனிமுதல் - கடவுள். தனிமை - உவமையின்மை, ஏகாந்தம்,தனிப்பு, பிரிவு. தனிமையாற்றல் - வணிகரெண்குணத்தொன்று. தனிமொழி - தனியேநிற்குஞ் சொல். தனியரசாட்சி - ஏகாதிபத்தியம்,சுயவரசாட்சி. தனியன் - ஒன்றி, தனித்தது, தனிப்பாட்டு. தனியா - கொத்தமல்லி. தனியிசை - நேரிசை. தனியிருத்தல் - தனியேயிருத்தல். தனியுப்பு - அமுரி. தனியுவமம் - ஒரு பொருளுவமம்(உ-ம்) கன்னெஞ்சு. தனியெழுத்து - கூட்டரவற்றதனியொலியெழுத்து. தனிவலிப்பெருமாள், தனிவல்லி - குப்பை மேனி. தனிவழி - துணையற்ற பிரயாணம். தனிவீடு - தனிமையானவீடு,மோட்சம். தனு - அத்தி, உடல், ஓரிராசி, காசிபர்,மனைவி, சிறுமை, தக்கன்மகள்,தானவர்தாய், தோல், பெண்,முக்காரம், வில். தனுகரன் - வில்லாச்சிரமி. தனுகாண்டன் - அம்பு, வில். தனுகூபம் - உரோமத்துவாரம். தனுக்கோடி - சேதுதீர்த்தம், வின்னுனி. தனுகஞ்சாரிணி - பத்துவயதுப் பெண். தனுசர் - அசுரர், மகார்.தனுசனி, தனுசன் - மகன். தனுசாத்திரம் - வில்வித்தை. தனுசாரி - இந்திரன், திருமால். தனுசு - தனுவிராசி, வில். தனுசூனு - அசுரன். தனுசை - மகள். தனுதரன் - வில்லுடையோன். தனுத்திரம் - போர்க்கவசம். தனுத்திருமம் - மூங்கில். தனுநபம் - வெண்ணெய். தனுப்பச்சை - பச்சைக்கல். தனுப்பாஷாணம் - சரகண்டபாஷாணம். தனுப்பீசம் - இந்திரகோபம். தனுமசணி - வில்லிற் கட்டியமணிஅஃது ஆயிரம்பேரைவில்லால்விசயம்பெற்ற வீரர்கைவில்லின்விருது. தனுமேகசாய்கை - நீலக்கல். தனுரசம் - வியர்வை. தனுரணம் - தனுவிரணம். தனுரத்தினம் - சூடாலைக்கல். தனுராகம் - மாணிக்கம். தனுருகம் - உரோமம். தனுரேகை - தனுவாகாரமானரேகை. தனுர் - தனுசு. தனுர்வாதம் - ஓர்வாயு. தனுர்வேதம் - உபவேத நான்கினொன்று. தனுவாதம் - ஓர்நரகம், ஓர்நோய். தனுவாரம் - போர்க்கவசம். தனுர்வித்தை - வில்வித்தை. தனுவித்தை - வில்லாச்சிரமக்கல்வி. தனுவிரணம் - சிரங்கு. தனுவிருக்கம் - ஆச்சாமரம். தனுவேதம் - தனுர்வேதம். தனேசன் - குபேரன். தனை - அளவு, எண். தனையள் - தனயை. தனையன் - தனயன். தனையை - தனயை. தனோபசயம் - திரவியாற்சனம். தன் - ஓர்சாரியை யுருபு. தன்காலம் - தனது தத்துவஞ்செல்லத்தக்க காலம். தன்கு - களிப்பு, உள்ளக்களிப்பு. தன்குலம்வெட்டி - கோடரிக்காம்பு,தனது வமிசத்தைக் கெடுக்கிற வன். தன்படுவன் - விளைவுப்பு. தன்பாடு - தன்காரியம். தன்பொருட்டனுமானம் - தன்னப்பியாசத்தினா லனுமானித்தறிதல். தன்பொறுப்பு - தன்மேற்பாரம். தன்மணி - தருமஞ் செய்வோன். தன்மாதா - நல்லுபகாரி. தன்மதிப்பு - தன்மேம்பாடு. தன்மம் - அறம், தருமம், நன்மை, நீதி. தன்மயம் - தற்சுபாவம். தன்மராசா - உதிட்டிரன், பாலைமரம். தன்மலைக்காசி - சாலக்கிராமம். தன்மன் - இயமன், தருமன், திப்பிலி,திப்பிலிமூலம். தன்மாதன்மியம் - புண்ணியபாவம். தன்மாத்திகாயம் - புண்ணிய தேகத்தொன்று. தன்மாத்திரை - பூதங்களினாதி,பொறிகளின்மூலம், விடயன். தன்மானி - எளிமை, நிற்பந்தன். தன்மூப்பு - இட்டம், இறுமாப்பு. தன்மூலம் - திப்பிலிக்கட்டை. தன்மேம்பாடு - தற்புகழ்ச்சி. தன்மேம்பாட்டுரை - ஓரலங்காரம்அஃது தற்புகழ்ச்சி. தன்மை - ஓரலங்காரம் அது யாதொருபொருளைய தன்றன்மை விளங்கச்சொல்வது, குணம், சுபாவம்,நிலைபரம், மரியாதை, மாதிரி,மூவிடத் தொன்று. தன்மையெழுத்து - உணர்வெழுத்து. தன்யாசி - தன்னியாசி, ஓரிராகம். தன்வசம் - தன்பொறுப்பு, தன்மாதிரி. தன்வந்தரி - ஓர் வைத்தியசாத்திரி,அவன் திருப்பாற்கடல் கடையும்போதுண்டானதேவர் மருத்துவன்,சிவன்,சூரியன். தன்வயத்தன் - ஸ்வாதீனன். தன்வயத்தாதல் - கடவுளதெண் குணத்தொன்று. தன்வழி - தன்வசம், தன்பொறுப்பு. தன்வழிப்படுதல் - தன்வசப்படுதல். தன்விருத்தி - தன்றொழில். தன்வினை - ஊழ்வினை, எழுவாய்க்கருத்தாவின்புடை பெயர்ச்சியாய் நிகழுந்தொழில், தன்னாலாய தொழில். தன்வேதனை - சுயபரீட்சை. தன்வேதனைக்காட்சி - அராகாதியாலறிந்தாசைப்படுவது. தன்வையாதம் - சிறுகாஞ்சொறி. தன்னடக்கம் - தன்னைக் கட்டுப்பாடு பண்ணல். தன்னந்தனி - மிகுதனி. தன்னமதி - பிறைச் சந்திரன். தன்னமை - இணக்கம், ஒத்தாசை,சினேகம், தாழ்மை. தன்னம் - அற்பம், பசுவின்கன்று,மான்கன்று, ஓர்யுத்தி, வழக்கமிகவெடுத்துரைத்தல். தன்னயம் - தன்பலம். தன்னரசு - இட்டமானவாளுகை.தன்னரசுநாடு, தன்னரசுபற்று - இராஜா வில்லாத தேசம். தன்னரண்காத்தல் - எண்வகைவெற்றியினொன்று. தன்னலம் - தன்நன்மை. தன்னவன் - தன்னுடையவன். தன்னறிவு - சுயவறிவு, தனக்குரியவுணர்ச்சி, பிரஞ்ஞை.தன்னிச்சை, தன்னிட்டம் - எதேச்சை,மனப்படி. தன்னியத்துவம் - செல்வமுடைமை. தன்னியம் - தனது, திரவியம், முலைப்பால். தன்னியல்புப்பிரதேயம் - ஓரளவைஅது மிகுதி காரணமாய் ஒன்றற்குவழங்கியும் பிறவுமுளவென வியல்பினாற் கோடல் (உ-ம்) சேதுப்புராணம். தன்னியன் - தனவான், தீவினைநீங்கினோன், கிருகார்த்தன். தன்னியாசி - ஓர் இராகம். தன்னியை - வளர்த்ததாய். தன்னிரைமீட்டல் - எண்வகைவெற்றியினொன்று. தன்னிலை - சமனாய்நிற்கை, சுபாவநிலை. தன்னிறமாக்கி - குளவி, பொன். தன்னிறம் - சுபாவநிலை, மாந்தளிர்ச்சிலை. தன்னினி - வேங்கைமரம். தன்னீங்கள் - தன்னிட்டம், தான்றவிர்வாதல். தன்னுணர்ச்சி - தன்னறிவு. தன்னுதல் - சற்றுச்சற்றாய்க் கொண்டுபோதல்.தன்னுதோணி, தன்னுவத்தை - சிறுவத்தை. தன்னெடுப்பு - அகந்தை, தன்முயற்சி. தன்னை - இரண்டாம் வேற்றுமையுருபுடைப் படர்க்கையொருமைவிரவுப் பெயர், தமக்கை, தாய்,மூத்தோன். தன்னைக்கட்டுதல் - தன்னைக்காவல்செய்தல், மனதைக் கட்டுப்படுத்தல். தன்னைப்பருப்பித்தல் - தன்னைப்புகழ்தல், தன்னையுயர்த்தல். தன்னையறிதல் - இருதுவாதல்,தன்றன்மையுணர்தல், ஆத்மதரிசனம். தன்னையொறுத்தல் - தனக்குள்ளசெலவைக் குறைத்தல், தன்னைக்கொல்ல தன்னை வாட்டுதல். தன்னொழுக்கம் - தன்னிலைக்குத்தக்க பரிமாற்றம். தன்னோடொற்றுமைப் பொருள் - தற்கிழமைப் பொருள் (உ-ம்)முருகன் கை, உபாங்கப்பொருள்(உ-ம்) முருகன் வேல். தா தா - அழிவு, ஓரெழுத்து, குற்றம்கேடு, கொடியன், தாண்டுதல்,தாவென்னேவல், பகை, பாய்தல்,பிரமன், வருத்தம், வலி, வியாழம்,பரப்பு. தாகசாந்தி - விடாய் தணித்தல். தாகசுரம் - ஓர்சுரம். தாகப்புளி - விடாய்ப்புளி. தாகமடக்கி - புளியாரை. தாகமெடுத்தல் - தாகங்கொள்ளுதல். தாகம் - ஆசை, உணவு, எரிவு, எருது,தூண், நீர்விடாய் அஃது உயிர்வேதனையி னொன்று, மாயயாக்கை பதினெண் குற்றத்துமொன்று. தாகனம் - தகனம். தாகன் - கொடையாளன், யாகஞ்செய்விப்போன், தியாகன். தாகாரித்துவம் - ஆகாயசுரூபமறிதல். தாகித்தல் - தாகங்கொள்ளுதல். தாக்கணங்கு - இலக்குமி. தாக்கணித்தல் - அத்தாட்சிப்படுத்தல். தாக்கம் - அதைப்பு, கனப்பு, வீக்கம். தாககல் - தாக்குதல். தாக்காட்டுதல் - ஆதரவுபண்ணுதல்,உதவி செய்தல், ஏய்த்தல், பராக்குக்காட்டல். தாக்கிதை - கட்டளைப்பத்திரம். தாக்கியன் - தார்க்கியன். தாக்கீது - தாக்கிதை. தாக்கு - அடி அதிர்ச்சி, இடம், உரம்,கனம், சாதிப்பு, தாக்கென்னேவல், நிலவறை, நெல்வயல்,போர், வலி, வேகம், எதிர்த்தல். தாக்குதல் - அடித்தல், எண்கூட்டிப்பெருக்கல், எதிர்த்தல், கனத்தல்,தள்ளுதல், தாழுதல், பாய்தல்,முட்டுண்ணல். தாங்கல் - குளம், சுமத்தல், தாங்குதல், மனக்குறை,விதனம், பூமி. தாங்கான்மட்டை - நூற்பாவைத்தாங்கவைக்கு மட்டை. தாங்கி - ஆதாரம், பணிகளின் கடைப்பூட்டு, பூண், மலை தாங்கி. தாங்கு - ஈட்டிக்காம்பு, தாங்கல்,தாங்கி. தாங்குகோல் - மரக்கோல். தாங்குதல் - அணைத்தல், ஆதரித்தல்,காத்தல், சகித்தல், சுமத்தல், தரித்தல், தோணிதள்ளல், பொறுத்தல்,விதனப்படுதல். தாசத்துவம் - அடிமைத்தனம். தாசநந்தினி - சத்தியவதி, அவள்வியாசன்றாய். தாசநம்பி - சாத்தாதவன், சாத்தானி. தாசபாலனம் - தயாவிருத்தி பதினான்கினொன்று அஃது அடிமை காத்தல்.தாசபுரம், தாசபூரம் - ஓர் புல். தாசரதன் - இராமன். தாசரதி - தசரதபுத்திரனான இராமன். தாசரி - தாதன், மலைப்பாம்பு. தாசருகன் - விட்டுணு. தாசர் - அடிமைகள், நெய்தனில மாக்கள். தாசன் - அடிமை, ஊழியக்காரன்,சூத்திரன், ஞானி, தாதன், நெய்தனிலத்தவன்.தாசி, தாசிகை - அடிமை, நாடகக்கணிகை, பரணிநாள், மேகவண்ணப் பூவுள மருதோன்றிமரம். தாசிக்கல் - காக்கைக்கல். தாசிதம் - அழிந்தது. தாசியப்பிருந்தம் - பசுக்கூட்டம். தாசியம் - அடிமைத்தனம். தாசினப்பொடி - பன்மினுக்குதூள். தாசு - இரண்டரை நாழிகை கொண்டநேரம், சூதாடுகருவி, நாழிகைவட்டில். தாசுவம் - கொடை. தாசுவன் - கொடையாளன். தாசூரன் - ஓர் முனிவன். தாசேயன் - வேலைக்காரன்.தாசேரகம், தாசேரம் - ஒட்டகம். தாசேரன் - வேலைக்காரன். தாசோகம் - அடியேன், ஒட்டகம். தாச்சி - சோனைப்புல், தாய்ச்சி. தாடம் - நீர்முள்ளி, வீழி. தாடகை - ஓரரக்கி, மானங் கெட்டவள். தாடசம் - கொடிமுந்திரிகை. தாடங்கம் - காதணி, தோடு. தாடபத்திரம் - ஓர் காதணி. தாடம் - உப்பட்டி, ஒலி, தண்டித்தல்,மலை. தாடனம் - அடித்தல், தட்டுதல்,தட்டல். தாடன் - தாசன். தாடாண்மை - முயற்சி. தாடாளன் - முயற்சியுள்ளோன். தாடாற்றி - ஆறுதல், சகாயம். தாடி - மாடு முதலியவற்றின் கழுத்தாரம், மோவாய், மோவாய் மயிர்,விரலுறை. தாடித்தல் - அமர்த்தல், இடித்தல்,தட்டல். தாடிமஞ்சம் - சத்திரக்கொடி.தாடிமபட்சணம், தாடிமப்பிரியம் - கிளி. தாடிமம் - சிற்றேலம், தாதுமாதளை. தாடை - கன்னம், தாடி, பெரும்பல்,விருப்பம். தாட்குற்றியீனுதல் - செந்தாளீனல். தாட்கோரை - ஓர்புல். தாட்சகம் - தக்க வமிசம்.தாட்சணம், தாட்சணியம், தாட்சணை, தாட்சண்ணியம் - இரக்கம், தாழ்மை. தாட்சம் - கொடிமுந்திரிகை, முந்திரிகை. தாட்சயம் - விவேகம். தாட்சன் - கருடன். தாட்சாயணம் - பொன், பொன்னாபரணம், தாட்சாயணி - இருபத்தேழ் நட்சத்திரப்பொது, உரோகணி, துர்க்கை,பார்வதி. தாட்சாயணீபதி - சந்திரன். தாட்சாயணீபன் - சந்திரன், சிவன். தாட்சாயம் - வலியான்.தாட்சிணியம், தாட்சிணை, தாட்சிண்ணியம் - இணக்கம், இரக்கம்,சமர்த்து, மரியாதை.தாட்சீபுத்திரன், தாட்சேயன் - பாணினி முனி. தாட்டன் - கடுவன்குரங்கு, தலைவன்,பெருமைக்காரன். தாட்டாந்தகம் - திருட்டாந்தப்பட்டது. தாட்டாந்தம் - திருஷ்டாந்தத்தைக்கொண்டது. தாட்டாந்தரம் - அத்தாட்சி வேண்டியன. தாட்டான் - கணவன், தலைவன். தாட்டி - ஆண்மாரி, கெட்டிக்காரி,சாமர்த்தியம், தடவை, தலைவி,தைரியம், பனை. தாட்டிகம் - அகந்தை,பலம்.தாட்டுப்போட்டு, தாட்டுமேட்டு - குழப்பம்.தாட்போட்டம், தாட்டோட்டு - எத்து. தாட்படை - கோழி. தாட்பாள் - கதவடைக்குந்தாள்,நுழையடைக்குந்தாள். தாணி - தாணியென்னேவல், தான்றிமரம். தாணித்தல் - குற்றமேற்றல், தறைதல்,தாளித்தல், துப்பாக்கியில் மருந்திடுதல், பலப்படுத்தல். தாணு - குறுந்தறி, சிவலிங்கம், சிவன்,தாபரம், தூண், நிலை, நிலைபேறு, புகலிடம், மலை, வெற்றி. தாணையம் - பாளயம். தாண்டகம் - ஓர் பிரபந்தம் அஃதுஇருபத்தா றெழுத்தின் மிக்கவெழுத்தானடி கொண்டு வரும்பா. தாண்டல் - தாண்டுதல் தாண்டவதாலிகன் - நந்திதேவன். தாண்டவப்பிரியன் - சிவன். தாண்டவம் - கூத்து, சிவன்கூத்து,தாவல்.தாண்டவராயன், தாண்டவன் - சிவன். தாண்டு - நடனசாத்திரம், கடத்தல்,குதி, தாண்டென்னேவல், வெற்றி. தாண்டுதல் - ஆடுதல், கடத்தல்,பாய்தல், வெல்லுதல். தாதகி - ஆத்திமரம். தாதக்கூத்து - ஓர்கூத்து. தாதச்சி - தவப்பெண். தாததுல்லியன் - பித்ருசமானன். தாதநம் - கரிக்குருவி. தாதமம் - பட்சித்தல். தாதமார்க்கம் - சரிதைநிலை. தாதம் - அசையப்பட்டவை, கொடை. தாதரூப்பியரூபகம் - ஓரலங்காரம். தாதர் - அடிமைக்காரர், கொடையாளர், தொண்டர், வைணவர்களினோர் வகையார். தாதலம் - நோய், பாகம், மனத்திட்பம். தாதன் - அடிமைக்காரன், ஈகையாளன், தொண்டன், பிதா,சாத்தானி, தாசன். தாதா - ஈகையாளன், பாட்டன்,பிதா, பிரமன்.தாதாத்மியம், தாதான்மியம் - ஒருமைப்பட்டிருக்கை. தாதி - அடியவள், செவிலித்தாய்தோழி, தாசி. தாதிரி - கொடையாள். தாதிராசகம் - இந்திரியம். தாதிரு - திருமால், பிதா, பிரமன். தாது - காவிக்கல், சத்ததாது அஃதுஇரதம், இரத்தம், எலும்பு,சுக்கிலம், தசை, தோல், மூளை,சொன்மூலம், தாதுமாதளை,துகள், நரம்பு, பஞ்சபூதம், பஞ்சவிடயம், பத்தாவதாண்டு, பூந்தாது,பொன்னாதியேழு, மண்ணாதியைந்து, பூவிதழ், உலோகம்,நாடிசக்தி, பொடி. தாதுகட்டுதல் - சுக்கிலத்தம்பனம்பண்ணுதல். தாதுகலித்தல் - தாதுகக்குதல். தாதுக்களையோன் - புட்பராகம். தாதுசேகரம் - துருசி. தாதுநட்டம் - தாதுச்சிதைவு. தாதுபார்த்தல் - கைநாடியறிதல். தாதுமாதளை - பூமாதளை. தாதுமாரிணி - பொரிகாரம். தாதுமூலசீவன் - இரசநிரச வஸ்துக்களுஞ் சீவவஸ்துக்களும். தாதுராஜநம் - விந்து. தாதுரோகம் - ஓர்வியாதி. தாதுவல்லபம் - பொரிகாரம். தாதுவாதம் - கலைஞான மறுபத்துநான்கினொன்று. தாதுவாதி - பொன் முதலியவுலோகங்களைப் பரிசோதிப்போன். தாதுவிருத்தி - தாதுவிளைவு, சுக்கிலவிருத்தி. தாதுவைரி - ஏலம், கடுக்காய், கந்தகம். தாதை - பேய்க்கொம்மட்டி, தகப்பன்,பாட்டன், பிரமன், ஒன்பதாமிடத்துக் கதிபதி.தாதைதன்றாதை, தாதைதாதை - பாட்டன். தாத்தாரி - நெல்லி. தாத்திரம் - கூன்வாள், கோடாலி. தாத்திரி - ஆடுதின்னாப்பாளை,நெல்லி, பூமி, மாதா. தாத்திரிபலம் - நெல்லிக்கனி. தாத்திரிபுத்திரன் - வளர்ப்புப் பிள்ளை. தாத்திரியம் - வறுமை. தாத்திருவாதம் - எத்து, கபடம்,பொய். தாத்துதல் - தாற்றுதல். தாத்துரு - துவாதசாதித்தரிலொருவன். தாத்துவன் - உபகாரி. தாநகம், தாநாகம் - கொத்துமல்லி. தாநி - ஓர் நதி, ஓர் மரம், கொத்துமல்லி, நிதானம், வாசஸ்தாநம். தாந்தகாரி - வாதமடக்கி. தாந்தம் - குருசிட்டி. தாந்தவம் - நூற்றல், நெய்குதல். தாந்தனம் - காற்று. தாந்தன் - தவஞ்செய்தலி லுண்டாகும் துன்பத்தைச் சகிப்பவன். தாந்திமம் - பஞ்சேந்திரிய நிக்கிரகம். தாந்திரிகம் - ஓர் நோய் தந்திரத்திற்கடுத்தது, தந்திர நியாயத்துக்குரியது. தாந்திரிகன் - நூல் வல்லோன். தாபகம் - துக்கம், நிலை நிறுத்தல்,வெப்பம், வைத்தல். தாபகன் - நிலை நிறுத்துபவன். தாபசபத்திரகம் - தவனம். தாபசப்பிரியை - கொடி முந்திரி. தாபசம் - ஓர்மரம், கொக்கு. தாபசன் - தவசி. தாபசுரம் - ஓர் நோய். தாபசோபம் - தளப்படி, மிகுவாட்டம். தாபதநிலை - கைமைவிரதம், தபவொழுக்கம். நெய்தற்புறம் அதுதலைமகனை நீங்கியமாதர் நிலை. தாபதம் - முனிவர் வாசம். தாபதர் - சடைமுடியர், சமண்முனிவர், முனிவர். தாபநன் - சூரியன். தாபநி - இரவு, ஓர் நதி, ஓர் மந்திரம். தாபநீயம் - உபநிடத முப்பத்திரண்டினொன்று. தாபந்தம், தாபந்திரியம் - வேதனை. தாபமாறி - தான்றி. தாபம் - உட்டணம், காடு, காட்டாக்கினி, தாகம், துக்கம், துன்பம்,வெப்பம். தாபரசங்கம் - எழுவகைத் தோற்றத்தொன்று, அது மர முதலியன. தாபரம் - ஆதாரம், உடல், கோயில்,தஞ்சம், துணை, நிலைத்திணைப்பொருள், பூமி. தாபரன் - கடவுள். தாபரித்தல் - தாங்குதல். தாபனம் - சூரியகிரணம், தாபிப்பு,வெப்பம். தாபி - பத்தன், யமுனையாறு. தாபிஞ்சம் - ஆமணக்கு, பச்சிலைமரம். தாபிதம் - சூடு, தாபித்தல், தாபித்தல் - இருத்துதல், தாபனம்பண்ணுதல். தாபியம் - வைத்தல். தாப்பணிவார் - கசை, கல்லணைக்கச்சை, தாம்புக்கயிறு. தாப்பாள் - தாழ்ப்பாள்.தாப்பிசை, தாப்பிசைப்பொருள்கோள் - பொருள்கோ ளெட்டினொன்றுஅஃது நடுவினுள்ள மொழியையேனையீரிடத்துங் கூட்டிப்பொருள் கொள்வது. தாப்பு - குறித்தநேரம். தாப்புக்கொள்ளுதல் - சமயம்பார்த்திருத்தல். தாமசபதார்த்தம் - வெறியூண். தாமசப்பிரகிருதி - தாமதகுணத்தின்மூலம். தாமசம் - இருள், தாமதம். தாமசித்தல் - தாமதித்தல். தாமணி - கயிறு, தாம்பு தாமதம் - தாமதித்தல், முக்குணத்தினொன்று இஃது ஒழுக்கவழு,காமம், கொலை, கோபம், சோம்பு,நீதி வழு, நெடுந்துயில், பேருண்டி,பொய், மறதி, வஞ்சக முதலியன. தாமதவேளை - மூன்றேமுக்கா னாழிகைகொண்டுவரு மோர் காலம்,முக்குணவேளையி லொன்று. தாமதித்தல் - தடைபடல், தரித்தல். தாமநிதி - சூரியன். தாமம் - அஞ்சத்தக்கது, அணைகயிறு, இடம், உடல், ஒழுங்கு,ஒளி, கயிறு, கிரணம், கீர்த்தி,கொன்றைமரம், சரீரம், சுகம்,தாமணி, தீங்கு, பட்டினம், பிரபை,பிறப்பு, புள்ளினதாரம், பூ,பெருமை, போர்க்களம், மகத்துவம், மணிவடம், மலை, மாலை,முடியுறுப்பு, மூவாறு கோவை,மணியுள்ள மாதரிடையணி,யானை, விருப்பம், வீடு. ஊர்,சார்பு. தாமரசம் - செம்பு, தாமரை, பொன். தாமரம் - நீர், நெய், தாமரை. தாமரை - கமலம். தாமரைக்கண்ணன் - விட்டுணு. தாமரைக்கொட்டை - பொகுட்டு. தாமரைச்சத்துரு - ஓர் பாஷாணம்.தாமரைநண்பன், தாமரைநாயகன் - சூரியன். தாமரைநூல் - தாமரை வளையத்தினூல். தாமரைமணி - தாமரைக்கொட்டை. தாமரையாசனன் - பிரமன்.தாமரையாசநி, தாமரையாள் - அரிதாரம், இலக்குமி. தாமரையான் - பிரமன். தாமரைவாசி - தாமரையாள். தாமலகி - நிலநெல்லி. தாமலகிதளம் - தாளிசபத்திரி. தாமலம் - இலை. தாமளை - புன்னை. தாமனபருவம் - சித்திரைச் சுக்கிலபக்கச் சத்தமி. தாமனி - நரம்பு, பசுக்கட்டுங்கயிறு. தாமான் - கப்பற் பின்பக்கத்துக்கயிறு. தாமிசிரம் - நாமம், பேரிருள். தாமிரகருணி - மேற்றிசை யானைக்குப்பெண் யானை. தாமிரசிகி - கோழி. தாமிரசிந்தூரம் - ஓர் மருந்து. தாமிரபட்டம் - செப்பேடு. தாமிரபட்டயம் - செப்பேட்டுசாசனம். தாமிரபருணி - ஓர்யாறு, மேற்றிசையானைக்குப் பெண்யானை. தாமிரபல்லவம் - அசோகமரம். தாமிரபீசம் - கொள். தாமிரம் - செம்பு. தாமிரவிருந்தம் - கொள். தாமிரிகை - குன்றிக்கொடி. தாமிரை - செம்பு. தாமை - தாம்பு. தாமோதரன் - ஆமை, விட்டுணு. தாம் - அசைச்சொல் (உ-ம்) அவர்தாம், சாரியை (உ-ம்) எல்லோர்தாமும், தானென்பதன் பன்மை. தாம்பணி - தாம்புக்கயிறு. தாம்பாளம் - ஓர்வகைத் தட்டம். தாம்பிகம் - தூரத்தில் வருபவரைக்காணல். தாம்பிகன் - மாயக்காரன். தாம்பிரகம் - செம்பு. தாம்பிரகருப்பம் - துருசி. தாம்பிரகாரர் - கன்னார். தாம்பிரசூடம் - சேவல். தாம்பிரபத்திரம் - செப்புப் பட்டையம். தாம்பிரமிருகம் - செந்நிறமான். தாம்பிரம் - செம்பு. தாம்பிரவன்னமண் - செம்புமணல். தாம்பிரவன்னம் - சிவப்பு. தாம்பிரவன்னி - ஓரியாறு. தாம்பிராட்சம் - குயில். தாம்பு - கயிறு, தாமணிக்கயிறு. தாம்புலோவல்லி - மஞ்சாடி. தாம்பூரவல்லம் - வாழை. தாம்பூலகாங்கம் - வெற்றிலைப்பெட்டி. தாம்பூலதன் - அடைப்பைக்காரன். தாம்பூலதாநியம் - வெற்றிலைச்சுருள். தாம்பூலபீடிகை - வெற்றிலைப்பெட்டி. தாம்பூலம் - வெற்றிலை, அஃதுஅட்ட போகத் தொன்று, வீடிகை. தாம்பூலவல்லி - வெற்றிலை, வெற்றிலைக்கொடி. தாம்பூலவாகன் - அடைப்பைக்காரன். தாம்பூலி - தாம்பூலவல்லி. தாம்பூலிகன் - வெற்றிலை வாணியன். தாம்பூலோவல்லி - மஞ்சாடி. தாயகம் - ஈகையுடைமை, பிறந்தகம்,தாரகம். தாயகன் - கொடையாளி, பாலகன். தாயக்கட்டை - சூதுகவறு, சூதாடுகருவி.தாயதி, தாயத்தனம் - உரிமைப்பங்கு,தாயாதித்தனம். தாயத்தார் - ஞாதிகள், வங்காளிகள். தாயபந்து - சகோதரன். தாயபாகம் - சுதந்திரம், பங்கு. தாயம் - உடைத்தல், உபகாரம்,உரித்து, ஓர் சூது, கொடை, சமயவாய்ப்பு, சுற்றம், சூது கவறு,தந்தைவழிச் சுற்றம், துன்பம்,நட்டம், பங்கு. தாயம்பார்த்தல் - சமயவாய்ப்புப்பார்த்தல். தாயம்போடுதல் - சூதாடல். தாயவிபாகம் - உரிமைப்பொருள்பிரித்தல். தாயாதன் - உரிமைப்பங்காளி,உறவன் மகன். தாயாதிகள் - தாயத்தார். தாயாதித்தனம் - எதிரிடை, எரிச்சல். தாயபவர்த்தனம் - பொருட்சேதம். தாயான் - ஒன்பது. தாயான்புலு - தொண்ணூறு. தாயித்து - அட்சரக்கூடு, மந்திரித்தஎந்திரம், அடைக்கும்கூடு.தாயுமானவர், தாயுமானார் - ஓர்ஞானி, செவ்வந்தியீசர். தாயேடு - பாடேடு. தாயைக்கொல்லி - குட்டியிடுக்கி,மாபாவி, வாழை. தாயைக்கொன்றான் - புல்லூரிவாழை. தாயோலை - முதலலோலை. தாய் - அண்ணன்றேவி, அரசன்றேவி,ஊட்டுந்தாய், குருவின்றேவி,கைத்தாய், செவிலித்தாய், தன்றேவியையீன்றாள், நற்றாய், பாராட்டுந்தாய், மாதாவின் சகோதரி,முதல், முதற்றரம், முதன்மை. தாயக்கண் - பருங்கண். தாய்க்கிழங்கு - கிழவிக்கிழங்கு. தாய்ச்சி - கருப்பிணி, தாய், முன்னீடுகாரன். தாய்ச்சித்தம்பலம் - ஓர் விளையாட்டு. தாய்ச்சீட்டு - முன்னுறுதி, தாயோலை. தாய்பெற்றமேனி - நிருவாணம். தாய்மாமன் - தாயின் சகோதரன்.தாய்வழி, தாய்வழிச்சுற்றம் - மாதாவழிச்சுற்றம். தாரகசித்து - குமரன். தாரகத்தான் - பன்றிக்கொம்பு. தாரகப்பிரமம் - ஓர் மந்திரம். தாரகம் - ஆதாரம், உச்சவிசை, ஓர்மந்திரம், கண், கண்மணி, பலண்டுருவ பாஷாணம், பிரணவம்,வெள்ளி. தாரகருமம் - கல்யாணம். தாரகன் - கண்ணன் தேர்ச்சாரதி,குழந்தை, தாங்குவோன், தாபரிக்கிறவன், மகன், கடப்பிப்பவன். தாரகாகணம் - விண்மீன் கூட்டம். தாரகாபதி - சந்திரன், வியாழம். தாரகாரி - குமரன். தாரகிநி - இரவு. தாரகை - கண்மணி , விண்மீன். தாரகைமாலை - ஓர் பிரபந்தம் அஃதுகற்பின் மகளிரியற்கை தோன்றக்கூறுவது. தாரக்கம் - தாரகம், பத்தியம். தாரசங்கிரகம் - விவாகம். தாரசுத்திகரம் - ஈயம். தாரண - பதினெட்டாவதாண்டு. தாரணகன் - கடனாளி. தாரணம் - ஓர்பூடு, கடன், தாரணை,தெப்பம், நினைத்தமைத்தல், தரித்தல். தாரணி - பூமி, தரணி. தாரணை - அட்டாங்க யோகத்தொன்று அஃது இதயம் கண்டம்கபாலம் நாபி நெற்றியிவற்றொன்றிற் சிந்தை வைத்திருத்தல்,அதிவாசம், உறுதி, கடன், கட்டளை,சரிநிலையினிற்றல், ஞாபகம்,தரித்தல், நிலை, புலனடக்கல்,வாயுவைக்கும் பித்தல், மனத்தைநிறுத்துதல். தாரதண்டுலம் - வெண்சோளம். தாரதம் - இரதம், கடல், சிந்தூரம். தாரதம்மியம், தாரதன்மியம் - உவமை,ஏற்றத்தாழ்ச்சி, ஒப்பு, வித்தியாசம். தாரநாசம் - பேரொலி. தாரபரிக்கிரகம் - விவாகம். தாரம் - அரிதாரம், அரும்பண்டம்,எல்லை, கடன், கல், சாதிலிங்கம்,சிற்றரதை,தரா, தேவதாரம்,நட்சத்திரம், நா, நாரத்தை, நீர்,பச்சிலைப் பாம்பினஞ்சு, பனி,பாதரசம், பார்வை, பிரணவம்,மழை, மழைத்துளி, மனைவி,முத்து, மூக்காற்பிறக்குமிசை, வல்லிசை, விவாகம், வீணை நரம்பினொன்று, வெண்கலம், வெள்ளி. தாரா - ஓர்புள், ஓர் பெயரெச்சம், ஓர்வினைமுற்று, ஓர்வினையெச் சம்,குருகு, மனைவி, விண்மீன். தாராகணம் - நட்சத்திரக்கூட்டம். தாராகதம்பம் - கடம்பு. தாராங்கம் - மழைத்துளி, வாள். தாராங்குரம் - ஆலங்கட்டி. தாராசம்பாதம் - விடாமழை. தாராசாரம் - பெருமழை. தாராடம் - குதிரை, சாதகப்புள்,மதயானை, மேகம். தாராட்டு - ஓர் பாட்டு, தாலாட்டு. தாராட்டுதல் - ஓராட்டுதல். தாராதத்தம் - நீரொடு தானஞ்செய்தல். தாராதரம் - மேகம், வாள். தாராதாரம் - மேகம். தாராதிபதி - சந்திரன். தாராதீனன் - மனைவிக் கமைந்து நடப்போன். தாராபதம் - நட்சத்திரப் பதவி,வானம். தாராபதி - சந்திரன், வியாழம். தாராப்பிரம் - கர்ப்பூரம். தாராபீடன் - சந்திரன். தாராபூஷணம் - இரவு. தாராப்பூடு - நாரத்தை. தாராமண்டலம் - நட்சத்திர மண்டலம். தாராமூக்கன் - ஓர் பாம்பு. தாராவனி - காற்று. தாராவிஷம் - வாள். தாராளம் - இட்டம், உதாரம்,கொடை, தெளிவு, தைரியம்,பொலிவு, மிகுதி, விசாலம். தாரி - அரிதாரம், உடையோன்,குணம், தரிப்பவர், வழி, விதம்,விலைவாசி. தாரிகம் - தீர்வை. தாரிகாதானம் - கன்னிகாதானம். தாரிகை - பனஞ்சாறு. தாரிசம் - இணக்கம், ஒப்பந்தம்,சம்மதி. தாரிணி - பட்டுப்பருத்தி,பூமி. தாரிதம் - குதிரைநடை, பிழைத்தல். தாரித்தல் - தாங்குதல்.தாரித்திரம், தாரித்திரியம் - தரித்திரம். தாரிபாரி - சமாசாரமறிந்தவன்,சுபாவம், நல்லவழி யறிந்தவன். தாரீடம் - சமுத்திரம், சுவர்க்கம்,பொன். தாரு - பித்தளை, மரக்கொம்பு, மரப்பொது, தேவதாரு. தாருகசித்து - குமரன். தாருகதலி - கான்வாழை. தாருகம் - சோலை, தேவதாருவனம். தாருகருப்பை - மரப்பாவை.தாருகவிநாசனி, தாருகற்செற்றாள் -காளி. தாருகற்சேற்றோன் - குமரன்.தாருகன், தாருகாசுரன் - காளியால்கொலையுண்ட அசுரன், குமரன்கொன்ற அசுரன். தாருகாரி - குமரன். தாருகாவனம் - ஓர் வனம். தாருசம் - செம்புளிச்சை, மத்தளம். தாருணம் - அச்சம், கூச்சம், துக்கம். தாருணி - நத்தைச்சூரி, பூமி தாருண்ணியம் - இளம்பருவம். தாருபத்திரிகை - மரப்பாவை. தாருபாத்திரம் - மரப்பாத்திரம். தாருமயம் - மரத்தாலாயது. தாருவனம் - சோலை. தாரை - அபிஷேகம், ஒப்பு, ஒழுங்குகண், கண்மணி, காளம், கீர்த்தி,குதிரைநடை, கூர்மை, கொடிப்படை, சக்கராயுதம், சந்ததி, சலதாரை, சிறுசின்னம், சீலை,தத்தம்பண்ணு நீர், திகிரி, திரள்,நா, நேரோடல், பஞ்ச கன்னியரிலொருத்தியான சுரகுரு பன்னி,படையின் முன்னணி, பண்டியுருள், பாய்தல், பெரு மழை,மலைச்சாரல், மழை, மனைவி,வலி,வழக்கம், வழி, வாவியின்மனைவி, விண்மீன், தாசி, கூந்தற்கமுகு. தாரையோன் - ராசியாதிபதி. தாரைவார்த்தல் - தத்தம்பண்ணிநீர்விடுதல். தாரோபசங்கிரகம் - விவாகம்பண்ணல். தார் - கிண்கிணிமாலை, கொடிப்படை, தாறு, படை, படை வகுப்பு,பூ, பூவரும்பு, மாலை, நீர். தார்காணித்தல் - அத்தாட்சிப்படுத்தல். தார்க்கிகன் - ஓர் மதக்காரன், தருக்ககாரன். தார்க்கியன் - கருடன். தார்க்குழல் - தார்நூல்சுற்று குழல். தார்த்தராஷ்டிரன் - துரியோதநன். தார்த்தியம் - கடுமை. தார்மணி - கிண்கிணிமாலை, குதிரைக்கழுத்தின் கிண்கிணிமாலை. தார்மபத்தநம் - மிளகு. தார்மிகன் - புண்ணியவான். தார்மிகை - ஏகாதசிதிதி. தார்யம் - தரிக்கத்தக்கது. தார்வாதாடம் - தச்சன்குருவி. தாலகி - கள். தாலகேதனன் - பலராமன், வீட்டுமாசாரி. தாலதவ்வியம் - சிவன்கை வாள். தாலத்துவசன் - பலதேவன். தாலபத்திரம் - பனையோலை. தாலபத்திரி - மரமஞ்சள். தாலபோதம் - ஆவிரை. தாலமூலி - நிலப்பனை. தாலமேழுடையோன் - அக்கினிதேவன். தாலம் - அகங்கை, உண்கலம், கூந்தற்பனை, தட்டம், தாலம்ப பாஷாணம், தேன், நா, பனை, பூமி,யானைச்செவி. தாலம்ப பாஷாணம் - ஓர் மருந்து. தாலவட்டம் - பூமி, யானைச்செவி,யானைவால், விசிறி. தாலவிருந்தம் - பேராலவட்டம்,விசிறி, தாலவ்வியம் - அண்ணத்தால் பிறப்பன. தாலங்கன் - பலராமன், வீடுமன். தாலாங்கை - யமுனையாறு. தாலாட்டு - ஓராட்டு. தாலாலம் - பழிமொழி. தாலி - கீழ்காய் நெல்லி, மங்கலநாண். தாலிகட்டு - கலியாணம், மங்கிலியதாரணம். தாலிகம் - விரித்தகை. தாலிக்காரி - சுமங்கலி. தாலிக்கொடி - மங்கலநாண். தாலிக்கோவை - மங்கிலியங் கோக்கப்பட்ட ஓர் பணி. தாலிசம் - மலை. தாலிச்சரடு - தாலிக்கொடி. தாலிபாகம் - தீட்சையிற் குருப்பகுக்கு மன்னம். தாலிப்பெட்டி - பொன்னத்துப் பெட்டி. தாலிப்பொருத்தம் - மங்கிலியப் பொருத்தம். தாலியம் - பாதிரி. தாலு - அண்ணன், நா. தாலுகண்ணி - வெள்ளைக்காக்கணம். தாலுகா - நீதித்தலம்,ஜில்லாவின்உட்பகுப்பு. தாலுகை - மேனா. தாலூரம் - சுழல்காற்று. தால் - தாலாட்டு, தாலு, பிள்ளைக்கவியுறுப்பி னொன்று. தாவசி - ஓர் சன்னியாசி. தாவடம் - இருப்பிடம், உருத்திரமணி மாலை, கழுத்தணிமாலை. தாவடி - பிரயாணம், போர். தாவட்டம் - ஓர் கல், சிற்ப நூன்முப்பத்திரண்டி னொன்று. தாவணி - கண்டங்கத்திரி, மாட்டைப்பிணிக்குந்தாம்பு, பெண்கள்மேலுடை. தாவந்தம் - இக்கட்டு, நரகம், சிரத்தை. தாவம் - காடு, காட்டுத்தீ, மருதநிலத்தூர், வெப்பம். தாவரசங்கம் - நிலத்திணைப்பொருள். தாவரம் - அசரம், இடம், இட்டம்,உடல், உதவி, உறுதி, எழுபிறப்பினொன்று, நிலை, பூமி, மரப்பொது, மலை, வின்னாண், நிலையியற்பொருள். தாவரன் - கடவுள். தாவரித்தல் - காப்பாற்றுதல், தாங்குதல். தாவல் - தாண்டல், பரத்தல், தாவுதல். தாவளக்கட்டு - கூன்வாங்கிக்கட்டுதல். தாவளக்காரர் - தேசாந்தரவணிகர்,பொதிக்காரர். தாவளமாடு - பொதிமாடு. தாவளம் - இருப்பிடம், கடை, தாங்கல், பொதிகாரர், மருத நிலத்தூர். தாவளி - கம்பளி. தாவனம் - அசைவு, சுத்திசெய்தல்,தாபனம், தாவாக்கினிவிபூதி - காட்டுத்தீச்சாம்பல். தாவாரம் - தாழ்வாரம். தாவானலம் - காட்டுத்தீ. தாவிஷம் - சமுத்திரம், சுவர்க்கம். தாவிளை - சகாயம், நன்மை. தாவு - இளைப்பாறுமிடம், உறைவிடம், ஒதுக்கிடம், குதிரை நடை,தாவென்னேவல், பகை, பற்றுக்கோடு, பாய்ச்சல், வருத்தம், வலி, பள்ளம். தாவுதல் - அழிதல், எட்டிப் பிடித்தல், பள்ளம், தாண்டல், நீட்டல்,பரத்தல், செல்லல், குறைதல். தாவுரி - இடபவிராசி. தாழக்கோல் - தாழ்ப்பாள், திறப்பு. தாழஞ்சங்கு - வாயகன்ற சங்கு. தாழாமை - இறுமாப்பு. தாழி - அரிதாரம், குடம், சாடி,சிவதை, பரணிநாள். தாழிகை - ஓர் கவி.தாழுகை, தாழுதல் - தாழ்தல். தாழை - தாழைமரம், தென்னமரம். தாழ் - இரௌவுக்கைக்கச்சு, சுவர்ப்புறத்து நீண்ட வுத்திரம், தாழ்க்கோல், தாழென்னேவல், நீளம்,தாழ்ப்பாள். தாழ்குழல் - பின்சாய்ந்தவளகம்,பெண், தாழ்க்கோல் - தாட்பாள். தாழ்சடை - நீண்ட சடை. தாழ்ச்சி - குறைவு, தவறு, தாழ்மை,நட்டம். தாழ்ச்சிவளர்ச்சி - சிறுமைபெருமை. தாழ்தல் - அமிழ்ந்துதல், ஆசை,ஆசைப்பெருக்கம், குறைதல்,சரிதல், தங்கல், தாமதித்தல், தூங்குதல், விரும்புதல். தாழ்த்தல் - அடக்கம்பண்ணுதல்,இருத்தல், கீழ்ப்படுத்துதல், குறைத்தல், தாமதித்தல், புதைத்தல்,மந்தப்படுத்தல். தாழ்த்துதல் - அடக்குதல், அமிழ்த்துதல், கீழ்மைப்படுத்துதல், குறைத்தல், சாய்த்தல், தாமதித்தல்,பணித்தல். தாழ்ப்பம் - ஆழம். தாழ்ப்பாள் - தாட்பாள். தாழ்ப்பு - தாழ்ச்சி, தாழ்த்துதல். தாழ்மை - ஒடுக்கம், கீழ்மை, நீசத் துவம். தாழ்வடம் - முத்துக்கோவை முதலியன. தாழ்வயிறு - சரிந்த வயிறு.தாழ்வாய், தாழ்வாய்க்கட்டை - தாடி. தாழ்வாரம் - வீட்டிறப்பு. தாழ்வு - கீழ்மை, குறைவு, சாய்வு, தவறு, பள்ளம். தாளகம், தாளக்கம் - அரிதாரம்,மால்தேவி. தாளத்திரயம் - வலக்கை மூவிரலால் இடதுள்ளங் கையிற் சலத்தைமுத்திரந் தட்டல். தாளப்பிரமாணம் - சங்கீத சுருதிப்பிரமாணம், அஃது அங்கம்,இலயை, களைகாலம், கிரகம்,கிரியை, சாதி, பிரத்தாரம்,மார்க்கம், யதி. தாளம் - ஓர் வாச்சியம், கலைஞானமறுபத்துநான்கினொன்று, சதி,பனை. தாளம் போடுதல் - தாளங் கொட்டுதல். தாளன் - குழுக்குறியிற் கனவீனன். தாளாண்மை - ஊக்கம், முயற்சி தாளாளர் - ஊக்கமுள்ளோர்,வைசியர், பொது. தாளி - அனுடநாள், ஓர் கொடி,தாளியென்னேவல், பனைமரம். தாளிக்கம் - தளைப்பு, திடன். தாளிசபத்திரி - ஓர் மருத்திலை. தாளிசம் - ஓர்மரம். தாளிதம் - தாளிப்பு. தாளித்தல் - மசித்தல் . தாளிப்பனை - சீதாளம். தாளிப்பு - மசிப்பு, மதர்ப்பு, தாளித்தல். தாளினி - சிவதை, நிலவாகை. தாளுதல் - இயலுதல், பொறுத்தல். தாள் - அருவி, அலகு, ஆதி, ஒட்டு,ஒற்றைக் காகிதம், கதவுறுதாள்,கால், தாளென்னேவல், திறவுகோல், பணிகளின் கடைப்பூட்டு,முயற்சி, விளக்குத்தண்டு, விற்குதை. தாள்கழுவல் - பாதசுத்திபண்ணல்,அஃதுபுண்ணிய மொன்பதினொன்று. தாறு - அங்குசம், அளவு, இருப்புமுள், ஐது, கமுகு, வாழை முதலியவற்றின் குலை, நூனாழி, விற்குதை. தாறுகன்னி - வெள்ளைக்காக்கணம். தாறுமாறு - குழப்பம், விரோதம். தாற்கரியம் - களவு. தாற்பரியம் - கருத்து, கொள்கை,விபரம். தாற்பரியம்பண்ணுதல் - பருப்பித்துப்பண்ணுதல். தாற்பரியவுரை - விபரவுரை. தாற்று - கொழிப்பு. தாற்றுக்கதிர் - கொத்தாய்க் காய்க்குங்கதிர். தாற்றுக்கோல் - துறட்டி,முட்கோல். தாற்றுதல் - தரித்தல், புடைத்தாற்றிக்கழித்தல். தாற்றுப்பூ - கொத்துப்பூ. தானகம் - பரதவுறுப்பு ளொன்று. தானக்கை - உயிர் நிலை, பொறுப்பிடம். தானங்கொடுத்தல் - காயத்தினற்குணமூன்றினொன்று, கோதான முதலிய வீதல். தானசுத்தி - பஞ்சசுத்தியிலொன்று,அஃது இருக்குந் தானத்தைச்சுத்திசெய்தல். தானசீலம் - கொடைக்குணம். தானஞ்செய்தல் - தானங்கொடுத்தல். தானத்தார் - கோயில் விசாரணைக்குரியோர். தானத்திறை - இலக்கினாதிபதி. தானரிலை - வலிவுமெலிவு சமனென்பன. தானபதி - கொடையாளன். தானபத்திரம், தானபத்திரிகை - நன்கொடை யுறுதி. தானப்பிரட்டன் - உத்தியோக மிழந்தவன். தானப்பிரதிபாலியம் - அடகு. தானப்புழு - மலக்குடலிற்புழு. தானம் - அடித்தல், இடம், ஈகை(அஃது இராசத குணத்தொன்று,உபாயநாலினொன்று, புண்ணியமேழினொன்று) தரிசனப் படுவது,துண்டித்தல், தேவ லோகம்,தேன்,நீராட்டு, யானை மதம், வலி. தானவம் - மிருது. தானவர் - அசுரர். தானவன் - அசுரன், சந்திரன். தானவாரி - இந்திரன், திருமால். தானவியத்தியாசம் - அதமதானம். தானவீரன் - மிகு கொடையாளன். தானாகுதல் - தானாயாதல். தானாட்டித்தனாதுநிறுத்தல் - எழு வகைமதத்தினொன்று அது கற்பித்தற்கு நியாயமுரைத்துநிறுத்தல். தானாதிபதி - படைத்தலைவன். தானாபதி - தூதன், படைத் தலைவன்.தானாபதிக்கம், தானா பத்தியம் - தானாபதி யுத்தியோகம். தானானமூவர் - சாலக்கிராமம். தானி - இருப்பிடம், தானத்திலுள்ளது, பண்டசாலை. தானிகம் - கொத்துமல்லி. தானிகன் - பூசாரி. தானிகை - கொத்துமல்லி. தானிப்பு - தாணித்தல். தானியதற்பகம் - பதர். தானியகோட்டகம் - கோரியை,தானியக் களஞ்சியம். தானியசங்கிரகம் - தானியஞ் சேர்த்துவைத்தல், பண்டசாலை. தானியசாரம் - அரிசி, தூற்றினபொலி. தானியதவசம் - தானியசம்பத்து. தானியப்பொட்டு - அந்துப் பூச்சி,பயிர் நோயினொன்று. தானியமாயன் - தானியம் விற்போன். தானியம் - கொத்துமல்லி, நென்முதலிய மணிகள். தானியராசன் - கோதுமை. தானியவத்தனன் - பொலியைக்குக்கொடுப்போன். தானியவிலக்குமி - அட்ட விலக்கு மியினொருத்தி. தானியாகம் - கொத்துமல்லி. தானியாகுபெயர் - தானத்தி லிருக்கும்பொருளானாகும் பெயர் (உம்)விளக்கு. தானியாதிபன் - தானியத்துக்கதிபன். தானியாரி - பெருச்சாளி. தானியார்த்தம் - தானிய சம்பத்து. தானியோத்தமம் - அரிசி. தானீயம் - கொடை. தானீயோத்தமம் - செந்நெல். தானு - காற்று, கொடையாளன்,வெற்றியாளன். தானூரம் - சுழல்காற்று. தானெடுத்துமொழிதல் - ஓர் யுத்தி. தானை - ஆயுதப்பொது, தூசு, படை,சேனை, சீலை. தானைத்தலைவன் - சேனாபதி. தானைத்தறுகணாளர் - படைவீரர். தானைமாலை - ஓர் பிரபந்தம் அஃது அகவலோசை பிறழாதா சிரியப் பாவாற் கொடிப்படையைச்சிறப்பித்துப் பாடுவது. தான் - அசைச்சொல் (உ-ம்)நீதான்,படர்க்கையொருமைப் பெயர்,முழுப்புடைவை. தான்றி - ஓர்மரம். தான்றிக்காய் - ஓர்மருத்துக்காய் அஃது திரிபலையி னொன்று,துவர்பத்தினு மொன்று. தான்றோன்றி - ஒருவராலுண்டாக்கப்படாதது, வலிய முளைத்தது,சுயம்பு. தி திகசம் - அசமோதம் எனும் ஓமம். திகதி - தேதி. திகந்தம் - திகாந்தம். திகந்தராளம் - ஆகாயம். திகம் - அதிகம், புலித்தோல்,வைராக்கியம். திகம்பரம் - இருள், நிருவாணம். திகம்பரர் - சமண்முனிவர், நிருவாணிகள். திகம்பரன் - அருகன், சிவன், நிருவாணி. திகம்பரி - துர்க்கை, நிருவாணி,பார்ப்பதி. திகரடி - சோர்வு. திகரம் - அவா, இளைப்பு, ஈளை,ஓரெழுத்து, சோர்வு, முட்டுத்தொய்வு. திகழல் - ஒளிசெய்தல். திகழ் - ஒளி, திகழென்னேவல். திகழ்ச்சி - ஒளி, தோற்றம், விளக்கம். திகழ்தல் - தோற்றல், பிரகாசித்தல்,விளங்கல், திகழ்வு - திகழ்ச்சி. திகனா - கொடுவேலி. திகாந்தம் - திக்கின்முடிவு. திகாந்தரம் - ஆகாயம். திகிரி - உருளை, சக்கராயுதம், தண்டசக்கரம், திரிகை, தேர், பண்டி,மலை, மூங்கில், வட்டம், வண்டியுருளை. திகிரிகை - சக்கரம். திகிரிக்கல் - ஆட்டுக்கல், கோரோசனை, சக்கிரவாளகிரி. திகில் - திடுக்காட்டம், பயம்.திகிலிடுதல், திகிற்படுதல் - திடுக்கிடுதல், பயப்படுதல். திகு - தாளக்குறிப்பு. திகுதிகெனல் - ஒலிக்குறிப்பு. சீக்கிரக்குறிப்பு. திகை - திகையென்னேவல், திசை,தேமல். திகைத்தல் - பிரமித்தல், மயங்கல், திகைப்பு - திடுக்காட்டம், மயக்கம். திகைப்பூடு - ஓர்செந்து, ஓர் பூண்டு. திகைமயக்கு - திக்குத் தடுமாற்றம். திக்கங்கம் - அட்டபாலர்குறி அஃதுகிழக்காதிமுறையே, கொடி புகை,சீயம், நாய், இடபம், கழுதை,யானை, காகம். திக்கசம் - திக்குயானை. திக்கடைப்பு - திக்கெல்லை. திக்கம் - இளயாளை. திக்கயம் - அட்டயானை அவைகிழக்காதி முறையேஐராவதம்,புண்டரீகம், வாமனம், குமுதம்,அஞ்சனம், புட்பதந்தம், சார்வபூமம், சுப்பிரதீபம். திக்கரன் - குமரன், திக்கரி - குமரி. திக்கரித்தல் - நிந்தித்தல். திக்கற்றவன் - தாபரமற்றவன், கதியற்றவன். திக்காதிக்கு - பலதிசையிலும். திக்காரம் - நிந்தை. திக்காலுக்கு - திக்காதிக்கு. திக்கிடுதல் - துணுக்குறல். திக்கு - ஆதரவு, கொடுவேலி, திக்கென்னேவல், திசை, பேச்சுத்தடக்கு. திக்குக்கட்டு - திக்குத்தம்பனம். திக்குக்கெடுதல் - உதவியற்றுத்திரிதல், திக்கு மயங்குதல். திக்குதல் - பலவழியாய்ச்சிதறல்,பாடந்தடக்குதல், பேச்சுத் தடக்குதல், வழிதப்புதல். திக்குத்திகெனல் - அச்சக்குறிப்பு,ஒலிக்குறிப்பு, தாளக்குறிப்பு. திக்குபதிக்கிரகம் - திசாபதிகள் இவர் கிழக்காதிமுறையே சூரியன் சுக்கிரன் செவ்வாய் இராகு சனி சந்திரன் புதன் வியாழம். திக்குபந்தனம் - திக்குக்கட்டு. திக்குபாலகர் - அட்டபாலகர்,அவராவார் இந்திரன், அக்கினி,எமன், நிருதி, வருணன், வாயு,குபேரன், ஈசானன். திக்குப்பூசை - அட்டபாலகர் பூசை. திக்குமாறாட்டம் - திசைமாறுதல். திக்குமுக்கு - மூச்சுமுட்டு. திக்குவாய் - பேச்சுத்தடக்கும் வாய். திக்குவிசயகிரமம் - திக்குவிசயஞ்செய்தல். திக்குவிசயம் - அட்டதிக்கும் வெல்லல். திக்குவிபாகம் - திக்கின்பகுதி. திக்குறு - புன்முருங்கை. திங்கட்குடையோன் - காமன். திங்கணாள் - மிருகசீரிடம். திங்கள் - ஓர்வாரம், சந்திரன், பன்னிரண்டு மாதம். திசாமிதன் - ஆசையற்றவன். திசாமுகம் - திக்குப்புறம். திசாயம் - குக்கில். திசாலம் - தேசகாலம். திசி - திசை, திசையையுடையது. திசிலன் - இராக்கதன், சந்திரன். திசை - ஒவ்வோர் திக்குப்புரமரசாளுமதிகாரி, திக்கு, நிலை,நோக்கு, ஒவ்வொரு கிரகத்தின்அதிகாரம். திசைக்கெருடன் - கட்டுக்கொடி திசைச்சொல் - அடுத்தபுறங்களிலிருந்து வந்து வழங்குஞ் சொல். திசைநா - கொடுவேலி. திசைபிலம் - மருக்காரை.திசைமயக்கு, திசைமாறுதல் - திக்குத்தடுமாறுதல். திசைமுகன் - பிரமன். திசைமொழி - திசைச்சொல். திசையடித்தல் - வாக்குச்சித்தி முதலியவாய்த்தல். திசையுடையவர் - தேசாதிபதி. திடங்கொள்ளுதல் - தயிரியமடைதல். திடசித்தம் - உறுதிப்பட்ட மனம். திடசெய்தி - நிச்சயகாரியம். திடசாட்சி - உறுதியான சாட்சி. திடஞானம் - கலக்கமற்றஞானம்,ஸ்திர ஞானம். திடஞ்சொல்லுதல் - உறுதிசொல்லுதல்,தேற்றப்படுத்தல். திடத்துதல் - திடப்படுத்துதல். திடத்துவம் - பெலன். திடபத்தி - உறுதியானபத்தி. திடபரப்படுதல் - தைரியப்படுதல்,நிசப்படுதல். திடபரம் - உறுதி, மனவலி. திடபிடி - பெலபிடி. திடபுருடன் - தைரியவான். திடப்படுதல் - உறுதிப்படுதல், தைரியப்படுதல். திடப்படுத்துதல் - உறுதிப்படுத்துதல்,தேற்றப்படுத்துதல். திடப்பிரஞ்ஞன் - சீவன் முத்தன். திடமனம் - சலனமடையாமனம். திடமை - வெள்ளெருக்கு. திடம் - உறுதி, தைரியம், மெய், வலி திடரிடுதல் - மேடாதல். திடர் - மணற்குன்று, மலை, மேடு. திடர்ச்சுண்டி - வரட்சுண்டி. திடல் - திடர். திடன் - திடம். திடாரி - தைரியவான். திடாரிக்கம் - திடம். திடின்பொதினெனல் - ஈரடுக்கொலிக்குறிப்பு.திடீரிடுதல், திடீரெனல் - ஒலிக்குறிப்பு, சீக்கிரக்குறிப்பு,திடீர்திடீரெனல், திடீர்பொதீரெனல் - ஈரடுக்கொலிக்குறிப்பு. திடுகூறு - சடுதி. திடுக்கம் - அச்சம், துணுக்கம். திடுக்காட்டம் - திடுக்கிடுதல். திடுக்கிடுதல் - அச்சத்தால் மனமசைதல், பயத்தாலுடல் கம்பித்தல். திடுக்கீடு - திடுக்கம்.திடுக்குத்திடுக்கெனல், திடுக்கெனல் - அச்சக்குறிப்பு. திடுதிடுத்தல், திடுதிடுப்பு - ஈரடுக்கொலிக் குறிப்பு. திடுதிடெனல் - ஈரடுக் கொலிக்குறிப்பு, சீக்கிரக்குறிப்பு. திடுமதி - திண்மையுள்ளவள். திடுமல் - திண்மை. திடுமனடித்தல் - திண்மைக் குணங்காட்டல். திடுமன் - திண்மை. திட்கல் - அச்சக்குறிப்பு.திட்கிடுதல், திட்கெனல் - அச்சக்குறிப்பு, திடுக்கிடுதல். திட்டபட்டம் - செவ்வை. திஷ்டம் - காணப்படுவது. திட்டம் - உறுதி, ஒப்புரவு, கட்டளை,கணிசம், சரி, செவ்வை, திறம்,நிலைபரம், பூரணம். திட்டல் - சபித்தல், திட்டுதல். திட்டவட்டம் - திட்டபட்டம், திட்டம். திட்டனம் - இருப்பைமரம். திட்டாணி - மரத்தைவளைவிடு மேடை. திட்டா - வெள்ளறுகு.திட்டாந்தம், திஷ்டாந்தம், திட்டாந்தரம் - அத்தாட்சி, உறுதி, கணிசம். திஷ்டி - ஞானம், கண், கண்ணூறு,பார்வை. திஷ்டி - ஞானம், கண், சந்தோஷம்,தினை, தேவதச்சன், நுழைவாயில்,பார்வை, மேடு.திஷ்டிக்கல், திட்டிக்கல் - ஓரிரத்தினம். திட்டிதோஷம் - கண்ணேறு. திட்டித்தம்பம் - கண்கட்டு அஃது கலைஞானமறுபத்து நான்கினொன்று.திஷ்டித்தல், திட்டித்தல் - காண்டல். திட்டிபடுதல் - கண்ணூறுபடுதல். திட்டிவாயில் - ஒடுக்கவாயில். திட்டிவிதை - ஓர் மருந்து விதை. திட்டினம் - இலுப்பை. திட்டு - கணையச்சுவர், சபிப்பு, சிறுதிடர், திட்டென்னேவல், முட்டடைப்பு, வசை. திட்டுதல் - சபித்தல், வைதல். திட்டுமுட்டு - சபிப்பு, முட்டடைப்பு. திட்டை - உரல், கண், திடர், திண்ணை,மலை, மேடு, வெள்ளறுகு. திட்டையிடுதல் - மேடாதல், வரைகட்டுதல். திட்பம் - காலநுட்பம், திண்மை,நிசம். கிணறுதல் - மூச்சுத்தடுமாறுதல். திணி - திணியென்னேவல், திண்மை. திணிகம் - போர். திணிதல் - திண்மையாயிருத்தல்,நெருங்கல்.திணித்தல் , திணிப்பு - அடைத்தல்,துறுத்தல். திணியன் - திண்ணியன், பருத்தவன்,மந்தையன். திணிவு - காடின்னியம், நெருக்கம். திணுக்கம் - நெருக்கம். திணுக்கு - நடுக்கம்.திணுங்கல், திணுங்குதல் - நெருங்குதல், உறைதல். திணை - இடம், ஒழுக்கம், குடி,குலம், பூமி, பொருள். திணைப்பெயர் - குறிஞ்சி முதலியநிலங்காரணமாய் வரும்பெயர். திணைமயக்கம் - திணைமயங்கிநிற்றல். திணைவழு - உயர்திணையெழுவாய்க்கிழி திணைவிகுதியும் இழிதிணையெழுவாய்க்குயர் திணைவிகுதியுமேற்றிப் பேசுவது. திண் - பலம், வலி. திண்கல் - சுக்கான்கல். திண்டகம் - கிலுகிலுப்பை. திண்டாடுதல் - அலைக்கழிதல்,கலக்கப்படுதல், நெருக்கப்படல். திண்டாட்டம் - அலைக்கழிவு,கலக்கம், நெருக்கம். திண்டாட்டு - அலைக்கழிவு. திண்டி - அரசு, ஓரசுரன், தம்பட்டம்,பசலைக்கொடி, யானை, தீன். திண்டிமம் - தம்பட்டம். திண்டிறல் - அதிவீரம். திண்டு - வளைந்த மெத்தை. திண்ணகம் - செம்மறிக்கடா, தட்டார் கருவியினொன்று, துருவாட்டேறு. திண்ணக்கம் - மனவுரம், வலி. திண்ணம் - மெய்ம்மை, வலி. திண்ணன் - கண்ணப்பன், வலியன். திண்ணியன் - வலியுடையோன். திண்ணெனல் - ஒலிக்குறிப்பு. திண்ணெனவு - உறுதி. திண்ணை - வேதிகை. திண்படுதல் - வலியுறுதல். திண்பொறுத்தல் - தாக்குப்பொறுத்தல். திண்மை - உறுதி, எண்வகையூறினொன்று, நிதானம், மெய்ம்மை,வலி. திண்மைக்கவர்ச்சி - மற்றொன்றைவலிக்கத்தக்க சத்து. தித - வட்டத்திருப்பி , பீதரோகணி. திதகம் - மலைவேம்பு. திததாபகம் - நிலைப்படுதல். திதம் - அக்கினி, அசைபவை, உறுதி,நிலை, அசைவின்மை, மலைவேம்பு. திதலை - தேமல். திதளம் - மாமரம். திதனி - தேமல். திதி - இருப்பு, கனம், காசிப் பிரமாவின் மனைவிகளி லொருத்தி,காத்தல், சங்கை, சந்திரனாள்அஃது பஞ்சாங்க வுறுப்பினொன்று, சிராத்தம், திதியென்னேவல், தைத்தியர், தாய், நிலைபேறு, பாக்கியம், வாழ்வு. திதிகத்தா - விட்டுணு. திதிகை - இருத்தல்.திதிசர், திதிசுதர் - அசுரர். திதிட்சயம் - அமாவாசி.திதிட்சிதம், திதிட்சை - பொறுமை. திதித்தல் - நிலைபொறுத்தல். திதித்தவில் - கட்டியவீடு. திதித்திரயம் - ஒருநாளில் வரு மூன்றுதிதி. திதித்துவயம் - ஒருநாளில்வருமிரண்டு திதி. திதிநிச்சயம் - சிராத்தத்துக்கேற்றதிதியை நிச்சயித்தல். திதிநியதம் - திதிநிச்சயம். திதிபரன் - விட்டுணு. திதிப்பிரகரணம் - காத்தல். திதிப்பிரணி - சந்திரன். திதிமைந்தர் - அசுரர், தைத்தியர். திதியம் - அழிவின்மை. திதிவிரதம் - திதி குறித்த நோன்பு.திதீக்கை, திதீட்சை - ததேகநிஷ்டை. தித்தகம் - நிலவேம்பு, மலைவேம்பு. தித்தகோசாதகி - பேய்ப்பீர்க்கு. தித்தம் - அக்கினி, எண்ணெய்,கசப்பு, கட்டுக்கதை, நச்சம்பு, நிலவேம்பு, மலைவேம்பு, வாசனை தித்தா - பீதரோகிணி, வட்டத்திருப்பி. தித்தி - ஓரூதுகுழல், ஓர் பனை,குரவம்,சதி, தித்திப்பு, தித்தியென்னேவல், திற்றி, வேள்விக்குண்டம். தித்திகம் - பேய்ப்புடோல். தித்திசாகம் - மாவிலங்கு. தித்தித்தல் - இனித்தல். தித்திப்பு - இனிப்பு. தித்திமுளை - தித்திப்புப்பனங்கட்டி. தித்தியர் - அசுரர். தித்திரம் - அரத்தை. தித்திரி - ஒரு ரிஷி, ஓர் கௌதாரி,சிச்சிலிக்குருவி.தித்திரு, தித்திருச்சி - நாணல், நண்டு. தித்துப்பாடு - திருத்தம். திந்திடம் - புளியமரம். திந்திடி - புளியமரம். திந்திடிகம் - புளி. திந்திருணி - புளியமரம்.திபதிசம், திபதிச்சம் - வாலுளுவை. திப்பி - கோது. திப்பியம் - அசமதாகம், திவ்வியம்,விளக்கம்,மேன்மை. திப்பிலாட்டம் - தொந்தரை. திப்பிலி - அலைவு, ஓர் சரக்கு. திப்பிலிக்கட்டை - கண்டதிப்பிலி. திப்பிலிக்கொச்சிக்காய் - சிறுமிளகுகாய். திப்பிலிமூலம் - ஓர் சரக்கு. திப்பிலியரிசி - திப்பிலிக்கொட்டை. திப்பிலியாட்டம் - அலைவு, வஞ்சனை.திப்பிலியாட்டல் , திப்பிலியாட்டுதல் - அலைவுபண்ணல். திப்பை - மேடு. திமி - குத்தல்,சமுத்திரம்,திமிங்கிலம். திமிகோடம் - கடல். திமிங்கிலகிலம் - திமிங்கிலத்தைவிழுங்கு மீன். திமிங்கிலம் - யானையை விழுங்குமீன்.திமிசம், திமிசு - வேங்கை மரம், மட்டஞ் செய்யுங் கட்டை. திமிதகுமுதம் - இரைச்சல், ஊதாரித்தனம், பம்பல், மகிழ்ச்சி, மிகுதி. திமிதம் - ஈரம், உறுதி, ஓர்கணக்கு,பேரொலி. திமிதம்போடுதல் - குதியன் குத்துதல். திமிதிமி - யானையை விழுங்குமீன். திமிதிமியெனல் - ஈரடுக்கொலிக்குறிப்பு, தாளக்குறிப்பு, விரைவுக்குறிப்பு. திமிரகாசம் - கண்ணோயுளொன்று. திமிரடைதல் - திமிர்மிகுத்தல். திமிரம் - இருள், நரகம்,பாரம்,விறைப்பு. திமிரரிபு - சூரியன். திமிரன் - விறைப்புள்ளவன். திமிராரி - சூரியன். திமிரி - திமிரன். திமிரேறுதல் - விறைப்புக் கொள்ளுதல். திமிர் - சன்னி, சோம்பு, திமிரென்னேவல், மயக்கம், விறைப்பு, மதம்,அகங்காரம். திமிர்ச்சி - திமிர். திமிர்தம் - ஒலி, எச்சில். திமிர்தல் - பூசுதல், வளர்தல். திமிர்த்தல் - திமிர்கொள்ளுதல்,அடித்தல். திமிர்ப்பு - திமிர்ச்சி. திமிர்ப்பூச்சி - வயிற்றுப்புழு. திமிர்முரித்தல் - சோம்புமுரித்தல். திமிர்மொய்த்தல் - விறைப்புக் கொள்ளுதல். திமிர்வாதம் - ஓர் நோய். திமிர்வாயு - திமிர்வாதம். திமிர்வு - பூச்சு. திமிலகுமிலம் - திமிதகுமுதம். திமிலம் - பேரொலி, யானைமீன். திமிலர் - நெய்தனிலமாக்கள், மீன்காரர். திமிலிடுதல் - ஒலித்தல், நெருக்கல். திமிலை - பம்பைமேளம். திமில் - எருத்தினேரி, தோணி,மரக்கலம், வேங்கை மரம். திமிறல் - துலுக்குதல், தேய்த்தல்,பறித்தல், மீறுதல், வளர்தல். திமைத்தல் - கிளப்புதல். திமைவிச்சதா - மூக்கிரட்டை. திம் - திக்கு. திம்பு - செங்கத்தாரி. திம்மலி - தடித்த சரீரக்காரி. திம்மன் - இகழுஞ்சொல், ஓராண்குரங்கு. திம்மை - சுருணை, பிரமை. தியக்கடி - தியக்கம். தியக்கம் - அசைவு, கலக்கம்,சஞ்சலம், சோர்வு, மயக்கம். தியக்கு - தியக்கம், தியக்கென்னேவல். தியக்தம் - தள்ளப்பட்டது. தியங்குதல் - சோருதல், கலங்குதல். தியசம் - மரமஞ்சள். தியந்தி - திராய். தியரடி - திகரடி. தியாகங்கூறுதல் - கொடையைப்பிரசித்தப்படுதல். தியாகம் - உபகரிப்பு, கைவிடல்,கொடை, துறத்தல். தியாகராயன் - சிவன்.தியாகன், தியாகி - உபகாரி, கொடையாளன், சிவன், தவத்தி. தியாச்சியம் - ஒவ்வொருநாளிற்கழிவாகிய மூன்றேமுக்கானாழிகை, விலக்குகை, தள்ளற்பாலது. தியாத்துவம் - தியானம். தியாமம் - இருவேலி, நான்முகப்புள்,முயல்புல். தியாம்பதி - ஆன்மா. தியாலம் - திசாலம். தியானசமாதி - யோகநிலையினொன்று. தியானம் - அட்டாங்க யோகத்தொன்று அஃது ஐம்பு லனடக்கிச்சிவயோகஞ் செய்தல், அனுட்டானம், சிந்திப்பு, நினைவு. தியானம்பார்த்தல் - அனுட்டானம்பண்ணல். தியானவான், தியானி - தியானியென்னேவல், யோகி. தியானித்தல் - அனுட்டானம்பண்ணல், சிந்தித்தல். தியானிப்பு - தியானம். தியு - பகல், மோட்சம். தியுகணம் - தவணை. தியுகம் - புள். தியுமாரி - காகம். தியுதம் - கிரணம். தியுதி - கிரணம், வெளிச்சம். தியுதிகரம் - அழகு, பிரபை. தியுதிகரன் - துருவன். தியுநிசம் - இராப்பகல். தியுபதி - இந்திரன், சூரியன். தியுமணி - சூரியன். தியேசேயெ - மரமஞ்சள். தியோதம் - பிரகாசம், வெயில்.திரகமூலகம், திரகமூலம் - முடக்கொத்தான். திரகம் - கொன்றை. திரகலூமம் - செம்புளிச்சை. திரக்கத்தாரு - நிலப்பனை. திரக்கம் - கொன்றை.திரக்கரித்தல், திரஸ்கரித்தல் - நிந்தித்தல், நீக்குதல்.திரக்காரம், திரஸ்காரம் - நிந்தை,நீக்கல். திரக்கிரசம் - கண்வலி. திரக்கிரணி - பிரண்டை. திரங்கம் - நகரம், மிளகு திரங்கலம் - மிளகு. திரங்கல் - திரைதல், மிளகு. திரங்குதல் - திரைதல், உலர்தல். திரசரம் - நூல் சுற்றல். திரச்சீனமுகம் - நாணத்தாற்றலையாட்டு முகம். திரடம் - வெண்ணொச்சிமரம். திரட்கோரை - ஓர் புல். திரட்சி - உண்டை, கூட்டம், திரண்டதன்மை,முத்து. திரட்டல் - கூட்டல் , திரட்டுதல். திரட்டு - இருது, சேர்த்தொன்றாக்கியிருப்பது, சேர்ப்பு, திரட்டென்னேவல், திரண்டகைமரம்,திரளை, முழுமை. திரட்டுக்கலியாணம் - இருதுக்கலியாணம். திரட்டுக்கோவை - ஓர் கோவை. திரட்டுதல் - உருட்டுதல், சங்கிரகித்தல், சேர்த்தல். திரட்டுப்பால் - திரளக் காய்ச்சும்பால்,அஃது முப்பாலினொன்று. திரணச்சி - எவட்சாரம். திரணபதி - வாழை. திரணப்பிராயம் - வெறுமை. திரணம் - அற்பம், திருணம், புல். திரணராசன் - நிலப்பனை. திரணாசனம் - தர்ப்பாசனம். திரணி - ஓர் செடி. திரணிக்கல் - காக்கைக்கல். திரணை - கம்பி, திரண்டது, திரளை. திரண்டகொடிச்சி - புற்றாம்பழம். திரண்டபால் - திரைந்தபால். திரண்டவடிவு - உண்டை. திரதயம் - பலகாற்கேட்டல். திரஸ்தம் - பயங்கரம். திரந்திகம் - திப்பிலிமூலம். திரபம் - வெட்கம். திரபாகன் - மிலேச்சன். திரபாரண்டை - வேசி. திரபானிரத்தம் - வெட்கக்கேடு. திரபு - பித்தளை. திரபுட்பம், திரபுலம் - துத்தநாகம். திரப்படுத்தல் - உறுதிப்படுத்தல். திரப்பியம் - பொருள். திரப்பியவணி - பொருட்டன்மை யலங்காரம். திரப்புசம் - கத்திரி. திரமம் - சாதிலிங்கம். திரமாக்குதல் - அத்தாட்சியாக்கல்,நிலைப்படுத்தல். திரமாதம் - ஆவணி, கார்த்திகை,மாசி, வைகாசி. திரமிடம் - திராவிடம். திரம் - உரம், உறுதி, தகரைச்செடி,நிலைபெலன், முத்தி, மலை, பூமி. திரயப்பிணிகடம் - தூலதேகம். திரயம் - மூன்று. திரயாங்கம் - மூவங்கம் அஃதுதிதிவார நட்சத்திரங்கள். திரயாட்சரி - மூன்றுவரி யெழுத்தான்முடியுமோ ரலங்காரம். திரயீதது - சூரியன். திரயீதர்மம் - வேதவிஹிதமான தர்மம். திரயீமுகன் - பிராமணன். திரயோதசி - பதின்மூன்றாந்திதி. திரராசி - இடபம், கும்பம், சிங்கம்,விருச்சிகம். திரராசிகம் - முத்தொகை வினா. திரலடி - ஏலம். திரல் - காட்டாமணக்கு. திரவணம் - திரவியம், பாய்தல்,போதல், வெப்பம். திரவகத்துவம் - ஈர்மை. திரவந்தி - ஓர் நதி,காட்டாமணக்கு. திரவபோதம் - பூசினி. திரவம் - திராவகம், பாய்தல், பொசிதல். திரவிடம் - திராவிடம். திராவிடன் - சத்திரியகுலத்துக் கீழ்மகன். திரவிணம் - பாக்கியம், பெலன், பொன். திரவித்தல் - நீர் முதலிய பொசியப் பண்ணல். திரவியசம்பன்னன் - சம்பாத்தியகாரன். திரவியசித்தி - பாக்கிய சம்பாத்தியம்,பாக்கியத்தினால் வருஞ் செல்வாக்கு. திரவியசுத்தி - பஞ்சசுத்தியிலொன்று. திரவியம் - ஓர் மருந்து, சரக்கு, நிதி,பாக்கியம், பித்தளை, பொருள்,பொன், ஒன்பதாமிடம். திரவியலோபம் - பொருட்குறைவு. திரவியவான் - செல்வன். திரவீகரணம் - உருக்குதல். திரளாரம் - நிலப்பனை, காட்டாமணக்கு. திரளி - ஓர் மீன். திரளுதல் - உருட்சியாதல், கூடுதல்,திரட்சியாதல், தெருளுதல். திரளை - உருண்டை, கட்டி,திரட்டப்பட்டது. திரள் - குழியம், கூட்டம், திரட்சி,திரளென்னேவல், திரளை, படை,மிகமுடுகிய நடையை யுடையபாடல், இயக்கம் நான்கினுளொன்று. திரள்கோரை - கஞ்சாங்கோரை. திரா - ஓர் மரம், தரா. திராகம் - உயரவெறிந்து பிடித்தல். திராகிட்டம் - மிக நீளம். திராசம் - அச்சம்.திராட்சம், திராட்சை - கொடிமுந்திரிகை. திராணதம் - இரட்சித்தல். திராணம் - உறை, இரக்ஷித்தல்.திராணி, திராணிக்கம் - தகுதி,தத்துவம், பலம், சக்தி. திராணிக்கை - திராணி. திராபம் - ஆகாயம், சேறு, மூடன். திராபை - புத்தியற்றவன். திராமரம் - பவளமல்லிகை. திராமிடம் - திராவிடம். திராமிலன் - ஓர் முனி. திராம் - தகரை. திராய் - ஓர் கசப்பான கீரை. திராலம் - ஓர்வகை வெள்ளரிச்செடி.திராவகத்துக்கடுங்காரம், திராவகத்துக்காதி - அன்னபேதி. திராவகநீறு - வெடியுப்புச் சுண்ணம். திராவகம் - காந்தக்கல், செய்நீர்,மெழுகு. திராவகன் - அறிஞன், கள்வன். திராவடி - ஏலம். திராவிடம் - ஓரெண், சாதினான்கினொன்று, தமிழ், தேயமைம்பத்தாறினொன்று. திரி - காரத்திரி, திரியென்னேவல்,பெண், மூன்று,விளக்குத்திரி. திரிகடம் - யானை நெருஞ்சில். திரிகடி - இந்திரன் சங்கு.திரிகடுகம், திரிகடுகு - ஓர் நூல்(சுக்கு, திப்பிலி, மிளகு) திரிகண்டகம் - ஓர்வகைப் புல்,நெருஞ்சில்.திரிகண்டகி, திரிகண்டம் - நெருஞ்சில். திரிகதம் - மும்மடங்கு. திரிகத்தம் - ஓர் தேயம். திரிகம் - திரிகடுகம், முச்சந்தி, மூன்றுகூடியது. திரிகளாடகம் - நெருஞ்சில். திரிகாயன் - புத்தன். திரிகாலசந்தி - காலை மாலை உச்சி களிற் பண்ணு மனுட்டானம். திரிகாலஞானம் - முக்காலமறியு ஞானம். திரிகாலம் - முக்காலம் அவை உச்சிகாலை மாலை, அன்றியும், இறப்பு,எதிர்வு, நிகழ்வு. திரிசாலவர்த்தமானம் - முக்காலநிகழ்ச்சி. திரிகாலோசிதம் - குசைப்புல். திரிகி - குயவன்சக்கிரம், நினைத்தல். திரிகுணம் - முக்குணம். திரிகூடம் - ஓர் மலை. திரிகூர்ச்சகம் - முக்கருவுள்ளது. திரிகேது - கிளி. திரிகை - இடக்கைமேளம், எந்திரம்,குலால சக்கிரம், திரிதல், முந்திரிகைமரம், திரிகோணசாத்திரம் - முக்கோணசாத்திரம். திரிகோணப்பாலை - நால்வகைப்பாலையுளொன்று. திரிகோணமலை - திருக்கோணமலை. திரிகோணம் - முக்கோணம். திரிசங்கசன் - அரிச்சந்திரன். திரிசங்கு - அரிசந்திரன் றந்தை. திரிசங்குசன் - அரிச்சந்திரன். திரிசங்குமண்டலம் - ஓர் நட்சத்திரமண்டலம். திரிசனம் - வாஞ்சை. திரிசவநம் - திரிகாலம். திரிசாகபத்திரம் - வில்வமரம். திரிசாரம் - எவட்சாரம், சத்திசாரம்,நவச்சாரம், திரிசி - சமுசாரி. திரிசிகம் - சிகரம், சூலம்,வில்வமரம். திரிசிகன் - இராவணன் மகன். திரிசிகை - சூலப்படை. திரிசியம் - காணப்படுவது, தோற்றப்படத்தக்கது. திரிசியாதிரிசியம் - தோற்றப்படத்தக்கவைகளுந் தோற்றப்படாதவைகளும். திரிசிரபுரம் - திரிசிராப்பள்ளி. திரிசிரன் - அக்கினி, இராவணன்மகன். திரிசிரா - ஓரிராக்கதன். திரிசிராப்பள்ளி - ஓர் பட்டினம். திரிசிராமலை - ஓர் மலை. திரிசிருங்கம் - முக்கோணம்,திரிகூடசைலம். திரிசுடர் - முச்சுடர். திரிசூத்திரம் - பூணூல். திரிசூலம் - முத்தலைவேல்,அதுஇச்சை, கிரியை ஞானம். திரிசூலி - சிவன். திரிசொல் - செய்யுட்சொல். திரிச்சல் - திரிதல். திரிச்சிரமம் - முக்கால நியமநிட்டை. திரிஞ்சில் - துரிஞ்சில். திரிடி - கரும்புக்கணு. திரிடீகரித்தல் - நிச்சயிதல். திரிட்டை - காணப்படல். திரிணீகரம் - அற்பமாக வெண்ணல். திரிதசமஞ்சரி - துளசி. திரிதசன் - கடவுள். திரிதசாதாரியன் - வியாழம். திரிதசாயுதம் - வச்சிராயுதம். திரிதசாரி - அசுரன். திரிதசாலயம் - சுவர்க்கம், மேருகிரி. திரிதசாவாசம் - சுவர்க்கலோகம். திரிதசாஹாரம் - அமிர்தம். திரிதசி - திரயோதசி. திரிதண்டதாரணம் - முக்கோறரித்தல். திரிதண்டம் - திரிதண்டு, முக்கோல். திரிதண்டி - காரணமூன்று மடக்கினோன், முக்கோற்பகவன். திரிதண்டு - முக்கோல். திரிதயம் - மூன்று. திரிதரல் - சுழலல், திரிதல், மீளல்,உலாவல், மாறுதல். திரிதராட்டிரன் - துரியோதனன்தந்தை. திரிதலை - ஓர் பூடு. திரிதல் - அலைதல், உலாவல், கெடுத்தல், சுழலல், நடத்தல், மாறுதல்,மீளல். திரிதல்விகாரம் - எழுத்துத்திரி புவி காரம். திரிதாயன் - விநாயகன். திரிதிகை - மூன்றாந்திதி. திரிதியம் - செவ்வள்ளி. திரிதியை - மூன்றாந்திதி. திரிதிவம் - முத்தி. திரிதிவேசன் - தேவன். திரிதீர்க்கம் - மணப்பொருத்தம் பத்தினொன்று. திரிதூளி - சில்லபொல்லம். திரிதேகம் - காரணதேகம், சூக்குமதேகம், தூலதேகம். திரிதோஷம் - ஓர் நோய், முப்பிணி. திரித்தல் - சுழற்றுதல், மாறுபடுத்தல்,மாற்றுதல், முறுக்குதல். திரித்துவம் - மூன்று தத்துவம். திரிநயநன் - சிவன். திரிநாயகம் - பெண்டலைமை. திரிநேந்திரசூடாமணி - சந்திரன். திரிநேத்திரன் - சிவன். திரிபங்கி - மிறைக்கவியினொன்று,அஃது ஒரு செய்யுளாய்நின்றுமூன்றாய்ப் பிரித்தோத மூன்றுசெய்யுளாயும் நிற்குங் கவி. திரிபணி - உபமானப்பொருள் நிகழ்கின்ற செய்கையிற் பயன் படுதற்பொருட்டு உபமேயத்தின் உருவத்தைக் கொண்டுபமித்தல் (உ-ம்)தாட்கமலத்தானடந்து கட்குவளையானோக்கி. திரிபதகை - கங்கை. திரிபதம் - முத்தெருக் கூடுமிடம். திரிபதாகம் - நெற்றியிலுள்ள மூவிரேகை. திரிபதார்த்தம் - பசு, பதி, பாசம். திரிபதி - யானைக்காலிலிடுஞ் சங்கிலி. திரிபதை - இசைப்பா வகையு ளொன்று. திரிபலம் - திரிபலை. திரிபலாசம் - முருக்கமரம். திரிபலை - கடுக்காய்,தான்றிக்காய், நெல்லிக்காய். திரிபழுகம் - பால், நெய், தேன். திரிபாகி - மிறைக்கவியினொன்று,அஃது ஓர்மொழி முவெழுத்தானின்றோர் பயனுமதினிடையெழுத்து நீங்க வேறோர் பயனும்அதன் முதலெழுத்து நீங்கவேறோர் பயனுங்கொண்டுமுடிவது. திரிபாதம் - முச்சந்தி. திரிபீஜம் - ஓர் புன்செய்த் தாநியம். திரிபு - முத்திவிக்கின மூன்றினொன்று, வேறுபாடு, தகரம்,விபரீதம். திரிபுக்காட்சி - ஒன்றை வேறோன்றாய்க் காணுதல். திரிபுடகம் - முக்கோணம். திரிபுடி - ஞாதுரு, ஞானம், ஞேயம். திருபுடிபலம் - ஆமணக்கு. திரிபுடை - சத்ததாளத்தொன்று.திரிபுண்டரகம், திரிபுண்டரிபி, திரிபுண்டரம் - மூன்றுவாரியாய்ப் பூசும்விபூதிப் பூச்சு. திரிபுரசுந்தரி - பார்ப்பதி. திரிபுரதகனன் - சிவன். திரிபுரமல்லிகை - ஓர்மல்லிகை. திரிபுரமெரித்தான் - சிவன், நொச்சி,மாவிலிங்கை, குப்பைமேனி. திரிபுரம் - முப்புரம், சாரணை. திரிபுராந்தகன் - சிவன். திரிபுரி - சாறடை. திரிபுருஷம் - முத்தலைமுறை. திரிபுரை - ஓர் சத்தி, பார்ப்பதி. திரிபுவனம் - சுவர்க்கம், மத்தியம்,பாதலம். திரிபோகம் - பெண்போகம். திரிப்பு - மாற்றுதல், முறுக்கு. திரிமஞ்சள் - கத்தூரிமஞ்சள், மஞ்சள், மரமஞ்சள். திரிமணை - திருமணை. திரிமனம் - அறிவு, நினைவு, புத்தி. திரிமார்க்கம் - முச்சந்தி. திரிமுகுடம் - திரிகூட பர்வதம். திரிமூர்த்தி - மும்மூர்த்தி. திரிமூலம் - கண்டுமூலம், சித்திரமூலம், திப்பிலிமூலம். திரிய - திரும்ப. திரியக்கு - குறுக்கு. திரியக்ஷி - தேங்காய். திரியமுகம் - அடிவானம் நோக்கியபார்வை. திரியம்பகன் - அரன், அருகன்,விட்டுணு, விநாயகன், வீரபத்தி ரன்,மூன்று கண்களையுடை யவன். திரியவும் - திரும்ப. திரியங்குமுகம் - சமுகம். திரியாங்கம் - திரயாங்கம். திரியாமகம் - பாவம். திரியாமயம் - முத்திவிக்கினம் மூன்று. திரியாமை - இரவு, நீலக்கல், யமுனையாறு. திரியாவரம் - புரளி. திரியேகத்துவம் - மூன்றொன்றாயிருத்தல். திரியேகம் - முப்பொரு ளொன்றாயிருத்தல். திரியேகன் - கடவுள். திரிரேகம் - சங்கு. திரிலிங்கம் - திரீலிங்கம். திரிலோகசிந்தூரம் - ஓர் மருந்து. திரிலோகம் - திரிபுவனம், அஃது பூமி,அந்தரம், சுவர்க்கம், பொன்,வெள்ளி, செம்பு. திரிலோகவசியம் - சருவ வசீகரம். திரிலோகாதிபதி - இந்திரன், கடவுள். திரிலோகி - விட்டுணுகரந்தை. திரிலோகேசன் - சூரியன். திரிலோகதி - துர்க்கை. திரிலோசனன் - திரியம்பகன். திரிவசியம் - பெண்வசியம். திரிவட்டம் - இயந்திரத்தினோருறுப்பு. திரிவருக்கபாரீணன் - திருவருக்கமடைந்தவன். திரிவருக்கம் - அகவியல் மூன்று,அஃது அசுத்தம், அறியாமை,சுத்தம், அரசியல் மூன்று, அஃது,ஆதாயம், நட்டம், மத்திமம்,இயல்பாய் விரும்புவது மூன்று,அஃது கடமை, செல்வம், பெண்போகம். திரிவாய் - தீவாய். திரிவிக்கிரமன் - ஓரரசன், விட்டுணு. திரிவிஷடபம் - ஆகாயம், சுவர்க்கலோகம். திரிவு - திரிபு. திரிவேணிசங்கமம் - ஓர் தலம், அஃதுகங்கை, சரச்சுவதி, யமுனையென்னு மூவாறுகளின் சந்திப்பு.திரீ, ஸ்திரீ - பெண். திரீசனப்பிரியன் - தூர்த்தன். திரீயத்துவம் - மூன்றொன்றாயிருப்பது. திரீலிங்கம் - சிறீலிங்கம். திரு - அழகு, இலக்குமி, செல்வம்,தெய்வீகம், மங்கலமொழியினொன்று, மேன்மை, யானையைப்பாகனதட்டு மொலி, நல்வினை. திருகணி - சங்குதிரி, திருகாணி. திருகணை - புரிமணை. திருகம் - சாதிக்காய், துவாரம். திருகலி - நுனிவளைந்தபனைமுதலியன. திருகல் - முரணல், முறுகல், வளைதல், திருகுதல். திருகல்முறுகல் - திருக்கானது. திருகாணி - சுரியாணி. திருகு - கள்ளம், திருகென்னேவல்,முறுக்கு, வஞ்சனை. திருகுகள்ளி - ஓர் கள்ளி. திருகுதல் - திருப்பிமுரித்தல், திரும்புதல், பறித்தல், முறுகுதல், வளைதல், மீறுதல். திருகுதாழை - ஓர் தாழை. திருகுதாளம் - மாறுபாடு. திருகுதாளி - மாறுபாடுள்ள ஆள். திருகுபலை - வலம்புரிக்காய். திருகூசி - தமரூசி, துலா, அச்சு. திருக்கடைக்காப்பு - கோவிற்கதவுசாத்தல், திவ்விய பிரபந்தத்தின்முடிவுப் பாட்டு. திருக்கடையாப்பு - சம்பந்தர்பாடியநூல். திருக்கடையூர் - தஞ்சாவூருக்கருகில்ஓர் சிவஸ்தலம். திருக்கம் - வளைவு. திருக்கண்சார்த்துதல் - கிருபையாய்ப்பார்த்தல். திருக்கரணம் - பாம்பு. திருக்கழுக்குன்றம் - செங்கல்பட்டுக்கருகில் உள்ள ஓர் சிவஸ்தலம். திருக்களிற்றுப்படியார் - ஓர் நூல். திருக்காட்சி - தேவதரிசனம். திருக்காளத்தி - ஓர் தலம். திருக்கு - கண், குற்றம், முறுக்கு,வஞ்சம், வளைவு. திருக்குதல் - முறுக்குதல், முறுக்கிப்பறித்தல், வளைத்தல். திருக்குழப்பம் - திருவிளையாட்டு,தேவசெயற்குழப்பம், புரளித்தனம். திருக்குளம் - கோயிற்குளம். திருக்குன்றாமலை - திருக்கோணாமலை. திருக்கூட்டம் - தேவதொண்டர்கூட்டம். திருக்கூத்து - திருநடனம். திருக்கை - ஓர்மீன். திருக்கொன்றை - ஓர்மரம். திருக்கோணமலை - திரிகோணமலை. திருக்கோலம் - திருவேடம், துருவமண்டலம், தேவலோகம். திருக்கோவில் - தேவகோயில். திருசி - கண். திருசியத்துவம் - பார்வை. திருசியம் - தோற்றமுள்ளது. திருசை - கண். திருசோபம் - வெண்டாமரை. திருச்சவை - திவ்வியசங்கம், தேவசபை. திருச்சித்தம் - திவ்வியசித்தம். திருச்சிற்றம்பலம் - சிதம்பரம். திருச்சின்னம் - ஓர்வாச்சியம். திருச்சீரலைவாய் - திருச்செந்தூர். திருச்சுண்ணம் - அபிஷேகச்சுண்ணம். திருச்செந்தூர் - இராமேசுரத்துக்கருகில் சுப்பிரமணியர் பிரதானஸ்தலங்களினொன்று. திருடகம் - அடுக்கு.திருடகாண்டம், திருடக்கிரந்தி - மூங்கில். திருடதை - உறுதி, பெலம், வயிரம்.திருடமம், திருடமூலம் - தேங்காய். திருடம் - இரும்பு, தத்துவம், பெலம்,மிகுதி. திருடலோமை - காட்டுப்பன்றி,பருமயிர். திருடல் - திருடுதல். திருடழம் - தேங்காய். திருடன் - கள்வன், விஷ்ணுகரந்தை. திருடாபத்தி - நம்பிக்கையானமனையாள். திருடார்த்தி - மிகுவருத்தம், வின்னுதி. திருடி - கள்ளி. திருடு - களவு, திருடென்னேவல். திருடுதல் - களவெடுத்தல். திருட்டகூடம் - கொடிக்கதை. திருட்டம், திருஷ்டம் - தெளிவு.திருட்டாந்தம், திருட்டாந்தரம் - அத்தாட்சி, உதாரணம், சாத்திரம். திருட்டாபோகம் - இம்மையிற்கண்ணால னுபவிக்கு மனுபவம். திருட்டி - அறிவு, கண், பாம்பு, பார்வை,விஷம். திருட்டித்தல் - காண்டல். திருட்டிபந்து - மின்மினி. திருட்டிபாதம் - பார்வை. திருட்டிபூதம் - காக்கப்பட்டது. திருட்டிபோகம் - கட்பார்வைப்புணர்ச்சி. திருட்டியம் - ஞானம். திருட்டினிபாதம் - பார்வை. திருட்டு - அணாப்பு, களவு. திருட்டுத்தனம் - கள்ளக்குணம்,தந்திரம். திருட்டுமாயம் - திருக்கு, மாறுபாடு. திருணகம் - வாளுறை. திருணகேது - மூங்கில். திருணசாதி - மரமுதல் மருந்து. திருணசாரை - வாழை. திருணசிங்கம் - தறிகருவி. திருணசூனியம் - தாழை. திருணதை - வில். திருணத்தானியம் - பன்பயிர். திருணத்துருமம் - பனை தெங்குமுதலிய மரம். திருணபதி - பனை. திருணபூலி - புற்பாய். திருணம் - உடைவாள், திரணம்,துரும்பு, தேள், தேனீ, புல், வில். திருணராசன் - பனை. திருணியை - புற்றிரள். திருணோற்பவம் - காட்டுப்பயிர். திருதபதம் - கெதிநடை. திருதம் - தரித்தல். திருதி - உறுதி, ஓர் மீன், சந்தோஷம்,திருத்தி, துணை, தோல், நித்தியயோகத்தொன்று, நீர்த்துருத்தி,யாகம். திருதிகரி - நாய். திருதியபிரகிருதி - அண்ணகன், அலி. திருதியை - மூன்று. திருத்தம் - ஒப்பரவு, ஒழுங்கு, திருந்தல், தீர்க்கம். திருத்தல் - திருந்தச்செய்தல். திருத்தாண்டவம் - திவ்வியநடனம். திருத்தி - பூரணம், மனரம்மியம். திருத்திரு - யானைமுதலியவற்றைநடத்தும் ஓசை. திருத்து - பயிர்செய்த நிலம். திருத்துசெய்கை - திருத்தென்னேவல். திருத்துதல் - சமனாக்குதல், சீர் திருத்தல், செவ்வைப்படுத்தல், தேற்றுதல், நிலமுதலியவற்றைப் பண்படுத்தல், மிகுவித்தல். திருத்தொண்டர் - தெய்வதொண்டர். திருத்தொண்டு - தேவதொண்டு. திருநடனம் - திருத்தாண்டவம். திருநயனம் - திருக்கண். திருநாதன் - விட்டுணு. திருநாமக்கத்திரி - ஓர்பாம்பு.திருநாமச்செடி , திருநாமத்துத்தி, திருநாமப்பாலை - ஓர்பூடு. திருநாமம் - தெய்வீகநாமம், மேன் மையான நாமம். திருநாளைப்போவார் - சிவ தொண்டரிலொருவர், நந்தனார். திருநாள் - விசேடாராதனைத் தினம். திருநீலகண்டன் - ஓர்பூரான், சிவத்தொண்டரிலொருவன். திருநீறு - விபூதி. திருநீற்றுக்காப்பு - விபூதி யீட்டிரட்சை, விபூதியீடு. திருநீற்றுக்கோவில் - திருநீற்றுப்பை.திருநீற்றுப்பச்சை, திருநீற்றுப்பத்திரி -உருத்திர சடைப்பூடு. திருநீற்றுப்பழம் - திருநீற்றுண்டை. திருநோக்கு - திவ்விய பார்வை. திருந்தகை - பெருமையிற் சிறந்தோன். திருந்தகைமை - பெருமை, மேன்மை.திருந்தலர், திருந்தார் - பகைவர். திருந்துகை - செவ்வைப்படுதல். திருந்துதல் - செய்துமுடித்தல், திருத்தமாதல், திருந்தல், தேறுதல். திருபலை - ஓர் கொடி. திருப்படைவீடு - தேவர்கள் பெரியோர்கள் கூட்டத்துட னிருக்கும்வாசஸ்தலம். திருப்பணி - கோயில்வேலை, திவ்வியதொண்டு, ஒன்பதாமிடத்தின்பெயர். திருப்பணித்தல் - யானையை நிற்கப்பண்ணல். திருப்பணிமுட்டு - கோவிற்றளபாடம். திருப்பதி - தேவதலம், விட்டுணு,வேங்கடமலை. திருப்பம் - திரும்புகோடி, பணவியாபாரம். திருப்பரங்குன்று - மதுரைக்கருகில்சுப்பிரமணியருக்குப் பிரதானமலை. திருப்பரம் - சோறு. திருப்பள்ளி - சயனஸ்தலம், தெய்வசயனம். திருப்பள்ளித்தாமம் - கோவிற்பூமாலை. திருப்பள்ளியெழுச்சி - ஓர் பிரபந்தம்,தேவர்களனந்தல் விட்டெழுதல். திருப்பிரம் - நெய். திருப்பு - வளைப்பு. திருப்புகழ் - ஓர் பாடல். திருப்புதல் - திரும்பச் செய்தல்,மாறவைத்தல், மீட்குதல், மொழிபெயர்ப்பு. திருப்பூட்டு - தாலி, மங்கலியதாரணம். திருப்பூட்டுதல் - மங்கிலியந் தரித்தல். திருமகண்மைந்தன் - மன்மதன். திருமகள் - இலக்குமி. திருமஞ்சனம் - அபிஷேகம். திருமடந்தை - இலக்குமி. திருமணியிற்றுநர் - முத்துக்கோப்பார். திருமண் - திருநாமம். திருமண்டலம் - துருவமண்டலம். திருமயிலை - மயிலாப்பூர். திருமரம் - அரசு. திருமலர் - தாமரை. திருமலை - கயிலாயமலை, திருப்பதி. திருமல் - கடுக்காய், தான்றி, நெல்லி. திருமறுமார்பன் - அருகன், திருமால். திருமாது - இலக்குமி. திருமாலுந்தி - தாமரை. திருமால் - விட்டுணு. திருமால்கொம்பர் - தாமரை. திருமால்புதல்வன் - மன்மதன். திருமானகரம் - வைகுண்டம். திருமுகம் - தேன சன்னிதானம்,பெரியோர்சமுகம், வரைந்தனுப்பு மோலை, கடிதம். திருமுதல் - திரும்புதல். திருமுருகாற்றுப்படை - ஓர்நூல். திருமுழுக்காட்டுதல் - அபிஷேகம்பண்ணுதல். திருமுழுக்கு - திவ்வியாபிடேகம். திருமுறை - திருவாசகம், புத்தகம். திருமுற்றம் - குதிரை, வையாளி வீதி,கோயில், கோயிற் சந்நிதானம்.திருமுன், திருமுன்பு - தேவசன்னிதானம், பெரியோர் முன்பு. திருமெழுக்கு - கோவில் மெழுகுதல். திருமேற்பூச்சு - திருமேனியிற் பூசும்பூச்சு. திருமேனி - ஓராபரணம், குப்பைமேனி, திவ்வியதேகம், விக்கிரகம். திருமேனிக்கடுக்கன் - குப்பைமேனி. திரும்பல் - திரும்புதல். திரும்பு - இடியேறு, சக்கிரம், சந்திரன்,திரும்பென்னேவல், பாம்பு. திரும்புதல் - மாறுதல், மீளல்,வளைதல். திருலோகி - விஷ்ணுகரந்தை. திருவடி - ஆறாப்புண், திவ்வியபாதம் திருவடிநிலை - ஓரூர், பாதுகை. திருவடிப்புண் - ஆறாதகலும்புண். திருவடியிராச்சியம் - முறைகெட்டவிராச்சியம். திருவடையாளம் - சமயசாதனம். திருவட்டம் - திரிவட்டம். திருவட்டி - கள்ளி. திருவணை - சேது. திருவண்ணாமலை - அருணாசலம்,தேயுஸ்தலம். திருவமுது - திவ்விய வுணவு. திருவருட்பயன் - ஓர் சைவநூல். திருவலகு - கோவில் விளக்குமாறு. திருவல்லிக்கேணி - சென்னையைச்சார்ந்த ஓர் விஷ்ணுதலம். திருவள்ளுவர் - ஓர் நூல், வள்ளுவ நூலாசிரியன். திருவனந்தபுரம் - மலையாளக்கரையில் ஓர் பட்டினம். திருவன் - கள்வன், திருவாலி,விகடக்காரன். திருவாக்கு - திவ்விய வாக்கு. திருவாசகம் - திருவாக்கு, மாணிக்கவாசகர் செய்த நூல். திருவாசி - ஓராபரணம். திருவாசிகை - ஓர் மாலை. திருவாடுதண்டு - திருவுருவைக் காவுமரம். திருவாட்சி - ஓர் பூமரம்.திருவாதரம், திருவாதிரம் - புரளி. திருவாதிரை - ஓர் நாள். திருவாத்தி - ஓர் பூமரம். திருவாத்தான் - விகடன். திருவாபரணம் - தெய்வாபரணம். திருவாயில் - கோயில்வாயில், மடம். திருவாய் - திருவாக்கு. திருவாய்மலர்தல் - தேவவாக்குவிள்ளுதல், (பெரியார்) சொல்லுதல். திருவாய்மொழி - ஓர் திருப்பாடல்,தெய்வவாக்கு, பெரியோரதுசொல். திருவாருர் - தஞ்சாவூருக்கருகில் ஓர்தலம். திருவாலி - கள்வன், திருவாதிரக்காரன், பொய்யன். திருவாவினன்குடி - சுப்பிரமணியராறிடத்தொன்று அஃது பழனி. திருவாழங்கோடு - ஓர் தலம். திருவாழித்தண்டு - திருவாடுதண்டு. திருவாழ்த்தான் - விகடன். திருவாளன் - செல்வன். திருவானைக்கா - திருச்சிராப்பள்ளிக்கருகில் ஓர் அப்புஸ்தலம். திருவான்கோடு - ஓர் பட்டினம். திருவிருந்து - திவ்விய விருந்துஅஃது சத்திய வேதத்தார் உடன்படிக் கையினொன்று. திருவிலி - கைம்பெண், வறியன். திருவிழா - உற்சவம். திருவிளக்கு - கோவிற்றீபம். திருவிளம் - சிவதை, திராய்.திருவிளையாடல், திருவிளையாட்டு - ஓர் புராணம், தெய்வ விளையாட்டு. திருவுந்தியார் - மாணிக்கவாசகர்செய்த திருவாசகத்தோருறுப்பு. திருவுரு - விக்கிரகம், வடிவம். திருவுளச்சீட்டு - தெய்வசித்தமறியுஞ்சீட்டு. திருவுளமத்தியஸ்தம் - தேவமத்தியட்சம். திருவுளம் - கடவுள், திவ்வியசித்தம். திருவுளம்பற்றுதல் - கிருபையாய்ச்சொல்லுதல், கிருபை பாலித்தல். திருவுளம்வைத்தல் - கிருபைபுரிதல். திருவுறுப்பு - நுதன்மேலணி.திருவூசல், திருவூஞ்சல் - தெய்வவூஞ்சலாட்டு. திருவெனற்சாரம் - காசிச்சாரம். திருவேங்கடம் - திருப்பதி. திருவேடம் - சமயவேடம், சிவவேடம். திருவேரகம் - புதுச்சேரிக் கருகில்சுப்பிரமணிய ராறிடத்தொன்று. திருவொற்றாடை - விக்கிரகங்கட்குச்சார்த்துமாடை. திருவொற்றியூர் - சென்னைக்கருகில்ஓர் சிவஸ்தலம். திருவோணம் - ஓர் நாள். திருவோலக்கம் - மகா திவ்விய சபை. திருனகம் - திருணகம். திரேககரணம் - இராசியை மூன்றாய்ப் பகிருதல். திரேககரணாதிபன் - திரேககரணத்ததிபன். திரேகம் - மூன்று, தேகம், மூன்று. திரேக்காணம் - உதயராசியை மூன்றாகப் பகிர்தல். திரேசந்தி - திராய். திரேதம் - இரண்டாம் யுகம். திரேதாக்கினி - முத்தீ. திரேதாயுகம் - திரேதம். திரேத்து - நிறைவு. திரேந்தி - திராய். திரை - அலை, இடுகிரை, உடற்றிரை, கடல், திரைச்சீலை, திரையென்னேவல், திரைவு, புனற்றிரை, யாறு, வைக்கோற் புரி,வெற்றிலை. திரைச்சீலை - மறைப்பீட்டுச்சீலை. திரைதல் - சுருங்குதல், பால் முதலியகண்விடுதல். திரைத்தல் - திரைக்குதல், சுருட்டல். திரைப்பு - திரைதல். திரைப்புடைவை - திரைச்சீலை. திரையல் - சுருங்கல், வெற்றிலை. திரையன் - தொண்டைமான், நெய்தனிலத் தலைவன். திரையெறிதல் - திரைவீசுதல். திரைராசிகம் - முத்தொகைவினா. திரைவிழுதல் - உடறிரங்குதல்,சுருங்குதல், திரைதல். திரைவு - திரைப்பு. திரோகதம் - அதரிசனம். திரோகிதம் - மறைவு. திரோதசத்தி - பஞ்சசத்தியினொன்று.திரோதம், திரோதயம் - பஞ்ச கிருத்தியத் தொன்று, மறை, மறைப்பு.திரோதாயி, திரோதானசத்தி - பஞ்சசத்தியி னொன்று. திரோதானம் - திரைச்சீலை, மறைப்பு. திரோபவம் - மயக்கம், மறைப்பு. திரோபவித்தல் - மறைத்தல். திரோபாவம் - மயக்கம். திர்ப்தி - திருத்தி. திலககண்டம் - ஊர்க்குருவி. திலகடம் - பிண்ணாக்கு. திலகநிறமணி - குருவிந்தப்பதுமராகம். திலகம் - கலித்துறை, சிந்தூரம்,சுட்டி, திலோதகம், பொட்டு, மஞ்சாடி மரம், மேன்மை, பிரதானம்,எள்ளு. திலகலம் - செக்கு. திலகற்பம் - பிண்ணாக்கு. திலகாசிரியம் - நெற்றி. திலகாதுகன் - வாணியன். திலகாளகம் - கரும்புள்ளி. திலசூர்ணம் - எட்பொடி. திலட்சாரம் - எள்ளிலெடுக்கும்லவணம். திலதண்டகன் - வாணிபன். திலதண்டுலகம் - எள்ளுடன் கலந்தஅரிசி. திலதம் - சுட்டி, நெற்றித்திலகம்,பொட்டு. திலதயிலம் - நல்லெண்ணெய். திலதர்ப்பணம் - எள்ளுந் தண்ணீருமிறைத்தல். திலதேனு - தானஞ்செய்ய எள்ளினற்செய்தபசு. திலபகம் - தூபம். திலபவம் - எண்ணெய்.திலபருணி, திலபருணிகை - சந்தனம். திலபாவி - கொளுஞ்சி மரம். திலபாவிநி - சாதிமல்லிகை. திலபிச்சடம் - பிண்ணாக்கு. திலபிஞ்சம் - ஆணெள். திலபேஜம் - ஓர்வகையெள். திலமயூரம் - ஓர்வித மயில். திலமலம் - பிண்ணாக்கு. திலம் - எள், மஞ்சாடிமரம். திலயந்திரம் - செக்கு. திலரசம் - எள்ளெண்ணெய். திலவகம் - வெள்ளிலோத்திரம். திலாட்சாரம் - திலாலவணம். திலீபன் - ஓரரசன். திலு - மூன்று. திலுப்புலு - முப்பது. திலோதகம் - எள்ளும் நீரும். திலோத்தமை - ஓரரம்பை. தில் - அசைச்சொல், ஒழியிசை,காலம், விழை. தில்லகம் - வெள்ளிலோத்திரம். தில்லமெழுகு - தில்லைமெழுகு. தில்லம் - காடு. தில்லானா - ஓர் சந்தக்குறிப்பு,தாளக்குறி. தில்லியம் - எட்சாட்டி, நல்லெண்ணெய்தில்லுப்பில்லு, தில்லுமுல்லு - சண்டை,தருக்கம், மாறுபாடு. தில்லை - ஓர் மரம், சிதம்பரம். தில்லைநாயகம் - ஓர் நெல். தில்லைநாயகர் - சிதம்பரேசுவரன். தில்லைமூவாயிரவர் - சிதம்பரசேத்திரவுரிமைப் பார்ப்பார். தில்லையம்பலம் - கனகசபை. தில்லையம்பலவாணன் - சிதம்பரேசுரன். தில்லையெண்ணெய் - தில்லைமரத் தெண்ணெய். தில்லைவனம் - சிதம்பரதலம்,ஆகாயத்தலம். திவசகரன் - சூரியன், விடியல். திவசமுகம் - உதயகாலம். திவசம் - சிராத்தம், நாள்.திவசாத்தியம், திவசாவசானம் -அந்தி. திவச்சுவான் - துவாதசாதித்தரி லொருவன். திவடல் - துவளுதல். திவண்டல் - துவளல். திவம் - ஆகாயம், காடு, தோற்றம்,நாள், பகல், மோக்கம், விளக்கம். திவரம் - நாடு. திவலுதல் - சாதல். திவலை - துளி, மழை, மழைத்துளி. திவவு - படி, வீணைவலிக்கட்டு.திவளல், திவளுதல் - துவளல்,மெலிதல், அசைதல். திவறல் - சாதல். திவா - பகல். திவாகரம் - ஓர் நிகண்டு, காகம்,சூரியகாந்திப்பூ, சூரியன். திவாகரன் - திவாகரஞ் செய்தவன்,சூரியன், நாவிதன். திவாக்கீர்த்தி - ஆந்தை, சண்டாளன்,நாவிதன். திவாசுத்தம் - பகனித்திரை. திவாடனம் - காக்கை. திவாநிசம் - இராப்பகல். திவாந்தகி - மூஞ்சூறு. திவாந்தம் - ஆந்தை. திவாபீகம் - ஆந்தை, வெண்டாமரை. திவாபீதன் - கள்வன். திவாபீதி - ஆந்தை. திவாமணி - சூரியன். திவாமத்தியம் - நடுப்பகல். திவாமானம் - பகற்காலம்திவாராத்திரி, திவாராத்திரி - இராப்பகல். திவார்த்தம் - பகலிற்பாதி, மத்தியானம். திவிசர் - தேவர். திவிபிநாபம் - கொடுவேலி. திவிராட்சம் - கொடிமுந்திரிகை. திவேச்சுரன் - துவாதசாதித்தரிலொருவன்.திவோதாசன், திவோதாதன் - காசியரசன். திவ்வியகந்தம் - கராம்பு. திவ்வியகவி - தெய்வப்புலவன், வரகவி. திவ்வியகாயநன் - கந்தருவன்.திவ்வியசட்சு, திவ்வியதிருட்டி - ஞானநோக்கு, தெய்வீக பார்வை. திவ்வியது - திவ்வியமானது. திவ்வியநானம் - சூரிய கிரணம் பாயுமழைத்தூறலிற் படிதல் இஃதுஏழ்வகை நானத்தொன்று. திவ்வியம் - ஆணை, இனிமையானது, ஓர்வகைச்சந்தனம்,கராம்பு, தெய்வீகமானது, மேன்மையானது. திவ்வியரதம் - நறுஞ்சுவை. திவ்வியரத்தினம் - சிந்தாமணி,சூடாமணி. திவ்வியவருஷம் - தேவவருடம் அது மானிடவருஷம் முந்நூற்றறுபத்தைந்து கொண்டது. திவ்வியாதிவ்வியம் - தெய்வீகமும்மனுஷீகமும். திவ்வியாத்திரம் - தேவர்களாற்கொடுக்கப்பட்ட அம்பு. திவ்வியோதகம் - தீர்த்தநீர், மழைத்தண்ணீர். திளைத்தல் - அழுந்துதல், அனுபவித்தல், நிறைதல், நெருங்கல்,பெருகுதல், அசைதல், விளையாடல். திறக்கு - காரியம். திறக்குதல் - அதிகப்படல், திறத்தல், திறத்தகை - வயானகை, வலுலிவானவன். திறத்தல் - திறக்குதல், வலுத்தல்,வழிவெட்டிவிடுதல், விரித்தல்,விளக்குதல். திறத்தார் - பகுதியார், பக்கத்தார். திறத்தி - மருத்துவிச்சி. திறந்தறை - அந்தரங்கத்தை வெளிவிடுவோன், அரணற்றது. திறபு - ஈயம், துத்தநாகம். திறப்படுதல் - தேறுதல், பலப்படுதல். திறப்பணம் - தமரூசி, துறப்பணம். திறப்பாடு - வகை,வலிமை. திறப்பு - காவலின்மை, துறப்பு. திறமை - சமர்த்து, தகுதி, மேன்மை,வகை, வலி. திறம் - அதிகம், அரையென்னுமோரிலக்கம், உச்சிதம், உறுதி, காரணம், குணம், குறைநரம் புள்ளவீணை, கூறுபாடு, சாமர்த்தியம்,தத்துவம், தன்மை, திறமை, பக்கம், பாக்கியம், மருத்துவம்,மேன்மை, வகை, வலி, சுற்றம்,குலம், யுத்தம்.திறம்பல், திறம்புதல் - தவறுதல்,மாறுபடல். திறயம் - திரயம். திறலோன் - திண்ணியன். திறல் - தைரியம், பகை, போர், வலி. திறவறிதல் - உளவுபார்த்தல், மறைத்திருப்பதை யறிதல். திறவாளி - காரியகிரகஸ்தன், விவேகி. திறவான் - வலியவன். திறவு - உளவு, திறத்தல், வழி. திறவுகோல் - திறப்பு. திறவுண்ணல் - திறவுபடல். திறனில்யாழ் - நெய்தல் யாழ்த்திறம். திறன் - காரணம், குணம், கூறுபாடு. திறாணி - திராணி. திறி - மூன்று. திறிதண்டம் - நெருஞ்சில். திறிதியம் - செவ்வள்ளி. திறிதேகி - பற்பாடம். திறிபாதி - சிறுபுள்ளடி. திறியம் - செவ்வள்ளி. திறிலிங்கம் - தான்றி. திறிலேகரி - விஷ்ணுகரந்தை. திறிவாசம் - கக்கரி. திறிவிச்சதா - மூக்கிரட்டை.திறுதட்டம், திறுதிட்டம் - நேரேநிற்றல்.திறுதிறுத்தல், திறுதிறுப்பு, திறுதிறெனல் - அச்சக்குறிப்பு. திறேதம் - திரேதம். திறை - அரசிறை. திறைகொள்ளுதல் - திறைவாருதல்,வெல்லுதல். திறையளத்தல் - இறைகொடுத்தல். திற்றி - தின்றற்குரியன. தினகரன் - சூரியன். தினகவி - அரசர்க்குப் புகழ்ச்சியாயந்திசந்தி சொல்லுங்கவி, தினகவிப் புலவன். தினகாலம் - நித்தமும். தினகேசவம் - இருள். தினசரி - நாள்தோறும். தினசேரி - நித்தம். தினத்திரயம் - ஒருநாளில் மூன்றுபெருநாள் சம்பவிப்பது. தினந்தினம் - நாளுக்கு நாள். தினநாதன் - சூரியன். தினபலம் - ஐந்தாம் ஆறாம் ஏழாம்எட்டாம் பதினொன்றாம் பன்னிரண்டாமிராசிகள், நிதநடக்கும்பலன். தினப்பாடு - தினசேரி.தினப்பிரணி, தினமணி - சூரியன். தினமானம் - நித்தமும். தினம் - திருநாள், நாள், பகல், தினவிருத்தி - நாடோறும், நாள்வேலை, நித்தம். தினவு - சொறிவு.தினவுதின்றல், தினவெடுத்தல் - சொறிதல். தினாங்கிசம் - சாமம். தினாதி - விடியல். தினாதினம் - பிரதானநாள்,பிரதானப்பிரதானம். தினாந்தகம் - இரவு. தினாந்தம் - மாலைப்பொழுது. தினாந்தரம் - ஒன்றை விட்டொருநாள், நாடோறும். தினாமிசம் - நாளின்பங்கு. தினாரம்பம் - வைகறை. தினாவசானம் - அந்தி. தினிகை - நாட்கூலி. தினுசு - வகை. தினுசவாரி - பலவகை. தினை - ஓர் சாமை, சிறுமை,செந்நெல். தினைக்குருவி - ஓர் சிறுகுருவி. தினைச்சாமை - ஓர் சாமை. தினைப்புனம் - தினைவிளைபுலம். தின்பனவு - உணா. தின்மை - தீமை. தின்றல் - உண்ணல், மெல்லுதல்,அஃது நால்வகை யுணவினொன்று. தின்றி - தீன். தின்னல் - தின்றல் தின்னாத்தீன் - இழிந்தபோஜனம்,நிந்தைப்பட்டு வாங்கிப் புசிக்கும்புசிப்பு. தின்னி - தின்கிறவன். தின்னுகை - தின்னுதல். தின்னுதல் - உண்ணல். தீ தீ - அறிவு, இனிமை, உபாயவழி,ஓரெழுத்து, ஜடராக்கினி,கொடுமை, தீமை, தீயென் னேவல்,நரகம், நெருப்பு, அஃது அட்டமூர்த்தத் தொன்று, பஞ்சபூதியத்து மொன்று. தீகன் - சந்திரன். தீக்கஞ்சி - ஆரதிகருப்பூரம். தீக்கடன் - ஈமக்கடன். தீக்கடைகோல் - ஞெலிகோல். தீக்கட்டி - அக்கினிக்கட்டி. தீக்கணம் - நேரசைநடுவும் நிரையசையிருபாலும் நிற்பன. தீக்கதர் - தீட்சதர். தீக்கதிக்கும்பச்சை - நாகப்பச்சை. தீக்கதிர் - உலையாணிக்கோல்,சூரியன். தீக்கரண்டி - நெருப்பகப்பை. தீக்கருமம் - ஈமக்கிரியை, துற்கிரியை. தீக்கரை - முருக்கு. தீக்கல் - நெருப்புக்காலுங்கல். தீக்காய்தல் - குளிர்காய்தல். தீக்காரியம் - அக்கினிகருமம், பொல்லாங்கு. தீக்காலி - துடைகாலி. தீக்கித்தல் - தீட்சித்தல். தீக்குணம் - துர்க்குணம். தீக்குணர் - கீழ்மக்கள். தீக்குண்டம் - அக்கினி வளர்க்கும்குழி. தீக்குதல் - கருகுவித்தல், தீயச்செய்தல். தீக்குதித்தல் - ஆவேச முதலியவற்றாற்றீப்பாய்தல். தீக்குருவி - தழல்விழுங்கி. தீக்குவெறுங்குகை - சவுக்காரம். தீக்குளித்தல் - அக்கினியிற்படிதல். தீக்குறி - துற்குறி. தீக்கூர்மை - இந்துப்பு, திலாலவணம். தீக்கை - தீட்சை, விரதநியமம், மந்திரோபதேசம், யாகம், மயிர்களையாதிருக்கை. தீக்கையோன் - அரன், குரு, தீட்சைபெற்றோன். தீக்கோள் - துர்க்கிரகம்.தீங்கனி, தீங்காய் - உருசியான பழம். தீங்கு - குற்றம், கேடு, தவறு, தீமை. தீங்குணர் - துட்டர். தீசகன் - ஆலோசனைகாரன்,உபாத்தி. தீச்சகுனம் - துற்சகுனம். தீச்சடம் - அமுரி. தீச்சட்டி - நெருப்புச்சட்டி. தீச்சலம் - கடனுரை.தீச்சனம், தீக்ஷனம் - மிளகு. தீச்சுடர் - வெடியுப்பு. தீச்சொல் - சாபம், பழிச்சொல். தீஞ்சுவை - நற்சுவை. தீஞ்சொல் - இனியசொல், நற்சொல். தீட்சணகண்டகம் - முண்ணாவல். தீட்சணகந்தகம் - ஈரவெண்காயம். தீட்சணகம் - வெண்கடுகு. தீட்சணசாரம் - இலுப்பை. தீட்சணதண்டுலம் - திப்பிலி. தீட்சணபத்திரம் - அலரி. தீட்சணபுட்பம் - கராம்பு. தீட்சணம் - ஆயுதம், இரும்பு, உக்கிரம், உப்பு, உறைப்பு, கஞ்சாங்கோரை, கூர்மை, கொள்ளைநோய், கோபம், சீக்கிரம், நஞ்சு,போர், மரணம், வெப்பம். தீட்சணரசம் - வெடியுப்பு. தீட்சணியம் - உக்கிரமம், கூர்மை,வெப்பம். தீட்சதர் - சிதம்பரப்பார்ப்பார்,தீட்சை பெற்றோர். தீட்சம் - சம்பவிப்பதை வெறாதனுபவித்தல். தீட்சதன் - தீட்சைபெற்றோன். தீட்சாவரன் - தீட்சதன். தீட்சித்தல் - தீட்சைகொடுத்தல். தீட்சை - உபதேசம், விரதநியமம். தீட்சைகேட்டல் - உபதேசம் பெறு தல்.தீட்சைகொடுத்தல், தீட்சை பண்ணுதல், தீட்சைவைத்தல் - உப தேசங்கொடுத்தல். தீட்டம் - ஆசூசம், மகளிர்தொடக்கு. தீட்டலரிசி - தவிடு நீங்கமினுககினவரிசி. தீட்டல் - தீட்டுதல். தீட்டு - அழுக்கு, ஆசூசம், எழுதுதல்,கூர்மையாக்குதல், சூதகம், தீட்டென்னேவல், மகளிர்சூதகம்,எழுத்து, சீட்டு. தீட்டுகோல் - எழுதுகோல். தீட்டுக்கல் - சாணைக்கல், மாக்கல். தீட்டுக்கழித்தல் - தொடக்குக் கழித்தல். தீட்டுக்காரி - சூதகக்காரி. தீட்டுக்குற்றி - ஆயுதந்தீட்டுந்தடி. தீட்டுச்சீலை - அழுக்குச்சீலை. தீட்டுதல் - அழுத்துதல், எழுதுதல்,கட்டுதல், கூராக்கல், சாதித்தல்,சித்திரித்தல், மினுக்குதல்,கோதுதல். தீட்டுத்தடி - ஆயுதந்தீட்டுந்தடி. தீட்டுப்படுதல் - அழுக்குப்படுதல்,அனாசாரப்படுதல், குற்றப்படுதல், சூதக நீர் பாய்தல். தீட்பு - இழிவு, கீழ்மை. தீண்டல் - தொடல், சூதகம். தீண்டியம் - பவளக்குறிஞ்சி.தீண்டுகை, தீண்டுதல் - தொடுதல்அஃதுமெய்ப் பரிச மெட்டினொன்று. தீதபிட்டர் - வட்டத்திருப்பி. தீதல் - கருகுதல், தீந்துபோதல். தீதனம் - மாமரம். தீதி - தாகம். தீதிலி - குற்றமில்லான். தீது - குற்றம், தீமை. தீதை - அறிவு, கன்னி. தீத்தகம் - பொன். தீத்தசிகுவை - நரி. தீத்தட்டி - தீத்தருங்கருவி. தீத்தட்டிக்கல் - தீக்கல். தீத்தட்டிக்குடுக்கை - சக்கைமுக்கி. தீத்தட்டிவளையம் - தீக்கல்லைத்தட்டும் வளையம். தீத்தபிங்கலம் - சிங்கம். தீத்தம் - சிங்கம், சிவாகம மிருபத்தெட்டினொன்று, தீர்த்தம்,பிரகாசம் பெருங்காயம், பொன். தீத்தரசம் - நாங்கூழ். தீத்தலோகம் - நிறம், மாந்துளிர்க்கல்,வெண்கலம். தீத்தலோசனம் - பூனை. தீத்தல் - எரித்தல். தீத்தர் - வட்டத்திருப்பி. தீத்தாங்கம் - மயில். தீத்தாங்கி - தீமறைக்கும்பலகை. தீத்தாட்சம் - பூனை, மயில். தீத்தி - அழகு, சரகதி, பிரகாசம்,வெண்கலம். தீத்தியம் - அரத்தை. தீத்திரள் - ஊழித்தீ, சுவாலைக்கூட்டம். தீத்தீண்டல் - கலியாணம். தீத்தீண்டுகையான் - சிவன். தீத்தெய்வம் - அக்கினி. தீத்தொழில் - அக்கினி, கருமம்,துற்செய்கை, தகாத செய்கை. தீத்தோபலம் - சூரியகாந்தக்கல். தீநா - கப்பற்காரர் துறைபிடிக்கககொளுத்தின வெளிச்சம். தீநாற்றம் - முடை, கெட்ட நாற்றம். தீநிறம் - மாந்துளிர்க்கல். தீநுரை - கடனுரை. தீந்தமிழ் - இனியதமிழ், நற்றமிழ். தீந்திரியம் - அறிகருவி. தீபகம் - ஒரலங்காரம், அஃது ஒரிடத்து நின்றமொழி பல விடத்துநின்றுபொருடருவது, சந்திரகிரணம், புட்படுக்கும்படி கொண்டுபோகிறபுள், மஞ்சள், விளக்கு. தீபகம்பம் - விளக்குத்தண்டு. தீபகாந்தி, தீபகாந்தியோன் - வயிரக்கல்.தீபகூபி, தீபகோரி - விளக்குத்திரி. தீபக்கால் - தீபக்கருவி. தீபக்கொடிச்சி - ஆரதிகருப்பூரம். தீபங்காட்டல் - தீபாற்சனை செய்தல்அஃது புண்ணியமொன்பதினொன்று. தீபசிகை - விளக்குச்சுவாலை. தீபதவி - ஆமணக்கு. தீபதிச்சம் - வாலுளுவை. தீபதைலி - ஆமணக்கு. தீபபாதவம் - விளக்குத்தண்டு. தீபபுட்பம் - சண்பகப்பூ. தீபவத்திசை - விளக்குத்தண்டு. தீபம் - சோதிநாள், தீவு, விளக்கு,அஃது இராசசின்னத்தொன்று,இரவு எரிமரம். தீபவதி - யாறு. தீபவராடி - வராடித்திறத்தினொன்று. தீபவிருட்சம் - விளக்குத்தண்டு. தீபனம் - ஆகாரம், நைவேத்தியஞ்செய்தல், பசி, பிரகாசம், மஞ்சள்,மிகப்பிரகாசம். தீபாக்கினி - ஓர்சுடர் கொண்டெரியுநெருப்பு. தீபாந்தம் - பெருச்சாளி. தீபாராதனை - விளக்காலாத்திதீபாவலி, தீபாவளி, தீபாளி - தீவாளி,ஒரு பண்டிகை. தீபிகை - விளக்கு. தீப்தம் - தீத்தம். தீப்படுதல் - அழிதல், எரிச்சலடைதல், எரிந்துபோதல். தீப்பாய்தல் - தீக்குதித்தல். தீப்பி - நெருப்பு. தீப்பியமானம் - பிரபை. தீப்பியம் - அசமதாகம், சுவாலை. தீப்பிரகாசி - குங்கிலியம். தீப்பிரம் - பிரபை. தீப்பிரயகம் - ஓமம். தீப்பு - எரிப்பு, கருக்குதல். தீப்பொறி - கங்கம் , கங்கு. தீப்போடுதல் - குரூரஞ்செய்தல்,கோத்தல், நெருப்பிட்டுச்சுடுதல். தீமதி - அறிவுள்ளவள். தீமலம் - கரி. தீமான் - பண்டிதன், புத்திமான்,வியாழ பகவான். தீமிதித்தல் - நெருப்பினடத்தல். தீமுகம் - உலைமுகம், நெருப்பெரியமிடம். தீமுறுகல் - ஓர் சரக்கு, அது வைப்புப்ப h ஷ h ண மு ப் ப த் தி ர ண் டினொன்று. தீமை - கேடு, பொல்லாங்கு. தீமைக்கஞ்சல் - பொல்லாங்கிற்குப்பயப்படல் அஃது தயாவிருத்திஎட்டினொன்று. தீமொழி - சாபம், பொல்லாவார்த்தை. தீம் - இனிமை, தித்திப்பு. தீம்பண்டம் - நற்பண்டம். தீம்பர் - கீழ்மக்கள், தீங்குசெய்வோர். தீம்பால் - தித்திப்பான பால். தீம்பி - துட்டை. தீம்பு - கீழ்மை, தீது. தீம்புகை - நறும்புகை. தீய - இனிமையான, சுத்தமான, தீதான. தீயகம் - நரகம். தீயது - ஆரதம், இனியது, தீங்குள்ளது. தீயபுட்பம் - சண்பகப்பூ. தீயம் - திதி, தித்திப்பு. தீயர் - கீழ்மக்கள், பொல்லாதவர்கள்,வேடர். தீயல் - தீய்ந்தது, பொறிக்கறி. தீயவன் - தீயோன். தீயவு - தீய்தல். தீயளி - காசா, காய். தீயறம் - பொல்லாங்கு. தீயன - இனிமையுள்ளன, சுத்தமுள்ளன, தீங்குள்ளன. தீயாக்கீரை - பொன்னாங்காணி. தீயார் - தீயோர். தீயின்வயிரம் - மீனம்பர். தீயொழுக்கம் - துன்மார்க்கம். தீயோந்தி - திப்பிலி. தீயோர் - தீம்பர், மூடர், வேடர். தீய்ச்சலம் - அக்கினிக்கட்டி. தீர - முற்றாக. தீரக்காரு - நிலைப்பனை. தீரத்துவம் - அறிவுடைமை, உறுதி,தைரியம், தீரம் - அம்பு, அறிவு, கரை, குளிர்,சிறுவரம்பு, பெலன், மஞ்சள்மனத்தைரியம், வலி. தீரன் - திண்ணியன். தீராந்தரம் - மறுகரை. தீராந்தி - மச்சுமரம். தீராப்பசியன் - மகோதரன். தீராமை - கொடுமை. தீரிகாதம் - வெள்ளரி. தீரிக்கை - ஒழிந்தவேளை. தீரை - அறிவுடையாள். தீர்கடை - முடிவு, முழுமை. தீர்க்ககணம் - வெண்சீரகம். தீர்க்ககதி - ஒட்டகம். தீர்க்ககந்தை - மெருகன்கிழங்கு. தீர்க்ககாடிகம் - ஒட்டகம். தீர்க்ககாண்டம் - கோரைப்புல். தீர்க்ககேசம் - நெடுமயிர். தீர்க்கக்கிரீபம் - ஒட்டகம். தீர்க்கசங்கம் - ஒட்டகம், ஓர்நாரை,தொடை. தீர்க்கசதுரம் - சரிசதுரம், நீண்டசதுரம். தீர்க்கசத்திரம் - ஓர் யாகம். தீர்க்கசந்தி - எழுத்து விகாரப்பட்டுப்புணரும் புணர்ச்சியினொன்று அஃது நிலை மொழியீறும் வருமொழி முதலு நிற்கும்அகர ஆகாரங்கெட ஆகாரமும்இகர ஈகாரங்கெட ஈகாரமும்உகர ஊகாரங்கெட ஊகாரமுந்தோன்றுதல். தீர்க்கசாலம் - சாலமரம். தீர்க்கசிகுவம் - பாம்பு. தீர்க்கசீவம் - நெட்டாயுள். தீர்க்கசுமங்கலி - பூரணசுமங்கலி. தீர்க்கசுரதம் - நாய். தீர்க்கசுரம் - நெட்டுயிரெழுத்து. தீர்க்கசூத்திரம் - கண், குன்மநோய்,வயிற்றுவலி. தீர்க்கதண்டம் - ஆமணக்கு, சாட்டாங்கம், பூரணவணக்கம். தீர்க்கதரிசனம் - முக்கால் வருத்தமான மறிதல். தீர்க்கதரிசி - முக்கால வருத்தமானமறிவோன். தீர்க்கதரு - பனைமரம். தீர்க்கதாரு - நிலப்பனை. தீர்க்கதிருட்டி - உற்றுப்பார்த்தல். தீர்க்கநாதம் - சங்கு. தீர்க்கநிச்சுவாசம் - பெருமூச்சு. தீர்க்கநித்திரை - நெடுந்தூக்கம்,மரணம்.தீர்க்கபத்திரகம், தீர்க்கபத்திரம் - உள்ளி. தீர்க்கபரணி - வாழை. தீர்க்கபாதபம் - தென்னமரம். தீர்க்கபாதன் - ஓரிருடி, சூரியன். தீர்க்கபிருட்டம் - பாம்பு. தீர்க்கமாருதம் - யானை. தீர்க்கமூலம் - ஓர்வகை வில்வம்,தொட்டாற்சுருங்கி, முடக்கொற்றான். தீர்க்கம் - அந்தரம், ஆறா மேழாமிராசிகள், உச்சரிப்பின் திறம்,திட்டம், தெளிவு, தூரம், நிச்சயம்,நீளம், நெட்டுயிரடையாளம்,நெட்டுயிரெழுத்து, பூரணம். தீர்க்கரஸநம் - பாம்பு. தீர்க்கரதம் - பன்றி. தீர்க்கராஜிகை - மஞ்சள். தீர்க்கராத்திரம் - நீண்டராத்திரி,நெடுங்காலம். தீர்க்கலோகிதம் - சிலிந்தி, தருப்பை. தீர்க்கவசனம் - உறுதிச்சொல். தீர்க்கவத்திரம் - யானை. தீர்க்கவருணம் - நெட்டுயிரெழுத்து. தீர்க்கவற்சிகை - முதலை. தீர்க்கவிருக்கம் - பெருமரம். தீர்க்கவைரம் - நெடுநாளையில்விரோதம். தீர்க்காசனம் - பாம்பு.தீர்க்காயு, தீர்க்காயுசு - காகம்,நீடியஆயு, மார்க்கண்டன். தீர்க்காயுஷியம் - நெடுங்காலம். தீர்க்காயுதம் - ஈட்டி, பன்றி. தீர்ணம் - காயம். தீர்தல் - இட்டமாதல், எழுதல், செல்லுதல், நடத்தல், நிசமாதல், நீளம்,நீளித்தல், முடித்தல், விடுதல்,வெடி தீர்தல், வெட்டல். தீர்த்தகரன் - சமணகுரு. தீர்த்தகர் - சமணமுனிவர், பெரியோர். தீர்த்தசேவி - தீர்த்தவாசி. தீர்த்தம் - சுத்தம், திருமஞ்சனநீர்,திருவிழா, தீ, நீர், பிறப்பு, புண்ணியதீர்த்தம், பெண்குறி, யாகம்,சாத்திரம். தீர்த்தராஜி - காசி. தீர்த்தர் - கடவுளர், பரிசுத்தர். தீர்த்தல் - இட்டமாக்கல், தீர்ப்புச்செய்தல், நீக்கல், போகுதல்,முடித்தல், விடுத்தல். தீர்த்தவாகம் - மயிர்ச்சுருள். தீர்த்தவாசி - யாத்திரைகாரன். தீர்த்தன் - அருகன், ஆசான், ஆலோசனைக்காரன், உபாத்தி யாயன்,குரு, சிவன், பரிசுத்தன், வியாழபகவான். தீர்த்தி - பரிசுத்தவாட்டி, பார்ப்பதியாறு. தீர்த்திகை - யாறு. தீர்ந்தவன் - துறந்தவன், தேறினவன்,தைரியவான். தீர்ப்பான் - வைத்தியன்.தீர்ப்பு, தீர்மானம் - நியமம், நிவர்த்தி,பரிகரிப்பு, முடிப்பு. தீர்மானித்தல் - நிச்சயித்தல். தீர்மானிப்பு - தீர்மானம். தீர்வு - தீர்வை, முடிப்பு, விலக்கு,பிராயச்சித்தம். தீர்வை - கீரி, சுங்கம், தீர்மானம்,பிரேதக்கிரியையி னொன்று, விதி,பிராயச்சித்தம், முடிவு. தீர்வைக்காரன் - ஆயக்காரன். தீர்வைச்சரக்கு - ஆயமிறுக்குஞ்சாமான். தீர்வைத்துறை - ஆயத்துறை. தீவகம் - தீபகம். தீவட்டி, தீவத்தி - ஓர் விளக்கு. தீவரம் - தீவிரம். தீவரி - செம்படத்தி. தீவர்த்தி - எரிபந்தம். தீவலஞ்செய்தல் - கலியாணச் சடங்கினொன்று அஃது அக்கினிப்பிரதட்சணம் பண்ணல், கலியாணம். தீவளர்த்தல் - அக்கினிவளர்த்தல்,ஓமம். தீவளர்ப்போர் - அந்தணர், முனிவர். தீவறை - பெருநெருப்பெரிக்குங்குழியடுப்பு. தீவாந்தரம் - தீவு, வெளி. தீவாளி - தீபாவளி. தீவான் - கரையான். தீவி - புலி. தீவிகை - தீபிகை. தீவிதிராட்சம் - கொடிமுந்திரிகை. தீவியது - இனியது. தீவிரகந்தம் - துளசி. தீவிரம் - உறைப்பு, கொடுமை, சடுதி,சூரியகிரணம், நரகம், பெருங்கோபம், மூர்க்கம், கூர்மை. தீவிரவேதனை - மிகுவேதனை. தீவிரித்தல் - கொடுமையா யிருத்தல்,சீக்கிரம்பண்ணல், விரைதல். தீவிளங்குவயிரம் - மீனம்பர். தீவிளி - காய். தீவினை - பாவம், அஃது இருவினையினொன்று. தீவு - கடலிடைக்குறை, கடலுட்டிடர், கண்டம், சுவை, தீய்தல்,தீவாந்தரம், தூரதேசம், தீபம். தீவுபற்று - தீவுப்புறம். தீவேட்டல் - கலியாணம், யாகம்பண்ணல். தீவேள்வி - கலியாணம். தீழ்ப்பு - கீழ்மை, தீட்டு. தீற்றுக்கல் - மணியாசிக்கல். தீற்றுதல் - ஊட்டுதல், சுத்தம் பண்ணுதல், சுவர் முதலிய மெழுகுதல். தீற்றுப்பலகை - மணியாசிக்கட்டை. தீனபந்து - கடவுள். தீனம் - இட்டம், எளிமை, குரூரம்,குறை, கேடு. தீனர் - இரப்போர், தீம்பர். தீனன் - இரப்போன், தரித்திரன்,பெருந்தீனன். தீனி - தீன். தீன் - உணவு, உண்டல். தீன்பண்டநல்கல் - உணாப் பொருளீதல், அஃது அறம் முப்பத்திரண்டினொன்று. தீன்பண்டம் - இரசவஸ்து, தின்பண்டம். து து - அசைத்தல், அநுபவம், இருதிணை, முப்பா லொருமைத்தன்மை விகுதி, (உ-ம்) யான்நடந்து, எரித்தல், ஓரெழுத்து,கெடுத்தல், சேர்மானம், துவ்வென்னேவல், நடத்தல், நிறைத்தல்,பிரிவு, பிரிவினை, விகுதி, வருத்தல், வளர்தல், சுத்தம், உணவு,துகத்தல், கசத்தல். துகளிதமாடல் - துகளாக்கல், துகளிதம் - தூள். துகள் - குற்றம், பராகம், புழுதி,பூந்தாது. துகி - மகள். துகிதுபதி - மகளின் கணவன். துகிதை - துகி. துகிரிகை - சாந்து, சித்திரம். துகிர் - பவளம். துகிர்த்தாளி - பவளமல்லிகை. துகிலிகை - எழுதுகோல், சித்திரம். துகிலின்பீசம் - பருத்திவிதை. துகில் - சீலை, விருதுக்கொடி, பட்டு. துகினசயிலம் - இமயமலை. துகினவிசம் - பருத்திவிரை. துகினம் - சந்திரகிரணம், பனி. துகினாத்திரி - இமயம். துகு - வருத்தம். துகூலம் - நொய்யபுடைவை. துகைத்தல் - இடித்தல், உழக்கல்,நசுக்கல், வருத்தல், வருந்துதல். துகையல் - துகைத்தபொருள். துக்ககன் - துயரமுள்ளோன். துக்கங்கொண்டாடுதல் - இழவுகொண்டாடுதல், புலம்புதல். துக்கசாகரம் - உலகம், பெருந்துக்கம். துக்கதோக்கியை - உதைகாலி. துக்கத்திரயம் - கடவுளாலு முயிர்த்தோற்றங்களாலும் பஞ்ச பூதியங்களாலுமுண்டாகிற துக்கம். துக்கம் - கிலேசம், குற்றம், துன்பம்,நரகம், நோ. துக்கரம் - அம்பு, ஓர் தேயம் துக்கராகம் - துக்கப்பாட்டிற்குரியராகம். துக்கவீடு - செத்த வீடு. துக்காணி - இரண்டு தம்படி கொண்டஓர் செம்பு நாணயம். துக்காதீதம் - சுகம். துக்கி - துக்கமுடையோன், துக்கியென்னேவல். துக்கிதம் - வருத்தம் துக்கிதன் - துக்கிக்கிறவன். துக்கித்தல் - கிலேசித்தல், புலம்பல்,மனநோதல். துக்கிப்பு - துக்கம். துக்கு - உதாவாதது, கீழ்மை, துப்பு. துக்குணி - அற்பம். துக்கை - மகளிர்சூதகம். துக்கைச்சி - சூதகமுள்ளவள். துக்கசேகரம் - மலை. துங்கதை - துங்கம், உயர்ச்சி. துங்கமந்தோச்சம் - கிரக வட்டத்தினது தூரமானநிலை.துங்கபத்திரி, துங்கபத்திரை - ஓர்ஆறு. துங்கம் - உயர்ச்சி, நுனி, பரிசுத்தம்,பெருமை, மந்தோச்சம், மலை,வெற்றி, பிரதானம். துங்கரிகம் - காவிக்கல். துங்கன் - கிரகவட்டத்தின் தூரமானமுனை, மேன்மையுடையோன். துங்கமூட்டு - கோரைக்கிழங்கு. துங்கி - இரவு. துங்கீசன் - சந்திரன், சிவன், சூரியன்,திருமால். துங்கீபதி - சந்திரன். துசங்கு - குங்கிலியம். துசகம் - கொம்மட்டிமாதளை,மாதளை. துசம் - இருபிறப்புள்ளன, உமி, குங்கிலியம், கொடி, தவிடு, துவசம். பல். துசன் - பார்ப்பான். துசானலம் - உமித்தீ. துச்சகம் - சுகந்தம். துச்சதானியம் - பதர். துச்சத்தாரு - ஆமணக்கு, குறிஞ்சான். துச்சம் - கீழ்மை,கொம்மட்டி, பதர்,பொய், பேய்க்கொம்மட்டி,வெறுமை, துச்சவனன் - இந்திரன். துச்சன் - கீழ்மகன்.துச்சாசனன், துச்சாதனன் - துரியோதனன் தம்பி. துச்சி - அனுபவம், பரிட்சை, புசிப்பு,பூநீறு. துச்சிமை - கீழ்மை. துச்சில் - ஒதுக்கிடம், சரீரம், சூட்டு.தங்குமிடம். துஞ்சர் - அசுரர். துஞ்சல் - துஞ்சுதல், துஞ்சற - முற்றாக. துஞ்சுதல் - உறங்கல், சாதல், சோம்பல், நிலைபெறுதல், வாடுதல்,தங்குதல். துஞ்சுநிலை - கட்டில். துஞ்சூமன் - சோம்பன். துடக்கம் - தொடக்கம். துடக்கறுப்பான் - கொத்தான் கொடி,முடக்கொற்றான். துடக்கு - ஆசூசகம், கட்டு, சிக்கு,துடக்கென்னேவல்,மகளிர்சூதகம். துடக்குதல் - கட்டுதல், தொடங்குதல், பொருத்துதல், தொங்குதல்,அகப்படுதல். துடங்கு - துடங்கென்னேவல்,துலங்குமரம். துடங்குதல் - தொடங்குதல். துடப்பம் - துடைப்பம். துடராமுறி - தொடராமுறி. துடரி - தொடரி, நாயுருவி. துடர் - தொடர். துடர்ச்சி - தொடர்ச்சி. துடர்தல் - தொடர்தல். துடவை - உழவுகொல்லை, பூந்தோட்டம், சோலை, முல்லை. துடி - அகில், இசங்கு, உடுக்கை,உதடு, ஏலம், காலதசப்பிரமாணத்தொன்று, அஃது நிமிடமெட்டுக்கொண்டது, காலநுட்பம், குமரனாடல், குறிஞ்சிப்பறை, கூதாளிச்செடி, சத்த கன்னிகை களாடல்,துடியென்னேவல், பாலைநிலப்பறை, மேன்மை, வலி. துடிகம் - தும்பை. துடிசாத்திரம் - துடிநூல். துடிதுடிக்குதல் - துடிக்குதல், துட்டத் தனம் பண்ணல். துடிதுடித்தல் - துஷ்டத்தனம்பண்ணல், துடித்தல். துடிதுடிப்பு - துடியாட்டம், துட்டத்தனம், மிகு சுறுக்கு. துடித்தல் - அசைதல், அதிகப்படுதல்உருக்கங் கொள்ளுதல், குதித்தல்,கெருவங்கொள்ளல், துள்ளுதல்,பதறல், மின்னல். துடிநூல் - சரீராங்கத் துடிப்பினால்வருநயநட்டஞ் சொல்லுமோர்சாத்திரம். துடிப்பு - அசைவு, உருக்கம், சதிப்பு,சுறுக்கு, துட்டத்தனம், பதைப்பு. துடியடி - யானைக் கன்று. துடியன் - கோபமுள்ளவன், துட்டன்,விரைவுள்ளவன். துடியாஞ்சி - இசங்கு. துடியாட்டம் - துடிப்பு. துடியானவன் - பலாஷ்டிகன். துடியிடை - பெண், பெண்ணிடை. துடுக்கன் - தீம்பன், துடியன். துடுக்கு - குறும்பு, தீக்குணம்,விரைவு. துடுப்பாற்றி - ஓர்மீன். துடுப்பு - அகப்பை, நெய்த்துடுப்புமுதலியன, பூங்கொத்து, மரக்கோற்கை, வலிதண்டு, வலி, பூவரும்பு. துடுப்புக்கீரை - ஓர்கீரை. துடுப்புள்ளான் - ஓர்குருவி. துடுமெனல் - ஒலிக்குறிப்பு, விரைதல். துடுமை - ஓர்வகைத் தோற்கருவி. துடுவை - நெய்த்துடுப்பு. துடை - அரசமரம், சுவர்க்கட்டை,சுவர்ப்புறத்து நீண்டவுத்திரம்,துடையென்னேவல், தொடை,விஷமூங்கில், விட்டம், பத்தாமிடத்தின் பெயர். துடைகாலி - தீக்காலி, பாக்கியத்தைஒழிக்கும் பெண். துடைக்குதல், துடைத்தல் - அழித்தல்,சீய்த்தல், தள்ளுதல், நாசம் பண்ணுதல், விட்டுவிடுதல், வீழ்த்தல். துடைப்பம் - வாருகோல். துடைப்பு - துடைத்தல், துடைவாசி - விஷமூங்கில். துடைவாழை - தொடைவாழை. துடைவை - உழவு கொல்லை, பூந்தோட்டம், தொடைவை. துட்கரம் - ஆகாயம், வருத்தப்பட்டுநிறைவேற்றுங்கிரியை, செய்தற்கரியது. துட்கல் - அச்சக்குறிப்பு. துடகிரமம் - எட்டாதது, ஒழுங்கற்றது. துட்குதல் - வெருவுதல். துட்குலேயன் - இழிகுலன். துட்கெனல் - அச்சக்குறிப்பு. துட்சணத்துவம் - பொல்லாங்கு. துட்சணம் - அசப்பியம், பொல்லாங்கு, துர்ச்சனம். துட்டகண்டகன் - துட்சணன்,நிற்பந்தன், மகாகுரூரன். துட்டகம் - பொல்லாங்கு. துட்டக்குணம் - தீக்குணம். துட்டசதுர்த்தர் - மகாபாரதத்திலகொடுமையிற் சிறந்த நால்வராகிய கன்னன், சகுனி, துச்சாத துட்டசித்தன் - கொடியோன். துட்டசிரோமணி - கொடியன். துட்டதேவதை - அக்கிரமதேவதை. துட்டத்தனம் - தீக்குணம். துட்டத்தொழில் - துர்ச்செய்கை. துட்டநிக்கிரகம் - துட்டரை யழித்தல். துட்டமிருகம் - காட்டுமிருகம், தீயமிருகம். துட்டம் - அடங்காமை, ஒழுங்கீனம்,கீழ்மை, தீங்கு, நீலோற்பலநிறம்அது மரகதக் குற்றத்தொன்று,பலவீனம், பொல்லாங்கு. துட்டரி - தொடரி. துட்டரோகம் - ஓர்நோய். துட்டர் - தீயர். துட்டவி - ஓர்செடி. துட்டவித்தை - தீக்கல்வி, தீத்தொழில். துட்டவினை - தீத்தொழில். துட்டன் - தீயன், தேள். துட்டாட்டம் - துட்டத்தனம். துட்டாப்பு - காவுதடி,சுமத்தல், மந்தம். துட்டு - தீமை, பணத்தினாலினொன்று கொண்ட நாணயம்,காசு. துட்டுத்தடி - குறுந்தடி, வளைதடி. துட்டுவம் - அற்பம். துட்டை - வசவி. துட்பிரதருசனி - சேம்பு. துட்பதம் - தீயவஞ்சகம். துணங்கறல் - இருள், திருவிழா. துணங்கு - இருள். துணங்கை - இருகையுமுடக்கிப்பழுப்புடையொத்தியாடல், கூத்து, திருவிழா. துணர் - பூ, பூங்கொத்து, பூந்தாது. துணர்த்தல் - முகைத்தல், குலை கொள்ளல். துணவு - சீக்கிரம், நுணாமரம், தணக்கு. துணி - ஒளி, கந்தை,சீலைத்துணி,சோதிநாள், துணியென்னேவல்,துணிவு, துண்டு. தூக்கங்கள்,தெளிவு, தேரிடக்கியம், தைரியம். துணிகரம் - தயிரியம், துணிவு. துணிகை - துணிவு. துணிக்கை - துணுக்கை, துண்டாக் கல். துணிச்சல் - துணிகரம். துணிதல் - நிச்சயித்தல், திடங்கொளல், தெளிதல். துணித்தல் - திடன்கொள்ளல், தெளடுண்ணல், அறுத்தல், வெட்டல். துணிபு - தீர்ப்பு, தெளிவு, தீர்மானம். துணிபொருள் - நிசப்பொருள். துணியல் - துண்டம். துணிவு - திடன், துண்டு, தெளிவு,நம்பிக்கை, நோக்கம், வெட்டு. துணிவுரை - விருத்தியுரைப் பிரிவுபதினான்கினொன்று. துணுக்கம் - அச்சம், உள்ளோசை. துணுக்கிடுதல் - திடுக்கிடுதல், பயப்படுதல். துணுக்கு - துண்டு, பயங்கரம். துணுகுறுதல் - அச்சப்படுதல். துணுக்கெறிதல் - நடுங்கல், வருத்தமாற்றாது மூச்சுவிடுதல். துணுக்கெனல் - அச்சக்குறிப்பு. துணுக்கை - துண்டு. துணுங்குதல் - வெருவுதல். துணை - அளவு, ஆதரவு, ஆயுதமுனை, இணை, உதவி, ஒப்பு,சகாயம், சல்லியம், சோடு. துணைக்கருவி - உபகருவி. துணைக்காரணம் - உபகரணம். துணைக்காரணவகத்திணை - உதவிக்காரணம் (உ-ம்) ஐம்பொறியுணர்ந்துந் தன்மையறிவுள்ளோர்நம்பார். துணைசெயல்விலக்கு - துணைசெய்வார் போற்கூறி விலக்குவது. துணைச்சொல் - உதவிச்சொல். துணைப்படை - உதவிப்படை. துணைமை - துணை. துணைவர் - உற்றோர், சகோதரர்,தோழர், மந்திரிகள். துணைவன் - உதவிக்காரன், கடவுள்,சகோதரன், தலைவன். தோழன்,மந்திரி. துணைவி - சகோதரி, தோழி, மனைவி. துண்டகன் - கபடன். துண்டகேரி - கோவைக்கொடி,பருத்திச்செடி. துண்டம் - கைவாய்க்கால், சாரைபபாம்பு, தண்டித்தல், துண்டு, பங்கு,பறவைமூக்கு, முகம், மூக்கு,யானைத்துதிக்கை. துண்டரிக்கம் - குரூரம், நெருக்கிடை. துண்டாயம் - பொற்பணம், பொன்மணல் துண்டி - கழி, கொப்பூழ், துண்டியென்னேவல், துண்டு, துண்டுநிலம், பறவை மூக்கு, முகம்.துண்டிகேரி, துண்டிகேரிகை - துண்டகேரி. துண்டிகை - கொப்பூழ். துண்டித்தல் - அறுத்தல், உறுத்திப்பேசல், கண்டித்தல், கிழித்தல்,தறித்தல், பங்கிடுதல், பலப்படுத்தல்,வெட்டல், துண்டாக்கல். துண்டிப்பு - உறுதிப்படுத்தல், துண்டித்தல். துண்டிவிநாயகன் - காசியில் விநாயகன். துண்டீரபுரம் - காஞ்சி. துண்டீரன் - காஞ்சியரசன், துண்டு - இரண்டுசிப்பம் புகையிலை,கையொப்பத்துண்டு, துணி,துணிக்கை, நஷ்டம், பங்கு, பற்றுச்சீட்டு. துண்டுக்கத்திரி - ஓர்விஷப்புழு. துண்டுபம் - ஓர்வகைப் பாம்பு. துண்டுவிழுதல் - நட்டம் விழுதல். துண்ணிடுதல் - திடுக்கிடுதல். துண்ணெனல் - அச்சக்குறிப்பு,விரைவுக்குறிப்பு. துதகாரம் - துப்பும்பொழு தெழுமொலி. துதமுகம் - தலையாட்டம், வேடாமைக்குத் தலை யசைத்தல். துதம் - அசைவு. துதி - துதியென்னேவல். தோத்திரம், துளை. துதிக்கை - துதிக்குதல், யானைத் துதிக்கை. துதித்தல் - வழுத்தல். துதிநிந்தை - இகழாவிகழ்ச்சி. துதிபூமி - யாகபூமி. துதிப்பு - துதி. துதியம் - சவரிலோத்திரம். துதியரிசி - அட்சதை. துதியை - இரண்டாந்திதி. துது - இருது. துதை - துதையென்னேவல், நெருக்கம். துதைதல் - நெருங்குதல். துதைத்தல் - நெருக்கல். துத்தகம் - துத்தம். துத்தநா - முசற்புல். துத்தநாகமணல் - ஓர் மருந்து. துத்தநாகம் - சத்த லோகத்தொன்று. துத்தபாஷாணம் - ஓர் பாஷாணம். துத்தபேனம் - பானுரை. துத்தமனா - முயற்புல், நீர்முள்ளி. துத்தமன் - ஓர்தூர்த்தன். துத்தம் - ஏழிசையினொன்று, கண்மருந்து, சமனிசை, தீ, நாய், நாவினாற்பிறக்குமிசை, நாணற்புல்,நாண்பாகப்புல், நாய்ப்பாகல்,நீர்முள்ளி, முல், யாழினோர்நரம்பு, வயிறு. துத்தல் - அனுபவித்தல், புசித்தல். துத்தன் - கபடன், தப்பிலி. துத்தாஞ்சனம் - துத்தம். துத்தாத்தி - பாற்கடல். துத்தாத்திசயனன் - விட்டுணு. துத்தாத்திதனையை - இலக்குமி. துத்தாரம் - ஊமத்தை. துத்தாரி - ஓர்விதசீலை, ஓர் வாச்சியம். துத்தி - உண்டற்குரியன, ஓர்செடி,தேமல், பாம்பின்படப்பொறி. துத்தியம் - துதி, வணக்கம். துத்தினை - வட்டத்திருப்பி. துத்து - கம்பளி, தப்பிதம், பொய்,வஞ்சனை. துத்தநாசம் - துத்தநாகம். துத்துமாற்று - எத்து, தந்திரம்,பொல்லாங்கு. துத்தூரம் - ஊமத்தை. துநீ - நதி, பறவைமுட்டை. துநீநாதன் - சமுத்திரம். துந்தகடம் - கோதுமைநொய். துந்தகூபிகை - கொப்பூழ். துந்தமம் - ஓர்பறை. துந்தம் - வயிறு. துந்தி - கொப்பூழ், வயிறு. துந்திகன் - தொப்பையுள்ளவன்,பெருவயிறன். துந்திகை - துந்தி. துந்திதன் - பெருங்கொப்பூழுள்ள வன். துந்திபன் - பெருவயிறன். துந்துபம் - கடுகு. துந்துபி - துந்துமி, பேரிகை. துந்துமாரம் - ஓர்புழு, பூனை. துந்துமாரி - முதலெழுவள்ளலிலொருவன். துந்துமி - ஐம்பத்தாறாவது வருடம்,ஓரசுரன், துளிமழை, பறைப்பொது, பேரிகை, பேரொலி.துந்துருபாவை, துந்துருமாலை - துடிப்புள்ளவர், துடிப்புள்ள வன். துந்துவாயன் - சேணியன். துபரம் - கொம்பில்லாப்பசு. துபாக்கி - துப்பாக்கி. துபாக்கிக்காது - துப்பாக்கிவத்தி வாய். துப்பம் - உதிரம். துப்பாக்கிவத்திவாய் - இரஞ்சகம். துபாசி - துப்பாசி, பாஷையை மறுபாஷயிற் சொல்பவன். துப்பகம் - நெய். துப்பட்டா, துப்பட்டி - ஓர்சீலை, மெல்லிய அங்கவஸ்திரம், படுக்கைமேல் விரிக்குந்துணி. துப்பரவு - துப்புரவு, முழுமை,மேன்மை. துப்பலிடுதல் - ஆணையிடுதல், எச்சலிடுதல். துப்பல் - உமிழ்நீர், துப்புதல். துப்பல்விடுதல் - ஆணையை விலக்கல். துப்பற்களாசி - துப்பற்பாத்திரம். துப்பாக்கி - துவக்கு, சுடுங்கருவி. துப்பாசி - பாஷையை மறு பாஷையிற் சொல்பவன். துப்பிரசம் - கருஞ்சொண்டி. துப்பு - அரக்கு, அறிவு, அனுபவம்,ஆயுதப்பொது, ஆராய்ச்சி, உணவு,கறை, குற்றம், சகாயம், சாமர்த்தியம், சிவப்பு, சுத்தம், சோதித்தல்,துணை, துணைக் காரணம்,துப்பென்னேவல், நெய், பகை,பவளம், பானம், பொலிவு, மிகுதி,மேன்மை, வலி, வன்மை, மெழுகு,முயற்சி, நுகர்பொருள். துப்புக்கேடு - சீர்கேடு. துப்புண்ணி - சீர்கேடி. துப்புதல் - உமிழ்தல். துப்புத்துருவிசாரித்தல் - ஒட்டினதுதப்பினது விசாரித்தல். துப்புரவு - அலங்காரம், அனுபவிப்பன, ஐம்பொறி நுகர்ச்சி,ஒப்புரவு, ஒழுங்கு, சுத்தம்,முழுமை, மேன்மை. துப்புளி - ஆயுதச்சாலை. துமாகாரன் - கொல்லன். துமால் - இறையின்மை. துமானம் - ஆபரணப்பெட்டி. துமி - சிறுதிவலை, துமியென்னேவல், மழைத்துளி. துமிதம் - நீர்த்துளி. துமித்தல் - அறுத்தல், துளித்தல்,வெட்டல். துமிப்பு - துமி, வெட்டு. துமிரம் - கருமை, மிக்கசிவப்பு. துமிலம் - பேரொலி. துமுலம் - முழப்பம், யுத்தம், ஒலி. தும் - உளப்பாட்டுத்தன்மைப் பன்மைவினைவிகுதி (உ-ம்) நடத்தும்,துகள், தும்மென் னேவல். தும்பகர் - தும்பை. தும்பகா - அத்தி, தும்பரம், தும்பராஷ்டகம், தும்பை, பேரரத்தை. தும்படைசி - நாடாவினோருறுப்பு. தும்பம் - வீணைக்காய். தும்பரம் - அத்தி. தும்பராஷ்டகம் - பேரரத்தை. தும்பல் - தும்மல். தும்பன் - துட்டன். தும்பாலை - சுரை. தும்பால் - துமால். தும்பி - ஓர்மீன், கரும்பு, கருவண்டு,கொத்தான், சுரை, துட்டை, தும்பிமரம், பனிச்சை, நெருஞ்சில், யானை,வண்டினாண்,வண்டு. தும்பிகரும்பு - பனிச்சை. தும்பிக்கை - துதிக்கை. தும்பிசேர்கீரனார் - புறநானூறுபாடிய புலவருளொருவர். தும்பிச்சி - துட்டை. தும்பியூதுதல் - நுரைதள்ளுதல். தும்பிலி - ஓர்மரம். தும்பு - கரும்பு, கயிறு, குறைவு, சிம்பு,நார், நெருஞ்சில், கொற்றான்,சுரபி. தும்புராட்டகம் - தும்பராஷ்டகம். தும்புரு - ஓர்கந்தருவன், வீணை,வீணைப்பரிட்சையுள்ளவன். தும்பை - ஓர்கொடி, ஓர்பூடு, ஓர்மீன்,கறவைப்பசு, கூட்டம், பொரு தல்,போர்வென்றோர்க்கு மாலை,வெற்றிலை. தும்பைமாலை - ஓர்பிரபந்தம் அஃதுதும்பைப்பூ மாலைசூடி மாற்றாரோடு பொருவதைக் கூறுவது,போர்வென்றோர்க்கு மாலை. தும்மட்டி - ஓர்செடி. தும்மல் - உயிர்ப்பு, தும்முதல், விடுதல். தும்மிட்டி - சிறுகுமட்டி, பேரீந்து. தும்மு - கொசுகு, தும்மல், தும்மென்னேவல். தும்முட்டி - ஓர்செடி, தும்முதல் - தும்மல். துயக்கம் - சோர்ச்சி, சோர்வு, அறிவு வேறுபடுதல். துயக்கு - சோர்வு, தளர்வு. துயங்குதல் - சோர்தல். துயம் - இரண்டு, கொடி. துயரடி - துன்பம், வாட்டம். துயரம் - கிலேசம், துன்பம், மழை. துயரி - யாழ்நரம்பு. துயருறுவோன் - தரித்திரன், துன்புறுவோன். துயர் - கிலேசம், துயரென்னெவல், துன்பம். துயர்தல் - கிலேசப்படல், துன்பப்படல். துயலுதல் - அசைதல், தூங்குதல். துயவு - அறிவின்றிரிபு. துயிலல் - நித்திரைசெய்தல். துயிலாதாராலயம் - மகமேரு. துயிலார் - தேவர். துயிலிடம் - நித்திரைசெய்யுமிடம்,மக்கட்படுக்கை. துயிலுணர்தல் - விழித்தல். துயிலுதல் - நித்திரைசெய்தல். துயிலெடை - துயிலெழும்பல். துயிலெடைநிலை - ஓர்பிரபந்தம்அஃது மனக்கவற்சி யின்றிப் பாசறைக்கட்டுயின்ற அரசர்க்குப்புகழ் கொடுத்தலைக் கருதிய சூதர்துயிலெழுப் புகலாகப் பாடுவது. துயில் - துயிலென்னேவல், நித்திரை. துயில்கூர்தல் - நித்திரைபண்ணல். துயில்போதல் - ஆறுதல், நித்திரையாதல். துயில்வு - நித்திரை. துயிறல் - நித்திரைசெய்தல், தங்குதல். துயிற்றுதல் - நித்திரையாக்கல். துயுலி - தொய்யில். துய் - அறிவின்றிரிபு, உணவு, துய்யென்னேவல், பஞ்சிற்றொடர்நுனி, பஞ்சு. துய்ச்சி - அனுபவம். துய்து - துய்யது. துய்த்தல் - அனுபவித்தல், நூனூற்றல்,புசித்தல். துய்ப்பு - அனுபவம், புசிப்பு. துய்மை - தூய்மை. துய்யது - சுத்தமானது. துய்யம் - சுத்தம். துய்யவன் - சுத்தமானவன். துய்யனையிரவியாக்கி - பவளப்புற்றுப் பாஷாணம். துய்யன் - பரிசுத்தன், வெள்ளிமணல். துய்யாள் - அழகுள்ளவள், சரசுவதி. துய்யான்குறுமணல் - வெள்ளிமணல். துய்யோன் - சுத்தமானவன். துரகதமூலம் - நீர்முள்ளி. துரகதம் - குதிரை. துரகம் - குதிரை, குதிரைப்பற்பாஷாணம், மனம். துரக்காரர் - பொறுப்பாளிகள். துரகாநகம் - குதிரைமுகமீன். துரகி - அச்சுவமூர்வோன். துரங்கப்பிரியம் - கோதும்பை துரங்கமம் - குதிரை. துரங்கம் - குதிரை, மனம். துரங்கவதனர் - கந்தருவர். துரங்காரி - எருமை. துரங்கி - குதிரைக்காரன். துரசதமூலம் - நீர்முள்ளி. துரடன் - துர்மார்க்கன். துரட்டு - துறட்டு. துரதிட்டம் - துர்ப்பாக்கியம். துர்த்துதல் - ஓட்டுதல், செலுத்தல்,தொடர்தல், செலுத்துதல், எறிதல். துரந்தரம் - பொதியெருது, வல்லபம். துரந்தரன் - பாரந் தாங்குவோன்,வல்லோன், தலைவன். துரபிமானம் - ஈனாபிமானம், வீண்பெருமை. துரப்பணம் - கம்மக்கருவியி னொன்று. துரப்பு - துரத்துதல், நீக்குதல். துரமி - தூதுளை, தொடரி. துரம் - சுமை, பொறுப்பு. துரவி - செம்மை. துரவு - கிணறு, தூது. துரவுச்சட்டம் - சூறாவளிச்சட்டம். துரா - பாரம். துராகதம் - துன்னடை. துராகன் - மிலேச்சன். துராகிருதம் - தீத்தொழில். துராசாரம் - ஒழுக்கத்தவறு, பவித்திரவீனம். துராசாரி - ஒழுக்க வீனன், ஒழுக்கவீனி. துராசை - துரிச்சை. துராத்தியம் - எளிமை. துராத்துமா - தீம்பன். துராபம் - பெறுதற்கரியது. துராயணல் - தடையின்றி வாசித்தல்,பாராயணம். துராயுதம் - அநீதி. துராரோகம் - பனை, பேரீந்து. துராலபம் - கிடைத்தற்கரியன,சிறுகாய்ஞ்சொறி. துராலாபம் - பழிமொழி. துராலிங்கன் - அகத்தியர் மாணவர்பன்னிருவரி லொருவர். துராலோகம் - பேரொளி. துராலோசனை - தீயோசனை. துராலோபம் - சிறுகாஞ்சொறி. துரால் - செற்றை, துரும்பு, துன்பம், துரி - எழுதுகோல், நூற்பாத் திருத்தும்படைமயிர். துரிகம் - சொர்ன பாத்திரம். துரிசி - துருசி, குற்றம். துன்பம். துரிசு - குற்றம், துருசி, துன்பம். துரிச்சை - பொல்லாவிருப்பு. துரிஞ்சில் - உசிலமரம் வெளவால்,கக்கர். துரிட்டம் - பெரும்பாவம். துரிதம் - ஓர் தாளம், கலக்கம். காலதசப்பிரமாணத் தொன்று அஃதுதுடியிரண்டு கொண்டது, கேடு,சீக்கிரம், துன்பம், பாவம். துரியத்தானம் - நாபிக்கமலம். துரியம் - சுத்தநிலை, சுமத்தல்,நான்காமவத்தை, பரமாத்துமா,பொதியெருது, சிரேட்டம். துரியர் - கடவுள், சுத்தநிலையிற்சலனமற்றிருப்போர். துரியாதீதம் - ஆன்மாக்கள் மிகத்தூய்மையாய் நிற்கும் நிலை,ஐந்தாமவத்தை. துரியாதீததானம் - மூலாதாரம். துரியோதனன் - துர்யோதனன். துரிலபம் - அருமையானது, பெறுதற்கரியது. துரீ - நெய்வார் கருவியி னொன்று. துரீயபாகம் - காற்பங்கு. துரீயம் - நான்காவது, பொதியெருது. துரீயவருணன் - சூத்திரன். துரீல் - சடுதி. துரீயன் - பிரமன். துரு - உபாயம், களிம்பு, கறை,பொன், இரும்பில் பிடிக்கும் கறை. துருகணன் - பிரமன். துருகா - ஆடு. துருகம் - மலைமேற் கோட்டை. துருக்கநாட்டுமணி - மரகதமணி. துருக்கபாதை - ஒடுங்கியபாதை. துருக்கபுரம் - அரணானநகர். துருக்கம் - ஒடுக்கவழி, கத்தூரி,கத்தூரி மிருகம், கலக்கம், காடு,குங்குமமரம், சேரற்கரியவிடம்,பஞ்சவிரையினொன்று, மலை துருக்கர் - ஓர் பாடைக்காரர்,துலுக்கர். துருக்கல் - கீச்சுக்கிட்டம். துருக்கன் - ஓரசுரன். துருக்கி - துருக்கதேயம். துருக்கு - துருக்கருக்குரியது, துலுக்கப்பாஷை, மிலேச்ச சாதி. துருக்கை - துற்கை. துருசி - ஓர் மருந்து, களிம்பு, சீக்கிரம். துருசிக்குரு - நவசாரம், துருசு - மயிற்றுத்தம், மாசு. துருணம் - கத்தி, துரோணாசாரியன்வில், தேள், வண்டு, வில். துருணன் - சிக்கனக்காரன். துருணி - தேள், பெண்ணாமை,வின்னாண். துருதம் - துரிதம். துருதுருத்தல் - விரைதல். துருதுருபாவை - ஆடுமாலை. துருதுருப்பு - சுறுசுறுப்பு. துருதுரும்பை - பிள்ளைகள் விளை யாட்டினொன்று. துருதுரெனல் - விரைவின் குறிப்பு. துருதை - சுறுசுறுப்பு, சொறிவு. துருத்தி - ஆற்றிடைக்குறை, ஊதுந்துருத்தி, தோல், நீர்த்துருத்தி,மட்டத்துருத்தி. துருத்தூரம் - ஊமத்தை. துருநகம் - முள். துருந்தல் - ஆராய்தல், துளைபருக்கப்பண்ணல். துருபதன் - துரோபதை தந்தை,பாஞ்சால தேசத்தரசன். துருபவருணி - காட்டாமணக்கு, துருப்பணம் - துரப்பணம். துருப்பிடித்தல் - ஆராய்ந்து பிடித்தல், கறைபிடித்தல். துருமசிரேட்டம் - பனை. துருமநகம் - முள். துருமம் - கற்பகதரு, குங்குமமரம்,மரப்பொது, மணக்கலக்கம். துருமரம் - முள். துருமவருணி - காட்டாமணக்கு. துருமவியாதி - கொம்பரக்கு. துருமனகம் - முள். துருமாரி - யானை. துருமேசுவரம் - பனை. துருமோற்பலம் - கோங்குமரம். துரும்பம் - பூ முடித்த கொண்டை. துரும்பர் - ஈனர், பறையர் முதலானவர்க்கு வண்ணார். துரும்பு - திரணம், கூளம். துருவகம் - குற்றி. துருவங்கட்டுதல் - சூத்திர முண்டாக்குதல், வகைபண்ணல்.துருவசக்கிரம், துருவச்சக்கிரம் - துருவத்திற்கு இருபத்து மூன்றரைப் பாகையளவி னிற்பதுதுருவணம், துருவண்ணம் - வெள்ளி. துருவதாளம் - நவதாளத் தொன்று. துருவமண்டலம் - துருவபதம். துருவம் - அசையாநிலை, உபாயம்,ஒடுக்க வழி, கிரகநடையின்தூரம்,கூத்தின் விகற்பம், சத்ததாளத்தொன்று, சூத்திரம், துருவ நட்சத்திரம், நிச்சயம், நித்தியம், நித்தியயோகத்தொன்று, நியாய சாத்திரம், நிலைபேறு, மோக்கம்,வட்டத்தின்முனை, ஒப்பு, திராய். துருவம்பண்ணுதல் - துருவங்கட்டுதல். துருவயம் - அளவு. துருவலகு - துருவுமணை. துருவல் - ஆராய்தல், கடைதல்,துளைத்தல், தேடுதல், பிறாண்டுதல், துருவுதல், துருவிய பொருள். துருவன் - அட்டவசுக்களி லொருவன், சிவன், திருமால், பிரமன்,முனையினிற்கு நட்சத்திரம். துருவாசன் - ஓரிருடி. துருவாடு - செம்மறியாடு. துருவாட்டி - சிற்றேலம். துருவாதி - காட்டாமணக்கு. துருவு - துருவல், துருவென்னேவல்,துளை, துருவாடு. துருவுதல் - கடைதல், துளைத்தல்,தேடுதல், தொடர்தல், பிறாண்டுதல், ஆராய்தல்.துருவுபலகை, துருவுமணை - தேங்காய்துருவுமோர் கருவி. துருவை - செம்மறியாடு, கீதவுருப்புளொன்று, ஆடு. துருளக்கம் - குந்தரிக்கம். துரூஉ - செம்மறியாடு. துரை - அதிகாரி, மேன்மகன், அரசன்,தேகம், மிகுதிப்பாடு.துரைசாணி, துரைசானி - மேன்மகள். துரைச்சி - உலோக நிமிளை, துரைசானி. துரைத்தனகாரர் - அதிகார முள்ளோர். துரைத்தனம் - அதிகாரம். துரைப்பெண் - துரைசாணி. துரைமகள் - மேன்மகள். துரைமகன் - மேன்மகன். துரோகசிந்தனம் - துராலோசனை, பாதக நினைவு. துரோகம் - கலக்கம், குற்றம், கொடும்பாவம், தப்பிதம், பாதகம். துரோகாடன் - எத்தன், வேட்டைகாரன். துரோகி - இரக்கமற்றவன், கொடும்பாவி. துரோட்டி - துரட்டுக்கோல், தோட்டி.துரோணகாகம், துரோணகாகலம் - காகம். துரோணகை - வெண்ணொச்சி. துரோணமுகம் - துரோணீமுகம். துரோணம் - எண்காற்புள், ஓர் மரம்,காக்கை, சத்தமுகிலி னொன்றுராசி, தும்பைச்செடி, துலை வாய்,பதக்கென்னுமோரளவை, வில்,சரபம். துரோணன் - குருகுலத்தரசர் குரு. துரோணபர்வம் - பாரதத்தில் பதினெட்டு பர்வதத்தி லொன்று. துரோணாசாரியன் - பரத்வாஜபுத்திரன். துரோணிகை - ஆவிரை. துரோணிதலம் - தாழை. துரோணீமுகம் - நானூறு கிராமத்திற்றலைப்பட்டினம். துரோதரம் - சூதாட்டு. துரோபதை - பஞ்சகன்னிகளினொருத்தி, பாண்டவர் மனைவி.துரோபவம் - மயக்கு. துர் - தீதுப்பொருடரு மோருப சருக்கம். துர்க்கதி - கெட்டநடை, தரித்திரம்,நரகம். துர்க்கதிநாசிநி - துர்க்கை. துர்க்கந்தம் - கெட்ட நாற்றம். துர்க்கமம் - பெறற்கரியது. துர்க்கம் - துருக்கம். துர்க்கி - பார்வதி. துர்க்குணன் - தீயன். துர்க்கை - கொற்றவை, பூரநட்சத்திரம், பார்வதி. துர்ச்சநன் - துஷ்டன். துர்ச்சனம் - செருக்கு,மோகலீலை,வன்மம். துர்த்தமன் - துத்தமன். துர்த்திநம் - கெட்டநாள், மழை. துர்த்தூரம் - துருத்தூரம். துர்ப்பறிகம் - சிறுகாய்ஞ்சொறி. துர்ப்பலம் - துற்பலம், பலகீனம். துர்ப்பிட்சம் - துற்பிட்சம், பஞ்சம். துர்ப்பீசம் - துற்பீசம். துர்மதி - துர்ப்புத்தி, துன்மதிவருடம். துர்மாமிசம் - துன்மாமிசம். துர்மார்க்கம் - துன்மார்க்கம். துர்முகி - துன்முகி. துர்மேதை - மந்தபுத்தி. துர்லபம் - துரிலபம், கிடைத்தற்கரியது.துர்வர்ணகம் ,துர்வர்ணம் - வெள்ளி. துர்வாதம் - நியாயக்கேடான வாதம். துர்விதன் - துர்ஜநன். துர்விருத்தன் - துஷ்டன். துலக்கம் - தெளிவு, பளபளப்பு,பிரகாசம். துலக்கல் - விளக்கல், துலக்குதல். துலக்கு - துலக்கென்னேவல், பிரகாசம். துலக்குதல் - பிரகாசிப்பித்தல், மினுக்குதல், வெளிப்படுத்தல். துலங்கல் - ஒளிசெய்தல், துலங்குதல். துலங்கு - துடங்கு, துலங்கென்னேவல், தொழுமரம். துலங்குதல் - தெளிதல், பிரகாசித்தல். துலம் - கனம், கோரை, நிறை, நீர்முள்ளி. துலவம் - பஞ்சு. துலா - ஏற்றமரம், ஒன்றற்குச் சரியாந்தன்மை, கைமரம், துலா ராசி,நிறைகோல், பண்டிக்கோல்,பாகம், ஒப்பு, அளவு. துலாகோசம் - துலாபரீட்சை. துலாகோடி - ஓர் நிறை, காலணியினொன்று, பத்துக்கோடி. துலாக்கட்டை - திராவி. துலாக்கொடி - பட்டைக்கொடி. துலாக்கோல் - தராசுக்கோல், துலாப்படி. துலாசூத்திரம் - துலாப்பிரகிருகம். துலாதடம் - சவள்மரம். துலாதரன் - சூரியன். துலாதாரம் - துலாக்கோல், துலைத்தட்டின் கயிறு. துலாதாரன் - வியாபாரி. துலாந்து - ஓர்வகை விட்டம். துலாபரீட்சை - குற்றவாளியை நிறுத்தறிதல். துலாபாரதானம் - ஓர் தானம். துலாபாரமேறுதல் - தன் நிறைக்குப்பொன்கொடுக்கத் தன்னைநிறுத்தல். துலாபுருஷதானம் - துலாபார தானம். துலாபுருஷன் - நிறுக்கப்பட்டவன். துலாப்படி - நிறைகோல். துலாப்பிரகாரம் - துலாக்கோலின்கயிறு. துலாமானம் - நிறை. துலாம் - ஏற்றமரம், ஐந்துவீசைகொண்ட நிறை, ஓரிராசி, நிறைகோல், நூறுபலம்கொண்ட நிறை. துலாம்பரம் - தெளிவு, விளக்கம்.துலாவிஷுவம், துலாவிடுவம் - துலாராசியிற் சூரியன் வருங்காலம். துலி - ஓர் முனி, பெண்ணாமை. துலிதம் - அசைவு, ஒப்பு, நிறுக்கப்பட்டது. துலிநி - இலவமரம். துலிபலை - இலவு. துலியாசுனம் - செம்முருங்கை. துலுக்கப்பூ - ஓர்பூ துலுக்கர் - துருக்கர், மகமதியர். துலுக்காணம் - ஓர் தேயம். துலுக்காணியம் - துலுக்கராச்சியம். துலுக்கிச்சி - துலுக்கப்பெண். துலுக்கு - அசைப்பு ஓர் தேசம், ஓர்பாடை, துலுக்கென்னேவல். துலுக்குச்செவ்வந்தி - ஓர் செவ்வந்தி. துலுக்குதல் - குலுக்கல். துலை - ஒப்பு, கனம், துலா, துலாராசி, துலையென்னேவல், தூரம்,நிறை, நீரிறைக்குந்துலை, நூறுபலம், மடை முகம், அளவு. துலைக்கிடுதல் - தூரப்படுதல். துலைதல் - தொலைதல். துலைத்தல் - தொலைத்தல்.துலைப்பள்ளம், துலைமுகம், துலைவாய் - துலைக்கிடங்கு துலோபம் - கருஞ்சுண்டி. துல்லபம் - அருமை, எட்டாதது,மேன்மை. துல்லம் - பேரொலி,துல்லிபம், துல்லிமை - மேன்மை. துல்லியபக்கம் - ஒத்தபக்கம். துல்லியபலம் - சரிபலம். துல்லியபானம் - பலரொன்றிக் குடித்தல், துல்லியம் - அப்பிரகம், உவமை,ஒருமிப்பு, சுத்தம், ஒப்பு. துல்லியரூபம் - ஒரேமாதிரி. துல்லியவிருத்தி - ஒத்த தொழில். துல்லியோகிதாலங்காரம் - ஒப்புமைக்கூட்டவணி. துவக்கம் - ஆரம்பம். துவக்கல் - கட்டல், தொடங்கல், துவக்குதல். துவக்கவிவரம் - செவ்வலரிசி. துவக்கு - உடல், கட்டு, சங்கிலி,சம்பந்தம், துப்பாக்கி, துவக்கென்னேவல், தோல், பிணக்கு. துவக்குதல் - துவக்கல். துவங்கல் - தொடங்குதல். துவங்கிசம் - சேதம், நட்டம். துவங்குதல் - துவங்கல். துவசங்கட்டுதல் - கொடிகட்டுதல்,முயற்சியாய் நிற்றல். துவசப்பிரகரணம் - காற்று. துவசம் - அடையாளம், கொடி,விருதுக்கொடி. துவசர் - கள் விற்போர். துவசல் - தொடிசு. துவசாரோகணம் - கொடியேற்றம். துவட்சி - அசைவு, பலவீனம், வறட்சி. துவட்சிகை - கடுப்பிஞ்சு. துவட்டர் - கம்மாளர், தச்சர். துவட்டல் - துடைத்தல், துவட்டத்தறி, துவட்டுதல். துவட்டன் - துவாதசாதித்தரிலொருவன்.துவஷ்டா, துவட்டா - விச்சுவகன்மா. துவட்டாநாள் - சித்திரைநாள். துவட்டு - துவட்டென்னேவல், துவள்வு. துவட்டுதல் - செறிவித்தல், துடைத்தல், துவளச்செய்தல். துவணீர் - துவண்டநீர். துவண்டை - காஷாயப் புடைவை. துவத்தம் - விழுதல். துவந்தம் - இரட்டித்தது, இரண்டு,ஒன்றைத் தொடர்ந்தது. தொந்தம், நெருக்கம். துவந்தயுத்தம் - விடாத போர். துவந்தனை - அலைவு, இரட்டித்திருப்பது, தடை. துவந்தித்தல் - ஒன்றற்கொன்றுதொடர்ந்திருத்தல், தொந்தித்தல்.துவந்துவசரம், துவந்துவசாரி - சக்கிரவாகம். துவந்துவம் - இரண்டு, ஒன்றற்கொன்று தொடர்ந்திருப்பது,சோடு, புணர்ச்சி, வாது. துவம் - அசையாநிலை, இரண்டு,சத்துவம். துவயம் - இரண்டு. துவயாதிகன் - பரிசுத்தன். துவயார்த்தம் - உபயார்த்தம். துவர - மிக. துவரம் - துவர்ப்பு. துவராபதி - துவாரகை. துவரி - காஷாயம். துவரை - ஓர் பயறு, துவாரகை. துவரைக்கோமான் - இடைச்சங்கப்புலவருளொருவர். துவரைமல்லி - புஷ்பராகத்தரிப்பு. துவர் - சிவப்பு, துவரென்னேவல்,துவர்ப்பு, பகை, பவளம், விறகு. துவர்க்கட்டி - காய்ச்சுக்கட்டி. துவர்க்காய் - பாக்கு. துவர்ச்சிகை - கடுக்காய்ப்பிஞ்சு. துவர்தல் - திமிர்தல், தெளிதல்,பிரிதல், துவர்த்தல் - துவர்ப்புக் கொள்ளுதல்,பூசுதல். துவர்ப்பு - அறுசுவையினொன்று,பத்து.துவலல், துவலுதல் - தீவிரித்தல்,துளிவிடுதல். துவலை - துளி, மழை, மழைத்தூவல். துவல் - சீக்கிரம், துவலென்னேவல்.துவளல், துவளுதல், துவள்தல் - அசைதல், ஒசிதல், ஒட்டுதல், காய்தல்,வளைதல், வாடல், அலைதல். துவள்வு - துவட்சி. துவறல் - துவலைவிடுதல், விரைவு. துவனம் - அக்கினி, ஒலி. துவனி - ஒலி, துவண்டிருப்பது. துவனிக்கிரகம் - காது, கேள்வி. துவனை - தொனித்தல். துவன் - வட்டத்திருப்பி. துவன்றல் - சாதல், நிறைதல், நெருங்கல், பொலிவு. துவா - இரண்டு. துவாட்சரி - இருவருக்க வெழுத்தான் முடியுமோர் கவி. துவாதசகரன் - குமரன், வியாழம். துவாதசம் - பன்னிரண்டு. துவாதசவிலோசனன் - குமரன். துவாதசாங்கிசம் - இராசியைப்பன்னிரண்டாய்ப் பகிர்தல். துவாதசாதித்தர் - பன்னிரு சூரியர்,அவர்தாத்துரு, சக்கரன், அரியமன், மித்திரன், வருணன், அஞ்சுமான், இரணியன், பகவான்,திவாச்சுவரன், பூடன், சவித்திரு,துவட்டன், இவர் மேடமுதல் மீனமீறாய் விராசியிலவ்வம் மாதத்திற்புகுந்து சூரியனுக்கு முறையேசெல்வர்.துவாதசாந்தம், துவாதசாந்திரம் - பன்னிரண்டாமவத்தை. துவாதசாவத்தை - உயிர் வேதனைபன்னிரண்டு. துவாதசான்மா - சூரியன். துவாதசி - பன்னிரண்டாந்திதி.துவாஸ்திததகன், துவாஸ்தன், துவாஸ்திதன் - துவாரபாலன். துவாந்தம் - இருள், நரகம், வினையெச்சம். துவாந்தாராதி - சூரியன். துவாபரம் - மூன்றாம் யுகம். துவாப்புலு - இருபது. துவாரகண்டகம் - கதவு. துவாரகம் - தீவரம், துவாரகை. துவாரகாபுரி - துவாரகை. துவாரகேசன் - விட்டுணு. துவாரகை - ஓர்பட்டினம், சத்தபுரியிலொன்று. துவாரசாகை - சிறகுகதவு. துவாரத்தம்பம் - கதவுநிலை. துவாரபாலகன் - கடைகாப்போன்,வாயில் காப்போன். துவாரபிண்டி - வாசற்படி, துவாரம் - துளை, வழி, வாயில். துவாரயந்திரம் - பூட்டு.துவாரவதி, துவாராவதி - துவாரகை. துவாரிகன் - துவாரபாலகன். துவாரிகை - துவாரவதி. துவாலை - உதிரப்பெருக்கு, தீட்டு,பூச்சு, பூச்சுமருந்து. துவாலையிடுதல் - பூசுதல். துவாளிப்பு - குடைவு. துவானம் - ஒலி. துவி - இரண்டு. துவிகபா - வட்டத்திருப்பி. துவிகன்மக்கத்துருப்பிரயோகம் - செ ய ப்ப டுபெ hருளிரண்டுடைவினைமுதலின் முடிபு. துவிகன்மக்கன்மணிப்பிரயோகம் - செயப்படுபொரு ளிரண்டுடைச்செயப்படு பொருளின் முடிபு. துவிகாபா - வட்டத்திருப்பி. துவிகாயாசின் - செம்முருங்கை. துவிகிருத்தியை - கருப்பிணி. துவிசபதி - சந்திரன். துவிசபம் - கவைக்குளம்புள்ளது. துவிசம் - பல், முட்டையிற் பிறப்பன. துவிசவிரணம் - பற்கொதி. துவிசன் - பிராமணன், இருபிறப்பாளன். துவிசாதி - பிராமணர், முட்டையிற்பிறப்பன. துவிசாயணி - பூணூல் துவிசாரகன் - அனந்தன், கருடன்,சந்திரன். துவிசாலயம் - பிராமணவீதி, மரப்பொந்து. துவிசிகுவன் - கள்வன், கோட்சொற்காரன், பாம்பு. துவிசோத்தமன் - பிராமணன். துவிட்டத்துரு - தண்ணீர்மிட்டான். துவிஷ்டம் - பித்தளை. துவிதகேந்திரம் - கால்வட்டத்திற்குறைவாயிருப்பது. துவிதசம் - இருபது. துவிதபாவனை - இரண்டாய்ப்பாவிப்பது. துவிதம் - அசைவு, இரண்டு, இருமடங்கு. துவிதயம் - சோடு. துவிதவாதம் - சிவனுஞ்சீவனும்வேறெனக்கொள்ளுஞ்சமம். துவிதாகதி - நண்டு. துவிதாதகி - முதலை துவிதாது - விநாயகன். துவிதாத்மதம் - சாதிக்காய். துவிதியகேந்திரம் - துவிதகேந்திரம். துவிதியம் - இரண்டாவது, இரண்டு. துவிதியை - கோரோஜனம். துவிதீயன் - புத்திரன். துவிதேகன் - விநாயகன். துவிபடி - துப்பட்டி. துவிபமதம் - யானைமதம். துவிபம் - யானை. துவிபாதசெந்து - இருகாலுள்ளது. துவிபுடம் - கடலை. துவிபுத்துரு - தண்ணீர்விட்டான். துவிமுகம் - துவிபம். துவிமுகாதி - இருதலைப் பாம்பு. துவிமுகை - நீர்ச்சாடி. துவிரசனம் - இரண்டுமுறை சாப்பிடுதல், பாம்பு. துவிரதம் - யானை. துவிரதாந்தகம் - சிங்கம். துவிரம் - தேனீ. துவிராபம் - யானை. துவிருடை - இரண்டுதார முள்ளவன். துவிருத்தி - இரண்டுபடச் சொல்லல்,கூறியது கூறல். துவிரேபம் - மிருகம், வண்டு. துவிரேபாரி - சண்பகமரம். துவிலிங்கி - சத்திரியன். துவிவசனம் - இருவசன மிணைந்தது,இருமை யுணர்த்துஞ் சொல். துவிவிதாரி - விட்டுணு. துவிவேசரை - ஓர்விதப்பண்டி. துவீபசித்திரம் - சிறுத்தைப்புலி. துவீபம் - தீவு, புலித்தோல். துவீபவதி - ஓர்நதி, பூமி.துவேசம், துவேஷம் - பகை, வெறுப்பு.துவேசித்தல், துவேஷித்தல் - வெறுத்தல். துவை - இறைச்சி, ஒலி, துவையென்னேவல், துளசி, பருகுதற்குரியன,புண்ணாக்கு, புளிங்கறி. துவைதம் - துவிதம். துவைதல் - துவைக்கப்படுதல். துவைத்தல் - ஒலித்தல், துவைக்குதல், தோய்க்குதல், பானம் பண்ணுதல், பேரொலி, வாச்சியம்,வாசித்தல், விடுதல். இடித்தல். துவைபாயனன் - வியாசன். துவைப்பு - இடித்தல், ஒலித்தல்,துவைக்குதல், துவையல், ஆரவாரம். துவைமாதுரன் - விநாயகன். துவையல் - ஓர் பச்சடி, சுண்டாங்கி,துவைக்கப்பட்டவை. துவ்வல் - அனுபவித்தல், புசித்தல்.துவ்வாதார், துவ்வார் - தரித்திரர். துவ்வாமை - அநனுபவம், தரித்திரம்,பொறாமை, வெறுப்பு. துவ்வு - அனுபவம், உணவு, ஐம்பொறி, நுகர்ச்சி, துவ்வென்னேவல். துழத்தல் - அளைதல், கலத்தல். துழவுதல் - துழாவுதல். துழவை - துளவை, மூங்கிற்பற்றை. துழனி - ஒலி, பறவைக்கூட்டத்தொலி. துழா - துழாவுதல், துழாவென்னேவல். துழாய் - துளசி. துழால்மௌலி - விட்டுணு. துழாய்வனம் - துழாய். துழாவல் - ஆராய்தல், கலத்தல்.பரவுதல், வெட்டல், துழாவுதல். துழாவாரம் - ஊர்பேச்சுப் பேசுகை. துழாவு - துழாவுதல்,துழாவென்னேவல். துழாவுதல் - துழாவல். துழைத்தல் - பரப்புதல். துளக்கம் - அசைவு, அச்சம். ஒலி, ஒளி,கலக்கம், சோதிநாள், வருத்தம். துளக்கல் - அசைத்தல், ஒளி, செய்தல். துளக்கு - அசைவு, துளக்கென் னேவல். துளக்குதல் - துளக்கல். துளங்கல் - அசைதல், அச்சப்படுதல்,ஒளிசெய்தல்,கலங்கல், துளங்குதல். துளங்குதல் - அசைதல். துளங்கொளி - கேட்டைநாள், மிக்கஒளி. துளசி - ஓர்பூச்செடி, ஓர்பெண். துளசிதீர்த்தம் - துளசிபத்திர நீர். துளசிமணி - ஓர்மணி. துளசிமாடம் - துளசி மண்டபம். துளசிமாலை - துளசிமணி மாலை. துளபம் - துளசி. துளம்பிக்கிரி - ஆதொண்டை, காற்றோட்டி, திப்பிலி. துளவம் - துளசி. துளப்பு - வயிறு. துளவன் - சோரபாஷாணம், திருமால். துளவி - திப்பிலி. துளவு - துளவம். துளவை - துளை, மூங்கிற்பற்றை. துளாரி - நெய்வார்கருவியினொன்று. துளாவாரம் - தொளாவாரம். துளி - திவலை, துளியென்னேவல்,பெண்ணாமை, மழை, மழைத்துளி. துளித்தல் - துளியாய்விழுதல், மழைபெய்தல். துளிப்பு - துளித்தல். துளிமழை - திவலையாய்ச்சொரியுமழைதல். துளிர் - தளிர், துளிரென்னேவல். துளிர்த்தல் - செழித்தல், தளிர்த்தல். துளிர்ப்பு - தளிர்ப்பு. துளுர்ப்பல் - கலக்குதல். துளும்பல் - அலைதல், எழும்பல்,ஒளி செய்தல், திமிர்தல். திமிறல்.துள்ளுதல், அசைதல், கலங்குதல். துளுவம் - தேய மைம்பத்தாறினொன்று, பதினெண் பாடையினொன்று. துளை - துவாரம், துளையென்னேவல்,மூங்கில். வாயில். துளைக்கருவி - சின்ன முதலியதுளையுடை வாத்தியம். துளைக்கை - யானைத்துகிக்கை. துளைச்செவி - உட்செவி, துளைக்காது. துளைதல் - அனுபவித்தல். கலத்தல்,சுளியோடுதல். துளைத்தல் - துளைக்குதல். துளைப்பு - துளைக்கை. துளையடித்தல் - துளைத்தல். துளையரியம் - ஊதுகொம்பு. துள்ளம் - துளி, துள்ளு. துள்ளலோசை - கலிப்பாவினோசை. துள்ளல் - ஆடு, கலிப்பாவோசை,குதித்தல், கூத்து, கொசுகு, விரைந்துபாடுமிசை, சுள்ளுதல். துள்ளாட்டம் - துள்ளு. துள்ளி - திவலை, துளி. துள்ளு - குதிப்பு, துள்ளென்னேவல். துள்ளுதல் - குதித்தல். துள்ளுபூச்சி - தெள்கு. துறக்கம் - தேவலோகம்.துறடு, துறட்டி - யானைத்தோட்டி. துறட்டிச்செடி - ஓர் முட்செடி. துறட்டு - சுறட்டு, தொந்தரை. துறட்டுத்தடி - கொழுவுதடி. துறட்டுவாதம் - பிடிவாதம். துறத்தல் - துறவு, நீக்கல், வெறுத்துவிடுதல், விடுதல்.துறந்தார், துறந்தோர் - நீத்தோர். துறப்பணம் - துளைக்குமூசி. துறப்பு - துறவு, துறவுகோல். துறவர் - முனிவர். துறவறம் - இல்லறந் துறத்தல், அஃதுநாலாச்சிரமத் தொன்று, இல் லம்,துறந்த நிலை. துறவி - நீத்தோன், முனிவன். துறவு - இல்லறநீங்கி நிற்றல், விடுதல். துறவுபூணுதல் - துறவறத் துட்படல்,துறவு கொள்ளுதல். துறவொழுக்கம் - சந்நியாச தருமம். துறவோர் - நீத்தோர். துறவோருரைக்குஞ்செயல் - புராணமோதல். துறு - உணவு, கூட்டம், செம்பூரான்,துறுவென்னேவல், நெருக்கம். துறுகல் - சலதாரை முதலிய வடைக்குங்கல். துறுக்கல் - திணித்தல், துருக்கல். துறுக்குதல் - செறுமுதல். துறுட்டி - சிற்றேலம். துறுதல் - நெருங்குதல், புசித்தல். துறுத்தல் - நெருக்குதல். துறுபவம் - நெருக்கம், திணித்தல். துறுப்பு - திணிக்கை.துறுமல், துறுமுதல் - திரட்சி,நெருங்கல். துறுவல் - நெருங்கல், புசித்தல், துறுவுதல். துறுவு - உணவு, துறுவென்னேவல்,நெருக்கம். துறுவுதல் - உண்ணல், நெருங்குதல். துறை - ஆறு, இடம், இரங்குதுறை,எல்லை, கலித்துறை, காரியம்,தங்குமிடம், நீர்த்துறை, நூல்,பாவினத்தொன்று, வழி. துறைத்தோணி - துறையிலேற்றற்குரிய தோணி. துறைநியாயம் - அகப்பொருள்புறப்பொருட்டுறை மரபு. துறைபிடித்தல் - உபாயந்தேடல். துறைபெயர்தல் - துறைமுகத்தை விட்டுப் போதல். துறைபெய்தல் - நதியாடுவித்தல்.துறைபோகுதல், துறைபோதல் - நூல்கற்றறிதல், முடிவறிதல், முற்றக்கற்றறிதல். துறைப்பேச்சு - சொந்தப்பேச்சு. துறைமாலை - பகைத்திறச் செய்கைக்குரிய மாலை. துறைமுகம் - ஏற்றமிறக்கஞ் செய்யுந்துறை, ஏற்றுமதி இறக்குமதிசெய்யுந்துறை. துறைவல்லோர் - கற்றோர். துறைவன் - நெய்தனிலத் தலைவன். துறோட்டி - தோட்டி. துற்கதம் - உபத்திரவம், வறுமை. துற்கதி - ஒடுங்கிய பாதை, தரித்திரம்,துற்சீவியம், நரகம். துற்கந்தம் - கெட்ட வாசனை. துற்கபுரம் - துருக்கபுரம். துற்கமார்க்கம் - துருக்க பாதை. துற்கம் - துருக்கம். துற்கருமம் - தீவினை, பாவம். துற்கன் - துருக்கன். துற்கன்மம் - துற்கருமம். துற்காதேவி - துருக்கை. துற்காநவமி - புரட்டாதிமாதப்பூருவபக்கத்து நவமி. துற்கிருதகருமம் - ஆகாமியம். துற்கிருதம் - பாவம். துற்கீர்த்தி - அவகீர்த்தி. துற்குணம் - தீக்குணம். துற்குறி - அவக்குறி. துற்கை - துற்காதேவி. துற்சகுணம் - துற்குறி. துற்சரிதம் - தீத்தொழில். துற்சனம் - துட்சணம், துராசாரம்,பொல்லாங்கு. துற்சனவியோகம் - துன்னடை. துற்சனன் - துட்டன், தூர்த்தன். துற்சாதம் - அதிட்டவீனம், துற்பிறப்பு. துற்செய்கை - அவச்செய்கை. துற்பகை - குணங்கெட்ட மனைவி. துற்பரிகம் - சிறுகாஞ்சொறி. துற்பலம் - பலவீனம். துற்பலன் - தீங்கு, மத்திம பலன். துற்பாக்கியம் - நிர்ப்பந்தம். துற்பிட்சம் - பஞ்சம். துற்பீசம் - நல்விதியற்ற பிள்ளை. துற்புத்தி - பொல்லாத புத்தி. துற்போதனை - தீயுபதேசம். துற்றல் - உண்டல், குவிதல், நிறைதல், நெருங்கல், துற்றுதல். துற்றி - உண்ணப்படுவது. துற்று - உணவு, சோறு, துறுகல்,துற்றென்னேவல், நெருக்கம். துற்றுதல் - குவிதல், துறுத்தல், நிறைதல், நெருக்கல், நெருங்குதல். துற்றுமாற்று - திரியாவரம். துனாவி - திப்பிலி. துனி - அச்சம், கோபம், சினம்,துன்பம், நோய், புலவிநீட்டம்,யாறு, வெறுப்பு. துனித்தல் - வெறுத்தல். துனிநாதம் - கடல்.துனை, துனைவு - விரைவு. துன் - துர், துன்னென்னேவல்,நெருக்கம். துன்பம் - உபத்திரவம், கிலேசம்,நோய், வருத்தம். துன்பிலி - கடவுள். துன்பு - துன்பம், துன்புறுதல் - வருந்துதல். துன்மதி - அவமதி, ஐம்பத்தைந்தாவதாண்டு. துன்மரணம் - அவச்சாவு, இலக்கினத்திற்கு எட்டாமிடம். துன்மனம் - தீமனம். துன்மாதிரி - துற்பாவனை. துன்மாமிசம் - ஊழ்த்த விறைச்சி,ஓர்நோய். துன்மார்க்கம் - தப்புவழி. துன்மித்தல் - வருந்துதல். துன்முகன் - குதிரை, சிங்கன். துன்முகி - ஓரரக்கி, முப்பதாவதுவருடம். துன்மை - தின்மை.துன்றல், துன்றுதல் - நெருங்கல். துன்னகாரர் - தையற்காரர். துன்னநாயகன் - தையற்காரன். துன்னப்போத்து - எருமைக்கடா. துன்னம் - கிழிவு, தைத்தல், தையல்,துளைத்தல். துன்னர் - சக்கிலியர், செம்மார்,தையற்காரர், தோல்வினை மாக்கள். துன்னலர் - பகைவர். துன்னல் - கிட்டல், தைத்தல், நெருங்கல், துன்னுதல். துன்னவாயன் - தையற்காரன்.துன்னாதார், துன்னார் - பகைவர். துன்னிமித்தம் - துற்சகுனம். துன்னியார் - அடுத்தோர், சிநேகிதர். துன்னீதி - துன்னடை. துன்னீர் - எச்சில். துன்னு - இறைச்சி, துன்னென்னேவல்,நெருக்கம், பிதுக்கம், முதுகு. துன்னுதல் - கிட்டுதல், தைத்தல்,நிறைதல், நெருங்குதல், பிதுங்கல். துன்னுநர் - அடுத்தோர், சிநேகிதர், துன்னர். துன்னூசி - தையலூசி. துன்னெறி - கெட்ட நடை. தூ தூ - ஓரெழுத்து, சீ, சுத்தம், தசை,தூவென்னேவல், பகை, பற்றுக்கோடு, புள்ளிறகு, வெண்மை,வலி. தூகம் - காற்று. தூகுதல் - அலரிடல். தூக்கணங்குருவி - ஓர்குருவி. தூக்கணம் - உறி, தூக்கணங் குருவி,தொங்கல். தூக்கணாம்குருவி - தூக்கணங்குருவி. தூக்கம் - அயர்ச்சி, ஆபரணத்துடக்கு,காதணி, சல்லியம், சோம்பு,தணிவு, தூக்கணம், நித்திரை,மந்தம், வடிவு, வதக்கம், வாட்டம். தூக்கல் - தூக்குதல். தூக்கி - தூக்குவோன். தூக்கிரி - காவலாள். தூக்கிரிமேரை - காவலுக்குக்கொடுக்குந் தானியம். தூக்கு - ஆசாரியன், ஆராய்வு,உயர்ச்சி, உவமைச்சொல், உறி,கனம், கால், துலாம், கூத்து, துலாராசி, தூக்கங்கள், தூக்கணங்குருவி. தூக்கணம், தூக்குதல்,தூக்கென்னேவல், நிறை, நிறைகோல், பாட்டு. தூக்குக்கோல் - நிறைகோல். தூக்குணி - தழுக்குணி. தூக்குதல் - ஆராய்தல். உதவி செய்தல், உயர்த்துதல், சிந்தித்தல்,தூங்கவைத்தல், நிறுக்குதல். தூக்குநூல் - நேரறிகயிறு. தூக்குப்பரிசை - செந்தூக்கு. தூக்குமரம் - கொல்வோரைத்தூக்குமரம். தூக்குவிளக்கு - கொடிவிளக்கு. தூங்கணம் - தூக்கணங்குருவி, தூக்கு. தூங்கணி - ஓராபரணம். தூங்கமுட்டு - கோரைக்கிழங்கு. தூங்கலன் - சோம்பன். தூங்கலாளி - தூங்கு மூஞ்சி. தூங்கலோசை - வஞ்சிப்பாவினோசை. தூங்கல் - ஆடல், உறங்கல், ஓரோசை,கூத்து, சொரிதல், சோம்பல்,சோம்பி, தணிதல், தாழ்தல், யானை. தூங்கல்வண்ணம் - வஞ்சிபயின்று வருவது. தூங்காமை - அரசர்குண மூன்றினொன்று அஃது சோர்வில்லாமை. தூங்கிசை - நிறையொன்றாசிரியத் தளையான் வருவது. தூங்கிசைச்செப்பல் - இயற்சீர் வெண்டளையான் வரும் வெண்பா. தூங்கிசைத்துள்ளல் - கலிப்பாவோசையினொன்று. தூங்கிசையகவல் - நிரைநிரையியற்றளையான் வருமகவல். தூங்குதல் - அசைதல், சொரிதல்,சோம்பாயிருத்தல், சோர்தல்,நாலுதல், வாடுதல், தொங்குதல். தூங்குமஞ்சம் - ஆடுமஞ்சம். தூங்குமூஞ்சி - தூக்கமுள்ளோன். தூசம் - யானை கட்டும் கயிறு. தூசரம் - மங்கின வெண்மை. தூசரன் - எண்ணெய் வாணிபன். தூசர் - வண்ணார். தூசி - குதிரை, கொடிப்படை, துகள்,முற்படை வகுப்பு, புழுதி. தூசிகம் - புளியாரை. தூசிதாங்கி - அழுக்குத்தாங்க உடையின் மேற்கட்டுந் துண்டுப்புடைவை. தூசிப்படை - கொடிப்படை, முற்படை. தூசியம் - கூடாரம். தூசு - சித்திரைநாள், சீலை, தூய்துவகுப்பு, புழுதி. தூசுதாங்கி - தூசிதாங்கி. தூசுப்பு - தண்ணீர்விட்டான்.தூடணம், தூஷணம் - அசப்பியம்,குற்றம், நிந்தனை, பழுதுபடுதல்,மீறுதல். தூஷணன் - இராவணன் றம்பி மாரிலொருவன். தூஷணாரி - இராமன். தூஷணித்தல் - நிந்தித்தல். தூஷணை - நிந்தனை. துஷிகை - பீளை. தூஷித்தல் - தீட்பாக்கல், நிந்தித்தல், தூஷிப்பு - தூஷணம் தூட்டகம் - தும்பை. தூட்டி - சீலை. தூணம் - அம்புக்கூடு,தூக்கணம்,தூண், பகை. தூணி - அம்புக்கூடு, நாலுமரக்காலளவு. தூணிகர் - செட்டிகள். தூணித்தல் - பருத்தல். தூணிப்பு - பருப்பம். தூணியங்கம் - அத்திப்பிசின். தூணீரம் - அம்புக்கூடு. தூண் - தம்பம், பற்றுக்கோடு. தூண்டல் - தூண்டில், தூண்டுதல். தூண்டாவிளக்கு - தானேயெரியும்விளக்கு. தூண்டிக்காட்டல் - எடுத்துக் காட்டல். தூண்டில் - தோட்டி, மீன்பிடிக்குங்கருவியினொன்று. தூண்டிவிடுதல் - உந்துதல், ஏவுதல். தூண்டி - தூண்டுதல், தூண்டென்னேவல், முயற்சி. தூண்டுகுச்சி - தூண்டுகோல். தூண்டுகோல் - ஏவிவிடுவான்,திரிதள்ளுமீர்க்கு. தூண்டுதல் - எழுப்பல், ஏவுதல்,செலுத்துதல், தள்ளுதல், நினைப்பூட்டுதல். தூதகம் - துருசி. தூதம் - அசைவு, நிந்தை, தள்ளப்பட்டது. தூதர் - ஒற்றர், கிங்கரர், சமாதானம்பேசுவோர். தூதல் - தூவுதல். தூதளை - தூதுவளை. தூதனம் - மூங்கில். தூதன் - தூது செல்வோன், புதன். தூதாயி - ஓர்விதப் பூண்டு. தூதி - தூது செல்பவள், பாம்பினச்சுப் பல்லினொன்று. தூதிகை - தூதி. தூது - ஓர்பிரபந்தம் அஃது காமுகர்பாணன் முதலிய வுயர்திணையையாவது கிள்ளை முதலியஅஃறிணையையாவது தூதனுப்புவதாகப் பாடுவது, காரியம், பேசியிணக்குமாள், கோடாங்கல்,சம்மதிபண்ணக் காரியம்பேசுவித்தல், செய்தி, பகை,காரியம்பேசி யிணக்குகை. தூதுசொல்லுதல் - சம்மதியறியும் படிசெய்தி சொல்லுதல்.தூதுணம், தூதுணி - தூக்கணங்குருவி, புறாப்பொது.தூதுணை, தூதுவளை - ஓர்செடி. தூதுவன் - தூதன் , புதன். தூதுளை, தூதூவளை - தூதுவளை. தூதை - சிறுமுட்டி, சூதாடு பந்தயம். தூஸ்தம் - அனு, துகள், பாவம்,பின்னல், மயிர். தூத்தன் - மூங்கில். தூத்தியம் - செய்தி. தூத்திரக்கூர்ச்சம் - ஆண்தருப்பை. தூர்ந்துதுருப்பிடித்தல் - நுட்பஆராய்ச்சி செய்தல். தூபக்கலசம் - தூபங்காட்டுங் கலசம். தூபக்கால் - ஓர் தூபக் கருவி. தூபங்கொடுத்தல் - தூபங்காட்டுதல்,அஃது புண்ணியமொன்பதினொன்று. தூபமூட்டி - தூபக்கலசம். தூபம் - புகை, மூங்கில். தூபரதண்டி - ஊதாரி. தூபரம் - கொம்பில்லா மிருகம். தூபவருக்கம் - நறும்புகைப் பாண்டம். தூபனம் - தூபம், பிசின். தூபாயிதம் - அக்கினியில் மரணம். தூபி - மலைமுடி, முகடு. தூபிகை - கோவில்யமுடி, தூமம். தூபிதம் - அக்கினியில் மரணம்,வெப்பம். தூபிப்பிரதிட்டை - சிகரத்தாபனம். தூமகம்பம் - ஓருற்பாதம். தூமகாரம் - சூதபாஷாணம். தூமகேதனன் - தீ. தூமகேது - அக்கினி, அக்கினிதேவன், கேது, கொடுமை, வால்நட்சத்திரம், விண்வீழ்கொள்ளி. தூமத்துவசன் - தீ. தூமப்பிரபை - ஏழ்நரகவட்டத்தொன்று. தூமம் - சூளை, புகை, புளிநறளை. தூமம்போக்கி - புகைக்கூடு. தூமயோனி - முகில். தூமலம் - கருமை, மிக்கசிவப்பு, பாவம். தூமாகாரம் - புகைவடிவு. தூமான் - ஆசனம், ஆபரணச் செப்பு. தூமியம் - புகை. தூமிரகம் - ஒட்டகம், தூமிரம் - தூமலம். தூமிராபம் - காற்று. தூமை - தூய்மை, மகளிர்சூதகம்,வெண்மை. தூமோர்ணாபதி - யமன். தூமோர்ணை - யமன் மனைவி. தூம் - ஓரளவு, தூம்பல் - சுரை, தூம்பா - தூம்பை. தூம்பிரகருப்பம் - துத்தபாஷாணம். தூம்பிரம் - தூமிரம். தூம்பிராஷ்டகம் - ஓர் குளிகை. தூம்பு - இடுக்குவழி, ஈயம், உட்டுளை,ஏரிமதகு, சலதாரை, பாதை,மரக்கால், மூங்கில், வழி, வாயில். தூம்பை - பாடை. தூயது - சுத்தமானது. தூயவர் - முனிவர். தூயவுடம்பினனாதல் - இறைவனெண்குணத் தொன்று. தூயவுடம்புடைமை - கடவுளெண்குணத்தொன்று. தூயாள் - சரச்சுவதி, சுத்தவாட்டி. தூய்தன்மை - அசுத்தம். தூய்தாக்கல் - சுத்தமாக்குதல், செப்பம்பண்ணல்.தூய்து, தூய்மை - சுத்தம். தூய்வெள்ளை - சுத்தவெள்ளை. தூரகாரி - வருகாரிய மறிவோன். தூரகாரியம் - காரியமொருவழியுங்காரணமொரு வழியுமாய் நிகழ்வது. தூரசூலை - ஓர்சூலை. தூரணம் - சீக்கிரம். தூரணி - தீவிரம், மலம், மனம். தூரதரிசி - தீர்க்க தரிசி, பண்டிதன்,வலியான்.தூரதிட்டி, தூரதிஷ்டி - அஞ்சனபாஷாணம், தீர்க்க தரிசி, துலைப்பார்வை, முன்னுணர்ச்சி. தூரதிட்டிக்கண்ணாடி - தூரத்திற்பொருளைக்கிட்டக் காட்டுமோர் கருவி. தூரதை - தூரம். தூரத்தான் - அன்னியன். தூரஸ்திரி - இடங்கரமானபெண்,சூதகமான பெண். தூரம் - இசைக்கருவி, ஊமத்தை,சேய்மை,புறம்பு, விசாலம், வித்தியாசம். தூரல் - தூருதல், வருத்தம். தூரவத்திரகம் - நிருவாணம். தூரவை - அறுகு. தூராகு - எலிச்செவிக்கள்ளி. தூராதூரம் - வெகுதூரம், தூர சமீபம். தூராமம் - தேட்கொடுக்கி. தூரி - ஊசல், ஊரி, எருது, தூரிக்கோல், பலகறை, பெருவலை.தூரிகை, தூரிகைக்கோல், தூரிக்கோல் - எழுதுகோல். தூரியகண்டம் - ஓரிசைக்கருவி. தூரியக்கோல் - தூரிகை. தூரியம் - ஆயுதப்பொது, ஈட்டி,உவகைப்பறை, எருது, எழுதுகோல், கைவேல், நல்லாடை,முரசப்பறை, வாத்தியப்பொது. தூரியன் - கடவுள், தூரத்திலேயுள்ளவன். தூரு - அடி, தூர். தூருதல் - மேவப்படுதல், வெளியடைதல் தூரேத்தி - கம்பந்திராய். தூரோணம் - கவிழ்தும்பை. தூர் - சேறு, தூரென்னேவல், மண்டி,வேர். தூர்க்கை - பூரநாள். தூர்ச்சடி - சிவன். தூர்தல் - நிரவுதல். தூர்த்தத்தனம் - காமுகத்தன்மை. தூர்த்தம் - அரப்பொடி, ஊமத்தை, தூர்த்தத்தனம். தூர்த்தர் - காமுகர், வஞ்சகர். தூர்த்தல் - கூட்டல், செறுத்தல்,நிரப்புதல். தூர்த்தவியாபாரம் - காமுகநடை. தூர்த்தன் - காமுகன், வஞ்சகன். தூர்த்தை - தூர்த்தக் குணமுள்ளவன். தூர்ப்பு - நிரப்புதல். தூர்மம் - தேட்கொடுக்கி. தூர்வகம் - சுமத்தல், பொதி யெருது. தூர்வம் - மீன். தூர்வாக்கிரம் - அறுகுநுனி. தூர்வாசம் - அட்டாதச வுபபுராணத்தொன்று. தூர்வாசன் - ஓரிருடி, அவர் அத்திரிமகாரிஷியின் புத்திரர். தூர்வு - தூர்ப்பு. தூர்வை - அறுகு, கிணற்றடைதூர்,கிணற்றைச் சார்ந்த நிலம், செத்தல்,செய்கையினால் மிருது பட்டநிலம். தூர்னா - முசற்புல். தூலகம் - பருத்தி. தூலகாயம் - தூலதேகம். தூலகார்முகம் - பஞ்சவட்டந்தடி. தூலசரீரம் - புறவுடல், தூலசர்க்கரை - பருத்திவிரை. தூலசிருட்டி - காணப்படு பூதியம். தூலசேசனம் - நூனூற்றல். தூலதனு - ஸ்தூல தேகம். தூலதேகம் - தூல சரீரம். தூலபஞ்சாக்கரம் - பூதபஞ்சாக்கரம். தூலபிசு - பஞ்சு. தூலபூதம் - காணப்படு பூதியம். தூலப்பிரகாரம் - உறுப்புக்கேடு. தூலம் - ஆகாயம், இலவமரம்,கோரை, சீவதேக மூன்றினொன்று அஃது தூலதேகம்,நஞ்சு, நீர்முள்ளி, பஞ்சு, பருத்தி,பருமை, வீட்டுத்திரம். தூலலிங்கம் - கோபுரம். தூலவிருக்கம் - இலவமரம். தூலன் - தூளித்தவன். தூலாசம் - வில். தூலி - எழுதுகோல், பருத்தவள். தூலிகை - எழுதுகோல்,மெத்தை,விளக்குத்திரி. தூலித்தல் - தூளித்தல், பருத்தல். தூலிபலம் - இலவங்காய். தூலிப்பு - தூளிப்பு. தூலினி - இலவு. தூலை - பருத்தி. தூவத்தி - வாள். தூவரம் - இடபம், துவர்ப்பு,மொட்டை. தூவரன் - அண்ணகன். தூவரிகை - உவர்மண். தூவல் - அம்பிறகு, இறகு, எழுதுமிறகு, சிந்தல், தளிர், தூரியக்கோல், நீர்த்துளி, மழை, மழைத்துளி, மழைபெய்தல். தூவானம் - காற்றினாற் சிதறப்படுமழைத்திவலை. தூவி - அன்னச் சிறகு, இறகு, மயிற்றோகை, மீன் சிறகு. தூவு - ஊன், தூவுதல், தூவென்னேவல். தூவுதல் - சிந்துதல், தெளித்தல்,மழை தூறல். தூளம், தூளனம் - தூள். தூளி - அனுமானிதம், தூளியென்னேவல், பராகம், புழுதி. தூளிகுச்சம் - கதம்பப் பொடி. தூளிகேதாரம் - கொத்தளம். தூளிதம் - தூள், விபூதி. தூளித்தல் - பருத்தல். தூளித்துவசம் - காற்று. தூளிப்படலம் - புழுதிப்போர்ப்பு. தூளிப்பு - பருப்பம். தூளிமட்டம் - தரைமட்டம். தூள் - கறித்தூள், சூரணம், புழுதி,பூந்தாது, பொடி. தூறல் - பழிச்சொல்லல், மழை,மழைத்துளி, மழைபெய்தல்,தூறுதல். தூறவம் - நாவல். தூறன் - தூர்த்தன். தூறு - கூட்டம், சிலும்பல், சிறுசெடி, சிறுபற்றை, தூறென்னேவல், திராய், பழிச்சொல்,பற்றைக்காடு, மஞ்சள். தூறுகுணம் - கடம்பு. தூறுட்டி - சிற்றேலம். தூறுதலை - சிலும்பிய மயிர்த்தலை. தூறுதல் - கிளைத்தல், சடைபற்றல்,சிதறுதல், தூறுபடுதல், நிந்தித்தல்,மழை துமித்தல், பழிசொல்லல். தூறுபடுதல் - சடைபற்றல், சிதறிப்போதல், பரவுதல், பழிமொழிகூறப்படல். தூறுபண்ணல் - அவதூறு செய்தல். தூறுபுட்பம் - சிலந்தி, சீந்தில். தூறுபேசுதல் - பழி சொல்லுதல். தூறுமாறு - குழப்பம், தப்பு. தூறுவாயன் - பழிச்சொற்காரன். தூற்றல் - சிதறுதல், தூற்றுதல், பழிகூறல், மழைத்தூறல்.தூற்றநெல், தூற்றாப்பொலி - பதர்பிரியா நெல். தூற்றாரி - ஆராதூரி. தூற்றாரித்தனம் - ஆராதூரித்தனம், தூற்று - தூற்றுதல், தூற்றென்னேவல், பழிப்பு. தூற்றுக்காடு - சிறுதூறு, பற்றை. தூற்றுக்கூடை - தூற்றுங்கூடை. தூற்றுதலையன் - பிராய்மரம். தூறுவாதி - தீம்பாலை. தூற்றுதல் - கோட்சொல்லல், சிதறல்,சிலும்பச்செய்தல், நென் முதலியவற்றைத் தூற்றுதல், பழி கூறல்,வீண்செலவு செய்யல்.தூற்றாமைக்கொற்றான், தூற்றுவாய்க் கொற்றான் - ஓர் கொடி. தூனம் - அக்கினியில் மரணம்,அசைதல்,வருத்தம். தூனனம் - அகற்றல், அசைதல். தெ தெகிடி - ஓர் விளையாட்டு, புரட்டு. தெகிட்டு - தெவிட்டு. தெகிழ்தல் - விரிதல், நிறைதல். தெகிள் - ஓர் கொடி. தெகுட்டல் - தெவிட்டல். தெகுட்டி, தெகுட்டிகை - தேட்கொடுக்கி. தெகுளம் - நிறைவு, பெருக்கம்.தெகுளல், தெகுளுதல் - நிறைதல்,பெருகுதல். தெக்கு - தெற்கு. தெக்கணம் - தெற்கு. தெங்கங்காய் - தேங்காய். தெங்கணம் - தேயமைம்பத்தாறி னொன்று. தெங்கநாடு - குமரியாற்றுக்கும்பஃளியாற்றுக்கும் இடையிலிருந்த நாடு. தெங்கு - சத்ததீவினொன்று, தென்னமரம்.தெசகண்டன், தெசகந்தரன், தெசமுகன் - இராவணன். தெசம் - தசம், தெசலம் - தேமா. தெசவம் - மா. தெசனி - பெருங்குரும்பை, மஞ்சள். தெட்சகன் - இரட்சிப்பவன், சாமர்த்தியன், தட்சகன். தெட்சணகயிலாயம் - தென்கயிலை. தெட்சணதுருவம் - தென்முனை. தெட்சணபூமி - தென் பூமி. தெட்சணம் - தெட்சிணம். தெட்சணாதி - மேருவுக்குத் தென்பாரிசம். தெட்சணாமூர்த்தி - அகத்தியன்,சிவன். தெட்சணாவிருத்தம் - வலம்புரிச்சங்கு. தெட்சணை - காணிக்கை, வலப்பக்கம். தெட்சிணம் - தெற்கு, வலப்பக்கம். தெட்டத்தெளிய - மிகுதெளிவாய். தெட்டல் - அபகரித்தல். தெட்டு - எத்து, தெட்டென்னேவல்,யானைக்கணையம். தெட்டுதல் - வஞ்சித்தல், அபகரித்தல். தெட்பம் - தெளிவு, முதிர்ச்சி,பேரறிவு, தெண் - தெளிவு. தெண்டம் - அபராதம், வணக்கம்,வீண். தெண்டனை - தண்டனை. தெண்டன் - வணக்கம், வணங்கல்,தண்டம். தெண்டி - தண்டி, தெண்டியென்னேவல். தெண்டித்தல் - ஒறுத்தல், சிட்சித்தல்,பிரயாசப்படல். தெண்டிப்பு - கண்டிப்பு, பிரயாசம். தெண்டிரை - சமுத்திரம். தெண்டு - தண்டு, ஓணான். தெண்டுதல் - மிண்டுதல். தெண்டை - நெருக்கிடை. தெண்ணீர் - தெளிநீர். தெண்மை - சாமர்த்தியம், தெளிவு. தெத்தம் - தத்தம். தெத்து - தெற்று. தெத்துமாற்று - துத்துமாற்று. தெத்துவம் - கொடுத்தல், தெந்தனா - தாளக்குறிப்பு. தெந்தி - நேர்வாளம்.தெப்பம், தெப்பல் - புணை. தெம்பல் - சேறு. தெம்மாங்கு - ஓர்வகைச் சந்தம். தெம்மாடி - அறிவீனன், பலவீனன். தெம்முனை - இரணக்களம், பகைமுகம். தெய்ய - இடைச்சொல் (உ-ம்) சொல்லென்றெய்ய. தெய்வகட்டாடி - ஆவேசங்கொண்டாடுவோன். தெய்வகளை - தெய்வமயம், தெய்வவிளக்கம். தெய்வகாரியம் - தெய்வகருமம். தெய்வகாவல் - தேவ துணை. தெய்வசகாயம் - தேவ வுதவி. தெய்வசாட்சி - தெய்வமத்தியட்சம். தெய்வசாயல் - தேவலோகம்.தெய்வசிந்தனை, தெய்வசிந்தை - தெய்வ தியானம். தெய்வசுரபி - காமதேனு. தெய்வசோதனை - தேவ பரிசோதனை. தெய்வச்செயல் - தெய்வத்தின்செய்கை. தெய்வதம் - தெய்வம். தெய்வதயானை - தெய்வயானை. தெய்வதுணை - தெய்வ வுதவி. தெய்வதூஷணம் - தேவ தூஷணம். தெய்வத்தாபனம் - தேவப் பிரதிட்டை. தெய்வத்தீர்வை - தேவதீர்ப்பு. தெய்வத்துதி - கடவுள் வாழ்த்து. தெய்வத்துரோகம் - தெய்வபாதகம். தெய்வத்துவம் - தெய்வீகம். தெய்வநிந்தை - தெய்வ தூஷணம். தெய்வநியமம் - தெய்வத் தீர்ப்பு,தெய்வம் நியமித்தது. தெய்வபக்திஸ்தானம் - பத்தாமிடம். தெய்வபயம் - தெய்வபத்தி, தெய்வவச்சம். தெய்வபூசை - தேவாராதனை. தெய்வபோகம் - தேவானுபவம். தெய்வப்பசு - காமதேனு. தெய்வப்புலமை - சரசுவதி வாக்கு, தெய்வீக வுணர்ச்சி யுடன்படுதல். தெய்வப்பெயர்த்தொகுதி - நிகண்டில்ஓர் பாகம். தெய்வமணம் - திவ்வியமணம்,வேள்வியால் வந்த கன்னியைத் தீமுன்னர்க் கொடுப்பது. தெய்வமத்தியட்சம் - தேவநடுத்தீர்வை. தெய்மந்திரி - வியாழன். தெய்வம் - ஊழ், எண்வகை மணத்திலொன்று, ஐவகையாகத் தொன்று,கடவுள், வருடம். தெய்வயாகம் - பஞ்சமாவெச்சத்தொன்று அஃது ஓமம் வளர்த்தல். தெய்வயானை - குமரன் றேவி. தெய்வயானைகாந்தன் - குமரன். தெய்வரோதம் - குங்கிலியம். தெய்வவிரதன் - வீடுமாசாரி. தெய்வாதீனம் - தெய்வ சுதந்திரம்,தெய்வத்திற் கடங்கியது. தெய்வாராதனை - தெய்வ வழிபாடு. தெய்வாவி - பரிசுத்தாவி.தெய்விகம், தெய்வீகம் - தெய்வத்தன்மை, தெய்வ சம்பந்தமானது. தெய்வு - சந்திரன். தெய்வேத்தனம் - தெய்வச் செயல். தெய்வோபாசனை - தேவவழிபாடு. தெரிகடை - தீரக்கழிகடை. தெரிகவி - பலகவியுட்டெரிந்தெடுக்குங் கவி. தெரிக்கம் - கருஞ்சீரகம். தெரிசனம் - தரிசனம். தெரிசித்தல் - தரிசித்தல். தெரிசியம் - காட்சி. தெரிசொல் - அருமொழிவிளக்கம்,காரணம், சத்தியம். தெரிதரல் - அறிதல், தோற்றுதல். தெரிதருதேற்றவுவமை - ஐயுற்றதனைத் தெரிந்து துணிவது (உ-ம்)கறைவிரவாததனால் மதியன்றுமுகமே. தெரிதல் - அறிதல், ஆராய்தல்,ஆலோசித்தல், காணல், தெரிந்துகொள்ளுதல். தெரித்தல் - எழுதல், கொழித்தல்,சொல்லல், தெரிவித்தல், பங்கிடுதல், மாறுபடுதல். தெரிநிலை - விளங்கி நிற்பது. தெரிநிலைவினை - கருத்தா காலம்கிரியை எனும் மூன்றனையும்விளக்கி நிற்கும் வினை. தெரிநிலைவினைப் பெயரெச்சம் - செயலுங் காலமும் விளக்கிப் பெயரை யவாவி நிற்பது. தெரிநிலைவினைமுற்று - செயல்காலம் வினையெனு மூன்றனையும்விளக்கி முற்றுப்பெற்று நிற்பது. தெரிநிலை வினையெச்சம் - செயல்கால மிரண்டையும் விளக்கிவினையை யவாவி நிற்பது. தெரிபடுதல் - தெரிந்தெடுக்கப் படுதல்,தோன்றுதல். தெரிப்பு - அறிவிப்பு, ஆராய்வு,எழுதுதல், கொழிப்பு, சொல்லுதல், பிரிப்பு. தெரிமா - சிங்கம். தெரிமானனப்புள் - ஆந்தை.தெரியக்காட்டுதல், தெரியக் கொடுத்தல் - வெளிப்படுத்துதல். தெரியப்படுதல் - காணப்படுதல்.தெரியப்படுத்துதல், தெரியப்பண்ணுதல் - அறிவித்தல், காண்பித்தல். தெரியலர் - அறிவீனர், தரியலர்,பகைஞர். தெரியல் - ஆராய்தல், காணல்,பூமாலை. தெரியவருதல் - அறிதல். தெரியவைத்தல் - அறிவித்தல்.தெரியாத்தனம், தெரியாப்புத்தி, தெரியாமை - அறியாமை, தோன்றாமை. தெரியிழை - பெண். தெரிவிடுதல் - ஆராய்தல், தெரிந்தெடுத்தல். தெரிவித்தல் - அறிவித்தல், வெளிப்படுத்தல். தெரிவு - அறிவு, ஆராய்வு, தெரிதல்,தெரிந்தெடுக்கப்பட்டன. தெரிவை - இருபத்தாறுமுதல் முப்பத்தொரு வயதிற்பெண், பெண். தெரு - வழி, வீதி. தெருட்சி - அறிவு, தெளிவு. தெருட்டு - இருது, தெருட்சி, தெருட்டென்னேவல். தெருட்டுக்கல்யாணம் - இருதுச்சடங்கு. தெருட்டுதல் - அறிவுறுத்தல், மனதைத்தெளிவித்தல், வற்புறுத்தல். தெருண்டபெண் - இருதுவான பெண். தெருண்டமேலவர் - அறிவிற் சிறந்தோர். தெருமரல், தெருமருதல் - சுழலல்,நம்பிக்கையற்றிருத்தல், மனக்கவற்சி. தெருவிலழகி - குப்பைமேனி. தெருவு - தெரு. தெருளல் - இருதுவாதல், தெளிதல்,தெருளுதல். தெருளுடைமை - அறிவு, ஞானம். தெருளுதல் - தெருளல்.இருதுவாதல். தெருள் - அறிவு, தெருளென்னேவல்,தெளிவு. தெருள்வின்மை - தெளிவின்மை. தெருள்வு - தெளிவு. தெலிங்கம் - ஓர் தேயம்.தெலிங்கு, தெலுங்கு - ஓர்பாடை. தெல் - அஞ்சல், கலாதி, நெடுங்கிடங்கு, நெடும்பாத்தி. தெல்லாட்டம் - அணாப்பு, இழுபறி,எத்து, குழப்பம். தெல்லு - தெல். தெல்லுக்கட்டுதல் - இழுபறிப்படுதல்,பாத்தி கட்டுதல். தெல்லுக்காரர் - அஞ்சற்காரர். தெல்லுப்பு - வளையலுப்பு. தெல்லோட்டு - தொந்தறை. தெல்லோட்டுதல் - தொந்தறைபண்ணுதல். தெவம் - மாமரம். தெவிட்டல் - தெவிட்டுதல். தெவிட்டு - தெவிட்டென்னேவல்,நிறைவு, வெறுப்பு. தெவிட்டுதல் - உமிழ்தல், ஒலித்தல்,தேக்கிடுதல், நிறைதல், நினைத்தல், வாந்தித்தல், தொனித்தல்,குமட்டுதல், தங்குதல்.தெவிளல், தெவிளுதல் - நிறைதல்,தங்குதல், திரளுதல். தெவு - எடுத்துக்கொள்ளுதல். தெவுட்டல் - அடைத்தல், கொப்பளித்தல், சத்தித்தல், தங்குதல்,நிறைதல், நினைத்தல், மறைத்தல். தெவுட்டு - தெவுட்டென்னேவல்,நிறைவு.தெவுளல், தெவுளுதல் - பெருகுதல். தெவ் - சத்துரு, பகை, போர், கவர்தல். தெவ்வர் - பகைவர். தெவ்வினை - போர். தெவ்வு - சத்துரு, சந்திரன், பகை,போர். தெவ்வுதல் - கவர்தல். தெவ்வூன்றி - இராகு. தெழித்தல் - அதட்டல், கோபம்,சினக்குறிப்பு, துவைத்தல்,பேரொலி, பிரித்தல். தெழிப்பு - இரைச்சல், தொனி,அதட்டல். தெளி - ஒளி, விற்கால், புல்லூரி. தெளிஞன் - அறிஞன், கல்வியிற்சிறந்தோன். தெளிதல் - அறிதல் ஆராய்தல்,ஆலோசனை, ஊடுருவுதல்,கலக்கம், கொழுக்குதல், சுத்தமாதல், தேறுதல், நீங்கல், தெளித்தல் - ஒலித்தல், கொழித்தல்,சுத்தமாக்குதல், தூவல், தெரித்தல்,நிச்சயித்தல், புரோட்சித்தல்,விதைத்தல். தெளிநீர் - சுத்தநீர். தெளிப்பு - தெவிப்பு, நிச்சயம்,விதைப்பு. தெளிமணி - நல்லிரத்தினம். தெளிர் - உள்ளோசை, தெளிரென்னேவல். தெளிர்தல் - பிரகாசித்தல், பேசலாலெழுமொலி, பொருந்துதல். தெளிவித்தல் - அறிவித்தல், தெரியப்பண்ணல், விவரித்தல். தெளிவு - அறிவு, குணவலங்காரம்பத்தினொன்று அஃது கவியாற்கருதிய பொருள் விளங்கத்தொடுப்பது, கொழுப்பு, தீர்க் கம்,துணிவு, தெளித்தெடுக்குங் கஞ்சி,மனத்தோற்றம், வெளிச்சம். தெளிவுகொடுத்தல் - உணர்வு வரப்பண்ணல். தெளிவெண்ணெய் - நறுவேப்பெண்ணெய். தெள் - தெள்கு, தெள்ளென்னேவல். தெள்கு - ஓர்பூச்சி, தெள்கென்னேவல். தெள்குதல் - தெளிவித்தல், வீசுதல். தெள்விளி - ஓரிராகம், மகிழ்ச்சியாலார்த்தல், இசைப்பாட்டு. தெள்ளச்சி - பூநீறு. தெள்ளத்தெளிதல் - நன்றாய்த்தெளிதல். தெள்ளல் - தெள்ளுதல். தெள்ளி - யானை. தெள்ளிமை - அறிவு, தெளிவு. தெள்ளியர் - அறிவுடையோர், கல்வியிற் சிறந்தோர். தெள்ளு - தெள்கு, தெள்ளுதல்,தெள்ளென்னேவல். தெள்ளுதமிழ் - செந்தமிழ். தெள்ளுதல் - கொழித்தல், தெளிவித்தல். தெள்ளேணம் - மகளிர் விளையாட்டு. தெறி - அணிஅங்கி முதலியவற்றின்கடைப்பூட்டு, சிதறுகை, தெறியென்னேவல். தெறிகெடுதல் - நிலைகெடுதல். தெறிக்கடித்தல் - சிதறடித்தல்.தெறிக்குதல், தெறித்தல் - அட்டாதுட்டி பண்ணல், அதைத்தல்,சிந்தல், பாய்தல், முரிதல், துள்ளுதல். தெறிப்பு - அதைப்பு, சிந்துதல், சுண்டுகை, முரிவு. தெறிமுற்றினது - முழுதும் பழுத்தது. தெறியன் - ஐதானது. தெறிவில் - சுண்டுவில். தெறுக்கால் - தேள், விருச்சிகவிராசி. தெறுதல் - அழித்தல், தங்குதல், சுடுதல், தண்டஞ்செய்தல், சொல் லல். தெறுத்தல் - நெரித்தல். தெறுநர் - கொலையாளர், பகைவர். தெற்கித்தி - தெற்கே யுள்ளது. தெற்கித்தியகாற்று - தென் காற்று. தெற்கித்தியான் - தென் சீமையான். தெற்கு - தெக்கணதிக்கு. தெற்பை - தருப்பை. தெற்றல் - அலைத்தல், இழைத்தல்,இறுக்கல், உடுத்தல், தடைப்படுதல், பின்னல், மாறுபடல். தெற்றி - சித்திரகூடம், திண்ணை. தெற்றித்தல் - தெற்றுதல். தெற்றியம்பலம் - சித்திரகூடம். தெற்று - அடைப்பு, இழைப்பு,தெற்றல், தெற்றென்னேவல்,பின்னல், தடைப்படுகை. தெற்றுக்கால் - முட்டிக்கால். தெற்றுதல் - தெற்றல், பின்னல்,மாறுபடல், பிணங்குதல், தடுத்தல்,தடைப்படுதல். தெற்றுமாற்று - திரியாவரம். தெற்றுவாய் - திக்குவாய். தெற்றென - தெளிய, விரைய. தெற்றெனல் - தெளிதல், விரைவுக்குறிப்பு. தெற்றெனவு - தெளிவு. தெனாது - தெற்கு, தெற்குள்ளது. தென் - அழகு, இசை, எதிர், கருமை,தெற்கு, தென்னமரம். தென்கயிலை - பொதியமலை. தென்கலை - தமிழ். தென்காஞ்சி - ஓரூர்.தென்கால், தென்காற்று - சோழகம்,தென்றல்.தென்கிழக்கு, தென்கீழ்த்திசை - அக்கினி மூலை.தென்கீழ்த்திசைப்பாலன், தென்கீழ்த்திசையிறை - அக்கினிதேவன். தென்குமரி - ஓரியாறு. தென்சார் - தென்பக்கம். தென்சிதம்பரம் - ஓர் ஸ்தலம். தென்படுதல் - கிடைத்தல், கண்முன்தோன்றல். தென்பரதம் - தென்பாரதம். தென்பாண்டி - கொடுந்தமிழ் நாட்டினொன்று. தென்பாரதம் - நவகண்டத்தொன்றுஅஃது பாரதகண்டத்திற்றென்பக்கம், தென்பாரிசம் - தென்றிசை. தென்பாலிரேபதம் - நவகண்டத்தொன்று. தென்பால் - தென்பக்கம். தென்பால்விதேகம் - நவகண்டத்தொன்று. தென்புலத்தார் - பிதிர்கள். தென்புலம் - இயமலோகம். தென்புறம் - தென்பக்கம். தென்பூமி - பூமியின் றென்பக்கம்,மேருவின் றென்பால். தென்மதுரை - ஆலவாய். தென்மலை - சோலைமலை, பொதியமலை. தென்முனை - பூமியின் றென்புறக்கோடி.தென்மேல், தென்மேற்கு, தென் மேற்றிசை - நிருதிதிசை. தென்மேற்றிசைப்பால் - நிருதி. தென்விதேகம் - தென்பால்விதேகம். தென்றமிழ் - செந்தமிழ். தென்றல் - தென்காற்று, முன்பனிப்பருவத்தின் காற்று. தென்றற்றேரோன் - மன்மதன். தென்றி - தெற்கு, தென்காற்று. தென்றிசை - தெற்கு.தென்றிசைக்கோன், தென்றிசைப் பாலன் - இயமன். தென்னங்கிளி - கிளியினோர் பேதம். தென்னங்குரும்பை - தென்னம்பிஞ்சு. தென்னமரம் - தெங்கு. தென்னம்பிள்ளை - தென்னங்கன்று. தென்னர் - பகைவர்.தென்னவன், தென்னன் - பாண்டியன்,இயமன். தென்னாலுராமன் - சந்திரிகிரியிலிருந்த தெலுங்கு விகடகவி. தென்னிரேபதம் - தென்பாலிரேபதம். தென்னி - வாழை. தென்னிலங்கை - இராவணன்பட்டணம். தென்னிலம் - போர்க்களம். தென்னை - தென்னமரம். தே தே - ஓரெழுத்து, கடவுள், கிருபை,நாயகன். தேககாந்தி - சரீரவொளி. தேககோசம் - தோல். தேகக்கல் - நீலக்கல். தேகசம்பந்தம் - சரீர சேர்வை. தேகசாரம் - மூளை. தேகட்சயம் - நோய். தேகதாரகம் - என்பு. தேகத்தியாயம் - உயிரைக் கொடுத்தல், சரீரப்பற்றுவிடல், மரணம். தேகத்திரயம் - சரீரத்திரயம். தேகநாசம் - சரீர வழிவு. தேகபந்தம் - சரீர சேர்மானம். தேகமண் - செம்மண். தேகம் - உடல், இலக்கினம், தேசாவரம். தேகயாத்திரை - சரீரபோஷணை,மரணம். தேகரசம் - வெயர்வை. தேகராசம் - கரிசாலை. தேகனி - மஞ்சள். தேகாதாரம் - உண்டி, எலும்பு. தேகாத்துமவாதி - சாருவாகமதஸ்த்தன். தேகாந்தம் - மரணம். தேகாபரணம் - உடை. தேகாபிமானம் - சரீரப்பராமரிப்பு,சரீரத்திடத்தி னிடத்துப்பற்று. தேகி - சீவாத்துமா, புல்லூரி. தேகிகை - ஓர் புழு. தேக்கம் - தியக்கம், நிலைநீர், நிறைவு. தேக்கல் - தியங்குதல், நிறைதல். தேக்கிடுதல் - தெவிட்டல், நிறைதல்,நிறைந்து வழிதல். தேக்கு - ஓர் மரம், கமுகு, தித்திப்பு,தெவிட்டு, நிறைவு, தேக்கென்னேவல். தேக்குதல் - தடைபண்ணுதல்,தெவிட்டுதல், நிறைதல். தேக்கெறிதல் - ஏப்பமிடல், தெவிட்டல், நிறைதல். தேங்கல் - அச்சக்குறிப்பு, நிறைதல்,தேங்குதல். தேங்காய் - தெங்கங்காய். தேங்காய்க்கயில் - தேங்காய்ப்பாதி. தேங்காய்க்கீரை - ஓர் கீரை. தேங்காய்த்துருவல் - தேங்காய்ப்பூ. தேங்காய்ப்பாரை - ஓர் மீன். தேங்காய்ப்பால் - தேங்காய்ப்பூவின்பால். தேங்காய்ப்பூ - தேங்காய்த்துருவல்.தேங்காய்ப்பூக்கீரை, தேங்காய்ப்பூநாறி - பீளைசாறி. தேங்காய்மொத்தி - மாட்டின்முன்காலூடேயிருக்குந் திரட்சி. தேங்கிட்டி - தேள்கொடுக்கி. தேங்குதல் - அஞ்சல், நிறைதல்,குலைதல். தேசகன் - ஆளுகைக்காரன். தேசகாலம் - இடமும் நேரமும்,நெடும் பொழுது, பொழுது. தேசசஞ்சாரி - பரதேசி. தேசசு - தேயசு, அழகு, ஒளி, விந்து. தேசசுவாத்தியம் - தேயத்தின் சுகம். தேசதருமம் - தேசகட்டளை, தேசவொழுங்கு. தேசநம் - மூங்கில். தேசபாடை - அவ்வத் தேயத்திற்குரியபாஷை. தேசபாரம் - இராச்சியப் பொறுப்பு. தேசப்பழமை - தேச வழக்கம். தேசமுகி - இறை முதலிய வெழுதுவோன். தேசம் - இடம், உறைப்பு, கட்டளை,கூர்மை, நாடு, பங்கு, பிரபை. தேசரூபம் - தேசாசாரம்.தேசவழக்கம், தேசவளமை - தேசநடபடி. தேசவியவகாரம் - தேச வழக்கம். தேசனம் - திருத்தம். தேசனி - மஞ்சள். தேசன் - குரு. தேசா - ஓர்பண். தேசாசாரம் - தேசநடை. தேசாச்சாரம் - மயிர். தேசாட்சரி - ஓரிராகம். தேசாதி - கவரை சாதித்தலைவன். தேசாதிபதி - தேசத்தை யாள்வோன். தேசாதிபத்தியம் - தேசத்தையாளுமதிகாரம். தேசாதேசம் - ஒவ்வோர் தேசம். தேசாந்தரம் - பரதேசம், பன்னிரண்டாமிடம். தேசாந்தரி - பரதேசி. தேசாந்திரம் - பூமத்தியின் சாய்ப்பு. தேசாந்திரரேகை - பக்கவரி. தேசாவரம் - ஓர் செடி. தேசி - எலுமிச்சை, ஓரிராகம்,குதிரை, பரதவுறுப்புளொன்று,பெருங்குதிரை. தேசிகம் - அவ்வவ்நாட்டுச்சொல்,அழகு, ஒளி, ஓர் கூத்து, காந்தி,பொன். தேசிகன் - அரசன், அழகன், உபாத்தியாயன், குரு, தேசாந்தரி, வணிகன், வேதமோதுவிப்போன்,வேதாந்த தேசிகன். தேசிக்காய் - எலுமிச்சங்காய். தேசிதம் - கூர்மை. தேசியம் - திசைச்சொல், அந்தந்தநாட்டுச் சொல். தேசிப்பல் - குதிரைப்பல். தேசு - அழகு, உறைப்பு, ஒளி, காங்கை,கீர்த்தி, கூர், பலம், பொன்,மகத்துவம், மனக்கதி, மூளை,விந்து, வீரம். தேசோபத்திரவம் - தேய வியாகுலம். தேசோபிந்து - உபநிடத முப்பத்திரண்டி னொன்று. தேசோமந்தரம் - நெல்லி. தேசோமயம் - அழகு, பிரபை,பேரொளி, ஒளி வடிவம். தேசோரூபம் - ஒளி, ஒளியுருவம். தேசோரூபன் - கடவுள். தேசோவதி - யானைத்திப்பிலி. தேடல் - தேடுதல். தேடாக்கூறு - தேட்டாக்கூறு, பராமரிப்பின்மை. தேடாமை - விசாரியாமை. தேடிதம் - தோத்திரஞ்செய்தல். தேடுதல் - சம்பாதித்தல், பராமரித்தல்,விசாரித்தல். தேட்கடை - ஓர் மூலி, மூலநாள். தேட்குடிச்சி - கதண்டு, தேட்கெண்டை - ஓர் மீன்.தேட்கொடுக்கி, தேட்கொடுக்கிலை - ஓர் செடி. தேட்டக்காரன் - சம்பாத்தியகாரன். தேட்டம் - ஆராய்வு, கவலை, சம்பாத்தியம், சேகரித்த பொருள்,சேகரிப்பு, பராமரிப்பு, பேரவா. தேட்டாக்கூறு - தேடாத்தன்மை. தேட்டாண்மை - சம்பாதிப்பு, நாட்டம்,விசாரிப்பு. தேட்டாளன் - தேட்டக்காரன். தேட்டு - தேட்டம். தேட்டை - தெளிந்தநீர், தெளிவு,தேட்டம், மூலநாள். தேணிறம் - மாந்தளிர்க்கல். தேண்டுதல் - தேடுதல். தேதி - திகதி. தேமம் - ஈரம். தேமல் - படர் சுணங்கு. தேமனம் - சிரமம், புளிப்பு. தேமா - இருநேரசைச்சீர் வாய்பாடு,தித்திப்பு மாமரம். தேமாங்கனி - நேர்நேர் நிரையசைச்சீர் வாய்பாடு. தேமாங்காய் - மூன்றுநேரசைச்சீர்வாய்பாடு. தேமாநறுநிழல் - நேர்நேர் நிரைநிரைசீர்வாய்பாடு. தேமாநறும்பூ - நேர்நேர் நிரைநேர் சீர்வாய்பாடு. தேமாந்தன்னிழல் - நேர்நேர்நேர்நிரை சீர்வாய்பாடு. தேமாந்தண்பூ - நான்குநேரசைச்சீர்வாய்பாடு. தேம் - இடம், ஈரம், ஏழனுருபு (உ-ம்)கோடாய்தேத்து, கள், தித்திப்பு,தேசம், தேன், வாசனை, இனிமை. தேம்பல் - அழுகை, இளைத்தல், தேய்தல், பழம்பூ, மெலிதல், வாடல். தேம்பாவணி - ஓர் காப்பியம். தேம்புதல் - அழுகை, தேம்பல், தேய்தல், மெலிதல், வாடல். தேயசு - அழகு , ஒளி, விந்து. தேயபரிச்சேதம் - ஒரு தேசத்துண்டு,ஒரு தேசத்தின்றென்பது. தேயாமணி - வைரமணி. தேயம் - இடம், உடல், ஒளி, களவு,கொடைப்பொருள், நாடு, தியானிக்கப்படும் பொருள். தேயவாதனம் - ஒரு தாண் மடித்துமற்றைத்தாளூன்றி யிருப்பது. தேயன் - திருடன். தேயு - தீ, அஃது சிவனட்டமூர்த்தத்தொன்று. தேயுடலி - தேவாங்கு. தேய்கடை - தேய்ந்தது. தேய்தல் - உரைதல், குறைதல்,மெலிதல். தேய்தவளை - தேரை. தேய்த்தல் - அழித்தல், உரைத்தல்,குறைத்தல், கொல்லல், துலக்கல். தேய்பிறை - அபரபக்கச் சந்திரன். தேய்ப்பு - தேய்த்தல். தேய்மானம் - சிக்கனம், தேய்வு,பொன்னுரை. தேய்வாங்கு - தேவாங்கு. தேய்வு - அழிதல், உரைதல், குறைவு,மெலிவு. தேய்வை - பரிமள சாந்து, சந்தனக்குழம்பு. தேரகன் - தேர்ப்பாகன். தேரடி - தேர்ச்சுவடு, தேர்நிலை. தேரர் - பௌத்தர். தேரலர் - பகைவர், மதியீனர். தேரல் - தேன். தேரன் - ஓர் வைத்தியசாத்திரப்புலவன். தேரார் - கல்லாதவர், கீழ்மக்கள்,பகைவர், மதியீனர். தேராள் - தேரேற்றத்தானை. தேரி - மணற்றிட்டை. தேரிடக்கியம் - தேர்க்கொடி. தேரூமச்சி - நத்தை. தேரை - இட்டமான வீகை, தவளையினோர் பேதம். தேரைபாய்தல் - நோய்பட்டுட றேய்தல். தேரைமேய்தல் - உல்லிபற்றல். தேரையர், தேரையன் - தேரன். தேரோடும்வீதி - கோயிற்புற வீதி. தேரோட்டு - தேரிழுப்பு. தேரோன் - இரதவீரன், சூரியன். தேர் - இரதம், அஃது நால்வகைத்தானையினொன்று, உரோகணிநாள், தேரென்னேவல். தேர்கடை - தீர்மானம். தேர்க்கவி - மிறைக்கவியினொன்று,அஃது தேரங்கமாய்க் கோடு கீறியெழுத்தடைக்குங் கருவி. தேர்க்காரன் - தேரேற்றக்காரன்,தேர்ப்பாகன். தேர்க்கால் - தேர்ச்சில். தேர்க்குடம் - தேர்முடி. தேர்க்கூம்பு - கொடிஞ்சி மரம். தேர்க்கொடி - தேரிடக்கியம். தேர்க்கொடுங்கை - தேரின் மரச்சுற்று. தேர்க்கொத்தர் - தேரிழுக்கிறவர்கள். தேர்ச்சார்பலகை - தேரின் தட்டு. தேர்ச்சி - ஆராய்தல், எண்ணல்,கல்வி, தெளிவு, கல்வியறிவு. தேர்ச்சித்துணைவர் - மந்திரிகள். தேர்ச்சியர் - மந்திரியர்.தேர்ச்சில், தேர்ச்சில்லு - தேர்ச்சக்கரம். தேர்ச்சுவடு - தேரடி, தேர்த்தடம். தேர்ச்சேனை - தேர்த்தானை. தேர்தல் - அறிதல், ஆராய்தல், சொல்லல், தெளிதல், நிச்சயித்தல். தேர்த்தடம் - தேர்ச்சுவடு. தேர்த்தட்டு - தேர்நடு. தேர்த்தானை - தேர்ச்சேனை. தேர்த்திருநாள் - தேர்த் திருவிழாநாள். தேர்த்துகள் - இரததூளி, கதிரெழுதுகளெட்டுக் கொண்டது. தேர்நிலை - தேரடி, தேர்விடு மிடம். தேர்ந்தவன் - அறிஞன். தேர்ப்பந்தர் - தேர்போலும் பந்தல். தேர்ப்பாகன் - தேர் செலுத்துவோன்,புதன். தேர்ப்பார் - தேர்த்தட்டு. தேர்முட்டி - தேர்விடுமிடம். தேர்மொட்டு - தேர்க்கூம்பு. தேர்வடம் - தேரிழுக்குங் கயிறு. தேர்வீரர் - போர் மன்னர். தேர்வு - ஆராய்வு, தெளிவு. தேலிக்கை - இலேசு . தேலுதல் - தப்புதல், விலகல். தேவகங்கை - ஆகாயகங்கை. தேவகணிகையர் - தேவ நாடகியர். தேவகந்தம் - குங்கிலியம். தேவகந்துரு - சீதேவியார். தேவகம் - தேவீகம். தேவகம்மாளன் - தேவ தச்சன். தேவகன் - கிருட்டிணன் பாட்டன்,தேவகி தந்தை. தேவகன்னி - தேவரம்பை. தேவகா - கோவிற்பூங்கா. தேவகாஷ்டம் - தேவதாரி. தேகாதம் - மலைக்குகை. தேவகாத்துமசை - கிருட்டினன்றாய். தேவகாந்தாரி - ஓர் பண், ஓரிராகம். தேவகாயனன் - கந்தருவன். தேவகானம் - தேவர்கட் குரிய ராகம். தேவகி - கண்ணன்றாய், வசுதேவன்மனைவி.தேவகிசூனு, தேவகிநந்தனன், தேவகி மைந்தன் - கிருட்டிணன். தேவகிரகம் - தேவாலயம். தேவகிரி - ஓர் மலை. தேவக்கிரியை - ஓர்பண், தெய்வச் செயல். தேவசுமம் - கராம்பு. தேவகுண்டம் - தானாயுண்டானவூற்று. தேவகுரு - வியாழ பகவான்.தேவகுருவஞ்சம், தேவகுருவம் - போகபூமி யாறினொன்று. தேவகுலம் - கோவில், தேவசாதி. தேவகூத்தியர் - தேவரம்பையர். தேவகெந்தம் - குங்கிலியம். தேவகோட்டை - மதுரைக்கருகில்நாட்டுக்கோட்டையாரூர். தேவகோயில் - தேவாலயம். தேவக்கிரியை - ஓரிராகம். தேவசங்கு - சங்கநிதி. தேவசபை - தேவ கூட்டம். தேவசாட்சி - ஆணை, தெய்வ முன்னிலை. தேவசாயுச்சியம் - தேவனுடனொன்றி யிருத்தல். தேவசிகிச்சகன் - தேவ மருத்துவன். தேவசிகிருதம் - தெய்வத்திற்குச்சேர்ந்தது. தேவசிருட்டி - சராசரம். தேவசிருட்டை - மதுபானம். தேவசுருதன் - தேவன், நாரதன். தேவசேகரம் - தவனம். தேவசேனாபதி - குமரன். தேவசேனை - இந்திரன் மகள், தேவகூட்டம். தேவச்சந்தம் - நூறுசரமுள்ளமுத்தாரம். தேவடன் - சிற்பி. தேவடியாள் - தேவதாசி, வேசி. தேவதச்சன் - விச்சுவகன்மா. தேவதத்தம் - அருச்சுனன் கைச்சங்கு. தேவதத்தன் - ஓட்டமுமிளைப்பும்வியர்வும் வருவிக்கும் வாயு,புத்தன்றம்பி. தேவதத்தாக்கிரசன் - புத்தன். தேவதத்துவம் - தெய்வ வல்லபம். தேவதரு - கற்பகம், மந்தாரம். தேவதா - தேவதை. தேவதாகாரம் - கோவில். தேவதாசன் - அரிச்சந்திரன் மகன், தெய்வத்தொண்டன். தேவதாசி - தேவடியாள். தேவதாசொரூபி - அதி சுந்தரமுள்ளவள், திவ்விய சொரூபி. தேவதாடம் - இராகு, தீ. தேவதாதிபன் - இந்திரன். தேவதாமரை - பதுமநிதி. தேவதாயதனம் - கோவில். தேவதாயோக்கியம் - தெய்வீகம். தேவதாரம் - ஐந்தருவி னொன்று,ஓர்மரம், செம்புளிச்சை. தேவதாரி - ஓர்மரம். தேவதாரு - செம்புளிச்சை, பஞ்சகற்பகதரு, பஞ்சதருவினொன்று,தேவதாரம். தேவதாருவனம் - ஓர் தபோவனம். தேவதாவியற்சனம் - விக்கிரகாராதனை. தேவதாளி - ஓர்செடி. தேவதானியம் - ஓர் தானியம். தேவதீபம் - கண். தேவதுந்துமி - தெய்வப்பறை. தேவதூஷணம் - தெய்வநிந்தை. தேவதூதர் - தெய்வ தூதராகியவானோர். தேவதூபம் - சாம்பிராணி, வெள்ளைக்குங்கிலியம். தேவதேவன் - சிவன், பிரமன், விட்டுணு. தேவதை - தெய்வம், தேவி, பேய். தேவத்துவம் - தேவதன்மை. தேவநகர் - கோவில், தேவபட்டணம். தேவநந்தி - இந்திரன் வாயில்காப்போன்.தேவநாகரம், தேவநாகரி - சமஸ்கிருதத் தோர்வகையட்சரம். தேவநாயகன் - கடவுள், தேவர்தலைவன். தேவநாயகன் பட்டணம் - கூடலூருக்கருகிலோரூர். தேவநிகாயம் - மோக்கம். தேவநிந்தகன் - தேவநிந்தனைக்காரன். தேவநீதி - தெய்வத்தினால் வருஞ்சிட்சை. தேவபதம் - ஆகாயம், இராச சமுகம். தேவபதி - இந்திரன். தேவபத்தினி - தேவபாரி. தேவபவனம் - அரச மரம், கோவில்,மோக்கம். தேவபாஷை - தேவர்களின் பேச்சு,நாகரம். தேவபாணி - இசைப்பாவின் பகுதியுளொன்று. தேவபூதி - கங்கை. தேவபூமி - தேவலோகம். தேவபசு - காமதேனு. தேவப்பிரதிமை - விக்கிரகம். தேவப்பிரமா - நாரதன். தேவப்புள் - அன்னப்பறவை. தேவப்பெண் - தேவஸ்த்ரீ. தேவமஞ்சரம் - கிருட்டின னாபரணம். தேவமணி - அகன்மணி, கிருட்டினனாபரணம், குதிரை, நற்சுழியினொன்று, சிவன், குதிரைக்கழுத்துச் சுழி. தேவமந்திரி - வியாழன். தேவமாசம் - கருப்ப முண்டானஎட்டாம் மாதம்.