யாழ்ப்பாண அகராதி 1 ஆசிரியர்கள் சந்திரசேகரப் பண்டிதர் சரவணமுத்துப் பிள்ளை இவ்வருந்தமிழ் அகராதி 1935இல் வெளிவந்தது 70 ஆண்டுகளுக்குப் பிறகு 2006இல் வெளியிடப்பட்டது புதுப்பொலிவுடன் மீள்பதிப்பாக மீண்டும் 2014இல் வெளிவருகிறது தமிழ்மண் பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : யாழ்ப்பாண அகராதி - 1 ஆசிரியர் : சந்திரசேகரப் பண்டிதர், சரவணமுத்துப் பிள்ளை பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 1842 இரண்டாம் பதிப்பு : 2006 மறு பதிப்பு : 2014 தாள் : 16 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 8+ 488 = 496 படிகள் : 1000 விலை : உரு. 620/- நூலாக்கம் : பாவாணர் கணினி தியாகராயர் நகர், சென்னை - 600 017. அட்டை வடிவமைப்பு : தமிழ்க்குமரன் அச்சு : ஸ்ரீ வெங்கடேசுவரா அச்சகம் இராயப்பேட்டை, சென்னை - 600 014. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே: 044-2433 9030 PREFACE (in original edition) This work, which is now offered to the public, is believed to be the first attempt at a complete Dictionary of the Tamil language in alphabetical order. It contains about 58,500 words being nearly four times as many as are found in the whole rJufuhâ. When the work was commenced the Compilers contemplated preparing little more than a Vocabulary for the use of Schools. This will account for the size of the Appendix in the vowels, and in f. It is not supposed to be free from defects, but it is believed that the work will be highly valuable not only to those who read the Christian Scriptures in the Tamil language but to those who study the higher branches of Tamil literature. AMERICAN MISSION PRESS, JAFFNA, 1842 முன்னுரை (மூல நூல்) : தமிழாக்கம் தமிழ்மொழியின் சொல்வளத்தை அகரவரிசையில் முழுமை யாகத் தரும் முதல் முயற்சியாக உருவாக்கப்பட்ட இவ்வகராதி தமிழுலகின் முன்னர் சமர்ப்பிக்கப்படுகிறது. இவ்வகராதியில் 58,500 சொற்கள் உள்ளன; அதாவது சதுரகராதி முழுவதிலும் அடங்கிய சொற்களைவிட நான்கு மடங்கு சொற்கள். பள்ளி மாணவ மாணவியர் பயன்படுத்தும் சொற்றொகுப் பாகத் தான் இப்பணி முதற்கண் தொடங்கப் பெற்றது. உயிர் முதற் சொற்களின் இணைப்பும் ககரச் சொற்களின் இணைப்பும் சற்று நீளமாக உள்ளதற்கு அதுதான் காணரம். இந்நூலில் பிழைகள் சில இருக்கலாம். எனினும் கிறித்தவ மறை நூல்களைத் தமிழில் பயில்பவர்களுக்கு மட்டுமன்றி தமிழ் இலக்கியத்தின் பல்வேறு நுட்பமான துறைகளில் பயில்வோருக்கும் இவ்வகராதி பெரும்பயன் தருவதாக இருக்கும் என்று நம்பப் படுகிறது. 1842. விடையூழியர், அமெரிக்கன் அச்சகம், யாழ்ப்பாணம், ஈழம் தந்த தமிழ்க் கொடை ஈழம் தந்த தமிழ்க்கொடை பெரிது. ஈழத்துப் பூதந்தேவனார் சங்க காலத்தவர். அக்காலத்திற்குப் பின்னர்க் காலம் காலமாகத் தமிழ் வளர்த்த முன்னோடியரும் புலமைச் சான்றோரும் ஏறத்தாழ இருநூற்றுவர் உளர். அவருள் அகராதி, கலைக் களஞ்சியம் என்பவற்றை முன்னின்று செய்து வழிகாட்டிய பெருமக்கள் மட்டும் இவண் சுட்டப்படுகின்றனர். “ஈழம் தந்த இனிய தமிழ்க் கொடை” என்னும் பெயரால், ஈழத்துத் தமிழ்ச் சான்றோர் பெருமக்கள் தனி நூலாக்கம் பெறுகின்றனர். நெ. சேனாதி ராய முதலியார் (1750 - 1840) மானிப்பாய் அமெரிக்கமிசன் தொகுத்த அகராதித் தொகையாளருள் இவரும் ஒருவர். சைமன் காசிச் செட்டி (1807 - 1861) தமிழ்ப் புலவர்களின் வரலாற்றை அகராதி முறையில் வரிசைப் படுத்தி ஆங்கில நூல் செய்தவர் இவர். இவர் செய்த இந்நூலே புலவர் வரலாற்று நூல்களில் முற்பட்டது என்பர். கூயஅடை ஞடரவயசஉh என்பது அதன்பெயர். விநோதரச மஞ்சரிபோல் கட்டுக் கதையல்லாத வரலாறு அது. அ. சதாசிவப் பிள்ளை (1820 - 1896) சைமன் காசிச் செட்டி ஆங்கிலத்தில் செய்த தமிழ்ப் புலவர் வரலாற்று நூலை விரிவு செய்து ‘பாவலர் சரித்திர தீபகம்’ என்னும் பெயரில் தமிழ் மொழி பெயர்ப்பாக வெளியிட்டவர் இவர் (1886) சந்திர சேகர பண்டிதர் (19ஆம் நூ.ஆ) சதுரகராதியை அடுத்துவந்த அகராதி யாழ்ப்பாண அகராதி ஆகும். அதனை மானிப்பாய் அகராதி என்றும் சொல்வர். அதனை ஆக்குதற்குப் பெரிதும் உழைத்தவர் இப்பண்டிதர். பீற்றர் பெர்சிவல் ஈழத்தில் வாழ்ந்த இவர், தமிழ்ப் பழமொழிகளைத் தொகுத்து ஆங்கில மொழிபெயர்ப்புடன் வெளியிட்டார். ஆங்கில - தமிழ் அகராதி ஒன்றும் வெளியிட்டார். கு. கதிரைவேற் பிள்ளை (1829 - 1904) சொற்களின் தோற்றம், இலக்கிய ஆட்சி முதலியவற்றைக் காட்டிப் பேரகராதி செய்தவர். மதுரைத் தமிழ்ச் சங்கப் பணிக்கு அவ்வகராதியால் பெருமை சேர்த்தவர். நா. கதிரைவேற் பிள்ளை (1844 - 1907) இவரும் பேரகராதி ஒன்று செய்தவர். ஆ. முத்துத் தம்பிப் பிள்ளை (1852 - 1917) இவர் இயற்றிய அபிதான கோசம் என்பது தமிழில் தோன்றிய கலைக் களஞ்சிய நூல்களுக்கு முன்னோடியானது (1902) ஆங்கிலம் - தமிழ் அகராதி ஒன்றும் இவர் செய்தார். சுவாமி ஞானப் பிரகாசர் (1875 - 1947) தமிழைப் பிறமொழிகளொடும் ஒப்பிட்டு ‘உலகத் தலைமொழி தமிழே’ என்பதை நிறுவியவர். சொற்பிறப்பியல் அகரமுதலி அமைத்து வெளியிட்டவர். ‘தமிழ் அமைப்புற்ற வரலாறு’ வரைந்தவர். ந.சி. கந்தையா பிள்ளை (1893 - 1967) செந்தமிழ் அகராதி, தமிழ்ப் புலவர் அகராதி, தமிழ் இலக்கிய அகராதி, காலக் குறிப்பு அகராதி, திருக்குறள் சொல்லடைவு அகராதி எனப் பல அகராதிகளைச் செய்த அரிய பெரிய உழைப்பாளர். இரா. இளங்குமரனார் பதிப்புரை அகராதி என்பது, கற்பார்க்குத் துணைநின்று உரிய பொருள் தெரிந்து கொள்ள வழிவகுப்பது; கல்வி கற்பிக்கும் ஆசிரியரின் நிலையில் உள்ளது அகராதி. ஆசிரியரிடம் நேரில் மாணவர் கல்வியின் பயனைப் பெறுவதுபோல அகராதியின் துணையால் அறிவு விளக்கம் பெறலாம். அகராதி என்பதை ‘மொழிஞாயிறு’ தேவநேயப் பாவாணர் அவர்கள் ‘அகரமுதலி’ என்று பெயரிட்டு முதன்முதலில் தமிழ் உலகில் புழக்கத்துக்கு விட்ட பெருமைக் குரியவர். முதல் தமிழ் அகராதி - சதுரகராதி 18ஆம் நூற்றாண்டில் இத்தாலி மண்ணிலிருந்து கிறித்தவ சமயம் பரப்பத் தமிழ்மண்ணுக்கு வந்தவர் பெஸ்கி பாதிரியார் என்னும் வீரமாமுனிவர். நிகண்டுகளிலும், பா வடிவிலும் அமைந்திருந்த சொற்பொருள் விளக்கங்களை முதன்முதலாக உரை நடையில் மாற்றி ‘அகராதியாக’ 1732ஆம் ஆண்டு படைத்தளித்தார். இப் படைப்பிற்குச் சதுரகராதி எனப் பெயரிட்டார். இப் படைப்பு 18ஆம் நூற்றாண்டில் இயற்றப்பெற்ற போதிலும் முழுமையாக 19ஆம் நூற்றாண்டில் 1824இல் தான் அச்சில் வெளிவந்தது. தமிழ் அகராதி வரலாற்றில் திருப்புமுனைக்கு அடிகோலியவர் வீரமாமுனிவர். தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் அனைத்து நூல்களையும் தேடி எடுத்து ஒரே நேரத்தில் அமிழ்தம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவர் நூல்களில் ஒன்றான காலக் குறிப்பு அகராதியைப் படிக்க நேர்ந்தபோது, 1842இல் சந்திர சேகரப் பண்டிதர் மற்றும் சரவணமுத்துப் பிள்ளை அவர்களால் தொகுக்கப்பட்ட மானிப்பாய் அகராதி என்னும் யாழ்ப்பாண அகராதியைப் பற்றிய குறிப்பு கிடைத்தது. தமிழ் அகராதிகளுக்கு அடித்தளம் யாழ்ப்பாண அகராதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மானிப்பாய் என்னும் ஊரில் அச்சிடப்பெற்றதால் ஊர்ப்பெயரைச் சுட்டி இப்பெயர் இடப் பெற்றது போலும். சதுரகராதியின் முதல் அகராதியாகிய பெயரகராதியின் விரிவே யாழ்ப்பாண அகராதியாகும். 19ஆம் நூற்றாண்டின் மையப் பகுதியில் 1842இல் இவ்வகராதி வெளிவந்தது. வெளிவந்த காலத்தில் தமிழ் மொழியின் நிலையும், இம் மொழியின்பால் மக்களின் பார்வையும் எப்படி இருந்தன என்பதை அறிய உதவுவது யாழ்ப்பாண அகராதி.. வடமொழி வல்லாண்மை மேலோங்கி இருந்த காலத்தில் வெளிவந்த அகராதி யாதலால் மூலத்தில் எவ்வித மாற்றமும் செய்யப் படாமல் மரபு கருதி உள்ளவாறே வெளியிட்டுள்ளோம். ‘அனுபந்த அகராதி’ என்ற பின்னிணைப்பு இந்தப் பதிப்பில் அகரவரிசைப்படி அவ்வவ் விடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. தாய்மொழியாம் தமிழ்மொழி உயர்ச்சியில் பற்றுடைய அன்பர்கள் அனைவருக்கும் பயன்படும்படி இவ்வகராதியை வெளியிட்டுள்ளோம். அண்மைக் காலத்தில் தமிழ்ப் பதிப்புலகில் பழந்தமிழ் அகராதிகள் படஅச்சுப் பதிப்பாக பரவலாக வெளி வந்துள்ள சூழலில், இன்றைய அறிவியலின் துணை கொண்டு அச்சுத் துறையின் வளர்ச்சி மேலோங்கி இருக்கும் நிலையில் கணினி வழி புத்துயிர் பெற்று மிகச் சிறந்த வடிவமைப்புடன், இந்நூலினைத் தமிழ் கூறும் உலகிற்கு புதிய வரவாய்க் கொடுத் துள்ளோம். தமிழ் அகராதிகளின் வளர்ச்சியை விரும்புவார்க்குப் பழைய அகராதிகள் வழிகாட்டும் ஒளிவிளக்காய் அமையும். நம் பாட்டன் தந்த அருந்தமிழ்ச் செல்வத்தைத் தேடி எடுத்துத் தமிழர்க்குக் கருவூலமாய்த் தந்துள்ளோம். தமிழ் இளந்தலைமுறைக்கும், ஆய்வாளர்களுக்கும், கல்லூரி, பல்கலைக்கழக நூலகங்களுக்கும் பயன்படும் எனும் நோக்கில் 2006இல் வெளிவந்த இவ்வருந்தமிழ் பேரகராதியை மீள் பதிப்பாக இவ்வாண்டு வெளியிடுகிறோம். தமிழர் தம் நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைத் தமிழர்க்குக் கொண்டு சேர்க்கும் பெரும் பணியை தொலைநோக்குப் பார்வை யுடன் எம் பதிப்புச் சுவடுகளை பதித்து வருகிறோம். உலகெங்கும் பரந்து வாழும் எம் தமிழ்ப் பேரினம் அகர முதலி துறைக்கு திறவு கோலாக உள்ள இவ்வருந்தமிழ் அகராதியை வாங்கிப் பயனடையும் என்று நம்புகிறோம். இப் பழந்தமிழ்ப் பெட்டகம் புதுப்பொலிவோடு வருவதற்கு தோளோடு தோள் நின்று உழைத்த அனைவருக்கும் எம் நன்றி. பதிப்பாளர் யாழ்ப்பாண அகராதி பாகம் – 1 அ அ - அஃறிணைப்பன்மையீறு, ஆறாவதன் பன்மையுருபு, சாரியை, சுட்டு, இன்மை-எதிர்மறை-குறைவு-தடை-பிறிது-வியப்பு இவற்றைக் காட்டுமோருப சருக்கம், ஓரெழுத்து, பெயரெச்ச விகுதி, வினையெச்ச விகுதி. அஃகரம் - வெள்ளெருக்கு. அஃகல் - குறைதல், சுருங்கல். அஃகுபோதம் - நிலாமுக்கிப்புள். அஃகுல்லி - சிற்றுண்டி, பிட்டு. அஃகேனம் - ஆய்தவெழுத்து, முள்ளில்லாப்பன்றி. அஃது - அது. அஃறிணை - இழிதிணை. அகக்கடவுள் - மனம். அகக்காழ் - ஆண்மரம், உள்வயிரம், வச்சிரக்கல். அகங்கரித்தல் - ஆங்காரங்கொள் ளுதல். அகங்கரிப்பு - மனவெறுப்பு. அகங்களித்தல் - மனமகிழ்தல். அகங்காரக்கிரந்தி - ஆணவ மறைப்பு, மாயாபாசமும் மலத்தொடக்கு. அகங்களித்தல் - மனமதர்த்தல். அகங்காரத்திரயம் - முக்கியவகங் காரம், முக்கியா முக்கியவகங் காரம், அமுக்கியவகங் காரம் எனமூன்று. அகங்காரம் - அகந்தை, உட்கரணம் நான்கினொன்று. அகங்காரி - அகங்காரமுடையது. அகங்காழ் - அகக்காழ். அகங்கை - உள்ளங்கை. அகசியம் - வேடிக்கை. அகசு - பகல், பொழுது. அகச்சுட்டு - சொல்லகத்து முதனி லையாயமைந்துநிற்குஞ் சுட்டு. அகடம் - பொல்லாங்கு, அநீதம். அகடவிகடம் - அபாயம், இரண்டகம், வஞ்சகம். அகடு - உள், நடு, பொல்லாங்கு, வயிறு, சீர், மேடு. அகடூரி - பாம்பு. அகணி - உள், மருதநிலம், வயல், தெங்குபனைமுதலிய வற்றினார். அகணிதபஞ்சாங்கம் - அலகிடாது சொல்லும்பஞ்சாங்கம். அகணிதபஞ்சாங்கி - கணியாது பஞ்சாங்கஞ் சொல்வோன். அகணிதம் - எண்ணிக்கையின்மை. அகண் - அருகு. அகண்டம் - எல்லாம், மண்ணகல். அகண்டன் - அருகன், கடவுள், சிவன், விட்டுணு. அகண்டாகண்டன் - கடவுள். அகண்டாகாரவிருத்தி - அஞ்ஞான நீக்கிச்சீவசாட்சியைத் தோற்று விப்பது. அகண்டி - ஓர்வாச்சியம். அகண்டிதம் - முழுதும், ஏற்றுக் கொள்ளல், கண்டிப்பில்லது, கூறு படாமை. அகதங்காரன் - வைத்தியன். அகதம் - ஓர்குழிகை, சுகம். அகதி - தகுதியற்றவன், போக்கற்றவன், வறியவன். அகதேசி - உள்ளூர்யாசகி. அகதேசு - பிணியில்லான். அகத்தி - ஒரு மரம். அகத்திணை - உள்ளொழுக்கம். அகத்திணைப்புறம் - கைக்கிளையும் பெருந்திணையும். அகத்தியன்-சத்தவிருடிகளிலொரு வன். அகத்தியம் - அவசரம், தேவை. அகத்தியா - ஆழம், எட்டாமை. அகத்தீடு - கைக்குள் விட்டணைத்தல். அகத்துறுப்பு - உள்ளியல். அகநிலை - கடவுள். அகந்தை - ஆங்காரம், செருக்கு. அகப்படுத்தல் - உட்படுதல், கிடைத் தல், கிட்டுதல், சிக்குதல். அகப்பற்று - மனவிருப்பு. அகப்பா - அகழி, மதிலுண்மேடை, மதில். அகப்பாடு - அகப்படுதல், உண்ணி கழ்ச்சியானது. அகப்பாட்டுவண்ணம் - முடியாது போன்றுமுடிவது. அகப்பாட்டுறுப்பு - திணைமுதற்று றையீறாகக் கூறப்படு முறுப்புப் பன்னிரண்டும். அகப்புறக்கைக்கிளை - காமஞ்சால விளைமைத்தன்மையுடைய தலைமகள் பக்கத்துத்தலைமகன் குறிப்பினை யறியாது அவளோடு மேன்மேலுங் கூறுவது. அகப்புறத்திணை - கைக்கிளையும் பெருந்திணையும். அகப்புறப்பாட்டு - மடலேறுதன் முதலாகத்தபுதார்நிலையீறாகச் சொல்லப்பட்டவியற்பெயர்க் கோடாமையாம். அகப்புறப்பெருந்திணை - அகன்று ழிக்கலங்கன் முதலாகத் தலைவி யுந்தானும் வனமடைந்து நோற்ற லீறாகச் சொல்லப் பட்டனவும் பிறவுங்கூறுதலாம். அகப்புறப்பொருள் - கைக்கிளையும் பெருந்திணையும். அகப்பு - தாழ்வு. அகப்பை - சட்டுவம். அகப்பொருட்கோவை - ஓர்பிரபந்தம். அகப்பொருள் - ஓரிலக்கணம், அஃது உண்ணிகழ்ச்சியான சிற்றின்பத்திற் குரிய வெழுதிணையைக் கூறும். அகமகிழ்ச்சி, அகமலர்ச்சி - ஆனந்தம், மனமகிழ்ச்சி. அகமம் - மரப்பொது. அகமரிஷணம் - அகங்கையுணீர் விட்டுமூக்கு நுதியில் வைத்துச் செபித்தல். அகமருடணம் - நீர்க்குணின்று செய்யு மோர் செபம். அகம் - இடம், உள், தானியம், பள்ளம், பாவம், பூமி, மரப்பொது, மனம், வீடு, ஆன்மா,உபத்திரவம், ஏழனுருபு, ஓர்மரம், குணா குணம், சூரியன், பாம்பு, மலை, வருத்தம். அகம்படியார் - உள்வேலைக்காரர், ஓர் சாதியார். அகம்பிரமம் - ஆங்காரம், நாமேபிரமமெனல். அகம்மதி - அறியாமை, தற்பிரியம். அகம்மியம் - பத்திலட்சங் கோடி கோடிகோடாகோடி. அகரம் - எழுத்தின் சாரியை, ஓரெழுத்து, பார்ப்பனச்சேரி, மருத நிலத்தூர், வீடு. அகராதி - அகரமுதலெழுத்துக்களாற் றொடங்குஞ் சொற் கோவை. அகரீஷணம் - துக்கம், வெறுப்பு. அகரு - அகில். அகருதம் - வீற்றிருத்தல். அகர்த்தத்துவம் - அழிக்குந்தத்துவம், செயலின்மை. அகர்த்தனன் - குள்ளன். அகர்த்தா - பஞ்சகோசங் கட்கன்னி யன். அகர்த்தியம் - கிருத்துவம். அகர்ப்பதி, அகர்ம்மணி - சூரியன். அகர்ம்முகம் - வைகறை. அகலக்கட்டை - அகலமற்றது. அகலம் - மார்பு, விசாலம், விரிவு, தரவை. அகலர் - சண்டாளர். அகலல் - நீங்கல், பிரிதல், விசாவித்தல், விருத்தித்தல். அகலவுரை - விரித்துரை, அஃது இலக் கணமும் இலக்கியமு மெடுத்துக் காட்டிப் பொருள் விரித்துரைப்பது. அகலிகை - பஞ்சகன்னிகைகளி லொருத்தி. அகலிடம் - பூமி. அகலியம் - மரப்பொது. அகலுதல் - அகன்றுபோதல், நீங்குதல், விரிதல். அகலுள் - அகலம், ஊர், நாடு, பெருமை. அகல் - அல்குல், தகழி, நீங்கென் னேவல். அகல்வு - அகலம், அகலல். அகல்வோர் - ஈனர். அகவலுரிச்சீர் - ஈரசைச்சீர். அகவலோசை - ஆசிரியப்பாவிற் குரியவோசை. அகவல் - அழைத்தல், ஆசிரியப்பா, ஆடல், ஒரு சந்தம், மயிற்குரல். அகவற்சுரிதகம் - ஆசிரியச்சுரிதகம். அகவற்பா - ஐந்துபாவினொன்று, அஃது நாற்சீரான்வருமள படி யாயும் இயற்சீர்பயின்றும் அயற் சீர் விரவியுந் தன்றளை தழுவியும் பிறதளை மயங்கியும் கருவிளங் கனிகூவிளங்கனியென்னு மிரு சீர்கலவாது மூன்று முதலிய பல வடிகொண்டுமுடிவது. அகவற்றுள்ளல் - வெண்டளையுங் கலித்தளையும் விரவிவருவது. அகவற்றூங்கல் - ஒன்றாதவஞ்சித் தளையான்வருவது. அகவிதழ் - உள்ளிதழ். அகழான் - ஓரெலி. அகழி - அகழ். அகழெலி - அகழான். அகழ் - அகழி, தோண்டென்னேவல். அகழ்தல் - தோண்டல். அகளங்கமூர்த்தி - புத்தன். அகளங்கம் - சீதாங்கபாஷாணம். அகளங்கன் - கடவுள், மாசிலான், புத்தன். அகளம் - தாழி, மிடா. அகளி - தாழி, மிடா. அகறல் - அகலம், கடத்தல். அகற்றுதல் - அகலப்பண்ணுதல், துரத்துதல், விரித்தல். அகனம் - கனமில்லாதது. அகன்மக்கத்திருப்பிரயோகம் - செயப் படுபொருளிலாவினை, (உம்) நடந்தான். அகன்மணி - தெய்வமணி. அகன்றில் - ஒருபட்சி, ஆண் அன்றில். அகன்னம் - செவிடு. அகாசரம் - அறியாமை. அகாண்டபாதசாதம் - சாதமரணம். அகாதம் - நீந்துபுனல், பள்ளம், வஞ்சகம். அகாதன் - வஞ்சகன். அகாதத்துவம் - ஆழம். அகாதம் - முந்து. அகாதிதம் - பட்சித்தல். அகாத்தியம் - பொல்லாங்கு வஞ்சனை. அகாத்துமசை - பார்வதி. அகாரணம் - காரணமின்மை. அகாரணன் - ஏதுவில்லான். அகாரத்திரயவித்தை - பஞ்சாக்கர வித்தைகளினொன்று. அகாரம் - ஓரெழுத்து, வீடு. அகாரி - கடவுள். அகாரியம் - காரியமற்றது, துற் செய்கை. அகாலமிருத்து - அநியமமரணம். அகாலம் - அவகாலம், நியமமல்லாத காலம், பஞ்சகாலம். அகி - இரும்பு, பாம்பு, இராகு, ஈயம், சூரியன், பிரயாணி. அகிகாந்தம் - காற்று. அகிகை - பட்டுப்பருத்தி. அகிஞன் - தரித்திரன். அகிதம் - இதமின்மை, உரிமை யின்மை, தீமை, பகை, தியானம், போசனம். அகிதர் - பகைவர். அகிபதி - சேடன். அகிபுசம் - கலுழன், மயில். அகிபேனம் - அவின், பாம்பினஞ்சு. அகிரன் - சூரியன், தீ. அகிருதம் - முற்றாவேலை. அகிருதித்துவம் - அந்தக்கேடு. அகிருத்தியம் - தப்பானசெய்கை. அகிலம் - எல்லாம், பூமி. அகிலாண்டம் - சருவாண்டம், பூவண்டம். அகில் - ஓர்மரம், பஞ்சவிரையி னொன்று. அகிற்கூட்டு - ஏலம், கருப்பூரம், காசுக்கட்டி, சந்தனம், தேன். அகீர்த்தி - துற்கீர்த்தி. அகுடம் - கடுகுரோசனி. அகுணம் - குணமின்மை, குறைவு, துற்குணம். அகுதி - அகதி. அகுப்பியம் - பொன், வெள்ளி. அகும்பை - கவுழ்தும்பை. அகுலீனம் - குலவீனம். அகூடகந்தம் - பெருங்காயம். அகேசன் - மொட்டையன். அகேது - முகாந்திரமின்மை. அகைத்தல் - அடித்தல், அறுத்தல், எழுச்சி, ஒடித்தல், செலுத்தல், முரித்தல், வருந்துதல், உயர்த்தல். அகைப்பு - அடி, அறுத்தல், எழுச்சி. அகைப்புவண்ணம் - அறுத்தறுத் தொழுகும்வண்ணம். அகோ - அதிசயச் சொல். அகோசரம் - அறியொணாமை, காணப்படாமை. அகோடம் - கழுகு. அகோதாரை - மிகப்பொழிதல். அகோரம் - உக்கிரம், உட்டணம், கொடுமை, சிவனைம் முகத் தொன்று. அகோராத்திரம் - பகலிரா. அகோரை - உட்டணநாள். அக்ககன்னம் - அட்சரேகை. அக்கசாலையர் - கம்மாளர், தட்டார். அக்கடி - அலைவு, இடைஞ்சல், வருத்தம். அக்கணம் - பொரிகாரம், வெண் காரம். அக்கண்டே - அக்காளே. அக்கதம் - அட்சதை, பங்கப்படா தது, பழு தின்மை. அக்கதயோனி - கன்னி. அக்கதேவி - சோனைப்புல்லு. அக்கதூர்த்தன் - அத்தநாசஞ் செய் வோன். அக்கந்து - புறக்கந்து. அக்கபாடம் - மற்களரி. அக்கப்பாடு - நிலையழிவு, மரக்கலச் சேதம், மோசம். அக்கமம் - பொறாமை. அக்கமுன்றி - கண். அக்கம் - அருகு, உருத்திராட்சம், கண் கயிறு, தானியவிலை, தான்றி, பொன், ஆன்மா, உப்பு, ஓர்நிறை, சில்லு, சொக்கட்டான்காய், ஞானம், துரிசு, தேருறுப்பு, தேர், பாம்பு, வழக்கு. அக்கரசுதகம் - ஓர்மிறைக்கவி. அக்கரம் - எழுத்து, ஓர்நோய், ஆகாயம், பிறவியறுத்தல். அக்கரன் - சிவன், திருமால், பிரமம். அக்கராந்தம் - எழுத்தொலி. அக்கவாடம் - மற்களரி. அக்கரவிலக்கணம் - எழுத்தியல்பு, கலை ஞானமறுபத்தினான்கி னொன்று. அக்கராரம்பம் - எழுத்துப் பயில வைத்தல். அக்களித்தல் - மனமகிழ்தல். அக்களிப்பு - மனமகிழ்ச்சி. அக்கறை - காரியம், குற்றம். அக்கன் - நாய், கருடன், குருடன். அக்காகிரம் - பண்டியச்சு, பண்டியின் முற்பக்கம். அக்காதேவி - மூதேவி. அக்காரம் - கருப்புக்கட்டி, சருக்கரை, மாமரம். அக்காள் - தமக்கை. அக்கிக்கல் - ஓரிரத்தினம். அக்கி - உட்டணம், ஓர்நோய், கண். அக்கிதாரை - கண்மணி. அக்கிபடலம் - கண்ணோயு ளொன்று. அக்கியாதம் - மறைவு. அக்கியாதவாசம் - மறைந்திருத்தல். அக்கியாதி - துற்கீர்த்தி. அக்கியானம் - அறிவின்மை, ஞான மின்மை. அக்கியானி - அறிவீனன், ஞான மில்லாதவன். அக்கிரகரம் - கைநுனி, வலக்கை. அக்கிரகாரம் - பிராமணவீதி. அக்கிரசங்கை - அக்கிரசம்பாவனை, முன்றொடை. அக்கிரசந்தானி - நமன்கணக்கு. அக்கிரசன் - அண்ணன், பிராமணன். அக்கிரசன்மன் - அண்ணன், பிரமா, பிராமணன். அக்கிரசாதகன், அக்கிரசாதி - பார்ப் பான். அக்கிரநிரூபணம் - முன்னிருபித்தது. அக்கிரபாகம் - நுனி, முதற்பங்கு, முன்பக்கம். அக்கிரபாணி - கைநுனி, வலக்கை. அக்கிரசம்பாவனை - முதன்மரியாதை. அக்கிரபூசை - முதன்மைப்பூசை, முதன்மையுபசாரம். அக்கிரமம் - கொடுமை, ஒழுங்கின்மை. அக்கிரமாமிசம் - இரத்தாசயம். அக்கிரம் - நுனி. அக்கிராதம் - கோபமின்மை. அக்கிராத்தம் - கைநுதி - வலக்கை. அக்கிராந்தம் - சேம்பு. அக்கிராரம் - அக்கிரகாரம், விளை நிலம். அக்கிரியன் - தமையன். அக்கிரு - விரல். அக்கிரேவனம் - காட்டோரம் அக்கிள் - கைக்குழி. அக்கினி - செங்கொடுவேலி, நெருப்பு, பித்தம், பொன், மூலாக்கினி. அக்கினிகணம் - தீப்பொறி, நிரை நேர்நிரைக்கணம். அக்கினிக்கட்டு - அக்கினித்தம்பனம். அக்கினிகருப்பம் - கடனுரை, சூரிய காந்தம். அக்கினிகருப்பன் - குமரன். அக்கினிகோணம் - தென்கீழ். அக்கினிகோத்திரம் - தீ, நெய், யாக மிருபத்தொன்றினொன்று. அக்கினிசகன் - காற்று. அக்கினிசகாயம் - காற்று. அக்கினிசன்மன் - குமரன். அக்கினிசாலம் - ஓர்பூடு. அக்கினிசிகம் - அம்பு, வாணம், விளக்கு. அக்கினிசேகரம் - மஞ்சள். அக்கினிச்சுவாலை - தீக்கொழுந்து. அக்கினிட்டோமம் - யாகமிருபத் தொன்றினொன்று. அக்கினிதிரேதை - திரியாக்கினி. அக்கினித்திராவகம் - ஓர் திராவகநீர். அக்கினித்தம்பம் - ஓர்வித்தை, கலை ஞானமறுபத்தினான்கி னொன்று, நெருப்புத்தூண். அக்கினித்தம்பனம் - நெருப்புச் சுடாமற்செய்யும் வித்தை. அக்கினித்தூண் - தீப்பிழம்பு. அக்கினிநாள் - கொடியநாள். அக்கினிபரிச்சதம் - ஓமோபகரணம். அக்கினிபரீட்சை - மழுவேந்தன் முதலிய வித்தை. அக்கினிபோஷணம் - வைசுவ தேவ பூசை. அக்கினிப்பிரத்தரம் - தீக்கல். அக்கினிமணி - சூரியகாந்தம். அக்கினிமண்டலம் - மும்மண்டலத் தொன்று அஃது மூலாதார முதனா பிக்க மலமளவும். அக்கினிமாருதி - அகத்தியன். அக்கினிமுகம் - சேங்கொட்டை. அக்கினிமுகன் - தீ, பார்ப்பான். அக்கினியாகாரம் - ஓமசாலை. அக்கினியாதானம் - ஓமாக்கினி வளர்த்தல். அக்கினியாதேயம் - நித்தியதீ வளர்த்தல், யாகமிருபத்தொன்றி னொன்று. அக்கினியாலயம் - அக்கினியாகாரம். அக்கினியின்குணம் - ஆலசியம், தாகம், நித்திரை, பசி, மைதுனம். அக்கினியின்கோபம் - பித்தம். அக்கினியுற்பாதம் - விண்வீழ்கொள்ளி. அக்கினியோகம் - அக்கினிக்குரிய யோகம். அக்கினிவருத்தனம் - தீவளர்த்தல். அக்கினிவல்லபம் - கீல். அக்கினிவாகம், அக்கினிவாகு - புகை. அக்கினிவிசர்ப்பம் - விரணக்கொதி. அக்கினிவீசம், அக்கினிவீரியம் - பொன். அக்கு - எருத்துத்திமில், எலும்பு, கண், சங்குமணி, பலகறை. அக்குத்து - சந்தேகம், மையம். அக்குரன் - இடையெழுவள்ளலி லொருவன். அக்குருக்கி - சயரோகம். அக்குறோணி - படையிலோர் தொகை, அஃது அரிகம்மூன்று கொண்டது. அக்கை - முன்பிறந்தாள், அன்னை. அக்கோ - அதிசயச்சொல், இரக்கச் சொல். அக்கோடகம், அக்கோடம் - கடுக்காய். அக்கோணி - பத்துநூறாயிரத்தொன் பதினாயிரத்து முந்நூற்றைம்பது காலாளும் அறுபத்தையாயிரத்து, அறுநூற்றறுபதுகுதிரையும் இருபத்தையாயிரத்து எண்ணூற் றெழுபது இரதமும் இருபத்தொ ராயிரத்து எண்ணூற்றெழுபது யானையுங் கொண்டது. அக்கோபம் - உறுதி, யானைகட்டுந் தூண். அக்கௌகீணி - அக்கோணி. அங்ககம் - அங்கம். அங்ககாரம் - அங்கசேட்டை, அபி நயம். அங்கசங்கம் - புணர்ச்சி. அங்கசம் - உதிரம், உரோமம், காமம், நோய். அங்கசன் - மன்மதன். அங்கணம் - சலதாரை, சேறு, பொரி காரம், மதகு, முற்றம், வெண்காரம், பத்துமுழத்தளவு. அங்கணன் - அருகன், சிவன், மிருத பாஷாணம், விட்டுணு. அங்கணி - காளி, பார்ப்பதி. அங்கண் - அவ்விடம். அங்கதம் - தோளணி, பழிச்சொல், பாம்பு, பொய், யானையுணவு, மார்பு. அங்கதி - கொடை, தீ, நோய், பார்ப் பான், பிரமா, வாயு, விட்டுணு. அங்கதை - தென்றிசையானைக்குப் பெண்யானை. அங்கநியாசம் - அனுட்டானமுறையி லொன்று. அங்கபடி - குதிரையங்கபடி. அங்கபாலி, அங்கபாலிகை - கட்டித் தழுவுதல். அங்கப்பிரதட்சணம் - சரீரத்தாலு ருண்டுலம் வருகை. அங்கமாலை - ஓர்பிரபந்தம். அங்கம் - அடையாளம், அவயவம், உடல், உறுப்பு, எலும்பு, ஓர்தேயம், கட்டில், சாயல், பதினெண் பாடையிலொன்று, பாவனை, வேதாங்கம், அத்தியாயம், அலங் கரிப்பு, ஆறங்கம், ஓர் விளையாட்டு, குற்றம், சமீபம், தங்குமிடம், தாளப் பிரமாணம்பத்தினொன்று, பரதவுறுப்பு ளொன்று, மனம், வரி. அங்கரட்சணி - யுத்தகவசம். அங்கராகம் - பூசும்பரிமளம். அங்கரூகம் - உரோமம். அங்கர் - அங்கதேசத்தார். அங்கர்கோமான் - கன்னன். அங்கலாய்ப்பு - பேராசை. அங்களி - கற்றாளை. அங்கவம் - பழவற்றல். அங்கவிட்சேபம் - அபிநயம். அங்கவித்திகை - கணிதம். அங்கனாகணம் - மாதர்கூட்டம். அங்கனை - பெண், ஓரிராசி, வட திசை யானைக்குப் பெண்யானை. அங்காடி - கடைவீதி. அங்காதிபாதம் - ஓர்வைத்தியநூல், முழுவுடம்பு. அங்காத்தல் - வாய்திறத்தல். அங்காப்பு - அண்ணாத்தல், வாய் திறத்தல். அங்காரகன் - செவ்வாய், நெருப்பு. அங்காரவல்லி - குறிஞ்சி. அங்காரதானிகை - சூட்டடுப்பு, தீச் சட்டி. அங்காரபரிபாசிதம் - பொரிக்கறி. அங்காரம் - கரி, தீ. அங்காரன் - அங்காரகன். அங்காரிகை - கரும்பு. அங்காவணம் - பஞ்சதருவின்பந்தர். அங்கி - அங்கத்தையுடையது, கார்த்திகை நட்சத்திரம், சட்டை, தீ. அங்கிகரித்தல் - ஏற்றுக்கொள்ளுதல், தழுவிக்கொள்ளுதல். அங்கிகரிப்பு - ஏற்றுக்கொள்ளல். அங்கிகாரம் - அங்கிகரித்தல். அங்கிசம் - உபநிடத முப்பத்திரண்டி னொன்று, கூறு, பங்கு, வமிசம். அங்கிஷபாதி - சிறுபுள்ளடி. அங்கிஷம் - வமிசம், வாழை. அங்கிடுதத்தி - நாடோடி, நிலை கெட்டவன். அக்கிட்டோமம் - கோமேதகம். அங்கிதம் - உடற்றழும்பு. அங்கிநாள் - அத்தநாள். அங்கிரகம் - சரீரநோ. அங்கிரி - கால், மரமூலம், மூன்றுகாலிருடி. அங்கினி - கற்றாழை. அங்கிரிநாமகம் - மரமூலம். அங்கீகரணம் - சம்மதித்தல். அங்கீகரித்தல் - ஏற்றுக்கொள்ளல், சம்மதித்தல். அங்கீகாரம் - சம்மதி, வாக்குத்தத்தம். அங்கு - அவ்விடம். அங்குசகிரகன் - யானைப்பாகன். அங்குசதாரி - தாளகம், யானைப் பாகன், விநாயகன். அங்குசபாசமேந்தி - விநாயகன். அங்குசபாணி - காளி, விநாயகன், வீரபத்திரன். அங்குசன் - சரகாண்டபாஷாணம். அங்குசம் - தோட்டி, வாழை. அங்குசவி - கொள். அங்குடம் - துறப்பு. அங்குஷடம் - பாண்டுவியாதி. அங்குட்டம் - குறளுரு, பெருவி. அங்குட்டான் - விரலுறை. அங்குரகம் - கூடு. அங்குரம் - முளை, உரோமம், தளிர், நங் கூரம், நீர். அங்குரார்ப்பணம் - முளையிடுதல். அங்குரி - விரல். அங்குரித்தல் - முளைத்தல். அங்குரீயம் - அங்குலியம். அங்குலம் - விரற்கிடை, பெருவிரல், விரல். அங்குலி - விரல், ஐவிரலிச்செடி, துதிக்கை நுனி. அங்குலியம் - மோதிரம். அங்குலிசந்தேசம் - விரனொடித்தல். அங்குலிதோரணம் - திரிபுண்டரம். அங்குலித்திரம் - விரற்புட்டில். அங்குலிபஞ்சகம் - ஐந்துவிரல். அங்குலித்திராணம் - விரற்புட்டில். அங்குலிமுகம் - விரனுனி. அங்குலிமுத்திரை- முத்திரைமோதிரம். அங்குலிமோடனம் - விரனொடித்தல், விரலாற்றெறித்தல். அங்குலீகம், அங்குலீயகம் - மோதிரம். அங்கூசம் - அங்குசம். அங்கூடம் - அம்பு, கீரி. அங்கூரம் - தளிர். அங்கை - உள்ளங்கை. அங்கோலம் - அழிஞ்சில். அங்ஙனம், அங்ஙன் - அவ்விடம், அவ்விதம். அங்சம் - அமிசம். அசகம் - வரையாடு. அசகவம்-சிவன்வில்,அஃது இருதலை திருமாலும் நடுப்பிரமனுமா யிருப்பது. அசங்கச்சித்தன்- அஞ்ஞானமனத்தன். அசக்கல் - கட்டல். அசங்கதம் - ஒழுங்கின்மை, பொய். அசங்கதம் - வெறுப்பு. அசங்கதி - இணக்கமின்மை, ஒவ் வாமை. அசங்கமம், அசங்கியம் - அசட்டை, இகழ்ச்சி, பவித்திரமின்மை, புலவி. அசங்கம் - விரோதம், தனிமை, நிச்சயம், பயமின்மை. அசங்கற்பம் - உண்மை, முன்னி தானிப்பின்மை. அசங்கன் - அஞ்ஞானன், ஒட்டாத வன். அசங்குதல் - அசைதல். அசங்கை - சங்கையீனம். அசங்கோசம் - அடக்கமின்மை. அசசீவிகன் - ஆட்டுக்காரன். அசஞ்சலம் - ஐயம், திடாரிக்கம். அசஞ்சிதன் - முத்தன். அசடர் - கீழ்மக்கள். அசடு - இசடு, இரும்புமுதலிய வற்றிற் பெயருமசடு. அசட்டை - பராமுகம், மதியாமை. அசதாசாரம் - துன்னடை. அசதி - அயர்ச்சி, சிரித்துப்பேசல், மறதி, வசவி. அசதீசுதன் - சோரபுத்திரன். அசத்தியம் - பொய். அசத்திலட்சணம் - அசம்பவம். அசத்துரு - சந்திரன், மித்துரு. அசத்தை - சூனியம், பிரவஞ்சம், பொய். அசந்தம் - உயிரெழுத்தில் முடியுஞ் சொல். அசந்தானம் - சந்தானமின்மை, பிரி வினை. அசந்தி - சந்தியின்மை. அசந்தோஷம் - வெறுப்பு. அசபன் - இடையன், பிரதிவாதி. அசப்பியம் - சபைக்கடாதசொல். அசமபாதை - சேனைநடக்கும்வழி. அசமஞ்சசம் - வித்தியாசம். அசமந்தம் - மந்தக்குணம், மலையத்தி. அசமன் - சமனின்மை. அசமானம் - உவமையின்மை. அசமுசாரி - சுத்தசைதன்னியன். அசமோதம் - ஓமம். அசம் - ஆடு, ஈரஉள்ளி, சந்தனம், மூவருடநெல், ஆட்டுக்கடா, ஆடு, துடங்கல், மூவருடனல், அடிபடு தல், திரிதல். அசம்பவம் - அதிசயம், சூனியம், மாறுகொளக்கூறல், அஃது நூற்குற்ற மூன்றினொன்று. அசம்பாவனை - அறியக்கூடாமை. அசம்பாவி - அடிப்பலம், அத்திபாரம். அசரியம் - அழிவின்மை, சினேகம். அசரீரன் - காமன். அசம்பாவிதம் - சம்பவிக்கக்கூடாதது. அசம்பிரேட்சியகாரித்துவம் - ஆராயாது செய்தல். அசம்பிரேட்சியம் - ஆராய்வின்மை. அசம்போகம் - அனுபலமின்மை. அசம்மானம் - அசங்கை. அசரம் - இருவகைத்தோற்றத்தின் ஒன்று, அஃது நடையில்லது, ம், சாரல், ஒன்றும், போர்க் களம். அசராது - கொன்றை, எழும்பாத கிடை, பிரியா. அசலம் - அம்பு, இரும்பு, படைக்க லம், மலை. அசலன் - அசைவற்றிருப்பவன். அசரீரி - அரூபி, ஆகாயவாணி, சரீர மற்றது, துக்கொள்ளுதல். அசலகால் - தென்றல். அசலம் - அசையாநிலை, பூமி, மலை. அசலனம் - அசைவின்மை. அசலம்ல் - ஒன்றன்மேலொன்றுவை. அசலனி - தொடுத்தல், மலை. அசலவிளை - மடைப்பள்ளி. அலவுதல் - உண்டுபண்ணுதல், கொல்லல், சமைத்தல். அசலன் - கடவுள். அசலாதிபன் - மலையரசன். அசலை - மலை. அசல் - சீலை, பூமி. அசவை - பெருவிரலடி. அசறு - சேறு. அசற்பதம் - ஆகாதவழி, துன்னடை. அசன் - காமன், சிவன், பிரமன், விட்டுணு. அசன்மானம் - அசங்கை. அசன்னியம் - சகுனம். அசன்னிதி - தூரம், நம்பிக்கை. அசாகசம் - அமைதி, பொய். அசாகை - களி, புற்கை. அசாக்கிரதை - சோம்பு மறவி. அசாசனம் - அரசாட்சியின்மை, ஆளுகையின்மை. அசாசீவி, அசாபாலகன் - ஆட்டு வாணிகன். அசாதனம் - நிலைநிறுத்தாமை. அசாதாரணம் - பொதுவின்மை. அசாத்தியம் - சந்தேகம், பெரு வழக்கற்றது, முடிக்கக்கூடாதது. அசாபல்லியம் - உறுதி, திடம். அசாரம் - ஆமணக்கு. அசாவாமை - தளராமை. அசாவேரி - ஓரிராகம். அசி - அவமதிச்சிரிப்பு, ஆயுதப் பொது, வாள், யுத்தம். அசிக்கல் - அரும்பொருள். அசிதம் - சிவாக மிருமபத்தெட்டி னொன்று, அபரபக்கம், கருமை, சனி. அசிதன் - சிவன், திருமால், புத்தன். அசிதாம்புருகம், அசிதோற்பலம் - நீலோற்பலம். அசிதை - அவுரி. அசித்தி - அத்தாட்சியற்றது, தவறு. அசித்திரன் - கள்வன். அசிந்தம் - பத்திலட்சங் கோடி கோடாகோடி. அசிந்தியம் - ஓரெண். அசிந்தை - புலனின்மை. அசிபத்திரகம் - கரும்பு. அசிபத்திரம் - கரும்பு, படையுறை, வானலகு. அசிபத்திரவனம் - ஓர்நரகம். அசிரப்பிரவை - மின்னல். அசிரம் - உடல், காற்று, தவளை, முற்றம், விடயம். அசிரவணம் - செவிடு. அசிரன் - சூரியன், தீ. அசிராபை - மின்னல். அசிருபாடம் - உதிரப்பெருக்கு. அசினபத்திரிகை - வெளவால். அசினம் - தோல். அசினயோனி - மான். அசீதகரன் - சூரியன். அசீரணம் - சமியாமை, யௌவனம். அசீர் - ஆயத்தம், தளபாடம். அசீவம் - சூனியம், மரணம். அசீவனி - சூனியம். அசு - பிராணவாயு. அசுகம் - காற்று, துக்கம். அசுகுசுப்பு - அருவருப்பு. அசுகுணி - ஓர்வகைக்கரப்பன். அசுகை - எழில், ஐயம். அசுசமன் - அன்பன், கணவன். அசுசி - அருவருப்பு, சுசியின்மை, அவகீர்த்தி. அசுணம் - கேகயப்புள். அசுணமா - கேகயப்புள். அசுதாரணன் - சிவன். அசுதை - விடம். அசந்தரம் -அடாமை, அலவட்சணம். அசுத்தம் - சுத்தமின்மை. அசுத்தாவி - சுத்தமில்லாவரூபி, பசாசு. அசுபதி - ஓர் நாள். அசுபம் - குதிரை, பாவம். அசுமாற்றம் - அசுகை, சயிக்கினை, சிலமன். அசுமேதம் - ஓர் யாகம். அசும்பு - கிணறு, பொல்லாநிலம், வழுக்குநிலம். அசுரகுரு - சுக்கிரன். அசுரசந்தி - இரணியவேளை. அசுரமணம் - எண்வகைமணத் தொன்று, அஃது பெண்ணுக்குப் பொன் பூட்டிப் பெண்ணின் சுற்றத்திற்குப் பொன்வேண்டுவன கொடுத்துக் கொள்வது. அசுரநாள் - மூலநாள். அசுரமந்திரி - சுக்கிரன். அசுரரிபு - விட்டுணு. அசுரை - இராசி, இருள், வேசி. அசுவசாத்திரம் - அசுவபரிட்சை நூல். அசுரர் - அவுணர். அசுவகினி - அச்சுவினி. அசுவகெந்தி - அமுக்கிரர். அசுவசட்டிரம் - நெரிஞ்சி. அசுவசாந்தி - ஓரியாகம். அசுவசாரத்தியம் - குதிரைச்சாரதித் துவம். அசுவசாலை - குதிரைப்பந்தி. அசுவசாபம் - குதிரைக்குட்டி. அசுவத்தம் - அத்திமரம், அரசு. அசுவத்தாமன் - சிரஞ்சீவிஏழ்வரி லொருவன் அவன் துரோணன் மகன். அசுவந்தம் - அடுப்பு, மரணம், முடிவு, வயல். அசுவபரி - அலரி. அசுவபரிட்சை - கலைஞானமறுபத்தி னான்கினொன்று. அசுவபாலன் - குதிரைப்பாகன். அசுவமியம் - குதிரைப்பாஷாணம். அசுவமேதம் - ஓர் யாகம். அசுவமேதிகம், அசுவமேதியம் - அசுவ மேத யாகத்திற்குப் பக்குவமான குதிரை. அசுவம் - குதிரை, குதிரைப்பற் பாஷாணம். அசுவினி - அச்சுவினிநாள். அசுவை - அத்தாட்சியற்றது. அசுழம் - நாய். அசூசம், அசூசி - ஆசூசம். அசூதி - பிறப்பின்மை, மலடி. அசூயனம் - அசூயை, அவதூறு. அசூயை - பொறாமை. அசூரி - வைசூரி. அசேதனம் - அறிவின்மை. அசேவனம் - அசட்டைபண்ணல், கீழ்ப்படியாமை, விலகுதல். அசேவை - அசங்கை, விலகல். அசை - அசைநிலை, அசையென் னேவல், இசைப்பிரிவு, இரை மீட்பு, சொல்லுறுப்பு, அலகொன் றேனு மிரண்டே னுங்கொண்டு சீர்க்குறுப் பாய் வருவது, ஆட்டு மறி, பிரகிருதி மாயை. அசைகபாதன் - பன்னோருருத் திரரி லொருவன். அசைச்சீர் - தளைகொளற்கிடனா கிஓரசையேசீராயுநிற்பது. அசைச்சொல் - அசை நிறைக்குஞ் சொல். அசைதல் - ஆடுதல், இருத்தல், உலாவல், கலங்குதல், சோம்பல், தங்கல், துவளல், பயப்படுதல். அசைதன்னியம் - அறியாமை, சடத் துவம், ஞானக்குருடு. அசைத்தல் - ஆட்டல், ஓசையெடுத் தல், கட்டல். அசைநிலை - அசைச்சொல். அசைப்பு - அசைதல், இறுமாப்பு, சொல், சொல்லுதல். அசைநிலையோகாரம் - ஈற்றசை யோகாரம், (உம்) கேண்மினோ. அசையடி - அம்போதரங்கம். அசையந்தாதி - அடிஈற்றசைவருமடி முதலசையாகத் தொடுத்திருப்பது. அசையாமணி - ஆராய்ச்சிமணி. அசைவாடுதல் - அசைதல், உலாவுதல். அசைவு - ஆட்டம், ஓர்வகைத்தூக்கு, சலனம், பெயர்ச்சி. அசைவெட்டுதல் - இரைமீட்டல். அதோகதளிர்மணி - சௌந்திகப்பது மாரகமணி. அசோகம் - ஒருமரம், சோகமின்மை, வாழை, மன்மதன்கணையி னொன்று. அசோகவனம் - வாழைவனம். அசோகன் - அருகன். அசோகு - அசோகமரம். அசோசம் - கவலையின்மை. அசௌசம் - ஆசூசம், சூதகம். அசௌரியம் - வீரமின்மை. அச்சக்குறிப்பு - பயப்பாட்டுக்குறி. அச்சடியன் - ஓர்வகைச் சாயப் புடைவை. அச்சபல்லம் - கரடி. அச்சமுள்ளோன் - பயமுடையோன். அச்சம் - அகத்தி, இலேசு, பயம், மகடூஉக்குணம் நான்கினொன்று, ஓரலங்காரம், கடைப்படு தான மேழினொன்று, அஃது அச்சத்தா னீதல், கரடி, பழிங்கு, முன்புறம். அச்சயன் - கடவுள். அச்சல் - ஆச்சல், தரம். அச்சவாரம் - ஆய்த்தப்பணம், உறுதிப்பணம். அச்சறுக்கை - எச்சரிக்கைப்பத்திரம். அச்சன் - தந்தை. அச்சாணி - அச்சுருவாணி. அச்சாரம் - அச்சவாரம். அச்சி - ஓர்தேயம். அச்சு - அடையாளம், உடல், உயி ரெழுத்து, எழுத்து, கட்டளைக் கருவி, பண்டியச்சு, நெய்வார் கருவியினொன்று. அச்சுக்கம்பு - துப்பாக்கிக் கம்பு. அச்சுதம் - அறுகுவெள்ளரிசி கூட்டி யணிவது, கெடுதலின்மை. அச்சுதன் - அழியாமையுள்ளோன், கடவுள், மூத்தோன், விட்டுணு. அச்சுதன் முன்னர்வந்தோன் - பல தேவன். அச்சுப்பலகை - நெய்வார்கருவியி னொன்று. அச்சுரம் - நெருஞ்சில். அச்சுருவாணி - தேரகத்திற்செறிகதிர். அச்சுலக்கை - துலாவினடுவச்சுமரம். அச்சுவத்தம் - அரசமரம். அச்சுவமுகாதனம் - கால்மடித்து இரண்டு முழந்தாளினும் முழங்கை களை யூன்றி இரண்டுள்ளங்கை களையுங் கன்னத்திலே வைத் திருப்பது. அச்சுவம் - குதிரை. அச்சுவினி - அசுபதி. அச்சுவினிநாள் - அசுபதி. அச்சுறல் - பயப்படுதல். அச்சுறை - உடம்பு. அச்சேர - அதிசயச்சொல், இரக்கச் சொல். அஞர் - அறிவிலார், துன்பம். அஞலம், அஞல் - கொசுகு. அஞ்சணங்கியம் - பஞ்சவிலக்கியம். அஞ்சணங்கம் - பஞ்சவிலக்கணம். அஞ்சதி - காற்று. அஞ்சலம் - சீலைத் தொங்கல், வாளுறை. அஞ்சம் - அன்னம். அஞ்சலி - கும்பிடல், வண்டு கொல்லி, வந்தனை, வெளவால், வறட்சுண்டில், பேதை. அஞ்சலிகாரிகை - ஓர்பூடு, சித்திரப் பாவை. அஞ்சலிவந்தனம் - கும்பிட்டு வணங்கல். அஞ்சற்சூழச்சி - குங்குமபாஷாணம். அஞ்சலிகை - வெளவால். அஞ்சல் - தரங்கல், தரிப்பினெல்லை, தோல்வி, பயப்படுதல். அஞ்சனக்கல் - கருநிமிளை. அஞ்சனக்கோல் - அஞ்சனந்தீட்டுங் கோல். அஞ்சனபாஷாணம்- விளைவுபாஷாண முப்பத்திரண்டி னொன்று. அஞ்சனம் - இருள், கறுப்பு, மேற்றிசை யானை, மை. அஞ்சனவண்ணன் - திருமால். அஞ்சனன் - இந்திரன், சனி, விட்டுணு. அஞ்சனாலா - கருங்காக்கணம், நீலோற்பலம். அஞ்சனாவதி - வடகீழ்த்திசை யானைக்குப் பெண்யானை. அஞ்சனி - காயா. அஞ்சனை - அனுமன்றாய், வடதிசை யானைக்குப் பெண்யானை. அஞ்சாப்பட்டயம் - இரட்சண்ணிய பத்திரிகை. அஞ்சாவிரா - பெருங்குமிள். அஞ்சானனம் - சிங்கம், சிங்கவிராசி. அஞ்சானன் - சிவன். அஞ்சி - எசமானன். அஞ்சிக்கை - அச்சம். அஞ்சிட்டன் - சூரியன். அஞ்சிதமுகம் - வருத்தமாற்றாதிரு தோண்மேற்றலைசாய்தல். அஞ்சிதம் - உண்டாதல், பொருந்தல், தலையசைத்தல், பூசித்தல், வணக்கம். அஞ்சிதவணி - தற்குறிப்பலங்காரம். அஞ்சீரம் - அத்தி, அத்திப்பழம். அஞ்சுகம் - கிளி. அஞ்சுமான் - சிவாகமமிருபத் தெட்டி னொன்று, துவாதசாதித்தரி லொருவன். அஞ்ஞத்துவம் - அஞ்ஞானம். அஞ்ஞன் - அறிவிலான். அஞ்ஞானம் - ஞானமின்மை, தெய்வ அறிவின்மை. அஞ்ஞை - அறிவிலான், இலலாடத் தானம். அடகு - இலைக்கறி, கடன்கோடற்கு வைத்தவீடு. அடக்கம் - அடங்கிய காரியம், அடங்கிய பொருள், உயிரொடுங்கி யிருத்தல், ஒடுக்கம், கருத்து, மன வமைதி. அடக்கம்பண்ணுதல் - சேமஞ்செய்தல், பிரேத முதலியவற்றைப் புதைத்தல். அடங்கலர் - பகைவர். அடங்கல் - அமைதல், எல்லாம், சுருங்கல். அடக்கல் - ஒடுக்கல், கீழ்ப்படியப் பண்ணல். அடங்கன்முறை - கோவிற்பதிகம். அடங்காப்பற்று - அடங்காதவர் களிருக்குமூர். அடதாளம் - சத்ததாளதல். அடந்தை - ஓர்தாளம். அடப்பம் - சாமான்பை. அடம் - இனம், பொல்லாங்கு, சஞ் சாரம், போகுதல். அடர் - அடரென்னேவல். அடர்தல் - நெருங்கல். அடம்பாரம் - இடம்பம், பரப்பம், பிரபலியம். அடம்பு - அடம்பங்கொடி. அடரார் - பகைவர். அடர்ச்சி, அடர்த்தி - நெருக்கம். அடர்த்தல் - நெருக்கல். அடர்ந்தேற்றம் - கொடுமை, கிடை. அடர்ந்தேற்றி - இட்டேற்றம், நெருக்கம். அடர்பு - செறிவு, நெருக்கம். அடர்ப்பம் - நெருக்கம். அடர்ப்பு - நெருக்கம், போர். அடலம் - மாறாமை. அடலார் - பகைவர். அடலி - வெள்ளாட்டி. அடலை - சாம்பல், போர்க்களம், மாறாமை. அடல் - கொல்லுதல், சமை, பொருதல், வலி, வெற்றி. அடவி - காடு, சோலை. அடவிகன் - வனவாசி. அடனம் - அலைந்துதிரிதல், போகுதல். அடனி - வின்னுனி. அடாணா - ஓரிராகம். அடாத்தியம் - அடாதது. அடாத்து - தகாதது, பொருந்தாதது, முறைகேடானது. அடாவந்தி - இட்டேற்றம், வாரா வந்தி. அடி - அடியென்னேவல், ஆதி, கடவுள், கால், காற்சுவடு, கீழ், செய்யுளுறுப் பினொன்று, தாது, அடியோன், முன், மூலம், வமிசமூலம். அடிகள் - கடவுள், குரு, தலைவன், முனிவர், மூத்தோன். அடிக்கீழ்ப்படுத்தல் - அடக்கி நடத்தல், ஆண்டுகொள்ளல். அடிக்குடி - அடிச்சேரி. அடிக்குடில் - அடிச்சேரி. அடிக்கொள்ளுதல் - தொடக்கம் பண்ணுதல். அடிக்கோலுதல் - இடம்பிடித்தல். அடிசில் - சோறு. அடிச்சேரி - அடிக்குடில். அடிதலை - அடிமுடி, வரலாறு. அடிதல் - அடிபடுதல். அடித்தலம் - அத்திவாரம், கால். அடித்தளம் - அத்திவாரம், வீட்டினிற் பரப்பு. அடித்தல் - அதுக்கல், அறைதல். அடிபெயர்தல் - விலகுதல். அடிப்படுதல் - அமைதல். அடிப்படுத்தல் - கீழ்ப்படுத்தல். அடிப்பற்றுதல் - கறிமுதலிய சுண்டுதல். அடிப்பலம் - மூலபலம். அடிப்பற்று - சோறுமுதலிய பாண்டத் திற்பற்றுகை, பாறையுப்பு. அடிப்பாடு - வழி. அடிப்பாய்தல் - ஓர்விளையாட்டு. அடிப்பார்த்தல் - ஏதுப்பார்த்தல். அடிப்பிடித்தல் - ஏதுப்பிடித்தல், கறி முதலியசுண்டல், முதற்பிடித்தல். அடிப்போடுதல் - இடம்பண்ணுதல். அடிமடக்கு - பாதமடக்கு. அடிமயக்கு - பாதமயக்கு. அடிமறிமண்டிலவாசிரியப்பா - அக வற்பாவினுளொன்று, அஃது எல்லாவடியு மளவொத்து எவ் வடியைமுதனடுவிறுதியாகக் கொள்ளினு மோசையும் பொரு ளும்வழுவாதுநிற்பது. அடிமறிமாற்றுப்பொருள்கோள் - பொருள்கோளெட்டினொன்று. அஃது யாதானு மோரடியை யிறுதி நடு முதல்களில் வேண்டிய விடத்துக் கூட்டிப் பொருளிசை மாட்சி மாறாது பொருள் கொள் வது, (உம்) அலைப்பான் பிறி துயிரையாக்கலுங் குற்றம் விலைப் பாலிற் கொண்டூன் மிசைதலுங் குற்றஞ் சொலற்பால வல்லாத சொல்லலுங் குற்றங் கொலற் பாலுங்குற்றமேயாம், இதனை மாறிக்காண்க. அடிமறிமொழிமாற்றுப்பொருள்கோள் - பொருள் கோளினொன்று, அஃது அடிகளை யேற்புழிக் கூட்டிப் பொருள் கொள்வது. (உம்) படு பயன் வெஃகிப்பழிபடுவ செய்யார் நடுவன்மை நாணுபவர் என்பதனுள் நடுவன்மை நானுபவர் படுபயன் வெஃகிப் பழிபடுவ செய்யார் எனக்கூட்டிக்காண்க. அடிமுகனை - துவக்கம். அடிமுடி - காலுந்தலையும், வரலாறு. அடிமுரண்டொடை - அடிதோறு முதற்கட் சொல்லேனும் பொரு ளேனு மறுதலைப் பட்டுவருவது, (உம்) இருள் பரந்தன்னமா நீர் மருங்கினிலவுக்கு வித்தன்ன. அடிமை - சிறை, தொண்டு. அடிமோனைத்தொடை - அடிகடோறு முதலெழுத் தொன்றி வருவது. அடியந்தாதி - நின்ற பாட்டினீற்றடி வரும் பாட்டின் முதலடியாகப் பாடல். அடியல் - சொரிதல், (உம்) கதிரடிந்தது, தொடர். அடியளபெடைத்தொடை - அடி தோறு முதன் மொழிக்கண் அள பெடுத்து வருவது. அடியனாதி -தொன்று தொட்டுள்ளது. அடியார் - அடிமைகள். அடியாறு - தொன்றுதொட்ட வரலாறு. அடியியைபுத்தொடை - அடியினிறுதி தோறுநின்றவெழுத்தேனுஞ் சொல்லேனுமொன்றிவருவது. அடியெதுகைத்தொடை - அடிதோறு மிரண்டாமெழுத்தொன்றிவருவது. அடிவரையறை, அடிவாறு - அடியாறு. அடிவிடுதல் - பாண்டங்களினடிப் பொருத்துவிடுதல். அடுக்கணி - ஓரலங்காரம், அஃது சொல்லும் பொருளுமடுக்கி வருவது. அடுக்காலாத்தி - அடுக்குத்தீபம். அடுக்குத்தொடர் - ஒருமொழியேபல முறையடுக்கிவருவது, அஃது அசை நிலையினும் பொருணிலை யினு மிசை நிறையினு மிரண்டு முதனான் களவுமடுக்கி வரும் - (உம்) அன்றேயன்றே அசைநிலை, தீதீதீ பொருணிலை, வருகவருக வருகவருக விசைநிறை. அடுசிலைக்காரம் - செந்நாயுருவி. அடுத்தல் - கிட்டல், சம்பவித்தல், சார்தல், சேர்த்தல். அடுத்தி - வட்டி. அடுப்பு - அச்சம், தீவாய்த்தானம், பரணி. அடுவல் - வரகுந்நெல்லுங்கலப்பு. அடை - அடுத்தல், அடைகிடத்தல், அடையென்னேவல், உவமை, தோசை. அடைகட்டி - அடைமண். அடைகலம் - சேமக்கலம். அடைகல்லு - கம்மப்பட்டடை. அடைகாத்தல் - அடைகிடத்தல். அடைகாய் - ஊறுகாய். அடைகிடத்தல் - குஞ்சுபிறப்பிக்க முட்டையைக்காத்தல், நீங்கா திருத்தல். அடைகுளம் - வாய்க்காவில்லாத குளம். அடைகுறடு - பட்டடை. அடைகோட்டை - வெளிபோகப் பெறாததடை. அடைக்கத்து - அடைகிடக்குங் கோழியிடுஞ்சத்தம். அடைக்கலக்குருவி, அடைக்கலான் குருவி - ஊர்க்குருவி. அடைக்கலம் - அடைக்கலப் பொருள், சரண்புகல், புகலிடம். அடைக்காய் - பாக்கு. அடைசல் - நெருக்கம், அடைசுதல். அடைசீலை - பாழச்சீலை. அடைசுதல் - ஒதுக்குதல், ஒதுங்குதல், கொடுப்புக்குள் வைத்துக் கொள் ளுதல், செருகுதல், நெருக்குதல், நெருங்குதல். அடைசுபலகை - செருகிவெளி யடைக்கும்பலகை. அடைசுவலை - ஓர்விதவலை. அடைசொல் - அடைமொழி, விசே டணமொழி. அடைச்சுதல் - மலர்சூட்டல். அடைதல் - அடைகுதல், ஒதுங்குதல், கூடுதல், சேருதல், பெறுதல். அடைத்தல் - சேர்த்தல், தடுத்தல், மழைவிடாது பெய்தல், மறியற் படுத்தல், வெளியை மறைத்தல், வேலியடைத்தல். அடைந்தார் - அடைக்கலம் புகுந் தோர், மித்திரர். அடைந்தோர் - உறவோர். அடைப்பன் - ஓர்வியாதி. அடைப்பு - அடைக்கப்பட்டது, அடைத்தற்றன்மை, அடைத்தற் றொழில், சரளிமுதலியவற்றி னடைப்பு, கதவு. அடைப்பை - வெற்றிலைப்பை. அடைப்பைக்காரன் - பிளவுசுரு ளெடுத்துக் கொடுப்போன். அடைமண் - கலப்பையிலடைந்த மண். அடைமானம் - உவமை, வழிவகை. அடைமொழி - விசேடனமொழி. அடைய - எல்லாம். அடையடுத்தவாகுபெயர் - ஒரு பொருளதன் புறத்துப்பண்பாய் நின்றவடையோடு கூடியாகு பெயராய் வழங்குவது, (உம்) புகையிலைநட்டான். அடையலர், அடையார் - பகைவர். அடையல் - அடைகுதல், அடைந்து, வருவது, எல்லாம். அடையாளம் - அறிகுறி, குறிப்பு, சின்னம், மாதிரி. அடைவு - ஈடு, உபமானம், எல்லாம், முறை, விதம். அட்சகன்னம் - நேர்முக்கோணத்தி னெடுவரி. அட்சதை - மங்கலவரிசி. அட்சபாடனம் - திரைப்படல். அட்சய - ஓர் வருடம். அட்சயம் - கேடின்மை. அட்சம் - அக்கம். அட்சரசஞ்சன், அட்சரசணன், அட்சர சனன் - எழுத்துக்காரன். அட்சரசனனி - இலேகிணி. அட்சரசீவிகன் - எழுத்துக்காரன். அட்சரதூலிகை - இலேகிணி. அட்சரமுகன் - மாணாக்கன். அட்சரசுத்தி - உச்சரிப்புத்திருத்தம், எழுத்துத்திருத்தம். அட்சரம் - எழுத்து, வேதப்பொருள். அட்சாவினியாசம் - எழுத்து, வேதம். அட்சி - கண். அட்டகணம் - செய்யுட்குரியவெண் கணம், அவை ஆகாயம், இய மானன், சூரியன், தீ, நிலம், நீர், மதி, வாயு, இவற்றுள் முன்னைய நான்கு நீக்கி மற்றையநன்று. அட்டகணிதம் - எண்கணிதம், அவை கனமூலம், கனம், குணனம், சங்க லிதம், பாகாரம், வருக்கமூலம், வருக்கம், விபகலிதம். அட்டகம் - எட்டின்கூட்டம், வட மொழியினோர்பிரபந்தம். அட்டகருமம் - வசியமுதலிய எண் வித்தை. அட்டகாசம் - பெருநகை. அட்டகிரி - அட்டகுலமலை, அவை இமையம், ஏமகூடம், கந்தமா தனம், கைலை, நிடதம், நீலகிரி, மந்தரம், விந்தம். அட்டகுணம் - கடவுட்குரிய எண் குணம், அவை இயல்பாகவே பாசங்களினீங்குதல், இயற்கை யுணர் வினனாதல், தன்வயத்தனா தல், தூயவுடம்பினனாதல், பேர ருளுடைமை, முடிவிலாற்றலு டைமை, முற்றுமுணர்தல், வரம் பிலின்பமுடைமை. அட்டகுற்றம் - மலசகிதர்க்குரிய குணம் எட்டு, அவை அந்த ராயம், ஆயு, கோத்திரம், ஞானா வரணி யம், தரிசனாவரணியம், நாமம், மோகநீயம், வேதநீயம். அட்டகை - அட்டமி, பிதிர் வணக்கம், யாகமிருபத்தொன்றி னொன்று. அட்டகை - அட்டமி, பிதிர் வணக்கம், யாகமிருபத்தொன்றி னொன்று அட்டசித்தி - எண்சித்தி, யோகசித்தர்க் குரிய எண்சித்தி, அஃது அணிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிராத்தி பிராகாமியம், ஈசத்துவம், வசித் துவம். அட்டசுபம் - அட்டமங்கலம், எண் வகைமங்கலம், அவை இணைக் கயல், கண்ணாடி, சாமரம், கொடி, தோட்டி, நிறை குடம், முரசு, விளக்கு. அட்டதயாவிருத்தி - பிறரையந் தீர்த் தல், தீமைக்கஞ்சல், பிறர்துயர்க் கிரங்கல், நன்மைகடைப் பிடித் தல், பிறர் கருமத்திற்குடன்படல், பிறர்கரும முடிக்கவிரைதல், பிறர்க்குப் பொருள் வரவையுவத் தல் பிறர்செல்வம் பொறுத்தல். அட்டதனம் - யோககியர்க் குரியபே றெட்டு, அவை அழகு, குணம், ஆயு, குலம், சம்பத்து, வித்தை, விவேகம், தனம். அட்டதாது - எண்வகைலோகம், அவை பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, வெண்கலம் தரா, வங்கம், துத்தநாகம். அட்டதானபரிட்சை -வைத்தியரறி குறியெட்டு, அவை நாடி, முகம், மலம், அமுரி, கண், நா, சரீரம், தொனி. அட்டதிக்கயம் - அட்டகுலயானை, அவை கிழக்காதி முறையே ஐரா பதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புட்பதந்தம், சார்வபூமம், சுப்பிரதீபம். அட்டதிக்கு - எட்டுத்திசை, அவை கிழக்கு, தென்கீழ், தெற்கு, தென் மேல், மேற்கு, வடமேல், வடக்கு, வடகீழ். அட்டதிக்குப்பாலகர் - திக்குக்காவலர் அவர் கிழக்காதிமுறையே, இந்தி ரன், அங்கி, இயமன், நிருதி, வரு ணன், வாயு, குபேரன், ஈசானன். அட்டநாகம் - எண்வகைமாநாகம், அவை அனந்தன், கார்க்கோடகன், குளிகன், சங்கபாலன், தக்கன், பதுமன், மகாபதுமன், வாசுகி. அட்டபந்தனம் - திக்குக்கட்டு. அட்டபரிசம் - எண்வகையூறு, அவை ஊன்றல், கட்டல், குத்தல், தடவல், தட்டல், தீண்டல், பற்றல், வெட்டல். அட்டபாலகர் - அட்டதிக்குப்பாலகர். அட்டபாலகர்குறி - திக்குப்பால கரடையாளம் அவை இந்திராதி முறையே, இடி, புகை, சீயம், ஞாளி, இடபம், கழுதை, யானை, காகம். அட்டபோகம் - எண்போகம், அவை அணிகலன், ஆடை, தாம்பூலம், பரிமளம், சங்கீதம், பூவமளி, பெண், போசனம். அட்டப்பிரமாணம் - அளவையெட்டு, அவை அனுமானம், அபாவம், அருத்தாபத்தி, ஆகமம், உவ மானம், ஐதீகம், சம்பவம், பிரத்தி யட்சம். அட்டமங்கலம் - எண்வகைமங்கலம், ஓர்பிரபந்தம். அட்டமணம் - எண்வகைமணம், அவை ஆசுரம், ஆரிடம், இராக் கதம், காந்தருவம், தெய்வம், பிரசா பத்தியம், பிரமம், பைசாசம். அட்டமி - எட்டாந்திதி. அட்டமூர்த்தம் - ஈசுரன்வடிவமெட்டு, அவை நிலம், நீர், தீ, கால், வெளி, சூரியன், சந்திரன் இயமானன். அட்டமூர்த்தி - சிவன். அட்டம், அஷடம் - அருகிடம், எட்டு, அண்ணம், மேல் வீடு. அட்டமூர்த்திதரன் - சிவன். அட்டம்பாரித்தல் - பக்கலில் விசாலித் தல். அட்டயோசம் - அரைபொடி. அட்டலோகம் - அட்டதாது. அட்டவசுக்கள் - எண்வகைவசுக்கள், எண்வகைவசுக்கள், அவர் அன லன், அணிலன், ஆபச்சைவன், சோமன், தரன், துருவன், பிரத்தி யூசன், பிரபாசன். அட்டவணை - சொல்லப்பட்ட காரியத்தினொழுங்கு, சேர்க்கப் பட்டது. அட்டவதானம் -ஒரேசமயத்தி லெட்டுக் காரியத்தையவ தானித்தல். அட்டவருக்கம் - நற்சீரகம், கருஞ் சீரகம், அசமோதம், மிளகு, திப்பிலி, சுக்கு, இந்துப்பு, பெருங் காயம். அட்டவூறு - எண்வகையூறு, அவை சருச்சரை, சீர்மை, தண்மை, திண்மை, நொய்மை, மென்மை, வன்மை, வெம்மை. அட்டவெற்றி - எண்வகைவெற்றி, அவை, பகைநிரைகவர்தல், பகை வர்கவர் நிரைமீட்டல், பகைமேற் செல்லல், பகை முன்னெதிரூன்றல், தன்னரண் காத்தல், பகைவரரண் வளைத்தல், பொருதல், போர் வெல்லல், இவற்றிற்கு முறையே மாலை, வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை. அட்டவைசுவரியம் - எண்வகைச் செல்வம், எண்வகைச் செல்வம், அஃது அடிமை, இரா சாங்கம், சுற்றம், நெல், பொன், மக்கள், மணி, வாகனம். அட்டனம்- சக்கராயுதம். அட்டாங்கநமஸ்காரம் - எட்டுறுப்பு நிலந்தோயவணங்கல். அட்டாங்கயோகம் - யோகமுறை யெட்டு. அவை ஆதனம், இயமம், சமாதி, தாரணை, தியானம், நியமம், பிரத்தியாகாரம், பிராணா யாமம். அட்டாங்கவந்தனம் - எண்வகை யுறுப்பு நிலந்தோயவணங்கல், அவை இருகால், இருகை, இரு தோள், நெற்றி, மார்பு. அட்டாதுட்டி - அடர்ந்தேற்றம், தாறு மாறு. அட்டாபதபத்திரம் - பொற்றகடு. அட்டாபதம் - எண்காற்புள், கதவின் றாள், பொன், வன்னப்புடைவை. அட்டாபந்தனம் - திக்குபந்தனம். அட்டாலம் - அட்டாலை. அட்டாலிகாகாரன் - கற்சிற்பன். அட்டாலை - அட்டாளை. அட்டாளகம், அட்டாளம் - மேல்வீடு. அட்டாளிகை - மேன்மாடம். அட்டாளை - சிறாம்பி. அட்டி - அதிமதுரம், இருப்பை, செஞ் சந்தனம், தடை, பருப்பு. அட்டிகம் - சாதிக்காய். அட்டிகை, அட்டியல் - உட்கட்டு. அட்டில் - அடுக்களை. அட்டு - சமைக்கப்பட்டது, செய்தது, அணை, மதிப்பு, வியங் கோள் விகுதி அட்டை - ஓர் செந்து. அட்டோலிக்கம் - ஆடம்பரம், ஆர வாரம், மகிழ்ச்சி. அணங்கம் - இலட்சணம். அணங்காட்டு - சன்னதம். அணங்கு - அச்சம், அணங்கென் னேவல், அழகு, ஆசை, கொலை, தெய்வப்பெண், தெய்வம், தேவர்க் காடுங்கூத்து, நோய், பெண்மகள், வருத்தம். அணங்குதல் - வருந்துதல். அணம், அணரி - கீழ்வாய்ப்புறம், மெல்வாய். அணல் - கீழ்வாய், மிடறு. அணவல் - கிட்டல், பொருந்தல். அணவு - அணவென்னேவல், நடு. அணவுதல் - கிட்டல், புணர்ச்சி. அணாப்புதல் - ஏய்த்தல். அணி - அடுக்கு, அணியென்னேவல், அலங்காரம், அழகு, ஆபரணம், ஏர்ச்சீர், ஒழுங்கு, ஓரிலக்கணம், நன்மை, நிரை, படைவகுப்பு, பெருமை, மாலை, எல்லை. அணிகம் - சிவிகை. அணிகலம் - ஆபரணம், கம்மாளர் கருவி, பணிமுட்டு. அணிகலன் - ஆபரணம். அணிதல் - அலங்கரித்தல், பூணல், அணிந்துநிற்றல், தரித்தல், படை வகுத்தல். அணிநுணா - அன்னவன்னா. அணிந்துரை - பாயிரம். அணிப்படுத்தல் - அணியப் படுத்துதல், சிங்காரித்தல். அணிமா - அட்டசித்தியினொன்று, அஃதுஆன்மாப்போலாதல். அணிமை - நுட்பம். அணியம் - ஆயத்தம், தளபாடம், படவின்முன்பக்கம், படைவகுப்பு. அணியல் - மாலை, அணிதல். அணியிலக்கணம் - பஞ்சவிலக்கணத் தொன்று. அணிலன் - அட்டவசுக்களிலொரு வன். அணில் - வெளில். அணிவகத்தல் - படைவகுத்தல். அணிவகுப்பு - படைவகுப்பு. அணிவடம் - மாதர் கழுத்தணியி னொன்று. அணு - உயிர், சிறுமை, நுண்மை, இனம், பரமாணு. அணுகலர் - அயலார், பகைவர். அணுகல் - கிட்டல். அணுகன் - சமர்த்தன். அணுக்கம் - சந்தனம். அணுச்சைவம் - சைவம்பதினாறி னொன்று. அணுபை - மின்னல். அணுமை - சமீபம். அணுவெழுத்து - இனவெழுத்து. அணுரேணு - சிறுதூளி. அணை - அணையென்னேவல், உதவி, கரைப்பொது, செய்கரை, மெத்தை, வரம்பு. அணைசொல் - துணைச்சொல். அணைதல் - சேர்தல், புணர்தல், அவிதல். அணைத்தல் - அடுத்துக் கொள்ளுதல், அவித்தல், சேர்த்தல், தழுவுதல். அணையாடை - சாணைச்சீலை. அணோக்கம் - மரப்பொது, மேனோக்கம். அண் - அண்ணென்னேவல், மேல். அண்டகம் - பீசம். அண்டகன் - அண்ணகன். அண்டகடாகம் - அண்ட கோளவோடு. அண்டகை - அப்பவருக்கம். அண்டகோசம் - அண்டசொரூப சாத்திரம், எல்லை, பழத்தோல், பழம், பீசம். அண்டகோளம் - அண்டஉண்டை. அண்டங்காக்கை - ஓர்வகைக்காகம். அண்டசம் - முட்டையிற்பிறப்பன. அண்டப்பார்த்தல் - பொருந்தப் பார்த்தல். அண்டம் - ஆகாயம், உலகம், பீசம், முட்டை, தலையோடு. அண்டயோனி - சூரியன். அண்டரண்டபட்சி - பெரும்பறவை. அண்டரண்டம் - பலவண்டங்களும். அண்டர் - இடையர், பகைவர், வானோர். அண்டலர், அண்டார் - பகைவர். அண்டல் - அண்டுதல், அழுந்தல், கிட்டுதல், சேர்தல். அண்டவாணர் - ஆகாயவாசிகள். அண்டவாயு - ஓர்நோய். அண்டா - பெருஞ்சட்டி. அண்டிகம் - செந்நாய். அண்டிரன் - மனுஷன். அண்டுதல் - நெருக்கல். அண்டில் - கண்ணிற்பற்றும்பூச்சி. அண்டை - அயல், அருகிடம், பீற லடைக்குந் துண்டு. அண்ணகன் - பீசம்வாங்கப்பட்ட வன். அண்ணம் - உண்ணா, கீழ்வாய்ப்புறம், மேல்வாய். அண்ணல் - அரசன், சார்தல், தமை யன், பெருமை, பெருமையிற் சிறந் தோன், முல்லைநிலத் தலைவன், அருகன், சிவன், புத்தன். அண்ணன் - முன்பிறந்தான். அண்ணா - உண்ணா. அண்ணாக்கு - உண்ணாக்கு. அண்ணாத்தல் - அங்காத்தல், மேனோக்கல். அண்ணாந்தாள் - தலை நிமிர்ந் திருக்கப் பூட்டுங்கயிறு. அண்ணாவி - உலாத்தி, புலவன், மூத்தோன். அண்ணி - தமையன்மனைவி. அண்ணிசு - அணுமை. அண்தல் - சார்தல். அண்முதல் - கிட்டுதல். அண்மை - அணுமை. அண்மைச்சுட்டு - சமீபத்திலிருக்கும் பொருளைச்சுட்டிக்காட்டல். அண்மைவிழி - சமீபத்திலிருப்ப வரையழைத்தல். அதகணம் - நாசகணம். அதகடி - அதட்டு. அதகம் - மருந்து. அதக்குதல் - குதப்புதல். அதங்கம் - ஈயம். அதசம் - ஆன்மா, காற்று, மரவுரி. அதசு - கேள்வி, நாசம். அதடம் - செங்குத்து. அதட்டம் - அரவுயிர்ப்பு, அரவினச் சுப்பல்லு. அதட்டல் - உரப்புதல், உறுக்குதல். அதப்யிம் - சபைக்கடாதசொல். அதமசரீரம் - கற்பகதரு. அதமபிருதகன் - காக்காரன். அதமம் - கடைத்தரம், நீதித்தப்பு. அதமவிமிசதி - அதமவருடமிருபஃது. அதமாங்கம் - கால். அதம் - அத்தி, கொலை, தாழ்வு, பள்ளம், பின்பு. அதரபானம், அதரமதம் - இதழூறல். அதரம் - உதடு, கீழுதடு, நிதம்பம். அதராமிர்தம் - அதரபானநீர். அதராவலோகம் - இதழதுக்கல். அதரிசனம் - காணப்படாமை, குருடு, மறைதல். அதரிசனன்,அதரிசி- கடவுள், குருடன். அதரித்திரன் - கன்னன், தரித்திர மில்லான். அதருமம் - பாவமான செய்கை, நீதி கேடு. அதர் - நீளக்கிடங்கு, நுண்மணல், புழுதி, வழி. அதர்கொளல் - வழிப்பறித்தல். அதர்கோள் - வழிப்பறி. அதர்க்கம் - குதர்க்கம். அதர்மாசாரி - துராசாரி. அதர்மாத்திகாயம் - காரணகாயத் தொன்று. அதர்வக்கிரம், அதர்வம் - உபநிடத முப்பத்திரண்டினொன்று. அதர்வணம் - நான்காம்வேதம். அதலமூலி - ஆடுதின்னாப்பாலை. அதலம் - கீழேழுலகினொன்று. அதவம் - பின்பு. அதவா - அல்லாமல். அதவாபட்சம் - அல்லாதபட்சம். அதவிடம் - அதிவிடயம். அதவு - அத்தி, நெய். அதளை - அடை. அதழ் - பூவிதழ். ஆதள் - களகம்பளம், தோல். அதறுதல் - உதிர்த்தல். அதனப்பிரசங்கி - அகங்காரி. அதாதிரு - உலோபி. அதனம் - மிகுதி. அதன்மம் - நீதிகேடு. அதி - மிகுதிப்பொருளைக் காட்டு மடைசொல், அதிதி. அதிகசிதம், அதியசிதம் - பெருநகை. அதிகடம் - யானை. அதிகதம் - வாயு. அதிகதை - பயனில்பேச்சு. அதிகந்தம் - ஓர் வாசனைப்புல், கெந்தகம், சண்பகப்பூ. அதிகண்டம் - நித்தியயோகத்தொன்று. அதிகப்பிரசங்கம் - அதிகப்படப் பேசுதல், தன்மேம்பாட்டுரை. அதிகம் - இலாபம், குருக்கத்தி, படை, பொலிவு, மிகுதி, அடையாளம், உதாரணங்களைப் பலவாகப் பிரயோகித்தல். அதிகரணம் - இடம், உரித்து, ஏழு னுருபு, கேள்வி, மேன்மை. அதிகரித்தல் - அதிகப்படுதல், விசேடித்தல். அதிகரிப்பு - அதிகரித்தல். அதிகன் - ஆதிக்கன், சிவன். அதிகாசம் - பெருநகை. அதிகாந்தம் - செவ்வானம். அதிகாயன் - இராவணன் மக்களி லொருவன். அதிகாரதலைவன் - அதிகாரி. அதிகாரப்புறனடை - அதிகாரத்து ளெஞ்சியதற்கோர்விதியாய்நிற்பது. அதிகாரம் - அதிகரித்தல், உத்தி யோகம், தத்துவம், உரித்து, ஒழுங்கு, சிலாக்கியம், நூற்கூறுபாடு, பண்பு, விருத்தியுரை பதினான்கி னொன்று. அதிகாரவுரை - நூலுரை பதினான்கி னொன்று. அதிகாரி - அதிபதி, நூல்கேட்டற் குரியோன், நூல் செய்வித்தோன், பாட்டுடைத் தலைவன். அதிகிரமம் - அசட்டை, அதிகப் படல், எதிர், மீறுதல். அதிகிருசசிரம் - ஓர்விரதம், அஃது ஆறுநாள் ஒவ்வோர் பிடியன்ன முண்டுமேன் மூன்று நாளுப வாசித்திருப்பது. அதிகும்பை - பொற்றலைக் கையாந் தகரை. அதிகுணன் - கடவுள், நற்குணன். அதிக்குதி - ஒவ்வாதநடை, கொடுமை யானநடை. அதிங்கம் - அதிமதுரம். அதிசங்கலிதம் - சங்கலிதசங்கலிதம். அதிசயச்சொல் - வியப்புமொழி. அதிசஞ்சயம் - திரவியக்குவியல். அதிசசத்திரகம், அதிசசத்திரம் - காளான். அதிசந்தானம் - பொய். அதிசயம் - அற்புதம், ஓரலங்காரம், நூதனம், புதுமை, மாயை யாக்கைக் குரிய பதினெண் குற்றத்தொன்று. அதிசயன் - அருகன். அதிசயவிரக்கச் சொல் - இரக்கத் தோடு கூடியவியப்புமொழி. அதிசயோத்தி - மிகக்கூறல். அதிசரித்தல் - தூரமாய்ப்போதல், மிகுகதியாய்நடத்தல். அதிசருச்சனம் - கொடுத்தல், கொடை, கொலை. அதிசாமியை - வெண்குன்றிச்செடி. அதிசாரம் - கிரகநடை, ஓர்பேதிநோய். அதிசாரவக்கிரம் - கிரகவக்கிரத் தொன்று. அதிசித்திரம் -மார்க்கசடப் பிரமாணத் தொன்று, அஃது கால்மாத்திரை யோர் களையாகக்கொண்டது. அதிட்சேபம் - அனுப்புதல், நிந்தைப் படுத்தல். அதிசீக்கிரம் - மிகுசுறுக்கு. அதிசூக்குமம் - சூக்குமத்திற்சூக்குமம். அதிட்டம் - நல்லனுபோகம், நல் வினைப்பயன். அதிட்டானசைதன்னியம் - பிரமம். அதிட்டானம் - நிலை, இடம் காரியத் திற்குக் காரணம், சில்லு, பட்டினம், விதித்தல். அதிட்டித்தல் - நிலைப்படுத்தல். அதிதாதிரு - ஈகையாளன். அதிதானம் - கொடை. அதிதி - சிராத்தத்திற்கொவ்வாததிதி, பரதேசி, புதியவன், தேவரையீன் றாள், பூமி. அதிதிகிரியை - விருந்தோம்பல். அதிதிசேவை - விருந்தோபசாரம். அதிதிப்பம் - பசியின்மை. அதிதிநாள் - புநர்பூசநாள். அதிதூதர் - அதிகப்பிரதானவிசேடங் களையறிவிக்க உலகத்துக்கனுப்பப் படுவோர். அதிதேவன் - கடவுள். அதிதேவதை - அதிகாரதேவதை. அதிபதி - இராசா, தலைவன். அதிபத்தியம் - அதிகாரம், ஆளுகை. அதிபரன் - சத்துருவைவென்றவன். அதிபலம் - நேர்வாளம், மிகுபலன். அதிபன் - இராசன், எசமான், எப் பொருட்குமிறைவன். அதிபாதகம் - கொடும்பாதகம். அதிபாரம் - மிகுபாரம். அதிபாதம் - எதிரிடை, மீறுதல். அதிபாரகம் - கோவேறுகழுதை. அதிபாரகன் - மிகுநிபுணன். அதிபானம் - மதுபானம். அதிமதுரம் - ஓர்சரக்கு, வெண்குன்றி. அதிமலம் - மாவிலிங்கு. அதிபூதம் - பிரகிருதிமாயை. அதிமாத்திரம் - மிகுதி. அதிமாயம் - மாயையின்மை. அதிமானுடன் - உத்தமபுருடன் சிரஞ் சீவி. அதிமிதி - அதிக்குதி. அதிமித்திரன் - கணவன். அதிமோகம் - அனேகம், ஒருதலைக் காமம். அதியட்சன் - கண்காணி. அதியம் - அதிகம், ஓர்மருந்து. அதிரசம், அதிரதம் - ஓர்பண்ணி காரம், ஓர் பானம், நால்வகைத் தேரினொன்று. அதிரதர் - முழுத்தேரரசர். அதிரதி - அதிரதன். அதிரல் - அதிர்தல், விரிதூறு. அதிராத்திரம் - யாகமிருபத்தொன்றி னொன்று. அதிராயம் - அதிசயம். அதிரிசம் - காணப்படாததன்மை, குருடு. அதிரிசயம் - கலைஞானமறுபத்தி னான்கினொன்று. அதிரிசனம் - அதரிசனம். அதிரிசன் - குருடன். அதிருத்தி - திருத்தியின்மை. அதிரேகம் - அதிசயம், மேற்பட்டது, மிகுதி. அதிரோகணி - ஏணி. அதிரோகம் - ஓர்காசம். அதிலோகம் - உலகம். அதிவசனம் - பேர். அதிர் - அதிரென்னேவல், ஒலி, பயம். அதிர்ச்சி - அதிகப்படுதல், ஆரவாரம், குமுறல், பயம். அதிர்தல் - குமுறுதல், நடுங்கல். அதிர்த்தல் - அதட்டல், குமுறல், சொல்லுதல். அதிர்ப்பு - அச்சம், அதிரல், ஆரவாரம், நடுக்கம். அதிர்வெடி, அதிர்வேட்டு - ஓர் வெடி. அதிவாசம் - உபவாசத்திற்கு முதனாள், கிருத்தியாரம்பச் சடங்கினொன்று, மிகுமணம், அயல், இடம், வீடு. அதிவாசனம் - வாசனாபிஷேகம். அதிவாதம் - பெருங்காற்று. அதிவாலகன் - குழந்தை. அதிவிடயம் - ஓர் மருந்து. அதிவியதை - மிகுவேதனை. அதிவியாத்தி - அருத்தாபத்தி, மிகக் கூறல். அதிவெள்ளைச்சிந்தூரம் - பறங்கிப் பாஷாணம். அதிவேகம் - மிகுகதி. அதிவேதனம் - மனைவியைவிடவே றொருத்தியை விவாகம் பண்ணு தல். அதீசன் - எசமான். அதீசாரம் - அதிசாரம். அதீச்சுரபதவி - நவவிலாசசபைக் குரியவதிகாரம். அதீச்சுரன், அதீச்சுவரன் - அரசன், கடவுள். அதீட்சணதை - மழுங்கல். அதீதப்பிரமம் - கடவுள். அதீதம் - எட்டாதது, கடந்தது, மேற் பட்டது, குரல்முன்னுந் தாளம் பின்னு மாய்வருவது, பொன். அதீதர் - வானோர், முனிவர், மேலோர். அதீதவேதன் - வேதநிபுணன். அதீதியம் - ஆசையின்மை. அதீந்திரியம் - புலனுக்கெட்டாதது. அதீரம் - கரையின்மை. அதீரை - அமையாதவள், மின்னல். அதீனத்துவம் - இட்டம். அதீனம் - உரித்து. அது - அஃது, ஆறாவதனொருமை யுருபு. அதுக்கம் - அடிப்பு, ஒதுக்கம், குழிவு. அதுக்கல் -அடித்தல், அடைசுதல். அதுங்கல் - ஒதுங்கல், குழிதல். அதுலம் - உவமையின்மை, ஓரெண். அதுலன் - ஒப்பிலி, கடவுள். அதுலிதம் - அசைவின்மை. அதுல்லியம் - ஒப்பின்மை. அதெந்து - யதெந்து. அதெநன்மையம் - நூதனம். அதைத்தல் - தாக்கிமீளல், வீங்கல். அதைப்பு - தாக்கியெழுதல், வீக்கம். அதோ - கீழ், படர்க்கைச்சுட்டு. அதோகதி - நரகம், இறங்குதல், பள்ளம். அதோங்கம் - குதம், யோனி. அதோசாதி - கீழ்சாதி. அதோபாகம் - கீழ்ப்பக்கம். அதோபுவனம் - கீழுலகம். அதோமாயை - ஓர் மாயை. அதோமுகம் - ஆற்றுநீர்க்கழிமுகம், கீழ்நோக்கியமுகம். அதோமுகி - கவிழதும்பை. அதோவாயு - அபானவாயு. அதோலம்பம் - தூங்குதல், நிறுதிட்ட வரி. அதோலோகம் - கீழுலகம். அதோலதனம் - அதோமுகம். அத் - ஒன்று பாதி. அத்தகடகம் - கைவளை. அத்தகண்டாதனம் - ஒருகால் மேனீட்டி ஒருகைகொண்டு நீட்டின காலைக்கட்டி மற்றைக் கையை நிலத்தூன்றியிருப்பது. அத்தகோரம் - நெல்லி. அத்தசந்திரன் - வாலசந்திரன். அத்தசகாயம் - பொருளுதவி. அத்தசதம் - நூறாண்டு. அத்தசாமம் - நடுச்சாமம். அத்தசித்திரம் - மார்க்கசடப் பிர மாணத்தொன்று, அஃது அரை மாத்திரை யோர்களையாகக் கொண்டது. அத்தநாசம் - பொருளழிவு. அத்தபாகம் - பாதி. அத்தடி - அடிக்கெடுதல், அந்தரிப்பு. அத்தப்பிரகரன் - கரந்துறைகோளி னொன்று, நாலேகானாழிகை கொண்டது. அத்தமண்டபம் - கோவிலினடு மண்டபம். அத்தமம் - அத்தமிப்பு. அத்தமனம், அஸ்தமனம் - அத்தமன காலம், அத்தமித்தல். அத்தமானியம் - கண்டதிற்பாதி யிறைதருதல். அத்தமித்தல் - அற்றுப்போதல், உட்குதல், படுதல், மறைதல். அத்தமேற்காலாதனம் - இருகாலும் மேலுறமடக்கியக் காலிரண்டை யுங்கையாற்பற்றிக் கிடப்பது. அத்தம் - அருநெறி, ஓர் நாள், ஓர் மலை, கண்ணாடி, காடு, கை, சொற்பொருள், பாதி, பொன், வழி, ஆண்டு, முகில். அத்தர் - வாசனைப்பண்டம், வன வாசர். அத்தலைபொருந்தி - ஓர் பூடு. அத்தவாரணம் - போதுமெனல். அத்தவாளம் - உல்லாசம், காடு, போர்வை. அத்தவேடணை - பொருளிச்சை. அத்தன் - கடவுள், குரு, பிதா, மூத்தோன், அருகன், சிவன். அத்தாட்சி - ஒப்பனை, திட்டாந்தம். அத்தாணி - வேந்திருக்கை. அத்தாதிக்கம் - பாதிக்கதிகப்பட்டது. அத்தாதுரம் - பொருளாசை. அத்தாப்பித்தல் - உரப்பிநெருக்கல். அத்தார்ச்சனை - திரவியசம்பாத்தியம். அத்தார்த்தம் - அரைவருடம், பொரு ணிமித்தம். அத்தான் - மைத்துனன். அத்தி - என்பு, ஓர்மரம், கடல், கண்ணில் நிற்கும் ஒரு நரம்பு, கருவிளை, கொலை, பாதிசெய் யென்னேவல், யானை, வெருக மரம், அக்காள், திப்பிலி, பிடியன் யானை, மலை. அத்திகோலம் - அழிஞ்சில். அத்திகை - அக்காள். அத்திக்கன்னி - வெருகமரம். அத்திசம் - நீர்முள்ளி. அத்திசயனன் - விட்டுணு. அத்திசுரம் - ஓர் நோய். அத்தித்தல் - பாதிசெய்தல். அத்தித்திப்பிலி - யானைத்திப்பிலி. அத்திநந்தனி - பார்வதி. அத்திநவ்நீதகம் - சந்திரன். அத்திபஞ்சரம் - முழுவென்பு. அஸ்திபாரம் - அத்திவாரம். அத்திமண்டூகி - முத்துச்சிப்பி. அத்தியக்கினி - சீதனம், வடவாமு காக்கினி. அத்தியக்கினிட்டோமம் - யாகமிருபத் தொன்றினொன்று. அத்தியசனம் - ஏகோத்திட்டவூண். அத்தியட்சரம் - பிரணவம். அத்தியட்சன் - அதிகாரி. அத்தியந்தகோபம் - மிகுகோபம். அத்தியயம் - அத்தியாயம், ஆக்கினை, இக்கட்டு, ஒருபொருளின் பேதத் தை ஐயத்துடனறிதல், நட்டம், பொல்லாங்கு, மரணம், மீறுதல். அத்தியந்தம் - ஓரெண், மட்டற்றது, மிகுதி. அத்தியயனம், அத்தியாகரணம் - வேதமோதல், படித்தல். அத்தியவசயித்தல் - ஒருபொருளின் கணியல்பாய் நிகழுந் தன்மையை யொழித்துத் தானெடுத்த பொருண் மேலேற்றிச்சொல்லல், தற் குறிப்புச் செய்தல். அத்தியவசாயம், அத்தியவசாயிதம் - தானெடுத்துக் கொண்டது, முயற்சி. அத்தியாசனம் - ஏகோதிட்டம். அத்தியாபகன் - வேதமோதுவிப் போன். அத்தியாகரணம் - தொக்குநின்றதை நிரப்புதல். அத்தியாகாரம் - குற்றம், மிகு போசனம். அத்தியாசம் - சாட்டுதல், வித்தியாசம், வீற்றிருத்தல். அத்தியாசாரம் - முறைவழு. அத்தியாத்துமா - ஆன்மா, கடவுள். அத்தியாத்துமிகநூல் - அத்தியான் மிகநூல். அத்தியாத்துமிகம் - கடவுட்கடுத்தது. அத்தியாபனம் - ஓதுவித்தல், வேத மோதுவித்தல். அத்தியாயம் - இலக்கியச் செய்யுட் பகுதி, வேதநூலை விரித்த விலக் கியத்தின் கூறுபாடு, வேதம். அத்தியாயனம் - வேதமோதல். அத்தியாரோகணம், அத்தியாரோகம் - ஏறுதல். அத்தியாரோபனம் - ஓன்றையொன்றி லேற்றல். அத்தியாவாகனிகம் - சீதனம். அத்தியான்மிகநூல் - பதிநூல், அஃது சாங்கியம், பாஞ்சவியம், வேதாந் தம் எனப்படும். அத்தியூடன் - சிவன். அத்தியானமீகநூல் - மூவகைச் சாத்திரம். அத்திரதர் - காற்றேரரசர். அத்திரதேவர் - ஆயுததேவர். அத்திரபரிட்சை - கலைஞானமறு பத்தினான்கினொன்று, வில் வித்தை. அத்திரம் - அம்பு, இலந்தை, கழுதை, குதிரை, கைவிடுபடை, மலை, முன்விடுமம்பு. அத்திராசம் - பயமின்மை. அத்திராதரம், அத்திராபரம் - அம்புக்கூடு. அத்திரி - உலைத்துருத்தி, ஒட்டகம், கணை, கழுதை, குதிரை, தரும நூல் பதினெட்டினொன்று, மலை, விண், ஓரிருடி, சூரியன். அத்திரிகீலை - பூமி. அத்திரிசாதன் - சந்திரன், முதன் மூன்று வருணத்தான். அத்திரிசாரம் - இரும்பு. அத்திரிசிருங்கம் - சிகரம். அத்திரீசன் - இமையம், சிவன். அத்திரு - அரசு. அத்திலை - செருப்படை. அத்திரோகம் - மெத்தெனவு. அத்திவாரம் - அடி, அடியுரம். அத்தினாபுரம் - அஸ்தனாபுரி. அத்தினி - நால்வகைப் பெண்களி னொருத்தி, பெண்யானை. அத்து - அசைச்சொல், அரைநாண், அரைப்பட்டிகை, இசைப்பு, சாரியை, சிவப்பு, செவ்வை, தைப்பு. அத்துகமானி - அரசு. அத்துகம் - ஆமணக்கு. அத்துச்சம் - சரியுச்சம். அத்துதல் - இசைத்தல், பொருந்தல். அத்துமம் - அரத்தை. அஸ்து - அப்படியாக. அத்துருக்கம் - அகழ்சூழ்ந்த கோட்டை. அத்துவகமனம் - பிரயாணம்பண்ணல். அத்துவசோதனை - பிரமசோதனை செய்தல். அத்துவம் - இரண்டொன்றாயிருத் தல், ஒன்றிப்பு, சிவப்பு, வழி. அத்துவர் - பிரமஞானிகள். அத்துவாக்கியம் - கருஞ்சீரகம். அத்துவாசைவம் - ஓர்சைவம். அத்துவாந்தம் - காலைமாலை வெளிச்சம். அத்துவாமூர்த்தி - பிரபஞ்சத்திற் கலந்து நின்றுசேட்டிப்போன். அத்துவானம் - செவ்வானம். அத்துவிதம் - ஒன்றிப்பு. அத்துவை - கோழையினது மூழை யினதுங்கலப்பு, தெரு, நேரம். அத்தூரம் - மரமஞ்சள். அத்தை - தலைவி, மாமி, முன்னிலை யசைச்சொல், அக்காள், மாதா. அத்தோ - அதிசயவிரக்கச்சொல், இரக்கச்சொல். அத்தோதையம் - அருந்தோதையம். அநங்கம் - இருவாட்சி, மல்லிகை. அநரவன் - வேந்தோன்றியன். அநயம் - அதிட்டகீனம், தீங்கு, வருத்தம். அநாயகம் - முதன்மையின்மை. அநிகம் - சங்கம்மூன்று கொண்ட படை. அநிக்கிரகம், அநிக்கிரகித்தல் - காத்தல். அநித்தியம் - நிலையின்மை, பொய். அநிட்டை - உறுதியின்மை. அநிதானம் - அனாதாரம். அநித்தியசமம் - உதாரணத்தால் ஞாயம்பேசல். அநியதம் - அழிவுள்ளது, விலக்கியது. அநியமம் - சந்தேகம், துன்னடை, விலக்கியது. அநிமாலினம் - சாவு. அநியம் - வுவமை, நியமித்தவுவமை யை விலக்கிப்பிறிது மொரு பொருளைக்கூட்டி உவமிப்பது. (உம்) மதுவராக விரேநின்வா யொப்ப தன்றியது போல்வதுண் டெனினுமாம். அநியாயம் - நியாயமின்மை. அநிரதம் - சத்துரூபத்துக் கன்னிய மாகுமாயை. அநிருத்தபதம் - ஆகாயம். அநிருத்தன் - அடங்காதவன், மன் மதன் மகன். அநிருமலம் - அழுக்கு. அநீசம் - மரியாதை. அநீதம் - நீதமின்மை. அநீதர் - கீழ்மக்கள், நீதியற்றோர். அநீதி - நீதிகேடு. அநுக்காரம், அநுசாரம் - ஒப்புமை. அநுசிதம் - தகுதியின்மை. அநுதார்த்தம் - உரூபகத்தினொன்று. அந் - அன். அந்தகசயன் - சிவன். அந்தகம் - ஓர் சன்னிநோய். அந்தகரிபு - சிவன். அந்தகன் - அழிப்போன், இயமன், குருடன், சனி, ஓரிராக்கதன், சவுக் காரம். அந்தகாசுகிருதன் - சிவன். அந்தகாரம் - இருள், நரகம். அந்தகாரி - சிவன். அந்தகோளம் - நெல்லி. அந்தகூபம் - தூர்ந்தகிணறு. அந்தக்கரணம் - அந்தர்க்கரணம். அந்தக்கிரகம் - உள்வீடு. அந்தசடம் - வயிறு. அந்தணரறுதொழில் - ஈதல், ஏற்றல் ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட் பித்தல். அந்தணர் - பார்ப்பார், முனிவர். அந்தணர்வாக்கு - வேதம். அந்தணன் - சனி, பார்ப்பான், வியாழன், அருகன், கடவுள், சிவன், பிரமன். அந்தணாளர் - அரசர்க்குறுதிச் சுற்றத்தினொருவர், பார்ப்பார். அந்ததமசம் -மிகுவிருள். அந்தஸ்து - நிருவாகம். அந்தப்புரம் - மன்றேவியில்லம். அந்தமந்தம் - உறுப்புக்கேடு, கூர்மை யின்மை, செப்பமின்மை. அந்தம் - அழகு, ஆகாயம், ஒழுங்கு, கடை, கத்தூரி, சாவு, முடிவு, அவையவம், இருள், எல்லை, சமீபம், சுபாவம், சோறு, நிச்சயம், நீர். அந்தரகணம் - ஆகாயகணம். அந்தரகாமி - ஆகாயமார்க்கமாய்ச் செல்லுங்குதிரை. அந்தரங்கம் - இரகசியம், ஏகாந்தம், மனம், ஆலோசனை, உள்ளாக உடையது. அந்தரசைவம் - ஓர்சைவம். அந்தரபவனி - ஆகாயகதி. அந்தரதிசை - சாதகதிசைகளி னொன்று. அந்தரநடனர் - கழாயர். அந்தரமிசிரம் - ஓர்நரகம். அந்தரம் - அளவு, ஆகாயம், ஆதர வின்மை, இடை, இருள், உள் வெளி, கூட்டம், தனிமை, தீமை, தேவர்கோயில், பேதம், முடிவு, மேகம், விக்கினம், அந்தரிப்பு, இடம், உடுப்பு, உவமை, கடவுள், காலம், சேடம், சொந்தம், நடு, நிமித்தம், பிழைப்பு, புருவத்தினடு, வெளி. அந்தரவல்லி - கருடன்கிழங்கு. அந்தரவாசம் - கொட்டைப்பாசி. அந்தரவீச்சு - அந்தரிப்பு, பொறுப் பின்மை. அந்தராபத்தியை - கருப்பிணி. அந்தராயம் - இடையூறு, தீமை. அந்தராளம் - நடு. அந்தராளன் - அனுலோமத் தந்தைக் குப்பிரதிலோமத் தாயிடத்திற் பிறந்தபிள்ளை. அந்தரி - அந்தரியென்னேவல், துற்கை, பார்வதி. அந்தரிட்சம் - ஆகாயம். அந்தரிதம் - சேடம். அந்தரித்தல் - அலைதல், நிலை கெடுதல், மனந்தடுமாறல். அந்தரியாகம் - உட்பூசை. அந்தர் - உள், மறைவு. அந்தரியாமி - ஆன்மா, கடவுள், சீவசாட்சி. அந்தரிலம்பம் - ஒடுங்கிய முக்கோணம். அந்தரிலயம் - துரியாதீதம். அந்தரீட்சம் - ஆகாயம். அந்தரீபம் - தீவு. அந்தரேணம் - நடு. அந்தர்க்கதம் - இடையில்வருதல். அந்தர்க்கரணம் - உட்கருவி. அந்தர்ச்சடரம் - இரைக்குடர். அந்தர்ச்சரீரம் - உள்ளிந்திரியம். அந்தர்த்தகனம் - மதுநீர்வடித்தல். அந்தர்த்தானம் - உள், மறைவிடம். அந்தர்த்துவாரம் - உட்கதவு. அந்தர்ப்பிரகிருதி - உள்ளிந்திரியம். அந்தர்ப்புரம் - அரசன்றேலியில்லம், உள்வீடு. அந்தலை, அந்தலைப்பு - முடிவு. அந்தளம் - கவசம். அந்தன் - குருடன், சனி. அந்தாதிச்சா - மகராதியாறினும் வந்தசாபலம். அந்தாதித்தல் - அந்தாதியாகத் தொடுத்தல். அந்தாதித்தொடை - அடிதோறு மிறுதிக் கணின்றவெழுத்தேனு மசையேனுஞ் சீரேனுஞ் சொல் லேனுமடியேனு மற்றையடிக்காதி யாகவருவது. அந்தாதிமடக்கு - ஓரடியினிறுதி யுமற்றையடியின் முதலும் பல பொருளொரு மொழியான் மடங்கி வருவது. அந்தாதி - கடவுள், நின்ற பாட்டினி றுதியும் வரும் பாட்டின் முதலும் ஒன்றாய்வருமோர்தொடை. அந்தாளிபாடை - ஓர்பண். அந்தி - அந்தியென்னேவல், இரா, மாலையாகாலம், முத்தெருக் கூடு மிடம், அக்காள், பொருத்து, முடிவு. அந்திகம் - அயல், கொளுகொம்பு, பக்கம். அந்திகாசிரயம் - தாவரம். அந்திகாவலன் - ஓர் தேவதை. அந்திகை - அக்காள், அடுப்பு, இரவு, ஓர் கண்ணோய், சமீபம், பெண். அந்தித்தல் - பொருந்தல், பொரு முதல், மந்தப்படுதல். அந்திமந்தாரை - ஓர் பூமரம். அந்திமான் - இடையெழுவள்ளலி லொருவன். அந்தியம் - முடிவு. அந்தியகருமம் - சாச்சடங்கு. அந்தியகாலம் - மரணகாலம். அந்தியபம் - இரேவதி. அந்தியவருணம் - நாலாம்வருணம். அந்திரம் - குடர். அந்திரன் - வேடன். அந்தியர் - கீழ்மக்கள். அந்தியேட்டி - மரணயாகம். அந்திவண்ணன் - சிவன். அந்தில் - அசைச்சொல், அவ்விடம். அந்து - நெல்வண்டு, கிணறு, பாத கிண்கிணி. அந்துகம் - சங்கிலி, யானைச்சங்கிலி, பாககிண்கிணி. அந்துளிதுந்துளியார்த்தல் - சூகை யாடல், பதைபதைத்தல். அந்தூகம் - யானைப்பாதகிண்கிணி. அந்தேசம் - அந்தரிப்பு, அபலம். அந்தேவாசி - சண்டாளன், மாணாக் கன் அந்தைமந்தை - மந்தக்குணம். அந்தோ - அதிசயவிரக்கச்சொல், இரக்கச்சொல். அபகடம் - அவகடம். அபகரித்தல் - வஞ்சனையாய்க் கவர்தல். அபகம் - மரணம். அபகரணம் - அபகரிப்பு, வழுச் செய்கை. அபகருமம் - துற்கருமம், நெருக் கிடை, பொல்லாங்கு. அபகளங்கம் - நீங்காவசை. அபகம் - அவயவம். அபகாதம் - கொல்லல். அபகாரம் - நன்மைக்குத்தீமை செய்தல், களவு, கொடுங் கோன்மை, தவறு, நட்டம், பொல்லாங்கு, வன்னம். அபகாரி - நன்றியீனன். அபகிருதி - எதிரிடை, துற்செய்கை, நெருக்கிடை. அபகீர்த்தி - துற்கீர்த்தி, நிந்தை. அபகுண்டனம் - சுற்றல். அபக்கியாதி - நிந்தை, பழி. அபக்கிரமம் - புகலிடம், போதல். அபக்கிரியை - தீங்கு, துற்செய்கை. அபக்கிரோசம் - நிந்தித்தல். அபக்குவம் - பக்குவமின்மை. அபசகுனம் - துன்னிமித்தம். அபசத்தம் - அவசத்தம். அபசங்கம் - பாதம். அபசதம் -கீழ்மை. அபசயம் - தோல்வி, பலவீனம். அபசரணம் - வெளிச்செல்லுதல். அபசரம் - அகற்றுதல், சீக்கிரகதி. அபசருச்சனம் - கொல்லுதல், நன் கொடை, பிறவிநீங்கல், விடுதல். அபசரிதம் - ஒழுக்கவீனம். அபசவ்வியம் - இடப்பக்கம், தற் சனிக்கும் அங்குட் டத்திற்குநடு. அபசாரம் - துன்னடை, குறைவு, துற் செய்கை, வெளிச்செல்லுதல். அபசாரி - ஒழுக்கந்தப்பினவள், வேசி. அபசிதம் - ஆசரித்தல், செலவிடல். அபசித்துமூர்த்தம் - எட்டாமூர்த்தம். அபசேதிரு - ஆராதூரிக்காரன். அபச்சாயை - தள்ளுபடிச்சாயை. அபஞ்சீகிருதம் - தனித்தனியேநிற்கும் பூதங்கள். அபடி - திரைப்படாம். அபடு - சாமர்த்தியமின்மை. அபடுகரணம் - புலக்குறைவு. அபட்சணம் -நோன்பு. அபட்சதை - எதிர். அபட்சம் - வெறுப்பு. அபட்டகம், அபட்டம் - அங்குசநுனி. அபதாந்தரம் - சமீபம். அபதானகம், அபதானம் - சுத்தநடை, மேன்றொழில், வலி. அபதூறு - துற்கீர்த்தி. அபத்தம் - தவறு, பொய், மோசம். அபதேசம் - இலக்கு, உபாயம், காரணம், கீர்த்தி, திக்கு, வஞ்சம், வேடம். அபதேவதை - பைசாசம். அபத்தி - பத்தியின்மை. அபத்திச்சந்தம் - பசியின்மை. அபத்தியசத்துரு - நண்டு. அபத்தியதை - மருத்துவிச்சி. அபத்தியபதம் - யோனி. அபத்தியம் - பிள்ளை. அபத்தியாவிக்கிரயி - மகவைவிற்பவன். அபத்தியானம் - பொல்லாங்கு. அபத்திரபம் - வெட்கக்கேடு. அபத்திரவியம் - அசுத்தம், கலப்பு. அபதுதியுருபகம் - பொருளைமறுத் துவமையுடம்படுத் துரைப்பது. (உம்) கையல்லக் காந்தண்மலர். அபநயனம் - அழிதல், அழித்தல், எடுத்துக்கொள்ளுதல், கடனிறுத் தல். அபநீதம் - அபகரிக்கப்பட்டது, இறுக்கப்பட்டது. அபநோதம் - அகற்றுதல். அபமம் - சூரியன்தக்கணாயனத்தி லாகுதல் உத்தராயணத்திலாகுத லிறங்குதல். அபமரணம் - துன்மரணம். அபமானம் - துற்கீர்த்தி. அபம் - எதிர், கீழ்மை, பிரிவு, வித்தி யாச முதலியதைக் காட்டு மோருப சருக்கம். அபயங்கொடுத்தல் - அடைக்கலமா யேற்றுக் கொள்ளுதல். அபயசம் - துற்கீர்த்தி. அபயதன் - தற்காப்போன். அபயதானம், அபயப்பிரதானம் - அடைக்கலம். அபயஸ்தம் - அபயகரம். அபயமிடுதல் - அடைக்கலம்புகுதல், முறையிடுதல். அபமார்க்கம் - துன்மார்க்கம், நாயுருவி, புன்சமயம். அபமிருத்து - அபமரணம். அபயகரம், அபயாத்தம், அபையார்த் தம் - பயந்தீரவமைக்குங்கை. அபயம் - அச்சமின்மை, அடைக்கலம், ஓலம், கிருபை, செவ்வியம், தயை, உலகமுடிவு. அபயர் - படைவீரர். அபயவாக்கு -அஞ்சேலெனல். அபயன் - கடவுள், சோழன், வீரன், அச்சமறுத்தோன், அருகன், பய மற்றவன். அபரசன் - பின்னோன். அபரஞானம் - வாலஞானம். அபரஞ்சி - ஒடவைத்தபொன். அபரதி - தாமதித்தல். அபரத்துவம் - எதிர், பின். அபரநாதம் - எதிரொலி. அபரபக்கம் - சந்திரன்பிற்பக்கம். அபரமார்க்கம் - நாயுருவி. அபரம் - கவசம், நரகம், பிணக்கு, பிற்பக்கம், பின், முதுகு, யானைப் பின்கால், எதிர், பிந்தினது. அபரலோகம் - மோட்சம். அபராசிதன் - அரன், அரி. அபராணம் - ஏற்பாடு, பின்னேரம். அபராதம் - குற்றம், தெண்டம், பிழை. அபராத்திரம் - கடைச்சாமம். அபரிசரம் - தூரம். அபரிச்சதம் - நிருமாணம். அபரிச்சேதம் - ஒழுங்கின்மை, பிரி வின்மை. அபரிட்காரம் - சீர்கேடு. அபரிணயனம் - இல்லொழுக் கத்திருத்தல். அபரிணீதை - விவாகஞ் செய்யாத வள். அபரிபாடி - ஒழுங்கின்மை. அபரிபூதம் - முதிராதது. அபரிமாணம் - அளவில்லாதது. அபரிமிதம் - அளவின்மை, எல்லை யின்மை, பெருமை. அபலம் - பலவீனம், பலனற்றது, கதவின்றாள். அபரியாயம் - ஒழுங்கின்மை. அபரூபம் - அவலட்சணம். அபரோட்சஞானம் - பிரமசைதன்னிய தரிசனம். அபரோட்சன் - பிரமசைதன்னிய தரிசனன். அபவருக்கம் - முத்தி, நிறைவேற்றம், பலம், முடிவு, விடுதல். அபலாடிகை - தாகம். அபலாபம் - உருக்கம், வஞ்சகம். அபவரணம் - மூடி. அபவருச்சனம் - நன்கொடை, பிறவி நீங்கல், விடுதல். அபவருத்தம் - அழித்தல். அபவருத்தனம் - அகற்றுதல், கலக்கு தல், சுருக்குதல். அபவனம் - நந்தனவனம். அபவாகம் - அருத்தாபத்தி, உள்ளறை. அபவாதம் - ஒவ்வாப்பேச்சு, பழிச் சொல், குற்றச்சாட்டு, தடை, வெள்ளை. அபவாதயோகம் - குற்றஞ்சொல்லல். அபவாரணம் - மறைவு, மரணம். அபவிதவ்வியம் - அசம்பவம். அபவித்திரம் - அசுத்தம். அபவித்திரன் - அசுத்தன். அபவியயமானம் - கடனிறாமை, செலவிடல். அபவியயம் - ஆராதூரித்தனம். அபவிருத்தி - குறைவு. அபாகசாகம் - இஞ்சி. அபாகம் - முதிராமை. அபாகரணம் - கடனிறுத்தல். அபாக்கியம் - நிற்பாக்கியம். அபாங்ககம் - கடைக்கண். அபாங்கம் - கடைக்கண்பார்வை, திலகம். அபாசங்கம் - அம்புக்கூடு. அபாசம் - ஆசையின்மை, குற்றம். அபாசிரயம் - பந்தர். அபாசீனம் - தெற்கு. அபாஷணம் - அமைதி, பேச்சின்மை. அபாடவம் - அந்தக்கேடு, நோய். அபாணிக்கிரகணம் - விவாகமின்மை. அபாண்டம் - அபாத்திரம், நிந்தை. அபாதானம் - ஐந்தாம் வேற்றுமைப் பொருள். அபாத்திரம் - பாத்திரவீனம். அபாத்திரீகரணம் - சுயதருமம்விட்டு அன்னியதருமஞ்செய்தல். அபாபம் - இன்மை, ஒவ்வாமை, மரணம். அபாம்பதி - சமுத்திரம். அபாயம் - சதியோசனை, மோசம், வஞ்சகம், அழிவு, எழுச்சி, நட்டம், பிரிவு. அபாரணை - உண்ணாமை. அபாரம் - அளவின்மை, எல்லைப் படாதது, கடவுள், கேடு. அபார்த்தகரணம் - கள்ளவழக்கு. அபாவஅளவை - இல்லாததற்குவமை. அபாவப்பிரமாணம் - ஓரளவை, அஃது இயல்பாயில்லதனை யில்லை யெனக் கோடல். அபாவம் - இன்மை, ஓரளவை, அபாபம். அபாவர்த்தனம் - திருப்புதல். அபாவனை - தியானமின்மை, நிந்தனை. அபானம் - குதம். அபானவாயு - கீழ்நோக்கிச்செல்லும் மூச்சு. அபானன் - தசவாயுவினொன்று. அபி - கண்டனை, கதிப்பு, கேள்வி, சந்தேகம், சமீபம், பிரிவு, மேன் மை, விருப்பம் இவற்றைக் காட்டு மோருபசற்கம். அபிகதம் - சமீபித்தல். அபிகமம் - சமீபம். அபிகரிசனம் - தேய்த்தல். அபிகாதம் - உபாதி, காயப்படுத்தல். அபிகாதி - சத்துரு. அபிகாயம் - அழற்சி, ஓர்காசம், சீற்றம், மனவேகம். அபிகாரம் - கொள்ளையிடல், நெய், படைக்கலந்தரித்தல். அபிகிதத்துவம் - மேற்கோள். அபிகிதம் - முன் சொல்லப்பட்டது. அபிக்கியை - அழகு, அழைத்தல், கீர்த்தி, நாமம். அபிக்கிரகம் - திருடுதல், போர்க்கறை கூவுதல். அபிக்கிரணம் - எதிர்கொள்ளல். அபிக்கிரமம் - ஏறுதல், சருவுதல். அபிசங்கம் - குற்றச்சாட்டு, கூட்டம், சத்தியம், சபிப்பு, தழுவுதல். அபிசத்தி - துற்கீர்த்தி. அபிசந்தாபம் - யுத்தம். அபிசந்தானம் - அணாப்புதல், இணக்கம், பற்றுதல். அபிசந்தி - அணாப்பு, இணக்கம், காரியம். அபிசம் - சங்கம். அபிசம்பந்தம் - சங்கிரதம், நல்லிணக் கம். அபிசம்பாதம் - சாபம், யுத்தம். அபிசரன் - தோழன். அபிசவம் - கஞ்சி. அபிசவனம் - முழுகுதல். அபிசற்சனம் - கொலை, நன்கொடை. அபிசனம் - கீர்த்தி, பிறந்ததேயம், வமிசத்தலைமை, வமிசம். அபிசாதகுலம் - நற்குலம். அபிசாதம் - தகைமையானது. அபிசாபம் - குற்றச்சாட்டு, சபிப்பு, வீண். அபிசாபனம் - சபித்தல். அபிசாபிவாரம் - இச்சித்தல். அபிசாரகம் - மந்திரத்தாற்கொல்லல். அபிசாரணம் - சந்தித்தல், சமீபித்தல். அபிசாரமந்திரம் - மோகனமந்திரம். அபிசாரம் - நியமிப்பு, பெலன், மோகனம், யுத்தம். அபிசாரவோமம் - மாரணஓமம். அபிஷதம் - மருந்து. அபிஷேகம் - திருமுழுக்கு, முழுக்கு. அபிசாரி - மோகஸ்திரீ, மோகன வித்தைக்காரன். அபிசாரிகை - பிறர்சம்பந்தஸ்திரீ. அபிசாரிதம் - மோகிக்கப்பட்டது. அபிசித்தாந்தம் - சித்தாந்தஞ் சொல்லத் தொடங்கிவே றொன்றைச் சொல் லுதல். அபிசித்து - அபசித்து. அபிசுதம் - கஞ்சி. அபிஞ்ஞானம் - அடையாளம், அறிவு, கறை. அபிடங்கம் - சாபம். அபிடேகம் - திருமுழுக்கு. அபிதம் - இரட்சித்தல். அபிதாபம் - கலக்கம், மிகுவெப்பம். அபிதாவனம் - பின்றொடர்தல். அபிதானம் - பெயர், பேச்சு, பொரு ணூல். அபிதிற்சை - விருப்பம். அபிதேயம் - நாமம், பொருளுள்ள சொல். அபிதேயாகிதம் - பயனில்சொல். அபித்தியானம் - இச்சித்தல், தியானித் தல். அபித்தியை - இச்சை. அபித்துரோகம் - குரூரம். அபிநந்தை - விருப்பம். அபிநயம் - கூத்து, கைமெய்காட்டுதல், அலங்கரிப்பு, உபசரணை, காமக் குறிப்பு. அபிநயர் - கூத்தர். அபிநயித்தல் - அபிநயஞ்செய்தல். அபிநிட்கிரமணம் -கக்குதல், புறப்படல். அபிநிடபத்தி - முடிவு. அபிநிரியாணம் - படையெழுச்சி. அபிநிவேசம் - சங்காவியம், படிப்பு முயற்சி. அபிநீதி - சயிக்கை, சினேகம். அபிலவிருக்கம் - தில்லைமரம். அபிபவம் - கீழ்ப்படுத்தல். அபிப்பிரணயம் - தயவு, நிவிர்த்தி. அபிப்பிராயச்சந்தம் - அபிப்பிராயம். அபிநவம் - அதிசயம், புதுமை. அபிப்பிராயம் - உட்கருத்து, எண்ணம். அபிமதம் - சம்மதம், அன்பு, சமத்து, விருப்பம். அபிமந்திரணம், அபிமந்திரித்தல் - ஒன்றிலேமந்திரவுருவேற்றல், அழைத்தல், ஆலோசித்தல். அபிமந்திரம் - செபித்தல். அபிமரம் - கொலை, மறியல், யுத்தம். அபிமர்த்தம் - ஊர்க்கொள்ளை, தேய்த்தல், யுத்தம். அபிமன்னு - வாளபிமன். அபிமானம் - களிப்பு, மதிப்பு, மானம், அறிவு, ஆணவ மறைப்பு, உருக்கம், கொலை, பெருமை. அபிமானவிருத்தி - அகங்காரம். அபிமானி - அபிமானமுடையோன். அபிமானிதம் - புணர்ச்சி. அபிமானித்தல் - அளவிடல். அபிமானு - அறிவு, உருக்கம், பெருமை. அபிமுகம் - நேர்முகம், முகதா. அபியரதி - சத்துரு. அபியவகிரீஷணம் - கல்லிப்பிடுங்கல். அபியிதகருத்தன் - எழுவாய்க் கருத்தன். அபியிதம் - சொல்லல். அபியுத்தம் - பகையெதிர்கொள்ளல். அபியூட்சணம் - அமைத்தல். அபியோகம் - தடை, தண்டனை, போர்க்கறைகூவுதல், முயற்சி, முறைப்பாடு, யுத்தம். அபியோகி - குறைகூறுவோன். அபிரங்கி - கருநெல்லி. அபிரட்சை - சருவரட்சணம். அபிரதி - சந்தோஷம், தொழில். அபிரயோசனம் - பிரயோசனமற்றது. அபிராமம் - அழகு. அபிராமி - சரச்சுவதி, பார்வதி, சத்தமாதர்களிலொருத்தி. அபிருசி - கீர்த்திப்பிரியம், விருப்பம். அபிரூபன் - காமன், சந்திரன், சிவன், திருமால், பண்டிதன். அபிலாசம் - விருப்பம். அபிலாபம் - பேச்சு. அபிலிகிதம், அபிலேகனம் - எழுதுதல். அபிவந்தனம் - வந்தனஞ்சொல்லு தல். அபிவாக்கியம் - கொண்டுபோதல், செலுத்துதல். அபிவியாத்தம் - பரம்புதல். அபிவியாத்தி - சருவவியாபகம். அபிவிருத்தி - வருத்திப்பு. அபினி - அபின். அபின்னதை - முழுமை. அபின் - ஓர் மருந்து. அபின்னம் - ஒற்றுமை பேதமின்மை, முழுவிலக்கம். அபின்னாசத்தி - பங்கப்படாமை. அபீகன் - கணவன், புலவன். அபீசு - கிரணம். அபீடனம் - நோயின்மை, பட்சம். அபீட்சணம் - அமைதல். அபீட்டம், அபீஷடம் - விரும்பப் பட்டது. அபீட்டிதம் - துதித்தல். அபீட்பம் - வைதல். அபீதம், அபீதி - பயமின்மை. அபீமானம் - அபிமானம். அபீரன் - இடையன். அபீரு - அச்சமிலான், வைரவன். அபுத்தம் - உண்ணாதது. அபுத்திரன் - பிள்ளையில்லாதவன். அபுனராவிருத்தி, அபுனர்ப்பவம் - பிறவிநீங்கல். அபூதவுவமை - முன்பில்லதனையு வமையாக்கியுரைப்பது (உம்.) சகலகமலங்களினழ கெலாந் திரண்டிடினிவண் முகத்துக் கொப்பு. அபூபம் - அப்பவருக்கம். அபூரணகாலசம் - முதிராமற் பிறந்தது. அபூரணி - பட்டுப்பருத்தி. அபூருவம் - நூதனம். அபெத்தன் - பந்தமகன்றோன். அபேட்சை - ஆசை, எச்சரிப்பு, சங்கை, சமயம். அபேதசைவம் - ஓர் சைவம். அபேதம் - பேதமின்மை. அபேனம் - அவின். அபைசுனம் - நிதார்த்தம். அபையம் - அபயம். அபோகண்டம் - அமைதி, அவலட் சணம், குழந்தை, பயங்கரம். அபோகம் - ஐயந்தீர்த்தல், ஞாயம் பேசுதல், போகமின்மை. அபோகார்த்தம் - விபரீதவுரை. அபோக்கியம் - அனுபவியாமை. அபோசனம் - உபவாசம். அபோதம் - அக்கியானம். அப்தோரியாமம் - யாகமிருபத்தொன்றி னொன்று. அப்பம் - அடை, சிற்றுண்டி, புட்டுத் திருப்பிப்பூடு. அப்பறாத்தோணி - அம்புக்கூடு. அப்பல் - அணிதல், அப்புதல், மோதல். அப்பளம் - ஒருவகைப்பண்ணிகாரம். அப்பறாத்தூணி - அம்புக்கூடு. அப்பன் - தந்தை. அப்பாட்டன் - முப்பாட்டன். அப்பாலி - பாவமற்றவன். அப்பிதம் - மேகம். அப்பியங்கம், அப்பியங்கனம் - முழுக வெண்ணெய்பூசுதல், உடம்பில் வாசனை யூட்டல், பிண்ணாக்கு, மை தீட்டல். அப்பியங்கஸ்நானம் - எண்ணெய் முழுக்கு. அப்பியசனம், அப்பியசித்தல் - அப் பியாசித்தல். அப்பியசூயகன் - அழுக்காறுடை யோன். அப்பியஞ்சனம் - எண்ணெய், எண் ணெய்பூசல்,மைதீட்டல், வாசனை யூட்டல். அப்பியந்தரம் - உள்வீதி, உள்ளிடம். அப்பியமிதம் - துன்பம். அப்பியர்த்தனை - மன்றாட்டு, வணக்கம். அப்பியவகரணம் - தின்றல். அப்பியவகாரம் - தின்றல். அப்பியற்சனம் - வணக்கம். அப்பியற்சை - வணக்கம். அப்பியாகதன் - விருந்தன். அப்பியாகமம் - அயல், எழும்புதல், கொலை, சேருதல், யுத்தம், வைராக்கியம். அப்பியாகமனம் - சந்தித்தல். அப்பியாகாதம் - சருவுதல். அப்பியாகாரம் - களவு. அப்பியாசம் - பரிட்சை. அப்பியாசையோகம் - தியானம். அப்பியாதானம் - துவக்கம். அப்பியாமர்த்தம் - யுத்தம். அப்பியுதையம் - சம்பவிப்பது, திருவிழா, வத்திப்பு. அப்பியுத்தானம் - உயர்ச்சி, எழும்பு தல், கீர்த்தி, சூரியோதையம். அப்பியுபகமம் - சமீபித்தல், சேர்த் திக்கை, வாக்குத்தத்தம். அப்பியுப்பத்தி - தயவு, தற்காப்பு. அப்பியுபாயம் - பொருத்தம். அப்பியுற்பத்திகை - உபகாரம். அப்பிரகம் - ஓர்வகை லோகக்கல். அப்பிரகம்பதை - அசைவின்மை. அப்பிரகிருட்டம் - காக்கை. அப்பிரசம் - மலடு. அப்பிரசாதம் - தயவின்மை. அப்பிரசாதை - மலடி. அப்பிரசித்தம் - பிரபவியமின்மை, விளக்கமின்மை. அப்பிரதாபம் - எளிமை, மங்கல். அப்பிரதானம் - முக்கியமின்மை, விளக்கமின்மை. அப்பிரதானி - பிரதானமற்றவன். அப்பிரதிகாரம் - பதிலின்மை. அப்பிரதிபத்தி - அசட்டை, தவறு, நிதானிப்பின்மை. அப்பிரதிரதன் - யுத்தவீரன். அப்பிரத்தியயம் - சந்தேகம். அப்பிரபிசாசகம், அப்பிரபிசாசம் - இராகு. அப்பிரபுட்பம் - நீர். அப்பிரமாதங்கம் - இந்திரன் யானை. அப்பிரமாதம் - சுறுசுறுப்பு. அப்பிரமாணிகம் - ஒவ்வாநியாயம், பிரமாணிக்கத்தகாதது. அப்பிரமேயம் - அளவிடப்படாதது, ஓரெண். அப்பிரமை - கீழ்த்திசையானைக்குப் பெண்யானை. அப்பிரமாபிரியம் - ஐராவதம். அப்பிரமாலை - முகில்நிரை. அப்பிரமேயன் - அறியப்படாதவன். அப்பிரம் - மேகம், ஆகாயம், பொன், முகில். அப்பிரயோசனம், அப்பிரயோசிகம் - பிரயோசனமின்மை. அப்பிரவத்தகம் - செயலின்மை. அப்பிரவிருத்தன் - விருத்தியற்றவன். அப்பிராகிருதம் - பிரதானமானது, மேலானது. அப்பிராஞ்ஞம் - அறிவின்மை. அப்பிராணம் - மரணம். அப்பிராணி - அப்பாவி, வஞ்சக மற்றவன். அப்பிராந்தி - குழப்பமின்மை. அப்பிரீதி - சத்துருத்தனம், வெறுப்பு. அப்புத்திரட்டி - கட்டுக்கொடி. அப்புருவம் - உப்பு, நவசாரம். அப்பு - அப்பென்னேவல், அம்பு, கடல், தந்தை, நீர். அப்புதல் - கும்முதல், சாத்துதல், பூசுதல். அப்புவின்கோபம் - சேத்துமம். அப்புறாத்தூணி - சரகாண்ட பாஷாணம். அமங்கலம் - மங்கலமற்றது. அமங்கலி, அமங்கலை - கைமை. அமசடக்கம் - அடக்கம். அமச்சன் - மந்திரி, வியாழம். அமச்சு - மந்திரி, மந்திரித்தன்மை. அமடு - மடிப்பு, பொல்லாங்கு. அமட்டு - உருட்டு, புரட்டு. அமட்டுதல் - உருட்டுதல், புரட்டுதல். அமணர் - சமணர், மதிகேடர். அமண் - சமண்சமயம், சமணருக் குரியது. அமயம் - காலம். அமண்டம் - ஆமணக்கு. அமதம் - நோய், மரணம். அமம் - நோய். அமரசிலைக்கந்தம் - வைப்புப் பாஷா ணமுப் பத்திரண்டினொன்று. அமரத்துவம் - அழியாமை. அமரபாதிரு - இந்திரன். அமரம் - ஓர்நோய், கிரந்தநிகண்டு, அழிவின்மை, இரசம் சுத்தம் வெண்மை. அமரர் - பகைவர், வானோர். அமரர்மாதர் - தெய்வப்பெண். அமரார் - பகைவர். அமராங்கனை - தேவப்பெண். அமராசயம் - கருப்பை. அமராத்திரி - மகாமேரு. அமராபகை - ஆகாயகங்கை. அமராபதம் - தேவுலகு. அமராவதி - தேவலோகம். அமராவதியோன் - இந்திரன். அமரி - அமிழ்து, சிறுநீர், துற்கை, விடம், கற்றாழை. அமரிக்கை - அடக்கம், ஆறுதல். அமரிஷணம் - கோபம். அமருதல் - அடங்குதல். அமரேசன், அமரேசுவரன் - இந்திரன். அமரை - இந்திரனகர், கருப்பை, கொப்பூழ்க்கொடி, வீடு. அமர் - அமரென்னேவல், போர், மதில், மூர்க்கம், வெறி. அமர்கொள்ளுதல் - மூர்க்கவெறி யடைதல். அமர்க்களம் - ஆரவாரம், பம்பல், போர்க்களம். அமர்தல் - அடங்குதல், அமைதல், இருத்தல், படிதல், பெருமை, பொருந்தல், பொலிவு, மிகுதி. அமர்த்தல் - அடக்கிக்கொள்ளுதல், அமரச்செய்தல், பொருதல். அமலகமலம் - கோசலம். அமலசாந்தம் - சுண்ணாம்பு, பசுவின் சாணம். அமலம் - அழகு, அழுக்கின்மை, வெண்மை. அமலல் - சேர்தல், நெருங்கல், பொருந்தல். அமலன் - கடவுள், மலமிலி, அருகன், சிவன், விட்டுணு. அமலை - ஒலி, சோறு, மலமில்லாத வள், மிகுதி, இலக்குமி, கொப்பூழ்க் கொடி, பார்ப்பதி. அமல் - செறிவு. அமளி - ஆரவாரம், மக்கட்படுக்கை, மெத்தை. அமளை - ஓர் பூண்டு. அமனி - தெரு. அமனோயோகம் - கவனமின்மை. அமாசயம் - அன்னந்தண்ணீர் தங்கு மிடம். அமாதானம் - அடக்கம், சேமம். அமாத்தியர் - தந்திரிகள், மந்திரிகள். அமாநசியம் - உபாதி. அமாமசி, அமாவசி - அமரவாசி. அமார்க்கம் - துன்மார்க்கம், நாயுருவி, மார்க்கவிரோதம். அமாவாசி - சூரியனுஞ்சந்திரனுங் கூடும்நாள், அஃது, கிருட்டிண பக்கத்திற்பதினைந் தாந்திதி. அமானம், அமிதம் - அளவின்மை. அமானனம் - அவசங்கை. அமானி - பொது. அமானிதை - மரியாதை. அமிசகம் - நாள். அமிசகன் - பங்காளி, பங்கு. அமிசம் - அன்னம், செல்வாக்கு, தோள், நிதார்த்தம், பங்கு, பாகை, பின்னம், விவாகம். அமிசனம் - பிரித்தல். அமிசாமம், அமிசாமியம் - பிரமாவின் மானதவாவி. அமிசு - அணு, சூரியன், பிரவை. அமிசுகம் - இலை, நல்லாடை. அமிச்சை - ஞானம். அமிதாவல் - ஆசைப்பெருக்கம். அமித்திரர் - பகைவர். அமித்துரு - சத்துரு. அமிரம் - மிளகு. அமிருதம் - அமிர்தம். அமிருதை - திப்பிலி, துளசி, மது. அமிர்தசஞ்சீவனி - உயிர் தருமருந்து, குற்றுயிர் தருமருந்து. அமிர்தசாரம் - கற்கண்டு. அமிர்தசோதரம் - குதிரை. அமிர்ததரங்கிணி - சந்திரகிரணம். அமிர்தபிந்து - உபநிடத முப்பத்தி ரண்டினொன்று. அமிர்தவல்லி - சீந்தில். அமிர்தன் - மரணமற்றவன். அமிர்தாகரணன் - கருடன். அமிர்தாசனர் - தேவர். அமிர்தாரிவளை - சங்கநிதி. அமிர்தாவல் - ஆசைப்பெருக்கம். அமிர்தம் - அமிழ்தம், மூர்ச்சைதீர்த் துயிர் தருமருந்து, இனிப்பு, உணவு, சோறு, தேவவூண், நஞ்சு, நீர், நெய், பாக்கியம், பால், பொன், மரணமின்மை, முத்தி, மோர், யாகசேடம். அமிழ்தம், அமிழ்து - அமுதம், இனிமை, மங்கலச் சொல்லினொன்று. அமிழ்தல் - அமிழ்ந்தல், தாழ்தல். அமிழ்த்தல் - தாழ்த்தல். அமிழ்ந்தல் - அழுந்தல், தாழ்தல். அமீவம் - பாவம், வருத்தம். அமுக்கடி - மந்தாரம், முட்டாயிருத் தல், மூடமாயிருத்தல், மூடிக் கொள்ளுதல். அமுக்கல் - உள்ளேயமிழ்ந்தப் பண்ணல், கீழேயமரப் பண்ணுதல். அமுக்கனங்கிழங்கு - ஓர் மருந்து. அமுக்கன் - நித்திரையிலமுக்குமாவி. அமுக்கு - அமர்த்தித்தள்ளுதல். அமுக்குரவு, அமுக்குரா - ஓர் செடி. அமுங்கல் - அழுந்தல், தாழ்தல். அமுசம் - சிறுசெருப்படை. அமுணங்கம் - அடக்கமின்மை. அமுதகதிரோன் - சந்திரன். அமுதகம் - நீர், பாற்கடல், முலை. அமுதகிரணன் - சந்திரன். அமுதசருக்கரை - சீந்தில்மா. அமுதகுண்டை - இரப்போர்கலம். அமுதகுலர் - இடையர், சான்றார். அமுதங்கம் - கள்ளி, சதுரக்கள்ளி. அமுதபார்வை - பிரியநோக்கு, புணர்ச்சி நோக்கு. அமுதமேந்தல் - புண்ணியமொன்பதி னொன்று. அமுதம் - இனிமை, திரிபலை, தேவ ருணவு, நீர், பால், பெருமை, போசனம், முத்தி, வேண்டல், உயிர்தருமருந்து, சேடம், மூளை. அமுதயோகம் - சுபயோகம். அமுதர் - இடையர், வானோர். அமுதவல்லி - சீந்தில், வள்ளிநாயகி. அமுதவெழுத்து - சொன்முதலிலே வரத்தக்க சுபவெழுத்து. அமுதாம்பரமணி - கௌத்துவமணி. அமுதாரி - பூனைக்காலி. அமுது - அமிழ்து, சுவை, சோறு, நீர், பால். அமுதுசெய்தல் - புசித்தல். அமுதுறை - எலுமிச்சைக்கனி. அமுத்தம் - கையாயுதம். அமுத்தி - இட்டமின்மை. அமுரி - சிறுநீர். அமுரியுப்பு - ஓருப்பு. அமூர்த்தம், அமூர்த்தி - உருவமின்மை. அமேதநீக்கி - கற்றாளை. அமேத்தியம் - அசுத்தம். அமை - அமாவாசி, அமையென் னேவல், மூங்கில். அமைச்சர் - மந்திரிகள். அமைச்சு - மந்திரி, மந்திரித்தனம். அமைதல் - அடங்கதல், சம்பவித்தல், சம்மதித்தல், நிறைதல், பொருந்தல். அமைதி - அடக்கம், அமரிக்கை, சமையம், நிகழ்ச்சி, பொருத்தம், மாட்சிமை. அமைத்தல் - அமையப்பண்ணுதல், சமைத்தல், செய்தல், நியமித்தல். அமைப்பு - அனுபோகம், நியமிப்பு, விதி. அமையம் - காலம், சமையம். அமையுமென்றல் - ஆகட்டுமென்றல், வேண்டாமென்றல். அமைவடக்கம் - அமசடக்கம். அமைவர் - ஞானிகள், முனிவர். அமைவன் - அடக்கமுடையோன், அருகன். அமைவு - அடக்கம். அமோகம் - பெருகுந்தன்மை, மிகுதி, மோகநீயம். அமோட்சம் - அடிமைத்தனம், மறியல். அம் - அசைச்சொல், அழகு, இடைச் சொல், சாரியை, நீர், மேகம், தன்மைமுன்னிலையுளப் பாட்டுப்பன்மைவினைவிகுதி, (உம்) வந்தனம், தொழிற்பேர் விகுதி, (உம்) தோற்றம், பண்புப் பேர்விகுதி (உம்) நலம். அம்பகம் - எழுச்சி, கண், சேம்பு. அம்பட்டத்தி - நாவிதப்பெண். அம்பட்டன் - நாவிதன். அம்பணத்தி - துற்கை. அம்பணம் - ஆமை, துலாக்கோல், நீர், மரக்கால், வாழை. அம்பணவர் - ஓர் சாதியார். அம்பரம் - ஆகாயம், கடல், சீலை, திசை, பரவெளி. அம்பராந்தம் - திக்காந்தம், புடைவை யினோரம். அம்பராம்புயம் - கடற்றாமரை, பதும நிதி. அம்பரீசம் - எண்ணெய்ச்சட்டி, போர். அம்பரீசன் - சிவன், திருமால். அம்பரை - ஓர் நிமிளை. அம்பரைநாதம் - அப்பிரகம். அம்பர் - அவ்விடம், ஓர் மருந்து. அம்பலம் - சவை, சித்திரகூடம்,வெளி. அம்பலவிருக்கம் - தில்லைமரம். அம்பல் - பழிமொழி, புறங்கூறல். அம்பாயம் - அக்கப்பாடு, உபாதி. அம்பாரம் - அடுக்கு, குவியல். அம்பாரி - அவுதா. அம்பாலிகை - தருமதேவதை, பாண்டுவின்றாய், பார்வதி, மாதா. அம்பால் - தோட்டம். அம்பாவணம் - சாபம். அம்பி - இறைகூடை, ஓடம், சலசூத் திரம், தாம்பு, தெப்பம், மரக்கலம், மிடா. அம்பிகேயகன், அம்பிகேயன் - கணபதி, கந்தன், திரிதராட்டிதன். அம்பிகை - காளி, தருமதேவதை, பார்வதி, திரிதராட்டிரன்றாய், மாதா. அம்பிகைதனயன் - குமரன், விநாயகன், வீரபத்திரன். அம்பிகைபாகன் - சிவன். அம்பு - எலுமிச்சை, கணை, தளிர், நீர், மூங்கில், மேகம், சரகாண்ட பாஷாணம். அம்புகிராதம் - முதலை. அம்புக்கட்டு - அத்திரக்கட்டு. அம்புக்குப்பி - அம்புக்குழைச்சு. அம்புக்கூடு - ஆவநாழி. அம்புசம் - தாமரை. அம்புசன்மம் - தாமரை. அம்புசாதம் - தாமரை. அம்புசாதன் - பிரமன். அம்புதம் - நீர், மேகம். அம்புதி - சமுத்திரம். அம்புநிதி - சமுத்திரம். அம்புயம் - இறைகூடை, தாமரை. அம்புபிரசாதனம் - தேற்றாங்கொட்டை. அம்புரம் - கீழ்வாயிற்படி. அம்புராசி - கடல். அம்புரோகிணி - தாமரை. அம்புலி, அம்புலிமான் - சந்திரன். அம்புவாகம் - முகில். அம்புவாகினி - பாதிரிப்பூ. அம்போசசனி, அம்போசயோனி - பிரமன். அம்போசம் - சந்திரன், தாமரை. அம்போதம், அம்போதரம் - முகில். அம்போதரங்கம் - அஃது நாற்சீரடியு முச்சீரடியுமிருசீரடி யுமாய்த் தாழிசைக்குந் தனிச்சொற்கு நடு வேயேனும் அராகத்திற்குந்தனிச் சொற்குநடுவேயேனுநிற்பது, கலிப்பாவினோருறுப்பு. அம்போதரங்க, வொத்தாழிசைக் கலிப்பா - கலிப்பாவித்துளொன்று, அஃது வண்ணக வொத்தாழிசைக் கலிப்பாவுறுப்பின் அராக மொழிந்த ஐந்துறுப்பையுங் கொண்டு வருவது. அம்போதி - கடல், காற்று, பாட்டின ருத்தம். அம்போநிதி, அம்போராசி - சமுத்திரம். அம்போருகம் - தாமரை. அம்ம - உரையசைச்சொல், கேளெனல். அம்மணம் - தூஷணவார்த்தை, நிருவாணம். அம்மம் - முலை. அம்மல் - சமியாக்குணம், மந்தாரம், மூடம், விறைப்பு. அம்மனை - அம்மானை, தாய். அம்மாபச்சரிசி - சிற்றிலைப்பாலாவி, சீதேவியார்செங்கழுநீர். அம்மாறு - பெருங்கயிறு. அம்மானை - ஓர் பிரபந்தம், ஓர் விளையாட்டு. அம்மான் - தகப்பன், மாமன். அம்மி - அரைகல்லு, மாமி. அம்மிமிண்டி - அமசடக்கி, சுறுக்கிலே பேசாதவன். அம்மியம் - கள், காளம், சிறுசின்னம். அம்மியை - மிண்டுத்தனம். அம்மிரம் - மாமரம். அம்மில்சாரம் - கரடி. அம்மிலம் - புளி, புளிப்பு. அம்மிலவிருட்சம் - புளியமரம். அம்மிலிகை - புளியமரம். அம்முதல் - அடைத்தல், உண்டல், மூடுதல். அம்மெனல் - ஒலிக்குறிப்பு. அம்மை - அழகு, தவப்பெண், தாய், வசூரி, வருபிறப்பு, தருமதேவதை, பார்வதி. அம்மைவனப்பு - சிலவாய மெல்லிய சொற்களால் ஒள்ளிய பொருண் மேற்செய்யப்படுவது, (உம்) அறிவினானாகுவ தொன்றுண் டோ பிறிதினோய் தன்னோய் போற்போற்றாக்கடை. அயக்கதையம் - இருப்புலக்கை. அயக்களங்கு - இரும்புருக்கியமணி. அயக்காந்தம் - ஊசிக்காந்தம். அயக்கிருதி - காந்தக்கல். அயசிந்தூரம் - இரும்புச்சிந்தூரம். அயசு - உருக்கு, பொல்லாநிலம். அயத்தினம் - முயற்சியின்மை. அயத்தொட்டி - வைப்புப்பாஷாணத் தொன்று. அயமரம் - அலரி. அயமேதம் - ஓர்யாகம். அயம் - ஆடு, இரும்பு, குதிரை, குளம், சேறு, நல்வினை, நிலம், நீர், விழா, அதிட்டம். அயம்பற்றி - காந்தம். அயர் - அயரென்னேவல், வருத்தம், வாட்டம். அயர்ச்சி - உணர்வழிவு, மறதி. அயர்தல் - செய்தல், சோர்தல், தளர்தல். அயர்தி - உணர்வழிவு, மறதி. அயர்த்தல் - அயர்வு, மறத்தல். அயர்ப்பு - மறதி, மறப்பு. அயர்வு - அகலம், உன்மத்தம், சோம்பு, தளர்வு, வருத்தம், வெறுப்பு. அயர்வுயிர்த்தல் - வருத்தந்தீர்தல். அயலவன் - அண்டையான், பிறன். அயல் - அருகிடம், இடம். அயவாகனன் - தீத்தெய்வம். அயவு - அகலம். அயனகாலம் - சூரியன் ஒரு அயனத் தைச்சுற்றி வருங்காலம். அயனசலனம் - கிரகங்கள் மையவரியி லிருந்துபக்கவரிக் குத்திரும்புதல். அயனம் - ஆண்டிற்பாதி, பிறப்பு, வழி, பருதி, பூ, வேதம். அயனாள் - உரோகணிநாள். அயனூருவிலுதித்தோர் - வைசியர். அயன் - அருகன், பிரமன். அயன்பதத்துதித்தோர் - சூத்திரர். அயன்முகத்துதித்தோர் - பார்ப்பார். அயன்வாவி - மானதம். அயன்றோளுதித்தோர் - சத்திரியர். அயாவுயிர்த்தல் - பெருமூச்சுவிடல். அயானம் - சுபாபம். அயிக்கம் - ஐக்கம். அயிணம் - மான்றோல். அயிப்பை - ஓர்செடி. அயிரம் - கண்டசருக்கரை. அயிராச்சுரபி - காமதேனு. அயிராணி - இந்திராணி, பார்பதி. அயிராவணம், அயிராவதம் - இந்திரன் யானை, கீழ்திசை யானை. அயிராவதப்பாகன் - இந்திரன். அயிரி - நெட்டிப்புல், மீன்முள்ளரிந் திடு கத்தி. அயிரை - ஓர் மீன். அயிர் - சருக்கரை, நுண்மணல், நுண்மை, அயிரென்னேவல். அயிர்க்கடு - அங்குசம். அயிர்த்தல் - எழில்பிடித்தல், ஐயப் படுதல். அயிர்ப்பு - சந்தேகம். அயிலல், அயிறல் - உண்டல். அயுகலம் - தனிமை. அயில் - அழகு, இரும்பு, உண்ணென் னேவல், கூர்மை, கைவேல், கோரை, நாஞ்சில். அயினி - சோறு. அயின்றல் - உண்டல். அயுதம் - பதினாயிரம். அயுத்தம் - ஓரலங்காரம், பொருத்த மில்லாதது. அயுத்தி - பிரிவினை,முறைகேடு. அயோகம் - தகுதியின்மை, பிரிவினை, முயற்சி, வெறுப்பு. அயோகவிவச்சேதம் - தெளிவே காரம். அயோகனம் - சுத்தியல். அயோகன் - தாரமிழந்தவன். அயோக்கிரம் - உலக்கை, சுத்தியல். அயோக்கியம் - யோக்கியவீனம். அயோசனம் - பிரிவினை. அரக்கர் - இராட்சதர், அசுரர். அரக்கல் - அரைத்தல், தேய்த்தல், புடைபெயர்ச்சி. அரக்காம்பல் - செவ்வாம்பல். அரக்கி - இராக்கதஸ்திரீ. அரக்கு - அரக்கென்னேவல், சாராயம், சிவத்தமெழுகு, சிவப்பு, தேன். அரக்குதல் - அரைத்தல், அழித்தல், இருப்புவிட்டுப்பெயர்த்தல். அரங்க - முற்றாக. அரங்கசீவகன் - வண்ணக்காரன். அரங்பூமி - நாடகசாலை, போர்க்களம். அரங்கம் - ஆற்றிடைக்குறை, கூத்துப் பயிலிடம், சத்திரம், சபை, சாலை, சிலம்பக்கூடம், சூது பயிலிடம், போர்க்களம், சீரங்கம், நடனம், நாடக சாலை, நிறம், போர்க்களம். அரங்கல் - அழுந்தல், அழிதல். அரங்கு - இடம், ஓரில், சபை, சூதாடற்குவகுத்த அறை, போர்க் களம், அரங்கென்னேவல், யாற்றி டைக்குறை. அரங்கேற்றம் - சபையிலேறுதல். அரங்கேற்றுதல் - சபையிலேறச் செய்தல். அரசச்சின்னம் - இராசரீக்கவடை யாளம். அரசரறுதொழில் - ஈதல், உலகோம் பல், ஓதல், படை பயிற்றல், பொரு தல், வேட்டல். அரசர்க்குக்குழு - அரசரைச் சூழ் வோர். அரசர்க்குத்துணைவர் - அரசர்க்குப் போர்த்துணைவர். அரசர்க்குறுதிச்சுற்றம் - இராசாக் களுக்கு உயிர்த்துணைவர், அவர் அந்தணாளர், நிமித்திகப்புலவர், நட்பாளர், மடைத்தொழிலர், மருத்துவக் கலைஞர். அரசர்மன்னன் - துரியோதனன். அரசன் - இராசன், எப்பொருட்கு மிறைவன், எழுத்துத்தானமைந்தி னொன்று, வியாழம். அரசன்விருத்தம் - ஓர் பிரபந்தம். அரசாட்சி - இராசரிக்கம், இராசா வினாளுகை. அரசாணி - அரசங்கால் நாட்டும் மேடை, இராசாத்தி. அரசி - இராசாத்தி, தலைவி. அரசியலாறு - அரசர்க்குரிய வியலாறு, அவை அமைச்சு, அரண், குடி, கூழ், நட்பு, படை. அரசியல் - இராசரிக்கமுறை. அரசு - இராசா, இராச்சியபாரம், ஓர்மரம், துவர்பத்தினொன்று, நாடு, வியாழம். அரசுநீழலிலிருந்தோன் - புத்தன். அரட்டம் - பாலைநிலம். அரட்டர் - குறுநிலமன்னர். அரட்டுகம், அரட்டுசம் - தசநாடகத் தொன்று. அரணம் - கதவு, கவசம், காவற்காடு, கோட்டை, தொடுதோல், மஞ்சம், மதில், வேலி, வேல், அழகு, காவல், காவற்சாலை.. அரணாம்பரம் - மதில், வேலி. அரணி - கவசம், தீக்கடைகோல், மதில், அரணியென்னேவல், ஓர் பூடு, காடு, சூரியன், தீத்தட்டிக் கல், நெருப்புறுகாடு. அரணித்தல் - காவல்செய்தல், முறைத்தல். அரணிப்பு - அடைப்பு, முறைப்பு, வயிரிப்பு, அழகு, காவல். அரணியகதலி - காட்டுவாழை. அரணியசடகம் - காட்டுக்கவுதாரி. அரணியசாரணை - காட்டிஞ்சி. அரணியம் - காடு. அரணியவரணி - பெருங்காடு. அரணை - ஓர் செந்து. அரண் - அழகு, காவல், காவற்காடு, கோட்டை, மதில். அரண்மனை - உண்மனை, கோட்டை, மன்றேவியில்லம். அரதனம் - அகன்மணி, சிலம்பணி, நவமணிப்பொது. அரதி - வெறுப்பு, கோபம், திருத்தி யின்மை, வருத்தம். அரதேசி - அகதேசி. அரத்தம் - இரத்தம், சிவப்பு, செங் கடம்பு, செங்கழுநீர், செங்குவளை, செம்பஞ்சு, செம்பரத்தம், செம் பருந்து, செம்மெழுகு, செம்மை, பவளம், பொன். அரத்தனம் - இரத்தினம். அரத்தன் - செவ்வாய். அரத்தி - செவ்வல்லி. அரத்தை - ஓர் மருந்து, ஓர்செடி. அரத்தோற்பலம் - செங்குவளை. அரந்தை - துன்பம். அரபி - கடுக்காய். அரபொடி - இரும்புத்தூள். அரமகளிர் - தெய்வப்பெண்பொது. அரமனை - இராசமனை. அரமியம் - நிலாமுற்றம். அரமுறி - ஓர் செடி. அரம் - ஒரு கருவி, குகை, பாதலம், உறை, கதவு. அரம்பிலம் - பாதாளம். அரம்பை - தெய்வப்பெண், வாழை மரல். அரரி - கதவு. அரரு - சத்துரு. அரலை - கடல், கழலை, கோட்டை. அரவக்கொடியோன் - துரியோதனன். அரவணிந்தோன் - சிவன். அரவணைத்தல் - ஆதரித்தல், சேர்த் துக்கொள்ளுதல். அரவம் - ஆயிலியம், ஒலி, சிலம்பு, பாம்பு, பேரொலி. அரவிந்தம் - தாமரை, மன்மதன் கணையினொன்று. அரவு - பாம்பு. அரவுநாள் - ஆயிலியநாள். அரளி - பீநாறி. அரற்றுதல் - அழுதல், ஒலித்தல். அரள் - எப்பொருட்குமிறைவன், சிவன், பன்னொருருத்திரரிலொரு வன். அரனிடத்தவள் - பார்ப்பதி. அரன்மகன் - குமரன், விநாயகன், வீரபத்திரன். அரா - அராவென்னேவல், பாம்பு. அராகம் - அடங்காமை, அவா, ஓர் பண், வண்ணக வொத்தாழிசைக் கலிப்பா வினோருறுப்பு, சிவப்பு, பாலையாழத்திறம், பொன், முடுகியல், பரதவுறுப்புளொன்று. அராகவொத்தாழிசைக்கலிப்பா - வண்ணகவொத்தாழிசைச்கலிப்பா. அராதி - சத்துரு. அராதியங்கம் - முறியடித்தல். அராத்தல் - அராத்துதல், நினைப் பூட்டுதல், மிண்டுதல். அராநட்பு - வேண்டாவெறுப்பு. அராபதம் - வண்டு. அராமம் - சோலை, பயிர். அராமி - கெட்டவள், கெட்டவன். அராலம் - மதயானை, கொடுவாள். அராலை - வேசி. அராவைரி - கருடன், மயில். அரி - அடர்பு அரிசி, அரித்தல், அரி யென்னேவல், ஆயுதப்பொது, ஈர்வாள், உட்டுளைட்பொருள், ஐமை வடிவு, ஒளி, கடல், கட்டில், சண்வரி, கள், காற்று, கிள்ளை, குதிரை, குரங்கு, குற்றம், கூர்மை, சக்கிரம், சந்திரன், சிங்கம், சிங்க விராசி, சிலம்பின் பருக்கைக்கல், சிலம்பு, சூரியன், செம்மறியாட்டுக் கடா, சோலை, தவளை, தீ, தேர், தேவேந்திரன், நமன், நிறம், நெருக்கம், நெற்கதிர், பகை, பச்சை, படுக்கை, பறை, பன்றி, பாம்பு, புகை, பொன், மரகதம், மரவயிரம், மலை, மழைத்தூவல், மாலை, மூங்கில், வண்டு, வரி, வலி, விசி, சத்துரு, சில்லு, சிவன், திருமால், வெற்றி. அரிகண்டபுலவர் - காளமேகப் புலவர். அரிகண்டம் - ஓர்விரதவேடம், தொந் தரை, நவகண்டத்தி லொன்று. அரிகரபுத்திரன் - ஐயன். அரிகரப்பன் - ஓர்கரப்பன். அரிகல் - மகாமேரு. அரிகளவம் - நதி. அரிகள் - பகைவர். அரிகுரல் - கரகரத்தகுரல். அரிகூடம் - கோபுரவாயில், கோபுர வாயில்மண்டபம். அரிக்கட்டு - அரிவிக்கட்டு. அரிக்கண்சட்டி - அரிசியரிக்கிறசட்டி. அரிக்குதல் - அரித்துப்போடுதல், பேச்சினால்வருத்துதல். அரிசயம் - எலுமிச்சை, கொன்றை மரம். அரிசம் - மிளகு. அரிசனம் - மஞ்சள். அரிசா - பெருங்குமிள். அரிசி - தண்டுலம். அரிச்சந்தனம் - ஐந்தருவிலொன்று. அரிச்சந்திரன் - அறுவகைச்சக்கிர வத்திகளிலொருவன், இடையெழு வள்ளலி மொருவன். அரிச்சுவடி - அரிவரியேடு. அரிச்சனை - பூசனை. அரிச்சிகன் - சந்திரன். அரிச்சுனம் - எருக்கு, மருதமரம். அரிஷம் - உரோமப்புளகம். அரிடணம் - நித்தியயோகத்தொன்று. அரிடிகம் - சிற்பநூன் முப்பத்திரண்டி னொன்று. அரிட்சி - பயம். அரிட்டசூதனன் - விட்டுணு. அரிட்டம் - கள், காக்கை, கேடு, சென் மத்தோஷம், பங்கம், முட்டை, மோர், வெண்காயம், அதிட்டம், அந்தர்ப்புரம் - உற்பாதம், சுபம், புள்ளி, வம்பு, வேம்பு. அரிட்டானகம் - பயங்கரம். அரிட்டித்தல் - கொல்லல். அரிணம் - சிவப்பு, பொன், மான், யானை, வெள்ளை, கடல். அரிணி - வஞ்சிக்கொடி. அரிணை - கள். அரிதகி - கடுக்காய்மரம். அரிதம் - திக்கு, பசும்புன்னிலம், பச்சை, பொன்னிறம், மஞ்சள். அரிதல் - அறுத்தல். அரிதாரம் - ஓர்மருந்து. அரிதாலம் - அரிதாரம். அரிதாளம் - நவதாளத்தொன்று. அரிதாள் - ஒட்டு. அரிது - அரியது, பச்சை. அரிதை - வன்மம். அரித்தல் - அணில், எலி முதலிய வறுத்தல், புன்முதலியவற்றைத் தூசுதுகள் நீக்கியெடுத்தல், மா முதலியவற்றைப் பிரித்தொழுக்கு தல். அரித்திரம் - கந்தம், மஞ்சள், சுக்கான். அரித்திராபம் - பொன்னிறம். அரித்து - அரித்தலைச் செய்தென் னேச்சம், பச்சை. அரித்தை - கிலேசம், துன்பம். அரிநிம்பம் - மலைவேம்பு. அரிந்தமன் - விட்டுணு. அரிபாலுகம் - தற்கோலம். அரிபிளவை - ஓர் சிலந்தி. அரிபுதை - இரவு. அரிப்பிரியை - இலக்குமி. அரிப்பு - அரித்தல், குற்றம், தினவு. அரிப்புக்காரன் - பொன் முதலிய வற்றைத் தெரிக்கிறவன். அரிப்பெட்டி, அரிபெட்டி - மாமுதலிய வற்றையரிக்கும் பெட்டி. அரிமஞ்சரி - குப்பைமேனி. அரிமருகன் - விநாயகன். அரிமா - சிங்கம், சிங்கவிராசி. அரிமாநோக்கு - செய்யுணிலை சூத்திர நிலையினொன்று. அரியணை - சிங்காசனம். அரிமுகச்சிவிகை - சிங்கத்தலைச் சிவிகை, அஃது சமயவாதிகளை வென்றவாசிரியர்களேறுவது. அரியணைச்செல்வன் - அருகன். அரியமன் - துவாதசாதித்தரிலொரு வன். அரியமா - ஓர் பிதிர்தேவதை, சூரியன். அரியம் - வாச்சியம். அரியயற்கரியோன் - சிவன். அரியல் - அரிதல், கள். அரில் - குற்றம், சிறுதூறு, பகை, பிணக்கு. அரிவட்டம் - அரிகண்டம். அரிவரி - அரிச்சுவடி, எழுத்து வருக்கம். அரிவாட்கள்ளன் - கூன்வாள் பிடிக் குங்கைப் பறண்டையில் வருநோ. அரிவிக்கள்ளன் - அரிவிபிடிக் குங்கைப் பிடிப்பு. அரிவாட்சொண்டன் - ஓர்கொக்கு. அரிவாள் - கூன்வாள். அரிவி - அரிகதிர். அரிவிக்கள்ளன் - கைப்பறண்டை யில்வருந்நோ. அரிவை - இருபத்தைந்து வயதுப் பெண், தெய்வப்பெண், பெண் பொது. அரிள் - பயம். அரு - அணு, அருவப்பொருள், அறிவு, கடவுள். அருகம் - சமணமதம், யோக்கியம். அருகர் - அனுசரிதர், சமணர். அருகல் - அணைதல், கிட்டுதல், குறைதல், சாதல், சுருங்குதல். அருகனைமுடிதரித்தரள் - தரும தேவதை. அருகன் - சங்காத்தி, சயினர்களின் தேவகுரு, பக்குவன். அருகி - கள், பக்குவி. அருகியரத்தம் - பூனைக்காலி. அருகு - அருகென்னேவல், சமீபம், பக்கம். அருகுறல் - கிட்டல். அருக்கல் - அச்சம், அருமைப் படுத்துதல், குறைத்தல். அருக்கசூனு - யமன். அருக்கசோதரம் - இந்திரன் யானை. அருக்கதானம் - பொற்காணிக்கை. அருக்கத்தி - வருத்தம். அருக்கந்தன் - சிவன், பௌத்தன். அருக்கபாதபம் - நிம்பம். அருக்கமண்டலம் - சூரியமண்டலம். அருக்கம் - எருக்கு, இலை, கனம், சேரென்னேவல், நிலவிறை, குறைவு, சூரியன், திரவியம், துன்னி மித்தம், நீர்க்காக்கை, படிகம். அருக்களித்தல் - அருவருத்தல். அருக்களிப்பு - அருவருப்பு. அருக்கனிலை - காணாக் கோளி ரண்டினிலை, சூரியனிலை. அருக்கன் - காணாக்கிரகங்களிலி ரண்டு, சூரியன், இந்திரன். அருக்காணி - அருக்குகிறவன், அருக் குதல். அருக்கியம் பூசனைமுறையுளொன்று. அருக்கு - அருக்கென்னேவல், அருமை. அருக்கேந்துசங்கமம் - அமாவாசியை. அருக்கோபலம் - சூரியகாந்தம், பளிங்கு. அருங்கலம் - அரசர்க்குரியபொருள். அருங்கலைநாயகன் - புத்தன். அருங்கிடை - பட்டினி. அருச்சகன் - சம்பாத்தியகாரன். அருச்சயம் - அருச்சனை, அருச்சிக்கத் தக்கது. அருச்சயோகம் - பூசை. அருச்சனம் - சம்பாத்தியம், வணக்கம். அருச்சனை - பூசனை. அருச்சிகன் - கோவிற்பட்டன். அருச்சிதம் - தேட்டம், வணக்கம். அருச்சித்தல் - புண்ணியமொன்பதி னொன்று, அஃது பூசித்தல். அருச்சிப்பு - அருச்சனை. அருச்சியப்பிரபுத்துவம் - அருச்சிக்கப் படத்தக்கமுதன்மை, தேவநவ விலாசசபைக்குரியமுதன்மை. அருச்சுனம் - எருக்கு, பொன், மருது, வெண்மை. அருஞ்சிறை - கடுஞ்சிறை, நரகம். அருட்குடையோன் - கடவுள், அருகன். அருட்சி - அருளுதல். அருட்சித்தி - இரசம், சிவசத்தியி னொன்று. அருட்சோதி - கடவுள், கவுரி பாஷா ணம். அருட்டி - அச்சம். அருட்டுதல் - எழுப்புதல், ஏவி விடு தல், சாக்கிரதையாகப்பண்ணுதல், நித்திரைதெளிவித்தல். அருணசாரதி - சூரியன். அருணம் - ஆடு, எலுமிச்சு, தேயமன் பத்தாறினொன்று, பதினெண் பாடையினொன்று, மான், மிகு சிவப்பு, கருமைகலந்தசிவப்பு, செவ்வானம் - விடியல். அருணலோசனம் - புறா. அருணவம் - கடல். அரணவூரி - இந்திரகோபம். அருணன் - சூரியன், சூரியன்சாரதி, புதன். அருணாக்கிரசன் - கருடன். அருணினம் - திருநாமப்பாலை. அருணினைவு - மனதினற்குண மூன்றினொன்று. அருணோதயம் - சூரியோதயம், வைகறைப்பொழுது. அருத்தகங்கை - காவிரியாறு. அருத்தசந்திரபாணம் - பிறைமுகாத் திரம். அருத்தசந்திரம் - மணிற்றோகைக் கண். அருத்தசந்திரன் - அட்டமியிற் சந்திரன், இளம்பிறை. அருத்தகாமம் - பொருளாசை. அருத்தசாமம் - நடிரா. அருத்தநாள் - பாதிநாள். அருத்தநிசா - அத்தசாமம். அருத்தபதி - குபேரன். அருத்தபாகை - வேதநூற்பொருள். அருத்தப்பிரயோகம் - திரவியங்களை எடுத்துப்பாவித்தல். அருத்தப்பிராத்தி - அத்தார்ச்சனை. அருத்தம் - கருத்து, சொற்பயன், பாதி, பிரயோசனம், பொன். அருத்தலாபம் - திரவியசம்பாத்தியம். அருத்தலோபம் - சத்தவிசனத்தொன்று, அஃது கொடாமை. அருத்தல் - உண்பித்தல். அருத்தனம் - நிந்தை. அருத்தனை - பிச்சைகேட்டல். அருத்தவேதம் - உபவேத நான்கி னொன்று. அருத்தவிற்பத்தி - பயன் சொல்லல். அருத்தன் - கடவுள். அருத்தாங்கீகாரம் - அரைமனம். அருத்தாதிகாரன், அருத்தாகிகாரி - உக்கிராணகாரன். அருத்தாந்தரன்னியாசம் - எதிர்க் கருத்து. அருத்தாந்தரம் - கருத்துப்பிரிவு. அருத்தாபத்தி - பொருட் குறிப்பு உள்ளது, இலேசுவிதி, அஃது கடல்வாசி யென்றுளிமரக்கல னெனக் கொளல். அருத்தானம் - தோத்திரஞ்செய்தல். அருத்தி - ஆசை, உண்பித்தென்னு மெச்சம், கூத்து, பாதம், பாதிசெய் யென்னேவல். அருத்திதம் - பிட்சைத்திரவியம். அருத்தித்தல் - பாதிசெய்தல். அருத்துதல் - உண்பித்தல். அருத்துரு - ஆராய்வு, நுணுக்கம். அருத்தேந்து - அத்தசந்திரன். அருத்தோதையம் - குருஅத்தமிக்கச் சூரியனுதிக்கும் முகுர்த்தம். அருத்தோபார்ச்சனம் - பொருளீட்டல். அருநெல்லி - ஓர்மரம். அருநெறி - சுருங்கியவழி, வாயில், நரகம், பாலைநிலம். அருந்தததி - ஒருநட்சத்திரம், வசிட்டன் மனைவி. அருந்தல் - அருமையாதல், புசித்தல். அருந்தவர் - முனிவர். அருந்துதன் - வேதனைசெய்வோன். அருந்துதி - அருந்ததி. அருப்பகன் - இளந்தை, மூடன். அருப்பம் - உரோமக்கிளர்ச்சி, ஊர், கள், காடு, கொலை, கோட்டை, துக்கம், தொடரி, நோய், பிட்டு, மருதநிலத்தூர், மா, முகரோமம், மோர், வழுக்குநிலம், பனி, பிள்ளை. அருப்பலம் - அனிச்சமரம். அருப்பு - தயிர். அருப்புத்துருப்பு - அருந்தல். அருமதாளம் - நவதாளத்தொன்று. அருமந்த - அரிய மருந்தன்ன. அருமலதி - ஓர் பண். அருமை - அரியதன்மை, எளிதாய்க் கிடையாதது, மேன்மை. அரும்பல் - முகிழ்த்தல், முளைத்தல். அரும்பாலை - ஓரிராகம். அரும்பு - அரும்பென்னேவல், பூ வரும்பு, பொன்முதலியவற்றாற் செய்தவரும்பு, முகை. அரும்புதல் - பொடித்தல், முகைத்தல், தோன்றுதல். அரும்பூட்டு - ஒட்டு, போந்தும் போதாதிருப்பது. அரும்பொருவினை - எண்வகை மணத்துளொன்று. அரும்பொருள் - அரியகருத்து தெரி வானபொருள். அருவம் - அருந்தல், உருவமில்லாதது. அருவருப்பு - அரோசிகம். அருவல் - சற்றுச்சற்றாய்ப்போதல், சருவுதல். அருவா - கொடுந்தமிழ்நாட்டி னொன்று. அருவாவடதலை - கொடுந் தமிழ் நாட்டினொன்று. அருவி - அரிவி, கழிமுகம், தினைத் தாள், மலையின்வீழாறு. அருவுதல் - அருவிமுதலியன பாய்தல், குறைதல், சருவுதல். அருளகம் - வெள்ளெருக்கு. அருளரசி - குடசப்பாலை. அருளல் - அசைதல், கிருபைசெய்தல், கொடுத்தல், நித்திரைவிழித்தல், காத்தல், சிட்டித்தல், சொல்லல். அருளவம் - பெருமரம். அருளாபு - சாறணை. அருளாளிவேந்தன் - கடவுள், அருகன். அருளிச்செய்தல் - அனுக்கிரகித்தல், கிருபைசெய்தல், கொடுத்தல். அருளுறுதி - வேம்பு. அருள் - ஈயென்னேவல், கொடை, சாத்துவிதகுணத்தொன்று, அஃது, கிருபை, உமை. அருள்விருட்சம் - பஞ்சதாரு. அரூபகம் - உருபமின்மை. அரூபதை - அவலட்சணம். அரூபம் - உருவமற்றது, குறைவு, வெறுமை, ஆகாயம். அரூபி - உரூபமற்றது, கடவுள். அரேசகண்டு - கரணைக்கிழங்கு. அரேசிகம் - வாழை. அரேணுகம் - கடுக்காய்வேர், வால் மிளகு. அரை - அரையென்னேவல், இடை, பாதி. அரைக்கச்சு, அரைக்கச்சை - இடைக் கச்சு. அரைகல் - அம்மி. அரைக்கால் - எட்டிலொன்று. அரைசிலை - அம்மி. அரைச்சதங்கை - ஓரிடையணி. அரைச்சல்லடம் - அரைச்சட்டை. அரைஞாண் - அரைவடம். அரைத்தல் - அரக்குதல், அரைக்குதல், அழித்தல், தேய்த்தல், வியாதி யிலழுந்துதல். அரைநலம் - விதைநருங்காது குறை யாயிருக்கு நலம். அரைநா - முதலை. அரைநாவை - திரும்பினநாவை, வாக்கு. அரைநூல் - அரைச்சதங்கை, அரை ஞாண். அரைநெக்கல் - அரைத்திட்டம் பழுத்தது. அரைப்பட்டிகை - மாதரிடையணியி லொன்று. அரைப்பு - அரைத்தல், இருப்பைப் பிண்ணாக்கு. அரைமூடி - பெண்பிள்ளைக்களரை யிற்றரிக்கு மோர்பணி. அரையல் - அரைக்கப்பட்டது, துவையல். அரையனாடுதல், அரையனிடுதல் - அரைத்துத்துகளாக்கல். அரையன் - அரசன், துகளிதம். அரையாப்பு - அரையிலேயுண்டாகு மோர்கட்டு. அரைவடம் - அரைஞாண், பனை யேற்றுக் காரரரையிற்கட்டு மோர் கயிறு. அரைவயிரக்கண் - கம்மாளர்கருவி யினொன்று. அரைவயிறன் - அரையரிசிநெல். அரைவாய் - தேய்ந்தவாய். அரோ - அசைச்சொல். அரோகம் - சுகம். அரோசகம், அரோசிசம் - அருவருப்பு, சமியாக்குணம். அரோசனம் - அருவருப்பு, பிரியவீனம். அரோசிகம் - அசுத்தம், அருவருப்பு. அரோசிப்பு - அருவருப்பு. அரோதனம் - அழுகை, சூழ்தல், தடை, படைவளைப்பு. அலகம் - யானைத்திப்பிலி. அலகரி - பெருக்கு. அலகிடல் - அளவிடுதல், எழுத் தெண்ணியோசை கூட்டுதல், கணித்தல். அலகு - ஆயுதப்பொது, எண், கதுப்பு, கத்தியிற்கூர்ப்புறம், துடைப்பம், நுளம்பு, நென்மணி, பயிர்க்கதிர், பலகறை, பறவை மூக்கு, மகிழம் விதை, பாவோட நிரைக்குந்தடி. அலகுஞ்சம் - நுளம்பு. அலகுநிலை - பாக்குச்சுநிலை. அலகுபனை - ஆண்பனை. அலகுபனை - ஓர்பனை. அலகை - பிசாசம், கற்றாழை. அலகைக்கொடியாள் - காளி. அலகைமுலையுண்டோன் - கண்ணன். அலக்கணம் - அதிட்டவீனம், இலக் கணவீனம். அலக்கண் - துன்பம். அலக்கு - கிளை. அலங்கம் - மதிளினோருறுப்பு. அலங்கரணம் - அலங்கரிப்பு, அலங் காரம். அலங்கரித்தல் - சோடித்தல். அலங்கலம் - அசைதல். அலங்கல் - அசைவு, இரக்கம், ஒழிசெய் தல், கலுழ்தல், தளிர், பூமாலை. அலங்கனாரி - முத்துச்சிப்பி. அலங்காரத்திருவிழா - விசேடத்திரு விழா. அலங்காரநைபேத்தியம் - மண்டபப் படி. அலங்காரபஞ்சகம் - ஓர்பிரபந்தம். அலங்காரம் - அணி, அணியிலக் கணம், அழகு, உவமை, ஓர்நூல், கட்டழகு, கலைஞானமறுபத்தி னான்கினொன்று, ஆபரணம், சிறப்பு, வாசகச்சிறப்பு. அலங்கிருதம் - அலங்கிருதி, அலங் காரம். அலங்கை - துளசி. அலங்கோலம் - ஒழுங்கின்மை, கோலக்கேடு. அலசல் - அலசுதல், அலைவு, கழுவு தல், சோம்பல். அலசுதல் - கழுவுதல், தளர்தல். அலசகம் - உதரவாயு. அலசத்துவம் - சோம்பு. அலசம் - ஓதம், ஓர்மரம். அலஞ்சரம் - மட்சாடி. அலட்சியம் - அற்பமானது, கணிசக் குறைவானது. அலட்டி - பிதற்றுக்காரன். அலட்டுச்சன்னி - பிதற்றுச்சன்னி. அலட்டுதல் - இடைவிடாமற் பேசி வருத்துதல், பிதற்றுதல். அலத்தகம், அலத்தம் - செம்பஞ்சு. அலந்தலை - துன்பம். அலத்தல் - அங்கலாய்த்தல், துன்பம். அலத்தி - நுளம்பு, அங்கலாய்ப்பு, துன்பு. அலந்தை - குளம், துன்பம். அலப்பாரித்தல் - ஆற்பரித்தல். அலப்புதல் - அலட்டுதல், ஆரபாரித் தல், குழப்புதல். அலமரல் - அச்சம், சுழலல், துன்பம், வருந்தல். அலமலத்தல் - அங்கலாய்த்தல், ஏம்ப வித்தல். அலமாத்தல் - அங்கலாய்த்தல், கலங்கல், கழலல். அலம் - அமையுமென்றல், அலமரல், கலப்பை, சஞ்சலம், தேள், விருச்சிக விராசி, தேட்கொடுக்கு, பொன்னரி தாரம். அலம்பல் - அலக்குத்தடி, ஒலித்தல், கழுவல், ததும்பல், தளம்பல், வீண்பேச்சுப்பேசுதல். அலம்புசம் -உவாந்தித்தல், விரித்தகை. அலம்புடை, அலம்புருடை - காதுற் றிருக்குமோர் நரம்பு. அலயம் - நிராலயம். அலரி - அழகு, ஓர் பூமரம், கண்வரி, சூரியன், தேனீ, நீராவி, பூப்பொது. அலருதல் - மலர்தல், விரிதல். அலர் - நீர், பலரறிந்துபழிதூற்றல், பழிச்சொல், பூமாலை, மலரென் னேவல், மலர்ந்தபூ. அலர்ச்சி - அலர்தல். அலர்ந்தபூ - கொற்றான், மலர்ந்தபூ. அலர்தல் - அலருதல். அலர்த்தி - அலர்ச்சி. அலர்மகள் - இலக்குமி, சரச்சுவதி. அலர்முகராகம் - பரதவுறுப்பு ளொன்று. அலலியம், அலானம் - கலப்பை. அலவல் - கதாய், கந்தை. அலவன் - ஆணண்டு, கடகவிராசி, சந்திரன், நண்டு, பூனை. அலறல் - அழுதல், ஒலித்தல், கதறல், கூப்பிடல், சிதறுதல். அலன்றல் - சாதல். அலாசம் - நாப்புற்று. அலாதம் - நெருப்புக்கொள்ளி. அலாபம் - தீமை, நட்டம். அலாபு - சுரை. அலாயுதன் - பலபத்திரன். அலாரம் -கதவு. அலாரி - அலரி. அலி - இயமன், தீ, நறுவிலிமரம், பலதேவன், பேடி, வெளிற்றுமரம். அலிகம் - நெற்றி. அலிஞ்சரம் - மட்சாடி. அலிந்தம் - அளிந்தம், முற்றம். அலிபகம் - கருவண்டு, தேள், நாய். அலியெழுத்து - ஒற்றெழுத்து. அலுக்குத்து - ஓர் காதணி. அலுக்குலைதல் - அடுக்குக் குலைதல் கொலுகொலுத்தல். அலுக்கொலு - குலைவு. அலுசிலும்பல் - ஒழுங்கின்மை, குழம் பல். அலுமம் - புளிப்பு. அலைமகள் - இலக்குமி. அலுத்தல் - சலித்தல் வெறுத்தல். அலுப்பு - அயர்வு, சலித்துப்போதல், வெறுப்பு. அலுவல் - வேலை. அலுவீகம் - வில்வம். அலேகம் - பஞ்சலோகமணல், வெள் ளேடு. அலோகனம் - அதரிசனம். அலோபம் - மரியாதை, வெறுப்பு. அலை - அலையென்னேவல், கடல், கருமணல், திரை, புனற்றிரை. அலைக்கழித்தல் - உலைவுபண்ணு தல். அலைசடி -அலைவு, சோவி, துன்பம். அலைசல் - தொந்தறை. அலைசுதல் - அலையல், சோம்பல். அலைசோவி - அலைக்கழிவு. அலைச்சல் - உலைவு. அலைதல் - அலையல், சோம்பல், துன்பம், வருந்துதல். அலைத்தல் - உலைத்தல், சலனப் படுத்தல். அலைத்துவம் - மிகுதி. அலைப்பு - அலைத்தல், கூத்தின் விகற்பம். அலையல் - அலைதல், சோம்பல், துன்பம், வருத்தம். அலைவாய்க்கரை - கடற்கரை. அலைவு - அலைதல். அலோசி - பசளை. அல் - அல்லென்னேவல், இரவு, இருள், உடலெழுத்து ஓர்விகுதி, மதில், வியங்கோள்விகுதி, எதிர் மறைவிகுதி, (உம்) அஞ்சல், சாரியை, (உம்) தொடையல், இருதிணை முக்கூற்றொருமைத் தன்மை விகுதி, (உம்) நடப்பல, தொழிற் பெயர்விகுதி, (உம்) வரல், வியங் கோள்விகுதி, (உம்) வகுத்தனர் கொளலே. அல்கல் - இரா, சுருங்கல், தங்கல், தரித்திரம், நாள், வறுமை. அல்குல் - பெண்குறியின்மேற்பக்கம். அல்லகண்டம் - துன்பம். அல்லம் - இஞ்சி. அல்லரியல் - கண்ணறை, கண்ணறை யுள்ளது. அல்லல் - துன்பம், முடைதல். அல்லவை, அல்லன - ஒழிந்தன, தீயன, தீமை, பயனில்லாப் பொருள். அல்லாதது - ஆகாதது, ஒழிந்தது. அல்லாதார், அல்லார் - ஒழிந்தோர், தீயோர். அல்லி - அகவிதழ், ஆம்பல், இராகா யாமரம், பூந்தாது. அல்லிப்பிஞ்சு - பூவிழாதபிஞ்சு. அல்லியம் - இடையரூர், விட்டுணு கூத்து. அல்லுச்சில்லுப்படுதல் - குலைதல், சிதறுண்டிருத்தல். அல்லை - அல்லாயென்னு முன்னிலை யொருமைக்குறிப்புவினைமுற்று, ஓர்கொடி. அல்லோன் - ஒழிந்தோன், சந்திரன். அல்வழி - வேற்றுமையொழிநிலை. அல்வழிப்புணர்ச்சி - வேற்றுமை யொழிநிலைத்தொடர். அவகடம் - தந்திரம், வஞ்சகம், எதிரிடை, பொல்லாங்கு. அவகணிதம் - அவமானம். அவகண்டம் - முகப்பரு. அவகதி - அறிவு. அவகரணம் - அபகரித்தல். அவகர்த்தனம் - சீவுதல், தறித்தல். அவகாசம் - சமயம், தகுதி, திராணி, இடம், சமையம், பொக்கிஷ சாலை, வெளி. அவகாதம் - அவமானம், கொல்லு தல், நெல்லுக்குத்தல். அவகாரம் - அழைத்தல், பதிதத்துவம், யானைமீன். அவகாலம் - கெடுகாலம். அவகிரந்தனம் - சத்தமிட்டழுதல். அவகிருத்தியம் - அமங்கலகாரியம், துற்செய்கை. அவகீதம் - நிந்தை, வசைப்பாட்டு. அவகீர்த்தி - கட்டசாத்தியகுணம், தீக்குணம், துற்கீர்த்தி. அவகீனம் - தேள். அவகுஞ்சனம் - வளைவு. அவகுடாரம் - எதிர். அவகுணம் - தீக்குணம். அவகுண்டனம் - இழுத்தல், சூழ்தல், முக்காடு. அவகுண்டியம் - இழுத்தல், சுற்றல். அவகேலம், அவகேலனம், அவகேலிதம் - அவசங்கை. அவகோரணம் - பொருதல். அவக்கியாதை - அவமானம். அவக்கிரகணம் - அவசங்கை, தடை. அவக்கிரகம் - ஏற்றுக்கொள்ளுதல், சுபாபம், நிந்தை, பற்றுதல். அவக்கிரயம் - அநீதவிலை. அவக்கிராகம் - சபிப்பு. அவக்கிரியை - அசட்டை. அவசகுணம் -துற்சகுணம். அவசதம் - கல்லூரி. அவசேசி - காயாதமரம். அவசேடம் - மிச்சம், முடிவு. அவக்கியாதி - சங்கையீனம், துற் கீர்த்தி. அவக்குணம் - அவகுணம். அவக்குறி - துற்குறி, மரணக்குறி. அவக்கொடை - வீண்கொடை. அவக்கொலை - துன்மரணம். அவசங்கை - சங்கையீனம். அவசத்தம் - அமங்கலவோசை, இன்னாவோசை. அவசம் - பரவசம், மயக்கம். அவசயம் - கைகூடாமை, தோல்வி, நட்டம். அவசரம் - சுறுக்கு, மிகுதேவை, ஆண்டு, ஆலோசனை, சமையம், மழை. அவசனம் - அமைதி. அவசாதம் - இழைப்பு, கட்டளை, தைரியக்குறைவு, நிந்தை, முடிவு. அவசாயம் - நிச்சயம், நிறைவேறு தல், முடிவு. அவசாரம் - அப்பிரயோசனம், வேசித்தனம். அவசாரணம் - நடத்துதல். அவசாரி - வேசி. அவசானம் - எல்லை, மரணம், முடிவு. அவசிதம் - அறிந்தது, முடிந்தது. அவசித்து - உத்திராடத்துக்குந் திரு வோணத்துக்குந் நடுநாள். அவசியம் - அவசரம், ஆவத்து, நிச்சயம், பிதிராசாரம். அவசேகம் - தெளித்தல். அவசேடம் - மிச்சம், முடிவு. அவசுத்தம் - சுத்தமின்மை. அவச்சா - துன்மரணம். அவச்சாயை - தள்ளுபடிச்சாயை. அவச்சின்னம் - பிரிவு. அவச்சுரிதகம், அவச்சுரிதம் - குதிரைக் கனைப்பு. அவச்சேதகம் - அவச்சேதம். அவச்சேதம் - எல்லை, ஒன்றற்குரியன, நறுக்குதல், பங்கு. அவச்சேதனம் - நறுக்குதல், பகுத்தறி தல். அவடி - குழி. அவடு - கிணறு, குழி, பிடர். அவட்சயம் - அழிவு, நட்டம். அவணன் - திண்ணியன், வீணன். அவணி - நன்மை. அவண் - அவ்விடம். அவதந்திரம் - சதியோசனை, மடிப்பு. அவதரணம் - இறக்குதல், துப்பாசி செய்தல். அவதரம் - சமையம், தறுவாய். அவதரித்தல் - கருவிற்புகுதல், தங்கல், பிறத்தல். அவதாதம் - வெண்மை. அவதாரணம் - மண்வெட்டி, தாபித் தல், நிதானித்தல். அவதாரம் - உற்பத்தி, தெண்டம், பிரித்தல், பிறப்பு, மறுபாஷைப் படுத்தல். அவதாவனம் - பின்றொடர்தல். அவதானம் - கிரகித்தல், நிதானம், நினைவு. அவதி - அளவு, ஆவத்து, எல்லை, வருத்தம், இணக்கம், கவனம், காலம், கிடங்கு, முடிவு. அவதிக்காரகம் - நீக்கப் பொருளைக் காட்டுமுருபுடைப்பெயர். அவதீரணம் - அவசங்கை. அவதூதம் - முழுத்துறவு. அவதூதன் - ஓர் சன்னியாசி. அவதூறு - நிந்தை, பிறர்பழிகூறல். அவதூனனம் - அகற்றல், அசைத்தல், கலங்குதல், மிதித்தல். அவதோகம் - பால். அவத்தம் - ஆபாத்துடையது, பொய். அவத்தியம் - பாவம். அவத்திரங்கம் - கடை. அவத்திரியம் - ஆபத்து. அவத்தை - ஆபத்து, சாக்கிரமுதலிய உயிர்நிலையுபாதி, மரணஉபாதி. அவத்தைப்பிரயோகம் - கலைஞான மறுபத்தினான்கி னொன்று. அவநம்பிக்கை - நம்பிக்கையீனம். அவநாசி - ஓர்தலம், கலைமகள். அவநாயகம் - இறக்குதல். அவநிதம் - தோத்திரித்தல். அவநிந்தை - தூஷணம். அவநியாயம் - அநீதம். அவநீதம் - அநீதம். அவநுதியுருபகம் - ஓரலங்காரம், அஃது சிறப்பினதும் குணத்தினதும் பொருளினது முண்மையை மறுத் துப்பிறிதொன்றாகவுரைப்பது. அவந்தி - சத்தபுரியினொன்று, தேசமன்பத்தாறினொன்று. அவந்திகை - அவந்தி, கிளி. அவந்திசோமம் - காடி. அவபத்தி - பத்தியின்மை, வீண்பத்தி. அவபத்தியம் - இச்சாபத்தியம், விடு பத்தியம். அவபாசம் - வெளிச்சம். அவபாதம் - படுகுழி. அவபாதனம் - வெட்டுதல். அவபோதகன் - உபாத்தி, எழுச்சி செய்வோன். அவபோதம் - அறிவு, விழிப்பு. அவப்பிரஞ்சம் - இழிசனர்மொழி. அவப்பெயர் - துற்கீர்த்தி. அவப்பொழுது - வீண்பொழுது. அவமதி - நிந்தை. அவமதிப்பு - மதியாமை. அவமரணம் - துன்மரணம். அவமரியாதை - மரியாதைத்தப்பு. அவமாதாங்குசம் - மதயானை. அவமானம் - இழிவு, மானகீனம். அவமானிதம் - அவமானம். அவமிருத்து - துன்மரணம். அவமோசனம் - இட்டமாக்கல், கக்குதல். அவம் - பயனின்மை, வீண். அவம்போதல் - வீண்போதல். அவயம் - அழுகை, இலாமிச்சு, நன்மையின்மை. அவயவம் - உடல், உறுப்பு. அவயவவுருவகம் - அவயவத்தை யுருவகஞ்செய்து அவயவியை வாழாவுரைப்பது (உம்) புருவச் சிலை குனித்துக்கண்ணம் பேனுள்ள முருவத்துரந்தாரொருவர். அவயவி - உறுப்பு, பல சினைகளை யடக்கிய ஒருமுதல். அவயவியுருவகம் - அவயவியை யுருவகஞ் செய்து அவயவத்தை வாழாவுரைப்பது. (உம்) விழி மதர்ப்ப மூரலளிக்கும் வதனாம் புயம். அவரசன் - தம்பி. அவரம் - அபரம். அவரை - ஓர் கொடி, கொள்ளு துவரை முதிரை முதலாயின. அவரோகணம் - ஏறுதல். அவரோகம் - இறங்குதல், ஏறுதல், சுவர்க்கம், விழுது. அவரோகி - ஆல். அவரோதம் - அரண்மனை, உள் மண்டபம், தடை, வேலி. அவரோதனம் - உள்மாளிகை, தடை. அலரோபணம் - அத்மித்தல், இறங்கு தல், கெடுத்தல். அவலம்பம் - தாவரம், தூங்கல், நிறு திட்டவரி, புகலிடம். அவலட்சணம் - அழகின்மை, இலட்சணக்கேடு, ஒழுங்கின்மை. அவலம் - ஓரலங்காரம், அஃது துயரந் தோன்றக் கூறுவது, கிலேசம், துன்பம், வருத்தம். அவலித்தல் - வருந்தல். அவலீலை - விளையாட்டு. அவலுஞ்சனம் - கிழித்தல். அவலுண்டனம் - உருளல். அவலேசம் - அற்பம், ஆபத்து, சிறுமை. அவலேகனம் - நக்குதல். அவலேபம் - அலங்காரம், பூசுதல், பெருமை. அவலேபனம் - துணிவு. அவலோகம், அவலோகனம் - பார்வை. அவல் - ஓர்சிற்றுணவு, குளம், பள்ளம். அவவிசுவாசம் - விசுவாசகீனம், பொய்விசுவாசம். அவவியாத்தி - பொருண்மாறு படக் கூறல், அஃது நூற்குற்ற மூன்றி னொன்று. அவளிகை - இடுதிரை. அவற்கம் - கஞ்சி. அவனதி - குனிதல். அவனம் - அலங்கரித்தல், இருத்தல், கொல்லல், செய்தல், தழுவுதல், தற்காத்தல், தாங்குதல், திருத்தி, தீவிரம், பட்சம், பிடித்தல், பெலன், விருத்திப்பு, விருப்பம். அவனேசனம் - கழுவுதல். அவனி - பூமி. அவனிபாரகன் - இராசா. அவனுதி - ஓரலங்காரம். அவன் - உயர்திணை யாண்பா லொருமைப் படர்க்கையிடத்துப் பெயர்ச்சுட்டு. அவன்னியம் - உபமானப்பொருள். அவா - அவாவென்னேவல், ஆசை, ஆசைப்பெருக்கம், இறங்குதல். அவாசி - தெற்கு. அவாஸ்தம் - புறங்கை. அவாந்தரம், அவாந்தரை - உள்ளடங் கியது. அவாந்திரம் - மத்தியகாலம், வெறு வெளி. அவாந்திரை - வெறுமை. அவாரபாரம் - சமுத்திரம். அவாரம் - ஆற்றங்கரை. அவாவின்மை - வெறுப்பு. அவாவுதல் - இச்சித்தல், இறங்குதல், சார்தல். அவி - அவியென்னேவல், சோறு, தேவருணவு, நெய், ஆடு, எலி, காற்று, சூரியன், தலைவன், மதில், மலை. அவிகடம் - ஆட்டுமந்தை. அவிகம் - இரத்தினம். அவிகாயம் - எரிச்சல், ஓர்காசம், வேகம். அவிகாரம் - விகாரமின்மை. அவிகாரன் - ஆட்டுக்காரன். அவிகாரி - மாறாதவன். அவிக்கிரமம் - பராக்கிரமமின்மை. அவிசாரம் - புத்திகேடு. அவிசு - பச்சரிசிச்சோறு, தேவருணவு. அவிசுவாசம் - விசுவாசமின்மை. அவிச்சி - அபேட்சை. அவிச்சின்னம் - இடைவிடாமை, பிரிவின்மை. அவிச்சை - அறியாமை, மனமயக்கு, வெறுப்பு. அவிஞ்ஞதை - அறியாமை. அவிஞ்ஞாதம் - அறியப்படாதது. அவிடி - திரைச்சீலை. அவிட்டம் - ஓர் நாள். அவிதல் - அடுப்பில்வேகுதல், அமை தல், அழிதல், கெடுதல், தணிதல், வருந்தல், வேகுதல். அவிதானம் - ஒழுங்கின்மை. அவித்தம் - உண்மை. அவித்தம் - அறியப்படாதது, வறுமை. அவித்தல் - அழித்தல், கெடுத்தல், தணித்தல், வருத்தல், வேகுவித்தல். அவித்தியசம் - சூதம். அவித்தியம் - அறியாமை, மாயை. அவித்துருமம் - இலுப்பை. அவித்தை - அஞ்ஞானம், பஞ்ச மாயையினொன்று, மனமயக்கு. அவிநயசாலை - நாடக அரங்கு. அவிநயம் - ஓர் நூல், கூத்து, நாடக அரங்கம். அவிநயர் - ஓர் நூலாசிரியர், நாடகர். அவிநிகமம் - அநியாயத்தான் வந்த தீர்ப்பு. அவிநீதை - கற்பில்லாள், பரஸ்திரீ. அவிபடம் - கம்பளி. அவிபவனம் - மேற்கொள்ளுதல். அவிபன்னம் - அதிட்டவீனம், குற்றம். அவிபாகம் - அசீரணம், அனுபவி யாத வினை, இளமை. அவிபாச்சியத்துவம் - பிரிக்கக் கூடாமை. அவிபரவனம் - அதரிசனம். அவிபூதி - அவசங்கை. அவிப்பாகம் - தேவருணவு. அவிமுத்தம் - காசி. அவிமுத்தேசன் - காசீசுவரன். அவியல் - அவிந்தது, உட்டணம், ஓர்கறி. அவியாகிருதம் - பிரமத்தோடு பிரி வின்றி நிற்பது. அவியாத்தம், அவியாத்தியம் - பிரிந் திருப்பது. அவியோகம் - கூட்டம். அவிரதம் - எப்பொழுதும், இடை யின்மை. அவிரோதச்சிலேடை - ஓரலங்காரம், அஃது முன்னர்விரோதித்த பொருளைப் பின்னரும் விரோதி யாமற் சிலேடிப்பது. அவிரோதம் - விரோதமின்மை. அவிர்தல் - ஒளிசெய்தல், பீறல். அவிவாதம் - இணக்கம். அவிவேகம் - புத்திக்குறைவு. அவிவேகி - அறிவீனன், மதிகீனன், மந்தன். அவிழ்தல் - நெகிழ்தல், விரிதல். அவினா - நீக்கமற்றது, வெளியற்றது. அவினாபாவம் - ஓன்றற்கேயுள்ளது, ஓரளவை. அவிழ்த்தல் - அலர்த்தல், அவிழச் செய்தல், கட்டுநீக்கல். அவுடதம் - ஒளஷதம். அவுபலபாஷாணம் - விளைவு பாஷாண முப்பத்திரண்டி னொன்று. அவுணர் - அசுரர். அவுதா - யானைமேற்றவிசு. அவுரி - ஓர் செடி. அவேட்சை - இணக்கம், கவனம், பார்த்தல். அவேத்தியம் - பசுக்கன்று. அவை - அவையென்னேவல், அவ், கூட்டம், சவை, புலவர். அவைகரணம் - தோண்டல், மூடல். அவைத்தல் - நெரித்தல், நென்முதலி யகுத்தல். அவையடக்கம் - சவைமுன்றன்னைத் தாழ்த்தல். அவையல் - திரட்சி. அவையவம் - உறுப்பு. அவையவவுருவகம் - ஓரலங்காரம், அஃது அவையவத்தை யுருவகஞ் செய்து அவையவியைவாழா கூறுவது. அவையவியுருவகம் - ஓரலங்காரம் அஃது அவையவியையுருவகஞ் செய்து அவையவத்தைவாழா கூறுவது. அவ் - அவை. அவ்விடம் - அந்தவிடம். அவ்வியஞ்சனம் - அடையாள மற்றது, கொம்பிலாமிருகம். அவ்வியதி - குதிரை. அவ்வியதிதி - இரவு, பூமி. அவ்வியத்தம் - கோடிகோடிகோடி கோடாகோடி, விளங்கக்காணப் படாதது, அதரிசனமானது, ஆன்மா, கடவுள், பிரமம். அவ்வியத்தன் - சிவன், மன்மதன், மூடன், விட்டுணு. அவ்வியம் - மனக்கோட்டம், அடை மொழி. அவ்வியாகிருதம் - பிரமத்தோடு பிரிவற்றது, மாயை. அவ்வியாகிருதன் - செகறகாரண சாட்சியானவன். அவ்வியாசம் - நிதார்த்தம். அவ்வுதல் - அவாவிவிழுதல், அழுந் துதல். அவ்வை - ஒளவையார், தாய். அழகாரம் -பேச்சுச்சித்திரம், மதுரம். அழகியவாணன் - ஓர் நெல். அழகு - சருக்கரை, யௌவனம், ஒழுங்கு,பதினாறுபேறினொன்று. அழகுவனப்பு - செய்யுள்வனப் பெட்டினொன்று, அஃது செய்யுட் சொல்லாகிய திரி சொற்களினா லோசை பெறப்பாடுவது. அழத்தியன் - பெருங்காயம். அழலவன் - அக்கினி, சூரியன், செவ்வாய். அழலாடி - சிவன். அழலிக்கை - பொறாமை. அழலுதல் - எரிதல், கன்றல், வெப்பங் கொள்ளல். அழலேந்தி - சிவன். அழலோன் - சூரியன், செவ்வாய், தீ. அழல் - அழலென்னேவல், கேட்டை நாள், செவ்வாய், தீ, நரகம், வெப்பம். அழற்கண்ணன் - உருத்திரன், சிவன். அழற்கண்வந்தோன் - முருகன், வீர பத்திரன். அழற்குத்துதல் - வேகமானநாற்றம் வீசுதல். அழற்சி - அழுக்காறு, வெப்பம். அழற்பால் - எருக்கு. அழற்றி - அழற்சி, எரிவு. அழற்பிரவை - ஏழ்நரகவட்டத் தொன்று. அஃது தீநிலம். அழற்றுதல் - எரிதல், சுடுதல். அழனம் - பிணம். அழனாகம் - ஓர் பாம்பு. அழன் - பிணம். அழிகட்டு - சாட்டு, மாற்று. அழிகரு - அழிப்புக்காரன், சிதைந்து போகிறகருப்பம். அழிச்சாட்டியம் - அலைவு. அழிஞ்சில் - ஓர்மரம். அழிதல் - கெடுதல். அழிதூ - அலி. அழித்தல் - கெடுத்தல், முத்தொழிலி னொன்று, அஃது சங்கரித்தல். அழிபுண் - ஆறாமிகுபுண். அழிப்பாளி - அழிப்புக்காரன். அழிப்பு - தொலைப்பு. அழிமதி - கெடும்பு, மிஞ்சின செலவு. அழிமுதல் - முதலழிவு. அழிம்பன் - புரட்டன். அழிம்பு - அழிவு, சேதம், நட்டம். அழியாமை - அழிவின்மை. அழிவழக்கு - கள்ளநியாயம், புரட்டு நியாயம். அழிவி - கழிமுகம். அழிவு - கழிமுகம், குற்றம், கேடு. அழுகண்ணி - ஓர் பூடு. அழுகல் - அழுகினது, அழுதல். அழுகுசப்பாணி - ஓர்விஷநோய். அழுகுசற்பம் - ஓர் விஷச்செந்து. அழுகுணி - அழுபிள்ளை. அழுகுதல் - பதனழிதல். அழுகை - அழுதல். அழுக்கணவன் - ஓர் புழு, புழுக்கூடு. அழுக்கல் - அச்சக்குறிப்பு. அழுக்கறல் - அழுக்காறடைதல், அழுக்குநீங்கல். அழுக்கறுத்தல் - பொறாமை கொள் ளல். அழுக்காறாமை - பொறாமையடை யாமை. அழுக்காமை - ஓராமை. அழுக்காறு - பொய், பொறாமை. அழுக்கு - அசுத்தம், ஆமை, ஊத்தை, மாசு. அழுங்கல் - அச்சம், அலையல், அழு தல், அழுந்தல், ஆரவாரித்தல், இரங்கல், ஒலித்தல், ஒளிமழுங் கல், கெடுதல், சோம்பல், துன்பம், நோய், வருத்தம். அழுங்கு - அழுங்கென்னேவல், ஆமை, ஓர் மிருகம். அழுதல் - இரங்கல். அழுத்தம் - உலோபத்தனம், ஒப்பம். அழுத்தல், அழுத்துதல் - அழுந்தச் செய்தல், பதித்தல், பாராட்டுதல். அழுந்தல் - அழுந்துதல், உத்தரித்தல், பதிதல், வருந்தல். அழுந்து - அழுந்தென்னேவல், நீராழம். அழுப்பு - சோறு. அழுப்புகம் - தேவலோகம். அழுவம் - அப்பவருக்கம், அழுக்கு நிலம், கடல், நடுக்கம், நாடு, பரப்பு, பெருமை, மலைமேற் கோட்டை, முரசு, வழுக்குநிலம். அழை - அழையென்னேவல். அழைக்கை - கூவுகை. அழைத்தல் - கூவுதல், வாவெனல். அழைப்பு - அழைத்தல். அளகபந்தி - கேசபாரம். அளகம் - நீர், பன்றிமுள், பெண் மயிர், மயிர்க்குளற்சி. அளகாதிபதி, அளகாதிபன் - குபேரன். அளகு - கார்த்திகைநாள், கோழி கூகையல்லாத புள்ளின்பெண். அளகை - குபேரனகர். அளகையாளி - குபேரன். அளக்கர் - உப்பளம், கடல், கார்த்தி கைநாள், குழைசேறு, நீள்வழி, பூமி. அளக்கல் - அளக்குதல். அளக்கார் - உப்பமைப்போர். அளக்குதல், அளத்தல் - அளவிடல், எண்ணல், பிரமாணித்தல், மதித்தல், வரையறுத்தல். அளத்தி - நெய்தநிலப்பெண். அளபு - அளபெடை, ஓரலங்காரம் அஃது அளபெடையாய்வருவது. அளபெடை - எழுத்துக்கடத்தமாத் திரையினீண்டொலித்தல். அளபெடைவண்ணம் - அளபெடை பயின்று வருவது. அளப்பளத்தல் - பிதற்றல். அளப்பு - அலப்பு, அளத்தல், பிதற்று. அளப்புதல் - அலப்புதல், குளப்புதல். அளமளைதல் - அளவளாதல். அளம் - உப்பளம், கூர்மை, நெருக்கம். அளவடி - நாற்சீரான்வருஞ் செய்யுள். அளவடிவிருத்தம் - நாற்சீரோரடி யாய் வரும் விருத்தம். அளவர் - அளப்போர், உப்பமைப் போர். அளவல் - கலத்தல். அளவழித்தாண்டகம் - எழுத்தலகு மெழுத்துமொவ்வாது வருமோர் பிரபந்தம். அளவளத்தல், அளவளாதல், அள வளாவுதல் - கலத்தல். அளவறுத்தல் - வரையறுத்தல். அளவிடுதல் - மதித்தல். அளவிடை - அளவு, நிருவாகம், நிறை, மட்டறிதல். அளவியற்றாண்டகம் - இருபத்தே ழெழுத்துமுதலாக வுயர்ந்த வெழுத்தடியினவாய் எழுத்துங் குருவுமிலகுவு மொத்தவருமோர் பிரபந்தம். அளவு - எண்முதலியநான்களவு, வரையறை, பிரமாணம். அளவுப்பண்புத்தொகை - அளவுப் பண்புருவுதொக்குநிற்பது, (உம்) நாற்பொருள். அளவெண் - அளவடி ஓரடியாக நான்கடி வருவது. அளவை - அளவு, அறிதல், எல்லை, நாள், பிரமாணம், எடுத்தல், எண்ணல், முகத்தல், நீட்டல், எனு நான்கள வை, பிரத்தியட்சம், அனுமானம், ஆகமம் எனு மூவளவை, ஓர்நூல். அளவையாகுபெயர் - எடுத்தல், எண்ணல், நீட்டல், முகத்தல், எனுமளவைப் பெயர் அதனை யடைந்த பொருட்காவது. அளறு - குழைசேறு, நரகம். அளறுதல் - சிதர்தல். அளாவுதல் - கலத்தல் சேர்ந்துபற்றல். அளி - அளியென்னேவல், அன்பு, கள், காய், குளிர்ச்சி, கொடை, மது, வண்டு, சாளரம், பாணம். அளிகம் - கட்டழகு, நெற்றி. அளிதல் - உருகுதல், கனிதல், வார்தல். அளித்தல் - காத்தல், கொடுத்தல், நெருங்கல், பாதீடு. அளிந்தம் - கோபுரவாயிற்றிண்ணை, முற்றம். அளியர் - அன்புள்ளோர், எளியோர். அளீகதை - பொய். அளீகம் - நெற்றி, பிரியக்கேடு, பொய். அளுக்கல் - அச்சக்குறிப்பு. அளுங்கு - அழுங்கு. அளை - குழையென்னேவல், தயிர், புற்று, மலைக்குகை, மோர், வளை, ஏழாம்வேற்றுமையுருபு, வெண்ணெய். அளைகுதல் - கலக்குதல். அளைதல் - கலத்தல், குழைதல். அளை மறிபாப்புப்பொருள் கோள் - பொருள்கோளெட்டினொன்று, அஃது செய்யுளிறுதி