தேவமாதா, தேவமாதுரு - அதிதி. தேவமாநகம் - கௌஸ்துபமணி. தேவம் - அனிச்சை, குளி நாவல்,தெய்வம், மாமரம். தேவயாத்திரம் - திருவிழா. தேவயானம் - தேவவாகனம், விமானம். தேவயானி - சுக்கிரன் புத்திரி. தேவயானை - இந்திரன் பட்டத்தியானை, சுக்கிரன்மகள், முருகன்றேவி. தேவயோனி - தேவப் பிறப்பு. தேவரங்கம் - பணிப்புடைவை. தேவரதம் - தேவயானம். தேவரம்பை - தேவப்பெண். தேவரன் - கொழுந்தன். தேவராசன் - இந்திரன். தேவராட்டி - சன்னதாரி. தேவராதன் - மிதிலையினரசன். தேவராளன் - சன்னதக் காரன். தேவருணவு - அமுதம். தேவர் - உயர்ந்தோர், சுரர். தேவர்கோன் - தேவேந்திரன்,வியாழன், குளிநாவல். தேவர்பீடை - வெற்றிலை. தேவர்வசம் - அரசு. தேவலகன் - பூசாரி. தேவலதை - அடுக்கு மல்லிகை. தேவலன் - ஓர்முனி, கொழுந்தன்,சன்மார்க்கன், பார்ப்பான், பூசாரி. தேவலோகம் - சுவர்க்கம். தேவவணக்கம் - தேவவழிபாடு. தேவவத்திரம் - அக்கினி. தேவவருடம் - தேவாண்டு. தேவவருணனை - தெய்வப்புகழ்ச்சி. தேவவல்லபம் - சுரபுன்னை. தேவவரசி - இந்திராணி. தேவவர்த்தகி - விசுவகர்மா. தேவவாக்கியம் - தேவவசனம் தேவவிரதன் - தேவனை வழிபடுவோன், வீடுமன். தேவவிருட்சம் - பஞ்சதரு. தேவவுணவு - அமுதம், அவிர்ப்பாகம். தேவவைத்தியம் - சிந்தூர வைத்தியம். தேவளம் - கோவில். தேவனம் - அழுகு , ஒளி, சூதாடு கருவி,தாமரை, துக்கம், துதி, தோழி, தேவன் - அகம்படியன், அரசன்,அருகன், ஈட்டிக்காரன், கடவுள்கொழுந்தன், பரிசைக்காரன்,மடையன், மறவன். தேவாங்கம் - பட்டுச்சீலை. தேவாங்கு - ஓர்மிருகம். தேவாசனம் - தேவபத்திராசனம். தேவாசீவன் - கோவிற்பணிவிடைசெய்யும் பிராமணன். தேவாசுவம் - இந்திரன் குதிரை. தேவாண்டு - தேவராண்டு அஃதுமுந்நூற்றறுபைத்தைந்து மானிடவருஷங் கொண்டது. தேவாதி - கடவுள். தேவாதீனம் - தெய்வத்திற்குரியது. தேவாத்திரம் - தேவர்களாற் கொடுக்கப்பட்ட அம்பு. தேவாத்துமா - அரசமரம். தேவாபீட்டை - வெற்றிலை. தேவாமுதம் - தேவர்கள் பருகுமமுதம். தேவாயதனம் - கோவில். தேவாயுதம் - மழைவில். தேவாரம் - ஓர் திருப்பாடல், மூவர்பாடல். தேவாலயம் - கோவில், தேவபதவி,மேருகிரி. தேவாலயஸ்திதபஜிதம் - ஆலயவிபூதி. தேவாவாசம் - அரசமரம், கோவில். தேவானுட்டிப்பு - தேவவணக்கம். தேவான்னம் - நைவேத்திய வமுது. தேவி - அரசி, காளி, சீதேவியார்,தலைவி, துர்க்கை, தேவப்பெண்,பதுமினிப் பெண், பார்வதி,மனைவி. தேவிகம் - தேவீகம். தேவிகை - ஊமத்தை, ஓர் நதி. தேவிகோட்டம் - ஒரூர், காளி கோயில். தேவிபட்டினம் - ஓரூர். தேவிமுத்திரை - காஸ்மீர படிகம். தேவிரு - கொழுந்தன், முந்தினகணவன். தேவிலன் - தார்மிகன். தேவீகம் - தெய்வீகம். தேவேக்கியம் - ஓமம். தேவேசியம் - பிருகற்பதி. தேவேத்தனம் - தெய்வேத்தனம். தேவேந்திரன் - தேவராசன். தேவை - அவசரம், இராமநாதபுரம்,வேண்டுந் தன்மை.தேவோக்கித்தம், தேவோக்தம் - வெளிப்படுதல். தேவோத்தியானம் - தேவகா. தேளி - தேளித் தேங்காய், திரளிமீன்,தேட்கெண்டை, தேள். தேள் - அனுட்நாள், ஓர்செந்து,தெறுக்கால், விருச்சிக விராசி. தேள்கொடுக்கி - ஓர் பூண்டு. தேறகம் - தேறை.தேறலர், தேறலார் - அறியாதார்,பகைவர். தேறல் - கள், தங்கல், துணிதல்,தேறுதல், தேன், நிச்சயம், கள்ளின்தெளிவு. தேறார் - அறிவிலோர், பகைவர். தேறு - சுத்தம், தேறென்னேவல்,தேற்றாமரம், நிச்சயம், மஞ்சள்,முதலியவற்றின் தேறு. தேறுகடை - தீர்மானம். தேறுசூடு - தெளிவுசூடு. தேறுதலை - ஆறுதல், தைரியம். தேறுதல் - அதிகப்படுதல், தங்கல்,துணிதல், துன்பந்தீர்தல், தெளிதல்,நம்புதல், நிச்சயம், விறைத்தல். தேறுநர் - கற்றோர், சேர்ந்தோர்,நம்பினோர். தேறை - ஓர்மீன். தேற்றம் - அதிகப்படல், கருமமுடிக்குந் துணிவு, திடன், தெளிவு,நிச்சயம். தேற்றரவாளன் - திடப்படுத்துகிறவன்,.திடனுடையோன். தேற்றரவு - திடப்படுத்துகை, தெளிவு. தேற்றல் - அறிவித்தல், தீர்த்தல்,தேறப்பண்ணுதல், தெளிந்திடப்படுத்தல். தேற்றவுவமை - பொருளினுயர்விழிபு தோன்ற ஏகாரம் புணர்த்தியருவகிப்பது (உ-ம்) அல்லார்திருவின் இனிதேநல்லார் வறுமை. தேற்றா - ஓர் மரம். தேற்றார் - அறிவிலார், பகைவர். தேற்றுதல் - தேற்றல். தேற்றுமரம் - இலவம் தேனம் - சமுத்திரம். தேனர் - அசுரர், திருடர். தேனி - கடுகு ரோகணி. தேனிகை - கொத்துமல்லி. தேனித்தல் - இனித்தல். தேனிலையான் - தேனீ.தேனிறாட்டு, தேனிறால் - தேன்கூடு. தேனீ - தேன் கூட்டுமீ. தேனீக்குடிக்கீரனார் - கடைச்சங்கப்புலவருளொருவர். தேனு - எருமை, களவு, குதிரை,தெய்வப்பசு, பசு, பாற்பசு. தேனுகசூதனன் - கிருட்டினன். தேனுகம் - பெண்யானை. தேனுகன் - ஓரசுரன். தேனுகா - தேனுகை, பாற்பசு, பெண்யானை. தேனுகாதுத்தம் - பசுப்பால். தேனுகாரி - கிருட்டினன். தேனுமுத்திரை - ஓர் முத்திரை. தேனெல் - அச்சுவினிநாள். தேனெறும்பு - பெரிய எறும்பு. தேன் - கள், பெண்வண்டு, மது,வண்டு, வாசனை. தேன்கடல் - சத்த சமுத்திரத் தொன்று. தேன்கதலி - ஓர்வாழை.தேன்குழல், தேன்குழாய் - ஓர்பண்ணிகாரம்.தேன்கூடு, தேன்கூண்டு - தேனீக்கூட்டம், தேன்வதை. தேன்தோடை - தேன்றோடை. தேன்மரம் - ஓர்மரம். தேன்வதை - தேனிறால். தேன்றோடை - ஓர்தோடை தை தை - ஓரெழுத்து, ஓர் மாதம், தாளக்குறிப்பினொன்று. தைக்கத் தக்கவை - தையென்னேவல், பூசநாள், மகரராசி,தைவிளை, அத்திப்பிசின். தைசசம் - உலோகம், நெய், பலம். தைசசாவர்த்தினி - உலோக முருக்குங்குகை. தைசதம் - அக்கினிசம்பந்தம், மகரராசி, மூவாங்காரத்தொன்று. தைதம் - விரனுனி. தைதல் - அலங்கரித்தல். தைதிலம் - காண்டாமிருகம், தைதுலம்.தைதுலம், தைதுலை - கழுதைக்கரணம். தைதேயர் - இராக்கதர். தைத்தல் - அடைத்தல், அறைதல்,கணக்குப்பூட்டுதல், தையல் செய்தல், படுதல், பொருத்துதல், உட்புகுதல். தைத்தியகுரு - சுக்கிரன். தைத்தியதேவன் - வருணன். தைத்தியநிசூதநன் - விட்டுணு. தைத்தியபுரோகிதன் - சுக்கிரன். தைத்தியமதனம் - கரணைச்செடி. தைத்தியமந்திரி - சுக்கிரன், தைத்தியபுரோகிதன். தைத்தியமாதுரு - திதி. தைத்தியயுகம் - சதுர்யுகங் கொண்டது. தைத்தியர் - அசுரர், திதிமைந்தர். தைத்தியாகோராத்திரம் - ஓர் வருடம்,அஃது அசுரர்க் கோரிராப் பகல். தைத்தியாரி - திருமால். தைத்திரம் - சிச்சிலிக்குருவி. தைத்திரியம் - இரண்டாம் வேதம்,உபநிடத முப்பத்திரண்டினொன்று. தைத்திரீயகன் - இரண்டாம் வேதானுசாரி. தைநம் - எளிமை, தீனத்துவம். தைப்பான் - ஊசி, தையற்காரன். தைப்பு - தையல்செய்தல், பொருத்துதல். தைப்பூசம் - தைமாதத்துப் பூசத்திருநாள். தைப்பை - சட்டை, தைத்தவுடுப்பு. தையல் - அழகு, தைப்பு, பெண். தையறம் - தைவறப்பு. தைரியம் - குதிரையின் கெச்சநடை,திடம், பலம், கவலையின்மை. தைரியஸ்தானம் - மூன்றாமிடம். தைரியலட்சுமி - அட்ட லட்சுமிகளிலொருத்தி. தைலகிட்டம் - எண்ணெய் அடிமண்டி. தைலக்காப்பு - எண்ணெய்க்காப்பு. தைலக்காரன் - எண்ணெய் வாணிபன். தைலசௌரிகை - வெளவால். தைலபர்ணிகம் - வெண்சந்தநம். தைலபிபீலிகை - செவ்வெறும்பு. தைலபீதம் - தயிலபீதம். தைலமாட்டுதல் - எண்ணெயபிஷேகம் பண்ணல், பிரேதாலங்காரம் பண்ணல். தைலமாலி - திரி. தைலமிடுதல் - எண்ணெய் பொருத்துதல். தைலமிறக்குதல் - எண்ணெய்வடித்தல். தைலம் - சத்து, சாரம், தயிலம்,எள்ளெண்ணெய். தைலாங்குருவி - தகைவிலான் குருவி. தைலாம்புகை - துரிஞ்சில்.தைலி, தைலிகன் - வாணிபன். தைலீநம் - எள்விளை நிலம். தைவகருமம் - தகனப்பலி. தைவகி - தேவகி. தைவகோவிதன் - தைவபண்டிதன். தைவதம் - தெய்வதம். தைவதீபம் - கண். தைவம் - பாக்கியம்.தைவரல், தைவருதல் - தடவல்,துடைத்தல், அனுசுருதி ஏற்றல் தைவலேககன் - சோதிடன். தைவவாணி - தேவவாக்கு. தைவாகரி - சனி, நமன். தைவிகம் - தேவச் செயலாய்ச் சம்பவிப்பது, தேவசம்பந்த முடையது. தைவிளை - தைவேளை. தைவீகம் - தெய்வத் தன்மை, தெய்வவழியாய் வருவது. தைவேத்தனம் - தேவேத்தனம். தைவேளை - அசகண்டர், நல்ல வேளை. தைனம் - தினம். தைனியம் - உலோகம், கீழ்மை,தாழ்மை, பொருளாசை. தொ தொகம் - மதிப்பு தொகல் - கூடல், சுருங்கல், தொகுதல். தொகாநிலை - வேற்றுமை முதலியவிரிந்து நிற்பது. தொகுதல் - கூடுதல், சுருங்குதல்,நெருங்குதல். தொகுதி - அளவு, கூட்டம், பகுதி. தொகுதிப்பெயர் - குழூஉக்குறிப் பெயர். தொகுத்தல் - அளவு படுத்தல்,ஒழுங்காக்குதல், கூட்டல், சம்பாதித்தல், சுருக்குதல், தொக்கு நிற்கச்செய்தல். தொகுத்துக்காட்டல் - தொகையாகக்காண்பித்தல். தொகுத்துச்சுட்டல் - தந்திர யுத்தியினொன்று அஃது பலவுந் தொகுத்துச் சொல்லுதல். தொகுநிலைத்தொடர்மொழி - வேற்றுமையுருபு, முதலியன நடுவேதொக்கு நிற்பச்சொற்கடொடர்ந்துவருவது. தொகுபுலப்பொருட்டற்குறிப்பு - ஓரலங்காரம் அஃது உபமேய வுபமானங்கட்குரிய தருமவிடயந் தொக்குநிற்பது. தொகுப்பு - தொகுத்தல். தொகை - கணக்குவகை நான்கினொன்று, கூட்டம், சுருக்கம்,தொக்குநிற்றல், மொத்தம்.தொகைகட்டுதல், தொகைக்கட்டுதல் - தொகுத்தல், முடித்தல் தொகைக்காரன் - பணக்காரன். தொகைச்சூத்திரம் - பலதிறப்பொருள்களையும் வேறு வேறாகத்தொகுத்துச் சொல்லுஞ் சூத்திரம். தொதைத்தல் - தொகைப்படுத்தல். தொகைநிலை - தொக்கு நிற்குநிலை. தொகைநிலைச்செய்யுள் - ஓர் பிரபந்தம், அஃது பொருளா னேனும்அளவானேனுந் தொகுத்துக்கூறப்படுவது. தொகைநிலையுருவகம் - மாட்டேற்றுச் சொற்றொகுத்துக் கூறப்படு முருவகம். தொகைபூட்டுதல் - கணக்குச் சரிக்கட்டுதல். தொகைப்பொருள் - முதலிற்பலகாரணங்களான்விரித்துச்சொன் பொருள்களை - முடிவிற்சுருக்கிச் சொல்லல். தொகைமோசம் - பிழை, மறதியினால் வந்தது. தொகையாக்குதல் - தொகைப்படுத்தல். தொகையுருவகம் - மாட்டேற்றுச்சொற்றொகுத்துருவகித்தல் (உ-ம்)கைமலருமடித்தளிருஞ் சேருங்கொடி. தொகையுவமம் - உவமான வுபமேயங்களின் உவம வுருபும் பொதுத்தன்மையுந் தொக்குநிற்கச் சொல்லப் படுமணி. தொகையுவமை - பண்பு முதலாயினதொக்கு நிற்பது (உ-ம்) தாமரைபோன்முகம். தொகைவிரி - தொகுத்தலும்விரித்தலுமாயிருப்பது. தொகைவிரியுருவகம் - உவமைச்சொற்றொக்கும் விரிந்தும் நிற்பது(உ-ம்) சூரியன் விளக் காகச் சொன்மாலை சூடினான். தொக்கடம் - தொக்கடி, மிதித்தல்முதலியன. தொக்கடவு - குறுக்குவழி. தொக்கடி - குடலை, காவற்குடிசை,சிறு கூடை. தொக்கடை - தரித்திரம். தொக்கட்டி - தொக்கடி. தொக்கம் - தொங்கல், வழக்கு. தொக்கார் - அடுத்தோர், தோழர். தொக்கி - சமுத்திராப்பச்சை. தொக்கிந்திரியக்காட்சி - ஒரளவைஅது பரிசமறிதல். தொக்கு - அற்பம், உடல், தோல்,அஃது பஞ்சவிந்திரியத் தொன்று.சருமம், மரப்பட்டை. தொக்குதொக்கெனல் - ஈரடுக்கொலிக்குறிப்பு. தொக்குநிற்றல் - உருபு முதலியசுருங்கி நிற்றல். தொங்கணி - ஆபரணத்தின் கடைப்புணர்வு. தொங்கல் - ஆண்மயிர், ஆபரணக்கடைப்பூட்டு, காதணி, குதித்தல்,தங்கல், தூக்கங்கள், தொங்குதல்,பீலி, பீலிக்குஞ்சம், பீலிக்குடை,பூமாலை, மயிர் மயிற்றோகை,முந்தல், முலைமூடு, முத்தரீயம்,முனை, வெண்குடை. தொங்கன் - கள்வன். தொங்கி - கள்ளி. தொங்கிசம் - அழிவு, நட்டம். தொங்கீன் - சீனமல்லிகை. தொங்கு - தொங்குதல், தொங்கென்னேவல். தொங்குங்கல் - ஆட்டுக்கல். தொங்குதல் - குதித்தல், தங்குதல்,தூங்குதல், ஓடிப்போதல். தொங்குபறிவு - ஆதாரமின்மை,பட்டும் படாமலிருத்தல், தொங்குபுளுகன் - மகா விசும்பன்.தொங்குபொரிவு, தொங்குபொறி - தொங்குபறிவு. தொசங்கட்டுதல் - துவசங்கட்டுதல், தொசத்தம்பம் - கொடித்தம்பம். தொசம் - துவசம்.தொசாரோகணம், தொசாரோணம் - கொடியேற்றம். தொசாவந்தி - ஓரிராகம். தொடக்கம் - ஆதி, செல்வம்,துவக்கம், வருக்கம். தொடக்கு - துடக்கு தொடக்குதல் - துடக்குதல்,பிணித்தல். தொடங்கல் - ஆரம்பித்தல், முயலல். தொடங்கு - காலணி, தொடங்கென்னேவல், விலங்கு. தொடங்குதல் - தொடங்கல். தொடராமுறி - விடுதலைப்பத்திரம். தொடரி - ஓர் செடி, புலிதொடக்கி. தொடரெழுத்து - நிலைமொழியீற்றையும் வருமொழி முதலை யுந்தழுவி நிற்குமெழுத்து. தொடர் - கோவை, சங்கிலி, தொடரென்னேவல், தொடர்பு, நூல்,பஞ்சி நூல், பழமை, பிசின், பூமாலை, வாசம், விலங்கு, நட்பு. தொடர்ச்சி - உரிமை, ஒழுங்கு,தொடர்பு, பற்றுதல், பூத்திரள்,முயற்சி, வழக்கு, தொடர்ச்சொல் - வாசகம். தொடர்ச்சொற்புணர்த்தல் - தந்திரயுத்தியினொன்று அஃது ஒன்றற்கொன்று சம்பந்தமுடைய சொற்களைச் சேர்த்து வைத்தல். தொடர்தல் - கட்டல், தேடல், பின்போதல், பின்றொடர்தல், முயற்சியாயிருத்தல், வழக்கிலேயழைத்தல். தொடர்நிலைச்செய்யுள் - பொருளானேனுஞ் சொல்லானேனுஞ்சொற்பொருனானேனந்தொடர்ந்து நிற்கும் பாடல். தொடர்ந்தார் - மித்திரர். தொடர்ந்தேற்றி - தொடர்ச்சி. தொடர்ந்தோர் - மித்திரர். தொடர்பின்மையணி - ஓரலங்காரம்அஃது காரணமோரிடத் திருப்பக்காரிய மற்றோரிடத்துப் பிறத்தலைச் சொல்லுதலும், ஓரிடத்துச்செய்தற் குரியதை மற்றோரிடத்துச் செய்தலும் ஒன்றைத்தொடங்கி அதற்குப் பகையாகியமற்றொன்றைச் செய்தலுமாம். தொடர்பு - உறவு, ஒழுங்கு, சினேகம்,சேர்மானம், தொடர்ச்சி, பழமை,பா, பாட்டு, முறைமை. தொடர்புயர்புநவிற்சியணி - ஓரலங்காரம். அஃது சம்பந்தமில்லாதிருப்பச் சம்பந்தத்தைக் கற்பித்தலும் சம்பந்த மிருக்கச் சம்பந்தமில்லாமையைக் கற்பித்தலுமாம். தொடர்ப்பாடு - தொடர்ச்சி. தொடர்முழுதுவமையணி - ஓரலங்காரம் அஃது முன் வாக்கியங்களுள்ளும் பின் வாக்கியங்களுள்ளுமொரே பொதுத் தருமத்தைச்சொல்லுதல். தொடர்மொழி - புணர்மொழி. தொடர்வு - தொடர்பு. தொடலி - தொடரி. தொடலை - மகளிர் விளையாட்டு,மாலை, விளையாட்டு. தொடல் - சார்தல், தீண்டல், தோண்டல், பிடித்தல், புசித்தல், தொடுதல். தொடாப்பூ - விரிந்த பூ. தொடி - ஒரு பலம், கங்கணம்,கைவளை. தொடிசு - உடந்தை, சம்பந்தம். தொடித்தலைவிழுத்தண்டினார் - சங்கப்புலவரிலொருவர். தொடு - அணாப்பு, தொடுவென்னேவல், தோண்டல், தோட்டம்,பரிசம், மருதநிலம், வஞ்சம், வயல். தொடுகடி - மேற்கடி. தொடுகயிறு - தொடுவான். தொடுகழல் - தொடுசெருப்பு. தொடுகிலும் - ஒரு பொழுதும். தொடுகை - தோண்டுகை, பரிசம் தொடுக்கம் - பொன். தொடுசு - உடந்தை, சம்பந்தம். தொடுதல் - அணிதல், இணைந்திருத்தல், உண்ணல், எய்தல்,தீண்டல், தொடங்கல், தோண்டல்,பிடித்தல், இடுதல், கட்டல். தொடுதுணைவி - உதவி. தொடுதோல் - செருப்பு. தொடுத்தல் - அணிதல், அறிமுமாதல், உருவாக்கல், கட்டல்,கோத்தல், செலுத்தல், சேர்த்தல்,தொடங்கல், பற்றல், பாத்தொடுத்தல், பிணைத்தல், பொருத்தல். வில்வளைத்தல், வைத்தல். தொடுத்து - தொட்டு. தொடுபதம் - சோறு. தொடுப்பு - கட்டு, கலப்பை, கூட்டு,கோவை, கோள், சங்கிலி, சேர்க்கை,தந்திரம், துவக்கம், பழக்கம், பாதரட்சை, மரக்கொம்பு, வழக்கு,வெறும்புறங் கூறல். தொடுப்புக்கத்தி - ஓர் பட்டா. தொடுவழக்கு - கள்ள வழக்கு. தொடுவாய் - ஆறுங்கடலுஞ் சந்திக்குமிடம். தொடுவான் - அடிவானம், தொடுக்குங்கயிறு. தொடுவிலங்கு - இருவரைத்தொடுக்கும் விலங்கு. தொடுவு - கொல்லை. தொடுவை - கூட்டாளி, தொடுத்திருப்பது, புது யானையைப்பழக்கும் யானை, வைப்பாட்டி. தொடை - அம்பு, உத்திரந்தாங்குங்கட்டை, செய்யுட்டொடை, அஃதுபல வடிகளிலேனும், பலசீர்களிலேனு மெழுத்துக்களி லொன்றிவருவது, துடை, தொடர்ச்சி,நாணி, பூங்கொத்து, பூமாலை,மதில், மாலை, வீணை முதலியவற்றினரம்பு, வினா, கட்டு, தாறு. தொடைதட்டிவெள்ளாழர் - நாவிதர். தொடையல் - பூமாலை, மாலை,தொடர்ச்சி. தொடைவாழை - ஓர் செடி, ஓர் நோய். தொட்டப்பன் - தலைதொட்ட பிதா. தொட்டம் - துண்டுநிலம். தொட்டல் - உண்டல், தீண்டல்,தோண்டல். தொட்டவிரல்தறித்தான் - பெருங்குறிஞ்சா. தொட்டா - துவட்டா. தொட்டாச்சி - ஞானத்தாய், தலைதொட்டமாதா.தொட்டாட்டுமணியம், தொட்டாட்டு வேலை - குற்றேவல். தொட்டாப்பு - துட்டாப்பு. தொட்டால்வாடி - ஓர் செடி. தொட்டாற்சிணுங்கி - சுண்டில். தொட்டாற்சுருங்கி - தொட்டால்வாடி. தொட்டி - காஞ்சொறி, தெண்டம்,தொட்டில், வேலி, குறுந்தொட்டிஅம்பாரி. தொட்டிக்கால் - படப்புக்கால், விற்போல் உள்வளைந்த கால். தொட்டிச்சி - தொட்டியப்பெண். தொட்டிபாஷாணம் - ஓர் பாஷாணம். தொட்டிமை - ஒற்றுமை. தொட்டியக்கரு - தொட்டிய வித்தைக்குரிய நக மயிர் முதலிய கரு. தொட்டியம் - ஓர்தேசம், ஓர் பாடை,ஓர்வித்தை. தொட்டியர் - ஓர் சாதியார். தொட்டில் - சிறுகட்டில், தொட்டி. தொட்டு - தொடங்கி, பற்றியெனெச்சம். தொட்டுக்காட்டுதல் - சுட்டிக் காட்டுதல். தொண்டகம் - குறிஞ்சிப்பறை,ஆகோட்பறை. தொண்டமான் - ஓரரசன். தொண்டரடிப்பொடியாழ்வார் - ஓர்வைணவ சமயாசாரியர். தொண்டலம் - யானைத்துதிக்கை. தொண்டன் - அடியான். தொண்டி - ஓர் பட்டினம், கள்,கலப்பைக்கிழங்கு, தேவடியாள்,நெல்லாலாக்கின கள். தொண்டிச்சி - அடியாள். தொண்டியோர் - சோழகுலத்தோர். தொண்டு - அடிமை, ஒன்பது, ஓர்பூண்டு, கோழியுள்ளான், பனி,பழமை. தொண்டுசெய்தல் - பணிசெய்தல். தொண்டுதுரவு - பணிசெய்கை,வேகர்க்குச் செய்யுமுதவி. தொண்டை - ஆதொண்டைச் செடி,இனிய குரல், கொவ்வைச்செடி,பெருங்குரல், மிடறு, யானைத்துதிக்கை. தொண்டைகம்முதல் - குரல் கம்முதல். தொண்டைக்கனப்பு - குரற்கனப்பு. தொண்டைக்குழி - குரல்வளைக் குழி. தொண்டைதிறத்தல் - மிடற்றடைப்புநீங்கல். தொண்டைநாடு - தொண்டைமண்டலம். தொண்டைப்புற்று - ஓர் நோய். தொண்டைமண்டலசதகம் - ஓர் நூல். தொண்டைமண்டலம் - ஓர் நாடு. தொண்டையடைத்தல் - குரலடைத்தல். தொண்டையடைப்பு - குரலடைப்பு. தொண்டைவைத்தல் - சத்தமிட்டுக்கூப்பிடல். தொண்ணூறு - ஓரெண் தொகைகள்,நூறு எண்பதின் குறுக்கம். தொதி - பப்பரப்புளி மரம். தொத்தம் - பலவீனப்பட்டது. தொத்தன் - அடிமைக்காரன், தொத்தி - அடிமைக்காரி, ஓர் மரம், தொத்து - அடிமை, ஒட்டு, சார்பு,பழமை, பூங்கொத்து. தொத்துதல் - கூடுதல், தொந்தசத்துரு - தொடர்ந்த சத்துரு. தொந்தப்பழி - தலைதலைமுறையாகநிற்கும்பழி. தொந்தம் - அன்னியோன்னியம்,இரட்டித்தது, சலஞ்சாதித்தல்,சேர்க்கை, தொடர்பு, பழமை,போர், நெடுங்கோபம், தொந்தயுத்தம் - தொடர்ந்த போர்.தொந்தரவு, தொந்தரை - சோலி,வருத்தம். தொந்தரோகம் - பழநோய். தொந்தவினை - பழவினை. தொந்தறை - தொந்தரவு. தொந்தார்த்தம் - பழவினை. தொந்தி - தசைமடிப்பு, தொந்தியென்னேவல், தொப்பை, வயிறு. தொந்தித்தல் - இசைவுபிசகாதல்,இரட்டித்தல், தொடர்தல். தொந்திப்பு - இரட்டிப்பு, தொடர்பு,பேதம். தொந்திவயிறு - தொப்பை வயிறு. தொப்பாரம் - கொப்புளம், தோல்பாரம், நெடுஞ்சப்பாத்து, பேரில்லம், பொட்டணம். தொப்பி - கள், குல்லா, தலையின்றொப்பி, தாற்றுமடல், வாத்தி,நெல்லாலாக்கினகள். தொப்பிக்காரர் - தொப்பியீட்டுச்சாதிக்காரர் தொப்பிமடல் - கமுகம்பாளைமடல். தொப்புத்தொப்பெனல் - ஒலிக்குறிப்பு. தொப்புள் - கொப்பூழ். தொப்பை - கொப்புளம், திண்மையின்றிப்பருத்தது, தொந்தி, அம்பாரம். தொமலாடி - எட்டி. தொம்பம் - கம்பக்கூத்திலொன்று. தொம்பரம் - பந்தி, பேரில்லம். தொம்பர் - கழாய்க்கூத்தர். தொம்பறை - களஞ்சியம், தொம்பாரம் - பேரில்லம்.தொம்பை, தொம்பைக்கூடு - தானியங்களைச் சேமிக்கிற குதிர்.தொம்மனை, தொம்மை - மிகப்பருத்தது. தொயில் - தொய்யில். தொய் - குற்றம். தொய்தல் - இளகல், .இளைத்தல்,தளர்தல், தொய்யகம் - தலைப்பாளை. தொய்யல் - அகமகிழ்ச்சி, இளைத்தல்,இன்பம், உழவு, சந்தோஷம், சேறுசோர்தல், துன்பம். தொய்யா - துயிலி. தொய்யில் - உழுநிலம், ஓர்கீரை,சாந்தினா லுடலிலிடுங்கோலம்,எழுதுங்குளம்பு. தொய்வு - இளைப்பு, ஈளை, சுவாசமுட்டு, தொய்தல். தொலி - உமி, தொலியென்னேவல்,தோல். தொலித்தல் - உமிபோகக்குத்துதல்,உரித்தல். தொலியல் - உமிபோக்கிய அரிசி,தொலிக்கப்பட்டது, தொலித் தல். தொலியாகரம்பை - நத்தைச்சூரி. தொலை - உவமை, எல்லை, துலை,தூரம், தொலையென்னேவல். தொலைதல் - ஒழிதல், கெடுதல்,சாதல், நீங்குதல், முடிதல். தொலைத்தல் - அழித்தல், கொல்லல்,சேதப்படுத்தல். தொலைவு - அதிவு, தூரம், தோல்வி. தொலைவெட்டு - வெகுதூரம் தொல்காப்பியக்குடி - மதுரைக்கருகில் ஓர் பட்டினம். தொல்காப்பியம் - ஓரிலக்கண நூல். தொல்காப்பியன் - அகஸ்தியர் சீஷர்களிலொருவனாகிய திரணதூமாக்கினி எனும் நாமங் கொண்டஓரிலக்கண நூலாசிரியன், இவர்இடைச்சங்கப் புலவருளொருவர். தொல்பதி - பழமையான வூர். தொல்லை - தொந்தரவு, பழமை. தொல்லுகம் - பாவட்டை. தொல்வினை - பழவினை. தொவசலுகம் - பாவட்டை தொழல் - தொழுதல், தொழித்தல் - சிதறல், கோபித்தல்,ஆரவாரித்தல். தொழிலாளி - உத்தியோகத்தன், வேலைக்காரன். தொழிலானணையும்பெயர் - செயலைப்பற்றி வரும் பெயர் (உ-ம்) கணக்கன். தொழிலுவமம் - இரு பொருளின்றொழி லொப்புமையானத் தொழிற் பொருளையுவமா னோபமேயமாகக் கூறுவது. தொழிலோர் - தொழிலாளர். தொழில் - உத்தியோகம், சாமர்த்தியம், செயல், தந்திரம், தன்மை,வியாபாரம், வினைச்சொல், வேலை. தொழில்ஸ்தானம் - பத்தாமிடம். தொழிற்குறைவிசேடம் - ஓரலங்காரம், அஃது காரணமாகியதொழில் குறைந்து அதனாலாயகாரியம் விசேடித்திருத்தல். தொழிற்படுதல் - காரியப்படுதல் தொழிற்பண்பு - தொழிலை யுணர்த் தும் பண்புச்சொல். தொழிற்பாடு - வேலை. தொழிற்பெயர் - தொழிலானாய பெயர். தொழிற்றுறை - வியாபாரம். தொழின்மொழி - வினைச்சொல். தொழு - இரேவதி, குஷ்டநோய்,துலங்கு மரம், தொழுமரம்,தொழுவென்னேவல், பசுக்கூட்டம், பசுக்கொட்டில், பட்டி,மந்தை, மடு. தொழுகண்ணி - அரவாட்டிப் பச்சை. தொழுகள்வர் - மாசாலக்காரர். தொழுகுலத்தோர் - அந்தணர்,தொழத்தக்க குலத்தவர். தொழுகுலம் - பிரமவருணன். தொழுகை - தொழுதல். தொழுதல் - கும்பிடுதல், வணங்கல் தொழுதி - கூட்டம், திரட்சி, தொழுகிறாய், பறவைக் கூட்டத்தொலி. தொழுத்தை - அடிமைப்பெண்,வசவி. தொழுநோய் - குட்டநோய். தொழுந்தகை - தொழத்தக்கவன். தொழுப்பு - உழுதொழில்வளைப்பு. தொழுமரம் - உழலை, துலங்குமரம். தொழும்பர் - அடிமைகள், குற்றேவல்செய்வோர். தொழும்பு - அடிமை, அடிமைவேலை தொழுவம் - தொழுவோம், பட்டி. தொழுவர் - தொழிற்செய்வோர்,மருதநிலமாக்கள். தொழுனை - யமுனையாறு. தொளதொளத்தல் - சோர்தல், தளர்தல். தொளதொளப்பு - சோர்வு, நெகிழ்வு. தொளதொளெனல் - ஈடாட்டம்,நெகிழ்தல். தொளாபாரம் - பழைய காரியம். தொளாயிரம் - தொள்ளாயிரம். தொளி - சேறு, தொளியென்னேவல். தொளுக்குதல் - துகைத்துக்கட்டல். தொளுதொளுத்தல் - நுகைதல். தொளை - உட்டுளை, துளை, மூங்கில். தொள்கு - வலை, சேறு. தொள்ளம் - சேறு, தெப்பம். தொள்ளல் - துளை, துளைத்தல்,நெகிழ்வானது. தொள்ளற்காது - வடிந்த காது. தொள்ளாடி - நெகிழ்ந்த சரீர முள்ளது,பலமற்றவன். தொள்ளாடுதல் - தளர்தல், தொள்ளாமணி - தொளைக்காதமுழுமணி. தொள்ளாயிரம் - ஒன்பதுநூறு. தொள்ளாளி - தொழிலாளி. தொள்ளி - குழைசேறு. தொள்ளுதல் - துளைத்தல். தொள்ளை - துளை, துளையுடைப்பொருள், மரக்கலம், மரக்கால். தொள்ளைக்காது - வடியற்காது. தொறு - அடிமை, கூட்டம், தொழிற்பயில்வு, பசுக்கூட்டம், பொலிவு,மிகுதி. தொறுத்தி - இடைச்சி. தொறும் - தோறும். தொறுவர் - இடையர். தொறுவி - இடைச்சி. தொறுவியர் - இடைச்சியர். தொறுவு - தொறு. தொற்று - ஏறுதல், ஒட்டு, தொற்றென்னேவல், பற்று, பொருத்து,மூலைக்கையோ டணைத்த மரம். தொற்றுதல் - ஏறுதல், ஒட்டுதல்,பற்றுதல். தொற்றுத்தொடிசு - அற்ப பிசகு. தொற்றுவியாதி - ஒருவரிலிருந்துமற்றொருவர்க்கு வரும் வியாதி. தொனி - ஒலி, தொனியென்னேவல். தொனிச்சிலேடை - உரிப்பொருடவிரத்தொனியினாலு மோர்பொருட் கிடங்கொடுப்பது. தொனித்தல் - ஒலித்தல் தொனிப்பு - ஒலி. தொனு - உக்காரம், உக்கிர சத்தம். தொனிப்பு - ஒலி. தொனு - உக்காரம், உக்கிர சத்தம். தொனுப்பு - அலப்பு. தொனுப்புதல் - அலப்புதல். தொன்மரம் - ஆலமரம். தொன்மை - பழமை, பாவினெண்வகை வனப்பினொன்று. தொன்மைக்காட்சியனுமானம் - ஓரளவை, அஃது ஒரு பூவைக்காணாதிருக்க வதன் மணத்தால்இன்னபூவென்றறிதல். தொன்று - பழமை. தொன்னீர் - கடல். தொன்னூல், தொன்னூல்விளக்கம் - ஓரிலக்கண நூல். தொன்னை - இலை முதலியவற்றாற்செய்த பாத்திரம், ஈனன். தோ தோகசம் - பால். தோகதம் - வயா, விருப்பம். தோகதவதி - கருப்பிணி. தோகம் - சிசு, சிறுமை, திருத்தி, பால். தோகலம் - விருப்பம். தோகலவதி - கருப்பவதி. தோகலி - அசோகு. தோகல் - சோனைப்புல். தோகாபநயம் - பால். தோகை - இறகு, தொங்கல், பனங்கிழங்கின்வாற்றோல், பெண்,பெண் மயிர், மயில், மயிற்றோகை,முன்றானை, வால், விருதுக்கொடி, கொய்சகம். தோகைகுழல் - முடியிலை, முதியார்கூந்தல். தோகைமுகபூடணம் - மஞ்சள். தோகையர் - பெண்கள். தோக்கியம் - காதுக்குறும்பி, முகில். தோக்கு - துப்பாக்கி. தோக்குமம் - காதிற் குறும்பி. தோக்குளம் - பருத்தி. தோக்கை - சீலை, முன்றானை,மேற்போர்வை. தோசம் - குற்றம். தோசி - தோஷி. தோசை - அப்ப வருக்கத்தினொன்று,அப்ப வருக்கம். தோடகச்சிரங்கு - கொப்புளமான சிரங்கு. தோஷகம் - பசுக்கன்று. தோடகம் - கொப்புளம், தாமரை,திப்பிலி. தோடஞ்சிரங்கு - தோடகச் சிரங்கு. தோடத்திரயம் - முப்பிணி, அவைவாதபித்த சேத்துமம். தோடமூர்ச்சிதம் - நவமணிக் குற்றத்திலொன்று, அது புல்லினிறம்.தோஷம், தோடம் - இரவு, ஓர் சுரம்,குற்றம், சந்தோஷம், சன்னி, பர்வம். தோடயம் - ஓர் கருவி, நாடகச்சிறப்புப் பாயிரக் கவி. தோடலேசம் - நவமணிக்குற்றத்தொன்று, அது தாமரை நிறம். தோடல் - நவமணிக்குற்றத் தொன்று,அஃது எலுமிச்சையிலை நிறம். தோஷாரத்திவிரயம் - அக்கிராகாரம். தோடா - கைவளை. தோடி - ஓரிராகம். தோஷி - குற்றப்படுமாள், பாவி. தோஷிக்கொக்கு - ஓர் கொக்கு. தோடு - அணை, இலை, ஓலை,காதணியினொன்று, கூட்டம்,பழத்தினோடு, பூவிதழ், வளையம்,குடுமி. தோடை - குளஞ்சிமரம், சலாபக்குளியிலோர் குழூஉக்குறி, ஆடாதோடை. தோடையம் - நாடகச் சிறப்புப்பாயிரக்கவி. தோட்கோப்பு - கட்டுச்சோறு. தோட்சுமை - கா, காவடி. தோட்டக்கள்ளன் - ஓர் பறவை. தோட்டப்பயிரி - ஓர் பயிரி. தோட்டம் - கொல்லை. தோட்டா - வெடிமருந்துச் சுருள் தோட்டி - அட்ட மங்கலத் தொன்று,அழகு, இராசசின்னத் தொன்று,கதவு, குடாரி, கொழுக்கி, சுத்திசெய்வோன், சூழ்கழியிருக்கை,செங்காந்தள், நெல்லி, வாயில்,வெட்டியான், காவல், அங்குசம். தோட்டிமை - ஒற்றுமை, வெட்டியான் வேலை. தோட்டுச்சக்கரம் - ஓர்வித பாணம். தோட்டுச்சிரங்கு - தோடகச் சிரங்கு. தோட்பட்டை, தோட்பலகை - கைச்சீப்பு. தோணாமுகம் - கழியிருக்கை. தோணி - அம்பு, இரேவதிநாள், சிறுவழுதுணை, சேறு, நீர், மதிலின்சித்திரம், மரக்கலம், மிதவை. தோணிக்காரன் - சம்பானோட்டி. தோணிதாங்குதல் - மரக்கோ லிட்டுத்தோணி செலுத்தல். தோணித்துறை - ஏற்றிறக்குத்துறைமுகம். தோணியம் - அம்பு. தோணியோட்டு - தோணிவிடல். தோணோக்கம் - ஒருவரிக் கூத்து. தோண்டல் - தோண்டுதல். தோண்டான் - கோணாய். தோண்டி - பானை, வறட்சுண்டி. தோண்டுதல் - அகழ்தல், குடைதல்,முகத்தல். தோண்மேல் - பிடரி. தோதகத்தி - நூக்கமரம், மரியாதையற்றவள். தோதகமாடுதல் - மரியாதையற்றுநடத்தல். தோதகம் - மரியாதை யின்மை,வஞ்சகம், வருத்தம். தோதகன் - வஞ்சகன். தோதகி - வஞ்சகி. தோதம் - பசுவின்கன்று, வருத்தம்,வியாகுலம். தோதனம் - அங்குசம். தோதிபேலா - பேராமுட்டி. தோது - தொகுதி, தொடர்பு. தோத்திரம் - ஆவோட்டுங்கோல்,துதி, தொட்டி பாஷாணம்,யானைத்தோட்டி, வந்தனம். தோத்திரவேத்திரம் - ஆத்துரத்துங்கோல். தோத்திரித்தல் - துதித்தல். தோத்தை - சிறங்கை. தோப்பாடி - துஷ்டன். தோப்பு - சோலை. தோப்புக்கண்டம், தோப்புக்கரணம் - இருகைமாறிச் செவியைப் பிடித்திருகான் முடக்கி விழுதல். தோப்பை - திண்மையின்றிப் பருத்தது. தோமம் - படை. தோமரக்கிரகன் - தண்டபாணி. தோமரதரன் - தண்டபாணி, தீ. தோமரம் - இருப்புலக்கை, எறிபடை,கைவேல், தண்டம், பெருஞ்சவளம். தோம் - குற்றம், பொல்லாங்கு,பாவம். தோம்பு - சிவப்பு. தோயசூசகம் - தவளை. தோயதம் - நெய், மேகம். தோயதரம் - மேகம். தோயதி - கடல். தோயதிப்பிரியம் - இலவங்கம். தோயநிதி - கடல். தோயபாணம் - பொடுதலை. தோயப்பம் - தோசை. தோயமாபுரம் - நிவாதகவசர் புரம். தோயம் - நீர். தோயல் - ஆயுதங்களைக் காய்ச்சித்தோய்த்தல், கலத்தல், குளித்தல். தோய்ச்சல் - குளிப்பு, தோய்தல். தோய்தல் - இரும்பைக் காய்ச்சிநனைத்தல், உறைதல், கலத்தல்,புணரல், முழுகல். தோய்த்தல் - ஆயுதங்களைக் காய்ச்சிநனைத்தல், உறையிடுதல். ஊறவைத்தல், துவைத்தல், நனைத்தல். தோய்பனி - மிகு பனி. தோய்பன் - ஓர் பண்ணிகாரம். தோய்ப்பரடி - தோப்பாடி. தோய்ப்பு - தோய்த்தல் தோய்வு - கலப்பு, சார்பு, தோயல். தோரணகம்பம் - வெளிவாய்தற்றம்பம். தோரணம் - கோபுரவாயில், தலைவாய்தலின் வாயில், புடைவைத்தோரணம், மகரிகை, மாவிலைமுதலியவற்றாற் செய்யுந் தோரணம், வாகனம், நகரவாயில். தோரணவாய்தல் - சித்திர கோபுரவாயில், தோரணம், வகுத்திருக்கும் வாயில், முதல்வாயில். தோரணவிளக்கு - வெளவால்விளக்கு. தோரணி, தோரணிக்கம் - ஒழுங்கு,வரலாறு, வழிவகை, பரம்பரை. தோரணை - துடித்தல், நடை. தோரத்தம் - தொந்தறை. தோரி - சோறு. தோரிதம் - குதிரைநடை தோரியமடந்தை - பற்றுப்பாடும் பெண். தோரியமடந்தையர் - ஆடி முதிர்ந்தவர். தோரை - இரத்தம், ஓரெண், ஓர்பனை, குளநெல், கை, சரமணிக்கோவை, மயில் விசிறி, மூங்கிலரிசி, விரலிறை, வெண்மைகலந்த சிவப்பு, பொன்வடம், தோர்மூலம் - அக்குள். தோர்வி - பின்னிடல். தோலடிப்பறவை - தோற்காற் பட்சி,அவை தாராமுதலியன அன்னப்புள். தோலம் - அசைவு, ஓர் நிறை. தோலனம் - நிறுத்தல். தோலன் - தழுக்குணி. தோலாட்டம் - தழுக்குணித்தனம். தோலாண்டி - தோலன். தோலாநாவினர் - வாசாலகர். தோலாநியாயம் - பெறாநியாயம். தோலாமை - ஈடழியாமை தோலாமொழித்தேவர் - சூளாமணியியற்றிய சைனமுனிவர். தோலாயா - இலவு. தோலாவழக்கு - பெறாவழக்கு. தோலான் - அற்பன். தோலி - ஓர்பிசின், ஓர்மீன், தழுக்குணிப் பெண். தோலிகை - ஊஞ்சல், காது. தோலின்துன்னர் - பறும்பர் முதலாயினோர். தோலுணி - தோற்றன முடையார். தோலோதோல் - எவ்விதமும். தோல் - அபசயம், அழகு, எண்வகைவனப்பினு ளொன்று, சருமம்துருத்தி, தோலென்னேவல், தோற்பரிசை, புறணி, மூங்கில், யானைவாசகத்தினோருறுப்பு, வார்த்தை,தோல்வி தோல்வி - தோர்வி, பின்னிடல். தோல்வினைஞர் - செம்மார். தோல்வினைமக்கள் - செம்மார். தோல்வு - தோல்வி. தோவத்தி - சோமன், புடைவை. தோழமை - நட்பு. தோழம் - தொழுவம். தோழன் - நண்பன், பாங்கன். தோழி - சிநேகிதி, பாங்கி. தோழ் - தோழம். தோளணி - வாகுவலையம். தோளா - ஓர் வாகனம். தோளாமணி - தொளைக்காத முழுமணி. தோளி - அவுரி, தோளா. தோளுதல் - துளைத்தல். தோள் - கை, புயம். தோள்கொடுத்தல் - உதவுதல். தோள்செய்தல் - துளைத்தல். தோறு, தோறும் - பன்மைப் பொருடருமோரிடைச் சொல். தோற்கடித்தல் - தோற்றோடப்பண்ணல். தோற்கட்டு - கோதை. தோற்கருவி - தோலால் மூடப்பட்டவாச்சியம். தோற்கருவியாளர் - தோல் வினைஞர். தோற்காது - தோற்செவி. தோற்காற்பறவை - தோலடிப்பறவை. தோற்கொம்பு - தோலிலே முளைத்தகொம்பு. தோற்சித்தை - தோற்றுருத்தி. தோற்செருப்பு - அடியுயர மில்லாதசெருப்பு. தோற்செவி - காது. தோற்பரம் - தோற்பரிசை. தோற்பறை - தோற் கருவி. தோற்பாடி - வேசி. தோற்பாய் - தோற்றவிசு. தோற்பாவை - வினோதக் கூத்தாறினுளொன்று, அது தோலாற் செய்தபாவையை ஆட்டுவிப்பது. தோற்பு - தோல்வி. தோற்புரை - தோலையடுத்த துவாரம். தோற்பெட்டி - தோலாற் செய்யப்பட்ட பெட்டி. தோற்பை - புரையுள்ள தோற்குல்லா. தோற்றம் - உதயம், எண்ணம், ஏற்றமொழி, கணிப்பு, காட்சி, துலக்கம், துவக்கம், தோன்றுதல், பிரபலியம், பிறப்பு, புகழ்ச்சி, பெலன்,பொலிவு, மகன், முதன்மை,மூலம், மேன்மை, வலி, வார்த்தை.தோற்றப்பட்டவன், தோற்றமானவன் - கணிக்கத் தக்கவன். தோற்றரவு - ஆவேசம், உதயம்,கணிப்பு, மேன்மை, வெளிப்படல். தோற்றல் - தோல்வி, தோன்றல்,பிறத்தல், முளைத்தல், வீணெண்ணம். தோற்றனம் - சுனைக்கேடு. தோற்றன் - துருசி, தோற்றாங்கொள்ளி - புறங்கொடுத் தவன். தோற்றாமை - வெளிப்படாமை. தோற்றானம் - தோற்பாத்திரம். தோற்றுதல் - உண்டாதல், உதித்தல்,காணப்படல், பிறத்தல். தோற்றுவாய் - ஆரம்பம், தொடக்கம், பாயிரம். தோற்றுவித்தல் - உண்டாக்கல்,பிறப்பித்தல். தோற்றுன்னர் - சக்கிலியர், செம்மார். தோனாய் - ஓர்வகை நாய். தோன்றல் - ஆண்மகன், இராசா, ஓர்விகாரம் அஃது மொழிப்புணர்ச்சிக் கண்ணியாதானுமோரெழுத்துத் தோன்றல், தமையன்,தோன்றுதல், பாலைநிலத் தலவன், பெருமையிற் சிறந்தோன்,மகன், முல்லை நிலத்தலைவன்,வெளிப்படல். தோன்றல்விகாரம் - ஓர் விகாரம். தோன்றாத்துணை - அந்தரங்கத்துணை, கடவுள். தோன்றாவெழுவாய் - குறிப்பாய்நிற்குமெழுவாய். தோன்றி - இரத்தம், காந்தள், செங்காந்தள், வெந்தோன்றி. தோன்றிகர் - செட்டிகள். தோன்றுதல் - இடையில்வரல், உதித்தல், பிறத்தல், முளைத்தல், விளங்குதல், வெளிப்படல். தௌ தௌகித்திரன் - மகண் மகன். தௌசருமியம் - சுன்னத்து. தௌசாரம் - குளிர், பனி. தௌதசிலம் - பளிங்கு. தௌட்டகம் - துட்டகம். தௌதம் - வெள்ளி. தௌதிகம் - முத்து, முத்துச்சிப்பி. தௌத்தியம் - செய்தி, தவம், துத்தியம், நானம், துதி. தௌராத்துமியம் - ஆகாமியம். தௌரிதகம் - குதிரை மெல்லியநடை, குதிரை வட்டமாய்த்திரும்பல். தௌரிதம் - குதிரைநடை, துரிதம். தௌரியம் - தூரியம், தௌர்ப்பல்லியம் - பலஹீநம். தௌர்ப்பாகிகேயன் - நிர்ப் பாக்கியவதிபுத்திரன். தௌர்ப்பாகிநேயி - நிர்ப்பாக்கியவதிபுத்திரி. தௌர்ப்பாக்கியம் - நிர்ப்பாக்கியம். தௌலம் - துலாக்கோல்.தௌலிகன், தௌலிகிகன் - வன்னக்காரன், சித்திரகாரன். தௌலேயம் - ஆமை. தௌவல் - இளம்பருவமானது, குந்திநடத்தல், கெடுதல். தௌவாரிகன் - துவாரபாலகன். தௌவுதல் - கெடுதல், தத்துதல், முடவுதல். தௌவை - அக்காள், தாய், மூதேவி,மூத்தாள். தௌற்பல்லியம் - துற்பலம் ந ந - இன்மைப் பொருள் எதிர் மறைப்பொருள் பிறிதின் பொருளிவைகளைக் காட்டுமோ, ருப சருக்கம்,ஓரெழுத்து சிறப்புணர்த்தும்முன்னிடை. நககுட்டன் - அம்பட்டன். நகக்கண், நகக்கால் - நகத்தினடி. நகக்காளான் - நகத்தின் முளைக்குங் காளான். நகக்குறி - நகத்தழும்பு. நகங்கிருதி - அடக்கமருந்து,புண்ணிய மேழினொன்று. நகசத்துரு - இந்திரன். நகசம் - யானை. நகசிறிதம் - குன்றி நகச்சிராய் - நகத்தருகு கிழிந்தசிம்பு. நகச்சுற்று - நகக் கண்ணில் வருமோர்நோய், ஊர்ச்சுற்று. நகச்சூடு - சிறுசூடு. நகட்டுதல் - அரைத்தல், சாப்பிட்டுப்போடல், நகரச் செய்யல், அரக்குதல். நகதிபீசம் - புலிதொடக்கி. நகத்தல் - நகர்த்தல். நகநந்தினி - உமை. நகநோக்கி - வேலிப்பருத்தி. நகந்துரோணம் - தும்பை. நகபதம் - நகக்குறி. நகபதி - இமயமலை, சந்திரன். நகமுகம் - வில். நகம் - உகிர், நாகணம், பங்கு, பூமி,மரம், மலை. நகரகாதம் - யானை. நகரங்கட்டுதல் - நகரங்கோலுதல். நகரங்கம் - ஓர் வாசனை, நகக்குறி. நகரசம் - யானை. நகரத்தார் - பட்டினத்தார். நகரத்துவெள்ளாளர் - வெள்ளாளர்வகையினொன்று. நகரமாக்கள் - நகரத்தார் இவர்அரசர்க்குறு துணையினொன்று. நகரம் - இராசமனை ஓரெழுத்து,பட்டினம், மருத நிலத்தூர். நகரா - ஓர்பறை. நகராயுதம் - நகாயுதம். நகரி - இராசமாநகரம், பட்டினம்,வறட்சுண்டி. தேட்கொடுக்கி. நகரிபகம் - காகம். நகருதல் - நகர்தல். நகரேகை - நகத்தழும்பு. நகரை - ஓர் மரம், ஓர்மீன், ஓர்வகையரிசி. நகரோபாந்தம் - நகரெல்லை. நகரௌஷதி - வாழை. நகர் - கோயில், நகரம், நகரென்னேவல், மருத நிலத்தூர், வீடு. நகர்தல் - ஊர்தல், நுழுந்தல். நகர்துறோணம் - தும்பை. நகர்த்துதல் - அரக்குதல், குத்துதல், நகரச் செய்தல் நகர்படுதிரவியம் - நகரிலுண்டாகுந்திரவியம், அஃது அரசன் கண்ணாடிபித்தன் மந்தி யானை. நகர்வளம் - நகரின் செல்வம். நகர்வு - ஊர்தல். நகலேகை - நகரேகை நகல் - நகுதல், பிரதி. நகவிஷம் - நகந்தைத்த தோஷம். நகவியாக்கிரம் - புலித்தொடக்கி,இண்டு. நகவிரணம் - நகத்தழும்பு. நகவிலேகம் - நகரேகை. நகவுளி - ஓருளி. நகளுதல் - நகருதல். நகற்சீட்டு - சவாபுச் சீட்டு. நகாசு - நெற்றி, நேர்த்தி, நாணயமான வேலை, நுட்பமான வேலை. நகாடநம் - வாநரம். நகாதிபன் - இமயமலை. நகாயுதம் - சிங்கம், சேவல், நகமுள்ளவை, புலி. நகாரி - இந்திரன். நகார் - எயிறு. நகிர் - தேள் கொடுக்கி.நகிலம், நகில் - முலை. நகுடம் - மூக்கு.நகுஷன், நகுடன் - ஓர் பாம்பு,சந்திரகுலத் தரசரி லொருவன்,இவன் நூறு அஸ்வமேதயாகம்செய்தவன். இவனை அகஸ்தியர்சிலநாள் பாம்பாபாகச் சபித்தார். நகுஷாத்துமசன் - யயாதி. நகுதல் - இகழ்தல், ஒளிவிடுதல்,சிரித்தல், புட்பித்தல். நகுதா - கப்பலோட்டி. நகுத்தம் - புன்குமரம். நகுலம் - கீரி. நகுலன் - சிவன், பஞ்சபாண்டவர்களிலொருவன், பரிமாவுகைப்போன், மகன். நகுலி - ஓர் கந்தம், பட்டுப்பருத்தி. நகுலேசன் - வயிரவன். நகுலேட்டை - ஓர்பூடு. நகேசனங்கை - பார்வதி. நகேசன் - இமயமலை. நகேசிறு - புல்லூரி. நகை - ஆபரணம், இகழ்ச்சி,இகழ்ச்சி மகிழ்ச்சி தோன்றக்கூறுமலங்காரம், இன்பம், எயிறு,ஒளி, களிப்பு, சிரிப்பு, நகையென்னேவல், பல், பூமொட்டு, மலர்ச்சி. நகைச்சொல் - சிரித்துப்பேசல்,பரிகாசப்பேச்சு. நகைத்தல் - சிரித்தல், நிந்தித்தல். நகைத்திறைச்சுவை - விதூடகக்கூத்து, வசைக்கூத்தெனினுமாம் நகைநோக்கம் - மஞ்சள். நகைப்பு - சிரிப்பு, பரிகாசம்.நகையரல், நகையால் - பகன்றைச்செடி. நகைரசம் - நகைக்குந்தன்மை. நகைவேழம்பர் - சாரமாணிகள்,சிரிக்கும் பரியாசகர். நக்கப்பாரக்கச்சவடம் - நம்பிக்கையற்ற நாணயம். நக்கபாரம் - ஓர் தீவு. நக்கபாரி - நக்கபாரத்தவன். நக்கரம் - முதலை, தேள். நக்கரித்தல் - அரக்குதல், அழுந்துதல்,தவழுதல். நக்கரிப்பு - அழுந்தல், நகருதல். நக்கரைத்தல் - நக்கரித்தல். நக்கவாரம் - நக்கபாரம். நக்கல் - இலேகியம், எச்சில், சிரித்தல், தீண்டல், நக்குதல், இஃதுநால்வகை யுணவி னொன்று. நக்கவாரம் - ஒரு தீவு. நக்கவாரி - குள்ளமானது, நம்பிக்கையற்ற நாணயஞ் செய்வோன். நக்கனத்துவம் - நிருவாணம். நக்கனப்பிரசாதனம் - வத்திர தானம். நக்கனம் - நக்கனத்துவம். நக்கன் - அருகன்,சிவன், நரி, .நிருவாணி. நக்காரி - வறட்சுண்டி. நக்கார் - ஓர்புலவன். நக்கி - நக்குவோன். நக்கிநதை - நிர்வாணம். நக்கிநன் - சிவன் நக்கிநை - ஆடையில்லாதவள். நக்கிப்பூ - தேட்கொடுக்கி. நக்கிரம் - மேல்வாய்தற்படி. நக்கிரராஜம் - முதலை. நக்கிரை - தேட்கொடுக்கி, மூக்கு, நக்கிறா - தேள்கொடுக்கி. நக்கிணகரணம் - நிருவாணமாக்கல். நக்கினம் - நக்கனம், நிர்வாணம். நக்கினிகரணம் - நக்கனமாக்கல். நக்கினிகை - நிருவாணஸ்திரி,பத்தாண்டுப்பெண். நக்கீரனார் - கடைச்சங்கப் புலவரிற்றலைமை பெற்றவர். நக்கீரன் - நற்கீரன். நக்கு - நக்குதல், நக்கென்னேவல். நக்குடகம் - மூக்கு. நக்குணி - ஓர்பாம்பு, சிறுபிள்ளை,நக்கி. நக்குதல் - நாவாலெடுத்துண்ணல். நக்கணவாய்ச்சி - நாகணவாய்ப்புள். நங்கிலி - பயிரி. நங்கு - பரிகாசம். நங்குரம் - நங்கூரம். நங்கூரப்பல் - நங்கூரத்தின் கொழுவி. நங்கூரம் - மரக்கலத்தைத் தரிப்பிக்குங்கருவி. நங்கை - ஓர்பூடு, பெண்ணிற் சிறந்தாள். நசலாளி - துன்பவாளி. நசல் - நையல், வியாதி. நசற்காரன் - நசலாளி. நசனை - மாணிக்க ரத்தினத்திலுண்டாகும் வெண்மையான நீர் நசாரி - காஞ்சிரை. நசிகொதி - உணவுபாகம் பண்ணு தலிலோர் பழுது. நசிதல் - ஈனப்படல், கெடல், நசுங்குதல். நசித்தல் - அழித்தல், கெடுத்தல்,சாதல், நசுங்கப்பண்ணுதல், பிளிதல், பெலன் கெடுத்தல், நசிப்பு - அழிவு, கேடு, நசிவு, நெரிவு. நசியப்பிரசூதிகை - சாப்பிள்ளைபெற்றவள். நசியம் - மூக்கிலிடும் மருந்து. நசியரி - குப்பைமேனி, நசியல் - நசிந்தது, நசிவு, நிந்தை. நசியற்பதம் - நசிந்துபோம் பருவம், நசிவு - ஈனம், நசியல்.நசிறாணி, நசிறாண்டி - உலோபி,மெலிந்தவன், தொந்தரவு செய்வோன். நசினை - நசுனை. நசுகுனி - மிகச்சிறியது, மெலிந்தோன். நசுக்கான் - சிறியது. நசுக்கு - நசித்தல், நசுக்கென்னேவல். நசுக்குனி - நசுக்கான், பின்னிடுவோன், மெலிந்தவன். நசுக்குதல் - நசியச்செய்தல், பின்போடுதல், பெலன் கெடுத்தல். நசுங்கச்சப்பி - இழுகுணி, உலோபி. நசுங்கடித்தல் - நசுங்குதல், பெலன்கெடுத்தல்.நசுங்கலன், நசுங்களாண்டி - இழுகுணி. நசுங்கல் - நசிவு. நசுங்குதல் - நசுக்கப்படுதல், நெருக் கிடைப்படுதல். நசுநசுத்தல் - இழுகுதல், தாமதித்தல்,மெதுமெதுத்தல். நசுநசுப்பு - ஈரம், தாமதம், மனக்கசப்பு, மெதுமெதுப்பு. நசுநசெனல் - இழுகுதல், ஈரலித்தல்தாமதித்தல், மெதுமெதெனல். நசுபிசுத்தல் - இழுகுதல், நசுபிசெனல். நசுபிசுப்பு - குழைந்தொட்டுந் தன்மை. நசுபிசெனல் - இழுகுதல், ஈரலித்தல்,குழைந்தொட்டுதல். நசுவல் - நசுகுணி, நசுங்கற்குணம்,பெலன் குறைந்தது. நசை - அன்பு, ஆசை, ஈரம், ஒழுக்கம்,குற்றம், பரிகாசம். நசைகுநர் - நண்பர். நசைதல் - விரும்பல்.நசைநர், நசையுநர் - சினேகிதர்,விரும்பினோர், நசைவினை - நன்னடக்கை, நசைவு - ஈரம். நச்சம்பு - நஞ்சுப்பாணம்.நச்சறுப்பாஞ்சான், நச்சறுப்பான் - ஓர்கொடி, கழுதைப்பாலை. நச்சினார்க்கினியார் - ஓராசிரியர். நச்சினி - குரக்கன், கேழ்வரகு. நச்சு - ஆசை, சிறுமை, தொனுப்பு,நச்சென்னேவல், அலட்டு,பஞ்சரிப்பு, நச்சுக்கத்தி - கெட்டவன், நஞ்சுபாய்ச்சியகத்தி. நச்சுக்காற்று - விஷக்காற்று. நச்சுக்குழல் - குருவிக்குக் குண்டூதுங்குழல், தூரதிட்டிக் கண்ணாடிக்குழல். நச்சுக்கொடி - கொப்பூழ்க்கொடி. நச்சுச்சொல் - தீச்சொல். நச்சுதல் - அலட்டல், ஆசைப்பெருக்கம், விரும்பல். நச்சுத்தானம் - அமுதநிலைக் கேழாமிடம். நச்சுநச்செனல் - அலட்டுதல்,கச்சுப்பிச்சுப்படல். நச்சுநீர் - நஞ்சுச்சலம். நச்சுப்பல் - நஞ்சுப்பல். நச்சுப்பல்லி - விஷப்பல்லி. நச்சுப்பார்வை - கொடும்பார்வை,மோகப்பார்வை. நச்சப்பால் - கள்ளிப்பால், சீம்பால்,விஷப்பால் நச்சிப்புகை - நஞ்சுப்புகை. நச்சுப்பூடு - நஞ்சுப்பூண்டு. நச்சுப்பொடி - ஓர் சிறுமீன், நஞ்சுச்சாரத்தூள். நச்சுமரம் - எட்டி, நஞ்சுள்ளமரம். நச்சுமருந்து - தீயமருந்து, நஞ்சுசேர்ந்த மருந்து. நச்சுமழை - அவமழை, காலந்தப்பியமழை. நச்சுமனார் - கடைச்சங்கப்புலவரிலொருவர். நச்சும்பிச்சும் - வீண் காரியங்கள்.நச்சுவாக்கு, நச்சுவாய் - தீச்சொல். நச்சுவிறகு - நஞ்சுச்சாரமுள்ள விறகுஅஃது எருக்கு கள்ளி முதலியன.நச்சுறுத்தல், நச்சுறுவித்தல் - ஆசையுண்டாக்குதல்.நச்செண்ணெய் - நஞ்சுப் பதார்த்தஞ்சேர்த்துச் செய்த வெண்ணெய். நச்செலி - மூஞ்சூறு, விஷவெலி. நச்செழுத்து - நஞ்சுத்தன்மையுள்ளவெழுத்து, அவை யா, யோ, ரா,ரோ, லா, ய், ர், ல், இவைகளும்ஏழுநெட்டுயிரும் ஆய்த முமாம். நச்செள்ளையர் - ஓர் சங்கப்புலவர். நஞ்சம் - நஞ்சு. நஞ்சறப்பாய்ந்தான், நஞ்சறுப்பான் - பேய்ப்பலவன், கொடிசப் பாலை. நஞ்சன் - தீயன். நஞ்சி - குன்றிமணி, கொண்டைக்காணிக்கிழங்கு. நஞ்சு - தீமை, நஞ்சுக்கொடி, விடம், நஞ்சுக்குதல் - விடங்காலல். நஞ்சுகரத்தல் - நஞ்சுகலத்தல். நஞ்சுக்கொடி - கொப்பூழ்க்கொடி. நஞ்சுணி - சிவன். நஞ்சுண்டோன் - சிவன். நஞ்சுண்டபாலை - நச்சுப்பாலை. நஞ்சுபற்றுதல் - நஞ்சுகலத்தல், விஷமேறுதல். நஞ்சுபாய்ச்சுதல் - ஆயுதங்களுக்குநஞ்சூட்டல், வஞ்சகஞ் செய்தல். நஞ்சுமுறிச்சான் - நஞ்சறுப்பான்செடி. நஞ்செழுத்து - நச்செழுத்து. நடக்கல் - நடக்குதல். நடக்கை - ஒழுக்கம், செய்கை, நடத்தல், நடப்பு. நடத்தல் - இயற்றுதல், காரியம்பலித்து வருதல், சம்பவித்தல்,செலுத்தல், செல்லுதல், போகல். நடத்துதல் - இயற்றுதல், செலுத்துதல், நடப்பித்தல். நடத்தை - ஒழுக்கம், நடப்பு. நடத்தைப்பிழை - துன்னடை நடநசபை - பஞ்ச சபையினொன்று. நடநாடகசாலை - நாடகப்பெண். நடநாயகன் - கெருடப்பச்சைக்கல்,சிவன். நடநாராயணம் - ஓரிராகம். நடந்தேறுதல் - சம்பவித்தல், நிறைவேறல். நடபடி - ஒழுக்கம், வர்த்தமானம், வழக்கம். நடபத்திரிகை - சேம்பு. நடபாவி - நடைகிணறு. நடப்பன - இயங்குமுயிர் வருக்கம். நடப்பித்தல் - நடத்துதல். நடப்பு - சலுகை, திருவாங்குகை,நடக்கை, போக்கு வரவு, வழக்கம். நடமண்டனம் - அரிதாரம் நடமாடி - சிவன். நடமாடுதல் - ஊடாடுதல், கூத்தாடுதல்,வழங்குதல், நடத்தல். நடமாட்டம் - ஊடாட்டம், செல்வாக்கு,பழக்கம். நடம் - ஓர் பண், கூத்து. நடராஜன் - சிவன். நடர் - கூத்தர். நடலக்காரன் - நாகரிகன். நடலமடித்தல் - தொந்தரவு பண்ணுதல். நடலம் - ஒய்யாரம், செருக்கு, நடலை. நடலம் பண்ணுதல் - நாகரீகம் பண்ணுதல் நடலை - கபடம், துன்பம், நடுக்கம்,நாகரீகம், பொய், வஞ்சனை,வருத்தம், நுடக்கம். நடல் - நடுதல், நடவடி, நடவடிக்கை - நடபடி,ஒழுக்கம். நடவரன் - நடநமாக்களிற் சிறந்தவன். நடவாதநடத்தை - துன்னடத்தை. நடவு - நடவுதல், நடவென்னேவல்,நாற்று நடுகை. நடவுதல் - செலுத்தல், நடத்துதல். நடவுபயிர் - நட்டபயிர். நடவை - கடவுமரம், தணக்குமரம்,வழங்குமிடம், (உ-ம்) தமிழ்நடவை, வழி, நடக்குமிடம். நடனம் - கூத்து. நடனர் - கூத்தர். நடனியர் - நாட்டியப்பெண்கள். நடன் - கூத்தன். நடாத்துதல் - ஓட்டல், நடத்துதல், நடாந்திகை - லஜ்ஜை. நடாவுதல் - நடவுதல். நடி - நடியென்னேவல், நாடகக்கணிகை பெருமை, மகத்துவம்,கூத்தி. நடித்தல் - கூத்தாடுதல், நாகரீகம்பண்ணல், வெளிப்படல், பாசாங்குசெய்தல். நடிப்பு - கூத்து, துன்னடை, நாகரீகம்,பாசாங்கு. நடிராசி - இடையிராசி, நடுத்தரம். நடு - அரை, இடை, ஊடு, தொழில்,நடுவென்னேவல், நீதி, பூமி, மிதம். நடுகை - நடுதல். நடுக்கட்டுதல் - மத்தியட்சத்தில்வைத்தல். நடுக்கம் - அச்சம், கிறுகிறுப்பு,நடுங்கல். நடுக்கல் - நடுங்குதல், அஞ்சுவித்தல். நடுக்கல்வாதம் - ஓர் நோய்.நடுக்கற்காய்ச்சல், நடுக்கற்சுரம் - ஓர்நோய். நடுக்காரர் - நடுவர். நடுக்கு - கிறுகிறுப்பு, நடுக்கம், நடுக்கென்னேவல். நடுக்குடி - உட்சேரிக்குடி. நடுக்குண்ணல் - நடுங்குதல் நடுக்குதல் - அசைத்தல், நடுங்கசசெய்தல். நடுங்கொள்ளுதல் - நடுவிலாகுதல். நடுங்கநாட்டம் - ஒர் துறை அஃதுதோழி தலைவியை நடுங்கப்பேசுதல். நடுங்கலன் - அச்சமுடையோன்,திமிர் வாதக்காரன்.நடுங்கல், நடுங்குதல் - அசைதல்,அதிர்தல், பதறுதல், பயப்படல். நடுச்சாமம் - அத்தசாமம், பாதியிரா. நடுச்செல்வம் - இடையில் வந்தசெல்வம். நடுச்செல்வர் - இடைச் செல்வர். நடுச்சொல்லுதல் - நியாயஞ் சொல்லுதல். நடுதல் - நாட்டல். நடுத்தரம் - இடைத்தரம். நடுத்தலை - உச்சி. நடுத்தீர்த்தல் - நியாயந் தீர்த்தல்.நடுத்தீர்ப்பு, நடுத்தீர்வை - நியாயந்தீர்ப்பு. நடுநடுங்குதல் - பயத்தால் மிகக்கலங்கல், மிக நடுங்கல். நடுநாள் - சித்திரை நட்சத்திரம். நடுநியாயம் - நீதி. நடுநிலை - நடுநிற்பு, நீதி. நடுநிற்றல் - பிணைநிற்றல், மத்தியட்ச நிற்றல். நடுநீதி - நியாயம். நடுப்பகல் - மத்தியானம்.நடுப்படுத்துதல், நடுப்பண்ணுதல் - பொதுக்கட்டுதல். நடுப்பார் - இடை. நடுப்பார்த்தல் - மத்தியட்சம்பார்த்தல். நடுப்பேசுதல் - நியாயம் பேசுதல். நடுப்போக்குதல் - ஊடுபோக்குதல்,நியாயந் தீர்த்தல். நடுப்போர் - அமளி.நடுமதீயம், நடுமத்தியானம் - உச்சிக்காலம். நடுமையம் - உச்சம், நடு. நடுராசி - நடுத்தரம்.நடுவதுபாதி, நடுவத்தானம் - நடுவிடம் நடுவத்தசாமம் - நடுச்சாமம். நடுவறுத்தல் - சீர்தூக்கிப் பார்த்தல்,நியாயந் தீர்த்தல். நடுவறுத்தான் - மூக்குரட்டைக்கொடி. நடுவன் - நமன், நியாயாதிபதி,மத்தியக்கன். நடுவாந்தரம் - இடை. நடுவிரல் - மத்திமை. நடுவின்மை - சமமின்மை, நீதிக்கேடு. நடுவு - நடு, மாதரிடை. நடுவுநிலைமை - நிதானம், நீதி. நடுவெலும்பு - முதுகெலும்பு. நடுவெளி - இடைவெளி, பரவெளி. நடுவைத்தல் - நடுக்கட்டல்.நடேசன், நடேசுவரன், நடேச்சுரன் - சிவன். நடை - ஒழுக்கம், கூத்து, செலவு,செல்வம், தொடர்பு, நடத்தை,பழக்கம், முறை, வழக்கம், வழி,வாயிற்கடவை, இடைகழி. நடைகாரன் - நடைசுறுக்கம். நடைகாவணம் - நடைப்பந்தர். நடைகூலி - நடக்கிறதற்கான கூலி. நடைகொள்ளுதல் - கதிகொள்ளுதல். நடைக்கலம் - மரக்கலம். நடைசாரி - உலாத்து, குதிரையின்மந்தகதி. நடைசாரிமேளம் - உலாமேளம்,சாப்பறை. நடைச்சலங்கு - வள்ளம். நடைத்தேர் - சிறுதேர். நடைநாயகம் - அன்னப்புள். நடைநோய் - கிடைப்பாடில்லாதரோகம். நடைபடி - நடத்தை, வாடிக்கை. நடைப்பரிகாரன் - பயணச் சாமான். நடைப்பறிதல் - நடை கொள்ளுதல். நடைப்பாவாடை - நிலப்பாவாடை. நடைபாவி - படி. நடைப்பரிகாரம் - நடைமருந்து,பயணச் சாமான், பலபண்டம். நடைமருந்து - பத்தியமில்லாத மருந்து. நடைமலை - யானை. நடைமேல் - கானடை. நடையன் - உழுமாடு, ஏறுகுதிரைமுதலியன, பாதகுறடு, நடையாளன். நடையாடுநோய் - கிடைப்பாடில்லாததுன்பம். நடைவாவி - நடைபாவி, நீர் விளையாட்டிற் கேற்றபடி, அமைக்கப்பட்ட பெருங் கிணறு. நட்சத்திரகண்டகி - அநாசிச்செடி. நட்சத்திரசக்கிரம் - நட்சத்திரமண்டலம். நட்சத்திரசாகிநி - திருவாதிரை நாள். நட்சத்திரசீரகம் - அனீசு, ஓர் சீரகம். நட்சத்திரதீபம் - ஓர் விளக்கு. நட்சத்திரநேமி - சந்திரன், துருவன்,விட்டுணு. நட்சத்திரப்பதவி - நட்சத்திர மண்டலம். நட்சத்திரபுருஷம் - ஓர் விரதம். நட்சத்திரமாலை - ஓர் கூத்து, ஓர்சோதிட நூல். நட்சத்திரம் - பஞ்சாங்க வுறுப்பினொன்று, முத்து, விண்மீன். நட்சத்திரவாணம் - ஓர்வாணம். நட்சத்திராகிருதி - வெண்சோளம். நட்சத்திரேசன் - சந்திரன். நட்டசந்திரன் - ஆவணிப்பூர்வ பக்கச்சதுர்த்திப் பிறை. நட்டணை - ஆகடியம், எண்ணாமை,கொடூரம், வெறுப்பு. நட்டநடு - சரிமத்தி. நட்டபாடை - ஓர் பண். நஷ்டம் - கேடு, சேதம். நட்டம் - அம்மணம், அழிவு, கலைஞான மறுபத்து நான்கினொன்று,கூத்து, கேடு, நட்டோம், நிறுதிட்டம், மறைவு. நட்டல் - நடுதல், நள்ளுதல், சிநேகம்பண்ணுதல். நட்டழிவு - நடவு சேதம். நட்டாத்திசூத்திரம் - கொள்ளைப்பொருள். நட்டாமட்டி - நடுத்தரம். நட்டாமுட்டி - ஓர் நூல், கீழ்மை,நடுத்தரம், வெறுவிலி. நட்டாமுட்டிசிந்தனை - ஓர் நூல். நட்டார் - உறவோர், சினேகிதர். நட்டாறு - நடுஆறு.நஷ்டி, நட்டி - நட்டம். நட்டு - கீழ்மை, சரிநடு, நட்டம்,நட்டுவன், நாட்டியம். நட்டுக்கதை - கட்டுக்கதை. நட்டுக்குநடுவே - சரி நடு. நட்டுச்சி - நடுவுச்சி. நட்டுச்சினை - நண்டுச்சினை. நட்டுச்சினைக்கல் - ஓர்விதக்கல். நட்டுச்சினைமண் - ஓர்விதமண். நட்டுமுட்டு - நடனத்துக்கடுத்த தளபாடம். நட்டுவக்காலி - நட்டுவாக்காலி. நட்டுவமுட்டுக்காரர் - மேளகாரர். நட்டுவம் - நாட்டியம் பழக்குந்தொழில். நட்டுவன் - நடனமாட்டுவோன்.நட்டுவாக்காலி, நட்டுவாய்க்காலி - ஓர் விஷ செந்து, கொடுக்கன். நட்டுவிழுதல் - தலைகீழாய் விழுதல்அஃது யாக்கைக்குறு குற்றமைந்தினொன்று. நட்டுவைத்தெலும்பு - இடுப்பின்கீழ்துடையெலும்பு, கால். நட்டெந்துகலை - பூருவபக்கத்துப்பிரதமை நட்டோர் - உறவோர். நட்பாளன் - அரசர்க்குறுதிச் சுற்றத்தொருவன், நண்பன். நட்பு - உறவு, சிநேகம், சுற்றம். நட்புக்கிரகம் - கிரகநிலை யைந்தினொன்று. நட்புத்தானம் - கிரகம் நட்புப் பெற்றிருக்குந் தானம்.நட்புப்பண்ணுதல், நட்புவைத்தல் - பட்சங் காட்டல். நணந்தம் - சணல், புன்கு. நணுகலர் - பகைவர். நணுகல் - கிட்டல், நணுகுதல். நணுகார் - பகைவர். நணுகுதல் - இணைதல், கிட்டல்,சார்தல். நண்டல் - பொங்கல். நண்டு - கற்கடக விராசி, ஞெண்டு. நண்டுக்கல் - ஓர் கல். நண்டுக்காற்கீரை - ஓர்கீரை. நண்டுக்காற்புல் - ஓர்புல். நண்டுக்கொடுக்கி - நண்டின் முன்கால்.நண்டுத்தெருக்கால், நண்டுவாய்க் காலி - நட்டுவக்காலி. நண்ணலர் - பகைவர். நண்ணல் - கிட்டல். நண்ணார் - பகைவர். நண்ணுதல் - இருத்தல், கிட்டுதல்,சேர்தல். நண்ணுநர் - மித்திரர். நண்பகல் - மத்தியானம். நண்பன் - குறிஞ்சி நிலத்தலைவன்,சணல், தோழன், புருடன். நண்பு - நட்பு. நதம் - ஆண்யாறு, உச்சத்திருந்துகிரகத்திற்குள்ள தூரம், கிரந்திதகரம், மேற்கோடுமாறு. நதநதீபதி - கடல். நதனு - சிங்கம், முகில். நதாங்கி - பொன். நதாதிபதி - கடல். நதி - கிழக்கோடுமாறு, தீர்த்தம்,பெண்யாறு, யாறு. நதிகாந்தை - திப்பிலிமூலம். நதிக்கரை - கங்காதீரம். நதிசம் - தாமரை. நதிசரம் - ஆற்றச்சார்பிற் பிறந்தயானை. நதிபதி - கடல், வருணன். நதீகாந்தன் - வருணன். நதீசம் - தாமரை. நதீஜாரன் - சிவன். நதீநன் - கடல், வருணன். நதீரம் - ஆற்றுக்கரை. நதீரயம் - நீர்ப்பாய்ச்சல், நதீவடம் - காராலமரம். நதீவரம் - தகரம். நதீனம் - கடல். நதுத்தல் - அவித்தல், கெடுத்தல், மறைத்தல். நத்தகம் - கந்தை. நத்தத்தனார் - சங்கப்புலவரில்ஒருவர், சிறுபாணாற்றுப்படையாசிரியர். நத்தபாகை - மையவரி. நத்தபோசனம் - இராப்போசனம். நத்தபிலா - எருக்கு. நத்தமகன் - ஓர்வகை வேளாளன்.நத்தமாடி, நத்தமார் - வேளாளர். நத்தமாலம் - புன்கமரம். நத்தமுகை - இரவு. நத்தம் - இராத்திரி, இருள், ஊர்,எருக்கு, கடிகாரவூசி, சங்கு, நடு,நத்தை, புன்கமரம், மூக்கு, வாழை,கெடுதல், வளர்தல். நத்தலைவைரவன் - பாவட்டை. நத்தாசை - பேராசை. நத்தாமணி - வேலிப்பருத்தி. நத்தார்வைத்தல் - தோணியை நங்கூரம் வைத்திழுத்தல். நத்திதம் - நாணயம் போடப்பட்டது. நத்து - ஓராபரணம், ஓர் பறவை,சங்கு, நத்தென்னேவல், மூக்கணி,விருப்பம், நத்துதல் - விரும்பல். நத்துருவண்ணநாதம் - ஈயமணல். நத்தை - ஓர்பூண்டு, கடுகு, கருநந்து. நத்தைக்கட்டை - சாரணை.நத்தைக்குத்தி, நத்தைக்கொத்தி - ஓர்நாரை.நத்தைச்சுண்டி, நத்தைச்சூரி - ஓர்செடி. நத்தைப்படுவன் - ஓர் கண்ணோய்,கண்கட்டி. நந்தகம் - வாள், விட்டுணுவின் வாள். நந்தகி - திப்பிலி.நந்தகன், நந்தகோபன் - இடையராஜன், கண்ணனை வளர்த்ததந்தை. நந்தகோபாலர் - இடையர். நந்தசுதன் - கிருட்டினன். நந்தநந்தனன் - கண்ணன். நந்தநந்தினி - உமை. நந்தபாலன் - வருணன், விட்டுணு. நந்தபுத்திரி - பார்வதி. நந்தம் - இடையர், கஸ்தூரி, சங்கநிதி, கங்கு, பெருமகிழ்ச்சி, சங்கு. நந்தர் - இடையர். நந்தல் - ஆக்கம், கெடுதல், நிந்தை,வளர்தல், நந்துதல். நந்தவனம் - நந்தனவனம். நந்தன - இருபத்தாறாவதாண்டு. நந்தனம் - இந்திரன் பூந்தோட்டம்,இரு பத்தாறாவது வருடம்,தவளை, பூந்தோட்டம். நந்தனவனம் - பூந்தோட்டம். நந்தனன் - மகன், மால், மகிழ்விப்பவன்.நந்தனி, நந்தனை - மகள். நந்தன் - மகாநதியின் புத்திரனானஓரரசன், அரசாண்ட ஓர் சக்கிலியன், கிருட்டினன், சீர்பந்தாபஷாணம், நந்தகோபன், புத்திரன். நந்தாத்துமசன் - கிருட்டினன். நந்தாத்துமசை - துர்க்கை. நந்தாப்பதம் - மோட்சம். நந்தாமணி - உத்தாமணி, சிறந்தமணி. நந்தாவனம் - நந்தனவனம். நந்தி - அட்டாதச வுபபுராணத்தொன்று, இடபவிராசி, எருது,ஓரரசன், ஓர்மலை, சிவன், சிறுபறை, செக்கான், நந்திதேவன்,நாகம். கொக்கான்செடி, நந்திகேசரம் - நந்தியாவட்டம்.நந்திகேசன், நந்திகேசுரன், நந்திகேச்சுரன் - இடபவிக்கிரகம், சிவனூர்தி, சிவன், நந்திதேவன். நந்திகை - இந்திரநகர், நந்தை,மட்பாண்டம். நந்திதேவன் - சிவனது வாசற்காவற்காரன். நந்திபத்திரி - நந்தியாவட்டம். நந்திப்பூசுணி - சாம்பற்பூசுணி. நந்திமலை - ஓர் மலை. நந்திமுகி - கோதுமை.நந்தியம்பெருமாள், நந்தியம் பெருமான் - நந்திதேவன். நந்தியாவட்டத்தாமன் - துரியோதனன்.நந்தியாவட்டம், நந்தியாவட்டை, நந்தியாவர்த்தம் - ஓர்பூச்செடி,நந்திபத்திரி. நந்திவருத்தனன் - சிவன், சினேகிதன்,மகன். நந்திவிருட்சம் - சின்னிமரம். நந்தீசுவரன். நந்தீட்சுரன் - சிவன். நந்து - சங்கு, நத்தை, நத்தென்னேவல், நந்துதல் - நந்தல், கெடுதல். நந்துருணி - கோட்காரன், மதியீனன். நந்தேசன் - சிவன், நந்தி. நந்தை - ஏகாதசி, கலப்பையைநுகத்தொடு பிணைக்குங் கயிறு,கொற்றான் கொடி, சஷ்டி, தேற்றாமரம், பஞ்சதெய்வப் பசுவினொன்று, பிரதமை. நந்நான்கு - நான்கு நான்காக. நபசங்கமம் - பறவை. நபசம் - ஆகாயம். நபச்சட்சு - சூரியன். நபப்பிரமாணம் - காற்று. நபமணி - சூரியன். நபம் - ஆகாயம், ஆவணிமாதம்,கார்காலம். நபாகம் - இருள். நபாலயம் - புகை. நபி - தீர்க்கதரிசி. நபுஞ்சகம் - பேடு, அலி. நபுஞ்சகலிங்கம் - அலிப்பால். நபுஞ்சகன் - ஆண்குறி வாங்கப்பட்டவன், பேடன். நபோகசம் - முகில். நபோகதி - அந்தரகதி.நபோதுகம், நபோதூமம் - முகில். நபோநதி - ஆகாயகங்கை. நபோமணி - சூரியன். நபோரஜம் - இருள். நபோரேணு - பரமாணு. நபோலயம் - புகை. நப்பாலத்தனார் - கடைச்சங்கப்புலவரிலொருவர். நப்பின்னை - இலட்சுமி. நப்பூதனார் - பத்துப்பாட்டில்முல்லைப் பாட்டியற்றிய புலவர். நம - மந்திரமுடிவினொன்று, வணக்கம். நமக்காரி - ஆடுதின்னாப்பாளை,வறட்சுண்டி. நமஸ்மரித்தல் - வணங்கல். நமஸ்காரம் - நமற்காரம், வணங்கல். நமசம் - இணக்கம். நமசன் - அநுகூலன். நமதம் - புகை. நமசிதன் - பூசிக்கத்தக்கவன். நமதன் - ஆண்டவன். நமத்தம் - சடாமாஞ்சி. நமருதல் - ஊறுதல். நமர் - சுற்றத்தார், நம்மவர்கள். நமள் - நம்மவள். நமற்கரித்தல் - வணங்குதல். நமற்காரம் - வணக்கம். நமன் - இயமன், சுற்றத்தான், நம்மவன். நமிடு - ஈர். நமுசி - ஓரசுரன், மதன், மாவலியின்புத்திரன். நமுசிசூதனன் - இந்திரன். நமுடு - ஓர்நாரை, கீழுதடு, நமிடு. நமுட்டுச்சிரங்கு - வேர்க்குரு. நமேரு - உத்திராக்கம், புன்னைமரம். நமை - ஓர்மரம், சொறிவு, தினவு,நமையென்னேவல். நமைக்காய் - கத்திரிக்காய். நமைச்சல் - தினவு. நமைதல் - தின்றல். நமைத்தல் - சொறிதல், தின்றல்,சூட்டுதல். நமைப்பு - சொறிவு. நமோகுரு - பிராமணன். நம் - சாரியை, நமது (உ-ம்) எல்லார்நம்மையும், வணக்கம். நம்பகன் - சீர்பந்தபாஷாணம். நம்பல் - ஆசைப்பெருக்கம், நம்புதல். நம்பவன் - நம்மவன். நம்பன் - கடவுள், சிவன், நம்பிரான். நம்பாசு - அவநம்பிக்கை. நம்பி - அகப்பொரு ளிலக்கணஞ்செய்தோன், அரசமாதைப் பார்ப்பானி ராக்கதமணஞ் செய்யப்பிறந்து விட்டுணுவை யருச்சிப்போன், புருடரிற் சிறந்தோன்,வேடுவராசன், நம்பியான், சிறந்தபுருடன். நம்பிக்கை - சத்தியம், நிசம்,விசுவாசம். நம்பிக்கைகாரன் - நிசவான். நம்பிக்கைத்துரோகம் - இரண்டகம். நம்பிக்கைத்துரோகி - இரண்டகன். நம்பியாண்டார்நம்பி - ஓர்புலவன். நம்பியாரூரர் - சுந்தரமூர்த்தி. நம்பியான் - நம்பி, ஆதிசைவப்பிராமணன். நம்பு - நம்பென்னேவல், நாவல்,விருப்பம். நம்புதல் - விசுவாசித்தல், விரும்பல். நம்பூரி - மலையாளப் பார்ப்பாரிலுயர்ந்தோர். நம்மாழ்வார் - தாம்பிரவன்னி நதிக்கருகிலிருந்த ஓர் வேளாளவைணவாசாரியர். நயகுணன் - நற்குணமுடையோன். நயக்கன் - நாய். நயச்சொல் - இச்சகம், சிரித்துப்பேசல், முகமன் வார்த்தை நயத்தல் - அதிகப்படல், ஆசைப்பெருக்கம், சிறத்தல், சினே கித்தல்,நன்மைப்படல், பலன் படல், பின்செல்லுதல், மதித்தல், மலிவாதல்,விரும்பல், மகிழ்தல். நயநத்திரயன் - சிவன். நயநயவார்த்தை - உறுதியில்லாச்சொல். நயநிலைப்படலம் - நாடகம். நயநௌஷதம் - கண்மருந்து. நயந்துகேட்டல் - இரந்துகேட்டல். நயந்துசொல்லுதல் - பலன்படப்பேசல், பாராட்டுதல். நயந்தோர் - சினேகிதர். நயபோசனம் - நல்லாகாரங் கொடுத்தல், அஃது புண்ணிய மேழினொன்று. நயப்பாடு - பலன், மேம்பாடு. நயப்பித்தல் - கனப்படுத்தல், சந்தோஷப்படுத்தல், சம்மதப்படுத்தல்,சிறப்பித்தல், மலிவாக்கல். நயப்பு - அன்பு, ஆசை, இலாபம்,சந்தோஷம், மலிவு. நயப்புணர்வு - கண்ணோட்டம். நயப்புரை - விருப்புமொழி நயமாலி - மனோசிலை. நயம் - அதிகம், அரசாட்சி, இலாபம், இன்பம், உபசாரம், சரி, நடத்தம், நன்மை, நீதி, பலன், மலிவு,மிகுதி, மேன்மை, வேத சாஸ்திரம், நற்பயன், மகிழ்ச்சி. நயம்பயம் - நன்மை தின்மை. நயம்பேசுதல் - இன்னோசை யுண்டாதல். நயவர் - சினேகிதர். நயவார்த்தை - பணிவான சொல்,உபசார வார்த்தை. நயவான் - ஆதாயக்காரன், நயப்புள்ளோன், நல்லுபகாரி, விரும்பினோன். நயவிசாரதன் - நீதிசாத்திர மறிந்தவன். நயனகத்தூரி - ஓர் கண் மருந்து. நயனதீட்சை - ஞான தீட்சையினொன்று, அஃது விஞ்ஞானகலர்க்குரியது. நயனத்தோன் - புட்பராகம். நயனபாஷை - கண் பயில். நயனப்பத்து - ஓர்பிரபந்தம், அஃதுகண்ணினைப் பத்துச் செய்யுளாற்கூறுவது. நயனமோட்சம் - கண்டிறத்தல். நயனம் - கண், அடைவித்தல். நயனரோகம் - நேத்திர ரோகம். நயனவாரி - கண்ணீர். நயனவிதி - நேத்திர வைத்திய வாகடம். நயனவீடு - விக்கிரகத்துக்குக் கண்திறத்தல். நயனாவுடதம் - கண் மருந்து. நயனை - கண்மணி. நயனோபாந்தம் - கடைக்கண். நயனோற்சவம் - அலங்காரப்பொருள், விளக்கு. நயன் - இன்பம், கொடையாளி,நன்மை, பலன், மகிழ்ச்சி, நயம்அருள். நயிச்சியம் - நைச்சியம். நயிட்டிகப்பிரமசாரி - பிரமசாரி முறைதவறாது நிற்போன். நயிஷ்டிகம், நயிட்டிகம் - நியமநிட்டை. நயிட்டிகர் - நிட்டைதவறாதோர். நயிந்தை - நாயனீர், நாயன். நயிராக்கியம் - நைராக்கியம். நயினார் - ஆண்டவன், எசமானன்,ஐயனார், சைனர், நாயனார்,பாளையக்காரர். நரககதி - நரகப் பிராப்தி. நரகதேவதை - பிசாசம், மூதேவி. நரகபாதாளம் - ஆழ் நரகம். நரகம் - பாதாளம், பாபலோகம்.நரஹரி, நரகரி - நரசிங்கம். நரகர் - கீழுலகத்தவர். நரகலித்தல் - அலவருத்தல், அழுக்குடைத்தாதல். நரகலோகம் - கீழுலகம், அஃதுபாவிகள் அடையு முலகு. நரகல் - அசுத்தம், மலம். நரகவட்டம் - நரகச் சுற்று. நரகவாசி - நரகத்திலுள்ளவன். நரகவாதி - நரகத்திற் கீடானவன். நரகவாய் - குதம், நரகம். நரகனாதி - தேள்கொடுக்கி. நரகன் - ஓரசுரன், நரகத்திலுள்ளோன். நரகாசுரன் - ஓரசுரன். நரகாசுரவைரி - கண்ணன். நரகாந்தகன் - விட்டுணு. நரகாமயம் - ஆத்துமா. நரகாரி - விட்டுணு. நரகாலி - மாட்டுக்கு வருமோர் நோய். நரகீலகன் - குருவத்தி செய்தோன். நரகு - நரகம். நரங்கடித்தல் - கெடுத்தல். நரங்குதல் - தேய்ந்து தேய்ந்துகெடுதல். நரசிங்கமூர்த்தி - திருமால். நரசிங்கம் - திருமால், தசாவதாரத்தொன்று, அஃது இரணியனைக்கொல்லத்தூணிற் பிறந்த அவதாரம். நரசிங்கராச்சியம் - விஜய நகரத்தைச்சார்ந்த தேசம். நரசீவன் - மனிதர். நரதாரணன் - கடவுள். நரதுதி - மானிடரைப் புகழ்தல்,நரஸ்துதி. நரதேவன் - அரசன். நரத்துவம் - மனிதத்தன்மை. நரநாராயணன் - திருமால் பதினைந்தவதாரத் தொருவன். நரந்தம் - கஸ்தூரி, மிருகம், காகம்,நாரத்தை, வாசனை. நரந்தை - கொற்றான். நரபதி - அரசன், விசயநகரத் திராசா. நரபலி - மனித பலி. நரபாலன் - அரசன். நரபுடம் - ஐம்பதெருப்புடம். நரபூமி - பார்த வர்ஷம். நரப்பிரதிட்டை - நரவுருத் தாபனம்,மனிதர் தாபித்த விக்கிரகம். நரப்புக்கருவி - வீணைமுதலியவாத்தியம். நரப்புக்கருவியாளர் - யாழ் முதலியவாசிப்போர். நரப்புக்கருவியைக் கொளுத்துமாக்கள் - நரப்புக் கருவியாளர். நரப்புச்சிலந்தி - ஓர் சிலந்தி. நரப்புச்சுழுக்கு - நரப்புச் சுளுக்கு. நரமடங்கல் - நரசிங்கம். நரமேதம் - ஓர்யாகம், அஃது நரபலியிட்டுச் செய்வது. நரம்பன் - ஓர்வகைப் புகையிலை,நரம்பு புடைத்த சரீர முள்ளவன். நரம்பு - இலை முதலியவற்றினரம்பு,தந்தி, நாடி, நாணி, நார், வின்னாண். நரம்புக்காய் - முருங்கை. நரம்புச்சிலந்தி - ஓர் புண். நரம்புபுடைத்தல் - நரம்பு புறப்பட்டிருத்தல். நரம்புவாங்கல் - நரம்பை யிழுத்துக்கொள்ளுதல், வெற்றிலை முதலியவற்றினரம்பை யெடுத்தல். நரம்புவீச்சு - நரம்புவலி. நரர் - மனிதர். நரலல் - ஒலித்தல், பேசலாலெழுமொலி. நரலுதல் - ஒலித்தல், நரலை - கடல். நரலோகம் - பூமி. நரல் - சனக்கூட்டம், செத்தை. நரல்வு - உள்ளோசை, ஓசை. நரவம் - அனிச்ச மரம், குங்குமம்,தேன், ஞாழல்.நரஹரி, நரவரி - நரசிங்கம். நரவலித்தல் - அலுத்தல், நரகலித்தல். நரவாகனம் - குபேரனைச் சுமப்போன், சிவிகை. நரவாகனன் - குபேரன் நரளி - கடலை. நரளிமருட்டி - கிலுகிலுப்பை. நரற்றல் - ஒலித்தல். நரன் - அருச்சுனன், கடவுள், திருமால், மனிதன். நரா - தழும்பபட்டது, நருங்கப்பட்டது. நராங்குதல் - நிராங்குதல், நராதாரை - பூமி. நராதிபன் - அரசன். நராந்தகம் - மரணம். நராந்தகன் - இயமன், விட்டுணு. நராந்தம் - காகம். நராபோகம் - நினைத்திராத வாழ்வுபெறல். நராயணன் - நாராயணன். நராரி - விட்டுணு. நாராலை - நரகம். நராவதாரம் - மனு வவதாரம். நரி - ஓர் மிருகம். நரிக்காய்ச்சி - ஓர்வகைப்பனை. நரிக்கொன்றை - ஓர் மரம். நரிதல் - நெறிதல். நரித்தல் - நருக்குதல், நிந்தித்தல்,பிரமித்தல். நரிநிறம் - பலநிறக் கலப்பு, பலவெண்ணம், வெறுப்பு. நரிப்பயறு - ஓர்புன் பயறு. நரிப்பள்ளம் - ஆறு முதலியவற்றிற்குள்ளிருக்குங் கிடங்கு. நரிப்பாகல் - காட்டுப்பாகல். நரிப்பு - ஆச்சரியம், இகழ்பு, நருக்கம்,நரித்தல். நரிப்புத்தி - தந்திரப்புத்தி. நரிப்புறம் - மிருகசீரிடம். நரிமருட்டி - கிலுகிலுப்பை. நரிமுருக்கு - ஓர்நெல், ஓர்முருக்கு. நரிமெருட்டி - நரிமருட்டி. நரியனெல் - ஓர்வகை நெல். நரியன் - கள்ளத்தனமுள்ளவன்,சூதன். நரியிலந்தை - ஓர்மரம். நரியுடை - மொசுமொசுக்கை. நரியுணி - நண்டு. நரிவளை - நரிக்குழி. நரிவாற்புல் - ஓர்புல். நரிவிளா - நிலவிளா. நரிவிருத்தம் - ஓர்நூல் நரிவெண்காயம் - ஓர் வெண்காயம். நரிவெருட்டுதல் - காரணமில்லாமல்வெருளல். நரிவெருத்தலையார் - ஓர் சங்கப்புலவர். நருக்கட்டியெனல் - ஒலிக்குறிப்பு,விரைவுக் குறிப்பு. நருக்கல் - ஓர் வயிற்றுவலி, நொருக்கல். நருக்கற்குத்து - காரியம் வாய்க்காமற்பண்ணுதல், பறுவறைக் குத்து. நருக்காணி - நருவாணி. நருக்கு - நருக்குதல், நருக்கென்னேவல். நருக்குதல் - நொருக்குதல். நருக்குமூலம் - கண்ட திப்பிலி. நருக்கெனல் - ஒலிக்குறிப்பு, விரைவுக்குறிப்பு. நருங்குதல் - நொருங்குதல்.நருநருத்தல், நருநரெனல் - ஈரடுக்கொலிக் குறிப்பு, சருச்சரைக்குறிப்பு. நருமதை - சத்தநதிகளி னொன்று. நருமுதல், நரும்புதல் - துண்டாக்கல்,பல்லுநரும்புதல், நருவல் - நருங்கினது. நருவனொருவல் - இருநருவல். நருவாணி - சிற்றுரு வானது. நருவியுப்பு - ஓருப்பு. நருள் - சனம்.நரேசன், நரேசுவரன் - அரசன் நரேந்திரன் - அரசன், விஷவைத்தியன். நரை - இடபவிராசி, கருமைகலந்தவெண்மை, சரை, சாமரை, சிவன்,நரையென்னேவல், நாரை,மாயை, யாக்கை, பதினெண் குற்றத்தொன்று, ரிஷபம், வெண்மை,கவரிமா. நரைகொம்பு - எலும்பு. நரைக்கொள்ளு - சீர்க்கோழிப்பூடு. நரைச்சல் - நரை, வெளிறின பயிர். நரைதல் - மெலிதல். நரைத்தல் - பயிர் வெளிதல், மயிர்முதலிய வெளுத்தல். நரைமயிர் - வெளுத்த மயிர். நரைமானினி - முகரோமக்காரி. நரையல்லி - வெள்ளாம்பல். நரையான் - ஓர்பருந்து, நரைநிறமுள்ளது, வல்லூறு, சின்னது,மீன்குத்திப் புள். நரையன் - காகம், சின்னது, செங்கானாரை, மார்க்கண்டன், மீன்குத்திப்புள். நர்க்குடகம் - நாசி. நர்த்தகம் - ஆண்யானை. நர்த்தகி - பெண்யானை. நர்த்தநட்பிரியம் - மயில். நர்மடம் - சாதகப்புள், முலைக்கண். நர்மடன் - சூரியன், விடன். நர்மதை - ஓர்நதி. நலகீலம் - முழந்தாள். நலகூபரன் - குபேரன், மகன். நலக்குதல் - அழுக்காக்குதல், கசங்கச் செய்தல். நலங்கல் - அழுக்காதல், அழுக்கானது. நலங்கு - அரைத்த குழம்பு, ஓர்கலியாணச்சடங்கு, நலங்கென்னேவல், வைசூரிக்குப்பூசுமோர்மருந்து. நலங்குதல் - அழுக்காதல், வதங்குதல். நலச்சூடு - கடுப்புச்சூடு, நலதம் - வெள்வெட்டிவேர். நலதம்பு - வேப்பமரம். நலதை - சடாமாஞ்சி. நலத்தல் - சித்தித்தல், நயத்தல். நலந்தட்டுதல் - விதையை வாங்கல். நலப்பாடு - அதிஷ்டம், ஆதாயம், நன்மை. நலப்பு - சித்தி, நன்மை.நலமடித்தல், நலமெடுத்தல் - நலந்தட்டுதல். நலம் - அழகு, இன்பம், உபகாரம்,உயர்வு, கண்ணோட்டம், சுக்கு,ன்மை, பயன் விருப்பம், விலங்கின் விதை. நலம்நசுக்குதல் - நலந்தட்டுதல். நலம்பாராட்டுதல் - புனைந்து அழகுசெய்தல். நலம்பொலம் - நன்மையுந் தின்மையும். நலவு - நலம்போடுதல், நன்மை. நலன் - நலம். நலி - நலியென்னேவல், நோய். நலிதல் - ஓரொலிவிகற்பம், சரிதல்,தவறுதல், மெலிதல், வருந்தல்,நெருக்கல், வருத்தல். நலித்தல் - நலிவித்தல். நலிநம் - தாமரை, நீர், வெண்ணாரை. நலிநீருஹம் - தாமரைத் தண்டு. நலிவித்தல் - நலியச்செய்தல். நலிவு - அழிவு, மெலிவு, வருத்தம். நல் - ஏற்ற, நல்ல, மிகுதி.நல்கல், நல்குதல் - ஈதல், கடாட்சித்தல், விரும்பல், உவத்தல். நல்குரவு - தரித்திரம். நல்கூர்தல் - தரித்திரப்படல். நல்கூர்ந்தோன் - தரித்திரன். நல்கூர்வேள்வியார் - சங்கப்புலவரில்ஒருவர். நல்லதம்பிரான் - நாகப்பாம்பு. நல்லதனம் - சினேகத் தன்மை,நற்குணத் தன்மை. நல்லது - செம்மை, நன்மையானது. நல்லதுபண்ணுதல் - இணக்குதல். நல்லத்தை - தந்தையின் சகோதரி. நல்லந்துவனார் - கடைச்சங்கப்புலவரிலொருவர். நல்லபாம்பு - நாகப்பாம்பு. நல்லப்பன் - தந்தையின் சகோதரன். நல்லமை - சற்குணம், சினேகம்,நன்மை. நல்லம் - கறுப்பு, மங்கல். நல்லம்மாள் - தாயின் சகோதரி. நல்லம்மான் - தாயின் சகோதரன். நல்லம்மான்பச்சரிசி - ஓர்பூடு. நல்லவரிஞ்சம் - போகபூமியாறினொன்று. நல்லவர் - அறிஞர், உத்தமர்,சினேகிதர். நல்லவழி - நற்குலம், நன்னடக்கை,மோட்சவழி. நல்லவளம் - வசதி. நல்லவெல்லம் - கருப்பங் கட்டி. நல்லவேளை - அதிஷ்ட காலம்,நல்வேளைப்பூடு, நற்சமயம். நல்லவை - நற்சவை, மேன்மையானவை, நன்மையானவை. நல்லவையோர் - பெருமையிற்சிறந்தோர். நல்லள் - நல்லவள். நல்லறம் - நல்வாழ்க்கை. நல்லறிவு - ஒழுக்கம், ஓர்நூல், நற்போதனை, பேரறிவு. நல்லன் - நல்லவன். நல்லாங்கு - நன்மை. நல்லாச்சி - நல்லப்பன்றேவி, நல்லம்மாள். நல்லாதனார் - அகஸ்தியர் காலத்திருந்த ஓர் ஆசிரியர். இவர் திரிகடுகம் என்னும் நூல் செய்தார். நல்லாப்பிள்ளை - பாரதத்தை விரிவாகப் பாடிய புலவர் நல்லாப்பு - நன்மை. நல்லார் - அறிஞர், உத்தமர், மாதர். நல்லாள் - அழகுடையாள், நலமுடையாள், பெண். நல்லாறு - நல்வழி. நல்லிறையனார் - ஒரு புலவர். நல்லி - நல்லாள். நல்லுறவு - இதமான வுறவு. நல்லூர்நத்தத்தனார் - சிறுபாணாற்றுப்படை பாடிய புலவர். நல்லெண்ணெய் - திலநெய், எள்நெய். நல்லோர் - அறிஞர், உத்தமர். நல்வழி - ஒளவையார் செய்த ஓர்நூல், .சன்மார்க்கம். நல்வார்த்தை - உத்தம மொழி இஃதுவாக்கினற்குண நான்கினொன்று. நல்வாழ்வு - இல்லறமகிழ்ச்சி, சுகவாழ்க்கை. நல்வினை - புண்ணியம், இஃதுஇருவினையி னொன்று. நவகண்டம் - ஒன்பது கண்டம்,அஃது, கீழ்விதேகம், மேல் விதே கம்,வட விதேகம், தென் விதே கம்,வடவிரேபதம், தென்னிரே பதம்,வடபரதம், தென்பரதம், மத்திமகண்டம். நவகம் - ஒன்பது. நவகாரிகை - புதுமணப்பெண். நவக்கிரகம் - நவக்கோள் அவைஆதித்தன், இராகு, கேது, சந்திரன்,சனி, சுக்கிரன், செவ்வாய், புதன்,வியாழம். நவசாரத்தான் - பொன்மணல். நவசாரம் - நவச்சாரம். நவசி - ஓர்கமுகு, ஓர்தெங்கு. நவசித்தர் - நவநாதசித்தர். நவசிராத்தம் - கருமாதிகாலத்தில்முதலில் ஒன்பது பிராமணருக்குக்கொடுக்கும் கொடை. நவசூதிகை - இளங்கன்றுப்பசு,இளம் பிள்ளைக்காரி. நவச்சாரம் - ஓர்மருந்து. நவட்சி - எவட்சாரம். நவச்சிராத்தம் - முதலாம் மூன்றாம்ஐந்தாம், ஏழாம் ஒன்பதாம் பதினோராநாளிற் செய்யுஞ்சிராத்தம். நவஞ்சம் - அசமதாகம். நவட்சாரம் - நவச்சாரம். நவதளம் - மாதரைத்தளிர். நவதம் - யானைமேற்றவிசு. நவதாரணை - ஒன்பதுதாரணை,அவைசதுரங்கதாரணை, சத்ததாரணை, சித்திரதாரணை, நாமதாரணை, பேததாரணை. மந்திரதாரணை, மாயாதாரணை, வச்சிரதாரணை, வத்துத்தாரணை. நவதானியம் - ஒன்பதுதானியம்அவை உளுந்து, எள்ளு, கடலை,கொள்ளு, சாமை, தினை, துவரை,நெல்லு, பயறு. நவதி - தொண்ணூறு, பொடுதலை. நவதிகை - தூரியக்கோல். நவதை - புதுமை. நவத்தம் - சடாமாஞ்சி. நவத்துவாரம் - ஒன்பதுவாயில்அவை கண், காது, மூக்கு, வாய்,குதம், குய்யம். நவநதிகள் - ஒன்பதுயாறுகள் அவைகங்கை, யமுனை, நருமதை, சரசுவதி, சிந்து, காவிரி, சரயு, குமரி,பயோஷ்ணி. நவநாகம் - அசமதாகம், ஒன்பதுநாகம், அவை, அனந்தன், ஆதிசேடன், கார்க்கோடகன், குளிகன்,சங்கபாலன், தக்கன், பதுமன்,மகாபதுமன், வாசுகி. நவநாணயம் - புதுவழக்கம். நவநாதசித்தர் - ஒன்பது சித்தர் அவர்அனாதிநாதர், ஆதிநாதர், கடேந்திரநாதர், கோரக்கநாதர், சதோகநாதர், சத்தியநாதர், மச்சேந்திரநாதர், மதங்கநாதர், வகுளிநாதர். நவநிதி - கச்சபநிதி கற்பநிதி சங்கநிதி நந்தநிதி நீலநிதி பதுமநிதிமகாநிதி மகாபதுமநிதி முகுந்தநிதி இவையே குபேரன் நவநிதி. நவநீதகம் - நெய். நவநீதசோரன் - விட்டுணு, வெண்ணெய் திருடிய கிருஷ்ணன். நவநீதபாகம் - செய்யுளினோர் சுவை. நவநீதம் - புதுமை, புது வெண்ணெய், அசமதாகம். நவபல்லவம் - தளிர். நவபவநம் - நூதநகிருகம். நவபாஷணம் - புதுமையான சொல். நவபுண்ணியம் - ஒன்பது புண்ணியம், அவை அமுதமேந்தல், அருச்சித்தல், ஆசனத்திருத்தல், எதிரகொளல், தாள் கழுவுதல், தீபங்காட்டல், தூபங்கொடுத்தல்,பணிதல், புகழ்தல். நவபேதம் - சிவபேதமொன்பதுஅவை பிரமா, விட்டுணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவம், சிவம்,சத்தி, நாதம், விந்து. நவப்பிரீதி - வெடியுப்பு. நவப்பிரேதம் - ஒன்பதுதிக்கிற் காவற்பூதங்கள். நவமணி - ஒன்பதிரத்தினம், அவைகோமேதகம், நீலம், பவளம்,புருடராகம், மரகதம், மாணிக்கம்,முத்து, வயிரம், வைடூரியம். நவமணிமாலை - ஓர் பிரபந்தம் அஃதுவெண்பா முதலாகப் பலவேறுபட்ட பாவும் பாவினமுமாகவொன்பது செய்யுளந்தாதித்துப்பாடுவது.நவமஸ்கந்தம், நவமம் - பாகவதத்தின்ஒன்பதாம் அத்தியாம். நவமி - ஒன்பதாந் திதி. நவமுகில் - ஒன்பது மேகங்கள்,அவை ஆவர்த்தம், சம்வர்த்தம்,புட்கலம், துரோணம், காளம்,நீலம், வாருணம், வாயுவம், தமம். நவம் - ஒன்பது, கார்காலம்,கேண்மை, சாரணை, சினேகம்,புதுமை, பூமி. நவயௌவனை - வாலைப் பெண்.நவரசம், நவரதம் - ஒன்பது சுவைஅவை அற்புதம், இரௌத்திரம்,கருணை, குற்சை, சாந்தம், சங்கா ரம், பயம், பெருநகை, வீரியம். நவரத்தினம் - நவமணி.நவராத்திரம், நவராத்திரி - கன்னிமாதத்தில் இலக்குமி, சரச்சுவதி,துர்க்கையாகிய சத்திகளைப்பூசிக்கு மொன்பது தினம். நவரோசு - ஓர் இராகம். நவலோககுப்பி - சுதைமண். நவலோகம் - ஒன்பது லோகம். நவலோகாங்கம் - காந்தம். நவவதூ - புது மணப்பெண். நவவஸ்திரம் - புதுத்துணி. நவவரிகை - புதுமணப்பெண். நவவாயில் - நவத்துவாரம், நவவியாகரணம் - கிரந்த விலக்கணமாகிய வொன்பது வியாகரணம். நவவிலாசசபை - அதிதூதர், சத்துவகர், ஞானதிக்கர், தூதர், நாதகிருத்தியர், பத்திச்சுவாலகர், பத்திராசனர், பலவத்தர், பிராத மிகர்எனு மொன்பது வகைச் சுத்தான்மாக்கள் கூடிய தேவசபை. நவாகம் - பிரதமை.நவாங்கிசம், நவாமிசம் - இராசியையொன்பதாய்ப் பகிருதல், ஒன்பதுபங்கு. நவாம்பரம் - கோடிப் புடைவை. நவான்னம் - புதியதானியம், வெஞ்சோறு. நவியம் - புதியது, கோடாலி, புதுமை,மழு. நவிரம் - ஆண்மயிர், உச்சிய, தலை,புன்மை, மயில், மருதயாழ்த் திறம்,மலை, வாள், மயில் கொன்றை,உச்சந்தலை. நவிரெழுசங்கு - முட்சங்கு. நவிர் - ஆண்மயிர், திரணம், மயிர்,மருதயாழ்த்திரம், வாள்.நவிலல், நவிலுதல், கற்றல், பயில் செய்தல் - சொல்லல் நவிழ்த்தல் - அவித்தல்.நவிறல், நவிற்சி, நவிற்றல் -சொல்லல். நவிற்றுதல் - அதிகாரத்தோடுரைத்தல்,சொல்லல். நவின்றோர்க்கினிமை - நூலின்பத்தழகினொன்று, அது கற்போனுக்குதிருத்தி படுத்துகை. நவீனம் - புதுமை.நவுதல், நவுந்துபோதல் - இற்றுப்போதல், தளரல். நவுரி - எக்காளம். நவை - இகழ்ச்சி, குற்றம். நவோடை - புது மணப்பெண். நவோத்திருதம் - வெண்ணெய். நவ்வல் - நாவல். நவ்வி - அத்தநாள்,.அழகு, இளமை,தோணி, மான். நவ்வியம் - புதியது. நவ்வு - ஆடு, தோணி, நன்மை. நவ்வுசுவ்வு - இதாகிதம், நயநட்டம். நழுக்கம் - ஆழமின்மை, மழுங்கல். நழுக்கு - நழுக்குதல், நழுக்கென்னேவல், வழுகுதல். நழுங்கல் - மழுங்கல், வழுவுதல். நழுவமிழ்து - கூழ். நழுவர் - நளவர். நழுவல் - வழுவுதல், விலக்கல், நழுவுதல். நழுவி - பிடி கொடாதவன். நழுவுசாதம் - கூழ். நழுவுதல் - நுழுந்துதல், வழுவுதல். நள - ஐம்பதாவதாண்டு. நளகூபரன் - குபேரன் மகன். நளத்தம் - சடாமாஞ்சி. நளத்தி - நளப்பெண். நளம் - அகலம், கள்ளிறக்குஞ் சாதி,சிற்பநூன் முப்பத்திரண்டினொன்று, தாமரை. நளவர் - கள்ளிறக்குஞ் சாதியார். நளவெண்பா - நளன் சரித்திரத்தைவெண்பாவில் கூறும் நூல். நளன் - இராமர் முதலானவர்கள்இலங்கைக்குப் போவதற்கு சேதுவிலணைகட்டிய ஓர் குரங்கு, ஓர்தேவதச்சன், நிடத நாட்டையாண்ட வோரரசன், இவன் அறுவகைச் சக்கிரவர்த்திகளிலும் முதலெழு வள்ளல்களிலு மொருவன். நளி - அகலம், குளிர்ச்சி, கூட்டம்,கேள், நெருக்கம், பெருமை,வெண்சாரணை. நளிர் - குளிர், நண்டு, பகை, பெருமை. நளிவிடம் - தேள். நளினச்சொல் - பரிகாசப் பேச்சு. நளினம் - இங்கிதம், தாமரை, நிந்தை,நீர், நீலம், பரிகாசம், பாசி. நளினி - இலக்குமி, ஓர் பண்,தாமரை வாவி. நளினை - இலக்குமி, நளுங்கு - அழுங்கு, ஓர் கிளிஞ்சில். நளுத்தை - ஓர் பண்.நளுநொளுத்தல், நளுநொளுப்பு, நளுநொளெனல் - வழுவி நுழுவிப்போதல். நளை - ஏலத்தோல். நள் - உச்சிப்பொழுது, திருவோணம்,நடு, நள்ளென்னேவல், மருங்கு,மிகுதிப்பொருடருமோரிடைச்சொல். நள்ளவர் - பகைவர். நள்ளல் - நட்டல். நள்ளார் - பகைவர். நள்ளாறு - ஓர்சிவதலம். நள்ளி - உறவு, கடையெழுவள்ளலிலொருவன், கற்கடகவிராசி, நண்டு. நள்ளிருள் - நடிரா, செறிந்த இருள். நள்ளு - நடு, நள், மருங்கு, திரு வோணம். நள்ளுதல் - நட்புக்கொள்ளுதல். நள்ளுநர் - சினேகிதர். நறவம் - அனிச்சமரம், கள், குங்குமமரம், ஞாழல், தேன், வாசனை. நறவு - கள், குங்குமமரம், தேன்,நறுமை, நன்மை, வாசனை. நறளை - ஓர் பூடு, இது சிறுநறளை,புளிநறளை , பெருநறளையெனமூவிதம். நறா - கள், தேன், வாசனை. நறியது - நல்லது. நறிவெங்காயம் - ஓர் வெங்காயம். நறு - நறுமை. நறுக்கு - ஊதுகுழலின் நாக்கு, ஓலையுறுதி, துண்டு, நறுக் கென்னேவல், ஓலைத்துண்டு. நறுக்குதல் - துண்டித்தல். நறுக்குத்திப்பிலி - தேசாவரம் எனும்சரக்கு. நறுக்குமூலம் - திப்பிலிக்கட்டை,வெட்டிவேர். நறுங்கரந்தை - ஓர் கரந்தை. நறுஞ்சுதை - நல்ல பசும்பால். நறுதடி - அடைகல்.நறுநறுத்தல், நறுநறெனல் - ஈரடுக்கொலிக்குறிப்பு, வாய்க்குக் கடினமாயிருத்தல். நறுநாற்றம் - சுகந்தம். நறுநுதல் - பெண், மணங்கமழ்நெற்றி. நறுநெய் - பசுநெய். நறுந்தாளி - வாசனைத்தாளி. நறுந்தை - நறுந்தாளி. நறுந்தொகை - அதிவீரராம பாண்டியனாற் செய்யப்பட்ட ஒரு நீதிநூல். நறுமணம் - சுகந்தம், நறுமருப்பு - இஞ்சி. நறுமா - அற்பம், எளியவன், அலட்சியம் வெறுமை. நறுமுதல் - நரும்புதல்,நறுமுருத்தல், நறுமுறெனல் - முறுமுறுத்தல். நறுமை - சுகந்தவருக்கம், நன்மை,வாசனை. நறும்பிசின் - சாதிசம் எனும் பிசின்,ஓர் மருந்து, ஏலம் நறும்புகை - சுகந்த புகை. நறும்புதல் - நரும்புதல். நறுவியது - நல்லது, வாசனைப் பண்டம்.நறுவிலி, நறுவீழி, நறுவுளி - ஓர்மரம்,அது சிறு நறுவிலிபெரு நறுவிலிஎன இருவகை. நறை - கள், குற்றம், தேன், நறும்புகை, வாசனை. நற்கதி - மோக்கம். நற்கந்தம் - சுகந்தம். நற்கருணை - தெய்வீக விருந்து,நற்கிருபை. நற்கலிதம் - நற்சங்கலிதம். நற்கல் - ஆட்டுக்கல். நற்காலம் - சுககாலம், தற்செய்காலம், நல்லகாலம். நற்கீரன் - நக்கீரன். நற்கீர்த்தி - நல்ல புகழ். நற்குணம் - நல்ல குணம். நற்குலமேரு - செம்பு மலை. நற்குலம் - உயர் குலம். நற்குறி - நல்லடையாளம், நற்குணம். நற்கோள் - நற்கிரகம், அவை புதன்,வியாழன், சுக்கிரன். நற்கடினம் - நன்னிமித்தம். நற்சங்கலிதம் - ஒன்று தொடுத்துமுறையே தானங்களேறி நிற்பது. நற்சமயம் - நற்றருணம். நற்சரக்கு - உயர்ந்த சரக்கு, பழுதற்றசரக்கு. நற்சா - சுகமரணம். நற்சாங்கம் - சாலம்ப பாஷாணம், நல்லடையாளம் நற்சாந்து - சுண்ணச்சாந்து. நற்சாரி - நவசாரம். நற்சாளை - ஓர்மீன். நற்சித்தன் - இராசவத்தனக்கல். நற்சிலை - கருங்கல். நற்சீரகம் - கரிச்சீரகம். நற்சீர் - நன்னிலை. நற்செங்கல் - மஞ்சட் காவிக்கல். நற்செய்தி - சுகசெய்தி. நற்பரகுன்றி - சிந்து லவணம் நற்கலம் - வெட்பாலை. நற்பிரியம் - ஓர் செடி, மிகு பட்சம்,பற்பாடகம். நற்புத்தி - நற்போதம். நற்றத்தனார் - அகஸ்தியரின் சீஷர்களில் ஒருவராகிய நற்றம் எனும்ஓரிலக்கண நூலாசிரியர். நற்றமிழ் - இனிய தமிழ், சுத்த தமிழ். நற்றாய் - பெற்ற தாய். நற்றிணை - எட்டுத் தொகையுள்முதலாவது பல புலவர்கள் பாடியது. நற்றுளி - அத்திப்பிசின், அத்திமரம். நனந்தம் - புன்கு. நனந்தலை - உச்சி நடு, நடுவிடம் நனவு - அகலம், இடம், சாக்கிரம்,தெளிவு, பரப்பு, மயக்க நீங்கல் நன்காடு - சுடுகாடு. நனா - நனவு. நனி - நெருக்கம். பெருமை, மிகுதி. நனை - கள், தேன், நனையென்னேவல், பூமொட்டு. நனைதல் - ஈரலித்தல், ஈரமாதல். நனைப்பு - ஈரமாக்குகை. நனைத்தல் - ஈரமாக்கல். நனையாவிறாட்டி - கொட்டைப்பால். நனைவிற்கூ - ஒதமறு பூமி. நனைவு - ஈரம், நனைதல். நன்கு - அழகு, இலாபம், நன்மை,மிகுதி. நன்குணர்தல் - கற்றறிதல். நன்கொடை - உபகாரக்கொடை. நன்செய் - நெல் விளைபுலம். நன்சொல் - இன்சொல், நற்புத்தி. நன்பகல் - நண்பகல், கடும்பகல். நன்பன் - சணல். நன்மச்சான் - நல்லம்மான் பிள்ளை. நன்மச்சினி - நல்லம்மான் புத்திரி. நன்மருகன் - சொந்த மருமகன்,அதாவது ஒருவனுக்குச் சகோதரிமகன், அல்லது ஒருவளுக்குசகோதரன் மகன். நன்மருதி - சொந்த மருமகள்,அதாவது ஒருவனுக்கு சகோதரிமகள் அல்லது ஒருவளுக்கு சகோதரன் மகள். நன்மனம் - மனப்பூரணம். நன்மாமன் - நல்லம்மான். நன்மாமி - நல்லத்தை. நன்மார்க்கம் - உபசாரம், சன்மார்க்கம், நன்னெறி. நம்முகம் - தாராளம். நன்மை - அதிட்டம், உதவி, உபகாரம்,சன்மார்க்கம், நன்கு பிர யோசனம். நன்மைகடைப்பிடித்தல் - தயாவிருத்தியெடடி னொன்று அஃதுசெய்ந்நன்றி மறவாதிருத்தல். நன்மைத்துனன் - நல்லம்மான்புதல்வன். நன்மைப்பகுதி - நல்வினைப்பயன் நன்மைப்படுதல் - இருதுவாதல்,பலன்படுதல். நன்மைப்பேறு - நன்மைப் பகுதி. நன்மையாகுதல் - இருதுவாதல். நன்மையானபெண் - இருதுவானபெண். நன்றி - உபகார குணம், நன்மை. நன்றிகேடு - செய்ந்நன்றி யில்லாமை. நன்றிகோறல் - செய்ந்நன்றிகெடுத்தல். நன்றி மறத்தல் - செய்ந்நன்றியயர்தல். நன்றியறிதல் - செய்ந்நன்றியறிதல். நன்றியீனம் - செய்ந்நன்றி கேடு. நன்று - சுகம், நல்லது, நன்மை,பெருமை, வாழ்வு. நன்னடை - நல்லொழுக்கம். நன்னயம் - உபசாரச்சொல், நன்மை,நினைவு. நன்னயன் - எண்ணம், நயப்பு, முகமன். நன்னருக்கல் - அற்பநோ. நன்னர் - நன்மை. நன்னலம் - அழகு, சிறந்த நலம்,நயப்பு, மேன்மை. நன்னாகனார் - ஒரு புலவர். நன்னாரி - பாற்கொடி. நன்னி - சிற்றுருவானது. நன்னிலம் - நற்றறை, நன்செய். நன்னிலை - உலகம், சுகம், தவம்,நல்லொழுக்கம். நன்னிறம் - வெண்மை. நன்னுதல் - நறுக்குதல், நல்லநெற்றி,பெண். நன்னூல் - நல்ல நூல், பவணந்திமுனிவர் செய்த இலக்கண நூல். நன்னெருக்கல் - நன்னருக்கல். நன்னெறி - சிவப்பிரகாசன் செய்தஓர் நீதி நூல், நல்வழி. நா நா - அயலார், அயல், சுவாலை,திறப்பு, மணி முதலியவற்றினுக்குநடு, நாக்கு, பொலிவு. நாககங்கணன் - சிவன். நாககர்ணன் - சிவன் நாகர்ணம் - செவ்வாமணக்கு நாககள்ளி - கள்ளியிலோர் பேதம். நாககற்பம் - செவ்வீயம். நாககன்னிகை - நாகலோகத்துப்பெண். நாககெந்தி - நேர்வாளம், வஞ்சிக்கொடி. நாககுமாரகாவியம் - சங்கமருவியசிறு காப்பியங்கள் ஐந்தனுள்ஒன்று. நாகக்குவடு - செம்பு மலை. நாகசம் - சிந்தூரம், வங்கம். நாகசம்பவம் - செவ்வீயம். நாகசரம் - ஓ ரூதுகுழல். நாகசாபம் - நாகத்தைக் கொல்வதினால் வருஞ் சாபம். நாகசிவிகை - சிவந்த பாஷாணம். நாகசின்னம் - ஓ ரூதுகுழல். நாகசீவனம் - துத்தநாகம். நாகசுரம் - ஓரூதுகுழல். நாகசுவந்தை - நாகுலி. நாகசேதகன் - இந்திரன். நாகச்சிலைக்கல் - சிலா நாகக்கல். நாகணம் - நேர்வாளம்.நாகணவாய் நாகணவாய்ப்புள் - ஓர்பட்சி. நாகதத்துவம் - திரீதத்துவங்களினொன்று. நாகதந்தகம் - முளையாணி. நாகதந்தம் - பாம்பின் பல், முளையாணி, யானைத் தந்தம். நாகதந்தி - ஓர் மரம், வேசை. நாகதமநி - ஓர் மரம். நாகதம்பிரான் - நாகதேவன். நாகதாளி - ஓர் மரம். நாகதாளிக்கள்ளி - ஓர் மரம். நாகதீபம் - ஐந்தலை விளக்கு. நாகதேவன் - ஆதிசேடன். நாகதேமணி - மணித்தக்காளி. நாகதேவி - நாகப்பாம்பு. நாகதேனி - பெரு மருந்து. நாகதைவிகை - தசமி திதி. நாகத்திசை - மேற்கு திசை. நாகத்தின் பாம்பு - பூ நாகம். நாகநாடு - பவணலோகம். நாகநாதன் - ஆதிசேடன், இந்திரன். நாகநாயபுரோஹிதன் - பிறகற்பதி. நாகநாயகன் - நாகநாதன். நாகந்தி - நாகணம். நாகபடம் - ஓர்காதணி, பாம்பின்படம். நாகபடலம் - கண்ணோயுளொன்று. நாகபட்டினம் - ஓரூர். நாகபந்தம் - நாகபெந்தம், ஒரு சித்திரகவி. நாகபந்து - அரசமரம். நாகபலன் - வீமன் நாகபலை - நாகமல்லி. நாகபாசம் - நாகரூபமான வோர்கயிறு, வருணனாயுதம். நாகபாஷாணம் - ஓர் பாஷாணம். நாக பிரம்பு - ஓர் பிரம்பு. நாகபூஷணன் - சிவன். நாகபெந்தம் - ஓர் மிறைக்கவி அஃதுஇரண்டு பாம்பு தம்முட் பிணைவது போல இரேகைகீறி யொருநேரிசை வெண்பாவும் ஓரின்னிசைவெண்பாவு மெழுதியிரேகையிற்சந்திகளினின்ற வெழுத்து மற்றையிடங்களினு முறுப்பாக நிற்கப்பாடுவது நாகப்பச்சை - ஓரிரத்தினம். நாகப்பற்று - துத்தநாகப் பிடிப்பு. நாகப்பிரதிட்டை - நாகவிக்கிரப்பிரதிட்டை. நாகப்பூச்சி - நாக்குளிப் பூச்சி, குடற்புழு நாகமணி - நாகரத்தினம். நாகமல்லம் - ஜராவதம்.நாகமல்லி, நாகமல்லிகை - அனிச்சமரம். நாகமாதா - துளசி. நாகமுத்து - பாம்பின் கல். நாகமோடி - ஓர்புடவை. நாகம் - ஆகாயம், ஈயம், ஒலி, ஒர்கரணம், ஓர் பாம்பு, ஓர்மருந்துமரம். கந்தகம், கருங்குரங்கு,காரீயம், குரங்கு, ஞாழல், துத்தநாகம், தேவலோகம், நற்புடைவைநாகபாஷாணம், நாகப்பச்சை,பாம்பு, புன்னை மரம், மலையானை. நாகம்பூ - ஓர் மருந்து. நாம்மா - நாகதேவி. நாகரகம் - தேன்றோடை. நாகரகன் - கள்வன், கைச்சித்திரவிவேகி. நாகரங்கம் - தேன்றோடை. நாகரத்தினம் - நாகமணி. நாகரம் - இளைப்பு, ஓர்பாஷை,ஓர்வண்டு, சுக்கு, தேன்றோடை,விருப்பு. நாகரவண்டு - பொன் வண்டு. நாகரன் - கணவனின் சகோதரன்,சிறந்தோன், நகரத்தான். நாகராகம் - ஓர் பண். நாகராசன் - அனந்தன், ஆதிசேடன். நாகரி - குருக்கத்தி. நாகரிமுனை - மதுரைக்குச் சேர்ந்தவோரிடம். நாகரீகம் - கண்ணோட்டம், சாதுரியம், பிலுக்கு, வினோதம், நகரத்திற்குரியது. நாகரீகம்விடுதல் - நாகரீகம் பேசல். நாகரீகர் - காமுகர், நகரத்தார், சதுரர். நாகரு - குருக்கத்தி. நாகருகம் - தேன்றோடை. நாகரேணு - செவ்வியம். நாகரை - ஓர்பூடு, கரிப்புடோல். நாகர் - சற்பசாதியார், தேவர். நாகலதை - ஆண்குறி. நாகலோகம் - கீழே ழுலகினொன்று,தேவலோகம். நாகல் - நாவல்மரம். நாகவம் - பாம்புக் கரணம். நாகவராளி - ஓர் பண். நாகவல்லி - கலியாணப்பூர்த்திச்சடங்கி னொன்று, வெற்றிலைக்கொடி, வெற்றிலை. நாகவல்லிதளம் - வெற்றிலை. நாகவள்ளி - ஓர் கிழங்குக் கொடி,வெற்றிலைக் கொடி. நாகவாடை - செம்பூறல், துத்துநாகப்பிடிப்பு. நாகவாய் - ஓர் கடைச்சற் கருவி. நாகவாரிகம் - இராசயானை, கலழன், மயில். நாகவாரிகன் - யானைப் பாகன். நாகவீதி - பால்வீதி மண்டலம். நாகன் - தசவாயுவினொன்று அஃதுநீட்டலும், முடக்கலுங் கிளக்கலுஞ் செய்விப்பது. நாகவேதம் - மருகு. நாகனம் - நேர்வாளம். நாகனாதி - தேட்கொடுக்கி. நாகனாய் - இலைக்கள்ளி. நாகாசனன் - கருடன். நாகாதிபன் - அனந்தன், இந்திரன்,இமயமலை, இராசயானை,ஐராவதம், மலையரசன், மேருகிரி. நாகாத்திரம் - நாகபாணம். நாகாந்தகன் - இந்திரன், கருடன்,சிவன், விட்டுணு. நாகாபரணம் - நாகரூபமான வோராபரணம், சிவனணியி னொன்று. நாகாபரணன் - சிவன். நாகாயுதம் - ஓர் படைக்கலம். நாகாராதி, நாகாரி - கருடன்,தேவேந்திரன், எட்டி நாகாலயம் - தேவகோயில், பாதலம். நாகினி - வஞ்சிக்கொடி, வெற்றிலை. நாகு - இளமரம், இளமை, எருமை,சங்கு, நத்தை, பசு, மரையிவற்றின்கன்னிப் பெண், நத்தை, புற்று,பெண்மீன், மரக்கன்று, மலை. நாகுலி - அரத்தை, கீரிபுரண்டான்பூடு, செவ்வியம். நாகூர் - ஓரூர். நாகேசுரம் - கும்பகோணத்தருகில்திருநாகேசுரம் எனும் ஓரூர், சிறுநாகப்பூ. நாகேந்திரன் - நாகாதிபன். நாகை - நாகப்பட்டினம், நாகூர்,வெற்றிலைக்கொடி. நாகோதரம் - மார்க்கவசம். நாக்கப்பாம்பு, நாக்கப்பூச்சி - நாங்கூழ். நாக்கரளை - நாவில் வருமோர்நோய். நாக்கனிடுங்கூர்மை - கெந்த லவணம். நாக்கியாக்கிரம் - ஓர் முட்செடி நாக்கிரந்தி - ஓர் நோய். நாக்கு - கதிர், திறப்பு முதலியவற்றின்நா, இலக்கினத்திற்கு இரண்டாமிடம். நாக்குத்தவறுதல் - சொற்றவறுதல். நாக்குஸ்தானம் - இலக்கினத்திற்குஇரண்டாமிடம். நாக்குப்புரட்டு - பொய். நாக்குப்புற்று - ஓர் நோய். நாக்குப்பூச்சி - நாங்கூழ், குடற்புழு. நாக்குமீன் - ஓர்மீன். நாக்குரோதம் - காட்டாமணக்கு. நாக்குவளைத்தல் - இகழ்தல். நாக்குவாங்கல் - நாக்கையிழுத்தல்,வில்லங்கப்படுத்தல். நாக்குவிழுதல் - பேசநாவெழாதிருத்தல். நாக்குழிஞ்சான் - ஓர் செடி.நாக்குளிப்பாம்பு, நாக்குளிப்பூச்சி - நாக்கப்பூச்சி. நாக்குறுதி - சொல்வன்மை. நாக்கை - நாக்குளிப்பூச்சி. நாங்கள் - நாம். நாங்குதல் - சோம்புதல், தைரியம்குன்றல். நாங்குழு, நாங்கூழ் - நாக்கப்பூச்சி,பூநாகம். நாங்கூர் - சீர்க்காழிக்கருகிலுள்ளஓரூர். நாசகன் - அழிப்பவன். நாசகாரி - கேடுசெய்வோன். நாசகாலம் - அழிவுகாலம். நாசஞ்சியம் - போக்கல். நாசமிலி - சிவன். நாசம் - அழிவு, மரணம், விடுதல். நாசயோகம் - மரணயோகம். நாசனம் - நாசம். நாசன் - அழிப்போன், நமன். நாசாக்கிரம் - நாசிநுனி, நாசாதக்கணம் - வலமூக்கு. நாசாபுடம் - மூக்குத் தொளை. நாசாவாவம் - இடமூக்கு. நாசி - சலதாரையின் வாய், மூக்கு,மூக்குத் துளை, மேல்வாய் தற்படி,வஞ்சிமரம். நாசிகாக்கிரம் - மூக்குநுனி. நாசிகாசூரணம் - மூக்குப்பொடி. நாசிகாபீடம் - நாசிக்குள் வளருமோர்நோய். நாசிகாமலம் - மூக்குச்சளி. நாசிகேது - அக்கினி. நாசிகை - கதவு நிலையின் மேற்சட்டம், மூக்கு. நாசிதாரு - மேல்வாய்தற்படி. நாசித்தல் - நசித்தல். நாசித்துவாரம் - மூக்குத்துளை. நாசிப்பொடி - மூக்குத்தூள். நாசுகம் - பீர்க்கு, வீழி. நாசுவன் - அம்பட்டன். நாசியம் - நாணயக்கயிறு, மூக்காங்கயிறு. நாசோற்பத்தி - அழிந்து பிறப்பது. நாச்சிமார் - சத்ததேவிகள். நாஞ்சிநாடு - மலையாளம். நாஞ்சில் - கலப்பை, மதிலுறுப்பு. நாஞ்சிற்படையோன் - பலபத்திரன். நாடகக்கணிகை - நாடகசாலைப்பெண். நாடகசாலை - கூத்துப்பயிலிடம், நாடகக் கணிகை. நாடகத்தமிழ் - நாடகவழங்குந் தமிழ்அஃது முத்தமிழி னொன்று. நாடகத்தி - ஆடுமாலைப்பெண்,கூத்தி, கூத்துவிளையாடும் பெண். நாடகப்பெண் - நடனப் பெண். நாடகமடித்தல் - ஆடுமாலைத்தனம்பண்ணுதல். நாடகமாடுதல் - ஆடுமாலைத் தனம்பண்ணுதல், கூத்தாடுதல். நாடகம் - கலைஞான மறுபத்து நான்கினொன்று அஃது கதை தழுவிவருங்கூத்து, கூத்துப் பாட்டு, நடனவீதி நாடகர் - கூத்தர். நாடகாங்கம் - அவிநயம். நாடகியர், நாடகீயர் - கூத்தர். நாடடிப்படுத்தல் - தேசத்தைக் கீழ்ப்படுத்தல். நாடன் - கார்த்திகை நாள், சோழன். நாடன்பருத்தி - ஓர் செடி. நாடா - ஓர் கயிறு, நூனாழி. நாடான் - சாணாருக்குரிய பட்டப்பெயர். நாடி - ஆண்மயிர், இருபத்துநாலுநிமிடங்கொண்டது, இலைநரம்பு, உட்டுளை, தாடி, தாது,துவாளிப்பு, நரம்பு, நாசி, நாழிகை,பூவிற்றாள், மூக்கு, யாழின் நரம்பு. நாடிகேளம் - நாரிகேளம். நாடிசுத்தி - யோகத்திற்குத் தாது சுத்தி பண்ணல். நாடிதாரணை - நவதாரணையி னொன்று. நாழ்ரம்பு - நாடியோட்ட நரம்பு. நாடிபார்த்தல் - நாடிக் குறியறிதல்.நாடிப்பயிற்சி, நாடிப்பரிட்சை - தாதறியுமறிவு. நாடிமண்டலம் - ஆகாய சமரேகை. நாடியொடுக்கம் - நாடித் தூக்கம். நாடியோடுதல் - நாடியியங்குதல். நாடிவிதி - நாடித்திட்ட மறிவிக்குநூல். நாடிவிழுதல் - நாடியொடுங்கல். நாடு - இடம், உலகம், ஊர், நாடென்னேவல், பக்கம், பூமி நாடுதல் - தேடுதல், விசாரித்தல்,விரும்புதல். நாடுபடிதல் - நாட்டார் வசப்படுதல். நாடுபடுதிரவியம் - நாட்டிலுண்டாகுந் திரவியம் அஃது கரும்புசிறு பயிறு செந்நெல் செவ்விளநீர் வாழை. நாடுரி - நாவுரி. நாடேயன் - நாடகக் கணிகை புத்திரன். நாடோடி - நிலையற்றவன்.நாடோடிச்சொல், நாடோடிப்பேச்சு - வழக்கச்சொல். நாடோறும் - நாள்தோறும். நாடோன் - நாடகக்கணிகை புத்திரன். நாட்கடத்துதல் - நாள்விடுதல், நாளகழித்தல். நாட்கணக்கு - அன்றாடக் கணக்கு.நாட்கால் - மங்கலப்பந்தருக்கு முதனாட்டுங்கப்பு. நாட்குறித்தல் - நன்முகூர்த்த நியமித்தல். நாட்கூலி - அற்றைக் கூலி. நாட்கொள்ளுதல் - புதிதாய்த்தொடங்கல். நாட்செய்தல் - நாட்கொள்ளுதல். நாட்செலவு - அன்றன்று செல்லுஞ்செலவு, நாட்செல்லுதல். நாட்டமிலி - குருடன். நாட்டமைதி - நாட்டுச்சிறப்பிற்குடையன அவை குறும்பின்மைசெங்கோல்செல்வம் செழிப்புநோயின்மை விளைநிலம். நாட்டம் - அசைவு, ஓர்பண், கண்,நோக்கம், வாள், விருப்பம், அழகு,ஆராய்தல். நாட்டல் - ஆடல், நாட்டுதல். நாட்டவத்தனம் - நாட்டுப்பாங்கு. நாட்டவன் - நாட்டான். நாட்டா - ஊர்ப்பசு. நாட்டாசாரம் - உலக ஒழுக்கம். நாட்டாண்மை - ஊரதிகாரம். நாட்டார் - ஊரார். நாட்டியக்காரன் - கூத்தன். நாட்டியசாலை - நடந சாலை. நாட்டியப்பிரியன் - சிவன், நடனப்பிரியன். நாட்டியம் - கருத்து, குறிப்பு, கூத்து. நாட்டு - தேடுதல். ஆதன ஆழ்நாட்டு(நாடுதல் நாட்டு) நிலை. 199.நாட்டி நிறுத்தும் சரக்கம்பு (வழி) பொய்ந்நாட்டு - மண்ணைத்தோன்றி ஊன்றாமல் மேலேநிறுத்தப் பெறுத் தூன். நாட்டு - நாட்டென்னேவல், தாபிப்பு. நாட்டுக்குற்றம் - ஊருக்குத் தீதுசெய்வன அவை கள்வர், கிள்ளை,தன்னரசு, தொட்டியர், நட்டம்,பன்றி, பெருமழை, மிகுகாற்று,மிகுமழை, யானை, விட்டில்,வேற்றரசு நாட்டுச்சார்பு - மருதநிலம் அஃதுநாட்டைச் சார்ந்திருப்பது. நாட்டுச்சிறப்பு - நாட்டுவளம் நாட்டுதல் - தாபித்தல், நடத்தல்,நிறுத்தல், நாட்டுப்புறம் - பட்டிக்காடு, நாட்டுப்பெண் - மருமகள். நாட்டுப்போக்கு - நாட்டுக்கடுத்தவிதம். நாட்டுவழக்கம் - தேசநடை. நாட்டுவளப்பம் - நாட்டின்சீர். நாட்டுவளம் - நாட்டுச்சிறப்பு நாட்டுவெள்ளரி - ஓர் வெள்ளரி. நாட்டை - ஓர்பண். நாட்படுதல் - நாட்செல்லுதல். நாட்பட்டது - நாட்சென்றது, பழையது. நாட்பணிவிடை - அன்றாடகவேலை,நன்முகூர்த்தத்திற் செய்யும் வேலை. நாட்பார்த்தல் - சுபதினம் பார்த்தல், நாட்பு - ஞாட்பு, வலி. நாட்பூ - அன்றலர்ந்த பூ. நாட்பொருத்தம் - சென்ம நட்சத்திரப்பொருத்தம் இஃது தசப் பொருத்தத்தொன்று. நாணகம் - நாணயம். நாணக்கேடு - வெட்கமின்மை. நாணப்படுதல் - அடங்குதல், மதித்தல்,வெட்கித்தல். நாணம் - அச்சம், அடக்கம், மதிப்பு,வெட்கம் இஃது மகடூ உக்குணம்நான்கினொன்று. நாணயகாரன் - நிதானி. நாணயங்குத்துதல் - மிருகங்களுக்குமூக்குத்துளைத்தல். நாணயங்குலைத்தல், நாணயங் கெடுதல் - மானமழிதல். நாணசில்லம் - அவமானம். நாணயச்சரக்கு - விலைச்சாமான். நாணயஞ்செலுத்துதல் - உண்மைதவறாம னடத்தல், பேச்சையுண்மைப் படுத்தல். நாணயத்தப்பு - நாணயப்பிழை. நாணயம் - உண்மை, உயர்வு, உரோசம், கட்டுப்பாடு, காசு நாணயம்,நிதானம், நேர்மை, வழக்கம்,வாக்குப்பிசகாமை. நாணயவன் - உண்மை தவறாதவன்,நிதானி. நாணல் - ஓர்புல், நாணுதல். நாணவந்தான் - நாணுவம். நாணாங்கள்ளி - ஓர்கள்ளி. நாணி - நாணமுடையாள், வின்னாரி. நாணித்தல் - நாணுதல். நாணுகம் - குதிரை. நாணுதல் - அடங்குதல், மதித்தல்,வெட்குதல்.நாணுவத்தான், நாணுவம், நாணுவான் - நாகணவாய்ப்புள்.நாணேறிடுதல், நாணேற்றுதல் - வில்வளைத்தல். நாணையம் - நாணயம். நாண் - கயிறு, நாணென்னேவல்,வின்ணாண், வெட்கம். நாண்மலர் - புதுமலர், அன்றலர்ந்தமலர். நாண்மீன் - நட்சத்திரம். நாண்முகப்புல் - ஓர்புல். நாதகிருத்தியர் - கடவுளது கிருத்தியத்தை யவனருளாற் புரிபவர் நாதக்குடம் - சங்கு. நாதசாரம் - சிவசாரம். நாதத்துவம் - நாதம். நாதம் - அப்பிரகம், இந்திரியம், ஒலி,நாணயக்கயிறு, பாதிவட்டம்,மகாரசிங்கி. நாதரூபம் - சிவன துருவி னொன்று. நாதவத்தம் - பெருநெருஞ்சில். நாதன் - அரசன், அருகன், எப்பொருட்கு மிறைவன், கடவுள்,கணவன், குரு, சிவன், தலைவன்,முனிவன், மூத்தோன். நாதாக்கள் - சுத்தவான்கள்,பெரியோர். நாதாங்கி - கதவுநிலைச் சங்கிலி,பூட்டுக்களினோ ருறுப்பு. நாதாந்தசோதி - கடவுள். நாதாந்தம் - ஞானநெறிகளினொன்று,பஞ்சகருத்தாவி லொருவன். நாதாந்தவிளக்கம் - ஓர்நூல். நாதாந்தன் - சிவன். நாதாந்தி - பொன்னிமிளை. நாதி - ஓர்பெருங்காயம், ஞாதி. நாதித்தல் - ஒலித்தல். நாதேயம் - இந்துப்பு, சீந்தில், நதியிற்பிறப்பன, நீலாஞ்சனம். நாதேனி - மணித்தக்காளி.நாத்தழும்பல், நாத்தழும்பேறுதல் - நாவப்பியாசப்பட்டிருத்தல். நாத்தனார் - கணவன் சகோதரி. நாத்தாங்கி - இலைக்கள்ளி, நாதாங்கி. நாத்தாங்கிப்பேசுதல் - எண்ணிப்பேசுதல், நாவெறுத்துப் பேசுதல். நாத்தி - கணவன்சகோதரி, தாழ்வாரம், நாசம். நாஸ்தி - இன்மை, இல்லை. நாஸ்திகமதம் - சூனியவாதம். நாஸ்திகம் - தெய்வமின்மை, தெய்வமில்லை யென்னும் மதம். நாஸ்திகன் - சூனியவாதி. நாத்திரம் - அதிசயம், புகழ். நாத்திரன் - சிவன். நாத்தூண் - மைத்துனி. நாநா - பல. நாந்தகம் - கிருஷ்ணன்வாள், வாள். நாந்தம் - நாரத்தை நாந்தல் - ஈரம். நாந்தி - ஒருவனைப் புகழ்ந்துபாடியகவி, பதினாறு கருமத்தொன்றுமங்கல வாழ்த்து, பாயிரம்நாந்திகரன், நாந்திவாதி - மங்கலப்பாடகன். நாந்துதல் - நனைதல். நாந்தெனி - ஓர்பூடு. நாபம் - நாபி. நாபாகன் - அம்பரீஷன். நாபி - கஸ்தூரி, கொப்பூழ், வற்சநாபம். நாபிக்கமலம் - கொப்பூழ். நாபிக்கொடி - கொப்பூழ்க் கொடி. நாபிசன், நாபிசன்மன் - பிரமன். நாபிசூத்திரம் - நாபிக் கொடி. நாபிதன் - அம்பட்டன். நாபித்தானம் - கொப்பூழ். நாபிநாடி - உந்திக் கொடி. நாபிநாளம் - கொப்பூழ், நஞ்சுக்கொடி. நாபிரசம் - விந்து. நாபீலம் - கடிதடம், கொப்பூழ்க் குழி. நாபீலை - உத்தம ஸ்திரீ. நாப்பண் - இடை, தேர்நடு, நடு, யாழினுறுப்பு. நாப்பு - எத்து, பரிகாசம். நாப்புற்று - நாவறளை. நாப்பொடிதல் - நாவுலர்தல். நாம - பயம். நாமகரணம் - பெயரிடுதல். நாமகள் - சரச்சுவதி நாமக்கட்டி - விட்டுணு பத்திக்காரர்போடுமோர் சாந்துக்கட்டி. நாமக்காரர் - விட்டுணு பத்திக்காரர்,வைணவர்.நாமக்குச்சரி, நாமக்குச்சலி - ஓர்வகைப்புடைவை. நாமசங்கிதை - சிற்பநூன், முப்பத்திரண்டி னொன்று. நாமசாஸ்திரம் - நிகண்டு. நாமசேடம் - மரணம். நாமச்சி - நத்தை. நாமஞ்சாத்துதல் - நாமந்தரித்தல்,மோசஞ் செய்தல் நாமடந்தை - சரச்சுவதி. நாமதாரணை - நவதாரணையினொன்று, அஃது பூரணமாய்க்கடவுளைத் தியானித்தற்குக்கற்பித்த நாம தியானத்தினாலக்கடவுளை யெல்லைப் படுத்தல். நாமதாரி - நாமந் தரித்தோன்,விட்டுணு பத்திக்காரன். நாமதேயம் - பெயர். நாமத்துத்தி - ஓர் பூடு. நாமப்பொருத்தம் - பெயர்ப் பொருத்தம். நாமமாலை - ஓர்பிரபந்தம், அஃதுஅகவலடியுங் கலியலடியும் வந்துமயங்கிய வஞ்சிப்பாவா லாண்மகனைப் புகழ்ந்து பாடுவது. நாமமிடுதல் - நாமக்குறி தீட்டுதல்,பெயர் கொடுத்தல். நாமம் - அதிசயம், இணக்கம், ஐயம்,கோபம், நிச்சயம், நிந்தை, நினைப்பு,மாய்மால மிவை களைக்காட்டுஞகோலினடு, பெயர், அஃது எண்குற்றத்தொன்று, வைட்டிணவரிடுநாமம். நாமராசி - இராசிப் பொருத்தம்,பெயர்ப் பொருத்தம். நாமவந்தம் - பெரு நெருஞ்சில்,நாமவெகுண்டம், நாமவைகுண்டம் - தும்பை. நாமறல் - பேருமற்றுப் போதல்,முற்றுமறல். நாமாது - சரச்சுவதி. நாமாபாரதம் - நிந்தனை. நாமிதம் - வளைவு. நாமுடி - நா நுனி. நாமோச்சாரணம் - நாமவுச்சரிப்பு. நாம் - அச்சம், பால்பகாவுயர் திணைத்தன்மை பன்மை. நாம்பல் - இளைத்த மிருகம், இளைத்தல். நாம்பன் - இளவெருது. நாம்பு - நாம்பென்னேவல், மெலிவு. நாம்புதல் - மெலிதல். நாயகசுரம் - நாக சின்னம். நாயகச்சி, நாயகத்தி - தலைவி, தேவி,மனைவி. நாயகப்பானை - முதலுலை கட்டிப்பொங்கும் பானை. நாயகமணி - மணிமாலை நடுவிலேகோத்திருக்கும் பெரு மணி. நாயகம் - ஆளுகை, கிரந்தி நாயகம்,சன்னிநாயகம், தலைமை, மாலையின் பிரதான மணி. நாயகம் பண்ணுதல் - முதன்மைசெலுத்தல். நாயக வளந்து - பொங்கல், செய்வோர்முதலுலை வைக்கும் பானை. நாயகன் - அரசன், எசமான், எப்பொருட்கு மிறைவன், சிவன்நடத்துவோன், பாளயக்காரன்,புருடன், தலைவன். நாயகாதியன் - அரசன். நாயகி - எசமாட்டி, பார்வதி,பெருமையிற் சிறந்தவள், மனைவி,தலைவி. நாயகிமேனி - மரகதப்பச்சை. நாயக்கன் - சேனைத்தலைவன்,தெலுங்கருளோர் வகையான். நாயரஞ்சி - நாயுருவி நாயனம் - நாகசுரம். நாயனார், நாயன் - அரசன், எசமான்,ஐயனார், கடவுள், சிவன், பெருமையிற் சிறந்தோன், தலைவன். நாயன்மார் - தலைவர், துறவோர்,பெருமையிற் சிறந்தோர், பண்டைச்சிவனடியார்கள். நாயாட்டம் - உலைச்சல், பேயாட்டம். நாயில் - ஞாயில். நாயிறு - ஓர்கிழமை, சூரியன். நாயிறுதிரும்பி - பொழுது வணங்கி. நாயிறுவணங்கி - கொழிஞ்சி. நாயுருவி - ஓர்பூடு, சுரமஞ்சரி. நாயுறக்கம் - பொய்யுறக்கம். நாயோட்டம் - குதிரைநடையினொன்று. நாய் - ஞமலி, சூதாடு கருவி, தென்மேற்றிசைப்பாலன் குறி, புளியமரம். நாய்கர் - செட்டிகள். நாய்குருவி - நாயுருவி. நாய்க்கடுகு - நாய்வேளை. நாய்க்கரந்தை - குன்றி. நாய்க்குட்டிச்செடி - ஓர் செடி. நாய்க்கோலம் - இழிவான கோலம்.நாய்ச்சி, நாய்ச்சியார் - எசமாட்டி,தலைவி. நாய்ச்சீரகம் - ஓர்சீரகம். நாய்த்தயிர்வேளை - ஒர்செடி. நாய்த்திசை - தென்மேற்கு. நாய்த்துளசி - கஞ்சாங்கோரை.நாய்நாக்கி, நாய்நாக்கு - இலைக்கள்ளி, பூடு. நாய்ப்பயறு - ஓர்பூடு. நாய்ப்பாகல் - ஓர் பாகல் நாய்ப்புடுக்கன் - ஓர் மரம். நாய்ப்புடோல் - ஓர் கொடி. நாய்முருகை - ஓர் முருகைக் கல் நாய்முள்ளி - ஓர் முள்ளி. நாய்விட்டைக்கல் - ஓர்வகைச் சுண்ணாம்புக் கல். நாய்வெள்ளை - நாய்த்தயிர்வேளை நாய்வேம்பு, நாய்வேளை - ஓர் பூடு. நாரகம் - நரகம். நாரகன் - நரகன். நாரகி - நரகவாசி. நாரங்கம் - தேன்றோடை, நாரத்தை. நாரங்கி - சடைச்சி. நாரசிங்கம் - அட்டாதச வுப புராணத்தொன்று, உபநிடத முப்பத்திரண்டி னொன்று, நரசிங்கம்அஃது திருமாலவதாரத் தொன்று. நாரசிங்கன் - விட்டுணு. நாரணவன் - ஓர்கிருமி, மாட்டுநோயிலொன்று. நாரணன் - விஷ்ணு. நாரணி - துர்க்கை. நாரதம் - பதினெண்புராணத்தொன்று, முகில். நாரதன் - ஓரிருடி, இவன் திருமால்பதினைந்தாவதாரத் தொருவன்,கலகஞ்செய்வோன், பஞ்ச பாரதீயமென்னும் இசைத்தமிழ் நூலாசிரியன். நாரதீயம் - அட்டாதச வுபபுராணத்தொன்று, பதினெண்புராணத்தொன்று. நாரதை - நதி. நாரத்தம் - சடாமாஞ்சி, வசம்பு. நாரத்தம்புல் - ஓர் புல். நாரத்தை - ஓர் தோடை, ஒரு மரம். நாரம் - அன்பு, சனத்திரள், நாண்,நாரத்தை, நீர், நீர்வாழ் புள்,பசுக்கன்று, பாசி. நாராங்கி - நாதாங்கி. நாராசபாணம் - ஓரத்திரம். நாராசமுத்திரை - பூசாமுத்திரைவகையினொன்று. நாராசம் - அம்பு, இருப்பாணி,எழுத்தாணி, சலாகை, விட்டம். நாராயணகவுளம் - ஓர் பண். நாராயணகோபாலர் - திருமாலுருவுடையோர். நாராயணதைலம் - ஓர் தைலம். நாராயணப்பிரியன் - சிவன். நாராயணமுநி - ஓர் முனிவன். நாராயணம் - அரசமரம், உபநிடதமுப்பத்திரண்டி னொன்று, மீன்,அரத்தை. நாராயணன் - சந்திரன், சிவன்,பிரமன், வருணன், விட்டுணு. நாராயணாஸ்த்ரம் - ஓர் பாணம். நாராயணி - இலக்குமி, ஓரிராகம்,கங்காதேவி, சத்த மாதர்களிலொருத்தி, தண்ணீர்விட்டான்கிழங்கு, துர்க்கை, நாரி - இடை, ஓர் பண், கள், சேனை,தேன், நன்னாரி, நாணி, பன்னாடை,பார்வதி, பெண், வாசனை.நாரிகேரம், நாரிகேளம் - தென்னமரம், தேங்காய். நாரிபாகன் - சிவன் நாரியங்கம் - தேன்றோடை. நாரிதூஷணம் - பதிவிரதா விரதத்திற்குத்தப் பானது அஃது அன்னியக் கிரகசயனம் அன்னியக்கிரகபிரவேசம் அன்னியக் கிரகாசனம் கணவனைப் பிரிந்திருத்தல்துற்கூட்டம், மதுபானம். நாரிவெருட்டி - புலிநகர் கொன்றை. நாரை - ஓர்புள். நாரைக்கொம்பு - நீண்டகொம்பு. நாரைப்பசு - ஓர்வகைப்பசு. நார் - அன்பு, கயிறு, கல்நார், தும்பு,மட்டை முதலியவற்றினார். நார்ச்சீலை - மரவுரி, வலைக்கோணி. நார்மடி - நாரினாற் செய்தமடி.நாலடி, நாலடியார் - ஓர்நூல், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள்முதலாவது. நாலம் - தாமரைப்பூ முதலியவற்றின்காம்பு. நாலை - நாளம். நாலல் - தாழ்தல், தொங்குதல், விழுதல். நாலாகாரியம் - பலவகைக்காரியம்.நாலாஞ்சடங்கு, நாலாநீர்ச்சடங்கு - விவாகத்தினாலாநாட் பண்ணுமுழுக்குச்சடங்கு. நாலாமுறைக்காய்ச்சல் - நாலு நாளைக்கொருமுறை வருங்காய்ச்சல். நாலாம்வருணம் - சூத்திரசாதி நாலாம்வருணர் - சதுர்த்தர். நாலாயிரப்பிரபந்தம் - பன்னித்தராழ்வார்கள் பாடிய வைணவப்பிரபந்தம். நாலாவிதம் - பலவிதம். நாலி - கார்த்திகைப்பூ, முத்து. நாலிகம் - எருமை, காகம், தாமரை. நாலிகை - அடுப்புச்சந்து தொளை,மூங்கில், குழை. நாலுதல் - தொங்குதல். நாலுபாதச்சைவம் - ஓர் சைவம். நால் - நாலென்னேவல், நான்கு. நால்வகைச்சாந்து - சாந்து வகைநாலு அவை கலவை, பீதம், புலி,வட்டிகை. நால்வகைத்தோற்றம் - நான்கு வகைப்பிறப்பு அவை நிலம், பை, முட்டை,வியர்வை இவைகளிற் சனிப்பு. நால்வகைப்பொருள் - அறம், பொருள்,இன்பம், வீடு. நால்வர் - சம்பந்தர் முதலிய நால்வர்,நான்குபேர். நால்வாயன் - இந்திரன், விநாயகன். நால்வாய் - யானை. நாவடக்கம் - நாவெழாமற் பண்ணல், மௌனம். நாவடைத்தல் - பேசக்கூடாதிருத்தல் நாவணம் - உண்ணா. நாவரசன் - சிவத்தொண்ட ரறுபத்துமூவரிலொருவரான அப்பர்,புலவர். நாவரட்சி - நீர்த்தாகம். நாவரணை - நாப்புற்று. நாவரளுதல் - நீர் விடாத்தல். நாவலந்தீவு - சத்ததீவி னொன்று. நாவலர் - கற்றவர், புலவர், அமைச்சர். நாவலோ - உரப்பற் குறிப்பு நாவல் - இரக்கக்குறிப்பு, ஓர்மரம்,அஃது துவர்பத்தினொன்று,சத்ததீவி னொன்று. நாவறட்சி - நீர் விடாய். நாவறளுதல் - நீர் விடாய்த்தல். நாவறளை - நாப்புற்று. நாவாசித்தி - நாவேறு, வாக்குச்சித்தி. நாவாய் - இரேபதிநாள், மரக்கலம். நாவாள் - சரச்சுவதி. நாவி - ஊமத்தை, ஓர்மருந்து, கத்தூரி, மிருகம், நாபி, புழுகுப்பூனை, வசநாவி. நாவிகன் - கப்பற்காரன். நாவிகீ - இந்திரன் சபை. நாவிச்சட்டம் - கத்தூரி. நாவிதச்சி - அம்பட்டத்தி. நாவிதம் - பூரம். நாவிதர் - அம்பட்டர். நாவிதன் - அம்பட்டன், இராச்செல்லான், கார்த்திகை நாள், பூரநாள். நாவித்தண்டை - எருமுட்டைப்பீநாறி. நாவிநெய் - மயிர்ச் சாந்து. நாவிப்பிள்ளை - ஓர் மிருகம். நாவிப்புழுகு - மான்மதம். நாவியம் - கார்த்திகைப்பூ. நாவிழுதல் - பேசநாவெழாது போதல். நாவு - நா. நாவுதல் - நாக்கு வளைத்தல், நோம்புதல். நாவுரி - நாழியுரி என்பதின் குறுக்கம்,அது ஒன்றரைப்படி கொண்டது. நாவுழலை - நாக்குளறுதல், நாவூரு,விடாய். நாவுழலையாடுதல் - நாக்குழறுதல். நாவூறு, நாவேறு - நாத்தோஷம். நாவை - கலப்பையின்நா, படைவாள். நாழி - உட்டுளைப் பொருள், ஒருபடி, கொத்து, நாழிகை, பூரடடாதி நாள், நாழிகை - உத்திரட்டாதி, விநாடியறுபது கொண்டது, கடிகை,கன்னல்,விகலை. நாழிகைப்பறை - நாழிகையறிவிக்கஅடிக்கும் பறை.நாழிகைவட்டம், நாழிகைவட்டில் - காலவளவைக்காட்டு மோர்சூத்திரம், சூரிய கடிகாரம். நாழிகைவெண்பா - அரசற்கு நாழிகைதோறுஞ் சொல்லும் வெண்பா. நாழியோடு - குழலோடு. நாளகம் - இலாமிச்சு. நாளடகம் - நாடோறும். நாளம் - உட்டுளை, நாள், பூந்தண்டு,பொன்னரி தாரம், வட்டம். நாளரும்பு - புதிய அரும்பு. நாளறுதி - நாள்முற்றும், நாள்வட்டம். நாளன்று - நாளைநின்று. நாளாதிறுதி - நாளறுதி. நாளாய்ந்தோர் - வைத்தியர். நாளி - கள், நாய். நாளிகம் - தாமரை, வெள்ளைக்கொடி, நாய்வேளை. நாளிகேரபாகம் - செய்யுளினோர்சுவை, அஃது ஆழமான பொருளுள்ளது.நாளிகேரம், நாளிகேளம் - தென்னமரம். நாளினி - புளிமா. நாளுக்குநாள், நாளும் - எப்போழ்தும், வரவர. நாளுலத்தல் - இறத்தல், நாட்கழித்தல். நாளெடுத்தல் - நன்முகுர்த்தங் குறித்தல். நாளெல்லை - அத்தமனம், மரணகாலம். நாளை - மற்றைநாள். நாளைநின்று - நாளைவிட்டு மற்றை நாள். நாளோலை - சாதகம்,சீதனக்குறிப்பு. நாள் - இராப்பகல் கொண்டபொழுது, காலம், நன்முகுர்த்தம்,பெருநாள், முகுர்த்தம், அலவை,ஆனியம், எல், எல்லை, திவசம்,திசா, தினம், பகல். நாள்தோறும் - நாளுக்குநாள். நாள்வட்டம் - நாட்சுற்று. நாள்வழிப்படுமடிசில் - கட்டுச் சாதம். நாள்விடுதல் - சீவியம் பண்ணுதல். நாள்வேலை - நாட்பணிவிடை. நாறணா - நாறனா. நாறல் - நாறுதல், பதனழிதல்,பதனழிந்தது. நாறற்பாக்கு - ஓர்வகைப் பாக்கு. நாறனா - சடைச்சிச்செடி. நாறி - கற்றாழை. நாறு - நாறென்னேவல், நாற்று. நாறுகட்டி - பெருங்காயம். நாறுகரந்தை - ஓர் வகைப்பூடு. நாறுதல் - உண்டாதல், தோற்றுதல்.,மணத்தல், முளைத்தல், பதனழிதல். நாற்கணம் - நான்கினம் அவைஇடையினம், உயிர், மெல்லினம்,வல்லினம். நாற்கதி - தேவர், நரகர், மனிதர்,விலங்கு. நாற்கவி - நாலுவிதக்கவி அவை ஆசு,சித்திரம், மதுரம், வித்தாரம். நாற்கவிராசநம்பி - புளியங்குடியில்ஆசு, மதுரம், சித்திரம், வித்தா ரம்எனும் நாற்கவிகளையும் பாடலில்வல்லவராய் அகப் பொருளிலககணம், பாடின ஓர் சமணப்புலவர். நாற்காலி - ஓர்வகையாசனம், நாற்கான்மிருகம்.நாற்காற்சீவன், நாற்கான்மிருகம் - நாற்காலுள்ள மிருகம். நாற்குணம் - ஆடூஉக்குணம் நான்குஅவை அறிவு, ஓர்ப்பு, கடைப்பிடி, நிறைவு, மகடூஉக்குணம்நான்கு அவை அச்சம், நாணம்,பயிர்ப்பு, மடம். நாற்கோணம் - நாலுமூலை. நாற்சதுரம் - சதுரங்கம். நாற்சந்தி - நாற்றெருக் கூடுமிடம். நாற்சி - ஞாற்சி . நாற்பது - ஓர்பிரபந்தம், அஃதுஇடம், காலம், பொருளென்பவற்று ளொன்றனை நாற்பதுவெண்பாவாற் கூறுவது, நான்குபத்து. நாற்பயன் - நாற்பொருளினால் வரும் பேறு. நாற்பான் - நாற்பது. நாற்பொருள் - அறம், பொருள்,இன்பம், வீடெனப் படுபொருள். நாற்பொன் - ஆடகம், கிளிச்சிறை,சாதரூபம், சாம்பூநதம் எனும் நால்வகைப் பொன்.நாற்றங்கால், நாற்றங்கொல்லை - நாற்றுப் போட்டிருக்குமிடம். நாற்றத்தானி - ஊன். நாற்றமடித்தல் - நாற்றம் வீசுதல். நாற்றமெடுத்தல் - துர்க்கந்தம் வீசுதல். நாற்றம் - கள், கெந்தகம், துர்க்கந்தம்,தோன்றுதல், வசம்பு, வாசனை. நாற்றம்வைத்தல் - நாற்றமெடுத்தல். நாற்றி - நாலுமடங்கு. நாற்றிசை - கிழக்கு தெற்கு மேற்குவடக்கு எனுந் திக்கு. நாற்று - முளைப்பயிர். நாற்றுதல் - தூக்குதல்.நாற்றுப்பாவுதல், நாற்றுப்போடுதல் - தானியம் முதலிய பதிபோடுதல். நானமா - கத்தூரி மிருகம். நானம் - கத்தூரி, கத்தூரிமிருகம்,கவரிமா, குளித்தல், முழுகல்,வாசனை. நானா - பல. நானாப்பிரகாரம், நானாவிதம் - பலவிதம். நானாளைமாறன் - நாலாமுறைக்காய்ச்சல். நானிலம் - நால்வகை நிலம் அவைகுறிஞ்சி நெய்தல் மருதம் முல்லை. நானூறு - நான்குதரம் நூறு. நான் - யான். நான்கடிமடக்கு - மடக்கலங்காரத்தொன்று. நான்கனுருபு - நாலாம் வேற்றுமையுருபு அவை கு முதலியன. நான்காம்வேதம் - அதர்வணம். நான்கு - நாலு, சது. நான்மணிக்கடிகை - விளம்பி நாகனாரியற்றிய ஓர் நூல். நான்மணிமாலை - ஓர்பிரபந்தம்அஃது வெண்பாவுங் கலித் துறையும் விருத்தமும் அகவலுமாகஅந்தாதித்தொடையானாற்பதுபாடுவது. நான்மருப்பியானை - ஐராவதம். நான்மருப்பியானையூர்தி - இந்திரன். நான்மறை - நான்குவேதம் அவைஇருக்கு தைத்திரியம் சாமம்அதர்வணம், அன்றியும் உபவேதம்நாலு அவை ஆயுள்வேதம் அருத்தவேதம் தனுர்வேதம் காந்தருவவேதம் எனப்படும். நான்மறையோன் - பிரமன், முனிவன். நான்முகப்புல் - ஓர் புல். நான்முகன் - அருகன், பிரமன். நான்முகன்கிழத்தி - சரச்சுவதி. நான்முகன்றேவி - சரச்சுவதி, மனோசிலை. நான்முகன்வாழ்நாள் - பிரமகற்பம். நி நி - இன்மை உறுதி எதிர்மறை ஐயம்சமீபம் நிச்சயம் நிலைபேறுபூரணம் மிகுதி வன்மை விருப்பம்,இவைகளைக் காட்டுமோ ருபசருக்கம் ஓரெழுத்து. நிக - நிர். நிகசம் - போசனம். நிகசலாகம் - ஏகாந்த தலம் நிகசோத்தியம் - பரிசுத்தம். நிகடம் - சமீபம். நிகணம் - ஓமப் புகை. நிகண்டவாதம் - ஓர் சமயம். நிகண்டவாதி - நிகண்டவாத சமயத்தான் நிகண்டு - சொற்பயன் விளக்கு நூல்,தொகுதி, நிச்சயம், படலம்,வேதாங்கமாறினொன்று. நிகதம் - சொல், பேச்சு. நிகப்பிரபை - இருள். நிகமம் - கடைவீதி, நிச்சயம், பட்டினம், வேதம், வழி, வியாபாரம்,வியாபாரக் கூட்டம். நிகமனம் - உறுதிப்படுத்தித் தீர்ப்புச்சொல்லுதல். நிகமாகமம் - வேதாகமங்கள். நிகமாச்சுவன் - சிவன். நிகம் - பிரகாசம். நிகர - உவமைச்சொல், ஒளி. நிகரணம் - விழுங்குதல். நிகரம் - கூட்டம், கொடை, சுரம்,திரவியம், மொத்தம், விழுங்குதல். நிகரிடுதல் - ஒப்பிடுதல், நிகருஷணம் - அயல், முற்றம். நிகருமம் - நிகன்மம். நிகருவம் - அடக்கம். நிகர் - உவமை, சமானம், நிகரென்னேவல், பிரகாசம், போர். நிகர்தல் - ஒப்பாயிருத்தல். நிகர்தி - இருப்புலக்கை. நிகர்த்தல் - ஒப்பாதல், பொருதல். நிகர்ப்பக்கம் - உவமைப் பொருளிருக்குமிடம். நிகர்ப்பு - ஒப்பு, போர். நிகர்வம் - தாழ்மை, கர்வமில்லாமை. நிகர்வி - தாழ்மை யுள்ளோன். நிகர்வு - ஒப்பு. நிகலம் - தோண்மேல். நிகழ்காலம் - வர்த்தமான காலம். நிகழ்காலவினையெச்சம் - அகரவிகுதிபெற்று இடைநிலை யோடுகூடாது தானே நிகழ் காலம்காட்டி நிற்குஞ்சொல். நிகழ்ச்சி - ஒளி, சம்பவம், வர்த்தமானம். நிகழ்தல் - ஒளிசெய்தல், செல்லல்,நடத்தல், நிறைவேறல். நிகழ்த்துதல் - சொல்லுதல், நடப்பித்தல். நிகழ்வினைவிலக்கு - ஓரலங்காரமவிலக்குவது (உ-ம்) மாதர் நுழைமருங்கு நோவமணிக்குழைசேர்,காதின்மிசை நீலங்கவின் புனைவீர்- மீதுலவு - நீனிலவு வாட்கண்நிமிர்கடையே செய் யாவோநானிலஞ் செய்யுநலம். நிகழ்வு - சம்பவிப்பு. நிகளம் - சங்கிலி, யானைச்சங்கிலி,விலங்கு. நிகற்பம் - நூறுகல்பம் கொண்ட ஓர்கால அளவு. நிகன்னம் - கொலை. நிகா - குறிப்பு. நிகாசம் - ஒப்பு. நிகாதம் - சொல், வஞ்சகம். நிகாதன் - வஞ்சகன். நிகாநம் - நிந்தித்தல், நிகாயம் - இலக்கு, கூட்டம், மருதஞ்சார்ந்தவூர், வாசஸ்தலம், குக்கில். நிகாயன் - கடவுள். நிகாரணம் - காரணமற்றது, கொலை. நிகாரணன் - கொலைகாரன். நிகாரம் - அவசங்கை ஆகாயசுரூபமறிதல், இறைத்தல், உயர்த்துதல்,தப்பிதம், தூற்றுதல், பனி, விரதம், விழுங்குதல், அவமானம்,அபகரம். நிகாலம் - கழுத்து. நிகாவா - பிரமி. நிகிதம் - படை. நிகிருதி - தரித்திரம், நிந்தை, பொல்லாங்கு. நிகிலம் - எல்லாம். நிகீனன் - கீழ் மகன். நிகு - அறியுங் கருவி நிகுஞ்சம் - குகை, சிற்றில், புதர் வீடு. நிகுட்டம் - தொனி. நிகுஞ்சகம் - ஓரளவு, ஓர் மரம். நிகுஞ்சனம் - கொலை. நிகும்பம் - நேர்வாளம். நிகும்பலை - நிகும்பிலை. நிகும்பன் - கும்பகர்னன் மகன். நிகும்பிலை - இலங்கையில் இந்திரசித்துயாகம் பண்ணினவிடம். நிகுரம்பம் - சமூகம். நிகூடம் - ஆழம், மறைவு. நிகேசரம் - ஓர்மரம். நிகேசாயம் - குவித்தல்.நிகேதகம், நிகேதம் - வீடு. நிகேதனம் - தேவர்கோயில், மருதஞ்சார்ந்தவூர், வீடு. நிக்கந்தன் - அருகன். நிக்கிரகணம் - கீழ்ப்படுத்தல். நிக்கிரகஸ்தன் - அழிப்பவன். நிக்கிரகத்தானம் - தற்கத்திலெதிரியைச் சயிக்குநிலை, தோல்வித் தானம். நிக்கிரகம் - எல்லை, கட்டுதல்,குற்றப்படுத்தல், கொலை, தண்டம், நாசம், வெறுப்பு, அதட் டல்,அழித்தல். நிக்கிரகன் - கிருட்டினன், நிக்கிரகானுக்கிரகம் - இன்ப துன்பங்களூட்டல், தண்டனையு மிரக்கமும், தண்டித்தலும், அருள்புரிதலும். நிக்கிரகித்தல் - கொல்லல், தண்டித்தல், பந்தித்தல், வாதியைச்சயித்தல்.நிக்குவணம், நிக்குவாணம் - வீணைமுதலியவற்றின் தொனி. நிக்குறோத்தம் - காட்டாமணக்கு. நிசகரம் - நிச்சயம்பண்ணல். நிசங்கம் - அம்புக்கட்டு, இணக்கம். நிசஸ்தர் - நிசவான்கள். நிசத்தன் - நிசஸ்தன். நிசமம் - நியமம். நிசமனம் - கேள்வி, பார்வை. நிசமித்தல் - நியமித்தல். நிசம் - உண்மை, சொந்தம், நாணயம்,நித்தியம், மெய். நிசயம் - கூட்டம், நிச்சயம். நிசரேதம் - தள்ளுதல். நிசவான் - மெய்யன். நிசவு - நெசவு. நிசற்கம் - உருவம், சிருட்டி, நிலைபரம், மாற்றுதல், விடுதல். நிசற்கசம் - பிறவிச் சுபாவம். நிசா - இரவு. நிசாகசம் - வெள்ளாம்பல். நிசாகம் - மஞ்சள். நிசாகரன் - சந்திரன், சேவல், நிசாகேது - சந்திரன். நிசாசம் - வெள்ளாம்பல், பிரமி. நிசாசம் - இரவினடமாடுவன, கூகை,பாம்பு. நிசாசரர் - அசுரர், இராக்கதர், கள்வர். நிசாசரி - இராட்சதத்திரி, கூகை, வேசி. நிசாசன் - சந்திரன். நிசாலம் - பனி. நிசாடம் - ஆந்தை. நிசாடு - மஞ்சள். நிசாதனம் - இடம், மெய், வீடு. நிசாதன் - கீழ்மகன். நிசாதி - மாலை வெளிச்சம். நிசாந்தநாரி - இல்லாள். நிசாந்தம் - விடியற்காலம், வீடு. நிசாபதி - கற்பூரம், சந்திரன். நிசாபிசா - மரமஞ்சள். நிசாபுட்பம் - இரவலரும்பூ, உறைந்தபனி, செவ்வாம்பல், பனி, வெள்ளாம்பல். நிசாமணி - சந்திரன், மின்மினி. நிசாமனம் - கேள்வி, நிழல், பார்வை. நிசாமானம் - இராத்திரி காலவளவு. நிசாரணம் - இராப்போர், கொலை. நிசாரணன் - கொலை செய்வோன். நிசாரம் - சாரமற்றது, வருத்தம்,மஞ்சள். நிசாரியம் - போடல் நிசார்த்தம் - பாதிராத்திரி, மெய். நிசார்த்துனன் - சந்திரன். நிசாளம் - ஒரு கட்பறை. நிசி - இரா,இருள், பொன், மஞ்சள், நிசிசரர் - அசுரர், இராக்கதர். நிசிதம் - இகழ்ச்சி, இரும்பு, கூர்மை. நிசிதர் - அசுரர், ஈனர். நிசித்தம் - விலக்கு. நிசிமணி - சந்திரன். நிசீதம் - அத்தசாமம், அற்பம், இரவு,கூர்மை.நிசீதினி, நிசீத்தியை - இரவு.நிசும்பம், நிசும்பனம் - கொலை. நிசும்பர் - கொலைஞர். நிசுலகம் - மார்க்கவசம். நிசுலம் - அலரி, கவசம், துப்பட்டி. நிசுவாசம் - சிவாகமமிருபத்தெட்டினொன்று, வெளிக்கு விடும்சுவாசம். நிசுனம் - நீர்க்கடம்பு. நிசூதனம் - அழித்தல். நிஷேதம், நிசேதம் - நிடேதம். நிசோலகம் - மார்ச்சட்டை. நிசோலநம் - தரிசநம். நிஸ்காரம் - நிந்தை. நிச்சணதாரி - நீர்க்கடகம். நிச்சத்தியதை - பொய். நிச்சத்துவம் - தத்துவமின்மை. நிச்சம் - நித்தம். நிச்சயதாம்பூலம் - பெண்ணை விவாகம் பண்ணிக் கொடுப்பதற் குடம்படிக்கையாக மணவாள னுக்குக்கொடுக்கும் பாக்கு வெற்றிலை,மணத்துக்கு முன் மணத்தைஉறுதிப்படுத்தி வெற்றிலை கைம்மாறல் நிச்சயப்படுத்தல் - உறுதிப்படுத்தல்,நிசப்படுத்தல். நிச்சயம் - உறுதி, தீர்ப்பு, நியமம்,மெய், துணிவு. நிச்சயார்த்தம் - மெய்ப்பொருள். நிச்சயித்தல் - உறுதிப்படுத்தல், தீர்மானித்தல், நியமித்தல், துணிதல். நிச்சயிப்பு - தீர்மானம், நிச்சயம். நிச்சலத்தியானம் - அசைவற்றதியானம். நிச்சலம் - அசைவின்மை, உறுதி,நிலை நித்தம். நிச்சலும் - எப்பொழுதும். நிச்சலன் - அசைவற்றவன், கடவுள். நிச்சள் - தாளி. நிச்சாணம் - ரசம். நிச்சாரகம் - காற்று. நிஸ்ஸாரம் - நிசாரம், நிச்சாலங்கம் - மலை. நிச்சிதம் - நிசம். நிச்சிதார்த்தம் - மணம் நடக்கவேண்டுமெனப் பிள்ளை பெண்வீட்டார் உறுதி பண்ணிக் கொள்ளுதல். நிச்சித்தம் - மனோலயம், விசாரமின்மை. நிச்சித்தல் - நிச்சயித்தல். நிச்சிந்தன் - அருகன், எண்ணமற்றவன், கடவுள். நிச்சிந்தை - எண்ணமற் றிருத்தல். நிச்சியம் - உள்ளி. நிச்சிரேணி - ஏணி. நிசசிரேயகம் - முற்றத் துறத்தல். நிச்சுவசனம் - பெருமூச்சு விடுதல்,மூர்க்கங் கொள்ளுதல். நிச்சுவாசம் - சுவாச வொடுக்கம்,சுவாசத்தை வெளிவிடல். நிஸ்தாரம் - ஈடேறல். நிஸ்தாரத்தினாகரம் - ஓர் கிறிஸ்தவநூல். நிஷக்கல்லு - சீதாங்க பாஷாணம். நிஷதம் - அட்டமலையி னொன்று,தேயமைம்பத்தாறி னொன்று. நிஷாதம் - சத்தசுரத்தில் கடைசுரம். நிஷித்தல் - இகழ்ச்சி, தவறு, விலக்கு. நிடதம் - நிஷதம்.நிடதர்கோன், நிடதன் - நளன். நிடலம் - நெற்றி. நிடலாட்சன் - சிவன். நிடாலம் - நெற்றி. நிடுதம் - உமிழ்தல். நிடூதனம் - கொலை. நிடூதனன் - கொலைக்காரன்.நிஷேகம், நிடேகம் - மணவாளனும்மணவாளியும் முதன்முதற் கூடுதல்.நிஷேதம், நிடேதம் - ஒழிவு, தடை,வழு, விலக்கு.நிஷேதித்தல், நிடேதித்தல் - மணவாளனும் மணவாளியும் முதன்முதற் கூடுதல், விலக்கல். நிட்கபடபத்தி - மெய்ப்பத்தி.நிஷ்கபடம், நிட்கபடம் - சத்தியம்,மனச் சுத்தம்.நிஷகம், நிட்கம் - இன்மைப் பொருடருமோருப சருக்கம், ஓர்பறை, பலம்,பொன், மார்பணி, வராக னிடை. நிட்கம்பம் - அசைவின்மை. நிட்கருடபத்திரிகை - உறுதி நடத்தைக்காகிதம்.நிஷ்கருஷம், நிட்கருடம், நிஷ்கருஷை, நிட்கருடை - நிச்சயம். நிட்கலை - பிரசூதித்துடக்ககன்றவள்.நிஷ்களம், நிட்களம் - உருவின்மை,கலப்பின்மை.நிஷ்களங்கம், நிட்களங்கம் - சுத்தம்.நிஷ்களர், நிட்களர் - கடவுள், சுத்தமுடையோர். நிட்காபட்டியம் - கபடமின்மை.நிஷ்காமியம், நிட்காமியம் - விருப்பின்மை.நிஷ்காரணம், நிட்காரணம் - காரணமின்மை. நிட்கிராமம் - கூத்தினோர் விகற்பம். நிட்கிரியன் - இகபரலோக சடங்கற்றவன். நிட்குடி - ஏலம். நிட்சணம் - முத்தங் கொடுத்தல். நிட்சிப்பியம் - போடல். நிட்சேபம் - அடைவு, துடைத்தல்,புதையல், விடுதல், நாலாமிடம்,வெள்ளுள்ளி.நிட்டாபரன், நிட்டாவரன் - நியமநிட்டை தவறாதோன். நிட்டானுபூதி - நிட்டையிலனுகூலப்படுந்திவ்வியானுபவம். நிட்டீவனம் - வாந்தி.நிஷ்டூரம், நிட்டூரம் - இடையூறு,கொடுமை. நிட்டூரி - கொடியவள்.நிட்டேகம், நிட்டேவனம் - நிடுதம்.நிஷ்டை, நிட்டை - அழிவு, இக்கட்டு,உறுதி, சரித்திர முடிவு, சாதகம்,நம்பிக்கை, நன்னடை, நிலைபரம்,முடிவு, வாழ்நாள், மனம், வாக்குக்காயங்கள் அசைவின்றி யிருத்தல். நிட்பத்தி - பிறப்பு, முடிவு. நிட்பரிக்கிரகன் - முற்றத் துறந்தோன்.நிஷ்பலம், நிட்பலம் - பலமின்மை,பிரயோசனமின்மை. நிஷ்பவம் - அவரை. நிட்பவம் - மொச்சைப்பயறு. நிட்பன்னம் - பக்குவமானது. நிட்பாவம் - துரத்தல், விசைக்காற்று,வைக்கோல். நிட்பானம் - குடித்தல், நிட்பிரகிருதி - பிரகிருதியற்றது. நிட்பிரபஞ்சன் - சாந்தமுள்ளவன். நிட்பிரபை - ஒளியின்மை. நிணச்செருக்கு - மூர்க்கம். நிணத்தல் - கொழுத்தல், முடைதல்,பிணித்தல். நிணப்பு - கொழுப்பு, நெய்ப்பு. நிணம் - கொழுப்பு. நிணறு - உருக்கம். நிண்டுதல் - நிமிண்டுதல். நிண்ணயபாதம் - தீர்ப்பு. நிண்ணயம் - உறுதி, தருக்கமுடிவு,தீர்ப்பு, நிச்சயம், நியமம், முறை. நிண்ணயம்பண்ணுதல் - சத்தியம்பண்ணல், நிச்சயப்படுத்தல், நியமம்பண்ணல். நிண்ணயி - நிருணயி. நிண்ணரம் - சூரியன்பரியி னொன்று. நிண்ணித்தல் - நிசப்படுத்தல். நிதகம் - நீர்முள்ளி. நிதத்துரு - மனிதன். நிதம் - நஞ்சு, நித்தியம். நிதம்பசூலை - ஓர்சூலை. நிதம்பம் - அல்குல், இடைக்குந்தொடை மூலத்துக்கு நடு, கரை,கற்பரிபாஷாணம். தோள், மலைப்பக்கம். நிதரிசனம் - காட்சியணி அஃதுயாதொன்றி னிகழ்ச்சியா னன்மையாவது தீமையாவது வருவதாய்த்தெரிவித்தல், காணப்படாமை,திருட்டாந்தம், உதாரணம். நிதலம் - கீழேழுலகி னொன்று. நிதரிசனம் - உதாரணம், கட்டளை,வகை. நிதருக்கம் - அருத்தமில்லா வசனங் களைப் பேசல். நிதனம் - அழிவு, தரித்திரம், தோற்றப்படாமை, பிறந்தநாளுக் கேழாநாள், மரணம். நிதாககரன் - சூரியன். நிதாகம் - முதிர்வேனிற் காலம்,வெப்பம், வெயர்வு. நிதாந்தம் - மேன்மை, விடியற் காலம். நிதாந்தன் - மேன்மையுள்ளவன். நிதார்த்தம் - உண்மை, சமஞ்செய்கை, நிதார்த்தம், நீதி. நிதானம் - ஆதிகாரணம், கடவுண்மணிக்கும் நவமணிக்கும்பொது,சமம், சரி, சுத்தம், சுமுத்திரை,நிச்சயம், நேர்மை, பசுக்கட்டுங்கயிறு, படை, பிரமாணம், பொன்,மதிப்பு, முடிவு, மெய், வைத்தியசாத்திரத்தொன்று, பொற்காசு,தாமதிப்பு. நிதானவான் - நேராளி. நிதானன் - கடவுள். நிதானி - நேராளி. நிதானித்தல் - நிச்சயித்தல், மதித்தல்,தாமதித்தல், நிதானிப்பு - அருத்தாபத்தி, மதிப்பு. நிதி - ஆபரணத்திற் றொங்கணி,கடவுண் மணிக்கு நவமணிக்கும்பொது, சமுத்திரம், திரவியம்,நிறைவு, பொக்கிஷம், பொன்,ஒன்பதாமிடம்.நிதிக்கிழவன், நிதிக்கோன் - குபேரன். நிதிசாத்திரம் - புதையலெடுக்கும்சாத்திரம். நிதித்தியாசனம் - சிந்திப்பு, தெளிதல். நிதிநாதன் - குபேரன். நிதிந்திகம் - கண்டங்கத்திரி. நிதிபதி - குபேரன். நிதிப்பொதி - கிழிக்கட்டு. நிதியம் - கடவுண்மணி, திரவியம்,பஞ்சலோகப் பொது, மணிப்பொது, நிதி. நிதியின்கிழவன் - தலைச்சங்கப்புலவருளொருவன். நிதியோன், நிதீசன் - குபேரன். நிதுவனம் - கலத்தல், சந்தோஷம்,விளையாட்டு. நிதேசம் - கட்டளை, சமீபம்,வார்த்தை. நிதேசிநி - திக்கு. நித்தம் - அனவரதம், நித்தியாக்கினி,நீர்முள்ளி, எப்பொழுதும். நித்தரங்கசமுத்திரம் - திரையில்லாக்கடல்.நிஸ்தரங்கம், நித்தரங்கம் - அலையில்லாமை. நித்தல் - நித்தம். நித்தன் - அருகன், ஆத்துமா, கடவுள்,சிவன். நித்திகம் - ஓர்பூடு. நித்தியகதி - காற்று. நித்தியகருமம் - நியமநிட்டை, நித்தியகருமம். நித்தியகலியாணம் - நித்திய சந்தோஷம். நித்தியகலியாணி - பார்வதி. நித்தியகாலம் - அனவரத காலம். நித்தியசுந்தரி - பிரமன் பட்டணம். நித்தியசூதகி - அபரக்கிரியை செய்வோன். நித்தியசேவகம் - நித்திய சேவனை. நித்தியதத்துவம் - அழிவின்மை. நித்தியதாநம் - நாடோறும்பண்ணும் தாநம். நித்தியத்துவம் - நித்தியதத்துவம். நித்தியநைமித்திகம் - பூசனையும்விழாவும். நித்தியபிரளயம் - இடைவிடாதமரணம். நித்தியபூசை - தினபூசை. நித்தியப்படி - எப்பொழுது நடக்குங்கட்டளைப்படி, நாடோறும்.நித்தியமுக்தன், நித்தியமுத்தன் - கடவுள், ஞானி.நித்தியமுத்தி, நித்தியமோட்சம் - மீளாதகதி. நித்தியம் - அழியாமை, எப்போழ்தும், சமுத்திரம், நாடோறும்,மோட்சம். நித்தியயோகம் - தினஅதிட்டம்,தினயோகம் அவை அதிகண்டம்,அரிடணம், ஆயுஷ்மான், ஐந்திரம்,கண்டம், சாத்தியம், சித்தம், சித்தி,சிவம், சுகர்மம்,சுபம், சுப்பிரம்,சூலம், சோபனம், சௌபாக்கியம்பிரீதி, வச்சிரம், வரியான், விட்கம்பம், விதிபாதம், வியாகாதம்,விருத்தி, வைதிருதி. நித்தியயௌவனம் - என்று மிளமை. நித்தியயௌவனை - துரோபதி. நித்தியவிதி - ஓமக்கிடங்கு, நித்தியகருமம், பலிசெலுத்துமிடம். நித்தியவினோதம் - அருகன்முக்குடையினொன்று. நித்தியன் - கடவுள், நாசமில்லான். நித்தியாநித்தியம் - அழியாமையும்அழிவும், அழிவில்லதும், அழிவுள்ளதும். நித்தியாநித்தியவத்துவிவேகம் - பிரமமே நித்தியம் மற்றவைய நித்தியமெனவறிதல். நித்தியாபரோட்சம் - நித்தியபிரமம். நித்தியானத்தியாயம் - அட்டமிஅமாவாசி சதுர்த்தசி பௌர்ணமியென்னுந் தினங்கள். நித்தியானந்தம் - மோட்சம். நித்தியானந்தன் - கடவுள். நித்தியானம் - பார்த்தல். நித்திரம் - கண்டங்கத்திரி. நித்திராசஞ்சன்னம் - குறட்டை,சேடம். நித்திராதேவி - நித்திரைக்குரியதேவி, நித்திரை. நித்திராணன் - நித்திரைகொண்டவன். நித்திராலு - நித்திரையாயிருப்பவன். நித்திராவிருட்சம் - இருள். நித்திரித்தல் - நித்திரை கொள்ளல். நித்திரை - கண்படை அஃது மாயையாக்கை பதினெண் குற்றத்தொன்று,உறக்கம். நித்திரைச்சோப்பம் - நித்திரைத்தூக்கம். நித்திலம் - முத்து. நித்திலவடம் - முத்துமாலை. நித்தில் - நொச்சி. நித்திறம் - கண்டங்கத்திரி. நித்துவானம் - தொனி.நிநதம், நிநாதம் - ஒலி. நிந்தகன் - பழி சொல்வோன். நிந்தம் - சொந்தம். நிந்தனம் - நிந்தனை. நிந்தனை - நிந்தை. நிந்தாட்சணை - நிந்தனை. நிந்தாத்துதி - நிந்தித்தல்போல்துதித்தல். நிந்திதம் - இகழ்ச்சி, தடை, பரிகாசம். நிந்திதன் - பழிக்கப்பட்டவன். நிந்தித்தல் - இகழ்தல். நிந்திப்பு - இகழ்ச்சி, பரிகாசம். நிந்து - சாப்பிள்ளை பெற்றவள். நிந்தை - நிந்திப்பு, பழி, இகழ்ச்சி. நிந்தையுவமை - உவமையை யிகழ்ந்துவமிப்பது (உ-ம்) மறுவுடைத்திங்களை யொப்பெனினும் முகஞ்சிறப்புடைத்து. நிபச்சொல் - கோட்சொல், புறங்கூற்று. நிபடம் - படித்தல். நிபடிதம் - வாசித்தல். நிபதனம் - இறக்குதல், விழுதல். நிபத்தி - உண்மை, நிச்சயம். நிபத்தியை - போர்க்களம். நிபந்தம் - கடமை, சலமறிப்பு, யாப்பு,வியார்த்தி, படித்தரம். நிபந்தனகிரந்தம் - பலநூல்களிலிருந்தெடுத்துச் சேர்த்துப் பண்ணியிருக்கிற சாத்திரம். நிபந்தனம் - கட்டுதல், கட்டுப்படுதல், காரணம், பல நூல்களிலிருந்தெடுத்துத் திரட்டின புத்தகம்,வீணையின் வலிக்கட்டு. நிபந்தனை - உறுதி, ஏற்பாடு, கடமை,கட்டு, குண்டு, தண்டனை. நிபம் - உவமை, கடம்பு, கபடம்,காரணம், கோள், நீர்ச்சாடி, புறங் கூறல். நிபாகம் - சமைத்தல், நிபாடம் - படித்தல், நிபாடை - படித்தல். நிபாதம் - இறங்குதல், மரணம், வழு,விடுதல், விழுதல். நிபாதனம் - கொல்லல், தகர்த்தல், நிபாபம் - நீர்ச்சால். நிபாலனம் - பார்வை, வழு, விழுத்தல். நிபானம் - கிணறு, நீர்த்தொட்டி,பாற்சாடி.நிபிடம், நிபிடாயம், நிபிடீகரம் - நெருக்கம். நிபிரீசம் - நெருக்கம். நிபுணத்துவம் - விரகு, விவேகம்,சாமர்த்தியம். நிபுணர் - கலைவல்லோர், விரகுமிக்கோர். நிபுணன் - கல்வியிசிற் சிறந்தோன்,புதன், மிக வல்லோன். நிபூதம் - அதீதம். நிப்பரம் - தீவிரம், பாரமின்மை. நிமந்தம் - நிபந்தம். நிமம் - பிடர். நிமயம் - ஒன்றற்கொன்றை மாற்றல். நிமலம் - அழுக்கின்மை. நிமலன் - கடவுள், சுத்தன்.நிமி, நிமிச்சக்கிரவர்த்தி - சூரியகுலத்தரசரிலொருவன்.நிமிஷம், நிமிடம் - கால நுட்பம் அஃதுகாட்டையெட்டுக் கொண்டது. நிமிடீகரம் - கடினம், நெருக்கம். நிமிட்டம் - கிள்ளல். நிமிண்டி - ஓரெறும்பு, தோன்றாமற்கவர்வோன். நிமிண்டுதல் - கிள்ளல், சாதுரியமாகக் களவெடுத்தல், நன்னுதல். நிமித்தகம் - முத்தம். நிமித்தகாரணம் - கத்துருத்துவவேதுவாயிருப்பது. நிமித்தகாரர் - வருங்காரியஞ் சொல்வோர். நிமித்தகாரன் - நிமித்திகன். நிமித்தசூடாமணி - ஓர் சகுன நூல். நிமித்ததருமம் - நிவிர்த்திக் கிரியை. நிமித்ததானம் - தென்புலத்தார்க்குச்செய்யுஞ் சடங்கி னொன்று. நிமித்தத்துவம் - ஏது. நிமித்தம் - அடையாளம், காரணம்,பல்லி முதலியவற்றின் குறி,பொருட்டு, இலக்கு, சகுனம். நிமித்தர் - நிமித்தக்காரர்.நிமித்திகப்புலவன், நிமித்திகன் - அரசர்க்குறுதிச் சுற்றத் தொருவன்,புரோகிதன், வள்ளுவன், சகுனஞ்சொல்லுபவன். நிமித்தியம் - நிமித்தம். நிமிரல் - நிமிர்தல், சோறு. நிமிர்ச்சி - இறுமாப்பு, உறுதி, கிரகநடையினொன்று, திடன், நிமிர்வு,மேட்டிமை நிமிர்தல் - உயர்தல், ஓடல், சோறு,நெருங்கல், மேட்டிமை கொள்ளல், வளர்தல், வளைவுமாறல்,பாய்தல், மிகைத்தல்.நிமிர்த்தல், நிமிர்த்துதல் - உயர்த்துதல்,சீர்படுத்தல், வளைவை மாற்றல். நிமிர்ந்தகூறு - அஞ்சாதகுணம்,நேர்ந்த படி செய்யுங்குணம். நிமிர்ந்தநடை - மேட்டிமையானநடை. நிமிர்ப்பு - நிமிர்ச்சி. நிமிர்வு - நிமிர்தல். நிமிலனம் - சிமிட்டு, மரணம். நிமிளை - அம்பரை, கூட்டுக்கல். நிமீலிகை - சிமிட்டு, மாயம். நிமுட்டல் - கிள்ளல். நிமேஷகம் - மின்மினி. நிமேயம் - நிமயம். நிமை - இமை. நிம்பசம் - வேம்பு. நிம்பசேதம் - முடக்கற்றான். நிம்பத்தாரோன் - பாண்டியன். நிம்பத்தோல் - வேப்பம்பட்டை. நிம்பம் - வேம்பு, எலுமிச்சை. நிம்பிலி - பொருமை தோன்றுங் குறி. நிம்பிரித்தல் - கோபித்தல். நிம்பை - இலக்குமி. நிம்மச்சாறு - எலுமிச்சம் பழச்சாறு. நிம்மந்தம் - ஐக்க வீனம். நிம்மாந்தரம் - கடினம், மிகுதி. நியக்கரணம் - நிந்தைப்படுத்தல். நியக்கி - மான். நியக்குரோதம் - அகலம், ஆலமரம்,ஒரு பாகம், வன்னிமரம். நியதம் - அடக்கம், உறுதி, நிசம்,நிதம், முகவுரை, எப்போதும்.செய்கடன். நியதி - ஊழ், செய்கடன், தத்துவம்முப்பத்தாறி னொன்று, நியமநிட்டை, நியமிப்பு, முறைமை,வீதி. நியதித்தல் - நியாசம் பண்ணல். நியதேந்திரியன் - இந்திரியத்தையடக்குபவன். நியத்துதல் - விடுதல். நியத்துவம் - பூசித்தல், வைத்தல். நியமச்சிலேடை - சிலேடித்தவற்றைவரையறைப்படுத்தி நிச்சயிக்குமுருவகம். நியமச்சூத்திரம் - முன்னொன்றான்முடித்துப் பின்னதை விலக்கலும்விதித்தலும். நியமஸ்தர் - நியமக்காரர், நியமித்தஉத்தியோகஸ்தர். நியமநம் - வேம்பு. நியமநிட்டை - சந்தியாவந்தனம். நியமம் - அட்டயோகத்தொன்றுஅவை தத்துவநூலோர்தல், தவம்,தூய்மை, தெய்வம் வழி படல்,மனமுவந் திருத்தல், இடம்,இணக்கம், கடைவழக்கம், கடைவீதி, தெரு, தேவர் கோயில்,நிச்சயம், நிருமிப்பு, நெடுந்தெருநேர்த்தி, மருதஞ் சார்ந்த வூர்,முறைமை, நகரம், நீதி. நியமவிலக்குச்சிலேடை - சிலேடித்தபொருளை நியமஞ் செய்து அந்நியமத்தை விலக்குவது. நியமவுவமை - இதற்கிதுவே யொப்பெனவேகாரம் புணர்த்துரைப்பது (உ-ம்) வேயேகர மொப்பது. நியமனம் - கட்டளை, முறை. நியமிதம் - நிச்சயம். நியமித்தல் - சங்கற்பித்தல், நிரூபித்தல்,நிலைப்படுத்தல், பிறப்பித்தல், நியமிப்பு - அமைப்பு, நியமித்தல். நியர்ப்புதம் - பதினாயிரங்கோடி. நியாக்கியம் - பொரித்தரிசி. நியாசம் - கிரியை, யோகஞ் செய்தல்,விடுதல், வேம்பு, வைப்பு, வைத்தல்,சமர்ப்பித்தல். நியாதம் - தின்றல், நியாசம், வேம்பு. நியாதனம் - விழுத்தல். நியாமகன் - சாரதி, படகோட்டி,கட்டளையிடுவோன். நியாமம் - தவ முதலிய சாதகம். நியாமன் - சிவன். நியாயகீனம் - நீதித் தப்பு. நியாயக்காரன் - நீதிமான். நியாயக்கேடு - நியாயகீனம். நியாயசபை - நியாயத் தலம். நியாயசாத்திரம் - நீதி சாத்திரம். நியாயசூடாமணி - தருக்க நூலினொன்று. நியாயதுரந்தரன் - நியாய சாத்திரி,நியாயம் பேசுவோன். நியாயத்தப்பு - நியாயத் தவறு. நியாயத்தலம் - நீதித் தலம். நியாயத்தவறு - நியாயகீனம், நியாயமின்மை. நியாயநிஷ்டூரம் - அநியாயம். நியாயநூல் - நீதி சாத்திரம். நியாயநெறியாளன் - நீதி முறையுள்ளவன். நியாயபரிசோதகன் - நியாயத்திலேவல்லவன். நியாயபோதினி - தற்க சாத்திரங்களினொன்று. நியாயப்பிரமாணம் - நீதிச் சட்டம்.நியாயப்பிரமாணன், நியாயப்பிரமாணி - நியாய நெறியாளன். நியாயப்பிழை - நியாயத் தவறு. நியாயமலைவு - தருக்கசாத்திர வழுவினொன்று அது தீர்ப்பு விளங்காமல் மயங்கப் பேசுதல். நியாயம் - இடம், கட்டுப்பாடு, சரி,சன்மார்க்கம், தருக்க சாத்திரம்வழக்கு, யுக்தி, தகுதி. நியாயவாதி - நியாய துரந்தரன். நியாயவான் - நியாய துரந்தரன், நீதித்தலைவன், நீதியுள்ளவன். நியாயவிதாயகன் - நியாயம் விதிப்போன். நியாயாசனம் - நியாய சிங்காசனம், நியாயாசாரன் - சற்புருடன். நியாயாதிபதி - நீதி யதிபதி, நீதிபதி. நியுதம் - இலட்சம். நியுத்தம் - முட்டி யுத்தம். நியுத்தன் - ஒன்றிற் கேற்பட்டவன்,மனங் கவிந்தவன். நியுப்பிசம் - தருப்பையினாற் செய்தசுருவை, வளைவு, வியாதி. நியோகப்பிரயோசனம் - நியமவேது. நியோகம் - கட்டளை, தத்துவம்,தொழில், நிச்சயம், நியமம், முயற்சி. நியோகர் - உத்தியோகஸ்தர். நியோகித்தல் - ஏவுதல். நியோக்கியம் - தகுதி. நியோசனம் - இசைவு, கட்டளை. நிரகுள்ளி - நொச்சி. நிரங்குசம் - கீழ்ப்படியாமை. நிரங்குசன் - கட்டுப்பாடற்றவன். நிரசம் - சாரமின்மை, சுவையின்மை. நிரசவஸ்து - சுவைப்பொருளல்லாதன. நிரசனம் - அழித்தல், எதிரிடை,தள்ளுதல், பட்டினி, வாந்தித்தல்.நிரசாதிபதி நிரசாதிபன் - நிரசவஸ்துக் கதிபன். நிரஞ்சனம் - இருளின்மை, நிறைவு,அழுக்கின்மை. நிரஞ்சனன் - அருகன், கடவுள், வியாபி. நிரஞ்சனி - பார்வதி. நிரஞ்சனை - பௌரணை. நிரட்சதேசம் - இராப்பகனாழிகைசரியாயிருக்குந் தேசம், உட்டணதேசம். நிரட்சம் - பூகோள சமரேகை. நிட்சரம் - அட்சரமின்மை. நிரணம் - மனுக்கூட்டம். நிரதி - சம்பந்தம். நிரதிகாரன் - பக்குவ மற்றவன். நிரதிசயானந்தம் - தனக்கு மேற்பட்ட தோரானந்த மில்லாதது. நிரத்தகம் - பயனின்மை. நிரத்தல் - கலத்தல், நிறைதல். நிரத்திமாலி - சிவன். நிரத்தியயம் - குற்றமின்மை. நிரந்தம் - இடங்கழிமை, நெருக்கிடை குரங்கு. நிரந்தரம் - இடமின்மை, எப்பொழுதும் நெருக்கம், மந்தி, மறைவு,வெளி, இடைவெளியின்மை. நிரந்தரன் - கடவுள். நிரந்தராப்பியாசம் - இடைவிடாப்பழக்கம். நிரந்தரி - பார்வதி. நிரந்தரித்தல் - நிறைதல், பரம்பல், நிரந்திரியன் - சருவக்கியானி. நிரபத்திரவம் - வெட்கமின்மை. நிரபம் - நீரின்மை. நிரபராதம் - குற்றமற்றிருத்தல். நிரபராதி - குற்றமற்றவன். நிரபாயம் - அழிவின்மை. நிரபிமானம் - அடக்கம், அபிமானமின்மை.நிரபேட்சம், நிரபேட்சை - விருப்பின்மை. நிரப்பம் - பூரணம். நிரப்பு - குறைபாடு, தரித்திரம், நிரப்பென்னேவல், நிறை குடத்தைச்சூழப்போடு நெல், நிறைத்தல்,நிறை, நாழி, நிறைவு, மிடிமை. நிரப்புதல் - திருத்தியாக்கல், நிறைத்தல்,பரப்புதல், மூடுதல். நிரப்போர் - இரப்போர், வறியோர். நிரம்பரம் - வெளி. நிரம்பரன் - அருகன், கடவுள், சிவன்,வத்திரமில்லாதவன். நிரம்பல் - நிறைதல். நிரம்பழகியர் - சேது புராணம் செய்தஓர் நூலாசிரியர். நிரம்பாச்சொல் - மழலைச் சொல்.நிரம்பாமென்சொல், நிரம்பாமொழி - மழலை. நிரம்பியபுட்பம் - வாழை. நிரம்புதல் - இருதுவாதல், நிறைதல்,தொலைதல், வரிசையாதல். நிரயம் - நிரையம், நரகம். நிரர்க்களம் - தடையற்றது. நிரர்த்தகம் - வீணானது. நிரல் - ஒழுங்கு. நிரவகாலிகை - வெளி. நிரவம் - தொனியின்மை. நிரவயவன் - கடவுள். நிரவலடித்தல் - உழுத நிலத்தை நீர் வாரடித்தல். நிரவல் - உழுத நிலத்தை நீர்வாரடித்தல், நிரவுதல். நிரவவியம் - நித்தியம். நிரவனிலம் - நீர்வாரடித்த நிலம். நிரவுதல் - சரிக்கட்டுதல், நிரப்புதல்,நிரம்புதல். நிரளியசாரை - கானற் கல். நிரனிறை - ஒழுங்காக நிறுத்தல்,நிரனிறையணிப் பொருள், அவைவரிசையாகச் சொல்லப் பட்டபொருள்கட்குச் சம்பந்தமுள்ளவைகளையும் முறையே சொல்லுதல். நிரனிறைவழு - செய்யுள் வழுவினொன்று, அது நிரன்முறை பிறழவைப்பது. நிரன்னுவயன் - இல்லொழுக்கந்துறந்தோன். நிரா - நரா. நிராகம் - உருவின்மை. நிராகரணம் - மறுத்தல், தூரப்போக்குதல். நிராகரன் - அரூபி, கடவுள். நிராகரித்தல் - எறிதல், தடை, தவறல்,தள்ளுதல், மறுத்தல். நிராகரிப்பு - மறுப்பு. நிராகாரம் - அரூபம், ஆகாயம்,உபவாசம், நிந்தை, நிராகரிப்பு,மோக்கம். நிராகாரன் - கடவுள், சிவன், சூக்குமசரீரன், திருமால். நிராகிருதம் - உரூப மற்றது, தள்ளுண்டது. நிராகிருதி - தவவொழுக்கந் தவறினோன், தள்ளுதல், வடிவின்மை,வேத முற்றக் கல்லாத பார்ப்பான். நிராகுலம் - அமைதி, சந்தோஷம். நிராங்குதல் - தேய்தல். நிராசம் - எதிரிடை, நம்பிக்கையின்மை, விடுதல். நிராசனம் - ஆசனமின்மை, கொல்லுதல், தள்ளுதல், துப்புதல். நிராசாரம் - அநாசாரம், அயோக்கியம், துர்க்குணம். நிராசாரன் - ஆசாரகீனன். நிராசை - விருப்பின்மை. நிராஞ்சனம் - மஞ்சணீ ரிறைத்தல். நிராதபம் - வெயிலின்றி யிருக்கை. நிராதமை - இரவு.நிராதரம், நிராதாரம் - ஆசையின்மை,ஆதரவின்மை, ஆதாரமற்றது. நிராதாரன் - ஆதரமற்றவன், கடவுள். நிராதேசம் - இறுத்தல், தானமற்றது,நட்டம். நிராமயம் - நோயின்மை, பன்றி. நிராமயன் - கடவுள், நோயில்லான். நிராமாலு - விளாமரம். நிராயம் - வரவின்மை. நிராயுதன் - அருகன், ஆயுதமில்லாவன். நிராலம்பம் - ஆதாரம் வேண்டாதது. நிராலம்பன் - கடவுள். நிரியாணசக்கிரம் - மரண சக்கிரம். நிரியாணதிசை - மரண திசை. நிரியாணம் - சாவு, பிறவி நீங்கல்,யானைக்கடைக்கண், மோட்சம். நிரீச்சுவரசாங்கி - கடவுளில்லையெனுஞ் சமயி.நிரீச்சுவரசாங்கியம், நிரீச்சுவரவாதம் - சூனியவாதம். நிரீட்சணசுத்தி - கண்ணூறு கழிப்பு. நிரீட்சணம் - பார்வை, பார்வையின்மை, மதிப்பு. நிரீட்சமாணம் - நம்பிக்கை, பார்த்தல். நிரீட்சிதம் - காணப்பட்டது. நிருகேசரி - நரசிங்கம். நிருசத்தன் - இராட்சசன். நிருசிங்கம் - நரசிங்கம். நிருசிம்மம் - நரசிங்கம். நிருணயம் - ஆராய்வு, தீர்ப்பு, நிச்சயம்,நியமிப்பு. நிருணாமன் - அருகன், கடவுள். நிருணித்தல் - நிண்ணயம் பண்ணுதல். நிருதர் - இராக்கதர். நிருதாட்சணியம் - கண்ணோட்டமின்மை. நிருதி - இராக்கத்தி, தென்மேற்றிசைப்பாலன், முதலெழுவள்ளலிலொருவன். நிருதிதிசை - தென்மேற்றிசை. நிருதூளி - பராகம். நிருத்தமண்டபம் - நடனசாலை. நிருத்தமாது - நாடகக் கணிகை. நிருத்தம் - கூத்து, அஃது கலைஞானமறுபத்து நான்கினொன்று, பதம்,பிரித்தல், வேத வியார்த்தி,வேதாகம மாறினொன்று, பதம்பிரித்துப் பொருள் கூறும் நூல். நிருத்தன் - கட்டுப்பாடற்றவன்,கூத்தன், சிவன். நிருதாட்சிணியம் - அபட்ச நோக்கு. நிருத்தாதனம் - ஒரு கால் தூக்கிநிற்பது. நிருத்தியலங்காரம் - பிரிநிலை நவிற்சியணி. நிருநரன் - நரசிங்கம். நிருநாசம் - அழியாமை. நிருநாசன் - அழிவில்லோன், கடவுள். நிருநாமன் - அருகன், கடவுள்,நாமமிலி. நிருபதி - அரசன், குபேரன். நிருபத்திரவம் - உபத்திர மின்மை. நிருபம் - கட்டளை, காகிதம், தீர்வை,நியமம். நிருபமம் - உவமையின்மை. நிருபமன் - ஒப்பில்லாதவன். நிருபவல்லவை - இராசாத்தி. நிருபன் - அரசன். நிருபாதானம் - துணைக்காரண மின்மை. நிருபாதி - தடையின்மை. நிருபாதிகம் - தடையற்றது. நிருபாவர்த்தம் - ஓரிரத்தினம். நிருபித்தல் - ஏற்படுத்தல், பிறப்பித்தல், நியமித்தல். நிருபூசல் - மும்மரிப்பு. நிருமதம் - மதமில்லா யானை. நிருமலம் - மாசின்மை, மலமின்மை. நிருமலன் - அருகன், கடவுள், சிவன்,மலத்துடக் கற்றவன், விஷ்ணு. நிருமலோபலம் - படிகக் கல். நிருமாணம் - ஏற்பாடு, நிருமிப்பு,நிருமித்தல். நிருமாலியம் - பூசித்துக் கழித்தபொருள். நிருமாலியை - ஓர் நூல். நிருமானம் - நிருமித்தல். நிருமிதம் - நியமிப்பு. நிருமிதி - நிருமாணம். நிருமித்தல் - நியமித்தல். நிருமுத்தம் - தோலுரித்த பாம்பு. நிருமூடம் - மிக வறிவின்மை. நிருமூடன் - மிக வறிவில்லான், பெருமூடன். நிருமூலம் - கட்டழிதல். நிருவகம் - நிருவாகம். நிருவகித்தல் - ஒழுங்காக நடத்தல்,தாங்குதல், நிலைப்படுத்தல். நிருவபணம் - கொடுத்தல். நிருவராகம் - கிருட்டிணனது வராகாவதாரம். நிருவாகங்கட்டுதல் - நிருவாகித்தல். நிருவாகம் - உண்மை, சீர், செவ்வை,நிலைமை, பராமரிப்பு, பொறுப்பு,முடிவு. நிருவாகி - சமர்த்தன், நிதானி,முகாமைக்காரன். நிருவாகித்தல் - சரிப்படநடத்துதல்,நேராக்குதல். நிருவாசம் - குடியிராமை. நிருவாணதீட்சை - சிவதீட்சையில்மேலானது இது பூசை முத லானதுசெய்யவும் குருவுடன் சமபோஜனம் செய்யவும் உரித்தானது. நிருவாணம் - கலையின்மை, தன்மை,மோக்கம், உடையின்மை. நிருவாணி - அருகன், சிவன், நக்கன். நிருவிகற்பக்காட்சி - ஒருமையாயறிதல். நிருவிகற்பசமாதி - ஓர் யோகநிலை. நிருவிகற்பம் - ஒருமை யுணர்ச்சி. நிருவிகற்பன் - தானாகவுந் தனக்கன்னியமாகவுங் காணப்பட்டதத்துவ விகற்பங்கட் கன்னிய மாகவிருப்பவன். நிருவிகாரசைதந்நியம் - விகாரமற்றவறிவன். நிருவிகாரம் - விகாரமின்மை. நிருவிகாரி - கடவுள், விகாரமற்றவன். நிருவிக்கினம் - இடையூறின்மை. நிருவிசாரம் - கவலையின்மை,வேண்டாமை.நிருவிடம், நிருவிஷம் - ஓர் மருந்து. நிரூகம் - தற்கம், நிச்சயம், வெளிப்படை வசனம். நிரூடபசுபந்தம் - யாகமிருபத் தொன்றினொன்று. நிரூபணம் - ஆராய்தல், நிசமம்,பார்வை. நிரூபதிகாரன் - நிருபத்திரன். நிரூபம் - அரூபம். நிரூபன் - உருவமற்றவன், கடவுள். நிரூபிதம் - ஆராயப்பட்டது, காணப் பட்டது. நிரூபித்தல் - ஆராய்தல், நிதானித்தல்.நிரேச்சுரசாங்கியம், நிரேச்சுவர சாங்கியம் - நிரீச்சுர சாங்கியம். நிரேட்சணம் - பார்வை. நிரை - ஒழுங்கு, ஓர் விளையாட்டு,நிரையசை, நிரையென்னேவல்,பசு, பசுக்கூட்டம், பசுப்பொது,படைமுன்னணி, படைவகுப்பு,வரிசை. நிரைகவர்தல் - சத்துருக்கள் காலிகளைக் கவர்தல் அஃது புறப்பொருட்டுறையினொன்று. நிரைசல் - மறைப்பு. நிரைச்சம் - அடைவு, ஓர்சூது, படைமுன்னணி, படைவகுப்பு. நிரைச்சல் - இரவல், ஓர் விளையாட்டு,மறைப்பு. நிரைதல் - ஒழுங்கு, நிரவுதல், நிரையாக்கல், வியாபாரப் பொருளைப்பலவிடத்தும் பரிமாறுதல். நிரைத்தல் - ஒழுங்காய் நிறுத்தல்,வியாபாரப் பொருளை யிலாபத்துக்குப் பலரிடத்துங் கொடுத்தல். நிரைநிறை - நிரனிறை. நிரைபசை - நிரைக்கீழ்க்குற்று கரமுற்றுகரம் வருவது. நிரைமீட்டல் - நிரைமீட்சி, பகைவர்கவர்ந்த காலிகளைத் திரும்பக்கவர்தல். நிரையசை - குறிலிணைந்துங் குறினெடிலிணைந்துங் குறிலிணையொற்றடுத்தும் குறினெடிலொற்றடுத்தும் வருமசை. நிரையம் - நரகம். நிரையாடல் - நிரை விளையாடுதல். நிரையொன்றாசிரியத்தளை - நிரையசையிணைந்துவரு மாசிரியத்தளை அஃது இயற்சீர்களொன்றும் பலவுந் தம்முளொத்து நின்றசீரினீற்றசை நிரையாய் நிற்கவருஞ்சீர் முதலசை நிரையாயொன்றிவரப் பெறுவது. நிரைவிளையாடுதல் - ஓர் விளையாட்டு.நிரோஷ்டம், நிரோட்டம், நிரோட்டி - ஓர்கவி, மிறைக்கவியினொன்றுஅஃது இதழ்குவி வாய்ப்பிறக்குமெழுத்துக்கள் தொடராதுமுடிக்குங்கவி. நிரோதயம் - அபகாரம், அழிவு,தடை, வெறுப்பு. நிரோதனம் - தடை. நிரோத்தியம் - கொடுத்தல். நிர் - உறுதிப்பொருளையு நீக்கப்பொருளை யுந்தருமோ ருபசருக்கம் அஃது நிரு என்றும் நிர் என்றும்வழங்கும், வெளி. நிர்க்குணம் - குணமின்மை. நிர்க்குணன் - கடவுள். நிர்க்குண்டி - வெண்ணொச்சி. நிர்ணயம் - நிருணயம், தீர்மானம். நிர்ணயித்தல் - தீர்மானித்தல், நிச்சயித்தல். நிர்த்தாட்சிணியம் - கண்ணோட்டமின்மை. நிர்த்துகம் - கஷாயம். நிர்த்தூளி - சருவநாசம். நிர்நாசம் - நிருநாசம்.நிர்நிமித்தம், நிர்நிமித்தியம் - முகாந்தரமின்மை.நிர்ப்பத்தியம், நிஷ்பத்தியம் - பத்தியமின்மை. நிர்ப்பந்தம் - தொந்தரை. நிர்ப்பாக்கியம் - வறுமை, பாக்கியமின்மை. நிர்ப்பீசதீட்சை - முழுப்போதனை. நிர்மலம் - நிருமலம். நிர்மாணம் - நிருமாணம். நிர்மாலியம் - நிருமாலியம், நிவேதித்தபொருள். நிர்மிதம் - நிருமிதம். நிர்மூலம் - நிருமூலம். நிர்வஹனன் - நிஷ்டை. நிர்வர்நம் - தரிசனம். நிர்வாகம் - நிருவாகம். நிர்வாசநம் - கொல்லுதல். நிர்வாணம் - நிருவாணம். நிர்வாணி - நிருவாணி. நிர்வாதம் - காற்றின்மை, நிந்தை. நிர்வாபணம் - கொலை, தாநம்கொடுத்தல். நிர்விகற்பம் - நிருவிகற்பம், வேறுபாடின்மை. நிர்விகாரம் - நிருவிகாரம். நிர்விகாரி - நிருவிகாரி. நிர்விக்கினம் - நிருவிக்கினம். நிர்விசாரம் - நிருவிசாரம் நிர்விஷம் - நிருவிடம். நிர்விவாரம் - யானைக் காதினடி. நிர்வீரம் - வீரமின்மை. நிலஇலந்தை - ஓர்பூடு. நிலக்கடம்பு - ஓர்பூடு. நிலக்கடலை - வேர்க்கடலை. நிலக்கணம் - மூன்று நிரையசையடுத்து வருஞ்சொல். நிலக்கரி - பூமியிலிருந் தெடுக்கப்படும் ஓர் கரி. நிலக்கறையான் - ஓர்கறையான். நிலக்கன்று - சிறு பயிர் நிலக்காரை - ஓர் முட்செடி. நிலக்காளான் - ஓர் காளான். நிலக்குமிழ் - ஓர் செடி. நிலக்குழி - அட்சரக்குழி, உரற்குழி. நிலக்குறி - நிலச்சாத்திரத்தோர்பகுதி. நிலக்கூந்தல் - எலிச்செவிப்பூடு. நிலக்கொட்டை - ஓர் பூடு. நிலக்கொதி - நிலப்புழுக்கம்நிலச்சார், நிலச்சார்பு, நிலச்சார்வு - நிலவளம், பூமியின் தன்மை. நிலச்சுருங்கி - ஓர் பூடு. நிலத்தரசுகாரன் - சுயாதிபதி, தேச்தலைமையுயோன். நிலத்தி - நுளம்பு. நிலத்திணை - நடையில்லது. நிலத்துத்தி - ஓர் துத்தி. நிலத்துளசி - ஓர் துளசி. நிலநெல்லி - ஓர் நெல்லி. நிலந்தட்டி - நிலமடிக்கும் பலகை. நிலப்பனை - நிலப்பனகிழங்கு, ஒர்பூடு. நிலப்பாகல் - ஓர்பூடு. நிலப்பாகை - ஓர்பூடு. நிலப்பாலை - ஓர்பூடு. நிலப்பாவாடை - நிலத்தினடக்கவிரிக்கும் புடவை. நிலப்பிளப்பு - கமர். நிலப்பு - தாளி. நிலப்பழு - ஓர்புழு.நிலப்பெயர்ச்சி, நிலப்பெயர்த்தி, நிலப்பேதம் - நிலவித்தியாசம். நிலப்பொட்டு - ஓர்வகைக்காளான்,மண்ணைத் தேய்த்திடுந் திலகம். நிலமகள் - பூமிதேவி. நிலமகன் - செவ்வாய். நிலமட்டம் - தரைமட்டம். நிலமண் - வீட்டின் சார்மண். நிலமண்டிலவாசிரியப்பா - அகவற்பாவினொன்று அஃது எல்லாவடியுமள பொத்து நாற்சீரடிகளாக வருவது. நிலமதிப்பு - தரைமதிப்பு. நிலமயக்கம் - தரைக்கலப்பு. நிலமறிதல் - ஓர் வித்தை, பூமியின்வளமறிதல். நிலமிதி - நடைவசதி. நிலமெடுத்தல் - மனை முதலியவற்றிற்கு நிலங்குறித்தல். நிலமை - நிலவாதனம். நிலம் - இடம், கன்னி, தேசம், பூமி,அஃது பஞ்சபூதத் தொன்று. நிலம்பி - கொசுகு. நிலம்பிறாண்டி - ஓர்பூடு. நிலம்பிறாண்டுதல் - நிலத்தைச்சுறண்டுதல். நிலம்பு - தாளி, கள்ளி, நிலப்பூ. நிலயம் - இடம், இலக்கு, கூத்து,கோவில், சூடல், நிலை, பூமி, மருதநிலம், வாசகம், வீடு. நிலயனம் - நிலையம். நிலவடலி - சிறுபனை. நிலவடுப்பு - நில அடுப்பு. நிலவரி - நிலவிறை. நிலவலையம் - பூமி. நிலவல் - ஒளி செய்தல். நிலவளம் - நிலவாசி. நிலவறை - நிலக்குகை. நிலவாகை - நில ஆவிரை, நிலப்பாகல். நிலவாசி - நிலப்போக்கு. நிலவாடகை - நிலவாடை. நிலவாரம் - தரை வாரம். நிலவாவிரை - நிலாவிரை. நிலவாழை - ஓர்பூடு. நிலவிழுது - நிலப்பனை. நிலவிளா, நிலவிளாத்தி - ஓர் மரம். நிலவிறிக - ஓர் வாணம். நிலவீரியம் - பூநீறு. நிலவு - ஒளி, சந்திரப்பிரபை,சந்திரன், நிலவென்னேவல். நிலவுகாய்தல் - நிலவெறித்தல். நிலவுதல் - ஒளி செய்தல், கீர்த்திமுதலிய பரம்பல், விசாலித்தல்,பொருந்துதல், நிலைபெறல். நிலவுநாழிகை - நிலவினடிகொண்டுபிரமாணிக்கு நாழிகை. நிலவுமரி - நிலவுமரிப்பூடு. நிலவூறல் - நிலவூறணி. நிலவெடுப்பு - முதலா முழவு. நிலவெழுத்து - பழகுவதற்காகநிலத்திலெழுது மெழுத்து. நிலவெறித்தல் - நிலவொளிகாலல். நிலவேம்பு - கிரியாத்துச் செடி. நிலவேர் - பூநாகம். நிலன் - நிலம். நிலா - நிலவு. நிலாக்காலம் - நிலாவெறிக்குங்காலம். நிலாக்காலுதல் - நிலவு வீசல். நிலாக்கிரணம் - சந்திர கிரணம். நிலாக்கொழுந்து - இளம்பிறை. நிலாப்பதிவு - இருட்டுப்பக்கம். நிலாமணி - சந்திரகாந்தம். நிலாமண்டபம் - நிலாமுற்றம். நிலாமண்டலம் - சந்திர மண்டலம். நிலாமுகி, நிலாமுக்கி - சகோரம். நிலாமுற்றம் - நிலாக்காலத் துலாவச்செய்யும் வீட்டின் வெளி, நிலாக்காலத்து உலாவுவதற்காக வீட்டின்மேல் அமைத்த வெளியாயிருக்கும்முற்றம். நிலாவிரை - ஓராவிறை. நிலாவிழுது - நிலாப்பனை. நிலாவுதல் - நிலவுதல். நிலாவேர் - நாக்குப்பூச்சி, குட்டிவிளா,சல்லிவேர், பூமிவேர். நிலிஞ்சிகை - பசு. நிலிம்பன் - தேவன். நிலுவை - இறுத்து மிஞ்சின தொகை,பாக்கி. நிலை - ஆபரணத்திற் றொங்கணி,இடம், உலகம், கதவு, நிலை,குணம், சாலை, தொழில், நிச்சயம், நிலைக்கல், நிலைபரம்,நிலைபேறு, நிலைப்பரப்பு, நிலையென்னேவல், நிற்குந் துணை,நேரம், பரப்பு, பூமி, பொழுது,மார்க்கம், முறைமை, யுத்தநிலை,அவை, ஆலீடம், பிரத்தியாலீடம்,பைசாசம், மண்டிலம், ஆசிரமம். நிலைகலங்குதல் - தடுமாறல். நிலைகுலைதல் - நிலைகெடுதல். நிலைகொள்ளுதல் - நிலைப்படுதல்,நிலையூன்றுதல். நிலைகோலுதல் - அணிகோலுதல்,இடந்தேடுதல். நிலைக்கடகம் - பெருங் கூடை. நிலைக்கண்ணாடி - ஓரிடத்தினிறுவியிருக்குங் கண்ணாடி. நிலைக்கல் - ஆட்டுக்கல். நிலைக்களப்போலி - ஓரெழுத்து நின்றவிடத்தில் அதற்கீடாய் வந்துநிற்குமெழுத்து. நிலைக்களம் - நின்றவிடம், நிலைக்குமிடம். நிலைக்கால் - வாசற்கால். நிலைக்குடி - ஊரிலிருக்கும் பழையகுடி. நிலைக்குத்துதல் - அசையாதுநிற்றல், குடியேறுதல், பயிர்கணிலைத்துப் போதல். நிலைதடுமாறல் - நிலை கலங்குதல். நிலைதல் - சம்பவித்தல், நிலைப்படல்.நிலைதவறுதல், நிலைதளம்புதல் - நிலைகெடுதல். நிலைத்தண்ணீர் - எட்டுந் தண்ணீர். நிலைத்தல் - நிலைக்குத்துதல், நிலைபெறுதல், நின்றுபோதல். நிலைத்தேர் - அலங்காரத்துக்குச்செய்து ஓரிடத்தில் நிறுத்தப்பட்டிருக்குந் தேர். நிலைநிறுத்துதல் - சீர்ப்படுத்துதல்,நிலைப்படுத்தல். நிலைநிற்றல் - நிலைபெறுதல்,பிடித்த பிடிவிடாது நிற்றல். நிலைநீச்சு - ஓர்நீச்சு. நிலைபரம் - உறுதி, நிலைமை. நிலைபிடித்தல் - வளம் பிடித்தல். நிலைபெறுதல் - உறுதியாய்த் தங்கல்,திரங் கொள்ளுதல்.நிலைபெறுத்தல், நிலைபெறுத்துதல் - காத்தல், நிலைநிறுத்துதல், உறுதியாய்த் தங்கல். நிலைபேறு - அசையாமை, உறுதி,தூண், நிச்சயம், மானம், மோக்கம். நிலைபோடுதல் - அடிப்போடுதல். நிலைப்படுதல் - நிசப்படுதல், நிலைநிற்றல். நிலைப்படுத்துதல் - திரமடைவித்தல்,தீர்மானம் பண்ணுதல், நிசப்படுத்துதல், பிரியாது தங்கப்பண்ணுதல், நிலைநிற்கச் செய்தல். நிலைப்பரப்பு - நிலையிலாச்சம். நிலைப்பாடு - உறுதிப்பாடு. நிலைப்பு - உறுதி, திரங்கொள்ளுதல்,தொடர்ந்தேற்றி, நிலை, மாறாமை,முயற்சி. நிலைமண் - இடையிலே போடப்படாதியல்பாயுள்ள மண். நிலைமண்டிலஆசிரியப்பா - நிலமண்டிலவாசிரியப்பா. நிலைமண்டுதல் - பிரியாதிருத்தல். நிலைமாறுதல் - இடமாறுதல்,தொழின்முதலிய மாறுதல்,புணர்ச்சி விகாரத் தொன்று அஃதுஎழுத்து முதலிய மாறிநிற்றல் (உ-ம்)வைகாசி வைசாகி. நிலைமை - இயல்பு, உறுதி, குணம்,நிலவாதனம், நிலை, மெய். நிலைமொழி - பதப்புணர்ச்சிக்கண்முதனிற்கு மொழி. நிலையகம் - இருப்பிடம், மனை. நிலையங்கி - உடன் முற்றுமூடுகிறசட்டை. நிலையம் - இருப்பிடம், இலக்கு,குறித்தவிடம், கூத்து, தேவர்கோயில், பிரதானஸ்தானம், பூமி,மருத நிலத்தூர், வீடு, நிலம். நிலையழிதல் - தோற்குதல், நிலைகெடுதல். நிலையழிவு - தோல்வி, நிலைகேடு. நிலையறிதல் - எண்ணமறிதல்,நிலைபரமறிதல். நிலையாடி - நிலைக் கண்ணாடி,நெய்வார் கருவியு ளொன்று. நிலையாநீர் - பெருகு நீர். நிலையாமை - அநித்தியம். உறுதியின்மை. நிலையிடல் - நிலைப்படுதல். நிலையிலாச்சம் - வரகு விரைப்பாடு.நிலையில்லாமை, நிலையின்மை - அநித்தியம், உறுதியின்மை. நிலையுடைமை - உறுதி. நிலையுமல் - பருமுமல். நிலையுரல் - பருவிரல். நிலையூன்றுதல் - பலப்படுதல்,பிரியாதிருத்தல், வேரூன்றுதல். நிலைவரம் - நிலைபரம். நிலைவிளக்கு - சட்ட விளக்கு. நில்லாமை - அநித்தியம், உறுதிப்படாமை, தவறுதல் . நிலகம் - திரள். நிவசதம் - கிராமம். நிவசதி - வீடு. நிவசனம் - புடவை, வீடு. நிவத்தல் - உயர்தல், உயர்த்தல்,வளர்தல். நிவபனம் - அபரக்கிரியையினொன்று. நிவப்பு - உயர்ச்சி, எழுச்சி. நிவருணம் - பார்த்தல். நிவரை - கன்னி. நிவர்தல் - உயர்தல். நிவர்த்தனம் - இருநூறு முழநீளமகலங் கொண்டது, கொடுத்தல்,தாமதித்தல், திரும்புதல். நிவர்த்தித்தல் - விட்டு நீங்குதல்,விட்டொழித்தல்.நிவறல், நிவறுதல் - கூடுதல், சுருங்குதல், திரளுதல், நுணுக்கம். நிவாகம் - இடம். நிவாசம் - இருப்பிடம், வீடு. நிவாசனம் - வீடு. நிவாசித்தல் - வாசம் பண்ணல். நிவாதகவசர் - தோயமாபுரத் தசுரர். நிவாததீபம் - காற்றில்லாவிடத்திட்டவிளக்கு. நிவாதம் - காற்றின்மை. நிவாபம் - சிராத்தம், பிதிர் தருப்பணம். நிவாரணம் - தடை, நீங்கல், பிராயச்சித்தம், விடுதல். நிவாரம் - தடை. நிவிராகன் - மிகு விருப்புள்ளோன். நிவிர்ததாளம் - நவதாளத் தொன்று. நிவிர்த்தம் - தடை, துறத்தல். நிவிர்த்தன் - துறவி. நிவிர்த்தாத்துமன் - தவத்தி, விட்டுணு. நிவிர்த்தி - ஒழிப்பு, துறவு, பிராயச்சித்தம். நிவிர்த்திகலை - பஞ்ச கலையினொன்று. நிவிர்த்தை - பாகமாதல். நிவேசம் - உடுப்பு, உட்படுதல், ஒப்புவித்தல், கலியாணம், பாளயம்,பெரியோருறைவிடம், வீடு. நிவேசனம் - இடம், ஊர், பட்டினம்,வாசல், வீடு. நிவேதனம் - ஒப்புவித்தல், கொடுத்தல்,தேவர்க்குச் சமர்ப்பிக்கு நைவேத்தியம், பேசுதல், அறிவித்தல். நிவேதித்தல் - நைவேத்தியஞ் செய்தல். நிவேத்தியம் - நைவேத்தியம். நிழலல் - நிழலுதல். நிழலி - காற்று. நிழலிடுதல் - நிழல்செய்தல். நிழலுதல் - சாய்கை, விழுதல், நிழல்செய்தல். நிழலுலர்த்தல் - நிழலிற்காய வைத்தல். நிழலொதுக்கு - நிழற் சாய்ப்பு. நிழல் - ஒளி, கிருபை, குளிர், சாயை,செல்வம், தஞ்சம், துன்பம்,தோற்றம், நிழலென்னேவல், நீதி,மரக்கொம்பு, விம்பம், நோய். நிழல்விழுதல் - நிழல் வீசுதல், நிழற்சரிவு - சாயந்தரம், நிழற்சாய்வு. நிழற்சாய்ப்பு - நிழலொதுக்கு. நிழற்செய்தல் - சாய்கை விழுதல்,நிழற்படுத்தல், மந்தாரம் போடுதல்,நிழல்தரல். நிழற்பாடு - ஒதுக்கு. நிழற்பாவை - திரைப்புடைவைக்குள் விட்டாட்டும் பாவை. நிழற்பிடித்தல் - நிழற்படுதல். நிழற்போடுதல் - நிழலிடுதல். நிழற்றல், நிழற்றுதல் - நிழற்செய்தல்,நுண்மையாயிருத்தல், ஒளிவிடல். நிழனாவல் - ஓர்பூடு, நிழல், நாவல். நிறங்கொடுத்தல் - நன்னிறம்பெயர்தல், வன்னங்கொடுத்தல். நிறத்தல் - சீர்படல், நிறங்கொள்ளுதல். நிறப்பு - நிறத்தல். நிறப்பெயர்ச்சி - நிறப்போதிப்பு. நிறம் - ஒளி, குணம், சரீரம், மார்பு,வண்ணம், இலக்கினம். நிறம்பெயர்தல் - நன்னிறமாதல், நிறம்பேதித்தல். நிறம்பேதலித்தல் - நிறமாறுதல். நிறம்போடுதல் - நிறங்கொடுத்தல். நிறால் - நரா. நிறுதிட்டம் - நெறிப்பு, நேரேநிற்றல். நிறுத்தம் - சாயாம னிமிர்ந்து நிற்றல். நிறுத்தல் - கோடாமை, நிறுக்குதல்,நிறுத்துதல், எடைபார்த்தல் நிறுத்திப் பிடித்தல் - தூக்கிப்பிடித்தல், நிலைநிற்றல். நிறுத்துக்கட்டுதல் - அளவிடுதல். நிறுத்துதல் - ஆட்படுத்தல், காக்குதல்,தரிப்பித்தல், நாட்டுதல், நியமித்தல்,நிலைப்படுத்தல், நிற்கச் செய்தல்,பின்போடுதல், முடித்தல், வைத்தல். நிறுபூசல் - நிருபூசல். நிறுப்பான் - தராசி, துலாராசி,நிறுப்பவன். நிறுப்பு - தாமதிப்பு, தாபிப்பு, நிறுத்தல், வைப்பு. நிறுவல் - நிலைபெறுதல், நிறுத்தல். நிறுவாகம் - நிருவாகம். நிறுவாணம் - நிருவாணம். நிறுவிஷம் - நிருவிஷம். நிறுவுதல் - நிறுத்தல். நிறை - அழிவின்மை, ஆடூஉக்குணநான்கினொன்று, இடை, உறுதிப்பாடு, கற்பு, தயிரியம், துலாராசி,நியாயம், நிறுத்தஉ வளவு, நிறையென்னேவல், நிறைவு, நீர்ச்சால்,நூறுபலம், மாட்சிமை, முறையினிலைமை, வரையறை. நிறைகருப்பிணி - பூரண கெற்ப ஸ்திரீ. நிறைகலை - பூரணசத்தி, பூரணசந்திரன், முழுக்காட்சி. நிறைகுடம் - அட்டமங்கலத்தொன்று அஃது பூரண கும்பம். நிறைகோல் - தராசுக்கோல். நிறைசபை - பெரிய சபை. நிறைசன்னி - மூடுசன்னி. நிறைசூல் - நிறைகருப்பம். நிறைசெல்வன் - குபேரன். நிறைச்சல் - நிறைவு. நிறைதப்பு - நீதிவழு. நிறைதருதூறு - சீந்தில். நிறைதல் - பூரணப்படுதல், பெருகுதல். நிறைத்தல் - நிறையச் செய்தல். நிறைநாழிவைத்தல் - சாச்சடங்கினொன்று, பிள்ளைப்பேற்றுச்சடங்கினொன்று. நிறைநிலவு - பூரணசந்திரன். நிறைந்திடல் - நிறைதல். நிறைபடி - தலைவெட்டாத படி. நிறைபாரம் - கனத்த சுமை, மிகுதி. நிறைபூசல் - பேரொலி. நிறைபூரணம் - முழுத்திருத்தி. நிறைப்பு - நிறைத்தல். நிறைமணி - பூரணாபிடேகம். நிறைமதி - பூரணசந்திரன், பூரணஞானம். நிறைமொழி - உறுதிச் சொல், பெரியோர் வாக்கு, மந்திரம், சாபாநுக்கிரக சக்தி வாய்ந்த மொழி. நிறைமொழியாளர் - பெரியோர்,முனிவர். நிறையழிதல் - கற்பழிதல், மனத்திடன்கலங்குதல். நிறையளவு - நிறுத்தறியு மளவு. நிறையறிகருவி - தராசு. நிறையாமை - குறைவு. நிறையுள்ளவன் - நிதானி. நிறைவாகரம் - நிறைவு. நிறைவாரம் - மிகுதி. நிறைவு - பூரணம், மாட்சிமை. நிறைவேறுதல் - செய்துமுடிதல்,முற்றுதல். நிறைவேற்றம் - முடிப்பு. நிற்கத்தண்டனம் - தயாவிருத்திபதினான்கினொன்று அஃதுதண்டத்தினீக்கல். நிற்கல் - நிற்குதல்.நிற்காரம், நிஸ்காரம் - இகழ்ச்சி. நிற்கிரகம் - அபகாரம், தள்ளல். நிற்குணசைவம் - ஓர் சைவம். நிற்குணத்துவம் - தேவ தன்மை. நிற்குணம் - குணாதீதம். நிற்குணன் - கடவுள், முக்குணத்தையும் பிரித்தடக்கி யுகந்தோறுமிருப்பவன். நிற்குண்டி - நீர்க்குண்டி. நிற்குதல் - நிற்றல். நிற்கை - நிற்குதல். நிற்சம்பந்தம் - விடயசம்பந்தமில்லாதவன். நிற்சரம் - அமுதம், மலையருவி. நிற்சலம் - அசைவின்மை. நிற்சனம் - தனிமையிடம், தள்ளல். நிற்பத்தி - விவாகம்.நிற்பன, நிற்பனவு - அசரம் அஃது மரமுதலியன. நிற்பாக்கியம் - ஏதுமின்மை. நிற்பியாதர்த்திதம் - ஏகசித்தம். நிற்பீசம் - ஏதுவில்லாதது. நிற்பு - நிலை. நிற்புதம் - ஓரெண். நிற்றல் - அடங்கல், ஒழிதல், தங்கல்,தரித்தல், நிலைநிற்குதல், நிற்குதல்.நினதம், நினாதம் - சத்தம். நினைதல் - நினைக்குதல், கருதல். நினைத்தகாரியம் - எண்ணிய பொருள்இஃது சோசிய சோதனையினொன்று. நினைத்தல் - ஆலோசித்தல், எண்ணல், தியானித்தல், மனதிற்கொளல். நினைப்பணி - ஓரலங்காரம், அஃதுஒரு பொருளைக்கண்டு ஒப்புமையினான் மற்றொரு பொருளைநினைத்தல் (உ-ம்) கஞ்சமலர்கோதைமுகங் காட்டும். நினைப்பாளி - ஞாபக முள்ளோன். நினைப்பு - நினைக்குதல் அஃதுமாயையாக்கை பதினெண் குற்றத்தொன்று, நோக்கம். நினைப்பூட்டு - நினைப்புக் குறிப்பு,நினைப்பூட்டென்னேவல். நினைப்பூட்டுதல் - நினைப்பித்தல். நினையாப்பிரகாரம் - திடுகூறு. நினைவு - எண்ணம், கருத்து,நினைப்பு, நினைப்புக் குறிப்பு,நோக்கம், ஞாபகம். நினைவுகூர்தல் - நினைத்தல். நினைவுகேடு - கருத்தழிவு, மறதி. நினைவுத்தப்பு - எண்ணப்பிசகு. நினைவுமோசம் - நினைவுப் பிசகு. நினைவுவைத்தல் - கருத்து வைத்தல். நினைவோடுதல் - ஞாபகம் வருதல். நின் - உனது. நின்மலம் - அழுக்கின்மை. நின்மலன் - கடவுள், சுத்தன். நின்மலாவத்தை - மேலாவத்தை. நின்மாலியம் - நிருமாலியம். நின்மூடன் - நிருமூடன். நின்றநிலை - ஒரு நிலை, பிடித்தபிடி. நின்றவடி - நின்றவிடம், மிதித்தவடி. நின்றவிடந்தீஞ்சான் - குருவிச்சை. நின்று - அசைச்சொல் (உ-ம்) சொல்லிநின்றான். நின்றுசிணுங்கி - சிறியாணங்கை. நின்றுபயனின்மை - நூற்குற்றம் பத்தினொன்று. நின்றுபோதல் - அற்றுப்போதல்,தரித்துப்போதல். நின்றும் - ஐந்தாம் வேற்றுமையினீக்கவுருபுகளி னொன்று (உ-ம்)ஊர்தியினின்று மிழிந்தான். நீ நீ - நீயென்னேவல், முன்னிலையொருமைப்பெயர், நீங்குதல். நீகம் - தவளை, மேகம். நீகாசம் - ஒப்பு, நிசம். நீகாமன் - நீகான்,மீகாமன். நீகாரம் - சங்கையீனம், பனி, பனிக்காலம். நீகான் - மீகாமன். நீகேதநம் - வீடு. நீக்கப்பொருள் - ஐந்தாம்வேற்றுமைப்பொருள்களி னொன்று அஃதுநீக்குதற்குரிய பொருள். நீக்கம் - நீக்கல், நிளம், பிரிவு. நீக்கல் - அகற்றல், கண்ணறை,கொல்லல், நீக்கம், நீட்டல், நீளல்,மாறுபாடு, மாற்றல், நீக்குதல். நீக்கவுருபு - நீக்கப்பொருளைத்தருமுருபு அஃது ஐந்தாமுருபு. நீக்கு - நீக்கென்னேவல், பிளப்புமீதி,விலக்கு. நீக்குதல் - அகற்றுதல், கழித்தல்,குலைக்குதல், நீத்தல், பிரித்தல்,மாற்றல், கொல்லல். நீக்குப்போக்கு - இடைவெளி,உபாயம், வழிவகை. நீங்கல் - இட்டம், நீங்குதல், பிரிதல்,புறம்பு, போகல், மாறுதல். நீங்கள் - முன்னிலைப் பன்மைப்பெயர். நீங்காதவோசையோன் - சங்கு. நீங்காமை - பிரியாமை. நீங்குதல் - நீந்துதல், விடுதலையாகுதல், விலகுதல். நீசகம் - நீர். நீசகன் - கீழ்மகன். நீசகை - நீசப்பெண், யாறு. நீசக்கிரகம் - இராகு, கேது, உச்சத்திற்கேழாமிடக் கிரகம். நீசசாதி - கீழ்சாதி. நீசத்தனம் - இழிதன்மை. நீசத்தானம் - உச்சத்திற்கேழாமிடம். நீசநடை - தீயொழுக்கம். நீசபங்கராசயோகம் - ஓர் யோகம். நீசப்படுதல் - ஈனகுண முடைத்தாதல். நீசப்பெலக்குறைவு - பங்கம். நீசம் - ஈனம், உச்சத்திற்கேழா மிடம்கொடுமை. நீசர் - கீழ் மக்கள். நீசவச்சிரம் - ஓர்மணி. நீசவாகனம் - கழுதை. நீசன் - ஈனன். நீசாரம் - கம்பளிப்புடைவை, திரைச்சீலை, திரைப்படல். நீசிகை - நற்பசு. நீச்சல் - ஆழம், நீந்தல். நீச்சு - நீந்துதல். நீச்சுத்தண்ணீர் - எட்டா நீர், நிலையாநீர். நீஞ்சுதல் - நீந்துதல். நீஞ்சும்பிராணி - நீர்வாழ்வன. நீடசம் - குருவி. நீடசேந்திரன் - கருடன். நீடம் - இருப்பிடம், குருவிக் கூடு,பறவைக் கூடு. நீடல் - நீளல், நெடுத்தல். நீடாணம் - கறி, குழம்பு. நீடாலைக்கோடு - சூடாலைக்கல். நீடிக்கை - நீடிப்பு. நீடித்தல் - நெடுகுதல், நீளுதல். நீடித்திருத்தல் - நெடுங்காலத்திற்கிருத்தல். நிடிப்பு - நீடித்தல். நீடு - நெடுங்கால மட்டும், நெடுநேரம்,மிகுதி. நீடுதல் - செழித்தல், தாண்டல்,நிலைத்திருத்தல், நீளுதல், நெடுங்காலத்திற்கிருத்தல். நீடுநினைந்திரங்கல் - அகப் பொருட்டுறையி னொன்று அஃது தலைவியை மிக நினைந்து தலைவனிரங்கல். நீடூழி, நீடூழிகாலம் - ஊழிகாலம். நீடோத்பவம் - பறவை. நீட்சி - நீளம், விசாலம். நீட்சிமை - நெடுமை. நீட்டம் - நீட்சி. நீட்டலளவை - கோல் முதலியவற்றானளத்தல். நீட்டலளவையாகுபெயர் - நீட்டியளத்தற்குரிய கருவியின் பெயர் அதனானளக்கப்படுவதற்கு வழங்குவது (உ-ம்) தடி. நீட்டல் - ஈதல், நீட்டுதல், மயிர்வளர்த்தல். நீட்டல்மானம் - நீட்டலளவை. நீட்டாணம் - நீடாணம். நீட்டாள் - நெடுத்தவன், வேலையாள். நீட்டித்தல் - தாமதித்தல், நெடுகுதல்,நெடும்பொழுது செல்லல், முடித்தல். நீட்டினவிரல்குறித்தான் - கிரந்திநாயகம். நீட்டு - நீட்டென்னேவல், நீளம்,நெடும்பொழுது. நீட்டுதல் - ஈதல், தாமதப்படுத்தல்,நாட்போடுதல், நீளச் செய்தல். நீட்டுப்போக்கு - அகல நீளம், செல்வமுதலியவற்றின் விசாலம், திராணி,நெடுமை, வலிமை. நீட்டுமுடக்கு - கொடுக்கல் வாங்கல்,திராணி. நீட்பம் - நீளம். நீணாளம் - உயர்ந்த புகைக் குழை. நீணெறி - நீண்ட வழி. நீண்டகரை - நெடுங்கரை. நீண்டகையானை - காண்டாமிருகக்கொம்பு. நீண்டது - நெடியது. நீண்டமயல் - பெருமயக்கம். நீண்டவன் - விட்டுணு. நீண்டாயம் - நீளம். நீண்டோன் - விட்டுணு. நீதக்காரன் - நீதவான். நீதச்சிலைச்சூதம் - நீலாஞ்சனம். நீதத்தலம் - நீதம் விசாரிக்கு மிடம். நீதபரிமளம் - சீதாங்க பாஷாணம். நீதம் - தானியம், நன்னெறி, நீதி,பாக்கியம், மேகம். நீதவான் - நீதமுள்ளவன், நீதித்தலைவன். நீதன் - நீதிமான் நீதி - நியாயம், முறைமை, மெய். நீதிகேடு - அநியாயம். நீதிசாத்திரம் - கலைஞான மறுபத்துநான்கினொன்று, நியாயநூல்நீதிசாரம், நீதிசாஸ்திரம், ஓர்நூல். நீதிஞ்ஞன் - நியாய சாத்திரி. நீதித்தலம் - நீதத்தலம். நீதித்தவறு - நீதிப்பிழை. நீதித்தீர்ப்பு - நியாயத்தீர்வை.நீதிநூலன், நீதிநூலி - அருகன்,நியாயப் பிரமாணிகன். நீதிநூல் - நீதிசாத்திரம். நீதிநெறி - ஓர் நூல், சன்மார்க்கமுறை, சன்மார்க்கம். நீதிநெறிவிளக்கம் - குமரகுருபரரியற்றிய ஒரு நீதிநூல். நீதிபரன் - அரசன், கடவுள், நீதிமான். நீதிமான் - நீதியுள்ளவன். நீதியதிபதி - நியாயாதிபதி. நீதியறிந்தோன் - மந்திரி. நீதியற்றவன் - அநியாயக்காரன். நீதியாதிபதி - நீதி யதிபதி. நீதியொழுங்கு - நீதிமுறை. நீதிவழு - நியாயத்தப்பு அஃது தாமதகுணத்தொன்று. நீதிவிளக்கம் - நியாயவிசாரணை. நீதிவிளங்குதல் - நியாயம் விசாரித்தல், நியாயம் வெளித்தல். நீத்தம் - தண்ணீர் விட்டான், வெள்ளம். நீத்தல் - ஒழுகல், துறத்தல், நீக்கல்,ஒழித்தல். நீத்தவன் - அருகன். நீத்தார் - நீத்தோர். நீத்து - நீந்தல், நீந்துபுனல். நீத்தோர் - துறவோர்.நீந்தல், நீந்துதல் - கடத்தல், நீரினீஞ்சுதல். நீந்துபுனல் - எட்டாநீர், நிலையாநீர். நீபம் - உத்திரட்டாதிநாள், கடம்பு,வெண்கடம்பு. நீப்பு - துறவு, பிரிவு. நீமம் - ஒளி. நீம்பல் - வெடிப்பு. நீயிர் - நீவிர். நீர - குணத்தை யுடையன. நீரசம் - தாமரை, மாதுளை. நீரடி - நீரெட்டி. நீரடைத்தல் - சலமடைத்தல். நீரடைப்பு - ஓர்நோய். நீரதம் - மேகம். நீரதி - கடல், சாறு. நீரத்தி - ஓர் மரம். நீரணிமாடம் - பள்ளியோடம். நீரநிதி - கடல். நீரம் - நீர். நீரரண் - அகழ் அஃது நான்கரணினொன்று. நீரரமகளிர் - நீரில் வாழுந் தெய்வப்பெண்கள். நீரருகல் - நீர்ச்சிறுப்பு. நீரலரி - ஓரலரி. நீரழி - ஓர் நோய். நீராகாரம் - நீர்த்தன்மை, பானகம்,சாதத் தீர்த்தம்.நீராசனம், நீராஞ்சனம் - ஆலாத்தி,கண்ணூறு கழிக்குமோர் வகையாலாத்தி. நீராடல் - ஸ்நானம் பண்ணல்,நீர்கிலுங்குந் தேங்காய், நீராடுதல். நீராடுதல் - ஸ்நானம்பண்ணல், நீர்விளையாடல். நீராட்டு - நீர் விளையாட்டு, முழுகவார்த்தல். நீராட்டுதல் - முழுக்காட்டுதல். நீராமம் - ஓர் நோய். நீராமை - ஓர் சிலந்தி, ஓர் நோய்,கடலாமை. நீராம்பல் - ஆம்பல், ஓர் நோய். நீராரம்பம் - பாய்ச்சல் நிலம். நீராரை - நீருளாரை. நீராலி - நீர்த் துளி. நீராவி - கேணி, புகை. நீராழி - கடல். நீராழிமண்டபம் - குளத்தினடுவேகட்டிய மண்டபம், வசந்த மண்டபம். நீராளம் - நீராகாரமானது, மயக்கமில்லாத கள். நீரிலாநிலம் - பாலை. நீரிழிவு - நீர்ப்பாடு, ஒரு நோய். நீரிறக்கம் - நீர்வற்றம். நீருடும்பு - ஓருடும்பு. நீருதிபாசம் - கடற்பாசி. நீருபம் - ஆகாயம், காற்று. நீருமரி - ஓர்பூடு. நீருளாரை - நீராரை. நீருள்ளி - வெண்காயம். நீரூற்று - நீரூறுதல். நீரெடுத்தல் - நீர் பெருகுதல். நீரெடுப்பு - நீர்ப் பெருக்கு. நீரெட்டி - ஓர் மரம். நீரெரிப்பு - நீர்க்கடுப்பு. நீரெலி - ஓரெலி. நீரேற்றம் - ஓர் நோய், சலதோஷம்,நீர்ப்பெருக்கு. நீரொட்டி - நீராரை. நீரோசை - கொண்டாட்டம்,சந்தோஷம். நீரோடி - இருசாரையு மிணைக்குமரம், மதகு. நீரோட்டம் - நீர்ப்பாய்ச்சல். நீரோருகம் - தாமரை. நீரோற்காரி - ஆவர்த்தம். நீர் - கடல், குணம், சாறு, தன்மை,நீரென்னேவல், நீவிர்,புனல்,இஃது அட்டமூர்த்தத் தொன்று,பஞ்சபூதத்து மொன்று, பூராடநாள், ஒளி. நீர்கொள்வான் - ஸ்போடகம். நீர்க்கடம்பு - ஓர்மரம். நீர்க்கடன் - திலதற்பணம். நீர்க்கடுப்பு - சலக்கடுப்பு, ஒரு நோய். நீர்க்கட்டு - நீர் மறிப்பு. நீர்க்கட்டுதல் - கொப்புள முதலியநீர்ப்பிடித்தல். நீர்க்கணம் - அட்டகணத்தொன்றுஅஃது ஒரு நேரசையு மிரண்டுநிரையசையு மடுத்து வருவது. நீர்க்கண்டகி - நீர்முள்ளி. நீர்க்கமல்லி - அல்லி. நீர்க்கரை - தண்ணீர்த் துறை. நீர்க்கழிவு - நீரழிவு நீர்க்காகம், நீர்க்காக்கை - ஓர் புள். நீர்க்காசம் - ஓர் நோய். நீர்க்கால் - நீர் வாய்க்கால். நீர்க்காவி - கருங்குவளை, நாளுந்தோய்க்கும் புடவையிற் பற்றுநிறம். நீர்க்கிராம்பு - ஓர் பூடு. நீர்க்கீரை - ஓர் கீரை. நீர்க்கீழ் - உதயத்திற்கு நாலாமிராசி. நீர்க்குடம் - பூரண கும்பம் இஃதுஅட்ட மங்கலத்தொன்று இராசசின்னத்து மொன்று. நீர்குட்டம் - ஓர்நோய். நீர்க்குண்டி - வெண்ணொச்சி. நீர்க்குதல் - நீராதல். நீர்க்குப்பி - நீர்முள்ளி. நீர்க்குமிழி - நீரிலெழும்புங் குமிழ்ப்புவடிவு. நீர்க்குளிரி - கல்லாரச்செடி. நீர்க்குறிஞ்சா - ஓர்செடி. நீர்க்குன்று - நத்தை. நீர்க்கொதி - நீரெரிவு. நீர்க்கொழுந்து - நீர்த்தலை. நீர்க்கொள்வான் - கொப்புளிப்பான்.நீர்க்கொள்ளுதல், நீர்க்கோத்தல் - நீர்பிடித்தல் , சலதோஷம். நிர்க்கோத்தை - ஓர்வகைத் தண்ணீர்ப்பாம்பு. நீர்க்கோவை - நீர்ப்பிடிப்பு. நிர்க்கோழி - நீர் வாழுங்கோழி. நீர்ச்சங்கு - ஓர்பூடு. நீர்ச்சலவை - புடவையைத் தோய்த்தல். நீர்ச்சாணை - நீர்விட்டுத் தீட்டுஞ்சாணை. நீர்ச்சாரை - தண்ணீர்ச்சாரை. நீர்ச்சால் - தண்ணீர் பூரிக்குஞ் சால். நீர்ச்சாவி - நீரால் வரும் பதர். நீர்ச்சிக்கு - நீரடைப்பு. நீர்ச்சித்திரம் - நீரடிமுத்து. நீர்ச்சிரங்கு - சேற்றுப்புண், நீர்ப்புழு. நீர்ச்சிறுப்பு - சிறுநீர். நீர்ச்சின்னி - ஓர்பூடு. நீர்ச்சீலை - குளிசீலை. நீர்ச்சுண்டி - கொடிநெட்டிச் செடி.நீர்ச்சுழல், நீர்ச்சுழி - நீரிலுண்டாஞ்சுரிப்பு. நீர்ச்சுனை - நீர்த்தடாகம். நீர்ச்சூலை - அண்டவாயு. நீர்ச்செம்பை - ஓர் செடி. நீர்ச்செறிவு - நீர்ப்பரப்பு. நீர்ச்சேம்பு - ஓர்பூடு. நீர்ச்சோறு - பழஞ்சோறு. நீர்தூவுந்துருத்தி - நீர்விடு சிவிறி. நீர்த்தல் - நீராதல். நீர்த்தாரை - சலதாரை, நீரோட்டம். நீர்த்தானம் - நீர்க்கீழ். நீர்த்திவலை - நீர்த்துளி. நீர்த்துளி - நீர்ச்சொட்டு. நீர்த்துறை - நீர்க்கறை. நீர்த்தூம்பு - மதகு. நீர்த்தோஷம் - சலதோஷம். நீர்நாய் - நாய்மீன், மாமரம். நீர்நாள் - பூராடம். நீர்நிதி - கடல். நீர்நிலை - குளம், தண்ணீரின் மட்டு,மடு. நீர்நெட்டி - ஓர் பூடு. நீர்நெருப்பு - கொட்டைப்பாசி,கல்லுருவி. நீர்நொச்சி - ஓர் நொச்சி. நீர்பெய்கலன் - கமண்டலம். நீர்ப்பகண்டை - ஓர் பூடு. நீர்ப்பஞ்சு - கடற்காளான். நீர்ப்படுவன் - ஓர்நோய். நீர்பரிசை - ஆமை. நீர்ப்பறவை - நீரில் வாழும்பட்சிஅவை கின்னரப்புள் முதலியன. நீர்ப்பனை - புல்லாமணக்கு. நீர்ப்பாக்கு - ஊறற்பாக்கு. நீர்ப்பாசி - வைப்புப் பாஷாணமுப்பத்திரண்டி னொன்று. நீர்ப்பாடு - நீரிழிவு, நீர்க்குறைவு,விஷக்கிராணி. நீர்ப்பாட்டுச்சன்னி - ஓர் சன்னி. நீர்ப்பாம்பு - நீர்க்கோத்தை. நீர்ப்பாய்ச்சல் - ஓர் நோய், நீரோட்டம்.நீர்ப்பிடி, நீர்ப்பிடிப்பு - நீர் கொண்டிருத்தல். நீர்ப்பிரமியம் - நீர்க்கடுப்பு. நீரப்பிளவை - ஓர் சிலந்தி. நீர்ப்பீனசம் - ஓர்பீனசம். நீர்ப்பு - நீர்த்தல். நீர்ப்புடையன் - ஓர் பாம்பு. நீர்ப்பூ - நால்வகைப்பூவி னொன்றுஅஃது சலத்திலுண்டுபடும் பூ. நீர்ப்பூண்டு - நீர்முள்ளி.நீர்ப்பூலா, நீர்ப்பூல் - நீர்ப்புல்லாய். நீர்ப்பெருக்கு - சலப்பெருக்கு,நீர்ப்பாய்ச்சல். நீர்மட்டம் - சரிமட்டம், சரிமட்டம்,பார்க்குங் கருவி. நீர்மறிப்பு - சிறுநீர்த்தடை. நீர்மாங்காய் - மாங்காயடைகாய். நீர்மாடம் - பள்ளியோடல். நீர்மீட்டான் - நீர்விட்டான். நீர்முகம் - இறங்குதுறை, நீர்ப்பாய்ச்சல் முனை. நீர்முள்ளி - ஓர்முள்ளி. நீர்மேனெருப்பு - கல்லுருவி. நீர்மை - ஒப்புரவு, குணம், நிலைபரம். நீர்மோர் - ஓர் பானம். நீர்வஞ்சி - ஓர்வகைப் பிரம்பு. நீர்வண்டு - நீரில்வாழ் வண்டு. நீர்வரத்து - நீர்ப்பெருக்கு. நீர்வல்லி - வெற்றிலைக்கொடி. நீர்வழுக்கை - ஓர் நீர்ப்பூடு. நீர்வளம் - நீர்ச்சிறப்பு, நீர் நயத்தினால் வருஞ் செல்வம் நீர்வள்ளி - சாற்றாவாரி, வெற்றிலைக்கொடி. நீர்வற்றம் - நீர்வற்று. நிர்வற்றற்றேங்காய் - கொப்பறாத்தேங்காய். நீர்வற்றுதல் - ஈரம் வற்றுதல்,நீர்சுவறுதல். நீர்வாத்து - ஓர் பறவை. நீர்வாரம் - குளநெல், நீர்வஞ்சி. நீர்வாழைக்காய் - மீன். நீர்வாழ்சாதி - நெய்தனில மாக்கள்,மீன் முதலியன. நீர்வாழ்வன - எழுவகைப் பிறப்பினொன்று அஃது மீன் முதலியநீந்தும் பிராணி. நீர்விடுதல் - பதனழிந்து நீராதல். நீர்விட்டான் - சாற்றாவாரி. நீர்விழுதல் - இரத்தினகாந்தி தளம்பல். நீர்விளையாட்டு - சலக்கிரீடை. நீர்வேட்கை - நீர்த்தாகம். நீர்வேட்டல் - நீர் தாகித்தல். நீலகண்டம் - மயில். நீலகண்டன் - ஓர் பூரம், கொடியவன்,சிவன், துருசி, முருங்கை, திருநீலகண்ட நாயனார். நீலகண்டரட்சம் - உருத்திராக்கம். நீலகண்டி - பாம்பினச்சுப்பல்லினொன்று, பொல்லாதவன். நீலகந்தி - ஓர்வகைக் கொம்பு. நீலகமலம் - நீலோற்பலம். நீலகம் - காருப்பு, துருசு. நீலகாசம் - கண்ணோயு ளொன்று. நீலகிரி - அட்டமலையி னொன்று,உதகமண்டலம் என்னுமோரூர். நீலகேசி - ஓர் சைன நூல். நீலக்கண்ணாடி - நீலநிறக் கண்ணாடி. நீலக்கத்தரி - ஓர் வழுதுணை. நீலக்கல் - நீல ரத்தினம். நீலக்காக்கட்டான் - ஓர்பூடு. நீலக்காரம் - துருசு. நீலக்காலி - அவுரி, ஓர் நண்டு. நீலக்கிராந்தை - விஷ்ணுக்ராந்தை. நீலக்கிரீவன் - சிவன். நீலக்கிரௌஞ்சம் - கருங்கொக்கு. நீலங்கட்டுதல் - நீலந் தீர்த்தல், பெரும்பொய் கூறல். நீலசம்பூடம் - ஓர்வகை நாவல். நீலச்சால் - நீலநிறச்சாய மூறவைக்குஞ்சால். நீலதரு - தெங்கு. நீலநிதி - குபேரனவநிதிகளினொன்று. நீலந்தர் - இராகம் பாடுவோர்.நீலந்தீர்தல், நீலந்தோய்தல் - நீலநிறம்போடுதல். நீலபங்கம் - கருஞ்சேறு. நீலபடிகம் - பளிங்கு. நீலபதுமம் - நீலோற்பலம். நீலபத்திரம் - கருங்குவளை. நீலபம் - சந்திரன், தேனீ, முகில். நீலபாஷாணம் - ஓர்பாஷாணம். நீலப்புடவி - விஷ்ணுகரந்தை, நீலபுட்பம், நீலபுட்பிகை - அவுரி, எட்டிமரம், விட்டுணுகரந்தை, விட்டுணுகாந்தி. நீலப்பணி - புடைவையிலிடு நீலச்சாயம். நீலமணி - கண்ணிற் கருமணி, நீலரத்தினம், மரகதமணி. நீலமணிகாயம் - கண்ணோயுளொன்று. நீலமண்டலம் - சிற்றீச்சமரம். நீலமருந்து - அவுரி. நீலமாதவன் - திருமால். நீலமார்க்கம் - கையாந்தகரை. நீலமீலிகை - மின்மினி. நீலமேகம் - நீருண்ட மேகம். நீலமேனியன் - இராமன், துருசி,விட்டுணு. நீலம் - இருள், ஓர் நிறம், ஓர் மேகம்,கருங்குவளை, கறுப்பு, காற்று,துருசு, நஞ்சு, நவமணியி னொன்று,நீலக்கட்டி, பனை. நீலம்பற்றவைத்தல் - கதை கட்டுதல். நீலம்பாரித்தல் - விஷ முதலியவற்றாற்சரீரம் நீலவன்னமாதல், நீலவர்ணமாதல். நீலராசன் - ஓரரசன். நீலராஜாவத்தம் - ஒரிரத்தினம். நீலருத்திரன் - ஓருருத்திரன். நீலலோகிதன் - சிவன், பன்னோருருத்திரரி லொருவன். நீலவசனம் - சனி. நீலவண்ணன் - சனி, விட்டுணு. நீலவண்ணான் - சாயக்காரன். நீலவத்திரம் - நீலப்புடவை. நீலவத்திரன் - பலராமன். நீலவருணம் - சத்தமுகிலினொன்று,அஃது தீப்பொழிவது, நீலநிறம்,மேகம். நீலவழுதலை - நீலக்கத்தரி. நீலவாசன் - சனி. நீலவிதானம் - நீலப்பட்டு, மேற்கட்டி. நீலன் - ஓரரசன், ஓர் வானரப்படைத்தலைவன், நீலி யென்னும்பைசாசத்தால் கொல்லப்பட்டஓர் வணிகன், குரூரன், சனி,நீலநிறமுள்ளவன். நீலா - அவுரி. நீலாக்காலி - ஓர் நண்டு. நீலாங்கம் - மலைத்தேள். நீலாங்கு - புழு. நீலாஞ்சனம் - கல்லீயம், கறுப்புக் கல்,துருசு. நீலாஞ்சனை - மின்னல். நீலாட்சம் - அன்னப்புள். நீலாப்பிரகம் - கருமுகில். நீலாம்பரன் - பலபத்திரன், பலதேவன். நீலாம்புசம் - கருங்குவளை. நீலாம்புரி - ஓர் பண். நீலாரம் - குளநெல், செந்தினை. நீலி - அவுரி, கருநொச்சி, கறுப்பு,காளி, துட்டை, துருசு, துர்க்கை,பாம்பினச்சுப்பல்லி னொன்று,பார்வதி, மேகவண்ணப்பூவுளமருதோன்றி மரம், செம்பசளை. நீலிகை - அவுரி, தழும்பு. நீலினி - அவுரி. நீலோற்பலம் - கருங்குவளை. நீல் - காற்று, நீலம், வாதம். நீவரகம் - பஞ்சம். நீவரம் - சேறு, நீர், வியாபாரம், நாடு. நீவல் - நீவுதல். நீவாரம் - செந்தினை, நாடு, வளநெல்,குளநெல். நீவான் - மீகாமன். நீவி - கொய்சகம், சீலை, முதற்பணம்,மூலதனம். நீவியம் - சீலை. நீவிரம் - வீட்டிறப்பு. நீவிர் - நீங்கள், இஃது முன்னிலைப்பன்மைப் பெயர்களி னொன்று. நீவுதல் - தடவுதல், தட்டுதல், துடைத்தல், பூசுதல், கோதுதல், கைவிடல். நீழல் - ஒளி, நிழல், நோய், நீளங்கடை - நாட் செல்லல் . நீளச்சம் - கொன்றை. நீளப்பூச்சி - ஓர்பூச்சி. நீளம் - தாமதம், தூரம், நெடுமை,பறவைக்கூடு. நீளல் - ஓடுதல், தூரம், நீளுதல். நீளி - நீளியென்னேவல், நெடியன்,நெடுமை, நெடுவல். நீளிடை - சேய்மை. நீளித்தல் - தாமதித்தல், நாட்போதல்,நீளுதல், நெடுநாளிருத்தல். நீளிப்பு - நீடிப்பு. நீளியசாரை - கானற்கல்லு. நீளியது - நெடியது. நீளியன் - நெட்டையன். நீளுதல் - அதிகப்படுதல், ஓடுதல், நீளமாதல், நெடுகுதல். நீள் - உயரம், ஒளி, நீளம், நீளென்னேவல், பிரபை. நீள்சடையோன் - கொன்றை. நீறடித்தல் - கயிற்றினாற் கோலமிடுதல். நீறணிந்தோன் - சிவன். நீறாடி - சிவன். நீறாடுதல் - அழித்தல், விபூதியைஉத்தூளனமாய்ப் பூசுதல், பொடிபடுத்தல். நீறு - சாம்பர், சுண்ணம், துகள்,நீறென்னேவல், புழுதி, விபூதி. நீறுதல் - நீறாதல். நீறுபடுதல் - அழிதல், நீறாதல். நீறுபூத்தல் - அழுக்குப் படிதல்,சாம்பற்பொடித்தல். நீற்றல் - எரியிட்டு நீறச்செய்தல்,நீற்றுதல். நீற்றறை - சுண்ணாம்புச் சூளை. நீற்றுக்குட்டான் - சிறிய சுண்ணாம்புப்பெட்டி. நீற்றுண்டை - முட்டை. நீற்றுதல் - நீறாக்குதல். நீற்றுப்பூசணி - ஓர்கொடி. நீற்றுப்பூசணிக்காய்த்தானம் - மிருத்து தானத்தொன்று. நீற்றுப்பெட்டி - எண்ணெயூற்றுங்கூடை, மாவவிக்கும் பெட்டி. நு நு - ஆயுதப்பொது, ஐயம், சங்கை,வினா வென்பவைகளைக் காட்டுமோருபசருக்கம், தியானம், தோணி,நிந்தை, நேரம், புகழ். நுகத்தடி - வண்டியில் மாடுகளைப்பூட்டும் தடி. நுகம் - நுகத்தடி, பாரம், வலி,கணைய மரம். நுகம்புரட்டி - ஒழுங்கு தவறுகிறவன்,கட்டுக்கமையாத எருது. நுகர்ச்சி - அனுபவம், உணவு,உண்டல். நுகர்தல் - அனுபவித்தல், புசித்தல்,விழுங்கல். நுகர்வு - நுகர்ச்சி. நுகும்பு - பனையின் இளங்காய். நுகை, தல் - இளகுதல், தளர்தல். நுகைத்தல் - இளக்குதல், தளர்த்தல். நுகைப்பு - நுகைத்தல். நுகைவு - இளக்கம், தணிவு, தளர்வு,மிருது. நுக்காங்குலை - காய் விழுந்த பனங்குலை. நுக்கு - எட்டிமரம், நுக்கென்னேவல்,நுங்கு, பொடி. நுக்குடம் - காஞ்சிரை. நுங்கல் - பருகல், விழுங்கல், நுங்குதல். நுங்கு - நுங்கென்னேவல், பனையினிளங்காய். நுங்குக்கண் - நுங்கிற்கண். நுங்குதல் - குடித்தல், விழுங்குதல். நுங்கை - உன்றங்கை, உன்றாய். நுசுப்பு - இடை. நுசை - சிவதைவேர். நுடக்கம் - தள்ளாட்டம், நுட்பம்,முடக்கம், வளைவு, அசைவு, கூத்து. நுடக்கு - முடக்கு. நுடங்கல் - நுடங்குதல். நுடங்கு - நுடக்கம், நுடங்கென்னேவல். நுடங்குதல் - அசைதல் , ஆடல்,துவளல், முடங்கல். நுட்டம் - எருக்கு. நுட்பம் - எளிது, ஓரலங்காரம், அஃதுகுறிப்பாற் கருத்தறிவித்தல், சூட்சம்,சொற்பம், திட்பம், நுண்மை. நுட்பவுரை - நுண்ணிதாய் விளக்குமுரை. நுணக்கம் - நுணங்கல். நுணங்கல் - துவளல், நுண்மை,முடங்கல். நுணங்கியோர் - அறிவுடையோர். நுணங்கு - தேமல், நுணங்கென்னேவல், நுண்மை. நுணங்குதல் - நுண்மையாதல்,வளைதல், வாடல். நுணலி - தணக்கு. நுணலை - ஓர் மீன், தவளை. நுணல் - தவளை, தவளையினோர்பேதம். நுணவு - தணக்கமரம், நுணாமரம். நுணவை - தணக்கமரம். நுணா - ஓர்மரம். நுணாக்காயக்கிரந்தி - ஓர் கிரந்தி. நுணாசுதல் - தடவுதல். நுணாவுதல் - தடவித்தெரிதல். நுணி - நுணியென்னேவல், நுதி. நுணித்தல் - குணம், நுணுக்கல். நுணுகு - நுணுகென்னேவல், நுண்மை. நுணுகுதல் - நுண்மையாதல், சிறுத்தல், மெலிதல். நுணுக்கம் - அடக்கம், சூட்சம், கூர்மை,நுண்மை. நுணுக்கல் - நுண்மையாக்கல். நுணுக்கு - அற்பம், எழுத்துக்குணுக்கம், நுணுக்கென்னேவல். நுணுக்குதல் - நுணுக்கல், கூராக்கல். நுணுங்கல் - நுண்மை, நுணுங்கு - நுணுங்கென்னேவல்,நுண்மை நுண் - அணு, நுண்மை. நுண்ணறிவு - நுண்ணியபுத்தி. நுண்ணிச்சிறை - கொசுக்கட்டைக்குருவி. நுண்ணிடை - சிற்றிடை, பெண். நுண்ணிமை - நுட்பம். நுண்ணியது - நுண்மையானது. நுண்ணியர் - அறிவுடையோர், நுட்பமானவர், பெரியோர், மந்திரிகள். நுண்ணுணர்வு - கூறிய அறிவு. நுண்பிண்டி, நுண்பொடி - புழுதி. நுண்பொருள் - நுட்பமான கருத்து,நுண்ணிய பொருள். நுண்பொறிவெள்ளை - சிலமரையினேறு. நுண்மணல் - மெல்லிய மணல். நுண்மருங்குல் - நுண்ணிடை. நுண்மை - கூர்மை, நுட்பம், நேர்த்தி. நுதம் - தோத்திரம். நுதம்புதல் - நனைந்திளகுதல். நுதலணி - சுட்டி. நுதலல் - கருதல், குறித்தல். நுதலிப்புகுதல் - முப்பத்திரண்டுத்தியினொன்று அஃது சொல்வனென்றுகூறிப்புகுதல். நுதலுதல் - நுதலல். நுதல் - சொல், நுதலென்னேவல்,நெற்றி, புருவம். நுதற்கண் - நெற்றிக்கண். நுதற்கண்ணன் - சிவன், நெற்றிக்கண்ணன். நுதற்சுடிகை - சுட்டி. நுதி - புகழ், முனை, வணக்கம், முன். நுதுத்தல் - அடக்கல், அவித்தல்,அழித்தல். நுதுப்பு - தணிப்பு. நுந்துதல் - தள்ளுதல், தூண்டுதல். நுந்தை - உங்கள்தந்தை. நுபம் - எருக்கு. நுமர் - உம்மவர், நுமள் - உம்மவள். நும் - விரவுத்திணை முன்னிலைப்பன்மை, சாரியை (உ-ம்) எல்லீர்நும்மையும். நும்பி - உம்பி, உம்தம்பி. நும்மோர் - உம்மவர். நுரு - நொரு, முளியில் முளைக்குமட்டம். நுரை - குமிழி, நீர்முதலிய வற்றினுரை,நுரையென்னேவல். வெள்ளை,வெண்ணெய். நுரைத்தல் - நுரைக்குதல், நுரைதள்ளல். நுரைப்பீர்க்கு - ஓர்பீர்க்கு. நுரையீரல் - ஈரலிலோர் வகை. நுலையிலி - ஊமை. நுவணம், நுவணை - கல்விநூல்,தினைமாவு, நுண்மை, பஞ்சி நூல். நுவலல் - சொல்லுதல். நுவலாநுவற்சி - ஓரலங்காரம். நுவலுதல் - நுவலல். நுவல் - சொல், நுவலென்னேவல். நுவல்கை - சொல்லுதல். நுவற்சி - சொல்லுகை. நுழாய்ப்பாக்கு - முதிராப்பாக்கு. நுழுந்தி - நழுவி. நுழுந்துதல் - திருடுதல், நகர்தல்,நழுவுதல், பதுங்குதல். நுழுவல் - நழுவல், நுழாய்ப்பாக்கு. நுழுவுதல் - நழுவுதல். நுழை - நுண்மை, நுழையென்னேவல், நுழைவாயில், பலகணி,துவாரம். நுழைகடைவை - நுழைகண்டாயம். நுழைச்சல் - எழு, நுழைத்தல், நுழைச்சற்புலு - எழுபது. நுழைதல் - சாடைசொல்லுதல்,நுழைக்குதல், மட்டுக்கட்டுதல்,புகுதல். நுழைத்தல் - நுழைதல், நுழைவித்தல், புகுவித்தல். நுழைநரி - ஓர் நரி. நுழைவாயில் - சிறுவாயில். நுழைவு - கூரியபுத்தி. நுளம்பு - கொசுகு, மின்மினி. நுளும்புதல் - அசட்டை பண்ணுதல். நுளை - ஈனம், குருடு. நுளைச்சி - நெய்தனிலப்பெண். நுளையர் - நெய்தனில மாக்கள். நுள் - கிள்ளு, நுள்ளென்னேவல். நுள்ளான் - ஓரெறும்பு. நுள்ளு - நுள். நுள்ளுதல் - கிள்ளுதல். நுறுக்கல் - தூளாக்கல். நுறுங்கல் - தூள். நுனி - நுண்மை, நுனியென்னேவல்,முனை. நுனித்தல் - உற்றாராய்தல்,கூராக்கல். நுனித்துநோக்கல் - கூர்மையாய்ப்பார்த்தல். நுனிப்பந்தி - கடைப்பந்தி. நுனை - முனை. நுன் - உனது. நூ நூ - ஆபரணம், ஓரெழுத்து,நூவென்னேவல், நூல், எள்ளு,எள்ளிளங்காய். நூக்கம் - தோதகத்திமரம், நூக்கு. நூக்கல் - செலுத்தல், தள்ளல், நெய்வார் கருவியினொன்று, நூக்குதல். நூக்கு - தள்ளு, நூக்கென்னேவல்,நொய். நூக்குதல் - செலுத்துதல், தள்ளுதல். நூங்கு - நூங்கென்னேவல், பெருமை,மிகுதி. நூங்குதல் - பெருமையாயிருத்தல்,மிகுதியா யிருத்தல். நூடி - சிற்றேலம். நூதநசாலி - புது நெல். நூதநமணம் - புதுமணம். நூதநவஸநம் - புது வஸ்திரம். நூதல் - அவிதல். நூதனகாரன் - நூதனச்செய்கையுள்ளவன். நூதனத்துவம், நூதனம் - புதுமை. நூதனி - நூதனகாரன். நூத்தல் - நொதுத்தல். நூபம் - இடபவிராசி, எருக்கு, எருது நூபுரம் - காற்சிலம்பு, பாதகிண்கிணி. நூப்பு - தணிப்பு. நூரல் - அவிதல், ஆறல், பதனழிதல். நூர்த்தல் - அணைத்தல், ஆற்றல். நூலச்சு - கம்பியிழுக்குமச்சு. நூலறிவு - கல்வியறிவு. நூலாசிரியன் - நூலாக்கியோன். நூலாதாரம் - முதல்புத்தகம். நூலான்புடை - ஒட்டடை. நூலான்பூச்சி - சிலந்திப்பூச்சி. நூலியாப்பு - நூலினிடத்தி யாப்பமைக்கும் விதம் அஃது தொகுத்தல் தொகைவிரி மொழி பெயர்ப்புவிரித்தல். நூலில்லாமாலை - வைப்புக்கட்டு. நூலிழந்தாள் - அமங்கலி. நூலிழைத்தல் - நூனூற்குதல். நூலுண்டை - நூற் சுருள். நூலுத்தி - தந்திரவுத்தி. நூலுரைப்போன் - உபாத்தி. நூலுரையுணர்வோர் - ஒல்லுநர். நூலுறிஞ்சி - நெய்வார் கருவியி னொன்று. நூலேணி - கயிற்றேணி. நூலோடுதல் - தையலினூல் விட்டுப்பம்முதல். நூலோர் - அறிஞர், பார்ப்பார்,மந்திரிகள். நூல் - ஆண்குறி, ஆலோசனை, இழை,எண்ணல், எற்றுநூல். கல்விநூல்,குறியைப்பற்றிய நரம்பு, சாஸ்திரம், நூலென்னேவல், பஞ்சினூல்,பூணூல். நூல்சோர்த்தல் - நூல் பதனிடுதல். நூல்போடுதல் - நேர்பிடிக்கக் கயிறடித்தல். நூல்யுத்தி - நூலுத்தி. நூல்வலை - நூலினால் முடியும்வலை. நூல்வல்லோர் - அறிஞர், மந்திரிகள். நூல்வழக்கு - செய்யுள் வழக்கு. நூல்விடுதல் - சிலம்பி முதலியனநூலுண்டாக்கல். நூவு - எள். நூழல் - நூறல். நூழிலாட்டு - கொலை, மெய்புதைபடை பறித்துமாற்றாரையிரித்தல், கொன்று குவித்தல். நூழிலாட்டுதல் - கொல்லுதல். நூழில் - குவித்தல், கொடிக் கொத்தான், கொலை, தன்மெய் புதைந்தபடையைப் பறித்து நிற்கை,படர்கொடி, யானை, கொன்றுகுவித்தல். நூழை - துவாரம், நுண்மை. நூறல் - அழித்தல், நூறுதல். நூறாயிரம் - இலட்சம். நூறு - ஓரெண், நூற்றென்னேவல்,நீறு, சுண்ணாம்பு. நூறுகோடி - வச்சிராயுதம், ஓர்பேரெண். நூறுதல் - அழித்தல், நசுக்குதல்,வெட்டல். நூறை - மலங்குமீன். நூற்கயிறு - நூலினாற் றிரிக்குங்கயிறு. நூற்கருத்து - நூற்பொருள். நூற்கழி - நூற்பந்து. நூற்குச்சு - நூற்குச்சம். நூற்குதல் - நூற்றல். நூற்சரடு - நூலினாற் செய்யுமோர்கயிறு.நூற்சுருள், நூற்சுருளை - நூற்பந்து. நூற்பகந்திரம் - நூலடியிற்கட்டு. நூற்படுகு - நெசவுபா. நூற்பயன் - நூலினதுபலன், அவைஅறம், இன்பம், பொருள், வீடு. நூற்பவுந்திரம் - நூற்பகந்திரம். நூற்பழக்கம் - கல்விப்பயிற்சி. நூற்பா - சிலவகை யெழுத்துக்களாகிய சொற்றொடராய்ப் பலவகைப் பொருள்களை விளக்கித்திடம் நுட்பமமைந்து வருவது,சூத்திரச் செய்யுள். நூற்பாவகவல் - இலக்குணச்சூத்திரம். நூற்புறனடை - நூலின்புறத்தினடைக்குங்காப்புமொழி. நூற்பொருள் - நூலிற் சொல்லப்படு பொருள். நூற்றந்தாதி - ஓர்பிரபந்தம் அஃதுவெண்பா நூறினானேனுங் கலித்துறை நூறினானேனு மந்தாதித்துப் பாடுவது. நூற்றல் - நூற்குதல், நூலாக்கல். நூற்றாறு - நூனாழி. நூற்றுறை - நூற்கருத்து, நூற்பொருள். நூனம் - குறைவு, நிச்சயம். நூனயம் - கல்விநயம், நூலின்மேன்மை. நூனாயம் - ஊனாயம். நூனாதிகம், நூனாதிக்கம் - குறைவு,நிறைவு, ஏற்றக் குறைவு. நூனாழி - நாடா. நூன்முகம் - நூற்றுறை, பாயிரம்.நூன்முடிபு, நூன்முடிவு - நூலினதுபொருணோக்கம். நெ நெகல் - கனிதல், நெகிழ்தல், நெகுதல். நெகிடி - நெருப்புக்குவை. நெகிழம் - பாதச்சிலம்பு. நெகிழி - ஞெகிழி. நெகிழிசை - வல்லெழுத்து வராதுமற்றீரின வெழுத்திலொன்றான்முடியுஞ் செய்யுள். நெகிழுதல் - நெகிழ்தல். நெகிழ்ச்சி - இளக்கம், தளர்ச்சி. நெகிழ்தல் - அழுந்தல், அவிழ்தல்,இரங்குதல், இளகுதல், உருகுதல்,குழைதல்,தளரல், நழுவல்,நுகைதல், பிரிதல், பொசிதல்,பொடியாதல், மலர்தல், விட்டுநீங்குதல்.நெகிழ்த்தல், நெகிழ்த்துதல் - அவிழ்த்துதல், உருக்கல், நீக்கல். நசுக்கல்,பிரித்தல், மலர்த்தல், நெகிழச்செய்தல். நெகிழ்ப்பு - நெகிழ்த்தல். நெகிழ்வு - குறைவு, தளர்வு, நுகைவு,பிரிவு, மலர்தல், விட்டுநீங்கல். நெகிளம் - ஞெகிளம். நெகுதல் - உருகுதல், கரைதல்,நுகைதல், இளகுதல். நெக்கல் - உக்கல், உருகுதல், கனிதல்,கனிந்தது, கிளப்பல், தளர்ந்தது,தள்ளல், நெக்குதல் . நெக்கு - நெக்குதல், நெக்கென்னேவல். நெக்குடைதல் - நெகிழ்ந்துருகுதல்,நெகிழ்ந்து விள்ளுதல், மனம்உருகுதல். நெக்குதல் - உருகுதல், கனிதல்,கிளப்பல், தள்ளல், துகைதல்,துரத்தியடித்தல், விள்ளுதல். நெக்குருகுதல் - விண்டுருகுதல். நெக்குரோதம் - நியக்குரோதம், ஆல். நெக்குவிடுதல் - நுகைதல், விண்டுடைதல். நெசவு - நெய்குதல். நெசவுக்காரர் - நெய்வோர். நெச்சி - கடுக்காய். நெஞ்சகம் - நெஞ்சு.நெஞ்சடைப்பு, நெஞ்சடைவாதம் - ஓர்நோய். நெஞ்சம் - மனம், மார்பு, நெஞ்சு. நெஞ்சழிதல் - ஏங்கல், மதிமயங்கல். நெங்சறிதல் - மனமறிதல். நெஞ்சறிவிளக்கம் - ஓர்நூல். நெஞ்சறிவுறுத்தல் - மனத்துக்குஅறிவுறுத்தல். நெஞ்சன் - ஓர்மி. நெஞ்சாங்கட்டை - சவஞ்சுடுவற்குநெஞ்சில் வைக்குங்கட்டை,துராலோசனை, நெஞ்செலும்பு. நெஞ்சாங்குலை - ஈரற்குலை. நெஞ்சாங்குற்றி - நெஞ்சாங்கட்டை. நெஞ்சாங்கொழுந்து - நெஞ்சாங்குலை. நெஞ்சிடி - நெஞ்சுபதறுதல். நெஞ்சிற்கல் - கவலை, துக்கம். நெஞ்சு - ஓர்மம், துணிவு, தைரியம்தொண்டை, மனம், மார்பு. நெஞ்சுக்கோழை - ஓர்நோய். நெஞ்சுத்தடிமல் - நெஞ்சிற் சளிப்பிடியுண்டாந்தடிமல். நெஞ்சுநோ - நெஞ்சினோ, மனவிதனம். நெஞ்சுவிடுதூது - சைவசித்தாந்தசாத்திரத்தொன்று. நெஞ்சூன்றி - ஒருபக்கம் வளைந்துமறுபக்கம் மிதந்திருப்பது. நெஞ்செரிச்சல் - பொறாமை. நெஞ்செரிதல் - எரிச்சற்படல்,பொறாமைப்படல், மனநோப்படல். நெஞ்செரித்தல் - உடற்பிசகால்வருமோர் நோய். நெஞ்செரிப்பு - நெஞ்செரித்தல்,பொறாமை. நெஞ்சோர்மம் - நெஞ்சுத்துணிவு. நெடநெடெனல் - ஈரடுக்கொலிக்குறிப்பு. நெடி - சிள்வண்டு, நாற்றம், நெடியென்னேவல், மிளகாயின்காரம். நெடிசு - நெடிது. நெடித்தல் - பொழுது நீட்டித்தல். நெடியவட்டம் - மரவட்டணம்,பரிசை. நெடியவன் - நெட்டையன், விட்டுணு.நெடியன், நெடியான் - நெட்டையன். நெடியோன் - திரிவிக்கிரமனானவிட்டுணு, துளசி, மூக்கிரட்டை. நெடியோன்குன்றம் - வேங்கடமலை. நெடிலடி - ஐஞ்சீரடுத்து நிற்பது. நெடிலி - கடற் பறவையி லொன்று. நெடிலெதுகை - அடிதோறு நெடிலெழுத் தெதுகையாய் வருவது. நெடில் - நீளம், நெட்டெழுத்து,மூங்கில். நெடிற்றொடர் - நெட்டெழுத்துத்தொடர்ந்து வருவது. நெடின்மோனை - அடிதோறுமுதலெழுத்து வருவது. நெடு - நீண்ட. நெடுகலும் - நீளத்திலே. நெடுகல் - நீளுதல், போதல். நெடுகுதல் - உயருதல், சாதல்,நீளித்தல், நீளுதல். நெடுக்கு - நீட்சி. நெடுங்கடல் - கரையடுத்த கடல். நெடுங்கணக்கு - அரிவரி, பழங்கடன், பெருந்தொகை. நெடுங்கணவாய் - ஓர் கணவாய். நெடுங்கண்விழுதல் - பன்னமொருபக்கம் நெடுகி மறுபக்கந் தளர்ந்திருத்தல். நெடுங்கதை - பழங்கதை. நெடுங்கயிற்றில்விடுதல் - நாட்கடத்துதல். நெடுங்கரை - நீண்டகரை. நெடுங்கழுத்தன் - ஒட்டகம். நெடுங்காலம் - வெகுகாலம். நெடுங்குடர் - மணிக்குடர். நெடுங்குரலன் - கழுதை. நெடுங்குரல் - பெருங்குரல். நெடுங்கேடு - தீராதகேடு. நெடுங்கோணி - ஒட்டகம். நெடுஞ்சட்டை - அங்கி.நெடுஞ்சாணை, நெடுஞ்சாண்கிடை - நெடுங்கிடை. நெடுத்தல் - நீளுதல், நெடுக்குதல்,நெடும் பொழுதாதல். நெடுநாவை - நீண்ட நாவை. நெடுநாள் - வெகு நாள். நெடுநீட்டு - வெகு நீளம். நெடுநீர் - கடல், தாமதம். நெடுநீளம் - நேர்நீளம்.நெடுநெடுக்குதல், நெடுநெடுத்தல் - நெடுக நீளுதல், நெடுக வளர்தல். நெடுநேரம் - வெகு நேரம். நெடுந்தகை - பெரியோன். நெடுந்தகைமை - மேன்மை. நெடுந்தட்டு - ஓர் கடுதாசிப் படம். நெடுந்தாயம் - அடுத்தடுத்து விழுந்தாயம். நெடுந்துயில் - சாவு, நீண்ட தூக்கம். நெடுந்தூரம் - வெகு தூரம் நெடுந்தெரு - இராச வீதி, நீண்டதெரு. நெடுந்தொகைநானூறு - கடைச்சங்கப் புலவர் பாடிய நூல்களினொன்று. நெடுப்பம் - நீளம். நெடுப்பிணை - வங்கமணல். நெடுப்பு - நீளிப்பு. நெடுமழை - பெருமழை. நெடுமன் - நீண்டது, பாம்பு. நெடுமால் - விட்டுணு. நெடுமி - நீண்ட மரம், நீளியபெண்,பனை, மழை. நெடுமுரல் - ஓர்மீன். நெடுமுழம் - ஓர்வகைப் புடைவை. நெடுமூச்சு - பெருமூச்சு இஃதுயாக்கைக் குற்றத் தொன்று. நெடுமை - அமிதம், உயரம், நீளம்,பெண்மயிர், பெருமை. நெடுமொழி - தன் மேம்பாட்டுரை,வஞ்சினம். நெடும்பயணம் - நெடும் பிரயாணம்,மரணம். நெடும்பல்லியத்தனார் - ஒரு புலவர். நெடும்பழக்கம் - வெகுகாலச்சாதனை. நெடும்பழி - பெரும்பழி. நெடும்பா - ஆடாதோடை. நெடும்பார்வை - கண்ணூன்றிப்பார்த்தல். நெடும்புகழ் - மிகுபுகழ். நெடும்புரிவிடுதல் - ஏய்த்தல், கடத்தல். நெடும்பொழுது - நெடுநேரம். நெடுவல் - நீளி. நெடுவாய் - உள்ளா மீன். நெடுவாலூடகம் - ஓர் மீன். நெடுவாற்றிரளி - ஓர் மீன். நெடுவிரல் - ஆடாதோடை, நாய்ப்பாகல். நெடுவேர் - சாய வேர். நெட்டநெடியது - மிக நெடியது. நெட்டம் - மிளகு நெட்டாயம் - நீளம். நெட்டி - ஓர்புல், கிடைச்சி, சடை,நெட்டு, நெட்டை அஃதுயாக்கைக்குற்றமைந்தினொன்று, முளி. நெட்டிக்கோரை - ஓர்பல். நெட்டிசை - நீண்டொலிக்குமிசை. நெட்டிடுதல் - சீத்தல். நெட்டிப்பூ - கிடைச்சியிற் செய்த பூ. நெட்டிமாலை - கிடைச்சி மாலை. நெட்டிமுரிதல் - நெட்டைமுரிதல். நெட்டிமையார் - ஒரு புலவர். நெட்டிலிங்கு - அசோகு. நெட்டில் - மூங்கில். நெட்டு - இணுக்கு, காம்பு, குலை,சீத்தல், தள்ளுதல், நெட்டென்னேவல். நெட்டுக்கட்டுதல் - குலை கட்டுதல். நெட்டுதல் - சீத்தல், தள்ளுதல். நெட்டுயிர் - நெட்டொலி யுயிரெழுத்து அஃது இரண்டு மாத்திரை யொலிப்பது. நெட்டுயிர்த்தல் - பெருமூச்சு விடுதல். நெட்டுயிர்ப்பு - பெருமூச்சு. நெட்டுரு - நீடியரூபு, வாய்ப்பாடம்,மனப்பாடம்.நெட்டுருப்படுத்துதல், நெட்டுருப் பண்ணுதல் - வாய்ப்பாடமாக்கல்,மனப்பாட மாக்கல்.நெட்டூத்தி, நெட்டூதி - ஓர்வித சங்கு. நெட்டூரம் - நிட்டூரம். நெட்டெழுத்து - உடல் வாசகம், கையொப்பம், நீட்டு, நெடிலெழுத்து. நெட்டெழுத்துக்காரன் - வாசகமெழுதுவோன். நெட்டை - நெடுமை, நெட்டி, முழுவெலும்பு. நெட்டைக்கங்காளம் - நெடுமையுள்ளது, நெட்டி. நெட்டைச்சி - நெடுமி, நெடியள். நெட்டையன் - நெடுவல், நெடியன். நெட்டோடை - நீண்ட வோடை. நெண்டுதல் - நெளித்தல். நெத்தகர் - ஓர்பூடு. நெத்தலி, நெத்தில் - நெய்த்தோலி. நெமம் - திமசு. நெம்பு - இருகூர் ஆணி, ஏணிப்பழு,ஏற்ற மடலாணி, நென்பு, மிண்டி,விலாவெலும்பு. நெம்புதல் - உயர்த்துதல், கிளப்பல். நெய் - இரத்தம், சித்திரை நாள்,நறுநெய் இஃது பஞ்ச கௌவியத்தொன்று, நிணம், நெம்பென்னேவல், தேன், புழுகு. நெய்க்கடல் - சத்த சமுத்திரத்தொன்று. நெய்க்குறி - தேரைய ரியற்றிய ஒருவைத்திய நூல். நெய்க்கொட்டான் - பூவந்தி மரம். நெய்க்கொட்டை - பூவந்திப் பழம். நெய்ச்சட்டி - செங்கழுநீர், பணிகாரச்சட்டி, பவளக் குன்றிமணி. நெய்ச்சாதம் - நெய்ச்சோறு. நெய்ச்சிட்டி - சிற்றிலைச் செடி. நெய்ச்சுட்டி - ஓர் கீரை. நெய்தலுரிப்பொருள் - இரங்கல்,இரித்தல், ஊடல், பிரிதல், புணர்தல்இவற்றி னிமித்தம். நெய்தல் - ஆடை முதலிய நெய்தல்,ஆம்பல், இரங்குதல், ஐந்நிலத்தொன்று அஃது கடலுங் கடல்சார்ந்த விடமும், சாப்பறை,புலர்ந்தோர்புலம்பல், அல்லி. நெய்தல்விளைவு - உப்பு, மீன். நெய்தற்கருப்பொருள் - நெய்தனிலவிளைபொருள். நெய்தற்குப்பொருள் - நெய்தனிலத்துற்பத்திப் பொருள்கள் அவை வருணன் முதற் கடலாடலீறாயபதினான்குமாம். நெய்தற்பதி - நெய்தற்றலைவன்,நெய்தனிலத்தூர். நெய்தற்பறை - சாப்பறை, நெய்தனிலப்பறை. நெய்தற்புரம் - தபுதாரநிலை, தாபதநிலை. நெய்தற்றலைவன் - நெய்தனிலத்தலைவன், வருணன். நெய்தற்றிறம் - நெய்தற்பண். நெய்தற்றெய்வம் - வருணன். நெய்தனிலத்தலைவன் - சேர்ப்பன். நெய்தனிலத்தியாழ் - விளரியாழ். நெய்தனிலத்தினீர் - உவர்நீர். நெய்தனிலத்தூர் - பாக்கம். நெய்தனிலப்பறவை - கடற்காக்கை. நெய்தனிலப்பறை - பம்பை. நெய்தனிலப்பெண் - அளத்தி,நுளைச்சி, பரத்தி. நெய்தனிலமரம் - அடம்பு, கோங்கு,தாழை, புன்னை, முள்ளி. நெய்தனிலமாக்கடொழில் -கடலாடல், மீன் உப்புப்படுத்தல். நெய்தனிலமாக்கள் - அளவர், நுளையர், பரதவர். நெய்தன்மாக்களுணா - விலைக்குப்பெற்றன. நெய்தன்மாக்கள் - நெய்தனில மாக்கள். நெய்தன்முதற்பொருள் - கடலுங்கடல் சார்ந்தவிடமுஞ் சிறு பொழுதாயவெற்பாடும் பெரும் பொழுதாறும். நெய்தை - பெருமை. நெய்த்தல் - கொழுத்தல். நெய்த்துடுப்பு - ஆகுதிவிடுந் துடுவை. நெய்த்தோர் - இரத்தம். நெய்த்தோலி - ஓர் பொடிமீன். நெய்நெட்டி - சம்பம்புல். நெய்ப்பற்று - நெய்ப்பிடி. நெய்ப்பீர்க்கு - நுரைப்பீர்க்கு. நெய்ப்பு - கொழுப்பு, சிதல் நெய்மீன் - வெள்ளிறா மீன். நெய்யரி - பன்னாடை. நெய்யல் - நெசவு, நெய்குதல். நெய்யற்கயிறு - நெய்வார்கருவியினொன்று. நெய்யன்னம் - நெய்ச்சோறு. நெய்யாடுதல் - நெய்பூசி முழுகுதல்,இஃது பிள்ளைப்பேற்றுச் சடங்கினொன்று. நெய்வண்டி - நெய்த்த வண்டி. நெய்வார் - நெசவுகாரர். நெய்விழா - நெய்பாடுதல். நெய்விளக்கு - நெய்வார்த் தெரிக்கும்விளக்கு, மாவிளக்கு. நெய்வு - நெசவு. நெய்வைத்தல் - கொழுப்பேறுதல். நெரடு - வாசிக்கக் கடினமானது. நெரி - நெரியென்னேவல், நெரிவு,புடைவை முரிப்பு, புரி, மடிப்பு. நெரிகுழல் - சுரிகுழல், பெண் நெரிகொட்டை - நெருங்கு கொட்டை. நெரிசல் - மனக்குறை, வெறுப்பு. நெரிஞ்சி, நெரிஞ்சில் - ஓர் முட்பூண்டு இஃது தசமூலத்தொன்று. நெரிஞ்சின்முள் - ஓர் யுத்தாயுதம்.நெரிதரல், நெரிதல் - உடைதல், ஓடல்,சாய்தல், நசிதல், நொருங்குதல். நெரித்தல் - நசுக்குதல், நிமிட்டல்,நொறுக்குதல், வருத்தல்.நெரிநெட்டி, நெரிநெட்டிக்கோரை - சம்பம்புல். நெரிபடுதல் - நசுங்குதல். நெரிபிடித்தல் - புடவை முரிப்புவிடல். நெரிபுருவம் - கண் புருவம். நெரிப்பு - நெரிதல். நெரிமயிர் - சுரிமயிர். நெரிமீட்டான் - ஓர் பூண்டு. நெரியல் - மிளகு. நெரியாசம், நெரியாசி - எரிகாசு. நெரிவருணசுக்கிரன் - கண்ணோயுளொன்று. நெரிவிடுதல் - நெரி பிடித்தல். நெரிவு - நெரிதல், பகை. நெரிக்கடி - இக்கட்டு, கடுமை, பலவந்தம், வருத்தம். நெருக்கட்டியெனல் - சீக்கிரக்குறிப்பு. நெருக்கம் - இடைஞ்சல், இடைவிடாமை, ஒடுக்கம், கிட்டுமானம்,கொடுமை, நெருங்குதல். நெருக்கல் - நெருக்குதல். நெருக்கவாரம் - தரித்திரம், நெருக்கிடை. நெருக்கிடை - குரூரம், தரித்திரம்,நெருக்கம். நெருக்கு - நெருக்கம், நெருக்கிடை,நெருங்கென்னேவல். நெருக்குண்ணுதல் - நெருக்குப்படுதல், நெருங்குதல். நெருக்குதல் - ஒடுக்குதல், கடினம்பண்ணுதல், நெருங்கச் செய்தல்,பலவந்தம் பண்ணுதல். நெருக்குவாரம் - நெருக்கிடை. நெருக்கெனல் - சீக்கிரக் குறிப்பு. நெருங்கப்பிசைதல் - இறுகப் பிசைதல். நெருங்கல் - உறுதிச்சொல், கொல்லல், செறிவு, நெருங்குதல். நெருங்குதல் - உறுதிப்படுதல், கடினமாதல், கிட்டுதல், கொல்லல்.நெருஞ்சி, நெருஞ்சில் - நெரிஞ்சில். நெருடல் - இழை பொறுத்தல், உறுத்தித் தடவல், வஞ்சித்தல், நெருடுதல். நெருடன் - வஞ்சகன். நெருடு - இழையின் பொருத்து,நெருடென்னேவல், வஞ்சனை. நெருடுதல் - நெருடல். நெருட்டுப்புத்தி - வஞ்சகப்புத்தி. நெருநல் - சற்றுமுன், முன்னை நாள்,நேற்று. நெருநற்று - நேற்று. நெருநெருத்தல் - ஒலிக்குறிப்பு,சீக்கிரக்குறிப்பு. நெருநெருப்பு - அடைசல், உள்வலி,ஒலிக்குறிப்பு. நெருநெரெனல் - நெருநெருத்தல்,ஒலிக்குறிப்பு. நெருப்பன் - கடுங்கோபி, பொல்லாதவன். நெருப்பு - அக்கினி, கஸ்தூரி. நெருப்புக்கண் - சிவனது நெற்றிக்கண், தீயன். நெருப்புக்கண்ணன் - அக்கினிக்ண்ணன். நெருப்புக்கல் - காடிக்காரம், தீத்தட்டிக்கல். நெருப்புக்கொள்ளுத்துதல் - அநீதஞ்செய்தல், கோபங்கொள்ளுதல்,தீக்கொள்ளுதல். நெருப்புக்கொள்ளி - தீயன், தீயுறுவிறகு நெருப்புக்கோழி - தீக்கோழி, வான்கோழிச் சேவல். நெருப்புச்சட்டி - தீச்சட்டி. நெருப்புச்சயநீர் - ஓர்திராவகம். நெருப்புச்சாணை - ஓர் கல். நெருப்புச்சிகை - அக்கினிக் கொழுந்து. நெருப்புத்தண்ணீர் - எரிநீர். நெருப்புத்தழல் - தீக்கட்டி. நெருப்புத்திராவகம் - நெருப்புத்தண்ணீர். நெருப்புப்படுதல் - அழிதல், தீப்படுதல். நெருப்புப்பிடித்தல் - தீப்பற்றல். நெருப்புப்பொறி - தீப்பொறி. நெருப்புமழை - அக்கினி மழை. நெருப்புவட்டம் - அக்கினி மண்டலம். நெருப்புவிழுதல் - தீவிளைதல். நெருமுதல் - நருமுதல். நெரேலெனல் - ஒலிக்குறிப்பு நெர்க்குண்டி - நொச்சி. நெல் - நெல்லு, வாகை. நெல்லி - ஓர்மரம். நெல்லிக்கந்தகம் - நெல்லிக்காய்க்கந்தகம். நெல்லிக்காய் - நெல்லிமரத்தின் காய்இஃது திரிபலையி னொன்று,துவர்பத்தினு மொன்று. நெல்லிக்காய்க்கந்தகம் - ஓர் கந்தகம். நெல்லித்துத்தி - ஓர்பூடு. நெல்லிமுள்ளி - பெருநெல்லி வற்றல். நெல்லு - ஓரளவு, சாலி, நெற்பயிர். நெளி - ஓர்வகை மோதிரம், நெளியென்னேவல். நெளிச்சலன் - வளைந்தவன். நெளிச்சல் - வளைதல். நெளிதம் - அற்புதம், இலேசு. நெளிதல் - சுழிதல், புரளுதல், வளைதல். நெளித்தல் - இறுமாப்புக்காட்டல்,நெளிக்குதல். நெளிப்பு - இறுமாப்பு, நெளித்தல்,பரிகாசம். நெளியலன் - கூனன், வளையலன். நெளியல் - நெளிவுள்ளது. நெளிர் - பேசலா லெழுமொலி. நெளிர்தல் - பேசலா னெழுமொலி. நெளிவு - வளைவு, ஒரு மோதிரம். நெறநெறெனல் - ஈரடுக் கொலிக்குறிப்பு. நெறி - ஒழுங்கு, கண்மண்டைக்குழி,கற்பு, கோவில், சன்மார்க்கம்,சுளுக்கு, செவ்வை, நரப்புத்திரட்சி, நீதி முறை, வழி, விதம். நெறிகேடன் - நெறி கெட்டவன். நெறிகேடு - முறைத்தவறு. நெறிக்கல் - சுக்கான்கல். நெறிக்கோரை - ஓர்புல். நெறித்தல் - சிலிர்த்தல், செவ்வேநிற்றல், முறிப்புக்கொள்ளல். நெறிநிற்போன் - நன்மார்க்கத்தில்நிற்பவன். நெறிபிழைத்தல் - நெறி தவறுதல், நெறிப்படுத்தல் - ஒழுங்குப்படுத்தல்,குணப்படுத்தல், வழிப்படுத்தல். நெறிப்பு - சிலிர்ப்பு, முரிப்பு. நெறிமயிர் - சிலிர்த்த மயிர். நெறிமான் - நீதிமான். நெறிமை - நீதி. நெறியிலார் - கீழ்மக்கள், நீதிகேடர். நெறியிலி - துன்மார்க்கன். நெறுக்கட்டியெனல் - ஒலிக்குறிப்பு,நெறுக்கிடுதல், நெறுக்கெனல் - ஒலிக்குறிப்பு.நெறுநெறுத்தல், நெறுநெறுப்பு, நெறு நெறெனல் - ஈரடுக்கொலிக்குறிப்பு. நெறுமுதல் - நெருமுதல். நெற்கணக்கு - நெல்வாய்க்கணக்கு. நெற்கழி - ஓர்வகை நிலம். நெற்காணி - நெல் விளைநிலம். நெற்குவை - நெற்போர். நெற்குறி - நெற்கொண்டு சொல்லுமோர் சோசியம். நெற்கூர் - நெல்வால். நெற்சப்பி - ஓர் புல். நெற்பயிர் - நெல்விளைவு. நெற்பரப்பு - பன்னிரண்டு குழிகொண்ட நிலம். நெற்பழம் - மதத்தினால் வெடித்தநெல். நெற்பு - சீ, மெலிவு. நெற்பூமி - நெற்காணி. நெற்போர் - நெற்குவை. நெற்றலன் - செத்தன். நெற்றலி - ஓர்மீன். நெற்றி - உச்சி, நுதல், படைவகுப்பு, நெற்றிக்கண்ணன் - சிவன். நெற்றிச்சுட்டி - ஓராபரணம், நெற்றியில் வெண்ணிறப்புள்ளி. நெற்றிச்சுழி - நெற்றியிற் சுழிப்பு. நெற்றிச்செகில் - செகிற்சுட்டி யேறு. நெற்றித்தலம் - நெற்றி. நெற்றித்தானம் - இரண்டாமிடம். நெற்றித்திலகம் - பொட்டு. நெற்றிப்பட்டம் - ஓராபரணம். நெற்றிப்புருவம் - புருவம். நெற்றிப்பொட்டு - திலகம். நெற்றிமாலை - ஒர் மாலை. நெற்றிமுட்டு - கிட்டுமானம், சரிநேர்,முன்புறம். நெற்றியிற்கல்லுவைத்தல் - ஓராக்கினை, நெருக்கிடை. நெற்று - உலர்ந்தபழம், நெற்றென்னேவல். நெற்றுதல் - இடறுதல். நென்பு - பழு, மர ஆப்பு. நென்னல் - முன்னை நாள், நேற்று. நே நே - ஓரெழுத்து, நேயம். நேசகன் - வண்ணான். நேசம் - அன்பு. நேசயம் - நிலப்பனை. நேசன் - அன்பன், சிநேகன். நேசி - அன்புள்ளான், நேசியென்னேவல். நேசித்தல் - அன்பு வைத்தல். நேசிப்பு - அன்பு. நேடல், நேடுதல் - தேடல், விரும்பல். நேத்தி - நேற்றி, நேர்த்தி. நேத்திரசம் - கண்ணீர். நேத்திரச்சதம் - கண் மடல். நேத்திரபரியந்தம் - கடைக்கண். நேத்திரபிண்டம் - கண்விழி, பூனை. நேத்திரபேஷஜம் - கண் வைத்தியம். நேத்திரப்படலம் - ஓர்கண்ணோய். நேத்திரம் - கண், பட்டாடை, வேர். நேத்திரயோனி - இந்திரன், சந்திரன். நேத்திராஞ்சநம் - கண்ணுக்கிடும்மை. நேத்திரரோகம் - கண்ணோய். நேத்திரவாயு - ஓர் வாயு. நேத்திரவிதி - நயன விதி. நேத்திரவீட்சணம் - கிருபையாய்ப்பார்த்தல். நேத்திரவைத்தியம் - நயன பரிகாரம். நேத்திரவைத்தியன் - கண் பரிகாரி. நேத்திராஞ்சனம் - கண் மருந்து. நேத்திராமயம் - கண்ணோய். நேத்திராம்பு - கண்ணீர். நேத்திராரி - கள்ளி மரம். நேத்திராவுடதம் - கண் மருந்து. நேத்திரோற்சவம் - கண்ணுக்கு விருப்பமானது, கண்ணுக்கு ரம்மியமானது. நேத்திரௌஷதம் - கண் மருந்து. நேபத்தியம் - நாடக அரங்கில்வேடம் பூணுமிடம். நேபம் - நீர். நேபன் - புரோகிதன். நேபாலிகை - ஓர் பாஷாணம். நேபாளம் - ஓர் நச்சுமரம், தேயமைம்பத்தாறி னொன்று, நேர்வாளம். நேமகம் - நியமம். நேமநிட்டை - நியம நிட்டை. நேமம் - அணாப்பு, சாயங்காலம்,நியமம், நேரம், பங்கு, பிளப்பு,முறை, மேல், வேர், வேலி, எல்லை,பாதி. நேமனம் - நியமனம். நேமி - கடல், சக்கரவாகப்புள், சக்கிரம், தேருருள், நேமியென் னேவல்,பூமி, மூங்கில், மோதிரம், வட்டம். நேமிசந்தனா - வேங்கை. நேமித்தல் - நியமித்தல். நேமிநாதம் - ஓரிலக்கண நூல். நேமிநாதன் - அருகன், கடவுள்,திருமால், வருணன். நேமிப்புள் - சக்கரவாகப்புள்.நேமியான், நேமியோன் - விட்டுணு. நேமிவலயம் - பூமண்டலம். நேமிவலவன் - அரசன், கடவுள். நேயம் - அன்பு, எண்ணெய், நன்மை,நிலப்பனை, நெய், உறவு. நேயன் - நேசன். நேர - உவமைச்சொல். நேரகாலம் - தற்காலம். நேரங்கடத்துதல் - பொழுது போக்கல். நேரங்கெட்டநேரம் - ஒவ்வாத சமயம். நேரசை - குற்றெழுத்தேனு நெட்டெழுத்தேனுந் தனித்தும் ஒற்றடுத்தும் வருவது. நேரசைக்கலித்துறை - நேரசையாய்த்தொடங்குங் கலித்துறை. நேரஞ்சாய்தல் - பொழுது சரிதல். நேரடி - அளவடி. நேரஸ்தன் - குற்றவாளி. நேரம் - அபராதம், காலம், குற்றம்,சமயம், தண்டிப்பு, நற்சமயம்,பகலிற் பாதி. நேரலர் - பகைவர். நேரல் - ஒத்தர். நேராக்கல் - சரிப்படுத்துதல். நேராதல் - இணங்கல், சரியாதல்,அழியாதல். நேரார் - பகைவர். நேராளி - நேருள்ளவன். நேரி - சோழ தேயத்தோர் மலை. நேரிசம் - அம்பு, எறி படை. நேரிசைக்கலிப்பா - கலிப்பாவினோர்பேதம். நேரிசைச்சிந்தியல்வெண்பா - மூன்றடியாய் நேரிசை வெண்பாப்போலவிரண்டாமடி யினிறுதி தனிச்சொற் பெற்று வருவது. நேரிசையாசிரியப்பா - ஈற்றயலடிமுச்சீராய் மற்றையடி யெல்லாநாற் சீராய் வருவது. நேரிசையொத்தாழிசைக்கலிப்பா - தரவு தாழிசை தனிச்சொல் சுரிதகமெனுநான்குறுப்புக் கொண்டுவருவது. நேரிசைவெண்பா - நான்கடியாய்இரண்டாமடியி னிறுதி தனிச்சொல்லாய்வர அடி முழுதும்ஓரெதுகை யாயேனும் முன்னிரண்டும் ஓரெதுகையும் பின்னிரண்டு மற்றோ ரெதுகையாயேனும் வருவது. நேரிடுதல் - எதிர்த்தல், எதிர்ப்படுதல், சம்பவித்தல், தொடங்குதல். நேரிட்டபடி - எழுந்த மானம். நேரியது - நேரானது. நேரியன், நேரிவெற்பன் - சோழன்,நுண்ணறிவினன். நேரிழை - பெண். நேரியிறை - சோழன். நேரீற்றியற்சீர் - நேரசையாலிறுமாசிரியவுரிச்சீர். நேருக்குச்சீர் - செம்பாகம். நேரேடம், நேரேடு - நாவன் மரம். நேரொன்றாசிரியத்தளை - இயற்சீர்கள் ஒன்றும் பலவுந் தம்முளொத்து நின்ற சீரினீற்றசைநேராய் நிற்க வருஞ்சீர் முதலசைநேராய்ஒன்றி வருவது. நேரோடல் - நேராயோடல் இஃதுதுரகதியி னொன்று. நேர் - உடன்பாடு, உண்மை, உவமை,ஒப்புரவு, கற்பு, சரி, செவ்வை,தகுதி, நீதி, நீளம், நுட்பம், நேரசை,நேரென்னேவல், பாதி, முன்,மேல், வரிசை, மிகுதி, கூடுதல். நேர்கடன் - நேர்ந்த கடன். நேர்கட்டுதல் - சரிக்கட்டுதல். நேர்காட்டுதல் - சரிவளமாக்குதல்,முன்காட்டுதல், விழுங்குதல். நேர்காற்று - வளக்காற்று. நேர்சீர் - இணக்கம், நேருக்குச் சீர். நேர்சொல்லுதல் - சத்தியஞ் சொல்லுதல். நேர்ச்சி - இணக்கம், சம்மதம், சிநேகம், தகுதி, நேர், பிரதிக் கினை. நேர்ஞ்சிராய் - நேரிய சிராய். நேர்தல் - ஈதல், உடன்படல், எதிர்த்தல், கிட்டல், சம்பவித்தல், பொருதல், மெலிதல், வேண்டுதல்,தீண்டல். நேர்திறம் - பாலைப் பண்ணின்றிறமைந் தனு ளொன்று. நேர்த்தி - சிறப்பு, திருத்தமுள்ளது,நேருதல், நேர்ந்த பொருள். நேர்த்திக்கடன் - வாசாதத்தம் பண்ணியது, பிரார்த்தனை பண்ணிக்கொண்டது. நேர்த்திக்குறிப்பு - தவறாமை. நேர்நஞ்சு - கல்மதம். நேர்நிதானம் - சரி நிதானம் நேர்நிறை - கற்பு, சரிபாரம், நீதி. நேர்நெட்டி - ஓர் பூடு.நேர்ந்தபடி, நேர்ந்தபாடு, நேர்ந்தபால் - எதிரிட்டபடி. நேர்ந்தார் - சிநேகிதர். நேர்ந்துகொடுத்தல் - கொடுக்கநியமித்தல். நேர்பசை - நேர்க்கீழ்க் குற்றுகரமுற்றுகரம் வருவது. நேர்படுதல் - இணங்குதல், சந்தித்தல்,சம்மதித்தல், சிநேகித்தல், எதிர்தல். நேர்பண்ணுதல் - சத்தியம் பண்ணுதல்,சமனாக்குதல். நேர்பாடு - சம்மதி, நினையாமல்வருகிறது, நீளம். நேர்பாடுசொற்பாடு - சொற்படிவாய்ப்பு, நினைத்திராத காலத்துவந்தது. நேர்பு - எழுச்சி, ஒன்றிப்பு, நீளம். நேர்போதல் - இணங்குதல், குணமாதல், சரிபோதல். நேர்ப்பிசின் - ஓர் பூடு. நேர்ப்பு - நேர்த்தி. நேர்முகம் - எதிர் முகம். நேர்மை - இணக்கம், செவ்வை,நிதானம், நுண்மை. நேர்மையம் - சரி நடு. நேர்வளம் - செல்வழியாழ்த்திறம்பாலையாழ்த்திறம், வேய்ங்குழல். நேர்வாளம் - ஓர் மரம், நேபாளங் கொட்டை. நேர்வான் - சித்திரை நாள். நேர்வு - உடன்பாடு, எதிர்தல், கூடுதல், கொடை, சம்பவிப்பு, சருவுதல், பொருதல். நேளி - தாமரை. நேற்றி - செவ்வை, நல்லது, நேர்த்தி. நேற்று - முதனாள், நென்னல். நை நை - இகழ்ச்சிக் குறிப்பு, ஓரெழுத்து,நையென்னேவல், நைகரம் - துன்பம், வருத்தம். நைகொதி - நசி கொதி. நைக்காட்டுதல் - நையாண்டி பண்ணல். நைசர்க்கிகம் - சுபாவம். நைசல் - வியாதி, நைசிகம், நைசியம் - காக்கை, நாசியிற் புகுத்து மருந்து. நைச்சி - காகம், பாம்பு. நைச்சிகம், நைச்சியம் - தாழ்வு. நைஷதம், நைடதம் - ஓர் பிரபந்தம்,நிடதம். நைட்டிகன் - நிட்டைக்காரன், ஆயுள்முழுதும் பிரமசரியங் காப்போன். நைட்டூரியம் - நிட்டூரம். நைதல் - இரங்கல், கெடுதல், தளர்தல், துக்கித்தல், துன்புறல், நசிதல்,வதங்கல், வருந்தல், வாடல். நைதிகை - முல்லை. நைதெனல் - இரக்கக்குறிப்பு, மெலிவின் குறிப்பு. நைத்தல் - கெடுத்தல், தளர்த்தல்,துக்கப்படுத்தல், நசித்தல், வருத்தல், வாட்டல், தின்னல்.நைத்திகம் நைத்தியம் - நித்தியம்,நித்தியாராதனை. நைநையெனல் - இகழ்ச்சிக் குறிப்பு. நைந்திகை - நைதிகை. நைபடல் - நசிபடல். நைபாலி - அடுக்குமல்லிகை, சிவந்தபாஷாணம், நீலம். நைபாலிகம் - தாமிரம். நைபுணம் - நிபுணத்துவம். நைபுணன் - நிபுணன். நைபுண்ணியம் - நிபுணத்துவம். நைமிசம், நைமிசாரணியம் - ஓர் வனம். நைமித்திகம் - நிமித்தம், விசேடாராதனை. நைமித்திகநாதம் - நிமித்தத்தாற் செய்யும் தானம். நைமித்தியம் - நைமித்திகம். நையத்தியம் - நியதத்துவம். நையம் - நைசியம். நையல் - கிரந்தி வியாதி, துன்பம்,மெலிவு, வசூரி. நையாண்டி - இகழ்ச்சி, சரசம், பரிகாசம். நையாயிகம் - ஓர்மதம். நையாயிகன் - நியாய சாத்திரி,நையாபிகமதானுசாரி. நைரந்தரியம் - இறுக்கம். நைராக்கியம் - பரிகாசம். நைராசியம் - ஆசையின்மை. நைருதி - நிருதி, நிருதி திசை. நைர்க்குண்ணியம் - நிற்குணம். நைர்மல்லியம் - சுத்தம். நைவளம் - குறிஞ்சியாழ்த்திறம். நைவு - நைதல். நைவேதனம் - நிவேதனம். நைவேத்தியம் - காணிக்கை, தேவர்க்குச்சமர்ப்பிப்பது. நொ நொ - ஓரெழுத்து, துன்பம், நொவ்வென்னேவல், நோய், வருத்தம். நொக்காங்குலை - நுக்காங்குலை. நொக்கு - வெடிப்பு, நொங்கு - நுங்கு. நொசி - மெல்லியது. நொசிதல் - துவளல், நுண்மையாதல், வருந்தல், வாடல், வளைதல். நொசிவு - துவள்வு, நுண்மை, வருத்தம், வாட்டம். நொச்சி - ஓர்செடி, அஃது அட்டாதசமூலத் தொன்று, சிற்றூர், மதில். நொச்சிமாலை - ஓர் பிரபந்தம், அஃதுமாற்றார்க் கெதிரூன்றிநொச்சிப்பூ மாலை சூடித் தம்மதில் காக்குந் திறங்கூறுவது மாற்றார்க் கெதிரூன்றித் தம்மதில்காப்போர்க்கு மாலை. நொடி - கால நுட்பம், கைந்தொடி,சொல், நொடியென்னேவல், பள்ளம், விடுகதை. நொடிதல் - சொல்லல். நொடித்தல் - அழித்தல், கையால்நொடிக்குதல், சொல்லல், பால்சுரத்தல். நொடிபாராட்டுதல் - விடுகதை சொல்லல். நொடிப்பு - நொடித்தல். நொடியவிழ்த்தல் - விடுகதை விளக்குதல். நொடுத்தல் - விற்றல். நொடுநொடுக்கெனல் - ஒலிக்குறிப்பு,விரைவுக் குறிப்பு. நொடுநொடுத்தல் - துடினமாய்நடத்தல், பரபரத்தல். நொடுநொடுப்பு - துடினம், பரபரப்பு. நொடுநொடெனல் - நொடுநொடுத்தல். நொடை - விலை, விற்றல். நொட்டை - நொன்னை. நொண்டல் - நொண்டுதல், முகத்தல்,விழுங்கல். நொண்டி - ஓர் நூல், கால்முடவன்,பொய்க்கால். நொண்டுதல் - கால் முடக்கப்பட்டுக்குந்தி நடத்தல். நொதி - நொதியென்னேவல்,பெருஞ்சேறு. நொதித்தல், நொதிப்பு - ஊறல்,கொப் புளித்தல், சீக்கட்டல்,நுரைத் தெழும்பல். நொதுக்கல் - நொதுப்புள்ளது. நொதுத்தல் - அவித்தல்.நொதுநொதுத்தல், நொதுநொதுப்பு, நொதுநொதெனல் - இளக்கக்குறிப்பு. நொதுப்பு - இளக்கம். நொதுமலர் - அயலோர். நொதுமல் - அயல், நொய்மை, பற்றிகலின்மை, விருப்பு வெறுப்பின்மை. நொத்தல் - நொப்புக்கட்டுதல்,வருத்துதல். நொத்து - நொப்பு.நொந்தகைமை, நொந்தலை, நொந் தலைமை - நோ, பலவீனம்,வறுமை. நொப்பு - ஆட்டின்முலையிற் சுற்றியலை, தடை, நுரை. நொய் - இலேசு, உடையுந்தன்மை,குறுநல், மிருதுத்துவம், மென்மை,குறுணை. நொய்சு - நொய்மை. நொய்தல் - நுண்மை. நொய்து - மிருது, மெல்லிசு, விரைவு. நொய்தெனல் - மெதுமெதுத்தல்,விரைவின் குறிப்பு. நொய்மை - உருக்கம், எண்வகை யூறினொன்று, எளிமை, கேடு, தளர்வு,நொய்வு, மிருது, மென்மை,வறுமை. நொய்யசொல் - எளியசொல். நொய்யரிசி - குறுநல், குறுணை. நொய்யவன் - எளியவன், பலவீனன்,வறியவன், வெஞ்சொற் பொறாதவன். நொய்யெனல் - நுண்மைக்குறிப்பு. நொய்வு - இலகு, நொய்மை. நொரு - நுரு, காய்ப்புமாறினபின்னரும்பும் பிஞ்சு, பயிரினடியில்முளைப்பது. நொருகை - தின்பண்டம். நொருக்கரிசி - உக்கலரிசி, முட்டரிசி. நொருக்கல் - நொருங்கப்பட்டது. நொருக்காய் - நுருவிற்காய். நொருக்கு - அடி, நெரிவு, நொருக்கென்னேவல், முறிவு. நொருக்குதல் - அடித்தல் , நருக்குதல். நொருங்குதல் - நருங்குதல், முரிதல்.நொருநொருத்தல், நொருநொருப்பு, நொருநொரெனல் - ஈரடுக்கொலிக்குறிப்பு. நொருவல் - நொரு, நொருங்குண்டதூள். நொருவெடித்தல் - பயிர்கள் கப்பித்தல்.நொலை, நொலையல் - அப்பவருக்கம். நொவ்வு - தளர்வு, நொய்மை, நொவ்வென்னேவல், நோ, வருத்தம் நொவ்வுதல் - நொய்தாதல், வருந்துதல். நொளநொளத்தல் - நளுநொளுத்தல். நொளுக்கல் - இளம்பாக்கு. நொளுநொளுத்தல் - நொள நொளத்தல். நொளுநொளெனல் - நொள நொளத்தல். நொளுவல் - நொளுக்கல். நொளுநொளுப்பு - நளுநொளுப்பு. நொள்கல், நொள்குதல் - அச்சக்குறிப்பு, ஞொள்கல், முகத்தல். நொள்ளல் - குருடு, கொசுகு, நுளம்பு,நொள்ளுதல். நொள்ளுதல் - நொள்குதல், விழுங்குதல், முகத்தல். நொள்ளை - குருடு, நாகரவண்டு. நொறிதல் - விரைவு, நொறில் - அடக்கம், விரைவு. நொறுக்கு - அடிக்கை, நருக்கு. நொறுக்குச்சக்கந்தம் - பரிகாசம். நொறுக்குதல் - நருக்குதல், பொடியாக்கல். நொறுக்குநொறுக்கெனல் - ஈரடுக்கொலிக் குறிப்பு. நொறுங்கல் - நொறுங்குதல்,நொறுங்கினது. நொறுங்கு - குறுநல், நொய்மை,நொறுங்கென்னேவல். நொறுங்குதல் - நருங்குதல், நொய்தாதல்.நொறுவை, நொற்பம், நொற்பன் - நொய்து. நொன்னை - சரசம். நோ நோ - இன்மை, ஓரெழுத்து, சிதைவு,துக்கம், துன்பம், நோவென்னேவல், பலவீனம், வியாதி. நோக்கம் - அருமை, அழகு, உயர்ச்சி,எண்ணம், கண், காவல், புன்மை,தோற்றம், பார்வை, விருப்பம். நோக்கர் - கழைக் கூத்தார். நோக்கல் - காணல், காத்தல், நோக்குதல். நோக்காடு - தரித்திரம், நோ, பிரசூதிநோ, நோதல். நோக்கு - அழகு, எண்ணம், கண்,கிரகநிலைகளி னேழாமிடம், தயவு,நோக்கென்னேவல், பார்வை,விருப்பம், வினோதக் கூத்து. நோக்குதல் - கடாட்சித்தல், காத்தல்,தயவுசெய்தல், பார்த்தல்,விரும்புதல், கருதல். நோக்குவித்தை - ஓர் தந்திரவித்தை. நோசல் - நோவு. நோஞ்சல் - மெலிதல், மெலிந்தது. நோஞ்சி - மெலிந்தவன். நோடாலம் - நூதனம், நொன்னை. நோட்டம் - கண்ணோடி யறிதல், கண்திட்டம், விலை. நோட்டம்பார்த்தல் - தகுதியறிதல்,விலை பார்த்தல். நோட்டம்பேசுதல் - பிறரைத் தன்பேச்சுக் குட்படுத்தும்படி பேசல். நோண்டல், நோண்டுதல் - உரித்தல்,கிண்டல், கிள்ளுதல், தோண்டல்,முகத்தல். நோதலை - தரித்திரம், நோ, மெலிவு நோதல் - கேடு, துக்கித்தல், துன்புறல்,நோயுறல், பெலவீனம், மரத்தின்சதா, வறுமை. நோப்படுதல் - காயப்படல், மெலிதல்,விதனப்படுதல். நோப்படுத்துதல் - காயப்படுத்துதல்,மெலிவித்தல், விதனப்படுத்தல். நோம்பு - நோன்பு. நோம்புதல் - நுணாவுதல். நோயாளி - வியாதிக்காரன். நோயின்மை - நாட்டுப்பெருமையாறினொன்று. நோய் - துன்பம், வருத்தம் இஃதுமாயயாக்கை பதினெண் குற்றத்தொன்று. நோய்கொள்ளுதல் - வியாதி கொள்ளுதல். நோய்ச்சல் - நோய் கொள்ளல். நோய்ஞ்சலன் - மெலிந்தவன். நோய்ஞ்சல் - நோஞ்சி, நொய். நோய்ஞ்சி - வியாதிகொண்டு மெலிந்தது. நோய்ஞ்சியன் - நோய்ஞ்சலன். நோய்த்தல் - நோய்ச்சல். நோய்முகன் - சனி. நோலாதார் - தவமில்லார், பொறாமையுள்ளோர், பொறுமையில்லாதவர். நோலாமை - தவமின்மை, பொறாமை. நோலோர் - நோலாதார். நோலுதல் - நோற்றல், பொறுத்தல். நோலை - எள்ளுருண்டை. நோவாளி - நோவுள்ளான், மிடியன். நோவு - நோய், மஞ்சள், மெலிவு,வருத்தம். நோழிகை - நூற்பந்து. நோற்பு - தவம், பொறுத்தல், விரதம். நோற்றல் - தவஞ்செய்தல், பொறுத்தல். நோனாமை - தவமின்மை, பொறாமை. நோனார் - தவமில்லார், பகைவர்,பொறாமையுள்ளோர், பொறுமையில்லார். நோனுதல் - தவஞ்செய்தல், நிலைநிறுத்தல், பொறுத்தல், விரதமனுட்டித்தல். நோன்பி - தவத்தி. நோன்பு - உபவாசம், தவம், விரதம். நோன்புதுறத்தல் - பாரணை பண்ணல். நோன்மை - தவம், பெருமை,பொறுமை, வலி. நோன்றல் - தள்ளல், நிலை நிறுத்தல்,பொறுத்தல். நோன்றாள் - வலியகால். ப ப - இருபதிலோர் பாகத்தைக்காட்டும் ஓர் கீழ்வாயிலக்கக்குறி,ஒரெழுத்து, காற்று, சாபம், பெருங்காற்று. பஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா - பலதாழிசைகளோடு மற்றையுருப்புக்களையும் பெற்றுவருவது. பஃறி - இரேபதி, ஓடம், மரக்கலம். பஃறுளியாறு - குமரியாற்றுக்குத்தெற்கின்னோடிய வோராறு. பஃறொடைவெண்பா - நான்கடியின்மிக்க பலவடிகளைப் பெற்றுவருவது. பகசித்து - கண்ணன், வீமன். பகடக்காரன் - அதட்டி, எத்தன்,தந்திரி, வெளி வேவுக்காரன். பகடம் - சிலம்பம், தந்திரம், வெருட்டு, வெளிவேடம்.பகடி - அகசியக்காரன், பரிகாசம்,விகடம், பிரகிருதி. பகடு - ஆனை, எருமை, பசு, இவற்றினாண், ஓடம், தெப்பம், பெருமை,பொதியெருது, யானை, விசாலம், மரக்கலம்.பகடை - அதிட்டம், சக்கிலிச்சாதி,சூதுதாயங்களி னொன்று, சிவதை. பகட்டு - அதட்டு, இறுமாப்பு, தந்திரம்,பகட்டென்னேவல், பார்வை,பிரகாசம், மயக்கம், மினுக்கம்,வெருட்டு, வெளி வேடம். பகட்டுதல் - அதட்டுதல், தந்திரம்பண்ணுதல், வெருட்டுதல், வெளிவேஷங்காட்டுதல். பகண்டை - சிவற்பட்சி, கிலுகிலுப்பை. பகதத்தன் - நரகாசுரன் மூத்தமகன். பகந்தரம் - ஓர் குதநோய். பகநிசூதநன் - கண்ணன், வீமன். பகந்திரம் - நூலடியிற்கட்டு. பகபகெனல் - வேகக்குறிப்பு. பகம் - அவாவின்மை, ஈச்சுரத்தன்மை, கீர்த்தி, செல்வம், ஞானம்,வீரியமென்னுமறு குணம், அழகு,காக்கட்டான் கொடி, காந்தி,கொக்கு, பெண் குறி, மகத்துவம்,முத்தி, மந்தாரை. பகரம் - அலங்காரம், ஓரெழுத்து,மினுக்கம். பகரிப்பு - மினுக்கு. பகர் - பங்கம் பாழை. பகர்ச்சி - சொல். பகர்தல், பகர்வு - கூறல், சொல்லல்,விற்றல். பகலவன் - சூரியன், பரணிநாள். பகலோன் - சூரியன். பகல் - ஒளி, சூரியன், தினம், நடு,பகற்காலம், பகுதல், பிரிதல்,பிளத்தல், மதியாணி, மத்தியானம்,மூர்த்தம், நுகத்தின் மத்தியாணி. பகல்மானம் - பகனாழிகை. பகல்வத்தி - ஓர் வினோதவிளக்கு. பகல்வாயில் - பகல்தோற்றுகிறவழி,கீழ்த்திசை. பகல்வெள்ளிகாட்டுதல் - இன்மைப்பொருடரு மோருவமைக் குறிப்பு. பகல்வேஷம் - பகற்காலத் துருமாற்றல். பகவதி - தருமதேவதை, துர்க்கை,பார்வதி. பகவதிநாள் - பூரநாள். பகவற்கீதை - பாரதத்தோர் பிரிவு. பகவற்பத்தன் - தேவ தொண்டன். பகவன் - அரன், அரி, அருகன், கடவுள்,குரு, பிரமன், புத்தன். பகவான் - கடவுள், சூரியன், துவாதசாதித்தரிலொருவன். பகவிருக்கம் - நிலக்கடம்பு. பகவு - துண்டு, பங்கு, பிளப்பு,வெடிப்பு, பிரிவு. பகவைரி - கண்ணன், வீமன். பகழி - அம்பிற்குதை, அம்பு. பகழிக்கூத்தர் - திருச்செந்தூர் முருகன்பிள்ளைத் தமிழ்ப்பாடிய புலவர். பகற்குருடு - காக்கை. பகற்குறி - களவுப் புணர்ச்சியிற் பகற்காலஞ் சந்திக்க நியமிக்குமிடம். பகற்பாடு - பகற்காலம். பகன் - துவாத சாதித்தரிலொருவன்,பகாசுரன். பகன்றை - கிலுகிலுப்பை, கிலேதை,சீந்தில், பெருங்கையால் என்னுங்கொடி. பகாங்குரம் - பெண்யோனி யுறுப்பினொன்று. பகாசுரன் - ஓரசுரன். பகாசுரவைரி - வீமன். பகாநிலை - பிரிவுபடாது நிற்பது. பகாப்பதம் - பகுப்பிற்பயன் படாப்பதம். பகாப்பொருள் - கடவுள். பகாரி - கண்ணன், வீமன். பகாலம் - கபாலம். பகாலி - சிவன். பகிகண்டம் - பிடரி. பகிடி - பரிகாசம், விகடம், பகடி. பகிரங்கம் - மறைப்பின்மை, வெளியரங்கம். பகிரண்டம் - அண்டத்தின் வெளி,பேரண்டம். பகிரதன் - ஓரரசன். பகிர் - பகிரென்னேவல், பகுப்பு,வெடிப்பு, பங்கு. பகிர்ச்சி - பகுப்பு. பகிர்தல் - பங்கிடல் , பிளத்தல். பகிர்விடல் - பிளவாதல். பகினி - உடன்பிறந்தாள், பெண். பகீகனநேத்திரம் - கண்ணரம்பைப்பற்றின ஓர் சன்னி. பகீரதன் - ஓர் சூரிய குலத்தரசன். பகீரதி - கங்கை. பகீரிடுதல் - வெடித்தல், வேகக்குறிப்பு. பகீரெனல் - அச்சக் குறிப்பு. பகு - பகுவென்னேவல், பலது. பகுதி - இயல்பு, குடியிறை, சொன்முதனிலை, பகுபதத்தோருறுப்பு,பங்கு, படை, பிரிவு, பிரகிருதி. பகுதிகட்டுதல் - இறை கொடுத்தல்,பங்கிடுதல். பகுத்தல் - ஈதல், தறித்தல், பங்கிடல்,இஃது வணிகரெண்குணத்தொன்று, வெட்டல். பகுத்தறிதல் - பிரித்தறிதல், மனநியாயமறிதல், நன்மைதின்மையறிதல். பகுத்தறிவு - மனநியாயம், நன்மைதீமையறியுமறிவு. பகுபதம் - பகுதி விகுதி முதலியவுறுப்பினானியன்ற பதம். பகுப்பு - பகுதி, பகுத்தல், பிரிவு. பகுவபஞ்சம் - உபநிடத முப்பத்திரண்டினொன்று. பகுவாய் - பிழா, பேழ்வாய். பகுளசத்தமி - கிருட்டிணபக்கச்சத்தமி. பகுளம் - கிருட்டிண பக்கம். பகை - பகையென்னேவல், விரோதம்,வெறுப்பு, மூன்றாவதாளுவதுநரம்புகள். பகைஞர் - சத்துருக்கள். பகைஞன் - பகைவன். பகைத்தல் - பகைகொள்ளல், முரணல். பகைத்தானம் - ஆறாமிடம். பகைத்தொடை - முரண்தொடை. பகைநாள் - பிறந்தநாட்கு முதனாள். பகைநிரைகவர்தல் - பகைவரதுகாலிகளைக்கோடல் அஃதுஎண்வகை வெற்றியி னொன்று. பகைப்படல் - விரோதமாதல். பகைப்பு - பகைத்தல். பகைமுன்னெதிரூன்றல் - பகைவர்க்கு முன்னெதிர்த்தல் அஃதுஎண்வகைவெற்றியினொன்று. பகைமேற்செல்லல் - மாற்றாரைப்பொரப்போதல் இஃது எண்வகைவெற்றியி னொன்று. பகைமை - பகைத்தனம். பகையகம் - போர்க்களம். பகையாளி - பகைஞன். பகைவரரண்வளைத்தல் - மாற்றாரதுமதிலை வளைத்த அஃது எண்வகை வெற்றியி னொன்று. பகைவர் - சத்துருக்கள். பகோளம் - வான உண்டை. பக்ககம் - பக்கம், புறக்கதவு. பக்ககன் - கூட்டாளி. பக்ககேசம் - நரை மயிர். பக்கசம் - செட்டை. பக்கசரம் - சந்திரன், யானை. பக்கசன்மன் - சந்திரன். பக்கசூலை - பக்கத்திலே வருஞ்சூலை பக்கச்சொல் - துணைச்சொல். பக்கணம் - ஊர், கிராமம், பற்பலதீவிற்பண்டம் விற்குமிடம், வேடர்வீதி. பக்கதி - செட்டைமூலம், பிரதமை. பக்கத்தார் - அயலவர், இனத்தவர்,கன்னையி லுள்ளவர். பக்கத்துணை - பக்கவுதவி. பக்கபாதம் - பட்சபாதம். பக்கபாதிதை - சேர்மானம். பக்கப்பகந்திரம் - குறியின் பக்கத்தில்வருஞ் சிலந்தி. பக்கப்பிளவை - முள்ளந்தண்டருகிற்பிளவை. பக்கப்போலி - பொருளிருக்கு மிடம். பக்கமூலம் - செட்டைக் குழி. பக்கம் - அம்பிறகு, அருகு, அருத்தாபத்திப்பொருள், அவயவம்,இடம், இராசயானை, இறகு,உணா, எதிரிடை, ஓர்கையணி,கனிவு, சந்திரனாள், சமீபம்,சுத்தம், செட்டை, சேனை, தகுதி,நட்பு, நாரை, பட்சம், பதினைந்துநாள், புட்பொது, புறம், வகுப்பு,வமிசம், வால், வீடு, சகாயம். பக்கரசம் - மது. பக்கரை - அங்கவடி, சேணம், முகட்டின் கீழ்க்கட்டு, துணிப்பை. பக்கரைக்கட்டு - முகட்டுக்கட்டு. பக்கர் - சுற்றத்தார், பக்கல். பக்கல் - இனம், பக்கம். பக்கவாகனன் - பட்சி. பக்கவாதம் - பாரிசவாதம். பக்கவாயு - பக்கத்தி னெருக்கும்வாயு. பக்கவாரி - வெந்நீர். பக்கறை - குழப்பம். பக்கசாயம் - இரைகுடர். பக்காந்தம் - பக்கத்தின் கடைநாள். பக்கான்னம் - சமைக்கப்பட்ட போசனம். பக்கி - பக்கியென்னேவல், பக்ஷி,பறவை, பிள்ளை. பக்கிகை - அத்தாட்சி, தந்திரம்,பெறாநியாயம். பக்கிடுதல் - திடுக்கிடுதல், வெடித்தல். பக்கித்தல் - பட்சித்தல். பக்கிராசன் - கலுழன். பக்கிநேத்திரகம் - ஓர் நோய். பக்கு - உடைவு, ஊத்தை, பிளவு,புண்ணசறு, பொருக்கு, மரப்பட்டை. பக்குடுக்கைநன்கணியார் - புறநானூறு பாடிய புலவரி லொருவர். பக்குப்பக்கெனல் - அச்சக்குறிப்பு. பக்குவகாலம் - தக்க காலம். பக்குவசாலி - பக்குவ வாளி. பக்குவப்படுதல் - இருதுவாதல்,தகுதியாதல். பக்குவமாக்குதல் - தகுதியாக்குதல். பக்குவமாதல் - ஏற்றதாதல், தகுதியாதல். பக்குவம் - தகுதி, திராணி, பருவம். பக்குவரசம் - சாராயம். பக்குவர் - மோட்ச பக்குவர் மூவகைஅவர் கருமகாண்டிகர் ஞானகாண்டிகர் பத்திகாண்டிகர்.பக்குவவாளி, பக்குவன் - தகுதியுள்ளோன், வைத்தியன். பக்குவாசயம் - அன்னமயகோசம். பக்குவாத்துவா - பரிபாகி. பக்குவி - பக்குவப்பட்ட பெண்,பரிபாகி. பக்குவிடுதல் - பிளத்தல், வெடித்தல். பக்கெனல் - அச்சக் குறிப்பு, ஒலிக்குறிப்பு. பக்தன் - பத்தன், தொண்டன். பக்தி - பத்தி, கடவுளிடத்தன்பு,பெரியோரிடத்தன்பு. பக்திஸ்தானம் - ஐந்தாமிடம். பங்கக்கிரீடம் - பன்றி. பங்கசம் - பங்கயம், தாமரை. பங்கசாதம் - தாமரை. பங்கசார்த்தம் - அநிதார்த்தம்,பிசுனத்தனம். பங்கசினி - தாமரைக்குளம். பங்கசூரணம் - தாமரைவேர். பங்கணம் - நீசர் சேரி. பங்கணி - பங்கம்பாளை. பங்கப்படுதல் - பின்னப்படுதல்,அவமானப்படுதல். பங்கப்பாடு - ஈனம், தோல்வி, பழுது,வெட்கம். பங்கம் - அசைவு, அச்சம், அலை,ஈனம், எத்து, குழைசேறு, குளம்,குற்றம், துண்டு, தூசு, தோல்வி,நீர்ப்பாய்ச்சல், நோய், பந்தயம்,பயம், பழுது, பாவம், பிளப்பு,பின்னம், புழுதி, முடம், வத்திரம்,வெட்கம், வேறுபாடு, அவமானம், கொலை.பங்கம்பாலை, பங்கம்பாளை - ஆடுதின்னாப்பாளை, பொன்முசுட்டை. பங்கயத்தவன் - பிரமன். பங்கயம் - தாமரை. பங்கயன் - சூரியன், பிரமன். பங்கயாசனன் - பிரமன். பங்கரம் - அதிவிடயம். பங்கருதம் - தாமரை. பங்கவாசம் - நண்டு. பங்காரம் - படி, நரம்பு. பங்காரு - ஓர்வகைப் பொன். பங்காலி - வெளவால். பங்காளம் - ஓர் தேயம், ஓர்பண்.பங்காளன், பங்காளி - கூட்டாளி,பங்குக்காரன். பங்கி - ஆண்மயிர், கஞ்சா, பங்கியென்னேவல், பிரிவு, புறமயிர். பங்கிடுதல் - பகர்தல். பங்கித்தல் - அரிதல், பிளத்தல். பங்கிலம் - தெப்பம். பங்கிவித்து - கஞ்சா விதை. பங்கீடு - உபாயம், திட்டம், பங்கு,பங்கு செய்தல், வழிவகை. பங்கு - கூட்டு, கூறு, சனி, பாதி,முடம், முடவன். பங்குக்கிரகம் - மகரராசி. பங்குசம் - தலைக்கோலம். பங்குதை - அவலட்சணம். பங்குபடுதல் - பின்னப்படல், பொதுவாதல். பங்குபட்டநாள் - இரண்டு ராசியிற்றன்னங்கசஞ் சேர்ந்து நிற்கும்பெருநாள். பங்குரம் - ஆற்றுமுடக்கு, வளைவு. பங்குரை - அதிவிடயம். பங்குவீதம் - பங்கின்படி. பங்குனன் - அருச்சுனன். பங்குனி - உத்திரநாள், ஓர் மாதம். பங்கூரம் - மரமஞ்சள்.பங்கேசம், பங்கேருகம் - தாமரை. பசகன் - சமையற்காரன். பசண்டை - ஈரம், பச்செனவு. பசதன் - இந்திரன், சூரியன், தீ. பசத்தல் - காம முதலியவற்றாற்பொன்னிறப்புள்ளி யுண்டாதல்,நிறமாறுதல், பசுமையாதல்,மங்கல். பசந்தம் - நேரம். பசந்து - பசுந்து. பசபசத்தல் - அலப்புதல், தினவெடுத்தல். பசபசப்பு - பசபசத்தல். பசபசெனல் - அலப்புதல், மசமசத்தல். பசப்பல் - பசப்புதல். பசப்பு - ஈரடிப் பிடிப்பு, ஏய்ப்பு,சாரம், பசலை, பச்சைநிறம்,பொன்மை, மயப்பு. பசப்புதல் - ஓயாமற் பேசுதல், மயக்கல். பசமந்ததிரம் - மரமஞ்சள். பசம்பை - கழுந்து. பசர் - சமைத்தல். பசலிமம் - வெந்தது, பசலை - காம முதலியவற்றாலுண்டாம் பசப்பு, தேமல், வருத்தம். பசவ்வியம் - புல். பசளி - ஓர் கீரை, மடைமுகம். பசளை - எரு முதலிய வுரம், ஓர் கீரை. பசளைக்கதை - முகமன் கதை, வீண்கதை. பசறு - பச்சிலைச் சாறு. பசனம் - சங்கோசை, சமைத்தல்,சிற்றின்பம், வணக்கம், வழிபாடு. பசனன் - அக்கினி, பாகம் செய்வோன் பசாசம் - பேய். பசாசன் - பேயன். பசாசு - பேய். பசாடு, பசாடை - கண்ணிற்படலம்,மாசு. பசாரி - விபசாரி, வீதிக்கு வருபவள். பசார் - சாரமற்றது. பசானம், பசான் - ஓர் நெல். பசி - அக்கினி, சமைத்தல், பசித்தல்,இஃது உயிர் வேதனையினொன்று,மாயையாக்கை பதினெண்குற்றத்து மொன்று. உணவின்மையால் வயிற்றில் தோன்றும்உளைவு. பசிதம் - சாம்பர், விபூதி. பசித்தல் - பசிகொள்ளல். பசிப்பு - பசி. பசியம் - கயிறு. பசியெடுத்தல் - பசியுண்டாதல். பசிரி - ஓர் கீரை. பசு - ஆன், இடபவிராசி, உயிர்,எருது, கடவுள், சீவனுடையது,பலி, மிருகம், யாகத்துக்குரியஆடு, வெள்ளாடு. பசுகரணம் - உயிர்க்கரணம், சீவச்செயல். பசுகாதம் - மிருகபலி. பசுகாயத்திரி - பலியிடப்படு மிருகத்திற்குபதேசிக்கு மந்திரம். பசுகை - புன் மிருகம் பசுகௌவியம் - மிருக பலி பசுக்கன்று - பசுவின் கன்று. பசுக்காத்தல் - சூத்திரர், வைசியர்க்குரிய வறுதொழிலி னொன்று. பசுக்காவலர் - இடையர். பசுக்கிரியை - புணர்ச்சி. பசுங்கதிர் - இளங்கதிர், சந்திரன். பசுங்கதிர்த்தே - சந்திரன். பசுங்களை - பச்சைக் கல். பசுங்காய் - செங்காய். பசுங்குடி - போதிய குடி. பசுங்கொடி - அறுகு. பசுங்கொற்றான் - ஓர் கொற்றான். பசுங்கோரை - ஓர் புல். பசுஞானம் - தத்துவ ஞானம். பசுண்டி - சீரகம். பசுதருமம் - கைமைப்புணர்ச்சி,பரதாரப்புணர்ச்சி, பொதுமக்கடன்மை, மனுநீதி வழு, மிருகநடை. பசுதை - மிருகத்தன்மை. பசுத்தக்காளி - ஓர் செடி. பசுத்துவம் - ஆத்தும தத்துவம்,மிருகத்தன்மை. பசுநரம்பு - பச்சைநிற நரம்பு. பசுநா - பிராய் மரம், வில்வம். பசுநாகு - இளம்பசு, ஈனாநாகு. பசுநிரை - பசுமந்தை. பசுந்தரை - புற்றரை. பசுந்து - அழகு, பசுமை, மேன்மை,நேர்த்தி. பசுபதி - சிவன். பசுபந்தம் - ஓர் யாகம். பசுபாசம் - மூலமலம். பசுபாலனம் - பசுக்காத்தல். பசுபாலன் - கோபாலன். பசுபாவம் - ஆத்தும வியல்பு, உயிர்க்குச் செய்யும் பாவம். பசுபிரேணம் - சாபம். பசுபுண்ணியம் - ஆத்துமாக்கட்குச்செய்யுந் தருமம். பசுப்பட்டி - பசுத் தொழுவம். பசுப்பிரோணம் - ஆவோட்டல். பசுமந்தம் - வேம்பு. பசுமந்தை - சுபாபி, பசுத் தொழுவம். பசுமுல்லை - ஓர் முல்லை. பசுமூலி - பச்சிலை மூலி. பசுமை - ஈரம், உண்மை, ஓர்புடைவை, குளிர்மை, சாரம்,சிறப்பு, செல்வம், செவ்வி, பச்சை,பொன்னிறம். பசும்பயறு - பாசிப்பயறு. பசும்பி - சீரகம். பசும்பிடி - பச்சிலை மரம். பசும்புல் - ஓர் புல், பச்சைப் புல், பயிர். பசும்பொன் - உயர்ந்த பொன். பசுரட்சணம் - பசுக் காத்தல். பசுராசன் - சிங்கம். பசுவதை - கோகத்தி. பசுவாசாரம் - சத்தி பூசை. பசுவாட்டம் - பொன்னாங்குழியாட்டம். பசூசகன் - சோதிடன். பசேரெனல் - பச்சை நிறமாயிருத்தல். பசேலிமன் - சூரியன், தீ. பசேலுகன் - சமையற்காரன். பசை - அன்பு, ஆசை, இலாபம், ஈரம்,ஒட்டும் பசை, குழைவு, சாரம்,செந்தளிப்பு, தளைவு, பசையென்னேவல், பற்று, விருப்பம். பசைகாரம் - காரங் கூட்டிய பசை. பசைதல் - அன்பு கொள்ளல், ஒட்டுதல், சாரமுடைத்தாதல், பசையாக்கல், பிசைதல். பசைந்தார் - சினேகிதர். பசைமட்டை - இரும்பைப் பசையுமட்டை. பகையற்றவன் - அமித்திரன்,வறியன்,வன்கண்ணன். பசைவு - அன்பு, நட்பு, பிசைதல். பச்சடி - துவையற்கறி. பச்சடியன் - வெள்ளையிலே கறுப்புப்புள்ளி யுள்ளது. பச்சரிசி - அவியாமற் குத்தின வரிசி. பச்சவடம் - பச்சைவடம். பச்சன் - சூத்திரன். பச்சன்னியம் - மரமஞ்சள். பச்சாது - பின்பு. பச்சாத்தாபம் - செய்த குற்றத்துக்குமனஸ்தாபம், மனந் திரும்புதல்,செய்த குற்றத்துக்கு இரங்கல். பச்சிமகாண்டம் - புது வேற்பாடு. பச்சிமதோகரன் - கள்வன், தட்டான். பச்சிமப்பிறை - இளம் பிறை. பச்சிமம் - பின், மேற்கு, நெற்றி, முதுகு. பச்சியம் - அதிசயக் குறிப்பு. பச்சிலை - ஓர் மரம், பசு மருந்து,பச்சையிலை. பச்சிலைப்பாம்பு - ஓர் பாம்பு. பச்சிலையோணான் - பச்சோந்தி. பச்சிறைச்சி - பச்சையிறைச்சி. பச்சுடம்பு - குழந்தையினுடல்,புண்ணாலிளமை பெற்றவுடல். பச்செனல் - சிறப்பாயிருத்தல், பச்சையாயிருத்தல், பசலை யாதல். பச்செனவு - ஈரம், தழைவு, பச்சை. பச்சை - அவியாதது, இளமை,இன்பம், ஈரம், ஓர் நிறம், ஓர் புதர்,தோல், பசுமை, புதன், மரகதம்,மிகுதிக் குறிப்புச் சொல் (உ-ம்)பச்சைப் பொய், மூலபல வருக்கம், வாசனை, விட்டுணு. பச்சைக்கட்டு - சாந்திமருந்து,தாடாற்றி பரிதானங் கொடுக்கை. பச்சைகுற்றுதல் - பச்சை வண்ணம்பதித்தல். பச்சைக்கருப்பூரம் - ஓர் கருப்பூரம். பச்சைக்கல் - மரகதம். பச்சைக்கிளி - பசுங்கிளி. பச்சைக்குங்கிலியம் - ஓர் குங்கிலியம். பச்சைக்குவடு - மரகதம். பச்சைக்கூடு - தூலதேகம். பச்சைக்கொம்பு - இஞ்சி. பச்சைச்சடையன் - வயிரவன். பச்சைநஞ்சு - தீயன். பச்சைநிறநிற்களன் - துருசி. பச்சைபழுக்காயடைத்தல் - கருநிறமுமஞ்சணிறமு மூட்டல். பச்சைப்பசேரெனல் - பச்சைநிறவொளிக்குறிப்பு. பச்சைப்படி - அவியாமற் கொடுப்பது. பச்சைப்பட்டி - எரு. பச்சைப்பதம் - இளம்பதம். பச்சைப்பயறு - பசும்பயறு. பச்சைப்பாம்பு - பச்சிலைப் பாம்பு. பச்சைப்பாலன் - குழந்தை. பச்சைப்புண் - புதுப்புண். பச்சைப்புல் - பசும்புல். பச்சைப்புழு - ஓர் புழு. பச்சைப்புறா - ஓர் புறா. பச்சைப்பெருமாள் - ஓர் நெல்,திருமால். பச்சைப்பொட்டு - பசுந்திலகம். பச்சைமண் - எருவிடாமண், வேகாமண். பச்சையன் - திருமால். பச்சையுடல் - புண்ணுடல். பச்சைவடம் - ஓர் வகைச்சீலை. பச்சைவில் - இந்திரதனு. பச்சைவெட்டு - எரிய இடாமருந்து,நன்கு பஸ்மிக்காத மருந்து பச்சைவெண்ணெய் - உருக்கா நெய்.பச்சோணான், பச்சோந்தி - ஓர் வகைஓந்தி. பச்சோலை - பச்சை ஓலை. பஸ்பம், பஸ்மம் - சாம்பர், பற்பம்,விபூதி. பஸ்மகுண்டி - விபூதி மடல். பஸ்மித்தல் - நீறாதல்.பஞ்ச, பஞ்சம் - ஐந்து. பஞ்சகதி - துரககதியைந்து அவைமயூரகதி மல்லகதி வானரகதிவிடபகதி வியாக்கிரகதி. பஞ்சகம் - ஐந்தின் கூட்டம், யுத்தகளம். பஞ்சகம்மாளர் - ஐந்துவகைக் கம்மாளர் அவர் கன்னார் கொல்லர்சிற்பர் தச்சர் தட்டார். பஞ்சகருத்தாக்கள் - ஐவகைக் கருத்தாக்கள் அவர் அயன் அரி உருத்திரன் சதாசிவன் மகேசன். பஞ்சகலியாணி - பஞ்சகதியுள்ளகுதிரை. பஞ்சகலை - ஐவகைக் கலை, அவைசாந்தி, சாந்தியாதீதம், நிவிர்த்தி,பிரதிஷ்டை, வித்தை. பஞ்சவ்வியம் - கோமயம், கோமூத்திரம், ரம், தயிர், நெய், பால்என்பன. பஞ்சகன்னிகள் - ஐந்து கன்னிகைப்பெண்கள், அவர் அகலிகை சீதைதாரை துரோபதை மண்டோதரி. பஞ்சகாலம் - கருப்புக்காலம். பஞ்சகாவியம் - ஐவகைக்காப்பியம்,அவை குண்டலகேசி, சிந்தா மணி,சிலப்பதிகாரம், மணி மேகலை,வளையாபதி. பஞ்சகிருத்தியம் - பிரபஞ்சத் தொழிலைந்து அவை சிருட்டி திதிசங்காரம் திரோபவம் அனுக்கிரகம். பஞ்சகுத்தம் - ஆமை. பஞ்சகுரோசஎல்லை - காசியில்ஓரிடம், இந்த இடத்தில் அசுசியானவன் வேறு மதத்தன் வரக்கூடாது. பஞ்சகூடம் - ஆமை. பஞ்சகோசம், பஞ்சகோஷம் - அன்னமுதலிய வைந்தினாலாயகூடு,அவை அன்னமயகோசம், ஆனந்தமயகோசம், பிராணமய கோசம்,மனோமயகோசம், விஞ்ஞானமயகோசம். பஞ்சகோணமண்டலம் - சுக்கிரமண்டலம். பஞ்சகோலம் - சித்திரமூலம், சுக்கு,செவ்வியம், திப்பிலி, திப்பிலிமூலம். பஞ்சகௌடம் - கவுடதேயத்தின்ஐந்து பகுதி, அவை உற்கலம்கௌடம், மைதுலை. பஞ்சகௌவியம் - பஞ்சதிரவியம். பஞ்சக்கருவி - ஐந்துவகைச் சத்தக்கருவி, அவை கஞ்சம், கண்டம்,துளைதோல், நரம்பு, இவற்றாலாயது, அன்றியும் ஐந்துபொறிஅவை கண், செவி, மூக்கு, மெய்,வாய். பஞ்சசத்தி - இச்சாசத்தி, கிரியாசத்தி,சிற்சத்தி, ஞானசத்தி, பராசத்தி. பஞ்சசயனம் - ஐந்தாலாய மெத்தை,அவை அன்னத்தூவி, இலவம்பஞ்சு, செம்பஞ்சு, மயிற்றூவிமெத்தை, வெண் பஞ்சு. பஞ்சசனன் - ஓரசுரன். பஞ்சசன்னியம் - குதிரை. பஞ்சசரன் - மன்மதன். பஞ்சசாகம் - முன்கை. பஞ்சசிகை - சௌளம் பண்ணாதுவிடுமைந்திடம், அவை தலையுச்சிகண்புருவம் முழங்கை முதல்கைவரையும். பஞ்சசீலம் - கொல்லாமை, கள்ளுண்ணாமை, பொய்யாமை, காமமின்மை, கள்ளாமை. பஞ்சசுகந்தம் - பஞ்சவாசம். பஞ்சசுத்தி - ஐவகைச்சுத்தி, அவைஆத்துமசுத்தி, இலிங்கசுத்தி, திரவியசுத்தி, பூதசுத்தி, மந்திர சுத்தி. பஞ்சசூனை - அம்மி, உரல், உலக்கைதுடைப்பம், மடைப்பள்ளி. பஞ்சசென்னியம் - பாஞ்சசன்னியம். பஞ்சஞாநன் - புத்தன். பஞ்சடைதல் - கண்பஞ்சாடுதல். பஞ்சணை - பஞ்சாலாய மெத்தை. பஞ்சதசகம், பஞ்சதசம் - பதினைந்து. பஞ்சதசி - பூரணை, வேதாந்தசாத்திரங்களினொன்று. பஞ்சதத்துவம் - வாமபூசைக் கடுத்ததசாங்கமைந்து, அவை இறைச்சிசாராயம் திரீசம்பாஷணைபுணர்ச்சி யபிநயம் மீன். பஞ்சதந்திரம் - ஐந்துவகைத் தந்திரம்,அவை அசம்பிரேட்சிய காரித்துவம், அத்தநாசம், சந்தி விக்கிரகம், சுகிர் லாபம், மித்திரபேதம். பஞ்சதம் - சாவு,பஞ்சதன்மாத்திரம், பஞ்சதன் மாத்திரை - பஞ்சபூதமூலம் பஞ்சதாது - பஞ்சபூதம். பஞ்சதாரை - சருக்கரை, சீனி. பஞ்சதிரவியம் - கோசலம், கோமயம்,தயிர், நெய், பால். பஞ்சதிராவிடர் - தமிழர், தெலுங்கர்,கன்னடர், மஹாராஷ்டர், கூர்ஜரர். பஞ்சதீர்க்கம் - உதரம், கண், கை,மார்பு, மூக்கு எனு மைந்துறுப்பு. பஞ்சது - குயில், நேரம். பஞ்சதை - சாவு, பஞ்சபூதியம். பஞ்சத்துவம் - ஐந்தின் கூட்டம்,மரணம். பஞ்சநகக்கூர்மையோன் - ஆமை. பஞ்சநகம் - ஆமை, புலி, யானை. பஞ்சநகி - உடும்பு. பஞ்சநதம், பஞ்சநதி - திருவையாறு. பஞ்சநிம்பம் - வேம்பின் இலை,பட்டை, பழம், பூ, வேர் என்பன. பஞ்சநிறக்கல் - சிலா நாகக்கல். பஞ்சநீராஞ்சனம் - ஐவகை யாலாத்தி,அவை சாட்டாங்கம், சீலை, தளிர்,தாமரை, விளக்கு. பஞ்சபட்சி - எழுத்துப் பொருத்தமறியுமைந்து பட்சி, அவை வல்லூறு, ஆந்தை, காகம், கோழி,மயில், அவை கட்கு முறையேஎழுத்து அ, இ, உ, எ, ஒ, ஓர்சாத்திரம் வைப்புப் பாஷாணமுப்பத்திரண்டி னொன்று. பஞ்சபட்சிக்காதல் - ஓர் சாத்திரம். பஞ்சபத்திரகன் - வியசன முள்ளவன். பஞ்சபல்லவம் - அருச்சனைக்கேற்றஐவகைப் பாத்திரம் அவை ஆத்திமா முட்கிளுவை முல்லை வில்வம். பஞ்சபாணம் - மன்ம தாத்திரமைந்துஅவை முல்லை, அசோகு, வனசம், சூதம், நீலம், அவை முறையேதைக்குமிடம் உச்சி, நெற்றி,நெஞ்சு, முலை, குய்யம். பஞ்சபாணன் - காமன். பஞ்சபாணாவத்தை - மன்மதாத்திரத்தினாலுண்டா மைந்துபாதி,அவை சுப்பிரயோகம், விப்பிரயோகம், சோகம், மோகம்,மரணம். பஞ்சபாணி - பார்வதி. பஞ்சபாண்டவர் - பாண்டுவினைந்துபுத்திரர் அவர் தருமன், வீமன்,அருச்சுனன், நகுலன், சகதேவன். பஞ்சபாண்டவர் முல்லை - ஓர் முல்லை. பஞ்சபாதகம் - ஐந்து துரோகம்அவை களவு, கள்ளூண், குருநிந்தை, கொலை, பொய். பஞ்சபாதகன் - பஞ்சபாதகஞ்செய்வோன், முழுத் துரோகி. பஞ்சபாத்திரம் - ஓர் பாத்திரம். பஞ்சபிராணன் - தசவாயுவினுள்வாயுவைந்து அவை அபானன்,உதானன், சமானன், பிராணன்,வியானன். பஞ்சபூதமூலி - வெள்ளெருக்கு,மாவிலங்கு, கொடிவேலி, புனல்மூங்கை. பஞ்சபூதம் - ஐந்து பூதம் அவை பிருதிவி,அப்பு, தேயு, வாயு, ஆகாயம். பஞ்சப்பிரமம் - பஞ்ச முகேச்சுரன். பஞ்சமகதி - மோக்கம். பஞ்சமம் - அழகு, ஐந்து, ஒர் பண்,சத்ததாளத் தொன்று, சமர்த்து. பஞ்சமலம் - ஐந்து மலம். பஞ்சமன் - ஐந்தாஞ்சாதி. பஞ்சமாசத்தம் - பஞ்சக் கருவியினாலுண்டாகு நாதம். பஞ்சமாசியம் - குயில். பஞ்சமாபாதகன் - பஞ்சபாதகன்.பஞ்சமாயெக்கியம், பஞ்சமாயெஞ்ஞம் - ஐவகை யாகம், அவை அக்கினிகருமம், தேவபூசை, பிதிர்பூசை,விருந்தோம்பல், வேதாத்திய யனம். பஞ்சமாரன் - பலதேவன் மகன். பஞ்சமி - அவிட்ட முதலைந்து நாள்,ஐந்தாந்திதி, சொக்கட்டான்மனை, துரோபதி, துர்க்கை. பஞ்சமிப்பேய் - பஞ்சமியி லிறந்துளிநிற்கும் பேய். பஞ்சமுகருத்திரன் - எலியாமணக்கு. பஞ்சமுகன் - சிங்கம், சிவன். பஞ்சமுத்திரை - சைவ தவத்தோர்முத்திரை, அவை உருத்திராக்கம்கமண்டலம் காவிப்புடவை சடைதண்டு. பஞ்சமூலம் - ஐவகை மூலி, அவைசிறுபஞ்சமூலம் பெரும்பஞ்சமூலம் எனவிருவகைப்படும், சுக்கு,செவ்வியம், சிற்றரத்தை,பேரரத்தை, கண்டுபரங்கி. பஞ்சம் - ஐந்து, கருப்பு, விழுதல். பஞ்சயன் - பஞ்சராத்திரி. பஞ்சயாகம் - ஐந்தியாகம், அவைசுற்றப்போஷிப்பு தனக்குணவுதேவபலி பிதிர்பலி யோகிகள்பலி. பஞ்சரத்தினம் - ஐவகைநிதி, அவைசுகந்தி பொன் மரகதம் மாணிக்கம்முத்து, ஓர் பிரபந்தம். பஞ்சரம் - இடம், உடல், கழுகு, கூடு,செருந்திமரம், பன்னுங்கூடு,மட்கலம் வனையுங்கூடம், பருத்தி. பஞ்சராகேடம் - மீன்களைக்கொல்லுமுபாயம். பஞ்சராத்திரம் - வைணவமதத்தொன்று.பஞ்சரித்தல், பஞ்சரிப்பு - உபசாரமாய்ப் பேசல், குதலைபேசல்,கெஞ்சிக் கேட்டல், விரிவாய்ப்பேசல். பஞ்சலட்சணம் - இலக்கணமைந்துஅவை எழுத்து சொல் பொருள்யாப்பு அணி புராணவுறுப்பைந்து, அவை சரிதைத் தலைவர்வமிசம், பிரபஞ்சத் தோற்றம்பிரபஞ்சநாசம் மனுக்களரசாட்சிமனுவமிச வரலாறு. பஞ்சலவணம் - ஐவகை யுப்பு. பஞ்சலிங்கம் - ஐந்து பூதங்களினாலும்தனித்தனி யுண்டான லிங்கம். பஞ்சலித்தல் - பஞ்சங் கூறுதல். பஞ்சலிப்பு - பஞ்சங் கூறுதல், பஞ்சத்தின் வருத்தம். பஞ்சலோகம் - ஐந்துலோகம், அவைஇரும்பு ஈயம் செம்பு பொன்வெள்ளி. பஞ்சலோபி - மிகுபிசுனன். பஞ்சவடம் - பூணூல், மயிரினாலாயபூணூல். பஞ்சவடி - ஓர் தலம். பஞ்சவட்டந்தடி - எஃகுக்கோல். பஞ்சவத்திரம் - சிங்கம். பஞ்சவத்திரன் - சிவன். பஞ்சவர் - பாண்டுமக்கள். பஞ்சவர்தூதன் - கிருட்டினன். பஞ்சவன் - பாண்டியன். பஞ்சவன்னக்கிளி - ஓரினக்கிளி,அஃது ஐந்து வன்னமுடையது. பஞ்சவன்னம் - ஐந்துவன்னம், அவைகருமை செம்மை பச்சை மஞ்சள்வெண்மை. பஞ்சவாசம் - ஐவகை வாசம் அவைஇலவங்கம் ஏலம் கருப்பூரம்சாதிக்காய் தக்கோலம். பஞ்சவிடயம் - பஞ்சப்பொறியினாலறியப்படுவன, அவை இரசம்,உரூபம், கந்தம், சத்தம், பரிசம். பஞ்சவெச்சம் - பஞ்சயாகம். பஞ்சறைக்கிழவன் - அறக்கிழவன். பஞ்சனம் - அழித்தல். பஞ்சனி - சொக்கட்டான்மனை. பஞ்சாக்கரம் - பஞ்சாட்சரம், சிவநாமாக்கரம் ஐந்து. பஞ்சாக்கினி - ஐந்து அக்கினி, அவைஇராகம், காமம், கோபம், சடம்,தீபனம், தவஞ்செய்வோர் நிற்குமைந்தக்கினி, அவை நாற்றிசைக்குநான்கு தீக்குண்டம் மேலேசூரியன்.பஞ்சாங்ககுத்தம், பஞ்சாங்கக்கூர்மை - ஆமை. பஞ்சாங்கதெண்டன் - கால், கை,தலை யெனுமைந்துறுப்பு நிலந்தோய வணங்கல். பஞ்சாங்கபலன் - பஞ்சாங்க நிருமித்தலிற் கண்ட பலன். பஞ்சாங்கம் - ஆமை, குதிரை, சோதிடத்திற்குரிய வைந்துறுப்பு, அவைகரணம், திதி, நட்சத்திரம்,யோகம், வாரம், ஆமணக்கு. பஞ்சாங்கவாக்கியம் - கணித முறையினொன்று. பஞ்சாங்கி - குதிரைக் கடிவாளம். பஞ்சாங்குலம் - ஆமணக்கு, கை. பஞ்சாசியம் - சிங்கம். பஞ்சாடித்திருக்கை - ஓர் திருக்கைமீன். பஞ்சாடுதல் - கண்பஞ்சடைதல். பஞ்சாட்சரம் - சிவநாமாக்கர மைந்து. பஞ்சாணிகம் - கோரைக்கிழங்கு. பஞ்சாதபை - பஞ்சாக்கினிமத்தியிற்செய்யுந் தவம். பஞ்சாமியம் - இலந்தை. பஞ்சாமிர்தம் - ஐந்தமுதம், அவைசருக்கரை, தயிர், தேன், நெய்,பால். பஞ்சாமிலம் - இலந்தை, மாதளை,புளியாரை, நெல்லி, எலுமிச்சைசேர்ந்தது. பஞ்சாமுதம் - பஞ்சாமிர்தம். பஞ்சாயத்தார் - நியாய சங்கத்தார். பஞ்சாயம் - ஐந்துபேர்கூடிய நியாயங்கம், கோரை. பஞ்சாயுதபாணி - விட்டுணு. பஞ்சாயுதம் - ஓராபரணம், விட்டுணுவினைந்தாயுதம், அவை சக்கரம்,சங்கு, தண்டு, தனு, வாள். பஞ்சாயுதன் - விட்டுணு. பஞ்சாய் - கோரை. பஞ்சாரகேடம் - மீன்கூடு. பஞ்சாரம் - எருது பரி யிவற்றினாயுள்,பழையது. பஞ்சாரி - சொக்கட்டான்மனை பஞ்சார்க்கதோஷம் - ஐந்தருக்கத்தானும் வருந்தோஷம். பஞ்சார்க்கம் - ஐந்தருக்கம், அவைஇந்திரவில், கேது, தூமம், பரிவேடம், விதிபாதம். பஞ்சார்த்தல் - பஞ்சாடுதல். பஞ்சாலம் - ஓர் தேயம். பஞ்சாவடம் - பூணூல் பஞ்சாவத்தம் - பிரேதம். பஞ்சாவத்தை - ஐந்தவத்தை, அவைசாக்கிரம், சொப்பனம், சுழுத்தி,துரியம், துரியாதீதம் . பஞ்சாளர் - பஞ்சக்கம்மாளர். பஞ்சானனம் - சிங்கம். பஞ்சானனன், பஞ்சானன் - சிவன். பஞ்சான் - பச்சைக்குழந்தை. பஞ்சி - சடைந்தது, சோம்பு, தூறு,பஞ்சாங்கம், பஞ்சு, வருத்தம்,வெண்டுகில். பஞ்சிகம் - தாளி. பஞ்சிகாரகன் - கணிதன், சோம்பன்,வருத்தக்காரன். பஞ்சிகை - கணக்கு, நமன், பஞ்சாங்கம், மயிர், வியார்த்தி பண்ணப்பட்ட நூல். பஞ்சிதம் - விண்மீன். பஞ்சிற்றொடர் - நூனுனி. பஞ்சீகரணம் - பஞ்சபூத வமிச கூட்டம். பஞ்சு - சீலை, தூறு, பருத்திப்பஞ்சுமுதலியன. பஞ்சுநீலப்பாணி - துருசி. பஞ்சுரம் - ஓர்பண், குறிஞ்சியாழ்த்திறம், பாலை நிலத்திராவகம். பஞ்சுருட்டான் - ஓர் பறவை. பஞ்சுருத்தான் - ஓர் குருவி. பஞ்சுவாய்க்கொள்ளுதல் - முலைகொள்ளுதல். பஞ்சூகம் - பெருமை. பஞ்சேந்திரியம் - ஐம்பொறி, அவைகண், காது, தோல் , நா, மூக்கு. பஞ்சை - இறப்போன், எளிமை,தரித்திரம், பலவீனன். பஞ்சைமயிர் - மெல்லியரோமம். பஞ்சையன் - எளியன், தரித்திரன்.பலவீனன். படகம் - இரணபேரி, கலகம், கவரிமா,கோல், தம்பட்டம், திரைச்சீலை,படாம் வீடு, பரண், விஷ்ணுகரந்தை. படகாரன் - ஓவியன், நெய்வோன். படகு - தெப்பம். படகுடி - கூடாரம். படக்குப்படக்கெனல் - அச்சக்குறிப்பு,ஈரடுக்கொலிக்குறிப்பு, துடித்தல். படங்கன் - ஓர் மீன். படங்கு - கூடாரம், சலாகை, பெருங்கொடி, பெருவரிச்சல், மெய்போற்பேசுதல், மேற்கட்டி, பதங்கம். படங்குந்திநிற்றல் - காலிற் பெருவிரலூன்றி நிற்றல். படச்சரம் - பழம்புடவை. படபடத்தல் - துடிதுடித்தல், விரைதல். படபடப்பு - துடிதுடிப்பு, விரைவு. படபடெனல் - ஈரடுக்கொலிக் குறிப்பு,விரைவுக் குறிப்பு. படபம் - பாதாளம். படபை - வடவைத்தீ. படப்பம் - மருங்கிலூர் சூழ்பதி. படப்பு - கொல்லை, வைக்கோற்போர். படப்பை - ஆவின்கொட்டில்,கொல்லை, நாடு, மருதநிலத்தூர்,தோட்டம், பக்கம். படப்பொறி - துத்தி, பாம்பின் படத்தினடையாளம். படமஞ்சரி - ஓரிராகம். படமடக்கி - தாழை. படமண்டபம், படமயம் - கூடாரம். படமரம் - நெய்வார்கருவியிலொன்று. படமெடுத்தல் - பாம்பு படம்விரித்தல். படம் - எழுத்துப்படம், காற்றோட்டி,சீலை, திரைச்சீலை, பாம்பின்படம், யானைமுகபடாம், விருதுக்கொடி, காற்றாடி. படரடி - சிதறடிப்பு, முழுக்கூறும்வேண்டாத்தலை. படராமூக்கி - வெண்ணாயுருவி. படருருக்கி - செந்நாயுருவி. படரை - ஆவிரை. படர் - இழிமக்கள், ஏவல் செய்வோர்,கருத்து, செலவு, துகிற்கொடி,துன்பம், துன்புறுவோர், நடை,நினைப்பு, நோவு, பகை, படரென்னேவல், நினைப்பு, நோவு, பகை,படரென்னேவல் , படைவீரர்,மேடு, வருத்தம், வழி. படர்கொடி - பயிர்க்கொடி, பீர்க்கு. படர்க்கை - மூன்றாமிடம். படர்ச்சி - நடை, பரப்பு, பரவுதல்,விரித்தல். படர்தல் - அகலம், நடத்தல், நினைத்தல், பரவுதல், விரிதல், போதல்.படர்தாமரை, படர்தேமல் - ஓர் கரப்பன். படர்மல்லிகை - ஓர் மல்லிகை. படர்வு - படர்ச்சி. படலம் - அடுக்கு, அதிகரிப்பு, இரதனக்குற்றம், இலக்கியச் செய்யுட் கூறுபாடு, கூட்டம், திசை, திலகம்,நேத்திரபடலம், பரிவாரம், படல்,மூடி. படலிகை - இளைப்பு, கைமணி,படலம், பூந்தட்டு, பெரும்பீர்க்கு,வட்டம், வட்டவடிவு. படலி - கூட்டம், வீட்டின் மேற்கூரை. படலை - கட்டுக்கதவு, கோத்தமாலை, தார்மணி, பரந்தவவு,பரந்தவாய்ப்பறை, பூமாலை,வெளிக்கதவு. படலைமாலை - பச்சிலைமாலை. படல் - அகப்படுத்தல், அத்தமித்தல்,உண்டாதல், ஒன்றுடனே தோய்தல், கெடுதல், சாதல், தட்டி,தெறித்தல், படுதல், பதிதல், புலனிலேறுதல், பூத்தல், முட்டுதல். படவாசகம் - கூடாரம், வாசனைத்தூள். படவாசம் - கூடாரம். படவாள் - படைவாள். படவு - படகு. படவை - செருப்படை. படனம் - படித்தல், மனப்பாடம். படன் - இழிகுலன், படைவீரன். படாகவாசம் - தேவாலயக்கொடி. படாகை - கிராமம், விருதுக்கொடி. படாடோபம் - உடைப்பகட்டு, ஆடம்பரம். படாந்தரம் - கட்டுக்கதை, கோள்,முழுப்பொய். படாபஞ்சனம் - தீர்க்கநாசம், படாவஞ்சனம். படாப்பழி - பெரும்பழி. படாம் - சீலை, திரைச்சீலை, பெருங்கொடி. படாம்வீடு - கூடாரம். படாரமூக்கி - வெண்ணாயுருவி. படாரன் - பிடாரன். படாரிடுதல் - ஒலிக்குறிப்பு. படாரூபம் - படாப்பழி. படாரெனல் - படாரிடுதல்.படாவஞ்சனம், படாவஞ்சனை - கடும்பொய், கொடிய வஞ்சனை. படி - ஒப்பு, ஓரளவு, குணம், குதிரையங்கபடி, சம்பளம், சோபானம்,தரம், தாழ்வாரம், நாழி, நிறையறிபடி, நீர் நிலை, நூறு பலங்கொண்ட நிறை, பகை, படியென்னேவல், பூமி, வாயிற் படி, விதம்,கற்படி, உருவம். படிகட்டுதல் - இடைகட்டுதல், படிகொடுத்தல். படிகபச்சை - ஓரிரத்தினம். படிகம் - கூத்து, பளிங்கு, பிச்சை,வெள்ளி லோத்திரம். படிகர் - வாயிலாளர். படிகை - படிவு, புடைவை. படிகொடுத்தல் - நாளுக்குநாள்வேண்டிய செலவு கொடுத்தல். படிக்கட்டளை - கோயின் முதலியவற்றிற்குள்ள நித்திய விருத்திச்செலவு, நியமிதம். படிக்கட்டு - நியம அளவு. படிக்கம் - துப்பற்பாத்திரம். படிக்காசு - இராமநாதபுரம், இரகுநாத சேதுபதியின் சமஸ்தானத்தில் ஓர் புலவன், படிகொடுக்கும் பணம். படிக்காசுப்புலவர் - தெய்வீகம்வாய்ந்த ஒரு புலவர். படிக்காரம் - சீனக்காரம். படிக்காரர் - படிகொடுப்போர், படிவாங்குவோர். படிக்கால் - ஏணி. படிக்குப்பாதி - நியமித்ததிற் பாதி. படிசம் - தூண்டில். படிசு - நிலைபரம். படிச்சந்தம் - பிரதிரூபம். படிதம் - படித்தல். படிதல் - அமருதல், அமைதல், கலத்தல், குளித்தல், கூத்து, திருந்தல். படிதவ்வியம் - படித்தற் குரியது. படித்தரம் - நிபந்தனை. படித்தல் - சொல்லுதல், பழகுதல்,வாசித்தல், கற்றல். படித்திரம் - சூட்டிறைச்சி. படித்தீன் - படிக்கணக்கான சாப்பாடு. படித்துறை - படிக்கரை, கற்படியமைந்த ஸ்நானக் கட்டடம். படிப்பனை - சமர்த்து, படிப்பு,போதனை. படிப்பனவு - படிப்பு, போதனை. படிப்பாளி - கற்றோன். படிப்பித்தல் - கற்பித்தல், பழக்குதல். படிப்பினை - படிப்பனவு, வங்கமணல். படிப்பு - அறிவு, கல்வி, சொல்லல்,பழக்கம், புத்தி, வாசனை, வாசிப்பு. படிப்போன் - மாணாக்கன். படிமக்கலம் - கண்ணாடி. படிமதாளம் - நவதாளத் தொன்று. படிமத்தாள் - சன்னதகாரி.படிமத்தான், படிமத்தோன் - தேவராளன், வெறியாட்டாளன். படிமம் - கண்ணாடி, சுத்தம், வெண்மை,வெறியாட்டு, பாவை விரதம். படிமா - ஒப்பு. படிமாத்தாள் - படிமத்தாள். படிமானம் - கீழ்ப்படிதல், தகுதி,திருத்தம், விலை குறைதல். படிமை - தவவேடம். படியகம் - படிக்கம். படியச்சு - ஓர் கருவி, கட்டளைக் கருவி. படியப்பார்த்தல் - அடக்குதல், குறைத்தல், சேர்த்தல். படியரம் - ஓரரம் படியவைத்தல் - படியப்போடுதல். படியளத்தல் - படிகொடுத்தல். படியளந்தோன் - விட்டுணு. படியாள் - படிக்காரன். படிரம் - படீரம். படிலன் - வீரன், வேலைகாரன். படிவம் - உடலுறுப்பு, உடல், சித்திரரூபம், நோன்பு, வடிவு, தான்வழிபடு தெய்வம். படிவர் - சடைமுடியோர், முனிவர். படிவு - அடங்குகை, அழுந்துகை,கீழ்ப்படிவு, குளித்தல், தாங்குதல்,தாழ்தல், வணக்கம், வடிவு. படிறர் - திருடர், தூர்த்தர், பொய்யர்,வஞ்சகர். படிறு - களவு, பொய், வஞ்சகம். படினம் - பக்குவம், மேன்மை, வெற்றி. படீரம் - உதரம், உயரம், சந்தனம்,சிவப்பு, வயல், வாதம், கருங்காலி.படீரிடுதல், படீரெனல் - ஒலிக்குறிப்பு. படு - உப்பு, குலை, கள், குளம்கூர்மை, கொத்து, சம்பத்து,நன்மை, நீர்நிலை, படுவென்னேவல், மரக்குலை, மிகுதிக்குறிப்பு (உ-ம்) படுபொய், வெப்பம், பேரறிவு, நிபுணன். படுகர் - இழிந்தேறும்வழி, குளம்,பள்ளம், மருதநிலம், வயல், நீர்நிலை. படுகளம் - போர்க்களம். படுகள்ளன் - வலுகள்ளன். படுகாடு - சுடுகாடு. படுகாயம் - உயிர்ச்சேதமான காயம்,உயிராபத்தான காயம். படுகாய்ச்சி - உபசார மறியாதவன்,கட்டையிற் புகையிலை. படுகி - சீனக்காரம். படுகிடங்கு - பொறிகிடங்கு. படுகு - வாக்கு விசேடம். படுகுடி - கெடுகுடி. படுகுழி - யானைமுதலிய படுகிடங்கு. படுகை - ஆற்றங்கரையடுத்த வயல். படுகையாமணக்கு - ஓராமணக்கு. படுக்காளி - தந்திரி, பொய்யன்,போக்கிரி. படுக்காளிவிசேஷம் - கட்டுக்கதை. படுக்கை - அடிப்பட்டை, படுத்தல்,பல்லணம், மக்கட்படுக்கை, விலங்கின் படுக்கை, படுத்தல். படுசூரணம் - மருந்துத்தூள், முழுநாசம். படுஞாயிறு - அத்தம சூரியன், ஓர்நோய். படுதடி - பட்டதடி. படுதல் - அகப்படுதல், அத்த மித்தல்,இல்லாமை, உண்டாதல், ஒலி,சகித்தல், சாதல், படுந் தன்மை,பதித்தல், புலப்படுதல், பூத்தல்,முட்டுதல். படுதா - ஒதுக்கிடம், திரைச்சீலை. படுதாமரை - படர்தாமரை. படுத்தடி - முரட்டுத்தன்மை. படுத்தலோசை - தாழ்த்திசை. படுத்தல் - அகப்படுதல், கொலைசெய்தல், சயனித்தல், சயனிப்பித்தல், செறித்தல், செய்தல். படுத்துருமம் - வெள்வேல மரம். படுத்துவம் - சமர்த்து, வலிமை. படுநாயகி - பாற்சோற்றி. படுநிலம் - பாலைநிலம், மயானம்,யுத்தபூமி. படுநீலி - முழுநீலி. படுபழம் - முதிர்ந்த பழம், வஞ்சகன். படுபழி - மிகுபழி. படுபுரளி - சுத்தப்புரளி. படுபுளுகு - மிகுபுளுகு, வீண்புகழ்ச்சி. படுபொய் - முழுப்பொய். படுபொழுது - மாலை நேரம். படுமரம் - பட்டமரம். படுமலைப்பாலை - ஓரிசை. படுமுடிச்சு - அவிழா முடிச்சு. படுமோசம் - முழுமோசம். படுவநாயகி - பாற்சோற்றி. படுவர் - கள்விற்போர். படுவன் - ஓர் சிலந்தி, ஓர் நோய்,ஓர்பூண்டு. படுவான் - அழிவான், மேற்றிசை. படுவி - கள்விற்பாள், வசவி. படுவை - தெப்பம். படை - அடுக்கு, ஆயுதம், கலப்பை,கல்லணை, செதிள், தானை,இஃது அரசியலினொன்று, திரள்,நித்திரை, நிரை, படையென்னேவல், போர், போர்ப்படை,மெத்தை, செருப்படை. படைக்கலம் - ஆயுதப்பொது. படைக்குழப்பம் - படை வீரரின்குழப்பம் படைக்கோலம் - போர்க்கோலம். படைச்சனம் - படைவீரர். படைச்சால் - உழவுசால். படைச்செருக்கு - படைவீரம். படைத்தலைவன் - சேனாதிபதி,இவன் அரசர்க்குத் துணைவரிலொருவன். படைத்தல் - உடைத்தாதல், சிருட்டித்தல், இஃது முத்தொழிலினொன்று, சோறு முதலியவுண்கலத்திடுதல், பெறுதல், பரிமாறுதல். படைத்தவன் - ஒன்றை யடைந்தவன்,கத்தா, பிதா. படைத்துணை - போர்க்குதவி,போர்த்துணைவன். படைத்தோன் - கடவுள், சிருட்டிகர்த்தர். படைபயிற்றல் - சிலம்பம் பழக்கல்அஃது அரச ரறுதொழிலினொன்று. படைபேற்றல் - கீழறுத்தல். படைப்பு - சம்பாத்தியம், சாத முதலிய படைத்தல், சிருட்டி, சிருட்டிக்கப்பட்டது, செல்வம். படைப்பௌஞ்சு - படை வகுப்பு. படைமரம் - நெய்வார் கருவியினொன்று. படைமுகம் - போர்முகம். படையல் - அடிக்குமடி, நிவேதனப்பொருள். படையன் - அடித்தல், அடிமை. படையாச்சி - ஓர் சாதி. படையாளர் - ஆயுதவீரர், போராளர். படையிராசன் - வெடியுப்பு. படையிறங்குதல் - பாளையம்போடுதல். படையுறுப்பு - படையணி. படையுறை - ஆயுதவுறை. படையுள்படுவோன் - சின்னமூதி. படையெடுத்தல் - சேனையெழுதல். படையெழுச்சி - படையெழும்பல். படைவகுப்பு - படையணி. படைவரம் - குதிரைச்சேணம். படைவாள் - கலப்பை, கலப்பையினோருறுப்பு. படைவீடு - ஆயுதசாலை, தேவாலயம், பாசறை. படைவீரர் - சேனை வீரர். படைலோகம் - சிப்பி. படோலங்கி - பேய்ப்புடல். படோலம் - யானைக்கட்டுத்தறி,முள்ளுவெள்ளரி, பேய்ப்புடல். படோலி - நிலவு. படோலிகை - புடல்.படோல், படோல்ராசி - பேய்ப்புடல். பட்கை - பாம்பின்மேல் வாயினோர்பல். பட்சகம் - திட்டிவாயில். பட்சகன் - பேருண்டியன். பட்சசரம் - பட்சி. பட்சசரன் - பார்ப்பான்.பட்சணம், பட்சணை - இரை, உணவு,உண்டல். பட்சணி - உண்போன். பட்சணித்தல் - உண்டல். பட்சணீயம் - உண்ணத்தகுபொருள். படசதாபம் - உருக்கம், பரிதாபம். பட்சத்துவாரம் - திட்டிவாயில். பட்சபாதம் - ஓரவாரம், ஓரம். படசபிந்து - நீலாமுகிப்புள். பட்சம் - உருக்கம், செட்டை, தரம்,நேசம், பக்கம், பதினைந்துநாட்கொண்டது, பாட்டியமி, மீனம்பர், வகுப்பு. பட்சயம் - போசனம். பட்சவாதம் - பட்சபாதம். பட்சவாதி - ஓரவாரஞ் செய்பவன். பட்சாந்தம் - அமாவாசை, பூரணை. பட்சு - பாகஞ் செய்வோன். பட்சி - பட்சியென்னேவல், பறவை. பட்சிசாதி - பறவைக்குலம். பட்சிசாத்திரம் - பஞ்சபட்சியைக்குறித்தறியு நூல். பட்சிசாலம் - பறவைக் கூட்டம். பட்சிசிங்கம் - கலுழன். பட்சித்தல் - உண்ணல்,விழுங்கல். பட்சித்தோஷம் - பறவைத்தோஷம். பட்சிப்பு - பட்சித்தல். பட்சியம் - மாப்பலகாரங்கள். பட்சியிராசன் - கலுழன், கெருடப்பச்சைக்கல். பட்சியினெச்சம் - பொன்னம்பர். பட்சிராஜன் - கருடன். பட்டகசாலை - பண்டசாலை. பட்டகம் - பண்டசாலை, புழுக்கொல்லிச்செடி. பட்டங்கட்டி - கைக்கோளரிற் றலைவன், நெய்தனிலமாக்களிற் றலைவன், பட்டவத்தனன். பட்டங்கட்டுதல் - பட்டப்பேர்கொடுத்தல், பட்டமணிதல். பட்டசம் - ஓர் ஆயுதம். பட்டசாலை - பட்டகசாலை. பட்டச்சீட்டு - பட்டப்பேரொப்பம். பட்டஞ்சூடுதல் - அபிஷேகமடை தல், பட்டமணிதல். பட்டஞ்சூட்டுதல் - அரசரைக் குரவரையபிஷேகம் பண்ணுதல்,பட்டப்பேர் கொடுத்தல். பட்டடை - அடைகல், கழுத்தணி,குவியல், தலைதாங்கி, தாங்குபலகை, தாபரம், தானியஉறை,நரம்புகளின் இளி. பட்டைக்கழனி - தண்ணீரிறைத்துப் பயிரிடுங் கழனி. பட்டடையார் - முதல் வேலைகாரர்.பட்டணசுவாமி, பட்டணத்துப்பிள்ளை - ஓர் ஞானி. பட்டணத்தோர் - நகரப்பதியோர். பட்டணப்பிரவேசம் - நகரிவலம் வருதல். பட்டணம் - நகரம். பட்டணவர் - செம்படவர். பட்டத்தியானை - இராசயானை. பட்டத்திரி - நெருப்புத்திரி.பட்டத்திரீ, பட்டஸ்திரீ - இராசாத்தி. பட்டத்துக்குமாரத்தி - அரசன்றலைமகள். பட்டத்துக்குமாரன் - அரசன்றலைமகன். பட்டத்துத்தேவி - இராசாத்தி. பட்டத்துரை - பட்டவத்தனன். பட்டந்தரித்தல் - பட்டப்பேர்கொடுத்தல், பட்டமணிதல். பட்டந்தீர்தல் - ஆபரணந் தூண்முதலியவற்றிற் பட்டம் வகுத்தல். பட்டப்பகல் - நடுப்பகல், நல்ல பகல். பட்டப்பேர் - குலமுறைப்பேர்,பட்டஞ்சூட்டற்பேர். பட்டமணி - பட்டந்தீர்ந்த மணி. பட்டமரம் - படுமரம். பட்டம் - ஆயுதம், எழுதும்படி செய்ததகடு, கடுதாசிபடம், கவரிமா,குளம், சதுக்கம், சீலை, தீர்க்கம்,நாற்காலி, நெற்றிப்பட்டம், பட்டினம், பரிசை, மனிதர் படுக்கை,வழி, வாள், விலகின் படுக்கைகாற்றாடி, பட்டப்பேர். பட்டயம் - பிரசித்த பத்திரிகை, வாள். பட்டர் - பாடுவோர், பிரமாணரிலோர், வகுப்பு, ஆதி சைவப்பிராமணர். பட்டவத்தனர் - பட்டந்தரித்த வரசர். பட்டவிளக்கு - ஓர் விளக்கு. பட்டறை - கண்டத்தணியு மோராபரணம். பட்டனம் - பட்டினம். பட்டன் - சத்துரு, ஞானி, பாடுபவன்.பட்டா, பட்டாகத்தி - வாள். பட்டாங்கு - ஊழ், சித்திரச்சேலை,பரிகாசம், மெய். பட்டாசிரியன் - ஓர் சமைய வாசிரியன். பட்டாசு - சீனவெடி. பட்டாடை - பட்டுவஸ்திரம். பட்டாணி - ஓர் கருவி, ஓர் சாதியான்ஓர்செடி. பட்டாணிதயிலம் - ஓர் சிரங்கெண்ணெய். பட்டாணிப்பயறு - ஓர் பயறு. பட்டாணிப்பாஷை - ஓர் பாஷை.பட்டாபிஷேகம், பட்டாபிடேகம் - பட்டந்தரித்தல், முடி சூட்டல். பட்டாரகர் - கடவுளர், குருக்கள். பட்டாரகன் - அரசன், அருகன், இருடி,கடவுள், குரு, சூரியன். பட்டாலிகம் - உறுதிப்பத்திரம். பட்டி - அட்டவணை, ஆட்டுக்கி டை,இடம், ஓர்செடி, ஓர்விதச் சிகிச்சை,களவு, கள்வன், சிற்றூர், சீலை,தெப்பம், நெகிழ்ச்சி, படல், பலகறை, பிள்ளை, மந்தை, வாலையென்னுமோர் கருவி, விக்கிரமாதித்தன் மந்திரி, வெற்றிலைச்சுருள், வேசி, நாய். பட்டிகம் - நந்தியாவட்டம்.பட்டிகர், பட்டிகள் - திருடர். பட்டிகை - அரைநாண், சீந்தில், சீலை,சுவர்த்தலத்தின் சித்திரக்கம்பி,தெப்பம், தோணி, எட்டிச்செடி,முலைக்கச்சு, செவ்வந்தி. பட்டிக்கடா - மாப்பிள்ளைக் கடா. பட்டிக்காடு - காட்டுக்குள்ளூர். பட்டிக்கிடை - பட்டிக்கிடவை. பட்டிக்குறி - பரவணிக்குறி. பட்டிசம் - ஓர் பாணம். பட்டிடை - நந்தியாவட்டை. பட்டிணி - பட்டினி. பட்டிநி - பார்ப்பனத்தி, போகமாது. பட்டிபார்த்தகொம்பு - நிமிர்ந்து முள்வளைந்த கொம்பு. பட்டிப்படி - பட்டிமேய்ப்போர் செலவு. பட்டிப்பயல் - திருட்டுப்பயல். பட்டிப்பொங்கல் - மந்தையிற் பொங்கல். பட்டிமண்டபம் - பாடற்சவை மண்டபம், ஒலிக்கமண்டபம், வித்தியாமண்டபம். பட்டிமரம் - கள்ளமாட்டின் கழுத்திற்கட்டு மரம். பட்டிமாடு - கள்ளமாட்டின் கழுத்திற்கட்டுமரம், பயிரழிக்கு மாடு. பட்டிமுறித்தல் - ஓர்விளையாட்டு,கட்டுக்கடந்து போதல், கூட்டத்தை நீக்கல். பட்டிமேய்தல் - மிருகம், பயிரழித்தல். பட்டிமை - களவு, வஞ்சம். பட்டியல் - வலிச்சல், அட்டவணை,பட்டி. பட்டியூண் - விளைவிற் பட்டிக்காரனுக்கு வைக்கும் பங்கு. பட்டிவிடுதி - அந்தநேரத்தில் மழைவிடுதல். பட்டினத்தடிகள் - துறந்த ஞானியாகியதிருவெண் காட்டடிகள். பட்டினப்பாலை - பத்துப்பாட்டில்ஒன்பதாவது பாட்டு. பட்டினம் - ஊர், நெய்தநிலத்தூர். பட்டினவர் - நெய்தனில மாக்கள்,செம்படவர். பட்டினவர்சேரி - நெய்தனிலம். பட்டினி - இராசாத்தி, உணவற்றிருத்தல், பார்ப்பனத்தி.பட்டினிகாத்தல், பட்டினிகிடத்தல் - பசிகிடத்தல். பட்டினிப்பண்டம் - சாவீட்டுக் கனுப்பும்போசன பண்டம். பட்டு - உல்லாசம், ஓர் பருத்தி,சிற்றூர், பட்டாடை, மடிப்பு,மேற் போர்வை. பட்டுக்கரைச்சீலை - பட்டுநூலாலருகு நெய்யப்பட்ட புடைவை. பட்டுச்சீலை - மடிப்பு. பட்டுத்தரித்தல் - பட்டனுபவித்தல்.பட்டுநூற்பூச்சி, பட்டுப்பூச்சி - ஓர்சிலம்பி. பட்டை - ஆபரணத் தோருறுப்பு,காறை, சிலிர்கை, தோள் மூட்டு,நீரிறைக்கும் பூட்டை, பட்டுநாடா,பிழா, போதிகை, மரத்தோல். பட்டைகிடங்கு - கிணற்றிற் பட்டையிட்டள்ளுங்குழி. பட்டைக்காறை - ஓர் கழுத்தணி. பட்டைக்கொடி - துலாக்கொடி. பட்டைச்சாதம் - புற்கைத்தளிகை. பட்டைச்சாராயம் - வெள்வேலம்பட்டையைக் காய்ச்சி இறக்கும்ஓர்பானம்.பட்டைச்சுருக்கு, பட்டைத்தடம் - ஓர்வகைத் தடம். பட்டைநாமம் - விட்டுணு பத்திக்காரர், நெற்றியிலணியு மோர்குறி. பட்டைப்பெல்லி - பட்டைப்பிடி. பட்டையம் - பட்டயம். பட்டையரைஞாண் - ஓரரைஞாண். பட்டோலை - அட்டவணை, அரசர்விடுந்திருமுகம், காரியக் குறிப்பெழுது மோலை. பணகரம் - பாம்பு, இராகு, கேது. பணக்கொழுப்பு - செல்வச் செருக்கு. பணசம் - வியாபாரச் சாமான்.பணச்சலுகை, பணச்செருக்கு - பணப்பெருமை. பணதரதரன் - சிவன். பணதரம் - பாம்பு, இராகு, கேது. பணதி - ஆபரணம் , செவ்வை. பணநம் - விக்கிரயம். பணபரம் - இரண்டு ஐந்து எட்டுபதினோரா மிடங்கள். பணப்பித்து - பணவாஞ்சை.பணப்புரட்சி, பணப்புரட்டு - பணவரவு. பணப்பெட்டி - ரொக்கத்தயிலா. பணப்பேய் - பணவாஞ்சை. பணமணி - நாகமணி. பணமிடுக்கு - பணப்பெலன். பணம் - காசு, கிரகம், சூதாடுதல்,பருமை, பாக்கியம், பாம்பின்படம், பாம்பு, பொக்கசம், வியாபாரச் சரக்கு, விலை, வேலை,சூதாடு பந்தயம், பொன். பணயம் - அடகு, பணம், பொருத்தப்பணம். பணர் - மரக்கிளை. பணவம் - தம்பட்டம். பணவன் - பணிசெய் மகன். பணவிடுதூது - சதாவதானம் பெரியசரவணகவிராயரியற்றிய நூல். பணவெடை - வராகனிலொன்பதினொரு பங்கு. பணவை - அட்டாலை, ஓரளவு,கழுகு, பரண். பணறு - பணர். பணாதரம் - பாம்பு, இராகு, கேது. பணாங்கனை - வேசி. பணாடவி - ஆதிசேஷன். பணாபவம் - பாம்பு, இராகு. பணதரதரன் - சிவன். பணாமகுடம் - பாம்பின் படம். பணாமணி - நாகரத்தினம். பணாமரம் - கொப்படர்த்தியானமரம். பணாமுடி - பாம்பின் முடி. பணாயிதம் - வணங்கல். பணாயை - கடைவீதி, தொழில்,வியாபாராதாயம். பணி - ஆபரணம், ஈகை, எருமை,ஏவல், கட்டளை, செய்கை,சொல், தொண்டு, தொழில், தோற்கருவி, பட்டாடை, பணி யென்னேவல், பாம்பு, வார்த்தை,வேலை. பணிகாரத்துத்தி - ஓர் பூடு. பணிகாரம் - அப்பவருக்கம். பணிக்கம் - திருத்தம். பணிக்கணம் - சர்ப்பக் கூட்டம். பணிக்களரி - தொழில் செய்யுமிடம். பணிக்கன் - உபாத்தியாயன், கூத்துமுதலிய பயிற்றுவோன், கொற்றர்தலைவன், சாராயங் காய்ச்சுகிறவன், நாவிதன், யானைப் பாகன்,விஷவைத்தியன், பணிக்கு - ஆசான் வேலை, பணிக்கை,திருத்தம். பணிக்குச்செலுத்துதல் - முற்கந்தம்பண்ணுதல். பணிக்குதல் - பணித்தல். பணிக்கை - செய்கை, நேர்த்தியானசெய்கை, பணித்தல். பணிசாரகன் - வேலையாள். பணிச்சக்கரம் - வேளாண்மை நாட்பொருத்தம் பார்க்குமோர்சக்கிரம். பணிதல் - இறங்கல், உண்டல், குறைதல், தாழ்தல், வணங்கல், இஃதுபுண்ணியமொன்பதி னொன்று,வளைதல். பணிதம் - பந்தயப்பொருள். பணிதவ்வியம் - விற்றற்குரியது. பணிதானம் - தோத்திரஞ் செய்தல். பணிதி - பணதி. பணித்தட்டார் - பொற் கொல்லர். பணித்தல் - ஏவுதல், கட்டளையிடல், குறைத்தல், கொடுத்தல்,சொல்லல், தாழ்த்தல். பணித்திறத்தல் - கீழேயிறக்கி வைத்தல். பணிப்படுத்துதல் - அலங்கரித்தல்,செப்பனிடுதல். பணிப்பிரியம் - காற்று. பணிப்பு - பணிதல். பணிப்பெண் - குற்றேவற்காரி. பணிமாறுதல் - இரட்டல். பணிமுட்டு - தளபாடம். பணிமொழி - நல்வார்த்தை. பணியல் - வணங்கல். பணியாநாக்கு - தண்ணீர்விட்டான். பணியாரத்துத்தி - ஓர் துத்தி. பணியாரம் - பணிகாரம். பணியார் - பகைவர். பணியினாக்கு - தண்ணீர்விட்டான்பூடு. பணிலம் - சங்கு, வலம்புரிச்சங்கு,வார்த்தை. பணிவிடை - கட்டளை, குற்றேவல்,வேலை. பணிவு - தாழ்வு, பதுங்குகை, வணக்கம். பணினம் - பாம்பு. பணீசுரன் - சேடன். பணை - அரசமரம், உயரம், கிளை,குதிரைப்பந்தி, தப்பிதம், பணையென்னேவல், பருமை, பறைப்பொது, பிழை பெருமை, மரக்கொம்பு, மருதநிலப்பறை, மருதநிலம், முரசு, மூங்கில், வயல்,விலங்கின் படுக்கை. பணைத்தல் - கிளைத்தல், பருத்தல்,பிழைத்தல். பணைத்திராய் - ஓர் பூடு. பணைப்பு - கிளைப்பு, பருமை,பெருத்தல். பணையம் - பணயம். பண் - அமைவு, இசைப்பாட்டு,ஊழியம், குதிரைக்கல்லணை, சீர்,செவ்வை, தகுதி, நிந்தை, நிறைநரம்புள்ள வீணை, நீர் நிலை,படுகுழி, பண்ணென்னேவல்,பாய்மரக்கயிறு, மகளிர் கூட்டம்,சீர். பண்கொடி - பிரம்பு. பண்செய்தல் - பணிவிடைசெய்தல்,பண்படுத்தல். பண்டகசாலை - களஞ்சியம், பொக்கசச்சாலை. பண்டகன் - அலி. பண்டகாசினி - வேசி. பண்டகேந்திரம் - ஓர் கணிதம். பண்டசாலை - பண்டகசாலை. பண்டபதார்த்தம் - இரசநிரச வஸ்து. பண்டப்பழிப்பு - தேட்டாக்கூறு,நிந்தித்துரைத்தல். பண்டமாற்று - விற்பனவு. பண்டம் - அறிவு, உணவுப்பொருள்,கலைக்கியானம், தானியம், பண்ணிகாரம், பொருள், பொன்,வயிறு, மெய்யுணர்வு. பண்டர் - பாடற்கீழ்மக்கள்.பண்டவறை, பண்டவீடு - பொக்கசச்சாலை. பண்டனம் - கவசம், போர். பண்டன் - ஆண்டன்மையில்லாதவன். பண்டாகி - சேம்பு. பண்டாரக்குரு - ஆகமக் குரு. பண்டாரசன்னிதி - ஆதீனத்துப்பெரியோர்களின் சாத்திர விசாரணைத்தலம், ஆதீனத்துப் பெரியோர் தலைவன், மடாதிபதி. பண்டாரச்சொம் - பொதுச்சொம். பண்டாரத்தி - பண்டாரப்பெண். பண்டாரத்தெரு - இராசதெரு. பண்டாரத்தோப்பு - இராசதோட்டம். பண்டாரப்பிள்ளை - அதிகாரியினேவற்காரன். பண்டாரமேளம் - இராசமேளம். பண்டாரம் - குங்குமம், சிவனடியான்,துரைத்தனம், பல பண்டம், பொக்கசம், பொது, மஞ்சட் பொடி,மடாதீனத்தான், அபி ஷேகஸ்தன். பண்டாரவாய்க்கால் - பொதுவாய்க்கால். பண்டாரவிடுதி - பொது விடுதி.பண்டாரவூழியம், பண்டாரவேலை - அமஞ்சி வேலை, பொதுவூழியம். பண்டாரி - பண்டாரம், பொக்கிஷக்காரன், வேளாண்மை செய்வாரிலோர் வகுப்பு. பண்டி - உரோகணிநாள், வண்டில்,வயிறு. பண்டிகை - ஓர்வகை சிற்பவேலை,திருவிழா, பெருநாள். பண்டிதபார்ப்பார் - பார்ப்பாரினோர்வகை. பண்டிதம் - வித்தை, வைத்தியம். பண்டிதவாய் - கடுக்காய். பண்டிதன் - சுக்கிரன், புதன், புலவன்,வைத்தியன். பண்டிலன் - நூதன். பண்டு - பழமை, பண்டுகம் - அசமதாகம்,செவ்வகத்தி. பண்டை - கல்வி, ஞானம், பண்டு.பண்டையர், பண்டையோர் - முன்னோர். பண்ணல் - செய்தல், பருத்தி. பண்ணவர் - கடவுளர், குருமார்,திண்ணியர், தேவர், பாடகர்,முனிவர். பண்ணவன் - அருகன், ஆசிரியன்,கடவுள், குரு, திண்ணியன், தேவன்,பாடகன், முனிவன். பண்ணவர்சாமி - இலக்கினாதிபதி. பண்ணி - சிறுநாவல். பண்ணிகாரம் - அப்பவருக்கம், பலபண்டம். பண்ணியங்கூலம் - பலபண்டம். பண்ணிமோத்தை - சிறுகுறட்டை, பண்ணியசாலை - அப்பசாலை,சந்தை, வியாபாரவீடு. பண்ணியஸ்திரீ - வேசி. பண்ணியபலத்துவம் - வியாபாரசித்தி. பண்ணியம் - பலகாரம், பலபண்டம்,விற்றற்குரியது. பண்ணியவீதி - கடைத்தெருவு. பண்ணியாங்கனை - வேசி. பண்ணியாசீவகம் - தடை. பண்ணுதல் - செய்தல். பண்ணுவர் - குதிரைப்பாகர், யானைப்பாகர். பண்ணுறுத்தல் - சீர்ப்படுத்தல், வாகனங்களை ஆயத்தம் பண்ணல். பண்ணை - ஓர்கீரை, குளம், சமுசாரம், நீர்நிலை, படகு, மனை,மகளீர்கூட்டம், மகளீர் விளையாட்டு, மரக்கலம், மருத நிலம்,வயல், விலங்கின்படுக்கை, விலங்கின் மேற்சேணம், தோட்டம்,சவை, நீர்நிலை. பண்ணைக்காரர் - பறையரிற்றலைவர்,வயற்செய்கைக்காரர். பண்ணைக்காரியம் - கமக்காரியம்,சமுசாரகாரியம். பண்ணையார் - மிராசுதார். பண்ணையாள் - வயல்வேலைக்காரன், வீட்டு வேலைக்காரன். பண்ணைவீடு - தானியவீடு, மடைப்பள்ளி. பண்ணைவைத்தல் - உணவு சமைத்தல், படகு வைத்தல். பண்படி - பண்புப்பகுதி. பண்படுதல் - அமைதல், உதவுதல்,ஏவல் செய்தல், சீர்திருந்தல், சொற்படிசெய்தல். பண்படுத்தல் - சீர்ப்படுத்தல். பண்பாகுபெயர் - பண்பினாலாயஆக்கப்பெயர்(உ-ம்) வரை. பண்பி - பண்பையுடைய பொருள். பண்பு - குணம், தகுதி, விதம், செயல்,நன்மை. பண்புச்சொல் - உரிச்சொல். பண்புத்தற்கிழமை - பண்பி னொற்றுமையுடைமை (உ-ம்) கதிர்மணி பண்புத்தொகை - குணத்தொடுகுணிக்குண்டாகிய வொற்றுமைநயத்தை விளக்கும் ஆகிய வென்னும் பண்புருபு தொக்கு வருந்தொடர் (உ-ம்) ஆதிபகவன். பண்புப்பெயர் - உரிப்பெயர். பண்புமறிநிலை - ஓரலங்காரம் அஃதுஒன்றன் குணத்தை மற்றொன்றற்குரைத்தல். பண்புரிச்சொல் - பொறிகளா லறியப்படுங்குணம் (உ-ம்) செம்மை. பண்புரைப்பார் - தூதர். பண்புவமை - ஒன்றின்பண்பைமற்றொன்றிற்கொப்பிடுவது பண்மை - தகுதி. பதகம் - ஓர்பறவை, பாதகம் என்பதின் குறுக்கம். பதகர் - சண்டாளர். பதகளித்தல் - பதறுதல். பதகளிப்பு - பதறுகை. பதகன் - கீழ்மகன், பாதகன். பதகி - பாதகி. பதகை - திரிபதகை. பதக்கம் - மாதரணிவடம், மார்பணியினொன்று. பதக்கிரமம் - காலடி. பதக்கு - இரண்டு குறுணி கொண்டது. பதக்குபதக்கெனல் - அச்சக்குறிப்பு. பதக்கெடுதல் - தைரியங்கெடல்,பதனழிதல். பதங்கமம் - பறவைப்பொது, விட்டில். பதங்கம் - இரசம், சந்தனம், சாம்பிராணி முதலியவற்றினெடுக்கும்பதங்கம், பறவைப்பொது,விட்டில். பதங்கன் - சூரியன். பதங்கு - ஓட்டுவரிசை, குழி, பிளவு. பதசம் - சந்திரன், பட்சி, மயிர்ப்புழு. பதச்சேதனம்பண்ணுதல் - பதமுடித்தல், கண்ணழித்தல்,சொல்லைப் பிரித்தல். பதஞ்சலி - ஓர் இருஷி, சேடன். பதஞ்சலியம் - பதஞ்சலி செய்த நூல். பதடி - பதர். பதணம் - மதிலுண்மேடை, மதில். பதத்திரம் - சிறகு. பதத்திரி - பறவை. பதநியாசம் - ஓர்பூடு, காலடி, நடை. பதநிறம் - மாங்கிஷசிலை. பதநீர் - கருப்பநீர், பனஞ்சாறு. பதந்தன் - பூஜிக்கத் தக்கவன். பதபஞ்சனம் - சொல்லிலக்கணம்,சொற்பிரிவு, விளங்கப்பண்ணுதல். பதபதெனல் - ஈரடுக்கொலிக் குறிப்பு. பதபாதம் - காலடி. பதப்படுதல் - சீர்ப்படுதல், பக்குவமாதல். பதப்படுத்துதல் - சீர்ப்படுத்துதல்,பக்குவப்படுத்துதல். பதப்பலம் - கால்பலம். பதப்பாடு - மதிலுறுப்பு, பதப்புணர்ச்சி - நிலைமொழியீறும்வருமொழிமுதலும் இயல்பாயேனும், விகாரமாயேனும்புணர்தல். பதப்பேறு - பதமுத்தி. பதப்பொருட்காட்சியணி - ஓரலங்காரம், அஃது உபமானோபமேயங்களுளொன்றின் றருமத்தைஒன்றினாரோபித்தல். பதப்பொருள் - பதவுரை அஃது உரையிலக்கண மைந்தினொன்று. பதமம் - சந்திரன், பட்சி, விட்டில். பதமழிவு - பதனழிவு. பதமுடித்தல் - பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரமெனு மாறையுங்கொண்டு மொழிகளைப் பிரித்துக் காண்டல். பதமுத்தி - பதவிமுத்தி, பாதமுத்தி. பதமை - அமைதி, இணக்கம், தாழ்மை,மிருது, மெத்தனவு, மெல்லோசை. பதம் - அடையாளம், அழகு, அறுகம்புல், ஆடை, இடம், இன்பம்,ஈரம், உண்டல், எழுத்தானாயபதம், ஒளி, ஓர்மொழியிற் பிரகிருதியாய் நிற்பது, கால், காவல்,குழைவு, கூர்மை, கொக்கு, சிந்து,சொல், சோறு, தின்றல், தெரு,நாழிகை, பக்குவம், பதவி, பாவினோருறுப்பு, பூரட்டாதி,பொருள், பொழுது, முயற்சி,வரிசை, வழி, வேஷம். பதம்பிரித்தல் - சொற்பிரிப்புச்செய்தல். பதரி - இலந்தை. பதரிகாச்சிரமம் - ஓர் தபோவனம்,விஷ்ணு ஸ்தலம், வேதவியாசராச்சிரமம். பதரை - வெந்தோன்றி. பதர் - அறிவீனன், அற்பம், சப்பட்டை, பலனற்றது. பதலம் - பதனம். பதலை - ஓர் கட்பறை, குண்டான்,சிறுமலை, தாழி, மத்தளம், மரக்கலம், மலை, வாயகன்றபறை,சாடி. பதல் - வதிள். பதவி - இடம், உலகம், ஒழுங்கு, கதி,செல்வம், நிலை, நிலைபரம்,முத்திவழி. பதவியகுணம் - மெத்தெனவு. பதவியடைதல் - கதியடைதல், பாதமடைதல். பதவியது - சாதுவானது, மிருதுவானது. பதவியல் - பதப்புணர்ச்சி யிலக்கணம். பதவியன் - சாதுவானவன். பதவு - புல், மெத்தனவு, அறுகு பதவுரை - சொற்றோறுமுரைக்கும்பொருள். பதவை - வழி.பதறல், பதறுதல் - தளம்புதல், திடுக்கிடல், நடுங்கல், விரைதல். பதறை - வெந்தோன்றி. பதற்றம் - பதறுதல். பதனகேந்திரம் - அக்ககன்னம்,உதயத்திலிருந்து நாலாம் ஏழாம்பத்தாமிடம். பதனம் - இறக்கம், இறக்குதல், களைதல், தாழ்தல், பத்திரம், பாவம்,பேணல், போதல், வியோமாட்சரேகை, விழுதல். பதனழிதல் - ஊழ்த்தல். பதனழிவு - ஊழ்ப்பு. பதனார் - முசுமுசுக்கை. பதனி - பதநீர், பனஞ்சாறு. பதனிடுதல் - பதமையாக்கல், மிருதுவாக்கல். பதன் - பக்குவம், பதம். பதன்படுதல் - பக்குவமாதல், பதமையாதல், பாகமாதல். பதாகன் - அரசன், பதாகையுடை யோன். பதாகிணி - படை,சேனை. பதாகை - அடையாளம், அதிட்டம்,கூத்தினோர் விகற்பம், விருதுக்கொடி. பதாசனம் - பாதபடி. பதாசி - பதாதி. பதாதி - அமைதியின்மை, எதுமற்றவன், காலாள், சேனைத்தொகை, பத்தினொன்று அஃதுஓர் தேரும் ஓர்யானையும் மூன்றுபரியும் ஐந்து காலாளுங் கொண்டது. பதாயுதம் - கோழி. பதாரம் - காலிற்றுகள், தெப்பம். பதார்த்தசாரம் - வைத்திய சாத்திரத்துளொன்று அஃது பதார்த்தங்களின் குணத்தைச் சொல்வது. பதார்த்தகுணசிந்தாமணி - பதார்த்தசார நூல். பதார்த்தம் - கறி, பதப்பொருள்,பாக்கியம், பொருள், போசனவஸ்து. பதி - அரசன், இடம், ஊர், எப்பொருட்குமிறைவன், ஒளி,கடவுள், காப்பவன், குதிரை, குரு,கொழுநன், சிவன், தலைவன்,பட்டினம், பதித்தல், பதியென்னேவல், பதிவு, பூமி, மருதநிலத்தூர், மூத்தோன், வீடு, வேர். பதிகசந்ததி - வழிச்செல்வோர்கூட்டம். பதிகம் - பத்துச் செய்யுளான்முற்றுப்பெறுமோர் பிரபந்தம்,பாசி, பாயிரம். பதிகன் - காலாள், வழிச்செல்வோன். பதிகி - வழிச்செல்வோன். பதிக்கினி - புருஷனைக்கொல்லி. பதிசத்திசாலம் - சிவசத்தி மாயை. பதிசம் - பாசி. பதிசாத்திரம் - பதிநூல். பதிசேவை - புருஷனுக்குக் கீழ்ப்படி. பதிச்சம் - வாலுளுவை. பதிஞானம் - தேவவறிவு, துறிவு. பதிஞ்ஞை - பிரதிஞ்ஞை. பதிட்டை - பிரதிட்டை. பதிதபாவனன் - பதிதர்களின் பாதித்தியத்தைப் பரிகரிக்கிறவன். பதிதம் - கூத்தினோர் விகற்பம்,தவறு, வருணாச்சிரமந் தவறுகை. பதிதல் - அழுந்துதல், ஊன்றல்,எழுத்துப்பதிதல், ஒடுங்குதல்,கீழ்ப்படிதல், தங்குதல், தாழ்தல்,பணிதல், பள்ளமாதல். பதிதன் - குலஞ்சமய முதலியவொழுக்கத்திற் றவறினோன். பதித்தல் - அழுத்தல், எழுதல், தரித்தல், தாழ்த்தல், பள்ள மாக்கல்,புதைத்தல், வைத்தல். பதித்திரி - உலைத்துருத்தி.பதிநிச்சயம், பதிநிண்ணயம், பதிநிதானம், பதிநியமம் - கடவுளதுதன்மை முதலியன அறிதல். பதிநூல் - கடவுளது தன்மையைவிளக்கும்நூல். பதிபக்தி - நாயக விசுவாசம். பதிபடை - ஒளித்திருக்கும் படை. பதிப்பிரஞ்ஞன் - வழியறிந்தவன். பதிப்பிராணை - பத்தினி. பதிப்பு - பதித்தல். பதிமினுக்கி - விளக்குமாறு. பதிமை - பிரதிமை. பதிம்பரை - சுவயம்பரை. பதியம் - பதிக்கப்பட்ட நாற்று,பத்துச்செய்யுளான் முடியும்பிரபந்தம், பாசி, பாசிப்பூடு. பதிரன் - செவிடன். பதில் - வதில், உத்தரம். பதிவத்தினி - மங்கலை. பதிவாகன் - சுமைகாரன். பதிவிடை - ஒளித்திருக்கு மிடம். பதிவிரதம் - கற்புத் தவறாமை. பதிவிரதாதருமம் - கற்பு நெறி. பதிவிரதாபத்தினி - பதிவிரதை.பதிவிரதாபுண்ணியம், பதிவிரதா விரதம் - கற்புநெறி.பதிவிரதி, பதிவிரதை - கற்புடையாள். பதிவிருத்தல் - ஒளிப்பிடத்தில்மறைந்திருத்தல். பதிவு - குனிவு, சாய்வு, பதிதல். பதிவைத்தல் - நாற்றுப் பதித்தல்,வேர் வைத்தல். பதிற்றந்தாதி - ஓர் பிரபந்தம் அஃதுபத்து வெண்பாவும் பத்துக் கலித்துறையுந் தோன்ற வந்தாதித்துப் பாடுவது பதிற்றுபத்தந்தாதி - நூறு செய்யுள்கொண்ட ஓர் பிரபந்தம் அதில்ஒவ்வொரு பத்தும் அந்தா தித்துப்பாடியது. பதிற்றுப்பத்து - நூறு. பதிற்றொன்பான் - தொண்ணூறு. பதினாயிரம் - ஓரெண், பத்தாயிரம். பதினாலுலோகம் - கீழேழுலகுமேலேழுலகு அவை அதலம்,விதலம், சுதலம், தராதலம்,இரசாதலம், மகாதலம், பாதலம்,இவை ஏழுங் கீழுலகு,பூலோகம்,புவலோகம், சுவலோகம், சனலோகம், தபோலோகம், மகலோகம்,சத்தியலோகம் இவையேழுமேலுலகு. பதினாறுகோணம் - எட்டுத்திசையுமதினுள்ளந்தராள மெட்டும். பதினெண்கணம் - பதினெண்கூட்டம், அவர் அசுரர், அந்தரர்,அமரர், ஆகாயவாசிகள், இயக்கர்.உரகர், கருடர், கந்தருவர், கிம்புருடர், கின்னரர், சித்தர், நிருதர்,பூதர், பைசாசர், போக பூமியர்,முனிவர், விஞ்சையர், வித்தியாதரர் பதினெண்கீழ்க்கணக்கு - எட்டுத்தொகையுள் ஒன்று இதனுள்நாலடியார், நான்மணிக்கடிகை,இன்னா நாற்பது, இனியவைநாற்பது, கார்நாற்பது, களவழிநாற்பது, ஐந்திணையைம்பது,ஐந்திணை யெழுபது, திணைமொழியைம்பது, திணைமாலைநூற்றைம்பது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், முதுமொழிக் காஞ்சி, ஏலாதி, இன்னிலை, அல்லது கைந்நிலை யென்னும் நூல்களடங்கியிருக் கின்றன. பதினெண்குடிமை - ஓடாவி, கன்னார்,குயவர், கொல்லர், கோவியர்,சிவியார், தச்சர், தட்டார், நாவிதர்,பள்ளர், பாணர், மாலைக்காரர்,மூவாணிபர், வண்ணார், வலையர்,வெட் டியான். பதினெண்ணுப்புராணம் - பதினெண்புராணத்து மெடுத்து ஆக்கியோர் பெயராய் வழங்குஞ் சார்புநூல், அவை, ஆங்கிரகம், உசனம்,கபிலம், காளி, சனற் குமாரம்,சாம்பவம், சிவதன்மம், சௌரம்,துருவாசம், நந்தி, நாரசிங்கம்,நாரதீயம், பராசரம், பாற்கவம்,மாரீசம், மானவம், வாசிட்டலைங்கம், வாருணம். பதினெண்பாடை - பதினெண் தேசத்தார்க்குரிய பாஷை, அவை, அங்கம்,அருணம், கலிங்கம், காம்போசம்,கொங்கணம், கோசலம், கௌசிகம், சாவகம், சிங்களம், சிந்து,சீனம், சோனகம், திரவிடம், துளுவம், பப்பரம், மகதம், மராடம்,வங்கம். பதினெண்புராணம் - சிவபுராணம்பத்தும் விட்டுணுபுராண நான்கும்பிரமபுராண மிரண்டும் அக்கினிபுராணமொன்றும் சூரிய புராணமொன்றுமாம், இவை முறையேஇலிங்கம், காந்தம், கூர்மம்,சைவம், பிரமாண்டம், பௌடிகம்,மச்சியம், மார்க்கண்டேயம் வராகம், வாமனம், காருடம், நாரதீயம், பாகவதம், வைணவம், பதுமம், பிரமம், ஆக்கினேயம்,பிரமகை வர்த்தம். பதினோராடல் - புறக்கூத்திற்குரியவற்றுள் ஒன்று. பதுகரை - பழமுண்ணிப்பாலை. பதுக்கம் - ஒளிப்பு, கபடம், பதுங்குந்தன்மை. பதுக்காயன் - குள்ளன். பதுக்காய் - உள்ளான் குருவி, கூழை,வளர்ச்சி யற்றது. பதுக்குதல் - மறைத்தல். பதுக்கை - சிறுதிட்டை, சிறுதூறு,பாறை, கற்குவை. பதுங்கலன் - பதுங்கி. பதுங்கல் - ஒளித்தல், பதுங்கி - பின் நிற்பவன். பதுங்குதல் - பதுங்கல். பதுமகருப்பன் - பிரமன், விட்டுணு. பதுமகேசரம் - புன்னைமரம். பதுமகோசரம் - நாட்டியத்தில் ஐந்துவிரல்களும் மேனோக்கவிற்போல் வளைத்துக் காட்டல். பதுமசாரிணி - ஓர் தாமரை. பதுமதந்து - தாமரை நாளம்.பதுமநாபன், பதுமநாபி - விட்டுணு. பதுமநாளம் - தாமரைக்கொடி. பதுமநிதி - தாமரையுருவாய்க் கிடக்கும் பொன் அஃது இந்திரனிருவகை நிதிகளி னொன்று, குபேரனவநிதிகளினுமொன்று, பெருநிதி. பதுமபத்திரம் - தாமரையிலை. பதுமபந்து - சூரியன், தேனீ. பதுமபந்தம் - ஓரலங்காரம். பதுமபர்ணம் - தாமரையிலை. பதுமபாணி - சூரியன், பிரமன்,புத்தன். பதுமம் - ஈயம், ஓர் குளிகை, கோடாகோடி, சோதிநாள், தாமரை,பதினெண் புராணத்தொன்று,பதுமாசனம், முடியுறுப்பைந்தினொன்று, யானைத் துதிக்கைப்பொறி. பதுமமணி - தாமரைக்கொட்டை. பதுமயோனி - பிரமன். பதுமராகம் - கெம்பு, நவமணியினொன்று. பதுமரேகை - கையிரேகையி னொன்று. பதுமரோகம் - கண் ரெப்பைக்குள்சிகப்பு சதை வளர்ச்சி. பதுமலாஞ்சனன் - அரசன், குபேரன்,சூரியன், பிரமன். பதுமலாஞ்சனை - இலக்குமி, சரசுவதி. பதுமவீசம் - தாமரைக் கொட்டை. பதுமனார் - நாலடியாருக்கு உரையெழுதின ஓர் ஆசிரியர். பதுமன் - அட்ட நாகத்தொன்று,இராமன், ஓர் சக்கிரவர்த்தி, பிரமன். பதுமாகரம் - தடாகம். பதுமாக்கம் - பதுவீதம். பதுமாக்கன் - விஷ்ணு. பதுமாசநன் - பிரமன். பதுமாசனம் - அட்டாங்க யோகாசனத் தொன்று அஃது இருதொடைமேலு மிரண்டுள்ளங்காலையு மாறித் தோன்ற வைத்திருத்தல். பதுமாதனம் - பதுமாசனம். பதுமாந்தரம் - தாமரை யிதழ். பதுமாலயை - இலக்குமி, சரச்சுவதி. பதுமார்க்கம் - கவிழ்தும்பை. பதுமாவதி - ஓர் நதி, ஓர் முனி பத்தினி. பதுமினி - கூத்தினோர் விகற்பம்,நால்வகைப் பெண்களி னொருத்தி,முதல் சாதிப் பெண். பதுமினிகாந்தன் - சூரியன். பதுமுகம் - ஓரிருக்கை. பதுமை - இலக்குமி, ஓரிதழ்த் தாமரை,காளி, பதிமை. பதுமைகதை - பதிமை கதை, பாவையின் கதை. பதுமோத்பவன் - பிரமன். பதுவை - வலம்புரிக்காய். பதைத்தல் - பதைப்பு.பதைபதைத்தல், பதைபதைப்பு - மிகப்பதைத்தல். பதைப்பு - இரக்கம், பதகளிப்பு,பதறுதல். பதோதகம் - சதக்கல், பாதப்பிரட்சாளன நீர், வழிக்கரையிற்றண்ணீர். பதோற்பாலம் - வெடியுப்பு. பத்தகணம் - பத்தர் கூட்டம். பத்தகாரன் - சமையற்காரன். பத்தகேசரி - கருப்பூரம். பத்தங்கம் - செஞ்சந்தனம். பத்தசந்தம் - போசனப்பிரியம். பத்தசனம் - தொண்டர். பத்தசாரம் - காடிச்சலம். பத்தசை - அமுதம். பத்ததி - ஒழுங்கு, கிரியைகளைவிதிக்கிற நூல், சொற்பயன், வழி. பத்தம் - உணா, உண்மை, கட்டு,நன்றியறிகை. பத்தயம் - போன், எலிப்பத்தயம்முதலியன. பத்தரூபி - கருப்பூரம். பத்தர் - தட்டார், தேவதொண்டர்,வத்தகர். பத்தல் - ஓர் பாத்திரம், நீரிறைக்குஞ்சால், யாழினோருறுப்பு. பத்தறா - மொசு மொசுக்கை. பத்தனம் - பட்டணம். பத்தன் - அன்புடையோன், தட்டான்,தொண்டன். பத்தா - கணவன்.பத்தாசு, பத்தாயம் - மஞ்சி. பத்தி - அடைப்பு, அன்பு, ஒழுக்கம்,ஒழுங்கு, தூணினிடைவெளி,தொண்டு, நடை, நம்பிக்கை,நிரை, பங்கு, பதாதி, பாத்திமுறைமை, வரிசை, வழிபாடு,விசுவாசம், வீட்டிறப்பு. பத்திகாண்டிகர் - மூவகைப் பக்குவரிலொருவர் அவர் நேசப்பெருக்கமுடையோர். பத்திசாரர் - திருமழிசை யாழ்வார். பத்திசூலம் - ஓர் நோய். பத்திச்சுவலாகர் - கடவுளைப் பற்றியபத்தியிற் சுவாலிப்போர். பத்திநெறி - பத்தி மார்க்கம். பத்திபங்காரம் - ஆற்று நீர்ப்பாய்ச்சல். பத்திபாய்தல் - கதிர் வீசல், பிரதி விம்பித்தல். பத்திமார்க்கம் - பத்தி நடை. பத்திமான் - பத்தி யுடையோன். பத்திமை - அன்புடைமை, ஒழுக்கமுடைமை,தேவபத்தி யுடைமை. பத்தியம் - ஆரியம், தெலுங்கு இவற்றின் பிரபந்தம், இணக்கம், இதம்,கடு, தமிழ், பாடல், போசனம்,மருந்திற்கிசைந்த புசுப்பு கடுக்காய். பத்தியகாரி - சிறு கீரை. பத்திரகம் - இலை, இறகு, சந்தனம்பூசுதல்.பத்திரகாகலம், பத்திரகாகலை - புள்சிறகடித் தெழுமொலி. பத்திரகாளி - ஓர் தேவதை. பத்திரகிரியார் - பட்டினத்தடிகள்சீடர், ஒரு ஞானி. பத்திரகும்பம் - முடிசூட்டுக்குச்சலம்பூரித்த கும்பம். பத்திரங்கம் - செஞ்சந்தனம். பத்திரசிரயம் - சந்தனம். பத்திரசிரேட்டம் - வில்வம். பத்திரசுரம் - கட்டாரி. பத்திரசூசி - முள். பத்திரதாரகம் - சட்டவாள். பத்திரதாருகம் - தேவதாரம். பத்திரதாலி - சாதிமல்லிகை. பத்திரநாடிகை - இலை நரம்பு. பத்திரபதி - சிற்றாமுட்டி. பத்திரபரசு - அரம். பத்திரபலநம் - பலராமன். பத்திரபாணி - பூசிணி. பத்திரபதை - இரேபதி, உத்திரட்டாதி. பத்திரம் - அதிட்டம், அம்பிறகு,அம்பு, அழகு,இரும்பு, இலை,இறகு, உடைவாள், உறுதிப்பத்திரம், எருது, குறிச்சி, குற்றுவாள், சந்தோஷம், செல்வம்,திரட்சி, திருமுகம், நன்மை, மடை,பத்திரவாகரணம், புத்தகத்தினொற்றை, பூவிதழ், பேணம்,பொன், மலை, முடியுறுப்பு,மெல்லிய தகடு, வாகனம், பலாசம். பத்திரயௌவனம் - தளிர். பத்திரரதம் - பட்சி. பத்திரரேணு - ஐராவதம். பத்திரவதை - பெரிய பட்டாக்கத்தி. பத்திரவம் - பத்திரவாகரணம். பத்திரவாகம் - அம்பு, பட்சி. பத்திரவாகரணம் - விட்டிக்கரணம். பத்திரவாகன் - சீட்டோலை கொண்டுபோவோன். பத்திரவீரியகம் - கோணாமூங்கில்,பிரப்பஞ்செடி. பத்திரன் - சிவன், வீரபத்திரன். பத்திராகரணம் - சௌளஞ்செய்தல். பத்திராக்கியம் - தாளிசபத்திரி. பத்திராங்கம் - ஊமத்தை, செஞ்சந்தனம். பத்திராசனம் - அட்டாங்க யோகத்தோராசனம், அஃது பீசத்தின்கீழ்ச் சீவனியிடத் திருகாற் பரட்டையும் வைத்தவ் விருபதத்தையுமிருகையா லிறுகப்பிடித் தசையாதிருத்தல், இராசாசனம். சிங்காசனம். பத்திராசனர் - வானோர், நவகணத்தொருவர், அவர் கடவுளாதனத்தைப் புகழ்ந்துறைவோர். பத்திராசிரயம் - சந்தனம். பத்திராசுவம் - நவகண்டத் தொன்று. பத்திராஞ்சனம் - மை. பத்திராட்சம் - ஓர் கொட்டை, வீரபத்திர மணி. பத்திராதனம் - பத்திராசனம். பத்திராத்தியம் - திப்பிலிமூலம். பத்திராத்துமசம் - வாள். பத்திரி - அம்பு, இலை, காளி, குதிரை,பறவை. பத்திரிகை - இலை, ஒற்றை, ஓலையுறுதி, திருமுகம். பத்திரை - அவுரி, இரண்டாம் ஏழாம்பன்னிரன்டாந்திதி, கங்கை, காளி,கீரி, புரண்டான்பூடு, நற்பசு,மஞ்சள். பத்திரைகேள்வன் - வீரபத்திரன். பத்திரோதகம் - இலையினீர். பத்திரோர்ணம் - வெண்பட்டு. பத்திரோல்லாசம் - இலைத்தளிர். பத்திவான் - பத்தன். பத்திவிசுவாசம் - உறுதியான நம்பிக்கை. பத்திவைராக்கியம் - தெய்வ பத்தியிற்பிடிவாதம். பத்தினி - இல்லாள், கற்புடையாள். பத்தினிக்கடவுள் - கண்ணகி. பத்தினித்தனம் - கற்புநெறி. பத்தினிப்பிள்ளை - குடிப்பிள்ளை. பத்து - ஓரெண், தேவபத்தி, பாதம். பத்துக்காலோன் - நண்டு. பத்துப்பாட்டு - திருமுருகாற்றுப்படை போன்ற பத்துப் பாட்டுகளடங்கிய ஒரு நூல். பத்தூரம் - பொன்னாங்காணி. பத்தை - வகிர், வெந்தோன்றி. பஸ்மம் - பற்பம், பற்மம், விபூதி. பந்தகம் - கட்டு. பந்தகி - பெண்யானை. பந்தடித்தல் - பந்தெறிதல். பந்ததந்திரம் - சதுரங்கம், வியபிசாரி. பந்ததயிலம் - பந்தமெரித்திறக்குமெண்ணெய். பந்தம் - அழகு, உண்டை, உறவு,ஏற்பாடு, கட்டு, கயிறு, கைவிளக்கு, தளை இஃது யாப்புறுப்பெட்டி னொன்று, திரட்சி, தீக்கொளுத்தும் பந்து, தொடர்,பெருந்துருத்தி, மதில், மயிர் முடி,முடிச்சு, முறை, விலங்கு, சரீரம்,நூல். பந்தயங்கட்டுதல் - ஓட்டம்வைத்தல். பந்தயச்சீட்டு - ஓட்டம் யார்க்குடையதென வெழுதிப்போடுஞ்சீட்டு. பந்தயமொட்டுதல் - பந்தயம் பிடித்தல். பந்தயம் - ஓட்டம். பந்தயித்துவம் - கட்டல். பந்தரம் - கரண்டக பாஷாணம். பந்தரி - பிடாலவணம். பந்தர் - ஓர் பட்டினம், பந்தல்,பாசத்துக் குள்ளானவர்கள், நிழல். பந்தல் - ஓடுஞ்சாலை, பந்தர். பந்தவரிசை - ஓர் விளையாட்டு,குதிரைப் பற்பாஷாணம். பந்தவிளக்கு - தீவத்தி, பந்தாய்த்திரட்டிக்கொளுத்தும் விளக்கு. பந்தற்பாடன் - முகடு பதிந்து தாழ்வாரமுயர்ந்தது. பந்தற்பாடு - சாய்ப்பு. பந்தற்பூ - உதிர்ந்த இருப்பைப்பூ. பந்தனந்தாதி - ஒளவையார் பாடியஒரு நூல். பந்தனம் - அரைஞாண், கட்டல்,கயிறு, காவல் செய்தல். பந்தனாலயம் - சிறைச்சாலை. பந்தனை - கட்டு, நிருணயம், பந்தித்தல், மகள். பந்தன் - ஓர் வாணிகன், இவன்பேரில் ஒளவை பந்தனந்தாதிஎனும் நூல் பாடினாள், சீர்பந்தபாஷாணம். பந்தி - ஒழுங்கு, ஓர்பண், கீர்த்தி,குதிரை, யானைமுதலிய நிற்குஞ்சாலை, கூட்டம், சபை, பந்தியென்னேவல், வரிசை. பந்தித்தல் - கட்டல். பந்தித்திரம் - நேயம். பந்திபோசனம் - பலரையுஞ் சேரவைத்துப் புசித்தல். பந்திப்பாய் - மிகவொடுங்கி நீண்ட பாய். பந்திருபாவனன் - சங்கைமான். பந்திலம் - அசைவு, சுபம். பந்திவஞ்சனை - பந்தி பரிமாறுதலில்வஞ்சித்தல். பந்தினம் - பந்துசனம். பந்து - உறவு, எறியும்பந்து, சகோதரன், சினேகிதன், திரட்சி, திரிகை,துராலோசனை, மட்டத் துருத்தி. பந்துக்கட்டு - கட்டுக்கதை, பலரையுமொன்றாய்ச் சேர்த்துக் கொள்ளல், போலி, வெளிவராதுமறைத்தல். பந்துக்கள் - நாலாமிடம். பந்துசனம் - வமிசம். பந்துத்துவம் - இனச்சேர்வு. பந்துரம் - அழகு. பந்துரை - வேசி. பந்துவராளி - ஓர் இராகம். பந்தூரம் - தொளை. பந்தையம் - பந்தயம். பபதி - சந்திரன். பபீதி - ஏகபாத்திரபானம். பப்படம் - அப்பளம். பப்பரப்புளி - தொதி, பெருக்கமரம். பப்பரம் - ஓர் பாடை, தேய மைம்பத்தாறி னொன்று, பதினெண்பாடையினொன்று, பருப்பம். பப்பரர் - பப்பரதேசத்தார். பப்பரவன் - பருத்தது.பப்பரவாகனன், பப்பருவாகனன் - அருச்சுனனுக்குச் சித்திராங் கதையிடத்திற்பிறந்த பிள்ளை. பப்பளி - ஓர் மரம். பப்பளிச்சேலை - ஓர்வகை வன்னச்சேலை. பப்பாதி - பாதிபாதி. பப்பாளி - பப்பளி. பப்பு - ஒப்பு, பரப்பு. பப்புவர் - புகழ்வோர். பமரம் - பேரொலி, வண்டு. பம் - கிரகம், விண்மீன். பம்பம் - திராய், புகை. பம்பரத்தி - ஆடுமாலை, காமாதுரமுள்ளவள். பம்பரமாட்டுதல் - அலைக்கழித்தல்,பம்பரஞ் சுழற்றுதல். பம்பரம் - ஓர் விளையாட்டுக் கருவி,மந்தரகிரி, வேசி. பம்பரை - ஓர்பலா. பம்பல் - ஆரவாரம், பம்புதல், மிகுதி,வலி. பம்பளபளோ - இளமைக்குறிப்பு மொழி. பம்பா - தக்ஷணத்தில் ஓர் நதி. பம்பிகை - பீர்க்கு, திருநாமப்பாலை. பம்புதல் - ஆரவாரித்தல், எழுச்சி,நெருங்கல், பரவல், பொலிதல். பம்பை - ஓர் வாச்சியம், சுருண்டமயிர், பம்பாநதி, முல்லை நிலப்பறை. பம்மல் - செம்முதல், பொருத்திக்கட்டு, கை, மந்தாரம், மந்திப்பு,மூடுதல், பின்வாங்கல். பம்மாத்து - வெருட்டு, வெளிவேடம். பம்முதல் - பம்மல். பம்மை - சித்திரப்பாவை. பயங்கரம் - அச்சம். பயசம், பயசு - நீர், பால். பயசுபம் - பூனை. பயணங்கட்டுதல் - பிரயாணத்துக்காயத்தம்பண்ணல். பயணம் - பிரயாணம். பயதம் - வண்டு. பயத்தல் - உண்டாதல், கொடுத்தல்,சிந்தித்தல், பிறப்பித்தல். பயந்தாள் - தாய்.பயந்தான், பயந்தோன் - பிதா. பயபத்தி - ஒடுக்க வணக்கம். பயப்படல் - அஞ்சல். பயப்பாடு - அச்சம். பயப்பு - கிருபை, தேமல், நிறம், பசப்பு. பயம் - அச்சம், அஃது சுபாவகுணமொன்பதி னொன்று, அமிர்தம்,குளம், சுதை, நீர், பயன், பால்,பிரமா, மாயை, யாக்கை, பதினெண் குற்றத்து மொன்று,மன்னர் விழைச்சி. பயருதி - திருநாமப்பாலை. பயம்பு - பள்ளம், யானை படுகுழி. பயரை - ஓர் மரம். பயல் - சரிபாதி, பள்ளம், பையல். பயளி - பசளி. பயளை - பசளை. பயறி - ஓர் குருநோய். பயறு - ஓர் தானியம், சித்திரைநாள். பயற்றங்காய் - ஓர் காய். பயனிலசொல்லல் - பிரயோசனமில்லாத பேச்சுப் பேசல், இஃதுவாக்கின் றீக்குணநான்கினொன்று. பயனிலாள் - வேசி. பயனிலி - வீணன். பயனிலை - பயன் முடிவு. பயனின்மை - பயன்படாமை. பயனுரைத்தல் - உரை சொல்லல். பயனுவமம் - பிரயோசனத்தையேயுவமையாய்ச் சொல்லுவது (உம்)மாரிவண்கை. பயன் - அகலம், சொல்லுரை, நீர்,பலன், பகல், பிரயோசனம். பயன்சொல்லுதல் - வியார்த்திபண்ணல். பயன்படச்சொல்லல் - பிரயோசனந்தரச்சொல்லல் அஃது வாக்கினற்குண நான்கினொன்று. பயன்படுசொல் - பிரயோசனந்தருஞ்சொல். பயன்படுதல் - பிரயோசனமாதல்.பயன்முடிவு, பயன்முற்று - பொருளின்முடிவு. பயாபகன் - அரசன். பயானகம் - அச்சம், இராகு, புலி. பயிக்கம் - பிச்சை. பயித்தியக்காரகன் - சூரியன். பயித்தியம் - பைத்தியம், மதிகேடு,மிண்டுத்தனம், பயிந்தரி - ஏகம்ப பாஷாணம். பயிரங்கம் - அறிக்கைப்பத்திரம்,பகிரங்கம். பயிரவி - முடக்கொத்தான். பயிரி - ஓர் கீரை, ஓர் வசூரி. பயிருகம் - பழம்பாசி. பயிரேறுதல் - பயிர்ப்படல். பயிர் - இடும்பயிர், ஒலி, பயில்,பறவைக் குரல், புல், விலங்கொலி,பசுமை. பயிர்த்தல் - ஒலித்தல், அழைத்தல். பயிர்ப்பங்கு - செய்கைப்பங்கு. பயிர்ப்பு - அசுத்தம், குற்சிதம் இதுமகடூஉக்குண நான்கினொன்று,அருவருப்பு. பயிலல் - சொல்லுதல், பிடித்தல்,பழகல், நெருங்கல். பயிலியம் - குப்பைமேனி. பயிலுதல் - பயிலல். பயில் - சைகை, சொல், பயிலென்னேவல், பழக்கம், பாதி. பயில்விடுதல் - பயில் காட்டுதல். பயில்வு - செய்கை, பயிற்சி. பயிறல் - ஒலித்தல், கூடுதல், சொல்லுதல், பயிலுதல், பேசலா லெழுமொலி. பயிற்சி - பழக்கம். பயிற்பேச்சு - யூகப்பேச்சு. பயிற்றுதல் - படிப்பித்தல், பழக்குதல். பயினி - இணக்கம், ஓர் மரம். பயின் - உட்படுகுருத்து, பிசின்,அரக்கு. பயோகடம் - தீவு. பயோகனம் - ஆலாங்கட்டி. பயோதசம் - சமுத்திரம், நீர்ப்பிரிவு,முகில். பயோததி - சமுத்திரம், பாற்கடல். பயோதம் - முகில். பயோதரப்பத்து - ஓர்பிரபந்தம் அஃதுமுலையினைப் பத்துச் செய்யுளாற்கூறுவது. பயோதரம் - கடல்,கரும்பு, பால்,முலை, மேகம். பயோதி - கடல். பயோதிகம் - கடனுரை. பயோநிதி - சமுத்திரம். பயோவிரதம் - ஓர் மாதவரை பசுக்கோட்டத்துறைந்து பால் மாத்திரமுண்டு செய்யுமோர் விரதம். பய்யன் - பையன். பரகதி - முத்தி. பரகளத்திரம் - பிறர் மனையாள், பரகளத்திராவிகமனம் - விபசாரம்பண்ணுதல். பரகாயப்பிரவேசம் - கூடுவிட்டுக் கூடுபாய்தல் அஃது கலைஞானமறுபத்து நான்கினொன்று. பரகாயம் - பிறசரீரம். பரகாரியம் - பிறகாரியம். பரகிதம் - நுட்பமாகக் கணிக்கப்பட்டது, பிறர்க்கு நன்மையானது. பரகீயம் - பிறர்க்குரியது. பரகுடிலம் - பிரணவம். பரக்கம் - பரத்தல். பரக்கழி - பழி, கீழ்மை. பரக்கழிவு - பழி விளைக்கை. பரங்கி - இலவுங்கம்,பூசணி. பரசஞ்சகம் - ஆன்மா. பரசதம் - பல நூறு. பரசமயகோளரி - எம்பெருமானார்,சம்பந்தர். பரசமயம் - பிறசமயம். பரசமயி - பிறசமயி. பரசம் - ஓரிரத்தினம். பரசாதி - அன்னியசாதி. பரசிராமன் - மழுவுடையிராமன்,இவன் சமதக்கினியு மிரேணுகையுந் தந்தை தாயாகத் திருமாலவதரித்தது.பரசிவம், பரசிவன் - கடவுள். பரசு - கோடாலி, பரசென்னேவல்,மழு. பரசுகம் - மோட்சானுபவம். பரசுகரியன் - பரிவேடம். பரசுதரன் - கணேசன், சிவன், பரசுராமன். பரசுதல் - துதித்தல். பரசுபாணி - சிவன், பரசுராமன்,விநாயகன். பரசுராமன் - திருமாலவதாரத்தினொன்று. பரசுவதம் - பரசு. பரசுவம் - பிறர்பொருள். பரசூதனன் - சிவன், பரசுராமன். பரசை - பரிசு. பரஞானம் - பதிஞானம். பரஞ்சம் - செக்கு, நுரை, வாணுதி. பரஞ்சனன் - வருணன். பரஞ்சுடர் - சுயம்பிரகாசக் கடவுள். பரஞ்சேயன் - பரஞ்சனன். பரஞ்சை - காகளமுதலியவற்றின்தொனி. பரஞ்சோதி - கடவுள், பரஞ்சுடர். பரஞ்சோதிமுனிவர் - திருவிளையாடற் புராணம் பாடிய ஒருவேளாண்புலவர் பரடன் - கூலிக்காரன். பரடு - கரடு. பரட்டை - பறட்டை. பரணம் - கவசம், சம்பளம், தாங்குதல், பட்டுச்சீலை, பரணி, பாரம்.தரித்தல். பரணர் - ஓர் சங்கப்புலவர். பரணி - அடுப்பு, அணிகலச்செப்பு,எரி, ஓர் நாள், ஓர் பாத்திரம், ஓர்பிரபந்தம், அஃது ஆயிரங்களிற்றைக் கொன்றவீரனைத்தலைமகனாகக் கொண்டு கடவுள் வாழ்த்தும் கடைத் திறப்பும்பாலைநிலமுங் காளி கோவிலும்பேய்களோடு காளியுங் காளியோடு பேய்களுஞ் சொல்லத்தான் சொல்லக் கருதிய தலைவன்சீர்த்தி விளங்கலும் அவன் வழியாகப் புறப்பொரு டோன்ற வெம்போர் வழங்க விரும்பலுமென்றிவை யெல்லா மிரு சீரடி முச்சீரடி யொழித் தொழிந்த மற்றையடிகளா னீரடிப் பஃறாழிழிசையாற் பாடுவது, கூத்து, மதகு. பரணியம் - கூலி, சம்பளம். பரண் - இதணம். பரண்டை - கணைக்கால். பரதகண்டம் - நவகண்டத் தொன்று. பரதசாத்திரம் - நடனநூல். பரதநாட்டியசபை - கூத்துக்களரி. பரதநூல் - பரதசாத்திரம். பரதந்திரம் - சுதந்திரமின்மை. பரதந்திரன் - சுதந்திர மற்றவன். பரதபித்தல் - பரிதபித்தல். பரதமோகனநாட்டியம் - பரத முறைப்படியாடுங் கூத்து. பரதமோகினி - நாடகி. பரதம் - இலட்சம் கோடி, கோடாகோடி, கூத்து, நவகண்டத்தொன்று, பரதநூல். பரதர் - நெய்தனிலமாக்கள், வைசியர். பரத வசந்தன் - ஓர் கூத்து. பரதவருடம் - பரத கண்டம். பரதவர் - நெய்தனிலமாக்கள். பரதவித்தை - பரதசாத்திரம். பரதனம் - பிறர் பொருள். பரதன் - இராமன்றம்பி, ஓரிருஷி,சந்திரகுலத்தோ ரரசன், நெய்வான்,பரதசாத்திரஞ் செய்தோன். பரதன்மம் - பரோபகாரம். பரதாக்கிரசன் - இராமன். பரதாபம் - பரிதாபம். பரதாரகமனம் - பிறர்மனை கலத்தல். பரதாரம் - பிறன்மனைவி. பரதாரோபசேவனம் - விபசாரம். பரதி - நாடகி. பரதிரவியம் - பிறர் திரவியம். பரதிருதூனயோகம் - பிறர்செய்ததீமையை மறந்து நன்மையைநினைத்தல் அஃது தயாவிருத்திபதினான்கி னொன்று. பரதிருஷ்டிகோசரம் - வேறொருவனையறிதல். பரதுக்கம் - அயலார் துன்பம். பரதூஷணம் - பிறரைத் தூஷணித்தல். பரதேசம் - பிறதேசம். பரதேசவாசி - பிறதேசத்தோன். பரதேசி - ஓர் சாதி, பிறதேசத்தான்,யாசகி. பரதேவதை - கடவுள். பரத்தர் - தூர்த்தர். பரஸ்தலம் - வேற்றிடம். பரத்தல் - பரம்புதல், மிகுதல், விருத்தியாதல், பரவுதல். பரத்தன் - பரத்தையை நுகர்பவன். பரத்தி - நெய்தனிலப் பெண், பரவப்பெண், பரத்தியென்னேவல். பரத்தியானம் - தேவதியானம். பரத்திரம் - மறுமை. பரத்திரவியம் - பிறர் பொருள். பரத்திரி, பரஸ்த்ரி - வேசி, வேற்றுப்பெண், பிறன் மனைவி.பரத்திரிகமனம், பரஸ்த்ரீகமனம் - தூர்த்த வியாபாரம். பரத்துவம் - கடவுட்டன்மை, யுத்தம்,வித்தியாசம். பரத்துவாசன் - கரிக்குருவி, சத்தவிருடிகளி லொருவன், துரோணாசாரியன் றந்தை. பரத்தை - ஓர் செடி, வேசி. பரத்தையருவி - பரந்துவெட்டுமருவி. பரத்தையிற்பிரிவு - தலைமகன்பரத்தையிடத்துப்பிரிதல், வாயில்வேண்டன் முதலாக வாயினேர்தலீறாகிய நான்கு மாம். பரஸ்பரம் - பரற்பரம். பரநாதம் - ஓர் மருந்து. பரநாமத்திலை - மாவிலிங்கிலை. பரந்தவடிவு - தட்டைவடிவுபரந்தவட்டம், பரந்தவட்டிகை - சேமக்கலம். பரந்தவம் - சேர்மானம். பரந்தவர் - யாசகர். பரந்தாமம் - வைகுந்தம். பரந்தாமன் - திருமால். பரபக்கம் - பரபட்சம். பரபட்சம் - பிறர்நிலை சொல்லும்பகுதி, விரோதம். பரபதம் - மேன்மை, மோட்சம். பரபத்தி - சிவபத்தி. பரபத்தியம் - சமன்செய்தல், பணங்கொடுக்கல் வாங்கல் பண்ணுதல். பரபத்தியம்வாங்கல் - பணம் கடன்வாங்கல். பரபரத்தல் - தீவிரப்படல். பரபரப்பு - சீக்கிரக்குறிப்பு. பரபரீணம் - உரிமை, பாரம்பரை. பரபரெனல் - சீக்கிரக்குறிப்பு. பரபாகம் - அதிட்டம், சேடம், பிறர்சமைத்தது, மேன்மை. பரபிண்டம் - பிறர்கையுணவு. பரபிண்டாதன் - எப்பொழுதும்பிறரன்னம் புசிப்பவன். பரபிருதம் - காகம், குயில். பரபிருத்தம் - காகம். பரபுட்டமகோற்சவம் - மாமரம். பரபுட்டம் - குயில். பரபுட்டன் - காமதூர்த்தன். பரபுட்டை - வேசி. பரபுருடன் - கள்ளப்புருடன், விட்டுணு. பரபூமி - பிறதேசம். பரபூருவை - முன் கலியாண முடித்தவள். பரபேதகம் - சத்துருவை யழித்தல். பரபோகம் - பேரின்பம். பரபபத்தியம் - விசாலம். பரப்பல் - பரம்பச்செய்தல், பரவுதல். பரப்பிரபௌத்திரன் - அப்பாட்டன். பரப்பிரமசைலம் - அவுரி. பரப்பிரமம் - கடவுள். பரப்பு - அகலம், ஓர் நிலவளவுப் பிரமாணம், சப்பிரமஞ்சம், படுக்கை,பரப்பென்னேவல், பரவைக்கடல்,மிகுதி, விலாசம், வீதி. பரப்புதல் - பரம்பச்செய்தல், பரவுதல். பரம - சிரேஷ்டமான, திவ்வியமான,பிரதானமான. ழுரமகதி - மோட்சம், அடைக்கலம். பரமகருத்தன் - கடவுள். பரமகாரியம் - தேவகாரியம், மகாகாரியம். பரமகுரு - ஆசாரியனுக்குக்குரு. பரமக்கியானம் - பரமஞானம், பரமசண்டாளன் - மகாதுரோகி. பரமசத்துரு - மகாசத்துரு. பரமசந்தேகம் - மிகுசந்தேகம். பரமசந்தோஷம் - மிகுமகிழ்ச்சி. பரமசமாதி - தியானம். பரமசித்தி - முத்தி. பரமசிவன் - மும்மூர்த்திக்கு மேற்பட்ட சிவன். பரமசுந்தரி - தருமதேவதை. பரமண்டலம் - வானுலகம். பரமதம் - கடவுள், பிறசமயம். பரமதுஷ்டன் - மிகுதுஷ்டன். பரமநாழிகை - முற்றுமுள்ள நாழிகை. பரமநிவர்த்தி - பாசவிமோசனம். பரமபதம் - உலகம், மோட்சம்,விட்டுணு.பரமபாகவதசிகாமணி, பரமபாகவதன் - வைணவ சந்நியாசி. பரமமூர்த்தி - பரப்பிரமம், விஷ்ணு. பரமம் - பரப்பிரமம், மகாமேன்மை,முதன்மை, பிரதானம். பரமரகசியம் - அந்தரங்கவுண்மை,ஓர் நூல். பரமலுத்தன் - மிகுலோபி. பரமலோகம் - சிவலோகம், மோக்கம். பரமலோபி - மிகுலோபி. பரமவிந்து - வேதம் வாசிப்போர்வாயிலிருந்து தெறிக்குநீர். பரமவிராகன் - ஏகாதிபதி. பரமன் - கடவுள், சீர்பந்த பாஷாணம்,சிவன், பெரியவன். பரமாகாயம் - துவாதசாந்தம், வெறுவெளி. பரமாங்கணை - சௌந்தரி. பரமாங்கிசம் - உபநிடத முப்பத்திரண்டி னொன்று. பரமாணு - அதிசூக்கவணு, ஓர் காலநுட்பம். பரமாத்துமன் - கடவுள், சன்னியாசி,பெருமையிற் சிறந்தோன். பரமாத்துமா - சுத்தாத்துமா, கடவுள். பரமாயு - பூரணஆயு. பரமார்த்தம் - உண்மை, ஞானார்த்தம்,தேவவறிவு, மெய்ம்மை. பரமாற்புதம் - தேவாற்புதம், பரமானந்தம் - பேரின்பம், பரமானந்தன் - கடவுள். பரமானம் - பரமான்னம். பரமானுபவம் - அசிபதசோதனை. பரமான்மா - இதரபதார்த்தாவச் சின்னவான்மா. பரமான்னம் - சருக்கரை யமுது. பரமுத்தாத்துமா - சாயுச்சியகதியடைந்தோர், பக்குவர். பரமுத்தி - சாயுச்சியம், மோக்கம்.பரமேசன், பரமேசுரன், பரமேசுவரன் - கடவுள், சிவன், விட்டுணு . பரமேசுவரி - இலக்குமி, பார்வதி.பரமேச்சுரன், பரமேச்சுவரன் - பரமேசன். பரமேச்சுவரி - பரமேசுவரி. பரமேட்டி - அருகன், கடவுள், சிவன்,பிரமன், விட்டுணு. பரமோட்சம் - பரமுத்தி. பரமோபகாரம் - பேருதவி. பரமோபகாரி - பேருதவி செய்வோன். பரமௌஷதம் - மேலானமருந்து. பரம் - அத்திமரம், உடல், கடவுள்,கவசம், குதிரைக்கல்லணை, கேடகம், செயல், தனிமை, பழமை,பாரம், மிகுதி, முற்றத் துறத்தல்,முன்பு, மோக்கம், உத்தமம். பரம்படித்தல் - பலகை யடித்தல். பரம்பதம் - மோட்சம். பரம்பரம் - சுதந்தரம், வமிச பாரம்பரை, வமிசம். பரம்பரன் - அப்பாட்டன், கடவுள். பரம்பராகம் - யாகபசுக்கொலை. பரம்பராதி - தொன்று தொட்டுள்ளது,பரவணியானது. பரம்பரை - சம்பிரதாயம், தொடர்பு,தொன்றுதொட்டது, பரவணி,வரன்முறை, வமிசம், வரிசை. பரம்பர் - ஓர் சாதியார். பரம்பு - கழனிதிருத்தும் பலகை,பரம்பென்னேவல், வரம்பு,விசாலம். பரம்புதல் - பெருகுதல், விசாலித்தல்,பரவுதல். பரம்பை - வன்னி. பரராசசேகரன் - ஓரரசன். பரரூபம் - விகாரப்படுதல். பரர் - அன்னியர், பகைவர். பரலோககமனம் - மரணம். பரலோகக்கிரியை - அபரக்கிரியை. பரலோகசாதனம் - மோக்கத்துக்குரியசாதிப்பு. பரலோகசௌக்கியம் - மோட்சானந்தம். பரலோகம் - தேவலோகம், மோக்கம். பரலோகவாசி - மோட்சத்தான். பரல் - பருக்கைக்கல், விதை. பரவசஞ்சொல்லுதல் - பிரமாணத்தோடே வாக்குத்தத்தம் பண்ணுதல். பரவசம் - தன்வசமற்றிருத்தல், பிரமாணத்தோடு பண்ணும் வாக்கு,பிரமை, மிகுகளிப்பு, மூர்ச்சை. பரவசவிலக்கு - தன்வசமல்லாமற்கூறிவிலக்கு மலங்காரம். பரவணி - தலைமுறை, வமிசம். பரவணிகாரன் - தலைமுறை தலைமுறையாயுரித்துக்காரன். பரவணிப்பட்டம் - தலைமுறைப்பட்டவரிசைப்பெயர். பரவர் - ஓர் சாதியார், வலைஞர்,செம்படவர். பரவல் - சொல்லுதல், பரவுதல்,புகழ்தல், வணங்கல். பரவான்மா - முற்றத்துறந்தவான்மா. பரவிகாரம் - முத்தியிலிச்சைகொள்ளல். பரவிருதயம் - குயில். பரவிவேகம் - ஞானவறிவு. பரவுதல் - சொல்லல், துதித்தல்,பரப்பிச்செப்பம் பண்ணுதல்,பரப்புதல், வணங்கல், விரிதல். பரவுபகாரம் - பரோபகாரம். பரவெளி - பராகாயம், மாயா சூனியம். பரவை - இலக்குமிகூத்து, கடல்,சுந்தரர் மனைவி, திடல், நீர்ப்பரப்பு, பிரபலம், வழக்கு, பரத்தல். பரவைவழக்கு - உலகவழக்கு, செய்யுளல்லாவியல். பரற்பறம் - பதிலுபகாரம், ஒன்றுக்கொன்று. பரற்பரவிரோதம் - ஒன்றுக்கொன்றுவிரோதம். பரன் - கடவுள், சிவன். விஷ்ணு, பிறன்.பராகண்டம், பராகண்டிதம் - அசட்டை, பராமுகம். பராகதம் - சருவுதல், பராகத்தின்சேவுகன் - பன்றி. பராகமண் - செம்மண். பராகம் - ஓர் மலை, ஓர் வாசனைத்தூள், கிரகணம், கீர்த்தி, சந்த னம்,தூளி, பூந்தாது, மகரந்தம், மற்றைநாள், தூள். பராகரணம் - இகழ்தல். பராகாயம் - பரவெளி. பராக்கதம் - தைரியம். பராக்காட்டுதல் - பராக்குக்காட்டுதல். பராக்கிரமகாரகன் - செவ்வாய். பராக்கிரமசாலி - பலவான், வீரன். பராக்கிரமஸ்தானம் - மூன்றாமிடம். பராக்கிரமம் - வலி, வீரம்.பராக்கிரமன், பராக்கிரமி - பலவான்,வீரன். பராக்கிரமித்தல் - வீரங்காட்டல். பராக்கு - அசட்டை, ஓர் பிரபந்தம்,நோக்கம், பலதையும் பார்த்தல்,பொழுது கழித்தல், விளையாட்டு,வேறு புலனாயிருத்தல். பராங்கதன் - சிவன். பராங்கவம் - சமுத்திரம். பராங்குசர் - நம்மாழ்வார். பராசத்தி - பஞ்சசத்தியி னொன்றுஅஃது பிராணன் முதலிய வாயுவாக நிற்பது. பராசயம் - தோல்வி. பராசரம் - அட்டாதச வுபபுராணத்தொன்று, தரும நூல் பதினெட்டினுமொன்று. பராசரன் - வியாசன் றந்தை. பராசரியம் - சிற்பநூன் முப்பத்திரண்டினொன்று. பராசனம் - கொலை. பராசனன் - கொலை செய்வோன். பராசிதம் - சிவன் கைவாள். பராசியம் - பலரறிந்தது. பராசுதை - துக்கம், மரணம். பராஞ்சம் - ஆயுதவலகு, செக்கு. பராடம் - வனச்சார்பி னிலம். பராதாரம் - காகம். பராதி - பீராதி. பராதீனம் - சுதந்திரமற்றது. பராத்தம் - பரார்த்தம். பராந்திரம் - பிறவழி. பராபத்தியம் - பாரபத்தியம். பராபரக்கண்ணி - ஓர் பாடல். பராபரம் - கடவுள், சிவம், நன்மை,தீமை, நடுத்தரம், முன்பின். பராபரவஸ்து - கடவுள். பராபரன் - பரமேசுவரன். பராபரித்தல் - பராமரித்தல். பராபரிப்பு - பராமரிப்பு. பராபரை - பார்ப்பதி. பராபவ - நாற்பதாவதாண்டு. பராபவம் - அபசாரம், தோல்வி. பராபூதன் - தோற்றவன். பராமரிசம் - தீர்க்கமாக விசாரித்தறிகை, ஆராய்ச்சி. பராமரிசித்தல் - ஆராய்தல், பகுத்தறிதல். பராமரித்தல் - ஆதரித்தல், ஆராய்தல்,நடத்தல், பத்திரப்படுத்தல், வளர்த்தல், விசாரித்தல். பராமரிப்பு - விசாரிப்பு. பராமாத்துமியம் - உபநிடத முப்பத்திரண்டி னொன்று. பராமுகம் - அசட்டை, கவனிப்பின்மை, பின்னோக்கிய முகம்,முகங் கொடாமை. பராயணம் - அறுசமயத்தொருவகுப்பு, இராசிமண்டலம், பற்று,விருப்பு, வேதத்தின் பகுதி, நன்னிலை, குறிப்பு. பராயணர் - குறிக்கொள்வோர்,வேதாத்தியயனர். பராயணி - கன்னன். பராயத்தம் - பிறராதீனம். பராய் - பிராய் மரம். பராரி - மூன்றாம் வருடம். பராருகம் - கல். பராரை - உள்ளோசை, பருமரத்தடி. பரார்த்ததேவப்பிரத்தியம் - பிறர்ககாகத் தேவாராதனை செய்தல்,இஃது தயாவிருத்தி பதினான்கினொன்று. பரார்த்தம் - ஆயிரங் கொடி, கோடாகோடி, பிரமகற்பத்தரை, பிறர்க்குபகாரமானது. பரார்த்தவனுமானம் - பிறர்பொருட்டாமனுமானம். பராவரம் - கடல். பராவித்தன் - குபேரன். பராவிருத்தமுகம் - வேண்டாததற்குமுகந்திருப்பல். பராவு - வாழ்த்து. பராவுதல் - துதித்தல், பரவுதல்,வணங்கல். பரானுகூலம் - பிறர்க்கனுகூலம். பரானுகூலி - உபகாரி, விபசாரி. பரான்னம் - பிறர்கொடுத்த போசனம். பரி - அசுபதி, அச்சுவினி, அடையாளம், அலங்காரம், அன்பு,உண்மை, உயர்ச்சி, உள்ளக்களிப்பு, கருமை, காழ்த்தல்,குதிரை, சுமை, செல்வம், துக்கம்,துன்பம், நெருக்கிடை, பங்கு,பரப்புதல், பரியென்னேவல்,பருத்தி, பாதுகாத்தல், பெருமை,மிகுதி, முடிவு, வணக்கம், வருத்தம், வழி, விசாலம், விரிவு, விரைவு,செலவு. பரிகட்டநம் - ஓர்வகைக் கோடரி. பரிகதம் - அறிவு, ஆதாயம், தடை,மறதி, விசாரணை. பரிகதை - தரித்திரம். பரிகம் - அகழ், அழித்தல், இருப்புத்தண்டு கதவிற்றாள், கிழங்கு,நித்தியயோகத்தொன்று, நீர்ச் சாடி,மதிலுண்மேடை, மதில், வளைதடி, வெளிக்கதவு, பரிகம்பம் - பயங்கரம்.பரிகரணம், பரிகரமாணம் - பிடித்தல்,விடுதல். பரிகரம் - இடைக்கட்டு, தீர்ப்பு,துவக்கம், படுக்கை, பரிவாரம்,கட்டில். பரிகரித்தல் - காத்தல், குணமாக்கல்,நீக்கல், பத்தியம்பண்ணல், பிராயச்சித்தம் செய்தல், மாற்றல், வைத்தியம் பண்ணுதல், முற்றக் களைதல். பரிகரிப்பு - குணமாக்கல், வகைசெய்தல், விலக்கல், பரிகருத்தனம் - சூன்றல். பரிகருமம் - அலங்கரிப்பு, சுத்தி. பரிகலச்சேடம் - உச்சிட்டம், மகாத்துமாக்களின் விசேடம். பரிகலத்தார் - பரிவாரசனம். பரிகலம் - சேனை, பரிவாரப்பேய்,பரிவாரம், மகாத்துமாக்களுண்ணும் பாத்திரம். பரிகலிதம் - உருகுதல், பாய்தல். பரிகற்பனம் - உணவு முதலிய தேடல். பரிகாசப்பட்டன் - பரிகாசக்காரன். பரிகாசப்போர் - பகிடிச் சண்டை. பரிகாசம் - பகிடி, நிந்தனை, மிகுநகை, கேலி, அவமானம். பரிகாதநம் - கதாயுதம், பெருந்தடி. பரிகாதம் - ஆயுதம், கொல்லுதல். பரிகாரநிகண்டு - வைத்திய அகராதி. பரிகாரம் - அவசங்கை, சூழ்தல்,நீக்குகை, பரிகரித்தல், பிராயச்சித்தம், பெண்மயிர், மாற்றுமருந்து, மிகுதி, வைத்தியம். பரிகாரி - நாவிதன், வைத்தியன். பரிகிருசம் - மெலிவு. பரிகீர்த்தனம் - சொல்லுதல், புகழ்தல். பரிகுளம்பு - குதிரைக் குளம்பு. பரிகை - அகழ், அன்பு, உருக்கம்,மதிலுண்மேடை. பரிக்கந்தி - அமுக்கிராக் கிழங்கு. பரிக்காரம் - அலங்காரம், துலக்கம். பரிக்காரர் - குதிரைக்காரர், யானைக்காரர். பரிக்கிரகம் - அழிவு, ஆனை, இணக்கம், ஏற்றுக்கொள்ளுதல், நிலைபேறு, பிற்படை, மனையாள்,மூலம், சபதம். பரிக்கிரகித்தல் - கைக்கொள்ளல். பரிக்கிரமம் - அலைந்து திரிதல், சுற்றுதல், போதல், விளை யாட்டு. பரிக்கிரயம் - மீட்பு, சூழல். பரிக்கிராகம் - பலிபீடம். பரிக்கிரியை - வேலி யடைத்தல். பரிக்கை - பரிட்சை. பரிசக்குன்று - நாகபச்சை. பரிசணித்தல் - மிருதுவாய்ப் பேசுதல். பரிசதன்மாத்திரை - பரிச வுணர்வின்மூலம். பரிசதீட்சை - ஓர்தீட்சை அ ஃதுபிரளயாகலர்க்குப் பரிசத்தினால் மலமறுத்தல். பரிசத்தலன் - கூட்டாளி. பரிசம் - உபத்திரவ நோய், கற்பாஷாணம், கிரகணம் பற்றல்.தொடல், தொடுதலையறியு மறிவுஇஃது பஞ்சபுலனி னொன்று,மணவாளன் பெண்ணின் பிதாமாதாவுக்குக் கொடுக்கும் வெகுமானம். பரிசயம் - ஐக்கம், பரிசனை, பழக்கம்,உறவு. பரிசரம் - அகலம், மரணம், முறை. பரிசரன் - காவற்காரன், தோழன்,படைத்தலைவன். பரிசரியம் - எங்குந் திரிதல். பரிசருப்பம் - சூழ்தல். பரிசனம் - உறவு, ஏவல்செய்வோர்,சூழ்வோர், தொடுதல், பரிசிப்பு. பரிசனவேதி - இழிந்த லோகங்களைப் பொன்னாக்கு மருந்து. பரிசனன் - காற்று. பரிசனை - ஐக்கம், பழக்கம். பரிசன்னியம் - பொன்மலை, மேருகிரி. பரிசாதனம் - செய்து முடித்தல்,தீர்மானம். பரிசாயம் - ஓமக்கிடங்கு, ஓமம். பரிசாரகம் - ஏவல் வேலை. பரிசாரகன் - ஏவல் செய்வோன்,கூடப்போகிறவன், சமையற் காரன். பரிசாரம் - பரிவாரம், பெண் மயிர். பரிசாரிகை - ஏவல் செய்பவள்.பரிசித்தல், பரிசிப்பு - தீண்டல், பழகுதல். பரிசிரமம் - பிரயாசம், வருத்தம். பரிசிரயம் - கூட்டம். பரிசிலாளர் - இரப்போர். பரிசில் - ஈகை, வெகுமதி, கொடை,சன்மானம். பரிசு - ஈகை, கங்கை, பண்பு, பயணச்சனம், பரிது, விதம். பரிசுகேடு - சங்கையீனம், அவமானம். பரிசுத்தம் - தூய்மை, புனிதம்,மாசின்மை, முழுதுஞ்சுத்தம்,முழுமை.பரிசுத்தவான், பரிசுத்தன் - சுத்தமுள்ளோன். பரிசுத்தாத்மா - மகா ஞானி. பரிசுத்தாவி - சுத்தமான ஆவி. பரிசுத்தி - பரிசுத்தம், முற்றாக. பரிசுத்தை - சுத்தமுள்ளவன். பரிசேதம் - எல்லை, பிரிவு, மாற்று. பரிசேதனம் - சிரிப்பு, பரிசேதம், பரிசை - கேடகம். பரிசைக்காரர் - ஓர் சாதியார்,கேடகம் பிடிப்போர். பரிசோதனை - பூரண சோதனை. பரிசோதித்தல் - முற்றுஞ் சோதித்தல்,நன்கு சோதித்தல். பரிசோபை - அலங்காரம். பரிச்சதம் - மூடி. பரிச்சயம் - பழக்கம், வேதசுரத்தினொன்று. பரிச்சிதம் - பழக்கம். பரிச்சித்து - அருச்சுனன் பௌத்திரன், ஓரரசன். பரிச்சிரமம் - பரிசிரமம். பரிச்சேதம் - எல்லை, துண்டிப்பு,நூற்கூறுபாடு, பகுத்தறிகை, முழுவதும்.பரிச்சேதனம், பரிச்சேதன் - இலக்கியச் செய்யுட் கூறுபாடு, இன்மை,நீக்கம், முற்றும். பரிச்சை - பரிச்சியம். பரிஞ்சு - வாட்பிடி. பரிஞ்ஞானம் - அறிவு,பரிட்காரம், பரிஷ்காரம் - அலங்காரம்,சமைத்தல், சமயாசாரத்துட் படுத்தல், துலக்கம், முடிவு, தெளிவு. பரிட்கிருதபூமி - பலிபீடம். பரிட்சாவிற்பத்தி - அப்பியாசத் திறம். பரிட்சித்தல் - அப்பியாசித்தல்,ஆராய்தல். பரிட்சித்து - பரிச்சித்து. பரிட்சை - ஆராய்வு, சோதனை,பழக்கம்பரிட்சைபண்ணுதல், பரிட்சைபார்த்தல் - அப்பியாசம் பண்ணுதல், ஆராய்தல், சோதித்தல். பரிட்டினகம் - பட்சி வட்டமிடுதல். பரிணதம் - கனிவு, முதற்பணம்,வளைவு. பரிணதன் - பரிபக்குவ முடையவன்,அறிஞன். பரிணதை - விவாகஞ் செய்தவள். பரிணமித்தல் - பேதப்படல், வேறுபடல். பரிணயம் - கடைப்பிராயம், கலியாணம், முதிர்வு. பரிணயனம் - கலியாணம், பற்று. பரிணாகம் - அகலம், வட்டத்தின்சுற்றளவு. பரிணாக்கன் - கணவன். பரிணாமசரீரம் - ஒன்று திரிந்துண்டான தேகம் அஃது தூலதேகம்போல்வது. பரிணாமசூலம் - ஓர் நோய். பரிணாதம் - வேறுபாடு, விகாரம். பரிணாமரூபம் - பரிணமிக்கப்பட்டவுருவம். பரிணாமாலங்காரம் - திரிபணி. பரிணாயம் - சொக்கட்டான் காய். பரிணேத்திரு - கணவன். பரிதகனம் - பொசுக்குதல். பரிதபித்தல் - இரங்குதல், துக்கித்தல்,வருந்தல். பரிதபிப்பு - இரக்கம், துக்கம். பரிதல் - அறுத்தல், அன்பு, அன்போடு பேசல், இரங்கல், ஒடிதல்,ஒழுகல், தறித்தல், பங்கிடல், பரிந்துபேசுதல், வெட்டுதல், விரைதல். பரிதவித்தல் - துயருறல், பரிதபித்தல், பரிதாகம் - வெம்மை. பரிதாபசுரம் - ஓர் சுரம். பரிதாபப்படுதல் - பரிதாபித்தல். பரிதாபம் - இரக்கம், ஓர் நகரம்,துயரம், பயம், வருத்தம், வெப்பம். பரிதாபி - துயருறுவோன், நாற்பத்தாறாவதாண்டு. பரிதாயம் - சகவாசிகள், சந்து, நீர்க்குண்டு, பின்றொடை. பரிதானக்காரன் - கைக்கூலி வாங்குவோன். பரிதானம் - உடுப்பு, கைக்கூலி,பொருள் கொடுத்துப் பொருள்வாங்குதல், பரிதி - ஒளி, சக்கராயுதம், சூரியன்,தேர்ச்சில், பரிவேடம், பொன்,யாகமேடை, யூபஸ்தம்பம், வட்டத்தின் சுற்றளவு, வட்டம்,திருக்குறள் உரையாசிரியரில்ஒருவர் பரிதிமண்டலம் - சூரியமண்டலம். பரிதிவிட்டரம் - அகழ். பரிது - பரியது. பரிதுஷ்டம் - சந்தோஷம். பரிதேவனம் - அச்சம், புலம்பல். பரிதேவிதம் - புலம்பல். பரித்தம் - பரிவட்டம். பரித்தல் - காத்தல், சுமத்தல், தரித்தல்,தாங்குதல், தாபரித்தல். பரித்தியாகம் - நட்டம், முற்றும்விடுதல். பரித்தியாகி - சன்னியாசி, துறந்தோன். பரித்திராணம் - தற்காத்தல். பரிநாமம் - கீர்த்தி, செல்வம். பரிநியாசம் - முடிவு செய்தல், வசனப்பொருள். பரிபக்குவம் - ஏற்ற சமயம், ஏற்றபக்குவம். பரிபணம் - கைப்பணம். பரிபதி - பகைவன். பரிபந்தகன் - எதிரி. பரிபந்தி - எதிரி, கள்வன். பரிவபதம் - நிந்தையான நிலைமை. பரிபவம் - அவசங்கை, இகழத்தகுபொருள், இழிவு, எளிமை,தோல்வி, வியாகுலம், அவமா னம்,இகழ்ச்சி, தோல்வி. பரிபாகம் - அடுதல், ஏற்றபக்குவம்,சமர்த்து, பலம், சமித்தல், முதிர்வு,சாமர்த்தியம். பரிபாகி - ஏற்ற பக்குவன், முத்தியடையும் பக்குவன். பரிபாஷணம் - இணக்கம், சம்பாஷணை, நிந்தை, முறை. பரிபாடல் - கடைச்சங்கப்புலவர்கள்பாடிய ஒரு நூல். பரிபாடி - ஒழுங்கு. பரிபாடைசூத்திரம் - தெய்வ வணக்கஞ் செயலும் மங்கல மொழிமுதல் வகுத்தலும் தொகை வகைவிரியாய்ச் சொல்லலும் ஏற்புடைப்பொருளை யுரைத்தலுமெனுநான்குமாம். பரிபாஷை - குழூஉக்குறி, சங்கேதம். பரிபாலகன் - காப்போன்.பரிபாலம், பரிபாலனம் - அருளுதல்,ஆளுகை, காவல், சமாளித்தல்,தற்காத்தல். பரிபாலனன் - காப்போன். பரிபாலன் - காப்போன், சமாளிப்போன். பரிபாலி - காப்போன், பரிபாலியென்னேவல். பரிபாலித்தல் - அருளுதல், காத்தல்,செழித்தல். பரிபாவம் - நிந்தை. பரிபிட்டகம் - ஈயம். பரிபீரேசனம் - களைதல்,விடுதல். பரிபுடம் - நூறெருப்புடம். பரிபுட்கரை - ஓர் வெள்ளரி. பரிபுதம் - வெறுப்பு. பரிபுரம் - காற்சிலம்பு, பாதகிண்கிணி. பரிபூசனம் - வணக்கம். பரிபூதம் - அவமானம், சுத்தப்பட்டது,தெரிவு, பழையது. பரிபூரணதை - திருத்தி. பரிபூரணத்துவம் - திருத்தி, நிறைபூரணத் தன்மை. பரிபூரணம் - திருத்தி, மிகுதி, முழுப்பூரணம், முழு நிறைவு. பரிபூரணன் - எங்கும் நிறைந்தோன்,கடவுள், சிவன். பரிபூரணி - இலட்சுமி, பார்ப்பதி. பரிபூர்த்தி - நிறைவு, மிகுதி. பரிபோகம் - பிறன் பொருட் போகம். பரிப்பிரமம் - சுழலல், தவறு, திரிதல். பரிப்பு - பரித்தல், இயக்கம். பரிமணி - கரந்தை.பரிமண்டலம், பரிமண்டலிதம் - உண்டை. பரிமந்தம் - அற்புதம், மந்தம். பரிமருச்சியம் - துடைத்தல். பரிமளகந்தி - வியாசன்றாய். பரிமளக்குழம்பு - கலவை. பரிமளசுகந்தம் - நற்கந்தம். பரிமளச்சேறு - பரிமளக் குழம்பு.பரிமளதயிலம், பரிமளதிரவியம், பரிமளத்தைலம் - கந்த தயிலம். பரிமளம் - சந்தோஷம், சம்போகம்,மிகுமணம் இஃது அட்டபோகத்தொன்று. பரிமளவருக்கம் - பரிமள தயிலம். பரிமளி - கரந்தை. பரிமளித்தல் - சந்தோஷித்தல், சமாளித்தல், மிகமணத்தல். பரிமளிப்பு - சந்தோஷம், வாசம். பரிமா - குதிரை. பரிமாணசந்தேகம் - அளவையிற்காணுஞ் சந்தேகம். பரிமாணம் - அளவு. பரிமார்ச்சனம் - சுத்தி பண்ணுதல். பரிமாவடிப்போர் - குதிரைப்பாகர். பரிமாறுதல் - உட்கொள்ளுதல்,ஊடாடுதல், கொடுத்து மாறுதல்,திரிதல், நடமாடுதல், பங்கிடுதல். பரிமாற்றம் - ஊடாட்டம், கலப்பு.நடத்தை, புணர்ச்சி. பரிமிதம் - அளவு பட்டது, எல்லை,மட்டுப்பட்டது. பரிமிதாகாரம் - மட்டான போசனம். பரிமித்தல் - அணிதல், அலங்கரித்தல். பரிமுகம் - அசுபதி, காலிற்றோல். பரிமுகவம்பி - குதிரை முகவோடம். பரிமேயம் - அளவுபட்டது. பரிமேலழகர் - திருவள்ளுவர் குறளுக்கு உரைசெய்த ஓரந்தணக்கவிஞர். பரிமோகனம் - மயக்கு. பரியகம் - காற்சரி, கைச்சரி, பாதகிண்கிணி. பரியங்கம் - கட்டில், மக்கட் படுக்கை. பரியஸ்தம் - மேல் கீழாதல், தள்ளுதல்,விழுதல். பரியஸ்திகை - படுக்கை. பரியந்தம் - எல்லை, முடிவு, வரைக்கும் பரியம் - பரிசம். பரியயணம் - சேணம். பரியயம் - அசட்டை, எதிரிடை,ஒழுங்கின்மை, படுக்கை. பரியவசானம் - முடிவு.பரியவஸ்தானம், பரியவத்தை - எதிரிடை. பரியவம் - பலர்செல்லு நெறி. பரியன்னியம் - முகில், முழக்கம். பரியன்னியன் - இந்திரன். பரியாகாரம் - காகம், கொண்டுபோதல், சுமை, தானியக்குவியல்,நுகம். பரியாசம் - பரிகாசம். பரியாத்தம் - கூட்டுந்தன்மை,சம்மதம், திருத்தி. பரியாத்தி - காத்தல், சம்பாதித்தல்,சம்மதம், தகுதி, திருத்தி, பகுத்தறிதல், விலக்குதல் பரியாயசந்தேகம் - அற்பசந்தேகம். பரியாயச்சொல் - ஒரு பொருள்குறித்த மறுசொல். பரியாயநாமம் - ஒரு பொருட்கினமாயிருப்பது. பரியாயம் - ஒழுங்கு, ஒன்றற்குரியன,ஓரலங்காரம் அஃது கருதியபொருளை யறிதற்குரிய விதத்தாற்கூறாது மற்றொரு விதத்தாற் கூறுதல், சமயம், சுபாவம், செய்யப் படுபொருள், மாதிரி, முகவுரை,முறை. பரியாயான்னம் - ஓர் வருணத்தான்மற்றோர் வருணத்தானுக்குக்கொடுக்குமன்னம். பரியாரம் - பரிகாரம். பரியாரி - பரிகாரி. பரியாலோசனம் - ஆலோசித்தல்,சூழ்வரப்பார்த்தல். பரியாளம் - பரிவாரம். பரியானம் - சேணம். பரியுதஞ்சனம் - கடன். பரியுதாசம் - வழுச்சூத்திரம். பரியுதாசனம் - வணக்கம். பரிரட்சணம் - காத்தல். பரிரபமாணம் - ஆலிங்கனம். பரிவசதம் - கிராமம். பரிவசிதம் - குருவைக்காத்தல். பரிவட்டம் - சீலை, தலையிற் கட்டுஞ்சீலை, துண்டுச்சீலை நெய்வார்,கருவியினொன்று, விக்கிரகத்தினுடை குதிரை. பரிவதனம் - அழுதல், நிந்தித்தல். பரிவயத்தம் - விரோதித்தல். பரிவயம் - அரிசி, இளமை, நெடு நாட்கூடியிருத்தல். பரிவருக்கம் - பரிவாரம், பாக்கியம்,பொருள். பரிவருத்தம் - உலக முடிவு, கூர்மம்,சதுர்யுகமுடிவு, சுற்றுதல், நூன்முடி, பின்னிடுதல், பொருள்கொடுத்துப் பொருள் வாங்கல். பரிவருத்தனம் - அதிகப்படல்,சுற்றுதல், மாற்றுதல், பொருள்மாறுதல். பரிவருத்தனை - ஓரலங்காரம் அஃதுபொருள் ஒன்றற்கொன்றுகொடுத்து வேறொன்று கொண்டனவாகக் கூறுவது, பரிவருத்தனம். பரிவருத்திதம் - சக்கரமானது. பரிவற்சரம் - வருடம். பரிவற்சனம் - கொலை, விடுதல். பரிவாகம் - பெருக்கு, மதகு. பரிவாகிதமுகம் - மதத்தாற்றலையைஒரு புறஞ் சாய்த்துச் சிறிதாய்ச்சுற்றி யாட்டல். பரிவாகிதம் - வெறுமை. பரிவாசம் - தங்குதல். பரிவாதகன் - வழக்காளி. பரிவாதம் - குற்றச்சாட்டு, பழிச்சொல், வீணையியக்கும் வில்,அபவாதம். பரிவாபம் - சௌளம்பண்ணல்,நீர்க்குண்டு, பரிவாரம். பரிவாபனம் - மயிர் களைதல். பரிவாரதேவதை - ஏவற்றேவர். பரிவாரம் - அணிசெய்வோர், உறை,சூழ்வோர், படை. பரிவாலி - குதிரைவாலி.பரிவிணன், பரிவித்தி, பரிவிந்தகன் - முன்னோன் மணமுடியாதிருக்கமணமுடித்த பின்னோன். பரிவிரட்டம் - தவறு. பரிவிருகிதம் - அதிகப்படல். பரிவிருங்கணம் - அதிகப்படுத்தல்,சேர்க்கப்படுவன். பரிவிருடன் - மேன்மையுடையோன்.பரிவிருத்தம், பரிவிருத்தி - ஒருபொருள் கொடுத்தொரு பொருள்வாங்குதல், கிரகச்சுற்று, சுற்றுதல்,முடிவு, முழுவட்டம். பரிவீதம் - பிரமன்வில். பரிவு - அன்பு, இன்பம், சுகம், துன்பம்,பக்குவம்.பரிவேசம், பரிவேஷம் - சந்திர சூரியரைச் சூழத் தோன்றும் வட்டம்,சுற்றளவு, சூழுதல். பரிவேடணம் - சூழுதல், விருந்திடல். பரிவேடம் - பரிவேசம். பரிவேட்டணம் - சுற்றளவு, சூழுதல். பரிவேதனம் - ஆராய்வு, உபத்திரம்,சம்பாத்தியம், விவாகம். பரிவேதிரு - பரிவிந்தகன். பரிற்பவம் - அசைவு, கொடுங்கோன்மை, மூழ்குதல். பரீகம் - நித்தியயோகத் தொன்று. பரீகாசம் - பரிகாசம். பரீக்கை - தான் விவகரிக்கும் பொருளினிவ் விலக்கண முண்டோவின்றோவெனப் பார்த்தல் அஃதுபோதப் பிரகாரம் மூன்றினொன்று,ஆராய்தல், சோதித்தல், பரீட்சை. பரீசாரம் - சுற்றுதல். பரீட்சணம் - சோதனை. பரீட்சித்தல் - ஆராய்தல், பழகுதல்,சோதித்தல். பரீட்சை - அப்பியாசம், ஆராய்வு,பழக்கம்,சோதனை. பரீஷ்டி - ஆயத்தம், ஆராய்வு, ஊழியம். பரீணம் - ஒடித்தல், பரீணாயம் - சூதுகாயெடுத் தடைத்தல். பரீதாவி - ஓராண்டு, பரிதாபி. பரீபாவம் - நிந்தை. பரீமலம் - நறுமணம். பரீயமாணம் - ஊடுருவுதல். பரீரம் - பழம். பரீரம்பம் - தழுவல். பரீவத்தம் - கொடுத்துமாற்றல். பரீவாகம் - பிரவாகம். பரீவாதம் - கடிந்துகொள்ளல்,வீணை வாசிக்கும் வில். பரீவாரம் - பரிவாரம், வாளுறை. பரு - கடல், கணு, குரு, சிலந்தி,பருமை, பருவென்னேவல், மலை,மோக்கம்.பருகல், பருகுதல் - குடித்தல் அஃதுநால்வகை யுணவி னொன்று,நுகருதல், புசித்தல். பருக்கல் - பருக்கச்செய்தல். பருக்கன் - பரும்படியானது, மிருதுவற்றது. பருக்குதல் - பருக்கச்செய்தல், பருத்தல். பருக்கென்றல் - பருத்துக்காட்டல். பருக்கை - உருண்டை, சோறு,பருக்கைக் கல், பளிங்கு. பருக்கைக்கல் - தரிசு. பருங்கடி - மேற் கடிகடித்தல். பருங்காரியம் - பெருங்காரியம். பருங்குடல் - மலவாகி. பருங்கை - தாராளமாகக் கொடுக்குங்கை, பெருஞ் செல்வம். பருஞ்சாய் - சடாமாஞ்சில்.பருஷம், பருஷவருஷம், பருஷோத்தி - கடுஞ்சொல். பருஷோத்திகன் - கடுஞ்சொற்காரன். பருணயனம் - விவாகம். பருணிதர் - புலவர். பருதி - பரிதி. பருத்தல் - பெருத்தல், பருத்தவழகை - மல்லிகை. பருத்தாரம் - குதிரை. பருத்தி - ஓர்செடி. பருத்திக்குண்டிகை - பருத்திப் பஞ்சடைத்த குடுவை. பருத்தித்தூறு - வாய்க்கிரந்தி. பருத்திபன்னுதல் - பஞ்சு நூற்றல். பருந்தலை - பெரியதலை, பெருமையிற் சிறந்தோர், மேட்டிமைக்காரர். பருந்தின்விருந்து - நண்டு. பருந்தின்வீழ்வு - சூத்திரநிலை நான்கினொன்று அஃது ஓரிடத்துச்சூத்திரம் பின்னோரிடத்துச் சூத்திரத்தை அவாவி நிற்பது. பருந்து - ஓர் பறவை. பருந்தொட்டு - பருமிதழ். பருபருக்கை - இருவனொருவல்,வேவாச்சோறு. பருபாரித்தல் - பருத்தல். பருப்பதம் - மலை. பருப்பதி - பார்வதி. பருப்பம் - அளவு, பருத்தல், பருமை. பருப்பித்தல் - பரிதாக்கல். பருப்பு - அதிகப்படல், பயறு, பருப்பம், வித்தின் பருப்பு. பருப்பொருள் - நுண்மையற்றபொருள். பருப்போரை - பருப்புச்சாதம். பருமட்டம், பருமட்டு - செவ்வையின்மை, பரும்படி. பருமம் - அங்கி, குதிரைக்கல்லணை,நிதம்பம், மூவாறுகோவைமணி,பருப்பம், கவசம். பருமல் - கப்பற்பாய்கட்டு மரம். பருமன் - பருத்தது, பருத்தவன். பருமிதம் - இறுமாப்பு, சிரமம். பருமித்தல் - அலங்கரித்தல், இறுமாப்பாயிருத்தல், சிரமஞ்செய்தல். பருமிப்பு - இறுமாப்பு, சிலம்பம். பருமுறி - பரும்புடைமை. பருமை - பருப்பம். பரும்படி - பருபட்டு. பரும்பனையன் - ஓர் நோய். பருவகம் - முழந்தாள். பருவகாலம் - உரியகாலம், பக்குவகாலம். பருவக்காய் - உரியகாலத்திற் காய். பருவசந்தி - உவாக்கட்டையும்பிரதமை முதலும் பொருந்துஞ்சமயம். பருவணிகை - ஓர் கண்ணோய். பருவதகாகம் - ஓர் காகம். பருவதம் - ஓர் மரம், ஓர் மீன், மலை. பருவதவர்த்தனி - பார்வதி. பாருவதவாசினி - காயத்திரி, துர்க்கை. பருவதாசயம் - முகில். பருவதாசிரயம் - சரபப்பட்சி. பருவதாதாரை - பூமி. பருவதாரி - இந்திரன். பருவதி - சந்திரன், பார்வதி. பருவபேதம் - காலவேறுபாடு. பருவமழை - காலமழை. பருவமலைவு - ஒர் காலத்துக்குரியதைமற்றோர்காலத்துக் குரியவாகக்கூறுவது. பருவமாதல் - இருதுவாதல், தகுதியாதல். பருவம் - அமாவாசி, இருது, இளமை,உயரம், ஏது, கணு, காலம், பகுதி,பக்குவம், பருவ காலம், பிரமாணம்,பூரணை, பெருநாள், பொழுது,முளி, வயது. பருவயோனி - கரும்பு. பருவரல் - அருவருப்பு, துன்பம்,துன்பமுறல். பருவரீணம் - திருவிழா. பருவருதல் - அருவருத்தல், துன்பப்படல். பருவலயம் - குழியம், பெரியவட்டம். பருவல் - பருத்தது. பருவி - தில்லை. பருவு - பரு. பருவெட்டு - பரும்படியாய் வெட்டினவெட்டு. பரூஉ - பருமை, பறித்தல். பரேஷ்டி - பரமேட்டி. பரேதம் - பிசாசம். பரேதராசன் - நமன். பரேபம் - நீர்நிலை. பரேர் - பேரழகு. பரை - ஐந்து மரக்கால்கொண்டஓரளவு, பார்வதி. பரைநாதம் - நெல்லிக்காய் கந்தி. பரோட்சக்கியானம் - அதிரிசியமானவற்றை யறிதல். பரோட்சஞானம் - சத்தாவத்தையினொன்று, அது பிரமமொன்றுண்டென்றுகேட்டறிதல். பரோட்சபோகம் - பரத்திரவியானுபவம். பரோட்சம் - அதிரிசியமானவை,இறந்தகாலம், காணப்படாதது. பரோட்சன் - தவசி. பரோட்சாரதம் - காணப்படாதபொருள். பரோதிதம் - அச்சுறுத்தல். பரோபகாரம் - பிறர்க்குபகாரம்.பரோபகாரன், பரோபகாரி - பிறர்க்குபகாரி. பரோபசாபம் - வாக்குவாதம். பரோபரீணம் - தோற்றநாச மற்றது. பர்க்கம் - ஒளி, வீரியம். பர்க்கன் - சிவன், சூரியன், பிரமன்,விஷ்ணு, பர்ணசாலை - இருடியர் ஆச்சிரமம்,இலைகளால் வேய்ந்த குடில். பர்ணம் - பன்னம், இலை. பர்ணாசநம் - மேகம், இலையுணவு. பர்ணீ - முருக்கமரம். பர்த்தா - பத்தா, கணவன்.பர்ப்படாகம், பர்ப்பாடகம் - பற்பாடகம். பர்மம் - கொப்பூழ், பொன்.பர்யுகஞ்சநம், பர்யுதஞ்சநம் - கடன். பர்வதம் - பருவதம், மலை. பர்வதராஜன் - இமயமலை. பர்வதாக்கிரம் - மலையுச்சி. பல - அனேகம். பலகணி - சாளரவாயில், திட்டிவாயல், சன்னல். பலகண்டன் - உப்பரவன், மண்வேலைசெய்வோன். பலகதை - சொவி. பலகம் - அடுக்கு, கேடகம், நாற்காலி,பின் சந்து.பலகலப்பு, பலகலவை - பலவுங்கலந்தது, வாசனைப் பொடி. பலகறை - கவடி. பலகாரம் - அப்பவருக்கம், யானைமேற்றவிசு. பலகீனம் - பலக்கேடு. பலகேசரம் - தெங்கு. பலகை - கேடகம், தொட்டிப்பாஷாணம், நெற்றியெலும்பு,யானைமேற்றவிசு, தட்டையானமரத்துண்டு. பலகைக்கயிறு - நெய்வார் கருவியினொன்று. பலகைக்கள்ளி - ஓர் கள்ளி. பலகைப்பா - இரதத்தோருறுப்பு,பரவப்பட்ட பலகை. பலகைமரம் - நெய்வார்கருவியினொன்று. பலகையடித்தல் - பரம்படித்தல். பலகையுரு - வளயலுப்பு. பலங்கரம் - பித்தம். பலசந்தமாலை - ஓர் பிரபந்தம் அஃதபத்துச் செய்யுள் ஒவ்வோர் சந்தமாக நூறு செய்யுள் கூறுவது. பலசம் - நகரவாயில், பழம், பனசம்,யுத்தம், வயல்.பலசம்பத்து, பலசம்பாரம் - பலபொருள். பலசரக்கு - கடைச்சரக்கு, பலசாமான். பலசாடவம் - மாதளை. பலசாலி - பலமுள்ளோன். பலசிரேட்டம் - மாமரம். பலசித்தி - பலப்பேறு. பலசூதனன் - இந்திரன். பலச்சரீடம் - குன்றி. பலட்சயம் - பலவீனம். பலட்சாரம் - இரத்தம். பலண்டு - வெங்காயம். பலண்டுறுகபாஷாணம் - விளைவுபாஷாண முப்பத்திரண்டினொன்று. பலதம் - மரம். பலதாசு - புளியாரை. பலதானம் - கருப்பதானம். பலதிரட்டு - பல பாடலிலு மெடுத்துச்சேர்த்திருப்பது. பலதுறை - நானாபேதம், பலவழி. பலதூசு - புளியாரை. பலதேவன் - பலபத்திரன், வாயு,பலராமன். பலத்தல் - பெலத்தல். பலத்தியாகம் - பயனிழக்கை, வலியிழக்கை, பயனை விடுகை. பலத்திரயம் - திரிபலை. பலபடப்புனைவணி - ஓரலங்காரம்அஃது ஒரு பொருளிற் பலரும் பலதருமங்களாற்பொருள்களைஆரோபித்தலும் ஒருவரே யொருபொருளில் விடயபேதங் காளற்பல பொருள்களை யாரோபித்தலுமாம் (உ-ம்) ஆரணங் காணென்பரந்தணர் யோகிய ராகமத்தின்காரணங்காணென்பர் எனவும்வில்லிற்குவி சயன் கல்விக்குச்சேடன் எனவும் வரும். பலபடுதல் - இரட்டித்தல், வேறுபடல். பலபட்டறை - பண்டகசாலை. பலபட்சணம் - கனியுணவு. பலபண்டம் - பலகாரம், பலபொருள். பலபத்திரன் - பலதேவன். பலபந்தம் - வலோற்காரம். பலபலெனல் - ஒலிக்குறிப்பு, ஒளிக்குறிப்பு, விடியற் குறிப்பு. பலபாகம் - கனி கொடுக்கும் பக்குவம்,கனிமுதிர்வு, பிரயோசனப்பங்கு. பலபாடு - பலதொந்தரை. பலபூமி - நரகம், மோக்கம். பலபூரகம், பலபூரம் - மாதுளை. பல பெயர்த்திரிசொல் - செந்தமிழ்நிலத்து மொழிகளாய்க் கற்றோர்க்கு மாத்திரந்தம் பொருள்விளக்கி யொரு பொருளைக்குறித்த பலபெயராய் வரும் பெயர்ச்சொல். பலபை - சூரியன் மையவரியினிற்கையிற் கடிகாரமத்தியில் விழுநிழல். பலபொருட்சொற்றொடரணி - ஓரலங்காரம் அஃது பல பொருள்களைத்தருதற்குரிய சொற்களைப்புணர்த்துக் கூறுதல். பலபொருளுவமை - ஒரு பொருட்குப்பலவுவமையை யெடுத்துக் காட்டுவது (உ-ம்) வேலுஞ் சேலும்போலும் விழி. பலபொருளொருசொல் - பல அருத்தங்கொள்ளுஞ் சொல். பல பொருள்குறித்த ஒருவினைத் திரிச்சொல் - செந்தமிழ் நிலத்துமொழிகளாய்ச் செய்யுட்கேயுரியவாய்க் கற்றோர்க்கு மாத்திரம் பொருள்விளக்கிப் பல பொருடருமொரு சொல்லாய் நிற்கும்வினைச்சொல்.பலபொருள்குறித்த ஓரிடைத்திரிச் சொல் - செந்தமிழ் நிலத்து மொழிகளாய்ச் செய்யுட்கே யுரியனவாய்க் கற்றோர்க்குமாத்திரந் தம்பொருள் விளக்கிப் பல பொருடருமோர் சொல்லாய் நிற்குமிடைச்சொல். பலபொருள்குறித்த ஓருரித்திரிசொல் - அரிதுணர் பொருளாய்ப் பலபொருடரு மோருரிச்சொல் (உ-ம்)கடி. பலப்படுதல் - பலமடைதல், வளர்தல். பலப்பம் - மாக்கல். பலப்பல் - பலபல். பலப்பித்தல் - பலப்படுத்துதல். பலப்பிராப்தி - பலசித்தி. பலப்பிரியம் - செம்போத்து. பலப்பிரேதம் - திப்பிலி. பலப்பேறல் - உரப்பேறல். பலமுகம் - பலகாரியம், பலதிசை,பலவழி. பலமுறை - நானாவிதம், பலதரம். பலமூலசாகாசனர் - முனிவர். பலமூலசாகாதி - இலை, கனி, கிழங்குமுதலியன. பலம் - அம்பலகு, ஆதாயம், ஆயுதநுனி, இலை, காய், கிழங்கு, கேடகம், கொழு, சாதிக்காய், சுரூபம்,செல்வாக்கு, தாது, தொகை,நிமிஷம், நிறைகல், நிறையளவினொன்று, நெற்றிப்படை, பயன்,பருப்பம், பழம், பிறித்துக்கண்டபேறு, பெலன், பொன், மகளிர்சூதகம், மாதிரி, மாமிசம், வட்டத்தின் பரப்பு, வெட்பாலை,சேனை. பலம்பழம் - சேங்கொட்டை. பலரறிசொல் - அலர்மொழி, உயர்திணைப் பன்மைச்சொல், பிரசித்த வார்த்தை, பெருஞ்சொல். பலராமன் - பலபத்திரன். பலர் - அனேகர். பலர்க்கம் - கதுப்பு. பலர்பால் - ஆண் பன்மையையும்பெண் பன்மையையும் இருவர்பாற்கும் பொதுப்பன்மையையுங்காட்டி நிற்பது. பலலப்பிரியம் - காகம். பலலம் - சேறு, பிண்ணாக்கு, மாமிசம். பலலன் - இந்திரன் மகன், பலராமன்,பேருண்டியான். பலலாசயம் - கழுத்து. பலவத்தர் - கடவுட்டிருவுளப்படிஎய்துங்கருமங்கட்கு வரு மிடையூற்றை யவனருளாற்றடுப்பவர். பலவத்தை - பலம். பலவந்தம் - பலபந்தம், பலாற்காரம். பலவயிற்போலியுவமை - ஒரு தொடர்மொழிக்கட் பலவுவமைவர அவ்வுவமைதோறு முவமைச்சொற்புணர்ந்து வருவது (உ-ம்) மலர்வாவிபோலு மாதர் அதின் மலர்கள்போலும் அவர் முகம் அதினுறை அணிபோலு மவர்விழி. பலவரி - ககரமுதனகர மீறாயபதினெட்டெழுத்து. பலவழித்தோன்றல் - மருமகன். பலவறிசொல் - அஃறிணைப் பன்மைச் சொல். பலவறுதி - பலவீனம். பலவன் - ஓர் மருந்துப்பூண்டு. பலவானம் - மந்தாரச்சீலை பலவான் - பலசாலி. பலவிதம் - நானாவிதம். பலவிருட்சகம் - பலாமரம். பலவிளக்கு - செந்நாயுருவி. பலவினைச்சிலேடை - பலவினையான்வருவது. பலவினைத்திரிசொல் - செந்தமிழ்நிலத்து மொழிகளாய்க் கற்றோர்க்கு மாத்திரந்தம் பொருள்விளக்கி ஒருவினை குறித்தபலசொல்லாய் வரும் வினைச் சொல். பலவின்கூட்டத்தற்கிழமை - பலவினொற்றுமை (உ-ம்) படையதுதொகுதி. பலவின்பால் - அறிஃணைப் பன்மைப்பால். பலவு - பலாமரம். பலற்காரம் - பலபந்தம். பலனம் - கனி கொடுத்தல். பலன் - இந்திரனால் கொல்லப்பட்டஓர் இராட்சதன், இலாபம்,ஈரவெங்காயம், காய், சிவதருமமுதலியவற்றான் வரும்பேறு,பலதேவன், பழம், பிரயோசனம்,புண்ணியம், பேறு. பலன்கொடுத்தல் - பிரயோசனமளித்தல், பேறாதல். பலா - ஓர் மரம், சிற்றாமுட்டி, பாகல். பலாகம் - கொக்கு. பலாகாரம் - பழமுதலியபோசனம். பலாக்கினி - பித்தம். பலாங்கம் - ஓர் மீன். பலாசம் - இலை, ஓர் பிசாசம், பச்சைநிறம், பயிர், பலாமரம், புனமுருக்கு,மகதம், முருக்கு. பலாசனம் - கிளி. பலாசாக்கியம் - பெருங்காயம். பலாசி - மரப்பொது. பலாசு - பலாசம். பலாட்டியம் - பலபந்தம், பலம். பலாட்டியன் - பலமிக்கோன். பலாண்டு - ஈர வெங்காயம். பலாதவம் - பூனைக்காலி. பலாதனம் - கிளி. பலாதன் - ஓரரக்கன். பலாத்காரம் - பலாற்காரம். பலாநுஜன் - கிருஷ்ணன். பலாந்தம் - ஒருகாற் காய்த்துப்படுமரம், மூங்கில். பலாபம் - யானை மத்தகம்.பலாபலம், பலாபலன் - நயநட்டம், மிகுபலன்.பலாயனம் - நிலைகுலைவு, புறங்காட்டுகை, போதல்.பலாரன், பலாராதி - இந்திரன். பலாரி - இந்திரன், பலசூதனன். பலாரெனல் - விடிதற் குறிப்பு. பலார்த்தம் - அரைப்பலம். பலார்பற்றல் - பலாரெனல். பலாதோகதம் - மாமரம். பலாலம் - வைக்கோல். பலாற்காரம் - வலோற்காரம், பலவந்தம். பலி - இறை, உடற்றிரை, ஓர்சக்கிரவர்த்தி, காகம், காணிக்கை, காய்த்திருந்த மரம், சாம்பல், சேடம்,சோறு, தேவருணவு, நீறு, பலிபதார்த்தம், பிச்சை, பூசை, விண்ணோருணவு, மாமிசம். பலிகம் - சுவர், நீர்க்குடம், பளிங்கு,பிச்சைப்பாத்திரம், வாயில். பலிகை - பிண்ணாக்கு.பலிகொடுத்தல், பலிசெலுத்தல் - பலியிடுதல். பலிச்சக்கரவர்த்தி - மாபலி. பலிதம் - கனியுள்ளது, சேறு, பலிப்பது, மயிர்நரை, வெம்மை. பலிதானம் - பலி கொடுத்தல். பலிதை - கிழவி. பலித்தம் - இலாபம். பலித்தல் - செழித்துவளர்தல், நயப்படல், வாய்த்தல், பலனுடைத்தாதல். பலித்திரு - தருப்பை. பலிநந்தநன் - வாணாசுரன். பலிபாத்திரம் - பிக்ஷhபாத்திரம். பலிபீடம் - பலிசெலுத்தும் பீடம். பலிபுட்டம் - காக்கை. பலிபோடுதல் - பலி கொடுத்தல். பலிப்பு - பலித்தல். பலிமந்திரம் - பாதாளம். பலிமுகம் - குரங்கு. பலியங்கம் - பரியாங்கம் பலியம் - தளிர்,பூ. பலியயனம் - சேணம்.பலியிடுதல், பலியூட்டுதல் - பலிசெலுத்துதல். பலியெடுத்தல் - உயிரெடுக்குதல்,பலியேற்றல். பலினம் - காய்த்திருக்கு மரம். பலினி - காய்த்திருந்த மரம், கோங்குஞாழல். பலீ - எருது, ஒட்டகம், கடா, கோழை,பன்றி. பலீனி - பலினம், மிளகு. பலுகம் - குரங்கு.பலுகல், பலுகுதல் - பெருகுதல். பலுட்டல் - முடித்தல். பலேந்திரன் - பலவான். பலை - பழம். பலோதயம் - ஆதரீயம், சந்தோஷம்,பலம், மோக்கம், பலோத்தமை - திராiக்ஷப்பழம். பலோருகம் - பாதிரி. பலோற்காரம் - வலோற்காரம். பலோற்பதி - மாமரம். பலோனி - பெண்குறி. பல் - ஆயுதக்கருக்கு, நங்கூரநாக்கு,பல்லு. பல்கணி - நுழைவாயில். பல்கல் - பருகல், வெகுநாள். பல்காயனார் - ஓர் இலக்கண ஆசிரியர். பல்காற்பறவை - வண்டு. பல்குதல் - பலுகுதல். பல்பல - பலபல. பல்லகம் - கரடி. பல்லக்கர் - சிவனடியார். பல்லக்கு - சிவிகை. பல்லங்குழி - பல்லாங்குழி. பல்லணம் - குதிரைக்கல்லணை. பல்லதி - ஓரிராகம். பல்லம் - அம்பு, ஓரெண், கரடி,குதிரைக் கல்லணை, கோரிகை,சேரான்மரம்.பல்லரணை, பல்லரனை - ஓர் நோய். பல்லவகன் - தூர்த்தன். பல்லவதாரம் - மரக்கொம்பு. பல்லவத்திரு - அசோக மரம். பல்லவம் - இலை, கிளை, கொப்பு,கையணி, சாயம், தளிர், தேயமைம்பத்தாறினொன்று, பதத்தினோருறுப்பு, விசாலித்தல். பல்லவர் - கீழ்மக்கள், தூர்த்தர், பலர்,ஒரு சாதியார். பல்லவாதம் - மான். பல்லவாதாரம் - கொப்பு. பல்லவாத்திரன் - காமன். பல்லவி - பல்லவம், பதத்தினோருறுப்பு. பல்லவை - இழிபானபொருள், கீழ்மை,பல பொருள். பல்லாக்கு - பல்லக்கு. பல்லாங்குழி - பன்னாங்குழி. பல்லாண்டு - ஓர்வகை வாழ்த்துக்கவி,பல வருஷம், வாழ்த்து.பல்லாதகம், பல்லாதகி, பல்லாதம் - சேரான்மரம். பல்லார் - பலர். பல்லி - இடம், இடையரூர், ஓருடும்பு,கெவுளி, சிற்றூர். பல்லிக்கை - சேங்கொட்டை, பல்லி. பல்லிச்சாத்திரம் - கெவுளி நூல். பல்லிப்பூடு - ஓர்பூண்டு. பல்லியம் - சங்கீதம், வாச்சியப் பொது. பல்லியோசியம் - பல்லிச் சாத்திரம். பல்லினர் - சதுரக்கள்ளி. பல்லினர்குழவி - மலைப்பச்சை. பல்லினார் - கிலுகிலுப்பை, குழவி. பல்லு - தந்தம், இரண்டாமிடம். பல்லுகம் - கரடி, பெருவாகை. பல்லுக்கடித்தல் - அதரத்தைக்கடித்தல். பல்லுக்காட்டுதல் - கெஞ்சுதல். பல்லுக்கிட்டுதல் - அலகு பூட்டுதல். பல்லுக்கெஞ்சுதல் - மன்றாடுதல். பல்லுக்கொறிக்குதல் - பல்லோடுபல்லராத்தல். பல்லுங்கம் - மூங்கில். பல்லுத்தீட்டுதல் - பல்லுக்கொறிக்குதல்,பல்லு மினுக்குதல். பல்லுவிளக்குதல் - பல்லு மினுக்குதல். பல்லுறுசெங்களை - குதிரைப் பற்பாஷாணம். பல்லூகம் - கரடி, குரங்கு. பல்லூழி - அனேகயுக காலம். பல்வலம் - சிறுகுளம், வாவி. பல்வலாவாசம் - ஆமை. பவ - எட்டாவதாண்டு. பவசாகரம் - பிறவிக் கடல். பவணந்தி - நன்னூலென்னு மிலக்கணநூல் செய்த ஓராசிரியன். பவணை - கழுகு. பவநாசம் - ஓர் தீர்த்தம். பவநாசன் - கடவுள், சிவன். பவநாசிநி - சரயுநதி. பவந்தம் - சூது. பவந்தி - கற்புடையாள். பவபூதி - ஐசுவர்யம், ஓர் வடமொழிப்புலவன், சிவன்.பவமானம், பவமானன் - தீ, வாயு. பவம் - அழிவு, இருத்தல், உலகம்,காற்று, சதுப்பு, நிலம், சம்பாத்தியம், சாணி, சிங்கக்கரணம்,சுத்தம், தூர்த்தல், நிலைபரம்,பலன், பாவம், பிறப்பு, மேன்மை,மரம். பவரணை - பூரணை. பவர் - கவர், நெருங்கல், மூடுகை,கொடி. பவர்க்கம் - நரகம். பவர்தல் - பரத்தல். பவவீதி - முடிவு, முற்றத் துறத்தல். பவழம் - பவளம். பவளக்காலி - ஓர் புள், ஓர்பூடு. பவளக்குறிஞ்சி - ஓர் பூண்டு. பவளச்சோளம் - ஓர் சோளம். பவளநெடுங்குஞ்சியோன் - வயிரவன். பவளப்புற்றுப்பாஷாணம் - ஓர்வைப்புப் பாஷாணம். பவளப்பூண்டு - ஓர் பூண்டு.பவளப்பூலா, பவளப்பூலா, பவளப்பூல் - ஓர் செடி. பவளமல்லிகை - ஓர் மல்லிகை. பவளமனோசிலை - ஓர் சரக்கு. பவளம் - நவமணியி னொன்று. பவளவங்காரவாச்சி - ஓர்பூண்டு பவனகுமாரன் - அக்கிநி. பவனசுதன், பவனநந்தனன் - ஆஞ்சநேயன், வீமன். பவனம் - அரண்மனை, இடம், இராசி,ஒதுக்கல், காடு, காற்று, குயவன்,சூளை, கொழித்தல், கோட்டை,சுத்தம், தூர்த்தல், தூற்றுதல்,தேவலோகம், நாக லோகம்,பவனவாய், பாவனை, பூஞை,பூமி, பொழுது, வாயு, வீடு.பவனவாசல், பவனவாய் - அபானத்துவாரம். பவனவாயு - அதோ வாயு. பவனன் - காற்று. பவனாசநாசம் - கருடன், மயில். பவனாசநாசன் - கருடன், மயில். பவனாசம், பவனாசனம் - பாம்பு. பவனாத்துமசன் - அக்கினி, அனுமான், வீமன். பவனி - உலாப்போதல், பயணம். பவனிக்காதல் - ஓர் பிரபந்தம், அஃதுபவனிவந்த தலைமகன் மேற்கொண்ட காமத்தாலவன் சிறப்பைப் பிறரோடுரைத்து வருந்துவதாகக் கூறுவது. பவனோதரம் - உள் வீடு. பவன் - கடவுள், தானாயுண்டானவன். பவாகை - சுழல் காற்று. பவாநிகுரு - இமயமலை. பவாபவம் - தூல சூனியம். பவாயனை - கங்கை. பவாரண்மியம் - பாவக்கேடு. பவானி - கோயம்புத்தூருக்கருகில்ஓரூர், காவிரியாற்றின் கிளைநதி,பார்வதி. பவி - இடியேறு. பவிகம் - சிலாக்கியம், மங்களம். பவிஞ்சு - பவுஞ்சு பவிசி, பவிக்ஷி - பவுஷு, மானம், செல்வம், சம்பிரமம். பவிஷியம், பவிடியம் - எதிர்காலம் , ஓர்புராணம், செல்வம். பவிதம் - சுத்தம், மிளகு.பவிதவ்வியம், பவிதவ்வியதை - சுபம்,பாக்கியம். பவித்திரகம் - அத்தி மரம், அரசமரம், தருப்பைப்புல், நெய்,வலைக்கயிறு. பவித்தரமுடிச்சு - ஓர்வகை முடிச்சு. பவித்திரமோதிரம் - பவித்திர முடிச்சாய்ச் செய்த மோதிரம். பவித்திரம் - காணிக்கைப் பாத்திரம்,செம்பு, தண்ணீர், தருப்பை,தருப்பைப் புல்லாற் செய்தவோர்முடிச்சு, துடைத்தல், தூய்மை,தேன், நெய், பூணூல், மோதிரம்.பவித்திரவான், பவித்திரன் - தூயவான். பவித்திராங்குலி - தருப்பை முடிச்சணிவிரல். பவித்திராரோபணம் - பூணூலணிதல். பவித்திரி - சுத்தன், தருப்பை. பவித்திரிதம் - சுத்தம். பவித்திரீகணம் - நெய். பவித்திரீகரணம் - சுத்தி செய்தல். பவித்திரை - தூய்மை யுள்ளவள். பவிநன் - நூலாசிரியன். பவுகம் - சுபம். பவுஞ்சு - படை.பவுஷி, பவுஷு, பவுஷ் - சம்பிரமம்,வாழ்வு. பவுண்டரம் - வீமன்கையிற் சங்கு. பவுண்டரிகம் - ஓர் யாகம். பவுண்டிரகம் - ஓர் பலி. பவுதிகம் - பௌதிகம். பவுத்திரம் - பவுந்திரம். பவுத்திரர் - பௌத்திரர். பவுந்திரம் - பகந்திரம்.பவுரணமி, பவுரணை - பௌரணை. பவுராணிகம் - பௌராணிகம். பவுரி - கூத்தின் விகற்பம். பவுரிசம் - போலியான நடை,வேஷம். பவுள்சு - ஆடம்பரம், ஐசுவரியம். பவேசம் - மோவாய்க்கட்டை, மீசைமயிர். பவோற்பவன் - பன்னோருருத்திரரிலொருவன். பவ்வம் - பௌவம், பருவம். பவ்வியம் - சத்தியம், சுபம்,பயன்,தாழ்மை, அடக்கம். பவ்வியை - உமாதேவி, யானைத்திப்பிலி. பழகல் - பழகுதல். பழகாடி - பழக்கமுடையோன். பழகாதபழக்கம் - கெட்ட பழக்கம். பழகுதல் - இணக்கமாதல், ஊடாடுதல், கற்குதல், பயிலல், வழங்கு தல். பழக்கம் - அறிமுகம், சாதுத்துவம்,பயிற்சி, பரிசனை, வழக்கம். பழக்கம்பண்ணுதல் - அப்பியாசித்தல், அறிமுகப்படுத்தல், பாவித்தல். பழக்காய் - செங்காய். பழக்குதல் - அறிமுகப்படுத்தல், பயிற்றல், பரிசனைப்படுத்தல், வழங்கல். பழங்கஞ்சி - முதனாட் கஞ்சி பழங்கணக்காதல் - பழசுபடல் பழங்கணாளர் - துயறுருவோர், பழங்கண் - இளைப்பு, ஒலி, துன்பம்,பழுது, பயனின்மை, மெலிவு. பழங்கதை - கிழக்கதை, பூருவ கதை. பழங்கிடையன் - நெடுநாட்பட்டது. பழங்குடி - தொன்மரபு, ஆதிகாலத்தேறிய குடி பழசு - சாரமற்றது, பழையது. பழசுபடுதல் - பழையதா தல். பழஞ்சாதம் - பழஞ்சோறு. பழஞ்சுரம் - பழங்காய்ச்சல். பழஞ்சொல் - பழமொழி. பழஞ்சோறு - பழைய சாதம். பழந்தண்ணீர் - நீர்ச்சோறு. பழந்தரை - பழநிலம் பழந்திருடன் - நெடுநாட்டிருடன். பழப்பாசம் - கருஞ்சீரகம். பழப்புளி - புளியம்பழக்களி. பழப்பேசி - செப்பு நெருஞ்சில். பழமலை - திருமுதுகுன்றம், விருத்தாச்சலம். பழமனை - அழிந்தவீடு, முன் வீடிருந்த நிலம். பழமுண்ணிப்பாலை - ஓர் மரம். பழமை - சாரமின்மை, பூருவம், முதுமொழி. பழமொழி - ஓர் நீதி நூல், முது சொல். பழமொழித்திரட்டு - ஓர் நூல். பழம் - கனி, பலன், முதிர்ந்தது. பழம்பகை - தொந்தப்பகை, நெடுநாட்பகை. பழம்பஞ்சாரம் - மிக முதியோர்,வெகுநாட்பட்டது. பழம்பஞ்சுரம் - ஓர் பண். பழம்பழுத்தல் - சொக்கட்டானிலோர் செய்கை. பழம்பாசி - ஓர் பூடு. பழம்பாடம் - படித்த பாடம். பழம்பொருள் - கடவுள், பழயபொருள், புதையல். பழயகாலம் - முற்காலம். பழயபடி - முந்தின பிரகாரம். பழயபாடல் - முன்னோர் பாடல். பழயமனிதர் - முன்னோர். பழயவர் - முன்னோர், முதியோர். பழவடியார் - வழித்தொண்டர். பழவினை - ஊழ்வினை, பழம்பகை. பழனமாக்கள் - பள்ளர்.பழனம் -மருதநிலம், வயல், நீர் நிலம். பழனி - திருவாவினன் குடி. பழி - குற்றம், நிந்தை, பழியென்னேவல், பொய், பொல்லாங்கு,வயிராக்கியம், விரோதம். பழிகட்டுதல் - பழி பிடித்தல், பழிமூட்டுதல், வசை கூறல். பழிகாரன் - பழிக் குடந்தைக்காரன்,பழி வாங்குவோன். பழிகிடத்தல் - யாதொன்று பெறுவதற்குப் பட்டினி கிடத்தல். பழிகூறல் - தூற்றல் அஃது மும்மொழியினொன்று. பழிக்குச்செய்தல் - கடன் வழிக்குச்செய்தல். பழிக்குடி - எதிரிடைக்குடி, எளியகுடி,பழிக்கிடமா யிருக்குங்குடி. பழிக்குவிடுதல் - தன் காரியமல்லவென்று விடுதல், மறு பெயரிலேபழிவரும் படி விடுதல். பழிசுமத்தல் - பழி சுமத்துதல், பழிவந்து பொறுத்தல். பழிசுமத்துதல் - பழியைச் சுமத்துதல்,பிறர்மேற் பாரம் போடுதல். பழிசூழ்தல் - பழியடைதல், முற்பழிவந்து சேருதல். பழிசெய்தல் - தீங்கு செய்தல். பழிசை - இகழ்ச்சி. பழிசொல்லுதல் - பொல்லாங்குசொல்லல்.பழிச்சல், பழிச்சுதல் - துதித்தல். பழிச்சொல் - பழிமொழி. பழிதீர்தல் - குற்ற நீங்கல், சமாதானமாதல், பொல்லாங்கு தீர்தல். பழிதீர்த்தல் - குற்றநீக்கல், சமாதானப்படுத்தல், பொல்லாங்கு நீங்குதல்.பழிதூறுதல், பழிதூற்றுதல் - புறங்கூறல். பழிதேடுதல் - பழிகட்டுதல், பொல்லாங்கு செய்தல். பழித்தல் - நிந்தித்தல். பழிநாணல் - பழிக்கஞ்சுதல். பழிபடுதல் - குற்றப்படல், பழிக்குட்படுதல். பழிபிடித்தல் - விரோதங் கட்டல். பழிப்படுதல் - குற்றப்படல், பழி யேறுதல். பழிப்பனவு - பழிப்பன காரியம். பழிப்பு - நிந்தை, பழி. பழிமீட்குதல் - பழிதீர்த்தல், பழி வாங்குதல். பழிமுடிதல் - பழி மூட்டுதல். பழிமுடித்தல் - பழிசாதித்தல், விரோதங்காட்டல். பழிமூட்டுதல் - கோள் மூட்டுதல். பழிமூளுதல் - பொல்லாங் குண்டுபடல். பழிமொழி - நிந்தனை, புறங்கூறல். பழியஞ்சல் - பழிக்கஞ்சுதல். பழியிடுதல் - பழி யேற்றுதல். பழியெடுத்தல் - பழி தேடுதல். பழியேறுதல் - பழி பிடித்தல். பழியேற்குதல் - பழிக்குடன்படல். பழிவருதல் - பழி சுமருதல். பழிவாங்கல் - தீமைக்குத்தீமை செய்தல். பழிவேலை - வேண்டா வெறுப்பானவேலை. பழிவைத்தல் - பழிப்படுத்திச் சொல்லல். பழு - ஏணிப்பழு, பழுவென்னேவல்,விலா, விலாவெலும்பு. பழுக்கச்சுடுதல் - பொன்னணியைப்பழுப்பாக்கல். பழுக்கப்போடுதல் - காய் பழமாகும்படி கிடங்கிற் போடுதல். பழுக்கா - பொன்னிறம். பழுக்காய் - ஓர் நிறம், தேங்காய்,பாக்கு. பழுதாதல் - பழுதுபடல். பழுது - குற்றம், சிதைவு, பொய்,பொல்லாங்கு, சேதம், பயனின்மை. பழுதுபடல் - சீர்கெடல். பழுதுபார்த்தல் - திருத்துதல். பழுதை - கயிறு, பாம்பு, வைக்கோற்புரி. பழுத்தபழம் - தீர்ந்த கள்வன், பூரணபலம், முதிர்ந்தவன், விருத்தன்,கிழம். பழுத்தல் - கனிதல், பழமாதல், பழுத்தஇலை, பழுப்புநிறங் கொள்ளல்,முதிர்தல். பழுபாகல் - ஓர் பாகல், தும்பை. பழுப்படைசுதல் - இடைப் பழுப்பேறல். பழுப்பு - அரிதாரம், ஓர் நிறம், நென்பு,பழுத்தலாயிருப்பது. பழுப்பேறுதல் - பழுப்படைசுதல். பழுமரம் - ஆலமரம், பழுத்தமரம். பழுவம் - காடு. பழுவறை - பழு. பழைசு, பழைது - பழையது. பழைமை - தொன்மை. பழைமைபாராட்டல் - பழையவுரிமைகளை யெடுத்துப் பேசல். பழையதண்டுலம் - பழைய அரிசி. பழையது - நாட்பட்டது, பழஞ்சாதம். பழையர் - கள்விற்போர், தொல்லோர். பழையோள் - காடுகாள். பளகம் - பவளம், மலை. பளகு - குற்றம். பளபளத்தல் - ஒளி கொள்ளுதல். பளபளப்பு - அலங்காரம், ஒளிக்குறிப்பு. பளாபளா - இன்மைக்குறிப்பு, வியப்புக்குறிப்பு. பளபளெனனல் - ஒளிக்குறிப்பு. பளிக்கறை - பளிங்கு மண்டபம். பளிங்கு - கண்ணாடி, சுக்கிரன்,தோணிக்கயிறு, படிகம், கருப்பூரம். பளிச்சட்டியெனல் - பளிச்செனல். பளிச்சிடுதல் - ஒளி மின்னுதல். பளிச்சுப்பளிச்செனல் - ஒளிக்குறிப்பு. பளிச்செனல் - ஒளிக்குறிப்பு. பளிஞ்சி - கப்பலினாஞ்சான் கயிறு. பளிதம் - ஓரெண், கருப்பூரம். பளீரிடுதல் - பளிச்சிடுதல். பளீரெனல் - ஒளிக்குறிப்பு. பளீர்பளீரெனல் - ஒளிக்குறிப்பு. பளு - பாரம். பளுவு - பாரம். பளை - வளை. பள் - ஓர் சாதி, ஓர் பிரபந்தம். பள்ளக்கை - பதிந்த நிலச்சார்பு. பள்ளச்சி - பட்பெண், பள்ளப் பெண். பள்ளச்சேரி - பள்ளக்குறிச்சி. பள்ளத்தாக்கு - இரண்டு மேட்டுக்கூடாயிருக்கு நிலம். பள்ளத்தி - பட்பெண். பள்ளம் - ஆழம், தாழ்ந்த நிலம். பள்ளயம் - தேவதைகட்குச் செய்யுங்குளிர்த்தி. பள்ளர் - உழவர், ஓர் சாதியார். பள்ளாடு - பள்ளையாடு. பள்ளி - அறச்சாலை, அறை, ஊர்,ஓர்சாதி, கல்லூரி, சிற்றூர், தேவர்,கோவில், நித்திரை, பட் பெண்,பள்ளிக்கூடம், மக்கட் படுக்கை,மருத நிலத்தூர், முனி வர் வாசம்,இடைச்சேரி, பள்ளிகொண்டபெருமாள் - விட்டுணு. பள்ளிகொள்ளுதல் - நித்திரை செய்தல். பள்ளிக்கணக்கர் - கற்போர். பள்ளிக்குவைத்தல் - பிள்ளைகளைக்கற்க வைத்தல், பிள்ளைகளைப்பள்ளிக்கூடத்திற் கனுப்புதல். பள்ளிக்கூடம் - கல்வி பயிலிடம். பள்ளிசெய்தல் - பள்ளிவளர்தல். பள்ளிப்பழக்கம் - கல்லூரிப் பயிற்சி. பள்ளியடைத்தல் - சாலையுண்டாக்கல். பள்ளியறை - சயனவறை. பள்ளியிற்பிள்ளை - கற்போன். பள்ளியெழுச்சி - ஓர் பிரபந்தம்,துயிலெழுப்புகை, நித்திரை விழித்தெழுதல் பள்ளியெழுப்புதல் - நித்திரை விழிக்கச் செய்தல். பள்ளிவளர்தல் - நித்திரை செய்தல். பள்ளு - பள், ஒரு நாடகத்தமிழ் நூல். பள்ளுவிலி - ஓர் சாதி. பள்ளை - ஆடு, குள்ளம், வயிறுபருத்தது, வெள்ளாடு. பள்ளையம் - உண்கலம், தாம்பாளம்,படைக்கப்பட்ட பலி. பள்ளையன் - படர்ந்தவன். பற்கடித்தல் - அகற்றல், துரத்துதல். பறக்காளி - பறைக்காளி. பறக்குதல் - பறத்தல். பறங்கி - ஓர் மேகவியாதி, பறங்கிப்பாடைக்காரன். பறங்கிக்காய் - பூசினிக்காய். பறங்கிக்காரன் - ஓர் பாடைக்காரன் பறங்கிக்கொடி - பூசனிக்கொடி. பறங்கிக்கிழங்கு - சீனக்கிழங்கு. பறங்கிக்கூர்மை - காசிசாரம். பறங்கிக்கொடி - பூசுனி. பறங்கிச்சாம்பிராணி - ஓர் மருந்து. பறங்கிச்சிலைநிறம் - மாங்கிஷசிலை. பறங்கித்தாழை - அன்னதாழை. பறங்கிப்பட்டை - சீனக்கிழங்கு. பறங்கிப்பாஷாணம் - ஓர் பாஷாணம். பறங்கிப்பாஷை - ஓர் பாஷை. பறங்கிப்புண் - ஓர் தொற்று வியாதி. பறங்கிப்பேட்டை - ஓரூர். பறங்கியணிநுணா - ஓர் மரம். பறங்கியாமணக்கு - ஓராமணக்கு. பறங்கிவராகன் - ஓர்வகை வராகன். பறங்கிவியாதி - கிரந்தி நோய். பறட்டை - சடைவு, செழிப்பற்றது,தழைவற்றது, வளர்ச்சியற்றது. பறட்டைக்கீரை - ஓர்வித கீரை. பறணி - பெருங்குரும்பை, சீந்தில். பறண் - புரண். பறண்டுதல் - சுறண்டுதல். பறதி - அவசரம், பறத்தல். பறதிக்காரன் - அவசரக்காரன். பறத்தல் - அவசரம்பண்ணல், கிளர்தல், தூசி முதலிய கிளம்புதல்,விரைவாயோடல். பறந்தடித்தல் - அவசரப்படுதல். பறந்தலை - சுடுகாடு, போர்க்களம். பறந்துவிழுதல் - பறந்தடித்தல்.