மொழியாவ தடியாவதச் செய்யுளின் முதலினு நடுவினும் பொருள்கொண்டு வரு வது, (உம்) தாழ்ந்தவுணர் வின ராய்த் தாளுடைந்து தண்டூன்றித் தளர்வார் தாமுஞ்சூழ்ந்த வினை யாக்கை சுடவிழிந்து நாற்கதியிற் சுழல் வார்தாமு மூழ்ந்த பிணி நலிய முன் செய்தவினையென்றே முனிவார் தாமும் வாழ்ந்த பொழுதி னேவா னெய்து நெறி முன்னி முயலாதாரே யெனவரும். அளைவு - குழைவு, கலப்பு. அள், அள்ளு - அள்ளென்னேவல், கன்னம், காது, கூர்மை, நெருக்கம், பற்றிரும்பு, உயர்திணைப்பெண் பாற் படர்க்கை யொருமைவிகுதி. அள்ளல் - அள்ளுதல், குழைசேறு, சத்தராகங்களினொன்று. அள்ளுதல் - அள்ளல், நெருங்கல். அள்ளை - பிசாசம். அற - அறும்படி, தீர, முற்ற. அறக்காடு - சுடுகாடு. அறக்கொடியோன் - கடவுள். அறங்கை - அகங்கை. அறச்சாலை - தருமச்சத்திரம். அறச்செல்வி - பார்வதி. அறத்தளி - அந்தர்ப்புரம். அறத்தின்மூர்த்தி - தருமதேவதை. அறத்தின்மைந்தன் - தருமபுத்திரன். அறத்துறுப்பு - அறத்தினதங்கம். அறத்துறுப்பெட்டு - அறஞ்செய்யும் விதமெட்டு, அஃது அழிந்தோரை நிறுத்தல், அறம் விளக்கல், ஐயப் படாமை, பழியை நீக்கல், மயக்க மின்மை, பேரன்புடைமை, விருப் பின்மை, வெறுப்பின்மை. அறத்தைக்காப்போன் - ஐயன். அறத்தொடுநிற்றல் - கையறுதோழி கண்ணீர் துடைத்துழிக்கலுழ் தற் காரணங்கூறன முதலாகக் கனை யிருளவன வரக்கண்டமை கூற லீறாகிய வேழும். அறநிலைப்பொருள் - நெறி வழி நின்று தத்தம் நிலையினால் முயன்றுபெறு பொருள். அறநிலையறம் - தத்தம்வருணத்திற் பிறளாது நிலைபெறப் பாது காத்தல். அறநிலையின்பம் - ஒழுக்கமுங் குண முங்குலமும் பருவமு மொத்த கன்னியைத்தீவேட்டில்லத்திருத்தல். அறப்பால் - அறத்துப்பகுதி. அறப்புறம் - அறச்சாலை. அறமுறியப்பார்த்தல் - முற்றமுடியப் பார்த்தல். அறம் - கையறம், தருமம், தீமை, நூற் பயனான்கினொன்று, பெரியோ ரியல்பினொன்று. அறம்விளக்கல் - அறத்தைப்பிர பலியப்படுத்தல். அறம்புறம் - அகம்புறம், அடிதலை, உட்புறம், தடுமாற்றம். அறல் - அறுதல், கடற்றிரை, கரு மணல், சிறுதூறு, நீர், விழவு. அறவர் - பெரியோர், முனிவர். அறவரி - அறவிடுதல். அறவன் - புத்தன். அறவாக்கல் - அறவிடுதல். அறவாழியந்தணன் - அரன், அரி, அருகன், கடவுள். அறவாழிவேந்தன் - கடவுள். அறவான் - அறவு. அறவிடுதல் - அறவாக்குதல், தண்டுதல். அறவு - அறுபட்டஇடம், ஒடிவு, கடவை. அறவுளி - முடிவு. அறவுளிபார்த்தல் - தீர்ப்புப் பண்ணு தல், முற்றுங்கெடுத்தல். அறவை - அனாதம். அறவைச்சோறு - அனாதருக்கன்னங் கொடுத்தல். அறவைத்தல் - புடமிடுதல். அறவைத்தூரியம் - அனாதருக்குப் புடைவைகொடுத்தல். அறவைப்பிணஞ்சுடுதல் - அனாதப் பிரேதத்துக்கு ஈமக்கடன் செய்தல். அறவோர் - துறவோர், பார்ப்பார், முனிவர். அறவோன் - அருகன். அறளை - அரிகண்டம், ஓர்வியாதி. அறன் - அறம். அறன்கடை - பாவம். அறாவிலை - கடுவிலை. அறிகுறி - அடையாளம். அறிகை - அறிதல். அறிக்கை - அறிவித்தல், அறிவு, கட்டுப்பாடு. அறிக்கைபண்ணுதல் - அறிவித்தல், கட்டுப்படுத்தல். அறிக்கைப்பத்திரம் - அறிவித்தல், காவற்பத்திரம். அறிஞர் - அறிவுடையோர், புலவர், முனிவர். அறிஞன் - அறிவுள்ளோன், புதன். அறிதுயிலமர்ந்தமூர்த்தி - விட்டுணு. அறிதுயில் - ஞானானந்தல், யோக நித்திரை. அறிமடம் - அறிந்துமறியார் போன்றி ருத்தல். அறிமுகம் - கண்டபழக்கம். அறியாமை - அறிவீனம், முத்தி விக்கினம் மூன்றினொன்று. அறியாவினா - பஞ்சவினாவினொன்று. அறிவினா - அறிவொப்புக்காண்டல். அறியான்வினாவல் - பஞ்சவினாவி னொன்று. அறிவர் - அறிஞர், கம்மாளர். அறிவழி - கள், பிசாசம். அறிவனாள் - உத்திரட்டாதி. அறிவன் - அருகன், அறிவுடை யோன், உத்திரட்டாதி, கடவுள், செவ்வாய், புதன். அறிவித்தல் - அறிவிப்பு. அறிவிப்பு - பிரசித்தம். அறிவிலார் - மூடர். அறிவின்மை - அசேதனம். அறிவீனம் - அஞ்ஞானம், அறியாமை. அறிவு - அறிதல், ஆடூஉக்குணம் நான்கினொன்று, உணர்வு, கல்வி. அறிவுசூடு - நினைத்திருக்கத் தக்க தாகச் செய்ததீமை. அறிவொப்புக்காண்டல் - பஞ்ச வினாவினொன்று. அறுகரிசி - அட்சதை. அறுகால் - வண்டு. அறுகு - ஆண்புலி, ஓர்புல், சிங்கம், யாளி, யானை. அறுகுணன் - கடவுள். அறுகுதராசு - சிறுதராசு. அறுகுறை - கவந்தம். அறுசமயத்தோர்க்குண்டி - அறமுப் பத்திரண்டினொன்று. அறுசரம் - ஓசையாழ். அறுதலி - மங்கிலியமிழந்தவள். அறுதல் - அறப்பட்டது, அறல், கைம் பெண், தோசி. அறுதி - சாவு, சொந்தம், தீர்ப்புவிலை. அறுதிச்சாதனம் - அறுதியுறுதி. அறுதொழிலோர் - பார்ப்பார். அறுதொழில் - அறுவகைத்தொழில், அஃது உழவு, சிற்பம், தொழில், வரைவு, வாணிபம், விச்சை. அறுத்தல் - அரிதல், அறச்செய்தல். அறுந்தறுவாய் - உறுந்தறுவாய், தற் சமயம். அறுபதம் - கையாந்தகரை, வண்டு. அறுப்பு - அரிகை, மங்கிலியமிழத்தல். அறுப்புக்காலம் - அரிவிவெட்டுக் காலம். அறுமர் - எண்ணெய்வாணிவர். அறுமின் - கார்த்திகைநாள். அறுமீன்காதலன் - குமரன். அறுமுகன் - குமரன். அறும்பு - கொடுமை, பஞ்சகாலம். அறுவகைப்பொருள் - வினைச் சொற்கள் கொள் பொருளாறு, அஃது கருவி, காலம், செயப்படு பொருள், செயல், செய்பவன், நிலம். அறுவாய் - கார்த்திகைநாள். அறுவிகாரம் - செய்யுள்விகாரமாறு, அவை குறுக்கல், தொகுத்தல் நீட்டல், மெலித்தல், வலித்தல், விரித்தல். அறுவான் - அறவு. அஅவை - சித்திரைநாள், சீலை. அறை - அடி, எழுத்தினோசைச் சொல், கண்ணறை, சிற்றில், சொல், திரை, தூக்கங்கள், பறையடித்தல், பறையறையென்னேவல், பாறை, மலையுச்சி, முளைஞ்சு, அறுந்தது, குறை. அறைகுதல் - அடித்தல், கொல்லுதல். அறைகூவல் - பொரவழைத்தல். அறைக்கீரை - ஓர் கீரை. அறைதல் - அடித்தல், சொல்லல், பறையடித்தல், கடாவல். அறைபோதல் - கீழறுத்தல். அற்கம் காணிக்கை - திரவியம், நீர்க் காக்கை, விலை, வெண்டுளசி. அற்கல் - அறிவுடைமை, நிலை பெறுதல். அற்கன் - அருக்கன். அற்காதிபன் - திரவியாதிபன். அற்காமை - அறிவின்மை, நிலை யாமை. அற்கியம் - அருக்கியம். அற்சகன் - அருச்சகன். அற்சனம் - அருச்சனம். அற்சனை - அருச்சனை. அற்சி - சுவாலை. அற்சிகன் - கோவிற்பட்டன். அற்சித்தல் - அருச்சித்தல். அற்சியம் - அருச்சியம். அற்பகம் - குழந்தை. அற்பகன் - குழந்தை, மூடன். அற்பகெந்தம் - செந்தாமரை. அற்பகேசி - வசம்பு. அற்பபதுமம் - செந்தாமரை. அற்பபத்திரம் - ஓர்துளசி. அற்பம் - சிறுமை, நாய், அணு, பஞ்சு, பனி, பிள்ளை, புகை. அற்பரம் - மக்கட்படுக்கை. அற்பருத்தம் - வாழை. அற்பர் - கீழ்மக்கள். அற்பிதம் - காணிக்கை, பலி. அற்புதம் - அதிசயம், அழகு, ஓரலங் காரம், ஓரெண், பாவக்குண மொன்பதினொன்று. அற்பு - அரிது, அற்பம். அற்புதமூர்த்தி - அருகன், கடவுள். அற்புதர் - கம்மாளர். அற்றடி - அடிகேடு. அற்றடிப்படுதல் - அடிகெடுதல். அற்புதவுருவகம் - ஓரலங்காரம், அஃது உவமைக் கியல்பல்லாதவற்றை யுள்ளதாயெடுத்துருவகப் படுத்து வது. அற்புதவுவமை - ஓரலங்காரம், அஃது பொருட்குள இயல்பை யெடுத்துக் காட்டி இவ்வியல்புகளெல்லாங் குறித்தவுவமைக் குளவேலொப் பாமெனக் கூறுவது. அற்புதன் - கடவுள். அற்றம் - அச்சம், சமயம், சோர்வு, மறைவு, மெலிவு. அற்றார் - இறந்தோர், தரித்திரர். அற்றான் - இறந்தோன், தரித்திரன். அற்று - உவமையுருபு, சாரியை, (உம்) பலவற்றுக்கோடு, அத்தன்மைத்து. அனகங்காரம் - பெருமையின்மை. அற்றை - அன்று, சிறுமை. அனகம் - பாவமின்மை, மாசின்மை, கீழானது. அனகன் - கடவுள், அருகன். அனங்கம் - இருவாட்சி, உடலின்மை, மல்லிகை, அறிவு, ஆகாயம். அனங்கன் - உடலிலான், கடவுள், மதன். அனசனம் - உபவாசம். அனசூயம் - எரிச்சவின்மை. அனஞ்சனம் - ஆகாயம். அனட்சம் - குருடு. அனதிகாரி - உரித்தற்றவன். அனத்தம் - நாசம், பயனில்லாமை. அனந்தசயனன் - விட்டுணு. அனந்தரம் - நிதம், பிரிவின்மை, பின்பு, மேல். அனந்தஞானி - கடவுள், பார்வதி, பிரமன். அனந்தம் - அளவின்மை, ஆகாயம், ஓரெண், பொன், முடிவிலாமை, அந்தங்கெட்டது. அனந்தர் - நித்திரை, பித்து, மயக்கம், மயிர்ச்சூட்டு. அனந்தலோசனன் - கடவுள், புத்தன். அனந்தல் - நித்திரை. அனந்தவாதம் - ஓர்நோய். அனந்தன் - அட்டநாகத்தொன்று, கடவுள், அரன், அரி, அருகன், பலதேவன், பிரமன், புத்தன். அனந்தை - பார்வதி, பூமி. அனபரன் - பிரமன். அனபாயம் - நிரபாயம். அனப்பியாசம் - அப்பியாசமின்மை. அனபியிதகருத்தன் - மூன்றனுருபின் கருத்தன். அனர்த்தம் - பயனிலாச்சொல், பய னின்மை, பொல்லாங்கு. அனலம் - உட்டணம், சிவாகம மிருபத்தெட்டி னொன்று, வட வாக்கினி. அனலல் - கனலல். அனலன் - அக்கினி, அஷடவசுக் களிலொருவன். அனவி - சூரியன். அனலேறு - இடி. அனலொடுவேந்தன் - கார்முகில் பாஷாணம். அனல் - அக்கினி, இடி, உட்டணம், உணர்வு, உயிர்வேதனையி னொன்று, அனலென்னேவல். அனல்காவி - சூரியகாந்தக்கல். அனல்வென்றி - தங்கம். அனவசரம் - விடுதலின்மை. அனவதானம் - அவதானக்கேடு. அனவஸ்தானம் - உறுதியின்மை, துன்னடை. அனவரதம் - எப்பொழுதும். அனற்றல் - கனலல். அனற்று - அனற்றென்னேவல், திருணம். அனன்னியசன் - மனோபவன். அனாகதம் - ஆறாதாரத்தொன்று, அஃது இதயத்தானம், அறிவுக் கதீதமானது. அனாகாரம் - உருபின்மை, பசி யினால் வருந்தல். அனாகாலம் - பஞ்சகாலம். அனாசரணம் - துன்னடை. அனாசரித்தல் - ஆசரிப்பின்மை. அனாசாரம் - ஆசாரமின்மை, நிரு வாணம். அனாசிரயம் - பற்றின்மை. அனாதபம் - கூதிர், நிழல். அனாதம் - அந்தரித்தது, ஆதரவற்றது. அனாதரம் - அவசங்கை, ஆதர வின்மை. அனாதி - ஆதிக்குமுந்தினது, ஓர் சைவம், கடவுள், துடக்கமில்லா தது, ஆதியின்மை, சிவன். அனாதிசைவம் - சைவம்பதினாறி னொன்று. அனாதித்துவம் - நித்தியம். அனாதிநாதர் - நவநாதசித்தரி லொருவர். அனாதிமுத்தன் - அநித்தியமில்லா ஞானி. அனாதிரேகம் - வியப்பின்மை. அனாதீனவம் - நிராதீனம். அனாதுரம் - வெறுப்பு. அனாதேயம் - ஆதேயமற்றது, ஏற்றுக் கொள்ளத்தகாதது. அனாஸ்தை - அவசங்கை, நிலை யின்மை. அனாந்தம் - அழகின்மை. அனாமயம் - நோயின்மை. அனாமயன் - நோயிலான். அனாயதம் - சமீபித்தது, நீளமற்றது. அனாயாசம் - இலகு, சோம்பின்மை. அனாமிகை - ஆழிவிரல். அனாரம்பம் - துவக்கமின்மை. அனாரதம் - எப்போழ்தும். அனாரோக்கியம் - நோய். அனார்ச்சபம் - வளைவு, வியாதி. அனாவிருட்டி - மழையில்லாமை, வரட்சி. அனாவிலன் - சுக்கிரன். அனிகம் - அனீகம். அனிச்சம் - அனிச்சை. அனிச்சை - ஓர் பூடு, ஓர் மரம், விருப்பின்மை. அனிட்டம் - பிரியவீனம், இட்ட மின்மை. அனிலசகன் - தீ அனிலாமயம் - வாதநோய். அனித்தம் - அநித்தியம், அழிவுள்ளது. அனியமச்சிலேடை - நியமத்தின் மேலுமோர்நியமச் சிலேடை (உம்) சிறைபயில்வ புட்குலமேதீம் புனலுமன்ன. அனியமவுவமை - ஓரலங்காரம், அஃது நியமித்தவுவமையை விலக் கியதனோடு பிறிதுமொரு பொருள் கூட்டியுரைப்பது (உம்) கவிரே நின்வாயொப்பதன்றியது போல வுண்டெனினுமாம். அனியாயம் - நியாயக்கேடு. அனிலநாள் - சோதிநாள், வியாகநாள். அனிலம் - காற்று, பிறப்பு. அனிலன் - அட்டவசுக்களிலொரு வன், வாயு. அனீகம் - படையிலோர்தொகை, கவலையின்மை, படை, யுத்தம். அனீகிதம் - அசந்தோஷம். அனீகினி - சேனை, தாமரை, படை யிலோர்தொகை, அஃது இரண் டாயிரத்து நூற்று எண்பத்தேழு யானையும் அவ்வளவு இரதமும் ஆறாயிரத்து அஞ்ஞூற்று அறு பத்தேழு குதிரையும் பதினாயி ரத்துத் தொளாயிரத்து முப்பத் தை ந்துகாலாளுங்கொண்டது. அனீசன் - தலைவனில்லாதவன், விட்டுணு. அனீசுவரவாதி - தேவனில்லை யென்பவன். அனீதர் - கீழ்மக்கள். அனு - அடையாளம், கதுப்பு, கூட, தொடர்ச்சி, அற்பம், பின், கீழ், பங்கு, தனிமை, சமீபம், ஒழுங்கு, இவற்றைக் காட்டு மோருப சருக்கம், மோனை. அனுகதம் - ஈட்டப்பட்டது. கூடிப் போதல், பின்வருவது. அனுகதனம் - சம்பாஷனை. அனுகமனம் - கூடப்போதல், பின் போதல். அனுகம் - செஞ்சந்தனம். அனுகம்பை - உருக்கம். அனுகரணம் - உவமை, செயல் விளங்க நிற்பது. அனகரணவோசை - ஒலிக்குறிப்பு. அனுகருஷணம் - அழைத்தல், கவர்ச்சி. அனுகவீனன் - இடையன். அனுகற்பம் - பதில். அனுகன் - கணவன். அனுகாமி - தோழன். அனுகூலம் - காரியசித்தி, கிருபை, சம்மதம், பட்சம். அனுக்கம் - அனுங்குதல், சந்தனம், சோம்பு, பயம், பாம்பு, வருத்தம். அனுக்காட்டல் - சாடைகாட்டல். அனுக்காட்டுதல் - சாடைகாண் பித்தல். அனுக்கியடித்தல் - ஓர் விளையாட்டு. அனுக்கிரகம் - கிருபை. அனுக்கிரகித்தல் - கிருபைசெய்தல். அனுக்கிரமணம் - தொடர்ந்துபோதல். அனுக்கிரமணிகை - பொருளட்ட வணை. அனுக்கிரமம் - ஒழுங்கு. அனுங்குதல் - அசைதல், சிணுங்குதல், புரள்தல். அனுக்கை - விடை. அனுங்கல் - அனுங்குதல், முட்டுதல், வருந்தல், வாடல். அனுசங்கம் - உருக்கம், புணர்ச்சி. அனுசந்தானம் - ஆராய்வு, விடா யோகம். அனுசந்தித்தல் - தியானித்தல். அனுசயம் - பற்று, மனஸ்தாபம், வன்மம். அனுசரணம், அனுசரணை - இணக் கம், போதல், வழக்கம். அணுசரன் - தோழன், வேலைகாரன். அனுசரித்தல் - சார்ந்து நடத்தல், மேற் கொண்டு நடத்தல், வழிபடுதல். அனுசன் - தம்பி. அனுசாசகன் - ஆள்பவன். அனுசாசனம், அனுசாஸ்தி - கட்டளை. அனுசாதன் - தம்பி. அனுசாதை - தங்கை. அனுசாரம் - அடுத்துநடத்தல் ஆசரிப்பு, தொடர்தல், சுபாபம், தத்துவம், நடபடி, பலன், வழக்கம். அனுசாரி - உதவிக்காரன், சார்ந்து நடப்பவன், வழிபடுகிறவன். அனுசிதம் - அசுத்தம், தகுதியின்மை. அனுசிந்தை - தியானித்தல். அனுசை - தங்கை. அனுசோகம், அனுசோசனம் - துக்கம். அனுச்சிட்டம் - சுத்தம். அனுச்சுவரம் - முதனிலையாய் நின் றொலி தரும்விந்தெழுத்து. அனுடம் - ஓர்நாள். அனுட்டணம் - சத்தவிசனத்தொன்று, அஃது சோம்பு. அனுட்டானம் - அனுட்டிப்பு, தகுதி, துவக்கம், நிலை நிறுத்தல். அனுட்டித்தல் - ஆசரித்தல். அனுட்டிப்பு - ஆசரிப்பு. அனுதமம் - சிரேட்டமானது. அனுதரம் - ஏற்றுமதிக்கூலி, பட கேறுதல், மெலிவு. அனுதரிசனம் - பானபாத்திரம். அனுதரித்தல் - அணைத்தல், படகி லேற்றல், மெலிதல். அனுதாத்தம் - வேதநூற்பகுதி, படுத்தலோசை. அனுதாபம் - ஒன்றிற்கிரங்கல். அனுதாயம் - மனந்திரும்புதல். அனுதாரம் - இல்லொழுக்கம், பிசு னித்தனம். அனுதாவனம் - பின்றொடர்தல். அனுதினம் - எப்போழ்தும். அனுத்தமம் - அதமம். அனுத்தம் - பொய். அனுத்தரம் - ஒவ்வாமறுமொழி. அனுத்தானம் - முகங்குப்புறக்கிடத்தல். அனுத்தியோகம் - முயற்சியின்மை. அனுத்துவாகம் - பிரமசரியச்சன்னி யாசம். அனுத்தேகம் - விருப்பின்மை. அனுநயம் - விருந்தோம்பல். அனுநாசிகை - மெல்லினம். அனுநாதம் - எதிரொலி. அனுபதிதம் - இறங்குதல், போதல். அனுபஸதானம் - இன்மை. அனுபஸதி - இன்மை. அனுபஸதியேது - ஓரளவை, அஃது குளிரின்மை பனியின்மை காட்டு தல் போலும். அனுபந்தம் - ஒன்றிப்பு, தொடர் வினைக்கட்டு, ஒற்றுமை, காரண காரக சம்பந்தம், கூடுதல், முகனை. அனுபந்தன் - குழந்தை, மாணாக்கன். அனுபந்தி - தாகம், விக்கல். அனுபமை - தென்மேற்றிசை யானைக்குப் பெண்யானை, மேன்மை, உவமையின்மை. அனுபயோகம் - பிரயோசனமற்றது. அனுபல்லவம் - பதத்தில் முதற்சிற்றடி. அனுபல்லவி - பல்லவிக்கயற்பல்லவி. அனுபவப்படல் - உற்றறிதல். அனுபவம் - அனுபோகம், சுகபோகம், அனுபோகம், தோற்றுதல், பிறத்தல். அனுபவித்தல் - துய்த்தல். அனுபவிப்பு - அனுபோகம். அனுபாதகம் - பெருங்குற்றம். அனுபானம் - உடன்பருகுவது, மருந் தனுபானம். அனுபிவம் - அபிநயம், நிச்சயம். அனுபூதி - பிரமாணங்களைக் கொண்டறிந்தவறிவு. அனுபோகம் - அனுபவிப்பது. அனுபோகித்தல் - அனுபவித்தல். அனுப்பிராசம் - அனுராகம், வழி யெதுகை, விரகம். அனுப்பு - அனுப்புவது, அனுப்பென் னேவல். அனுப்புதல் - போகவிடுதல். அனுமக்கொடியோன் - அருச்சுனன். அனுமதி - சம்மதி, பௌரணை, ஒழுங்கு, கட்டளை, சதுர்த்தசி, சம்மதி. அனுமந்தன் - அனுமான். அனுமரணம் - அடுத்திறத்தல், உடன் கட்டையேறுதல். அனுமானப்பிரமாணம் - ஓரளவை, அஃது அனுமானத்தால் அன மேயத்தை யறிதல். அனுமானம் - காரியத்தாற் காரணத் தையறிவிக்கிற ஓர்பிரமாணம், கூட்டு, சந்தேகம், ஓர் பிரமாணம், அஃது உரைத்தவற்றைப் பிரமாண மாகக் கொண்டுரையாத பொருளை யறிதல். அனுமானாபாசம் - சந்தேகப் பிர மாணம். அனுமானானுமானம் - கருதலனு மானம். அனுமானிதம் - குதிரைக்கனைப்பு. அனுமானித்தல் - ஆர்த்தல், ஐயப் படுதல், குதிரைகனைத்தல். அனுமானோத்தி - நியாயசாஸ்திரம். அனுமான் - அஞ்சனைகுமரன், சிற்ப நூல்முப்பத்திரண்டினொன்று. அனுமிதி - அனுமானம். அனுமித்தல் - அனுமானித்தல். அனுமேயம் - ஓரளவை, அஃது அனு மானித்தறியப்படுபொருள். அனுமை - கண்ணின்புறவருகு, அருந் தாபத்தி. அனுமோதனம் - இன்பம், உவகை. அனுயோகம் - கண்டனை, கேள்வி, தியானம், மன்றாடுதல். அனுயோசனம் - கேள்வி. அனுரஞ்சகம் - திருத்தியாதல். அனுரஞ்சனம் - அன்பு, உருக்கங் காட்டுதல். அனுரதம் - பற்று, விருப்பம். அனுரதி - அன்பு. அனுராகபோகம் - காமானுபவம். அனுராகமாலை - ஓர்பிரபந்தம். அனுராகம் - அன்னியோன்னியப் பிரியம், தொடர்ந்தவிருப்பு, காமம். அனுருபம் - இணக்கம், தடை, மத்தி யட்சம். அனுரோதகம் - சம்மதித்தல். அனுரோதம் - பிறர்கருமம் முடித்தல். அனுலாபம் - கூறியதுகூறல். அனுலேபகம், அனுலேபம் -அபிடேகம். அனுலேபனம் - அபிஷேகம் பண்ணல், வாசனையூட்டல். அனுலோமசன் - அனுலோமன். அனுலோமன் - உயர்குலத் தந்தைக்கு மிழி குலத்தாய்க்கும் பிறந்த பிள்ளை. அனுவசனம் - ஒத்தவாக்கியம். அனுவதித்தல் - சொன்ன நியாயத்தை யேதிரும்பச் சொல்லல். அனுவர்த்தனம் - கடமைப்படுத்தல், பலன். அனுவழி - புதன். அனுவாகாரியம் - பிதிர்கருமம். அனுவாக்கியை - வேதமந்திரம். அனுவாசம், அனுவாசனம் - அன்பு, கூடியிருத்தல், வாசனையூட்டல், வேலைச் சாலை. அனுவாசிதம் - வாசனை யூட்டப் பட்டது. அனுவாதம் - முற்குறித்த பொருளைப் பற்றித் திரும்பச் சொல்லும் நியாயம், சம்மதம், நிந்தை. அனுவாதேயன் - அடையப் படாதவன். அனுவாரோகணம் - உடன்கட்டை யேறுதல். அனுவிரசனம் - வழிவிட்டனுப்பல். அனுவிருத்தி - உபசரணை, புறனடை. அனுற்பத்தி - தவறு, பிறப்பின்மை. அனூடன் - விவாகம் பண்ணாதவன். அனூபசம் - இஞ்சி. அனூபம் - ஈரம். அனூனம் - முழுமை. அனூரு - புதன், முடவன், அருணன். அனேகம் - ஒன்றுக்குமேற்பட்டது. அனேகாங்கவுருவகம் - ஓரலங்காரம், அஃது ஒன்றனங்கம் பலவற்றையு முருவகஞ் செய்துரைப்பது. அனேகாகாரம் - பலமாதிரி. அனேகாந்திகபேதம், அனேகாந்திகம் - அனைகாந்திகம். அனேடமூகம் - அணாப்பு, செவிடு மூமையும். அனை - ஓர்மீன். அனைகாந்திகம் - ஓரலங்காரம், அஃது காரணகாரியமொன்றற் கொன்று மாறு படக்கூறுவது. அனைக்கியம் - அன்னியோன்னிய விரோதம், பன்மை. அனைக்குமம் - ஐக்ககுறைவு, பன்மை. அனைசுவரியம் - வறுமை. அனைதாய் - நடுக்குறைவார்த்தை. அனைத்து - அவ்வளவு, எல்லாம். அனைய - உவமையுருபு. அனைவரும் - எல்லாரும். அன் - உயர்திணையாண்பாற் படர்க் கை யொருமைவிகுதி, சாரியை, இன்மைப்பொருள், எதிர்மறைப் பொருள், பிறிதின் பொருளிவை களைக்காட்டு மோருப சருக்கம். அன்பன் - நாயகன், பத்தன். அன்பு - ஆசை, தயை, நேசம், பெரி யோரியல்பினொன்று. அன்மயம் - சந்தேகம். அன்மொழி - பிறமொழி. அன்மொழித்தொகை - வேற்றுமைத் தொகை, வினைத்தொகை, பண்புத் தொகை, உவமைத்தொகை, உம்மைத் தொகையென்னுந் தொகைநிலைத் தொடர் மொழி களின் புறத்து அவையல்லாதபிற மொழிகள் தொக்குநிற்பன, (உம்) பொற்றொடி. அன்மை - அல்லாமை, தீமை. அன்வயம் - அன்னுவயம். அன்றில் - ஓர் புள், மூலநாள். அன்று - அசைச்சொல், அந்நாள், அல்ல. அன்ன - உவமையுருபு. அன்னகந்தி - வயிற்றுனைவு. அன்னகோட்டகம் - களஞ்சியம். அன்னகோட்டகன் - சூரியன், விட்டுணு. அன்னகோட்டம் - பண்டாரம். அன்னக்கொடியோன் - பிரமன். அன்னசத்திரம் - அன்னசாலை. அன்னசலம் - தாபரம். அன்னசாரம் - கஞ்சி. அன்னசுத்தி - நெய். அன்னதன், அன்னதாதிரு - அன்னங் கொடுப்பவன். அன்னதாதா - அன்னங் கொடுக் கிறவன். அன்னதானம் - அன்னக்கொடை. அன்னதாழை - ஓர் தாழை. அன்னத்தூவி-பஞ்சசயனத் தொன்று, அஃது அன்னஇறகு. அன்னபூமி - சோற்றுக்கும்பம். அன்னபேதி - ஓர்மருந்து. அன்னப்பிராசனம் - சோறூட்டல். அன்னமயகோசம் - பஞ்சகோசத் தொன்று, அஃது உடல். அன்னமயம் - உடல், போசன முள்ளது. அன்னமலம் - கஞ்சி. அன்னமுரசு - சோறிட இடும்பறை. அன்னம் - ஓர்புள், கவரிமா, சோறு, தயாவிருத்தி பதினான்கி னொன்று, அஃது உணவு கொடுத்தல், சாப்பாடு, தானியம். அன்னரசம் - உணாக்களிற்றேகத்திற் சேருஞ்சாரம். அன்னரேகை - ஓர்கைவரை. அன்னர் - அத்தன்மையர். அன்னலார் - பெண்கள். அன்னவம் - கடல். அன்னவாசயம் - உணாவசிக்குமிடம். அன்னவிகாரம் - இந்திரியக்கழிவு. அன்னவூர்தி - சரச்சுவதி, பிரமன். அன்னவூறல் - அன்னரசம். அன்னவேதி - ஓர்பூடு. அன்னாதன் - வளர்ப்புப்பிள்ளை. அன்னாபிடேகம், அன்னாபிஷேகம் - ஓரபிஷேகம். அன்னியகுணசகனம் - தயாவிருத்தி பதினான்கினொன்று, அஃது பிறர் குணத்தழுக்காறின்றிப் பொறுத்தல். அன்னியசன்மம் - மறுபிறப்பு. அன்னியசாகன் - பதிதன். அன்னியதாகர்த்தத்துவம் - ஒன்றை யொன்றாக்குந் தத்துவம். அன்னியதாசித்தி - அன்னியகாரணங் கொண்டு சுய காரணத்தானாய காரியத்தை மறுத்தல். அன்னியபுட்டம் - குயில். அன்னியபிருதம் - குயில். அன்னியமம் - நியமமல்லாதது. அன்னியம் - அயல், குயில், வித்தியாசம். அன்னியர் - ஈனர், பிறச்சாதியார், பிறர். அன்னியோன்னியகலகம் - அன்னி யோன்னியவிரோதம். அன்னியோன்னியவிரோதம் - பகை. அன்னியோன்னியம் - ஐக்கம், ஒன்றற் கொன்றிருக்கிற சம்பந்தம். அன்னுபாஷாணம் - வாதுசொன்ன பொருளையறிந் தனுமதியா திருத்தல். அன்னுவயம் - காரணகாரிய சம்பந்தம், சேர்த்திக்கை, வமிசம். அன்னுவயவிலக்கணம் - கருத்தா, கருமம், கிரியை, விசேடணம், விசேடியம் இவற்றின் சம்பந்தம். அன்னுவாசனம் - அனுவாசனம். அன்னுவாதேயம் - கணவன் வழியார் கொடுத்த நன்கொடை. அன்னுவாரோகணம் - அனுவா ரோகணம். அன்னை - அக்காள், தாய், தோழி. அன்னோ - அதிசயச்சொல், இரக்கச் சொல். அன்னோன்றி - பெலனற்றவன். ஆ ஆ - அஃறிணைப் படர்க்கை யெதிர் மறைப்பலவின் விகுதி, ஆச்சா மரம், ஆதலைச் செய்யென்னேவல், இச்சை, இரக்கம், எதிர்மறை, எருமை பசு மரையிவற்றின் பெண், ஓரெழுத்து, ஓர்வினை யெச்சவிகுதி, சொல் லிசை, வியப்பு, விலங்கின் பெண் பொது, வினா, அந்தம், இணைப்பு, உருக்கம், குறைவு, பிரிப்பு, இவற்றைக் காட்டு மோருபசருக்கம். ஆஅ - அதிசயச்சொல், அதிசய விரக்கச்சொல், இரக்கச்சொல். ஆக - உவமையுருபு, முழுவதும். ஆகடியம் - அநியாயம், கொடுமை. ஆகண்டலன் - இந்திரன். ஆகதம் - கந்தைப்புடைவை, புதுப் புடைவை. ஆகமப்பிரமாணம் - மூவளவையி னொன்று, அஃது தந்திரகலை, மந்திரகலை, உபதேசகலை யெனப்படும். ஆகமமலைவு - தருமநூல் சொல்லிய வாறேசொல்லாது பிறளக் கூறுவது. ஆகமம் - ஆகமநூல், கல்வி, மரப் பொது, மிகுத்தல், முதல்வன் வாக்கு, உறுதிக்கடுதாசி, ஒர் சாத்திரம், சேருதல், தருமநூல், தோன்றல் விகாரம். ஆகமனகாலம் - சங்கிராந்தி, பிரசவ காலம். ஆகமனம் - வந்துசேருதல். ஆகமன் - சிவன். ஆகம் - உடல், மார்பு, பாரை. ஆகம்பிதமுகம் - சினத்தானுஞ் சம்மதியானும் மேற்கீழ்த் தலை யாட்டல். ஆகம்பிதம் - சம்மதக்குறிகாட்டும் முகம். ஆகரணம் - ஏவுதல், பிடித்தல். ஆகரம் - உறைவிடம், குற்றுவாள், சுரங்கம், திரள், மண்வெட்டி, மேலானது. ஆகரன் - கள்வன். ஆகரி - ஓரிராகம். ஆகருஷணம், ஆகருஷித்தல் - இழுத் தல். ஆகருணனம் - கேட்குதல். ஆகருடணம் - அழைத்தல், கலை ஞான மறுபத்தினான்கினொன்று. ஆகருடணை - அழைத்தல். ஆகல் - ஆகுதல். ஆகலனம் - எண்ணுதல், பிடித்தல், விருப்பம். ஆகவபூமி - போர்க்களம். ஆகவம் - சீலை, போர். ஆகவனீயம் - வேதாக்கினி மூன்றி னொன்று. ஆகவனம் - பலி. ஆகற்பகம் - இருள், பச்சாத்தாபம், மதிகெடல், முடிச்சு. ஆகற்பம் - அதிகப்படுத்தல், அலங் காரம், நோய். ஆகனம் - கன்னக்கருவி, பாரை. ஆகனிகம் - எலி, பன்றி, மண்ணகழ் கருவி. ஆகனிகன் - ஒட்டன், கள்வன். ஆகன்னம் - காது. ஆகா - எதிர்மறைப் பன்மைப் படர்க்கை வினைமுற்று கந்தருவர், வியப்புச்சொல். ஆகாக்களங்கு - மிறுதாறுசிங்கி, அஃது முப்பத்திரண்டு பாஷாணத் தினொன்று. ஆகாங்கிசை, ஆகாங்கிஷை - மிகு விருப்பு. ஆகாசகபாலம், ஆகாசகபாலி - புரளிக் காரன். ஆகாசகபாலி - மிகவல்லபன். ஆகாசக்கத்தரி - ஓர்கத்தரி. ஆகாசக்கல் - சூரியகிரணத்தணு. ஆகாசதீபம் - தீபாபலித்தீபம். ஆகாசத்தாமரை - அந்தரத்தாமரை, பொய். ஆகாசப்பட்சி - சாதகப்புள். ஆகாசமண்டலம் - பரதவுறுப்பு ளொன்று. ஆகாசமயம் - சூனியம். ஆகாசமார்க்கம் - அந்தரவழி. ஆகாசம் - அந்தரம், வெளி, இடம், ஓர்பூதியம். ஆகாசயானம் - அந்தரகமனரதம். ஆகாசவல்லி - ஓர்கொடி, சீந்தில். ஆகாசவாசிகள் - அந்தரசஞ்சாரிகள், பதினெண்கணத்தினொன்று. ஆகாசவாணி - அசரீரி வார்த்தை. ஆகாசேசன் - இந்திரன். ஆகாதம் - அடி, குளம், கொலை, கொலைக்களம். ஆகாத்தியம் - பொல்லாங்கு. ஆகாமியம் - அக்கிரமம், முக்கன்மத்தி னொன்று. ஆகாயகணம் - நிரையசை யிரண்டு நேரசையொன்றுமாக வருவது (உம்) திரையெறிநீர். ஆகாயகமனம் - அந்தரமார்க்கமாய்ப் போதல், கலைஞான மறுபத்தி னான்கினொன்று. ஆகாயகருடன் - சீந்தில். ஆகாதனம் -கொலை, கொலைக்களம். ஆகாயத்தின் கூறுபாடு - இராகம், துவேசம், பயம், மோகம், இலச்சை என்பன. ஆகாயபதவி - திருச்சங்குப்பதவி. ஆகாயப்பிரவேசம் - அந்தரத்துட் புகுதல், கலைஞானமறு பத்தி னான்கினொன்று. ஆகாயமாஞ்சி - சிறுசடமாஞ்சி. ஆகாயம் - அட்டமூர்த்தத்தொன்று, பஞ்சபூதியத்தொன்று, வான். ஆகாயவழுதலை - ஓர்வழுதுணை. ஆகாயவீதி - நட்சத்திரவீதி. ஆகாரகுத்தி - மாசாலம். ஆகாரசம்பவம் - நிணம். ஆகாரணம் -அழைத்தல். ஆகாரதாகம் - வீடுசுடுதல். ஆகாரம் - நெய், போசனம், மனைப் பொது, வடிவு, அடையாளம், ஓரெழுத்து. ஆகாரி - உயிர், பூனை. ஆகாவம் - நீர்த்தொட்டி, யுத்தம். ஆகிஞ்சனம் - தரித்திரம். ஆகிரதம் - வணங்கல். ஆகிரம் - விரிவு. ஆகிருதி - அங்கம், மாதிரி, அடிதோறு மிருபத்திரண்டு அசை கொண்டு நான்கடியாய் முடியும் பாட்டு, உடல். ஆகிருநந்தனம் - புன்குமரம். ஆகு - எலி, கொப்பூழ், சாமரை, பெருச்சாளி, கள்வன், பன்றி. ஆகுகன் - கணபதி. ஆகுஞ்சனம் - அடக்குதல், குவித்தல், விளைத்தல். ஆகுண்டிதம் - கோழை. ஆகுதம் - உயிர்க்குறுதிசெய்தல். ஆகுதி - ஓமாக்கினியினெய்விடுதல், பலி. ஆகுபாஷாணம் - வெள்ளைப் பாஷாணம். ஆகுபுகு - பூனை. ஆகுபெயர் - சம்பந்தமானவொன்றின் பெயர் மற்றொன்றிற்கு வழங்கு வது. ஆகுரதன் - கணபதி. ஆகுலத்துவம், ஆகுலம், ஆகுலி - கலக்கம். ஆகுலம் - ஆரவாரம், ஒலி, துன்பம், வருத்தம். ஆகுலித்தல் - அழுதல், ஆரவாரித் தல், வருந்துதல். ஆகுவாகனன் - விநாயகன். ஆகுளி - சிறுபறை. ஆகுனி - வாதமெண்பதினொன்று. ஆகூதம் - அழைப்பு, கருத்து, விருப்பம். ஆகேடகம் - வேட்டை. ஆகோடிபம் - தடை, மறியல். ஆக்கச்சொல் - ஆக்கம் பெற்று வருஞ்சொல். ஆக்கஞ்செப்பல் - பத்தவத்தையி னொன்று, அஃது தன்மன வருத் தத்தைப் பிறர்க்குரைத்தல். ஆக்கதம் - முதலை. ஆக்கம் - ஆகுதல், இலக்குமி, இலாபம், எழுச்சி, கொடிப் படை, செலவம், படைவகுப்பு, பொன். ஆக்கல் - சமைத்தல், செய்தல், படைத்தல். ஆக்கவினை - ஆக்கத்தால் வரும் வினைச்சொல். ஆக்கவினைக்குறிப்பு - ஆக்கச்சொல் விரிந்தேனுந்தொக்கேனு நிற்பது (உம்) பெரியன். ஆக்கவும்மை - ஆக்கத்தைக் காட்டு மிடைச்சொல் (உம்) பாலுமாம் மருந்துமாம். ஆக்கியம் - நாமம். ஆக்கியாதம் - சொல்லல். ஆக்கியாபித்தல் - கட்டளையிடல். ஆக்கியானம் - கட்டுக்கதை. ஆக்கியோன் - செய்தோன், படைத் தோன். ஆக்கிரகம் - கடுங்கோபம், தத்துவம், தாபரிப்பு, மேற்கொள்ளுதல். ஆக்கிரந்திதம் - குதிரையின் விரைவு நடை. ஆக்கிரமம் - ஆங்காரம், சூரம், பொல்லாங்கு, அடைதல், எதிர்த் தல், கடத்தல், சுமத்தல், பரப்பல், விரித்தல். ஆக்கிரகாயணி - யாகமிருபத் தொன்றி னொன்று. ஆக்கிரகித்தல் - உக்கரித்தல், தரபரித் தல், வெல்லல். ஆக்கிரமித்தல் - ஆங்காரம் பண்ணு தல். ஆக்கிரயணம் - யாகமிரு பத்தொன்றி னொன்று. ஆக்கிராணம் - மூக்கு, மூக்குப் பொடி, திருத்தி, மணத்தல். ஆக்கிராணவிந்திரியக்காட்சி - ஓரளவை, அஃது கந்தமறிதல். ஆக்கிராணவிந்திரியம் - மூக்கு. ஆக்கிராணித்தல் - மூக்கிற்றூளிடுதல். ஆக்கிராந்தி - கடந்துபோதல், மேற் கொள்ளுதல். ஆக்கிராயணம் - விளைவுகாவல் செய்தல். ஆக்கிரிஷம் - கோபம். ஆக்கிரீடம் - ஆராமம், பொழுது போக்கு. ஆக்கிரோசகம், ஆக்கிரோசம் - ஆணை, சாபம், துற்பாவனை. ஆக்கிரோசனம் - சாபம். ஆக்கினாகரணம் - கீழ்ப்படிதல். ஆக்கினாகரன் - ஏவல்செய்வோன். ஆக்கினாசக்கரம் - ஆணை, செங் கோன் முறைமை. ஆக்கினாபங்கம் - கீழ்ப்படியாமை. ஆக்கினாபத்திரம் - கட்டளைச் சட்டம். ஆக்கினிஸநானம் - எழுவகை ஸநானத்தொன்று, அஃது விபூதி யுத்தூளன மாய்ப் பூசுதல். ஆக்கினேயம் - பதினெண்புராணத் தொன்று, அஃது அக்கினி புராணம். ஆக்கினை - கட்டளை, தண்டனை, ஆறாதாரத்தொன்று, அஃது இலாடத்தானம். ஆக்குதல் - ஆகச்செய்தல், சமைத்தல். ஆக்குரோசம் - கோபம், மூர்க்கமான சத்தம். ஆக்குரோசனம் - வைதல். ஆக்குவயம் - நாமம். ஆக்கொல்லி - ஓர்புழு, தில்லைமரம். ஆக்கை - உடம்பு. ஆங்க - ஓரிடைச்சொல், அஃது அசை நிலை, (உம்) ஆங்கத் திறனலயாங் களற, இடப்பொருள், (உம்) ஆங்காங்காயினுமாக. ஆங்காரம் - இறுமாப்பு, கெறு. ஆங்காரி - செருக்கன். ஆங்காரித்தல் - செருக்குதல், மூர்க்கங் காட்டுதல். ஆங்காலம் - ஆகுங்காலம். ஆங்கிரம் - அட்டாதசவுபபுராணத் தொன்று. ஆங்கீரச - ஓர் வருடம். ஆங்கிரசம் - தருமநூல் பதினெட்டி னொன்று. ஆங்கிரசன் - சத்தவிருடிகளிலொரு வன். ஆங்கு - அசைச்சொல், (உம்) விருந் தொக்கறானென்றாங்கு அவ் விடம் உவமைச்சொல் (உம்) மகற் கண்டதாய்மறந் தாங்கு. ஆங்ஙனம் - அங்ஙனம். ஆசகவம் - சிவன்வில். ஆசகாரம் - சிவனேறு. ஆசங்கம் - அடர்த்தி, கூட்டம், சேர்த்திக்கை. ஆசங்கித்தல் - அய்யங்கொள்ளல். ஆசங்கை - அய்யம், பயம். ஆசத்தி - சம்பாத்தியம், தத்துவம். ஆசந்தன் - விட்டுணு. ஆசந்தி - பாடை. ஆசமனம் - உட்கொள்ளல், சிறுக நீருட்கொள்ளல். ஆசமன்கம் - துப்பற்காளாஞ்சி. ஆசமனியம் - ஆசமனஞ் செய்தற் குத்தகுதியானநீர். ஆசமித்தல் - நீர் முதலியவற்றைச் சிறுகவுட் கொள்ளல். ஆசம் - சிரிப்பு, இருக்கை, உரைகல், நெய், வில்லு. ஆசயம் - தங்குமிடம், அதிட்டம், ஆதனம், இட்டம், இரைக்குடர், குணம், சுபாவம், புகலிடம், மனம். ஆசரணம் - ஆசரணை. ஆசரணை - ஆசரிப்பு, வழிபாடு. ஆசரித்தல் - கைக்கொள்ளுதல், கொண்டாடுதல், வழிபடுதல். ஆசரிப்பு - கொண்டாட்டம், வழிபாடு. ஆசரிப்புக்கூடாரம் - வழிபாட்டுப் படாம் வீடு. ஆசவத்திரு - பனைமரம். ஆசவம் - கள். ஆசவுசம் - ஆசூசம். ஆசறுதி - முடிவு. ஆசனம் - இராசசின்னத்தொன்று, இருப்பு, பீடம். ஆசனவாயில் - மலவாயில். ஆசனனகாலம் - பின்னேரம், மரண வேளை. ஆசனனம் - பின்பொழுது. ஆசனன் - சுக்கிரன். ஆசனாத்தம் - நிலைக்கண்ணாடி. ஆசாகி - சீந்தில். ஆசாடம், ஆஷாடம் - ஆடிமாதம், முருக்கு. ஆசாட்டம் - அசுகை, தோற்றம். ஆசாதிதம் - பெறுபேறு. ஆசாபங்கம் - நம்பிமோசம் போதல். ஆசாபந்தம் - சிலம்பிநூல், நம்பிக்கை. ஆசாபாசம் - ஆசைமயக்கம், ஆசை யாகிய கட்டு. ஆசாரசாவடி - ஆசாரவாயில், பொதுச் சாவடி. ஆசாரபோசன் - பெருந்தேகி. ஆசாரம் - அரசிருக்கை, ஒழுக்கம், சீலை, சுத்தம்,பெருமழை, வழி பாடு, கட்டளை, படை வளைப்பு, முப் பொருளினொன்று, அஃது அறப் பொருள், வழக்கம். ஆசாரவாயில் - வெளிவாயில். ஆசாரியவிருத்தனம் - ஆசாரியதி காரம். ஆசாரி, ஆசாரியன் - உவாத்தி, கம் மாளன், குரு, பணிக்கன். ஆசாரியாபிடேகம் - குருவுத்தி யோகத் திற்கு நியமித்தல். ஆசாள் - தலைவி. ஆசானுவாகு - உத்தமபுருடன், முழந் தாளளவு நீண்டகையுடையோன். ஆசான் - உவாத்தி, கம்மாளன், குமரன், குரு, சுக்கிரன், தலைவன், பணிக்கன், பாலையாழ்த்திறம், மூத்தோன், வியாழம், அருகன். ஆசி - வாழ்த்து, ஆசியென்னேவல், சமநிலம், நிந்தை, யுத்தம். ஆசிகன் - வாட்காரன். ஆசிக்கல் - காகச்சிலை. ஆசிடை - கூட்டம், சீலை, வாழ்த்து. ஆசிடை - ஆசாக இடையிட்டுக் கொண்ட சொல். ஆசிடையிட்டெதுகை - பதத்தின் முதலெழுத்திற்கு மிரண்டா மெழுத்திற்குமிடையே பிறிதோர் மெய்பெற்றுவழங்கு மெதுகை (உம்) ஆ வேறு பால்வேறு. ஆசிதம் - ஆசனம், நகரம், பத்துப் பறை கொண்டது. ஆசிதையன் - நாவிதன். ஆசித்தல் - விரும்பல். ஆசிப்பு - ஆசை. ஆசியபத்திரம் - தாமரை. ஆசியம் - அவமதிச்சிரிப்பு, முகம், அவ்விடம், முகம், வாய். ஆசியாசவம் - உமிழ்நீர். ஆசிரபம் - மூலநட்சத்திரம். ஆசிரம் - இடம், தீ. ஆசிரயம் - இடம், இருத்தல், கொழு கொம்பு, சமீபம், புகலிடம், வழக்கு, வாசம். ஆசிரயன் - தற்காப்போன். ஆசிரியத்தனை - ஆசிரியப் பாவிற் குரியதளை, அஃது மாநாள் என்னும் வாய்பாடுகளின் பின்னே ரசையும் விளமலர் என்னும் வாய் பாடுகளின் பின்னிரையசையும் வருவது. ஆசிரியத்தாழிசை - அகவற்பா வினத்துளொன்று, அஃது எனைத்துச் சீரானுந்தம் முளள பொத்து மூன்றடியாய்த் தனித் தேனும் ஒருபொருண் மேல் மூன்றடுக்கியேனும் வருவது. ஆசிரியத்துறை - அகவற்பாவினத்து ளொன்று, அஃது எனைத்துச் சீரானும் வருமடி நான்குடைத் தாய் ஈற்றயலடி குறைந்தேனு மிடை மடங்கியேனு முதலடியு மூன்றாமடியுங் குறைந்தேனும் வரும். ஆசிரியநிலைவிருத்தம் - அடிமறியா தேவருவது. ஆசிரியமண்டலவிருத்தம் - அடிமடி யாகவருவது. ஆசிரியப்பா, ஆசிரியம் - ஐந்துபாவி னொன்று அஃது அகவல், இணக் கம், உடன்பிடிக்கை, உபத்திரவம், இருத்தல், கொளு கொம்பு. ஆசிரியவசனம் - குருவாக்கியம், பதினான்குரையிலோருரை. ஆசிரியவிருத்தம் - ஓர் கவி, அகவற் பாவினத்துளொன்று, அஃது அள பொத்தகழி நெடிலடிநான்கினான் வருவது. ஆசிரியவுரிச்சீர் - அகவற்குரியசீர். ஆசிரியன் - உவாத்தி, குரு, நுலாசிரி யன். ஆசிலேடம் - ஆலிங்கனம். ஆசினி - ஆகாயம், ஈரப்பலா, மர வயிரம், மரவுரி. ஆசீயம் - கருஞ்சீரகம். ஆசீர்வசனம் - ஆசிகூறல். ஆசீர்வாதம் - வாழ்த்து. ஆசீவகர் - சமண்முனிவர். ஆசீவம், ஆசீவனம் - சீவனம். ஆசு - அற்பம், இருகுறணேரிசை முன்னிற்பது, இலக்கு, கவசம், குற்றம், கைக்கவசம், சடுதி, நாற் கவியினொன்று, முப்பத்திரண்டு பாஷாணத்தொன்று, ஆசுமணை, கைக்கருவி, பற்றாசு, வெண்பா வினிடையிட்டுக் கொண்ட சொல். ஆசுகம் - அம்பு, காற்று, பறவை. ஆசுகவி - நாற்கவியினொன்று அஃது பொருளடி பாவணி முதலி யன கொடுத்து மற்றொருவன் பாடுகவெனப் பாடுங்கவி. ஆசுகன் - காற்று. ஆசுகி - புட்பொது. ஆசுபத்திரி - ஓர்மரம். ஆசுமணை - நூல்சுற்றுங்கருவி. ஆசுரதம் - சம்மதித்தல். ஆசுரம் - பெண்ணுக்குஞ் சுற்றுத் துக்கும் வேண்டுவன கொடுத்துக் கொள்ளும் மணம். ஆசுரவைத்தியம் - இரணவைத்தியம். ஆசுரி - இரணவைத்தியன். ஆசுவயம் - வேதநுட்பம். ஆசுவயுசி - யாகமிருபத்தொன்றி னொன்று. ஆசுவலாயநீயம் - உபநிடதம் முப் பத்திரண்டினொன்று. ஆசுவினம், ஆசுவீசம் - ஐப்பசிமாதம், ஐப்பசி. ஆகுசம் - சூதகம். ஆசூடனம் - உரிஞுதல். ஆசெதுகை -ஆசிடை யிட்டெதுகை. ஆசேசனம் - தெளித்தல். ஆசை - திசை, பொன், மனத்தீக் குணம் மூன்றினொன்று, மாயை யாக்கை பதினெண்குற்றத்தொன்று, விருப்பம், அன்பு, நீளம். ஆசைப்பெருக்கம் - அவா. ஆசையறுத்தல் - மனதினற்குணந் நான்கினொன்று, அஃதுவிருப் பகற்றல். ஆசோத்தியம் - ஆயாசமின்மை. ஆசோதை - இளைப்பாறல். ஆசௌசம் - அசுத்தம், ஆசூசம், தீட்டு. ஆச்சரியம் - அதிசயம். ஆச்சா - ஓர் மரம். ஆச்சாட்டு - சிற்றீரம். ஆச்சாதம், ஆச்சாதனம் - உறை, புடைவை, மூடி, மேலங்கி. ஆச்சி - தாய். ஆச்சிபூச்சி - ஓர் விளையாட்டு. ஆச்சியம் - நெய். ஆச்சிரமம் - நிலை, பன்னசாலை. ஆச்சிரமி - ஆச்சிரமத்தையுடை யோன். ஆச்சிரயம் - ஒருவனையடுத்திருத்தல். ஆச்சிராமம் - ஆளுகைசெல்லுமிடம். ஆச்சிலை - கோமேதகம். ஆச்சுரிதகம் - குதிரைக்கனைப்பு, நொடித்தல். ஆச்சேதம், ஆச்சேதனம் - நறுக்குதல், வெட்டுதல். ஆச்சோதனம் - வேட்டை. ஆஞ்சனேயன் - அனுமான். ஆஞ்சான் - அந்தரிப்பாயசைவது, கட்டிச்சாம்புங்கயிறு, நிறுக்குங் கருவிகளின் கயிறு, மரக்கலப்பாய் கட்டுங்கயிறு. ஆஞ்சி - அலையல், ஏலம், கூத்து, சோம்பல், விளையாடல். ஆஞ்சில் - ஓர் விதப்பூடு. ஆஞ்செலகை - கப்பல், தெப்பம். ஆஞ்ஞை - ஆஞ்ஞை ஆறாதாரத் தொன்று, அஃது நெற்றித்தானம். ஆடகத்தி - குங்குமபாஷாணம். ஆடகம் - துவரை, நால்வகைப் பொன்னுளொன்று, பொன். ஆடகி - துவரை. ஆடகூடம் - செப்புமலை. ஆடம் - இருபதுகொத்துக் கொண்ட ஓரளவு. ஆடம்பரம் - இடம்பம், வேடிக்கை, கண்மடல், கோபம், சந்தோஷம், துவக்கம், பெருமை, போர்ப்பறை, யானை பிளிறொலி. ஆடரி - சுப்பிரமணியன். ஆடல் - அசைதல், குளித்தல், கூத்தாடல், செய்தல், சொல்லல், நயச்சொல், புணர்தல், பொருதல், விளையாடல், கூத்து, வார்த்தை, விசயம். ஆடவர் - ஆண்மக்கள், இளையோர், பிராயம் முப்பத்திரண்டிற்குந் நாற் பத்தெட்டிற்கு மிடைப்பட்டவர் இவர் மன்னரெனவும் படுவர், புருடர். ஆடவவிருத்தம் - வயதுநாற்பத் தெட்டிற்கும் அறுபதிற்குமூடான பருவம், இஃது மூத்தோனெனவும் படும். ஆடவள் - பெண், விருத்தை. ஆடவன் - புருடன், வயது முப்பத்தின் மேல் நாற்பத்தெட்டுக்குட்பட்ட வன். ஆடவை - மிதுனவிராசி, ஏவல், பெண். ஆடாதோடை - பாவட்டை. ஆடி - உத்திராடநாள், ஓர் மாதம், கண்ணாடி, காற்று. ஆடிப்பட்டம் - ஆடிப்பருவத்திற் பயிரிடல். ஆடு - அசம், ஆடென்னேவல், மறி யாடு, மேடவிராசி, வெற்றி, கூத்து, கூர்மை. ஆடுகால் - துலாநிற்குமரம். ஆடுதல் - ஆடல். ஆடுதின்னாப்பாலை - ஓர் கொடி. ஆடுதொடை - தொடையின் கீழ்ப் புறம். ஆடுபந்தர் - நடைப்பந்தர். ஆடுமாலை - ஓரிடத்துந்தரித்திராதவர். ஆடூஉ - ஆண்மகன். ஆடூவறிசொல் - ஆண்பால்மொழி. ஆடை - சித்திரைநாள், சீலை, பால் முதலியவற்றினாடை, போர்வை. ஆடையொட்டி - ஒட்டுப்புல், சீலைப் பேன். ஆடோபம் - பெருமை, வாயு. ஆட்காட்டி - ஓர் புள், சுட்டுவிரல். ஆட்கொல்லி - கொலைகாரன், பணம். ஆட்கொள்ளுதல் - அடிமைக் கொள் ளுதல், உருக்கொள்ளுதல். ஆட்சபணம் - உபவாசம். ஆட்சபாடிகன் - நியாயாதிபதி. ஆட்சபாதன் - தருக்கசாத்திரி. ஆட்சாரணம் - குற்றச்சாட்டு, நிந்தனை. ஆட்சாரம் - குற்றச்சாட்டு. ஆட்சி - ஆண்மை, ஆளுகை, உரிமை, நிலையினொன்று, நன்னிமித்தம், பழக்கம், முயற்சி. ஆட்சேபகம் - குற்றச்சாட்டு, நோய், வலி. ஆட்சேபனம் - எதிர்நியாயம். ஆட்சேபம் - தடைபண்ணுதல், நியாயத்தைத் திரும்பத்திரும்பக் கொடுத்தல், வழக்குரைத்துத் தள்ளுதல். ஆட்சேபித்தல் - தடை, மறுத்தல். ஆட்டமடித்தல் - ஓர் விளையாட்டு. ஆட்டம் - அசைவு, அலைவு, உவமை யுருபு, சூதாடுதல், சூதுமுதலிய வற்றினோமுறைவிளையாட்டு, தன்மை. ஆட்டல் - அசைத்தல், கூத்தாட்டுதல், நடப்பித்தல். ஆட்டி - ஆட்டுவோன், தலைவி, பெண். ஆட்டு - அலைப்பு, ஆடுந்தன்மை, ஆட்டுந்தன்மை, ஆட்டென் னேவல், கூத்து, தத்துவம். ஆட்டுக்கல் - அமுத பாஷாணத்தி னொன்று. ஆட்டுக்காற்கல் - கொக்கைக்கல். ஆட்டுதல் - ஆடச்செய்தல். ஆட்டுவாகனன் - அக்கினிதேவன். ஆட்டுவாணிபன் - கசாப்புக்காரன். ஆட்டை - ஆண்டு. ஆட்படுதல் - அடிமைப்படுதல், தலைப்படுதல். ஆணம் - அன்பு, ஆணவம், குழம்பு, கொள்கலம். ஆணர் - நன்மை, பாணர், வளமை. ஆணவமலம் - அறியாமை, சுபாப மயக்கம், மும்மலத்தொன்று, மூலமலம், அஃது உடம்பையா னென்றிருக்கை. ஆணவம் - ஆங்காரம், நான்பெரியவ னென்கிறகுணம், மூலமலம். ஆணாள் - ஆண்டன்மையுடைய பெருநாள். ஆணி - உரையாணி, எழுத்தாணி, காயாணி, தைக்கிறவாணி, முதன் மை, மேன்மை, எல்லை, வாளலகு. ஆணிக்குருகு - அடிக்குருகு. ஆணிச்சீ - மூலச்சிதல். ஆணித்தங்கம் - உயர்ந்தபொன். ஆணித்தரம் - முதற்றரம். ஆணிமுத்து - வயிரமுத்து. ஆணெழுத்து - குற்றெழுத்து. ஆணை - அடையாளம், ஏவல், சத்தியம், சபதம், தடுத்தல், நிண் ணயம், மெய், வெற்றி. ஆணையாசக்கரம், ஆணையா சக்கிரம் - அரசாட்சித் தத்துவம். ஆணையிடுதல் - சத்தியம்பண்ணல். ஆணைவழிநிற்றல் - வேளாண்மை மாந்தரியல்புளொன்று. ஆண் - ஆண்பாற்பொது, ஆண் மகன், தலைமை. ஆண்குமஞ்சான் - குங்குலியம். ஆண்குறி - ஆடவக்குறி. ஆண்டகை - இராசா, சிறந்தோன், வீரன். ஆண்டகைமை - ஆண்டன்மை,வீரம். ஆண்டண்டு - காதிற்புறவருகு. ஆண்டலை - கோழி, படைத்தலைவன். ஆண்டலைக்கொடியோன் - குமரன். ஆண்டவன் - அரசன், ஆளுகை செய் கிறவன், எசமான், கடவுள். ஆண்டளப்போன் - வியாழம். ஆண்டி - தவசி, பண்டாரம், யாசகி. ஆண்டிச்சி - பண்டாரத்தி. ஆண்டு - அவ்விடம், வருடம். ஆண்டை - அவ்விடம், எசமான். ஆண்டையர் - மனிதர். ஆண்டொழின்மைந்தன் - அருச்சுனன். ஆண்பால் - ஆண்பகுதி, புல்லிங்கம். ஆண்பாற்பிள்ளைக்கவி - காப்பு முதற் சிறுதேரீறாய்ச் சொல்லப் படும் பத்துறுப்புக்களும் பப்பத்து விருத்தத்தான் முடியப் பாடுவது. ஆண்மகன் - ஆணிற்சிறந்தோன், மகன், மனிதன். ஆண்மரம் - அகவயிரமுள்ளமரம், செம்மரம். ஆண்மாரி - மூர்க்கமுடையாள். ஆண்மை - ஆண்டன்மை, திடன், மனமுயற்சி, மெய், வலி. ஆண்மைச்சினைப்பெயர் - ஆண் பாலையே விளக்கிநிற்குஞ் சினைப் பெயர், (உம்) முடவன். ஆண்மைச்சினைமுதற்பெயர் - ஆண் பாலையே விளக்குஞ்சினை முதற் பெயர் (உம்) முடக்கொற்றன். ஆண்மைமுதற்பெயர் -ஆண் பாலையே விளக்கி நிற்குமுதற் பெயர், (உம்) சாத்தன். ஆண்மைமுறைப்பெயர் - ஆண் பாலையே விளக்கிவரு முறைப் பெயர் (உம்) தந்தை. ஆண்வழி - தந்தைவழி. ஆதங்கம் - ஆபத்து, உபத்திரவம், கலகம், தீங்கு, காய்ச்சல், நோய், பயம், பறையொலி. ஆதஞ்சனம் - அழித்தல், உபத்திரவம், உறையிடல், தீவிரம், பஸ்ம மாக்கல். ஆதண் - நோய், வருத்தம். ஆதண்டை - காற்றோட்டி. ஆதபத்திரம் - குடை. ஆதபம், ஆதவம் - ஒளி, குடை, வெயில். ஆதபவாரணம் - குடை. ஆதபன் - சூரியன். ஆதம் - ஆதரவு, கூந்தற்பனை, விருப்பு. ஆதரம் - அன்பு, ஆசை, ஊர், சங்கிப்பு, சிலம்பு, கேள்வு, சங்கை, துவக்கம். ஆதரவு - அன்பு, தாபரம், விருப்பம். ஆதரவுசெய்தல் - அன்புபண்ணுதல், தாங்குதல். ஆதரிசம் - பளிங்கு, வியாத்தி. ஆதரிசனம் - கண்ணாடி. ஆதரித்தல் - அன்புவைத்தல், சங்கித் தல், தாபரித்தல். ஆதர் - அறிவிலார், குருடர். ஆதலை - உதவி, தாபரிப்பு. ஆதல் - ஆகுதல், கல்விநூல், கூத்து, தெரிதல், நுணுக்கம். ஆதவம் - ஒளி. ஆதவன் - சூரியன், பார்ப்பான். ஆதளை - ஆமணக்கு, மாதளை, ஆயாசம். ஆதனம் - ஆசனம், சீலை, நிலைமை, பார்வை, விசாலம். ஆதன் - அறிவிலான், உயிர், குரு, குருடன், அருகன். ஆதாயம் - இலாபம், நன்மை. ஆதாரகாரகம் - தானப் பொருளைக் காட்டு முருபுடைப்பெயர். ஆதாரம் - அடி, அத்திபாரம், ஈடு, உடல், காக்குதல், தாபரம், நிலை, மழை, தானம், பாத்தி, வாய்க்கால். ஆதாளி - இரைச்சல், கலக்கடி, சத்தம், புரட்டல், வீம்புபேசல். ஆதாளித்தல் - ஆயாசப்படுதல். ஆதானம் - இஸ்தாபனம், ஈடு, ஏற்றுக் கொள்ளுதல், சங்கற்பித்தல், பெறுதல். ஆதானிகம் - கருப்பாதானம். ஆதி - இறைவன், எப்பொருட்கு மிறைவன், ஓர் தாளம், கடவுள், சூரியன், நேரோடல், பழமை, பிரதானம், மண்டிலமாயோடல், மிருதபாஷாணம், முதல், அதிசியம், இடம், ஈடு, எழுவாய், சூத்திரம், தொன்மை வனப்பு, அஃது பழங் கதை கூறுதல், மனவிருப்பம். ஆதிகடுஞ்சனி - மகம். ஆதிகம் - சிறுகுறிஞ்சா. ஆதிகரன் - பிரமன். ஆதிகாரணகாரியம் - முதற்காரியத் தாற் காரியப்படுவது. ஆதிகாரணம் - முதற்காரணம். ஆதிகாரணவகத்திணை - முதற் காரணவகத்திணை, (உம்) மண் ணாலாய குடம். ஆதிக்கடுஞ்சாரி - நவச்சாரம். ஆதிக்கம் - உயர்ச்சி, முதன்மை. ஆதிக்கல்பேதம் - அன்னபேதி. ஆதிக்கன் - பெரியவன், மேன்மகன். ஆதிக்குடி - சவர்க்காரம். ஆதிக்குரு - முப்பூ, அஃது பஞ்ச லோகங்களைப் பேதிக்கச் செய்வது. ஆதிசாரம் - சிற்பநூன் முப்பத்தி ரண்டினொன்று. ஆதிசைவம் - சைவம்பதினாறி னொன்று. ஆதிச்சரக்கு - சூதம். ஆதிச்சனி - மகநாள். ஆதிட்டம் - சேடம். ஆதிட்டி - பிரமசாரி. ஆதிதாரணம் - ஈடு. ஆதிதேவன் - நாராயணன். ஆதித்தமணி - சூரியன், முத்து. ஆதித்தமண்டலம் - மும்மண்டலத் தொன்று, அஃது இதயகமல முதற் கண்டத்தானமளவும். ஆதித்தம் - காவிக்கல், துருசு. ஆதித்தர் - வானோர். ஆதித்தன் - சூரியன். ஆதித்தன்கூர்மை - இலவண பாஷாணம். ஆதித்தன்மத்திமச்சா - ஆதித்தனுக்குக் கற்கடக முதலாறிராசியிற் கண்டசா. ஆதித்தியசா - ஆதித்தனுடையசா வாக்கியம். ஆதித்தியம் - உபசரணை, கவனித்தல். ஆதித்தியன் - சூரியன், தேவன். ஆதிநாதர் - நவநாதசித்தரிலொருவர். ஆதிநூல் - முதனூல், வேதம். ஆதிபத்தியம் - அதிகாரம், தலைமை. ஆதிபன் - இராசா, எப்பொருட்கு மிறைவன். ஆதிபத்தியம் - தத்துவம், மகத்துவம். ஆதிபுங்கவன் - அருகன். ஆதிபுங்கவன் - கடவுள், அருகன். ஆதிபூதம் - அதிட்டான பூதம். ஆதிபோகம் - ஈடுவைத்ததைப் பாவித் தல். ஆதிமகாகுரு - துரிசு. ஆதிமகாநாதம் - உலோகமணல். ஆதிமடக்கு - ஓரலங்காரம். ஆதிமுதல், ஆதிமூலம் - எல்லாவற் றிற்குமுன், முதன்முதல், கடவுள். ஆதிமூர்த்தி, ஆதியங்கடவுள் - கடவுள், அருகன். ஆதியந்தம் - அடிமுடி, முதற்றொ டங்கி முடியுமட்டும். ஆதியரிவஞ்சம் - போகபூமியாறி னொன்று. ஆதியெழுத்து - முதலெழுத்து, அஃது உயிர்பன்னிரண்டு மெய் பதி னெட்டும். ஆதியொடிடைமடக்கு - ஓரலங்காரம், அஃது நான் கடிகளுளடியின் முத லினுமிடையினு மடக்கு வருவது. ஆதியொடுகடைமடக்கு - அஃது அடி களுள்முதலும்கடைமக்கிவருவது, ஓரலங்காரம். ஆதிரம் - நெய். ஆதிரவிச்சிலை - காவிக்கல். ஆதிரன் - பெரியோன். ஆதிராச்சியம் - ஏகாதிபத்தியம். ஆதிரை - திருவாதிரை. ஆதிரௌத்திரம் - சௌவீரம். ஆதிவராகன் - விட்டுணு. ஆதிவருணர் - பார்ப்பார். ஆதிவிந்து - நீலபாஷாணம், மழை. ஆதிவிராகன் - அருகன், சிவன், சோரபாஷாணம். ஆதிவிராட்டியம் - வெள்ளைப் பாஷாணம். ஆதிவிருத்திசந்தி - மொழிக்கு முதனின்றஇ-ஈ-ஏ-ஐயாகவும் உ-ஊ-ஒ- ஒளவாகவும் அகரம் ஆகார மாகவும் இரு ஆராகவுந்திரிவது. ஆதீபனம் - கோலஞ்செய்தல். ஆதீனம் - ஆஸ்தி, உடைமை, உரிமை, வமிசம், ஆளுகை. ஆதினவம் - கீழ்ப்படியாமை, மீறுதல். ஆது - ஆறனுருபு, யானையைப் பாகர் தட்டுமோசை, தெட்பம். ஆதுரம் - அவா, நோய். ஆதுரன் - ஆசையுற்றோன், நோயுற் றோன். ஆதுலர்க்குச்சாலையளித்தல் - அற முப்பத்திரண்டினொன்று. ஆதுலன் - தரித்திரன். ஆதுவம் - கள். ஆதெரிசம் - கண்ணாடி. ஆதேசம் - ஆதாயம், திரிபு, ஒழுங்கு, கீரகசாரம், பதில், புத்தி. ஆதேயம் - ஆதாயம், தாங்கப்படுவது. ஆதொண்டை - காற்றோட்டி. ஆதோரணர் - துரத்துகிறவர்கள், யானைப்பாகர். ஆத்தன் - கடவுள், கூட்டாளி, சங்காத்தி, சினேகிதன், தோழன், பெரியவன், அருகன், சிவன். ஆத்தா - அணிநுணா. ஆத்தாடியுள்ளான் - ஓர் குருவி. ஆத்தாள் - தாய், பார்ப்பதி ஆத்தானம் - ஆபத்து, கோபுரவாயில், தருமசவை. ஆஸ்தானம் - கொலு, கோபுரவாயில், மண்டபம், நீதித்தலம். ஆஸ்தி - ஆதனம், சம்பத்து, பாக்கியம். ஆத்தி - ஒருமரம். ஆத்திசூடி - சிவன். ஆத்தியன் - சிவன். ஆத்தியோபாந்தம் - ஆதியந்தம். ஆத்திரதம் - இஞ்சி. ஆத்திரம், ஆத்திரவம், ஆத்திரி, ஆத்திரியம் - ஆவத்து. ஆத்துமகத்தியை, ஆத்துமகன்னம் - தற்கொலை. ஆத்துமகம் - பிறத்தல். ஆத்துமகாதம் - தற்கொலை. ஆத்துமசந்தேகம் - உள்ளையம். ஆத்துமசன் - மகன். ஆத்துமஞானம் - ஆத்துமாவையறிதல். ஆத்துமசுத்தி - பஞ்சசுத்தியினொன்று. ஆத்துமசை - மகள். ஆத்துமஞ்ஞன் - தன்னையுந் தலை வனையுமறிபவன். ஆத்துமதரிசம் - பளிங்கு. ஆத்துமதரிசனம் - ஆத்துமநிலை யறிதல். ஆத்துமபுத்தர் - பூனைக்காலி. ஆத்துமபுத்தி - சீவசாட்சி, சுயவறிவு, தன்னறிவு. ஆத்துமம், ஆற்றுமம், ஆத்துமா, ஆற்றுமா - பிராணன், மனம். ஆத்துமயோனி - காமன், சிவன், பிரமன், விட்டுணு. ஆத்துமலட்சணம் - ஆத்துமாவின்சு பாவக்குணம், அஃது அனந்தம், சத்து, சித்து. ஆத்துமவசம் - தன்னடக்கம். ஆத்துமா - கரடிக்குட்டி, அறிவு, ஆன்மா, உடல், உறுதி, காற்று, சீவன், சுபாபம், சூரியன், தீ, பிரமன், புத்தி, மகன். ஆத்தை - ஈன்றாள். ஆநின்று - நிகழ்காலவிடைச்சொல், (உம்) நடவாநின்றான். ஆந்திகை - அக்காள். ஆந்தரங்கம் - இரகசியம், உச்சிதம். ஆந்திரம் - ஓர்பாடை, சாதிநான்கி னொன்று, தேயமன்பத்தாறி னொன்று, மரணம். ஆந்தை - ஓர்பறவை, பஞ்சபட்சியி னொன்று. ஆபகை - ஆறு. ஆபச்சைவன் - அட்டவசுக்களி லொருவன். ஆபணம் - கடை, கடைவீதி. ஆபணியம் - கடைவீதி. ஆபதம் - ஆபத்து. ஆபதோத்தாரணன் - வயிரவன். ஆபத்தம் - பிரதிட்டை. ஆபத்தம்பம் - தருமநூல்பதினெட்டி னொன்று. ஆபத்து, ஆவத்து - அவசரம், பெரிய தேவை, மிகுவருத்தம். ஆபந்தம் - அலங்காரம், உருக்கம், கட்டு, நுகம். ஆபரணக்கடைப்புணர்வு - பின் கோக்கி. ஆபரணம் - சீலை, பூணாரம், சத்தா வத்தையினொன்று, அஃது இருபத்தைந்து தத்துவங்களையு மொன்றற்கொன்று பேதந்தெரிய வொட்டாமல் மறைத் திருப்பது. ஆபற்சன்னியாசம் - ஆபத்துக் காலத்திற்பெறுந்துறவு. ஆபனம் - மிளகு. ஆபனிகன் - வேடன். ஆபாகம் - அடுப்பு, குயக்கலஞ்சுடு சூழை. ஆபாசம் - போலி, மிகுவிருப்பம், எண்ணம், நியாயம், பிரவை, பொய். ஆபாதசூடம் - உச்சிதொடங்கி யுள்ளங்கால்மட்டும். ஆபாதமத்தகம், ஆபாதமத்தம் - பாதாதிகேசம். ஆபாடம் - பாயிரம். ஆபாலி - பேன். ஆபானம் - மதுக்கடை. ஆபிலவனம்-நீர்தெளித்தல், முழுகுதல். ஆபீரன் - இடையன். ஆபீனம் - சிற்பர்வீதி, பசுவின்மடி, கிணறு, கொழுப்பு. ஆபூடம் - துத்தநாகம். ஆபூப்பியம் - மா. ஆபோகம் - அனுபவம், பாம்பின் படம், பூரணம், முயற்சி. ஆபோசனம் - போசனம். ஆபோதனம் - அறிவு, போதித்தல். ஆப்பம் - கும்பவிராசி. ஆப்பி - சாணி. ஆப்பிரச்சனம் - வழியுபசாரம். ஆப்பு - மரம்பிளக்குங்கருவி. ஆப்பேறல் - ஆப்பேறினபிரிவு. ஆமசிராத்தம் - பச்சைப்படி கெரடுக் கிறசிராத்தம். ஆமசூலை - வயிற்றுவலி. ஆமணக்கமுத்து - ஆமணக்கங் கொட்டை. ஆமணக்கு - ஓர் செடி. ஆமணத்தி - கோரோசனை. ஆமண்டம் - ஆமணக்கு. ஆமம் - ஓர் நோய், பச்சை, நோய், மலவரட்சி. ஆமயம் - சாணி, நோய். ஆமயாவித்துவம் - அசீரணம். ஆமரி - வசனம். ஆமலகமலம் - ஆகாசதாமரை. ஆமலகம் - நெல்லிமரம், பளிங்கு. ஆமல் - மூங்கில். ஆமா - காட்டுப்பசு. ஆமாகோளம் - கடுக்காய்ப்பூ. ஆமாங்கு - ஆம்படி, தகுதி, விபரீதம். ஆமாசயம் - இரைக்குடா, சமித்தல. ஆமாதிசாரம் - வயிற்றுளைவு. ஆமாத்தியா - ஆலோசனைக்காரர், குரு, தந்திரிகள், வைத்தியர். ஆமிசம் - அனுபவம், இச்சித்தல், கைக்கூலி, போசனம், மாமிசம், விருப்பம். ஆமிரம் - மாமரம், புளிப்பு. ஆமிரேடனம் - கூறியது கூறல். ஆமிலம் - புளிப்பு, புளியமரம். ஆமிலிகை - புளி, புளிப்பு. ஆமுகம் - துவக்கம், முகனை. ஆமுகர் - நந்திதேவர். ஆமுத்தி - மோக்கம். ஆமுத்து - ஆவின்பல்லிற்பிறந்த முத்து. ஆமுநாயம் - பாரம்பரை, வேதம். ஆமூலாக்கிரம் - வேர்முதற்கிளை பரியந்தம். ஆமேற்பில்லூரி - கடுக்காய்ப்பூ. ஆமோசனம் - காலுதல், பிரகாசித்தல். ஆமை - இராசசின்னத்தொன்று, கூர்மம், வாசனை. ஆமையாழ் - செல்வழியாழ்த்திறம். ஆமோதம் - உவகை, மிகுமணம். ஆம் - ஆமெனல், இடைச்சொல், ஈரம், உவமையுருபு, நீர், தன்மை முன்னிலையுளப் பாட்டுப்பன்மை வினைவிகுதி (உம்) சொல்வாம் அசைச்சொல் (உம்) பணியுமாம். ஆம்பலரி - சூரியன், முதலை. ஆம்பல் - அல்லி, இசைக்குழல், ஊதிடு கொம்பு, கள், சந்திரன், துன்பம், பண், மூங்கில், யானை, அடைவு, ஓரெண். ஆம்பி - இறைகூடை, ஒலி, காளான். ஆம்பியம் - இரதம். ஆம்பிரம் - புளிப்பு, புளிமா, மாமரம். ஆம்பிலம் - கள், புளிப்பு, புளியமரம். ஆம்பு - காஞ்சொறி. ஆம்புலம் - சூரை. ஆம்பூறு - சுரை. ஆயக்கல் - காரக்கல். ஆயசம் - ஆயுதம், இரும்பு. ஆயதம் - அகலம், நீளம், முட்டை வடிவம். ஆயதனம் - பலிபீடம், வாசம் வீட்டி னுட்டளம். ஆயதி - எதிர்காலம், நீளம், பொருத்து, மகத்துவம், மனக்கட்டு. ஆயத்தம் - எத்தனம். ஆயத்தி - உருக்கம், எல்லை, நன் னடை, நாள், நீளம், பெலன். ஆயத்துறை - தீர்வைத்துறை. ஆயமுக்கரவன் - குபேரன். ஆயம் - ஆதாயம், கடமை, சுங்கம், சூதாடுகருவி, சூதுதாயம், தாய், தோழி, நாணி, நீளம், மகளிர் கூட்டம், மல்லரி, வரவு, வழக்கம். ஆயர் - இடையர். ஆயனம் - ஆண்டிற்பாதி, வருடம். ஆயாசம் - இளைப்பு, சோர்வு, தயிரியக்கெடு, துக்கம், முயற்சி. ஆயாமம் - அகலம், நீளம்.. ஆயாள் - வளர்க்குந்தாய், தாயைப் பெற்றவள், தாய். ஆயானம் - சுபாபக்குணம். ஆயி - தாய். ஆயிரங்கண்ணன் - இந்திரன். ஆயிரங்கதிரோன், ஆயிரங்கிரணன் - ஆதித்தன். ஆயிரஞ்சோதி - சூரியன். ஆயிரநாமன் - சிவன், திருமால். ஆயிரம் - பத்துநூறு. ஆயிலியம் - ஓர் நாள். ஆயில் - ஆயிலியநாள், ஓர்மரம். ஆயிளை - கொடுவாட்டலை. ஆயிழை - பெண். ஆயினிமேனி - பச்சைக்கல். ஆயினும் - இடைச்சொல். ஆயு, ஆயுகம், ஆயுசு, ஆயுள் - வயது, வைத்தியம். ஆயுண்மான் - நித்தியயோகத்தொன்று. ஆயுதபரிட்சை - படைக்கலப்பயிற்சி. ஆயுதபூசை - படைக்கலப்பூசை. ஆயுதம் - உபகரணம், படைக்கலப் பொது. ஆயுதாகாரம் - ஆயுதசாலை. ஆயுரு - பரிகாரவித்தை. ஆயுர்வேதம் - ஆயுள்வேதம் ஆயுவின்மை - ஈச்சுரனெண்குணத் தொன்று, அஃது செனனமரண மின்மை. ஆயுள் - வைத்தியன். ஆயுள்வேதம் - வைத்தியசாத்திரம். ஆயுள்வேதியர் - வைத்தியர். ஆயே - ஓர் வியப்புச்சொல். ஆயோகம் - கரை, பூசனை. ஆயோசனம் - பிடித்தல், முயற்சி. ஆயோதம், ஆயோதனம் - சேனை, போர். ஆய் - ஆயென்னேவல், இடையர்க் குரியது, முன்னிலை யொருமை விகுதி, ஏவல்விகுதி, (உம்) கேளாய், ஓர்விளியுருபு (உம்) கிள்ளாய் தாய் முன்னிலை யொருமை முற்று வினைவிகுதி (உம்) சென்றாய். ஆயக்குழல் - வேய்ங்குழல், இடைய ரூது குழல், அஃது கொன்றையங் குழல், முல்லையங் குழல் வேய்ங் குழல். ஆய்ச்சல் - அச்சல், பறிப்பு. ஆய்ச்சி - இடைச்சி, தாய். ஆய்ச்சியர் - இடைச்சியர். ஆய்தம் - அஃகேனம், சிறுமை, நுண்மை. ஆய்தல் - ஆராய்தல் தெரிதல், தேர்தல், நுண்மை, பறித்தல். ஆய்த்தல் - ஆச்சுப்பார்த்தல். ஆய்ந்தோர் - அறிவுடையோர், பார்ப்பார், புலவர். ஆய்ப்பாடி - இடையரூர். ஆய்ப்பு - அசைப்பு, வீச்சு. ஆய்மலர் - தாமரை. ஆய்வு - அகலம், அழகு, ஆராய்தல், நுட்பம், வருத்தம். ஆரகம் - இரத்தம். ஆரகூடம், ஆரகூலம் - பித்தளை. ஆரகேரம் - வாகுவலையம். ஆரகோரம் - கொன்றை. ஆரஞா - அருந்துயர், துக்கம். ஆரட்சகன் - இடையன், சேகண்டிக் காவற்காரன். ஆரணம் - மங்கலச் சொல்லி னொன்று, வேதத்தின் ஞான பாகை, வேதம். ஆரணவாணர் - பிராமணர். ஆரணன் - பிரமன். ஆரணி - காளி, பார்பதி, சுழல்காற்று. ஆரணியம், ஆரண்ணியம் - காடு, பற்றை. ஆரதம் - சுத்தபோசனநிலை. ஆரதி - ஆலாத்தி. ஆரத்தியம் - ஒளி. ஆரநாலகம், ஆரநாலரம் - காடி. ஆரம் - ஆட்டதள், ஆத்திமரம், ஆபரணம், ஓர்பாணம், கடம்பு, கோடகசாலை, சந்தனமரம், சந்தனம், நந்தனவனம், படப் பொறி, பட்சிகளுடைய கழவரி, பதக்கம், பித்தளை, பூமாலை, மாதரணிவடம், முத்து, முத்து மாலை, கீச்சுக்கிட்டம், கோணம், சனி, செவ்வாய், நுனி. ஆரம்பம் - ஒலி, துவக்கம், பேரொலி, கொலை, பாயிரம், பெருமை, முயற்சி. ஆரலம் - பகை. ஆரல் - ஓர் பூடு, ஓர் மீன், கார்த்திகை நாள், செவ்வாய், நெருப்பு, மதில். ஆரவம் - ஒலி. ஆரவாரம் - ஒலி, கிளர்ச்சி, கொண் டாட்டம், பேரொலி. ஆராதனம் - சமைத்தல், சம்பாத் தியம், நிறைவேற்றம், வணங்கல். ஆராதனை - பூசனை, வணக்கம். ஆராதி - சத்துரு. ஆராதித்தல் - பூசித்தல். ஆராதியம் - சமீபம். ஆராத்திரியர் - பார்ப்பார். ஆராலிகன் - பாகதாரி. ஆராவம் - ஆர்வம். ஆராதூரி - அழிப்புக்காரன், அழிவு. ஆராதூரித்தனம் - அழிக்கிறகுணம். ஆராத்திரிகம் - ஆலாத்திவிளக்கு. ஆராப்பத்தியம் - அரும்பத்தியம், அற்பம். ஆராமம் - சோலை, பூந்தோட்டம். ஆராய்ச்சி - ஆராய்தல், விசாரிப்புக் காரன். ஆராய்ச்சிமணி - இராசவாசலிலே கட்டிய வசையாமணி. ஆராய்தல் - தெரிதல், தேடல். ஆராய்வு - விசாரிப்பு. ஆரி - சோழன், மேன்மை, பார்ப்பனி, மாலை. ஆரிடம் - ஆகமம், இருஷிகள்வாக்கு, ஒன்று இரண்டு பசுவுமெருதும் வாங்கிக் கன்னியைத் தீமுன்னர்க் கொடுக்கும் மணம், நூல், பூசை, வழக்குநிலம். ஆரிடர் - சமணர், முனிவர். ஆரியக்கூத்து - பாவைக்கூத்து. ஆரிதம் - தருமநூல். ஆரியபுத்திரன் - கணவன்,குருபுத்திரன். ஆரியப்பாவை - சித்திரப்பாவை. ஆரியம் - அழகு, இமையமலைக்கும் பொதியமலைக்குந்நடுத்தேசம், செல்வம், பண்டம், வடமொழி. ஆரியரூபன் - எத்தன். ஆரியர் - ஆசிரியர், ஆரியதேசத் தவர், குருமார், பார்ப்பாரிலோர் பேதத்தோர், புலவர், மிலேச்சர், வைத்தியர். ஆரியவராடி - ஓர்பண். ஆரியவேளாகொல்லி - கொல்லித் திறத்தினொன்று. ஆரியன் - அறிவுடையோன், ஐயன், குரு, சூரியன், புலவன், மிலேச்சன், வைத்தியன். ஆரியை - காளி, துற்கை, பார்வதி. ஆரியைதனயன் - குமரன், வயிரவன், விநாயகன், வீரபத்திரன். ஆரீரம் - சிற்றீரம். ஆரு - குடம், நண்டு, பன்றி. ஆருகதம் - அருகசமையம், நாவன் மரம். ஆருகதன் - அருகசமையத்தவன். ஆருணி - உபநிடதம் முப்பத்திரண்டி னொன்று. ஆருதல் - ஆர்தல். ஆருத்திரை - திருவாதிரை. ஆருபதம் - பித்தளை. ஆருப்பியம் - வங்கமணல். ஆருவம் - நீர். ஆரூடம் - ஏறுதல். ஆரூபம் - அமையாமை, நீங்காமை. ஆரை - ஓர் பூடு, புற்பாய், மதில். ஆரைப்பற்றி - உடும்பு. ஆரோகணம் - ஏறுதல், கற்படி, தாழ் வாரம், எழும்புதல், ஏணி. ஆரோகம் - அளவு, ஏறுதல், சகனம், நீளம், பாரம், மாதரிடை. ஆரோக்கியம் - சுகம், சௌக்கியம். ஆரோபணம் - ஏறுதல், உயர்த்தல், ஒப்புவித்தல், நாட்டுதல், வில் வளைத்தல். ஆரோபம் - ஒன்றைவேறொன்றா யறிதல், சுட்டுதல், ஏறுதல், வைத்தல். ஆரோபிதம் - உண்டாக்கினது, நிறுத் தினது, வைத்தது. ஆரோபித்தல் - தாபித்தல். ஆர் - அருமை, ஆத்தி, ஆரென் னேவல், உயர்திணைப் பன்மைப் படர்க்கை விகுதி, ஐந்துருவாணி, கூர்சோதி, தேர்ப்பண்டியகவாய், நிறைவு, பாகு, பூமி, யாரென் வினா. ஆர்கதி - திப்பிலி. ஆர்கலி - கடல், மழை. ஆர்கவிவாரணம் - வெள்ளை யானை. ஆர்க்கம் - இரத்தம், பெறுபேறு. ஆர்க்கு - ஓர் மீன். ஆர்க்குவதம் - கொன்றைமரம். ஆர்க்கை - கட்டுதல், துரும்பு, வரிச்சு. ஆர்ச்சவம் - உண்மை, நேர்மை. ஆர்ச்சனம், ஆர்ச்சனை, ஆர்ச்சிதம் - சம்பாத்தியம், பாதுகாத்தல், வழியுப சாரம், விருந்தோம்பல். ஆர்தல் - அனுபவித்தல், இணைத்தல், உடைத்தாயிருக்குதல், குடித்தல், தங்குதல், நிறைதல், புசித்தல். ஆர்த்தநாதம் - புலம்பல். ஆர்த்தபம் - மகளிர்சூதகம். ஆர்த்தர் - எளியவர், துயருறுவோர், பெரியோர், யோகிகள். ஆர்த்தல் - அணிதல், ஒலித்தல், ஒளி வீசிமின்னுதல், கட்டல், பொரு தல், பொருத்தல். ஆர்த்தவம் - புட்பம். ஆர்த்தி - துன்பம், மகிழ்ச்சி, விருப்பம், வின்னுதி. ஆர்த்திகை - துன்பம். ஆர்த்தி - வின்னுதி. ஆர்த்தியம் - காட்டுத்தேன். ஆர்த்திரகம் - இஞ்சி. ஆர்த்திரசாகம் - இஞ்சி. ஆர்த்துதல் - நிறைத்தல், நிறைவேற்று தல், புசிப்பித்தல். ஆர்பதம் - நீழல், வண்டு. ஆர்ப்பதம், ஆற்பதம் - சாரம், பச் செனவு. ஆர்ப்பரவம் - இரைச்சல். ஆர்ப்பரித்தல் - ஆரம்பித்தல். ஆர்ப்பரிப்பு - ஆரம்பம். ஆர்ப்பு - கட்டு, சிரிப்பு, நுண்ணியன, பேரொலி, போர். ஆர்மதி - கற்கடகவிராசி, நண்டு. ஆர்மை - கூர்மை, மதில். ஆர்வமொழி - ஓரலங்காரம். ஆர்வம் - அன்பு, ஆசை, ஒலி, சீலை, நரகம், கடைப்படுதானமேழி னொன்று, அஃது அன்புமுதலிய வற்றானளித்தல். ஆர்வலன் - அன்புடையோன், நாயகன், மித்திரன். ஆர்வு - ஆராய்தல், உண்டல், குடித் தல், நிறைவு. ஆர்வை - கோரைப்பாய். ஆலகண்டன் - சிவன். ஆலகாலம் - நஞ்சு, விடம். ஆலக்கட்டி - துருசு. ஆலக்கொடிச்சி - அரிதாரம். ஆலசம் - சோம்பு. ஆலசியம் - சோம்பு, தாமதம். ஆலத்தி, ஆலாத்தி - அட்ட மங்கலத் தொன்று, நீராஞ்சனம். ஆலம் - அம்புக்கூடு, ஓர் மரம், கலப்பை, நீர், பாம்பினஞ்சு, மலர்ந்தபூ, மழு, மழை, நஞ்சு, மஞ்சளுஞ்சுண்ண முங்கலந்த நீர். ஆலம்பம் - ஆதாரம் பற்றுக்கோடு, ஆலயம், தேவர்கோயில், யானைக் கூடம், வீடு, தூங்கல், நிறுதிட்ட வரி, புகலிடம். ஆலலம் - கூறை. ஆலல் - ஆடல், ஒலித்தல், சேருதல், மயிற்குரல். ஆலவட்டம் - கால்செயவட்டம். ஆலவணியம் - அவலட்சணம். ஆலவாலம் - பாத்தி வயல். ஆலனந்தலன் - திருமால். ஆலா - ஓர் பட்சி. ஆலாங்கட்டி - மழைக்கட்டி. ஆலாதம் - நெருப்புக்கொள்ளி. ஆலாத்து - அம்மாறு, ஓர் புள், கப்பல், வெளவாற் கொடி முடியுங் கயிறு. ஆலாபம் - அலப்பு, சம்பாஷணை. ஆலாபனம் - சம்பாஷித்தல். ஆலாபித்தல் - அலப்புதல், சம்பாஷித் தல். ஆலானம் - கட்டு, கயிறு, யானை கட்டுந்தறி. ஆலாலம் - விடம், வெளவால். ஆலி - அமுதம், ஆலாங்கட்டி, களி யென்னேவல், கள், காற்று, மழை, மழைத்துளி, தோழி, வமிசம், வரம்பு, வரிவிடமுள்ளன. ஆலிங்கனம் - தழுவல். ஆலிஞ்சரம் - நீர்ச்சாடி. ஆலித்தல் - களித்தல், தூறல். ஆலிந்தம் - திண்ணை, முற்றம். ஆலீடம் - வலக்கால்மண்டலித்திடக் கான்முந்துறுந்நிலை. ஆலீனகம் - துத்தநாகம். ஆலு - நீர்க்குடம். ஆலுதல் - ஆலல், தொங்குதல். ஆலை - கரும்பாலை, கரும்பு, கள், கிட்டி. ஆலேகனம் - எழுத்து. ஆலேகனி - எழுத்தாணி, வரைகோல். ஆலேபம், ஆலேபனம் - ஓர் கந்ததயிலம். ஆலைவாய் - மதுரை. ஆலோகம் - பார்வை, பிரபை, முகமன். ஆலோகனம் - பார்வை. ஆலோகன் - தெளிந்தபுத்திமான். ஆலோசனை - யோசனை. ஆலோசித்தல் - யோசித்தல். ஆலோடனம் - கலக்குதல், கலப்பு. ஆலோலம் - நீரொலி, புள்ளோச்சு மொலி, கலக்குதல். ஆலோலிதமுகம் - ஆசையான் மலர்ந்தமுகமா யொருவனை யழைத்தல். ஆலோலிதம் - சந்தோஷம், விருப்பம். ஆலோன் - சந்திரன். ஆல் - அசைச்சொல், ஆமெனல், ஆலென்னேவல், ஓர்மரம், துவர் பத்தி னொன்று, மூன்றனுருபு. ஆல்வாடுதல் - சிறுகக்காய்தல். ஆவகம் - சத்தவாயுவினொன்று. ஆவகை - யாறு. ஆவசதம் - வீடு. ஆவசம் - சத்தமுகிலினொன்று. ஆவட்டங்கொட்டல் - ஆவாய் கத்துதல். ஆவடுதுறை - திருவாவடுதுறை. ஆவட்டை - ஓர்பூண்டு. ஆவணம் - அடையாளம், உரிமை, உரிமைப்பத்திரம், கடை, கடை வீதி, தெரு, தேர்மொட்டுப் பொருந்திய பீடம், புநர்பூசம், கரை. ஆவணி - அவிட்டநாள், ஓர் மாசம். ஆவணீயம் - கடை, கடைவீதி. ஆவனியம் - கடைவீதி. ஆவதம் - ஆவர்த்தம். ஆவதத்தம் - ஆபத்துக்காலத்துக் கென்று வைத்ததிரவியம், சத்த முகிலினொன்று. ஆவத்து - இக்கட்டு, உபத்திரவம். ஆவகாளி - அம்புக்கூடு. ஆவம் - அம்புக்கூடு, குங்குமமரம், நாணி. ஆவணம் - கரை. ஆவரகம் - திரைச்சீலை, மூடி. ஆவரணசத்தி - பசு, பதி, பாச மூன்றையும் பேதந்தெரியாது மறைப்பது. ஆவரணம் - ஈட்டி, கோட்டை, சீலை, மறைவு, பரிசை, மூடி, மேற் புடைவை, வேலி. ஆவரி - அம்பு. ஆவரை - ஆவிரை. ஆவர்த்தகம் - சுழலுதல், சுழல் காற்று, பிடருரோமம், மயிர்முடி, மனக்கலக்கம். ஆவர்த்தம் - சத்தமேகத்தொன்று, அஃது நீர்பொழிவது, சுழல் காற்று, சுழி, மயிர் முடி. ஆவர்த்தனம் - உருக்குதல், கடைதல், கலக்குதல், சுழற்றுதல், பழக்கம். ஆவலங்கொட்டல் - வாயாலார்த் தாடல். ஆவலம் - கொல்லை. ஆவலர் - காதலர், நாயகர். ஆவலாதி - அங்கலாய்ப்பு, ஆசை. ஆவலி, ஆவளி - இரேகை, ஒழுங்கு, தொடர்ச்சி, வமிசம். ஆவலித்தல் - ஆசைப்படுதல், கொட்டாவிவிடுதல். ஆவலிப்பு, ஆவல் - ஆசை, பேராசை, வளைவு. ஆவளித்தல் - ஆவலித்தல். ஆவளிப்பேச்சு - ஆதரவற்றபேச்சு, ஒழுங்கற்றபேச்சு. ஆவறி - அங்கலாய்ப்பு. ஆவாகனம் - தாபனம், அழைத்தல். ஆவாகித்தல் - தாபித்தல். ஆவாசம் - வீடு. ஆவாபம் - கைவளை, கூத்தினோர் விகற்பம், பாத்தி, விரைதானியம். ஆவாபனம் - நெய்வார்தறி, வடிக் கயிறு. ஆவாய்கத்துதல் - இல்லையென்று, சொல்லித்திரிதல். ஆவாரை - ஆவரை, நிலவாகை. ஆவாலம் - வெளவால், பாத்தி. ஆவி - அரூபி, ஆன்மா, உயிரெ ழுத்து, உயிர், உயிர்ப்பு, குளம், தேவதிரீத்துவத்தி னொன்று, பிட்டு, புகை, வாசனை, வெப்பம். ஆவிடை - சத்திரூபம். ஆவிதம் - துறப்பணம். ஆவித்தல் - கொட்டாவிவிடுதல். ஆவிப்பதங்கம் - வைப்புச்சரக்கு. ஆவிபதம் - புறாமுட்டை. ஆவிபத்தம் - போர்முட்டி. ஆவிபத்திரம் - புகையிலை. ஆவியம் - உயிர், சரீரபலம். ஆவியர் - வேடர், வேளாளர். ஆவியேற்றம் - பெருமூச்சு. ஆவிரம் - இடையரூர். ஆவிருத்தி - முழுவட்டம், சுற்றுதல், மாறிப் பிறத்தல், வழக்கம். ஆவிரை - ஓர்மரம். ஆவிலம் - அழுக்கு, கலங்கனீர். ஆவீதம் - முப்புரிநூல். ஆவுடையார் - ஆவிடையார். ஆவுரிஞ்சி - ஆவுரிஞ்சுந்தறி. ஆவெனல் - இரக்கக்குறிப்பு, வாய் திறத்தல். ஆவேகம் - சீக்கிரம், தடுமாற்றம். ஆவேசம், ஆவேஷம் - சன்னதம், வெறி, வேடம், பெருமை, மனம் பற்றுதல், வாயில். ஆவேசனம் - சித்திரகாரர்வீதி, கம்மாலை, கோபம், குரிய மண்ட லம், வாயில். ஆவேசிகன் - விருந்தன். ஆவேட்டகம் - வேலி. ஆவேட்டனம் - சுற்றுதல். ஆவேதகன் - வழக்காளி. ஆவேலி - தொழுவம். ஆவோ - அதிசயவிரக்கச்சொல். ஆழம் - கடல், தாழ்வு. ஆழல் - கறையான், தாழ்தல். ஆழாக்கு - அரைக்காற்படி. ஆழி - கடல், கரைப்பொது, சக்கரம், தேருருளை, மோதிரம், யானைக் கைநுனி, வட்டம். ஆழிக்கொடி - பவளம். ஆழித்தல் - ஆழமாகத்தோண்டல். ஆழியளித்தோள் - சிவன். ஆழியன் - வஞ்சகன், வருணன். ஆழிவிட்டோன் - சிவன், விட்டுணு. ஆழிவித்து - முத்து. ஆழிவிரை - ஓர் பயிர். ஆழுதல், ஆழ்தல் - அழுந்தல், தாழ்தல். ஆழ்வார் - கருடன். ஆழ்த்தல் - கட்டல், தாழ்த்தல். ஆளகம் - சுரை. ஆளரி - சிங்கவேறு. ஆளல் - ஆளுதல். ஆளானம் - கட்டுத்தறி, கலப்பை, யானைகட்டுந்தறி. ஆளி - ஆள்வோன், ஒழுங்கு, கரைப் பொது, சிங்கம், சிங்கவிராசி, செய் கரை, யாளியானை, கிளிஞ்சில் போன்ற சிப்பி, மட்டி. ஆளிமுரசோன் - மதன். ஆனியூர்தி - காளி, துற்கை. ஆளுகை - ஆட்சி, ஆளுந்தன்மை, இராச்சியப்பொது. ஆளுதல் - அடிமைக்கொள்ளுதல், ஆட்சிபண்ணல். ஆளொட்டி - மறைவு. ஆள் - அடிமை, ஆடவன், ஆளென் னேவல், உயர்திணைப்பெண்பாற் படர்க்கை யொருமைவிகுதி. ஆள்வணங்கி - அரசமரம். ஆள்வள்ளி - மலைச்சக்கரைவள்ளி. ஆள்விழுங்கி - நிகள்வங்கி. ஆள்வினை - உற்சாகம், முயற்சி. ஆறடிவிருத்தம் - கலிவிருத்தம், தரயு கொச்சகம். ஆறதீகம் - கல்நார். ஆறலை - வழிப்பறிக்குந்தன்மை. ஆறலைத்தல் - வழிப்பறித்தல். ஆறலைப்பு - வழிப்பறி. ஆறல் - அலைதல், ஆறுதல். ஆறாக்காரியம் - தேற்றம். ஆறடி - தூர்த்தன். ஆறாதாரம் - சடாதாரம், அவை மூலாதாரம், சுவாதிட்டானம், மணி பூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை. ஆறாதூறு - அவதூறு, அழிப்பு. ஆறாமீன் - கார்த்திகைநாள். ஆறு - ஆறென்னேவல், ஒழுக்கம், ஓரெண், நதி, வழி. ஆறுகாட்டி - மாலுமி, வழிகாட்டி. ஆறுதல் - ஆறியிருத்தல், ஓய்தல், சூடுகுளிர்தல், தணிதல். ஆறுமுகன் - குமரன். ஆறை - ஆற்றூர். ஆற்பலம் - சாரம், பலம். ஆற்றங்கரை - ஆற்றோரம். ஆற்றலரி - சுடலைப்பூச்செடி, சேங் கொட்டை. ஆற்றல் - அதிகம், செய்தல், ஞானம், தணித்தல், நிலையுடைமை, பரித் தல், பொறை, மிகுதி, முயற்சி, வலி. ஆற்றறுத்தல் - வலியழித்தல். ஆற்றாக்கொலை - ஆற்றாப்பட்சம். ஆற்றாப்பட்சம் - ஆற்றாமை, தரிக்கக் கூடாமை. ஆற்றார் - தரித்திரர், தோற்றோர், வருந்தினர். ஆற்றி - ஆறுதல். ஆற்றிகேடு - ஆற்றாண்மை, சத்துக் கேடு. ஆற்றிடைக்குறை - ஆற்றினொடுக்க மானவிடம், ஆற்றுக்கிடையே யுயர்ந்ததிடர். ஆற்று - ஆற்றென்னேவல், தலைக் கடை. ஆற்றுக்காலாட்டியர் - மருதநிலப் பெண்கள். ஆற்றுக்கால் - ஆற்றிலிருந்து பாயும் வாய்க்கால். ஆற்றுணா-கட்டுச்சோறு, வழியுணவு. ஆற்றுதல் - தணித்தல், துயர்தீர்த்தல். ஆற்றுநீர் - ஆற்றிற்சலம். ஆற்றுநீர்ப்பொருள்கோள் - பொருள் கோளெட்டினொன்று. ஆற்றுநெட்டி - நீர்ச்சுண்டி. ஆற்றுப்பச்சை - பச்சைக்கல். ஆற்றுப்படுத்தல் - சன்மார்க்கத்திலுட் படுத்தல், வழிநடத்துதல். ஆற்றுப்படை - ஓர் பிரபந்தம், வழிப் படுதல். ஆற்றுப்பாசி - ஓர்பூண்டு. ஆற்றுப்பித்தல் - ஆற்றோரம். ஆற்றுமடை - வாய்க்காலமுகம். ஆற்றுமல்லிகை - ஓர் மல்லிகை. ஆற்றுமா - ஆன்மா. ஆற்றுவித்தல் - ஆறுபாய்முகம், உறுதிசெய்தல், தயிரியப்படுத்தல், வலிதருதல். ஆற்றொழுக்கு - சூத்திரநிலை செய்யு ணிலைகளினொன்று. ஆனகம் - தம்பட்டம், துந்துமி, தேவதரு, மேளம், இடி, போர்ப் பறை, மத்தளம், முகில். ஆனந்த - ஓர் வருடம். ஆனந்தததம் - யோனி. ஆனந்தபடம் - கூறைப்புடைவை. ஆனந்தபயிரவி - ஓர் பண். ஆனந்தபாட்பம் - பேரின்பக்கண்ணீர். ஆனந்தபிரபவம் - இந்திரியம். ஆனந்தமயகோசம் - பஞ்சகோசத் தொன்று, அஃது அவித்தை. ஆனந்தமயம்- கோசமைந்தினொன்று, தனவசமற்றிருத்தல், கடவுள். ஆனந்தம் - பேரின்பம். ஆனந்தன் - கடவுள், சிவன், கடவுள், சந்தோஷம். ஆனந்தரூபன் - பஞ்சகோசகன்ம பந்தசன்ம மரணாதியற்ற வடிவன். ஆனந்தலட்சணம் - பரமாத்து மாசகல பதார்த்தத்தைக் காட்டி யுந்தன்னிடத்திற் பிரமை நீங்கா திருப்பது. ஆனந்தவல்லி - பார்ப்பதி. ஆனந்தவாதி - கௌரிபாஷாணம். ஆனந்தனம் - இன்பங்கொடுப்பது, உபசரணை, சந்தோஷித்தல். ஆனந்தி, ஆனந்தை - பார்வதி. ஆனந்தியம் - அழிவின்மை, முடி வின்மை. ஆனந்தித்தல் - சந்தோஷித்தல். ஆனம் - கள், மஸ்துள்ளபானம், பூரகவாயு. ஆனயம், ஆனயனம் - உபநயனம். ஆனர்த்தம் - களரி, நிர், யுத்தம். ஆனல் - நீங்குதல். ஆனனம் - முகம். ஆனாகம் - சலவடைப்பு. ஆனாமை - உத்திராடம், நீங்காமை, கெடாமை. ஆனி - உத்திராடநாள், ஓர் மாதம், கேடு, கேட்டை, பொருந்தநதி, மூலநாள், வெட்டுக்குருத்து, எல்லை, வாளலகு. ஆனியம் - நாள், பகல், பருவம், பொழுது, மூலநாள். ஆனிலன் - அனுமான், வீமன். ஆனிலை - பசுக்கொட்டில். ஆனு - இனிமை, நன்மை. ஆணுலகு - தேவலோகம். ஆனேறு - எருது. ஆனை - அத்தி, யானை. ஆனைக்கண்படுதல் - புள்ளிபடுதல். ஆனைத்தடிச்சல் - புளிநடலை. ஆனைநெரிஞ்சி - பெருநெருஞ்சி. ஆனைப்படுவன் - விலங்கினோர் நோய். ஆனைப்பந்தி - யானைக்கூடம். ஆனைப்பாகன் - யானைப்பணிக்கன். ஆனைப்பேன் - ஓர்பேன். ஆனைமீன் - ஓர்பெருமீன். ஆனைமுகன் - விநாயகன். ஆனையறுகு - ஓரறுகு. ஆனையேற்றம் - ஆனையேறும் பரிட்சை, யானையைமரக்கலத் தேற்றுதல். ஆனைவணங்கி - தேட்கொடுக்கி. ஆனைவாழை - ஓர் வாழை. ஆன் - உயர்திணையொருமையாண் பால் படர்க்கை விகுதி, சாரியை, பசுப்பொது, மூன்றனுருபு, ஆனென் னேவல். ஆன்மா - உயிர், சிவனட்டமூர்த்தத் தொன்று. ஆன்மீட்சணம் - தேடல். ஆன்வல்லோர் - இடையர். ஆன்றல் - அகலம், மாட்சிமை, மிகுதி. ஆன்றவர், ஆன்றார், ஆன்றோர் - அறிவுடையோர், சன்மார்க்கர், புலவர், பெரியோர். இ இ - உயர்திணைப் படர்க்கை யொரு மைவிகுதி, சுட்டு, பெண்பால் விகுதி, முன்னிலை யொருமை விகுதி, ஓரெழுத்து, முப்பாலொருமை முன்னிலைவினைவிகுதி (உம்) உண்டி, முப்பாலொருமை முன் னிலையேவல் விகுதி, (உம்) கேட்டி, உயர் திணைப் பெண் பாலொருமைப் படர்க்கைப் பெயர் விகுதி, (உம்) குறத்தி, உயர்திணை யாண்பாற்படர்க்கை யொருமைப் பெயர்விகுதி, (உம்) வில்லி, அஃறி ணைப் படர்க்கை யொருமைப் பெயர் விகுதி, (உம்) ஊருணி, விரவுத்திணையொருமைப் பெயர் விகுதி, (உம்) செவியிலி. இஃது - இது. இக - இகவென்னேவல், முன்னிலை யசைச்சொல். இகத்தல் - கடத்தல், புறப்படுதல், போதல், மீறுதல், விட்டுவிடுதல், பழித்தல். இகந்துபடுதல் - கடந்துபோதல், நிராகரிக்கப்படுதல், தவறுதல். இகபரசாதனம் - இம்மைமறுமைக் கடுத்தகடமைகளை நடப்பித்தல். இகபரபுத்திரார்த்தபரபோகவிசாகம் - இகத்திலுள்ளபெண்டு பிள்ளை முதலியனவும் பரத்திலுள்ள தேவாமிர்த போகங்களும் வெறுத்துவிடல். இகபரம் - இம்மைமறுமை, அஃது பூலோகபரலோகவனுபவம். இகம் - இம்மை, உலகம், பூமி. இகரம் - ஓரெழுத்து, சந்தம். இகல - உவமைச்சொல். இகலல் - எதிர்த்தல், பகைத்தல், பொருதல். இகலன் - ஓரி, நரி, பகைவன். இகலாட்டம் - போராட்டம். இகலார், இகலோர் - பகைவர். இகலோகம் - இவ்வுலகம். இகல் - பகை, போர், வலி. இகல் - இகலென்னேவல், ஒப்பு, பெருங்காப்பியவுறுப்புளொன்று, அஃது மறனிலை. இகல்வு - எதிரிடை. இகவு - இகழ்ச்சி. இகழாவிகழ்ச்சி - ஓரலங்காரம், அஃது புகழ்வது போலிகழ்வது. இகழ் - இகழென்னேவல், நிந்தை. இகழ்ச்சி - ஈனம், நிந்தை, மறதி. இகழ்ச்சிப் புகழ்ச்சி - புகழ்மொழி யானிகழ்தல் (உம்) பேராளி. இகழ்ச்சியில் புகழ்ச்சி - ஓரணி, அஃது இகழ்ச்சியின்றிப்புகழ்தல் (உம்) சத்தியத்திலரிச்சந்திரன். இகழ்ச்சியுட் புகழ்ச்சி - ஓரணி, அஃது இகழ்ச்சியும் புகழ்ச்சியுங்கலந்து கூறல் (உம்) இவர்சற்றேவாசித் தவர். இகழ்ச்சிவிலக்கு - ஓரலங்காரம், அஃது ஏதுவையிகழ்ந்து விலக்கு வது. இகழ்தல் - நிந்தித்தல். இகழ்வு - நிந்தை. இகளி - இடி. இகளை - வெண்ணெய். இகாசம் - பழிகூறல். இகிதம் - இன்பம். இகுடி - ஆதொண்டை. இகுத்தல் - அழைத்தல், இரித்தல், ஈதல், எறிதல், குழைத்தல், கொல் லல், தாண்டல், தாழ்த்துதல், துடைத்தல், மறித்தல், வருந்து வித்தல், வீழ்த்தல், அழித்தல், புடைத்தல். இகும் - அசைச்சொல். இகுளை - சுற்றம், தோழி, நட்பு. இகுள் - இடி, ஓர்மீன், கார்த்திகைநாள். இகைத்தல் - கொடுத்தல், நடத்தல். இக்கட்டு - தரித்திரம், துன்பம், இட நெருக்கம், வெல்லக் கட்டி. இக்கணம் - இப்போழ்து. இக்கரை - ஓந்தக்கரை, இந்துப்பு. இக்கவம் - கரும்பு. இக்கன - இப்போது. இக்கிரி - ஓர்முட்செடி. இக்கு - ஆபத்து, கரும்பு, கள், தடை. இக்கியந்திரம் - கரும்பாட்டுமாலை. இக்குறி, இக்கூறு - அன்னியநாள், இச்செலவு. இக்கெனல் - சீக்கிரக் குறிப்பு. இக்கோ - அதிசயவிரக்கச் சொல். இக்கிரசம் - கருப்பஞ்சாறு. இக்குவிகாரம் - சருக்கரை. இங்கண் - இவ்விடம். இங்கம் - அறிவு, சயிக்கை, நோக்கம். இங்கரி - கஸ்தூரி. இங்கிசை - கொலை, சங்கையீனம். இங்கிதம் - அடையாளம், இனிமை, எண்ணக்குறிப்பு, எண்ணம், கருத்து, இங்கம். இங்கு - இவ்விடம், பெருங்காயம். இங்குசுக்காண்டான் - நீர்முள்ளி, நெருஞ்சில். இங்குதாரி - பேரோசனை. இங்குதாழி - பீதரோகணி. இங்குமம் - இங்கு. இங்குலிகம் - சாதிலிங்கம், சிவப்பு. இங்ஙனம், இங்ஙன் - இத்தன்மை, இவ்விடம். இசகுபிசகு, இசக்குப்பிசக்கு, இசைவு பிசகு - குழப்பம். இசங்கு - ஓர் செடி. இசடு - அசடு, பொருக்கு. இசமான் - எசமான். இசலாட்டம் - எசலாட்டம். இசலி - சபதம். இசி - இசியென்னேவல், இணுங்கு தல், சிரிப்பு. இசிதல் - இணுங்கப்படுதல், இழு படுதல், நீளுதல். இசித்தல் - இணுங்கல், இழுத்தல், சிரிக்குதல். இசிப்பு - ஈர்ப்பு, சிரிப்பு. இசிவு - இழுப்பு, உரிவு. இசின் - இறந்தகால விடைநிலை, (உம்) என்றிசினோரே. இசை - இசைப்பாட்டு, இசைப்பு, இசையென்னேவல், இணக்கம், ஒலி, கூடிநிற்றல், சொல், பாட்டி சை, புகழ், முத்தமிழினொன்று, இனிமை, கொடை, பண்பு, பொன். இசைகேடு - சத்துக்கேடு. இசைக்கழல் - தேர்நூறு குதிரையா யிரம்யானை நூறு காலாள் பதினா யிரம் போரின்மடிய வென்ற வெற்றி பெற்ற வேந்தரிடக் காவினணியும் வீரவெண்டயம். இசைக்குழல் - ஊதுகுழல். இசைதல் - சம்மதித்தல், பொருந்தல். இசைத்தமிழ் - சங்கீதத்தமிழ். இசைத்தல் - இணக்குதல், ஈதல், ஒலித்தல், கட்டல், பேசல், பொருந்தப்பண்ணுதல். இசைத்திரிபு - இசையறுப்பு, வேறு பாடு. இசைநாள்-உத்திரட்டாதி, பூரட்டாதி. இசைநிறை - ஓசைநிறைத்துநிற்பது. இசைநிறையேகாரம்- ஈற்றசையே காரம். இசைநூபுரம் - யானையைக்கொன்ற சுத்த வீரனிடக்காளலணியும் வீரச் சிலம்பு. இசைபுனை - ஆயிரம் பேரை வென்ற வனிடக்காலிலணியும் வீரச் சங்கிலி. இசைப்பாட்டு - இராகம். இசைப்பு - இணக்கம், கூடிநிற்றல், சொல்லல், பொருத்து. இசைப்புள் - அன்றிற் பறவை, குயில். இசைமடந்தை - சரச்சுவதி. இசைமணி - பதினாயிரம் பேரை வென்றவேந்தர் பொன்னாற் செய்து இடக்காலிலணியும் வீரகண்டை. இசைமுட்டி - செருந்தி. இசைமூடி - சிலந்திநாயகம். இசையந்தாதி - ஓரலங்காரம், அஃது ஒருவசனத் தீறுமற்றொரு வசனத் தாதியாக வருவது. இசையுந்தொழிலர் - சூத்திரர். இசையுரிச்சொல் - ஓசையாலறியப் படுங் குணச்சொல் (உம்) கவிகடல். இசையெச்சம் - ஒழிந்துநிற்குஞ் சொற்கொண்டு கருத்து முடிவது. இசையெஞ்சணி - இசையெச்சம். இசைவளை - குதிரை நூறுபோர்க் களத்திற் பொருதுவென்ற மல்லு யுத்தர் காற்பெரு விரலிலணியும் வளை. இசைவிரும்பி - அசுணம். இசைவு - இணக்கம், சம்மதி, பொருத்து. இசைவுபிசகு - இணக்கமின்மை. இச்சகம் - முகமன். இச்சயம் - ஆசை. இச்சாசத்தி - பஞ்ச சத்தியினொன்று. அஃது பஞ்சபூதமாக நின்று உயிர்க் கருணேசஞ் செய்வது. இச்சாபத்தியம் - புறப்பத்தியம், மைதுன முதலிய நீங்கல், விடு பத்தியம். இச்சாபோகம் - இச்சித்தவனுபவம். இச்சாவசு - குபேரன். இச்சானுவிருத்தி - ஆசையடக்கம். இச்சி - ஓர் மரம். இச்சித்தல் - காமுறல். இச்சியல் - கடுகுரோகணி. இச்சு - ஓரிடைநிலை. இச்சை - அஞ்ஞானம், ஆசை, இடித் தல், இட்டம், பேராசை, பொய். இஞ்சரகம் - இறால். இஞ்சி - இஞ்சிக்கிழங்கு, ஓர் மருந்துப் பூடு, கேடகம், மதில், வாவி. இஞ்சுச்சார் - வெல்லம். இடகலை - சந்திரகலை. இடக்கயம் - இடக்கியம். இடக்கரடக்கல் - சொல்லத்தகா வார்த் தையை மறைத்துச் சொல்வது. இடக்கர் - குடம், தூர்த்தர், நெருங் கல், மறைத்தசொல். இடக்கியம் - தேர்க்கொடி. இடக்கு - இழிச்சொல், எதிரிடை, ஏறுமாறு, தடை. இடக்கை - ஓர்வாச்சியம், தம்பட்டம், இடதுகரம், தாறுமாறு, மருத நிலத்தூர். இடக்கையான் - அஞ்சாவீரன். இடங்கணம் - பொரிகாரம். இடங்கணி - சங்கிலி, ஆந்தை. இடங்கம் - உளி. இடங்கரம் - மகளிர் சூதகம். இடங்கர் - குடம், சிறுவழி, தூர்த்தர், நீர்ச்சால், முதலை. இடங்கழி, இடங்கழிமை - நெருங்கல். இடங்கழியர் - காமுகர், தூர்த்தர். இடங்காரம் - மத்தளத்தினிடப்பக்கம். இடங்கேடு - தரித்திரம், வெறுமை. இடசாரி - இடச்சுற்று. இடங்கணி - ஆந்தை. இடதந்தம் - இராசயானை. இடதானன் - கன்னன். இடது - இடப்புறம். இடத்தல் - அகலப்பண்ணுதல், கிழித்தல், தோண்டல், பிரித்தல். இடத்தாலணையும் பேர் - குறிஞ்சி முதலிய வைந்திணையைப் பற்றியும் வான், அகம், புறம், முதலிய இடங் களைப் பற்றியும் வரும் பெயர் (உம்) வெற்பன், மறவன், ஆயன், ஊரன், சேர்ப்பன், வானத்தான், அகத்தான், புறத் தான் முதலியன. இடத்திடல் - சொலித்தல். இடநாகம் - அடையிருக்கும்பாம்பு. இடந்தலைப்பாடு - களவுப் புணர்ச்சி நான்கினொன்று, அஃது இடந் தலைப்படுதல். இடபம் - இராச சின்னத்தொன்று, எருது, ஓரிராசி, மேற்றிசைப் பாலன்குறி. இடபவீதி - சூரியன்மூவகை வீதி யினடுவீதி. இடப்பகுபதம் - ஓர்பகுபதம். இடப்பிறிதின்கிழமை - இடம்பற்றிய பிறிதின் கிழமை (உம்) அரசன துமாளிகை. இடப்பு - இடக்கப்பட்டது, மண் கட்டி, கான்முதலியவற்றைய கல விடுதல். இடப்பொருள் - ஏழாம் வேற்றுமைப் பொருள். இடமரம் - தேசோபத்திரவம். இடமலைவு - ஓரலங்காரவழு, அஃது ஓரிடத்துள்ள பொருள் மற்றொ ரிடத்துளவாகக் கூறுவது. இடமன் - இடப்புறம். இடமிடுதல் - பருத்தல். இடமிடைஞ்சல், இடமுடங்கு - இடங் கழிமை, ஒடுக்கம், நெருக்கம். இடமை - பூமி. இடம் - அகலம், ஆகாயம், ஓடப் பக்கம், ஓடம்பாடு, ஓளக்காரம், ஏது, சமயம், செல்வம், தலம், தன்மை முன்னிலை படர்க்கை யென்னுமூவிடம், தூரம், பெரு மை, விசாலம், வீடு, இராகத் தகுதி நான்கி னொன்று, அஃது ஐந் திணையைப் பற்றி வருவது, ஏழாம்வேற்றுமையுருபு, (உம்) என்னிடம். இடம்பக்கம் - திரவிய முதலியவுதவி. இடம்பம் - பெருமை, மேம்பாடு. இடம்பகம் - இடப்பக்கம், வழிவகை. இடம்பாடு - செல்வம், பருமை, விரிவு. இடம்புதல் - விலகுதல், வெறுத்து விடுதல். இடம்புரி - இடக்கைக்கயிறு, இடம் புரிச்சங்கு, சங்கு. இடம்மானம் - ஓர்பாறை. இடர் - ஆபத்து, இடைஞ்சல், துன்பம். இடலம், இடவிப்பு - அகலம். இடவித்தல் - விசாலித்தல். இடலை - துக்கம், துன்பம். இடல் - எறிதல், கொடுத்தல். இடவகை - வீடு. இடவம் - பூமி. இடவழு - தன்மை முன்னிலை படர்க்கை மூவிடத்தை பிறழக் கூறல், ஐந்திணைக்குரியவற்றுள் ஒன்றற் குரியவற்றை மற்றொன் றற்குக் கூறுவதுமாம். இடவன் - இடக்கப்பட்டது, எதிரி மாடு, மண்கட்டி. இடவாகுபெயர் - இடத்தினா மத்தை யதனிடத்த பொருட்கு வழங்குவது (உம்) அகம். இடவியது - அகலமுள்ளது. இடவை - வழி. இடவோட்டு - இடப்புறச் செலவு, இராகுகேதுவின் நடை. இடறி - யானை. இடறு - இடறென்னேவல், தடை. இடறுகட்டை - தடைகாரன். இடறுதல் - தடக்குதல், தட்டுதல், காலினாலெற்றுதல். இடனறிந்தொழுகல் - வணிகரெண் குணத்தொன்று. இடன் - இடம். இடா - இறைகூடை, ஓர் பொறி. இடாகினி - காளியேவல் செய்வாள். இடாகு - புள்ளி. இடாசுதல் - அகலநிற்குதல், அடித்தல், தள்ளல், நெருக்கல், மேற்படல். இடாடிமம் - தாதுமாதளை. இடாப்பித்தல் - காலையகலப் பண்ணி நிற்றல். இடாப்பு - சவாதுபண்ணினது, பார்த் தெழுதும்பிரதி, பெயர்விலாசம். இடாமுடாங்கு - எதிரிடை, ஏறுமாறு, ஒழுங்கின்மை. இடார் - ஓறைகூடை, ஓர் பொறி. இடி - இடியென்னேவல், ஓடியேறு, உறுதிச்சொல், ஒலி, சிற்றுண்டி, சுண்ணம், தகரம், தினைநென் முதலியவற்றின்மா. இடிகரை - அழிந்தகரை. இடிகை - பூமி. இடிக்கொடியன் - இந்திரன். இடிஞ்சில் - அகல். இடிசாமம் - கெடுகாலம். இடிதல் - உடைதல், ஒடிதல். இடித்தல் - ஒடிக்குதல், ஓடிவிழுதல், உறுதிச்சொல், ஒலித்தல். இடித்துரை - உறுதிச்சொல். இடிப்பு - ஒலி. இடிம்பு - அவமதிப்பு, ஓடும்பு. இடியப்பத்தட்டு - ஓடியப்பம் விக்குந் தட்டு. இடியப்பம் - ஓர்சிற்றுண்டி. இடியப்பவுரல் - ஓடியப்பம் பிழியும் பாத்திரம். இடியேறு - ஓடி. இடிவு - அழிவு, இடிந்திருப்பது, ஒடிவு. இடீகை - கிரந்த நிகண்டினொன்று. அஃது காரியங்களை வகுத்து ஒழுங்குபடுத்தத்தக்கது. இடீக்கு - இடம்பம், பிரபவியம், மேன்மை. இடு - கொடுவென்னேவல். இடுகடை - தருமமீயும் வாயில். இடுகாடு - சுடுகாடு. இடுகிடை - இடுக்கண், நெருக்கம். இடுகு - ஒடுக்கம். இடுகுதல் - ஒடுங்குதல், நோ. இடுகுறி - நியமிதமாத்திரப்பேர். இடுகுறிச்சிறப்புப்பெயர் - இடுகுறியா னொன்றற் கேவருஞ் சிறப்புப் பெயர். இடுகுறிப்பொதுப்பெயர் - இடுகுறி யாற்பலவற்றிற்கும் பொதுவாய் வரும் பெயர். இடுகை - ஈகை. இடுக்கணி - இடுக்கு. இடுக்கண் - இக்கட்டு, துன்பம், வறுமை. இடுக்கம் - ஒடுக்கம், துன்பம், நெருக்கம், வறுமை. இடுக்கல் - இடுக்குதல். இடுக்கி - இடுக்குவது, உலோபி, கொடிறு, சாவணம். இடுக்கு - இடுக்கென்னேவல், இடைஞ்சல், ஒடுக்கம், நெருக்க மானவிடம். இடுக்குதல் - அணைத்தல், நெருக்கல். இடுக்குத்தடி - கிட்டித்தடி. இடுக்குப்பனை - கருப்ப நீர்ப்பனை. இடுக்குப்பிள்ளை - கைக்குழந்தை. இடுக்குமரம் - எண்ணெயூற்றுமரம். இடுக்குமுடுக்கு - மூலைமுடுக்கு. இடுதங்கம் - மாற்றுயர்ந்த தங்கம். இடுதண்டம் - பம்பல், வந்தி. இடுதண்டல் - பம்பல். இடுதல் - அணிதல், ஈதல், எறிதல், சொரிதல், நிசமித்தல், வைத்தல். இடுதெண்டம் - தண்டனை, வாரா வந்தி. இடுப்பு - இடை, பக்கம். இடுமருந்து - கைமயக்குமருந்து. இடுமுடுக்கு - நெருக்கமானவிடம். இடும்பர் - ஓர்வகையிராக்கதர், செருக்கர், துயர்செய்வோர். இடும்பன் - ஓரரக்கன். இடும்பு - அவமதி, துன்பம், தேசோபத்திரவம். இடும்பை - அச்சம், ஆபத்து, தரித் திரம், தவறு, துன்பம், பொல் லாங்கு, விகாரமெட்டினொன்று. இடுலி - பெண்ணாமை. இடுவந்தி - அநீதம், நெருக்கிடை, வாராவந்தி. இடுவேற்று - இடைத்தட்டு. இடை - அளவு, ஓடமூக்கினிற்குந் நரம்பு, ஓடம், ஓடையர்க்குரியது, ஏழனுருபு, சுவாசத்திற்சந்திர கலை, சுற்றாடல், தெசநாடியி னொன்று, நடு, நிறை, நுசுப்பு, பக்கம், பௌரணை, யானை, இடைச்சொல், இடையென்னேவல். இடைகலை - இடமூக்கால் வருஞ்சு வாசம், இடமூக்கினிற்குந் நரம்பு. இடைக்கச்சு - இடைக்கட்டு. இடைக்கட்டு - அரைக்கச்சு. இடைக்குலநாதன் - விட்டுணு. இடைக்கிடை - ஊடேயூடே, ஒன்றை விட்டொன்று. இடைக்குறை - இடையிற்குறைந்து நிற்கும்மொழி. இடைக்கொள்ளை - அவமிருத்தாய்ச் சாதல், இடையிலேவாருதல். இடைசுருங்குபறை - உடுக்கை. இடைசூரி - அரும்புவளையம். இடைச்சங்கம் - மதுரையிலிரண்டா வதாயிருந்த சங்கம். இடைச்சனி - பூரநாள். இடைச்சன் - நடுமகன். இடைச்சி - முல்லைநிலப்பெண். இடைச்சீலை - திரைச்சீலை. இடைச்சேரி - இடையரூர். இடைச்சொல் - பெயர்வினைகளோ டே சார்ந்து வழங்குஞ்சொல். இடைச்சொற்பகாப்பதம் - ஓர்பகாப் பதம். இடைச்சோழகம் - மறுகாற்றுக் கிடை யிலே வீசுந்தென்றல். இடைஞ்சல் - இக்கட்டு, நெருக்கிடை, வருத்தம். இடைதரம் - இடைத்தரம். இடைத்திரிசொல் - இயற்சொற் போற்றம் பொருள் விளக்காது அரி துணர்பொருளனவாய் நிற்கு மிடைச்சொல் (உம்) சேறும். இடைத்தொடர்க்குற்றுகரம் - ஓர் குற்றுகரம். இடைதல் - சீலை, தோற்குதல், பின் வாங்குதல், வசக்கெடுதல். இடைத்தட்டு - இடையிலேகாரியம் பார்த்தல், சஞ்சாயம். இடைத்தரம் - நடுத்தரம். இடைநடு - ஊடே. இடைநரை - ஓடைக்கிடையேநரை மயிரிருப்பது. இடைநிலை - பகுபதங்களினிடையே நிற்பது. இடைநிலைத்தீபகம் - ஓரலங்காரம், அஃது தீபகச்சொல்லிடையினிற் பது. இடைநிலைப்பாட்டு - தாழிசை. இடைநிலைமயக்கு - மெய்யொடு மெய்யேனும் உயிரொடு மெய் யேனு மொழிக் கிடைமயங்கி வருதல். இடைநிலையெழுத்து - சொற்களுக் கிடையே மயங்கிவரத்தகு மெழுத் துக்கள். இடைநீரினிற்றல் - நீரினீந்திநிற்றல். இடைப்பழம் - இடையிடைபழுத்த பழம். இடைப்பழுப்பு - பச்சைகலந்தபழுப்பு, முற்றும்பழாதது. இடைப்புணரியைபு - நடுவிருசீர்க் கண்ணுமியைபுவருவது. இடைப்புணரெதுகை - நடுவிருசீரிக் கண்ணுமெதுகைவருவது. இடைப்புணர்முரண் - நடுவிருசீர்க் கண்ணு முரண்வரத் தொடுப்பது. இடைப்புணர்மோனை - நடுவிருசீர்க் கண்ணுமோனைவரத் தொடுப்பது. இடைப்புணரளபெடை - நடுவிருசீர்க் கண்ணுமளபெடை வருவது. இடைப்புணரியைபு - நடுவிருசீர்க் கண்ணுமியைபு வருவது. இடைப்புணரெதுகை - நடுவிருசீர்க் கண்ணுமெதுகை வருவது. இடைப்புணர்மோனை - நடுவிருசீர்க் கண்ணுமோனைவரத் தொடுப்பது. இடைப்புழுதி - ஈரமும்புழுதியுங் கலவன். இடைப்புள்ளி - இடைவரி. இடைப்பூட்டு - அரைப்பூட்டு. இடைமடக்கு - ஓரலங்காரம், அஃது இடைமுற்று மடங்கி வருவது. இடைமுள் - இடைப்பரு. இடையர் - முல்லைநிலமாக்கள். இடையல் - நல்லாடை, மெலிதல். இடையாகெதுகை - அடிதோறு மிடையிலேயாகுமெதுகை. இடையாந்தரம் - நடு. இடையிடுதல் - ஊடேசம்பவித்தல். இடையிடை - இடைக்கிடை. இடையிட்டு வண்ணம் - எதுகைத் தாது. இடையிட்டெதுகை - அடிகளொன் றைவிட்டொன் றெதுகையொன்றி வருவது. இடையியற்சொல் - செந்தமிழ் நிலத்து மொழிகளாய்ச் செய்யுளினும் வழக்கினு நின்று தம் பொருளை யியல்பாய் விளக்குமிடைச்சொல். இடையினமோனை - இடையெழுத் துக்கள் ஒன்றற்கொன்று மோனை யாய் வருவது. இடையினம் - இடையெழுத்து. இடையீடு, இடையூறு - ஊறுபாடு, தடை, இடையெழுத்து, இடை யிட்டுக் கொண்டது. இடையூறின்மை - தடையின்மை, அஃது ஈச்சுரனெண் குணத் தொன்று. இடையெண - சிந்தடி ஓரடியாக எட்டுவருவது. இடையினவெதுகை - இடையின வெழுத்துக்களொன்றற் கொன்று எதுகையாய் வருவது. இடையெழுஞ்சனி - பூரநாள். இடையெழுத்து - வல்லோசை மெல்லோசை யிரண்டிற்குமிடை நிலைமையா யுச்சரிக்குமெழுத்து. இடையொடுகடைமடக்கு - ஓரலங் காரம், அஃது அடிகளினிடையுங் கடையு மடங்கி வருவது. இடைவழக்கு - எதிரிக்கும் வழக் காளிக்குமிடையிலே வேறொரு வன் தொடர்தல். இடைவழி - நடுவழி, பாதிவழி. இடைவள்ளல் - கேட்டன கொடுப் போன். இடைவிடாமழை -ஓயாமழை. இடைவு - தோல்வி, நீக்கம், வெளி. இடைவெட்டு - இடையிலே பெறுதல். இடைவெளி - ஊடுவெளி, நடுவெளி. இடோல் - ஓர்பறை. இஷடப்பிரசாதம் - தொடர்ந்தவன்பு, யாகசேடம். இஷடம் - ஆமணக்கு, சடங்கு, யாகபலி, யாகம், விடுதலை. இட்டகாமியம் - இச்சித்த பொருளை நினைத்த படிபெறுதல். இட்டடை - கடைச்சல் மரம். இட்டதேவதை - குலதேவதை. இட்டபோசம் - தன்னிட்டம், விரும்பிய போகம். இட்டம் - அன்பு, இச்சைப்படி. இட்டலி - ஓர்பண்ணிகாரம். இட்டலிடைஞ்சல் - இடையூறு, தரித் திரம், துன்பம். இட்டளம் - உவாதி, தளர்வு, துன்பம். இட்டறுதி - முட்டு, வறுமை. இட்டி - ஈட்டி, யாகம், செங்கல், விருப்பம். இட்டிகை - இடுக்குவழி, செங்கல். இட்டிடை - அற்பம், சிறுமை. இட்டிடைஞ்சல் - ஓட்டறுதி, முட்டு. இட்டியம் - யாகம். இட்டிவனம் - ஓர்சடங்கு. இட்டு - அசைச்சொல், அற்பம், நுண்மை. இட்டுக்கட்டிப்பேசுதல் - இல்லாததை நியமித்துப்பேசுதல். இட்டுறுதி - ஆபற்காலவுதவி. இட்டேற்றம் - அநீதம். இட்டொருசட்டு - இட்டம். இட்டோட்டு - அலைக்களிவு, தொந் தறை. இணக்கம் - இசைவு, சம்மதம், சேர்மானம். இணக்கு - இணக்கென்னேவல், இயைவு, சம்மதி. இணக்கோலை - பொருத்தோலை. இணங்கலார் - பகைவர். இணங்கல் - உடன்படல். இணங்கார் - பகைவர். இணங்கி - தோழி. இணங்கு - இணங்கென்னேவல், பிசாசம். இணங்குதல் - சம்மதித்தல், பொருந்து தல். இணபம் - யாக்கைக்குற்றம் பதி னெட்டினொன்று. இணர் - பூங்கொத்து, பூந்தாது, பூ மலர், இணரென்னேவல், கிச்சிலி மரம், தளிர். இணாட்டு - ஓலைத்தளிர், குணாட்டு. இணாப்பு - ஏய்ப்பு. இணாப்புதல் - ஏய்த்தல். இணி - எல்லை, ஏணி. இணுக்கு - இணுக்கப்பட்டது, குலை யினெட்டு. இணுக்குதல் - இணுங்குதல். இணுங்குதல் - இசித்தல். இணை - இச்சை, இரண்டு, உவமை, கூந்தல், சகாயம், சோடு, துணை, பிணையென்னேவல், வதில். இணைகயல் - அட்டமங்கலத்தொன்று, இராசசின்னத்தொன்று. இணைக்குறளாசிரியப்பா - அகவற் பாவுளொன்று, அஃது ஈற்றடியு முதலடியுமள பொத்து நடுவடி களுளொன்றும் பலவும் ஒரு சீரும்பல சீருங்குறைந்து வருவது. இணைதல் - இசைதல், சேர்தல், பொருந்தல். இணைத்தல் - உவமித்தல், சேர்த்தல், தொடுத்தல். இணைப்பு - இசைப்பு, சேர்ப்பு. இணைமணிமாலை - ஓர் பிரபந்தம், அஃது வெண்பாவும் அகவலும் வெண்பாவுங்கலித்துறையுமாக விணைத்து வெண்பாவகவலிணை மணிமாலையெனவும் வெண்பாக் கலித்துறையிணை மணிமாலை யெனவும் நூறு நூறு அந்தாதித் தொடை நான் கானும் பாடுவது. இணைமுரண் - முதலிரு சீர்க் கண்ணு முரண்வருவது. இணைமோனை, இணை மோனைத் தொடை - முதலிரு சீர்க்கண்ணு மோனைவருவது. இணையசை - நிரையசை. இணையடி - உபயபாதம், ஓரலங் காரம், அஃது இருசீரொன்றாய் வருதல். இணையல் - இணைதல். இணையளபெடை - முதலிருசீர்க் கண்ணுமளபெடை வருவது. இணையியைபு - அடிகளினீற்றசை யிரண்டு மொத்துவருவது. இணையெதுகை - முதலிரு சீர்க் கண்ணுமெதுகை வருவது. இணையெழுத்து - போலியெழுத்து. இணைவிழைச்சு - கற்பின்மையாய்க் கொள்ளுமிச்சை, திரீபுருஷரிரு வர்க்கு மொத்தவின்பம். இணைவு - ஒன்றிப்பு, கலப்பு, சேர் மானம். இண்டர் - இடையர், சினேகர், சுற்றம். இண்டு - ஈகைக்கொடி, சிங்கிலிச் செடி. இண்டை - இகைக்கொடி, தாமரை, மாலை, முல்லை. இதங்குதம் - இதாகிதம், நவ்வுசுவ்வு. இதணம், இதண் - அட்டாலை, பரண். இதமியம் - இதப்படுதல், இனிமை, திருத்தி. இதமித்தல் - ஒன்றித்தல். இதம் - இனிமை, உரிமை, சொல், நன்மை. இதயம் - மனம். இதரபதார்த்தானவச்சின்னவான்மா - மறுமைக்கடுத்தவாத்துமா. இதரம் - அழிவு, அன்னியம், ஈனம், ஓர்மருந்து, கீழ்மை, வித்தியாசம். இதரயோகவிவச்சேதம் - பிரிநிலை. இதரர் - அன்னியர், கீழ்மக்கள். இதரவிதரம், இதரேதரம் - அன்னி யோன்னியம். இதரேதரவுவமை - ஓரலங்காரம், அஃது பொருளொருக்காலுவ மையாய் உவமையொருக்காற் பொருளாயொரு தொடர்க்கண் வருவது. இதலை - கொப்பூழ். இதல் - கவுதாரி, சிவல். இதவு - இதம், முகமன். இதழி - கொன்றை. இதழ் - இலை, உதடு, கண்ணிமை, பனையேடு, பூவிதழ். இதாகிதம் - நன்மைதீமை, விருப்பு வெறுப்பு. இதார்த்தம் - எதார்த்தம். இதி - உறுதி, பிசாசம், அத்தாட்சி, இப்படி, காரணம். இதிகாசப்பிரியர் - நைமிசாரணியர். இதிகாசம் - அறிவு, பழங்கதை, மேற்கோள். இதிகாசன் - சூதமாமுனி, வேத வியாசன். இதியாசம் - அறிவு, உதாரணம், கலை ஞானமறுபத்தினான்கினொன்று, பழங்கதை. இது - இஃது, சுட்டு. இதை - கலப்பை, காராமணி, புதுக் கொல்லை, மரக்கலப்பாய். இதைப்புனம் - புதுக்கொல்லை. இத்தி - ஓர் மரம், துவர்பத்தினொன்று. இத்தியாதி - இதுமுதலானவை. இத்து - காவட்டம்புல். இத்துரு - காவட்டப்புல்லு, வங்க மணல். இத்தை - முன்னிலையசைச்சொல். இந்தம் - புளியமரம். இந்தம்பரம் - நீலம். இந்தரி - இராகு. இந்தளம் - ஓர் பண், தூபக்கால். இந்தனம் - காடு, சுவாலை, நறும்பு கை, மேல், விறகு. இந்தனோடை - உத்தரீயம். இந்தி - பூனை. இந்தியம் - இந்திரியம், புலன்கள். இந்திரகணம் - மூன்றுநேரசைகூடிய சீர், அஃது இயமானகணமென வும் படும். இந்திரகம் - சங்கமண்டபம். இந்திரகீலம் - மந்தரமலை. இந்திரகுஞ்சரம் - இந்திரன்யானை. இந்திரகோபம் - தம்பலப்பூச்சி. இந்திரசத்தி - இந்திராணி. இந்திரசாலம் - அற்புதங்களைக் காட்டும் வித்தை, கலைஞான மறு பத்தி னான்கினொன்று, எத்து, ஓர்நூல். இந்திரசாலி - அழிஞ்சில், இந்திர சால வித்தைக்காரன். இந்திரசுதன் - அருச்சுனன், வாலி. இந்திரதனு - வானவில். இந்திரதிசை - கிழக்கு. இந்திரநீலம் - ஓரிரத்தினம். இந்திரபதம் - தேவலோகம், பாலை. இந்திரபாஷாணம் - வைப்புப்பாஷாண முப்பத்திரண்டி னொன்று. இந்திரபிரகரணம் - இடியேறு. இந்திரமாசாலம், இந்திரமாஞாலம் - இந்திரசாலம். இந்திரம் - சிற்பநூன்முப்பத்திரண்டி னொன்று, ஆத்துமா, இந்திரியம், இரா, கடம்பமரம், நவகண்டத் தொன்று, மாயம். இந்திரயாணி - இந்திராணி. இந்திரலோகேசன் - இந்திரன். இந்திரவல்லி - கொற்றான். இந்திரவாசம் - நெய்தல். இந்திரவிகூடல் - அமாவாசி. இந்திரவிகூட்டம் - அமாவாசி. இந்திரவில் - வானவில். இந்திரனாள் - கேட்டை. இந்திரன் - தலைவன், தேவேந்திரன், மிருகசீரிடம், கடவுள். இந்திரன் மைந்தன் - அருச்சுனன், சயந்தன். இந்திராணி - இந்திரன்மனைவி. இந்திராணிப்பூ - கையணியினோ ருறுப்பு. இந்திராபரசன் - உபேந்திரன். இந்திராயுதம் - வானவில். இந்திரானுசன் - விட்டுணு. இந்திரி - காந்தம், கிழக்கு, நன்னாரி. இந்திரியகிராமம் - பஞ்சேந்திரியம். இந்திரியகோசரம்- புலனுக்கெட்டியது. இந்திரியக்காட்சி - கண் முதலிய புலனாலறிதல். இந்திரியத்துவாரம் - பொறிவாயில். இந்திரியநிக்கிரகம் - இந்திரியமடக்கல். இந்திரியநுகர்ச்சி, இந்திரியபோகம் - ஐம்புலனுகர்ச்சி. இந்திரியப்பிரத்தியட்சம் - பஞ்சேந் திரியக்காட்சி. இந்திரியம் - தாது, பஞ்சவிந்திரியம். இந்திரியவருக்கம் - பஞ்சேந்திரியம். இந்திரியவிப்பிரதிபத்தி - திரிபுக் காட்சி. இந்திரியாசங்கம் - அனுபவவெறுப்பு. இந்திரியாபதனம் - உடல். இந்திரேயம் - வெட்பாவட்டை. இந்திரை - இலக்குமி. இந்திரைகேள்வன் - திருமால். இந்திரைக்குமூத்தாள் - மூதேவி. இந்திவரம் - கருங்குவளை. இந்தீவரம் - கருங்குவளை, கருநெய் தல். இந்து - கரடி, கரி, சந்திரன், கௌரி பாஷாணம், பச்சைக் கருப்பூரம். இந்துகமலம் - வெண்டாமரை. இந்துசனகம் - சமுத்திரம். இந்துசேகரன் - சிவன். இந்துதலம் - சந்திரன்கலை. இந்துகாந்தம் - சாந்திரகாந்தக்கல். இந்துதேசம் - சிந்துதேசம். இந்துஸ்தானம், இந்துஸ்தானி - ஓர் பாடை. இந்துபுத்திரன் - புதன். இந்துப்பு - ஓர்மருந்துச்சரக்கு. இந்துமதி - பூரணை. இந்துரத்தினம் - முத்து. இந்துரம் - எலி. இந்துரு - பெருச்சாளி. இந்துரேகை, இந்துலேகை - சந்திரன் கலை. இந்துலோகம் - வெள்ளி. இந்துளம் - கடப்பமரம், நெல்லி. இந்துளி - நெல்லி, பெருங்காயம். இந்தோளம் - ஓரிராகம். இந்நாள் - அந்நியநாள், இன்று. இபங்கம் - புளிமா. இபம் - மரக்கோடு, யானை. இப்பர் - இடையர், உழவர், செட்டி கள், வைசியர்பொது. இப்பவம் - இப்பிறப்பு. இப்பாலகன் - யானைப்பாகன். இப்பால் - இந்தப்பக்கம், இனிமேல். இப்பி - சங்கு, சிப்பி. இமகரன் - சந்திரன். இமசானு - இமயம். இமபடி - சூரியன். இமப்பிரவை - ஏழ்நரகவட்டத் தொன்று, அஃது குளிர்நிலம். இமம் - குளிர், பனி, பொன். இமயம் - இமயமலை, பொன்மலை. இமலம் - மரமஞ்சள். இமவான் - மலையரசன். இமாசலம், இமாலயம் - இமயமலை. இமிசை - எளிமை, கொல்லுதல், சங்கையீனம், வருத்தம். இமிர்தல் - ஒலித்தல், முரிதல், மொய்த்தல். இமில் - எருத்தினேரி. இமிழ் - இனிமை, இமிழென்னேவல், ஒலி. இமிழ்தல் - இனிதாதல், ஒலித்தல், கக்குதல். இமிழ்த்தல் - ஒலித்தல், சட்டல், கொப்பளித்தல். இமை - அற்பம், இமைப்பொழுது, இமையென்னேவல், கண்ணிதழ், கரடி, மயில். இமைத்தல் - ஒளிசெய்தல், கண் ணிமைத்தல். இமைப்பு - இமைத்தல், இமைப் பொழுது. இமைப்பொழுது - கணப்பொழுது. இமையவர் - வானோர். இமையவர்வேந்தன் - இந்திரன். இமையில் - கருடன். இம்பர் - இவ்விடம், இவ்வுலம். இம்பூறல் - சாயவேர். இம்மடி - யானை. இம்மி - அற்பம், ஓர்கணக்கு, நுண் மை, புலம், பொன்மை. இம்மெனல் - அனுகரணவோசை, விரைவின்குறிப்பு. இம்மை - இப்பிறப்பு. இயக்கம் - அசைதல், இயங்குதல் செய்குதல், நடமாடுதல், பலம், பாக்கியம், பெருமை, போதல், மிகுதி, வடதிசை. இயக்கர் - கந்தருவர். இயக்கர்கோமான் - குபேரன். இயக்கன் - கந்தருவன், நாய், குபேரன். இயக்கி - கந்தருவஸ்திரீ, தரும தேவதை. இயக்கு - இயக்கென்னேவல், நடை. இயக்குதல் - உழத்தல், ஒளிசெய்தல், செலுத்துதல், தங்கல், நடத்தல். இயங்காத்திசை - சூனியதிசை. இயங்காத்திணை - நடையில்லது. இயசு - இரண்டாம்வேதம். இயங்கு - இயங்கென்னேவல், ஓர் செடி. இயங்குதல் - இளைத்தல், உலாவல், ஒளிசெய்தல், தங்கல், நடத்தல். இயங்குதிசை - பூரணதிசை. இயங்குதிணை - நடையுள்ளது. இயசுரு - இரண்டாம்வேதம். இயத்தனம் - கருவி, பாத்திரம். இயந்திரம் - ஆலை, சக்கிரம், சூத்திரம், தேர், மதிலுறுப்பு. இயந்தை - மருதயாழ்த்திறம். இயமதூதி - பாம்பினச்சுப்பல்லி னொன்று. இயமம் - அட்டயோகத்தொன்று, அஃது இச்சை களவு கொலை பொய் இவற்றிற்கு நீங்கிப் புலனடக்கியிருத்தல். இயமன் - அரவினச்சுப்பல்லினொன்று, கூற்றுவன். இயமானகணம் - நேரசைமூன்றடுத்து வருவது. இயமானன் - உயிர், காரியத்தலைவன், யாகஞ்செய்விப்போன். இயமான் - எசமான். இயம் - ஈ, ஒலி, சொல், வாச்சியம். இயம்பல் - எவ்வகைவாச்சியமு முழக்கல், ஒலித்தல், சொல்லல், பழமொழி. இயம்புதல் - வேட்கையுவமை, ஓரலங் காரம், அஃது பொருளையின்ன தொன்றென்று சொல்ல வேட் கின்றுதென்னுள்ளமெனக் கூறு வது. இயலடி - இயற்சீரான்வருமடி. இயலல் - ஏலுதல், பொருந்தல். இயலுவமம் - அதீதம் போலுஞ் சாக்காடெனவருவது. இயல் - இசை, இயற்றமிழ், ஒத்து, ஒழுங்கு, குணம், சாயல், நடை, பகுதி, இயலென்னேவல். இயல்பகத்திணை - அவ்வவ்வியல் பைக் கொண்டு பொருளைக் காட்டுவது. இயல்பளவை - நால்வரிலொருவன் கள்வனெனில் மற்றையர்கள் வரலரென்றுணர்தல். இயல்பு - ஒழுக்கம், குணம், சுபாபம், தகுதி, பெலன். இயல்புகேடு - பலகீனம். இயல்புக்காட்சி - காட்சிபேதத் தொன்று. இயல்புப்புணர்ச்சி - எழுத்துவிகார மில்லாத புணர்ச்சி. இயல்பூ - வில்வம். இயல்பூதி - நாய்வேளை. இயல்பேது - ஓரளவை, அஃது பல பொருள்குறித்தவொரு சொல் லாயினுமியல்பையுங் காரணத் தையுங் கொண்டு ஒருபொருளைக் கருதுவது, (உம்) மா. இயவர் - கீழ்மக்கள், சண்டாளர் தோற்கருவியாளர். இயவனர் - கம்மாளர், சித்திரகாரர், சோனகர். இயவு - ஊர், காடு, புகழ், வழி. இயவுள் - தலைவன், தெய்வம், புகழாளன். இயவை - துவரை, தோரை நெல், வழி. இயறல் - போதல், முத்தி. இயற்கை - ஏது, குணம், சுபாபம், தகுதி, தட்டுமுட்டு, பாக்கியம், முறைமை. இயற்கைஞானம் - சுபாபஞானம். இயற்கைப்புகழ்ச்சியணி - இயற்கை யையேயுவமையாய்க் கூறல் (உம்) கன்னன் கொடையேகொடை. இயற்கைப்புணர்ச்சி - களவுப் புணர்ச்சியினொன்று, அஃது தலைவனுந் தலைவியு முயற்சி யின்றிக் கூடுதல். இயற்கைப்பொருள் - இயல்புப் பொருள். இயற்கையறிவு - சுயவறிவு. இயற்கையுணர்வுடைமை - கடவு ளெண்குணத்தொன்று, அஃது பூருவ ஞானம். இயற்கைவினைக்குறிப்பு - ஆக்கச் சொல் வேண்டாதியற்கைச் சொல் லாய் நிற்கும் வினைக்குறிப்பு. இயற்சீர் - ஆசிரியவுரிச்சீர். இயற்சீர்வெண்டளை - நேர்முன்னி ரையும் நிரைமுன்னேருமாய் வருவது, ஆசிரியவுரிச் சீரீற்றசை வருஞ் சீர்முதலசையோ டொன் றாது நிற்பது. இயற்சொல் - இயற்றமிழ், வழக்கச் சொல். இயற்படுத்துரைத்தல் - வழிப்படுத்திச் சொல்லல். இயற்பெயர் - காரணமின்றி வழங்கும் பேர். இயற்றமிழ் - செந்தமிழ், வழக்கத் தமிழ். இயற்றல் - ஏவுதல், செய்தல். இயற்றளை - ஆசிரியத்தளை. இயற்றனம் - கருவி, பாத்திரம். இயற்றி - முயற்சி. இயற்று - இயற்றென்னேவல், பாத்திரம். இயற்றுதல் - செய்தல். இயற்றுதற்கருத்தா - வினைமுதற் கருத்தா. இயற்றும்வினை - தன்வினை. இயற்றும் வினை முதல் - செய்வினைக் கருத்தா. இயனம் - மரமேறிகளின் கருவியுறை. இயனிலையுருவகம் - உருவகவலங் காரத்தொன்று, அஃது ஒன்றனங் கம் பலவற்றையு முருவகித்து முருவகியாது முரைத்தங்கியை யவருவித் துரைப்பது. இயன்மொழிவாழ்த்து - ஓர் பிரபந்தம், வேள்வி. இயாகம் - கொன்றை, பாத்திரம், வேள்வி. இயாகாதிபதி - இந்திரன். இயாதம் - யானைத்தோட்டியின் பிடர். இயாழ் - ஓரிசைக்கருவி. இயை - இசைப்பு, இயையென் னேவல், புகழ். இயைதல் - இணங்கல், பொருந்தல். இயைத்தல் - இணக்கல், பொருத்தல். இயைபணி - ஓரலங்காரம். இயைபிசையணி - பற்பல வசனத்தீற்று மொழிகடமதுருபி னொப்புமை யானியையக் கூறுதல். இயைபிலுருவகம் - ஓரலங்காரம், அஃது பலபொருளையுந்தம் முளொன்றோடொன்றியை யாமலுருவகஞ் செய்வது. இயைபின்மையணி - ஓரலங்காரம், அஃது ஒருபொருளையேயுப மானமாகவும் உபமேயமாகவுஞ் சொல்வது (உம்) சேயிளையாள் செவ்வியினாற்றானேயுவமை தனக்கு. இயையு - இசைப்பு, இணக்கம், செய் யுளினோருறுப்பு, பொருத்தம். இயைபுத்தொடை - அடிகளினிறுதி தோறுமோரெழுத்தேவருந்தொடை. இயைபுருவகம் - ஓரலங்காரம், அஃது பலபொருளையு முருவகஞ் செய் யுளி அவை தம்மு ளொன்றோ டொன்றியை புடையவாக வைத் துருபகஞ்செய்வது. இயைபுவண்ணம் - இடையெழுத்து மிக்குவருவது. இயைபுவனப்பு - செய்யுள்வனப் பெட்டினொன்று. அஃது இடை மெலியின வொற்றீற்றிற்பயின்று வருவது. இயைபுளன் - புகழாளன். இயைய - உவமையுருபு (உம்) என்றா யியைய. இயைவு - இசைவு, இணக்கம், பொருவு. இரகசியத்தானம் - மூலத்தானம். இரகசியம் - அந்தரங்கம், குறி, மறை. இரகம் - சூரியகாந்தம். இரகுநாதன் - இராமன். இரகுவரன் - இராமன். இரகிதம் - இட்டம், கைவிடுதல், நீங்கியிருத்தல், விடுதல். இரக்கச்சொல் - பரிதாபமொழி. இரக்கம் - உருக்கம், ஒலி, கிருபை, துன்பம், உணவு, பிச்சை. இரங்கல் - அழுதல், உருகல், ஒலித்தல், பரிதபித்தல். இரங்கல்விலக்கு - ஓரலங்காரம், அஃது இரக்கந்தோன்றக் கூறி விலக்குவது. இரசகந்தபாஷாணம் - சாதிலிங்கம். இரசகம் - இரேசகம். இரசகற்பூரம் - ஓர் மருந்து. இரசகன் - வண்ணான். இரசகுளிகை - இரும்பைப் பொன் னாக்கு மருந்து. இரசகேசரம் - கருப்பூரம். இரசசானு - இருதயம், முகில். இரசசிந்தூரம் - ஓர்செந்தூரம். இரசதம் - வெள்ளி. இரசதம் - இரத்தம், கழுத்தணி, பொன், யானைத்தந்தம், வெண்மை. இரசதாது - இரதம். இரசதாளி - ஓர்மரம். இரசநாதம் - இரதம். இரசநாயகன் - சிவன். இரசபஸ்மம் - ஓர் மருந்து. இரசபலம் - தென்னமரம். இரசபுட்பம் - இரசபஸ்மம். இரசமணி - இரசங்கட்டியமணி. இரசமாத்திரை - இரசகுழிகை. இரசம் - சாறு, சுவை, சூதம், பாதரசம். இரசம் - சுக்கிலம், தூளி, நஞ்சு, நீர், பூந்தாது, பூப்பம், மதம். இரசலிங்கம் - சாதிலிங்கம். இரசவாதம் - இரும்பைப் பொன் னாக்குதல், கலைஞானமறுபத்தி னான்கி னொன்று. இரசவாழை - ஓர் வாழை. இரசனம் - ஓர்பொறி, பல், சுவை, தொனி, வன்னம். இரசனி - இராத்திரி, அவுரி. இரசனிகரன், இரசனீகரன் - சந்திரன். இரசனீசலம் - பனி. இரசனை - இரசிப்பு, அணிவகுப்பு, அலங்கரித் தல், நா, மயிர்கோதல், மாதரிடையணி, மாலை கோத்தல், வாசக விணைப்பு. இரசாதலம் - கீழேழுலகினொன்று. இரசாதிபன் - இரசவஸ்துக்கட்கதி காரி. இரசாயனம் - ஓர் மருந்து, இரச வாதம், காயசித்தி மருந்து, நஞ்சு, மோர். இரசாயனனி - கருடன். இரசாலம் - கரும்பு, பலாமரம், மாமரம், கோதும்பை. இரசிகம் - குதிரை, தூர்த்தத்தனம், யானை. இரசிகன் - தூர்த்தன். இரசிகை - தூர்த்தி, நா, மாதரிடை யணி. இரசிதசுத்தி - ஈயம். இரசிதம் - வெள்ளி, இடி, ஒலி, வைப்புப் பாஷாண முப்பத்திரண்டி னொன்று. இரசித்தல் - உருசித்தல். இரசிப்பு - உருசி. இரசுனம் - உள்ளி. இரசேந்திரம் - இரசம், பரிசனவேதி. இரசோகரன் - வண்ணான். இரசோபலம் - இருள், முத்து. இரசோரசம் - இருள். இரச்சு - கயிறு, சடை, முடிச்சு. இரச்சுலம் - கவண். இரச்சுவம் - குற்றெழுத்து. இரச்சை - கயிறு. இரஞ்சகம் - பிரியம், திரிவாய்ப் பெட்டி. இரஞ்சகன் - பிரியவான், விளக்கு வோன், செய்பவன், வன்னக் காரன், செஞ்சந்தனம், திரிவாய் மருந்து, பிரியம். இரட்சம் - இரட்சை. இரஞ்சிதம் - இன்பம், பிரியம், விளக்கம், செய்பவன், வன்னக் காரன், காப்பாற்றல். இரட்சகத்தா - காவற்கடவுள். இரட்சகன் - காக்கிறவன், மீட்புக் செய்பவன். இரட்சணை - காவல், மீட்பு. இரட்சண்ணியம் - இரட்சிப்பு, காத்தல். இரட்சாபந்தனம் - காப்பு. இரட்சித்தல் - காத்தல், மீட்குதல். இரட்சிப்பு, இரட்சை - காவல், மீட்பு. இரட்டர் - வைசியர். இரட்டல் - அசைத்தல், ஒலித்தல், பணிமாறுதல், இரட்டித்தல். இரட்டாங்காலி - ஓரடியினிற்குமிரு மரம். இரட்டி - இரட்டியென்னேவல், இரண்டுபங்கு, ஓர் சாதி. இரட்டித்தல் - இரட்டைபடவெண் ணல், இரண்டாமுறையுழுதல், இரண்டுபங்காதல், இரண்டுபடு தல், ஒவ்வாமை. இரட்டிப்பு - இரட்டித்தல். இரட்டியர் - இடையர், வைசியர். இரட்டு - இரட்டென்னேவல், இரட்டை, இரட்டை நூற் புடைவை, ஒலி, ஓர்சாதி. இரட்டுதல் - ஒலித்தல், வீசுதல். இரட்டுமி - ஓர் வாத்தியம். இரட்டுறமொழிதல் - இரண்டருத்தம் வினையச்சொல்வது. இரட்டை - இரண்டொன்றானது, பாடுவிச்சி, மிதுனவிராசி. இரட்டைக்கிழவி - இரு சொல்லடுக்கி வரல், (உம்) கலகல. இரட்டைத்தொடை - ஓரலங்காரம், அஃது அடிமுழுதும் புகன்ற தொடையே புகல்வது, அடி முழுதும் வந்தமொழியேவருவது. இரட்டைமணிமாலை - ஓர் பிரபந்தம், அஃது வெண்பாவுங் கலித்துறை யுமிருபஃதந்தாதித் தொடையான் வருவது. இரணகளம் - போர்க்களம். இரணகாளம் - போர்நிறுத்தவூதுங் காளம். இரணக்கொடி - போர்க்கொடி. இரணங்கொல்லி - ஓர்பூடு. இரணசங்கம் - போர்வென்றூதுஞ் சங்கு. இரணசின்னம் - படைக்கலம், படை சனம். இரணசுக்கிரன் - கண்ணோயு ளொன்று. இரணசூரன் - யுத்தவீரன். இரணதாரை - போர்புரியவூது நதாரை. இரணதூரியம் - போர்ப்பறை. இரணதோரணம் - பகைவரை வெட்டியவர் கடலையைத் தோர ணங்கட்டிப் பிடித்தல். இரணத்தொடை - செய்யுட்டொ டையினொன்று, அஃது சொல்லா னேனும் பொருளானேனுமறு தலைப்படத்தொடுப்பது. இரணபரிட்சை - சத்திரபரிட்சை. இரணபாதகம் - கொலை, நம்பிக்கைத் துரோகம். இரணபாதகன் - கொலைபாதகன். இரணபேரி - போர்ப்பறை. இரணமத்தம் - யானை. இரணமாலை - பகைவர் குடலை மாலையாகவணிதல். இரணமுடி - பகைவரை வென்று போர்க்களத்திற் பூவைத் தலை யிலே முடித்தல். இரணமுழுக்கு - உதிரமுடலெங்குந் தோயும் படி போர் செய்தல். இரணமோசனம் - அழிவு. இரணம் - இரை, உணவு, உப்பளம், ஒலி, கடன், பல், புண், போர், வேட்டை, அரவம், சதுப்புநிலம், பொன், வனாந்தரம். இரணரங்கம் - போர்க்களம், யானைக் கொம்பினடு. இரணவிரணம் - இரணத்தழும்பு, கொதுகு, துக்கம். இரணவீரம் - தன்வேந்தர் தடுத்துமஞ் சாதுபோர்புரிசௌரியம். இரணவைத்தியம் - சத்திரவைத்தியம். இரணாங்கணம், இரணாசிரம் - போர்க்களம். இரணாபியோகம் - படையெழுச்சி. இரணியகருப்பன் - பிரமா, இச்சா ஞானக் கிரியைகளையுடையோன். இரணியநேரம் - மாலைநேரம். இரணியம் - பொன். இரணியன் - துவாதசாதித்தரிலொரு வன். இரணியாக்கன் - ஓரசுரன். இரணை - இரட்டை. இரண்டகம் - இருமனம், நம்பிக்கைத் துரோகம். இரண்டகவாதி - நம்பிக்கைத் துரோகி. இரண்டன் - துர்க்குணன். இரண்டாக்கியம் - இரண்டகம். இரண்டாந்தரம் - இரண்டாம்முறை, நடுத்தரம். இரண்டடியெதுகை - முலிரண்டடி யோரெதுகையாய் மற்றையடி களோ ரெதுகையாயேனும் பலவெதுகையாயேனும் வருவது. இரண்டு - உபயம், புரளித்தனம். இரண்டுபடுதல் - வேறுபடுதல். இரண்டுபண்ணுதல் - புரளித்தனம் பண்ணுதல், வேற்றுமைபண்ணு தல். இரதகீலம் - நாய். இரதகுண்டகன் - தூர்த்தன். இரதகுரு - கணவன். இரதகூசிதம் - புணர்ச்சிவெறுப்பு. இரதசாரி - தேரேற்றம், வேசி. இரததன்மாத்திரை - உருசியறிவு. இரததாரி - காமாதுரன். இரதநாரீசம் - காமம், நாய், வேசி. இரதபதம் - புறவு. இரதபரிட்சை - ஓர் வித்தை, கலை ஞான மறுபத்தினான்கினொன்று. இரதபாதம் - தேருருள். இரதம் - அரைஞாண், இனிமை, குணம், சாத்தியம், சுவை, சூதம், தேர், புணர்ச்சி, மாமரம், அவய வம், உடல், சத்ததா துவினொன்று, அஃது உமிழ் நீர், பண்டி, பாதம், வாகனம். இரதயோனி - விபசாரி. இரதவாழை - ஓர் வாழை. இரதவிரணம் - நாய். இரதனம் - அரைஞாண், கிண்கிணி, பல். இரதன் - கண், கிளி. இரதாங்கபாணி - விட்டுணு. இரதாங்கம் - சக்கிரம், சில். இரதாயனி - வேசி. இரதி - ஆசைப்பெருக்கம், இலந்தை மரம், உருசி, காந்தள், நிறுக்கும் படிக்கல், பித்தளை, பெண்யானை, மதன்றேவி, வேண்டல், இரத்தல், காமம், புணர்ச்சி, பெண். இரதிகாதலன் - மன்மதன். இரதிகுகரம், இரதிக்கிரகம் - யோனி. இரதிக்கிரியை - புணர்ச்சி. இரதிக்கிரீடை - சுரதலீலை. இரதித்தல் - அடக்கதல், இடுக்கண் படுதல், இழுக்குதல், உருசித்தல், மூடுதல், விரும்பல். இரதிபதி, இரதிப்பிரியன் - காமன். இரதிமந்திரம் - யோனி. இரதியாளர் - யாசகர். இரதிரமணன் - காமன். இரத்தகம் - செவ்வாடை. இரத்தகாசம் - ஓர்நோய். இரத்தகுமுதம், இரத்தகைரவம் - செந்தாமரை, செவ்வாம்பல். இரத்தகோகனதம் - செந்தாமரை. இரத்தக்கலப்பு - உற்றவுறவு. இரத்தக்கவிச்சு - இரத்தவெடில். இரத்தசந்தனம் - செஞ்சந்தனம். இரத்த சந்தியாகம், இரத்தசரோருகம் - செந்தாமரை. இரத்தசிகுவம் - சிங்கம். இரத்தசெந்துகம் - நாங்கூழ். இரத்தசூலை - ஓர் நோய். இரத்தச்சுரப்பு - இரத்தங்கன்றுதல், சரீரக்கொழுப்பு. இரத்தஞ்சிந்துதல் - கொல்லுதல். இரத்தஞ்சுண்டுதல் - இரத்தம் வற்று தல், கொழுப்பேறுதல். இரத்ததாது - செம்பு, செவ்வரிதாரம். இரத்ததுண்டம் - கிளி. இரத்தநரம்பு - உதிரநரம்பு. இரத்தபழம் - ஆலமரம். இரத்தபாஷாணம் - வைப்புப் பாஷாண முப்பத்திரண்டி னொன்று. இரத்தபாதம் - கிளி. இரத்தபாரதம் - சாதிலிங்கம். இரத்தபானம் - இரத்தம்பருகல். இரத்தபிண்டம் - சீனமல்லிகை. இரத்தபித்தசூலை - ஓர் நோய். இரத்தபித்தம் - ஓர் நோய். இரத்தப்பசப்பு - இரத்தப்பசுமை. இரத்தப்பலி - இரத்தப்பிச்சை, இரத்த வுணவு. இரத்தப்பழி - கொலைப்பழி. இரத்தப்பிரமியம் - ஓர் நோய். இரத்தப்பிரவாகம் - இரத்தப்பெருக்கு. இரத்தப்பிரவை - ஏழ்நரக வட்டத் தொன்று, அஃது இரத்த நிலம். இரத்தப்பீனசம் - ஓர் நோய். இரத்தப்புடையன் - ஓர் பாம்பு. இரத்தபீனசம் - ஒர்நோய். இரத்தமண்டலம் - செந்தாமரை. இரத்தமண்டலி - ஓர் பாம்பு. இரத்தம் - உதிரம், சிவப்பு, பவளம், சாதிலிங்கம், செம்பு. இரத்தரோகம் - கண்ணோயுளொன்று, ஓர்நோய். இரத்தல் - பிச்சைகேட்டல், வேண்டு தல். இரத்தவடி - வைசூரிக்குரு. இரத்தவற்கனம் - செம்பு. இரத்தவிந்து - இரத்தினத்திலுள்ள பொரிவு. இரத்தவிரியன் - ஓர்பாம்பு. இரத்தவீசம் - மாதுளை. இரத்தவெடில் - இரத்தமணம். இரத்தவெறி - ஆங்காரம், இரத்தங் குடித்தவெறி. இரத்தாக்கம் - எருமைக்கடா, புறவம். இரத்தாக்கன் - குரூரன். இரத்தாசயம் - இரத்தந்தங்குமிடம். இரத்தாட்சி - ஓர் வருடம். இரத்தாதாரம் - தோல். இரத்தாதிசாரம் - பிராந்திநோய். இரத்தாம்பரம் - சிவப்புப்புடைவை. இரத்தி - இத்தி, இலந்தை. இரத்திரி - இத்திமரம். இரத்தினகருப்பம் - சமுத்திரம். இரத்தினக்கம்பளம், இரத்தினக் கம்பளி - உயர்ந்தகம்பளம். இரத்தினசானு - மகாமேரு. இரத்தினச்சுருக்கம் - ஓர் வைத்திய நூல். இரத்தினபரிட்சை - கலைஞானமறு பத்தினான்கினொன்று. இரத்தினமாத்திரை - ஓர் குளிகை. இரத்தினம் - மாமணிப்பொது. இரத்தினி - பிடிமுழம். இரத்துதல் - பேசலாலெழுமொலி. இரத்தோற்பலம் - செங்குவளை. இரஸ்து - படைகளுடையபோசனச் சாமான், வாழைப்பழம். இரந்திரம் - குழி. இரப்பாணன், இரப்பாண்டி - யாசகன். இரப்பு - தரித்திரம், பிச்சை, மன்றாட்டு. இரப்புணி - இரப்போன். இரமடம் - பெருங்காயம். இரமணம், இரமணியம் - இரம்மியம், காமச்சேட்டை, சுரத விளை யாட்டு, புணர்ச்சி. இரமணன் - காந்தன், தலைவன். இரமதி - காகம், காமன், காலம், தூர்த்தன், மோட்சம். இரமம் - ஆசை. இரமன் - காமன், நாயகன். இரமரபதி - திருமால். இரமாப்பிரியம் - தாமரை. இரமை - இலக்குமி, செல்வம், மனை யாட்டி. இரமியம், இரம்மியம் - பூரணசந் தோஷம். இரம்பம் - ஈர்வாள், கத்தூரிமிருகம். இரலை - அச்சுவினிநாள், ஊதிடு கொம்பு, கருமான், கலைமான். இரவச்சம் - இரத்தலினாலுண்டா கும் பயமுங்கூச்சமும். இரவணம் - ஒட்டகம், குயில், வெண்கலம், வெப்பம். இரவதம் - குயில். இரவலர் - ஏற்போர். இரவலாளர் - யாசகர். இரவல் - கைமாற்று, சொந்தமில்லா தது. இரவறிவான் - கோழிச்சேவல். இரவாக்கல் - ஓரிரத்தினம். இரவி - சூரியன், மலை. இரவிகாந்தம் - சூரியகாந்தம். இரவிநாள் - இரேவதி. இரவிநிறமணி - சாதுரங்க பதுமராகம். இரவு - இரத்தல், இரப்பு, இராத்திரி. இரவுக்குறி - களவுப்புணர்ச்சியிலி ராக்காலஞ் சந்திக்கநியமிக்கு மிடம். இரவுக்கை - மார்க்கட்டுச் சட்டை, முலைக்கச்சு. இரவுத்திரம் - இரௌத்திரம். இரவுரவம் - இரௌரவம். இரவெரிமரம் - ஓர் மரம். இரவை - அற்பம், மணிப்பொது. இரவோர் - யாசகர். இரவோன் - சந்திரன யாசகன், வறிய வன். இரற்று - இரற்றென்னேவல், ஒலி. இரற்றுதல் - ஒலித்தல். இரா - இரவு, இருத்தலைச்செய்யா வென்னுமஃறிணைப் பன்மை முற்று, இருந்தென்னெச்சம். இராகசூத்திரம் - தராசுக்கயிறு, பட்டு நூல். இராகம் - அன்பு, ஆசை, கீதம், சடத் தீயினொன்று, சிவப்பு, நிறம், வித்தியாதத்துவமேழினொன்று. இராகவன் - இராமன். இராகி - குரக்கன். இராகிக்கிராகம், இராசிக்கிராசம் - கிரணம். இராகு - கரும்பாம்பு. இராகுகாலம் - இராகுவின்காலம். இராகூச்சிட்டம் - உள்ளி. இராகை - குட்டம், பருவமுடை யாள், பூரணை. இராக்கதம் - பெண்ணும்சுற்றமு முடன்படாது வலிதிற்கொள்ளும் மணம். இராக்கதர் - ஓர் சாதியார். இராக்கதிர் - சந்திரன். இராக்காய்ச்சல் - ஓர் சுரம். இராக்கினி - இராசாத்தி. இராசகம் - இராசகூட்டம். இராசகலகம் - படைக்குழப்பம். இராசகனி - எலுமிச்சைக்கனி. இராசசிருங்கம் - குடை. இராசகாரியம் - அரசியல். இராசகீரி - வெள்ளைக்கீரி. இராசகோலம் - இராசவேஷம். இராசகோழை - இராசபயம், ஓர் நோய். இராசசம் - இராசபிறப்பு. இராசசாரசம் - மயில். இராசசின்னம் - அரசர்க்குள்ளமுடி முதலியவரிசை, இராசதத்துவம். இராசசூயம் - ஓர் வேள்வி, தாமரை, மலை. இராசசேர்வை - இராசாக்களின் சேர்மானம். இராசதம் - ஓர்காலம், முக்குணத்தி னொன்று, அஃது ஊக்கம் ஞானம் வீரம் தருமம் தவம் தானம் கல்வி கேள்வியென்னுமெண் குண முடையது. இராசதந்தம் - முன்வாய்ப்பல். இராசதரிசனம் - இராசாவைக்காணல். இராசதருமம் - அரசரறுதொழில், இராசநீதி, செங்கோன்மை. இராசதாலம் - சுமுகு. இராசதானம் - இராசதானி. இராசதானி - தலைப்பட்டினம், வேந்திருக்கை. இராசதுரோகம் - இராசாக்களுக்குச் செய்யும்வஞ்சகம். இராசதெரு, இராசவீதி - இராச மனைத்தெரு, பெருந்தெரு. இராசத்திரவியம் - அரசர்செல்வம். இராசத்துவம் - இராசதத்துவம், இராசாங்கம். இராசநாகம் - நாகபாம்பினோர் சாதி. இராசநிட்டூரம் - கொடுங்கோன்மை. இராசநோக்கு - இராசகிருபை, இராசபார்வை. இராசபஞ்சகம் - அரசாட்சியி னிடைஞ்சல். இராசபட்டம் - முடிசூட்டு. இராசபட்டினம் - இராசநகரம். இராசபத்திரம் - இராசகட்டளை. இராசபிளவை - ஓர் சிலந்தி. இராசபுரி - இராசநகர், வெல்லம். இராசபுள் - எண்காற்புள். இராசமண்டலம் - இராசசங்கம். இராசமாநகரி - இராசபட்டினம். இராசமாநாகம் - கருவழலை. இராசமாமந்தம் - கருவழலை. இராசமாளிகை - அரசரரண்மனை, இராசநகரம். இராசமானியம் - இராசமான்னியம். இராசமான்னியம் - இராசபொறுப் பாய்நடப்பது. இராசயானை - எழுமுழவுயர்வும் நவ முழநீளமும் பதின்மூன்று முழச் சுற்றுமுடையயானை. இராசயோகம் - ஓருத்தமயோகம். இராசராசன் - இராசாதிராசன், துரியோதனன். இராசராசேசுபரி - துற்கை, பார்பதி. இராசரிகம், இராசரிக்கம் - இராச தத்துவம். இராசலட்சுமி - அட்டலட்சுமியி னொன்று. இராசலேகம் - திருமுகம். இராசவசதி - அரண்மனை, சிங்கா சனம். இராசவசித்துவம், இராசவசியம், இராசவசீகரம் - இராசாவைத்தன் வசமாக்கல். இராசவரிசை - இராச சிறப்பு. இராசவள்ளி - ஓர் கொடி. இராசவாயில் - இராசவாய்தல். இராசவிட்டூரம் - கொடுங்கோல். இராசவிருட்சம் - கொன்றைமரம். இராசன் - அரசன், இந்திரன், சந்திரன். இராசாக்கினை - இராசகட்டளை, இராசதண்டனை. இராசாங்கம் - அட்டவைசுவரியத் தொன்று, இராசசின்னம், இரா சத்துவம், இராசவாளுகை. இராசாசனம் - நீதாசனம். இராசாணி - இராணி. இராசாதிகாரம் - இராசதத்துவம். இராசாதிராசன் - திறைவாங்குமரசன். இராசாத்தி - அரசன்மனைவி, அரசி. இராசாளி - ஓர் புள். இராசி - இணக்கம், ஒழுங்கு, குவிதல், கூட்டம், மத்தியானம், மேட முதலிய வீடு. இராசிகம் - அரசனால்வருவது, அட்சரகணிதம், அமிசம், ஓரிராசி, குவியல், நரம்பு, வரி. இராசிகை - வயல், வரி. இராசிசக்கிரம் - இராசிமண்டலம். இராசித்தலைவர் பொருத்தம் - மணப் பொருத்தம் பத்தினொன்று. இராசிப்பொருத்தம் - இராசியிணக்கம், மணப்பொருத்தம் பத்தினொன்று. இராசிநாதன் - அவ்வவ் விராசியி னின்று ஆளுகை செய்யுங் கிரகம். இராசிபாகம் - பின்னம். இராசியத்தானம் - குறி, கெற்பக்கிரகம், மறைவு. இராசியம் - அந்தர்ப்புரம், சா, பெண் குறி, மறைவு. இராசிலம் - சாரைப்பாம்பு, நீர்ப்பாம்பு. இராசிவக்கிரம் - இராசிப்பிரிவி னொன்று. இராசிவட்டம் - இராசிச்கக்கிரம். இராசீக தெய்வீகம் - அரசராலுந் தெய்வத்தாலும் வருவது. இராசீகம் - அரசனால்வருவது. இராசீகரம் - அரசாட்சிக்குரியது, அரசாளுகை. இராசீலம் - இராசிலம். இராசீலம் - தாமரைப்பூ. இராச்சியக்காரர் - இராச்சியம் பண்ணுவோர். இராச்சியபாரம் - இராச்சியப் பொறுப்பு. இராச்சியம் - அரசுசெல்லுமிடம், ஆளுகை, உலகு, நாடு. இராச்சியவதி - இராச்சியகாரி. இராடம் - ஓர் தேயம், கழுதை, பெருங் காயம், வெண்காயம். இராட்சசன், இராட்சதன் - இராக்கதன். இராட்சத - ஓர் வருடம். இராட்டினத்தொட்டி - இராட்டினம், போலச்சுழல்தொட்டி. இராட்டினம் - நூனூற்குங்கருவி. இராட்டினவாழை - ஒருதண்டில் நடு வீட்டுமேலுங் கீழுஞ் சீப்பிடும் வாழை. இராட்டினவூஞ்சல் - இராட்டினம் போற்சுற்றுமூஞ்சல். இராட்டு - இராசா. இராணம் - இலை, மயிற்றோகை. இராணி - இராசஸ்திரி. இராணுவம் - படை, யுத்தமுகம். இராதங்கம் - கால், கோரம். இராதாங்கம் - கலப்பை, மழைத்துளி. இராதை - விசாகம். இராதைகாந்தன் - கிருட்டிணன். இராதம் - கடைக்கொள்ளி. இராத்திரகம் - பஞ்சராத்திரம். இராத்திரம் - இரவு. இராத்திரி - இரவு. இராத்திரிகாசம் - வெண்டாமரை. இராத்திரிசரன் - கள்வன், சேகண்டிக் காரன், பைசாசம். இராத்திரிவேதம் - கோழி. இராந்து - தொடைச்சந்து. இராப்போசனம் - இராச்சாப்பாடு, நற்கருணை. இராமகவி - ஓரிராகம். இராமக்கிரியம், இராமக்கிரியை - ஓரிராகம். இராமசகன் - சுக்கிரீபன். இராமசந்திரன் - இராமன். இராமடை - பெருங்காயம். இராமபாணம் - இராமரம்பு, ஓர் புழு, ஓர் மருந்து. இராமதூதன் - அனுமான். இராமபத்திரி - ஒர்மருந்து. இராமமரம் - அணிநுணா. இராமம் - அழகு, ஆசை. இராமன் - தசரதபுத்திரன், வருணன். இராமாயணம் - இதிகாசத்தொன்று. இராமாலை - கருகுமாலை. இராமானம் - இராநாழிகை. இராமிலன் - கணவன், காமன். இராயசம் - எழுத்துக்காரியம். இராயணி, இராயணி - இராசஸ்திரி. இராயன் - அரசன். இராவணம் - விளக்கு. இராவணம்மீசை - ஓர்புல். இராவணாத்தம் - வீணை. இராவணாரி - இராமன். இராவணி - இந்திரசித்து. இராவராக்கு - ஓர்காதணி. இராவுதல் - அராவுதல். இராவுத்தன் - குதிரைப்பாகன். இரிகம் - இருதயம். இரிங்கணம் - ஓர் புள். இரிசல் - புலனைவேறொன்றிற் செலுத்தல், இரிதல். இரிசியா - பூனைக்காலி. இரிஞர் - பகைவர், அச்சமுள்ளோர். இரிதல் - அஞ்சுதல், ஓடல், கெடுதல், சாய்தல். இரித்தல் - அச்சுறுத்தல், ஓட்டுதல், கெடுத்தல். இரிபு - ஓடுதல், பகை, அச்சம், வெறுப்பு. இரிப்பு - அச்சுறுத்தல். இரீட்டம் - குறுகல். இரியல் - இரிதல், நல்லாடை. இரீதி - ஒழுங்கு, பித்தளை. இருகால் - அரை, இரண்டுமுறை. இருகுறணேரிசைவெண்பா - நேரிசை வெண்பா. இருக்கால் - இரண்டுமுறை, கவற்றிற் றாயத்துளொன்று. இருக்காழி - இரண்டு கொட்டை யுள்ளது. இருக்கு - முதல்வேதம், வேதம், உப நிடத முப்பத்திரண்டினொன்று. இருக்கை - ஆசனம், இருத்தல், ஊர்ப் பொது, வீடு. இருசு - உரித்து, செவ்வை, பண்டி யுளிரும்பு. இருசுடர் - ஆதித்தன், சந்திரன். இருசுடர்த்தோற்றம் - பெருங்காப்பிய வுறுப்புளொன்று. இருஞ்சிறை - காவல், மதில். இருஷபத்துவசன் - சிவன். இருஷபம் - இடபம், காதிற்றுளை. இருஷி - இருடி, பிரவை, வேதம். இருஷிகேசன் - திருமால். இருஷியஞ்ஞம் - வேதாப்பியாசம். இருஷியமூகம் - கிட்கிந்தை. இருடி - ஆந்தை, இரு துடையாதிருப் பவள், முனிவன். இருட்சி - இருள், மயக்கம். இருட்டு - இருள், மயக்கம். இருட்டுதல் - இருளடைதல். இருணம் - உப்பளம், உவர்த்தரை, கடன். இருணிலம் - நரகம். இருண்மை - இருளுடைமை. இருதம் - நீர், மெய். இருதயம் - இரத்தாசயம், மனம். இருதலைக்கபடம் - விலாங்குமீன். இருதலைக்கொள்ளி - இருதலையுந் தீபற்றியகொள்ளி. இருதலைஞாங்கர் - குமரன்வேல். இருதலைப்பட்சி - ஓர் புள். இருதலைப்பாம்பு - மண்ணுணிப் பாம்பு. இருதலைப்பூச்சி - ஓர் பூச்சி. இருதலைமணியன் - ஓர் பாம்பு. இருதலைமாணிக்கம் - ஓர் மந்திரம். இருதிணை - அஃறிணை உயர்திணை. இருதிராசம் - வேனில். இருது - பருவம், மகளிர்சூதகம். இருது - இரண்டுமாதம், ஒருமாதம், பிரபை. இருதுகாலம் - கருப்பந்தரிக்கத்தகு நாள், அஃது பூப்படைந்து பதினாறு நாள்மட்டும். இருதுக்காட்சி - அகப்பொருட்டுறை யினொன்று. இருதுசந்தி - பருவச்சங்கிரமம். இருதுசாந்தி - ஓர் சடங்கு. இருதுவிருத்தி - வருடம். இருதோத்தி - சத்தியவசனம். இருதோற்றம் - சரமசரம். இருத்தம் - பிரகாரம். இருத்தல் - இருத்துதல், சீவித்தல், தங்கல், தாழ்தல். இருத்தி - இருத்தலைச்செய்யென் னெச்சம், இருப்பாயென்னும் முற்று, இருவென்னேவல், சித்தி. இருத்தை - இருபத்தினாலு நிமிஷங் கொண்டநேரம், சந்திரனான்காம் பக்கம் ஒன்பதாம்பக்கம் பதினான் காம்பக்கம், சேங்கொட்டை, நாழிகை, நாழிகைவட்டில். இருநா - உடும்பு, பாம்பு. இருநிதிக்கிழவன் - குபேரன். இருநினைவு - இருமனம். இருந்து - அசைச்சொல், (உம்) எழுந் திருந்தேன். இருந்தை - கரி. இருபது - இரண்டுபத்து. இருபாவிருபஃது - ஓர் பிரபந்தம் அஃது பத்துவெண்பாவும் பத்த கவலு மந்தாதித் தொடையானிரு பதிணைந்து வருவது. இருபிறப்பாளர் - பார்ப்பார். இருபிறப்பு - சந்திரன், சிறகு, பல், பார்ப்பார், முட்டையிற்பிறப்பன. இருபுட்சன் - இந்திரன். இருபுறவசை - இருமரபினிகழ்வு கூறல். இருபுறவாழ்த்து - இருமரபின் புகழ் கூறல். இருபெயரொட்டு - இருசொல்லொரு சொல்லாகநிற்பது, (உம்) பாம்பு பாம்பு. இருபெயரொட்டுப் பண்புத்தொகை - ஆகியவென்னு முருபுதொக்கு நிற்பவொரு பொருட்கே பொது வுஞ்சிறப்புமாக இருபெயர் வருவன (உம்) ஆயன் சாத்தன். இருப்பாயுதம் - ஆயுதப்பொது. இருப்பிடம் - ஆசனம், இருக்குமிடம். இருப்பு-இருக்கத்தக்கவிடம், இருக்குந் தன்மை, இருக்கை, குதம். இருப்புக்காய்வேளை - ஓர்செடி. இருப்புக்கிட்டம் - கீச்சுக்கிட்டம். இருப்புத்தட்டுமுட்டு - இரும்புமணை. இருப்புப்பாரை - குழிகல்லுங்கருவி. இருப்புமுள் - குற்றுக்கோல். இருப்புலக்கை - ஓராயுதம். இருப்பை - இருப்பாயென்னுமுற்று, இலுப்பை. இருமடங்கு, இருமடி - இரட்டி. இருமடியாகுபெயர் - ஒன்றற்காகு பெயராயிருப்பது அதனாலாய மற்றொன்றற்கும் பெயராய் வழங்குவது, (உம்) கார்காலம். இருமடியேவல் - ஈரேவல். இருமரபு - தாய்வழிதந்தைவழி. இருமல் - கக்கல்நோய். இருமனம் - சந்தேகம். இருமுரடன் - முரட்டுக்குணன். இருமை - இம்மைமறுமை, இரு தன்மை, துக்கம், பெருமை. இருமையியற்கை - ஓரலங்காரம், அஃது, கூடுவதையும் கூடாவதனை யுங்கூடக்கூறுவது. இரும்பன் - காரெலி. இரும்பிலி - ஓர் செடி. இரும்பு - ஆயுதப்பொது, சத்தலோ கத்தொன்று, அஃது கரும்பொன். இரும்பை - குடம், பாம்பு. இருவனருவல் - குறுணல், தூளும்பரு பருக்கையுமானது. இருவர்மாறுகொளொருதலை துணிவு - எழுவகைமதத்தினொன்று. இருவாட்சி, இருவாய்ச்சி - ஓர் மரம். இருவாட்டித்தரை - மணலுங்கழியு முள்ளதரை. இருவாய்க்குருவி - ஓர் புள். இருவாளிப்பு - இருமனம். இருவி - தினைத்தாள். இருவிக்காந்தம் - ஓர் மருந்து. இருவினை - நல்வினைதீவினை. இருவேலி - வெட்டிவேர். இருளர் - வேடர். இருளல் - இருளுதல். இருளன் - ஓர்பிசாசன். இருளி - பன்றி, பன்றிமோத்தை, முலையிலி, வெட்கம். இருளை - நாணம். இருள் - இருட்டு, கறுப்பு, நரகம், மயக்கம், யானை. இருள்வலி - சூரியன். இரேகபிராணன் - தேகத் தோடைக் கியமான சீவன், மிகுசினேகம். இரேகம் - தேகம். இரேகாத்திரயம் - அபயஞ்செய்தல். இரேகி - அதிட்டவான், கீழ்மகன். இரேகித்தல் - ஒன்றித்தல், சேருதல், பழகுதல். இரேகு - ஆயம். இரேகுத்தி - ஒரிராகம். இரேகை - எழுத்து, சித்திரம், வரி, வரை. இரேக்கு - தத்துவம். இரேசகம் - பிராணவாயுவை விடுதல். இரேசம் - இரசம். இரேசலம் - நவமணிக்குற்றத் தொன்று, நெல்லினிறம். இரேசனம் - பிராணாயாமத்தில் வாயுவைவிடல், விரேசனம். இரேசன் - அரசன், வருணன், விட்டுணு. இரேசிதம் - குதிரைவட்டமாயோடல், பரதவுறுப்புளொன்று, வெறுமை. இரேசித்தல் - அந்தித்தல், மூச்சுவிடுதல். இரேசுதல் - அந்திப்பு. இரேணு - அணு, அழகு. இரேணுகம் - ஓர் மருந்து. இரேதசு - வித்து. இரேபதம் - கண்டம், தருமநூல்பதி னெட்டினொன்று. இரேபதிகொண்கன் - பலதேவன். இரேயம் - கள். இரேவதம் - இரேபதம், இரேபதி. இரேவதி - கடைநாள். இரேவு - ஆயத்துறை. இரேணுகம், அரேணுகம் - ஓர் மருந்து. இரை - இருப்பு, இரையென்னேவல், உணவு, பறவையுணவு, இலக்குமி, ஒலி, நீர், பூமி, பேச்சு. இரைக்குடர் - இரைப்பை. இரைச்சல் - ஆரம்பம், ஒலி, வீக்கம். இரைதல் - ஒலித்தல், சீறுதல். இரைத்து - வெண்கலம். இரைநீர் - கடல். இரைப்பற்று - இரைப்பிடி. இரைப்பு - இரைதல், வீக்கம். இரைப்பெட்டி, இரைப்பை - இரை தங்கும், பை. இரைமீட்குதல் - அசைவெட்டுதல், இரையெடுத்தல். இரையெடுத்தல் - இரைமீட்டல், புசித்தல். இரௌத்திரம், இரௌத்திரவம் - சுபா பக்குணமொன்பதினொன்று, அஃது பெருங்கோபம். இரௌத்திரி - ஓர் வருடம். இரௌரவம் - ஓர் நரகம், சிவாகம மிருபத்தெட்டினொன்று. இலகடம் - யானைமேற்றவிசு. இலகரி - மஸ்து, மிகுமகிழ்ச்சி, பெருந்திரை. இலகான் - கடிவாளம். இலகிமா, இலகுமா - அட்டசித்தியி னொன்று, அஃது, பஞ்சினொய் தாதல். இலகிரி - அபின், கஞ்சா, சாதிக்காய், சாதிபத்திரி. இலகு - அகில், ஓர் மரம், கனமின்மை, காலதசப்பிரமாணத்தொன்று அஃது துரிதமிரண்டு கொண்டது, குறிலெழுத்து, நொய்மை, இல கென்னேவல், வானோர் வரநான்கி னொன்று, அஃது கனமின்மை. இலகுதல் - ஒளிசெய்தல். இலகுத்துவம் - அட்டசித்தியி னொன்று, அஃது இலகுவாதல். இலக்கணச்சிதைவு - வழுவாய் வழங்குஞ்சொல். இலக்கணச்சுழி - நல்லங்கச்சுழி. இலக்கணச்சொல் - இலக்கணவழி யால்வருஞ்சொல். இலக்கணப்போலி - இலக்கணமுடை யது போல்வருஞ்சொல். இலக்கணம் - அடையாளம், அழகு, இயல், ஒழுங்கு, போதப்பிரகாரம் வின்றினொன்று, அஃது தான் விவகரிக்கும் பொருளின் சிறப்புத் தன்மை கூறல், இலக்கணநூல், அஃது எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, பேர், முறைமை. இலக்கணவழக்கு - இலக்கணநடை. இலக்கணவழு - இலக்கணப்பிழை. இலக்கணவிளக்கம் - ஓர்நூல். இலக்கணி - இலக்கணமறிந்தவன். இலக்கணை - உரியபொருளைவிட்டு அப்பொருளின் சம்பந்தியை யுணர்த்துவது. இலக்கம் - எண், ஒளி, குறிப்பு, நூறாயிரம். இலக்கர் - சீலை. இலக்காந்தரம் - இடையிலக்கம். இலக்காரம் - சீலை. இலக்கியம் - இலக்கணநூற்படி முன் னோர் தந்த செய்யுள், உதாரணம். இலக்கினசட்டுவருக்கம் - இராசிக் குரிய வாறு காரியம். இலக்கினம் - முகுர்த்தம். இலக்கு - எதிர், ஒட்டம், ஒப்பு, குறிப்பு, சுவடு, நேர். இலக்கின்புடம் - இராசியைப்பற்றி வருஞ்சுத்த புடம். இலக்குமி - சீதேவி, அதிட்டம், அழகு, சீதை, முத்து. இலக்குமன் - இலட்சுமணன். இலக்குவன் - இராமன்றம்பி. இலங்கனம் - கடத்தல், பட்டினி. இலக்கிசார் - இடைஞ்சல். இலங்கு - குளம். இலங்குதல் - ஒளிசெய்தல். இலங்கம் - எறும்பு, களரி, கூட்டம், முடம். இலக்கை - ஆற்றிடைக்குறை, ஈழ மண்டலம், தூங்குவது. இலங்கோடு - கீழுடை. இலசுனம் - வெள்வெண்காயம். இலச்சினை - முத்திரைமோதிரம். இலச்சை - வெட்கம். இலஞ்சம் - பரிதானம். இலஞ்சி - ஏரி, குணம், குளம், கொப் பூழ், சாரைப்பாம்பு, புன்கு, மகிழ மரம், கீழ், புனம், மடு. இலட்சணம் - இடம், இலக்கணம், குறி, பார்வை, பேர். இலட்சம், இலட்சியம் - இலக்கம், அடையாளம், எத்து, நூறாயிரம். இலட்சயம் - எண்ணத்தக்கது. இலட்சாபதி - இலட்சப்பிரபு. இலட்சுமணம் - ஓர் மரம். இலட்டகம், இலட்டு - அப்பவருக்கம், பொரிமாத்திரளை. இலட்டுகம் - அப்பவருக்கம், தோசை. இலணை - அரசமரம். இலண்டம் - ஆனையிலத்தி. இலண்டன் - முரடன். இலண்டு - முரட்டுத்தனம். இலதை - கோற்கொடி, படர்கொடி. இலத்தி - குதிரைப்பீ, யானைக் கூட்டம். இலந்தை - ஓர் மரம், குளம். இலபி, இலபிதம் - பேறு, விதி, சம்ப விப்பது, பட்சித்தல், பேச்சு. இலபித்தம் - பேறு. இலம்பம் - உச்சத்திற்குந்துருவத்திற்கு முள்ளதூரம், கைக்கூலி, நிறு திட்ட வரி. இலபித்தல் - சித்தித்தல், பேறு கிடைத்தல். இலம்பகம் - அத்தியாயம், நுதலணி மாலை, மாலை. இலம்படை - தரித்திரம். இலம்பம், இலம்பனம் - தூங்குவது, மாலை. இலம்பாடி - ஓர் சாதி, வறியள். இலம்பாடு - தரித்திரம், வறுமை. இலம்பாட்டோன் - தரித்திரன். இலம்பிதம் - அசைவு, தூங்கல். இலம்பை - தரித்திரம். இலம்போதரன் - விநாயகன். இலயக்கியானம் - இலயபிடி. இலயபிடி - இலயத்தானம், ஒடுக்கம். இலயம் - இலயபிடி, ஒடுக்கம், கூத்தின் விகற்பம், கூத்து, சாவு, அழிவு, உருக்கல். இலயித்தல் - ஒடுங்குதல், சேர்ந் தொன்றித்தல், அடங்குதல். இலயை - இலயகாலம், தாளப் பிர மாணம் பத்தினொன்று. இலலாடம் - நெற்றி. இலலாடரேகை - நுதற்குறி, நெற்றிவரி. இலலாடிகை - நுதற்றிலதம், நெற்றிச் சுட்டி. இலலாமம் - அடையாளம், அரச சின்னம், கொடி, கொம்பு, திலகம், வால். இலலாலம் - ஆபரணம், இரேகை, குதிரை, நெற்றிமறை, பிடர்மயிர், மகத்துவம். இலவிதம் - அபிநயம், காமக்குறி, மகளிர் விளையாட்டு. இலவிதை - இராகமுப்பத்திரண்டி னொன்று, பெண், மான்மதம். இலவங்கபத்திரி - ஓர் மருந்து. இலவங்கம் - ஓர் வாசனைமரம், அஃது பஞ்சவாசத்தொன்றுமாம். இலவசம், இலவியம் - விலையின்றிப் பெறுகை. இலவணபஞ்சாட்சரம் - ஓர் மந்திரம், ஓர் மாந்திரீய நூல். இலவணபாஷாணம் - வைப்புப் பாஷாண முப்பத்திரண்டி னொன்று. இலவணம் - உப்பு, உவர்த்தல். இலவணவித்தை - ஓர் வித்தை. இலவந்திகை - ஏந்திரவாவி. இலவம் - ஓர் மரம், காலதசப் பிரமாணத்தொன்று, அஃது கண மெட்டுக்கொண்டது, பூசை, அழிவு, அற்பம், கராம்பு, சாதிக்காய், பிழை நீக்கல், மயிர். இலவம்பொதுமணி - சௌந்திகப்பது மராகமணி. இலவலேசம் - மிகச்சிறிது. இலவன்-இராமன் மக்களிலொருவன். இலவீதம் - அழகு, ஓரிராகவிகற்பம், பரிகாசம். இலவு - ஓர் மரம். இலவுகீகம் - இலௌகீகம். இலளிதபஞ்சகம் - ஓரிசைவிகற்பம். இலளிதம் - அழகு, சிவாகமமிருபத் தெட்டினொன்று, பரிகாசம். இலாகரி, இலாகிரி - மஸ்து. இலாகவம், இலாகு - இலகு, தாபரம். இலாகன் - ஓர் மீன். இலாகை - மாதிரி. இலாக்கிரி - செம்மெழுகு. இலாங்கலம், இலாங்கலி - கலப்பை, செங்காந்தள், தென்னமரம், ஆண் குறி, பனைதெங்கு முதலியன. இலாங்கூலம் - வால். இலாசடி - தொந்தறை. இலாசம், இலாசை - பொரி. இலாச்சம் - மரக்கால். இலாஞ்சனம் - அடையாளம், புள்ளி, பெயர். இலாஞ்சனை - அடையாளம், அலைவு. இலாஞ்சி - ஏலம். இலாடசங்கிலி - ஒர்சங்கிலி, சடுத்தம். இலாடம் - குதிரையின் காற்பறளை, தேயமன்பத்தாறினொன்று, நெற்றி, புளியமரம், குற்றம், புடைவை. இலாதார் - சஞ்சாயம். இலாந்துதல் - மச்சுச்சாந்திடுதல். இலாபம் - ஆதாயம், நயம். இலாமிச்சை - ஓர்வாசனைப்புல். இலாயம் - குதிரைப்பந்தி, ஏலரிசி. இலாலனை - அன்புவைத்தல், கெஞ்சு தல், சீராட்டு தாலாட்டு. இலாவி - துதி. இலாவணம் - உப்பு, சம்பாஷணை. இலாவணியம், இலாவண்ணியம் - பேரழகு. இலாளனை - இலாலனை. இலாவிருதம் - நவகண்டத்தினொன்று. இலிகி - எழுத்து. இலிகிதம் - எழுத்து, கலைஞான மறுபத்தினான்கி னொன்று. இலிகித்தல் - எழுதுதல். இலிகுசம் - எலுமிச்சை. இலிங்கசுத்தி - பஞ்சசுத்தியி னொன்று. இலிங்கபாஷாணம் - விளைவு பாஷாண முப்பத்திரண்டி னொன்று. இலிங்கபுராணம் - அட்டாதச புராணத்தொன்று. இலிங்கம் - அடையாளம், ஆண்குறி, இங்குலிகம், சிவலிங்கம், அருத்தா பத்தி, ஆத்து மலிங்கம், இஷட லிங்கம், உப நிடதமுப் பத்திரண்டி னொன்று, பிரமசரிய நிலையி னொன்று. இலிங்கிகள் - தபசிகள், முனிவர். இலிதை - குறிப்பிசை, பூமி. இலிபி - இலக்கம், எழுத்து, விதி, மெழுகுதல். இலிபித்தல் - அனுகூலமாதல், எழுது தல், நியமித்தல், விதித்தல். இலிர்த்தல் - சிலிர்த்தல், தளிர்த்தல், பொடித்தல். இலீக்கை - ஈர். இலீலாவினோதம் - சுரதவிளையாட்டு. இலீலை - பரிகாசம், புணர்ச்சி, மகளிர் விளையாட்டு, விளையாட்டு, கதை. இலுதை -அணில். இலுப்பை - இருப்பைமரம். இலேககன் - எழுத்துக்காரன், கணக்கன். இலேகம் - எழுத்து, திருமுகம். இலேகர் - வானோர். இலேகனி, இலேகிணி, இலேகினி - எழுதுகோல், எழுத்தாணி, தூவல். இலேகியம் - ஓர்மருந்து, நக்கல். இலேகை - எழுத்து, வரி, வரை. இலேசம் - அற்பம், ஓரலங்காரம் அஃது அகத்துக் கருதியவற்றைப் புறத்துக்குறிகளால் உணர்த்து வது, காலவிரைவு, நொய்மை. இலேசு - அற்பம், நொய்மை. இலேசனம் - எழுத்து, நாவழித்தல், பனையோலை. இலேபனம் - பூச்சு, வாசனைத்தயிலம். இலேபி - இலபி, பூச்சு. இலேபிதம் - தடவல். இலேவனம் - மெழுகுதல். இலை - இலைக்கறி, உலோபம், பத்திரம். இலைகிள்ளல் - கைச்சித்திர மைந்தி னொன்று. இலைக்கதவு - ஓர்வகைக் கதவு. இலைக்கள்ளி - ஓர்வகைக்கள்ளி. இலைக்கறி - கீரை. இலைக்கிளி - தத்துக்கிளி. இலைக்குட்டி - பலங்கெட்ட வாழைக் குட்டி. இலைக்குறடு - நீண்டகுறடு. இலைக்கொடி - வெற்றிக்கொடி. இலைக்கொழுக்கட்டை - ஓர்வகைக் கொழுக்கட்டை. இலைங்கம் - இலிங்கம், பதினெண் புராணத் தொன்று. இலைத்தல் - பச்சைநிறமாதல், சாரமின்மை. இலைத்திரி - காதில்வைக்குமோரி லைச் சுருள். இலைநிறம் - பச்சைநிறம். இலைப்பசளி - பெரும்பசளி. இலைப்பாசி - ஓர்பூண்டு. இலைமூக்கரிகத்தி - இலைக்காம் பரியுங்கருவி. இலையாகிருதி - இலையாகாரம். இலையாடுபொலிசை - கடும்பொலி சை. இலையான் - ஈ. இலையிலைத்தல் - சுவைகெடுதல், பச்சைநிறமாதல். இலையுதிர்வு - இலைசொரிவு, முதுகாடு. இலைவாணிபம் - இலைவியாபாரம், வெற்றிலை முதலிய விலைப்பயிர் வேளாண்மை. இலைவாணிபர், வெற்றிலைவிற் போர். இலௌகீகதருமம் - உலகாசாரம். இலௌகீகம் - சிற்றின்பம், பிரபடஞ் சம், மாமிசசிந்தை. இல் - இடம், இராசி, இல்லையெனல் உவமையுருபு (உம்) அழ லிற்பிறள் மணி, ஏழாம்வேற்று மையுருபு (உம்) ஊரிலிருந்தான், ஐந்தாம் வேற்றுமை உருபு (உம்) மலையின் வீழருவி, சாவு, தலைவி, மனைவி, வீடு, எதிர்மறையிடை நிலை, (உம்) செய்திலன். இல்பொருள் - இல்லாத பொருள். இலபுலப்பயனறற்குறிப்பு - ஓரலங் காரம், அஃதுஇயல்பாயில்லாத பயனை யுள்ளதாகத் தற்குறிப்புச் செய்தல், (உம்) வனத்தினின்று ஞற்று தவத்தினால் நின்சீறடிக் கிணை யாயதுகமலம். இல்புலவேதுத்தற்குறிப்பு - ஓரலங் காரம், அஃது இல்லாதவேதுவை யெடுத்துத்தற்குறிப்புச் செய்தல், (உம்) முகவொளியைப் பாவாய் பெறற்குமுண்டகத்தோடி கலு மதியையமிலை. இல்லடை - அடைக்கலம், இல்லு வமம். இல்லடைக்கலம் - அடைக்கலம். இல்லதாரம் - இல்வாச்சிரமம். இல்லம் - இல்வாழ்க்கை, தேற்றா மரம், மனைவி, வீடு. இல்லல் - கடத்தல், நடத்தல், போகு தல். இல்லவள் - மனைவி. இல்லவை - இல்லாப்பொருள், மனைப்பொருள். இல்லறம் - இல்லாச்சிரமம். இல்லாச்சிரமம் - இல்லொழுக்கத் திருத்தல். இல்லாண்முல்லை - முல்லைப்புறம், அஃது தலைமகன் பாசறைக்கண் மாதரையுள்ளல். இல்லாததனம் - வறுமை. இல்லாமை - தரித்திரம். இல்லாள் - எசமாட்டி, தரித்திரி, மனைவி. இல்லான் - கணவன், தரித்திரன். இல்லி - சில்லி, தேற்றா, பெண் ணுறுப்பிற்குறைவுள்ளாள். இல்லிடம் - வீடு. இல்லுவமம் - உபமாலங்காரத்தி னொன்று, அஃது இல்லாததற்குவ மை, (உம்) ககனாரவிந்தம்போலும். இல்லுனர் - மேவினர். இல்லென்றல் - இரத்தல், இல்லை யெனல், சாதல். இல்லை - இன்மை, சாதல். இல்லொழுக்கம் - இல்லாளோடில் லத்திருந்தறஞ் செய்தல். இல்லோன் - கணவன், தரித்திரன். இல்வழக்கு - கூடாவழக்கு. இல்வாழ்க்கை - மனைவாழ்க்கை, கிழவோன் மகிழ்ச்சி முதலாகச் செவிலிமகிழ்ச்சியீறா யவம். இல்வாழ்க்கைவிரி - தலைவன்றலைவி முன் பாங்கியைப் புகழ்தன் முதலாக வன்னவர் காதலறிவித்த லீறாகச் சொல்லப்பட்டபத்தும். இல்வாழ்வான் - இல்லாச்சிரமத் தோன். இல்வாழ்வு - இல்வாழ்க்கை. இலக்காண் - இப்பொழுது, இவ் விடம். இவணம் - இங்கே. இவண் - இவ்விடம். இவர்தல் - ஆசை, ஆசைப்பெருக்கம், எழுச்சி, ஏறுதல், செறிவு, சேறல். இவவு - இழிவு. இவறல் - ஆசை, ஆசைப்பெருக்கம், மறதி. இவறன்மை - அசட்டை, ஆசை, உலோபக்குணம். இவுளி - குதிரை. இவுளிமறவன் - அரசற்குத்துணை வரிலொருவன், குதிரைவீரன். இவை - அஃறிணைப்பன்மை. இவ் - இவை. இவ்விரண்டு - இரண்டிரண்டு. இழத்தல் - இழந்துபோதல், இழந்து விடுதல். இழப்பு - இழத்தல், கீழ்மை, நட்டம். இழவு - இழத்தல், சாவு. இழவுகாரன் - சாவுக்குரியவன். இழவுக்கடித்தல் - மாரடித்தல், வீணி லேவருந்தல். இழவுவிழுதல் - சாதல். இழவுவினாவல் - இழவு கொண் டாடல். இழவுவீடு - சாவீடு. இழவோலை - சாவோலை. இழி - இகழ்வு, இழியென்னேவல், கீழ்மை. இழிகடை - அறக்கீழானது. இழிகண் - இழியற்கண். இழிகுலம் - தாழ்ந்தகுலம். இழிங்கு - ஈனம் வடு. இழிசனர் - அறிவீனர், கீழ்மக்கள். இழிசொல் - அசப்பியம், சிறுசொல், நிந்தைவார்த்தை. இழிச்சல்வாய் - திறந்தவாய். இழிச்சுதல் - இறக்குதல், கீழ்ப்படுத்து தல், இகழ்தல். இழிச்சொல் - பழிச்சொல். இழிஞர் - சண்டாளர். இழிதகவு - இழிவு, எளிமை. இழிதல் - அவகீர்த்திப்படுதல், இறங் குதல், குறைதல், தாழ்தல். இழிதிணை - அஃறிணை, அஃது தேவர் நரகர் மனிதரல்லாதனது. இழித்தல் - இறக்குதல், கீழ்ப்படுத்தல், கெஞ்சுதல். இழிந்தோர் - ஈனர். இழிபு - ஓரலங்காரம், அஃது இழிபு தோன்றக்கூறுவது, கீழ்மை, தாழ்வு. இழிப்பு - அவகீழ்த்தி, இகழ்வு, கீழ்ப் பட்டதன்மை, நிந்தை. இழியற்கண் - இமைதிறந்தகண். இழிவு - ஈனம், குற்றம், கேடு, தாழ்வு, நிந்தை, பள்ளம். இழிவுசிறப்பு - ஒன்றற்கேயுள்ளயிழி வைக் காட்டியது. இழிவுச்சிறப்பும்மை - (உம்) பூனையும் புலாற்றினனாது. இழுகுணி - பிசுனன். இழுகுதல் - பிசுனித்தனம் பண்ணு தல், பின் போதல். இழுக்கம் - குறை, தப்பிதம், தவறு, பின்வாங்குதல், வசை, வழிவிலகு தல். இழுக்கல் - தவறுதல், வழுக்கல், வழுக்குநிலம். இழுக்கு - ஆபரணத்தினோருறுப்பு, இழுக்கென்னேவல், ஈனம், கேடு, தவறு, பொய், மறதி, வருத்தம். இழுக்குதல் - இழுத்தல், தவறுதல், பின்வாங்குதல். இழுது - தித்திப்பு, நிணம், செய். இழுதுதல் - கொழுத்தல், நெய்த்தல். இழுதை - அறிவிலான், பொய். இழுத்தல் - இழுக்குதல், சுரம்பாடுதல் பின்வாங்குதல், வலித்தல். இழுபறி - தொந்தரை. இழுபறிப்படுதல் - தொந்தரைப்படு தல். இழுப்பாட்டியம் - தாமதம். இழுப்பாணி - கலப்பையினோருறுப்பு, தாமதகாரன். இழுப்பு - இசைப்பு, இழுக்குதல், சத்தத்தை நீட்டி வழங்கல், தாமதம். இழுப்புண்ணுதல் - இழுக்கப்படுதல். இழுமு - சந்தோஷம், தித்திப்பு. இழுமெனல் - அனுகரணவோசை, இனிமை. இழும் - இனிமை, சந்தோஷம். இழுவல் - இழுப்பாட்டிமம். இழு - இழுக்கப்படுவது, இழுத்த சுவடு, இழுப்பு. இழுவைக்கயிறு - இழுக்குங்கயிறு, நெடுங்கயிறு. இழை - ஆபரணம், இழையென் னேவல், கலத்தலைச்செய் செய் தலைச் செய்யென்னேவல், காப்பு, பஞ்சிநூல், கூட்டம். இழைக்கயிறு - மெல்லியகயிறு. இழைக்குளிர்த்தி - புடைவையின் மிருது. இழைதல் - உட்குழைதல், உரோஞ் சுதல், கலத்தல், பிணைதல். இழைத்தநாள் - நியமித்தநாள், முடிவு நாள். இழைத்தல் - அழுத்துதல், கலப்பித்தல், செய்தல், முடைதல், ஆராய்தல். இழைநெருக்கம் - இழைக்குளிர்த்தி. இழைபு - வனப்பெட்டினொன்று, அஃது வல்லொற்றின்றி வருஞ் செய்யுள். இழைப்பிடித்தல் - காயங்காட்டல். இழைப்புடைவை - நல்லாடை. இழைப்புளி - சீதளி. இழைப்போடுதல் - புடைவை பொத் துதல். இழையூசி - மெல்லியவூசி. இழையோடுதல் - நூலோடுதல். இளகுதல் - ஈரித்தல், குழைதல், தணி தல், தளர்தல், நுகைதல், நெகிழ் தல், மிருதுவாதல். இளக்கம் - இளகியதன்மை, தணிவு, நுகைவு. இளக்கரம் - இளக்கம். இளக்கரித்தல் - இளகிப்பின்னிடுதல். இளக்காரம் - இளக்கம். இளக்குதல் - இளகச்செய்தல், நுகைத்தல். இளங்கதிர் - இளஞ்சூல், காலையிற் றோன்றுஞ் சூரியகிரணம், வாலா தித்தன். இளங்கலையன் - ஓர் நெல். இளங்கற்றி - இளங்கன்றுப் பசு. இளங்கன்று - எருமை பசு முதலிய வற்றின் சிறுகன்று, மரக்கன்று. இளங்காய் - பழுப்படையாதகாய். இளங்கார் - ஓர் நெல். இளங்கால் - இளங்கொழுந்து. இளங்காற்று - சிறுகால். இளங்குடர் - கடைக்குடல். இளங்குரல் - மிருதுவானகுரல், இளங்கதிர். இளங்கொடி - நஞ்சுக்கொடி, பெண். இளங்கொற்றி - இளங்கன்று, இளங் கன்றுப்பசு. இளங்கோக்கள் - வைசியர்பொது. இளசு - இளவல். இளஞ்சாயம் - வெண்சாயம். இளஞ்சூடு - சிறுசூடு. இளஞ்சூல் - இளங்கதிர். இளநாக்கடித்தல் - உறுதியற்றசொல் சொல்லல். இளநிறம் - வெளிறினநிறம். இளநீர் - தெங்கி னிளங்காய், தேங் காய்க் குண்ணீர், மணிகளின் வெள்ளொளி. இளநீர்க்குழம்பு - ஓர் மருந்து. இளநீலம் - வெளிறினநீலம். இளநெஞ்சு - இளகினமனம். இளந்தலை - இளக்கம், இளப்பு. இளந்தாரி - வாலிபன். இளந்தென்றல் - சிறுதென்றல். இளந்தை - இளவயசு, இளைது, குழந்தை. இளந்தோயல் - ஆயுதங்களினிளகிய தோய்ச்சல். இளப்பம் - கீழ்மையானது. இளமட்டம் - வாலிபமுடையது. இளமண் - மணற்கொண்டதரை. இளமண்டை - நொய்யதலை. இளமத்தியானம் - மதியத்தின் முன் பொழுது. இளமழை - சிறுமழை. இளமை - உன்மத்தம், பாலப்பருவம், வாலைப்பருவம். இளம்பசி - காலப்பசி, சிறுபசி. இளம்பதம் - இளம்பாகம், பக்குவ மற்றது. இளம்பருவம் - இளவயசு, மெல்லிய பதம். இளம்பறியல் - இளசாய்ப்பறித்தது. இளம்பாடு - இளம்பதம். இளம்பிடி - பெண். இளம்பிள்ளைவாதம் - சிறுபிள்ளை