பறபறத்தல், பறபறப்பு - ஈரடுக்கொலிக்குறிப்பு, சீக்கிரம்பண்ணுதல். பறபறவிளையாட்டு - ஓர் விளையாட்டு. பறபறெனல் - ஒலிக்குறிப்பு, விரைவுக்குறிப்பு. பறப்பன - பட்சிசாதி. பறப்பன் - அவசரக்காரன், தேள்,விருச்சிகம். பறப்பு - பறதி. பறப்பை - நெய்விடு பாத்திரம், பறவை. பறம்பர் - தோல்வினைஞர். பறம்பு - மலை, முலை. பறல் - பறவை. பறவாதி - பறதிக்காரன், பேராசைக்காரன். பறவை - அவிட்டநாள், இறகு, ஓர்நோய், பறப்பு, புள். பறவையின்வச்சிரம் - பொன்னம்பர். பறவைவேந்தன் - கருடன். பறழ் - அணிலாதி கோட்டில்வாழ்விலங்கின் பிள்ளை, ஆடு கீரி நரிநாய் பன்றி பாம்பு புலி பூனை மான்முயல் இவற்றின் குட்டி, பருப்பு.பறளிகை, பறளை - குறடு, பற்றிரும்பு. பறாண்டுதல் - பிறாண்டுதல்.பறாரிடுதல், பறாரெனல் - ஒலிக்குறிப்பு. பறி - பறித்தல், பறியென்னேவல்,பொன், மீன் படுக்குங்கருவி, மீன்பெய்யுங்கருவி. பறிகாரன் - பறிக்கிறவன், வலைஞன். பறிகுதல் - கடந்தோடுதல், பெயர்ந்துவழுவுதல். பறிகொடுத்தல் - அழியக்கொடுத்தல்,களவுகொடுத்தல், பறிக்கக்கொடுத்தல். பறிக்கல்லு - கற்கிட்டம். பறிக்குதல் - இறக்குதல், கொய்தல்,சாய்த்தல், தோண்டுதல், பிடுங்குதல், வலாற்காரமாய்க் கவர்தல். பறிதலையர் - சமணரிலோர் விகற்பிகள். பறிதல் - பறிகுதல், வெளிப்படல் . பறித்தல் - பறிக்குதல், கொய்தல்,பிடுங்குதல், தோண்டுதல். பறிப்பு - பறித்தல். பறிமணல் - பொன்மணல். பறிமுதல் - பறிக்கப்பட்டது. பறிய - தூரமாக. பறியல் - பறிப்பு. பறியவிடுதல் - தப்பவிடுதல், நெகிழவிடுதல். பறிவு - ஒட்டுகை, பறியல். பறிவை - சீந்திற்கொடி, நத்தியாவட்டம், பட்டிகை. பறுகன் - கட்டையன், சுறட்டையன். பறுகு - சிறுதூறு, பறட்டை. பறுணி - கொள்ளு, சீந்தில், பெருங்குமிழ், பெருங்குரும்பை. பறுவதம் - பருப்பதம். பறை - இறகு, ஓரளவு, ஓரளவு கருவி,சாதி, சொல் , பறையென் னேவல்,வாச்சியப்பொது. பறைகொட்டுதல் - மேள மடித்தல். பறைக்கம்பு - பறைவெட்டுங் கம்பு.பறைக்காலி, பறைக்கால், பறைக்காளி - ஓர்விதப் புடவை. பறைசாற்றுதல் - பறையடித் தறிவித்தல். பறைசீவி - சிறுநன்னாரி. பறைச்சல் - பேச்சு. பறைச்சி - பறைப்பெண். பறைதட்டுதல் - பறைமுறை யடித்தல்,பறைவெட்டுதல், பிரசித்தப்படுத்தல். பறைதல் - சொல்லல், அழிதல். பறைநாகம் - ஓர் பாம்பு. பறைபோடுதல் - பறையடித்தல். பறைப்பருந்து - கரும்பருந்து. பறைப்புடையன் - ஓர் பாம்பு. பறைப்பூச்சி - ஓர் சிலந்திப்பூச்சி. பறைமுழக்கு - பறையொலி. பறைமுழக்குதல் - பறையடித்தல்.பறைமுறை, பறைமுறைசாற்றுதல் - பறையடித்தறிவித்தல். பறைமேளம் - பறையடிக்கு மேளம். பறையடித்தல் - பறைமுழக்கிப் பிரசித்தம் பண்ணுதல், மேள மடித்தல். பறையர் - ஓர் சாதியார். பறையறைதல் - பறையடித்தல். பறையன் - ஓர் சாதியான். பறையாமை - கரியவாமை. பறைவு - பறைச்சல். பறைவெட்டு - பறைதட்டுதல். பற்கம் - பிரபை. பற்கன் - சிவன், சூரியன், பிரமன்,விட்டுணு.பற்காவி, பற்காறை - பற்கிடுமோர்தூள்.பற்குச்சி, பற்குச்சு - பற்கொம்பு. பற்குறி - தந்தரேகை, பல்லுப்பட்டஅடையாளம். பற்குனன் - அருச்சுனன். பற்குனி - உத்திரநாள், பங்குனி. பற்கொம்பு - தந்த சுத்திக்கம்பு. பற்சர் - பகைவர். பற்சனம் - நிந்தை. பற்சிராய் - பற்கறள். பற்ணி - வல்லாரை. பற்ணை - தண்ணீர்விட்டான் கிழங்கு.பற்படகம், பற்படம் - ஓர் பூடு. பற்பணம் - ஓர் பலம். பற்பநாபன் - பதுமநாபன். பற்பமாமுனி - ஓர் முனி.பஸ்பம், பற்பம் - தாமரை, தூள், நீறு,பதுமம், விபூதி. பற்பராகம் - பதுமராகம். பற்பரீகம் - அகங்கை, இனிப்பு,சூரியன், தீ, நீர். பற்பல - பலபல. பற்பாடகம் - பற்படகம். பற்பித்தல் - பற்பமாக்கல். பற்பேத்தை - முரசிற்கட்டு. பற்மகாரன் - வண்ணான். பற்மம் - பதுமம், பஸ்மம், பொன். பற்மராகம் - பதுமராகம். பற்மவேதகம் - கருப்பூரம். பற்மாசனம் - பதுமாசனம். பற்மீகரம் - சாம்பர். பற்மீகரித்தல் - பற்பமாக்கல். பற்றகற்றி - பாத்திரஞ் சுரண்டுங்கருவி. பற்றடித்தல் - கல்லு முதலியவற்றிற்குஒட்டிடுதல். பற்றம் - கனம், துணையாகப்பிடிக்கை, தாமரை. பற்றம்பிடித்தல் - இருவர் கைவாறாய்த்தாங்குதல். பற்றலர் - சத்துருக்கள். பற்றல் - ஆசை பெருகுதல், குறித்தல்,தொடர்தல், பிடித்தல். பற்றவைத்தல் - தீ மூட்டல், பொருதவைத்தல். பற்றறுதல் - அன்புகெடுதல், பாசபந்தம் விடல், முழுதுமற்றுப்போதல்.பற்றற்றார், பற்றற்றோர் - முனிவர். பற்றாக்கூலி - அற்பகூலி, நாட்கூலி. பற்றாக்கை - அம்புகட்டுங் கயிறு,கட்டுங் கயிறு. பற்றாசு - இருகுற ணேரிசை வெண்பாவிற் கிடைவருவது, உலோகங்களைப் பொருத்த விடையிடுந்துண்டு. பற்றாதது - அலட்சியமானது,போதாதது. பற்றாதவர் - அலட்சியமானவர்.பற்றாப்படி, பற்றாப்பயணம் - அரும்பூட்டு, குறைவு. பற்றாப்போரி - சரியற்ற வெதிரி. பற்றார் - பகைவர். பற்றி - குறித்து, பற்றாசு.பற்றிக்கொள்ளல், பற்றிப்பிடித்தல் - தொடர்ந்து நிற்றல், நன்றாய்ப்பிடித்தல். பற்றிரும்பு - அள்ளு. பற்றிலி - துறந்தோன். பற்றினர் - உறவோர், சினேகிதர் பற்று - அறவிட்டது, அன்பு, ஆசை,இசைவு, உலோகங்களைப்பொருத்துங் கூட்டு, சம்பந்தம்,சிற்றூர், சேர்வை, தொடர்ச்சி,பசை, பற்றென்னேவல், பிடி,பொத்து, மண்டி, வாரப்பாடல். பற்றுக்கால் - தாபரம். பற்றுக்குறடு - ஒரு கம்மக்கருவி. பற்றுக்கொள்ளுதல் - அன்பு வைத்தல்,ஆசை கொள்ளுதல். பற்றுக்கோடு, பற்றுக்கோல் - ஊன்றுகோல், தஞ்சம். பற்றுச்சீட்டு - ஏற்புறுதி. பற்றுதல் - அன்பு, ஊன்றிப் பிடித்தல்,தீப்பற்றுதல், நம்பிக்கை, பிடித்துக்கொள்ளுதல், பொருந்துதல்,வாங்குதல்.பற்றுப்பூசுதல், பற்றுப்போடுதல் - பொருந்தப் பசைபோடுதல். பற்றுவரவு - கொடுக்கல் வாங்கல். பற்றுவாய் - திரிவாய். பற்றுவீடு - இன முதலிய துறத்தல்,பாசம் விடுகை. பற்றுவைக்குதல் - அன்பு வைக்குதல்,ஆசை கொள்ளுதல், துண்டிட்டுவிளக்குதல். பற்றுவைத்தல் - ஆசை கொள்ளுதல். பற்றை - சிறுதூறு, செங்காந்தள். பற்றைச்சி - சோர ஸ்திரீ.பற்றைப்பிள்ளை, பற்றையன் - சோர புத்திரன். பனங்கட்டி - பனை வெல்லம். பனங்கந்து - பனைத் திரள். பனங்கள் - பனை மரத்திலிறக்கும்கள். பனங்கற்றாழை - பனையிலுண்டாகுந் தாழை. பனங்காய் - பனையிற் காய். பனங்கிழங்கு - பனைவித்திற் கிழங்கு. பனங்கிளி - அன்றில், ஓர் கிளி. பனங்கீரை - ஓர் கீரை. பனங்கொட்டை - பனைவிரை. பனங்கோரை - ஓர் புல். பனசம் - ஈரப்பலா, பலாமரம், முள்ளு. பனசயித்தி - அரசு. பனசை - ஓர் பட்டினம், ஓர் பாம்பு,ஓர் விதக்கொப்புள அம்மை. பனத்தனத்தி - அரசு. பனத்தி - பார்ப்பனத்தி. பனத்தை - அரசு. பனநார் - பனைநார். பனந்தாமன் - பலபத்திரன். பனந்தாரான் - சேரன், பலபத்திரன். பனந்தாழை - ஓர் கற்றாழை. பனம்பழம் - பனங்கனி. பனம்பாகு, பனம்பாணி - பனங்கட்டிப்பாணி. பனம்பாரனார் - அகத்தியர் மாணாக்கர்பன்னிருவரி லொருவர். பனம்பிடுக்கு - பனம்பூ. பனம்பூ - ஆண்பனைப்பாளை. பனர் - கிளை. பனலம் - சிறு தம்பட்டம். பனவர் - பார்ப்பார். பனவன் - பிராமணன். பனாட்டு - பனங்களியிலட்டது. பனாட்டுத்தோல் - தோற்பனாட்டு. பனாட்டுப்பாய் - பனங்களி பெய்யும்பாய். பனார் - தும்பு. பனி - அச்சம், இக்கட்டு, குளிர்,துக்கம், தூளி, நடுக்கம், பயம்,பனியென்னேவல், பெய்யும்பனி,சொல், நோய். பனிகாலம் - மார்கழி முதலிய நான்குமாசம். பனிக்கட்டி - உறைந்த பனி, உறைந்தமழை. பனிக்கதிர் - சந்திரன். பனிக்காலம் - மார்கழி முதலியநான்கு மாதம். பனிக்காற்று - குளிர்காற்று. பனிக்குடம் - பன்னீர்க்குடம். பனிக்குதல் - பனித்தல், பனிக்கூர்மை - இந்துப்பு, சிந்துலவணம். பனிச்சா - கஞ்சாங்கோரை. பனிச்சாமை - ஓர் சாமை. பனிச்சை - காட்டத்திமரம், பின்னிமுடிக்கு மயிர்ச்சுருள், அஃதுஐம்பாலினொன்று. பனிதாங்கி - ஓர் பூடு. பனித்தல் - இடைவிடாது மழைபெய்தல், துளித்தல், தூறல்,நடுங்கல், வருந்தல். பனிநத்தை - ஓர் நத்தை. பனிநீர் - ஓர் வாசனை நீர். பனிப்பகை - சூரியன். பனிப்படலம் - பனிச்செறிவு. பனிப்பயறு - ஓர் பயறு. பனிப்பருவம் - பனி காலம். பனிப்பு - பனித்தல். பனிப்புகட்டு - பனி யிறைப்பு. பனிப்புகாரர் - பனி மேகம். பனிப்புழு - சேற்றுப்புழு, பனியிலுண்டாகும் புழு. பனிப்பூங்காரம் - பனிமங்குளம். பனிப்பூடு - ஓர் பூண்டு. பனிபெயர்தல் - பனி யுண்டுபடுதல். பனிப்பெய்தல் - பனி சொரிதல். பனிமலை - இமயமலை. பனிமேகம் - வெண் மேகம். பனிமொழி - குளிர்ந்த மொழி, பெண். பனியவரை - ஓரவரை. பனிவரை - இமயமலை. பனுக்குதல் - தெளித்தல். பனுவலாட்டி - சரச்சுவதி. பனுவல் - ஆகமம், கல்வி, சொல்,நூல், பஞ்சினூல், புலமை, கேள்வி,பாட்டு, இசைப்பாட்டு. பனை - அணுட நாள், ஓர் மரம். பனைக்கொடியோன் - பலபத்திரன்,வீடுமன். பனைசை - பனையூர். பனைமடல் - பனமட்டை, பனை யோலை. பனைமீன் - யானைமீன். பனைமுகிழ் - பனங்காய்முகிழ். பனையன் - ஓர் நோய், ஓர் பாம்பு,ஓர்மீன். பனையேறி - ஓர்குருநோய், ஓர் பாம்பு. பனைவட்டு - பனை வெல்லம். பனைவாரை - பனைமரக்கீற்று. பனைவெட்டு - பனை வெல்லம். பன் - ஓர் புல், பத்தின் சிதைவு (உ-ம்)பன்னான்கு, பன்மை, பன்னென்னேவல். பன்பாய் - புற்பாய். பன்மணிமாலை - ஓர் பிரபந்தம்அஃது ஒருபோகும் அம்மனை யும்ஊசலு நீக்கிமற்றை யுறுப்புக்களெல்லாங் கலம்பகம்போலமையக் கூறுவது. பன்முறைக்கருவியர் - படைக்கும்உற்சவத்துக்குங் கொட்டுவோர். பன்மூன்று - பதின்மூன்று. பன்மை - பலவாகிய தன்மை. பன்மைபண்ணுதல் - கண்டு சாய்த்துவிடுதல். பன்மைப்பால் - பலவின்பால். பன்மைப்பொதுப்பெயர் - பன்மைப்பால் கட்குரிய பொதுப்பெயர்(உ-ம்) செவியிலி. பன்மையாய்விடுதல் - கண்டு சாய்ப்பாய் விடுதல். பன்மொழித்தொகைத்தொடர் - பலமொழி தொடர்ந்து நிற்குந் தொகைநிலை (உ-ம்) செந்நிறக்குவளை. பன்றி - ஓர் மிருகம், கொடுந்தமிழ்நாட்டினொன்று. பன்றிக்கரணம் - ஓர் கரணம். பன்றிக்கிடை - பன்றிக்கூடு. பன்றிக்கிளி - ஓர் மீன். பன்றிக்குறும்பு - நிலப்பனை. பன்றிக்கொவ்வை - ஓர் கொவ்வை. பன்றிச்சுருக்கு - ஓர் தண்டனை,கூன்வாங்கிக் கட்டுதல். பன்றித்தகரை - ஓர் தகரை. பன்றிநெல் - ஓர் நெல். பன்றிப்புல் - ஓர் வகைப்புல். பன்றிமயிர் - எய்ப்பன்றி மயிர். பன்றிமுள் - எய்ப்பன்றி முள். பன்றிமொத்தை - சிறுகுரட்டை. பன்றிவெட்டுதல் - ஓர் விளையாட்டு. பன்றுகம் - அசமதாகம். பன்றை - நெய்க்கொட்டான் பன்னகசாலை - பன்னசாலை. பன்னகண்டம் - மரம். பன்னகம் - சீதரங்கபாஷாணம், பாம்பு. பன்னகவைரி - கருடன். பன்னகாசனன் - கலுழன், விட்டுணு. பன்னகாபரணன் - சிவன். பன்னகாரன், பன்னக்காரன் - பன்னவேலை செய்பவன், வெற்றிலைவாணிபன். பன்னசந்தரம் - இலை மெத்தை. பன்னசாலை - புல்வீடு, முனிவர் வாசம். பன்னசி - தாமரை, வசந்தமண்டபம். பன்னச்சத்தகம் - காம்புச் சத்தகம். பன்னத்தண்டு - நெய்வார் கருவியினொன்று. பன்னத்தை - பனிநத்தை. பன்னநரன் - சாச்சடங்கிற் கிலையாற்செய்யப்பட்ட மனுவடிவு. பன்னபோசனம் - இலையுணவு. பன்னமாசாலம் - ஓர் மரம். பன்னமிருகம் - இலையுணும் விலங்கு. பன்னம் - இலை, ஓலை முதலியவற்றாற் பின்னும்வேலை, பத்திரி,பலாசு, வெற்றிலை. பன்னலதை - வெற்றிலைக்கொடி. பன்னல் - சொல்லுதல், தேர்தல்,நெருங்கல், பருத்தி. பன்னவல்லி - பன்னலதை. பன்னவேலை - ஓலை முதலியவற்றாற்பின்னும் வேலை. பன்னாங்கு - தண்டிகைப் பன்னாணம்,தென்னோலைப் பன்னாங்கு. பன்னாங்குழி - பதினான்கு குழியுள்ளவோர் விளையாட்டுத் தட்டு. பன்னாகம் - துளசி. பன்னாசனம் - இலையுணவு, புற்பாய்,புன்மெத்தை, முகில். பன்னாசி - ஓர் துளசி. பன்னாடை - நெய்யரி. பன்னாணம் - பன்னாங்கு. பன்னாலம் - தெப்பம். பன்னான்குழி - பன்னாங்குழி. பன்னி - குருவின்றேவி, சணல்,மனைவி, பனிநீர், சீப்பு, பத்தினி. பன்னிணவிலைஞர் - ஆட்டு வாணிகர். பன்னிரண்டாதித்தர் - துவாதசாதித்தர். பன்னிருபடலம் - அகத்தியர் மாணவர் பன்னிருவரும் செய்த ஒரு புறப்பொருள் நூல். பன்னீர் - ஓர் வாசனைநீர், கருப்பைநீர், காயத்திற் பாயுநீர். பன்னீர்க்குடம் - கருப்பத்தைச் சூழ்ந்தநீர்ப்பை.பன்னீர்க்குப்பி, பன்னீர்ச்செம்பு, பன்னீர்த்துருத்தி - பன்னீர்தூவுகருவி. பன்னீர்மரம் - ஓர் பூமரம். பன்னீர்வடித்தல் - பன்னீர் காய்ச்சுதல். பன்னு - வரி. பன்னுதல் - பன்னல், சொல்லுதல்,தேர்தல், நெருங்கல். பன்னுமல் - புல்லுமல். பன்னை - ஓர் செடி, கருப்பூரம்,சூடன், பன்னொன்று - பதினொன்று. பா பா - அழகு, ஓரெழுத்து, கடிகாரவூசி, கிழங்குப்பா, நிழல், நெசவுபா, பஞ்சிநூல், பரப்பு, பரவுதல்,பாட்டு, பாவென்னேவல், பிரபை,வெண்பா முதலிய வைந்துபாஅஃது இரண்டு முதலிய வடிகளானாக்கப்பட்ட பிரபந்தம், காத்தல்,சுத்தம். பாககம் - பிரிக்குந் தொகை. பாகசம் - ஓர்வகை யுப்பு, சூலம். பாகசன் - ஓரிராக்கதன்.பாகசாசனி, பாகசாதனி - அருச்சுனன்,இந்திரன் மகன், சயந்தன். பாகசாதனன் - இந்திரன். பாகசாலை - மடைப்பள்ளி. பாகண்டன் - வெளிவேஷக்காரன். பாகதம் - எல்லாநாட்டு மேலோர்மொழி, பிராகிருதம். பாகதாரி - சமையற்காரன். பாகதானம் - மடைப்பள்ளி. பாகபாண்டம் - சமையற் பாத்திரம். பாகபுடி - குயவன் சூளை. பாகப்படுதல் - சமைக்கப்படுதல்,பக்குவப்படல், பதப்படுதல். பாகப்படுத்துதல் - சமைத்தல்,பக்குவப்படுத்தல். பாகமாகுதல் - பாகப்படுதல். பாகம் - அச்சம், ஆந்தை, ஓர் கணிதம்,ஓர் பிசாசம், சபித்தல், சமைத்தல்,செய்யுள்நடை, தேச பயம், நரைமயிர், நான்குமுழங் கொண்டவளவு, பக்கம், பக்குவம், பங்கு,பாகை, பாதி, பாத்திரம், பிச்சை,புயம், ஓர்வகைத் தோற்கருவி. பாகம்பண்ணுதல் - சமைத்தல், மகுத்தல், பக்குவப்படுத்தல். பாகர் - யானை, குதிரை முதலியவற்றை நடத்துவோர். பாகலம் - குதிரை, யானைநோய். பாகலன் - உன்மத்தன். பாகல் - ஓர் கொடி, பலா, வெட்பாவட்டை, காரவல்லி. பாகவதம் - பதினெண் புராணத்தொன்று. பாகவதர் - விட்டுணுசமயத்தவர்,வைணவப் பெரியோர். பாகனம் - ஓர் வருடம். பாகன் - சங்கம் வாங்கி, நடத்துவோன்,புதன். பாகாரம் - பங்கிடுதல், பிரிவு கணக்கு. பாகாரி - இந்திரன், வெண்பொன். பாகி - நாய், பக்குவன். பாகிடுதல் - பங்கிடுதல். பாகிநேயன் - மருமகன். பாகியம் - புறம்பானது. பாகியேந்திரம் - புறவுறுப்பு. பாகீடு - பங்கீடு. பாகீரதி - கங்கை. பாகு - கரை, கற்கண்டு, குழம்பு, சத்தி,சருக்கரை, தலைப்பாகு, பங்கு,பரணி நாள், பாகன், பாக்கு, பால்,பிச்சை, புயம். பாகுடம் - அரசிறை. பாகுபடுதல் - பகுக்கப்படுதல். பாகுபாடு - பகுப்பு, பிரிவு. பாகுரி - இலக்கணி. பாகுலம் - கார்த்திகைமாதம். பாகுவன் - படையன். பாகேக்கியம் - பிதிர்பூசை, வைசுவதேவபூசை. பாகை - தலைப்பா, பகுதி, வட்டத்தின்முந்நூற்றறுபதி லொருபங்கு. பாகோடன் - சூரியன். பாக்கம் - ஊர்ப்பொது, நெய்தனிலத்தூர், மருதநிலத்தூர்.பாக்கல், பாக்கல்லு - பாவுகல். பாக்கன் - பூனை. பாக்கானூல் - பாவினூல். பாக்கன் - பூனை. பாக்கி - நிலுவை. பாக்கியசாலி - அதிட்ட முள்ளவன். பாக்கியத்தானம் - சென்மத்துக்குஒன்பதாமிடம். பாக்கியம் - அதிட்டம், கஷாயம்,சித்தி, செல்வம், தனம், பேறு,ஒன்பதாமிடம், நல்வினை. பாக்கியலட்சுமி - அட்டலக்குமியினொன்று இஃது செல்வந் தருவது. பாக்கியவதி - செல்வி. பாக்கியவான் - செல்வன். பாக்கியானுகூலம் - செல்வப்பேறு. பாக்கு - எதிர்கால விடைச்சொல்(உ-ம்) உண்பாக்கு வந்தான்,துவர்க்காய், கமுகு. பாக்குக்கட்டுதல் - ஓர் விளையாட்டு. பாக்குச்சாரம் - பாக்குச்சாறு, பாக்குவெற்றிலைத் தம்பலம். பாக்குப்பறித்தல் - மணமுடிக்க வருமணவாளனது சயஞ் சோதித்தல். பாக்குப்பை - அடைப்பை. பாக்குப்போடுதல் - ஓர்விளையாட்டு, பிளவிலை யருந்தல். பாக்குவெட்டி - பாக்குச்சீவுங் கருவி. பாக்குவெற்றிலைப்பை - அடைப்பை. பாங்கம் - பலண்டுறுவபாஷாணம். பாங்கர் - இடம், தோழர், பக்கம்,ஓமைமரம். பாங்கன் - தோழன். பாங்கி - தோழி. பாங்கு - அழகு, இடம், இணக்கம்,உரிமை, தகைமை, பக்கம், மாதிரி,முறை, பாங்கன். பாங்குபண்ணல் - சிறப்பித்தல். பாங்குமம் - கருஞ்சீரகம். பாசகத்திரி - சமயற்காரி. பாசகம் - சூதாடுகருவி, மடைத்தொழில், மூலாக்கினி. பாசகரன் - காலன், நமன், வருணன்,விநாயகன். பாசகர் - மடையர். பாசகன் - அக்கினி, சமையற்காரன். பாசகுசுமம் - இலவங்கம். பாசக்கட்டு - பிரபஞ்சக்கட்டு. பாசக்கயிறு - பாசம். பாசங்களினீங்கல் - நிருமலமாதல்இது சிவனெண்குணத் தொன்று. பாசஞானம் - உலக ஞானம். பாசடம் - வெற்றிலை. பாசடை - பச்சிலை. பாசண்டத்துறை - சமயக்கட்டினிலை. பாசண்டம் - சமயக்கட்டு. பாசண்டர் - சமயிகள். பாசதரன் - காலன், நமன், வருணன்,விநாயகன். பாசநாசம் - பந்தநாசம். பாசபந்தம் - கண்ணி, மலபந்தம். பாசபந்தர் - பாச நீங்காதோர். பாசபந்திகள் - பாசசம்பந்தர், மலசம்பந்தர். பாசபாணி - சிவன், யமதூதரி னொருவன், யமன், வருணன், விநாயகன். பாசபெந்தர் - பாசபந்திகள். பாசபேயம் - ஓர் யாகம். பாசமோசனம் - பாசநாசம். பாசம் - அழகு, அன்பு, இருள், ஊசித்துளை, ஓரளவைப் பிரமாணம்,ஓர் படைக்கலம், கட்டு, கண்ணி,கயிறு, கவசம், கற்பாஷாணம்,சிவனாயுதம், சீரகம், சுற்றம், நவனாயுதம், நூல், பலபந்தம், பாசக்கயிறு, பாசி, பிசாசம், மாயை,விலங்கு, வலை. பாசருகம் - அகில். பாசலம் - காற்று, தீ, தீயிலாப்பாகம். பாசவபாலனம் - புற்றரை. பாசவர் - இலையமுதிடுவோர்,கயிறு, திரித்து விற்போர், பச்சையிறைச்சி, சூட்டிறைச்சி விற்போர். பாசவிமோசனம் - மலநீங்கல். பாசவிமோசனன் - கடவுள். பாசவைராக்கியம் - பிரபஞ்ச வெறுப்பு. பாசளை - குன்றி. பாசறை - ஓர்மரம், துன்பம், பகைமேற்சென்றோருறைவிடம், மணியாசிப் பலகை. பாசறைமுல்லை - ஓர் நூல் அஃதுபாசறைத் தலைமகன் றலைவியைநினைத்தல். பாசனகம் - பருகுவன. பாசனம் - அக்கினி, உண்கலம், உறவு,ஓர்மருந்து, நிவிர்த்தி, பங்கு,பாண்டம், பாத்திரம், பிரிவுக்கணக்கு, புளிப்பு, மட்கலம். பாசன் - இயமன், ஓர் முநிவன், சீவன்,வருணன். பாசாங்கடித்தல் - மாரீசம் பண்ணுதல். பாசாங்கடி - இல்லதை யுள்ளதாய்க்காட்டல், பாவனை, மாரீசம். பாசாங்கு - மாரீசம். பாசாங்குகாரன் - எத்தன், தந்திரி, பாவனைக்காரன். பாசாங்குசன் - விநாயகன். பாசாங்குசதரன் - விநாயகன்.பாசாங்குபண்ணுதல், பாசாங்குபோடுதல் - மாரீசம் பண்ணுதல் பாசாண்டம் - பாசண்டம். பாசாண்டர் - பாசண்டர். பாசாபந்தம் - மாயையால்மறைக்கப்படுதல். பாசாபாசம் - அம்புக்கட்டு, கயிறு. பாசானபேதி - செப்புநெருஞ்சில். பாசி - கண்ணியேற்றுவோன், கரியமணி, கடைச்சி, சமைத்தல், நமன்,நாய், நீர்ப்பாசி, நெட்டி, பலம்,புல்லுருவி மீன், வருணன், கிழக்கு. பாசிதம் - ஈவு, பிரித்தானது. பாசித்தீர்வை - மீன்றீர்வை.பாசிபடர்தல், பாசிபற்றல் - பாசிபிடித்தல். பாசிப்படை - பலமுள்ள படை. பாசிப்பயறு - ஓர்வகைப் பயறு. பாசிமணி - பரியமணி, பச்சைமணி. பாசிலை - பச்சிலை. பாசிவிலை - மீன் விலை. பாசு - தைரியம், பசுமை, பச்சை,மூங்கில். பாசுபதம் - உட்சமய மாறினொன்று,பசுபதிபாணம், பசுபதி யுடையது. பாசுபதர் - பாசுபத சமயத்தோர். பாசுபதன் - பாசுபதசமயி, சிவபிரான். பாசுபதாத்திரம் - சிவன்பாணம். பாசுபதி - ஓர் யாகம். பாசுபாலியம் - பசுக்காத்தல். பாசுரம் - பாட்டு, வசனம், வேய்ங்குழலோசை. பாசுவசுறோணி - காட்டாமணக்கு. பாசை - சமைத்தல், பாஷை பாச்சல் - எழுச்சி, பாய்தல். பாச்சா - துருக்க அரசன். பாச்சி - பாச்சிகை, பால்.பாச்சிகை, பாச்சிக்கை - சொக்கட்டான் கவறு. பாச்சியம் - பங்கு, பிரிக்கப்படுந்தொகை.பாச்சுருட்டி, பாச்சுற்றி - தறிமரம். பாச்சை - ஓர் வண்டு. பாச்சையடித்தல் - வண்டூதுதல். பாச்சொற்றி - பாற்சொற்றி. பாஞ்சசத்திகம் - வாத்தியப்பொது. பாஞ்சசன்னியதரன் - விட்டுணு. பாஞ்சசன்னியம் - ஓடு, ஓர்மீன்,கிருட்டினன் சங்கு அஃது சலஞ்சலமாயிரஞ் சூழ்ந்தது, தீ. பாஞ்சராத்திரம் - ஐந்துநாளளவும்பிரமாவுக்கு விட்டுணு வுபதேசித்தஓர் சமயம் இஃது புறச்சமயமாறினொன்று, வைணவாகமமிரண்டினொன்று.பாஞ்சராத்திரி, பாஞ்சராத்திரிகன் - பாஞ்சராத்திர மதத்தோன். பாஞ்சலிகை - சித்திரப்பாவை. பாஞ்சார்த்திகன் - பாசுபதமதஸ்த்தன். பஞ்சாலபுருஷன் - இலட்சணவான். பாஞ்சாலமட்டியம் - ஓர் தாளம். பாஞ்சாலம் - இலட்சணம், தேயமைம்பத்தாறி னொன்று. பாஞ்சாலன் - இலட்சணவான்,பாஞ்சால தேயத்தான். பாஞ்சாலி - சித்திரப்பாவை, துரோபதி. பாஞ்சாலிகை - சித்திரப்பாவை. பாடகம் - ஓர் வாத்தியக்கருவி, ஓர்நீட்டலளவை, கரை, காலணியினொன்று கிராமத்திற் பாதி, கூலி,சூதுவிளையாடல், நட்டம், தெரு. பாடகர் - பாடுவோர். பாடகன் - உபாத்தி, பாடுவோன்,மாணாக்கன். பாடங்கேட்டல் - ஆசிரியனிடத்தினூற்பொருள் விசாரித்தல்,மாணாக்கன் கற்றது சோதித்தல். பாடசாலை - பள்ளிக்கூடம். பாடச்சுரன் - கள்வன். பாடஞ்செய்தல் - பதப்படுத்தல். பாடஞ்சொல்லல் - மாணாக்கருக்குநூற்பொருள் விளக்கல். பாடச்சுவடி - தாயேடு. பாடஞ்சேர்தல் - அடைந்தமர்தல். பாடஞ்சொல்லல் - மாணாக்கற்குநூற்பொருள் விளக்கல், மாணாக்கன் படித்த பாடத்தை ஆசிரியனுக்குச் சொல்லல்.பாஷணம், பாடணம் - சம்பாஷணை,போதனை. பாடபம் - பாடவம். பாடமாக்குதல் - பாடம்பண்ணுதல். பாடம் - அடுக்கு, அழுத்தம், இடையர்வீதி, எழுதும்பாடம், ஓதும்பாடம், தெரு, படித்தல், படியவைத்தது, பொன் முதலியவற்றினுரை, விரிவு, வீதி, ஒளி, படிக்கப்படுவது. பாடம்பண்ணுதல் - மனப்பாடமாக்கல். பாடம்போற்றல் - கேட்ட பாடத்தைபலகாற் சிந்தித்தல், இஃதுநூல்கற்போரியல்பு ளொன்று. பாடலத்துருமம் - புன்னாக மரம். பாடலம் - குதிரை, சபதம், இளஞ்சிவப்பு, சேரன் குதிரை, பாதிரிமரம், மழை காலத்துப் பழுக்குநெல், வெண் சிவப்பு. பாடலாங்கிரி - புறா. பாடலி - ஓர் நெல், ஓர் பூக்கொடி, ஓர்மரம், கள். பாடலிபுத்திரம் - ஓரூர். பாடலை - ஓர்மரம், துர்க்கை, பாடல்வர்ணப்பசு, பாடலிபுரம். பாடலோபலம் - மாணிக்கம். பாடல் - சங்கீதம், செய் யுள் பாடுதல்,வாசித்தல். பாடவம் - களிப்பு, சமர்த்து, சுகம்,பெருமை, வடவாமுகாக்கினி. பாடவள் - பாடன் மகடூஉ, மிதுனவிராசி. பாடவன் - பாடுபவன், மிதுனவிராசி. பாடவிகன் - தூர்த்தன். பாடவை - பாடவன், மிதுனவிராசி.பாஷனம், பாடனம் - பாடுதல், பேச்சு,போதித்தல், வெட்டல்.பாடன்மகடூஉ, பாடன்மகள் - பாடுவாள்,பாணர்பெண். பாடா - பங்கம்பாளை. பாஷாசமம் - இரண்டு பாஷைக்கேற்ற சொல்.பாடாணதாரகம், பாடாணதாரணம் - கல்லுளி. பாடாணத்தாபனம் - சவக்கிரியையினொன்று. பாடாணமுத்தி - கற்போற் கிடக்குமுத்தி.பாடாணம், பாஷாணம் - கல், நச்சுச்சரக்கு. பாடாண்டிணை - புறப்பொருட்டிணையினொன்று. பாடாதல் - கெடுதல். பாஷாந்தரமாக்குதல் - பிறபாஷைப் படுத்தல்.பாஷாந்தரம் - பலபாஷை, மறுபாஷை.பாடாவறுதி, பாடாவாரி - மிகுபாடு. பாடாவிதி - கெடுவிதி. பாடாற்றல் - சகித்தல். பாடி - ஊர், ஓரிராகம், கவசம், சேரி,சேனை, நகரம், நாடு, உளவாளி,பாசறை, பாடுபவள், முல்லைநிலத்தூர், வில்லிவாக்கத்திற் கருகிலுள்ள ஓர் சிவஸ்தலம். பாடிக்கதை - வீண் பேச்சு. பாஷிகம், பாடிதம் - சொல்லல், பேச்சு. பாஷியகாரன் - உரைகாரன், பாஷைப்படுத்துவோன், உடையவர்.பாடியம், பாஷியம் - உரை, சூத்திரவிருத்தியுரை.பாடியோடுதல், பாடியோட்டம் - ஓர்விளையாட்டு. பாடிரம் - ஓர் கிழங்கு, சந்தனம், துத்தநாகம், முகில், மூங்கிலரிசி, வாதம். பாடில் - வாகை. பாடிலம் - நாடு. பாடிவீடு - பகைமேற் சென்றோருறைவிடம். பாடினி - பாடுவாள், மட்பாண்டம். பாடீகம் - ஓர் கிழங்கு, சந்தனம்,துத்தநாகம், முகில், மூங்கிலரிசி,வயல், வாதநோய். பாடீநம் - சித்திரமூலம். பாடீளன் - உபாத்தியாயன். பாடீரம் - பாடிரம். பாஷீரம் - சந்தனம். பாடு - அனுபவிக்கை, இடம்,உண்டாகுகை, உதயத்துக் கேழாமிடம், ஏழாம் வேற்றுமை யுருபு,ஓசை, கடமை, குணம், கேடு,சுயகாரியம், நட்பு, பக்கம், படுதல்,பாடென்னேவல், பெருமை,வருத்தம், விருத்தி, வேலை, துயில். பாடுகாட்டுதல் - பக்கம் சரிந்துகிடக்குதல், பாட்டிலே விழுதல். பாடுகாயம் - படுகாயம். பாடுகிடத்தல் - வரங்கிடத்தல். பாடுதல் - இராகம் பாடுதல், கவிசெய்தல், பாடியோடுதல், வாசித்தல். பாடுநன் - பாடுவோன். பாடுபடுதல் - ஆக்கினைப்படுதல்,வருத்தப்படுதல், வருத்துதல். பாடுபடுத்துதல் - ஆக்கினைப் பண்ணுதல், வருத்துதல். பாடுவள் - பாடுவாள். பாடுவன் - பாடுவான்.பாடுவாள், பாடுவிச்சி - பாடன் மகள்,பாடுவி. பாடுவித்தல் - பாடப்பழக்குதல்,புலமைபாடச் செய்தல், பாடச்செய்தல். பாடேடு - தாயேடு. பாஷை - சபதம், சரச்சுவதி, பேச்சு. பாடை - ஆசந்தி, பருத்தி, பாடைமரம், பாஷை, வட்டத்திருப்பி. பாடைகுலைத்தான் - பாகல். பாஷைக்காரன் - பாஷையில் வல்லோன். பாஷைசொல்லுதல் - சபதஞ் சொல்லுதல்.பாடைப்படுத்தல், பாஷைப்படுத்தல் - ஓர் பாஷையிலுள்ளதை வேறோர்பாஷையிற் றிருப்புதல். பாஷையிடுதல் - சபதஞ் சொல்லுதல். பாட்சிகன் - குருவி வேட்டக்காரன். பாட்டகம் - வைசூரி. பாட்டகன் - பாடகன். பாட்டப்பிரபாகரம் - வேதமே தெய்வமென்னு மதம். பாட்டம் - அச்சம், மழை, பலகாரம்,பாட்டாச்சாரிய மதம், தோட்டம்,பாட்டு. பாட்டன் - பாட்ட மதத்தான், மூதாதை பாட்டா - பாட்டன். பாட்டாசாரியம் - பட்டாசாரியார்வேதமே தெய்வமென்று ஏற்படுத்திய கொள்கை. பாட்டாப்பிரபாகரம் - பாட்டாப்பிரபாகரம். பாட்டாளி - பாடுவோன், வேலைப்பிரயாசி, நன்கு உழைப்பவன். பாட்டாள் - பிரயாசி, வீணாள். பாட்டி - ஒரு சார்விலங்கின் பெண்பொது, நரி, நாய், பன்றி, இவற்றின்பெண், பாடன் மகள், பாடுவாள்,மூதாய்.பாட்டியமி, பாட்டியம் - பிரதமை. பாட்டியல் - ஓர் நூல், செய்யுளிலக்கணம், பாட்டு - இசைப்பாட்டு, சங்கீதம்,இஃது அட்டபோகத் தொன்று,செய்யுள், சொல், வசைமொழி. பாட்டுக்காணி - பாட்டுநிலம். பாட்டுக்காரன் - பாடுவோன். பாட்டுடைச்செய்யுள் - பல பாக்களோடு உரைப்பாட்டையும் இசைப்பாட்டையுமுடைய இயலிசைநாடகப் பொருட்டொடர் நிலைச்செய்யுள்.பாட்டுடைத்தலைவன், பாட்டுநாயகன் - கவியுடைத் தலைவன். பாட்டுவாளி - பாடுவோன். பாட்டை - வழி. பாட்டைசாரி - வழிப்போக்கன். பாட்பம், பாஷ்பம் - கண்ணீர். பாஷ்யம் - பாடியம். பாணகோசரம் - சரகதி. பாணச்சி, பாணத்தி - பாணப்பெண். பாணபத்திரன் - மதுரை வரகுணபாண்டியனின் மந்திரி. பாணம் - அம்பு, கை, திப்பிலி,துதி,நாடகவகை பத்தினொன்று, பூம்பட்டு, மழைவண்ணக் குறிஞ்சி,வியாபாரம். பாணர் - சங்கீதம் பாடிப் புகழ்வோர்,தையற்காரர். பாணன் - காட்டாமணக்கு, பாடுநன். பாணா - சால், பருத்த சட்டி, பருத்தபீசம், வயிறுபருத்த பானை. பாணாத்தடி - சிலம்பக் கம்பு. பாணாலு - சூதிலோர் தாயம். பாணான் - தையற்காரன். பாணி - இலைச்சாறு, ஊர், ஊர்சூழ்சோலை, ஓசை, கடைவீதி, கருப்பநீர் முதலியவற்றின் பாணி, கள்,கரண்டக பாஷா ணம், கா, காடகாலம், கீதம், கூத்து, கை இஃதுகருமேந்திரிய மைந்தினுமொன்று,தாமதம், சொல், தயிரோதனம்,சருக்கரைக் கரும்பு, நாடு, நீர்,நெடுநேரம், படை, பலபண்டம்,பழச்சாறு, பற்று பாட்டு, பாணியென்னேவல், பூம்பந்தல், வாச்சியப்பொது, வாணி பன், அழகு,அன்பு, தாளம். பாணிகன் - பாடன்மகன், வாத்தியகாரன். பாணிகை - அகப்பை. பாணிகொட்டல் - கைகொட்டல். பாணிக்கிரகணம் - கைப்பற்றல்,விவாகம். பாணிக்கிரகீதி - விவாக மனைவி. பாணிக்கிரகம் - கைப்பிடித்தல்,விவாகம். பாணிசம் - கைநகம். பாணிசாரியை - கயிறு. பாணிதம் - கருப்பஞ்சாறு. பாணிதலம் - இரண்டு துலாங்கொண்டது, உள்ளங்கை. பாணித்தல் - பொழுது நீட்டித்தல்,மதித்தல், தாமதித்தல், செப்பமாகச் செய்தல். பாணிந்தயம் - கைமண்டையாய்க்குடித்தல். பாணிபாத்திரம் - கமண்டலம். பாணிபீடனம் - விவாகம். பாணிப்பனாட்டு - பாணியிலிட்டபனாட்டு. பாணிப்பிடி - பாணிப்பற்று. பாணிப்பு - பாணித்தல். பாணிப்பூ - இலுப்பைப்பூ. பாணிமுத்தம் - எறியாயுதம். பாணியம் - வலம்புரிக்கொடி. பாணிருகம் - கைநகம். பாணிவாதன் - வாணிகன். பாணினன் - ஓரிலக்கண நூலா சிரியன். பாணினி - ஓரிலக்கண நூலாசிரியன்.பாணினியம், பாணினீயம் - ஓர் கிரந்தவிலக்கணம். பாணு - பாட்டு. பாணௌகரணம் - விவாகம். பாண் - இசைப்பாட்டு, கள், பாணச்சாதி, பாழ். பாண்டகம் - சாமான். பாண்டம் - ஆபரணம், ஆற்றின்பரப்பு, உடம்பு, ஓடு, கையிருப்பு,பரிகாசம், பாத்திரம், மட்கலம்,வாத்தியக்கருவி, விலங்கின்கழுத்தணி, வெண்ணெய், மணி பாண்டரங்கம் - சிவன் கூத்து. பாண்டரங்கன் - சிவன். பாண்டரம் - செஞ்சுண்ணாம்பு,மல்லிகை, வெண்மை. பாண்டல் - பாழ்த்துப்போனது. பாண்டவர் - பாண்டு புத்திரர் பாண்டவர்முன் பிறந்தோன் - கன்னன். பாண்டவதானம் - வாத்தியமியக்கல் பாண்டவாபீலன் - கிருட்டினன் பாண்டவாயநன் - க்ருஷ்ணன். பாண்டவிகை - பெண் ஊர்க்குருவி. பாண்டவேயன் - பாண்டுவமிசத்தான். பாண்டாகாரம் - பண்டசாலை. பாண்டி - ஓர்தேயம், ஓர் பண், ஓர்விளையாட்டு, பன்னாங் குழிப்பலகை, வாகை மரம். பாண்டிகன் - பள்ளியெழுச்சி பாடுவோன். பாண்டித்தியம் - கல்வித்திறம், படித்தல்,புலமைபாண்டிமண்டலம், பாண்டியம் - பாண்டியன் றேயம் இஃது தேயமைம்பத்தாறினொன்று. பாண்டியன் - தமிழ்நாட்டு மூவேந்தரிலொருவன். பாண்டியன்மதிவாணனார் - மதிவாணர்நாடகத் தமிழ் நூலாசிரியர். பாண்டில் - அகல், இடபவிராசி,எருது, ஓர் வாத்தியம், கட்டில்,கைத்தாளம், நாடு, பண்டி, மூங்கில்,வட்டம், வாகனம், வாகைமரம்,தேர்வட்டை, குதிரை வண்டி. பாண்டீரம் - ஆல், வெண்மை. பாண்டு - ஓரரசன், ஓர் நோய், சிறுபூனை, வெண்மை. பாண்டுகம் - காமாலை, மங்கல்வெள்ளை. பாண்டுகம்பலம் - ஓர் கல், யானைமேற்றவிசு, வெண்கம்பளம். பாண்டுசருமிலை - துருபதி பாண்டுநாகம் - ஐராவதம். பாண்டுபத்தினி - குந்திதேவி. பாண்டுமைந்தர் - தருமன்முதலைவர். பாண்டுயாவநம் - பேரீச்ச மரம். பாண்டுரம் - ஓர்நோய், ஓர் மரம்,வெண்மை. பாண்டுராகம் - வெண்மை. பாண்டுராங்ககம் - தவநம். பாண்டுருவன் - பெரிய வுருவள்ளது. பாண்டுரேட்சு - வெண் கரும்பு. பாண்டுரை - பாதிரி மரம். பாண்டுரோககாரன் - இராகு. பாண்டுரோகம் - பாண்டு வியாதி. பாண்டுலா - கறிப்புடோல். பாண்டுவன்னம் - வெண்மை. பாண்டை - ஊழ்த்த நாற்றம். பாண்டைநாறி - வெடுக்கன். பாண்டைநாற்றம் - ஊழ்த்த நாற்றம். பாண்மகள் - பாடுவாள். பாண்மகன் - பாடுவான். பாண்மூலை - பாழ்மூலை. பாதகடகம் - பாடகம். பாதகண்டீரம் - ஓதக்கால். பாதகத்துவரம் - அரசு. பாதகம் - துரோகம். பாதகன் - துரோகி. பாதகாணிக்கை - பாத தட்சணை. பாதகாப்பு - செருப்பு. பாதகி - துரோகி. பாதகுறடு - மிதியடி. பாதங்கி - சனி. பாதசத்துவரம் - அரசமரம், ஆடு,ஆலாங்கட்டி. பாதசரம் - ஓர் காலணி. பாதசன் - சூத்திரன். பாதசாகை - கால்விரல். பாதசாபலியம் - உதைத்தல். பாதசாரம் - கிரகமன்றன்று நிற்குநிலை. பாதசாரி - காலாள். பாதசாலம் - காலணிப் பொது. பாதசிலை - தூண்டாங்குங் குழிக்கல். பாதசுத்தி - கால் கழுவல். பாதசேவனம் - ஊழியம், பாத வந்தனம். பாதசேவை - அடித்தொண்டு. பாதச்சனி - வாக்குத்தானத்துச் சனி. பாதச்சாயை - மிதித்தவடி நிழல்.பாதஞ்சலம், பாதஞ்சலியம் - பதஞ்சலிசெய்த நூல். பாததட்சணை - பாத காணிக்கை. பாததரிசனம் - பெரியோர் காட்சி. பாததாடனம் - உதை. பாததாரி - காலின் வெடிப்பு. பாததிரணம் - பாதரட்சை. பாததீட்சை - பாதமுத்திரை கொடுத்தல். இஃது தீட்சை வகையினொன்று. பாததீர்த்தம் - பெரியோர் பாதங்கழுவிய நீர். பாததூளி - காளிலொட்டின மண்,திருவடித்துகள், நடைப்புழுதி. பாதபடி - பாதம் வைக்குமாசனம்,மிதியடி. பாதந்தனம் - தொழுவம். பாதபம் - பாதவம், மரம், பாதபீடம். பாதபரிசம் - சீதரங்க பாஷாணம். பாதபரித்திருநம் - பாதபரிதட்டனம். பாதபீடம் - பாதபடி. பாதபீடிகை - கீழ்த் தொழில், பாதபடி,பாதபீடம். பாதபூசை - பெரியோர்க்குச் செய்யும்பாதாராதனை. பாதபை - மிதியடி. பாதப்பிரகாரம் - உதை. பாதப்பிரதாரணம் - பாதரட்சை, கால்கழுவல். பாதமயக்கு - நான்கடியிலேதுமொன்றை முதலாய் வாசிக்கச்சரிவரும் பா. பாதமுத்தி - பரகதி, பாததீட்சை. பாதமுத்திரை - குருவின் பாதஞ்சிரசில் வைத்தல், பெரியோரின்பாதரட்சை. பாதமூலம் - குதிகால். பாதமூலி - சிறுநெருஞ்சில். பாதம் - இராகு, கால் இஃது கருமேந்திரிய மைந்தினொன்று,கிரணம், சம்பவித்தல், சரிதைமுதலிய நிலை, செய்யுட்களினடி,திடர், நாலினொன்று, நீர் பங்கு,மரவேர், வட்டத்தினான்கினொன்று, வைகறை. பாதரசம் - இரதம்.பாதரட்சணம், பாதரட்சை - தொடுதோல், மிதியடி. பாதரதம் - இரதம், காலாட்படை,தொடுதோல். பாதராயணன் - வாதராயணன்,வியாசன். பாதரோகணம் - அரச மரம். பாதலத்தம்பி - நிலக்காளான். பாதலம் - கமர், கிடங்கு, குகை,சூரியனிற்கு மிராசிக்கு நாலாமிராசி, நரகம், பாதாளம். பாதலவாழ்நர் - நாகர். பாதவந்தனம் - பாதவணக்கம். பாதவம் - தோப்பு, பாதபடி, மரப்பொது, மரம், மலை. பாதவன்மிகம் - ஓர் நோய். பாதவிகன் - வழிச் செல்வோன். பாதவிரசை - பாதுகை. பாதனம் - இழிதல், துக்கத்தாற் றலைசாய்த்தல், விழுதல். பாதன் - சூரியன், தீ. பாதாக்கிரம் - கானுதி. பாதாக்கிராந்தன் - அடி வணங்குவோன். பாதாங்கதம் - பாதகடகம். பாதாங்குட்டம் - காற்பெரு விரல். பாதாங்குட்டிகை - கால் விரலணி. பாதாசனம் - பாதபடி. பாதாதம் - காலாட்படை. பாதாதி - பதாதி. பாதாதிகேசம் - ஓர் பிரபந்தம் அதுகலிவெண்பாவாலடிமுதன் முடியளவுங் கூறுவது, பாதமுதற் சிகைபரியந்தம். பாதாரம் - கிரணம். பாதாரவிந்தம் - சீர்பாதம், அடித்தாமரை பாதார்த்தம் - எட்டினொன்று, பாதகாணிக்கை. பாதார்த்தியம் - குரூபகாரம். பாதாவசேசனம் - பாத சுத்தி. பாதாவத்தம் - நீரிறைக்குஞ் சூத்திரம். பாதாவனேசனம் - கால் கழுவல். பாதாவிகன் - காலாள். பாதாளகங்கை - கீழுலக நதி. பாதாளகிரணம் - காணாக்கிரகணம்.பாதாளநிலயம், பாதாளபூமி - கீழ் பூமி. பாதாளநிலயன் - தைத்தியன். பாதாளபேதி - காடி.பாதாளமூலம், பாதாளமூலி - ஆடுதின்னாப்பாலை, கறையான்,கோரைக்கிழங்கு, சிறுநெருஞ் சில்,சீந்திற்கொடி. பாதாளம் - கீழுலகம், தாழ்வு, நரகம்,பிலம், கிடங்கு. பாதாளலோகம் - கீழுலகம். பாதாளவஞ்சனம் - பூமிக்குட்பொருளைத் தெரியக் காட்டுமை. பாதாளவயிரவன் - ஓர்வயிரவன். பாதாளவாகினி - பாதாள கங்கை. பாதாளவாசிகள் - நரகர். பாதாளவினையன் - ஆழமானவினையன். பாதி - அரைவாசி, கணவன், தலைவன், பங்கு, கூறு. பாதிகம் - சம்பளம். பாதிச்சாமம் - பாதியிரா. பாதிடுதல் - நெருக்கல், பங்கிடுதல்,பாதுகாத்தல். பாதித்தல் - கூறு செய்தல். பாதித்தியம் - பதித்தனம். பாதிமதி - அர்த்த சந்திரன். பாதிமம் - நான்கி னொன்று.பாதியிரா, பாதியிராத்திரி - அர்த்தசாமம், நள்ளிரவு. பாதிரம் - மலையாத்தி. பாதிரி - பாதிரிமரம், அது தசமூலத்தொன்று, மூங்கில். பாதிரிவிநாயகன் - பழனி விநாயகன். பாதிலி - வலை. பாதிவிர்த்தியம் - பதிவிரதைத்தனம். பாதீடு - காத்தல், செறித்தல், பங்கிடுதல். பாது - காவல், சூரியன், பங்கு. பாதுகம் - செங்குத்து, தொடுதோல்,மிதியடி. பாதுகன் - நடைவல்லோன், விழுமியல்புள்ளவன். பாதுகாகாரன் - சக்கிலியன். பாதுகாசித்தி - நீர்மேல் மிதியடியினடக்குஞ் சித்தி. பாதுகாத்தல் - உதவிசெய்யல், காத்தல். பாதுகாப்பு - காவல். பாதுகாவலன் - காவல் செய்வோன். பாதுகாவல் - பாதுகாப்பு. பாதுகிருது - சக்கிலியன். பாதுகை - பாதுகம், சிறு செருப்படை. பாதேயம் - கட்டுச்சோறு, கன்னியிராசி. பாதை - அடிப்பாடு, மரக்கலம்,மிதவை, முறை, வழிவகை. பாதோசம் - தாமரை. பாதோதகம் - கால்கழு நீர், வழியருகிற்றண்ணீர். பாதோதம் - தாமரை, முகில். பாதோதரம் - முகில்.பாதோதி, பாதோநிதி - கடல். பாத்தம் - எல்லாநாட்டுமொழி, மருது. பாத்தல் - கொடுத்தல், பங்கிடுதல். பாத்தி - சிறுசெய், பங்கு, பயிரிடுமேடை, வீடு. பாத்திபம் - புறாமுட்டிப்பூடு, பூமி. பாத்திபன் - அரசன். பாத்தியஸ்தனம் - பங்காளி. பாத்தியஸ்தன் - பாத்தியன், உரிமையாளன். பாத்தியம் - உரிமை, சம்பந்தம், பகுக்கப்பட்டது, பங்கு, பாத மலம்பக்கொடுக்குநீர், பாதமலம்புதல் இதுபூசையியல்பினொன்று, பிணை. பாத்தியல் - தண்ணீர் விட்டான். பாத்தியன் - உரியவன், பிணைகாரன். பாத்திரச்சுரை - ஓர் சுரை. பாத்திரடீரம் - காகம், தீ, நாரை,பாத்திரம். பாத்திரபதம் - இரேவதி, உத்திரட்டாதி,புரட்டாசி மாசம். பாத்திரபாலம் - சுக்கான். பாத்திரப்பிரவேசம் - ஓர் விளையாட்டு. பாத்திரமாதுரன் - கற்புடையாண்மகன். பாத்திரம் - இரப்போர் கலம், இலை,உடல், உண்கலம், எண்சேர்கொண்டது, கட்டளை, தகுதி,புரட்டாதி, மந்திரி, வாய்க்கால்.பாத்திரவாளி, பாத்திரவான் - தகுதிவான், தக்கோன். பாத்திரன் - இரட்சகன். தகுதிவான். பாத்திராதீரம் - அக்கினி. பாத்திரிவம் - யாகோபகரணம். பாத்திரீயம் - பலிப்பாத்திரம். பாத்திரீரம் - காணிக்கை. பாத்திரேசமிதன் - மாய்மாலன்,விருந்தூண் பிரியன். பாத்திரை - இரப்போர் கலம். பாத்தில் - வீடு. பாத்து - கஞ்சி, சோறு, நான்கு, பங்கு, பாதி. பாத்துதல் - பங்கிடுதல். பாத்துப்புலு - நாற்பது. பாநாள் - அத்தசாமம், பாதிநாள், மத்தியானம். பாநிலம் - பாநபாத்திரம். பாநியாமலகம் - நெல்லியினோர்பேதம். பாநுகோபன் - சூரபதுமன் றம்பி. பாநுமதி - விக்கிரமார்க்கன் மனைவி. பாநேமி - சூரியன். பாந்தம் - அடியாறு, ஒழுங்கு, பகரவீறு. பாந்தல் - பதுங்கல்.பாந்தவம், பாந்தவியம் - அடியாறு,பந்துத்துவம். பாந்தள் - பாம்பு, பெரும்பாம்பு. பாந்தன் - வழிச்செல்வோன். பாந்து - அளை, பாந்தென்னேவல். பாந்துதல் - பதுங்குதல், மறைதல். பாந்தை - அளை, பொள்ளல். பாபகம் - பாவம். பாபகிரகம் - இராகு, சனி, செவ்வாய்,கேது, சூரியன். பாபக்கிநம் - எள். பாபசமனம் - பாவப் பரிகாரம். பாபசரியன் - இராட்சசன், பாவஞ்செய்வோன். பாபத்தி - வேட்டை. பாபநிரதி - பொல்லாங்கு. பாபப்பொறுத்தல் - பாவ மன்னிப்பு. பாபமார்க்கம் - பாவ வழி. பாபமூர்த்திகள் - வேடர். பாபமோசம் - பாவ நிவிர்த்தி. பாபம் - குற்றம், பாவம். பாபரஹிதன் - பாவமற்றவன். பாபயோனி - பாவப்பிறப்பு. பாபரோகம் - ஊழ்நோய், கொப்புளிப்பான். பாபர்த்தி - பாபத்தி. பாபவிக்கியானம் - பாபசங்கீர்த்தனம். பாபவிமோசனம் - பாவநாசம். பாபாத்துமா - பாவி பாபாபநுதி - பாவ நிவிர்த்தி. பாபி - பாவி. பாபிஷ்டன் - பாவஞ் செய்வோன். பாபிஷ்டை - பாபஞ் செய்பவள். பாபிவிட்டம் - கோழிப்பூடு. பாப்பாச்சி - ஓர்வகைத் தொடுதோல். பாப்பான் - ஓர்பூடு, பார்ப்பான். பாப்பு - பாத்தல், பிராமணசாதி. பாப்புரி - பாம்புரி. பாப்பு - பார்த்தல். பாப்பூசு - ஓர்வகைத் தொடுதோல். பாமகள் - சரச்சுவதி. பாமக்கினம் - கந்தகம். பாமடந்தை - பாமகள். பாமதம் - வாலுளுவை. பாமநன் - சிரங்கு பிடித்தவன். பாமம் - கோபம், தினவு, பரப்பு, பிரபை. பாமரம் - அறிவின்மை, இழிமை பாமரர் - அரசற்குத் துணைவர், அறிவீனர். பாமரவைத்தியன் - அநப்பியாசவைத்தியன். பாமரன் - அறிவீனன், கீழ்மகன். பாமன் - சூரியன், மைத்துனன். பாமாரி - கந்தகம். பாமாலை - ஒருவன் கீர்த்தியைப்புகழ்ந்து தொடுத்த பா. பாமிநி - பெண் பாமுதல்வி - சரச்சுவதி. பாமை - அகங்காரி, காமி, சிரங்கு. பாம்பரணை - ஓரரணை. பாம்பாட்டம் - சோலி. பாம்பாட்டல் - தொந்தரைபண்ணல்,பாம்பையாடச் செய்தல். பாம்பாட்டி - அரவாட்டுவோன்,கௌசிகன். பாம்பாட்டிசித்தர் - ஓர் சித்தர். பாம்பு - அரவு, ஆயிலியநாள், கரை,வரம்பு, இராகு, கேது. பாம்புகண்டசித்தன் - கரடி. பாம்புகொல்லி - ஓர் பூண்டு. பாம்புக்கல் - பாம்பின் விஷத்தைஇழுக்குங் கல். பாம்புக்கண்ணி - சங்கங்குப்பி. பாம்புக்குத்தச்சன் - கறையான். பாம்புதின்னி - முண்ணாயகி. பாம்புமொச்சை - ஓர் பூண்டு. பாம்புரி - அகழி, பாம்புச்சட்டை. பாம்புவிரல் - நடுவிரல். பாம்போடுவடலி - நெடுமட்டை வடலி. பாயசம் - பால், பாற்சோறு, பாற்சோற்றிச் செடி. பாயமுகம் - வடவாக்கிநி. பாயம் - நீர், மனத்திற்கு விருப்பமானது. பாயல் - மக்கட்படுக்கை. பாயிகன் - காலாள். பாயிரம் - பொழிப்புரை, முகவுரை,வரலாறு. பாயிழுத்தல் - தோணியிற்பாய் தூக்கிவிடல்.பாயு, பாயுரு - குதம் அது கருமேந்திரியமைந்தி னொன்று. பாயெடுத்தல் - பாயிழுத்தல். பாய் - களப்பாய்முதலியன, கூறைப்பாய், பாயல், பாயென்னேவல். பாய்கோரை - ஓர் புல். பாய்ச்சல் - கீழ்ப்படியாமை, பாய்தல்,எழுச்சி, பெருக்கல். பாய்ச்சல்காட்டுதல் - பாயும்படிஏவுதல். பாய்ச்சல்விடுதல் - குதிரை முதலியவற்றைப் பாயவிடல். பாய்ச்சான்போடுதல் - இருவர் கூடியோருலக்கையை மாறியோச் சல்.பாய்ச்சி, பாய்ச்சிக்கை - சொக்கட்டான் முதலியவற்றின் கவறு. பாய்ச்சு - பாய்ச்சென்னேவல், பிளாச்சு. பாய்ச்சுதல் - உட்செலுத்துதல், பாயச்செய்தல், பாயவிடல். பாய்ச்சுலக்கை - பாய்ச்சானுலக்கை. பாய்ச்சுவலை - ஓர்வலை. பாய்ச்சை - தத்துப்பூச்சி. பாய்தல் - உருவுதல், ஓடல், குதித்தல்,தாண்டல், நீர் முதலிய பாய்தல்,பரம்புதல், பறக்குதல், பறிதல்,மூட்டல். பாய்தூக்கல் - கப்பற்பா யெடுத்தல். பாய்த்தல் - பாயச்செய்தல். பாய்த்து - பாய்ச்சல், பாய்த்தென்னேவல். பாய்த்துதல் - பாய்ச்சுதல், பரப்புதல். பாய்மரம் - கப்பல் முதலியவற்றின் பாய்தூக்குமரம் பாய்மா - குதிரை, புலி. பாய்மாறுதல் - தோணியிற் பாயை மறுபுற மாக்கிவிடல். பாய்வலித்தல் - கப்பற்பா யிழுத்தல். பாய்விரி - பசிரி. பாரகஸ்பத்தியம் - தருமநூல் பதினெட்டினொன்று. பாரகம் - நடக்குதல், திரைச்சீலை,தோணி, நீந்தல், பூமி. பாரகர் - கரைபிடித்தவர், தாங்குவோர். பாரகன் - கரைகண்டவன், தாங்குபவன். பாரங்கதன் - கல்வியிற் கரைகண்டவன். பாரங்கு - காட்டுப்பருத்தி, சிறுதேக்கு, பாரத்துவாசி. பாரசவம் - ஆயுதப்பொது. பாரசவன் - பார்ப்பானுக்குச்சூத்திரச்சி பெற்றபிள்ளை, வேசி பிள்ளை. பாரசிகை - பருந்து. பாரசீகம் - பாரிசதேசம், பாரிசதேயத்திற் குதிரை. பாரசுவதன் - மழுவேந்தி. பாரசுவயம் - பொன். பாரச்சுமை - வலுச்சுமை, பாரமாகியசுமை. பாரஞ்சுமத்துதல் - பாரமேற்றுதல்.பாரணம், பாரணை - உண்டல்,உபவாசமிருந்துண்ணல், திருத்திசெய்தல், முகில். பாரதகண்டம் - நவகண்டத்தொன்று. பாரதந்திரியம் - பராதீநம். பாரதம் - இரதம், ஐந்தாம் வேதம்,பாரத வருடம், பாதரசம், பரதவமிசத்தரசர்கள் சரித்திரம். பாரதர் - குருகுல வேந்தர். பாரதவருடம் - பரதகண்டம். பாரதன் - குருகுலவேந்தரிலொருவன்,கூத்தாடி, தீ. பாரதாரிகன் - விபசாரன், பிறன்மனைவியை விரும்புபவன். பாரதாரியம் - விபசாரம். பாரதி - சரச்சுவதி, சொல், மரக்கலம்,பைரவி. பாரதிகொழுநன் - பிரமன். பாரதிதீபம் - ஓர் நிகண்டு. பாரதியாங்கம் - சுடலை. பாரதூரம் - மிகப்பெரியது, வெகுதூரத்தது. பாரதேசிகன் - அன்னியன், பரதேசி. பாரத்துவாசம் - எலும்பு, கரிக்குருவி,காடை, வலியான். பாரத்துவாசன் - அகத்தியன்,துரோணாசாரியன். பாரத்துவாசி - துரோணாசாரி. பாரந்தாங்குதல் - பாரஞ் சுமத்தல். பாரபட்சம் - ஓரவாரம். பாரபத்தியக்காரன் - அதிகாரி, உத்தியோகத்தன். பாரபத்தியம் - அதிகாரம், மேல் விசாரணை. பாரப்படுதல் - பாரமாதல். பாரப்படுத்துதல் - பருப்பித்தல், பாரமாக்குதல். பாரப்பழி - மிகுகுற்றம். பாரமார்த்திகன் - பரமார்த்த யுத்தன். பாரமார்த்திகம் - பரமார்த்த சம்பந்தமானது. பாரமிதம் - மேலானது. பாரமுகார்க்கியம் - சிவனைம்முகப் பூசையியல்பினொன்று. பாரமேச்சுரம் - சிவாகம மிருபத்தெட்டினொன்று. பாரமேஷ்டி - பிரமன். பாரம் - இரதம், ஓர் விளையாட்டு,கடமை, கரைப்பொது, கவசம்,கனம், காவுதடி, குதிரைச் சேணம்,சுமை, துலாமிருபத் தெட்டுக்கொண்டது அஃது இரண்டாயிரம் பலங்கொண்டது,தோணி, நிறை, நீர்க்கரை, பூமி,பொறுப்பு, பொறுமை, முடிவு,வரம்பு, பருத்தி.பாரம்பரம், பாரம்பரியம், பாரம்பரை - ஐதிகம், கிரமங்கிரமமாய் வருவது,வழிவழியாய் வருவது. பாரம்பரைநியாயம் - கிரமங் கிரமமாய்வரு முறைமை. பாரலௌகிகம் - பாயசம் பாரவதம் - புறாப்பொது. பாரவம் - வின்னாண் பாரவாகனம் - சுமையெடுத்தும் யானம். பாரவாகனன் - காக்காரன். பாரவிருதம் - உபகாரம், பலி. பாராகம் - உபநிடத முப்பத்திரண்டினொன்று. பாராசரியகற்பிகன் - பாராசர நூற்படிநடப்போன். பாராசரியன் - பாராசரி. பாராசரியயம் - பராசரியம், ஒருசோதிட நூல். பாராசாரி - வியாசன். பாராட்டல் - மெச்சுதல், தூறல்,பாராட்டுதல். பாராட்டு - கொண்டாட்டம், பாராட்டென்னேவல், புகழ்ச்சி. பாராட்டுக்காரன் - புகழ்வோன். பாராட்டுதல் - உபசரித்தல், உரிமைபாவித்தல், புகழ்தல், மெச்சுதல். பாராட்டுந்தாய் - ஐவகைத்தாயாரிலொருத்தி. பாராட்டுப்பண்ணுதல் - புகழ்தல். பாராயணப்பத்திரம் - மாணாக்கர்க்குபாத்தியாயர் கொடுக்கு முறுதி. பாராயணம் - கடந்துபோதல், நியமமாகப் படித்தல், முற்றுற முடித்தல். பாராயணர் - நியமமாய்க் கற்போர்,பார்ப்பார். பாராயணி - சரச்சுவதி. பாராயணிகன் - கற்போன். பாராருகம் - மலை. பாராவதம் - கருங்காலி, கரும்புறா,குரங்கு, புறாப்பொது, மலை.பாராவலையம், பாராவளையம் - வளைதடி. பாராவளை - சுழல்படை. பாராவாரம் - கடல், கடற்றிரை, கரை,சமுத்திரம். பாராவாரீணன் - இருபக்கஞ் சாய்ந்தவன். பாரி - இராக்காவல், ஓரளவு, கடையெழு வள்ளலி லொருவன்,கட்டில், கள்குடிக்கும் பாத்திரம்,கோட்டம், சிங்கம், சிறங்கைநீர்,நல்லாடை, பாரியென்னேவல்,பூந்தாது, பூமி, பெரியோன், மனைவி,யானைகட்டுங் கயிறு, ஊர். பாரிகன் - காக்காரன். பாரிகாரிகன் - மாலைக்காரன். பாரிகாரியம் - கடையம், பிடித்தல். பாரிக்கிதன் - பரிக்கிருது, பாரிக்கை - பாரிப்பு. பாரிசகிரணம் - பக்கக்கிரணம். பாரிசநோய் - ஓர் நோய். பாரிசம் - ஓர் மலை, திசை, பக்கம்.பாரிசவாதம், பாரிசவாயு - ஓர் நோய். பாரிசாதகம் - பஞ்சதருவி னொன்று,பவள மல்லிகை. பாரிசாதம் - ஐந்தருவி னொன்று,பவள மல்லிகை முருக்கு பாரிசாரம் - ஏவல், கட்டளை. பாரிசேடம் - ஒழிபளவை அஃதுதருக்க சாத்திரத்தி லோருறுப்புஅது கூட்டிக் கழித்தல், எஞ்சியது. பாரிஷதன் - காவற்காரன், பார்க்கிறவன். பாரிடம் - பூதகணம், பூமி. பாரிணாயம் - சீதனம். பாரிதத்தியை - நெற்றிச்சுட்டி. பாரிதோஷிகம் - உபகாரம். பாரித்தல் - உண்டாக்கல், குற்றஞ்சார்த்துதல், தோற்றல், பரப்பல்,பருத்தல், பலன்படல் , வளர்தல். பாரிந்திரன் - சிங்கம். பாரிபத்திரம் - வேம்பு. பாரிபந்திகன் - கள்வன். பாரிபாட்டியம் - ஒழுங்கு. பாரிபார்ச்சுவிகன் - உதவிக்காரன்,துணைக்கவி சொல்வோன். பாரிபாவிகம் - கை. பாரிபாவியம் - ஓர் குளிகை, கோஷ்டம்,பிணை. பாரிப்பு - அதிகரிப்பு, கனம், பருப்பம்,வீக்கம். பாரியம் - கடுக்காய், முருக்கு, புண்ணாக்குக் கீரை. பாரியாடன் - மனைவியைப் பிறர்க்கனுகூலப்படுத்திச் சீவிப்போன். பாரியாடிகன் - மனைவிக்கடங்கியகணவன். பாரியாதிக்கிரமம் - விபசாரம். பாரியாத்திரம் - ஓர் மலை. பாரியாள் - பருத்தவன், மனையாள். பாரியானிகம் - பண்டி. பாரியை - மனைவி. பாரிரட்சகன் - தவசி. பாரிவர்ணம் - முள்ளங்கி. பாரிவேட்டை - வேட்டை, குதிரை வேட்டை. பாரீட்சிதன் - ஜநமேஜயன். பாரீந்திரம் - சிங்கம், மலைப்பாம்பு. பாரு - சூரியன், தீ. பாருஷியம் - அகில், இந்திரன் தனம்,கடுஞ்சொல், கொடுமை, நிந்தை. பாரோகம் - வாள். பாரோதரணம் - காவுதல். பாரை - ஓர் மீன், இருப்புலக்கை,கடைப்பாரை, குழிகல்லுங் கருவி. பார் - அடுக்கு, உரோகணி நாள்,தேசம், தேரின் பரப்பு, நிலம்,படுக்கை, பாரென்னேவல், பார்ப்பார், பாறை, புத்தன், பூமி, முறை,தடை, நீர்ச்சால். பார்க்க - பார்க்கிலும். பார்க்கடம் - சாம்பர். பார்க்கவப்பிரியம் - வச்சிரம். பார்க்கவம் - உபபுராணம் பதினெட்டினொன்று. பார்க்கவன் - சுக்கிரன், பரசுராமன்,வில்லாச்சிரமி. பார்க்கவி - இலக்குமி, சிறுதேக்கு,பார்வதி, வெள்ளறுகு. பார்க்கியம் - நன்னடை. பார்க்கியன் - சத்துரு. பார்க்குணம் - பாற்குணம். பார்சவம் - பக்கம், பரிசு, வட்டத்தின்சுற்றளவு. பார்சவன் - பரிசுபெற்றோன். பார்சிகை - பருந்து. பார்சுவகன் - கள்வன். பார்சுவத்தன் - அணைசொற்காரன்,உதவிக்காரன். பார்சுவம் - உதவி, துதிப்போர்கூட்டம், வட்டம், விலா, பக்கம். பார்சுவாசாந்தம் - உச்சிட்ட பந்திபோசனம். பார்த்தல் - ஆராய்தல், கவனித்தல்,காணல், தேடல், நோக்குதல்,பத்திரம் பண்ணல், பிரயாசப்படுதல், வணங்கல். பார்த்தவம் - மிகுதி. பார்த்தன் - அருச்சுனன், காத்தவீரியன். பார்த்திவ - பத்தொன்பதாவ தாண்டு. பார்த்திவசாலை - இராஜ சபை. பார்த்திவம் - பார்த்திபம், பூமி. பார்த்திவன் - அரசன், பார்த்திபன். பார்த்தீப - பார்த்திவ. பார்ப்பதி - பார்வதி, பெருநெருஞ்சில். பார்ப்பதிகொழுநன் - சிவன். பார்ப்பரன் - யமன். பார்ப்பனக்கொலை - பிரமகத்தி. பார்ப்பனச்சேரி - பார்ப்பார் சேரி. பார்ப்பனத்தி - பிராமணத்தி. பார்ப்பனமாக்கள் - பார்ப்பார். பார்ப்பனி - பார்ப்பனத்தி. பார்ப்பாரறுதொழில் - ஈதல் ஏற்றல்ஓதல் ஓதுவித்தல் வேட்டல் வேட்பித்தல். பார்ப்பான் - இயமன், பிராமணன். பார்ப்பினி - பார்ப்பனி. பார்ப்பு - கோட்டில்வாழ் விலங்கின்பிள்ளை, தவழ்சாதியின் பிள்ளை,பறவைக் குஞ்சு, பார்த்தல், பிரமசாதி, மான்கன்று. பார்மகன்சாரி - பச்சைக்கருப்பூரம். பார்மிசையோன் - புத்தன். பார்வணம் - பூரணை, மான், யாகமிருபத்தொன்றி னொன்று. பார்வணன் - சந்திரன். பார்வதம் - மலை, வாலுளுவை, வேம்பு. பார்வதி - இடைச்சி, உமை, காவிமண், துருபதி, பெரு நெருஞ்சில். பார்வதிகம் - மலைக்கூட்டம். பார்வதிகுமாரன் - முருகன். பார்வதிகொழுநன் - சிவன். பார்வதிநந்தநன் - முருகன். பார்வதிலோசனம் - தாளவகையிலொன்று, அது பதினாறு மாத்திரையை யுடையது. பார்வதேயம் - மலையிற் பிறப்பன. பார்வல் - குஞ்சு, தீவகப்பட்சி, மான்கன்று முதலியன. பார்வை - கண், கவனம், சிறப்பு, சூனியமயக்கு, நோக்கு, பார்த்தல், மதிப்பு. பார்வைக்காரர் - நோய் தீர்ப்போர்,மதிப்புக்காரர். பார்வைத்தகடு - துறப்புவாய்தற்றகடு. பார்வைத்தாழ்ச்சி - குருடு, பராமரிப்புத் தாழ்ச்சி. பார்வைபார்த்தல் - நோய் தீர்க்கமந்திரமுச்சரித்தல். பாலகத்துவம் - தற்காத்தல். பாலகம் - எள்ளு, குருவேர், கோட்டம், சிகை, தோளணி, மோதிரம். பாலகன் - காப்போன், குதிரைக்கரான், குழந்தை, புத்திரன். பாலகி - புத்திரி. பாலங்கம் - குதிரை, பறவை. பாலசரியன் - முருகன். பாலசிகிச்சை - குழந்தை வைத்தியம் பாலசூரியன் - உதயாதித்தன். பாலசூலிகம் - சாமரம். பாலடி - பாற் சோறு. பாலடை - ஓர் செடி, பாலகப்பை,பாலுறட்டி. பாலதனயம் - கருங்காலி. பாலதிருணம் - இளம்புல். பாலபோச்சியம் - சிறுவ ருணவு. பாலமுடாங்கி - வேலிப்பருத்தி. பாலமை - அறியாமை. பாலம் - ஆற்றுப்பாலம், நெற்றி,பிரபை, பூமி, மரக்கொம்பு, மழு. பாலரசம் - பொன்னிறம். பாலரதி - இளமைப்பருவப் பெண். பாலராஜம் - வைடூரியம். பாலரீரி - பிள்ளைத் தன்மை. பாலர் - இடையர், பிள்ளைகள். பாலலீலை - குழந்தை விளையாட்டு. பாலலோசநன் - சிவன், நெற்றிக்கண்ணன். பாலலோசனி - உமை. பாலவம் - வாலவம். பாலவரை - ஓரவரை. பாலவாயஜம் - வைடூரியம். பாலனம் - இளங்கன்றின்பால்,காத்தல், பாற்சோறு. பாலனன் - காப்போன். பாலன் - இடையன், எழுத்துத்தானமைந்தினொன்று, ஏழு வயசுக்குட்பட்டவன், காப்போன்,கருங்குவளை. பாலாக்குதல் - சாதுவாக்குதல், பங்கிடுதல். பாலாங்கன் - சிவன். பாலாசம் - பச்சைநிறம். பாலாடை - பாலிற் பிறக்குமாடை,பாலேடு பாலாட்சன் - சிவன். பாலாரிட்டம் - ஏழு வயதிற்குள் வரும்அரிட்டம். பாலார்க்கன் - இளஞ் சூரியன். பாலி - அணை, ஆலமரம், எல்லை,ஓர் பாஷை, ஓர் யாறு, கள், கறை,காதிற் சோணை, சுற்றளவு, செம்பருத்தி, பாலியென்னேவல், பாற்பசு, பாணை, புகழ், வரிசை,வாண்முனை. பாலிகை - அடம்பு, ஆயுதமுனை,உதடு, படைவாளின் முட்டி, பாற்கரண்டி, பெண்பிள்ளை, முளைப்பாலிகை, வட்டம். பாலிசின்னம் - ஆலவட்டம் பாலிதம் - பெருந்தேக்கு. பாலிதன் - வளர்ப்புப் புத்திரன். பாலித்தல் - அருளுதல், ஈதல், காத்தல். பாலியம் - ஏழுவயசுக் குட்பட்டபருவம். பாலியர் - ஏழுவயசுக் குட்பட்டபிள்ளை. பாலிரு - அடம்பு, முருக்கு. பாலிறக்கம் - வைசூரிக் கொப்புளத்திற் பால் வடித்தல். பாலிறுவி - முருக்கு. பாலுகம் - கருப்பூரம். பாலுண்ணி - சரீரத்திலுண்டாகிற ஓர்காய். பாலுறட்டி - வெள்ளுறட்டி. பாலேடு - பாலாடை. பாலேயம் - கழுதை, சிறு முள்ளங்கி, மிருது. பாலை - ஓர் கொடி, ஓர் மரம், ஓர்மீன், கடல், கல்வியிற் பிரிதல்,குழந்தை, பெண் குழந்தை, பாடற்சுவையி னொன்று, பாலை நிலம்,பாலைப்பண், புநர்பூச நாள்,பொருள்வயிற் பிரிதல், மிருகசீரிடநாள், வெம்மை, சிவந்தி, ஓரணி. பாலைக்கருப்பொருள் - பாலைநிலத்துற் பத்திப் பொருள் அதுகாளி முதற் சூறையாடலீறாயபதினான்கு. பாலைக்கிழத்தி - துர்க்கை. பாலைத்திணை - பாலைநிலத்திற்குரியவை. பாலைநிலக்குடிகள் - குறவர், வேடுவர். பாலைநிலத்தலைவன் - காளை. பாலைநிலத்தெய்வம் - காளி, துர்க்கை. பாலைநிலத்தூர் - குறும்பு. பாலைநிலநீர் - வறுங்கூவ நீர். பாலைநிலப்பண் - பஞ்சுரம். பாலைநிலப்பறை - துடி. பாலைநிலப்புள் - கழுகு, பருந்து, புறா. பாலைநிலப்பூ - கள்ளி, பாலை, பூளை. பாலைநிலமரம் - ஓமை, கள்ளி, குரா,பாலை, மரா. பாலைநிலமக்கடொழில் - கொள்ளையாடல். பாலைநிலமாக்களுணா - ஆறலையும்பதிப்பறியும் பாலைநிலம் - ஐந்நிலத்தொன்றுஅஃது நீருநிழலு மில்லாச் சுரமுஞ்சுரஞ்சார்ந்த விடமும். பாலைநிலவிலங்கு - செந்நாய். பாலைப்புறம் - சுரநடை, முதுபாலை. பாலைமுதற்பொருள் - சுரமுஞ் சுரஞ்சார்ந்தவிடமும் வேனில் நண்பகல் பின்பனியென்னும் பெரும்பொழுதுஞ் சிறு பொழுதுகளுமாம். பாலையாழ் - பாலைநிலத்தியாழ். பாலைவனம் - சுரம் பாலொடுவை - கொடிப்பாலை. பாலோபவீதம் - பூணூல். பால்மோடிக்கா - ஓர் பூடு. பால் - இடம், இயல்பு, உரிமை, ஊழ்ஏழனுருபு, கடமை, குணம், திக்கு,பகுதி, பக்கம், பங்கு, பஞ்சகௌவியத் தொன்று அது பசுப்பால், பலன், பாதி, மரப்பால்,முலைப்பால், வெண்மை. பால்கட்டுதல் - பால் கொள்ளுதல்,வைசூரிப்பால் குற்றுதல். பால்கறத்தல் - பால் பிதிர்த்தல். பால்தோய்தல் - பாலுறைதல். பால்தோய்த்தல் - பாலுறைவித்தல். பால்பகாவஃறிணைப்பெயர் - பால்பகுத்தலின்றி நிற்கு மஃறிணைப்பெயர் (உ-ம்) மாடு வந்தது. பால்பகாவுயர்திணைப்பெயர் - பால்பகுத்தலின்றி நிற்குமுயர்திணைப்பெயர் (உ-ம்) மக்கள் வந்தார். பால்பிடிபதம் - பயிர்க்கதிர் பாலடையும் பதம். பால்மரம் - பாலுள்ள மரம். பால்மறத்தல் - பால்குடி மறத்தல். பால்மறுத்தல் - பால் வற்றுதல். பால்மாறிக்கை - சோம்பு. பால்மாறுதல் - சோம்பா யிருத்தல். பால்முடங்கி - ஓர் பூடு. பால்முட்டான் - ஓர் மீன். பால்வழு - பான் மயக்கம். பால்வீதிமண்டலம் - வாணாட்சரேகையிற் றோன்றும் சோதிவரி. பால்வடித்தல் - நென் முதலானதானியம் பாலடையாது விள்ளல். பால்வெள்ளைமண் - சுதை மண். பாவகம் - இயல்பு, கருத்து, உருவு,கொலை, சேங்கொட்டை, தூய்மை,தோற்றம், பாவனை, மனதினன்பைவெளிப்படுத்தல், அபிநயம். பாவகன் - அக்கினிதேவன், கற்றோன்,சுத்த மடைந்தோன், சொரூபி,தூய்மை செய்வோன், நெருப்பு. பாவகாரி - பாவாத்துமா, பாவஞ்செய்பவன். பாவகி - முருகன். பாவசம் - காமம். பாவசன் - மன்மதன். பாவடம் - பாவாடம். பாவட்சயம் - பாவ நிவிர்த்தி. பாவட்டை - ஆடாதோடை, திரணைச்செடி. பாவட்டைச்சக்களத்தி - ஓர் செடி. பாவண்ணம் - வண்ணப்பேதங்களினொன்று. பாவநாசம் - ஓர் நதி, பாவநீக்குதல்.பாவநிவாரணம், பாவநிவர்த்தி - பாவநீக்குதல். பாவமன்னிப்பு - பாவப்பொறுதி,பாவம் மன்னிக்கப்படுதல். பாவமூர்த்திகள் - கீழ்மக்கள், வேடர். பாவம் - அக்கிரமம், அதிட்டவீனம்,ஆத்துமா, இயக்கம், இயங்குதிணை, இயல்பு, உலகம், உள் ளது,கருத்து, கருப்பை, செயல், சொற்பொருள், சொன் மூலம், தன்மை,நோக்கம், பரதவுறுப்பு ளொன்று,பாபம், பாவனை, பிறப்பு, பொருள்,பொழுது போக்கு, போதனை,மெய்ப்பாட்டுக் குறிப்பு, தீயசெயல்,அபிநயம், விளையாட்டு. பாவலர் - கவிகள், புலவர். பாவல் - பாதகுறடு, பாவுதல், மரக்கலத்தோருறுப்பு. பாவவாளி - பாவி. பாவவிமோசனம் - பாவ நிவிர்த்தி.பாவனத்துவனி, பாவனத்தொனி -சங்கு. பாவனம் - அத்தாட்சி, அலங்கரிப்பு,ஆப்பி, ஆராய்வு, இணைவு, எண்ணம், கருதலனுமானம் அதுஅளவை யெட்டினொன்று, சுத்திசெய்தல், தவம், தியானம், தூபம்,துய்து செய்தது, தூய்மை. பாவனன் - அனுமன், ஓர் இருடிபுத்திரன், தீ, வியாசன், வீமன். பாவனாதீதம் - பாவனைக் கெட்டாதது. பாவனாவுருவகம் - உரூபகாலங்காரத்தொன்று. பாவனி - கங்கை, துளசி, பசு. பாவனை - எண்ணம், தியானம்,நடத்தை, மாதிரி. பாவனைபண்ணுதல் - பாசாங்குபண்ணல், பாவித்தல், மாரீசம்பண்ணுதல். பாவாடம் - நாவறுத்தல். பாவாடன் - சுத்தன், தூர்த்தன். பாவாடை - கோலம், நிலத்தில் விரிக்குஞ்சீலை, பெண்களாடை. பாவாடைப்பூ - இலுப்பைப்பூ பாவாடையமுது - ஓர் வகை நைவேத்தியம். பாவாணர் - புலவர். பாவாத்துமா - பாவி. பாவாநுகை - சாயை. பாவார்த்தம் - சொற்பொருள், வெளியருத்தம். பாவாற்றி - நெய்வார் குச்சு. பாவி - உள்ளது, சுபாவி, தீயோன்,பாவியென்னேவல், பேதை, வரற்பாலது. பாவிகம் - ஓரலங்காரம், அது சென்றதையும் வருவதையும் நிகழ்வதாகச் சொல்லுதல், காப்பியமாய்முடியவுரைப்பது. பாவிதம் - கலப்பு, கூட்டு, சங்கற்பித்தல், சம்மதம், பாவிப்பு, பேறு. பாவித்தல் - பாவனைசெய்தல், வழங்கல், எண்ணுதல். பாவித்திரம் - மூன்றுலகம். பாவிப்பு - பாவனை, எண்ணம். பாவினம் - பாக்களினமாகிய வகவற்பா கலிப்பா நூற்பா மருட்பாவஞ்சிப்பா வெண்பா என்னும்பாக்களு மிவற்றின் விகற்பங்களுமாம். பாவின்புணர்ப்பு - ஓரலங்காரம்அஃது ஒரு பாட்டைப்பிரித்துவாசிக்க வெவ்வேறு பாட்டாகவரத்தொடுத்தல். பாவு - பா, பாவென்னேவல். பாவுகம் - சந்தோஷம், சுபதினம். பாவுகல் - வரிசைப்படப் பரப்பினகல். பாவுதல் - தாண்டல், நடுதல், பரப்புதல், பரம்புதல், பற்றுதல், வேர்வைத்தல், விரித்தல். பாவுபலகை - மேல்மச்சு. பாவை - சித்திரப்பாவை, பதிமை,பெண், மதில், இலக்குமிக் கூத்து. பாவைக்கயிறு - பாவை யாட்டுங்கயிறு. பாவைக்கூத்து - பாவை யாட்டுதல். பாவோடல் - இழையோடுதடி,பாவோடுதல். பாவோடுதல் - நெய்வார் தொழிலினொன்று. பாவோதயம் - ஓரலங்காரம். பாழாக்குதல் - அழித்தல், கெடுத்தல். பாழாதல் - ஊழ்த்தல், கெடுதல்,சினத்தல். பாழி - அகலம், அளை, ஆகாயம்,உரை, ஊர், கடல், கிராமம், குகை,சயனம், சிறு குளம், தேவர் கோவில், பகைவரூர், பாழ், பெருமை,மருதநிலத்தூர், முனிவர் வாசம்,வலி, விலங்கின் படுக்கை, போர்,வட்டம் (தக்க). பாழித்தியம் - ஓர் நூல். பாழ் - அழிவு, ஆகாயம், கெடுதி,சூனியம், நட்டம், பாழென்னேவல், வீண், வெறுமை, இலக்கினத்திற்கு எட்டாமிடம். பாழ்க்கடி - கெடுதல், கேடு. பாழ்க்கடித்தல் - பாழாக்கல். பாழ்க்கடிப்பு - கெடுத்தல், கேடு. பாழ்க்குதல் - பாழாக்கல், பாழாதல். பாழ்ங்கிணறு - செடிக்கிணறு,நீரில்லாக்கிணறு. பாழ்ங்குடி - கெடுகுடி. பாழ்ஞ்சேரி - பாழ்பட்ட பட்டினம். பாழ்த்தல் - பாழாதல். பாழ்நத்தம் - பாழ்பட்ட ஊர். பாழ்நிலம் - செய்கையற்ற நிலம், பாலை நிலம். பாழ்ந்தலம் - பாழாயிருக்குமிடம் பாழ்படுதல் - அழிதல், கெடுதல். பாழ்மூலை - வழங்கா மூலை. பாழ்வாயன் - வீண் பேச்சுக்காரன். பாழ்வாய்கூறல் - நியாயமற்றமுறைப்பாடு, வீண்பேச்சு பாழ்வாய்ச்சி - வீண் பேச்சுக்காரி. பாழ்வெளி - அந்தரவெளி, சூனியவெளி. பாளச்சீலை - மருந்து பூசிக் காயவைத்த புடவை. பாளபந்து - தேவநாகர எழுத்து. பாளம் - கட்டி, சீலையின் கிழிவு,பொற்பாள முதலியன, வெடிப்பு. பாளயம் - பாளையம். பாளாசக்கயிறு - குதிரை கால் கட்டுங்கயிறு. பாளி - அடையாளம், பாசறை. பாளிக்கிரமம் - வேதமோதுங் கிரமம். பாளிதம் - கண்டசருக்கரை, கருப்பூரம், குழம்பு, சந்தனம், சோறு,பட்டுப்புடவை பாற்சோறு. பாளை - கமுகு, தெங்கு, பனை முதலியவற்றின்பாளை, பதர், பாலப்பருவத்திற்கு முன்பருவம். பாளைப்பருவம் - கருவிலோர் பருவம். பாளைமடல் - பாளையை மூடியமடல். பாளையகாரன் - அரசர்க்குக் கீழ்ச்சில சேனையோடும் ஒவ்வோர்புறங்கட் கதிகாரியா யிருப்போன், கூடாரத்திலிருப்பவன்படைத் தலைவன். பாளையப்பேட்டு - பாளையகாரன். பாளையமிறங்குதல் - கூடாரம்போடுதல், படை வந்திருத்தல். பாளையமெழும்பல் - படையெழுச்சி. பாளையம் - குருநில மன்னரூர்,சுற்றூர், படை, பாசறை. பாளையம்போடுதல் - நெடுகவிருத்தல், பாளைய மடித்தல். பாளையரம் - ஓரரம். பாளைவருதல் - தெங்கு முதலியவற்றிற் பாளை புறப்படல். பாறல் - அடிப்பறிதல், இடபவிராசி,எருது, ஓடல், பொதியெருது,பொருதல், நீங்கல். பாறு - பருந்து, பாறென்னேவல்,மரக்கலம். பாறுதல் - அடிப்பறிதல், ஓடுதல்.திட்டை. பாறையுப்பு - ஓருப்பு. பாற்கடல் - சத்த சமுத்திரத்தொன்று. பாற்கடற்பிறந்தாள் - இலக்குமி. பாற்கடற்றுயில்வோன் - விட்டுணு. பாற்கட்டுப்பயிர் - மூட்டுக்காய்ப்பருவத்திற் பயிர். பாற்கரம் - உபநிடத முப்பத்திரண்டினொன்று, பொன், வீரம்.பாற்கரன், பாஸ்கரன் - ஆதித்தன், தீ,வீரன், ஒளியுள்ளவன். பாற்கரியோன் - தேவேந்திரன். பாற்கலசம் - பால்கறக்குங் கலசம். பாற்கவடி - பாற்சோகி. பாற்காய் - பாலுண்ணி, பாற்பிடியானகாய். பாற்காரன் - பால் விற்போன். பாற்காரி - குழந்தைப்பிள்ளைக்காரி,செவிலித்தாய், பால் விற்பவள். பாற்காவடி - பால் கொண்டுபோகுங்காவடி. பாற்குடம் - பால் கொண்டுபோகும்குடம். பாற்குழந்தை - கைக்குழந்தை,முலைப்பாலுண்ணும் பிள்ளை. பாற்குழம்பு - குழம்புப் பால்.பாற்குனம், பாற்குனி - உத்திரநாள்,பங்குனி மாதம். பாற்குனிகம் - பங்குனி. பாற்கெண்டை - ஓர் மீன். பாற்கொவ்வை - ஓர்கொவ்வை. பாற்சிரசந்தன் - கெருடபச்சை. பாற்சுண்டு - பாலினடிப்பற்று. பாற்சுறா - ஓர் சுறாமீன் பாற்சொக்கு - செல்லச் சொக்கு பாற்சொற்றி - பாற்சோற்றி. பாற்சோறு - பாலன்னம். பாற்சோற்றி - ஓர் பூண்டு, பாயசம். பாற்பசு - சுவை. பாற்பள்ளயம் - ஓர் குளிர்த்தி, பால்விட்டுப் பொங்கிய அன்னப்படைப்பு. பாற்பீர்க்கு - வெள்ளைப் பீர்க்கு. பாற்பொங்கல் - பாலோதனம். பாற்று - உரியது (உ-ம்) வைக்கற்பாற்றன்று, பாலது. பாற்றுதல் - ஓட்டுதல், நீக்குதல். பாற்றுத்தம் - வெண்டுத்தம் பானகம் - ஓர்வகை நீர்மோர்,புளியும் வெல்லமுங் கலந்தநீர். பானகோட்டிகை - மதுக்கடை. பானக்கம் - பானகம். பானசம் - பலாப்பழத் தட்டமது. பானசியர் - மடையர். பானபரம் - குடித்தல். பானபலி - மதுப்பலி. பானபாசனம் - குடிக்கும் பாத்திரம், பானபாத்திரம் - வள்ளம், கிண்ணம். பானம் - கள்குடித்தல், பருகுவன. பானம்பண்ணுதல் - குடித்தல். பானல் - கடல், கருங்குவளை, கள்,குதிரை, மருதநிலம், வயல்,வெற்றிலை. பானாள் - அத்தசாமம், மத்தியானம்,பாதினாள். பானி - படை, பருகுவோன், பானியென்னேவல். பானிக்குருச்சி - சீனக்காரம். பானித்தல் - குடித்தல். பானியம் - பாநபாத்திரம். பானியவரை - வலம்புரிக்கொடி. பானியவல்லி - வலம்புரிக்கொடி. பானீயம் - நீர், பருகுவன. பானு - அரசன், அழகு, அழகுடையான், எசமான், ஒளி, கிரணம்,சிற்பநூன் முப்பத்திரண்டினொன்று, சூரியன். பானுபலை - வாழை. பானுபூமி - மகாதலலோகம். பானுமைந்தன் - கன்னன், சனி,சுக்கிரீவன், நமன்.பானுவாசரம், பானுவாரம் - ஞாயிறுவாரம். பானை - மிடா. பானைக்குடுவை - சிறுபானை. பானைமூடி - மல்லாய். பானைவெடிச்சான் - புளவை கொல்லி. பான் - எதிர்கால விடைச்சொல்(உ-ம்)உண்பான் வந்தான், பத்தினோர்திரிபு (உ-ம்) ஒருபான். பான்மயக்கம் - ஓர் பாற்குரியசொல்வேறோர்பாற்குரிய சொல்லு டன்வழங்கல். பான்மாறுதல் - பான் மயங்குதல். பான்முளை - ஊழ்முளை. பான்மை - குணம், தகுதி, தன்மை,பங்கு. பி பி - அழகு, ஓரெழுத்து. பிகபந்து - மாமரம். பிகம் - குயில். பிகராகம் - மாமரம். பிகலி - முள்ளி. பிகவல்லபம் - மாமரம். பிகாங்கம் - ஓர்புள். பிகானந்தம் - வசந்தகாலம். பிகி - பெண்குயில். பிகு - சத்தத்தினூன்றுகை, பிகுவு,பெலன். பிகுதல் - தளர்ந்ததை வலிதாக்குதல். பிகுப்பட்டை - குதிரைமேற் சேணங்கட்டும் வார். பிகுவு - இறுக்கம், பெருமை. பிகுவேற்றுதல் - இறுக்கல், பிளிதல்,வில்வளைத்தல். பிக்கம் - யானைக்கன்று. பிக்கலி - அறுகு. பிக்காகம் - மாமரம். பிக்கு - ஒவ்வாமை, கலக்கடி, சிக்கு,பிசகு. பிக்குப்பிசகு - பிசகு. பிங்கசடன் - சிவன். பிங்கதிருட்டி - சிங்கம். பிங்கம் - இளங்கன்று, பொன்மைகலந்த சிவப்பு. பிங்கலந்தை - பிங்கலன் செய்தநிகண்டு. பிங்கலம் - அரிதாரநிறம், ஆந்தை,கீரி, குபேரநவநிதியி னொன்று,குரங்கு, பிங்கலந்தை, பித்தளை,பொன், பொன்மைநிறம், வடக்கு. பிங்கலலோஹம் - பித்தளை. பிங்கலன் - ஓர் நிகண்டாசிரியன்,குபேரன், சிவன், சூரியன், தீ. பிங்கலை - ஆந்தை, தசநாடியினொன்று, அஃது வலமூக்கில்நிற்பது, பார்வதி, பிங்களை,வலமூக்கிற்சரம். பிங்கள - ஐம்பத்தோறாவ தாண்டு. பிங்களம் - களிம்பு, பின்னிதம்,வஞ்சகம். பிங்களித்தல் - அருக்களித்தல், பின்போடுதல். பிங்களை - ஆயுட்காலத்தின்மூன்றிலோர் பகுதி, தென்றிசையானைக்குப் பெண் யானை. பிங்கன் - பாலகன். பிங்காசம் - ஓர்வகைப் பொன். பிங்காசி - அவுரி. பிங்காட்சன் - சிவன். பிங்கி - வன்னிமரம். பிங்குசம் - தலைக்கோலம். பிங்கேட்சணன் - சிவன். பிசகடி - தடை. பிசகு - ஒவ்வாமை, தடை, தப்பிதம்,பிசகென்னேவல். பிசகுதல் - தவறுதல், பிசகுபடல், விலகுதல். பிசகுபண்ணுதல் - தடை பண்ணுதல்,தப்புப் பண்ணுதல். பிசக்கு - பிசகு, பிசகென்னேவல். பிசக்குதல் - தடுத்தல், நலக்குதல். பிசங்கதை - கருமை கலந்த பொன்மை,வெண்மை. பிசங்கம் - பொன்மைகலந்த சிவப்பு.பிசங்கல், பிசங்குதல் - நலங்கல் பிசண்டம் - மிருகத்தின்முதுகு, வயிறு. பிசண்டிலன் - பெருவயிறுள்ளவன். பிசத்துதல் - பிதற்றுதல். பிசம் - இறகு, தாமரைவளையம். பிசல் - எருத்துத்திமில், புசல். பிசவ்வியம் - பருத்தி. பிசறல், பிசறுதல் - கலத்தல். பிசனம் - செஞ்சந்தனம். பிசாசகி - குபேரன். பிசாசம் - பேய், பேய்க்கரும்பு. பிசாசவப்பிரியம் - வேம்பு. பிசாசன் - பேய், பேய்க்குணமுடையோன். பிசாசி - சடமாஞ்சில். பிசாசிகை - கிணற்றுப் பெண்தவளை. பிசாசு - பிசாசம். பிசாச்சி - சடாமாஞ்சில். பிசாரதம் - நூதனம். பிசானம் - ஓர்நெல். பிசான் - அழுக்கு, பிசுபிசுப்பானது. பிசி - அரும்பொருள். சோறு, பொய். பிசிண்டம் - பிசண்டம். பிசிதம் - உதாரணம், ஊன், நீர்,வேம்பு. பிசிதாசி - ஊனுண்போன். பிசிதாசனர் - இராக்கதர். பிசிதாசனன் - இராக்கதன். பிசித்துளிர் - வேப்பந்துளிர். பிசிர் - துளிமழை. பிசினம் - கோட்சொல். பிசினன் - கோளன். பிசினாறி - பிசினேறி. பிசினி - கோட்சொல்வோன், பசை. பிசினேறி - உலோபி, ஓர் மரம். பிசின் - சாம்பிராணி, நீர்வஞ்சி,பஞ்சினூல், மரப்பிசின், வெட்டுக்குருத்து, பசை. பிசு - இரண்டு துலாங்கொண்டது,ஓரசுரன், ஓர்நோய், பருத்தி. பிசுகம் - உத்தாமணி. பிசுகுதல் - கொசறுதல். பிசக்கு - கிள்ளீடு, தொகையீடு, பீர்க்கு. பிசுங்கொட்டுதல் - பிசான் பிடித்தல். பிசுணம் - சீதேவியார். பிசுதூலம் - பருத்தி. பிசுநன் - நாரதன், கோளன், கொடியவன். பிசுபிசுப்பு - பிசான். பிசுபிசெனல் - பிசுபிசுப்புக் குறிப்பு.பிசுமத்தம், பிசுமந்தம் - வேம்பு. பிசுலம் - நீர்க்காகம், பிஞ்சு. பிசுனத்தனம் - பிசினித்தனம். பிசுனம் - உலோபம், காகம், பருத்தி,மஞ்சள். பிசுனவசனம் - கோட்சொல், பழிமொழி.பிசுனன், பிசுனி - உலோபன், கோளன்,பொய்யன், வேவாள். பிசுனித்தனம் - உலோபத்தனம். பிசூகம் - வேலிப்பருத்தி.பிசைதல், பிசைவு - சேர்த்துக்கலத்தல், பகைதல். பிச்சடம் - ஈயம், துத்தநாகம். பிச்சப்பழம் - வத்த குப்பழம். பிச்சம் - ஆண்மயிர், இருவேலி,இறகு, காஞ்சிரை, குடுமி, பீலிக்குஞ்சம் முடி, வத்தகு, வெண்குடை, மயிலின்றோகை, வால். பிச்சர் - பித்தர், மருளர். பிச்சல் - பிய்த்தல். பிச்சாகாரம் - இரப்பூண். பிச்சாடனம் - இரக்குதல், பிச்சைக்குத்திரிதல். பிச்சாசரன் - பிச்சைக்காரன். பிச்சாடிக்கயிறு - பாளாசக்கயிறு. பிச்சாபாத்திரம் - இரப்போர் கலம். பிச்சி - ஓர் கொடி, ஓர்பெண், ஓர்பிசாசம், ஓர் மல்லிகை, கொம்மட்டி, சிறு சண்பகம், முல்லை,பித்துப்பிடித்தவள். பிச்சிலம் - ஆணம், ஈரம், கஞ்சி. பிச்சு - பித்து. பிச்சை - இரப்பு, ஒழுங்கு, சிசுரமரம்,சோற்று நுரை, பாக்கு, மார்ச்ட்டை, வத்தகுக்கொடி, வரிசை,வாழை. பிச்சைக்காரன் - இரப்போன். பிச்சைக்குடி - இரப்புக்குடி. பிச்சைச்சோறு - அறச்சோறு. பிச்சைத்தனம் - இரப்புத்தனம்,எளிமை. பிச்சைபண்ணுதல் - இரத்தல், சந்நியாசி, புசித்தல். பிச்சைமுட்டி - பிடியரிசி. பிச்சையுண்ணி - யாசகி. பிச்சையெடுத்தல் - இரத்தல். பிஞ்சகம் - இறகு, கொலை, தலைக்கோலம். பிஞ்சகன் - கொலைகாரன், சிவன். பிஞ்சடம் - பீளை. பிஞ்சம் - இறகு, கொலை, சத்திக்கொடி, பெலம். பிஞ்சரம் - அரிதாரம், கருமை கலந்தசிவப்பு, பொன். பிஞ்சலம் - அரிதாரம், தருப்பை. பிஞ்சனம் - நூலெஃகும் வில். பிஞ்சானம் - பொன். பிஞ்சிதை - கொட்டையிட்ட பஞ்சு. பிஞ்சு - இளங்காய், முற்றாமை. பிஞ்சூஷம் - காதுக்குறும்பி. பிஞ்சூலம் - விளக்குத்திரி. பிஞ்சூலை - தருப்பைப்புற் கட்டு. பிஞ்சேடம் - கண்ணிற் பீளை. பிஞ்சை - பஞ்சு, மஞ்சள். பிஞ்சோலம் - இலைமுதலியவற்றானெழுமொலி. பிஞ்ஞகம் - தலைக்கோலம். பிஞ்ஞகன் - சிவன். பிஞ்ஞை - நப்பின்னை. பிடகம் - கோரிகை, நூல், பிச்சைபுத்தாகமம், பெட்டி, ஓலைப்பெட்டி. பிடகன் - புத்தன், வைத்தியன். பிடகாரி - விடவைத்தியன். பிடகை - பூந்தட்டு, பூங்கூடை. பிடக்கு - வைத்தியன். பிடங்கம் - பெருவெள்ளரி. பிடங்கு - ஆயுதங்களின் பிற்பக்கம்,சோங்கு. பிடம் - புடம், பெட்டி, மரக்கால். பிடரம் - ஓர் புல், தயிர்கடைதறி,முகப்பரு.பிடரி, பிடர், பிடர்த்தலை - புறங்கழுத்து. பிடர்ப்பிளவை - ஓர் சிலந்தி. பிடவம், பிடவு - ஓர்செடி, முதுகு. பிடவை - புடவை. பிடா - ஒரு மரம். பிடாகன் - ஓர் முநிவன். பிடாந்திரம் - இல்லாப்பழி. பிடாரச்சொல் - நூதனச்சொல்,வாகடச்சொல். பிடாரம் - வைத்திய வாகடம். பிடாரர் - குறவர், வைத்தியர். பிடாரன் - குறவன், பாம்பு பிடிப்போன், வைத்தியன். பிடாரி - காளி, பிடாரிதேவி, பீடாரி. பிடாரிச்சி - குறப்பெண். பிடி - ஏலம், ஒட்டகம், கவரி, யானையிவற்றின் பெண், கரமுட்டி,கிரகிப்பு, கைப்பிடி, கைப்பணம்,நம்பிக்கை, நால்விரல் கொண்டஅளவு, பற்றுகை, பிடியென்னேவல், பெலன் அள்ளு. பிடிகடா - சத்துவாங்கின கடா. பிடிகம் - பிள்ளைக் கைவளை. பிடிகாரர் - வேட்டைக்காரர். பிடிகொடுத்தல் - இடம் கொடுத்தல். பிடிக்கொழுக்கட்டை - ஓர்வகைக்கொழுக்கட்டை. பிடிச்சராவி - கம்மாளர் கருவியினொன்று. பிடிச்சீலை - பிடித்துணி. பிடிதம் - பிச்சை. பிடித்தபிடி - பற்றிக்கொண்ட நிலை,விடாப்பிடி. பிடித்தம் - அபராதம், பிடிக்கும் காசு.வழக்கமின்றிப் போதல், பற்று. பிடித்தல் - அடுப்பு முதலிய பிடித்தல்,உடன்படல், உட்கொள்ளல்,கடல் கப்பாத்துப் பண்ணல், காய்பூ முதலிய பற்றல், சளி முதலியபற்றல், சார்தல், சுமையெடுத்துதல், தெண்டுதல், தைத்தல், நீங்கியெடுத்தல், பட்டை, கோலுதல்,பற்றல், மட்டுக்கட்டுதல், மனதுக்கிணக்குதல், முடித்தல், வசமாக்கல்,வேண்டியதாயிருத்தல். பிடித்திராவி - பிடிச்சராவி. பிழ்டை - பெண்யானைபோல்நடக்கும் நடை. பிடிபடுதல் - அகப்படுதல், மட்டுக்கட்டுதல். பிடிபாடு - அகப்படுதல், செல்விக்கை,சேர்மானம், பட்சம், பிசினித்தனம். பிடிப்பிட்டு - ஓர் பிட்டு. பிடிப்பித்தல் - விதை யடித்தல். பிடிப்பு - சேர்மானம், பிடித்தல், பிடிமானம். பிடிமானம் - அன்பான பற்று, உலோபம், உறுதி, கையிருப்பு, சேர்மானம், தேட்டம். பிடியரிசி - தருமஞ்செய்ய அள்ளிவைக்குமரிசி. பிடியல் - சீலை, நல்லாடை, நிறுதுகில். பிடியன் - கொள்ளத்தக்கது, பெண்யானை. பிடியாள் - அமஞ்சியாள், பலபந்தமாகப் பிடித்த ஆள். பிடிவாதக்காரன் - பிடிவாதி பிடிவாதம் - கொண்டது விடாமை,முரண்டு, வைராக்கியம். பிடிவாதி - கொண்டது விடாதுநிற்போன். பிடுக்கு - பனம்பூ, பீசம். பிடுங்கல், பிடுங்குதல் - கவர்தல்,பறித்தல். பிடை - மூசை. பிடையன் - புடையன். பிட்குதல் - பிள்ளச்செய்தல். பிட்சகன் - இரப்போன்.பிட்சாசரம், பிட்சாடனம் - இரத்தல்இரந்து திரிதல். பிட்சாதானம் - தருமங் கொடுத்தல். பிட்சாபாத்திரம் - இரப்போர் கலம் பிட்சான்னம் - பிச்சைச்சோறு. பிட்சி - இருவாச்சி. பிட்சை - ஊழியம், கூலி, யாசகம்,பிச்சை. பிட்டகம் - பலகாரம், பல்லழுக்கு. பிட்டபம் - உலகம். பிட்டம் - இடித்தமா, ஈயம், சகனம்,சிற்றுண்டி, மாவு. பிட்டர் - ஆடுதின்னாப்பாளை. பிட்டம் - பிட்குதல். பிட்டவத்தி - ஓர் பணிகாரம். பிட்டா - ஆடுதின்னாப்பாளை. பிட்டி - சிறுகூடை. பிட்டிலம் - ஏலம். பிட்டு - சிற்றுண்டி, தினைமா. பிட்டை - அண்டவாதம், விட்டை. பிணக்கம் - பிணங்கல். பிணக்காடு - சுடுகாடு, யுத்தகளம். பிணக்கு - சண்டை, நெருக்கம்,பிணக்கென்னேவல், வனப் பேதம். பிணக்குதல் - கட்டுதல்.பிணங்கல், பிணங்குதல் - குழம்புதல்,சண்டை செய்தல், நெருங்கல்,பின்னல், மாறுபடல், தெற்றுதல்,வெறுத்தல். பிணந்தின்னி - மாமிசபேதி. பிணந்தின்னிப்பிச்சி - ஓர் பிசாசம். பிணப்பறை - சாப்பறை. பிணம் - சவம், பிசாசம். பிணம்வீழ்களம் - சுடுகாடு, போர்க்களம். பிணர் - கோங்கு, சருக்கரை வடிவு,சமமில்லா வடிவு. பிணவறையன் - பருந்தேகி. பிணவு - கவரிமா நாய் பன்றிபுல்வாய் இவற்றின்பெண், பெண்பொது, விலங்கின் பெண். பிணவெடில் - சாவெடில். பிணா - பிணவு. பிணாரம் - பெரிய சடல முள்ளது. பிணி - ஊடை, நூலைப்பிணிக்குதூற்படை, ஓர் பிசாசம், கட்டு,துன்பம், நோய், பிணியென்னேவல். பிணிகை - கச்சி. பிணிக்குறை - பேய்க்குறை. பிணித்தல் - கட்டல். பிணிப்பு - கட்டு. பிணிப்பேய் - பிள்ளைகளை நோய்செய்யும் நோய். பிணிமிதித்தல் - நெய்வார் தொழிலினொன்று. பிணிமுகம் - அன்னம், பறவைப்பொது, மயில், முருகன், யானை.பிணியன், பிணியாளன் -நோயாளன். பிணியாளி - நோயாளி. பிணியோலை - பிணிக்குறைக்குக்கட்டு மட்சரவோலை. பிணை - ஆசை, உடன்பாடு, ஒட்டகம், கவரிமா, கழுதை, குதிரை,நாய், பன்றி, புல்வாய் யானையிவற்றின் பெண், கட்டு, பிணையென்னேவல், பூமாலை, மான்,வதிட்பொருள், இணை.பிணைகாரன், பிணைக்காரன் - பிணைப்பட்டவன். பிணைதல் - இணைதல், கலத்தல். பிணைத்தல் - இணைத்தல்,கட்டல்,தொடுத்தல். பிணைபடுதல், பிணைப்படுதல் - இறுக்கஉத்தரவாதியாயுட்படல்,கட்டுப்பாட்டிற் குள்ளாதல். பிணைப்பு - இணைப்பு. பிணையடித்தல் - பிணைத்தல். பிணையல் - இரணை, கதவு முதலியவற்றிலிடுமிணைப்புச் சலாகை,தொடுவை, பின்னியமாலை,மாலை, இரட்டைக்கை.பிணையாளன், பிணையாளி - உத்தரவாதத்திற் குட்பட்டவன். பிணைவு - இணைவு, புணர்ச்சி. பிண்டகம் - நறுந்தூபம். பிண்டகருமம் - பிதிர் பூசை. பிண்டகன் - பிதிர்ப் பிண்டமிடுவோன். பிண்டகாப்பு - சோறு. பிண்டகோசம் - வாசனைப் பிசின். பிண்டசன் - யாசகன். பிண்டசூத்திரம் - தொகைச் சூத்திரம். பிண்டதன் - உபகாரி, கிட்டினவறவன்,தாபரிப்போன், பிதிர் பிண்டமிடுவோன். பிண்டதானம் - பிண்டமிடுதல். பிண்டபாதம் - யானை. பிண்டபுட்பம் - அசோகு, செவ்வந்தி. பிண்டப்பிரசாதம் - பிதிருணவு. பிண்டப்பிரதானம் - பிதிர் பூசை. பிண்டப்புறனடை - புறனடைகளினொன்று. பிண்டப்பொருள் - குவிக்கப்பட்டபொருள், சடப்பொருள்,தொகுக்கப்பட்ட பொருள். பிண்டம் - இரும்பு, உடல், உண்டை,கந்தவருக்கம், கருப்பம், கவளம்,கற்கண்டு, கால்வட்டத் திருபத்தநான்கினொன்று, கூட்டம், சிவன்,செவ்வந்தி, சோறு, தொகை,பிச்சை, பெலன், போசனம்,மாமிசம், மூலபதம், விலா, வெண்ணெய், பிதிர்களுக்கு இடும்அன்னத்திரளை. பிண்டம்விழுதல் - கருப்பம் விழுதல். பிண்டவைத்தல் - பிதிர்கடன் செய்தல். பிண்டரோபணம் - நாரத்தை. பிண்டலம் - அணை, பாலம். பிண்டவுரை - பொழிப்புரை. பிண்டனம் - பிண்டலம். பிண்டாசயன் - யாசகன். பிண்டாப்பிரம் - ஆலங்கட்டி. பிண்டாயசம் - உருக்கு. பிண்டாரன் - இடையன், யாசகன். பிண்டாரி - கொள்ளைக்காரன். பிண்டி - அசோகமரம், குவிக்கப்பட்டது, கூட்டம், சில்லினுட்சுருள், தினைமா, தொகுக்கப்பட்டது, நென்மா, பிண்டியென்னேவல், பிண்ணாக்கு, புநர்பூசம்,ஒற்றைக்கை, பொருட்கை,குந்திருக்கம், மருது. பிண்டிகரணம் - பிண்டீகரணம். பிண்டிகை - ஆசனம், சில்லினுட்சுருள், மருக்காரை. பிண்டிதகம் - மருக்காரை. பிண்டித்தல் - குவித்தல், தொகுத்தல்,திரளல். பிண்டிபாலம் - எறியாயுதம். பிண்டிலம் - பாலம். பிண்டிலன் - சாதககணிதன். பிண்டிவாலம் - பிண்டிபாலம். பிண்டிவாகனம் - குந்துருக்கம். பிண்டீகரணம் - உண்டையாக்கல். பிண்டீகரம் - தொகுப்பு. பிண்டீதகம் - மருக்கொழுந்து. பிண்டீரம் - சாரமின்மை, மாதளை. பிண்ணாக்கு - எள் முதலியவற்றினரைப்பு. பிண்ணாக்குக்கீரை - ஓர் கீரை. பிண்ணாக்குமாடன் - மதிகேடன். பிதகம் - இடி. பிதரண்டம் - ஊமத்தை. பிதரம் - பிளத்தல். பிதரிசனம் - எட்டி. பிதளை - எண்ணெய்ப் பாத்திரம். பிதற்றல் - பலகாற்பேசல், பேசலாலெழுமொலி, குழறல். பிதற்று - பிதற்றல், பிதற்றென்னேவல்,மழலை. பிதற்றுதல் - பிதற்றல். பிதா - அருகன், கடவுள், சிவன்,தந்தை, பிரமன், பெருநாரை. பிதாநம் - யானைமேற் கவசம். பிதாபிதா - பாட்டன். பிதாமகன் - பாட்டன், பிரமன். பிதாமகை - பாற்பசு. பிதி - இடி. பிதிகம் - பெருங்குரும்பை. பிதிரம் - பிதி. பிதிராசாரம் - பிதிர் பூசை. பிதிராட்சணை - முதுசொம். பிதிரார்ச்சிதம் - பிதிரார்ச்சனை,முன்னோர் ஈட்டிவைத்த பொருள். பிதிருலகம் - பிதிர்பதம். பிதிரெக்கியம் - பிதிர் யாகம். பிதிர் - கதை, காலநுட்பம், தந்தைவழியின்மூதாக்கள், திவலை,கொடி, பராகம், பிதா, பிதிரென்னேவல், பிதிர்கள், போர்க்கதை,யாகம் ஐந்தினொன்று, பொடி.பிதிர்கடன், பிதிர்கருமம் - சிரார்த்தமுதலிய தென்புலத்தோர்கடன். பிதிர்காதகம் - பிதாவைக் கொல்லுகை. பிதிர்காரகன் - சூரியன். பிதிர்காரியம் - பிதிர்கடன். பிதிர்காலம் - சிராத்த புண்ணியகாலம் அஃது பதினெண்ணாழிகை தொடங்கியிருபத்துநாலுநாழிகை பரியந்தம். பிதிர்கானனம் - மயானம். பிதிர்கிரியை - பிதிர்கருமம். பிதிர்க்காதகம் - பிதாக்கொலை. பிதிர்க்கிரகம் - சுடுகாடு. பிதிர்சந்ததி - பிதிர்வழி. பிதிர்சனம் - முற்பிதாக்கள். பிதிர்சாமான்னியர் - முற்பிதாக்கள். பிதிர்சிராத்தம் - பிதாவுடைய சிராத்தம். பிதிர்சுவசிரு - பிதாவின் சகோதரி. பிதிர்தருப்பணம் - சுட்டுவிரலடி,பிதிர்பலி. பிதிர்தல் - உதிர்தல், சிதறல். பிதிர்தானம் - சிராத்த தானங்களினொன்று, ஒன்பதாமிடம். பிதிர்திதி - அமாவாசி. பிதிர்தினம் - பிதிர் நாள். பிதிர்தீர்த்தம் - கொடை, சுட்டு விரலடி. பிதிர்தேவர் - தென்புலத்தார். பிதிர்தைவதம் - மகம். பிதிர்த்தல் - சொரிவித்தல். பிதிர்ஸ்தானாதிபதி - ஒன்பதாமிடத்திற்குரியோன். பிதிர்த்துரோகம் - இறந்த பிதாமுதலோர்க்கு விரோதஞ் செய்தல்,பிதிர்கடமைசெய்யாது விடல். பிதிர்த்துவம் - பிதாத்துவம், பிதிர்தன்மை. பிதிர்த்தேவர் - தென்புலத்தார். பிதிர்நாள் - அமாவாசி, இறந்தோர்நாள், மகநாள். பிதிர்பதம் - தெற்கு. பிதிர்பதி - நமன், பிதிர்கட்குச் செய்யவேண்டியகடமை. பிதிர்பந்து - பிதாவழிச் சுற்றம். பிதிர்பாந்தவன் - பிதாவழிச் சுற்றத்தான். பிதிர்பிண்டம் - இறந்தோர்க்கிடு மமுது. பிதிர்பிதிர் - பாட்டன். பிதிர்புண்ணியகாலம் - பிதிர்காலம். பிதிர்பூசை - பிதிர்கட்குச் செய்யும்பூசை. பிதிர்போசனம் - பிதிருணவு, சிராத்தம். பிதிர்ப்பிரசு - பிதாவின் மாதா,மாலைவெளிச்சம். பிதிர்மந்திரம் - கோரி, பிதிர் தேவதைகட்குரிய மறை. பிதிர்மேதம் - சிராத்தம். பிதிர்யானம் - விமானம். பிதிர்வசதி - பிதிர்வனம். பிதிர்வசனம் - இறந்தோர் வாக்கு. பிதிர்வழி - பிதா வமிசம். பிதிர்வனம் - சுடுகாடு. பிதிர்வனேசரன் - சிவன். பிதிர்வாக்கியபரிபாலனம் - பிதிர்வசனத்தைப் போற்றி நடத்தல். பிதிர்வாக்கியம் - பிதிர் வசனம். பிதிர்விரதம் - பிதிர்கருமம். பிதிர்வு - பிதிர்தல். பிது - இடி. பிதுகம் - நவமணிக்குற்றத்தொன்றுஅது தாமரை நிறம். பிதுக்கம் - பிதுங்கல். பிதுக்கல், பிதுக்குதல் - பிதுங்கச்செய்தல். பிதுங்கல், பிதுங்குதல் - உள்ளடங்காமற் புறப்படல். பிதுரம் - இடி. பிதுரு, பிதுர் - பிதிர். பிதுர்யானம் - பிதுர்லோகப் பிராப்தி. பித்தகம் - நவமணி குற்றத் தொன்றுஅது கிளி நிறம். பித்தகாசம் - ஓர் காசம். பித்தகாமாலை - ஓர் நோய். பித்தகாரகம் - பித்தகாங்கை. பித்தகாலம் - பித்தத்தினதிகார காலம்.பித்தக்கிராணி - ஓர் நோய். பித்தக்கிறுகிறுப்பு - பித்தத்தினால் வருஞ்சுழற்சி. பித்தசரீரம் - பித்தாதிகாரமான தேகம். பித்தசாந்தி - பொன்னாங்காணி.பித்தசிலேட்டுமம், பித்தசிலேற்பனம் - பித்தத்தோடு கலந்த சேட்பம். பித்தசுரம் - ஓர் சுரம். பித்தசூடு - பித்தகாரகம். பித்தசூலை - ஓர் சூலை. பித்தசோகை - ஓர்வித சோகைநோய். பித்தச்சுழற்சி - தலைக் கிறுகிறுப்பு. பித்தநாடி - நடுவிரனாடி. பித்தநீர் - பித்தத்தினாலுண்டான நீர்.பித்தபாண்டு, பித்தபாண்டுரு - காமாலை. பித்தப்பிளப்பு - பித்த வெடிப்பு. பித்தமயக்கம் - கிறுகிறுப்பு, பைத்தியம். பித்தம் - கூத்தின் விகற்பம், மயக்கம்,முப்பிணியி னொன்று. பித்தரோககாரகன் - செவ்வாய். பித்தரோகம் - பித்த நோய். பித்தலம் - ஒளியிடைப்பொருள்,பித்தளை.பித்தலாடகம், பித்தலாட்டம் - ஒன்றைமற்றொன்றாய்க் காட்டல். பித்தல் - அருகு, பிடங்கு, விளிம்பு. பித்தவாயு - உட்டண வாயு. பித்தளை - செம்பும் நாகமுங் கலந்தது. பித்தளைமலை - காளிக்கம். பித்தளையாடகம் - சூது, பித்தலாட்டம். பித்தன் - கள்வன், சிவன், பைத்தியகாரன், வயிரவன்.பித்தாதிகாரம், பித்தாதிக்கம் - பித்தமேலீடு. பித்தாதிசாரம் - உவாந்திப் பிராந்தி. பித்தாந்தலைக்கொட்டி - ஓர் பூடு. பித்தி - ஒதுக்கிடம், சுவர், துண்டு,பங்கு, பிற்றி, வெடிப்பு, சிறுசண்பகம், அறுகு. பித்திகை - சிறுசண்பகம், சுவர், கருமுகை. பித்திசௌரன் - கள்வன். பித்து - ஈரற்பித்து, பித்தம், பைத்தியம். பித்துப்பை - பித்த மிருக்குங் குடர்ப்போர்வை. பித்தேறல் - பித்தவூறல். பித்தை - ஆண் மயிர். பிந்தபாலம் - எறியீட்டி. பிந்திதம் - காஞ்சிரை. பிந்தியகாலம் - சாயங்காலம். பிந்து - புள்ளி, விந்து. பிந்துசாரம் - ஓர் விஷ வைத்திய நூல். பிந்துதல் - தாமதித்தல், பிற்படுதல்.பிபாசிதன், பிபாசு - தாகங் கொண்டவன். பிபாசை - தாகம். பிபீலவாதம் - பரமாணுபிரபஞ்சத்துக்குக் காரணமெனல், பைபீலவாதம். பிபீலி - எறும்பு. பிபீலிகாவாதம் - பிபீலவாதம், மிருகபாஷை. பிபீலிகை - பிபீலி. பிபீலு - ஏலம். பிப்பலகம் - முலைக்கண். பிப்பலம் - அரசு, ஓர் புல், நீர். பிப்பலாசநம் - யானை. பிப்பலாதம் - சூரிய கிரணம். பிப்பலாதன் - ஓரிருடி. பிப்பலி - திப்பிலி. பிப்பலிகம் - தைக்கிறநூல், முலைவட்டம். பிப்பலிகை - அரச மரம். பிப்பலை - திப்பிலிச் செடி. பிம்பகம் - சந்திர சூரியமண்டலம்,கோவைக்கனி. பிம்பம் - அடையாளம், ஓணான்,கமண்டலம், கோவைக்கனி,சந்திர சூரியாதிமண்டலம், பிரதிபிம்பம், யோநி, வடிவம். பிப்பிகை - பல்லழுக்கு. பிப்பிலி - பிப்பலி, ஆனை நெருஞ்சில். பிப்பிலியத்தி - பெருநெருஞ்சில். பிம்பி - கோவை. பிம்பிகை - சந்திர சூரியமண்டலம்,கோவைக்கனி. பியாசுகம் - வேம்பு. பியை - அச்சம். பிய்ச்சல் - பிய்த்தல். பிய்தல் - கிழிதல், பிள்ளுதல். பிய்த்தல் - கிழித்தல், பிட்குதல்,புய்த்தல். பிய்ப்பு - பிய்த்தல். பிர - தோற்றம், மிகுதி, மேன்மை,விரைவு இவைகளைக்காட்டுமுபசருக்கம். பிரகசம் - கொல்லுதல். பிரகசனம் - பெருநகை, மகிழ்ச்சி,வசைப்பாட்டு. பிரகசிதம் - பெருநகை. பிரகஸ்பதி - பிரகற்பதி. பிரகடம் - வெளியரங்கம், வெளிப்படை. பிரகடனம் - விளம்பரம். பிரகடிதம் - வெளிப்படல். பிரகணம் - அசையப்பட்டது,இருப்புத்தண்டம், செப்புப்பாத்திரம், முற்றம். பிரகணேமி - சந்திரன். பிரகண்டம் - புயவென்பு, முன்புயம். பிரகதவாதம், பிரகதவாயு - ஓர் வாயு. பிரகதாரண்ணியம் - உபநிடதமுப்பத்திரண்டி னொன்று. பிரகதி - கத்தரிச்செடி, வழுதுணைச்செடி. பிரகஸ்தம் - விரித்தகை. பிரகமனம் - தருக்கம், தேற்றம். பிரகம்பனம் - அசைவு, காற்று, நாசம். பிரகம்பிதமுகம் - அதிசயக்குறிகாட்டுமுகம். பிரகம்பிதம் - அசைவு. பிரகரணம் - அத்தியாயம், ஆயுதம்,சமயம், பகுதி, பெண் பிள்ளை கள்சாரிவருந்தேர், முகவுரை, யுத்தம்,விடயமுடிவு. பிரகரம் - உதவி, ஓர் வாசனை மரம்,குவியல், சங்கை, பூஞ்செண்டு,வளமை. பிரகாரி - முன்றிற் றோட்டம். பிரகரித்தல் - சங்கரித்தல். பிரகருசம் - மிகுதி, மேன்மை. பிரகலை - கீதவுறுப்பு ளொன்று. பிரகற்பதி - தரும நூல் பதினெட்டினொன்று, வியாழம். பிரகற்பன் - பிரபு. பிரகாசத்தி - அப்பிரகம். பிரகாசம் - ஒளி இஃது வானோர் வரநான்கினொன்று, நகை, பராசியம்பொருமல், போலுந்தன்மை, விரிவு,விளக்கம், வெண்கலம், வெய்யில். பிரகாசனம் - பிரகாசம். பிரகாசன் - ஒளிபுடையோன்,முத்தாத்துமா. பிரகாசாத்துமா - சூரியன். பிரகாசித்தல் - ஒளி செய்தல், பிரபலியமாதல், விளங்குதல். பிரகாண்டம் - கொப்பு, மரக்குற்றி,மேன்மை, அடிமரம். பிரகாண்டரம் - மரம். பிரகாபரணம் - துரத்தல். பிரகாமியம் - அட்டபாக்கியத்தொன்று, நிறைவு. பிரகாரணம் - நன்கொடை. பிரகாரம் - காயப்படுத்தல், கோயின்முதலியவற்றின் வீதி, தன்மை,மதில், வகுப்பு, வழி, விதம், விசேடணம், வித்தியாசம், ஒப்பு பிரகி - கிணறு. பிரகிதம் - அனுப்பியது, ஏவியது,நியமித்தது, வைக்கப்பட்டது. பிரகிருட்டம் - மேலானது. பிரகிருதபிரளயம் - உலக நாசம். பிரகிருதம் - உண்டாக்கப்பட்டது. பிரகிருதி - அரசாட்சிக்குரிய வுறுப்பேழு அஃது அரசன் ஆளுகைசெல்லுமிடம் கோட்டைசேனை நட்பாளர் பொக்கசம்மந்திரி ஆதாரம், இயல்பு,காரணம், பகுதி, பகுதிமொழி,பஞ்ச பூதம், பிரதானம், பிப்பஞ்சமூலமா யிருக்குமாயை, பெண்,மாதா, மிருகம், யோனி, வலி,மறைவு. பிரகீர்ணம் - சாமரம், விசாலம். பிரகுஞ்சம் - ஒரு பலம். பிரகுடி - காட்டு மல்லிகை. பிரகுலம் - யௌவன தேகம். பிரகேலகம் - இனிப்புப் பதார்த்தம். பிரகேலிகை - நொடி.பிரகேட்டம், பிரகோஷ்டம் - தோண்மூலம், முற்றம். பிரகொண்டி - பிரமி. பிரகோபணம் - காத்தல்.பிரகோபம், பிரகோபனம் - கோபம்,மூர்க்கம். பிரகோவம் - கடுங்கோவம்.பிரக்கணம், பிரக்கரணம் - யாழோசை. பிரக்கரம் - போர்க் கவசம்.பிரக்கியம், பிரக்கியாதம் - அறிவு. பிரக்கியாதி - அறிவு, கீர்த்தி. பிரக்கியாதை - ஒழுகல். பிரக்கியானம் - அறிவு. பிரக்கிரமம் - அடிமை, கிரணம்,சமையம், தராசுக்கயிறு, துவக்கம்,நெருக்கிடை, பசுக்கட்டுங் கயிறு,பட்சம், பிடித்தல், புயம், போதல்,மேற்கொள்ளுதல். பிரக்கிராகம் - தராசுக்கயிறு, பிடித்தல். பிரக்கிரீடதம் - கிரீடை. பிரக்கிரீவம் - கிரீடைமனை, சாளரம்,மயிர்நுனி. பிரக்கினை - அறிவு, உணர்வு,பிரஞ்ஞை.பிரஸகந்தனம், பிரஸகந்திகை - பேதிப் பண்ணல், வயிற்றுளைவு. பிரசகம், பிரசகனம் - இலையுணாமிருகம். பிரசங்கம் - உட்படுதல், கூட்டம்,தருக்கதீர்மானம், தெளிவு,நியாயத் தொடர்பு, பற்று,பாயிரம், பிரபலியம், வாக்கியம்,வெளிப் படுத்தல், சொற்பொழிவு. பிரசங்கி - ஆடம்பரகாரன், பிரசங்கியென்னேவல், வியாக்கியானி. பிரசங்கித்தல் - தீர்மானமெடுத்துக்காட்டல், பிரபலியப்படுத்தல்,ஒருவிஷயத்தைக் குறித்து விரிவாய்ப் பேசுதல். பிரசஞ்சனம் - சேர்த்தல், பாவித்தல்,புகழ்ச்சி. பிரசஞ்சை - புகழ்ச்சி. பிரசண்டகதி - அதிவேககமனம். பிரசண்டமாருதம் - பலத்தகாற்று. பிரசண்டம் - பெலன், மிகுதி, மிகுவெப்பம், வலி, வீரம், வேகம். பிரசண்டவாயு - பலத்தகாற்று. பிரசண்டவேகம் - அதிவேகம். பிரசண்டன் - வலியன், வீரன், வேகி. பிரசத்தம் - சதானந்தம், நித்தியம். பிரசத்தி - அருத்தாபத்தி, இசைவுகிருபை, சுத்தம், பற்று, பிரபையுள்ளது, முயற்சி, விம்பிக்கத்தக்கது, புகழ். பிரசபம் - பிரசவம், வலோற்காரம். பிரசமனம் - கொலை, சமாதானமாக்கல். பிரசம் - கள், தேனீ, தேன், தேன்கூடு,வண்டு. பிரசம்சை - புகழ்ச்சி. பிரசயம் - இணைவு, திரட்சி. பிரசரணம் - ஊர்க்கொள்ளையிடல்,சத்துருவைச் சூழல், சுற்றுதல்,சூழப்போதல், பரப்புதல், போதல். பிரசரம் - அம்பு, இடம், கதி, சமயம்,சிறுகொம்பு, திரள், பெரிதாதல்,போர், வழக்கம், வழி, விசாலித்தல்,வேகம், வெளியாதல். பிரசருப்பகன் - அழைக்கப்படாதுவிருந்துக்கு வந்தவன். பிரசருப்பணம் - விசாலித்தல். பிரசலாகம் - பாம்பு, மயிற்றோகை,வில்லாச்சிரமம். பிரசலிதம் - அசைத்தல், திரிதல். பிரசவபந்தனம் - பூந்தண்டு. பிரசவம் - சந்ததி, பலம், பிள்ளைப்பேறு, பிறப்பித்தல், பிறப்பு, புட்பம். பிரசவவேதனை - பிள்ளைப்பேற்றுவருத்தம். பிரசவித்தல் - பிறத்தல், பிள்ளைபெறுதல். பிரசற்பம் - மழலை. பிரசனம் - கருப்பந் தரித்தல். பிரசனிகை - மாதா. பிரசன் - கணவன். பிரசன்னமுகம் - அலர்ந்தமுகம். பிரசன்னம் - காட்சி, தெளிவு, தோற்றப்படுதல், பிறப்பு, பெண்குறி, மகிழ்வு,தூய்மை. பிரசன்னன் - கடவுள், தோற்றப்பட்டவன். பிரசாகிதம் - நீர். பிரசாக்கடை - மதகு. பிரசானம் - ஆளுதல். பிரசாட்சயம் - சனவழிவு. பிரசாதகை - கோலஞ் செய்வாள்,வன்னெல். பிரசாதம் - அமுதம், அருள், கருப்பமுண்டாக்கு மருந்து, களங்கமின்மை, கூட்டம், சுகசீவியம்,தெளிவு, நிருமாலி யம், நிவேதனப்பொருள், பட்சம், பயன், பவித்திரம்,பிரதிஷ்டை பிரார்த்தனை, பிள்ளைப்பேறு, பேறு, மனவமைதி. பிரசாதருமம் - புத்திரதருமம். பிரசாதனம் - அலங்கரிப்பு, சீப்பு,சுத்தம், சோறு, மனத்திருத்தி. பிரசாதனம் - வெள்ளி. பிரசாதி - புணர்ச்சி, பிரசாபகன் - அரசன். பிரசாபதி - அரசன், ஆண்குறி,சூரியன், தீ, பிதா, பிரமன், மருமகன்.பிரசாபத்தம், பிரசாபத்தியம் - பெண்சுற்றமு மாண்சுற்றமு மொத்துத்தீமுன்னர்க் கொடுக்குமணம். பிரசாபன் - அரசன். பிரசாமம் - சமாதானம், மனவமைதி. பிரசாரணம் - சத்துருவைச் சூழ்தல்,விசாரித்தல், விரித்தல், தருமம். பிரசாரணை - பிரஸ்தாபம். பிரசாரம் - நடை, பரம்புதல், போதல்,வழக்கம், வேங்கை மரம், பிராயக்கிழங்கு. பிரசாரி - வாயுலோகம். பிரசாலம் - வீணாத்தண்டு. பிரசாவதி - சகோதரன் மனைவி,மாதா. பிரசாவிருத்தி - சனப்பெருக்கம்,புத்திரவிருத்தி. பிரசிதம் - சிதல். பிரசித்தப்பத்திரிகை - அறிக்கைப்பத்திரிகை. பிரசித்தம் - அறிவிப்பு, கீர்த்தி, பராசியம், விளக்கம். பிரசித்தி - புகழ். பிரசிரயம் - உபசரணை, உருக்கம்,சங்கை, நட்பு. பிரசிரவணம் - அருவி, சிறுநீர், நீர்நிலை, பொசித்தல், மலைமேற்குளம், வேர்வை. பிரசிருதி - அவையார்த்தம். பிரசினதூதி - நொடி.பிரசினம், பிரசினை - கேள்வி. பிரசீவனம் - சம்பாதிக்கை, சீவனம். பிரசீனம் - காற்று. பிரசுரபுருடன் - சோரன். பிரசுரம் - அறிவிப்பு, மிகுதி, வெளியிடுகை. பிரசுரன் - சுக்கிரன். பிரசுரீகரணம் - சேர்த்தல். பிரசுருதம் - நீர்முதலிய பாய்தல். பிரசுவாளம் - பேரொலி. பிரசூ - ஓர்கொடி, பெண்குதிரை,மாதா, வாழை. பிரசூதம் - பிள்ளை பெறுதல். பிரசூதன் - சாரதி. பிரசூதவாயு - கருப்பவாயு. பிரசூதி - பிள்ளைப்பேறு. பிரசூதிகாலம் - பேறுகாலம். பிரசூதிகாவாயு - கருப்பவாயு. பிரசூதிகை - பிள்ளை பெற்றிருத்தல். பிரசூதிசம் - வியாகுலம். பிரசூதியாதல் - பிரவேசமாதல். பிரசூதிவேதை - கருப்பவேதனை. பிரசூதிவைராக்கியம் - பிள்ளைபேற்றினால் வந்த தீர்மானம். பிரசூசை - பிள்ளைபெற்றிருப்பாள். பிரசூனம் - கனி, புட்பம். பிரசேகம் - நனைத்தல், பொசிதல். பிரசேச்சுவரன் - அரசன். பிரசேதிரு - சாரதி. பிரசேலகம் - குதிரை. பிரசை - குடி, சனம், பிள்ளை, சந்ததி. பிரசோதனம் - அனுப்புதல், சொல்லுதல், முறை. பிரசோதினி - கண்டங்கத்திரி.பிரசோற்பதி, பிரசோற்பத்தி - ஐந்தாவதாண்டு. பிரச்சனை - உணர்ச்சி, கேட்டல். பிரச்சாதனம் - மூடி, வெளிப் புடைவை. பிரச்சாது - பின்பு. பிரச்சி - மாஞ்சில். பிரச்சினை - பிரசினை. பிரச்சுவாலியம் - கொளுத்தல். பிரஞத்துவம் - அறிவு, உணர்ச்சி. பிரஞ்ஞமானம் - அறிஞர்க்கிடுமுபசரணை. பிரஞ்ஞம் - அறிவு கேடு. பிரஞ்ஞன் - அறிஞன், சமர்த்தன்,பண்டிதன். பிரஞ்ஞாபங்கம் - அறிவு கேடு. பிரஞ்ஞானம் - அடையாளம், அறிவு. பிரஞ்ஞை - அறிவு, அறிவுடையாள்,சரச்சுவதி. பிரடை - முறுக்காணி.பிரட்சாளகம், பிரட்சாளனம், பிரட்சாளியம் - கழுவுதல். பிரஷ்டம் - தள்ளுபடி. பிரட்டம் - ஆதி, தள்ளுபடி, தீங்கானது,பொரித்தது. பிரஷ்டன் - ஆதிக்கன், துற்குணன்,பதிதன், வழுவினவன். பிரட்டானம் - திதி விசேடம். பிரட்டு - புரட்டு. பிரட்டுக்கல் - இராச வருத்தனக்கல். பிரட்டை - ஓர் செடி. பிரணம் - பழமை. பிரணதன் - வணக்கமுள்ளவன். பிரணயகலகம் - கலவியிற் பிணங்கல். பிரணயமானம் - தலைவனுக்குந்தலைவிக்கு நடக்கு நேய விவாதம். பிரணயம் - அன்பு, கீழ்ப்படிதல்,கலவி, கேட்டல், நம்பிக்கை, பழக்கம், பிரதி, பிரார்த்தனை, மோக்கம். பிரணயனம் - கொடுத்தல், நடத்தல்,பரப்புதல். பிரணருத்தினம் - ஆடல். பிரணவம் - ஓங்காரம், ஓர் பறை. பிரணவரூபம் - கடவுள். பிரணாசம் - அழிவு. பிரணாதம் - காதுநோயி னொன்று, பேரொலி. பிரணாயம் - இணங்காமை, நிதார்த்தம், வெறுப்பு. பிரணாலம் - மதகு. பிரணி - தானம், தியானம், முயற்சி,வாயில். பிரணிதி - ஒற்றன், கேட்டல், தோழன். பிரணிநாதம் - பேரொலி.பிரணிபதனம், பிரணிபாதம் - வணங்கல். பிரணீதம் - உண்டாக்கப்பட்டது. பிரண்டை - பரண்டை. பிரதகம் - முன்பு. பிரதக்கணம் - வலம் வருதல். பிரதக்கு - தனிமை. பிரதட்சணம் - பிரதக்கணம். பிரதமகற்பிகன் - பாலமாணாக்கன். பிரதமகாலம் - பூருவ காலம், விடியற்காலம். பிரதமசிருட்டி - பூருவ சிருட்டி. பிரதமம் - ஆரம்பம், முதன்மை,விசேஷித்தது. பிரதமை - ஒன்று, கடுக்காய், முதல்முதற்றிதி. பிரதம் - கொடை, பிரசித்தம், புகழ். பிரதரம் - அம்பு, சுருக்கு, சுழலல்,பிளப்பு, விறைப்பு. பிரதலம் - அம்பு, பாதலம்.பிரதனம், பிரதனை - கிழித்தல், நீளுதல், படையிலோர்தொகை அஃதுவாகினி மூன்று கொண் டது,புராதனம், யுத்தம், விரித்தல். பிரதன் - ஈகையாளன். பிரதாபதி - பாண்டு. பிரதாபம் - உயர்ச்சி, கீர்த்தி, பிரகாசம்,பெருமை, மகிமை, வீரம், வெப்பம். பிரதாபனம் - நரகம். பிரதாரகம் - எத்து. பிரதாரம் - கடத்தல். பிரதாவனம் - காற்று. பிரதானதாது - சுக்கிலம். பிரதானம் - அங்குசம், கடவுள்,கொடை, சுபாவம், புத்தி, மூலம்,விசேடம், வீம்பு. பிரதானன் - முதன் மந்திரி, யானைப்பாகன். பிரதானி - அதிகாரி, பொக்கிஷக்காரன். பிரதானிகம் - அதிகாரம். பிரதானியம் - பிரதானம். பிரதி - அற்பம், எதிர், எழுதிச்சேர்த்தல், தடை, பகுதி, பதில்,மூலம், விகாதம், மாறு. பிரதிகதி - அதைப்பு.பிரதிகஸ்தகன், பிரதிகஸ்தன் - பதிலாள். பிரதிகம் - அவல், குழந்தை. பிரதிகரணம் - வெறுத்தல். பிரதிகருமம் - அலங்கரித்தல், பதிற்கிரியை, மாற்று. பிரதிகாசம் - பரிகாசம். பிரதிகாதம் - அதைத்தல், தடுத்தல், மோதுதல். பிரதிகாதனம் - கொல்லல். பிரதிகாந்தி - பிரதி விம்பம். பிரதிகாயம் - அடையாளம், குறிப்பு. பிரதிகாரகன் - வஞ்சகன், வாயில்காப்போன். பிரதிகாரணம் - உட்படுதல். பிரதிகாரம் - அணாப்பு, கதவு, பதில்,பழி வாங்குதல். பிரதிகாரன் - வாயிற்காப்போன். பிரதிகிரகணம் - பதில்வாங்கல். பிரதிக்கிரகம் - ஏற்றல். பிரதிகிருதி - பதில் செய்தல், பிரதிகாயம், பிரதிபிம்பம். பிரதிகூலம் - எதிர், கைகூடாமை,மாறுபாடு. பிரதிகூலியம் - எதிரிடை. பிரதிக்கியாதம் - சம்மதித்தல். பிரதிக்கினம் - சரீரம். பிரதிக்கினை - அத்தாட்சி, அறிக்கையிடுதல், சம்மதி, நேர்த்திக்கடன்,பொருத்தனை, வேண்டியது,மேற்கோள். பிரதிசங்காரம் - அழித்தல், குறைத்தல். பிரதிசங்கை - பயம். பிரதிசத்தம் - எதிரொலி. பிரதிசந்தானம் - இச்சை யடக்கம். பிரதிசமாதானம் - மாற்று மருந்து. பிரதிசம் - கோணதிசை. பிரதிசரம் - கைக்கடகம், படைவகுப்பு, மாலை. பிரதிசரன் - வேலைக்காரன். பிரதிசருக்கம் - சிருட்டிப்பு,புராணத்தினோருறுப்பு. பிரதிசாகிரம் - எச்சரிக்கை. பிரதிசாந்தானிகன் - புலவன். பிரதிசாபம் - எதிர்ச்சபிப்பு, நிதானித்தல். பிரதிசாயை - சுரூபம், நிழல் பிரதிபிம்பம். பிரதிசாரணம் - இரணங்கட்டல்,தள்ளல். பிரதிசிகுவை - உண்ணா. பிரதிசிந்தனம் - ஆலோசித்தல். பிரதிசிரயம் - அடைக்கலவிடம்,இருப்பிடம், கூட்டம், யாக சாலை.பிரதிசிரவணம், பிரதிசிரவம் - சம்மதித்தல். பிரதிசீரை - திரைப்பாடம். பிரதிசூரியகம் - சூரிய மண்டலம்,பல்லி. பிரதிசூரியம் - பல்லி. பிரதிசூரியன் - சூரியப் பிரதிபிம்பம். பிரதிதேசம் - எதிரிடை. பிரதிஞ்ஞாபத்திரம் - உறுதிச் சீட்டு. பிரதிஞ்ஞாவிரோதம் - எதிர் நியாயம். பிரதிஞ்ஞானம் -சம்மதி. பிரதிஞ்ஞேயன் - புகழ்வோன். பிரதிஞ்ஞை - பிரதிக்கினை. பிரதிட்டம் - ஸ்தாபனம். பிரதிட்டாகலை - பஞ்சகலையி னொன்று. பிரதிட்டாபனம் - நிறுத்துதல். பிரதிஷ்டாவான் - கீர்த்தி யுள்ளோன். பிரதிட்டை, பிரதிஷ்டை - இடம்,எல்லை, ஓர் பா, கீர்த்தி, சடங்குமுடித்தல், தாபனம், நிறைவேற்றல், நேர்தல், பூமி. பிரதிதன் - அறிவாளி. பிரதிதாரணம் - யுத்தம். பிரதிதானம் - கைம்மாறு, திரும்பக்கொடுத்தல், பொருண் மாற்றுதல். பிரதிதி - கீர்த்தி. பிரதிதிசம் - சகல இடமும். பிரதிதினம் - நாடோறும். பிரதிதுரை - பதிற்றுரை. பிரதிதுவந்துவம் - எதிரிடை,விரோதம். பிரதிதுவனி - எதிரொலி. பிரதிதேவன் - சூரியன், நாள். பிரதிதொனி - எதிரொலி. பிரதித்தல் - உருவு காட்டுதல், தோற்றுதல். பிரதிநாதம் - எதிரொலி. பிரதிநிசம் - இரவோடிரா. பிரதிநிதி - உருநாட்டு, பிரதிபிம்பம்,ஒத்தவடிவம், சமமாக வைக்கப்பட்டது. பிரதிநியாயம் - பதில் நியாயம். பிரதிபட்சன் - எதிரி. பிரதிபதகன் - எதிரிடைகாரன். பிரதிபதம் - அடிக்கடி, பரியாயச்சொல். பிரதிபதூரியம் - உவகைப்பறை. பிரதிபத்தி - அடக்குதல், அதிகரித்தல், ஏய்த்தல், கீர்த்தி, சம்பாதித்தல், சம்மதித்தல், நன்னடை,நிதானிப்பு, நோக்கம், பாவிப்பு,மிக நம்பிக்கை. பிரதிபத்திபடகம் - பெரும்பறை. பிரதிபத்திரம் - மறுமொழிச் சீட்டு.பிரதிபந்தகம், பிரதிபந்தம் - கட்டுப்பாடு, தடை. பிரதிபம் - முறடு.பிரதிபலநம், பிரதிபலம் - பிரதிபிம்பம். பிரதிபன்னம் - அறியப்படுதல். பிரதிபாகம் - பங்கு. பிரதிபாதகம் - செயற்படுத்துவது. பிரதிபாதனம் - ஈகை, உலகநடை,செய்துமுடித்தல், நிதானித்தல்,பிறப்பித்தல், முடித்தல். பிரதிபாதுகம் - தெளியப்பண்ணல்,நிதானித்தல். பிரதிபாலகன் - அரசன், தற்காப்போன். பிரதிபாவனம் - காத்தல், பழகுதல். பிரதிபாவியம் - அடகு. பிரதிபானம் - தைரியம், பிரபை. பிரதிபிம்பம் - பிரதிவிம்பம், அதாவதுஎதிருருவம். பிரதிபுருடன் - ஒவ்வொருவன். பிரதிபூசனம் - வணக்கம். பிரதிபேதனம் - பிரித்தல், வெட்டுதல். பிரதிபை - அறிவு, கூர்மை, பிரகாசம்,பிரதிகாந்தி. பிரதிபோதம் - கற்பித்தல். பிரதிமண்டலம் - சுற்றளவு, ஒத்தமண்டலம். பிரதிமதை - பிம்பம். பிரதிமாலை - ஈற்றெழுத்துக் கவி. பிரதிமானம் - சாரூபம், யானைக்கொம்பினடு, யானை நெற்றி. பிரதிமூர்த்தி - தோற்றம், பாவனை,பெயர்த் தெழுதுகை. பிரதிமை - விக்கிரகம், ஒத்த வடிவம். பிரதியத்தினம் - எதிரிடை, சிறைப்படுத்தல், பழி வாங்குதல், விருப்பம். பிரதியாதனை - சாயல். பிரதியுத்தரம் - பிரத்தியுத்தரம். பிரதியுபசாரம் - பிரத்தியுபகாரம். பிரதியெழுதல் - ஒன்றைப்பார்த்ததுபோலெழுதல். பிரதியோகம் - எதிரிடை, கூட்டம். பிரதியோகி - எதிரி, கூட்டாளி,மறுதலை, எதிர்மறை. பிரதிராத்திரம் - இராவுக்கிரா. பிரதிரூபம் - பிரதிமை. பிரதிரோதகன் - எதிரி, கள்வன். பிரதிரோதம் - எதிரிடை, களவு,மறைத்தல், முற்றிக்கை போடுதல். பிரதிரோதி - திருடன். பிரதிலம்பம் - இலாபம்.பிரதிலோமகன், பிரதிலோமன் - இழிபுயர் பாண்பெண்ணிற் பிறந்தோன். பிரதிவசதம் - கிராமம். பிரதிவசனம் - இணக்கம், எதிரொலி,மறுமொழி. பிரதிவாக்கியம் - மறுமொழி. பிரதிவாசரம் - நாளுக்கு நாள். பிரதிவாணி - பிரதிவாக்கியம். பிரதிவாதம் - எதிர்வாதம். பிரதிவாதி - எதிர்வாதி. பிரதிவாதிப்பு - மறுமொழி. பிரதிவாபம் - மருந்தனுபானம். பிரதிவிம்பம் - கண்ணாடி முதலியவற்றிற்றோற்றும் போலி யுரு. பிரதிவிம்பர் - உபதேவர். பிரதிவிம்பித்தல் - போலியுறுத் தோற் றுதல். பிரதிவேசம் - அயல்வீடு. பிரதீகம் - அவயவம், பங்கு, பிண்டம். பிரதீகாரம் - இணக்கம், கதவு, சீர்திருத்தல், பழிவாங்கல், மருந்துசெய்தல்.பிரதீசி, பிரதீசீனம் - மேற்கு. பிரதீதம் - கீர்த்தி, சங்கை, சந்தோஷம். பிரதீதி - அறிவு, கீர்த்தி, விருப்பம். பிரதீபம் - எதிர், ஒப்பிடல், வக்கிரித்தல். பிரதீபவசனம் - எதிரிடை, முகங்கோடாது மறுமொழி கொடுத்தல் பிரதீபனம் - ஏவுதல், ஓர் மருந்து. பிரதீபாலங்காரம் - எதிர் நிலையணி. பிரதீரம் - கரை. பிரதீவாவம் - அனுபானஞ் சேர்த்தல்,உபத்திரவம், உலோக நீற்றல். பிரதிவேசம் - அயல். பிரதுகம் - அலகுள்ள பட்சி. பிரதெட்சணம் - பிரதட்சணம். பிரதேகம் - அபிஷேகம். பிரதேசம் - இடம், பிறதேசம். பிரதேசனம் - காணிக்கை, வெகுமதி,வெளிப்பாடு.பிரதேசனி, பிரதேசினி - முன் விரல். பிரதை - அருச்சுனன்தாய், ஈகை,கீர்த்தி, குந்திதேவி.பிரதோஷகாலம், பிரதோஷ புண்ணிய காலம் - திரயோதசித் திதியிற்பொழுதத்தமிக்க முன் மூன்றேமுக்கானாழிகை தொடங்கி அத்தமித்து மூன்றே முக்கானாழிகைபரியந்தமுள்ள நேரம்.பிரதோடம், பிரதோஷம் - அத்தமனத்துக்கு முன்னும் பின்னும் மூன்றேமுக்கால் நாழிகை, இராவின்முதற்சாமம், திரயோதசி விரதம்,மாலைக்காலம். பிரதோதம் - அங்குசம். பிரஸ்தம் - ஓரளவு, மலைமேற் பரந்ததலம், வயிரமானது விசாலித்தல். பிரஸ்தரம் - இரத்தினம், ஓரிசை, கல்,படுக்கை. பிரத்தல் - எழுத்திலா ஒலி. பிரஸ்தாபம் - அத்தியாயம், அறிவித்தல், சமயம், புகழ்ச்சி, வெளிப்படுத்தல், குறித்துச் சொல்லுகை. பிரத்தாபம் - அவசரம், பகிரங்கம். பிரஸ்தாபனம் - அனுப்பல், நியமித்தல். பிரஸ்தாபனை - கட்டியம், துவக்கம்,வெளிப்படுத்தல். பிரஸ்தாபித்தல் - குறித்துச் சொல்லுதல். பிரஸ்தாரம் - காடு, படுக்கை, பிரத்தாரம், புட்ப சயனம் பிரத்தாரம் - தாளப்பிரமாணம்பத்தினொன்று. பிரஸ்தாவனை - கட்டியம், துவக்கம். பிரத்திக்கினை - பிரதிக்கினை. பிரத்திட்சம் - பிரத்தியட்சம். பிரத்திதம் - கேட்கும் பொருள். பிரத்தியக்கதரிசனம் - கண்ணாற்கண்டகாட்சி. பிரத்தியக்கப்பிரமாணம் - பிரத்தியட்சப்பிரமாணம். பிரத்தியக்கம் - காட்சியளவை, கண்கூடு. பிரத்தியக்காசாபதி - வருணன். பிரத்தியக்கு - பிரிவு, மேற்கு, வேறு. பிரத்தியங்கம் - உபாங்கம், பரதவுறுப்புளொன்று, பிரதியுறுப்பு,மூக்கு முதலியவுறுப்புகள். பிரத்தியங்கிரி - ஓர் தேவதை. பிரத்தியட்சப்பிரமாணம் - ஓரளவைஅஃது கண்ணாலேகண்டு நிச்சயிப்பு. பிரத்தியட்சம் - காணத்தக்கது. பிரத்தியட்சாபாசம் - காட்சிப்பிரமாணம். பிரத்தியதநம் - உணவு. பிரத்தியநீகன் - சத்துரு. பிரத்தியபகாரம் - தீமைக்குத்தீமைசரிக்கட்டுதல். பிரத்தியபதம் - விகுதி. பிரத்தியபம் - அறிவு, ஆணை, கீர்த்தி,தியானம், நம்பிக்கை, நிச்சயம்,நோக்கம் விகுதி. பிரத்தியபாயம் - காணத்தக்கது. பிரத்தியம் - குறுக்கு, விகுதி. பிரத்தியயம் - சமஸ்கிருத விகுதி,விகுதி. பிரத்தியருத்தம் - எதிரிடை, மறுமொழி. பிரத்தியவசாநம் - போசனம். பிரத்தியவசிதம் - பட்சித்தல். பிரத்தியவாயம் - எதிர், குற்றம், நம்பி,மோசம்போதல், பாவம். பிரத்தியவியோகம் - எதிர் வழக்கு. பிரத்தியாகரணம் - புலனடக்கல். பிரத்தியாகாரம் - இருந்துவாங்கல்,உபாதியை நீக்கி யுண்ணோக்கல்இஃதுஅட்டயோகத் தொன்று,எடுத்துக் கொள்ளுதல், சுருக்கம்,படையுறைபற்றுதல். பிரத்தியாக்கியானம் - தள்ளல்,தள்ளுதல், நிந்தை, மறுத்தல். பிரத்தியாசத்தி - கலப்பு. பிரத்தியாசரம் - சேனை. பிரத்தியாசாரம் - அணிவகுப்பு,சேனை. பிரத்தியாசேதம் - அசரீரி வார்த்தை,அறிவித்தல், எச்சரித்தல், தள்ளுதல், மறுத்தல். பிரத்தியாசை - நம்பிக்கை. பிரத்தியாபாசம் - ஓரளவை. பிரத்தியாபீடம் - வலக்கான் முன்வைத்திடக்கான் மண்டலித்துநிற்குநிலை.பிரத்தியுத்தரம், பிரத்தியுத்தாரம் - கைம்மாறு, மறுமொழி. பிரத்தியுத்தானம் - உபசரித்தல். பிரத்தியுத்தி - மறுமொழி. பிரத்தியுபகாரம் - கைம்மாறு. பிரத்தியுற்கம் - யுத்த நிமித்தம். பிரத்தியுற்பன்னம் - ஆயத்தம்,பெருக்கம். பிரத்தியூகம் - தடை.பிரத்தியூசன், பிரத்தியூஷன் - அட்டவசுக்களி லொருவன். பிரத்தியேகம் - தனிமை, பிற நீங்கல். பிரத்தியேகராச்சியம் - தனி யரசு. பிரத்தியோகம் - மனவேற்றுமை, நடு. பிரத்தியோகார்த்தம் - யுத்த நிமித்தம். பிரத்தியோதம் - கிரணம், பிரபை பிரத்தியோதனன் - சூரியன். பிரத்துலம் - பருத்தல். பிரத்துவமிசாபாவம் - அழிவு, ஊறுபட்டபாவம். பிரத்தொங்கிசம் - தீமைக்குத்தீமைசரிக்கட்டல், பழி வாங்குகை. பிரநிகாதனம் - கொலை. பிரந்தயோகம் - கூட்டம். பிரந்தாகாரம் - அதிசயம். பிரந்தாரம் - அழகு. பிரந்திட்டம் - மிகு கூட்டம். பிரந்தை - சமூகம். பிரபஞ்சக்கட்டு - இலௌகிக மயக்கப்பெருக்கம். பிரபஞ்சசாகரம் - இலௌகிக மயக்கம். பிரபஞ்சபந்தம் - பிரபஞ்சக்கட்டு. பிரபஞ்சபாசம் - இலௌகிகபந்தம். பிரபஞ்சமாயை - இலௌகிக மாயை. பிரபஞ்சமூலம் - பிரபஞ்ச காரணமான மாயை, மூலப்பிரகிருதி. பிரபஞ்சம் - உலகம், எத்து, கூட்டம்,சேனை, பகிடி, மாயை, மாறு,விசாலம். பிரபஞ்சலட்சணம் - அசத்து, சடம்,துரக்கம். பிரபஞ்சவாதனை - பிரபஞ்ச வாதனை,இலௌகிகாப்பியாசம். பிரபஞ்சவாழ்வு - இலௌகிக சம்பாஷணை, இலௌகிக வாழ்க்கை. பிரபஞ்சவியாபாரம் - இலளகிககாரியம். பிரபஞ்சவிருத்தி - உலகச்செய்கை,மாயாகாரிய விருத்திப்பு. பிரபஞ்சவிலாசம் - மாயாகாரியசம்பிரமம். பிரபஞ்சவைராக்கியம் - உலக வெறுப்பு. பிரபஞ்சனன் - காற்று. பிரபஞ்சானுக்கிரகம் - உலக தயை. பிரபதனம் - அடைந்துகொண்டது,அழிவு, மரணம், விழுதல். பிரபதன் - மகன். பிரபதை - மகள். பிரபந்தகற்பனை - கட்டுக்கதை. பிரபந்தம் - கதை, தொடர்பு, பாமாலை,நூல். பிரபந்நன் - சரணடைந்தவன். பிரபம் - தண்ணீர்ப்பந்தர். பிரபலம் - கீர்த்தி, தளிர், பெலன்,முக்கியம், மிகுவலி. பிரபலன் - சௌரியவான், பேர்போனவன். பிரபலியம் - கீர்த்தி, முக்கியம். பிரபவ - முதலாண்டு. பிரபவம் - ஆதாரம், காரணம், பிறப்பு,பெலன். பிரபன்னம் - அடைதல், ஒதுங்குதல்,சேருதல். பிரபா - பந்தல், பிரமம். பிரபாகரம் - ஆறு சாத்திரத் தொன்று. பிரபாகரன் - அக்கினி, ஓர் நூலாசிரியன், சந்திரன், சமுத்திரம்,சூரியன். பிரபாகீடம் - மின்மினி. பிரபாசன் - அட்டவசுக்களி லொருவன். பிரபானி - உள்ளங்கை. பிரபாதம் - கரை, செங்குத்து, தெருமலையின் வீழருவி, வைகறை. பிரபாதசமயம் - விடியற் காலம். பிரபாதிகம் - மயில். பிரபாலன் - மாணாக்கன். பிரபாவம் - ஒளி, கீர்த்தி, சமனாக்கல்,பெலன், மகத்துவம், மகிமை,வன்மை. பிரபாவனம் - கொல்லை. பிரபானம் - பிரகாசம். பிரபித்தம் - கிடைக்கும் பொருள். பிரபு - அதிகாரி, இரதம், உயர் குலத்தவன், கொடையாளி, தலைவன்,தொனி, பெருமையிற் சிறந்தோன்,வல்லவன், விட்டுணு, ஐந்தாமிடம், செல்வன். பிரபுதத்துவம் - ஆளுகை, பெருந்தன்மை. பிரபுதை - பெருமை, மகத்துவம். பிரபுத்தனம் - மேம்பாடு. பிரபுத்துவம் - பிரபு தத்துவம், மகத்துவம். பிரபுமோடி - மேம்பாடான நடை. பிரபூரணம் - அம்பு, நாணேற்றல். பிரபுலிங்கலீலை - ஓர் வீரசைவ நூல்,துறைமங்கலம் சிவப்பிரகாசரியற்றியது. பிரபேதம் - விதம். பிரபை - ஒளி, குபேர னகரம், தண்ணீர்ப்பந்தல், திருவாசி, துர்க்கை,தெளிவு. பிரபோதசந்திரோதயம் - ஓர் நூல். பிரபோதம் - அறிவு, சுறுசுறுப்பு,தெளிதல், புத்தி, துயிலின்மை. பிரபோதனம் - எழுப்புதல், படிப்பித்தல். பிரஸபோடனம் - அலர்தல், குல்லம்,புடைத்தநெல், வீங்குதல். பிரப்பங்கூடை - ஓர் கூடை, பிரம்பினாற் செய்த கூடை. பிரப்பங்கோரை - ஓர் புல். பிரப்பு - ஒரு கலத்திற் பல்லுணாப்பரப்புவது, பேருண்டி.பிரமகத்தி, பிரமகத்திதோஷம், பிரமகத்தியாதோஷம், பிரமகத்தியை -பிராமணரைக் கொன்ற தோஷம்,பிராமணக் கொலை. பிரமகற்பம் - பிரமன் வாழ்நாள் அஃதுஆயிரங்கோடாகோடி வருடம். பிரமகன்னிகை - சரச்சுவதி, பிராமணப் பெண். பிரமகாதகன் - பிராமணகொலைபாதகன். பிரமகாயத்திரி - ஓர் மந்திரம். பிரமகீதை - ஒரு வருடநூல், தமிழில்செய்தவர் தத்துவராயர். பிரமகுலம் - பிராமணசாதி. பிரமகைவர்த்தம் - பதினெண் புராணத்தொன்று. பிரமக்கியானம் - பிரம ஞானம். பிரமக்கியானி - ஓர் ஞானி. பிரமக்கிரந்தி - ஓர் முடிச்சு. பிரமக்கொலை - பிராமணக் கொலை. பிரமசடங்கம் - ஆறங்கத்தோடுசெய்யு மோர் செபம். பிரமசரியம், பிரமசரியவிரதம் - கற்றுவிரதங் காத்து விவாகமின்றியிருக்கு நிலை இஃது ஆச்சிரமநான்கினொன்று. பிரமசாபாலம் - உபநிடத முப்பத்திரண்டி னொன்று. பிரமசாரி - பிரமசரிய மனுட்டிப்போன், வீடுமன், வேதம் படிக்குமாணாக்கன். பிரமசாரிசந்நியாசி - பிரமசரியநிலையிலிருந்து சந்நியாசத்திற்புகுவோன். பிரபசாரித்துவம் - பிரமசரிய நிலை. பிரமசித்தி - தேவஞான சித்தி. பிரமசூத்திரம் - ஓர் நூல், முப்புரிநூல், வேதாந்த சூத்திரம். பிரமசைதன்னியம் - கடவுள், மூலகாரணம்.பிரபாதம் பிரமஞானம் - கடவுளை யறியு ஞானம். பிரமஞானி - தேவஞான முள்ளோன். பிரமஞ்ஞம் - தேவவறிவு. பிரமஞ்ஞானம் - தேவ ஞானம். பிரமட்டை - பேய்மிரட்டி. பிரமணம் - சுழற்சி, திரிதல். பிரமதகணம் - கைலாயத்தி லிருக்கும்பக்த சமூகம். பிரமதண்டம் - குருக்கு, பிராமணர்க்குரிய கோல். பிரமதண்டு - ஓர் பூடு, பிரமதண்டம்,குருக்கு. பிரமதத்துவம் - தேவத்தன்மை,தேவவறிவு, மெய்ஞ்ஞானம். பிரமதம் - சந்தோசம், வெறி. பிரமதனம் - கடைதல், கொலைவருத்தல். பிரமதாகானனம் - நந்தனவனம்,பிரமதாவனம். பிரமதாதிபன் - சிவன். பிரமதாலயம் - நாகம். பிரமதாவனம் - நந்தனவனம். பிரமதானம் - வேதபோதனை. பிரமதிதம் - கடைதயிர். பிரமதேவன் - பிரமா. பிரமதை - உரூபவதி. பிரமத்தம் - அசட்டை, பிழை, மதிமயக்கு, வெறி. பிரமத்தி - பிரமகத்தி. பிரமத்துவம் - பிரமதத்துவம். பிரமநாள் - உரோகணி. பிரமநிருவாணம் - கடவுளுடனொன்றியிருத்தல்.பிரமபதம், பிரமபதவி - பிரமலோகம்.பிரமபத்திரம், பிரமபத்திரி - புகையிலை. பிரமபந்து - பிராமணன். பிரமபிங்கை - வெள்ளி. பிரமபந்து - உபநிடத முப்பத் திரண்டினொன்று பிரமபுத்திரம் - ஓர் நதி. பிரமபுத்திரி - சரஸ்வதி, சரஸ்வதியாறு. பிரமபுரம் - சீகாழிப்பதி. பிரமபுராணம் - பிருமபிராணம். பிரமபூதி - சந்தி வெளிச்சம். பிரமப்பிரளயம் - பிருமப் பிரளயம். பிரமமணம் - பிரமசாரிக்குக் கன்னியைத்தீ முன்னர்க் கொடுக்குமணம் அஃது எண்வகை மணத்தொன்று. பிரமமரிசம் - வெள்ளை மிளகு. பிரமமுனி - பிரம ரிஷி. பிரமமூலி - பிரமி. பிரமம் - அக்கினி, அட்டாதசப்புராணத்தொன்று, ஆதிகார ணம்,ஆதித்தன், இருடி, உபநிடதமுப்பத்திரண்டினொன்று ,கடவுள், கலக்கம், சந்திரன், சிவன்,சுழல்காற்று, சுழற்சி, ஞானம்,தண்டசக்கிரம், தத்து வம், தவம்,தவறு, திரிதல், திருமால், நடு,நித்திய யோகத் தொன்று, நீர்ப்பாய்ச்சல், பஞ்சமாவெச்சத்தொன்று, அஃது வேதமோதல்,பதினெண் புராணத் தொன்று,பிரம சாரிக்குக் கன்னியைத் தீமுன்னர்க் கொடுக்கு மணம், பிரமன்,மந்திரம், மாயை, முத்தி, யாகம்,யோக மிருபத்தேழி னொன்று,வேதம், வேதாந்தம். பிரமயம் - கொலை, மரணம். பிரமயாகம் - பஞ்சமாவெச்சத்தொன்று, அஃது வேதமோதல். பிரமயோனி - பிராமணப் பிறப்பு. பிரமரட்சு - பருத்த முருடன். பிரமரந்திரம் - சிரத்தின் உச்சித்துவாரம். பிரமரம் - வண்டு.பிரமராட்சதன், பிரமராட்சதை - அவமரண மடைந்த பிராமணனாவியெடுக்கு மிராட்சதப் பேய். பிரமராட்சதைமூலம் - காசி வேர். பிரமரி - கூத்தின் விகற்பம், சுழலல். பிரமரிஷி - பிராமண ரிஷி.பிரமரிஷி பிரமரீதி - பித்தளை. பிரமலிபி - பிரமாவி னெழுத்து. பிரமலோகம் - சத்தியலோகம். பிரமவமிசம் - பிராமணச் சாதி. பிரமவருத்தனம் - செம்பு. பிரமவாதம் - வேத மதம். பிரமவித்து - ஞானிகளி னோர்வகை. பிரமவிந்து - பிரமபிந்து. பிரமனாள் - உரோகணி. பிரமன் - பிரமா, பிராமணன், முதற்குரு. பிரமன்றந்தை - விட்டுணு. பிரமா - பிரமதேவன். பிரமாகாரன் - சந்திரன், சூரியன். பிரமாஞ்சலி - இரு கையுங் குவித்துநெஞ்சிடை வைத்து வணங்கல். பிரமாட்சரம் - மூலவெழுத்து. பிரமாணஞ்செய்தல் - சத்தியம்பண்ணல். பிரமாணம் - அத்தாட்சி, அளவு,அளவை, ஆணை, உண்மை,எல்லை, போழ்து, முகாந்திரம்,முதல்வேதம், விதி, மெய்யுணர்வு. பிரமணன் - மெய்யன், விட்டுணு. பிரமாணாதீதம் - பிரமாணத்தைக்கடந்தது. பிரமாணாபாவம் - அத்தாட்சியில்லாமை, அளவின்மை.பிரமாணிகம், பிரமாணிக்கம் - ஆணை, உண்மை, திட்டாந்தம். பிரமாணிக்கன் - மெய்யன். பிரமாணித்தல் - அளவு படுத்தல்,நிதானித்தல், மதித்தல். பிரமாண்டநாயகன் - கடவுள்,சக்கரவர்த்தி, சிவன். பிரமாண்டம் - உலகம், காத்திரம்,பதினெண்புராணத் தொன்று. பிரமாண்ணியம் - பிராமணர் கூட்டம். பிரமாதம் - அசட்டை, உவாதித்தல்,கொல்லல், தவறல், மதியீனம்,மோசம், வருத்தம், வலாற்காரம்,வெறி. பிரமாதா - பாட்டன், அளப்பவன். பிரமாதாமகன் - அப்பாட்டன். பிரமாதி - பதின் மூன்றாவதாண்டு. பிரமாதிகமனம் - வேதம்படித்தல். பிரமாதிகை - தீண்டப்பட்டவள்,புத்திகெட்டவள். பிரமாதிட்சு - அறிவித்தல். பிரமாதீச - நாற்பத் தேழாவதாண்டு. பிரமாத்தியம் - அசட்டை, மதிமயக்கு.பிரமாத்திரம், பிரமாஸ்திரம் - பிரமபாணம். பிரமாந்தரம் - உயிர் நிலை. பிரமாபணம் - கொலை. பிரமாம்பசு - கோசலம் . பிரமாயு - பிரமகற்பம். பிரமாயுதம் - பத்திலட்சம். பிரமாரண்ணியம் - வேதாரணியம். பிரமானந்தம் - பரமானந்தம்,பேரின்பம். பிரமி - ஓர் பூடு, சுழல், சுழல்காற்று, தண்டசக்கிரம், தவறு, பிழை, நடத்தல். பிரமிதம் - அறியப்பட்டது. பிரமிதி - அளத்தல், அனுமானம்,மெய்யறிவு. பிரமித்தல் - அதிசயத்தாலு மச்சத்தாலும் விறைத்தல், ஏங்குதல், திகைத்தல். பிரமிப்பு - அதிசயம், திகைப்பு.பிரமியம், பிரமியன் - ஓர் பூண்டு, ஓர் வியாதி. பிரமுகதம் - மிகு மேன்மை. பிரமுகம் - அதிக நல்லது, நிகழ் காலம், மேன்மை, பிரதானம். பிரமுதிதம் - சந்தோஷம். பிரமூடன் - மடையன், மருண்டவன். பிரமேகம் - மேக வியாதி. பிரமேயம் - அளவிடப்படுவது, அறியப்படுவது, ஓரலங்காரம் அஃது சரீரம் ஆன்மா முதலிய பன்னிரண்டு பொருளையுடைத் தாயத்தாட்சிப் படுத்தப்பட வேண்டியது, சமுசயம். பிரமரீதி முதலாவது பெயரகராதி - 2 305 பிரமை - அறியாமை, காட்சி,பைத்தியம், மயக்கம், மெய் யறிவு,நடத்தல். பிரமோகம் - மயக்கம். பிரமோசனம் - இட்டமாதல். பிரமோதநி - மல்லிகைக்கொடி. பிரமோதம் - உவகை. பிரமோதிதன் - குபேரன். பிரமோதூத - நான்காவதாண்டு பிரமோத்தரகாண்டம் - பிரம புராணத்துக் கடைக்காண்டம். பிரமோற்சவம் - கோவில்களில்வருஷத்துக் கொருதரம் நடக்கும்விசேஷ உற்சவம். பிரம்பு - சூரல், தேர், தேர்முட்டி,வரம்பு, சாதிவேத்திரம். பிரயதன் - பரிசுத்தன்.பிரயத்தனம், பிரயத்தினம் - எத்தினம்செயல், நிறைவேற்றம், முயற்சி,பிரயாசம். பிரயாகம் - குதிரை, பிரயாகை, யாகம். பிரயாகன் - இந்திரன். பிரயாகை - ஓர் தலம், ஓர்நதி, திரிவேணி, சங்கம், கங்கை யமுனைசரச்சுவதி என்னு மூன்று நதியுங்கூடுமிடத்திலுள்ள ஒருபுண்ணிய க்ஷத்திரம். பிரயாசம் - ஓர் யாகம், தெண்டிமை,முயற்சி, வருத்தம். பிரயாசி - பிரயாசைக்காரன், பிரயாசைக்காரி. பிரயாசை - பிரயாசம்,பிரயாசி. பிரயாணகாலம் - மரணகாலம். பிரயாணம் - சா, பயணம், போதல்,யாத்திரை. பிரயாதன் - சௌப்திகன், பிருகு. பிரயாபயன் - பிரயாகன். பிரயாமசியாதம் - கிட்டவிருத்தல். பிரயாமம் - அருந்தல், நீளம், பஞ்சை. பிரயுதம் - பத்திலட்சம். பிரயுத்தம் - முகாந்திரம், யுத்தம். பிரயுத்தார்த்தம் - யுத்தம். பிரயுத்தி - பிரயோஜநம். பிரயோகசாரம் - ஓரிலக்கண நூல். பிரயோகம் - உதாரணம், உபாயம்,உவமானம், எத்தனம், ஏவல்,காரியம், குதிரை, சாதனை,சூட்சம், செயல், செலுத்துதல்,தம்பனம், நியமம், நிவர்த்தி,நோக்கம், பலம், மயக்கம், மருந்துசெய்தல், முகாந்திரம், முதற்பணம்,முயற்சி, மூலவாக்கியம், வழங்கும்முறை, அனுட்டித்தல். பிரயோகம்பண்ணல் - அத்தாட்சிபண்ணல், அப்பியாசித்தல், யூகித்தல். பிரயோகவிவேகம் - ஓரிலக்கண நூல். பிரயோகி - சமர்த்தன், பிரயாசி, யூகி,வல்லவி. பிரயோகித்தல் - செலுத்துதல்,வழங்கல். பிரயோசகம் - பிரயோசனம். பிரயோசகன் - பிரயோசனப்பட்டவன். பிரயோசனம் - ஏது, நோக்கம், பலன்,முகாந்திரம். பிரயோசனம்பண்ணுதல் - நயம்பண்ணுதல்.பிரயோசனன், பிரயோசிகன் - உத்தமபுருஷன், பரோபகாரி. பிரயோச்சியம் - மூலதனம். பிரயோந்திருக்கள் - உபயோகப்படுப்பவர். பிரரோகம் - தளிர். பிரலம்பம் - அசைவு, எத்து, கிளை,தளிர், தனம், துத்தநாகம், தூக்கங்கள், பூமாலை. பிரலம்பன் - ஓரசுரன், நரன், பலராமன். பிரலாபசன்னி - அலறு சன்னி. பிரலாபம் - அசைத்திசைத்தல், ஓர்சன்னி, சம்பாஷணை, துக்கம்,நாக்குளறுதல், பயனில்சொல்,புலம்புகை. பிரலாபித்தல் - ஊன்றிப் பேசுதல்,நாக்குளறுதல், புலம்பல். பிரலோடனம் - உருளுதல். பிரலோபம் - காமம். பிரலோபனம் - காம விகாரம். பிரவகம் - காற்று. பிரவசயோகம் - பரதேசம் போகல். பிரவசனம் - சுற்றுதல், பிரசங்கம்பண்ணுகை. பிரவஞ்சம் - உலகம், வித்தியாசம். பிரவணம் - நாற்றெருக் கூடுமிடம்,கதி வளைவு. பிரவத்தகம் - செயல். பிரவத்தம் - சமுசாரம். பிரவபணம் - விதைத்தல். பிரவயணம் - அங்குசம். பிரவரம் - சந்ததி, வமிசம். பிரவருக்கம் - ஓமத்தீ. பிரவருத்தகன் - ஆக்கியோன், தொல்லாசிரியன், நீதவான்,முயற்சிசெய் வோன், வியாபாரி. பிரவருத்தனம் - தீர்மானம், முயற்சி. பிரவருத்தித்தல் - தீர்மானித்தல்,முயறல். பிரவர்த்தகன் - பிறவருத்தகன். பிரவர்த்தனம் - பிரவருத்தகன்,அதாவது நடக்கை. பிரவர்த்தி - முயற்சி. பிரவர்த்தித்தல் - பிரவருத்தித்தல். பிரவாகம் - குளம், தத்துவம், தொழில்,நீர்ப்பெருக்கு, வரவு, வேலை,பரம்பரை. பிரவாசம் - வெளிப்புறப்படல். பிரவாசனம் - கொலை, பிரதேசவாசம். பிரவாணி - நாடா. பிரவாரணம் - கொடை, தடை. பிரவாரம் - புடவை. பிரவாலம் - இளந்தளிர், சிசு, முளை,நூதநமான தளிர், வீணாதண்டம். பிரவாளம் - பவளம். பிரவிக்கியாதி - கீர்த்தி. பிரவிசெடம் - விலகல். பிரவிடை - பெண்பருவ நான்கினொன்று அது மத்தியபருவம்,ஐம்பத்தைந்து வயதுடையபெண். பிரவிதாரணம் - அரும்புதல், கிழித்தல்,சந்தடி, யுத்தம். பிரவிருத்தர் - முயற்சியுடையோர். பிரவிருத்தி - செய்கை, செய்தி, சேர்மானம், நடை, நீர்ப்பாய்ச்சல்,பெருக்குந்தொகை, முயற்சி,யானை மதம், வளர்ச்சி, விரிவு. பிரவிருத்தித்தல் - அதிகப்படுதல்,விரிதல், செய்தல். பிரவிருந்தியம் - வரவு. பிரவீணதை - சமர்த்து, தேற்றம். பிரவீணன் - சமர்த்தன். பிரவீனம் - சாமர்த்தியம். பிரவேசகம் - உட்படல், முயற்சி. பிரவேசகன் - தூதன். பிரவேசப்படுத்தல் - பிரவேசிப்பித்தல். பிரவேசமாதல் - தோற்றுதல். பிரவேசம் - ஆரம்பம், உட்படல்,கூத்தினோர்விகற்பம், தோற்றுதல், முயற்சி, வாயில், உட்புகுதல். பிரவேசவுபநிடதம் - ஓருபநிடதம். பிரவேசனம் - வாயில். பிரவேசித்தல் - உட்செல்லல், உட்படல், தொடங்கல், தோற்றப்படல். பிரவேட்சணம் - முன்னுறக்காணல். பிரவேட்டம் - புயம், மணிகட்டு,யானை மேற் றவிசு. பிரவேணி - சடை, யானைமேற்றவிசு. பிரவேனாம் - வணக்கம். பிரவை - ஒளி. பிரளயகாலம் - உலக முடிவு. பிரளயகாலருத்திரன் - சங்காரருத்திரன். பிரளயகாலவெள்ளம் - உகாந்தவெள்ளம். பிரளயமுடிவு - உகாந்தம். பிரளயம் - அழிவுகாலம், படையிலோர் தொகை, அஃது வாகினிமூன்றுகொண்டது, வெள்ளம்,உகாந்தம். பிரளயகாலர் - பிரளயகாலத்து முத்தியடைபவர், மாயைநீத்தோர். பிரளயாக்கினி - ஊழித்தீ. பிரளல் - எழுத்திலாவோசை, புரளல். பிரளையம் - பிரளயம். பிரனாலம் - நீர்க்கால். பிராகபாவம் - மாயை, முன்னையின்மை. பிராகம் - கிழக்கு. பிராகரியம் - உறைப்பு, கூர்மை,பொல்லாங்கு. பிராகாதம் - யுத்தம். பிராகாமியம் - அட்டசித்தியினொன்று, அஃது குறைவின்றியிருத்தல், நினைத்த போகமெல்லாம் பெறுவது. பிராகாரம் - பிரகாரம், மதில்,வார்த்தல். பிராகிண்ணம் - முற்பொழுது. பிராகிருதசனம் - நடுத்தரமான சனம். பிராகிருத பிரளயம் - உலகநாசம். பிராகிருதமித்திரன் - துணைவன். பிராகிருதம் - அழியத்தக்கது, எல்லாநாட்டு மேலோர்மொழி, திசைமொழி, பிரகிருதம், பொது, இழிசனர் மொழி. பிராகிருதன் - உண்மையறிவில்லாதவன். பிராக்கியன் - அறிவுள்ளவன். பிராக்கு - சென்றது, பராக்குபிராங்கணம், பிராங்கம் - ஓர் பறை. பிராசகம் - பித்தம். பிராசகன் - தேர்ப்பாகன். பிராசங்கம் - தொழுவம். பிராசம் - இறகம்பு, எதுகை. பிராசயம் - ஆதி. பிராசனம் - அங்குசம், உண்மை,சோறூட்டல். பிராசாதகுக்குடம் - மாடப்புறா. பிராசாதம் - கோயில். பிராசாபத்தம் - அட்டமங்கலத்தொன்று. பிராசாபத்தியம் - ஓர் விரதம். பிராசாரம் - ஒழுக்கவழு. பிராசாரியன் - மாணாக்கன். பிராசி - கிழக்கு,முன். பிராசிகன் - ஈட்டிக்காரன், எறி படைகாரன். பிராசிகை - கொசுகு. பிராசிதம் - காணிக்கை. பிராசீ - பிராசி. பிராசீநதிலகம் - சந்திரன். பிராசீநபநசம் - வில்வம். பிராசீபதி - இந்திரன். பிராசீரம் - சுவர், வேலி. பிராசீனம் - கிழக்கு, சுவர், பங்கம்பாளை, பழமை, பழையது. பிராசீனவாக்கிசன் - அரசன், இந்திரன். பிராசீனாநீதம் - சூத்திரர்மார்பிலணியுநூல். பிராசு - கிழக்கு. பிராசேதசன் - வான்மீகரிஷி. பிராச்சித்தம் - பிராயச்சித்தம்.பிராஞ்ஞத்துவம், பிரஞ்ஞம் - அறிவு. பிராஞ்ஞன் - பிரஞ்ஞன், பிராக்கியன்,அறிஞன். பிராட்டி - தலைவி, பெருமாட்டி. பிராணசகி - உயிர்த்தோழி. பிராணசங்கடம் - உயிர்போகத்தக்கநெருக்கம். பிராணசமை - மனைவி. பிராணசவுக்கியம் - செல்வம். பிராணசினேகிதன் - உயிர்த்துணைவன். பிராணசேதம் - உயிர்ச்சேதம். பிராணதம் - இரத்தம், காற்று, நீர்,தோத்திரஞ் செய்தல். பிராணதன் - பிறப்பித்தோன், வலியன். பிராணதாரகம் - பத்தியபோசனம். பிராணதாரணம் - சீவனத்திற்குரியன. பிராணதுக்கம் - உயிரையும் போக்கத்தக்க கவலை. பிராணத்தறுவாய் - மரணத்தறுவாய். பிராணத்தியாகம் - சீவனைக் கொடுத்தல், தற்கொலை. பிராணநதம் - காற்று. பிராணநாசம் - பிராணலயம்.பிராணநாதன், பிராணநாயகன் - கடவுள், கணவன். பிராணநாயகி - மனைவி. பிராணந்தியம் - நவக்கிரகம். பிராணப்பிரதிட்டை - பிராண ஸ்தாபனம். பிராணமயகோசம் - கருமேந்திரியமும்பிராணனுங்கூடிய சம்பந்தம்,அஃது பஞ்சகோசத் தொன்று. பிராணமயம் - பஞ்சமயகோசத்தொன்று. பிராணமித்துரு - பிராண சினேகிதன். பிராணம் - கவிவல்லபம், காற்று,சீவன், சுவாசம், பெலன். பிராணலயம் - உயிரழிவு, சீவ ஒடுக்கம். பிராணவாயு - பிராணன். பிராணவியோகம் - பிராணலயம். பிராணவீனன் - அப்பிராணி. பிராணவேதனை - மரணவேதனை. பிராணவ்விய்யம் - மரணம். பிராணனம் - சீவன், தொண்டை. பிராணன் - உயிர், தசவாயுவினொன்று,அஃது இதயத்தியங்குவது. பிராணாதிநாதன் - கடவுள் கணவன். பிராணாந்தம் - உயிர்முடிவு, மரணம். பிராணாந்திகம் - கொலை. பிராணாபாதம் - சீவனுக் கிடையூ றானது. பிராணாயாமம் - அட்டாங்கயோகத்தொன்று, அஃது பிராண வாயுவைஇரேசக பூரககும்பகஞ் செய்தல். பிராணி - சீவனுடையது. பிராணித்தியூகம் - கடாப்போர்,சேவற்போர். பிராணிபீடை - சீவனைவருத்தல். பிராணேசன் - கணவன். பிராணேசை - மனைவி. பிராதகம் - காப்பாற்றல். பிராதக்காலம் - விடியல் பிராதக்கிருத்தியம் - காலைப்பலி. பிராதசந்தி - வைகறை, வெளிச்சம். பிராதச்சந்தியை - காலைப்பலி,வைகறை. பிராதமிகர் - வானோர்கண மொன்பதினொருவர் இவர் கடவுட்டிருவுளப்படியே இராச்சியசம்பந்தமான சாதாரண நன்மைகளைநடத்துந் தலைமை பெற்றோர். பிராதமிகன் - முன்பிறந்தோன். பிராதம்மியம் - முதன்மை. பிராதர் - மூதாக்கள். பிராதா - அண்ணன். பிராதாஸ்தானம் - பதினோராமிடம். பிராதி - பிரியாதி. பிராதிபதிகன் - அக்கினி. பிராதிரு - சகோதரன்.பிராதிருசாயை, பிராதிருபத்தினி - சகோதரன் மனைவி. பிராது - அத்தாட்சி, முறைப்பாடு. பிராதேசம் - ஓட்டை, தானம். பிராதேசனம் - கொடை. பிராத்தனை - நேர்கடன், வேண்டுதல். பிராத்தி - அட்டசித்தியினொன்று,அஃது வேண்டுவன வடைதல்,ஆதாயம், ஏறுதல், கூட்டம்,சம்பாத்தியம், சித்தி, பேறு,அடைதல், பிராப்தி. பிராத்திதம் - கேட்கும் பொருள். பிராத்தித்தல் - பிராத்தனை செய்தல். பிராத்திப்பு - பிராத்தனை. பிராத்தியக்கு - மேற்கு. பிராந்ததுருக்கம் - நகரம். பிராந்தம் - அருகு, கடை, மதயானை. பிராந்தன் - மூடன், மயக்கமுடையோன். பிராந்தரம் - காடு, மரப்பொது,வனபாதை. பிராந்தி - உறுதியின்மை, கழிதல்,சுழலல், தப்பிதம், திரிதல், நிலையின்மை, மயக்கம். பிராந்திகரன் - மந்திரி. பிராந்திதாதான்மியம் - பிரம பூரணத்திலகங்காரங் கலத்தல். பிராந்திமதலங்காரம் - மயக்கவணி. பிராந்தியம் - சுற்றுப்பட்டு. பிராந்திரம் - புறவெளி. பிராந்து - பருந்து, பிராந்தி. பிராபவநியம் - தத்துவம். பிராபவம் - முதன்மை. பிராபாகரம் - பிராபாகரமதம். பிராபி - பிராசி. பிராபோதிகம் - விடியல். பிராப்பியம் - பெறத்தக்கது, பேறு. பிராமகம் - எத்து, காந்தம், நரி. பிராமணத்தி - பார்ப்பனச்சி. பிராமணத்துவேஷி - பிராமணநிந்தகன். பிராமணநாகம் - ஓர் நாகம். பிராமணபோசனம் - சமாராதனை. பிராமணப்பாம்பு - பிராமண நாகம். பிராமணம் - பார்ப்பனக் கூட்டம்,வேதப்பகுதி. பிராமணவாளி - ஓர் காதணி. பிராமணன் - பார்ப்பான், சீவன்முத்தன். பிராமணாதிகிரமம் - பிராமணநிந்தனை. பிராமணி - பார்ப்பனி, பார்ப்பான். பிராமணிகம் - பிராமணயோக்கியம். பிராமணியம் - அத்தாட்சி. பிராமம் - பெருவிரலடி. பிராமரம் - கிராமம், சுழலல், தேன்,விறைப்பு. பிராமரி - பார்வதி. பிராமாணியம் - அத்தாட்சி. பிராமாதீட்சு - அறிவித்தல். பிராமி - உரோகணி, சரச்சுவதி,பார்ப்பனத்தி, முசுறு. பிராமியம் - தலைப்புறம். பிராமீத்தியம் - கடன். பிராயச்சித்தம் - காமப்பகுதி, சாந்தி,தண்டனை, தவம், நிவிர்த்தி, பாபபரிகாரத்திற்காகச் செய்யப்படும்கிரியை. பிராயச்சித்தவிதி - சாந்திமுறை,தவமுறை. பிராயஞ்சென்றவன் - வயது முதிர்ந்தவன். பிராயணம் - மரணம். பிராயப்படல் - பக்குவப்படல். பிராயமறிதல் - புத்தியறிதல். பிராயம் - அளவு, பக்குவம், பாவம்,மரணம், வயது. பிராயோபவேசனம் - உபவாசம்பண்ணல். பிராய் - பராய். பிராரம்பம் - ஆரம்பம். பிரார்த்தகன்மம் - அனுபவகன்மம். பிரார்த்தகன்மவாதனை - ஊழ்வினைப்பயன். பிரார்த்தநீயம் - துவாபரயுகம். பிரார்த்தம் - அனுபவிக்குங்கன்மம்,ஊழ்வினை. பிரார்த்தவினை - அனுபவிக்கு மூழ்வினை.பிரார்த்தனம், பிராத்தனை - மன்றாட்டு,விண்ணப்பம். பிரார்த்துவதேகம் - வினைப் பகுதியின்படி பெற்றவுடம்பு. பிரார்த்துவம் - பிரார்த்தம். பிராலம்பம் - பூமாலை. பிராலம்பிகை - மாலை. பிராலேயம் - உறைந்தபனி. பிராவம் - கொல்லை. பிராவரணம் - வெளியங்கி. பிராவரம் - வேலி. பிராவிருதம் - காணிக்கை, முக்காடு. பிராவிருதி - வேலி. பிராவேசனம் - வேலைகொள்ளிடம். பிராறு - நீந்துபுனல், நிறைபுனல். பிரான் - எசமானன், எப்பொருட்குமிறைவன், கடவுள், சிவன்,விட்டுணு, தலைவன். பிரி - பிரியென்னேவல், பிரிவு, வெருகு. பிரிசம் - பிரியம். பிரிசல் - குறைவு, வேறுபாடு. பிரிசாலம் - கலக்கம். பிரிச்சல் - பிரிக்குதல். பிரிட்டிகி - பரிசனம். பிரிதல் - அகலல், குலைதல், கூறுபடல், போகல். பிரிதி - பிரீதி. பிரித்தம் - பரிசனம். பிரித்தல் - குலைத்தல், கூறுசெய்தல், நீக்கல். பிரிநிலை - பலவற்றுளொன்றைப்பிரித்துக்கொள்வது இஃதுஇடைச் சொற் பொருள்களினுமொன்று. பிரிநிலையுயர்புநவிற்சியணி - ஓரலங்காரம் அஃது உபமானத்திற்குபமேயம் யாதொன்றானுயர் புடைத்தெனப் பிரித்துச் சொல்லுதல். பிரிநிலையெச்சம் - பிரிநிலையாக்குமோரெச்சம் (உ-ம்) அவனோகொண்டான். பிரிநிலையெஞ்சணி - பிரிநிலையெச்சம். பிரிந்திசைக்குறள் - அம்போதரங்கம். பிரிந்திசைத்துள்ளல் - கலித்தளையும்பிறதளையும் பொருந்திய கலிப்பா. பிரிந்திசைத் தூங்கல் - கலித்தளையும்பிற தளையு மயங்கிவரும் வஞ்சி. பிரிபொருட்சொற்றொடர் - செய்யுள்வழுவினொன்று அது கவி முழுதுமோர் பொருள்கொள்ளாதுநோக்கப் பொருள் பிரிந்து நிற்பது (உ-ம்) பாலும் மதுவும் பனைபொழியும். பிரிப்பு - குலைப்பு, பகுப்பு, பிரித்தல். பிரிமணை - புரிமணை. பிரிமொழிச்சிலேடை - ஓர்வகையானின்ற சொல்லைப் பிரித்துத்தொகை வேறு படுத்திப் பலபொருள் கொள்வது. பிரியகம் - கடம்பு. பிரியசத்தியம் - இனிய சம்பாஷணை. பிரியசந்தேசம் - சண்பகமரம். பிரியஞ்செய்தல் - நேசித்தல். பிரியதரிசநம் - கிளி, பிரியமானபொருள். பிரியதரிசநி - வன்னிமரம். பிரியத்தம் - நன்கொடை. பிரியப்படுதல் - அன்புவைத்தல். பிரியப்பிராயம் - பிரியவசநம். பிரியமது - பலராமன். பிரியம் - அன்பு, உவகை, விருப்பம். பிரியலர் - சிநேகிதர். பிரியன் - கணவன், தலைவன், பிரியமுள்ளவன். பிரியாது - பிராது. பிரியாமை - நீங்காமை. பிரியாம்பு - மாமரம். பிரியாலு - திராiக்ஷ. பிரியாவிடை - உள்ளம்பிரியாவன்புடன் விட்டு நீங்கல். பிரியை - ஏலம், ஓரிசை, ஓர்பண்,செய்தி, பெண், மது, மனைவி. பிரியோதிதம் - இன்சொல். பிரிவனை - வேறுபாடு. பிரிவாற்றாமை - புலவியாற்றாதுவருந்தல், விரகவேதனை. பிரிவினை - ஒவ்வாமை, சமயபேதம்,வேறுபாடு. பிரிவு - பகுதி, பிரிதல், வெறுப்பு,வேற்றுமை. பிரிவுகணக்கு - கழிவுகணக்கு. பிரீணனம் - திருத்தியடைவித்தல். பிரீதம் - உவப்பு. பிரீதி - இரதி, உருக்கம், உவப்பு,நித்தியயோகத்தொன்று அஃதுபிரியம். பிரீரிதன் - பகிடிக்காரன். பிரீது - பட்சி. பிரு - கத்திரி. பிருகதாரணியம் - உபநிடத முப்பத்தி ரண்டினொன்று. பிருகதி - கத்தரிச்செடி. பிருகு - சமதக்கினி, சிவன், சுக்கிரன்,பிருங்கிருஷி இவன் தசப் பிரமாவிலொருவன், மலைமேற்பரப்பு,மிகவு மிளங்கிழங்கு. பிருகுசுதன் - சுக்கிரன், பரசுராமன். பிருகுடி - நெற்றியை நெறிக்கை, புருவம். பிருகுபதி - இராமன், பரசுராமன்,பலராமன். பிருங்கம் - வண்டு. பிருங்கரீடன் - ஓர் சிவகணத்தலைவன். பிருங்கராஜம் - கையாந்தகரை. பிருங்கீசன் - சிவன். பிருச்சகன் - விசாரணைக்காரன். பிருச்சனம் - கேட்டல். பிருடை - சுழலாணி, சுழல் துறப்பு. பிருஷ்டம் - அரைத்தமா. பிருட்டம் - பரப்பு, பிடரி, பின்பக்கம்,முதுகு, சகனம், பிருஷ்டம். பிருட்டி - கிரணம், பரிசம். பிருதகசனன் - கீழ்மகன், துட்டன்,மூடன். பிருதகன் - கூலிக்காரன், வேலைக் காரன். பிருதகரணம் - பகுத்தறிதல். பிருதத்துவம் - தனிமை. பிருதனை - பிரதனை. பிருதாகன் - பிருதகன். பிருதாகி - எலி, தேள், பாம்பு, யானை. பிருதி - கூலி, போசனம். பிருதிவி - பூமி. பிருதிவிசக்கிரன் - பிருதிவிபதி. பிருதிவிதத்துவம் - சடத்தின்மூலம். பிருதிவிதநயை - சீதை.பிருதிவிபதி, பிருதிவிபாலன் - அரசன்,இயமன். பிருதிவிலிங்கம் - மண்ணாலாயலிங்கம். பிருது - அங்கி, அவின், சூரியகுலத்தரசரி லொருவன், பெரியது. பிருதுகேசுரம் - மலை. பிருதுமானம் - யானைக்கொம்பினடு. பிருதுரோமை - மீன்பொது. பிருதுவி - பஞ்சபூதத்தி னொன்று,பூமி. பிருதுவிகை - ஏலம். பிருதுவியண்டம் - பூமியண்டம். பிருதூதரம் - ஆட்டுக்கடா. பிருதூதரன் - பெருவயிறன். பிருதை - பிரதை, குந்திதேவி. பிருத்தம் - ஆஸ்தி. பிருத்தியத்துவம் - ஊழியம். பிருத்தியர் - அடிமைகள். பிருத்தியன் - அடிமை. பிருந்தம் - கூட்டம், துளசி. பிருந்தாரகன் - தேவன், சிவன்.பிருந்தாவநேசன், பிருந்தாவநேச்சுரன் - ஸ்ரீ கிருஷ்ணன். பிருந்தாவநேச்சுவரி - ராதை. பிருந்தை - சலந்தரன் மனைவி,துளசி, விருந்தை.பிரேஷணம், பிரேடணம் - போதல். பிரேட்சணம் - கள், களரி. பிரேட்சணிகை - ஆடம்பரப் பீணிகை. பிரேட்சை - அறிவு, ஆடல், காண்டல்,புத்தி, மரக்கொம்பு.பிரேதகருமம், பிரேதகாரியம் - அபரக்கிரியை. பிரேதகிரகம் - கோரி. பிரேதகிருத்தியம் - பிரேதகருமம். பிரேதகும்பம் - பிணத்துக் குடைக்கும்குடம். பிரேதக்குழி - சவக்குழி. பிரேதசுத்தி - பிரேதத்தைக் குளிப்பாட்டல். பிரேதநதி - நரகம்.பிரேதநிற்காரகன், பிரேதநிஸ்காரகன் - சவங்காவி. பிரேதபக்கம் - அபரபக்கம். பிரேதபதி - நமன். பிரேதபுரம் - யமபுரம். பிரேதம் - தெற்கு, பிசாசம், பிணம்,பிதிர், பின். பிரேதராட்சஸி - துளசி. பிரேதலோகம் - பிதிர் திசை. பிரேதாலங்காரம் - சவ வலங்கரிப்பு. பிரேதவனம் - மயானம். பிரேதான்னம் - பிண்டம், பிதிரூண். பிரேதோத்தேசம் - பிதிர்பலி. பிரேமபாதனம் - பீழை. பிரேயம் - கள். பிரேரகம் - காரியப்படுத்தல், ஏவுதல். பிரேரகன் - காரியம் நடத்துவோன்,ஏவுவோன். பிரேரகாண்டம் - ஐம்பொறிகளின்பேதம். பிரேரணம் - அனுப்பல், ஏவல்,ஓட்டுதல், நடத்துதல், விகாரம். பிரேராவத்தை - ஆன்மாக் கிரியைகளை நடத்துமவத்தை. பிரேரித்தல் - காரியப்படுத்தல்,நடத்துதல், ஏவுதல். பிரை - அரைப்பங்கு, உறை. பிரைக்காற்சின்னி - அரைக்காற்படி. பிரோகம் - முடிச்சு, யானைக்கணைக்கால், யானைக்கால். பிரோட்சணம் - கொலை, தெளித்தல்,மிருகபலி. பிரோதம் - கந்தை, குதிரைமூக்கு,தொடைமுதிராக் கருப்பம்.பிரோற்சாகம், பிரோற்சாகனம் - முயற்சி. பிரௌடை - பிரவிடை. பிர்மலெக்கினம் - எட்டாமிடம். பிர்மாண்டம் - பிரபஞ்சம். பிலகரி - ஓரிராகம். பிலகாரி - பெருச்சாளி. பிலசம் - கருஞ்சீரகம். பிலஞ்சுலோபம் - எறும்பு. பிலத்துவாரம் - நிலவறை, பாதாளவழி. பிலம் - கீழறை, குகை, பாதலம், வளை. பிலவ - முப்பத்தைந்தாவ தாண்டு. பிலவகதி - தவளைப் பாய்ச்சல். பிலவங்கம் - குரங்கு, தேரை. பிலவகன் - அருணன், கம்பங்கூத்தாடி. பிலவங்க - நாற்பத்தோராவதாண்டு. பிலவங்கமம் - குரங்கு. பிலவங்கம் - குரங்கு, தேரை, மான். பிலவம் - ஆடு, ஓர் பட்சி, ஓர்புல்,காப்பு, கீழ்சாதி, குரங்கு, சாயல்,தவளை, தெப்பம், நீந்தல்,நீர்நிலை, நெட்டிசை, பாய்தல்,வாகை. பிலவாகை - கப்பல். பிலன் - எறும்பு, பிலம். பிலா - பலாமரம். பிலாக்கு - ஓர் மூக்கணி. பிலாச்சை - கடற்றவளை. பிலாவம் - தேய்த்தல், நிறைத்தல். பிலாளகம் - புழுகு சட்டம். பிலிக்குடியன் - எலுமிச்சை. பிலிம்பி - குச்சித் தமரத்தை. பிலிற்றல் - கொப்பளித்தல், தூற்றல். பிலுக்கன் - ஆடம்பர முடையோன். பிலுக்கு - ஆடம்பரம், வீம்பு. பிலுபிலுத்தல் - ஈரடுக்கொலிக்குறிப்பு. பிலேசயம் - எலி, கீரி, சிங்கம், பாம்பு. பிலேசயை - உடும்பு. பிலோடம் - சுடுதல். பில்கல், பில்குதல் - கொப்பளித்தல்,பொசித்தல். பில்லடை - அப்பவருக்கம்,இடியப்பம். பில்லம் - ஓர் கண்ணோய். பில்லி - ஓர்வகைப் பேய், சூனியவித்தை, பூஞை. பில்லிக்குராயன் - இலாமிச்சை. பில்லியத்தி - பெருநெருஞ்சில். பில்லிப்படை - பில்லிப்பேய்ப் பரிகலம். பில்லை - புல்லை, வில்லை. பிழக்கடை - கோடிப்புறம். பிழம்பு - தம்பம், திரட்சி, வடிவம். பிழா - ஓலைக்கலம், கொள்கலம். பிழார் - இறைகூடை. பிழி - கள், பிழியென்னேவல். பிழிதல் - சாரமூறல், சாரம் வடித்தல். பிழியர் - கள் விற்போர். பிழியல் - தேன். பிழிவு - பிழிதல். பிழுக்கை - விட்டையெரு, ஆட்டின்மலம். பிழை - குற்றம், தவறு, பிழையென்னேவல், பொய், எட்டாமிடம். பிழைகாயம் - இலேசான காயம். பிழைக்கடை - பிழக்கடை. பிழைக்கை - பிழைத்தல். பிழைத்தல் - உய்தல், சீவனம் பண்ணுதல், தவறுதல், பிழை செய்தல், பிழையாதல். பிழைபாடு - குற்றம், பிழைபடுதல். பிழைபார்த்தல் - திருத்தல். பிழைப்பித்தல் - தாபரித்தல், பிழைக்கச் செய்தல். பிழைப்பு - உயர்வு, சீவனம், சீவிப்பு. பிழைப்பூட்டு - சீவனவேது. பிழைப்பூட்டுதல் - உயிர்ப்பித்தல்,சீவனவேது காட்டல். பிளகு - பிளவு, கடுகுவேர். பிளச்சு - பிளாச்சு. பிளத்தல் - அறுத்தல், கீழ்தல்,துளைத்தல், போழ்தல், வெடித்தல். பிளந்து - வெடியுப்பு. பிளப்பு - பிளத்தல், வெடிப்பு. பிளவு - கீற்று, துண்டு, பிளப்பு,வெடிப்பு. பிளவை - விப்புருதி, வெடித்த புண். பிளாச்சி - சிறுசலாகை, தட்டை. பிளாச்சு - சிராய், பனங்கிழங்கின்பிளவு, பிளாச்சி, வரிச்சல். பிளிச்சி - சீனக்காரம். பிளிர்த்தல் - கொப்பளித்தல். பிளிறல் - ஒலித்தல், கீண்டல், பேசலாலெழுமொலி, ஆரவாரித்தல். பிளிறு - ஆரவாரம், எழுத்திலாவோசை, சேறு, பிளிறென்னேவல்,பேரொலி. பிளிறொலி - யானை முதலிய குளிறுமொலி. பிள்ளுதல் - போழுதல், வெடித்தல். பிள்ளை - அணில், அன்றிற்குஞ்சு,இளமையோன், கரிக்குருவி, காகம்,கிளி, கீரி, குரங்காதி கோட்டில்வாழ்விலங்கின் பிள்ளை, தெங்கு,கமுகு இவற்றின் கன்று, நாகணவாய்ப்புள், பறவைக் குஞ்சு, பன்றி,பூனை, மான் முயல் இவற்றின்குட்டி, மகன், மரக்கன்று, வயிரவன்,வெள்ளாளரில் ஓர் பட்டப் பெயர். பிள்ளைகொல்லி - ஓர் நோய், ஓர்பெருங்காயம். பிள்ளைக்கட்டி - கருப்பக் கட்டி. பிள்ளைக்கவி - ஓர் பிரபந்தம், அஃதுகாப்பு, செங்கீரை, தால், சப் பாணி,முத்தம், வாரானை, அம் புலி, சிறுபறை, சிற்றில், சிறுதேர் எனும்பத்துறுப்புக்களையுங் கொண்டுகலிவிருத்தத்தான் முடிவதாண்பாற்பிள்ளைக்கவி, அவற்றுட்கடை மூன்றுறுப் பொழிய கழங்கு, அம்மானை,ஊசல் எனு மூன்றுறுப்பையுங் கூட்டிக்கூறுவது பெண்பாற் பிள்ளைக்கவி,தொன்னூல் மொழிகளைத் தெரிந்துதொடுக் குங்கவி. பிள்ளைக்கற்றாழை - ஓர் கற்றாழை. பிள்ளைக்கிணறு - உட்கிணறு. பிள்ளைக்கைவளை - சிறுவளையல். பிள்ளைக்கோட்டை - அரையாப்பு,சிறுகோட்டை. பிள்ளைச்சோமன் - சிறு சோமன். பிள்ளைத்தக்காளி - ஓர் செடி. பிள்ளைத்தமிழ் - பிள்ளைக்கவி. பிள்ளைத்தாய்ச்சி - கருப்பஸ்திரி,வாலசூதி. பிள்ளைத்தேங்காய் - நாற்றுத்தேங்காய். பிள்ளைத்தேள் - ஓர் தேள். பிள்ளைப்பாட்டு - பிள்ளைக்கவி. பிள்ளைப்பிறை - இளம்பிறை. பிள்ளைப்பூச்சி - ஓர் பூச்சி. பிள்ளைப்பெருமாளையங்கார் - ஓர்சிறந்த புலவர். பிள்ளைப்பேறு - மக்கட்பேறு. பிள்ளைமாபிரபு - பெருமையிற்சிறந்தோன். பிள்ளைமை - பிள்ளைத்தன்மை,அறியாமை. பிள்ளையாண்டான் - வாலிபன். பிள்ளையார் - கந்தன், சம்பந்தன்,விநாயகன். பிள்ளையார்சுழி - ஊமையெழுத்து. பிள்ளைவாங்கு - பாய்மரநிற்குங் குழி. பிள்ளைவண்டு - இளவண்டு. பிள்ளைவிழுதல் - கருவழிதல். பிற - அசைச்சொல் (உ-ம்) யாஞ்சிலவரிசி வேண்டினேமாகத்தான் பிறவரிசையறிதலிற்றுன்னுந்தூக்கி ,பிறவென்னேவல், வேறு. பிறகரம் - காவல், சாமம். பிறகரித்தல் - காத்தல், சாமங்காத்தல். பிறகரீசம் - அகில். பிறகிடல் - சேறல், பின்றல். பிறகு - பின்பு, பின்புறம். பிறகுகாட்டுதல் - பின்காட்டுதல்,தோற்றல். பிறக்கணித்தல் - இகழ்தல், நிந்தித்தல். பிறக்கணிப்பு - இகழ்ச்சி. பிறக்கம் - அச்சம், கடைக்கணிப்பு,மரக்கொம்பு, மலை. பிறக்கிடல் - பின்றல், பின்னிடல்.பிறக்கியாதி, பிறக்கினை - புறக்கியாதி. பிறக்கு - அசைச்சொல் (உ-ம்)எண்ணிய பிறக்கியுட்செலான்,பின், பின்புறம், வழு, வேறு. பிறக்குதல் - உண்டாதல், உற்பவித்தல், வெளிவரல். பிறங்கடை - மகன், சந்ததி, வழிததோன்றல். பிறங்கல் - அரசன், உயர்ச்சி, ஒலித்தல், ஒழுக்கம், ஒளிசெய்தல், சிறுமலை, நிறைதல், பெருமை, மலை,மிகுதி, ஒளிர்தல். பிறங்கியல் - முதுகாடு. பிறங்கு - பிறங்கென்னேவல், விரலிறை. பிறங்குதல் - உயர்தல், ஒலித்தல்,நிறைதல், பிரகாசித்தல். பிறசாதனம் - தேக்கு, தேற்றாவிரை. பிறசாரினி - கொடியார் கூந்தல். பிறதனம் - கடுக்காய். பிறதாரம் - பிறர் மனை. பிறதிக்கினை - பிரதிக்கினை. பிறத்தல் - பிறக்குதல், உண்டாதல்,வெளிவரல். பிறத்தானம் - புறத்தானம். பிறத்தி - வழுதலை. பிறத்தியகபன்னி - நாயுருவி. பிறத்தியுத்தாரம் - மறுமொழி. பிறநீங்கல் - புறநீங்கல். பிறநூன்முடிந்ததுதானுடன்படல் - பிறநூலின் முடிந்த முடிபைத்தானங்கீகரித்தல் அஃது யுத்தி முப்பத்திரண்டினொன்று. பிறந்தகம் - சீதனம், தாய்மனை,பரிசம். பிறந்தகோலம் - நிருவாணம். பிறந்தநாள் - பிறந்த தினம். பிறந்தமேனி - நிருவாணம். பிறந்தவம் - பிறப்பு. பிறந்தாள் - புறங்கால். பிறந்தை - சுபாவம், பாவம், பிறப்பு. பிறபலம் - திப்பிலி. பிறபாஷை - அன்னிய பாஷை. பிறப்பார் - நாய்வேளை. பிறப்பிடம் - உறைவிடம், பிறந்தவிடம், மூலம். பிறப்பித்தல் - உண்டாக்கல், சனிப்பித்தல், வெளிப்படுத்தல்.பிறப்பிலி, பிறப்பில்லான் - கடவுள்,சிவன். பிறப்பிறப்பில்லான் - கடவுள். பிறப்பு - அச்சம், உற்பத்தி, சகோதரம்,துவக்கம், தோற்றம், நெருக்கம். பிறப்புவாசி - சென்மசுபாவம், பிறப்பிலுண்டானது. பிறயகபன்னி - நாயுருவி. பிறரையந்தீர்த்தல் - பிறருடையசந்தேக மாற்றல், அஃது தயாவிருத்தி யெட்டினொன்று. பிறரோகி - வறட்சுண்டி. பிறர் - அயலோர், அன்னியர், மறுபெயர். பிறர்கருமத்திற்குடன்படல் - தயாவிருத்தியெட்டி னொன்று. பிறர்கருமம்முடிக்கவிரைதல் - தயாவிருத்தியெட்டி னொன்று. பிறர்க்குப்பொருள்வரவையுவத்தல் - தயாவிருத்தி யெட்டினொன்று. பிறர்செல்வம்பொறுத்தல் - தயாவிருத்தியெட்டினொன்று. பிறர்தம்மதமேற்கொண்டுகளைதல் - பிறர் மதத்திற் குடன்பட்ட பின்புமறுத்தல் அஃது ஆசிரியமதமேழி னொன்று. பிறர்துயர்காத்தல் - அறமுப்பத்திரண்டி னொன்று. பிறர்துயர்க்கிரங்கல் - தயாவிருத்தியெட்டினொன்று. பிறர்நூற்குற்றங்காட்டல் - ஆசிரியமதமேழி னொன்று. பிறர்பொருட்டனுமானம் - தானனுமானித்ததைப் பிறர்க்குரைத்தல். பிறர்மனைநயத்தல் - பரதாரம்விரும்பல். பிறர்முகம்பார்த்தல் - பரதாரம்விரும்பல். பிறலாபம் - பிரலாபம். பிறவாயாக்கைப்பெரியோன் - சிவன். பிறவி - உற்பத்தி, சகோதரம், பிறப்பு. பிறவிக்கடல் - சநநசாகரம். பிறவிக்குணம் - சுபாவகுணம். பிறவிக்குருடன் - குருடனாய்ப் பிறந்தவன். பிறவிசாரம் - பரதவுறுப்பினுளொன்று. பிறவிச்சுபாவம் - பிறக்கையிலுள்ளது,பிறவியி லுள்ளது. பிறவிச்செல்வம் - பிறந்தநாடொட்டசெல்வம். பிறவிடுதி - புறவிடுதி. பிறவித்துயர் - சகோதரநிரியாணதுக்கம், பிறப்பிலுண்டாகும்வருத்தம். பிறவித்துவக்கு - பிறவித்தொடர்பு. பிறவித்துவந்தம் - பிறப்புத்தோறுந்தொடரும் வினை, பிறவித்தொடர்பு.பிறவித்தொடக்கு, பிறவித்தொடர்பு - சநநத்தொடர்ச்சி. பிறவித்தொந்தம் - பிறவித்துவந்தம்.பிறவிநோக்கல், பிறவிநோக்குதல் - பிறக்கத் தொடங்கல். பிறவிநோய் - சென்மதுக்கம், பிறப்பிலேயுண்டான வியாதி. பிறவிப்பயன் - சனனபலன். பிறவிப்பேறு - பிறப்பாலாயபயன். பிறவிமயக்கு - உற்பத்தி மயக்கு. பிறவியாரதம் - புலான்மறுப்பு. பிறவிழம் - பவழம். பிறவினை - காமம், பாவம், பிறகருத்தாவின்புடை பெயர்ச்சியாய்த்தொழிற்படுஞ்சொல்.பிறழ்ச்சி, பிறழ்தல், பிறழ்வு - ஒளிசெய்தல், சொல்லல், திரும்புதல்,நடுக்கம், வெறுப்பு, வேறாதல்,பெயர்தல். பிறனில் - பிறன்மனை. பிறன் - அயலவன், அன்னியன், மற்றவன். பிறன்கோட்கூறல் - தன்னூலிற் பிறனதுகோட்பாட்டைச் சொல்லுதல்அஃது யுத்தி முப்பத்திரண்டினொன்று. பிறன்மனை - பிறத்தியான் மனைவி. பிறாக்காண்டம் - சரகாண்ட பாஷாணம். பிறாண்டு - வேறிடம். பிறாண்டுதல் - வறுகுதல். பிறாமுட்டி - சாயவேர். பிறிதல் - நீங்குதல், பங்குபடுதல்,வேறுபடல். பிறிதாராய்ச்சியணி - ஓரலங்காரம்அஃது உலகறி காரணமில்லாதிருப்பக் காரியம்பிறத்தலைச்சொல்லுதல். பிறிதி - பிரதி. பிறிதிக்கினை - பிரதிக்கினை. பிறிதினவிற்சி - பரியாயவலங்காரம். பிறிதின்கிழமை - தன்னோடொற்றுமையில்லது. பிறிது - வேறு. பிறிதுபடுபாட்டு - மிறைக்கவியினொன்று அஃது ஒரு செய்யுளையே தொடையுமடியும் வேறுபடுத்துரைப்பச் சொல்லும்பொரு ளும்வேறுபடாதுவேறோர் செய்யுளாய் முடிவது. பிறிதொடுபடான்றன்மதங்கொளல் - பிறர் மதத்திற் குடன்படானாகித்தன் மதத்தைக் கொளல் அஃதுஆசிரியமதமேழி னொன்று. பிறித்தல் - பங்குபடுத்தல், வேறுபடுத்தல், முரித்தல். பிறிப்பு - பிரிப்பு. பிறியம் - பிரியம். பிறியகம் - கடம்பு, ஞாழல், வேங்கை. பிறியாவிடை - பிரியாவிடை. பிறிவினை - பிரிவினை. பிறிவு - பிரிவு. பிறீதி - பிரீதி. பிறை - கரலட்சணத் தொன்றுஅஃது பெருவிரலைப் பின்வாங்கிநீட்டி மற்றையவிரல்களை முன்னாக நீட்டுதலாம், சந்திரப்பிரவை, வாலசந்திரன். பிறைக்கொழுந்து - இளம்பிறை. பிறைக்கோடு - பிறைநுதி. பிறைசூடி - சிவன். பிறைச்சிந்தாக்கு - கழுத்தணியினொன்று. பிறைதொழுகென்றல் - புதுப்பிறைவணங்குக வென்றல் அஃது அகப்பொருட்டுறையினொன்று. பிறைமலர் - அகத்தி. பிறைமுகவாளி - அர்த்தசந்திரபாணம். பிறைமுகாத்திரம் - பிறைமுக அம்பு. பிறையிரும்பு - அரிவாள். பிறைவடம் - சந்திரகாரமென்னும்ஆபரணம். பிறைவடிவு - வில் வளைவு. பிற்கழித்தல் - பின்வாங்குதல். பிற்காலம் - பிற்படுசமயம், வருங்காலம். பிற்கூறு - பிற்பகுதி. பிற்கொழுங்கால் - உத்திரட்டாதி. பிற்சாமம் - நான்காஞ்சாமம். பிற்பக்கம் - அபரபட்சம். பிற்படுதல் - பின்போதல். பிற்படை - பின்னணி. பிற்பாடு - பிறகு. பிற்றல் - பித்தல், பின்றுதல். பிற்றி - பிந்திப்போனது. பிற்றிகம் - முள்ளி. பிற்றை - பிறகு, பின்னைநாள்.பினத்தல், பினத்துதல், பினற்றல், பினற்றுதல் - பிதற்றுதல். பினாகபாணி - சிவன். பினாகம் - சிவன்வில், திரிசூலம்,மணிமாலை, மண்மாரி, சிவன்சூலம், சூலம், தம்பனம். பினாகி - ஓரிருடி, ஓருருத்திரன்,சிவன், பெண்ணையாறு.பினாகிநதி, பினாகினி - பெண்ணையாறு. பினாத்துதல் - பினத்தல். பினைச்சல் - பினைதல். பினைதல் - பிசைதல். பினைவு - பினைதல். பின் - ஏழனுருபு (உ-ம்) காதலி பின்சென்றகம் மகடை, காரணம்,பின்னென்னேவல், பெருமை,வழி. பின்கட்டு - பின்பக்கத்திற்கட்டு,வீட்டின் பின்புறம். பின்காட்டுதல் - தோற்றோடுதல். பின்குடுமி - பின்சிகை. பின்கொடுத்தல் - பிறகிடல். பின்கொண்டை - பின் குடுமி. பின்கொம்பு - பல்லக்கின் பின்புறத்துக் கொம்பு. பின்கோக்கி - ஆபரணக் கடைப்புணர்வு. பின்சந்ததி - பின்னாரி. பின்சந்து - பின்னடியார். பின்சரிவு - பின்னேரம். பின்சிகை - பஞ்ச சிகையினொன்றுஅஃது பிடர் மயிர்முடி. பின்செல்லல் - தொடர்ந்துபோதல்,மன்றாடுதல். பின்தட்டு - தோணியின் பிற்பக்கம்,பின்னந் தண்டு. பின்பத்தி - பின் வரிசை.பின்பற்றல், பின்பற்றுதல் - ஒருவர்செய்தது போலச்செய்தல், கீழமைந்து நடத்தல், பின்போதல். பின்பனி - ஆறு பருவத்தொன்றுஅஃது மாசி, பங்குனி. பின்பனியுரிமை - உலவைக் காற்றுவீசலும் பல புறவினமுங் கானங்கோழியு மகிழ்தலுங் கோங்குமிலவும் பூத்தலும் பேரீந்து பனையிவை பழுத்தலும் பருத்தி வெண்சுளை வெடித்தலுமாகும். பின்பிறந்தாள் - இலட்சுமி, தங்கை. பின்பிறந்தோன் - தம்பி. பின்பு - பின். பின்புத்தி - பின்னே யுண்டாகு மறிவு. பின்புறணி - ஒருவனை முன்னிலையிற்புகழ்ந்து இல்லாவுழி யிகழ்தல். பின்புறம் - பின்பக்கம். பின்போகுதல் - பின்செல்லுதல். பின்போடுதல் - நாட்கடத்துதல். பின்மழை - பிற்பட்ட மழை. பின்மாரி - மார்கழி தை மாதங்களின்மழை. பின்மாலை - விடியற்காலம். பின்முடுகுவெண்பா - பின்னிரண்டடிமுடுக்காய் வருவது. பின்முரண் - இரண்டாஞ்சீரும்இறுதிச் சீரும் முரணிவருவது. பின்மோனை - இரண்டாஞ்சீர்க்கண்ணுமிறுதிச் சீர்க்கண்ணுமோனை வருவது. பின்வரிசை - பின்பகுதி. பின்வருநிலை - ஓரலங்காரம், அஃதுமுன் வாக்கியத்தில் வந்த சொல்லேனும் பொருளேனுஞ் சொல்லும் பொருளுமேனும் பின்வாக்கியத்திலும் வருதல். பின்வருவிளக்கணி - ஓரலங்காரம்,அஃது முன் வாக்கியத்து வந்தவிளக்கச் சொல்லேனும் பொருளேனுஞ் சொல்லும் பொருளுமேனும் பின் வாக்கியத்துள்ளும்வருதல். பின்வாங்கல் - தோற்றல், பிற்கழித்தல். பின்வைத்தல் - பின்போடுதல்,பின்னடி யாருக்கு வைத்தல். பின்றல் - பிறகிடல். பின்றளை - பின்னங்கால் பிணைக்குங்கயிறு, பின்னங்காற் பிணைப்பு. பின்றுதல் - பின்றல். பின்றை - பின்பு, பின்னைநாள். பின்றொடரி - ஓர் செடி, நாயுருவி. பின்றொடர்தல் - பின்செல்லல். பின்றோன்றல் - தம்பி. பின்னகம் - பேதம், மயிர்முடி,பின்னிய மயிர். பின்னகனம் - கீழ்வாயிலக்கத்தைச்சமமாகிய அவ்விலக்கத்தாற்றாக்கிவந்த இலக்கத்தை மறுமுறையும் பெருக்கல். பின்னகன் - பேதி. பின்னகுணனம் - கீழ்வாயிலக்கத்தைப்பெருக்கல். பின்னங்கால் - பின்னகால். பின்னசங்கலிதம் - கீழ்வாய்க் கூட்டல். பின்னசத்தி - பங்கப்படத்தக்கது. பின்னடி - கடைசி, பிற்சந்ததி, வருகாலம். பின்னடியார் - பின்சந்ததியார். பின்னடைப்பன் - பசுநோயி னொன்று. பின்னணி - பிற்படை. பின்னணியம் - தோணியிற்பிற்புறம்,பிற்படை. பின்னதுநிறுத்தல் - யுத்தி முப்பத்திரண்டினொன்று, அஃது ஒருபொருட்குக் கருவியாய் முன்வைத்தற் குரியதை முன்வைத்தற்கிடம்பெறாதாயின் அப்பொருளின் பின்னே அதனை வைத்தல். பின்னந்தண்டு - பின்காற்சீப்பு. பின்னந்தலை - பிடர். பின்னந்தொடை - பின்றொடை.பின்னபேதகம், பின்னபேதம் - விரோதம். பின்னம் - கிழிவு, சிதைவு, தடை,தவறு, பங்கு, பராகம், பழுது,பிணக்கு, பிரிவு, வேற்றுமை,பிழைத்தல், பினத்தல், பொடி,மாறுபாடு. பின்னரை - பின்பாதி. பின்னர் - சூத்திரர், பிறகு. பின்னல் - சடை, சிக்கு, பிசகு, பின்பட்டது, பின்னுதல். பின்னவருக்கம் - கீழ்வாயிலக்கத்தைச் சமமாகிய வவ்விலக்கத் தாற்பெருக்கல். பின்னவர் - சூத்திரர். பின்னவன் - தம்பி. பின்னவியவகலிதம் - கீழ்வாய்க்கழிவு கணக்கு. பின்னவையகத்திணை - பின்வருவதைக் காட்டல் (உ-ம்) பகைபாவமச்சம் பழியெனநான்குமிகவாவா மில்லிறப் பான்கண். பின்னளபெடை - இரண்டாஞ்சீருமிறுதிச் சீருமளபெடுத்து வருவது. பின்னறுவிடை - விடுகாலி விளைவு. பின்னற்காரன் - பின்னல்வேலைசெய்பவன். பின்னனை - சிரியதாய். பின்னாரி - முதுகின்கீழ்ப்புறம். பின்னால் - பின்பு.பின்னிடல், பின்னிடுதல் - அதைத்தல்,தோற்றல், பின்னே போதல். பின்னிடைதல் - பின்னிடுதல். பின்னிதம் - பேதம். பின்னியாசம் - பெருங்காயம். பின்னியையு - முதற்சீர்க்கண்ணுமீற்றியற் சீர்க்கண்ணுமியைபுவருவது. பின்னிரக்கம் - பிற்றயவு. பின்னிருட்டு - பின்னிராவிருள். பின்னிரை - பின் வரிசை. பின்னிலவு - அபரபக்கம். பின்னிலை - குற்றேவல். பின்னிழுக்கு - பின்வருங்குறை. பின்னிளவல் - தம்பி. பின்னிற்றல் - பிறகிடல், மறுத்தல். பின்னுதல் - தெற்றல். பின்னும் - மேலும். பின்னெதுகை - இரண்டாஞ் சீர்க்கண்ணுமிறுதிச் சீர்க்கண்ணுமெதுகைவருவது. பின்னேரம் - சாயங்காலம். பின்னை - இலக்குமி, இளையவள்,இளையவன், பின்பு, பின்னைநாள், தங்கை. பின்னைகேள்வன் - திருமால். பின்னைநாள் - பின்னாள், மறுநாள். பின்னைபிரான் - திருமால். பின்னோக்கு - பிற்பார்வை. பின்னோர் - சூத்திரர். பின்னோன் - தம்பி, வழிநூல் செய்வோன். பீ பீ - அச்சம், ஓரெழுத்து, மலம். பீகாரகாரம் - பயங்கர ரூபம். பீக்கருவேல் - ஓர் மரம். பீக்கலாட்டம் - பித்தலாட்டம். பீக்கிலாத்தி - சங்கங்குப்பி. பீங்கான் - ஓர் தீட்சை. பீசகம் - யானை விரல். பீசதீட்சை - ஓர் பாண்டம். பீசநியாயம் - மூலநியாயம், வெளிப்படாதது. பீசம் - அண்டம், ஆண்குறி, சந்ததி,சுக்கிலம், தாடி, தாமரைப்பூச்சுருள், மூலம், விதை. பீசாங்குரநியாயம் - காரணகாரியமிதுவதுவென முற்பிற்பாடு வரையறுக்கப்படாவழக்கு. பீசாட்சரம் - விந்து, மந்திரத்தில்முக்கியாட்சரம். பீசி - பீசத்தை யுடையது. பீச்சல் - கழிச்சல்.பீச்சாக்கத்தி, பீச்சாங்கத்தி - சிறியகத்தி, பூச்சாத்தி. பீச்சாங்குழல் - மலசலம் வாங்கும் ஓர்சூத்திரக் குழல். பீச்சாங்கொள்ளி - அச்சமுடையோன். பீச்சுவிளாத்தி - ஓர் நாற்றமுள்ளமரம். பீச்சைக்கால் - இடக்கால். பீச்சைக்கை - இடக்கை. பீஞ்சல் - பீச்சுவிளா. பீடகேலி - வேசி.பீடணம், பீஷணம் - அச்சம். பீடம் - ஆசனம், குதம், சிங்காதனம்,தருப்பைப்பாய். பீடரம் - தேவாலயம். பீடனம் - பீடை, வருத்தம், துன்புறுத்தல். பீடாபஞ்சகம் - ஐவகைப் பீடை. பீடாபயம் - பீடையினால் வரும் பயம். பீடார்த்தம் - அவத்தை. பீடிகை - அணிகலச்செப்பு, ஆசனம்,கடைவீதி, பூந்தட்டு, முகவுரை,முனிவரிருக்குமிடம். பீடித்தல் - இரங்கல், துன்புறுதல்,துன்புறுத்தல். பீடிப்பு - உருக்கம், துன்பம், வருத்துகை. பீடு - குறைவு, பீடை, பெருமை,வலி. பீடை - உருக்கம், துன்பம், பாழாதல்,முடிமாலை, ஆறாமிடம். பீடைகழித்தல் - துன்பநிவாரணஞ்செய்தல், மார்கழி மாதத்திற்செய்யுமோர் சடங்கு. பீடைமாதம் - மார்கழி மாதம். பீட்டகம் - உத்தியோகம், தொழில். பீட்டன் - இரண்டாம் பாட்டன்,இரண்டாம் பேரன். பீட்டி - பாட்டி. பீட்டிகை - பீடிகை. பீட்டை - இளங்கதிர், இளஞ்சூல். பீதகதலி - செவ்வாழை. பீதகந்தம் - பன்றி. பீதகம் - அரிதாரம், இருவேலி,சாந்து, தேன், பித்தளை, பொன்னிறம், மஞ்சள், பொன், வெற்றிவேர். பீதகலி - செவ்வாழை. பீதகல் - பீதரோகணி. பீதகன் - வியாழன். பீதகாட்டம் - செஞ்சந்தனக்கட்டை. பீதகாரகம் - வேங்கைமரம். பீதகாபேரம் - பித்தளை, மஞ்சள். பீதகாவேரம் - மஞ்சள். பீதசந்தநம் - பொதியையிலுண்டான செஞ்சந்தநமரம். பீதசம்பகம் - ஓர் வகைச் சண்பகம். பீதசாரகம் - வேங்கைமரம், சந்தனம்,செவ்வல்லி. பீதசாரம் - சந்தனம், வேங்கைமரம். பீதசாரி - சந்தனம். பீதசாலம் - பீதசாரம், வேங்கை. பீததாரு - செம்புளிச்சை, தேவதாரமரம், பின்னை. பீததுண்டம் - பொன்வாய்ப்புள். பீததுத்தை - இளங்கற்றா. பீதத்துரு - மரமஞ்சள். பீதத்துருமம் - தேவதாரமரம். பீதநம் - அரிதாரம், குங்குமம். பீதநி - மூவிலைப்புன்னை. பீதபத்திரம் - மலைக்காசினி. பீதபீஜம் - வெந்தயம். பீதபூரம் - கொம்மட்டிமாதளை. பீதமணி - புஷ்பராகம். பீதமுண்டம் - தூக்கணங்குருவி. பீதம் - அச்சம், அரிதாரம், குடித்தல்,சந்தனம், சிவப்பு, நால்வகைச்சாந்தி னொன்று, நீர், நேரம்,பருமை, பொன், பொன்னிறம்,மஞ்சள். பீதயூதி - செம்மல்லிகை. பீதராகம் - தாமரை நூல், பொன்மை. பீதராசாவருத்தம் - ஓர் கல். பீதரோகணி - பீதகல், பீருகா. பீதரோசனை - ஓர் மருந்து. பீதலகம், பீதலம் - பித்தளை. பீதவாசன் - ஸ்ரீகிருஷ்ணன். பீதனம் - கடுக்காய். பீதனி - மஞ்சள். பீதன் - அச்சமுள்ளோன், சூரியன்,தீ. பீதனேகம் - பீதலகம். பீதாபன் - இந்திரன், குபேரன். பீதாப்தி - அகத்தியமுநி. பீதாம்பரம் - கனகவத்திரம், பொற்புடவை. பீதாம்பரன் - திருமால்.பீதாம்பரி, பீதாம்பரை - பார்வதி. பீதி - அச்சம், குடிப்பு, பயம், மதுக்கடை, வேதனைசெய்யும் நோய். பீதிகை - செம்மல்லிகை, பொன்மை,மஞ்சணிறம். பீதை - பொன்னிறப்பூவுள மருதோன்றி மரம், மஞ்சள். பீத்து - வீம்பு. பீத்துதல் - வீம்புபேசுதல். பீத்தை - நாடா. பீத்தோல் - மேற்றோல். பீநாறி - பெருமரம். பீநாறிச்சங்கு - ஓர் செடி. பீந்தோல் - பீத்தோல். பீப்பாக்கு - நுங்குப்பாக்கு. பீமசாசனம் - பெருங்கொலை. பீமசாசனன் - நமன். பீமநேசன் - பீமன். பீமநாதம் - சிங்கம், பேரொலி. பீமபாகம் - பாகவகையி னொன்று. பீமபீசம் - அண்டநோயி னொன்று. பீமம் - அச்சம், பருமை. பீமரதி - பிறந்த எழுபத்தேழாமாண்டி னேழாமாதத் தேழா மிரவு. பீமரம் - யுத்தம். பீமரன் - யுத்தவீரன். பீமன் - சிவன், பாண்டுமைந்தரிலொருவன், விதர்ப்பதேசத் தரசன்,வீமசேநன். பீமாதேவி - துர்க்கை. பீயாக்குதல் - கெடுத்தல். பீயு - ஆந்தை, காகம், காலம், சூரியன். பீயூஷம் - அமுதம், இளங்கற்றாப்பால். பீரங்கி - பெருவெடிக்குழாய். பீரம் - பலம், பீர்க்கு, பூவரசமரம்,வாகைமரம், வீரம். பீராய்தல் - வீராய்தல். பீரிடுதல் - கம்பிபோலப்பாய்தல்,நுட்ட மாயாராய்தல். பீரிறங்கல் - பீரோடல். பீரு - அச்சமுள்ளோன், புருவம்,புலி, வெள்ளாடு. பீருகம் - ஆந்தை, கரடி, காடு. பீருகன் - அச்சமுடையோன். பீருகா - பீதரோகிணி. பீருதந்தி - தண்ணீர்விட்டான் கிழங்கு. பீருரந்திரம் - அடுப்பு, சூளை.பீரோடல், பீரோடுதல் - இரத்தமுதலிய விசைத்துப் பாய்தல். பீர் - அச்சத்தான்வேறுபட்டநிறம்,அச்சம், ஒலிக்குறிப்பு, பசலை,பீர்க்கு, முலைப்பால். பீர்க்கு - ஓர் கொடி. பீர்ச்சாங்குழல் - பீச்சாங்குழல். பீர்ச்சுதல் - பீரிடச்செய்தல், மலங்கழித்தல். பீர்விழுதல் - பீரிடுதல். பீலகம் - எறும்பு. பீலி - ஆலவட்டம், ஒட்டச்சீட்டு,சிறு சின்னம், பத்தல், பறைப்பொது, பனங்கிழங்கினுட் குருத்து,பனங் குருத்து, பெருஞ் சவளம்,பொன், மதில், மயில், மயிற்றோகை,மாதர் காலணியினொன்று,வாச்சியம், விசிறி. பீலிக்கண் - மயிற்றோகைக்கண். பீலிக்குஞ்சம் - மயிற்றோகை யீச்சோப்பி. பீலிக்குடை - மயிற்றோகைக்குடை. பீலிக்கொட்டு - நீரிறைக்கும் பத்தல். பீலித்தண்டு - பிண்டிபாலம். பீலிப்பட்டை - பயிர்க்கு நீரிறைக்கும்பூட்டை. பீலு - அச்சமுடையோன், அச்சம்,அணு, அம்பு, உள்ளங்கை, ஓர்மரம், செந்து, பூ, யானை. பீலுகம் - கரடி. பீலுகன் - அச்சமுள்ளோன். பீலுவாதம் - பைபீலவாதம். பீலுவாதி - பைபீலவாதி. பீவரம் - ஆமை, பருமை. பீவரன் - பருத்தவன். பீவரி - அமுக்குறா, பசு, பருவப்பெண், பெண் கிளி. பீவுரை - பருத்தவன். பீவை - நீர். பீழித்தல் - வருத்தல், பீடித்தல். பீழை - துன்பம், பீடை. பீளல் - பெண்குறி. பீளை - கண்ணழுக்கு. பீளைசாறி - ஓர் பூடு. பீளைசாறுதல் - கண்ணழுக்குப் புறப்படல். பீள் - கருப்பம், சினை, பயிரிளங்கதிர். பீறல் - கிழிதல், கிழித்தல், கிழியல். பீறு - கிழிவு, குதம், சூறு, பீறென்னேவல். பீறுகை - பீறுந்தன்மை. பீறுதல் - கிழிதல், கிழித்தல், கீறுதல். பீற்றல் - கிழியல். பீனசக்குறட்டை - ஓர் பூடு. பீனசம் - ஓர் வியாதி அஃது மூக்கிலுண்டாவது. பீனம் - பருமை, பாசி, வதக்கம். பீனிசம் - பீனசம். பு புகடல் - உட்புகுதல். புகடு - அடுப்பின் பின்பக்கம்.புகட்டல், புகட்டுதல் - உட்புகுதல்,உட்புகுத்தல், பருகச் செய்தல். புகரு - பிராய மரம். புகர் - கபிலநிறம், குற்றம், சுக்கிரன்,நிறம், பொறி, அழகு. புகர்முகம் - யானை. புகர்வு - சோறு. புகலல் - புகலுதல். புகலி - சீகாழி. புகலிடம் - ஊர், தஞ்சம், பட்டினம். புகலுதல் - சொல்லல், மகிழ்தல்விரும்பல். புகலூர் - புகலி. புகல் - உடல், உபாயம், குதிர், சொல்,விருப்பம், தஞ்சம், புகலென்னேவல், வெற்றி. புகல்தல் - சொல்லல். புகழாப்புகழ்ச்சி - ஓரலங்காரம் அஃதுஇகழ்தல் போற்புகழ்தல்,மேன்மை. புகழாளன் - கீர்த்தியுடையோன். புகழுவமை - உவமையைப்புகழ்ந்துவமிப்பது (உ-ம்) சிவன் சடையிற்றங்கும் பிறையே நின்னுதற்கொப்பு. புகழேந்தி - வெண்பா பாடுவதிற்சிறந்த ஓர் புலவன். புகழ் - கீர்த்தி, புகழென்னேவல். புகழ்கூறல் - கீர்த்தி யெடுத்துச்சொல்லல் இஃது மும்மொழியினொன்று. புகழ்ச்சி - கீர்த்தி, துதி. புகழ்ச்சிமாலை - ஓர் பிரபந்தம் அஃதுஅகவலடியுங் கலியடியும் வந்துமயங்கிய வஞ்சிப்பாவான் மாதரதுசீர்மையைக் கூறுவது. புகழ்தல் - துதித்தல், பாராட்டுதல்இஃது புண்ணியமொன்பதினொன்று. புகழ்நிலை - ஓரலங்காரம். புகழ்ந்தோதல் - புகழ்தல். புகழ்பொருளுவமையணி - இதரேதரவுபமாலங்காரம் அஃது முன்னதிலுப மானமாகச் சொன் னதைப்பின்னதிலுபமேயமாக்கியும் உபமேயமாகச் சொன்னதையுபமானமாக்கியுஞ் சொல்லுதல். புகழ்பொருள் - வன்னிக்கப்படுவது,உவமேயம். புகழ்வீசுசந்திரன் - பச்சைக் கருப்பூரம். புகழ்வு - புகழ்ச்சி. புகழ்வோர் - கீர்த்தியுடையோர்,துதிப்போர். புகள் - அகத்தி. புகறல் - குறித்தல், சொல்லல்,விரும்புதல். புகாமை - பிரவேசியாமை. புகார் - கபிலம், கழிமுகம், காவிரிப்பூம்பட்டினம், மந்தாரம், முகில். புகீர்புகீரெனல் - ஈரடுக்கொலிக்குறிப்பு. புகுடி - கழி, புருவம், மாதர் காதணியினொன்று, வாயில். புகுதல் - உட்செல்லுதல், சம்பவித்தல்,செல்லல், தொடங்கல், நுழைதல். புகுதி - சம்பவிப்பு, நுழைவாயில்,புகுவென்னேவல், போய்ச் சேர்தல். புகுத்தல், புகுத்துதல் - உட்செல்லுதல்,போக விடல். புகுபுகெனல் - ஈரடுக்கொலிக் குறிப்பு,பனி முதலிய சொரிதற் குறிப்பு. புகை - தூபம் இஃது தென்கீழ்த்திசைப்பாலன் குறி, நீராவி, பனிப்படலம், புகையென்னேவல்,யோசனை தூரம். புகைகட்டுதல் - புகையூட்டுதல். புகைகாட்டுதல் - தூபங்காட்டுதல்,புகையூட்டுதல். புகைக்கப்பல் - புகையின் பலத்தாலோடுங் கப்பல். புகைக்காடு - வேக முதலியவற்றின்மிகுதிக் குறிப்பு. புகைக்குண்டு - நச்சுப்புகை, புகைக்குங் குண்டு. புகைச்சல் - இருள், கண் மங்கலாயிருத்தல், தீய்ந்து புகைதல், பயிர்தீய்தல், புகை யெழும்புதல்,பொறாமை, வயிற்றெரிவு. புகைச்சுற்று - ஒட்டறை. புகைச்சூழுதல், புகைச்சூழ்தல் - புகைபிடித்தல். புகைதல் - எரிச்சற்படல், எரிதல்,சினக்குறிப்பு, பயிர்தீதல், புகையெழல். புகைத்தல் - சினக்குறிப்பு, புகையச்செய்தல். புகைநாற்றம் - புகைமணம். புகைநிற்காரணம் - எவட்சாரம். புகைப்படலம் - புகைச்செறிவு. புகைப்பித்தல் - புகையச் செய்தல். புகைப்பு - புகைத்தல். புகைப்போடுதல் - புகையிடல். புகைமடக்கி - வெண்காரம். புகைமணம் - புகை நாற்றம். புகையாற்றி - ஒட்டறை. புகையிலை - ஓர் செடி. புகையுறை - ஒட்டறை. புகையூட்டுதல் - புகை பிடித்தல். புகையூதுதல் - புகை யூட்டுதல்.புகையூரல், புகையூறல் - புகைப்பற்று, புகைப்பற்றுதல், ஒட்டறை. புகைவரி - மனைவரி. புகைவு - எரிச்சல், புகைச்சல், புகைதல். புக்ககம் - மாமியார் வீடு. புக்கசன் - சண்டாளன், கீழோன். புக்கம் - உதயம். புக்கல் - புகுதல். புக்கனம் - குலைத்தல். புக்காதம் - உக்காரம். புக்கி - பிராய் மரம். புக்கில் - உடல், வீடு, புகலிடம். புக்கு - வில்வம், பிராய் மரம். புக்குப்புக்கெனல் - புகுபுகெனல். புக்கை - புற்கை. புக்தம் - உணவு. புங்கம் - அம்பு, அம்புக்குதை,உயர்ச்சி, குவியல், சீலை, அம்பின்அடி. புங்கசவனம் - ஐந்தாமாதச் சடங்கு,பூ முடித்தல். புங்கலம் - ஆத்துமா. புங்கவம் - எருது, சிரேஷ்டம். புங்கவர் - கடவுளர், வானோர்,உயர்ந்தோர். புங்கவன் - கடவுள், குரு, புத்தன்,மூர்த்தபாஷாணம். புங்கவி - தெய்வப்பெண், பார்ப்பதி. புங்கவிருகம் - பும்விருகம். புங்காபுரி - அம்புகட்டுங் கயிறு. புங்கானுபுங்கம் - அம்பின் பின் அம்புதொடர்கை. புங்கு - புங்கமரம். புங்கசவனம் - புஞ்ச வனம். புங்சின்னம் - புஞ்சின்னம். புசகம் - பாம்பு.புசகதாரணம், புசகாசநன், புசகாந்தகன் - கருடன்.புசங்கமம், புசங்கம் - பாம்பு. புசபலம் - புயவலி. புகம் - எருவரட்டி, தயிராடை, பதர்,பாக்கியம், புயம். புசல் - குச்சுமட்டை, பெருங்காற்று. புசாகண்டம் - கைநகம். புசாகோடி - ஏறுமிறங்குமிராசி. புசாபலம் - புசாகோடிகளைந்தபின்மிஞ்சின தொகை. புசி - புசியென்னேவல். புசிகரணம் - புசித்தல், போசனபதார்த்தம். புசிதம் - பூசை. புசித்தல் - உண்டல். புசிப்பன - உண்டற்குரியன. புசிப்பாளி - அனுபோகி. புசிப்பித்தல் - உண்பித்தல், வினைப்பயனனுபவிக்கச் செய்தல். புசிப்பு - அனுபவிப்பு, புசித்தல் இஃதுமாயையாக்கை பதினெண் குற்றத்தொன்று, போசனப் பொருள். புசியம் - தை மாதம். புசிண்டன் - ஓர் யோகி. புசை - முதலாமிரண்டா மூன்றாம்ஏழாம் எட்டா மொன்பதா மிராசி. புச்சபீதலம் - பின் பக்கம். புச்சம் - தோள், மயிற்றோகை, வால்,வால் வெள்ளி. புச்சி - எருக்கு, கோழி. புஞ்சம் - குவியல், திரட்சி, நூற்குஞ்சம். புஞ்சலி - வேசி. புஞ்சவனம் - கருப்பங் கொண்டமூன்றாந் திங்களில் செய்யுமோர்கருமம், மூன்றாமாதக் கருப்பம். புஞ்சானம் - புசித்தல். புஞ்சிகை - ஆலங்கட்டி. புஞ்சித்துவம் - சுக்கிலம். புஞ்சின்னம் - ஆண் குறி. புடகம் - இலைக்கலம், தாமரை. புடகிரீபம் - கழுத்து, சாடி. புடகினி - தாமரைப் பூங்கொத்து. புடபாகம் - சமித்தல், சமைத்தல். புடபேதம் - ஆற்றுவளைவு, நகரம். புடபேதனம் - பட்டினம். புடமிடுதல் - பொன் முதலிய வற்றைத்தூய்மை செய்தல். புடம் - இடம், இலைக்கலம், எண்ணலிற் சுத்தம், கண்ணிமை, குடவானது, கௌபீனம், சுத்தம், செம்முதல், படம், புறம், பொன் முதலானவற்றினற வைப்பு, மருந்துசுத்தி, மூடி, மறைப்பு. புடம்வைத்தல் - புடமிடுதல். புடலம் - பன்றிமோத்தை. புடலித்தல் - திரண்டூதுதல். புடலிப்பு - திரட்சி. புடலிமூலம் - சிறுகுறட்டை. புடல் - புடோல். புடவி - பூமி. புடலித்தல் - புடைப்பு. புடலிமூலம் - சிறுகுறட்டை. புடவை - சீலை, வஸ்திரம், புடவை. புடனம் - பினத்தல். புடாரமுளை - செந்நாயுருவி. புடிகை - ஏலம். புடிதம் - கரமுட்டி. புடை - அடிப்பு, இடம், ஏழனுருபு,திரட்சி, பக்கம், பாழி, புடையென்னேவல், போர், மொத்தி,ஒலி, பகை, வீக்கம். புடைகொள்ளல் - புடைத்தல். புடைக்கருத்து - ஒருசார் தோற்றும்பொருள். புடைத்தல் - அடித்தல், குட்டுதல்,சுளகு முதலியவற்றாற் கொழித்தல்,பறவை சிறகடித்தல், நீந்துதல்,வீங்குதல். புடைநூல் - சார்புநூல். புடைபெயர்ச்சி - பக்கத்திற் போக்குவரவு செய்தல், பக்கத்திற்றிரும்பல், மாறிக்காரிய பக்கத்திற்றிரும்பல். புடைபெயர்ச்சித்தொழிற்பெயர் - மாறிக்காரியப்படும் வினைப்பெயர். புடைபெயர்ச்சிவினை - மாறிக்காரியப்படும்வினை. புடைபெயர்தல் - பக்கத்திற் போக்குவரவுசெய்தல், பக்கத்திற்றிரும்பல், மாறிக்காரியப்படல், கீழ்மேலாதல், அதைதல். புடைப்பு - புடைத்தல். புடைமண் - சுதைமண். புடையல் - மாலை. புடையன் - ஓர் பாம்பு. புடைவிழுதல் - பாழிவிழுதல், மொத்திபற்றுதல். புடைவை - சீலை. புடைவைக்குஞ்சம் - வெள்ளொலியல். புடோடசம் - வெள்ளைக்குடை. புடோதகம் - தெங்கு. புடோல் - ஓர் கொடி. புட்கரசிவை - தாமரைக்கிழங்கு. புட்கரம் - அம்பு, ஆகாயம், ஓர்குளிகை, ஒன்றிப்பு, ஓர் தலம்,ஓர்நாரை, ஓர் நோய், ஓர் பாம்பு,ஓர் வாத்தியம், குகை, கோஷ்டம்,சத்ததீவினொன்று, தாமரை,தாமரைப்பூ, தீர்த்தம், நடனசாத்திரம், நிறைவு, நீர், நீர்நிலை,பங்கு, பருந்து, பாண்டமுகம்,புட்கலாவர்த்தம், யானைத்துதிக்கை நுனி, யுத்தம், வாளலகு,வாளுறை, வாள், வெறி. புட்கரன் - ஓரரசன், வருணன் மகன். புட்கரி - யானை. புட்கரிணி - தாமரைக்குளம், நாற்சதுரவாவி, பெண்யானை..புட்கரோபலம், புஷ்கரோபலம் - சந்திரகாந்தம். புட்கலம் - நிறைதல், புட்கலா வர்த்தம். புட்கலாதேவி - புட்கலை. புட்கலாவர்த்தம் - சத்தமுகிலினொன்று,அஃது பொன் பொழிவது. புட்கலை - ஐயன்றேவிகளி னொருத்தி. புட்கலைமணாளன் - ஐயன்.புட்களம், புஷ்களம் - நிறைவு. புட்குரல் - பட்சிக்குரல், அஃது சையோக வினோதத்து மொன்று. புட்குத்திருப்பி - வட்டத்திருப்பி. புட்டம் - காகம், சீலை, நிறைவு,முடிதல். புட்டல் - தலைச்சுமை. புட்டி, புஷ்டி - கொழுப்பு, திடர்,வளர்ச்சி.புட்டிகாந்தன், புஷ்டிகாந்தன் - கணேசன். புட்டில் - இறைகூடை, உறை, கூடை,முறம், விரலுறை, குதிரைக்குஇரையிடும் கருவி, கூடு, கெச்சை,தக்கோலக்காய்.. புட்டிவெல்லம் - பனங்கட்டி. புட்டுக்கூடை - நீற்றுப்பெட்டி. புட்டுத்திருப்பி - ஓர் செடி, வட்டத்திருப்பி. புட்பகம் - அன்னபேதி, இரத்தினகங்கணம், இரும்புப்பாத்திரம்,ஓர் கண்ணோய், குபேரனூர்தி,சகா தேவன், சங்கு, புட்பகவிமானம், மூக்கிரட்டை. புட்பகவிமானன் - இந்திரன், குபேரன். புட்பகாசீசம் - அன்னபேதி. புட்பகாசை - பூப்பதாரி. புட்பகாதகம் - மூங்கில். புஷ்பகிரி - மேற்றிசைக் கடலில்வருணன் விளையாடுமோர் மலை. புட்பகீடம் - தேன்வண்டு. புட்பகீனி - பூப்பமாறிய பெண். புஷ்பகேதநன் - காமன். புட்பகேது - காமன். புஷ்பசகடி - ஆகாசவாணி. புஷ்பசமயம் - வசந்தருது. புட்பசயம் - பூந்திரள். புட்பசயனம் - பூமெத்தை.புட்பசரன், புட்பசரானன், புட்பசாபன் - காமன். புஷ்பசாமரம் - தாழை. புட்பசாரம் - பூந்தேன். புஷ்பசூனியம் - அத்திமரம். புட்பச்சோலை - பூஞ்சோலை. புட்படுத்தல் - பட்சி பிடித்தல். புட்பதந்தம் - வடமேற்றிசையானை. புட்பதனுவன் - காமன்.புட்பத்திரவம், புட்பத்திராவகம் - பூந்தாது, பூவில் வடிக்கு நீர். புட்பநிரியாசம் - பூவமுதம். புட்பந்தயம் - தேனீ புட்பபதம் - யோனி. புட்பபலம் - விளாங்கனி.புட்பபிரசயம், புட்பபிராசயம் - பூக்கொய்தல். புஷ்பபுச்சி - ஓர்வகைப்பசு. புஷ்பபுரம் - பாடலிபுரம். புட்பமஞ்சரி - பூங்கொத்து. புட்பமஞ்சரிகை - நீலோற்பலம். புட்பமழை - பூமாரி. புட்பமாரி - புட்பமழை. புட்பமாசம் - தளிர்காலம். புட்பமாலை - பூமாலை. புட்பம், புஷ்பம் - ஓர்கண்ணோய், புட்பகம், பூ, மகளிர் சூதகம், வாழை, விசாலம். புட்பரசம் - பூந்தேன், மகரந்தம். புட்பரதம் - பூந்தேர். புட்பராகம் - நவமணியினொன்று. புட்பரேணு - பூந்தாது.புட்பலாவகன், புட்பலாவன் - சாலியனுக்கும் பார்ப்பினிக்கும் பிறந்துபூக்கொய்து மாலைவிற்போன். புஷ்பலோலுபம் - வண்டு. புஷ்பவதி - ரஜஸ்வலை. புட்பவருஷம் - புட்பாஞ்சலி. புஷ்பவாகநன் - புஷ்கரன். புட்பவாடிகை - பூந்தோட்டம். புட்பவிமானம் - பூந்தேர். புட்பாசவம் - தேன். புட்பாசனன் - பிரமன். புட்பாசனி - இலக்குமி, சரஸ்வதி.புட்பாசீவனி, புட்பாசீவி - பூமாலைகாரன். புட்பாஞ்சலி - புட்பஞ்சொரிந்துவந்தித்தல். புட்பாத்திரன் - காமன். புஷ்பாயுதன் - மன்மதன். புட்பிகை - இந்திரியம், பல்லழுக்கு. புட்பிதை - பூப்பதாரி. புட்பித்தல் - பூத்தல்.புஷ்பேந்திரம், புட்பேந்திரம் - சண்பகமரம். புணக்கம் - கோட்டம், கடற்றிரை. புணரி - அலை, கடல். புணருதல் - புணர்தல். புணர் - புணரென்னேவல், புதுமை. புணர்ச்சி - இசைப்பு, இசைவு,எழுத்து முதலியவற்றின்சந்தி,கலத்தல், ஒரு தேயத்தராதல். புணர்ச்சிமாலை - தண்டகமாலை. புணர்ச்சியின்மகிழ்தல் - அகப்பொருட்டுறையி னொன்று. புணர்ச்சிவிகாரம் - சொற்றொடரின்வருந்தோன்றல், திரிதல், கெடுதல்எனும் விகாரங்கள். புணர்தல் - இசைதல், இணங்கல்,இணைதல், கலத்தல், சார்தல்,விளங்கல்.புணர்த்தல், புணர்த்துதல் - அணிதல்,இணைத்தல், இயைவித்தல், உண்டாக்கல், உபாயஞ்செய்தல்,புணரச் செய்தல், விளங்கச்செய்தல். புணர்நலம் - சாரணை. புணர்நிலை - ஓரலங்காரம், அஃதுயாதோர் பொருளுடனேபிறிதோர் பொருளுங் கூடநிகழ்வதாய்ச் சொல்லுதல். புணர்பூசம் - அதிதிநாள். புணர்ப்பு - இணைப்பு, உடல், கூடல்,தந்திரம், மாயம். புணர்வு - இசைவு, இணைவு, உடல்,கலப்பு. புணை - தெப்பம்,புணையென்னேவல், மரக்கலம்,மூங்கில், விலங்கு. புணைத்தல் - கட்டல். புண் - ஊன், விரணம். புண்டரகேலி - யானை. புண்டரநீறு - திருநீறு. புண்டரம் - இரேகை, கழுகு, செங்குரங்கு, நெற்றிக்குறி, வெண்கரும்பு, வெண்டாமரை, குருக்கத்தி. புண்டரன் - ஒரு தைத்தியன், பலியின்நான்காம் புத்திரன். புண்டரீகக்கண்ணன் - திருமால். புண்டரீகப்பிரியன் - காலவமுநி. புண்டரீகம் - ஒரு நோய், ஒரு பாம்பு,ஒரு மருந்து, கழுகு, தாமரை,தென் கீழ்த்திசை யானை, புலி,யானைநோய், வண்டு, வெண்கொற்றக் குடை, வெண்டா மரை,அக்கினி திக்குக்காவல் பூண்டஆண் யானை, ஒரு தீர்த்தம். புண்டரீகாட்சன் - திருமால். புண்டரீகன் - நபசு புத்திரன். புண்டரீகாக்ஷன் - விஷ்ணு. புண்டரீயம் - ஒரு கொடி. புண்டலீகன் - சூத்திரன். புண்டாரம் - சூரியன் கைச்சங்கு. புண்ணாக்கு - பிண்ணாக்கு. புண்ணியகந்தம் - சண்பகம். புண்ணியகாலம் - சுபவேளை, திவ்வியகாலம். புண்ணியக்கதை - தரும சரித்திரம். புண்ணியக்கருத்து - தரும சிந்தை. புண்ணியசடம் - சற்சனன், புண்ணியதேகம். புண்ணியசரவணம் - அழகர் மலையிலுள்ள ஒரு பொய்கை, இதில்மூழ்குவோர்களுக்கு இது ஐந்திரவியாகரணத்தை யுணர்த்துவது. புண்ணியசரித்திரம் - புண்ணியக்கதை. புண்ணியசரீரம் - புண்ணிய சடம். புண்ணியசனம் - சற்சனர். புண்ணியசனேசுவரன் - குபேரன். புண்ணியசன்மம் - சற்சனன், நல்லஜன்மம். புண்ணியசாலி - புண்ணியவான். புண்ணியரூபி - திவ்வியரூபி.புண்ணியசாந்தம், புண்ணியசாந்து - சரணம், விபூதி. புண்ணியதலம் - தருமத்தை விருத்தியாக்குந் தலம். புண்ணியசுலோகன் - உதிட்டிரன்,நளன். புண்ணியசுலோகை - சீதை, துருபதி. புண்ணியசேத்திரம் - பரிசுத்த தலம். புண்ணியதானம் - தருமக்கொடை. புண்ணியதிரணம் - வெண்டருப்பை.புண்ணியத்தானம், புண்ணியஸ்தானம் - உதயத்திற் கொன்பதாமிடம், புண்ணியத் தலம். புண்ணியத்தினம் - சுபதினம். புண்ணியத்திசை - வடதிசை. புண்ணியத்தீர்த்தம் - பாவ விமோசனநீர். புண்ணியபலம் - புண்ணியப்பேறு. புண்ணியபுத்திரன் - சற்புத்திரன். புண்ணியபுருஷன் - சற்புருஷன். புண்ணியபூ, புண்ணியபூமி - புண்ணியசேத்திரம்.புண்ணியமுதல்வன், புண்ணியமூர்த்தி - அருகன், கடவுள், புத்தன். புண்ணியம் - அறம், திவ்வியம்,தூய்மை, நல்வினை, நீர்த்தொட்டி. புண்ணியராஜி - நக்ஷத்ரலோகம். புண்ணியராத்திரம் - சுபராத்திரி. புண்ணியலோகம் - சுபலோகம், தேவபதவி. புண்ணியவதி - புண்ணியவாட்டி. புண்ணியவாசனம் - புண்ணிய யாகம். புண்ணியவாட்டி - தருமவதி.புண்ணியவாளன், புண்ணியவான் - தருமவான். புண்ணியன் - அரசன், அருகன், ஒருஇருடிபுத்திரன், சிவன், சுத்தன்,தருமவான், புத்தன். புண்ணியாகம் - ஆசூச நிவாரணம். புண்ணியாக்கம் - குந்துருக்கம். புண்ணியாகவாசனம் - ஆசூச நிவாரணம். புண்ணியாகனம் - பரிசுத்த நாள். புண்ணியாத்துமா - சற்சனன். புண்ணியை - துளசி, புண்ணியவதி. புண்ணியோதயம் - அதிட்டம். புண்ணீர் - இரத்தம். புண்ணுடம்பு - பச்சையுடம்பு. புண்படுதல் - புண்ணாதல், மனநோயுண்டாதல். புண்வாய் - புண்ணிற்றுவாரம். புதசனன் - அறிஞன். புதசுதன் - புரூரவச் சக்கிரவர்த்தி. புததாதன் - சந்திரன். புதப்பிரியம் - மரகதரத்திநம். புதர் - ஞானிகள், நூறு, தேவர்,புலவர், புல். புதல் - நாணல், புருவம், புல், பூடு. புதல்வன் - மகன். புதல்வி - மகள். புதவாரம் - புதன்கிழமை. புதவு - ஒருவகைப்புல், கதவு, கதவுவிட்டுப் புகும்வழி, கோபுரவாயிற்கதவு. புதற்பூ - புல், பூடு, செடி யிவைகளின்பூ,இது நால்வவைப் பூவினொன்று. புதன் - அறிஞன், ஒரு நாள், தேவன்,புலவன், சந்திரன்மகன், தாய்தாரை, நவக்ரகங்களு ளொன்று. புதா - கொக்கு, பெருநாரை, மரக்கால். புதானன் - அறிஞன், குரு. புதிதாக்கல் - புதுப்பித்தல். புதிசு, புதிது - புதியது. புதிதுணல் - புதுப் பிரயோசனத்தைச் சுபதினம்பார்த்துண்ணல். புதியநுட்பம் - தருக்க நூலு ளொன்று. புதியர், புதியவர் - விருந்தர். புதியனபுகுதல் - புதுமொழி வழங்கல். புதியோர் - புதியவர். புதிர் - புதிது. புதிலி - எண்ணெய்த் துருத்தி. புதினக்கடுதாசி - சமாசார பத்திரிகை. புதினம் - அதிசயம், நூதனம். புதினா - ஒரு பூடு. புதீதம் - புத்தம். புதுக்க - புதிதாக்க.புதுக்கல், புதுக்குதல் - புதுப்பித்தல். புதுச்சேரி - ஒரு பட்டினம். புதுநாணயம் - நூதன வழக்கம். புதுபுதுக்கை - புது முகனை. புதுப்பணம் - புது நாணயம். புதுப்பித்தல் - திருத்துதல், புதிதாக்கல். புதுமுகனை - முன்முகனை. புதுமை - அற்புதம், நூதனம், மிகுதி.