வாதம். இளம்பிறை - வளர்பக்கச் சந்திரன், வாலசந்திரன். இளம்புல் - அறுகு, முதிராதபுல். இளவடி - இளம்பதத்தில்வடிப்பு. இளவரசு - இராசகுமாரன், வாலபதி. இளவல் - இளையோன், குழந்தை, முதிராதது. இளவழிபாடு - சிறுபிள்ளைக்கல்வி. இளவாடை - சிறுவாடை. இளவாதித்தன் - வாலசூரியன். இளவாலிப்பு, இளவாளிப்பு - இளகு தல், ஈரமாகுதல். இளவிளவேனல் - துளிர்காலம். இளவுச்சம் - மத்தியானத்துக்குமுன். இளவுறை - இளந்தயிர். இளவெந்நீர் - சீறுசூடானநீர். இளவெயில் - காலைவெய்யில். இளவெழுத்து - திருந்தாவெழுத்து. இளவேந்து - இளவரசு. இளவேனிலுரிமை - தென்றல்வீசலும், வண்டு, கிளி, பூவை, அன்றில், குயிலிவை மகிழதலும், மாங்கனி யுதிர்தலும், புன்னை, மகிழ், தாழை, சண்பகமிவை மலர்தலும், இந்திர கோபம், கேகய முதலிய மெலிதலு மாம். இளவேனில் - சித்திரைவைகாசியின் பருவம், வெப்பம். இளாவிருதம் - நவகண்டத்தொன்று. இளி - அவமதிச்சிரிப்பு, இகழ்ச்சிக் குறிப்பு, இணக்கம், இனியென் னேவல், சிரிப்பு, நெற்றியிற் பிறக்கு மிசை, யாழினோர்நரம்பு. இளிதல் - இழிதல். இளித்தல் - அவமதித்தல், சிரித்தல். இளிப்பு - இளித்தல், நிந்தை. இளிவு - இழிவு. இளை - இலக்குமி, இளமை, இனை யென்னேவல், காவற்காடு, பிரதான காவல், மேகம், வேலி. இளைஞர் - இளையோர். இளைஞன் - சிறுவன். இளைது - இளையது. இளைத்தமண் - சத்துக்குறைந்தமண். இளைத்தல் - தொய்ந்துபோதல், மெலிதல். இளைப்பாறுதல் - ஆறிக்கொள்ளு தல், வேலைவிட்டிருத்தல். இளைப்பாறுமண்டபம் - வசந்தமண்ட பம். இளைப்பாற்றி - ஓய்ந்திருத்தல். இளைப்பு - தொய்வு. இளைமை - இளையதன்மை. இளையவர் - பெண்கள். இளையள், இளையாள் - இலக்குமி, பின்பிறந்தாள், பெண். இளையோன் - குமரன், தம்பி. இளைவலி - கரிக்காடு. இற - இறவென்னேவல், இறால். இறகர் - இறகு. இறகு - சிறகு. இறக்கம் - இறங்குதுறை, இறங்குந் தன்மை, போறவழி, வீக்கம் முதலிய விறங்குல். இறக்காது - பெயர்த்துச்சொல்லல். இறக்குதல் - இறங்கச்செய்தல், சாதல், தயிலமுதலியவடித்தல். இறங்கர் - குடம். இறங்கல் - இறங்கப்படுவது, அதோ கதியாதல், இறங்கு துறை, தாழ் வாரம், படி. இறங்குதல் - கீழ்நோக்குதல், கீழ்ப் படுதல். இங்குதுறை - இறங்குந்துறை, காரி யத்தின்போக்கு. இறங்குபொழுது - சாயங்காலம். இறங்குமிராசி - கடக முதற்றனு வீறான விராசி. இறங்கமொட்டான், இறங்குமுட்டான் - ஓர் நெல். இறடி - கருந்தினை. இறத்தல் - கடத்தல், சாதல், நடத்தல், மிகுதி. இறந்தகாலம் - செல்காலம். இறந்தகாலவினைத்தொகை - செல் காலவினை தொக்குநிற்பது (உம்) கொல்களிறு. இறந்தகாலவினையெச்சம் - உ-இ-ய-பு-ஆ-ஊ-என என்னும் ஏழுவிகுதி களையும் பெற்று இடைநிலை பெற்றும் பெறாதும் வருந்தெரி நிலை வினையெச்சம். இறந்ததுதழீஇயவெச்சவும்மை - செல்கால நிகழ்ச்சியை விளக்கி நிற்குமும்மை (உம்) சாத்தனும் வந்தான். இறந்ததுவிலக்கல் - ஓர்யுத்தி. இறந்துபடுதல் - சாதல். இறந்தோர் - மரித்தோர். இறப்பு - கடத்தல், சாவு, போக்கு, மிகுதி, வீட்டிறப்பு. இறவி - இத்திமரம், சத்ததீவினொன்று. இறல் - கிளிஞ்சில், கேடு, நரம்பு, முறிதல், விசை. இறவாணம் - ஓர்வாச்சியம். இறவு - இறால், வீட்டிறப்பு, உற்ற சமயம், எல்லை. இறவுளர் - குறிஞ்சிநிலமாக்கள். இறவுள் - குறிஞ்சிநிலம். இறவை - இறவு, ஏணி, காடை. இறா - இறால். இறாஞ்சுதல் - உராஞ்சுதல், தட்டி யெடுத்தல், பருந்திறாஞ்சல். இருட்டணம் - இராட்டினம். இறாட்டாணியம் - இடுக்கண். இறாட்டுதல் - உரோஞ்சுதல், பகைத் தல், முரண்டுதல். இறாட்டுப்பிறாட்டு - ஏதடை. இறாத்தல் - ஆறுபலங்கொண்டது, மீன்தீர்வைத் துறை. இறாத்துக்கட்டுதல் - கட்டித்தூக்குதல். இறால் - இடபவிராசி, இறவு, எருது, கார்த்திகைநாள், தேன்கூடு. இறுகுதல் - அழுந்துதல், கடினமாதல், நெருங்கல், முரணாதல். இறுக்கம் - உருமம், கடினம், பிசுனித் தனம், வயிரிப்பு. இறுக்கர் - பாலைநிலமாக்கள். இறுக்கல் - இறுகச்செய்தல், உடுத்தல், கடிந்துகொள்ளல். இறுக்கன் - உலுத்தன். இறுங்கு - ஓர் சோளம். இறுதல் - அறுதல், ஒடிதல், கெடுதல், முடிதல், முரிதல். இறுதி - எல்லை, சாவு, முடிவு. இறுதிநிலைத்தீபம், இறுதிநிலை விளக்கம், இறுதிவிளக்கு - தீபகச் சொற்கடையினிற்பது. இத்தல்று - இறையிறுத்தல், ஒடித்தல், சேர்தல், சொல்லுதல், தங்கல், தெளித்தல், முரித்தல், வடித்தல், வெட்டல். இறுப்பு - ஆவணஓலை, இறுத்தல், குடியிறை. இறுமாத்தல் - அகங்கரித்தல், ஏமாத் தல். இறுமாப்பு - அகந்தை, ஏமாப்பு, நிமிர்ச்சி, மிகுமகிழ்ச்சி. இறும்பி - எறும்பு. இறும்பு - குறுங்காடு, சிறுமலை, தாமரைப்பூ, தூறு, மலை, வண்டு. இறும்பூது - அதிசயம், சிறுதூறு தாமரைப்பூ, மலை, காந்தள், தளிர், தீபம், பித்திகை, பெருமை, வண்டு. இறுவதஞ்சாமை - வணிக ரெண் குணத் தொன்று. அஃது நட்டத் துக்கஞ்சாமை. இறுவரையம் - எல்லை, தற்சமயம். இறுவாய் - முடிவு. இறை - அணு, அரசன், அற்பம், இறகு, இறையென்னேவல், உயர்ச்சி, உயர்ந்தோன், ஊழித்தீ, எப் பொருட்குமிறைவன், கடமை, கடவுள், கடன், காலவிரைவு, குடி யிறை, கையிறை, சிறுமை, தங்கல், தலை, நுட்பம், நோய், பெருமை, மறுமொழி, மூத்தோன், வருத்தம், வீட்டிறப்பு, பிரமன், விடை. இறைகுத்தல் - அளவுபார்த்தல், நிதானம் பண்ணுதல். இறைகூடை - சீலாப்பூட்டை, பூட்டை. இறைக்குத்தல் - கண்புரட்சியற்று நிற்றல். இறைச்சி - மாமிசம். இறைச்சிப்பொருள் - தருக்கசாத்திரத் தொன்று, புறத்துச்சொல்லுங் குறிப்புப்பொருள், தெய்வ முதலா கிய பொருளின் கண்ணே பிறத்தல். இறைஞ்சல் - குனிதல், வணங்கல். இறைஞ்சார் - பகைவர். இறைஞ்சி - மரவுரி. இறைஞ்சுதல் - குனிதல், வணங்குதல். இறைதல் - சிதறுதல், சிந்தல். இறைத்தல் - அள்ளிச்சொரிதல், சொரிதல், நீரிறைத்தல். இறைபயப்பது - இருவகைவிடையி னொன்று, அஃது வினாவெதிர் வினாவல், உடன்படல், உறுவது கூறல், உற்றதுரைத்தல், ஏவல், சொற்றொகுத்திறுத்தல்,மறுத்தல். இறைப்பிளவை - கைவரைச்சிலந்தி. இறைப்பு - இறைக்குந்தன்மை, சொரிதல். இறைமகன் - அரசபுத்திரன், குமரன், விநாயகன். இறைமரம் - எற்றல்மரம். இறைமாட்சி - அரசியல். இறைமாண்டார் - அரசர். இறைமை - இராட்சியமுறை, தலை மை, தெய்வத்தன்மை. இறைமையாட்டி - தலைவி. இறையனார்பொருள் - ஓர் பொரு ளிலக்கணம். இறையோன் - கடவுள். இறைவன் - அரசன், கடவுள், குரு, தலைவன், பிதா, மூத்தோன், பிரமன். இறைவி - இராசாத்தி, தலைவி, மனைவி. இறைவை - இறைகூடை, ஏணி, தூற்றுக்கூடை, நீரிறைக்குமரப் பத்தல். இற்செறிப்பு, இற்செறிவுறுத்தல் - கன்னியைவீட்டிவிருத்திக்காத்தல். இற்பிறப்பு - குடிப்பிறப்பு. இற்புவி - பூனை. இற்று - இஃது, இத்தன்மைத்து, சாரியை (உம்) பதிற்றுப்பத்து. இற்றுப்போதல் - அழுகிப்போதல், முரிந்துபோதல். இற்றை - இன்று. இனக்கட்டு - இனக்கூட்டம், இன முறை. இனங்காக்கும் யானை - யானைத் திரட்குத்தலையானை. இனத்தார் - சுற்றத்தார். இனமொழிவிடை - இனத்தைச் சொல் விடை (உம்) மற்றைய செய்வேன். இனம் - குலம், கூட்டம், சுற்றம், திரள், பசுக்கூட்டம், மந்திரிகள், வருக்கம். இனமோனை - இனவெழுத்துக் களொன்றற் கொன்று மோனை யாய் வருவது. இனவழி - வமிசபாரம்பரை. இனவெதுகை - இனவெழுத்துக் களாலாகுமெதுகை. இனன் - அரசன், சந்திரன்,சூரியன், உபாத்தி. இனா - நகைச்சொல். இனாம் - நன்கொடை. இனி - இப்பால், இப்பொழுது, பின்னால். இனித்தல் - இதப்படுதல், தித்தித்தல். இனிப்பு - இனிமை, சினேகம், தித்திப்பு. இனிமை - இனிப்பு, சந்தோஷம், மேன்மை. இனியவைகூறல் - வாக்கின் நற் குணந்நான்கினொன்று அஃது நயச்சொல். இனைதல் - இரங்கதல், வருந்தல். இனைத்தல் - ஒலித்தல். இனைத்து - இத்தன்மைத்து. இன் - இனிமை, ஐந்தனுருபு (உம்) மலையின் வீழருவி, சாரியை (உம்) பூவின்மணம். இன்கண் - பிரியம். இன்சபம் - இராசசபை. இன்சொல் - நயச்சொல். இன்சொல்லுவமை - ஓரலங்காரம், அஃதுபொருளில் உவமைக்கொரு மிகுதி தோன்றக் கூறியின்னமிகுதி யுடைத்தெனினு மொப்பதன்றிச் சிறந்ததன்றென்பது. இன்பம் - அகமகிழ்ச்சி, இனிமை, ஓரலங்காரம். அஃது சொல்லா னாயினும் பொருளானாயினுஞ் சுவை படத்தொடுப்பது, சுகம், நூற்பயனான்கி னொன்று, பெரி யோரியல்பி னொன்று, யாக்கைக் குறுகுற்றம் பதி னெட்டினொன்று. இன்பன் - கணவன். இன்பு - இன்பம். இன்பூறல் - சாயவேர். இன்மை - இல்லாமை, துக்கம். இன்மைநவிற்சியணி - ஓரலங்காரம், அஃது யாதேனு மொன்றின்மை யால் உபமேயத்திற்கு உயர் பேனுந் தாழ்வேனுந்தோன்றச் சொல்லு தல். இன்றியமையாமை - இல்லாதுநிறை யாமை. இன்று - அசைச்சொல், இந்தநாள். இன்ன - இத்தன்மைய, உவமையுருபு. இன்னணம் - இவ்விதம். இன்னதல்லதிதுவெனமொழிதல் - ஓர் யுத்தி. இன்னம், இன்னமும் - அதிகம், இது வரையும், மறுபடியும், மேலும். இன்னல் - தீமை, துன்பம். இன்னா - ஆகாமை, தீமை, துன்பம். இன்னாங்கு - தீமை, துன்பம். இன்னாச்சொல் - இழிச்சொல், கடுஞ் சொல், நகைச்சொல். இன்னாதார் - பகைவர். இன்னாது - தீது. இன்னாமை - ஆகாமை, தவறு, வேண்டாமை. இன்னார் - இத்தன்மையர், பகைவர். இன்னிசை - இராகம், ஏழுநரம் புள்ள வீணை. இன்னிசைக் கலிப்பா - கலிப்பாவு ளொன்று. இன்னிசைக்காரர் - பாணர். இன்னிசைச்சிந்தியல் வெண்பா - இன்னிசைவெண்பாப்போனடந்து மூன்றடியான் முடிவது. இன்னிசைவெண்பா - வெண்பாவு ளொன்று. இன்னியர் - பாடுவார். இன்னே - இத்தன்மையவாய், இப் பொழுதே. இன்னோசை - இனியவோசை. இன்னிசைவெண்பா - அஃது ஒரு விகற்பத் தானேனும் பல விகற் பத்தானேனு நான்கடியாய்த் தனிச் சொல்லின்றி வருவது. ஈ ஈ - இலையான், ஈயென்னேவல், ஓரெழுத்து, கொசுகு, முன்னிலை யசைச்சொல், (உம்) நின்றீபெரும, வண்டு. ஈகம் - சந்தனம். ஈகை - இண்டங்கொடி, கற்பகம், கொடை, பொன், மேகம், பூமி, முயற்சி, விருப்பம். ஈகையாளன் - கொடையாளன். ஈங்கிசை, ஈங்கிஷை - கொலை, வடு. ஈங்கு - இண்டங்கொடி, இவ்விடம், சந்தனம். ஈங்கை - இண்டங்கொடி. ஈசசகி - குபேரன். ஈசத்துவம் - அட்டசித்தியினொன்று, அஃது யாவர்க்குந்தேவனாகுதல். ஈசல் - சீழ்க்கை. ஈசனாள் - ஆதிரைநாள். ஈசன் - அரசன், எப்பொருட்குமிறை வன், கடவுள், குரு, மூத்தோன். ஈசன் - அயன், அரி, ஈசானன், ஐயன், சிவன். ஈசானம் - சிவனைம்முகத்தொன்று, வடகீழ்த்திசை, சிவன், வடகீழ்ப் பாலன். ஈசானன் - வடகீழ்த்திசைப்பாலன். ஈசான்னியம் - இசானம். ஈசுவரன் - ஈச்சுரன். ஈசுரமூலி - பெருமருந்துக்கொடி. ஈசுரவிந்து - இரதம். ஈசுரவேர் - தராசுக்கொடி. ஈசுரன் - இசன், ஈச்சுவரன். ஈசுவரிபிந்து - கெந்தகம். ஈசெல், ஈசல் - சிறகுள்ளகறையான். ஈச்சத்தோல் - ஈயினெச்சம்பிடித்த தோல். ஈச்சப்பி - உலோபி. ஈச்சு - ஓர்மரம். ஈச்சுக்கோட்டல் - சீழ்க்கைவிடுதல். ஈச்சுர - ஓர்வருடம். ஈச்சுரமூலி - பெருமருந்து. ஈச்சுரம் - சிவதத்துவமைந்தினொன்று. அஃது ஞானக்குன்றிக்கிரியை யுயர்ந்தது. ஈச்சுரன், ஈச்சுவரன் - கடவுள், தலை வன், அனுபவந்தருகிறவன், சிவன். ஈச்சோப்பி - ஈப்பீணி, ஈயோட்டி. ஈஞ்சு - ஓர் மரம். ஈஞ்சை - இகழ்ச்சி, கொலை, நிந்தை. ஈடணம் - புகழ். ஈடன் - திராணிவான், பணக்காரன், பலசாலி. ஈடாடுதல் - கொளகொளத்தல், தளர் தல். ஈடாட்டம் - ஊசாட்டம், தளர்தளர்ப்பு, திராணி, விசாலம். ஈடிகை, ஈஷிகை - எழுதுகோல். ஈடிதம் - துதித்தல். ஈடு - உவமை, ஓர் மருந்து, கடன் கோடற்குவைத்த அடைவு, குழைவு, சரியொத்தது, பெருமை, பதில், வலி. ஈடேறுதல் - உய்யப்பெறுதல், கடைத் தேறுதல். ஈடேற்றம் - இரட்சிப்பு, உய்வு, கடைத் தேற்றம், மீட்பு. ஈட்சணம் - நோக்கம், பார்வை. ஈட்டம் - கூட்டம், தேட்டம். ஈட்டல் - சம்பாதித்தல், தொகுத்தல், வணிகரெண்குணத்தொன்று. ஈட்டி - சவளம். ஈணை - அகணி. ஈட்டியது - சஞ்சிதவினை, தேடியது. ஈண்டல், ஈண்டுதல் - கூடல், கூட்டம், நெருக்கம், நெருங்கல். ஈண்டு - இவ்வண்ணம், இவ்விடம், ஈண்டென்னேவல், சீக்கிரம், புலித் தொடக்கி. ஈண்டை - இவ்விடம். ஈதல் - அந்தணர் அரசர் வணிகர்க் குரிய வறுதொழிலினொன்று, கணக்கிலீவு பண்ணுதல், கொடுத் தல், சொரிதல். ஈத்தல் - ஈக்குதல். ஈந்தி, ஈந்து - ஈஞ்சு. ஈப்பி - இலையானெச்சம், ஈர். ஈப்பிணி - உலோபி. ஈப்புலி - ஓர் செந்து. ஈமத்தாடி - சிவன். ஈமப்பறவை - கழுகு, கரகம், பருந்து ஈமம் - சுடுகாடு, விறகு. ஈம் - சுடுகாடு. ஈயக்களங்கு - வங்கவெட்டை. ஈயக்கிட்டம் - ஈயமுருக்கியெடுத்த கிட்டம். ஈயக்குழவி - நீலப்பாஷாணம். ஈயத்தின்பிள்ளை - நீலபாஷாணம். ஈயமலை - ஓர் மலை. ஈயம் - பஞ்சலோகத்தொன்று. ஈயல் - ஈதல், சிறகுமுனைத்தகறையர். ஈரசைச்சீர் - அஃது தேமா - புளிமா - கருவிளம் - கூவிளம் எனும் வாய் பாட்டான் வருவது. ஈரடிப்பா - குறள் வஞ்சிப்பாச்சிறுமை. ஈரடிமடக்கு - அடிகளுளிரண்டடி மடங்கி வருவது. ஈரவெண்காயம் - ஈரஉள்ளி. ஈரிச்சல் - குளிர்தல். ஈர்ங்கை - உண்டுகழுவியகை. ஈழைக்கொல்லி - தாழகம். ஈறல் - பின்னல். ஈறுகட்டி - இரசகருப்பூரம். ஈற்றசையோகாரம் - ஈற்றசையாகவரு மோகார விடைச்சொல். ஈற்றயலைழுத்து - சொல்லினிறுதி யெழுத்துக் கயலெழுத்து. ஈற்று - ஈனுகை, பெறுகை. ஈற்றுளைதல் - ஈனவருந்துதல். ஈற்றெலும்பு - கடையில்நரம்பு. ஈற்றெழுத்து - உயிரபன்னிரண்டும் ஞ்-ண்-ந்-ம் ய்-ல்-வ்-ழ்-ள்-ன் என்னு மெழுத்துக்களும். ஈற்றெழுத்துக் கவி - முற் பாட்டினந் தத்தெழுத்தேனுஞ் சொல்லேனும் வரும்பாட்டிற் காதியாய் வருவது. ஈனசாதி - எளியசாதி. ஈனமிலணங்கு - தெய்வப்பெண். ஈனம் - அழிவு, இழிவு, குறைபாடு, தள்ளல். ஈனல், ஈன்றல் - ஈனுதல், கதிர். ஈனனம் - வெள்ளி. ஈனாமலடு - ஒருமுறையுமீனாத மலடு. ஈனாயம் - சங்கையீனம், நிந்தை. ஈனுதல் - கதிர்முதலியன கக்குதல், பெறுதல். ஈனுமணிமை - புனிறு. ஈனை - இலைநரம்பு, பருமட்டம். ஈன்றணிமை, ஈன்றணுமை - ஈனு மணிமை. ஈன்றல் - உண்டாதல். ஈன்றார் - தந்தைதாயர். ஈன்றாள் - தாய். ஈன்றான் - தந்தை, பிரமன். உ உ - ஓர் சுட்டு, உருக்கம், கட்டளை, கோபம், சம்மதியிவற்றைக் காட்டு மோரு பசருக்கம், ஓரெழுத்து, ஓர் வினையெச்ச விகுதி (உம்) செய்து, தன்மை யொருமை வினை விகுதி, (உம்) உண்கு, சாரியை, சிவன், பிரமன். உஃது - ஒன்றன்படர்க்கைச் சுட்டுப் பெயர். உககனல் - வடவைத்தீ. உகசந்தி - உகத்தின் சந்திப்பு. உகசூரியர் - பன்னிருசூரியர். உகட்டுதல் - தேக்கெடுத்தல், புரள்தல். உகத்தல் - உயர்தல், எழும்பல், சந் தோஷித்தல், விரும்பல். உகப்பிரளையம் - யுகமுடிவு. உகப்பு - உயர்ச்சி, சந்தோஷம். உகமாருதம் - ஊழிக்காற்று. உகம் - நாள், பாம்பு, பூமி, முடிவு, யுகம். உகவை - சந்தோஷம். உகரக்குறுக்கம் - குற்றியலுகரம். உகரம், உகாரம் - ஓரெழுத்து. உகருத்திரர் - பன்னோருருத்திரர். உகல் - சிந்தல், சொரிதல். உகளம் - இரண்டு. உகளல் - கடத்தல், குதித்தல், பாய்தல். உகளித்தல் - குதித்தல். உகளுதல் - கடத்தல், கட்டுதல், குதித் தல், பாய்தல். உகாந்தம் - யுகமுடிவு. உகாரி - உருத்திரமூர்த்தி. உகிர் - நகம். உகுணம் - மூட்டைப்பூச்சி. உகுதல் - சொரிதல், பொடியாதல், விடுதல். உகுத்தல் - உதிர்த்தல், ஊற்றுதல், சிந்தல், சொரிதல், விடுத்தல். உகைதல் - செல்லுதல், எழுதல். உகைத்தல் - எழுதல், ஏறுதல், செலுத்தல். உக்கம் - ஆலவட்டம், இடபம், இடை, கோழி, தீ, பசு, பந்து. உக்கலை - மருங்கின்பக்கம். உக்கல் - உக்கினது, உக்குதல், பக்கம். உக்கனம் - இராக்காவல். உக்களை - மருங்கின்பக்கம். உக்கா - கஞ்சாக்குடுகு, கள். உக்காக்கம் - அரைநாண். உக்காரம் - சத்திபண்ணல், தொனுப் போடுதல். உக்காரி - பிட்டு. உக்கிரகந்தம் - உள்ளி, பெருங்காயம், வசம்பு. உக்கிரகெந்தம் - வசம்பு, வேம்பு. உக்கிரம் - உறைப்பு, கடுமை, கொடு மை, தலைக்காவல், மூர்க்கம், வேகம், உத்திரம், குரூரம், கோபம், பயங்கரம், பரணி, பாத்திரபதம், மகம், முருங்கை, வெப்பம். உக்கிரன் - சிவன், வீரபத்திரன். உக்கிரன் - சத்திரியனுக்குஞ் சூத் திரிக்கும் பிறந்து வேட்டைத் தொழில் செய்வோன், துருவாசன், விசுவாமித்திரன். உக்கிராணம் - களஞ்சியம். உக்கிரி - துற்கை, வசம்பு. உக்கிருட்டம் - மேன்மை. உக்கு - இலவுங்கம். உக்குதல் - இற்றுப்போதல். உக்குளான் - சருகுமுயல். உங்கரித்தல் - அதட்டுதல், உரப்புதல். உங்காரம் - உம்மென்றுரப்பல். உங்காரித்தல் - உங்கரித்தல். உங்கு - உவ்விடம். உங்கை - உன்மாதா, உன்றங்கை. உங்ஙனம் - உத்தன்மை, உவ்விடம். உசலம் - ஓர் மரம். உசல் - ஓர் மரம். உசற்காலம் - சூரியோதையம். உசனம் - உபபுராணம் பதினெட்டி னொன்று, தருமநூல்பதினெட்டி னொன்று. உசனன் - சுக்கிரன். உசா - ஆலோசனை, உசாவென் னேவல், ஒற்றர். உசாத்துணை - உசாவுதுணை. உசார் - சாக்கிரதை. உசாவல், உசாவுதல் - ஆராய்தல், எண்ணல். உசி - கூர்மை. உசிதசமயம் - அவதரம். உசிதம் - உத்தமம், தகுதி, மேன்மை, யோக்கியம், அழகு. உசிதன் - பாண்டியன். உசிரம் - இடபம், கிரணம். உசிப்புதல் - ஏவுதல். உசிலை, உசில் - சீக்கிரிமரம். உசு - உளு. உசுக்கல், உசுப்புதல் - ஏவுதல். உசும்புதல் - இயங்குதல். உச்சடை - கொடிக்கூம்பு, கோபம், வழக்கம். உச்சட்டம் - இலக்கு, நேர். உச்சந்தம் - அதிகப்படுதல், ஒடுக்கம். உச்சந்தலை - உச்சிச்சிரசு. உச்சதரு - தென்னமரம். உச்சதேவன் - கிருட்டிணன். உச்சந்திரம் - கடைச்சாமம். உச்சபாஷணம் - பலக்கப்பேசல். உச்சம் - உயர்ச்சி, கிரகவுச்சம், மத்தி யானம், வல்லிசை, நுதி. உச்சயனி - உச்சினிநகரம். உச்சரித்தல் - சொல்லுதல். உச்சரிப்பு - எழுத்தினோசை. உச்சவீடு - உதயத்துக்கேழாமிடம். உச்சலம் - அறிவு. உச்சற்கம் - அபானம். உச்சன் - இலக்குக்கெறியும் பொருள். உச்சாகம், உச்சாயம் - முயற்சி. உச்சாசனம் - கொலை. உச்சாடணம் - அகற்றல், ஏவுதல், கலை ஞானமறுபத்தினான்கினொன்று. உச்சாட்டியம் - ஓட்டல். உச்சாரணஞ்ஞன் - பரபாஷைக்காரன். உச்சாணி - உயர்ப்பு. உச்சாரணம், உச்சாரணை - உச்சரித் தல், உச்சாடணம். உச்சாரம் - உயர்ச்சி, உச்சரிப்பு. உச்சாரிதம் - உச்சரிக்கப்பட்டது. உச்சி - ஆண்மயிர், தலை, நடு, நடுப் பகல், நாய், துனி, மத்தியானம், மயிர்முடி, விடிந்துபத்து நாழி கை யின் மேற்பத்துநாழிகைப்பொழுது. உச்சிக்கரண்டி - குழந்தைகளுச்சியி லெண்ணெய்விடுங்கரண்டி. உச்சிக்கிழான் - சூரியன். உச்சிக்குடுமி - உச்சிச்சிகை. உச்சிக்குழி - உச்சித்துவாரம், தலை நடு. உச்சிக்கொண்டை - உச்சியின்மயிர் முடி. உச்சிச்சுட்டி - ஓராபரணம். உச்சிட்டசாங்கரியம் - எச்சிற்பாத்திரத் திலுண்ணல். உச்சிட்டமோதனம் - மெழுகு. உச்சிட்டம் - எச்சில். உச்சிதம் - அழகு, உயர்ச்சி, தகுதி, மேன்மை. உச்சித்திலகம் - ஓர் மரம். உச்சிப்பிளவை - உச்சந்தலையிற் சிலந்தி. உச்சிப்பின்னல் - உச்சிச்சடை. உச்சிமோத்தல் - உச்சிச்சிரசைமுகத் தல். உச்சிரட்டம் - தள்ளப்பட்டது. உச்சிரதம் - பிரண்டை. உச்சிரதன் - பிறந்தவன். உச்சிரயம் - உயரம், முக்கோணத் தினிறு திட்டவரி. உச்சிரயோகன் - கனவான். உச்சிருதி - உயரம், முக்கோணத் தினிறு திட்டவரி. உச்சிவிடுதி - மத்தியானவிடுதலை. உச்சினிமாகாளி - ஓர்காளி, விக்கிர மாதித்தனிருந்தவூர். உச்சின்னம் - சமப்படுதல். உச்சுக்காட்டுதல் - தூண்டிவிடுதல். உச்சுதல் - இலக்குக்கெறிதல், தள்ளு தல், வெல்லுதல். உச்சுவலம் - ஆசை, பொன். உச்சுவாசம் - சுவாசம்விடுதல். உச்சூடை - கொடிக்கம்ப நுனி. உச்சூனம் - கொழுப்பு. உச்சேசனம் - மிச்சம், வரள்தல். உச்சேதம் - அழித்தல், வெட்டல். உச்சைச்சிரவம் - இந்திரன்குதிரை. உஞற்று - உஞற்றென்னேவல், ஊக்கம், முயற்சி, வழக்கோதல், வளக்கம். உஞற்றுதல் - ஏவிவிடுதல், செய்தல், தவறிப்போதல், முயற்சி பண்ணு தல். உஞ்சட்டை - ஒஞ்சட்டை. உஞ்சல் - ஊஞ்சல். உஞ்சு - நாயையேவிவிடுங் குறிப்புச் சொல். உஞ்சுக்காட்டுதல் - நாயையேவி விடுதல். உஞ்சை - அவந்திநகர். உடக்கு - சுரையினுட்புரி. உடங்கு - ஒருங்கு, ஒன்றிப்பு, கூடி நிற்றல். உடசம் - சிறுகுடில், பன்னகசாலை. உடந்தை - உரித்து, கூட்டு, சேர்மானம். உடம் - உடன். உடம்படிக்கை, உடன்படிக்கை, உடம் பிடிக்கை, உடன்பிடிக்கை - சம்மதம், பொருத்தச்சீட்டு, பொருத்தம். உடம்படுதல் - சம்மதப்படுதல். உடம்படுமெய் - உயிருமுயிரும் புணர விடைவருஞ் சந்தி யொற்று. உடம்படுவிலக்கு - ஓரலங்காரம், அஃது உடம்பட்டார் போலக் கூறி விலக்குவது. உடம்பாடு - ஒருமிப்பு, சம்மதம். உடம்பிடி - வேல். உடம்பு - ஒற்றெழுத்து, சரீரம். உடம்புபுரட்டுதல் - பிள்ளைப்பருவச் செயலினொன்று. உடம்பெடுத்தல் - உடம்புதேறல், பிறத்தல். உடம்பை - கலங்கனீர். உடலம் - சரீரம். உடலல், உடறல் - சினக்குறிப்பு, பகைத்தல், பிரகாசித்தல், பெருங் கோபம், பொருதல். உடலெடுத்தல் - சரீரந்தேறுதல், சனனித்தல். உடலெழுத்து - மெய்யெழுத்து. உடல் - உடலென்னேவல், ஒற்றெ ழுத்து, சரீரம், பொன், முப்பகை யினொன்று, பொருள். உடல்வாசகம் - நெட்டெழுத்து வாசகம். உடல்வேலை - பருவேலை. உடற்குறை - தலையற்றவுடல். உடற்கூறு - உடலினிலட்சணம், உடலின்சுபாவம். உடற்கொழுப்பு - குடற்கொழுப் பேறு தல், அஃது தினைமறப்பிக்குமோர் நோய். உடற்றல் - உலைத்தல், சினக்குறிப்பு, பகைகொள்ளல், பெருங்கோபம், பொருந்தல், வருத்துதல். உடற்றழும்பு - உடன்மறு. உடனிகழ்ச்சி, உடனிகழ்தல், உடனி கழ்வு - ஒருங்குசம்பவித்தல், மூன் றாம்வேற்றுமைப் பொருள்களி னொன்று. உடனிகழ்ச்சியணி - ஓரலங்காரம், அஃது புணர்நிலை. உடனிலை - கூடநிற்றல், தன்னொடு தானிற்றல். உடனிலைமயக்கம் - ஓரோற்றே தன்னொடு தான் மயங்குதல். உடனிலைமெய்மயக்கம் - உடனிலை மயக்கு. உடனைக்குடனே - சம்பவித்தவுடனே. உடன் - அன்னேரம், கூட. உடன்கட்டையேறுதல் - நாயகனுட னேமனைவிதீயேறுதல், பிரியே னென்று நிற்றல். உடன்கூட்டு - ஒன்றுகூட்டு. உடன்கை - உடனே. உடன்பங்காளி - கூடியபங்குக்காரன். உடன்பங்கு - கூட்டுப்பங்கு, சரிபங்கு. உடன்படல் - எழுவகைமதத்தி னொன்று. உடன்படல்விடை, உடன்படுவிடை - வினாயதற்குடன்பாடுகாட்டு மொழி, (உம்) செய்வேன். உடன்படுதல் - சம்மதித்தல். உடன்படுத்துதல் - இணக்குதல். உடன்பாடு - சம்மதம். உடன்பாட்டுவினை - விதிவினை. உடன்பிறந்தார் - சகோதரர். உடன்பிறப்பு - சகோதரம். உடன்போக்கிடையீடு - போக்கறி வுறுத்தன் முதலிரக்கமீறாகிய நான்குமாம். உடன்போக்கு - போக்கறிவுறுத்தன் முதலாகத் தோற்றலீறாகிய வெட்டும். உடன்போக்குவிரி - பாங்கி தலைவற் குடன் போக்குணர்த்தன் முத லாகத் தலைவன்றன் பதியடைந் தமைதலைவிக் குணர்த்த லீறாகிய பதினெட்டும். உடன்மகரம் - நடுப்புடைவையிற் பற்றுவிக்குமகரம். உடன்றல் - கோபம், சினக்குறிப்பு, பொருதல். உடு - அகழி, அம்பிறகு, அம்பு, அம்புத் தலை, ஆடு, உடுவென்னேவல், ஓடக்கோல், சீக்கிரி மரம், விண் மீன். உடுகாட்டி - பொன்னாங்காணி. உடுக்கு - இடைசுருங்குபறை, ஒரு கட்பறை, சீலை. உடுக்கை - இடைசுருங்கியபறை, சீலை. உடுத்தல் - ஆடைசாத்தல், சோலை முதலிய சூழப்பெறுதல், தரித்தல். உடுத்தாடை - சிற்றாடை. உடுத்துதல் - ஆடை அணிதல். உடுபதி - சந்திரன், மரமஞ்சள். உடுநீர் - அகழ். உடுபதம் - ஆகாயம். உடுபம் - தெப்பம். உடுபன் - சந்திரன். உடுப்பகை - சூரியன். உடுப்பு - உடை, புடைவை. உடும்புமுத்து - உடும்பிற்பிறந்த முத்து. உடுப்பை - உடுப்பாயென்னுமுற்று சீக்கிரிமரம். உடுமானம் - உடை. உடும்பு - ஓர் மிருகம். உடுவின்காந்தன், உடுவின்வேந்தன் - சந்திரன். உடுவை - அகழ். உடை - உடைமை, உடையென்னே வல், சீலை, செல்வம், வேலமரம், உள், கலணை, கால். உடைகுளம் - பூராடநாள். உடைதல் - கெடுதல், சாய்தல், தகரு தல், தளர்வு. உடைத்தல் - கெடுத்தல், தகர்த்தல், தளர்த்தல். உடைப்பு - உடைந்தறவு, தகர்ப்பு, தளர்வு. உடைமானம் - உடை, புடைவை. உடைமை - உடையதன்மை, உரிமை, பணதி, பாக்கியம், பொருள். உடைய - ஆறாம்வேற்றுமையினோர் சொல்லுருபு. உடையல் - உடைகுதல், உடைந்தது, முரியல். உடையவன், உடையான் - உரிமைக் காரன், எசமான், கடவுள், சொந்தக் காரன். உடைவாள் - உடையிற்கட்டும்வாள். உடைவு - தகர்வு. உடைவேல் - குடைவேல். உட்கட்டு - உள்ளுரம், ஓராபரணம், வீட்டினுட்கட்டு. உட்கரணம் - அந்தர்க்கரணம். உட்கரிஷம் - அதிசயம், விளிம்பு. உட்கருத்து - உட்பொருள், மனக் கருத்து. உட்கல் - அஞ்சல், மடிதல், வெட்கல். உட்காத்தல், உட்காருதல் - இருத்தல். உட்காய்ச்சல் - உள்ளுக்குக் காய்தல், ஓர் நோய். உட்கு - உட்கென்னேவல், பயம், வெட்கம். உட்குத்துப்புறவீச்சு - ஓர் நோய். உட்குறிப்பு - மனக்குறிப்பு. உட்குற்றம் - காமமுதலியுகுற்றம். உட்கூதல் - தோன்றாதகுளிர். உட்கை - உட்கல், உட்பக்கம், உள்ளங்கை. உட்கைச்சுற்று - வலச்சுற்று. உட்கொள்ளுதல் - அருந்துதல், திரு வுளங்கொள்ளுதல், மனசில் வைத்தல். உட்கோபம் - தோன்றாக்கோபம். உட்டணசஞ்சீவி - நீர், பிரண்டை. உட்சமையம் - சைவமுதலியவறு சமயம். உட்செல்லல் - உட்போதல். உட்டணகாசம்-கண்ணோயு ளொன்று. உட்டணசயித்தியம் - வெம்மையிற்றண் ணெனவு. உட்டணசிகை - குசன் சனி பானு நின்றகால். உட்டணம் - அகோரம், வெப்பம், மிளகு. உட்டணவாயு - உட்டணங்கண்டு உடலிற்கிளரும்வாயு. உட்டணாசகம் - குளிர்காலம். உட்டணித்தல் - உருமித்தல், வெப்பங் கொள்ளல். உட்டணோதகம் - வெந்நீர். உட்டணோபகமம் - வேனிற்காலம். உட்டிரம் - களர்நிலம், நீர், முட்செவ் வந்தி. உட்டுளை - குழாய், புரை. உட்டெளிவு - உள்ளத்தெளிவு, பழுது திருத்தியெடுத்துக் கொண்டது, பேரறிவு. உட்பகை - காமமுதலியவறுபகை. உட்படி - படிக்கற்குவாடிய இடை யறிய இடும்படிக்கல். உட்படுதல் - உள்ளே போதல், எல்லைக்குக் கீழ்ப்படிதல், ஏற் படுதல். உட்படுத்தல் - உடன்படுத்தல், உட் செலுத்தல், உள்ளேசேர்த்தல். உட்பத்தியம் - மருந்துசாதனை பண் ணுந்தற்காலபத்தியம். உட்பிரவேசித்தல் - உட்படுதல். உட்புரை - உட்டுவாரம். உட்பொருள் - உட்கருத்து, உட்பயன். உட்போடுதல் - வசமாக்கிக் கொள்ளு தல். உணக்கம் - வாட்டம். உணக்கல் - காய்ச்சுதல், துக்கப் படுத்துதல், வாட்டுதல். உணங்கல் - ஒசிதல், காய்தல், துக்கப் படுதல், வாடல். உணத்தல் - காயச்செய்தல், வாட்டுதல். உணராமை - அறியாமை, மயக்கம். உணருதல் - அறிதல், ஊடறீர்தல், எண்ணல், காய்தல், தெளிதல், நினைத்தல், வாடல். உணர்ச்சி - அறிவு, கல்வி, சுவர்ன்னை, நினைவு, புத்தி, மனச்சாட்சி. உணர்தல் - உணருதல், அறிதல், காய்தல். உணர்த்தல் - அறிவித்தல், கற்பித்தல், போதித்தல். உணர்த்தி - அறிவு, உணர்வு. உணர்ந்ததையுணர்தல் - ஓரளவை, அஃது முன்குளிர்வந்துற்ற காலத்து நெருப்பு மருந்தென்றறிந்தான் பின்பு மது மருந்தென வுள்ளங் கோடல். உணர்ந்தோர் - அறிவுடையோர். உணர்வு - அறிவு, தெளிவு, நீங்கல். உணர்வுகேடு - அறிவுகேடு, சுவர்ன் னைகேடு. உணவு, உணா - ஆகாரம், சோறு, போசனம். உணவுதல் - தெரித்தல். உணி - அனுபவிப்பாள், அனுபவிப் பான், அனுபவிப்பதென்னும் பொருள்பட நிற்குமோ ரொருமைப் படர்க்கை விகுதி. உணை - உணையென்னேவல், மெலிவு. உணைதல் - மெலிதல். உண்கலம் - போசனபாத்திரம். உண்கு - உண்கென்னேவல். உண்டல் - புசித்தல். உண்டாகுதல், உண்டாதல் - உண்டு படுதல், தலைப்படுதல், வளர்தல். உண்டாக்குதல் - உண்டுபடுத்துதல், வளர்க்குதல். உண்டாட்டு - மகளிர்விளையாட்டு, மதுபானக்கொண்டாட்டு, விளை யாட்டு, பெருங்காப்பியவுறுப்பு ளொன்று, அஃது மது முதலிய வுண்ணுஞ் சிறப்புக் கூறுதல். உண்டி - உணவு, உண்டா யென்னு முற்று, உண்டியென்னேவல், சோறு, நால்வகை யுணவி னொன்று. அஃது உண்பன, பறவையுணவு. உண்டிச்சீட்டு - உண்டியற்சீட்டு. உண்டியல் - உண்டியற்சீட்டு, பொக் கிஷம். உண்டில்லாதது - கோள், தேவை யானது. உண்டு - உள்ளது, ஊன்றுகால். உண்டுபடுதல் - உண்டாதல். உண்டுபடுத்தல், உண்டுபண்ணுதல் - உண்டாக்குதல். உண்டென - போதத்தக்கதாக. உண்டை - உண்டாயென்னும் முற்று, தார்நூல், திரளை, படைவகுப்பு, சிற்றுண்டி. உண்ணல் - புசித்தல். உண்ணா - அண்ணம், உண்ணா வென்னு மெதிர் மறைப்பன்மை வினைமுற்று. உண்ணாக்கு - மேனாக்கு. உண்ணாமுலை - பார்ப்பதி. உண்ணி - ஓர் செந்து. உண்ணிக்கொக்கு - ஓர் கொக்கு. உண்ணீர் - குடிக்குநீர். உண்பித்தல் - உண்ணச்செய்தல். உண்மாசு - மனக்கறை. உண்மை - அறிவு, உள்ளது, சத்தியம், நேர்மை. உண்மைத்தவறு - தப்பிதம். உண்மைத்துரோகம், உண்மைப் பாதகம் - நம்பிக்கைத்துரோகம், பொய். உண்மைப்படுதல் - மெய்ப்படுதல், விசுவாசம் பொருந்தல். உண்மைப்பொருள் - உவமேயப் பொருள். உண்மையளவை - மெய்மையினாற் பிரமாணித்தல். உண்மையுவமம் - ஓரலங்காரம், அஃது உவமையைக் கூறி மறுத்துப் பொருளையே கூறி முடிப்பது. உண்மைவசை - ஓர் வசை. உண்மைவாழ்த்து - ஓர் வகைவாழ்த்து. உதகம் - நீர், பூமி, மழை, மழைத்துளி. உதகதானம் - தாராதத்தம். உதகவன் - தீ. உதகம் - நீர். உதகாதாரம் - நீர்நிலை. உதகாரம் - முகில். உதகு - புன்கு. உதகும்பம், உதகோதஞ்சனம் - நீர்ச் சாடி. உதகோதரம் - முகில். உதக்கிரியை - நீர்க்கடன். உதக்கு - வடக்கு. உதசம் - சாபம், பசுமடி. உதஞ்சனம் - மூடி. உதடன் - அதட்டுக்காரன். உதடு - அதரம். உதடுபிதுக்கி - ஒருபுறத்திற்பிதுங்கி விழுமுதடுள்ளவன். உதட்டடி - அதகடி, வாய்வெருட்டு. உதணம் - மொட்டம்பு. உததி - கடல், நீர்க்குடம், முகில். உததிக்கிரமன் - கலவன். உததிசுதை - இலட்சுமி. உததிமேகலை - பூமி. உததியானுசன் - வியாழம். உதபாரம் - முகில். உதபானம் - கிணறு. உதப்பி - பேசுகையிற்றெறிக்கும் வாய்நீர். உதப்புதல் - கடிந்துகொள்ளல், குதப்புதல். உதமேகம் - முகில். உதம் - அழைத்தல், கேட்டல், நீர். உதம்புதல் - அதட்டுதல். உதயகாலை - அருணோதயம். உதயமனகிரி - ஓர்மலை. உதயமனம் - உதயகாலம், உதயமலை, உதயம். உதயம் - உதித்தல், தோற்றம், விடியல், அதிட்டம், இலாபம், உதய கிரி, உலகசிஷடிப்பு, வெளிச்சம். உதயலக்கினம் - சென்மலக்கினம். உதயனம் - உதித்தல். உதயன் - சூரியன். உதயாதி - விடியல். உதயாத்தமனம், உதயாத்தம் - அத்த மன உதயமனங்கள், அந்திசந்தி. உதரக்கொதி - பசி. உதரதி - சமுத்திரம், சூரியன். உதரத்துள்ளதீ-உயிர்முத்தீயினொன்று. உதரபந்தனம் - ஓராபரணம். உதரப்பிரிவு - தங்குடித்தமர். உதரம் - கருப்பை, வயிறு, யுத்தம். உதராக்கினி - பசித்தீ. உதராமயம் - வயிற்றுழைவு. உதராவர்த்தம் - கொப்பூழ், தீட்டுக் கட்டு. உதவகன் - தீ. உதவச்சிரம் - சமுத்திரத்திலிருந்து திரண்டெழுந்து மேலே போகு நீர்த் தம்பம். உதவரங்கெட்டது - மிகவுமிளந்தது. உதவல் - ஈதல், காரியத்திற்காதல், துணைச்செய்தல். உதவாகனம் - முகில். உதவாசம் - நீர்க்கரை, வீடு. உதவாசனம் - முகில். உதவி - ஒத்தாசை, கொடை, சகாயம், துணை. உதவிந்து - நீர்த்துளி. உதள் - ஆடு, ஆட்டுக்கடா, மேடவி ராசி. உதறுகாலி - எறிகாற்பசு. உதறுதல் - இடங்கொடா மற்றள்ளு தல், குலைவுகொண்டு நடுங்குதல், சிதற அசைத்து வீசுதல். உதன்னியம் - நீர்த்தாகம். உதாகரணம் - அத்தாட்சி, இலக்கிய மெடுத்துக்காட்டல். உதாகலம் - உரல். உதாகாரம் - உதாரணம். உதாசனம் - எண்ணாமை, தூஷணம். உதாசனன் - கண்குத்திப்பாம்பு, தீ. உதாசினம் - உதாசனம், விருப்பு வெறுப்பின்மை. உதாசீனன் - பிறத்தியான். உதாத்தம் - ஓரலங்காரம், வேதவுச் சாரண மூன்றினுச்சவுச்சாரணம். உதாரணம் - இலக்கிய மெடுத்துக் காட்டல், ஒப்பனை, துணைக் காரணம். உதாரத்தம் - ஓரலங்காரம், அஃது செல்வம் முதலியவற்றின் மிகுதி தோன்றக் கூறுவது. உதாரத்துவம் - பெருங் கொடைத் தனம். உதாரம் - உத்தண்டம், ஓரலங்காரம், அஃது பொருளின்றிக் குறிப்பா னொரு நெறிப்பட நிரப்புங்கவி, கொடை, வீரம். உதாரன் - கொடையாளன். உதாரி - கொடையாளி, வீரன். உதார்த்தம் - உரூபகத்தினொன்று. உதாவணி - கண்டங்காலி. உதானம், உதானன் - நாபியில்நிற்கும் வாயு, கண்மடல், கொப்பூழ். உதி - உதியென்னேவல், உலைத் துருத்தி, ஒதியமரம். உதிட்டிரன் - தருமன். உதிதம் - சொல்லல். உதித்தல் - தோற்றுதல், பருத்தல். உதிப்பு - தோற்றம், பிறப்பு. உதியன் - சேரன், பாண்டியன். உதிரக்கட்டு - ஓர்நோய். உதிரக்கலப்பு - உறவு. உதிரக்கிரிகி - அட்டை, கரடி. உதிரக்குடோரி - கருடன், கிழங்கு. உதிரபந்தம் - மாதுளை. உதிரம் - இரத்தம். உதிரவிரியன் - ஓர் பாம்பு. உதிரவேங்கை - ஓர் மரம். உதிரன் - செவ்வாய். உதிரி - வசூரியிலோர்வகை, சிறுகீரை, துளசி. உதிரிக்குத்து - வசூரியினாலுண் டாகுமோர்வகைக்குத்து. உதிரோற்காரி - சத்தமுகிலி னொன்று, அஃது இரத்தம் பொழிவது. உதிர்காய் - சொரிகாய். உதிர்காலம் - இலையுதிர்காலம். உதிர்தல் - சொரிதல். உதிர்த்தல் - உகுத்தல், சொரிவித்தல். உதிர்ப்பு - உதிர்வு. உதீசி - வடக்கு. உது - உஃது. உதும்பரம் - அத்திமரம், எருக்கு, செம்பு, நெற்களம். உதை,உதைத்தல் - உதையென்னேவல். உதைகால் - மிண்டுக்கால். உதைகாற்பக - உதறுகாற்பசு. உதைகொடுத்தல் - மிண்டு கொடுத்தல். உதைசுவர் - அணைசுவர். உதைதல் - உதைத்தல், செலுத்தல். உதைத்தல் - அதைத்தல், காலாலெறி தல், செலுத்தல். உத்தண்டம் - அதிகாரம், உக்கிரம், கொடை, தயிரியம், துணிவு, வலிமை, வாக்குவல்லமை, வீரம். உத்ததீ - மேட்டிமை. உத்தமசரீரம் - கருடகாந்திருவர் முதலியோருடம்பு. உத்தமதாளி, உத்தாமணி - வேலிப் பருத்தி. உத்தமதானம் - பாக்குவெற்றிலைக் கொடை, பிளவிலை. உத்தமபட்சம் - நற்பட்சம், முதற்றரம். உத்தமபாத்திரம் - சற்பாத்திரம். உத்தமபுருடன் - உத்தமலக்கண முடையன். உத்தமம் - உண்மை, நன்மை, முதன்மை. உத்தமவிமிசதி - உத்தமவருடமிருபது. உத்தமன் - சற்குணன், பெரியவன், மிகுநண்பன், மூன்றாமனு. உத்தமாகாணி - ஓர்கொடி. உத்தமாங்கம் - தலை. உத்தமி - சற்குணமுள்ளவள். உத்தமோத்தமம் - அதிகவுத்தம். உத்தம் - ஓரலங்காரம் அஃது காரணத் திற்கேற்றகாரியம் நிகழ்வது, சொல்லல். உத்தரகாலம் - வருங்காலம், சாந்திர மாதம், அஃது பூரணை துவங்கி மற்றப் பூரணை யளவும். உத்தரகுரு, உத்தரகுருவம், உத்தர கோளம் - போக பூமியாறினொன்று, அஃது சன்மார்க் கரிருக்கும் நல் லனுபவபூமி. உத்தரகோசமங்கை - ஓர்தலம். உத்தரகோசலை - அயோத்தி. உத்தரக்கிரியை - அசுபக்கிரியை. உத்தரசாட்சி - பிரதிவாதியின் சாட்சி. உத்தரணம் - முற்றத்துறத்தல். உத்தரணி - சுருவை. உத்தரதுருவம் - வடமுனை. உத்தரதேசம் - உத்தரபூமி. உத்தரபட்சம் - அத்தாட்சி, அபர பக்கம், ஞாயமுத்தரித்துக் கண்ட தீர்ப்பு, மறுமொழி. உத்தரபதம் - பிரத்தியபதம். உத்தரபாதம் - மறுமொழி. உத்தரபாத்திரபதம் - இரேவதி, உத்திரட்டாதி. உத்தரபாற்குனி - உத்திரம். உத்தரபுருடன் - படர்க்கையிடத் தவன். உத்தரமத்திமபூமி - துருவசக்கிரத் திற்குங் கற்கிச்சக்கிரத்திற்கு நடு. உத்தரமந்தோச்சம் - சூரியனுக்குங் கிரகத்திற்கு முள்ளதி தூரம். உத்தரமீமாஞ்சை - ஆறு சாத்திரத் தொன்று. உத்தரம் - உயர்ச்சி, ஊழித்தீ, மறு மொழி, வடக்கு, சேடம், பலம், பின். உத்தரவாதம் - உத்தரிப்பு, வகை சொல்லுந்தன்மை. உத்தரவாதி - எதிரி. உத்தரவு - மறுமொழி, விடை. உத்தராசங்கம் - உத்தரீகம். உத்தராசாடம் - உத்திராடம். உத்தராசாபதி - குபேரன். உத்தராசை - வடக்கு. உத்தராதலம் - உயர்வு, தாழ்வு, மேல், கீழ். உத்தராதி - வடக்கு. உத்தராதிகாரம் - சுதந்தரம். உத்தராத்தகோளம் - பூமியின் வட பாதியுண்டை. உத்தராபதம் - வடக்கு. உத்தராபாசம் - பொய்மறுமொழி. உத்தராபோசனம் - இரண்டாம் முறை புசிக்குமுணவு. உத்தராயணம் - அருக்கன் மூவகை வீதியினொன்று. உத்தரி - குதிரை. உத்தரிஷணம் - புளகப்பொடிப்பு. உத்தரித்தல் - அனுபவித்தல், சம் மதித்தல், சாதித்தல், தருக்கித் தல், பொறுப்புச்சரிக்கட்டுதல், மறு மொழிசொல்லுதல். உத்தரிப்பு - வருத்தம், வருந்தல். உத்தரீகம், உத்தரீயம் - ஏகாசம், மேற்போர்வை. உத்தரோத்தரம் - எதிர்மறுமொழி, மிகுதி. உத்தவம் - ஓமாக்கினி, திருவிழா. உத்தளம் - உத்தூளிதம். உத்தாபம் - உபத்திரம், மிகுவெப்பம், முயற்சி. உத்தாபலம் - இசங்கு. உத்தாபனம் - எழுப்புதல், பதில் வைத்தல். உத்தாமணி - உத்தமாகாணி. உத்தாரணம் - உயர்த்துதல், பிரித்தல். உத்தாரசங்கம் - உத்தரீகம். உத்தாரம் - மறுமொழி, விடை, அடுப்பு, உயர்ச்சி, உவாந்தித்தல், கடன், பங்கு. உத்தாரவிபாகம் - பங்கிடுதல். உத்தானபரதன் - சுவாயம்புமனுவின் மகன். உத்தானம் - இசைப்பு, ஏறினது, முத் தானம், அத்தநாள், ஆழமின்மை, இடை, உள்வளைவு, ஊழித்தீ, எல்லை, எழும்புதல், சங்கிரமம், சந்தோஷம், சேனை, துணைக் காரணம், நிமிர்ந்துகிடத்தல், பலி பீடம், புத்தகம், மலங்கழித்தல், மனிததத்துவம், முயற்சி, முற்றம், யுத்தம். உத்தி - இசைவு, இணக்கம், செல்வம், சொல், தந்திரவுத்தி, திருவுறுப்பு, தூக்கங்கள், தேமல், படப்பொறி. உத்திட்டம் - குறிப்பு. உத்திதாங்குலி - அபயார்த்தம். உத்தியதம் - அத்தியாயம். உத்தியம் - யாகமிருபத்தொன்றி னொன்று, உத்தியோகம். உத்தியாபனம் - முடிவு, விரதமுதலிய முடித்தல். உத்தியாவனம் - பூந்தோட்டம். உத்தியானபாலன் - தோட்டக்காரன். உத்தியானம் - பூந்தோட்டம், தோட்டம். உத்தியோகம் - அதிகாரத்தோடுங் கூடியதொழில், உள்ளமிகுதி, முயற்சி. உத்திரட்டாங்கம் - தசநாடகத்தொன்று. உத்திரட்டாதி - ஓர்நாள். உத்திரதம் - அச்சுருவாணி. உத்திரம் - உத்திரநாள், சிறுவளை. உத்திரவகுலி - அருந்ததி. உத்திராசாடம் - உத்திராடம். உத்திராடம் - ஓர் நட்சத்திரம். உத்திராபன்னி - சணல். உத்திராபம் - பேரொலி. உத்திரிப்பொருள் - மந்திரம், அருச் சனை, யோகம். உத்திரி - அருச்சனை, தியானம், பருத்தி, மந்திரம். உத்திரேகம் - துவக்கம், வருத்திப்பு. உத்தினம் - மத்தியானம். உத்தீபனம் - தீபமேற்றல், விகார மூட்டல். உத்து - அத்தாட்சி, தெளிவு. உத்துங்கம் - உயர்ச்சி, மகத்துவம், மிருது, மேன்மை. உத்துவந்தனம் - தூக்கல். உத்துவருத்தனம் - அரைத்தல், ஏறுதல், தேய்த்தல், முழைத்தல், வாசனை யூட்டல். உத்துவாகம் - கலியாணம். உத்துவாகிதமுகம் - தலை நிமிர்ந்து பார்த்தல். உத்துவாகனம் - உழுதிரட்டித்தல், கலியாணம். உத்துவாசனம் - மிகவளர்ச்சி. உத்துவேகம் - அச்சம், துக்கம், பாக்கு. உத்துவேட்டணம் - சூழ்தல். உத்தூளனம், உத்தூளிதம் - உடம்பு முற்றும் பொடிவிபூதியணிதல், விபூதிப்பொடி. உத்தேகம் - மதிப்பு, விருப்பம். உத்தேகித்தல் - மதித்தல். உத்தேசம் - போதப்பிரகாரம் மூன்றி னொன்று. அஃது தான்விபரிக்கும் பொருளைப் பெயர்மாத்திரங் கூறல், மதிப்பு, ஒப்பந்தம், சொல்லல், விசாரணை, விபரம். உத்தேசனம் - அனுப்பல், சாணை பிடித்தல். உத்தேசித்தல் - திருட்டாந்திரப் படுத்தல். உத்தேரிதம் - குதிரைநடையைந்தி னொன்று. உந்தரம் - வழி, எலி. உந்துரம், உந்துரு - எலி. உந்தி - ஆன்கூடம், உயர்ச்சி, கடல், கொப்பூழ், தேருருளை, நடு, நீர்ச் சுழி, பரப்பு, மகளிர் விளையாட்டி னொன்று, யாழினுறுப்பு, யாறு, தேர்த்தட்டு, தொழில். உந்திபூத்தோன் - விட்டுணு. உந்து - உந்தென்னேவல், பெற்ற மளைக்குமோர் குறிப்புச்சொல். உந்துதல் - உயர்ச்சி, ஏறுதல், செலுத் துதல், தள்ளுதல். உந்துரு - பெருச்சாளி. உந்தை - உன்றந்தை. உப - இரண்டாவது, இரண்டு, ஓருப சருக்கம், துணை, அதிசயம், அலங் காரம், உவமை, கட்டளை, கண் டனை, கீழ்மை, கொலை, சமீபம், மிகுதி, முயற்சி, விருப்பம் இவற்றைக் காட்டுமோரு பசருக்கம். உபகசிதம் - சிரிப்பு. உபகதை - பழங்கதை. உபகண்டம் - கழுத்தடி, குதிரை நடை. உபகந்தம் - வாசம். உபகமம் - கொள்கை, சமீபம், பொருத்தம். உபகரணம் - உபயோகம், கருவி, துணைக்காரணம், அரசசின்னம், உண விடுதல், உதவி, காணிக்கை கொடுத்தல், சீவனம். உபகரித்தல் - உதவிசெய்தல், உப காரஞ்செய்தல், கொடுக்குதல், சங்கித்தல். உபகாசம் - அவமதிச்சிரிப்பு. உபகாதம் - சருவுதல், நோய் பற்றாசு. உபகாரபரன் - உபகாரி. உபகாரணன், உபகாரன் - உபகாரி. உபகாரம் - ஈகை, உதவி, சகாயம், தயவு, தொங்கல், மலர்ந்தபுட்பம். உபகாரி - ஈகையாளன், துணைச் செய்வோன், நன்மைசெய்வோன். உபகாரிகை - எசமாட்டி, சத்திரம். உபகிருதம், உபகிருதி - உதவி. உபகுஞ்சிகை - ஏலம். உபகுல்லம் - சுக்கு. உபகுல்லியை - அகழ், திப்பிலி. உபகூகனம் - அதிசயம், ஆலிங்கனம். உபகேசி - உமை. உபக்கிரகணம் - பிடித்தல், வேதாப் பியாசம். உபக்கிரகம் - உதவி, உற்பாதம், கிரகா திபன், தருப்பைக் கட்டுபிடித்தல். உபக்கிரகன் - மறியற்காரன். உபக்கிரமம் - துவக்கம், காரியமுயற்சி செய்தல், சோதித்தல், தைரியம், வைத்தியம். உபக்கிரோசம் - நிந்தனை. உபசங்காரம் - எதிர்ச்சங்காரம், மாற்று. உபசதனம் - அயல். உபசத்தி - ஊழியம், சந்திப்பு, நன் கொடை. உபசமம் - சமாதானம். உபசமனம் - அமைந்திருத்தல், சமா தானம். உபசயம் - உயர்ச்சி, குவியல், திரட்சி, மிகுதி, முதலாமிராசியிலிருந்து மூன்றாம் ஆறாம் பத்தாம் பதி னொராம் பாகைகள். உபசரணை - உபசாரம், வழிபாடு. உபசரிதம் - உபசரணை. உபசரித்தல் - சங்கித்தல், மரியாதை பண்ணுதல், வழிபடுதல். உபசருக்கம் - ஆரியமொழிகளின் அடையுரு, உற்பாதம், சாக்குறி, சொன்மூலம், மாறுதல். உபசருச்சனம் - கிரகணம். உபசாந்தம், உபசாந்தி - அமரிக்கை, சமாதானம், ஒழிவு. உபசாபகன் - கோட்காரன். உபசாபம் - சதியோசனை, பிரிவினை. உபசாயம் - சாமக்காவல். உபசாரகரணம், உபசாரகருமம், உபசாரகிரியை - விருந்தோம்பல். உபசாரகன் - உபசரணைகாரன். உபசாரம் - ஆசாரம், சங்கித்தல், அருத்தாபத்தி, உபகாரம், உப சரணை, ஊழியம், தொழில், மருந்துசெய்தல், மன்றாட்டு. உபசாரி - உபசரிப்போன். உபசிரதம் - சம்மதப்படல். உபசிருட்டம் - புணர்ச்சி. உபசீவனம் - ஓசீவனம். உபசேபனம் - ஊழியம். உபஞ்ஞை - வாலஞானம். உபட்சேபம் - செய்யுட்போங்கு. உபதரிசகன் - துவாரபாலன். உபதாது - கலப்பானலோகம். உபதாபம் - சீக்கிரம், நோய், வருத்தம், வெப்பம். உபதானகம் - உபதை. உபதானம் - தலையணை, அத்தி பாரம், கடமை, துணைக்காரணம், நஞ்சு, பட்சம். உபதி - அணாப்பு, சில், பயம். உபதிசன் - எத்தன். உபதேசகலை - ஓரளவை, அஃது கடவுட்டன்மையையறிவித்தல். உபதேசகன் - உபதேசி. உபதேசம் - சமையபோதகம், தீட்சை, போதனை. உபதேசனம் - உபதேசம். உபதேசி - போதகன். உபதேசித்தல் - போதித்தல். உபதை - காணிக்கை, சோதனை, மாய்மாலம். உபத்தம் - கருமேந்திரியமைந்தி னொன்று. அஃது குறி, பெண்குறி. உபத்தாயம் - அபத்தம், உபத்திரம், உபாயம். உபத்தானம் - அயல், கூட்டம், சமீபம். உபத்திதி - அறிவு, சமீபம். உபத்திரம், உபத்திரவம், உபத்திரியம் - துன்பம், வருத்தம், இக்கட்டு, கொடுங் கோன்மை, வலோற் காரம். உபத்தை - உலுப்பை. உபநயம், உபநயனம் - பூணூல், பூணூற் சடங்கு, மூக்குக் கண்ணாடி. உபநயித்தல் - பூணூற்சடங்கு செய் தல். உபநாகம் - இரணந்தீர்க்கு மருந்து. உபநாகனம் - பூசுதல். உபநாயம் - துவைத்துக்கட்டு மருந்து, முப்புரி நூலணிதல். உபநிடதம் - வேதசாரசாத்திரம், வேதத்தினுட்பொருள். உபநிட்சரம் - தெரு, பெருந்தெரு. உபநிட்கிரமணம், உபநிட்டானம் - பிள்ளை பிறந்த நான்காம்மாசம், வெளியே கொண்டு வந்து சந்திர தரிசனை பண்ணுவித்தல், இராச தெரு. உபநிதானம், உபநிதி - ஈடு. உபநியாசம் - ஈடு, பிரமாணம், முக வுரை. உபநியாயம் - பலமுறைநியாய மெடுத் துக்காட்டல். உபபதம் - அற்பம், பகுதி. உபபதி - இரண்டாமதிகாரி, சோர நாயகன். உபபத்தி - கூட்டம், செய்கை, தியானம், பிறப்பு, முகாந்திரம், முடிவு. உபபலம் - உதவி, தாபரம், துணை. உபபாதகம் - மகாபாதகம். உபபீடனம் - உபாதி. உபபுராணம் - பதினெண்புராணங் களிலிருந்தெடுத்துச் சொல்லப் பட்ட பதினெண் சார்புப் புரா ணங்கள். உபபுறம் - புறநகரம். உபபோகம் - அனுபவம், இன்பம். உபமம் - உவமை, பாவனை. உபமலம் - மனமாசு. உபமாதீபகம் - தீபகாலங்காரத் தொன்று. உபமானத்தொகை - உபமானந் தொக்குநிற்பது (உம்) முகத்திற் கொப்பாங்காந்தி கொள் பொரு ளுமுண்டோ. உபமானம் - உவமை, ஓரளவை. உபமிதம் - ஒப்பிடப்பட்டது. உபமிதி - ஒப்பு. உபமேயம் - உவமைப்பொருள். உபமேயோபமானம் - உபமேயத்தையு வமானமாகவும் உவமானத்தை யுபமேயமாகவுஞ் சொல்வது. உபமை - உவமை. உபயகுலம் - இருமரபு. உபயகோமுகி - கன்றின்முகமாத்திரந் தோற்றவீன்று நிற்கும் பசு. உபயசம்பவம் - இருதலைநியாயமும் பொருந்தியொருவழிவருவது. உபயத்தம் - சிலேடை. உபயமம் - கலியாணம். உபயமாதம் - கன்னி தனு மிதுனம் மீன மாதங்கள். உபயம் - இரண்டு, உபகாரம், மகிமை. உபயராசி - கன்னி தனு மிதுனம் மீனம். உபயவாதி - இருபுறத்துநியாயமும் பேசுபவன், எதிரி. உபயவோசை - ஈரடுக்கொலி. உபயாங்கன் - சதாசிவன். உபயார்த்தம் - இருவினைக்கருத்து. உபயோகம் - கருவி, காரியத்திற்கேற் றிருப்பது, சமீபம், நன்னடை, பாவிப்பு, பிரயோகம், மருந்து செய்தல். உபயோகி - அனுகூலி, ஒத்தாசையா யிருப்பவன். உபயோகித்தல் - காரியத்திற் கேற்பித் தல், சாதனமாயிருத்தல். உபரசம் - கடனுரை. உபரசன் - தம்பி. உபரசிதம் - உபசரிப்பு, குருவைக் காத்தல். உபரட்சணன் - கடைகாப்போன். உபரதி - வெறுத்துத்தள்ளுதல். உபரதித்தல் - உபரதிப்படுத்துதல். உபரமணம் - முற்றத்துறத்தல். உபராகம் - கிராணகாலம், கிராணம், இராகு உபத்திரவம், துன்னடை. உபராசன் - இளவரசன். உபராவம் - ஒளி. உபரி - மேல், அதிகம், ஓர்மீன். உபரிலீலை - ஓர் வகைப் புணர்ச்சி. உபரோதகம் - உள்ளறை. உபரோதம் - கட்டுதல், சூழ்தல், தடை, தற்காப்பு. உபலத்தி - அறிவு, சம்பாத்தியம். உபலம் - கல், சிறுகல், பூசித்தல். உபலாலணை - கோதுகுலம் பண் ணுதல், சீராட்டு. உபலாலிகை - தாகம். உபலாளனம் - தூய்தாக்கல். உபலிங்கம் - உற்பாதம். உபலேபம், உபலேபனம் - மெழுகுதல். உபவசித்தல் - உபவாசித்தல். உபவம் - சீந்தில். உபவருத்தனம் - இராச்சியம், குடி யில்லாவூர். உபவனம் - பூங்கா. உபவாசம் - உணவொழிதல், நோன்பு. உபவாசவிரதம் - உணவொழிந் திருக்கு நோன்பு. உபவீதம் - பூணூல். உபவேசம் - ஆசனம், இருத்தல், மலங்கழித்தல். உபற்பவம் - இராகு, கிரகணம். உபன்னியாசம் - ஈடு, ஒற்றுமை, கட்டளை, பாயிரம். உபாகமம் - மூலாகமப்படி செய்யுஞ் சார்பாகமம், பொருத்தம். உபாகரணம் - ஆயத்தக்கிரிகை. உபாகருமம் - பிதிர்தற்பனம். உபாகிதம் - உற்கை. உபாகிருதம் - உற்பாதம், பலி. உபாக்கியானம் - இதிகாசம், இலக் கியப்போதனை. உபாங்கம் - அணியப்பட்டது, பரதவுறுப்புளொன்று, புறவங்கம். உபாசங்கம் - அம்பறாத்தூணி. உபாசயம் - நித்திரை. உபாசனம், உபாசனை - ஆசரணை, வழிபாடு, வில்வித்தை. உபாசிதம் - வணக்கம். உபாசித்தல் - ஆசரணைபண்ணுதல், வழிபடுதல். உபாசிரயம் - அடைக்கலம். உபாஞ்சனம் - மெழுகுதல். உபாதானகாரணம் - துணைக்காரணம். உபாதானம் - ஈவு, பிச்சை, உப யார்த்தம், எண்ணம், துணைக் காரணம், முதற்காரணம், விலக்கல். உபாதி - தடை, பகுத்தறிதல், வருத்தம், காரியம், தியானம், தேகசம்பந்தங் களிலையமவந்தாலவற்றுண்மனஞ் செல்லாமனிறுத்தல், மாரீசம் உபாத்தி - ஆசிரியன். உபாத்தியாயன் - ஆசிரியன். உபாந்தியம் - ஈற்றயல், ஒன்றுவிட்ட யல். உபாயதந்திரம் - தந்திரப்புத்தி. உபாயம் - உபசாரச்சொல், சுளுகு, சொற்பம், தந்திரம், வகை. உபாயவிலக்கு - ஓரலங்காரம். அஃது ஒருபாயங் காரணமாக விலக்கு வது. உபாயனம் - உபகாரம். உபாயி - சுளுகுப்புத்திக்காரன், தந்திர முள்ளவன். உபானம், உபானவரி - கோபுரத்தின் கீழ்ச்சித்திரவரி. உபேட்சித்தல் - வெறுத்துவிடுதல். உபேட்சை - அசட்டை, அருவருப்பு, பிரியவீனம், உபாயம், நிந்தை, பொறுமை, மாயம், விடுதல் உபேந்திரன் - விட்டுணு. உபோதகம் - பேய்ப்பசளை. உப்பங்கழி - உப்புக்கழி, உப்புப் போடும்பாண்டம். உப்பட்டி - கதிர்த்திரட்சேர்வை. உப்பமைத்தல் - உப்புவிளைவித்தல். உப்பமைப்போர் - உப்புச்செய்வோர், நெய்தனிலமாக்கள். உப்பரிகை - மேல்மாடம். உப்பளம் - உப்பவிளைநிலம், கழிக் கரை. உப்பளவர் - நெய்தனிலமாக்கள். உப்பிசம் - பொருமுதல், முட்டுத் தொய்வு. உப்பிலி - இண்டங்கொடி. உப்பு - அராகம், இலவணம், இனிமை, உவர்த்தல், எல்லை, கடல், மகளிர் விளையாட்டு. உப்புக்கசனை - உப்பூறணி. உப்புக்கட்டி - சிறுகட்டுக்கொடி. உப்புக்கண்டம் - உப்புகியல். உப்புக்கரித்தல், உப்புக்கூர்த்தல் - உப்பு வர்த்தல், உப்புமிகுத்தல். உப்புக்கீரை - ஓர்கீரை. உப்புக்குத்தி - ஓர்குருவி. உப்புக்கொள்ளுதல் - ஓர் விளையாட்டு. உப்புதல் - ஊதுதல், பொருமுதல், வீங்குதல். உப்புத்தரவை - உவர்நிலம். உப்புத்திராவகம் - ஓர் திராவகநீர். உப்புப்படுதல் - உப்புவிளைதல். உப்புப்பற்றுதல் - உப்புப்பிடித்தல். உப்புப்பால் - ஈன்றணுமைப்பால். உப்புப்புல்லு - ஓர்புல்லு. உப்புப்பூத்தல் - உப்புப்பற்றுதல். உப்புரிகை, உப்புரிசை - உப்பரிகை. உப்புவாணிகர் - உப்பமைப்போர். உப்புவிந்து - ஆண்சரக்கு. உப்பை, உவ்வை - ஒளவை சகோதரி களிலொருத்தி. உமணர் - உப்பமைப்போர். உமது - உம்முடையது. உமம் - இறங்குதுறை, நகரம். உமரி - ஓர்பூடு, நத்தை. உமலகம் - அரிதாரம். உமலோத்திரம் - விளாம்பிசின். உமல் - ஓலைப்பை. உமாகட்கம் - தருப்பை. உமாகுரு - இமையம். உமாசகிதன் - சிவன். உமாசுதன் - கணேசன், குமரன், வீர பத்திரன். உமாதசி - சணல். உமாதம் - அறிவின்மை. உமாதி - அறிவில்லாள், அறிவில்லான். உமாபட்சி - ஓர்புள். உமாபதி - சிவன். உமி - உமியென்னேவல், தானியங் களின்றோல். உமிக்கரப்பன் - ஓர் வகைக்கரப்பன். உமிச்சிரங்கு - ஓர் வகைச்சிரங்கு. உமிக்காந்தல் - உமியெரிந்ததுகள். உமிச்சிரங்கு - சிறுசிரங்கு. உமிதல் - கொப்பழித்தல், நாவினாற் சாரம் வாங்கல். உமித்தல் - இற்றுப்போதல், பதனழி தல். உமித்தவிடு - சுணைத்தவிடு. உமிநகம் - மெல்லியநசம். உமிநீர் - வாய்நீர். உமியுண்ணி- ஓருண்ணி. உமிரி - உமரி. உமிழ்தல் - கொப்பழித்தல், சத்தி செய்தல், சொரிதல், தெவிட்டல். உமிழ்நீர் - உமிநீர், துப்பல். உமேசன் - சிவன். உமை - பார்வதி, அமைதி, கீர்த்தி, துற்கை, பிரகாசம். உமைமகன் - முருகன், வினாயகன், வீரபத்திரன். உமையாள் - சவுக்காரம், பார்வதி. உமைகரநதி - கங்கை. உம் - இடைச்சொல், அய்யப் பொருள் (உம்) வரினும் வருவான். ஆக்கப்பொருள், (உம்) வலியனு மாயினான். எச்சப்பொருள், (உம்) பாடவும் வேண்டும். எண்பொருள், (உம்) நீயுமவனும். எதிர் மறைப் பொருள், (உம்) வரவுங் கூடும். சிறப்புப்பொருள், (உம்) அந்தண னுங் கள்ளுண்டான். தெரிநிலைப் பொருள் (உம்) ஆணுமன்று பெண்ணுமன்று. முற்றுப்பொருள், (உம்) எங்குமில்லை, தன்மைமுன் னிலை படர்க்கை யுளப்பாட்டு வினைவிகுதி, (உம்) வருதும், முன் னிலையே வற்பன்மை விகுதி,(உம்) வாரும், பெயரெச்ச வினைவிகுதி, (உம்) வருங்காலம். உம்பருலகு - தேவலோகம். உம்பர் - ஆகாயம், உயர்ச்சி, உவ்விடம், பார்ப்பார், மேல், வானோர். உம்பல் - ஆட்டினேறு, ஆண் யானை, எருது, எருமைக் கடா, எழுச்சி, குலம், கோத்திரம், மகன், முறை மை, யானை, வலி, விலங்கேற் றின் பொது, வழித்தோன்றல். உம்பளம் - உபகாரம், கொடை, வெகுமானம். உம்பி - உன்றம்பி. உம்பிளிக்கை - இலவிசப்பொருள். உம்மங்காய் - கொட்டையில்லாப் பனங்காய். உம்மை - உம்மென்னுமிடைச் சொல், கழிபிறப்பு, வருபிறப்பு. உம்மைத்தொகை - உம்மென்னுஞ் சொல்தொக்குநிற்பது, (உம்) செல்கதி. உம்மையெஞ்சணி - ஓரணி. உம்வரம் - மேல்வாயிற்படி. உயக்கம் - உபத்திரவம், துக்கம், வருத்தம், வாட்டம். உயங்கல், உயங்குதல் - மனந்தளர் தல், வருந்தல், வாடுதல். உயத்தி - வெள்ளைப்பாஷாணம். உயரம் - உயர்ச்சி, மிகுதி, மேல். உயரி - உயரமானது. உயர் - உயரென்னேவல், குன்றிச் செடி, வருத்தம். உயர்குலம் - மேலானகுலம். உயர்ச்சி, உயர்த்தி - உயர்பு, மேல், மேன்மை. உயர்தல் - அதிகப்படல், ஏறுதல், நிமிர்தல், மேற்படல், வளர்தல். உயர்திணை - உயர்ந்தகுலம், அஃது மானிடர் தேவர் நரகர். உயர்தினம் - சுபநாள், திருவிழா. உயர்த்துதல் - அதிகப்படுத்துதல், கிழர்ப்புதல், சுமையெடுத்துதல். உயர்நிலத்தோர் - வானோர். உயர்நிலம் - மேடு. உயர்நிலை - தேவலோகம். உயர்ந்தகுளச்சி - பவளப் புற்றுப் பாஷாணம். உயர்ந்தோர் - அறிஞர், பார்ப்பார், முனிவர். உயர்பு, உயர்வு - உயரம், மேன்மை. உயர்ப்பு - அதிகப்பாடு, நிமிர்ச்சி, வளர்ச்சி. உயர்விழிவுப்புகழ்ச்சியுவமை - ஓரலங் காரம். உயர்வுசிறப்பு - ஒன்றற் கெயுரிய வுயர்வைக்காட்டி நிற்குஞ்சொல். உயர்வுசிறப்பும்மை - உயர்வைச் சிறப் பிக்குமும்மை, (உம்) குறவருமரு ளுங்குன்றம். உயர்வுநவிற்சியணி - ஓரலங்காரம், அஃது ஒருபொருள்தன் சொல் லாற் சொல்லப்படாமற் கேட் போரை மகிழ்விப்பது மிஃகு தன் றெனத் தெரிந்துந் தன்னிச்சை அஃதாமெனக் கொள்வது மரம். உயல் - உயிர்வாழ்தல். உயவர் - வருந்தினர். உயவல் - நினைத்தல். உயவு - துன்பம், நிவனப்பு, வருத்தம். உயவை - காக்கணங்கொடி, துன்பம், முகில். உயாவல் - உசாவல். உயிரளபு, உயிரளபெடை - உயிரெ ழுத்துக் களுள்ளபு நீண்டிசைக்கு மெழுத்து. உயிரிலுள்ளதீ-உயிர்முத்தீயினொன்று. உயிரெழுத்து - அகரவரியி னெழுத் துக்கள். உயிரொழிதல் - சாதல். உயிரொழித்தல் - கொல்லல். உயிரொளித்தல் - உயிர்போனது போற்காட்டல். உயிரோம்பல் - உயிர்காத்தல். உயிர் - ஆன்மா, காற்று, சீவன். உயிர்குடித்தல் - கொல்லல். உயிர்க்கட்டை - உடம்பு. உயிர்தருமருந்து - மிருதசஞ்சீவினி. உயிர்த்தல் - உயிரடைதல், மகப்பெறு தல், மூச்சுவிடல், வாய் விடல், விடுத்தல், ஈனுதல். உயிர்த்தறுவாய் - பிராணாவத்தை. உயிர்த்தானம் - உயிர்நிலை, சென்மத் தானம். உயிர்த்துணை - கடவுள், பிராண சினேகம், மனைவி. உயிர்த்துணைவன் - உயிர்த்தோழன், நாயகன். உயிர்த்துணைவி - உயிர்த்தோழி, சரச்சுவதி, மனைவி. உயிர்த்தெழுதல் - மரித்தவனுயிர் பெற்றெழுதல். உயிர்த்தொடர்க்குற்றுகரம் - ஓர் குற்றுகரம். உயிர்நிலை - உடல், உட்கருத்து, பிராணனிற்குமிடம். உயிர்ப்பளி - கொலைபாதகம். உயிர்ப்பனவு - உயிரின்தன்மை, செழிப்பு, பச்செனவு. உயிர்ப்பிராணி - சீவனுள்ளது. உயிர்ப்பு - காற்று, மூச்சு. உயிர்மாய்த்தல் - கொலைசெய்தல், தற்கொலை. உயிர்மெய் - ககரமுதல் னௌகார மீறாய்க்கிடந்த இருநூற்றுப் பதினா றெழுத்தும். உயிர்வாழ்தல் - நாள்விடுதல். உயிர்ப்புவீங்கல் - நெட்டுயிர்த்தல். உயிர்வேதனை - சீவவருத்தம், உயிர்க் குறும் வேதனை, அஃது அனல், சீதம், அசனி, புனல், வாதம், ஆயுதம், விடம், மருந்து, பசி, தாகம், பிணி, முனிவு, முதலியன. உயிறு - இலாமிச்சை. உயில் - சாதனப்பத்திரிகை. உய்தடி - உண்டாகுந்தடி. உய்தல் - ஈடேறுதல், உண்டுபடுதல், தாழ்த்தல், பிழைத்தல். உய்தி - ஈடேற்றம், உயிர்வாழ்தல். உய்த்தலில்பொருண்மை - ஓரலங் காரம். அஃது கருதிய பொருள் மொழிக்கண்ணே தோன்றத் தொடுப்பது. உய்த்தல் - செலுத்தல், சேர்த்தல். உய்த்துணர்தல் - ஆராய்தல், நுட்ப பமாய்த்தேர்தல். உய்த்துணர்வைப்பு - தந்திரயுத்தியி னொன்று. உய்மணல் - கருமணல். உய்யக்கொண்டான் - எருமை முல்லை, கொய்யா. உய்யானம், உய்யானனம் - சோலை, பூந்தோட்டம். உய்வனவு - ஈடேற்றம், தழைவு, வாழ்வு. உய்வித்தல் - ஈடேற்றுதல், பிழைப் பித்தல், வாழ்வித்தல். உய்வு - ஈடேற்றம், பிழைப்பு. உரகடல் - பெருங்கடல். உரகபந்தம், உரகபந்தனம் - நாக பெந்தம். உரகம் - பாம்பு, மல்லிகை. உரகர் - சமணர், நாகர். உரகன் - ஆதிசேடன். உரகாசனன் - கருடன், விட்டுணு. உரகாரி - கருடன். உரகேந்திரன் - சேடன். உரக்கம் - வசத்திலிருப்பு. உரங்கம் - பாம்பு. உரங்குத்தல் - பலப்பித்தல். உரசல் - உரிஞ்சல். உரசி - நெஞ்சம். உரசிதம், உரசிருகம் - முலை. உரஞ்சுதல் - துடைத்தல், தேய்த்தல். உரஞ்செய்தல் - உரங்குதத்தல், திரப் படுத்தல். உரணம் - ஆட்டுக்கடா, முகில். உரண்டம், உரண்டை - காக்கை. உரத்தல் - பலத்தல், வலியுறல். உரத்திதம் - விருத்தி. உரத்திதன் - விருத்தியானவன். உரந்தை - துன்பம். உரபடி, உரபிடி - உரப்பு. உரப்பல் - அதட்டல். உரப்பித்தல் - பலப்பித்தல். உரப்பு - உரப்பென்னேவல், பலப்பு. உரப்புதல் - வாயாலதட்டல். உரம் - உள்ளமிகுதி, ஊக்கம், ஞானம், மதில், மார்பு, வலி. உரம்போடுதல் - உரப்பித்தல். உரல் - நென்முதலியகுத்துமுரல். உரவர் - அறிவுடையோர், சமணர். உரவல் - உலாவல். உரவன் - அருகன், அறிவுடை யோன், பலமுடையோன். உரவு - அறிவு, வலி. உரவுநீர் - உலாவுநீர், உவர்நீர். உரவோர் - அறிஞர், மூத்தோர். உரறல் - பெருங்கோபம். உரற்றல் - ஒலித்தல், பேரொலி. உரற்று - உரற்றென்னேவல், ஒலி. உரன் - அறிவு, உள்ளமிகுதி, பலம், மார்பு, வெற்றி. உராஞ்சல் - உரிஞ்சுதல், உரைதல். உராதரம் - முலை. உராய் - உராயென்னேவல், தேய்த்தல். உராய்தல் - உரிஞ்சல். உராய்போதல் - உரைதல். உராவல் - உலாவல். உரி - அரைப்படி, உரிச்சொல், உரிய, உரியென்னேவல், கொத்தமல்லி, தோல், மரப்பட்டை. உரிசை - தீம்சுவை. உரிச்சீர் - நேரசையாயிறுவது வெண்பாவுரிச்சீர் நிரையசையா யிறுவது வஞ்சியுரிச்சீர். உரிச்சொல் - பொருள்களின் பல வகைக் குணங்களை யுணர்த்துஞ் சொல். உரிஞுதல், உரிஞ்சல், உரிஞ்சுதல் - தேய்த்தல், வழுந்தல். உரிதல் - கழலல், கழற்றல், முளைத் தல். உரித்தல் - உரிக்குதல், வழுந்துதல். உரித்து - உரிமை, உரியது. உரிப்பகாப்பதம் - பகுக்கப்படாதுரிச் சொல்லாய் நிற்பன. உரிப்பொருள் - அகத்திணை முப் பொருளினொன்று, அஃது புணர் தல், புணர்தனிமித்தம், ஊடல், ஊடனிமித்தம், இரங்கல், இரங் கனிமித்தம் என்பன. உரியடி - உரிச்சீரான் வருமடி. உரிமை - ஆட்சி, உரித்து, ஒவ்வொன் றிற்குத்தகுவது, குணம், சுதந்தரம், மனைவி. உரிமைக்கஞ்சி - சாவீட்டிற் சுற்றத் தார்க்கு வார்க்குங்கஞ்சி. உரிமைக்கடன் - சேர்ந்திருந்த வுரித் துக்குச் செய்யுங்கடன். உரிமைக்காணி - உரிமைவழியிற் காணி. உரிமைச்சொல் - உரித்துக்கொண்ட பேச்சு. உரிமைத்தத்துவம் - உரித்தெடுக்கும் அதிகாரவுறுதி. உரிமைபாராட்டுதல் - உரித்துக் கொண்டாடல். உரிமைபேசல் - உரிமைகாட்டிப் பேசல். உரிமைப்பங்கு - உரிமைவழியாய் வரும்பங்கு. உரிமைப்பாடு - உரித்து. உரிமைப்பிள்ளை - உரித்துக் குடந் தைப்பிள்ளை. உரிமைப்பெண் - விவாகத்துக்குரிமை யான பெண். உரிமைமண் - சவக்குழியிலுரிமைக் காரர்போடும் மண். உரிமையாட்சி - உரிமையால்வந்த ஆட்சி. உரிமைவழி - உரித்துக்காரணமாய் வருவது. உரியது - உடையது, சுதந்தரமானது, தக்கது. உரியவள், உரியாள், உரியோள் - உரித் தானவள், மனைவி. உரியவன் - உரித்தானவன், கணவன். உரியியற்சொல் - செந்தமிழ் மொழி களாய் வழக்கினுஞ் செய்யுளினு நின்று தம் பொருளையேயியல் பாய்விளக்குமுரிச்சொல். உரியெண் - அவ்வவ்சங்கததத்திற் குரிமையாய் நிற்குமெண், அஃது நற்சங்கலிதவுரிமை - அரை வருக்க சங்கலிதவுரிமை - ஒன்றரை - மூன்றி லொன்று சங்கலிதசங்கலித வுரிமை, ஒன்று, ஆறிலொன்று கனசங்கலிதவுரிமை - மூன்றரை - இரண்டு - கால். உரியோர் - அறிஞர், உறவோர். உரியோன் - கணவன், சுதந்திரி. உரிவை - தோல். உரீகாரம் - வாக்குத்தத்தம். உரு - அட்டை, உடல், உருத்தலைச் செய்யென்னேவல், உள், கலை, கோபம், சன்னதம், செபத்தினுரு, நிறம், நோய், மரக்கலம், வடிவு, வேற்றுமைக்குறிமுதலிய வெண் வகையிடைச்சொற்குறி, பதமை, வைக்கோற்புரி. உருகம் - பிறப்பு. உருகுதல் - இரங்குதல், கரைதல், நீராளமாதல். உருக்கம் - அன்பு, இரக்கம், உருக்குந் தன்மை, தொடை. உருக்கனடித்தல், உருக்கன் - ஓர் நோய் சடைவு. உருக்கு - உருக்கென்னேவல், எஃகு. உருக்குதல் - உருகச்செய்தல். உருக்குப்பிரமியம் - ஓர் நோய். உருக்குமணல், உருக்குமண் - அய பஸ்மம். உருக்குமணி - கிருட்டிணன்றேவி. உருக்குவளை - மெதுகாணி. உருக்குமம் - பொன். உருக்கொள்ளுதல் - உறுப்படைதல், சன்னதங்கொள்ளுதல். உருசி, உருசிகரம், உருசை - சுவை. உருசிதட்டுதல் - உருசிப்படுதல். உருசிதம் - உருசி. உருசித்தல் - சுவைத்தல், சுவைப் படுதல். உருசு - அத்தாட்சி. உருட்சி - திரட்சி. உருட்டல் - உருளச்செய்தல், கவறெறி தல், புரட்டல், வெல்லல். உருட்டு - உருட்டென்னேவல், உருள் தல், புரட்டு. உருட்டுவண்ணம் - துரிதமுள்ள வண்ணம், அராகந் தொடர்ந்து வருவது. உருணி - உருளுந்தன்மையுடையது. உருண்டை - உண்டை. உருத்தகம் - ஓர்சன்னிநோய். உருத்தல் - கோபம், கோபித்தல், சினக்குறிப்பு, தோற்றுதல், மிகுதி, முளைத்தல். உருத்திதம் - உரியபொருள், தொழிலி லாபம், வளர்தல். உரு கை த்திரகணி- தேவதாசி. உருத்திரசடை - மஞ்சிலிக்கான். உருத்திரபஞ்சமம் - ஓர் பண். உருத்திரம் - ஓரலங்காரம். அஃது வெகுளிதோன்றக்கூறுவது, பெருங்கோபம், மஞ்சள். உருத்திரரோகம் - மாரடைப்பு. உருத்திரவீணை - ஓர் வீணை. உருத்திரன் - சிவன், பெருங்கோபி, ஏகாதசவுருத்திரரி னொருவன். உருத்திராக்கம், உருத்திராட்சம் - உருத்திரமணி. உருத்திராணி, உருத்திரை - பார்வதி. உருத்திராபிஷேகம் - உருத்திர மந்திரஞ் செபித்துச் செய்யுமபிஷேகம். உருத்திரோற்காரி - ஓர் வருடம். உருத்துவம் - பருப்பம். உருபுத்தொகை - உவமையுருவு தொக்கு நிற்பது, (உம்) புயற் கருங் குழல். உருநாட்டு - சித்திரம். உருபகதீவகம் - ஓரலங்காரம். உருபு - உருவம், வேற்றுமையுருபு முதலிய விடைச்சொல். உருபுமயக்கம் - ஓர் வேற்றுமையுருபு நிற்கவேண்டுமிடத்துப் பிறி தொன்று தன் பொருள்படாத தன் பொருள் படநிற்றல். உருபுப்புணர்ச்சி - வேற்றுமையுருபு புணர்ந்துவருவது. உருபுவமானத்தொகை - உருபுமுபமா னமுந்தொக்கு நிற்பது, (உம்) வாய நயச்சிவப்புளதொன்றில்லை. உருபுவமைத்தொகை - உருபுவமை தொக்குநிற்பது, (உம்) சேல்விழி. உருப்பசி - தெய்வப்பெண்களி லொருத்தி. உருப்படி - உரு, உருமுழுவதும். உருப்படுதல் - உருவேறல், சன்னதங் கொள்ளல். உருப்படுத்தல் - உருவேறப்பண்ணு தல், சித்திரித்தல். உருப்பம் - உட்டணம், தினைமா, மிகுதி. உருப்பு - பூரணம், வெப்பம். உருமணி - கருவிழி. உருமுதல் - உறுமுதல். உருமம் - உட்டணம், மத்தியானம். உருமாறுதல் - கோலம்மாறுதல். உருமித்தல் - உட்டணித்தல், மன வெப்பமடைதல். உருமு, உருமேறு - இடி, விடுதல். உரும் - அச்சம், இடி, விடுதல். உருவகம் - ஓரலங்காரம், அஃது, உவ மையைப் பொருளாயும் பொரு ளையுவமையாயுங் கூறுவது. உருவசவுயர்வுநவிற்சியணி - ஓரலங் காரம், அஃது உபமேயத்தையச் சொல்லாற் சொல்லாமல் உப மானச் சொல்லால் இலக்கணை யாய்ச் சொல்லுதல் (உம்) வில்லு வக்காயிரண்டு கொண்ட வல்லி. உருவகவுருவகம், ஓரலங்காரம், அஃது, உருவகத்தையே பெயர்த் தும் பிறிதொன்றாக வுருவகஞ் செய்வது. உருவகித்தல் - உபமேயத்திலுவ மானத்தைப் பேதமின்றியேற்றிச் சொல்லுதல். உருவங்காட்டி - கண்ணாடி. உருவசாத்திரம் - கலைஞானமறு பத்தினான்கினொன்று. உருவசி - உருப்பசி. உருவம் - அழகு, உடலுறுப்பு, உடல், காரணக்கூடியது, நிறம், விக்கிரகம். உருவல் - உருவுதல், காதணியி னொன்று. உருவழிதல் - உருக்கெடுதல். உருவாக்குதல் - உண்டுபண்ணுதல், படைத்தல், பொருளாக்குதல். உருவாணி - தேய்ந்துபோனது. உருவாணிபற்றுதல் - தேய்ந்து போதல். உருவாதல் - உருவமெடுத்தல், உரூப மடைதல், பொருளாதல். உருவாரம் - வெள்ளரி. உருவி - நாயுருவி. உருவித்தல் - உருவகப்படுத்தல். உருவியுப்பு - நாயுருவியுப்பு. உருவிலி - உருவில்லாதவன், மன்மதன். உருவு - அச்சம், உருவம், உருவென் னேவல். உருவுதல் - இலைமுதலியன வுருவுதல், உறுப்பு, உறை கழித்தல், புதைந் தோடல். உருவுவமம் - உருவவுபமானம், அஃது மனுவடிவம் போலுங் குருவடிவெனவருவது. உருவெடுத்தல் - உருக்கொள்ளுதல். உருவெளி - மனதிலுள்ள பொருளின் மருட்சித்தோற்றம். உருவெளிப்படுதல் - மனதி லெண் ணியது தோன்றுமனத் தோற்றம். உருவேறல் - அதிகப்படுதல், உருப் படுதல். உருவொளி - கண்ணாடி முதலிய வற்றிற்காணும் நிழல். உருளரிசி, கொத்தமல்லி. உருளல் - உருளுதல். உருளி - உரோகணிநாள், தேருருளை, பொருத்துப்புரட்சி, வட்டம். உருளிபோர்தல் - பொருத்து விலகுதல். உருளுதல் - புரளுதல். உருளை - உண்டை, தேர்முதலிய வற்றினுருள். உருள் - உருளென்னேவல், உரோ கணிநாள், தேருருளை, பண்டி. உரூடபதம் - இடுகுறிமாத்திரப்பெயர். உரூடம், உரூடி - இடுகுறி, பகாப்பதம், இடுகுறி. உரூடியார்த்தம் - இயற்சொல். உரூபகம் - அத்தாட்சி, சத்ததாளத் தொன்று, ஓரலங்காரம், ஓர்செய்யுள். உரூபகாரப்படுத்தல் - அத்தாட்சிப் படுத்தல். உரூபகாரம் - அத்தாட்சி. உரூபம் - உருவம், கிரிகாமாலை பண்ணல், சுபாபம், மந்தை. உரூபி - உரூபமுள்ளது. உருபிகரம் - உரூபம். உரூபிகரித்தல் - உரூபப்படுதல். உரூபித்தல் - அத்தாட்சிப்படுத்தல். உரூபு - உரூபம், சாயல். உரூப்பியம் - அழகானது, பொன் வெள்ளிநகை, வெள்ளி, வெள்ளை. உரேந்திரன் - வீரன். உரை - உயர்ச்சி, உரையென்னேவல், ஒலி, சொல், சொற்பயன், தேய் மானம், தேய்வு, பொன். உரைகட்டுதல் - உரைபண்ணுதல். உரைகல் - கட்டளைக்கல். உரைகாரர் - வண்ணார். உரைக்கோள் - உரைகாரன்கருத்து. உரைசல் - உரைதல். உரைதல் - தேய்தல். உரைத்தல் - ஒலித்தல், சொல்லுதல், தேய்த்தல். உரைத்தாமென்றல் - ஓர்யுத்தி. உரைத்துமென்றல் - ஓர்யுத்தி. உரைநூல் - உரையுள்ளநூல். உரையல் - உரைதல். உரையாசிரியன் - உரைசெய்தோன். உரையாடல் - பேசல். உரையாணி - மாற்றறியுமாணி. உரையிலக்கணம் - நூலுரைக்கு வேண்டுமிலக்கணம், அஃது பாடம், கருத்து, சொல்வகை, சொற்பொருள், தொகுத்துரை, உதாரணம், வினா விடை, விசேடம், விரிவு, அதிகாரம், துணிவு, பயன், ஆசிரியவசனம். உரையிற்கோடல் - ஓர்யுத்தி. உரோகணி - ஓர் நட்சத்திரம். உரோகணிதனயன் - பலபத்திரன். உரோகதி - நாய். உரோகம் - நோய், இறங்குதல், ஏறுதல், ஒளியின்மை. உரோகாதம் - நெஞ்சிடித்தல், மார டித்தல். உரோகி - நோயாளி. உரோகிணி - உரோகணி. உரோங்கல் - உலக்கை. உரோசம் - மானம், வெட்கம், முலை. உரோசல் - உரைஞ்சல். உரோசனை - கோரோசனைமயிட ரோசனை முதலியரோசனை. உரோசனி - கோரோசனை, செந்தா மரை. உரோசித்தல் - உரோசப்படுதல். உரோஞ்சுதல் - உரைஞ்சதல். உரோணி - உரோகணிநாள். உரோதம் - தடை. உரோதனம் - அழுதல். உரோபணம் - இறங்குதல். உரோமக்கட்டு - நிறைமயிர். உரோமக்கிழங்கு - வசம்பு. உரோமத்துவாரம் - மயிர்த்துவாரம். உரோமப்புளகம், உரோமப்புளகிதம் - மயிர்ப்பொடிப்பு. உரோமாம்பரம் - கம்பளம், சால்வை. உரோமாரிஷம் - மயிர்ப்புளகம். உரோமி - மயிர்ச்சிகைப்பூடு. உரோமம் - புறமயிர், மயிர், மயிர்ப் பரப்பு. உரோமரேகை, உரோமாவலி - உரோ மத்தினொழுங்கு. உரோமாஞ்சலி, உரோமாஞ்சிதம் - உரோமப் பொடிப்பு. உரோருகம் - முலை. உலகசஞ்சாரம் - உலகவாழ்வு. உலகசயன் - புத்தன். உலகநடை - உலகவியற்கை. உலகநாதன் - அரசன், கடவுள். உலேகநேத்திரன் - சூரியன். உலகபரந்தவன் - சூரியன், விட்டுணு. உலகப்புரட்டன் - மிகுபுரளிக்காரன். உலகமலையாமை - நூலழகினொன்று. உலகமலைவு - ஓரலங்காரவழு, அஃது உலகொழுக் கிறப்பக் கூறுவது, கற்றோர்க்கும் மயங்க வைத்தல். உலகமாதா - இலக்குமி, சரச்சுவதி. உலகமுண்டோன் - விட்டுணு. உலகம் - ஆகாயம், உயர்ந்தோர், உலகு, பதவி, பிரபஞ்சம், மங்கலச் சொல் முப்பத்திரண்டினொன்று, குணம், சனம், திசை. உலகவழக்கம் - இயல்பாய் வழங்கு வது, உலகொழுங்கு. உலகவிரட்சகன் - கடவுள், மனிஷ ரையீடேற்றுபவன். உலகளந்தோன் - விட்டுணு. உலகாசாரம் - உலகவொழுக்கம். உலகாயிதம் - புறச்சமையமாறி னொன்று. உலகாயிதன் - உலகாயிதசமையத் தோன். உலகு - ஆகாயம், உயர்ந்தோர், ஒழுக்கம், திசை, நாடு, நிலம், பூமி, மக்கள், முப்பகையினொன்று. உலகுலம் - திப்பிலி. உலகோம்பல் - அரசரறுதொழிலி னொன்று அஃது உலகுகாத்தல். உலக்கை - இருப்புத்தண்டு, ஒழிகை, குத்துமுலக்கை, திருவோணம். உலக்கைக்கணை - உலக்கையின் திரண்ட தலை, திரண்ட தலை யுள்ள வுலக்கை. உலக்கைப்பாட்டு - வள்ளைப்பாட்டு. உலங்கலம் - கற்பாத்திரம். உலங்கு - கொசுகு. உலண்டம், உலண்டு - கோற்புழு. உலத்தல் - ஒழித்தல், கெடுதல், சாதல். உலத்திசூலை - ஓர்சூலை. உலப்பு - ஒழிபு, கேடு, சாவு. உலப்புதல் - அலப்புதல், ஆர்த்தல். உலமரல், உலமருதல் - அச்சக்குறிப்பு, துன்பம். உலம் - கற்றிரள், திரண்டகல். உலம்பல், உலம்புதல் - ஒஞ்சித்தல், ஒலித்தல். உலர்ச்சி - காய்வு. உலர்தல், உலரல் - காய்தல். உலர்த்தல் - உலர்த்துதல். உலர்த்திச்சூலை - ஓர் நோய். உலர்த்துதல் - காய்ச்சுதல். உலவமரம் - இலவமரம். உலவம் - உலோபம். உலவாக்கிழி - எடுக்கவெடுக்கப் பொருள் குறையாக்கிழிக்கட்டு. உலவுதல் - உலாவுதல், ஒழிதல். உலவை - ஊர், ஓடைமரம், காற்று, கிலுகிலுப்பை, குடி, குலம், தழை, மரக்கொம்பு, மரப்பொந்து, முல்லைநிலக் கான்யாறு, வள்ளி, விலங்கின்கொம்பு. உலவைநாசி - திப்பிலி. உலிந்தம் - ஓர்தேயம். உலறல் - காய்தல், சினக்குறிப்பு. உலறுதல் - காய்தல், சிலும்புதல். உலா - உலாவென்னேவல், ஓர் பிரபந்தம். அஃது பாட்டுடைத் தலைவன் உலாவந்ததாக நேரிசைக் கலிவெண்பாவாற் கூறியவனது குலமுதலிய மகிமையை விளக்கு வது, பவனிவருதல். உலாகுமம் - மனோசிலை. உலாங்கிலி - காவட்டப்புல்லு. உலாஞ்சுதல் - கிறுகிறுத்தல், தள்ளாடு தல். உலாத்தல் - உலாவுதல். உலாத்து - உலாத்தென்னேவல், உலாவுகை. உலாத்துக்கதவு - பிணையற்கதவு. உலாத்துதல் - உலாவல். உலாப்போதல் - பவனிபோதல். உலாமடல் - ஓர் பிரபந்தம். அஃது ஒருபெண்ணைக் கனவின் மணந் தோன் அவள் பொருட்டு மட லூர்வேனெனககலி வெண்பா வாற்கூறுவது. உலாவல், உலாவுதல் - பொழுது கழித்துவிளையாடல், மெல்ல நடத்தல். உலு - தினைமுதலியவற்றின்சப் பட்டை. உலுக்குதல் - குலுக்குதல். உலுக்குமரம் - மிண்டிமரம். உலுடிதம் - துவாரம். உலுண்டனம் - உருட்டுதல். உலுத்தம் - பொருளாசை. உலுததன் - பொருளாசைக்காரன். உலுத்துதல் - உதிர்த்தல். உலுப்பை - காய்வருக்கம், சாமான்பை, சிறுகாய். உலுவா - ஓர்சரக்கு. உலுவாவரிசி - வெந்தயம். உலூகம் - கோட்டான், ஆந்தை, இந்திரன், குங்குலியம். உலூகலம் - உரல். உலூதை - சிலந்திப்பூச்சி. உலை - உலையென்னேவல், கம்மா ளரினுலை, பாகஞ் செய்யவைக்கு நீருலை. உலைக்களம் - அடுப்பு, உலைமுகம். உலைக்குறடு - கம்மாளர் கருவியி னொன்று. உலைசல் - உலைவு, ஒவ்வாமை. உலைச்சல் - அலைவு, கலக்கம். உலைதல் - அலைதல், அழிதல், கெடுதல், வருந்தல். உலைத்தல் - அலைத்தல், அழித்தல், கெடுத்தல், வருத்தல். உலைத்துருத்தி - உதி. உலைப்பு - அலைப்பு, வருத்தம். உலைமுகம் - கம்மாளரினுலைமுகம். உலைமூக்கு - கொல்லுலையின் மூக்கு. உலைமூடி - உலைமூடுஞ்சிறுசட்டி. உலையாணிக்கோல் - சுட்டுக்கோல். உலையேற்றுதல் - உலைவைத்தல். உலைவு - அச்சம், அலைவு, நடுக்கம், நிலையின்மை. உலொங்குதல் - கீழ்ப்படுதல். உலொட்டி - மஸ்துள்ளபதார்த்தம். உலொட்டை - சொட்டைப்பேச்சு. உலோககாந்தம் - காந்தம். உலோககாரன் - கொல்லன். உலோகக்கட்டி - பஞ்சலோகத்தை யுருக்கிக் கூட்டியகட்டி. உலோகத்திரம் - வெள்ளிலோத்திரம். உலேகபாலன் - இராசா. உலோகம் - எழுவகையுலோகம், தேவலோகமுதலிய பதினாலு லோகம், பூமி, இரத்தம், பஞ்ச லோகம், பார்வை, மனிதன். உலோகரூடம் - தேசவழமை. உலோகவேடணை - மண்ணிச்சை. உலோகாய்தம் - ஓர்மதம். உலோகார்த்தம் - உலகநன்மை. உலோகிதம் - சிவப்பு, இரத்தம், செவ்வாய், மஞ்சள், யுத்தம். உலோகொத்தமம் - பொன். உலோகோயம் - இமயமலைக்குத் தெற்கு மிராமேசுரத்துக்கு வடக்கு முள்ள தேசங்கள். உலோசம் - கண்மணி, காதணி, சுட்டி யாபரணம், வானம், வின்னாண். உலோசனம் - கண். உலோட்டி - சோலி, வெறியுள்ள சாராயம். உலோபம் - அற்பம், ஆசை, ஈயாமை, உட்பகையாறினொன்று, கெடு தல், விகாரமெட்டி னொன்று. உலோபனம் - ஒறுப்பு, குறைத்தல். உலோபன் - பிசுனன். உலோபி - நொய்யது, பிசுனன். உலோபித்தல் - பிசுனித்தனம் பண்ணல். உலோமகருணம், உலோமாஞ்சம் - புளகப்பொடிப்பு. உலோமம் - வால், ஓரிருடி. உலோமசன் - ஓரிருடி. உலோமம் - ஒழுங்கு. உலோமன் - உரோமன், ஒழுங்குடை யான். உலோலம் - அசைவு, விருப்பம். உலோலிதமுகம் - சிந்தையாலொரு தோண் மேற்றலைசாய்ந்து நிற்கு முகம், துக்கமுகம். உலோலிதம் - அசைவு, சிந்தையா லொரு தோண்மேற்றலை சாய்த் தல், பயம். உலோலை - இலக்குமி, நா. உலௌகீகம் - இலௌகீகம். உல் - கழு, கூர்க்கட்டை, பாரை. உலகு - ஆயம். உல்லகசனம் - புளகப்பொடிப்பு. உல்லங்கனம் - உல்லிங்கனம். உல்லம் - ஓர் மீன். உல்லரி - தளிர். உல்லாசம் - அத்தவாளம், உத்தரீகம், உள்ளக்களிப்பு, சந்தோஷம், அத்தியாயம், வத்திப்பு. உல்லாடி - மெல்லிய ஆள். உல்லாபம் - மழலைச்சொல். உல்லாபன் - நோயுற்றொழிந்தோன். உல்லி - ஒல்லி, மெல்லிய ஆள், மெல் லியது, வெங்காயப்பூ. உல்லிங்கனம் - கலக்கம், சண்டை மிகுதி, மீறுதல். உல்லியம் - கிணறு. உல்லியர் - கூவநூலோர். உல்லு - ஒருதலைகூருள்ள கட்டை. உல்லேகனம் - உயர்த்துதல், உவாந்தித் தல், எழுதல், கல்லுதல், சீவுதல். உல்லோசம் - மேற்கட்டி. உல்லோலம் - பெருங்கடற்றிரை. உவகுலம் - திப்பிலி. உவகை - களிப்பு, மாய்யாக்கை பதினெண்குற்றத்து ளொன்று. உவகைப்பறை - மங்கலப்பறை. உவக்காண் - உங்கே. உவச்சர் - சோனகர். உவட்சி - அசைப்பு. உவட்டல் - அருவருத்தல், எதிரெடுத் தல், சத்திபண்ணல், பெருகல், வெறுத்தல். உவட்டுரை - இகழ்ச்சிச்சொல். உவட்டித்தல் - அருவருத்தல், எதிரெ டுத்தல், தேக்கெடுத்தல். உவட்டிப்பு - அருவருப்பு, குமட்டு. உவட்டு - அருவருப்பு, உவட்டென் னேவல், புரட்சி, பெருக்கு. உவட்டுதல் - அருவருத்தல், குமட்டு தல், புரளுதல். உவட்டெடுத்தல் - பெருக்கெடுத்தல். உவணகேதனன் - விட்டுணு. உவணமுயர்த்தோன் - விட்டுணு. உவணம் - உயர்ச்சி, கருடன், கழுகு, பருந்து. உவணன் - கருடன். உவணி - வாள். உவணை - உவ்விடம், தேவலோகம். உவண் - உவ்விடம். உவதி - பதினாறுவயதுப்பெண். உவதை - மலையின்வீழருவி. உவத்தல் - மகிழ்தல். உவப்பு - உயரம், பொலிவு, மகிழ்வு, விளையாட்டு. உவமத்தொகை - உவமையுருபு தொக்க தொடர் மொழி (உம்) பரன்மொழி. உவமம் - ஒன்றோடொன்றையொப் புறுத்தல். உவமாதீவகம் - ஓரலங்காரம். உவமாநிலம் - சுவர். உவமானப்பிரமாணம் - ஓரளவை, அஃது ஆமாவை ஆப்போன் றிருக்கு மென்றறிதல். உவமானம் - உவமிக்கும்பொருள், சமானம். உவமானித்தல் - ஒப்பிடுதல். உவமானோவமானம் - ஓரலங்காரம். உவமித்தல் - உவமைப்படுத்தல். உவமேயம் - உவமிக்கப்படுபொருள். உவமை - உவமம், ஓரலங்காரம். அஃது பண்பு தொழில் பயன் முதலிய காரணமாகப் பொரு ளொடு பொருளிசைய வொப்பு மைப் படுத்துவது. உவமைத்தொகை - உவமையுருபு தொக்கியசொல். உவமையகத்திணை - இரு பொருடரு மொன்றனை ஒப்புமை காட்டி யுரைத்தல். உவமையாகுபெயர் - உவமானத்தின் பெயரை உவமேயத்திற்கு வழங்கு வது, (உம்) மயில்வந்தாள். உவமையுருபு - உவமை. உவமையுருவகம் - ஓரலங்காரம். அஃது உருவகஞ்செய் பொரு ளைத் திரும்பவு மோர் விசேடத் தினால் ஒன்றோ டொப்புமைப் படுத்துவது. உவராகம் - கிராணகாலம். உவரி - கடல், மகளிர்விளையாட்டு, மூத்திரம். உவரிக்கெண்டை - ஓர்மீன். உவரிலீலை - உபரிலீலை. உவர் - உவர்ப்பு, கடல், கடுகடுப்பு, களர்நிலம், சவர், முன்னிலைப் பன்மைவிகுதி, உயர்திணைப் பலர்பாற் படர்க்கைச்சுட்டுப் பெயர். உவர்க்கடல் - சத்தசமுத்திரத் தொன்று. உவர்க்களம், உவர்த்தரை - உப்பளம், சவர்நிலம். உவர்க்காரம் - சவர்க்காரம். உவர்த்தல் - அறுசுவையினொன்று. அஃது துவர்ப்பு, வெறுப்பு. உவர்நீர் - உப்புச்சலம். உவர்ப்பு - உப்புறைப்பு, நிந்தை, வெறுப்பு. உவர்மண் - சவர்மண். உவளகம் - அந்தர்ப்புரம், இடைச் சேரி, உப்பளம், ஓர்பக்கம், கன்மதம், குளம், பள்ளம், மதில், இரண்டு. உவளல் - துவளல். உவளித்தல் - தூயதாக்கல். உவனாயம் - துவைத்துக் கட்டுமருந்து. உவனித்தல் - ஈரலித்தல். உவனிப்பு - ஈரம். உவன் - ஓர் சுட்டுச்சொல். உவா - அமாவாசி, இளையோள், கடல், தம்பி, நிறைவு, பூரணை, யானை, வாலிபன். உவாகருமம் - உபாகருமம். உவாதி - உபாதி. உவாத்தி, உவாத்தியாயன் - கற்பிப் போன். உவாநாடி - கிரகணபரிசனநாடி. உவாந்தி - சத்தி. உவாய் - ஓர்மரம். உவாலம்பனம் - தூஷணை. உவாவறுதி - அமாவாசி பூரணையின் முடிவு. உவிதல் - நீர்வற்றியவிதல், நெருக்கத் தினாலவிதல். உவை, உவ் - உதுகள். உவ்வி - தலைவி. உவ்வு - தவம். உவ்வை - உப்பை. உழக்கல் - கலக்கல், காரியந்நடத்தல், சிலம்பம்பழகல், மறுவைத்தல், மிதித்தல். உழக்கு - உழக்கென்னேவல், காற் கொத்து. உழச்சியர் - மருதநிலப்பெண்கள். உழத்தல் - பழகல், புரளல், வருந்தல். உழத்தி - மருதநிலப்பெண். உழத்திப்பாட்டு - ஓர் பிரபந்தம். அஃது வேளாண்மைச்சிறப்பும் வேளாண்மைமாந்தர் சிறப்பும் தோன்ற இடையிடைசிந்தும் விருத்தமும் விரவிவரப் பாடுவது. உழத்தியர் - மருதநிலப் பெண்கள். உழப்பாளி - பிரயாசி, முயற்சியுள்ள வன். உழப்பு - ஊக்கம், குழப்பப்பேச்சு, முயற்சி, வலி. உழமண் - அழுக்கெடுக்கும் மண். உழம்பல் - ஒலித்தல், குழம்பல், பிதற்றல். உழர்தல் - கோதிவகிர்தல், புரளுதல், வருத்தமாற்றாதுபுரளுதல். உழலல் - ஆடுதல், உலைந்து திரிதல், சுழலல். உழலை - உழலைமரம், தாகம். உழல் - உழலென்னேவல், உழுதல். உழவர் - சூத்திரர், பூவைசியர், மருதநிலமாக்கள், வேளாளர். உழவன் - உழவுமாடு, உழுபவள், கருமபாரகன், வீரன். உழவாரம் - உழைவாரம். உழவு - உழுந்தொழில், சூத்திரர் வசியர்க்குரியவறு தொழிலி னொன்று, படைச்சால். உழவுகட்டி - உழவிலேபுரண்ட மண் ணாங்கட்டி. உழவுகோல் - கேட்டிக்கம்பு, முட் கோல். உழவுசால் - உழவிடும்வளையம். உழற்றி - சுழற்சி, திரிதல், வருத்தம். உழற்றுதல் - சுழற்றுதல், வருத்துதல், வருந்திப்புரளல். உழன்றி - சுழலத்தக்கது. உழி - இடம், ஏழனுருபு, பக்கம். உழிஞை - சிறுபூளை. உழிஞைமாலை - ஓர் பிரபந்தம். அஃது மாற்றாரதூர்ப்புறஞ் சூழ உழிஞைப் பூமாலை சூடிப் படை வளைப்பதைக் கூறுவது, பகை வரரண் பிடிப்பார்க்கு மாலை. உழிதரல் - சுழலல், திரிதல். உழு - உழுவென்னேவல், ஓர்பூச்சி. உழுகை - உழுதல். உழுதல் - உழல். உழுநர் - உழவர். உபந்து - ஓர் பயறு. உழுபடை - கலப்பை. உழுவம் - எறும்பு. உழுவல் - உழுவனென்னுமுற்று, குணம், முறை, விடாது தொடர்ந்த வன்பு. உழுவான் - ஓர் புழு, உழுவானெடுத்த மண். உழுவை - ஒரு மீன், புலி. உழை - இடம், உழையென்னேவல், ஏழனுருபு (உம்) அவனுழை வந்தான், ஏழிசையினொன்று, சிரத்தாற்பிறக்குமிசை, பக்கம், மான், யாழினோர் நரம்பு, இரா, பசு, வைகறை. உழைத்தல் - சேகரித்தல், சொல்லா லெழுமொலி, பிரயாசப்படுதல், வருந்தி யீட்டுதல், வேலைசெய்தல். உழைப்பு - சுறுசுறுப்பு, சேகரிப்பு, பிரயாசம். உழைமண் - உழமண். உழையர், உழையோர் - ஏவல்செய் வோர், மந்திரிகள். உழைவாரம் - ஓராயுதம். உளகு - யாழினோருறுப்பு. உளதம் - கேட்டல். உளத்தியலிடை - நாயகசுரத்திலிடைச் சொல். உளபுலப்பயன்றற்குறிப்பு - ஓரலங் காரம், அஃது இயல்பாயுள்ள பயன் வேறொன்றாலாய தெனத் தற்குறிப்புச் செய்தல் (உம்) முல்லை சுமந்து தேய்ந்த திடை. உளபுலவேதுத்தற்குறிப்பு - ஓரலங் காரம், அஃது கயல் பாயுள்ளதை ஏதுவினால் வந்ததென அத்திய வசயித்தல் (உம்) நின்றாளவனி மிதித்தலினாற் சேந்தன வென் றுள்ளு மென்னெஞ்சு. உளப்படுதல் - இணங்குதல், உட்படு தல், மனதிலிருத்தல், உறழச் செய்தல். உளப்பாடு - இணக்கம், உட்படுக்கை. உளப்பாட்டுவினை - ஓரிடைப் பொரு ளுடன் பிறவிடப்பொருள்களையு முட்படுத்தியவ்வொன் றிற்குரிய விகுதியான் வினைப் படுவது. உளம் - கருத்து, மனம். உளராதல் - இடமாதல், உடந்தையா தல், உள்ளாதல். உளரிகிரதம் - சம்மதப்படல். உளர் - உடந்தை, உட்பட்டது, உள ரென்னேவல், ஏது. உளர்ச்சி - உளர்வு. உளர்தல் - அசைதல், இறகு உதறுதல், இறகுகோதல், ஈடாடுதல், குரவை யிடல், சிந்தல், சுலாவல், சுழலல், தடவல். உளர்வு - அசைவு, ஈடாட்டம், சுலா வல், சுழலல், பேரொலி. உளவன் - வேவுகாரன். உளவு - அசுகை, ஒற்று, வேவு. உளறுதல் - குளிறுதல், தடுமாறிப் பேசல், பிதற்றல், பேரொலி. உளறுபடி, உளறுபிடி - கலகம், குழப்பம். உளி - இடம், ஏழனுருபு, (உம்) என் னுளி, தறிக்குங்கருவியி னொன்று. உளிஞை - கோபுரவாயில், படை. உளிப்பாரை - குழிகல்லுங்கருவியி னொன்று. உளியம் - கரடி. உளிவைத்தல் - மரத்திலுளியிட்டுத் தறித்தல். உளு - ஓர் புழு, உளுவென்னேவல். உளுக்காத்தல், உளுக்கார்த்தல் - இருத்தல், இருத்துதல். உளுக்கு - ஓர்கருவி, நரப்புச்சுருக்கு. உளுக்குதல் - உளுத்தல், சுளுக்குதல். உளுத்தல் - சிதைந்துபோதல், மர முதலியமாவாதல். உளுந்து - ஓர்பயறு. உளுப்பு - உளுத்தல். உளுவை - ஓர் மீன். உளை - ஆண்மயிர், உளையென் னேவல், ஒலி, குதிரை முதலிய வற்றின் பிடர்மயிர், சேறு, புற மயிர், பேசலாலெழுமொலி. உளைதல் - உவாதிப்படுதல், கைகால் முதலிய வுளைதல், நொதித்தல், பிரசவ வேதனைப்படுதல், மனம் நோதல். உளைத்தல் - அழைத்தல், ஒலித்தல். உளைந்துபேசல் - ஒருவனைக் கருதிப் பேசல், சுடப்பேசுதல், மனத்தாங் கலாய்ப்பேசல். உளைப்பு - அழைப்பு, ஒலிப்பு. உளைமாந்தை - ஓர்நோய். உளைவு - சரீரவருத்தம், மனநோய், வாதநோயினொன்று. உள் - உட்புறம், உள்ளென்னேவல், ஏழனுருபு (உம்) ஊருள், மனம். உள்கல், உள்ளுதல் - நினைத்தல். உள்யோசனை - உள்ளுக்குள்ளான யோசனை. உள்வணக்கம் - மனவணக்கம். உள்வயிரம் - அகவயிரம், மனவயிரம். உள்வலிப்பு - ஓர் நோய். உள்வழிகடந்தோன் - கடவுள். உள்வளையல் - உள்ளேவளைய லானது. உள்வளைவு - உட்கலிவு. உள்வாரம் - கமவாரம், மனவிருப்பம். உள்விழுதல் - உள்ளேபோதல், சினேகங்கூடுதல். உள்வினை - உட்கள்ளம், உட்பகை. உள்வீச்சுச்சன்னி - ஓர் சன்னி. உள்வெக்கை - ஓர் நோய். உள்வெட்டு - சோற்றிவெட்டு. உள்ளக்களிப்பு - மனமகிழ்ச்சி. உள்ளக்குறிப்பு - மனக்குறிப்பு. உள்ளங்கம் - உள்ளுறுப்பு. உள்ளங்கால் - உட்கால். உள்ளங்கை - அகங்கை. உள்ளடக்கம் - அமசடக்கம். உள்ளடக்குதல் - உட்பட்டிருக்கச் செய்தல். உள்ளடங்குதல் - உட்பட்டிருத்தல். உள்ளடி - உள்ளங்கால், கிட்டடி. உள்ளடியார் - உறவர். உள்ளது - உடையது, உள்ளமை. உள்ளத்தம் - கருத்துப்பொருள். உள்ளத்துறைவோன் - கடவுள். உள்ளநாள் - ஆயுநாள். உள்ளபடி - உண்டானஅளவு. உள்ளப்புணர்ச்சி - மனதிலேபுணர்ச்சி பண்ணுவதாக நினைத்துருசி யடைதல், வீணெண்ணத்திற் கொண்டமகிழ். உள்ளமிகுதி - ஊக்கம். உள்ளமுடையான் - ஓர் நூல். உள்ளமை - உடைமை, உண்மை. உள்ளம் - கருத்து, மனம், முயற்சி. உள்ளல் - உள்ளான்குருவி, நினைத்தல். உள்ளவன் - உடையவன், பணக்காரன். உள்ளளவு - உண்டானமட்டும், சீவ நாள் மட்டும். உள்ளாகுதல் - உடந்தையாதல், உட் படுதல். உள்ளாடுசத்துரு - உள்ளானவனைப் போலிருக்குஞ் சத்துரு. உள்ளாடுதல் - உடந்தைப்படுதல், உள்ளேசேருதல். உள்ளாதல் - உடந்தையாதல், உட் படுதல். உள்ளாந்தரங்கம் - அந்தரங்கம். உள்ளாயிருத்தல் - உற்ற யோசனைக் காரனாயிருத்தல். உள்ளார் - உடையோர், உள்மனிதர், பகைவர். உள்ளாளனம், உள்ளானம் - கூத்தின் விகற்பம். உள்ளாளுங்கள்ளாளும் - இருபுறத் துக்குமிணங்கிக் கள்ளமாய் நிற்பவன். உள்ளான் - ஓர் குருவி. உள்ளி - வெண்காயம். உள்ளிடுதல் - உட்படுதல். உள்ளிடை - உட்காரியம். உள்ளிட்டது - உள்ளடங்கியது. உள்ளிட்டார் - கூட்டாளிகள், பங்காளிகள். உள்ளிந்திரியம் - மனமுதலியபுலன். உள்ளியர் - அறிவுடையோர். உள்ளின்மனசு - மனமாசு. உள்ளீடு - உட்படுகை. உள்ளுக்குள் - உள்ளே. உள்ளுடன் - பலகாரத்திலுள்வைத்தது. உள்ளுடை - உள்வேட்டி, கௌபீனம். உள்ளுடைவு - மனத்துயர். உள்ளுதல் - நினைத்தல். உள்ளுயிர்க்குன்று - நத்தை. உள்ளுறுத்தல் - உட்படுத்தல், நினைப் பித்தல். உள்ளுறை - உள்ளெண்ணம். உள்ளுறையுவமம் - தோன்றாமலுவ மிப்பது, உய்த்துணர் வகைத் தாய்ப்புள்ளொடும் விலங் கொடும் பிறவற் றொடும்புலப் படுவது. உள்ளூர் - வழக்கமானவூர். உள்ளே - உள்ளாக. உள்ளோசை - மணிமுதலியவற்றி னுள்ளனுக்கு. உறக்கம் - நித்திரை, யாக்கைக்குற்றம் பதி னெட்டினொன்று. உறக்கல் - கறக்குதல், விரலாற் பிதுக்கி யெடுத்தல், உறங்கச் செய்தல். உறக்கு - நித்திரை, உறக்கென் னேவல். உறக்குதல் - இலைமுதலிய வொடுங்கு தல், நித்திரைசெய்தல், வதங்குதல். உறங்கல் - உறங்குதல். உறங்கி - புளியமரம். உறட்டலன் - வரண்டவன். உறட்டல் - வரண்டது. உறட்டற்களி - வரட்களி. உறட்டி - அப்பம், வரண்டது. உறட்டு - உறண்டை நாற்றம், குறை, குறைசொல்லல், சதுப்புநிலம், சுறட்டு. உறட்டுதல் - வரட்டுதல். உறட்டை, உறண்டை - துற்கந்தம், வரட்சி. உறண்டல்மண் - வரளமண். உறண்டற்களி - வரட்களி. உறண்டுதல் - வரள்தல். உறத்தல் - கறத்தல், பிதுக்கல், முற்றக்கவர்தல். உறல் - கிட்டல், வருதல், உறுதல். உறவர் - உறவோர். உறவாடுதல் - உறவாதல். உறவி - உயிர், உலைக்களம், உறவு, ஊற்று, எறும்பு, ஓர்புழு, கிணறு, மலைமுருங்கை. உறவின்முறையார், உறவுமுறையார் - உறவர். உறவு - எறும்பு, சினேகம், சுற்றம், உற்றசமயம். உறவுகூடுதல், உறவுசெய்தல் - சினேகங் கூடல். உறவோர் - சுற்றத்தோர். உறழ - ஓருவமையுருபு. உறழல் - உறழ்தல். உறழ் - இடையீடு, ஒப்பு, காலம், பெருக்கம். உறழ்ச்சி - உறழ்வு, எண்கூட்டின பெருக்கம். உறழ்தலுவமை - ஓரலங்காரம். உறழ்தல் - உவமித்தல், எண்கூட்டிப் பெருக்கல், இடையிடல், போலுதல். உறழ்வு - இடையீடு, உணர்வு, உவமை, எண்ணின்பெருக்கம், பகை,போர். உறி - உறியென்னேவல், தூக்கு. உறிஞ்சுதல் - உள்ளேவாங்கல். உறிதல் - உறிஞ்சுதல். உறு - உறுவென்னேவல், மிகுதி. உறுகண் - அச்சம்,தரித்திரம், துன்பம், நோய். உறுகண்ணாளர் - உறுகண்ணுடை யோர், தரித்திரர். உறுகண்ணாளன் - அச்சமுள்ளான். உறுக்கல் - அதட்டல், கடத்தல், குதித்தல், கோபம், சினக்குறிப்பு. உறுக்காட்டம், உறுக்காட்டியம் - உறுக்குதல், தத்துவம். உறுகுது - வஞ்சகம். உறுதல் - அடைதல், சம்பவித்தல், சேர்தல், பொருந்தல், வருதல். உறுதி - அங்கம், அறிவு, உண்மை, கல்வி, திடன், நன்மை, நிச்சயம், முறிச்சீட்டு, வலி. உறுதிச்சுற்றம் - உற்றதுணைவர். உறுதிச்சொல் - நிசச்சொல். உறுதிபயத்தல் - நயன்றரல். உறுதிப்படுத்தல் - சாதனமுடித்தல், வற்புறுத்தல். உறுதிப்பத்திரம் - எழுத்துறுதி. உறுதியர் - உற்ற துணைவர், தூதர், மந்திரிகள். உறுத்தல் - உறுவித்தல், ஒற்றுதல், சேர்த்தல், நினைப்பித்தல், பயத்தல். உறுத்தை - அணில். உறுந்தறுவாய் - தற்சமயம். உறுபு - செறிவு, பாலையாழ்த்திறம், மிகுதி. உறுப்படக்கி - ஆமை. உறுப்பிலபிண்டம் - உறுப்புக்குறை யெட்டினொன்று. அஃது அங்கங் கள் நிறைவில்லாதது. உறுப்பினகவல் - ஒருபொருண் மேற்பரந்திசைப்பது. உறுப்பு - அங்கம், அடுக்கு, அடை யாளம், அவயவம், உடல், உறுதி, துறுவல், நெருக்கம், மரக்கொம்பு, மிகுதி. உறுப்புக்குறைவிசேடம் - ஓரலங் காரம். அஃது வேண்டுமுறுப்புக் குறைவைச் செயலினருமை தோன்றக்கூறுவது. உறுப்புத்தற்கிழமை - உறுப்போ டொற்றுமை யுடையது. உறுப்புத்தோல் - மௌஞ்சி. உறுப்புநலனழிதல் - துயருறு வோரதங்கத் தழகுகெடல். உறுப்புமயக்கம் - உறுப்புக்குறை யெட்டினொன்று. உறுமல் - இரைதல், உறுமுதல், எழும்பல், குமுறல். உறுமா, உறுமாலை, உறுமால் - தலைச் சீலை, தலைப்பாகை. உறுமி - ஓர்பாறை. உறுவ - தெரிதல், வணிகரெண் குணத் தொன்று அஃது வருவதறிதல். உறுவதுரைத்தல்விடை - வினாவுக்கு விடையாய் உறுவதைச் சொல்லல், (உம்) உண்டாயோவெனவயிறு நோமெனல். உறுவர் - முனிவர். உறுவல் - உறுவேனென்னுமுற்று, துன்பம். உறுவன் - அருகன், முனிவன். உறுவித்தல் - வருவித்தல். உறுவை - ஒளவைசகோதரிகணால் வருளொருத்தி. உறை - ஆடையழுக்கற்றுநீர், இடம், இருப்பிடம், இரை, இலக்கக் குறிப்புளொன்று, உயர்ச்சி, உவர் நீர் உறையென்னேவல், காரம், நீளம், படைக்கூடு, பண்டம்பெய் யுறை, பாலிடுபிரை, மருந்து, மழை, மழைத்துளி, வாழ்நாள், விலங்குணவு, வெண்கலம், பொருள். உறைகாரர் - உறைசெய்வோர். உறைகாலம் - மழைகாலம். உறைதல் - இருத்தல், நிலம் பால் முதலியன விறுகுதல், வசித்தல். உறைத்தல் - அழுந்தல், கார்த்தல். உறைத்துளி - மழைத்துளி. உறைந்தமழை - கட்டியானமழை. உறைபதி - இருப்பிடம், சுயவிருப்பு. உறைப்பு - காரம், கூர்மை, கொடுமை, பலப்பு. உறைமோர் - பாலிடுபிரை. உறையிடம், உறைவிடம் - இருப்பிடம், உள்வீடு, தங்குமிடம். உறையுள் - உறைகாலம், ஊர்ப்பொது, நாடு, மக்கட்படுக்கை, மருதநிலத் தூர், வீடு, இருக்குமிடம். உறையூர் - சோழனூர், மருதநிலத்தூர். உறைவு - இருப்பு, உறையுந்தன்மை. உற்கடம் - யானை, வெறி. உற்கடுகாதனம் - சம்மணமாயிருத்தல். உற்கடிதம் - பஞ்சதாளத்தொன்று. உற்கணம் - தட்டை. உற்கண்டிதம் - துக்கப்படல். உற்கம் - கடைக்கொள்ளி, தீத்திரள். உற்கரித்தல் - சினத்தார்த்தல், வாந் தித்தல். உற்கருடம் - அதிசயம். உற்கலம் - கௌடமைந்தினொன்று. உற்கலன் - சுமைகாரன். உற்காதம் - ஆரம்பஞ்செய்காரியம். உற்காமுகம் - கொள்ளிவாய்ப்பேய். உற்காரசூலை - ஓர்நோய். உற்காரம் - உக்காரம், வாந்தி, இரைதல், தூற்றியபொலி, விழுங்கல். உற்கிரமணம் - போதல். உற்கிராமம் - எதிரிடை, திறம்புதல். உற்கிருஷடம் - மேன்மை. உற்கீரணம் - உவாந்தித்தல். உற்குரோசம் - நீர்வாழ்பறவை. உற்கை - கடைக்கொள்ளி, விண்மீன், விண்வீழ்கொள்ளி. உற்கை - சுவாலை, தீ, தீக்கொள்ளி, விண்வீழ்கொள்ளி. உற்கோசகன் - பரிதானம் வாங்கி. உற்சர்க்கம் - அத்திவாரம், கைவிடுதல். உற்சவம் - திருவிழா, உயர்ச்சி, களிப்பு, கோபம், விருப்பம். உற்சவவிக்கிரகம் - எழுந்தருளுந் திருவுரு. உற்சற்சனம் - நன்கொடை. உற்சாகம் - ஊக்கம், புண்ணியமேழி னொன்று, முயற்சி, சந்தோஷம், நூல். உற்சாயம் - உற்சாகம். உற்சாதனம் - அழித்தல், உழுதிரட் டித்தல், போதல், வாசனையூட்டல். உற்சாரகன் - கடைகாப்போன். உற்சேதம் - உடல், உயர்ச்சி, காயப் பட்டசரீரம், கொலை. உற்சேபணம் - கால்செய்வட்டம். உற்சேபம் - அலைபுரள்தல், அனுப்பு தல், எறிதல், கக்குதல், மோதுதல். உற்பதம் - தப்பு. உற்பதனம் - உற்பத்தி. உற்பத்தி - தோற்றம், பிறப்பு. உற்பத்திக்கிரமம் - வங்கிஷ அட்ட வணை. உற்பத்திப்பிரயோகம் - காரணங் களானாய காரியம், பொருண் மாட்சி. உற்பலபத்திரம் - திலகம், நகரேகை. உற்பலம் - கருநெய்தல், குவளை, சீதே வியார்செங்கழுநீர், செங்குவளை. உற்பலம்பம் - தோற்றல். உற்பலவனம் - நடந்தது. உற்பவமாலை - ஓர் பிரபந்தம், அஃது பாட்டுடைத்தலைமகன் பிறப் பினை ஆசிரியுவிருத்தத்தாற் பாடு வது. உற்பவம் - கருப்பந்தரித்தல், பிறப்பு. உற்பவனம் - பூரணாகுதி செய்தல். உற்பவித்தல் - உற்பத்தியாதல், பிறத்தல். உற்பனம், உற்பன்னம் - தோற்றம், பிறப்பு. உற்பாடனம் - கக்கல், நிருமூடம். உற்பாதகம் - எண்காற்புள். உற்பாதம் - கொடுமை, துன்னிமித்தம். உற்பாதம் - தப்பு, தானாய்ச்சம் பவித்தது, பூகம்பமுதலியன, விண் வீழ் கொள்ளி. உற்பாதனம் - பிறப்பித்தல். உற்பிராசனம் - நிந்தை. உற்பீசம் - நிலத்திற்பிறப்பன. உற்றுதுரைத்தல்விடை - வினாவுக்கு விடையாய்ச்சம்பவித்ததைச் சொல்லல் (உம்) உண்டாயோவென வயிறுநோகின்ற தென்பது. உற்றபண்புரைப்போர் - தூதர். உற்றவன் - உறவின்முறையான், சேர்ந்தவன். உற்றறிதல் - உணர்ந்தறிதல், சேர்ந் தறிதல், பரிசித்தறிதல். உற்றாண்மை - உள்ளந்தரங்கம், உற்றசினேகம். உற்றார் - உறவோர். உற்றிடம் - உற்றசமயம். உற்றுக்கேட்டல் - புலனடக்கிக்கேட்கு தல். உற்றுணர்தல் - ஆராய்ந்தறிதல். உற்றுப்பார்த்தல் - கண்ணூன்றிப் பார்த்தல். உன் - உனது, உன்னென்னேவல், மனம். உன்மதம் - மதிமயக்கம். உன்மத்தகி - குறிஞ்சா. உன்மத்தம் - ஊமத்தை, மயக்கம், மன்மதன் கணையினொன்று, வெறி. உன்மத்து, உன்மத்தை - பூமத்தை. உன்மந்தம் - கொலை. உன்மார்க்கம் - துன்னடை. உன்மனை - பிராசாதவியல்பி னொன்று. உன்முகம் - மேனோக்கியமுகம், மேனோக்கம். உன்மேதை - கொழுப்பு. உன்மை - தசைபிடுங்குங்குறடு. உன்னதம் - உயர்ச்சி, மேன்மை. உன்னதி - வத்திப்பு. உன்னமனம் - எழுச்சி. உன்னம் - அன்னப்புள், நினைவு, நீர் வாழ்பறவைப்பொது, மனம், ஈரம். உன்னயம் - உயர்வு. உன்னயனம் - அருத்தாபத்தி, ஆலோசித்தல். உன்னலர் - பகைவர். உன்னல் - உன்னுதல், நினைத்தல். உன்னாகம் - காடி. உன்னாமம் - உயர்த்துதல். உன்னாயம் - உயர்வு. உன்னாலயம் - இதயம். உன்னி - குதிரை, அழிஞ்சல். உன்னிப்பு - கவனிப்பு, குறிப்பு, பலம், முயற்சி. உன்னியம் - அயிக்கம். உன்னுதல் - கிளர்தல், நினைத்தல், பாய்தல். ஊ ஊ - உணவு, ஊன், ஓரெழுத்து, வருத்தமாற்றாதனுங்கல். ஊகடன் - முருங்கை. ஊகம் - கருத்து, குரங்கு, தியானம், நினைவு, படைவகுப்பு, புலி. ஊகனம் - தீர்த்தல். ஊகனி - துடைப்பம். ஊகாரம் - ஓரெழுத்து. ஊகித்தல் - நியாயஞ்சொல்லல், நினைத்தல், மட்டுக்கட்டுதல், யோசித்தல். ஊகிபாஷை - யூகிபாஷை. ஊகை - யூகை. ஊக்கம் - உயர்ச்சி, உள்ளமிகுதி, உற்சாகம், முயற்சி, வலி, உண்மை. ஊக்கல் - ஏறுதல், தளர்த்தல். ஊக்கு - ஊக்கம், முயற்சி. ஊக்குதல்- உற்சாகங்கொள்ளுதல், முயலுதல். ஊங்கு - பெரிது, மிகுதி, உவ்விடம், விசேடம், உயர்ச்சி. ஊங்கென - மிகவும். ஊசரத்திராவணம் - வெடியுப்பு. ஊசரம் - பூவழலை. ஊசல் - அசைதல், ஊஞ்சல், ஊழல், ஓர் பிரபந்தம். அஃது ஆசிரிய விருத்தத்தானாதல் கலித்தாழிசை யானாதல் ஆடிரூசல் ஆடாமோ ஊசலென முடிவுறக் கூறுவது, பதனழிதல். ஊசா - ஓர்செடி. ஊசாடுதல் - ஊடாடுதல். ஊசாட்டம் - உலாத்து, களவு, வரத்துப் போக்கு, விரைவு. ஊசி - எழுத்தாணி, சூசி. ஊசிக்கண், ஊசிக்காது - ஊசித் தொளை. ஊசிக்காந்தம் - ஓர்மருந்து ஊசிக்கால் - மச்சுக்கால். ஊசிப்பாலை - ஓர் பாலை. ஊசிப்புல் - ஓர்புல். ஊசிமல்லிகை - ஓர் மல்லிகை. ஊசிமிடறு - சிறுமிடறு. ஊசிமுனை - ஊசிநுதி. ஊசிமூலைத்தலைவாரை - ஓர் தலைப் பெட்டி. ஊசியவாடை - தைத்த புடைவை. ஊசுதம் - அச்சம். ஊசுதல் - நாறுதல், பதனழிதல். ஊஞ்சல் - உஞ்சால். ஊடகம் - ஓர் மீன். ஊடலுவகை - ஊடலினாலே கூடலின் பஞ்சிறந்ததெனக்கூறுவது. ஊடல் - கல்வியிற்பிணங்கல். ஊடல்விரி - வெள்ளணியணிந்து விடுத் துளித்தலைவன் வாயில் வேண்டன் முதலாகப் பாங்கி தலைவனையன் பிலைகொடியை யென்றிகழ் தலீறாகியவை. ஊடறுத்தல் - நடுவறுத்தல். ஊடாடுதல் - நடமாடுதல், பழகுதல். ஊடாட்டம் - பழக்கம். ஊடான் - ஓர் மீன். ஊடு - உள், ஊடென்னேவல், ஏழ னுருபு, தார்நூல், நடு. ஊடுசெல்லல் - ஊடுபோதல். ஊடுதல் - பிரிதல், பிரியவீனப்படுதல். ஊடுபற்றுதல் - விளக்குக்குள்ளே பற்றியெரிதல். ஊடுபோக்கல் - நடுவறுத்தல். ஊடுருவல் - தட்டுருவல். ஊடுருவுதல் - நுழைதல், பீறுதல், புதைதல். ஊடுவெளி - இடைவெளி. ஊடை - புடைவையின் குறுக்கு நூல், மனைவி. ஊட்டம் - உண்டி. ஊட்டல் - ஊட்டுதல். ஊட்டி - உணவு, பறவையுணவு, மழை, மிடறு. ஊட்டிரம் - தேட்கொடுக்கி. ஊட்டுக்கன்று - பால்குடிக்குங்கன்று. ஊட்டுக்குற்றி - மிடறு. ஊட்டுதல் - அகிற்புகை பஞ்சு மை முதலியவூட்டுதல், உண்பித்தல், கன்று முதலிய பாலுண்ணல். ஊட்டுந்தாய் - பஞ்ச தாயரு ளொருத்தி, அவள் பிள்ளைக் கூட்டுதல் செய்வாள். ஊணம் - ஓர் தேயம். ஊணர் - பேருண்டிக்காரர். ஊண் - இரை, சோறு. ஊண்பாக்கு - உண்டபின்னிடும் பிளவிலை. ஊதநாதன் - இனத்தைக்காக்கும் யானை. ஊதம் - கேட்டல். ஊதல் - ஆரவாரம், ஊதுதல், காற்று. ஊதாநிறம் - மங்கனிறம். ஊதாரி - அழிப்புக்காரன். ஊதாரித்தனம் - அழிப்பு. ஊதிகை - முல்லைக்கொடி. ஊதிடுகொம்பு - கொம்பினாற்செய்த இசைக்குழல். ஊதியம் - இலாபம், கல்வி. ஊதியொடுக்கம் - சுவாசம். ஊதுகட்டி - சொக்கவெள்ளி. ஊதுகரப்பன் - ஓர் கரப்பன். ஊதுகாமாலை - ஓர் நோய். ஊதுகுழல் - ஓர் வாச்சியம். ஊதுகொம்பு - ஊதிடுகொம்பு. ஊதுதல் - அரித்தல், காற்றுநொய் தாய்வீசல், குழல்முதலியவூதல், பொருமுதல். ஊதுமா - ஓரினிப்புக்கூழ். ஊதுமாந்தம் - ஓர்நோய். ஊதுவிரியன் - ஓர் பாம்பு. ஊதை - காற்று, குளிர்காற்று. ஊத்தை - அழுக்கு, ஊன், சுரோணித நீர், புலால். ஊத்தைகுடியன் - ஓர் பிசாசம். ஊத்தைச்சீலை - அழுக்குச்சீலை. ஊத்தைநாறி - பீநாறி. ஊத்தைப்பாண்டம் - உடம்பு. ஊத்தைப்பிணம் - அழுக்குடம்பு. ஊமச்சி - ஊமைச்சி. ஊமணை - அந்தங்கெட்டது, ஊமை, ஊமைமுகமுள்ளது, மந்தன். ஊமணைச்சி - அழகற்றவள். ஊமணையன் - அவலட்சணன். ஊமத்தங்கூகை - கூகை. ஊமத்தம், ஊமத்தை - பூமத்தை. ஊமத்து - ஊமத்தை. ஊமல் - கிழங்குகழிந்த பனங்கொட் டை. ஊமற்கச்சி - ஊமற்பாதி. ஊமன் - ஊமை, கூகை. ஊமாண்டி - ஊமை. ஊமை - உறுப்புக்குறை யெட்டி னொன்று. அஃது மூங்கை, கீரி, ஓர்வாத்தியம். ஊமைக்கட்டு - முகங்கொள்ளாத கட்டு. ஊமைக்காடை - ஓர்காடை. ஊமைச்சி - ஊமைப்பெண், ஓர் நத்தை. ஊமைத்தேங்காய் - கிலுங்காததேங் காய். ஊமைப்பயில் - கரபாஷை, கைப்பயில். ஊமையன் - ஊமை. ஊமையெழுத்து - ஒலியற்றவெழுத்து. ஊமைவிளையாட்டு -ஓர் விளையாட்டு. ஊம் - மவுனம். ஊம்பல் - சூப்புதல். ஊய்தல் - பதனழிதல். ஊரப்பார்த்தல் - ஊர்ந்து செல்ல மந்திரித்தல். ஊரலியன் - வைசியன். ஊரல் - ஈரம், உரிஞ்சல், ஊருதல், காய்ந்துவருகிறபுண், கிளிஞ்சில், பசுமை. ஊரற்பதம் - பச்சைப்பதம். ஊரற்புண் - காய்ந்துவரும்புண். ஊரன் - மருதநிலத்தலைவன். ஊராண்மை - மிக்கசெயல். ஊரார் - ஊரவர், பிறர். ஊராளி - ஊதிகாரி, ஓர்சாதியான். ஊரி - இளமை, ஊரி, சங்கு, மேகம். ஊரிலிகம்பலை - கலாதி. ஊரின்னிசை - ஓர் வெண்பாவாற் றொண்ணூறேனும் பிரபந்தம். அஃது பாட்டுடைத் தலைவனூ ரினைச் சாரவின்னிசை எழுபதே னுங்கூறுவது. ஊரு - அச்சம், தொடை, அட்டை. ஊருகால் - சங்கு. ஊருசன் - வைசியன். ஊருடைமுதலியார் - முருங்கை. ஊருணி - ஊரடுத்தகுளம், ஊரெல் லாமுண்ணுங்குளம், கிணறு. ஊருதல் - ஏறுதல், செலுத்தல், நகருதல். ஊரெல்லை - ஊரினெல்லைமானம். ஊரெழுச்சி - ஊரவர்களொன்றா யெழுதல். ஊரோச்சம் - ஊரெல்லாம் பேசத்தக் கதாயிருத்தல். ஊர் - ஊரென்னேவல், நாடு, பரி வேடம். ஊர்கூடுதல் - ஊரவர்கள் திரளுதல். ஊர்கோலம் வருதல் - பட்டினப் பிரவேசம் வருதல். ஊர்கோள், ஊர்கோள்வட்டம் - பரி வேடம். ஊர்க்கதை - நிசமற்றபேச்சு. ஊர்க்குருவி - அடைக்கலக்குருவி. ஊர்ச்சம் - கார்த்திகைமாதம். ஊர்ச்சிதம் - உறுதி, தத்துவம், நிலைப் படுதல். ஊர்தல் - ஊருதல், ஏறுதல், செலுத்து தல், பரத்தல். ஊர்தி - எருது பண்டி முதலியவாக னங்கள். ஊரத்தம் - ஊர்த்துவம், சைவம் பதினாறினொன்று. ஊர்த்துவகதி - மேற்கதி, மேனோக்கு. ஊர்த்துவகபுரம் - அரிச்சந்திர னுடைய நகரம். ஊர்த்துவகம் - மேலேறுதல். ஊர்த்துவகாயம் - உடல். ஊர்த்துவதேவன் - விட்டுணு. ஊர்த்துவபாதம் - எண்காற்புள். ஊர்த்துவபுண்டரம் - மேனோக்கப் பூசும்புண்டரம். ஊர்த்துவமுகம் - மேல்முகம். ஊர்த்துவம் - மேல், மேனோக்கம். ஊர்த்துவராசி - மேனோக்கிராசி. ஊர்த்துவலிங்கன் - சிவன். ஊர்த்துவலோகம் - தேவலோகம். ஊர்நேரிசை - ஓர் பிரபந்தம். அஃது பாட்டுடைத் தலைவனூரினைச் சார நேரிசை வெண்பாவாற் கூறுவது. ஊர்புல் - ஓர் புல். ஊர்ப்பகை - ஊர்ப்பழி. ஊர்ப்புகைச்சல் - புகைநிறமாய்த் தோற்றல். ஊர்ப்புரளி - ஊர்க்குழப்பம். ஊர்ப்புலம் - ஆமணக்கு. ஊர்மனை - குடியிருப்பு. ஊர்மன்று - உளரம்பலம், பொது மனை. ஊர்ம்மிகை - அலை, மோதிரம். ஊலுகம் - ஆந்தை. ஊர்வலம் வருதல் - பட்டினப்பிர வேசம் வருதல். ஊர்வன, ஊர்வனவு - எழுபிறப்பி னொன்று. அஃது ஊரும்பிராணி. ஊர்வெண்பா - ஓர்பிரபந்தம். அஃது பாட்டுடைத் தலைவனூரினைச் சாரவெண்பாவாற் பத்துச்செய்யுள் கூறுவது. ஊழகம், ஊழம் - வைகறை. ஊழலித்தல் - இளைத்தல், நாற்ற மடைந்து கெடுதல், பதனழிதல். ஊழல் - ஆகாதது, நரகம், நாற்றம், பழுதானது. ஊழல்நாற்றம் - துற்கந்தம். ஊழி - உறைகாலம், ஓர் பிசரசம், நெடுங்காலம், பிரமனாயு, பூமி, யுகமுடிவு, வீதி. ஊழிகாலம் - உகாந்தகாலம். ஊழிக்காய்ச்சல் - கொள்ளைநோய். ஊழிக்கால் - உகாந்தவாயு. ஊழித்தீ - வடவாமுகாக்கினி. ஊழிநாள் - முடிவுநாள். ஊழிநோய் - தொந்தவியாதி, பெரு வாரிநோய். ஊழியக்காரன் - வேலைக்காரன். ஊழியம் - தொண்டு. ஊழியூழிகாலம் - நித்தியம். ஊழைக்குருத்து - துளசி. ஊழ் - உலகமுடிவு, ஊழ்த்தலைச் செய்யென்னேவல், குணம், நிய மம், பகை, பழவினை, பழைமை, முடிவு, முறை, வெயில். ஊழ்த்தல் - உதிர்தல், ஊன், சிதைவு செவ்வி, நினைத்தல், பதனழிவு, புலால், மடித்தல், மலர்தல், முதிர் தல், வாடுதல். ஊழ்த்துணை - மனைவி. ஊழ்முறை - நியதி, பூருவநியாயம். ஊழ்வினை - பழவினை. ஊளன் - ஆணரி. ஊளா, ஊளி - ஓர் மீன். ஊளான் - நரி. ஊளை - நாய் நரிமுதலிய வோலிடுஞ் சத்தம். ஊளைகொள்ளுதல், ஊளையிடுதல் - ஓலிடல், குரவையிடுதல். ஊறணி - ஊறல், ஊற்று. ஊறல் - ஊறுதல், ஊற்று, காய்ந்தல், பச்சை, மயப்பு. ஊறவைத்தல் - ஊறும்படிவைத்தல். ஊறற்பாக்கு - நீரிலூறிய பாக்கு. ஊறு - இடையூறு, ஊறென்னேவல், கொலை, தழும்பு, தீண்டல், தீமை பரிசம். ஊறுகாய் - அடைகாய். ஊறுகோள் - கொலை. ஊறுதல் - சாரமேறுதல், நனைதல், நீர்பெருகுதல், பலவழியினும் பொருள் வந்தடைதல், மாமிசஞ் சேர்ந்து பிடித்தல். ஊறுநீர் - ஊற்றுநீர். ஊறுபாடு - இடையூறு, இரணம், சேதம். ஊறுபுண் - ஊறிப்பிடிக்கிறகாயம். ஊறுவைத்தல் - இடையூறுண்டாக் கல், தழும்புடுத்தல், வடுவைத்தல். ஊற்றங்கோல் - ஊன்றுகோல். ஊற்றம் - அசைவின்றிநிற்றல், அறிவு டைமை, பற்றுக்கோடு, புகழ், முயற்சி, வலி. ஊற்றல் - நீர்முதலியவூறிவருதல், பெய்தல். ஊற்றாணி - இடையூறு, ஊறு. ஊற்றாம்பெட்டி - ஊற்றுப்பெட்டி. ஊற்றால் - உரோகணிநாள், கரப்பு, மீன்கூடு. ஊற்றால்கவித்தல், ஊற்றால்போடல் - கரப்புக்குத்துதல். ஊற்று - ஊற்றென்னேவல், ஊன்று கோல், நீருற்று. ஊற்றுக்கண் - ஊற்றுத்துவாரம். ஊற்றுக்குழி - நீரூறும்படி தோண்டுங் குழி. ஊற்றுக்கோல் - ஊன்றுகோல். ஊற்றுண்ணல் - சாதல், சிந்தப்படல். ஊற்றுதல் - எண்ணெய் முதலிய வூறச் செய்தல், கீழேயொழுக்கல், வார்க்குதல். ஊற்றுநீர் - ஊறுநீர். ஊற்றுப்பட்டை - ஊற்றிறைக்கும் பட்டை. ஊற்றுப்பூ - எண்ணெயூற்றின தேங்காய்ப்பூ. ஊற்றுப்பெட்டி - எண்ணெயூற்றும் பெட்டி. ஊற்றுப்பெயர்தல் - ஊற்றுத்திரும்பு தல். ஊற்றுமரம் - எண்ணெயூற்றும் சிறமரம். ஊற்றெடுத்தல் - ஊறலெழுதல். ஊனகத்தண்டு - கருவண்டு. ஊனக்கண் - கட்பொறி. ஊனமானம் - உரோசாபிமானங்கள். ஊனம் - ஈனம், குறைபாடு, கேடு, சாரம், மாமிசநீர். ஊனன் - குறைவுள்ளோன். ஊனாயம் - பிழை. ஊனான் - ஓர் கொடி. ஊனுருக்கி - கயவியாதி. ஊனொட்டி - உடும்பிறைச்சி. ஊன் - தசை, நிணம். ஊன்விற்போர் - இறைச்சி விற்போர். ஊன்றக்கட்டுதல் - பலப்படுத்தல். ஊன்றல் - சார்தல், தள்ளல், நடுதல், பதித்தல், பலப்படுத்தல், மெய்ப் பரிசமெட்டினொன்று, நினைத்தல். ஊன்றி - ஓர்பாம்பு. ஊன்றிப்பேசல் - அசைநிறுத்திப் பேசல், பலப்படுத்திப்பேசல். ஊன்றுகோல் - உதைகால். ஊன்றுகோல் - பற்றுக்கோல். ஊன்றுதல் - அமர்த்தல், தாபரங் கொடுத்தல், நடுதல், நிலைப் படுதல், பதித்தல், பலப்பித்தல், வேர்வைத்தல். எ எ - ஓரெழுத்து, வினாவெழுத்து, அம்பு. எஃகம் - எறியாயுதம், கைவேல், சக்கிரம். எஃகல் - எட்டுதல், ஏறுதல், நொய் தாக்கல், பஞ்சுமுதலியவெஃகுதல், மேலேவாங்கல். எஃகு - ஆயுதப்பொது, உருக்கு, எஃகென்னேவல், கூர்மை, மன வொடுக்கம், வேல். எஃகுகோல் - பஞ்சவட்டந்தடி. எகரம் - ஓரெழுத்து. எகினம் - எகின். எகின் - அன்னம், கவரிமா, செம் மரம், நாய், நீர்நாய், புளிமா, புளிய மரம். எகுன்று - குன்றிக்கொடி. எக்கச்செக்கம் - இடக்கு, ஒவ்வாமை, குழப்பம். எக்கண்டம் - ஒருமிக்க, முழுதும். எக்கரணம், எக்கரவம் - தொனுப் போடுதல். எக்கர் - சொரிதல், மறைத்தசொல், மேலுக்கேறப்பண்ணல். எக்கல் - ஏறுதல், பதிவு, பொருதல், வயிற்றையெக்கல், வற்றல், குவிதல், சொரிதல். எக்கழுத்தம், எக்கழுத்தல் - இறுமாப்பு. எக்களித்தல் - மிகமகிழ்தல். எக்களிப்பு - மிகுமகிழ்ச்சி. எக்காளம் - ஓரூதுகுழல். எக்கியம் - யாகம். எக்கியோபவீதம் - பூணூல். எக்குதல் - ஒருபுறம் வற்றிவளைதல், வயிற்றைவற்றப் பண்ணல். எங்கண், எங்கு - எவ்விடம். எங்ஙனம், எங்ஙன் - எவ்விடம், எவ்விதம். எசமாட்டி, எசமானி - தலைவி. எசமானினி - தலைவி. எசமானன், எசமான் - தலைவன், முதல்வன். எசமானிக்கை - முதன்மைத்தனம். எசம் - நரம்பு. எசுர் - உபநிடதமுப்பத்திரண்டி னொன்று. எச்சச்சொல் - பேராவது வினை யாவது குறைந்து நிற்குஞ்சொல், பெயர்வினை, உம்மை, சொல், பிரிநிலை, என, ஒழியிசை, எதிர் மறை, இசை, குறிப்பு முதலிய குறைந்து நிற்குஞ்சொல். எச்சதேவன் - யாகதேவன். எச்சம் - எச்சில், குறை, சந்ததி, சேடம், பட்சிப்பீ, பிள்ளை, யாகம், காரியம். எச்சரிக்கை, எச்சரீக்கை - ஓர் பிர பந்தம், கருத்து, கவனம். எச்சரித்தல் - முன்னறிவித்தல், விழிக் கப்பண்ணுதல். எச்சரிப்பு - எச்சரித்தல். எச்சவனுமானம் - ஓரளவை, அஃது ஆற்றைக் கண்டவன் மலைக்கண் மழையுண்டெனவறிதல். எச்சவாய் - குதம். எச்சன் - யாகத்தினதிதேவதை. எச்சிலன் - பிசுனன். எச்சில் - உச்சிட்டம். எச்சில்வாய் - உச்சிட்டவாய். எச்சிற்பேய் - உச்சிட்டதேவதை. எச்சிற்றழும்பு, எச்சிற்றேமல் - தழு தணை. எச்சு - ஓர் வாத்தியக்கருவி. எஞ்சணி - எஞ்சி நிற்குஞ்சொல். எஞ்சல் - குறைதல், மிஞ்சுதல். எஞ்சிநிற்றல் - ஒழிந்துகுறிப்பாய் நிற்குதல். எஞ்சியசொல்லினெய்தக்கூறல் - ஓர் தந்திரயுத்தி. எஞ்சுமுரை - எச்சமாய்நிற்கும் பொருள் விரித்தவுரை. எஞ்ஞான்றும் - எப்போழ்தும். எடாத எடுப்பு - தொடங்காத தொடக் கம், பெரியகாரியம். எடுகூலி - சுமைகூலி. எடுக்குதல் - எடுத்தல். எடுத்தடிமடக்கு - திடுகூறு. எடுத்தடிவைத்தல் - குழந்தைதளர் நடையாய் நடத்தல். எடுத்தபடி - நேர்ந்தபடி. எடுத்தமொழியினெய்த வைத்தல் - ஓர்யுத்தி. எடுத்தலளவு - நிறை. எடுத்தலளவையாகுபெயர் - நிறையின் பெயர்நிறுக்குங்கருவிக்கு வழங்குவது, (உம்) துலாக்கோல். எடுத்தலும்மைத்தொகை - நிறை யளவும்மை தொக்குநிற்பது, (உம்) ஒன்றேமுக்காற்பலம். எடுத்தல் - இடங்குறித்தல், உடைத் தாதல், எடுக்குதல், எடுத்துதல், ஏற்றுக்கொள்ளல், ஓரோசை, சுமத்தல், தரித்தல், தாங்குதல், தூக்குதல், தெரிந்துகொள்ளல், தொடக்குதல், நீக்குதல், பற்றிக் கொள்ளல், வாங்குதல், வீடு முதலியகட்டல், வேடங்கொள் ளுதல், பொருந்தல். எடுத்தன் - பொதிமாடு. எடுத்தாட்சி - வழக்கம். எடுத்தார்கைப்பிள்ளை - எவர்சொல் வதையுங் கேட்டு நடப்பவன். எடுத்து - எடுத்துந்தன்மை, எடுத் தென்னெச்சம், எடுத்தென்னேவல், சுமை. எடுத்துக்காட்டல் - ஓர்யுத்தி. எடுத்துக்கட்டு - பொய். எடுத்துக்காட்டு - உதாரணம். எடுத்துக்காட்டுதல் - உதாரணங் களினாற்றெரிவித்தல். எடுத்துக்காட்டுவமையணி - ஓரலங் காரம், அஃது விம்பப்பிரதிவிம்ப பாவத்தைக் காட்டுவது. எடுத்துக்கூட்டுதல் - பிசகினதை ஒருபடிசரிப்படுத்தல். எடுத்துக்கைநீட்டுதல் - கைத்தொண்டு செய்தல். எடுத்துதல் - எடுக்கப்பண்ணுதல், ஏற்றுதல். எடுத்துத்தொடுத்தல் - கட்டிப்பேசல். எடுத்துப்பிடித்தல் - குணாகுணங் களை நிறுத்திப்பிடித்துப் பேசல். எடுத்துப்பேசுதல் - நியாயமுத்தரித் தல், பரிந்துபேசல், விட்டதைத் திரும்பவெடுத்துப்பேசல். எடுத்தேற்றம், எடுத்தேற்றி - இணக்க மின்றியிருப்பது. எடுபடுதல் - திக்கற்றுப்போதல், நியமந்தப்புதல், வெளிவருதல். எடுபட்டவன் - நிலையற்றவன். எடுபாடு - நிமிர்ச்சி, நிலையின்மை, மகிமை, விசாலமானநடை. எடுபிடி - மதிப்பு, முயற்சி. எடுப்பல் - எடுத்தல், தூங்கினோரை யெழுப்பல். எடுப்பித்தல் - எடுக்கச்செய்தல், சுவர் முதலியவேற்றுவித்தல். எடுப்பு - எடுத்தல், எடுப்பென்னே வல், கோப்பு, பெரியவெண்ணம். எப்புச்சாய்ப்புடு - தராதரமறிந்து நடக்குந்தடை, நிமிர்ச்சியுங் குறை வும், மேன்மை. எடை - எடுத்தல், எழுப்பல், நிறை யிடை. எட்கடை, எட்கிடை - எட்பிரமாணம். எட்சாதம் - எள்ளுச்சாதம். எட்ட - தூரமாக. எட்டக்கட்டுதல் - தூரமாய்ப்போதல். எட்டம் - தூரம். எட்டம்பற்றுதல் - கிடைத்தல். எட்டர் - மங்கலப்பாடகர். எட்டல் - எட்டுதல். எட்டாக்கை - தூரம். எட்டி - ஓர் சாதி, காஞ்சிரமரம், செட்டி. எட்டியர் - செட்டிகள், வைசியர்பொது. எட்டிற்பத்தில் - இடையிடை. எட்டினர் - சினேகிதர். எட்டு - அட்டம், ஆசை, எட்டென் னேவல், சாச்சடங்கினொன்று. எட்டுதல் - அகப்படுதல், தாவுதல். எட்பாகு - எட்டுவையல். எட்பிரமாணம் - எள்ளளவு. எண் - எண்ணிக்கை, எண்ணென் னேவல், எளிமை, எள், கணக்கு, சோதிடநூல், வரையறை, வலி, விசாரம். எண்கணன் - பிரமன். எண்காற்புள் - சரபம். எண்கு - கரடி. எண்குணன் - கடவுள். எண்சிறப்புள்ளோன் - அருகன். எண்சுவடி - கணக்கேடு. எண்செய்யுள் - எண்ணாற்பெயர் பெறும் பிரபந்தம். எண்டோளன் - சிவன். எண்டோளி - காளி, துற்கை. எண்ணக்குறிப்பு - நினைவு. எண்ணத்தப்பு - நினைவுமயக்கம், மதிகேடு, மதியாமை. எண்ணப்படுதல் - கணிக்கப்படுதல், நினைவிற்றோற்றல், மதிக்கப்படு தல். எண்ணம் - ஆலோசனை, கிலேசம், குறிப்பு, நினைவு, மதிப்பு. எண்ணர் - கணிதர், மந்திரிகள். எண்ணலர் - பகைவர், பிறரைமதியா தோர். எண்ணலளவு - இலக்கத்தாலெண்ணு மளவு. எண்ணலளவையாகுபெயர் - எண் ணுக்குரியபெயரையதற்குரிய பொருட்கு வழங்குவது, (உம்) ஒன்று வந்தது. எண்ணலும்மைத்தொகை - எண்ண லும்மை தொக்கு நிற்பது, (உம்) அறம், பொருள், இன்பம், வீடு. எண்ணல் - எண்ணுதல், கணிதம், குறித்தல், தேர்ச்சி, நினைத்தல், மதித்தல். எண்ணாதகண்டன், எண்ணாத நெஞ்சன் - துணிவுள்ளவன். எண்ணாதவன் - துணிந்தவன். எண்ணார் - பகைவர். எண்ணிக்கை - எச்சரிக்கை, எண், சங்கை, மதிப்பு. எண்ணிலிகாலம் - அளவில்லாத காலம். எண்ணில் கண்ணுடையோன் - புத்தன். எண்ணும்மை - எண்ணுக்கு நிற்குமும் மென்னுமிடைச்சொல் (உம்) நீயுமவனும், எண்ணைக்காட்டி நிற்குமும்மை, (உம்) இரவும் பகலும். எண்ணும்மைத்தொகை - எண்ணலும் மைத்தொகை, (உம்) அற்பகல். எண்ணுவண்ணம் - எண்பயின்று வருவது. எண்ணுவமம் - ஓருவமானம். (உம்) ஒருவனுக்கன்னமிடுவது ஆயிரங் கோதானமீந்ததற்கொப்பு. எண்ணுறுத்தல் - உறுதிப்படுத்தல். எண்ணெய் - தயிலம். எண்ணெய்க்காப்பு - எண்ணெ யபிஷெகம். எண்ணெய்க்காரன் - எண்ணெய் வாணிபன். எண்ணெய்ச்சாணை - ஓர் சாணைக் கல். எண்ணெய்ப்புல்லிடுதல் - நெசவு பாவுக்கெண்ணெயிடுதல். எண்ணெய்மணி - வெள்மட்டமணி. எண்ணெய்வாணிபன் - எண்ணெய் விற்போன். எண்ணேகாரம் எண்ணைக்காட்டுமே காரம் - (உம்) நிலனே, நீரே, தீயே. எண்ணோகாரம் - எண்ணைக்காட்டு மோகாரம் (உம்) முத்தனென்கோ, முதன் மூர்த்தியென்கோ. எண்படுதல் - அகப்படுதல். எண்பது - எட்டுமுறைபத்து. எண்பித்தல் - அத்தாட்சிபண்ணல். எண்மர் - கணிதர். எண்மை - எளிமை, கணிசம். எதாஸ்து - அப்படியாகட்டும். எதாப்பிரகாரம் - அந்தப்பிரகாரம். எதார்த்தம் - யதார்த்தம். எதிர - உவமைச்சொல். எதிரதுதழீ இயவெச்சவும்மை - எஞ்சியசெயலைவிளக்கி யெதிர் காலத்தைத் தழுவி நிற்குமும்மை, (உம்) இனிக்கொற்றனும் வருவான். எதிரது நோக்கிய வெச்சவும்மை - எதிர்மறைச் சொல்லைக் காட்டி நிற்குமும்மை. எதிரதுபோற்றல் - ஓர் யுத்தி. எதிராத்தம் - ஏற்ற, நிதார்த்தம். எதிராப்பு - கழலாதபடி வைக்கிற ஆப்பு. எதிராளி - எதிரி. எதிரி - எதிர்நிற்கிறவன், பகைவன். எதிரிடை - எதிரித்தனம், பகை. எதிருக்கெடுத்தல் - ஏப்பமெடுத்தல், வாந்தித்தல். எதிருத்தரம் - மறுமொழி. எதிருரை - எதிரிடைப்பேச்சு, மறு மொழி. எதிரூன்றல் - எதிர்தல். எதிரெடுத்தல் - உண்டதுமேலுக்கு வருதல், ஏவறையெடுத்தல், தேக் கெடுத்தல், வாந்தித்தல். எதிரேற்று - தனக்கெதிரே வந்ததைத் திருப்பிவிடுதல். எதிரொலி - அதிர்ந்து கேட்கிறசத்தம், பிரதித்தொனி. எதிரொலித்தல் - பிரதித்தொனி காணல். எதிர் - எதிரென்னேவல், ஒப்பு, முன். எதிர்கட்சி - முன்பக்கம். எதிர்காலம் - வருகாலம். எதிர்காலவினைத்தொகை - வருங் காலவினைதொக்குநிற்பது, (உம்) இனிக்கொல்களிறு. எதிர்காலவினையெச்சம் - இன்-ஆல்-கால்-கு-இய-இயா-வான்-பான்-பாக்கு எனும் விகுதிகளைக் கொண்டு இடைநிலை பெற்றும் பெறாதுந்தாமே எதிர்காலங் காட்டி நிற்கும் வினையெச்சம். எதிர்காற்று - நேர்காற்று. எதிர்கொள்ளுதல் - நவபுண்ணியத் தொன்று. அஃது வந்தவர்க்கு முன் சென் றளவளாதல். எதிர்கோள் - எதிர்கொள்ளல். எதிர்க்கை - எதிர்மரம். எதிர்ச்சீட்டு - எதிர்முறி. எதிர்ச்செட்டு - இரண்டாஞ்செட்டு, எதிரிடைச்செட்டு. எதிர்தல் - சந்தித்தல், தோன்றல், மலைதல், மாறுபடுதல். எதிர்த்தல் - அலைத்தல், சந்தித்தல், நேர்தல், மாறுபடுதல், முற்படுதல். எதிர்நிரனிறை - நேரின்றிமாறிவரும் நிரனிறை. எதிர்நிலை - எதிர்நிற்றல், கண்ணாடி. எதிர்நிலையகத்திணை - அகப்பொரு ளுறுப்பி னொன்று, ஒன்றனை விளக்கவதனை மறித்து எதிர் நிற்கும் பொருளைக்காட்டல்(உம்) முட்டரூடாடிய நட்புக் கட்டை யூடாடிய கால். எதிர்நிலையணி - உபமானத்திற்குக் குறைவு தோன்றச் சொல்லல், (உம்) அணங்கு முகம் போன் மதியுஞ் செயுமேமகிழ் அன்றியும் அவன்னியத்தை யுபமேயமாகக் காட்டி வன்னியத்தையிகழ் தலு மாம், (உம்) முகமேமதியு முனை யொக்கும். எதிர்ந்தோர் - பகைவர். எதிர்பார்த்தல் - வரவுபார்த்தல். எதிர்ப்படுதல் - எதிர்தல், சம்பவித்தல், நேரிடுதல். எதிர்ப்பாடு - நேரிடுதல். எதிர்ப்பாய்ச்சல் - நேரிட்ட பாய்ச்சலுக் கெதிர்த்துப் பாய்தல். எதிர்ப்பு - எதிர்த்தல். எதிர்மறுப்பு - உடன் பாட்டிற்கு மாறாய்ச் சொல்லுதல். எதிர்மறையணி - ஓரலங்காரம், அஃது ஒழிப்பணிக்கு வேறாகியுங் கேட்போரை மகிழ்விப்ப தாயு மிருக்கின்றமறுப்பைச் சொல்லு தல். எதிர்மறையும்மை - எதிர்மறுத்துச் சொல்லுமும்மை, (உம்) சாத்தன் வருதற்குமுரியன். எதிர்மறையெச்சம் - எதிர்மறுப்பைக் காட்டுமெச்சம், (உம்) அவனோ கொண்டான். எதிர்மறையெஞ்சணி - எதிர்மறை யெச்சவலங்காரம். எதிர்மறையேகாரம் - எதிர்மறுக்கு மேகாரம், (உம்) தூற்றாதேதூர விடல். எதிர்மறையோகாரம் - எதிர்மறுக்கு மோகாரம், (உம்) நானோகொண் டேன். எதிர்மறைவிகுதி - வினையையெதிர் மறுக்கும், இல்-அல்-ஆ என்னு மூன்றுமாம், (உம்) உண்டிலன்-உண்ணலன்-உண்ணான். எதிர்மறைவிடை - வினாவெதிர் மறுத்துத்தரங்கூறல், (உம்) செய்யே னெனன். எதிர்மறை - எதிர்மறுப்பு. எதிர்மறைவினை - எதிர்மறுப்புள்ள வினை, அஃது இல்-அல்-ஆ எனும் விகுதிகள் புணர்ந்த வினைச் சொல். எதிர்மீன் - நீர்ப்பாய்ச்சலுக்கெதிர் வரும்மீன். எதிர்முசம் - நேர்முகம். எதிர்முறி - கள்ளச்சீட்டு. எதிர்மொழி - எதிர்வார்த்தை, மறு மொழி. எதிர்வாதம் - பிரதிவாதம். எதிர்வாதி - பிரதிவாதி. எதிர்வினை - எதிர்மறைவினை வருவினை. எதிர்வினைவிலக்கு - ஓரலங்காரம். அஃது வருகாலவிடையூற்றைக் காட்டிமறுப்பது. எதிர்வு - எதிர்காலம், எதிர்த்தல், வருவது. எதிர்வைத்தல் - சரிவைத்தல். எது - யாது. எதுகை - செய்யுட்டொடை. அஃது இரண்டாமெழுத்தொன்றி வருவது. எதுகைத்தொடை - செய்யுட் டொடை யினோர் வகை, அஃது அடிகளின் முதற் சீரினிரண்டாமெழுத் தொன்றிவரினடி யெதுகை அடி களின் முதலிரு சீர்களிரண்டா மெழுத்தொன்றிவரி னிணை யெதுகை. எதேச்சை, எதேஷடம், எதேட்டம் - தன்னிட்டம். எத்தனம் - ஆயத்தம். எத்தனித்தல் - ஆயத்தமாக்கல், நோக்கமாயிருத்தல். எத்தன் - அணாப்புக்காரன். எத்து - அணாப்பு, எற்று, எத்தென் னேவல். எத்துணை - எவ்வளவு. எத்துதல் - அணாப்புதல். எத்தேசகாலமும் - எப்போழ்தும். எந்திரம் - இயந்திரம், சூத்திரம், திரி கை, தேர், பண்டி, மதிலுறுப்பு. எந்திரவாலி - சூத்திரவாலி. எந்திரன் - சூத்திரி, தேர். எந்தை - எமதுசுவாமி, என்றந்தை. எப்படி - எவ்விதம். எப்பொருட்குமிறைவன் - எல்லா வற்றிற்குமதிபன். எப்பொழுதும், எப்போதும், எப்போழ்தும் - எக்காலமும். எப்போ, எப்போது - எப்பொழுது. எமகணம் - யமகணம். எமதூதி - நாகபாம்பின் நச்சுப்பல்லி னொன்று. எமநாகம் - அசமதாகம். எமநாமம் - ஊமத்தை. எமர் - எமதுசுற்றத்தார், எம்முடைய வர். எமள் - எம்முடையவள். எமன் - இயமன், எம்முடையவன், நாகபாம்பினது நச்சுப்பல்லி னொன்று. எம் - தன்மைப்பன்மை விகுதி, எம்முடைய, தன்மைப் படர்க்கை யுளப் பாட்டுப்பன்மை விகுதி, (உம்) உண்டனெம். எம்பர் - எவ்விடம். எம்பி - என்றம்பி. எம்பிராட்டி - எங்கள்தலைவி. எம்பிராள், எம்பெருமான் - எங்கள் தலைவன், எங்கள் தேவன். எம்புகம் - நிலக்கடம்பு. எம்மர் - எம்முடையோர். எம்மனோர் - எம்மோடொத்தவர். எம்மாத்திரம் - எவ்வளவு. எம்மான் - எமதுதெய்வம், எம்பிரான். எம்மை - எங்களை, எப்பிறப்பும். எம்மையும் - எப்பிறப்பும். எம்மோர் - எம்முடையவர். எயில் - ஊர்ப்பொது, மதில். எயிறலைப்பு - பற்கடிப்பு. எயிறு - பல்லு, பன்றிக்கொம்பு, யானைக்கொம்பு, வக்கிரதந்தம். எயிறுதின்றல் - பற்கடித்தல். எயிற்றியர் - பாலைநிலப்பெண்கள், வேடுவப்பெண்கள். எயினர் - பாலைநிலமாக்கள், வேடர். எயின் - வேடருக்குரியன, வேடசாதி. எய் - எய்யென்னேவல், முட்பன்றி. எய்தல் - அடைதல், நால்வகை யூறு பாட்டினொன்று. அஃது எய்தல். எய்துதல் - அடைதல், சம்பவித்தல், பெறுதல். எய்த்தல் - இளைத்தல், மெலிதல். எய்ப்பன்றி - முட்பன்றி. எய்ப்பாடி - வேடரூர். எய்ப்பிலவைப்பு - தான் தளர்ந்தும் பிறரைத்தாங்கல். எய்ப்பு - இளைப்பு, பலவீனம். எய்யாமை - அறியாமை. எரி - எரியென்னேவல், கேட்டை நாள், தீ, நரகம், பிரவை, புநர்பூசம். எரிகரும்பு - கரும்பு. எரிகாசு- அகிற்கூட்டைந்தி னொன்று. அஃது காசுக்கட்டி. எரிகாலி - காட்டாமணக்கு. எரிகுடலன் - மிகுபசியுள்ளவன். எரிகுன்மம் - ஓர் நோய். எரிக்கலக்காம்போதி - ஓரிராகம். எரிசனம் - நரகர். எரிச்சல் - அழற்றல், எரிதல், கோபம், பொறாமை. எரிதயிலம் - எரித்தெடுக்குந்தயிலம். எரிதல் - அழற்றல், அனற்றல், தீசு, வாலித்தல், பிரகாசித்தல், வெந் தற்றுப்போதல். எரித்தல் - எரியச்செய்தல். எரிநாள் - கார்த்திகைநாள். எரிபடுவன் - ஓர் நோய். எரிபக்கம் - எரிவந்தம். எரிபிடாரி - எரிச்சற்காரன், ஓர் தேவதை. எரிபுழு, எரிபூச்சி - கரியமயிர்க்குட்டி. எரிபொழுது - இலங்குபொழுது. எரிப்பு - எரித்தல், பொறாமை. எரிப்புறம் - நரகம். எரிமருந்து - சுடுமருந்து. எரிமுகி - சேங்கொட்டைமரம். எரியல் - எரிதல், எரிந்தது. எரியவிட்டமருந்து - நீற்றினபலமம். எரியிடுதல் - எரியவைத்தல். எரிவட்டம் - நரகவட்டத்துளொன்று. எரிவண்டு - பட்டவிடமெரிகிறவண்டு. எரிவந்தம் - மிகவெரிக்குமோர்நோய். எரிவனம் - சுடுகாடு. எரிவிழித்தல் - கோபித்துப்பார்த்தல். எரிவு - அழற்சி, எரிதல். எரு - சாணி. எருக்கம் - எருக்கு. எருக்கல், எருக்குதல் - கொல்லல், சுமத்தல், வெட்டல். எருக்களம் - ஆனிலை. எருக்கு - எருக்கலை, எருக்கென் னேவல். எருச்சாட்டி - எருப்பட்டநிலம். எருதடித்தல் - உழுதல், போரடித்தல். எருது - இடபம், இடபவிராசி. எருதுமறித்தல் - பசுவுடனே எருது, புணர்தல். எருத்தங்கோட்டல் - தலைகவிழ்தல். எருத்தடி - ஈற்றயலடி. எருத்தம், எருத்து - பிடர், தரவு. எருத்துக்கரணம் - ஓர் கரணம். எருத்துப்பூட்டு - ஓர் பூட்டு. எருத்துவாலன் - ஓர் குருவி. எருந்து - கிளிஞ்சில். எருமணம் - செங்குவளை. எருமுட்டை - எருவராட்டி. எருமுட்டைப்பீநாறி - வெதுப்படக்கி. எருமை - காரா. எருமைக்கற்றாழை - ஓர் கற்றாழை. எருமைக்காய்ஞ்சொறி - ஓர் காய்ஞ் சொறி. எருமைக்கொற்றான் - ஓர் கொடி. எருமைச்சுறா - ஓர்மீன். எருமைத்தக்காளி - ஓர் செடி. எருமைநாக்கி - சாணாக்கி. எருமைநாக்கள்ளி - ஓர் கள்ளி. எருமைநாத்தொட்டி - வைப்புப் பாஷாண முப்பத்திரண்டி னொன்று. எருமைப்பாச்சோற்றி - ஓர்பூண்டு. எருமைமுல்லை - ஓர் முல்லை. எருமைமுன்னை - ஓர் கொடி. எருமையூர்தி - யமன். எருவராட்டி - காய்ந்த எரு. எருவாரம் - எருச்செய்கைப்பங்கு. எருவிடுவாசல் - குதம். எருவை - உதிரம், ஓர் பூடு, கழுகு, கழுதை, கொறுக்கை, கோரை, செம்பு, யானை. எலி - பூரநாள், மூடிகம். எலிச்செவி, எலிச்செவித்துத்தி - ஓர் பூடு. எலித்திசை - வடமேற்றிசை. எலிப்பளை - எலிப்புற்று. எலிப்பாஷாணம் - ஓர் மருந்து. எலிப்புலி - பூனை. எலிப்புற்று - எலிவளை. எலிப்பொறி - எலிபடுக்குஞ்சூத்திரம். எலியாமணக்கு - ஓர் மரம். எலியொட்டி - ஒட்டொட்டி. எலியோடி - முகட்டுப்பாய்ச்சு. எலியோட்டி - ஓர் பூடு. எலிவளை - எலிப்புற்று. எலு - கரடி, தோழமை. எலுநன் - சோழன். எலுமிச்சை - எலும்பிச்சை. எலும்பன் - எலும்புபுறப்பட்டவன். எலும்பிலி - ஓர் மரம், புழு. எலும்பு - என்பு. எலும்புக்கூடு - எலும்புக்கோவை. எலும்புக்கோறை - எலும்புத்துவாரம். எலும்புருக்கி - ஓர் நோய், ஓர் பூடு, ஓர் மரம். எலுவன் - தோழன். எல் - இகழ்ச்சிக்குறிப்பு, இரவு, ஒளி, சூரியன், நாள், பகல், வெயில். எல்லரி - கைமணி. எல்லவன் - சந்திரன், சூரியன். எல்லாம் - முழுவதும். எல்லாரும் - சகலரும். எல்லி - இராத்திரி, சூரியன். எல்லீரும், எல்லீர் - நீவிர்யாரும். எல்லு - சூரியன், நாள். எல்லேமும், எல்லேம் - நாமெல்லாரும். எல்லை - அவதி, அளவு, கூப்பிடு தூரம், சூரியன், நாள்முடிவு, பகற் பொழுது. எல்லைகடத்தல் - அளவைக் கடத்தல், ஆணையைக்கடத்தல். எல்லைகட்டுதல் - தீர்த்தல், முடிவு கட்டுதல், வரம்புவைத்தல், வரை யறுத்தல். எல்லைகுறித்தல் - அவதிகுறித்தல், எல்லைகட்டுதல். எல்லைக்கட்டு - இறைக்கட்டு, எல்லை மானம். எல்லைக்கல், எல்லைக்கால் - எல்லை யறியநிறுத்துவது. எல்லைக்காவல் - எல்லைமானக் காவல். எல்லைக்குறிப்பு - எல்லையடை யாளம். எல்லைக்கெட்டநேரம் - ஒவ்வாத நேரம். எல்லைக்கேடு - ஒவ்வாமை. எல்லைத்தீ - ஊழித்தீ. எல்லைப்படுத்தல் - அளவுபடுத்தல், எல்லைகட்டுதல். எல்லைப்பிடாரி - ஓர் தேவதை. எல்லைப்பொருள் - ஒருபொருளினது திசையளவைக் குறிப்பதற்கு எல்லையாய் நிற்கும் பொருள், (உம்) உத்தரார்த்த கோளத்திற்கு தெற்கு சமரேகை. எல்லைமானம் - எல்லை. எல்லையின்மை - அளவின்மை. எல்லோ - அதிசயவிரக்கச்சொல். எல்லோமும், எல்லோம் - நாமெல் லாரும். எல்லோரும் - சகலரும். எல்லோன் - சூரியன். எல்வை - காலம், நாள். எவட்சாரம் - ஓர் சரக்கு. எவண் - எவ்விடம். எவரும் - எல்லாரும். எவற்று - எது. எவன் - என்னை, யாது, யாவன், யாவை. எவை - யாவை. எவையும் - யாவையும். எவ் - எவை. எவ்வது - எது, எவ்வண்ணம். எவ்வம் - குற்றம், தனிமை, தீராத நோய், துக்கம், துன்பம். எவ்வரும் - எவரும். எவ்வனம் - இளமை, மதர்த்தல். எழல் - எழும்பல், துக்கம். எழால் - ஓர் பட்சி, யாழ், யார்நரம் பினோசை. எழிலறிதல் - அசுவைமட்டுக்கட்டு தல், குறிப்பறிதல். எழிலி - கடையெழுவள்ளலிலொரு வன், மேகம். எழில் - அசுகை, அழகு, இளமை, வண்ணம், வலி. எழினி - இடைச்சீலை, தீரைச்சீலை. எழு - உழலைமரம், எழுவென்னே வல், ஓர்மரம், கம்பம், வளைதடி. எழுகூற்றிருக்கை - ஓர் பிரபந்தம், அஃது ஏழறைத்தட்டு விளை யாட்டுச்சிறப்புக்கூறுவது. எழுகை - எழுதல். எழுச்சி - எழும்புதல், ஏறிச்செல்லல், கண்ணோயினொன்று, மன முயற்சி. எழுச்சிக்கொடி - கண்ணினிற்பற்று மோர்கொடி. எழுச்சிபாடுவோன் - தேவரரசர் முதலியோர்க்குப் பள்ளியெழுச்சி பாடுவோன். எழுச்சிமுரசம் - தேவரரசரிவர்களை வைகறையிலெழுப்ப முழக்கு முரசம். எழுச்சியிலை - பலவனிலை. எழுதகம் - எழுதப்பட்டரூபு, சித்திரக் கம்பி, சித்திரசொரூபம். எழுதல் - எழுதுதல், எழும்புதல், கிளர்தல். எழுதாக்கிளவி, எழுதாமறை - வேதம். எழுதுகோல் - தூரியக்கோல். எழுதுதல் - எழுதல். எழுத்தந்தாதி - ஈற்றெழுத்தாதியாகப் பாடல். எழுத்தடைத்தல் - எழுத்துக்களை யறைவகுத்தடைத்தல். எழுத்ததிகாரம் - எழுத்திலக்கணம். எழுத்தலங்காரம் - எழுத்திலோரியல். எழுத்தறப்படித்தல் - தீர்க்கமாய் வாசிக்கப்பயிலல். எழுத்தாணி - ஓலையிலெழுதுங்கருவி. எழுத்தாணிப்பூடு - ஓர் பூடு. எழுத்தாளர் - அறிஞர், எழுத்துக்காரர். எழுத்தானந்தம் - பாடற்கு விலக்கப் பட்டவெழுத்து. எழுத்திலக்கணம் - பஞ்சவிலக்கணத் தொன்று. எழுத்திலாவோசை - எழுத்தொலி காட்டாத அசை.அஃது இரைச்சல் முதலியன. எழுத்தினோசை - அக்கரம் விளக்கி நிற்குந்தொனி. எழுத்து - அக்கரம், சித்திரம். எழுத்துக்காரன் - எழுதுகிறவன், புடைவை முதலியவற்றிற் சித்திரந் தீட்டுவோன். எழுத்துக்காரியஸ்தன் - எழுத்துக் காரன். எழுத்துக்குற்றம் - நச்செழுத்து முதலியனவருதல். எழுத்துக்கூட்டுதல் - எழுத்துக்களைப் புணர்த்தி வாசித்தல் எழுத்துச்சந்தி - எழுத்துக்களின் புணர்ச்சி. எழுத்துச்சாரியை - ஓரெழுத்தான் வருஞ்சாரியை. எழுத்துச்சுருக்கம் - எழுத்துக்களை யிடைவிட்டெழுதிவாசிப்பது. எழுத்துநடை - நன்றாய்ச் செல்லும் வாசனை. எழுத்துப்புடைவை - சித்திரப்படாம். எழுத்துப்பொருத்தம் - பாலன்முதலி யனவெழுத்துத்தானப் பொருத்தம். எழுத்துவருத்தனம் - சித்திரக்கவியி னொன்று. அஃது எழுத்தெழுத் தாய்ப் பிரிக்கப் பொருள்பயப்பது. எழுத்துவாசனை - எழுத்துநடை. எழுநா - நெருப்பு. எழுந்தபடி - நினைத்தபடி, நேரிட்ட படி. எழுந்தமானம் - யோசனை பண்ணா மை. எழுந்தருளிவிக்கிரகம் - வெளி கொண்டுவருகிறவிக்கிரகம். எழுந்தருளுதல், எழுந்திருத்தல் - பெரியோரெழுதல். எழுந்தேற்றம் - எழுந்தமானம், எழுந் தருளல். எழுபவம் - உயர்பிறப்பு, எழுபிறப்பு. எழுப்பம் - எழுச்சி, நடமாட்டம், வளர்ச்சி. எழுப்பிவிடுதல், எழுப்புதல் - எழும்பப் பண்ணுதல், முயற்சியுண்டாக்கு தல். எழுப்பு - எழுப்புதல் எழுப்பென்னே வல். எழுமான்புலி - ஓர் பூடு. எழுமுகனை - துவக்கம், முதல். எழுமை - உயர்ச்சி, எழுபிறப்பு. எழும்பல் - எழும்புதல், கைத்தோம்பு. எழுவரைக்கூடி - ஓர் பாஷாணம். எழுவாயுருபு - பெயர் வேற்றுமை யுருபு. எழுவாயெழுனி - மகநாள். எழுவாய் - ஆதி. எழுவாய்வேற்றுமை - முதலாம் வேற்றுமை. எழுவான் - கிழக்கு. எளிசு - அருமையற்றது, இலேசானது, எளியது. எளிஞர் - எளியவர். எளிதரவு - எளிமைத்தனம். எளிது - எளிசு. எளிமை - தரித்திரம், தளர்வு, தனிமை, தாழ்வு. எளியர், எளியார் - ஈனர், தரித்திரர், திராணியற்றவர். எளியவிலை - அற்பவிலை. எள் - எள்ளு, எள்ளென்னேவல். என்கல், எள்குதல் - இகழ்தல். எள்ள - உவமைச்சொல். எள்ளல் - அவமதிச்சிரிப்பு, நிந்தை. எள்ளிடை - எள்ளளவு. எள்ளுச்செவி - ஓர் பூண்டு. எள்ளுதல் - இகழ்தல், தள்ளுதல். எள்ளோரை - எள்ளுச்சாதம். எறிகாலி - காலாலெறியும்பசு. எறிதல் - அடித்தல், உதைதல், குத்தல், நால்வகையூறினொன்று, வீசல், வெட்டல். எறித்தல் - ஒளிவீசல், வெயில்காலல். எறிபடை - கைவிடுபடை. எறிப்பு - ஒளிசெய்தல், கோடை, விம்பித்தல். எறிமணி - சேமக்கலம். எறிமுத்து - வசூரிநோயிலிடையிடை போட்டமுத்து. எறியாயுதம் - வேல்முதலியபடை. எறியால் - ஓர் மீன். எறியீட்டி - எறிவல்லையம். எறிவு - எறிதல். எறும்பி - யானை. எறும்பு - பிபீலிகை. எறுழி - பன்றி. எறுழ் - தடி, தண்டு, தூண், வலி. எற்பாடு - மாலைப் பொழுதுக்கு முன் பத்துநாழிகை நேரம். எற்றல் - அடித்தல், அறுத்தல், இறை மரம், எதிர்த்தல், எறிதல், எற்றுதல், குத்தல், கொல்லல், தட்டப்படுதல், வெட்டல். எற்றல்மரம் - இறைமரம். எற்றற்கொட்டு - இறைமரக்கொட்டு. எற்றற்பட்டை - சீலாப்பட்டை. எற்றித்தல் - இரங்கல். எற்று - இரக்கக்குறிப்பு, எத்தன் மைத்து, எறிதல், எற்றென்னேவல். எற்றுதல் - எறிதல், கொல்லல், நீர் முதலியவற்றையெற்றல், புடைத் தல். எற்றுநூல் - மரக்கோட்டம் பார்க்கு நூல். எற்றை - என்று. எற்றோ - அதிசயவிரக்கச்சொல், இரக்கச்சொல், எத்தன்மைத்தோ. என - என்க, ஓர் உவமையுருபு, என்னுடையது, ஓரெச்சச் சொல், (உம்) ஒல்லெனவொலித் தது, எண்ணிடைச்சொல், (உம்) பகை, பாலம், அச்சம், பழியென நான்கு. எனது, எனாது - என்னுடையது. எனல் - என்றல். எனா - எண்ணிடைச்சொல், (உம்) சாத்தனெனா கொற்றனெனா. என்வெஞ்சணி - எனவெஞ்சணி. எனில் - என்று சொல்லில். எனைத்து - எத்தன்மைத்து, எவ்வளவு. எனைத்துணை - எவ்வளவு. எனையவன் - எத்தன்மையவன், எவன். எனைவரும் - யாவரும். எனைவீர் - எல்லாநீர். எனைவேமும், எனைவேம், எனை வோமும், எனைவோம் - எல்லோரும். எனைவோரும் - யாவரும். என் - இகழ்ச்சிக்குறிப்பு, இடைச் சொல், என்ன, ஐயக்கிளவி, சொல் லுக, தன்மை யொருமைச் சொல். என்கு, என்கும் - என்றுசொல்லும். என்பாபரணன் - சிவன். என்பித்தல் - அத்தாட்சிப்படுத்தல், என்று சொல்வித்தல். என்பு - எலும்பு, புல். என்புதின்றி - கழுதைக்குடத்தி. என்புருக்கி - எலும்புருக்கி. என்மர், என்மனார், என்றிசினோர் - என்றுசொல்வார். என்வெஞ்சணி - எனவென்னெச்சம். என்றா - எண்ணிடைச்சொல். என்று - எந்நாள், சூரியன். என்றும் - எப்போழ்தும். என்றூழி - எப்போழ்தும். என்றூழ் - சூரியன், வெயில். என்றூள் - கோடை. என்ன - உவமைச்சொல், எத்தன்மைய என்று சொல்க, யாவை. என்னல் - என்றுசொல்லல். என்னே - அதிசயவிரக்கச்சொல். என்னை - என்றந்தை, என்ன, விரவுத் திணை யொருமைத் தன்மைச் செயப்படுபொருள். என்னோ - அதிசயவிரக்கச்சொல், இரக்கச்சொல், ஐயக்கிளவி. ஏ ஏ - அடே, இசைநிறை, ஈற்றசை, எண்ணின்குறிப்பு, (உம்) நிலனே நீரே, எதிர்மறை, (உம்) பொய்யே, ஓரெழுத்து, தேற்றக்குறிப்பு, (உம்) நானேவந்தது, பாணம், பிரிவின் குறிப்பு, (உம்) இவற்றுளொன்றே நன்று, வினாக்குறிப்பு (உம்) தரலே வந்தது. ஏஏ - இகழ்ச்சிக்குறிப்பு. ஏககுண்டலன் - குபேரன், பலராமன். ஏககுரு - உடன்கற்றோன். ஏகசகடு - ஓரொட்டு. ஏசசக்கிரம் - தனியரசாட்சி செலுத்து தல். ஏகசக்கிரவர்த்தி, ஏகசக்கிராதிபதி - சுயாதிபதி. ஏகசமன் - ஒருசரி. ஏகசமானம் - ஒரேசமானம். ஏகசரம் - காண்டாமிருகம். ஏகசாதர் - சகோதரர். ஏகசாதி - சூத்திரன். ஏகசிந்தை - ஒருமனம், ஒன்றிப்பு. ஏகசிருங்கம் - காண்டாமிருகம். ஏகசிருங்கன் - கிருஷ்டிணன். ஏகசூனு - ஒரேபேறானபிள்ளை. ஏகதந்தன் - வினாயகன். ஏகதாளம் - சத்ததாளத்தொன்று. ஏகதிரீயத்துவம் - ஒன்றில்மூன்று தத்துவங்கொண்டிருத்தல். ஏகதேகம் - யௌவனம். ஏகதேசக்காரன் - மாறுபாடுள்ளவன். ஏகதேசம் - அரிது, அலங்காரத்து ளொன்று, ஒட்டுக்கு, ஓரிடம், முன்பின்னாக, வித்தியாசம், பங்கு. ஏகதேசவுருபகம், ஏகதேசவுருவகம் - அஃது ஒரேயங்கத்தையுருவகஞ் செய்வது ஏகதேசவுருவகம் - ஓரலங்காரம். ஏகதேவன் - கடவுள், சிவன், புத்தன். ஏகதொகை - முழுத்தொகை. ஏகத்துவம் - ஒருபொருளாயிருக்குந் தன்மை. ஏகநாதன், ஏகநாயகன் - கடவுள், சுயாதிபதி. ஏகபந்தனம் - ஒருகூட்டாய்க் கூடுதல், ஒன்றிப்பு. ஏகபத்திரிகை - வெண்டுளசி. ஏகபத்தினி - பதிவிரதை. ஏகபாதம் - நான்கடியுமோரடியாய் வருங்கவி. ஏகபாதவாதனம் - அத்தமேற்காலா தனமாய்க் கிடந்து ஒரு கான்மேனீ முட்வது. ஏகபாவனை - ஒருமைப்பாவனை. ஏகபிங்கலன் - குபேரன். ஏகபிங்கன் - குபேரன். ஏகபிண்டன் - நெருங்கியவுறவன். ஏகபோகம் - இட்டம், இருவருமொத்த போகம். ஏகப்பிழை - முற்றும்பிழை. ஏகப்பெருவெள்ளம் - ஒருமிக்கமூடிய பெருவெள்ளம். ஏகமாய் - ஒன்றாய். ஏகம் - ஒப்பில்லாதது, ஒன்று, தனிமை, முழுவதும். ஏகம்பன் - கச்சிப்பதீசன். ஏகரூபன் - கடவுள். ஏகல் - உயர்ச்சி, நடத்தல், போகல். ஏகவசனம் - ஒருமைச்சொல், ஒரே மொழி, மெய். ஏகலிங்கன் - குபேரன். ஏகவத்தவாதனம் - ஏகபாதவாதன மாகக் கிடந்துகையை நீட்டி யிருப்பது. ஏகவஸ்து - கடவுள். ஏகவாசம் - ஆலமரம், கூடியிருத்தல், தனியிருப்பு. ஏகவீரன் - இணையில்வீரன். ஏகவெளி - மறைவிலாவெளி. ஏகவேணி - மூதேவி. ஏகன் - ஒருவன், கடவுள், சிவன். ஏகாக்கம் - காக்கை. ஏகாக்கிரம், ஏகாக்கிருதை - ஒரே நோக்கம். ஏகாங்கம் - தனிமை, சந்தனம், புதன். ஏகாங்கவுருவகம் - ஓரலங்காரம், அஃது ஒன்றனங்கம் பலவற்றை யும் வாளா கூறி யோரங்கத்தையே யுருவகிப்பது. ஏகாங்கி - சந்நியாசி, தனிமையா யிருப்பவன். ஏகாசம் - உத்தரீயம், போர்வை. ஏகாட்சரி - புவனாசத்தி, மிறைக்கவி யினொன்று. அஃது ஓர்வரி யெழுத்தானோர் கவிமுடிவது. ஏகாட்சரிகக்கிஷம் - ஓர்மாந்திரிய நூல். ஏகாண்டம் - ஆகாயம், வெளி. ஏகாதசம் - பதினொன்று. ஏகாதசி - பதினொராந்திதி. ஏகாதிபதி - தனியாட்சி பண்ணுபவன். ஏகாதிபத்தியம் - தனியரசாட்சி. ஏகாத்தியம் - தனிச்செங்கோன்மை. ஏகாந்தசேவை - தனிச்சேவை. ஏகாந்தமண்டபம் - கொலுமண்டபம், தனியிருக்கு மண்டபம். ஏகாந்தம் - தனித்திருக்குமிடம், தனிமை, சந்தனம், புதன். ஏகாந்தவாழ்வு - தனிவாழ்வு. ஏகாம்பரன் - சிவன். ஏகாரவல்லி - பலா, பாகல். ஏகாலி - சவுக்காரம், வண்ணான். ஏகாலியர் - வண்ணார். ஏகி - கைம்பெண். ஏகீபலித்தல் - ஒன்றித்தல், சேருதல். ஏகீபாவம் - ஒருமைப்பாவனை. ஏகீயன் - தோழன். ஏகுதல் - போகுதல். ஏகோத்திட்டம் - அபரக்கிரியையி னொன்று, ஏகோதிட்டம். ஏகோபித்தல் - ஒருமனப்படுதல், ஒன்றாதல், சேர்தல். ஏக்கம் - ஏங்கல், பயம், பேராசை. ஏக்கழுத்தம் - இறுமாப்பு. ஏக்கறல் - ஏக்கறுதல். ஏக்கறவு - ஏற்றுக்கொள்ளுதல், வணங்கல். ஏக்கறுதல் - அங்கலாய்த்தல், அவ மானித்தல், தாழ்ந்துநிற்றல். ஏக்கிபோக்கி - எளியோர். ஏக்கை - இகழ்ச்சி. ஏங்கல் - அஞ்சல், அழுதல், இரங்கல், ஒலித்தல், மயிற்குரல். ஏசம் - வெண்கலம். ஏசல் - பழிமொழி, வைதல். ஏசறுதல் - துக்கித்தல். ஏசனம் - கலக்குதல். ஏசாதவர் - குற்றமில்லாதவர், தேவர். ஏசி - கிளி. ஏசு - ஏசென்னேவல், குற்றம். ஏச்சு - உதாசினம், வைதல். ஏட - தோழன்முன்னிலை. ஏடகம் - சீலை, தென்னமரம், பலகை, பனைமரம், பூவிதழ், ஆட்டுக் கடா, திருவேடகம். ஏடணை - விருப்பம். ஏடல் - கருத்து. ஏடன் - செவிடன், தோழன். ஏடா - தோழன்முன்னிலை. ஏடாகுடம், ஏடாகூடம் - ஏறாமேடு. ஏடாகோடம் - ஏற்றத்தாட்சியான நடை. ஏடாசிரியர் - குருவில்லா தேடுமாத் திரத்திற் கற்றோர். ஏடி - தோழிமுன்னிலை. ஏடு - கண்ணிமை, பனையேடு, பாலாடை, பூவிதழ். ஏடுகம் - பிரேதக்கல்லறை. ஏட்டிக்குப்போட்டி - எதிருக்கெதிர், ஒவ்வாமை. ஏட்டிற்கல்வி - குருவில்லாக்கல்வி. ஏட்டை - ஆசை, தளர்வு, துன்பம், வறுமை. ஏணகம் - மான்.. ஏணம் - எலும்பு, நிலைபெறுதல், மான், மான்றோல், வலி. ஏணல் - வளைவு. ஏணாசினம் - மான்றோல். ஏணாப்பு - இறுமாப்பு. ஏதசன் - பிராமணன். ஏணி - இறைவை, எல்லை, நாடு, மான் கன்று. ஏணிலையுடைமை - கண்ணோட்டம். ஏணை - ஆடுமஞ்சம். ஏண் - நிலையுடைமை, வலி, வளைவு. ஏண்கோண் - திருக்கு, நேரின்மை. ஏண்டாப்பு - இறுமாப்பு. ஏதடை - விரோதம். ஏதண்டை - சிறாம்பி. ஏதம் - குற்றம், கேடு, துன்பம், பல வன்னம், மான். ஏதனம் - சுவாசம் விடல். ஏதி - ஆயுதப்பொது, துண்டு, வாள். ஏதியம் - கிரணம். ஏதிலார் - அயலோர், தரித்திரர், பகைவர், பிறர். ஏதில் - அயல். ஏதின்மை - பிரியவீனம், வெறுமை. ஏது - ஏன், ஓரலங்காரம், அஃது இன்ன காரணத்தானின்னதா மெனக் கூறுவது, காரணம், யாது, உபகரணம். ஏதுங்கெட்டவன் - இடமற்றவன், வீணன். ஏதுத்தற்குறிப்பு - ஓரலங்காரம். ஏதும் - யாதொன்றும். ஏதுவனுமானம் - ஓரளவை, அஃது புகையைக் கண்டு நெருப்புண் டென வறிதல். ஏதுவானவன் - இடமுள்ளவன், பிராத்தியுள்ளவன். ஏதுவிலக்கு - ஓரலங்காரம், அஃது இன்னதினானின்ன காரணமின் றெனக் கூறுவது. ஏதுவின்முடித்தல் - ஓர்யுத்தி. ஏதுவுருவகம் - ஓரலங்காரம். அஃது காரணத்தைக்காட்டி யுருவகப் படுத்துவது. ஏதுவுவமை - காரணங்களை யெடுத்துக்காட்டி யுவமையைப் பொருட் கொப்பிட்டுக் கூறுவது, (உம்) மாமணியும் பாசிலையும் இளம்பிறையுங் கூடிபிரபையால் வானவிற்போன்றது. ஏதை - பேதை, வறியன். ஏத்தல் - துதித்தல். ஏத்திரி - சாதிபத்திரி. ஏத்து - ஏத்தென்னேவல், துதி. ஏத்துவம் - பின்பு. ஏந்தல் - அரசன், உயர்ச்சி, ஏந்துதல், பெருமை, பெருமையிற்சிறந்தோன், மலை, மேடு. ஏந்தல்வண்ணம் - சொல்லியது சிறந்து வருவது. ஏந்தானம் - ஏந்துதல், சிறாம்பி. ஏந்தி - ஏந்துபவன், தரித்தவன். ஏந்திசை - இராகத்தகுதியுளொன்று. ஏந்திசைச் செப்பல் - வெண்சீர் வெண்டளையான் வருவது. ஏந்திசைத்துள்ளல் - கலித்தளை யிசைந்து வருவது. ஏந்திசைத் தூங்கல் - வஞ்சித்தளை யொன்றி வருவது. ஏந்திசையகவல் - நேரொன்றாசிரியத் தளையான் வருவது. ஏந்திரம் - இயந்திரம். ஏந்திரவச்சு - பண்டியச்சு. ஏந்திழை - பெண். ஏந்துகொம்பு - மேல்வளைவான கொம்பு. ஏந்துதல் - தாங்கல். ஏப்பம் - ஏவறை. ஏமகண்டன் - ஓரிராக்கதன். ஏமகூடம் - அட்டமலையிற்பொன் மலை. ஏமதவஞ்சம் - போக பூமியாறி னொன்று. ஏமத்தூரி - பொன்னூமத்தை. ஏமம் - இரா, இன்பம், உன்மத்தம், கலக்கம், களிப்பு, காவல், சேமம், திரைச்சீலை, புதையல், பொன், மயக்கம், விபூதி. ஏமருதல் - கலங்குதல், திகைத்தல், மிகுகளிப்புறல், மூர்க்கமுறல். ஏமவஞ்சம் - போகபூமியாறினொன்று. ஏமாத்தல் - அவாவுறல், களித்தல். ஏமாப்பு - கருத்து, செருக்கு, மிகு களிப்பு, வலியாதல். ஏமாறுதல் - அலமருதல், தடுமாறல். ஏமி - உடனிகழ்வான். ஏமிவாந்தல் - திகைத்துப்பார்த்தல். ஏமிலாந்தி - அலமலந்து பார்ப்போன். ஏமிலாப்பு - அலமலப்பு. ஏமுறல், ஏமுறுதல் - இறுமாப்புறல், மயங்குதல். ஏம் - தன்மைப்பன்மைவிகுதி. ஏம்பல் - ஏம்புதல். ஏம்பலித்தல் - அங்கலாய்த்தல். ஏம்புதல் - ஏம்பலித்தல். ஏய்தல் - இயைதல், ஒப்பாதல், பொருந்தல். ஏய்த்தல் - அனாப்புதல், இசையப் பண்ணுதல், உவமித்தல், சமாளித் தல். ஏய்ப்ப - உவமைச்சொல், (உம்) முத் தேய்ப்ப. ஏய்ப்பிலேவட்டன் - எத்துக்குட்படு பவன், கணிசமற்றவன், மதிகேடன். ஏய்ப்பு - ஏய்த்தல். ஏரகம் - ஓரூர். ஏரண்டம் - ஆமணக்கு. ஏரல் - கிளிஞ்சில், சமுத்திரச்சுண்டி. ஏரா - மரக்கலத்தினோருறுப்பு. ஏராண்மை - உழவு. ஏராதது - ஏலாதது. எராளம் - மிகுதி. ஏராளர் - உழுநர். ஏரி - இமில், குளம், புநர்பூசம். ஏரிசா - கடற்கொந்தளிப்பு, புரளித் தனம். ஏரின்வாழ்நர் - பூவைசியர். ஏருழல்-வைசியரறு தொழிலினொன்று. ஏருழவர் - உழவுதொழிலாளர். ஏருழுநர் - உழவர். ஏர் - அழகு, உழவுக்கிசைந்ததள பாடம், உழுமாடு. ஏர்க்கால் - கலப்பையினோருறுப்பு. ஏர்ச்சீர் - உழவுக்கிசைந்ததளபாடம், வேலைக்கிசைந்த பணிமுட்டு. ஏர்த்தொழிலர் - பூவைசியர். ஏர்த்தொழில் - உழவுதொழில். ஏர்பு - எழுச்சி. ஏர்ப்பண் - ஏர்ச்சீர். ஏர்ப்பு - ஈர்ப்பு. ஏர்ப்பூட்டு - ஏர்தொடுத்தல். ஏர்வாரம் - கமவாரம். ஏல - இயல, முன்னம். ஏலக்கோலம் - ஆயத்தம். ஏலப்பாட்டு - இழுக்குநர்சொல்லும் பாட்டு. ஏலம் - இயங்கு, ஓர் மரம், பஞ்ச வாசத்தொன்று, மயிர்ச்சாந்து, முதிரை, வாசனைப்பண்டம். ஏலவரிசி - ஏலக்கொட்டை. ஏலவே - முன்னே. ஏலா, ஏலாள் - தோழிமுன்னிலை. ஏலாதது - இயலாதது, பொருந்தாது. ஏலாதார் - இயலாதார், பகைவர். ஏலாதிகடுகம் - ஓர்மருந்து. ஏலாப்பு - துன்பம். ஏலாமை - இணங்காமை, கூடாமை, துன்பம். ஏலி - கள். ஏலை - ஏலம். ஏலுதல் - இயலுதல், பொருந்தல். ஏல் - ஏலென்னேவல், ஒப்பு, முன்னி லையொருமை வியங்கோள்விகுதி, எதிர்மறையேவலொருமை விகுதி, (உம்) நடவேல் - வினையெச்ச விகுதி, (உம்) வருமேல். ஏல்வை - காலம், குளம், பொழுது. ஏவங்கேட்டல் - ஒருவருக்காக ஏவி விடப்பட்டுப் போயதட்டல். ஏவம் - ஒருவருக்காக ஏவிவிடப்பட்டு அதட்டும்படி வருகை, குற்றம். ஏவல் - ஆணைசெலுத்துதல், ஏவுதல். ஏவல்கொள்ளுதல் - தொண்டுசெய் வித்தல். ஏவல்செய்தல் - தொண்டுசெய்தல். ஏவல்மேவல் - ஏவற்றொழிலும் உள் வேலையும். ஏவல்வாய்பாடு - ஏவற்சொல். ஏல்விலன் - குபேரன். ஏவல்விகுதி - ஏவலில்வரும்விகுதி, அஃது, ஆய்-மின்-உம் முதலியவை. ஏவல்விடை - வினாவையெதிர் மறுத் தேவும் வினை, (உம்) உண்டாயோ வென்ற வழி நீயுண் ணென்பது. ஏவல்வினா - ஏவும்வினா (உம்) எழுகிறாயா. ஏவல்வினை - ஏவலைச்செய்யும் வினை. ஏவறை - எதிருக்கெடுத்தல். ஏவற்காரன் - பணிவிடைகாரன். ஏவற்பணி - ஏவற்றொழில். ஏவற்பேய் - ஏவிவிட்டபேய். ஏவிவிடுதல் - ஏவுதல். ஏவிளம்பி - ஓர் வருடம். ஏவு - அம்பு, அனுப்புந்தன்மை, ஏவென்னேவல், வருத்தம். ஏவுதல் - அனுப்புதல், எழுப்பிவிடு தல், கற்பித்தல், செலுத்துதல், தூண்டிவிடுதல். ஏவுதற்கருத்தா - இயற்றுதற் கருத் தாவையேவுவோன். ஏவும்விடை - ஏவல்விடை. ஏவும்வினை - தொழிற்பாற்படுத்தும் வினைச்சொல். ஏவும்வினைமுதல் - ஏவுதற்கருத்தா. ஏவுவான் - ஏவிவிடுவான். ஏழகம் - ஆடு, செம்மறிக்கடா, துரு வாட்டேறு. ஏழ்மை, ஏழ்மைத்தனம் - எளிமைத் தனம், ஏழைத்தனம். ஏழனுருபு - ஏழாம்வேற்றுமை, அஃது கண். ஏழிலம்பாலை, ஏழிலைம்பாலை - ஓர்மரம், அஃது மகளிரான்மலர் மரம் பத்தினொன்று. ஏழு - ஓரெண். ஏழுநிலைக்கோபுரம் - ஏழுநிலை யுள்ள கோபுரம். ஏழுநிலைமாடம் - ஏழடுக்குமாடம். ஏழுபுரம் - சத்தபுரி.அஃது அயோத்தி, அவந்தி, காசி, காஞ்சி, துவாரகை, மதுரை, மாயை. ஏழேழுதலைமுறை - ஏழ்தலை முறை யும் புத்திரபரம்பரையாய்வரு மேழ்தலைமுறை. ஏழை - அறிவிலான், தரித்திரன், பெண். ஏழைமை - ஏழைத்தன்மை. ஏழ் - ஓரெண். ஏழ்ச்சி - எழுச்சி. ஏழ்பரியோன் - சூரியன். ஏழ்பவம் - ஏழ்பிறப்பு. ஏழ்பிறப்பு - ஏழுபிறப்பு. அஃது ஊர்வன, தாபரம், தேவர், நீர்வாழ் வன, பறவை, மக்கள், விலங்கு. ஏளனம் - அவமதிச்சிரிப்பு, நீக்கல். ஏளிதம் - இகழ்ச்சி, எளிமை. ஏற - அதிகமாக, உயர. ஏறக்கட்டுதல் - கட்டியுயர்த்துதல், பலப்படுத்துதல். ஏறக்குறைய - முன்பின்னாக. ஏறங்கோட்பறை - முல்லைப்பறை. ஏறத்தாழ-கூடக்குறைய, முன்பின்னாக. ஏறல் - ஏறுதல். ஏறவிடுதல் - மரக்கலத்தைக்கரைக்குத் தூரமாய்விடுதல், மேலேவிடுதல். ஏறவிறங்கப்பார்த்தல் - கேசாதிபாத மீறாகப்பார்த்தல். ஏறாங்கடைசி - அறமுடிவு. ஏறாமேடு - சரிப்படுத்தக்கூடாத காரியம், நீரேறாதமேடு. ஏறாளர் - படைவீரர். ஏறிடுதல் - அடைதல், ஏறவிடுதல், சரையாப்பித்தல். ஏறிட்டுப்பார்த்தல் - உற்றுப்பார்த்தல். ஏறியவீரி - சவ்வீரபாஷாணம். ஏறு - அசுபதி, இடபவிராசி, இடி, எருது, எருமை, கவரி, சங்கு, சுறா, பசு, பன்றி, புல்வாய், மரை, மான், இவற்றினாண், ஏறென்னேவல், தழும்பு, விலங்கேற்றின் பொது. ஏறுகுதிரை - ஏறுங்குதிரை. ஏறுக்குமாறு - குழப்பம். ஏறுசலாகை - மரங்கோக்குஞ்சலாகை. ஏறுதல் - அதிகப்படுதல், இவர்தல், உட்போதல், உயருதல், மேற் போதல். ஏறுதழுவல் - மணமுடிக்கும் பொருட்டு இடபத்தைப்பிடித்தல். ஏறுநெற்றி - அகன்றநெற்றி. ஏறுபடி - அதிகபடி, தாழ்வாரம். ஏறுபெட்டி - கருப்பநீர்ப்பெட்டி. ஏறுபொழுது - இளநேரம். ஏறுமாறு - குழப்பம். ஏறுமிராசி - மகரமுதல்மிதுனமீறான விராசிகள். ஏறுவட்டம் - ஏறினவட்டம். ஏறுவால் - குறல்வால். ஏறுவிடுதல் - மணமுடிக்கவருபவன் பிடிக்கும் பொருட்டு இடபம் விடுதல். ஏறுவெயில்-முன்பொழுதின் வெய்யில். ஏறுழவர் - படைவீரர். ஏறூர்ந்தோன் - சிவன். ஏறெடுத்தல் - உயர்த்துதல், மேலெ டுத்தல். ஏற்க - இணங்க, உவப்பாக, முன். ஏற்கன - முன். ஏற்குதல் - இணங்கல், இரத்தல், ஒப்புக்கொள்ளல், பொருந்தல், வாங்கல். ஏற்கென - முன்னே. ஏற்கை - இணங்குகை, வாங்குந் தன்மை. ஏற்படுதல் - உடன்படுதல். ஏற்படுத்தல் - இணக்கம்பண்ணுதல், நிருமித்தல். ஏற்பாடு - உடன்பாடு, நியமம், பொருத்தம். ஏற்பு - இரப்பு, ஈர்ப்பு, பொருத்தம். ஏற்புளிக்கோடல் - ஓரு யுத்தி அஃது ஏற்றவிடத்திற்பாவித்தல். ஏற்புறவணிதல் - மணமகளையலங் கரித்தல். ஏற்போர் - இரப்போர். ஏற்ற - தகுதியான, பக்குவமான. ஏற்றக்கால் - தூண். ஏற்றக்குறைச்சல் - ஏற்றத்தாழ்ச்சி. ஏற்றக்கோல் - துலாக்கொடி. ஏற்றச்சால் - நீர்மொள்ளும்பாத்திரம். ஏற்றது - இயன்றது, பொருந்தியது. ஏற்றத்தாழ்ச்சி - ஒவ்வாமை, முன் பின்னாக. ஏற்றமடல் - காமத்தோரூரும்மடல். ஏற்றமரம் - துலா. ஏற்றமாலை - ஓர்பிரபந்தம். ஏற்றமொழி - புகழ்மொழி. ஏனமுத்து - பன்றிக்கோட்டிற் பிறந்த பச்சை நிறமுத்து. ஏற்றம் - அதிகம், உயர்ச்சி, எழும்புதல், துலா, புகழ், மிகுதி, மேன்மை. ஏற்றம்வற்றம் - பெருக்குங்குறைவும். ஏற்றரவு - முகனை. ஏற்றல் - அடுக்குதல், இணங்கல், இரத்தல், உணர்த்தல், எதிர்த்தல், எழுப்பல், எறிதல், ஏற்றுதல், கொள்ளல், தகுதி. ஏற்று - ஏற்றுதல், ஏற்றென்னேவல், மரத்தின்மேற்செய்த ஏதண்டை. ஏற்றுக்கொள்ளுதல் - பெற்றுக்கொள் ளுதல். ஏற்றுதல் - அதிகப்படுத்தல், உயரப் பண்ணுதல், ஏறப்பண்ணுதல். ஏற்றுதுறை - ஏற்றிவிடுந்துறை. ஏற்றுப்பனை - ஆண்பனை. ஏற்றுமதி - தோணியிலேற்றப்படுஞ் சரக்கு. ஏற்றுவாகனன் - சிவன். ஏனம் - இயற்று, எழுத்தின்சாரியை, ஓலைக்குடை, தப்பிதம், பன்றி, பாவம். ஏனல் - கதிர், செந்தினை, தினைப் புனம், பைந்தினை. ஏனவாயன் - தப்பிதகாரன். ஏனவும் - ஒழிந்தவும். ஏனாதி - ஓர் மருந்து, தந்திரி, நாவிதன், மந்திரி, மறவன். ஏனை - ஒழிந்த, மலங்குமீன், மற்று. ஏனைய - ஒழிந்தன. ஏன் - என்னை, தன்மையொருமை விகுதி. ஏன்றல் - இயலல், குறித்தல், பொருந் தல். ஏன்றுகொள்ளுதல் - இயலுதல். ஐ ஐ - அரசன், அழகு, ஆசான், இரண்ட னுருபு, இருமல், எசமானன், ஓரிடைச்சொல், ஓரெழுத்து, கடவுள், குரு, கோழை, சாரியை, (உம்) ஏற்றினோடேற்றை, சுவாமி, நுண்மை, பிதா, யானையைப் பாகன் தட்டுமோசை, சிவன், முன் னிலையொருமை வினைவிகுதி, (உம்) வந்தனை, தொழிற் பெயர் விகுதி, (உம்) நடை, பண்புப்பெயர் விகுதி, (உம்) தொல்லை, வினை முதற் பொருள் விகுதி, (உம்) பறவை, செயப்படுபொருள் விகுதி, (உம்) தொடை, கருவிப் பொருள் விகுதி, (உம்) பார்வை. ஐங்காயதயிலம் - பிண்டதயிலம். ஐகாரக்குறுக்கம் - தன்மாத்திரையிற் சுருங்கிய ஐகாரம். ஐக்கம், ஐக்கியம் - ஒன்றிப்பு. ஐங்கணைக்கிழவன் - மன்மதன். ஐங்காற்கிளையோன் - முருகன், வீர பத்திரன். ஐங்கரன் - வினாயகன், சிவன். ஐங்காயம் - ஐந்துகாயம். அஃது உள்ளி, கடுகு, சுக்கு, பெருங்காயம், மிளகு, தலைப்பிள்ளைக்கரு. ஐங்காயம் - தலைப்பிள்ளைக்கரு. ஐங்குரவர் - பஞ்சகுரு. அவர் இராசா, குரு, தமையன், பிதா, உபாத்தி யாயன். ஐங்குழு - அரசர்க்குரிய பஞ்சகுழு, அவர் சாரணர், சேனாபதியர், தூதர், புரோகிதர், மந்திரியர். ஐசானம் - ஈசானம். ஐசானி - வடகீழ்த்திசையானை. ஐசானியன் - ஈசானன். ஐசுவரியம் - செல்வம், பாக்கியம். ஐஞ்ஞார்த்தகம் - பஞ்சப்பொறிகளை யடக்கத்தியானித்திருத்தல். ஐஞ்ஞூறு - ஓரெண். ஐட்டிகம் - ஓமச்சடங்கு. ஐணம் - ஏணம். ஐதி, ஐதிகம் - ஓரளவை. அஃது தொன்றுதொட்டுவருங்கேள்வியை நம்புவது. ஐந்தடக்கல் - பஞ்சேந்திரியங்களை யொடுக்குதல். ஐந்தடிவிருத்தம் - கலிவிருத்தம், தரவு கொச்சகம். ஐதியளவை - வழங்குங்கேள்விப்படி மெய்யென்றுணர்தல். ஐது - அடர்த்தியற்றது, அற்பம். ஐந்தரம் - அழகுள்ளது, நெருக்க மின்மை, பனை, மந்தம். ஐந்தரு - பஞ்சதரு. அஃது அரிச் சந்தனம், கற்பகதரு, சந்தானம், பாரிசாதம், மந்தாரம். ஐந்தருநாதன் - இந்திரன். ஐந்தலைநாகம் - ஓர் பாம்பு. ஐந்தவம் - மிருகசீரிடம். ஐந்தவித்தல் - பஞ்சப்புலனடக்கல். ஐந்தனுருபு - இன்வேற்றுமை. ஐந்தானம் - மிருகசீரிடம். ஐந்திரன் - அருச்சுனன், இந்திரன், வாலி. ஐந்திணை - அன்புடைக்காமம், ஐவகை நிலம். ஐந்திணைச்செய்யுள் - ஓர் பிரபந்தம், அஃது புணர்தன முதலியவைந் துரிப் பொருளும் விளங்கக் குறிஞ்சி முதலியவைந்திணையினையுங் கூறுவது. ஐந்திரம் - ஓர் கிரந்தவிலக்கணம், கிழக்கு. ஐந்திரி - கிழக்கு. ஐந்திரியம் - இந்திரியம், ஓர் நூல். ஐந்து - ஓரெண். ஐந்துருவாணி - தேரகத்துச்செறி கதிர். ஐந்தை - சிறுகடுகு. ஐந்தொகைவினா - ஓர் கணக்கு. ஐந்தொழில் - பஞ்சகிருத்தியம். ஐந்நூறு - ஐந்துநூறு. ஐப்பசி - அச்சுவினிநாள், ஓர் மாதம். ஐமிச்சம் - ஐயம். ஐமீன் - அத்தநாள், உரோகணி. ஐமுகன் - சிவன். ஐமுகாஸ்திரம் - ஓர் பாணம். ஐமுகி - காட்டாமணக்கு, சிவன். ஐமை - அடர்பு, கூட்டம், தகட்டு வடிவு பகுதி. ஐம்பது - ஓரெண். ஐம்பால் - ஆண்பால் முதலியவைந்து பால், அஃது ஒருவன் ஒருத்தி, ஒன்று பல, பலர், ஐவகைமயிர் முடி, பெண்மயிர். ஐம்புலத்தடங்கான் - கடவுள். ஐம்புலம், ஐம்புலன் - பஞ்சபுலன். ஐம்புலவிடயன் - இல்வாழ்வான். ஐம்புலன்விழையான் - துறவி. ஐம்புலன்வென்றோர் - முனிவர். ஐம்புலனடக்கல் - சாத்துவிதகுணத் தொன்று. அஃது பஞ்சபுலனடக் கல். ஐம்புலன்வென்றோன் - அருகன், பஞ்சபட்சிப்பாஷாணம். ஐம்புலாதி - ஐம்புலன், பேராசை. ஐம்பூதம் - பஞ்சபூதம். ஐம்பூதவிலிங்கம் - பஞ்சபூதவி லிங்கம். ஐம்பூதியம் - பஞ்சபூதியம். ஐம்பொறி - பஞ்சபொறி. ஐம்பொறிநுகர்ச்சி - அனுபவம். ஐம்பொறியடக்கான் - இல்வாழ்வான். ஐம்பொறியடக்கி - துறவி. ஐம்பொறிவிடயம் - ஐம்புலத்தான றியப்பட்டது. ஐம்பொன் - பொன்முதலிய ஐவகையு லோகம். அஃது இரும்பு, ஈயம், செம்பு, பொன், வெள்ளி. ஐம்முகப்பிரமன் - பூருவபிரமன். ஐய - அழகிய, ஐயனே, வியப்புச் சொல். ஐயகோ, ஐயாகோ - ஐயோ. ஐயக்கணசூலை - ஓர்நோய். ஐயக்காட்சி - ஐயம், ஓரளவை அஃது குற்றியோமகனோவெனக்காண்டல். ஐயக்கிளவி - ஐயச்சொல். ஐயங்கவீனம் - புதுவெண்ணெய். ஐயங்காய்ச்சி - ஓர்தேவதை, ஓர்நோய். ஐயங்கார் - பிராமணருக்குள்ளதி காரி, வைணவப்பிராமணன். ஐயநாடி - சிலேற்பனநாடி. ஐயபூளி - பருமணல். ஐயப்படாமை-அறத்துறுப்பினொன்று அஃது சந்தேகப் படாமை. ஐயப்படுதல் - சந்தேகப்படுதல். ஐயப்பாடு - ஐயம். ஐயமறுத்தல் - பஞ்சவினாவி னொன்று அஃது சந்தேகந்தீர்த்தல். ஐயம் - இரப்போர்கலம், ஓர்விதக் காட்சி, கோழை, சந்தேகம், பிச்சை, முத்திவிக்கினம் மூன்றினொன்று, மோர். ஐயர் - பார்ப்பார், பெருமையிற் சிறந்தோர், முனிவர், வானோர். ஐயவணி - ஓரலங்காரம், அஃது ஒப்புமையினானொரு பொருளை யதுவோ அதன் ஒப்புடைப் பொருளோ வெனவையமுறுதல், (உம்) மானோவிழி யோகடுவோ வடுவோ. ஐயவி - கடுகு. ஐயவிலக்கு - ஓரலங்காரம். அஃது ஐயற்றதனைவிலக்குதல். ஐயவினா - சந்தேகவினா, (உம்) குற்றி யோமகனோ. ஐயவும்மை - சந்தேகவும்மை, (உம்) பத்தாயினுமெட்டாயினுங்கொடு. ஐயவுவமை - ஓரலங்காரம். அஃது உவமையையும் பொருளையும் ஐயுற்றுரைப்பது (உம்) முகமோ மலரோவறியேம். ஐயனார் - வனரட்சகன், இவள் சாத்தன். ஐயன் - உவாத்தியாயன், குரு, சாத்தன், தந்தை, மூத்தோன். ஐயாயிரம் - ஓரெண். ஐயானனம் - சிங்கம். ஐயானனன் - சிவன். ஐயிதழ்த்துத்தி - ஓர் துத்தி. ஐயுறல், ஐயுறுதல் - ஐயப்படல். ஐயுறவு - சந்தேகம். ஐயெனல் - விரைவின்குறிப்பு. ஐயை - காளி, தலைவி, தவப்பெண், துற்கை, பார்பதி, மகள். ஐயையோ, ஐயோ - அதிசயவிரக்கச் சொல், இரக்கச்சொல். ஐராணி - இந்திராணி. ஐராவணம் - இந்திரன் யானை. ஐராவதம் - இந்திரன் யானை, கீழ்த்தி சையானை, தோடை. ஐராவதம் - தோடை. ஐவகைப்பொழுது - சிறுபொழுதின் வகையைந்து அவை காலை, நண் பகல் மாலை, யாமம், வைகறை. ஐவகைப்பொன், ஐவகையுலோகம் - ஐம்பொன். ஐவகைமயிர்முடி - ஐவகைக்கூந்தல். அஃது குழல், கொண்டை, சுருள், பனிச்சை, முடி. ஐவசு - பதில். ஐவணம், ஐவணி - மருதோன்றி. ஐவண்ணமணி - சௌந்திகப்பது மராகமணி. ஐவர் - பஞ்சப்பொறி, பாண்டவர். ஐவனம் - மலைநெல். ஐவாய்மிருகம் - கரடி, சிங்கம். ஐவிரலி - ஐவேலி. ஐவிரல் - அத்தநாள். ஐவேசு - வழிவகை. ஐவேலி - ஓர் கொவ்வை. ஓ ஒஃகல் - ஒதுங்கல். ஒகரம் - ஓரெழுத்து, மயில். ஒக்க - ஒருமிக்க, கூட, மெத்த. ஒக்கம் - உயர்ச்சி, ஊர்ப்பொது, எழுதல், கிராமம், பட்டினம், கரை. ஒக்கலிடுதல், ஒக்கலித்தல் - இனங் கூட்டல், சுற்றமுறைமை நடப் பித்தல். ஒக்கலை - மருங்கின்பக்கம். ஒக்கல் - இடைப்பக்கம், உறவு, ஒத்தல், குடி, மூட்டுதல். ஒக்கல்போற்றல் - வேளாண்மை மாந்தரியல்புளொன்று. அஃது சுற்றத்தைப் பேணல். ஒக்குதல் - கொப்பளித்தல், சமானித் தல், பிற்படவிடல். ஒக்கோலை - அம்பர். ஒசிதல் - அசைதல், ஒடிதல், துவளல், முறிதல். ஒசித்தல் - அசைத்தல், ஒடித்தல், முறித்தல். ஒச்சந்தம் - உச்சந்தம். ஒச்சம் - ஒச்சை, கவனித்தல், வெட்கம். ஒச்சித்தல் - வெட்கப்படுதல். ஒச்சியம் - வெட்கம். ஒச்சை - உற்றுக்கேட்டல். ஒஞ்சட்டை - ஒடுக்கமானது. ஒஞ்சரிதீர்ப்பு - ஒரவாரமானதீர்வை. ஒஞ்சரித்தல் - ஒருச்சாய்த்தல். ஒஞ்சரிவழக்கு - ஒருதலைவழக்கு. ஒஞ்சி - மார்பு. ஒஞ்சித்தல், ஒஞ்சுதல் - மனதையடக் கல், வெட்கப்படுதல். ஒடி - ஒடியென்னேவல், கவண். ஒடிசில் - கவண். ஒடிதல் - முறிதல். ஒடித்தல் - ஒளிசெய்தல், முறித்தல். ஒடியல் - பனங்கிழங்குப்பிளவு, ஓடி பட்டது. ஒடிவு - முறிவு. ஒடு - ஒடுக்கட்டி, ஓர் மரம், புண் ணிற்கள்ளம், மூன்றாமுருபு, (உம்) கையொடுகாலும், இசை நிறை யிடைச்சொல், (உம்) சொல்லென் றெய்யநின் னொடு பெயர்த்தே. ஒடுக்கட்டி - கழலைக்கட்டி. ஒடுக்கநாள் - இடைஞ்சனாள். ஒடுக்கம் - அடக்கம், சுருக்கம், நெருக்கமானவிடம், பதுங்கல், முடிவு, வழிபாடு. ஒடுக்கவணக்கம் - கீழ்ப்படிகிற குணத்தோடே கூடிய வணக்கம். ஒடுக்கிடம் - நெருக்கமானவிடம், மூலை. ஒடுக்கு - ஒடுக்கென்னேவல், ஒடுங் கினது, நெருக்கமானது. ஒடுக்குதல் - இறையிறுத்தல், குறைத்தல், சுருங்கப்பண்ணுதல். ஒடுக்குத்துண்டு - பற்றுத்துண்டு. ஒடுக்குவாய் - ஒடுங்கினவாய். ஒடுங்கல் - அடங்கல், ஒதுங்கல், சுருங்கல், பதுங்கல். ஒடுங்கி - ஆமை. ஒடுங்குண்ணல் - ஒடுக்கப்படுதல். ஒடுதடங்கல் - நெளிந்தது, நேரற்றது, வளைந்தது. ஒடுவடக்கி - குப்பைமேனி, திராய் மரம். ஒடை - ஓர் மரம். ஒட்ட - அடியோடே, அணுக, இறுக, கிட்ட, சேர. ஒட்டகப்பாரை - ஓர் மீன். ஒட்டகம் - ஓர் மிருகம். ஒட்டங்கி - கன்னார்கருவியி னொன்று. ஒட்டடை - புகையுறை. ஒட்டம் - உடன்படிக்கை, ஓடு, தோண்டலளவைத்திடர், பந்தயப் பொருள். ஒட்டர் - மண்வேலைகாரர். ஒட்டலன் - ஓரலன், பகைவன், மெலிந்தவன். ஒட்டல் - இடங்கொடுத்தல், உடன் படல், ஒட்டுதல், ஒளித்தல், குறுகல், சேர்த்தல், வற்றல். ஒட்டறை - புகையுறை. ஒட்டற்காது - சுருங்கற்காது. ஒட்டாக்கொற்றி - கறக்கவிடாதபசு. ஒட்டாம்பாரை - ஒட்டகப்பாரை. ஒட்டாரம் - முரட்டுத்தனம். ஒட்டார் - பகைவர். ஒட்டாவுருவம் - கருங்கற்சிலை. ஒட்டி - ஓர் மீன். ஒட்டிகக்குவான் - ஓர்புல். ஒட்டிக்கிரட்டி - ஒன்றுக்கிரண்டுபங்கு. ஒட்டியக்கரு - ஒட்டியவித்தைக்கு வேண்டுங்கரு. ஒட்டியம் - ஓர் பாஷை, தேயமன் பத்தாறினொன்று. ஒட்டியர் - ஓர் சாதியார். ஒட்டியாணம் - ஓராபரணம், மாதரி டையணி, யோகபட்டை. ஒட்டியாதேவி - ஓர் தேவதை. ஒட்டினர் - சினேகிதர், மித்திரர். ஒட்டு - அருகு, ஒட்டென்னேவல், ஒளிப்பிடம், ஒன்றிப்பு, ஓரலங் காரம், அஃது கவிபாற் கருதிய பொருளை மறைத்ததன் பொரு ளை வெளிப்படுத்தற்குரிய பிறி தொன்றைச் சொல்வது, கண்ணி, கதிர்கொய்த தாள், சபதம், சிறு கடுக்கன், திண்ணைக்குந்து, படைவகுப்பு. ஒட்டுக்கண் - கண்ணினோர் நோய். ஒட்டுக்காய்ச்சல் - உடம்போ டொத்த காய்ச்சல், தொற்றுக் காய்ச்சல். ஒட்டுக்கு - ஒருமிக்க. ஒட்டுக்குஞ்சு - பேன்குஞ்சு. ஒட்டுக்குடி - ஒதுக்குக்குடி. ஒட்டுக்கேட்டல் - ஒளித்து விசேஷங் கேட்டல். ஒட்டுக்கொடுத்தல்-இடங்கொடுத் தல். ஒட்டுச்செடி - ஒட்டொட்டி. ஒட்டுடந்தை - உரித்து. ஒட்டுதல் - இடங்கொடுத்தல், பொருத்துதல், பொருந்துதல். ஒட்டுத்திணணை - திண்ணைக்குத்து. ஒட்டுத்தீட்டுக்கலப்பு - உதிரக்கலப் பானவுறவு. ஒட்டுத்துத்தி - ஓர் துத்தி. ஒட்டுத்தையல் - ஓர் தையல். ஒட்டுநர் - மித்திரர். ஒட்டுப்பார்த்தல் - உளவுபார்த்தல். ஒட்டுப்புல் - ஓர் புல். ஒட்டுமயிர் - வெட்டிமுளைத்தகுறள் மயிர். ஒட்டுரிமை - உடந்தை. ஒட்டுருவம் - மரவிக்கிரகம். ஒட்டுவிசேஷம் - ஒட்டிநின்று கேட்கும் வார்த்தை. ஒட்டுவிடுதல் - பிரிந்துபோதல். ஒட்டுவித்தை - இந்திரசாலத்திலோர் வித்தை. ஒட்டுவியாதி - தொற்றுநோய். ஒட்டுவேலை - ஒட்டவைக்கிற வேலை. ஒட்டுவைத்தல் - ஆணையிடல், ஒளி வைத்தல், கண்ணிவைத்தல். ஒட்டுறவு - உரித்துறவு. ஒட்டை - ஒட்டகம், பத்ததுவிரற் கிடை. ஒட்டொட்டி - ஓர் செடி, ஓர் புல். ஒட்டோலகம், ஒட்டோலக்கம் - ஆடம் பரம், சனத்திரள், வெற்றி. ஒட்பம் - அழகு, நன்மை, முதுக் குறைவு, மேன்மை. ஒண்டன் - ஆணரி, நரி. ஒண்டொடி - பெண். ஒண்ணல் - கூடுதல், பொருந்தல். ஒண்ணாதது - ஒவ்வாதது. ஒண்ணாப்பு - இயலாப்பு. ஒண்ணாமை - கூடாமை. ஒண்ணுதல் - இயலுதல், பெண். ஒண்மை - அழகு, அறிவு, ஒழுங்கு, நன்மை, மிகுதி. ஒதி - உதிமரம். ஒதுக்கம் - ஒழுக்கம், தாழ்மை, நடை, மறைவு, தீட்டு. ஒதுக்கல் - ஒதுங்கச்செய்தல், தீர்த்தல். ஒதுக்கிடம் - புகலிடம், மறைவிடம். ஒதுக்கு - ஒதுக்கென்னேவல், சார்பு, மறைவு. ஒதுக்குக்குடி - இரவற்குடி. ஒதுக்குதல் - தீர்த்தல், புடைவை முதலியவொதுக்குதல். ஒதுக்குப்படல் - காற்றைக்காக்கும் படல். ஒதுக்குப்பாடு - மறைவு. ஒதுக்குப்புறம் - ஒதுக்குப்பாடு. ஒதுங்கல் - நடத்தல், பதுங்கல், விலகல். ஒதுங்கிடம் - புழைக்கடை. ஒதுங்கிநடத்தல் - தாழ்மையாய் நடத்தல், விலகிநடத்தல். ஒதுங்குபுறம் - புறம்போக்கு. ஒதுப்புறம் - ஒதுக்கிடம். ஒத்த - சரிவந்த. ஒத்தபண்புரைப்போர் - தூதர். ஒத்தமொளி - ஒருசரி, ஒன்றுபோல. ஒத்தல் - ஒத்துதல், ஒப்பு, சமானித் தல், நடு, பொருந்தல். ஒத்தவாக்கியம் - ஒன்று போன்ற வசனம். ஒத்தறுத்தல் - தாளம்போடல். ஒத்தாசை - உதவி. ஒத்தாப்பு - ஒதுக்கு. ஒத்திக்கை - உதவி. ஒத்திசை - விட்டிசையாதிசைக்கும் பண். ஒத்திடுதல் - ஒத்துப்பிடித்தல், தாளம் போடுதல். ஒத்து - ஒத்தென்னேவல், ஓரூதுகுழல். ஒத்துக்கொள்ளுதல் - ஒப்புவித்துக் கொள்ளுதல், சம்மதித்தல். ஒத்துதல் - ஒற்றிடுதல், தாளம் போடுதல், விலகுதல். ஒத்துப்பார்த்தல் - சரிபார்த்தல். ஒத்துவாழ்தல் - இணங்கியிருத்தல். ஒத்துவிடுதல் - இணங்கிவிடுதல், ஒப்பித்து விடுதல், பொருந்தி விடுதல். ஒப்ப - உவமையுருபு (உம்) மதியொப்ப. ஒப்பக்கதிர் - பணியையொப்பனை செய்யுங்கருவி. ஒப்பங்கொடுத்தல் - அழுத்துதல், கட்டளை கொடுத்தல். ஒப்படை, ஒப்படைத்தல் - ஒப்புக் கொடுத்தல். ஒப்பணி - ஓரலங்காரம். ஒப்பந்தம் - உடன்பிடிக்கை, ஒப்பரவு, சமன். ஒப்பமிடுதல் - உலோகங்களை யொப் பனையாக்கல். ஒப்பம் - கையெழுத்து, நிலமுதலிய வற்றினொப்பம், மினுக்குதல். ஒப்பம்பண்ணுதல் - ஒப்பனையாக்கல். ஒப்பரவு - ஒப்பம்,ஒழுங்கு, சமாதானம். ஒப்பளவை - உவமையினாலுவமே யத்தையறிவது. ஒப்பனை - அலங்கரித்தல், அலங் காரம், உவமை, ஒப்பரவு, சாட்சி, செவ்வை. ஒப்பாகுதல் - சமானமாகுதல், சரி வருதல். ஒப்பாசாரம் - கண்சாடை, மாரீசம். ஒப்பாரி - ஒப்பு, ஒப்புச்சொல்லி யழுதல். ஒப்பிடுதல் - உவமித்தல், சமப்படுத்தல். ஒப்பிதம் - இசைவு, ஒவ்வுதல், மட்டம். ஒப்பித்தல் - உவமித்தல், ஒத்துக் கொள்ளுதல், ஒத்துவிடுதல், ஒப்பனை செய்தல், சம்மதித்தல். ஒப்பிலபோலி - ஒப்புவமையைக் காட்ட வராதபோலென்னுஞ் சொல். ஒப்பிலுவமை - ஓரலங்காரம், அஃது ஒப்பின்றெனக் கூறுதல், (உம்) தானேதனக்குநிகர். ஒப்பின்முடித்தல் - ஓர்யுத்தி. ஒப்பு - அழகு, உவமானம், ஒப்பாரி, ஒப்பென்னேவல், கூட்டு, சமன், சம்மதம், பொருந்தல். ஒப்புக்கொடுத்தல் - ஒப்புவித்தல், கையளித்தல். ஒப்புக்கொப்பாரம் - விருந்துமுதலிய உபசாரஞ்செய்தல். ஒப்புக்கொள்ளுதல் - ஏற்றுக் கொள் ளுதல். ஒப்புதல் - ஒத்தல், சம்மதித்தல், பொருந்தல். ஒப்புப்பொருள் - புகழ்பொருளினுந் தன்னிலுமிருக்கிறசாதாரண தருமத்தி னாலுவமானமாகிற பொருள், (உம்) காக்கையிற்கரிது களம்பழம். ஒப்புமைக்கூட்டம் - ஓரலங்காரம். அஃது பலபொருளைப் பொது வாகியவொரு தருமத்தின் முடித்தல். ஒப்புமைக்கூட்டவுவமை - ஓரலங் காரம். அஃது பலபொருளையொரு தருமத்தின் முடித்துவ மானித்தல். ஒப்புரவு - கொடை, சமாதானம், முறைமை. ஒப்புவமை - ஓரலங்காரம். அஃது உவமிக்கப்பட்ட பொருளை மற் றோருவமைக் கெடுத்துவமிப்பது. ஒப்புவித்தல் - அத்தாட்சி பண்ணல், ஒப்புக்கொடுத்தல். ஒப்புறுத்தல் - உவமித்தல். ஒயிலமரம் - ஆக்கினைக்கென்று நிறுத்தியமரம். ஒயில் - அலங்காரம், சாயல். ஒய்தல் - தவிர்தல். ஒய்யல் - ஒழிதல், செலுத்தல். ஒய்யாரம் - அலங்காரம், ஆடம்பரம், கெறுவம், சாயல். ஒய்யெனல் - மந்தக்குறிப்பு. ஒரித்தல் - இட்டமாயிருத்தல். ஒருகண்டசீர் - எப்போதும். ஒருகண்ணன் - ஒற்றைக்கண்ணன். ஒருகண்ணுக்குறங்கல் - ஒருமுறை யுறங்கல். ஒருகாலிலி - குபேரன், சனி. ஒருகுடி, ஒருகுடித்தமர் - தாயத்தார். ஒருகூட்டு, ஒருகை - ஒருசேர்மானம், ஒருபக்கம், ஒன்றிப்பு. ஒருகொடி - ஒருவமிசம். ஒருகொள்ளை - மிகுதி. ஒருக்கணித்தல் - ஒருச்சாய்த்தல். ஒருக்கம் - ஒருதன்மை, மனவொடுக் கம். ஒருக்கால் - ஒருமுறை. ஒருக்கிடை - ஒரேகிடை. ஒருக்குதல் - ஒருப்படுத்தல். ஒருங்கல் - அடங்கல், கேடு. ஒருங்கு - அடக்கம், அழிவு, எல்லாம், ஒருங்கென்னேவல், ஒருதன்மை, ஒருமிக்க, கூடிநிற்றல். ஒருங்குடன்றோற்றம் - ஓரலங்காரம். அஃது காரணகாரியமொருங்கு தோற்றல். ஒருங்குதல் - அடங்குதல், அழிகுதல், ஒருவழிப்படல். ஒருசந்தி - ஒருநேரப்போசனம், விரதம். ஒருசாயல் - ஒரேமாதிரி. ஒருசாய்வு - ஒருகண்டசீர். ஒருசாரார் - ஒரு நூலாசிரியர், ஒரு புடையார். ஒருசார் - ஒருபக்கம். ஒருசிறை - ஒதுக்கிடம், ஒருபக்கம். ஒருசேர - ஒருமிக்க. ஒருசொன்னீர்மை - ஒருசொற்றன்மை. ஒருச்சரிதல் - ஒருபுறத்துக்குச்சரிதல். ஒருச்சரிவு - ஒருச்சரிதல். ஒருச்சாய்தல் - ஒருபுறத்துக்குச்சாய்தல். ஒருச்சாய்த்தல் - ஒருபக்கத்துக்குச் சாயப்பண்ணல். ஒருச்சாய்ப்பு - ஒருபுறத்துக்குச்சரிவு. ஒருதரம் - ஒருமுறை. ஒருதலை - உறுதி, ஒரு பக்கம், நிசம். ஒருதலைக்காமம் - ஆடவனுந்திறியு மங்கங்கிருந்து வருந்தல். ஒருதலை துணிதல் - ஓர்யுத்தி. ஒருதலைநோவு - ஒருத்தலைவி. ஒருதலையுள்ளுதல் - ஒருதலைக் காமத்தோர் புணர்ச்சியை யிடை விடாது நினைத்தல், அஃது பத்தவத்தையினொன்று. ஒருதலைவழக்கு - ஒருத்தலைநியாயம். ஒருதன்மை - ஒருநிலை, ஒரேவிதம், மாறாத தன்மை. ஒருதாரை - ஒருமிக்க. ஒருதாரைக்கத்தி - ஒருபுறங்கூருள்ள கத்தி. ஒருத்தலைநியாயம் - ஒருபுறநியாயம். ஒருத்தலைப்பரம், ஒருத்தலைப்பாரம் - ஒருபுறத்துப் பாரம். ஒருத்தலைவலி - ஒருபுறத்துத்தலை வலி. ஒருத்தல் - எருமை, கரடி, கவரி, பன்றி, புலி, புல்வாய், மரை, மான், யானை இவற்றினாண், விலங் கேற்றின் பொது. ஒருநெல்லுப்பெருவெள்ளை - ஓர் நெல். ஒருபடி - ஒருகொத்து, வகை, வருத் தத்தோடே. ஒருபடித்தாய் - அவ்விதமாய், பிரயாச மாய், மட்டாய். ஒருபவம் - ஒருபிறப்பு. ஒருபாவொருபஃது - ஓர் பிரபந்தம். அஃது அகவல் வெண்பா கலித் துறை யெனுமிவற் றொன்றாலந் தாதித் தொடையாய்ப் பத்துச் செய்யுட்பாடுவது. ஒருபுடை - ஒருபக்கம். ஒருபுடையொப்புமை - ஏகதேசவுவமம். ஒருபொருட்டீபகம் - ஒருபொருடா னேகவிமுற்றுந்தீபகமாய்நின்று முடிவது. ஒருபொருட்பன்மொழி - ஒருபொரு ளைக் குறித்து வரும் பலசொல். ஒருபொருள் - ஏகார்த்தம், கடவுள். ஒருபொருள் குறித்த பலபெயர்த்திரி சொல் - செந்தமிழ்நிலத்து மொழி களாய்ச் செய்யுட்கேயுரிய வாய்க் கற்றோர்க்கு மாத்திரம் பொருள் விளக்கினவாய் ஒன்றன் பெயரை யே விளக்கும் பலபெயர்த்திரி சொல், (உம்) கிள்ளை, தத்தை. ஒருபொருள்குறித்த பலவிடைத்திரி சொல் - செந்தமிழ் நிலத்து மொழி களாய்க் கற்றோர்க்கு மாத்திரம் பொருளைவிளக்கி ஒரு பொரு டரும் பலவிடைத் திரிசொல், (உம்) என்ஏன். ஒருபொருள் குறித்த பலவினைத் திரிசொல் - செந்தமிழ்நிலத்து மொழி களாய்க் கற்றோர்க்கு மாத்திரம் பொருள் விளக்கித்திரி சொல்லாய் நிற்கும் பலவினைத் திரிசொல் (உம்) சரித்தான், நடந்தான். ஒருபொழுது - ஒருசந்தி. ஒருப்படல் - ஒருமனப்படல், ஒன்றித் தல், சம்மதித்தல். ஒருப்பாடு - சம்மதம். ஒருப்பார்வை - விடாதுபார்த்தல். ஒருப்பிடி - உறுதிப்பிடி, வலுபிடி. ஒருமட்டம் - ஒரேசரி. ஒருமரம் - செம்மரம். ஒருமனப்படுதல் - ஓரெண்ணமாதல் சம்மதப்படுதல். ஒருமிக்க - ஏகமாய். ஒருமித்தல் - ஒன்றுபடல், சம்மதித்தல். ஒருமிப்பு - ஒன்றிப்பு. ஒருமுகம் - ஒருகூட்டம், ஒருபுறம். ஒருமை - இறையுணர்வு, ஒரு தன்மை, ஒருபிறப்பு, ஒற்றுமை, ஓர்மம், தனிமை, நிச்சயம். ஒருமைப்படுதல் - உடன்படல், ஒற்று மைப்படல். ஒருமைமகள் - பதிவிருதை. ஒருமையிற்பன்மை - ஒருமைப்பாலிற் பன்மைப்பால் கூறல், (உம்) ஒருவர் வந்தார். ஒருமொழி - ஒருபொருளையே விளக்கி நிற்குஞ்சொல். ஒருவகை - ஒருபோங்கு, ஒருவிதம். ஒருவந்தம் - உறுதி, ஒற்றுமை, சம்பந்தம், தனித்திருக்குமிடம். ஒருவயிற்போலியுவமை - ஓரலங்காரம். அஃது ஒருதொடர்மொழிக்கட் பலவுவமை வரவவ்வுவமை தோறு முவமைச் சொற்புணரா தொரு வமைச் சொற்புணர்த்து வருவது. ஒருவழிச்சேறல் விலக்கு - ஓரலங் காரம். அஃது ஒரு பொருட்கோர் காரியங் காட்டியதற்கு மாத்திர மன்று இன்னுஞ் சிலவற்றிற் குண்டெனக்கூறுவது. ஒருவழிப்படுதல் - ஒன்றாய்ச்சேர்தல், நேர்படுதல். ஒருவழிமேவல் - ஓரவாரம். ஒருவழியொப்பினொரு பொருண் மொழிதல் - ஓரலங்காரம். ஒருவிசை - ஒருமுறை. ஒருவிதம் - ஒருமாதிரி. ஒருவினைச்சிலேடை - ஓரலங்காரம். அஃது ஒருவினையான் வருவது. ஒருவு - ஆடு, செய்யுளுறுப்பினோர். பேதம், நீங்கென்னேவல். ஒருவுதல் - நீங்கல். ஒருவேளை - ஒருபொழுது. ஒரூஉமுரண் - முதலாஞ்சீரினு நான் காஞ்சீரினுமுரண்வருவது. ஒரூஉமோனை, ஒரூத்தொடை - செய் யுட்டொடையினொன்று, அஃது நாற்சீரடியில் முதற்சீருமிறுதிச் சீருமோனை முதலியவற்றிலியைந் திருப்பது, முதற்சீர்க் கண்ணு நான் காஞ்சீர்க்கண்ணு மோனை வருவது. ஒரூஉவண்ணம் - ஒரீத்தொடுப்பது. ஒரூஉவளபெடை - முதற்சீர்க்கண்ணு நான்காஞ்சீர்க்கண்ணுமளபெடை பயிலுவது. ஒரூஉவியைபு - ஈற்றுச்சீரினுமீற்றய விரு சீரிடைவிட்டயற் சீரினு மியைபு வருவது. ஒரூஉவெதுகை - முதற்சீர்க்கண்ணு நான்காஞ்சீர்க்கண்ணு மெதுகை வருவது. ஒரே - ஒன்று. ஒரோவொன்று - ஒவ்வொன்று. ஒலி - ஆரவாரம், இடி, ஒலியென் னேவல், ஓசை, காற்று, முழக்கம். ஒலிக்குறி - ஒலியைக்காட்டுங்குறி. ஒலிசை - மணவாளப்பிள்ளைக்குக் கொடுக்குமுபகாரம். ஒலித்தல் - ஆடையழுக்கற்றல், ஆர்த் தல், தளைத்தல், மிகக்காய்த்தல். ஒலிமுகம், ஒலிமுகவாய்தல் - கோட் டையின் முன்புறவாய்தல். ஒலியலந்தாதி - ஓர்பிரபந்தம். அஃது பதினாறுகலையோரடியாகவைத்து நாலடிக்கறுபத்து நாலுகலை வகுத்துப் பலசந்தமாக வண்ண முங் கலைவைப்புந் தவறாமலந் தாதித்து முப்பது செய்யுட்பாடு வது. அன்றியும் வெண்பா வகவல் கலித்துறையெனு மிம்மூன்றை யும் பப்பத்தாக வந்தாதித்துப் பாடியதுமாம். ஒலியல் - சீலை, தீ, தெரு, தோல், பூ மாலை, யாறு. ஒலியெழுத்து - ஒலிவடிவாமெழுத்து. ஒலுகல் - ஒதுங்குதல், ஒல்கல். ஒல் - ஒலிக்குறிப்பு, ஒல்லென்னேவல், முடிவிடம். ஒல்கல், ஒல்குதல் - அருகல், குழைதல், குறைதல், தளர்தல், துவளல், மெலிதல். ஒல்லட்டை - ஓரலன். ஒல்லல் - இயலல், பொருந்தல். ஒல்லாடி - ஒஞ்சட்டை. ஒல்லாமை - இகழ்தல், இயலாமை, பொருந்தாமை, வெறுப்பு. ஒல்லார் - பகைவர். ஒல்லி - ஒடுங்கினஆள், ஒடுங்கினது, மெலிந்தவன், வெறிதாய்ப்போன தேங்காய் முதலியன. ஒல்லிமேய்தல் - தேங்காய்ப்பருப் பிடையிடையே வெறிதாய்ப் போதல். ஒல்லுதல் - இணங்குதல், இயலுதல், சம்பவித்தல், நிந்தித்தல், நிறை வேற்றல், பொத்துதல், பொருந்தல். ஒல்லுநர் - நூலுரையுணர்வோர், மித்திரர். ஒல்லெனல் - அனுகரணவோசை, ஒலிக்குறிப்பு. ஒல்லை - கடுப்பு, காலவிரைவு, சிறு பொழுது, சீக்கிரம், பழமை. ஒவ்வாதபக்கம் - பொருந்தாத பக்கம். ஒவ்வாமை - இயலாமை, தகுதியீனம், பொருந்தாமை. ஒவ்வுதல் - இசைதல், இணங்குதல், பொருந்துதல். ஒவ்வொன்று - ஒன்றொன்று, வகைக் கொன்று. ஒழி - உப்பட்டி, ஒழியென்னேவல். ஒழிகடை - ஈறு. ஒழிகை - ஓய்தல், விடுகை. ஒழிதல் - அழிதல், சாதல், தவிர்தல், நீங்கல், முடிதல், விடுதல். ஒழித்தல் - அழித்தல், எழுச்சி, குறைத் தல், கொல்லல், முடித்தல். ஒழிபணி - பலவற்றைச் சுருக்கிக் காட்டுவது. ஒழிபியல் - பொதுவியல். ஒழிபு - மிச்சம். ஒழிப்பணி - அபநுதியுருபகவலங் காரம், அஃது ஒருதருமத்தையா ரோபித்தல். ஒழிப்பு - தவிர்ப்பு, விலக்கு. ஒழிப்புயர்வு நவிற்சியணி - ஓரலங் காரம், அஃது உயர்புநவிற்சி ஒழிப் பொடு வருதல். ஒழிய - தவிர. ஒழியவைத்தல் - ஒழிவித்துவைத்தல், ஒழிவுபார்த்தல், முடித்தல். ஒழியாமை - ஒழிவில்லாமை. ஒழியாவொழுக்கம் - பிறழாவொழுக் கம். ஒழியிசை, ஒழியிசையெச்சம் - ஒழிந்து நிற்குஞ் சொற்களைக் கொண்டு முடிவது. ஒழியிசையெஞ்சணி - ஒழியிசை யெச்சம். ஒழியிசையோகாரம் - ஒழி பொருளைக் காட்டுமோகாரம், (உம்) கொளலோ கொண்டான். ஒழிவளவை - ஓரளவை, அஃது கீழ்ச்சேரிதோற்றதென்புளிமேற் சேரிவென்றதெனக் கோடல். ஒழிவித்தல் - அழித்தல், ஒழியவைத் தல், முடித்தல். ஒழிவு - ஒழிகை, குறைவு, முடிவு. ஒழுகல் - உயர்ச்சி, ஒழுக்கம், நடை, நீர்முதலியவொழுகுதல், நீர் முதலியவோடுதல், நீளம், போதல், முறையாக நடத்தல். ஒழுகிசை - ஓரலங்காரம். அஃது இன்னாவிசையின்றிவருவது. ஒழுகிசைச்செப்பல் - வெண்சீரு மியற்சீரும் விரவிவருவது. ஒழுகிகைத்துள்ளல் - கலிப்பா வோசையினொன்று. ஒழுசிகையகவல் - நேரொன்றா சிரியத்தளையு நிரையொன்றா சிரியத்தளையும் விரவி வருவது. ஒழுகு - உயரம், ஒழுகென்னேவல், ஒழுங்கு, நீளம், பண்டி, முறைமை, முறைமையாய் நடத்தல். ஒழுகுதல் - நீர்முதலியவார்தல். ஒழுகுவண்ணம் - ஓசையினொழு கும் வண்ணம். ஒழுகை - ஒழுகு, பண்டி. ஒழுக்கம் - உயர்ச்சி, எழுச்சி, குலம், நடை, பண்பு, புண்ணியத் தோற்றந் நான்கினொன்று, மரியாதை, முறை, வழி. ஒழுக்கம் - அறப்பான் மூன்றனு ளொன்று, அஃது நான்காச்சிரமத் தோர்க்கு விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலும். ஒழுக்கல் - எழுச்சி, ஒழுகுவித்தல். ஒழுக்கவணக்கம் - நல்லொழுக்கம். ஒழுக்கவழு - தாமதகுணத்தொன்று. அஃது முறைத்தவறு. ஒழுக்கு - ஒழுகல், ஒழுக்கென் னேவல், நடை, முறைமை. ஒழுக்குதல் - ஒழுகச்செய்தல், துளித் தல், நடத்துதல். ஒழுக்கெறும்பு - ஓரெறும்பு. ஒழுங்கல் - ஒழுங்குதவறுதல், நிரல் படல். ஒழுங்கு - ஒழுங்கென்னேவல், கட்ட ளை, நன்னடை, நிரை, முறை. ஒழுங்கை - ஒடுங்கியவழி. ஒளி - ஒளிப்பிடம், ஒளியென்னே வல், சந்திரன், சூரியன், நெருப்பு, பிரவை, புகழ், விண்மீன், விளக்கு, வெயில். ஒளித்தல் - பதுங்கல், மறைதல், மறைத்தல். ஒளிப்பிடம் - மறைவிடம். ஒளிப்பு - ஒளிக்குதல், மறைவு. ஒளிமழுங்கல் - பிரகாசம் மங்குதல். ஒளியிலுருவம் - சுவரிலெழுதுருவ முதலியன. ஒளியிழை - ஆபரணம், பெண். ஒளியுள்ளுருவம் - கண்ணாடி யுளுருவம். ஒளியோன் - சூரியன். ஒளிர்தல் - ஒளிசெய்தல். ஒளிர்பு - பிரவை. ஒளிர்முகம் - வயிரக்கல். ஒளிவட்டம் - கண்ணாடி, சக்கிரம். ஒளிவட்டி - பச்சைக்கருப்பூரம். ஒளிவாடுதல் - ஒளிவிடுதல். ஒளிவிடுதல்,ஒளிவீசுதல் - பிரகாசித்தல். ஒளிவு - ஒளி. ஒளிவைத்தல் - மிருகங்களைப் படுக்க மறைப்பு வைத்தல். ஒளிவைத்துப்பார்த்தல் - உற்றுப் பார்த்தல், கைவிலக்கு வைத்துப் பார்த்தல். ஒளிறல் - ஒளிகொள்ளல். ஒள் - அழகு, ஒளி, மேன்மை. ஒள்ளியர் - அறிவுடையோர். ஒள்ளியோன் - அறிவுடையோன், ஒளி செய்வோன், சுக்கிரன், நல்லோன். ஒறுத்தல் - அலைத்தல், கடிதல், குறை தல், குறைத்தல், நோய் செய்தல், வருத்தல், வெறுத்தல். ஒறுப்பு - அடக்கம், அதட்டுதல், குறைவு, தண்டிப்பு, வெறுப்பு. ஒறுவாய் - ஒடிந்தவாய். ஒறுவினை - தீராவருத்தம். ஒறுவு - வருத்தம். ஒற்கம் - அடக்கம், ஒடுக்கம், பொறுமை, வறுமை. ஒற்றர் - தூதர், வேவுகாரர். ஒற்றல் - உடுத்தல், ஒற்றுதல். ஒற்றளபெடை - மெய்யெழுத்தினீண் டிசை கொள்வது. ஒற்றாடல் - தூதுசொல்லல். ஒற்றி - ஈட்டடைமானம். ஒற்றிடம் - ஓர் பூச்சு. ஒற்றிடுதல் - வக்கம்பிடித்தல். ஒற்றித்தபக்கம் - ஒருமைப்பட்ட பக்கம். ஒற்றித்தல் - ஒற்றைப்பட வெண்ணல். ஒற்றித்தவெண் - ஒற்றைப்பட்ட கணக்கு. ஒற்றியூரன் - சிவன். ஒற்று - உளவு, ஒற்றும் பொட்டணி, ஒற்றென்னேவல், தூதன், தூது, மெய்யெழுத்து. ஒற்றுதல் - அடுத்தல், உடுத்தல், எற்றுதல், ஒற்றல், கிட்டல், தள்ளி விடுதல், விலகுதல். ஒற்றுப்பேர்த்தல் - மிறைக்கவியி னோருறுப்பு. அஃது ஓர்பயனன்றி யின்னுமோர் பயன்படுத்தவெழுத் தைத்திரித்தல். ஒற்றுமை - உரிமை, ஒருமை, குறிப்பு, செல்வம், தகுதி. ஒற்றுமைகோடல் - வேளாண்மை மாந்தரியல்பினொன்று. அஃது ஒன்றித்து வாழ்தல். ஒற்றுமைநயம் - ஒருமித்த தன்மை. ஒற்றெழுத்து - மெய்யெழுத்து. ஒற்றை - ஒன்று, தனிமை, தனியேடு. ஒற்றைக்கடவை - பன்னத்திலொற்றை விழுந்தவிடம். ஒற்றைக்கண்ணன் - குபேரன், சுக்கிரன். ஒற்றைக்குடை - ஏகசத்திரம். ஒற்றைக்கொம்பன் - வினாயகன். ஒற்றைத்தாலி - தனித்தாலி. ஒற்றைத்தாட்பூட்டு - ஒரேதாட்பூட்டு. ஒற்றையாழித்தேரோன் - சூரியன். ஒற்றையாழித்தேர் - சூரியன்றேர். ஒற்றையிரட்டைபிடித்தல் - ஓர் விளை யாட்டு. ஒற்றொலிவெண்டுறை - ஓரோசைத் தான் வரும் வெண்டுறை. ஒற்றொழிபாட்டு - ஒற்றெழுத்துத் தீர்ந்தவொரு பொருட்பாட்டு. ஒன்பான் - ஒன்பது. ஒன்ற - பொருந்த. ஒன்றடிமன்றடி - ஒருகலப்பு, குழப்பம், தலைதடுமாற்றம். ஒன்றப்பார்த்தல் - அடுக்கப்பார்த்தல். ஒன்றல் - ஒன்றுதல். ஒன்றறியாதவன் - ஏதுமறியாதவன். ஒன்றற்றவன் - கூடாதவன், வெறுவிலி. ஒன்றன்கூட்டம் - ஒருபொருளின் கூட்டம். ஒன்றன்பால் - ஒருமைப்பால். ஒன்றாதவஞ்சித்தளை - யாப்பி னோருறுப்பு. அஃதுநேர்முன் நேரொன்றி வருவது. ஒன்றாதவஞ்சித்தளை - கனி முன்னேனு நிழன்முன்னேனு நேரொன்றி வருவது. ஒன்றாய் - ஒருமிக்க. ஒன்றார் - பகைவர். ஒன்றாலொன்றும் - யாதொன்றும். ஒன்றி - ஒற்றை, ஒன்றியென்னேவல், தனித்தஆள், தனித்தது. ஒன்றிக்காரன் - சமுசாரமில்லாதவன். ஒன்றித்தல் - ஒருமைப்படுதல், பொருந்துதல். ஒன்றிப்பு - ஒருமிப்பு. ஒன்றியவஞ்சித்தளை - யாப்பினோ ருறுப்பு. அஃது கனிமுன்னிரை யொன்றி வருவது. ஒன்றினமுடித்தறனனினமுடித்தல் - ஓர் யுத்தி. ஒன்றின்மை - யாதொருபற்று மில்லாமை. ஒன்று - ஏகம், ஒன்றென்னேவல். ஒன்றுகட்டுதல் - சரிப்படுத்தல். ஒன்றுகற்றவன - சிலகற்றவன். ஒன்றுகூடியிருத்தல் - ஆடவனுந்திறி யுந்தங்களிற் கலந்திருத்தல், ஒன்றித் திருத்தல். ஒன்றுகூட்டு - உறவு, ஒருகூட்டு, கொண்டுகூட்டு. ஒன்றுக்கற்றவன் - கூட்டற்றவன். ஒன்றுக்கிருத்தல் - சலம்விடுதல். ஒன்றுக்குப்போதல் - சலங்கழிக்கப் போதல். ஒன்றுக்கொன்று - ஒன்றோடொன்று, பதிலுக்குப்பதில். ஒன்றுதல் - இசைதல், இணங்கல், ஐக்கப்படுதல், பொருந்துதல். ஒன்றுபடல், ஒன்றுபடுதல் - கூடுதல், பொருந்துதல். ஒன்றுபாதி - அத்தசாமம், ஒன்றிற் பாதி, சிலபல. ஒன்றுமாறியொன்று - ஒன்றன்பின் னொன்று. ஒன்றுநர் - சினேகிதர், மித்திரர். ஒன்றைவிட்டயல், ஒன்றைவிட்டொன்று - அடுத்ததைவிட்டு மற்றது. ஒன்றொழிபொதுச்சொல் - இருதி ணையிலு மாண்பால் பெண்பா விரண்டிற்கும் பொதுவாய் நின்று அப்பால்களினொரு பாலைக் குறிப்பினீக்குஞ்சொல் (உம்) ஆயிரமக்கள் போர்செய்தார். ஒன்றோ - அதிசயவிரக்கச்சொல், இடைச்சொல் (உம்) பொய்படு மொன்றோடனை பூணும். ஒன்னப்பூ - மாதர்காதணியினொன்று. ஒன்னலர் - பகைவர். ஒன்னார் - பகைவர். ஓ ஓ - அசைநிலை (உம்) வம்மினோ, அதிசயவிரக்கச்சொல் (உம்) ஓபுதினம், இரக்கச்சொல் (உம்) ஓகெட்டேன், இழிவுசிறப்பு (உம்) ஓகொடியன், உயர்வுசிறப்பு (உம்) ஓபெரியன், எதிர்மறை (உம்) யானோசெய்தது, ஒழியிசை (உம்) கொளலோகொண்டான், ஓரெழுத்து, தெரிநிலை (உம்) ஆணோ அதுவுமன்று, பிரிநிலை (உம்) அவனோகொண்டான், மடையடைக்குங்கதவு, வினா (உம்) சாத்தனோ, அகாரஉகார சந்தியக்கரம், அயன், அரன், அழைத்தல், இரக்கம் இவற்றைக் காட்டு மோரு பசற்கம். ஓகணம், ஓகோதனி - மூட்டைப் பூச்சி. ஓகம் - அடைக்கலம், ஓர்குருவி, சமுகம், திரட்டு, புகலிடம், பெருக்கு, போதனை, வீடு. ஓகாரம் - ஓரெழுத்து. ஓகாரவுரு, ஓங்காரவுரு - கடவுள். ஓகுலம் - அப்பம். ஓகை - உவகை. ஓகோ - அதிசயச்சொல். ஓக்கமிரட்டி - ஓர்வகைக்கலித்தாழிசை. ஓக்கம் - உயர்ச்சி, எழூஉதல், பருமை, பெருமை. ஓக்காளம் - ஓங்காளம். ஓங்கலுற்பவன் - காந்தபாஷாணம். ஓங்கல் - அரசன், உயர்ச்சி, எழுச்சி, சத்திபண்ணல், மரக்கலம், மலை, மூங்கில், மேடு, யானை, வலியுடை யோன். ஓங்காரம் - பிரணவம். ஓங்காரவுரு - கௌரிபாஷாணம், கடவுள். ஓங்காரி - சத்தி. ஓங்காரித்தல் - உறுக்குதல். ஓங்கானம் - வாந்திப்பு. ஓங்கில் - ஓர் மீன். ஓங்குதல் - அதிகப்படல், உயர்தல், உயர்த்துதல், தேறுதல், வளர்தல். ஓசம் - கீர்த்தி, பிரவை, கோசம், தாபரம், பிராண வாயு. ஓசரம் - பதில். ஓசரி - கேடு, துக்கக்குறிப்பு. ஓசனித்தல் - பறவைசிறகடித்தல். ஓசன் - உவாத்தி. ஓசீவனம் - பிழைப்பு. ஓசு - கீர்த்தி. ஓசை - ஒலி, கீர்த்தி, வாழை. ஓசைக்கழல் - வீரவெண்டயம். ஓசையுடைமை - நூலழகினொன்று. ஓச்சம் - பெரும்பேர். ஓச்சர் - கணக்காயர். ஓச்சல் - எறிதல், ஓட்டல், செலுத்தல். ஓடதி - ஒருகாற்காய்த்துப்படுமரம், கொடி, மரமுதன்மருந்து. ஓடதிபதி - சந்திரன். ஓடம் - தோணி, மிதவை, நெய்வார் கருவியினொன்று. ஓடல் - அச்சக்குறிப்பு, ஓடுதல். ஓடவைத்தல் - புடமிடுதல். ஓடாணி - ஆபரணக் கடைப் பூட் டாணி. ஓடாவி - சித்திரகாரன், தச்சன், படகு செய்வோன். ஓடி - ஓடுவது, ஓடுவாள், ஓடுவான், வனநெல். ஓடி, ஓடிகை - வனநெல். ஓடியம் - சபைக்கடாப்பேச்சு. ஓடு -ஆமைமுதலியவற்றினோடு, இரப்போர்கலம், உடைந்தமண் பாண்டம், ஓடென்னேவல், கொட்டைகளினுறை, நீளுதல், மூன்றனுருபு, வீடுவேயுமோடு. ஓடுதல் - நீர்முதலியவோடுதல், வளர்தல், பிளத்தல். ஓடுதாவடி - ஓடித்திரிதல். ஓடுபந்தர் - நடைப்பந்தர். ஓடுவிப்புருதி - ஓர் சிலந்தி. ஓடை - அகழி, ஓர் கொடி, கிலு கிலுப்பை, குளம், நெற்றிப்பட்டம் மலைவழி, யானைநுதற்பட்டம். ஓடை - ஓர்மரம், யானை. ஓட்டபல்லவம் - மேலுதடு. ஓட்டம் - உதடு, ஓடுதல், தோல்வி, மேலுதடு. ஓட்டல் - ஓடப்பண்ணல், செலுத்தல். ஓட்டாங்கிழிஞ்சில் - ஓர்மீன். ஓட்டாங்குச்சு - கலவோடு. ஓட்டாம்பாரை - ஓர்மீன். ஓட்டி - ஓடப்பண்ணுவோன். ஓட்டுத்துத்தி - ஓர்பூடு. ஓட்டுமுத்து - உள்வயிரமற்றமுத்து. ஓட்டை - சில்லி, துவாரம். ஓட்டைவாயன் - வெளிவாயன். ஓணம் - ஆறு, திருவோணம். ஓணான் - ஓந்தி. ஓணான்குத்தி - ஓர் பருந்து. ஓதக்கால் - பெருங்கால். ஓதமிறங்குதல் - பீசமூதிப்பருத்தல். ஓதம் - அண்டவாதம், ஈரம், ஓர் வித வீக்கம், கடல், கடற்றிரை, பெருக்கு, வெள்ளம். ஓதல் - அந்தணர்வணிகர்க்குரியவறு தொழிலினொன்று, சொல்லல், படித்தல், போதித்தல், மந்திரஞ் செபித்தல், வாசித்தல், ஒழிதல். ஓதனம் - உண்டி, சோறு, பெருமை, போர். ஓதன்மை - ஓதற்றன்மை, பாடல். ஓதி - அறிவு, அறிவுடையோன், இடங் கழிமை, ஓந்தி, கல்வி, ஞானம், பூனை, பெண்மயிர், போர், மலை. ஓது - பூனை. ஓதிமமுயர்த்தோன் - பிரமன். ஓதிமம் - அன்னம், கவரிமா, மலை. ஓதுதல் - சொல்லுதல், படித்தல், போதித்தல், மந்திரமுச்சரித்தல். ஓதுவார்க்குணவிடுதல் - அறமுப் பத்திரண்டினொன்று. ஓதுவான் - ஆசான், திருப்பாட்டுப் பாடுவோன், மாணாக்கன். ஓதுவித்தல் - அந்தணரரசர்க்குரிய வறு தொழிலினொன்று, படிப் பித்தல். ஓதை - ஒலி, பேரொலி, மதிலுண் மேடை, மதில், மலை. ஓதைவாரி - இறகு. ஓத்தி - ஓந்தி. ஓத்து - ஓரினப்பொருளை யொரு வழி வைத்திருக்குமியல், வேதம். ஓத்துப்புறனடை - இயலிற்கீற்றிற் சொல்லப்படும்புறனடை. ஓத்துமுறைவைப்பு - ஓர்யுத்தி. ஓத்துரைப்போர் - பொருந்தச் சொல் லுவோர், வேதமோது வோர். ஓநாய் - ஓர்விதநாய். ஓந்தி - ஓணான். ஓமகுண்டம் - வேள்விக்குண்டம். ஓமசாந்தி - ஓமம்வளர்த்துச்சாந்தி பண்ணல். ஓமத்திரவியம் - ஓமத்திற்குரியவுப கரணம். ஓமப்பொடி - திருநீறு. ஓமமண்டபம் - ஓமாலயம். ஓமம் - அசமோதகம், அப்பிரகம், ஓர் பூடு, யாகம். ஓமம்வளர்த்தல் - யாகம்பண்ணல். ஓமல் - பேச்சுப்பரத்தல். ஓமவிறகு - சமிதை. ஓமாக்கினி - ஓமத்தீ. ஓமான் - ஓந்தி. ஓமி - தீ, நீர், நெய். ஓமிடி - துக்கம். ஓமுடிவு - அழிவு. ஓமை - மாமரம். ஒம் - ஆமெனல், தன்மைப்பன்மை விகுதி, பிரணவம், அயன் - அரன் - அரி. ஓம்படல் - சம்மதித்தல். ஓம்படை - காவல், கையடை. ஓம்படைக்கிளவி - கையடைவாக்கு. ஓம்பல் - உண்டாக்கல், பாதுகாத்தல், வளர்த்தல். ஓயல் - ஓய்தல். ஓயாமாரி - இடைவிடாமை. ஓய் - ஓயென்னேவல், பால்பகாவுயர் திணையொருமை முன்னிலை விளியுருபு. ஓய்தல் - ஆறுதல், ஒழிதல், சாய்தல், தளர்தல். ஓய்ந்திருக்குதல் - ஆறியிருக்குதல், வேலையொழிந்திருக்குதல். ஓய்ப்பிடியாள் - ஓரகத்தி. ஓய்வு - சாதல், தளர்வு, முடிதல். ஓய்வுகரை - அளவுமுடிவு. ஓரகத்தி - உருமைச் சுதந்தரகாரி, கணவனின் சகோதரன் மனைவி. ஓரக்கண்ணன் - சாய்ந்த பார்வை யுள்ளவன். ஓரக்காரன் - பக்கபாதக்காரன். ஓரசைச்சீர் - நேரசையானாவது நிரையசை யானாவதுவரு மசைச் சீர். ஓரடிமடக்கு - நான்கடி யுள்ளோரடியே மடங்கிவருவது, (உம்) துறை வாதுறைவார் பொழிற் றுணைவர் நீங்க. ஓரபட்சம் - ஓரவாரம். ஓரம் - காரசாரம், சத்திசாரம், பக்க பாதம், பக்கம், விளிம்பு. ஓரம்பேசல் - ஒருபக்கஞ்சாயப்பேசல். ஓரல் - ஆய்தல், ஒடுக்கமானது. ஓரவாரம் - ஒருபக்கவாரம். ஓரா - ஓர் மீன். ஓராஒட்டி - ஓர் மீன். ஓராசிடை நேரிசை வெண்பா - ஓராசி டையிட்டுவரும் வெண்பா. ஓராட்டு - தாலாட்டு. ஓராட்டுதல் - ஓலாட்டுதல். ஓராயம் - சத்தார். ஓரி - ஆணரி, ஆண்மயிர், ஆண்முசு, ஒல்லட்டை, கடையெழு வள்ளலி லொருவன், கிழநரி, புறமயிர், விலங்கின்படுக்கை, விலங்கேற்றின் பொது. ஓரிசு - ஆயத்தம், இசைவு, இணக்கம், சமாதானம். ஓரிதழ்த்தாமரை - ஓர் பூடு. ஓரிபூத்தல் - தேடாமற்கிடத்தல். ஓரிலைத்துத்தி - ஓர் பூடு. ஓருதல் - ஓர்தல். ஓரும் - அசைச்சொல் (உம்) செயற் பாலதோருமறனே, பெயரெச்சம். ஒருள்ளிப்பூடு - பல்லிலாவுள்ளி. ஓரெழுத்தினம் - ஓரெழுத்துவரிக்குள் வருங்கலி. ஓரெழுத்துமடக்கு - அடிகடோறு மிடைபிறிதெழுத்தின்றி வந்த வெழுத்தே வருவது. ஓரை - இராசிப்பொது, சமயம், சித்திரான்னம், தோழி, மகளிர் கூட்டம், மாதர் விளையாடுங் களம், மாதர்விளையாடுங் கலன் கள், விளையாட்டு, நாழிகை, மூர்த்தம். ஓரோவழி - ஒருசார். ஓரோவிடம், ஓரோவிடை - ஒவ்வொரி டம். ஓர் - ஒன்று, ஓரென்னேவல். ஓர்கட்புள் - காகம். ஓர்குடிமணாளன், ஓர்குடியிற் கொண் டொன் - சகலன். ஓர்க்கோலை - ஓர்வாசனைப் பண்டம். ஓர்சல் - ஓரிசு. ஓர்ச்சி - ஆலோசனை. ஓர்தல் - ஆராய்தல், தெளிதல். ஓர்ப்பு - ஆடூஉக்குணந் நான்கி னொன்று. அஃது ஓர்மம், கரும முடிக்குந் துணிவு, பொதுக்கட்டு தல், பொறுமை. ஓர்மம், ஓர்மிப்பு - மனத்திடன். ஓர்மை - துணிவு. ஓர்வு - ஆராய்வு. ஓலக்கமண்டபம் - சங்கமண்டபம். ஓலக்கம் - சங்கத்தானம், திருச்சமுகம். ஓலமிடுதல் - அபயமிடுதல், அழுதல், கற்றல். ஓலம் - அபயமிட்டழைத்தல், ஒலி, கடல், திரை, துக்கக்குறிப்பு, பாம்பு. ஓலாட்டு - தாலாட்டு. ஓலிடுதல் - ஊளையிடுதல், ஓலமிடுதல். ஓலை - ஒலி, கமுகு தாழை தெங்கு பனைமுதலியவற்றினிலை, சீட்டு. ஓலைக்கணக்கர் - வித்தியார்த்திகள், பண்டிதர். ஓலைக்கண் - ஓலைச்சட்டம். ஓலைக்காந்தல் - ஓலைத்துகள். ஓலைக்கிணாட்டு - ஓலைத்தளிர். ஓலைக்கிழிஞ்சில் - ஓர்விதசங்கு. ஓலைக்கூடு - ஓலைக்குடை. ஓலைதீட்டல் - திருமுகம் வரைதல். ஓலைதீட்டும்படை - எழுத்தாணி. ஓலைப்பூ - தாழைப்பூ. ஓலைமுதிரை - ஓர் முதிரை. ஓலைமூங்கில் - ஓர் மூங்கில். ஓலையெழுதுதல் - சீட்டெழுதுதல், சீதனவுறுதியெழுதுதல். ஓலைவாங்குதல் - சாதல். ஓலைவாளை - ஓர் மீன். ஓல் - ஒலி, ஒலித்தல், ஓலம். ஓவம் - உயரம், சித்திரம், சித்திர வேலை. ஓவர் - ஓவியர், கம்மாளர், பாடற் கீழ் மக்கள். ஓவல் - ஓவுதல். ஓவன் - சித்திரகாரன். ஓவாப்பிணி - மாறாததுன்பம். ஓவாமுயற்சி - ஒழியாமுயற்சி, இஃது வேளாண்மை மாந்தரியல்பு ளொன்று. ஓவியம் - சித்திரம். ஓவியர் - கம்மாளர், சித்திரகாரர். ஓவுதல் - இசைதல், ஒழிதல், வருந்தல். ஓவெனல் - அதிசயக்குறிப்பு, இரக்கக் குறிப்பு. ஓவென்றவெளி - பெரியவெளி. ஓளி - ஒழுங்கு, யானைக்கூடம். ஓனம் - எழுத்தின் சாரியை. ஓனாய் - கோணாய். ஒள ஒள - ஓரெழுத்து, ஒளவென்னேவல், கடித்தல், அழைத்தல், வியப்பு, தடை, இவற்றைக்காட்டு மோருப சருக்கம், அனந்தன், பூமி. ஒளகாரக்குறுக்கம் - தன் மாத்திரையிற் குறுகிய ஒளகாரம். ஒளசரம் - கோடாங்கல்லு. ஒளசனசம் - அட்டாதசதருமசாத் திரம். ஒளசீரம் - ஆசனம், கவரிமாமயிர், படுக்கை. ஒளஷதம், ஒளடதம் - மருந்து. ஒளடதவாதி - ஓர்மதக்காரன். ஒளதகம் - உதகம். ஒளதாரியம் - உதாரம், மிகுகொடை. ஒளதாரியன் - வரையாது கொடுப் போன். ஒளபசிலேஷம் - ஒருவழிமேவல். ஒளபதேயம் - பண்டிச்சில். ஒளபத்தியம் - புணர்ச்சி. ஒளபரிதிகம் - ஈடு. ஒளபாசனம், ஒளபாசனை - உபாசனை, வைதீகச்சடங்கு நடத்தல். ஒளரகம் - உரகம். ஒளரசன் - குலமொத்தகன்னியைத் தீவேட்டுப் பெற்ற புத்திரன். ஒளரிதம் - தருமநூல் பதினெட்டி னொன்று. ஒளவித்தல் - அழுக்காறடைதல், பெருமையடைதல். ஒளவியம் - அழுக்காறு, பொறாமை. ஒளவுதல் - அங்கலாய்த்துவிழுதல், அழுந்தியெடுத்தல். ஒளவை - தவப்பெண், தாய், திருவள் ளுவர் சகோதரி. ஃ ஃ - அக்கேனம் இது கூ. க கஃகான் - ஓரெழுத்து. கஃசு - காற்பலம். க - அரசன், ஆன்மா, உடல், ஓரெழுத்து, கந்தருவசாதி, காமன், காற்று, சூரியன், செல்வம், திரு மால், தீ. தொனி, நமன், பிரமன், மயில், மனம், விநாயகன். ககபதி - கருடன், இராசாளிப்பறவை. ககமாறம் - மணித்தக்காளி. ககம் - அம்பு, பறவை. ககரம் - ஓரெழுத்து, ஒன்றினிலக்கம். ககவசுகம் - ஆல். ககனபம் - வீணாதண்டு. ககனம் - ஆகாயம், காடு, கிழங்கு, படை, புட்பொது. ககனாக்கிரகம் - அண்டமுகடு. ககனாரவிந்தம் - அந்தரத்தாமரை, பொய். ககன் - சூரியன். ககாரம் - ஓரெழுத்து. ககுஞ்சலம் - சாதகப்புள். ககுபம் - திசை, மருதமரம். ககேசன் - கருடன். ககேசுரன், ககேந்திரன் - கருடன். ககோளம் - கோளம், வானவட்டம். ககோளவித்தை - வானசாத்திரம். கக்கசம் - பிரயாசம். கக்கப்பாளம் - கக்கப்பை, கக்கப் பொட்டணி. கக்கப் பொட்டணி - இடுக்குப் பொட்டணி. கக்கம் - கமுக்கட்டு, கைக்குழியின் கீழ், எண்ணெய்க்கடுகு. கக்கரி, கக்கரிகம் - ஓர்கொடி. கக்கலாத்து - ஓர்செந்து. கக்கல் - இருமல், கக்கப்பட்டது, கக்குதல், சத்திபண்ணல். கக்கார் - தேமா. கக்கிஷம், கக்கிசம் - ஒன்றை விளக்கு முறை, ஓர்மாந்திரிய நூல், பிர யாசம், வருத்தம். கக்கிஷாரம், கக்கிசாரம் - பிரயாசம். கக்குதல் - ஆணிமுதலியபுறப்படுதல், இருமுதல், உட்கொள்ளாமை வெளிவருதல், எதிரெடுத்தல், கதிர்குலை முதலியவீனுதல், கொப் பளித்தல், சத்தித்தல். கக்குரீதி - கக்கசம். கக்குவான் - குக்கல். கங்கடம் - கவசம். கங்கணங்கட்டல் - ஒருகாரியத்தி லாயத்தப்படல், சயக்குறியணிதல், விருதுகட்டல். கங்கணம் - கைவளை, நீர்த்துளி, மஞ்சட்காப்பு, முடி. கங்கபத்திரம் - அம்பு, பருந்திறகு. கங்கம் - கழுகு, கோளகபாஷாணம், சீப்பு, தீப்பொறி, பருந்து, பெரு மரம், மரணம், வரம்பு. கங்கன் - பிறவிச்சீர்பந்தபாஷாணம். கங்கரம் - மோர். கங்காதரன் - சிவன், குமரன், வீடுமன். கங்காதீரம் - கங்கைக்கரை. கங்காதேவி - கங்கை. கங்காளமாலி - சிவன். கங்காளம் - உண்கலம், தசைகழிந்த உடன்முழுவெலும்பு. கங்காளன் - சிவன். கங்காளி - காளி. கங்கு - எல்லை, கருந்தினை, கரை, கவர், கழுகு, பக்கம், பருந்து, பனை மட்டையின்கவை, வரம்பருகு, வரம்பு, வரையறை, தீப்பற்றிய துரும்பு, தீப்பொறி. கங்குகரை - எண்ணிக்கை. கங்குல் - இரா, இருள், பரணிநாள். கங்குல்விழிப்பு - கூகை. கங்குற்கிறை - சந்திரன். கங்கேஷமிசுரம் - கவுடதாக்கம். கங்கை - சத்தநதிகளினொன்று, நதி, மேனைபுத்திரரிலொருத்தி. கங்கைகோத்திரம் - நீர்விளங்குன்றம், வேளாளர்குலம். கங்கைக்குணன் - நவட்சாரம். கங்கைசக்களத்தி - பார்ப்பதி. கங்கைதூவி - மேகம். கங்கைபெற்றோன், கங்கைமைந்தன் - குமரன், வினாயகன், வீடுமன். கங்கையோன் - துருசு. கங்கைவேணியன் - சிவன். கசகசப்பு - ஒலிக்குறிப்பு. கசகசா - ஓர் மருந்து. கசகசெனல் - ஒலிக்குறிப்பு. கசகம் - வெள்ளரி. கசகரிகம் - கக்கரி. கசகன்னம் - காதையசைக்கும் வித்தை, மாரீசம். கசகன்னி - வெருகு. கசகுதல் - நழுவுதல், வருந்தல். கசக்கம் - சுணக்கம். கசக்கார் - தேமா. கசக்கு - கயக்கு. கசக்குதல் - கயங்கச்செய்தல், வருத்துதல். கசங்கலம் - கடல். கசங்கனம் - கடைவீதி. கசங்கு - ஈந்து, கசங்கென்னேவல், கயங்கு. கசங்குதல் - குழைதல், தேம்பல், வேலையினாவிளைத்தல். கசடர் - கீழ்மக்கள். கசடு - அய்யம், கீழ்மை, குறைவு, குற்றம், தழும்பு, மாசு. கசட்டை - இளமை, கசப்பு, கயர். கசட்டைத்தயிர் - ஆடைநீக்கினதயிர். கசட்டைப்பிஞ்சு - இளம்பிஞ்சு, கசப்புப் பிஞ்சு. கசத்தல் - கைத்தல், வெறுத்தல். கசந்தலை - கயந்தலை. கசபம் - புல். கசபரீட்சை - கலைஞானமறுபத்தி னான்கினொன்று. அஃது யானைப் பரீட்சை. கசபுடம் - ஆயிரம் எருவைத்தெரிக் கும் புடம். கசபுளுகன் - பெரியபுளுகன். கசப்பு - கைப்பு, மனத்துக்கம், வெறுப்பு. கசப்பி - மயிர்ச்சிகைப்பூடு, வல்லாரை, வேம்பு. கசமடையன் - பெருமூடன். கசமாது - ஊமத்தை. கசபம் - புல். கசம் - ஓரளவு, ஓர் நோய், மயிர், யானை, கயம், தாமரை. கசரிபு - சிங்கம். கசர் - இளநீர்முதலியவற்றின்கயர், ஓர் சரக்கு, ஓர் சுவை. கசர்ப்பு - இறைச்சி. கசலை - துன்பம். கசவஞ்சி - மகாலோபி. கசவம் - கடுகுச்செடி. கசவாரக்கெட்டது - அறக்கெட்டது. கசவிருள் - பெரியவிருள். கசற்பம் - மஞ்சள். கசனை - ஈரம், காவி. கசன் - வியாழன் மகன். கசாகூலம், கசாகூளம் - குப்பை. கசாக்கிரம் - மயிர்நுனி. கசாயம் - கஷாயம். கசாரி - சிங்கம். கசாருகன் - கொலையாளன். கசாளம் - அடையல். கசிகசிப்பு - ஒட்டீரம். கசிதம் - துடுப்பு, பதித்தல், பூச்சு. கசிதல் - அழுதல், இரங்கல், உருகல், ஊறுதல், கரைதல். கசித்தி - வீழி. கசியபன் - காசிபரிஷி. கசிவகத்துண்மை - வேளாண்மை மாந்தரியல்புளொன்று. கசிவு - அழுகை, அன்பு, கசிதல், வருத்தம், வெயர்வை. கசுகசுத்தல் - ஈரலித்தல், கசிவாயிருத் தல். கசுகசுப்பு - ஒட்டீரத்தன்மை. கசுகசெனல் - ஈரமொட்டுங்குறிப்பு. கசுகுசுத்தல் - இரகசியம் பேசுங் குறிப்பு, இரகசியம் பேசுதல். கசுபிசுத்தல் - ஒட்டீரமாயிளகி யிருக்குதல். கசுமாலம் - அழுக்கு, கெட்டது. கசேந்திரஐசுவரியம் - மிகுஐசுவரியம். கசேந்திரன் - அயிராபதம், இராச யானை. கசை - கவசம், குதிரைச்சம்மட்டி, முறுக்கினகம்பி, சவுக்கு, பின்னற் கயிறு. கசைமுறுக்கி - ஓர் கருவி. கச்சகம் - குரங்கு. கச்சக்கடாய் - ஆமை. கச்சந்தூஷன் - தவளை. கச்சட்டம் - கௌபீனம், சண்டை. கச்சபநிதி-குபேரனவநிதியி னொன்று. கச்சபம் - ஆமை, மற்போற்நிலையி னொன்று. கச்சம் - அளவு, கடன், கவசம், குதிரையங்கவடி, துணிவு, நிச்சயம், மரக்கால், மீனெலும்பு, முன் றானை, யானைக் கழுத்திடு கயிறு, வார். கச்சல் - ஓர் மீன், கைப்பு, பிசகு, வெறுப்பு. கச்சவடம் - வியாபாரம். கச்சளம் - இருள், கண்ணிடுமை. கச்சற்கொடி - ஓர் கொடி. கச்சற்கோரை - ஓர் கோரை. கச்சன் - ஆசை. கச்சாந்தகரை - திராய். கச்சாயம் - ஓர் பணிகாரம், கடலரு கானமுனை. கச்சாலம் - சுரபாஷாணம். கச்சாலை - காஞ்சிநகரம். கச்சான் - மேல்காற்று, மேற்றிசை. கச்சி - ஊமற்பிளவு, காஞ்சிபுரம், சிரட்டைக்கையில். கச்சு - இடைக்கட்டு, பிணிகை, முலைக்கட்டு. கச்சுக்கச்செனல் - விடாதுபிதற்றல். கச்சுச்சாத்தல் - விக்கிரகத்துக்குக் கச்சிடுதல். கச்சுப்பிச்சுப்படுதல் - கம்பலைப் படுதல். கச்சுரு - நெருப்பு. கச்சூரம் - கழற்சிக்கொடி, பேரீந்து. கச்சை - கயிறு, கவசம், கௌபீனம், தழும்பு, யானை கட்டுங்கயிறு, வார். கச்சைகட்டுதல் - அரைகட்டுதல், தாறுபாய்ச்சிக்கட்டுதல். கச்சைக்கொடியன் - கன்னன். கச்சோணி - வாசனைப்பண்டம். கச்சோதநிறமணி - சாதுரங்கப்பது மராகம். கச்சோதம் - மின்மினி. கச்சோலம் - ஏலப்பட்டை. கஞலல் - கஞறல். கஞறம் - கள். கஞறல் - எழுச்சி, கடுப்பு, சினக் குறிப்பு, நிறைதல், நெருங்கல், பொலிவு, மிகுதி. கஞன்றல் - எழுச்சி. கஞ்சகம் - கச்சு, விடுந்தலைப்பு, கண் ணிடுமோர் மருந்து, முன்றானை. கஞ்சகன் - கண்ணன். கஞ்சகாரர் - கன்னார். கஞ்சக்கருவி - தாளம்முதலிய வெண் கலவாத்தியம். கஞ்சத்தகடு - ஈயத்தினாற் செய்யு மோர்தகடு. கஞ்சம் - அப்பவருக்கம், ஓரூர், கஞ்சா, கற்கடகபாஷாணம், கைத் தாளம், தாமரை, நீர், வஞ்சம், வெண்கலம். கஞ்சரன் - சூரியன், பிரமன். கஞ்சரீடம் - வலியான்குருவி. கஞ்சல் - எளியது, குப்பை, கூளம். கஞ்சனம் - கண்ணாடி, கரிக்குருவி, கைத்தாளம், வலியான். கஞ்சனை - கண்ணாடி,கலசப் பானை. கஞ்சன் - ஓரரசன், பிரமா, குறியவன். கஞ்சா - கள், கோரக்காமூலி, சாராயம். கஞ்சாக்குடுக்கை - குடுகுடா. கஞ்சாங்கொற்றி - கனமற்றது, பாலற் றது, பிச்சிப்பேய். கஞ்சாங்கோரை - ஓர் துளசி. கஞ்சாரி - கண்ணன். கஞ்சாலேகியம் - ஓர் மருந்து. கஞ்சி - அன்னப்பால், காஞ்சி. கஞ்சிகை - இரத்தினச்சிவிகை, சீலை, திரைச்சீலை. கஞ்சிதண்ணீர்குடித்தல் - சாச்சடங்கி னொன்று. கஞ்சிப்பசை - கஞ்சியாலானபசை. கஞ்சியிடல் - கஞ்சிப்பசைதோய்த்தல். கஞ்சீயம் - வெண்கலம். கஞ்சுகம் - சட்டை, மார்ச்சட்டை. கஞ்சுகம் - பாம்பின்றோல். கஞ்சுகர் - மெய்க்காப்பாளர். கஞ்சுகன் - காவற்காரன், வயிரவன். கஞ்சுகி - காவற்காரன், சட்டை, திரைச்சீலை, பாம்பு. கஞ்சுளி - சட்டை, பொக்கணம். கடகடத்தல் - உபயவோசை கொள் ளல், உழன்றுபோதல், கழலல், வசக்கெடுதல். கடகடப்பு - கடகடத்தல், வசக்கேடு. கடகடெனல் - ஈரடுக்கொலிக்குறிப்பு. கடகம் - ஆயுதவருக்கம், உருள், கங்கணம், கற்கடகம், கூடை, கூத்தின் விகற்பம், கெண்டிகை, கேடகம், கைவளை, படை, மதில், மலைப்பக்கம், யானைக் கூட்டம், வட்டம், இராசதானி, கிம்புரி, நாடு, பூவாதுகாய்க்கு மரம், மலை, வீடு. கடகன் - நடுவன். கடகாதகம் - காக்கை, நரி. கடசம் - கங்கணம். கடசியம் - கன்னத்தட்டு. கடதாசி - சங்கதூதி. கடத்தல் - செலுத்தல், தாண்டல், நடத்தல், நெடுகவிடுதல், பாய்தல், பொழுதுபோக்கல், மீறுதல், விலக்குதல். கடத்துதல் - செலுத்துதல், நாட் போக்குதல், நெடுகவிடுதல், விலக் குதல். கடத்தேறுதல் - கடைத்தேறுதல். கடத்தேற்றம் - கடைத்தேற்றம். கடத்தேற்றுதல் - கடைத்தேற்றுதல். கடந்தஞானம் - முற்றத்துறந்தஞானம். கடந்தபொருள் - கடவுள், கிட்டாதது, போனபொருள். கடந்தவெண்ணம் - முதிர்ச்சியான வெண்ணம். கடபலம் - தேக்குமரம். கடப்பாடு - ஈகை, கடமை, செய்ய வேண்டுவது, தகுதி, நடை, நேர்மை, முறைமை. கடப்பாரை - ஓர் கருவி. கடப்பு - ஓர் நெல், கடத்தல், கடவை. கடப்புக்கால் - வளையற்கால். கடமா, கடமான் - காட்டுப்பசு. கடமாத்தான் - சிவன், நோய்தீர்ப் போன். கடமுடெனல் - ஈரடுக்கொலிக் குறிப்பு. கடமுனி - அகத்தியன். கடமை - இறை, கடன், காட்டுப்பசு, முறைமை. கடம் - அருநெறி, உடல், உபநிடதம் முப்பத்திரண்டினொன்று, கடமை, கயிறு, காடு, குடம், தோட்டம், நீதி, மலைப்பக்கம், யானைக்கதுப்பு, யானைக் கூட்டம், யானைமதம், யானை மத்தகம், வாச்சியம் வானம், ஓர்மந்திரம், காக்கை, குடமுழவு, கொடிக்கடை, கோளை, சாரல், சுடலை. கடம்பம் - வாலுளுவை, அம்பு, கீரைத் தண்டு. கடம்பர் - ஓர் சாதியார். கடம்பல் - குமிழ்மரம். கடம்பன் - குமரன். கடம்பாடவி, கடம்புவனம் - மதுரை. கடம்பு - ஓர் மரம். கடம்பூர், கடம்பை - ஓரூர். கடயம் - அத்தகடகம், இந்திராணி கூத்து. கடரி - மரமஞ்சள். கடலகம் - ஊர்க்குருவி, பூமி. கடலஞ்சிகம் - தருப்பை. கடலடக்கி - பேமுசுட்டை. கடலடம்பு - ஓரடம்பு. கடலடி - இலவுங்கம். கடலடைத்தான் - அவின், கஞ்சா. கடலர் - நெய்தனிலமாக்கள். கடலாடி - நாயுருவி. கடலாமணக்கு - ஓராமணக்கு. கடலியாத்திரை - கடற்பயணம். கடலியோச்சியம் - சமுத்திரசாத்திரம். கடலிறாஞ்சி - ஓர் மரம். கடலுடும்பு - ஓர் மீன். கடலுராஞ்சி - நீர்வாழ்பறவையி னொன்று. கடலெடுத்தல் - சமுத்திரம் பெருகுதல். கடலெலி - ஓர் மீன். கடலெள்ளு - ஓரெள். கடலை - ஓர் பயறு. கடலைக்கம்பி - புடைவையருகிற் கீறுங் கம்பிகளினொன்று. கடலோடி, கடலோட்டி - மரக்கல மோட்டுவோன். கடலோடுதல் - கடற்பிரயாணம் பண் ணுதல். கடலோட்டு - கப்பலோட்டு. கடலோரம் - கடற்கரை. கடல் - இராசசின்னத்தொன்று, ஓரெண், சமுத்திரம், பசு. கடல்கட்டி - நீர்தடுப்போன், மச்சங் களின்வாய் கட்டுவோன். கடல்கொள்ளுதல் - கடலெடுத்தல். கடல்நாய் - நீர்நாய். கடல்படுதிரவியம் - கடலிலுண்டா குந்திரவியமைந்து. அவை அக்கு, உப்பு, சங்கு, பவளம், முத்து. கடல்மனிதன் - நீரிலிருக்குமோர்வித மனு. கடல்முனை - கடலந்தம். கடல்வண்டு - குடைவண்டு. கடல்வண்ணம் - விண்டு. கடல்வண்ணன் - ஐயன். கடல்வருணனை - பெருங்காப்பி யவுறுப்பிளொன்று, அஃது கடற் சிறப்புக் கூறுவது. கடல்விராஞ்சி - ஒரு செடி. கடவ - அப்படியாக. கடவது - ஆகட்டும், கூடியது, செய்ய வேண்டுவது, முறையானது. கடவல் - செலுத்தல். கடவல்லி - உபநிடதம். கடவனாள் - செல்லுநாள். கடவன் - செய்வானாக, செய்வேனாக. கடவாப்பண்டம் - பயணச்சாமான். கடவான் - கண்டாயம், செய்வா னாக, வரம்பிலுடைவு. கடவு - வழி. கடவுட்பணி - சேடன், தேவதொண்டு. கடவுதல் - ஏவுதல், செலுத்தல், தகுதி யாதல், வினாவல். கடவுமரம் - கணக்கு. கடவுளர் - தேவர். கடவுள் - குரு, தெய்வம், நன்மை, முனிவன். கடவுள் வணக்கம் - கடவுள் வாழ்த்து, தேவவணக்கம். கடவுள்வாழ்த்து - தேவதுதி. கடவை - ஏணி, கடத்தல், கடப்பு, கடப்புமரம், குற்றம், வாயில். கடவைப்படுதல் - விட்டுப்பிரிதல். கடவைப்படுத்தல் - தூத்தரித்தல் நீக்கல். கடறு - அருநெறி, காடு, வாளுறை. கடற்கரை - கடலருகு. கடற்காகம், கடற்காக்கை - ஓர்பறவை, கடலுராஞ்சிமரம். கடற்காளான் - கடலினோர்பாசி. கடற்குதிரை - ஒரு நீர்வாழ்மிருகம். கடற்குருவி - கல்லுப்பு. கடற்கொஞ்சி - ஓர் மரம். கடற்கொடி - தும்பை. கடற்கொழுப்பை - எழுத்தாணிப்பூடு. கடற்சார்பு - நெய்தனிலம். கடற்சில் - ஓர் கடன் மரக்கொட்டை. கடற்சேர்ப்பன் - நெய்தற்றலைவன், பாண்டியன். கடற்பட்சி - கிளிஞ்சில். கடற்பன்றி - ஓர் கடல்மிருகம். கடற்பாசி - கடலிலுண்டாகும்பாசி. கடற்பாம்பு - நீர்வாழுமோர் விதபாம்பு. கடற்பாலை - சமுத்திரசோகி. கடற்பிணா - நெய்தனிலப் பெண். கடற்பிறந்தாள் - இலக்குமி. கடற்புறா - கடலின்வாழ்புறா. கடற்றாரா - கடலின்வாழுமோர் பறவை. கடற்றாழை - கொந்தாழை. கடற்றீ - கடனுரை. கடற்றேங்காய் - கடற்றெங்கங்காய். கடனம் - தாழ்வாரம், முயற்சி. கடனாளி - கடன்பட்டவன். கடனுரை - ஓர் பண்ணிகாரம், ஓர் மருந்து. கடனெடுத்தல் - கடன்வாங்குதல், பழிசாதித்தல். கடன் - அளத்தல், இருமணம், குடி யிறை, மரக்கால், முறைமை. கடன்கட்டு - கடன். கடன்கழித்தல் - கரிசனமற்றவேலை செய்தல், தென்புலத்தார்க்குச் செய்வன செய்தல், பதிலளித்தல். கடன்காரன்- கடன்கொடுத்தவன், கடன்பட்டவன், பார்வைக் கூழி யஞ்செய்வோன். கடன்சீட்டு - பற்றியகடனைக் காட்டு முறுகி. கடன்செய்தல் - இறந்தோர்க்கு வேண்டுஞ்சடங்குசெய்தல். கடன்மூர்த்தி - அருகன். கடன்முறி - கடன்சீட்டு. கடன்வழி - பிரயோசனமின்மை, வீண். கடன்றீர்த்தல் - கடனிறுத்தல். கடா - ஆடு, எருமை இவற்றினாண், கடாவென்னேவல், வினா. கடாகம் - பெருங்கொப்பரை, கிணறு. கடாகாசம் - குடத்தின்றோன்றியலா காயம். கடாகாயம், உருவுக்குள்வெளி. கடாக்கம் - கடாட்சம். கடாசுதல் - எறிதல், கடாவுதல். கடாச்சங்காத்தம் - மடைத்தனம், மதியாத்தன்மை. கடாட்சம் - கடைக்கண், கிருபை, தயவு. கடாட்சவீட்சணம் - கிருபைக் கண் வைத்தல். கடாட்சாவேட்சணம் - மோகப் பார்வை. கடாட்சித்தல் - கிருபைசெய்தல். கடாம் - யானைமதம். கடாயம், கஷாயம், கஷாயனம் - குடிநீர், மருத்தூறனீர். கடாரம் - ஓரூர், கருமைகலந்த பொன் மை, கொப்பரி. கடாரன் - காமாதுரன். கடாரி - நாகு. கடாரை - ஓர் நாரத்தை. கடாவல் - ஆணி முதலிய கடாவல், செலுத்தல், வினாவல். கடாவு - கடாவென்னேவல், வினா. கடாவுதற்சீட்டு - பொருத்தச்சீட்டு. கடி - அச்சம், அழகு, இன்பம், ஐயம், ஒளி, கடிக்கப்பட்ட தழும்பு, கடி யென்னேவல், கரிப்பு, களிப்பு, காலநுட்பம், காலம், காவல், கூர்மை, கைப்பற்றல், சீக்கிரம், தொனி, நந்தனவனம், நிதம்பம், பிசாசம், புதுமணம், புதுமை, பொழுது, மிகுதி, வாசனை, விளக்கம், அதிசயம், அரை, இரப் போர் கலம், சிறுகொடி, நீக்கல், புணர்வு. கடிகண்டு - பூனைக்காலி. கடிகம் - கரமுட்டி. கடிகாசூத்திரம் - அரைஞாண், நாழிகைவட்டம். கடிகாசூத்திரன் - குயவன். கடிகாஸ நானம் - அரைஸ நானம். கடிகாரம் - நாழிகைவட்டம். கடிகை - அரையாப்பு, உண்கலம், கரகம், தாழ்க்கோல், துண்டம், நாழிகை, வேதம், சமயம். கடிகைமாக்கள் - நாழிகைக்கலி சொல்லோர், மங்கலப்பாடகர். கடிகையாரம் - கடியாரம். கடிகை வெண்பா - ஒரு பிரபந்தம். அஃது தேவரிடத்துமரசரிடத்துந் நிகழுங்காரியங் கடிசையள விற் றோன்றி நடப்பதாக முப்பத்தி ரண்டு நேரிசை வெண்பாவாற் கூறுவது. கடிகை வேளாளர் - ஓர் வேளாளர். கடிகோல் - கழிகோல், கொடுங்கோல். கடிசு - கடுமை. கடிசூத்திரம் - கடிகாசூத்திரம். கடிசை - பாய்மரந்தாங்கி. கடிச்சை - ஓர் பூடு, ஓர் மீன். கடிஞை - இரப்போர்கலம். கடிதடம் - சகனப்பக்கம், நிதம்பம். கடிதம் - அடுக்கல், இணைவு, செய்யப் பட்டது. கடிதல் - அழித்தல், அறுத்தல், கோ பித்தல், சினக்குறிப்பு, தண்டித் தல், வெட்டல். கடிது - கடியது. கடிதேசம் - இடை. கடித்தல் - கயிறு முதலிய விறுகிப் பிடித்தல், கறித்தல், தழும்புபடுத் தல். கடிநாய் - கடிக்கிறநாய். கடிந்தமன் - குயவன். கடிந்தோர் - முனிவர். கடிபிடி - சண்டை. கடிப்பகை - கடுகு. கடிப்பம் - காதணி, கெண்டிகை, பூண் கொள்கலம். கடிப்பா - ஊறுகாய், கறி. கடிப்பிடுகோல் - முரசறைகோல். கடிப்பிணை - காதணி. கடிப்பிரோதம் - தொடைச்சந்து. கடிப்பு - கடிபட்டகாயம், கோல். கடிப்பிரதேசம் - பின்பக்கம். கடிப்பை - சிறுகடுகு. கடியந்திரம் - ஏற்றமரம். கடியது - கடுமையானது. கடியல் - மரக்கலங்களின் குறுக்கு மரம். கடியன - கடிக்கப்பட்டது, கடிக்கிற குணமுடையது, கடியது. கடியாரம் - நாழிகை வட்டம். கடியிரத்தம் - மூக்கிரட்டை. கடிரோமம் - கோரைக்கிழங்கு. கடிலா - மூக்கிரட்டை. கடிவாய் - பற்பட்டவிடம். கடிவாளம் - குதிரையின் வாய்வடம். கடிவுகம் - அரையில்வருந்திரட்சி. கடிவை - யானை கடினகாலம் - தீங்கான காலம், பஞ்சங்கோதாரியுள்ள காலம். கடினம் - கடுமை, கற்கசம், கொடுமை, மிகுதி, முறைப்பு. கடீரகம் - உபத்தம். கடீரம் - அல்குல். கடு - கசப்பு, கடுக்காய்மரம், கடு வென்னேவல், கார்த்தல், நஞ்சு, முள், கூர், கூன், மாவிலங்கு. கடுகடுத்தல் - உவர்த்தல், கசத்தல், வெடுவெடுத்தல். கடுகடுப்பு - ஓர் சுவை, வெடுவெடுப்பு, அதிசீக்கிரம். கடுகம் - கடுகுரோகணி, கார்க்கும், மருந்து, கார்ப்பு, சுக்கு, திப்பிலி, மிளகு, குடம், மோதிரம். கடுகல், கடுகுதல் - விரைதல். கடுகன்னம் - கடுகோரை. கடுகாலாத்தி - ஓராலாத்தி. கடுகு - எண்ணெய்க்கஷாயம், ஐயலி, கடுகென்னேவல் கடுகுசாதம் - கடுகோரை. கடுகுடுத்தல் - விரைவு பண்ணுதல் கடுகுமணி - கடுகு, சிறுமணி. கடுகுரோகணி - ஓர் மருந்து. கடுகோரை - சித்திரான்னத்தொன்று. கடுக்கன் - ஓர் காதணி. கடுக்கன்புல் - ஓர் புல். கடுக்காய் - திரிபலையினொன்று, துவர்பத்தினொன்று. கடுக்காய்த்தலையன் - ஓர் பாம்பு, சிறுத்துவட்டித்தலையுடையவன். கடுக்காய்நண்டு - ஓர் நண்டு. கடுக்காய்வேர் - அரேணுகம். கடுக்கிரந்தி - இஞ்சி. கடுக்குதல் - உவமையாதல், உளைதல், கடிவாய்கடுக்குதல், பசைப்படுத் தல். கடுக்கென்குதல் - வளர்தல். கடுக்கென்றவன் - வளர்ந்தவன். கடுக்கை - கொன்றைமரம். கடுக்கைக்கண்ணியன் - சிவன். கடுங்கணாளர் - வள்கண்ணர். கடுங்கண் - கொடுமை. கடுங்கருத்து - கூரிய கருத்து, வன் கருத்து. கடுங்காய் - பழாதகாய், சாதிக்காய். கடுங்காய்ச்சல் - அறக்காய்தல். கடுங்காரம் - ஆயக்கல், ஓருப்பு, கடுங் கூட்டானகாரம், மிகவுறைப்பு, சாதிபத்திரி. கடுங்காலம் - உபத்திரவகாலம், கொடியகாலம். கடுங்கூர்மை - அமரியுப்பு, அறக் கூர்மை. கடுங்கை - கடுமை. கடுங்கோடை - வன்கோடை, வேனிற் காலம். கடுங்கோபம் - மிகுகோபம். கடுசரம் - கடுரோகிணி. கடுசாரம் - காரச்சாரம். கடுசித்தாழை - ஓர் தாழை. கடுஞ்சாரி - நவட்சாரம். கடுஞ்சினப்பூமி - உழமண். கடுஞ்சினேகம் - மிகுசினேகம். கடுஞ்சுண்ணத்தி - சீனக்காரம். கடுஞ்செட்டு - கொடியவியாபாரம். கடுஞ்சொல் - நால்வகையிழிச் சொல் லினொன்று. கடுடம் - மருக்காரை. கடுதலைமுடிச்சு - கபடச்செய்கை. கடுதலைவிற்பூட்டு - வழுவாத பூட் டானசொல். கடுதல் - திருடல், பறித்தல். கடுதாசி - காகிதம். கடுத்தம் - அடர்த்தி, சோன கருடைய சீதனவுடம்பிடிக்கை, புத்தகத் தினட்டை. கடுத்தலூசி - கற்றுளைக்குங்கருவி. கடுத்தலை - வாள். கடுத்தல் - உவமையாதல், ஐயம், கோபம், கோபித்தல், சினம், வேகம். கடுத்திரயம் - திரிகடுகம். கடுநடை - நடைச்சுறுக்கு. கடுநிம்பம் - நிலவேம்பு. கடுநீர் - மதி, மேகம். கடுந்தது - கடந்தது, கடின முடையது. கடுந்தரை - வன்னிலம். கடுந்தழற்பூமி - உழமண். கடந்தி - நாயுருவி. கடுந்திலாலவணம் - அமரியுப்பு. கடுந்தோயல் - ஆயுதங்களையறக் காய்ச்சித்தோய்வது. கடுப்ப - உவமைச்சொல். கடுப்படக்கி - எருமுட்டைப்பீநாறி. கடுப்பிறக்கல் - அகங்காரத்தைய கற்றல். கடுப்பு - அகங்காரம், கொதிப்பு, சினம், விரைவு. கடுப்புச்சூடு - வற்றற்சூடு. கடுப்புமரம் - எண்ணெயூற்றுமிடுக்கு மரம். கடப்பூ - ஊமத்தை. கடுப்பெடுத்தல் - கடுப்பிறக்கல். கடுமரம் - கடுக்காய்மரம், நச்சுமரம், எட்டிமரம். கடுமலை - காரீயமலை. கடுமன் - கடுமை. கடுமுடுக்கு - விரைவு, வில்லங்கம். கடுமுடுத்தல் - விரைதல். குடுமுடெனல் - ஒலிக்குறிப்பு. கடுமுள் - ஆயுதப்பொது, நச்சுமுள், கண்டங்கத்தரி. கடுமூர்க்கம் - மிகுகோபம். கடுமை - கொடுமை, சீக்கிரம், மிகுதி, முறைப்பு. கடும்பகல் - மத்தியானம். கடும்பச்சை - நாகப்பச்சை. கடும்பலம் - இஞ்சி, கருணைக் கிழங்கு. கடும்பு - உறவு, சும்மாடு, பாற்கடும்பு முதலியன. கடும்புப்பால் - ஈன்றணுமைப்பால். கடுரம் - மோர். கடுரோகிணி, கடுரோணி - ஓர் மருந்து. கடுவங்கம் - வேர்க்கொம்பு. கடுவட்டி - அந்தவட்டி. கடுவல் - கடுநிலம். கடுவழி - அந்தரவழி, அருமையான வழி. கடுவன் - குரங்கு, நாய், பூனை, முசு இவற்றினாண், விலங்கேற்றின் பொது, மாவிலங்கு. கடுவாயன் - கழுதை, பாம்பு. கடுவாய் - ஓர் புலி, நாய். கடுவெளி - நிழலற்றவெளி, வெறு வெளி. கடூரம் - கொடுமை. கடேந்திரநாதர் - ஓர் சித்தர். கடேரம் - நோய், முகில். கடேரன் - நோயாளி. கடை - அங்காடி, இடம், ஏழனுருபு, (உம்) அவன்கடைச்சென்றான், கடையென்னேவல், கதவு, கீழ், புறவாயில், பூணின் கடைப் புணர்வு, பெண்குறி, முடிவு, வழி, வாயில். கடைகாப்பாளர் - வாயில்காவலாளர். கடைகால் - பால்கறக்கும் மூங்கிற் குழல், பின்கோக்கியி னோருறுப்பு, பின்னணை. கடைகெட்டவன் - கீழ்மகன். கடைகேடு - மிகவிழிபு. கடைகோல் - தீக்கடைகோல். கடைக்கட்டு - முடிப்பு. கடைக்கணித்தல் - கடாட்சஞ் செய் தல், கடைக்கண்ணாற் பார்த்தல், புறக்கணித்தல். கடைக்கண் - கண்ணின்கடை. கடைக்கனல் - வடவாக்கினி. கடைக்காப்பு - பதிகத்தின் கடைசிப் பாட்டு. கடைக்கால் - தறுவாய். கடைக்குடர் - கீழக்குடர். கடைக்குட்டி - கடைசிப்பிள்ளை. கடைக்குளம் - உத்திராடநாள். கடைக்குறை - ஈறுகுறைந்துநிற்குஞ் சொல். கடைக்கூட்டல் - அனுபவத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தல், செய் வினைப்பயனையனுபவிப்பது. கடைக்கூழை - ஓர்தொடை, பிற்படை. கடைக்கூழை முரண், கடைக் கூழை மோனை, கடைக்கூழையள பெடை, கடைக்கூழையியைபு, கடைக்கூழை யெதுகை - செய்யுட்டொடை யினொவ்வோர் விகற்பம். கடைக்கூழைமுரண் - ஓரடியின் முதற்சீர்க் கணன்றியேனைச் சீர்க் கண் முரண்வருவது. கடைக்கூழைமோனை - முதற்சீர்க் கணின்றி யேனைச்சீர்க்கண் மோனை வருவது. கடைக்கூழையளபெடை - முதற்சீர்க் கணின்றியேனைச் சீர்க்கணள பெடைவளவது. கடைக்கூழையியைபு - ஓரடியின் கடைச்சீர்க்கணின்றி யேனைச் சீர்க்கணியைபு வருவது. கடைக்கூழையெதுகை - ஓரடியின் முதற் சீர்க்கணின்றி யேனைச் சீர்க்க ணெதுகை வருவது. கடைக்கொள்ளி - குறங்கொள்ளி. கடைக்கோடி - அறக்கடைசி. கடைசாரம் - காரியத்தின்முடிவு, முடிவு. கடைசாரி - கடைகெட்டவள். கடைசார் - காரியம், பின்னணை. கடைசால் - பின்னணை. கடைசி - கடையப்பெண், முடிவு. கடைசியர் - மருதநிலப்பெண்கள். கடைசோரி - அப்பக்கடை. கடைச்சங்கம் - பிற்சங்கம். கடைச்சரக்கு - கறிச்சரக்கு, பலசரக்கு. கடைச்சல் - கடைதல். கடைச்சல் மரம் - கடையுமரம். கடைச்சற்காரர் - ஓர் சாதியார். கடைச்சன் - இளையமகன். கடைச்சி - இளையமகள், கடையப் பெண், மருதநிலப்பெண். கடைச்சித்தாழை - பறங்கித்தாழை. கடைஞர் - மருதநிலமாக்கள். கடைதடம் - வாயில். கடைதலைவிற்பூட்டு - பூட்டுவிற் பொருள்கோள், பேச்சிற்கொளு விப் பிடித்தல். கடைதல் - கலக்குதல், குடைதல். கடைதிறப்பு - ஓர் பிரபந்தம். கடைத்தரம் - கீழ்த்தரம். கடைத்தலைவாய்தல் - முதல்வாயில். கடைத்தெரு - கடைவீதி. கடைத்தேறுதல் - ஈடேறுதல். கடைத்தேற்றம் - ஈடேற்றம். கடைநாள் - இரேவதி. கடைநிலை - ஓர் பிரபந்தம். அஃது சான்றோர் எம்வரவினைத் தலை வற்குரையெனக் கடைகாவலர்க் குக்கடைக் கண்ணின்று கூறுவது. கடைநிலைத்தீபகம் - இறுதிவிளக்கு. கடைநிலைத்தீபம் - ஓர் பயனிலை. அது இறுதிநிலை விளக்கம். கடைப்படல், கடைப்படுதல் - மிகவிழி பாதல். கடைப்படுதானம் - இலவுகீககாரண மாய்க்கொடுக்குங்கொடை, அத மதானம், அவை அச்சம், ஆரவம், கடைப் பாடு, கண்ணோட்டம், காரணம், கைம்மாறு, புகழ். கடைப்பிடி - கருமமுடிக்குந் துணிவு. அஃது ஆடூஉக்குணந்நான்கி னொன்று, தேற்றம், மறவாமை. கடைப்பிடித்தல் - உறுதியாய்ப்பிடித் தல், தெளிவாயறிதல், மறவாதிருத் தல். கடைப்பிறப்பு - கீழ்ப்பிறப்பு. கடைப்புணர்வு - ஆபரணக் கடைப் பூட்டு. கடைப்புளி - கருமமுடிக்குந் துணிவு, தேற்றம், மறவாமை. கடைப்பூட்டு - பின்நோக்கி. கடைப்போதல் - நிறைவேறல். கடைமடக்கு - நான்கடியினீறும்பல பொருளவொரு சொல்லான் முடியுங்கவி. கடைமரம் - கடையுந்தறி. கடைமீன் - இரேவதிநாள். கடைமுரண் - செய்யுளுறுப்பி னொன்று, அடிதோறுமிறுதிச் சீர்மறுதலைப்பட்டுவருவது. கடைமோனை - நான்கடியினீறுமோ ரெழுத்தின் முடியுங்கவி. கடையம் - இந்திராணிகூத்து, கடசம். கடையர் - ஓர்சாதி, சுண்ணாம்புக் காரர், மருதநிலத்தவர். கடையழிதல் - கஷ்டப்படல், கெடுதல், குன்றல், தேய்தல். கடையழித்தல் - தேய்த்தல், மிகக் கெடுத்தல். கடையளபெடை - செய்யுளுறுப்பி னொன்று, அடியினிறுதிக் கண் ணளபெடைபயிலுவது. கடையனல் - ஊழித்தீ. கடையாகுமோனை - இடையாகு மோனை முரணிவருவது. கடையாகெதுகை - அடிகடோறு முதற்சீரினீற்றசை யொன்றி வருவது. கடையாட்டம் - மிகுந்தகஷ்டம், வருத்தம். கடையாணி - அருகாணி. கடையாந்தரம் - முடிவு. கடையாயர் - கடையர். கடையால் - கடைசால். கடையிணைமுரண், கடையிணை மோனை, கடையிணையளபெடை, கடையிணையியைபு, கடையியைபு, கடையிணையெதுகை - செய்யு ளுறுப்பினொன்று. கடையிணைமுரண் - ஓரடியின் கடை யிரு சீர்க்கண்ணு முரண் வருவது. கடையிணைமோனை - ஓரடியின் கடையிரு சீர்க்கண்ணு மோனை வருவது. கடையிணையளபெடை - ஒரடியின் கடையிரு சீர்க்கண்ணுமள பெடை வருவது. கடையிணையியைபு - ஓரடியின் முதலிருசீர்க்கண்ணு மியைபு வருவது. கடையிணையெதுகை - ஓரடியின் கடை யிருசீர்க்கண்ணு மெதுகை வருவது. கடையியைபு - அடிதோறுமுதற்சீர்க் கண்ணியைபுவருவது. கடையெதுகை - அடிதோறுமிறுதிக் கண்ணெதுகைவருவது. கடையீடு - இழந்தது. கடையுணி - கீழ்மகன். கடையெதுகை - கடையியைபு. கடையெழுஞ்சனி - உத்திரநாள். கடைவளர்தல் - ஈனுங்காலத்துக்குறி விரிதல். கடைவள்ளல் - பலமுறையுங்கேட்க மறுத்துக்கொடுப்பவன். கடைவாசல், கடைவாயில் - தலை வாய்தல். கடைவாய் - வாயருகு கடைவாய்நக்கி - உலோபி. கடைவால் - கடைசிவால். கடைவு - கடைதல். கடோரம் - கொடுமை, வயிரம். கட்கட்டி - இமையிற்கட்டு. கடகத்தம்பம் - கலைஞானமறுபத்தி னான்கினொன்று, அஃது வெட் டறாமற்றடுக்கும்வித்தை. கட்கம் - வாள். கட்கராடம் - பரிசை. கட்காகாதம் - வாளேறு. கட்காதாரம் - வாளுறை. கட்சம் - மந்திரசாத்திரம், சங்கபா ஷாணம், நவக்கிரககட்ச மென்னு மோர்நூல். கட்சாந்தரம் - அந்தப்புரம். கட்சி - காடு, சரீரம், பக்கம், பங்கு, பறவைக்கூடு, மனிதர்படுக்கை, வழி. கட்செவி - பாம்பு. கட்டகாலம், கஷ்ட்டகாலம் - கிரகந்தீங் கானகாலம், பஞ்சங் கோதாரி யுள்ள காலம். கட்டக்கடுமை - அதீககடுமை. கட்டங்கம், கட்டங்கு - தண்டு, பொல்லு. கட்டாசாத்தியம் - கடுமசாத்தியம். கட்டசீவி - ஆயக்காரன், துறைகாவற் காரன் கட்டபாரை - கடப்பாரை. கட்டப்படுதல் - சம்பந்தத்திற்குள் ளாதல், பிணிக்கப்படுதல், வருத் தப்படுதல். கட்டம், கஷடம் - காடு, தாடி, துன்பம், மலம், மிகுவருத்தம், துறைமுகம். கட்டல் - கட்டுதல், தடை, திருடல், தோண்டல், பிடுங்குதல், மூடல், மெய்ப்பரிசமெட்டினொன்று, உடுத்தல், பருக்கொள்ளல். கட்டவிழ்தல் - முறுக்கவிழ்தல். கட்டழகு - அலங்காரம், பேரழகு. கட்டழல் - நெருப்பு. கட்டழிதல் - நெறிதப்புதல். கட்டழித்தல் - நெறியழித்தல், முற்று மழித்தல். கட்டளை - அளவு, உத்தரவு, உரை கல், உவமை, ஒழுங்கு, கற்பனை, செங்கல்லச்சு, துலாராசி, நிறை, நிறையறிகருவி, முறை. கட்டளைக்கலித்துறை - கலித்துறையி னோர்பேதம், முதற் சீர்நான்கும் வெண்டளை பிழை யாநிற்பக் கடையொரு சீரும் விளங்காயாகி வருவது. கட்டளைக்கலிப்பா - கலிப்பாவினோர் பேதம், முதற்கண்மாச் சீர்பெற்று நாற்சீரான்வருவ தரையடியாகவும் அஃதிரட்டி கொண்ட தோரடி யாகவும் மவ்வடி நான்கு கொண்டு வருவது. கட்டளைக்கல் - உரைகல், படிக்கல். கட்டளைக்கோல், கட்டளைச்சட்டம் - நியாயப்பிரமாணம். கட்டனன் - குள்ளன். கட்டாகட்டிமை - மிகுந்தகட்டிமை. கட்டாக்காலி - கட்டுக்ககப்படாத காலி. கட்டாசம் - நாபிமிருகம். கட்டாஞ்சி - முள்வேல். கட்டாடி - குறிசொல்வோன், வண் ணாரிற்றலைவன். கட்டாணி - தூர்த்தன், பேராசைக் காரன். கட்டாண்மை - பேராண்மை. கட்டாந்தரை - கடுந்தரை, வெறுந் தரை. கட்டாம்பாரை - ஓர் மீன். கட்டாயம் - கடுமை, கட்டுப்பாடு, நெருக்கிடை, வெறுப்பு. கட்டாரம் - குற்றுவாள். கட்டாரி - குற்றுவாள். கட்டாரிக்குத்துணி - ஓர் புடைவை. கட்டார்ச்சிதம், கஷ்ட்டார்ச்சிதம் - வருந்தித்தேடினதேட்டம். கட்டி - அகமகிழ்ச்சி,இடப்பு, ஓர் புள், ஓர்கருப்பிண்டம், கருப்புக் கட்டி முதலியன, சருக்கரை, திரண்ட