புதுமைசெய்தல், புதுமைபண்ணல் - அற்புதஞ் செய்தல். புதுவது - புதியது. புதுவை - புதுச்சேரி. புதை - அம்பு, அம்புக்கட்டு, அறிவுடைமை, சரீரம், புதுமை, புதையென்னேவல், மறைவிடம்,மறைவு. புதைதல் - தாழ்தல், மறைதல். புதைத்தல் - சேமித்தல், தாழ்க்குதல்,மறைத்தல். புதைபொருள் - புதைக்கப்பட்டபொருள், மறைபொருள். புதைப்பு - சேமம், தாழ்ப்பு, மறைவு. புதையல் - புதைத்த திரவியம், புதைப்பு. புத்தகம், புஸ்தகம் - ஏடு, சித்திரப்படம். புத்தசேடம் - மிச்சில். புத்தசௌத்திராந்திகன் - உருவம்ஞானம் வேதனை குறிப்பு வாசனைஎன்பன தொடர்ச்சியாய் அழிவதுபந்தமென்றும், அதைமுற்றும்ஒழிவதே முத்தியென்றுஞ் சொல்லுவோன். புத்தப்புதியது - மிகப் புதியது. புத்தமுதம் - புதிய வமுதம். புத்தம் - அதிசயப்படல், உணவு,புத்தமதம் இது புறச்சமயமாறிலொன்று, பாசேனம். புத்தரக்கன் - பருத்த குறளன். புத்தர் - பௌத்த சமயத்தார், பௌத்தமதத்தை ஸ்தாபித்த கௌதமர்,இவர் கங்கைக்கு வடதிசையிலேரோகிணிநதி தீரத்தில் கபிலவாஸ்து என்னும் நகரத்திலேசுத்தோதநன் என்னும் அரசனுக்குமாயாதேவி வயிற்றிலே அவதரித்தவர். புத்தலிற்சுதையார் - செய்த பொம்மை. புத்தன் - பௌத்த சமயி, பௌத்தன்,போதமே வடிவானவன். புத்தாடை - புதிய வஸ்திரம். புத்தாத்திரி - அரிநெல்லி. புத்தாம்பழம் - ஒரு உபசரப்பொருள். புத்தி - அறிவு, இடித்துரை, உட்கரணநான்கி னொன்று, போதனை,யூகிப்பு, விநாயகக் கடவுளது உபயசத்திகளுளொருவர், மற் றொருவர்சித்தி. புத்திகேடு - மதியீனம். புத்திகூர்மை - மனநுண்மை, விவேகம். புத்திசாலி - யூகி. புத்திதாழ்ச்சி - மதிகேடு. புத்திமயக்கம் - அறிவு மயக்கம். புத்திமழுக்கம் - புத்திக் குறைவு. புத்திமான் - அறிவாளி. புத்தியறிதல் - இருதுவாதல், விரகறிதல். புத்தியூட்டுதல் - புத்தி படிப்பித்தல். புத்திரகன் - அன்பன், எத்தன். புத்திரகாமியம் - ஒரு யாகம், புத்திரஆசை. புத்திரகாமேட்டி - புத்திர யாகம். புத்திரகை - மகள். புத்திரசந்தானம் - பின் சந்ததி, புத்திரர். புத்திரசம்பத்து - புத்திர பாக்கியம். புத்திரசுவிகாரம் - பிறர் பிள்ளையைத் தன் பிள்ளையாக்கல். புத்திரசென்னி - தாளி.புத்திரசோகம், புத்திரசோபம் - பிள்ளையை யிழந்து படுந்துயர். புத்திரதானம் - புத்திரரை செனிப்பித்தல், புத்திரனைத் தானம்பண்ணுதல். புத்திரத்தானம் - உதயத்திற்கு ஐந்தாமிடம். புத்திரநாதன் - பிள்ளையினாற்றாபரிக்கப்படுபவன். புத்திரபாக்கியம் - பிள்ளைப் பாக்கியம். புத்திரபொளத்திரபாரம்பரியம் - பிள்ளை பாட்டப்பிள்ளைமுதலாகவரும் வமிசவரிசை. புத்திரப்பிரதிநிதி - மஞ்சணீர்ப்பிள்ளை. புத்திரமார்க்கம் - கிரியாமார்க்கம். புத்திரயாகம் - புத்திரகாமிய யாகம். புத்திரர் - பிள்ளைகள். புத்திரலாபம் - புத்திர சம்பத்து. புத்திரவதி - புத்திரசாலி. புத்திரவேடணை - பிள்ளையிச்சை. புத்திரனாதன் - புத்திரஸ்தானாதிபதி. புத்திரன் - மகன். புத்திரி - மகள், கருமுள்ளி, கீழாநெல்லி.புத்திரிகாசுதன், புத்திரிகாபுத்திரன் - மகண்மகன். புத்திரிகை - சித்திரப்பாவை, மகள்.புத்திரேடணை, புத்திரேஷணை - புத்திரவாஞ்சை. புத்திரோற்பத்தி - புத்திரவுற்பத்தி. புத்திவான் - புத்திசாலி. புத்திறி - கறிமுள்ளி, கீழ்க்காய்நெல்லி. புத்தின்சாரி - காஞ்சிரை. புத்தீந்திரியம் - உள்ளிந்திரியம். புத்து - ஓர் நரகம், புதிது, புற்று. புத்துருக்குநெய் - உடனே யுருக்கினநெய், புதுநெய். புத்துரை - புதியஉரை. புத்துவணி - காஞ்சிரை. புத்தேணாடு - தேவலோகம். புத்தேளிர் - தேவர்கள், வானோர். புத்தேள் - தெய்வம், புதுமை. புத்தேன் - காஞ்சிரை, புதியதேன். புநருத்தி - அநுவதித்துக்கூறல், கூறியது கூறல். புநர்சமஸ்காரம் - விசேஷமானசடங்குகளைத்திரும்பச்செய்தல். புநர்ச்சரணை - சபம். புநர்தம், புநர்வசு - புநர்பூசம். புநிதம் - சற்குணம், சன்மார்க்கம். புநிதவதி - காரைக்காலம்மையார்இயற்பெயர். புநீதம் - சற்குணம், சன்மார்க்கம். புநீதன் - அரசன், அருகன், இந்திரன்,சிவன். புந்தி - அறிவு, புதன், புத்தி, சிந்தை. புந்திதம் - காஞ்சிரை. புந்தியர் - அறிவாளிகள், புலவர். புந்திவாரம் - புதவாரம். புந்திவிந்து - பச்சைக்கல். புபுட்சிதன் - பசித்தவன். புபுட்சை - பசி. புபுதானன் - ஆசாரியன், தேவன்,பண்டிதன். புப்பாகம் - வாலுளுவை. புப்புலம் - உதரவாயு. புமான் - ஆண்குறி, ஆண்மகன்,ஆன்மாவினோர் தத்துவம். பும் - ஆண்குறி, ஒலிக்குறி. பும்விருகம் - கத்தூரிநாவி. புயகடி - பாம்பு. புயகதாரணம் - கருடன். புயகம் - பாம்பு.புயகாசனன், புயகாந்தகன், புயகாந்தன் - கருடன். புயகோடரம் - கைக்குழி. புயங்கநிருத்தம் - ஓர் கூத்து. புயங்கம் - ஓர் கூத்து, பாம்பு. புயத்துணை - உதவி. புயபலம் - புயவலிமை. புயம் - ஒருபக்கம், தோள், முன்கை,வளைந்தவரி. புயல் - சுக்கிரன், நீர், பெருங்காற்று,மழைக்கோள், மேகம். புயவகுப்பு - ஓர் பிரபந்தம், கலம்பகத்தி னோருறுப்பு. புயவலி - புயவலிமை. புயாகண்டம் - நகம். புயாசலம் - மலையொத்ததோள். புயாதலம் - கை. புயாந்தரம் - மார்பு. புய்த்தல் - பயத்தல், பறித்தல். புரகரன் - சிவன். புரகிதன் - சிராத்தகருமாதிப்பார்ப் பான். புரஸ்கரணம் - பூரணமாக்கல். புரஸ்காரம் - எத்தனப்படுத்தல்,ஒழுங்குப்படுத்தல், காத்திருத் தல்,குற்றஞ்சாட்டல், சருவுதல்,முடித்தல், முன்வைத்தல். புரசபரம் - யத்தனபூர்வகம். புரசம் - அக்நிதேவன் கைச்சங்கு. புரசல் - இரகசியம், உட்டுளை,புரைசல். புரசு - பலாசமரம். புரசை - புரோசை, புரசைவாக்கம். புரஞ்சயன் - சூரியகுலத்தரசருளொருவன். புரஞ்சரம் - தோள், விட்டுணுகேடகம். புரஞ்சனன் - உயிர், சீவன். புரஞ்ஞனி - அழிவு. புரடம் - பொன். புரட்சி - கிரகபுரள்வு, கீழ்மேலாய்வருதல், திரும்புதல். புரட்டல் - திருப்புதல், மாறுபாடுபண்ணல், வாந்திகொள்ளல். புரட்டன் - பொய்யன், மாறுபாடுகாரன்.புரட்டாசி, புரட்டாதி - ஓர்மாதம்,பூரட்டாதி. புரட்டாதிமாளயம் - புரட்டாதிமாதத்திற் செய்யும் சாதாரணமாசியம். புரட்டி - புரட்டன், புரட்டுக்காரி. புரட்டு - புரட்சி, புரட்டென்னேவல்பொய், வாந்திக்குணம். புரட்டுதல் - புரட்டல். புரட்டுருட்டு - புரளித்தனம். புரட்டை - பூரட்டாதி. புரட்டோடியம் - அசப்பியம். புரணபாவனை - சருவவியாபகம். புரணம் - சமுத்திரம், புரட்சி, பூரணம். புரணி - ஊண், புறணி. புரண்டை - ஓர் கொடி. புரதகனன் - சிவன். புரதடி - கடைவீதி. புரத்தல் - ஈதல், காத்தல், நிலைபெறுத்தல். புரத்துவாரம் - பட்டினவாயில். புரந்தரம் - தோள். புரந்தரன் - இந்திரன், கள்வன். புரந்தரை - கங்கை. புரந்தன் - இந்திரன். புரப்பிரியை - அநாசிச்செடி. புரப்பு - காப்பு.புரமூன்றெரித்தோன், புரமெரித்தோன் - சிவன். புரம் - இராசதானி, உடல், ஊர்,தோல், நகரம், மருதநிலத்தூர்,முன், மேன்மாடம், வீடு. புரவலன் - அரசன், காப்போன்,கொடையாளன். புரவி - அசுபதி, குதிரை, வேகி. புரவிசயன் - சிவன். புரவிவட்டம் - வையாளிவீதி, குதிரைசெலுத்தும் வீதி. புரவு - கொடை, காத்தல். புரவுகாத்தல் - கொடை. புரளல் - புரளுதல், மாறுதல். புரளி - குழப்பம், சண்டை, தப்பிதம்,துடுக்கு, பொய். புரளுதல் - உருளுதல், திரும்புதல்,மாறுதல். புராகிருதபாவம் - ஊழ்வினை. புராகிருதம் - முன்செய்தது. புராடம், புராடனம் - சஞ்சாரம். புராணகன் - பிரமா, புராணம் படிப்போன். புராணபுருஷன் - விட்டுணு புராணம் - கதை, காந்தமுதலியபுராணம் இஃது கலைஞான மறுபத்து நான்கினொன்று,பழங்கதை, பூருவம், கடுக்காய்,பழமை. புராணி - பட்டை. புராணிகன் - புராணநிலையினிற்போன். புராதலம் - பாதலம். புராதனம் - பழமை. புராந்தகன் - புரதகனன். புராந்திமகாண்டம் - பழைய வேற்பாடு. புராந்திமம் - பழமை. புராரி - சிவன். புராவசு - வீட்டுமன். புராவிருத்தம் - சரித்திரம், பரம்பரை,இதிகாசம். புரி - அரசன், ஆசை, இராசதானி,ஊர், கட்டு, கயிறு, கயிற்றுப்புரி,கோட்டை, சங்கு, சுரி, சுருள்,பட்டினம், புரியென்னேவல், மருதநிலத்தூர், யாறு, முறுக்கு, செயல். புரிகுழல் - கடைகுழன்று சுருண்டகூந்தல்.புரிசாலம், புரிசாலம்பிடித்தல் - வருந்திவேண்டல். புரிசை - மதில். புரிதல் - செய்தல், விரும்பல். புரிதிரித்தல் - புரிமுறுக்குதல் புரித்தல் - விரும்பச் செய்தல். புரிந்தோர் - சினேகிதர். புரிமணை - பாண்டம்வைக்குமணை. புரிமுகம் - கோபுரம், சங்கு, நத்தை. புரிமுறுக்கல் - கோள்மூட்டிவிடுதல். புரிமோகம் - சம்புநாவல், விளாத்தி.புரியட்டகம், புரியட்டகாயம் - சூக்குமதேகம். புரியணை - புரிமணை. புரியம் - கூத்து. புரிவு - அன்பு, ஆசை. புரீடணம் - மலம். புரீடமம் - உளுந்து. புரீடம், புரீஷம் - அழுக்கு, மலம். புரு - ஓரரசன், ஓர் தைத்தியன்,குழந்தை, மோட்சம். புருகுற்சன் - அறுவகைச் சக்கிரவர்த்திகளி லொருவன். புருகூதன் - இந்திரன். புருஷகாரம் - ஆண்மை, முயற்சி. புருஷகுஞ்சரன் - புருஷஸ்ரேஷ்டன்.புருடதத்துவம், புருஷதத்துவம் - ஆண்மை. புருடநாள் - இரேவதிநாள். புருஷத்துவம் - ஆண் தன்மை,தைரியம். புருஷபசு - மனிதன். புருஷபரிசம் - மைதுனம். புருடபிரமாணம் - நான்கு முழம்.புருஷபுங்கவன், புருஷபுண்டரீகன் - புருஷ சிரேஷ்டன். புருஷமேதம் - மனுஷபலி. புருஷம், புருடம் - புருட பிரமாணம்,புன்னை, மகாமேரு. புருடராகம் - நவமணியி னொன்று. புருடரூபம் - ஆண் ரூபம். புருடர் - ஆடவர், நாயகர். புருடலக்கணம் - ஆடவ லட்சணம்அஃது சாமுத்திரிக விலக்கணத்தொன்று. புருடவாகனம் - பல்லக்கு, விமானம். புருடவாகனன் - குபேரன். புருடவித்தை - ஆண் தேவதையுபாசனை. புருஷவியாக்கிரம் - உத்தியோகம்,வலியன், வலியான்.புருடன், புருஷன் - அணு, ஆண்மகன்,ஓர் மரம், கடவுள், கணவன்,சிவன், சீவான்மா, செவியுற்றிருக்கு நரம்பு இஃது தசநாடியினொன்று, தலைவன், பிரமா,மனுஷன். புருடா - பொய். புருஷாங்கனை - புதன் மனைவி. புருஷாதமன் - இழிந்தவன்.புருடாயு, புருஷாயு - மனுவாயுள்,மனிதவாயுள்.புருடார்த்தம், புருஷார்த்தம் - அடையவேண்டுவது, செய்ய வேண்டுவது. புருடோத்தமநம்பி - திருவிசைப்பாவியற்றியவரி லொருவர். புருடோத்தமன் - சிரேஷ்டன், திருமால். புருஷோத்திகன் - உதவி யற்றவன். புருண்டி - மல்லிகை. புருதம் - பொன். புருபூதம் - விதலலோகம்.புருவமத்தியம், புருவமையம் - இலாடத்தானம். புருவத்தானம் - இரண்டாமிடம். புருவம் - குதிரை, நெற்றிப் புருவம்,வரை, விளிம்பு. புருவை - ஆடு, இளமை. புரூணகத்தி - சிசுவதை, கருவழித்தல்.புரூணகம், புரூணம், புரூண்ணம் - கருப்பத்திற் பிள்ளை. புரூத்தியர் - வேலைக்காரர். புரூரம் - புருவம். புரூரவன் - அறுவகைச் சக்கிரவர்த்திகளி லொருவன். புரை - இரகசியம், உட்டுளை,உயர்ச்சி, உவமை, எதிர்காலம்,களவு, குடில், குழிப்புண், குற்றம்,செல்காலம், பழமை, பழுது,பன்னசாலை, புரையென்னேவல், மடிப்பு, மாடக்குழி,மூலப்பகந் திரம், மேன்மை, வீடு,வரி, ரேகை. புரைசல் - இரகசியம், குழப்பம்,சச்சரவு, பொத்தல். புரைசு - புரசு. புரைசை - புரோசை. புரைச்சல் - இழைப்பு, தைத்தல்,பின்னுதல், வெளிவருதல். புரைதல் - இழைத்தல், தைத்தல்,போலுதல். புரைத்தல் - உட்புகுதல், வெளிவருதல், துளைத்தல். புரைய - உவமைச் சொல். புரையன் - குடில், பன்னசாலை, வீடு. புரையேறுதல் - துளைவழியுட் புகுதல். புரையேற்றம் - புரையேறுந் தன்மை. புரையோர் - கீழோர், திருடர்,மேலோர். புரோகதி - நாய், முன்னடப்பது. புரோக்கணம் - புரோக்ஷணம். புரோகன் - உயர்ந்தோன். புரோகிதத்துவம் - பௌரோகித்தியம். புரோகிதன் - அரசர் பஞ்சகுழுவினொருவன் அவன் வருங்காரியஞ்சொல் வோனுங்கிருத்தியம்பண் ணுவிப்போனுமாகிற பார்ப்பான், இந்திரன், வியாழன். புரோகை - பொதியையிற் பிறந்தவோர்நதி. புரோசநன் - குபேரனுக்கு வாகனமாயிருக்கும் நரன், சமர்த்தன்,ஞானவான். புரோசர் - குறுநில மன்னர். புரோசை - யானை கட்டுங்கயிறு,யானைக் கழுத்தணிக் கயிறு. புரோடாசம் - ஓர் மந்திரம், நெய். புரோடி - யாற்றுப் பாய்ச்சல்.புரோட்சணம், புரோட்சணை - தெளித்தல். புரோட்சிதம் - சுத்தஞ் செய்தல். புரோட்சித்தல் - தெளித்தல், சுத்தஞ்செய்தல். புரோத்தி - நாய். புரோபாகி - பிறர்குற்றம் நாடுவோன். புரோவாதம் - முன்னற் சொன்னது. புரோற்கிதம் - சிவாகம மிருபத்தெட்டினொன்று. புலகன் - ஓர் இருடி. புலக்கம் - வழக்கம். புலங்கொளி - புலங்கோளி. புலத்தல் - கலவியிற் பிணங்கல்,புணர்ச்சிக் கமையாததுபோலமுறையிடல், ஆற்றுதல், முனிதல். புலத்தியன் - ஓரிருடி. புலத்தியன்மைந்தர் - குபேரன்,இராவணன் முதலோர். புலத்துறைமுற்றியகூடலூர்கிழார் - எட்டுத் தொகையி லொன்றாகியஐங்குறுநூறு தொகுத்தவர். புலப்படுதல் - விளங்குதல். புலப்படுத்துதல் - விளங்கப்பண்ணுதல். புலப்பம் - அலப்பு, பிதற்று, விளக்கம். புலப்பாடு - மட்டுக்கட்டுதல், விளங்குதல். புலமினுக்கி - விளக்குமாறு. புலமை - கல்வி, வித்தாண்மை.புலமையர், புலமையோர் - கவிஞர். புலம் - அறிவு, இடம், ஒலி முதலைம்புலன், திக்கு, நுண்மை, மேட்டுநிலம், வயல், புலவரிசி, விடயம். புலம்பல் - ஆரவாரம், இரங்கல்,ஒலித்தல். புலம்பன் - நெய்தநிலத் தலைவன். புலம்பு - அச்சம், ஒலி, கலக்கம்,சத்தம், தனிமை, துன்பம், புலம்பல்,புலம் பென்னேவல், நடுக்கம்,வருத்தம், குற்றம், வெறுப்பு. புலம்புதல் - அழுதல், ஒலித்தல்,பிதற்றுதல். புலரி - விடியல்.புலருதல், புலர்தல் - காய்தல், வாடல்,விடிதல்.புலர்த்தல், புலர்த்துதல் - காய்ச்சல்,பூசுதல். புலர்வு - உலருகை, காய்வு, விடிவு. புலவராற்றுப்படை - சிறிய இரத்தினக்கவிராய ரியற்றிய நூல். புலவர் - அறிஞர், கம்மாளர், கவிவாணர், குறுநிலமன்னர், கூத்தர்,தேவர், புதன், பொருநர், தேவேந்திரன், முருகன். புலவன் - அருகன்,அறிஞன், கம்மாளன், கவிவாணன், கூத்தன், தேவன்,தேவேந்திரன், புதன், போர்வீரன்,முருகன், வானோன். புலவா - பூலா. புலவி - ஊடலின் முதிர்வு, கூடியுங்கூட்டமின்மை, வெறுப்பு. புலவிநீட்டம் - ஊடல். புலவு - ஊன், நரகம், புலம், புலால்,மணம். புலன் - அறிவு, இந்திரிய வுணர்ச்சி,ருத்து, வனப்பெட்டினொன்று,விடயம். புலன்வனப்பு - இயற்சொல்லானியன்ற பொருடோன்றக் கூறல். புலன்வென்றோர் - முனிவர். புலாகஜை - இரதிதேவி. புலாகநன் - இந்திரன், மகேச்சுரன். புலாகம் - அழகு, சுருக்கம், சோறு,பதர்மீன். புலாகி - மரம். புலாகி - கவலை, பிராந்தி. புலால் - ஊன், மீன், வெடில். புலால்கட்டி - கடலின் மீன் முதலியவற்றைத் தடுப்போன். புலால்கட்டுதல் - மீன் முதலியவற்றைத் தடுத்தல். புலானீர் - இரத்தம். புலான்மறுத்தல் - ஓர் நூல். புலி - அண்ணா, ஓர்மிருகம், சிங்கவிராசி, நால்வகைச் சாந்தினொன்று, வேங்கைமரம்,தொடரி, நாயுருவி. புலிக்கண்கள் - கோமேதகம். புலிக்கொடியோன் - சோழன். புலிங்கம் - ஊர்க்குருவி, தீப்பொறி.புலித்தடுக்கி, புலித்தொடக்கி - கற்றாழை, சிங்கிலி, தொடரி,இண்டு. புலித்தொடர் - புலிச் சங்கிலி. புலித்தோலுடையோன் - சிவன். புலிநகக்கொன்றை - ஓர் மரம். புலிந்தம் - தேயமைம்பத்தாறினொன்று, அது மிலேச்ச தேசம். புலிந்தன் - மிலேச்சன். புலிபம் - பொன்னா விரை. புலிப்பாணி - வியாக்கிரபாதர். புலிமுகக்கடுக்கன் - ஓர் காதணி. புலிமுகச்சிலந்தி - ஓர் விஷ வண்டு. புலிமுகப்பணி - புலிமுகக் கடுக்கன். புலிமுகப்பூச்சி - ஓர் பூச்சி. புலிமுனி - வியாக்கிரபாதர். புலிமெய்ச்சிலந்தி - புலிமுகச் சிலந்தி. புலியடிக்குலை - வாழைக்குலை. புலியுகிலி - புலிதொடக்கி. புலியுறுமி - ஓர் பறை, கிறிச்சான். புலியூர் - சிதம்பரம். புலியேறு - ஆண் புலி. புலிரிகம் - பாம்பு. புலு - பத்து. புலுட்டுதல் - கருக்குதல், சுடல். புலுட்டை - தழைவற்றது, புலுண்டனிறம், புலுண்டின தன்மை. புலுண்டலன் - புலுட்டையன்.புலுண்டல், புலுண்டுதல் - கருகல்,கருகினது, கருகுதல். புலுதம் - அளபெடை, காலதசப் பிரமாணத்தொன்று அஃது இலகுமூன்று கொண்டது, குதிரை முழுவோட்டம். புலை - ஊன், புலால், புன்குணம்,பொல்லாங்கு, இழிவு. புலைச்சி - எவட்சாரம், புலைப்பெண். புலைச்சேரி - பறைச்சேரி, புலையர்சேரி. புலைஞர் - ஈனர், சண்டாளர், பறையர், மறவர், வேடர். புலைத்தனம் - கொலைக்குணம்,புன்குணம். புலைத்தொழில் - புன்றொழில்,கொலைத்தொழில். புலைப்பாடி - புலைச்சேரி. புலைமகள் - புலைப்பெண். புலைமகன் - புலையன். புலைமை - கீழ்மை, புலைத்தன்மை. புலையர் - கீழ்மக்கள், சண்டாளர். புலையன் - கீழ்மகன், சண்டாளன். புலைவினைஞர் - இழிதொழிலாளர். புலோமசித்து - இந்திரன். புலோமசை - இந்திராணி, அவள்புலோமன் குமாரி. புலோமபிதன் - இந்திரன். புலோமன் - இந்திராணி தந்தை,ஓரரக்கன். புலோமாரி - இந்திரன். புலோமை - ஓரசுரன். புல் - அற்பம், அனுடநாள், இழிவு,கல்வி, பனை, புலி, புல்லு, புல்லென்னேவல், புன்மை, புணர்ச்சி,புறவைரமுடைய மரம்.புல்கல், புல்குதல் - புல்லல். புல்மரம் - தென்னமரம். புல்மானம் - புன்மானம். புல்லகண்டம் - சருக்கரை. புல்லகம் - நுதலணி. புல்லணர் - தாடி. புல்லம் - இடபவிராசி, எருது,புட்பம், மலர்ந்தது, அபிநயம். புல்லரண்டல் - பேய்க்கரும்பு. புல்லரிகம் - பாம்பு. புல்லர் - கீழ்மக்கள், வேடர். புல்லல் - அமைதல், கூடுதல், சார்தல்,புணர்தல், புல்லுதல். புல்லறிவாளர் - அறிவீனர், அற்பஅறிவு. புல்லறிவாண்மை - அறிவின்மை. புல்லறிவு - அறிவின்மை, கீழ்மையானவறிவு. புல்லன் - அறிவீனன், கீழ்மகன்,சிறியவன்.புல்லாங்கழி, புல்லாங்குழல் - ஓரூதுகுழல். புல்லாந்தி - பூல். புல்லாமணக்கு - ஓராமணக்கு. புல்லாமொய்ச்சி - புற்பற்றை. புல்லார் - பகைவர். புல்லாற்றூர்எயிற்றியனார் - புறநானூறு பாடிய புலவரு ளொருவர். புல்லி - புறவிதழ், பூவினிதழ். புல்லிங்கம் - ஆண்பால். புல்லிதழ் - பூவின்புறவிதழ். புல்லிது - புன்மைத்து, பூ, இழிவானது. புல்லியம் - புளிநறளை. புல்லியர் - கீழ்மக்கள். புல்லு - புதர். புல்லுக்கற்றை - புற்கற்றை. புல்லுதல் - இணங்குதல், தழுவுதல்,புணர்தல், கூடுதல், சார்தல். புல்லுநர் - சினேகிதர். புல்லுருவி - குருவிச்சை, ஒரு செடி. புல்லுவர் - வேடர். புல்லூதியம் - பனை. புல்லூரி - குருவிச்சை. புல்லெடுத்தல் - புன்மிகுத்தல். புல்லெனல் - ஒளிமழுங்கல், பொலிவழிதல். புல்லை - மங்கலானமஞ்சள்நிறம்,வெண்மை கலந்த சிவப்பு. புல்வரகு - ஓர் பயிர். புல்வாடி - புற்கற்றையடுக்கியவாடி. புல்வாய் - கருமான், கலைமான். புல்வாரி - புல்லுச்சத்தகம். புல்விரியன் - ஓர் பாம்பு. புல்வெட்டிப்பல் - மாட்டின் முன்வாய்ப்பல். புவலோகம் - மேலேழுலகி னொன்று. புவனகோசம் - பூகோளம். புவனசாத்திரம் - பூமிசாத்திரம். புவனத்திரயம் - திரிலோகம் அதுசுவர்க்கம் மத்தியம் பாதலம். புவனநாயகர் - புவன கர்த்தாக்கள். புவனமெண்வச்சிரம் - கால்மீர்ப்படிகம். புவனம் - அப்பியாசம், ஆகாயம், நீர்,பதினான்குலகப்பொது, பூமிஉலகம். புவனி - பூமி. புவனியு - எசமான், முச்சுடர். புவனேசுவரி - பார்வதி. புவனை - ஓர் சத்தி. புவி - பூமி. புவிதவிருக்கம் - பெருவாகை. புவிப்பாத்திரம் - மண்கலம். புவிபீரு - தண்ணீர்விட்டான். புவித்தேவன் - அந்தணன். புழக்கம் - அறிமுகம், தோற்றம், பழக்கம். புழங்குதல் - வழங்குதல். புழல் - ஓரூர், சலதாரை, துளையுடைப் பொருள், மீன், மதகு. புழு - கிருமி, புழுவென்னேவல். புழுகு - நாவிப்புழுகு, அம்புக்குப்பி. புழுகுசட்டம் - ஓர் வாசனைப் பண்டம். புழுகுசம்பா - ஓர் நெல்.புழுகுபிள்ளை, புழுகுபூனை - நாவிப்பிள்ளை. புழுக்கடி - புழுக்குத்தல். புழுக்கம் - உட்டணம், பொறாமை,வன்மம், வெப்பம். புழுக்கல் - அவித்தல், சோறு,முதிரைப்பண்டம் புழுக்கியது. புழுக்கு - அவிப்பு,புழுக்கென்னேவல், இறைச்சி. புழுக்குதல் - அவித்தல். புழுக்குத்தல் - புழுவரித்தது, புழுவரித்தல். புழுக்குத்தி - கொண்டலாத்தி. புழுக்குத்துதல் - புழுவரித்தல். புழுக்கூடு - புழுவிருக்கும் பை. புழுக்கை - அடிமை, ஆடுமுதலியவற்றினெரு. புழுக்கைச்சி - அடிமைப்பெண். புழுக்கையன் - அடிமை. புழுக்கொடியல் - அவித்த ஒடியல். புழுக்கொல்லி - வண்டுகொல்லிச்செடி, ஆடுதின்னாப்பாளை. புழுங்கலரிசி - அவித்த நெல்லரிசி. புழுங்கல் - உட்டணமாதல், சினக்குறிப்பு, புழுக்கினதானியம். புழுங்குதல் - அவிதல், உட்டணித்தல், கோபித்தல். புழுதி - பராகம். புழுதிப்படலம் - பூதூளிச்செறிவு. புழுதிமாயம் - காரியஞ் சரிக்கட்டினது போற்காட்டல். புழுதியாடல் - புழுதிகுளித்தல், புழுதியாக்கல், இஃது எண்வகை நானத்தொன்று. புழுதியார்த்தல் - பூ தூளிபரம்புதல். புழுதிவிதைப்பு - ஈரமில்லாவிதைப்பு. புழுது - அம்புக்குதை. புழுத்தல் - புழுவுண்டாதல். புழுப்பு - புழுத்தல். புழுமேய்ச்சல் - புழுவரித்தல் புழுமேய்தல் - புழுக்கடித்தல். புழுவதை - தேனீவைக்கும் புழுக்கூடு. புழுவெட்டு - புழுமேய்ச்சல். புழுவெட்டுதல் - புழுவரித்தல். புழை - உட்டுளை, கதவுவிட்டுப்புகும்வழி, துளையுடைப் பொருள்,துவாரம். புழைக்கடை - பின்புறவாயில், நுழைவாயில். புழைக்கை - துதிக்கை, யானை. புழைத்தல் - துளைத்தல். புளகம் - அரிதாரம், கண்ணாடி,சோறு, புடைப்பு, மகிழ்ச்சி, மயிர்சிலிர்த்தல், வெடிப்பு, குமிழ்ப்பு. புளகாலயன் - குபேரன். புளகிதம் - மகிழ்ச்சி, மயிர்ச்சிலிப்பு. புளகித்தல் - மகிழ்தல், மயிர்சிலிர்த்தல். புளகிப்பு - மகிழ்ச்சி, மயிர்சிலிர்ப்பு. புளப்பாகல் - சிறுவாலுளுவை. புளம் - அண்ணம், குதிரைநடையினொன்று. புளவை - பிளவை. புளாகம் - கஞ்சி, சோற்றுத் திரளை. புளி - ஓர் சுவை, புளியமரம், புளியென்னேவல், சிந்துகம். புளிக்கறி - புளிங்கறி. புளிக்கீரை - ஓர் கீரை. புளிக்குடித்திருத்தல் - பிள்ளைபெற்றிருத்தல். புளிக்குழம்பு - புளியிட்டுச்செய்யுங்குழம்பு. புளிங்கறி - புளிக்குழம்பு. புளிச்சல் - புளித்தது. புளிச்சற்பணிகாரம் - ஓர் பணிகாரம். புளிச்சாறு - ஓருணவுநீர். புளிச்சை - ஓர் செடி. புளிஞர் - வேடர். புளிஞ்சோறு - புளியோதனம். புளிதம் - ஊன். புளித்தல் - நெருங்கல், புளிப்பு,தன்மை, திரிதல், வெறுப்பு. புளித்தோடை - ஓர் தோடை.புளிநடலை, புளிநறளை - புளிமதுரை. புளிந்தம் - புலிந்தம். புளிந்தயிர் - புளித்த தயிர். புளிந்தன் - வேடன். புளிப்பற்றுதல் - புளிப்பிடித்தல். புளிப்பாகல் - சிறுவாலுளுவை. புளிப்பு - ஓர் சுவை, பொங்குகை. புளிமண்டி - அதிகவழுக்கு, புளிப்புக்கொண்டது. புளிமதுரை - ஓர் செடி. புளிமா - ஓர் மரம், நிரை நேராய்வருஞ் சீர்க்குவாய்பாடு. புளிமாங்கனி - நிரை நேர்நிரையாய்வருஞ் சீர்க்குவாய்பாடு. புளிமாங்காய் - நிரை நேர்நேராய்வருஞ் சீர்க்குவாய்பாடு. புளிமாதளை - ஓர் மாதளை. புளிமாநறுநிழல் - நிரை நேர் நிரைநிரையாய்வருஞ்சீர்க்கு வாய் பாடு. புளிமாநறும்பூ - நிரை நேர்நிரைநேராய் வருஞ்சீர்க்குவாய்பாடு. புளிமாந்தண்ணிழல் - நிரைநேர் நேர்நிரையாய்வருஞ்சீர்க்கு வாய் பாடு. புளிமாந்தண்பூ - நிரைநேர் நேர்நேராய் வருஞ்சீர்க்குவாய்பாடு. புளியமரம் - ஓர் மரம். புளியமிலைக்கம்பி - புளியிலைபோற்கீறுஞ் சாயரேகை. புளியம்பாசி - ஓர் நீர்ப்பூண்டு. புளியறணை - ஓர் பூண்டு. புளியாமணக்கு - ஓர் பூண்டு. புளியாரை - ஓர் கீரை. புளியுப்பு - ஓருப்பு. புளியோதனம் - புளிஞ்சோறு, இஃதுநிவேதனச்சாதவகையினொன்று. புளியோரை - புளிவிட்டுத் தாளித்தசாதம். புளினம் - மணற்குன்று, மணற்றிட்டை, புட்கூட்டம். புளினர் - வேடர். புளுகன் - விசித்திரகாரன், வீம்பன்,பொய்யன். புளுகு - புளுகென்னேவல், பொய்,விசித்திரம், வீம்பு. புளுகுதல் - மெய்போற் பொய் கூறல்,வீம்புபேசல், பொய்கூறல். புள் - அவிட்டநாள், ஓர் விளையாட்டுக்கருவி, பறவைப்பொது,இது பிறப்பேழினொன்று, வண்டு,வளையல். புள்பூகம் - வஞ்சிமரம். புள்ளடி - உரைகல், புள்ளி னடிச்சுவட்டையொத்த அடையாளம்,ஓர் பூடு. புள்ளம் - அரிவாள், கொடுவாள். புள்ளரசு - கருடன். புள்ளி - இலக்கப்புள்ளி, ஒற்றெழுத்து, ஓர் அடையாளம், கணிசம்,நண்டு, பணத்தொகை, பல்லி,பொறி, மதிப்பு, தேமல், நவமணியைங்குற்றத் தொன்று. புள்ளிக்கணக்கன் - கணக்கிற் பயின்றவன். புள்ளிக்கணக்கு - இலக்கக்கணக்கு. புள்ளிக்கல்லு - கானற்கல். புள்ளிக்காரன் - கணக்கன், கணிசவான். புள்ளிபாய்தல் - புள்ளிவிழுதல். புள்ளிபார்த்தல் - கணக்குப்பார்த்தல். புள்ளிப்போடுதல் - புள்ளிவைத்தல்,மதித்தல். புள்ளிமலை - இமயமலை. புள்ளிமான் - ஓர் மான், புள்ளியுடையமான். புள்ளிமிருகம் - கலைமான். புள்ளியம் - சிறுகுறிஞ்சா, புளிநரளை. புள்ளிரோகம் - ஓர் நோய். புள்ளிவண்டு - கழுதை வண்டு. புள்ளிவராகன் - ஓர்வகை வராகன். புள்ளிவரி - இடாப்பு. புள்ளிவைத்தல் - கணக்கிற்றள்ளியடையாளம் போடல். புள்ளீட்டம் - பறவைக்கூட்டம். புள்ளிருக்கும்வேளூர் - வைத்தீஸ்வரன்கோயில். புள்ளு - புள், சிறுபுள்ளடி. புள்ளுவம் - வஞ்சகம். புள்ளுவர் - கீழ்மக்கள், வஞ்சகர்,வேடர். புள்ளொலி - பறவைக்கூட்டத்தொலி. புள்ளோச்சல் - பட்சி துரத்தல்.புள்ளோப்பல், புள்ளோம்பல் - பட்சிகாத்தல். புறக்கட்டு - சுற்றுவீடு. புறக்கணித்தல் - வேற்றுமை பண்ணல், அசட்டை செய்தல். புறக்கணிப்பு - புறக்கணித்தல் புறக்கண் - கடைக்கண். புறக்கதவு - வெளிக்கதவு. புறக்கந்து - கந்தினருகு. புறக்களறி - வெளிக்களறிவிடல். புறக்காதுபடல் - காதிற்சோணையுள்வளம் புறவளமாதல். புறக்காரியம் - பக்கத்திற்காரியம். புறக்காவல் - வெளிக்காவல். புறக்காழ் - புறவயிரம், பெண்மரம். புறக்கூரை - வெளிக்கூரை. புறக்கை - புறங்கை, வலப்புறம்,வெளிப்புறம். புறக்கோடி - வெளிக்கோடி. புறங்கடை - வெளிக்கதவு, வெளிவாயில். புறங்காடு - சுடுகாடு. புறங்காட்டல் - தோற்றோடுதல், பின்காட்டல். புறங்காணுதல் - தோற்றோடச்செய்தல். புறங்கால் - புறவடி. புறங்காழ் - புறக்காழ். புறங்கான் - முல்லைநிலம். புறங்கூறல் - தூற்றல். புறங்கூற்று - பின்புறணி. புறங்கை - உள்ளங்கைக்குட் புறவளம். புறங்கொடுத்தல் - தோற்றுத் திரும்பல். புறச்சுட்டு - மொழிக்குப் புறத்துச்சுட்டெழுத்தாய்ப்புணர்ந்து நிற்பது. புறச்சுவர்தீற்றல் - சொந்தமானவர்களை விட்டுப் பிறனுக்குபகாரம்பண்ணல். புறச்சுற்று - வெளிச்சுற்று. புறச்சேரி - வெளிச்சேரி. புறணி - குறிஞ்சிநிலம், தோல், புறங்கூறல், புறம், முல்லைநிலம், மரப்பட்டை. புறதேசம் - அன்னியதேசம். புறத்தவன் - ஐயனார். புறத்தான் - புறம்பானவன். புறத்தி - பின்பக்கம், புறம்பு. புறத்திணை - வெட்சி முதலிய எழுவகையொழுக்கம். புறத்திணைநன்னாகனார் - புறநானூறு பாடிய புலவரி லொருவர். புறத்தியான் - அந்நியன். புறத்துறுப்பு - புறத்தங்கம். புறநகர் - நகர்ப்புறம். புறநடம் - வென்றிக்கூத்து முதலாயனவை. புறநானூறு - ஓர் செய்யுள், எட்டுத்தொகைநூலுள் எட்டாவது. புறநிலை - ஓர் பிரபந்தம், அஃதுநீதொழு தெய்வ நிற்புறங்காக்கவாழ்வையென வெண்பா முதலும் ஆசிரியவிறுதியுமாகப் பாடுவது. புறநிலைமருதம் - உழைகுரலாய்க்கைக்கிளை குரலாய மேற்செம்பாலை. புறநிலையகத்திணை - தான் குறித்தவற்றின் புறத்துட் பிறிதொருபொருளை எடுத்துக்காட்டித் தன்பொருளை விலக்குதல். புறநிலைவாழ்த்து - புறநிலை. புறநீங்கல் - தன்னிடம், விடுதலை,விலக்கு. புறநீர்க்குந்தம் - கண்ணோபுளொன்று. புறநீர்மை - ஓர் பண், வெளிக்குணம்.புறந்தரல், புறந்தருதல் - ஓம்பல்,தோற்றல். புறந்தாள் - புறங்கால். புறப்பகை - வெளிப்பகை. புறப்படுதல் - பயணப்படுதல், வெளிவருதல். புறப்பத்தியம் - பிற்பத்தியம். புறப்பற்று - வெளிப்பற்று. புறப்பாடு - புறப்படுகை.. புறப்பாட்டு - புறநானூறு. புறப்பாவகவல் - பாடாண்பாட்டுத்துறை மேற்பாடு மாசிரியம். புறப்புறம் - பாடாண்பொதுவியல். புறப்பேச்சு - சுயவறிவு, மயங்கிப்பேசல். புறப்பொருள் - அறம்பொரு ளென்னுமிரு வகை ப்பா ற் பட்டிருப்பன, படைத்திறம். புறப்பொருள்வெண்பாமாலை - ஐயரிதனார் என்னும் அரசராற்செய்யப்பட்ட ஒருநூல். புறமயிர் - உரோமம். புறமறிவு - பிறர்க்கு நன்மைநினைக்கை. புறம் - இடம், ஏழாம்வேற்றுமையுருபு, சுற்று, பக்கம், பின்புறம்,மதில், முதுகு, வீரம், வெளிவளம்,வரியில்லாநிலம், புறநானூறு. புறம்பனை - குறிஞ்சிநிலம், முல்லைநிலம். புறம்பனையான் - சாதவாகனன். புறம்பு - தனியானது, புறத்தி, மற்றை. புறம்புக்கிருத்தல் - மலங்கழிக்கவிருத்தல். புறம்புபண்ணுதல் - புறத்திபண்ணுதல். புறம்புறுத்தல் - புறக்காவல் செய்தல். புறம்பொசித்தல் - வெளிவருதல். புறவடி - புறங்கால். புறவடை - மலங் கழிப்பிக்க அபானவாயில் வைப்பது. புறவட்டம் - வெளிவட்டம். புறவணி - குறிஞ்சிநிலம், முல்லைநிலம். புறவம் - காடு, குறிஞ்சிநிலம், புறா,முல்லைநிலம். புறவயிரம் - ஆண்மரம், வெளிவயிரம். புறவளையம் - சூழப்பூசுமருந்துப்பூச்சு. புறவாயில் - கடைத்தலை. புறவாளி - புறவேலை. புறவிடன் - கடல், சோலை, மலை,யாறு. புறவிதழ் - புல்லிதழ். புறவீச்சு - ஓர் சன்னி. புறவீதி - வெளிவீதி. புறவு - குறிஞ்சிநிலம், புறா, முல்லைநிலம், விலங்கின் கூட்டம், காடு. புறவுரை - பாயிரம். புறவெட்டு - பட்டையடுத்தபலகை,எதிர்ப்பேச்சு, புறத்திவெட்டு. புறவெண்டு - கடுக்கனிற் புறத்துவெண்டு. புறவெளி - பராகாயம். புறவேலை - சக்கிரவாளத்தைச்சூழ்ந்த சமுத்திரம். புறவொடுபுலத்தல் - அகப்பொருட்டுறையினொன்று. புறனடை - புறக்காப்பாய்ச் சொல்வது. புறன் - புறம், முதுகு. புறா - ஓர் புள். புறாக்காலி - ஓர் பூடு. புறாண்டுதல் - பிறாண்டுதல். புறப்பறத்தல் - களவெடுத்தல். புறாமாடம் - புறா வசிக்குமிடம். புறாமுட்டி - ஓர் பூடு. புற்கசன் - சண்டாளன், வேடன். புற்கம் - எத்து, குறை, புன்மை. புற்கலம் - உடல். புற்கலன் - உடல், உயிர். புற்கவ்வுதல் - தோல்விக் குறியாய்ப்புல்லுக் கவ்வுதல். புற்கற்றை - புற்றிரள். புற்கு - கபிலநிறம், குறை, நிந்தைக்குறிப்பு. புற்கெனல் - அந்திப்பொழுதின்குணம், புகர்நிறக் குறிப்பு. ஒளிமங்கல் (தக்க) புற்கை - கூழ், சோறு. புற்கொடி - சுரை. புற்கோரை - ஓர் புல். புற்சாமை - ஓர் சாமை. புற்செடி - புற்பற்றை. புற்பதி - அனுடநாள், பனை,வாழைக் கிழங்கு. புற்பாய் - புன் பாய். புற்புதம் - நீர்க்குமிழி, மூக்கலச்சி. புற்புல்லெனல் - விடியற்குறிப்பு. புற்பொழி - புற்பற்றை. புற்போதி - பூவரசு. புற்றாஞ்சோறு - கறையான் கூடு. புற்றாளி - அனுடம், பனை. புற்றிற்பூ - காளான். புற்று - வளை, வன்மீகம். புற்றுக்குதைச்சி - புற்றாஞ் சோறு. புற்றெடுத்தல் - கறையான் முதலியனவளை தோண்டல். புனக்கல் - தேகக்கல். புனக்காலி - காயா, காசா, பாதிரி. புனஸ்காரம் - வணக்கம். புனமல்லி - காட்டு மல்லி. புனமுருக்கு - பலாசு. புனமுருங்கை - ஓர் முருங்கை. புனம் - கொல்லை, வயல், அலங்காரம். புனராகமனம் - திரும்பி வருதல். புனராவர்த்தம் - சனனம், சுற்றுதல்,மறுதரம். புனராவிருத்தி - செனனம்.புனரி, புனரித்தண்டு - ஓர் பூடு. புனருத்தம் - புனருத்தம். புனருத்தசன்மம் - பார்ப்பான்.புனருத்தம், புனருத்தி - கூறியது கூறல். புனர்செனனம் - மீண்டும் பிறத்தல்,மறுபிறப்பு. புனர்தம் - புனர்பூசம். புனர்நவம் - நகம். புனர்பூசம் - ஓர் நட்சத்திரம். புனர்ப்பவம் - நகம், மீண்டும் பிறத்தல். புனர்ப்பாகம் - சமைத்ததைச்சமைக்கை. புனர்வசு - சிவன், திருமால், புனர்பூசம். புனர்விவாகம் - இரண்டா மணம். புனலி - ஓர் பூண்டு, புனரி. புனலை - நெய்க்கொட்டான் மரம். புனல் - ஆறு, குதலை, நீர். புனல்முருங்கை - ஓர் முருங்கை. புனல்விடுதல் - குதலை கொஞ்சல். புனல்வேந்தன் - வருணன். புனவர் - குறிஞ்சிநிலமாக்கள். புனற்பாகம் - சமைத்ததை மறுபடிசமைத்தல். புனற்பெருக்கு - நீர்ப்பெருக்கு. புனற்றிரை - நீர்த்திரை புனனாடன் - சோழன். புனனாடு - காவேரிநாடு இது கொடுந்த மி ழ் ந h ட் டி b ன h ன் று ,சோணாடு. புனாகம் - பின்பு. புனிகம் - சங்கபாஷாணம். புனிதம் - புனீதம், சுத்தம். புனிதன் - அருகன், இந்திரன், சிவன்,சுத்தன், பத்தன். புனிறு - ஆசூசம், ஈன்றணிமை,சூதகம், தோல், புதுமை. புனிற்றா - இளங்கன்றுப் பசு. புனீதம் - சுத்தம், புனர்பூசம். புனுகு - புழுகு. புனை - அலங்கரிப்பு, அழகு, சீலை,புதுமை, புனையென்னேவல்,பொலிவு, விலங்கு, புனல்.புனைகுழல், புனைகோதை - பெண். புனைசுருட்டு - சதியோசனை, சூது. புனைதல் - அணிதல், அலங்கரித்தல். புனைந்துரை - சிறுதினைப்பெருக்கிப் பெரிதினைச் சுருக்கிக்கூறல், பாயிரம். புனையிழை - பெண். புனைவர் - கம்மாளர். புனைவிலி - உபமானப்பொருள். புனைவிலிநவிற்சியணி - ஓரலங்காரம் அஃது உபமானத்தைவன்னிக்க அதனது சம்பந்தத் தால்உபமேயந் தோன்றச் சொல்லுதல். புனைவுளி - வன்னிக்கப்படு பொருள். புனைவுளிவிளைவணி - ஓரலங்காரம்அது சொல்லப்பட்ட ஒரு உபமேயந் தோன்றுதலாம். புன்கண் - தரித்திரம், துன்பம், நோய்,மெலிவு. புன்கம் - உணவு, சோறு. புன்காலி - காயாமரம், பாதிரி மரம். புன்கு - புனமுருங்கை, புன்கமரம். புன்குசடை - குஞ்சிச்சடை. புன்குமரம் - பொன்னாங்காய் மரம். புன்குரி - புங்கம்பட்டை. புன்சிரிப்பு - புன்முறுவல். புன்செக்கர் - மாலைநேரம். புன்செய் - சிறு தானியம் விளைநிலம்,தரிசுநிலம். புன்செய்கை - சிறு தானியச்செய்கை. புன்சொல் - எளியசொல். புன்பயிர் - சிறு பயிர். புன்புலால் - இழிவாகிய ஊன். புன்மரம் - மூங்கில் முதலிய வுட்டுளைமரம். புன்மாலை - புன்செக்கர். புன்மானம் - இளஞ்செக்கர் வானம். புன்முறுவல் - மந்தனச் சிரிப்பு. புன்மை - அற்பம், ஈனம், சிறுமை,துன்பம், மறதி, வறுமை, குற்றம். புன்றுமி - தூறல், சிறு துளி. புன்றுளி - சிறு திவலை. புன்றொழில் - இழிதொழில். புன்னகை - புன்சிரிப்பு புன்னறவம் - இஞ்சி. புன்னறுவம் - சாறணை. புன்னாகம் - கோழிக்கீரை, புன்னை,வெள்ளாம்பல். புன்னாகவராளி - ஓரிராகம். புன்னிடா - தகரை. புன்னெறி - ஈனவழி. புன்னை - புன்னை மரம். பூ - பூ அழகு, இடம், இந்துப்பு, இருக்குதல், இலை, ஓமாக்கினி, ஓரெழுத்து, ஓர் கண்ணோய், ஓர் நரகம், கூர்மை, தாமரை, தீப் பொறி, பிறப்பு, புட்பம், பூமி, பூ வென்னேவல், பொலிவு, மகளிர் சூதகம், பூநீறுக்கு முன்பு தோன்றுங் கதிர், மலர். பூகதம் - கழுகு. பூகதம்பம் - நிலக்கடம்பு. பூகதர் - புகழ்வோர். பூகதன் - புகழ்வோன், பூழியைஅடைந்தவன். பூகபீடம் - துப்பற்காளாஞ்சி. பூகம் - இருள், உண்டை, கமுகு,கழுகு, குவியல், கூந்தற்கமுகு,கூந்தற்பனை, கௌரி, சுபாவம்,திரட்சி, நேரம், பலா, பாக்கு,பிளப்பு, பூவரசு.பூகம்பம், பூகம்பனம் - பூமி நடுங்கல். பூகரபம் - கையாந்தகரை. பூகரம் - நஞ்சு. பூகர்ணம் - பூகன்னம். பூகலம் - மதர்த்த குதிரை. பூகன்னம் - மையவரியினரை விட்டம். பூகாகம் - அன்றில், கரும்புறா. பூகாந்தை - பூமிதேவி. பூகாமி - பூமிவழியாய்க் கமனிக்குங்குதிரை. பூகேசம் - ஆலமரம், நீர்ப்பாசி. பூகோளசாஸ்திரம் - புவன சாஸ்திரம்,பூமி சாஸ்திரம். பூகோளம் - பூச்சக்கிரம், பூமி, பூகோளசாஸ்திரம். பூக்கஞ்சா - ஓர் கஞ்சா. பூக்கட்டுதல் - பூத்தொடுத்தல். பூக்கந்தகம் - புடமிட்ட கந்தகம். பூக்கம் - ஊர்ப்பொது, கமுகு, மது,மருதநிலத்தூர். பூக்காணம் - சமரேகையின் விட்டளவு.பூக்குடலை, பூக்குட்டான் - பூக்கூடை. பூக்குதல் - பூத்தல். பூக்குறடு - பூமாலை தொடுக்குஞ்சாலை. பூக்கொய்தல் - பூவெடுத்தல். பூக்கோசனி - வெட்பாலை. பூங்கஞ்சா - பூக்கஞ்சா. பூங்கணை - புஷ்பபாணம். பூங்கணுத்திரையார் - புறநானூறுபாடிய புலவரி லொருவர். பூங்கதிர் - ஒளி, வெண் கதிர். பூங்கரும்பு - செங்கரும்பு. பூங்கவணி - ஓர் வகைப் புடவை. பூங்கா - நந்தனவனம். பூங்காரம் - மந்தாரம். பூங்காரை - ஓர் காரை. பூங்காவனம் - பூங்கா. பூங்காவி - ஓர் காவி. பூங்குறுநல் - மெல்லிய குறுநல். பூங்கொத்து - மலர்த்திரள், மஞ்சள். பூங்கொல்லை - பூந்தோட்டம். பூங்கோதை - மதுரையிலே யிருந்தபுலமை வாய்ந்த ஒரு தாசி. பூங்கோரை - ஓர்புல். பூசகன் - பூசை செய்வோன். பூசக்கிரவாளம் - சக்கிர வாளகிரி. பூசக்கிரன் - அரசன். பூசணம் - பிசான், பூஞ்சணவன்,பூஞ்சு, பூடணம், தூசி. பூசணி - ஓர் கொடி. பூசம் - ஓர் நாள். பூசல் - கழுவல், பூசுதல், பெரிதொலித்தல், பொருதல், பொருந்தல், யுத்தம். பூசறுத்தல் - சுத்தி பண்ணல். பூசனம் - பூசை. பூசனி - அடைக்கலான் குருவி,வணக்கம். பூசனை - ஆராதனை. பூசாகாலம் - ஆராதனை வேளை. பூசாக்கல் - சுக்கான்கல். பூசாசாரி - பூசாரி.பூசாந்தப்படலம், பூசாந்தப்படல் - பூம்படல். பூசாந்திரம் - அருமை பண்ணல், ஓர்கடுக்கன். பூசாபந்தம் - ஓரடி ஒரு வரியாகநான்குவரி யெழுதி யந்நான்குவரியுள் மேல்வரி யிரண்டுந் தம்மிற்றாமே கோமூத்திரியாகவும்கீழ்வரி யிரண்டுந் தம்மிற்றாமேகோமூத்திரியாகவும் மேல்வரிகீழ் வரி மூன்றினும் வந்துகோமூத்திரி யாகவும் கீழ்வரிமேல்வரி மூன்றி னும் வந்துகோமூத்திரியாகவும் வருவது.பூசாபலம், பூசாபலன் - பூசையின்பலம். பூசாமுகம் - பூசைமுகம். பூசாயத்தம் - பூசை யாயத்தம். பூசாரி - கோவிற் பூசை பண்ணுவோன். பூசாலி - பூசாரி. பூசாவந்தம் - பூசாந்திரம். பூசாவிதி - பூசை முறை. பூசிதபயங்கரம் - சடங்கா ராதனை. பூசிதம் - வணக்கம். பூசிதன் - கனவான், பூசிக்கப்படுவோன். பூசித்தல் - பூசனை செய்தல். பூசிப்பு - வணக்கம். பூசிலன் - தேவன். பூசு - தூசி, பூசென்னேவல், போர். பூசுணி - பறங்கிக்கொடி, பூசணி. பூசுதல் - அலங்கரித்தல், கழுவல்,சந்தன முதலியவற்றைப் பூசுதல்,சாத்தி மினுக்கல், தடவல். பூசுதன் - செவ்வாய். பூசுதை - சீதை, பூமியின் மகள். பூசுத்தி - துடைத்தல், மெழுகுதல். பூசுரர் - அந்தணர். பூசுவாதம் - தான்றிக்காய். பூசை - அன்னதானம், ஆராதனை,பூனை, வெண்கிடை. பூசைப்பரிசாரகன் - குருவின் சீடன். பூசைப்பெட்டி - பூசைத்தளபாடப்பெட்டி. பூசைமுகம் - பூசா சன்னிதானம். பூசைமேடை - பூசைக் குறடு. பூச்சக்கரம் - சூரியனோடும்பாதை,பூமிச்சுற்று, பூமி. பூச்சக்கரன் - அரசன். பூச்சட்டை - குடலைக் கதிர். பூச்சாண்டி - வெருளி. பூச்சாயை - இருள், பூமி நிழல். பூச்சாரம் - நிலத்தன்மை, பூவினிரசம்,பூநீறு. பூச்சி - செந்து, புள்ளி. பூச்சிகாட்டுதல் - வெருள் காட்டுதல். பூச்சிக்கூடு - ஓராபரணம். பூச்சியம் - அருமை, ஆடம்பரம்,கீர்த்தி, சங்கை, சுன், பூசிக்கப்படத்தக்கது, மேன்மை, வெறுமை,பூசித்தல், சுன்னம். பூச்சியவார்த்தை - கணிசப்பேச்சு. பூச்சியன் - கருப்பும் வெள்ளையுமான மாடு,பூசிக்கப்படத்தக்கவன், மாமன். பூச்சிலை - கருந்தண்ணீர்க் கல். பூச்சியாண்டி - பூச்சாண்டி. பூச்சிவிடுதல் - பூச்சி காட்டுதல். பூச்சு - பிலுக்கு, பூசுதல், வெளிக்காட்சி. பூச்செண்டு - புட்பச் செண்டு. பூச்சோலை - பூச்சித்திரப்படாம். பூஞை - பூனை. பூஞ்சக்கல் - தேகக் கல். பூஞ்சணங்கட்டுதல் - சிக்குப்பூத்தல்,பூஞ்சுகட்டல். பூஞ்சணம் - பூஞ்சு. பூஞ்சணவன் - பூஞ்சு. பூஞ்சப்பரம் - பூவினாற் செய்யுஞ்சப்பரம். பூஞ்சலாடுதல் - கண்ணொளி மயங்குதல். பூஞ்சல் - கண் மயங்குதல், பூஞ்சு,பூஞ்சை. பூஞ்சற்கண் - குழிந்தகண், பீளைக்கண், மயங்கின கண். பூஞ்சாடுதல் - பூச்சியாடல் போற்காணல். பூஞ்சாட்டி - பூம்பயிர்ச் சாட்டி. பூஞ்சான் - ஓர் புல். பூஞ்சி - பூஞ்சு, பூஞ்சை. பூஞ்சிலிகை - புஷ்பப் பல்லாக்கு. பூஞ்சிறகு - பட்சிக் குஞ்சின் றூவி. பூஞ்சு - ஒட்டை, பூசு, தூசி. பூஞ்சுண்ணம் - பூந்தாது. பூஞ்சை - மங்கல். பூஞ்சைநிலம் - பாழ்நிலம். பூஞ்சோலை - புட்பக்கா.பூஷணம், பூடணம் - ஆபரணம். பூஷனை - உபசாரம். பூடன் - துவாத சாதித்தரி லொருவன். பூஷிதம் - அலங்கரிப்பு, ஆபரணம். பூடு - உள்ளிப்பூடு, புல்லு, பூண்டு. பூட்கரம் - கோட்டம். பூட்கை - தோல், மேற்கோள், யாளி,யானை, வலி, போர்வை. பூட்சி - உடல், உரித்து, பூணல்,பொருத்து, ஆபரணம். பூட்டகம் - இளப்பமான வேலை,வெளிவேஷம். பூட்டகம்பண்ணுதல் - வீம்படித்தல். பூட்டகவேலை - நொற்பன் வேலை,மேன்மினுக்கான வேலை, வெளிவேஷமான வேலை. பூட்டகாரன் - வீம்பன். பூட்டங்கம் - தொந்தரை, வில்லங்கம். பூட்டங்கயிறு - பூட்டாங் கயிறு, நுகக்கயிறு. பூட்டம் - முடித்தல். பூட்டாங்கம் - பூட்டங்கம். பூட்டாங்கயிறு - நுகக் கயிறு. பூட்டல் - அடைத்தல், அணிதல்,கணக்குத் தைத்தல், கொழுவுதல்,தொடுத்தல். பூட்டன் - பாட்டன் தகப்பன். பூட்டி - பாட்டன் தாய். பூட்டு - கதவு முதலிய பூட்டும் பூட்டு,கொளுவி, துலங்கு, பூட்டென்னேவல், பொருத்து, விலங்கு,வில்நாண், திறவுகோல். பூட்டுக்கயிறு - பூட்டங் கயிறு. பூட்டுதல் - பூட்டல். பூட்டுவாய் - திறவுகோல் புகுந்துவாரம். பூட்டுவிற்பொருள்கோள் - செய்யுண்முதலினுமிறுதியினு நிற்குஞ்சொற்கள் தம்முட்பொருள்கொள்வது. பூட்டை - இறைகூடை, ஏற்றமரம்,செக்கு. பூட்பராசன் - கருஞ்சீரகம். பூணல் - அணிதல். பூணாரம் - ஆபரணம். பூணாரவெலும்பு - காறையெலும்பு,மணிக்கட்டி னெலும்பு. பூணி - இடபவிராசி, எருது, பூணிப்பறவை. பூணித்தல் - சுட்டுதல், அகப்படுத்தல்,அணிதல். பூணிப்பு - தீர்ப்பு. பூணுதல் - அகப்படுதல், அணிதல்,உட்படுதல், பொருந்துதல்.பூணுநூல், பூணூல் - உபவீதம். பூணூற்கலியாணம் - உபநயனச்சடங்கு. பூணை - முல்லை நிலம். பூண் - ஆபரணம், உலக்கை முதலியவற்றிலிடும் பூண், கிம்புரி,பூணென் னேவல், கவசம். பூண்டி - ஊர், கடற் குட்டிடர். பூண்டு - பூதர், பூடு. பூதகணம் - பூத சேனை. பூதகரப்பன்பட்டை - பீநாறிப் பட்டை. பூதகலம் - பூதாக்கலம். பூதகாலம் - செல்காலம், இறந்தகாலம். பூதகி - கிருஷ்ணனை முலை மூலமாய்விஷமூட்டிக் கொல்லும்படிகம்ச னால் ஏவப்பட்ட ஓர்அரக்கி, பேய், அத்திக்காய். பூதகிராமம் - பஞ்ச பூத சம்பந்தம். பூதகிருதாயி - இந்திராணி. பூதகிருது - இந்திரன். பூதகேசரி - வெட்பாலை. பூதகேசி - காஞ்சிரை. பூதகேசனி - சடாமாஞ்சில். பூதக்கண்ணாடி - சிறிதைப் பெரிதாகக்காட்டுங் கண்ணாடி. பூதக்கலம் - பூதாக்கலம். பூதக்கால் - பருத்தகால். பூதக்கியம் - ஆலம்விழுது. பூதசஞ்சாரம் - உலகவாழ்வு. பூதசஞ்சாரி - உலகவாழ்வை விடாதோன், காட்டாக்கினி. பூதசாரசரீரம் - தேவர்களினுண்ணியதேகம். பூதசாரம் - பஞ்சபூதசத்து. பூதசுத்தி - பஞ்சசுத்தியி னொன்று. பூதஞ்சேந்தனார் - இனியவை நாற்பதுபாடியவர். பூததயை - ஆன்மாக்கட்குச் செய்யுந்தயை, ஜீவதயை. பூததாத்திரி - பூமி. பூததானியம் - எள். பூததேசி - வெண்ணொச்சி. பூதத்தாழ்வார் - முதலாழ்வாராகியமூவரிலொருவர். பூதத்துணர் - புன்முருக்கு. பூதநம் - சந்திரகிரணம், சூரியகிரணம். பூதநாசரீரம் - பூதமயமான சரீரம். பூதநாசநம் - உருத்திராக்கம், கடுகு,சேங்கொட்டை, மெழுகு. பூதநாசினி - பெருங்காயம். பூதநாடி - பசாசுபிடித்தவர்க்கியங்குநாடி, மரணநாடி. பூதநாதன் - சிவன். பூதநாயகி - உமை. பூதநிருத்தம் - ஓர்காலை முடக்கியாடல். பூதநை - கடுக்காய்மரம், குபேரன்பட்டணம், சடாமாஞ்சி, பூதநையென்னு மோரரக்கி. பூதபஞ்சாக்கரம் - ஓர் பஞ்சாக்கரம். பூதபதி - சிவன். பூதபத்திரி - துளசி. பூதபரிணாமதேகம் - தூலதேகம். பூதபரிணாமம் - பூதங்களின்றிரிபு. பூதபலம் - பலா. பூதபலி - உச்சிட்டங்கொடுத்தல். பூதபாவநன் - விட்டுணு. பூதம் - ஆல், இறந்தகாலம், உண்மை,உயிர், ஐம்பூதம், கிடக்கும்பொருள், சங்கு, சடாமாஞ்சில்,சுத்தம், தருப்பை, பரணி, பூதகணம், பேய். பூதயாகம் - பஞ்சயாகத்தொன்றுஅதுபலியீதல். பூதரம் - பூமிதாங்கல், பொன்மலை,மலை, புளிநரளை. பூதரன் - அரசன், விட்டுணு. பூதராயன் - பிசாசம். பூதர் - சாரதர் இவர் பதினெண்கணத் தொருவர். பூதலம் - பூமி. பூதலிகை - மாப்பலகாரம். பூதவக்குருக்கண் - ஆலம்விழுது. பூதவச்சம் - பீநாறி. பூதவம் - ஆல், மருது. பூதவாக்கு - கெட்டபேச்சு. பூதவாசகம் - பெருந்தேக்கு. பூதவாசம் - சரீரம், தான்றி. பூதவாதம் - ஓர் சமயம். பூதவார்த்தை - பூதவாக்கு. பூதவிருக்கம் - பெருவாகை. பூதவிருட்சம் - ஆலமரம். பூதவிருள் - உலகவிருள். பூதவேசி - பூதாவேசி. பூதனம் - கடுக்காய். பூதனன் - அரசன். பூதனாகனன் - கிருட்டினன். பூதனாசரீரம் - பூதபரிணாமதூலசரீரம்.பூதனாசூதனன், பூதனாரி - கிருஷ்ணன். பூதனை - கண்ணபிரானாற் கொல்லப்பட்ட ஓர் பெண்தேவதை, பூதகி. பூதன் - கடுக்காய், கிருட்டினபக்கத்துப் பதினான்காந் திதி, மகன். பூதாக்கலம் - மாப்பிள்ளைக்கு மணவாட்டி சோறிடுங்கலம். பூதாக்கலம்பணிதல் - மணவாளப்பிள்ளைகள் முதன்முறை ஓர்பாத்திரத்திற் பூசித்தல். பூதாங்குசம் - பேய்மருட்டி. பூதாதியாங்காரம் - பூதோற்பத்தியாங்காரம். பூதாத்திரி - கீழ்க்காய்நெல்லி. பூதாத்துமன் - சந்நியாசி. பூதாத்துமா - உடல், சிவன், துணைக்காரணம், பிரமன். பூதாரம் - பன்றி. பூதாரன் - அரசன். பூதாரி - பெருங்காயம். பூதாவாசன் - விட்டுணு. பூதாவேசி - வெண்ணொச்சி. பூதி - உடம்பு, ஊன், கொடுமை,சாம்பர், சித்தி, சுத்தம், செல்வம்,தசை, தத்துவம், துற்கந்தம், நரகம்,நாய், வேளை, பிறப்பு, புலால்,புழுதி, பூமி, பொறிக்கறி, மகத்துவம், யானை, மைதுனம், விபூதி,சிங்காரம்.பூதிகந்தம், பூதிகந்திகம் - கந்தகம்,துற்கந்தம். பூதிகம் - அகில், ஆயில்மரம், ஓர்வாசனைப்புல், சாதிக்காய், நிலவேம்பு, உடம்பு, பூமி. பூதிகர்ப்பன் - பவபூதியென்னும் வடமொழிப்புலவன். பூதிகாஷ்டம் - செம்புளிச்சை. பூதிகாமன் - மந்திரி. பூதிசாரிசை - நாவி. பூதிமாமிசம் - துன்மாமிசம். பூதிமாருதம் - வில்வமரம். பூதியம் - உடல், பிருதிவி முதலியபூதம், பூமி. பூதிரம் - வில்வபத்திரி. பூதிவாகம் - வில்வமரம். பூதுரந்தரர் - அரசர். பூதேசன் - சிவன். பூதேவர் - பார்ப்பார். பூதை - அம்பு. பூத்காரி - மரவயிரம். பூத்தட்டுதல் - மெழுகைத் தகடாக்கல். பூத்தல் - உண்டாதல், பயத்தல்,மலர்தல், மாதவிருதுவாதல்,பொலிவு பெறுதல். பூத்தானம் - அருமை பண்ணல். பூஸ்திதி - நிலசம்பத்து. பூத்திரணை - சணம்பு. பூத்திரம் - மலை. பூத்திரி - ஓர்வகை விறிசு. பூத்துப்பூத்தெனல் - இளைப்புக்குறிப்பு, பூர்ப்பூரெனல். பூத்தொடுத்தல் - மாலைகட்டல். பூநதி - புன்குமரன், பொன்னாங்காய் மரம். பூநாகம் - நாங்கூழ், பூநீறு. பூநாதம் - வெடியுப்பு. பூநிம்பம் - நிலவேம்பு. பூநிறம் - மாந்தளிர்க்கல். பூநீபம் - நிலக்கடம்பு. பூநீர் - பனிநீர். பூநீலம் - சுத்தநீலம். பூநீறு - ஓர் மருந்து. பூநொய் - சிறுநொய்.பூந்தட்டம், பூந்தட்டு - பூவைக்குந்தட்டம். பூந்தாது - கோங்கு, பூவிற்றுகள்,பூவின் சுண்ணம். பூந்தார் - மலர்மாலை. பூந்தி - பூவந்தி. பூந்துகள் - பூந்தாது. பூந்துணர் - புன்முருங்கை,பூங்கொத்து. பூந்துருத்திநம்பிகாடநம்பி - திருவிசைப்பா பாடியவரிலொருவர். பூந்துளிர் - மெல்லியதுளிர். பூந்தூள் - பூந்துகள். பூந்தேர் - புட்பத்தினாலாயதேர். பூந்தேளினம் - மகரந்தம். பூந்தேன் - பூவிற்றேன். பூந்தை - ஓரூர், பூதன் தந்தை. பூந்தோடு - பூவிதழ். பூந்தோட்டம் - நந்தனவனம், சோலை. பூபசாலை - பணிகாரக்கடை. பூபட்டை - இலவங்கப்பட்டை,முருங்கப்பட்டை. பூபதம் - மரம். பூபதி - அரசன், ஓர்குளிகை, மல்லிகை. பூபம் - பட்டாபிஷேகம், பணிகாரம். பூபரிதி - சூரியனோடும்வரி. பூபருத்தி - பூவரசு. பூபன் - அரசன், பூசாசாரி, பூரட்சகன். பூபாலர் - பூவைசியர். பூபாலன் - அரசன், வேளாளன். பூபாளம் - ஓரிராகம். பூபிரநிதம்பம் - மலைநடு. பூபுத்திரி - சீதை. பூப்பகம் - பெண்குறி. பூப்பதாரி - தூரஸ்திரி. பூப்பரிதி - அயனவரி. பூப்பருத்தி - பூவரசு. பூப்பரிகை - ஓர் மரம். பூப்பிரதக்ஷிணம் - பூமியைவலம்வருதல். பூப்பாசம் - கருஞ்சீரகம். பூப்பு - பூத்தல், மகளிர் சூதகம். பூமகண்மைந்தர் - வேளாளர். பூமகள் - இலக்குமி, பூமிதேவி. பூமகள்நாயகன் - விஷ்ணு. பூமகள்மார்பன் - திருமால். பூமகன் - செவ்வாய், ஒரு நக்ஷத்திரம்அது நிறம் பேதித்துத் தோன்றின்நோய் கலக முதலிய உற்பாதங்கள்தோன்றுமாம். பூமடல் - பிள்ளைமடல். பூமடி - மெல்லியமடி. பூமடை - பூவினாலிடுமடை. பூமணம் - புஷ்ப பரிமளம். பூமண்டலம் - பரதவுறுப்பு ளொன்று,பூச்சக்கிரம். பூமத்தை - ஓர் செடி. பூமஸ்நானம் - ஏழ்வகை நானத்தொன்று அஃது துளசி முதலியதிவ்விய மரத்தருகின் மிருத்திகையாற் பூசுதல். பூமலேக்கினம் - சங்கங்குப்பி, ஞாழல். பூமன் - செவ்வாய், பிரமன். பூமாலை - புட்பமாலை, இஃதுஇராசின்னத் தொன்று. பூமாதளை - காய்க்காமல் பூமாத்திரம்விடும் மாதளை. பூமான் - புமான், புருஷன். பூமி - இடம், குவியல், கோணங்களின் கீழ்வரி, தேசம், நிலம்,பூநீறு, பூவுலகு,மூவுலகத்தொன்று, நாக்கு. பூமிசதம்பம் - நிலக்கடம்பு. பூமிகாமி - பூகாமி. பூமிகுருவகம் - வெள்ளெருக்கு. பூமிகொழுநன் - திருமால். பூமிக்கூர்மை - வெடியுப்பு. பூமிசம் - நரகம், பூமியிலுண்டானது. பூமிசம்பவை - சீதை. பூமிசன் - செவ்வாய், நரகாசுரன். பூமிசாரம் - ஓர் நூல், பூசாரம். பூமிசை - இலக்குமி, சீதை. பூமிசைநடந்தோன் - அருகன்,புத்தன். பூமிச்செருக்கன் - உவர்மண். பூமிதேவன் - பார்ப்பான். பூமிதேவி - பூமிலட்சுமி. பூமிஸ்தானம் - நாலாமிடம். பூமித்திரம் - மலை. பூமித்தைலம் - மண்டயிலம். பூமிநடுக்கம் - பூமியதிர்ச்சி. பூமிநாதம் - இந்துப்பு, காந்தம், பூநீறு. பூமிநாயகம் - நீலிவேர். பூமிநாயகன் - காஸ்மீரப்படிகம்,நிலவேம்பு. பூமிபரிட்சை - கலைஞான மறுபத்து நான்கி னொன்று. பூமிபாரம் - சிருட்டிப் பொருள்களாற்பூமிக்குண்டான பாரம். பூமிபாலகன் - அரசன். பூமிபிசாசம் - பனை. பூமிப்பிரவேசம் - விளைநிலத்திற்செய்கை பண்ண நாளுக்குப்போதல். பூமியதிர்தல் - பூமிநடுங்கல். பூமியதிர்த்தல் - பூமிநடுக்கம். பூமிலட்சுமி - இலக்குமி, பூமிதேவி. பூமிலாபம் - மரணம். பூமிலேபனம் - மெழுகுதல். பூமிவெளுப்புமண் - சுதைமண். பூமிவேர் - பூநாகம். பூமின் - இலட்சுமி, பூமிதேவி.பூம்பட்டாடை, பூம்பட்டு - ஓர் பட்டுப்புடைவை. பூம்பந்து - பூவினாலாய பந்து. பூம்பறியல் - குறைவு, தட்டுக்கேடு. பூம்பனை - ஆண்பனை. பூம்பாளை - பூப்பாளை. பூம்பிஞ்சு - இளம்பிஞ்சு. பூம்பிடா - பூக்குடலை. பூம்பிடகை - பூக்குடலை. பூம்பிரயோசனம் - பின்பயிர்ப் பிரயோசனம். பூம்புகை - நறும்புகை. பூம்பொழில் - புஷ்பச்சோலை. பூயம் - சீழ், முறிந்தரக்தம். பூயாரி - வேம்பு. பூயாலசம் - கட்பீழை. பூரகம் - பிதுர்பிண்டம், பூரித்தல்,பெருக்குந்தொகை, மத்தங்காய்ப்புல், மூச்சுள்ளே வாங்கல். பூரங்களித்தல் - தீபாராதனை. பூரட்சகன் - அரசன். பூரட்டாதி - ஓர் நாள், ஓரு நட்சத்திரம். பூரணகருப்பம் - நிறைகருப்பம். பூரணகருப்பிணி - நிறைகருப்பிணி.பூரணகலசம், பூரணகும்பம் - சலம்பூரித்தகலசம், நிறைகுடம். பூரணசந்திரன் - நிறைகால சந்திரன்,நிறைமதி. பூரணசற்குணம் - நிறைந்த நற்குணம். பூரணசற்குணன் - நிறைந்த நற்குணன்.பூரணசாத்திரம், பூரணசூத்திரம் - அகத்தியர் செய்த ஓர் நூல். பூரணதிசை - சரஞ்செல்லுந்திசை. பூரணநூல் - பூரணசாஸ்திரம். பூரணபலன் - நிறைபலன். பூரணபாத்திரம் - இருநூற்றைம்பத்தாறு சிறங்கை யரிசி கொண்டபாத்திரம், பூரணகும்பம். பூரணபிண்டம் - நிறைகரு. பூரணமாசம் - பிரசூதிமாதம். பூரணமி - பூரணை. பூரணமை - பௌர்ணமி. பூரணம் - உடைநூல், எல்லாம்,கடல், நிறைவு, பிதுர்பிண்டம்,பெருக்கம், பொலிவு, மழை,முழுமை, பூர்ணம். பூரணலேகியம் - ஓரிலேகியம். பூரணவடிவு - கட்டழகு, மகாலங்காரம். பூரணவயசு - நிறைவயசு. பூரணவித்தை - முழுக்கல்வி. பூரணவிரதம் - உத்தமவிரதம். பூரணன் - அரன், அருகன், கடவுள்,மூர்த்தபாஷாணம், விஷ்ணு. பூரணாகுதி - ஓமச்சடங்கை நிறைவேற்றுங் கடைசியாகுதி. பூரணாதிலேகியம் - பூரணலேகியம். பூரணாயு - பூரணவயசு. பூரணானகம் - சந்திரகிரணம், மேளம். பூரணி - இலவமரம், காடு, நிறைவுள்ளவன், பூமி. பூரணேந்து - பூரணசந்திரன். பூரணை - ஐயன்றேவிகளிலொருத்தி,சந்திரனைந்தாம் பத்தாந்திதி,பௌரணை, நிறைவு. பூரணைகேள்வன் - ஐயன். பூரதியூரம் - நாயுருவி. பூரபதி - பச்சைக்கருப்பூரம். பூரம் - இரசகர்ப்பூரம், ஓர்நாள், ஓர்மருந்து, கருப்பூரம், சூழ்தல்,தேள், நீர்க்குண்டு, பூரணம்,பூரான், நிறைவு. பூரவாகனி - சரச்சுவதி. பூராசி - பூத்திரள். பூராடமாசு - பால்வீதிமண்டலம். பூராடம் - ஓர் நாள். பூராயக்கதை - பழங்கதை. பூராயம் - ஆராய்வு, பூருவம், விசித்திரம், விருப்பம், வரலாறு. பூராவாய் - நிறைவு. பூரான் - ஓர் விஷசெந்து, பனங்கொட்டை முதலியவற்றினுட்பருப்பு. பூரான்காவிக்கல் - மஞ்சட்காவி. பூரி - ஓரிசை, ஓர் பணிகாரம், ஓர்வீரன், கலப்புநெல், குற்றம்,சிராத்தக் கிரியையி னொன்று,சிவன், திருமால், நாணி, நூறுகோடி, கோடி, கோடாகோடி,பகல், பிரமன், புல், புரியென்னேவல், பொன், மிகுதி, வில்நாண். பூரிகம் - அப்பவருக்கம். பூரிகலியாணி - ஓரிராகம். பூரிகா - அகில். பூரிகை - அப்பவருக்கம், ஊதிடும்பூரிகை. பூரிகொடுத்தல் - சிராத்தச்சடங்கினொன்று. பூரிக்கோ - எட்டுத்தொகையிலொன்றாகிய குறுந்தொகை தொகுத்தவன். பூரிதம் - பூரணம். பூரித்தல் - உவத்தல், நிரப்புதல்,நிறைத்தல், பருத்தல், வாயுவைநிறைத்தல். பூரிபோசனம் - சிராத்தத்தின்பிற்கொடுக்கும் போசனப்பொருள். பூரிப்பு - பூரணம், மிகுகளிப்பு, மிகுதி. பூரிமாயன் - நரி. பூரிமாயு - ஆணரி, பழமை. பூரிமம் - தெருப்பக்கம் திண்ணை. பூரியம் - அரசர்வீதி, அரசிருக்கை,ஊர், மருதநிலத்தூர், வேந்தர்வீதி.பூரியர், பூரியோர் - கீழ்மக்கள், நிலவேம்பு. பூரு - குருகுலத்தரசரி லொருவன்,புருவம், யயாதிமகன். பூருகம் - மரம். பூருண்டி - மல்லிகை, வேலிப்பருத்தி. பூருது - பூநீறு. பூருபூரெனல் - பூர்பூரெனல். பூருவகங்கை - நருமதை. பூருவகதை - பழங்கதை.பூருவகருமம், பூருவகன்மம் - ஊழ்வினை. பூருவகாட்டை - கிழக்கு. பூரவகாலம் - முற்காலம். பூருவகௌளம் - ஓரிராகம். பூருவக்கியானம் - பிரார்த்த ஞானம். பூருவசந்தியை - விடியல். பூருவசனனம் - முற்பிறப்பு. பூருவசனன் - தலைமகன், முன்னோன். பூருவசன் - சேஷ்டபுத்திரன், தமையன். பூருவசன்மத்தானம் - இரண்டாமிடம். பூருவசன்மம் - பூருவசனனம். பூருவசாகசம் - கடுந்தண்டம். பூருவசைலம் - உதயமலை. பூருவஞானம் - முன்னனுபவத்தையறியுமறிவு.பூருவதிக்கு, பூருவதிசை - கிழக்கு. பூருவதுவந்தம் - ஊழ்வினைப்பயன். பூருவதேகம் - பூருவசரீரம். பூருவதேசம் - கிழக்கு. பூருவதொடர்ச்சி - பழவினைத்தொடர். பூருவதொந்தம் - பூருவதுவந்தம்.பூருவபக்கம், பூருவபட்சம் - வளர்பிறைப்பக்கம், சுக்லபக்ஷம், முற்பக்கம். பூருவபதம் - நிலைமொழி. பூருவபருப்பதம் - உதயமலை. பூருவபற்குனி - பூரம். பூருவபற்குனிபன் - வியாழன். பூருவபாஷை - ஆதிபாஷை, தேவர்மொழி. பூருவபுண்ணியம் - முற்றருமம்,முற்செய்புண்ணியம். பூருவப்படுதல் - தொன்றுதொட்டுரித்தாயிருத்தல். பூருவமீமாஞ்சை - மீமாஞ்சையின்முற்பகுதி. பூருவமுகம் - கிழக்குமுகம். பூருவம் - ஆதி, எல்லாம், கிழக்கு,சந்திரன், முன்பக்கம், பழஞ்சரித்திரம், பழமை, முதன்மை,முதிர்ச்சி, முன்பு, பூர்வம். பூருவவாசனை - முற்பிறப்பின்பற்று. பூருவாஷாடம் - பூராடம்.பூருவாண்ணம், பூருவாண்ணியம் - முன்னேரம். பூருவாபரம் - அத்தாட்சி. பூருவாப்பியம் - பழயவர்க்கம். பூருவீகம் - ஆதி, பழமை. பூருவோத்தரம் - பூருவோத்திரம்,வடகீழ்த்திசை. பூருவோத்திரசங்கதி - பூருவத்தின்வரலாறு. பூருவோத்திரம் - பூருவீகம். பூரை - குறைவின்மை, பூரணம். பூரையிடுதல் - அலுத்துப்போதல். பூர்ணகம் - பொற்சிகைப் பறவை. பூர்ணம் - பூசணம், பூரணம். பூர்ணாவதாரம் - இராமாவதாரம்,நரசிங்காவதாரம். பூர்தல் - நிறைதல். பூர்த்தம் - தருமம். பூர்த்தி - ஐந்தகம், நிறைவு. பூர்ப்பியம் - நூதனம், பழங்கதை. பூர்ப்பூரெனல் - பொலிந்து பருத்தல். பூர்வம் - பூருவம், கிழக்கு. பூர்வராத்ரம் - முன்னிரவு. பூர்வாத்ரி - உதயகிரி. பூர்வான்னம் - பகலின் முற்பாதி. பூர்வீகம் - பூருவீகம். பூர்வீகன் - பழையோன். பூலதை - நாங்கூழ், படர்கொடி,பூநாகம். பூதலத்தி - மருதமரம். பூலம் - புற்கட்டு. பூல் - புல்லாந்தி. பூலா - பூல். பூலாசம் - புல்லாந்தி. பூலித்தகடு - மணியழுத்தவைக்குந்தகடு. பூலோகம் - பூமி இஃது மேலேழுலகினொன்று. பூல் - ஓர் செடி, புல்லாந்தி, பூலா. பூவசியர் - பூவைசியர். பூவணம் - மதுரைக்கருகில் ஓர் சிவதலம். பூவணை - பூமெத்தை. பூவத்தி - மருது.பூவந்தம், பூவந்தவம் - நிலாவிரை. பூவந்தி - ஓர் மருந்து, நெய்க் கொட்டான், புன்குமரம், பொன் னாங்காய் மரம். பூவந்திப்பழம் - மணிப்புங்குப்பழம். பூவமளி - புட்பசயனம் இஃதுஅட்ட போகத்தொன்று. பூவம்பன் - மன்மதன். பூவரசு - ஓர் மரம். பூவலயம் - பூகோளம். பூவல் - சிவப்பு, துரவு, செம்மண். பூவல்மண் - செவ்வல். பூவழலை - பூநீறு. பூவள்ளம் - தங்கக் கிண்ணம்,மண்கிண்ணம். பூவன்வாழை - ஓர் வாழை. பூவாணம் - ஓர்வித வாணம். பூவாமரம் - கோளி. பூவாமற்காய்க்குமரம் - ஆல் முதலியன. பூவாளி - ஓர் பாணம், மதன்பாணம்,மன்மதன். பூவிதழ் - பூந்தோடு, பன்றிக்கிழங்கு. பூவிந்து - அப்பிரகம், வீரம். பூவிந்துநாதம் - அப்பிரகம். பூவிலைமடந்தையர் - அற்றைப்பரிசங் கொள்வோர். பூவில் - மன்மதன் வில். பூவிளம் - கற்பாஷாணம். பூவுலகு - பூமி. பூவெண்ணெய் - ஓர் நற்றயிலம். பூவை - காயாமரம், கிளி, குயில்,நாகணவாய்ப்புள், பெண். பூவைசியர் - களமர், உழவர், வேளாளர் இவர் மூவைசியரி லொருவர். பூவைவண்ணன் - காயாம்பு மேனியன், விஷ்ணு. பூவொல்லி - தேங்காயி லோர் வகையொல்லி. பூவோடு - தொட்டி பாஷாணம். பூழக்கரம் - கோட்டம். பூழான் - கவுதாரி, கானாங்கோழி. பூழி - குழைசேறு, கொடுந்தமிழ்நாட்டினொன்று, சேற்றிற்குமிழி, பராகம், புழுதி, காடை. பூழியபலம் - பூசுணி. பூழியன் - சேரன், பாண்டியன். பூழில் - அகில், பூமி. பூழிவேந்தன் - பாண்டியன். பூழை - கோபுரவாயிற் கதவிலிட்டுப்புகும்வழி, துவாரம், புதவு. பூழ் - காடை, கானாங்கோழி. பூழ்க்கரம் - கோட்டம். பூழ்க்கை - பூழைக்கை, யாளி யானை,யானை. பூழ்தி - தூசி, வராகம், புலால், புழுதி. பூளம் - பூவரசு. பூளை - இலவம்பஞ்சு, ஓர் செடி,சிறு பூளை. பூனாகம் - இலைக்கள்ளி, நாக்குப்பூச்சி. பூனை - பூஞை. பூனைக்கச்சி - ஓர் செடி. பூனைக்கண் - ஓர் மணி, புருடராகம். பூனைக்கழற்சி - ஓர் செடி. பூனைக்காஞ்சொறி - ஓர் காஞ்சொறி. பூனைக்காய்வேளை - ஓர் செடி. பூனைக்காலி - ஓர் செடி. பூனைக்கீரை - ஓர் கீரை. பூனைத்திசை - தென்கிழக்கு. பூனைப்பகைவன்முள் - எலி முள்ளு.பூனைப்பிடுக்கன், பூனைமடி - ஓர்செடி. பூனைமயிர் - பூனைக்கழற்சி, வெண்மயிர். பூனைவணங்கி - குப்பைமேனி. பெ பெகுலம் - அநேகம். பெங்கு - கள்ளினோர் பேதம். பெடம் - மிகுதி. பெடை - பறவைப்பெண். பெட்டகத்துத்தி - ஓர் துத்தி. பெட்டகம் - பெட்டி. பெட்டல் - ஆசைப்பெருக்கம்,விரும்பல். பெட்டார் - சினேகிதர். பெட்டி - கூடை, பேழை, மூளிவாய். பெட்டிலிக்குழல் - நச்சுக்குழல். பெட்டிக்கோரை - ஓர் புல். பெட்டு - பொய். பெட்டை - ஒட்டகம், கழுதை, குதிரை,சிங்கம், நாய், மரையிவற்றின் பெண்,பறவைப்பெண், பெண் பொது. பெட்டைக்கடல் - சிறுகடல். பெட்டைக்கட்டு - வளமற்றகட்டு. பெட்டைக்கண் - ஊனக்கண், சாய்ந்தகண், சிறுகண். பெட்டைக்கண்ணன் - சிறு கண்ணுள்ளவன். பெட்டைமுடிச்சு - பெட்டைக்கட்டு. பெட்டையன் - அலி, ஆண்மையற்றவன். பெட்பு - அன்பு, ஆசை, பெருமை,பேணுதல், விருப்பம். பெண் - கற்றாழை, ஸ்த்ரீ, மனைவி,விலங்கின் பெண்பொது, கன்னியாராசி. பெண்கரு - சுரோணிதம். பெண்கலை - வண்ணத்தின்சிற்றின்பப் பகுதி. பெண்குமஞ்சான் - சாம்பிராணி. பெண்குறி - யோனி. பெண்கேட்டல் - பெண்ணை மணம்பேசுதல். பெண்கொடி - பெண். பெண்கொடுத்தல் - பெண்ணைவிவாகஞ் செய்து கொடுத்தல். பெண்சாதி - மனைவி. பெண்சோடினை - பெண் வேஷவணி.. பெண்டகர் - அலியர். பெண்டகன் - அலி. பெண்டகை - பெண்டன்மை. பெண்டர் - பெண்டகர். பெண்டாட்டி - பெண், மனையாட்டி. பெண்டாரி - பிண்டாரி.பெண்டிர், பெண்டில் - பெண், மனைவி. பெண்டீர் - பெண்கள், மனைவியர். பெண்டுகம் - களற்சி. பெண்டு - பெண்மகள், மனைவி. பெண்ணரசி - இராசாத்தி, செல்வமுடையாள், விவேக முள்ளவள். பெண்ணரசுநாடு - பெண்ணாள்கைசெய்யுமிராச்சியம். பெண்ணலம் - பெண்ணிலுள்ளவின்பம். பெண்ணழைத்தல் - பெண்ணைவிவாகஞ்செய்தல். பெண்ணன் - ஆண்மையற்றவன். பெண்ணாசை - ஸ்த்ரீவிருப்பம்இஃது மூவாசையி னொன்று. பெண்ணாள் - பெண் நட்சத்திரம். பெண்ணீலி - ஓர் பெண்தேவதை,துட்டை. பெண்ணுறுப்பு - பெண்குறி, பெண்ணிலட்சணம். பெண்ணெடுத்தல் - பெண் கொள்ளுதல். பெண்ணெழுத்து - நெட்டெழுத்து. பெண்ணை - அனுடநாள், ஓராறு,நீர்முள்ளி, பனைமரம், பெண்மரம். பெண்தண்டு - காதினுட்புறத் தண்டு. பெண்பழி - பெண் துரோகம். பெண்பனை - காயும்பனை. பெண்பால் - ஸ்த்ரீலிங்கம் இஃதுஐம்பாலி னொன்று. பெண்பால்விகுதி - பெண்பகுதியைவிளக்கி நிற்கும் விகுதி. பெண்பாற்பிள்ளைக்கவி - ஆண்பாற்பிள்ளைக்கவி யுறுப்புள் சிறுதேர்சிறுபறை சிற்றில் எனு மூன்றொழித்து ஏனையுறுப்பேழுடன் அம்மனை ஊசல் கழங்கெனு மூன்றுறுப்புங் கூட்டியுறுப் புக்குப் பப்பத்துவிருத்தத்தான் முடிவது. பெண்பிடித்தல் - கூத்தி பிடித்தல். பெண்பிள்ளை - சிறுமி, பெண்,மனவாட்டி. பெண்பிறந்தவள் - பெண்ணாய்ப்பிறந்தவள். பெண்புத்தி - பேதைப் புத்தி. பெண்பேசல் - பெண்ணை மணம்பேசுதல். பெண்பேதை - ஏழைப்பெண். பெண்போகம் - அறம் முப்பத்திரண்டினொன்று அஃது மணமுடிப்பித்தல், ஸ்திரீ போகம்இஃது அட்டபோகத் தொன்று. பெண்மகள் - ஸ்திரீ. பெண்மதி - பெண்புத்தி. பெண்மயக்கம், பெண்மயல் - பெண்போகம். பெண்மயிர் - அளகம். பெண்மரம் - புறவயிரமுள்ளமரம்,அவை பனை, கமுகு, தெங்கு,மூங்கில் முதலியன. பெண்மாயம் - பெண் மயக்கம். பெண்மூச்சு - பெண் மூர்க்கம். பெண்மை - பெண்டன்மை, மாட்சிமை, அமைதித் தன்மை. பெண்மைச்சினைப்பெயர் - பெண்பான் முப்பகுதிக்கும் பொதுவானவுறுப்பானாய பெயர் (உ-ம்)முடத்தி. பெண்மைச்சினைமுதற்பெயர் - பெண்பான் முப்பகுதிக்கும் பொதுவானவுறுப்பு முதற்பொருட் பெயர் (உ-ம்) முடக்கொற்றி. பெண்மைமுதற்பெயர் - பெண்பான்முப்பகுதிக்கும் பொதுவானமுதற் பொருட்பெயர் (உ-ம்)கொற்றி. பெண்மைமுறைப்பெயர் - முறையைக்காட்டி வரும் பெண் பெயர் (உ-ம்)தாய். பெண்வகை - பெண்வகுப்பு நாலுஅஃது பதுமினி, சித்தினி, சங்கினி,அத்தினி.பெண்வழி, பெண்வழிசுற்றம் - பெண்ணைப் பற்றியவினம். பெண்வழிச்சேறல் - பெண் பேச்சைக்கேட்டல். பெதரிகாளம் - காஞ்சிரை. பெதும்பை - பதினொரு வயதிற்பெண், பெண்பொது. பெத்தகாலம் - இலய காலம். பெத்ததிசை - ஆன்ம பாசத்திற்குட்பட்டிருக்குங் காலம். பெத்தமுத்தி - இலயமுத்தி. பெத்தம் - ஒடுக்கம், கட்டு, சேர்மானம், நிலைபரம், பத்தம். பெத்தரிக்கம் - அகந்தை, கலம்பகம். பெத்தர் - அடிமைகள், பாசபந்தர். பெத்தல் - பெருங்கரும்பை. பெத்தலர் - நேர்வாளம். பெத்தி - கறிமுள்ளி. பெந்தம் - பந்தம். பெந்தர் - பந்தர். பெந்தனம் - பந்தனம். பெந்தித்தல் - பந்தித்தல். பெந்திப்பு - கட்டு. பெந்து - சுற்றம், பந்து. பெந்தை - அவலட்சணமாய்ப் பருத்தது, கலப்பையினோ ருறுப்பு. பெந்தைக்கண் - பெரியகண். பெந்தைக்கயிறு - படைவாளைமேழியோடிணைக்குங் கயிறு,வடக்கயிறு. பெம்மான் - உயர்ந்தவன், பெருமான். பெயரடி - பெயர்ச்சி, பேர்மூலம். பெயரன் - பாட்டன், பேரன். பெயராளி - கீர்த்திமான். பெயரிடுதல் - நாமந்தரித்தல், நாமகரணம். பெயரிடைநிலை - பெயர்ப்பகுதிவிகுதிகளிரண்டிற்கு நடுவினிற்குமெழுத்து (உ-ம்) வலைஞன்,வலை-ஞ்-அன். பெயரியற்சொல் - செந்தமிழ் நிலத்துமொழிகளாய் உலகவழக்கினுஞ்செய்யுள் வழக்கினுநின்று தம்பொருளையியல்பாக விளக்கும்பெயர்ச்சொல். பெயரின்னிசை - ஓர் பிரபந்தம்,அஃது பாட்டுடைத்தலைவன்பெயரினைச் சாரவின்னிசைவெண்பாவாற் பாடுவது. பெயருதல் - நிலைவிலகுதல். பெயரெச்சம் - பெயரை யவாவிநிற்குஞ்சொல், அஃது அகரமும்உம்முமாகிய இருவிகுதிகளையும் பெற்று கருத்தா, காரணம்,இடம், காலம், செயல், செயப்படுபொருள் எனு மாறனுள் ஒன்றைக்கொண்டு முடியும். பெயரெடுத்தல் - கீர்த்தியடைதல். பெயரெடுப்பு - நாமப்பிரபலியம். பெயர் - கீர்த்தி, நாமம், பெயரென்னேவல், பெயர்ச்சொல். பெயர்ச்சி - திரும்புதல், புரட்சி,புரட்டு. பெயர்ச்சூத்திரம் - இடுகுறி, காரணக்குறியா லிதற்கிது பெயரென்றி டுதல். பெயர்ச்சொல் - இடுகுறியாயுங்காரணக்குறியாயும் வேற்றுமையுருபுகள் சார்தற்கிடனாய் ஒன்றன்பெயரை விளக்கிநிற்குஞ் சொல். பெயர்தல் - ஆடல், உரிஞ்சல், எடுபடல், மீளுதல், திரும்பல், போதல்,வேறுபடல். பெயர்த்தல் - கிளப்புதல், திருப்புதல்,வேறுபடுத்தல். பெயர்த்தி - பாட்டி, பெயர்ச்சி,பேத்தி. பெயர்த்து - பெயரையுடையது. பெயர்நேரிசை - ஓர்பிரபந்தம், அதுபாட்டுடைத் தலைவன் பெயரினைச்சார நேரிசை வெண்பாவாற் கூறுவது. பெயர்போதல் - கீர்த்திபிரபலமாதல். பெயர்ப்பகுதி - பொருள், இடம்,காலம், சினை, குணம், தொழில்எனு மறுவகை அடிகள். பெயர்பிரஸ்தாபம் - கீர்த்தி. பெயர்ப்பு - பெயர்ச்சி. பெயர்வழி - தலைமுறை, பெயர்முறை. பெயர்விகுதி - பெயர்ச்சொல்லின்விகுதி. பெயர்விளங்கல் - கீர்த்தியுண்டாதல். பெயர்வு - பெயர்தல். பெயர்வேற்றுமை - எழுவாய் வேற்றுமை. பெயலை - மழை. பெயல் - மழை, மழைத்துளி. பெயாதானம் - வேங்கை. பெய்கலம் - கொள்கலம். பெய்தல் - செறித்தல், சொரிதல்,விடுதல், இடுதல், செறித்தல். பெய்துரை - பாயிரம். பெய்வளை - பெண். பெய்வு - பெய்தல்.பெரிசு, பெரிது - கனங்கொண்டது,பருத்தது. பெரியகை - கொடைக்கரம், தாராளமானகை. பெரியகுணம் - பெருந்தன்மை. பெரியதகப்பன் - தந்தையின் றமையன். பெரியதம்பிரான் - ஓர் தேவதை. பெரியதனம் - பெருந்தன்மை,மேட்டிமை. பெரியதாய் - தாய்க்கு முன் பிறந்தாள். பெரியது - பெரிது. பெரியநங்கை - பிரியாணங்கை. பெரியநடை - நல்லொழுக்கம். பெரியநாயகி - பார்வதி. பெரியபிராட்டி - இலட்சுமி. பெரியபுராணம் - அறுபத்து மூவர்கதை. பெரியபுலு - நூறு. பெரியப்பன் - பெரிய தகப்பன். பெரியமனம் - உதார மனம். பெரியம்மான்பச்சரிசி - ஓர் பூடு. பெரியம்மை - வசூரிகை. பெரியர் - பெரியோர். பெரியவர் - மேன்மை யுடையோர். பெரியவன் - தத்துவசாலி, மேம்பாடுடையோன், வளர்ந்தவன். பெரியாணங்கை - ஓர் பூடு. பெரியாதனம் - வேங்கை.பெரியாத்தாள், பெரியாயி - பெரியதாய். பெரியாழ்வார் - ஸ்ரீ வில்லிபுத்தூரிலஅவதரித்தவர், பன்னிரண் டாழ்வாரில் ஒருவர், இவர் குமாரிஆண்டாள்.பெரியார், பெரியோர் - பெரியவர்கள். பெருகல் - பெருகுதல். பெருகி - துத்தம். பெருகியல் - இராகத் தகுதியினொன்று. பெருகியன்மருதம் - குரல்தார மாயத்தாரங்குரவாய விளரிப்பாலை. பெருகு - தயிர், பெருகேன்னேவல். பெருகுதல் - பாய்தல், மிகுதல், விருத்தித்தல். பெருக்கமரம் - பப்புரப்புளி மரம். பெருக்கம் - செல்வம், பெருகுதல்,பெருக்கிக் கண்டபேறு, மிகுதி,விசாலம், விருத்தி. பெருக்கம்பண்ணுதல் - பெருமைபண்ணுதல், போகுதல். பெருக்கல் - அதிகப்படுத்தல், எண்கூட்டித் தாக்கல், சீய்த்தல், நிறைத்தல், பருத்தல், மிகுவித்தல், விசாலித்தல். பெருக்கன் - பருக்கன். பெருக்காச்சவட்டு - கவலை யீனம்,வேண்டா வெறுப்பு. பெருக்காளர் - போதியவர்கள்,வேளாளர். பெருக்கு - கணக்குவகை நான்கினொன்று, பப்பறப்புளி, பாய்ச்சல்,பெருக்கென்னேவல், விசாலம்,வெள்ளம், மிகுதி. பெருக்குக்கணக்கு - கணக்குவகைநான்கி னொன்று. பெருக்குதல் - பெருக்கு. பெருக்குவேளை - உச்சிப்பொழுது. பெருங்கடல் - சமுத்திரம். பெருங்கடி - தொடுகடி. பெருங்கணக்கு - பெரு நிரவி, பெருந்தொகை. பெருங்கதை - பிள்ளையார் நோன்புமுடிவில் வாசிக்குங் கதை, உதயணன் சரித்திரத்தை விரித்துரைக்கும் ஒரு தமிழ்நூல். பெருங்கலம் - ஆயிரங்கோலையுடைய பேரியாழ். பெருங்கலையன் - ஓர் நெல். பெருங்காக்கைபாடினியம் - ஓர் நூல். பெருங்காஞ்சொறி - ஓர் காஞ்சொறி. பெருங்காப்பியம் - ஓர்பிரபந்தம்அஃது தெய்வ வணக்கமும் செய்யப்படுபொருளும் வாழ்த்தும்முன்னுளதாய் அறம் பொருள்இன்பம் வீடு எனு நாற்பொருட்பயத்ததாய் கவிநாயகனையுடைத்ததாய் மலை கடல் நாடுநகர் பருவமுதலியவற்றின் வளங்கூறுதலும் மணமுடித்தல் முடிகவித்தல் பொழில் விளையாட்டுநீர்விளையாட்டு உண்டாட்டுபுலவி கலவி என்றிவற்றைப் புகழ்தலும் மந்திரம் தூதுசெலவுபோர் வென்றி என்பவற்றைக்கூறலு மாகிய விவை தொடரச்சருக்கம் இலம்பகம் பரிச்சேதம்என்னும் பகுதியை யுடைத்ததாய்வருவது, மகாகாவியம். பெருங்காயம் - ஓர் மருந்து, காயம். பெருங்காரை - ஓர் மரம், ஓர் மீன். பெருங்கால் - சண்டமாருதம், பெருவாய்க்கால், யானைக்கால். பெருங்காற்று - உரத்த காற்று.பெருங்கிடை, பெருங்கிடைச்சி - ஓர்கிடைச்சி. பெருங்கிரந்தி - ஓர் நோய். பெருங்கிராமம் - ஐஞ்ஞூறு குடிகொண்ட வூர். பெருங்கிழங்கு - ஈசுரவேர், ஓர்பூடு,சீனப்பலா, பரங்கிப்பட்டை. பெருங்கிழமை - முழுவுரிமை. பெருங்குடல் - ஓர் குடல். பெருங்குடிவாணிகர் - வணிகருள்ஒருவகையார். பெருங்குமிழ் - ஓர் குமிழ் அது தச மூலத்தொன்று. பெருங்குரல் - பெருஞ்சத்தம். பெருங்குருகு - சக்கரவாகப்புள்,தலைச்சங்கப் புலவரி லொருவர்செய்த ஒரு நூல். பெருங்குருந்து - ஓர் குருந்து. பெருங்குருமல் - மருள்கிழங்கு. பெருங்குரும்பை - ஓர் மருந்து. பெருங்குளவி - ஓர் குளவி. பெருங்குறடு - பெரிய குறடு. பெருங்குறட்டை - ஓர் செடி, காக்கணங்கொவ்வை. பெருங்குறிஞ்சா - ஓர் குறிஞ்சா. பெருங்குன்றூர்க்கிழார் - பதிற்றுப்பத்தில் ஒன்பதாம் பத்தினைப்பாடியவர். பெருங்கொடி - ஓர் துவசம். பெருங்கொண்டலாத்தி - புழுக்குத்திப்புள். பெருங்கொன்றை - ஓர் கொன்றை. பெருங்கோடணை - முரசு. பெருங்கோழிநாய்கன்மகன்கண்ணனார் - ஒரு புலவர். பெருங்கௌசிகனார் - மலைபடுகடாம் பாடியவர். பெருச்சாளி - ஓரெலி. பெருஞ்சித்தரனார் - புறநானூறுபாடிய புலவரிலொருவர். பெருஞ்சிறப்பு - மிகுசிறப்பு. பெருஞ்சீத்தனார் - ஓர் சங்கப்புலவன். பெருஞ்சீரகம் - ஓர் சரக்கு, சோம்பு. பெருஞ்செய்யான் - ஓர் தேள். பெருஞ்செருப்படி - ஓர்பூடு. பெருஞ்செல்வம் - திரண்ட ஐசுவரியம். பெருஞ்சொல் - பலரறிசொல். பெருத்தல் - அதிகப்படல், பருமையாதல். பெருநகை - பெருஞ்சிரிப்பு, பெருமகிழ்வு இது சுபாவகுணத்தினொன்று, புறக்கூத்தினுளொன்று. பெருநடை - உயர்ந்தநடை. பெருநண்டு - ஓர் நண்டு. பெருநந்தியாவட்டம் - ஓர் நந்தியாவட்டம். பெருநம்பி - மங்கலபாடகன். பெருநயப்பு - பெருவிருப்பு. பெருநயப்புரைத்தல் - பெருவிருப்பைக் கூறல் இஃது அகப்பொருட்டுறையினொன்று. பெருநறளை - ஓர் பூடு. பெறுநறுவிலி - ஓர் மரம். பெருநாரை - ஓர்நாரை, தலைச்சங்கத்து இசை நூலுளொன்று. பெருநாள் - அச்சுவினி முதலியநாள்,இரேவதி, கொண்டாட்டமானநாள். பெருநிரவி - குமுக்கு, மொத்தம். பெருநிம்பம் - வேம்பு. பெருநீர் - கடல். பெருநூல் - விரிவுநூல். பெருநெருஞ்சி - ஓர் நெருஞ்சி. பெருநெருப்பு - தீச்செறிவு. பெருநெறி - நன்மார்க்கம். பெருநையல் - பெருவியாதி, மசூரிகை. பெருந்தகவு - பெருமை. பெருந்தகை - அரசன், பெருமையுடையோன், எப்பொருட்குந்தலைவன். பெருந்தக்காளி - ஓர் செடி. பெருந்தலைக்கறையான் - ஓர் கரையான். பெருந்தலைச்சாத்தனார் - ஒருபுலவர். பெருந்தன்மை - அகந்தை, மானம்,மேன்மை. பெருந்தாரா - ஓர் தாரா. பெருந்தாளி - ஓர் தாளி. பெருந்திணை - பொருந்தாக்காமம். பெருந்திணைமணம் - பெருந்திணைக் குரிய மணநான்கு அவைபிரமம் பிரசாபத்தியம் ஆரிடம்தெய்வம். பெருந்திரட்டு - ஒரு தொகைநூல். பெருந்தில்லை - ஓர் மரம். பெருந்தீன் - பேரூண். பெருந்துத்தி - ஓர் பூடு. பெருந்துளசி - ஓர் துளசி. பெருந்தேவபாணி - இசைப்பாவகையுள் ஒன்று. பெருந்தேவனார் - பாரதம்பாடின ஓர்சங்கப்புலவர். பெருந்தேவி - அரசன் மனைவி. பெருந்தேன் - பேரிலையான் கூட்டுந்தேன். பெருந்தொகை - மிகுதொடை. பெருந்தொடை - ஆடுதொகை. பெருப்பம் - பருப்பம். பெருப்பித்தல் - அமிதப்படுத்தல்,பருப்பித்தல். பெருமகன் - அரசன், சிறந்தோன்,பெருந்தகை. பெருமகிழ்ச்சிமாலை - ஓர் பிரபந்தம்அது தலைவியது சிறப்பைக்கூறுவது. பெருமக்கள் - பெரியோர். பெருமங்கலம் - ஓர் பிரபந்தம். பெருமஞ்சிகன் - நாவிதன். பெருமணிக்கோட்டுவான் - ஓர் நீர்ப்புள். பெருமந்தாரை - ஓர் செடி. பெருமம் - பெரியது. பெருமரம் - பீநாறி, பெருங்கள்ளிமரம். பெருமருந்து - ஓர் மருந்து, ஈசுரமூலி. பெருமலை - மகாமேருகிரி. பெருமலைகலக்கி - ஓர் பூடு. பெருமல்லரி - பெருங்கள்ளி. பெருமல்லிகை - ஓர் மல்லிகை இதுதசமூலத்தொன்று. பெருமழை - மிகுமழை. பெருமன் - பருத்தது. பெருமா - யானை. பெருமாகோதேயர் - சேரமான்பெருமான். பெருமாட்டி - தலைவி. பெருமாண்டி - செருப்படை. பெருமாந்தம் - ஓர் நோய். பெருமாரி - பெருமழை. பெருமாள் - திருமால், பெருமையிற்சிறந்தோன். பெருமான் - அரசன், குரு, சிவன்,தலைவன், திருமால், பெருமையிற் சிறந்தோன், மூத்தோன்,விந்து, ரசம். பெருமிட்டை - பீநாறி. பெருமிதம் - களிப்பு, மிகுதி, வீரம்,உள்ளச்செருக்கு. பெருமீன் - யானைமீன். பெருமுசுட்டை - ஓர் பூடு. பெருமுட்டி - கூடம். பெருமுத்தரையர் - செல்வர், சொந்தப்பொருட்காரர். பெருமூளை - ஓர்வகைப்பாட்டு. பெருமூச்சு - நெடுமூச்சு. பெருமை - ஆங்காரம், பொலிவு,மாட்சிமை, அருமை, மிகுதி. பெருமைபண்ணுதல் - ஆங்காரங்காட்டுதல். பெருமைபாராட்டுதல் - வீம்புபேசுதல். பெரும்பசிரி - ஓர் கீரை. பெரும்பஞ்சமூலம் - தழுதாழை, பாதிரி,பெருங்குமிழ், வாகை, வில்வம். பெரும்படி - பரும்படி. பெரும்படை - ஓர் தேவகூட்டம். பெரும்பதி - தலைக்கிராமம், மருங்கிலூர்சூழ்பதி. பெரும்பதுமனார் - புறநானூறு பாடியபுலவரி லொருவர். பெரும்பயறு - ஓர்வகைப்பயிறு. பெரும்பயன் - மிகுபேறு. பெரும்பராக்கு - அசட்டைத்தனம். பெரும்பருந்து - கூகை. பெரும்பறவை - எண்காற்புள். பெரும்பறை - ஒருவகைத்தோற்கவி. பெரும்பற்றப்புலியூர் - சிதம்பரம்.பெரும்பனசை, பெரும்பனையன் - மசூரிகையி னோர்வகை. பெரும்பாடு - தீட்டுதிரமிறைப்பு. பெரும்பாணாற்றுப்படை - பத்துப்பாட்டில் நான்காவது. பெரும்பாந்தள், பெரும்பாம்பு - ஓர்பாம்பு. பெரும்பாலும் - மிகுதியும். பெரும்பாவி - மிகுபாவி. பெரும்பாழ்கெளி - சூனியவெளி,துவாத சாந்தம். பெரும்பாற்சொற்றி - ஓர் பூடு. பெரும்பான்மை - மிகுபான்மை. பெரும்பிரண்டை - ஓர் பிரண்டை. பெரும் பிறிவு - மரணம். பெரும்புரண்டை - ஓர் பிரண்டை. பெரும்புலால் - பெருமீன். பெரும்புலி - ஓர் புலி.பெரும்புழுக்கல், பெரும்புழுக்கு - பேரவியல். பெரும்புள் - கூகை. பெரும்புறா - ஓர்புறா. பெரும்பூண் - பதக்கம். பெரும்பூழை - கதவிலிடும் வாயில். பெரும்பூளை - ஓர் பூடு. பெரும்பேச்சு - பலரறிசொல். பெரும்பெயர் - பராசியம், பெரும்பொருள். பெரும்பேறு - இறந்தபாடு. பெரும்பொங்கல் - ஊர்ப்பொங்கல்,தைப்பொங்கல். பெரும்பொருள் - முத்தி. பெரும்பொழுது - ஆறு பருவம்அவை கார் கூதிர் முன்பனிபின்பனி இளவேனில் முதுவேனில். பெரும்போகம் - பேரனுபவம். பெருவண்ணம் - இசப்பாவகையிலொன்று. பெருவயிறு - ஓர் நோய், குடவயிறு. பெருவலி - பெருநோ. பெருவல் - தூக்கத்தில் பிதற்றல். பெருவழக்கம், பெருவழக்கு - பலராலும் வழங்கப் படுவது. பெருவெள்ளி - ஓர் கிழங்குக்கொடி. பெருவாகை - ஓர் மரம். பெருவாஞ்சை - பேராசை. பெருவாயின்முள்ளி - ஆசாரக்கோவை யியற்றியவர். பெருவாரி - கொள்ளை நோய். பெருவாரிக்காய்ச்சல் - கோதாரிக்காய்ச்சல். பெருவாழ்வு - மிகு செல்வம். பெருவிடை - நெடுவிடை. பெருவியாதி - கிரந்தி நோய், குஷ்டம்,மசூரிகை. பெருவிரியன் - ஓர் பாம்பு. பெருவெக்கைநோய் - வாந்தி பிராந்தி. பெருவெளி - ஏகவெளி. பெருவெள்ளம் - மிகுவெள்ளம். பெருவெள்ளை - ஓர் நெல். பெலக்குதல் - பலத்தல். பெலசாலி - பெலனுள்ளோன். பெலட்சயம் - பெலவீனம். பெலத்தல் - பலப்படல், மிகுத்தல். பெலபிடி - பெலன், பேருதவி. பெலப்படுதல் - உறுதிப்படல், திரப்படுதல். பெலப்படுத்துதல் - உறுதிப் படுத்துதல், திரப்படுத்துதல். பெலப்பித்தல் - பெலப்படுத்துதல். பெலப்பு - உதவி, பெலன். பெலப்பேறுதல் - பெலப்படுதல். பெலம் - பலம். பெலவந்தம் - பலவந்தம். பெலவறுதி - பலகீனம். பெலன் - உறுதி, வலிமை, மூன்றாமிடம், பலம். பெலன்செய்தல் - உறுதிப்படல்,பலித்தல், வலிமை கொள்ளுதல். பெலி - காணிக்கை, பலி. பெலிபீடம் - பலிபீடம். பெல்லி - சூனியம், துறட்டியின் முள்,பிசாசம். பெல்லித்தடி - பூட்டைப்பிடி. பெறல் - பெறுதல். பெறாவிலை - அதிக விலை, குறைந்தவிலை. பெறுக்கல் - பொறுக்கல். பெறுதல் - அடைதல், கிடைத்தல்,பிரசவித்தல். பெறுதி - பெறுதல், பெறும் விலை. பெறுத்தல் - பெறுவித்தல். பெறுமதி - உறுதி, தகுதி, திராணி,பெறும் விலை, வெகுமதி. பெறுமானம் - பெறத்தக்க விலை.பெறுவகொள்வோர், பெறுவது கொள்வோர் - கூத்தியர், வேசையர். பெற்றத்துவசன் - சிவன். பெற்றம் - இடபவிராசி, எருது,காற்று, பசுசாதிப் பொது. பெற்றம்பெற்றவன் - பீமன். பெற்றார் - ஈன்றார்.பெற்றி, பெற்றிமை - குணம், தன்மை. பென்றுகம் - கழற்சி. பென்னம்பெரிது - மிகப் பெரிது. பே பே - ஓரெழுத்து, நுரை, மேகம்,அச்சம். பேகடம் - ஓர்வகை மீன். பேகம் - தவளை, முகில். பேகன் - ஆண்தவளை, கடையெழுவள்ளலி லொருவன். பேகி - பெண்டவளை. பேசகம் - ஆந்தை, கூகை, முகில்,யானைவாலடி, யானைவானுனி,வாயில். பேசகி - யானை. பேசலம் - உலக்கை, ஊமை, குயில்,தகுதி, மிருது. பேசலன் - சிவன். பேசல் - சொல்லல். பேசாதபேச்சு - அசப்பியம். பேசாநிலை - மோனநிலை. பேசாமை - மௌனம். பேசாவநுபூதி - மௌநாநுபவம். பேசி - இடியேறு, உடை, ஓர்யாறு,தசை, நரம்பு, பூமொட்டு, முட்டை. பேசிகோசம் - முட்டை. பேசிலம் - யானை. பேசுதல் - பறைதல், வார்த்தை சொல்லுதல். பேசவாயன் - பரிந்து பேசுபவன்,வாயாடி. பேச்சல் - பறைச்சல். பேச்சழிதல் - பேச்சுத்தப்புதல். பேச்சறுதல் - மௌனம். பேச்சறுதி - தீர்மானம். பேச்சற்றவன் - பேசமாட்டாதவன்,பொய்யன், மௌனி. பேச்சாட்டுத்துணை - பேச்சுத்துணை. பேச்சாளி - சொல்லாளி, நிதானி. பேச்சி - ஓர்பெண்பேய், பேய்ச்சி. பேச்சு - சம்பாஷணை, சொல்,பாஷை, பேசுதல். பேச்சுக்குற்றம் - சொற்குற்றம். பேச்சுக்கொடுத்தல் - பேச்சு வளர்த்தல். பேச்சுநடத்தல் - சம்பாஷித்தல். பேச்சுவளர்த்தல் - நீடிக்கப்பேசல். பேச்சுவாயன் - வாயாடி. பேச்சுறுதி - பேச்சு நிதானம். பேடகம் - கூடை, திரள். பேடணம் - திரிகைக்கல், பொடி செய்தல், அரைத்துப் பொடி செய்தல் பேடம் - தெப்பம், வெள்ளாடு. பேடர் - அலியர். பேடாடல் - மன்மதன் கூத்து. பேடி - அலி, பெண்ணாடு. பேடிகை - கூடை. பேடிசம் - மயக்கு. பேடிசவித்தை - மயக்குத் தொழில். பேடியர் - அவியர். பேடு - அலி, ஊர், காமனாடல்,பறவைப்பெண், பெண். பேடுமூஞ்சி - பெண்முகம். பேடை - கூடை, பறவைப்பெண். பேட்டி - பெரியவரது வரவுகாத்திருத்தல், பெரியவரைக் காணல். பேட்டை - நகரத்தருகுஞ் சந்தை கூடலுமாகிய வூர், பட்டைக்கரை. பேணகம் - ஓர் பணிகாரம்.பேணம், பேணரவு - பேணுதல். பேணலர் - பேணார். பேணல் - ஆசைப் பெருக்கம்,கருத்து, காத்தல், குறித்தல், விரும்பல், நன்குமதித்தல், வழிபடல். பேணாமை - போற்றாமை. பேணார் - பகைவர். பேணுதல் - பேணல்.பேண், பேண்மரம் - துலாத்தாங்கி,பேணென்னேவல். பேதகமணி - வெண்காரம். பேதகம் - பேதம். பேதகன் - தப்பிதகாரன். பேதசைவம் - ஓர் சைவம். பேததாரணை - நவதாரணையினொன்று அஃது இயமாதி யோகசாதனையாற் பிராணன் அபானன்உதானன் வியானன் எனு நான்குவாயுக்களையுஞ் சமான வாயுவுடன் சேர்த்து அதோமுகமாயிருக்கு மிதய கமலத்தைப்பிராணவோச்சார ணத்தாலுண்முக மாக்குவது. பேதநம் - பன்றி. பேதமை - அறிவின்மை. பேதம் - ஒவ்வாமை, சிவாகம மிருபத்தெட்டி னொன்று, திரிபு, பகுப்பு,பகைவினை, வேற் றுமை,வேறாக்கல். பேதலித்தல் - மறுப்பு இஃது உபாயநான்கினொன்று, வேற்றுமைப்படல்.பேதலிப்பு, பேதலிமை - வேற்றுமை. பேதனம் - பேதிப்பு இஃது அட்டகருமத் தொன்று.பேதாதிபேதம், பேதாபேதம் - பலபேதம். பேதானா - ஓர் விதை. பேதி - இரதம், கழிச்சல், நேர்வாளம்,பேதமானவள், பேதிப்பது, பேதியென்னேவல், வெளி. பேதிகாரி - ஆற்றுத்தும்மட்டி, பேதிமருந்து, பேய்க்குமட்டி. பேதிதம் - பிளத்தல். பேதித்தல் - பகைத்தல், விரோசனித்தல், வேற்றுமைப்படுதல், வேற்றுமைப் படுத்தல், வேறாக்கல். பேதிபண்ணுதல் - விரோசனஞ்செய்தல். பேதிப்பு - பேதம். பேது - மதிமயக்கம், வருத்தம். பேதுரம் - வச்சிராயுதம். பேதுறல் - பேதுறுதல், மதிமயங்குதல், வருந்தல். பேதுறவு - மதிமயக்கு. பேதுறுதல் - புத்தி கலங்குதல். பேதை - அறிவிலான், ஏழுவயதுப்பெண், சுபாவி, தரித்திரன், பெண்,பேடி. பேதைமை - அறிவின்மை, ஏழைமை,சுபாவம். பேதையர் - அறிவீனர், ஏழுவயதிற்பெண்கள், கீழ்மக்கள், தரித்திரர்,பாலைநில மகளிர். பேத்தி - பேர்த்தி. பேத்துவம் - அமுதம், நெய். பேத்தை - ஓர் மீன், கெளிசு, பற்பேத்தை. பேத்தைப்பற்றுதல் - கெளிசுபற்றுதல். பேநன் - சந்திரன், சூரியன். பேம் - பயம். பேயகற்றுதல் - பேயோட்டுதல். பேயத்தி - ஓர் மரம். பேயம் - கஞ்சி, நீர், பால். பேயவரை - ஓரவரை. பேயனார் - ஐந்குறுநூற்றில் முல்லைத்திணையைக் குறித்த ஐந்தாநூறுபாடினவர். பேயன் - மதிகேடன். பேயன்வாழை - ஓர் வாழை. பேயாடுதல் - பேயுருக்கொள்ளுதல். பேயாட்டி - பேய்வித்தைக்காரன். பேயாட்டுதல் - பசாசையுருக் கொள்ளுவித்தல். பேயாமணக்கு - ஓராமணக்கு. பேயாவிரை - ஓர் ஆவிரை, ஆளிவிரை. பேயாழ்வார் - ஓர் வைணவாசாரியர். பேயுள்ளி - ஓருள்ளி. பேயுறைதல் - பேய்குடி கொள்ளுதல்.பேயூடம், பேயூஷம் - அமுதம், ஈன்றவேழாநாட்கறக்கும்பால், நவ நீதம். பேயூமத்தை - மருளூமத்தை. பேயேற்றுதல் - பேயையேவி விடுதல். பேயோடாடி - சிவன். பேயோட்டி - ஓர் மரம், பேய் துரத்துவோன். பேயோட்டுதல் - பேயகற்றல். பேயோணான் - ஓர்வகை ஓணான். பேய் - பிசாசம், மதிகெட்டது, மயக்கம் பேய்க்கண் - அஞ்சத்தக்கவிழி,வெருண்டபார்வை. பேய்க்கண்டல் - ஓர் மரம். பேய்க்கரும்பு - ஓர் கரும்பு. பேய்க்கனி - பேயன்வாழைப்பழம். பேய்க்காடு - பேயுறையுங்காடு. பேய்க்காளான் - ஓர் காளான். பேய்க்குணம் - பேய்த்தனம். பேய்க்குப்பார்த்தல் - பேயைத் துரத்துதல். பேய்க்குமட்டி - ஓர் கொடி. பேய்க்குறை - பேய்த்தொடர்ச்சி. பேய்க்குன்றி - ஓர் குன்றி. பேய்க்கூண்டு - மாயவித்தை படிக்குமோரிடம். பேய்க்கொம்மட்டி - பேய்க்குமட்டி. பேய்க்கோட்டாலை - பேய்க்குறை. பேய்க்கோலம் - கோலக்கேடு. பேய்ச்சத்தம் - அவசத்தம். பேய்ச்சாளை - ஓர் மீன். பேய்ச்சி - பேய்க்குணமுள்ளாள், ஒருபெண்பேய். பேய்ச்சுரை - ஓர் சுரை. பேய்த்தக்காளி - ஓர் செடி. பேய்த்தண்ணீர் - மதுநீர். பேய்த்தனம் - அறிவின்மை. பேய்த்துமிட்டி - ஓர் பூடு. பேய்த்தும்பை - ஓர் தும்பை. பேய்த்தும்மட்டி - பேய்க்கொம்மட்டி. பேய்த்தேர் - கானல். பேய்நரி - வெறிநரி. பேய்நாய் - வெறிநாய். பேய்பிடித்தல் - பிசாசு பிடித்தல்.பேய்ப்பசலை, பேய்ப்பயளை - ஓர் கீரை. பேய்ப்பலவன் - படுவன்கீரை. பேய்ப்பள்ளி - பேய்க்கூண்டு. பேய்ப்பாகல் - ஓர் பாகல். பேய்ப்பார்வை - மருட்பார்வை. பேய்ப்பாற்சொற்றி - ஓர் பாற்சொற்றி. பேய்ப்பிடி - வீண்பிடி. பேய்ப்பிரம்பு - ஓர் பிரம்பு. பேய்ப்பீர்க்கு - ஓர் பீர்க்கு.பேய்ப்புடல், பேய்ப்புடோல் - ஓர்புடோல். பேய்ப்புத்தி - மதியீனம். பேய்ப்புல் - கணைப்புல், ஒட்டுப்புல். பேய்ப்போக்கு - ஒழுங்கின்மையானநடை. பேய்மகள்இளவெயினி - ஒரு புலவர். பேய்மகன் - கெட்டவன். பேய்மருட்டி - ஓர் செடி. பேய்மனம் - அங்கலாய்த்தமனம். பேய்மாடி - புளிநறளை. பேய்முகம் - அவலட்சணமுகம். பேய்முசுட்டை - ஓர் கொடி. போய்முல்லை - ஓர் கொடி. பேய்முன்னை - ஓர் மரம். பேய்வித்தை - சூனியவித்தை. பேய்வெருட்டி - ஓர் பூடு. பேரகத்தி - ஓரகத்தி. பேரடம் - வெண்ணொச்சி. பேரடிபடுதல் - பெயர் பிரபல்யமாகுதல். பேரணி - நடுச்சேனை. பேரணிகலம் - பெரும்பதக்கம். பேரண்டம் - உலகம், நரி, மண்டையோடு. பேரத்தி - கறிமுள்ளி. பேரப்பிள்ளை - பாட்டப்பிள்ளை,பேரன்.பேரமட்டி, பேரமுட்டி - ஓர் செடி. பேரம் - உடல், காஸ்மீரதேயம்,பேரிகை. பேரம்பலம் - சிதம்பரத்துச் சபைகளினொன்று. பேரரத்தை - பஞ்சமூலத் தொன்று. பேரவம் - நரி. பேரவன் - அரக்கன், அரசன். பேரவியல் - பெரும்புழுக்கு. பேரருளுடைமை - கடவு ளெண்குணத் தொன்று. பேரருள் - பெருங்கருணை. பேரறிவு - ஞானம், மூதறிவு. பேரறுகு - ஓர் அறுகம்புல். பேரன் - பெயரன், மகன்பிள்ளை,மகள்பிள்ளை. பேரன்புடைமை - மிகுந்த வன்பாயிருத்தல், இஃது அறத்துறுப்பினொன்று. பேராசிரியர் - சிறந்த உரையாசிரியரிலொருவர். பேராசை - மிகுவாசை. பேராட்டி - பெருமையுடையவள். பேராண்டு - அறுபது வருடங்கொண்ட காலம். பேராண்மை - அரியசெயல், வீரம். பேராந்தை - கூகை, நிலாமுகிப்புள். பேராமட்டி - பேரமட்டி. பேராமணக்கு - ஓராமணக்கு. பேராமல்லி - ஓர் மல்லிகை. பேராமுட்டி - ஓர் கொடி. பேராலவட்டம் - ஓராலவட்டம். பேராழம் - பெரிய ஆழம். பேராழி - பெருங்கடல். பேராழிமாமுனி - திருவள்ளுவர்தந்தை. பேராளன் - கீர்த்தியுடையோன்,மிருகசீரிடம். பேராளி - பேருள்ளவன். பேராளிமாமுனி - வள்ளுவன்றந்தை. பேரானந்தம் - மோட்ச சந்தோஷம்,மோட்சம்.பேரி, பேரிகை - பறைப்பொது, முரசு. பேரிடி - முழக்கம். பேரிடுதல் - நாமஞ்சூட்டுதல். பேரியாழ் - நால்வகையாழினொன்று. பேரிலக்கம் - முழுவிலக்கம். பேரிளம்பெண் - நாற்பதுவயதுப்பெண். பேரின்பம் - ஆனந்தம், மோட்சந்தோஷம். பேரீகம் - வட்டத்திருப்பி.பேரீச்சு, பேரீஞ்சு, பேரீந்து - ஓர் மரம்,கர்ச்சூரம். பேரு - சமுத்திரம், சூரியன், தீ, பொன்,மலை. பேருண்டம் - கருப்பந்தரித்தல், பயம்,பறவை விசேடம். பேருண்டி - பேருணவு, இது தாமதகுணத்தொன்று. பேருதல் - நீங்குதல், அருகிற் போதல்,பெயர்தல். பேருந்தம் - நரி. பேருமரி - ஓர் பூடு. பேருயிர் - பெருங்காற்று. பேருரியோர் - சக்கிலியர். பேருறுதி - திடவத்தாட்சி. பேரூர் - பெரும்பதி, மேலைச் சிதம்பரம், மருதநிலத்தூர். பேரூழி - உருத்திரசங்காரம். பேரெடுத்தல் - கீர்த்திபெறுதல். பேரெடுபடுதல் - பிரபலமாதல். பேரெண் - அளவடி யீரடியாகஇரண்டு வருவது, பேரிலக்கம். பேரெயின்முறுவலார் - புறநானூறுபாடிய புலவரி லொருவர். பேரெல்லைவெண்பா - எட்டடிவெண்பா. பேரெழும்புதல் - பிரபலமாதல். பேரேடு - கணக்கேட்டிலோர்வகை,பெயர் கணக்கேடு. பேரொலி - மிகுவொலி. பேரொளி - மிகுபிரபை. பேரோசை - பேரொலி. பேர் - பெயர், பெரிய. பேர்க்குறி - பெயர்க்குறி. பேர்ச்சி - பெயர்ச்சி. பேர்தரித்தல் - நாமஞ்சூட்டல். பேர்தல் - பெயர்தல். பேர்த்தல் - பெயர்த்தல். பேர்த்தி - பாட்டி, பெயர்த்தி,பௌத்திரி. பேர்வழி - பேரட்டவணை, வமிசவரிசை, ஆசாமி. பேலகம் - தெப்பம். பேலம் - சிறுபங்கு, பீசம், போதல். பேலவம் - மிருது. பேலன் - தீரன். பேலி - குதிரை. பேலிகை - எச்சில். பேலுதல் - மலங்கழித்தல். பேழை - பேடகம், பெட்டி. பேழ் - பெருமை. பேழ்வாய் - பெருவாய். பேறு - இலாபம், ஒன்று, கொடை,செல்வம், நல்லூழ்பெறுதல்,வரம், வாய்ப்பு, பெற்ற பொருள்.பேறுகாலம், பேற்றுக்காலம் - பெறுங்காலம், பிரசவ காலம். பேனம் - நுரை. பேனவர்கி - இடி. பேனாக்கிரம் - நீர்க்குமிழி. பேனாசனி - இந்திரன். பேன் - தலையிற்பற்றும் பூச்சி. பை பை - அழகு, ஓரெழுத்து, குடர்,சாக்கு, நிறம், பசுமை, பச்சைநிறம், பாம்பின்படம், பையென்னேவல், பொக்கணம், மந்தக்குணம், மெத்தெனவு.பைகோ, பைகோவு, பைகோவை - ஓர்தேயம். பைகோவைச்சிவப்பு - ஓர்வகைமாணிக்கம். பைக்கம் - பிச்சை. பைக்கூறை - பை. பைங்கண் - பசியகண். பைக்கழை - பசுமையான மூங்கில். பைங்காய் - பசுங்காய். பைங்கிளி - பச்சைக் கிளி. பைங்கூழ் - நோய், பயிர், பசும்புல். பைசந்தி - வாக்கு நான்கினொன்று. பைசாசநிலை - ஒருதாளினின்றுமற்றைத்தாண் முடக்கிநிற்றல்இஃதுயுத்த நிலை நான்கினொன்று. பைசாசமணம் - துயின்றாளைச்சென்று கூடுங் கூட்டம், களித்தாளையாவது, மூத்தாளையாவது கூடுங்கூட்டம். பைசாசம் - இரும்பு, ஓர்மணம்,ஓர்யுத்தநிலை, பிசாசம். பைசாசி - இராக்கதத்தி, சடாமாஞ்சில். பைசார் - ஓர் தொடுதோல். பைசுனம் - உலோபத்தனம். பைசுன்னியம் - குறளை. பைஞ்ஞீலம் - பசியநீலம், மக்கட்பரப்பு. பைஞ்ஞீலி - ஓர் பட்டினம். பைஞ்ஞீல் - பைஞ்ஞீலம். பைண்டின்னியம் - யாசகம்பண்ணிவயிறு வளர்த்தல். பைதல் - துன்பம், பையல். பைதிரம் - நாடு. பைதிருகம் - பிதாவழியிற் பொருள். பைது - பசுமை, ஈரம். பைத்தம் - பித்தம். பைத்தல் - கோபம், சினக்குறிப்பு,துன்பம், பசுமையாதல், பாம்புபடம் விரித்தல். பைத்திகம் - பைத்தம். பைத்தியக்காரன் - பித்தன். பைத்தியம் - பயித்தியம், பித்தாதிக்கம்,மதிகேடு, வெறி. பைத்திராகோராத்திரம் - பிதிர்களினதோர்நாள் அது மனிதருக்கோர்மாதம் பைத்து - பசுமை. பைத்ருகதநம் - பிதுரார்ஜிதநம். பைத்ருகபூமி - பிதுரார்ஜித பூமி. பைத்ருகம் - பித்ருசம்பந்தம். பைந்தார் - பசியபூமாலை. பைந்தினை - ஓர் தினை, கருந்தினை. பைந்தொடி - பச்சை வளையல்,பெண். பைந்நாகம் - சர்ப்பம். பைபீலம் - எறும்பு.பைபீலவாதம், பைபீலிகாவாதம் - எறும்புகளின் பேச்சறிதல் அதுகலைஞான மறுபத்து நான்கினொன்று. பைபீலிகை - எறும்பு. பைபைய - மெல்ல மெல்ல. பைமை - தவப்பெண், பசுமை. பைம்பூண் - பொன்னாபரணம். பைம்பொன் - பசும்பொன், மேருகிரி. பைய - மெல்ல. பையல் - பயல். பையன் - சிறுவன். பையுள் - அற்பம், சிறுமை, துன்பம்,நோய். பையெனல் - மந்தக்குறிப்பு. பையோடதி - பச்சைக்கொடி. பைரவம் - அச்சம், உட்சமயமாறினொன்று. பைரவன் - சிவன், வயிரன். பைரவி - ஓரிராகம், காளி. பைராகி - வைராகி.பைலவான், பைலன் - ஓரிருடி. பைவரல் - துயருறல். பொ பொகுட்டாசனன் - பிரமன். பொகுட்டு - சேற்றிலெழுங்குமிழி,தாமரைக்கொட்டை, மலை. பொகுத்தல் - பொத்தல் செய்தல். பொக்கசம் - திரவியசாலை, திரவியம். பொக்கணந்தூக்கி - முடக்கொத்தான். பொக்கணப்பிச்சி - முடக் கொத்தான். பொக்கணம் - ஓர்வகைப்பை, சோளி,பெருமருந்து. பொக்கணி - ஓர் பானபாத்திரம்,குழியுரல், விரிந்த தொப்புள். பொக்கணை - கல்வளை, குழியுரல்,மரப்பொந்து. பொக்கம் - பொய், பொலிவு, மிகுதி,குற்றம். பொக்கலவாய் - பொக்குவாய். பொக்கிஷகாரன் - திரவியவான்,பொக்கிஷ விசாரணைக்காரன். பொக்கிஷம் - பொக்கசம். பொக்கிலவணம் - திலாலவணம். பொக்கு - குற்றம், பொள்ளல்,பொந்து. பொக்குப்பொக்கெனல் - ஒலிக்குறிப்பு. பொக்குவாய் - பல்லற்றவாய். பொக்குளித்தல் - கொப்புளித்தல். பொக்குளிப்பான் - கொப்புளிப்பான். பொக்கெனல் - விரைவின் குறிப்பு. பொக்கை - சிறுதுளை. பொக்கைவாய் - பொக்குவாய். பொக்கைவாய்ச்சி - பொக்குவாய்ச்சி. பொங்கடி - யானை. பொங்கம் - நெற்றி, பரிமளிப்பு,பொலிவு, வால்மிளகு. பொங்கரி - தூற்றாத நெற்பொரி. பொங்கர் - இலவமரம், சோலை,மரக்கொம்பு, மலை, வாடற்பூ. பொங்கலாண்டி - பொங்கற்காரன். பொங்கல் - உயர்ச்சி, கிளர்தல்,சமைத்தல், பொலிதல், மிகுதி,கள், பொங்குதல். பொங்கழி - தூற்றாநெல், தூற்றாதநெற்பொலி. பொங்காரம் - பொங்கல், மிகுதுக்கம். பொங்குசனி - இரண்டாமுறைஏழரையாய் வருஞ்சனி. பொங்குதல் - கொதித்துக் கிளர்தல்,கோபித்தல், சாதஞ் சமைத்தல்,நொதித்தல், பொலிதல், மிகுத்துக்காட்டல். பொசிதல் - இரகசியம் வெளித்தல்,கசிதல், நீரரும்பல், நீர் பறிதல். பொசித்தல் - புசித்தல். பொசிவு - அருகிச் செல்லல். பொசுக்குதல் - சுடுதல். பொசுங்கல் - கருகினது, கருகுதல். பொசுங்குதல் - வெம்மையாற் றீய்தல். பொசுபொசுத்தல் - இரகசியம்பேசல், கொஞ்சங்கொஞ்சமாய்வெளிப் படுதல். பொசுபொசெனல் - ஒலிக்குறிப்பு. பொச்சடித்தல் - வெறுநாக்கடித்தல். பொச்சம் - அவா, உணவு, குற்றம்,தேங்காய் மட்டை, விருப்பம்,பொய். பொச்சாத்தல் - பொல்லாங்கு, மறதி,மறத்தல். பொச்சாப்பு - பொல்லாங்கு, இடையறவுபடுதல், குற்றம், மறதி. பொச்சாலிநெல் - ஓர்நெல். பொச்சாவாமை - மறவாமை. பொச்சு - பொய்ச்சு, பயனில்லது,மயிர். பொச்சை - கரிகாடு, காடு, சிறுமலை, புழுக்கூடு, மலை. பொச்சையர் - அறிவிலார். பொஞ்சுதல் - ஒவ்வுதல், செழித்தல். பொடம் - ஆவாரை. பொடி - சிறிசு, சூரணம், பஸ்மம்,பராகம், புழுதி, பொடியென்னேவல், விபூதி. பொடிச்சி - சிறுபெண். பொடிச்சிலை - மஞ்சட்கல். பொடிதல் - கெடுதல், திட்டுதல்,தூளாதல், வெறுத்தல். பொடித்தல் - கெடுத்தல், தூளாக்கல்,மயிர் சிலிர்த்தல், முளைத்தல். பொடிபண்ணல் - துண்டித்தல்,மாவாக்கல், சுண்ணமாக்கல். பொடிபொடிதல் - மிகத்தூளாதல். பொடிபொட்டு - சிறியது, பதரானது. பொடிப்பு - புளகம். பொடியன் - சிறுவன். பொடியாதல் - துகளாதல். பொடிவிளக்கணம் - பொன்முதலியவற்றைப் பொருத்திச் சுடுதல். பொடிவு - திட்டு, பொடிதல். பொடிவெட்டி - பொன் வெள்ளிமுதலிய வெட்டுங் கத்திரிகை. பொடுகன் - சிற்றாள். பொடுகு - ஓர்பூடு, சிறிசு, சொடுகு. பொடுதலை - ஓர் பூண்டு.பொடுபொடுத்தல், பொடுபொடுப்பு, பொடுபொடெனல் - அபூரணம்,ஓர் குறிப்பு, காய்தல், சீக்கிரக்குறிப்பு.பொட்டணம், பொட்டணி - ஒத்திடும்மூட்டை, பொதி. பொட்டலம் - பொட்டணம். பொட்டல் - கரம்பு. பொட்டளி - பொட்டணம். பொட்டிலுப்பு - வெடியுப்பு. பொட்டில் - பொதி. பொட்டு - ஓர் பூச்சி, சங்கை, தாலிப்பொட்டு, தானியப் பொட்டு,நுழைவழி, நெற்றித் திலகம், புழு,துளி. பொட்டுக்கட்டுதல் - தாலி கட்டுதல். பொட்டுக்குலைதல் - சங்கை கெடுதல். பொட்டுக்குத்துதல் - திலக மெழுதல். பொட்டுக்கேடு - சங்கை கேடு. பொட்டுத்தாலி - பொட்டாகாரத்தாலி. பொட்டுப்பூச்சி - ஓர் சிலந்திப் பூச்சி. பொட்டெனல் - சீக்கிரக் குறிப்பு. பொட்டை - குருடு, கூசிய கண். பொண்டான் - பேரெலி, பெருச்சாளி. பொதி - அம்பலம், ஓலைக்குடை,கரி காடு, பொதியப்பட்டது, பொதியமலை, பொதியென்னேவல், மலரரும்பு, மூட்டை, அரசு, கட்டு, குலை. பொதிகாரன் - பொதி மாடு செலுத்துவோன். பொதிகை - பொதியம். பொதிசோறு - கட்டுச்சோறு. பொதிதல் - திணித்தல், மறைத்தல். பொதிப்போதா - பெருநாரை. பொதிமாடு - பொதியெருது. பொதியமலை - பொதியில். பொதியமுனி - அகத்தியன். பொதியம் - தென்மலை, மலயமலை. பொதியவிழ்த்தல் - கட்டமுதவிழ்த்தல், பூ முதலிய விரிதல். பொதியவெற்பன் - பாண்டியன். பொதியறை - துவாரமில்லாத கீழரை. பொதியன் - அகத்தியன். பொதியாசலம் - பொதியமலை. பொதியில் - அம்பலம், பொதியமலை. பொதியெருது - பொதியெடுக்குமெருது. பொதிர் - நடுக்கம், பொதிரென்னேவல், மிகுதல். பொதிர்தல் - மிகுதல். பொதிர்த்தல் - புடைப்புக் கொள்ளுவித்தல். பொதிர்ப்பு - அச்சம், நடுக்கம். பொதிர்வு - பொதிர்ப்பு, மிகுதல். பொதிவு - பொதிதல்.பொதின்பொதினெனல், பொதீர் பொதீரெனல் - ஒலிக் குறிப்பு. பொது - சாதாரணம், பலர் முன்னிலை, மன்றம், சபை, யாருக்கும்உரிமையில்லாதது. பொதுக்கட்டுதல் - நடுக்கட்டுதல். பொதுக்கு - ஒதுக்கு, பொதுக்கென்னேவல், மறைப்பு. பொதுக்குதல் - மறைத்தல். பொதுச்சீர் - நான்கசையாய் வருஞ்சீர். பொதுச்சூத்திரம் - தொகைச் சூத்திரம். பொதுச்சொல் - திணைபால் இடம்காலங்களைக் குறித்துப் பொதுவாயிருக்குஞ் சொல், பொதுப்பொருள். பொதுத்தல் - துளைத்தல். பொதுத்தன்மை - பொது வியல்பு. பொதுத்தன்மைத்தொகை - பொதுத்தன்மை தொக்கு நிற்பது (உ-ம்)காந்தட்போதினை நிகர்க்குங் கை. பொதுத்தன்மையுருபுத்தொகை - பொதுத் தன்மையு முருபுந்தொக்குநிற்பது (உ-ம்) கயற்கண். பொதுத்தன்மையுருபுவமானத்தொகை - பொதுத்தன்மையு முருபுவமானமுந்தொக்கது (உ-ம்) குயிற்கிளவி. பொதுத்தன்மையுவமானத்தொகை - பொதுத்தன்மையு முபமானமுந்தொக்கு நிற்பது (உ-ம்) நாசிபோல்வதுமற்றாகும். பொதுத்திணை - பல திணைக்கும்பொதுச்சொல்.பொதுத்திரீ, பொதுஸ்த்ரீ - வேசி. பொதுநடுவர் - மத்தியட்சர். பொதுநலம் - பலர் நன்மை. பொதுநிலம் - எல்லார்க்கும் பொதுவாயிருக்கும் நிலம். பொதுநிறம் - பலநிறக் கலப்பு,மாநிறம். பொதுநீங்குவமை - இயை பின்மையணி அது உவமையைக் கூறிமறுத்துப் பொருடன்னையேயுவமையாய்க் கூறுவது (உ-ம்)திங்களில் வதனஞ் சிறப்புடைத்ததனா லதுவே யதற்கு நிகர். பொதுநோக்கு - சம பார்வை. பொதுபொதுத்தல், பொதுபொதெனல் - ஒலிக் குறிப்பு, மெதுமெதுத்தல். பொதுப்பணம் - பலர்க்குமுரியபணம். பொதுப்பெண் - பொது மகள். பொதுப்பெயர் - திணைபால் இடங்களைக்குறித்துப் பொதுவாய்வரும் பெயர். பொதுப் பொருள் - பலர்க்குமுரியபொருள். பொதுமகள் - வேசி. பொதுமத்தியம் - பொது. பொதுமனிதன் - நடவன். பொதுமாது - வேசை. பொதுமுதல் - பங்கான முதல். பொதுமை - பொதுத்தன்மை. பொதுமொழி - பொதுப்பெயர், உறுதியில்லா மொழி. பொதும்பர் - மரச்செறிவு, மரப்பொந்து, இளமரச் சோலை. பொதும்பு - பொந்து, குறுங்காடு. பொதுவகத்திணை - அகத்திணைப்பொது தனிக்குறுப்பெனப் பலவற்றை யடக்கிக் கொள்ளல். பொதுவசனம் - பலவற்றை நோக்குஞ்சொல். பொதுவடி - இயற்சீருரிச்சீர் பொதுச்சீரென்னும் மூன்றானும் வருமடி. பொதுவர் - இடையர். பொதுவறுசிறப்பு - தனக்கேயுரியசிறப்பு. பொதுவனுமானம் - ஓரளவை அதுசாதன சாத்தியங்களினொற்றுமையுணராது பொதுவாயனுமானித்தல். பொதுவார்த்தை - பட்சபாத மில்லாத சொல். பொதுவி - முல்லை நிலப்பெண். பொதுவிதி - பொதுவான நிருணயம். பொதுவியர் - இடைச்சியர். பொதுவில் - அம்பலம். பொதுவெழுத்து - தமிழிற்குமாரியத்திற்கும் பொதுவாய் வழங்குமெழுத்து. பொதுவைத்தல் - நடுக்கட்டுதல்.பொதுளல், பொதுளுதல் - செழித்தல்,நெருங்குதல். பொத்தகம் - புத்தகம். பொத்தலூசி - துளையூசி. பொத்தல் - துவாரம், துளைத்தல்,புரைதல், மூடுதல்.பொத்தாறு, பொத்தாறுகட்டை - ஏர்க்கால். பொத்தி - வாழை முதலியவற்றின்காய்ப்பொத்தி, பிருகுக் கிழங்குத்தோற்பொத்தி. பொத்திக்கரப்பன் - தண்டுக் கிரந்தி. பொத்திக்காளான் - ஓர் காளான். பொத்திதள்ளுதல் - வாழை முதலியபொத்தி போடுதல். பொத்தியார் - கோப்பெருஞ் சோழனுக் குயிர்த்தோழராய் விளங்கியஒரு புலவர். பொத்திரை - பாழடைந்த அகழ். பொத்து - ஆண்குறி, தவறு, புரைவு,பெண்குறி, பொத்தென்னேவல்,பொந்து, பொய், மூடுதல், துளை. பொத்துதல் - அடித்தல், புரைதல்,மூடுதல், புதைத்தல். பொத்துப்பாய் - பருக்கன்பாய். பொத்து பொத்தெனல் - ஒலிக்குறிப்பு. பொத்துமான் - ஓர்வகை மான். பொத்தை - பருத்தது, மட்சிறுமலை. பொத்தைக்கால் - யானைக்கால். பொத்தைச்சி - கும்மலி. பொத்தையன் - நீர்ப்பிடியான சரீரமுள்ளவன். பொந்தர் - ஓர்வகை நீர்ப்புள். பொந்தி - சரீரம், மரவாள், மொத்தி. பொந்திகை - நிறைவு (திருப்தி). பொந்து - மரப்பொந்து, வங்கு,கெவுளி. பொந்தையக்கோல் - ஓர்வகைப்பற்றுக்கோல். பொம்மம் - சுக்கு. பொம்மலாட்டம் - பாவைக் கூத்து. பொம்மலி - பருத்தவள். பொம்மல் - சோறு, பொம்மை,பொருமல், பொலிவு, மிகுதி, நீர்க்கடம்பு. பொம்மெனல் - அனுகரணவோசை,விரைதல். பொம்மை - சிறு சுவர், பிரதிமை. பொய் - அசத்தியம் இது தாமதகுணத்தொன்று, சிறுசிராய்,பஞ்ச பாதகத்துமொன்று,பொய்யென் னேவல்,மரப்பொந்து, வேஷம். பொய்கை - குளம், கோட்டான்,சிறுகுளம். பொய்கையார் - ஓர் புலவன். பொய்கையாழ்வார் - ஓர் வைணவாசாரியர். பொய்க்கடி - பருங்கடி. பொய்க்கண் - கண்மண்டை. பொய்க்கண்ணி - பிஞ்சு பிடியாதகண்ணி. பொய்க்கண்ணுறக்கம் - குறைக்கணித்திரை. பொய்க்கதை - கட்டுக்கதை. பொய்க்கால் - போலிக்கால். பொய்க்கிளை - பிஞ்சு பிடியாத முளை. பொய்க்குதல் - பொய்சொல்லுதல்,பொய்யாய்ப்போதல். பொய்க்குரல் - போலிச் சத்தம். பொய்க்குழி - நாற்றுநட்டகுழி,பொறிக்கிடங்கு. பொய்க்கூடு - சரீரம், பொய்ச் சரீரம். பொய்க்கை - ஓர்மீன், பொய்த்தல்,போலிக்கை. பொய்க்கோட்டை - பொய்ப் பிஞ்சு. பொய்க்கோலம் - கரவடவேடம்,போலிவேடம். பொய்சொல்லல் - தப்புப் பேசல் இதுவாக்கின் தீக்குணநான்கி னொன்று. பொய்ச்சத்தம் - பொய்க்குரல். பொய்ச்சத்தியம் - பொய்யாணை. பொய்ச்சாட்சி - கள்ளச்சாட்சி. பொய்ச்சாத்தல் - மறத்தல். பொய்ச்சு - கொட்டை சுளையற்றது,பயனில்லது. பொய்தல் - தோழி, மகளிர் கூட்டம்,மகளிர் விளையாட்டு, பொள்ளலாக்கல். பொய்த்தலை - போலித்தலை. பொய்த்தல் - பொய்சொல்லுதல்,பொய்யாய்ப்போதல். பொய்ந்நீர் - கானல். பொய்படுதல் - பொய்யாதல். பொய்ப்பத்திரம் - கள்ளச் சீட்டு. பொய்ப்படுதல் - பொய்படுதல். பொய்ப்பிஞ்சு - நிலையாப் பிஞ்சு. பொய்ப்பு - பொய்த்தல். பொய்ப்பூ - பிஞ்சுபிடியாத பூ. பொய்முயக்கம் - அன்பிலாக் கூட்டம். பொய்முளை - பொய்க்கிளை. பொய்மூக்கு - உண்மூக்கு. பொய்ம்மை - கரவடம், பொய்,பொய் வேஷம், மாயம். பொய்யடி - பகடம், வெருட்டு. பொய்யடிமையில்லாதபுலவர் - மதுரைச்சங்கப் புலவர்களாயிருந்தநக்கீரர், கபிலர், பரணர், கல்லாடர்முதலிய நாற்பத் தொன்பதின்மர். பொய்யன் - பொய் சொல்வோன். பொய்யாணை - பொய்ச் சத்தியம். பொய்யாதல் - பொய் சொல்லல். பொய்யாமை - தவறாமை, பொய்ம்மொழி கூறாமை. பொய்யாமொழி - சத்தியம் தவறாமை,தவறாது பலிக்கும் மொழி. பொய்யாமொழிப்புலவர் - ஓர் புலவர்,திருவள்ளுவ நாயனார். பொய்யில்புலவர் - திருவள்ளுவர். பொய்யுடல் - நிலையற்ற வுடல். பொய்யுறக்கம் - குறை நித்திரை. பொய்வார்த்தை - பொய்ப் பேச்சு. பொய்வாழ்க்கை - அநித்திய வாழ்வு. பொய்வாழ்வு - பொய் வாழ்க்கை. பொய்வேஷம் - கரவடவேஷம்,போலிக்கோலம். பொரி - கரிகாடு, நெற்பொறி முதலியன, பொரியென்னேவல், வெண்காரம். பொரிகாரம் - வெண்காரம். பொரிக்கறி - பொரியல். பொரிச்சல் - வெண்காரம். பொரிதல் - எரிச்சற்படுதல், தீதல்,பொரியாதல், பொருக்கு வெடித்தல். பொரித்தல் - அலப்பல், குஞ்சு பிறப்பித்தல், பொரியச் செய்தல்,வறுத்தல். பொரிபொரிச்சான் - வெடி பலவன். பொரிமலர் - புன்கு. பொரிப்பூண்டு - கரப்பான் பூண்டு,வயற்சுள்ளி. பொரிமலர் - புன்கு. பொரிமா - பொரியரிசி மா. பொரிமாச்சிந்தி, பொரிமாத்தட்டி - வீணெண்ண மெண்ணுவோன். பொரியரிசி - பொரித்தரிசி. பொரியல் - பொரிக்கறி, பொரிதல். பொரிவிளங்காய் - பொரிமாத் திரளை. பொரிவு - சிலிர்ப்பு. பொருகளம் - போர்க்களம். பொருகு - சோறு. பொருக்காங்கட்டி - பொருக்கு மண்கட்டி. பொருக்கு - செதிள், தகட்டு வடிவாய்வெடிக்கும் வண்டல். பொருக்கெனல் - சீக்கிரக்குறிப்பு,விரைதல். பொருட்காட்சியணி - ஓரலங்காரம்அஃது ஒன்றன் செய்கையினானற்பொருளையாயினுந் தீப்பொருளை யாயினுந் தெரிவித்தல். பொருட்குறைவிசேடம் - பொருட்குறைவினால் விசேடித்துக்காட்டு வது (உ-ம்) இருநாழிநெற்கொண் டுயிரனைத்துமூட்டும். பொருட்சிதைவு - பொருட் சேதம். பொருட்சிறப்பு - அருத்தாலங்காரம். பொருட்சுவை - அருத்தரசம். பொருட்செல்வம் - திரவிய சம்பத்து. பொருட்செல்வி - இலக்குமி. பொருட்டிரிபு - கருத்துத் திரிபு. பொருட்டு - காரணம், நிமித்தம்,மேம் பட்டது. பொருட்டொடர்நிலைச்செய்யுள் - ஓர்பிரபந்தம் அஃது பொருளாற்றொடர்ந்து வருவது. பொருட்படுதல் - பயன்படுதல். பொருட்படுத்தல் - ஒரு பொருளாகமதித்தல், பயன்படுத்தல். பொருட்பால் - பொருளின் பகுதி. பொருட்பிறிதின்கிழமை - தன்னோடொற்றுமையில்லாப் பொருள்(உ-ம்) குமரன்வேல். பொருட்பின்வருநிலை - மொழிந்தபொருளே பொருளாயினுஞ்சொல்வேறாய் வருவது. பொருட்பெண்டீர் - வேசிகள். பொருட்பெண்டு - வேசை. பொருட்பெற்றி - பொருளின் குணம். பொருட்பேறு - திரவிய லாபம். பொருணயம் - கருத்து, நயப்பு. பொருணி - கள். பொருணிலை - பயனிலை. பொருண்முடிவு - கருத்து முடிவு. பொருண்மை - பொருட்டன்மை. பொருதல் - அலைபோதல், ஒப்புதல்,தும்பை, பொருந்தல், போர் செய்தல் இஃது அரசரறு தொழிலினொன்று. பொருதுதல் - பொருத்தல். பொருத்தக்கடுதாசி - உடம்படுக்கைக்கடுதாசி. பொருத்தம் - இணக்கம், தகுதி,பொருத்தனை. பொருத்தல் - பொருத்துதல்.பொருத்தனை, பொருத்தன் - நேர்த்திக்கடன், பொருத்தம். பொருத்து - இணக்குகை, இசைப்பு,சந்து, பொருத்தென்னேவல், மரக்கண், மூட்டு. பொருத்துதல் - அமைத்தல், பொருந்தச்செய்தல். பொருநராற்றுப்படை - ஓர் நூல். பொருத்தோலை - பொருத்துச்சீட்டு. பொருநர் - அரசர், கூத்தர், நாடகர்,படைத்தலைவர், படைவீரர்,புகழ்வோர். பொருநன் - அரசன், குறிஞ்சி நிலத்தலைவன், திண்ணியன், நாடகன்,படைத்தலைவன், படைவீரன்,உவமிக்கப் படுவோன், கூத்தாடி,பொருபவன். பொருநுதல் - உடன்படல். பொருநை - தாமிரபருணி யாறு. பொருநைத்துறைவன் - சேரன். பொருந்தநதி - சூத நதி. பொருந்தம் - பொருநை. பொருந்தார் - நெய்வார், மேதரவர். பொருந்தலர் - பகைவர். பொருந்தல் - அடுத்தல், அமைதல்,இயைதல், காத்தல், சம்மதித்தல். பொருந்தாமை - இயையாமை,வெறுப்பு. பொருந்தார் - பகைவர். பொருந்திலிளங்கீரனார் - புறநானூறுபாடிய புலவரி லொருவர். பொருந்துதல் - பொருந்தல். பொருபுவி - பாலை நிலம், போர்க்களம். பொருபொருத்தல் - அறத்தீதல்,மனவெரிச்சற்படல். பொருபொரும்பான் - ஓர் மரம். பொருபொரெனல் - ஒலிக்குறிப்பு. பொருப்பரையன் - மலையரையன். பொருப்பன் - குறிஞ்சிநிலத் தலைவன்,முருகன். பொருப்பு - கொல்லிமலை, மலை,பக்கமலை. பொருப்புவில்லான் - சிவன். பொருமலி - கொழுத்த பெண். பொருமல் - பொருமுதல், வயிற்றுப்பொருமல். பொருமுதல் - அழுதல், ஊறிக்கசிதல்,வீங்கல். பொரும்பி - சுழலாவாரை. பொருவ - உவமவுருபு. பொருவாய் - ஓர் மீன். பொருவு - உவமை, குற்றம், பொருவென்னேவல். பொருவுதல் - ஒப்பல். பொருளகத்திணை - தனக்குறுப்பெனப் பலவற்றையடக்கிக்கொள்வது. பொருளணி - பொருளான்வரு மலங்காரம். பொருளந்தாதி - ஈற்றுப்பொருளைமுதற்பொருளடியாகப் பாடல். பொருளவுனுதி - பொருளா னுயர்புதோன்றக் கூறு மலங்காரம். பொருளாகுபெயர் - முதற் பொருளின்பேரைச்சினைப் பொருட்குவழங் குவது (உ-ம்) மரையிதழ். பொருளாசை - திரவிய வாஞ்சை. பொருளாலணையும்பெயர் - சுற்றம்எண்குழூஉ பொருண் முதலியவற்றான்வரும் பெயர். பொருளானந்தம் - சொற்பொருட்குற்றம். பொருளிலக்கணம் - அறம் பொருளின்ப மென்பவைகளை விளக்குமிலக்கணம், இது பஞ்சலட்சணத்தொன்று. பொருளின்பம் - பொருட்சுவை. பொருளீட்டல் - பொருள் சம்பாதித்தல் இது சூத்திரர் வைசியர்க்குரியவறு தொழிலி னொன்று. பொருளுவமம் - பொருட்டன்மையையுவமிப்பது (உ-ம்) நீர்போலுந்திருவுள்ளம். பொருள் - அருத்தாபத்தி, உடைமை,உண்மை, குணம், சம்பத்து இதுநூற்பயனான்கினொன்று, சொற்பொருள், தலைமை, பணம்,பலபண்டம், பிள்ளை, பொன்,வஸ்து, உபமேயம், காரியம்,தேமல், தருமம், தன்மை, அறிவு. பொருள்கோள் - ஆசுரமணம், பயனிலை. பொருள்பண்ணுதல் - அருத்தம்பண்ணுதல், மதித்தல். பொருள்வயிற்பிரிவு - அகப்பொருட்டுறையினொன்று. பொருள்விலக்கு - ஓரலங்காரம் அதுகுறித்தபொருளை மறுத்துக் கூறுவது. பொருள்விளங்கவைத்தல் - அருத்தம்விளங்கவைத்தல் இஃது நூற்குணம் பத்தினொன்று. பொருள்வீடு - பொருட்பற்றுதல். பொருனன் - பொருநன். பொருனை - பொருநை. பொலங்கலம் - ஆபரணம். பொலந்துறவு - பெருந்தவம். பொலம், பொலன் - அழகு, பொல்லாங்கு, பொன், பொன்மைநிறம்,மேன்மை, அணிகலம். பொலி - தூற்றாநெல், பொலியென்னேவல். பொலிகடா - பொலியெருது. பொலிக்கந்து - பொலியருகிற்கந்து. பொலிக்கடா - பட்டிக்கடா. பொலிக்கடை - பொலியெருது கட்டுங்கட்டை. பொலிக்கொடி - வைக்கோல். பொலிசை - இலாபம். பொலிதல் - அதிகரிப்பு, அழகு,எழுச்சி, சிறத்தல், தாராளம்,பருமை, புணர்தல், மிகுதல். பொலிதூற்றுதல் - தானியந்தூற்றல். பொலிநடையன் - பொலியெருது. பொலியளவு - நிறையளவு. பொலியெருது - போரடிக்கிற எருதுகளிற் பொலிக்கட்டைக்கடுத்தஎருது, மாப்பிள்ளை மாடு. பொலிவு - அழகு, பொலிதல், நிறைவு. பொலுகுதல் - நீர்பறிதல். பொலுபொலுத்தல் - உதிருதல். பொலுபொலுப்பு - உதிர்வு. பொலுபொலெனல் - பொலுபொலுத் தல். பொல் - பொல்லு. பொல்லம் - துண்டு, தைத்தல். பொல்லர் - சக்கிலியர், செம்மார்,தையற்காரர். பொல்லன் - பொல்லான். பொல்லாங்கு - ஈனம், தீங்கு, மறதி,குற்றம். பொல்லாது - பொல்லாதது, குற்றம். பொல்லாநடை - தீநடை. பொல்லாநிலம் - நரகம், மயானம். பொல்லாப்பு - பொல்லாங்கு. பொல்லாமணி - பொள்ளாமணி,துளையிடாதமணி. பொல்லாமை - பொல்லாங்கு. பொல்லார் - தீயோர். பொல்லு - ஊன்றுகோல், தடி, பதர். பொழிதல் - ஈதல், சொரிதல், மழைபெய்தல். பொழிப்பளபெடை - முதற் சொற்கண்ணும் மூன்றாஞ்சொற் கண்ணுமளபெடைவரத் தொடுப் பது. பொழிப்பியைவு - முதற்சீர்க் கண்ணும் மூன்றாஞ்சிர்க்கண்ணும்இயைபு வரத் தொடுப்பது. பொழிப்பு - அனுமானம், குறிப்பு,சுருக்கம், தொகைப்பொருள்,சிறப்புடையது. பொழிப்புத்திரட்டல் - பொழிப்புரையுரைத்தல். பொழிப்புத்திரட்டு - பொருட்டொகுப்பு. பொழிப்புமுரண் - முதற்சீர்க்கண்ணும்,மூன்றாம் சீர்க்கண்ணும் முரண்வரத்தொடுப்பது. பொழிப்புமோனை - முதற்சீர்க் கண்ணுமூன்றாஞ்சீர்க்கண்ணு மோனைவரத்தொடுப்பது. பொழிப்புரை - பொருடொகுத்துரைக்குமுரை. பொழிப்பெதுகை - முதற்சீர்க் கண்ணும்மூன்றாஞ் சீர்க்கண்ணும் எதுகைவரத் தொடுப்பது. பொழில் - உலகப்பொது, சோலை,நாடு, பூந்தோட்டம், பூமி,பெருமை. பொழிவு - பலன், புகழ்ச்சி, பொழிதல்,மேன்மை, வருமானம். பொழுதறுதி - அத்தமனபரியந்தம். பொழுதிற்கூடல் - பொழுதொடுபுணர்தல். பொழுது - காலன், சூரியன். பொழுதுசாய்தல் - பொழுதுமதியந்திரும்பல். பொழுதுபடுதல் - சூரியனத்தமித்தல். பொழுதுபுகுதல் - பொழுதத்தமித்தல் பொழுதுபோக்கல் - பொழுதுகழியவிளையாடல். பொழுதுபோக்கு - பராக்கு, பாராட்டு. பொழுதுபோக்குதல் - காலம்விடுதல்,பராக்குப்பண்ணல். பொழுதுவணங்கி - சூரியகாந்தி. பொழுதுவிடிதல் - சூரியனுதித்தல். பொழுதுவிடுதல் - பொழுது போக்குதல். பொழுதொடுபுணர்தல் - வணிகரெண்குணத்தொன்று. பொளி - துளை, மண்வெட்டிவெட்டு, வரம்பு.பொளிதல், பொளிவு - கன்முதலியகோதல், துளைசெய்யல். பொள்ளல் - அப்பவருக்கம், தழும்பு,பொத்தல், பொளிதல், மரப்பொந்து, உள்வயிரமில்லது,துளைத்தல். பொள்ளாமணி - துளையாமணி,சுயம்புமணி. பொள்ளுதல் - பொந்துபோதல். பொள்ளெனல் - அனுகரணவோசை,சீக்கிரக்குறிப்பு, சீக்கிரம், விரைதல். பொறாமை - எரிச்சல், தரியாமை. பொறி - அடையாளம், அறிவு, இயந்திரம், இலக்குமி, இலிபி, எழுத்து,கைவரை, செல்வம், தீப்பொறி,தேமல், தேர், புலப் பொறி, புள்ளி,பொருள், பொலிவு, பொறி,பொறியப்படுவது, பொறியென்னேவல், பொறிவு, மதிலுறுப்பு,மரக்க லம், முத்திரை, இந்திரியம்,திரட்சி, இலக்கணம், ஒளி, நல்வினை, பட்சம், வரி. பொறிக்கல் - சிலாநாகக்கல், சுக்கான்கல். பொறிக்குதல் - பொறித்தல். பொறிதல் - கலைதல், சரிதல், சறுக்குதல், பறிதல், விழல். பொறித்தட்டுதல் - கண்மின்னுதல்,பறிதல். பொறித்தல் - எழுதல், சித்திரமெழுதுதல், பொறியச் செய்தல், தெறித்தல், அடையாளமாக வைத்தல். பொறிப்பு - பொறித்தல். பொறி யார்த்தல் - கண்மின்னுதல். பொறியிலார் - அதிட்டகீனர், கீழ்மக்கள். பொறியிலி - அறிவிலி, விதிகேடன். பொறியேற்றுதல் - பொறிவைத்தல். பொறிவு - சாய்ந்தபதிவு, தொங்குபறிவு, பொறிதல். பொறுக்கல் - தாங்குதல், பெறுக்கல். பொறுக்கி - பெறுக்கி. பொறுக்குதல் - பொறுக்கல், தெறிதல், ஆய்ந்தெடுத்தல். பொறுக்கு - பொறுக்கி, பொறுக்கென்னேவல். பொறுதி - ஓய்வு, தணிவு, தாமதம்,பொறுமை, மன்னிப்பு. பொறுத்தல் - தரித்தல், தாங்குதல்,பொறுமை, மன்னித்தல். பொறுப்பாளி - பொறுப்புக்காரன். பொறுப்பானவன் - பிரதானமானவன். பொறுப்பித்தல் - சுமத்துதல். பொறுப்பு - சென்மானம், தகுதி,பாரம், பிரதானம், பொறுத்தல்,பொறுமை. பொறுமை - சகிப்பு, பொறுதி. பொறை - கருப்பம், சலதாரை முதலியவடைக்குங்கல், சிறுமலை, சுமை,பாரம், பூமி, பொறுமை இதுபெரியோரியல்புளொன்று ,சாத்துவிக குணத்துளொன்று,மலை, தூறுகல். பொறைசாலி - பொறுதிக்காரன். பொறையன் - சேரன், தருமராசன். பொறையாட்டி - பொறுமை யுடையவள். பொறையாளன் - தருமன். பொறையிலார் - பூரியர், வேடர். பொறையுயிர்த்தல் - பாரங்கழித்தல்,மகப்பெறுதல், ஈனுதல். பொற்கசை - பொற்கம்பி. பொற்கணக்கு - பொன்னிறையளவு. பொற்கண்டை - பொற்கெண்டை. பொற்கம்பி - பொன்னின்கம்பி. பொற்கலம் - பொன்பாத்திரம். பொற்கலை - பொன்வஸ்திரம். பொற்காசு - கொள்ளு, பொன்னின்காசு. பொற்காரை - ஓர் கழுத்தணி. பொற்கொல்லன் - கம்மாளன். பொற்சபை - கநகசபை அது சிதம்பரத்திலுள்ள நடராஜர் நடனம்செய்வது. பொற்சரக்கு - உயர்ந்த சரக்கு. பொற்சரிகை - பொன்னூல். பொற்சீந்தில் - ஓர் சீந்தில். பொற்சுண்ணம் - பொற்றூள். பொற்ப - பொற்புக்கொள்ள.பொற்பணதி, பொற்பணி - பொன்னாபரணம். பொற்பாளம் - பொற்சலாகை. பொற்பிரகாசம் - பொன்னொளி. பொற்பு - அலங்கரிப்பு, அழகு,ஒப்பனை, பொலிவு, மிகுதி, அணி. பொற்புறுத்தல் - அலங்கரித்தல். பொற்பூ - பொன்மலர். பொற்பூச்சு - மலாம்பூச்சு. பொற்பூவராகன் - ஓர் வராகன். பொற்பூண் - பொன்னாபரணம். பொற்பொருப்பு - மேருமலை. பொற்றகடு - பொன்னின்றகடு. பொற்றபரம் - வேளை. பொற்றலை - கையாந்தகரை. பொற்றலைக்கரிப்பான் - பொற்றலைக்கையாந்தகரை. பொற்றலைக்கையாந்தகரை - ஓர்கையாந்தகரை, அதிதும்பை. பொற்றாது - பொற்றலைக் கையாந்தகரை. பொற்றாமரை - பொன்னுருவத்தாமரை, மதுரையிலோர் தீர்த்தம். பொற்றிக்கீரை - ஓர் கீரை. பொற்றேகராசம் - பொற்றலைக்கரிப்பான். பொற்றை - சிறுதூறு, சிறுமலை,மலை. பொற்றொடி - பெண், பொன்வளை. பொனாம்பளம் - நெய்க்கெட்டான்,பொற்றாது. பொன் - அழகு, இரும்பு, இலக்குமி, ஓர்நாணயம், சூரியன், பஞ்ச லோகப்பொது, பிரகாசம், பொலிவு,பொன், வியாழம், ஆபரணம். பொன்காத்தபூதம் - புதையல் காத்தபூதம். பொன்செய்கொல்லர் - தட்டார். பொன்பற்றியூர்ப்புத்தமித்திரனார் - வீரசோழியமென்னு மிலக்கணஞ்செய்தவர். பொன்புனைதல் - அகப்பொருட்டுறையினொன்று. பொன்பூணுதல் - கடுக்கன் முதலியவணிதல். பொன்மணி - பொன்னினாற் செய்தமணி. பொன்மயம் - பொற்பிரகாசம். பொன்மயிர்க்கொன்றை - ஓர்கொன்றை. பொன்மலாம் - பொற் பூச்சு. பொன்மலை - திருச்சினாப்பள்ளியில்தாயுமானவர் மலை, மாமேரு. பொன்மழை - புட்கலாவர்த்தமுகில்பொழியு மழை. பொன்முசுட்டை - பங்கம்பாளை,பேய்முசுட்டை. பொன்முடியார் - திருவள்ளுவமாலைசொல்லிய கடைச்சங்கப் புலவரிலொருவர். பொன்முழை - பொற்காசி னச்சு. பொன்மெழுகு - ஓர் மெழுகு. பொன்மை - பொன்னிறம். பொன்வண்டு - பொன்னிறவண்டு. பொன்வண்ணத்தந்தாதி - சேரமான்பெருமான் செய்த ஓர் பாடல். பொன்வலயம் - பொன்வளையம். பொன்வன்னக்காரிளை - கெந்தகம். பொன்வாய்ப்புள் - சிச்சிலிக் குருவி. பொன்வானம் - பித்தளை மலை. பொன்வித்து - நாகமணல். பொன்விலை - அரிய விலை. பொன்விலைமகளிர் - வேசையர். பொன்வினைமாக்கள் - தட்டார். பொன்றல் - அழிதல்,குறைதல்,சாதல். பொன்றாவல்லி - சீந்திற் கொடி. பொன்றுதல் - பொன்றல். பொன்னகர் - சுவர்க்கம், தேவலோகம். பொன்னகர்க்கிறைவன் - இந்திரன். பொன்னகை - பொன்னாபரணம். பொன்னத்துப்பெட்டி - தாலி கூறைவைத்துக்கொண்டு போகும்பெட்டி. பொன்னப்பிரகம் - ஓரப்பிரகம். பொன்னம்பலம் - பொற்சபை சிதம்பரத்திலுள்ளது. பொன்னம்பர் - ஓர் மருந்து. பொன்னரிதாரம் - ஓரரிதாரம்.பொன்னரிமாலை, பொன்னரியமாலை - ஓர் ஆபரணம். பொன்னவண்டு - பொன்னிற வண்டு. பொன்னவன் - இரணியன், வியாழன். பொன்னன் - அருகன், பொன்னுடையவன். பொன்னாங்கண்ணி - பொன்னாங்காணி. பொன்னாங்காணி - ஓர் கீரை. பொன்னாசை - திரவிய வாஞ்சைஅஃது ஆசை மூன்றி னொன்று. பொன்னாங்கொட்டை - பூவந்தி. பொன்னாந்தட்டான் - ஓர் பட்சி. பொன்னாபரணம் - பொன்னகை. பொன்னாம்பளம் - நெய்க் கொட்டான். பொன்னாம்பூவேர் - ஆவாரை வேர். பொன்னாவிரை - ஓர் செடி. பொன்னி - எட்டாம்பாட்டன்,காவேரி. பொன்னித்துறைவன் - சோழன். பொன்னிமிளை - ஓர் கல். பொன்னிலம் - தேவலோகம். பொன்னிறமாட்சி - பொன்னிமிளை. பொன்னுக்குவீங்கி - கூகைக்கட்டு. பொன்னுருக்குதல் - பொன்னைநீராக்குதல். பொன்னுரை - தேய்மானம். பொன்னுலகு - தேவலோகம். பொன்னூமத்தை - ஓரூமத்தை. பொன்னூல் - பொன்னாற்சமைக்குநூல். பொன்னெயில்வட்டம் - அருகனிருக்கு மிடம். பொன்னெயிற்கோன் - அருகன். போ போ - அசைச் சொல் (உ-ம்) பிரியின்வாழா தென்போ, ஓரெழுத்து,போவென்னேவல். போககிருகம் - வசிக்கும் வீடு. போககுஞ்சம் - பணயம். போகடல் - போக விடல். போகடிபோக்கு - வந்தவாகு. போகணம் - பெரு மருந்து. போகணி - ஓர் பாத்திரம். போகண்டன் - ஐந்து வயசு தொடங்கிப் பதினாறு வயசுக்குட்பட்டவன். போகஸ்தானம் - ஆனந்த மயகோசம்,உடல், ஏழாமிடம். போகஸ்திரீ - பொதுப் பெண். போகபதி - அதிபதி. போகபாலன் - அசுவரக்ஷகன். போகபிசாசிகை - பசி. போகபிருதகன் - கூலிக்காரன். போகபூமி - கரும பல பூமி, தேவலோகம், நல்வினைப் பலனையனுபவிக்கும் பதவி, விளைநிலம். போகபூமியர் - பதினெண் கணத்தவரில் ஒரு சாரார். போகபாக்கியம் - அனுபவ வின்பம். போகமுனிவர் - போகர். போகம் - அனுபோகம், இன்பம்,கூலி, செல்வம், தின்றல், பண யம்,பாம்பின்படம், பாக்கியம், பாம்பினுடல், பாம்பு, பிரயோ சனகாலம், வளர்த்தல், விளைவு,சுகம், உணவு, சரீரம். போகம்பண்ணுதல் - அனு போகித்தல், புணர்தல். போகர் - ஓர் சித்தர். போகல் - உயச்சி, செல்லல், நீளம்,போகுதல். போகவதி - நல்லனுபவ முடையவள்,நாகலோகம், பாதாள நதி. போகவாஞ்சை - அனுபோகப் பிரியம். போகாங்கபூசை - சிவகணாதிபர்க்குச்செய்யும் பூசை. போகார்க்கம் - பாக்கியம். போகாவலி - கட்டியம், புகழ்ச்சி. போகாவாசம் - அந்தப்புரம் . போகி - அரசன், இந்திரன், ஓர்பண்டிகை, கார்போகி விதை,சுகமனுபவிப்போன், சௌளகன், தலைமைக்காரன், பாம்பு,பிரபஞ்ச வியாபாரி, போகியென்னேவல், பூவரும்பு. போகிகன் - குதிரைக்காரன். போகிகாந்தம் - காற்று.போகித்தல், போகிப்பு - அனுபவித்தல்,அனுபோகம், புணரல். போகில் - கொப்பூழ், பறவை, பூவரும்பு. போகிவல்லபம் - சந்தனம். போகிவாசம் - சந்தந மரம். போகீசன் - ஆதிசேஷன். போகீந்திரன் - அனந்தன். போகு - நெடுமை. போகுதல் - அழிதல், செல்லல், நீளம்,நேர்மை, மாறுதல். போகை - போதல். போக்கடி - அழிவு, சுயேச்சை, நட்டம்,போக்கடியென்னேவல், வழிச்செலவு, போதல். போக்கடித்தல் - அழித்தல். போக்கணங்கேடு - இலட்சைக்கேடு. போக்கணம் - இலட்சை, கட்டுச்சோறு. போக்கல் - போக்குதல். போக்கன் - துஷ்டன், பரதேசி,வழிச்செல்வோன். போக்காடு - சாவு, போக்கு. போக்காட்டுதல் - அனுப்புதல். போக்கி - பரதேசி. போக்கிடம் - ஒதுங்குமிடம், சேர்கதி. போக்கியப்பொருள் - அனுபவப்பொருள். போக்கியம் - அனுபவப்பொருள்,அனுபவம், செல்வம், தானியம். போக்கியல் - சுரிதகம். போக்கியார் - ஓர் சங்கப் புலவர். போக்கிரி - போக்கிலி, துன்மார்க்கன். போக்கிலி - கதியற்றவன், நாணயமில்லாதவன். போக்கு - அறையிருப்பு, சாட்டு,சாவு, பழக்கம், போகுதல், போக்கென்னேவல், யாதொன்றுசெல்லுந் துவாரம், வழி, விதம்,பழி, குற்றம். போக்குதல் - அழித்தல், அனுப்புதல்,செலுத்தல், விடுதல், உணர்த்தல். போக்குநீக்கு - ஊடுவெளி, பழக்கம்,விபரம். போக்துரு - புசிப்பவர். போங்காலம் - அழிவு காலம். போங்கு - போக்கு. போசக்கை - மாயம், வெளிப்போலி,வெளி யலங்காரம். போசபதி - கஞ்சன். போசம் - அகத்தி, ஓர் தேசம்,காஞ்சிரை. போசனகஸ்தூரி - நாரத்தங்காய். போசனக்குறடா - மிளகாய். போசனசௌக்கியம் - ஊன் சுகம். போசனபதார்த்தம் - தின்பண்டம். போசனப்பிரியன் - பெருந்தீன்காரன். போசனம் - உணவு, புசித்தல், இஃதுஅட்டபோகத் தொன்று. போசன் - ஓரரசன், செல்வன். போஷகன் - காப்போன். போஷணம், போஷணை - பராமரிப்பு. போசாதிபன் - கஞ்சன். போச்சியம் - உண்ணற்குரிய பொருள். போஷித்தல் - ஆதரித்தல். போஷிப்பு - பேணுதல். போஷியன் - வளர்ப்புப்பிள்ளை. போஸ்தக்காய் - உலர்ந்த கசகசாநெற்று. போடகம் - கொப்புளிப்பான். போடம் - தேயமைம்பத்தாறினொன்று. போடல் - அடித்தல், எறிதல், போடுதல், வழுவவிடல், வைத்தல். போடி - சம்புநாவல் மரம். போடுதடி - அலட்சியமானது, தேவையற்றது. போடுதல் - அணிதல், இடுதல்,ஈனுதல், எறிதல், வழுவவிடல். போட்டரி - இரட்சகன். போட்கம் - பொய்யெல்லாம் பொதிந்துகொண்ட போட்களேன். போட்டி - எதிரிடை, கேலி. போட்டிக்கை - போட்டி. போட்டிக்காரன் - எதிரிடைக்காரன்,கேலிக்காரன். போட்டுப்பொல்லாங்கு - குற்றம், வசை. போணி - போகணி, முதல்விக்கிரயம். போதகம் - இளமை, உபதேசம்,காஞ்சிரை, சிங்கக்குட்டி, பசளை,புலிக்குட்டி, மரக்கன்று, யானை,யானைக்கன்று. போதகன் - உபதேசி, உவாத்தி, ஒற்றன்,குரு. போதகரன் - எழுச்சி பாடுவோன்,துயிலெடை பாடுவோன், அறிவிப்பவன். போதகாசிரியன் - ஓர் ஆசிரியன். போதகி - பெண்ணூர்க்குருவி. போதநாசக்தி - போதிப்பு வல்லமை. போதப்பிரகாரம் - அறிவகை, இஃதுஇலக்கணம், உத்தேசம், பரீக்கைஎன மூவகைப்படும். போதம் - அறிவு, கன்று, ஞானம்,பரணி, புடைவை, மரக்கலம்,யானைக்கன்று, வீட்டுநிலம்,வஸ்திரம். போதரல் - போகுதல், போதல்,கொண்டு போதல். போதரவு - ஆறுதல், உபசரணைகணிசம், பேணுதல். போதருதல் - போதரல்.போதலிப்பு, போதலிமை - போதரவு. போதல் - அகலல், அழிதல், உட்படல்,திருத்தியாதல், நீளப்போகல்,வரல். போதவாகன் - தோணி யோட்டுவோன், போதுதல். போதனம் - அறிவித்தல், அறிவு,தூபங்காட்டல். போதனை - கற்பனை, தூண்டுகை,போதிப்பு. போதன் - அருகன், அறிவுடையோன், பிரமன், புத்தன். போதா - பெருநாரை. போதாக்குறைச்சல் - மேற்குறைச்சல். போதாச்சாதனம் - கூடாரம். போதாந்தம் - ஞானாந்தம். போதாந்தன் - கடவுள். போதாமை - குறைவு, வெறுப்பு. போதாயநீயம் - உபநிடதமுப்பத்திரண்டி னொன்று. போதி - அரசமரம், அறிவு, போதியென்னேவல், மலை, அறிஞன். போதிகை - குறுந்தறி, சுமையடைக்கட்டை. போதிகைக்கட்டை - தாழ்வாரந்தாங்கி. போதிகைத்தூண் - குறுந்தூண். போதிதரு - அரசமரம். போதித்தல் - கற்பித்தல், புத்தி சொல்லுதல், போதகஞ்செய்தல். போதிப்பு - உபதேசம், படிப்பனை,போதித்தல். போதியது - போந்தது. போதியவன் - கணிசவான், தக்கவன். போதிரன் - அரசு. போதிவேந்தன் - புத்தன், மலையரசன். போது - காலம், பூ பூவலரும் பருவத்தரும்பு, போதென்னேவல், சூரியன். போதுதல் - அகலல், செல்லல், தகுதியாதல், திருத்தியாதல், நீளல். போதை - மயக்கம், மூதறிவு. போதைப்புல் - கர்ப்பூரப்புல், காவட்டம் புல். போத்தம் - பூவரசு. போத்தரல் - போக்கல். போத்திரம் - இடியேறு, கொழு. போத்திராயுதம் - பன்றி. போத்திரி - பன்றி. போத்து - எருமை, காட்டா, பசு,புலி, புல்வாய், பூனை, மயில், மரைஇவற்றினாண், செம்போத்து,நீர்சாதியினாண், மரக்கன்று,விலங்கின்படுக்கை. போந்தகாலம் - தக்ககாலம். போந்தகுணம் - மேன்மையான குணம். போந்தது - போதுமானது. போந்தலிமை - போதலிமை. போந்தவன் - தகுதியானவன். போந்தி - பருமை, வீக்கம். போந்தின்றாரோன் - சேரன்.போந்து, போந்தை - அனுடநாள், இளம்பனை, பனை, வேங்கை மரம். போபடி - சாடை. போம் - அசைச்சொல், பயம். போம்பல் - நீர்க்கடம்பு. போரடி - ஓர் விளையாட்டு. போரடித்தல் - சூடுதறல், தேங்காய்முதலிய அடித்து விளையாடுதல். போரடுக்குதல் - போர்வைத்தல். போராடல் - யுத்தம்பண்ணல். போராடுதல் - பொருதல், மலைதல். போராட்டம் - தொந்தரை செய்தல்,போர்பண்ணல். போராட்டல் - கோட்டிசெய்தல். போரி - எதிரி, ஒத்தரதம், திருப்போரூர். போரிடுதல் - சண்டைபிடித்தல். போரித்தனம் - எதிரித்தனம். போருடலல், போருடறல் - பொருதல். போருடன்றல் - போர்செய்தல். போரேறு - செவ்வாய், போர்வீரன். போரேற்றுதல் - போரடுக்குதல். போர் - சதயநாள், நெற்போர், பொந்து,போரென்னேவல், யுத்தம். போர்கலத்தல் - போர்நடத்துதல். போர்க்கடா - போர்பண்ணுங் கடா. போர்க்கதவு - இரட்டைக்கதவு. போர்க்களம் - யுத்தகளம். போர்க்கறைகூவல் - போருக்கழைத்தல். போர்க்கெழுச்சி - படையெழுச்சி. போர்க்கெழுவஞ்சி - ஓர் பிரபந்தம்,அது மாற்றார்மேற் போர்குறித்தேகும் வயவேந்தர் வஞ்சிப்பூமாலை சூடிப் புறப்படும் படையெழுச்சிச் சிறப்பை ஆசிரியப்பாவாற் கூறுவது. போர்க்கோலம் - போரணித்தரிப்பு. போர்ச்சேவகர் - யுத்தவீரர். போர்த்தல் - மூடுதல். போர்த்துக்கட்டுதல் - உள்ளுக்குள்ளேசரிப்படுத்துதல், மறைத்தடக்கிக்கொள்ளல். போர்த்துமூடுதல் - மறைத்துக் கொள்ளுதல். போர்த்தேங்காய் - வலியதேங்காய். போர்போடுதல் - போரடுக்குதல். போர்ப்படை - படைச்சனம். போர்ப்பறை - இரணபேரிகை. போர்ப்பு - போர்த்தல், போர்வை. போர்ப்பை - உழவுசாலி னுட்கை,களக்கட்டையடி.போர்ப்பைக்காள, போர்ப்பையன் - உட்கைக் காளை, பொலியெருது. போர்மடந்தை - துர்க்கை, வீரலக்குமி. போர்மாந்தம் - அஷ்டமாந்தத்தொன்று. போர்முகம் - படைமுகம். போர்முடிதல் - போர்மூட்டுதல். போர்முள் - சேவலின் கால் முள். போர்முனை - போர்முகம். போர்மூட்டுதல் - போருண்டாக்கல். போர்விடுதல் - போர்செய்யும்படிஏவிவிடுதல். போர்வீரன் - போர்வல்லன். போர்வெல்லல் - யுத்தத்திற் செயமடைதல், இஃது எண்வகைவெற்றியினொன்று. போர்வை - தோல், மூடுதல், மெய்க்கவசம், மேற்போர்வை. போர்வைச்சீலை - மூடுகுப்பாயம். போர்வைத்தல் - போரடுக்குதல். போல - உவமைச்சொல். போலம் - நிலக்கடம்பு. போலல் - போலுதல். போலி - ஒட்டகம், ஒப்பு, ஒன்றுபோலொன்றிருத்தல், கள்ளமுமிளப்புமாயிருப்பது, கேலி,சாயல், பொய். போலித்தனம் - வெளிவேஷம். போலிநடை - கேலிநடத்தை, வெளியலங்காரமான நடத்தை. போலிபண்ணுதல் - கேலிப்படுத்தல். போலியாள் - வெளிவேஷக்காரன். போலியெழுத்து - பதிற்றொனியக்கரம். போலிவேலை - கள்ளவேலை. போலுதல் - உவமையாதல், சரியாதல்,ஒத்தல். போலும் - அனுமான சந்தேகப் பொருளுணர்த்தும் இசைநிறையசைச்சொல் (உ.ம்) வடுவென்ற கண்ணாய் வருந்தினைபோலும். போலூகன் - சேவகன். போல் - உவமை, பதர், பொந்து,போலென்னேவல், மூங்கில். போல்வு - போலுதல். போவது - போகவேண்டியது. போழல் - பிளக்குதல். போழ் - பிளவு, போழென்னேவல்,வார். போழ்தல் - பிளத்தல். போழ்து - காலம், பொழுது. போழ்முகம் - பன்றி. போழ்வாய் - திறந்தவாய், பொக்குவாய். போழ்வு - பிளவு, பிளப்பு. போளம் - ஓர் வாசனைப் பண்டம்,நிலக் கடம்பு, மணிவகையினொன்று. போளி - அப்பவருக்கத் தொன்று. போறல் - போலுதல். போறை - கோறை. போற்றரவு - பேணரவு. போற்றலர் - பகைவர். போற்றல் - போற்றுதல். போற்றார் - பகைவர். போற்றி - துதி, பாட்டன், வணக்கம்,காத்தருள்க, போற்றப்படுவது. போற்றிப்பஃறொடை - ஓர் நூல். போற்றிமார் - ஓர்வகைப் பிராமணர். போற்று - காப்பு, துதி, போற்றென்னேவல். போற்றுதல் - காத்தல், துதித்தல்,புகழ்தல், பேணுதல், வணங்கல்,வளர்த்தல், விரும்புதல், ஈட்டு தல். போனகக்காரி - சமையற்காரி. போனகச்சட்டி - சாதமெடுக்கும்பாத்திரம். போனகத்தி - ஊட்டுந்தாய், சமைக்கிறவள், வெள்ளாட்டி. போனகம் - சோறு. போனபோக்கு - நேரிட்டபடி. பௌ பௌஞ்சு - சேனை. பௌஷம், பௌடம் - தைமாதம்.பௌஷிகம், பௌடிகம், பௌடியம் - பதினெண்புராணத் தொன்று,முதல்வேதம்.பௌஷியன், பௌடியன் - ஓர் சக்கரவர்த்தி. பௌண்டிரம் - ஓர்தேயம், பவுண்டாரம். பௌதி - ராத்ரி. பௌதிகம் - பூதியத்துக் கடுத்தது,பூதசம்பந்த முள்ளது. பௌதிகன் - சிவன். பௌதீகம் - உலகம். பௌத்தம் - புத்தமதம். பௌத்தரன் - பெயரன். பௌத்தர் - புத்தர். பௌத்தன் - புத்தசமயத்தான். பௌத்தி - பவுத்தி. பௌத்திரம் - சுத்தம், புத்திரற்குரியது. பௌத்திரர் - பெயரமார். பௌத்திரம் - சுத்தன், மகன்மகன். பௌத்திரி - பெயர்த்தி, மகன்மகள். பௌமம் - நிலத்திற் பிறப்பன. பௌமன் - செவ்வாய், நரகாசுரன். பௌமி - சீதை. பௌரகம் - நகர்சூழ் சோலை.பௌரணமி, பௌரணிமி - பூரணை. பௌரணை - பூரணை, மரக்கன்று,உவா. பௌரம் - பட்டினம். பௌரவர் - குருகுல வேந்தர், பூருவமிசத்தோர். பௌராணிகமந்திரம் - பிரணவமில்லாமந்திரம். பௌராணிகம் - புராணமதம். பௌராணிகன் - புராணப்ரசாரம்பண்ணுவோன். பௌருஷம் - புருஷத் தன்மை. பௌரோகித்தியம் - புரோகிதத்தன்மை. பௌர்ணமி - பூரணை, நிறைமதி. பௌலஸ்தி - சூர்ப்பநகை. பௌலஸ்தியன் - இராவணன், குபேரன், விபீஷணன். பௌலோமி - புலோமசை, இந்திரன்மனைவி. பௌவம் - உப்பு, கடல், நீர்க்குமிழி,நுரை, பூரணை, மரக்கணு. பௌளி - ஓரிராகம், பூபாளன்மனைவி. பௌனருத்தம் - புனருத்தம். ம ம - இயமன், இறந்தகால விடைநிலை (உ.ம்) என்மர், ஓரெழுத்து,ஓர்மந்திரம், காலம், சந்திரன்,சிவன், நஞ்சு, நேரம், பிரமன்,விட்டுணு. மக - இளமை, காணிக்கை, பிள்ளை,மகன். மககம் - ஆமை. மககன் - மேன்மகன், விட்டுணு. மகக்குழை - மாவிலை. மகங்காரம் - அகங்காரம். மகசம் - அறிவு, விதம். மகடி - ஓர்குழல், ஓர் வித்தை, ஓர்விளையாட்டு. மகடூஉ - பெண். மகடூஉக்குணம் - பெண்டன்மைக்குரிய குணம். மகண்மா - அலி, சிறுபெண் வடிவம்போலத் தோன்றும் ஒரு மிருகம். மகண்மை - மகட்டன்மை. மகதந்திரம் - சிற்பநூன் முப்பத்திரண்டினொன்று. மகதம் - தேயமைம்பத்தாறி னொன்று,பதினெண்பாடையி னொன்று. மகதி - சேம்பு, திப்பிலி, நாரதன்வீணை. மகதிம்பம் - பெருமரம். மகதியாழ் - மிக்கநரம்புடைய யாழ். மகதேசுவரன் - சராசந்தன், மகததேசத்தரசன். மகதை - திப்பிலி. மகதோத்பவன் - மகததேசத்திற்பிறந்தவன். மகத்திராத்திரு - இராமன். மகத்திருநாள் - மாசிமகம். மகத்து - பெரியது, பெரியவர்,மகாத்துமா, விசாலம். மகத்துவம் - மேன்மை. மகந்தம் - கொடுவேலி. மகபதி - இந்திரன். மகப்பால்வார்த்தல் - அனாதப்பிள்ளைக்குப் பாலூட்டல்இஃது அறமுப்பத்திரண்டினொன்று. மகமது - மக்காதிபர். மகமுறை - யாகக்கிரமம், விருந்து. மகமேரு - மகாமேரு. மகமை - தருமக்கொடை. மகம் - இருபத்தொன்று, இன்பம்,ஓர் நாள், பலி, பிரபை, யாகம்,விழவு. மகரகண்டிகை - மகரதோரணம். மகரகந்தம் - வெண்காயம். மகரகாலம் - மாமரம். மகரகுண்டலம் - காதணியினொன்று. மகரகேதனம் - மச்சக்கொடி.மகரகேதனன், மகரகேது - மன்மதன். மகரக்குறுக்கம் - கான் மாத்திரையாய் நிற்கு மகரவெழுத்து. மகரக்கொடியோன் - மன்மதன். மகரச்சா - சாவாக்கியத்தொன்று. மகரதுருமம் - அரசு. மகரதோரணம் - வாயலிற் றூக்குந்தோரணம், மகரமீன் வடிவம்போன்ற தோரணம். மகரத்துவசன் - காமன். மகரந்தம் - கள், குயில், தேமாமரம்,தேனீ, தேன், பூந்தாது. மகரந்தவதி - பாதிரிப்பூ, மதுவிசேடம். மகரந்தாட்டஹாஸம் - முல்லைச் செடி. மகரந்தௌகம் - புஷ்பம். மகரப்பூ - வெந்தயம். மகரமண்டலம் - உத்தர வீதிக்கடை. மகரமாதம் - தை. மகரமீன் - சுறவு. மகரம் - இராச சின்னத்தொன்று, ஓரிராசி, ஓரெழுத்து, ஓர் காயம், ஓர்நிதானம், காமன்கொடி,குபேரனவ நிதிகளினொன்று,சாயநிறம், சுறாமீன், தேவருலகு,பூந்தாது, முதலை, விருப்பம்,குறங்கு செறி யென்னும் ஓர்ஆபரணம். மகரம்பு - வெந்தையம். மகரயாழ் - நால்வகை யாழினொன்றுபதினேழு நரம்புடைய யாழ். மகரயூகம் - படைவகுப்பினொன்று. மகரரேகை - தநவானிலக்கணம். மகரவாய்மோதிரம் - கால்விரலணி. மகரவாழை - காட்டுமல்லிகை, மருகு. மகரவியூகம் - மகரரூபமாக வகுக்கப்பட்ட படைத் தொகுதி. மகரவிருத்தி - சேம்பு. மகரன் - ஆகாயத்தைத் தோற்றுவித்தபூதம், முக்குணமூலம்.மகராகரம், மகராங்கம் - கடல். மகராங்கன் - காமன். மகராசன் - அரசன், பாக்கியவான். மகராசி - பாக்கியவாட்டி. மகராசுவன் - வருணன். மகராட்டிரம் - சாதி நான்கினொன்று.மகராலயம், மகராலையம் - கடல். மகரி - கடல். மகரிகை - தோரணம், குறங்கு செறியென்னும் ஆபரணம், தந்தப்பூண். மகரிஷி - பெரியரிஷி மகரிப்பு - கையாந்தகரை. மகருதம் - கொடிவேலி. மகலோகம் - மேலேழுலகினொன்று. மகவதி - இந்திராணி. மகவன் - இந்திரன். மகவாட்டி - குழந்தைப் பிள்ளைக்காரி. மகவான் - இந்திரன். மகவு - கோட்டில் வாழ்விலங்கின்பிள்ளை, பிள்ளை, மகன். மகளிக்கீரை - ஓர் கீரை. மகளிரான்மலர்மரம் - மகடூஉக்காரணமாயலருமரம் அவைஅசோகு ஏழிலைம் பாலை குராகுருக்கத்தி சண்பகம் பாதிரிபுன்னை மகிழமரம் மரா முல்லைஇவை முறையே உதைக்க நட்புறஅணைக்க பாட நிழல்படநிந்திக்க ஆட சுவைக்க பார்க்கநகைக்க தளிர்த்துப் பூப்பனவாம்.மகளிர், மகளீர் - பெண்கள். மகள் - புத்திரி, பெண். மகன் - ஆண்பாற்பிள்ளைப்பொது,புதல்வன், புருடன். மகன்மை - ஆண்டன்மை. மகன்றில் - ஒரு நீர்வாழ் பறவை. மகா - பெருமை மிகுதி மேன்மையிவற்றை விளக்குமோருபசருக்கம். மகாகச்சம் - சமுத்திரம், மலை. மகாகதம் - காய்ச்சல். மகாகதி - மேற்கதி. மகாகந்தம் - உள்ளி. மகாகபித்தம் - வில்வமரம்.மகாகருவம், மகாகர்வம் - பத்திலட்சங்கோடி. மகாகவம் - யுத்தம். மகாகாசம் - குதிரைக்கனைப்பு,பரவெளி. மகாகாயம் - யானை, பெருவெளி. மகாகாலம் - நெடுங்காலம், மாமரம். மகாகாலன் - உருத்திரன். மகாகிதி, மகாக்ஷிதி - கோடிகோடாகோடி. மகாகிரீவம் - ஒட்டை. மகாகும்பி - பெரும்பூசினி. மகாகுலம் - உத்தமகுலம். மகாகுலிகன் - உயர்குலத்திற் பிறந்தோன். மகாகூபம் - பெருங்கிணறு. மகாகோஷம் - பேரொலி.மகாகோணி, மகாnக்ஷhணி - இலட்சங்கோடாகோடி. மகாகோரம் - நரகத்தினோரிடம். மகாக்கினி - ஓமாக்கினி. மகாங்கம் - ஒட்டை.மகாசகா, மகாசகை - வாடாப்பூவுளமருதோன்றி மரம், வாடாமல்லிகை. மகாசங்கம் - ஆயிரங்கோடாகோடிஎலும்பு, குபேரனிதியினொன்று,நெற்றி. மகாசங்காரம் - சருவசங்காரம். மகாசண்டன் - யமகிங்கரன். மகாசத்தி - குமரன். மகாசம்பு - பெருநாவல். மகாசயம் - சமுத்திரம். மகாசயன் - பிரபு. மகாசனன் - பெரியோன். மகாசாந்தபனம் - ஆறுநாளாயனுட்டிக்கு மோர் விரதம் அது முதனாட் கோசலமும் இரண்டாநாட் கோமயமும் மூன்றாநாட்பாலும் நாலாநாட்டயிரும் ஐந்தாநாணெய்யும் ஆறாநாட்டருப்பை யவித்தநீரு முண்டனுட்டிப்பது. மகாசாலி - பெரும்பீர்க்கு. மகாசுகம் - புணர்ச்சி. மகாசுக்கம் - வாடாபூவுள்ள மருதோன்றி. மகாசுவேதம் - சிறுவாலுளுவை. மகாசுவேதை - சரச்சுவதி. மகாசூதம் - போர்ப்பறை. மகாசூத்திரன் - இடையன். மகாசேனன் - சேனாபதி, புத்தன்,முருகன். மகாசைவம் - ஓர் சைவம்.மகாசோபம், மகாnக்ஷhபம் - நூறுகோடிகோடாகோடி. மகாச்சாயம் - ஆலமரம். மகாச்சுவாலம் - ஓமாக்கினி. மகாணிலம் - தகரை. மகாதந்தம் - யானை, யானைக்கொம்பு. மகாதம்பிரபை - கீழ்நரகம். மகாதலம் - கீழேழுலகினொன்று,நீதிதலம். மகாதனம் - தூபம், பொன்,வேளாண்மை. மகாதாது - பொன். மகாதாநம் - பெருங்கொட்டை. மகாதி - திப்பிலி. மகாதிம்பம் - பெருமரம். மகாதியாகம் - சருவத்துறவு. மகாதுந்துமி - போர்ப்பறை. மகாதுருமம் - அரசு. மகாதேஜம் - பாதரசம். மகாதேவன் - கடவுள், சிவன்,தெய்வம், வருணன். மகாதேவி - துர்க்கை, பார்வதி. மகாதோரை - ஓரெண். மகாத்துமா - அறிஞன், பரமஞானி. மகாநசம் - அடுக்களை. மகாநடன் - சிவன். மகாநதி - கங்கை. மகாநந்தல் - முத்தி. மகாநந்தை - கள், ஓர் நதி. மகாநரகம் - ஓர் நரகம். மகாநலம் - யாகாக்கிநி. மகாநாகம் - சுரபுன்னைமரம், பெருஞ்சர்ப்பம். மகாநாதம் - சங்கு, சிங்கம், பேரொலி,முகில், யானை, வாத்தியக்கருவி. மகாநாடு - ஜனசபை. மகாநிசி - அத்தசாமம். மகாநிதி - குபேரனவநிதியினொன்று. மகாநித்திரை - மரணம். மகாநிம்பம் - பூவரசமரம், பெருவேம்பு. மகாநீசன் - வண்ணான். மகாநீலம் - கையாந்தகரை, மரகதம். மகாநுபவான் - மகாத்துமன். மகாநேமி - காகம். மகாபகை - பெருநதி. மகாபதம் - துர்க்கதி, மந்மதலோகம்,ராஜமார்க்கம். மகாபட்சி - ஆந்தை. மகாபதுமம் - குபேரனவநிதியினொன்று, பத்துக்கோடாகோடி, வெண்டாமரை. மகாபதுமன் - அட்டநாகத்தொன்று. மகாபத்திரம் - பனைமரம். மகாபத்திரை - கங்கை. மகாபலம் - ஆகாசம், குடம்,கொளிஞ்சி, சித்தம், தெங்கு. மகாபலன் - காற்று, பெலவான். மகாபலி - பலிச்சக்கரவர்த்தி. மகாபலை - வில்வம். மகாபவன் - சுக்கிரன். மகாபாசகன் - யாசகி. மகாபாசன் - யமதூதன். மகாபிரபம் - விளக்கொளி. மகாபிரபு - அரசன், இந்திரன். மகாபிரளயம் - நானூற்று முப்பத்திரண்டு கோடி வருடமுடிவில் வருமழிவு, பிரம கற்பத்தழிவு. மகாபிராணம் - காகம். மகாபிலம் - ஆகாசம். மகாபுருஷன் - உத்தமபுருடன். மகாபூ - சுக்கிரன், பெருஞ்சீரகம். மகாபூதம் - பஞ்சபூதம். மகாபூரி - ஆயிரங்கோடி கோடிகோடா கோடி. மகாபெலா - பேராமுட்டி. மகாப்பிரகாசசத்தி - அப்பிரகம். மகாமகம் - மாசிமகத்திற் குருவருநாள், அது பன்னிரண்டு வருடத்திற்கொரு முறை வருவது. மகாமசானம் - காசிநகரம். மகாமதம் - மதயானை, வெறி. மகாமந்திரி - முதல்மந்திரி. மகாமாத்திரன் - செல்வன், மந்திரி,யானைப்பாகன். மகாமாந்திரி - குருபன்னி, செல்வி. மகாமாயி - துர்க்கை. மகாமாயை - பஞ்சமாயையி னொன்று,பார்வதி. மகாமாரி - பார்வதி. மகாமால் - வில்வபத்திரி. மகாமிருகம் - யானை. மகாமிருத்து - சிவன். மகாமுகம் - முதலை. மகாமுனி - அகத்தியன், புத்தன்,வசிட்டன், வியாசன். மகாமூஷிகம் - பெருச்சாளி. மகாமேதை - மருளூமத்தை. மகாமேதைகண்டியல் - வெள்ளை. மகாமேரு - பொன்மலை. மகாயாகம் - மகாயக்கியம். மகாயுகம் - நாலுயுகங்கூடினது. மகாயக்கியம் - பார்ப்பார் தேவர் பிதிர்சுற்றம் தானென்னுமை வரையுமோம்பி வருதல். மகாரசசூதம் - ஓர் மாமரம். மகாரசதம் - பொன். மகாரசம் - ஓர் மரம், கஞ்சி. மகாரசனம் - மகாரசதம். மகாரண்ணியம் - பெருங்காடு. மகாரதம் - பதினோராயிரந் தேர்க்காரருடனே பொருவோன், பதினோராயிரம்தேருக்குத்தலைவன். மகாரதன் - பதினோரயிரத் தேர்க்காரருடனே பொருவோன், பதினாராயிரம் தேருக்குத் தலைவன். மகாராசன் - அதிபதி, அரசன், கவலையற்றவன், குபேரன், சமணகுரு,செல்வமுடையோன். மகாராட்டிரம் - ஓர்தேசம், ஓர்பாடை. மகாராத்திரம் - அத்தசாமம். மகாருத்ரன் - மஹாதேவன். மகாரூபகம் - நாடகத்தமிழ். மகாரூபன் - சிவன். மகாரோகம் - குட்டமுதலிய பெருவியாதி. மகாரௌரவம் - ஓர் நரகம். மகார் - மக்கட்பன்மை. மகாலக்குமி - மகாலட்சுமி. மகாலயம் - கோயில், பிரமலோகம். மகாலயன் - கடவுள், பிரமன். மகாலிங்கன் - சிவன். மகாலோகம் - தீக்கால்கள், மேலேழுலகினொன்று. மகாலோகம் - காகம். மகாவநம் - பெருங்காடு. மகாவபன் - சிவன். மகாவராகம் - சுவேதவராகம். மகாவல்லி - வசந்தமல்லிகை, வில்வம். மகாவற்புதம் - ஓர் பேரெண். மகாவாக்கியம் - பெரும்பதம். மகாவிசுவம் - மேட சங்கிராந்தி. மகாவிஷம் - இருதலைப் பாம்பு. மகாவிந்தம் - ஓரெண், நளன் நகரம்,வைகுந்தம். மகாவிந்து - அப்பிரகம். மகாவியாகிருதி - காயத்திரி மந்திரம். மகாவிரதம் - வீரசைவம். மகாவிரதர் - இலிங்கதாரிகள்,சைவர்கள். மகாவிருகதி - சேம்பு. மகாவிருக்கம் - சதுரக்கள்ளி. மகாவிருத்தி - சேம்பு. மகாவிலயம் - ஆகாயம், இதயம்,குகை, நீர்ச்சாடி. மகாவில் - பேராமுட்டி. மகாவீசி - ஓர் நரகம். மகாவீரம் - அருக்கிய பாத்திரம்,ஓமாக்கினி, குயில், சிங்கம்,வெண் குதிரை. மகாவீரன் - அக்கினி, கலுழன்,விட்டுணு வீரன். மகாவெள்ளம் - ஓரெண். மகாவேகம் - குரங்கு. மகாவேகன் - சிவன். மகானந்தம் - முத்தி. மகானசம் - மடைப்பள்ளி. மகானலம் - ஓமாக்கினி. மகான்னவம் - கடல். மகி - பூமி. மகிகை - மூடுபனி. மகிடசங்காரி - துர்க்கை. மகிடமர்த்திநி - துர்க்கை. மகிஷம், மகிடம் - மயிடம், எருமை. மகிடதானம் - எருமை தானம். மகிடரோசனை - கோரோசனை. மகிடவாகநன் - யமன். மகிடற்செற்றாள் - துர்க்கை. மகிடன் - மகிடாசுரன். மகிடாசுரன் - ஓர் அசுரன். மகிஷி - இராணி. மகிடி - மௌடி. மகிடித்தல் - மக்களித்தல். மகிணன் - மகிழ்நன். மகிதம் - சிவன் சூலம். மகிதலம் - பூமி. மகிந்தகம் - எலி, கீரி.மகிபதி, மகிபன் - அரசன். மகிமா - மகத்துவம், மிகவும் பருத்தல்அஃது அட்டசித்தியினொன்று. மகிமை - கனம், பெருமை. மகிரன் - சூரியன். மகிருகம் - மகீருகம். மகிலம் - மயிலம். மகிலை - பெண், வெறிகாறி. மகிழமரம் - வகுளம். மகிழ் - ஓர் மரம், களிப்பு, மகிழென்னேவல். மகிழ்ச்சி - இன்பம், களிப்பு. மகிழ்தல் - களித்தல், சந்தோஷித்தல். மகிழ்நன் - கணவன், மருதநிலத்தலைவன். மகிழ்வு - இன்பம், களிப்பு, சந்தோஷம். மகிளம் - பூவிதழ். மகிளி - ஓர் கீரை. மகிளித்தல் - மக்களித்தல். மகினம் - இராச்சியம். மகீ - ஓர் யாறு, பசு, பூமி. மகீசுதன் - செவ்வாய். மகீசுதை - சீதை. மகீதரம் - மலை. மகீதலம் - பூமி. மகீத்திரம் - மலை.மகீபதி, மகீபன், மகீபாலன் - அரசன். மகீப்பிராசீரம் - சமுத்திரம். மகீமயம் - மண்ணாற் செய்யப்பட்டவை. மகீருகம் - தாபரயோனி, மரம், கீரை. மகீலதை - நாங்கூழ். மகுடபங்கம் - கிரீடாவமானம். மகுடம் - சல்லடைக்கொப்பு, சிகரம்,சிவாகம மிருபத்தெட்டினொன்று, தலையணி,மத்தள முதலிய வற்றின் விளிம்பு,மறைவு, முடி, முடியுறுப்பு.மகுடராகம், மகுடராமக்கிரியம் - ஓர்பண். மகுடவர்த்தனர் - முடிதரிக்கு மரசர். மகுடாதிபதி - கிரீடதாரி. மகுடி - மகிடி. மகுணன் - மகிணன். மகுரம் - கண்ணாடி, தண்டசக்கிரம்,பளிங்கு, பூமொட்டு. மகுலம் - மகிழமரம். மகூலம் - மலர்ந்தபூ. மகேசம் - அப்பிரகம், இந்திரன், சிவன். மகேசன் - சிவன். மகேசுவரன் - சிவன். மகேசுவரி - பார்வதி.மகேச்சுரன், மகேச்சுவரன் - சிவன். மகேச்சுவரி - பார்வதி. மகேந்திரகதலி - ஓர் வாழை. மகேந்திரசாலம் - ஓர் மாயவித்தைஅது கலைஞான மறுபத்துநான்கி னொன்று. மகேந்திரநகரி - அமரவாதி. மகேந்திரம் - ஓர் நகரம், ஓர் மலை. மகேந்திரன் - இந்திரன். மகேந்திராணி - இந்திராணி. மகேந்திரை - ஓர் நதி.மகேலிகை, மகேலை - பெண். மகைசுவரியம் - செல்வம். மகோததி - இந்திரன், கடல், பெருங்கடல். மகோதயம் - ஓர் புண்ணியகாலம்,பெருமை, முத்தி, மேன்மை,விடுதல். மகோதரம் - ஓர் நோய், பெரு வயிறு,பூதம். மகோதரன் - இராவணன் மந்திரிகளிலொருவன். மகோநி - சசிதேவி. மகோந்நதம் - பனைமரம், அதிகஉயரம். மகோபநிடதம் - உபநிடத முப்பத்திரண்டினொன்று. மகோற்சவம் - திருவிழா. மகோற்பலம் - தாமரை. மகோன்மதம் - மருள்வெறி. மகௌடதம் - சுக்கு, திப்பிலி, வசம்பு,சிறந்த மருந்து. மகௌடதி - நன்மருந்து, சிறந்தமூலிகை. மக்கடம் - குரங்கு. மக்கடித்தல் - அழித்தல். மக்கட்டம் பிடித்தல் - மற்கட்டம்பிடித்தல். மக்கட்பரப்பு - நாட்டார், மன்பதை. மக்கம் - எருக்கு, ஓர்தேயம், நெய்வார்தறி. மக்கல் - உக்குதல். மக்களித்தல் - சுளுக்குதல், திரும்புதல், புரள்தல். மக்களிப்பு - மக்களித்தல். மக்கள் - மகார், மனிதர், இவர் ஏழுவகைப் பிறப்பி னொருவர். மக்கனம் - ஆழ்தல், கேலி. மக்கன் - பலவான். மக்காச்சோளம் - பெரிய சோளம். மக்கி - உக்கன்மாக்கல், ஓர் குளிகை. மக்கினம் - அமிழ்ந்தல், வெட்கம்,மக்நம். மக்கு - அடைமண், மந்த குணம்,மந்தம். மக்குதல் - உக்கியழிதல். மக்குலம் - சிலாசத்து. மங்கலகாரியம் - சுபகாரியம். மங்கலகொசிகம் - ஓரிராகம். மங்கலசண்டி - துர்க்கை. மங்கலச்சொல் - மங்கலமொழி. மங்கலஸ்நானம் - மங்கல காரியத்திற்கு முழுகுதல். மங்கலப்பாடகர் - கடிகைமாக்கள்,சோபனம் பாடுவோர், மங்கலவாழ்த்துக் கூறுவோர். மங்கலப்பிரதன் - சுப முண்டாக்குவோன். மங்கலப்பிரதை - மஞ்சள். மங்கலமொழி - சோபனவார்த்தை,செய்யுட்களின் முதற்கவியின்முதலில் வரவேண்டுஞ் சுபமொழி(அவை) அமிழ்தம், ஆரணம்,உலகம், எழுத்து, கங்கை, கடல்,சீர், சொல், திரு, தேர், நிலம், நீர்,பரி, பரிதி, புகழ், புயல், பூ, பொன்,மணி, மதி, மலை, யானைமுதலியன. மங்கலம் - கலியாணம், சுபம், சேகரிப்பு,சோபனம், தகனபலி, தருமம்,பொலிவு, வாழ்த்து, ஆக்கம்,இஷ்டசித்தி, சந்தனம். மங்கலம்பாடுதல் - சோபனம்படித்தல். மங்கலவள்ளை - ஓர் பிரபந்தம் அஃதுஉயர்குலத்துதித்த மடவரலைவெண்பா வொன்பதானும் வகுப்பொன்ப தானும் பாடுவது. மங்கலவாரம் - செவ்வாய்க்கிழமை,நல்ல நாள். மங்கலன் - செவ்வாய், நாவிதன். மங்கலி - நாவிதன், மங்கலியதாரி,கட்டுக்கழுத்தி. மங்கலியகம் - சிறுகடலை. மங்கலியகாரி - இல்லவள். மங்கலியம் - தாலி. மங்கலை - அம்பட்டத்தி, இலக்குமி,உமை, கற்புடையாள், சுமங்கலி,மங்கலியவதி. மங்கல் - ஒளியின்மை, கெடுதல்,தோற்றக்குறைவு, மங்குதல். மங்கல்லியம் - சந்தனம், தயிர். மங்கில்லீயம் - சந்தனம், செவ்வீயம்,தயிர், பொன். மங்களகரன் - சுபமுண்டாக்குவோன். மங்களகௌசிகம் - ஓர் பண். மங்களபாடகர் - மங்கல பாடகர். மங்களம் - காரியம், சுபகாரியம்,வாழ்த்து, மங்கலம். மங்களாசரணை - மங்களவழிபாடு,அது வாழ்த்து, வணக்கம், வத்துநித்தேசம் என மூவகைப்படும். மங்களாசாசனம் - மங்களவாழ்த்து. மங்களாதிபன் - ஏழுக்குடையவன். மங்களாதேவி - இலக்குமி. மங்களை - யோகினிதிசையினொன்று, உமை. மங்கிணி - மண்ணுணி, மிக்கமந்தன். மங்கிலம் - காட்டாக்கினி. மங்கிலியம் - மங்கலியம். மங்கு - வங்கு. மங்குங்காலம் - துன்பகாலம், மரணவேளை, துன்புறுகாலம். மங்குசனி - முதன்முறைவரு மேழரை. மங்குதல் - கெடுதல், தோற்றங் குறைதல், மழுங்குதல். மங்குரம் - பளிங்கு. மங்குலம் - மங்குளம். மங்குல் - ஆகாயம், இரவு, இருள்,மேகம், திசை, வானம். மங்குளம் - இருள், கலக்கம், மந்தாரம்,மழுக்கம், முகவாட்டம், பார்வைமந்தம், ஐயம், நிறமழுக்கம். மங்கை - கற்றாழை, பதின்மூன்றுவயதுப்பெண், பெண். மங்கைதீர்க்கம் - மணவாளிநாளுக்குமணவாளனாள், பதின்மூன்றுக்குமேற்பட்டநாளாயிருத்தல், இதுதசப்பொருத்தத்தி னொன்று.மங்கைபங்கன், மங்கைபங்காளன், மங்கைபாகன் - சிவன். மங்கையர்க்கரசியார் - அறுபத்துமூவரிலொருவர், கூன்பாண்டியன் மனைவி. மசக - மயங்க, சந்தேகிக்க. மசகம் - கொசுகு, நீர்த்துருத்தி, மயக்கம்,மயிர். மசகி - அத்திமரம், கடுகுரோகணி. மசகிற்புள் - ஓர் கடற்பறவை. மசகு - கடலிற்றிசைதெரியாத இடம்,வண்டிக்கீல். மசகுதல் - சுணங்குதல், மயங்குதல். மசக்க - மயக்க, கலக்க, கசக்க. மசக்கல் - மசங்கல். மசக்குதல் - கசக்குதல், கலக்குதல்,மயக்குதல். மசக்கை - கருப்பமசக்கு. மசக்கைக்காரி - கருப்பஸ்திரி. மசங்க - மயங்க, கசங்க. மசங்குதல் - கசங்கல்,மயங்கல். மசண்டை - அந்திநேரம், கருகுமாலை. மசமசத்தல் - தினவுகொள்ளல். மசமசப்பு - சொறிவு. மசமசெனல் - மசமசத்தல். மசம் - அளவு, கொசுகு, கோபம்,தொனி. மசரதம் - பேய்த்தேர். மசவு - கடலிற்றிசை தெரியாத இடம்,வண்டிக்கீல். மசனம் - அளத்தல், வருத்தல். மசாகம் - குருவி. மசாரகம் - இந்திரநீலமணி. மசாரம் - மரகதம், நீலரத்திநம். மசாலை - சம்பாரம்.மசால், மஷால் - தீவர்த்தி. மசானம் - மயானம்.மசி, மஷி - மசியென்னேவல், மை. மசிகம் - பாம்பளை. மசிகூபி - மைக்கூடு. மசிக்க - குழைக்க. மசிசலம் - மை. மசிதல் - நசிந்துகுழைதல்.மசிதானம், மசிதானி - மைக்கூடு. மசித்தல் - நதித்துக்குழைத்தல். மசிபண்ணியன் - எழுத்துக்காரன். மசிபதம் - தூவல்.மசிப்பாணி, மசிமணி - மைக்கூடு. மசியல் - மசிக்கப்பட்டது. மசிர் - அறுகு, மயிர். மசிவு - மசிதல். மசீது - பள்ளிவாசல், துருக்கர்கோயில். மசீலம் - வண்ணார்சேரி. மசுக்கரம் - மூங்கில். மசுரம் - கடலை. மசுரை - வேசி. மசூசிகம் - மசூரிகம், துருக்கர்கல்லறை. மசூதி - பள்ளிவாசல், துருக்கர்கோயில். மசூரகம் - வட்டத்தலையணை. மசூரம் - மூட்டுப்பூச்சி. மசூரன் - தட்டான். மசூரி, மசூரிகம் - சின்னமுத்து,துருக்கர் கல்லறை. மசூரிகை - குருநோய். மசூரை - வேசை. மச்சகந்தி - வியாசன்றாய். மச்சதேசம் - விராடபுரம். மச்சத்தின்சல்லியம் - மீனெலும்பு. மச்சம் - தேயமைம்பத்தாறி னொன்று,பதினெண்புராணத் தொன்று,மாற்று நிதானமறிய வெட்டி,வைத்திருக்கும் பதிற்பொன்,மீனவிராசி, மீன், இது திருமாலவதாரத்து மொன்று, மச்சை. மச்சரம் - பொறாமை. மச்சனம் - ஸ்நாநம். மச்சாவதாரம் - மீனவதாரம், இதுதிருமால் தசாவதாரத் தொன்று. மச்சாள் - மைத்துனி. மச்சான் - மைத்துனன். மச்சி - பூனைக்காலி, மச்சுனி. மச்சிகை - மோர், ஈ. மச்சியம் - கடுகுரோகிணி, சிவபுராணத்தொன்று. மச்சியாச்சி - பொன்னாங்காணி. மச்சினச்சி - மச்சுனி. மச்சினன் - மச்சான். மச்சினி - மச்சாள், மைத்துனி. மச்சினிச்சி - மைத்துனி. மச்சு - குற்றம், சுவர்க்குமேல் வெளியடைப்பு, மஞ்சு, மேனிலை,பரவு பலகை. மச்சுக்கல் - மேல்வீட்டிற்பாவுகல். மச்சுப்போக - மக்க, வெந்து குழைய. மச்சுவீடு - மச்சடைத்த வீடு. மச்சுனச்சி - மச்சினி. மச்சுனமை - மைத்துனவுரிமை. மச்சுனன் - மைத்துனன். மச்சுனி - மைத்துனி. மச்சேந்திரநாதர் - நவநாதசித்தரிலொருவர். மச்சை - உட்சுரம், மறு, மீனம்பர்,மூளை, அது சத்ததாதி னொன்று. மச்சைசமுற்பவம் - சுரோணிதநீர். மச்சோதரி - மச்சகந்தி. மஞ்சகம் - கட்டில், மேடை. மஞ்சகாசிரயம் - மூட்டுப்பூச்சி. மஞ்சட்கம்பு - ஓர் மரம். மஞ்சட்கல் - கொடுங்கோபிச்சிலை. மஞ்சட்காப்பு - மஞ்சட்பொடிச்சாந்து. மஞ்சட்காமாலை - ஓர் நோய். மஞ்சட்செவ்வந்தி - ஓர் செவ்வந்தி. மஞ்சட்டி - மஞ்சிட்டி. மஞ்சட்பாவட்டை - ஓர் பாவட்டை. மஞ்சட்பூச்சு - மஞ்சட்குளிப்பு.மஞ்சணத்தி, மஞ்சணாற்றி - மஞ்சணுணா. மஞ்சணீர்ச்சீட்டு - வளர்ப்புப்பிள்ளையைச் சுதந்தரத்திற் குரித்தாக்குஞ் சீட்டு. மஞ்சணீர்ப்பிள்ளை - சுதந்தரத்திற்குரிய வளர்ப்புப்பிள்ளை. மஞ்சணுணா - ஓர் நுணா. மஞ்சணை - எண்ணெய்க் குங்குமம். மஞ்சமண்டபம் - பள்ளிமண்டபம். மஞ்சம் - கடல், கட்டில், சப்பரம். மஞ்சரம் - முத்து. மஞ்சரி - ஓர் பிரபந்தம், தளிர்,நாயுருவி, பூங்கொத்து, பூத்திரள்,பூமாலை, மலர்க்காம்பு, முத்து,துளசி. மஞ்சரீகம் - மிருதுவான மருக்கொழுந்து. மஞ்சலன் - விற்காரன். மஞ்சலிக்கான் - உருத்திரசடை. மஞ்சளலரி - ஓர் அலரி. மஞ்சளாலாத்தி - ஆலாத்திகளினொன்று. மஞ்சளிளங்கலையன் - ஓர்வகை நெல். மஞ்சள் - அரிசனம், நிசி. மஞ்சள்மந்தாரை - ஓர்வித மந்தாரை. மஞ்சள்வசந்தம் - ஓர் சடங்கு, ஓர்விளையாட்டு. மஞ்சனச்சாலை - ஸ்நானமண்டபம். மஞ்சனம் - குளித்தல், முழுகல். மஞ்சனி - வேலிப்பருத்தி. மஞ்சன் - மகன், மைத்துனன். மஞ்சா - இலைக்கள்ளி, நாயுருவி. மஞ்சாடி - இரண்டு குன்றிமணிகொண்ட நிறை, ஓர் மரம், வயிரநிறை. மஞ்சாரி - கஞ்சாங்கோரை. மஞ்சாளி - வயிரநிறுக்குநிறை. மஞ்சி - சங்கம்வாங்கி, சிறுவரம்பு,படகு, பேடகம், பேழை, மரல்நார். மஞ்சிகம் - தாளிக்கொடி, பேடகம்,பெட்டி. மஞ்சிகன் - நாவிதன். மஞ்சிகை - காதணி, குண்டலம்,கையாந்தகரை, தாளிக்கொடி,பேழை, வேசி. மஞ்சிட்டம் - மஞ்சாடி.மஞ்சிஷ்டி, மஞ்சிட்டி - ஓர் கொடி, ஓர்சாயவேர், அணாவேர்ப்பட்டை,செவ்வல்லி, கெட்டி. மஞ்சிபலை - வாழை. மஞ்சிமம் - அழகு. மஞ்சிரம் - காலாழி. மஞ்சிரு - கையாந்தகரை. மஞ்சிலிக்கான் - உருத்திர சடைப் பூடு. மஞ்சிலை - செங்கல். மஞ்சில் - பழையவரம் பின்வழி. மஞ்சிறு - கையாந்தகரை. மஞ்சீரம் - வண்ணார் சேரி. மஞ்சு - அழகு, ஆபரணம், இளமை,கட்டில், களஞ்சியம், பனி, முகடு,முதுகு, மேகம், யானை முதுகு,வலி. மஞ்சுகமநன் - நடையழகன். மஞ்சுகமநை - அன்னப்பேடை. மஞ்சுகம் - கொக்கு. மஞ்சுகேசி - கிருட்டினன். மஞ்சுக்கட்டை - மறுமாடி. மஞ்சுபாஷணி - நயவசனி. மஞ்சுலம் - நீர்ப் பாய்ச்சல். மஞ்சுவாணி - இந்திராணி, கௌரி. மஞ்சுளம் - அழகு, மிருது.மஞ்சூஷை, மஞ்சூடை - கோட்டை,பேழை, கூடை, பெட்டி. மஞ்சூரம் - கடலை. மஞ்ஞை - மயில். மஞ்ஞையீர்க்கு - மயிலிறகு. மஞ்ஞையூர்தி - கந்தன். மடக்க - மடிக்க, திருப்ப, மாறிமாறிச்செய்ய, மறுக்க, கீழ்ப்படுத்த,அடக்க, வசப்படுத்த, தடுக்க,நோய் தணிக்க, எதிரெற்ற, பணிவாக்க, முறிக்க, உடற்கட்டுக்குலைக்க. மடக்கடி - கலக்கம், முடக்கு, தந்திரம். மடக்கடிக்காரன் - சூதன். மடக்கம் - அடக்கம், முடக்கு,வளைவு. மடக்கல் - அடக்கல், தடுத்தல்,வளைத்தல். மடக்கியல் - சுரிதகம். மடக்கு - ஓரலங்காரம் இதுவந்தமொழியே மடங்கிவருவது, ஓர்பாத்திரம், பேரகல், மடக்கென்னேவல், மடக்கடிப்பு, முடக்கு,திருப்பு, மடங்குதலுடையது,மாறிமாறி வருதல். மடக்குக்கத்தி - பூச்சாத்தி. மடக்குக்குடர் - ஓர் குடர். மடக்குதல் - மடக்கல். மடக்குப்பிடிக்கத்தி - எழுத்தாணிக்கத்தி. மடக்குமடக்கெனல் - ஒலிக்குறிப்பு. மடக்குவரி - இறைமேலிறை. மடக்கொடி - பெண். மடங்க - வளைய, முடங்க, கோண,சாயமீள, முறுக்க, நெளிய, கீழ்ப்பட, தாழ, தணிய, உக்கிரமடங்க,அமர, தடைபட, வாயடங்க,அடைய. மடங்கடித்தல் - தோற்றோடச்செய்தல், முறியடித்தல். மடங்கலர் - பகைவர். மடங்கலூர்தி - பராசக்தி. மடங்கல் - இடி, இயமன், காலன்,கீழ்ப்படிதல், சிங்கம், தாழை,மீளல், முடங்கல், யுகமுடிவு, வடவாமுகாக்கினி, வியாதிமுடிவு,மடங்குதல், நோய், ஊழித்தீ. மடங்கற்கொடியோன் - வீமன். மடங்கு - அளவு, இழைக்கயிறு,பங்கு, மடங்கென்னேவல், வியாதி. மடங்குதல் - கீழ்ப்படிதல், மீளல்,முடங்கல், அடங்குதல். மடதருமம் - மடபுண்ணியம். மடதி - ஆலங்கட்டி. மடத்தல் - அறியாமையா யிருத்தல். மடத்தனம் - அறியாமை. மடநடை - பதவியநடை, மென்னடை. மடநல்லார் - பெண்கள். மடநோக்கு - எண்ணமுமச்சமுங்கூடிய பார்வை. மடந்தை - பத்தொன்பதாண்டிற் பெண்,பருவமாகாத பெண், பெண்.மடந்தைபாகன், மடந்தைபாதியன் - சிவன். மடப்பத்து - மடத்திற்குரியன. மடப்பம் - அரண்மனையிற் பெண்,ஐஞ்ஞூறு கிராமத்திற்குத் தலைக்கிராம, மகளிர் குணங்களினொன்று. மடப்பளி - ஓர்சாதி, சமயல்வீடு,மடைப்பள்ளி. மடப்பற்று - மடத்திற் பொருள்,மடத்தைச் சார்ந்தது. மடப்பிடி - பெண் யானை.மடமட, மடமடத்தல், மடமடப்பு, மட மடெனல் - ஈரடுக்கொலிக் குறிப்பு. மடமை - அறிவின்மை இஃது பெண்கள் நாற்குணத்து மொன்று,கபடின்மை, புத்தியீனம். மடம் - அறப்புறம், இரதம், கோயில்,சத்திரம், மடமை, முனிவர் வாசம்,பெருங்காயம், அழகு, மென்மை,வேதம் படிக்குமிடம், தருமச்சாலை, இளைப்பாறு மிடம். மடரன் - ஓர்முநி. மடலரிதாரம் - ஓரரிதாரம். மடலாயம் - மடம். மடலிக்க - கோண, மடங்க, சுருங்க,நெளிய, குடலையாக, நெறிக்க. மடலித்தல் - மடங்கித் திரும்புதல். மடலூர்ச்சி - மடலூர்தல்.மடலூர்தல், மடலேறுதல் - மடற்குதிரை யிவர்தல் இஃது அகப்பொருட்டுறையி னொன்று. மடல் - ஈந்து, கமுகு, தாழை, தெங்குபனை, வாழை யிவற்றின்பூமுடி,ஏற்ற மடல், ஓர் பிரபந்தம், ஓலைமடல், காதின்மடல், கைச்சீப்பு,சிறுவாய்க்கால், பனைமட்டைக்கங்கு, பூவிதழ், வாழை முதலியவற்றின் மடல், கண்ணிமை.மடவரல், மடவாள் - இளம்பெண். மடவாமீன் - ஓர்மீன். மடவார் - அறிவீனர், பெண்கள். மடவியர் - பெண்கள். மடவை - ஓர் மீன், கடவுமரம்,துடுப்பு, கவரிறுக்கி, தணக்கு. மடவைக்கெண்டை - ஓர் மீன். மடற்பனை - கங்குப்பனை. மடற்பாளை - பூமடற்பாளை. மடற்றுத்தம் - ஓர் துத்தம். மடன் - அறியாமை, அறிவிலான்,உன்மத்தம். மடன்மா - மடற்குதிரை. மடாதிபதி - மடத்தலைவன். மடாதிபத்தியம் - மடத்தலைமை. மடாரெனல் - ஓரொலிக் குறிப்பு. மடி - அடங்கல், கேடு, சீலை,சோம்பல், சோறு, தாழை, தாழைவிழுது, நோய், பொய், மடங்குதல்,மடிந்தது, மடியென் னேவல்,முலைமேற்றிரள், வயிறு, வலையினருகு, பசுவின் மடி, புலம்பு,ஆசாரம். மடிகம்பு - வலைகம்பு. மடிகால் - கால்முடக்கி சகனத்தின்கீழ் வைத்திருத்தல். மடிக்க - மடக்க, கொல்ல, பேச்சிலே மடக்க. மடிக்குதல் - உபாயமாய்ச் செயித்தல்,கொல்லுதல், மடக்குதல் முடக்குதல். மடிக்குருவி - வெற்றிலை. மடிச்சுக்கட்டி - ஓர் புழு. மடிதல் - கெடுதல், சாதல், மடங்குதல். மடித்தல் - மடிக்குதல், உழக்குதல். மடிபிடி - சண்டை, மடிச்சீலையிற்பிடிக்கும்பிடி. மடிப்பணம் - கைப்பணம். மடிப்பாளி - மடிப்புக்காரன். மடிப்பிச்சை - மடிச்சீலையில் வாங்கும்பிச்சை. மடிப்பிளை - வங்கமணல். மடிப்பு - மடக்கு, மடித்திருப்பது,மோசம், வஞ்சகம். மடிப்புக்காரன் - தீதுசெய்வோன்,வஞ்சகன். மடிப்பெட்டி - கொட்டைப் பெட்டி. மடிப்பை - அடைப்பை. மடிமாங்காய்போடுதல் - பரிதானங்கொடுத்தல், பொய்க்குற்றஞ்சார்த்துதல். மடிமை - சோம்பு. மடியில் - கூடாரம். மடிவிக்க - முனைமடங்கச்செய்ய,கொல்ல. மடிவிடுதல் - மடிதளர்தல் அது பசுமுதலியன சினைக்குறி காட்டல். மடிவித்தல் - மடியச் செய்தல். மடிவு - கேடு, சாவு, சோம்பு, தரித்திரம்,மடக்கம், மடிதல். மடு - ஆற்றினுட்பள்ளம், குளம், மடுவென்னேவல், இறங்கியேறும்வழி. மடுக்க - பற்றி, அடைய, உண்ண,பொறி வழியாற்கொள்ள, விழுங்க. மடுத்தல் - சுத்தியல், நிறைத்தல்,மடிப்புச் செய்தல், வாய் முதலியவற்றா லுட்கொள்ளல், உட்புகுத்தல். மடுப்பு - மடிப்பு, நிறைத்தல். மடை - ஆபரணக் கடைப்பூட்டு,சோறு, துவாரம், தேவதை கட்குப்படைப்பது, நீர்பாயு மடை,மதகு, வாய்க்கால், பலி, ஆணி,மூட்டு வாய், இடைப்படுத்தல். மடைக்கடல் - முகத்துவாரமுள்ளகடல். மடைத்தலை - மடைமுகம், ஆற்றுவரம்பு. மடைத்தனம் - அறிவீனம். மடைத்தொழிலோன் - சமையற்காரன், இவன் அரசர்க்குறுதிச்சுற்றத்தொருவன். மடைத்தொழில் - சமையல்வேலை. மடைநூல் - பாகசாஸ்திரம். மடைபரவுதல் - நிவேதனஞ் செய்தல்,மடைப்பண்டம் பரப்பல். மடைபோடுதல் - மடைப்பண்டம்பரவல். மடைப்பண்டம் - அலங்கார நைவேத்தியம். மடைப்பள்ளி - அடுக்களை, ஓர்சாதி. மடைப்புத்தி - அறிவீனம். மடைமாற்றுதல் - மடைக் கழித்தல். மடைமுகம் - ஆற்றுவரம். மடையசாம்பிராணி - அறிவீனன். மடையப்புத்தி - மடைப்புத்தி. மடையன் - அறிவிலான், சமையற்காரன். மடையான் - ஓர் பறவை. மடைவேலை - சமயல்வேலை, புத்தியற்ற வேலை. மடைவைத்தல் - மடைபோடுதல். மட்கலம் - மண்பாண்டம். மட்கல் - அழுக்கேற்றல், ஒளிமழுங்கல். மட்குகை - மண்குகை, மழுங்குதல். மட்குடம் - மண்குடம். மட்குதல் - மட்கல். மட்சம் - குரோதம், சமூகம்.மட்சிகம், மட்சிகை - ஈ. மட்டக்கோல் - மட்டங்கட்டுங்கோல். மட்டங்கட்டுதல் - சரியாய் நிறுத்தல்,நிதானம் பண்ணல். மட்டசத்தம் - மட்டம். மட்டச்சுறா - ஓர் மீன். மட்டத்துருத்தி - ஓர் விசிறி. மட்டந்தட்டுதல் - ஒப்புரவு தட்டுதல். மட்டப்பலகை - சமனறி கருவி. மட்டம் - அளவு, எல்லை, உத்தேசம்,ஒப்புரவு, கரும்பு, நெல், மூங்கில்,வாழை யிவற்றின் கன்று, கேடகம்,சமம், வாலயானை, வாலக்குதிரை,மூன்றொத் துடைய தாளம்,சாதிக்காய், மிதம், குறைவு. மட்டம்பிடித்தல் - கப்பித்தல், நிதானம்பண்ணல்.மட்டம்வெடித்தல், மட்டம்வைத்தல் - கப்பித்தல். மட்டலகு - ஓர் கருவி. மட்டவேலை - பருமட்டான வேலை. மட்டறிதல் - அளவறிதல், குறிப்பறிதல். மட்டாயுதம் - வாள். மட்டி - ஒழுங்கின்மை, கடன்மட்டி,படைக்கலம், மட்டியென்னேவல், மதிகேடன். மட்கை - சாணி முத்திரை. மட்டிக்க - மண்டலிக்க, வட்டமாக்க,பூச. மட்டிடுதல் - மட்டுக்கட்டுதல். மட்டித்தல் - பூசுதல், மட்டுக்கட்டுதல்,மண்டலித்தல், முறித்தல், அழித்தல். மட்டித்தையல் - பருக்கன்றையல். மட்டிப்பால் - சாம்பிராணி. மட்டியம் - சத்ததாளத் தொன்று. மட்டிலை - பச்சிலை. மட்டு - அவதி, அளவு, எல்லை, கள்,உத்தேசம், தேன். மட்டுக்கட்டுதல் - அளவிட்டறிதல். மட்டுக்கோணம் - சரிகோணம். மட்டுத்தப்பு - அளவுக் கதிகம், நிதானமின்மை. மட்டுத்திட்டம் - சரி நிதானம். மட்டுப்படாமை - அடங்காமை,எட்டாமை. மட்டுப்படுதல் - அளவுபடுதல். மட்டுப்படுத்தல் - அளவுபடுத்தல். மட்டுப்பிரமாணம் - சரியளவு. மட்டுமதியம் - அளவு, நிதானம். மட்டுமரியாதை - ஆசார வுபசாரம். மட்டுமிஞ்சுதல் - மட்டுத் தப்புதல். மட்டை - உடற்குறை, ஓர் பாம்பு,கமுகு, தெங்கு, வாழை, பனையிவற்றின் மட்டை, முட்டாள்,மடல். மட்டைகட்டுதல் - கடகம் முதலியவற்றிற்கு மட்டை வைத்துத் தலைகட்டுதல். மட்டைக்கட்டு - வட்டுத் திரட்சி. மட்டக்குதிரை - மடலாற்செய்த குதிரை. மட்டைக்குறி - ஓர் சாயக்குறி. மட்டைக்கோரை - ஓர் புல். மட்டைச்சொண்டு - பெரிய சொண்டு. மட்டைத்தேள் - திருநீலகண்டன்,பிள்ளைத்தேள். மட்பகைஞன் - குயவன். மட்பாண்டம் - குயக்கலம். மட்பாத்திரம் - மண்பாண்டம். மணக்க - மோக்க, கூட்ட, கலியாணம்பண்ண, கூட, வாசனைவீச. மணக்குடவர் - திருக்குறளுக்கு உரைஎழுதியவர்களி லொருவர். மணக்கோலம் - கலியாணவலங்காரம். மணங்கட்டுதல் - வாசனை சேர்க்குதல். மணங்கல் - பானை, மிடா. மணங்கு - ஆட்டுக் குட்டி, இருவாட்சி, ஓர் நிறை, குருக்கத்தி. மணத்தக்காளி - ஓர் செடி. மணத்தல் - கமழ்தல், கூடல், மோத்தல், வேட்டல். மணந்தட்டுதல் - மணங்கிளர்தல். மணப்பந்தல் - கலியாணப் பந்தல். மணப்பறை - கலியாணப் பறை. மணப்பு - மயப்பு, வாசனை. மணப்பெண் - கலியாணப் பெண். மணப்பொருத்தம் - விவாகத்திற்குரியபொருத்தம் பத்து அவை இராசி,இராசித் தலைவர், இரச்சு, கணம்,திரி தீர்க்கம், தினம் மாகேந்திரம்,யோனி, வசியம், வேதம். மணமகள் - மணவாளி, மனைவி. மணமகன் - புருடன், மணவாளன். மணமண்டபம் - கலியாண மண்டபம். மணவலி - மருக்கொழுந்து. மணமுரசு - விழா முரசு. மணம் - கலியாணம், கூட்டம்,மகிழ்ச்சி, வாசனை, கூடுதல். மணம்பிடித்தல் - எழில் பிடித்தல். மணலக்கம்பம் - பால்வீதி மண்டலம். மணலி - மருக்கொழுந்து, ஓரூர்,மணலிக் கீரை. மணலை - ஓர் மீன். மணல் - வெள்ளை மண். மணல்வாரி - ஓர் நெல், ஓர் புல்,மணல் நீக்குங் கருவி. மணவடை - மணவறை. மணவணி - கலியாண வலங்காரம். மணவறை - பள்ளியறை, மணமண்டபம். மணவறைத்தோழர் - மணமக்கடோழர். மணவாட்டி - மனைவி, மணமகள். மணவாளதாசர் - பிள்ளைப் பெருமாளையங்கார். மணவாளமாமுனி - வைணவப்பெரியாரிலொருவர். மணவாளன் - ஆண் மகன், நாயகன். மணவாளி - புதுமணப்பெண், மாப்பிள்ளை. மணவியது - மணமுடையது. மணவினை - விவாகச் சடங்கு. மணவை - அடுப்பு. மணவோலை - விவாகத்திற்கு வரவழைக்கும் பத்திரிகை. மணற்காளான் - தவளை, மணலிலேமுளைக்குங்காளான். மணற்குன்று - மணற்றிட்டை. மணற்கூகை - தவளை. மணற்கோவை - ஓர் கொவ்வை. மணற்சோறு - மணலாற் சங்கற்பிக்குஞ்சோறு. மணற்பாக்கு - மணலிலிட்டு வைக்கும் பாக்கு. மணற்றரை - மணல்கொண்ட நிலம். மணற்றவளை - தவளையினோர்பேதம். மணற்றாரா - ஓர்வகைத்தாரா. மணாட்டி - மணவாட்டி. மணாளன் - ஆண் மகன், மணவாளன். மணி - அடிக்கு மணி, அழகு, ஆட்டின்களகம்பளம், இரண் டரைநாழிகை கொண்ட நேரம், உருத்திராக்கம், எறி மணி, ஓசை, கண்விழி,கறுப்பு, சங்கு முதலிய வற்றாலாயமணி, தாமரைக் கொட்டை,துளசி, நவமணிப் பொது, நன்மை,நீர்க்கலசம், நென் முதலியதானியம், பருக்கைக்கல், பறவையின்கழுத்தாரம், பெண் குறியினோருறுப்பு, பொன் முதலியவற்றானாய மணி, மருந்துக்கல்,முத்து, யானை மணி, இரத்தினம்,விஷக்கல். மணிகடம் - உத்தாமணி. மணிகண்டன் - சிவன். மணிகம் - நீர்க்குடம். மணிகர்ணிகை - காசியிலுள்ளவோர்தீர்த்தம்.மணிகன்றிகை, மணிகன்னிகை - காசித் தலத்திலோர் தீர்த்தம். மணிகாசம் - கண்ணோயு ளொன்று. மணிகாரகன் - ரத்தங்களை வேகடம்செய்வோன் அல்லது சாணைபிடிப்போன். மணிகாரம் - வெண்காரம். மணிகானனம் - கழுத்து. மணிகூடம் - ஓர் பர்வதம். மணிக்கஞ்சட்டி - மணிச்சட்டி. மணிக்கட்டு - புயத்தின்கீழ், கையினோருறுப்பு. மணிக்காம்பு - தக்காளி. மணிக்காளி - மணித்தக்காளி. மணிக்கிரீவன் - குபேரன் மக்களிலொருவன். மணிக்குடர் - சிறு குடர். மணிக்கூடு - நாழிகை வட்டம்,கடிகாரக்கூடு. மணிக்கோவை - மணிமாலை. மணிசகம் - சந்திரகாந்தம். மணிசரம் - மணிக்கோவை. மணிசேகரம் - யமன், அந்தப்புறம். மணிசௌபாநம் - முத்து முதலியரத்நங்களாற் றொடுத்த ஆரம். மணிச்சட்டி - பெருஞ் சட்டி. மணிச்சோதி - ரத்ந காந்தி, வாயுதேவன் வில். மணிதம் - மணியோசை. மணிதனு - வானவில். மணிதுருவிடுதல் - வேகடஞ் செய்தல். மணித்தக்காளி - ஓர் செடி. மணித்துவீபம் - பாற்கடலிலுள்ளவோர் த்வீபம் அல்லது தீவு. மணித்துவீபன் - அனந்தன். மணிநா - மணியினாக்கு. மணிநாள் - ஒன்பது நாள். மணிந்தம் - கைக்குளைச்சு. மணிபந்தம் - மணிக்கட்டு. மணிபத்திரன் - ஓர் சைனபோதகன். மணிபர்வதம் - ஓர் பர்வதம். மணிபிடித்தல் - தானியம் பிடித்தல். மணிபீஜம் - மாதுளை. மணிபூமி - இரத்தினம், விளைநிலம். மணிபூரகம் - ஆறாதாரத் தொன்றுஅது நாபித்தானம், கொப்பூழிடம். மணிபூரம் - இரைக்குடர், கொப்பூழ். மணிப்பவம் - இருபது. மணிப்புளகு - நெய்க்கொட்டான். மணிப்புறா - ஓர் புறா. மணிப்புன்கு - பொன்னாங்காய். மணிப்ரபை - நைருதி மனைவி. மணிமகுடம் - எட்டின் புறங்காய்போலையின் முடிச்சு. மணிமங்கலம் - ஓர் தலம். மணிமண்டபம் - ரத்நமண்டபம். மணிமந்தம் - இந்துப்பு. மணிமலை - பொன்மலை. மணிமாலை - இலக்குமி, ஒர் பிரபந்தம் அஃது எப்பொருண் மேலும்வெண்பாவிருபதும் கலித்துறைநாற்பதும் விரவிவரச் செய்வது,கழுத்தணிமாலை, தந்தரேகை,பிரபை, முத்துவடம். மணிமான் - சூரியன். மணிமேகலை - பஞ்சகாவியத்தொன்று. மணியகாரன் - விசாரணைக்காரன். மணியம் - மணியகாரன், மணியவேலை. மணியாசம் - துலக்கம், மணியாசப்பலகை. மணியாசி - ஓர் மரம். மணியாசிக்கட்டை - சாந்தழுத்தும்பலகை. மணியாட்டி - பூசாரி. மணியாமணக்கு - பறங்கியாமணக்கு. மணியிலையான் - ஓரிலையான். மணியீரல் - ஓரீரல். மணியூதுதல் - மணிதிரட்டுதல். மணிராககம் - இங்குலிகம். மணிவடம் - அக்கமாலை, இரத்தினமாலை, பாதசாலம், முத்துமாலை,வீரக்கழல். மணிவலை - ஓர் வலை. மணிவீசம் - மாதுளை. மணிவேர் - மணிபோலிடையிடை,திரட்சி விழுந்திருக்கும்வேர். மணீசகம் - சந்திரகாந்தம். மணீவகம் - பூ. மணை - துருவலகு, மணிமுதலியமுட்டு, பாதபடி, மழுங்கல், சிறுபீடம், பருத்தி, மணை, பலகை,வதுவைத் திண்ணை. மணையது - மழுங்கலாயுதம். மண் - அணு, ஒப்பனை, கழுவுதல்,சுட்ட சாந்து, துகள், நிலம், பூமி,மண்ணென்னேவல், மலை,மாட்சிமை, முழவின்மார்ச்சனை. மண்கட்டி - மண்ணாங்கட்டி. மண்கட்டுதல் - கருக்கட்டுதல். மண்கட்டை - உடம்பு, வாணக்குழலினெதிரடைப்பு. மண்கணை - ஓர் பறை, வாச்சியப்பொது. மண்கண்டம் - மட்பார். மண்கலம் - ஓடு, மட்பாண்டம். மண்கல் - செங்கல், வெண்சுக்கான்கல். மண்கிணறு - கற்பாரற்கிணறு. மண்கிண்டுதல் - மண்வேலைசெய்தல். மண்குகை - நிலவறை, மண்ணாற்செய்தகுகை.மண்கும்பம், மண்கும்பி - மண்மேடு. மண்கொத்தளம் - மண்ணாற்செய்தகோபுரம். மண்கொழுத்தல் - மண்மதத்தல். மண்கோபுரக்கல் - செங்கல். மண்சாடி - மட்சாடி. மண்சிலை - கற்காவி. மண்சிவப்பு - இருண்ட சிவப்பு. மண்சீலை - குகையைச்சுற்றும்படிமண்டோய்த்தசீலை. மண்செய்கை - மண்வேலை. மண்சோறுகறி - சிறுபிள்ளைகள்மண்ணாற்சங்கற்பிக்குஞ் சோறுகறி. மண்டகம் - ஓர் சிற்றுண்டி, சர்க்கரைபோடாதபூரி. மண்டகாரகன் - சாராயம் வடிப்போன். மண்டக்கம் - மண்டக்கு. மண்டக்கன் - மண்டக்குப் பிடிப்போன். மண்டக்காள் - மண்டக்கன். மண்டக்கிழுத்தல் - மண்டக்குக்கயிற்றையிழுத்தல். மண்டக்கு - முத்துக்குளிப்பவர்களையிழுக்குங் கயிறு. மண்டக்குக்கயிறு - மண்டக்கன்கையிற் கயிறு. மண்டக்குக்காரன் - மண்டக்காள். மண்டநம் - அலங்காரம், ஆபரணம். மண்டபப்படி - அலங்காரப்படைப்பு. மண்டபம் - மாடம். மண்டம் - அலங்காரம், ஆமணக்கு,தயிரேடு, தலை, மண்டை. மண்டயந்தம் - அலங்காரம், சோறு. மண்டயிலம் - மண்ணுலூறுந்தயிலம்,மண்ணில் வடிக்குந் தயிலம். மண்டர் - படைவீரர். மண்டலகம் - சூரியன் வட்டாகாரம்,பளிங்கு. மண்டலசெயம் - திக்குவிசயம். மண்டலநிருத்தம் - சுற்றியாடு நிருத்தம். மண்டலநிலை - இருகாலும் பக்கல்வளைய மண்டலித்து நிற்றல். மண்டலபுருஷன் - சூடாமணிநிகண்டுசெய்த வாசிரியன். மண்டலமட்டி - சிற்றிலுப்பை. மண்டலமழை - எங்கும்பொழியுமழை. மண்டலமாக்கள் - அரசர். மண்டலமிடுதல் - மண்டலம் வகுத்தல்,மண்டலித்தல், வட்டமிடுதல்,சுற்றிச் சுற்றி வருதல். மண்டலம் - இயந்திரம், இருகாலும்பக்கல்வளைய நிற்குநிலை,உண்டை, குவியல், சூரியமண்டல முதலியன, தேயம்,நகக்குறி, நாடு, நாற்பது நாள், பூமிவட்டம், ஆமணக்கு, கூட்டம்,சக்கரம், பிரதிபிம்பம், பாம்புச்சுற்று. மண்டலம்போடுதல் - மண்டல மிடுதல். மண்டலம்வகுத்தல் - நவக்கிரகமண்டலமிரேகித்தல். மண்டலவந்தாதி - ஈற்றடியிறுதியும்முதலடி முதலுமொன்றாகவருவது. மண்டலவிதி - சக்கரங் கீறுவதற்கானவோர்விதி. மண்டலாகாரம் - வட்டாகாரம், வட்டவடிவு. மண்டலாக்கிரம் - வாள்.மண்டலாதிபதி, மண்டலாதிபன் - ஏகசக்கிராதிபதி. மண்டலாதீசன் - அரசன். மண்டலாத்தம் - அரைவட்டம்.மண்டலாபிடேகம், மண்டலாபிஷேகம் - நாற்பதுநாள் மட்டுக்கு நாள்வட்டம் பண்ணு மபிடேகம். மண்டலாயிதம் - உண்டை. மண்டலார்த்தம் - அர்த்தகோளம்,பாதி விட்டம். மண்டலி - ஓரெலி, ஓர்வகைப்பாம்பு,கூட்டம், நாய் பாம்பு, பூமி,பூனை, மண்டலியென்னேவல். மண்டலிகன் - இருபது யோசனைவிஸ்தாரமான தேசத்தை யாள்வோன், தேசத்தையாள்வோன். மண்டலித்தல் - வட்டமிடுதல். மண்டலிப்பு - வட்டமிடுதல், வட்டம். மண்டலீகரணம் - உருட்டல். மண்டலீகர் - அவ்வத்தேசத்தையாளு மன்னர்.மண்டலேசன், மண்டலேசுபரன், மண்ட லேச்சுவரன் - அரசன், உலகாதிபதி,மண்டலாதிபதி. மண்டல் - நெருங்கல், மண்டுதல்,மிகுதல். மண்டா - இரட்டைக்கருவீட்டி. மண்டி - இருளான் முடங்கிநிற்குநிலை, கலங்கனீர், களஞ்சியம்,கள் முதலியவற்றினடையல்,பெரிய கடை. மண்டிகை - அப்பவருக்கம். மண்டிதம் - சிறுகீரை.மண்டிதனஅலங்கரிக்கப்பட்டவன், புத்தகணாதிபன்.மண்டிபோடுதல், மண்டியிடுதல் - இருகான்முடக்கி நிற்றல். மண்டிரவல் - கைமாற்றாய் வாங்கியது. மண்டிலம் - குதிரை, நடனம், நாடு,போர், வட்டமாயோடல், வட்டம்,கூத்து. மண்டு - மண்டல். மண்டுகம் - தவளை, மண்டூகம். மண்டுகால் - முட்டுக்கால். மண்டுதல் - நெருங்கல், மிகக்குடித்தல்,மிக்குச்செல்லல், தாக்கல்,ஆவலாய்ப் பருகல். மண்டூகசீவன் - தவளைக்கல். மண்டூகபன்னி - அழிஞ்சில். மண்டூகம் - கீச்சுக்கிட்டம், தவளை. மண்டூகராகம் - ஓர் பண். மண்டூகர் - ஓரிருடி. மண்டூகி - பெண்தவளை. மண்டூகை - வேசி. மண்டூரம் - கீச்சுக்கிட்டம், இருப்புக்கறள், பழஞ்செங்கற்கிட்டம். மண்டெரி - பெருந்தீ. மண்டை - இரப்போர்கலம், தலையோடு. மண்டைக்கண் - தாழ்ந்தகண். மண்டைக்கரப்பன் - ஓர் நோய். மண்டைக்குடைச்சல் - தலைக்குத்து. மண்டைக்கோழை - ஓர் கோழைநோய். மண்டைசூலை - ஓர் நோய். மண்டைப்பீனசம் - ஓர் நோய். மண்டையோடு - தலையோடு. மண்டைவியாதி - தலைநோய். மண்டோதகம் - கோலமிடுதல். மண்டோதரி - இராவணன் மனைவி. மண்ண - அலங்கரிக்க. மண்ணகுண்டம் - மண்ணான்மேடை செய்திருக்குமட்டாலை. மண்ணகை - கச்சோலம். மண்ணம் - சுண்ணாம்பு. மண்ணரசு - பூவரசுமரம். மண்ணரிநார் - குயக்கலம்வனைந்தரிகயிறு.மண்ணரியான், மண்ணரிவான் - குயவன். மண்ணரைத்தல் - சோம்பி வீணாயிருத்தல். மண்ணல் - மண்ணுதல். மண்ணவர் - மனிதர். மண்ணன் - மதிகேடன். மண்ணா - ஓர் மீன். மண்ணாங்கட்டி - மண்கட்டி. மண்ணாசை - ஆசைமூன்றினொன்று. மண்ணாள்வோன் - அரசன். மண்ணி - மந்தன். மண்ணியற்று - மண் பாத்திரம். மண்ணிலம் - பூமி. மண்ணில்வேந்தன் - அரசமரம், முடிதும்பை, வெற்றிலை. மண்ணினாதம் - உவர்மண். மண்ணின்பிரட்டு - பேரோசனை. மண்ணின்வத்தனம் - இராசவத்தனக்கல். மண்ணீடு - திண்ணை, மாடம், மூடுகாந்திட்டவீடு, வேயாமாடம். மண்ணீட்டாளர் - குயவர், சிற்பாசாரியர். மண்ணீரல் - மண்ணிர வீறல். மண்ணீர் - கழுவு நீர். மண்ணுடையான் - அரசன், குயவன். மண்ணுணி - ஓர் பாம்பு, மந்தன். மண்ணுதல் - அலங்கரித்தல், கழுவல்,செய்தல், முழுகுதல், ஒப்பமிடல். மண்ணுலகு - பூமி. மண்ணுறுத்தல் - அலங்கரித்தல்,நீராட்டல். மண்ணை - அறிவிலான், இளமை,பசாசு, வாலுளுவை. மண்ணைத்தனம் - அறியாமை. மண்ணைமணைத்தல் - காரசாரமற்றிருத்தல். மண்ணையன் - மதிகேடன். மண்ணொட்டர் - மண் சுமப்போர். மண்ணோரம் - பக்ஷபாதம். மண்ணோர் - மனிதர்.மண்பாண்டம், மண்பாத்திரம் - மட்கலம். மண்பார் - மண்கண்டம். மண்பிடி - மட்பசை. மண்பொதுத்தந்தை - பிரமன். மண்மகள் - பூமிதேவி. மண்மகள்புதல்வர் - வேளாளர். மண்மக்கள் - சூத்திரர், வேளாளர். மண்மலி - மருக்கொழுந்து.மண்மழை, மண்மாரி - புழுதிமழை. மண்வெட்டி - ஓராயுதம், குயவன். மதகந்தை - மஸ்துள்ளது. மதகமனம் - குழுக்கடா. மதகம் - காஞ்சிரை. மதகயம், மதகரி - ஆண்யானை. மதகரிக்கணை - யானைத்திப்பிலி. மதகு - சலதாரை, ஏரி நீர் வெளியேபோகும் வழி. மதக்கம் - ஆகாசம், மயக்கம், வதக்கம். மதங்கஜம் - யானை. மதங்கநாதன் - நவநாதசித்தரிலொருவன். மதங்கமம் - யானை. மதங்கலை - ஓர் மலை. மதங்கம் - ஓர் பறை, ஓர் மலை,கலம்பகவுறுப்புப் பதினெட்டினொன்று, முகில், யானை,மத்தளம். மதங்கர் - ஓர் முனி, பாணர். மதங்கன் - ஓர் முநி, சண்டாளன்,முருகன். மதங்கி - காளி, பதினாறு வயதுப்பெண், பாடுவாள், பார்வதி. மதசலம் - மத நீர். மதசாநம் - அன்னப்பறவை. மதசாரம் - இலவு. மதஸ்தலம் - மதுக்கடை. மதத்தல் - கொழுத்தல், செருக்குதல்,மயங்குதல், வெறித்தல்.மதஸ்தன், மதத்தன் - சமயவாதி. மதஸ்தானம் - மதஸ்தலம். மதநகோபாலன் - ஸ்ரீ கிருஷ்ணன். மதனம் - கடைதல். மதனன் - மன்மதன். மதநியை - மல்லிகைக்கொடி. மதநீர் - மதசலம். மதபேதி - சமயபேதி. மதப்பிரயோகம் - மதம்பொழில். மதப்பு - கொழுப்பு, செருக்கு, மயக்கு. மதப்பூ - மராட்டி மொக்கு. மதமடு - வெள் வெங்காயம். மதமதப்பு - மிகு மதப்பு. மதமதெனல் - ஈரடுக்கொலிக் குறிப்பு,சுரணைகுன்றல், மதமுறல். மதமத்தகம் - கஞ்சா. மதமத்தம்பூ - ஊமத்தை. மதமத்தன் - மதத்தினால் மயங்கிக்கிடப்போன். மதமலை - யானை. மதமெடுத்தல் - மதத்தல், மதமடக்குதல். மதமொய் - யானை. மதம் - அறிவு, கருத்து, கன்மதம்,கொழுப்பு, சந்தோஷம், சமயம்,சம்மதம், செருக்கு அஃது உட்பகையாறி னொன்று, தாது, நாவிச்சட்டம், நோக்கம், பெருமை,பைத்தியம், போதனை, மதாளிப்பு,மஸ்துள்ளது, மாயை யாக்கைபதினெண் குற்றத்து ளொன்று,யானைமதம், வலி, விகார மெட்டினுமொன்று, விருப்பம், வெறி,கொள்கை, உடன்பாடு, மிகுதி. மதம்பாய்சுவடு - மதநீர் பாயுஞ் சுவடு. மதயந்தி, மதயந்திகை - ஓர் மல்லிகை. மதரபன்னி - வட்டத்திருப்பி. மதராகன் - சேவல், மன்மதன். மதர் - ஆச்சல், களிப்பு, செருக்கு,மதரென்னேவல், மிகுதி. மதர்த்தல் - களித்தல், செழித்தல்.மதர்ப்பு, மதர்வு - அழகு, ஆசைப்பெருக்கம், இடம், இறுமாப்பு,செழிப்பு, மிகுதி, வலிமை, மகிழ்வு. மதர்வை - மயக்கம். மதலம் - வெள்ளுள்ளி. மதலிகை - ஆபரணத்தொடக்கு,வடிவு, தூக்கம். மதலிங்கம் - அமுக்கிறா. மதலை - கொடுங்கை, கொன்றைமரம், சரக்கொன்றை, தூண்,பிள்ளை, மரக்கலம், மழலை. மதவிருத்தம் - யானை. மதவு - மதகு. மதவெறி - அகங்காரம், இரத்தவெறி,காமவெறி, குடிவெறி, மார்க்கவெறி. மதளை - மழலை. மதனகாகுரவம் - புறா. மதனகாமியப்பூ - ஓர் சரக்கு. மதனசலாகை - ஓர் மருந்து, பெடைக்குயில். மதனசாத்திரம், மதனநூல் - இலீலை,நூல் இதுகலை ஞான மறுபத்துநான்கி னொன்று. மதனபாடகம் - குயில். மதனமோஹநன் - ஸ்ரீ கிருஷ்ணன். மதனம் - ஈ, கடைதல், காமம், தேன்மெழுகு, மஸ்து, மருக்காரை,மனக்கலக்கம், மௌனம் இதுபஞ்ச பாணாவத்தைக் குணங்களினொன்று, வசந்தகாலம். மதனலீலை - காம விளையாட்டு. மதனன் - காமன். மதனாங்குசம் - குய்யம், நகம். மதனாயுதம் - குய்யம். மதனாலயம் - குய்யம், தாமரை. மதனாவத்தை - பிரிவு. மதனி - மைத்துனி, அண்ணன்மனைவி. மதனை - கள். மதனோற்சவம் - வேனில் விழா. மதனோற்சவை - அரம்பை. மதன் - அழகு, கலக்கம், காமன்,மாட்சிமை, வலி, வளமை,செருக்கு, மிகுதி, அறியாமை. மதாசாரம் - சமயவொழுக்கு. மதாணி - ஆபரணம், பதக்கம். மதாத்தியயம் - மதுவினான்வரு நோய். மதாநுசாரம் - சமயத்தைக் கைக்கொள்ளுதல். மதாந்தரம் - மதபேதம். மதாபிமானி - தன் சமயமே மெய்யெனக் கொள்வோன். மதாப்பு - மதஜலம். மதாமத்தன் - மதோன்மத்தன். மதாமத்து, மதாமஸ்து - மிகவெறி,வெறுப்பின்மை. மதாம்பரம் - இந்திரன் யானை. மதாரம் - கஸ்தூரி, பன்றி, யானை,யானை மைதுனம். மதாரன் - எத்தன், தூர்த்தன். மதார் - மதர். மதாலம் - கொன்றை. மதாலாபி - குயில். மதாவளம் - யானை. மதாளித்தல் - ஓங்கி வளர்தல். மதாளிப்பு - செழிப்பு. மதானுசாரியர் - சமயநிலை யனுசரிப்போர். மதி - அறிவு, கற்கடகவிராசி, சங்கை,சந்திரன், ஞாபகம், நிதானம்,பானபாத்திரம், புத்தி, மதியென்னேவல், மாதம், முன்னிலையசைச்சொல் (உ.ம்) சென்மதி,வணக்கம், விருப்பம், குபேரன், புத்தி,காசிபர் பதின் மூன்று மனைவிகளிலொருத்தி, மனிதரைப் பெற்றவள். மதிகம் - மோர். மதிகாந்தி - காஸ்மீரப்படிகம், பளிங்கு. மதிகூர்மை - இந்துப்பு. மதிகேடன் - மூடன். மதிகேடு - அறிவின்மை. மதிக்கணம் - கணமெட்டி னொன்றுஅது நிரைநேர் நேரெடுத்து வருகிறது,சந்திரகணம். மதிக்கலை - பதினாறு. மதிக்கிராக்கிரம் - மதுக்கடை. மதிசகன் - மன்மதன். மதிதம் - மோர். மதிதனு - பொன்மணல். மதிதாக்னி - கடைந்தெடுத்த நெருப்பு. மதிதிசை - வடக்கு. மதித்தல் - எண்ணல், கடைதல்,கணித்தல், கருதல், கொழுத்தல்,வரையறுத்தல். மதிநாள் - மிருகசீரிடம். மதிபதிச்சம் - வாலுளுவை. மதிப்பகை - இராகு, கேது. மதிப்பிரமம், மதிப்பிராந்தி - பிழை, மதிமயக்கம். மதிப்பு - மதித்தல். மதிமகன் - சந்திரனுக்கும் உரோகணிக்கும் பிறந்தபிள்ளையாகியபுதன். மதிமணல் - வெள்ளிமணல். மதிமயக்கம் - புத்திமயக்கம். மதிமயக்கி - திகைப்பூண்டு, கொன்றை.மதிமயங்கல், மதிமயங்குதல் - புத்திகெடுதல். மதிமேகக்கல் - மந்தாரச்சிலை. மதிமோசம் - புத்திமோசம். மதியகநவம் - மாமரம். மதியம் - கணிசம், சந்திரன், நடு,மத்தியானம். மதியழிவு - அறிவுகேடு.மதியாணி, மதியாணிக்கட்டை - நுகத்தினடுவாணி. மதியிலி - மதிகேடன். மதியீனம் - புத்தியீனம். மதியுணி - இராகு கேது. மதியுள்ளான் - ஓர் ஞானியரசன். மதிரம் - மது. மதிராக்ருஹம் - கள்விற்கும் வீடு. மதிராட்சி - பெண். மதிரை - கள், குபேரன் மகள். மதிலாம்பல் - சீந்தில். மதிலுண்மேடை - கொத்தளம். மதிலுறுப்பு - மதிலின் சித்திரம். மதில் - இஞ்சி, மதிள். மதில்காத்தல் - பகைவர் மேலிடாமலுப் பரிகையைக் காவல் செய்தல், இது புறப்பொருட்டுறைகளினொன்று. மதில்வளைத்தல் - மாற்றாருப்பரிகையைச் சூழ்தல் இது புறப்பொருட் டுறைகளினொன்று. மதிவல்லி - கொத்தான்கொடி. மதிவல்லோர் - மந்திரிமார். மதிவாணர்நாடகத்தமிழ்நூல் - கடைச்சங்கமிரீஇய பாண்டியருட் கவியரங்கேறிய மதிவாணர்செய்தநூல். மதிவாம்பல் - சீந்தில். மதிள் - சுற்றுச்சுவர், இஃது இராசசின்னத் தொன்று. மதிற்சுற்று - மதிற்புறம். மதினி - மதனி, தமையன் மனைவி. மது - அசோகு, அதிமதுரம், அமுதம்,இருப்பைப்பூத் திராவகம், உருசி,ஓரரக்கன், கள், சித்திரை மாதம்,சீனி, தேன், நீர், பால், மகரந்தம்,மஸ்துள்ளது, வசந்த காலம்,மயக்கமுள்ளது. மதுகண்டம் - குயில். மதுகந்தம் - இலுப்பைமரம், மகிழமரம். மதுகம் - அதிமதுரம், இருப்பை,எட்டி மரம், காஞ்சிரை, தரா,தித்திப்பு, துத்தநாகம். மதுகரம் - ஆண்வண்டு, கள், தேனீ,பழம், வச்சநாபி, வண்டு. மதுகரன் - அன்பன். மதுகாயநம் - குயில். மதுகாரி - தேனீ. மதுகாரை - ஓர் பூடு.மதுகுக்குடிகை, மதுகுக்குடீ - எலுமிச்சை. மதுகேசடம் - மதுகாரி. மதுகை - வலி, வெற்றி, அறிவு. மதுகைடபன் - ஓரசுரன். மதுகோஷம் - குயில். மதுக்கிரமம் - தேன்கூடு. மதுக்கிருது - தேனீ. மதுக்கெண்டை - ஓர் மீன். மதுக்கோஷம் - குயில், தேன்கூடு.மதுசகன், மதுசகாயன் - காமன். மதுசாரதி - மந்மதன். மதுசாரன் - மதுசகன். மதுச்சிஷ்டம் - மெழுகு. மதுசுவரம் - குயில். மதுசூதனன் - திருமால். மதுஸ்மிகி - பறங்கிச்சக்கை. மதுச்சாவர் - பெருங்குரும்பை. மதுணம் - திப்பிலிமூலம். மதுதிருமணம் - கரும்பு. மதுதீபன் - காமன். மதுதூதம் - மாமரம், மது, தேன், கள். மதுதூலி - கருப்பஞ்சாற்றுப்பாணி. மதுத்துருமம் - இலுப்பைமரம். மதுநாலிகேரம் - ஓர்வகைத் தெங்கு.மதுநேதிரு, மதுநோலேகம் - தேனீ. மதுபதி - காளி, யோகினி. மதுபம் - கள், வண்டு. மதுபருணிகை - அவுரி, ஓர் பூடு. மதுபர்க்கம் - தயிர், நெய், பால்முதலியவற்றோடு கூடிய உணவு. மதுபர்ணிகை - சீந்தில். மதுபலம் - ஓர்வகைத் தெங்கு. மதுபலி - காளி. மதுபன்னி - சீந்தில். மதுபாயி - வண்டு. மதுபானம் - சுராபானம். மதுபானி - சுராபானி. மதுபீஜம் - மாதுளை. மதுபுரி - மதுராபுரி. மதுப்பிரியன் - பலராமன். மதுமதனன் - விட்டுணு. மதுமதி - ஓர் நதி. மதுமத்தை - ஓரூமத்தை. மதுமல்லி - இரட்டை மல்லிகை. மதுமல்லிகை - அடுக்கு மல்லிகை. மதுமாமிசம் - கள்ளும் இறைச்சியும். மதுமூலம் - ஓர் கிழங்கு. மதுரகம் - இலுப்பை. மதுரகவி - திருமால்தொண்டரிலொருவர், நாற்கவியி னொன்று,அது பொருட்செல்வம், சொற்செல்வம், தொடை, தொடைவிகற்பம், செறிய உரூபக முதலியவலங்காரத்தோடு இன்னோசைத்தாய் அமுதமுறப் பாடுங்கவி. மதுரசப்பாத்து - பெருங்காயம். மதுரசப்பாலை - பெருங்காயம். மதுரசப்பீலி - பெருங்காயம். மதுரசப்பீலு - பெருங்குரும்பை. மதுரசம் - இனிமை, கரும்பு, கொடிமுந்திரிகை, சாராயம், சொற் சுவை,பனைப்பொது, முந்திரிகை. மதுரசம்பீரம் - இன்னெலுமிச்சை. மதுரசை - பெருங்குரும்பை. மதுரபாகம் - கமுகு.மதுரபாடணம், மதுரபாஷணம், மதுர பாடனம் - கலைஞான மறுபத்துநான்கினொன்று, சாதுரியம்,வாயாற் பாடல். மதுரம் - அதிமதுரம், இனிப்பு, ஓர்கவி, கொடிமுந்திரிகை, சமனிசை,செஞ்சந்தனம், தித்திப்பு, துத்தநாகம், நஞ்சு, மதுரை, முந்திரிகை, முளை, அழகு, பிரியம். மதுரவசனம் - நயவசனம். மதுரவல்லி - சர்க்கரைவள்ளி. மதுரவள்ளி - வத்தாலைக்கொடி. மதுராபுரி - மதுரைப்பட்டினம். மதுராலாபை - நாகணவாய்ப்புள். மதுரித்தல் - உருசித்தல், தித்தல். மதுரிபு - விட்டுணு. மதுரிப்பு - உருசி. மதுரேசன் - கிருட்டினன், பாண்டியன். மதுரை - இனிமையானது, ஓர் நகரம்,கள், மதுரவஸ்து.மதுரை அளக்கர்ஞாழலார் மகனார் மள்ளனார் - ஒரு புலவர்.மதுரைஅறுவைவாணிகன் இளவேட்டனார் - புறநானூறு பாடிய புலவரிலொருவர். மதுரைஇளங்கண்ணிக்கௌசிகனார் - புறநானூறு பாடிய புலவரிலொருவர்.மதுரை ஓலைக் கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார் - புறநானூறுபாடிய புலவரி லொருவர். மதுரைக்கணக்காயனார் - புறநானூறுபாடிய புலவரி லொருவர். மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார் - நக்கீரர். மதுரைக்கள்ளிற்கடையத்தன் வெண் ணாகனார் - புறநானூறு பாடியபுலவரிலொருவர். மதுரைக்காஞ்சி - பத்துப்பாட்டிலொன்று. மதுரைக்கூலவாணிகன்சாத்தனார் - சாத்தனார். மதுரைக்கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் - சாத்தனார். மதுரைத்தமிழநாயனார் - திருவள்ளுவமாலை சொல்லிய ஓர் சங்கப்புலவர். மதுரைத்தமிழாசிரியர் செங்குன்றூர் கிழார் - திருவள்ளுவமாலை பாடிய கடைச்சங்கப் புலவரி லொருவர். மதுரைத்தமிழ்க் கூத்தனார் - புறநானூறு பாடிய புலவரிலொருவர். மதுரைநக்கீரனார் - புறநானூறு பாடியபுலவரிலொருவர். மதுரைப்படைமங்கமன்னியர் - புறநானூறு பாடிய புலவரிலொருவர். மதுரைப்பாலாசிரியனார் - ஓர்சங்கப்புலவர். மதுரைப்பெருமருதனார் - ஓர்சங்கப்புலவர். மதுரைமருதனிள நாகனார் - புறநானூறு பாடிய புலவரிலொருவர், இறையனாரகப்பொருளுக்குநக்கீரருக்கிரண்டாவதாக உரையியற்றியவர். மதுவேளாசான் - புறநானூறு பாடியபுலவரிலொருவர். மதுரைமாதேவி - மீனாட்சிதேவி. மதுரையாசிரியன்மாறனார் - இடைச்சங்கப் புலவருளொருவர். மதுரோதகம் - நல்லதண்ணீர்க் கடல். மதுர்ச்சி - பொன்னிமிளை. மதுலம் - மஸ்துள்ள பொருள்.மதுலேகம், மதுலேகி - வண்டு. மதுலோலுபம் - வண்டு. மதுவடித்தல் - மதுபானங் காய்ச்சிவடித்தல். மதுவம் - கள், வண்டு. மதுவனம் - குயில். மதுவீசம் - மாதனை. மதுனி - மைத்துனி. மதூகம் - இருப்பை, எட்டிமரம்,வண்டு, காஞ்சிரை. மதூகரம் - வண்டு. மதூகவலர் - இலுப்பைப்பூ. மதூச்சிட்டம் - தேனீமெழுகு. மதூலி - அதிமதுரம், மாமரம். மதோன்மத்தர் - மிகு களிப்புடையோர், மிகுவெறியர். மத்குணம் - மூட்டுப்பூச்சி, யானை. மத்தகஜம் - மதயானை. மத்தகமூலம் - கழுத்து. மத்தகம் - சென்னி, நெற்றி, பொல்லாநிலம், யானைமத்தகம். மத்தகாசம் - கண்ணோயினொன்று. மத்தகாசி - மேன்மையுடையாள். மத்தகாசிநி - உத்தம ஸ்த்ரீ.மத்தகீசம், மத்தகீசன் - யானை. மத்தகுணம் - மதகுணம், யானை. மத்தக்காளி - ஓர் பூடு. மத்தங்காய் - ஊமத்தங்காய். மத்தமாதங்கம் - மதயானை. மத்தங்காய்ப்புல் - ஓர் புல். மதப்பிரமத்தன் - மிகு களிப்புடையோன், மிகு வெறியன். மத்தம் - எருமைக்கடா, களிப்பு,குயில், பூமத்தை, மதம், மத்து,வெறி, ஊமத்தை. மத்தவாரணம் - அத்தவட்டத் தலையணை, நந்தன வனம், பாக்கு,வெற்றிலைத்து வையல், மதயானை, மேல்வீட்டுத் தாழ்வாரம். மத்தளம் - ஓர் பறை. மத்தனம் - கடித்தல், கடைதல்,தேய்த்தல். மத்தனலிங்கம் - மருக்காரை. மஸ்தன், மஸ்தான் - புலன் வேறுபட்டிருப்போன், பைத்தியக் காரன். மத்தாடி - கருவூமத்தை. மத்தாப்பு - ஓர் வாணம். மத்தி - நடு. மஸ்தி - எலும்பு. மத்திகை - குதிரைச்சம்மட்டி,கூடம், பூமாலை, விளக்குத் தண்டு. மத்திக்காய் - ஓர் காதணி. மத்தித்தல் - கடைதல், தேய்த்தல். மத்திபதீபம் - நடுநிலை விளக்கு இதுதீபிகாலங்காரத் தொன்று. மத்திபம் - குறை, மத்திமம். மத்திமகண்டம் - நவகண்டத் தொன்று. மத்திமகூர்மை - திலாலவணம். மத்திமசரீரம் - அயிராவதம், காமதேனுமுதலியன. மத்திமதானம் - நடுத்தரமான வீகைஇது மூவகைக் கொடையினொன்று. மத்திமதீபம் - ஓரலங்காரம். மத்திமபட்சம் - நடுத்தரம். மத்திமபூமி - உட்டணமுஞ் சீதளமுஞ்சமமான பூமி. மத்திமம் - இடை, குறைவு, சமனிசைஇது மூவிசையி னொன்று, நடு. மத்திமன் - நடுத்தரமானவன், நடுவுள்ளவன். மத்திமை - நடுவிரல், நான்கு வாக்கினொன்று. மத்தியகந்தம் - மாமரம். மத்தியட்சம் - நடுநியாயம். மத்தியதேசம் - குருக்கேத்திரத்திற்குத்தெற்கும் அளகபாத்திற்கு வடக்கும் இமயத்திற்கு மேற்கும் விந்தத்திற்குக் கிழக்குமாகவுள்ள பூமி. மத்தியஸ்தம் - மத்தியட்சம், நடுநியாயம். மத்தியஸ்தலம் - இடை. மத்தியஸ்தன் - நடுநியாயக்காரன். மத்தியஸ்தை - நடுநிலை. மத்தியந்தனமுனிவர் - வியாக்கிரபாதருடைய பிதா. மத்தியபானம் - மதுபானம். மத்தியசங்கிரகம் - பிறர்மனைக்கலப்பு. மத்தியபூமி - நிலவுலகம். மத்தியமண்டபம் - மதுநுரை. மத்தியமபிருதகன் - கமக்காரன். மத்தியமம் - இடை, சத்த சுருதியினொன்று, நடுவிரல், மத்தி. மத்தியமாவதி - ஓரிராகம். மத்தியமிகை - கன்னிப் பெண். மத்தியமை - குமரி, நடுவிரல். மத்தியம் - இடை, கள், தீழ்ப்பு, நடு,மேற்கு, விபரீத சாதனை. மத்தியராத்திரம் - நள்ளிரவு. மத்தியலோகம் - பூலோகம். மத்தியலோகேசன் - அரசன். மத்தியவிருத்தம் - உந்தி. மத்தியாமோதம் - மகிழமரம். மத்தியானம் - உச்சிப்பொழுது. மத்தியை - இடை, ஓரிராகம், காமமுநாணமுஞ் சமமாகவுள்ளவன்,நடுவிரல். மத்திரம் - சந்தோஷம். மத்திராகரணம் - பிறவி மயிர் களைதல். மத்திரன் - மத்திர தேசத்தரசன். மத்திரிப்பு - சினம். மத்திரை - சுமத்திரை, பாண்டுவின் மனைவி. மத்திவிருத்தம் - மத்திய விருத்தம். மத்து - ஊமத்தை, தயிர்முதலியகடையுமத்து. மஸ்து - தயிர், பைத்தியம், வெறி,தயிர்ச் சலம், கொழுப்பு. மத்துமலை - மந்திரமலை. மத்துவமதம் - சைவம். மத்துவம் - இலகிரி, மத்துவமதம். மத்துவன் - சிவன். மத்துவாசவம் - பன்னீர். மத்துவாசாரியார் - துளுவப் பிராமணர், துவைத மத ஸ்தாபகர். மத்தேபகமநை - மதயானைபோல்நடப்பவள். மத்தேபம் - மதயானை. மத்தை - ஊமத்தை, மஸ்துள்ளது,மத்தங்காய். மநுஸ்மிருதி - ஸ்மிருதிகள் பதினெட்டனுள் ஒன்று. மந்தகதி - தாமத நடை.மந்தகாசம், மந்தகாசியம் - கயரோகம்,புன்னகை. மந்தகாமி - பையநடப்பவன். மந்தகேந்திரம் - கிரக நடையினொன்று. மந்தக்குணம் - சமியாமையினால்வருமோர் நோய், விபரீதமற்றகுணம். மந்தக்கொதி - ஓர் நோய். மந்தசம் - வெண்ணெய். மந்தசனனி - சனீச்சுரன் றாய். மந்தசானம் - அக்கினி, சீவன், நித்திரை. மந்தசைலம் - மந்தர மலை. மந்தணம் - இரகசிய ஆலோசனை,கடைதல். மந்ததண்டகம் - தயிர்கடை தறி. மந்ததரம் - சோம்பு, அதிகமந்தம். மந்தநகடி - தயிர்கடை தாழி. மந்தப்படுதல் - அசீரணித்தல், அவிவேகப்படுதல், கூர்மையற்றுப்போதல். மந்தப்புத்தி - அவிவேகபுத்தி. மந்தமதி - மந்தஅழிவு. மந்தமா - யானை. மந்தமாருதம் - சிறுதென்றல். மந்தம் - அழித்தல், அற்பம், அசீரணம், உலகழிவு, ஓர் நோய், கடைதல், கண்ணோயினொன்று,கூர்மை யின்மை, சோம்பல்,பீழை, மத்து, மெல்லெனவு,வெறி, மேன்மை, அறிவின்மை,கூர்மையின்மை. மந்தரம் - அறிவின்மை, ஓர் மலை,கீழ்மை, கோட்டை, கோபம்,சோம்பு, தடிப்பு, தடை, தயிர்கடைதறி, தேவலோகம், பருமை,பழம், பளிங்கு, பொக்கிஷம்,மந்தாரம், மாலை, வெண்ணெய்,மந்த இசை. மந்தரன் - ஒற்றன், சோம்பன். மந்தரை - கைகேசியின் வேலைக்காரி, விரோசனன் புத்திரி. மந்தவசாரம் - சனிக்கிழமை. மந்தவரை - மந்தாரத்தம். மந்தவாரம் - சனிக்கிழமை.மந்தவிசை, மந்தவோசை - மெல்லியவோசை இது மூவிசையினொன்று. மந்தனம் - அழித்தல், ஆலோசனை,கடைதல், புகழ், யானைமுகபடாம். மந்தனி - தயிர்கடை தாழி. மந்தன் - கூர்மையில்லான், சனி, நமன். மந்தாகம் - புகழ். மந்தாகினி - அறுபதாண்டுள்ளவள்,கங்கை, தேவ கங்கை.மந்தாசம், மந்தாசியம் - புன்சிரிப்பு,வெட்கம். மந்தாட்சம் - வெட்கம். மந்தாயு - அற்பாயுசு. மந்தாரகாசம் - ஓர் நோய். மந்தாரகாந்தி - பிடாலவணம். மந்தாரகெங்கையோன் - துரிசு. மந்தாரக்கல் - ஈரற்கல். மந்தாரக்கொன்றை - ஓர் கொன்றை. மந்தாரங்கட்டுதல் - மந்தாரம் போடுதல். மந்தாரசு - வெள்ளெருக்கு. மந்தாரச்சிலை - ஓர் மருந்துக் கல். மந்தாரபீதம் - பித்தளைமலை. மந்தாரமஞ்சி - சூதபாஷாணம். மந்தாரமேரு - தொட்டி பாஷாணம். மந்தாரம் - ஐந்தருவி னொன்று,செம்பரத்தை, பூங்காரம், மப்பு,முண்முருக்கு, செவ்வகத்தி. மந்தாரித்தல் - பூங்காரம் போடல். மந்தாரிப்பு - பூங்காரம். மந்தாரை - ஓர் பூச்செடி. மந்தார்த்தம் - சூரியனது மையத்திருந்து வேறொரு கிரகத்திற்குள்ள தூரவளவு. மந்தானம் - மத்து. மந்தி - ஆடுதின்னாப்பாளை, கருங்குரங்கின் பெண், குரங்க, பெண்குரங்கு, பெண்முசு, மந்தியென்னேவல், வண்டு. மந்திட்டி - மஞ்சிட்டி. மந்தித்தல் - மந்த மடைதல், சீரணம். மந்திப்பு - மந்தம். மந்திமூலைத்தலைவாரை - ஓர்தலைவாரை தடைப்படுதல்.மந்திரகாஷாயம், மந்திரகாவி - ஓர்காவிப் புடைவை. மந்திரகிருது - மந்திரி. மந்திரகூடம் - கருங்கல். மந்திரகூடன் - ஒற்றன். மந்திரகூர்மை - இந்துப்பு. மந்திரக்கூறை - மணக்கூறை. மந்திரசஞ்சீவி - இந்திரகோபம். மந்திரசத்தி - மந்திரப்பலன். மந்திரசாத்திரம் - மந்திர வித்தை இதுகலைஞான மறுபத்து நான்கினொன்று. மந்திரசிகுவன் - தீ. மந்திரசித்தி - மந்திரத்தான் வரும்பேறு. மந்திரசெபம் - மந்திர வுச்சாரணம். மந்திரதன் - உபாத்தியாயன். மந்திரதாபனம் - மந்திர விதியுடன்கூடிய தாவிப்பு. மந்திரதாரணை - நவதாரணையினொன்று அது பிரபஞ்சமனைத்துமாயும் அவற்றிற் கதிட்டானமாயு மிருப்பவன், சிவனன்றிவேறொன்றல்ல வெனக் கொண்டுபௌராணிக மந்திரத் தாற்சிவனைத் தியானித்தல்.மந்திரத்தம்பம், மந்திரத்தம்பனம் - மந்திரத்தாற் றம்பித்தல். மந்திரஸ்நாநம் - ஏழ்வகைஸ்நானத்தொன்று அதுமந்திர நீர்ப்புரோட்சணம். மந்திரதீதினி - தீ. மந்திரநாயகர் - மந்திரதேவர். மந்திரபசு - பூனை. மந்திரபூதாத்துமன் - கருடன். மந்திரப்பயிற்சி - மந்திரப் பழக்கம். மந்திரப்பிரயோகம் - மந்திரத்தாற்பிரயோகித்தல். மந்திரப்பொருத்தம் - அவ்வவர்க்குரிய தேவதைகளின் மந்திரம்பொருந்துதல். மந்திரமுருவேற்றுதல் - மந்திரமுச்சாரணம் பண்ணுதல். மந்திரமூர்த்தி - மந்திரதேவர். மந்திரம் - ஆலோசனை, இராசமனை, உபநிடத முப்பத்திரண்டினொன்று, உள், எண்ணல், ஓர்தேயம், கடல் கள்ளு, குகை,குதிரைக் கூட்டம், குதிரைப் பந்தி,கோயில், தாழ்த்திசை, நாப்புடைபெயரா துச்சரித்தல், பொருப்பு,வீடு, வேதம், இரகசிய மாகப்பேசுதல் மந்திரவாதம் - ஓர் சமயம். மந்திரவாதி - மந்திரசமயி, மந்திரவித்தைக்காரன். மந்திரவாள் - அந்தரங்கவாள், அரசியற்குரியவாள். மந்திரவித்தை - மந்திரசாத்திரம்,மந்திரோபாசனை. மந்திராசரணை - மந்திரஞ் செபித்தல். மந்திராட்சதை - மஞ்சளரிசி. மந்திராலோசனை - இரகசியாலோசனை. மந்திரி - குபேரன், சுக்கிரன், தந்திரி,திராய், தேர்ச்சித் துணைவன்இவன் அரசர்க்குக் குழுவிலொருவன், அரசர்க்குத் துணைவரினுமொருவன், புதன், மந்திரியென்னேவல், வருங்காரியஞ்சொல்வோன், வியாழம், அதிவிடையம். மந்திரித்தல் - செபித்தல். மந்திரித்தனம் - மந்திரிக்குரிய தன்மை. மந்திரித்துவம் - மந்திரித்தனம். மந்திரை, மந்திரம் - வீடு. மந்திரோச்சாரணம் - மந்திர வுச்சரிப்பு. மந்திரோபாசனை - மந்திராசரணை. மந்தினி - தயிர் கடைதாழி. மந்தீபவம் - அறியாமை, சோம்பு. மந்து - அரசன், காய்வேளை, தப்பிதம்,மனிதன். மந்துரம் - குதிரைப்பந்தி. மந்துரை - தொழுவம், படுக்கை,குதிரைப்பந்தி. மந்தை - ஆடுமாடிவற்றின் கூட்டம். மந்தைக்கல் - ஆவுரிஞ்சுதறி. மந்தையன் - அவிவேகி, கூர்மையற்றவன். மந்தைவெளி - மேய்ச்சனிலம். மந்தோச்சம் - கிரக வட்டத்தின்தூரமானமுனை. மந்தோட்டணம் - உட்டணசீதளம். மந்தோட்டணவாரி - இளவெந்நீர். மந்தோதி - பாற்கடல். மந்தோதரி - இராவணன் மனைவி. மப்பு - மந்தம், மந்தாரம், மயக்கம். மம - அதிட்டம், நீர். மமகாரம் - அகந்தை, எனதென்கை. மமகாரன் - ஓரரசன். மமதை - அகந்தை, தனிமை,பெருமை, எனதென்கை. மம்மர் - துன்பம், மயக்கம். மம்மட்டி - சிற்றாமுட்டி. மம்மாயி - மாங்கிஷ பேதி. மயகோசம் - ஒன்றற்குறைவிடமாயிருப்பது. மயக்கடி - மயக்கம். மயக்கமின்மை - அறத்துறுப்பினொன்று, அது தெளிவு. மயக்கம் - உன்மத்தம் இது முக்குற்றத்தொன்று, சாச்சடங்கினொன்று,சோம்பு. மயக்கரவம் - ஓர் பாம்பு. மயக்கல் - மயக்குதல். மயக்கவணி - ஓரலங்காரம் அஃதுஒப்புமையி னொருபொருளைமற்றொன்றாக நினைத்தல் (உ.ம்)மரகதக் கதிரைப் புல்லெனக்கறிக்கும். மயக்கவொழிப்பு - அபநுதி யுருபகத்தொன்று அஃது ஒரு பொருளைமற்றொரு பொருளென்று கொள்ளும் பிராந்தியை உண்மை கூறியொழுத்தல் (உ.ம்) சுரமன்றுகாமநோய் வெப்பம். மயக்கிடை - மயக்கம். மயக்கு - மயக்கம்,மயக்கென்னேவல். மயக்குதல் - அறிவைக் கெடுத்தல்,கலத்தல். மயக்குறல் - கலங்குதல்.மயங்கல், மயங்குதல் - அறிவுகெடுதல்,அன்பினமிழ்ந்துதல், புத்தி கலங்குதல், மோகத்தில் அமிழ்ந்துதல். மயங்கிசைக்கொச்சகக்கலிப்பா - தரவதாழிசை அராகம் அம்போதரங்கம் தனிச்சொல் சுரிதகமென்னுமாறுறுப்புமிக்குங் குறைந்தும்பிறழ்ந்து முறழ்ந்தும் பலவாறுமயங்கிவருவது. மயடம் - புற்குடிசை. மயண்டை - மைம்மல். மயப்பு - சாரம், செல்வமுடைமை,நிறம். மயம் - அழகு, ஒட்டை, சிற்பநூன்முப்பத்திரண்டினொன் று ,வடிவம், சொரூபம்,ஊமத்தங்காய். மயர்வு - மயக்கம். மயல் - உன்மத்தம், செத்தை, பயம்,பிசாசம், மந்தம், மயக்கம், ஆசை. மயற்கை - செத்தை. மயனம் - மெழுகு. மயனூல் - சிற்பசாத்திரம். மயன் - ஓர் தேவதச்சன், கின்னரன்,தச்சன், வினைஞன். மயானக்கரை - இடுகாடு, சுடுகாடு. மயானக்கிரியை - சுடலையிற் செய்யுங்கரு. மயானஞானம் - மயான வைராக்கியம்.மயானபூமி, மயானம் - மயானக்கரை. மயானவயிரவன் - ஓர் வயிரவன். மயானவைராக்கியம் - பிறர் மரித்தபோதுண்டாகும் வயிராக்கியம். பயிடமத்தனி - துர்க்கை. மயிடம் - எருமை. மயிடரோசனை - எருமைக் கோரோசனை. மயிடற்செற்றாள் - காளி, துர்க்கை. மயிடோசனை - ஓர் மருந்து. மயிந்தி - பதுங்கி. மயிந்துதல் - பதுங்குதல். மயிரகம் - மயிர்ச்சீலை. மயிரெறிகருவி - கத்தரிகை, சௌளக்கத்தி. மயிரொழுங்கு - உரோமரேகை,மயிர்க்குழற்சி. மயிரோசனை - ஓர் மருந்து, மயிர்மாணிக்கம். மயிர் - உரோமம். மயிர்கழித்தல் - சிரைத்தல். மயிர்களைவோன் - நாவிதன். மயிர்க்கடை - மயிர்க்கிடை. மயிர்க்கால் - உரோமத்துவாரம். மயிர்க்கிடை - உரோம வளவிடை. மயிர்க்கிளர்ச்சி - உரோமச் சிலிர்ப்பு. மயிர்க்குச்சு - கொண்டைக்குச்சு,துகிலிகை. மயிர்க்குட்டம் - ஓர் நோய். மயிர்க்குட்டி - கம்பளிப்பூச்சி. மயிர்க்குந்தம் - ஓர் மருந்து. மயிர்க்குரு - உரோமத்துவாரத்திற்றோன்றிய பரு. மயிர்க்குழற்சி - உரோமப் புளகிதம்,மயிர்க் குழைவு. மயிர்க்கூச்சு - உரோமப் புளகிதம். மயிர்கூச்செறிதல் - மயிர் சிலிர்த்தல். மயிர்க்கொன்றை - ஓர் புல். மயிர்க்கோரை - ஓர் புல். மயிர்சிலிர்த்தல் - மயிர் பொடித்தல். மயிர்ப்பட்டு - ஓர் புடவை. மயிர்ப்பிளவை - ஓர் பரு. மயிர்ப்பொத்தி - மயிரொழுங்கு. மயிர்மாட்டி - ஓராபரணம். மயிர்மாணிக்கம் - ஓர் செடி, கோரோசனை, பசுவுடற்றிரட்சி. மயிர்முடி - குடுமி. மயிர்வாரி - சீப்பு. மயிர்வினை - கத்தரிகை, சௌளம்பண்ணல். மயிர்வினைஞர் - நாவிதர். மயிர்வினைஞன் - நாவிதன். மயிலடி - மாதர்காலாழியி னொன்று. மயிலடிக்குருந்து - ஓர் மரம். மயிலம் - குப்பைமேனி, மயிலிறகு,ஓர் ஸ்தலம். மயிலாநந்தர் - வள்ளுவர் சீடர்களிலொருவர்.மயிலாப்புரி, மயிலாப்பூர் - ஓரூர். மயிலி - செங்கத்தாரி. மயிலிபம் - சவுரி கொத்து. மயிலியம் - செம்பருத்தி, இலாமிச்சை,சோதிப்பூண்டு. மயிலியல் - மயிற்சாயல். மயிலெண்ணெய் - ஓர் மருந்தெண்ணெய். மயிலெள் - ஓரெள். மயிலை - இருவாட்சி, கருமைகொண்ட வெள்ளை, மீனவிராசி,மீன், வெட்சி, மயிலாப்பூர். மயிலைநந்தி - மருதோன்றி. மயிலைநாதர் - நன்னூலுக்கு முதன்முதல் உரை யியற்றியவர். மயில் - செங்கத்தாரி, மயூரம், மயிலாப்பூர், பஞ்சபட்சியி னொன்று. மயில்முனிவன் - அகத்தி. மயில்வாகனன் - குமரன். மயிற்குரல் - அகவல். மயிற்பிச்சம் - மயிலிறகுக்குடை. மயிற்பீலி - மயிலிறகு, மயில்விசிறி. மயிற்றுத்தம் - துருசி, வெண்டுத்தம். மயிற்றோகை - மயில்வால். மயு - குதிரைமுகம். மயுகம் - மயில். மயுராஜன் - குபேரன். மயூகம் - அழகு, கடிகாரவூசி நிழல்,கிரணம், சுவாலை, பிரபை. மயூரகதி - துரககதியைந்தினொன்று. மயூரகம் - துருசி, நாயுருவி, மயில். மயூரக்கிரீவகம் - துத்தம். மயூரபதகம் - நகக்குறி. மயூரபிச்சம் - மயிற்பீலி. மயூரம் - குரோசானி, நாயுருவி,மயில், மயிற்கொன்றை. மயூரவாகனன் - குமரக்கடவுள். மயூராதனம் - இருமுழங்கையு முந்தியிலழுந்தப் புவியிற் கையூன்றிக்கானீட்டித் தலை நிமிர்ந்திருத்தல். மயூராரி - ஓந்தி, பல்லி. மயூரி - பெண்மயில்.மயேசன், மயேசுரன், மயேசுவரன் - சிவன். மயேசுவரி - பார்வதி. மயேச்சுரர் - ஒரு யாப்பிலக்கணஞ்செய்தவர். மயேந்திரசாலம் - ஓர் மாயவித்தைஅது கலைஞான மறுபத்துநான்கி னொன்று. மயேந்திரம் - ஓர் பட்டினம். மரகதபத்ரி - நீர்ப்பாசி. மரகதப்பச்சை - நாகப்பச்சை. மரகதமேனியன் - திருமால். மரகதம் - பச்சைநிறம், பச்சைமணிஇது நவமணியி னொன்று. மரகதவல்லி - உமை, தருமதேவதை. மரகதன் - குபேரன். மரகம் - பேதி. மரக்கணு - மரக்கெட்டு. மரக்கலப்பாய் - கப்பற்பாய். மரக்கலம் - கப்பல், தோணி. மரக்கலன் - மீகாமன். மரக்கறி - காய்கறி. மரக்கற்றாழை - யானைக்கற்றாழை. மரக்கா - நந்தனவனம். மரக்காரை - ஓர் மரம். மரக்கால் - ஆயிலியம், உப்பளம்,கலத்தின் பன்னிரண்டிலொருபங்கு அஃது ஓர்குறுணி, கொத்து,சோதிநாள், திருமால், துர்க்கைக்கூத்து, முகந்தளக்குங் கருவியினொன்று, வள்ளம், விஷ்ணுகூத்து. மரக்காளான் - மரத்தில் முளைக்குங்காளான். மரக்கொம்பு - மரத்தின்கொம்பு. மரங்கொத்தி - ஓர் புள். மரக்கோல் - தோணியோட்டுங் கம்பு,மொட்டம்பு. மரச்சீலைக்கல் - கண்டகிச்சிலை. மரச்செப்பு - பரணி. மரச்செறிந்தம் - சோலைகள். மரச்செறிவு - சோலை, மரப்பொது.மரணகண்டி, மரணகண்டிகை - ஓர்சோதிடநூல். மரணகண்டிதம் - மரணகாலநிண்ணயம். மரணகாலம் - சாவறுதி. மரணக்குறி - சாவடையாளம். மரணக்கொடி - மரணபயம். மரணசாதனம் - சாகுந்தருவாயிலெழுதப்பட்ட வோலை. மரணசூதகம் - மரணத்தாலாகுந்தொடக்கு. மரணச்சனி - மூன்றாமுறை யுடலுயிர்பன்னிரண்டா மிராசியில் வருஞ்சனி. மரணஸ்தம்பனம் - மரணத்தைநிறுத்தல். மரணத்தருவாய் - மரணவோலை. மரணமடைதல் - சாதல். மரணம் - சாவு இது மாயயாக்கைபதினெண் குற்றத்தொன்று, பஞ்சபாணாவத்தையினொன்று, அதுமயக்கமுமாய்தலும், இரண்டாமிடம், ஏழாமிடம். மரணயோகம் - நாசயோகம். மரணவேதனை - மரண வேளைகளிற்படும் வருத்தம். மரணசூசம் - மரணசூதகம். மரணாவத்தை - மரணத்தருவாய். மரணித்தல் - மரணமடைதல். மரணிப்பு - மரணம். மரணை - சாதல், ஞாபகம். மரதம் - சாவு. மரதன் - கோவிந்தன், சிவன். மரத்தம் - ஓரிரத்தினம். மரத்தல் - பிரமித்தல், விறைத்தல். மரத்துவவாழை - மருத்துவவாழை. மரத்துவெள்ளி - வெள்ளைக் குங்கிலியம். மரத்தோல் - கீரை. மரநா - விறைத்தநாக்கு. மரநாய் - மரத்தில்வாழு நாய். மரநார் - மரவுரி. மரந்தம் - பூந்தேன். மரபினோர் - சான்றோர், சுற்றத்தார். மரபு - குணம், பழமை, முறைமை,வமிசம், தன்மை, மேம்பாடு,வழிபாடு. மரபுப்பெயர் - தொன்றுதொட்டுஅவ்வவற்றிற்கு மரபுப்பெயராய்வழங்குஞ் சொல் (உ.ம்) பலா. மரப்பட்டை - மரத்தோல். மரப்பத்தல் - இறைமரம். மரப்பாத்திரம் - மரவை. மரப்புண் - திருவடிப்புண். மரப்பெட்டி - பெட்டகம். மரப்பெத்து - சோலை. மரப்பொந்து - மரக்குகை. மரப்போர் - மரப்பொந்து. மரமஞ்சள் - ஓர் மஞ்சள். மரமரம் - சருகு முதலியவற்றானெழுமொலி. மரமரிவாள் - ஈர்வாள். மரமூலம் - மரவேர். மரமேறி - சாணான். மரம் - விருக்கம். மரல் - அரலை, ஓர் கற்றாழை, மருள்.மரவட்டணம், மரவட்டணை, மரவட்டம் - தட்டு, நெடும்பரிசை. மரவட்டு - மரத்தின்குருத்திருக்குந்தானம். மரவட்டை - ஓரட்டை. மரவணில் - ஓர் அணில். மரவண்டு - ஓர் வகை வண்டு. மரவம் - குங்குமமரம். மரவள்ளி - ஓர் வள்ளிக்கிழங்கு. மரவாணி - மரக்கெடுதி. மரவிடை - பிரயோசனந்தருமரம்.மரவினைஞர், மரவினையாளர் - தச்சர். மரவீடம் - தாவரவிஷம். மரவுப்பு - ஓருப்பு. மரவுரி - சீரம், நார்ச்சீரை. மரவெண்ணெய் - ஓர் தயிலம். மரவெலி - ஓரெலி. மரவெறும்பு - ஓரெறும்பு. மரவை - மரச்செப்பு. மரவொல்லி - கதம்பையொல்லி. மரா - அரசமரம், ஆச்சாமரம், வெண்கடம்பு, கதம்பம், கடம்பு. மராடம் - தேயமைம்பத்தாறினொன்று,பதினெண் பாடையினொன்று,மருக்காரை. மராட்டிமொக்கு - ஓர் போதை வஸ்து. மராட்டம் - இடம், புறமயிர், பெண்மயிர்.மராட்டியம், மராட்டிரம் - மராஷ்டம். மராட்டியர் - ஓர் பாஷைக்காரர். மராமரம் - அரசு, ஆச்சா, கடம்பு. மராம் - கடம்பு, வெண்கடம்பு. மராரம் - பண்டகசாலை. மராலம் - கண்ணிடுமை, குதிரைதாரா, மாதளை. மராளம் - அன்னம், பாம்பு, மாதளை,இருள். மரிகம் - முருங்கை. மரிக்கை - மரித்தல். மரிசம் - பொறுமை, மரீசம், மிளகு. மரிசி - புதுவரம்புவழி. மரிசிதம் - பொறுமை. மரித்தல் - சாதல், ஸ்மரித்தல். மரித்தோர்தலம் - கல்லறை. மரிப்பு - சா. மரிமாதம் - ஒழுங்கு, நீதி. மரியாதை - அமைவித்தநிச்சயம்,எல்லை, ஒழுக்கம், கரை, சரிமுறை,நீதி, வணக்கம், வரம்பு. மரியை - எல்லை, நிச்சயித்த நிபந்தனை, நீதி, பெரியோர்கள். மரீசம் - மிளகு, காயம். மரீசி - ஓரிருடி, கிரணம், பிசுனன்,மிளகு.மரீசிகம், மரீசிகை - கானல். மரு - ஓர் பரிமளப்புல், மருவென்னேவல், மலை, வனாந்தரம்,வாசனை, மருக்கொழுந்து, பாலைநிலம், நீரில்லா இடம். மருகம் - மான். மருகல் - ஓரூர். மருகன் - மருமகன். மருகி - மருமகன். மருகு - ஓர் வாசனைப்பூண்டு, மகரவாழை, மருமகன், காட்டுமல்லிகை. மருக்கடம் - சிலம்பி, மர்க்கடம். மருக்கடவாசம் - சிலம்பிப்பொட்டு. மருக்கடாசியம் - செம்பு. மருக்கம் - காற்று, குரங்கு, சரீரம். மருக்காரை - ஓர் காரை. மருக்கொழுந்து - ஓர் வாசனைப்புல்,தவனம். மருக்கொழுந்துசக்களத்தி - அளத்துப்பச்சை. மருங்கு - இடை, ஒழுங்கு, பக்கம்,வடிவு, செல்வம். மருங்குல் - இடை, பக்கம். மருங்கை - பிரசவித்தைந்தாநாள். மருச்சகம் - கொம்மட்டி மாதளை. மருச்சகன் - அக்கினி, இந்திரன். மருச்சுதன் - அனுமான், வீமன். மருட்கிழங்கு - மருளின்வேர். மருட்கை - வியப்பு. மருட்சி - அறிவின்மை, மயக்கம். மருட்செந்தொடை - இனவெழுத்துப்பெற்று மோனை முதலாகியதொடையுந் தொடை விகற்பமும்போலாமை வேறுபட்டு வருவது. மருட்டம் - கள். மருட்டல் - எத்துதல், மயக்குதல். மருட்டி - எத்தி, கள், மயக்கம்தருவது. மருட்டு - ஏய்ப்பு, மயக்கென்னேவல். மருட்டுதல் - எத்துதல், மயக்கல். மருட்பா - ஐந்து பாவினொன்று அதுமுதற்கண் வெண்பாவுங் கடைக்கண்ணகவலுமாய் வருவது. மருட்பார்வை - வெருண்ட பார்வை. மருணீக்கியார் - அப்பர் சுவாமி களின்பிள்ளைத் திருநாமம். மருண்மா - மதயானை. மருண்மாலை - கருகுமாலை. மருதக்கருப்பொருள் - மருதநிலத்துற்பத்திப்பொருள் அவை இந்திரன் முதற் சுனையாடலீறாய வாம். மருதங்கிளி - ஓர் கிளி. மருதணி - நாடுசார்நிலம், மருதாணி. மருதத்திணை - மருதத்திற் குரியன. மருதநிலம் - மருதணி. மருதநிலவேந்தன் - இந்திரன். மருதப்பண் - ஓர் பண். மருதப்பறை - ஓர் பறை. மருதப்புறம் - குற்றிசைக் குறுங்கலி. மருதமுதற்பொருள் - பழனமும்பழனஞ் சார்ந்த விடமும் வைகறையென்னுஞ் சிறுபொழுதும் ஆறுபெரும்பொழுதுகளுமாம். மருதம் - ஐந்நிலத்தொன்று அதுவயலும் வயல் சார்ந்த இடமும்,ஓர் மரம், காற்று, மருதநிலப்பண்,மருது, வயல், பூதவம், அருச்சனம். மருதயாழ் - ஓர் யாழ். மருதவேந்தன் - இந்திரன். மரதனிளநாகனார் - ஒரு புலவர். மருதாணி - ஓர் பூடு. மருது - மருதமரம், ஐவன்னி, கருநொச்சி. மருதூர் - ஓர் சிவஸ்தலம். மருதோன்றி - ஓர் மரம். மருத்தன் - ஓரரசன், மருத்துவன்,வாயு பகவான். மருத்திப்போதி - நாயுருவி. மருத்திரதம் - குதிரை, விமானம். மருத்தீடு - மருந்திடுதலினால்வருந்தோஷம். மருத்து - காற்று, தேவன். மருத்துநீர் - ஓர் முழுக்கு நீர். மருத்துபதம் - பரமாணு. மருத்துபலம் - ஆலாங்கட்டி மழை. மருத்துபாலன் - இந்திரன். மருத்துப்பை - மருத்துச் சரக்கு. மருத்துமரம் - மருந்துமரம் போன்றவன். மருத்துமாவாழை - ஓர்வகை வாழை. மரூத்துவக்கலைஞன் - வைத்தியசாத்திரி இவன் அரசர்க்குறுதிச்சுற்றத்தொருவன். மருத்துவம் - பரிகரிப்பு, வைத்தியம். மருத்துவர் - அச்சுவினி தேவதைகள்,வைத்தியர். மருத்துவர்நாள் - அசுபதி. மருத்துவவாழை - மருத்துமா வாழை. மருத்துவன் - இந்திரன், வைத்தியன். மருத்துவன்தாமோதரனார் - சங்கப்புலவரி லொருவர். மருத்துவாகம் - தீ, புகை. மருத்துவான் - இந்திரன். மருத்துவிச்சி - பிரசவ வைத்தியை,மருந்து கொடுப்பவள். மருத்தெண்ணெய் - வியாதிகட்குவடிக்குமெண்ணெய். மருந்தம் - தாலம்பபாஷாணம்,நஞ்சு. மருந்தீடு - மருத்தீடு, வசியம், மருந்திடுவதனால் வருந்தோஷம். மருந்து - அமுதம், ஓடதி, ஒளடதம். மருபுகா - வாழை. மருபூ - பாலைநிலம். மருப்பு - இஞ்சி, மரக்கொம்பு, விலங்கின் கொம்பு, யாழின்கோடு. மருப்புத்திரன் - மருச்சுதன். மருப்ரியம் - ஒட்டை. மருமகள் - சகோதரிமகள், மகன்மனைவி. மருமகன் - சகோதரி மகன், மகள்கணவன். மருமம் - இரகசியம், உயிர்நிலை,மார்பு. மருமரம், மருமராஞ்சம் - இலைமுதலியவற்றானெழுமொலி. மருமா - ஒருவகைக் கொண்டை. மருமான் - மகன், மருமகன், வழித்தோன்றல். மருவகம் - இராகு, ஓர் நாரை, புலி,மருக்காரை, மருக்கொழுந்து. மருவலர் - பகைவர். மருவல் - அணைதல், கலத்தல்,கிட்டல், சருவுதல், பொருந்துதல்,சிதைதல். மருவாரி - பாலை. மருவார் - பகைஞர். மருவியகாந்தி - வைடூரியம். மருவு - கலியாணத்திடு விருந்து,மருகு, வாசனை. மருவுதல் - மருவல். மருளங்கிழங்கு - ஓர் கிழங்கு. மருளல் - அஞ்சல், எழுத்திலாவோசை, பேசலா னெழுமொலி,மயங்குதல், வெருளுதல். மருளிந்தம் - ஓர் பண். மருளுதல் - மருளல். மருளூமத்தை - ஒரூமத்தை. மருள் - உவமையுருபு, உன்மத்தம், ஓர்கிழங்கு, கள், குறிஞ்சியாழ்த்திறம், பிசாசம், மயக்கம்,மருளென் னேவல். மரூஉமொழி - மருவி வழங்கு மொழி. மரூகம் - மயில். மரை - ஓர்வகை மான், தவளை,தாமரை.மரைக்காயர், மரைக்கார் - சோனகர். மரைநீகம் - தவளை. மரைப்பூ - தாமரைப்பூ. மரையிறக்கம் - மரையூடாடுமிடம். மர்க்கடபிப்பலி - நாயுருவி. மர்க்கடப்பிடி - குரங்குப்பிடி. மர்க்கடம் - குரங்கு. மர்க்கடாசியம் - தாமிரம். மர்க்கடி - பூனைக்காலி, பெண் குரங்கு. மர்க்கரம் - கையான்றகரை. மர்த்தநம் - சூர்ணித்தல், பிசைதல். மர்த்தலம் - மத்தளம். மர்த்தனம் - இடிக்கை, கடைதல். மர்த்தன் - மநிதன். மர்த்தித்தல் - அரைத்தல், உடைத்தல்,கடைதல், மருந்து கலத்தல். மர்த்தியம் - உலகம். மர்த்தியன் - மர்த்தன். மர்மகீலன் - கணவன். மர்மம் - மருமம். மர்மரீகன் - ஏழை.மர்மவித், மர்மவேதி - மருமக்காரன். மர்யாதகன் - மரியாதைக்காரன். மலஹரன் - சிவன். மலகரி - ஓரிராகம். மலக்கடி - கலக்கம். மலக்கட்டு - மலச்சிக்கு. மலக்கம் - கலக்கம், அலைவு. மலக்கனம் - பொன்னம்பர். மலக்கனல் - இராசவத்தனக்கல். மலக்குடர் - மலவாசயம். மலங்கல் - கலங்கல், குளம், விலாங்கு. மலங்கு - ஓர் மீன், மலங்கென்னேவல்,நுரை. மலங்குதல் - மலங்கல். மலசகிதர் - மலசம்மந்தர். மலசம் - சிதல். மலசம்பந்தம் - மலத்தோடு கூடியிருத்தல். மலசலம் - மலமூத்திரம். மலச்சிக்கு - மலப்பின்னல், மலக்கட்டு. மலச்சுத்தி - மலக்கழிவு, மல நிவாரணம். மலடன் - பிள்ளை யில்லாதவன். மலடி - மகப்பே றில்லாதவள். மலடு - கருவற்றது, பாழ். மலதூஷிதம் - அழுக்கு. மலத்தியம் - மும்மலம். மலத்துவாரம் - அபானவாய். மலந்திநட்சத்திரம் - வாலுளுவை. மலபந்தம் - மலக்கட்டு. மலபந்தன் - மல சகிதன். மலபரிபாகம் - பந்தபாச நீங்கிப்பக்குவமடைதல். மலபாகம் - மலபரிபாகம். மலபுக் - காகம். மலப்பற்றம், மலப்பற்று - மலப்பிடி. மலப்பாண்டம் - உடம்பு. மலப்புழு - மலத்திலுண்டாகுங் கிருமி. மலப்பை - மலவாசயம்.மலமலத்தல், மலமலப்பு, மலமலெனல் - ஒலிக்குறிப்பு. மலம் - அழுக்கு, இரத்தம், கட்டம்,கண் பீளை, கருப்பூரம், கறள்,குறும்பி, சலம், தாது, நகம்,பந்தம், பாவம், மண்டி,மூக்குச்சளி, மூளை, வேர்வை. மலயகந்திநி - உமாதேவி சேடியரிலொருத்தி. மலயக்கால் - மலையக்கால், தென்றற்காற்று. மலயசம் - மலையசம். மலயசுகம் - சந்தனம். மலயமுனி - அகத்தியன். மலயம் - சந்தனம், மலையம். மலயவிரேதம் - திப்பிலி. மலயாசலம் - பொதிகை. மலயோத்பலம் - சந்தனம். மலரவன் - பிரமன். மலருக்குநாயகம் - கருவண்டு. மலருதல் - மலர்தல். மலரோன் - பிரமன். மலர் - பூ, மலரென்னேவல், மலர்ச்சியானது. மலர்க்கணைவேள் - காமன். மலர்க்கா - புஷ்ப வனம். மலர்ச்சி - அலர்ச்சி, எழுச்சி, களிப்பு,பொலிவு, விரிதல். மலர்தல் - எதிர்தல், தோன்றல்,நிறைதல், விரிதல். மலர்தாங்கி - ஓர் கொடி. மலர்தேங்கு - தென்னம்பாளைப்பூ. மலர்த்தாள் - மலர்க்காம்பு. மலர்த்திரள் - பூங்கொத்து. மலர்த்தேன் - பூந்தாது, பூந்தேன். மலர்மிசையேகினான் - புத்தன். மலர்வு - மலர்ச்சி. மலவாசயம் - மலக்குடர். மலவாயில் - எச்சவாய். மலன் - கோபி. மலாகை - தூதி, தூர்த்தை, பெணயானை. மலாக்கா - ஓரூர். மலாசு - சிறுபூளை. மலாடனார் - ஓர் சங்கப் புலவர். மலாடு - கொடுந் தமிழ்நாட்டினொன்று அது மலையமானாடு. மலாபஹாரிணி - ஓர் நதி. மலாமட்டி - பேரிலுப்பை. மலாம் - ஓர் பூச்சு. மலாரடி - கலக்கம். மலார் - மிலாறு, விளார், சிறுபூளை. மலாவகம் - பிண்ணாக்கு. மலிதல் - நிறைதல், பெருகல். மலிநி - ரஜஸ்வலை. மலிலாதி - மருதாளி. மலிவு - நயம், மிகுதி. மலினமுகம் - அக்கினி, ஆவி, கருங்குரங்கு. மலினமுகன் - இறந்தோன், கொடியவன், தீக்கடவுள், தீயோன், முசு,வண்டு. மலினம் - அழுக்கு, கருமை, குற்றம்,பாவம், மாசு, மோர். மலீமசம் - அழுக்கு, இரும்பு. மலூகம் - குருவி. மலை - உவமை, பருப்பதம், மலையென்னேவல், இலக்கினம். மலைகலக்கி - ஓர் பூடு. மலைகளிறு - போர்க்களிறு. மலைக்கடுகு - ஓர் கடுகு. மலைக்கரு - சாத்திரவேதி. மலைக்கலவாய் - ஓர் மீனிறாஞ்சிப்புள். மலைக்கற்றாழை - ஓர் கற்றாழை. மலைக்கால் - ஆட்டுக்கல். மலைக்குகை - மலைமுழைஞ்சு. மலைக்குக்குறுப்பான் - ஓர் புள். மலைக்குறுவி - சாத்திரவேதி. மலைக்கொடுமுடி - மலையுச்சி. மலைசாரி - கிளிஞ்சில். மலைச்சக்கரம் - சாலக்கிராமம். மலைச்சக்கரைவள்ளி - ஓர் வள்ளிக்கொடி. மலைச்சாரல் - மலையருகு. மலைச்சார்வு - மலையைச் சார்ந்த விடம்.மலைதல் - அணிதல், உவமையாதல்,எதிர்த்தல், ஒரு வழிபடாது நிற்றல், பொருதல், மறுத்தல், செய்யுள் வழுவினொன்று அஃதுஒன்றற்குரியதை மற்றொன்றற்குரியதாகப் பாடுவது, மாறுபடுதல். மலைதாங்கி - ஓர் கொடி, பங்கம்பாளை, பேய்முசுட்டை, வட்டத்திருப்பி. மலைத்தலை - மலையுச்சி. மலைத்தல் - தடுமாறல், பொருதல்,மாறுபடல். மலைத்தொடக்கு - கல் மதம். மலைத்தும்பை - ஓர் தும்பை. மலைத்துவரை - ஓர் துவரை. மலைத்தேன் - மலையில் வைக்குந்தேன். மலைநாடன் - சேரன். மலைநாடு - சேரனாடு. மலைநாதம் - கல்மதம், சாத்திரவேதி,வக்கிராந்த பாஷாணம். மலைநெல் - மலையில் விளை நெல்,ஐவனம். மலைபடுகடாம் - பத்துப்பாட்டுளொன்று. மலைபடுதிரவியம் - மலையிலுண்டாகுந்திரவியம் அது மிளகுகோட்டம் அகில் தக்கோலம்குங்குமம். மலைப்பச்சை - ஓர் பூடு, குளவி. மலைப்பருத்தி - ஓர் பருத்தி. மலைப்பாம்பு - ஓர் பாம்பு. மலைப்பாழி - மலைக்குகை. மலைப்பாறை - மலைத்திட்டை,மலைப்பக்கம். மலைப்பிஞ்சு - கல். மலைப்பிறங்கம் - உலோக மணல். மலைப்பு - கூத்தின் விகற்பம், திகைப்பு,போர், மலைவு, மாறுபாடு,மயக்கம். மலைப்புறா - ஓர்வகைப் புறா. மலைப்பூடு - ஓர்பூடு.மலைமகள், மலைமடந்தை - உமை,பார்வதி. மலைமல்லிகை - ஓர் மல்லிகை.மலைமுழை, மலைமுழைஞ்சு - மலைக்குகை. மலைமுள்ளங்கி - ஓர் பூடு. மலையகம் - ஓர் சாதி. மலையாக்கல் - தென்றல். மலையசம் - சந்தனம், தென்றல்,மலையாடு. மலையடிப்படி - குறிஞ்சி நிலக்கிராமம். மலையடிவாரம் - மலையினடிப்பக்கம். மலையத்தி - அசமந்தம், ஓரத்தி. மலையத்துவசபாண்டியன் - ஓர்பாண்டியராசன் அவன் மீனாட்சியின் தந்தை. மலையமாருதம் - தென்றற்காற்று.மலையமான், மலையமான்முடிக்காரி சேரன் - கடையெழு வள்ளலிலொருவன். மலையம் - இந்திரன்கா, குறிஞ்சியாழ்த்திறம், தோட்டம், பொதியமலை, மலை, மலையினுச்சி. மலையரசன் - இமைய பருவதராசன்,மிளகு. மலையரண் - மலையினாலாய காவல்,இது நான்கரணி னொன்று. மலையருவி - மலையிலிருந்து வீழ்நீர். மலையரையன் - பர்வத ராஜன். மலையன் - ஓர் சாமை, கடையெழுவள்ளளி லொருவன், குறிஞ்சிநிலத் தலைவன், சேரன். மலையாடு - ஓர்வகை ஆடு. மலையாத்தி - ஓராத்தி. மலையாமணக்கு - ஓராமணக்கு. மலையாமி - மலையாள பாஷை. மலையாரம் - சந்தனம். மலையாழம் - தேயமைம்பத்தாறினொன்று, ஒரு பாஷை. மலையாளபகவதி - ஓர் தேவதை, உமாதேவியார். மலையாளம் - மலையாழம். மலையாளி - ஓர் தேவதை, மலையாளத்திற் பிறந்தோன், மிளகு. மலையானிலம் - தென்றல். மலையிசம் - சந்தனம். மலையிரும்பு - உலோக மணல். மலையிருவேலி - ஓரிருவேலி, சைலகம். மலையில்வைரவன் - பாக்கு. மலையிற்றிரண்டதி - கடனுரை. மலையினுச்சி - மலைமுடி, மாமிசபேதி. மலையின்முனிவன் - அகத்தி, மிளகு.மலையீஞ்சு, மலையீந்து - ஓரீந்து. மலையுருக்கன் - ஓர் வெற்றிலைக்கொடி. மலைவட்டு - சந்தனம். மலைவருணனை - மலைச்சிறப்புரைத்தல். மலைவாசிக்கொம்பு - பன்றிக்கொம்பு. மலைவாணர் - வேடர், மலைவாழ்நர். மலைவாழை - ஓர் வாழை. மலைவில்லோன் - சிவன். மலைவீரியம் - அன்னபேதி. மலைவு - உவமை, போர், மயக்கம், மாறுபாடு. மலைவெட்பு - சந்தனம். மலைவேம்பு - ஓர் வேம்பு, சந்தனம் மலோடம் - இலவம்பிசின். மல் - கூத்தினோர் விகற்பம், திருமால்கூத்து, பெருகல், வலி, வளமை,மலை. மல்கல் - நிறைதல், பெருகல். மல்காத்தல் - முதுகு கீழாய்க் கிடத்தல். மல்குவித்தல் - நிரப்பல். மல்புறு - கார்போகரிசி. மல்லகசாலை - மற்களரி. மல்லகதி - துரககதியைந்தி னொன்று. மல்லகம் - சிறுவாலுளுவை. மல்லகை - மல்லிகை. மல்லக்கச்செட்டி - மற்பிடிக்குஞ் சாதி. மல்லசம் - மிளகு. மல்லதூர்யம் - ஓர் வாத்தியம். மல்லநாகம் - இந்திரன் யானை. மல்லம் - ஓர் பாத்திரம், கதுப்பு,தட்டம், மற்பிடி, யாகமிச்சில்,வலிமை, மற்போர். மல்லயுத்தம் - மற்பிடி அது கலைஞானமறுபத்து நான்கி னொன்று. மல்லரங்கம் - மல்லக சாலை. மல்லரி - பம்பை மேளம். மல்லர் - மற்போர் செய்வோர்,வலியோர், திருக்குறளுக்கு உரைசெய்த பதின்மரி லொருவர். மல்லல் - மிகுதி, வலி, வளமை. மல்லன் - திண்ணியன், மல்வல்லன்,வலியோன். மல்லாக்குப்பறிதல் - உட்புறம் மேலாதல். மல்லாடல் - பதினோராடலு ளொன்று,வாணாசுரனை வெல்லக்கண்ணன் மல்லனாய்ச் சென்று அவன்உயிர்நீங்க நெரித்தாடி யது. மல்லாட்டம் - போராட்டம்.மல்லாத்தல், மல்லாத்துதல் - உட்புறம்மேலாய்க்கிடப்பித்தல். மல்லாய் - ஓர் பாத்திரம். மல்லாரி - சண்டைக்காரி, பம்பைமேளம். மல்லாருதல் - மல்லார்தல். மல்லி - கொத்துமல்லி, மல்லிகை,மிகப்பருத்துரத்தவள். மல்லிகம் - பிரப்பஞ்செடி. மல்லிகாட்சம் - வெண்கட்குதிரை. மல்லிகாமோதிநி - குண்டுமல்லிகை. மல்லிசார்ச்சுனம் - ஓரூர், ஓர் சிவஸ்தலம். மல்லிகை - ஓர் பாத்திரம், ஓர் பூச்செடி, விளக்குத்தண்டு. மல்லிபத்திரம் - ஓர் காளான். மல்லு - ஓர் கூத்து, ஓர் போர், மல். மல்லுக்கட்டுதல் - போராட்டமாடுதல், மல்லுப்பிடித்தல். மல்லுப்பிடித்தல் - மற்பிடித்தல். மல்லூகம் - புழு. மல்லை - இரப்போர்கலம், கைப்பரை,கப்பரை, மௌனம், வட்டம்,நிறைதல். மல்லில் - ஓர் சிவதலம். மவுடி - முடி. மவுட்டியம் - அறியாமை. மவுலி - மௌலி. மவுனம் - மோனம். மவுனி - ஆமை, மவுனஞானி. மழ - இளமையான. மழகளிறு - இளங்களிறு. மழம் - இளமை. மழலை - இளமை, நிரம்பாமென்சொல். மழலைப்பேச்சு - குதலைவார்த்தை. மழவன் - கட்டிளமையோன், வீரன். மழவு - இளமை, குழந்தை. மழித்தல் - மொட்டையாக்கல். மழு - எரியிரும்பு, சிவனாயுதத்தொன்று, பரசாயுதம். மழுக்கம் - கூரின்மை,தோற்றமின்மை, மங்கல். மழுக்கல், மழுக்குதல் - அடித்தல், அரிசிமினுக்குதல், கூர்மை மழுங்கச்செய்தல், தோற்றங் கொள்ளாமற்பண்ணல். மழுக்குலுக்குதல் - மழுவெடுத்தல். மழுங்கல், மழுங்குதல் - ஒளி மழுங்கல்,ஓர்வகைப் பொன், கூர் கெடுதல்,பேர்குறைதல், பொலிவழிதல்,தேய்தல். மழுப்பன் - குதர்க்கி, நியாயப்புரட்டி. மழுப்புதல் - வீண் பேச்சினாலேபுரட்டுதல். மழுமட்டை - அறமழுங்கல். மழுமாறி - புரட்டன். மழுவன் - அஞ்சாதவன், நகர்காப்போன், பிடித்ததை விடாதவன். மழுவாளி - சிவன், பரசுராமன். மழுவெடுத்தல் - எரியிரும்பைக் கையேந்தல், பொய்யைநிலையாக்கல். மழுவெண்ணெய் - தீக்குளிர்விக்குமெண்ணெய். மழுவேந்தி - சிவன், பொய்யன். மழை - குளிர்ச்சி, நீர், மாரி, மிகுதி,மேகம். மழைகாலம் - மாரிகாலம். மழைக்கண்ணி - ஓர் பட்சி. மழைக்கரு - மழைக்குரிய சூல். மழைக்காலிருட்டு - மழையடுத்தபேரிருள். மழைக்காற்று - குளிர்காற்று. மழைக்கிளி - ஓர் வெட்டுக்கிளி. மழைக்குறி - மழையடையாளம். மழைக்கோள் - சுக்கிரன். மழைதுளித்தல் - மழைதூறல். மழைத்தல் - மழைபெய்தல். மழைத்தாரை - அதோகதியாய்ப்பெய்யு மழை.மழைத்துமி, மழைத்துளி, மழைத்தூவல், மழைத்தூற்றம் - பிதிர்மழை. மழைத்தோற்றம் - மழைச்சாடை. மழைப்பெய்தல் - மழைசொரிதல். மழைப்புகார் - மழைமுகில். மழைப்பூங்காரம் - மழைக்குணங்கொண்ட மப்பு. மழைமரக்கால் - மழையினளவு. மழைமுகில் - சூற்கொண்டமேகம். மழையடை - மழையடைப்பு. மழையடைத்தல் - மழை விடாதுபெய்தல். மழைவண்ணக்குறிஞ்சி - ஓர் கொடி. மழைவண்ணன் - திருமால். மழைவாங்குதல் - மழை விட்டொழிதல்.மளமளத்தல், மளமளப்பு, மளமளெனல் - ஈரடுக்கொலிக்குறிப்பு.மளாரட்டியெனல், மளாரிடுதல், மளாரெனல் - ஒலிக்குறிப்பு. மளிகாரம் - வெண்காரம்.மளிகை, மளிகைக்கிடங்கு - பண்டசாலை, பல பொருட் கடை, வீடு. மளிகைக்கடை - கடைவீடு. மளினம் - மலினம். மளுக்கெனல் - ஒலிக்குறிப்பு. மள்ளம் - வலி. மள்ளர் - உழவர், குறவர், குறிஞ்சிநிலமாக்கள், திண்ணியர், படைவீரர், மறவர், வீரர். மள்ளல் - வலி. மள்ளு - கைமரம். மறதி - மறப்பு, அது தாமதகுணத்தொன்று. மறத்தல் - அசட்டை பண்ணல்,பொச்சாப்பு, விட்டுவிடல். மறத்தி - பாலைநிலப்பெண், மறவர்சாதிப் பெண். மறத்தியர் - பாலைநிலப்பெண்கள். மறநிலைப்பொருள் - மறத்தாற் கவர்பொருள், பகைவர்பொருள்,திறைப்பொருள், சூதில் வெல்பொருள் முதலியன. மறநிலையறம் - புறப்பொருட்டுறையினொன்று, அது நிரைமீட்டுப்பகைவென்றுசெஞ்சோற்றுக்கடன்கழியாதாரைத் தண்டித்துக்குறைவுறச் செய்தல். மறநிலையின்பம் - அகப்பொருட்டுறையினொன்று, அஃது இலக்கமெய்தல், ஏறுதழுவன் முதலியமறத்தகையாற் கன்னியை மணமுடித் தின்புறுதல். மறப்பிலி - கடவுள். மறப்பு - மறதி. மறப்புலி - சிங்கம். மறமலி - யானை.மறமறத்தல், மறமறப்பு - ஈரடுக்கொலிக்குறிப்பு. மறம் - ஓர் பிரபந்தம், அது கலம்பகத்தினோருறுப்புமாம், கெடுதி,கொலை, கோபம், சினம், நமன்,பாவம், பிணவலி, வீரம், வலி,மாறுபாடு, யுத்தம், கறுவு,கொடுமை, பொறாமை, மயக்கம். மறம்வைத்தல் - வன்மம்வைத்தல். மறலி - நமன், மயக்கம். மறல் - எழுச்சி, ஓர் கூத்து, காலன்,குற்றம், சாதல், தரித்திரம், நமன், பகை,பிணக்கு, போர், மயக்கம், மறதி. மறவர் - படைவீரர், பாலைநிலமாக்கள், வேடர், கொடியவர்,பகைவர். மறவன் - சிலேஷ்மம், வீரன், மறவர்இனத்தைச் சார்ந்தவன். மறவி - ஈனம், கள், மறதி.மறாடம், மறாட்டியம் - மகராட்டிரம்.மறாடர், மறாட்டியர் - மகராட்டிரர். மறி - அழுங்கு, ஆடு, குதிரை, மான்இவற்றின் குட்டி, ஆடு, குதிரை,மான் இவற்றின் பெண், மறியென்னேவல், மான், மேட விராசி. மறிகாண்குதல் - குட்டி போடுதல். மறிக்கான்கல் - சுக்கான்கல். மறிக்கையன் - சிவன். மறிதரல் - மீளல். மறிதல் - தடைபடல், திரும்பல்மடங்கல், வீழ்தல், கீழ்மேலாதல். மறித்தல் - காவற்படுத்தல், தடுத்தல்,திருப்புதல், மீட்டல். மறித்தும் - பின்னும். மறிப்பு - தடுப்பு, திருப்பு. மறியல் - சிறை, தடை. மறியேந்தி - சிவன். மறு - குற்றம், மச்சம், மறுவென்னேவல், மற்றை, மாசு, வேறு,எதிர். மறுகலிடுதல் - திரும்பிவருதல். மறுகலித்தல் - மறுதலித்தல். மறுகல் - மறுகுதல், வியாதி திரும்பல். மறுகு - இரண்டாம் விளைச்சல்,குறுந்தெரு, தெரு, மறுகென்னேவல். மறுகுதல் - சுழலல், புரளுதல், மனங்குழம்புதல். மறுகை - நுங்கு, பொதியினொருபக்கம், மற்றப்பக்கம். மறுக்கம் - இக்கட்டு, சுழற்சி, மனக்குழப்பம். மறுக்காரங்காய் - ஒருவகைக்காய். மறுக்காரை - மருக்காரை. மறுக்கிடுதல் - பெயர்தல். மறுக்கு - சுழற்சி, மயக்கம். மறுக்குதல் - மறுதலித்தல், மறையுழவுழுதல், மனஞ்சுழலல். மறுக்குத்து - ஓர் செடி. மறுதடவை - மறுமுறை. மறுதலித்தல் - மறுத்தல், வேறுபடல். மறுதலிப்பு - மறுப்பு. மறுதலை - சத்துரு, மறுதலிப்பு,வேறிடம், எதிர், மாறு. மறுத்தல் - கொடாமை, தவறு,நீக்கல், மறையுழவுழுதல்,வெட்கம். மறுத்தல்விடை - வினாவெதிர் மறுத்தல் (உ.ம்) உண்டாயோவெனஉண்ணேனென்பது. மறுபத்தியம் - பிறபத்தியம். மறுபாவி - சத்துரு. மறுபிறப்பு, மறுபிறவி - மறுசனனம். மறுபொருளுவமை - முன்வைத்தபொருட்கு நிகராவதோர் பொருள்பின்னரும் வைப்பது (உ.ம்) மக்களிலுனக் கொப்பில்லை சூரியனுக்கொப் பில்லை சுடர்கள். மறுப்படுதல் - ஊறடைதல், வசைப்படல். மறுப்பு - மறுக்குதல், மறுவுழவு. மறுமாடி - மஞ்சுக்கட்டை, மலைப்பிளவு. மறுமை - மரணத்தின் பின்வரு நிலைபரம், வருபிறப்பு. மறுமைப்பயன் - மரணத்தின் பின்னடைவது. மறுமொழி - உத்தரம். மறுவரல் - சுழற்சி.மறுவல், மறுவி - கஸ்தூரிமிருகம்,கஸ்தூரி, நாவி. மறுவுத்தரம் - பிரதியுத்தரம். மறை - அடைக்கலம், இரகசியம்,இரண்டாமுழவு, எதிர்மறுப்பு,ஒளிப்பிடம், கறை, கேடகம்,சங்குச்சுரி, சொல், புள்ளி, மந்திரம்,மறையென்னேவல், மறைவு,வேதம், மறைத்தல், நாலாமிடம். மறைக்காடு - வேதாரணியம். மறைக்கொடியோர் - அந்தணர். மறைக்கொடியோன் - துரோணாசாரியன், பிரமன், பிராமணன். மறைசை - வேதாரணியம். மறைச்சி - துரும்பிச்சி, பார்ப்பனத்தி. மறைஞானசம்பந்தர் - உமாபதிசிவாசாரியரின் குரு. மறைதல் - ஒளித்தல், தோன்றாமற்போதல். மறைத்தலைவி - இலக்குமி, உமை,சரச்சுவதி. மறைத்தல் - மறையச்செய்தல், மூடல். மறைபடல் - ஒதுக்குப்படல், மறைக்கப்படுதல். மறைபாடு - மறைவு. மறைபுகல் - அடைக்கலம் புகுதல். மறைபொருள் - உட்பொருள். மறைப்பிரிவு - வேதசாகை. மறைப்பு - மறைத்தல், மறைவு. மறைப்பொருள் - வேதார்த்தம். மறைமுடி - வேதத்துச்சி. மறைமுடிவு - கடவுள், வேதாந்தம்,வேதத்தினுச்சி. மறைமுதலி, மறைமுதல் - கடவுள்,சிவன், விட்டுணு. மறைமொழி - வேதமந்திரம். மறையவர் - அந்தணர், துரும்பர்,முனிவர். மறையவன் - வியாழன். மறையன் - மறுவுடையது. மறையிலார் - கீழ்மக்கள். மறையோர் - பார்ப்பார், முனிவர்,பஞ்சர் கிராமிகள். மறையோன் - பிரமன், பிராமணன்,வியாழம். மறைவிடம் - மறைவானவிடம். மறைவு - ஒதுக்கு, தோன்றாமை. மற்கடப்பிடி - குரங்குப்பிடி. மற்கடம் - குரங்கு.மற்கட்டம்பிடித்தல், மற்கட்டம் பொருகல் - இழுபறிப் படுதல். மற்கரை - குகை, மலடி. மற்குணம் - மத்குணம், மூட்டுப்பூச்சி. மற்கோல் - பகை. மற்சரம் - மச்சரம். மற்சியம் - மீன். மற்போர் - மல்யுத்தம். மற்ற - அடுத்த, பிற, மற்றவை, வேறு. மற்றது - அடுத்தது, பிறிது, வேறு. மற்றவர் - ஏனையோர், பிறர், மறுபெயர். மற்று - அசை நிலை,பிறிதின்பொருள் வினைமாற்றுப்பொருள் என்ப வற்றைத்தருமிடைச் சொல், அவற்றிற்குமுறையே (உ.ம்) மற்றென்னையாள்க, ஊழிற் பெருவலியாவுள மற்றொன்று, மற்றறிவாநல்வினை, இனி. மற்றும் - பிறவும்.மற்றை, மற்றைய - சுட்டியதற்கினம்,மற்றை நாள், வேறு. மற்றையது - மற்றது. மற்றோ - அதிசய விரக்கச்சொல். மனக்கசப்பு - மனவெறுப்பு. மனக்கசிவு - மனவுருக்கம். மனக்கயக்கம் - மனத்துயர். மனக்கருத்து - உட்கருத்து. மனக்கலக்கம் - மனச்சஞ்சலம். மனக்கவலை - மனவிசாரம். மனக்களிப்பு - அகக்களிப்பு. மனக்கறை - மனக்களங்கம். மனக்கனிவு - மனவுருக்கம். மனக்காய்ச்சல் - மனக்கொதி. மனக்காவல் - மனக்கட்டுப்பாடு.மனக்கிடக்கை, மனக்கிடை - மனவெண்ணம். மனக்கிலேசம் - மனத்துயர் மனப்பீடை. மனக்குத்து - மனவிதனம். மனக்குருடு - அறிவீனம். மனக்குவிவு - மன வொருமிப்பு. மனக்குழப்பம் - ஒருமிப்பின்மை,மனம் குழம்பி யிருத்தல். மனக்குள்ளம் - தந்திரம், வஞ்சகம். மனக்குறிப்பு - கருத்து, நோக்கம். மனக்குறை - பிரியவீனம். மனக்கூச்சம் - வெட்கம். மனக்கூர்மை - தெளிந்தபுத்தி. மனக்கொடுமை - மனப்பொல்லாங்கு. மனக்கொதி - எரிச்சல், கோபம். மனக்கோட்டம் - அழுக்காறு. மனக்கோட்டரவு - மனவாட்டம். மனங்கசிதல் - இரங்கல், மனமுருகல். மனங்கரைதல் - துக்கித்தல், மனமிளகுதல். மனங்கலக்குவிப்போன் - மன்மதன். மனங்கல் - ஒடுங்கல். மனங்கனிதல் - மனதுருகல். மனங்கு - இருபத்தைந்திறாத்தல்கொண்டது, கைப்படை. மனங்குவிதல் - மனங்கூம்புதல். மனங்குறாவுதல் - மணங்கோணல். மனங்கூம்புதல் - மனமடங்குதல். மனங்கொதித்தல் - மனவேகங்கொள்ளல். மனங்கோணுதல் - மனங்கோடுதல். மனசாதேவி - ஓர் தேவதை. மனசார - மனசரிய. மனசிசயன் - மன்மதன். மனசு - மனது. மனசுவிதை - நம்பிக்கை. மனசை - மனசாதேவி.மனச்சஞ்சலம், மனச்சடைவு - துக்கம். மனச்சந்தோஷம் - அகக்களிப்பு. மனச்சம்பூரணம் - மனத்திருத்தி. மனச்சலிப்பு - மனச்சஞ்சலம். மனச்சாட்சி - பகுத்தறியு மறிவு.மனச்சாய்ப்பு, மனச்சாய்வு - மனவரம். மனச்சார்பு - மனப்பற்று. மனச்சான்று - மனச்சாட்சி. மனச்சுகம் - இதம். மனச்சுத்தம் - இருதயத் தூய்மை. மனச்சோர்வு - மனவயர்ச்சி. மனஞ்சலித்தல் - துக்கித்தல், மனமலுத்தல். மனதார - மனப்பூருவமாக. மனது - மனம். மனதுருக்கம் - மனக்கசிவு. மனதுருகல் - மனங்கசிதல். மனத்தழிவு - மனவொடுக்கம். மனத்தழுக்கம் - அழுக்காறு. மனத்தளர்ச்சி - மனமெலிவு.மனத்தாபம், மனஸ்தாபம் - மன விதனம்,மனக்கவலை. மனத்தாராளம் - மனப்பூரணம். மனத்தாழ்மை - மெத்தெனவு. மனத்திடன் - மனத்தைரியம். மனத்திட்டம் - மனப்பிரமாணிப்பு. மனத்தியானம் - மனச்சிந்தனை. மனத்திருத்தி - மனப்பூரணம், மனநிறைவு. மனத்துக்கம் - மனத்துயர். மனத்துப்பரவு - மனச்சுத்தம்.மனத்துயரம், மனத்துயர், மனத்துன்பம் - மனநோ. மனத்தூய்மை - மனச்சுத்தம். மனத்தேற்றம் - மனத்திடன். மனத்தொழுக்கம் - மனவொழுங்கு. மனநசிவு - மனக்குறை. மனஸ்நாநம் - மானதஸ்நாநம். மனநியாயம் - மனச்சாட்சிக்குரிய நீதி.மனநிலை, மனநிறை - மனந்தளம்பாமை. மனநிறைவு - மனப்பூரணம், மனத்திருத்தி. மனநீதி - மனநியாயம். மனநெரிடு - வஞ்சகம். மனநெரிவு - மனக்குறை. மனநெருக்கு - வெடுவெடுப்பு.மனநேர், மனநேர்மை - மனதறிந்த வுண்மை.மனநோ, மனநோக்காடு - மனவிதனம். மனந்தழைத்தல் - மனந்திருத்தியடைதல். மனந்தளம்புதல் - மனமசைதல். மனந்தளர்தல் - தைரியங்கெடல். மனந்திரும்புதல் - மனமானதுஒன்றைத் தீதெனக்கண்டு மற்றொன்றைப் பற்றுதல், மனத்திரிபு கொள்ளல். மனந்தீத்தல் - ஏங்குதல், மனம்புழுங்குதல். மனந்தெளித்தல் - மனந்தேறுதல். மனப்படுத்தல் - சம்மதப்படுத்தல். மனப்பற்று - சிநேகம். மனப்பாடம் - மனதிலே பதிந்தபாடம். மனப்பிடிப்பு - மனப்பற்று. மனப்பிணக்கு - மனமாறுபாடு. மனப்பிணி - மனோவியாதி. மனப்பிரமை - மனமயக்கம். மனப்பின்னிதம் - மனவிரோதம். மனப்பீடை - மனத்துன்பம்.மனப்புகைச்சல், மனப்புழுக்கம் - எரிச்சல். மனப்புனிதம் - மனச்சுத்தம். மனப்பூரணம் - உள்ளக்களிப்பு, மனத்திருத்தி. மனப்பூருவம் - மனப்பூரணம், மனமொப்பல். மனப்பே - மதிமயக்கு. மனப்பொருத்தம் - மனவொன்றிப்பு. மனப்பொலிவு - மனத்தாராளம். மனப்பொறுப்பு - மனத்தரிப்பு. மனமடிவு - மனத்துயரம். மனமலர்ச்சி - சந்தோஷம். மனமலர்தல் - சந்தோஷித்தல். மனமலிநம் - மனவழுக்கு. மனமிடுக்கு - மனவலி. மனமுரிதல் - மனம் வெறுத்தல். மனமுரித்தல் - மனதை மடியப்பண்ணுதல். மனமுரிவு - மனவெறுப்பு. மனமுருகல் - மனதுருகல், உள்ளமுருகுதல். மனம் - இந்துப்பு, சிந்தை இஃதுஉட்கரணநான்கி னொன்று, முப்பொறியினுமொன்று. மனம்பதிதல் - கருத்துவைத்தல். மனம்புழுங்கல் - மனம் கன்றுதல். மனம்பொங்குதல் - கோபங் கொள்ளல், மனங்களித்தல். மனம்வெறுத்தல் - வெறுப்புக் கொள்ளல். மனராசி - சந்தோஷம், மனப்பொருத்தம். மனவஞ்சனை - குள்ளம். மனவந்தரம் - ஒரு மனுவுடையவாளுகை காலம், அஃது ஒருதேவாண்டு. மனவலி - ஊக்கம். மனவாசகங்கடந்ததேவநாயனார் - சித்தாந்த சாத்திரம் பதினான்கனுளொன்றாகிய உண்மை விளக் கம்செய்தவர். மனவாஞ்சை - மனவாசை. மனவிகற்பம் - மனவேறுபாடு. மனவிகாரம் - மனத்திரிபு. மனவிருத்தி - மனவிருப்பம். மனவிழி - இசைப்பாட்டு. மனவிறப்பு - மனவொடுக்கம். மனவினை - குள்ளம், மனவைராக்கியம். மனவு - அக்குமணி, சங்கு, புடைவை,மணிப்பொது, பலகறை. மனவுச்சாகம் - மனவூக்கம். மனவுறுதி - மனவுச்சாகம். மனவூக்கம் - மனவெழுச்சி. மனவெப்பம் - மனவழல். மனவெழுச்சி - மனவூக்கம், உள்ளக்கிளர்ச்சி. மனவெறுப்பு - மனக்கசப்பு. மனவேகம் - கோபம். மனவொற்றுமை - மனவொருமிப்பு. மனவொன்றிப்பு - மனப்பொருத்தம். மனனம் - சிந்தித்தல், ஞாபகம். மனா - அரைப்பட்டிகை. மனாகுலம் - மனோவிதனம். மனாகை - பெண்யானை. மனாயி - மனுமனைவி. மனாவு - அரைப்பட்டிகை. மனிதர் - மானிடர். மனிதன் - மானிடன். மனிலா - ஓரூர். மனிலாஆத்தா - ஓர் ஆத்தா. மனிலாப்பயறு - வேர்க்கடலை. மனு - தருமநூல் பதினெட்டினொன்று, நீதி, மந்திரம், மனுச்சக்கரவர்த்திகள் அவர் சுவாயம்புசுவாக்கிருஷன் உத்தமன் தமசன்இரேவதன் தாக்கிஷன் வைவச்சுவதன், மனுதன், மன்றாட்டு,விண்ணப்பம், இலக்கினம். மனுகுலம் - மனுஷசாதி. மனுக்கள் - மனிதர். மனுசன் - மனிதன். மனுசேந்திரன் - அரசன். மனுசை - பெண்.மனுடன், மனுஷன் - ஆத்துமா, மனிதன்.மனுஷீகத்துவம், மனுஷீகம் - மனுஷசுபாவம். மனுதர்மசாத்திரம் - மனுவினாற்செய்யப்பட்ட தருமநூல். மனுநீதி - தருமநூல், மனுமுறை. மனுநூல் - மனுநீதி சாஸ்திரம், தருமசாஸ்திரம். மனுநெறி - தரும நூல், மனுமுறை. மனுபு - மனிதன். மனுப்புத்திரர் - மனுடர், மனுவமிசத்தார். மனுப்பேசுதல் - பரிந்துபேசுதல். மனுமகன் - பிரபு, யோக்கியன். மனுமக்கள் - மனிதர். மனுவந்தரம் - மனுவின்காலம். மனுவர் - கொல்லர், மானுடர். மனுவவதாரம் - மனுப்பிறப்பு. மனுஸ்மிருதி - மனுதர்ம சாஸ்திரம். மனை - இரண்டாயிரத்து நானூறுகுழி கொண்டநிலம், பதினா றரையேயரைக்காற் குழிகொண்ட நிலம்,மனைவி, வீடு. மனைக்கிழத்தி - மனையாட்டி. மனைக்கோள் - பல்லி. மனைத்தக்காள் - இல்லொழுக்கிற் குரிய மனைவி. மனைத்தாயம் - இல்லொழுக்கத்தின்றிறமை, வீட்டுரிமை. மனைமாட்சி - இல்லறத்துக்குரியநற்குண நற்செய்கைகள், இல்வாழ்க்கை யிலட்சணம். மனைமாட்சிக்குரிய - நிமித்தம் போற்றன் முதலாக வச்சமுற்றிரங்கலீறாகச் சொல்லப்பட்ட வைந்தும். மனையவரறம் - ஈதல், ஏற்றல், காத்தல்,ஒழுக்கம், புணர்தல், துய்த்தல். மனையறம் - இல்லறம்.மனையாட்டி, மனையாள் - மனைவி.மனைவாழ்க்கை, மனைவாழ்வு - இல்லாச்சிரமம். மனைவி - நாயகி. மனைவிஸ்தானம் - ஏழாமிடம். மனோகதம் - எண்ணம், விருப்பம். மனோகதி - மனோவேகம். மனோகரம் - அழகு, இச்சை, சந்தோஷம். மனோகுலம் - மனாகுலம். மனோக்கியம் - அழகு, மனதிற் குவப்புள்ளது. மனோசங்கற்பம் - மனக்கருத்து. மனோசஞ்சலம் - துக்கம். மனோசலனம் - மனவசைவு. மனோசவம் - விவேகம், அதிவேகம். மனோசன் - மன்மதன். மனோசாஞ்சல்யம் - மனச்சலநம். மனோசாட்சி - மனச்சாட்சிமனோசிலம், மனோசிலை - ஓர்மருந்து இது விளைவு பாஷாணமுப்பத்திரண்டினொன்று. மனோச்சாகம் - மனவூக்கம். மனோதண்டம் - மனக்கட்டுமை. மனோதத்தம் - மனதிலேயீதற்குச்சங்கற்பித்தல். மனோதீபம் - மனதிறக்கப்படாதது. மனோதுக்கம் - மனத்துக்கம். மனோதைரியம் - மனத்திடன், மனமுயற்சி. மனோநாசம் - மனமிறத்தல். மனோநிதானம் - மனதின்றீர்ப்பு. மனோபதி - பிரமன் நகரம். மனோபத்தி - மனப்பத்தி. மனோபலம் - தைரியம். மனோபவம் - மனசிலே பிறந்தது. மனோபவன் - மன்மதன். மனோபாஷிதம் - தன்னொடு தான்பேசல். மனோபாவம் - மனநிலை, மனவெண்ணம். மனோபாவனை - மனப்பாவிப்பு. மனோபீஷ்டம் - மனப்பிரியம். மனோபு - மன்மதன். மனோபூசை - உட்பூசை.மனோமயகோசம், மனோமயம் - பஞ்சகோசத் தொன்று. மனோயோனி - காமன். மனோரஞ்சிதம் - மனப்பிரியம். மனோரதம் - இச்சை, இன்பம்,விருப்பம். மனோரதியம் - இல்லதை யுள்ளதுபோற் கற்பித்தனுபவித்ததா யுருசியடைதல். மனோரமை - மேருமலைக்குமகளுமிமய மலைக்கு மனைவியுமாகியமேனை. மனோரம்மியம் - மனத்திருத்தி. மனோராசி - மனச்சம்மதி. மனோராச்சியம் - மனநினைவினாற்றான் மகிமையடைந் தனுபவிப்பதாகச் சிந்தித்து மகிழ்தல்,வீணெண்ணம். மனோலயம் - பரிகாசம். மனோலயம் - மனவொடுக்கம். மனோலவுலியம் - வீண் தோற்றம். மனோலி - பகிடிக்காரன், பரிகாசம். மனோலித்தனம் - பகிடிக்குணம். மனோவிகாரம் - மனச்சஞ்சலம்,மனதின்றிரிபு. மனோவிசனம் - மனவிதனம். மனோவிதனம் - துக்கம். மனோவியாபாரம் - மனசின் றொழில். மனோவிருத்தி - மனதின் வியா பாரம். மனோவேகம் - எரிச்சல், மனக்கதி. மனோற்சாகம் - மனமுயற்சி. மனோற்பவன் - மன்மதன். மனோன்மணி - அப்பிரகம், ஓர் சத்தி,பார்வதி. மனோன்மணித்தாய் - இந்துப்பு. மன் - அசைச்சொல் (உ.ம்) அதுமற்கொண்கன்ரேறே, ஆக்கம்(உ.ம்) நெடியன்மன், இறந்தகாலவிடைநிலை (உ.ம்) என்மனார்,ஒழியிசை (உ.ம்) கூறியதோர்வாண்மன், கழிவு (உ.ம்) சிறியகட்பெறினே யெமக்கீயுமன்னே,மிகுதி (உ.ம்) எந்தை யெமக்கருளுமன், அரசன், நிலைபேறு,பெருமை, ஆக்கம், மிகுதி. மன்பதை - மக்கட்பரப்பு. மன்பா - ஆசிரியப்பா. மன்மத - இருபத் தொன்பதாவதாண்டு. மன்மதபாணம் - ஓர்வகை மல்லிகை,காமன் கணை. மன்மதம் - காமம், விழா. மன்மதன் - காமன், மனங் கலக்குவிப்போன். மன்மதாலயம் - மாமரம். மன்வந்தரம் - மனுவந்தரம். மன்விருத்தம் - ஆசிரிய விருத்தம். மன்ற - அசைச்சொல், தேற்றம் (உ.ம்)கடவுளாயினுமாக மடவேமன்றவாழியமுருகே, நிச்சயமாக. மன்றகம் - சபை. மன்றம் - சபை, நிச்சயம், நெடுந்தெரு, பலர் கூடும்வெளி,வாசனை, வெளி, வெள்ளிடை,பொதுவிடம், ஊர் நடுவேபலரும் கூடியிருக்கும் மரத்தடி. மன்றல் - கல்யாணம், நெடுந்தெரு,வாசனை. மன்றாடுதல் - இரந்து கேட்டல்.மன்றாட்டம், மன்றாட்டு - வேண்டுதல். மன்று - கனகசபை, சபை, நீதித்தலம்,வெளி. மன்றுபடுதல் - வெளிப்படல். மன்றுளாடி - சிவன். மன்னர் - அரசர். மன்னர்பின்னோர் - வைசியா.மன்னர்மன்னவன், மன்னர்மன்னன் - இராசாதி ராசன், துரியோதனன். மன்னல் - மன்னுதல். மன்னவர் - மன்னர். மன்னவன் - மன்னன், வியாழன். மன்னன் - அரசன், ஆடவர் பருவத்தொன்று அது முப்பத்திரண்டுக்குமேல்நாற்பத்தெட்டுக்குட்பட்டது,உத்திரட்டாதி நாள், எப்பொருட்குமிறைவன். மன்னார் - ஓரூர், பகைவர். மன்னார்கோயில் - ஓரூர். மன்னித்தல் - பொறுத்தல். மன்னிப்பு - பொறுதி. மன்னியு - இடைஞ்சல், கோபம்,துக்கம், பலி, பெருமை. மன்னியை - பிடர் நரம்பு, விசைநரம்பு. மன்னிறைதருதல் - வேளாண்மைமாந்தரியல்பி னொன்று. மன்னுதல் - சேர்தல், நிலைபெறுதல்,மிகுதல். மன்னும் - மிகவும். மன்னுமான் - கடவுள். மன்னுயிர் - ஆத்துமா, சீவன், பல்லுயிர். மன்னுலகு - தேவலோகம். மன்னெச்சி - மனவிதனம். மன்னை - கதுப்பு, கோபம்,தொண்டை. மன்னோ - அசைச்சொல். மா மா - அசைச்சொல், அழகு, அழைத்தல், அளவு, அறிவு, ஆணி,இடித்தமா, இடைமா, இலக்குமி, எதிர்மறை யுபசருக்கம்,ஐயவுருப சருக்கம், ஓரசைச்சொல், ஓரெண், அஃதுஇருபதினொன்று, ஓரெழுத்து,ஓர் மரம், கட்டு, கறுப்பு, குதிரை,பன்றி யானை யிவற்றினாண்,குதிரைப் பொது, சரச்சுவதி, சீலை,செல் வம், தாய், துகள்,நஞ்சுக்கொடி, நிறம், பரி, பிரபை,பெரிய, பெருமை, மகத் துவம்,மரணம், மிகுதி, மேன்மை,வண்டு, வயல், வலி, வியங்கோளொடு வரு மசைச் சொல் (உ.ம்)உப்பின்று புற்கை யுண்கமாகொற்கையோனே, விலங்கின்பொது, வெறுப்பு, நிலம், மாமை. மாகக்கல் - கானற்கல். மாகசம் - கையாந்தகரை. மாகட்டகம் - செந்நாயுருவி. மாகண்டம் - அதிகண்டம் அதுயோகமிருபத்தேழி னொன்று. மாகதம் - மகததேயத்துள்ளது. மாகதர் - அரச மாதுக்கும் வைசியனுக்கும் பிறந்தொருவர் வீரமுதலியவற்றைப் புகழ்வோர்,பாணர், மகததே யத்தார், வம்சபரம்பரை, கூறிப் புகழ்வோர். மாகதன் - ஜராசந்தன். மாகதி - சீனி, திப்பிலி, பிராகிருதபாஷை, முல்லைக்கொடி. மாகநீர் - மாசித் தீர்த்தம். மாகந்தம் - மாமரம், பன்னீர். மாகந்தி - நெல்லிமரம். மாகம் - ஆகாயம், மகநாள், மாசிமாதம், தேவுலகம், திக்கு, மேகம்,எருக்கு. மாகயம் - கெவுரி பாடாணம். மாகரி - ஆண் யானை. மாகர் - தேவர். மாகலி - இந்திர சாரதி, சந்திரன். மாகலூர்க்கிழான் - புறப்பொருள்வெண்பா மாலைக்கு உரையியற்றியவர். மாகவதி - கீட்டிசை. மாகனன் - பார்ப்பான். மாகாணம் - நாடு. மாகாணி - ஓரெண் அது பதினாறிலொரு பங்கு. மாகாத்மியம் - பெருமை. மாகாளம், மாகாளயம் - ஓர் சிவதலம். மாகாளன் - அயன் படைத்தலைவன். மாகாளி - சத்த மாதர்களி லொருத்தி,களாவிழுது, மாவலிக் கிழங்கு. மாகாளிக்கிழங்கு - பருனாரி. மாகாளிசரன் - களாவிழுது. மாகிரன் - இந்திரன். மாகினம் - இராச்சியம். மாகு - வலை. மாகுத்தம் - பூனைக்காலி. மாகுலவர் - வேடர். மாகேசி - துர்க்கை. மாகேசுவரி - சத்த மாதர்களிலொருத்தி, பார்வதி. மாகேந்திரம் - நித்தியயோகத்தொன்று,மணப்பொருத்தம் பத்தினொன்று. மாகேயம் - பவளம். மாகேயன் - நரகாசுரன். மாகேயி - பசு. மாகை - பசு. மாக்கடு - சூரத்துக் கடுக்காய். மாக்கம் - கையாந்தகரை. மாக்கருவி - குதிரைக் கல்லணை. மாக்கல் - பலப்பம். மாக்கள் - பிள்ளைகள், மனிதர். மாக்குத்தம் - பூனைக்காலி. மாங்கல்லியசூத்திரம் - தாலிக்கொடி. மாங்கல்லியதாரணம் - தாலிக்கட்டு. மாங்கல்லியபிச்சை - தாலிப்பிச்சை. மாங்கல்லியம் - தாலி. மாங்கன் - ஓரீரல், ஓர் மீன். மாங்காயீரல் - ஓரீரல். மாங்காய்ப்பூட்டு - ஓர்வகைப் பூட்டு. மாங்கிசம் - மாமிசம். மாங்கிஷச்சீலை - ஈரற்கல்லு. மாங்கிஷபட்சனி - மாமிசம் புசிப்போன். மாங்கிஷம் - மாங்கிசம். மாங்கிஷவாசகன் - கத்தூரி, எலும்பு. மாங்குடிகிழார் - புறநானூறு பாடியபுலவரி லொருவர். மாங்குடி மருதனார் - சங்கப்புலவரிலொருவர். மாங்கொட்டை - மாம்பழத்தின்கொட்டை. மாசக்காய் - ஓர் மருந்துச் சரக்கு. மாசங்கம் - சூதகம். மாசமானம் - வருடம். மாசடையான் - வன்னி, கஞ்சா. மாசம் - மாதம். மாசரம் - கஞ்சி மேலேடு. மாசலம் - நோய், முதலை. மாசலன் - கள்வன். மாசவிடாய் - மாதவிடாய். மாசறல் - குற்றந்தீர்தல், நன்மை. மாசனம் - பிராமணர், பெரியோர். மாசாதம் - கூழ். மாசாத்தன் - கண்ணகி தந்தை. மாசாந்தம் - அமாவாசியை. மாசாலம் - ஓர் மாயவித்தை, சிணுங்குகை. மாசி - ஓர் மாதம், புதுவரம்பு, மகநாள், மேகம், மாசிக்காய், கும்பவிராசி. மாசிகம் - இறந்தோர்க்கு மாசந்தோறுஞ் செய்யு மோர்கடன், ஓர்மருந்து, மாத சம்பந்தமாகித்தோன்றுவது. மாசிகை - பறவை. மாசிங்கம் - கலங்கொம்பு. மாசிபத்திரி - ஓர் பூடு. மாசிமகம் - ஓர் திருநாள். மாசியம் - மாசிகம். மாசிரம் - சீக்கிரம். மாசிலிப்பட்டினம் - ஓர் நகரம். மாசு - அழுக்கு, அற்பம், கருமை,குற்றம் ,பால்வீதிமண்டபம்,மழை, மறு,மேகம். மாசுகம் - பீர்க்கு. மாசுணம் - பாம்பு, பெரும்பாம்பு. மாசுண்ணல் - அழுக்காதல். மாசுதீர்ப்பான் - நாவிதன். மாசேனன் - அருகன், கடவுள்,குமரன், திருமால். மாசேனை - மிகுதி. மாசை - பொன். மாச்சக்காய் - மாசக்காய். மாச்சரியம் - பொறாமை. மாச்சல் - மாய்ச்சல். மாச்சாதம் - கூழ். மாச்சி - பாம்புகொல்லி. மாச்சிலை - மாக்கல்லு. மாஞாலம் - மாசாலம். மாஞ்சி - ஓர் வாசனைப் பண்டம்,சடா மாஞ்சி. மாஞ்சில் - ஒர் மருந்து, சடா மாஞ்சில், மகிழ மரம். மாடகம் - வீணை முறுக்காணி. மாடக்குழி - விளக்குவைக்குஞ்சுவரறை. மாடப்புறா - ஓர் புறா. மாடப்புறாக்கண்ணிறம் - அமுக்கிறா. மாஷம் - உழுந்து. மாடம் - உப்பரிகை, உழுந்து, மண்டபம். மாடல் - செய்தல். மாடன் - ஓர் பேய், மடையன். மாடி - அரண்மனை, இக்கட்டு,இரணைப்பல், கோபம், தரித்திரம், குளிர், புடைவை யோரம்,மெத்தை. மாடியம் - பாதை. மாடு - அகன்மணி, இடம், இரத்தினம், சீதனம், செல்வம், பக்கம்,பசுப்பொது, பொன். மாடை - அரை வராகனெடைப்பொன், பொன், விரிந்து முன்வளைந்திருத்தல், மாசை. மாடைக்கொம்பன் - உள்வளைந்தகொம்பன்.மாட்சி, மாட்சிமை - அழகு, பெருமை,நன்மை. மாட்டடி - குருட்டடி. மாட்டல் - மாட்டுதல், அழித்தல். மாட்டறைதல் - உறுதியின் கீழ்ப்புறத்தெழுதல். மாட்டாங்கோல் - மாடோட்டுங்கோல். மாட்டாமை - இயலாமை. மாட்டார் - ஏலாதார். மாட்டிலையான் - பெரிய ஈ. மாட்டிறக்கம் - ஆற்றிலே மாடிறங்குதுறை. மாட்டீ - பேரீ. மாட்டுக்கிடை - பசுத்தொழுவம். மாட்டுக்கொட்டில் - பசுக்கொட்டில். மாட்டுண்ணி - பேருண்ணி. மாட்டுதல் - அடித்தல், இயலுதல்,கடாவுதல், கட்டுதல், சம்மதித்தல், செருக்குதல், பூணுதல், மாள்வித்தல், மூட்டுதல். மாட்டுத்தாள் - பருக்கன் கடுதாசி. மாட்டுமுலைக்காளான் - ஓர் காளான். மாட்டெறிந்தொழுகல் - ஓர் யுக்தி அதுஒன்றற்குச் சொல்லப்பட்ட விலக்கணத்தை யதனைப் பெறுதற்குரிய மற்றொன்றற்கு மாட்டிச்சொல்லி நடத்தல். மாட்டேற்று - குறிப்பு, புறத்துச்செலுத்துகை. மாணம் - மாட்சிமை. மாணல் - நன்மை, மாட்சிமை,சிறத்தல். மாணவகம் - கல்வி. மாணவகன் - அறிவீனன், பிரமசாரி,பிள்ளை, மாணாக்கன். மாணவம் - பதினாறு கோவையுள்ளமுத்தாரம். மாணவன் - பிள்ளை, மனிதன்,இளைஞன், பிரமசாரி. மாணவ்வியம் - சிறுவர் கூட்டம்,மாணவர் கூட்டம். மாணாக்கன் - கற்போன். மாணாமை - மாட்சிமைப்படாமை. மாணார் - பகைவர். மாணி - ஆண்குறி, குறல், பிரமசாரி,மருக்கம், இந்துப்பு. மாணிகை - எட்டுப் பலங்கொண்டநிறை. மாணிக்கத்தாள் - வேசி. மாணிக்கம் - சிவப்புக்கல், செம்மணி,அது நவமணியி னொன்று. மாணிக்கவாசகன் - திருவாதவூரன். மாணிக்குழி - ஓரூர். மாணிக்குறி - ஆண் குறி.மாணிபந்தம், மாணிமந்தம் - உப்பு. மாணை - ஒரு கொடி. மாண் - மாட்சிமை, மாணென் னேவல். மாண்டது - மகிமைப்பட்டது. மாண்டல் - மாட்சிமைப்படுதல்,இறத்தல். மாண்டவர் - மாண்டார், இறந்தவர். மாண்டார் - இறந்தோர், பெரியோர்,சிறந்தோர். மாண்டூகம் - உபநிடத முப்பத்திரண்டினொன்று. மாண்பு - அழகு, பெருமை, மாட்சிமை. மாதங்கம் - அரசு, உத்தியாபரணம்,யானை. மாதங்கர் - சண்டாளர். மாதங்கன் - அரச மாதுக்கும்வேடனுக்கும் பிறந்து செருப்புத்தைப்போன், கீழ்மகன், வேடன். மாதங்கி - காளி, துர்க்கை. மாதசூதகம் - மாததூரம். மாதச்சங்கிரமம் - மாதப் பிறப்பு. மாதண்டம் - இராச வீதி, பெரும்பாதை. மாததூரம் - மகளிர் சூதகம். மாதநம் - இலவங்கம். மாதப்பிறப்பு - சூரியனோரிராசியினின்று மற்றோ ரிராசிக்குச்செல்லுஞ் சமயம். மாதப்புறா - ஓர் நீர்ப்புள். மாதம் - கடைதல், கராம்பு கொல்லல்,சந்தோஷம், பாதை பெருமை,மதம், மாசம். மாதரி - காளி. மாதர் - அழகு, ஆசை,இசைச்சொல், தலைவியர்,பெண்கள். மாதர்குணச்சலம் - கெந்தகம். மாதவி - இந்திரன் சாரதி. மாதலுங்கம் - மாதளை. மாதவப்ரியம் - செம்பூசினி. மாதவம் - இனிமை, கள், தவம்,வசந்த காலம், வைகாசி மாதம். மாதவர் - முனிவர். மாதவறுதி - மாதக்கடை. மாதவன் - திருமால், வசந்தன், முனிவன். மாதவி - அருச்சுனன் மனைவி, ஓர்கொடி, கண்ணன் மனைவி, கள்ளினையட்ட வெல்லம், குருக்கத்தி,கோவலன், கூத்தி, சீனி, துளசி,துர்க்கை, தூதிகை, நாடகக்கணிகை, வசந்தகால மல்லிகை. மாதவிகை - வசந்த மல்லிகைக்கொடி. மாதவிகொழுநன் - அருச்சுனன்,கண்ணன். மாதவிடாய் - மாதத்தீட்டு. மாதவிடை - மாதத்தீட்டு. மாதளை - ஓர் மரம், மாதுளை. மாதளைச்சிலை - மாந்தளிர்க்கல். மாதறி - விட்டம். மாதனம் - கராம்பு. மாதன் - வித்யா தநங்களாற் கர்வித்திருப்பவன். மாதா - தாய், பார்வதி, அளப்பவன். மாதாந்தம் - மாத வுறுதி. மாதாமஹன் - தாயைப் பெற்றபாட்டன். மாதாமஹி - தாயைப் பெற்ற பாட்டி. மாதானுபங்கி - திருவள்ளுவர். மாதி - மா, வட்டமா யோடல். மாதிகம் - குதிரை மார்க்கம். மாதிபோதி - நெருஞ்சில். மாதிமாதிர்த்தனார் - புறநானூறுபாடிய புலவரி லொருவர். மாதிரம் - ஆகாயம், திசை, பூமி,மண்டலம், மலை, யானை. மாதிரி - அதிவிடயம், மாதிரிகை. மாதிரிகை - சாயல், மாதா, விதம். மாதிரு - ஆகாயம், இரேபதி, இலக்குமி, பசு, பார்ப்பனிச்சி, பூமி,மாதா. மாதிருகசிதன் - பரசுராமன். மாதிருகாசிதன் - அறிவீனன். மாதிருகாதுகன் - இந்திரன். மாதிருகை - அரிவரி, கைத்தாய்,தேவி, மாதா. மாதிருகோத்திரம் - மாதா வமிசம். மாதிருஸ்தானம் - நாலாமிடம். மாதிருமுகன் - அறிவீனன். மாதிர்காரகன் - சந்திரன். மாது - அசைச்சொல் (உ.ம்) விளிந்தன்று மாதவர்த்தெளிந்த வென்னெஞ்சு, பெண், விருப்பம்,கன்னியாராசி, காதல், பெருமை. மாதுகரம் - பிரமசாரி பிச்சை, வீடுதோறுஞ் சென்று பிச்சையெடுத்தல். மாதுங்கம் - கொம்மட்டி மாதளை,மாதவி, கையாந்தகரை. மாதுபாகம் - புட்பராகம், பெண்பக்கம். மாதுமை - பெண்டன்மை. மாதுரம் - மல்லிகை. மாதுரி - சாராயம். மாதுரியம் - மிகுமதுரம், இனிமை. மாதுரு - மாதா.மாதுருகமனம், மாதுருகரணம் - ஈன்றாட்கலத்தல் இது பாதகமொன்பதினொன்று. மாதுருமட்டை - விசாள்மட்டை. மாதுலங்கம் - மாதளை, கொடிமாதுளை. மாதுலம் - ஊமத்தை. மாதுலன் - மாமன், தாயுடன் பிறந்தவன். மாதுலஸ்தானம் - ஐந்தாமிடம்.மாதுலா, மாதுலாநி - மாமன்,மனைவி. மாதுலி - மாதலி, மாமன் மனைவி. மாதுலுங்கம் - மாதளை. மாதுலை - மாமி, மாதுலன் மனைவி. மாதுவசை - பெண் வசம்பு. மாதுவம் - கள்.மாதுளங்கும், மாதுளம் - மாதளை. மாதுளை - மாதுளம், தாடிமம். மாதுறுப்பு - உத்தியாபரணம். மாதூகரம் - மாதுகரம். மாதேவன் - சிவன், பன்னோருருத்திரரி லொருவன். மாதேவி - பார்ப்பதி, ஊமத்தை. மாதொருபாகன் - சிவன். மாதோ - அசைச்சொல். மாத்தகை - மிகுசிறப்பு, மிகுதகை, பெருந்தகை. மாத்தியாகி - ஞானிகளி லோர்வகை.மாத்த்யானம், மாத்தியானிகம் - மத்தியானம், மத்தியான வந்தனம். மாத்திரம் - அளவு, தனிமை, அற்பம். மாத்திரி - மத்திரன் மகள். மாத்திரை - அளவு, அற்பம், காதணி,காலநுட்பம், காலவிரைவு,குளிகை, குற்றுயிரெழுத்து,பாக்கியம். மாத்திரைக்கோல் - அளவைக்கோல். மாத்திரைச்சுருக்கம் - ஒரு பொருள்பயந்து நிற்பதோர் சொல்லொருமாத்திரை குறைய வேறோர்பொருள் பயக்கப்பாடுவது (உ.ம்.)ஏரி, எரி. மாத்திரை வருத்தனம் - ஒருபொருள்பயப்பதோர் மொழி யொரு மாத்திரை கூடப் பிறிதோர்பொருள் பயப்பது, (உ.ம்) ஒதி, ஓதி. மாத்து - வரிசை, மகத்து. மாத்ரி - பாண்டுராஜன் மனைவி,வசம்பு. மாத்ரீபதி - பாண்டுராஜன். மாத்ருகாதுகன் - இந்திரன். மாத்ருகேசடன் - மாமன். மாத்ருநந்தநன் - முருகன். மாத்விகம் - இலுப்பைப்பூச் சாராயம். மாநசபூசை - மனப்பூசை. மாநடன் - சிவன். மாநவன் - பாலகன், மனிதன். மாநவி - சுவாயம்புவம நுவின் மகள்,மாநுடப்பெண். மாநவ்யம் - மானுடத்தொகுதி. மாநாகம் - ஓர் பாம்பு. மாந்தக்கொதி - ஓர் சுரம். மாந்தசன்னி - ஓர் நோய். மாந்தப்புல் - ஓர் புல், காவட்டம்புல். மாந்தம் - ஓர் நோய், மந்தம். மாந்தர் - ஆண்மக்கள், மனிதர். மாந்தல் - அவிந்தடங்கல், உள்ளழிதல்,குடித்தல், புசித்தல். மாந்தளிர் - மாமரத்துளிர், இதுதுவர்ப்பத்தி னொன்று. மாந்தளிர்ச்சிலை - கற்காலி. மாந்தளிர்ப்பச்சை - கொக்குக்கல். மாந்தன் - ஆண்மகன், மனிதன். மாந்தாதா - ஓரரசன். மாந்தாதுரு - ஓரரசன். மாந்தி - ஓர் கலியாணச்சடங்கு,மாமரம், மா. மாந்தியம் - மாந்தமானது. மாந்திரிகன் - மந்திரவாதி. மாந்திரியர் - மந்திரவாதிகள். மாந்துதல் - மாந்தல். மாந்தை - ஓரூர், ஓர் நோய். மாபத்தியன் - காமன். மாபலன் - காற்று. மாபலி - மாவலி. மாபலிவாணன் - ஓர் சக்கரவர்த்தி. மாபனம் - அளவு, தராசு. மாபுலி - சிங்கம். மாபுற்பாகம் - வெளியரங்க சிவபூசை. மாபூதி - சத்தநரகி னொன்று. மாப்பலகை - மாக்கல். மாப்பிடி - மாப்பிடிப்பு. மாப்பிள்ளை - மணவாளப்பிள்ளை,மருமகன், கணவன். மாப்பு - மிகுதி, மீன்றிரள், மன்னிப்பு. மாமகக்குளம் - கும்பகோணத்திலோர் குளம். மாமகம் - மாசிமகம், மாமாங்கம். மாமகன் - அம்மான், பிசுனன்,மன்மதன். மாமடி - மாமன். மாமணி - மாணிக்கம். மாமம் - மஞ்சள். மாமரம் - மா. மாமருத்துநூலோர் - வைத்தியர். மாமலி - அகத்தி. மாமல்லபுரம் - மாபலிபுரம். மாமன், மாமா - அத்தைகொழுநன்,அம்மான், புருஷன் தந்தை,மனைவியின்றந்தை, ஐந்தாமிடம். மாமன்காரகன் - புதன். மாமாங்கம் - குரு சிங்கவிராசியிலிருக்கும்போது மாசிமாதத்தில்மக நட்சத்திரம் வரும்நாள், இதுகும்பகோணத்தில் பன்னிரண்டுவருஷத்துக் கொரு தரம் நடக்கும்விசேஷ திருவிழா. மாமாத்திரர் - வைத்தியர். மாமி - அம்மான்மனைவி, பிதாவின்சகோதரி, மனைவியின்றாய். மாமிசதாரி - ஊன்றின்போன். மாமிசசிலை - கார்நிறக்கல். மாமிசபேதி - ஓர் பூடு. மாமிசம் - இறைச்சி, ஊன். மாமிசி - சடாமாஞ்சில். மாமிசோத்தானம் - உயிர்த்தெழுதல். மாமுகன்கை - ஐந்து. மாமுகிலை - துளசி. மாமுகில் - குறிஞ்சா. மாமுடி - நெட்டி. மாமுநி - நாயுருவி. மாமுநீ - அருகன், வசிட்டன். மாமூலனார் - கடைச்சங்கப் புலவரிலொருவர். மாமேரு - மகாமேரு. மாமை - அழகு, நிறம், கருநிறம். மாம்படை - வாழை. மாயப்பெண் - மாயாபோகப்பெண். மாயம் - அழகு, கறுப்பு, தந்திரம்,தீமை, பொய், வஞ்சகம், கனவு,தீது. மாயயாக்கை - மாயாதேகம். மாயரூபம் - மெய்போலத் தோற்றும்பொய்யுருவம். மாயவள் - இடாகினி, காளியேவல்செய்வாள், தெய்வப்பெண். மாயவன் - திருமால். மாயவன்மேனி - நாகப்பச்சை. மாயவித்தை - ஓர் மாந்திரியவித்தை,தந்திரத் தொழில். மாயவன் - கரியவன், திருமால். மாயன் - கரியவன், திருமால். மாயாகாரன் - இந்திரசாலக்காரன். மாயாகாரியம் - மாயையிற்றோற்றப்படுதல். மாயாகிருது - மாயாகாரியகத்தன். மாயாசங்கற்பம் - மாயாகாரியம். மாயாசத்தி - பஞ்சசத்தியினொன்று.மாயாசாலம், மாயாசித்து - மாயம். மாயாசீதை - போலிச்சீதை. மாயாசுதன் - புத்தன். மாயாசூனியம் - மறைவின்மை. மாயாதம் - முதலை. மாயாதாரகம் - மாயையை ஆதாரமாகவுடையது, மாயையை முதற்காரணமாக வுடையது. மாயாதாரணை - நவதாரணையினொன்று, அது நாமம், வடிவுமுதலிய விகாரங்களின்றிக் காலத்தகத்தும் இடத்தகத்தும் படாதபரமான்மாவிடத் திலந்தக் கரணஞ்செய்கையாற் புனைந் துரைக்கப்பட்ட பிரபஞ்சத்தை வியாபாரமின்றித் துறத்தற்குக் கருவியானமகா வாக்கியத்தைப் பொருளுணர்ச்சியோடுச் சரித்தல். மாயாதி - நரபலி. மாயாதேகம் - நிலையற்ற சரீரம்,மாயையாலான தேகம். மாயாதேவி - புத்தன்றாய். மாயாதேவிசுதன் - புத்தன். மாயாபாசம் - பந்தமாயை. மாயாபிரதிபிம்பர் - ஒன்றின் சாயலாய்த் தோற்று மரூபிகள், மாயையாற் பிரதி பலிக்கு முருவுடையோர். மாயாபுரி - சத்தபுரியி னொன்று,பித்தளை, மாயா சரீரம், அரித்துவாரம். மாயாமந்திரம் - ஓர் மந்திரம். மாயாமயக்குமாரன் - முருகன். மாயாமம் - புளி. மாயாமருளி - ஒர் தேவதை. மாயாமலம் - மாயைமலம். மாயாலட்சணம் - அசத்து, சடம்,அநித்தம், துக்கம், கண்டம்ஆகிய ஐந்து. மாயாவதி - இரதிதேவி. மாயாவல்லபம் - மாயாகாரியவல்லமை. மாயாவாதம் - ஓர் சமயம், ஏகான்மவாதம். மாயாவாதி - ஓர் சமயி. மாயாவி - மாயக்காரன், மாயைசெய்பவன். மாயாவித்தை - மாயவித்தை. மாயாவிமோசனம் - மாயைநீங்கல். மாயாவினோதம் - மாயை விளையாட்டு. மாயாளி - வட்டத்திருப்பி. மாயிரம் - புறமானமுகம். மாயு - பித்தம். மாயுராஜன் - குபேரன் மகன். மாயூரம் - ஓரூர், மயில், கூட்டம். மாயேசுபரி - சத்தமாதர்களிலொருத்தி பார்வதி. மாயை - அறிவு, இந்திரசாலமுதலியன, இரக்கம், இரதிதேவி,இலக்குமி, காளி, சத்தபுரியினொன்று, பஞ்ச மாயையினொன்று, அது சகத்து ருபமானஅன்னிதா தோற்றத் திற்குக்காரணமாகை, பொய், மாயம்,மாயாசத்தி, வஞ்சகம்,வித்தியாதத்துவ மேழினொன்று,அரித்துவாரம். மாயைபரை - ஓர் சத்தி. மாயைமலம் - மும்மலத் தொன்று,அது மறைப்பு. மாயையுற்றாள் - காளி. மாயோபாதானம் - மாயையையுபாதானமாகவுடையது. மாயோர் - பெண்கள். மாயோள் - பெண். மாயோனாள் - திருவோணம். மாயோன் - திருமால். மாயோன் மருமகன் - குமரன். மாய் - ஆச்சா. மாய்ச்சல் - சாவருத்தம். மாய்ச்சி - பூட்டுவிலங்கு. மாய்தல் - சாதல், மடித்தல், மறைதல்,அழிதல். மாய்த்தல் - கொல்லல், மடிதல்,மறைத்தல், வருத்தல், அழித்தல். மாய்ப்பு - மாய்த்தல். மாய்மாலம் - எத்து, பே, மாசாலம்,மாரீசம். மாரகஸ்தானம் - இரண்டு மூன்றுஎட்டுபதினோரா மிடங்கள். மாய்வு - சாவு, மறைவு, அழிவு. மாரகம் - மரணம், மரணம் வருவிக்கிறது, மாரி, அழித்தல். மாரகன் - கொல்லோன், அழிப்பவன். மாரகாகளம் - குயில். மாரசயன் - புத்தன். மாரடம் - மருக்காரை. மாரடித்தல் - இழவுக்கடித்தல். மாரடைப்பு - நெஞ்சடைப்பு. மாரணசாந்தி - அழிக்கச் செய்யுஞ்சாந்தி. மாரணமந்திரம் - மாரணத்தொழில்பண்ணு மந்திரம். மாரணம் - மந்திரத்தாற் கொல்லல்,மரணம் அஃது அட்டகருமத்தொன்று, அழித்தல். மாரணம்பண்ணுதல் - மந்திராதிகளினாலழித்தல். மாரணயாகம் - அந்தியேஷ்டி, மாரகஞ்செய்யும் வேள்வி. மாரணவித்தை - சூனியவித்தை,மாரணக்கிரியை. மாரணவோமம் - மாரணயாகம். மாரண்டம் - பாம்புமுட்டை. மாரதம் - நால்வகை யுத்தரத்தினொன்று. மாந்தர் - நால்வகையிரத வீரரிலொருவர். மாரதன் - சிவன், மகாரதன், விட்டுணு. மாரத்துச்சாமை - ஓர் சாமை. மாரமணம் - கருமம். மாரம் - எதிரிரிடை, கோடகசாலை,மரணம். மாரளை - திராய். மாரன் - காமன். மாராட்டம் - ஓரூர், நகரம். மாராப்பு - சீலைப் பொட்டாணி. மாராப்புப்பட்டை - கத்தியின் கச்சை. மாராயம் - உவதை, சோபனம்,வந்தனம், விசேஷம், கோடகசாலை. மாரி - அழிவு, உவாதி, ஓர் ஒட்டு நோய்,கள், காடுகாள், கொலை, சாவு, நீர்,பற்பலரிறக்கு நோய், மழை, மாரிகாலம்,மேகம், மாரணம், காடுகிழாள். மாரிகாலம் - ஐப்பசி கார்த்திகையின்பருவம். மாரிக்குடா - வடகீழ்த்திசை. மாரிசா - பெருந்திரைக் கிளர்ச்சி,மாறுபாடு. மாரிசாதம் - வானம்பாடி. மாரிநாள் - உத்திரநாள். மாரிப்பண் - மாரிப்பொழுது. மாரிப்போகம் - புன்பயிர்விளைவு. மாரிமறத்தல் - மழை வறத்தல். மாரிமுத்து - ஓர் நோய். மாரீசம் - அட்டாதசவுப புராணத்தொன்று, மாயம். மாரீசன் - இராவணன் மாமனானஓரரக்கன், மாயம் பண்ணுவோன். மாருண்டம் - பாதை, பாம்பு முட்டை. மாருதம் - காற்று, வாயு, பூனைக்காலி. மாருதவன்னக்கல் - காக்கைக்கல். மாருதவீமன் - ஏகம்ப பாஷாணம். மாருதாசநம் - பாம்பு. மாருதாத்துமசன் - ஹநுமான். மாருதாபகம் - எலுமிச்சை. மாருதி - அனுமன், காற்று, வீமன். மாருதிச்செங்கை - கண்டகிச்சிலை. மாருதிநாதம் - வங்கமணல். மாருதேயன் - அநுமன். மார் - பன்மை விகுதி (உ.ம்.) தாய்மார்,மார்பு, வருங்காலங்காட்டி நிற்குமோர் வினை முற்றுவிகுதி (உ.ம்).உண்மார். மார்கழி - ஒர் மாதம், மிருகசீரிடம்,தனுர் மாதம். மார்க்கசகாயம் - வழித்துணை. மார்க்கசிரம் - மார்கழிமாதம். மார்க்கசிரம் - மார்கழிமாதம். மார்க்கணம் - அம்பு, இரப்பு, தேடல். மார்க்கணர் - இரப்போர். மார்க்கண்டர் - ஓர் முனிவர். மார்க்கண்டேயர் - மார்க்கண்டர். மார்க்கண்டேயம் - பதினெண்புராணத்தொன்று. மார்க்கதேறு - யோசனைதூரம். மார்க்கம் - ஆராய்வு, உலகம், ஓர்கூத்து, கஸ்தூரி, கையாந்தகரை,சமயம், தாளப்பிரமாணம் பத்தினொன்று, தெரு, மறுதலை,மார்கழிமாதம், மூலம், வழி. மார்க்கவம் - கரிசாலை. மார்க்கிகன் - வழிச்செல்வோன்,வேடன். மார்ச்சரியம் - பொறாமை இஃதுஉட்பகையாறினொன்று, விகாரமெட்டினுமொன்று. மார்ச்சனம் - துடைத்தல், சுத்திசெய்தல். மார்ச்சனி - விளக்குமாறு, துடைப்பம். மார்ச்சனை - முழவின் வாய்வார்,முழவொலி, மண். மார்ச்சாரகண்டம் - மயில். மார்ச்சாரகம் - மயில். மார்ச்சாரம் - பூனை. மார்ச்சாரி - கஸ்தூரி. மார்ச்சாலநியாயம் - சந்தேகிக்கும்படியான நியாயம். மார்ச்சாலம் - கோமேதகம், பூனை,மாநாய். மார்த்தண்டன் - எருக்கு, பன்றி. மார்த்தண்டம் - சூரியன். மார்த்தம் - ஓர் நீதிசாத்திரம், மிருதிவழி. மார்த்தவம் - மிருதுத்துவம். மார்த்தண்டம் - பதினெண் புராணத்தொன்று அது சூரியபுராணம். மார்த்தாண்டன் - சூரியன். மார்த்தோல் - மரமேறிகள் மார்பிலிடுந்தோல். மார்பகம் - நெஞ்சு. மார்பதை - மாதம். மார்பம் - மார்பகம். மார்பு - அகலம், நெஞ்சு, ஐந்தாமிடம். மாலகம் - மேடு, வேப்பமரம். மாலதி - இரவு, இளம்பெண், ஓர்மல்லிகை, சந்திரகிரகணம், சிறுசண்பகம், புட்பம், மல்லிகை,முல்லை. மாலதிபத்திரி - சாதிபத்திரி. மாலதிபலம் - சாதிக்காய். மாலமாயம் - பேயின்றந்திரம். மாலம் - குங்குமமரம், பேய், வயல். மாலயம் - சந்தனம், மாளயம். மாலயற்கரியான் - சிவன். மாலரும்பு - மராட்டிமொக்கு. மாலர் - கவசம், பார்பனப் பெண்ணுக்குஞ் சூத்திரனுக்கும் பிறந்தோர், புலைஞர், வேடர். மாலவம் - ஒர் தேசம். மாலவன் - புதன். மாலன் - விட்டுணு, வேடன். மாலாகண்டம் - நாயுருவி. மாலாகாரன் - பூவிற்போன். மாலாதீபகம் - ஓரலங்காரம், தீபகச்சொல் மாலையாய் வருவது (உ.ம்.)மனைக்கு விளக்கு மடவாண்மடவாடனக்குத்த கைசால்புதல்வர். மாலாபலம் - உருத்திராக்கம். மாலி - ஆதித்தன், ஓரரக்கன், கள்,மாலை யணிந்தவன். மாலிகன் - பூவிற்போன். மாலிகை - ஓர்மது, கழுத்தணி, நிரல்பட நிற்குங்குழூஉ, மகள், மாலை. மாலிங்கம் - இலிங்கபாஷாணம். மாலிமி - இளமைப் பருவத்திற்செய்நட்பு, மாலுமி. மாலிமை - மாலுமி, மாலுமித்தனம். மாலியம் - புஷ்பம், மானம். மாலியவான் - ஓரரக்கன். மாலினி - உமை, கங்கை, காளி,பூமாலைக்காரி. மாலினிகரணம் - நவபாதகத்தொன்று. மாலின்யம் - அழுக்கு. மாலுகம் - வேம்பு. மாலுக்கிளையாள் - துர்க்கை, மால்தங்கை. மாலுங்கம் - புளிமாதுளை. மாலுடைக்கண்டன் - புருடராகம். மாலுதல் - மயங்குதல்.மாலுதாசனன், மாலுதானம், மாலு தானன் - கண்குத்திப் பாம்பு. மாலுநதிவந்தோன் - பிரமன். மாலுமி - மீகாமன். மாலுமிசாத்திரம் - கடலோடிகளின்கணிதம். மாலுறல் - மயங்கல், மாறுபாடாய்நினைத்தல். மாலூரம் - வில்வமரம், வில்வம்,வேம்பு. மாலூந்தி - கருடன். மாலை - அந்திப்பொழுது, அரசன்மனை, இயல்பு, இரா, ஒழுங்காயிருப்பது, ஒழுங்கு, சொல்லாலேனும் பூவாலேனும் பொன்னாலேனும் மணியாலேனுந் தொடுத்ததொடை, நோய், பெண், முறை,வரி, வரிசை. மாலைக்காதம் - மாலைநேரம். மாலைக்கண் - மாலைக்காலத் திருட்பிடிக்குங்கண், மாலைக்காலத்தில் பார்வை மங்குங்கண். மாலைக்காமாலை - மாலைக்கண். மாலைசூட்டு - சுயம்வரம். மாலைநுழைஞ்சான் - ஓர் குருவி, ஓர்பூடு. மாலைநேரம் - அந்திப்பொழுது. மாலைப்படிகம் - பளிங்கு. மாலைப்பண் - மாலைப்பொழுது. மாலைமாற்று - முதறொடுத்துங்கடை தொடுத்தும்வாசிக்கவொரு படித்தாய்முடியும் பா. மாலையணி - ஓரலங்காரம் அதுபின்பின் வருவனவற்றிற்கு முன்முன் வந்த வவற்றை விசேடியங்களாக வேணும் விசேடணங்களாகவேனுஞ் சொல்லுதல் (உ.ம்.)மன்னிவள கண்காதளவுங் காதுதோண் மட்டிசையும் எனவும்,புனலுமதினுறு மலரு மதன் மணமுமெனவும் வரும். மாலையாங்காலம் - மாலைநேரம். மாலையீடு - மாலைசூட்டு, சமாதி. மாலையுவமை - ஓரலங்காரம் அஃது ஒருபொருட்குவரும் பலவுவமையைமாலையாகத் தொடுத்துக் கடைக்கட்பொருளைக் கூட்டி யுரைப்பது. மாலைவாரம் - மாலைப்பொழுது. மாலைவெள்ளி - அந்திவெள்ளி. மாலோன் - திருமால், புதன். மால் - அருகன், இந்திரன், கண்ணேணி, கம்மாளர் கருவியினொன்று, கருமை, காற்று,கொட்டில், சோழன், திருமால்,பழமை, புகர் நிறம், புதன், பெருமை,மயக்கம், மேகம், வலை, வீடு, வெற்பு,வேட்கை, விஷ்ணுகரந்தை. மால்தங்கை - உமை, ஏகம்பபாஷாணம். மால்தாரம் - அரிதாரம். மால்தேவி - தாளகம். மால்தொடை - துளசி. மால்பாகலட்சுமி - அரிதாரம். மால்பு - கண்ணேணி, மூங்கிலேணி. மால்முருகு - துளசி. மால்மைத்துனன் - சிவன், துருசு. மால்விந்து - அப்பிரகம். மால்வீடு - சாலக்கிராமம். மால்வெட்டல் - தெல்லுவெட்டல். மாவகம் - இலுப்பை, காஞ்சிரை. மாவட்டை - செவ்வட்டை. மாவணங்கி - குங்குமப்பூ. மாவதை - தேனில்லாவதை. மாவலர் - குதிரைப்பாகர், யானைப்பகர். மாவலி - ஓர் சக்கிரவர்த்தி. மாவிடை - மரச்செறிவு. மாவிட்டம் - கடனுரை. மாவிரதம் - உட்சமயமாறினொன்று. மாவிரதியர் - இலிங்கிகள். மாவிருக்கம் - சதுரக்கள்ளி.மாவிலங்கு, மாவிலங்கை - ஒர்மரம். மாவிலந்தம் - விடத்தேர். மாவிலிங்கு - ஒர்வகை மரம். மாவிலைத்தோரணம் - மாவிலையாலிடுந் தோரணம். மாவிளங்கு - மாவினாற்செய்தநெய்விளக்கு. மாவிளம் - வில்வம். மாவிறங்கல் - மாப்பிடிப்புக் கீழ்ப்படுதல், மாவிறங்கியது. மாவீரன் - அதிவீரன். மாவுத்தன் - குதிரைப்பாகன்,யானைப்பாகன். மாவுரம் - வலி. மாவெனல் - அழைத்தல். மாவொல்லி - ஓர்வித வொல்லி. மாழம் - உளுந்து. மாழாத்தல் - மயங்குதல். மாழை - அழகு, அறிவின்மை, ஆயம்,உலோகக்கட்டி, ஓலை, திரட்சி,புளி, மா பொன், மாமரம்,இளமை, மாசை. மாழ்கு - சா, மயக்கம், மாழ்கென்னேவல், மிருகசீரிடம். மாழ்குதல் - சாதல், சோம்பல்,மயக்கம், மேவல், மயங்குதல். மாள - முன்னிலையசைச்சொல்(உ.ம்.) சிறிது தவிர்ந்தீகமாளநின்பரி சிலருய்ம்மார். மாளயபட்சம் - புரட்டாசி மாதத்துஅபர பக்கத்துப் பிரதமை முதற்பூருவ பக்கத்துச் சதுர்த்திமட்டுமுள்ள காலம். மாளயம் - புரட்டாசி மாதத்திற்பண்ணும் பொதுச்சிராத்தம். மாளல் - மாளுதல். மாளவகவளம் - ஓரிசை. மாளவம் - தேயமைம்பத்தாறி னொன்று. மாளவி - ஓரிராகம். மாளிகை - அரசன்மனை, வீடு. மாளிகைத்தேவர் - ஒர் ஞானாசாரியர். மாளுதல் - சாதல், தாழ்தல். மாளை - புளியமரம், பொன். மாறக்கட்டுதல் - இல்லையென்றுபுரட்டுதல். மாறல் - ஆடல், கொடுத்து வாங்குதல்,தவிர்தல், மறுபுறமாக்கல், விடுதல்,விற்றல், வேறாக்கல், கூத்தாடல்,மயங்கல். மாறனார் - இடைச்சங்கப்புலவரிலொருவர். மாறன் - சடகோபாழ்வார், பாண்டியன், மாறிவருவது. மாறன் பொறையனார் - ஐந்திணையைம்பது பாடியவர். மாறாடி - மாறுபாடுகாரன். மாறாடுதல் - எதிராடுதல், மயங்குதல். மாறாட்டம் - மயக்கம், மாறுபாடு. மாறி - மாறாடி. மாறு - துடைப்பம், பகை, பிரதி,மாறென்னேவல், மிலாறு, விகாரம்,முரண், வேறு, எதிர், இறந்துபாடு. மாறுகண் - சாய்ந்தகண். மாறுகம் - சீலை. மாறுகூலி - மரமேற்றுக்காரர்கூலி. மாறுகோள் - ஒவ்வாமை, விரோதம். மாறுதல் - மாறல். மாறுத்தரம் - மறுமொழி. மாறுபடல் - மாறிப்போதல், விரோதித்தல். மாறுபடுபொருள் - ஓரலங்காரம் அதுகருதிய பொருளைமறைத்ததனைப் பழித்தற்குமற்றொன்றைப் புகழ் வது.மாறுபாகை, மாறுபாடு - பிசகு, மறுதலிப்பு, விரோதம். மாறுவேடம் - வேற்றுருவம். மாறோக்கத்துநப்பசலையார் - புறநானூறு பாடிய புலவரிலொருவர். மாற்கண்டேயம் - மார்க்கண்டேயம். மாற்கரியோனுதல்விழிப்பால் - அக்கினிமூலை. மாற்சரியம் - மார்ச்சரியம், பொறாமை. மாற்பித்தியார் - புறநானூறு பாடியபுலவரி லொருவர். மாற்றம் - சொல், பகை, வேற்றுமை,மறைத்தல், எதிர்மொழி. மாற்றலர் - பகைவர். மாற்றல் - ஒன்றுகொடுத் தொன்றுவாங்கல், ஒன்றையொன்றாக்கல்,கொடாமை, தீர்த்தல், விற்றல்.மாற்றவள், மாற்றாடிச்சி, மாற்றாட்டி - சக்களத்தி, வேற்றுப் பெண்,மற்றைய மனைவி. மாற்றாந்தகப்பன் - மாதாவின் பின்தாரத்துக் கணவன். மாற்றாந்தாய் - பிதாவின் பின்தாரத்துப் பெண். மாற்றார் - பகைவர். மாற்றான் - பகைவன். மா ற்று - எதிர், கிரய ம், பொன்வெள்ளியின்தரம், மாற்றல்,உவமை. மாற்றுதல் - மாற்றல். மாற்றுநொடி - பிரதிநொடி. மாற்றுமை - மாறுபாடு. மாற்றுயர்பொன் - தங்கம். மாற்றுவஸ்திரம் - பதிற்புடைவை,விலையுயர்ந்த புடைவை. மான - உவமைச் சொல் (உ.ம்).கொங்கை முகமான, முன்னிலையசைச்சொல். மானக்குறை - மானக்கேடு. மானக்கேடு - சங்கையீனம், மதிப்புக்கெடுதல். மானசதீர்த்தம் - ஓர் தீர்த்தம். மானசம் - கருத்து, புத்தி, மனது,மானதவாலி, மனத்துக்கடுத்தது. மானசன் - மந்மதன். மானசஜபம் - மனத்திற்செய்யுஞ்செபம். மானசவிரதம் - கொல்லாமை முதலியன. மானசாலயம் - அன்னப்பறவை. மானசிகம் - மனத்தாற் செய்யுந்தவம். மானசூத்திரம் - அரைஞாண். மானதண்டம் - அளவைக்கோல். மானதநானம் - ஏழ்வகைநானத்தொன்று, அது சற்குருவருளான்மூல மலமறுத்தல். மானதபூசை - மனோபூசை. மானதப்பிரத்தியட்சம் - மானதக்காட்சி. மானதம் - மனத்துக்கடுத்தது. மானதவாவி - பிரமலோகவாவி. மானதீபம் - உபநிடத முப்பத்திரண்டினொன்று. மானத்தாழ்ச்சி - மானக்கேடு. மானபங்கம் - மானகீனம். மானபாவி - பெரும்பாவி. மானபோதம் - சிற்பநூன் முப்பத்திரண்டினொன்று. மானமா - கவரிமா. மானம் - அகங்காரம், அபிமானம்,அளவு, உவமை, ஒருவிதப்பொருத்தம், கணிதம், குற்றம்,நேசம், பிடிப்பு, பெருந்தன்மை,பெருமை, மரியாதை, வலி,விமானம், வெட்கம், ஆமணக்கு,நிலை தவறாது நிற்கும்பேராண்மை, வானம். மானம்பாடி - வானம்பாடி. மானரந்தரி - நாழிகைவட்டில். மானரியம் - பூராயம், விடுப்பு. மானல் - இலச்சை, ஐயம், ஒத்தல்,மயக்கம், மயங்குதல். மானவம் - உபபுராணத் தொன்று. மானவர் - ஆண்மக்கள், படைவீரர்,மனிதர், மானமுடையோர். மானவர்ஜிதன் - வெட்கமற்றவன். மானவு - தெளிவு. மானவேதியன் - வேதமுணர் பேரறிவோன். மானனம் - சங்கை. மானன் - தலைவன், மூடன், வேடன். மானா - பாட்டன். மானாகம் - பெருநாரை. மானாகர் - கோவலன்றந்தை. மானாபரணன் - மானமாகிய ஆபரணமுடையோன். மானார் - பகைவர், பெண்கள்,இலைக்கள்ளி. மானி - மானமுடையோன், மானியென்னேவல், மங்கைக்கரசி யார். மானிகை - ஓர் முகத்தளவு, சாராயம். மானிடச்சட்டை - மானிடதேகம். மானிடதத்தன் - சிவன். மானிடத்தன்மன் - குபேரன்.மானிடமுடையோன், மானிடமேந்தி - சிவன். மானிடம், மானிஷம் - மனுஷப்பிறப்பு. மானிடர், மானிடவர் - மனிதர். மானிடவைத்தியம் - ஓடதிகொண்டுசெய்யும் வைத்தியம். மி மிதல் - கடத்தல், மிகுதல். மிகவல்லோர் - அதிவீரர், அறிஞர். மிகவும் - மிகுதியும். மிகன் - பெருமை. மிகன்மக்கள் - பெருமையிற் சிறந்தோர். மிகிரம் - காற்று, முகில். மிகிரன் - சந்திரன், சூரியன். மிகிராணன் - சிவன். மிகுகொடையாளன் - கன்னன், தியாகி. மிகுக்குதல் - மிகுத்தல். மிகுண்டம் - சாறணை. மிகுதம் - மிகுதி. மிகுதல் - அதிகப்படல், கடத்தல்,பூரித்தல். மிகுதி - அதிகம், திரட்சி, பூரிப்பு,பொலிவு, மதர்ப்பு, மீதி. மிகுத்தல் - அதிகப்படல். மிகுத்தியல் - வில்வம். மிகுத்துச்சொல்லல் - விதந்து சொல்லல். மிகுந்தவனம் - தண்ணீர் விட்டான். மிகுபலத்தம் - காத்தொட்டி. மிகுபவந்தம் - ஆதொண்டை. மிகை - குற்றம், கேடு, துன்பம், மிகுதி,வருத்தம், அளவின் மிக்கது. மிகைபடக்கூறல் - அதிகப்படச்சொல்லுதல் அது நூற்குற்றம்பத்தினொன்று. மிகைபடல் - குற்றப்படல், மிகுதல். மிகையதன்செய்கையுருவகம் - ஓரலங்காரம் அஃது உருவகம் செய்கையிலொத்தும் யாதோ மிக்குளதெனச்சொல்வது. மிகையொற்றுமையுருவகம் - உருவகத்தில் யாதுமோர் மேம்பாடுதோன்றச் சொல்வது (உ.ம்)தடங்கட்கெண்டை. மிக்கது - மிகுதியானது. மிக்கவன் - பெருமையிற் சிறந்தோன். மிக்கவை - உச்சிட்டம், ஊண்,சோறு, நியாயமல்லவை, நிறை. மிக்கான் - மேலானோன். மிக்கிளமை - கட்டிளமை. மிக்கு - மிகுதி. மிக்கோர் - அறிஞர், பெரியோர். மிசி - தாளிசபத்திரி, சதகுப்பை. மிசிகம் - பாம்புவளை. மிசிரம் - கலப்பு, சமம். மிசிரவர்ணம் - கலப்பு நிறம். மிசுக்கன் - ஈனன், தரித்திரன். மிசுக்கை - சின்னத்தனம். மிசுரம் - உச்சவிசை. மிசை - உணர்வு, உயர்ச்சி, சோறு,தரித்திரம், மிசையென்னேவல்,மீமிசைச் சொல், மேடு, மேல். மிசைதல் - அனுபவித்தல், உண்டல். மிசைத்திரள் - கரடு. மிசைவடம் - வீரதண்டை. மிச்சம் - சேடம், மிகுதி. மிச்சரம் - மிசிரம். மிச்சிரகாவநம் - இந்திரன் பூந்தோட்டம். மிச்சிரம் - கலப்பு. மிச்சில் - எச்சில், ஒழிபொருள், கரி. மிச்சை - அஞ்ஞானம், தரித்திரம்,பொய், விலாமிச்சை. மிஞிறு - வண்டு. மிஞ்சல் - கடத்தல், மீதியாதல். மிஞ்சி - காலணியி னொன்று. மிஞ்சுதல் - மிஞ்சல். மிடல் - வலி. மிடறு - கழுத்து, கீழ்வாய், தொண்டை. மிடா - குழிசி, பானை. மிடாரி - பிரமன். மிடி - மிடியென்னேவல், வறுமை. மிடித்தல் - வறுமையுறல். மிடிமை - வறுமை. மிடியன் - தரித்திரன், வறியவன். மிடிவு - மிடிமை. மிடுக்கன் - பெலப்பானது, பெலப்பானவன், வலிமையுள்ளவன். மிடுக்கு - பெலப்பு, வலிமை. மிடுமிடுத்தல் - விரைதல். மிடுமிடுப்பு - விரைவு. மிடுமிடெனல் - விரைவுக்குறிப்பு. மிடை - தூற, மிடையென்னேவல்,பரண். மிடைதல் - நெருங்கல். மிடைதூறு - நெருங்கிய காடு. மிட்டா - அனுபவம், ஆட்சி, சுதந்திரம். மிணுமிணுத்தல் - இரகசியம் பேசல். மிணுமிணுப்பு - ஒலிக்குறிப்பு. மிணுமினெனல் - மிணுமிணுத்தல். மிண்டல் - நெருங்குதல், மிண்டுதல். மிண்டன் - திண்ணியன். மிண்டி - கிளப்புமோர் கருவி. மிண்டிபோடுதல் - மிண்டிட்டுப்பெயர்த்தல். மிண்டு - சார்த்துமிண்டு, மதத்தாற்பிழைத்தல், மிண்டென்னேவல். மிண்டுதல் - நெருங்கல், மதத்தாலடர்த்தல். மிதக்குதல் - மேலே கிளர்தல், மேற்படல். மிதங்கமம் - யானை. மிதசுரம் - மத்திம சுரம். மிதத்தல் - கிளர்தல், கிளர்த்தல். மிதத்துதல் - உயர்த்தல், கிளப்புதல். மிதத்துரு - கடல். மிதபாஷிணி - அளவு கடவாதபேச்சுக்காரி. மிதப்பு - உயர்ச்சி, கிளர்வு, மேடு,மேற்படுகை, வலைமுதலியவற்றிற் கட்டிவிடு மறிகுறி. மிதம் - அளவு, மிருதம், வரையறை. மிதலை - கொப்பூழ். மிதவை - சோறு, தெப்பம், மிதப்பது. மிதாசனம் - அற்பவுணவு. மிதி - அத்தாட்சி, அழகு, அறிவு,கிணற்று மிதி, நெய்வார்கருவியினொன்று, மிதித்தல், மிதியென்னேவல், விலை, கருஞ்சீரகம்,அளவு, கவளம், மதித்தல். மிதித்தல் - உழக்கல், குதித்தல்.மிதிபட்டடை, மிதிபலகை - பாதம்வைக்கும் பலகை. மிதிபாகல் - ஓர் பாகல். மிதிப்பு - மிதித்தல். மிதிமரம் - மிதிபலகை. மிதியடி - பாதகுறடு. மிதியல் - மிதிப்பு. மிதியிடுதல் - காலாற் குறிசெய்யல்,மிதித்தல். மிதிலை - சனகனகர். மிதுக்காங்காய் - ஓர் வெள்ளரிக்காய். மிதுக்கை - ஓர் வெள்ளரிக்கொடி. மிதுனம் - இரட்டை, ஒரிராசி, ஓர்புண், புணர்ச்சி, ஆண்பெண். மிதுனவீதி - அருக்கன் வீதியுளொன்று. மிதுனி - கரிக்குருவி. மித்தம் - ஆலசியம், நித்திரை. மித்தியம் - பொய். மித்தியாசாட்சி - பொய்ச்சாட்சி. மித்தியாநிரசநம் - சபதம். மித்தியாமதி - அறியாமை, பிழை,பொய்யுணர்வு. மித்தியாவாசகம் - பொய் மொழி. மித்தியாவாதி - பொய்யன். மித்தியை - கபடம், பொய். மித்தியோத்தரம் - பொய் மறுமொழி. மித்தியோபசாரம் - சத்துருவுக்குமித்துருபோற் காட்டல். மித்திரதுரோகி - சினேக சத்துரு,சினேகனுக்குத் துரோகஞ் செய்பவன். மித்திரதுருகன் - மாய்மால சினேகிதன். மித்திரநாள் - அனுடம். மித்திரபேதம் - மித்துரு பேதம். மித்திரம் - நட்பு. மித்திரர் - சினேகிதர். மித்திரலாபம் - சினேக சம்பாதனை. மித்திரன் - சினேகிதன், சூரியன்,துவாத சாதித்தரி லொருவன். மித்திரை - தோழி. மித்துரு - சினேகிதன். மித்துருதுரோகி - சினேகத்திற் றுரோகம் பண்ணுவோன். மித்துருத்தானம் - சென்மத்துக்குநாலாமிடம். மித்துருபேதம் - சினேகமா யிருந்துபேதித்தல் இது பஞ்ச தந்திரத்தினொன்று. மித்துருப்பதமை - ஈய மணல். மித்தை - பொய். மியா - முன்னிலை யசைச்சொல்(உ.ம்) கேண்மியா. மியூலசிவி - ஓர் பூடு. மியூல் - ஓர் பூடு. மிரசன் - பெருங்காயம். மிரட்ட - பயமுறுத்த, மயக்க. மிரட்டல் - அதட்டல். மிரட்டி - பேய்மிரட்டி. மிரட்டுதல் - பயமுறுத்துதல். மிரதம் - பாம்பு. மிரளுதல் - சங்காலியங் கொள்ளுதல்,பயப்படுதல்.மிராசி, மிராசு - முதுசொம், உரிமை. மிரிகை - முறுக்காணி. மிரிசனம் - மிளகு. மிரிசி - மிளகு. மிரிசபத்திரி - வறட்சுண்டி. மிரிஞ்சி - செம்முருங்கை. மிரியல் - மிளகு. மிரு - பாலைநிலம். மிருககீரம் - மான்பால். மிருகக்குணம் - ஒருங்கற்ற குணம்,துட்ட குணம், வன்குணம். மிருகசஞ்சாரம் - ஒழுங்கற்ற நடை,மிருகத்துடன் புணர்தல். மிருகசயிடகம் - வெருகு. மிருகசாதி - விலங்கு சாதி. மிருகசாலிகை - மான் வலை. மிருகசீரிடம் - ஓர் நாள். மிருகசீவனன் - வேட்டைக்காரன். மிருகசைடகம் - ஆண் பூனை. மிருகண்டகன் - மார்க்கண்டன்.மிருகண்டன், மிருகண்டு - ஓரிருடி,மார்க்கண்டன் தந்தை. மிருககாமிநி - வாயுவிளங்கம். மிருகதஞ்சகன் - நாய். மிருகதந்தம் - பன்றிக்கொம்பு. மிருகதரன் - சந்திரன்.மிருகதிருஷ்ணை, மிருகதிஷ்ணிகை - கானல். மிருகதூர்த்தகன் - நரி. மிருகத்தனம் - மிருகத்தின் றன்மை. மிருகத்தியு - வேட்டைக்காரன். மிருகநாபி - கத்தூரி, கத்தூரிப் பூனை. மிருகநாபிசம் - கத்தூரி. மிருகபதி - சிங்கம். மிருகபந்தினி - மான்வலை. மிருகபாலிகை - நாவி. மிருகமதம் - கத்தூரி. மிருகமதவாசை - கஸ்தூரி மல்லிகை. மிருகமர்த்தகம் - நரி. மிருகமாதிருகை - பெண்மான். மிருகம் - கத்தூரி, பன்றி, மான், மிருகசீரிடம், யானை, விலங்கின்பொது, வேட்டை. மிருகராசன், மிருகரிபு - சிங்கம்,வேங்கைப் புலி. மிருகலாஞ்சனன் - சந்திரன். மிருகவதாசீவன் - வேடன்.மிருகவாகனன், மிருகவாசநன் - வாயு. மிருகவ்வியம் - வேட்டை. மிருகாங்கம் - காற்று, சந்திரன். மிருகாங்கன் - சந்திரன், சிவன். மிருகாசனம் - சிங்கம், புலி. மிருகாசீவன் - புலி, வேடன். மிருகாண்டஜை - கஸ்தூரி. மிருகாண்டசம் - கஸ்தூரி. மிருகாண்டி - மிருகத்தன முள்ளவன். மிருகாதநம் - புலி. மிருகாதிபதி - சிங்கம், சிவிங்கி, புலி. மிருகாயினம் - மான்றோல். மிருகாரசிங்கி - மிருதாரசிங்கி.மிருகாராதி, மிருகாரி - சிங்கம், நரி,நாய், புலி. மிருகார்த்தநம் - புலி. மிருகி - மான். மிருகேந்திரம் - ஓர் சைவாகமம். மிருகேந்திரன் - சிங்கம். மிருசம் - காட்சி. மிருஞ்சி - செம்முருங்கை. மிருடங்கணம் - பிள்ளை. மிருடன் - சிவன். மிருடாநி - பார்வதி. மிருடார்த்தகம் - அபாவ அளவை(உ.ம்.) ஆமை மயிர். மிருடாலகம் - மாமரம். மிருடாவாதம் - இகழா விகழ்ச்சி. மிருடி, மிருடிகம் - மான். மிருடை - துர்க்கை. மிருடோத்தயம் - பொய். மிருட்டி - சமைத்தல், சுத்தி, தெளித்தல்,நெருக்கம். மிருட்டேருகன் - கொடையாளன்,தற்பிரியன். மிருணாலம் - தாமரை நூல். மிருணாலி - தாமரை. மிருண் - மண். மிருதகம் - பிரேதம். மிருதகாந்தம் - நரி. மிருதங்கபலம் - பலா. மிருதங்கம் - ஒலி, கலைஞான மறுபத்து நான்கினொன்று, முழவு,மூங்கில். மிருதசங்கை - மரணசங்கை.மிருதசஞ்சீவி, மிருதசஞ்சீவினி - இறந்தவர்களை யெழுப்பு மருந்து,ஓர் மந்திரம், உயிர்தருமருந்து,அமுது. மிருதசூதகம் - மரணசூதகம். மிருதச்சேதம் - இறத்தல். மிருதண்டன் - சூரியன். மிருதஸநானம் - குளிப்பாட்டு. மிருதபம் - பிரேதம். மிருதபாஷாணம் - பாஷாண மறுபத்து நான்கினொன்று. மிருதமத்தம் - நரி. மிருதம் - நீர்வள்ளி, போர், மரணம்,மித்துரு, விளைவு பாஷாண முப்பத்திரண்டி னொன்று, யாசித்துவாங்கிய பொருள். மிருதவற்சை - கன்றிழந்த பசு,மகவிழந்த பெண். மிருதாகரம் - இடி. மிருதாண்டன் - சூரியன். மிருதாமதம் - துருசு. மிருதாரசிங்கி - ஈயம், ஓர்பூடு, சிங்கிபாஷாணம். மிருதி - தருமநூல், நினைப்பு,மரணம், சமுத்திராப் பச்சை. மிருதிமதாலங்காரம் - நினைப்பணி. மிருதியல் - வில்வம். மிருதினி - நன்னிலம். மிருது - சாந்தம், நொய்மை, மந்தம்,மழுங்கல், மென்மை. மிருதுகமநை - அன்னப்பேடு, மந்தநடையினள். மிருதுநட்சத்திரம் - இலகு நட்சத்திரம். மிருதுபர்வகம் - பிரம்பு. மிருதுபலம் - பேரீந்து.மிருதுபாடிதம், மிருதுபாஷிதம் - மெத்தனவான மொழி, மென்மொழி. மிருதுபாஷிணி - மென்மொழியாள். மிருதுமூர்த்தம் - மரண முகுர்த்தம். மிருதுரேசநி - இலைக்கள்ளி. மிருதுலோமகம் - முசல். மிருதுவாதம் - சிறுதென்றல். மிருதுன்னகம் - பொன். மிருதூற்பவம் - நீலோற்பலம். மிருதை - பூமி. மிருதோற்பவம் - கடல். மிருத்தஞ்சயன் - சிவன். மிருத்தாலகம் - உவர்மண். மிருத்திகை - நிலம், மண். மிருத்தியம் - மண். மிருத்தியு - இயமன், சூதி, மரணம். மிருத்தியுஞ்சயன் - சிவன். மிருத்தியுநாசகன் - சிவன், பாதசரம். மிருத்தியுபலம் - இலந்தை. மிருத்தியுபலை - வாழை. மிருத்தியுபுஷ்பந்தயம் - கரும்பு. மிருத்தியுபுத்திரன் - கேது. மிருத்தியுப்பிரசூநம் - கரும்பு. மிருத்தியுவஞ்சநன் - சிவன். மிருத்து - மண், பூமி, மரணம். மிருத்துகரன் - குசவன். மிருத்துகாரகன் - மரணத்தைச்செய்யுங்கிரகம். மிருத்துகிரகம் - மிருத்துகாரகன். மிருத்துசாந்தி - அவமிருத்தை நீக்குஞ்சாந்தி. மிருத்துசூதகம் - மரண சூதகம். மிருத்துசூதி - நண்டு. மிருத்துஞ்சயம் - மரணத்தை விலக்குமந்திரம். மிருத்துஞ்சயன் - சிவன். மிருத்துநாசகம் - இரதம். மிருத்துநிலை - மிருத்து கிரகநிலை.மிருத்துபஞ்சகம், மிருத்துபயம் - மரணபயம். மிருத்துமூர்த்தம் - சாமூர்த்தம். மிருத்துவங்குரகம் - சாப்பறை. மிருத்துவஞ்சனன் - சிவன். மிருத்துவீசம் - மூங்கில். மிருநாளம் - தாமரைக் கொடி,விலாமிச்சு. மிருநாறம் - தாமரை. மிலாங்கலி - செங்காந்தள். மிலாந்தி - வெருட்கொண்டு பார்ப்போன். மிலாந்துதல் - அலமலந்து பார்த்தல்,ஏற இறங்கப்பார்த்தல். மிலாரடி - உன்மத்தம், மயக்கம்,மலாரடி. மிலார்க்கலி - தென்னை. மிலாறு - வளார். மிலிந்தம் - வண்டு. மிலேச்சகந்தகம் - உள்ளி. மிலேச்சதேசம் - இந்து தேசத்தைச்சூழ்ந்திருக்குந்தேசம், சோனகர்முதலியோர்தேசம். மிலேச்சத்தனம் - அறிவின்மை. மிலேச்சமண்டலம் - மிலேச்சதேசம். மிலேச்சமுகம் - செம்பு. மிலேச்சம் - சரச்சுவதியாற்றின் வடதேசம், செம்பு. மிலேச்சரம் - கோதும்பை. மிலேச்சர் - சோனகர், மதிகேடர். மிலேச்சன் - அறிவீனன், ஈனன்,சோனகன், மிலேச்சகண்டத்த வன்,வேடன், கீழ்மகன். மிலேச்சாசம் - கோதும்பை. மிலேச்சாசியம் - செம்பு. மிலேச்சிதம் - இலக்கணவழுவானபேச்சு, சமஸ்க்ருதமு மதற்குச்சேர்ந்த பாஷைகளுமல்லாத பிறபாஷை. மிலைச்ச - அணிய.மிலைச்சல், மிலைச்சுதல், மிலைதல் - அணிதல், சூடுதல். மிலைத்தல் - மேய்தல். மிலைய - அணிய, சூட. மிழலை - மழலை, நிரம்பா மென்சொல். மிழற்ற - மேன்மையாய்ச் சொல்ல. மிழற்றல் - சொல்லல், நிரம்பாமென்சொல், பேசலா னெழுமொலி,மெல்லப் பேசுதல். மிழற்றுதல் - மிழற்றல். மிளகரணை - ஓர்செடி, கரண்டை. மிளகறையன் - ஓர் புடைவை. மிளகாய் - ஓர் செடி, மிளகுகாய். மிளகாய்ச்சக்களத்தி - ஓர் செடி. மிளகாய்ப்புள் - ஓர் புள். மிளகு - ஓர்சரக்கு, மரீசம். மிளகுகரணை - கரண்டை. மிளகுகாய் - ஓர் கார்ப்புக்காய். மிளகுசம்பா - ஓர் நெல். மிளகுசாதம் - சித்திரான்னத்தொன்று. மிளகுசாறு - மிளகுநீர், ரசம். மிளகுதக்காளி - ஓர் தக்காளி. மிளகுதிரி - ஓர் குருநோய். மிளகுநீர் - அதிரசம். மிளகோரை - மிளகுகலந்த சித்ராந்நம். மிளப்பு - இலவுங்கம். மிளிர - பெருமைப்பட, ஒளிசெய்ய. மிளிர் - ஒளி, பெருமை, மிளிரென்னேவல். மிளிர்தல் - ஒளிசெய்தல், பருமைப்படல், பிறழ்தல், புரளுதல்,குதித்தல், கீழ்மேலாதல், மறிதல்,விளங்குதல். மிளிர்வு - ஒளிவிடுதல். மிளிறு - கரடி. மிளை - காவற்காடு, காவல். மிறல் - பெருமை. மிறிதாறிசிங்கி - மிருதாரசிங்கிபாஷாணம். மிறுங்கம் - கையாந்தகரை. மிறுசீரம் - இலாமிச்சை. மிறுது - சமுத்திராப் பச்சை. மிறுதுபலா - நெல்லி. மிறுதுபுட்பம் - வாகை. மிருத்தாலகம் - துவரை. மிறுத்திகம் - கொடி முந்திரிகை. மிறந்து - நெல்லி. மிறை - அச்சம், குற்றம், மிறையென்னேவல், வருத்தம், வளைவு,திறை, உலைவு. மிறைக்க - துன்பப்பட, துன்பஞ்செய்ய. மிறைக்கவி - சித்திரக்கவி. மிறைத்தல் - துன்பப்படல், பாடுபடல்,உலைதல். மினக்கெடல் - தடைப்படல். மினக்கேடு - வியர்த்தம், வினைக்கேடு. மினவ - உபசரிக்க. மினவுதல் - உபசரித்தல், வினவுதல். மினுக்க - விளக்க. மினுக்கம் - ஒளி, பகட்டு. மினுக்கல் - மினுக்குதல். மினுக்கு - ஒளி, மினுக்கென்னேவல்,பகட்டு. மினுக்குதல் - அளிதோன்றச் செய்தல்,பகட்டுதல். மினுக்குப்பசை - நரும்பசை, நெய்வாரிடும் பசையினொன்று. மினுக்கெண்ணெய் - ஓரெண்ணெய். மினுங்க - பிராகாசிக்க. மினுங்குதல் - மிளிர்தல்.மினுங்குபொழுது, மினுங்குவாரப் பொழுது - சாய் பொழுது. மினுமினுத்தல் - ஒளிசெய்தல். மினுமினுப்பு - மிளிர்வு. மின் - ஒளி, பெண், மகள், மின்னல்,மின்னென்னேவல். மின்மினி - இருளில் மின்னும் புழு. மின்ன - ஒளிசெய்ய. மின்னல் - ஒளிசெய்தல், மின். மின்னற்கொடி - மின்மாலை. மின்னற்றளுக்கு - நாகமணல். மின்னார் - பெண்கள். மின்னி - கருத்தக்காக்கணம், நீர்ப்பயறு. மின்னியார்த்தல் - சோதி வீசியாடுதல். மின்னுதல் - பிரகாசித்தல், மின்னற்காலுதல். மின்னெறி - மின்னலின் மார்க்கம். மின்னெறிதல் - மின்னுதல். மீ மீ - ஆகாயம், உயர்ச்சி, ஓரெழுத்து,மகிமை, மேல், மேற்புறம். மீகண் - இடத்தின்மேல், கண்ணின்மேல்.மீகாமன், மீகான் - மாலுமி. மீகாரம் - மேலிடம். மீகை - புலிதொடக்கி, உப்பிலி. மீக்குவம் - மருதமரம். மீக்கூர்தல் - பெருகுதல். மீக்கூறல் - கொண்டாடல், புகழ்தல்,மெச்சல். மீக்கூறு - புகழ். மீக்கூறுவோர் - புகழ்வோர். மீக்கூற்றம் - புகழ். மீக்கூற்று - புகழ்ச்சி. மீக்கோள் - ஏறுதல், மேற்போர்வை. மீசரம் - மேலானது, விரைவு. மீசாடுதல் - மீதேவிரைத்தல்,மேலாலே கையாடுதல். மீசு - மிகுதி. மீசுபொலி - முதலள்ளுந்தானியம். மீசுமீட்டல் - மேலாலேகவர்தல். மீசுரம் - அதிகம், மிகுஉக்கிரம். மீசுவைத்தல் - மேலேவைத்தல். மீசை - மேலிதழின் மீதுள்ளமயிர்,மேலிடம். மீச்செலவு - கருவம், மேற்போதல். மீடம் - மூத்திரம். மீட்குதல் - இரட்சிக்குதல், சோறுமுதலியவள்ளுதல், திருப்புதல். மீட்சி - மீளுதல், கைம்மாறு,மீட்டல். மீட்சியின்விரி - தலைவி சேணகன்றமை செவிலித்தாய்க் குணர்த்தன் முதலாக நற்றாய் கேட்டவனுளங் கொள்வேலனை வினாதலீறா யவையாம். மீட்ட - விரலானொடிக்க, வீணைவாசிக்க, நாணேற்றி யீர்க்க. மீட்டல் - அள்ளுதல், இரட்சித்தல்,வீணை வாசித்தல்.மீட்டிடுதல், மீட்டுதல் - சுண்டுதல்,வீணைவாசித்தல். மீட்டும் - திரும்பவும். மீட்டெடுத்தல் - இரட்சித்தல், இரையெடுத்தல், மேலாலே யெடுத்தல். மீட்பர் - இரட்சகர், மீட்கிறவர். மீட்பு - மீட்குதல். மீதல் - மிகுதல். மீதி - கருஞ்சூரை, மிச்சம், மிகுதி. மீதிடல் - கிளர்தல். மீது - மேல், அதிகம். மீதுந்தி - நெல்லி. மீதூர - நெருங்க. மீதுரை - பலகால் விளம்பல்.மீதூர்தல், மீதூரம் - நெருங்கல்,மேன்படல். மீந்திருக்க - மிஞ்சியிருக்க. மீந்தோல் - மீத்தோல், மேற்றோல். மீப்பு - மேம்பாடு. மீப்போர்வை - மேற் போர்வை. மீமாஞ்சை - பிரமாணத்தாலுண்மையறிதல், புறச்சமயமாறி னொன்று. மீமிசை - மேலுக்குமேல், மேல். மீமிசைச்சொல் - ஒருபொருட் பன்மொழியடுக்கு (உ.ம்.) இடைநடு. மீரம் - சமுத்திரம். மீராசு - பிரயோசனம். மீலம் - வானம். மீலனம் - கண்சிமிட்டு. மீலிதம் - ஓர் அலங்காரம். மீள - திரும்பவும், மீளவும், இரட்சிக்கப்பட, திரும்ப. மீளல் - திரிதரல், திரும்பல். மீளவும் - மீள. மீளாக்கதி - மோக்கம். மீளி - அரசன், திண்ணியன், நமன்,பாலை நிலத்தலைவன், பெருமை,மேன் மக்கள், வலி, வீரன். மீளிகை - வீரத்திரம், வன்மை. மீளுதல் - திரும்புதல், மீட்டெடுத்தல். மீள்வித்தல் - மீளச் செய்தல். மீற - கடக்க, அதிகரிக்க, மீந்திருக்க.மீறல், மீறுதல் - அடங்காமற்போதல்,அதிகரித்தல். மீனகாதி - கொக்கு. மீனகேதனன் - பாண்டியன், மன்மதன். மீனக்கொடியோன் - மீனகேதனன். மீனகோதிகை - நீர்நிலை. மீனங்கம் - மீனெலும்பு. மீனமாதம் - பங்குனி மாதம். மீனம் - ஓரிராசி, மீன், மச்சம். மீனம்பர் - ஓர் மருந்து, செம்மீன்வயிரம். மீனவல்லிகை - மீன்கொத்திக்குருவி. மீனவன் - பாண்டியன். மீனாஞ்சு - அங்கயற்கண்ணி, குபேரன்மகள், பொன்னாங்காணி. மீனாண்டி - சர்க்கரை. மீனாம்பூச்சி - மீன்மினிப்பூச்சி. மீனாய் - ஓர் மீன், நீர்நாய். மீனாலயம் - கடல். மீனெரிஞ்சான் - மீனஞ்சு. மீனெறி - மீன்குத்திக்குருவி. மீனேறு - மகரமீன். மீன் - சித்திரைநாள், நெய்தற்பறை,மகரமீன், மச்சம், விண்மீன். மீன்குத்தி - ஓர் புள். மீன்கூடு - மீன்பிடிக்குங் கருவியினொன்று. மீன்கொடியோன் - பாண்டியன்,மன்மதன். மீன்கொத்தி - மீன்குத்திப்புள்.மீன்கொல்லி, மீன்கொள்ளி - மீனஞ்சு. மீன்சிதள் - மீன்செதிள். மீன்சிறகு - மீன்செட்டை. மீன்சினை - மீன்கரு, மீன்கொழுப்பு. மீன்சுவை - சித்ரை நாள்.மீன்செகிள், மீன்செதில், மீன்செலு - மீனின்புறமுள். மீன்தலைவாளம் - மீனெலும்பு. மீன்பாடு - மீன்படுதல். மீன்பிடிகாரர் - வலைஞர். மீன்பிடிப்போர் - வலையர். மீன்பிரால் - மீன்செகிள். மீன்பீலி - கெண்டைப்பீலி மீன். மீன்மலம் - மீனம்பல். மீன்முள் - மீனெலும்பு. மீன்வேட்டை - மீன்பிடி. மு முக ஆட்டம் - முகமன். முகக்கடுப்பு - முகச்சினப்பு. முகக்கட்டு - நாணமின்மை. முகக்கட்டை - தாடி. முகக்கந்தம் - முருங்கைமரம். முகக்களை - முகச்செழிப்பு, முகச்சோபை. முகக்கிளர்ச்சி - முகமலர்வு. முகக்குறாவுதல் - முகக்கோட்டரவு. முகக்குறி - முகச்சாடை. முகக்குறிப்பு - முகத்தோற்றம். முகக்கொள்ளி - கொள்ளிவாய்ப்பேய். முகக்கோட்டம் - முகப்பொலிவழிவு. முகங்குப்புறல் - முகங்கீழ்ப்புறமாதல். முகங்குறாவுதல் - முகங்கோடல். முகங்கொடுத்தல் - இசைதல். முகங்கொள்ளுதல் - சிலந்தி யுடைக்கமுனை கொள்ளுதல். முகங்கோட்டல் - குனிதல்.முகங்கோடுதல், முகங்கோணுதல் - முகங்குறாவுதல். முகசம் - பல்லு. முகசன் - பார்ப்பான். முகசம்பவன் - பார்ப்பான். முகசிங் - ஓர் நோய். முகசீரி - நாக்கு. முகசுரம் - பனங்கள். முகசோதனம் - முகங்கழுவுதல். முகசோதி - எலுமிச்சை. முகச்சரக்கு - பார்வைச்சரக்கு, முதற்சரக்கு.முகச்சாடை, முகச்சாயல் - முகக்குறி. முகச்சாய்ப்பு - முகப் பழக்கத்திற்காகச் சாருதல், விருப்பின்மை. முகச்சித்தி - மறுபேர் மோகிக்கத்தக்க முகமாயிருத்தல். முகச்செழிப்பு - தாராளம். முகச்சின்னம் போதல் - வெட்கமடைதல். முகஞ்சுண்டுதல் - முகஞ்சோர்தல். முகஞ்செய்தல் - சிவந்திகுமிழ்த்தல்,பலித்தல். முகடி - மூதேவி. முகடு - உச்சி, சுவர்ப்புறத்து நீண்டவுத்திரம், மலை, வீடு முதலியவற்றினுச்சி. முகடுந்தல் - மேற்கொள்ளல். முகடோடி - முகட்டினீளம். முகட்டுப்பூட்சி - மூட்டைப்பூச்சி. முகதலை, முகதலைப்பு - முதனெய்யுஞ்சீலைத்தலைப்பு. முகதா - சமுகம். முகதாவநம் - முகங்கழுவல். முகத்த - முகத்தையுடைய, முகத்திற்கொண்ட. முகத்தலளவு - நாழி முதலியவற்றா லளக்குதல்.முகத்தலளவையாகு பெயர் - அளத்தற்குரிய பெயரை யளக்குங் கருவிக்குவழங்குவது (உ.ம்) நாழி. முகத்தலைத்தல் - கூடிப்பேசல்,சந்தித்தல், முகாமுகமாதல். முகத்தல் - மணத்தல், மொள்ளல்இஃது அளவை நான்கினொன்று,தோண்டல், எடுத்தல். முகத்தாடணை - கண்ணோட்டம். முகத்தாட்சணியம் - முகக்காட்சி,ஒருவர் முகங் கண்டவுடனேயுண் டாகுமிரக்கம். முகத்தாராளம் - முகப்பொலிவு. முகத்தாலடித்தல் - முகவெறுப்பைமுகக்குறியாற் காட்டல். முகத்தீடு - பிரேதாலங்காரத்தொன்று, இது பிரேதத்தை மூடிப்புடைவை போடுதல். முகத்துதி - முகமன்வார்த்தை. முகத்துரோணி - முகஞ்செல்லாதவன். முகத்துவாரம் - கடலுமாறும்பொருந்துமிடம், முகப்பு, வாயில். முகத்தெளிவு - முகத்தாராளம். முகநட்பு - முகத்திற்குமுன்காட்டுநட்பு. முகநாடி - முகரூபு. முகநிவாசினி - இலட்சுமி. முகநிலை - முகத்திற்படுந்தரவு. முகந்தகம் - ஈரவெண்காயம். முகபங்கம் - இலச்சை, முகமாறு. முகபடாம் - யானையின் முகப்போர்வை. முகபாடம் - வாய்ப்பாடம். முகபூஷணம் - தாம்பூலம். முகபூரணம் - தாராளமுகம், வாய்நிரம்பியது. முகப்படை - முற்படை. முகப்பணி - முகவேலை. முகப்பரீட்சை - அறிமுகம். முகப்பரு - முகக்குரு. முகப்பழக்கம் - முகப்பரீட்சை. முகப்பிரியம் - முகவாட்டம். முகப்பு - தலைப்பு, முகத்தல், முகனை,மூட்டு, முன், முன்னிடம். முகப்புடை - தலைமடை. முகப்பூச்சு - முகமன், முகமாற்று,வேஷம். முகப்பொருத்தம் - முகராசி. முகப்போதரவு - இச்சகம், முகப்பொலிவு. முஹமது - மக்காதிபர். முகமண்டலம் - முகவட்டம். முகமலர்ச்சி - சந்தோஷம். முகமலர்தல் - முகப்பழக்கமாதல். முகமறியாமை - அன்னியம், தூரம்,பிறத்தி. முகமறுத்தல் - கண்டித்தல், முகத்தாட்சணையின்மை. முகமன் - உபசாரம், முகஸ்துதி.முகமன்சொல், முகமன்வார்த்தை - உபசாரப்பேச்சு. முகமாயம் - முகமயக்கு. முகமாட்டம் - பாரபட்சம், முகமன். முகமாற்று - ஓர் மயக்குவித்தை. முகமுகமாய் - முகத்திற்குமுன்னாய். முகமுகெனல் - ஈரடுக்கொலிக் குறிப்பு. முகமுறிதல் - வெறுத்தல். முகமுறித்தல் - கோபமூட்டுதல்,வெறுப்பித்தல். முகமுறிவு - வெறுப்பு. முகமுன்னிலை - முகதா. முகமூடி - பிறக்கையில் முகத்தைமூடியிருக்கும் பை. முகமூடிவத்திரம் - முக்காட்டங்கி. முகமொட்டுதல் - முகங்கொடுத்தல். முகம் - இடம், சந்தி, தொனி, பட்சிச்சொண்டு, பருவின்முகப்பு, புறம்,முகப்பு, முந்தல், வதனம், வாய்,வாயில், வேதம், அந்தரக்கொட்டு, இரண்டாமிடம், பக்குவம், ஆரம்பம், உபாயம். முகம்பார்த்தல் - கணித்தல், முகமன்செய்தல். முகம்வாடல் - முகங்குறாவுதல், முகங்கோணல். முகர - மோக்க. முகரதம் - புணர்ச்சிவகையி னொன்று. முகரம் - காகம், சங்கு, கடுஞ்சொல், ஒலி. முகரன் - பயனிலசொல்வோன். முகராசி - முகவிணக்கம். முகரி - முகனை, மூக்கினடி, மூரி,தாழை, அரும்பு, மூகை, மல்லிகைப்பூ. முகரிகுளிர்த்தல் - அள்ளுகொள்ளை. முகரிமை - திவ்வியஞானம், பேரறிவு. முகரியோலை - முடக்கோலை. முகருதல் - முகத்தல்.முகரூபம், முகரூபு - முகலட்சணம். முகரெனல் - அனுகரணவோசை,ஒலிக்குறிப்பு. முகரை - மூக்கினடி, முகம். முகரோமம் - தாடி, மீசை. முகலதேசம் - ஓர் தேயம். முகலாங்கலம் - பன்றி. முகவங்கு - முகத்திற்படருங் கருந்தேமல். முகவசிகரம் - பட்சமான பார்வை.முகவசியம், முகவசீகரம் - ஓர் வித்தை,முகஞ்செல்லுதல். முகவணை - முகவுரை. முகவணைக்கல் - உத்திரப்படிக்கல். முகவல்லபம் - மாதுளை. முகவாசம் - முகப்பழக்கம், தாம்பூலதிரவியம், வெற்றிலை, வாசனைப்பொடி. முகவாசல் - தலைவாசல். முகவாசை - முகப்பிரியம்.முகவாடல், முகவாட்டம் - முகஆட்டம்,முகக்கோட்டம். முகவாதம் - ஓர் நோய். முகவிச்சகம் - முகமன். முகவிச்சை - முகமன். முகவிலாசம் - முகச்சிறப்பு. முகவுண்ணிபிடுங்குதல் - முகமன்காட்டுதல். முகவுரை - பாயிரம், மேல்வாசகம். முகவெட்டு - முகத்தினந்தம். முகவெள்ளைப்பருந்து - ஓர் பருந்து. முகவேலை - முகப்பணி. முகவை - அகப்பை, இராமநாதபுரம், கண்கயில், பொலிப் பாட்டு. முகவைப்பாட்டு - பொலிபாடும்பாட்டு. முகனை - முதலீடு, முதல், முதன்மை,முனை. முகனைக்காரன் - முதலாளி. முகனைமுடிவு - ஆதியந்தம், மூலாக்கிரம். முகன் - முகம். முகாக்கினி - ஓமாக்கினி, ஓர்பைசாசம், கட்டையில்வைத்தபிரேதத்திற்கு வாயிலிடு நெருப்பு,காட்டாக்கினி.முகாந்தரம், முகாந்திரம் - ஏது,நியாயம். முகாமயம் - முகரோகம். முகாமுகம் - சமுகம். முகாமை - முதன்மை. முகாரி - ஓரிராகம், முதன்மைக்காரன். முகிதல் - முற்றுதல். முகித்தல் - முற்றச்செய்தல். முகித்தல் - முற்றச்செய்தல். முகிய - முடிய. முகிரம் - அன்பு, காமம். முகிரன் - காமன், மூடன். முகிலூர்தி - தேவேந்திரன். முகில் - மேகம். முகில்வண்ணன் - திருமால். முகிவு - அந்தம், கடை. முகிவுகாலம் - கடைசிகாலம், மரணகாலம். முகிழம் - மலரும் பருவத்தரும்பு. முகிழி - முகிழ். முகிழிதம் - அரும்பு. முகிழ் - அரும்பு, காம்படி, முகிழென்னேவல், விரியாத்தளிர். முகிழ்க்க - குவிய. முகிழ்த்தல் - அரும்புதல், குவிதல். முகிழ்ப்பு - குவிவு. முகிழ்த்தல் - அரும்புதல், குவிதல். முகிழ்ப்பு - குவிவு. முகிழ்ப்புறம் - முகிழ்வளம். முகிற்குன்றம் - மேக மூடியமலை,வக்கிராந்த பாஷாணம். முகினி - புளியமரம். முகு - இட்டம். முகுடம் - முடி. முகுந்தநிதி - குபேரனவநிதிகளினொன்று. முகுந்தம் - இரசம், ஓரிரத்தினம்,குபேரனவநிதிகளினொன்று. முகுந்தன் - விட்டுணு. முகுரம் - ஓர் மல்லிகை, கண்ணாடி,தண்ட சந்திரத்தின் பிடி, தளிர்,பளிங்கு. முகுர்த்தபலன் - முகுர்த்த நயம். முகுர்த்தமெடுத்தல் - முகுர்த்தங் குறித்தல். முகுர்த்தம் - முகூர்த்தம். முகுர்த்தவிசேஷம் - முகுர்த்த பலன். முகுலம் - ஆத்துமா, சரீரம், மலரிதழ். முகுளம் - தாமரை, வளையம்,முகிழ்க்குந் தன்மை, மொட்டு. முகுள் - மலரும்பருவத் தரும்பு. முகூர்த்தம் - இரண்டு நாழிகைகொண்ட நேரம், சுபவேளை. முகூலம் - தந்திரம். முகோன் - முடன். முகை - கூட்டம், மலரும்பருவத்தரும்பு, மிடா, முகையென்னேவல். முகைத்தல் - அரும்புதல். முகையலூர்ச்சிறு கருந்தும்பியார் - திருவள்ளுவ மாலை பாடியகடைச்சங்கப் புலவரி லொருவர். முகோல்லாசம் - முகமலர்ச்சி.முக்கடுகம், முக்கடுகு - திரிகடுகம்.முக்கட்பிரான், முக்கட்பெருமான் - சிவன். முக்கணவன் - ஓர் கொடி. முக்கண் - மூன்றுவிரலி னகக்கண். முக்கண்டகி - நெரிஞ்சில். முக்கண்ணன் - சிவன், விநாயகன்,வீரபத்திரன். முக்கண்ணி - காளி, தேங்காய், பார்வதி. முக்கம் - பேராலவட்டம், முக்காரம். முக்கம்பி - மூன்றுகம்பிக்குறி. முக்கரணம் - மனம், வாக்கு, காயம். முக்கல் - உண்டல், பேசலானெழுமொலி, முக்குதல். முக்கவீனம் - மக்கனம். முக்கறட்டை - மூக்கிரட்டை. முக்கனி - முப்பழம் அது கதலி,பலா, மா இவற்றின் கனி. முக்காடு - முட்டாக்கு. முக்காட்டங்கி - முக்காடு. முக்காணி - சிற்றிலக்கத் தொன்று. முக்காணியர் - பிராமணரி லோர்வகை. முக்காரம் - எருது போர்வளைக்குங்குறி, தாழ்ப்பாள். முக்காரி - கலம் என்னும் ஓரளவை. முக்காலமறிந்தவன் - கடவுள். முக்காலம் - திரிகாலம் அஃது இறப்புஎதிர் நிகழ்வு. முக்காலி - அக்கினி, கலம் வைக்கும்மரத்தட்டு. முக்கால் - மூன்று கால், மூன்றுமுறை. முக்காவேளை - முட்காவேளை. முக்காழி - மன்று கொட்டையுள்ளது. முக்கானோக்கு - கிரகநோக்கினொன்று. முக்கான் - துட்டன். முக்கியம் - பிரதானம், மேன்மை. முக்கியர் - ஓர் சாதியார். முக்கியன் - முதன்மையானவன். முக்கு - பிரயாசம், முடுக்கு. முக்குகர் - முக்குயர். முக்குடுமி - சூலம். முக்குடை - சந்திரவட்டம் சகலபாசனம் நித்தியவினோதம்அவை நிரையே முத்துக்குடை,பொற் குடை, மணிக்குடை முக்குடைச்செல்வன் - அருகன். முக்குணம் - மூன்றுகுணம் அவைஇராசதம், சாத்துவிதம், தாமதம்,பூராடம். முக்குதல் - முட்டுப்பட்டனுங்குதல்,விழுங்கல், உண்ணல். முக்குருந்து - காட்டெலுமிச்சை. முக்குலம் - மூன்றுகுலம் அவைஅக்கினி வமிசம் சந்திர வமிசம்சூரிய வமிசம். முக்குலைச்சு - முக்கால். முக்குவர் - ஓர் வகைச்சாதியர். முக்குளம் - கங்கை, சரஸ்வதி,யமுனையென்னும் நதிகளைப்பொருந்தி யிருக்குமோர் கிராமம்,பூராடம். முக்குளி - கோழிமுளையான். முக்குளிக்க - நீரில்மூழ்க. முக்குளித்தல் - அமிழ்ந்துதல். முக்குளிப்பான் - ஓர் நோய், ஓர் பட்சி. முக்குற்றங்கடிந்தோன் - கடவுள்,புத்தன். முக்குற்றம் - மூன்றுகுற்றம் அவைகாமம் வெகுளி மயக்கம். முக்கூடல் - ஓர் மலை. முக்கூடற்பள்ளு - ஓர் பிரபந்தம். முக்கூட்டு - அடுப்பு, பரணி. முக்கூட்டெண்ணெய் - ஓர் மருந்தெண்ணெய். முக்கோணசாத்திரம் - அளவறியுஞ்சாத்திரத் தொன்று. முக்கோணம் - மூன்றுமூலை, மூன்றுமூலை வடிவம். முக்கோல் - திரிதண்டு, திருவோணம். முக்கோற்பகவர் - திரிதண்டசந்நியாசிகள். முக்தாபலம் - கர்ப்பூரம் முத்து. முங்குதல் - முழுகல், உண்ணல். முத்தகஞ்சுகம் - தோலுரித்த பாம்பு. முத்தசட்சு - சிங்கம். முத்தம் - பயறு. முத்தாகலாபம் - முத்துமாலை. முத்தாகாரம் - முத்துச்சிப்பி. முசகம் - எலி. முசங்கி - ஓர் வகைக்கொவ்வை. முசரு - தயிர். முசருகம் - பவழம். முசர் - தயிர். முசலம் - இருப்புலக்கை, உலக்கை,தண்டம். முசலி - உடும்பு, ஓணான், ஒந்தி,சந்திரன், தாழை, நிலைப்பனை,பலபத்திரன், பல்லி, முதலை,மெருகன் கிழங்கு.முசலிகாசனம், முசலிகாதனம் - இருகாலு மிருகையுஞ் சம்மணமாக மடக்கி மார்பு நிலத்திலேதோயக்கிடப்பது. முசலிகை - உடும்பு. முசலை - முயலை. முசல் - முயல். முசல்வலி - ஓர் வலிப்பு. முசற்காது - ஒர் பூண்டு. முசற்கொம்மட்டி - ஓர் கொம்மட்டி. முசிகுதல் - முசித்தல். முசிகுந்தம் - குபேரன்வில், சூரியன்கைச் சங்கு. முசிகுந்தன் - பிரமன். முசித்தல் - இளைத்தல், மெலிதல்.முசிப்பாறல், முசிப்பாறுதல் - இளைப்பாறுதல். முசிப்பாற்றல் - இளைப்பாற்றல். முசிப்பாற்றி - இளைப்பாற்றி. முசிப்பு - இடை, மெலிவு, வெளிப்பு. முசிரம் - வள்ளற்றன்மை. முசிரன் - கொடையாளி. முசிலாப்பு - புடவையைச் சுருக்கிக்கட்டுவது. முசிறு - முயிறு, முன்கோபி. முசு - ஓர் சாதிக்குரங்கு. முசுகுந்தன் - அறுவகைச் சக்கிரவர்த்திகளி லொருவன். முசுக்கட்டைச்செடி - கம்பளிச்சொண்டான். முசுக்கட்டைப்பூச்சி - கம்பளிப்பூச்சி. முசுக்கை - முசுமுசுக்கை. முசுடர் - கீழ்மக்கள். முசுடி - நொடி. முசுடு - பொல்லாங்கு, முயிறு. முசுட்டை - ஓர் கொடி. முசுட்டைப்பெண் - ஓர் புழு. முசுண்டம் - ஓர் ஆயுதம். முசுண்டர் - கீழ்மக்கள். முசுண்டி - ஓர் வாச்சியம், படைக்கலம், மட்டிப்படை. முசுப்பதி - பாசறை. முசுப்பு - எருத்தினேரி. முசுமுசுக்கை - ஓர் கொடி. முசுமுசுத்தல் - குறட்டைவிடல், நீர்முதலிய கொதித்தற் குறிப்பு. முசுமுசெனல் - தினவுக்குறி. முசும்புதல் - மிணுமிணுத்தல், முறுமுறுத்தல். முசுருமுட்டை - ஒருவகை எரும்பின்முட்டை. முசுவல் - முசுட்டை. முசுறு - முசிறு. முசுறுப்புல் - அளத்துப்புல். முச்சகம் - திரிலோகம், மூன்றுலோகம். முச்சங்கம் - முதலிடை கடையாய்மதுரையில் வழங்கிய சங்கம். முச்சட்டை - அழகு. முச்சதுரம் - முக்கோணம். முச்சத்தி - இச்சாஞானக் கிரியாசத்திகள் அவை சிருட்டி திதிசங்காரம். முச்சந்தி - திரிகாலசந்தி அது காலைஉச்சி மாலை மூன்றொன்றாய்ப்பொருந்துமிடம், முத்தெருக்கூடுமிடம். முச்சி - உச்சி, உச்சிக்கொண்டை,சிறு சுளகு, மயிர்முடி. முச்சியர் - உறைகாரர், மரவினையாளர், வன்னக்காரர். முச்சிரம் - சூலம். முச்சிலிகை - உடன்படிக்கையுறுதி. முச்சில் - சிறுமுறம்.முச்சினியக்கேடு, முச்சினியம் - சோம்பு. முச்சீரடி - சிந்தடி. முச்சுடர் - மூன்றுசுடர் அவைஅக்கினி, ஆதித்தன், சந்திரன். முச்சுழி - ணகரம். முச்சூடும் - முழுதும். முச்செயல் - மூன்றுசெய்கை அதுபடைத்தல் காத்தல் அழித்தல். முச்சை - மூன்றொன்றாய் முடிவது. முச்சொல்லலங்காரம் - ஓரலங்காரம்அஃது ஒருமொழி முப்பயன்விளைவிப்பது. முஞல் - கொசுகு.முஞ்சகேசன், முஞ்சகேசி - திருமால். முஞ்சபந்தனம் - பூணூற்பூண்டு. முஞ்சரம் - தாமரைக்கிழங்கு. முஞ்சல் - சாதல், முற்றல். முஞ்சி - உபவீதத்திற்கட்டும்புல்,காணற்புல். முஞ்சுதல் - முஞ்சல். முஞ்சை - தருப்பைப்புற்கட்டு,பார்வதி. முஷிதம் - திருட்டுத்தனம். முஷ்கரம் - முரட்டாட்டம். முஷ்கரன் - முரண்டம். முஷ்டம் - திருட்டுத்தனம். முஷ்டி - ஆயுதப்பிடி, ஒருபிடி, முடக்கியகை. மூஷ்டிகாந்தகன் - பலதேவன். முஷ்டிந்தயன் - பாலகன். முஷ்டிபந்தம் - கைப்பிடி. முடக்கம் - தடை, முடங்குதல். முடக்கல் - தடுத்தல், முடக்குதல். முடக்கற்றான் - ஓர் பூடு. முடக்கு - மடக்கு, முடக்கென்னேவல், விரலணியினொன்று. முடக்குக்குடவர் - மடிப்புக்குடவர். முடக்குச்சரக்கு - அவியற்சரக்கு,கிடையன் சரக்கு. முடக்குற்றான் - ஓர்கொடி. முடங்கல் - தாழை, நோய், மடங்கல்,முள்ளி, மூங்கில், வரைந்தனுப்புமோலை, முடங்குதல். முடங்கன்முலை - தாழைவிழுது. முடங்கி - கிடைப்பாடானவன். முடங்கு - ஓர்நோய், முடங்கென்னேவல். முடங்குதல் - மடங்குதல். முடங்குளை - குதிரையின் பிடருரோமம், சிங்கம். முடத்தாமங்கண்ணியார் - பத்துப்பாட்டில் பொருநராற்றுப் படையியற்றியவர். முடத்தி - முடப்பெண், வளைவுள்ளது. முடமுடெனல் - ஈரடுக்கொலிக் குறிப்பு. முடம் - நொண்டி அஃது உறுப்புக்குறை யெட்டினொன்று, குற்றம்,வளைவு. முடலை - உண்டை, கழலை, திரட்சி,நாற்றம், பெருங்குறடு, பெருமை,முருடு, வலி, முறுக்கு. முடவன் - அருணன், சனி, நொண்டி. முடவாட்டுக்கல் - ஆட்டுக்கல். முடவு - முடத்தன்மை. முடவுதல் - நொண்டுதல். முடி - ஐம்பாலினொன்று அஃதுஉச்சியின் முடித்தல், கிரீடம்அஃது இராச சின்னத்தொன்று,குடுமி, தலை, துழாய், தேங்காய்முடி, நாற்று, முடிமயிர்,முடியென் னேவல், மொக்கு,இலக்கினம். முடிகம் - பெருச்சாளி. முடிகளைதல் - முடிமயிர் வாங்குதல். முடிகாணிக்கை - நேர்ந்தசடைகழித்தல். முடிக்கோரை - ஓர் புல். முடிசூடுதல் - முடி சூட்டுதல். முடிசூட்டு - கிரீடதாரணை, கிரீடந்தரித்தல். முடிசூட்டுதல் - முடிதரித்தல். முடிச்சவிழ்க்கி - திருடன், புரட்டன். முடிச்சு - கழுத்தின் முடிச்சு, தந்திரம்,முடித்தல், முடியப்பட்டது,முட்டு. முடிச்சுமாறி - திருடன், புரட்டன். முடிதரித்தல் - முடிசூட்டுதல். முடிதல் - கட்டுதல், கெடுதல், சாதல்,தொடுத்தல், முற்றுதல். முடிதும்பை - ஓர் பூடு. முடித்தகேள்வி - கரைகண்ட கேள்வி. முடித்தல் - அழித்தல், கெடுத்தல்,சூடுதல், முற்றுவித்தல். முடித்துக்காட்டல் - மேலோர் முடித்தவாறு முடித்துக்காட்டல் அதுதந்திரயுத்திகளி னொன்று. முடிநாதம் - இந்திரகோபம். முடிந்தது - முடித்தல், ஒர் யுத்தி அதுசிறப்பு வாய்பாடான் முடிந்ததைப்பொது வாய்பாடான் முடித்தல். முடிபொறுத்தராசா - கிரீடாதி பத்தியவரசன். முடிபொறுத்தவன் - முடிதரித்தராசன். முடிப்பீரி - இறைமுதலிய சேர்க்கிறவன். முடிப்பு - தீர்மானம், முடிச்சு, முற்றானதொகை. முடிப்புக்கட்டுதல் - தீர்த்தல். முடிப்புச்செலுத்தல் - இறை முதலியசெலுத்தல். முடிப்புச்சொல்லுதல் - தீர்ப்புச்சொல்லுதல். முடிப்புரி - முடிப்பீரி. முடிமயிர் - தொற்றுவைக்கு மயிர். முடிமன்னர் - கிரீடந்தரித்த அரசர். முடிமாலை - முடியின்மேன்மாலை. முடிமேலழகி - கோடகசாலை. முடிமேல்முடி - செருந்தி. முடியல் - எல்லாம். முடியாட்டுதல் - திருமஞ்சநம் செய்தல். முடியாமை - கட்டுப்படாமை, முற்றாமை. முடியிறக்குதல் - கிரீடாவமானஞ்செய்தல். முடியுண்குதல் - கட்டுப்படுதல். முடியுறுப்பு - முடியினங்கம். முடிவறிதல் - துறைபோதல். முடிவாங்குதல் - பிறவி மயிர்களைதல். முடிவிடங்கூறல் - ஓர் யுத்தி அது தான்சொல்லு மிலக்கணத்திற்குஇலக்கியந்தோன்று மிடத்தைச்சொல்லுதல். முடிவிடம் - முடியுமிடம். முடிவில்லாமை - அனந்தம், நித்தியம். முடிவு - கடை, சாவு, இறதி. முடிவுகாலம் - யுகாந்தகாலம். முடிவுரை - கடைக்காப்பு. முடுகடி - கிட்டுமானம். முடுகல் - எதிர்த்தல், கிட்டல், சீக்கிரம்,மொய்த்தல், வலி, விரைதல். முடுகியல் - கலிப்பாவினோ ருறுப்பு,வண்ணம். முடுகு - அராகம், கடமைப்பெண்,முடுகென்னேவல். முடுக்கர் - பலமுடையோர், மலைக்குகை, குறுந்தெரு, கோணத்தெரு. முடுக்கல் - அவசரப்படுத்தல்,ஊன்றுதல், ஒட்டல், நெருக்கல்,மொய்த்தல். முடுக்கன் - பலமுள்ளவன். முடுக்கு - ஒடுக்கம், கோணத்தெரு,கோண், நெருக்குதல், முடக்கு,மூலை. முடுக்குதல் - முடுக்கல். முடுக்குவழி - ஒடுக்குவழி. முடுங்குதல் - நெருங்குதல். முடுவல் - செந்நாய், நாய், பெண்ணாய். முடுவற்படையோன் - படை நாய்களைவைத்திருக்கிறவன், வயிரவன். முடுவன் - ஊமை. முடை - ஓலைக்குடை, தீயவாசனை,நாற்றம், புலால், முடையென்னேவல், தவிடு. முடைச்சேரி - முல்லைநிலத்தூர். முடைஞ்சல் - மிடைதல். முடைதல் - இணைத்தல், நிணத்தல்,பின்னுதல். முடை நாற்றம் - நெய்ப்பு, மரணம்,புலான் மணம். முட்கத்தரி - முள்ளங்கத்தரி. முட்கடு - ஓர் கடுமரம். முட்காடு - முள்ளுக்காடு. முட்காய்வேளை - ஓர் செடி. முட்கிளுவை - ஓர் மரம். முட்கீரை - ஓர் செடி. முட்கொன்றை - ஓர் கொன்றை. முட்கோல் - இருப்புமுள். முட்சங்கு - ஓராயுதம், ஓர் சங்கு. முட்செடி - முள்ளுப்பற்றை. முட்செவ்வந்தி - ஓர் செவ்வந்தி. முட்ட - ஒட்ட, முடிய, நிறைய. முட்டக்கலிப்பு - தராமலை. முட்டடி - கிட்டுமானம், சமீபம்,நெருக்கம். முட்டடைப்பன் - ஓர் நோய். முட்டத்தனம் - முறட்டுத்தனம், மூடத்தனம், மூர்க்கத்தனம். முட்டமுடிய - ஆகநிறைவேறு மளவும். முட்டம் - ஓரூர், களவு. முட்டரிசி - முற்ற அவியாத சோறு. முட்டல் - உதைத்தல், கிட்டல், பாய்தல். முட்டற்றது - தாவரமற்றது. முட்டன் - கோபி, முட்டாள். முட்டா - ஓர் பணிகாரம், சம்பாரம். முட்டாக்கு - போர்வை, முக்காடு. முட்டாட்டம் - முட்டத்தனம், முட்டுத்தனம். முட்டாள் - பருவேலைக்காரன்,முட்டன், மூடன். முட்டி - ஆயுதப்பிடி, எட்டிமரம், ஒருபலம், ஓர் செடி, ஓர் பிடி, கலசம்,கலைஞான மறுபத்துநான்கினொன்று, கைப்பொத்து,சம்மட்டி, பிச்சை, முடக்கி யகை,காஞ்சிரை, பேராமுட்டி, முஷ்டி. முட்டிகன் - தட்டான். முட்டிகாந்தகன் - பலதேவன். முட்டிகை - இலைக்குறடு, கைக்குத்து,சாவணம், மத்திகை. முட்டிக்கத்தரி - ஓர் வழுதலை. முட்டிக்காய் - தும்மட்டிக்காய். முட்டிக்கால் - ஒன்றோடொன்றுதட்டப்படுங்கால். முட்டிச்சுரை - ஓர் சுரை. முட்டிபாதம் - கைப்போர்.முட்டியுத்தம், முஷ்டியுத்தம் - கைக் குத்துப்போர். முட்டு - அடைப்பு, அரண்வளைதல்,இலம்பாடு, கடிவாளம், குறைவு,தடை, தளபாடம், நெருக்கம்,பூப்பம், முட்டுதல், முட்டென்னேவல், முழந்தாள், மேடு,வருத்தம், வழு, வறுமை. முட்டுக்கட்டுதல் - பாத்திகட்டுதல்,மிண்டு கொடுத்தல். முட்டுக்கட்டை - எதிர்க்கட்டை,மிண்டுதடி. முட்டுக்களிக்கண் - பணிகளினோருறுப்பு. முட்டுக்காய் - இளந்தேங்காய்பணி. முட்டுக்கால் - உதைகால், முழந்தாள். முட்டுக்கொடுத்தல் - மிண்டு கொடுத்தல், அண்டைகொடுத்தல். முட்டுதல் - அணைதல், எதிர்த்தல்,ஒற்றுதல், குத்துதல், குறைதல்,தடுத்தல், தீண்டல், நிறைவுறல்,நெருக்குதல், முடுக்கல். முட்டுத்தொய்வு - ஓர் நோய். முட்டுப்பாடு - இலம்பாடு, திக்குமுக்கடைத்தல், தீமை, நெருக்கிடை,வருத்தம், வறுமை. முட்டுயுத்தம் - நெருங்கினபோர். முட்டுற்றவன் - மூடன். முட்டை - அண்டம், ஓர் நோய், கந்தன்,சிறுகரண்டி, தவிடு, எருமுட்டை,பீநாறி. முட்டைக்கண் - பொந்துக்கண். முட்டைக்கண்ணீர் - சொட்டுச்சொட்டாய்விழுங் கண்ணீர். முட்டைப்பாசி - ஓர் நீர்ப்பூடு. முட்பன்றி - முள்ளம்பன்றி. முட்பாஷாணம் - பன்றிமுள். முட்புறக்கனி - பலா. முட்பூல் - ஓர் செடி. முணங்கல் - அடங்குதல். முணங்கு - அடக்கம், சோம்பு. முணங்குதல் - முணங்கல். முணுமுணெனல் - ஒலிக்குறிப்பு. முனை - மிகுதி. முண்டகசனன் - முண்டகன். முண்டகம் - கடல், கருக்குவாளிமரம்,கள், தலை, தாமரை, தாழை, நீர்முள்ளி, நெற்றி, முட்செடி, முள்ளிச்செடி, தர்ப்பை. முண்டகன் - பிரமன்.முண்டகாசனி, முண்டாகாசனை - இலக்குமி. முண்டசணன் - மல்லன். முண்டபலம் - தேங்காய். முண்டம் - உடற்குறை, உபநிடதமுப்பத்திரண்டி னொன்று, குற்றி,தலை, திரட்சி, நெற்றி, மொட்டைத்தலை. முண்டனம் - முண்டித்தல், மொட்டை. முண்டணி - கொட்டாங் கரந்தை. முண்டன் - இராகு, நாவிதன், மொட்டந்தலையன். முண்டாகாரம் - அவயவப்பகிர்வற்றது. முண்டாசு - தலைப்பா. முண்டாயி - தீம்பண்டம். முண்டி - நாவிதன், முண்டியென்னேவல், மொட்டைத்தலையன். முண்டிதம் - மொட்டை. முண்டிதன் - மொட்டைத்தலைவன். முண்டித்தல் - மழித்தல், மொட்டையாக்கல். முண்டிரம் - உபநிடத முப்பத்திரண்டி னொன்று. முண்டீரம் - ஓர் கீரை. முண்டீரபாதி - சூரியன். முண்டு - உள்வேட்டி, முரண்டுத்தனம், மூடத்தனம். முண்டுதல் - முரண்டுபண்ணல். முண்டை - மொட்டை, விதவை. முண்டைக்கண் - பருத்தகண். முண்ணாயகி - ஓர் செடி. முண்மா - முட்பன்றி. முண்முருக்கு - ஓர் முருக்கு, கிஞ்சுகம். முதங்கி - வெள்ளகத்தி. முதம் - உவகை. முதலது - முதலானது. முதலல் - துவக்கம், துவங்குதல்,முதலாதல். முதலனுமானம் - முதற் காரணத்தைக்கொண்டனுமானித்தல். முதலாளி - முதன்மைக்காரன். முதலி - முதல்வன், கைக்களர். முதலிச்சாதி - ஓர் சாதி. முதலிலனாதல் - கடவுளறுகுணத்தொன்று, அது தானொன்றிலுந்ததோன்றாமை. முதலுதல் - துவங்கதல், முதலாதல். முதலெழுஞ்சனி - மகம். முதலெழுத்து - தனியெழுத்து, அஃதுஉயிருமெய்யுமாகிய முப்பதெழுத்து. முதலை - செங்கிடை, வன்மீன். முதலைக்கோரை - ஓர் புல். முதலைப்பூண்டு - ஓர் பூண்டு. முதலோன் - கடவுள். முதல் - ஆதி, ஏழனுருபு (உ.ம்) சுரன்முதல்வந்த வுரன்மாய்மாலை,கடவுள், முதலென்னேவல்,வட்டிக்குக் கொடுக்கும் பணம்,வியாபாரஞ்செய்யும் பணம்,காரணம், இடம். முதல்முதல் - துவக்கம். முதல்வடி, முதல்வடிப்பு - முதற்சாரத்தயில வடிப்பு. முதல்வர் - அதிபதிகள், வானோர். முதல்வள்ளல் - குறிப்பறிந்து கொடுப்போர். முதல்வன் - அரசன், அரன், அருகன்,கடவுள், முதலாளி, முன்னவன். முதல்வி - தலைவி, தேவி. முதல்வேதம் - இருக்குவேதம். முதளை - ஓர் நீர்ப்பூண்டு, முதலை. முதற்கண் - முதலிடம். முதற்கருவி - மத்தளம். முதற்காரணகாரியம் - ஆதிகாரணகாரியம். முதற்காரணம் - காரணத்திற்காதியாயிருப்பது. முதற்சங்கம் - தலைச்சங்கம். முதற்பட்சம் - முதற்றரம். முதற்பலபாகம் - விளைவின் முதற்கண் வருமானம். முதற்பலம், முதற்பலன் - முதற்பேறு. முதற்பா - வெண்பா. முதற்பெயர் - முதனிலைப்பெயர். முதற்பேறு - தலைப்பிள்ளை, முதற்பலன். முதற்பொருள் - கடவுள், மூலதநம். முதனடை - மிகவும், தாழ்ந்த செலவினையுடைய பாடல், இயக்கம்நான்கினுளொன்று. முதனாள் - அசுபதி, முந்தினநாள். முதனிலை - பகுதி, காரணம். முதனிலைத்தீபகம் - செய்யுளலங்காரத்தினொன்று அது தீபகச்சொல் முதனிற்பது. முதனிலைத்தொழிற்பெயர் - பகுதிப்பொருண் மாத்திரமாய் நிற்கும்வினைச்சொல் (உ.ம்.) வருதல். முதனிலைவிளக்கு - தீபகாலங்காரத்தினொன்று. முதனிறம் - மாங்கிஷச்சிலை. முதனூல் - முதல்வன் வாக்கு. முதன்மடக்கு - மடக்கலங்காரத்துளொன்று அஃது அடிகளுளொன்றேனும் பலவேனு மடிமுதலில் மடங்கிவருவது. முதன்மறிநிலை - ஓரலங்காரம் அதுசினைப்பெயர் முதற்கும் முதற்பெயர் சினைக்குஞ் செல்லவுரைத்தல். முதன்மாணாக்கர் - முதற்பட்சமானசீடர். முதன்மை - அதிகாரம், முன்னீடு.முதாரி, முதாரு - நிறைகன்றுத்தாய்ச்சி, முதுகன்று, முதுமை. முதாருகன்று - ஊட்டுமறந்தகன்று. முதிகம் - வேம்பு. முதிஞர் - முதியர். முதிதம் - உவகை. முதிதை - பெரியோரிடம் வைக்கும்பற்று. முதியகொல்லை - பழங்கொல்லை. முதியம் - நாய்வேளை. முதியர் - முதியோர், மூத்தோர். முதியன் - முதியான், மூத்தோன். முதியோர் - கற்றோர், பெரியோர்,மூத்தோர். முதியான் - ஓர்பட்சி, முதியது, முதுகன்று. முதியாள் - மூத்தவள், தேவராட்டி. முதிரம் - மேகம். முதிரன் - தூர்த்தன். முதிரிமை - முதுமை. முதிருதல் - முதிர்தல். முதிரை - அவரை, ஓர்மரம், காராமணி, கொள்ளு, துவரைமுதலியன. முதிர்காய் - கனி, முதிர்ந்தகாய். முதிர்காற்று - கடுங்காற்று. முதிர்சுவை - மிக்கசுவை. முதிர்சொல் - திரந்தினசொல். முதிர்ச்சி - முதிர்வு, மேட்டிமை. முதிர்தல் - காய்தல், தேறுதல்,பழுத்தல், வயசாதல், வறத்தல். முதிர்பிறை - சதுர்த்திப்பிறை முதலாகவருநிலவு. முதிர்பு - முதிர்வு. முதிர்ப்பு - கலக்கம், முதிர்ச்சி. முதிர்வயது - கிழப்பருவம். முதிர்வு - மூப்பு. முதிர்வேனிலுரிமை - கோடைக்காற்றுவீசலுங் கானறோன்ற லுங்காடைவலியான் வானம் பாடி காகம்கவுதாரியிவை மகிழ்தலும்மல்லிகை புளி பாதிரியிவைமலர்தலும் பாலை காஞ்சிரம் நாவல்இலுப்பை யிவை காய்த் தலுமரம். முதிர்வேனில் - ஆனி ஆடியின் பருவம். மூதி - சந்திர கிரணம். முது - பழமை, பேரறிவு. முதுகாஞ்சி - ஓர் பிரபந்தம் அதுமுதுக்குறைந்தோர் முதுக்குறையாமாக்கட்குக் கூறுவது. முதுகாடு - சுடுகாடு, பிறங்கியல். முதுகால் - முந்தின வருடத்தின்வெற்றிலைக் கொழுந்து. முதுகிடல் - புறங்காட்டல். முதுகு - உரப்பு, பின்புரம். முதுகுகாட்டுதல் - புறங்காட்டுதல். முதுகுகொடுத்தல் - துணைசெய்தல்,புறங்கொடுத்தல். முதுகுதாங்கி - சார்மணை. முதுகுநீர்ச்சடங்கு - சீமந்தச்சடங்கு. முதுகுபிளவை - ஓர் சிலந்தி. முதுகுருகு - தலைச்சங்கப் புலவரியற்றிய இசைத்தமிழ் நூல். முதுகுன்று - திரமுதுகுன்று அதுவிருத்தாசலம். முதுகொல்லை - முதிர்ந்தகொல்லை.முதுக்குறைதல், முதுக்குறைவு - திவ்விய ஞானம், பெண்புத்தியறிக்கை, பேரறிவு. முதுசொல் - பழஞ்சொல், மூதுரை. முதுநாரை - தலைச்சங்கப் புலவரியற்றிய இசைத்தமிழ் நூல். முதுநிலம் - களர், பாலைநிலம்,பெரும்பாழ்நிலம். முதுமகன் - சனி. முதுமை - பழமை, பழமொழி,மூப்பு. முதுமொழி - பழஞ்சொல், பிரணவம். முதுமொழிக்காஞ்சி - ஓர் நூல். முதுமொழிவெண்பா - சோமேசர்முதுமொழி வெண்பா. முதுலாபிகம் - பெருங்குரும்பை. முதுவர் - புலவர், மந்திரியார்,மூதுணர்ந்தோர், மூத்தோர்,அறிஞர். முதுவு - பருக்கன். முதை - காடுவெட்டிச் சுட்டகொல்லை, சந்தோஷம், இலையுதிர்ந்த காடு. முதைப்புனம் - முதுகாடு. முத்தகச்செய்யுள் - தனித்தனியேமுற்றுப்பெறுஞ்செய்யுள். முத்தகம் - எறியாயுதம், கருக்குவாளிமரம், தனித்தனியே முற்றுப்பெறுஞ் செய்யுள், தனிநின்றுமுடியுஞ் செய்யுள், கருங்குவளை. முத்தக்காசு - கோரைக் கிழங்கு இதுதுவர் பத்தினொன்று, அட்டமூலத்து மொன்று. முத்தஞானவுருபி - கடவுள். முத்தண்டு - திரிதண்டு. முத்தமிழுரியோன் - அகத்தியன்,வயிரவன். முத்தமிழ் - இயலிசைநாடா மென்னும்மூவகைத் தமிழ். முத்தம் - அட்டம், உதடு, கொஞ்சுதல், நவமணிக்குற்றத்தொன்றுஅது குல்லை நிறம், பிரியம், மருதநிலம், முத்து, முத்துக் கொட்டை,விடப்படுவது, விடுதல், விடுகை,கோரைக் கிழங்கு. முத்தரையர் - செல்வர். முத்தர் - திடர், முத்திக்குரியோர். முத்தலை - சூலம். முத்தலையன் - திரிசிரன். முத்தலையிருதலைவேல் - அறுதலைக் கழுமுள். முத்தலைவேலோன் - சிவன், வயிரவன். முத்தன் - அரன், அருகன், சுத்தன்,புத்தன், முத்திபெற்றோன், வயிரவன், விட்டவன், பாசங் களால்விடப்பட்டவன், முக்தன். முத்தகாந்தம் - பருப்புப் பொங்கல். முத்தகேசம் - அவிழ்ந்தசிகை. முத்தாகலாபம் - முத்தாரம். முத்தாகாரம் - முத்துச்சிப்பி. முத்தாடல் - கொஞ்சுதல். முத்தாதனம் - இடக்காற்பரட்டாற்சீவனியை யழுத்தி வலக்காற்பரடுஅப்பரட்டின் கீழழுந்த விருத்தல். முத்தாத்துமா - பக்குவன். முத்தாபலம் - இசங்கம்பழம், முத்து. முத்தாமணக்கு - ஓராமணக்கு. முத்தாம்பல் - சங்கு. முத்தாரம் - முத்துமாலை. முத்தாலதை - முத்துமாலை, ஓர்பண்,சம்ஸ்கிருத தருக்கசாஸ்திரம். முத்தாவலி - முத்தாவணி, முத்துமாலை. முத்தானம் - அடுப்பு, மூவகைத்தானம். முத்தான்மா - முத்தாத்துமா. முத்தி - திசை, பிறப்பு, நீங்குகை,முத்தம், மோட்சம், விடுதல்,முக்தி. முத்திக்கை - அரண்வளைப்பு. முத்தி - கொஞ்சுதல், மோக்கம். முத்திதசை - முத்திநிலை. முத்திதன் - மோக்ஷம் கொடுப்பவன். முத்திதானம் - மோட்சதலம், பன்னிரண்டாமிடம். முத்திதிசை - ஞானபட்சம். முத்திநெறி - ஞானமார்க்கம். முத்திபதம் - மோட்சபதவி, ஞானநிலை. முஸ்திப்பு - அசீர், ஆயுத்தம். முஸ்தை - கோரைக் கிழங்கு. முத்திப்பேறு - மோட்ச வாழ்வு. முத்திமண்டபம் - காசியில் விசுவ நாதர்சந்நிதிக்குத் தெற்கிலுள்ளமண்டபம். முத்திமார்க்கம் - விதிமார்க்கம். முத்தியம் - முத்து. முத்திராங்கிதன் - முத்திரிக்கப்பட்டவன். முத்திராங்கிதை - தங்கசாலை. முத்திரி - அடையாளம். முத்திரிகை - முத்திரை, முத்திரைமோதிரம். முத்திரித்தல் - முத்திரை வைத்தல். முத்திருக்குஞ்செடி - ஓர் பூடு. முத்திருக்கஞ்செவி - ஓர் செடி. முத்திரை - அடையாளம், இலாஞ்சனை. முத்திரைக்கம்பு - முத்தி அச்சு. முத்திரைக்குத்திப்பார்ப்பார் - தத்துவாதிகள். முத்திரைக்கூடம் - சாவலறை. முத்திரைக்கோல் - முத்திரைக்கம்பு. முத்திரைப்பல்லவம் - பதத்தினடிதோறு மொட்டிப்படிக்கும் பல்லவம். முத்திரைமோதிரம் - ஓர்வகைக்கணையாழி. முத்திரைவித்து - உருத்திராட்சம். முத்திவிக்கினம் - முத்திக்கிடையூறுஅஃது அறியாமை ஐயம் திரிபு. முத்தீ - உதாத்தீ, உயிர்த்தீ, சினத்தீ,அன்றியும் அகவனீயம் காருகபத்தியம் தக்கணாக்கினியம்எனும் மூவகையங்கி. முஸ்தீது - ஆசீர். முத்து - ஓரிரத்தினம், சங்கு முதலியவற்றின் முட்டை, பருப்பு, பிரியம், மேலானது, வைசூரிக் குரு. முத்துக்கற்கம் - ஓர் மருந்து. முத்துக்குமாரன் - முருகன்.முத்துக்குளி, முத்துக்குளித்தல் - முத்தெடுக்க நீரில் முழுகல். முத்துக்கொட்டை - ஆமணக்கங்கொட்டை. முத்துச்சம்பா - ஓர் நெல். முத்துச்சலாபம் - முத்துக்குளிப்பின்பேறு. முத்துச்சனிப்பு - முத்துண்டாகுமிடம் அஃது உடும்பு, கமுகு,கரும்பு, கொக்கு, சங்கு, சந்திரன்,சிப்பி, செந்நெல், தாமரை,நங்கையர் கழுத்து, நந்து, நாகம்,பசுவின் பல், பன்றிக் கொம்பு,மீன், முதலை, மூங்கில், மேகம்,யானைக்கொம்பு, வாழை. முத்துச்சிப்பி - முத்திருக்கு மிப்பி. முத்துச்சிவிகை - முத்துப் பல்லக்கு. முச்துச்சோளம் - வெள்ளைச்சோளம். முத்துமாதளை - ஓர் மாதளை. முத்துமாலை - முத்துக்கோவை. முத்துருவி - ஓர்வகைக் காதணி. முத்துவடம் - ஓர் சீலை, முத்துமாலை. முத்துவன்னச்சேலை - ஓர்சேலை. முத்தூர்க்காற்றம் - சோழ நாட்டிலோர் சிற்றூர். முத்தெறிதல் - குருநோய் பிடித்தல். முத்தை - கவளம், திரட்சி, மிகவுந்தெரிவிலாள். முத்தையன் - சுப்பிரமணியன். முத்தொகைவினா - ஓர்வகைக்கணக்கு. முத்தொழிலார் - வைசியர் பொது. முத்தொழில் - முச்செயல் அதுசிருட்டி திதி சங்காரம். முத்தொழிற்பகவன் - கடவுள். முத்தொள்ளாயிரம் - ஓர் காப்பியம். முத்தோஷம் - முப்பிணி. முநி - சரீரம். முந்த - முன்னே. முந்தல் - தலைப்பு, முச்சந்தி,முந்துதல். முந்தன் - கடவுள், மூத்தோன். முந்தானை - முன்றானை. முந்தி - முன்றானை, முன்னே. முந்திரி - ஓர் சிற்றிலக்கம் அதுமுந்நூற்றிருபது பாகத்தொன்று. முந்திரிகை - ஓரெண், ஓர் செடி. முந்திளவல் - தமையன். முந்து - பழமையான, பொந்து, முந்தென்னேவல், வெண்ணாரை, முன். முந்துதல் - முன்றல். முந்துநூல் - முதனூல். முந்துருணி - மதுரசம். முந்துறக்காண்டல் - அகப்பொருட்டுறையினொன்று. முந்துறல் - முற்படுதல். முந்தூழ் - பழவினை, மூங்கில். முந்தூள் - மூங்கில். முந்தை - பழமை, பாட்டன், முன்னே. முந்தைநாள் - முன்னாள். முந்தையோர் - முன்னோர். முந்நாடு - சேரசோழ பாண்டியர்களுக்குரிய மூன்று நாடு. முந்நீர் - கடல். முந்நூல் - பூணூல், மூவகை நூல்,அது முதனூல், சார்புநூல், வழிநூல். முந்நூன்மார்பர் - அந்தணர். முப்பகை - காமம், மயக்கம், வெகுளி,முத்தி விக்கினமாகிய பகை மூன்றுஅஃது உடல், உலகு, பசாசு. முப்பத்துமூவர் - தேர் வகையில் ஆதித்தர் பன்னிருவர், அச்சு வினிகள்இருவர், உருத்திரர்பதினொருவர், வசுக்கள் எண்மர்எனப்படுவர். முப்பலை - திரிபலை, அது கடுக்காய்,நெல்லிக்காய், தான்றிக்காய். முப்பழம் - முக்கனி அது மா, பலா,வாழை யிவற்றின் கனி, திரிபலை. முப்பா - ஆசிரியப்பா, கலிப்பா,வஞ்சிப்பா. முப்பாட்டன் - பாட்டனுடைபாட்டன். முப்பாட்டி - முப்பாட்டன் மனைவி. முப்பால் - முப்பகுதி அஃது ஆண்பால், பெண்பால், அலிப்பால்மூன்றுவிதப்பால் அது காய்ச்சுப்பால், திரட்டுப் பால், குழம்புப்பால், திருக்குறள். முப்பாழ் - உடம்புக்குட் சூனியமாயமூன்றிடம். முப்பான் - முப்பது. முப்பிணி - முத்தோஷம் அவைவாதபித்த சிலேற்பனம். முப்பு - அகஸ்தியர் தமிழ் வாகடம். முப்புடி - முக்குணம். முப்புடைக்காய் - தேங்காய். முப்புரமெரித்தான் - முக்காவேளை,மூக்கிரட்டை. முப்புரம் - திரிபுரம், அவை இருப்புமதில், பொன்மதில், வெள்ளிமதில். முப்புரிநூலோர் - பார்ப்பார். முப்புரிநூல் - பூணூல், மூன்றுபுரிசேர்ந்த நூல். முப்புள்ளி - ஆய்தவெழுத்து. முப்பூரம் - பூரட்டாதி, பூரம், பூராடம். முப்பேதம் - சுகதபேதம், சுசாதிபேதம், விசாதிபேதம். முப்பொருள் - திரிபதார்த்தம், திரி மூர்த்தி.முப்பொறி - மனம், வாக்கு, காயம். முமுசாநம் - மேகம். முமுடம் - முற்றத் துறத்தல்முமுட்ச, முமுக்ஷ - துறவி, மோக்ஷதாகமுள்ளோன். முமுட்சுத்துவம் - பரவிராகம், முற்றத்துறுத்தல்.மும்மடங்கு, மும்மடி - மூன்று மடங்கு. மும்மடியாகுபெயர் - ஒன்றற்கிரு மடியாகு பெயராய் நிற்பது அதனாலாய் மற்றொன்றுக்கும் பெயராய்வழங்குவது (உ.ம்) கார். மும்மணிக்கோவை - ஓர் பிரபந்தம்அது வெண்பாவு மாசிரியப்பாவுங் கலித்துறையு முறையேதொகை முப்பது பெறவடுக்கியந்தாதித் தொடையாய்ப் பாடுவது. மும்மணிமாலை - ஓர் பிரபந்தம் அதுவெண்பாவுங் கலித்துறையும்அகவலும் அந்தாதித் தொடையான் முப்பது பாடுவது. மும்மண்டலம் - பூமி, அந்தரம்,சுவர்க்கம். மும்மதக்கோடு - தாலம்ப பாஷாணம். மும்மரம் - மும்முரம், உக்கிரம். மும்மரித்தல் - உக்கிரம் கொள்ளல்,கொந்தளித்தல். மும்மலம் - முக்குற்றம் அவைஆணவம், மாயை, காமியம். மும்மீன் - மிருகசீரிடம். மும்முரம் - உக்கிரம், கொந்தளிப்பு. மும்முரித்தல் - உக்கிரங் கொள்ளல். மும்மூடர் - முழுமூடர். மும்முட்சு - துறவு. மும்மூர்த்தி - பிரமா, விட்டுணு,உருத்திரன், திரிகடு. மும்மை - முக்காலம், முப்பிறப்பு, மூன்றாயிருக்குந்தன்மை, மூன்று.முயக்கம், முயக்கு - கலவி, முயங்கல். முயங்கல் - தழுவல். முயங்குதல் - தழுவுதல். முயலல் - முயலுதல். முயலாக்கிரபுத்தி - மந்தபுத்தி. முயலாக்கிரம் - உலக்கைத்தலை. முயலாமை - முயலாதிருத்தல். முயலின் கூடு - சந்திரன். முயலுதல் - முயற்சி செய்தல். முயலை - ஓர் கோரைக்கிழங்கு. முயல் - போர், முசல், இது, வடகீழ்த்தி சைப்பாலன் குறியுமாம்,முயலென்னேவல். முயல்வார் - யோகியர். முயல்வு - முயற்சி. முயறல் - முயலுதல். முயற்களங்கம் - சந்திரகளங்கம். முயற்கறை - முயற்களங்கம். முயற்கூடு - சந்திரன். முயற்கோடு - இன்மையுவமை. முயற்சி - ஊக்கம், தொடர்ந்தேற்றி. முயற்சிவிலக்கு - முயற்சி தோன்றக்கூறி விலக்கு மலங்காரம். முயற்செவிக்கள்ளி - ஓர் கள்ளி. முயற்புல் - ஓர் புல். முயற்றிசை - வடகீழ்த்திசை. முயற்று - முயற்சி. முயிறு - ஓரெறும்பு.முரசகேதனன், முரசக்கொடியோன் - தருமன். முரசபலம் - பலா. முரசம் - மேளம், வாச்சியப்பொது,மத்தளம், பேரிகை. முரசவாத்தியம் - பேரிகை வாத்தியம். முரசிடுதல் - முரசுவைத்தல். முரசு - ஓர் மேளம் அஃது அட்டமங்கலத்தொன்று, இராச சின்னத்து மொன்று, உத்திராட் டாதிநாள், பல்லினீறு, பேரிகை,வாச்சியப்பொது. முரசுவைத்தல் - முரசு வளர்தல். முரசை - குபேரன் மனைவி. முரசொலி - பேரிகை யோசை. முரஞ்சியூர் முடிநாகராயர் - தலைச்சங்கப் புலவர்களிலொருவர், புறநானூறு பாடிய புலவரிலொருவர். முரஞ்சுதல் - முற்றுதல், வலிபெறல். முரடன் - முரட்டாள், முட்டாள்,மூர்க்கன். முரடு - கணு, கரடு, பதமையின்மை,முனி, சமமின்மை. முரட்கை - கலிப்பா. முரட்டாட்டம் - முரட்டுத்தனம். முரட்டுக்கழுத்து - வணங்காத குணம். முரட்டுத்தன்மை - முரட்டுத்தனம். முரட்டுவேலை - ஒழுங்கற்ற காரியம். முரணந்தாதி - ஈற்றுப்பொருட்குமாறாகிய பொருளை முதற்கண்வரப்பாடல். முரணல் - மாறுபடல், போராடல். முரணிற்றோன்றல்விலக்கு - ஓரலங்காரம் இஃது இன்ன பொருட்கின்னின்னவை விரோத மாயிருந்தாலு மின்னதினால் அவிரோதமெனக் கூறல். முரண் - அமையாமை, சொல்லும்பொருளு மொன்றற்கொன்றுவிரோதிப்பக் கூறுவது (உ.ம்)வெண் மலர்கார்வண்டு, பகை,போர், முரணென்னேவல், முரண்டொடை, வலி, மாறுபாடு. முரண்டல் - எதிர்த்தல். முரண்டன் - துடினக்காரன், பொறையிலான், முரடன். முரண்டு - அமையாமை, இசையாமை, மாறுபாடு. முரண்டொடை - சொல்லும் பொருளுமுரணத்தொடுப்பது. முரண்படுதல் - மாறுபடுதல். முரண்மறலி - இயமன். முரண்மொழி - எதிர்மொழி. முரண்விளைந்தழிவணி - ஓரலங்காரம் அஃது ஓரிடத்துள்ளனவுங்காரிய காரணங்களாகாதனவுமாகிய இரண்டு தருமங் கட்குமேன்மேலுந் தோன்றி யழியும்பகைமையைச் சொல்லுதல். முரண்வினைச்சிலேடை - சிலேடித்துக்கூறு முரண்டொடை. முரதம் - பஞ்சசன்னியம். முரந்தலை - நர்மதாநதி. முரப்பிரியை - ஈசாநன் மனைவி. முரமர்த்தநன் - விட்டுணு. முரம்பு - உப்பளம், கழி, பரலெடுத்துயர் நிலம், பாறை, மேடு, பாலைநிலம். முரரிபு - விஷ்ணு. முரலல் - ஒலித்தல், பேசலானெழுமொலி, கதறல். முரலி - முரளி. முரலிதரன் - கிருட்டினன். முரலை - நர்மதா நதி. முரல் - ஓர் மீன், முரலென்னேவல். முரல்வு - உள்ளோசை. முரவை - வரி, தவிடு. முரளி - மூக்கால் வாசிக்குங் குழல்,வேய்ங்குழல். முரள் - சிப்பி.முரற்றல், முரற்றதல் - ஒலித்தல். முரன் - ஓரரக்கன். முராரி - திருமால். முரி - பாலை நிலம்.முரிகுதல், முரிதல் - ஒடிதல், கெடுதல்,தோற்றல், பின்னப்படுதல், வளைதல். முரித்தல் - ஒடித்தல், கெடுத்தல் தோல்வி செய்தல், முறித்தல். முரிநிலை - இறுதியிற்படுந் தரவு. முரிப்பு - ஒடிவு, மடிப்பு, முறிவு,வருத்தம். முருகன் - இளையோன், குமரன்,வெறியாட்டாளன். முருகியம் - குறிஞ்சிநிலப்பறை. முருகீசன் - குமரன். முருகு - அகில், அழகு, இளமை,எலுமிச்சை, எழுச்சி, கள், காதணியினொன்று, குமரன், திருவிழா,தேன், மணம், வாசனை, வெறியாட்டாளன், தெய்வத்தன்மை,வேள்வி, திரு முருகாற்றுப்படை. முருகேசன் - குமரன். முருகை - ஓர் கல். முருக்கல் - முருக்குதல். முருக்கு - எலுமிச்சை, கிஞ்சுமரம்,கொலை, முருக்கென்னேவல்,முள்முருங்கை. முருக்குதல் - அழித்தல், உருக்குதல்,கொல்லல், கெடுத்தல்.முருங்கல், முருங்குதல் - அழிதல். முருங்கை - ஓர் மரம். முருடர் - வேடர். முருடு - ஓர் வாச்சியம், பறைப் பொது,பெருங்குறடு, விறகு, மத்தளம்.முருந்தம், முருந்தன், முருந்து - கோமளாஸ்தி, இறகினடியிற் குருத்து,வெட்டிய மரத்தினடி, வெண்மை,வெண்குருத்து, பிரசித்தன். முருமுரன் - சூரியன் குதிரையினொன்று. முருவிலி - வவ்வாலொட்டி. முலமுலெனல் - ஈரடுக்கொலிக் குறிப்பு. முலாம் - மலாம். முலை - கொங்கை, விலங்கின் மடி. முலைக்கச்சு - இரவிக்கை. முலைக்கட்டு - இரவிக்கை, ஓர் சிலந்தி. முலைக்கண் - முலைப்பால் வருந்துவாரம். முலைக்காம்பு - முலைக்கண். முலைக்கால் - ஆட்டுக்கால். முலைக்கோடு - ஸ்தநாக்ரபாகம். முலைத்தாய் - செவிலித்தாய். முலைத்து - துன்பம். முலைப்பாலி - புற்றாம்பழம். முலைப்பால் - பெண்கள் முலையின்பால். முலைமார்பு - நெஞ்சு. முலைமுகம் - முலைச்சிகரம். முலையணி - ஸ்தநாபரணம். முல்லை - இசை, ஐந்நிலத்தொன்றுஅஃது காடுங்காடு சார்ந்தவிடமும், ஓர் மரம், கற்பு, மன்மதன்கணையி னொன்று, முல்லைக்கொடி, வனமல்லிகை, வெற்றி. முல்லைக்கருப்பொருள் - முல்லைநிலத் துற்பத்திப்பொருள் அவைமுல்லைத் தெய்வம் முதற் கான்யாறாடலீறாயவாம். முல்லைக்கான்யாறு - முல்லைநிலத்தியாறு. முல்லைக்குழல் - முல்லைக்கொடியால் முப்புரியாகத் தெற்றியவளையை வளைவாய்க்கட்செறித்தூதுங்குழல். முல்லைத்தலைவன் - குறும்பொறைநாடன். முல்லைத்தலைவி - கிழத்தி. முல்லைத்திணை - முல்லைக்குரியன. முல்லைத்தெய்வம் - திருமால். முல்லைத்தொடை - முல்லைமலராற்றொடுத்த மாலை அது கற்பிற்சிறந்த மகளிர்க் குரியது. முல்லைநிலத்தூர் - பாடி. முல்லைநிலநீர் - கான்யாறு, குறுஞ்சுனை. முல்லைநிலப்பண் - முல்லைநிலத்திற்குரிய ராகம். முல்லைநிலப்பயிர் - காராமணி,சாமை, வரகு. முல்லைநிலப்பறை - பம்பை. முல்லைநிலப்புள் - காட்டுக்கோழி. முல்லைநிலப்பெண் - ஆய்ச்சி. முல்லைநிலமரம் - காந்தள் காயாகுருந்து கொன்றை துளசி முதலிய. முல்லைநிலமாக்கடொழில் - ஏறுதழுவல், கான்யாறு குளித்தல்,குரவையாடல், குழலூதல், பசுமேய்த்தல். முல்லைநிலமாக்கள் - ஆயர். முல்லைநிலமிருகம் - மான், முயல். முல்லைப்பல் - முல்லையறும்பு போன்ற பல். முல்லைப்பாட்டு - பத்துப்பாட்டில் ஒன்று. முல்லைப்புறம் - இல்லாண்முல்லை,பாசறை முல்லை. முல்லைமுதற்பொருள் - புறவும் புறவுசார்ந்த விடமும் கார் மாலையென்னும் பெரும்பொழுது சிறுபொழுதுகளுமாம். முல்லையர் - இடையர். முல்லையாழ் - முல்லைநிலத்திற்குரியயாழ். முல்லையுரிப்பொருள் - உரிப்பொருள்காண்க.முல்வயன், முல்வாயன் - முள்வாயன். முவலம் - அவுபல பாஷாணம். முழக்கம் - ஆரவாரம், ஒலி, குமுறுகை, மேகத்தி னொலிப்பு. முழக்கல் - முழக்குதல். முழக்கு - ஒலி, முழக்கென்னேவல்,மேகோற்காரம். முழக்குதல் - தொனிப்பித்தல். முழக்கோல் - நிலமளக்குங்கோல்,முழக்கம்பு. முழங்கல் - ஒலித்தல், வானங்குமுறல். முழங்கால் - முழந்தாள். முழங்காற்சில்லு - முழந்தாளினுருளை. முழங்கை - மணிக்கட்டின் கீழ். முழந்தாட்கச்சு - அறைச்சட்டையுங்காலுறையும் பூட்டிக்கட்டு மோர்கச்சு.முழந்தாள், முழந்து - முழங்கால். முழம் - இருசாண் கொண்டது. முழல் - கழற்சிக்கொடி, கெச்சைக்காய். முழவம் - குடமுழா, முரசு, முழவு. முழவின்மார்ச்சனை - மண். முழவு - பறைப்பொது, தண்ணுமை,மத்தளம், தம்பட்டம், வாச்சியம். முழவுக்கனி - பலா. முழா - மேளம், முழவு. முழாஅல் - கழுவுதல். முழாசு - சுவாலை. முழாசுதல் - சுவாலித்தல். முழாவுசால் - முடிவுசால். முழி - விழி.முழுகல், முழுகுதல் - குளித்தல். முழுக்க - முழுதும்.முழுக்காடுதல், முழுக்காட்டல் - அப்பியங்கந ஸ்நானம், ஸ்நானம்செய்வித்தல். முழுக்காட்டு - நீராட்டு. முழுக்காளி - சலாபங் குளிக்கிறவன். முழுக்கு - மாதவிடாய், முழுகல். முழுக்கூறு - முழுமை. முழுக்கொலை - பிராணவதை. முழுங்கல் - விழுங்கல். முழுச்சவுரம் - சருவாங்கசௌளம். முழுச்சேதம் - முழுநஷ்டம். முழுச்சௌளம் - முழுச்சவுரம். முழுது, முழுதும் - எல்லாம். முழுதொருங்குணர்ந்தோன் - அரன்,அருகன், கடவுள். முழுத்தசுரம் - ஓர் நோய். முழுத்தம் - முகுர்த்தம். முழுத்தல் - முழுமையாதல், மூழ்குவித்தல். முழுத்திருடன் - பெருந்திருடன்,பக்காத் திருடன். முழுநட்டம் - முழுச்சேதம். முழுநா - இராசிக்குப் பங்குபடாநாள். முழுநோக்கு - பூரணநோக்கு இதுகிரக நோக்கி னொன்று. முழுப்பார்வை - பூர்ணத்ருஷ்டி. முழுமகன் - அறிவிலான். முழுமணி - தொளையாதமணி,மாணிக்கம். முழுமதி - பூரணசந்திரன். முழுமனை - அறுபதடி நீளமும் நாற்பதடி அகலமுங்கொண்ட நிலம். முழுமன் - முழுமை. முழுமுதல் - கடவுள். முழுமுற்றும் - முழுதும். முழுமை - எல்லாம், முற்றும். முழுவதுஞ்சேறல்விலக்கு - ஓரலங்காரம் அஃது ஒரு பொருட்கோர்காரியத்தைக் காட்டித் திரும்பஎல்லாவற்றின் மேலுஞ் சொல்லுவதாகக் கூறியதற்கு மாத்திரமன்றெனல். முழுவதும் - முழுமை. முழுவலயம் - முழுவட்டம், வெற்றி. முழுவலி - பூர்ணவலி. முழுவுதல் - முத்தமிடல். முழுவெலும்பு - தசைகழிந்தவென்பு. முழை - குகை, துடுப்பு. முழைஞ்சு - மலையினுட்குகை. முழைத்தல் - எழுத்தில்லாவோசை. முளகரணை - ஓர் பூடு. முளரி - ஓமவிறகு, கடைக்கொள்ளி,காடு, தாமரை, நுண்மை, நெருப்பு,முட்செடி, விறகு. முளரிநாளம் - தாமரைவளையம். முளரியான் - பிரமன். முளவு, முளவுமா - முட்பன்றி. முளா - முள்ளங்கி. முளி - குளசு, மரமுதலியவற்றின்கரடு, முளியென்னேவல், வாட்டம். முளிதல் - உலர்தல். முளித்தல் - காய்தல், வறத்தல். முளை - அங்குரம், ஆப்பு, தண்டாயுதம், தறி, நாணயவச்சு, பருவின்முளை, மகன், முளையாணி,முளை யென்னேவல், மூங்கில்,சிறிது. முளைக்குதல் - அரும்புதல், வெளிப்படல். முளைக்கூச்சு - குண்டூசி. முளைக்கொட்டு - ஆற்றுக்காலாட்டிப்பெண்களினோர் விளையாட்டு. முளைதெளித்தல் - முளையிடல்,அரும்புதல், வெளிப்படல். முளைத்தல் - முளைக்குதல். முளைப்பாலிகை - அங்குரார்ப்பணம். முளைப்பு - முளைத்தல். முளையடித்தல் - ஆப்பறைதல், நாணயமச்சடித்தல். முளையாணி - கதவுநிற்குமிரும்பு. முளையான் - குழந்தை. முள் - நுண்மை, முள்ளு, தாற்றுக்கோல். முள்காத்தல் - மௌனமாயிருத்தல். முள்குதல் - முயங்குதல்.முள்வறையன், முள்வாயன் - ஓர்கறையான். முள்வாங்கி - தைத்த, முள்ளைக்குத்திஎடுக்கும் கருவி. முள்ளங்கத்தரி - முள்ளாங்கத்தரி. முள்ளங்கி - ஓர் கிழங்கு. முள்ளங்கிழங்கு - ஓர் கிழங்கு. முள்ளந்தண்டு - முள்ளென்பு. முள்ளம்பன்றி - முட்பன்றி. முள்ளாங்கத்தரி - ஓர் செடி. முள்ளி - ஓர் செடி. முள்ளிக்கீரை - ஓர் கீரை. முள்ளிலவு - ஓர் மரம். முள்ளியாசிரியர் - ஆசாரக்கோவையியற்றியவர். முள்ளு - ஓர்கருவி, நுண்மை, மரத்தின்முள், மீன்முள். முள்ளுடைமூலம் - முள்ளுள்ளவை. முள்ளுநாயகம் - ஓர் செடி. முள்ளுப்பலா - ஓர் பலா. முள்ளெலி - ஓரெலி. முள்ளெலும்பு - முள்ளந்தண்டு. முறச்செவியன் - யானை. முறண்டு - முரண்டு. முறண்டுகம் - அவுபல பாஷாணம். முறம் - களகு, விசாகநாள். முறி - அடிமை, இலை, உயர்ந்தவெண்கலம், எழுதுமுறி, ஓர்வகைப்புடைவை, தளிர், துண்டு,முறியென்னேவல், மூலைமுறி. முறிகரை - இடிகரை. முறிகட்டி - உயர்ந்த வெண்கலக்கட்டி. முறிகுளம் - உடைகுளம், பூராடம். முறிக்கலை - வஸ்திரத்துண்டு. முறிக்கலைச்சுருக்கு - துண்டுபெற்றகலையாகிய சுருக்கு, அது தண்டிற்கட்டியிருப்பதை யவிழ்த்துச்சுத்தாசமந முதலிய செய்தற்குத்கையிற் சுருக்கிக் கொள்ளப் படுவது. முறிக்குதல் - முறித்தல். முறிச்சாதனம் - முறிப்பத்திரம். முறிச்சி - விற்றற்குரியவடிமைப்பெண். முறிதல் - திரைதல், முரிதல், தளிர்த்தல். முறிதிரிசூலை - ஓர் சூலை. முறித்தல் - முறிதல். முறிப்பத்திரம் - முறிச்சீட்டு. முறிப்பு - முரிப்பு. முறியர் - விற்றற்குரிய வடிமைகள். முறியல் - முறிதல். முறியன் - விற்றற்குரிய வடிமைக்காரன். முறிவு - முரிவு. முறிவெட்டியான் - ஓர் கடற்காளான். முறுகல் - கடுமைபடல், திருகல்,முதிர்தல், வேகங்கொள்ளுதல்,மீறுதல், மிகுதல். முறுகுபதம் - முதிர்ந்தபதம். முறுக்கரவு - ஓர் பாம்பு. முறுக்கல் - கோபித்தல், திரித்தல்,வலித்தல். முறுக்கவரை - ஓரவரை. முறுக்காணி - சுரியாணி. முறுக்கு - ஓர் பண்ணிகாரம்,பிணக்கு, புரி, முறுக்கென்னேவல்,வீறாப்பு, கடுமை, திரிபு, வலிப்பு. முறுக்குதல் - சினத்தல், முறுக்கல். முறுக்குப்பணிகாரம் - ஓர் பண்ணிகாரம். முறுமுறுப்பு - குறைசொல்லல். முறுவஞ்சி - முத்து. முறுவலித்தல் - சிரித்தல். முறுவலிப்பு - புன்னகை. முறுவல் - எயிறு, சிரிப்பு. முறை - இடைச்சொல், உறவொழுங்கு,ஒழுக்கம், ஒழுங்கு, கிராமம்,குணம், தரம், பழமை, புத்தகம்,முறைமை, முறையீடு, வரிசை,நீதி, ஊழ். முறைகாரர் - முறைப்படி செய்வோர். முறைகேடு - தப்புநெறி. முறைக்காச்சல் - ஒன்றுவிட்டொருநாள் வருங் காச்சல். முறைதெரிந்தோன் - சிற்பாசாரி,பிரமன். முறைதெரிபகவன் - பிரமன். முறைத்தல் - விரைத்தல். முறைத்தவறு - கிரமக்கேடு. முறைநிரனிறை - நேர்நிரனிறை. முறைப்படுத்தல் - முறையிடுதுல். முறைப்பாடு - முறையீடு. முறைப்பு - விரைப்பு. முறைமசக்கு - முறைகேடு. முறைமயக்கி - குப்பைமேனி. முறைமாறுதல் - ஒழுங்குதப்பி வரல்,முறைப்படி மாறுதல். முறைமாற்றுதல் - கிரமத்தைக்கெடுத்தல். முறைமை - ஒழுங்கு, கட்டளை,கிரமம். முறையிடுதல் - குறைகூறுதல். முறையிலுயர்புநவிற்சியணி - ஓரலங்காரம், அது காரணகாரிய மொருவழி நிகழ்வதாகக் கூறுவது. முறையிலோர் - கீழ்மக்கள். முறையினிலைமை - கட்டளைமுறை. முறையின்வைப்பு - நூலழகி னொன்று. முறையீடு - முறைப்படுதல். முற்கந்தெரித்தல் - தொனிவைத்தல். முற்கம் - கெற்சிதம், பச்சைப்பயறு. முற்கரம் - ஓராயுதம், சம்மட்டி,படைக்கலம், பெரியதடி. முற்கரவன் - குபேரன். முற்கலம் - உபநிடத முப்பத்திரண்டுனொன்று. முற்கான்னம் - பருப்புச்சாதம். முற்கு - கெற்சிதம். முற்குளம் - பூராடம். முற்கூறு - துவக்கம், முற்பாகம். முற்கொழுங்கோல் - பூரட்டாதி. முற்சநநம் - முற்பிறப்பு. முற்சனி - மகநாள். முற்சாமம் - முதற்சாமம். முற்பகல் - ஒரு பகலின் முற்பகுதி. முற்படல் - எதிர்தல், முந்தல். முற்படுதல் - எதிர்ப்படுதல், கையிடுதல்,பிணைப்படுதல், முந்துதல். முற்பவம் - பழையபாவம், முற்பிறப்பிற்பாவம், முற்பிறப்பு. முற்பழி - பூருவப்பழி. முற்பனி - மார்கழி தைமாதங்களிற்பனி. முற்பாடு - முற்படுகை. முற்பால் - முற்கூற்று. முற்பிறப்பு - முற்சநநம். முற்ற - எல்லாம். முற்றத்துறத்தல் - சந்நியாசங் கொள்ளல். முற்றம் - முன்றில். முற்றல் - காழ்கொள்ளல், முடிதல்,முதிருதல், மூப்பு, வளைத்தல்,வளைவு, வெறுத்தல். முற்றவுணர்கை - கடவுளெண் குணத்தொன்று. முற்றவுணர்தல் - முற்றுமறிதல். முற்றளபெடை - எல்லாச் சீர்க்கண்ணுமளபெடைவரத் தொடுப்பது. முற்றறிவன் - கடவுள். முற்றறிவு - பேரறிவு. முற்றாமை - முடியாமை. முற்றாய்தம் - தன் மாத்திரையிற்குன்றாவாய்தவெழுத்து. முற்றிகரம் - முற்றியலிகரம். முற்றிக்கை - முற்றுக்கை. முற்றியலிகரம் - ஓசைகுன்றாவிகரம். முற்றியலுகரம் - ஓசைகுன்றாவுகரம். முற்றியையு - எல்லாச்சீர்க்கண்ணுமியைபு வரத்தொடுப்பது. முற்றில் - சிறுமுறம், முற்றம், விசாகநாள். முற்றிழை - பெண். முற்று - எல்லாச்சீர்க்கண்ணுமோனை முதலாயின வருவது,முடிவு, முற்றென்னேவல். முற்றுகரம் - முற்றியலுகரம். முற்றுகை - குறைவு, நெருக்கம்,முற்றுதல், வளைத்தல், முடிதல். முற்றுதல் - முடிதல், முதிர்த்தல்,விளைத்தல், தங்குதல். முற்றுதொடர்மொழி - எழுவாயும்பயனிலையு முடிவுபெற்று நிற்பன. முற்றுமடங்கு - ஓரலங்காரம், அஃதுஅடிமுழுதுமடங்கி வருவது. முற்றுமுருகுவெண்பா - நான்கடியுமுடுக்காய் வருவது. முற்றுமுரண் - எல்லாச்சீர்க்கண்ணுமுரண்வரத் தொடுப்பது. முற்றுமோனை - எல்லாச்சீர்க்கண்ணுமோனைவரத் தொடுப்பது. முற்றும் - எல்லாம், நடை, பெயரெச்சம், மூலநாள். முற்றுருவகம் - அவயவ அவயவிகளை ஏற்ற இடத்தோடும் பிறவற்றோடும் முற்ற உருபகஞ் செய்வது (உ.ம்) உளத்தடத்து விழிவண்டு மொழித்தேனு முளமலரொன்றும் மலர்ந்தது. முற்றுவமை - பூர்ணோபமம். முற்றுவினை - வினைமுற்று. முற்றூட்டு - பூர்ணாறுபவபூமி. முற்றெச்சம் - வினையெச்சத்திற்காகவழங்கப்படும் வினைச்சொல். முற்றெதுகை - எல்லாச்சீர்க்கண்ணுமெதுகைவரத் தொடுப்பது. முற்றெருத்தின்செவி - எழுத்தாணிப்பூடு. முனி - அகத்தி, நவத்தோன், பலாசு,புத்தன், முனியென்னேவல்,யானைக்கன்று, வில், யோகி. முனிசடிலம் - தவநம். முனிச்சிரேட்டன் - முனீந்திரன். முனிஷி - பாஷை பயிற்றுவோன். முனிதல் - சினத்தல், வெறுத்தல். முனித்துருமம் - காரகத்தி. முனிந்துரை - வெந்தயச்செடி. முனிபித்தலம் - தாமிரம். முனிபுங்கவன் - முநிசிரேஷ்டன். முனிமூத்திரம் - கல்லுப்பு. முனிமை - முனித்தன்மை. முனிவர் - அந்தணர்,சடைமுடியோர், தவத்தோர். முனிவறாமை - கோபமாறாமை,அஃது உயிர்வேதனையினொன்று. முனிவு - கோபம், சினம், வெறுப்பு. முனீந்திரன் - புத்தன், முனீசுரன். முனை - துணிவு, நுனி, பகை,முதன்மை, முனையென்னேவல்,யுத்தம், வினை, வெறுப்பு, தவம்,பகைப்புலம், முகம். முனைசுனை - விகண்டிப்பு. முனைதல் - சினக்குறிப்பு, போர்கலத்தல், முனையாக்கல், போராடல், வெறுத்தல். முனைத்தல் - முற்படல். முனைந்தோர் - முற்படல். முனைந்தோர் - பகைவர். முனைப்பதி - பாடிவீடு. முனைப்பாடியார் - அறநெறிச்சாரம்இயற்றியவர். முனைமடிதல் - அபசயப்படுதல்,கூர்மழுங்கல். முனைமுகம் - போர்முகம். முனையிடம் - பாலைநிலத்தூர்,போர்க்களம். முனையுள்ளோன் - தைரியவான். முனைவர் - பகைவர், முனிவர். முனைவன் - அருகன், கடவுள்,பகைவன், புத்தன். முனைவு - கோபம், சினம், வெறுப்பு,முற்படல். முன் - இனியென்பது, ஏழனுறுபு(உ.ம்) கற்றார் முற்றோன்றா கழிவிரக்கம், பக்கம், பழமை, முதல்,முன்பு, முன்னென்னேவல், மேல். முன்கட்டு - முன்னாலேகை மடித்துக்கட்டுதல், வீட்டின் முற்பக்கம். முன்குடுமி - முன் கொண்டை. முன்குடுமிப்பார்ப்பார் - சோழியப்பார்ப்பார், மலையாளப் பார்ப்பார். முன்கை - கெண்டைக்கை, முன்புறம். முன்கைவளை - முன்கையிலிடும்வளையல். முன்கொம்பு - பல்லக்கின் முன்புறக்கொம்பு. முன்சொல் - பழமொழி. முன்தண்டு - முற்படை. முன்தளை - முன்னங்காற் கட்டு. முன்பக்கம் - முன்புறம். முன்பனி - மார்கழி தைமாதங்களிற்பனி, மார்கழி தையின் பருவம். முன்பனியுரிமை - கொண்டல் வீசலுஞ் சிதைகன், கூகை, ஆந்தை,யிவை மகிழ்தலும், மாவுஞ்சிவந்தியு மலர்தலும், இலந்தைபழுத்தலும், செந்நெல் விளைதலும், கரும்பு முதிர்தலுமாகும். முன்பன் - முதல்வன், வலியவன். முன்பிறந்தாள் - அக்காள். முன்பாலைநாடு - குமரியாற்றுக்கும்பஃறுளியாற்றுக்கும் இடையிலுள்ள நாடு. முன்பிறந்தாள் - அக்காள். முன்பிறந்தான் - அண்ணன். முன்பு - பழமை, பெருமை, முன்,வலி. முன்மடி - மேன்மடி. முன்மறம் - முற்கோபம். முன்மாதிரி - பூருவநடை. முன்முகப்பு - ஆசாரவாயில். முன்முகனை - துவக்கம். முன்முச்சியம் - அவிழ்த்தல். முன்முடுகுவெண்பா - முன்னிரண்டடிமுடுக்காய் வருதல். முன்மொழி - தொடர்மொழியின்முன்னிற்குஞ்சொல், மூதுரை. முன்மொழிந்துகோடல் - ஓர்யுத்தி,அது முன்னே ஒன்றனைச் சொல்லிப் பின்பு அதனைவேண்டுமிடந் தோறு மெடுத்துக்கொள்ளல். முன்வாய் - உதடு, வாய்முகனை. முன்றளை - முன்காற்கட்டு. முன்றாதை - பாட்டன். முன்றாய் - பாட்டி. முன்றானை - முன்றோகை மேற்பார்வை. முன்றில் - முற்றம், முற்றிடம். முன்றுறையார் - பழமொழிநானூறுஇயற்றியவர். முன்றொடரி - ஓர் செடி, நாயுருவி. முன்றோன்றல் - தமையன். முன்னங்கால் - முன்பக்கத்திற் கால் முன்னங்கை - முன்கை. முன்னடி - முன்னே. முன்னடியான் - காவற்றேவதை. முன்னடைப்பன் - மிருகங்கட்குவருமோர்நோய். முன்னணி - முற்படை. முன்னனை - மாட்டுத்தொட்டி,முதற்பிள்ளை. முன்னதம் - கரலட்சணத்தொன்று,அது பதாகைக்கையில் சுட்டுவிரலைப் பித்திடலாம். முன்னந்தொடை - தொடையின்முற்பக்கம், தோள். முன்னமிசம் - முற்கூறு. முன்னம் - கருத்து, குறிப்பு, சீக்கிரம்,சீக்கிரிமரம், மனம், முன், முற்பொழுது. முன்னர் - ஆதி, இடம், நெஞ்சு, முன். முன்னர்விலக்கு - ஓரலங்காரம்,அதுகுறிப்பினொரு பொருளைவிலக்குவது. முன்னல் - நினைத்தல், நெஞ்சு. முன்னவள் - தமக்கை, மூதேவி. முன்னவன் - கடவுள், சிவன், தமையன், முதலானவன். முன்னவையகத்திணை - எடுத்துப்பொருடோன்ற முன்னையவற்றை விரித்துக் காட்டல். முன்னிடுதல் - நேரிடுதல். முன்னிட்டி - விலங்குணாவிடுந்தொட்டி. முன்னிரவு - இரவின் முற்பகுதி. முன்னிருட்டு - முன்னிராவிருள். முன்னிரை - பெருந்தொகைக் கூட்டம். முன்னிலவு - முன்னிராவின் நிலவு. முன்னிலை - காரணம், முகதா,மூவிடத்தொன்று, முன் நிற்பது. முன்னிலைகாரன் - கொல்லர், தச்சர்,வண்ணாரிற் தலைவன். முன்னிலைத்தீபகம் - தீபகா அலங்காரத்தொன்று. முன்னிலைப்பன்மைவினைமுற்று - இர் ஈர் என்னும் விகுதிகளையுடைய பன்மை வினைமுற்று. முன்னிலைப்புறமொழி - முகதாவினிற்போர்க்குப் பிறருடன் பேசுதல்போற் பேசல், முன்னிலை யாரைப்படர்க்கையில் வைத்துப்பேசுதல். முன்னிலைமொழி - அறத்தொடுநிலை. முன்னிலையேவலொருமை வினை முற்று - ஆய, உ, ஆல், எல், காண்,என்னும் ஐந்து விகுதிகளையும்அகரமுதல் ஒளகார விறுதிநின்றபன்னீருயிரையும் ஞ் ண் ந் ம் ன் ய்ர் ல் வ் ழ் ள் என்னும் பதினாருமெய்களையும் ஈறாக வுடையஇருதிணை முக்கூற்றொருமைமுன்னிலையேவல் வினைச்சொற்கள். முன்னிலையேவற் பன்மை வினைமுற்று - மின் உம் என்னும் விகுதிகளயிறுதியுடைவாய் இடைநிலையேலாது எதிர் காலத்தைக்காட்டி வருமொழிகள். முன்னிலையொருமை வினைமுற்று - ஐ, ஆய், இ என்னும் விகுதிகளையுடைய விருதிணைமுக்கூற்றொரு வினை முற்று. முன்னிளவல் - தமையன். முன்னிற்றல் - உதவுதல், முன்னேநிற்குதல். முன்னீடு - தலைமை, முன்னடைவு. முன்னுறு புணர்ச்சி முறையுறக் கூறல் - அகப்பொருட்டுறையி னொன்று. முன்னூல் - கடவுள் மொழிந்த நூல்,பழையநூல், வேதம், முதனூல். முன்னூற்கேள்வன் - கடவுள். முன்னெழுச்சி - பழைய வெண்ணம்,முன்னெண்ணம். முன்னெறி - பழைய மார்க்கம். முன்னெற்றி - மேனெற்றி. முன்னேரம் - இளம்பகல். முன்னேர் - முன்னுழவுமாடு. முன்னேற்றுதல் - முந்துதல். முன்னை - அக்காள், அண்ணன்,ஓர், மரம், பழமை. முன்னையோர் - பழையோர். முன்னொற்றி - முன்னீடு. முன்னோடி - முன்போவோன். முன்னோர் - பழையோர், மந்திரிகள். முன்னோன் - அருகன், கடவுள்,தமையன், விநாயகன். மூ மூ - ஓரெழுத்து, மூப்பு, மூவென்னேவல். மூகம் - ஊமை, ஓர் பைசாசம், ஓர்மீன், தரித்திரன், மௌனம். மூகன் - ஓரசுரன், ஊமை, வறிஞன். மூகரன் - ஊமை, செவிடன். மூகலன் - இராக்கதன். மூகாத்தல் - மௌனமாயிருத்தல். மூகை - ஊமை, படைக்கூட்டம். மூக்கணாங்கயிறு - நாணயக்கயிறு,காளைமாட்டிற்கு மூக்கிலிடுங்கயிறு. மூக்கரிகத்தி - வெற்றிலைக்காம்பரிகருவி. மூக்கறட்டை - ஓர் பூடு. மூக்கறை - நாசியறுபட்டவன். மூக்கறைச்சி - அரிதாரம், ஓர் செடி. மூக்கன் - முன்காற்சீப்பின் குருத்து. மூக்காங்கயிறு - மூக்கணாங்கயிறு. மூக்காங்கொழுந்து - நாசிமுனை. மூக்காந்தண்டு - மூக்கி னடுத்தண்டு. மூக்காவளை, மூக்காவனை - ஓர் பூடு. மூக்கிரட்டை - மூக்கறட்டை. மூக்கிலழகி - குமிழ். மூக்கிலி - சொக்களிப்பூடு, மூக்கறை. மூக்கில் - வசம்பு. மூக்கிறைச்சி - ஓர் பூடு. மூக்கிற்கல் - காக்கைக்கல். மூக்கு - நாசி இது பஞ்சப்பொறியினொன்று, பறவை மூக்கு, வித்துக்களின் மூக்கு, விளக்கு முதலியவற்றின் மூக்கு, இரண்டாமிடம். மூக்குக்கண்ணாடி - மூக்கிலிடுங்கண்ணாடி. மூக்குக்கொழுந்து - மூக்காங்கொழுந்து. மூக்குச்சளி - மூக்கிற் சளி. மூக்குச்சாத்திரம் - சரசாத்திரம். மூக்குச்சிந்துதல் - மூக்குச் சீறுதல். மூக்குச்சுழித்தல் - மூக்கு நெறித்தல்.மூக்குத்தழுக்கி, மூக்குத்தி - ஓராபரணம். மூக்குத்தூள் - புகையிலைப் பொடி. மூக்குஸ்தானம் - இரண்டாமிடம். மூக்குப்பிளவை - ஓர் சிலந்தி. மூக்கூளை - மூக்குச்சளி. மூக்கொலி - நாசியிற் பிறக்குமோசை. மூக்கொலியன் - சங்கு. மூக்கொற்றி - ஓர் காய், ஓர் கோரை,மூக்குத்தி. மூக்கொற்றிப்பூண்டு - ஓர் பூண்டு. மூங்கர் - மூங்கையர். மூங்கா - கீரி. மூங்கி - சிறு பயறு. மூங்கிலரிசி - மூங்கிற்கொட்டை,வேப்பரிசி. மூங்கிலுப்பு - ஓருப்பு. மூங்கில் - ஓர் மரம், முடங்கல். மூங்கிற்குத்து - மூங்கிற்போத்து.மூங்கிற்குழல், மூங்கிற்குழாய் - வேய்ங்குழல். மூங்கிற்புதர் - மூங்கிற் கிளை. மூங்கிற்போத்து - மூங்கில் மூளை. மூங்கிற்றண்டு - மூங்கிற்கழி. மூங்கினெல் - குறிஞ்சியுணவினொன்று. மூங்கின்முத்து - மூங்கிலிற்பிறந்தமுத்து. மூங்கு - சிறு பயறு. மூங்கை - ஊமை. மூங்கையர் - ஊமையர். மூசல் - சாதல், மூசுதல், மொய்த்தல். மூசாந்தம் - வெண்டாமரை. மூசாப்பு - மந்தாரம், முட்டுமூச்சு. மூசாலை - அந்தசந்தமற்றது, சோம்பு. மூசுதல் - மூசல், ஊசுதல். மூசை - மட்குகை. மூச்சன் - ஆண்மைக்காரன். மூச்சு - ஆண்மை, உயிர்ப்பு, சுவாசம்,பலம். மூச்சுக்காட்டுதல் - ஆண்மை காட்டுதல். மூச்சுத்தாங்கல் - மூச்சடைப்பு. மூச்சுப்பறிதல் - சுவாசம் வெளியேசெல்லல், பலவீனப்படுதல். மூச்சுப்பிடிக்குதல் - மூச்சமர்த்தல். மூச்சுப்பிடித்தல் - மூச்சை வெளியேசெல்ல விடாமல் உள்ளடக்கிக்கொள்ளுதல். மூச்சுப்பேச்சு - அசுமாற்றம். மூச்சுப்பொறுத்தல் - மூச்சுத்தாங்குதல். மூச்சுவாங்கல் - மூச்சையுள்ளே யடக்கல், மேல் மூச்சுக் கீழ் மூச்சுப்போதல், இளைத்தல். மூச்சுவிடுதல் - சுவாசம் விடல். மூச்செடுத்தல் - மூச்சுவாங்குதல். மூச்செறிதல் - நெடுமூச்சு விடுதல்,மூச்சு விடுதல். மூச்செறிவு - மூச்செறிதல். மூச்சை - மூர்ச்சை. மூச்சொடுங்கல் - சாதல், மூச்சடங்கல். மூஞ்சல் - மொய்த்தல். மூஞ்சி - மூஞ்சை, முகம். மூஞ்சிசுண்டுதல் - முகங்கருகல்,மூக்கை நெரித்தல். மூஞ்சுறு, மூஞ்சூறு - சுசுந்தரி. மூஞ்சூற்றுமுள்ளன் - ஓர் கிழங்குக்கொடி. மூஞ்சை - கோணியமுகம், நீண்டமுகம், நீண்ட மூக்கு.மூஷககர்ணி, மூஷகபர்ணி - எலிச்செவிக்கீரை. மூஷகம் - பெருச்சாளி. மூஷகாராதி - பூனை. மூஷம் - மூஷகம். மூஷாதுத்தம் - துருசு. மூடகருப்பம் - கருப்பத்திலிறந்தபிள்ளை. மூடக்கொத்தான் - முடக்கொற்றான். மூடதை - அறியாமை.மூடத்தனம், மூடத்துவம் - அறிவின்மை. மூடமதி - அறிவிலி. மூடம் - அறிவின்மை, எட்டு மரக்கால் கொண்ட ஓரளவை, ஐயம்,குளிர், மந்தாரம், மயக்கம். மூடர் - அறிவிலார், கீழ்மக்கள். மூடல் - மூடுதல், மேன்மூடி. மூடவிருத்தி - தாமதவிருத்தி. மூடனம் - மிளகு. மூடன் - அறிவீனன், மந்தன். மூடாத்துமா - மதிகேடன். மூடி - கொத்தமல்லிப்பூடு, மூகடி,மூடப்பெண், மேன்மடி.மூடிகம், மூஷிகம் - எலி, பெருச்சாளி,மலையாளதேயத்தினோர் பகுதி. மூஷிகவாகனன் - விநாயகன்.மூஷிகாங்கன், மூஷிகாஞ்சன் - விநாயகன். மூடிகாராதி - பூனை. மூஷிதம் - திருடப்பட்டது. மூடுகுப்பாயம் - மேற்போர்வை. மூடுசன்னி - மொய்யற்சன்னி. மூடுசாந்து - மேற்புறஞ் சாந்துக்காறை போட்டிருப்பது. மூடுசூளை - மொய்ப்பு. மூடுதல் - போர்த்தல், மறைக்குதல். மூடுபனி - மறைபனி. மூடை - பொதிப்பை. மூட்சி - மூளுதல். மூட்டம் - ஆயத்தம், உலைமுகம்,கம்மாளர் கருவி, மூடியிருப்பது,விறகு. மூட்டம்பண்ணுதல் - மூட்டங் கட்டுதல். மூட்டம் - இசைத்தல், எலி விடுதல்,கோண்மூட்டுதல், சந்திப்பு, பற்றப்பண்ணுதல். மூட்டு - எழுச்சி, கடிவாளம், கோள்,பொருத்து, மூட்டென்னேவல். மூட்டுச்சாட்டு - கோள். மூட்டுதல் - மூட்டல். மூட்டை - ஓர் பூச்சி, சாமான் பை. மூண்டன் - மிளகு. மூதணங்கு - காடுகாள். மூதண்டகஷாயம் - அறுகும் மிளகும்சேர்ந்த கஷாயம். மூதண்டம் - பழையலோகம், அண்டமுகடு. மூதண்டவேடத்தான் - தராமலை.மூதரித்தல், மூதலித்தல், மூதலிப்பு - ஒப்புவித்தல். மூதறிஞர் - பேரறிவுடையோர். மூதறிவன் - கடவுள். மூதறிவு - பேரறிவு. மூதா - தம்பலப்பூச்சி, இந்திர கோபம்.மூதாக்கள், மூதாட்கள் - முதியோர். மூதாட்டி - முதியவள். மூதாதை - பாட்டன். மூதாய் - பாட்டி. மூதாளர் - முதியோர். மூதிக்கம் - சிவனார் வேம்பு. மூதிற்பெண்டிர் - மறக்குடி மகளிர். மூதிரி - எருமை. மூதிரை - திருவாதிரைநாள். மூதுணர்வு - பேரறிவு. மூதுரை - ஓர் செய்யுள், பழமொழி. மூதூர்ப்பொழில் - இலவந்திகைச்சோலை. மூதேவி - சேட்டை. மூதை - இசங்கு, மூதணங்கு,வெட்டிச் சுட்டகாடு, முதுகாடு. மூத்ததிருப்பதிகம் - காரைக்காலம்மையாரருளிச் செய்த திருவாலங்காட்டிற்குரிய இரண்டு திருப்பதிகங்கள். மூத்தபிள்ளையார் - விநாயகர். மூத்தல் - முதிர்தல். மூத்தாள் - அக்காள், கிழவி, தலைவி,மூதேவி.மூத்திரகிரிச்சம், மூத்திரகிரிச்சனம், மூத்திரகிறீச்சனம் - ஓர் நோய்,கல்லடைதல். மூத்திரக்குளவி - ஓர் குளவி. மூத்திரசங்கம் - நீரிழிவு. மூத்திரசுக்கிலம் - வெட்டைநோய். மூத்திரதோஷம் - சலரோகம். முத்திரபுடம் - கீழ்வயிறு. மூத்திரப்பை - சலப்பை. மூத்திரம் - சிறுநீர். மூத்திரரோகம் - நீர் வியாதி. மூத்திரலம் - சலக்கடுப்பு. மூத்திராகாதம் - சலவடைப்பு. மூத்திராசயம் - சலப்பை, சிறுநீர் பை. மூத்திராதிக்யம் - நீர் வியாதி. மூத்திரோற்சங்கம் - இரத்தரோகம். மூத்தோர் - புலவோர், மந்திரிகள்,முதியோர், அறிஞர். மூத்தோன் - அண்ணன், முதிர்வயதுடையோன், விநாயகன். மூப்பர் - முதன்மைக்காரர், முதியோர். மூப்பன் - பறையரிற்றலைவன், முதன்மைக்காரன். மூப்பிமார் - முதுமகளிர். மூப்பு - தலைமை, முதுமை. மூய் - மூடி. மூய்தல் - மூடுதல். மூரல் - சிரிப்பு, சோறு, பல். மூரி - எருது, எருத்துத்திமில்,எருமை, ஓலைமூரி, சோம்பல்,நெரிவு, பழமை, பெருமை, வலி,முரண், இடபராசி. மூரிமுரித்தல் - திமிர்தீர உடற்பொருத்து நெறித்தல். மூர்க்கம் - உக்கிரம், கோபம், சலஞ்சாதித்தல், நாகப்பூச்சி. மூர்க்கர் - கீழ்மக்கள். மூர்க்கன் - ஆங்காரன், மூடன், கீழ்மகன், நாகப்பாம்பு. மூர்க்கை - ஆங்காரி, மூர்க்கம். மூர்ச்சனம் - கலக்குதல், மூர்ச்சனை. மூர்ச்சனை - நினைவுமயக்கம்,மயக்கம், நெட்டுயிர்ப்பு. மூர்ச்சாலன் - மூர்ச்சாரோகி. மூர்ச்சிதம் - அறிவின்மை, உயரம்,நினைவு, மயக்கம், வாட்டம். மூர்ச்சித்தல் - நினைவுமயங்கிக்கிடத்தல். மூர்ச்சிப்பு - மூர்ச்சிதம். மூர்ச்சை - அறிவுமயக்கம், வாட்டம், மயக்கம். மூர்ச்சை தீர்த்துயிர் தருமருந்து - குற்றுயிர் தருமருந்து. மூர்ச்சைவாயு - அறிவை மயக்குமோர் வாயு. மூர்த்தகர்ணி - குடை. மூர்த்தகன் - க்ஷத்திரியன். மூர்த்தகோலம் - குடை. மூர்த்தசம் - தலைமயிர். மூர்த்தம் - இருகடிகைப்பொழுது,உடம்பு, உருவுடையது, தலை. மூர்த்தரசம் - கஞ்சி நுரை. மூர்த்தவேட்டணம் - தலையணி. மூர்த்தன்னியம் - கிளர்ச்சி. மூர்த்தாபிஷிக்தன் - சத்திரியன்,மந்திரி. மூர்த்தி - அருகன், உடல், உருவம்,சிவன், தலைவன், தேவன், புத்தன்,பொருள், மாதிரி, தவவேடதாரி. மூர்த்திகரம் - தெய்வீகம், தேவச்செயல். மூர்த்திகன் - குமரன், வயிரவன். மூர்த்திமம் - சரீரம். மூர்த்திமான் - கழ்திரவியம், சரீரமுடையவன். மூர்த்தினி - தலை. மூலகதலம் - ஓர் முருங்கை. மூலகந்தம் - வெட்டிவேர், இருவேலி. மூலகபல்லவம் - முருங்கை மரம். மூலகம் - கிழங்கு, முள்ளங்கி. மூலகருமம் - சடகருமம். மூலகாரியம் - முதற்காரியம். மூலக்கடுப்பு - மூலநோய். மூலக்கரப்பன் - ஓர் கரப்பன். மூலக்கரணி - கற்கடகபாஷாணம். மூலக்கிரந்தி - ஓர் நோய். மூலக்கிராணி - ஓர் கிராணிநோய். மூலக்கொதி - ஓர் நோய். மூலசம் - வேருற் பத்திப்பயிர். மூலசாகிநம் - வேர்விளை நிலம். மூலச்சோதி - கடவுள். மூலதனம் - மூலத்திரவியம், முதற்பொருள். மூலதிரவியம் - மலதநம். மூலதேவன் - கஞ்சன். மூலத்தம்பம் - ஓர் சிற்பநூல். மூலத்தனம் - முதற்பணம்.மூலத்தானம், மூலஸ்தானம் - ஆகாயம்,கடவுள், கெற்பக்கிரகம். மூலத்திரவியம் - அடி யுரக்கம். மூலத்தின்சாரம் - அமுரி, இந்துப்பு. மூலத்துருவம் - கிரகவீதியின் மூலநீளளவு. மூலநாள் - மூல நட்சத்திரம். மூலபஞ்சாட்சரம் - மூலமந்திரம். மூலபத்திரன் - கஞ்சன். மூலபலதம் - பலா. மூலபலம் - அடிப்பலம், அடிப்பெலாமாயிருக்குஞ் சேனை. மூலபாடம் - உரைதவிர்த்தெழுதும்பாடம்.மூலபாடை, மூலபாஷை - ஆதிபாஷை. மூலப்படை - மூலபலம்.மூலப்பகுதி, மூலப்பிரகிருதி - பிரபஞ்ச காரணமான மாயை. மூலப்பொருள் - கடவுள், மூலதநம். மூலமந்திரம் - பஞ்சாட்சர மந்திரம். மூலமலம் - ஆணவமலம். மூலம் - ஆதி, உரையில்லாப்பாடம்,ஓர் நாள், ஓர் நோய், காரணம்,கிழங்கு, சமீபம், சொந்தம்,தலைமை, தாலம்ப பாஷாணம்,பாதம், மூலாதாரம் இஃது ஆதாரமாறி னொன்று, வேர். மூலவல்லி - வெற்றிலை. மூலவாயு - ஓர் நோய். மூலவிக்கிரகம் - மூலத்தான விக்கிரகம். மூலவியாதி - மூலநோய். மூலவிருள் - ஆணவமலம். மூலவுவமம் - ஒன்றினடங்கியிருப்பதை யெடுத்துவமிப்பது (உ.ம்)ஆணவம் போலும் பிரகிருதி. மூலவேர் - முதல்வேர். மூலாக்கிரம் - அடியு நுனியும். மூலாக்கினி - உதராக்கினி. மூலாசனம் - வேர்கிழங்கு புசித்தல். மூலாதாரம் - ஆறாதாரத்தி னொன்றுஅது குதத்தானம். மூலி - கிழங்கு, மருத்துப்பூடு,வேருள்ள மரம். மூலிகன் - மரத்தடியிலிருக்கும் தவசி. மூலிகை - மருத்துப்பூடு, மருந்துவேர். மூலிக்கரணம் - அறுதிமுறி, ஆதி. மூலிக்கை - மூலிகை. மூலியம் - கொண்டபொருள், சம்பளம்,விலை, விலைப்பொருள். மூலேரம் - சடை. மூலை - கோணம், வீடு. மூலைக்குடா - கோணத்து முடுக்கு. மூலையரம் - முக்கோணவரம். மூலையோட்டம் - சரிகோண மற்றது. மூவசைச்சீர் - நேரசையாவது நிரையசையாவது தன்னோடு தானேனும் ஒன்றோடொன் றேனும்புணர்ந்து மூன்றசை யடுக்கிவருவது. மூவட்சித்தொக்கு - தேங்காய் நார். மூவரசர் - மூன்றிராசாக்கள், அவர்சேரன் சோழன் பாண்டியன். மூவர் - திரிமூர்த்திகள், சைவசமயாசாரியர் மூவர் அவர் அப்பர் சுந்தரர் திருஞாந சம்பந்தர் என்பவர். மூவாசை - மூன்றாசை அதுமண்பெண் பொன். மூவாமுதல் - கடவுள், பரமேசுவரன். மூவிசை - மந்தம் மத்திமம் தாரம் எனுமூன்று விகற்பமான இராகங்கள். மூவிடம் - மூன்றிடம், அவை தன்மைமுன்னிலை படர்க்கை. மூவிலை - நரிப்பயறு. மூவிலைக்குருத்து - வேலியடக்கி. மூவிலைவேல் - சூலம். மூவுதல் - முடிதல், விலகுதல். மூவுலகம் - மூன்றுலகம் அவை, பூமிஅந்தரம், சுவர்க்கம். மூவுலகளந்தோன் - விஷ்ணு. மூவுலகாதாரன் - கடவுள். மூவுலகாளி - இந்திரன், கடவுள். மூவுலகு - மூவுலகம். மூவுலகுணர்ந்தோன் - அருகன்,கடவுள். மூவுலகுண்டோன் - விஷ்ணு. மூவுலகேந்தி - கடவுள். மூழி - அகப்பை, குளம், சோறு,துடுப்பு, மத்து, பெட்டி. மூழிக்களம் - ஓர் விஷ்ணு nக்ஷத்திரம். மூழிவாய் - பூவிடு பெட்டி. மூழை - அகப்பை, சோறு, துடுப்பு,மத்து. மூழ் - முகிழ். மூழ்கல் - அமிழ்தல், கெடுதல்,மறைதல். மூழ்த்தம் - முகுர்த்தம். மூழ்த்தல் - மொய்த்தல். மூளல் - மூளுதல். மூளி - காதறை, பெட்டி, விளிம்பற்றது. மூளிவாய் - பெட்டி. மூளுதல் - கூடுதல், நெருப்பு முதலியபற்றல், முயறல். மூளை - தலை முதலியவற்றின் மூளை,மச்சை. மூள்குதல் - புகுதல். மூள்தல் - மூளுதல். மூறுவா - பெருங்குரும்பை. மூன்று - ஓரெண். மெ மெச்சல் - கொண்டாடல், துதித்தல்,புகழ்தல். மெச்சுதல் - கொண்டாடல், துதித்தல்,புகழ்தல். மெட்டு - ஆயத்துறை, கிராமத்தைச்சூழ்ந்தகாடு, குனிப்பு, சுங்கச்சாவடி. மெது - மிருது. மெதுக்கு - ஓர் செடி.மெதுமெதுத்தல், மெதுமெதெனல் - மிருதுவா யிருத்தல். மெதுமெதுப்பு - நுகைவு. மெத்த - மிக. மெத்து - மென்மை. மெத்துதல் - மிகுதல், அப்புதல்.மெத்தெனல், மெத்தெனவு - மிருது,சாந்தகுணம். மெத்தை - ஓர் பூடு, அமளி, சட்டை,மேல் வீடு. மெத்தைப்பாய் - ஓர்வகைப் பாய். மெத்தைவீடு - தட்டு வீடு. மெந்திரி - ஏதண்டை. மெய் - உடல், இது பஞ்சப்பொறியினொன்று, உண்மை,ஒற்றெழுத்து, சொல்,சொற்பொருள், இலக் கினம்,அறிவு, பொருள். மெய்கண்டதேவர் - சுவேதவனப்பெருமாள், சிவஞானபோதமியற் றியவர். மெய்காப்பாளர் - உற்ற காவற்காரர். மெய்காவல் - உற்றகாவல். மெய்கூறல் - உண்மைபோல், அதுமும்மொழியி னொன்று. மெய்ச்கவசம் - மார்ச்சட்டை. மெய்க்கிளை - மெய்முளை. மெய்க்கீர்த்திமாலை - ஓர் பிரபந்தம்,அது சொற்சீரடியென்னும் கட்டுரைச் செய்யுளாற் குலமுறையிற்செய்த கீர்த்தியைக் கூறுவது. மெய்க்கூத்து - சாந்திக்கூத்து நான்கினுளொன்று. மெய்க்கொட்டை - பலாக்காய் முளை. மெய்க்கொள்ளல் - நம்புதல். மெய்க்கோள் - முன்னறவாங்கல். மெய்சொல்லல் - உண்மை பேசுதல். மெய்ச்சுதல் - புகழ்தல். மெய்ஞ்ஞலம் - உண்மையான நலம். மெய்ஞ்ஞானசாகரம் - ஓர் நூல். மெய்ஞ்ஞானதீபம் - ஓர் நூல். மெய்ஞ்ஞானம் - உண்மை ஞானம். மெய்ஞ்ஞானவிளக்கம் - ஓர் நூல். மெய்ஞ்ஞானி - உண்மை ஞானம். மெய்ஞ்ஞானவிளக்கம் - ஓர் நூல். மெய்ஞ்ஞானி - உண்மைக்கியானி. மெய்த்தல் - உண்மைப்படல். மெய்நலம் - வலி.மெய்நூலன், மெய்நூலாளன் - துரோணாசாரியன். மெய்புகுகருவி - கவசம். மெய்ப்படாம் - திரைச்சேலை, நிலையங்கி. மெய்ப்படுதல் - உண்மைப்படுதல்.மெய்ப்படுத்தல், மெய்ப்படுத்துதல் - உண்மைப் படுத்தல். மெய்ப்பரிசம் - தொட்டுணரு முணர்வு. மெய்ப்பாடு - குறிப்பு வெளிப்படுக்குந்தோற்றம், உள்ளத்தி னிகழ்ச்சிபுறத்தார்க்கு வெளிப்படுதல். மெய்ப்பித்தல் - மெய்ச்சுவித்தல்,மெய்ப்படுத்தல். மெய்ப்பீரம் - மேகம். மெய்ப்பு - மெய்ச்சிக் கொள்ளப்படல், மெய்ம்மை. மெய்ப்பை - சட்டை. மெய்ப்பொருள் - உண்மை, கடவுள்,கல்வி, நற்போதனை, மெய்ப்பாக்கியம். மெய்ப்பொறி - கன்மேந்திரிய ஞானேந்திரியங்கள்.மெய்மயக்கம், மெய்மயக்கு - ஒற்றெழுத்தியைபு. மெய்மலம் - உடம்பின்மாசு, நரகல். மெய்மறதி - கோபம், தன்னை மறத்தல்,வெறி. மெய்மரை - உடல்மறை கவசம். மெய்மறத்தல் - தன்னை மறத்தல். மெய்மாசு - உடம்பின்மாசு, மலம். மெய்ம்மை - உண்மை, கருத்து,நினைவு. மெய்ம்மொழி - வேதம். மெய்யர் - பார்ப்பார், மகார், முனிவர்,மெய்சொல்வோர். மெய்யறிவு - மெய்ஞ்ஞானம். மெய்யன் - கடவுள், சத்தியவான்,மகன், முனிவன், வேதியன். மெய்யுணர்வு - உண்மையறிதல்,நல்லறிவு. மெய்யுரை - சத்தியவாசகம், இதுவாக்கினற்குண நான்கினொன்று. மெய்யுரைத்தல் - உரைசொல்லல்,சத்தியஞ் சொல்லல். மெய்யுவமம் - உண்மையையேயெடுத்துவமிப்பது (உ.ம்.) சூரியப்பிரகாசம் போன்மணியொளி. மெய்யுறுபுணர்ச்சி - மெய்தொட்டுப்பயிறல். மெய்யுறை - கவசம், சட்டை. மெய்யெழுத்து - ஒற்றெழுத்து. மெய்வகை - உறுமிகழ்வைக் கூறுவது. மெய்வழிநீர் - அமுரி. மெய்வாழ்த்து - உறுப்புக்களைமுறையே கூறுவது. மெய்விரதன் - தருமன், வீடுமன். மெய்விவாகம் - தலைமகனுந் தலைவியும் இருசுற்றமு மிசைந்துமுடிக்கு மணம். மெருகிடுதல் - மிருதுவாக்குதல்,மெழுக்கிடுதல். மெருகு - ஓர் கிழங்கு, மிருது,மெழுக்கு. மெருகெண்ணெய் - மினுக்கெண்ணெய். மெலிதல் - இடைதல், இளைத்தல். மெலித்தல் - இசையை மெல்லிதாக்கல், வல்லினவெழுத்து வழங்குதல். மெலிந்தோன் - விபன்னன். மெலியது - மென்மையானது. மெலிவடைதல் - சஞ்சலப்படல். மெலிவித்தல் - கனங்குறைத்தல்,மிருதுவாக்கல், வாட்டல். மெலிவு - இளைப்பு, வருத்தம். மெலு - அற்பன். மெலுக்கு - வெளியலங்காரம். மெல்கல் - இலேசாதல். மெல்குதல் - மெல்லல். மெல்கோல் - பற்கொம்பு. மெல்ல - மிருதுவாக. மெல்லணை - மெத்தை. மெல்லப்புலம்பு - மெல்லியகரை. மெல்லல் - மெல்லுதல். மெல்லன் - நெய்தனிலத் தலைவன். மெல்லி - பெண். மெல்லிக்கை - ஒஞ்சட்டை. மெல்லிது - மிருது. மெல்லிமை - மென்மை. மெல்லியது - மெல்லிது. மெல்லியநல்லாள் - பெருமாட்டி. மெல்லியர் - மாதர், மெலிந்தவர்,வறியவர், அற்பகுணமுடையவர்,மென்மையுடையவர். மெல்லியலார் - பெண்கள். மெல்லியல் - பெண், மரத்திளங்கொம்பு. மெல்லியார் - எளியோர், பெண்கள்,மென்மையோர். மெல்லியர் கூந்தல் - அம்மையார்கூந்தல். மெல்லியாள் - பெண். மெல்லிலை - வெற்றிலை. மெல்லினம் - மெல்லொலியெழுத்து. மெல்லினவெதுகை - எல்லாச் சீர்க்கண்ணும் மெல்லினவெழுத் துக்களெதுகையாய் வருவது. மெல்லுதல் - கறித்தல். மெல்லெழுத்து - மெல்லின வெழுத்து. மெல்லெனல் - மந்தக்குறிப்பு. மெல்லெனவு - மிருது. மெல்லொற்று - மெல்லினவொற்று. மெழுகல் - மெழுகுதல்.மெழுகிடல், மெழுகிடுதல் - தரைமெழுகுதல், மெழுகு கட்டுதல்,மெழுகுபூசுதல். மெழுகு - அரக்கு, மெழுக்கென்னேவல். மெழுகுகட்டுதல் - மெழுகுபூசுதல். மெழுகுசாணை - ஓர் சாணை. மெழுகுசீலை - மெழுகுதோய்த்தபுடைவை. மெழுகுசேர்வை - ஓர் சேர்வை. மெழுகுதல் - நிலத்தைப்பூசுதல்,பூசுதல். மெழுகுதிரி - மெழுகாலாயதிரி. மெழுகுத்தட்டு - மெழுகுத்தகடு. மெழுகுத்தண்டு - மெழுகுதிரி. மெழுகுபதம் - மருத்தெண்ணெய்க்கடுகு, மெழுகுபோலுருளும் பதம். மெழுகுபனையன் - ஓர் வைசூரி. மெழுகுபாகல் - ஓர் பாகல். மெழுகுமண் - பசைமண். மெழுகுவத்தி - மெழுகுதிரி.மெழுக்கிடுதல், மெழுக்கு - சாணிமெழுகுதல். மெள்ள - மிருதுவாய். மெனம்பொடி - பஞ்சாங்கம், அவைசுக்கு, திப்பிலி, மிளகு, இலவங்கம்,தாளிசபத்திரி. மென்கணம் - மெல்லினம். மென்பால் - மருதநிலம். மென்புரட்டு - கைமாற்றிலே புரட்டிவருதல். மென்மேல் - ஒன்றன்மே லொன்று,மேலும் மேலும். மென்மை - மிருது, அஃது எண்வகையூறி னொன்று, சாத்துவித குணத்துமொன்று, மெல்லெழுத்து. மென்றல் - வெற்றிலை முதலியமெல்லுதல். மென்றொடர் - மெல்லெழுத்துத்தொடர்ந்து வருவது. மென்னடை - அன்னம், மிருதுவானநடை. மென்னி - மிடறு. மென்னிலை - கரலட்சணத்தொன்று அது பெருவிரலைமடக்கி மற்றைய விரல்களைவிரித்து நீட்டுதலாம். மென்னை - சொத்தை, மிடறு. மே மே - அன்பு, ஓரெழுத்து, மேம்பாடு. மேககாக்கையோன் - சீர்பந்த பாஷாணம். மேகலகந்யகை - நர்மதாநதி.மேககாந்தி, மேககாரகம் - ஓர் நோய். மேககாலம் - கார்காலம். மேககெற்சனம் - இடி.மேகக்கருப்பக்கல், மேகக்கல் - ஆட்டுக்கல். மேகக்கிராணி - ஓர் கிராணிநோய். மேகசம் - மேகத்திற் பிறப்பன,மேகத்தி லுண்டாகிற கோழிமுட்டை யளவுள்ள முத்து, முத்து. மேகசாரம் - கர்ப்பூரம். மேகசாலம் - ஓர் மணி, முகிற்கூட்டம்.மேகசிந்தகம், மேகசீவகம் - சாதகப்பட்சி. மேகசூலை - ஓர் சூலை. மேகசோரணம் - இராசவத்தனக்கல். மேகச்சிலை - மாக்கல், வங்கக்கல். மேகதாரி - மயிலிறகு. மேகதீபம் - மின். மேகதேகம் - மேகநோய்கொண்டவுடம்பு. மேகஸ்தம்பம் - மேகத்தூண். மேகத்தின்கருப்பக்கல் - ஆட்டுக்கல். மேகத்தின்விந்து - பூநாகம். மேகத்துவாரம் - ஆகாயகங்கைசெல்வழி. மேகத்தொனி - முகில் முழக்கம். மேகநாதசித்து - இலக்குமன். மேகநாதம் - சிறுகீரை, பலாசு,மலைப்பச்சை, முகில், முழக்கம். மேகநாதன் - இந்திரசித்து, நவசாரம்,வருணன். மேகநீர் - ஓர் நோய், நீர். மேகநோய் - ஓர் நோய். மேகபச்சை - நாகபச்சை. மேகபடலம் - ஓர் கண்ணோய், மேகச்செறிவு. மேகபந்தர் - முகிற்படலம். மேகபந்தி - முகினிரை. மேகபிரசவம் - மழை. மேகபுட்பம் - நீர், மழை. மேகபூதி - இடி. மேகப்புள் - வானம்பாடி. மேகமண்டலம் - முகின்மண்டலம். மேகமந்தாரம் - மந்தாரச்சிலை. மேகமாலை - முகிற்கூட்டம். மேகம் - ஓர் நோய், கடுக்காய், குயில்,முகில். மேகயோனி - புகை. மேகாஞ்சி - ஓரிராகம். மேகரண்டம் - மயிர்க்கருத்து. மேகராகக்குறிஞ்சி - குறிஞ்சித் திறத்தினோர்பண். மேகராடி - மயிலடிக்குருந்து. மேகலம் - ஒரு நோய். மேகலாகன்னிகை - நருமதை. மேகலாத்ரிஜை - நர்மதாநதி. மேகலாபதம் - இடை. மேகலாபாரம் - எழுகோவை மணிவடம். மேகலை - இடைக்கட்டு, ஓமகுண்டத்தை வளையவிடுங் கோலம்,சீலை, தேர் முடி, நருமதை,மலைப்புடைப்பு, மலைமுடி,மலையருகு, மாதரிடையணியுளேழுகோவைமணி, மான்றோர்பூணூல், மேருகிரிச்சிகரம். மேகவண்ணக்குறிஞ்சி - மழைவண்ணக் குறிஞ்சி. மேகவண்ணன் - திருமால். மேகவத்துவம் - பரமாணு. மேகவருணை - அவுரி. மேகவாகனன் - இந்திரன், கருங்கல்,சிவன். மேகவாயு - ஓர் நோய். மேகவியாதி - மேகநோய். மேகவிரஞ்சி - மேகரஞ்சி. மேகவூறல் - மேகநீர்ப்பாய்ச்சல். மேகவெட்டை - ஓர் நோய்.மேகனம், மேஹநம் - ஆண்குறி,மூத்திரம். மேகாகமம் - கார்காலம், மழை. மேகாக்கினி - மீன். மேகாஸ்பதம் - ஆகாயம்.மேகாநந்தி, மேகாரம் - மயில். மேகோதகம் - மழை. மேக்கு - உயர்ச்சி, மேல், மேற்கு. மேசகம் - இருள், கருமை, புகை,மயிற்றோகைக்கண், முகில்,குதிரைமயிர். மேசகாலகை - யமுநாநதி. மேசகை - இருள், கருமனோசிலை. மேசை - பீடம். மேடகம் - மேடம். மேடக்கோடு - ஆட்டுக்கோட்டுப் பாலை. மேடசிங்கி - புழுக்கொல்லி. மேடமதி - சித்திரைமாதம். மேடமாதம் - சித்திரைமாதம். மேடம், மேஷம் - ஆடு, ஆட்டுக்கடா,ஓரிராசி. மேடவிடவம் - மேடாயனம். மேஷவிஷாணிகை - ஆட்டுக்கொம்பு. மேஷவிலோசனம் - பேரவுரி. மேடவீதி - சித்திரை, வைகாசி, ஆனிமாதங்களிற் சூரியன் செல்லும்வீதி. மேடாயனம், மேஷாயனம் - ஆதித்தனிடப விராசியினின்று கற்கடகவிராசிக்குச் செல்லும்பாதை,உத்தராயண மூலம். மேடு - உயர்ச்சி, ஊர், திடர், வயிறு,மேலிடம், உயரம். மேடூகம் - சுவர். மேடை - உப்பரிகை, மேடாய் வகுக்கப்பட்டது, வேதிகை. மேட்டி - இறுமாப்பு, முதன்மை. மேட்டிமை - அகந்தை, மேன்மை. மேட்டிரம் - ஆட்டுக்கடா, ஆண்குறி. மேட்டிராந்தம் - மேல். மேண்டம் - ஆடு. மேதகம் - கோமேதகம், சாலங்கபாஷாணம், மதிப்பு, மேன்மை. மேதகு - மேன்மையான. மேதகையோர் - உயர்ந்தோர். மேதச்சி - கற்பரி பாஷாணம். மேதம் - கொலை, கொழுப்பு, யாகம். மேதரவர் - வேக்காரர். வேதாதிதி - ஓர்முநி. மேதாரம் - மலை. மேதாருத்திரன் - காளிதாசன். மேதாவதி - அறிவுள்ளவன். மேதாவர் - மூங்கில் வெட்டிவிற்போர். மேதாவி - அறிவு, உணர்வு, கிளி,பண்டிதன், புத்தியுள்ளவன்,அறிஞன். மேதாவிநி - நாகணவாய்ப்புள். மேதாவியர் - அறிஞர். மேதி - எருமை, நெற்களம், பொலிக்கட்டை, வெந்தயம். மேதிக்கவுணன் - மூர்த்தபாஷாணம். மேதிக்கொம்பு - எருமைக்கொம்பு. மேதிச்சென்னிமிதித்தோன் - துர்க்கை. மேதியன் - இயமன். மேதிரம் - புத்திசாலி. மேதிவாகனன் - இயமன். மேதினி - பூமி. மேதினீத்திரவம் - பூதூளி. மேது - அறிவு. மேதேதரை - நிணப்பை. மேதை - அறிஞன், அறிவு, இறைச்சி,கள், தோல், நரம்பு, நிணம், புதன்,பேரரிவு, பொற்றலைக் கையாந்தகரை, மேன்மை, கூகைநீறு,புதவாரம். மேதையர் - புலவர், அறிஞர். மேதோசம் - எலும்பு. மேத்தியம் - சுத்தம், சீரகம், கருங்காளி. மேத்திரம் - ஆட்டுக்கடா, சலவாய். மேநகாத்மஜை - பார்வதி. மேநகை - மேனகை. மேநகைபுதல்வி - பார்வதி. மேந்தலை - கப்பலிற் காற்றெதிர்ப்பக்கம், முதன்மை, மேன்மை. மேந்தானம் - உயரம்.மேந்தி, மேந்திகை - வெந்தயம். மேந்திரி - மெந்திரி. மேம்படுதல் - உயர்தல். மேம்பாடு - புகழ், மேன்மை. மேய - தகுதியான. மேயம் - அளக்கப்படுவது, அறிவது. மேய்க்கி - இடையன், கவளங்கொடுப் போன். மேய்ச்சல் - விலங்குணவு. மேய்தல் - விலங்குணவு. மேய்தல் - உண்டல், மூடல். மேய்த்தல் - மேயச்செய்தல். மேய்ப்பர் - இடையர். மேய்ப்பன் - இடையன். மேய்ப்பு - மேய்ச்சல். மேரு - ஆசனபீடம், ஓர்வகைக்குப்பி, பொன்மலை, மலை, செபமாலையின் நாயகமணி. மேருகம் - ஓர்வாசனை. மேருசாவர்ணன் - பதினொன்றாவதுமநு. மேருமணி - நாயகமணி. மேருமந்தரபுராணம் - ஒரு தமிழ்ச்சைவ நூல். மேருயந்திரம் - கதிர்க்கம்பி. மேருவில்லி - சிவன். மேருவின்வாரி - பொன்மணல். மேரை - குடிமக்கட்குக் களத்திற்றருந்தானியம், மரியாதை, வகை. மேரையல்ல - காத்தான் பிள்ளைபரங்கிவிடு தூது. மேலகம் - மேல்வீடு, மோக்கம். மேலச்சுலுகம் - சிறுத்தைப்புலி. மேலத்தாட்சி - மேலொப்பனை. மேலநம் - கலப்பு. மேலவரிறைவன் - இந்திரன், முருகன். மேலவர் - பெரியோர், வானோர். மேலனம் - கலப்பு, கூட்டம், பழக்கம். மேலாடை - அங்கவஸ்திரம். மேலாத்தல் - மேற்புறமாக்கல்,மேன்மை. மேலாமண்டலம் - எழுதுமைக்கூடு. மேலாமுதுரம் - கஸ்தூரி எலும்பு. மேலார்ப்பு - மேல்விரித்துப் பிடிக்கும்புடைவை. மேலாலம் - மழை. மேலாலவத்தை - மேனோக்கிநிற்குமலத்தை. மேலிடுதல் - அதிகப்படுதல், அதிகரித்தல், மேலே தாவுதல். மேலிமைத்தாறு - கற்கடக பாஷாணம். மேலீடு - அதிகரிப்பு, ஓராபரணம்,மேலிடுதன்மை, மேன்மை,மேற்படுதல், சார்தல். மேலுக்கெடுத்தல் - எதிரெடுத்தல். மேலுதடு - மேலதரம். மேலுலகம் - தேவலோகம், பூலோகமுதலேழுலகம். மேலுறுதி - துணையுறுதி. மேலெடுப்பு - மேன்மையான எடுப்பு,வீம்பு. மெலெழுச்சி - பெருமிதம், மேம்பாடு. மேலேடு - காவலொற்றை. மேலை - அஞ்சனக்கல், மேலிருப்பது, மேல், மேற்கு, மேன்மை,மை, வருங்காலம். மேலைத்திசை - மேற்றிசை.மேலையார், மேலையோர் - பெருமையிற்சிறந்தே. மேலொற்றி - திரும்பவைத்த வொற்றி. மேலோங்கி - கரையாரிலோர் பகுதி. மேலோர் - அறிஞர், புலவர், பெரியோர்,வானோர். மேல் - அகலம், அதிகம், ஆகாயம்,இடம், இனியென்பது ஏழாம்வேற்றுமை யுருபு, சரீரம், பின்,மிசை, முன்னே, மேற்கு, மேற்புறம், வருங்காலம், மேலிடம்,தலைமை, மேன்மை. மேல்காற்று - கோடைக்காற்று. மேல்கை - உயர்ந்தபூமி, மேடு,மேற்கு. மேல்சாதி - உயர்குலம். மேல்சார் - மேற்கு. மேல்பாலிரேபதம் - நவகண்டத்தொன்று. மேல்பால் - மேற்கு. மேல்பால்விதேகம் - நவகண்டத்தொன்று. மேல்வட்டம் - சங்கை, மகத்துவம். மேல்வாசகம் - பத்திரிகையின் புறவாசகம். மேல்வாய் - அண்ணம், ஒன்றுமுதலாய் மேற்பட்ட கணக்கு. மேல்வாரம் - இறைப்பங்கு, வாரக்காரன் வைத்தவாரம். மேல்விசாரணை - பராமரிப்பு, முதன்மையான விசாரணை. மேல்விதேகம் - மேல்பால் விதேகம். மேல்விழுதல் - யுத்தங்கலத்தல். மேல்வீடு - மச்சுவீடு. மேவலர் - பகைவர். மேவல் - உண்டல், சமமாக்கல், சேர்தல்,நிரவுதல், விரும்பல். மேவார் - பகைவர். மேவு - ஆசை, மேவென்னேவல்,மேம்பாடு. மேவுதல் - மேவல். மேழகம் - ஆடு, கவசம், செம்மறிக்கடா, துருவாட்டேறு. மேழி - கலப்பை, கலப்பையின் கைப்பிடி. மேழிப்படையோன் - பலதேவன். மேழியர் - பூவைசியர், மருதநிலமாக்கள், வேளாளர். மேளனம் - கூட்டம், கலப்பு. மேளித்தல் - கூட்டுதல். மேற்கட்டி - படங்கு. மேற்கட்டு - மேல் வீடு. மேற்கதி - மேற்செலவு, மோட்சம். மேற்கதுவாயளபெடை - முதலயலொழிந்த மற்றெல்லாவற்றின்கண்ணு மளபெடை வரத்தொடுப்பது. மேற்கதுவாயியையு - கடையயற்சீரொழிந்த மற்றெல்லாச் சீர்க்கண்ணுமியை புவரத் தொடுப்பது. மேற்கதுவாயெதுகை - முத லொழிந்தமற்றெல்லாச் சீர்க்கண்ணுமெதுகை வரத்தொடுப்பது. மேற்கதுவாய் - முதலயற் சீர்க்கணின்றியொழிந்த சீர்க்கண் மோனைவரத்தொடுப்பது. மேற்கதுவாய்முரண் - முதலயற்சீரொழிந்த மற்றெல்லாச் சீர்க்கண்ணு முரண்வரத்தொடுப்பது. மேற்கதுவாய்மோனை - முதலயற்சீர்க்கண்ணும் மெல்லின வெழுத்துக்க ளெதுகையாய் வருவது. மேற்கத்தியான் - மேற்கு தேயத்தவன். மேற்காது - காதின் மேற்புறம். மேற்காவல் - மேல் விசாரிப்பு. மேற்கு - மேல், மேற்றிசை. மேற்குலத்தோர் - மேல்சாதியார்,வேதியர்.மேற்கொள்ளல், மேற்கொள்ளுதல் - தலைப்படுதல், வெல்லல், ஏறுதல். மேற்கோள் - உதாரணம், சனி,போர்வை, முன்னோர் வழக்கு,மேன்மை. மேற்சாட்சி - மறு சாட்சி. மேற்சுவாசம் - மேனோக்கிய மூச்சு. மேற்செம்பாலை - ஓரிசை. மேற்செல்லல் - போர்க்குச் செல்லல்,மாற்றா ரெதிர்த்தல், மேலேநெருங்கிப்போதல், எதிர்தல். மேற்படல் - அதிகப்படல், மேன்மைப்படல், வெல்லுதல். மேற்படி - மறுபடி, முன் குறித்த படி. மேற்பாதவாதனம் - இருகாலுஞ்சம்மணமாக மடித்து மேலாக்கிக்கிடப்பது. மேற்பாரம் - மேலே யணைத்துச்சேர்க்கும்பாரம். மேற்புலவர் - தேவர். மேற்புறணி - மேற்பட்டை. மேற்புறம் - மேற்பக்கம். மேற்பூச்சு - மனத்தோ டியைபில்லாதசொல். மேற்போடுதல் - தலைப்போடுதல். மேற்போர்வை - நிலையங்கி, மீக்கோள். மேற்றட்டு - மேலறை. மேற்றரம் - உயர்ந்த தரம். மேற்றலை - மேற்புறம். மேற்றளம் - கப்பலின் மேற்பக்கம்,காவற் படை, மேனிலம். மேற்றிசை - மேற்கு. மேற்றிசைப்பாலன் - வருணன். மேற்றிராணி - அதிகாரம், அதிகாரி. மேனகை - ஓர் தேவதாசி, மனோரமை,மலையரையன் மனைவி. மேனகைபுதல்வி - பார்வதி. மேனா - மேநகை, ஒரு பல்லக்கு அதுமூடு பல்லக்கு. மேனாஜா - பார்வதி. மேனாசை - பார்வதி. மேனாடு - பொன்னாங்காணி. மேனாதம் - பூனை, மயில், வெள்ளாடு. மேனாதரன் - மலையரையன். மேனாதவம் - இமயம். மேனி - அங்கம், அழகு, உடல்,உருவம், காந்தி, குப்பைமேனி,நிறம், மினுக்கு. மேனை - மலையரசன்றேவி, இவள்சுதை மகள்.மேனோக்கம், மேனோக்கு - மேற்பார்வை. மேனோக்குதல் - ஊர்த்துவ முகமாதல்,மேற்கதி கொள்ளல். மேன்பாடு - மேம்பாடு. மேன்மக்கள் - பெரியோர். மேன்மாடம் - மேன்மாளிகை. மேன்மேல் - அதிகமதிகம். மேன்மை - மகிமை, மேலாந்தன்மை. மேண்மைபாராட்டல் - புகழ்தல். மேன்றலை - மரக்கலத்தின் முன்புறம். மை மை - அஞ்சனம், இருள், எழுதுமை,ஓரெழுத்து, கறுப்பு, குற்றம்,செம்மறியாடு, நீர், மலடி, மலட்டெருமை, மேகம், மேடவிராசி,மையென்னேவல், வெள்ளாடு. மைகம் - வக்கிராந்த பாஷாணம். மைகரம் - மயக்கம். மைகொடுத்தல் - வன்னம் பூசுதல். மைக்கூடு - மைப்பாத்திரம். மைசூர் - ஓர் பட்டினம்.மைச்சந்தன், மைச்சமனந்தன் - கச்சற்பாஷாணம். மைச்சாரி - கருங்குருவை நெல். மைச்சாள் - சகோதரனுடையமனைவி, மைத்துனி.மைச்சான், மைச்சுனன் - மைத்துனன். மைச்சுனி - மைத்துனி. மைஞ்சன் - மகன். மைதல் - மசிதல். மைதானம் - உறநடு, வெளி.மைதிராவருணன், மைதிராவருணி - அகத்தியன். மைதிலி - சீதை. மைதீட்டுதல் - மைபூசுதல். மைதுலை - பஞ்சகௌடத்தொன்று, மிதிலை. மைதுனம் - ஒன்றிப்பு, புணர்ச்சி,விவாகம். மைதுனன் - மச்சான். மைதுனி - மச்சாள். மைத்தல் - ஒளிகெடுதல். மைத்திரம் - சினேகம். மைத்திரன் - சினேகன், பிராமணன். மைத்திராவருணம் - உபநிடதமுப்பத்திரண்டி னொன்று. மைத்திராவருணன் - அகத்தியன். மைத்திராவருணி - அகத்தியன்,வால்மீகி.மைத்திரி, மைத்திரியம் - சிநேகம். மைத்திரீபலன் - புத்தன். மைத்திரேயன் - ஓர் முநி. மைத்துனமை - மைத்துன வுரிமை. மைத்துனன் - மச்சான். மைத்துனி - மச்சாள். மைநகர்ப்பூமி - வக்கிராந்த பாஷாணம். மைநா - சொல்லறிபுள், மைனா. மைநாகசுவசிரு - பார்வதி. மைநாகம் - ஓர் மலை. மைநாகன் - மலை யரசனுக்கும்மேனைக்கும் பிறந்த புத்திரன். மைந்தர் - ஆண்மக்கள், மனிதர். மைந்தன் - ஆண்மக்கள், மனிதர். மைந்தன் - திண்ணியன், மகன். மைந்து - மயக்கம், வலி, அழகு,வீரம். மைப்பு - கருப்பு. மைமல் - மாலை நேரம். மைமா - கரும்பன்றி. மைமுகன் - முசு. மைமை - மலடி, மலட்டெருமை. மைம்மீன் - சனி. மைம்முகன் - முசு. மையண்டம் - முட்டை. மையம் - நடு, மத்தியம். மையம்பாய்தல் - இருபக்கமுஞ்சாயஒவ்வாம னிற்றல். மையல் - உன்மத்தம், மயக்கம்,மோகம், ஊமத்தை, செருக்கு. மையன்மா - யானை. மையவாடி - முள்வேலியுள்ள விடம். மையாடுதல் - மையோலை பிடித்தல்,ஓதுதல். மையாத்தல் - மயங்குதல், ஒளிகெடுதல். மையிடுதல் - மைதீட்டுதல், மைபூசுதல், மைபோடுதல். மையுடை - கருவேல். மையுண்ணல் - மைதீட்டப்படுதல். மையூட்டுதல் - மைதீட்டுதல். மைரேயம் - ஓர் தைலம். மைவிடை - ஆட்டுக்கடா. மைவிளக்கு - நெய்விளக்கு. மைவீடு - செங்கத்தாரி. மைனம் - மீன். மைனா - நாகணவாய்ப்புள். மைனிகன் - கரையான். மொ மொகமொகெனல் - ஈரடுக் கொலிக்குறிப்பு. மொகவை - முகவை. மொக்கட்டை - முகம். மொக்கட்டை முறித்தான் - குறும்பன். மொக்கட்டை முறித்தல் - முகமுறித்தல். மொக்கட்டையீனம் - சங்கைத்தாழ்வு. மொக்கணி - தோற்பை, பொக்கணி. மொக்கவீனம் - சங்கையீனம். மொக்களித்தல் - தாமதித்தல், பயணத்திற்றரித்தல். மொக்கன் - பருத்தவன். மொக்கு - பூமொட்டு, மரத்தின்கணு,அரும்பு. மொக்குளித்தல் - குமிழியிட்டொலித்தல். மொக்குள் - கொப்பூழ், நீர்க்குமிழி,மலரும் பருவத்தரும்பு, அரும்பு,கொப்புளம். மொக்கை - அங்கை, கூரின்மை,பருமை, மணை, வெட்கம். மொக்கைகுலைதல் - அவமானப்படுதல். மொக்கைச்சோளம் - ஒர் சோளம். மொக்கைபண்ணல் - அவசங்கையாக்கல், ஆயுதங்களை மணைத்தல், கெடுத்தல். மொக்கைபோதல் - அணாகப்படுதல்,அவசங்கைப்படுதல், ஆயுதமுனை மடிதல். மொக்கையீனம் - சங்கைக்குறைவு. மொங்கன் - மொழுங்கன். மொசித்தல் - தின்னல். மொசுக்கை - மொசுமொசுக்கை. மொசுமொசுக்கை - முசுமுசுக்கை. மொசுமொசுத்தல் - ஒலிக்குறிப்பு,சீக்கிரக்குறிப்பு, தினவுக்குறிப்பு. மொச்சடித்தல் - மொச்சையடித்தல். மொச்சு - மொச்சை. மொச்சை - ஆட்டுமணம், ஓர்வகைப்பயறு. மொச்சையடித்தல் - மொச்சைமணம்விடுதல். மொஞ்சி - ஸ்தனம். மொடமொடெனல் - ஈரடுக் கொலிக்குறிப்பு. மொடு - இலாபம், நயம், பயற்றஞ்சப்பட்டை, பருமை. மொடுக்குமொடுக்கெனல் - ஒலிக்குறிப்பு.மொடுமொடுத்தல், மொடுமொடுப்பு - ஈரடுக் கொலிக்குறிப்பு. மொடுமொடெனல் - ஒலிக்குறிப்பு. மொட்டம்பு - அலகில்லா அம்பு. மொட்டல் - அரும்பல். மொட்டு - இளம்பூவரும்பு, குமிழ்ப்புவடிவுள்ளது. மொட்டறாமலர் - முழுதும் விகசியாதபுஷ்பம். மொட்டுதல் - அரும்புதல். மொட்டை - கூரின்மை, மழுக்கம்,முண்டிதம். மொட்டைக்கறுப்பர் - எமதூதர். மொட்டைச்சி - அமங்கலி, பூநீறு. மொட்டைத்தலை - மொட்டைந்தலை. மொட்டைப்புத்தி - மழுங்கற்புத்தி. மொட்டையடித்தல் - தலை முண்டிதமாக்கல். மொட்டையம்பு - அலகில்லாதஅஸ்திரம். மொட்டையன் - மொட்டைத் தலையன். மொட்டைவெட்டு - முண்டிதவெட்டு. மொண்டணி - மொந்தணி.மொண்டன், மொண்டாவன் - ஓர்சாமை. மொண்டி - ஓர் சாமை, நொண்டி. மொண்டு - அலைவு, முரண்டு,மொண்டெனெச்சம். மொண்டுக்காரன் - அலைவு பண்ணுபவன், முரண்டன். மொதுமொதெனல் - ஒலிக்குறிப்பு,நொதித்தற் குறிப்பு. மொத்தம் - தொகை, பருப்பம்,பொது. மொத்தல் - அடித்தல், நிறைதல். மொத்தளம் - கூட்டம், தொகை. மொத்தி - புடைப்பு. மொத்து - அடி, மொத்தென்னேவல். மொத்துண்ணல் - அடியுண்ணல். மொத்துதல் - அடித்தல், மிகுதல். மொத்தை - பருத்தது, கோட்டான். மொந்தணி - திரட்சி, பருப்பம்,மரக்கணு. மொந்தணியன் - திரண்டது, பருத்தது. மொந்தன் - ஓரினவாழை. மொந்தை - ஒர்கட்பறை, ஓர் பாத்திரம்,பருத்தது. மொப்பு - வெடிநாற்றம். மொய் கூட்டம் - தாய், பெருமை,போர், போர்க்களம், மகமை,மொய்த்தல், மொய்யென்னேவல், யானை, வண்டு, பகை, வலி. மொய்கதிர் - அடர்ந்தகதிர், முலை. மொய்குழல் - பெண். மொய்ச்சல் - மொய்த்தல். மொய்தாய் - ஈன்றாள். மொய்த்தல் - நெருங்கல், மூடுதல். மொய்த்தாய் - ஈன்றாள். மொய்ப்பணம் - மகமைப்பணம். மொய்ப்பு - மொய்த்தல். மொய்ம்பு - தோள், வலி. மொய்யெழுதல் - கலியாணக் காலத்தில் தருமக்கொடையாகக் கொடுத்தல். மொய்யெழுத்து - தருமசாதனவெழுத்து.மொருமொருத்தல், மொருமொரெனல் - ஒலிக்குறிப்பு. மொலுமொலுத்தல் - ஒலிக்குறிப்பு,தினவுக் குறிப்பு. மொல்லு - இரைச்சல். மொல்லுமொல்லெனல் - ஈரடுக்கொலிக் குறிப்பு. மொழி - சொல், மொழியென்னேவல்,கணு. மொழிக்கொடை - வித்யாதாநம். மொழிதல் - சொல்லுதல். மொழிந்தது மொழிதல் - செய்யுள்வழுவினொன்று. மொழி பெயர்த்தல் - பாஷை திருப்புதல். மொழிபெயர்ப்பு - பாழை திருப்பல். மொழிப்பொருள் - சொற்பொருள். மொழிமாற்று - பொருள்கோளெட்டினொன்று அது பயனிலைகட்கேற்ற மொழிகளைப் பயனிலைகட்கேலா மொழிகளோடுபுணர்ப்பது (உ.ம்) யானைக்குநீத்து முயற்கு நிலை. மொழிமாநம் - ஆகமவளவை. மொழிமுதலெழுத்து - சொற்குமுதனிற்கு மெழுத்து. மொழிமை - பழஞ்சொல். மொழியன் - பரும்பேன். மொழியிடையெழுத்து - சொல்லிடைநிற்குமெழுத்து. மொழியீற்றெழுத்து - சொல்லிறுதியினிற்கு மெழுத்து. மொழியொலிக்குறிப்பு - எழுத்தினோசைக் குறிப்பு. மொழியோசை - சத்தம்.மொழுக்கன், மொழுங்கன் - தடித்தஆள், வெண்மட்ட வேலை. மொழுக்கெனல் - ஒலிக்குறிப்பு.மொள்ளல், மொள்ளுதல் - முகத்தல்.மொறுமொறுத்தல், மொறுமொறெனல் - ஒலிக்குறிப்பு, மிகக் காய்த்தல். மோ மோ - ஓரெழுத்து, முன்னிலையசைச்சொல் (உ.ம்.) கேண்மோ,மோவென்னேவல். மோகநீயம் - மோகமின்மை. மோகப்படைக்கலம் - எதிரியைமயக்கும் படைக்கலம். மோகம் - ஆசை, உட்பகை யாறினொன்று, உன்மத்தம், காமம்,த ப் பி த ம் ,பஞ்சமாயையினொன்று அதுவிபரீத ஞான முண்டாக்கு வது,பஞ்ச பாணவத்தையி னொன்றுஅஃது அழுங்கலும் பிதற்றலும்,பாதிரி, மயக்கம், மதியீனம்,முருங்கை, வருத்தம், வாழை,விகார மெட்டினுமொன்று,வேட்கை, துக்கம். மோகரம் - உக்கிரம், மயக்கம், ஒலி. மோகரி - அசமதாகம். மோகரித்தல் - சினத்தார்த்தல், மயங்கல், ஆரவாரித்தல். மோகரிப்பு - ஆக்கிரமிப்பு, மயக்கம்,வீராவேசம். மோகர் - உன்மத்தர், சித்திரக்காரர். மோகலீலை - காம விநோதம். மோகவியாபாரி - காமவிகாரி, தூர்த்தன். மோகவிந்து - தண்டு. மோகவுவமை - பொருண்மேலெழுந்த வேட்கையான் வந்தமயக்கந் தோன்றவுரைப்பது(உ.ம்). கயல்போலு மென்று நின்கண் பழிப்பல் கண்ணின் செயல்போற் பிறழுந்திறத்தாற் கயல்புகழ்வன். மோகனக்கல் - கோயில்வாயின்மேற்படிக்கல். மோகனசாத்திரம் - அறிவை மயக்குநூல். மோகனநாட்டியம் - மகளிர் கூத்து. மோகனப்படைக்கலம் - மோகப்படை. மோகனமாலை - ஓராபரணம், ஓர்பிரபந்தம். மோகனம் - அணாப்பு, புணர்ச்சி,மயக்கம், மன்மதன் கணையினொன்று அஃது அட்டகருமத்தொன்று, கலைஞான மறுபத்துநான்கினு மொன்று, ஓரிராகம். மோகனவித்தை - மயக்குத் தொழில்இஃது அட்டகரும வித்தையினொன்று.மோகனாங்கனை, மோகனாங்கினி - மோகினி. மோகனாஸ்திரம் - மன்மதபாணம். மோகனி - மோகனப் பெண். மோகனீயம் - அட்டகுற்றத் தொன்றுஅது மோகமின்மை. மோகனை - மயக்கஞ் செய்பவள். மோகன் - மன்மதன். மோகாதி - முக்குற்றம் அது காமம்வெகுளி மயக்கம். மோகி - கஞ்சா. மோகிதன் - காமங்கொள்வோன்,மோகமுள்ளவன். மோகித்தல் - மயங்கல். மோகிப்பு - மயக்கம். மோகினி - ஓர் தேவதை, திருமால்கொண்ட பெண்ணுரு இது திருமால்பதினைந்தவதாரத்தொன்று. மோகினிப்பணம் - உற்சவவரிப் பணம். மோகொரம் - துருக்கர் பண்டிகை. மோக்கட்டை - மோவாய்க்கட்டை. மோக்கம் - தீர்தல், பரகதி, விடுகை. மோக்கல் - மணத்தல், மொள்ளல். மோக்குதல் - மணத்தல், முகந்துகொள்ளல். மோசகம் - துறவு, வாழை. மோசகன் - துறவி, விடுவிப்பவன். மோசகி - கிலுகிலுப்பைச்செடி. மோசநி - இலவரமரம், பாதரட்சை. மோசம் - அவத்தம், தவறு, பிசகு,வஞ்சனை. மோசனம் - ஓர்வகை நெல், கிரகணம்விடுகை, தீர்தல், துறத்தல்,விடுகை, முத்தி, கபடம். மோசாசம் - பருத்திப்பிசின். மோசாடம் - சந்தனம், வாழைப்பழம். மோசிகீரனார் - கடைச்சங்கப்புலவரிலொருவர். மோசிகை - உச்சிமுடி. மோசிகீரனார் - கடைச்சங்கப்புலவரி லொருவர். மோசிசாத்தனார் - புறநானூறு பாடியபுலவரிலொருவர். மோசித்தல் - தவறுதல், மோசம்போதல், கழித்துவிடல். மோசை - அவுரி, இலவு, வாழை,வசம்பு. மோஷகன் - தட்டான், திருடன். மோடசகன் - கள்வன். மோஷணம் - சேதித்தல், வதைத்தல். மோடனம் - அரைத்தல், காற்று. மோடன் - மூடன். மோடி - காடுகாள், பிணக்கு, மேட்டிமை, மௌடி, வேடிக்கை,துர்க்கை. மோடு - உயர்ச்சி, பிளப்பு, மேட்டிகை,முகடு, மூடத்தனம், மேடு, வயிறு. மோட்சமார்க்கம் - முத்திநெறி. மோட்சம் - இட்டம், கடன்செய்தல்,தீர்தல், மரணம், மோக்கம், உதயஇலக்கினத்திற்குப் பன்னிரண்டாமிடம். மோட்சவாசம் - மோட்சத்தி லிருத்தல்.மோட்சவாசி, மோட்சவாதி, மோட்ச வான் - மோட்சஞ்சேரப் பக்கு வன்,மோட்சத்திற் சஞ்சரிப் போன். மோட்சவிளக்கு - வீரசைவர் பிரேதமடக்குமிடத்து வைக்கும் விளக்கு. மோட்சாநந்தம் - மோட்சவின்பம். மோட்சோபாயம் - கதிபெறும் வழிவகை. மோட்டுத்தனம் - முரட்டுத்தனம். மோணம் - பழவற்றல், பாம்புப்பெட்டி. மோதகப்பிரியன் - விநாயகன். மோதகமரம் - குதிரைப்பிடுக்கன்மரம். மோதகம் - அப்பவருக்கம், இணக்கம்,ஓர் பணிகாரம், சந்தோஷம்,தோசை. மோதகர் - மகிழ்ச்சி யுடையவர். மோதகி - சந்தோஷம். மோதம் - ஓமம், களிப்பு, சந்தோஷம்,வாசனை. மோதயந்தி - காட்டுமல்லிகை. மோதரன் - மகோதரன். மோதல் - அடித்தல், இடித்தல்,பருத்தல். மோதவம் - வாசனை. மோதனம் - உவகை. மோதிதம் - சந்தோஷம். மோதிதன் - களிப்புடையோன். மோதிநி - கஸ்தூரி, மல்லிகை. மோதிரக்கள்ளி - ஓர் கொடி. மோதிரக்கன்னி - ஓர் செடி. மோதிரமாறுதல் - விவாக வுடம்படுக்கையிற் பெண்ணும் ஆணுங்கணையாழி மாற்றிக் கொள்ளுதல். மோதிரம் - விரலணி. மோதுதல் - மோதல். மோதை - வசம்பு. மோத்தல் - முகத்தல், மனங்கவர்தல். மோத்தை - வெள்ளாட்டுக்கடா. மோப்பம் - மணத்தல், மூக்கு. மோப்பி - கைம்பெண். மோப்பு - மோப்பம். மோய் - தாய். மோரடம் - கரும்புவேர், பெருங்குரும்பை வேர், வீழி. மோரகடம் - கரும்புவேர். மோரண்டம் - பெருங்குரும்பை. மோருதல் - முகத்தல். மோர் - மச்சிகை. மோலி - மௌலி. மோவாய் - தாடி. மோவாய்க்கட்டை - மோவாய். மோழல் - பன்றி. மோழை - கஞ்சி, கீழாறு, மடமை,மொட்டை, வெடிப்பு. மோறை - மோவாய். மோனம் - மௌனம் அது சாத்துவிதகுணத் தொன்று. மோனர் - முனிவர், மௌனிகள். மோனி - மௌனி. மோனை - ஆதி, ஓர் தொடை. மோனைத்தொடை - முதற்சீரின்முதலெழுத்தோடு பின்வருஞ் சீர்களில் ஒன்றனுள்ளேனும்பலவற்றி னுள்ளேனு முதலெழுத்தொன்றி வருவது. மௌ மௌகலிகுவி - காகம். மௌகூர்த்திகன் - முகூர்த்தங் குறிப்பவன். மௌக்திகம் - முத்து. மௌக்திக தண்டுலம் - வெண்சோளம். மௌக்திகப்ரஸவம் - முத்துச்சிப்பி. மௌஞ்சி - நாணற்புல்லாற் செய்தவரை ஞாண், முஞ்சி. மௌடி - ஓர் வித்தை, பகடம்,பரிகாசம். மௌட்டியம் - அறியாமை, மயக்கம். மௌட்டை - கைபொத்திக்குத்துங்குத்து. மௌண்டம் - ஓர் பலகாரம். மௌண்டிதம் - உபநிடத முப்பத்திரண்டினொன்று, முண்டிதம். மௌத்கல்யன் - ஓர் முநி. மௌத்காலம் - காகம். மௌத்திகம் - முத்து. மௌரலி, மௌர்வி - வின்னாண். மௌலன் - நல்லமிசத்தான். மௌலி - உச்சிக்குடுமி, கள், சடை,தலை, பூமி, மயிர்முடி, முடி. மௌவல் - முல்லை, வனமல்லிகை. மௌளம் - மோளம். மௌனம் - மோனம். மௌனியர் - முனிவர். மௌனேயம் - கந்தர்வ கணவிசேஷம். மௌனேயர் - ஒருவகைக் கந்தருவர். ய ய - இறந்தகால விடைநிலை (உ.ம்).போயது, ஓரெழுத்து. யக்கராசன் - குபேரன். யக்கராத்திரி - கார்த்திகாபூரணை.யக்கர், யக்ஷர் - இயக்கர். யக்கராத்திரி - கார்த்திகாபூரணை.யக்கன், யக்ஷன் - யக்கராசன், குபேரன்,இயக்கசாதியான். யக்ஞசூத்திரம் - முப்புரிநூல்.யக்ஞபுருடன், யக்ஞேசுவரன் - விஷ்ணு. யக்ஞோபவீதம் - பூணல். யக்கியசாலை - யாகசாலை. யக்கியசூத்திரம் - முப்புரி நூல். யக்கியசேடம் - யாகமிச்சில். யக்கியஸ்தானம் - யாகம் பண்ணுமிடம். யக்கியநாமிகை - மகநட்சத்திரம். யக்கியபசு - குதிரை, பலிக்கேதுவானமிருகம். யக்கியபுருஷன் - விட்டுணு. யக்கியம் - துவாபரயுகம், யாகம். யக்கியயோக்கியம் - அத்திமரம். யக்கியாரி - சிவன். யக்கியோபவீதம் - முப்புரிநூல். யக்கேசன் - குபேரன். யங்கூரா - அதிவிடையம். யசசு - புகழ். யசந்தன் - யாககர்த்தா. யசமானன் - தலைவன், யாககுரு,யாகத்தலைவன். யசஸ்வி - புகழாளன். யசனம் - யாகஞ்செய்தல், யாகம். யசாகன் - கொடையாளி. யசு - இரண்டாம்வேதம்.யசுசு, யசுரு - இரண்டாம்வேதம். யசோதை - நத்கோபன் மனைவி. யசோதரகாவியம் - சங்கமருவிய சிறுகாப்பியங்கள் ஐந்தனு ளொன்று. யச்சு - இரண்டாம்வேதம், புகழ். யட்சர் - ஓர் சாதியார். யட்சி - குபேரன் மனைவி.யட்சிணி, யக்ஷிணி - எட்சிணி, ஒருஜாலவித்தை.யட்டி, யஷ்டி - ஊன்றுகோல், தண்டு,மாலை, முத்துத்தாழ்வடம், அதிமதுரம். யதா - ஏற்ற, சரியான, தகுதியான. யதாகத்தவ்வியம் - சருவகத்தவ்வியம். யதாகற்பம் - கற்பனைப்படி. யதாகாரம் - உண்டி யொறுப்பு. யதாகாலம் - காலத்துக்கேற்க. யதாசத்தி - இயன்றமாத்திரம். யதாஸ்திசம் - அடியாறாய். யதாஸ்து - முற்றுமப்படியாக. யதாபூருவம் - தொன்றுதொட்டது. யதார்த்தம் - சரிமுறை, சத்தியம். யதி - அடக்கம், இளைப்பாற்றி,ஒன்றிப்பு, ஓரிருடி, கைம்பெண்,தாளப் பிரமாணம் பத்தினொன்று, முனி, மோனை, வாசகத்திற் றரிக்குமிடம், சந்நியாசி. யதிபாத்திரம் - பிச்சைப் பாத்திரம். யதிராஜர் - இராமநுஜர். யது - ஓரரசன், யயாதியின் மூத்தபுத்திரன்.யதுதானன், யதுநாதன் - கிருட்டினன்,கர்ணன். யதெந்து - என்ன, யார். யதேச்சை - இட்டம், இச்சைப்படி. யதேஷ்டம் - சுயேச்சை, மிகுதி,இஷ்டப்படி. யதேந்திரியம் - கற்புவழுவாமை. யதோத்தேசபக்கம் - இருந்த விடத்திருந்து கொண்டு காரியங்களைநடைபெறச் செய்தல். யத்தனம் - எத்தனம். யத்திரகிரகம் - சூத்திரம், செக்கு. யத்தினம் - எத்தனம். யத்திரகிரகம் - சூத்திரம், செக்கு. யத்தினம் - யத்தனம். யந்திரசாத்திரம் - இயந்திர மடைக்கும்வித்தை. யந்திரதாபனம் - சக்கரதாபனம். யந்திரம் - செக்கு, திரிகை, தீக்கடைகோல், தேர், பஞ்சரைக்குஞ்சூத்திரம், பொறி, மந்திரசக்கிரம். யந்திரலோகம் - பயறு. யந்திரு - ஆறுவோன், குதிரைப்பாகன், தேர்ப்பாகன். யமகம் - வந்தசொல்லேவருதல். யமகண்டம் - எமகண்டம். யமகாளிந்தி - சரயுநதி. யமகிங்கரன் - எமனேவற்காரன். யமகீடம் - ஓர்புழு. யமசபம் - இயமசபை. யமதக்கினி - சமதக்கினி. யமதூதன் - பாம்பினச்சுப்பற்களினொன்று, யமகிங்கரன். யமதூதி - பாம்பினச்சுப்பற்களி னொன்று. யமதேவதை - பரணி நட்சத்திரம். யமத்ருமம் - இலவமரம். யமபகினி - யமுனாநதி. யமபடன் - யமகிங்கரன். யமபாசன் - காலபாசம். யமப்ரியம் - ஆலமரம். யமம் - அடக்கம், இயமம், காக்கை,சனி, தரும நூல்பதினெட்டினொன்று, தவம், திருவிழா, பஞ்சகிருத்தியத் தொன்று. யமரதம் - எருமைக்கடா. யமராஜம் - யமுநாநதி. யமவாகனம் - யமரதம். யமவாசம் - சிறுகாய்ஞ் சொரி. யமவிரதம் - இயமானுட்டிப்பு, பட்சபாதமின்றி அரசுமுறை நடத்தல். யமளம் - இரட்டை. யமனி - இயமபுரம். யமனிகை - சீலைப்படல். யமன் - நமன். யமாந்தகன் - சிவன். யமி - முனிவன். யமீ - யமுநா நதி. யமுனாசனகன் - சூரியன். யமுனாப்பிராதிரு - யமன். யமுனை - சத்தநதிகளினொன்றுஅது காளிந்தி. யயாதி - குருகுலத்தரசர்களிலொருவன். யயு - அசுவமேதக்குதிரை, குதிரை. யவகம் - ஓர்வகைத் தானியம். யவகாரி - கிருட்டினன். யவசம் - வெடியுப்பு. யவசி - கழுதைப்பாலை. யவசூகம் - யவசம். யவட்சாரம் - எவட்சாரம், வெடியுப்பு. யவபலம் - மூங்கில். யவம் - நெல்லு, வாற்கோதுமை. யவரசம் - சிறுகாஞ்சொரி. யவனர் - துலுக்கர், மிலேச்சர்முதலயினோர், சோனகர்.யவநாலசம், யவலாசம் - வெடியுப்பு. யவனப்பிரியம் - மிளகு. யவனம் - சீக்கிரம், தேயமைப்பத்தாறி னொன்று. யவனர் - கம்மாளர், சித்திரக்காரர்,சோனகர். யவனாசார்யன் - சோதிட சாத்திர கர்த்தாவாகிய ஓர் முநி. யவனாரி - கிருட்டினன். யவனிகை - திரைச்சீலை. யவாகு - கஞ்சி.யவாநி, யவாநிகை, யவ்வனம் - ஓமம்,யௌவனம். யா யா - அஃறிணைப் படர்க்கைப்பன்மை வினா, அசைச்சொல்(உ.ம்.) யாபன்னிருவர், ஓரெழுத்து,ஓர் மரம், சந்தேகம், யாவை. யாகசாலை - வேள்விச்சாலை. யாகசேனன் - ஓரரசன், பாஞ்சாலன். யாகத்தம்பம் - வேள்வித்தூண். யாகத்திரவியம் - யாகப்பொருள். யாகபதி - ஓரரசன், இவன் திருமால்பதினைந்தவதா ரத்தொருவன்,யாகஞ்செய்பவன், இந்திரன்.யாகபத்தினி, யாகபன்னி - துரோபதை.யாகபாகம், யாகபோசனம் - அவிர்பாகம். யாகபோசனர் - வானோர். யாகம் - பலி, வேள்வி, பூர்ணாதி. யாகுவம் - சாவகம். யாக்கியவற்கியம் - அட்டாதசதருமசாத்திரத் தொன்று, உபநிடதமுப்பத்திரண்டி னொன்று. யாக்குதல் - கட்டுதல். யாக்கை - உடல், கட்டு, முயங்குதல்.யாக்கணம், யாங்கண் - யாங்ஙனம். யாங்கு - இடத்தின் ஐயுற்றசொல்,எவ்விடம். யாங்ஙனம் - எங்ஙனம். யாசகம் - இரப்பு, இராசயானை,மதயானை. யாசகர் - இரப்போர். யாசகன் - இரப்போன், வறிஞன். யாசமாநன் - யாசகன். யாசனம் - பூசாபலிநடத்தல், வெடித்தல், யாசித்தல். யாசனை - பிச்சை. யாசிதம் - இரப்புத்தொழில். யாசித்தல் - இரத்தல். யாஞ்ஞவற்கியம் - தருமநூல் பதினெட்டினொன்று. யாஞ்ஞவற்கியர் - ஓர் மிருதி நூலாசிரியர். யாடம் - காஞ்சொரி. யாடு - ஆடு. யாணர் - அழகு, தச்சர், நன்மை,புதுமை, வளமை, செல்வவருவாய், புதுவருவாய். யாண்டு - இட ஐயச்சொல், எங்கு,எப்பொழுது, காலம். யாண்டை - இடஐயச்சொல், எவ்விடம். யாதசாம்பதி - வருணன். யாதபதி - கடல், வருணன். யாதம் - இயாதம், பசுக்கூட்டம். யாதயாமம் - ஜீர்ணம். யாதவப்பிரகாசர் - ராமநுஜருடையவித்தியாகுரு. யாதவம் - யாதம். யாதவன் - கிருட்டினன், இடையன்,யதுகுலத்திற் பிறந்தவன். யாதவி - உமை, யதுகுலத்தவள், குந்தி. யாதனம் - தெப்பம், மரக்கலம். யாதனாசரீரம் - ஆக்கினை யனுபவிக்கத் தக்க சரீரம், புரியட்டகாயம், நரகர் சரீரம். யாதனை - துன்பம், நரகத்திற்கொல்லாது வருத்துநோய், மிக்கவேதனை. யாதி - ஆழியகருத்து, ஞாபகம். யாதிகன் - வழிச்செல்வோன். யாது - அஃறிணைப்படர்க்கையொருமைவினா, இராக்கதர் கள்,கள், ஞாபகம், பிசாசம். யாதுதானவர் - இராக்கதன். யாதும் - சிறிதும். யாதோ - ஐயச்சொல். யாதோநாதன் - ஸமுத்ராஜன். யாதோநிவாசம் - நீர். யாத்தல் - கட்டல். யாத்திராகரணம் - பிரயாணம் புறப்படல், பொழுதுபோக்கு. யாத்திராப்பிரசங்கம் - யாத்திரையிலிருத்தல். யாத்திரை - கடலேறிச்செல்லும்பயணம், கூத்து, திருவிழா, நடத்தல், பிரயாணம், வழக்கம். யாத்திரைக்காவி - புண்ணியஸ்தலதரிசனர் தரிக்குங் காவிவத்திரம். யாத்திரைத்தானம் - ஏழாமிடம். யாத்திரோற்சவம் - வெளித்திருவிழா. யாபம் - மைதுனம். யாபனம் - இகழ்ந்துவிடல், தாமதித்தல், பொழுது போக்குதல்,போக்குதல். யாபாரம் - வியாபாரம். யாப்பண்டம் - வயாப்பண்டம். யாப்பருங்கலக்காரிகை - ஓர் யாப்புநூல். யாப்பருங்கலம் - ஓர் யாப்புநூல். யாப்பியம் - எளிமை, பொழுதுபோக்கு, அதமம், இகழ்ச்சி. யாப்பியயாநம் - சிவிகை. யாப்பிலக்கணம் - செய்யுளியல் புணர்த்தும் விதி. யாப்பு - கட்டு, செய்யுள். யாப்புறவு - ஆராய்வு. யாப்புறுத்தல் - வலியுறுத்தல். யாமகோடம் - சேவல், நாழிகை வட்டம். யாமசரி - அரக்கன். யாமநேமி - இந்திரன். யாமபதி - சந்திரன். யாமம் - இடக்கைமேளம், இராத்திரிசாமம், தெற்கு, மாலைப் பொழுதின்பின் பத்துநாழிகை. யாமவதி - இராத்திரி. யாமளம் - இளமை, சோடு, பச்சை,ஒரு வகைத் தந்திர சாஸ்திரம். யாமளேந்திரர் - இந்திரகாளியநூலாசிரியர் ,இடைச்சங்கத்திற்குச் சிறிதுபிற்பட்டகாலத்திருந்த புலவர். யாமளை - காளி, பார்வதி. யாமி - இரா, கற்புடையாள், சகோதரி,தெற்கு, மகள், மருமகள். யாமிகன் - நகர்சோதனைக்காரன். யாமிகை - இராத்திரி. யாமிநீபதி - கர்ப்பூரம், சந்திரன். யாமியம் - அட்டாதச தருமசாத்திரத்தொன்று, சந்தனம், தெற்கு. யாமியன் - அகத்தியன். யாமியாயனம் - தெக்கணாயனம். யாமியை - இரா. யாமிருகம் - நாடகவகை பத்தி னொன்று. யாமினி - இராத்திரி. யாமினியம் - தெற்கு. யாமீரன் - சந்திரன். யாமீரை - இராத்திரி. யாமுகம் - ஆலோசனை. யாமுனம் - அஞ்சனக்கல். யாமுனாசாரியர் - ஓர் வைணவாசாரியர். யாமுனேட்டகம் - ஈயம். யாமை - இரா, தெற்கு, பரணி, ஆமை. யாம் - நாம். யாய் - தாய். யாரி - எதிரி, கதவு. யார்பதம் - வாலுளுவை. யாரும் - யாவரும். யார் - நத்தைச்சூரி, யாவர். யாலம் - ஆச்சாமரம். யாவகம் - காருளுந்து, செம்பஞ்சு. யாவசூகம் - வெடியுப்பு. யாவச்சீவம் - இச்சீவியத்துக் கடுத்தது. யாவண் - எவ்விடம். யாவதும் - சிறிதும், எல்லாம். யாவநாலம் - சோளம். யாவம் - அரக்கு, செம்பஞ்சு,நெல்லு, வணங்கிப்பூடு. யாவரும் - எல்லாரும். யாவர் - உயர்திணைப்படர்க்கைமுப்பாற் பொதுவினா, எவர். யாவள் - உயர்திணைப்படர்க்கையொருமைபெண்பால் வினா,எவள். யாவன் - உயர்திணைப் படர்க்கையொருமையான்பால் வினா,எவன். யாவும் - எல்லாம். யாவை - அஃறிணைப்படர்க்கைப்பன்மை வினா, எவை. யாழ - முன்னிலையசைச்சொல்(உ.ம்) செய் வினைமருங்கிற்செலவயர்ந்தி யாழ. யாழல் - கறையான். யாழோர்வட்டம் - காந்தருவமணம். யாழ் - அசுபதி, ஆந்தை, திருவாதிரை, நீர்ச்சுழியின் திரை, மிதுனவிராசி, வீணை. யாழ்நரம்பு - தந்திரி. யாழ்ப்பாணம் - ஓரூர். யாழ்ப்பாணர் - ஓர் தேசத்தார்,யாழ்வாசிப்போர். யாழ்முரி - ஓர் கவி. யாழ்வகை - குறிஞ்சி, நெய்தல், பாலைமருதமெனு நானிலத்தி யாழ். யாழ்வல்லோர் - கந்தருவர், வீணைவல்லோர். யாழ்வல்லோன் - நாரதன். யாளி - சிங்கம், சிங்கவிராசி,மரக்கலப் பாய்க்குநீர்,வீசுங்கருவி, யாளி, யானை,யானைபோன்ற ஒரு மிருகம். யாளியானை - பூட்கை. யாளியூர்தி - காளி, துர்க்கை. யாறு - ஆறு. யாற்றுநீர்ப்பொருள்கோள் - பொருள்கோளெட்டி னொன்று அஃதுஅடிதோறும் யாற்று நீரொழுக்குப்போல நெறிப்பட்டு அற்றற்றொழுகுவது. யானபாத்திரம் - மரக்கலம். யானமுகம் - பண்டியினேர்க்கால். யானம் - அறைவீடு, கள், சிவிகை,மரக்கலம், வாகனம், போதல்,போக்குப் போதல். யானை - ஆனை இஃது இராசசின்னத்தொன்று, வடதிசைப்பாலன் குறியுமாம். யானைக்கச்சை - யானை கழுத்தணிகயிறு. யானைக்கண் - இலைகாய் முதலியவற்றில் விழும்புள்ளி. யானைக்கம்பம் - யானை கட்டுந்தறி. யானைக்கள்ளி முளையான் - எழுமான். யானைக்காலை - யானை விட்டுநிற்கு மடைப்பு. யானைக்கால் - மொத்திக்கால், ஒருவியாதி, பெருங்கால், நாசிப்பூடு,யானை நெருஞ்சில். யானைச்சப்பரம் - யானைமேற் றவிசு. யானைச்சாலை - யானைக் கூட்டம். யானைச்சீரகம் - கத்தரி நாயகம். யானைத்தடிக்கா - புளிநரளை.யானைத்தடிச்சல், யானைத்தடிப்பு - புளிநடலை. யானைத்தண்டம் - யானை செல்புறவழி. யானைத்தந்தம் - யானைக்கொம்பு,யானைப்பல்.யானைத்தம்பம், யானைத்தறி - யானைகட்டுந்தூண். யானைத்திசை - வடக்கு. யானைத்திப்பிலி - ஓர் திப்பிலி. யானைத்தீ - பெரும்பசி விளைக்கும்ஒரு நோய். யானைநெருஞ்சி - பெருநெருஞ்சி. யானைப்பாகன் - யானைப்பணிக்கன், யானை மாவுத்தன். யானைப்புச்சான் - ஓர் செடி. யானைப்பெருங்காயம் - ஓர் பெருங்காயம். யானைமஞ்சள் - பெருமஞ்சள். யானைமட்டம் - இளயானை. யானைமாவுத்தன் - யானைப்பாகன். யானைமீன் - ஓர் பெருமீன். யானை முகவற்கிளையோன் - வீரபத்திரன்.யானைமுகவன், யானைமுகன் -விநாயகன். யானையாச்சான் - புளிநரனை. யானையுண்குருகு - சக்கரவாகம். யானையுரித்தோன் - சிவன். யானையேற்றம் - கசபரீட்சை, ஒருவித்தை. யானையைவிழுங்குமீன் - திமிங்கிலம். யானைவணங்கி - தேட்கொடுக்கி,யானை நெருஞ்சி. யானைவாழை - ஓர் வாழை. யானைவிச்சுளி - ஓர் கழுகு. யானைவீரன் - அரசருக்குத் துணைவரிலொருவன். யு யுகதருமம் - யுக பேதத்தினாலுண்டாகும் நடை. யுகந்தரம் - ஓர் மலை, தேயமைம்பத்தாறினொன்று, தேர் முதலியவற்றைப் பிணிக்குந் தறி.யுகபத்ரகம், யுகபத்ரம் - கோவிதாரரம். யுகபத்திகை - அசோகமரம். யுகப்பிரளயம் - யுகாந்தம், யுகாந்தவெள்ளம். யுகமுடிவு - உலக முடிவு. யுகம் - இரண்டு, இரு பொருள், ஓர்காலத்தளவு, நாலுமுழங் கொண்டது, நுகத்தடி, பூமி, யுக காலம். யுகவத்திரகம் - காட்டாத்தி. யுகளமந்த்ரம் - லக்ஷ்மீ நாராயணாதிமந்த்ரங்கள்.யுகளம், யுகளி - இரண்டு. யுகாதி - அருகன், கடவுள், வருஷாரம்பம், காந்தம், உலகாந்தம், யுகமுடிவு. யுக்தம் - தகுதி. யுக்மபத்திரிகை - அசோக மரம். யுக்மம் - இரண்டு. யுஜாநன் - சாரதி. யுதகம் - இரண்டு, ஐயம், சீலைத்தொங்கல், சம்பந்தம், நன்கொடை. யுதிட்டிரன் - தர்மநந்தநன். யுத்தகளம் - போர்க்களம். யுத்தங்கலத்தல் - போர் செய்தல். யுத்தசன்னத்தன் - போர்க் காயத்தமானோன். யுத்தசாரம் - குதிரை. யுத்தத்தானம் - ஆறாமிடம். யுத்தந்தொடுத்தல் - போர் மூட்டுதல். யுத்தமுகம் - போர்முகம். யுத்தம் - உசிதம், கூடுதல், நாலுமுழங்கொண்டது, நியாயம், பொருத்தமானது, போர். யுத்தரங்கன் - குமரன். யுத்தவேது - ஓரலங்காரம், அதுபொருத்தமான வேது. யுத்தி - அருத்தாபத்தி, ஆராய்வு,உபாயம், ஓரலங்காரம், கூடுதல்,தகுதி, பொருத்தம், மேற்கோள்கூறல், யூகை, யோசித்தல், வழக்கம், விவேகம், நியாயம், அனுமானம். யுபம் - சாமர்த்தியம், புத்தி. யுயு - குதிரை. யுயுதாநன் - இந்திரன், ஸாத்யகி. யுவ - ஒன்பதாவ தாண்டு. யுவதி - பதினாறு வயதுப் பெண்,பூரணாதி, இளம்பெண். யுவநாசுவன் - சூரிய குலத்தரசரிலொருவன். யுவராசன் - இளவரசன், ஓர் சமணகுரு. யுவன் - பதினாறுக்குமேல் முப்பதுவயசுக்குட்பட்டவன். யூ யூகம் - அகப்பொருளறிதல், ஓர் புல்,கருங்குரங்கு, கவந்தம்,. காந்தி,கோட்டன், தருக்கம், படை,படை வகுப்பு, பெண் குரங்கு,பெண் முசு, பேன், யோசிப்பு,விவேகம். யூகவான் - புத்திமான். யூகி - யூகியென்னேவல், விவேகி. யூகித்தல் - ஆராய்தல், யோசித்தல்.யூகிபாடை, யூகிப்பயில் - ஓர் பயிற்பேச்சு. யூகை - கல்வி, பேன்.யூதநாதன், யூதபதி, யூதபம், யூதபன் - இனத்தைக் காக்கு மியானை,யானைக் கூட்டத்திற் றலை யானை. யோ யோகக்கட்டு - இரு காலுஞ் சம்மணமாய்மாறியக் கால்களையு மிடையையுஞ் சேர்த்துத் தொடுப்பது. யோகக்காட்சி - தேசகால விகற்பமின்றித் தன் செயலற்றுச் சிவன்செயலிற் கூடி யறியுமறிவு,யோகத் தாற் காணுமறிவு. யோகசத்தி - நவசாரம். யோகசமாதி - யோக நிலை எட்டினொன்று அஃது இந்திரியாதிதத்துவ சகிதமாய் யாக்கையுணின்றும் அவற்றிற் பற்றின்றயிருக்கும் ஆத்தும தரிசனம். யோகசம் - சிவாகம மிருபத்தெட்டினொன்று. யோகசரன் - அனுமான். யோகசாதனை - யோகப் பரீட்சை,யோகத்தை அப்பியசித்தல். யோகசாத்திரம் - யோகாப்பியாசநூல் இது கலைஞான மறுபத்துநான்கினொன்று. யோகசித்தி - யோகபலிதம். யோகசேமம் - சமாசாரம், செய்தி. யோகசைவம் - ஓர் சைவம். யோகம் - கூடல். யோகஞ்சாதித்தல் - யோகம் பழகுதல். யோகஞ்செய்தல் - தியானம் பண்ணுதல். யோகட்சேமம் - யோகசேமம். யோகதண்டம் - யோகமுத்திரைக்கோல். யோகதீட்சை - ஓர் தீட்சை. யோகஸ்நாநம் - எழுவகை ஸ்நாநத்தொன்று அது யோகாப்பியாசத்தா வாத்தும சுத்தியடைதல். யோகநாலிகம் - ஓர் மீன். யோகநித்திரை - அறிதுயில். யோகநிலை - யோகானுட்டிப்பு. யோகநூல் - யோகசாத்திரம். யோகப்பட்டை - யோகக்கட்டுக்கேற்றகச்சு.யோகபரீக்கை, யோகபரீட்சை - யோகப்பயிற்சி. யோகபாதம் - யோகநிலை. யோகபீடம் - யோகாசநம். யோகப்பிரத்தியட்சம் - யோகக்காட்சி. யோகமாயை - பகவதி, விஷ்ணுமாயை. யோகமார்க்கம் - யோகநிலை. யோகம் - அட்டயோகம், அதிட்டம்,உபசாரம், உபாயம், உயர்ச்சி,உற்சாகம், எத்து, கூடல், கூட்டம்,கூட்டல், சாவு, சிவிகை, சூத்திரம்,தகுதி, தியானம், நிஷ்டை, பக்கம்,பஞ்சாங்கவுறுப்பி னொன்று,பலன், பொருத்தம், போர்க்கவசம்,வரம், கலத்தல், மருந்து, யுக்தி. யோகரங்கம் - கொளுஞ்சிமரம். யோகரூடி - காரணவிடுகுறி. யோகர் - சமணமுனிவர், முனிவர். யோகவாகி - இரசம். யோகாசநம் - யோகஞ்செய்வோரிருப்பு அது சுவத்திகமுதனூற்றெட்டுவகை யிருப்பு. யோகாசாரியன் - யோகபோதகன்,யோகாப்பியாசி. யோகாதிசயம் - சுகம், நிலைபரம். யோகாப்பியாசி - யோகம் பழகுவோன். யோகாரங்கம் - கொளுஞ்சிமரம். யோகார்த்தம் - திரிசொல், பல கருத்துடைய ஒருசொல். யோகி - அரன், அருகன், ஐயன்,நிஷ்டைசெய்வோன், முனிவன்,மாசாத்தன். யோகிகள் - முனிவர். யோகிதண்டம் - பிரம்பு. யோகித்தல் - ஆழ்ந்து நினைத்தல். யோகிப்பு - சிந்திப்பு. யோகினி - காளி, காளியேவல் செய்பவன், யோகசித்தி பெற்றவள். யோகினிதிசை - யோகினி தேவதையானடப்பது. யோகீசுவரன் - யாக்கியவற்கிய முநி,யோகஞ் செய்வோன். யோகீசுவரி - துர்க்கை. யோகு - யோகாப்பியாசம், யோகம். யோகேசன் - சிவன், முனிவன். யோகேசுவரன் - க்ருஷ்ணன். யோக்கியதாபத்திரிகை - நடத்தைக்கடுதாசி, தகுதியைக் குறிக்கும்கடுதாசி. யோக்கியதை - யோக்கியம், தகுதி. யோக்கியதைச்சீட்டு - யோக்கியதாபத்திரிகை. யோக்கியபாத்திரம் - யோக்கியவான். யோக்கியம் - ஆசாரம், தகுதி.யோக்கியர், யோக்கியாளர் - தக்கவர்,பெரியோர். யோக்கியவான் - ஒழுக்க முதலியவற்றிற் றிறம்பாதவன். யோசனம் - யோசனை. யோசனன் - கடவுள். யோசனவல்லி - மந்திட்டிவேர்,வல்லாரை. யோசனை - ஆலோசனை, ஓசை,ஓரெல்லையளவு, தியானித்தல்,புத்தி, கூடுதல், நான்கு கூப்பிடுதூரம். யோசனைகந்தி - விசாயன்றாய். யோசனைவான் - யூசுவான். யோசித்தல் - ஆராய்தல், கூட்டுதல். யோசியம் - சோதிடம். யோசியர் - சோதிடர். யோதனம் - படைக்கலம், யுத்தம். யோதனன் - போர்வீரன். யோது - அளவு. யோதேயன் - போர்வீரன். யோதைகள் - அறிவுடையோர். யோத்திரம் - நுகக்கயிறு. யோநலம் - ஓர் தாநியம். யோனி - ஆண்குறி, காரணம், நீர்,பிறப்பு, பெண்குறி, பிறப்பிடம். யோனிக்கலப்பு - சாதிக்கலப்பு. யோனிசங்கரன் - பிறப்பினா லிழிந்தோன். யோனிபேதம் - பிறவிபேதம். யோனிப்படுதல் - பிறத்தல். யோனிப்பொருத்தம் - மணப்பொருத்தம் பத்தினொன்று. யோனிமுத்திரை - யோனியாகாரமாகச் செய்யு முத்திரை. யோனிரஞ்சநம் - பூப்பம். யோனிலிங்கம் - யோனிமணி. யோனிவாய் - யோனி, உபஸ்தம். யௌ யௌகிகம் - பகுபதம். யௌதகம் - சீதனம். யௌதம் - ஓரளவு, பெண்கள் கூட்டம். யௌவனலட்சணம் - அழகு,கொங்கை. யௌவதம் - யவ்வநம், இளம்பெண்கள் கூட்டம். யௌவனகண்டகம் - முகப்பரு. யௌவனதசை - வாலிபம், இளமைப்பருவம்.யௌவநாசுவகன், யௌவநாசுவன் - மாந்தாதா. யௌவநிகை - பதினாறு வயதுதொடங்கி ஐம்பது வயதுக்குட்பட்ட பெண். யௌவனம் - அழகு, இளமை,களிப்பு, மகளிர் கூட்டம். ர ரஹஸ்யம் - மறை. ரகு - ஓர் அரசன், தீர்க்கயாஹுபுத்திரன், அஜன் தந்தை இவன்ஆண்மையிலும் கல்வியிலும்சிறந்தவன், விசுவஜித் என்னும்யாகம் செய்து அந்த யாகத் திற்குச்சென்றிருந்த அந்தணர் கூட்டத்திற்குத்தன் செல்வ முழுதும் வாரிவழங்கினவன். ரக்ஷகன் - காப்போன். ரக்ஷணம் - காப்பு. ரiக்ஷ - கவசம். ரக்தபீஜன் - சும்ப விசும்பா சகோதரிபுத்திரன், இவனுடம்பிலிருந்துசிந்துகிற ரத்தத்துளிகள் எத்தனையோ அத்தனை அசுரர் பிறப்பார்களென்று நியமமிருந்தமையால் அதனை நினைத்துக் காளிகாதேவி கராளரூபந்தாங்கி ஒருதுளியாவது சிந்தாமல் அவனைக்கொன்று தொலைத் தாள். ரங்கநாதன் - திருவரங்கத்து விஷ்ணு. ரங்கு - நிறம். ரஜஸ்வலை - தூரஸ்த்ரீ. ரசசு - அநேநசு வமிசத்து திரிககுத்தன்தந்தை. ரசனை - திதிபுத்திரி, துஷ்டாவின்டி. ரசாதலம் - கீழேழுலகத்தொன்று,அது மலை மயமாயுள்ளதுஇதற்கு அரசன் வாசுகி வாமனாவதார மெடுத்த விஷ்ணுவினால்மிதித்தழுத்தப்பட்ட பலிச் சக்கிரவர்த்தி போயுரைந்தவிடம். ரசிகநாதன் - ஒரு ஆந்திரகவி இவராற் செய்யப்பட்ட இராமாயணம் இரங்க நாத ராமாயணமென்னும் பெயரால் விளங்குகிறது. ரசீது - பொருள் பெற்றதற்கு அறிகுறியாகிய எழுத்து. ரசை - பிரஜாபதியின்மனைவி,அகன் என்னும் விசுவிக்குத்தாய். ரஜன் - பிரியவிரதன் வமிசத்து விரஜன் புத்திரன், ஆயுபுத்திரன்,புரூரவன் புத்திரன், நகுஷன் தம்பி. ரஜோகுணம் - ஒரு குணம். ரஜ்ஜுசர்ப்பம் - கயிற்றிலரவு. ரஞ்ஜனம் - சந்தோஷிக்கச் செய்வது. ரணரங்கம் - போர்க்களம். ரதம் - தேர். ரதிகள் - ஜெயசேனன் புத்திரன். ரதிதேவி - மன்மதன் மனைவி. ரதீதரன் - இக்ஷ்வாகுதம்பி நபகன்வமிசத்து அம்பரீடன் புத்திரனாகிய விரூபன் பௌத்திரன். ரத்நபரீiக்ஷ - ஒரு வித்தை. ரத்நம் - அரதனம். ரத்நாவளி - ஒரு வடமொழி நாடகநூல். ரந்திதேவன் - பூருவமிசத்தன்,சங்கிருதி புத்திரன். ரந்த்ரம் - துளை. ரபசன் - ஆயுவின் பௌத்திரன்,கம்பீரன் தந்தை, ஒரு சம்ஸ்க்ருதநிகண்டு செய்த பண்டிதன். ரமணி - ரம்யமான பெண். ரமா, ரமை - இலக்குமி. ரம்பம் - அரம். ரம்பை - அரம்பை, இந்திரன் சபையில்நடனமாடும் ஒரு தேவதாசி. ரா ராகம் - இராகம். ராகவன் - இராமன். ராகு - ராஹு, இராகு, விப்ரஜித்துபுத்திரன், இவன்தாய்சிங்கிகை;இவன் தம்பி கேது; இவ்விருவரும் காசிபன் பௌத்திரர். ராகை - தாதாவின் மனைவியரிலொருத்தி, சுமாலிகள், தூஷணன்திரிசிரன் என்பவர்க ளுக்குத் தாய். ராக்ஷஸர் - காசிபனுக்குச் சுரசையிடத்துப்பிறந்த புத்திரர்கள். ராக்ஷஸன் - இராக்கதன். ராஜா - அரசன். ராசி - மேஷமுதல் மீனமிறுதியாயுள்ளபன்னிரண்டு ராசிகள், இராசி. ராணி - அரசி. ராஜதர்யன் - நாரீஜங்கன். ராஜன் - சந்திரன், இந்திரன், ஒருயக்ஷன். ராஜாநகன் - உத்தம பண்டிதர்களுக்கு முற்காலத்தில் அளிக்கப்பட்ட ஒரு பட்டம். ராஜராஜநரேந்திரன் - வேகி தேசாதிபதி இந்த அரசனது சமஸ்தாநவித்வானே நன்னயப்பட்டவன். ராஜாதிதேவி - வசுதேவன் தங்கை,ஐயநேசன் மனைவி, இவள்புத்திரர் இருவர், அவர் விந்தன்அநுவிந்தன் என்பவர். ராஜ்யம் - இராச்சியம். ராதை - கிருஷ்ணன் பிரியநாயகி. ராத்திரி - ராத்திரி, இரவு. ராமர் - விஷ்ணு தசாவதாரங்களுள்ஏழாம் அவதாரமாயுள்ளவர்,இவர் இக்ஷ்வாகு வமிசத்திலேஅஜன் புத்திரனாகிய தசரதசக்கிர வர்த்திக்குக் கௌசலையிடத்துப் பிறந்த புத்திரர், இவர்மனைவி சீதை. ராமாராஜபூஷணம் - பட்டுமூர்த்தி. ராமாநுஜாசாரியர் - விசிஷ்டாத்வைமதோத்தாரகராகிய இவர் எண்ணூற்றிருபது வருஷங்களுக்குமுன்னிருந்தவர், இவர் தந்தையார்ஆசூரிகேசவாசாரியர், தாயார்காந்திமதி, இவர் ஜந்மஸ் தாநம்பூதபுரம் (ஸ்ரீபெரும் பூதூர்) இவர்வித்யாப்யாஸஞ் செய்த விடம்காஞ்சி. ராவணன் - இராவணன், ராக்ஷஸர்தலைவன், இவன் ராஜதாநிலங்காபுரி, புலஸ்தியன் புத்ரனாகிய விஸ்ரவாவுபுத்ரன் தாயஸுமாலிபுத்ரியாகிய கைகஸி, இவன்பாரி மயன் மகளாகிய மந்தோதரி(மண்டோதரி). ராஷ்ட்ரபாலன் - கம்ஸன் தம்பி. ராஷ்ட்ரபாலிகை - உக்ரஸேகன்புத்திரி, ஸ்ருஞ்ஜயன் பாரி. ரி ரிஷி - இருடி. ரிபு - சத்துரு, யதுவினது நான்காம்புத்திரன். ரிபுஞ்ஜயன் - ப்ருஹத்ரதன் வம்ஸத்துமகததேனு ராஜர்களுள் கடையரசன், இவன் தனது மந்த்ரிஸுக்ரீநகனாற் கொல்லப்பட்டவன். ரீதி - இரீதி. ரு ருகன் - வருகன் தந்தை, விஜயன்புத்திரன். ருக்மணி - ருக்மிணி, கண்ணன் மூத்தமனைவி, பீஷ்மகன் புத்திரி, பிரத்தியும்னன் தாய்.ருக்மகேஸன், ருக்மதரன், ருக்மநேத்ரன், ருக்மபாஹு - ருக்மிதம்பியர்.ருக்மன், ருக்மேஷு - ருசிகன் புத்திரர்,ஸ்யாமகன் ஸஹோதரர். ருக்மி - விதர்ப்பராஜனாகிய பீஷ்மகன்மூத்தமகன், ஸ்ரீருக்மிணீ தமையன். ருக்ஷயன் - மஹாவீரன் புத்திரன்,இவனுக்குப் புஷ்காராருணி, கவி,த்ரயாருணி எனமூவர் புத்திரர்,இவர்கள் ஸந்ததியார் ப்ராஹ்மணராயினர். ருசி - சுவை, ஒருப்ரஜாபதி, ஸதரூபன்புத்திரியாகிய ஆஹூதிஇவன்பாரி, இவளிடத்திற் பிறந்தபுத்திரன் யஜ்ஞன். ருசிகன் - தர்மபுத்திரன், இவன் புத்திரர் ஸ்யாமகன், பிருது, ருக்மேஷு,ருக்மன், ப்ருஜித்து என்போர். ருசிதரன் - குரு. ருஷி - இருடி. ருணம் - கடன். ருத்ரன் - திரிமூர்த்திகளுலொருவராகிய ஸம்ஹார கர்த்தா, சிவன். ருத்ரகோடி - ஒரு தீர்த்தம். ருத்ரபர்வதம் - கங்கைக் கரையிலேயுள்ள ஒரு மலை. ருத்ரப்ரயாகை - மந்தாகிநிக்கும்அளக நந்தைக்கு மிடையேயுள்ள nக்ஷத்ரம். ருத்ரர் - இவர் அஜான், ஏகபாதன்,ஹரன், அஹிர்ப்புத்யன், ஸம்பு,த்ரியம்பகன், அபராஜிதன்,ஈஸாநன், த்ரிபுவநன், த்வஷ்டா,ருத்திரன் எனப்பதினொருவர்இவர்களை ருத்திரன் மாநஸபுத்ரரெனவழங்குவர், ப்ரஹமமாநஸபுத்ரரெனவும் படுவர். ருத்ரன் - த்ரி மூர்த்திகளு ளொருவராகிய ஸம்ஸாரகர்த்தா, சிவனுக்கும் பெயராம், ப்ரஹ்மாவினது புத்ரருள்ளு மொருவராவர்ஸ்ரீகண்ட ருத்திரர் முதலியருத்திரபேத மெண்ணில. ருத்ராக்ஷம் - சைவர் தரிக்கும் ஒருமணி. ருமை - சுக்ரீவன் மனைவி. ரூடி - இடுகுறி. ரூபம் - உருவம். ரூபகம் - உருவம். ரூபை - ஒரு நதி. ரூபாஸ்வன் - க்ருதாஸ்வன். ரூபாவாகிகள் - ரூபாநதீதீர வாஸர்கள். ரூபை - சுக்கிமந்தமென்னு மிடத்திலிருந்து பாய்கின்ற வொருநதி. ரே ரேகை - இரேகை. ரேசகம் - இரேசகம். ரேணுகை - பரஸுராமன்தாய்,ஜமதக்நிபாரி. ரேணுமதி - நகுலன்பாரி. ரேவதி - ஒரு நக்ஷத்திரம், இரேவதி,ரைவதபர்வதமீதில் தாமரைத்தடாகத்திற்பிறந்த ஒரு கந்யகைஇவளை பரமஸன் என்னு முனிவர்எடுத்து வளர்த்தார், இவள்புத்திரன் ரைவதமது. ரோ ரோகம் - வியாதி. ரோகி - வியாதியஸ்தன். ரோசனை - வசுதேவர்பாரிகளுள்ஒருத்தி. ரோதனை - உபத்திரவம். ரோமம் - மயிர். ரோமஸித்தாந்தம் - ஜ்யோதிஷஸித்தாந்தங்களுளொன் று ,இதுரோமகன் என்னும் பண்டிதன் செய்தது. ரோமகபுரி - இது பூர்வகாலத்திலே,மேகலா ரேகையிலே இலங்கைக்கு மேற்கே தொண்ணூறுபாகை தூரத்திலிருந்த பட்டணம். ரோமகன் - ரோமகபுரியிலிருந்துஆரிய தேசத்தில் வந்து ஆரியசாஸ்திரங்களைக்கற்று விளங் கினமுற்காலத்துப் பண்டிதன். ரோமஸன் - இந்திரன் ஏவலால்அருச்சுநன்நாகலோகத்தி லிருக்கிறானென்று தருமருக் குணர்த்தி,அருச்சுநனைத் தீர்த்த யாத்திரைசெய்ய ஏவிய முனிவர். ரோஷம் - கோபம். ரோஹிணி - நக்ஷத்திரங்களுளொன்றுதக்ஷன் மகள், சந்திரன்அதிப்ரீதை யாகிய நாயகி, பலராமன் தாய், வசுதேவன் மனைவி.ரௌ ரௌத்திராசுவன் - அஹம்யாதிபுத்திரன், இவனுக்கு க்ருரு தாசியினிடத்திற் பிறந்த புத்திரம் பதின்மர், இவர்களில் மூத்தவன் இருசேயன். ரௌரவம் - ஒருநரகம், இதில் மிகுந்தபாவம் செய்தவர்களை யமபடர்வீழ்த்தி வருத்துவர், இரண்டாயிரம் யோசனை சதுரமாயுள்ளது, இந்தநரகம் முழங்கால்ஆழம் உருக்கிய செம்புநீர்ப்பரவையா யிருப்பது. ரௌரவம் - ஒரு நரகம். ரௌகிதம் - கௌரவர் சேனைதங்கியவனம். ல லகரி, லஹரி - அலை, பேரலை. லகிமா, லஹிமா - ஒரு சித்தி. லகு - இலேசு. லக்ஷணம் - இலக்கணம், அழகு. லக்ஷம் - நூறாயிரம். லக்ஷ்மணன் - இலக்குமணன். லக்ஷ்மீ - இலக்குமி. லக்ஷ்யம் - குறி. லக்நம் - இலக்கினம். லங்காதேவி - தருமன் மனைவியாகிய தக்ஷன்மகள், இவளுக்குலம்பா என்றொரு பெயருமுண்டு. லங்காபுரி - லங்கை, ராவணன்இராஜதானி. லங்கினி - இலங்கை நகரத்தைக்காவல் செய்திருந்த வோரரக்கி,இவள் வாயு புத்ரனாகிய ஆஞ்சநேயனால் கொல்லப்பட்டாள். லங்கை - லங்காபுரி காண்க. லஜ்ஜை - நாணம். லதை - கொடி. லம்போதரன் - விநாயகன். லயம் - ஒடுக்கம். லலாடம் - நெற்றி. லலிதா - அம்பிகை. லவங்கம் - கிராம்பு. லவலேசம் - மிக அற்பம். லவணம் - உப்பு. லக்ஷ்மணவதி - கௌடபுரி. லக்ஷ்மணன் - ஸ்ரீராமருக்குத் தம்பி,தசரதனுக்குச் சுமித்திரை யென்னும் மனைவியினிடத்திற் பிறந்தமகன். லக்ஷ்மி - திருப்பாற் கடலைத்தேவாசுர ராகிய இருதிறத்தாரும்கடைந்து அமிர்தம் பெற்காலத்தில் அந்தக் கடலிற் றோன்றியபெண்ணரசியார், இவர் திருமாலின் வலத்திருமார்பில் வாழ்ந்திருப்பவர், இவர் செல்வங்களுக்கெல்லாம் அதிதேவதையாயிருப்பவர். லதை - ஒரு அப்ஸரஸ்த்ரீ, இவள்,பூங்கொடிபோலிருப் பவளாததால் இவளுக்கு இப்பெயருண்டாயிற்று, (லதை கொடி). லம்போதரன் - விநாயகன், இவர்,சரிந்த வயிற்றை யுடையராதலால்இவர்க்கு இப்பெயருண்டாயிற்று. லவணாசுரன் - மதுபுத்திரன், இவன்உலகத்திலுள்ள சாதுக்களெல்லாரையும் வருத்துவதே தொழிலாகக் கொண்டு திரியுங் காலத்திலே, சத்துருக்கனாலே கொல்லப்பட்டவன். லவன் - சிரீ ராமர் புத்திரன். லா லாகவம் - லகுத்தன்மை, சாமார்த்தியம். லாங்கலி - பலராமன். லாங்கலினி - ஒரு நதி. லாசகன் - சிவன். லாடன் - லாடதேசத்தான். லாபம் - பேறு. லாவனை - கொஞ்சுதல். லாவண்யம் - அழகு. லி லிகிதம் - கடிதம். லிங்கம் - குறி, பால், சிவலிங்கம்,சிவபெருமானார், ஆன்மாக்கள்தம்மை வழி பட்டுய்யும்படிகொண்ட நிர்க்குசொரூபமாகிய சகளவடிவம் பீடமும்லிங்கமும் சதாசிவவடிவம் அதுகன்மசாதாக்கிய வடிவமெனவும்படும், பீடம் சத்தியையும் லிங்கம்சிவத்தையும் குறிக்கும். லிங்கி - இலிங்கி. லிபி - எழுத்து. லீ லீலாவதி - இரணியகசிபன் மனைவி,ப்ரஹ்லாதன் தாய், பாஸ்கராசாரியர் புத்ரி, இவள் பொருட்டேலீலாவதியென்னும் பிரபல கணிதநூல் பாஸ்கராசார் யராலேசெய்யப்பட்டது, துர்க்கை லீலாவதியென்னுங் கணித நூலிலேவல்லவளாகிய பின்னே தான்செய்த நூல்களை யெல்லாம் தன்தந்தை பெயரால் பிரசுரித் தாள்என்பர். லீலை - விளையாட்டு. லே லேககன் - எழுதுவோன். லேஹ்யம் - நக்கித் தின்னும் மருந்து. லேசம் - அற்பம். லை லைங்கம் - லிங்க புராணம், நந்திகேசுரராற் சொல்லப்பட்ட புராணம். லோ லோகபாலர் - பூமியைக் காக்கின்றவர்பூமிக்குநாற் புறத்திலும் லோகாலோக பர்வதத்திலேயிருந்துபூமியைக் காக்கின்ற சுதந்தவன்,சங்கன், ஹிரண்யரோமன், கேதுமந்தன் என்னும் நால்வர் இப்பெயர் பெறுவர். லோகம் - உலகம். லோஹம் - பொன். லோகாலோகம் - சங்கரவாளகிரி இதுவட்டவடிவா யிருப்பது, இதுவரைக்குந்தான் சூரியகிரணம்வியாபிக்கும், மனிதர் வசிக்கவொண்ணாத பூப்பிரதேசம்அலோக மென்றும் வசித்தற்குரியது லோகமென்றும் சொல்லப்படும், பூகோளத்தின்அதியுத்தர பாகமும் அதிகக்ஷிணபாகமும் அலோகமாம், இரண்டையும் பிரிக்குமெல்லையேலோகா லோக பர்வதமாம். லோகிதாசியன் - அரிச்சந்திரன்மகன். லோகித்தியநதி - தேவாரணியத்தருகேயுள்ள வோர்நதி. லோபம் - குறைவு, பேராசை. லோபாமுத்திரை - அகஸ்ய முனிவர்மனைவி, விதர்ப்பதேசத்தரசன்,மகள் புலஸ்தியர் தங்கை. லோமபாதன் - அங்கதேசத்தரசன். லோலா - லோலை லவணாசுரன்தந்தையாகிய மதுவின் தாய். லௌ லௌகிகன் - உலக விஷயங்களில்ஈடுபட்டவன். லௌகீகம் - உலகசம்பந்தம்,சிற்றின்பம். லௌகீகதருமம் - உலகாசாரம் வ வஃகான் - வகரம். வககி - எருது, காற்று, சினேகிதன். வகது - எருது, பிரயாணக்காரன். வகத்திறம் - வாகை. வகந்தம் - காற்று, குழந்தை. வகம் - காற்று, வழி, வாகனம், குதிரை. வகரம் - வகர எழுத்து. வகனிசூதனன் - வீமன். வகன் - குபேரன், மகன். வகாரத்திரவியவித்தை - பஞ்சாக்கரவித்தைகளுண் மூன்று வித்தை. வகாரம் - ஓரெழுத்து. வகித்தல் - சகித்தல். வகிரங்கம் - பகிரங்கம். வகிரியாகம் - வெளியரங்கப்பூசை. வகிருதல் - அறுத்தல், கோதல்,பங்குசெய்தல், போழ்தல். வகிரேந்திரியம் - அறிகருவி. வகிர் - நரம்பு, பிளவு, வகிரென்னேவல், வழி, வார். வகிர்தல் - வகிருதல். வகுண்டம் - கவிழ்தும்பை. வகுண்டிகம் - கஞ்சாங்கோரை. வகுண்டிமடம் - வாலுளுவை. வகுதி - வகுப்பு. வகுத்தல் - வகைப்படுத்தல். வகுத்திரம் - தெப்பம். வகுத்திராபிகாரம் - பஞ்சேந்திரியம். வகுத்துக்காட்டல் - ஓர் யுத்தி, அதுதொகுத்துக்காட்டியவைகளைவேறு விரித்துக் காட்டுதல். வகுந்து - வழி. வகுப்பு - அழகு, பகுப்பு, பொலிவு. வகுலி - ஓர் மீன். வகுளம் - மகிழமரம். வகுளாபரணர் - சடகோபர், நம்மாழ்வார். வகுளி - ஒலி. வகுள் - சமுத்திராப்பச்சை. வகுளிநாதர் - நவநாதசித்தரி லொருவர். வகை - இனம், உபாயம், ஏது, கூறுபாடு, தரம், பகுப்பு, முதல், முறை,வகுப்பு, வழிவகை, குறுந்தெரு,விதம், தன்மை, திறம், முதல்.வகைதேடுதல், வகைபார்த்தல் - உபாயந் தேடுதல். வகைபுனைதல் - வகைபண்ணல். வகைப்படுதல் - பங்குபடுதல். வகைப்படுத்தல் - பங்கிடுதல். வகையகத்திணை - தொகையாயுரைத்த பொருளை வகையறுத் துரைத்தல். வகையரா - உள்ளிட்டார். வகையிடுதல் - வகைப்படுத்தல். வகையுளி - அவ்வச்சொன் முடிவேசீர் முடிவாக்கித் தளைகொள்ளாமல் வேண்டிய விடத்துச்சீர்முடிவு செய்து தளைகோடல். வக்கட்டை - கடவான். வக்கணம் - நாகரிகம், நிந்தை,பட்டப்பேர், மார்பு, வர்ணனை,விற்பன்னம். வக்கணாத்தி - ஓர்பூண்டு. வக்கணை - வணக்கம். வக்கபாகை - ஓரூர். வக்கரை - பக்கரை. வக்கா - ஓர்பட்சி. வக்காமணி - ஓர் மணி. வக்கான் - வைக்கான். வக்கிரகட்சம் - கரவாளம். வக்கிரகண்டம் - இளந்தை. வக்கிரகம் - மழைத்தடை. வக்கிரக்கிரீவம் - ஒட்டகம். வக்கிரசச்சு - கருடன், கிளி, வலியான். வக்கிரசந்திரன் - இளம்பிறை. வக்கிரசிருங்கி - வளைகொம்புப் பசு. வக்கிரசுஞ்ச - கிளி. வக்கிரதந்தம் - வளைந்த பல். வக்கிரதுண்டம் - கிளி, வக்கிரசச்சு. வக்கிரதுண்டர் - விநாயக மூர்த்தங்களிலொன்று. வக்கிரபுஷ்பம் - முருக்குமரம். வக்கிரநக்கிரம் - கிளி. வக்கிரநக்கிரன் - பிசுநன், லோபி. வக்கிரநாசிகம் - ஆந்தை, கிளி. வக்கிரம் - கலக்கம், கொடுமை, நிமிர்தல், பொய், பொறாமை, மீளமடங்குதல், மீளுதல், வஞ்சனை,வட்டம், வளைவு, பின் திரும்புதல், கூன், வளைந்து போதல்,வளைந்துபோவது. வக்கிரவத்திரம் - பன்றி. வக்கிரவாலதி - நாய். வக்கிரன் - உருத்திரன், குரூரன், சனி,செவ்வாய், தந்தவக்கிரன். வக்கிராங்கம் - அன்னன், வளைந்தசரீரம். வக்கிராங்கி - கடுகுரோகணி, கூனி. வக்கிராத்தமனம் - திரும்புதலோடத்தமனம். வக்கிரிக்க - வளைய. வக்கிரித்தல் - திரும்புதல். வக்கிரோதயம் - திரும்புதலோடுதித்தல். வக்கு - தொட்டி, தோல், வழி,வதங்குதல். வக்குதல் - வதக்குதல். வக்குத்திரிகரணம் - படுக்கை. வக்துரு - சொல்வோன். வங்கக்கல் - சுக்கான்கல். வங்கசெந்தூரம் - ஈயபஸ்மம். வங்கசேநகம் - வெள்ளகத்தி. வங்கடம் - வமிசம். வங்கணம் - உற்றநேசம், ஓர்தேயம்,சிநேகம், வக்கணம். வங்கணதூஷணம் - அவதூறுபண்ணுதல். வங்கணன் - உற்றதோழன். வங்கநீறு - ஈயமணல்.வங்கபற்பம், வங்கபஸ்பம் - வங்கசெந்தூரம். வங்கமணல் - வங்கநீறு. வங்கம் - ஆற்றுமடக்கு, ஈயம், கத்தரிச்செடி, கருத்து, சிறு கத்தரி,துத்த நாகம், தேயமைம் பத்தாறினொன்று, பதினெண் பாடையினுமொன்று, மரக்கலம்,வளைவு, வெள்ளி, வழுதலை. வங்கம்விளையுங்கல் - வெள்ளைச்சுக்கான் கல். வங்கர் - ஓர்சாதியார், சண்டாளர்,வங்கதேசத்தார். வங்கனம் - சேம்பு. வங்கனார் - ஓர் சங்கப்புலவர், அவர்ஆலங்குடிவங்கனாரெனப் படுவர். வங்கா - காளம். வங்காரம் - உலோகக்கட்டி, பொன்,வணிதம்.வங்கராவச்சி, வங்காரவாசி - ஓர் கீரை,வாங்குருவாளை. வங்காளத்திப்பிலி - ஓர் திப்பிலி. வங்காளப்பச்சை - ஓர் பூடு, ஓர்வர்ணம். வங்காளம் - தேயமைம்பத்தாறினொன்று. வங்கி - ஓர்கைவளை, துடிவேலி. வங்கிஷம் - வமிசம். வங்கியம் - இசைக்குழல், மூங்கில்,வளைவு. வங்கிலம் - முள். வங்கு - அளை, கழுதைப்புலி, கற்புழை,சந்து, புற்று, துளை, குகை, ஒருசருமவியாதி, மலை முழை.வங்குக்கட்டை, வங்குக்கால் - மரக்கலத்தறி. வங்கூழ் - காற்று, வாதம். வங்கை - பகை. வசகம் - கொறடு. வசக்க - வசப்படுத்த. வசக்கட்டு - ஆட்சி. வசக்குதல் - படியப்பண்ணல்,வசையப் பண்ணல். வசக்கேடு - சரீரமெலிவு. வசங்கம் - கொடுவேலி. வசங்களித்தல் - ஆட்சியை விலக்கல். வசங்கெட்டவன் - இட்டமில்லாதவன், சுகமற்றவன். வசட்டி - வயிரமண். வசதி - இடச்சுகம், இரா, இருப்பிடம், நல்லிடம், மருதநிலத்தூர்,வீடு, நகரம். வசதிக்கேடு - சுகவீனம். வசத்திற்சோதினி - எலுமிச்சை. வசநாவி - நஞ்சு. வசநீயம் - வார்த்தை. வசநீயதை - நிந்தை. வசந்தகாலம் - சித்திரை வைகாசியின்பருவம். வசந்தகோஷி - குயில். வசந்தங்களித்தல் - வசந்தனடித்தல். வசந்தசகன் - மன்மதன். வசந்தசமுகன் - காமன். வசந்ததிரு - மாமரம். வசந்ததிருநாள் - மஞ்சணீர்த் திருவிழா. வசந்ததூதம் - குயில், சித்திரைமாதம், மாமரம், பாதிரிமரம். வசந்தபைரவி - ஓரிராகம். வசந்தமண்டபம் - இளைப்பாறுமண்டபம், சிறுதென்றல் வீசுமண்டபம். வசந்தமலர் - இலவுங்கம். வசந்தமாதம் - சித்திரைமாதம். வசந்தமாலை - ஓர் பிரபந்தம், அதுதென்றலைச் சிறப்பித்துப் பாடுவது. வசந்தம் - இந்திரன் மாளிகை, இளவேனில், ஓரிராகம், சின்ன முத்து,சுகந்தம், தென்றற்காற்று, வாசனை,சல்லாபம். வசந்தருகு - இளவேனிற்பருவம். வசந்தவிழா - வேனில் விழா. வசந்தனடித்தல் - வசந்தன் கூத்தாடல். வசந்தன் - ஓர் கூத்து, குரங்கு, தென்காற்று, மன்மதன்.வசந்திகை, வசந்தியை - தேமல்.வசப்படல், வசப்படுதல் - வசமாதல். வசப்படுத்தல் - வசமாக்கல். வசப்பிழை - பெலவீனம். வசமாக்கல் - ஆட்சி கொடுத்தல். வசமாதல் - ஆட்சியாதல். வசம் - அமைச்சல், ஒழுங்கு, கீழ்ப்படிதல், கைவசம், துரைத்தனம்,நிலைவரம், பிறப்பு, விருப்பம்,பிரபுத்தன்மை, ஆயத்தம், ஆட்சி. வசம்பு - ஓர் மருந்து, மிளகு, வசா. வசரம் - கோழி. வசலு - சத்துரு. வசலை - ஓர்கொடி, பசலை. வசலி - துட்டை, குட்டினி. வசவு - இழிவுரை, வைவு. வசளை - பசளை. வசனம் - அரைப்பட்டிகை, சொல்,பழமொழி, புடைவை, பேச்சு,வாக்கியம், வாசகம், வீடு, நோன்பு. வசனாபாசம் - ஓரளவைப் பிரமாணம். வசனாவி - வச்சநாபி, நஞ்சு. வசனிக்க - சொல்ல. வசனித்தல் - சொல்லல், விபரித்தல். வசன் - எல்லை, நேர். வசன்கட்டு - எல்லை வரம்பு. வசாரம் - அபிப்பிராயம். வசி - இருப்பிடம், கழுமுள், குற்றம்,கூர்மை, சூலம், தழும்பு, திரட்சி,வசியம், வாள், மழை, பிளப்பு,சுவாதீனம், ஐம்பொறி யடக்கினவன். வசிகம் - மிளகு. வசிகரணம் - கலைஞான மறுபத்துநான்கி னொன்று, புணர்ச்சிக்கிணக்கம், மன்மதன் கணையினொன்று, வசியென்னேவல்,வாள். வசிகரம் - சீந்தில், வசியன், வசியம். வசிகரிக்க - வசியஞ் செய்ய. வசிகரித்தல் - வசப்படுத்தல், வேண்டுதல். வசிகரிப்பு - மன்றாட்டு. வசிகன் - சுவாதீனன். வசிக்க - தங்க, வசியஞ்செய்ய,வசனிக்க. வசிட்டம் - வாசிட்டம். வசிட்டன் - ஓரிருடி. வசிதம் - ஆனைத்திப்பிலி. வசிதை - கீழ்ப்படுதல், மருட்டுதல்,வசித்துவம். வசித்தல் - தங்கல், வசனித்தல்,வசியம் செய்யல். வசித்துவம் - அட்ட சித்தியி னொன்றுஅது யாவரும் வணங்க நிற்றல். வசிநி - வன்னிமரம். வசியமை - வசியஞ் செய்யும் மை. வசியம் - கராம்பு, கைவசம், மணப்பொருத்தம் பத்தினொன்று,வசமாதல், அஃது அட்டகருமத்தொன்று. வசியை - பதிவிரதை. வசிரம் - ஆனைத்திப்பிலி, கடலுப்பு. வசிவு - வளைவு, பிளப்பு. வசீகரணம் - கீழ்ப்படுத்தல், வசிகரணம், வசியப்படுத்தல். வசீகரம் - வாசம். வசீகரன் - வசியப்படுத்துவோன். வசீகரித்தல் - வசமாக்கல். வசீரம் - யானைத்திப்பிலி. வசு - அட்டவசுக்கள், ஓரரசன், ஓர்மணி, கிரணம், குபரேன், சிவன்,சூரியன், செல்வம், தேவர், நீர்,நெருப்பு, பசுவின் கன்று,பொருள், பொன், மரப்பொது,வெள்வெங் காயம், இரத்தினம்,இனிமை. வசுகந்திகை - நாய்வேளைச்செடி. வசுகம் - எருக்கஞ்செடி. வசுகிரி - பொன்மலை. வசுகீடன் - யாசகன். வசுகூபம் - அமுரி. வசுக்கள் - அட்டவசுக்கள். வசுசேனன் - கர்ணன். வசுதன் - குபேரன். வசுதாதரம் - மலை. வசுதாதிபன் - அரசன். வசுதாரை - அருகர்க்குரிய ஓர் சத்தி,அளகை. வசுதேவன் - கண்ணன் றந்தை. வசுதை - பூமி, தேசம். வசுநாள் - அவிட்டநாள். வசுநேசன் - கர்ணன். வசுந்தரை - பூமி. வசுபை - புநர்பூச நட்சத்திரம். வசுப்பிராணன் - நெருப்பு. வசுமதி - பூமி. வசுவசி, வசுவாசி - சாதிப்பத்திரி. வசூரி - மசூரி, ஓர் நோய் அம்மைபோடுதல். வசூரை - வேசி. வசை - இகழ்ச்சிச் சொல், கணவனசகோதரி, குற்றம், பசு, பெண்,பெண் யானை, மகள், மலட்டுப்பசு, மனைவி, மூளை, நிணம். வசைக்க - வளைக்க, சூழ. வசைச்சொல் - இகழ்ச்சிச் சொல். வசைதல் - சூழப்படல், வளைதல். வசைத்தல் - வளைக்குதல். வசைபாடுதல் - நிந்தித்துப் பாடுதல். வசைப்படுதல் - வடுப்படுதல். வசைய - வளைய, சூழ்ப்பட. வசைவினை - துன்னடை. வச்சகத்தண்டுலம் - வெட்பாலையரிசி. வச்சகம் - மலைமல்லிகை. வச்சணந்திமாலை - வெண்பாவிற்செய்யப்பட்ட பாட்டியல் கூறும்ஓரிலக்கண நூல். வச்சநாபி - வற்சநாபி. வச்சநி - மஞ்சள். வச்சயம் - புல்வாய். வச்சலமணி - கோரோசனம். வச்சாதநி - சீந்தில். வச்சிரகங்கடம் - வச்சிரச்சட்டை. வச்சிரகங்கடன் - அனுமன். வச்சிரகம் - தாமரைக்காய். வச்சிரகம்பம் - வயிரத் தூண். வச்சிரகவசம் - வயிரச் சட்டை.வச்சிரகாயம், வச்சிரசரீரம் - வச்சிரயாக்கை, கோரைக் கிழங்கு. வச்சிரசிதன் - கருடன். வச்சிரசூசிகாபரணம் - ஓர்வகையம்பு. வச்சிரசூரியன் - புத்தன். வச்சிரசெலதம் - கோரைக் கிழங்கு. வச்சிரச்சுவாலை - மீன். வச்சிரதசநம் - எலி. வச்சிரதந்தம் - எலி, பன்றி. வச்சிரதந்தி - ஓர் புழு. வச்சிரதரன் - இந்திரன். வச்சிரதாரணை - நவதாரணையினொன்று, அஃது அகங்காரத்தையுஞ் சீவதத்து வத்தையு நீக்கிப்பரதத்துவமே தியானஞ் செய்யத்தக்க தென்றறிதல். வச்சிரதுண்டம் - கருடன், கொசுகு,வலியான், விநாயகன். வச்சிரதேகம் - வச்சிரயாக்கை. வச்சிரத்தலைச்சி - கதண்டு. வச்சிரத்துரு - கள்ளி மரம். வச்சிரபஞ்சகவசம் - ஓர் காப்பு. வச்சிரநிம்பம் - கருவேம்பு. வச்சிரபாணி - இந்திரன். வச்சிரபாதம் - இடியேறு. வச்சிரபீசகம் - கொடிப்புன்கு. வச்சிரபுட்பம் - எட்பூ. வச்சிரபசை - ஓர் பசை. வச்சிரம் - அத்திபேதி, இடி, எட்பூ,ஓர் பிசின், குலிசம், கொடுஞ்சொல், சதுரக்கள்ளி, சிற்பநூன்முப்பத்திரண் டினொன்று ,தருப்பை, நித்திய யோகத்தொன்று, பசுமை, மாட்டுத்தோலினின் றெடுக்கும்பசை,வச்சிராயுதம், வயிரமணி, வயிரம்,அசோகு, வேங்கை. வச்சிரயாக்கை - ஊறுபட மாட்டாதசரீரம். வச்சிரவராகி - சமணர் கொண்டாடும்ஓர் மாயாசத்தி. வச்சிரவல்லி - பிரண்டை, பொழுதுவணங்கிப் பூச்செடி. வச்சிரவாகு - சூரன் மைந்தரிலொருவன். வச்சிரவாராகி - மாயாதேவி. வச்சிரன் - இந்திரன், ஓர் பத்தன். வச்சிராகாதம் - இடியேறு. வச்சிராங்கம் - சதுரக்கள்ளி. வச்சிராசனி - இந்திரன் கொடி. வச்சிராட்சி - பிரண்டை. வச்சிராதம் - பன்றி. வச்சிராயுதம் - குலிசம். வச்சிராயுதன் - இந்திரன். வச்சிராவர்த்தம் - இராமன் வில். வச்சிரி - இந்திரன். வச்சிரீகரணம் - இடை பிங்கலைசுழிமுனை. வச்சை - வாஞ்சை, உலோபம். வச்சையம் - கலைமான். வச்சையன் - உலோபி. வஞ்சகச்சொல் - மடிப்பானபேச்சு. வஞ்சகமூடி - ஆமை. வஞ்சகம் - அணாப்பு, இது தாமதகுணத்தொன்று, கபடம், கீழ்மை. வஞ்சகவொழிப்பு - பெயர் முதலியசொற்களால் வருணியத்தினதுதருமத்தை மறுத்தல் (உ.ம்) இம்மடந்தை கட்கடை நோக்கென்னும் பெயரினைக் கொண்டம்மதவேள் வாளி யடும். வஞ்சகன் - தூர்த்தன், நரி, வஞ்சிப்போன், கீழ்மகன். வஞ்சகாரம் - கொடிவேலி. வஞ்சசதம் - கபடம். வஞ்சநடை - கபடநடை. வஞ்சநவிற்சியணி - ஓரலங்காரம்,அது ஒரு காரணத்தா னிகழ்ந்தசத்துவமாகிய குணத்தை மற்றொரு காரணங்கூறி மறைத்தல். வஞ்சந்தீர்தல் - பழிவாங்கல். வஞ்சப்பழிப்பணி - ஓரலங்காரம்,அது நிந்தையானிந்தை தோன்றச்சொல்லல். வஞ்சப்புகழ்ச்சியணி - ஓரலங்காரம்,அது பழிப்பினாற் புகழ்ச்சியும்புகழ்ச்சியாற் பழிப்பும் புகழ்ச்சியாற் புகழ்ச்சியுந் தோன்றச்சொல்லல். வஞ்சப்பெண் - காளியேவல் செய்வாள். வஞ்சமனம் - கபடமனம். வஞ்சமனத்தோன் - கபடமனமுள்ள வன். வஞ்சம் - கபடம், கொடுமை,சிறுமை, பொய், வடிப்பு, மாயம்,வாள், மராமரம், மூங்கில், குலம்,வர்க்கம். வஞ்சவம் - பாம்பு. வஞ்சனம் - ஓர் மீன், வஞ்சகம். வஞ்சனி - இடாகினி, காளியேவல்செய்வாள், பெண், மாயவள். வஞ்சனை - ஆணை, தெய்வப்பெண், பொய், மாயம், வஞ்சம். வஞ்சனைபண்ணுதல் - வஞ்சித்தல். வஞ்சன் - வஞ்சநன். வஞ்சி - ஓர் கொடி, ஓர்பா, கருவூர்,சீந்தில்கொடி, தருமதேவதை,பகைவர் மேற்செலவு, பகைவர்மேற் செல்வார்க்குமாலை, பெண்,வஞ்சியென்னேவல், பகை,மருதயாழ்த்திறம். வஞ்சிச்சீர் - வஞ்சியுரிச்சீர். வஞ்சிதன் - வஞ்சிக்கப்பட்டவன். வஞ்சித்தல் - வஞ்சனைசெய்தல். வஞ்சித்தளை - கனி நிழலென்னும்வாய்பாடுகளின்பின் நேரசையேனுநிரையசையேனும் வருவது. வஞ்சித்தாழிசை - நிரையசையோடேனு நேரசையோடேனும்புணர்ந்து இரு சீரடி நான்குகொண்டொருபொருள் மேல்மூன்றடுக்கி வருவது. வஞ்சித்துறை - இருசீரடி நான்குகொண்டு வருவது. வஞ்சிப்பா - ஐந்துபாவி னொன்று,அது பெரும்பான்மை வஞ்சித்தளையுஞ் சிறுபான்மை பிறதளையுந்தழுவி இருசீரடி யானேனு பல அடிகளைக் கொண்டு தனிச்சொற்பெற்று அகவற் சுரிதகத்தான் முடிவது. வஞ்சியர் - பெண்கள். வஞ்சியர்தரிசனம் - கண்ணாடி. வஞ்சியுரிச்சீர் - நேரசையு நிரையசையுந் தம்முள்விரவி மூன்றடுத்து நிரையசை முடிவு பெற்றுநிற்பது (உ.ம்). தேமாங்கனி, புளிமாங்கனி, கருவிளங்கனி, கூவிளங்கனி. வஞ்சிரம் - ஓர் மீன். வஞ்சிவிருத்தம் - முச்சீரடி நான்குகொண்டு வருவது. வஞ்சிவேந்தன் - சேரன். வஞ்சினம் - சபதம். வஞ்சுளம் - அசோகமரம், வேங்கை. வஞ்சுளன் - கரிக்குருவி. வஞ்சூரன் - ஓர் மீன். வடகடல் - வடதிசைக்கடல். வடகம் - உல்லாசம், ஓர் பணிகாரம்,தோல், போர்வை, மேலங்கி,வற்றல். வடகயிலாயம் - உத்தர கயிலாயம். வடகலை - கிரந்தநூல், வடமொழி. வடகலைசம்பிரதாயம் - நிகமாந்தவேதாந்த தேவிகனுடைய சம்ப்ரதாயம். வடகாற்று - வாடை, வடக்கினின்றடிக்குங் காற்று. வடகிரி - மாமேரு. வடகீழ்த்திசை - ஈசானம். வடகீழ்த்திசைப்பாலன் - ஈசானன். வடகீழ்த்திசைப்பாலன்குறி - காகம். வடகீழ்த்திசையானை - சுப்பிரதீபம். வடகு - தோல். வடகோடு - வக்கிரசந்திரனின் வடநுதி. வடகோடை - குன்றுவாடை. வடக்கயிறு - பருங்கயிறு. வடக்கு - வடதிசை. வடசொல், வடதமிழ் - கிரந்தமொழி. வடதிசைக்கோன் - குபேரன். வடதிசைப்பாலன் - குபேரன். வடதிசைப்பாலன்குறி - யானை. வடதிசையானை - சாருலபூமம். வடதேசம் - பாண்டிமண்டலத்திற்குவடபாற்பூமி. வடநூல் - ஸம்ஸ்க்ருத சாஸ்திரம். வடநெடுந்தத்தனார் - ஒரு புலவர். வடந்தை - வடகாற்று. வடபத்ரசாயி - விஷ்ணு. வடபத்திரம் - ஆலிலை. வடபரதம் - பரதகண்டத்தினோர்பிரிவு. வடபாரிசம் - வடக்குப்பக்கம். வடபாலிரேவதம் - நவகண்டத்தொன்று. வடபால் - வடக்குப்புறம். வடபால்விதேகம் - வடவிதேகம். வடபுறம் - வடபக்கம். வடபூமி - வடதேசம். வடமதுரை - வடநாட்டி லுள்ளதோர்விஷ்ணு ஸ்தலம். வடமரம் - ஆலமரம். வடமர் - பிராமணரி லோர்பேதம். வடமலை - திருப்பதி, மகாமேரு,இமயமலை.வடமலையாண்டவன், வடமலையான், வடமலைவாணன் - ஓர் நெல்,திருப்பதிப் பெருமாள். வடமவண்ணிக்கன்தாமோதரனார் - புறநானூறு பாடிய புலவரிலொருவர். வடமவண்ணிக்கன்பெருஞ் சாத்த னார் - ஒரு புலவர். வடமீன் - அருந்ததி. வடமுகம் - வடபாரிசம். வடமூலகன் - சிவன். வடமேரு - மகாமேரு. வடமேற்கு - வாயுமூலை. வடமேற்றிசைப்பாலன் - வாயு. வடமேற்றிசைப்பாலன்குறி - கழுதை. வடமேற்றிசையானை - புட்பதந்தம். வடமொழி - கிரந்தமொழி. வடமோதங்கிழார் - புறநானூறுபாடிய புலவரி லொருவர். வடம் - ஆலமரம், ஊர், ஓர் பண்ணிகாரம், கயிறு, நாணி, பூவரும்பு, மணிவடம், வட்டம். வடரம் - தலைச்சீலை, பாய். வடலி - இளம்பனை.வடவனல், வடவாக்கனல், வடவாக்கினி - வடவாமுகம். வடவாசி - இயக்கன், ஆலடியில்வசிப்போன். வடவாசுதர் - தேவமருத்துவர்.வடவாநலம், வடவாமுகம், வடவா முகாக்கினி - ஊழித்தீ. வடவாமுகம் - குமேரு. வடவிதேகம் - நவகண்டத் தொன்று. வடவிருக்கம், வடவிருட்சம் - ஆலமரம். வடவேங்கடம் - திருப்பதி. வடவை - அச்சுவினி, அடிமைப்பெண், ஊழித்தீ, எருமை, பெண்குதிரை, பெண்யானை. வடாகரம் - கயிறு. வடாது - வடக்கு. வடாரகை - கயிறு. வடாரணியம் - திருவாலங்காடு. வடி - கயிறு, கள், குசைக்கயிறு,கூர்மை, நாய், வடியென்னேவல்,மாம்பிஞ்சு, திருத்தம், வடித்தல்,தெளிவு. வடிகட்டுதல் - வடித்தெடுத்தல். வடிகயிறு - குதிரைவாய்க் கயிறு. வடிகாது - தாழ்காது. வடிக்கண் - வடுவகிற் போலுங்கண்.வடிக்கதிர், வடிக்கருவி - நூல் முறுக்குமோர் கருவி. வடிக்குதல் - களங்கமறுத்தல், வடியச்செய்தல். வடிசம் - தூண்டில். வடிசல் - வடிதல். வடிசாந்து - நற்சாந்து. வடிதங்கம் - சுத்ததங்கம். வடிதமிழ் - தெளிதமிழ். வடிதயிர் - நீர்வடிந்த தயிர். வடிதல் - நீர்முதலிய பாய்தல், நீளம்,நீளுதல், வற்றுதல், திருந்துதல்,தெளிதல். வடித்தல் - கூராக்குதல், தெளித்தெடுத்தல், வசமாக்குதல், நீளமாக்கல், தகடாக்கல், பயிற்றுதல்,யாழின் நரம்புகளை யுருவுதல். வடிப்பம் - அழகு, செப்பம், திறம். வடிப்பு - சலாகை, தெளித்தெடுத்தல்,வடித்தல். வடிமனி - தெளிந்தமணி. வடிம்பு - நுதி, விளிம்பு. வடிம்புக்கழி - எதிர்ச்சட்டம், குறுக்குவிட்டம். வடியல் - ஒன்றிலிருந்து நீங்கிய நீர்,வடிதல். வடியெண்ணெய் - கடுகு வடித்தெடுக்கு மெண்ணெய். வடிவம் - உடல், உருவு. வடிவவுவமம் - உருவத்தையேயுவமிப்பது, (உ.ம்) சிவன்வடிவேகுருவடிவு. வடிவு - அல்குல், அழகு, உருவு,வடிவம். வடிவுப்பண்புத்தொகை - உருவுப்பண்பைக்காட்டி நிற்குந் தொகைநிலை, (உ.ம்) வட்டக்கல். வடிவெழுத்து - வரியுங்கோடும் புள்ளியுமாகக் கட்புலனுக்குவிடயமா யெழுதுமெழுத்து. வடு - இளங்காய், குற்றம், செம்பு,தழும்பு, பிரமசாரி, மச்சம், மருதயாழ்த்திறம், வசை, வடுவென்னேவல், வண்டு, வாலிபன், வாள்,மாணவகன், உபநயனம். வடுகச்சி - வடுகப்பெண். வடுகன் - பிரமாசாரி, மூடன்,வயிரவன், வாலிபன், தெலுங்கன். வடுகன்றாய் - காடுகாள். வடுகி - துர்க்கை. வடுகு - உபநயனம், இந்தள ராகம்,ஓர் சாதி, ஓர் தேயம், தெலுங்கு,மருத யாழ்த்திறம். வடுச்சொல்லல் - வகைசொல்லல். வடுத்தல் - இளங்காயரும்பல். வடுப்படுதல் - ஏறுபடுதல், குற்றமடைதல், வசைபூணல். வடுப்படுத்துதல் - குற்றப்படுத்துதல்,மறுப்படுத்துதல். வடுவகிர் - மாவடுவின் பிளவு. வடுவரி - வண்டு. வடுகரணம் - பூணூலணிதல். வடை - உழுந்துவடை, ஒரு சிற்றுண்டி. வடையற்றது - வீணானது. வட்கல் - கெடுதல், வெட்கம், நாணுதல், ஒளி முழுங்குதல். வட்கர் - பகைவர், குற்றம். வட்கார் - பகைவர். வட்கிலான் - பகைவன். வட்கு - வட்கல்.வக்ஷஸ்தலம், வட்சஸ்தலம் - மார்பு. வட்டகை - அடைப்புநிலம், சிறுகிண்ணம். வட்டக்கிலுகிலுப்பை - ஓர் கிலுகிலுப்பை. வட்டக்குடில் - பெருங்குடில். வட்டக்கைச்சில் - தேங்காயடிச்சில். வட்டச்சீட்டு - கழிவு சீட்டு. வட்டணம் - நெடும்பரிசை, பரிசை. வட்டணிக்கை - சுற்றுகை, வட்டவடிவு. வட்டணித்தல் - வட்டமாக்கல், வட்டிப்பாய் வருதல். வட்டணை - தாளம், வட்டம். வட்டணையுறுத்தல் - தாளம்போடல். வட்டத்தலைப்பா - தலைப்பாக்கட்டினொன்று. வட்டத்தாமரை - மலையாளத்திலிருக்கும் ஓர் தாமரை. வட்டத்தாரி - விடத்தேறு. வட்டத்திரி - காதிடுதக்கை, துவக்கிற்கு நெருப்புவைக்குந் திரி, ஓர்விளையாட்டு. வட்டத்திருப்பி - மலைதாங்கி, பங்கம்பானை, ஆடுதின்னாப்பாளை. வட்டத்துத்தி - ஓர் செடி. வட்டத்தொப்பி - சோனகத்தொப்பி. வட்டப்பாலை - நால்வகைப்பாலையினொன்று. வட்டமிடுதல் - சுற்றுதல், சுற்றிவருதல். வட்டம் - குளம், கேடகம், கைம்மணி, கொள்கலம், சக்கிரம்,சீலை, தாழ்வு, திரிகை, நாணயமாற்று தலின் கழிவு, நீர்ச்சால்,பரிவேடம், பீடம், வட்ட வடிவு,வளைதடி, வாகுவலயம், நரிவிரட்டி, வட்டக் கிலுகிலுப்பை,ஆழி, கடகம் கனம், ஆலவட்டம்,சுழல்படை. வட்டம்பண்ணுதல் - தேவதுதியைநாள் வட்டத்திற் படித்தல். வட்டம்புல் - காவட்டம்புல். வட்டரவு - வட்டவடிவு, விருத்தம். வட்டவடிவு - வட்டாகாரம். வட்டவிருத்தம் - ஆல். வட்டறவு - முற்றாக அறவு பண்ணுதல். வட்டா - ஓர் பாத்திரம், தட்டம்,தாம்பாளம். வட்டாகிருதி - வட்டவடிவு. வட்டாடல் - சூதாடல், உருட்டல். வட்டாப்பத்து - கூந்தற்பூகத் தோலையாற் செய்யுமோர் விசிறி. வட்டாரம் - சுற்றுப்புறம், தானியக்களஞ்சியம், வீடு. வட்டி - கூடை, பலகறை, முதற்பொருட்கு வருமூதியம், வட்டியென்னேவல், கடகப்பெட்டி. வட்டிகை - கூடை, கைமணி, சித்திரம்நால்வகைச் சாந்தினொன்று,வட்டம், ஒரு சாந்து, பந்தயப்பொருள். வட்டிக்குவட்டி - வட்டிப் பணத்துக்குமேல்வட்டி. வட்டித்தல் - ஆணையிடல், ஊனிடுதல், தாளம்போடல், வட்டமாதல், வளைத்தல், சுழற்றுதல்,பரிமாறுதல். வட்டிப்பு - வட்டம். வட்டில் - ஓருண்கலம், கிண்ணம்,கூடை, சூதாடுகருவி, புட்டில், வழி. வட்டு - ஓர் செடி, ஓர் விளையாட்டு,கறிமுள்ளி, சூதாடுகருவி, திரட்சி,மறவட்டு, சூது, கண்டசர்க்கரை,சிலந்தி, பூவரசு. வட்டுகொல்லி - தேவதாரம், சம்பங்கி,சண்பகம். வட்டுக்குத்தி - மரவட்டு. வட்டுச்செடி - வட்டு. வட்டுடை - ஓருடை விசேடம், சீலை,ஒரு வீர ருடை. வட்டுவம் - ஓர்வகைப் பை. வட்டுறுப்பு - திருத்தம். வட்டை - இரதம், புலியின துடல்வரி,வழி. வட்புலி - சிங்கம். வண்டுணாமலர்மரம் - சண்பகம்,வேங்கை. வணக்கம் - கீழ்ப்படிதல், சங்கித்தல்,தொழுதல், இது மங்களாசரணை மூன்றினொன்று, தாழ்வு. வணங்கல் - தொழுகல், வளைதல்,தாழ்தல்.வணங்காமுடியன், வணங்காமுடியினன், வணங்காமுடியோன் - துரியோதனன், மற்றொருவரை வணங்காதவன். வணசி - ஓர் கரணம். வணம் - உத்யாநம், ஓசை, பலகறை,வநம். வணர் - வளைவு. வணர்தல் - வளைதல். வணிகம் - செட்டு, வியாபாரம். வணிகபதம் - வியாபாரம். வணிகன் - செட்டி, துலாராசி,வியாபாரி. வணிசம் - எருது, எருதுக்கரணம். வணிசன் - ஓர் கரணம், வாணீகன். வணிச்சியம் - வாணிச்சியம். வணிதம் - செப்பம். வண் - தெளிவு, மிகுதி. வண்களமர் - சூத்திரர், வேளாளர். வண்கை - கொடைக்கை. வண்மை - வழங்குகை. வண்சிறை - மதில். வண்டத்தனம் - குறும்புத்தனம். வண்டம் - குந்தாயுதம். வண்டரம் - நாய், நாய்வால், மார்பு,முகில். வண்டான் - அண்ணகன், உலோபி. வண்டர் - கடிகைமாக்கள், கவிகற்றோர், மங்கலப்பாடகர், மிண்டர். வண்டலம் - சேறு. வண்டல் - அடையுங்கஞ்சல், நீர்ச்சுழி, பருபருக்கை, பொருக்கு,மகளிர், விளையாட்டு, நீர் ஒதுக்கிவிட்ட மண், சேறு. வண்டன் - குள்ளன், திண்ணியன்,துட்டன், விருத்தசேதனம் பண்ணப்பட்டவன். வண்டாலம் - குந்தாலி, சூரயுத்தம். வண்டானம் - நாரை. வண்டி - பண்டி, வயிறு, சகடம். வண்டிக்கால் - வண்டிற்சில்லு. வண்டியகவாய் - வண்டிற்றோடு. வண்டில் - வண்டி. வண்டிற்கால் - வண்டிற்சில். வண்டிற்சத்தம் - வண்டிக்கூலி. வண்டு - அம்பு, குற்றம், கைவளை,சங்கு, பூசநாள், நூல். வண்டுகுத்தி - ஓர் குருவி. வண்டுகொல்லி - ஓர் செடி, தேவதாரம். வண்டுணாமலர்மரம் - சண்பகமரம்,வேங்கைமரம். வண்டுறை - எழுத்திலா வோசை. வண்டை - ஓர் செடி. வண்டோதரி - பஞ்சகன்னிகளிலொருத்தி, அவள் இராவணன்பெண்சாதி. வண்ணகம் - அலங்கரிப்பு, முடுகியற் செய்யுள். வண்ணகவொத்தாழிசைக்கலிப்பா - கலிப்பாவினோர் பேதம், அஃதுஒரு தரவு மூன்று தாழிசை அராகம் அம்போதரங்கம் தனிச்சொல் சுரிதகம்என்னுமிவ்வாறுறுப் பினையுங்கொண்டு வருவது. வண்ணகூபிகை - மைக்கூடு. வண்ணக்கன்சாத்தனார் - திருவள்ளுவமாலை பாடிய கடைச்சங்கப் புலவரிலொருவர். வண்ணக்கிரமம் - எழுத்தொழுங்கு,சாதியொழுங்கு. வண்ணக்குழிப்பு, வண்ணக்குளிப்பு - ஓரோசை. வண்ணதூதன் - திருமுகங்கொண்டுபோவோன். வண்ணத்தரு - ஓர் பாடல். வண்ணப்பண்புத்தொகை - நிறத்தைக்காட்டி நிற்கும் பண்புத்தொகை(உ.ம்) செந்தாமரை. வண்ணமகள் - கோலஞ்செய்வாள். வண்ணமாதிரு - இலேகினி, தூதி. வண்ணமாதிருகை - சரச்சுவதி. வண்ணமாலை - அரிவரி. வண்ணம் - அழகு, இராகம், குணம்,சந்தம், சந்தனம், சாந்துப் பொதுநிறம், முடுகியல், வடிவு,வாசனை, தொய்யிற் குழம்புமுதலியன, செயல், பூசுதல், விதம். வண்ணாத்தி - பூநீறு, வண்ணாரப்பெண். வண்ணாத்திப்பூச்சி - ஓர் பூச்சி. வண்ணாப்பண்டி - வண்ணார்புடைவையேற்றும் வண்டில். வண்ணான் - ஏகாலியன். வண்ணிகன் - எழுத்துக்காரன். வண்ணித்தல் - விரித்தல், புகழ்தல். வண்மை - அழகு, ஈகை, குணம்,புகழ், மெய்ம்மை, வளமை, விதம்,செல்வம். வதகம் - மரணம், வியாதி. வதகன் - கொலைகாரன். வதக்கம் - வாட்டம்.வதக்கல், வதக்குதல் - வசைத்தல்,வாட்டல்.வதங்கல், வதங்குதல் - வாடுதல். வதண்டன் - ஓர் முநி. வததண்டம் - கொலைக்கேற்றதண்டம். வதஸ்தானம் - கொலைக்களம். வதத்திரம் - அம்பு. வதநியன் - வரையாது கொடுப்போன். வதநதி - கதை, பேச்சு. வதம் - கொலை, விரதம், வதைத்தல். வதரம் - இலந்தை, இலந்தைக்கனி. வதரி - இலந்தை, பதரி, பருத்தி. வதவரிசி - தீஞ்சரிசி. வதவல் - வாடினது. வதறுதல் - திட்டல், மழலை மொழிதல். வதனம் - முகம், முக்கோணத்தின்மேற்கோணம், சொல்லல். வதனாசவம் - உமிழ்நீர். வதனாரவிந்தம் - பெண்முகம். வதனேந்து - முகம். வதன் - கொலை செய்வோன். வதாங்ககம் - சிறைவீடு. வதாங்கம் - நஞ்சு. வதாருகன் - வதைத்தற்குரியவன். வதாலகம், வதாலம் - ஓர் மீன். வதாவதன் - இராஜசபை முதலானவிடங்களில் நிஸ்ஸங்கையாகப்பேசுவோன், அதிகமாகப் பேசுவோன். வதானியன் - குபேரன், வரையாதுகொடுப்போன். வதி - சேறு, வதியென்னேவல், வழி. வதிட்கடித்தல் - வக்கணந்தரித்தல். வதிட்சீட்டு - பிரதிபத்திரம். வதிட்டன் - பருத்தது, பருத்தவன்,வசிட்டன். வதிதல் - தங்கல். வதிரன் - செவிடன். வதிரிகாச்சிரமம் - ஓர் தபோதலம்.வதில், வதிவு, வதிள் - இருத்தல்,பதில். வதிள்மொழி - பிரதிவாக்கு. வதீ - கொலைகாரன். வது - மகன்மனைவி, மனைவி,மருகி. வதுகை - மனைவி. வதுவடி - பாலை. வதுவர் - குதிரைப்பாகர், யானைப்பாகர். வதுவை - கலியாணம், வலுவந்தம்,வாசனை. வது - புதுமணப்பெண், பெண்,மனைவி. வதூடி - மருமகள். வதூவரர் - மணப்பெண்ணும், மாப்பிள்ளையும். வதை - உபத்திரவம், கொலை,தேன்வதை, வதையென்னேவல்.வதைசெய்தல், வதைத்தல் - கொல்லல். வதோபாயம் - கொலைக்கேதுவானஉபாயம். வத்தகமை - வருத்திப்பு, வியாபாரம். வத்தகம் - வத்தகைமை, வியாபாரம். வத்தகம் - வத்தகைமை, வெட்பாலை. வத்தகன் - செட்டி, வியாபாரி. வத்தகாலம் - நிகழ்காலம். வத்தகோபன் - கோபத்தை யடக்கினோன். வத்தங்கி - ஓர் மரம். வத்தமம் - ஆமணக்கு. வத்தமானம் - கருமம், சங்கதி,நிகழ்காலம், நிகழ்ச்சி. வத்தர் - வைத்திரு. வத்தல் - சிறுவள்ளம், செத்தல். வத்தணை - பெருக்கம், வமிசம்,செல்வம்.வத்தாக்கு, வத்தாலை - ஓர் கொடி,கொம்மட்டி. வத்தா - பேச்சில் வல்லவன். வத்தாவி - ஓர் தேயம். வத்தி - இரத்தினத்தின் கீழ்ப்பதிக்குந்தகடு, சீலைத்தொங்கல், திரிச்சீலை, திரிவாய்ப்பெட்டி, பரிமளதிரவியங்களைக் கூட்டி யரைத்துச் செய்த வத்தி, வத்தி யென்னேவல், வரி, விளக்கு, விளக்குத்தகழி, வர்த்தி. வத்தித்தல் - பெருகல். வத்தியதானம் - கொலைக்களம். வத்தியபாலன் - சிறைச்சாலைக்காவற்காரன். வத்தியபூமி - வத்தியதானம். வத்தியம் - மரணம். வத்தியன் - வதைக்கப்படுதற்குரியவன். வத்திரசோதினி - எலுமிச்சை. வத்திரதாரு - செம்புளிச்சை. வத்திரதுண்டன் - விநாயகன். வத்திரபட்டம் - நெற்றிப்பட்டம். வத்திரபுத்திரிகை - சித்திரப்பாவை. வத்திரபோதகன் - தையற்காரன்.வத்திரம், வஸ்திரம் - ஆடை, உடை,சீலை, போர்க் கருவி, முகம். வத்திராஞ்சலம் - புடைவையருகு. வத்திராட்டம் - பத்திராட்சம். வத்திரானசந்தானம் - பஞ்சமுகங் கூடல். வத்திரி - தோல்வார். வத்திரு - பேசுவோன், வாக்கி. வத்திறதாரு - செம்புளிச்சை. வத்திறோணம் - பெருமரம். வத்து, வஸ்து - பொருள். வத்துராதணை - நவதாரணையினொன்று அது விடயப்படாதசைவற்றிருக்கு மனம் புத்தியைச்சித்தத்திற் சேர்க்கச் சித்தந் தன்னிடத்தமைந்த புத்தியை மனதிற்சேர்க்கச் சித்தமும் மனமும்புத்தியை அலங்காரத்திற் சேர்க்கஅகங்காரம் புத்தி சித்தம் மூன்றும் மனத்திற்சேர அம்மனத் தாற்பிரமதரிசனம் பிறத்தல்.வஸ்துநிச்சயம், வஸ்துநிண்ணயம், வஸ்துநிதானம் - பிரபஞ்சகாரணமாய், கடவுளுண்டென்றும்அவன் யாவனென்றுங் கண்டதீர்ப்பு. வத்துபரிச்சேதம் - ஒரு பொருளிஃதாகும் ஒரு பொருளிஃதன் றென்பது. வத்துவித்தியாபதி - சிற்பநூன்முப்பத்திரண்டி னொன்று. வத்தூரம் - பொன்னாங்கண்ணி. வத்தேக்கு - கொம்மட்டி, வத்தங்கிச்சாய மரம். வத்தேந்தி - கதவுநிலைக்குமேல்வைக்குஞ் சுவர்தாங்கி. வத்தை - ஒரு மரத்தோணி, சோற்றி. வத்தைவெட்டு - சோற்றிவெட்டு. வநசந்தநம் - அகில், தேவதாரம். வநசந்த்திரிகை - மல்லிகை. வநசம்பகம் - காட்டுச்சண்பகம். வநச்சாகம் - காட்டாடு. வநஜீரம் - காட்டுச்சீரகம். வநஜை - இலக்குமி. வநதேநு - காட்டுப்பசு. வந்தனமாலை - வாயிலிற்கட்டுந்தோரணம். வந்தனம் - அட்டாங்கமாகப் பணிதல், முகம், விநயம், துதித்தல். வந்தனித்தல் - வந்தித்தல். வந்தனை - ஆராதனை, வணங்கல்,துதித்தல். வந்தி - ஏணி, மலடி, வந்தியென்னேவல், வருத்தம், வாராவந்தி,மங்கலபாடகன். வந்திகட்டுதல் - கட்டாயம் பண்ணுதல். வந்திகர் - கவிஞர், புகழ்வோர்,மங்கலப்பாடகர். வந்தித்தல் - பங்கம் பாழை, புகழ்தல்,வணங்கல். வந்தித்துநிற்போர் - புகழ்ந்துபாடுவோர். வந்திபாடம் - புகழ்ந்து பாடியபாட்டு,புகழ்க்கவி. வந்திபோடுதல் - கட்டாயமாய்ப்பொறுப்பித்தல். வந்தியர் - புகழ்வோர், மங்கலப்பாடகர், மலடிகள். வந்தியிறுத்தல் - கட்டாயத்திற்கிறுத்தல். வந்தியை - மலடி. வந்திவாங்குதல் - கட்டாயமாய்வாங்குதல். வந்து - காற்று. வந்தை - பெருமை, மலடி, மலட்டுப்பசு. வந்த்ரம் - கல்யாணம். வந்த்ரன் - பூசித்தற்குரியவன். வபனம் - சுக்கிலம், மழித்தல், முண்டிதம், விதைத்தானியம், மயிர்கழித்தல். வபிலன் - பிதா. வபு - உடல். வபை - வயிற்றுநாபிக்குள் வெண்டுகில் போன்ற புரையாகியநிணம். வப்பிரம் - ஈயம். வப்பு - இடைவேற்று. வப்ரீ - புற்று. வமநம் - சத்தி பண்ணல். வமநீ - அட்டை, பருத்தி. வமம் - வமநம். வமி - அக்கிநி, தூர்த்தன், வாந்தி. வமிசபாரம்பரை - வமிசக்கிரமம்.வமிசம், வம்சம் - சந்ததி, சுற்றம். வம்படித்தல் - சரசம் பண்ணல், தீங்குசெய்தல், தீதுபோதல், நிந்தித்தல். வம்பமாக்கள் - புதியமாக்கள், புதியவர். வம்பம் - சாலங்கபாஷாணம். வம்பலர் - அயலோர், புதியோர்,வழிப்போக்கர். வம்பல் - திசை. வம்பவுரை - புதுவார்த்தை. வம்பளத்தல் - பொருந்தாதபேச்சுப்பேசுதல், வீண்காரியம் பேசுதல். வம்பன் - சோரபுத்திரன், துட்டன்,வீணன். வம்பி - கருவண்டு, சோரபுத்திரி,துட்டை. வம்பு - கயிறு, அசப்பியம், சண்டை,தீச்செயல், தீச்சொல், நிலையின்மை, புதுமை, மிடா, முலைக்கச்சு, வாசனை, வீம்பு, வீண்,பொய், வஞ்சனை. வம்புக்காய் - பருவந் தப்பிக்காய்க்குங்காய். வம்புத்தனம் - நேரின்மை, மடிப்பு. வம்புப்பாளை - பருவந்தப்பி வரும்பாளை. வம்புப்பிறப்பு - சோரஸ்திரீ யிடத்திற்பிறத்தல். வம்புப்பேச்சு - தூஷண வார்த்தை. வயகுண்டம் - கவிழ்தும்பை. வயக்கம் - பிரபை, விளக்கம். வயக்குதல் - வசக்குதல், விளங்குதல். வயங்கல் - ஒளிசெய்தல், நடத்தல். வயசு - வயது, வாலிபம். வயசுப்பிள்ளை - வாலிபப்பிள்ளை,வாலிபன். வயணம் - வகை. வயதறம் - கடுக்காய். வயது - ஆயுசு, யௌவனம். வயதுவம் - முதிர்வயது. வயதெற்றி - திப்பிலி. வயத்தன் - அடிமை. வயந்தம் - வசந்தம். வயந்தன் - மன்மதன். வயப்படுதல் - வசப்படுதல். வயப்படை - வெற்றிப்படை. வயக்கொடி - வெற்றிக்கொடி. வயப்புள் - கருடன்.வயப்புலி, வயப்போத்து - சிங்கம். வயமா - குதிரை, சிங்கம், புலி, யானை. வயம் - ஆடு, இரும்பு, குதிரை, நீர்,பறவை, வசம், வலி, வெற்றி. வயல் - கழனி, மருதநிலம், வெளி. வயல்நெட்டி - ஓர் நெட்டி. வயல்மாதளை - ஓர் மாதளை. வயல்மெருகு - ஓர் மெருகு. வயவரி - புலி. வயவர் - படைவீரர். வயவன் - கரிக்குருவி, காதலன், தலைவன், திண்ணியன், வலியன்,வீரன். வயவீரர் - வெற்றிவீரர். வயவு - ஆசை, கருப்பம். வயவை - வழி. வயளை - பசளை. வயற்கல் - வெள்ளைச் சுக்கான்கல். வயற்கொடுக்கி - ஓர் கொடுக்கி. வயற்கோவியன் - ஓர் பாம்பு. வயற்சார்பு - மருதநிலம். வயற்சுள்ளி - பொரிப்பூண்டு. வயற்செம்பை - ஓர் செம்பை. வயற்றுத்தி - ஓர் துத்தி. வயனம் - வயணம். வயன்கட்டு - வசன்கட்டு. வயா - ஆசை, கருப்பநோ, கருப்பம்,கருப்பவருத்தம், சோர்வு, நடுககம், மசக்கை, வருத்தம், வேட்கைப்பெருக்கம். வயாசுள்ளி - பொரிப்பூண்டு. வயாப்பண்டம் - கருப்பவதி விரும்பியபொருள். வயாமது - சீந்தில். வயாவு - வயா. வயாவுதல் - விரும்புதல். வயாவுயிர்த்தல் - கருவீனல், வருத்தந்தீர்தல். வயானம் - பறவை. வயானன் - வலியன். வயிக்கிராந்தம் - குமுதபாஷாணம். வயிடூரியம் - வைடூரியம். வயித்தியம் - வைத்தியம். வயிந்தவம் - வைந்தவம், அசுத்தமாயை. வயிரகரணி - பெருநெருஞ்சில். வயிரங்கி - துவக்கிற்றிரிவாய்துளைக்கு மோர் கருவி. வயிரஞ்சாதித்தல் - பகை சாதித்தல். வயிரத்தனம் - வன்குணம். வயிரப்படை - வச்சிராயுதம். வயிரப்பொடி - வயிரமணி. வயிரமணி - ஓர்வகைப் பொன்மணி,வச்சிரம். வயிரமுத்து - வயிரித்தமுத்து. வயிரம் - கூர்மை, சலஞ்சாதித்தல்,சினம், தண்டாயுதம், திருவோணம், பூணாகக்கட்டுவது, மரவயிரம், வச்சிரமணி, வச்சிராயுதம், வாளியின்தகடு. வயிரவகுருசந்தானம் - வைரவமார்க்கக் குருபரம்பரை. வயிரவசாந்தி - வயிரவருக்குச்செய்யுஞ் சாந்தி. வயிரவம் - பயம், பைரவம். வயிரவல்லி - பிரண்டை. வயிரவளை - நரிப்பயறு. வயிரவன் - ஓர்கடவுள், சிறுகீரை. வயிரவாள் - குலிசம். வயிரவி - துர்க்கை, பைரவி. வயிரவூசி - முத்துத் துளைக்குமூசி. வயிரவேர் - சாயவேர்.வயிராகம், வயிராக்கியம் - வைராக்கியம். வயிராவி - ஓர் வகை விரதி, வயிரமனமுடையோன். வயிரி - வல்லூறு, வன்னெஞ்சுடையவன். வயிரித்தல் - வயிரமாதல், வலுத்தல். வயிரிப்பு - வயிரம், வலுப்பு. வயிரியம் - மயிர்ச்சீலை. வயிரியர் - கூத்தர், பாணர். வயிர் - ஊதுகொம்பு, கூர்மை. வயிர்ப்பு - வயிரம். வயிறு - உதரம், கருப்பப்பை. வயிறுகழிதல் - பேதியாதல். வயிறுகாந்துதல் - பசித்தல். வயிறுதாரி - வயிற்றுமாரி. வயிறுபேதித்தல் - வயிறு கழிதல். வயிறுப்புதல் - வயிறூதுதல். வயிறுவளர்த்தல் - வயிற்றூண் மாத்திரம் பெற்றுப் பிழைத் திருத்தல். வயிறுவாய்த்தல் - கருப்பமாதல். வயிறுவிடுதல் - வயிறு கழிதல். வயிற்றுக்கடுப்பு - ஓர் நோய். வயிற்றுக்கழிச்சல் - வயிற்றுப் போக்கு. வயிற்றுக்கனப்பு - கொழுப்பினால்வயிறூதல், தொந்திப்பு, புசிப்பினால் வயிறு விம்முதல். வயிற்றுக்காய்ச்சல் - பசி. வயிற்றுக்கிருமி - வயிற்றுட் புழு. வயிற்றுக்குத்து - வயிற்றி லுண்டாங்குத்து. வயிற்றுக்கொதி - பசி. வயிற்றுச்சுரப்பு - வயிற்றுக்கனப்பு. வயிற்றுநோய் - வயிற்று வலி. வயிற்றுப்படிப்பு - உதர போஷணார்த்தம் படித்தல். வயிற்றுப்பறதி - சீவனந்தேடித்திரிதல். வயிற்றுப்பறப்பு - சீவனந்தேடுமுலைச்சல். வயிற்றுப்பாடு - உட்புறம். வயிற்றுப்பிழைப்பு - உணவு தேடுதல்,சீவியம். வயிற்றுப்புகைச்சல் - வயிற்றுட்புகைதல். வயிற்றுப்பொருமல் - வயிறூதல். வயிற்றுப்போக்கு - உவாந்திப்பிராந்தி, பேதியாதல். வயிற்றுமாரி - பேருணன். வயிற்றுவலி - வயிற்று நோவு. வயிற்றுளைவு - ஓர் நோய். வயிற்றெரிச்சல் - பொறாமை. வயிற்றெரிவு - ஓர் நோய். வயிற்றையொறுத்தல் - உண்ணாதுகுறைத்தல். வயிற்றைவலித்தல் - குடர் வலிகொள்ளல். வயினதேயன் - கருடன். வயினம் - பறவை. வயின் - இடம், ஏழனுருபு (உ.ம்)அவர் வயிற்செல்வாய், வயிறு,வீடு, முறை. வயுநம் - ஞானம், தேவாலயம். வயேகடம் - மரமஞ்சள். வயோதிகம் - விருத்தாப்பியம். வயோதிகர் - கிழவர். வயோவங்கம் - ஈயம். வரகவி - தேவவருள் பெற்றுப்பாடும் புலவன். வரகு - ஓர் தானியம். வரகுதிரி - வசூரியிலோர் வகை.வரக்காட்டல், வரக்காட்டுதல் - வரவிடுதல். வரக்கிருது - இந்திரன். வரங்கொடுத்தல் - வரமருள்தல். வரச்சந்தனம் - ஓர் சந்தனம். வரடம் - அன்னம், ஓர்புழு, மாட்டீ,முல்லை. வரடி - அன்னப்பேடை. வரட்சி - வரள்வு. வரட்சுண்டி - ஒர் செடி, வாசமங்கை,ஆடுதின்னாப்பாளை. வரட்டி - எருமுட்டை. வரணசி - வாரணசி. வரணம் - ஒட்டகம், சூழ்தல், நியமித்தல், பால், மதில், மறைத்தல்,மாவிலங்கு. வரண்டகம் - உண்டை, சுவர்,முகப்பரு, யானைமேற் றவிசு. வாண்டம் - சாலை, தூண்டிற் கயிறு,புற்குவியல், முகப்பரு. வரண்டாலு - ஆமணக்கு. வரண்டியம் - பேராமுட்டி. வரண்மாடு - கடாரி மாடு. வரதகம் - அனுக்கிரகக் குறிப்பாகஇதயத்துக்குச் சமீபமாய்க்கையுறுவித்தல். வரதம் - ஈதல், வரங்கொடுத்தலைக்குறிப்பிக்கும் கரநியாசக்குறிப்பு. வரதனு - அழகு. வரதன் - அரன், அரி, அருகன்,உபகாரி, வரமருளத் தக்கோன். வரதாகம் - விரும்பின வரங்களைக்கொடுத்தல். வரதாரு - தேக்கு மரம். வரதை - கன்னி, உமாதேவி, வரங்கொடுப்பவள். வரத்து - வருகை, வருமானம்,வருவது. வரநதி - கங்கை. வரந்தருவான் - வில்லிபுத்தூரன். வரபலம் - தென்ன மரம். வரப்பார்த்தல் - வரவு காத்தல். வரப்பிரசாதம் - தேவ வருட்கொடை. வரப்பிரதானம் - நன்கொடை. வரப்பிரதை - அகத்தியன் மனையாள். வரப்பு - எல்லை, வரம்பு. வரப்புக்கடா - நண்டு. வரப்புள் - வயல். வரம் - அடைக்கலாங்குருவி, ஆசீர்வாதம், எறும்பு, கையிட்டுக்கொள்ளல், சூழல் தேவவீகை,நவநிதியிலொன்று, மஞ்சள்,மேன்மை, விருப்பம், வேண்டும்பொருள், மறைத்தல், வளைத்தல். வரம்பழிதல் - ஒழுங்கு கெடுதல். வரம்பிகத்தல் - அளவு கடத்தல். வரம்பிலாற்றலுடைமை - கடவுளெண்குணத் தொன்று. வரம்பிலின்புடைமை - கடவுளெண்குணத்தொன்று. வரம்பிறத்தல் - ஒழுங்கு தப்புதல். வரம்பு - அணை, எல்லை, ஒழுங்கு,வழி. வரம்புகட்டுதல் - அணைகட்டுதல்,எல்லை கட்டுதல், முடித்தல். வரம்புபண்ணல் - சரிப்படுத்தல். வரயிதன் - கணவன், தந்தை. வரயோகம் - சுபயோகத்தொன்று. வரருசி - ஓர் வடமொழிப் புலவன். வரர் - மேலோர், வரனோர். வரலக்ஷிமிவிரதம் - ஒரு நோன்பு, இதுஆவணி சுக்கிலபக்ஷ சுக்கிரவாரத்திலே சுமங்கலிகள் லக்ஷிமிதேவியைக் குறித்து ஐஸ்வரியம்,சந்தானம் முதலிய பெறும்படிநோற்கும் விரதம். வரலாறு - ஒழுங்கு, மூலம். வரலாற்றுவஞ்சி - ஓர் பிரபந்தம், அதுகுல முறையிற் பிறப்பு முதலியமேம்பாட்டின் பல சிறப்பையுங்கீர்த்தியையும் வஞ்சிப்பாவாற்கூறுவது. வரல் - வருதல். வரல்வாறு - வரலாறு. வரவண்ணினி - இலக்குமி, ஓர் நிறம்,கவுரி, கற்புடையாள், சரஸ்வதி,பெண், மஞ்சள். வரவர - மேலும் மேலும், வழிபாடு. வரவரச்சுருட்டி - ஓர் தேவதாசி. வரவிடுதல் - அனுப்புதல். வரவிருத்தன் - சிவன். வரவு - வருகை. வரவுகாத்தல் - வருதலைக் காத்திருத்தல். வரவை - விளையுட்பாத்தி. வரளாரை - ஓர் செடி. வரள்தல் - காய்தல். வரன் - கணவன், சந்நியாசிகளிலோர் பேதம், சிவன், தமையன்,மருமகன், சிரேஷ்டன். வரன்முறை - ஊழ், வரலாறு. வரன்றல் - கொழித்தல், வாருதல்,அரித்தல். வராககர்ணி - அசுவகந்தி. வராகபுடம் - ஐம்பதெருவைத்தெரிக்கும் புடம். வராகபுராணம் - சிவபுராணம் பத்தனுளொன்று. வராகம் - திருமாலவதாரத் தொன்று,பதினெண் புராணத்தொன்று,பன்றி, போர், மலை. வராகனெடை - ஒன்பது பணவிடைகொண்ட நிறை. வராகன் - ஓர் நாணயம், திருமால். வராகன் பூண்டு - கூத்தன் குதம்பை. வராகாதனம் - காலுங்கையு மூன்றிக்கவிழ்ந்து நிற்பது. வராகாரி - சிவன். வராகி - ஓர் சத்தி, சத்த மாதர்களிலொருத்தி, சிற்றரத்தை, நிலப்பனை, பன்றி மொத்தை. வராகிப்புகை - ஓர் மருந்துப் புகை. வராகிமாலை - ஓர் பிரபந்தம். வராகிவேய் - பன்றி முள். வராங்ககம் - இலவங்கப்பட்டை. வராங்கம் - உடல், தலை, யானை. வராங்கனை - உருவிற் சிறந்தவள்,கூந்தற்பனை. வராங்கன் - திருமால். வராகி - மஞ்சள். வராசனம் - சீனமுட்செவ்வந்தி,பாத்திரம். வராசனன் - வாயில்காப்போன்,வேசிக்கள்வன். வராசி - பரும்புடைவை. வராடகம் - ஓர் தேயம், கயிறு,தாமரைக்காய், பலகறை. வராடம் - பலகறை, விராடம். வராடி - பலகறை, முறுக்குநூற்சீலை. வராட்டி - வரட்டி. வராணசி - காசி. வராணன் - இந்திரன். வராணி - பாலை. வராத்தம் - கட்டளை, வரிவாங்குதல். வராரோகன் - யானைப்பாகன்.வராலகம், வராலம் - இலவங்கம். வராலி - பிரமிச்செடி. வராலிகை - துர்க்கை. வரால் - ஓர் மீன். வராளம் - பாம்பு. வராளி - ஓரிராகம், சந்திரன். வரானி - பாலை. வரி - அக்கினி, இசைப்பாட்டு,எழுத்து, கடல், குடியிறை, தேமல்,நிரை, நீளம், நெல், வடிவு. வண்டு,வரியென்னேவல், வழி, விரலிறை,இசை, இரேகை, நிறம். வரிக்கடை - வண்டு. வரிக்கல் - பரிக்கல். வரிக்காரன் - வரிப்பணந்தண்டுவோன். வரிக்குதிரை - கல்லணையில்லாதேறு குதிரை. வரிக்குமரியன்னம் - வரிக்கற்றாழஞ்சோறு. வரிக்கோரை - ஓர் புல். வரிசந்தி - நாற்றெருக் கூடுமிடம். வரிசி - தூண்டில். வரிசை - நாற்றெருக் கூடுமிடம். வரிசி - தூண்டில். வரிசை - ஒழுங்கு, சங்கை, நற்சீர்,பரிசு, முறைமை, வெகுமானம்,தரம், மேம்பாடு, உயர்வு, பட்டம்,சிறப்பு. வரிசைக்கிரமம் - நல்லொழுங்கு,வமிச வரிசை. வரிசைக்குப்பச்சை - நாகப்பச்சை. வரிசைபாராட்டல் - சங்கை கொண்டாடல். வரிசைபார்த்தல் - சங்கைபார்த்தல். வரிச்சல் - சலாகை. வரிச்சு - வீட்டின்மேலிடும் மரக்கீற்று. வரிச்சுருள் - செவ்வட்டை. வரிஷம் - வருஷம். வரிடன் - சன்னியாசிகளிலோர் பேதம்.வரிட்டம், வரிஷ்டம் - சிறந்தது. வரிதகம் - சொல்வகைநான்கினுளொன்று, அது 32 அடியால்வருவது. வரிதல் - எழுதல், கட்டல், சித்திரமெழுதல். வரித்தல் - கட்டல், நியமித்தல்,பூசுதல், மொய்த்தல், விரும்புதல்,தெரிந்து பெறல், தெரிதல். வரித்துவைத்தல் - நியமித்திருத்தல். வரிப்பணம் - வீதமாயிறுக்கும் இறை. வரிப்பிரோத்தம் - சதகுப்பை. வரிப்புலி - ஒர் புலி. வரிப்புறம் - அணில். வரியரிசி - சீரகம். வரியன் - சிரேஷ்டன். வரியாத்துக்கிழங்கு - ஓர் கிழங்கு. வரியாரோத்தம் - சதகுப்பை. வரியான் - சன்னியாசிகளிலோர்பேதம், நித்தியயோகத் தொன்று. வரியொட்டி - ஓர் மீன். வரியோரா - ஓர் மீன். வரிவசிதம் - குருவைக் காத்தல். வரிவடிவெழுத்து - அறிகுறியாய்த்தீட்டப்படு மெழுத்து. வரிவரி - தண்ணீர்விட்டான் கிழங்கு. வரிவரிமணலி - கற்றாழை. வரிவரிசு - சீரகம். வரிவனம் - தில்லை. வரீ - சூரியன் மனைவி. வரீயான் - ஓர் யோகம், சிறுபெண்,யோக்யன். வருகம் - இலை, பரிவாரம், மயிற்றோகை. வருகாலம் - எதிர்காலம். வருகை - வரவு. வருக்ககனம் - கனவருக்கம். வருக்கக்கோவை - ஓர் பிரபந்தம்,அஃது அகரமுத லெழுவருக்கம்ஒவ்வோர் காரிகையின் மொழிமுதற்கண் முறையேவரத் தொடுப்பது. வருக்கமாலை - ஓர் பிரபந்தம், அதுமொழிக்கு முதலாம் வருக்கவெழுத்திற் கொவ்வோர் செய்யுட் கூறுவது. வருக்கமூலம் - வருக்கத்தொகையினின்றதன் மூலமறிதல். வருக்கமோனை - அடிகடோறும்வருக்கவெழுத்துக்க ளவ்வவ்வருக்கமாய் வருவது. வருக்கம் - அத்தியாயம், இனம்,ஒழுங்கு, குலம், கூட்டம், சதுரம்,சமமாகிய வீரெண்ணின் பெருக்கம், வகுப்பு. வருக்கரை - பலா. வருக்கலாடசங்கலிதம் - ஓர் சங்கலிதம். வருக்கவெதுகை - சேர்வையினவெழுத்துக்களானாகு மெதுகைத்தொடை. வருக்கவெழுத்து - சேர்வையினவெழுத்து. வருக்கு - கஞ்சி. வருக்கை - ஒழுங்கு, பலா. வருக்கைக்கனி - பலாப்பழம். வருக்கைப்பலா - ஓரினப்பலா. வருச்சித்தல் - நீக்கல். வருச்சியம் - தள்ளப்படுவது. வருஷபுட்பம் - தாழம்பூ. வருடகம் - முடக்கொத்தான். வருடதேவதை - அவ்வவ் வருஷத்திற்குரிய தெய்வம். வருடபலன் - வருஷத்திற்குக் கண்டபலன். வருடப்பிறப்பு - புதுவருஷத் தோற்றம்.வருடம், வருஷம் - ஆண்டு, கண்டம்,மழை, மேகம். வருடல் - தடவல். வருடவான் - அண்ணகன். வருடன் - மிலேச்சன். வருடாகாலம் - மழைகாலம். வருடாங்கம் - மாதம்.வருடாந்தரம், வருடாந்திரம் - வருடமுடிவு. வருடாயுதம் - பதினாயிரம். வருடாரம்பம் - மழைத்தொடக்கம்,வருடத்தொடக்கம். வருடுவல் - வருடல். வருடை - எண்காற்புள், குறும்பாடு,மேடவி ராசி, வரையாடு. வருட்டம் - வேம்பு. வருட்டல், வருட்டுதல் - வற்புறுத்தல். வருணசிலைவந்தோன் - வயிரம். வருணசுதா - யமன் மனைவி. வருணதருமம் - அவ்வவ் வருணத்தார்க்குரிய கிருத்தியம், அஃதுஅந்தணர்க்கு ஓதல், ஒதுவித்தல்,வேட்டல், வேட்பித்தல், ஈதல்,ஏற்றல், சத்திரியர்க்கு வேட்பித்தல், ஈதல், வைசியர்க்கு கொள்ளல், விற்றல், கோக்காத்தல்,கிருஷி பண்ணல், வேட்டல்,சூத்திரர்க்கு சுயங்கிருஷியால்வந்த பயனீதல், கிருஷிபண்ணல்,கோக்காத்தல். வருணதருப்பணம் - ஓர் நூல். வருணம் - எழுத்து, கீர்த்தி, குலம்,நிறம், நீர், பிரகாசம், பொன்,பொன்னுரை, மஞ்சள், மாதிரி,யானை, வாசனை, விதம், வேஷம்,சாதி. வருணவிந்து - முத்துச்சிப்பி. வருணவில் - வானவில். வருணனாள் - சதயநாள். வருணனை - தோத்திரம், வன்னிப்பு,விரித்துக்கூறல், புகழ்ந்துரைத்தல். வருணன் - சமுத்திரம், துவாதசாதித்தரிலொருவன், மேற்றிசைப்பாலன். வருணாசாரம் - சாதியொழுக்கம். வருணாஸ்திரம் - வருணபாணம். வருணாத்மஜன் - இந்த்ரசாரதி. வருணாத்மஜை - கள். வருணாநி - வருணன் மனைவி. வருணித்தல் - வன்னித்தல், புகழ்ந்துரைத்தல். வருதல் - நடத்தல், வருகை. வருத்தகம் - வத்தகம். வருத்தகன் - வத்தகன். வருத்தப்படுதல் - துன்பப்படுதல். வருத்தப்படுத்தல் - துன்பப்படுத்தல். வருத்தம் - உள்ளக்களிப்பு, துன்பம். வருத்தல் - துன்புறுத்தல், வருவித்தல். வருத்தனம் - உண்டை, சம்பளம்,சீவனம், தொழில், பெருகுதல்,வத்திப்பு, வழி. வருத்தனி - நீர்க்குடம், விளக்குமாறு. வருத்தனை - பெருகுதல். வருத்தி - இரத்தினங்களின் கீழ்ப்பதிக்குந் தகடு, வருத்தியென்னேவல். வருத்தித்தல் - வளர்தல். வருத்திப்பு - வத்திப்பு. வருத்து - வரவு, வரத்து. வருத்துதல் - வருத்தல், வருவித்தல். வருத்துலம் - வட்டவடிவு.வருந்தல், வருந்துதல் - துன்புறல். வருந்துரு - கோங்கு. வருபிறப்பு - மறுபிறப்பு. வருபுனல் - யாறு, வேற்றுநீர், புதுநீர். வருமதி - வரவு. வருமம் - வர்மம். வருமானம் - வரவு. வருமொழி - நிலைமொழிக்குப் பின்மொழி. வரும்படி - வருமானம். வருவாய் - வரலாறு, வரவுகட்கானவேது, வருமானம். வருவித்தல் - வரச்செய்யல், வேண்டியதொன்றைப் பொருந்த விரித்துக்கொள்ளல். வரூதம் - இருப்பிடம், கவசம்தேரைப் பாதுகாக்கும் புலித்தோன்முதலிய தோல், காவலான இடம். வரூதிநி - ஓர் தெய்வப்பெண், படை. வரேசுவரன் - சிவன். வரேணியன் - சிரேட்டன். வரேண்யம் - குங்குமம். வரேந்திரன் - அரசன், இந்திரன்,வரத்தின் மிக்கோன். வரை - அளவு, கரை, சிறுவரம்பு,மலை, மூங்கில், வரையென்னேவல்,வரைவு, விரலிறை, விவாகம்,எழுத்து, உயர்ந்தமலை, பக்கமலை,கணு, எல்லை. வரைகம்பு - கம்மாளர் கருவியினொன்று. வரைக்குடிலம் - வங்கக்கல். வரைசிறகரிந்தோன் - இந்திரன். வரைதல் - எழுதல், கொள்ளல்,சித்திர மெழுதல், சுற்றிவரைதல்,நீக்கல், மாற்றல், விவாகஞ் செய்தல்,கூறுபடுத்தல், எல்லைப்படுத்தல். வரைபகவெறிந்தோன் - குமரன். வரைப்பகை - இந்திரன். வரைப்பு - எல்லை, மதில். வரையமிர்து - மலைபடு திரவியம். வரையரமகளிர் - மலையில் வாழுந்தெய்வப் பெண்கள். வரையறவு - வரையறை. வரையறுத்தபாட்டியல் - பத்துக் கட்டளைத் துறையால் முதன் மொழியிலக்கணங் கூறுவதொரு நூல். வரையறுத்தல் - எல்லைப்படுத்தல்,மதித்தல், வளைத்தல். வரையறை - அளவு, எல்லை, தீர்க்கம். வரையாடு - குறும்பாடு. வரையுறுத்தல் - எல்லைப்படுத்தல்,வளைத்தல். வரைவிடைவைத்துப் பொருள்வயிற் பிரிதல் - அகப்பொருட்டுறையினொன்று. வரைவின்மாது - வேசி. வரைவு - அளவு, எல்லை, பிரிவு,மணம் மாறுபாடு, வரைதல்,வரையப்பட்டது, கூறுபாடு. வரைவுமலிதல்விரி - காதலன் முலைவிலை விடுத்தமை பாங்கிகாதலிக் குணர்த்தன் முதலாகத்தலைவி யணங்கைப் பராவனிலைகண் டோன் மகிழ்த லீறாகியவேழும். வரைவுமலிவு - வரைவிற்குரியகிளவித் தொகை, அது வரைவுமுயல் வுணர்த்தன் முதலாகப்பராவல்கண்டுவத்த லீறாகியநான்கும். வரோதயன் - வரத்தால் உதித்தவன். வர்க்கம், வர்க்கு - வருக்கம், எருக்கு. வர்க்கை - வருக்கை.வர்ச்சம், வர்ச்சியம் - வருச்சியம். வர்ஷகாலம் - மழைகாலம். வர்ஷம் - வருஷம். வர்ஷாந்தரம் - வருஷ முழுதும். வர்ஜநம் - துன்பம், மரணம், விடுதல். வர்ஜநீயம் - விலக்கத்தக்கது. வர்ணம் - குங்குமம், பூச்சுத்திரவியம்,வருணம். வர்ணகம் - சந்தநம், திலகமரம்,மண்டலம். வர்ணகவி - குபேரன் மகன். வர்ணகாரிகை - நிலத்திலிடுங் கோலம். வர்ணசாரகன் - சித்திரக்காரன். வர்ணதம் - ஓர் வகைச் சந்தனம். வர்ணப்ரசாதனம் - அகில். வர்ணரூபிணி - சரசுவதி. வர்ணவதி - மஞ்சள். வர்ணனை - வருணனை. வர்ணி - பொன், பிரமசாரி. வர்த்தகம் - வருத்தகம், வியாபாரம். வர்த்தகத்தானம் - நாலாமிடம். வர்த்தநம் - ஜீவநோபாயம், தாபித்தல்,வளர்த்தல். வர்த்தமானம் - சங்கதி, சிற்றாமணக்கு,செய்தி, நிகழ்காலம், நிகழ்வு. வர்த்தரூகன் - த்வராபாலகன். வர்த்தனம் - பெருகுகை. வர்த்தனை - வரவேண்டியது, செல்வம். வர்த்தி - இரத்தினங்களின் கீழ்பதிக்குந்தகடு, வத்தி, திரி. வர்த்திக்கும் - இருக்கும். வர்த்துவம் - வட்டவடிவு. வர்மம் - வன்மம். வலக்காரம் - பொய். வலங்கமர் - ஓர் சாதியார். வலங்கம் - பாரி சமுசாரம். வலங்காரம் - மேளத்தின் பசையிட்ட புறம். வலங்குலம் - ஓர் குலம். வலங்கை - வலக்கை, வலப்புறம். வலங்கையார் - ஓர் சாதியார். வலங்கையான் - வலங்கமத்தான். வலங்கொள்ளல் - வலம்வருதல்,வெற்றியடைதல். வலசல் - அன்னிய கிரகபிரவேசம். வலசாரி - வலமாய்ச் சுற்றிப்போதல். வலசி - சோறு.வலசு, வலசை - கூட்டம். வலசைவாங்குதல் - கூட்டத்தோடேயெடுபட்டுப் போதல். வலசோர் - ஓர் பட்டினம். வலஞ்சுழி - வலஞ்சுற்றுஞ்சுழி, ஓரூர். வலட்டி - வலித்தது. வலது - செயல், வலபக்கம், வல்லமை.வலதுகண்ஸ்தானம் - இரண்டாமிடம். வலத்தல் - சொல்லல், நிணத்தல்,வளைத்தல், தெற்றுதல், கட்டல். வலத்திடல் - சொல்லல். வலநாடு - ஓரூர். வலந்தம் - வசனம், வளைவு. வலந்திரி - ஓர் கொடி, வலத்துக்குச்சுற்றுங்கொடி. வலப்பாரிசம் - வலப்புறம். வலமன் - வலப்பக்கம். வலம் - இடம், ஏழனுருபு (உ.ம்)கைவலத்தியாழ், கனம், சேனை,மேல், வலப்பக்கம், வலி, வெற்றி. வலம்பம் - நிறுதிட்டவரி. வலம்புரி - நந்தியாவட்டம், வலப்புரி,வலம்புரிச்சங்கு, சிறந்த சங்கு,சங்கு வடிவாகச் செய்த தலையாபரணம். வலம்புரிமாலையன் - துரியோதனன். வலயம் - எல்லை, கடல், குளம், கைக்கடகம், சுற்று, வட்டம், வட்டவடிவு, வளையம், பாத்தி. வலவன் - சமர்த்தன், தேர்ப்பாகன்,வெற்றியாளன், விஷ்ணு, வலப்பக்கத்து வண்டிமாடு. வலவை - இடாகினி, காளி, காளியேவல் செய்வாள், வல்லவள்,வல்லோன், விநாயகன் றேவி,நாணிலி. வலவோட்டு - சூரியன் முதலிய சத்தக்கிரகங்களின் சுற்று. வலன் - ஓரசுரன், வலப்பக்கம், வலி,வல்லவன், வெற்றி. வலாகம் - கொக்கு, நீர். வலாகை - கொக்கு. வலாசகம் - குயில், தவளை.வலாட்டிகன், வலாட்டியன் - தத்துவசாலி, பலாட்டியன். வலாரி - இந்திரன். வலாற்காரம் - வலோற்காரம்,அடர்த்தான செயல். வலி - இரேகை, ஓரலங்காரம், அதுதொகைச் சொற்றொடர் புண்டாகத் தொடுப்பது, ஓர் நோய்,குரங்கு, நறுவிலிமரம், பற்றிரும்பு,வரி, வலியென்னேவல், வல்லமை,கொசுகு, ஒலி, வஞ்சம், திரைவு,பலமுள்ளவன். வலிக்கட்டு - வீணையினோ ருறுப்பு. வலிக்கென - தெளிவாய். வலிங்கம் - பலவந்தம். வலிசங்கம் - குரங்குக் கூட்டம். வலிசம் - தூண்டில். வலிச்சலன் - அறமெலிந்தவன்,பிடித்த துவிடாதோன். வலிச்சல் - காய்ந்தது, பனையின்கடுங்காய், வரிச்சு. வலிச்சற்கொடி - ஓர் கொடி. வலிதம் - அசைவு, சூழ்வு. வலிதல் - தங்கல், துணிதல், வலிந்துகோடல், வலோற்காரஞ் செய்தல். வலிது - வலியது. வலித்தல் - இழுத்தல், உடன்படல்,ஏங்கல், கடினமாய் வாங்கல்,காய்தல், தோணிதூண்டல்,நினைத்தல், மரக்கலப்பா யுயர்த்தல், மெல்லெழுத்தை வல்லெழுத்தாக் கல், வயிற்றுள் முறுக்குதல், வலி வலித்தல், வளைத்தல்,வன்மையா யுச்சரித்தல், கொழுத்தல், துணிதல், சொல்லல். வலிந்துகோடல் - அருமையிற்கருத்துக் கொள்ளல். வலிபம் - கீழேழுலகத் தொன்று, அதுமஹாதலம். வலிபதம் - அற்பகடுமை. வலிப்படல் - வலிதாதல். வலிப்பு - இழுப்பு, வலி. வலிப்புறுத்தல் - வற்புறுத்தல். வலிமாந்தம் - மாந்தமெட்டி னொன்று. வலிமுகம் - குரங்கு. வலிமை - வலோற்காரம், வன்மை. வலிமைசெய்தல் - பலபந்தம் பண்ணல். வலிமைபாராட்டல் - சமர்த்துக்கொண்டாடுதல். வலிய - தானாக. வலியறிதல் - திராணியறிதல். வலியன் - கரிக்குருவி, வலிபதமானது,வலியுடையோன், வல்லவன். வலியாடல் - வலாற்கரித்தல். வலியான் - ஓர் பருந்து, கரிக்குருவி,வலியுடையோன். வலியுறுத்தல் - உறுதிப்படுத்தல்,பலப்பித்தல். வலீநகம் - தழை. வலீகம் - தேள். வலீமுகம் - குரங்கு. வலு - எட்டு, ஓர் பசைமருந்து, கனம்,கொசுகு, பலம், பற்று. வலுசுறுதி - வலோற்காரம். வலுத்தல் - திரப்படுத்தல், பலத்தல். வலுப்பு - திரம், பலப்பு. வலுவந்தம் - வலோற்காரம், பலவந்தம். வலுவந்தரம் - வலிமை. வலுவாயன் - வல்லாயன். வலூகம் - தாமரைக்கிழங்கு. வலை - மீன் முதலிய படுக்குங்கருவி. வலைக்குணுக்கு - வலையைத் தாழச் செய்யுமுண்டை. வலைச்சி - நெய்தனிலப்பெண். வலைஞர் - நெய்தனிலமாக்கள், செம் படவர். வலைஞன் - செம்படவன். வலைதடுத்தல் - மீன்படாமற்றடுத்தல். வலைப்படல் - சிறைப்படல், மயக்கிலகப்படல், வலையிலகப்படல். வலைப்பாடு - மீன்பிடி. வலையச்சேரி - நெய்தனிலம். வலையம் - வலயம். வலையர் - நெய்தனிலமாக்கள். வலையன் - ஓர்சாதியான், ஓர்சாமை,பரதவன். வலைவீசுதல் - வலையெறிதல்.வலோத்காரம், வலோற்காரம் - பலோத்காரம். வல் - கச்சு, சீக்கிரம், சூதாடுகருவி,மேடு, வலி. வல்கம் - பட்டை. வல்கி - வீணை. வல்கிதம் - குதிரையிருகாற்றூக்கியாடி வருநடை. வல்சி - அரிசி, உண்டல், சோறு,உணவு. வல்லகி - வீணை. வல்லங்கம் - வல்வழுக்கு. வல்லடி - வலூபந்தம், வல்லபம். வல்லடிக்காரன் - வலுபந்தநியாயம். வல்லணங்கு - காளி, துர்க்கை. வல்லதம் - கொலை, மூடுதல். வல்லபசத்தி - மிகுவலி. வல்லபஸ்தானம் - மூன்றாமிடம். வல்லபம் - கதியுள்ளகுதிரை, பிரியம்,வல்லமை, உத்தமமான குதிரை. வல்லபன் - இடையரிற் றலைவன்,குதிரை மேல் விசாரிப்புக்காரன்,நாயகன், பிரியமுள்ளோன், மேல்விசாரணைக் காரன், வல்லோன். வல்லபி - மனைவி, வல்லபமுள்ளாள்,வல்லபமுள்ளோன். வல்லபை - பிரியநாயகி, வலவை. வல்லமை - வல்லபம், சக்தி. வல்லம் - தஞ்சாவூருக்கருகிலோரூர்,வாழை. வல்லயம் - எறியீட்டி. வல்லரி - கொடி, தளிர், பசுங்காய்,பூங்கொத்து. வல்லவர் - அறிஞர். வல்லவன் - இடையன், பருப்புக்கறிசமைப்போன், புருடன், வல்லான்,வீமன். வல்லவாட்டு - உத்தரீயம், மேற்போர்வை. வல்லவி - வல்லபி, மனைவி. வல்லவை - வல்லபை. வல்லாங்கு - சதுரப்பாடு, வல்லபடி. வல்லாடாயம் - சூதாடுமிடம். வலாத்துக்கம் - ஞாயமில்லா துண்டாகிய துக்கம். வல்லாமை - இயலாமை.வல்லாரல், வல்லாரை - ஒர்பூடு,கேட்டைநாள். வல்லார் - அயலார், சமர்த்தர், மாட்டாதவர். வல்லார்கொள்ளை - பலராற் கவரப்படுதல். வல்லாளகண்டன் - திருவண்ணாமலையிலோரரசன். வல்லாளன் - திண்ணியன், வல்லான். வல்லான் - வல்லவன், வல்லமையுள்ளவன், வல்லமை யில்லாதவன். வல்லி - அளவு, ஆய்ப்பாடி, உபநிடதமுப்பத் திரண்டி னொன்று,கலியாணம், கால்விலங்கு, நீங்கல்,படர்கொடி, பிரிதல், பூமி,பெண், முருக்கு, வள்ளிக்கொடி,சீந்தில், பூட்டும் விலங்கு. வல்லிகம் - கொடி, மிளகு. வல்லிகை - காதணி, யாழ், குதிரைக்கழுத்திலணியும் ஒருவடம். வல்லிக்கொடி - பெருமருந்து. வல்லிசம் - மிளகு. வல்லிசாதகம் - கற்பகத்திற் படர்கொடி. வல்லிசாதம் - ஓர்கொடி. வல்லிசூரணை - புளிவசலை. வல்லிகை - உச்சவிசை, பாம்பு. வல்லியம் - இடையரூர், கொல்லிமலை, செவ்வல்லி, புலி, மஞ்சள். வல்லியை - அமுக்கிராங் கிழங்கு. வல்லிவன்னி - சித்திரமூலம். வல்லினமோனை - எல்லாவடிகளின்முதற்கண்ணும் வல்லின வெழுத்துக்கள் வருவது. வல்லினம் - வலிதாயுச்சரிக்கு மெழுத்தின் பகுதி. வல்லினவெதுகை - எல்லாவடிகளின் முதற்சீர்க்கண்ணும் வல்லினவெழுத்துக்க ளெதுகை யாய்வருவது. வல்லீஜம் - மிளகுக்கொடி. வல்லீட்டுங்குற்றி - பனைமுதலியபிளக்குங்குற்றி. வல்லுநர் - வல்லோர். வல்லுதல் - ஒழுங்கு, வன்மையுடைத்தாதல். வல்லுயிர் - அரிதாய்ப் பிழைத்திருக்குமுயிர். வல்லுரம் - காடு, காட்டுப்பன்றியிறைச்சி, தனிமை, புற்றரை, பூங்கொத்து, மணல், வயல்,வனாந்தரம். வல்லுவம் - அடைப்பை, கைப்பை. வல்லுளி - பன்றி. வல்லுனர் - வல்லோர். வல்லூகம் - ஆண்குரங்கு, கரடி, முசு. வல்லூரம் - பால்நிலம், வள்ளூரம்,வனாந்தரம், காய்ந்தபுலால். வல்லூறு - இராசாளி, இது பஞ்சபட்சியினு மொன்று. வல்லெழுத்து - வன்மையா யுச்சரிக்குமெழுத்துக்கள். வல்லெனல் - அனுகரண வோசை,வலிதாதல். வல்லே - விரைவாக. வல்லை - ஓர் நோய், கடுப்பு, காலவிரைவு, கோட்டை, புன்முருக்கு,பெருங்காடு, முருக்கு, மேடு,வட்டம், வருத்தம், வலிமை,புனல்முருக்கு. வல்லையம் - எறியீட்டு. வல்லொட்டு - அருமையான இருப்பு,அரும்பூட்டு. வல்லொற்று - வல்லின மெய். வல்லோரொழிப்பு - அபநுதி யுருபகத்தொன்று, அது பிறரையமுற்றுவினவிய தம் சொல்லினுண்மைப்பொருளை வல்லோரச் சொல்லுக்கு மற்றொருதாற் பரியத்தைக்கற்பித்து மறுத்தல். வல்லோன் - வலிமையுடையோன். வல்வருத்தம் - கடுவருத்தம். வல்வாயசரணன் - ஓர் பாம்பு. வல்வாயன் - பேச்சிற்றிற முடையோன். வல்விடம் - கடுநஞ்சு. வல்விரைவு - கடுவிரைவு. வல்விலங்கு - யானை. வல்வினை - வலிய வினை. வலி - வேதமுத்திரை தரியாதவன். வல்வலோட்டி - ஒர் முட்செடி. வவ்வல் - வாருதல், கவருதல். வவ்வாலொட்டி - ஓர் முட்செடி. வவ்வால் - வெளவால். வவ்வால்மீன் - ஓர் மீன். வவ்வால்விளக்கு - ஓர் வகை தொங்கும்விளக்கு. வவ்வாற்குறடு - செருப்பினோருறுப்பு. வவ்வாற்பந்தம் - வவ்வால் விளக்கு. வவ்வானாற்றி - ஆதாரமற்றது. வவ்வி - வவி. வவ்விலோரி - கடையெழுவள்ளலிலொருவன். வவ்வு - வவ்வல். வவ்வுதல் - க்ரஹித்தல், கவுர்தல். வழக்கச்சொல் - இயற்சொல். வழக்கம் - ஈகை, நடைபடி, வழங்குதல்,போக்கு. வழக்கறிதல் - நடையறிதல். வழக்காடுதல் - வழக்குச்செய்தல். வழக்காளி - தொடர்ச்சிக்காரன்,வழக்குச் செய்பவன். வழக்கிடுதல் - வழக்காடுதல். வழக்கு - அறப்பான் மூன்றனுளொன்று, அது பொருள் காரணமான வியாச்சியம், நியாயம்பேசுதல், வழக்கம், நியாயவாதம்,சஞ்சாரம். வழக்குக்கேட்டல் - நியாயம் விசாரித்தல். வழக்குச்செய்தல் - வழக்குப் பேசுதல். வழக்குத்தொடுத்தல் - வழக்குண்டாக்கல். வழக்குப்பேசல் - நியாய முத்தரித்தல். வழக்குவெல்லல் - வழக்குக் கெலித்தல். வழக்கோரம் - ஒருபக்கஞ் சாய்ப்பானநியாயம். வழங்கல் - ஆட்சிபண்ணுதல், இயங்குதல், ஈதல், உலாவல், சொல்லல்,நடத்தல், மழை பொழிதல்,செலுத்துதல், அசைத்தல். வழங்காநடை - புதுநடை. வழங்காமொழி - சொல்லத்தகாதசொல். வழங்காவழி - புதுக்கட்டு. வழங்குதல் - வழுந்துதல். வழப்பம் - வழக்கம். வழலிக்கை - சோர்பு. வழலுதல் - வழுந்தல். வழலை - ஓர் பாம்பு, ஓர் மருந்து,கோழை, சவுக்காரம், முப்பு. வழலையுப்பு - சவுக்கார வுப்பு. வழாஅல் - வழுவுதல். வழாநிலை - திணைபாலிடங் காலமுதலிய வழுவாது வழங்குவது,வழுவாது நிற்பது. வழாறு - நிறைபுனல். வழி - இடம், ஏழனுறுபு, (உ.ம்)நிழல்வழியசைந்தன்ன, கார ணம்,திரட்சி, நடவை, பழமை, பின்,மகன், மார்பு, முறைமை, வழியென்னேவல், ஒழுக்கம், ஏவல்,மரபு, நெறி. வழிகட்டுதல் - எத்தனம் பண்ணுதல்,வகைபண்ணுதல், வழிமறித்தல். வழிகாட்டி - முன்மாதிரி வைப்போன்,வழி நடத்துவோன். வழிகாணுதல் - நேர்வருதல், வயணம்பிடித்தல். வழிக்கரை - வழியருகு. வழிக்குதல் - துடைத்தெடுத்தல். வழிக்கொள்ளுதல் - பயணப்படுதல். வழிச்சாரி - தீர்வை கொடாத சரக்குகளைக்கொண்டு போகிறவர்களைக் கண்டு பிடிப்பதற்கானகள்ளப்பாதை, நடையுள்ள வழி. வழிச்செலவு - பயணச்செலவு,பயணம். வழிச்செல்வோன் - பதிகன். வழிதல் - மிகுந்து வடிதல். வழிதுறை - பயணப்போக்கு. வழித்தடை - சகுனப்பிழை. வழித்தல் - வழிக்குதல், மெழுகல்,துடைத்தெடுத்தல். வழித்துணை - பாரம்பரியமானதுணை, வழி நடையிற்றுணை. வழித்தெய்வம் - குலதெய்வம். வழித்தொண்டு - தலைமுறைப்பட்டதொண்டு. வழித்தோன்றல் - மகன். வழிநடத்தல் - நடப்பித்தல். வழிநடை - பிரயாணம். வழிநாள் - பின்னைநாள், பின்வருநாள். வழிநாற்பது - ஓர் செய்யுள். வழிநிலை - பின்னிற்றல். வழிநூல் - முதனூல் வழியே விகற்பித்துரைத்த நூல்.வழிபடல், வழிபடுதல் - கீழ்ப்படுதல்,ணங்கல். வழிபடுத்தல் - நேர்படுதல், பயணப்படுத்தல். வழிபண்ணுதல் - வகைபண்ணுதல். வழிபயத்தல் - மறுப்பறுத்தல். வழிபறித்தல் - அதர்பறித்தல். வழிபாடு - அப்பியாசம், ஆராதனை,தாழ்மை, வணக்கம், வழிபடல். வழிபாடுமறுத்தல் - அகப்பொருட்டுறையினொன்று. வழிபார்த்தல் - வகை பார்த்தல், வரவுபார்த்தல். வழிப்படுதல் - நேர்ப்படுதல், வழிநடக்கத் துவக்கல், கீழ்ப்படுதல்.வழிப்படுத்தல், வழிப்படுத்துதல் - உட்படுத்துதல், ஒழுங்காக்கல்,சரி வழியிடைத்தல். வழிப்பயணம் - வழிப் பிரயாணம். வழிப்பறி - ஆறலை. வழிப்பிரயாணம் - வழி நடை. வழிப்பிரிவு - தெருச்சந்தி. வழிப்பரை - வழிக்கண், தங்குமிடம். வழிப்போக்கர் - பயணக்காரர். வழிப்போதல் - பின் செல்லல்,வேறொருவர் காரியத்திற்குட்படல். வழிமுரண் - ஒவ்வோரடிக்கண்ணுஞ்சீர்களொன்றற் கொன்று மறுதலைப்பட்டு வருவது. வழிமுறை - தலைமுறை, வழிமுதல். வழிமொழிதல் - வழிபாடு கூறல்,பின்னெடுத்துக் கூறல். வழிமோனை - மோனைகளி னொன்று. வழியடைத்தல் - புறம்புறுத்தல். வழியல் - வழித்தெடுக்கப்பட்டது,வழியிற் றங்குகிறவன். வழியுரைப்போர் - தூதர். வழியெதுகை - ஒவ்வோரடிக்கண்ணும் முறையேசீர்களொன்றற்கொன்று எதுகையாய் வருவது. வழிவகை - இடம்பாடு, ஏது. வழிவழியாய் - வம்ஸபாரம்பர்யமாய். வழிவிடுதல் - பயணமனுப்புதல்,வழிவெட்டிவிடுதல். வழிவைத்தல் - போகத்தொடங்கல்,முன் தொடங்கல். வழு - இன்மை, ஈனக்கேடு, தப்பு,வழுவென்னேவல், கேடு, பாதகம். வழுகுதல் - வழுவுதல். வழுக்கட்டை - சிறுவன், மூடத்தன்மை. வழுக்கல் - அடித்தல், இழுக்கல்,மோதல், மறத்தல். வழுக்காய் - இளங்காய். வழுக்கு - தவறு, நிணம், மறதி, வழுக்கென்னேவல். வழுக்குதல் - வழுக்கல். வழுக்குநிலம் - வழுக்கற்றரை. வழுக்குப்பாசி - ஓர் நீர்ப்பூடு. வழுக்கெண்ணெய் - ஓர்வகை யெண்ணெய். வழுக்கை - தேங்காய்வழுக்கல்,வழுக்காய். வழுக்கைத்தலை - மொட்டந்தலை. வழுக்கைப்பலா - ஓர் பலா. வழுதலை - கத்தரி, புனத்திடும்பொய்க்கழு, கண்டங்கத்தரி. வழுதி - பாண்டியன். வழுது - பொய், வைக்கோல். வழுதுணை - கத்தரி.வழுத்தல், வழுத்துதல் - சொல்லல்,துதித்தல். வழுநிலை - திணைபாலிடங்காலமுதலிய வழுவி வழங்குவது. வழுந்தல் - காய்ப்பேறல். வழும்பு - அழுக்கு, நிணம், விலங்கின்குட்டிகள் பிறக்கும் போதிருக்கும் வழுவல், குற்றம். வழுவமைதி - திணைபாலிடம்முதலிய மாறுபட்டுவரினுமமைத்துக் கொள்ளத்தக்கது. வழுவமைப்பு - வழுவமைதி. வழுவல் - இளநீர் வழுவல், சாய்தல்,தப்புதல், வழும்பு, வழுவுதல். வழுவவிடுதல் - தப்பவிடுதல். வழுவற்றேங்காய் - வழுக்கைத்தேங்காய். வழுவன்சுறா - ஓர் மீன். வழுவாடி - காரியத்தி னழுவுகிறவன். வழுவாமை - நேர்மை. வழுவலி - குற்றமற்றவன். வழுவு - குற்றம், தவறு, வழு. வழுவுடைக்காமம் - துரிச்சை, பிறர்பொருள் விரும்பல். வழுவுதல் - தவறுதல், கெடுதல். வழுவை - யானை. வழூஉ - வழுவிநிற்பது. வழூஉச்சொல் - பிழைமொழி. வழூஉச்சொற்புணர்த்தல் - குற்றமானசொற்களைச் சேர்த்தல், அதுசெய்யுட் குற்றம் பத்தினொன்று. வழை - சுரப்புன்னை. வழைச்சு - இளமை. வளகு - ஒருசெடி, இலை. வளங்கட்டுதல் - வழிபண்ணுதல். வளந்து - பெரியமிடா. வளப்படுதல் - சீர்ப்படுதல், நேராதல். வளப்பம் - கொழுப்பு, நன்மை,மாட்சிமை, வளமை. வளப்பாடு - வளமை. வளப்பு - வளமை. வளமடல் - ஓர் பிரபந்தம், அஃதுஅறம் முதலிய முப்பொருளின்பயனை யிகழ்ந்து காமவினபத்தினையே பயனெனக் கொண்டுபாட்டுடைத் தலை மகனியற்பேர்க்குத் தக்கதை யெதுகையாகத் தனிச் சொல்லின்றியின்னிசைக் கலிவெண்பாவாற்றலைமகனிரந்து குறை பெறாதுமடலேறுவதாயீரடி யெதுகைவரப்பாடுவது. வளமை - உபகாரம், கொழுப்பு,செல்வப்பொலிவு நன்மை,மாட்சிமை. வளமையர் - பூவைசியர், மாட்சிமையுள்ளோர், வேளாளர். வளம் - அழகு, செல்வம், செவ்வை,பக்கம், பதவி, பலபண்டம்,மாட்சிமை, வலி, வழி, வாறு,நன்மை, தகுதி, கொழுப்பு. வளயம் - வளையம்.வளருதல், வளர்ச்சி - வளர்தல். வளர்தல் - உயர்தல், கதித்தல், விர்த்தி. வளர்த்தல் - உண்டாக்கல், வளரச்செய்தல், பரப்பல். வளர்த்தாள் - செவிலித்தாய். வளர்த்தி - வளர்ச்சி. வளர்த்துதல் - கிடத்துதல், சயனிப்பித்தல், பருப்பித்தல், உறங்கச்செய்தல். வளர்பிறை - பூருவபக்கச் சந்திரன். வளர்ப்பு - வளர்க்குந்தன்மை.வளர்ப்புணி, வளர்ப்புப்பிள்ளை - வளர்த்தபிள்ளை. வளர்மயிர் - மயிர்க்குழற்சி. வளவளத்தல் - பயனின்றிப் பிதற்றல். வளவளப்பு - பயனில் சொல். வளவன் - சோழன். வளவி - வீட்டிறப்பு. வளவு - கொல்லை, வளைவு, வீடு. வளவுதல் - கலத்தல், சூழ்தல். வளன் - வளம். வளாகம் - இடம், ஓர்நகரம், சூழ்ந்திடல், தினைப்புனம், வளைந்தவிடம். வளரர் - இளங்கொம்பு.வளாவல், வளாவுதல் - கலத்தல்,வளைதல், வளைவு, சூழ்தல். வளி - ஓதம், காற்று, சூரைக்காற்று. வளிசம் - தூண்டில். வளிமறை - கதவு. வளு - இளமை, இளைது. வளுந்தல் - தோல்வவ்வப்படல். வளுவல் - இளமை, வழுக்கத்தக்கது. வளுவளுத்தல் - கொளுகொளுத்தல். வளுவளெனல் - வளுவளுப்புக்குறிப்பு. வளை - உத்திரம், கங்கணம், களங்கம்,சக்கிரம், சங்கு, நுழைவளை, புற்று,வளையென்னேவல், கைவளை. வளைக்குதல் - கட்டல், கோணச்செய்தல், சூழுதல், தடுத்தல்,நளினஞ் செய்தல், வாருதல். வளைச்சல் - சூழ்வு. வளைதடி - பாராவலயம். வளைதருகுழியம் - கட்டுக்குழியம். வளைதல் - கட்டல், சுற்றுதல், சூழ்தல்,தடுத்தல், வாருதல், கோணுதல். வளைத்தல் - வளைக்குதல், சூழ்தல்,தடுத்தல், வாருதல், கோணச்செய்தல். வளைபோழ்நர் - சங்கறுப்போர். வளைப்பு - உழவுசால், மதில், வளைத்தல், காவல், தடை. வளைமணி - அக்குமணி, சங்குமணி. வளையகம் - சங்கு. வளையக்கொடி - அண்ணந்தாள். வளையமிடுதல் - குமிழமாடுதல்,சூழ்தல். வளையம் - எல்லை, குளம், கைவளை,சீதாங்க பாஷாணம், தாமரையுட்சுருள், வட்டம், தவளை. வளையலுப்பு - ஓருப்பு. வளையல் - கண்ணாடிக்கரு, கைவளை, வளைவுள்ளது. வளையல்மண் - வளையிலுண்டாக்குகிற மண். வளையாபதி - ஓரிலக்கிய நூல். வளையில் - கண்ணாடிக்கரு, கைவளை. வளைவாணி - தூண்டல். வளைவிற்பொரி - வளைந்துதானேயெய்யும் மந்திரவில். வளைவு - பணிதரவு, வட்டம்,வணக்கம், வணங்கல், வளைந்தது,வளைதல். வள் - ஒலிக்குறிப்பு, காது, கூர்மை,நெருக்கம், வலி, வளம், வார்,வாளுறை, வாள், காதுபற்றிரும்பு. வள்வள்ளெனல் - ஈரடுக்கொலிக்குறிப்பு. வள்வு - வார். வள்ளடி - செவிமூலம். வள்ளம் - ஓர்வகைச் சிறுதோணி,நாழி கைவட்டில், மரக்கால்,வட்டில், சிறுவட்டில். வள்ளல் - வரையாதுகொடுப்போன்,வலியன், வள்ளைக்கீரை, சிரேட்டம், பாம்பு. வள்ளற்றனம் - கொடைக்குணம். வள்ளன்மை - வள்ளற்றன்மை,கொடைக் குணம். வள்ளி - ஆபரணம், ஓர் கூத்து, ஓர்கொடி, கைவளை, சுப்பிரமணியன்றேவி, படர்கொடி, பிரப்பங்கேடகம், திருவள்ளுவர் சகோதரி. வள்ளிக்கண்டம் - சீந்தில். வள்ளிசு - நேற்றி முழுதும். வள்ளித்தண்டு - பிரம்பின்வட்டம்.வள்ளிமணவாளன், வள்ளிமணாளன் - முருகன். வள்ளியம் - ஊதுகுழல், மரக்கலம்,மிளகு, மெழுகு. வள்ளியோர் - வரையாது கொடுப்போர். வள்ளியோன் - வரையாது கொடுப்போன், சிரேட்டன். வள்ளுரம் - ஆட்டிறைச்சி, ஆவினிறைச்சி, சூட்டிறைச்சி, புலால்,தசை. வள்ளுவசாத்திரம் - ஓர் சோசியம். வள்ளுவன் - திருவள்ளுவநாயனார். வள்ளுவர்குறள் - ஓர் நூல். வள்ளுவன் - ஓர் சாதியான், புரோகிதன், வருங்காரியம் சொல்லுவோன், நிமித்திகன். வள்ளுறு - வல்லீறு. வள்ளூரம் - வள்ளுரம். வள்ளை - உலக்கைப்பாட்டு, ஓர்கொடி. வறகமார்க்கம் - நாயுருவி. வறகாலி - வெள்ளாடு. வறகுசர் - கார்போகவரிசி. வறக்காலன் - துடைகாலன். வறசமம் - சூடசப்பாலை. வறசுண்டி - செங்கருங்காலி. வறடு - வரடு. வறட்காமாலை - வரட்சி, வறள்வு. வறட்சுண்டி - ஆடுதின்னாப்பாளை. வறட்டல் - காயச்செய்தல், வறுத்தல். வறட்டி - வறாட்டி. வறட்பூல் - ஓர் பூல். வறண்டி - குப்பைவாரி, வழிக்குங்கருவி. வறதாரு - கறிமுள்ளி. வறத்தல் - காய்தல், சுருங்கல்,வறுமை யாதல். வறப்பு - குறைவு, வற்று, வற்றுதல்,வறுமை. வறலாரை - வரளாரை. வறல் - வறுமை, உலர்தல். வறவு - கஞ்சி. வறவொட்டி - ஓர் பூடு. வறளாரை - வரளாறை. வறண்முள்ளி - வாள்முள்ளி. வறளி - வரளி.வறளுதல், வறள், வறள்தல் - வரள்தல்,வற்றல். வறள்வு - வரள்வு. வறள் - வறுநிலம், பஞ்சம். வறாகி - பாப்படை. வறாட்டி - வறட்டி. வறிஞர் - தரித்திரர். வறிது - அறியாமை, குறைவு, சிறுமை,பயனின்மை, வீண், அற்பம். வறிதுநகைதோற்றல் - அகப்பொருட்டுறையி னொன்று. வறிமை - வறுமை.வறியர், வறியோர் - தரித்திரர். வறியோன் - தரித்திரன். வறுகுதல் - பிறாண்டுதல். வறுக்கற்றுப்போதல் - திரவறுமைப்பட்டுப்போதல். வறுங்காலம் - வறப்புக்காலம். வறுங்கோடை - மழையில்லாதகோடை. வறுத்தல் - வறட்டல். வறுத்துறுப்புச்செய்தல் - முற்றுநீக்கல். வறுநகை - புன்னகை. வறுநிலம் - பாழ்நிலம். வறுமம் - வன்மம். வறுமை - தரித்திரம், வெறுமை. வறுமொழி - வீண் சொல். வறும்புனங்கண்டுமறுகல் - அகப்பொருட்டுறையி னொன்று. வறும்புனம் - பாலைநிலம், விளைவுகொய் புனம். வறுவிலி - அகதி. வறை, வறையல் - துவட்டற்கறி,பிண்ணாக்கு, பொரிக்கறி. வற்கசங்கலிதம் - வருக்க சங்கலிதம். வற்கடம் - பஞ்சகாலம், வறப்புக்காலம். வற்கடை - குறைவு. வற்கமூலம் - வருக்கத் தொகையின்மூலம். வற்கமார்க்கம் - நாயுருவி. வற்கம் - கஞ்சி, குதிரை வாய்வார்,சமமாகிய வீரெண்ணின்பெருக்கம், மரவுரி, மரப்பட்டை. வற்கராடம் - நகக்குறி, மத்தியானக்கிரணம். வற்கரி - கரகம், குதிரைக் கயிறு. வற்கலம் - மரவுரி, மரப்பட்டை. வற்கலை - மரவுரிச்சீரை. வற்காலி - வெள்ளாடு. வற்கித்தல் - ஓர் தொகையையத்தொகையாற் பெருக்கல். வற்கு - அழகு, ஆடு, கஞ்சி, சந்தனம். வற்குசா - கார்போகரிசி. வற்குலிகம் - வலியான் குருவி. வற்சகம் - பசுக்கன்று, பிள்ளை. வற்சதந்திரி - கன்று கட்டுங் கயிறு. வற்சதரம் - இளங் கன்று.வற்சநாபம், வற்சநாபி - ஓர் மருந்து. வற்சநீயம் - தள்ளத்தக்கது, நேரற்றது. வற்சமம் - சூடசப்பாலை. வற்சம் - பசுக்கன்று, குழந்தை. வற்சவம் - எருமை பசு விவற்றின்கன்று, ஓர் தேயம், குதிரைவாய்வார், மார்பு. வற்சரம் - வருடம். வற்சலம் - இளங்கன்றுப் பசு, தயை. வற்சலை - ஈன்ற பசு. வற்சிதம் - தள்ளுகை. வற்சித்தல் - தள்ளுதல், விலக்குதல். வற்சிப்பு - தள்ளுகை. வற்சியம் - விடப்பட்டது. வற்சை - குழந்தை, மலட்டுப் பசு. வற்ணம் - வண்ணம். வற்தனை - பார்ப்பாருக்குங் கிராமத்தூழியக்காரருக்குங் கொடுக்குங்கூலி. வற்பம் - அருமை, ஓறுப்பு, பஞ்சம்,வமை. வற்பு - உறுதி, வலி, வற்பம். வற்புறுத்தல் - உறுதிப்படுத்தல். வற்மம் - வன்மம். வற்றம் - வறட்சி, வற்று, வறுமை. வற்றல் - அடைகாய், உலர்தல்,காய்ந்தது, வடிதல். வற்றங்சூடு - நலம்வற்றச் சுடுஞ்சூடு. வற்றாலை - ஓர் கிழங்குக்கொடி. வற்று - நீர்ச்சுருக்கம், வன்மையுடையது. வற்றுக்கடை - குறைவு. வற்றுதல் - காய்தல், வடிதல். வனகசம் - வனசரம். வனகதலி - காட்டு வாழை. வனகந்தம் - காட்டுக்கருணை. வனகவம் - காட்டுப் பசு. வனகுத்தன் - ஒற்றன். வனகோசரம் - காடு. வனகோசரன் - வனவாசி, வேட்டைக்காரன். வனகௌ - காட்டுப் பசு. வனசங்கடம் - கடலை.வனசஞ்சரிப்பு, வனசஞ்சாரம் - வனவாசம். வனசஞ்சாரி - வனவாசி. வனசமூகம் - பூஞ்சோலை. வனசம் - தாமரை. வனசரம் - பெருங்காடு, மூவினயானையினொன்று, அது வனத்திற்பிறந்த யானை.வனசரர், வனசரிதர் - வனவாசிகள்,வேடர். வனசரோசினி - காட்டுப்பருத்தி. வனசிருங்காடம் - யானை நெருஞ்சில். வனசீவி - வனவாசி. வனசுரம் - அருங்காடு. வனசூகரி - காட்டுப்பன்றியின் பெண். வனசெந்து - காட்டு மிருகம். வனசோபனம் - தாமரை. வனச்சார்பு - முல்லைநிலம். வனச்சுவை - நரி, நாவி, புலி. வனதம் - முகில். வனதித்தம் - குடசப்பாலை. வனதீபம் - சண்பகம். வனதேவதை - வனத்திற் றெய்வம். வனநரம் - குரங்கு. வனபதி - பூவாது காய்க்குமரம், மரம். வனபந்தம் - தடாகம். வனபலம் - யானைத் திப்பிலி. வனபாதவம் - காட்டுமரம். வனபிப்பலி - காட்டுத்திப்பிலி. வனபூமி - காட்டுத்தேயம். வனபத்தியம் - பூவாமற் காய்க்குமரம். வனப்பிரியம் - குயில். வனப்பு - அலங்காரம், அழகு. வனமரை - ஓரிதழ்த் தாமரை. வனமல்லி - காட்டுமல்லிகை, மௌவல். வனமா - கொடிவேலி, முதிரை. வனமாலி - திருமால், பிரமி. வனமாலிநி - துவாரகை, வராகி. வனமாலை - திருமால் மாலை. வனமுதம் - முகில். வனமுரை - முதிரை. வனமோசை - காட்டுவாழை. வனம் - அழகு, ஊர்சூழ்ந்த சோலை,காடு, குடியிருப்பு, சுடுகாடு,துளசி, நீர், புற்று, மலையருவி,மிகுதி, வழி, வீடு. வனரம் - குரங்கு. வனராசன் - சிங்கம். வனருகம் - தாமரை. வனலக்ஷ்மீ - வாழை. வனவசம் - சந்தனம். வனவாசம் - வனவிருப்பு. வனசாசனம் - நாவி. வனவாசி - வனசஞ்சாரி, வனத்தில்வசிப்பவன். வனவாந்தரம் - வனாந்தரம். வனவிரீகி - மலைநெல். வனவிலங்கு - காட்டு மிருகம். வனவிலாசினி - ஓர் செடி. வனாகம்பம் - மரவசைவு. வனாகி - முயல். வனாசம் - காட்டாடு. வனாந்தம் - காட்டோரம். வனாந்தரம் - நின்மானுஷிய காடு. வனாமலகம் - காட்டுநெல்லி. வனாயு - ஓர் தேயம். வனார்ச்சகன் - பூவிற்போன். வனிசை - கா. வனிதம் - சிறப்பு. வனிதை - பெண், மனையாள். வனீ - காடு.வனீகன், வனீயகன் - யாசகன். வனீரம் - காட்டுத் திப்பிலி. வனேசுரன் - காட்டில் சஞ்சரிப்போன். வனைதல் - அலங்கரித்தல், செய்தல். வனோற்சாகம் - காண்டாமிருகம். வன்கட்பேதை - பாலைநிலப்பெண். வன்கட்பேதையர் - குறிஞ்சிநிலப்பெண்கள், பாலைநிலப் பெண்கள். வன்கணம் - வலியுடையவருக்கம்,வல்லெழுத்து வருக்கம். வன்கண் - கொடுமை, கொடும்பார்வை, பொறாமை, வீரத்தன்மை,வைரம், அசைவின்மை. வன்கண்ணர் - வைராக்கியர். வன்காய் - கடுங்காய். வன்காரம் - வலோற்காரம். வன்கிடை - அருங்கிடை. வன்கிழம் - அறமுதுமை. வன்குணம் - வைரத்தனம். வன்கை - வைராக்கியம். வன்கைவாரம் - அரும்பழி. வன்கொலை - அருங்கொலை. வன்சா - அருஞ்சா. வன்சிரம் - ஓர் மீன். வன்சுரம் - பாலைவனம். வன்சொல் - கடுஞ்சொல். வன்சொல்விலக்கு - ஓரலங்காரம்,அது வன்சொற்சொல்லி விலக்குவது. வன்பகை - கடும்பகை. வன்பரணர் - ஒரு புலவர். வன்பாடு - வலியது. வன்பால் - குறிஞ்சிநிலம், பாலைநிலம். வன்பு - வன்மை, பொல்லாங்கு. வன்புலம் - முல்லைநிலம். வன்புறை - வற்புறுத்தல். வன்பொறை - பெரும்பாரம், கடும்பாரம். வன்மத்தானம் - உயிர்நிலை, நொய்யவிடம். வன்மம் - வைராக்கியம், வர்மம். வன்மரம் - அகக்காழுள்ள மரம், உள்வயிரமுள்ள மரம். வன்மனம் - கல்நெஞ்சு. வன்மி - பகைஞன். வன்மிகம் - ஓதம், வன்மீகம். வன்மித்தல் - வைரங்கொள்ளுதல். வன்மீகம் - புற்று. வன்மீகி - வான்மீகி. வன்மீனம் - முதலை. வன்மீன் - முதலை. வன்முகிழ் - தேங்காய்க்காம்பினடி. வன்மை - கடினம், இஃது எண்வகையூறினொன்று, கருத்து, பெலம்,வலி, வலோற்காரம், வல்லெழுத்து. வன்மொழி - உறுதிப்பேச்சு, கடுஞ்சொல். வன்றி - பன்றி. வன்றொடர் - வல்லெழுத்துத்தொடர்ந்து வருவது. வன்றொழில் - கொடுஞ்செயல். வன்னக்கல் - மந்தாரச்சிலை. வன்னம் - எழுத்து, சித்திரிப்பு, நிறம்,அழகு, வர்ணம். வன்னி - ஓர் மரம், கிளி, கொடிவேலி, சேங்கொட்டை, தீ, பிரமசாரித்துவம். வன்னிகருப்பம் - இலிங்கம், மூங்கில். வன்னிகருப்பன் - குமரன். வன்னிகர் - பொடுதிலை. வன்னிசகாயன் - காற்று. வன்னிமை - ஓர் சாதி, வன்னியருக்குரிய மேன்மை. வன்னியம் - வன்னிக்கப்பட்டது,காட்டிலுள்ளது. வன்னியர் - ஓர் சாதியார், காட்டில்வசிப்பவர். வன்னியன் - வன்னிய வேளாளன். வன்னியின்கெற்பம் - இலிங்க பாஷாணம். வன்னிலம் - உரநிலம். வன்னிலோகம் - செம்பு. வன்னிவண்ணம் - செந்தாமரை,செவ்வாம்பல். வன்னிவீசம் - பொன். வன்னெஞ்சன் - வயிரநெஞ்சன். வன்னெஞ்சு - வயிரநெஞ்சு. வன்னெத்து - நத்தைச்சூரி. வன்னெல் - வயதுள்ள நெல். வா வா - ஓரெழுத்து, வாவென்னேவல். வாககன் - காக்காரன், குதிரைக்காரன். வாகசம் - நீர்ப்பாய்ச்சல், பெரும்பாம்பு. வாகசி - குத்திரப்பேச்சு. வாகடம் - வைத்தியசாத்திரம். வாகம் - இடபம், எருமைக்கடா,ஓரளவு, காற்று, குதிரை, செங்கீரை, பலண்டுறுவ பாஷாணம்,புயம், வாகனம். வாகரம் - கோணாய், சாணைக்கல்,தடை, நிச்சயம், வடவாமுகம். வாகரன் - பண்டிதன், வீரன். வாகனத்தானம் - நாலாமிடம். வாகனப்புடைவை - புடைவைக்கட்டைத் தாங்குஞ்சீலை. வாகனம் - ஏறி நடத்தப்படுபவை,சீலை, பரி, முயற்சி. வாகன் - அழகன், காவாள். வாகாசனி - புத்தன். வாகிடி - நீர்ப்பன்றி. வாகித்தம் - யானைக்கதுப்பு. வாகியப்பிரவேசம் - வெளியே போதல். வாகியம் - வாகனம், வெளி, புறத்தது,புறத்திற்குரியது. வாகிருவன் - அறிஞன், சாதுரியன். வாகினி - படை, படையிலோர்தொகை அது கணக மூன்றுகொண்டது, பாதிரி. வாகினிநிவேசம் - பாசறை.வாகினிபதி, வாகினீபதி - சமுத்திரம்,சேனாதிபதி. வாகீகம் - பண்டி, பெரும்பறை. வாகீசன் - அப்பர், ஆக்கியோன்,திருநாவரசன், பிரமன், வாக்குத்தலைவன். வாகீசுவரன் - வாகீசன். வாகீசுவரி - சரச்சுவதி, ஒரு சத்தி. வாகீசை - சரச்சுவதி. வாகு - அழகு, ஒழுங்கு, தோள்,பக்கம், முக்கோணத்தினொருபக்கம். வாகுசம் - எள், கிளி. வாகுசன் - அரசன், சத்திரியன். வாகுசி - கார்போகவரிசி. வாகுதம் - ஓர் பட்சி. வாகுத்திராணம் - தோட்கவசம். வாகுபுரி - பூணூல். வாகுமாலை - பந்தற்சோடிப்பிலொன்று. வாகுமூலம் - கைக்குழி, தோண்மூலம், அக்குள். வாகுயுத்தம் - மல்லுயுத்தம். வாகுரம் - வலை. வாகுரிகன் - வேட்டைக்காரன். வாகுரை - கண்ணி, பொறி. வாகுலம் - மகிழங்கனி. வாகுலிகன் - அடைப்பைக்காரன். வாகுலேயன் - முருகன். வாகுலை - கார்த்திகைப்பெண். வாகுவம் - வஞ்சி. வாகுவளையம் - தோளணி. வாகுவீரியம் - புயபராக்கிரமம். வாகுனி - கீழ்க்காய்நெல்லி. வாகெடுத்தல் - உச்சிவகிருதல். வாகேசுவரி - வாக்கு, வாணி. வாகை - அறத்தின்றுறை, ஈகை,உண்மை, ஒழுக்கம், ஓர்மரம்,அது தசமூலத்தொன்று, குணம்,தவம், நலன், மாட்சிமை, மிகுதி,முயற்சி, வாகை மாலை, வெற்றி. வாகைமாலை - ஓர் பிரபந்தம் அதுமாற்றாரை வென்று வாகைமாலைசூடுவதை ஆசிரியப்பாவாற் கூறுவது, வெற்றிமாலை. வாக்கரசர் - அப்பர். வாக்கரி - வாக்குவல்லவன். வாக்கன் - மாறுகண்ணன். வாக்காடல் - வாதுபண்ணல். வாக்காட்டல் - எய்த்தல். வாக்காள் - சரச்சுவதி. வாக்கி - அறம்பொருளின்பம் வீடெனுந h ற் b ப h ரு ட் ப ய ன்களைக்கேட்க வேட்கை விரித்துக்கூறுவோன், மாறு கண்ணி, வரகவி. வாக்கிடுதல் - வாக்குக்கொடுத்தல். வாக்கியகண்டனம் - பொய்யென்றுரூபித்தல். வாக்கியதம் - மௌனம். வாக்கியப்பிரயோகம் - பேசுதல். வாக்கியப்பொருட்காட்சியணி - ஓரலங்காரம் அஃது இரண்டு வாக்கியார்த்தங் கட்கைக்கியத்தையாரோபித்தல். வாக்கியம் - உரையிலக்கண மைந்தினொன்று அது வினைமுதற்செயப் படுபொருள் பயனிலையோடு முடிந்த சொல், முறை,வசனம், வெளி, வைணவாகமத்தொன்று. வாக்கியாதன் - மௌனி. வாக்கியார்த்தம் - பொழிப்புரை. வாக்கின்செல்வி - சரச்சுவதி. வாக்கீசர் - அப்பர். வாக்கீசன் - திருநாவுக்கரசன். வாக்கீரன் - மைத்துனன். வாக்கு - சொல், திரும்பினபார்வை,நேரிலக்கற்றவளைவு, பக்கம்,முப்பொறியி னொன்று, மெய்ம்மை, வாக்கென்னேவல், வாய் அதுஐம்பொறியினொன்று, விதம்,ஜென்மத்திற் கிரண்டாமிடம்,திருத்தம், வடிவம். வாக்குக்கண் - மாறுகண். வாக்குக்குற்றம் - சொற்குற்றம். வாக்குக்கொடுத்தல் - நிசஞ் சொல்லல், உறுதி சொல்லல். வாக்குசாபல்லியம் - பேச்சி விளைத்துப் போதல். வாக்குச்சகாயம் - சொற்றுணை. வாக்குச்சித்தி - சொற்படி யனுகூலமாதல், சொல் பலிக்கப் பெறுதல். வாக்குச்சொல்லுதல் - நிசஞ் சொல்லுதல். வாக்குதண்டம் - கடிந்து பேசுதல். வாக்குதத்தை - மணமுடிக்க வாக்குக் கொடுத்த ஸ்திரீ. வாக்குதல் - வார்த்தல். வாக்குதேவதை - வியாழம். வாக்குதேவி - சரச்சுவதி. வாக்குதோஷம் - நிந்தனை, பேச்சுக்குற்றம், வழூஉச்சொல். வாக்குத்தத்தம் - வாக்குக் கொடுத்தல். வாக்குத்தம்பம் - பேச்சைத் தடைபண்ணல் அது கலைஞானமறுபத்து நான்கினொன்று. வாக்குத்தானம் - சென்மத்திற்கிரண்டாமிடம், வாக்குக்கொடுத்தல். வாக்குத்தீட்சை - தீட்சைபேதத்தொன்று அஃது உபதேசம். வாக்குத் துஷ்டம் - வாக்கு தோஷம். வாக்குநாணயம் - பேச்சுறுதி. வாக்குபதி - வியாழம். வாக்குப்பண்ணுதல் - நிசஞ் சொல்லுதல். வாக்குமாறுதல் - புத்திமழுங்கல்,பேச்சுத் தவறல். வாக்குமூலம் - சொற்கருத்து,வார்த்தை முகாந்தரம். வாக்குரோசம் - பேச்சுக்கு நாணல். வாக்குவசீகரம் - செல்வாக்கு. வாக்குவந்தனம் - அவையடக்கம். வாக்குவல்லபம் - பேச்சு வல்லபம். வாக்குவாதம் - தர்க்கம். வாக்குவி - சரச்சுவதி. வாக்குவித்தல் - வார்ப்பித்தல். வாக்குவியாபாரம் - பேச்சுவிதம்,வழக்கமான பேச்சு. வாக்குவிலாசம் - வாசாலகம். வாக்கெடுத்தல் - உச்சிவகிருதல். வாக்பதி - ப்ருஹஸ்பதி. வாங்கம் - கடல். வாங்கல் - அடித்தல், அழைத்தல்இழுத்தல், ஏற்றுக்கொள்ளல்,நீளம், பெற்றுக்கொள்ளல்,போதல், வளைத்தல், வளைவு,தழுவல். வாங்கா - ஒரூதுகுழல். வாங்காவில் - எதிரித்தனம். வாங்கு - ஓராசனம், கிறிசு, பிச்சுவா,வாங்கென்னேவல். வாங்குதல் - வாங்கல். வாங்மயம் - சொல் வடிவம். வாசகத்தீட்சை - வாக்குத் தீட்சை. வாசகபதம் - வழக்கச்சொல், வெளிப் படைமொழி. வாசகப்பா - வாசாப்புப்பாட்டு. வாசகப்புணர்ச்சி - வாசகப் பொருத்து. வாசகம் - வசனம், வார்த்தை. வாசகன் - தூதன். வாசகிரகம் - உள் வீடு. வாசங்கட்டுதல் - மணமூட்டுதல். வாசசல்லியம் - கத்தூரி எலும்பு. வாசசாம்பதி - வியாழம். வாசஞ்செய்தல் - இருத்தல், மணமூட்டுதல். வாசதம் - கழுதை. வாசதேயி - இரவு.வாசத்தலம், வாசஸ்தலம் - இருப்பிடம். வாசஸ்தமானம் - வாசஸ்தலம். வாசநெய் - புழுகு. வாசந்தம் - ஒட்டகம், குயில், தென்காற்று, மிருகத்தி னிளங்கன்று. வாசந்தி - ஆடாதோடை, குருக்கத்தி,திப்பிலி, வசந்தகால மல்லிகை. வாசபதி - வியாழம்.வாசபேயம், வாசபோசினி - ஓர்வேள்வி. வாஜபோஜி - வாஜபேய யாகம். வாஜஸநேயம் - ஜநமேஜயன் செய்தவேதாந்த க்ரந்தம். வாசம் - அம்பு, அரிசி, இருப்பிடம்,இலாமிச்சை, இறகு, உணவு,ஊர், சரச்சுவதி, சீலை, நாள், நீர்நெய், பூமணம், பேச்சு, மந்திரம்,மருத நிலத்தூர், யோசனை,வாக்கியம், வாக்கு, வாசனை,வேகம், வசிக்கு மிடம், வீடு. வாசம்பண்ணுதல் - இருத்தல். வாசம் - ஓர் நரகம், நாள். வாசரம் - நாள். வாசரம்யமன் - முநி மௌநவிரதி. வாசல் - வாயில். வாசவத்திரன் - திருமால். வாசவர் - பஞ்சவாசம் விற்போர். வாசவன் - இந்திரன். வாசவி - அருச்சுனன். வாசற்காவல் - காவலாளன், காப்பு. வாசற்படி - வாயிற்படி. வாசனம் - அறிவு, குரல், புடைவை,வாசனை, வாசித்தல். வாசனி - மேற்கட்டி. வாசனை - அறிவீனம், அறிவு, இடம்,நம்பிக்கை, மணம், பரிமளம்,நினைவிற்குக் காரணமான பயிற்சி.வாசனைத்திரவியம், வாசனைப் பண்டம் - கந்தவருக்கம். வாசனைப்பொடி - கந்தப்பொடி. வாசா - சரச்சுவதி, வாய்விசேஷம்,வாக்கு. வாசாகரம் - அந்தப்புரம். வாசாங்கியம் - மிளகு. வாசாடம் - வாசாலம். வாசாடன் - வாயாடி. வாசாதி - ஆடாதோடை. வாசாப்பு - ஓர் கூத்து. வாசாமகோசரம் - வாக்குக் கெட்டாமை. வாசாலகம் - வாக்கு வல்லபம். வாசாலகன் - வாய்வல்லபன், பேச்சில்வல்லவன். வாசாலம் - வாக்குவல்லபம், வாக்குவிற்பன்னம், அதிகம்பேசல். வாசாலன் - மிகப்பேசுவோன். வாசாலை - வாக்குவல்லவி. வாசி - அச்சுவினிநாள், அதிகம்,அம்பு, அளவு, இசைக்குழல்,இசைப்பாட்டு, இருப்பிடம்,குதிரை, சுவாசம், சௌக்கியம்,தன்மை, திட்டம், நிமித்தம்,நியாயம், பறவை, பாணம், மிகுதி,வட்டிக்குமே லதிகமாய்க் கழித்தெடுக்குங் கழிவு பணம், வாசஞ்செய்கிறவன், வாசியென் னேவல்,உயர்வு தாழ்வு, வாயு, வட்டமாகக்கழிக்கும் பணம். வாசிகந்தகம் - ஓர் பூடு. வாசிகபத்திரம் - திருமுகம். வாசிகம் - செய்தி, சொல்லாமாற்செய்யும் தவம். வாசிகரணம் - அன்புடைக்காமம். வாசிகன் - தூதன். வாசிகை - கோத்தமாலை, தொடுத்தமாலை, மாலை. வாசிக்கல் - காக்கைக்கல். வாசிக்காரகம் - திருமுகம். வாசிக்காரகன் - தூதன். வாசிசாலை - குதிரைப்பந்தி. வாசிட்டம் - அட்டாதச தரும நூலினொன்று அட்டாத சோபபுராணத் தொன்று, இரத்தம். வாசிதம் - அறிவு, ஒலி, குடியேற்றுதல், புட்குரல், மிருகக்குரல். வாசிதாரணை - வாயுதாரணை. வாசித்தல் - படித்தல், மணத்தல்,வீணை முதலிய வாசித்தல். வாசிப்பாடு - பெருமை. வாசிரம் - நாற்றெருக் கூடுமிடம்,பகல், வீடு. வாசிராயநீயம் - உபநிடத முப்பத்திரண்டி னொன்று. வாசினி - வெண்குதிரை. வாசினை - வாசித்தல். வாஜிபட்சம் - கடலை. வாஜிபேயம் - ஓர் யாகம். வாஜிபோஜகம் - பயறு. வாசு - இருவேலி, கடவுள், திருமால்.வாசுகி, வாசுகேயன் - அட்டநாகத்தொன்று. வாசுதேவன் - கண்ணன். வாசுபத்திரன் - கிருட்டினன். வாசுரை - இரவு, பூமி, பெண், பெண்யானை. வாசை - ஆடாதோடை. வாசோயுகம் - ஒருசோடு புடவை. வாச்சல்லியம் - தயை. வாச்சாம்பதி - வியாழம். வாச்சி - வாய்ச்சி. வாச்சியம் - குற்றம், சொல்லப்படத்தக்கது, நிந்தை, பறை முதலியன,வெளிப்படை, சொல்லாமற்பெறும் பொருள், சொல்லல். வாச்சியாயன் - களா நூல்செய்தமுனி. வாஞ்சனம் - வாஞ்சை. வாஞ்சனீயம் - விரும்பத்தக்கது. வாஞ்சனை - வாஞ்சை. வாஞ்சாபோகம் - இச்சித்தபோகம். வாஞ்சிதம் - விரும்பியது. வாஞ்சித்தல் - ஆசைப்படுதல். வாஞ்சினம் - விரும்பியது. வாஞ்சினி - காமி. வாஞ்சை - ஆசை. வாடகை - குடிக்கூலி, கொல்லை,தெரு, மட்சுவர், வாகனசாலை,வீட்டுக்கூலி, சத்தம். வாடபேயம் - எருது. வாடம் - சுவர், மதில், மிகுதி. வாடல் - சாதல், மெலிதல், வதங்கல். வாடாக்குறிஞ்சி - குரவகம். வாடாமல்லிகை - ஓர் பூச்செடி. வாடாமாலை - பொன்னரிமாலை. வாடி,வாடிகை - அடைப்பு, கொல்லை,தங்குமிடம், தொட்டால் வாடி,பூந்தோட்டம், மதில், முற்றம்,வீடு, வேலி. வாடிக்கை - வழக்கம். வாடுகி - ஓர்வகை வெள்ளரி. வாடுதல் - வாடல். வாடை - இடைச்சேரி, இடையவீதி, காற்று, குடிக்கூலி, தெருநிரை, மணம், வடகாற்று, வடக்கு,வரிசை, வாசனை, வீட்டுக்கூலி,வேடர்வீதி. வாடைக்கச்சான் - வடமேல்காற்று. வாடைக்காற்று - வடகாற்று. வாடைக்கொண்டல் - வடகீழ்காற்று. வாட்கை - வாழ்க்கை. வாட்கோரை - ஓர் புல். வாட்சூலை - ஓர் நோய். வாட்டம் - குறைவு, சாய்வு, சோர்வு,தெரு, தோட்டம், மெலிவு,வதக்கம், வழி, வாடல், வாகு. வாட்டரவு - சோப்பம், வதக்கம். வாட்டல் - மெலிவித்தல், வாட்டுதல். வாட்டாலை - மெலிந்தவன். வாட்டாழை - கடற்றாழை. வாட்டாளை - வாட்டாலை. வாட்டி - முறை, வசட்டி, தடவை. வாட்டியபுட்பம் - சந்தனம், மஞ்சள். வாட்டியம் - தோட்டம், வீடு. வாட்டு - நன்மை, நீதி, வாட்டென்னேவல், பொரியல். வாட்டுதல் - துன்புறுவித்தல், வாடப்பண்ணுதல், கெடுத்தல். வாட்படையாள் - துர்க்கை. வாட்யாயநி - அதிபலை. வாணகந்தி - அரசமரம், ஓர் கந்தகம். வாணகம் - அக்கினி, அம்பு, தனிமை,பசுமடி, வேய்ங்குழல். வாணகன் - திருமால். வாணங்கட்டுதல் - வாணமடித்தல். வாணதண்டம் - புடைவை, நெய்,சூத்திரம். வாணமாட்சணம் - அம்பெய்தல். வாணம் - அம்பு, தீ, பாணம், மத்தாப்பு முதலியன. வாணவாரம் - மார்க்கவசம். வாணன் - ஓரசுரன், கார்த்திகைநாள், வாழ்நன். வாணன்கோவை - ஓர் பாடல். வாணாக்கம்பு - சிலம்பக்கோல். வாணாத்தண்டம் - வாணாக்கம்பு. வாணாரி - திருமால். வாணாள் - வாழ்நாள். வாணி - அசமதாகம், ஓர் கூத்து,சரச்சுவதி, சொல், சொல்லல்,மனோசிலை. வாணிகம் - இலாபம், வியாபாரம். வாணிகன் - செட்டி, துலாராசி. வாணிகேள்வன் - பிரமன். வாணிஜம் - வடவைத்தீ. வாணிஜன் - வ்யாபாரி. வாணிஜிகம் - வாணிஜம். வாணிஜிகன் - வயாபாரி. வாணிச்சி - செட்டிப்பெண். வாணிச்சிமேனி - மாணிக்கம். வாணிச்சியம் - வணிகம், வணிகர்தொழில். வாணிதம் - கள். வாணிதி - கூத்து, மதர்த்தவள். வாணிநி - தூதி, நர்த்தகி. வாணிபம் - செட்டு அது வைசியரறுதொழிலி னொன்று. வாணிபர் - எண்ணெய் விற்போர்,ஒர் சாதியார், செட்டிகள், வியாபாரிகள். வாணியம் - வாணிகம். வாணியன் - வாணிபன். வாணிவிச்சி - வாணிச்சி. வாணினி - கூத்தி, மூர்க்க முள்ளவள்,விவேகமுள்ளவள். வாணீசன் - பிரமன். வாணுதல் - பெண். வாண்டியம் - பேராமுட்டி. வாதகரப்பன் - ஓர் நோய், ஓர்பட்டை. வாதகாசம் - ஓர் காசம். வாதகாமி - பட்சி. வாதகாலம் - முன்னேரம். வாதகி - சத்திசாரம். வாதகிராணி - ஓர் கிராணி. வாதகுண்டலிகை - நீரடைப்பு. வாதகும்பம் - யானைக்கதுப்பு. வாதகுலுமம் - பெருங்காற்று. வாதகுன்மம் - ஓர் நோய். வாதகேது - தூளி, புழுதி. வாதகேலி - சரசப்பேச்சு, நகக்குறி. வாதக்கடல் - நவசாரம். வாதங்கிநி - ஓர் மரம். வாதசகம், வாதசகன் - அக்கினி. வாதசாதனம் - தருக்கத்தினுடன்படுதல். வாதசாரதி - அக்கினி. வாதசிரோமணி - நவசாரம். வாதசீரிடம் - அடிவயிறு. வாதசுரம் - வாதத்தைப்பற்றி யெழுந்த காய்ச்சல். வாதசூலை - ஓர் சூலை. வாத்சோணிதம் - வாதநீர். வாததூலம் - காற்றிற் பறக்கும் பஞ்சு. வாததூளம் - நொய்யது. வாதத்தனிக்கல் - இராசவத்தனக்கல். வாதத்துவசம் - மேகம். வாதநாசனம் - ஆமணக்கு. வாதநாடி - வாதத்திற்குரிய நரம்பு. வாதநிகண்டு - இரசவாதநிகண்டு. வாதபாடணர் - அபவாதஞ் சொல்பவர். வாதபித்தசூலை - ஓர் நோய். வாதபித்தம் - இரத்தத்திற் கலந்தபித்தம். வாதபுத்திரன் - அனுமன், வீமன். வாதபுல்லம் - காற்றுக்கொண்டது. வாதபூமி - வாதங்கொண்டதேயம். வாதபோதம் - பலாசு, பூவரசு. வாதப்பிரமரி - சுழல்காற்று. வாதப்பிரமி - மான். வாதமடக்கி - தழுதாழை, நந்தக்காரி. வாதமண்டலி - சுழல்காற்று. வாதமானம் - வருத்தல். வாதமிருகம் - கலைமான். வாதம் - இரும்பு முதலிய லோகஙகளைப் பொன்னாக்கும்வித்தை,காற்று இஃது உயிர்வேதனையினொன்று, சம்பாஷணை, தருக்கமுடிவு, தருக்கம், முப்பிணியினொன்று, முறைப்பாடு, வில்வம்,இரசவாதம். வாதயுத்தம் - தருக்கம். வாதரக்தம் - ஓர் நோய். வாதரக்காச்சி - வாதராயண மரம். வாதரங்கம் - அரசு. வாதரதம் - சித்தாந்தம், முகில். வாதரம் - வாதலம். வாதராசன் - நவசாரம். வாதரட்சதன் - ஓர் மருந்து. வாதராயணம் - அம்பெய்தல், ஓர்மரம், மலைமுடி, மிகுகதி, வாள். வாதராயணன் - வியாசன். வாதராயன் - வாயுபகவான். வாதரூடம் - காற்று, கைக்கூலி,வானவில். வாதரோககாரகன் - சனி. வாதரோகம் - வாதநோய். வாதரோகி - வாயுரோகி. வாதலமண்டலி - சுழல்காற்று. வாதலம் - அதிமதுரம், காற்று, விரைவு. வாதலிங்கி - வாதரோகி. வாதவைரி - ஆமணக்கு. வாதனம் - ஒலி, சீலை, வருத்தம். வாதனை - தடை, வருத்தம், அழுத்தம்,பயிற்சி. வாதாகதம் - காற்றடியுண்டது. வாதாடகம், வாதாடம் - சூரியன் குதிரையி னொன்று.வாதாடல் - வழக்காடல், தர்க்கித்தல். வாதாட்டம் - தருக்கம். வாதாட்டுதல் - தருக்கத்திற் குட்படுத்தல், தொந்தரைப்படுத்தல். வாதாபி - ஓர் அசுரன், அகஸ்தியரால்ஜீரணிக்கப்பட்டவன். வாதாபிசூதநன் - அகத்தியன். வாதாமோதம் - மான்மதம். வாதாயம் - இலை. வாதாயனம் - பலகணி, மண்டபம். வாதாயு - மான். வாதாரி - ஆமணக்கு. வாதாலம் - ஓர் மீன். வாதாலி - சுழல்காற்று. வாதாவி - ஓரசுரன், அசமுகி துருவாசமுனிவரை வலிதிற்கூடப் பிறந்தவர்களில் இளையவன். வாதானுலோமனம் - காற்றடக்கல். வாதானுவாதம் - வினாவிடை. வாதான்னியம் - வள்ளற்றன்மை. வாதி - காரணமு மேற்கோளுமெடுத்துக் காட்டிப் பிறன்கோள் மறுத்துத்தன் மதநிறுத்திப் பாடு வோன், காற்று,தருக்கி, முறைப் பாடுகாரன்,வாதஞ் செய்வோன், வாதியென்னேவல். வாதிகம் - ஓர் நோய், சேம்பு. வாதிக்குதல் - வருத்தப்படுத்துதல். வாதிங்கணம் - சேம்பு. வாதிசன் - கல்விமான். வாதித்தல் - தருக்கித்தல், பேசுதல்,வருத்தப் படுத்துதல். வாதித்திரம் - ஓர் வாச்சியக்கருவி. வாதிராசன் - நவசாரம். வாதிரு - காற்று. வாதிவம் - வஞ்சி. வாது - சண்டை, சபதம், தருக்கம். வாதுகூறல் - சபதஞ் சொல்லுதல். வாதுகை - மனைவி. வாதுக்கியம் - கலியாணம். வாதுமை - ஓர்மரம். வாதுலம் - சுழல்காற்று. வாதுலுன் - உன்மத்தன். வாதுலி - வெளவால்.வாதுவர், வாதுவல் - குதிரைப்பாகர்,யானைப் பாகர். வாதுளம் - சிவாகம மிருபத்தெட்டினொன்று. வாதூகம் - சேம்பு. வாதூலம் - சுழல்காற்று. வாதூலன் - உன்மத்தன். வாதை - துன்பம், வேதனை செய்யும்,நோய், வருத்தம், வதைத்தல். வாதைவரி - ஆமணக்கு. வாதோரணமஞ்சரி - ஓர்பிரபந்தம்அது மதகளிற்றை வசப்படுத்தினோரதும் எதிர்பொரு கரியைச்சயித்தோரதும், கரிதழுவினோரதும் சயித்தோரதும், கரி தழுவினோரதும் வென்றியை வஞ்சிப்பாவாற் கூறுவது. வாத்தி - கற்பிப்போன், உபாத்தியாயன். வாத்தியபாண்டம் - வாத்தியப் பொது,வீணை. வாத்தியம் - கஞ்சக்கருவி துளைக்கருவி தோற்கருவி நரம்புக் கருவியெனு மிசைக்கருவிகள், மத்தளம் முதலிய இசைக் கருவிகள்.வாத்தியாயன், வாத்தியான் - கற்பிப்போன், உபாத்தியாயன். வாத்தியை - சுழல்காற்று. வாத்து - வாஸ்துபுருஷன், வீடு,வசித்தற்குரிய பூமி, நீரிற்செல்லக்கூடிய ஒரு பறவை, தாரா. வாத்துசாந்தி - வாத்துமனுக்குச்செய்யுஞ் சாந்தி. வாத்துபுருடன் - வாத்துமன். வாத்துபோதம் - சிற்பநூன் முப்பத்திரண்டினொன்று. வாத்துமன் - வாத்துபுருடன். வாத்துமாதனம் - இருகாலு மொருகையு நீட்டி யொருமுழங்கையூன்றித் தலை நிமிர்த்திக்கிடப்பது. வாத்ரோணவாயசம் - மலைக்காகம். வாந்தகி - கடியள். வாந்தம் - சத்தி. வாந்தரதம் - நாய். வாந்தவன் - மித்திரன். வாந்தி - சத்திபண்ணல். வாந்திசோதநி - கருஞ்சீரகம். வாந்தித்தல் - சத்தித்தல். வாந்திப்பிராந்தி - கழிச்சற்கோதாரி. வாந்தியம் - தான்றி, வாலுளுவை. வாபதண்டம் - நெய்யற்பலகை. வாபம் - சௌளஞ்செய்தல், நெய்குதல், வித்து. வாபி - வாவி, குளம், தடாகம். வாபிதம் - ஓர்வகைத் தானியம். வாபீகம் - சாதகப்புள். வாப்பியம் - கோஷ்டம். வாமக்கோன் - சந்திரன். வாமலசுக்கிலம் - பொன்னாவிரை. வாமதந்திரம் - வாமசமயநூல். வாமதேவம் - சிவபெருமான் ஐந்துதிருமுகங்களி லொன்று இதுவடக்குமுகமாய் விளங்கும். வாமதேவன் - ஓர்முனி, சிவன். வாமபாகம் - இடப்பக்கம். வாமபுரகோபம் - துத்தம். வாமம் - அழகு, இடப்பக்கம், உட்சமய மாறினொன்று, ஒளி, ஓர்பாம்பு, குறுமை, கூன், சிவனைம்முகத் தொன்று, செல் வம், தீமை,தொடை, பசுமுலை, முலை,விரோதம்.வாமலூரம், வாமலூரு - புற்று. வாமலூருதனயன் - வான்மீகி. வாமலோசனன் - அழகிய விழியுடையான், திருமால். வாமலோசனை - அழகிய விழியுடையாள், இலக்குமி. வாமலோசிகம், வாமல் - கற்றாழை. வாமனம் - குறள், திருமால், தசாவதாரத்தொன்று, தென்திசைஆண்யானை, பதினெண்புராணத்தொன்று. வாமனன் - குள்ளன், குறளுருக்கொண்ட திருமால். வாமனார் - புத்தனார். வாமனாவதாரம் - பலிச்சக்கரவர்த்தியையடக்கு நிமித்தம் அதிதியின் கர்ப்பத்தில் தோன்றியவிஷ்ணு வின் ஐந்தாமவதாரம். வாமன் - அருகன், காமன், சிவன். வாமாசாரம் - வாமசமயாசாரம். வாமாட்சி - வாமலோசனை. வாமாவர்த்தம் - இடம்புரிச்சங்கு. வாமி - பார்வதி, வாமசமயத்தவள். வாமிலம் - அகந்தை, அழகு. வாமை - இலக்குமி, சரச்சுவதி,பார்வதி, பெண், ஒரு நதி. வாம்பல் - மூங்கில். வாயகம் - கூட்டம். வாயசதுண்டகன் - விநாயகன். வாயசம் - காக்கை. வாயசாராதி - கூகை. வாயசி - செம்மணத்தக்காளி, பெண்காக்கை. வாயதண்டம் - நெய்யற்பலகை. வாயடித்தல் - வாயினாலதட்டுதல். வாயடை - உணவு. வாயடைத்தல் - நாவெழாதிருக்கச்செய்தல், பேசக்கூடாம லிருத்தல். வாயம் - நீர், பெய்குதல். வாயலம்புதல் - வாய் சுத்தி பண்ணல். வாயல் - பக்கம், வாயில். வாயவி - வடமேற்கு. வாயவியம் - ஏழ்வகைநானத் தொன்று,அது பசுநடையி னெழுதூளியிற்படிதல். வாயவ்வியம் - வாயு திசை. வாயனம் - தீம்பண்டம். வாயாங்காரம் - பேச்சுமதம். வாயாடல் - வாய்சாலமாய்ப்பேசல்,வாய் வழங்குதல். வாயாடி - வாய் வல்லவன். வாயாடுதல் - வாயாடல். வாயாவி - மூச்சு. வாயிலாளர் - வாயில் காப்போர். வாயிலோர் - தமிழ்க்கூத்தர், தூதுவர்,வாயில் காப்போர். வாயில் - ஐம்பொறி, கடை, கதவு,காரணம், திறம், தூது, வாய்தல்,துவாரம், வழி, கூட்டு, வார்,வரலாறு. வாயில்காப்போர் - கடைகாவலோர். வாயில்வேண்டல் - அகப்பொருட்டுறையினொன்று. வாயிற்காட்சி - காட்சிபேதத்தொன்று,ஐம்பொறிகளாற் காணுதல். வாயு - காற்று இஃது அட்ட மூர்த்தத்தொன்று, மூச்சு, வாதம். வாயுகண்டம் - அசீரணம். வாயுகுமாரன் - அநுமான், வீமன். வாயுகுலுமம் - சுழல்காற்று. வாயுகேது - துகள். வாயுகோணம் - வாயுமூலை. வாயுக்குத்து - ஓர் நோய். வாயுசகன் - தீ.வாயுசம்பவன், வாயுசாதன் - அனுமன்,வீமன். வாயுசுதன் - அநுமான், வீமன். வாயுசூலை - ஓர் நோய். வாயுச்சகன் - தீ. வாயுதவி - பேச்சுதவி. வாயுதாரணை - வாயுவை நிறுத்துதல். வாயுதாரு - முகில்.வாயுத்தம்பம், வாயுத்தம்பனம் - வாயுவைத் தடுத்தல் இது கலைஞானமறுபத்துநான்கி னொன்று. வாயுத்தானி - காற்று வீசுந் திசையைக் காட்டு மோர் கருவி. வாயுநிவர்த்தி - காற்றமைவு. வாயுபகாரம் - பேச்சுபகாரம், முகமன்வார்த்தை. வாயுபசாரம் - வாயுபகாரம், முகமன்.வாயுபட்சணம், வாயுபட்சம் - காற்றூண், பாம்பு. வாயுபலம் - மழை, வானவில். வாயுபுத்திரன் - அனுமன், வீமன். வாயுமூலை - வடமேற்கு. வாயுமைந்தன் - அனுமன், வீமன். வாயுரோகம் - வாதநோய். வாயுவாகம் - புகை. வாயுவாகினி - நரம்பு. வாயுவாஸ்திரம் - வாயுவம்பு. வாயுவிளங்கம் - ஓர் மருந்து. வாயுவின் கூறுபாடு - ஓடல், கிடத்தல்,கூடல், போதல், வருதல். வாயுவின் கோபம் - வாதம். வாயுவு - வாயு. வாயுவேகம் - மிகுகதி. வாயுவேகி - மிகுசுறுக்கன். வாயுறை - பசு முதலியவற்றிற்குக்கொடுக்குங் கைத்தீன், வாயுபதேசம், மெய்யுபதேசம், கவளம். வாயுறைவாழ்த்து - ஓர் பிரபந்தம்அஃது இடித்துரையாவது முன்னர்த்தாங்கக் கூடாவாயினும்பின்னர்ப் பெரிதும் பயன்பயக்குமென வெண்பா முதலுமாசிரிய மிறுதியுமாகக் கூறுவது. வாயுறைவாழ்த்துமருட்பா - உறுவதாய்மெய்ப்பொருள் கூறுவது. வாயூறல் - வாயினீரூறுதல். வாயூறுதல் - அபேட்சித்தல், வாய்நீரூறுதல். வாயூற்று - வாய் நீரூறுதல். வாயெடுத்தல் - பேசத் தொடங்கல். வாயொடுங்குதல் - பேச்சடங்குதல். வாய் - இடம், உதடு, ஊதுகுழல்,ஏழனுருபு (உ.ம்) குரைகடல்வாயமுதென்கோ, சொல், துவாரம்,நுதி, பேச்சு, மெய், வாக்கு இதுபஞ்சப் பொறியினொன்று,விதம், வாயில், வாயென்னேவல்,விளிம்பு, வடு, உண்மை. வாய்கட்டி - வாய்திறவாது தடுப்போன். வாய்கட்டுதல் - பிரேதங்கட்கு வாய்தட்டுதல், மந்திரத்தால் வாய்திறவாமற் பண்ணல், மரியாதைக்குறிப்பாய் வத்திரம் வாயிலிட்டுக்கட்டல். வாய்காட்டுதல் - அதிகப்பிரசங்கமாய்ப் பேசல். வாய்குளிறுதல் - அச்ச முதலியவற்றினாலே குளிறுதல். வாய்க்கட்டை - அநீதக் கொடை. வாய்க்கணக்கு - எழுதாமற் சொல்லுங்கணக்கு. வாய்க்கரிசி - பிரேதத்தின் வாயிலிடுமரிசி. வாய்க்கரிசி போடுதல் - வாய்க்கரிசியிடல், ஓர் அபரக்கிரியை. வாய்க்கரிசியிடுதல் - அபரக்கிரியையினொன்று. வாய்க்காசு - வாய்க்கரிசி யிடுகையிலிடுங்காசு. வாய்க்காரன் - அதிகப் பிரசங்கமாய்ப் பேசுவோன். வாய்க்கால் - நீரோடுங்கால், மகநாள். வாய்க்கிரந்தி - ஓர் நோய். வாய்க்கிறுது - அசங்கத வார்த்தை. வாய்க்குற்றம் - பேச்சுக்குற்றம். வாய்க்கூலி - கைக்கூலி. வாய்க்கொழுப்பு - மதியாப் பேச்சு. வாய்க்கொள்ளாதபேச்சு - அசப்பியம். வாய்சலிக்குதல் - வாயயர்தல். வாய்சளப்புதல் - வீண்பேச்சுப் பேசல். வாய்சளிக்குதல் - வாய் சவர்க்களித்தல். வாய்ச்சம்பிரதாயம் - பேச்சுச்சாமார்த்தியம். வாய்ச்சாக்கூட்டம் - பல்லு. வாய்ச்சி - மரம் வெட்டுமோ ராயுதம். வாய்ச்சித்தலை - சப்பளிஞ்சதலை. வாய்ச்சொல் - வாய்மொழி. வாய்ஞானம் - வாசா ஞாநம். வாய்தடுமாறுதல் - வாய் பதறுதல். வாய்தல் - வாயில். வாய்தற்கூடு - கதவினிலை. வாய்தற்படி - கதவினிலைப்படி. வாய்தா - நிலவிறைப்பணம், தவணை.வாய்தாரி, வாய்தாரை - ஆயுதங்களினுதி, கிணறு முதலியவை களின்விளிம்பு. வாய்த்தலை - வாய்க்காற்றலை. வாய்த்தல் - கிடைத்தல், சித்தித்தல்,சிறத்தல், பொருந்தல், மாட்சிமை, நேரல், தப்பாமை. வாய்த்தாரை - வாய்தாரி. வாய்நாற்றம் - வாயின் அசுசியானமணம். வாய்நீர் - உமிழ் நீர். வாய்பாடு - வாயிலாட்சிப்பட்டு வரும் பேச்சு. வாய்பாறுதல் - உளறுதல்.வாய்பிதற்றுதல், வாய்பினற்றுதல் - அலப்புதல். வாய்புதைத்தல் - வாய் மூடுதல். வாய்பூசல் - வாயலம்புதல். வாய்பூசறுத்தல் - வாய் சுத்தி செய்தல். வாய்பூசுதல் - வாய் நனைத்தல், வாய்கழுவல். வாய்பொருத்துதல் - வாய் புதைத்தல். வாய்பொருமுதல் - கனவில் வாய்குளிறுதல். வாய்போடுதல் - வாயிட்டுக் கேட்டல். வாய்ப்படுதல் - உரிசிப்படுதல். வாய்ப்பண் - ஓர் பணிகாரம். வாய்ப்பன்சட்டி - ஓர் பணிகாரச்சட்டி. வாய்ப்பாடம் - ஏடு பாராமற் சொல்லும்பாடம். வாய்ப்பிரசங்கம் - வாயாற் பேசும்பிரசங்கம். வாய்ப்பிறப்பு - வாய்மொழி. வாய்ப்பு - சித்தி, சிறப்பு, தகுதி, நயம்,பேறு, வளமை, மாட்சிமை. வாய்ப்புண் - வாய்க்கிரந்தி. வாய்ப்புள் - நிமித்தம், சொற்சகுனம். வாய்ப்பூட்டு - அடைப்பு. வாய்மட்டம் - வாய்வளையம். வாய்மண்போடுதல் - கொடுமைசெய்தல். வாய்மதம் - வாய்க் கொழுப்பு. வாய்முத்தம் - பல்லு. வாய்மூடுதல் - வாய்பொத்தல். வாய்மூத்தகுடி - வாய்ப்பேச்சினாலெவரையு மடக்கிவருங் குடி. வாய்மூத்தவன் - முந்திப் பேசுவோன். வாய்மை - மெய் அது சாத்துவிதகுணத்தொன்று, சொல், வலி,உண்மை. வாய்மொழி - வாயினாற் சொல்வது. வாய்மோசம் - பேச்சு மோசம். வாய்வடம் - குதிரைவாய்க் கயிறு. வாய்வது - உண்மை. வாய்வழங்கல் - உண்டல், பேசல். வாய்வளையும் - யாதொன்றின்வாயில் வைக்கும் வளையம். வாய்விசேடம் - வாக்குச் சுத்தியால்வருவது. வாய்விடல் - பேசல், பேசுதல். வாய்விடாச்சாதி - மிருகம். வாய்விடுதல் - வாய்விடல்.வாய்விலங்கம், வாய்விளங்கம் - ஓர்மருந்து. வாய்வு - வாயு, ஒரு நோய். வாய்வெட்டு - பறைவெட்டு. வாய்வெருவுதல் - அயர்ச்சியில் வாய்குழறுதல். வாய்வைத்தல் - கடித்தல், கேட்டல்,புசித்தல். வாரகம் - குதிரை, குதிரை நடை. வாரகி - கடல், சத்துரு, தவத்தி. வாரகீரம் - சீப்பு, பெண், போர்க்குதிரை, வடவாமுகம். வாரகீரன் - சுமைகாரன், மைத்துனன். வாரக்கம் - நெல் வட்டிக்குக் கொடுக்கும் பணம். வாரக்குடி - நிலம் பயிரிட்டுப் பங்குபெறுங்குடி. வாரக்குடிச்சி - வாரக் குடிப்பெண். வாரங்கம் - ஆயுதப்பிடி, புட்பொது. வாரசுநாமம் - ஆட்சி, உறுதி. வாரசுந்தரி - வேசி. வாரசேவை - வேசி கூட்டம். வாரடகம் - தாமரைக்காய். வாரடம் - வயல். வாரடி - பலகரை. வாரடித்தல் - நீரநிரவியோடுதல். வாரணசி - வாரணாசி. வாரணபுசை - வாழை. வாரணம் - உன்மத்தம், கடல், கவசம்,காத்தல், சேடகம், கோழி, சங்கு,சட்டை, தடை, பன்றி, மாவிலங்கை, யானை, விடுதல். வாரணவல்லபை - வாழை.வாரணவச்சி, வாரணாசி - காசி. வாரணாவதம் - பிரயாகை.வாரணை, வாரணையம் - தடுத்தல்,தடை. வாரத்தண்டு - கறிமுல்லை. வாரநாரி - வேசி. வாரபுசை - வாழை. வாரப்படுதல் - உருக்கங் கொள்ளுதல். வாரப்பாடு - உருக்கம். வாரமுக்யை - வேசி. வாரம் - அன்பு, உரிமை, ஏழுகிழமை கொண்டது, கடல், கரை,சமயம், சிறுவரம்பு, சுரிதகம்,தடை, திரள், திரை, நாடகவகைபத்தினொன்று, நாள், பக்கபாதம்,பங்கு, பஞ்சாங்கத் தினொன்று,யாக பாத்திரம், மலைச்சார்பு,வாயில், சொல் லொழுக்கமும்இசை யொழுக் கமும் உடையபாட்டு, தெய்வப் பாடல், துவாரம்,தரம், பிற்பாடு. வாரல் - அள்ளுதல், ஓலை முதலியவாருதல், கொள்ளையிடல்,கோலுதல், தடவுதல், நீளல்,மயிர்கோதல், முகத்தல், வடிதல்,வாரலென்னேவல். வாரவதூ - வேசி. வாரவாணம் - பஞ்சு பெய்து தைத்தமெய்ப்பை, மார்க்கவசம். வாரவாணி - குயிலுவன், நியாயாதிபதி, வருடம், வேசை, விறலி. வாரவாரம் - கவசம். வாரவிலாசினி - வேசை. வாராஹம் - ஓர் தீர்த்தம், ஒரு கற்பம்,சதுமுகப்பிரமன் ஆயுட்பிரமாணத்தின்பிற்பாதி. வாராகி - ஓர் கிழங்கு சத்த மாதர்களினொருத்தி, பூமி, பெண் பன்றி. வாராங்கனை - வேசி. வாராசனம் - நீர்க்குடம். வாராணசி - காசி. வாராணசேயன் - காசியிற் பிறந்தவன். வாராதிபன் - கிழமைக்கதிபன். வாராஸ்திரீ - வேசை. வாராநிதி - சமுத்திரம். வாராவதி - பாலம். வாராவந்தி - கட்டாயமாய் வந்தது. வாராவரத்து - அநீதமாய் வருதல். வாராவாரி - மிகுதி. வாரானை - வரவழைத்தல், இதுபிள்ளைக் கவியுறுப்புப் பத்தினொன்று. வாரி - இசைக்குழல், கடல், கதவு,சரச்சுவதி, சீப்பு, தானியம், நிறைநீர், நீர், மடை, மதில், மதிற்சுற்று,மிகுதி, யானை கட்டுங் கயிறு,யானைக் கொட்டம், யானைபடுகுழி, வழி, வாயில், வாரியென்னேவல், விளைவு, வெள்ளம்,வருவாய், யானைக்கட்டுஞ் சாலை,வருமிடம், செண்டுவெளி. வாரிகிருமி - அட்டை. வாரிக்காய்ச்சல் - கோதாரிக்காய்ச்சல். வாரிசம் - உப்பு, சங்கு, தாமரை. வாரிசரம் - மீன். வாரிசன் - திருமால். வாரிசாதம் - தாமரை. வாரிசாமரம் - நீர்ப்பாசி. வாரிடுதல் - கிழிதல், கீழ்மக்கள். வாரிணாதம் - கடல், நாகலோகம். வாரிணாதன் - வருணன். வாரிதம் - தடை, மேகம். வாரிதி - கடல். வாரிதித்தண்டு - பவளம். வாரிதிநஞ்சு - அக்கினிக்கட்டி. வாரிதிநாதம் - சங்கு. வாரிதிவிந்து - கடனுரை. வாரித்தல் - ஆணையிடல், தடுத்தல். வாரித்திரம் - ஓலைக்குடை, சாதகப்புள், பக்கான். வாரிநாதம் - கடல், பாதலம், முகில். வாரிநாதன் - வருணன். வாரிநிதி - கடல். வாரிபரணி - வள்ளைக்கீரை. வாரிப்பிரவாகம் - நீர்ப்பெருக்கு,மலையருவி. வாரிப்பிரசாதன் - தேற்றா. வாரிமசி - முகில். வாரியகரசாதன் - தேற்றா. வாரியுற்பவம் - தாமரை. வாரிரசிதம் - வெள்ளி மணல். வாரிரதம் - தெப்பம். வாரிராசி - கடல். வாரிருஹம் - தாமரை. வாரிவனநாதன் - சிவன். வாரிவாகம் - மேகம். வாரீசம் - கடல், தாமரை. வாரீடம் - யானை. வாருகம் - ஆற்றுத்தும்மட்டி, வெள்ளரி. வாருகோல் - துடைப்பம். வாருடம் - ஆசந்தி. வாருணம் - அட்டாதச வுபபுராணத்தொன்று, கடல், மாவிலங்கு,மேகம், மேற்கு, சலம், வருணாஸ்திரம். வாருணி - அகத்தியன், ஆட்டாங்கொடி, கள், காய்ச்சி வடித்தமது,சதயநாள், மேற்கு. வாருணிவல்லபன் - வருணன். வாருண்டகம், வாருண்டம் - எண்காற்புள், கண்பீழை, குறும்பி. வாருதல் - கவர்தல், கொழித்தல்,கொள்ளல், திருடல், வரன்றல்,வாரல். வாருதி - நவசாரம், வாரிதி. வாருல்லியம் - விருத்தி. வாரூடம் - பகடை. வாரூணி - அகத்தியன், புரட்டாதி. வாரை - காத்தண்டு, திராந்தி, மரவுத்திரம். வாரைபிட்டகம் - உத்திரம். வாரொலிகூந்தல் - நீண்டு ஒலித்தகூந்தல். வார் - கச்சு, தோல்வாய், நீர், நீளம்,நுண்மை, நேர்மை, புயல், வாரென்னேவல், கயிறு. வார்கடை - வார்ந்துமிஞ்சினது. வார்க்கயிறு - தோற்கயிறு. வார்க்குதல் - உலோக முதலியவற்றை யுருக்கிவிட் டுருவ முதலியவுண்டு பண்ணல், பெய்தல். வார்க்கோலபுரம் - தோயமாபுரம். வார்ச்சியாநீயம் - உபநிடத முப்பத்திரண்டினொன்று. வார்தல் - உயர்ச்சி, ஒழுகல், தெரிதல்,நீளல், வாருதல், நேரிதாதல். வார்த்தகம் - கிழத்தன்மை, கிழவர்குழு, வார்த்தகமை, விருத்தியுரை. வார்த்தசாகி - கற்றாழை. வார்த்தம் - சுகம், பதர். வார்த்தரம் - நீர். வார்த்தலம் - கெட்டநாள். வார்த்தல் - வார்க்குதல், உலோகத்தயுருக்கிப் பிரதிமை முதலியனஉண்டாக்கல். வார்த்தவம் - இருது. வார்த்தாகம் - கத்தரிக்காய், கத்தரிச்செடி. வார்த்தாகி - சிறுவழுதலை.வார்த்தாயனன், வார்த்தாவகன் - ஓலைச் செய்திகள் கொண்டுபோகு வோன், தூதன். வார்த்திகம் - கிழத்தன்மை, கிழவர்குழு, மார்க்கசடப் பிரமாணத்தொன்று அது நான்கு மாத்திரையோர் களையாகக் கொண்டது,விருத்தியுரை. வார்த்திகன் - தூதன், வைசியன்,சொல். வார்த்தைத்தொழிலோர் - பூவைசியர். வார்த்தைநாணயம் - பேச்சுறுதி. வார்த்தைபோடுதல் - பேசுதல், பேச்சுநிச்சயம் பண்ணுதல். வார்த்தைப்பாடு - பேச்சு நிச்சயம். வார்த்தையெடுத்தல் - பேச்சுத்தொடங்கல். வார்நாமச்சீட்டு - ஏற்றுமதிச்சீட்டு. வார்ப்பு - வார்த்தல். வார்ப்புவேலை - உருவாக்கிவார்த்தவேலை. வார்மை - நன்னடை. வார்வாரணம் - மார்க்கவசம். வாலகம் - கடையம், மோதிரம், வால். வாலகருப்பிணி - கன்னிக் கருப்பிணி,முதற்சினைப்பசு. வாலகிருமி - பேன். வாலகில்லியர் - அறுபதினாயிரம்ரிஷிகள். வாலசந்திரன் - இளம்பிறை. வாலசந்நியாசி - இளமையிற்றுறந்தவன். வாலசரம் - உரியாதேசத்திலோரூர்,ஓர் நெல். வாலசுப்பிரமணியன் - முருகன். வாலசூரணம் - ஓர் மருந்து. வாலசூரியன் - இளவாதித்தன். வாலஞானம் - இளமையில் ஞானம். வாலதத்துவம் - யௌவனசத்தி. வாலதந்திரம் - மருத்துவ நூல். வாலதி - யானைவால், வால். வாலநாயகம் - சிறுபிள்ளை யதிகாரம். வாலபத்திரம் - கதிரம், கருங்காலி. வாலபுட்டி - முல்லை. வாலமாலம் - அரிதாரம். வாலமுத்தையன் - முருகன். வாலம் - கந்தைத்துணி, தலைமயிர்,வால் மயிர். வாலயக்கியோபவீதம் - பிள்ளைப்பூணூல். வாலரசம் - சாதிலிங்கத்தில் வடித்தரசம். வாலராசன் - வைடூரியம். வாலவதனயன் - அபரசன். வாலவம் - புலிக்கரணம்.வாலவயசு, வாலவயது - இளவயது.வாலவாயசம், வாலவாயம் - வைடூரியம். வாலவாவம் - இளம்பிராயம். வாலவியசனம் - கவரிமயிர் விசிறி,சாமரை. வாலறிவன் - கடவுள், மெய்யறிவுடையோன். வாலறிவு - பேரறிவு. வாலன் - வாலிபன். வாலாசம் - பின்வார். வாலாதி - பந்தயக் குதிரை. வாலாதித்தன் - உதயகால சூரியன். வலாமை - அசுத்தம், மகளிர் சூதகம். வாலாம்பிகை - பார்வதி. வாலாயம் - வைடூரியம், வழக்கம். வாலான் - ஓர் நெல். வாலி - கிட்கிந்தை மன்னன், பலதேவன், கருங்குருவி, குதிரைவாலி. வாலிகை - மணல். வாலிசம் - தலையணை. வாலிசன் - அறிவீனன், இளவயதுடையோன், குழந்தை. வாலிசை - இளம்பெண். வாலிது - தூயது, வெளியது, நன்று.வாலிபம், வாலியம் - பாலியம். வாலியன் - இளவயதுடையோன். வாலீசர் - வாலிபர். வாலு - சாகை, பசுப்புட்டம்,ப்ரவாஹம். வாலுகநந்தநை - கங்கை. வாலுகபிரபை - ஏழ்நரக வட்டத்தொன்று அது சுடுமண்ணிலம். வாலுகம் - வெண்மணல், மணல். வாலுநர் - மடையர். வாலுகை - குப்பி. வாலுங்கி - கக்கரி, வாலுளுவை யரிசி.வாலுவசாத்திரம், வாலுவநூல் - மடைநூல். வாலுவர் - மடையர். வாலுளுவை - ஓர் மருந்து. வாலூகம் - நஞ்சு. வாலேபம், வாலேயம் - கழுதை. வாலை - இளைது, ஓர் சத்தி, சுத்தம்,திராவகம் வடிக்கும் பாத்திரம்பன்னிரு வயதிற் பெண், பெண்,இரசம். வாலைமெழுகு - ஓர் மருந்து. வாலைரசம் - பரப்பிரம்ம விந்து. வாலோபலீதம் - பிள்ளைப்பூணூல். வால் - இளமை, சுத்தம், தோகைமிகுதி, வெண்மை, ஓர் உறுப்பு. வால்மிளகு - ஒர் வாசனைச் சரக்கு. வால்மீகபலம் - எலுமிச்சை. வால்மீகம் - இந்த்ரத நுஸ்ஸு, வால்மீகராமாயணம். வால்லவேயம் - எருது. வால்வெடித்தல் - வால் வீசல். வால்வெள்ளி - ஓர் நட்சத்திரம். வாவயம் - துளசி. வாவரியுரி - கிளியூறற்பட்டை. வாவல் - கடத்தல், நசை, வெளவால்,பாய்தல். வாவாசம் - குதிரையின்வாய் வார். வாலி - குளம். வாலிப்பாய்தல் - தாவிப் பாய்தல். வாவுதல் - கடத்தல், பாய்தல். வாழகம் - குந்துருக்கம். வாழபுளப்பி - முல்லை. வாழவைத்தல் - வாழ்வித்தல். வாழாக்கேடி - விவாகமற் றிருப்பவள். வாழாத்திப்போளம் - ஓர்வித போளம். வாழி - இடைச்சொல், வாழிய,வாழ்த்து. வாழித்தல் - மதர்த்துண்டாதல். வாழிப்பு - மதர்ப்பு. வாழிய - முன்னிலையசைச்சொல்(உ.ம்) காணியவாழியமலைச்சாரல், வாழ்க வென்னேவல். வாழுதல் - வாழ்தல். வாழை - கதலி. வாழைக்குட்டி - வாழைக்கன்று. வாழைக்காய் - அரையாப்புக்கட்டிஓர் காய். வாழைப்பழத்தி - எருமைநாக்கி. வாழைமட்டம் - வாழைக்கன்று. வாழையடிவாழை - வாழைக்கீழ்வாழை, ஒன்று பலவாதல். வாழ்க்கை - ஊர், சந்தோஷநிலை,சீவிப்பு, செல்வம், மருதநிலத்தூர்,மனைவி. வாழ்க்கைத்துணை - இல்லாள். வாழ்க்கைப்படுதல் - இல்லாச்சிரமாதல், மனைவியாதல். வாழ்தல் - சீவித்தல், செல்வத்தோடிருத்தல், வாழ்வு. வாழ்த்தல் - துதித்தல், வாழ்த்துதல். வாழ்த்து - ஆசீர்வாதம், ஒருவருக்குநன்மை வருவதாகவெனக் கூறுவது, ஓரலங்காரம், சுப வசனம்,துதி, மங்களாசரணை மூன்றினொன்று, வாழ்த்தென்னேவல். வாழ்த்துதல் - ஆசீர்வாதம் பண்ணல்,சோபனம் பாடுதல், துதித்தல். வாழ்த்துரை - வாழ்த்து. வாழ்த்துவிலக்கு - ஓரலங்காரம், அதுவாழ்த்தி மறுப்பது. வாழ்த்தொலி - வாழ்த்துதலினொலி. வாழ்நன் - வாழ்வோன். வாழ்நாள் - சீவியகாலம்.வாழ்வாடிச்சி, வாழ்வாட்டி - சுமங்கலி. வாழ்வாளன் - வாழ்வுடையோன். வாழ்வித்தல் - வாழச்செய்தல். வாழ்விழத்தல் - அமங்கலியாதல்,தாரமிழத்தல். வாழ்விழந்தவள் - அமங்கலி. வாழ்வு - முறைமை, வாழ்தல்,செல்வம், வாழ்தற்குரிய இடம்,பெருமை. வாளம் - சக்கரவாளகிரி, சக்கரவாளப்புள், வளைவு, வாள். வாளகம் - வெட்டிவேர். வாளரம் - ஓரரம். வாளரி - சிங்கம். வாளவரை - ஓரவரை. வாளா - வீண், சும்மா. வாளாண்மை - வாட்போர். வாளாமை - கேளாமை, பயனின்மை,மௌனம். வாளி - அம்பு, மாதர்காதணியினொன்று, வட்டமாயோடல். வாளிச்சிமேனி - மாணிக்கம். வாளியம்பு - அலகம்பு. வாளீரல் - வளைந்தவீரல். வாளுழவர் - படைவீரர். வாளேந்தி - துர்க்கை. வாளேறு - வாள்வெட்டு. வாளை - ஓர் மீன். வாளைகடியன் - விஷமுள்ள ஓர் கடற்பாம்பு. வாள் - அரிவாள், ஈர்வாள், ஒளி,பட்டயம், கொலை, வாட்படை. வாள்கைக்கொண்டாள் - துர்க்கை. வாள்மீன் - ஓர் மீன். வாள்வரிக்கொடுங்காய் - வளைந்தவரிகளையுடைய வெள்ளரிக்காய். வாறான் - கப்பிலினோர் கயிறு, வருகிறான். வாறு - பெலன், வாய்ப்பு. வாறுதல் - அரிதல். வாற்கம், வாற்கலம் - மரவுரி. வாற்கிண்ணம் - அகப்பை. வாற்கோதும்பை - ஒர்வித தானியம். வாற்சகம், வாற்சலம் - கன்றுக்கூட்டம், பசுக்கூட்டம். வாற்சல்லியம் - உருக்கம், அன்பு. வாற்சிபுத்திரன் - உருக்கம், அன்பு. வாற்சிபுத்திரன் - வாற்சோ புத்திரன். வாற்சியாயன் - ஓர் முனி. வாற்சோபுத்திரன் - அம்பட்டன். வானகநேயம் - பழமுண்ணிப்பாலை. வானகப்புதைச்சி - கதண்டு. வானகம் - ஆகாயம், தேவலோகம்,மஞ்சாடி. வானக்கல் - காக்கைக் கல். வானசத்திரம் - வான்சோதிகளின்போக்கு வரவறியுஞ் சாத்திரம். வானசோதி - ஆகாயப் பிரபாரூபிகள். வானட்சத்திரம் - வால்வெள்ளி. வானதி - ஆகாயகங்கை. வானநாடு - பொன்னாங்காணி, தேவலோகம். வானபத்தி - பூவாது காய்க்குமரம். வானபத்தியம் - பலாசு, பூவாமற்காய்க்கு மரம். வானப்பிரத்தம் - இலுப்பை, நாலாச்சிரமத் தொன்று, அது வனத்திற்றவஞ் செய்தல், பலாசு. வானப்பிரத்தன் - வனத்திற் றவஞ்செய்யு மூன்றாமாச்சிரமி. வானப்பிரத்தி - காட்டிற் றவஞ்செய்பவன், பூவாது காய்க்குமரம். வானப்பிரியை - மரம். வானமிருகம் - கத்தூரி எலும்பு. வானம் - அத்திபாரம், ஆகாயம்,உலர்ச்சி, உலர்ந்த காய், உலர்ந்தது, உலர்ந்த மரம், கோபுரத்தினோருறுப்பு, சீவனோடிருத்தல்,சுவரறை, நீர்த்திரை, புற்பாய்,போதல், மழை, வாசனை. வானம்பாடி - ஓர் புள். வானம்பார்த்தகதிர் - கொப்புத்தாழாக்கதிர். வானம்பார்த்தபயிர் - மழையால்விளையும் பயிர். வானம்பார்த்தபிறவி - விருட்சயோனி. வானரகதி - துரகதியைந்தி னொன்று. வானரக்கொடியோன் - அருச்சுனன். வானரநேயம் - பழமுண்ணிப்பாலை. வானரபதி - சுக்கிரீவன். வானரம் - குரங்கு. வானராகரம் - மரம். வானராராதி - நண்டு. வானரேந்திரன் - அனுமான், சுக்கிரீவன். வானலம் - ஓர் துளசி. வானவரம்பன் - சேரன். வானவருறையுள் - தேவர்கோயில்,தேலோகம். வானவர் - தேவர். வானவர்கோன் - இந்திரன். வானவர்முதுவன் - சேரன், பிரமன். வானவல்லி - மின்னற்கொடி. வானவன் - சேரன், பிரமன், தேவன்,சூரியன். வானவில் - இந்திரவில். வானாசி - கார்போகரிசி. வானாடி - தேவப்பெண். வானி - ஓமம், கூடாரம், படை, மேற்கட்டி, விருதுக்கொடி, காற்றிற்செல்லும் பட்டம். வானிதம் - கள். வானிமலர் - வெண்டாமரை. வானியம் - வனம். வானிற்கெற்பத்தி - முத்துச்சிப்பி. வானீரம் - நீர்ப்பிறப்பு, நீர்வஞ்சி. வானுலகம் - தேவலோகம். வானேறு - இடி. வானோங்கி - ஆலமரம். வானோர் - தேவர்கள். வானோர் கணம் - நவகணத்தொன்று. வானோர்கோமான் - இந்திரன். வானோர்மாற்றலர் - அசுரர், இராக்கதர். வானோர்முதுவன் - சேரன், பிரமன். வானோர்வரம் - வானவாசிகள் பேறுஅஃது இலகு, சூக்குமம், அட்சயம்,பிரகாசம், இவை முறையே கனமின்மை, கண்டிப் பின்மை,கேடின்மை, விளக்கம். வான் - அமுதம், ஆகாயம், எதிர்காலவினையெச்ச விடைச்சொல்,புயல், பெருமை, மகத்துவம்,மழை, முகில், வலி. வான்கொடி - ஆகாயவல்லி. வான்கோழி - கோழியி லோர்வகை. வான்பயிர் - மரப்பயிர். வான்பாடுபுள் - வானம்பாடி. வான்பிரயோசனம் - மரப் பிரயோசனம். வான்மிகம் - இந்திரவில், புற்று. வான்மிளகு - ஒர் மிளகு. வான்மீகம் - குங்குமப்பூ. வான்மீகி - ஓர் முனி, பிராசேதசரென்றும் பெயர். வான்மீகியார் - தலைச்சங்கப்புலவரிலொருவர். வான்மீன் - நட்சத்திரம், உடு, சோதி,தாரகை, தாரா. வான்மை - சுத்தமுடைமை, வெண்மை. வான்மைந்தன் - வாயு. வி வி - அதிகம், அறிவு, இன்மை,நிச்சயம், பிரிவு, முகாந்திரம்,வித்தியாசம், வெறுப்பு இவற்றைக்காட்டுமோ ருபசருக்கம், ஆகாயம், கண், காற்று, திசை, விலக்கு,வேறு, காரணம், அற்பம், சுத்தி,விசேடம். விககம் - அம்பு, ஓர் பட்சி, கிரகம்,சந்திரன், சூரியன், முகில். விகங்கதம் - இலந்தை. விகங்கமை - கரத் தண்டு. விகங்கம் - அம்பு, அன்னம், சந்திரன்,சூரியன், பறவை, முகில், காற்றாடி. விகசதா - மூக்கிரட்டை. வீகசம் - கேது, மஞ்சாடி, மலர்தல்,மலர்ந்தது, மிச்சப் பண்டம்,மொட்டை. விகசனம் - புன்னகை. விகசன் - சந்திரன். விகசாதன் - நிருமாலிய வூணன். விகசிதம் - புனமுருக்கு, மந்தகாசம்,மலர்தல். விகசித்தல் - மலர்தல். விகசுவரம் - விசாலம். விகடகவி - பகிடிக்காரன், பகிடிப்பாட்டு. விகடசக்கரன் - காஞ்சி விநாயகன். விகடபுத்தி - கருக்குச் சுருட்டான்புத்தி. விகடம் - அழகானது, உன்மத்தம்,தொந்தரை, பெரியது, வேறுபாடு,விசாலம். விகடன் - வேடிக்கை பண்ணுபவன்,ஓரிருடி. விகடி - கருக்கு சுருட்டான ஆள். விகடிகை - விநாடி. விகணனம் - கடனிறுத்தல், கணித்தல்,தியானித்தல். விகணிதம் - தீர்ப்பு. விகண்டிதம் - பிரிவு, வேறுபாடு.விகண்டித்தல், விகண்டிப்பு - ஆட்சேபித்தல், வேறுபடுத்தல். விகண்டை - துரெண்ணம், வைராக்கியம். விகதம் - இட்டமானது, இருளுதல்,கடனிறுப்பு, சாவு. விகதனம் - புகழ்ந் துரைத்தல். விகதி - தோழன். விகத்தனம் - அடித்தல், அவிழ்த்தல்,இகழா விகழ்ச்சி, உரோஞ்சுதல்,புகழ்ந்துரைத்தல். விகத்தை - இகழா விகழ்ச்சி, புகழ்ச்சி. விகமம் - பிரிவு. விகமனம் - துர் நடக்கை. விகம் - வழியீற்றுப் பசுப்பால். விகம்பிதம் - நடுக்கம். விகரம் - இயைபின்மை, நோய், பிரிவு. விகான் - காற்றுப் புசிபோன், நிருமானி. விகராலம் - மிகப் பெரியது. விகர்த்தனன் - சூரியன், பிதாவினதிகாரத்தை வலிதாகக் கவர்ந்தமகன். விகர்ப்பத்தம் - அடாதது. விகர்மிகன் - விகன்மிகன். விகலபாணிகன் - சூம்பின கையன். விகலம் - கலக்கம், குறைபாடு, விகலை. விகலன் - குறைவுடையோன். விகலாங்கம் - உறுப்புக் குறை. விகலாங்கன் - குறை யுறப்புள்ளவன். விகலிதகேசம் - நெகிழ்ந்த கேசம். விகலிதம் - சிந்தல், நெகிழ்ந்தது,முடியப்பட்டது, வடிதல், விழுந்துபோனது. விகலை - கால நுட்பம், காலம்,நாழிகை. விகற்பக்காட்சி - பொருளின் பேதங்களைக் கண்டறியுங் காட்சி. விகற்பத்தின்முடித்தல் - ஓர் யுத்திஅது விளங்குதற் பொருட்டுப்பலவேறு பாடுகளின் சிறப்புவாய்பாட்டான் முடித்தல். விகற்பம் - சந்தேகம், தவறு, பிழை,வேற்றுமை, மயக்கத்துக்குக் காரணமான கற்பனை, பலவித கற்பனை. விகற்பித்தல் - வேறுபடுத்தல். விகற்பு - விகற்பம். விகனம் - கனமற்றது. விகன்மிகன் - காரிய விசாரணைக்காரன். விகன்னம் - எதிரிடை, கொலை,தீங்கு, பருத்தி கடைதறி. விகன்னன் - செவிடன். விகாகம் - அமிழ்ந்தல், மூழ்கல். விகாசதம் - ஆகாயம், ஆடம்பரம்,தனிமை, புன்னகை, மகிழ்தல்,மலர்தல். விகாசதை - தனிமை, தோற்றம்,விரிவு. விகாசம் - விகாசதம், விரித்தல், பிரகாசம், மலர்ச்சி. விகாசனம் - தனிமை, விரிவு, வெளிப்படுதல். விகாசித்தல் - மலர்தல். விகாசை - நா. விகாதம் - அழிவு, எதிர், தடை,விரோதம், தீங்கு. விகாதித்தல் - விரோதித்தல்.விகாபதம், விகாபிதம் - கொடை. விகாயசம் - பட்சி. விகாய் - ஓர் மரம். விகாரப்புணர்ச்சி - நிலை மொழியேனும் வருமொழியேனு மிவ்விருமொழியு மேனுந் தோன்ற றிரிதல்கெடுதலெனும் விகாரத்தோடுபுணர்வது. விகாரம் - அலைந்து திரிதல், உலர்த்துதல், கவலை, காமக் கவலை,தன்மயம், தோள், நோய்,பொழுது போக்கு, வருத்தம்,வேற்றுமைப் படுதல்,விளையாட்டு ஆலயம். விகாரபுவமை - உவமையை விகாரப்படுத்தி யுவமிப்பது (உ.ம்) முத்துக்கூர்த்தன்ன முறுவல். விகாரி - இருபத்திரண்டாவதாண்டு,மோகி, விகார முடையவன். விகாரிதம் - மாறுபட்டது. விகாரித்தல் - பேதித்தல், மோகித்தல்.விகாலகம், விகாலம் - மைம்மல். விகாலிகம் - நாழிகை யறிய வைக்குமில்லிக் குடம். விகானம் - துற்செய்தி, நிந்தை. விகிசிரன் - சந்திரன். விகிதம் - சிநேகம், விகிர்தம், செயல்,விதி. விகிதி - எதிர், நிந்தை, பாடல். விகிரணம் - சிதறுதல், விரிதல். விகிரம் - இறைத்தல், துண்டு, புட்பொது. விகிருடம் - இழுக்கப்படுவது. விகிருதம் - தலைமக டன்றலைவர்க்குத் தன் காதல் சொல்லநாணித்தல். விகிருதி - அச்சம், கல்லிற் பிறந்தபொருள், கவலை, நோய், பயம்,பொழுது போக்கு, மாறுதல்,வருத்தம், விகிர்தி வருஷம், விகுதி,வேறு படுதல். விகிர்தம் - அங்கபங்கம், குறைவு,நோய், பொய், விதி, முறை,வெறுப்பு, வேறுபாடு, அச்சம். விகிர்தி - இருபத்து நாலாவதாண்டு,வேறுபாடு. விகீதம் - ஒவ்வாமை. விகீதி - நிந்தை, விரோதம். விகீரணம் - எருக்கிலை. விகீரியம் - இறைத்தல். விகுட்சி - இக்ஷ்வாகு ராஜ புத்ரன். விகுணம் - குணமின்மை. விகுணி - கள், குணங் கெட்டது. விகுதி - பகு பதவுறுப்பி னொன்று,பிரகிருதி மாயை, விகாரம். விகுரம் - வெள்ளெருக்கு. விகுர்வாணன் - நிறை மன முள்ளவன். விகூணநம் - கடைக்கண் பார்வை. விகூணம் - வாக்குப் பார்வை. விகூணிகை - மூக்கு. விகேசம் - கூடம், மொட்டை. விகேசிகை - சேர்வைச் சீலை. விகேடகன் - வேதனை செய்வோன். விகேடம் - தீங்கு. விகேடனம் - அரைத்தல், துக்கம்,வாதித்தல். விகை - மோக்கம். விகோகன் - வருகாசிர புத்ரன். விகோஷணம் - பிரசித்தம். விகோடம் - கடினம், துறந்தது. விகௌதுகம் - பழமையானது. விக்கம் - யானைக் கன்று, சந்திரன்,சூரியன். விக்கல் - ஓர் நோய், விக்குதல். விக்கியாதம் - கீர்த்தி, பிரசித்தம். விக்கியாதன் - பிரசித்தன். விக்கியாதி - விக்கியாதம். விக்கியாபனம் - அறிவிப்பு, விண்ணப்பம், வெளிப்படுத்தல், விஞ்ஞாபனம். விக்கியானம் - கல்வி, விபரீதார்த்தம்,விஞ்ஞானம். விக்கியானி - கல்விமான். விக்கிரகம் - உடல், கருங்கல், சாயல்பங்கு, போர், விரிவு, விகுதி, சிலை. விக்கிரகாராதனை - சுரூப வணக்கம்,சிலை, வணக்கம். விக்கிரகாவரம் - முதுகு. விக்கிரம - பதினான்காவ தாண்டு.விக்கிரமசிங்கன், விக்கிரமசேனன் - விக்கிரமாதித்தன். விக்கிரமஸ்தானம் - மூன்றாமிடம். விக்கிரமம் - நடத்தல், பராக்கிரமம்,மிகுபலம், வெற்றிமுறை, பிழைத்தல், சாமர்த்தியம். விக்கிரமாணம் - போதல்.விக்கிரமாதித்தன், விக்கிரமார்க்கன் - ஓரரசன். விக்கிரமார்ச்சிதம் - வெற்றி. விக்கிரமி - சிங்கம், வீரன். விக்கிரமோர்வசியம் - காளிதாசனியற்றிய ஒரு வட மொழி நாடகநூல்.விக்கிரயணம், விக்கிரயம் - விற்றல். விக்கிரயிகன் - விற்போன். விக்கிரயீ - விற்போன். விக்கிராந்தகன் - சிங்கம், வீரன். விக்கிராந்தம் - மிக வீரம். விக்கிராந்தி - குதிரை, நடை, பராக்கிரமம், வீரநடை, வீரம். விக்கிராயிகன் - விற்போன். விக்கிரியை - விகாரம். விக்கிரேயம் - விற்கத்தக்கது, விற்கப்படும் பொருள். விக்கிரோசனம் - இகழ்ச்சி. விக்கிள் - விக்கல். விக்கினகரம் - தடுத்தல். விக்கினநாசனன் - பீடை தீர்ப்போன்,விநாயகன். விக்கினம் - இடையூறு, தடை, தீமை,விக்கம். விக்கினராசன் - விநாயகன். விக்கினவிநாசனன் - விக்கின நாசனன். விக்கினவிநாயகன் - விக்கினாரி. விக்கினாபனம் - அறிக்கை.விக்கினாரி, விக்கினேசன், விக்கினேசுரன், விக்கினேச்சுவரன் - விநாயகன்,வினை தீர்ப்போன். விக்குள் - விக்கல். விக்குதல் - விக்கல். விக்ஞாபனம் - விக்கியாபனம். விக்ஞானம் - விக்கியானம். விங்கம் - குதிரைக் குளம்பு. விங்களம் - கபடம், களிம்பு, திரிவு,பேதம்.விங்களித்தல், விங்களிப்பு - சூதுசெய்யல், நிலையற்றிருத்தல்,பிரித் தல், வித்தியாசப்படுத்தல். விங்குதல் - துளைத்தல். விசகம் - கேது. விசகன் - சந்திரன். விசங்கடம் - சிங்கம். விசசம் - தாமரை. விசசனம் - கொடுவாள், கொலை,தண்டம். விசதம் - அழகு, சுத்தம், நிருமலம்,வெண்மை, வெளிப்படை. விசத்துரு - அடம்பு. விசபிலம் - சேறு.விசபுட்பம், விசப்பிரசூனம் - தாமரை. விசமபாதம் - அணாப்பு, ஒவ்வாமை. விசமம் - சமமின்மை, வைராக்கியம். விசமுட்டி - காஞ்சிரை, எட்டி. விசம் - தாமரை நூல். விசய - இருபத்தேழாவதாண்டு. விசயகுஞ்சரம் - இராசகயம். விசயகோதண்டம் - வெற்றிவில். விசயசித்தி - வெற்றி. விசயச்சந்தம் - எழுநூறு கோவைமுத்துத் தாழ்வடம். விசயத்துவசம் - வெற்றிக்கொடி. விசயநகரம் - ஒர் பட்டினம். விசயப்பொறி - விற்பொறி. விசயமத்தளம் - இரண பேரிகை. விசயம் - அடைக்கலம், ஆராய்வு,ஐயம், சருக்கரை, சிவாகம மிருபததெட்டினொன்று, சூரியமண்டலம், தேவவிமானம்,வெற்றி. விசயனம் - ஆராய்வு. விசயன் - அருச்சுனன், கலி சகார்த்தன், திருமால் வாயில் காப்போன், வெற்றியாளன். விசயாரத்தம் - கைலைமலை. விசயை - துர்க்கை, துர்க்கையேவல்செய்வாள், மூன்றாம் எட்டாம்பதினைந்தாந்திதிகள். விசரம் - கூட்டம், கொலை. விசர் - பைத்தியம். விசர்க்கம் - கொடை, தள்ளுதல்,துறத்தல், தெட்சணாயன பாதை,நிறுத்தி யுச்சரிப்பதற்கிடு மடையாளம், பிரவை, பிரிதல், போதல்,மலங்கழித்தல், விடுதல், பிரளயம்,நீர்வார்த்தல். விசர்ச்சனம் - அனுப்புதல், நன்கொடை, விடுதல், கொடுத்தல். விசர்ச்சிகை - இலக்குமி, சிரங்கு. விசர்ச்சிதை - கூத்தினோர் விகற்பம். விசர்ப்பம் - ஓர் சிலந்தி, பரம்புதல்,பறத்தல். விசர்ப்பணம் - பரம்புதல். விசலம் - கஞ்சி, தளிர். விசலனம் - உறுதியின்மை,தற்புகழ்ச்சி. விசலி - சீந்தில். விசலிதன் - சலந குண முள்ளவன். விசவல்லி - கீழ்காய் நெல்லி. விசளை - சட்டி, நீற்றுப் பெட்டிகொண்ட அளவு. விசனம் - அபாக்கியம், கலகம்,துன்பம், நின்மா நுஷியம், பாவம்,பேராசை, விசிறி, வியசனம்,ஜனமில்லாத இடம். விசனனம் - பிறப்பு. விசனாமனம் - யாக தோத்திரம். விசாகம் - தோடை, அனில நாள்,வைகாசி. விசாகலம் - ஓராச்சிரமரம். விசாகன் - குமரன். விசாகை - வியாகம். விசாதி - நோய், புறசாதி. விசாதிபேதம் - பேதமூன்றி னொன்றுஅது மரத்திற்குங் கல்லுக்குமுள்ளவித்தியாசம். விசாயம் - தூங்கல். விசாரகன் - நியாயாதிபதி. விசாரங்கம் - கீர்த்தி. விசாரணம் - கொலை, தியானம்,நிதானித்தல், ஆராய்தல். விசாரணியம் - சாஸ்த்ரம். விசாரணை - ஆராய்ச்சி, மீமாஞ்சை, விசாரிப்பு. விசாரதர் - சிறந்தோர், புலவர். விசாரபூ - கல்விச்சங்கம். விசாரம் - ஆராய்வு, ஆலோசனை,ஊருதல், கவலை, மரம், மீன்,விவாதம். விசாரவகம் - கீர்த்தி. விசாரவம் - கீர்த்தி, நம்பிக்கை, புத்தி. விசாரி - கலக்கமுடையோன், வாயுத்திசை, விசாரியென்னேவல். விசாரிதம் - ஆலோசிக்கப்பட்டது. விசாரிதன் - ஆலோசனைக்காரன்.விசாரித்தல், விசாரிப்பு - ஆராய்தல்,பராமரித்தல். விசாகுலம் - நல்வமிசம். விசாலதை - அகலம், பருமை, மேன்மை. விசாலம் - அகலம், ஓர் பட்சி, ஓர்மான், கடம்பு, சிற்பநூன் முப்பத்திரண்டி னொன்று, பெரியது,பேய்த்திமிட்டி, விரிவு.விசாலாக்கன், விசாலாட்சன் - கருடன், சிவன். விசாலாட்சி - பார்ப்பதி, விரிந்தகண்களையுடையவள். விசாலித்தல் - விரிதல். விசாலிப்பு - விரிவு. விசாலை - சத்தபுரிய னொன்று அதுஉச்சினி, அவந்தி நகர்.விசானபூமி, விசானம் - மசானம். விசி - அலை, கட்டில், கட்டு, பறையிறுக்கும்வார், வார். விசிகம் - அம்பு, புனற்றிரை, இருப்புலக்கை. விசிகிலம் - தவநம், மல்லிகை. விசிகை - கச்சு, கருத்து, தெரு, பாரை,வைத்தியக்கிரகம்.விசிஷ்டம், விசிட்டம் - மேன்மை,விசேஷ முடையது, தகுதியுடை யது. விசிட்டாத்துவிதம் - எம்பெருமானார்செய்த ஓர் பிரபந்தம். விசிதகி - கடுகு. விசிதம் - விபூதி. விசிதிரு - நியாயாதிபதி, பங்காளி. விசிதை - வசித்துவம். விசித்தல் - கட்டல், வலித்துக்கட்டல், விம்மல். விசித்தி - அழிவு, இழத்தல், எல்லை,கடுகு, தரிப்பு, பிரித்தல், விசுத்தி,வெட்டல். விசித்திரகம் - அதிசயம். விசித்திரதேகம் - முகில். விசித்திரதை - விசித்திரகம். விசித்திரம் - அதிசயம், எதிர்ப்பேச்சு,பல நிறம், பேரழகு, வேடிக்கை. விசித்திரவீரியன் - சந்திரகுலத் தரசரிலொருவன். விசித்திரவேளாகொல்லி - கொல்லித்திறத்தி னொன்று. விசித்திராங்கம் - அழகு, நன்னிறம்,மயில். விசிபம் - கோயில். விசிப்பலகை - வாங்குப்பலகை. விசிப்பு - கட்டு. விசிமந்தம் - வேம்பு. விசிரகந்தி - பொன்னரிதாரம். விசிரகை - தளர்ந்த காலம். விசிரயம் - ஒதுக்கிடம், தாவரம். விசிராந்தி - ஓய்வு. விசிராமம் - இளைப்பாற்றி, தரிப்பு,மனவமைதி. விசிலம் - கஞ்சி. விசிறி - ஓர் செடி, சிற்றாலவட்டம். விசிறுதல் - விசுக்கல், வீசுதல். விசினம் - பிரபை. விசினி - தாமரைப்பூந்திரள். விசு, விஷு - பதினைந்தாவதாண்டு. விசுக்கிடுதல் - பிரிய வீனப்படுதல்,விதனப்படுதல். விசுக்கெனல் - சீக்கிரக் குறிப்பு. விசுதம் - கறிப்புடோல். விசுத்தம் - சுத்தம், புத்தி, வணக்கம்.விசுத்தி, விஸுத்தி - அடிநாத்தானம்அஃது ஆறாதாரத்தொன்று, ஐயம்,சுத்தம், திருத்தம், தீர்தல், நிகர்.விசுபம், விசுமம் - உடம்பு, உலகம்,சடபதார்த்தம். விசுமிகினி - வேம்பு. விசும்பு - ஆகாயம், திசை, தேவலோகம், மேகம், வீம்பு. விசும்புதல் - அசட்டையாய் விலக்கல். விசும்புத்திசை - உச்சி. விசுருதி - கீர்த்தி, பாய்தல். விசுவகந்தை - பூமி. விசுவகர்மஜை - சூரியன் மனைவி. விசுவகர்மசுதா - குபேரன் மனைவி. விசுவகருமன் - தேவதச்சன். விசுவகன் - பிரமன். விசுவகன்மா - சூரியன், தேவதச்சன். விசுவகேது - அநிருத்தன். விசுவகோதிரு - இந்திரன், திருமால். விசுவங்கரம் - கண். விசுவசகை - பூமி. விசுவசங்கிராந்தி - சூரியன் விசுவத்தினின்று அயலிராசிக்குப் போவது. விசுவசனம் - நம்புதல். விசுவசித்தல் - நம்புதல். விசுவசித்து - ஓர் வேள்வி. விசுவதாரிணி - பூமி. விசுவதினம் - இராப்பகனாழிகைசரியாயிருக்குநாள். விசுவதேவம் - தேவபூசை, பிதிர்பூசை. விசுவதேவர் - திரயோதச தேவகணத்தொருவர். விசுவநாதன் - சிவன், காசித்தலத்திலுள்ள சிவபெருமான். விசுவநாள் - உத்திராடம், அவிட்டம். விசுவபேடகம் - வேர்க்கொம்பு. விசுவபை - சந்திரன், சூரியன், தீ. விசுவபோதன் - புத்தன். விசுவமதை - தீநாவேழினொன்று. விசுவம் - அதிவிடையம், உலகம்,எல்லாம், பூமியின் சமரேகையுஞ்சூரியன் பாதையுஞ் சந்திக்குமிடம். விசுவம்பரம் - பிரபஞ்சாதாரம். விசுவம்பரன் - இந்திரன், விட்டுணு. விசுவம்பராதிபன் - அரசன். விசுவம்பரை - பூமி. விசுவம்பாரன் - இந்திரன், சிவன்,விஷ்ணு. விசுவயு - காற்று. விசுவராசன் - சுயாதிபதி. விசுவரூபம் - பிரபஞ்சரூபம். விசுவரூபன் - திருமால். விசுவரேதா - பிரமன். விசுவரோசனம் - ஓர் கிழங்கு. விசுவவராகம் - ஊர்ப்பன்றி. விசுவாசகன் - நம்பிக்கைவான். விசுவாசகாதகன் - விசுவாசத்தைக்கொலைப்போன், நன்றிகொன்றோன். விசுவாசகாதம் - நம்பிக்கைக் கிரண்டகம், நம்பிக்கைத் துரோகம். விசுவாசபங்கன் - விசுவாசகாதகன். விசுவாசபக்தி - நல்விசுவாசம். விசுவாசம் - நம்பிக்கைத் துரோகம். விசுவாசபாதகன் - நம்பிக்கைத்துரோகி. விசுவாசபாத்திரன் - நம்பத்தக்கவன். விசுவாசபூமி - நம்பத்தக்கது. விசுவாசம் - உண்மை, நம்பிக்கை,பத்தி. விசுவாசி - வேங்கை. விசுவாசித்தல் - நம்புதல். விசுவாத்துமன் - கடவுள். விசுவாமித்திரபிரியம் - தென்னமரம். விசுவாமித்திரப்புல் - ஓர்புல். விசுவாமித்திரன் - ஓரிருடி. விசுவாசன் - ஓர் கந்தருவன். விசுவாவசு - இருபத்தொன்பதாவதாண்டு, ஓர் கந்தருவன். விசுவான்மா - பிரமன்.விசுவேசன், விசுவேசுவரன் - சிவன். விசுவேதேவர் - சிரார்த்தகாலத்தில்அர்ச்சிக்கப்படுந் தேவர்கள். விசுவெளஷதம் - சுக்கு. விசுளி - கள். விசூகை - ஒர் நோய். விசூரணம் - துக்கம். விசூரிதம் - குணப்படுதல். விசேடகம் - நெற்றித்திலகம். விசேடகாலங்காரம் - ஓரலங்காரம்அஃது ஒப்புமையாற்பொது மையுற்றிருந்தவிரண்டு பொருள்களுக்கொரு காரணத்தால்விசேஷந் தோன்றவுரைத்தல். விசேடணம் - அடைமொழி,குணத்தை விளக்குவன,பகுத்தறிவு, வேறு படுத்துவது. விசேஷதீட்சை - ஒர் தீட்சை. விசேஷம் - பிரதானம். விசேடம் - மேன்மை, வகை, விசேடகாலங்காரம், விதம், வித்தியாசம்,சிறப்பு, விசேஷம். விசேடணம் - பண்பு. விசேடவாக்கியம் - சிறப்புமொழி. விசேடிதம் - உறுதிப்படுத்துவது.விசேடித்தல், விசேஷித்தல் - சிசேடப்படுத்தல், சிறப்பித்தல். விசேடியம் - அடையடுத்தபொருள்,விசேடிக்கப்படுவது. விசேடோத்தி - ஓரலங்காரம் அதுகாரணகாரியத்தை யிணைத்துச்சொல்வது. விசேட்டிதம் - துற்செய்கை, முயற்சி. விசேதம் - அபாக்கியம், இடம்,கலக்கடி, துக்கம், பிரிவு. விசை - சீக்கிரம், தரம், பொறி, முறை,வலிக்கை, விசையென்னேவல்,விரைவு. விசைகொள்ளல் - பெலன் கொள்ளல்.விசைக்கம்பு, விசைக்கால் - நெய்வார்கருவியினொன்று. விசைக்காற்று - செல்விசையினானுண்டாகுங்காற்று. விசைத்தடி - நெய்வார்கருவியினொன்று, பொறியினோர்தடி. விசைத்தல் - வேகமுறல், துள்ளல். விசையதண்டம் - சதுரங்க தானையைமோதிவென்ற வீரன் கதைத்தண்டு. விசையம் - விசயம். விசையன் - அருச்சுனன். விசையேற்றுதல் - பொறி யேற்றுதல்,மூட்டுவிடுதல். விசையை - விசயை. விசையனம் - ஆராய்வு. விசோகம் - அசோகமரம், சோகரஹிதம். விசோதனம் - சுத்திகரித்தல். விச்சதையன் - புல்லூரி. விச்சநந்தா - வெள்ளெருக்கு. விச்சம் - தாமரை. விச்சலம் - அம்பு. விச்சல்லி - பேய்த்திமிட்டி. விச்சாதரர் - வித்தியாதரர். விச்சாதி - வேறுசாதி. விச்சித்திரம் - விற்பன்னம். விச்சிரமம் - ஓய்வு, மலங்கழித்தல். விச்சிரம் - வெள்ளெருக்கு. விச்சம் - தாமரை. விச்சலம் - அம்பு. விச்சல்லி - பேய்த்திமிட்டி. விச்சாதரர் - வித்தியாதரர். விச்சாதி - வேறுசாதி. விச்சித்திரம் - விற்பன்னம். விச்சிரமம் - ஓய்வு, மலங்கழித்தல். விச்சிரம் - வெள்ளெருக்கு. விச்சிரல் - கோரை. விச்சிரவன் - குபேரன்பிதா. விச்சிராந்தம் - கடைக்கண். விச்சிராந்தி - ஓய்வு, ஓர் தீர்த்தம். விச்சிராமம் - விச்சிரமம், ஓய்வு,செயல் முடிவு. விச்சிராவகம் - கீர்த்தி. விச்சிரானனம் - கொடை. விச்சிரானம் - பேதிமருந்து. விச்சிரிப்பு - சிச்சிலுப்பான். விச்சிரும்பணம் - பொழுது போக்கு,விரிதல். விருச்சிரும்பிதம் - அலர்ச்சி, பொழுதுபோக்கு, விருப்பம். விச்சிலுப்பை - விச்சிரிப்பு. விச்சிறல் - கோரை. விச்சின்னம் - வேறாக்கப்பட்டது,பிளவு. விச்சு - வித்து. விச்சுருதம் - ப்ரசித்தம். விச்சுருதி - புகழ். விச்சுவகன் - பிரமன். விச்சுவகன்மன் - தேவதச்சன். விச்சுவகன்மா - தேவகம்மாளரிலொருவன். விச்சுவகாசிபம் - சிற்பநூன்முப்பத்திரண்டினொன்று. விச்சுவகேது - அநிருத்தன். விச்சுவங்கரம் - நேத்ரம். விச்சுவசாரம் - சிற்பநூன் முப்பத்திரண்டினொன்று. விச்சுவதருமம் - சிற்பநூன் முப்பத்திரண்டினொன்று. விச்சுவதாரிணி - பூமி. விச்சுவநாதன் - சிவன். விச்சுவதேவர் - பிதிர்களிலோர் பிரிவு. விச்சுவபோதம் - சிற்பநூன் முப்பத்திரண்டினொன்று. விச்சுவம் - விசுவம், உலகம்,முழுமையும். விச்சுவரேகை - வானவரை. விச்சுவர் - சிற்பர், வானோரிலோர்வகுப்பார். விச்சுவேசம் - சிற்பநூன்முப்பத்திரண்டினொன்று. விச்சுளி - ஓர்குருவி, சுறுக்கன்,விவேகி. விச்சுளியன் - விவேகி. விச்சை - அறிவு, அறுதொழிலினொன்று அது வித்தை, தெரு,வெள்ளெருக்கு. விச்சொரூபம் - விகாரவடிவம். விச்சோடு - சோடற்றது. விஞ்சதி - விம்சதி, இருபது. விஞ்சுதல் - மிகுதல். விஞ்சை - கல்வி, வித்தை. விஞ்சையரூர் - வித்தியாதரரூர். விஞ்சையர் - புலவர், வித்தியாதரர். விஞ்ஞதை - ஞானம். விஞ்ஞம் - அறிவு. விஞ்ஞாதம் - அறிந்தது, அறிவு,பிரசித்தம். விஞ்ஞாத்தி - அறிவிப்பு. விஞ்ஞாபனம் - விக்கியாபனம், அறிவித்தல். விஞ்ஞானகலர் - மூவகை யாத்துமாக்களிலொருவர். விஞ்ஞானபாதன் - வியாசன். விஞ்ஞானமயகோசம் - பஞ்சகோசத்தொன்று அது ஞானேந்திரியமும்புத்தியும். விஞ்ஞானம் - விசேடமான அறிவு,வாத்தியம், வேலை.விடகடி, விஷகடி - விஷந்தீண்டல். விடகாரி - காண்டாமிருகக் கொம்பு,விட வைத்தியன். விடக்கு - ஊன். விடங்கம் - அழகு, ஆண்மை,கொடுங்கை, சுவர்ப்புறத்துநீண்ட வுத்திரம், துகிற்கொடி,புழுக்கூடு, புறவுகட்குத் தூண்,கண் மேற் செய்த கூட்டின்வரிசை, முகடு, வீதிக் கொடி. விடங்கர் - சிறுவழி, தியாகராஜர். விடங்கன் - சுயம்பு மூர்த்தி. விடங்கு - அழகு.விடங்கொல்லி, விஷங்கொல்லி - ஓர்பூண்டு.விடசிருங்கம், விடசூகம் - ஓர் வண்டு. விடசூசகம் - சகோரப்புள். விடசெந்து - விஷப் பிராணி. விடதந்தகம் - பாம்பு. விடதம் - துருசி, முகில். விடதரம் - பாம்பு, மேகம். விடதரன் - சிவன்.விடதாரி, விஷதாரி - மருத்துவன்,வைத்தியன். விடதாளம்விடத்தேரை - ஒர் மரம். விடத்துக்கரசன் - கெருட பச்சை.விடநீர், விஷநீர் - சரீரத்துறுமோர்தோஷ நீர். விடந்தீஞ்சான் - கொல்லைப்பல்லி. விடந்தை - ஓரூர். விடபகதி - துரககதியைந்தி னொன்று. விடபட்சணம் - நஞ்சு புசித்தல். விடபதுவசன் - சிவன். விடபபதி - சிவன். விடபம் - அலர்வு, இடபவிராசி,எருது, சிவனூர்தியுங் கொடியும்,சிறுதூறு, தளிர், மரக்கொம்பு,விசாலம், தூண். விடபாரி - கிருட்டினன். விடபி - ஓர் மரம், மரப்பொது, ஆலமரம். விடப்பு - கமர். விஷமசாகசம் - ஏக்கம். விஷமந்திரம் - குறவன்.விடமம், விஷமம் - சமமின்மை,தொந்தரவு, வருத்தம். விஷமலிபாகம் - சரியற்ற பங்கு. விஷமாசனம் - அசீரண போசனம். விஷமாட்சன் - சிவன். விஷமாயுதன் - காமன். விஷமி - வன்மி. விஷமுட்டி - காஞ்சிர மரம். விடமூங்கில் - ஓர் மரம். விடமரக்கனி - எட்டிப் பழம். விடம் - அதிவிடையம், எத்து, காய்ச்சுப்பு, தாமரை நூல், தேள், நஞ்சு,நீர், பர ஸ்திரீ கமனம், பாஷாணம்,மலை. விஷம் - நஞ்சு, நீர், பாஷாணம். விடம்பம் - வேடம் பூணல். விடம்பனம் - உபத்திரவம். விடம்பு - கமர். விடயக்காட்சி - பஞ்ச பொறிகளினாலறிதல். விடயஞானம் - உலக ஞானம். விடயபஞ்சகம் - கண்டு கேட்டுண் டுயிர்த்துற்றறிதல். விடயபருத்தியாகம் - துறத்தல், நீங்கல்.விடயம், விஷயம் - அடைக்கலம்,அறியப்படத் தக்கது, இருத்தல்,உரியது, உலகப் பொருள், காணப்பட்டது, காரணம், சுக்கிலம்,தேயம், நாயகன், பிரயோசனம். விடயவாசனை - விஷயப் பற்று. விடயாயி - அரசன், காமன், சிற்றின்பம், பதார்த்த மாத்திர முண்டென்று சொல்பவன், பொறி. விடயி - பொருள், ஐம்பொறி, அரசன். விடயித்தல் - விடயத்தைப் பற்றுதல். விடரகம் - குகை. விடரவன் - பூனை. விடராசன் - கெருட பச்சை. விடரு - அதிவிடயம். விடருகம் - விடரவன். விடரோகம் - ஓர் நோய்.விடர், விடர்வு - கமர், காடு, தூர்த்தர்,மலைப் பிளப்பு, நிலப்பிளப்பு,குகை. விடலம் - உள்ளி, குதிரை, நஞ்சு. விடலி - கீழ்மக்கள், பூப்பதாரி, மலடி,தூர்த்தமங்கை. விடலை - ஆண்மகன், இளவாண்பொது, திண்ணியன், பாலைநிலத் தலைவன், மணவாளன்,முப்பது வயதிற்குட்பட்டவன்,காளை. விடல் - குற்றம், சாதல், விடுதல்.விடவம், விஷமம் - அயனவரி. விஷவாதகரப்பன் - ஓர் கரப்பன். விடலி - மரம். விடவிடெனல் - நடுக்கக் குறிப்பு. விடவு - கமர். விடன் - தூர்த்தன், விடம், சோர நாயகன். விடாச்சேரி - நீங்கா வரவு.விடாகணம், விஷாணம் - விலங்கின்கொம்பு. விடாணி - எருது, கொம்புள்ளது,யானை. விடாதம் - இக்கட்டு, மனத்தளர்ச்சி,விஷாதம். விடாதவாகுபெயர் - கருவியின் பெயரேகருத்தாவைக் காட்டி நிற்பது(உ.ம்) குதிரையா லவ்வூர் கொள்ளை யிடப்பட்டது. விடாதவாக்கச்சொல் - தன் செம்பொருளை விடாது நின்றும் பிறபொருளையுந் தழுவிநிற்குமாக்கச் சொல். விடாந்தகன் - சிவன். விடாப்பிடி - ஒருகண்டசீர், பிடித்தபிடி. விடாப்பூட்டு - ஓய்வில்லாமை.விடாமழை, விடாமாரி - ஓயா மழை,தின மழை. விடாயுதம் - பாம்பு. விடாய் - ஆசை, சோர்வு, தாகம். விடாய்த்தல் - தாக மடைதல். விடாய்ப்பு - தாகம்.விடாரகம், விடாரகன் - பூனை. விடாரம் - பாம்பு. விடாலகம் - பூனை, பொன்னரிதாரம். விடாலம் - கண்மணி, பூனை. விடானனம் - பாம்பு. விஷானி - சதுரக்கள்ளி. விடி - திரைச்சீலை, விடியென்னேவல். விடிதல் - அனுகூலமாதல், உதயமாதல். விடியல் - வைகறை, விடியற்காலம்,வெளி. விடியற்றரம் - விடியற் காலம். விடிவ - அனுகூலப்பட்டது. விடிவெள்ளி - வைகறை வெள்ளி. வீடு - நீர் யானை, யானை, மத்தகத்தினடு. விடுகதை - நொடி. விடுகாசு - பொடிக் காசு. விடுகாலி - கட்டா மாடு, தூர்த்தன். விடுகை - விடுதல். விடுசரம் - ஊர்ப்பன்றி. விடுசி - அம்பு. விடுதலை - இட்டம், தன்னிட்டம்,நீக்குதல், முடிவு, விடுந்தலைப்பு. விடுதல் - அனுப்புதல், எரிதல், ஒழிதல், நீக்கல், விள்ளுதல், பிரிதல்,தாங்குதல். விடுதி - ஆறியிருத்தல், உத்தரவு,தங்குமிடம். விடுது - விழுது. விடுதுறை - வாசித்து நிறுத்து மிடம். விடுத்தம் - தடவை. விடுத்தல் - அனுப்பல், தங்கல், தள்ளுதல், நடத்தல், பிரிதல், விடைகூறல். விடுந்தலைப்பு - கொய்யகம், முன்றானை. விடுபடை - அஸ்த்ர முதலியன. விடுபதி - மருமகன். விடுப்பு - ஆராயுங்குணம், பூராயம்,வேடிக்கை.விஷுவம், விடுவம் - விடவம். விடுவாய்ச்செய்தல் - அறுத்தல். விடுவித்தல் - விடுதலை செய்யல்,விரித்துரைத்தல். விடூசி - அம்பு. விஷேபம் - திரிபு. விடேலெனல் - அனுகரண வோசை. விடை - இடபம், இடபவிராசி, உத்தரம் இஃது உரையிலக்கண மைந்தினொன்று, எதிர்மொழி, எருது,குதிரை, கோழிப்பேடு, வருத்தம்,வலிமை, விடுதல், மிகுதி, கடா. விடைகாலெறிதல் - இளங்கன்றுதுள்ளிக்காலை யெறிதல், கால்வீசியுதறுதல். விடைகொடுத்தல் - உத்தரவு கொடுத்தல். விடைகொள்ளல் - உத்தரவு பெறுதல். விடைக்கொடி - இடபக் கொடி. விடைக்கோழி - விடை துரத்தப்பட்டகோழிக் குஞ்சு. விடைக்கந்தம் - செம்மணத் தக்காளி. விடைதல் - அபராதம் சொல்லுதல்,கோபம், சினம், பிரிதல், பிளத்தல். விடைதுரத்தல் - குஞ்சுகளை விடுதல். விடைதல் - சினக்குறிப்பு, பெருங்கோபம், வேறுபடுத்தல், சீறுதல்,தாக்கல். விடைபெறல் - போகவுத்திரவு பெறல். விடைப்பு - அபராதம், வேறுபடுத்தகை.விடையூர்தி, விடையேறி - சிவபெருமான். விடையோன் - சிவன். விஷ்கம்பம் - நித்திய யோகத் தொன்று. விட்கம்பம் - கதவின்றாழ், செயல்,தடை, தூண், நித்திய யோகத்தொன்று, விசாலித்தல், விட்டம்,வித்தாரம். விட்சவம் - இருமல். விட்சி - ஓர் மரம். விட்சேபசத்தி - ஓர் சத்தி அது சுருங்கிவிரியத்தக்கது. விட்சேபணம் - அனுப்பல், எறிதல்,சிதறல். விட்சேபம் - அனுப்பல், உமிழ்தல்,எறிதல், ஒன்றைச் சொல்லத்தொடங்கி வேறு ஞாபகத்தாற்சொல்லாமல் விட்டுவிடுதல்,கலக்கம், கூத்தினோர் விகற்பம்,பதனம், பயம், பொய்யென்றுரூபித்தல், வானாட்சரேகை. விட்டம் - உத்திரம், குறுக்களவுவரி. விட்டரம் - ஆசனம், ஓர் பிடி,தருப்பை, ஒர் மரம், கொள்கலம்,தவத்தோர் பீடம், படுக்கை. விட்டரி - அகத்தை. விட்டல் - விடுதல். விட்டவர் - துறவோர், பகைவர். விட்டவாகுபெயர் - மொழிக் கியன்றபொருளைவிட்டு குறிக்கப்படுபொருட்கிடனாய்ப் பிறிதொன்றை விளக்குவது (உ.ம்) கங்கைக்கண் இடைச்சேரி.விட்டவாக்கச்சொல்-சொற்பொருளைவிட்டு வேறொன்றிற்கு வழங்குஞ்சொல் (உ.ம்) அவ்வூர் வந்தது. விட்டாடி - தனியன். விட்டார்த்தம் - பாதிவிட்டம். விட்டாற்றி - ஆறுதல். விட்டி - கோழி, கோழிக்கரணம். விட்டிசை - பிரிந்திசை. விட்டிசைத்தல் - பிரிந்திசைத்தல்.விட்டித்தல், விஷ்டித்தல் - மலங்கழித்தல். விட்டில் - ஓர் பறவை, ஓர் வண்டு,நாட்டுக்குற்ற மேழினொன்று,பிராய்மரம், வெட்டுக்கிளி.விட்டுணு, விஷ்ணு - திருமால்,வியாபகன். விட்டுணுகரந்தை - ஓர் பூடு. விட்டுணுகாந்தி - ஓர் தருமநூல், ஓர்பூடு. விட்டுணுகிராந்தி - மூங்கில். விட்டுணுபதம் - பரமபதம், பாற்கடல்,வைகுந்தம். விட்டுணுபுராணம் - ஓர் வைணவபுராணம். விட்டுணுப்ரியம் - துளசி. விட்டுணுரதம் - கருடன். விட்டுணுலோகம் - வைகுண்டம். விட்டுணுவல்லபை - இலக்குமி.விட்டேறரணம், விட்டேறு - வேல்.விட்டை, விஷ்டை - இலத்தி, கட்டி,திரளை. விட்டோசை - விட்டிசை. விட்பாரம் - விற்றொளி. விஷ்வம் - விடவம். விண் - ஆகாயம், இளமை, கடுதாசிப்படத்திலோர் கருவி, தேவலோகம், மேகம். விணிகை - முலைக்கச்சு. விண்டபூரகம் - மாதளை. விண்டலம் - ஆகாயம். விண்டல் - அலர்தல், மூங்கில்,வெடித் தல், வெளி வருதல். விண்டாண்டு - ஊஞ்சல். விண்டு - அட்டாதச தருமநூலினொன்று, காற்று, தகரை, திருமால், மலை, மூங்கில், மேகம்,விஷ்ணுகாந்தி. விண்டுதம் - தகரை. விண்டுநதி - ஆகாயகங்கை. விண்டுபதம் - ஆகாயம். விண்ணகம் - தேவுலகம். விண்ணபத்திரம் - விண்ணப்பப்பத்திரம். விண்ணப்பப்பத்திரம் - மன்றாட்டுப்பத்திரம். விண்ணப்பம் - மன்றாட்டம், அறிவித்தல். விண்ணல் - காவட்டம்புல். விண்ணவன் - அருகன், தேவன். விண்ணாங்கு - ஓர் மரம். விண்ணா - கடுகுரோகிணி. விண்ணாணம் - நாகரிகம், மாசாலம்,விஞ்ஞானம், வெட்கம். விண்ணுகம் - கறிமுள்ளி. விண்ணுலகம் - தேவலோகம். விண்ணுளார் - விண்ணோர், ஆகாயவாசிகள். விண்ணேறு - இடியேறு. விண்ணோர் - தேவர். விண்பல் - மூங்கில். விண்மணி - சூரியன். விண்மீன் - நக்ஷத்திரம். விண்முழுதாளி - இந்திரன். விண்விண்ணெனல் - இசைக்குறிப்பீரடுக்கு மொழி. விண்வீழுங்கொள்ளி - உற்கை. விதண்டம் - ஓர் பூட்டு, யானை. விதண்டாவாதம் - வாதவகையினொன்று, விதண்டை. விதண்டை - அகப்பை, தன்மதநிறுத்திப் பேசல், திருத்தம். விததம் - விசாலம், வீணைமுதலானவாத்தியம், பொய். விததன் - தவத்தி, பண்டிதன். விததி - சமுஹம், விஸ்தாரம். விதத்தல் - மிகுந்துரைத்தல். விதத்தியம் - அசத்தியம். விதந்து - அமங்கலை, மாங்கல்யநூலிழந்தவள். விதப்பு - அதிசயம், சீக்கிரம், நடுக்கம்,மதிலுறுப்பு, மிகுதி, விவரம். விதப்புக்கிளவி - விதப்புமொழி,மிகைமொழி. விதப்புமொழி - சிறப்பித்துச் சொல்லுமொழி. விதம் - அறியப்படுதல், இனம், சம்பளம், சாயல், சூத்திரம், செயல்,துளை, மாதிரி, விலங்குணவு,பிரகாரம். விதம்பம் - கற்பரி பாஷாணம். விதரணம் - அழகு, ஈகை, சுறுக்கு,போதல், விடுதல், விவேகம்,கொடை. விதரணை - விவேகம். விதரம் - பிளப்பு. விதரி - அறியப்படுதல். விதரிதம் - உருக்கப்பட்டவை. விதர்க்கணம் - ஆலோசனை, சம்பா ஷணை. விதர்க்கம் - எண்ணம், ஐயம், நியாயம்,பஞ்சமய கோசத்தொன்று,பெருக்கம், ஆராய்வு. விதர்த்தி - சாலை, பந்தர், பீடப்பலகை. விதர்ப்பூஜை - அகத்தியன் மனைவி,தமயந்தி, ருக்மிணி. விதர்ப்பம் - ஓர் தேயம். விதர்ப்பு - அச்சம், நெருக்கம், போர், வெற்றி. விதலம் - கீழேழுலகி னொன்று அதுஇருள்மயமானது, பயற்றம்பருப்பு, பெட்டி. விதலை - நடுக்கம். விதவளம் - அசைவு. விதவாகாமி - கைம்பெண்ணை விரும்புவோன். விதவாவேதனம் - கைம்பெண்விவாகம் பண்ணல். விதவை - கைம்பெண், பாற்சோறு,குழம்பு. விதற்பம் - விதர்ப்பம். விதனம் - மனத்துயர், வேதனை, துயர். விதனித்தல் - துயருறல். விதன் - பண்டிதன். விதாகம் - உறைப்பு, வெப்பம். விதாதா - அருகன், பிரமன். விதாதிரி - திப்பிலி. விதாதிரு - காமன், பிரமன், விதி. விதாயம் - போடல். விதாரகம் - கிணறு. விதாரணம் - கிழித்தல், பிளத்தல்,யுத்தம், வெள்ள மெடுத்தல். விதாரி - புன்முருக்கு. விதாரு - பல்லி. விதாவிதம் - பலவிதம். விதானகம் - குவியல், மேற்கட்டி, வருத்தம். விதானகன் - பண்டிதன். விதானம் - இளைப்பாற்றி, உபாயம்,ஒழுங்கு, ஓர் பண், கற்பனை,குவியல், கூட்டம், சாரமின்மை,செயல், செல்வம், பாக்கியம்,மந்தம், மாதிரி, முறைமை, மேற்கட்டி, யாகம், யானை யுணவு,வணக்கம், வன்மம், விகுதி, விடுதி,விதம், விரிவு, விதி. விதானிகரணம் - மூடுதல். விதி - அறிவு, உண்மை, ஊழ்,கட்டளை, காலம், குணம், குதிரைமுதலியவற்றினுணவு, சூத்திரம்,செய்தொழில், செல்வம், நியமிப்பு,பிரமன், மெய், விட்டுணு, விதம்,விதியென்னேவல், வேதாகமமுறை, தன்மை, கிரமம். விதிக்கு - கோணத்திசை. விதிசாரதி - சிவன். விதிச்சூத்திரம் - முன்னில்லதனை விதித்தல். விதிதம் - சம்மதித்தல், தெரியப்பட்டது, வெளிப்படை. விதிதன் - கவிஞன், புத்தன், யோகி. விதிதரிசனி - விதிதேசகன். விதிதேசகன் - யாகபாதுகன். விதித்தல் - உண்டாக்கல், செய்தல்,சொல்லல், நியமித்தல். விதித்தோன் - கடவுள், பிரமன். விதிபாதம் - வியதிபாதம். விதிபாளி - ஓமம். விதிப்பாள் - மகள்.விதிப்பிரசங்கம், விதிப்பிரயோகம் - சூத்திர முறையைச் சாதித்தல். விதிப்பு - இலபிப்பு, நியமிப்பு. விதிமுறை - நெறிப்பிரகாரம். விதியர் - கணக்கர், தந்திரிகள்,மந்திரிகள். விதியுளி - ஓமம், தூதர், விவாகம்,யாகம், முறை. விதியை - இரண்டாந்திதி. விதியோகம் - விதிப்பிரகாரஞ் சம்பவித்தல். விதிர்க்குவிதிர்க்கெனல் - படபடத்தல். விதிர்த்தல் - அசைத்தல், அஞ்சுதல்,நடுங்கல், சிதறுதல். விதிர்ப்பு - அச்சம், நடுக்கம். விதிர்விதிர்த்தல் - சுழலல், நடுநடுங்குதல். விதிவது - முறைப்படியானது. விதிவினை - உடன்பாட்டான்முடியும் வினை. விது - கருப்பூரம், சந்திரன், நிவிர்த்திக்காயபலி, பிரமா, விட்டுணு,குபேரன், வாயு. விதுகம் - விலகல். விதுடன் - கற்றவன்.விதுடி, விதுஷி - அறிவாளி, கற்றவள். விதுட்சயம் - தேய்பிறை. விதுதமுகம் - வேண்டாமைக்குத்தலையசைத்தல். விதுதம் - தள்ளப்பட்டது. விதுநநம் - சலநம். விதுந்துதம் - இராகு. விதுபஞ்சரம் - வாள். விதுப்பிரியை - உரோகணி. விதுப்பு - ஆசை, காமித்தல், சீக்கிரம்,நடுக்கம், விரைவு. விதும்பல் - ஆசைப்படல், மனமசைதல், நடுங்குதல். விதுரஜம் - வைடூரியம். விதுரம் - கலக்கம், பிரிவு. விதுரன் - அறிஞன், கள்வன், குருகுலவரசரு ளொருவன், திண்ணியன்,தூர்த்தன், வாழ்க்கைத் துணையிழந்தோன். விதுலன் - ஒப்பிலி. விதுவனம் - அச்சம், உதறுதல். விதுவிதுப்பு - நடுக்கம். விதுன்னகம் - துத்தம்.விதுடகன், விதூஷகன் - கோமாளி. விதூடணம் - பெருந்தூஷணம். விதூதம் - நடுக்கம், விடுதல். விதூநிதம் - நடுக்கம். விதூரஜம் - வைடூர்யம். விதூரதன் - ஓரரசன். விதூரம் - வெகுதூரம். விதூனம் - கலக்கம். விதூனனம் - உதறுதல். விதேகமுத்தி - ஓர் முத்தி. விதேகம் - தேக விமோசனம், மிதிலை. விதேகை - மிதிலை நகரம். விதேசம் - தூரதேசம், பிறதேசம். விதேயன் - சொற்படி கேட்போன். விதை - அறிவு, புத்தி, பெருமை,விதையென்னேவல், வித்து. விதைத்தல் - வித்திடுதல், பரப்புதல். விதைப்புனம் - புதுக்கொல்லை. விதைமணி - விதைக்குந்தானியம். விதைமுதல் - வித்துமுதல். வித்தகம் - அதிசயம், ஞானம், நன்மை,சாதுரியம். வித்தகர் - அறிஞர், கம்மாளர், தூதர்,பெரியோர், சாதுரியர். வித்தகன் - அறிஞன், சதுரப்பாடுள்ளோன், தூதன், வயிரவன். வித்தகன் - பொருள் கொடுப்போன். வித்தம் - அறிவு, இகழ்வு, ஞானம்,பாக்கியம், பொருள், பொன்.வித்தரித்தல், விஸ்தரித்தல் - பெருக்கல், விரித்துச் சொல்லல். வித்தன் - உபகாரி, தவத்தி, பண்டிதன். வித்தாரகவி - நாற்கவியி னொன்றுஅது மும்மணிக்கோவை, பன்மணிமாலை, மறம், கலிவெண்பா,தசாங்கம், மடலூர்தல், கிரீடை,இயல், இசை, நாடகம், பாசண்டத்துறையிவை முதலிய விரித்துப்பாடுங் கவி.வித்தாரம், விஸ்தாரம் - அகலம்,சிற்பநூன் முப்பத்திரண்டினொன்று, மரக்கொம்பு, மிகுதி,விட்டம், வித்தாரகவி, விரித்தல்,விற்பன்னம்.வித்தாரி, விஸ்தாரி - விற்பன்னன். வித்தி - அறிவு, ஆராய்தல், சம்பாதிப்பு. வித்தியதம் - வேதிகை. வித்தியம் - அறிவு, தான்றி. வித்தியர் - கம்மாளர். வித்தியாகரன் - அறிஞன். வித்தியாகலை - பஞ்சகலையினொன்று. வித்தியாசம் - வேறுபாடு. வித்தியாதத்துவம் - தத்துவத் திரயத்தொன்று, தொண்ணூற்றாறுதத்துவங்களுள் இருபத்துநாலுதத்துவங் கொண்டது. வித்தியாதரர் - கந்தருவர். வித்தியாதரர் - கந்தருவர். வித்தியாதானம் - படிப்பித்தல். வித்தியாதுரம் - கல்வியாசை. வித்தியாநாராயணன் - மாதவாசாரியன். வித்தியாபாரகன் - கற்போன். வித்தியாப்பியாசம் - கற்றல். வித்தியாப்பிராத்தி - கல்விச் செல்வம். வித்தியாரண்யசுவாமி - வேதாந்தாசிரியர்களி லொருவர். வித்தியாரணியர் - மாதவாசாரியருடைய பெயர். வித்தியாரம் - பூராயம். வித்தியாரம்பம் - கற்கத்தொடங்கல்இது பிள்ளைச் சடங்குகளினொன்று. வித்தியார்த்தி - கற்போன். வித்தியாலையம் - கல்லூரி. வித்தியானுசேபனம் - கல்வி தேறச்செய்தல். வித்தியானுபாலனம் - படித்தல்,படிப்பித்தல். வித்தியை - அறிவு, கமனகுளிகை,துர்க்கை, வித்தை. வித்தியோதமானம் - பிரகாசம். வித்தியோபாற்சனம் - கல்வித் தேற்றம். வித்திரகம் - வெள்ளெருக்கு. வித்திரணம் - விரிவு. வித்திரம் - துளைத்தல், பிளப்பு. வித்திரவம் - பின்னிடல். வித்திராவணம் - உலோக முதலியவுருக்குதல், துரத்தல்.வித்திருதி, விஸ்திருதி - அகலம்,விசாலம், விட்டரேகை. வித்து - சம்பிரதாயம், வமிசவழி,விதை, வித்தென்னேவல், விந்து,காரணம், அறிஞன், அறிதல். வித்துசம் - தாளி. வித்துதல் - விதைத்தல், பரப்புதல். வித்துத்து - மின்னல். வித்துருமம் - இளந்தளிர், பவளம். வித்துவகற்பன் - சொற்பகவிக்காரன். வித்துவஞ்சம் - அவமரியாதை, பகைவித்துவாமிசன், வித்துவான் - புலவன்,அறிஞன்.வித்துவேடணம், வித்துவேடணை - விரோதித்தல் அஃது அட்டகருமத் தொன்று, கலைஞானமறுபத்து நான்கினு மொன்று. வித்துவேடம் - விரோதம்.வித்துவேடி, வித்துவேஷி - பகைவன். வித்தேசன் - குபேரன். வித்தை - கல்வி, ஞானம், தந்திரத்தொழில், மாசாலம், வித்தியாதத்துவமேழினொன்று, உண்மையுணர்வு. வித்தைகாரகன் - புதன். வித்தைஸ்தானம் - நாலாமிடம்ஒன்பதாமிடம். வித்யமாநம் - வர்த்தமாநம். வித்யாதநம் - கல்விப்பொருள். வித்யாதேவி - சரச்சுவதி. வித்யாபாரங்கதன் - கல்வி கரைகண்டோன். விநதம் - தொனி, வளைவு. விநதாசூனு - அருணன், கலுழன். விநதி - மரியாதை, வணக்கம், வளைவு. விநதை - கருடன்றாய், சத்தபுரியினொன்று. விநயம் - கட்டளை, தருமம்,நன்னடை, மரியாதை, வணக்கம். விநயனம் - கட்டளை, நன்னடை,மரியாதை, வணக்கம். விநாசகம் - அழிப்பு. விநாசகர் - அழிப்போர். விநாசகன் - மூக்கறை.விநாசம், விநாசனம் - அழிப்பு,கொலை, நாசம், காணப்படாமை. விநாசன் - கொலை செய்வோன். விநாசி - அழிப்போன். விநாடி, விநாடிகை - கால நுட்பம். விநாயகசட்டி - கார்த்திகையிற் கார்த்திகைகழித்த இருபத்தோரா நாள்வருஞ்சட்டி. விநாயகம் - தடை, பெருநாயகம். விநாயகன் - அருகன், குரு, புத்தன்,விக்கினேசுவரன், கருடன். விநாழிகை - நாழிகை, யறுபதிலோர்பங்கு, விநாடி. விநிகதம் - உற்பாதம். விநிகமம் - நியாயத்தால்வந்த தீர்ப்பு. விநிச்சுவாசம் - பெருமூச்சு. விநிபாதம் - இகழ்ச்சி, இக்கட்டு,மரணம், விழுதல். விநிமயம் - பண்டமாற்று. விநிவயம் - அடகு, மாற்றுதல். விநியோகம் - தடை, நியமிப்பு,பிரிதல், விடுதல், செலவு செய்தல். விநிர்ப்பயம் - அச்சமின்மை. விநீதம் - அழகு, அனுப்புதல், கற்பு,சாந்தம், தண்டிப்பு, நடத்துதல்,நன்னடை, படியப்பண்ணுதல்,மரியாதை. விநீதன் - தண்டிக்கப்பட்டவன்,விநயமுள்ளவன். விநீதை - கற்புடையாள். விநீயம் - பாவம். விநோதம் - அவா, அழகு, சந்தோஷம்,தள்ளுதல், தொழில், பகை, மகத்துவம், விளையாட்டிற் பொழுதுகழித்தல். விநோதர் - பொழுது கழிப்போர். விந்தஸன் - சந்திரன். விந்தம் - ஓரெண், குதிரைப்பற்பாஷாணம், விந்தியமலை,மாணிக்க வகையுளொன்று. விந்தரம் - கற்கடக பாஷாணம். விந்தர் - இடையர். விந்தாக்கினி - காமாக்கினி. விந்தாரற்கல் - ஈரற்கல். விந்தியகூடன் - அகத்தியன். விந்தியம் - அட்டகுல மலையி னொன்று.விந்தியவாசி, விந்தியவாசினி - கோட்டம், துர்க்கை, வீரலக்ஷிமி. விந்தியாவலி - புத்திரன், வாணாசுரன். விந்து - குறி, தாது, நீர்த்துளி, நெற்றித்திலகம், புருவமத்தி, புள்ளி,வட்டம், சுத்தமாயை. விந்துசாலம் - யானைமுகப்பொறி. விந்துசித்திரகம் - மான். விந்துதந்திரம் - சூதாடுகவறு, சூதாடுபடம். விந்தை - ஆச்சரியம் ஓரகத்தி,துர்க்கை விற்பன்னம், வீரலட்சுமி. விந்தையம் - செங்கத்தாரி. விந்நியாசம் - தாபித்தல், தொடுத்தல். விபகதம் - காஞ்சிரை. விபகரித்தல் - வழக்குச் சொல்லல்.விபகலனம், விபகலிதம் - கழித்தல். விபகாரம் - வியவகாரம். விபக்கம் - பகை, பிரதிகூலமானபக்கம். விபக்கன் - பகைவன். விபங்கம் - உடைத்தல், பிரித்தல்,வளைத்தல். விபசாயம் - கிருஷி, வியவசாயம்,பயிர்த் தொழில். விபசாரம் - வியபிசாரம்,வேசித்தனம். விபசாரி - வியபிசாரி, வேசி. விபசியம் - அறிவு. விபச்சித்து - பண்டிதன். விபஞ்சி, விபஞ்சிகம் - வீணை. விபஞ்சிகை - பொழுது போக்கு,விளையாட்டு, வீணை. விபட்சதை - எதிரிடை யுத்தம். விபட்சம் - பிறபட்சம், விலக்கு. விபட்சன் - எதிரி, சத்துரு. விபணம் - விலை. விபணி - கடை, கடைவீதி, வியாபாரி,வியாபாரப்பண்டம், விலைச்சரக்கு. விபண்ணகம் - பலாசு. விபதம் - கெடுவழி, கைக்காணிக்கை. விபதி - குருவி. விபதை - தரித்திரம். விபத்தம் - காஞ்சிரை, பஞ்சம். விபத்தன் - அபாக்கியன், கிலேசமுடையோன், விகாரி, வேறுபட்டோன். விபத்தி - அபாக்கியம், கலக்கம்குற்றம், தரித்திரம், துன்பம், பங்கு,மரணம், வேதனை, வேற்றுமை,ஆபத்து, அழிவு. விபத்து - அபாக்கியம், ஆபத்து,கலக்கம், துன்பம், அழிவு. விபந்நம் - நஷ்டம், பாம்பு. விபம் - செல்வம், மேலான தத்துவம்,மேன்மை. விபரம் - விரிவு, விவரம். விபரிணாமம் - மாறுதல். விபரித்தல் - விரித்துச் சொல்லல்,விவரித்தல். விபரியயம் - அழிவு, எதிரிடை,கோபக்குணமாறுதல். விபரியாசம் - எதிரிடை, மாறு,விபரீதம். விபரீதை - எதிரிடை. விபரீதம் - அதிசயம், மாறுபாடு,வேறுபாடு, பிரதிகூலம். விபரீதவிலக்கு - ஓரலங்காரம் அதுகாரணத்திற் கியையாது விபரீதமாய்க் காரியங்கூறி விலக்கிக்காட்டல். விபரீதவுவமை - தொன்று தொட்டுவழங்கு முவமையைப் பொருளாக்கியும் பொருளை யுவமையாக்கியு முரைப்பது (உ.ம்) கண்போற் பிறழுங்கயல். விபலம் - காலநுட்பம், பயனினிமை. விபலாயனம் - பறத்தல். விபலீகரணம் - தடுத்தல், பயனில்செய்கை. விபவ - இரண்டாவதாண்டு. விபவம் - சாதல், செல்வம், பொருள்,மகத்துவம், வரம்,வாழ்வு, மோக்ஷம். விபனவம் - கீழ்ப்படிவு. விபன்னம் - மெலிந்தோன். விபாகம் - உருசி, சமைத்தல், சீரணித்தல், செய்பலம், செல்வம், தரித்திரம், தற்செயலாய் வருவது, பக்குவம், பங்கு, பழுத்தல், போகம்,மாறுதல், வேறுபாடு, பிரிவு. விபாகரன் - சூரியன், தீக்கடவுள். விபாசம் - பந்தமோசனம். விபாசன் - ஓர்முநி, பற்றற்றவன். விபாச்சியத்துவம் - பகுக்கத்தக்கது. விபாச்சியம் - பகுதி, பகுப்பு. விபாசை - பிரகாசம். விபாடம் - அம்பு. விபாடிகை - ஓர் குட்டநோய். விபாதம் - உதயகாலம். விபாதனம் - அழித்தல். விபாதிகை - கொடி, பித்தவெடிப்பு. விபாவசன் - விபாகரன். விபாவசு - சந்திரன், சூரியன், தீக்கடவுள். விபாவரி - இராத்திரி, சங்கம் வாங்கி,வேசி. விபாவனம் - ஆராய்வு, தீர்த்தல்,பகுத்தறிவு, தரிசனம், பாவிக்கப்பட்டது. விபாவனை - ஆராய்வு, ஓரலங்காரம்அஃது உலகறிகாரண மில்லாதிருப்பக் காரியம் பிறத்தலைச்சொல்வது, மட்டுக் கட்டுதல். விபாவன் - சினேகிதன். விபாவியம் - சிந்தித்தல். விபிண்ணகம் - பலாசு. விபனம் - காடு. விபீடணன் - இராவணற்கிளையோன். விபீதகம் - தான்றிமரம். விபு - ஆகாயம், ஆன்மா, எசமான்,இடம், கடவுள், கருத்தா, சிவன்,தலைவன், நித்தியம், நேரம்,பரிபூரணம், பிரமன், விட்டுணு,வேலைக்காரன். விபுசத்துரு - தண்ணீர் விட்டான். விபுணன் - சிறந்தோன், வெற்றியுடையோன். விபுதர் - அறிஞர், மிகக்கற்றோர்,வானோர். விபுதர்கந்தம் - நெய்ச்சட்டி. விபுதன் - சந்திரன், தேவன், பண்டிதன். விபுதாநன் - ஆசார்யன், தேவன்,பண்டிதன். விபுதை - தத்துவம். விபுத்தன் - நன்மாணாக்கன். விபுலம் - அகலம், இமயகிரி, பூமி,பெருமை, மேருகிரி, விரிவு. விபுலரசன் - கரும்பு. விபுலை - பூமி.விபூஷணம், விபூடணம் - அலங்காரம்,ஆபரணம். விபூடை - அலங்காரம், அழகு, பிரபை. விபூதி - அட்டை சுவரியம், உத்தமகுணம், குற்றம், கெடுமை, செல்வம்,தசை, திருநீறு, பெருமை. விபூயம் - முஞ்சிப்புல். விபேகம் - புத்தி, வல்லபம். விபேகி - கூரியன். விபேகம் - எதிர், கலக்குதல், பிரித்தல்,வன்மம். விபேதனம் - பிரித்தல். விபை - அழகு, கிரணம், பிரபை. விபோதம் - புத்தி. விப்பிரகராசியம் - ஆகாயவுருவங்காண. விப்பிரகாரம் - எதிரிடை, தீங்கு,நிந்தை, பொல்லாங்கு, அபகாரம். விப்பிரகிருதி - நிந்தை, பதில். விப்பிரதகம் - வற்றல். விப்பிரபம் - ஒளியின்மை. விப்பிரதிகாரம் - எதிரிடை, பதில், மாறு. விப்பிரதிசாரம் - கோபம், சீர்ப்படுதல்,பகை, பொல்லாங்கு, விசனம். விப்பிரதித்துவம் - தடை, விலக்கியது. விப்பிரமம் - அழகு, இலீலா மோசனவெப்பு, குற்றம், பிரமை, மோகப்பிணக்கு, மோகலீலை, மயக்கம். விப்பிரம் - அழகு, ஐயம், சந்தேகம்,சீக்கிரம், சுழலுதல், தவறு, பிழை. விப்பிரயோகம் - ஒவ்வாமை, பஞ்சபாணாவத்தையி னொன்று அதுவெய் துயிர்த்திரங்கல், பிரிதல். விப்பிரர் - பார்ப்பார். விப்பிரலம்பம் - அணாப்பு, சண்டை,பிரிவு, தலைவன்றலைவி பிரிதல். விப்பிரலாபம் - பயனற்றபேச்சு, வாக்குவாதம். விப்பிரவாசம் - பரதேசவாசம். விப்பிரவாசனம் - ஊருக்குப் புறப்படுத்தல். விப்பிரன் - பிராமணன். விப்பிராந்தசீலம் - குரங்கு, சூரிய சந்திரவட்டம். விப்பிராந்தி - கலக்கம், சுழலுதல்,தவறு. விப்பிரியம் - மீறுதல், பிரியமின்மை. விப்பிலம் - தேசோபத்திரவம். விப்பிலவம் - அநியாயப்போர், அநீதக்கொள்ளை, கலக்கம், சீக்கிரம்,பொல்லாங்கு, வல்லமை. விப்பிலீகரணம் - தடுத்தல், பயனில்செய்கை. விப்புருதி - ஓர் சிலந்தி. விப்புருதிநாயகம் - அமுக்கிறா. விப்ரகாரம் - பற்கடித்தல். விப்ரப்ரியம் - முருக்கமரம். விப்ரதியோகம் - பிரிவு. விமதன் - பகைவன். விமதி - எண்ணப்பேதம், வெறுப்பு. விமயம் - பொருண்மாற்றல்.விமரிசம், விமரிசனம், விமரிசை,விமர்ச்சம், விமர்ச்சனம் - ஆராய்வு,கேள்வி, பாவனை, யூகம். விமர்த்தம் - அழித்தல், தேய்த்தல். விமர்த்தனம் - அடக்குதல், அமர்த்துதல், அரைத்தல், அழித்தல், கிரகணம், தூளாக்குதல், தேய்த்தல்வாசனை. விமர்த்தார்த்தம் - கிரகண பரிசனகாலந் தொடங்கி விமோசனம்வரைக்கும். விமலதாகம் - ஈசுவரப்ரீதியாய்ச்செய்யுந் தானம். விமலமணி - பளிங்கு. விமலம் - அழகு, அழுக்கின்மை,சிவாகமமிருபத்தெட்டினொன்று,பொன்மலாம், வெண்மை. விமலன் - கடவுள், சிவன். விமலாகாசம் - ஞானாகாசம். விமலாத்மகன் - நிர்மலன். விமலார்த்தம் - நிர்மலம்.விமலி, விமலை - இலக்குமி, சரச்சுவதி,துர்க்கை, பரிசுத்தவாட்டி, பார்ப்பதி, விந்தை. விமாதிரு - சிறிய தாய். விமாமிசம் - அசுத்தபோசனம். விமார்க்கம் - துன்னடை, விளக்குமாறு. விமானம் - அவசங்கை, அளவு,உரோகணி, இராச மாளிகை,ஏழ்நிலை மேடை, ஓர்வகைத்தேர், குதிரை, தேவர் கோயில்,தேவலோகம், வாகனம். விமுகம் - பஹிர்முகம், வெறுப்பு. விழுகிதை - எதிரிடை. விமுக்தம் - விமோசநம். விமுத்தி - பிரிவு, முத்தி. விமுத்திரம் - தளிர், பூந்தளிர். விமூட்சஞ்ஞம் - அறிவின்மை. விமோகனம் - அணாப்புதல். விமோசனம் - ஒழிதல், நிவிர்த்தி,விட்டு நீங்கல். விமோட்சணம் - விடுதல். விமோட்சம் - விமுத்தி. விம்ஸகம் - இருபதுகூடியது. விம்ஸதி - இருபது. விம்பகம் - விம்பம். விம்படம் - கடுகுச்செடி. விம்பபூசை - திருவுருவாராதனை. விம்பப்பிரதிவிம்பபாவம் - விம்பத்திற்கும் பிரதிவிம்பத்திற்கு முடையது. விம்பம் - உருவம், ஒளி, கொவ்வை,சந்திர சூரியர்களின் மண்டலம்,சாயை, சாலங்க பாஷாணம்,சிவாகம மிருபத்தெட்டினொன்று,நிழல், பலண்டுறுக பாஷாணம்,வட்டம், பிம்பம். விம்பிகை - கோவைக்கொடி. விம்பித்தல் - சாயை வீசுதல். விம்பு - கமுகு. விம்மல் - அழுதல், இறுகிப் பொலிதல், ஏங்கல், ஒலித்தல், கலக்கம்,சந்தோஷம், பருத்தல், இரங்குதல், பொருமுதல் விம்மிதம் - அச்சம், அதிசயம், உடல். விம்முதல் - விம்மல். விய - இருபதாவதாண்டு. வியக்கம் - பெருமை. வியக்களை - குடிக்கூலி. வியக்தம் - வியத்தம். வியங்கம் - தவளை, பிறவிமறு. வியங்கியம் - குறிப்பு, குற்றுவார்த்தை,குறிப்புப்பொருள். வியங்கோள், வியங்கோள் வினைமுற்று - ஐம்பான் மூவிடங்களிலுமியலும் வினை அது க-ய-ர்-அல்அட்டு என்னும் விகுதிகளைப்பெற்றுவரும், ஏவல், ஏவல்கொள் ளல். வியசநீயன் - வெறிகாரன். வியசனம் - அரிட்டம், உபத்திரவம்,காற்று, குற்றம், விசிறி. வியஞ்சகம் - அபிநயம், எத்து,வெளிப்படுத்துவது. வியஞ்சனம் - அடையாளம், ஒற்றெழுத்து, தாடி, பருப்புத்திரளை,யோனி, கறி. வியடம்பகம் - ஆமணக்கு.வியட்டி, வியஷ்டி - வேறு வேறுபிரித்துக் கூறுவது. வியட்டிரூபம் - தூலரூபம். வியதம் - வேதனை. வியதிதன் - துக்கிதன். வியதிபாதம் - கலகம், துன்னிமித்தம்,நித்தியயோகத் தொன்று. வியதிரேகம் - எதிர்மறை, விகற்பம்,விழுதல், வெதிரேகம். வியதீகரம் - அபாக்கியம், கலகம். வியதீகாரம் - மாறு. வியதீபாதம் - நித்யயோகத் தொன்று. வியதை - கஷ்டம், வேதனை. வியத்தகங்கை - கங்காநதி. வியத்தபதம் - தனிச்சொல். வியத்தம் - அத்தாட்சி, அறிவு, எதிர்,கலக்கம், தரிசிக்கத்தக்கது, தெளிவு,பிரதானம், மூலம், விளக்கம்,வெளிப்பட்டது. வியத்தல் - அதிசயப்படல், துதித்தல்,நன்குமதித்தல், பாராட்டல்,புகழ்தல். வியத்தி - காரியம், வெளிப்படுதல். வியத்திகை - பெருமை. வியத்தியாசம் - ஓரிடத்துப்பிரிந்தோரிடத்துறல், வித்தியாசம். வியத்பூதி - அந்தகாரம். வியநெறி - பெரும்பாதை. வியந்தரம் - பிசாசம். வியமதேசம் - அவநாணையம், சாட்டு,கபடம். வியபரோபணம் - நிருமூலம். வியபிசாரம் - தவறு, தூர்த்தம்,தீயொழுக்கம். வியபிசாரி - வேசி. வியபேட்சை - சாதனை, சேர்மானம்,வரவு காத்திருத்தல். வியப்பித்தல் - அதிசயப்படுத்தல். வியப்பு - அதிசயம், மெய்ப்பு,வியப்பைக் கூறு மலங்காரம். வியமம் - துக்கம், வியாமம், பெருமை. வியம் - அகலம், உடல், ஏவல்,செலவு, பறவை, பெருமை, வழி. வியயம் - செலவு,பனிரெண்டாமிடம். வியர்த்தம் - பயனின்மை. வியர்த்தல் - சினக்குறிப்பு, வேர்த்தல்,மனம்புழுங்கல். வியர்ப்பு - சினம், வேர்வை.வியர்வு, வியர்வை - வேர்வை. வியலிகை - பெருமை. வியலிடம் - அகலம். வியலீகம் - உபாதி, துற்செய்கை,மீறுதல். வியல் - அகலம், காடு, பெருமை,விரிவு. வியல்கனா - திப்பிலி. வியல்பூதி - வில்வம். வியவகாரம் - பிணக்கு, முறைமை,வழக்கு, வியாபாரம், வினோதம். வியவகாரவிதி - நியாயப்பிரமாணம். வியவசாயம் - முயற்சி, பயிர்த்தொழில். வியவன் - ஏவுவான், திண்ணியன்,வழிச்செல்வோன். வியனிலையுருவகம் - ஓரலங்காரம்,அஃது ஒன்றனங்கம் பலவற்றையுமுருவகித்து முருவகியாதுமுரைப்பது. வியனிலைமருட்பா - கைக்கிளவெண்பா முதலாசிரியமீறாக வருமிடத்தாசிரியவடியிரண்டேயாயவற்று ளீற்றயலடி யொவ்வாதுவருவது. வியனுநாதம் - எதிரொலி. வியனுலகு - தேவலோகம். வியன் - அதிகம், ஒற்றை, பெருமை,வேறுபாடு. வியன்சமன்சங்கலிதம் - ஓர் சங்கலிதம். வியன்சமன்பார்த்தல் - பெருமையுமொப்புங் குறித்தல். வியன்மணி - சூரியன். வியாகதம் - கலங்கினது. வியாகம் - ஓர் நட்சத்திரம், காற்று,விவாகம். வியாகரணம் - கிரந்தவிலக்கணம்,அது வேதாங்கத் தொன்று,கலைஞான மறுபத்துநான்கினுமொன்று, விபரம். வியாகன் - குமரன். வியாகாதம் - அழிவு, இடையூறு,தடை, நித்தியயோகத் தொன்று, தீங்கு. வியாகாரம் - அவலட்சணம், சத்தம்,சருவுதல், பேச்சு, மாறுதல். வியாகிருதி - வியாகாரம். வியாகிருதம் - மாறு, விபரம், பிரிக்கப் பட்டது. வியாகுலம் - கலக்கம், துக்கம். வியாகுலித்தல் - துக்கப்படல். வியாகூதி - எத்து, மாயம். வியாக்கியானம் - உரை, விபரம்.வியாக்கியானன், வியாக்கியானி - உரைகாரன். வியாக்கியாதர் - வியாக்கியானன். வியாக்கியை - உரை. வியாக்கிரகதி - துரககதியைந்தினொன்று. வியாக்கிரதலம் - ஆமணக்கு. வியாக்கிரநகம் - புலிதொடக்கி. வியாக்கிரநாயகன் - நரி. வியாக்கிரபாதன் - கௌதமரிஷி. வியாக்கிரபுச்சம் - ஆமணக்கு. வியாக்கிரபுரம் - சிதம்பரம். வியாக்கிரமம் - ஆமணக்கு, உத்தமம்,சிறந்தசொல், புலி, மேன்மை. வியாக்கிரம் - சிறந்தசொல், புலி,மேன்மை. வியாக்கிராசனம் - புலித்தோ லாசனம். வியாக்கிராசியம் - பூனை. வியாக்கிரி - கண்டங்கத்தரி. வியாசங்கம் - கலக்கம், சேர்த்திக்கை,பிரிவு. வியாசநிந்தை - ஓரலங்காரம்.வியாசம், வியாஸம் - உவமை, தந்திரம், தருமநூல், பதினெட்டினொன்று, தாரணம், நிபம், பகுத்தறிதல், பொல்லாங்கு, மாயம்,முகாந்தரம், விரிவு, வேஷம்,கட்டுரை. வியாசன் - வேத வியாசன். வியாச்சியக்கவலை - பனிரெண்டாமிடம். வியாச்சியம் - வழக்கு. வியாடம் - இலையுணா விலங்கு,பாம்பு. வியாதம் - உபத்திரவம், துயரம்,வேறுபாடு. வியாதன் - கீழ்மகன், வியாசன்,வேடன். வியாதாகாரம் - தயாவிருத்தி பதினான்கினொன்று அது துயரகற்றல்.வியாதாமம், வியாதாவம் - இடி,குலிசம். வியாதானம் - வாயில். வியாதி - கோட்டம், நோய். வியாதிகாதம் - கொன்றை. வியாதிசாந்தி - வியாதி தீர்த்தல். வியாதுதம் - அசைவுள்ளது. வியாத்தம் - உறுதி, கலந்திருப்பது,கீர்த்தி, சூழ்வு, நிறைவு, வியாத்தியோடு கூடியது, விரிவு. வியாத்தி - பெறுதல், வியாப்பித்தல். வியாபகத்துவம் - நிறைந்திருத்தல். வியாபகம் - எங்கு மிருப்பது, சாதாரணம், சுயதன்மை, வியாபித்தல்,வியாபிப்பது. வியாபனம் - வியாபகம். வியாபாதம் - கேடு நினைத்தல்,வஞ்சகம். வியாபாதனம் - கொல்லல். வியாபாரம் - அப்பியாசம், செட்டு,தொழில், முயற்சி. வியாபாரி - செட்டுச் செய்வோன்,தொழிற் படுவோன். வியாபி - எங்கு நிறைந்தது, வியாத்தி. வியாபித்தல் - எங்கு மிருத்தல். வியாபிருதன் - மந்திரி. வியாபினி - வியாபித்திருப்பது. வியாபுத்தி - வருந்தல். வியாப்தம் - வியாத்தம். வியாப்தி - வியாத்தி. வியாப்பித்தல் - சூக்குமமாய்க் கலந்திருத்தல். வியாப்பியம் - அருத்தாபத்திப் பொருள்,காரணம், கோட்டம், வியாத்தியை யுடையது. வியாமம் - இக்கட்டு, இளைப்பு,ஒளி, சாந்த குணம், நான்கு முழஅளவு, நிந்தை, புகை, முரஞ்சு,வருத்தம், வழி. வியாமனம் - அங்கசேட்டையின்மை, மதியாமை. வியாயோகம் - நாடக வகை பத்தினொன்று. வியாவகாரிகன் - மந்திரி. வியாவத்தம் - சுழலல், சூழ்தல். வியாவத்தனம் - வியாவத்தம். வியாவபாஷி - வாக்குவாதம். வியாவிருதி - புறம்பு, மறைவு. வியாவிருத்தி - தள்ளுதல், தெரிதல்,புகழ்ச்சி, மறைத்தல். வியாழகேந்திரம் - வியாழ வீதியின்மத்தி. வியாழதிசை - வியாழனுக்குச்செல்லுங் காலம். வியாழம் - ஓர் கிரகம், ஓர் கிழமை,தேவ குரு, பாம்பு, புலி. வியாழவட்டம் - வியாழத்தின் பன்னிருவருடச் சுற்று. வியாழன் - வியாழம். வியாளகம் - வியாளம்.வியாளக்கிராகன், வியாளக்கிராகி - குறவன், பிடாரன். வியாளம் - கெட்ட யானை, பாம்பு,புலி. வியாளாயுதம் - புலிதொடக்கி. வியானபூமி - மயான பூமி. வியானம் - நான்கு முழ அளவு,மயானம். வியானன் - தச வாயுக்களி னொன்றுஅது சரீர முழுதும் வியாபித்திருப்பது. வியுட்டம் - நாள், பலன், வைகறை. வியுட்டி - கீர்த்தி, பலன், வத்திப்பு. வியுற்பத்தி - சொற்புணர்ச்சி யிலக்கணம் சொற்பொருளுணரும்வன்மை, விசேட வுற்பத்தி. வியூககாரன் - தையற்காரன். வியூகபங்கம் - அணிகுலைத்தல். வியூகபேதம் - அணிமுறிதல். வியூகம் - உடல், கூட்டம், படைவகுப்பு, விலங்கின் கூட்டம்,தர்க்கம், நிர்மித்தல். வியூகனம் - ஒழுங்கு, சரீரக்கட்டு. வியூட்டு - அணி, ஒழுங்கு. வியோகம் - பிரிதல், விடுதல், சாவு. வியோகி - சக்ரவாகம், பிரிவுடையவன். வியோடம் - திரிகடுகம். வியோமகேசன் - சிவன். வியோமசாரி - இருடி, தேவன், பட்சி,பார்ப்பான். வியோமசாரிபுரம் - அரிச்சந்திரன்பட்டினம். வியோமதூமம் - முகில்.வியோமமஞ்சரம், வியோமமண்டலம் - கொடி. வியோமமுதம் - முகில். வியோமம் - ஆகாயம், கோவில், நீர். வியோமரூபி - அரூபி. விரகாதியன் - விரேகி, வீம்பன். விரகதம் - வெள்ளைச் சாரணை. விரகதாபம் - காம வருத்தம். விரகநோய் - காம விகாரம். விரகம் - காம நோய், தணித்தல்,பிரிவு, புலவி, விடுதல். விரகவேதனை - காம நோய். விரகறிதல் - பிராய மாதல். விரகன் - வல்லவன், அறிஞன். விரகிணி - சம்பளம், தலைமகற்பிரிந்தாள். விரகிதம், விரகு - அழிவு, உச்சாகம்,உணர்வு, உபாயம், கதி, சமர்த்து,புத்தி, கபடம். விரக்தம் - விரத்தம். விரக்தன் - பற்றற்றவன். விரக்தி - வைராக்கியம். விரசநன் - அக்நி, ஓரரக்கன், சந்திரன்,சூரியன். விரசம் - நிந்தை, சுவைக்கேடு. விரசனம் - இணைத்தல், உண்டாக்கல், போதல். விரசாகீரம் - தொழுவம். விரசுதல் - நெருங்குதல். விரஜை - பரமபதத் திப்புறத்தி யாறு. விரச்சனம் - கரவாளம், வெட்டுதல். விரஞ்சன் - பிரமன். விரடம் - புயம். விரட்டுதல் - மிரட்டுதல், ஒட்டுதல். விரணகம் - ஆமணக்கு. விரணகிருது - சேங்கொட்டை மரம். விரணம் - புண், விழல். விரணம்போக்கி - ஆடுதின்னாப்பாளை. விரதங்காத்தல் - நியமம் பேணல். விரதசங்கிரகம் - விரதத்திற்குச் சங்கற்பித்தல். விரதநிண்ணயம் - விரத விதி. விரதநியமம் - தீட்சித்தல். விரதநிறுத்தல் - விரத நிறை வேற்றுதல். விரதபங்கம் - விரத பின்னம். விரதம் - ஆணை, காம நோய், தவம்இது புண்ணிய மேழி னொன்று,தின்றல், பொய், வேறுபாடு,நியமம். விரதயம் - ஒளி. விரதர் - தவத்தோர், துறவோர். விரதலோபனம் - சங்கற்ப மீறுதல். விரதவுத்தியாபனம் - விரத முடித்தல். விரதன் - யோகி. விரதாசரணம் - விரதா னுட்டிப்பு. விரதாதேசம் - உபவீதம் பூணல். விரதானுஷ்டானம் - விரத மேற்கொள்ளல். விரதி - ஒழிவு, துறவி, துறவு, முறை,தவமுடையோன், யாகஞ்செய்பவன். விரதோபவாசம் - விரதானுட்டிப்பு. விரத்தம் - துறவு, வெறுப்பு. விரத்தன் - விரதி. விரத்தி - துறவு, விருத்தி. விரயம் - பேதி, மிகு செலவு. விரலணி - மோதிரம். விரலம் - தூரம், நெகிழ்வு, நெற்றி,புளித்த தயிர். விரலேறு - ஒருவகைத் தோற் கருவி. விரல் - அங்கு. விரல்நொடி - நாயுருவி. விரவலர் - பகைஞர். விரவல் - கலத்தல், பொருதல். விரவார் - பகைவர். விரவி - வெள்ளரி. விரவு - கலப்பு, விரவென்னேவல். விரவுதல் - அணுகல், கலத்தல். விரவுத்திணை - பொதுத் திணை. விரவுப்பெயர் - பொதுப்பெயர். விரளம் - தயிர், நீக்கம், நெகிழ்வு,மிருது, விசாலம், அவகாசம்,இடைவெளி. விரற்சுற்று - நகச் சுற்று. விரற்புட்டில் - விரலுறை. விராகம் - வெறுப்பு, விரும்பின்மை. விராகன் - அருகன், ஓர் பொற்காசு,இச்சை யற்றவன், கடவுள். விராடம் - ஓர் தேயம். விராடன் - ஓரரசன். விராட்டு - அழகு, சுவாயம்புவ மனுவின் பிதா மாதா அது பிரமன்தான் தானே ஸ்திரீ புருட ரூபமாய்த் தோற்றியது பரப்பிரமம்,பிரமன், புள்ளரசு. விராணி - யானை, வைரவன். விராதநம் - பீடை. விராதம் - எதிரிடை, கலக்கடி,கூட்டம், கைவேலை, தடை,நாள்வேலை. விராதன் - ஓர் தைத்தியன், ஓரரசன். விராதானம் - வருத்தம். விராதீனன் - கூலிக்காரன், வேலையில்லோன். விராத்தம் - இறைப்பணம், தண்டல். விராத்தியன் - சாதிதருமம் விட்டவன்,பிரதிலோமத் தந்தைக்கு மனுலோமத்தாய்க்கும் பிறந்தவன். விராமம் - இளைப்பாற்றி, ஒற்றெழுத்து, தரிப்பு, முடிவு, ஓய்வு. விராயம் - தளபாடம். விராய் - தலவாடம், விறகு. விராலம் - பூனை. விராலி - ஓர் செடி. விரால் - வரால். விராவம் - ஒலி. விராவி - சந்திரனுலகு. விராவுதல் - விரவுதல். விராளி - விரகம். விரானு - காக்கணம். விரி - பொதியெருதிலிடுஞ் சேணம்,விரியென்னேவல். விரிகண் - ஓர் கண்ணோய். விரிகி - நெல். விரிகுளம்பு - கவைக்குளம்பு. விரிக்கட்டு - சேணம். விரிசநன் - பிரமன். விரிசற்குளம்பு - கவைக்குளம்பு. விரிசா - கையாந்தகரை. விரிசிகை - முப்பத்திரண்டு கோவையுள்ள மாதரிடையணி. விரிச்சி - நன்னிமித்தம். விரிச்சிகம் - விருச்சிகம். விரிச்சிகன் - சூரியன். விரிச்சியூர்நன்னாகனார் - புறநானூறுபாடிய புலவரிலொருவர். விரிஞ்சநம் - காற்று, பரமாத்மா.விரிஞ்சனன், விரிஞ்சன் - பிரமன். விரிஞ்சி - சிவன், பிரமன், விஷ்ணு,புலிவயிற்றிற் பிறந்த ஒரு முனிவன். விரிதல் - அகலுதல், அலர்தல், ஒளிசெய்தல், பரவல், விசாலித்தல். விரிதூறு - புதர், பெருந்தூறு, பெரும்பற்றை. விரித்தல் - அலர்த்தல், சொல்லல்,பரப்பல், பூசுதல், விரிவாக்குதல்,விளக்குதல். விரித்துரை - விரியுறை, விருத்தியுரை. விரிபுலப்பொருட்டற்குறிப்பணி - ஓரலங்காரம் அஃது உபமானத்திற்கும் உபமேயத்திற்கு முரியகாரணத்தானுப மேயத்தைமுரியகாரணத்தானுப மேயத்தை யுபமானமாகச் சொல்லுதல் (உ.ம்)காமத்தீப்புகை போலுமிருள். விரிபூடு - பற்படாம், பற்பாடகம். விரிப்பு - விரித்தல், விரிக்கப்படுவது. விரிமுரண் - இசைப்பாவகையினொன்று. விரியலர் - மலர்ந்த பூ. விரியல் - ஒளி, பரவல், மலர்தல், விரிந்தது. விரியன் - ஓர் பாம்பு. விரியுரை - அகலவுரை. விரியுருவகம் - மாட்டேற்றுச் சொல்விரிந்து நிற்பவுருவகிப்பது (உ.ம்)கொங்கை முகையாக மென்மருங் குல் கொம்பாக, அங்கைமலரா வடிதளிராத், திங்கள்,அளிநின்ற மூர வணங்காமெனக்கு, வெளி நின்ற வேனிற்றிரு. விரியுவமை - உவமானமும் உவமேயமும் பொதுத் தன்மையும்உவமை யுருபும் விரிந்து வருவது. விரியூர் அங்கன், விரியூர்நக்கனார் - இவ்விரு பெயரும் ஒருவர்க்கேயுரியது, இவர் புறநானூறு பாடியபுலவரிலொருவர். விரிவு - அகலம். விரீகி - அரிசி, காரேலம், நெல். விரீகியாகாரம் - களஞ்சியம். விரீடம் - வெட்கம். விரீடனம் - மரியாதை, வெட்கம். விருகத்திரணம் - மூங்கில். விருகந்தண்டு - ஓர் பயிர். விருகம் - ஓணாய், காகம், செந்நாய்,நரி, மிருகம், இஞ்சி. விருகற்பதி - வியாழம். விருகற்பாடலி - விளா. விருகற்பாதம் - ஆல். விருகற்பானு - தீ.விருகாராதி, விருகாரி - சிங்கம், நரி,நாய், புலி, வெருகு. விருகு - ஓர் மரம், வெருகு. விருகோதரன் - பிரமன், வீமன். விருக்ககண்டம் - ஆராமம். விருக்ககாதனம் - கோடாலி, வாய்ச்சி. விருக்ககுக்குடம் - காட்டுக்கோழி. விருக்கசம் - பல்லி. விருக்கசரம் - குரங்கு, கோட்டில்வாழ்விலங்கு. விருக்கசாயிகை - அணில். விருக்கசாயை - மர நிழல். விருக்கதலம் - மரவடி. விருக்கதேனி - புல்லூரி. விருக்கநாதன் - அரசு. விருக்கநிவாசம் - மரவாசம். விருக்கபவனம் - மரப்பொந்து. விருக்கபாகம் - விருக்க நாதன். விருக்கபேதி - உளி. விருக்கம் - விருட்சம். விருக்கலாபம் - நெருஞ்சில். விருக்கவாடிகை - நந்தன வனம். விருக்காக்கிரம் - மரநுனி. விருக்காங்கிரி - மரவடி. விருக்காலயம் - பட்சி. விருக்காவாசன் - தவத்தி. விருங்கிதம் - யானைபிளிறொலி. விருசகத்தி - விரியறுகு. விருசம் - இஞ்சி, எலி. விருசனம் - ஆகாயம், உரோமம்,பாவம். விருசினம் - இக்கட்டு, உரோமம்,பாவம். விருசு - ஓர் மரம். விருச்சலாபம் - நெருஞ்சில். விருச்சி - சொன் னிமித்தம். விருச்சிககரணி - தேள் கொடுக்கி. விருச்சிகம் - ஓரிராசி, ஓர் மாதம்,சாரணை, நண்டு, மயிர்க்குட்டி,வண்டு, தேள். விருச்சிகன் - சூரியன். விருடசத்துரு - விட்டுணு. விருஷணம் - பீசம். விருடதுவசன் - சன்மார்க்கன், சிவன்,விநாயகன். விருடபகதி - துரககதி யைந்தி னொன்று. விருடபதி - கட்டாக்காலி, சிவன். விருடபத்துவசன் - சிவன்.விருடபம், விருஷபம் - எருது, காது,யானைக்காது, வாசகத்திறம். விருடபாரூடன் - சிவன். விருடம் - இடபம், எலி, ஓரிராசி,சன்மார்க்கன், தருமம், மயிற்றோகை, மேன்மை. விரடலம் - உள்ளி, குதிரை. விருடலி - கீழ்மக்கள், பன்னிரண்டாண்டிற் பெண், பூப்பதாரி,மலடி.விருடலோசனம், விருடலோசனன் - எலி. விருடவாகனன் - சிவன். விருடன் - கன்னன், காமன், சத்துரு,சிவன், விட்டுணு. விருடாகபாயி - இலக்குமி, கவுரி, சசி,சுவாகை. விருடாகாரன் - பூனை. விருடாங்கன் - சிவன், தேவபத்தன். விருட்சசரம் - குரங்கு.விருட்சநாதன், விருட்சபாகன் - அரசு. விருட்சம் - விருக்கம். விருட்சராஜம் - அரசமரம். விருட்சவாடிகை - கொல்லை, சோலை. விருஷ்டி - மழை. விருதம் - அழுதல், வெள்ளெருக்கு,நிலக்கடம்பு. விருதர் - படைவீரர். விருதா - பயனின்மை, பிழை, வீண். விருதாதானம் - அதமதானம். விருதி - கேட்குதல், சூழ்தல், தெரிந்தெடுத்தல், மறைத்தல். விருது - அடையாளம், கொடி,வமிசம், விரதம், வெற்றி. விருதுக்கொடி - வெற்றித்துவசம். விருதுமோதிரம் - அரசன் வீரம் கல்விமுதலிய கண்டு கொடுக்கு மோதிரம். விருத்தகங்கை - கோதாவரி. விருத்தகிரி - விருத்தாசலம். விருத்தசங்கம் - முதியோர் கூட்டம். விருத்தசேவை - விருத்தாதிகாரவந்தனம். விருத்ததை - எதிரிடை, ஒவ்வாமை,வன்மம். விருத்தத்தானம் - செய்யுட்டானப்பொருத்தத்தி னொன்று. விருத்தத்துவம் - முதிர்வயசு, முதுமை. விருத்தபலம் - மிளகு. விருத்தபன்னி - பங்கம்பாழை. விருத்தபாவம் - முதிர்வயசு. விருத்தபுட்பம் - கடம்பு. விருத்தபேதம் - ஓரளவைப் பிரமாணம். விருத்தபோசனம் - விருத்தான்னம். விருத்தப்பண் - விருத்தராகம். விருத்தப்பிரபிதாமகன் - முப்பாட்டன். விருத்தம் - அறிவு, ஆமை, ஒவ்வாநியாயம், ஒவ்வாமை, ஓரளவைப்பிரமாணம், கடினமானது, கிழத்தன்மை, குவியல், சிற்பநூன் முப்பத்திரண்டி னொன்று, சூதுதாயத்தொன்று, சூழ்ந்தது, செய்தி,தடை, தெரிந்து, கொள்ளப்பட்டது, தொழில், நடக்கை,நடந் தேறினது, நிலக்கடம்பு,நூதனம், படித்தது, பழமை,பாவினத் தொன்று, பிரபலியமுள்ளது, பெலன், முதுமை,மூடினது, மூப்பு, வட்டம், விரோதம், வெறுப்பு, வேறுபாடு,பழையது, சரித்திரம், மாறுபாடு. விருத்தரணம் - மூங்கில். விருத்தர் - கிழவர், மேலோர். விருத்தவிலக்கணம் - ஓர் பிரபந்தம். விருத்தன் - அதிகாரி, கிழவன்,படித்துத் தேறினவன், முதிர்ந்தவன், விரோதி. விருத்தாங்குலி - பெருவிரல். விருத்தாசலம் - ஓர் சிவஸ்தலம். விருத்தாசிரமம் - திரிதல். விருத்தாதீபகம் - ஓரலங்காரம் அது“வரிவண்டு நாணா மதுமலசம்பாகப், பொருவெஞ் சிலைக்குப்பொலிவும், பிரிவின், மிளர்க்குநிறமுடையார்தம் மேன் மெலிவும்,வளர்க்கு மலையா நிலம்” எனவரும். விருத்தாந்தம் - இளைப்பாற்றி, கதை,காரியம், சுவாவம், செய்தி,முழுமை, வர்த்தமானம், விதம். விருத்தாப்பியம் - கிழத்தன்மை. விருத்தாரணியம் - காவியம் வாசிக்குமிடம். விருத்தான்னம் - பழஞ்சோறு. விருத்தி - அடிமை, அபராதம்இலாபம், ஏறுதல், ஒழுக்கம்,ஓரலங்காரம், ஒருரை, குவியல்கூட்டம், சந்தோஷம், சித்தி,செல்வம், தரித்தல், தொழிலிலாபம், நல்லொழுக்கம், நித்தியயோகத்தொன்று, பலன், பாக்கியம், பிழைப்பு, போங்கு, மருது,வட்டம், வளர்தல், விபரம்,வியாபாரம், செயல். விருத்திசந்தி - நிலைமொழியிறுதிஅகர ஆகாரங்கண்முன் ஏகாரஐகாரம்வரில் ஐகாரமும் அவ்விரண்டி லொன்றன்முன் ஓகாரஒளகாரம்வந்தால் ஒளகாரமும்நிலைமொழியீறும் வருமொழிமுதலுங் கெடத்தோன்றல். விருத்திதானம் - சீவனங் கொடுத்தல். விருத்தியர் - அடிமைகள்.விருத்திரகன், விருத்திரத்துவிஷன், விருத்திரதாரி - இந்திரன். விருத்திரம் - இருள், ஓர் மலை,சத்தம், முகில். விருத்திரன் - இந்திரன், ஓரசுரன், ஓரிராக்கதன், சத்துரு. விருத்திராரி - இந்திரன். விருத்திரூபம் - தூலரூபம், வட்டவடிவு. விருத்தை - கிழவி, இது பெண்பருவநான்கினொன்று.விருத்தோக்கம், விருத்தோட்சம் - எருது. விருந்தம் - காம்பு, குவியல், கூட்டம்,மண் பாண்ட முதலியவற்றின்பாதம், முலைக்காம்பு, விலங்கின்கூட்டம், வேம்பு, சுற்றம். விருந்தர் - அதிதியர், புதியவர். விருந்தனை - மனைவி. விருந்தாகம் - சேம்பு. விருந்தாரகன் - தேவன், பிரதானி. விருந்தாரம் - அழகு, மேன்மை. விருந்தாட்டு - நித்தல் விழாவன்றியாண்டு தோறுஞ் செய்யும்விழைவு. விருந்திடல் - விருந்து கொடுத்தல்,விருந்து செய்தல். விருந்தினர் - அதிதியர், புதியோர். விருந்து - புதிதாய் வந்தோர்க் குணவுகொடுத்தல், புதுமை, சுற்றம்,விருந்தினன். விருந்துபுறந்தருதல் - விருந்தினர்க்கீயவஞ்சல். விருந்துவனப்பு - இப்பொழுதுள் ளாரைப் பாடுவது. விருந்தெதிர்கோடல் - விருந்தினரையெதிர் கொள்ளல். விருந்தை - சலந்தரன் மனைவி,துளசி. விருந்தோம்பல் - வேளாண்மைமாந்தரியல்பினொன்று. விருப்பின்மை - அவாவின்மை இஃதுஅறத்துறுப்பினொன்று. விருபன் - வெள்ளெலி. விருப்பம் - ஆசை, பிரியம். விருப்பின்மை - அவாவின்மை இஃதுஅறத்துறுப்பினொன்று. விருப்பு - ஆசை, பிரியம், விருப்பம். விருமன்னியம் - சேங்கொட்டை.விரும்பல், விரும்புதல் - ஆசைப்படுதல்,கருத்து. விருவிருத்தல் - சீக்கிரக்குறிப்பு. விருவிருப்பு - நஞ்சுமுதலியவேறுங்குறிப்பு. விருவிரெனல் - சீக்கிரக்குறிப்பு. விருளை - கடிவாளப்பூண். விரூட்சணம் - ஆணை, குற்றச்சாற்று. விரூபகரணம் - சந்தக்கேடு செய்தல். விரூபகரூபகம் - ஓரலங்காரம் அஃதுஒருபொருட்குக் கூடாத தன்மைபலவுங்காட்டி யுருவகஞ் செய்வது (உ.ம்) தண்மதிக்குத்தோலாது தாழ்தடத்துவை காதலரும் அரிவை வதனாம் புயம். விரூபம் - அந்தக் கேடு, குணபேதம்,விகாரரூபம், வேற்றுமை.விரூபாக்கன், விரூபாட்சன் - சிவன்,பன்னோருருத்திரர்களி லொருவன். விரூபி - யமன்றேவி, வடிவற்றஆள். விரூபை - இயமன் மனைவி. விரேகம் - கழித்தல். விரேசனம் - கழித்தல், பேதி, பேதிமருந்து, விடுவித்தல். விரேசித்தல் - கழிதல். விரேபம் - ஆற்றுப்பொது, ஓராறு. விரை - கலவைச்சாந்து, தூபம்,நறும் புகை, பூந்தேன், வாசனை,வித்து, விரையென்னேவல். விரைசீரம் - வாசனையான சீரகம். விரைதல் - விரைவு, விரைவு செய்தல்,வெயில், வேண்டல். விரைத்தல் - விதைத்தல், பரிமளித்தல். விரையன் - பனிரெண்டாமிடம். விரைவு - வேகம். விரோகம் - பொந்து. விரோசநசுதன் - மஹாபலி. விரோசநி - ஓர் நதி. விரோசனசுதன் - வாலி. விரோசனன் - அக்கினி, சந்திரன்,சூரியன், பலிச்சக்கிரவர்த்திதந்தை. விரோதச்சிலேடை - முன்னர்ச் சிலேடித்துவந்தவற்றைப் பின்னரும்விரோதிப்பச் சிலேடிப்பது. விரோதம் - அதிட்டவீனம், எதிர்,ஒவ்வாமை, ஓரலங்காரம்,சூழ்தல், பகை, போர், வன்மம்,வேற்றுமை. விரோதஸ்தானம் - எட்டாமிடம். விரோதவுவமை - ஓரலங்காரம்அஃது உபமானோப மேயங்கடம்மு ளொன்றற் கொன்றுபகையனவெனக் கூறுவது (உ.ம்)செம்மை மரைமலருந்திங்களுநும்முகமுந், தம்முட் பகைவிளைக்குந் தன்மையவே. விரோதனம் - எதிரிடை, ஒவ்வாமை,கோபமூட்டல், தடை, பகை. விரோதாபாசம் - ஓரலங்காரம். விரோதாலங்காரம் - மாறுபட்டசொல்லானும் பொருளானுமாறுபடுந் தன்மை விளைவுதோன்றவுரைப்பது. விரோதி - இருபத்து மூன்றாவதாண்டு, எதிரி, சத்துரு, விரோதிஎன்னேவல். விரோதிகிருது - நாற்பத் தைந்தாவதாண்டு. விரோதோத்தி - எதிர்பேச்சு.விலகல், விலகுதல் - எறிதல், நீங்கல். விலக்கணம் - திருட்டாந்தமற்றது,வித்தியாசம். விலக்கம் - மாற்றல், விலங்குந்தன்மை. விலக்கு - தவிர்ப்பு, மறிப்பு, வழு,விலக்கென்னேவல், விலக்கல்,விலக்குவது. விலக்குதல் - தவிர்த்தல், மறித்தல். விலக்குருவகம் - ஓரலங்காரம் அஃதுஉருவகிக்கிற பொருளினியல்பைவிலக்கி உருவகிப்பது (உ.ம்)மலையிற் பயிலா மடமஞ்ஞை. விலக்குவமை - ஓரலங்காரம் அதுமுன்னியமித்த வுவமையினகுறைகளை எடுத்துக்காட்டி யுவமைப்பொருட்கு ஒப்பல்ல வென்பதுபடப் புணர்ப்பது. விலங்கரசு - சிங்கம். விலங்கல் - கலங்கனீர், மலை, விலகுதல், வளைதல். விலங்கு - தடை, தளை, மிருகம்,விலங்கென்னேவல், குறுக்கு,குறுக்கிட்டுக் கிடத்தல். விலங்குதல் - எறிதல், துலங்கல், விலகல். விலசனம் - வினோதவிளையாட்டு. விலசிதம் - இலீலாவினோதம். விலட்சணம் - மேன்மை, பிந்நம். விலட்சத்துவம் - அடையாளமின்மை, அதிசயம்,பகுத்தறிவின்மை, வெட்கம். விலட்சயம் - அபாவவியல்பு.விலத்தல், விலத்துதல் - நீக்குதல்,நீங்குதல். விலபனம் - மழலை. விலம் - அகில், குகை, பொந்து,பள்ளம், துளை, பிலம். விலம்பனம் - தாமதம். விலம்பம் - தாமதம், தூங்குதல்,நன்கொடை, கொடுத்தல். விலம்பிதம் - தாமதம். விலயம் - அழிவு, உருக்குதல்,உலகாந்தம். விலயனம் - அகற்றுதல், அழித்தல்,உருகுதல். விலா - பழு. விலாக்கொடி - எலும்பு. விலாங்கு - பாம்பு போன்ற ஓர்வகைமீன். விலாசகானனம் - வினோத தானம். விலாசமந்திரம் - வினோதாலயம். விலாசம் - அழகு, ஆடவர் மகளிர்விளையாட்டு, இலீலாபிநயம்,நாணக் குறிப்பு, பத்திரிகையின்புறவெழுத்து, பொழுது போக்குவேடிக்கை, பிரகாசம். விலாசனை - மகளிர் விளையாட்டு. விலாசி - காமன், சந்திரன், சிவன்,திருமால், தீ, பாம்பு. விலாசிநி - பெண், வேசி. விலாடித்தல் - இரட்டை வரிகொடுத்தல். விலாத்தோரணம் - என்பு. விலாபம் - கனவு கண்டிரங்கல்,புலம்பல், அழுதல்.விலாமிச்சை, விலாம்மிச்சை - ஓர்வாசனைப் புல். விலாய் - கட்டம். விலாலம் - இயந்திரம், பூனை. விலாவனை - அழுகை. விலாவம் - அழுகை. விலாவித்தல் - அழுதல். விலாழி - குதிரை வாய் நுரை,யானைக்கை யுமிழ் நீர். விலாளம் - ஆண் பூனை, பூனை. விலீனம் - அழிந்தது, உருக்கப்பட்டது, கலக்கப்பட்டது. விலூபன்னி - பெருங் குரும்பை. விலேசயம் - எலி, குகை, பாம்பு,முயல். விலேபம் - சாந்து, பூச்சு. விலேபனம் - பூசுதல், வாசனை,வாசனைச் சாந்து பூசுதல். விலேபி - கஞ்சி. விலை - கிரயம், விற்றல். விலைகட்டுதல் - விலை மதித்தல். விலைகாரர் - கொள்வோர். விலைகுறித்தல் - விலை மதித்தல். விலைகூறுதல் - விலையைப் பலமுறையுஞ் சொல்லல். விலைக்கிரயம் - விலை.விலைச்சரக்கு, விலைச்சாமான் -விலைப் படுத்த வைத்திருக்கும்பொருள். விலைஞர் - செட்டிகள், விற்பவர்.விலைதீருதல், விலைதீர்தல் - விலைநிதானித்தல், விலை உறுதியாதல். விலைபேசுதல் - விலைசொல்லல்,விலை நிதானித்தல். விலைபோடல் - விலைகுறித்தல். விலைபோதல் - விலைப்படல்.விலைப்படல், விலைப்படுதல் - விற்கப்படல். விலைப்படுத்தல் - விற்குதல். விலைப்பண்டம் - விலைப்பொருள். விலைப்பருவம் - விலையின்முறைமை. விலைமகள் - வேசி. விலைமானம் - விலைபடுதற்கானமதிப்பு. விலையாளர் - விலையிடுவோர். விலையுணி - அலட்சியமான ஆள். விலையுயர்தல் - விலையதிகப்படல். விலைவைத்தல் - விலைகுறித்தல்,விலையேற்றுதல். விலோகணியதை - அழகு. விலோகநம் - பார்வை. விலோசனபாதம் - பார்வை. விலோசனம் - கண், பார்வை. விலோசனம்பு - கண்ணீர். விலோடனம் - உருளுதல், கலக்குதல். விலோடிதம் - மோர். விலோதம் - துகிற்கொடி, பெண்மயிர், மயிற்குழற்சி. விலோதனம் - துகிற்கொடி, பெருங்கொடி.விலோபம், விலோபனம் - அழிவு,இழுத்தல், கலக்குதல், புகழ்ச்சி, மயக்கம். விலோமாத்திரைராசிகம் - குறுகுமுத்தொகை வினா. விலோமம் - நீரியந்திரம், நீர், பாம்பு,பின் முறைபிழத்தல், விபரீதம். விலோமவிதி - ஒழுங்குதப்பின முறை. விலோமன் - வருணன். விலோலதை - உறுதியின்மை. விலோலம் - சஞ்சலம். வில் - ஒளி, சேரன்கொடி, தனு, மூலநாள், வில்லென்னேவல். வில்கண்டம் - பலபந்தம், முட்டு. வில்ஞாண் - விற்கயிறு. வில்லங்கம் - தடை, பலபந்தம்,முட்டு, வியாச்சியம். வில்லடை - இடையூறு, எதிரித்தனம். வில்லண்டம் - வில்கண்டம். வில்லம் - குகை, பெருங்காயம்,வில்வம், பாத்தி. வில்லவன் - சேரன். வில்லாச்சிரமம் - விற்பரிட்சை. வில்லாண்மை - வில்வல்லமை. வில்லார் - வில்லுடையார், வேடர். வில்லி - மன்மதன், விசையன்,விற்போராளன், வீரபத்திரன். வில்லிபுத்தூரன் - ஓர் கவிஞன் பாரதம்பாடியவரி லொருவர். வில்லியர் - வில்வல்லோர். வில்லுகன் - சிற்றாமுட்டி. வில்லுவம் - வில்வமரம். வில்லூதி - ஓர் சகலாத்து. வில்லேருழவர் - படைவீரர், வில்வீரர். வில்லை - அடை, அண்டை, தகட்டுவட்டம், வட்டித்தது, வில்வம். வில்லைமுருகு - ஓர் காதணி. வில்வஞ்சாத்துதல் - தெய்வங்கட்குவில்வஞ் சாத்தி யருச்சித்தல். வில்வமாலை - பொன் வெள்ளிகளாற்செய்யு மோர்வகை மாலை. வில்வம் - ஓர் மரம், இது தசமூலத்தொன்று, மாலூகம், கூவிளம்,விட்டில், பசு, நாய். வில்வல்லவன் - வில்லாச்சிரமி. வில்வளைவு, வில்வாங்கல் - வில்லாகாரமான வளைவு. வில்வித்தை - வில்லாச்சிரமம். விவகரித்தல் - நியாயஞ் சொல்லுதல். விவகலனம், விவகலிதம் - கழிவுக்கணக்கு. விவகாசம் - சிரிப்பு. விவகாரதரிசனம் - நீதம் விசாரித்தல். விவகாரஸ்தானம் - நீதாசனம். விவகாரம் - நீதியதிபதித்துவம்,பிணக்கு, முப்பொருளினொன்று,அது பொருளீட்டல், தொழில்,வழக்கு, வளமை, வழக்கம். விவகாரவிதி - நியாயப்பிரமாணம். விவகாரி - வழக்காளி. விவகாரிகம் - வழக்கம், வழக்கு,விவகார சம்பந்தமுடையது. விவசம் - கீழ்ப்பட்டது, பரவசம்,பற்றிலாமை, மரணவிருப்பம். விவசாயம் - வேளாண்மை, பயிர்த்தொழில், முயற்சி. விவசுதன் - சூரியன். விவச்சுவான் - சூரியன். விவஸ்வதி - சூர்யநகரம். விவட்சை - விருப்பம். விவதம் - காத்தண்டு, குவித்தல்,சுமை, தெரு. விவத்து - விபத்து. விவஸ்தை - பகுத்தறிவு, நன்னிலை,ஏற்பாடு. விவத்தை - ஆபத்து. விவம் - ப்ரகாசம். விவரணம் - விபரம், வியாக்கியானம்,விவரம். விவரம் - உட்டுளை, குகை, குறை,பிரிவு, வகை, விருத்தாந்தம். விவரிதம் - விபரிதம். விவரித்தல் - பகுத்துச் சொல்லல். விவருணம் - தீழ்ப்பு, துன்னிறம். விவர்ணம் - நீசன், விவேக மில்லாதவன். விவர்த்தம் - ஆடல், கூட்டம், சுற்றிவருதல், தப்பிதம், திரிவு. விவர்த்தரூபம் - மாயா ரூபம். விவர்த்தனம் - சுழலல், சுற்றிவரல்,திரும்புதல், பிரித்தல், புரளல்,வருத்திப்பு, விபரீத உணர்வு,வளர்தல். விவர்நாலிகை - மூங்கில். விவாகம் - மணம்.விவாகரணம், விவாசம், விவாசனம் - ஊருக்குப் புறப்படுத்தல். விவாதம் - சொற்கலகம், தருக்கம்,வழக்காடுதல். விவாரம் - விரிதல். விவிக்தம் - ரஹஸ்யம். விவிதம் - பலவிதம். விவிருதி - விவரம். விவிருருதி - சுழலல், வருத்திப்பு. விவேகசிந்தாமணி - ஓராகம நூல். விவேகசூனியம் - அறிவின்மை. விவேகதை - புத்தி. விவேகம் - ஆராய்வு, பகுத்தறிவு,புத்தி, மனக்கூர்மை. விவேகி - கூரியன், புத்தி மிகுந்தோன். விவேகிதை - ஆராய்வு, பகுத்தறிவு. விவேகித்தல் - மட்டுக் கட்டல். விவேசனம் - ஆராய்வு, பகுத்தறிவு. விழப்போத்தி - வட்டத் திருப்பி. விழம்பு - சோறு. விழலர் - வீணர். விழலாண்டி - வீணன். விழல் - ஓர் புல், விழுதல், வீண். விழவு - திருவிழா, மிதுனவிராசி,அகங்காரம். விழற்கட்டு - புல்வீடு, வீடு. விழா - திருவிழா, மங்கலச் சடங்கு. விழாலரிசி - ஓர் மருந்து. விழால் - விழாலரிசி. விழி - கண், கண்மணி, விழியென்னேவல், விழுதி. விழிதுறை - பாரம், வழிவகை. விழித்தல் - அருண்டெழுதல்,உருட்டிப் பார்த்தல், கண்டிறத்தல்,பார்த்தல், விளங்குதல். விழிப்பு - எச்சரிக்கை, சாக்கிரதை,துயிலொழிவு, தெளிவு. விழியன் - பெருங்கண்ணன். விழுவிழுங்கி - கண்ணோயுளொன்று. விழுகுதல் - வீழ்தல். விழுகை - விழுதல். விழுக்காடு - குறைவு, சகட்டுவிலை,தூக்கம், வசக்கேடு, விதம்,விழுதல், வேறுபாடு. விழுக்கு - நிணம், கொழுப்பு. விழுங்கல் - நுங்குதல், பட்சித்தல். விழுசுமை - வலுசுமை. விழுதல் - சாதல், வீழல். விழுதி - ஓர் மரம். விழுது - ஆலமர முதலியவற்றின்வீழ், ஆழம்பார்ப்பதற்கானகயிறு, நெய்வார் கருவியினொன்று, வெண்ணெய், நெய். விழுத்தம் - கருஞ்சீரகம். விழுபாலை - ஒர் கொடி. விழுப்பகை - பெரும்பகை. விழுப்பம் - ஆசை, குலம், சிறப்பு,நன்மை, மேன்மை. விழுப்பழி - பெரும்பழி. விழுப்பு - அனாசாரம், தீட்டு, நீக்கற்பாலது. விழுப்பொருள் - நுண்ணியபொருள்,மேன்மையான பொருள். விழுமம் - இடும்பை, சிறப்பு, சீர்மைநன்மை, துக்கம், வருத்தம். விழுவிழெனல் - பசைபிடியாதிருத்தல். விழை - கரும்பு. விழைச்சு - இளைமை, புணர்ச்சி. விழைதல் - ஆசைப்படல், ஆசைப்பெருக்கம், புணர்தல். விழைந்தோர் - கணவர், சினேகிதர்,விரும்பினோர். விழைவு - ஆசைப்பெருக்கம், உள்ளோசை, கலத்தல். விளகம் - சேங்கொட்டை. விளக்கணம் - பொடிவைத்து விளக்குதல். விளக்கணி - ஓரலங்காரம் அஃதுஉபமானமு முபமேயமு மொருதருமத்தின் முடிதல். விளக்கம் - சந்திரனாள், தெளிவு,விசாரணை, சேங்கொட்டை,விளக்கம், பிரகாசம், விளங்குதல். விளக்கல் - அழுக்கு நீக்கல், ஒட்டவைத்தல், தெளிவித்தல்,பிரகாசிப் பித்தல், மிணுக்குதல். விளக்கவொலி - பொருடருமொலி. விளக்கறை - தீபமேற்று மாடம். விளக்கீடு - ஓர் தினம் அது சருவாலயதீபமேற்றுதல். விளக்கு - அட்டமங்கலத்தொன்றுஅஃது ஆலாத்தி, ஒளி, சோதிநாள், தீபம், விளக்கென்னேவல். விளக்குக்கூடு - விளக்குத்தகழி. விளக்குதல் - விளக்கல். விளக்குத்தகழி - விளக்கக்கல். விளக்குத்தண்டு - விளக்குத்தாள். விளக்குநிலை - ஓர் பிரபந்தம் அதுவேலும் வெற்றிலையும் விலங்காதோங்கிய வாறுபோலக்கோலொடு விளக்குமொன்றுபட்டோங்குமா றோங்குவதாகக்கூறுவது. விளக்குநிறுத்துதல் - விளக்கணைத்தல். விளக்குப்பாதம் - விளக்குத்தண்டு. விளக்குமாறு - துடைப்பம். விளக்கெண்ணெய் - ஆமணக்கெண்ணெய், விளக்கிடுமெண்ணெய், வேப்பெண்ணெய். விளக்கேற்றல் - தீபம் வைத்தல். விளக்கொளி - தீபப்ரகாசம். விளங்கம் - வாயு விளங்கம். விளங்கல் - ஒளிசெய்தல், தெளிதல். விளங்கிழை - பெண். விளங்கு - சிற்றரத்தை. விளங்குதல் - விளங்கல். விளங்குதிங்கள் - சுக்கிரன். விளத்தல் - விபரித்தல், விலகுதல். விளத்தாரு - அடம்பு. விளத்துதல் - விலத்துதல். விளம்பம் - தாமதம். விளம்பரம் - அறிக்கைப்பத்திரம்,விளக்கம். விளம்பல் - சொல்லல், விசாரித்தல். விளம்பனம் - தாமதம். விளம்பி - கள், முப்பத்திரண்டாவதாண்டு. விளம்பிதம் - தாமதம், தாமதப்பட்டுமுற்றுதல், அது தாளப்பிரமாணத்தொன்று. விளம்பிநாகனார் - பதினெண்கீழ்க்கணக்கிலொன்றாய் நான்மணிக்கடிகை யியற்றிய புலவர். விளம்புதல் - விளம்பல். விளரி - இளமை, ஏழிசையி னொன்றஅது நெஞ்சாற் பிறப்பன, நெய்தனிலத்தியாழ், மிகுதி, யாழினோர் நரம்பு, யாழ், வேட்கை,கொழுப்பு. விளரிப்பாலை - ஓரிசை. விளர் - இளமை, கொழுமை, நிணம்,வெண்மை. விளர்த்தல் - வெளுத்தல். விளர்ப்பு - வெளுப்பு. விளவு - கமர், விளவென்னேவல்,விளாமரம், வேறுபடல். விளவுதல் - விளாவல். விளா - விளாமரம். விளாகம் - போர்க்களம். விளாக்கைத்தல் - உழுதல். விளாசம் - விலாசம். விளாத்தி - விளா. விளாப்பு - பிறர்க்குப் பங்கில்லாதது. விளாம்பூச்சி - ஓர் சித்திரப்பூச்சி. விளாவல் - கலத்தல், உழுதல். விளி - அழைப்பு, எட்டன் வேற்றுமை, ஏழிசையி னொன்று, விளியென்னேவல், இசைப்பாட்டு,ஓசை, கொக்கரிப்பு. விளிதல் - கெடுதல், கோபித்தல்,சாதல், மறிதல், வருத்தப்படல். விளித்தல் - அழைத்தல். விளிம்பு - அருகு, கண்ணிமை, கரை. விளிம்புதெற்றி - கரைத்திண்ணை. விளிவித்தல் - அழைப்பித்தல்,கொல்லல். விளிவு - கோபம், சாவு, கேடு. விளை - ஓர் மீன், கொல்லை. விளைகரி - நிலக்கரி. விளைச்சல் - விளைவு. விளைஞர் - மருதநில மாக்கள். விளைதல் - உண்டாதல், தானியமுற்றுதல். விளைத்தல் - விளைவித்தல். விளைநிலம், விளைபுலம் - வயல். விளைப்பு - செய்தல். விளைமீன் - ஓர் மீன். விளையாடுதல் - பொழுதுபோக்கல். விளையாட்டு - பொழுதுபோக்கு. விளையாட்டுப்பிள்ளை - சிறுபிள்ளை,வீணன். விளையுங்காலம் - அறுப்புக்காலம். விளையுள் - வயல், விளைதல், விளைவிப்போர். விளைவித்தல் - வினையச்செய்தல். விளைவு - சம்பவிப்பு, தானியம்,பயன், மேகம், வயல், விளா, ஆக்கம்,முதுமை. விளைவுகாலம் - தானியம் விளைந்திருக்குங் காலம். விள்வு - வேறுபாடு, நீங்கல்.விள்ளல், விள்ளுதல் - தழுவல், திறத்தல்,பிரிதல், பேசுதல், மலர்தல்,வெடித் தல், வேறுபடல், விடுதல். விள்ளோடன் - பருப்புவேறு சிரட்டைவேறாய்க்கழலுந் தேங்காய். விறகு - கறல், சமிதை, எரிகட்டை. விறகுதலைவன் - விறகுவெட்டி,விறகு வெட்டிதலையிற் சுமந்துவிற்றுச் சீவிப்பவன். விறத்தல் - அஞ்சுதல், நெருங்குதல்,பெருகுதல், போர்செய்யல்,வெல்லல், செறிதல். விறப்பு - அச்சம், நெருக்கம், பெருக்கம், போர், வெற்றி, செறிவு. விறலி - பதினாறு வயசுப்பெண்,பாடன் மகடூ, விறல்படப் பாடியாடும் மகள். விறலுதல் - வெற்றி கொள்ளல். விறலுவமம் - ஒன்றின்விறலா னுவமிப்பது (உ.ம்) மதயானைபோலுமகங்காரம். விறலோன் - அருகன், திண்ணியன். விறல் - பெருமை, வலி, வீரம், வெற்றி. விறற்கொடி - வெற்றிப்படை. விறன்மிண்டன் - அறுபத்துமூவரிலொருவன். விறாட்டி - எருவராட்டி முதலியன. விறாண்டுதல் - பிறாண்டுதல். விறாய் - வீறாப்பு. விறிசு - ஓர்வாணம், புழுகுப்பேச்சு,பொய். விறுதா - விருதா. விறுமதண்டம் - குருக்குற்றி. விறுமதரு - புள்முருக்கு. விறுமமூலி - புன்முருக்கு. விறுமமூலி - பிரமி. விறுமன் - ஓர் தேவதை. விறுமை - பிரமை. விறுவிறுத்தல் - கொதித்தல், விறுவிறுப்புக்கொள்ளல். விறுவிறுப்பு - கொதித்துளைதற்குறிப்பு, மிகுகோபம், விரைவுக்குறிப்பு. விறுவிறெனல் - விரைவின்குறிப்பு,விறுவிறுத்தற்குறிப்பு. விறைத்தல் - மரத்து நிற்றல். விறைப்பு - திமிர், பிரமிப்பு, முறைப்பு. விற்கிடை - விற்கிடக்குந்தூரம். விற்குதல் - விலைப்படுத்தல். விற்படை - அம்பு. விற்பத்தி - கல்விவல்லபம், சொற்குத்தாதுப் பொருள், புலமை. விற்பத்திமான் - கல்வியிற் சிறந்தோன். விற்பனம் - விற்பன்னம். விற்பனவு, விற்பனை - விற்றல். விற்பன்னம் - கல்வி, நூதனம்,பிரசங்கம், விந்தை. விற்பன்னர் - கற்றோர், நூதனகாரர்,புலவர். விற்பன்னித்தல் - சிறப்பித்தல். விற்புருதி - ஓர் சிவந்தி. விற்புருதிநாயகம் - அமுக்கிறா. விற்பூட்டு - பொருள்கோ ளெட்டினொன்று அது செய்யுளிறுதியினுமுதலினு நிற்கு மொழிகளைக்கூட்டிப் பொருள் கொள்வது. விற்போர் - வில்லாண்மைப்போர். விற்றல் - விலைக்கிரயம் பண்ணுதல். வினகம் - சேங்கொட்டை மரம். வினதாசுதன் - கருடன். வினதை - கருடன்றாய், சத்தபுரியி னொன்று. வினயம் - வஞ்சகம், விநயம், வணக்கம்.வினவல், வினவுதல் - அளவளாவுதல்,கேட்டாராய்தல், பிறர் சொல்லக்கேட்டல். வினா - உரையிலக்கண மைந்தினொன்று, கேள்வி, சொல், வினாவென்னேவல். வினாசம் - காணாதிருத்தல். வினாசன் - விநாசன். வினாடி - விநாடி. வினாதல் - வினாவுதல். வினாபூதகற்பனை - தெளிவில்லாதது. வினாயகன் - விநாயகன். வினாவிடை - சல்லாபம். வினாவுதல் - கேள்விகேட்டல். வினாவுத்தரம் - மிறைக்கவியினொன்று அஃது ஒருசெய்யுட்கண் வினாயவினாக்களுட் கடைவினாயதற்கோ ருத்தரமாய் நின்றமொழிபிரிந்துமேல்வினாயபலவினாவிற்கும் பலவுத்தரமாய்நின்று பொருடரத் தொடுப்பது. வினாவெண்பா - ஓர் நூல். வினாவெதிர்வினா - வினாவுக்குவிடையாய் வினாவுதல் (உ.ம்)உண்டாயோவென்றவழி உண்ணேனோ வென்பது. வினாவெழுத்து - வினாப்பொருடருமெழுத்து, அவற்றுள் எ, யா, ஏ,முதனிலை வினா ஆ, ஏ, ஓ, கடைநிலை வினா. வினியோகக்காரன் - கொடையாளன். வினியோகம் - பிரதிபலனை நோக்கியீதல். வினீதன் - தண்டிக்கப்பட்டவன்,வினையமுள்ளவன். வினை - இரண்டு, ஊழ், கருத்து,கள்ளம், தொழில், போர், வஞ்சகம், செய்கை, பொல்லாங்கு. வினைக்கேடு - செயலறல், தாமதம். வினைசாதித்தல் - வினைபாராட்டல். வினைச்சொல் - இடம், கருவி கருத்தாசெயப்படுபொருள் செயல் காலம்எனுமிவைகளை விளக்கி நிற்குஞ்சொல். வினைஞர் - கம்மாளர், கூத்தர்,சூத்திரம், செயலாளர், மருதநிலமாக்கள். வினைதீர்த்தல் - விக்கினந் தீர்த்தல். வினைதீர்த்தான் - விநாயகன். வினைத்தொகை - பெயரெச்சத்தின்விகுதி யிடைநிலைகடொக்குநிற்கப் பதம் வந்து புணரும்புணர்ச்சி (உ.ம்) விடுசரம். வினைபாராட்டல் - வினையழுத்தல். வினைப்பகுதி - வினையிற் பகாப்பதமாய் முதனிற்கு முறுப்பு. வினைப்பகாப்பதம் - செய்யென்னும்வாய்பாட்டல் வருமுதனிலைவினை. வினைப்பகுபதம் - பகுதி முதலியவுறுப்புக்களாற் பிரிக்கத்தக்கவினைச்சொல். வினைப்பயன் - முன்வினைப்படிவந்தபலன். வினைமுதல் - கருத்தா. வினைமுதற்பொருள் - தொழிற்காரணம். வினைமுறுகுதல் - வினைமூளுதல். வினைமுறுக்குதல் - வினைமூட்டுதல். வினைமுற்று - பொருள் இடமுதலிய ஆறன்புடை பெயர்ந்துசெய்ப வன் முதலிய ஆறையும்பெரும் பாலுந் தோற்றி முடியும்வினை, (இவற்றுள்) தெரிநிலைவினை முற்று பொன், வயல்,வேணல், கரம், பசப்பு, பிறப்புஎன்பவற் றோடு நீண்டது எனவொட்டிக் காண்க, குறிப்புவினைமுற்று அவன்பொன்னினன், புறத்தன்,ஆதிரையான், தாளன், கரியன்,நடையன் (இவை போல்வன). வினையம் - வஞ்சம், விநயம், செயல்.வினையழுத்தல், வினையளத்தல் - வினைபாராட்டல். வினையாளர் - ஏவல் செய்வோர், ஓர்தொழிலிற் றலைப்பட்டோர். வினையியற்சொல் - செந்தமிழ்நிலத்து மொழிகளாய் உலகவழக்கினுஞ் செய்யுள் வழக்கினுநின்று தம் பொருளை யியல்பாகவிளக்கும் வினைச்சொல். வினையிலி - கடவுள். வினையுரைப்போர் - தூதர். வினையுவமம் - தொழிலையே யுவமமாக வெடுத்துக் கூறுவது (உ.ம்)தீப்போற்றீயன். வினையெச்சக்குறிப்பு - தொழில்தோன்றாது வினையெச்சம்போல நின்று பிறிது வினையோடுமுடிவது (உ.ம்) அன்றி இன்றிஎன்பவற்றோடு நின்றார் எனவொட்டிக்காண்க. வினையெச்சம் - பிறிதோர் வினையொடு முடிய அவாவிநிற்கும்வினைச்சொல், இதில் தெரிநிலைவினையெச்சம் செய்து, செய்பு,முதலிய வாய்பாட்டான் வருவன,குறிப்பு வினையெச்சம் அன்றி,இன்றி முதலியன. வினையெஞ்சணி - ஓரலங்காரம் அதுவினையெஞ்சிநிற்பது. வினைவயிற்பிரிதல் - அகப்பொருட்டுறை யினொன்று. வினைவர் - வினைஞர். வினைவழிச்சேறல் - அகப்பொருட்டுறையினொன்று. வினைவளர்த்தல் - வினை பாராட்டல். வினைவிநாசன் - கடவுள். வினைவிளத்தல் - பொல்லாங்குசெய்தல். வினோதம் - அவா, அழகு, எதிரிடை,சந்தோஷம், தள்ளுதல், தொழில்,பொழுது போக்கல், மகத்துவம்,விளையாட்டு. வினோதன் - பொழுது கழிப்போன். வினோதி - ஒன்றிலே பொழுது கழிப்போன். வின்னம் - அரியப்பட்டது, கிடைத்தல், தடை, பங்கப்பட்டது. வின்னா - கடுகுரோகிணி. வின்னாண் - விற்பூட்டுங்கயிறு. வின்னூலாளன் - துரோணாசாரியன். வின்னூல் - வில்லாச்சிரம வித்தை. வீ வீ - ஓரெழுத்து, கருப்பந் தரித்தல்,சாவு, செல்லுதல், நீக்கம், பறவை,பூ, போதல், முன்னிலை யசைச்சொல், விரும்புதல், வீயென்னேவல், கேடு, ஒழிவு. வீகம் - காற்று, பட்சி, பூட்டு,மோதிரம். வீகாசம் - ஆடம்பரம், தனிமை. வீகோத்திரன் - சூரியன். வீக்கம் - ஓர்வியாதி, ஆசை, கட்டு,பூரிப்பு, மிகுதல், வீங்குதல்,பெருமை. வீக்கு - கட்டு. வீக்குதல் - அழிக்குதல், கட்டல்,முறுக்குதல். வீங்கல் - நித்திரை செய்தல், பருத்தல், மிகுதல், வீக்கம், வீங்க லாள்,பொதிதல், இறுகுதல். வீங்கி - சேங்கொட்டை, பேராசையுள்ளோன், வீங்கையாள். வீங்குதல் - வீங்கல். வீங்கை - அசைதல், ஆடல், குதிரை, நடை. வீசகணிதல் - அட்சரகணிதம். வீசகா - வேங்கை. வீசகோசம் - கொட்டை, தாமரைக்கொட்டை. வீசமாதிருகை - வீசகோசம். வீசம் - அவசியம், ஓரெண், ஓரணிதம், ஓர் மந்திரம், கொட்டை,சத்தியம், சுக்கிலம், நெல்லிடைப்பொன், மாகாணி, மூளை, மூலம்,வித்து, காரணம். வீசயனம் - விசாரணை. வீசல் - அடித்தல், ஈதல், எறிதல்,பரவல், மோதல், வீசல், சிதறுதல். வீசனம் - சிற்றாலவட்டம், பொருள்,விசிறி. வீசாட்சரம் - மந்திரமூலம். வீசி - அலை, அற்பம்,இளைப்பாற்றி, கிரணம்,சந்தோஷம், வீசத்தை யுடையது,சதகுப்பை, சுகம். வீசிமாலி - சமுத்திரம். வீசிதரங்கம் - ஓர் நியாயம். வீசுகாலேணி - ஓரேணி. வீசுதல் - வீசல். வீசுதவர் - ஓர் துறப்பணம். வீசுவில் - வீசுதவரின்வில். வீசுவிற்குடம் - வீசுதவரின்குடம். வீசை - ஓர்நிறை, மீசை, வாழை. வீசோதகம் - ஆலாங்கட்டி. வீசோதகிருட்டம் - நல்விதை. வீச்சம் - நாற்றம். வீச்சு - அடி, ஆட்டம், எறிதல், ஓர்நோய், பூமி, வலி, வீசுதல். வீச்சைக்காரன் - செலவுகாரன். வீச்சுக்காரி - செலவுகாரி, வேசி. வீச்சுக்கொள்ளுதல் - வலி கொள்ளல். வீச்சுவலை - ஒர் வலை. வீச்சேணி - வீசுகாலேணி. வீஞ்சுதல் - அதிக கிரயங் கேட்கல். வீடணன் - விபீடணன். வீடல் - சாதல், விடுதல். வீடாரம் - வீடு, பாசறை. வீடாவழி - வீட்டுக்கு வீடு. வீடி - கொத்தான், தாம்பூலம். வீடிகை - கட்டு, தாம்பூலம், வெற்றிலை. வீடில் - பாய்மரம். வீடு - ஒன்று, மனை, மோக்கம்,விடுதல், வீடென்னேவல், முடிவு. வீடுகாணல் - மீட்டல். வீடுகொள்ளல் - மீட்டல். வீடுதூங்கி - தூக்குணி. வீடுநெறிப்பால் - ஓர் நூற் பகுதி. வீடுமன் - பீஷ்மன். வீடுவிலக்கம் - மகளிர் சூதகம்.வீட்சணம், வீட்சணை - பார்த்தல்,பார்வை, விழுதல். வீட்சம் - அதிசயம். வீட்சிதம் - பார்வை. வீட்சியம் - அதிசயம், காணப்பட்டது. வீட்டாள் - மனைவி, வீட்டு வேலைக்காரி. வீட்டுக்கிரியை - சாச்சடங்கினொன்று. வீட்டுக்குத்தூரம் - மகளிர் சூதகம். வீட்டுதல் - கொல்லல். வீட்டுநெறி - முத்தி மார்க்கம். வீட்டுநெறிப்பால் - அறப்பாலினொன்று. வீட்டுப்பூனை - இற்புலி. வீட்டுமம் - வைராக்கியம். வீட்டுமன் - பீஷ்மன். வீட்டுமாசாரி - பீஷ்மாசாரி. வீட்டுமுன்கட்டு - முன்கட்டு வீடு.வீட்டுவாடகை, வீட்டுவாடை - வீட்டிலிருப்போர் கொடுக்குங் கூலி. வீட்டுவிசாரணை - உக்கிராணம். வீட்டுவீரன் - வீட்டி லிருந்து வீரம்பேசியும் வெளியில் அஞ்சுவோன். வீட்டுள்ளார் - உள்ளிட்டார். வீஷ்மம் - வீட்டுமம். வீஷ்மாசாரி - சந்தனுவின் புத்திரன். வீணன் - விருதாவி. வீணாகரணம் - வீணை வாசித்தல். வீணாகானபுரம் - யாழ்ப்பாணம். வீணாகானம் - வீணை நாதம். வீணாசியன் - நாரதன். வீணாட்டம் - வீண் பிரயாசம்.வீணாதண்டம், வீணாதண்டு - முள்ளெலும்பு, வீணைக் கழுத்து,முது கெலும்பு. வீணாவாதன் - யாழ்ப்பாடி. வீணாள் - விருதாவி. வீணானுபந்தம் - வீணையி னடிப்பக்கம். வீணை - ஓசையாழ், கலைஞானமறுபத்து நான்கினொன்று,மின்னல். வீணையியக்கல் - வீணையிலேபாடுதல். வீணைவல்லோர் - கந்தருவர். வீணைவாசித்தல் - வீணையியக்கல். வீண் - பயனின்மை. வீண்பத்தி - அவபத்தி. வீதகவ்வியன் - ஓர் முநிவன். வீதசோகம் - அசோகு. வீதபயன் - விஷ்ணு. வீதம் - அவிழ்த்துவிடப்பட்டது,இட்டமானது, சமாதானம்,பங்கு, முறை, மிதம், வேறுவேறாய்ப் பகுத்த பகுப்பினளவு,நட்பு, விழுக்காடு. வீதராகம் - பற்றின்மை, விஷமம்,வைராக்கியம். வீதராகர் - பற்றற்றவர். வீதராகன் - பற்றற்றவன், புத்தன். வீதல் - கெடுதல், சாதல், வறுமை,நீங்குதல், விடுதல். வீதன் - சாந்தன். வீதி - ஒழுங்கு, கடைவீதி, குதிரை,சுத்தி பண்ணல், தெரு, நாடகவகை பத்தினொன்று, நேரோடல், பிரபை, மேடை, வரி, வழி,விசாலம், வையாளி வீதி, அகலம்,போதல். வீதிகோத்திரம் - அக்கினி. வீதிகோத்திரன் - அக்கினி, சூரியன். வீதிக்குதல், வீதித்தல் - பங்கிடுதல்,விசாலித்தல். வீதியங்கம் - சம்பாஷணை. வீதிவண்ணச்சோலை - ஓர் புடைவை. வீத்துகம் - சதகுப்பை, வெள்ளரி. வீநாகம் - கூவற்சுவர். வீபணி - கடைவீதி. வீபத்து - சந்திரன். வீபற்சு - அருச்சுனன். வீப்பகழி - புட்பாத்திரம், மன்மதன்கணை. வீமசேனன் - தமயந்தியின் பிதா,பஞ்ச பாண்டவரி லொருவன். வீமதேவன் - பன்னோருருத்திரரிலொருவன். வீமம் - பயங்கரம், பருமை. வீரகண்டாமணி - வீரத்தாற்கட்டுமணி. வீரகத்தி - வீரரைக்கொன்ற பழி. வீரகம் - மீன், அலரி. வீரகவி - அரிச்சந்திர புராணமியற்றியவர். வீரகன் - சுத்தக் கிரகாக்கினியைத்தணிய விட்ட பார்ப்பான். வீரகுடியான் - பதினெண் குடிமையி னொருவன். வீரகெம்பீரம் - மிகுவீரம். வீரகேயூரம் - இருப்புத்தோளணி. விரகச்சு - புலித்தோற்கச்சு. வீரக்கடகம் - மிருகவேட்டை யாடினவீரர்க்குக் கொடுக்குங் காப்பு. வீரக்கவசம் - வயிரமணியான் மார்பிலணியுஞ் சீரா. வீரக்கழல் - கொடையாலும் வீரத்தாலுங் கட்டுங்கழல், வீரகண்டாமணி. வீரக்குட்டி - வீரவான். வீரக்குழல் - முன்கையிலணியுமிருப்புக் கவசம். வீரக்கொடி - வெற்றிக்கொடி. வீரங்காட்டுதல் - சூரங் காண்பித்தல்,சௌரியங் காண்பித்தல். வீரசயந்திகை - யுத்தம், யுத்த வீரரதுநடனம். வீரசல்லாபம் - வீரக்களிப்பாற் பேசிக்கொள்ளும் பேச்சு. வீரசாகி - சேமரம். வீரசு - ஆண்பிள்ளையின்றாய்,வீரன்றாய். வீரசூரம் - மிகுவீரம். வீரசூரன் - அதிவீரன். வீரசூலம் - போரிலேற்றவ ரீரலைச்சூலத்தாற் குற்றிப்பிடுங்கின வீரன்விருது. வீரசெல்வி - துர்க்கை. வீரசேனசன் - நளராசன். வீரசேனன் - நளராசாவின் பிதா. வீரசைவம் - ஓர் சமயம். வீரசைவர் - இலிங்கதாரிகள். வீரசொற்கம் - போரிலிறக்கும் வீரர்சேரும் பதவி. வீரச்சலங்கை - ஒற்றைக்காலிலணியும்பொற்சலங்கை. வீரச்சொல்லி - துர்க்கை. வீரட்டம் - ஓர் சிவதலம். வீரட்டாணம் - கூத்தின் விகற்பம். வீரட்டானம் - ஓர் சிவஸ்தலம். வீரணம் - இலாமிச்சம் வேர். வீரணி - மிளகு, விலாமிச்சை. வீரதச்சுவன் - மன்மதன். வீரதண்டை - வீரத்தாலணியுந்தண்டை. வீரதத்துவம் - வீரத்தன்மை. வீரதரம் - அம்பு. வீரதரன் - அதிவீரன். வீரதராசநம் - வில். வீரதரு - மருது, விடத்தேர். வீரதுரந்தரன் - மகா வீரன். வீரதை - வீரம். வீரந்தட்டி - வான்றோற் பட்டை. வீரந்தரம் - மயில், மார்ச்சட்டை. வீரபட்டிகை - வீரம் புலப்படுமாறுநெற்றியிலணியும் பட்டம். வீரபத்திரம் - அசுவமேதக் குதிரை. வீரபத்திரன் - அசுவமேத யாகத்துக்கேற்ற குதிரை, உருத்திர மூர்த்திகளிலொருவன், சிவகணத்தொருவன், வீரவான். வீரபத்தினி - கண்ணகி. வீரபாஹு - விஷ்ணு. வீரபட்டயம் - வெற்றி பெற்ற வீரர்நெற்றியி லணியும் பொற் றகடு. வீரப்பாடு - வெற்றி. வீரபாணக்குழாய் - வீரபாணம்வைத்திருக்கும் குழல். வீரமகரம் - கடல் கடந்து பகைவரூரைக் கைப்பற்றிய தேர்வேந்தர்முன்பாகப் பிடிக்கும் விருது. வீரமாகாளர் - ஐயன் படைத் தலைவன். வீரமார்த்தாண்டன் - நவசக்தி புத்திரரிலொருவன். வீரமாலை - வெற்றி பெற்று வாங்கும்பொன்மணிமாலை. வீரமுட்டி, வீரமுஷ்டி - வீர சைவத்துருத்திர வேடம் பூண்டு சமயப்பாதுகாவலனா யிருப்போன். வீரமுத்திரிகை - சுண்டு விர லணி. வீரம் - இஞ்சிக் கிழங்கு, ஓரத்தி,ஓரலங்காரம் அது வீரந்தோன்றக்கூறுவது, ஒர் மருந்து, கஞ்சி,சிவாகம விருபத்தெட்டினொன்று,பெலன், மலை, மிளகு, மேன்மை,வலி, வீரா தனம், வீரியம்,பராக்கிரமம், வேகம்.வீரம்பேசல், வீரம்பேசுதல் - வீம்புபேசுதல். வீரயாகம் - வீரபத்திரருக்குச் செய்யுமோர் வேள்வி. வீராதம் - அம்பு. வீரரேணு - வீமசேனன். வீரர் - படை வீரர். வீரலட்சுமி - அட்டலட்சுமிகளினொருத்தி. வீரவாகு - முருகவேள்கணத் தலைவன். வீரவாரம் - வெட்சிமாலை முதலியன. வீரவாளி - ஓர் புடவை. வீரவிருட்சம் - சேமரம். வீரவெட்சிமாலை - ஓர் பிரபந்தம்அது நிரைகோடற்கு வெட்சிப்பூமாலை சூடிப்போய் நிரைகவர்ந்துவரி லவனுக்கு முன்புதசாங்கம் வைத்துப்போய் வந்தவெற்றியைக் கூறுவது. வீரவெண்டயம் - வீரகண்டா மணி. வீரவெறி - வீரத்தாலாயமதர்ப்பு. வீரனாதன் - மூன்றா மிடத்திற்குடையவன். வீரன் - அருகன், ஓமாக்கிணி, கூத்தாடி, திண்ணியன், தீ, வீட்டுமாசாரி, படைத்தலைவன்,மூன்றா மிடத்திற் குடையவன். வீராசனம் - நாடகவகை பத்தினொன்று, போர்க்களம், முழந்தாளி னிற்றல், வீராதனம். வீராணம் - ஓர் வாத்தியம், நகரம்,நீர்க்கரை. வீராணிக்கிழங்கு - ஓர் கிழங்கு. வீராதனம் - வலத்தொடையி லிடக்காற்பரட்டைச் சேர்த்தியிறுமாப்புற் றிருத்தல். வீராதிவீரன் - மிகுவீரன். வீராப்பு - பொருமல். வீராய்தல் - அகலல், சுற்றி விசாரித்துச்சம்பாதித்தல். வீராவளி - வீராவேசம். வீராவேசம் - வீரவெறி. வீரி - காளி, துர்க்கை, வட்டத்திருப்பி, வீரமுடையவள், பங்கம்பாழை. வீரிடம் - நாவல். வீரிடுதல் - ஒலிக்குறிப்பு. வீரியம் - சுக்கிலம், தைரியம், பறைப்பொது, பிரபை, மகத்துவம், வலி,விந்து, வீரம், பலாக்கிரமம். வீரியர் - வீரர். வீரியவான் - வீரமுடையோன். வீருதம் - மிடைதூறு. வீரேசன் - சிவன். வீரேசுவரன் - மகா வீரன், வீரபத்திரன். வீரை - ஓர் மரம், கடல், துன்பம்,மனைவி, மாதா, வாழை, வட்டத்திருப்பி, நெல்லி, முந்திரிகை. வீரைச்செடி - ஓர் செடி. வீரைவெளியனார் - புறநானூறுபாடிய புலவரி லொருவர். வீர்யஜன் - புத்திரன். வீர்வீரெனல் - ஈரடுக்கொலிக் குறிப்பு. வீவதம் - கா, காத்தண்டு. வீவதிகன் - சுமை சுமப்போன். வீவு - சாவு, கேடு. வீழி - ஓர் செடி, விழுது, நீர்முள்ளி,விழுதிப் பழம். வீழுதல் - விழுதல். வீழ் - மரவிழுது, வீழென்னேவல். வீழ்கதி - நரகம். வீழ்க்கை - சோதிநாள், விருப்பம். வீழ்ச்சி - ஆசை, ஆசைப்படுதல்,ஆசைப் பெருக்கம், மேவல்,விழுதல், திரளுதல். வீழ்த்தல் - விழுவித்தல். வீழ்த்துதல் - விழுத்துதல். வீழ்நாள் - இழந்த நாள். வீழ்பிடி - குறைவு, வெறுப்பு. வீழ்வு - விழுதல், விரும்பல். வீளை - சத்தம், சீழ்க்கை. வீறல் - வீறுதல். வீறாப்பு - இறுமாப்பு, சினப்பு. வீறு - தனிமை, பிரகாசம், புண்ணியம், பெருமை, மருந்துச் சத்து,விளக்கம், வீறுதல், வீறென்னேவல், வெறுப்பு, வேகம்,பொலிவு, வெற்றி, வேறொன்றிற்கில்லா அழகு. வீறுகாட்டல் - பெருமை காட்டல். வீறுதல் - இழுத்தல், கீறதல், தனித்திருத்தல், பிரிதல், பீறுதல்,பெருமையுறுதல், விளங்குதல்,வெறுப்பாதல். வீற்றம் - வேறுபாடு. வீற்றிருக்கை - அரசிருக்கை. வீற்றிருத்தல் - சிறந்த ஆசனத்திருத்தல், தனித்திருத்தல், மகிழ்ந்திருத்தல், இறுமாந்திருத்தல், மேன்மையோடிருத்தல், வருத்தமின்றியிருத்தல். வீற்று - தனி, வளைவு, வேறுபாடு. வீற்றுவீற்று - வேறுவேறு. வெ வெஃகல் - ஆசைப் பெருக்கம்,விரும்பல். வெஃகா - கச்சித்திருப்பதிகளினொன்று. வெஃகாமை - வெறுப்பு, வேண்டாமை, விரும்பாமை. வெஃகுதல் - வெஃகல். வெகு - பல, பஹு. வெகுகரிஷாத்தம் - பருத்தல். வெகுசனத்துரோகம் - பல சனத்துரோகம். வெகுசனரட்சை - பல சன ரட்சிப்பு. வெகுசனவிரோதம் - வெகுசனப்பகை. வெகுசு - மிகுதி. வெகுச்சுருதம் - சிற்ப நூன் முப்பத் திரண்டி னொன்று. வெகுட்சி - கோபம், வெகுளுதல். வெகுண்டம் - கரும்பு. வெகுதானிய - பன்னிரண்டாவதாண்டு. வெகுத்தம் - அநேகம், மிகுதி. வெகுத்தல் - மிகுத்தல். வெகுத்துவம் - பன்மை, மகத்துவம். வெகுநாயகம் - வெகுபே ரதிகாரம். வெகுநியாயம் - வெளியரங்க பூசை. வெகுபத்திரி - அரிநெல்லி, கறிமுள்ளி, வட்டு. வெகுபிட்டம் - விரிவு. வெகுபுத்திரி - கீழ்காய்நெல்லி, துளசி. வெகுப்பு - மிகுதி. வெகுமஞ்சரி - துளசி. வெகுமதி - வெகுமானம். வெகுமாரி - மிகுதி, வெகு மழை. வெகுமானம் - உபசாரம், மிகுகனம்,சம்மானம். வெகுமானித்தல் - உபசரித்தல். வெகுமுகம் - பல கவர், பல நோக்கு,பல வழி. வெகுமூலம் - முருங்கை. வெகுரசம் - கரும்பு. வெகுரூபன் - ஓந்தி, சிவன், திருமால்,பிரமன், மதன். வெகுர் - உட்டணத்தால் வரும் பரு. வெகுலாங்கம் - ஆடுதின்னாப்பாளை. வெகுலாதி - சிற்றேலம். வெகுவாசமுடையயோகி - வசம்பு. வெகுளல் - வெகுளுதல். வெகுளாமை - கோபியாமை. வெகுளி - சினம் இது முக்குற்றத்தொன்று, மாயை யாக்கைபதினெண் குற்றத்து மொன்று. வெகுளிவிலக்கு - ஓரலங்காரம் அதுவெகுளி தோன்றக் கூறி விலக்குவது. வெகுளுதல் - கோபித்தல். வெகுள்வு - கோபம். வெக்காயம் - சூடு. வெக்காலி - ஓர் மரம். வெக்காளம் - மழை யில்லாக் காலம்,வெப்பியாரம். வெக்காளித்தல் - வானந் தெளிதல், வெப்பிராயப் படுதல். வெக்கை - காங்கை, நிலக்கொதிப்பு. வெக்கைநோய் - மிருகங்கள் நோயினொன்று, வைசூரி நோய். வெங்கண் - ஓர் மீன், பொறாமை,வைராக்கியம், கொடுமை. வெங்கதிர் - சூரியன். வெங்கலம் - சுடுகை யுள்ள பாத்திரம். வெங்களம் - போர்க்களம். வெங்காரம் - வெண்காரம், வெம்மையுடைய ஒருவகை யுப்பு. வெங்கார் - வேடை, சூடுடைய கருநிலம். வெங்கான்வெளி - கடுங்கானல்வெளி. வெங்கிணாத்தி - ஓர் பாம்பு. வெங்கிராயன் வெளி - கடுங்கானல்வெளி. வெங்கோஷ்டம் - ஓர் மருந்து. வெங்கோல் - கொடுங்கோல். வெங்கோன்மை - கொடுங்கோன்மை. வெச்சுவெந்நீர் - சுடு நீர். வெச்செனல் - வெம்மையாதல். வெச்செனவு - சூடு, வெம்மை. வெஞ்சமம் - பாலைநிலத் திராகம்,போர். வெஞ்சமன் - இயமன். வெஞ்சம் - கோபம், பழி. வெஞ்சனம் - கறி பதார்த்தம், சிற்றுண்டி, சுண்டற் குழம்பு. வெங்கிலைச் செல்வன் - வீரபத்திரன். வெஞ்சினம் - கடுங்கோபம். வெஞ்சுடர் - சூரியன். வெஞ்சுடர்க்கிரணன் - சூரியன். வெடி - அச்சம், இடி, கள், துப்பாக்கிமுதலியவற்றிற் பிறக்கு மொலி,நறுமணம், நறும்புகை, புகை,வெடியென்னேவல், வெளி, சிறேறேலம், ஒலி, பகை, முழக்கம், கேடு. வெடிக்கிரந்தி - ஓர்வகைக் கிரந்தி. வெடிகுண்டு - ஓர்வித வெடி. வெடிக்குதல் - வெடித்தல். வெடிசன்னி - சன்னி பேதத்திலொன்று. வெடிசூலை - ஓர் சூலை. வெடிச்சுடுதல் - வெடி வைத்தல். வெடித்தகுரல் - கடுந்தொனியானகுரல். வெடித்தசொல் - வெடுவெடுப்பானபேச்சு. வெடித்தல் - பிளத்தல், விள்ளுதல்,முழங்குதல், பகைத்தல், வீசுதல். வெடிபடல் - சிதறல். வெடிபலவன் - பேய்ப்பலவன். வெடிப்பாய்ப்பேசல் - வெறுப்பாய்ப்பேசல். வெடிப்பு - அதிகம், கமர், விள்ளுகை.வெடியுப்பு, வெடிலுப்பு - ஓருப்பு. வெடிலுப்புத் திராவகம் - ஓர் திராவகம். வெடில் - உறணாற்றம், வேட்டு. வெடுக்கன் - கோபி. வெடுக்கு - வெடில், வெட்டெனவு,வெட்டென வுள்ளது. வெடுக்கெனல் - கடுமைக் குறிப்பு. வெடுப்புக்காட்டுதல் - சினப்புக்கொள்ளுதல். வெடுவெடுத்தல் - கடுமையாயிருத்தல், கோபித்துப் பேசல். வெடுவெடெனல் - சினக் குறிப்பு. வெட்கக்கேடு - மான பங்கம். வெட்கம் - நாணம். வெட்கல் - அச்சக் குறிப்பு, நாணுதல்,வெட்குதல். வெட்குதல் - வெட்கல், வெள்குதல். வெட்கறை - இலச்சை. வெட்கிளுவை - கிளுவையினோர்பேதம். வெட்குவெட்கெனல் - வெட்கக்குறிப்பு. வெட்சி - ஓர் பூஞ்செடி, பகைநிரையோட்டுவார்க்கு மாலை. வெட்சிவிருப்பன் - முருகன். வெட்டல் - கொலை செய்தல், தறித்தல், நால்வகையூறுபாட்டினொன்று, மெய்ப்பரிசமெட்டினொன்று. வெட்டவெளி - ஏகவெளி, வெளியரங்கம். வெட்டறாமூலி - நத்தைச்சூரி. வெட்டனம் - காப்புக்கட்டல். வெட்டனவு - கடுமை, பலோற்காரம்,வெடுக்குத்தனம். வெட்டாந்தரை - கடுந்தரை. வெட்டி - இருவேலிச்செடி, வழி,வீண். வெட்டிப்பேசல் - கண்டித்துப் பேசுதல். வெட்டிமை - வெட்டியான்றொழில்,கொடுமை, கடுமை, சினம். வெட்டியான் - ஓர் பூச்சி, சவஞ்சுடுவோன், பறையன். வெட்டிரும்பு - இரும்புவெட்டுமோருளி. வெட்டிவீரன் - சுத்தவீரன். வெட்டிவேர் - இருவேலிவேர். வெட்டு - ஓரூறு, வெட்டுதல். வெட்டுக்கன்று - வரைகன்று. வெட்டுக்கிளி - ஓர் பூச்சி. வெட்டுணி - தப்பிலி. வெட்டுண்ணல் - வெட்டப்படுதல். வெட்டுப்படுதல் - வெட்டுண்ணல். வெட்டுதல் - வெட்டல். வெட்டுத்தட்டு - பறையின் வாய்வார். வெட்டுமாறன் - வெற்றியுள்ள ஓர்வஸ்து. வெட்டுரை - வெடுவெடுப்பானபேச்சு. வெட்டுரைப்பணம் - கள்ள நாணயம். வெட்டுவாய் - தறிவாய், பொருத்து. வெட்டுவாள் - ஓர் வாள். வெட்டுவெட்டெனல் - கடுமைக்குறிப்பு. வெட்டுவேளாண்மை - தானியமறுப்பு. வெட்டெனல் - கடுமைக்குறிப்பு. வெட்டெனவு - கடுமை. வெட்டேறு - ஓர் கருவி. வெட்டை - உட்டணம், ஓர் நோய்,கடினம், நிலக்கொதி, வெளி,வெறுமை. வெட்டைவெளி - வெறுவெளி. வெட்பகடம் - வெளிப்பகடம். வெட்பாடம் - வாய்ப்பாடம். வெட்பாலை - ஓர் மரம், குடசம். வெட்பாவட்டை - ஓர் பாவட்டை. வெட்புக்கார் - கருக்கொள்ளாமுகில்,வெண்முகில். வெட்பூல் - ஓர் பூல். வெண்பா - வெள்ளை. வெண்கடம்பு - ஓர் கடம்பு. வெண்கடுகு - ஓர் கடுகு, சிற்றரத்தை,ஐயவி, கடிப்பகை. வெண்கண் - வெங்கண்.வெண்கதிரோன், வெண்கதிர் - சந்திரன். வெண்கமலை - சரசுவதி. வெண்கலம் - செம்பும் வெள்ளீ யமும் கலந்த ஒருலோகம். வெண்கலி - கலித்தளையும் வெண்டளையும் விரவியும் அயற்றளையருகியும் வந்து ஈற்றடிமுச் சீரானிறுவது. வெண்கல் - வெள்ளைக்கல். வெண்கவி - பொருளாழமில்லாதபாட்டு, வெண்பா. வெண்காக்கணம் - வெள்ளைக்காக்கணம். வெண்காசம் - கண்ணோயு ளொன்று. வெண்காடு - ஓர் சிவதலம். வெண்காந்தள் - ஓர் கொடி. வெண்காயம் - உள்ளி, ஓர் காயம். வெண்காரம் - ஓர் காரம். வெண்காரை - வெள்ளைக்காரை.வெண்கிடை, வெண்கிடைச்சி - ஓர்கிடைச்சி. வெண்கிளி - வெள்ளைக்கிளி. வெண்குங்கிலியம் - வெள்ளைக்குங்கிலியம். வெண்குட்டம் - ஓர் நோய். வெண்குமுதம் - வெள்ளாம்பல். வெண்குன்றி - அதிமதுரம். வெண்கூதாளம் - ஓர் செடி, நீர்த்தாளி. வெண்கூவெண்பா - இனவெழுத்துமிக்கிசைப்பது. வெண்கொடிவேலி - ஓர் பூடு. வெண்கொல் - வெள்ளி. வெண்கொற்றக்குடை - தவளச்சத்திரம். வெண்கோட்டம் - ஓர் செடி. வெண்சலசமுற்றாள் - சரச்சுவதி. வெண்சலசம் - வெண்டாமரை.வெண்சாமரம், வெண்சாமரை - வெள்ளைச்சாமரம். வெண்சாரை - இந்திரியம், வெள்ளைச்சாரை. வெண்சீர் - மூவசை நேரீற்றுச்சொல். வெண்சீர்வெண்டளை - காய் முன்னேனும் பூமுன்னேனும்நேரொன்றி வரும் பந்தம். வெண்சுக்கான்கல் - ஓர் உபாசம். வெண்சுடர் - சந்திரன். வெண்செந்துறை - இரண்டிகள்தம்முள்ளொத்து விழுமியபொருளு மொழுகியவோசையுமாய் வரு வது. வெண்டகரை - ஓர் பூடு. வெண்டயம் - வெண்டையம். வெண்டலை - தலையோடு. வெண்டல் - காய்தல். வெண்டளை - வெண்பாவுக்குரியபந்தம், இது வெண்சீர்வெண்டளை இயற்சீர் வெண்டளையென விருவகைப்படும். வெண்டாது - வெள்ளி. வெண்டாமரை - ஓர் தாமரை. வெண்டாமரையாள் - சரச்சுவதி. வெண்டாவி - அன்னக்களை. வெண்டாழிசை - வெண்பா வினங்களினொன்று, அது மூன்றடியாய்முதலிரண்டடியு நாற்சீராயும்ஈற்றடி யொன்றும் வெண்பாவைப்போல முச்சீராயும் முடிவுபெற்று வேற்றுத்தளை விரவிவருவது. வெண்டாழை - ஓர் தாழை. வெண்டாளி - இடைச்சங்க நூல்களிலொன்று. வெண்டி - விறுதா. வெண்டிக்காய் - வெண்டைக்காய். வெண்டு - உட்டுளை, கடுக்கன்புரி. வெண்டுறை - வெண்பா வினங்களினொன்று, அது மூன்றடிமுதலேழடி யீறாகப் பின்புநின்ற சிலவடிகளிற் சில சீரடி குறைந்துவருவது. வெண்டேர் - கானல். வெண்டைக்காய் - ஓர் காய். வெண்டையம் - ஓர் சிறுமணி. வெண்டோன்றி - வெள்ளைத்தோன்றி மலர். வெண்ணஞ்சு - நிணம். வெண்ணாங்கு - ஓடைக்கொடி, ஓர்மரம். வெண்ணாந்தை - வெள்ளாந்தை. வெண்ணாயுருவி - ஓர் செடி. வெண்ணாரி - ஓர் பூடு. வெண்ணாரை - ஓர் கொக்கு. வெண்ணாவல் - ஓர் நாவல்.வெண்ணிக்குயத்தியார், வெண்ணிற் குயத்தியார் - ஒரு புலவர். வெண்ணிலம் - மணற்றரை, வெறுந்தரை. வெண்ணிலுவை - மென்புரட்டு. வெண்ணிலை - கைமாற்றுக்கடன். வெண்ணிறம் - வெள்நிறம், வெள்ளைநுரை. வெண்ணெய் - உருக்கா நெய். வெண்ணெய்சுறா - ஓர் சுறா. வெண்ணெய்தல் - ஓர் நீர்ப்பூ. வெண்ணெய்நல்லூர் - ஓர் சிவதலம். வெண்ணொச்சி - ஓர் நொச்சி,சிந்துவாரம், நீர்க்குண்டி. வெண்ணோ - ஓர் கண்ணோ. வெண்பதம் - இளம்பதம். வெண்பலி - சாம்பல். வெண்பா - ஓர்பா, அஃது ஈற்றடி முச்சீரடியாகவும் ஏனையடிநாற்சீரடி யாகவும் பெற்றுக்காய்ச் சீரு மகவற்சீரும் வெண்சீர்வெண் டளையுமியற்சீர்வெண்டளையுங் கொண்டுவருவது. வெண்பாட்டு - வெண்பா. வெண்பாப்புலி - ஓர் புலவர். வெண்பு - வெண்ணிலம், வெளிப்பு. வெண்புணர்ச்சிமாலை - தண்டகமாலை, அது வெண்பாவான்முந்நூறு செய்யுட் கூறுவது. வெண்புழுக்கு - இளம்புழுக்கு. வெண்பொன் - வெள்ளி. வெண்பொன்மலை - கைலாசகிரி. வெண்மட்டம் - கொத்துவேலையில்லாத செய்கை. வெண்மட்டவேலை - ஒப்புரவானவேலை. வெண்மணல் - வெள்ளைமணல். வெண்மணி - வெள்ளைவிழி. வெண்மதி - வெள்ளைச்செம்பு. வெண்மயிர் - சாமரம், நரைமயிர். வெண்மரி - வெள்ளாடு. வெண்மலை - கைலை. வெண்மீன் - வெள்ளி. வெண்மை - அறிவின்மை, இளமை,வெள்ளை, களங்கமின்மை. வெண்மொந்தன் - ஒர் வாழை. வெதரிவனம் - வதரிகாச்சிரமம். வெதிரம் - செவிடு. வெதிரேகம் - எதிர்மறை, பிரிவு,விலக்கு, விசேடம். வெதிரேகவனுமானம் - ஓரளவைப்பிரமாணம். வெதிரேகாலங்காரம் - ஓரலங்காரம்அஃது உவமான வுபமேயத்திற்பிரிவு தோன்றச் சொல்வது. வெதிர் - செவிடு, மூங்கில், வெதுப்பு. வெதிர்த்தல் - அஞ்சுதல், சினத்தல்,நடுங்குதல். வெதிரிப்பு - கலக்கம், நடுக்கம். வெதுக்கலன் - வெதும்பினவன். வெதுக்கல் - வெதுப்பல், வெதும்பலன். வெதுப்படக்கி - குப்பனை. வெதுப்பம் - ஓர் நோய், வெப்பம். வெதுப்பல் - வாட்டல். வெதுப்பி - ஒற்றைப்பேய் மிரட்டி. வெதுப்பு - சுரம், வெதுப்பென்னேவல், வேம்பு, வெம்மை. வெதுப்புதல் - வாட்டுதல், வெம்மையாக்கல். வெதும்பல் - சினக்குறிப்பு, வாடல்,வெதும்புதல். வெதும்புதல் - வாடல். வெதுவெதுத்தல் - இளஞ்சூடாயிருத்தல். வெதுவெதுப்பு - இளஞ்சூடு. வெந் - முதுகு. வெந்தயம் - ஓர் சரக்கு. வெந்தல் - வெந்தயம். வெந்தித்தல் - கொதிப்பு, சினப்பு. வெந்து - கிளை. வெந்துசனம் - சுற்றத்தார். வெந்தை - பிட்டு. வெந்தையம் - வெந்தயம். வெந்தோன்றி - ஆகாசக்கருடன். வெந்நிடுதல் - புறங்காட்டல். வெந்நீர் - சுடுநீர். வெப்பசாரம் - மனத்துயர், வெக்காளம். வெப்பம் - அசை, மனத்துயர்,வெந்திபு, வெம்மை, விருப்பம். வெப்பர் - வெம்மை. வெப்பித்தல் - வெம்மைகொள்ளுதல். வெப்பியாரம் - வெப்பசாரம். வெப்பு - ஓர் நோய், மனத்துயர்,வெம்மை, சுரநோய், நெருப்பு. வெப்புக்கட்டி - வெப்பினால் வயிற்றி லுண்டாகுங்கட்டி. வெப்புக்கொதி - வெப்பினாலுண்டான காய்ச்சல். வெப்புப்பாவை - வெப்புக்கட்டி. வெப்புவெப்பெனல் - கோபக்குறிப்பு,துயர்க்குறிப்பு. வெப்புள் - வெம்மை. வெம்பல் - பெருங்கோபம், வாடல்,விம்மல், வெக்காளித்தல், வெம்பலானது, வெம்புதல். வெம்பளிக்கை - வெம்பிளிக்கை. வெம்பிளாந்தி - ஏமிலாந்தி. வெம்பிளிக்கை - அகங்காரம். வெம்புதல் - கலங்குதல், சினத்தல்,வாடுதல், வெக்காளித்தல், ஒளித்தல்,கொதித்தல், விரும்புதல். வெம்மை - ஆசை, உட்டணம், எண்வகையூறி னொன்று, கடுமை,விரைவு. வெயிலுந்தரவிந்தம் - தாமரை. வெயிலெறித்தல் - ஒளிவீசல். வெயில் - ஒளி, சூரியகிரணம், சூரியன். வெயிற்குளித்தல் - வெயிலடியுணல். வெயிற்குளிர்தல் - சூரியகிரண வெம்மை தணிதல். வெய்து - வெம்மையுடையது, வெய்யது, விரைவு. வெய்துயிர்த்தல் - நெடுமூச்சுவிடல்,சுடு மூச்சு விடுதல், வெம்மைபோக்குதல். வெய்துரை - கடுஞ்சொல். வெய்துறல் - அச்சக்குறிப்பு, சினக்குறிப்பு, துன்பம். வெய்துறுத்தல் - வெய்தாக்கல். வெய்தெனல் - விரைவுக்குறிப்பு. வெய்யது - பொல்லாதது, வெம்மையானது. வெய்யநீர் - வெந்நீர். வெய்யவன் - கொடியோன், சூரியன்,மிருகசீரிடம், விருப்புற்றோன். வெய்யன் - கொடியவன், விரும்பினவன். வெய்யில் - சூரியகிரணம், வெயில். வெய்யோன் - வெய்யவன், விரும்புவோன். வெரிந் - முதுகு. வெரு - அச்சம். வெருகடி - பூனையடி. வெருகடிப்பிரமாணம் - மூன்று விரலாற் கிள்ளுமளவு. வெருகம் - விலங்கின் வாலின்கீழ். வெருகு - ஆண்பூனை, பூனை,மெருகு, காட்டுப்பூனை. வெருக்கொள்ளல் - அச்சமுறல். வெருட்சி - அச்சம், மயக்கம். வெருட்டல் - அச்சமுறுத்தல், மயக்கல். வெருட்டி - அச்சம், அச்சுறுவிப்போன், வெருட்டிய பொருள். வெருட்டு - அச்சுறுத்தல், வெருட்டென்னேவல், மயக்கம். வெருட்டுதல் - வெருட்டல். வெருணை - பாவட்டை. வெருவந்தம் - அச்சம். வெருவரல் - அஞ்சுதல். வெருவல் - வெருவுதல், அஞ்சுதல். வெருவிடல் - அஞ்சுதல். வெருவு - அச்சம், வெகுவென்னேவல். வெருவுதல் - அஞ்சல். வெருளல் - வெருளுதல். வெருளார்த்தல் - திகைத்தல், மயங்கல். வெருளி - அச்சமுடையது, அச்சமுறுவிப்பது, வெருட்சி, செல்வச்செருக்கு, மயக்கமுடையது. வெருளிகட்டுதல் - அச்சுறுத்தல்,வெருட்சிக்குறி. வெருளுதல் - அஞ்சுதல், மருளுதல்,மயங்குதல். வெருள் - அச்சம், உன்மத்தம், வெருளென்னேவல், மயக்கம். வெருள்வு - வெருட்சி. வெரூஉ - அச்சம். வெலவு - வெல்லல். வெலி - நீக்கல். வெலிகம் - கற்றாழை. வெலிகாரம் - வெண்காரம். வெலித்தி - கடித்தமில்லாதது, சீவல். வெலீஇயோன் - வெல்வித்தோன். வெல்லப்பாகு - வெல்லப்பாணி. வெல்லம் - கரும்பின்கட்டி. வெல்லல் - கசித்தல், சயித்தல். வெல்வி - சிற்றேலம். வெல்லுதல் - மேற்கொள்ளல். வெல்லுமா - புலி. வெல்வி - வெற்றி. வெல்லிது - வெய்து. வெல்லியன் - கோபி, வெப்பமுடையோன், கொடியவன். வெவ்வினை - போர். வெவ்வுயிர்த்தல் - பெருமூச்செறிதல். வெவ்வுரை - கடுஞ்சொல். வெவ்வுழவு - அடையாதவுழவு. வெவ்வேறு - வேறுவேறு. வெளி - ஆகாயம், புறம், மறைப்பில்லா வெளி, வெண்பா, வெளியிடம். வெளிக்கட்டு - வீட்டிற் புறக்கட்டு. வெளிக்காட்சி - வெளியான தோற்றம்,வெளித்தோற்றம். வெளிக்கிடல் - புறப்படல். வெளிசங்கம் - வெளியரங்கம். வெளிசம் - தூண்டில். வெளிச்சங்காட்டுதல் - ஒளி காட்டுதல், தீபங்காட்டுதல். வெளிச்சம் - பிரபை, வெளியரங்கம்,பகிரங்கம். வெளிதிறத்தல் - வெளிவிடுதல். வெளிது - வெண்மையுடையது, வெறிதானது. வெளித்தட்டு - பொறுப்பின்றிக்காரிய நடத்தல் வெளித்தல் - தெளிதல், வானம்வெளிவாங்குதல், விளங்குதல், வெறிதாதல், வெளிப்படல், பயனிலதாதல். வெளித்துமரம் - முருக்கு. வெளித்தோற்றம் - உள்ளொன்றுபுறம் பொன்றாயிருப்பது,உற்பத்தி, பிரத்தியட்சம். வெளிநாடுதல் - வெளியே காணப்படுதல். வெளிநாட்டம் - புறநோக்கம். வெளிபொருள் - வெளி யரங்கமானபொருள். வெளிப்பகடம் - உள்ளிருப்பதைமறைத்து நடப்பது, வீண் பகட்டு. வெளிப்பகட்டு - வெளிவெருட்டு.வெளிப்படல், வெளிப்படுதல் - தோற்றல்,வெளிவருதல். வெளிப்படுத்தல் - அறிவித்தல், வெளியாக்கல். வெளிப்படை - வெளியரங்கம், பகிரங்கம். வெளிப்படைச்சொல் - இயல்பாய்விளங்கி நிற்கு மொழி. வெளிப்படையுவமம் - வினையும்பயனும் உவமையுருபும் வெளிப்பட விளங்கி நிற்குமுவமம். வெளிப்பாடு - காணிக்கை, தோற்றம். வெளிப்பு - விலக்கம், வெளித்தல்,வெளியிடம். வெளிமடை - திரைச்சீலை, புறமடை. வெளிமான் - பெண்மான். வெளியரங்கம் - வெளிப்படை,பகிரங்கம். வெளியாகுதல் - வெளித்தல், வெளிவருதல், புலப்படுதல்.வெளியாக்கல், வெளியாக்குதல் - விளக்குதல், வெளி வரப்பண்ணுதல். வெளியாடை - தோரணம், புறவுடை. வெளியார் - மௌட்டியார், புல்லறிவாளர். வெளியிடல் - வெளிப்படுத்தல். வெளியிடில் - வெளிவாங்குதல். வெளில் - அணில், கட்டுத்தறி, தயிர்கடை மத்து, யானைத்தூண்,வெண்மை. வெளிவாங்குதல் - வெளித்தல். வெளிவாயன் - அந்தரங்கமற்றவன். வெளிவாய் - பரிகசியவாக்கு. வெளிவிடுதல் - வெளிப்படுத்தல். வெளிவிருத்தம் - வெண்பா வினங்களினொன்று அது மூன்றடியானேனு நான் கடியானேனுமுற்றுப்பெற்று அடிகளினிறுதிதோறும் தனிச்சொற் பெற்று வருவது. வெளிவேடம் - புறக்கோலம். வெளிறர் - அறிவில்லார். வெளிவல் - வெண்மையாதல். வெளிறு - அலிமரம், அறிவின்மை,நறுவிலிமரம், வயிரமில்லா மரம்,வெண்மை, வெளிறென்னேவல்,இளமை, குற்றம், பயனின்மை,, உள்ளீடின்மை. வெளிறுதல் - வெளிறல். வெளிற்றுக்குணம் - விநயமில்லாதகுணம். வெளிற்றுமரம் - அலிமரம், முருக்கு. வெளிற்றுரை - பொருணயமின்றியசொல். வெளுத்தல் - ஓர்மரம், வெள்ளையாக்கல், வெள்ளையாதல். வெளுப்பு - விடியல், வெண்மை,வெளுத்தல். வெளுவெளுத்தல் - மிகவும் வெளிறுதல். வெளுவெளுப்பு - நோயடைந்தவெண்மை. வெளுவை - வெளுத்தல். வெளேரெனல் - வெண்மைக் குறிப்பு. வெள்கல் - அச்சம், வெட்கம், வெட்குதல், குலைதல், வெண்மையாதல். வெள்வரி - பலகறை. வெள்வவ்வால் - ஓர் மீன். வெள்வாடை - சிறுவாடை. வெள்வெடி - சத்தவெடி. வெள்வெங்காயம் - வெள்ளுள்ளி. வெள்வெட்சி - ஓர் பூடு. வெள்வெற்றிலை - வெள்ளைவெற்றிலை. வெள்வேல் - ஓர் மரம். வெள்ளக்காடு - பெருவெள்ளம். வெள்ளடி - வெருட்டு. வெள்ளடிச்சேவல் - கத்திகட்டாமலடிக்குஞ் சேவல். வெள்ளடை - வெள்வெற்றிலை. வெள்ளணிநாள் - பிறந்தநாள். வெள்ளணியணிந்து விடுத்தல் - அகப்பொருட்டுறையினொன்று. வெள்ளப்பாடு - பள்ளம், வெள்ளம்பிடிப்பதினால் வருஞ்சேதம். வெள்ளம் - ஓரெண், கடல், நீர்ப்பெருக்கு, மிகுதி, கடற்றிரை, நீர்,ஈரம். வெள்ளரசு - ஓரரசு. வெள்ளரணை - சீலைப்பேன். வெள்ளரவம் - ஆதிசேஷன். வெள்ளரி - ஓர்கொடி, கருவாசம். வெள்ளலரி - ஓர்பூமரம். வெள்ளல்லி - வெள்ளாம்பல். வெள்ளழுகல் - அழுகிவெண்ணிறம்பிடித்தது. வெள்ளறிவன் - அறிவீனன். வெள்ளறிவு - அவிவேகம். வெள்ளறுகு - ஓர்பூடு. வெள்ளாடு - ஓர் வகையாடு. வெள்ளாட்டி - ஏவற்பெண். வெள்ளாண்மை - கிருஷி, பயிர்த்தொழில். வெள்ளாந்தை - ஓராந்தை. வெள்ளாப்பு - வைகறை. வெள்ளாம்பல் - ஓராம்பல், அல்லி. வெள்ளாவி - வெறுமாவி. வெள்ளாவிதட்டுதல் - ஆவிபிடித்தல். வெள்ளாவிரை - ஓராவிரை. வெள்ளாவிவைத்தல் - ஆவிபடவைத்தல். வெள்ளாளர் - பூவைசியர், மருத நிலமாக்கள். வெள்ளானை - ஐராவதம். வெள்ளி - சுக்கிரன், வெண்பொன்,வெண்மை, விண்மீன். வெள்ளிக்காசு - ஓர்மீன். வெள்ளிக்கால் - வெள்ளிக்கோல். வெள்ளிக்கிழமை - சுக்கிரவாரம். வெள்ளிக்கோல் - ஓர் நிறைகோல். வெள்ளிடி - மழைக்குணமில்லாமல்விழுமிடி. வெள்ளிடை - வெளி. வெள்ளித்தோற்றம் - சுக்கிரோதயம். வெள்ளிநகம் - கைலாசம். வெள்ளிநிமிளை - ஓர் நிமிளை. வெள்ளிப்பிரிவு - சுக்கிரனிருந்தவிராசி விட்டுப்பிரிதல். வெள்ளிமடந்தாள் - ஓர் மீன். வெள்ளிமலாம் - ஓர் மலாம். வெள்ளிமலை - கைலைமலை. வெள்ளிலை - வெற்றிலை. வெள்ளிலோத்திரம் - ஓர் மருந்து,விளாம்பட்டை. வெள்ளில் - பாடை, விளாமரம். வெள்ளிவாயில் - ஓரூர். வெள்ளிவீதியார் - திருவள்ளுவமாலை சொல்லிய கடைச்சங்கப்புலவரிலொரு மெல்லியவார். வெள்ளிறகுமந்தாரை - ஓர் மந்தாரை. வெள்ளிறால் - ஓர்வகை யிறால். வெள்ளீயம் - ஓரியம். வெள்ளீரல் - மணிக்குடர். வெள்ளுப்பு - ஓருப்பு. வெள்ளுழவு - புழுதியுழவு. வெள்ளுளுவை - ஓர் மீன். வெள்ளுள்ளி - ஓருள்ளி. வெள்ளுறட்டி - ஓர் பண்ணிகாரம். வெள்ளூமத்தை - ஒரூமத்தை. வெள்ளூக்காப்பியனார் - இடைச்சங்கப் புலவருளொருவர். வெள்ளெருக்கு - ஓரெருக்கு. வெள்ளெலி - ஓரெலி. வெள்ளெலும்பு - தசைகழிந்த வென்பு. வெள்ளெழுத்து - கண் புகைச்சல்,பார்வைக்கு வெளிதாய் நிற்குமெழுத்து. வெள்ளெள் - ஓரெள். வெள்ளென - காலம்பெற. வெள்ளெனல் - வெண்மையாதல்,வெளியாதல். வெள்ளேடு - எழுதாவேடு. வெள்ளேறன் - பகுதான இரும்பு. வெள்ளை - ஆழமான கருத்தில்லாதது,சங்கு, சுண்ணாம்பு, பலபத்திரன்,மேற்கட்டி, வெட்டை, வெண்பா,வெண்மை, வெள்ளாடு, வெள்ளாட்டு மறி, வெள்ளி, வேங்கை,வெண்ணிறப்பொருள், புல்லறிவாளன், புல்லறிவு, எருது, கள். வெள்ளைகட்டுதல் - மேற்கட்டிகட்டுதல். வெள்ளைக்கரு - முட்டையிற் சிவப்புக்கருவின் புறக்கரு. வெள்ளைக்கவி - புன்சொற்கவி. வெள்ளைக்காகம் - வெண்காக்கை. வெள்ளைக்காக்கணம் - ஓர்கொடி. வெள்ளைக்காரர் - வெள்ளை மனிதர். வெள்ளைக்காரை - ஓர் செடி. வெள்ளைக்கிளி - ஓர் கிளி. வெள்ளைக்கீரி - இராசகீரி. வெள்ளைக்கீரை - ஓர் வகைக்கீரை. வெள்ளைக்குங்கிலியம் - ஓர் மருந்து. வெள்ளைக்குடிராகனார் - ஒருபுலவர். வெள்ளைக்குன்றி - அதிமதுரக்கொடி. வெள்ளைக்குன்றிமணி - ஓர் குன்றிமணி. வெள்ளைக்கொம்பு - நரைமயிர். வெள்ளைக்கோட்டி - புல்லறிவாளர்சபை. வெள்ளைச்சாரணை - ஓர் சாரணை. வெள்ளைச்செவ்வந்தி - ஓர் செவ்வந்தி. வெள்ளைநாவல் - ஓர் நாவல். வெள்ளைநிறத்தாள் - சரச்சுவதி. வெள்ளைநெல் - ஓர்நெல். வெள்ளைபுரளுதல் - மல்லாக்காய்க்கிடத்தல். வெள்ளைப்பவளம் - வெள்ளைப்போளம். வெள்ளைப்பாகல் - ஓர் பாகல். வெள்ளைப்பாட்டு - வெண்பா. வெள்ளைப்பாஷாணம் - ஒர் பாஷாணம். வெள்ளைப்பிள்ளை - வஞ்சகமற்றவன். வெள்ளைப்புத்தி - பிள்ளைப்புத்தி. வெள்ளைப்பூண்டு - வெள்ளுள்ளி. வெள்ளைப்பேச்சு - சுத்தவாக்கு. வெள்ளைப்பொன்னாவிரை - ஓராவிரை. வெள்ளைப்போளம் - ஓர்மணி, ஒர்மருந்து. வெள்ளைமந்தாரை - ஓர் மந்தாரை. வெள்ளைமனிதர் - வெள்ளைக்காரர். வெள்ளைமாதளை - ஓர் மாதளை. வெள்ளைமாளர் - புறநானூறுபாடியபுலவரி லொருவர். வெள்ளைமெய்யாள் - சரச்சுவதி. வெள்ளைமேனியாள் - சரச்சுவதி. வெள்ளையடித்தல் - சுவர் முதலியவற்றிற்கு நீறுபூசுதல். வெள்ளையானை - கீழ்த்திசையானை,ஐராவதம். வெள்ளையானையூர்தி - இந்திரன்,ஐயன். வெள்ளைவண்ணாத்தை - ஓர் பூச்சி. வெள்ளைவாரணன் - வெள்ளையானையூர்தி. வெள்ளைவிழி - கருமணியருகு. வெள்ளைவெளுக்குதல் - ஆடையழுக்ககற்றல். வெள்ளைவேளேரெனல் - மிகுவெள்ளைக் குறிப்பு. வெள்ளைவேர் - சல்லிக்கொடி. வெள்ளைவேங்கை - பாஷாணம்,சங்கு. வெள்ளொத்தாழிசை - வெண்டாழிசை. வெள்ளொலியல் - புடைவைக்குஞ்சம்.வெள்ளோக்காளம், வெள்ளோங்காளம் - கக்கலில்லாத வோங்காளம். வெள்ளோடன் - ஓடுவிட்டுக்களருந்தேங்காய். வெள்ளோந்தி - ஓரோந்தி. வெள்ளோலை - எழுதாவோலை,முத்திரையில்லா வோலை. வெறி - அச்சம், ஆடு, கலக்கம், கள்,கோபம், சீக்கிரம், நாற்றம், பிசாசம், மஸ்து, வட்டவடிவு, வியாதி,வெறியென்னேவல், வேலனாடல்,மணம், மருட்சி, வட்டம். வெறிகொள்ளுதல் - சன்னதங்கொள்ளல், வெறித்தல். வெறிக்கப்பார்த்தல் - பயமுறுத்திப்பார்த்தல். வெறிக்கடுக்காய் - பேய்க் கடுக்காய். வெறிக்குணம் - மஸ்துக் கொண்டகுணம், மருட்குணம், மூர்க்ககுணம். வெறிக்குதல் - வெறிகொள்ளுதல். வெறிது - அறிவின்மை, கோது,வறிது, வெறுமை யுடையது. வெறித்த பார்வை - பயமுறப் பார்க்கும் பார்வை. வெறித்தல் - ஆவேசமாதல், மயக்குறல், வெறிதாய்ப்போதல், அஞ்சுதல், மணத்தல், கலங்குதல். வெறிநாய் - பித்துப் பிடித்த நாய்,பைத்தியம் பிடித்த நாய். வெறிபாடியகாமக்கண்ணியார் - ஒருபுலவர். வெறிப்பு - பஞ்சம், மயக்கம், வெறித்தல், வெறுமைத்தன்மை, அச்சம்,கலக்கம், மணம். வெறியயர்தல் - வெறியாடல். வெறியன் - பித்தன். வெறியாடல் - சன்னத மாடல், வெறிகொள்ளல். வெறியாட்டாளன் - உன்மத்தன், சன்னதக்காரன். வெறியாட்டு - உன்மத்தம், சன்னதம். வெறியெடுத்தல் - சன்னதம் கொள்ளுதல் இஃது அகப்பொருட்டுறையினொன்று. வெறியேறி - அக்கினி. வெறியோடுதல் - திகைத்தல், நம்பிக்கையறல், வெறுமையாதல். வெறு - வெறுமை, வெறுவென்னேவல். வெறுக்கை - கள், செல்வம், பொன்,விழுப்பொருள், மிகுதி. வெறுங்கை - பொருளின்மை. வெறுங்கோது - மூடன். வெறுத்தல் - கோபித்தல், சினத்தல்,பகைத்தல், மறுத்தல்,வேண்டாமை, மிகுதல், செறிதல்,நெருங்குதல். வெறுநுகம் - சோதி நாள். வெறுப்பின்மை - விருப்பம் இஃதுஅறத்துறுப்பி னொன்று. வெறுப்பு - அச்சம், கலக்கம், சினம்,செறிவு, துன்பம், வேண்டாமை,நெருக்கம். வெறுப்புக்காட்டுதல் - பிரியவீனங்காண்பித்தல். வெறுப்புக்கொடுத்தல் - பிரியவீனப்படல். வெறுமனை - வெறிது. வெறுமை - இன்மை, வீண், ஒன்றுமின்மை. வெறும்பிலுக்கு - வீண் வேடம். வெறும்புறங்கூறல் - அலர் தூற்றல். வெறும்புறங்கூற்று - அலர் மொழி. வெறும்புறம் - ஒன்று மில்லாதிருக்கை. வெறும்பேச்சு - வீண் சொல்.வெறுவாயலட்டுதல், வெறுவாய் பசப்புதல் - வீண்பேச்சுப் பேசுதல். வெறுவிது - பயனிலது. வெறுவிலி - வறியவன். வெற்பன் - குறிஞ்சிநிலத் தலைவன். வெற்பிரதம் - கருப்பூர சிலாசத்து. வெற்பு - மலை. வெற்றம் - சயம். வெற்றாள் - தனியாள், வெறுவிலி. வெற்றி - வென்றி, சயம், துர்க்கை.வெற்றிகாணுதல், வெற்றிகொள்ளல் -வெல்லுதல். வெற்றிக்கம்பம் - வெற்றித் தம்பம். வெற்றிக்கரந்தைமஞ்சரி - ஓர் பிரபந்தம் அது பகைவர் கொண்டதன்னிரை முட்டான் கரந்தைப்பூமாலை சூடிப் போய் மீட்பதைக்கூறுவது. வெற்றிக்குதிரை - பந்தயம் வென்றகுதிரை. வெற்றிக்கொடி - விருதுக்கொடி. வெற்றிச்சீட்டு - பந்தயச் சீட்டில்வெற்றி குறித்த சீட்டு. வெற்றித்தண்டை - வீரத்தண்டை. வெற்றித்தம்பம் - வெற்றிக் கொடிகட்டுந்தூண்,வென்றோர் நிறுத்துந்தூண். வெற்றித்தானம் - மூன்றாமிடம். வெற்றித்துவசம் - வெற்றிக்கொடி. வெற்றிமயில் - துர்க்கை. வெற்றிமாலை - போர் வென்றோர்சூடுமாலை. வெற்றிலை - தாம்பூலம். வெற்றிலைக்கா - வெற்றிலைக்தோட்சுமை. வெற்றிலைக்காய் - மாற்று வெற்றிலைக் கொடியின் நோய். வெற்றிலைக்கால் - வெற்றிலைத்தோட்டம். வெற்றிலைக்கொடி - தாம்பூலவல்லி. வெற்றிலைசுருட்டி - ஓர் புழு. வெற்றிலைச்சுருள் - ஓர்விதவெற்றிலைக் கட்டு, மணவாளர்கையில் பிடிக்குஞ் சுருள். வெற்றிலைத்தட்டம் - வெற்றிலைவைக்குந் தட்டம். வெற்றிலைத்தட்டி - வெற்றிலைச்சரை. வெற்றிலைத்தம்பலம் - வெற்றிலைபாக்கு மென்ற சாரம். வெற்றிலைநறுக்கி - ஓர் செடி. வெற்றிலைநாரி - ஓர் புதர். வெற்றிலைப்படலிகை - வெற்றிலைத்தட்டு. வெற்றிலைப்படிக்கம் - தாம்பூலப்படிகம். வெற்றிலைப்பூமணி - மாதரணிபணியினொன்று. வெற்றிலைமடிப்பு - வெற்றிலைச்சுருள். வெற்றிலைவெடிபதம் - மருத்தெண்ணெய்ப் பதத்தினொன்று. வெற்றிலைவைத்தல் - கலியாணத்துக்கு வரவழைத்தற் குறிப்பு. வெற்றிவாகை - போர் வென்றோர்சூடுமாலை. வெற்றிவேர்கை - ஓர் நூல். வெற்று - வெறு. வெற்றுடம்பு - தசைப் பிடியற்றதேகம், வெறிதாய வுடல். வெற்றுரை - பயனில் சொல். வெற்றெலும்பு - தசை கழிந்த வென்பு. வெற்றெனத்தொடுத்தல் - நூற் குற்றம்பத்தி னொன்று. வெற்றெனல் - வெறுமையாதல்,வெளிருதல். வெற்றொழிப்பு - அபநுதியுருவகத்தொன்று அஃது உபமான தருமத்தை யாரோபித்தற்கு உபமேயதருமத்தை ஒழித்தல் (உ.ம்) மதியன்று வெண்கமலப்பூ. வென் - முதுகு. வென்காணல் - வெல்லுதல். வென்றவர் - முனிவர். வென்றி - வெல்வி, வெற்றி. வென்றிக்கொடி - வெற்றிக்கொடி. வென்றிமாலை - செந்திபுர புராணஞ்செய்தோன், போர் வென்றோர்சூடுமாலை, வெற்றியொழுங்கு. வென்றோர் - புலனடங்கப் பெற்றோர்,வெற்றி யடைந்தோர். வென்றோன் - அருகன். வென்னிடுதல் - புறங் கொடுத்தல்,தோற்றல். வே வே - ஓரெழுத்து, வேயென்னேவல்,வேவு, வேவென்னேவல். வேகசரம் - ஒட்டகம், குதிரை. வேகடம் - ஓர் மீன், மணியழுக்ககற்றல், யௌவனம். வேகடன் - மணியொப்பஞ் செய்வோன், வாலிபன். வேகடை - வேகடம். வேகடைத்தாள் - குருநாப் பட்டை. வேகநாசனம் - கோழை. வேகம் - கடுமை, கதி, கோபம், சினம்,சுக்கிலம், தீவிரம், அடம்பு,விரைவு, நஞ்சு, பிரவாகம். வேகரம் - உக்கிரம், உறைப்பு. வேகரோதம் - மலமறிப்பு நோய். வேகவதி - கம்பையாறு, வைகையாறு. வேகவத்தமம் - மிகு கதி. வேகவிதாரணம் - தடை. வேகாகாதம் - தடை, மலக்கட்டு. வேகாப்பிணம் - குறைக்கட்டைப்பிணம். வேகாளம் - கோபம், சீக்கிரம். வேகி - வேக முடையோன். வேகிதை - விரைவு. வேகித்தல் - வேகமடைதல். வேகுதல் - அவிதல், உக்கிரங் கொள்ளல், எரிதல், காய்தல். வேக்காடு - சூடு, வேகுதல். வேக்காளப்படுதல் - வெட்கப்படுதல்,வெப்பியாரப்படுதல். வேக்காளம் - வெக்காளம். வேங்கடம், வேங்கடாசலம் - ஓர் மலைஇது தமிழ் நிலத்தெல்லை நான்கினொன்று, திருப்பதி. வேங்கை - ஓர் மரம், புலி, பொன்,களி, திமிசு. வேசகம் - யானைவானுனி, வால்,வீடு, மிருகத்தின் பால். வேசடை - துக்கம். வேசந்தம் - குளம். வேசம் - உடை, கதம், சம்பளம்,வாயில், வீடு, வேசிதெரு, வேஷம். வேசரம் - ஒட்டகம், தெலுங்குபாஷை. வேசரி - கழுதை, கோவேறு கழுதை. வேசரிநீர் - கழுதைநீர். வேசறவு - துக்கம். வேசனம் - மருதநிலத்தூர், வாயில்,வீடு, நகரம். வேசாடல் - மனக் கலக்கம். வேசாடை - துக்கம்.வேசாறல், வேசாறுதல் - ஆறுதல்,இளைப்பாறுதல், துக்கமடைதல். வேசி - வியாபாரி, விலைமகள். வேசிகை - வாயில். வேசிக்குணம் - விபசாரக்குணம். வேசிதெரு - பரஸ்திரி குடிஇருப்பு. வேசித்தனம் - கற்புத்தவறல், வேசித்தன்மை. வேசிநடை - விபசாரநடை. வேசிப்பார்வை - புணர்ச்சிநோக்கு. வேசிப்பிள்ளை - கொண்டோற்பிழைத்துப் பெற்ற புத்திரன். வேதிமார்க்கம் - தூர்த்தநடை, வேசிகள்நடை. வேசியம் - வேசிதெரு, வேசிவீடு. வேசியாசனமாசிரயம் - வேசிவீடு. வேசியாசாரியன் - நட்டுவன். வேசியாடுதல் - தற்பொழுக்கந்தவறிநடத்தல். வேசியை - வேசை. வேசிவிலை - பணயம். வேசிவிளையாட்டு - கணிகையர்கூத்து, வேசி நடை. வேசுமநகுலம் - மூஞ்சூறு. வேசை - சம்பளம், வேசி. வேஷகம், வேடகம் - காதணி. வேடங்காட்டுதல் - கோலங்காட்டுதல். வேடசேரி - வேடரூர். வேடச்சி - வேடப்பெண். வேடதாரி - வேஷந்தரிப்போன்.வேடம், வேஷம் - ஆவேசம், உடை,ஓர் காதணி, தன் கோலம்விட்டுவேறு கோலங் கொள்ளல். வேஷகம் - வேடகம். வேடன் - வேடுவன். வேடிக்கை - அலங்காரவேஷம்,ஆடம்பரம். வேடிக்கைகாட்டுதல் - ஆடம்பரங்காட்டல், கோலங்காட்டுதல். வேடிச்சி - வேடப்பெண். வேடிதம் - மருந்து நாற்றம். வேடு - செம்முதல், பொட்டணி,மூடு சீலை, வடிகட்டுசீலை,வேட்டுவச்சாதி, வேட்டுவன்.வேடுகட்டல், வேடுகட்டுதல் - பொட்டணி கட்டல், வண்டு கட்டல். வேடுவன் - பாலை நிலமகன், வேட்டைக்காரன், வேட்டையாளி. வேடை - அபேட்சை, காமநோய்,செட்டித்தெரு, மரக்கலம், வெப்பம், விருப்பம். வேட்கை - ஆசை. வேட்கைத்துணைவி - மனைவி. வேட்கைப்பெருக்கம் - காமநோய்,பேராசை.வேட்கோ, வேட்கோபன் - குயவன். வேட்சை - அபேட்சை, புடைவை. வேட்டகம் - தலைப்பா, புத்தகம்,மாமியார் வீடு. வேஷ்டகம் - பிசின். வேட்டணம் - காது, காப்புக்கட்டல்,சுவர், சுற்றல், சூழ்தல். வேட்டம் - சாரம், பிசின், வேட்டை,கொலை, விருப்பம். வேட்டல் - ஆசைப்பெருக்கம், ஓமம்செய்தல் அது அந்தணர் வணிகர்க்குரிய அறுதொழிலி னொன்று,மாயையாக்கை பதினெண்குற்றத்தொன்று, விருப்பம், விவாகஞ் செய்தல். வேட்டார் - சினேகிதர், புருடர்,மித்திரர், விவாகமானோர், வேட்டல் செய்தவர். வேட்டாள் - மணம்புரிந்தவன்,மனைவி.வேட்டி, வேஷ்டி - சோமன். வேட்டிதம் - கூத்தின் விகற்பம், சூழ்வு,தடை, மடிப்பு. வேட்டியம் - சுற்றல். வேட்டு - வெடி, வேட்டென்னேவல். வேட்டுவன் - குளவி, மகநாள்,வேடன், வேட்டையாளி. வேட்டுவித்தியர் - வேட்டுவப் பெண்கள். வேட்டை - இளைப்பு, துன்பம்,வேட்டம், கொலை. வேட்டைக்கடா - வேட்டைக்குப்பழக்கிய கடா. வேட்டைக்காரர் - வேட்டையாடுவோர். வேட்டைநாய் - கடிநாய், வேட்டையாடப் பழகிய நாய். வேட்டைப்பல் - வக்கிர தந்தம். வேட்டையவியல் - கூட்டிடாவவியல்.வேட்டையாடல், வேட்டையாடுதல் - வேட்டஞ்செய்தல். வேட்டைவாளி - ஓர் குளவி. வேட்டோர் - வேட்டார். வேட்டோன் - சினேகிதன், புருடன். வேட்பித்தல் - ஓமஞ் செய்வித்தல்அஃது அந்தணரறுதொழிலினொன்று. வேட்பு - விருப்பம், வேட்டல். வேணகை - மதில், வேட்கை. வேணவா - ஆசைப்பெருக்கம். வேணன் - அம்பட்டத்தி யிடத்திற்பார்ப்பானுக்குப் பிறந்து புகழ்ந்துபாடுவோன். வேணி - ஆகாயம், இடையர்வீதி,சடை, மரவேர், யாறு, வசம்பு,நீர்ப்பெருக்கு, வெளி. வேணிகை - சடை. வேணீரம் - பொன்னாங்கொட்டை. வேணீர் - தாகநீர். வேணு - உட்டுளை, கலைஞானமறுபத்து நான்கி னொன்று,குழல், புள்ளாங் குழல், மூங்கில்,வாள், வில், வேய்ங்குழல். வேணுகம் - யானைத்தோடி. வேணுகன் - வேய்ங்குழலூதல். வேணுநம் - மிளகு. வேணுநாதன் - வீணைவாசிப்போன். வேணுபலம் - மூங்கிலரிசி. வேணும் - வேண்டும். வேணுவனம் - திருநெல்வேலி, திருப்பாசூர். வேண் - அவா, கொடுந்தமிழ்நாட்டினொன்று, வேட்கைப் பெருக்கம். வேண்டலர் - பகைவர். வேண்டல் - ஆசை, ஆசைப் பெருக்கம், இரத்தல், விரும்புதல். வேண்டாத்தலைவன் - அஞ்சாதவன்,முரடன். வேண்டாமை - வெறுப்பு, அவாவின்மை. வேண்டார் - பகைவர். வேண்டாவெறுப்பு - பகை, வேண்டாமென்ற வெண்ணம். வேண்டிக்கேட்டல் - மன்றாடிக்கேட்டல். வேண்டுகோள் - விரும்புதல், பிரார்த்தனை. வேண்டுதல் - வாங்குதல், வேண்டிக்கேட்டல். வேண்டூட்டு - வேண்டும் உணவு. வேதகம் - கருப்பூரம், தானியம்,வேறுபடுத்தல், நற்சீலை. வேதகருப்பன் - பார்ப்பான், பிரமன். வேதகருப்பை - துர்க்காதேவி. வேதகாரர் - நெய்வார், பொருந்தர்,பிரம்பினாலே தொழில் செய்வோர். வேதகீதன் - சிவன். வேதக்கொடியோன் - துரோணாசாரியன். வேதசங்கிதை - வேதத்திரட்டு. வேதசம் - பிரம்பு, பெருவிரலடி. வேதசாத்திரம் - வேதம். வேதசாத்திரி - வேதவியார்த்திபண்ணுவோன். வேதசாரம் - நாணற்புல், வேதத்தின்சத்து. வேதசிரசு - உபநிடதம். வேதங்ஞன் - வேத அறிஞன், வேதமறிந்தவன். வேததத்துவம் - வேதப்பொருள். வேதநாதன் - கடவுள், பிரமன். வேதநாநம் - அனுபவித்தல். வேதநாயகன் - வேதநாதன், கடவுள். வேதநி - வெந்தயம். வேதநிந்தகன் - நாஸ்திகன், புத்தன். வேதநிந்தை - வேதத்தை யிகழ்தல். வேதநிருத்தன் - சமனன், சூனிய வாதி. வேதநீயம் - உபாதி யின்மை, அறிதற் பாலது. வேதபாரகர் - பார்ப்பார், வேதத்தைப்படிப்போர், வேதத்தை முற்றும்அறிந்தவர். வேதபுண்ணியம் - வேதானுசாரம். வேதப்பொருத்தம் - மணப்பொருத்தம் பத்தினொன்று. வேதமாதா - காயத்திரி. வேதமாதிரு - காயத்திரி. வேதமாயாவாதம் - ஓர் சமயம். வேதமார்க்கம் - வைதிகம். வேதமுக்கியை - கஸ்தூரி. வேதமுடி - வேதாந்தம். வேதமுதல்வன் - கடவுள். வேதமுதல்வி - சரச்சுவதி, பார்வதி. வேதம் - அறிவு, ஆழம், கலைஞானமறுபத்துநான்கினொன்று ,துளைத்தல், முதனூல், விபரம்,வாலுளுவை, நாலாமிடம், சுருதி. வேதரஞ்சகன் - பிரமா. வேதரட்சணம் - வேதத்தைப் பாதுகாத்தல். வேதல் - வேகுதல், வெய்தல். வேதவசனம் - திருவாக்கு. வேதவாக்கியம் - வியாகரணம். வேதவதி - ஓர்நதி, குசத்வஜராஜபுத்திரி. வேதவநம் - திருமறைக்காடு,வேதாரணியம். வேதவரசன் - பார்ப்பான். வேதவாணர் - பிராமணர். வேதவித்தகன் - வேதங்கற்றோன்,வேதம் வல்லவன். வேதவித்து - வேதம் அறிந்தவன்,விஷ்ணு. வேதவியாசன் - ஓரிருடி அவன்வேதஞ் செய்தோன். வேதவிருத்தம் - வேதபோதனை. வேதனம் - அறிவு, ஓர் சடங்கு, கூலி,சம்பளம், சீவனம், துளைத்தல்,பொன், விடயத்தான் வந்த அறிவு,வேதம், வேதனை. வேதனாதானம் - கூலி கொடாமை. வேதானி - கன்னவேதனக் கருவி. வேதனை - அலைத்தல், நோய்,வருத்தம். வேதனைக்காட்சி - காட்சி பேதத்தொன்று, அஃது இச்சாஞானச் செயலில் ராகாதி செலுத்தல். வேதனைதீர்த்தல் - மாயாமறைவுசெயலில் ராகாதி செலுத்தல். வேதனை தீர்தல் - மாயாமறைவுவிடுதல், வருத்தந் தீர்தல். வேதனைப்படுதல் - உபாதிப்படுதல்,மறைக்கப்படுதல். வேதன் - அருகன், கடவுள், பிரமன்,வியாழம், கடுக்காய், நாலாமிடத்துக் குடையவன். வேதா - கடவுள், சூரியன், பிரமன்,முனிவன். வேதாகமம் - வேதம், வேதமும் ஆகமும். வேதாக்கினி - ஆகவனீயம், காருகபத்தியம், தக்கணாக்கினியம். வேதாக்ரணி - சரச்சுவதி. வேதாங்கம் - வேதசாத்திரம், வேதப்பகுதி, அஃது சந்தோபிசிதம்,மந்திரம், வியாகரணம் எனுமாறுமாம்.வேதாதி, வேதாதிபீஜம் - பிரணவம். வேதாதிவர்ணம் - வேதாதி. வேதாதிவண்ணன் - கடவுள். வேதாத்தியயனம் - வேதமோதல். வேதாத்தியாபகன் - வேத மோதுவிப்போன். வேதாத்தியாபனம் - வேதமோதல். வேதாத்தியாயனம் - வேதமோதல். வேதாத்தியையி - வேத மோதுவோன். வேதாத்திரி - திருக்கழுக்குன்றம். வேதாந்தகன் - வைதிகன். வேதாந்தசன் - வேதாந்தி.வேதாந்தசூடாமணி, வேதாந்தசூளாமணி - சிவப்பிரகாச தேசிகர் செய்தஓர் நூல். வேதாந்தஞ்ஞன் - வேதாந்தி. வேதாந்ததீபம் - ஓர் நூல். வேதாந்தம் - வைதிகம், வேதமுடிவு. வேதாந்தன் - அரன், அருகன், கடவுள். வேதாந்தி - வைதிகன், வேதாந்தம்அறிந்தவன். வேதாப்பியாசம் - வேதமோதல்,வேதங்களை நன்கு பயிலுதல். வேதாரணியம் - திருமறைக்காடு. வேதாரன் - பல்லி. வேதார்த்தன் - கடவுள். வேதாளம் - ஓர் பிசாசம், பூதம். வேதாளி - காளி. வேதாளியர் - புகழ்வோர், மங்கலபாடகர். வேதாளிபாடுவார் - துயிலெடைநிலைபாடுவார், பண்டிதன். வேதி - ஓமகுண்டம், கேட்டைநாள்,மதில், வேதிகை, வேதியெனேவல். வேதிகை - கேடகம், திண்ணை, பலிபீடம், மேடை, வேறுபடுத்தல். வேதிகைபீடம் - ஓமவேதி. வேதிஜை - த்ரௌபதி. வேதிதம் - துளைத்தல், துளையுடைப்பொருள். வேதித்தல் - பிளத்தல், விகாரப்படுத்தல், வேறாக்கல், அரிதல்,பேதித்தல். வேதித்துவம் - அறிவு. வேதியர் - பார்ப்பார். வேதியன் - பிரமன், பார்ப்பான். வேதினம் - ஈர்வாள். வேதீசன் - பிரமன். வேது - காரமருந்து, வெய்து, தண்ணீர்,வெம்மை. வேதை - இரேகை, துன்பம், பொன்னாக்கல், வேதித்தல், துளைத்தல். வேதைச்சிந்தூரம் - உலோகங்களைப் பொன்னாக்குமருந்து. வேதோதயன் - சூரியன். வேதோபகரணம் - வேதானுசாரமானது. வேத்தர் - அறிந்தோர். வேத்தவை - ராஜசபை. வேத்தன், வேத்தா - அறிந்தவன். வேத்தியம் - அடையாளம், அறியத்தக்கது. வேத்திரகரன் - நந்திதேவன். வேத்திரகீயம் - ஓர் நகரம். வேத்திரச்சாய் - பிரப்பங்கோரை.வேத்திரதரன், வேத்திரதாரகன் - கட்டியக்காரன், நந்தி தேவன்வாயில் காவலன். வேத்திரத்தாள் - பிரப்பங்கிழங்கு. வேத்திரம் - அம்பு, இலந்தை, பிரம்பு. வேத்திரவதி - ஓர் நதி. வேத்திராசனம் - பிரப்பம்பாய். வேத்திரி - ஓர் நதி. வேத்திராசனம் - பிரப்பம்பாய். வேத்திரி - துவாரபாலகன். வேந்தவை - இராச சபை. வேந்தன் - அரசன், இந்திரன், சந்திரன்,சூரியன், வியாழன், இரசம். வேந்து - அரசன், இறைமை, அரசியல். வேந்துரு - ஏழாந்தலைமுறையிற்பிதா. வேந்தோன்றி - காந்தள், கார்த்திகைக்கிழங்கு. வேபனம் - பயம், நடுக்கம். வேபாக்கு - வேகுதல். வேப்பத்தூர் - ஓரூர். வேப்பம்பாகி - ஓர் நீர்ப்பூடு. வேப்பாலை - ஓர் செடி. வேமம் - நெய்வார்கருவியினொன்று. வேமானியர் - விமானத்திற் செல்வோர். வேம்பற்றூர்க்குமரனார் - புறநானூறுபாடிய புலவரிலொருவர். வேம்பனம் - கள். வேம்பன் - பாண்டியன். வேம்பாணி - கிறாணி. வேம்பின்றாரோன் - பாண்டியன். வேம்பு - வேப்பமரம். வேம்புறல் - உலர்தல். வேயரிசி - மூங்கிலரிசி. வேயர் - வேவுகாரர். வேயல் - மூங்கில், வேய்தல். வேயாமாடம் - சாந்து முதலியன இட்டு மூடிய வீடு. வேயாம் - இலந்தை. வேயுள் - மாடம், வீடு, போர்வை. வேய் - உட்டுளைப்பொருள், ஒற்று,மூங்கில், வேயென்னேவல். வேய்கள் - வேவுகாரர். வேய்ங்குழல் - மூங்கிற்குழல். வேய்தல் - அணிதல், அலங்கரித்தல்,சூடுதல், மாடம், மூடுதல், வீடு. வேய்த்தல் - ஏய்த்தல். வேய்வு - ஏய்ப்பு, மூடுதல். வேய்வை - குற்றம். வேரகம் - கருப்பூரம். வேரடம் - இலந்தைப்பழம். வேரடன் - நீசன். வேரம் - சரீரம், சலஞ்சாதித்தல்,சேம்பு, மஞ்சள், முகில், செய்குன்று, கர்ப்பூரம். வேரல் - மூங்கில். வேரறுத்தல் - அடிகெடுத்தல், அறக்கெடுத்தல். வேரி - கள், வாசனை, வெட்டிவேர். வேரிபீதகம் - இருவேலி. வேரூன்றல் - வேர் பதிதல். வேரோடுதல் - தூர்விடுதல். வேர் - காரணம், கோபம், திப்பிலிமலம், மூலம், வேரென்னேவல்,வேர்வை, அடி. வேர்க்கடலை - ஓர் பருப்பு. வேர்க்குச்சு - ஓர் குச்சுப்புல். வேர்க்குரு - வெகுர், வேர்வையில்தோன்றுங் குரு. வேர்க்குறி - சினக்குறிப்பு. வேர்க்கொம்பு - இஞ்சி, சுக்கு. வேர்க்கொள்ளல் - வேரூன்றல். வேர்த்தல் - கோபித்தல், வியர்த்தல். வேர்ப்படலம் - கண்ணோயு ளொன்று. வேர்ப்பு - கோபம், வியர்வு. வேர்வு - மாயையாக்கை பதினெண்குற்றத் தொன்று. வேர்வை - வியர்வை. வேலமரம் - ஓர் மரம். வேலம் - தோட்டம். வேலம்பாசி - ஓர் பூடு. வேலருவி - வேலொழுங்கு. வேலனாடல் - தேவர்க்காடுங் கூத்து. வேலன் - முருகன், வெறியாட்டாளன். வேலாமூலம் - கடற்கரை. வேலாயுதம் - வேல். வேலாயுதன் - குமரன். வேலாவலயம் - கடல், பூமி. வேலி - ஊர், ஐந்துகாணி நிலம்,காவல், நிலத்தளவையினொன்று,மதில், உத்தாமணி, வயல். வேலிக்கால் - கதிகால், வேலியருகு. வேலிப்பருத்தி - உத்தாமணி. வேலிப்பாகல் - கொல்லம்பாகல். வேலிறை - குமரன். வேலை - அவமிருத்து, இளைப்பாற்றி,எல்லை, கடல், கடற்கரை, கரை,காலம், செய்பொருள், தொழில்,நிகழ்காலம், நோய், பனி, புனற்றிரை, பொழுது, கரும்பு. வேலைப்பரிட்சை - வேலைப்பழக்கம். வேலையிற்றுயின்றோன் - விட்டுணு. வேல் - ஆயுதப்பொது, ஓர் மரம்,கைவேல், சூலம், மூங்கில். வேல்லஜம் - மிளகு. வேல்லி - கொடி. வேல்லிதம் - நடை. வேல்விழியாள் மீதுரைவேர் - கஸ்தூரிமஞ்சள். வேவாள் - வேவுகாரன். வேலித்தல் - வேகச்செய்தல். வேவு - ஒற்று, வேதல், வேவென்னேவல். வேழம் - கரும்பு, கொறுக்கை, நாணல்,மூங்கில், யானை, பீர்க்கு, இசை,சிறு மூங்கில், விளாம்பழத்துக்குவருவதொருநோய். வேழம்பர் - கழைக்கூத்தர். வேளன் - வேளான். வேளா - ஓர் மீன், கேளா. வேளாட்டி - வெள்ளாட்டி. வேளாண்குலர் - குயவர். வேளாண்மை - ஈகை, உபகாரம்,கொடை, பூவசியம், நெய்,உண்மை, உழவுத்தொழில். வேளாண்மைமாந்தரியல்பு - அழிந்தோரை நிறுத்தல், ஆணைவழி நிற்றல்,ஒக்கல்போற்றல், ஒற்று மைகோடல்,ஓவாமுயற்சி, கசி வகத்துண்மை,கைக்கடனாற் றல், திருந்திய ஒழுக்கம்,மன் னிறை தருதல், விருந்துபுறந் தருதல்ஆகப் பத்துக்குணம். வேளாண்மைமைந்தர் - வேளாளர். வேளாவளி - ஓரிராகம். வேளாளர் - ஈகையாளர், பூவைசியர். வேளான் - குயவன், வேளாளரிலோர்பகுதியான். வேளிர் - குறுநிலத்தரசர். வேளை - ஓர்பூடு, காலம், நேர்ந்துகட்டுகிற விளை. வேளைபூமணல் - மன்றாடுதல். வேளைப்பிழை - அரிட்டம். வேள் - ஆசை, ஆண்மகன், உபகாரம்,குமரன், மண், மன்மதன். வேள்பாரி - கடையெழு வள்ளல்களிலொருவன். வேள்புலவரசர் - சாளுவர். வேள்வி - ஆராதனை, ஈகை, ஓமகுண்டம், மகநாள், யாகம், விவாகம், பனிரெண்டாமிடம். வேள்விக்குண்டம் - ஓமகுண்டம். வேள்வித்தறி - யாகத்தம்பம். வேள்விநாயகன் - இந்திரன். வேள்விப்பசு - யாகபசு. வேள்விப்பயன் - யாகபலன். வேள்வியாளர் - ஈகையாளர், பார்ப்பார். வேள்வு - அரும்பண்டம், மணவரிசைப் பண்டம், வேள்வி. வேள்வெடுத்தல் - பல பண்டந்தேடிக்கொண்டு போதல். வேறல் - வெல்லுதல், வெற்றி கொள்ளல். வேறாங்கு - வெம்பாடல். வேறாதல் - பிரிதல். வேறிடம் - ஏகாந்தம். வேறு - மற்றது, வேற்றுமையுடையது,தனி. வேறுபடுதல் - பிரிதல். வேறுபடுத்தல் - பிரித்தல். வேறுபாடு - விகற்பம், வேறுபடல்,பேதம். வேறுபாட்டொழிப்பு - அபநுதி யலங்காரத் தொன்று அது அன்னியத்திலாரோபித்தற் பொருட்டுஅவன்னிய தருமத்தை யொழித்தல் (உ.ம்) தெரியுமது திங்களன்றரிவை முகமேதிங்களாம். வேற்கோட்டம் - முருகவேணிற்குங்கோயில். வேற்றலம் - காற்று. வேற்றுக்குரல் - மாறுகுரல். வேற்றுநிலைமயக்கு - கசதப ஒழிந்தமெய்கள் ஒன்றோடொன்றுமயங்கிவருவது. வேற்றுப்புலம் - பகையிடம். வேற்றுப்பொருள் - வேறு பொருள். வேற்றுப்பொருள் வைப்பு - ஓரலங்காரம் அது முன்னொரு பொருட்டிறந் தொடங்கிப் பின்னதனைமுடித்தற்கு, வலி துடைப்பிறிதொருபொருளை யுலகறி பெற்றியான் வைத்து மொழிவது, இதுமுழுவதுஞ் சேறல் ஒரு வழிச்சேறல் முரணிற் றோன்றல் சிலேடையின் முடித்தல் கூடாவியற்ககூடு மியற்கை இருமையியற்கைவிபரீதம் என எண்வகைப்படும். வேற்றுமணாளன் - பரபுருடன். வேற்றுமை - பதங்கள் புணரு மிருவகைச் சந்தியுளொன்று அஃதுஎழுவாய்முதலிய வுருபுகள் பெறநிற்பது, வேறுபடல், வேற்றுமையணி. வேற்றுமைகாட்டுதல் - வித்தியாசங்காட்டல். வேற்றுமைத்தொகை - வேற்றுமையுருபுகள் தொக்குநிற்பது. வேற்றுமைப்புணர்ச்சி - பேரும் விளியுமல்லாத வாறுருபும் விரிந்தேனுந்தொக்கேனும் புணர்வது. வேற்றுமைப் பொருள்விலக்கு - ஓரலங்காரம் அஃது ஒப்புடையவாயிருக்கு மிருபொருளையொருங்கு வைத்துக் காட்டியொன்றை விலக்கி வேற்றுமைப்படுத்திச் சொல்லுதல். வேற்றுமைமயக்கு - வேற்றுமையுருபுகளுளொன்று பிறிதொன்றற்காக மயங்கி நிற்பது. வேற்றுமையணி - ஓரலங்காரம்அஃது உபமானோபமேயங்களுளொன்றை விசேடமுடைத்தாய்ச்சொல்லுதல். வேற்றுமையுருபு - தன்னையேற்றபெயர் பொருளை வேறுபடுத்துவது அஃது ஐ, ஆல், கு, இன்,அது, கண். வேற்றுமையுருவகம் - ஓரலங்காரம்அது குணப்பொருளையு முக்கியப்பொருளையுமொரு பண்புடைத்தெனக்காட்டி முக்கிய பொருட்கோர் வேற்று மையுடைத்தெனக்கூறுவது. வேற்றுமைவிரி - வேற்றுமையுருபுவிரிந்து நிற்பது. வேற்றுரு - மாறுரு. வேற்றுவர் - அயலார். வேற்றொலிவெண்டுறை - பல ஓசைத்தாய் வரும் வெண்டுறை. வேனல் - கானல், வேனில், வெம்மை.வேனிலாளி, வேனிலான் - மன்மதன். வேனில் - கோடை, கானல் அழகு,பொலிவு. வேனில்மாலை - ஓர் பிரபந்தம். வேனில்வேள் - வசந்தகால மன்மதன். வேனிற்காலம் - கோடைகாலம். வேனின்மாலை - ஓர்பிரபந்தம் அஃதுஇரு வேனிலையுஞ் சிறப்பித்துப்பாடுவது. வேன் - வியன். வை வை - ஓரெழுத்து, கூர்மை, புல்,வைக்கோல், வையகம், வையென்னேவல். வைகடசம் - உத்தரியம். வைகடிகன் - இரத்தினங்கள் சாணைதீர்ப்போன், இரத்தினங்களைச் சுத்திசெய்பவன். வைகரி - அகங்காரம் மூன்றினொன்று,திட்டம், வாக்கு நான்கினொன்று. வைகரியாங்காரம் - மூவாங்காரத்தொன்று. வைகர்மன் - ஓர் முநி. வைகல் - கழியுநாள், தங்கல், நாள்,விடியல், வைகுமிடம், துயிறல், கழிதல். வைகல்லியம் - கலக்கம், குறைவு,சூனியம், தகுதியின்மை. வைகறை - விடியல்முதற் பத்துநாழகை யளவுகாலம், விடியற்காலம். வைகற்பிகம் - ஐயம், விகற்பமுடையது. வைகாசம் - ஓர்மாதம், விசாகம்,விடியற்காலம், வைணவாகமமிரண்டினொன்று. வைகாசி - ஓர் மாதம், விசாகம். வைகாசிவசந்தன் - வைகாசி மாதத்திற் பாயுங் காவிரியாறு. வைகாசம் - வைணவாகமத் தொன்று. வைகாநசன் - வனவாசி. வைகாலம் - சாயங்காலம். வைகானசம் - வைகாநசம். வைகிராந்தம் - ஓரிரத்தினம்.வைகிருதம், வைகிருத்தியம் - வெறுப்பு. வைகுண்டம் - திருமானகரம், தும்பை. வைண்டன் - திருமால். வைகுண்ணியம் - ஒவ்வாமை, குணமின்மை, குறை. வைகுதல் - இராத்தங்கல், இருத்தல்,ஏசுதல், கழிதல். வைகுந்தநாதன் - திருமால். வைகுந்தம் - வைகுண்டம். வைகுல்லியம் - எதிரிடை. வைகுறு - வைகறை. வைகூலியம் - வைகுல்லியம். வைகை - மதுரையாறு, காஞ்சியிலுள்ள கம்பநதி. வைகைத்துறைவன் - பாண்டியன். வைகைநாடன் - பாண்டியன். வைக்கல் - வைக்குதல், வைக்கோல். வைக்கிராந்தகம் - ஒர் பாஷாணம். வைக்குதல் - வைத்தல். வைக்கோல் - வைக்கல், வை. வைக்கோல்வாரி - ஓர் கம்பு, தோட்டி. வைக்கோற்கந்து - வைக்கோற்புரி. வைக்கோற்பாம்பு - வேஷம். வைக்கோற்புரி - வைக்கோல் முறுக்கு. வைங்கியாரம் - பகை. வைசத்தியம் - உண்மை, சுத்தம். வைசத்திரம் - அரசாட்சி. வைசம்பாயனன் - வியாசன் மாணாக்கர் நால்வருளொருவன். வைசயந்தம் - இந்திரனுப்பரிகை,இந்திரன்கொடி, இந்திரன் மாளிகை. வைசயந்தி - திருமான் மாலிகை,துகிற் கொடி, வாதமடக்கி. வைசயந்திகன் - கொடிக்காரன். வைசயந்திகை - துகிற்கொடி. வைசனனம் - பிள்ளைப்பெறுமாதம். வைசாகம் - வைகாசிமாதம், விசாகம். வைசாகி - வைகாசி. வைசாரிணம் - மீன். வைசிகம் - உடலுயிரைப் பிரித்தறிதல், தளிர், முகாந்தரம், வேசித்தனம். வைசித்ரியம் - விசித்திரம். வைசியக்கிரியை - வேளாண்மை,வியாபாரம். வைசியர் - மூன்றாவது சாதியார் அவர்தனவைசியர் அல்லது வணிகர்பூவைசியர் அல்லது உழவர்கோவைசியர் அல்லது இடையர்என மூன்றுவகுப்பினர், செட்டிகள். வைசியர்தொழில் - பொருளீட்டல்பயிர் செய்தல் ஆன்காத்தல் எனமூன்று தொழில். வைசியவிருத்தி - வைசியர் தொழில். வைசுவதேவம் - ஓமப்பலி, பிதிர்பூசை. வைசுவாநரன் - அக்கிநி. வைசூரி - வசூரி.வைசேஷிதம், வைசேடிதம் - சாத்திரமாறி னொன்று, கணாதமதம். வைச்சிரம் - வச்சிரம். வைச்சிரவணாலயம் - ஆலமரம். வைச்சிராவணன் - குபேரன்.வைடம்மியம் , வைஷம்மியம் - பகை,அது சத்த விசனத்தொன்று. வைடாலடக்கிரதிகள் - மாயக்காரன். வைடாலம் - பூனை, மாயசாலம். வைடாலவிரதிகன் - மாயசாலன். வைடூரியம் - நவமணியி னொன்று.வைணவம், வைஷ்ணவம் - ஓர் சமயம்,பதினெண் புராணத் தொன்று,மூங்கிலரிசி, வேய்ங்குழல், விஷ்ணு சமயம். வைணவர் - நாராயணசமயத்தோர்,விஷ்ணு சமயத்தோர். வைணவாகமம் - வைஷ்ணவ சமயநூல், அது பாஞ்சாரத்திரம்,வைகா நசம் என இரண்டு. வைணவி - சத்த மாதர்களி லொருத்தி,மூங்கிற்குழல். வைணவிகம் - மூங்கிற்கூட்டம். வைணவிகன் - வீணை வாசிப்போன், வேய்ங்குழ லூதுவோன். வைணிகன் - வீணை வாசிப்போன். வைணுகம் - கழிகோல், யானைத்தோட்டி. வைதகி - திப்பிலி. வைதநிகை - இரத்தினங்களைத்தொளைக்குங் கருவி. வைதரணி - யமபுரத்தியாறு. வைதருக்கம் - தந்திரப்பேச்சு. வைதருப்பம் - வஞ்சகத் தருக்கம்,அது கௌடத்திற்கெதிர், விதர்ப்பநாட்டுக் கவிஞர் கொண்டநெறி.வைதருப்பி, வைதர்ப்பி - தமையந்தி. வைதலம் - பாத்திரம். வைதல் - ஏசல், திட்டல், வஞ்சித்தல்,இகழ்தல். வைதவ்வியம் - கைமைத்தன்மை. வைதனிகம் - அற்றைக்கூலி. வைதனிகன் - கூலிக்காரன். வைதாத்திரன் - சனற்குமாரன். வைதாளிகன் - துயிலெடை பாடுவோன்.வைதானம், வைதானிகம் - ஓமப்பலி. வைதானிகன் - பள்ளியெழுச்சி பாடுவோன். வைதானோபசரணை - அந்திசந்திசெலுத்துங் கடவுட் பலி. வைதிகம் - வேதமார்க்கம். வைதிகர் - வைதிகசைவத்தோர்,வேதநெறி நிற்போர். வைதிகன் - வேதமுணர்ந்த பிராமணன், வேதநெறியில் நடப் பவன். வைதிருதி - நித்தியயோகத் தொன்று. வைதீகம் - வைதிகம்.வைதூரியம், வைதூர்யம் - ஓரிரத்தினம், வைடூரியம். வைதேகன் - பார்ப்பனத்திக்கும்வைசியனுக்கும் பிறந்து துதித்துய்வோன், வியாபாரி. வைதேகி - சீதை, திப்பிலி. வைதேயம் - அறிவின்மை. வைதேயன் - அறிவீனன். வைத்தல் - வைக்குதல், இடுதல்,கூர்த்தல். வைத்தியகம் - வைத்திய சாத்திரம். வைத்தியசாத்திரம் - கலைஞானமறுபத்து நான்கினொன்று, அதுவாகடநூல். வைத்தியநாதன் - சிவன். வைத்தியமாதா - ஆடாதோடை. வைத்தியம் - பரிகாரம். வைத்தியன் - பண்டிதன், பரிகாரி,வேதாப்பியாசி, மருத்துவன். வைத்தூறு - வைக்கோற்போர். வைநதேயன் - கருடன். வைநம் - பிரிவு. வைநாசிகம் - ஓர் யோகம், விநாசத்துக்குரியது. வைநாசிகன் - அடிமை, சிலம்பி. வைநாயிகன் - புத்தன். வைநாயிகை - சதுர்த்திதிதி. வைநிகம் - புராதன சாஸ்திர கேள்வி. வைநீதகம் - ஈரிணை மூவிணைஎருதேனுங் குதிரையேனும்கட்டிய பண்டி. வைந்தவம் - குதிரை. வைபரித்தியம் - எதிரிடை, விபரீதஉணர்வு. வைபவம் - வரலாறு, விபவம், செல்வம், விசேடமாகத் தோன்றியது. வைபாடிகன் - விகற்ப வார்த்தைகூறுவோன். வைபோகம் - சந்தோஷம், சிற்றின்பசம்பிரமம், வயணம், விவேகம். வைபோகி - விவேகி. வைபோதிகன் - சாமக்காவற்காரன். வைப்பாட்டி - குடிப்பெண்ணல்லாதவள். வைப்பு - இடம், ஊர், உண்டாக்கல்,சேமதிரவியம், பெருமை, வைத்தல், வைப்பாட்டி. வைப்புக்கட்டு - பொய்க்கதை. வைப்புச்சரக்கு - உண்டாக்கின சரக்கு. வைப்புச்செப்பு - வைக்குமிடம். வைப்புத்தலம் - மூவர் பாடல் பெறாததலம். வைமாத்திரேயன் - சக்களத்தி புத்திரன். வைமானிகன் - விமானத்திற் செல்பவன். வையகத்தேவர் - வேதியர்.வையகம், வையம் - உரோகணி,சிவிகை, தண்டிகை, தேர், பண்டி,பாண்டில், பூண்டவூர்தி, பூமி,வாகனம், எருது. வையாகரணம் - வியாகரணம்.வையாகரணன், வையாகரணி - இலக்கண ஆக்கியோன், வியாகரணம் படித்தோன், வியாகரணபண்டிதன். வையாசம் - வியாசம். வையாபுரி - பழனிமலை, ஒருபுண்ணிய தீர்த்தம். வையாளி - குதிரையின் மிகுகதி. வையாளிக்கோப்பெரும்பேகன் - கடையெழுவள்ளல்களி லொருவன். வையாளிவீதி - குதிரைநடத்தும் வீதி. வையை - வைகைநதி. வையைக்கிழவன் - பாண்டியன். வைரகரம் - பகை சாதித்தல். வைரகரன் - சத்துரு. வைரங்கிகன் - பற்றிலான். வைரசுத்தி - பகை தீர்த்தல். வைரநிரியாணம் - பகை நீக்கல். வைரம் - நவமணியி லொன்று, பகை,விரோதம், வீரத்தின் றன்மை,நீண்ட விரோதம். வைரவம் - வயிரவம். வைரவன் - பைரவன், சிறுகீரை. வைரன் - சத்துரு. வைராகம் - விராகம், வைராக்கியம். வைராகி - துறவி. வைராக்கிகன் - துறவி. வைராக்கியசதகம் - ஓர் நூல். வைராக்கியசூரியோதயம் - ஓர் நூல். வைராக்கியதீபம் - ஓர் நூல். வைராக்கியம் - பகை, வெறுப்பு,ஆசையற்றிருத்தல், விடயங் களிற்பற்றின்மை, பிடிவாதம். வைராடம் - இந்திரகோபம். வைராயமாணம் - சத்துருத்தனம். வைராரோஹம் - பெரும்போர். வைராவி - வயிர மனதுடையோன். வைரி - சத்துரு. வைரிதை - வன்மம், வீரம். வைரியம் - வீரியம், வைராக்கியம். வைரியர் - பாணர், கூத்தர். வைரூப்பியம் - அவலட்சணம்,விகார வடிவம். வைரோசனநிகேதனம் - பாதலம். வைரோசனன் - சூரியன், மாவலி,வாலி. வைரோசனி - புத்தன், மாவலி, வாலி,மாவலிமகன். வைரோதாரம் - பழிவாங்கல். வைலட்சணம் - அவலட்சணம். வைலட்சயம் - எதிரிடை, வித்தியாசம். வைலவம் - வில்வம். வைலுவம் - வில்வக்காய். வைவச்சுதன் - ஏழாவது மனு, நமன்,சனி. வைவஸ்வதன் - ஏழாவது மநு, சநி. வைவஸ்வதி - தென்றிசை. வைவாகிகம் - விவாகத்திற் குரியது. வைவு - ஏச்சு, சாபம், இகழ்வு. வைனதகம் - நெய்ப்பாத்திரம். வைனதேயன் - வைந்தேயன். வைனம் - பகுத்தல். வைனன் - கருடன். வெள வெள - ஒலிக்குறிப்பு, ஓரெழுத்து,வெளவென்னேவல். வெளவம் - தாமரை. வெளவல் - கொள்ளையிடல், திருடல், பிடித்தல், வாருதல். வெளலி - மான். வெளவுதல் - வெளவல். வெளவால் - ஓர் பறவை, வனமல்லிகை. வ் வ்ருகதூமம் - நீர்மேற் படர்கொடி. வ்ருகோதரன் - வீமசேநன். வ்ருஜநம் - தலைமயிர். வ்ருஜிநம் - கிலேசம். வ்ருட்ச சரம் - குரங்குவ்ருட்சநாதம், வ்ருட்சபாகம் - ஆலமரம். வ்ருட்சஸம் - உடும்பு. வ்ருட்சாதநம் - அரசமரம், கோடரி. வ்ருட்சாதநி - காட்டுப்பாகல். வ்ருத்தசங்கம் - கிளிஞ்சல். வ்ருத்தபலம் - இலந்தை, மாதளை, மிளகு. வ்ருத்தமல்லிகை - குடமல்லிகை. ஸ்ரீ ஸ்ரீகண்டம் - மலய பர்வதம். ஸ்ரீகண்டன் - பவபூபதி. ஸ்ரீகண்டாசாரியர் - நீலகண்ட சிவாசாரியர் இவர் சங்கராசாரியரின்காலத்தவர். ஸ்ரீசைலம் - திருப்பருப்பதம், க்ஷிதிரம்என்னும் மலை. ஸ்ரீதராசாரியர் - விஷ்ணு புராணத்துக்கும் பாகவதத்துக்கும் வியாக்கியானம் செய்தவர். ஸ்ரீபெரும்பூதூர் - தொண்டை நாட்டிலுள்ள ஒரு வைணவ ஸ்தலம்,ராமானுஜாசாரியார் அவதரித்தஇடம். ஸ்ரீமத் - செல்வம் நிறைந்த, பாக்கியமுடைய, மாந்தர் பெயரின் முன்வைத்துச் சொல்லும் கௌரவக்குறிப்பு. ஸ்ரீமுஷ்டம் - நடுநாட்டிலுள்ள ஒருவைணவ ஸ்தலம். ஸ்ரீவத்ஸம் - விஷ்ணுவின் மார்பிலுள்ள மறு. ஸ் ஸ்தண்டிலம் - மந்திரவேதிகை. ஸ்தந்யம் - பால். ஸ்தபனம் - ஸ்தாபனம். ஸ்தப்தம் - அசைவற்றிருத்தல். ஸ்தாநம் - இடம். ஸ்தாபகன் - ஏற்படுத்தியவன். ஸ்திதி - நிற்கை, காப்பு, நிலை. ஸ்திரீதனம் - பெண்ணுக்குரிய சொத்து. ஸ்தூபம் - மண் முதலியவற்றின் மேடு. ஸ்தூலகர்ணன் - ஒரு யக்ஷன் அவனாலேயே சிகண்டி புருஷத்துவம்பெற்றது. ஸ்நபனம் - ஸ்நானம். ஸ்நேகன் - நண்பன். ஸ்நுஷை - விதர்ப்பன் மனைவி. ஸ்புடம் - தெளிவாக்குகை. ஸ்மரணம் - நினைக்கை, ஞாபகம். ஸ்மரணை - ஸ்மரணம். ஸ்மரித்தல் - நினைத்தல். ஸ்மாரகம் - ஞாபகச்சின்னம், ஞாபகம். ஸ்மார்த்தன் - பிராமணரில் ஒருவகையினன். ஸ்மிருதி - தக்ஷன் புதல்வி, முதல்அங்கிரசன் மனைவி. ஸ்மிருதிகள் - வேதார்த்தங்களைத்தழுவிச் செய்யப்பட்ட தர்மநூல்கள். ஸ்ருஷ்டி - படைப்பு. ஸ்வகாரியம் - தன் காரியம். ஸ்வகீயம் - தன்னுடையது. ஸ்வதேசம் - தன் தேசம். ஸ்வதை - பிதிர் தேவதைகள் மனைவி. ஸ்வபக்ஷம் - தன் பக்கம். ஸ்வப்பனம் - கனவு. ஸ்வம் - உடைமை. ஸ்வயம்ப்ரபை - ஹோமை யென்னும்அபஸசரசு புத்ரி. ஸ்வரிதம் - சுவரிதம். ஸ்வஸ்தி - நன்மை யுண்டாகுக. ஸ்வஹஸ்தம் - தன் கை யெழுத்து. ஸ்வாதி - ஒரு நக்ஷத்திரம். ஸ்வாது - ருசி. ஸ்வாத்தியாயம் - வேத மோதல். ஸ்வாநுபவம் - தன் அனுபவம். ஸ்வாமிநி - இறைவி. ஸ்வாரஸ்யம் - சுவை, பிரியம். ஸ்வீகாரம் - தனதாக்கல், ஒப்புக்கொள்ளல். ஷ ஷட்ரசம் - அறுசுவை, அறுசுவையோடு கூடிய உணவு. ஷடூர்மி - பசிதாகம், சோகம்,மோகம், ஜனன மரணங்களாம். ஷஷ்டி - ஆறாந்திதி, அறுபது. ஹ ஹம்ஸகீதை - ஹம்ச ரூபியாகியபிரமன். ஹம்ஸன் - வசுதேவனுக்குச் சீதேவியிடத்துப் பிறந்த இரண்டாம்புத்திரன். ஹம்ஸை - மேருமலைக்கு வடபாலுள்ள ஒரு மலை. ஹயக்ரீவன் - குதிரை முகமும்மநுஸ்ய தேகமும் உடைய கற்கியவதாரத்தராகிய விஷ்ணு. ஹரன் - பாவஹாரி, பாபத்தைக்கெடுப்பவன், சிவன். ஹரி - விஷ்ணு. ஹரிகேசன் - வசுதேவன் தம்பியாகியசியாமகன் மகன். ஹரிச்சந்திரன் - அரிச்சந்திரன், மகாஉதாரசீலனும், சிறிதுந்தவறாதசத்திய வந்தனுமாய் விளங்கினவன். ஹரிணாங்கன் - சந்திரன். ஹரிணி - ஓரப்ஸரசு. ஹரித்துவாரம் - கங்கா த்வாரம்எனப்படும் nக்ஷத்ரம். ஹரிஹரன் - விஷ்ணும் சிவனும்கூடிக் கொண்டிருக்கும் வடிவம். ஹரிஹரபுத்திரன் - சாத்தனார்,ஐயனார். ஹவிர்யக்கியங்கள் - கிரௌதாக்நியிலே அமைக்கப்படும் யஜ்ஞ பேதங்கள். ஹவ்யவாகநன் - கிரகவதி, அக்னி.ஹனுமந்தன், ஹனுமான் - ராம தூதன். ஹஸ்திபுரம் - ஹஸ்திநபுரம். ஹஸ்திநபுரம் - கௌரவர்களுக்குராஜதானி. ஹஸ்தன் - வசுதேவனுக்கு யோசனையிடத்துப் பிறந்த புதல்வன். ஹஸ்திகன் - சுகோத்திரன் புத்திரன்இவனே ஹஸ்தினாபுரத்தைநிருமித்தவன். ஹா ஹார்த்திக்கியன் - கிருதவர்மா. ஹாஹா - ஒரு கந்தருவன். ஹி ஹிரண்யநாபன் - ராமன் மகனாகியகுசன் வமிசத்திற் பிறந்தவன்,மைநாகன். ஹிரண்யபுரம் - நிவாதகால கேயர்களுடைய தேசம். ஹிரண்யரோமன் - லோகபாலகர்களுள் ஒருவன். ஹிரண்யாக்ஷன் - ஹிரண்ய கசிபன்தம்பி. ஹிடிம்பன் - வீமனாற் கொல்லப்பட்டவன். ஹிடிம்பை - ஹிடிம்பன் தங்கை,கடோற்கசன் தாய். ஹிமசுதை - பார்வதி. ஹிமசுதன் - மைநாகன். ஹிமம் - பனி. ஹிமான் - ஹிமவந்தன். ஹிமாயம் - இமய பர்வதம். ஹிமாலயம் - பனி மலை. ஹிம்சை - நிருதி மகள். ஹிரண்யகசிபன் - காசிபனுக்குத்திதியினிடத்துப் பிறந்த புத்திரன். ஹிரண்யகருப்பன் - பிரமன், விஷ்ணு. ஹிரண்மயவருஷம் - நவ வருஷங்களுளொன்று. ஹிருஷிகேசன் - விஷ்ணு. ஹில்வலை - மிருகசீரிட நக்ஷத்திரத்தினது தலையிலுள்ள உப நக்ஷத்திரங்களைந்தும் இப்பெயர்பெறும். ஹிருதிகன் - போஜன் புத்திரன். ஹூ ஹூணதேசம் - ஹூணர்களுடையதேசம். ஹூணர் - வெண்ணிற முடையவர். ஹூஹூ - ஒரு கந்தருவன், கஜேந்திரன் என்னும் யானையைப்பிடித்த போது விஷ்ணுவினாற்கொல்லப் பட்டவன். ஹே ஹேதி - சிருஷ்டி காலத்தில் பிரமனால் படைக்கப்பட்ட ராக்ஷஸராஜன். ஹேமசந்திரன் - விசாலன் புத்திரன்,ஒரு சம்ஸ்கிருத கலி. ஹேமன் - ஜயத்திரதன் புத்திரன்,பலிக்குப் பாட்டன். ஹேமாத்திரி - மேருமலை. ஹேமாங்கன் - வசுதேவனுக்கு யோசனையிடத்துப் பிறந்த புத்திரன். ஹேமை - ஒரு அப்ஸர ஸ்திரீ. ஹேமவடம் - மேருவுக்குத் தென்றிசையிலுள்ள ஒரு மலை. ஹை ஹைரம்பம் - ஒரு மலை. ஹைஹயம் - கார்த்தவீரியார் ஜூநன்அரசாண்ட தேசம், நர்மதா நதிதீரத்திலுள்ளது. ஜ ஜ - ஓர் ஸம்ஸ்கிருத எழுத்து. ஜடம் - உடல். ஜடாமுனி - சடைதரித்த முனி. ஜம்பம் - இடம்பம். ஜலபாதை - சலபாதை. ஜலம் - சலம். ஜலவாதி - சலபாதை. ஜனம் - சனம். ஜா ஜாக்கிரதை - சாக்கிரதை. ஜாணத்தனம் - உபாயம். ஜாதகம் - சாதகம். ஜாதி - சாதி. ஜாமம் - சாமம். ஜாலம் - சாலம். ஜீ ஜீவரேக்கு - சீவரேக்கு. ஜீவனம் - சீவனம். ஜீவன் - சீவன். ஜீவானம் - சீவானம். ஜீனபாரதம் - ஓர் ஜைனநூல். ஜீனானந்தம் - ஓர் ஜைன நூல். ஜெ ஜெகம் - செகம். ஜெந்து - செந்து. ஜெபம் - செபம். ஜெயம் - செயம். ஜென்மம் - சென்மம். ஜோ ஜோதி - சோதி. ஜோதிடம் - சோதிடம். ஜ் ஜ்ஞாதி - நாதி. ஜ்ஞாத்ரு - அறிகிறவன், ஞாதுரு. ஜ்ஞாநம் - ஞானம். ஜ்ஞாபகம் - ஞாபகம். ஜ்ஞேயம் -அறியப்படுவது, ஞேயம். ஜ்யேஷ்டன் - தமையன். ஜ்யேஷ்டை - தமக்கை. ஜ்யோதி - ஒளி, ப்ரபை. ஜ்யோதிஷம் - சோதிடம். ஜ்வரம் - காய்ச்சல் நோய். ஜ்வாலை - சுவாலை. ஸ் ஸ் - ஓர் ஸம்ஸ்கிருத எழுத்து.ஸ்கந்தம் -கந்தம். ஸ்கந்தன் - கந்தன். ஸ்கலனம், ஸ்கலிதம் - பெரும்பாடு,விந்துவீழ்கை விழுகை. ஸ்காந்தம் - கந்தபுராணம். ஸ்தம்பம் - தம்பம். ஸ்தம்பனம் - தம்பனம். ஸ்தலம் - தலம். ஸ்தவம் - தவம். ஸ்தனம் - முலை. ஸ்தாணு - தாணு. ஸ்தாபகம் - தாபகம். ஸ்தாபிதம் - நிலைநிறுத்துகை, புதைபொருள். ஸ்தாபித்தல் - நிலைநிறுத்துதல். ஸ்தாவாரம் - தாவாரம். ஸ்தானம் - இடம். ஸ்தானிகம் - கோயிற் றலைமை.ஸ்தானிகர்கள், ஸ்தானிகாள் - கோயிலார். ஸ்தானியாம் - நிலை. ஸ்தானியாள் - ஸ்தானிகாள். ஸ்தானீகம் - ஸ்தானிகம். ஸ்தானீகன் - பூசாரி. ஸ்திதம் - நிற்பது. ஸ்திதி - இருப்பு. ஸ்திரம் - திரம். ஸ்திரரங்கம் - அவிரி. ஸ்திரீ - பெண். ஸ்துதி - துதி. ஸ்துத்தியம் - துத்தியம். ஸ்துஸ்ருதிதைவதம் - மத்தியவிளரி. ஸ்துஸ்ருதிரிஷபம் - மத்தியதுத்தம். ஸ்தூண் - தூண். ஸ்தூபி - தூபி. ஸ்தூலம் - தூலம். ஸ்தோத்திரம் - தோத்திரம். ஸ்தோமம் - சேனை. ஸ்தௌத்தியம் - ஸ்தவம். ஸ்நானம் - முழுக்கு. ஸ்நேகம் - சினேகம். ஸ்பஷ்டம் - தீர்க்கம், வெட்ட வெளிச்சம். ஸ்படிகம் - படிகம். ஸ்பரிசம் - ஊறு, பரிசம், மெய் யெழுத்து. ஸ்பரிசனம் - தொடுதல். ஸ்போடகம் - கொப்புளம். ஸ்மார்த்தம் - ஸ்மிருதி சம்பந்தம். ஸ்மிருதி - தருமசாத்திரம், நினைவுகூறுகை. ஸ்வகதம் - தன் கொள்கை. ஸ்வகதன் - சந்தேகி, நாஸ்திகன். ஸ்வச்சம் - சுவச்சம். ஸ்வஸ்தம் - சுவஸ்தம். ஸ்வஸ்தி - சுவஸ்தி. ஸ்வஸ்திகம் - சுவஸ்திகம். ஸ்வதந்திரம் - சுவதந்திரம். ஸ்வதர்மம் - கடமை. ஸ்வதா - சுதா. ஸ்வபாவம் - சுவாபம். ஸ்வபூ - ஸ்வயம்பு. ஸ்வயங்கிருதம் - சுயமாயுண்டானது. ஸ்வயம் - சுயம்.ஸ்வயம்பு, ஸ்வயம்புவன் - முதல்மனு. ஸ்வயம்வரம் - சுயம்வரம். ஸ்வரமண்டலம் - சுரமண்டலம். ஸ்வரம் - சுரம். ஸ்வரூபம் - சொரூபம். ஸ்வர்க்கம் - சுவர்க்கம். ஸ்வர்க்காதிபதி - இந்திரன்.ஸ்வர்ணம், ஸ்வர்னம் - சுவர்ணம். ஸ்வல்பம் - சொற்பம். ஸ்வாகதம் - வாழ்த்து. ஸ்வாகா - சுவாகா. ஸ்வாஸ்தியம் - சுவாஸ்தியம். ஸ்வாதந்திரியம் - சுதந்தரம். ஸ்வாபாவிகம் - சுபாவம், சுபாவிகம். ஸ்வாமி - சுவாமி. ஸ்வார்த்தம் - சுவார்த்தம். ஸ்வேச்சை - சுவேச்சை. ஸ்வேதசம் - சுவேதசம். ஸ்வேதம் - சுவேதம். ஸ்மசானம் - சுடுகாடு, மசானம். ஸ்மசானவாசி - சிவன். ஸ்மரணம் - அவதானம். ஸ்மரித்தல் - நினைவுகூரல். ஸ்ரீ ஸ்ரீ - இலட்சுமி, பாக்கியம். ஸ்ரீகண்டன் - சிவன். ஸ்ரீகரம் - இலட்சுமீகரம், பாக்கியம். ஸ்ரீகாந்தன் - விஷ்ணு. ஸ்ரீகாரியம் - பரமகாரியம். ஸ்ரீஜயந்தி - சயந்தி. ஸ்ரீதரன் - விஷ்ணு. ஸ்ரீதாளம் - தாளிப்பனையோலை.ஸ்ரீநிவாசன், ஸ்ரீயஃபதி, ஸ்ரீபதி - விஷ்ணு.ஸ்ரீமந்தன், ஸ்ரீமான் - சீமான். ஸ்ரீமுகம் - சீமுகன். ஸ்ரீமுகவருஷம் - சீமுகவருஷம். ஸ்ரீராமன் - இராமர். ஸ்ரீவச்சம் - விஷ்ணுவின் மார்பிலுள்ள ஓர்மறு. ஷ ஷடங்கம் - ஆறங்கம். ஷடத்துவா - ஆறத்துவா, அவைமந்திரம் புவன முதலியன. ஷடாதாரம் - ஆறாதாரம்.ஷட்காமம், ஷட்கிரியை - அறுதொழில். ஷட்குணம் - இறைவனது அறுகுணம். ஷட்சமயம் - அறுசமயம். ஷட்சாஸ்திரம் - ஆறுசாஸ்திரம். ஷட்ஸ்ருதிதைவதம் - மங்கதவிளரி. ஷட்ஸ்ருதிரிஷபம் - மங்கத்துத்தம். ஷஷ்டி - ஆறாந்திதி. ஷட்பதம் - வண்டு. ஷட்ரசம் - அறுசுவை. ஷட்வர்க்கம் - காமமுதலிய அறுபகை. ஷட்விதமார்கிணி - நாற்பத்தாறாவதுமேளகர்த்தா. ஷண்முகப்பிரியை - ஐம்பத்தாறாவதுமேளகர்த்தா. ஷண்முகம் - ஆறுமுகம். ஷண்முகன் - குமரன். ஷண்முகி - பஞ்சமுத்திரைகளிலொன்று. க்ஷ க்ஷ - ஓர் ஸம்ஸ்கிருத எழுத்து. க்ஷணம் - கணம், சணம். க்ஷதை - உடைந்தது. க்ஷத்திரியன் - சத்திரியன். க்ஷபணகன் - புத்தன். க்ஷபணமதம் - சமணமதம். க்ஷமித்தல் - பொறுத்தல். க்ஷமை - பொறுமை. க்ஷயம் - ஓர்நோய், சிதைவு. க்ஷயித்தல் - கெடல். க்ஷா க்ஷாத்திரம் - குரோதம். க்ஷாமம் - பஞ்சம். க்ஷாரம் - உப்பு. க்ஷி க்ஷிதி - கிதி. க்ஷீ க்ஷீணம் - ஈனம். க்ஷீணித்தல் - கெட்டுப்போதல். க்ஷீரசாகரம் - பாற்கடல். க்ஷீரநீரம் - நீரும்பாலுங் கலந்தது. க்ஷீரம் - பால். க்ஷீராப்தி - பாற்கடல். க்ஷீராப்திதநயை - இலட்சுமி. க்ஷீரான்னம் - பாற்சோறு. க்ஷீரோதகம் - ஐக்கியம். க்ஷு க்ஷுத்திரம் - கொடுமை, சிறுமை. க்ஷுத்து - பசி. க்ஷுபாத்தை - பசிவருத்தம், குக்ஷிபாதை. க்ஷூ க்ஷூகுணதை - கெடுதி. க்ஷே க்ஷேத்திரக்கோவை - ஓர் நூல். க்ஷேத்திரக்கியன் - ஆத்துமா. க்ஷேத்திரம் - ஸ்தலம். க்ஷேபம் - காலங்கழித்தல். க்ஷேமம் - சுகம். க்ஷௌ க்ஷௌரம் - சௌரம். முதலாவது பெயரகராதி முற்றிற்று