மாத்திரளை, பாடை. கட்டிக்கொள்ளுதல் - அடிப்படுத்துதல். கட்டிபடுதல் - கட்டியாதல். கட்டிமுட்டி - பரிதுஞ்சிறிதுமானகட்டி. கட்டிமை - கட்டுப்பாடு, பிசுனத்தனம். கட்டியகாரர், கட்டியக்காரர் - புகழ்வோர். கட்டியங்கூறல் - எழுச்சிகூறல், புகழ் கூறல். கட்டியப்பொல்லு - எழுச்சி கூறுவோர் பிடிக்குந்தண்டு. கட்டியம் - ஓர் கூத்து, புகழ்ந்துபேசல். கட்டியாரம் - இறுக்கம், கடுமை, நெருக்கிடை. கட்டில் - மஞ்சம். கட்டிவிழுதல் - கட்டியாதல், கெற்பம் விழுதல். கட்டிளமை - மிக்கிளமை. கட்டு - உறுதி, ஓர் வகைக்குறி, கட் டென்னேவல், காவல், கிளை, சம்பந்தம், சிலந்திப்பரு, தளை, பொய்மலைப்பக்கம், மிகுதி, வரம்பு. கட்டுக்கதை - பொய்க்கதை. கட்டுக்கலியாணம் - பாணிக்கிரகணம். கட்டுக்கழுத்தி - மங்கிலியதாரிணி. கட்டுக்காரன் - குறிசொல்வோன். கட்டுக்காவல் - கடுங்காவல். கட்டுக்கிடையன் - வெகுநாளாய்க் கிடக்கிறசரக்கு. கட்டுக்குத்தகை - ஏகதேசமாய் விற்குங்குத்தகை. கட்டுக்கூட்டு - எழுத்துமாறியெழு தல், ஒன்றாய்க்கூடல், பொய்யான தொடுப்பு. கட்டுக்கொடி - காலிகட்டுங்கயிறு. கட்டுச்சோறு - ஆற்றுணா. கட்டுடைத்தல் - அணையுடைத்தல். கட்டுண்ணல் - கட்டுப்படுதல். கட்டுதல் - சம்மந்தப்படுத்தல், சுவர் முதலியவெழுப்புதல், பிணித்தல், விவாகம்பண்ணுதல், வீடுமுதலிய தொடுத்தல். கட்டுத்தறி - யானைமுதலிய கட்டுந் தூண். கட்டுத்திரவியம் - கிளிக்கட்டுப் பொன். கட்டுத்தேர் - கட்டியெழுப்புந்தேர். கட்டுத்தையல் - ஓர் வகைத்தையல். கட்டுத்தோணி - தெப்பம். கட்டுப்படுதல் - அடங்குதல், அமைதல், தங்குதல். கட்டுப்படுத்துதல் - அடக்கிக் கொள் ளுதல், எல்லைப் படுத்துதல், கீழமையப் பண்ணுதல். கட்டுப்பாடு - பந்தம். கட்டுப்பெட்டி - ஓர் வகைப்பெட்டி. கட்டுமட்டு - அச்சறுக்கை, அடக்கம், அளவாய்நடத்தல். கட்டுமரம் - மிதவை. கட்டுமாமரம் - ஓர்மரம். கட்டுமுகனை - அச்சறுக்கை. கட்டுமுரித்தல் - கட்டுடைத்தல், நியமம்மீறுதல். கட்டுமை - கட்டுப்பாடு. கட்டுரை - உறுதிச்சொல், ஏற்றசொல், பொருளுள்ளசொல், பொய். கட்டுரைத்தல் - உறுதிப்படச் சொல் லுதல். கட்டுவம், கட்டுவன் - ஓர் காலணி. கட்டுவருக்கம் - பலவிதஉடை. கட்டுவாங்கம் - தண்டு. கட்டுவிடல், கட்டுவிடுதல் - அவிழ்தல், இந்திரியமோசனம், உடைதல், உருகுதல், பலவீனமாதல். கட்டுவிஷேசம் - கட்டுக்கதை. கட்டுவிட்டுப்பாய்தல் - கட்டுடைத்துப் பெருகல். கட்டுவிரியன் - ஓர் பாம்பு. கட்டுவை - கட்டில். கட்டெறும்பு - ஓரெறும்பு. கட்டை - குறைவு, நீளங்குறைந்தது, மரக்கட்டை, விறகு. கட்டைக்கருத்து - மந்தக்கருத்து. கட்டைக்காலி - கரடி. கட்டைக்குரல் - அமர்ந்தகுரல். கட்டைக்குருத்து - பொத்திக்குருத்து. கட்டைவாக்கு - அரதனத்தின்மங்க லொளி. கட்டைவைத்தல் - ஓர் விளையாட்டு. கட்டோசை - பேரொலி. கட்டோடே - முற்றாக. கணகணத்தல், கணகணப்பு - உரத்த சூடு, ஒலிக்குறிப்பு. கணகம் - படையிலோர்தொகை அஃது குமுதம்மூன்று கொண்டது. கணகன் - கணிதன். கணக்கன் - எழுத்துக்காரன், ஓர்மரம், கணக்குப்பார்க்கிறவன், புதன், ஓர்சாதியான். கணக்காசாரம் - கணிக்குமொழுங்கு. கணக்காயர் - அறிஞர், ஒத்துரைப் போர், பொருந்தச் சொல்வோர். கணக்காய்ச்சல் - கணரோகம். கணக்கு - எண், எழுத்து, மட்டு. கணக்கோலை - கணக்கேடு, தளி ரோலை. கணத்திரவியம் - பொதுத்திரவியம். கணநாதர், கணநாயகர் - கணாதிபர். கணபதி - விநாயகன். கணப்பு - சூடு, தீச்சட்டி. கணப்பூண்டு - ஓர் பூண்டு. கணப்பொருத்தம் - செய்யுட் பொருத் தத்தொன்று விவாகதசப் பொருத் தத்தொன்று. கணப்பொழுது - நொடிநேரம். கணமூலி - சாணாக்கி. கணம் - ஓர் நோய், ஓர் புல், கால நுட்பம், கூட்டம், சிறுமை, திரட்சி, நொடிநேரம், படையிலோர் தொகை, பிசாசம், மாத்திரை, வட்டம், வருக்கம், விண்மீன், விலங் கின்கூட்டம், குறைவு, சீரிலக் கணம், தீப்பொறி, நீர்த்துளி. கணம்புல்வர் - அறுபத்துமூவரி லொருவர். கணரோகம் - ஓர் நோய். கணவம் - அரசமரம். கணவர் - கொழுநர், பூதவீரர். கணவன் - அதிபன், காந்தன். கணவாய் - ஓர் மீன், குறைவு, சீரிலக் கணம், தீப்பொறி, நீர்த்துளி. கணவீரம் - அலரி. கணனம் - எண்ணல். கணாசலம் - கைலை. கணாதிபன் - கணநாயகன், விநாயகன். கணாரிடுதல் - ஒலிக்குறிப்பு. கணி - ஓர் சாதி, கணிப்போன், கணி யென்னேவல், மருதநிலம், வேங் கைமரம். கணிகம் - நூறுகோடி. கணிகம் - வேசி. கணிசம் - கணிக்கத்தக்கது, சங்கை, மதிப்பு, அதிகம். கச்சி - உளி, தறிகை, மழு, முட்ணி கோல், வெற்றிலை மூக்கரிகத்தி. கணிதசிந்தாமணி - ஓர் நூல். கணிதன் - சத்துரு. கணித்தீபிகை - ஓர் நூல். கணிதம் - எண், எண்ணிக்கை, கலை ஞான மறுபத்தினான்கி னொன்று. அஃது சோதிட நூல். கணிதர் - சோதிடர். கணித்தல் - எண்ணல், மதித்தல். கணிப்பு - கணித்தல். கணியான் - கூத்தாடி. கணீரிடுதல் - ஒலிக்குறிப்பு. கணீர்கணீரெனல் - ஈரடுக்கொலிக் குறிப்பு. கணீல் - ஒலிக்குறிப்பு. கணு - கவர், மரத்தின்முளி, மூங்கில். கணுக்கால் - பரடு. கணுக்கிரந்தி - ஓர் நோய். கணுப்பாலை - ஓர்பாலை. கணுவட்டு - சிறுவாழைக்குலை. கணேசன் - வினாயகன், சிவன். கணை - அம்பு, ஒலி, ஒரு நோய், திரட்சி, நிறைவு, பூரநாள், வளை தடி, சிவிகைமேல்வம்பு. கணைக்கால் - முழந்தாளின் கீழ்க் கால். கணையம் - காவற்காடு, பொன், போர், யானைக்கம்பம், வளைதடி, அம்பு. கண் - இடம், ஏழனுருபு (உம்) என் கண், ஓர் விகுதி (உம்) வன்கண், ஓலைக்கண், நுங்குக்கண், கணு, கண்ணென்னேவல், கண்ணோட் டம், துவாரம், தேங்காய் முதலிய முளைக்கு மிடம், பெருமை, மயிற் றோகைக் கண், மூங்கில், விழி அஃது பஞ்சப்பொறியி னொன்று. கண்கட்டி - கட்கட்டி. கண்கட்டு - திட்டித்தம்பனம். கண்கழு - முளைவெளிக்கமுன் விடுந்நீர். கண்காசம் - ஒரு நோய். கண்காட்சி - கண்ணுக்குச் சிறப்பு. கண்காட்டல் - கண்ணினாற்குறிப்புக் காட்டல். கண்காணம் - மேல்சாரிப்பு. கண்காணி - மேல்விசாரிப்புக்காரன். கண்காணித்தல் - மேல்விசாரணை செய்தல். கண்காரர் - அஞ்சனம் பார்ப்போர், குறிப்பறியத்தக்கவர்கள். கண்குத்திப்பாம்பு - ஓர் பாம்பு. கண்குவளை - கண்குழி. கண்குளிர்தல் - பார்வைக்குத் திருத் தியாயிருத்தல். கண்குறிப்பு - பார்வையாலறிதல். கண்கூடு - காட்சியளவை. கண்கூர்மை - பார்வைநுட்பம். கண்கூலி - கண்டதற்காகக் கொடுப் பது. கண்கையில் - தாய்க்கையில். கண்கொள்ளாக்காட்சி - அடங்காத காட்சி. கண்கொழுப்பு - அகங்காரம், மதம். கண்சயிக்கினை - கண்சாடை. கண்சாடை, கண்சாய்ப்பு - அறிந்து மறியார் போன்றிருத்தல். கண்சாதல் - பதனழிதல், வாடல். கண்சிமிட்டல் - கண்ணாலேகுறிப்புக் காட்டல். கண்சைகை - கண்சாடை. கண்டகசங்கம் - முட்சங்கு. கண்டகபலம் - பாலப்பழம். கண்டகம் - உடைவாள், காடு, நீர் முள்ளி, முள், வயிரம், வாள், ஊசி முனை, கம்மாலை, தடை, புளகம். கண்டகர் - அசுரர், கீழ்மக்கள், துட்டர். கண்டகாசனம் - ஒட்டகம். கண்டகி - ஓர் நதி. கண்டகிச்சிலை - சாலக்கிராமம். கண்டகூணிகை - வீணை. கண்டகோடாலி - ஓர்வகைக்கோடாலி. கண்டக்கரப்பன் - ஓர் நோய். கண்டக்கருவி - மிடறு. கண்டக்காறை - பொன்னிறம். கண்டக்கிரந்தி - ஓர் நோய். கண்டங்கத்தரி - ஓர் வழுதுணை, அஃது சிறுபஞ்சமூலத்தொன்று, தசமூலத்துமொன்ற. கண்டங்கருவிலி - ஓர்பாம்பு. கண்டங்காலி - ஓர் மரம். கண்டசாம் - கழுத்திலணியுமோர் பணி. கண்டசருக்கரை - ஒரு வகைச் சருக் கரை. கண்டசித்தி - கண்டகாரியத்திற்குப் பாட்டுச் சொல்லவல்லபம், ஆசு கவி. கண்டசூலை - ஓர் நோய். கண்டதிப்பிலி - ஓர் சரக்கு. கண்டதுண்டம் - பலதுண்டம். கண்டஸநானம் - குளித்தல். கண்டநாளம் - மிடறு. கண்டந் திறத்தல் - தொண்டை திறத்தல். கண்டபூர்த்தி - கண்டமளவு. கண்டபேரண்டபட்சி - இருதலைப் பட்சி. கண்டப்புற்று - ஓர் நோய். கண்டமணி - கண்டாமணி. கண்டமண்டலம் - குறைவட்டம். கண்டமாலை - ஓர் நோய். கண்டம் - எல்லை, எழுத்தாணி, கண்டசருக்கரை, கண்டை, கவசம், கழுத்து, கள்ளி, குன்றிவேர், கை பிடிவாள், சாதிலிங்கம், சிறுவாள், தத்து, திரைச்சீலை, துண்டம், நாடு, நித்தியயோகத் தொன்று, படையினோர் தொகை, மணி, மணியுள்ளோசை, யானைக்கச்சை, யானைக்கழுத்து, வெல்லம், நீர்க் குமிழி. கண்டர் - துரிசி. கண்டல் - ஓர் மரம், தாழை, நீர்முள்ளி. கண்டறியாதவன் - முன்னனுபவித் தறியாதவன். கண்டறை - கற்புளை. கண்டனம், கண்டனை - தள்ளுதல், நிராகரித்தல், உரல், பொலிதூற்றல். கண்டன் - எசமான், சோழன், நாயகன். கண்டன் - வீரன். கண்டாகண்டன் - ஓர்பத்தன். கண்டாங்கி - ஓர் புடைவை. கண்டாஞ்சி - முள்வேல். கண்டாமணி - கண்டை. கண்டாயம் - கடைவை, துவாரம். கண்டாரவம்-ஓரிசை, மணியினோசை. கண்டாலம் - ஒட்டகம், பாரை, யுத்தம். கண்டாவிழ்தம் - ஓர் மருந்து. கண்டி - ஓரளவு, ஓரூர், கடைவை, மீன்பிடிக்கவடைக்கும்பிறிவு, ஓராபரணம். கண்டிகை - உருத்திராட்சம், கடகம், தோளணி, பணிச்செப்பு, பதக்கம், மாதரணிவடம்., கைக்குழி கண்டிதம் - கண்டிப்பு, தறிப்பு, பூர ணம், வரையறுப்பு. கண்டித்தல் - கடிந்துகொள்ளுதல், கொடுமை பண்ணுதல், தறித்தல் பிறிவுபடல், வெட்டல். கண்டிப்பு - கண்டித்தல், தூலரூபின தன்மை, நிச்சயம். கண்டியர் - பாணர். கண்டில் - இருபத்தெட்டுத்துலாங் கொண்டது. கண்டில்வெண்ணெய் - ஓர் பூடு. கண்டிறத்தல் - கண்விழித்தல். கண்டினை - கண்டிப்பு. கண்டீரவம் - சதுரக்கள்ளி, புலி. கண்டீரவம் - சதுரக்கள்ளி, சிங்கம். கண்டு - கழலைக்கட்டி, கற்கண்டு, கண்டங்கத்திரி, சொறி, தீத்தளல், பரு. கண்டுகுணம்பாடி - முகமன்பேசு வோன். கண்டுசாடை, கண்டுசாய்ப்பு - கண் சாடை. கண்டுஞ்சல் - கண்ணடைதல், நித் திரை செய்தல். கண்டுத்துத்தி - ஓர் பூடு. கண்டுபாரங்கி - பஞ்சமூலத்தொன்று. அஃது சிறுகாஞ் சோன்றி. கண்டுபாவனை - பிறரைப்பார்த்துச் செய்வது. கண்டுமுதல் - கண்டமுதல். கண்டுமூலம் - திப்பிலி. கண்டூதி - காஞ்சொறி, தினவு. கண்டூரம் - ஓர் மருந்து. கண்டை - எறிமணி, ஓராபரணம், சீலை, பெருமணி, யானைமணி, சரிகை, நூற்கண்டை. கண்ணகை - கோவலன் மனைவி. கண்ணஞ்சல் - அஞ்சுதல், கண்ணை மின்னுதல். கண்ணடி - கண்ணாடி. கண்ணடியர் - கன்னடியர். கண்ணடைதல் - ஊற்றடைதல், துவார மிறுகல், பயிர்குருத் தடைதல். கண்ணடைத்தல் - துவாரமிறுகுதல். கண்ணப்பன் - ஓர் சிவதொண்டன். கண்ணமங்கை - விட்டுணுதலத்தி னொன்று. கண்ணராவி - பார்த்தவனிரங்கத் தக்கது. கண்ணல் - கருதல், குறித்தல், கன்றல். கண்ணழித்தலீ - பதப் பொருளுரைத் தல். கண்ணழிவு - தடுத்தல், பதப்பொரு ளுரை. கண்ணறை - அகலம், துவாரம், வன் னெஞ்சு. கண்ணன் - கிருட்டிணன், அஃது திருமால்தெச அவதாரத் தொன்று, திருமால். கண்ணா - ஓர் மரம், திப்பிலி. கண்ணாடி - உருவங்காட்டி இஃது அட்டமங்கலத்துமொன்று. கண்ணாடிச்சால் - பொட்டுழவு. கண்ணாடித்தரா - தராவிலோர் பேதம். கண்ணாடிப்புடையன் - ஓர் பாம்பு. கண்ணாடிவிரியன் - ஓர் பாம்பு. கண்ணாட்டி - அன்பானவள், மனை யாட்டி. கண்ணாமண்டை - கண்மண்டை கண்ணாம்பூச்சிகாட்டுதல் - ஓர் விளையாட்டு. கண்ணாம்பூச்சியாடுதல் - கண் சுழன்றுகிறுகிறுப்புத் தோற்றல், பிள்ளைகளினோர்விளையாட்டு. கண்ணாம்பொத்தி - ஓர் விளை யாட்டு. கண்ணாயிருத்தல் - உற்றுப் பார்த் திருத்தல், காவலாயிருத்தல், மிகு கருத்தாயிருத்தல். கண்ணாய்ப்பார்த்தல் - கருத்தாய்வி சாரித்தல். கண்ணாரக்காணல் - வெளியரங்க மாய்க் காணல். கண்ணாளர் - கம்மாளர், சித்திரகாரர், சினேகிதர், நாயகர். கண்ணாளன் - கணவன், தோழன். கண்ணாள் - சரசுபதி, சினேகமுள்ள வள். கண்ணி - தாம்பு, பாவினடி, புட் படுக்குங்கயிறு, பூ, பூங்கொத்து, பூ மாலை, பூவரும்பு. கண்ணிகட்டுதல் - அரும்பு கொள்ளு தல். கண்ணிகம் - மணித்தக்காளி. கண்ணிகுத்துதல் - தடம் வைத்தல். கண்ணிகை - தாமரைக் கொட்டை, பூ வரும்பு. கண்ணிக்கயிறு - நெய்வார்கட்டுங் கயிற்றினொன்று. கண்ணிக்கொடி - ஓர் புல். கண்ணிதழ், கண்ணிமை - கண்மடல். கண்ணிமைத்தல் - இமைவெட்டல். கண்ணீராக்கி - பச்சைக்கருப்பூரம். கண்ணிலி - குருடன், எறும்பு. கண்ணீர் - கண்ணிலிருந்து வழியுநீர். கண்ணுகம் - குதிரை. கண்ணுக்கரசன் - துருசு. கண்ணுக்கினியான் - பொன்னாங் காணி. கண்ணுக்குக்கண்ணானவன் - கண் போன்றவன், தோழன். கண்ணுக்குத்தைத்தல் - கண்ணுக்குப் பிரியப்படுதல். கண்ணுதல் - கருதல், சிவன். கண்ணுலைமூடி - ஓருலைமூடி. கண்ணுவம் - கம்மியம். கண்ணுவன் - ஓரிருடி. கண்ணுளர் - கண்ணாளர் நாடகர். கண்ணுளாளர் - நாடகர். கண்ணுள் - கூத்து. கண்ணுள்வினைஞர் - கண்ணாளர். கண்ணுறக்கம் - நித்திரை. கண்ணுறல் - காணல். கண்ணுறாவி - இரங்கப்படத் தக்க மெலிவு. கண்ணுறுதல் - பார்த்தல். கண்ணுறுத்தல் - கண்ணுருட்டல். கண்ணூறு - கண்பார்வையால்வந்த தோஷம். கண்ணெச்சில் - கண்ணூறு. கண்ணெறிதல் - கடைக் கண்ணாற் பார்த்தல், விரும்பல். கண்ணேணி - மூங்கிலேணி. கண்ணேறு - கண்ணூறு. கண்ணோ - கண்ணிலோர்வியாதி. கண்ணோடுதல் - இச்சித்தல், பார பட் சமாயிருத்தல், மேல்விசாரணை பண்ணல், விருப்பம் வைத்தல். கண்ணோட்டம் - கண்குறிப்பு, நாகரீகம், பட்சம். கண்ணோய் - கண்ணினோய். கண்திட்டம் - கண் மதியம். கண்திட்டி, கண்திஷ்டி - கண்ணூறு. கண்படல், கண்படுதல் - திட்டிபடுதல், நித்திரைசெய்தல். கண்படை - நித்திரை, மனிதர் படுக்கை. கண்படைநிலை - ஓர் பிரபந்தம், அஃது பெருமையிற் சிறந்தோர் அவைக்கண்நெடி துவைகியவமி மருத்துவர் முதலியோரவர்க்குக் கண்டுயில் கோடலைக் கருதிக் கூறுவது. கண்பட்டை - கண்மடல். கண்பாடு - நித்திரை. கண்பிடி - ஓர் காம்பிற்பற்றினகாய் களிவிளங்காய். கண்புகைச்சல் - ஓர் நோய், வெள் ளெழுத்து. கண்புணராமை - ஓரளவை, அஃது சிலவற்றைக்கண்டதன் பெயரறியா திருத்தல். கண்புதைத்தல் - கண்பொத்தல். கண்பூத்தல் - கண்புகைதல். கண்பூர்தல் - கண்டிருத்தியடைதல். கண்பொத்திக்குட்டல் - ஓர் விளை யாட்டு, களவெடுத்தல். கண்பொறித்தட்டுதல் - கண்மின்னல். கண்பொன்றுதல் - கண்செம்முதல். கண்போடுதல் - மனம் வைத்தல். கண்மங்கல், கண்மங்குலம், கண்மங் குளம் - கண்ணொளி குறைதல், வெள்ளெழுத்துவருதல். கண்மடல் - இமை, ஊற்றுக்கண். கண்மட்டம், கண்மட்டு - கண்மதிப்பு. கண்மணி - கண்ணிற்கருமணி. கண்மதியம் - கண்மதிப்பு. கண்மயக்கு - மயக்கம். கண்மருட்சி - கண்மயக்கு. கண்மருட்டு - கண்ணாலே மயக்குதல். கண்மலர் - ஓர் பணி, கண். கண்மறிக்காட்டல் - கண்குறிப்புக் காட்டல். கண்மாயம் - கண்ணை மறைத்தல். கண்மின்னியார்த்தல் - கண்சுழன் றொளியார்த்தல். கண்முகிழ்த்தல் - கண்மூடுதல். கண்மூடல் - இருள். கண்மூடி - அறிவீனன், குருடன். கண்மூடுதல் - இமைகுவித்தல், கண்டுங் காணார் போன்றிருத்தல், சாதல், நித்திரை செய்தல். கண்மை - கண்ணோட்டம். கண்வரி - கண்ணின்வரி. கண்வளர்தல் - நித்திரை செய்தல். கண்வாட்டி - கண்போன்றாள், மனைவி. கண்வாளர் - கணவர், கம்மாளர். கண்விடுதல் - உருகுதல், துவாரம் விடுதல். கண்விதுப்பழிதல் - கண்ணின தழகு கெடல். கண்விழி - கண்மணி. கண்விழித்தல் - கண்டிறத்தல், நித்தி ரை விழித்தல், வாட்டந் தெளிதல். கண்விழிப்பு - கவனம், சாக்கிரதை. கண்வினைஞர் - கம்மாளர். கண்வைத்தல் - விரும்பிப்பார்த்தல். கதகதெனல் - விரைவைக்காட்டு மீரடுக்கொலிக்குறிப்பு. கதகாலம் - செல்காலம். கதசம் - உட்டணம், சரித்திரம், தேற்றா, நோய், முகில். கதண்டு - கருவண்டு. கதம் - உக்கிரம், கோபம், பாம்பு, வலி, போதல். கதம்பம் - ஆன்கூட்டம், கடம்ப மரம், கானாங்கோழி, சனக் கூட்டம், மேகம், வாசனைப் பொடி, வெண் கடம்பு. கதம்பு - கடம்பு, கூட்டம். கதம்பை - ஓர்புல், தென்ன மட்டைத் தும்பு. கதரம் - யானைத்தோட்டி. கதலம் - வாழை. கதலி - கடுதாசிப்பட்டம், காற்றாடி தேற்றாமரம், வாழை, விருதுக் கொடி. கதலிகம் - தேற்றா. கதலிகை - துகிற்கொடி. கதலிமுத்து - வாழையிற்பிறந்த பழுப்பு நிறமுத்து. கதவிச்சி - கருப்பூரம். கதலிபாகம், கதலீபாகம் - சங்கீதத்தி னோர்சுவை, பாடலினோர் சுவை. கதலிப்பூ - பச்சைக்கருப்பூரம். கதலிவனம் - அனுமன்றபோவனம். கதலுதல் - அசைதல். கதவடிகாரர் - ஓர் சாதியார். கதவம் - கதவு, காவல். கதவாக்கியம் - சோதிடசாத்திரத் தினோர் வாக்கியம். கதவு - கபாடம், காவல். கதவுநிலை - கதவுநிற்குந் தூண். கதழ்வு - உவமைச்சொல், கடுப்பு, சிறப்பு, பகை, பெருமை, மிகுதி, வேகம். கதறல், கதறுதல் - அழுதல், கூப்பிடல். கதனம் - கடுப்பு, கலக்கம், போர், கொலை, பேச்சு. கதாசித்து - இடைவிட்டகாலம். கதாப்பிரசங்கம் - சரித்திரஞ் சொல்லல், சம்பாஷணை. கதாமஞ்சரி - கோவையானகதை. கதாயுதம் - தண்டாயுதம். கதாயுதன் - வயிரவன், வீமன். கதாயுத்தம் - தண்டுப்போர். கதாயோகம் - சம்பாஷணை. கதாய் - கந்தை, பீறல். கதி - அதிட்டம், ஆதரவு, கதியென் னேவல், குதிரைநடை, நடை, பதவி, பிறப்பு, புகலிடம், மோட்சம், விரைவு. கதிக்கும்பச்சை - நாகப்பச்சை, பச்சைக்கல். கதிக்கை - அதிகரிப்பு, கருவாளி மரம். கதித்தல் - எழுச்சி, ஒலித்தல், சிறத்தல், மிகுத்தல், பருத்தல். கதிபதம் - கூறியதுகூறல். கதிப்பு - எழும்பல், ஒலி, மிகுதி, பருமன். கதிமை - கூர்மை, பருமை. கதியன் - கூரியது. கதிரம் - அம்பு, கருங்காலி. கதிரவன் - சூரியன். கதிரெழுதுகள் - அணு எட்டுக் கொண்டது, சூரியகிரணத்தெழுந் துகள். கதிரோன் - ஆதித்தன். கதிர் - இருப்புமுள், கிரணம், சூரியன், தேருட்பரப்பினமரம், பயிர்க் கதிர், கதிரென்னேவல். கதிர்காமம் - ஓரூர். கதிர்க்கோல் - இருப்புமுள், நேரிய கோல். கதிர்செய்தல் - ஒளிவிடல். கதிர்த்தல் - இறுமாத்தல், ஒளிசெய் தல், கூர்த்தல். கதிர்நாள் - உத்திரநாள். கதிர்ப்பகை - இராகு, கேது, அல்லி, குவளை. கதிர்ப்பாரி - தாமரை. கதிர்ப்பாழை - ஆண்பனைப்பாழை. கதிர்மகன் - கன்னன், சனி, சுக்கிரீபன். கதிர்வாங்குதல் - கதிர்விடுதல். கதிர்விடுதல் - ஒளிசெய்தல், கதிரீனு தல். கதிர்விட்டெறித்தல் - கிரணம் விட்டி லங்குதல், செல்வம் பொலிந்து விளங்குதல், பிரகாசித்தல். கதிர்வீசுதல் - கதிரீனுதல், கிரணம் வீட்டிலங்குதல், செல்வம் பொ லிந்து விளங்குதல் பிரகாசித்தல். கது - வடுப்படல், வெடிப்பு. கதுகொதுத்தல் - ஒலிக்குறிப்பு, கொதித்தல். கதுக்கு - இராட்டினக்காது. கதுக்குதல் - அதக்குதல். கதுப்பு - ஆண்மயிர், கவுள், பசுக் கூட்டம், பெண்மயிர், மஞ்சள். கதுப்புளி - முக்கருவுள்ள சூட்டுக் கோல். கதுமுதல் - உறுமுதல், கடிந்து கொள் ளுதல். கதுமெனல் - சீக்கிரக்குறிப்பு, சீக்கிரம். கதுமை - கூர்மை. கதுவாய் - வடுப்படல். கதுவாலி - கவுதாரி, காடை. கதுவுதல் - கலங்குதல், நார்முதலிய வரிந்திழுத்தல், நீங்காதுபற்றல், பற்றுதல், வாங்குதல். கதை - காரணச்சொல், சொல், சொல்லென்னேவல், தடி, தண் டாயுதம். கதைகட்டல் - கதையுண்டு பண்ணல். கதைத்தல் - கதைசொல்லுதல், சொல்லுதல், மிகப்பேசல். கதைபிடுங்குதல் - கதைவிட்டுக்கதை கேட்டல், பேசிக்காரியமறிதல். கதைமாறுதல் - ஒன்றுசொல்லிப் பின்னொன்று சொன்னேனென்றல். கதையறிதல் - காரியமறிதல். கதைவிடுதல் - ஒன்றையறியப்பேச்சு விடுதல். கதோபகதனம் - சம்பாஷணை. கத்தக்காம்பு - ஓர் சரக்கு. கத்தபம் - கழுதை. கத்தம் - கதை, புயம். கத்தராளி - அதிபதி. கத்தரி - ஓர் பாம்பு, கத்தரி யென்னே வல், வழுதுணை, வேனிற்காலத் துக் கடுங்கோடை, சாதிபத்திரி. கத்தரிகை - கத்தரிக்குங்கருவி. கத்தரிகைக்கால் - கத்தரிகை போலப் பிணைத்தமிண்டி. கத்தரிக்கை - கத்தரித்தல், மயிரெறி கருவி. கத்தரிக்கோல் - கத்தரிகை. கத்தரித்தல் - அறுத்தல், திரிவாய் மருந்து சிதறியெரிதல். கத்தரிநாயகம் - யானைச்சீரகம். கத்தரிமணியன் - ஓர் பாம்பு. கத்தரிவிரியன் - ஓர்பாம்பு. கத்தரை - கோத்திரம். கத்தல் - கத்துதல். கத்தவியம், கருத்தவியம் - தத்துவம். கத்தளை - ஓர் மீன். கத்தனம் - கத்தரித்தல். கத்தன் - ஆக்குவோன், கடவுள், முத லாளி, அருகன், சிவன், விட்டுணு. கத்தா - கடவுள், செய்பவன், முதல் வன். கஸதி - வருத்தம். கத்தி - ஆயுதப்பொது, வாள். கத்திகட்டி - இராணுவவீரன். கத்திகட்டுதல் - கம்பலைப்படுதல். கத்திகை - கருக்குவாளிமரம், சிறு கொடி, துகிற்கொடி, பூமாலை. கத்திதீட்டுதல் - கூராக்கல், பகை சாதித்தல். கத்திப்போர் - வாட்போர். கத்தியம் - இலக்கணமின்றியிலக் கணப் பாட்டுப் போற் சொல்வது, சீலை, நல்லாடை. கத்தியோதம் - மின்மினிப்பூச்சி. கத்திரி - ஓர்பாம்பு, மயிரெறிகருவி, கண்டங்கத்தரி. கத்திரிக்கை - மயிரெறிகருவி. கத்திரிக்கைப்பூட்டு - ஓர் பூட்டு. கத்திரிணி - தேக்குமரம். கத்திரியர் - சத்திரியர். கத்திருதத்துவம் - கருத்ததத்துவம். கத்திருவம் - குதிரை. கத்திருவாச்சியம் - பிறவினை. கத்து - கத்துதல், கத்தென்னேவல், சந்து. கத்துதல் - கூப்பிடல், பிதற்றல். கத்துரு-ஆள்வோன்,காசிபர் மனைவி களிற் சருட்பங்களை யீன்றாள், நடத்துவோன், படைப்போன். கத்துருத்துவம் - ஆளுகைநடத்துதல். கத்துருவம் - குதிரைப்பற் பாஷாணம், குதிரை. கத்தூரி, கஸ்தூரி - மான்மதம். கத்தூரிநாரத்தை - ஓர் நாரத்தை. கத்தூரிநாவி - ஓர் மிருகம். கத்தூரிப்பிள்ளை, கத்தூரிப்பூனை - நாவி. கத்தூரிமஞ்சள் - ஓர் மஞ்சள். கத்தூரிமான் - ஓர் சாதியானமான், நாவி. கத்தூரிமிருகம் - நாவி. கத்தூரியெலுமிச்சை - ஓரெலுமிச்சை. கத்தை - கழுதை, கற்றை. கந்தகத்திராவகம் - கந்தகச்செயநீர். கந்தகபாஷாணம் - கந்தகம். கந்தகபூமி - காங்கையானதேசம். கந்தகம் - கெந்தகம், உள்ளி, முருங்கை. கந்தகரசாயனம் - ஓர் மருந்து. கந்தகவுப்பு - ஓருப்பு. கந்தகாலோத்தரம் - ஓர் நூல். கந்தசட்கம் - தமரத்தை. கந்தசட்டி - ஐப்பசிமாதத்தினமர வாசிதொடங்கியாறுநாள். கந்தசாரம் - இந்திரனந்தனம், சந்தனம். கந்ததன்மாத்திரை - மணத்தையறியு மறிவு. கந்தநாகுலி - செவ்வியம். கந்தநாகுலியம் - அரத்தை. கந்தபத்திரம் - வெண்டுளாய். கந்தபரடாணம் - கந்தகம். கந்தபுட்பை - அவுரி. கந்தமாதனம் - ஓர்மலை. கந்தமாதிரு - பூமி. கந்தமூடிகம் - கத்தூரிமிருகம். கந்தபூதியம் - நாய்வேளை. கந்தபொடி - வாசனைப்பொடி. கந்தப்புராணம் - காந்தம். கந்தமூலம் - கிழங்கு. கந்தம் - அணுத்திரள், இந்திரியம், கருணை, கழுத்தடி, கிழங்கு, பகுதி, பங்கு, பஞ்சகந்தம், பொதியமலை, வாசனைவேர், உள்ளி, சந்தனக்குழம்பு, முருங்கை. கந்தரக்காட்டம் - வெள்ளைப் பாஷா ணம். கந்தரசு - சாம்பிராணி. கந்தரம் - கடற்பாசி, கழுத்து, காடக பாஷாணம், புனல்முருங்கை, மலைக்குகை, மேகம். கந்தராசம் - சந்தனம். கந்தருப்பன் - காமன். கந்தருவம் - இசை, இசைப்பாட்டு, எண்வகைமணத்துளொன்று. அஃது கன்னியுந்தலை மகனு மொருப் பட்டுக்கலப்பது, தேவ சாதியிலோர்வகை, குதிரை, தேகம்விட்ட ஆத்துமா. கந்தருவர் - தேவசாதியிலோர் வகை யார். கந்தர்ப்பன் - மன்மதன். கந்தலோகம் - சுப்பிரமணியபதம். கந்தல் - கெடுதல், கெட்டது, பீறல். கந்தவகம் - மூக்கு, காற்று. கந்தவகன் - காற்று. கந்தவடி - வாசனைத்தயிலம். கந்தவருக்கம் - சுகந்தம். கந்தவாகன் - காற்று. கந்தவாரம் - அந்தர்ப்புரம், அரசன் றேவியில்லம். கந்தளம் - கவசம், கதுப்பு, தளிர், பொன், யுத்தம். கந்தற்பகூபம் - யோனி. கந்தற்பசுவரம் - காமம். கந்தனேந்திரர் - ஓர் சித்தர். கந்தன் - அருகன், ஓர் பிதிர், குமரன், சூதபாஷாணம், காமன். கந்தாயம் - பங்கு, விளைவுகாலம். கந்தாரம் - காந்தாரம். கந்தி - கந்தகம், கந்தியென்னேவல், கமுகு, தவப்பெண், வாசம். கந்தித்தம் - சீலை. கந்தித்தல் - மணத்தல். கந்தியுப்பு - கந்தகவுப்பு. கந்திரி - பண்டி. கந்திவாருணி - பேய்த்தும்மட்டி. கந்து - அருகு,கட்டுத்தறி,கந் தென் னேவல், கழுத்தடி, சந்து, தூண், தூற்றினமணி யருகு, பண்டி, பண்டியுள்ளிரும்பு, பற்றுக்கோடு, பனங்கூடல்,மாடு பிணைக்குங் கயிறு, யாக்கையின் மூட்டு, யானை யணைதறி, வைக்கோற்றிரள். கந்துகட்டுதல் - நீர்கொதித்து வரை கட்டல், வைக்கோற்றிரட்டி வளைத்துவிடுதல். கந்துகம் - குதிரை, குறுநிலமன்னர் குதிரை, பந்து. கந்துகன் - தான்றி. கந்துதல் - கெடுதல். கந்துமாறுதல் - இணைத்ததை மாற்றி விடுதல். கந்துவான் - கந்து. கந்துளம் - பெருச்சாளி. கந்துள் - கரி. கந்தேறு - கோடகசாலை. கந்தை - சீலை, நல்லாடை, பீறற் புடைவை. கந்தோதம் - தாமரை. கபடஸதன் - கபடன். கபடநாடகம், கபடவித்தை - மகா தந்திரமான செய்கை. கபடநாடகன் - திருமால். கபடம் - தந்திரம், வஞ்சகம். கபடன் - வஞ்சகன். கபடு - கபடம். கபட்டுப்படிக்கல் - இடைகுறைவான படிக்கல். கபநாசம் - கண்டங்கத்தரி. கபநாசனி - தேற்றாவித்து. கபந்தம் - கவந்தம். கபம் - கோழை. கபம்பம் - வாலுளுவை. கபாடக்கட்டி - வசம்பு. கபாடம் - கதவு, காவல். கபாலக்கரப்பன் - ஓர் நோய். கபாலக்குத்து - தலை மண்டைக் குத்து. கபாலசன்னி - ஓர் சன்னி. கபாலசாந்தி - ஆவிரை. கபாலதரன் - சிவன், வயிரவன். கபாலமலை - ஓர்மலை. கபாலம் - தலையோடு. கபாலவாசல் - உச்சித்துவாரம். கபாலன் - சீர்பந்தபாஷாணம். கபாலி - உமை, சிவன், வயிரவன். கபாலீச்சுரன் - சிவன். கபி - குரங்கு. கபிஞ்சலம் - ஆந்தை, காடை. கபிதம் - கருஞ்சீரகம். கபித்தம் - விளாமரம். கபிலம் - உபபுராணம் பதினெட்டி னொன்று, கருமைகலந்த பொன் மை. கபிலன் - ஓரறிஞன். கபிலை -கருமைகலந்தb பான்மை, தென் கீழ்த்திசையானைக்குப் பெண்யானை, தேவப்பசு, பசு, நீரிறைக்குஞ்சூத்திரத் தொன்று. கபோதகம் - சித்திரக்கம்பி. கபோதம் - கரும்புறா, சுவர்த்தலங் களின் சித்திரக்கம்பி, புறா. கபோலம் - கதுப்பு. கப்பச்சு - கம்மாளர்கருவியி னொன்று. கப்படம் - சீலை. கப்படா - அரை. கப்படி - ஓர் மரம். கப்பணம் - இருப்பு நெருஞ்சின்முள், ஓராபரணம், கழுத்திடுமிரும்புத் தகடு, கைவேல். கப்பம் - அரசிறை. கப்பரை - இரப்போர்கலன், கிடாரம். கப்பலோட்டு - கடல்யாத்திரை. கப்பல் - மரக்கலம். கப்பலவாணம் - ஓர் வாணம். கப்பல்வாழை - ஓர்வாழை. கப்பறை - சூதினோர்தாயம். கப்பற்கடலை - ஓர் கடலை. கப்பற்கதலி - ஓர் வாழை. கப்பற்காரன் - கப்பற்றலைவன். கப்பற்சண்டை - கப்பலிலிருந்து செய்யும்போர். கப்பற்பாட்டு - ஏலப்பாட்டு, ஓர் பாடல். கப்பி - ஓர்கருவி, கழிகடை, குறுநல், தானியம். கப்பித்தல் - கிளைவிடல், முகை யரும்பல். கப்பிப்பிஞ்சு - கழிகடைப்பிஞ்சு. கப்பியல் - கப்பி. கப்பு - கவர், கொப்பு, சிறுதூண். கப்புக்கால் - குறுங்கால். கப்புதல் - கம்முதல். கப்புத்தோள் - வலத்தோளுமிடத் தோளுமாகக்காவுதல். கப்புநாமம் - இருகவர்நாமம். கப்புவிடுதல் - கவர்வைத்தல். கமகமத்தல் - மிகமணத்தல். கமகமெனல் - வாசனைக்குறிப்பு. கமகன் - அரும்பொருளைச்செம் பொருணடையாய்க்காட்டிப் பாடுவோன். கமக்காரன் - கமத்திலெசமான், வேளாளன். கமங்கட்டுதல் - கமமுண்டுபண்ணல், வேளாண்மைக்கணிகோலுதல். கமசுகட்டுதல் - முயன்றுநிற்றல். கமடத்தரு - சீவதாரு. கமடம் - ஆமை. கமண்டலம் - கெண்டிகை, சுரைக் குடுகு இஃது தவத்தோர் பஞ்ச முத்திரையினொன்று. கமபாஷை - ஓர் பயில். கமம் - நிறைவு, விளைநிலம். கமரி - ஓர்புல். கமருதல் - அழுதல். கமர் - வெடிப்பு. கமலகுண்டலமாய்விழுதல் - கீழ் மேலாய் விழுதல். கமலக்கண்ணன் - விண்டு. கமலநிருத்தம் - கூத்தினோர்விகற்பம். கமலநிறமணி - சாதுரங்கப்பது மராகம். கமலம் - தாமரை, நீர். கமலயோனி - பிரமன். கமலராகம் - பதுமராகம். கமலவூர்தி - அருகன், பிரமன். கமலாக்கினி - மட்டானதீ. கமலாசனன் - பிரமா. கமலாசனி - இலக்குமி. கமலாலயம் - திருவாரூர். கமலாலையை - இலக்குமி. கமலி - குங்குமபாஷாணம். கமலிப்பட்டு - ஓர்பட்டு. கமலினி - உமைசேடிகளினொருத்தி. கமலை - இலக்குமி. கமல் - குடசப்பாலை. கமவாரம் - அணியப்பங்கு. கமழ்தல் - மணத்தல். கமறுதல் - அலறுதல், குமிறுதல், மிகக்காய்தல். கமனகுளிகை - இரசகுளிகை, நினைத்த விடத்துக்குப் போகப் பண்ணும் மருந்து. கமனசித்தி - கமனம்பண்ணும் வல்ல பம். கமனம் - கதி, போதல். கமனம் பண்ணுதல் - கமனமாய்ச் செல்லல், பெண்ணிடத்திற் சேர்தல், போதல். கமனி - ஆகாயமார்க்கமாச் செல் பவன். கமனித்தல்-கமனம்பண்ணல், போதல். கமாரிடுதல் - சத்தம் பண்ணல், வெடித்தல். கமாரெனல் - சத்தம்பண்ணுதல். கமார் - வெடிப்பு. கமித்தல் - பொறுத்தல். கமுகந்தீவு - சத்ததீவினொன்று. கமுகம்பூச்சம்பா - ஓர் நெல். கமுகு - ஓர் மரம். கமுகுமுத்தம் - கமுகிற்பிறந்தபச்சை நிறமுத்து. கமுக்கட்டு - கைக்குழி. கமுக்கம் - அடக்கம், அமைந்திருத்தல். கமுக்குக்கமுக்கெனல் - ஈரடுக் கொலிக்குறிப்பு. கமை - பொறுமை. அஃது சத்த புண்ணியத்தொன்று. கம் - ஆகாயம், காற்று, தலை, நீர், பிரமன், மேகம், வெண்மை, அறிவு, இந்திரியம், சந்தோஷம், முத்தி, விந்து. கம்பக்கணை - அசையாதவன், அசை யாத்தம்பம், தழுக்குணி. கம்பங்கோரை - ஓர் புல். கம்பட்டக்காரன் - காசடிப்போன். கம்பட்டமடித்தல் - காசடித்தல். கம்பட்டமுளை - காசடிக்கும் முத்திரை. கம்பட்டம் - காசு. கம்பத்தம் - வேளாண்மை. கம்பத்தன் - இராவணன். கம்பத்து - தோணியின் வெடிப்பு. கம்பந்தாளி - ஓர் தாளி. கம்பந்திராய் - ஓர் திராய். கம்பம் - அசைவு, தூண், நடுக்கம், பாய்மரம், விளக்குத்தண்டு. கம்பர்காஞ்சி - ஓரூர். கம்பலம் - கம்பளி, செவ்வாடை, மேற்சட்டி. கம்பலை - அச்சம், ஒலி, சண்டை, துன்பம், நடுக்கம், மருதநிலம், வயல், வருத்தம். கம்பலைகட்டுதல், கம்பலைப்படல் - சண்டை பிடித்தல், பேச்சுவார்த் தைப் படல். கம்பலை மாரி - கம்பலைப் படுகிறவன். கம்பவாணம் - ஓர் வாணம். கம்பளத்தார் - ஓர்சாதியார். கம்பளம் - கம்பளி, செம்மறிக்கடா, செவ்வாடை, துருவாட்டேறு. கம்பளர் - மருதநிலமாக்கள். கம்பளி - ஓர் மரம், ஓர் வகைச்சீலை, ஓர் வகையாடு. கம்பளிக்கொண்டான் - ஓர்பூடு. கம்பற்று - தோணியிற்சில்லி. கம்பனம் - அசைவு, அதிர்த்தல். கம்பன் - ஓர்புலவன், ஓரிராக்கதன். கம்பாகம் - அமாற்கயிறு. கம்பாயம் - ஓர் புடைவை. கம்பானத - கம்பையாறு. கம்பாநதி - அமாற்கயிறு. கம்பி - இரும்புமுதலியவற்றின் கம்பி, கம்பியென்னேவல், காதணி, சித்திரக்கம்பி. கம்பிகட்டுதல் - புடைவை முதலிய வற்றிற்குக் கம்பிகீறுதல். கம்பிகை - ஓர்வாத்தியம். கம்பிக்கடுக்கன் - ஓர்வகைக்கடுக்கன். கம்பிக்கரை - கம்பிக்குறியுள்ள புடைவை. கம்பிக்குறி - கம்பிபோன்றகுறி. கம்பிதம் - அசைவு, நடுக்கம். கம்பித்தல் - நடுங்கல். கம்பிமணி - ஓர் வகைமணி. கம்பியச்சு - கம்மாரோர்கருவி, சித்திரக்கம்பி. கம்பியுப்பு - ஓருப்பு. கம்பிவாங்குதல் - நெடுகிவிடுதல். கம்பிளி - கம்பளி. கம்பிவிறிசு - ஓர்வானம். கம்பீரித்தல் - ஆர்ப்பரித்தல், வீராவேசப்படுதல். கம்பீரசன்னி - ஓர் நோய். கம்பீரம் - ஆர்ப்பரிப்பு, ஆழம், செருக்கு. கம்பீரன் - வீரகெற்சித முள்ளவன். கம்பு - ஓர்பயிர், சங்கு, சிறுதடி, செந்தினை, மரக்கொம்பு. கம்புள் - சங்கு, சம்பங்கோழி, வானம் பாடி. கம்பை - எல்லை, ஓர்யாறு, கதவு முதலியவற்றின் கம்பை, பொறுப்பு. கம்பைக்கல் - ஓர் மணி. கம்மக்கை - வேலைநெருக்கம். கம்மம் - கம்மியம், வேலை. கம்மல் - இருமல், ஒரு வகைக்கடுக் கன், குரலடைப்பு, மந்தாரம், மாசு. கம்மவார் - கமக்காரர், ஓர் சாதியார். கம்மாலை - கம்மத்தொழில் செய்யுந் தலம். கம்மாளர் - கம்மியர். கம்மாறர் - கரையார். கம்மியம் - கைத்தொழில், பேறு. கம்மியர் - கம்மாளர், தொழில் செய் வோர். கம்முதல் - அதட்டியுரப்பல், இரு முதல், குரல்கன்றல், மூடுதல். கம்மெனல் - வாசனைக்குறிப்பு. கம்மை - சிறுகீரை. கயக்கம் - கயங்கப்படுதல். கயக்கு - கசக்கென்னேவல், கயக்குதல், சோர்வு. கயக்குதல் - நசுக்குதல், முறுக்குதல், மெலிவித்தல். கயங்கு - கம்பு, கயங்கென்னேவல். கயங்குதல் - குழைவு, சோர்தல், நொந்து மெலிதல், விலகிவிடுதல். கயந்தலை - மனத்துயர், யானைக் கன்று. கயப்பினை - வங்கமணல். கயமுகன் - வினாயகன், கயமுகாசூரன். கயமுகாரி - விநாயகன். கயமுனி - யானைக்கன்று. கயமை - கீழ்மை, சண்டாளத்தனம். கயம் - அகழி, அழிவு, ஆழம், இளமை, ஓர்நோய், கீழ், குளம், கேடு, தேய்வு, நீர், பெருமை, மேன்மை, யானை. கயரோகம் - கசரோகம். கயர் - கசர், கயரென்னேவல். கயல் - கெண்டைமீன். கயவஞ்சி - உலோபன். கயவஞ்சித்தனம் - உலோபத்தனம். கயவர் - கீழ்மக்கள். கயவளாகம் - கீழுலகம். கயவாய் - கரிக்குருவி, கழிமுகம், பிளந்தவாய். கயவு - உயரம், கழிமுகம், களவு, பெருமை, மிகுதி, மேன்மை. கயனை - கசனை. கயாகரம் - ஓர்நிகண்டு. கயாரி - சிங்கம். கயானன் - கயமுகாசூரன், விநாயகன். கயிங்கரன் - ஏவல்செய்வோன். கயிங்கரியம் - வேலை. கயிங்கிதம் - ஆகாயத்திற்சுருபமறிதல். கயிப்பு - இலாகிரி. கயிரம் - அலரி. கயிரவம் - செவ்வாம்பல், வெள்ளாம் பல். கயிரிகம் - ஓர்மண். கயிரை - சுற்றம். கயிர் - தவறு. கயிலாசம், கயிலை - ஓர்மலை. கயிலாயன், கயிலையாளி - சிவன். கயிலி - பலவன்னவரிப்புடைவை. கயிலையிற்கடுங்காரி - மாமிசபேதி. கயில் - ஆபரணக் கடைப்புணர்வு, தேங்காய்ப்பாதி, பிடர். கயிறடித்தல் - நூல்போடுதல். கயிறு - வடம். கயிறுகட்டுதல் - நெடுகவிடுதல். கயிறுசாத்துதல் - சாத்திரம்பார்க்க ஏட்டிலேகயிறிடுதல். கயிறுதடி - நெய்வார் கருவியி னொன்று. கயிறுபிடித்தல் - நூல்பிடித்து ஒழுங்கு படுத்தல். கயிறுமுறுக்குதல் - தொந்தரைப் படுத்தல், வருத்தப்படுத்தல். கயிறுமுறுக்குதல் - கயிறுதிரித்தல், வருத்தப்படுத்தல். கயிற்றுக்கொடி - கயிற்றாலாய கட்டுக் கொடி. கயிற்றுக்கோலாட்டம் - ஓர்விளை யாட்டு. கயிற்றுக்கோல் - வெள்ளிக்கோல். கயிற்றுப்பொருத்தம் - மணப் பொருத்தம் பத்தினொன்று. கயிற்றேணி - நூலேணி. கயினி - அத்தநாள், கைம்பெண். கயை - ஓர் புண்ணியச்சேத்திரம். கர - ஓர் வருடம், கரவென்னேவல். கரகம் - ஆலாங்கட்டி, கமண்டலம், கெண்டிகை, வட்டில். கரகரணம் - பரதவுறுப்புளொன்று. கரகரத்தல், கரகரெனல் - அரி கண்டப் படுத்தல், ஒலிக் குறிப்பு, பரிசக்குறிப்பு. கரகரப்பு - சருச்சரையூறு, தினவு. கரசம் - யானைக்கரணம், யானை. கரசரணாதி - கைகால் முதலிய சாங்கம். கரசல் - புன்செய். கரசாகை - விரல். கரசிக்கிருட்டி - ஓர் பறவை. கரசீகரம் - துதிக்கையுமிழ்நீர். கரசை - கரசம். கரடகபாஷாணம் - ஓர் மருந்து. கரடகம், கரடகம்பம் - தந்தரம், வஞ்சகம், ஓர் புல். கரடகன் - தந்திரி, வஞ்சகன். கரடம் - காக்கை, மதம்பாய்சுவடு, யானைமதம். கரடி - ஐவாய்மிருகம். கரடிகை - ஒர் பறை. கரடிக்கூடம் - அரங்கம். கரடிப்பறை - ஓர் பறை. கரடிவித்தை - ஆயுதபரிட்சை. கரடு - கணு, காற்பரடு, சருச்சரை, முரடு, வஞ்சகம், ஓர்புல். கரடுமுரடு - செம்மையற்றது, வயிர முங்கணுவுங் கொண்டது. கரட்டரிதாரம் - ஓர் மருந்து. கரட்டான் - ஓரோணான். கரட்டுக்கரட்டெனல் - ஒலிக்குறிப்பு. கரட்டுத்தாளகம் - விழைவுபாஷாண முப்பத்திரண்டினொன்று. கரட்டுநிலம் - வன்றரை. கரட்டோணான் - ஓரோந்தி. கரணம் - அந்தரிந்திரியம், அறுதிச் சீட்டு, உபகரணம், எண்ணிக்கை, ஏது, ஐம்பொறி, கணிதம், கல்வி, காரணம், கூத்தினோர் விகற்பம், கூத்து, நற்செய்கை, பஞ்சாங்கத்தி னொன்று, விருப்பம், செய்கை. கரணி - செய்குதல், செய்பவன். கரணிதம் - அந்தக்கரணம். அஃது ஆங்காரம் சித்தம் புத்தி மனம், கல்வி, கூட்டம், கூத்தின் விகற்பம். கரணியமேனிக்கல் - கரும்புள்ளிக்கல். கரணை - ஒர் செடி, ஓர் தூறு, ஒர் வகைக்கட்டு, முளி, வீணைத் தண்டு. கரணைப்பலா - வெருகு. கரணைப்பாவட்டை - ஓர்பாவட்டை. கரண்டகம் - ஓர் செப்பு. கரண்டம் - கமண்டலம், கரண்டகம், நீர்க்காக்கை. கரண்டி - சிற்றகப்பை. கரண்டை - முனிவர்வாசம். கரத்தல் - ஒளித்தல், கொடாமை, திருடல். கரநியாசம் - கைக்கிரியை. கரந்துறைகோள் - காணாக்கிரகம். கரந்துறைச்செய்யுள் - மிறைக்கவியி னொன்று. கரந்தை - ஓர் பூடு, அஃது அட்டாத சமூலத்தொன்று, பகைவரோட்டின நிரை மீட்டவர்க்கு மாலை, கல்லாரை. கரபத்திரம் - ஈர்வாள், கைவாள். கரபம் - கழுதை. கரபாத்திரமெடுத்தல், கரபாத்திரம் - கையிலன்னம் வாங்கிப் புசித்துத் திரிதல். கரப்பன் - கிரந்திப்புண். கரப்பன்பூச்சி - ஓர் பூச்சி. கரப்பன்பூடு - ஓர் பூடு. கரப்பு - ஒளிப்பு, களவு, மத்து, மீன் கூடு. கரப்பிரசாரம் - பரதவுறுப்புளொன்று. கரப்புக்குடில் - சிறுகுடில். கரப்பொறி - குடிலைத் தண்டேற்றி வைத்தல். கரமஞ்சரி - நாயுருவி. கரமுகன் - வினாயகன். கரம் - எழுத்தின் சாரியை, (உம்) அகரம், ஓலைக்குவியல், கழுதை, கிரணம், குடியிறை, கை, நஞ்சு, யானைத்துதிக்கை. கரம்பு - பாழ்நிலம். கரம்பை - சிறுகளா, பாழ்நிலம், ஓர் பூடு, களிமண். கரவடம் - களவு. கரவடர், கரவர் - திருடர். கரவாகம் - காக்கை. கரவாளம், கரவாள் - பட்டா கரவீரம், அலரிச்செடி. கரவு - உலோபம், ஒளித்தல், களவு, வஞ்சகம். கரவுவெளிப்படுப்பணி - ஒருவரது மறைத்த செய்கையைத்தன் செய் கையால் வெளிப்படுத்தல், (உம்) கடிமனைக்கு காலைவருகாவலற்கு துஞ்சும்படி விரித்தாள் ஓரணங்கு பாய். கரவை - கம்மாளர் கருவியினொன்று. கரளம் - காஞ்சிரமரம், நஞ்சு. கரளை, கருளை - வளர்தலின்மை. கரன் - ஓரரக்கன். கரா - ஆண்முதலை, முதலை, இல வுங்கம். கராகண்டிதம் - தெளிவு. கராசலம் - யானை. கராசனம் - புலி. கராடம் - மருக்காரை. கராமுத்து - முதலையிற்பிறந்த வெண்ணிற முத்து. கராம் - ஆண்முதலை, முதலை. கராம்பு - ஓர் சரக்கு. கராளகேசரி - சிங்கம். கராளம், கராளி - தீக்குணம். கராளை - வளராதவன். கரி - இருந்தை, கரியென்னேவல், சாட்சி, நஞ்சு, யானை, வயிரம். கரிகரம் - கலவிவிளையாட்டி னொன்று. கரிகறுத்தல் - கவலையான் முகங் கருகல். கரிகன்னி - வெருகு. கரிகாடு - கரிந்தகாடு, யானை திரியுங் காடு. கரிகாலன் - ஓர் சோழன். கரிக்கண்டு - கரிசலாங்கண்ணி. கரிக்காந்தல் - தூட்கரி. கரிக்குடர் - மடக்குக்குடர். கரிக்கருவி - ஓர் புள். கரிக்கொடி - மூவகைக்கொடியி னொன்று. கரிசங்கு - தென்னோலைக்கரிசங்கு. கரிசலாங்கண்ணி - ஓர் பூடு. கரிசலை - பொற்றலைக்கையாந்த கரை. கரிசல் - கரியற்காடு, கருமண்ணிலம், முதிர்ந்தவிலை. கரிசனம் - அன்பு, யானைக்கோடு. கரிசனம் - இழுத்தல், உழுதல். கரிசன்னி - வெண்காக்கணம். கரிசாலை - கையான்தகரை. கரிசு - இருநூறுபறைகொண்ட அளவு குறைவு, குற்றம், தவறு. கரிசை - கரிசு. கரிசனை - கரிசனம். கரிச்சாங்கிழங்கு - ஓர்பூடு. கரிச்சால், கரிச்சான்பூடு - கரிசலாங் கண்ணி. கரிச்சான் - கருங்குருவி. கரிணி - பெண்யானை, யானை. கரிணிகம் - ஓர்காதணி. கரிதம் - அச்சம். கரிதல் - கருகுதல், பெருங்கோபம். கரிதன் - அச்சமுள்ளோன். கரித்தல் - எரிதல், கார்த்தல். கரிநாள் - கருநாள். கரிப்பான் - ஓர் பூடு. கரிப்பு - அச்சம், கரித்தல். கரிப்புறத்திணை - புறத்திணையி னொன்று, அஃது சான்றோர் சொற்றவற்றைச்சாட்சியாகக் காட்டல். கரிப்பூசுதல் - வசைவைத்தல். கரிமரநாய் - கறுப்புமுறுப்புக் கேடு மானது. கரிமா - அட்டசித்தியினொன்று, அஃது இருப்புமலையினுங் கனத்தல். கரிமுகன் - வினாயகன். கரிமுண்டம் - அறக்கறுவல். கரியது - கருநிறமுள்ளது. கரியபோளம் - நறும்பிசின். கரியமணி - கண்மணி, கரியபாசி. கரியமால் - காய்ச்சற்பாஷாணம், விட்டுணு. கரியல் - கருகல். கரியவன், கரியான் - இந்திரன், கடவுள், கண்ணன், கள்வன், கறுவல், சனி. கரில் - கார்ப்பு, குற்றம், கொடுமை. கரிவங்கம் - காரீயம். கரிவாகனன் - இந்திரன், ஐயன். கரிவைரி - வெள்ளைப்பாஷாணம். கரீரம் - அகத்தி, குடம், கும்பவிராசி, மிடா, யானை, யானைப்பல்லடி. கரு - அட்டகருமக்கரு, ஓரு காகம், மக்கரு, கருப்பம், கருப்பொருள், நடு, நிறம், பெருமை, முட்டை, மேடு, மேன்மை, யோசனை, பிள்ளை. கருகருத்தல் - அரிகண்டப்படுத்தல். கருகல் - கருகினது, கருகுதல், பொருண் மறைவு, மாலைநேரம். கருகுதல் - கரிதல், கறுத்தல், தீதல், பொருண்மறைதல். கருகுமாலை - மசண்டை, மாலை நேரம். கருகூலம் - கருப்புக்கட்டி, பொக்கசம். கருக்கட்டுதல் - மழைக் குணமாயிருத் தல், யோசனை பண்ணல், வார்ப்பு வேலைக்குக் கருப்பிடித்தல். கருக்கரிவாள் - கூன்வாள். கருக்கரைதல் - கருப்பமழிதல். கருக்கல் - இருள், கருகினது, சப் பட்டை மனதை நோவச் செய்தல், மாலைநேரம். கருக்காக்குதல் - கூராக்குதல். கருக்காய் - இளங்காய். கருக்கானவன் - கபடன். கருக்கிடுதல் - கூராக்குதல். கருக்கிடை - யோசனை. கருக்கு - ஈர்வாட்பல், கருகல், கருக் கென்னேவல், கூர், பனை மட்டை இலைமுதலியவற்றின் கருக்கு. கருக்குச்சுருட்டு - கபடம். கருக்குடி - சவுக்காரம். கருக்குதல் - கருகப்பண்ணுதல். கருக்குப்பீர்க்கு - ஓர்பீர்க்குக்கொடி. கருக்குவாய்ச்சி, கருக்குவாளி - ஓர் மரம். கருக்குழி - கருப்பாசயம். கருக்கூடு - கருப்பை. கருக்கூட்டுதல் - கருத்துவிசாரித்தல், சினைத்தல், நியாயந்தேடுதல், மழைக்குணங்கொள்ளுதல். கருக்கொள்ளுதல் - கருப்பற்றுதல். கருங்கடல்வண்ணன் - ஐயன், விண்டு. கருங்கண்ணி - ஓர் மீன். கருங்கந்து - அக்கந்தின் புறக்கந்து. கருங்கரப்பன் - கருங்கிரந்தி. கருங்கல் - ஓர் சாதிக்கல். கருங்கற்றலை - ஓர் மீன். கருங்காக்கணம் - ஓர் காக்கணங் கொடி. கருங்காலி - ஓர் மரம். கருங்காலி - கருங்குவளை. கருங்கிரந்தி - ஓர் நோய். கருங்கிளி - ஓர் கிளி. கருங்குங்குலியம் - ஒரு மருந்து. கருங்குதிரையாளி - வயிரவல். கருங்குந்தம் - கண்ணோயி னொன்று. கருங்குரங்கு - கருநிறமந்தி. கருங்குவளை - நீலோற்பலம். கருங்குறுவை - ஓர் நெல். கருங்குன்றி - ஓர்குன்றி. கருங்கை - கடுங்கைவேலை. கருங்கொடி - ஓர் பூடு. கருங்கொட்டி - ஓர் கொட்டி. கருங்கொண்டல் - வடகீழ்க்காற்று. கருங்கொல் - இரும்பு. கருங்கொல்லர் - இரும்புவேலை செய்வோர். கருங்கொள் - ஓர் கொள். கருங்கோழி - ஓர் கோழி. கருங்கோள் - இராகு. கருசம் - தேயமன் பததாறினொன்று. கருசிலாங்கண்ணி - ஓர் பூடு. கருச்சிதம் - முளக்கம், வீராவேசம். கருஞ்சனம் - முருங்கை. கருஞ்சாதி - கீழ்மக்கள். கருஞ்சாரை - ஓர்பாம்பு. கருஞ்சார் - அரைப்பூட்டு. கருஞ்சீரகம் - ஓர் சரக்கு. கருஞ்சுக்கான் - ஓர் கல். கருஞ்சுரை - ஓர் சுரை. கருஞ்சூரை - ஒர் முட்செடி, செங்கத் தாரி. கருஞ்செம்பை - ஓர் செடி. கருடகேதனன் - விட்டுணு. கருடக்கல் - ஓர் கல். கருடக்கொடி - குறிஞ்சா, பெரு மருந்து. கருடக்கொடியோன் - விட்டுணு. கருடக்கொவ்வை - காக்கணங் கொவ்வை. கருடசாரம் - உப்பு. கருடணம் - அரைத்தல், தேய்த்தல். கருடணை - சேர்த்திக்கை. கருடதிசை - கிழக்கு. கருடதியானம் - ஓர் மந்திரம். கருடத்தொண்டை - காக்கணஞ் செடி, கொவ்வை. கருடபச்சை - ஓர் மருந்துக்கல், மரகதம், அஃது சிவனிந்திரியத் தைக்கருடன் கவ்விக் கடலில விடவதனாற் பிறந்தது. கருடபஞ்சாக்கரம் - ஓர் மந்திரம். கருடபாஷாணம் - ஓர் கல். கருடபார்வை - இராசபார்வை, விடந் தீர்க்கும்பார்வை யினொன்று. கருடர் - பதினெண்கணத்தொருவர். கருடல் - விரும்பல். கருடவாகனன் - விட்டுணு. கருடவித்தை - ஓர் வித்தை. கருடன் - செம்பருந்து. கருடாஞ்சனம் - கருடபச்சைக்கல். கருடி - சூழ்தல், படைவளைதல். கருடித்தல் - இழுத்துக்கொள்ளுதல். கருடுதல் - விரும்புதல். கருணன் - கன்னன். கருணாகடாட்சம் - கிருபைப் பார்வை, தயவு. கருணாகரம் - கருணைக் கிருப்பிடம். கருணாகரன் - கிருபாமூர்த்தி. கருணாக்கிரகன் - கிருபையில்லான். கருணாநிதி - கடவுள், காருண்ணியன். கருணாப்பள்ளி - ஓர் நகரம். கருணாமூர்த்தி - கடவுள், கிருபாரூபி. கருணாலயன் - கடவுள். கருணி - குகை, வெற்பு, பிடியன் யானை. கருணிகை - பூவினிற்கொட்டை. கருணிதன் - கிருபையுடையோன். கருணீகன் - கணக்கன். கருணை - ஓர் செடி, கிருபை. இஃது சுபாபக்குணமொன்பதினொன்று, பட்சம், பொரிக்கறி, பெருங் கிழங்கு. கருணோதயன் - கடவுள். கருதலர், கருதார் - பகைவர். கருதலனுமானம் - ஓரளவை, அஃது உரையால் அறிவிளைவையறிதல். கருதல் - எண்ணல், மதித்தல், விரும்பல். கருத்தபம் - கழுதை. கருத்தமம் - சேறு, பாவம், மாமிசம். கருத்தமன் - வருணன்றந்தை. கருத்தவ்வியம் - தத்துவம். கருத்தனாகுபெயர் - கருத்தாவாகு பெயர். கருத்தன் - அரன், அருகன், கடவுள், நடப்பிப்போன். கருத்தா - அருகன், கடவுள், சிவன், செய்பவன். கருத்தாக்காரகம் - வினைமுதற் பொருளைக் காட்டுமுருபுடைப் பெயர். கருத்தாவாகுபெயர் - கருத்தாவின் பெயரைக் காரியத்திற்கு வழங்கல், (உம்) திருவள்ளுவர். கருத்தாளி - குறிப்பறிவான், விவேகி, ஓர்மரம். கருத்து - ஆழமானபயன், எண்ணம், குறிப்பு, சித்தம், சொற்பொருள், நினைப்பு, விருப்பு. கருத்துக்கொள்ளல் - மனம்வைத்தல். கருத்துடையடைகோளியணி - ஓரலங் காரம், அஃது அபிப்பிராயத்து குரிய விசேடணத்தைச் சொல்லு தல். கருத்துடையடையணி - அபிப்பிராயத் தோடு கூடிய விசேடணத்தைச் சொல்லுதல். கருத்துப்பொருள் - மனக்காட்சிப் பொருள். கருத்துரை - செய்யுட் கருத்துரைக்கு முரை. கருத்தொட்டுதல் - யோசித்தல். கருநடம் - ஓர் தேயம், ஓர் பாடை. கருநந்து - நத்தை. கருநாகம் - இராகு, ஓர் மரம், கரும் பாம்பு. கருநாசம் - சித்திரைமூலம். கருநாடகம் - கன்னடதேசத்தாரின் விசேடம், நாகரீகம். கருநாடகவித்தை - நாகரீககல்வி. கருநாபிக்கிழங்கு - ஓர்கிழங்கு. கருநாரை - ஓர் கொக்கு. கருநார் - கரியநார். கருநாள் - ஆகாதநாள். கருநிமிளை - ஒரு நிமிளை. கருநிலம் - நீரின்மலையின் வனத்திற் பயன் படாமிகுநிலம். கருநெய்தல் - கருங்குவளை. கருநெய்தனிறமணி - சாதுரங்கப்பது மராகம். கருநெல்லி - ஓர்நெல்லி. கருநெறி - தீ. கருநொச்சி - ஓர் நொச்சி, சுரோணித நீர். கருந்தகரை - ஓர் தகரை. கருந்தனம் - செல்வம், பொன். கருந்தாது - இரும்பு. கருந்தாரை - காரொளி. கருந்திடர் - மேடு. கருந்தினை - ஒரு தினை. கருந்துகிலோன் - பலபத்திரன். கருந்துவரை - ஓர் துவரை. கருந்துளசி - ஓர் துளசி. கருந்தோழி - அவுரி. கருப்பகோசம் - கருப்பப்பை. கருப்பகோளகை - கருப்பாசயப்பை. கருப்பக்கிரகம் - மூலஸ்தானம். கருப்பக்கிரணம் - கருப்பந்தரித்தல். கருப்பங்கொள்ளுதல் - கருப்பந்தரித் தல். கருப்பசூலை - ஓர் நோய். கருப்பஞ்சாற்றுக்கடல் - சத்தசமுத்தி ரத்தொன்று. கருப்படம் - கந்தைப்புடைவை. கருப்பட்டி - கற்கண்டு, பனங்கட்டி. கருப்பஸ்திரி - கருப்பவதி. கருப்பதாரணம் - கருப்பந்தரித்தல். கருப்பநாடி - கொப்பூழ்க்கொடி. கருப்பபாதகம் - செம்முருங்கை. கருப்பபாதனம் - கருப்பம்விழுத்தல். கருப்பநாள் - பிறந்தநாளுக்கு ஒன்ப தாந்நாள். கருப்பநீர் - கருப்பஞ்சாறு, பனை முதலிய வற்றினீர். கருப்பப்பரிசம் - கருப்பந்தரித்தல். கருப்பப்பை - கருப்பகோளகை. கருப்பமழிதல் - கருக்கரைதல். கருப்பம் - சினை, அரண்மனை, உப நிடத முப்பத்திரண்டினொன்று, உள். கருப்பரம் - அத்தி, இரும்புப்பாண் டம், தலையோடு. கருப்பவதி - கருப்பந்தரித்தவள். கருப்பவாதை, கருப்பவேதை - கருப்ப வேதனை. கருப்பவாயு - ஓர் வாயு, பிறசூதவாயு. கருப்பற்று - கருப்பந்தரிப்பு. கருப்பனி - கருப்பவதி. கருப்பாகாரம் - கெற்பக்கிரகம். கருப்பாசயப்பை - கருப்பப்பை. கருப்பாசயம் - கருவிருக்குமிடம். கருப்பாதானம் - ஓர் சடங்கு. கருப்பிடித்தல் - யோசனை மட்டுக் கட்டுதல். கருப்பிணி - கருப்பஸ்திரி. கருப்பிணியவேட்சணம் - பிரசூதி வைத்தியம். கருப்பினி - கருப்பவதி. கருப்பு - அரிது, குறுவிலை. கருப்புக்கட்டி - கற்கண்டு, பனங்கட்டி. கருப்புரம் - ஓர்நெல், நீர், பாவம், பொன். கருப்புவில் - மதன்வில். கருப்புவில்லி - காமன். கருப்பூரசலாசத்து - ஓர் மருந்து. கருப்பூரதீபம் - கருப்பூரவிளக்கு. கருப்பூரத்துளசி - ஓர் துளசி. கருப்பூரத்தயிலம் - ஓர் மருந்து. கருப்பூரநீர் - ஓர் மருந்து. கருப்பூரப்புல் - ஓர் வாசனைப்புல். கருப்பூரமரம் - ஓர் மரம். கருப்பூரம் - சூடன், பஞ்சவாசத் தொன்று, பொன், பொன்னரிதாரம். கருப்பூரவள்ளி - ஓர் செடி. கருப்பூரவில்வம் - ஒர் வில்வம். கருப்பூரவெற்றிலை - ஓர் வெற்றிலை. கருப்பூர் - ஓரூர். கருப்பூர்வழக்கு - அழிவழக்கு. கருப்பெட்டி - கருப்பை. கருப்பை - கருப்பாசயப்பை, கரும் பனங்காய்ப்பனை, காரெலி. கருப்பொருள் - அவ்வவ் நிலத்திலுற் பத்திப் பொருள். அஃது உணா, ஊர், குடி, தலைவர் தெய்வம், தொழில், நீர், பண், பறை, புள், மரம், மலர், யாழ், விலங்கு என்பன. கருமகரன் - நமன், வேலைகாரன். கருமகள் - காக்கை. கருமகாண்டம் - கன்மநிவிர்த்தி முதலியவற்றைச் சொல்லுந்நூல். கருமகாண்டிகர் - மூவகைப்பக்குவரி லொருவர். கருமகாரன் - கம்மாளன், வேலையாள். கருமக்கத்தா - கிரியை நடத்து வோன், செய்வோன். கருமகீலகன் - வண்ணான். கருமக்காரகம் - வினையைப் பொரு ளிற்புலப்படுத்து முருபுடைப் பெயர். கருமக்கியானம் - கரும அறிவு. கருமங்கட்டுப்படல் - பாவஞ்செய்தல், வினைதீராதுநிற்றல். கருமசண்டாளன் - துரோகி. கருமசம் - களங்கம், சத்து, வினை, அரசமரம், கலியுகம். கருமசுத்தி - கிரியையிற்குற்றத்தீர்ப்பு, பாவப்பிராயச்சித்தம். கருமஞ்சரி - நாயுருவி. கருமணி - கண்மணி, நீலமணி. கருமத்தலைவர் - வருங்காரியஞ் சொல்வோர். கருமத்துரோகம் - வினைப்பவம். கருமநிட்டான் - பிராமணன். கருமநிவிர்த்தி - பாவத்தீர்ப்பு. கருமபந்தம் - செய்வினைத்தொடர். கருமபந்தனம் - பழவினைத் தொடர்பு. கருமபாகை - வேதநூற்பொருளி னொன்று. கருமபாவம் - கிரியாபாவம். கருமபூமி - இருவினையியற்றற்குரிய வுலகம், சுடுகாடு. கருமப்பழி - துரோகம். கருமப்பிறப்பு - பாவச்சென்மம். கருமமுடித்தல் - செய்தொழில் முடித் தல், நியமநிட்டை முடித்தல். கருமமூலம் - தருப்பை. கருமம் - உட்டணம், கடமை, காரியம், செயப்படுபொருள், செய்கை, வெப்பம், வேனிற்காலம். கருமயிர் - கரடி. கருமயுகம் - கலியுகம். கருமலை - இரும்புச்சுரங்கமலை. கருமவிபாகம் - ஊழ்வினைப்பயன். கருமவியாதி - மருந்தினாலாறாத நோய். கருமவிருத்தி - சுத்தநடக்கை. கருமவுவமம் - செயலுவமம். கருமவேதனை - மிக்கவருத்தம். கருமா - பன்றி, யானை. கருமாதி - அந்தியேட்டி முதலிய சடங்கு. கருமாதிகாரம் - கருமங்கள் செய்து முடிக்கு மதிகாரம், கிரியைக்கதி காரம். கருமாதிகாரன் - அரசர்க்குத் துணை வரிலொருவன், காரியத்தலை வன், நிமித்தகாரன். கருமாதிக்காரர் - கருமத்திலாதிக்கம் பெற்றோர், காரியத்தலைவர். கருமாதிசெய்தல் - ஈமக்கடன் முதலிய செய்தல். கருமாத்துமா - கன்மஞ்செய்தவன். கருமாந்தம், கருமாந்தரம், கருமாந்திரம் - கருமாதி, பாவம், கார்காலம். கருமாந்தியம் - அந்தியேட்டி. கருமாயம் - அருமையானது, அதிக விலை. கருமாரன் - கொல்லன். கருமாரி - ஓர் மரம், பிற்சூத வேதனை. கருமார் - கொல்லர். கருமானம் - கரியவானம், கருவித்தை. கருமானுட்டானம் - நியமநிட்டை. கருமானுபவம் - செய்வினைப்போகம். கருமான் - கலைமான், கொல்லன், பன்றி. கருமி - நித்தியகருமம் வழுவாது செய்வோன், பாவி. கருமிசம் - வினை. கருமுகில் - வைப்புப்பாஷாண முப்பத் திரண்டினொன்று. கருமுகிற்சிலை - காந்தக்கல். கருமுகிற்பாஷாணம் - ஓர் பாஷாணம். கருமுகை - இருவாட்சி, சிறு செண் பகம். கருமுடித்தல் - அட்டகருமக் கருவுண் டாக்கல், வேதைக் கருமுடித்தல். கருமுதல் - ஓர் மீன். கருமுரடன் - கீழ்ப்படியாதவன். கருமுரல் - ஓர் மீன். கருமேகம் - காளமேகம். கருமேந்திரியம் - கண்மேந்திரியம். கருமை - கறுப்பு, நஞ்சு, பெருமை, வலி. கரும்பனசை - கருவழலைப்பாம்பு. கரும்பாம்பு - இராகு, கருவழலை. கரும்பாலை - ஓர் மரம், கரும்பாட் டுஞ்செக்கு. கரும்பித்தம் - ஒர் நோய், ஓர்பித்தம். கரும்பிள்ளை - காக்கை. கரும்பு - கன்னல், புநர்பூசம். கரும்புசம் - வண்டு. கரும்புமுத்து - கரும்பிற்பிறந்த மஞ்சணிறமுத்து. கரும்புல் - பனைமரம். கரும்புலி - ஓர் புலி. கரும்புளித்தல் - செம்பிற்களிம் பூறு தல். கரும்புள் - சாகம், வண்டு, கரிக்குருவி, பெண்வண்டு. கரும்புள்ளிக்கல் - ஓர் கல். கரும்புள்ளிதீட்டல் - ஓர் கோலந் தீட்டல். கரும்புறம் - பனை. கரும்புறவு, கரும்புறா - ஓர் புறவு. கரும்பூ - நீலோற்பலம். கரும்பூமத்தை - கரியவூமத்தை. கரும்பேன் - புடைவையிற் பற்றுங் கரும்புள்ளி. கரும்பொன் - இரும்பு. கருவகம் - கருத்தரிக்குந்தானம். கருவங்கம் - காரீயம். கருவடம் - மலையுமாறுஞ் சூழ்ந்தவூர். கருவண்டு - ஓர் வண்டு. கருவண்ணம் - கறுப்புநிறம். கருவதை - சிசுவதை. கருவம் - அகங்காரம், ஓரெண், சினை. கருவரி - இருள், கறுத்தவிழியின் ரேகை. கருவவ்வால் - ஓர் மீன். கருவழலை - ஓர் பாம்பு. கருவழித்தல் - சிசுவதை. கருவளைச்சுக்கான் - கருஞ்சுக்கான் கல். கருவறிதல் - கருத்தறிதல். கருவறுத்தல் - நாளுக்குநாட்கவர்தல். கருவாடு - காய்ந்த மீன். கருவாட்டுவாவி - எருத்துவாலன் குருவி. கருவாமுப்பு - ஓருப்பு. கருவாலி - ஓர் மரம், ஓர் குருவி. கருவாழை - ஓர் வாழை. கருவாளி - கருத்துடையோன். கருவானம் - கருமானம். கருவி - ஆயுதப்பொது, உபகரணம், கலசம், குதிரைக்கல்லணை, கூட்டம், தொடர்பு, நட்பு, மெய் வாய் முதலிய கருவி, மேகம், யாழ், வாச்சியம், வீணை, காரணம். கருவிகரணம் - பொறியும் அந்தர்க் கரணமும். கருவிகழலுதல் - பெலன்கெடல். கருவிகாண்டம், கருவிநூல் - வாசிக்கப் பழகும் புத்தகம். கருவிக்காரகம் - கருவிப்பொருளைக் காட்டு முருபுடைப்பெயர். கருவிப்புட்டில் - படையுறை. கருவிப்பை - ஆயுதவுறை. கருவியாகுபெயர் - கருவியானாய பெயர் (உம்) நாழி. கருவிலி - ஓர் பாம்பு. கருவிழி - கண்மணி. கருவிளங்கனி - மூன்று நிரையசை யாய் வருஞ்சீர்க்கு வாய்பாடு. கருவிளங்காய் - நிரைநிரை நேராய் வருஞ்சீர்க்கு வாய்பாடு. கருவிளநறுநிழல் - நாலுநிரையசை யாய் வருஞ்சீர்க்குவாய்பாடு. கருவிளநறும்பூ - நிரைநிரைநிரை நேராய்வருஞ்சீர்க்கு வாய்பாடு. கருவிளந்தண்ணிழல் - நிரைநிரை நேர்நிரையாய் வருஞ்சீர்க்கு வாய் பாடு. கருவிளந்தண்பூ - நிரைநிரை நேர் நேராய்வருஞ்சீர்க்கு வாய்பாடு. கருவிளம் - இரண்டுநிரையசையாய் வருஞ்சீர்க்குவாய்பாடு, ஓர்மரம், காக்கணஞ்செடி. கருவிளா - ஓர் மரம். கருவிளை - காக்கணஞ்செடி. கருவுயிர்த்தல் - ஈனல். கருவுளமைப்பு - சென்மத்தினியமம். கருவூமத்தை - ஓர் பூமத்தை. கருவூர் - சேரனூர். கருவூலம் - பொக்கசம். கருவெடுத்தல் - உடம்பெடுத்தல். கருவேம்பு - ஓர் மரம். கருவேல் - ஓர் மரம் கருவை - ஓரூர், வரகுவைக்கோல். கருள் - இருள், கறுப்பு, நல்லாடை. கருனீகசனனி - ஒர் சன்னி. கரேணு - பெண்யானை. கரை - அருகு, எல்லை, கரை யென் னேவல், முடிவு, கானல். கரைகடத்தல் - எல்லைக்குமேற் படல். கரைகன்று - அழிகன்று. கரைகாணல் - எல்லைகாணுதல். கரைசீலை - இந்துப்பு. கரைச்சல் - உருக்கம். கரைஞ்சான் - அகில். கரைதல் - அழுதல், அழைத்தல், அறப்பழுக்குதல், ஆரவாரம், இரங்கல், உருவழிதல், ஒலித்தல், சொல்லுதல், பதனழிதல், பேரொலி. கரைதுறை - துறைமுகம். கரைத்தல் - எழுத்திலாவோசை, கரைக்குதல், சொல்லாலெழு மொலி. கரைபிடித்தல் - கரையடைதல். கரைபுரட்டுதல், கரைபுரளுதல் - கரை மூடிப்பாய்தல். கரைப்படுதல் - கரையேறுதல். கரைப்பாதை - கரையோரமானவழி. கரைப்போக்கு - கரையோரம். கரைப்போர் - கரையிலிருந்து பண் ணுஞ்சண்டை. கரையடுத்தல் - கரைக்குக்கிட்டுதல். கரையல் - கரைந்தது, கரைந்து போவது, கனிதல். கரையார் - ஓர் சாதி. கரையோட்டு - கரைபிடித்தோடல். கரைவலை - கரைக்குக்கொண்டு வரும் வலை. கரைவலைக்காரர் - கரையாரிலோர் பகுதி. கரைவழி - கரைப்பாதை. கரைவாடை - வடமேல்காற்று. கரைவு - கரைதல். கரோடி - தலையோட்டுப் பொருத்து, முடிமாலை. கரோடிகை - கழுதை, சூட்டுமாலை, முடிமாலை. கரோருகம் - நகம். கர்க்கடகம் - ஓரிராசி, நண்டு. கர்ச்சூரம் - கழற்கொடி, பேரீந்து. கர்த்தத்துவம் - அதிகாரம், சகலத் தையுந் நடத்துகிற தத்துவம். கர்த்தபம் - கழுதை. கர்ப்பக்கல் - ஓர் மருந்துக்கல். கர்வடம் - நானூறு கிராமத்திற்குத் தலைக்கிராமம், மலையும் யாறுஞ் சூழ்ந்தவூர். கர்வம் - இலக்கங்கோடி, செருக்கு. கலகக்குருவி - ஒர் பட்சி. கலகப்பிரியன் - சண்டைக்காரன். கலகம் - ஓர் பட்சி, குழப்பம், பேரொலி, போர். கலகலத்தல் - அறக்காய்தல், ஒலிக் குறிப்பு, மிகப்பேசுதல். கலகலம் - பறவைக்குரல், ஆபரணச் செப்பு. கலகலெனல் - ஈரடுக்கொலிக்குறிப்பு. கலகவாயன் - சண்டைக்காரன், வாயாலார்ப்பவன். கலகவாய்க்குருவி - ஓர் குருவி. கலக்கடி - கலக்கம். கலக்கம் - அச்சம், ஆரவாரம், குழப்பம், துன்பம்,தெளிவின்மை. கலக்கல் - கலங்கச்செய்தல், குழப்பல். கலக்கு - கலக்கென்னேவல், கலங்கப் பண்ணுதல். கலக்குதல் - கலங்கச்செய்தல். கலங்கடித்தல் - திகைக்கடித்தல். கலங்கல் - அஞ்சல், அழுதல், கலங்கு தல், சேற்றுநீர், நீர்பாயுமதகு. கலங்கனீர் - கலங்கற்றண்ணீர். கலங்காவரிச்சு - குடிலின்கால்வரிச்சு. கலங்குதல் - துயரப்படுதல், தெளி வின்றாதல். கலங்கொம்பு - கலைமான் கொம்பு. கலசர் - இடையர். கலந்தை - பெருமை. கலதம் - சொட்டைத்தலை. கலபம் - கலாபம். கலப்பற்று - மரக்கலத்தினீக் கலடைப் பது. கலப்பித்தல் - கலக்கச் செய்தல். கலப்பு - கலத்தல், கலவை. கலப்பை - உபகரணம், உழுபடை, கலப்பையுறுப்பு. கலப்பைக்கிழங்கு - வேந்தோன்றிக் கிழங்கு. கலப்பைச்சக்கிரம் - ஏர்ப்பொருத்தம் பார்க்குஞ்சக்கிரம். கலப்பைப்படை - ஓராயுதம். கலமர் - பாணர். கலம் - ஆபரணம், ஆயுதப்பொது, இரேபதி, உண்கலம், ஓரளவு, மட்கலம், மரக்கலம், யாழ். கலம்பகமாலை - பன்மணிமாலை. கலம்பகம் - ஓர் பிரபந்தம். அஃது ஒரு போகுவெண்பாக்கலித்துறை முதல் கவியுறுப்பாகக்கூறிப் புய வகுப்பு மதங்கம் அம்மானை காலம் சம்பிரதம் கார் தவம் குறம் மறம் பாண் களி சித்து இரங்கல் கைக்கிளை தூது வண்டு தழை ஊசல் என்னுமிப் பதினெட் டுறுப்புகளுமியைய மடக்கு மருட் பா ஆசிரியப்பா கலிப்பா வஞ்சிப் பா ஆசிரிய விருத்தம் கலிவிருத் தம் கலித்தாழிசை வஞ்சிவிருத்தம் வஞ்சித்துறை வெண்டுறையென்னு மிவற்றால் இடையே வெண்பா வுங் கலித்துறையும் விரவிவர அந்தாதித் தொடையான் முற்றுறக் கூறுவது, கலப்பு, சண்டை, நறுஞ் சாந்து. கலம்பம் - ஓர் பாஷாணம். கலயம் - கலசம். கலர் - கீழ்மக்கள். கலவகம் - காக்கை. கலவடை - திரிமணை. கலவரம் - கலக்கம். கலவரித்தல் - கலங்குதல். கலவர் - படைவீரர், மரக்கல மோட் டிகள். கலவல் - எழுத்திலாவோசை, கலத்தல். கலவன் - கலந்தது. கலவாங்கட்டி - உடைந்தவோடு. கலவாசு - ஓர் வகைவெடி. கலவாய் - ஓர் மீன், ஓர் வெடி. கலவி - புணர்ச்சி. கலவியிற்களித்தல் - அகப்பொருட்டு றையினொன்று. கலவுதல் - கலத்தல். கலவை - கலப்பு, சுண்ணச்சாந்து, சேறு, நால்வகைச்சாந்தி னொன்று. கலவைச்சேறு - சாந்து, பரிமளச் சேறு. கலவோடு - மண்பாண்டச்சல்லி. கலனம் - பெரும்பாடு. கலனை - கலப்பை, கலப்பை யுறுப்பு. கலன் - ஆபரணம், ஓமவுபகரணம், ஓரளவு, பாத்திரம், மரக்கலம், யாழ். கலன்கழிமடந்தை - கைம்பெண். கலாங்கழி, கலாங்கனி - துத்த பாஷா ணம். கலாசி, கலாசிகை - முன்கை. கலாசு - மரக்கலம். கலாசுகாரர் - மரக்கலமொட்டுவோர். கலாதன் - தட்டான். கலாதி - கலம்பகம். கலாநிதி - சந்திரன். கலாபகம் - யானைக்கழுத்திற்கயிறு. கலாபம் - அரைப்பட்டிகை, கலம் பகம், சரமணிக்கோவை, பதினாறு கோவையுள்ளமணி, பீலிக்குடை, மயிலினாண், மயிற்றோகை, அம்புக்கூடு, கலாபனை, சந்திரன். கலாபனை - கலாபம். கலாபி - ஆண்மயில், மயிலிறகு. கலாபித்தல் - கலகம்பண்ணுதல். கலாபினை - கலம்பகம். கலாபூரணன் - சந்திரன். கலாப்பித்தல் - கலத்தல். கலாமயம் - பாவித்தல். கலாமிருது - கம்மாளன், சந்திரன். கலாம் - ஊடல், கொடுமை, கோபம் சினம். கலாம்பூரம் - ஓர் மருந்து. கலாவதி - சந்திரன். கலாவல்லபன் - கலையறிவில் மேம் பட்டவன. கலாவல், கலாவுதல் - கலத்தல். கலானம் - களக்கூட்டம். கலி - ஒலி, ஓர் பா, கடல், கடையுகம், கலியென்னேவல், கேடு, சிறுமை, போர், வஞ்சகம், வலி, வறுமை, அம்பு, சனி, யுத்தம். கலிகம் - கற்பரிபாஷாணம். கலிகாலம் - கலியுகம். கலிகை - இளம்பூவரும்பு, நாகமல்லி. கலிக்கம் - கண் மருந்து. கலிங்கம் - ஊர்க்குருவி, கண்மருந்து, குதிரை, சீலை, தேயமன்பத் தாறி னொன்று பதிணெண் பாடை யிலொன்று, மிளகு, வானம்பாடி, வெட்பாலை. கலிங்கு - மதகு. கலிசம் - வன்னிமரம். கலிச்சி - இரட்டைப்பிள்ளையிற் பெண். கலிதம் - சங்கலிதம், பொருத்தம், பெரும்பாடு. கலிதி - திப்பிலி. கலித்தம் - ஆரவாரம், எழுச்சி, ஒலித்தல், கக்குதல், தழைத்தல், பொசிகுதல், பொலிவு, வெடித்தல். கலித்தளை - செய்யுட்டளையி னொன்று, அஃது வெண்பாவுரிச் சீர்கள் தம்முளொன்றாது வரப் பெறுவது. கலித்தாழிசை - ஓர் கவி. அஃது இரண்டு முதலிய பலவடிகளா னீற்றடி மிக்கு ஏனையடிதம் முளொத்து நிற்பத்தனித்தேனும் ஒரு பொருண் மேன் மூன்றடுக்கி யேனும் வருவது. கலித்துருமம் - தான்றிமரம். கலித்துறை - ஓர் கவி. அஃது நெடிலடி நான்கு கொண்டு முடிவது. கலித்தொகை - ஒர் பிரபந்தம். கலிபணம் - ஓர் பணம். கலிபிலி - கலிப்பிலி. கலிப்பா - ஐந்துபாவினொன்று. அஃது வெண்சீர்மிகப் பெற்று மாச்சீரும் விளங்கனிச்சீரும் பெறாது பிற்சீர் களுஞ் சிறு பான்மை கலந்து கலித்தளையும் இயற்றளையுந் தழுவி தரவு தாழிசை அராகம் அம்போதரங்கம் தனிச்சொல் சுரிதகம் என்னும் ஆறுறுப்பினுள் ஏற்பனகொண்டு நாற்சீரடியான் முடிவது. கலிப்பிலி - எதிரிடை, கலாதி. கலிப்பு - உயரம், ஒலி, கக்குதல், மிகுதி, வெடிப்பு. கலிமா - மகமது மதத்தாருடைய விண்ணப்பம். கலியத்தம் - கலியுகத்திற் சென்ற வருடம். கலியர் - படைவீரர், மிடியர். கலியன் - இரட்டைப் பிள்ளை யிலாண், கடையுகத்தலைவன். கலியாணக்கால் - வாசலுக்கடுக்க நிறுத்துங்கப்பு. கலியாணக்கிரதம் - ஓரமிழ். கலியாணக்கோலம் - மணக்கோலம். கலியாணப் பொருத்தம் - மணவாள னுக்கும் மணவாளிக்கும் உள்ள பொருத்தம். கலியாணமண்டபம் - மணமண்டபம். கலியாணம் - சந்தோஷம், சொந்த விவாகம். கலியாணம் முடித்தல் - விவாகம் பண்ணல். கலியாணி - ஓரிராகம், உமை. கலியுகம் - கடையுகம். கலிவிராய் - ஓர்நெல். கலிவிருத்தம் - ஓர்கலி. அஃது அளபடி நான்கினைக் கொண்டது. கலிவெண்பா - ஓர்கவி. அஃது வெண் டளை தழுவியீற்றடி முச்சீரான் முடிவது. கலினம் - கடிவாளம். கலினி - கைமை, திப்பிலி, இடாகினி. கலினை - கைமை, மிளகு. கலின்கலினெனல் - ஈரடுக்கொலிக் குறிப்பு. கலீரிடுதல், கலீரெனல் - ஒலிக்குறிப்பு. கலுகுலுத்தல் - பலசிற்றொலி யிலுண் டானதொனி. கலுகுலுப்பு - ஒலிக்குறிப்பு. கலுக்குப்பிலுக்கு - அணிகளா னெழு மொலி, ஆடம்பரம். கலுடம் - கலங்கனீர், பாவம். கலுமொலுத்தல், கலுமொலெனல் - ஒலிக்குறிப்பு. கலுவடம் - பூவரும்பு. கலுவம் - கலவம். கலுழம் - கலங்கனீர். கலுழன் - கருடன். கலுமி - கலங்கனீர், முல்லை நிலக் கான்யாறு. கலுழிதம் - கலங்கியிருத்தல். கலுழ்தல் - அழுதல், கலங்கல், சிந்தல். கலை - அரைப்பட்டிகை, ஆண்மான், ஆண்முசு, கலையென்னேவல், கல்வி, காஞ்சிமரம், காலநுட்பம், சந்திரன் பங்கு, சீலை, சுவாசத்தின் பகுதி, சுறா மீன், நூல், மகரமீன், மகரராசி, மரக்கொம்பு, மேகலை, வண்ணங் களினோரடி, வயிரம், வித்தியாதத் துவமேழினொன்று, விலங்கேற்றின் பொது. கலைகுறைதல் - சத்துக்குறைதல். கலைக்கியானம் - கலையறிவு, கல்வி நூல். கலைக்கோட்டுமாமுனி - ஓரிருடி. கலைஞர் - புலவர். கலைஞானம் - கலைக்கியானம். கலைதல் - குலைதல். கலைத்தல் - ஓட்டுதல், குலைத்தல். கலைநாதன் - அருகன். கலைநாயகன் - புத்தன். கலைப்பு - கலைத்தல். கலைமலைவு - கல்விமயக்கம். கலைமகள், கலைமடந்தை - சரச்சுவதி. கலைமான் - ஆண்மான், சரச்சுவதி. கலையம் - கலயம். கலையானத்தி - துர்க்கை. கலையினன் - சந்திரன். கலையுணர்புலவன் - குமரன். கலையூர்தி - சரச்சுவதி, துர்க்கை. கலையேறுதல் - அதிகப்படுதல், உரு வேறுதல். கலையேற்றுதல் - உருவேற்றுதல். கலைவல்லோர் - அறிஞர், புலவர். கலைவு - குழப்பம், பிரிவு. கல் - இரத்தினம், ஒலிக்குறிப்பு, கல்லு, கல்லென்னேவல், காவிக் கல், மலை, விடந்தீர்க்கும் மணி. கல்லகம் - மலை. கல்லகாரம் - செங்குவளை, நீர்க்குளிரி. கல்லக்காரம் - ஓர் விதபனங்கட்டி. கல்லடிமூலம் - ஒர் பாஷாணம். கல்லடைசல் - ஒர் நோய், கல்லுறுத்து தல். கல்லடைப்பு - ஒர் நோய். கல்லரவிந்தம் - கற்றாமரை. கல்லணை - குதிரைமேற்றவிசு. கல்லத்தி - ஓரத்தி. கல்லல் - தோண்டல், பேசலாலெழு மொலி. கல்லழிஞ்சில் - ஓர் மரம். கல்லழை - மலைமுழைஞ்சு. கல்லறுத்தல் - கல்லரிதல். கல்லறை - குகை, பிரேதக்குழி. கல்லாங்காசு - கலவோடு. கல்லாசாரி - கற்சிற்பன். கல்லாடம் - ஓர்நூல். கல்லாடர் - ஓர்புலவர். கல்லாந்தலை - ஓர்மீன். கல்லாரம் - செங்குவளை, நீர்க்குளிரி. கல்லார் - கீழ்மக்கள், மூடர். கல்லாலம் - இத்திமரம். கல்லால் - கயிலாயமலையினிற்குங் கல்லுருவமான ஆல். கல்லான் - பாரை. கல்லி - ஆமை, ஊர்க்குருவி. கல்லிச்சி, கல்லித்தி - ஓர் மரம். கல்லியம் - கள், சாராயம், கட்கடை, கால். கல்லிழைத்தல் - இரத்தினம்பதித்தல். கல்லின்காரம் - கல்நார். கல்லீயம் - ஓர் வகை ஈயம். கல்லீரல் - ஓரீரல். கல்லு - கல், மலை. கல்லுக்கலைக்காத்தான் - பொன் னாங்காணி. கல்லுண்டை - ஓர் நெல். கல்லுதல் - கிண்டல். கல்லுநிலம் - கல்லுத்தரை. கல்லுப்பு - ஓருப்பு. கல்லுரல் - கல்லினாலானவுரல். கல்லுருணி - குருவிச்சி. கல்லுருவி - ஓர் பூடு. கல்லுவைத்தல் - காரியஞ்செல்லாமற் பண்ணுதல், தோணி தரிக்கப் பண் ணுதல், மரணச்சடங்கி னொன்று, வயிராக்கியம் வைத்தல். கல்லுளி - ஓர் வகையுருக்கு கல்லுப் பொழிகிறவுளி. கல்லுளுவை - ஓர்மீன். கல்லூசி - ஓர் மருந்து. கல்லூரி - கல்விபயிலிடம். கல்லூருணி - ஓரூர், பாறைக்கிணறு. கல்லெடுப்பு - மரணச்சடங்கிற்றா பித்த கல்லை யெடுத்தல். கல்லெரிப்பு - நீரருகல். கல்லெறி - எறிபடத்தக்கதூரம், கல்லுவிட்டெறிதல், கவண். கல்லெனல் - அனுகரணவோசை. கல்லை - இலைக்கலம், பாதகுறட்டின் குமிழ், பிணக்கு. கல்லைநீராக்கி - மாமிசபேதி. கல்லொட்டி - நத்தை. கல்லோலம் - புனற்றிரை. கலவம் - குழியம்மி. கல்வரிக்கை - ஓர்பலா. கல்வளை - மலைப்பிளப்பு, மலை முழை. கல்வி - அறிவு, கற்றல், புண்ணியத் தோற்றந்நான்கினொன்று, வித்தை. கல்விக்களஞ்சியம் - கல்விக்கிருப்பிட மானவன். கல்வித்துறை - கல்வி நூல். கல்வி நூல் - கலை. கல்விபயிலிடம் - பள்ளிக்கூடம். கல்விப்பரிட்சை - கலைநூற் பயிற்சி. கல்விப்பொருள் - கல்விச்செல்வம். கல்விமதம் - கல்விச்செருக்கு. கல்லிமான் - அறிஞன். கல்வியறிவு - கற்றறிவு. கல்வியூரி - கழகம். கல்விவான் - அறிஞன். கல்வீடு - கல்வினாற்கட்டுமனை. கல்வீரியம் - அன்னபேதி. கல்வெட்டு - ஓர் பிரபந்தம். கல்வெள்ளி - முரண்வெள்ளி. கல்வேகம் - அன்னபேதி. கல்வேதி - ஓர் மருந்து. கலக்குன்று - மந்தரமலை. கவசகுண்டலன் - கன்னன். கவசம் - இரும்பு முதலியவற்றிய கவசம், காவற்பண்ணுமந்திரம், சட்டை. கவசனை - கவசம். கவடம் - தந்திரம். கவடி - சோகி. கவடிப்பாய்தல் - பாய்தல், ஓர்விளை யாட்டு. கவடு - கப்பு, கவர், கழுத்திடுகயிறு, மரக்கொம்பு, யானைகட்டுங்கயிறு. கவட்டல் - கவட்டுதல். கவட்டுக்கால் - கடப்புக்கால். கவட்டுதல் - சப்புதல், வளைத்தல். கவட்டுநெஞ்சன் - வஞ்சகன். கவட்டை - கவர். கவணங்கட்டுதல் - காயங்கட்டுதல். கவணம் - ஓர் மருந்து. கவணி - ஓர் புடைவை. கவணை - கவண். கவண் - கல்லெறிகயிறு. கவண்டர் - ஓர் சாதி, சண்டாளர். கவண்டி, கவண்டு - கவண். காதம் - உடற்குறை, நீர். கவந்தன் - ஓரிராக்கதன். கவர் - கோனை, மத்து. கவயமா, கவயம், கவயல் - காட்டான். கவரம் - சாமரம், சினம். கவராசம் - தமரூசி, வட்டமிடுங்கருவி. கவரி - இராசசின்னத்தொன்று, எருமை, கவரிமா, சாமரை, தேர். கவரிமா, கவரிமான் - ஓர்மிருகம். கவரிறுக்கி - கடவுமரம். கவரெழுசங்கம் - முட்சங்கம். கவர் - கவரென்னேவல், மரக்கப்பு, வாழை. கவர்ச்சி - கவருதல். கவர்தல் - ஆசைப்பெருக்கம், கடை தல், கொள்ளையிடல், திருடல், வாருதல். கவர்த்தடி - முள்ளிடுக்குந்தடி. கவர்த்தல் - கப்புவைத்தல், கவர்விடல். கவர்படுதல் - இரண்டுபடல். கவர்படுபொருள் - செய்யுள்வழுவி னொன்று, அஃது ஒருகுறிப்பான் விளங்க வேண்டும் பொருடெரி வுறவுணர்த்த வந்த சொல் பல பொருட்ருவதாயதனை ஐயுறுத்தி நிற்பது. (உம்) யாவருமூடாடார் அரிமருவு சோலையகம். கவர்படுமொழி - பலகருத்துக் கொள் ளுஞ் சொல். கவர்ப்பு - கப்புவைத்தல். கவர்வழி - பலகவராய்ப்போம் பாதை. கவர்விடுதல் - ஒன்றிலிருந்து பல தோன்றல், கப்புவைத்தல். கவர்வு - கதுவுதல், கவர்விடுதல், கைப்பற்று. கவலல் - கவலைப்படுதல், பேசலா லெழுமொலி, வருந்தல், விரும்பல். கவலி - கவலை. கவலித்தல் - கவலைப்படல், வருந்தல். கவலை - அச்சம், ஓர் கொடி, கவர் வழி, கிலேசம், சந்தி, செந்தினை, நோய், ஓர்மீன். கவல் - துக்கம், வருத்தம். கலவு - அகத்திடுதல், கவர், மரக் கொம்பு. கவழிகை - திரைச்சீலை. கவனம் - சோறு, திரளை, வாயளவு கொண்டவுணவு, வெற்றிலைக் கட்டு. கவளி, கவளிகை - வெற்றிலைக் கட்டு. கவளீகரித்தல் - கவளமாயுண்ணல், முற்றும்மூடுதல், விழுங்கல். கவறல் - துக்கித்தல், வருந்தல். கவறு - தாயக்கட்டை, பனங்கவறு. கவறுருட்டுதல், கவறெறிதல் - தாயம் போடுதல். கவறை - ஓர் சாதி. கவற்சி - வருத்தம், விருப்பம். கவனம் - கடுப்பு, கருத்து, கலக்கம், காடு, குதிரைநடை, சீக்கிரம், படை, மிகுகவலை. கவனம் - வேகமுள்ளோன். கவனித்தல் - கருத்துவைத்தல். கவனிப்பு - கருத்து. கவாடக்கட்டி - வசம்பு. கவாடக்காரன் - புல்லுவெட்டுவோன். கவாடம் - கபாடம், புல்லுச்சுமை. கவாய் - ஓருடை, கந்தை. கவானம் - புண்ணாற்றும் மருந்தி னொன்று. கவான் - தொடை. கவி - ஆசு-மதுர-சித்திர-வித்தார மெனுந் நாற்கவிகளைப் பாடு வோன், கவியென்னேவல், குரங்கு, சுக்கிரன், பாடுவோன், பாடல். கவிகருத்து - பாடுவோன்குறிப்பு. கவிகற்றோர் - மங்கலப்பாடகர். கவிகாளமேகம் - ஓர் புலவன். கவிகுருந்தம் - கந்தகபாஷாணம். கவிகை - ஈதல், கவிதல், குடை. கவிசை - ஓர் நோய். கவிசொல்லுதல் - புலமைபாடுதல். கவிச்சக்கிரவர்த்தி - கம்பன். கவிச்சி - துற்கந்தம். கவிச்சு - நிணநாற்றம். கவிஞர் - கலைவல்லோர், புலவர். கவிதல் - வளைதல், விருப்பமாயிருத் தல். கவிதை - பா. கவித்தம் - கரமுட்டிசெய்தல், விளா மரம். கவித்தல் - கவியப்பண்ணுதல், மூடுதல். கவித்துவம் - கலிபாடும்வல்லபம். கவிநாயகன் - பாட்டுடைத்தலைவன். கவிப்பர் - செட்டிகள். கவிப்பு - ஆரூடத்துக்குச்சூரியனிற் குந்நிலை, உட்டுளை, குடை, மூடுதல். கவியம் - கடிவாளம். கவிரம் - அலரிச்செடி. கவீரம் - அலரி. கவீராயன் - புலவன். கவீர் - முண்முருக்கு. கவிவல்லோர், கவிவாணர் - புலவர். கவிவு - உள்வளைவு, குலிவு. கவிழ்ச்சி - குவிவு, குனிவு. கவிழ்தல் - அகம் புறமாதல், இறத்தல், குனிதல் கவிழ்தும்பை - ஓர் தும்பை. கவிழ்த்தல் - அகம்புறமாக்கல், கவிழப் பண்ணல், மூடுதல். கவிணல் - அழகாயிருத்தல். கவின் - அழகு. கவீச்சுரர் - கவிவாணர். கவீனம் - பசுமேய்ந்த இடம், வெண் ணெய். கவுசி - குழைவு, வருத்தம். கவுசிகம் - கௌசிகம். கவுசிகன் - விசுமாமித்திரன், இந்திரன். கவுஷணம் - கௌபீனம். கவுஞ்சம் - அன்றில். கவுடி - ஓர் பண். கவுதம் - சிச்சிலிக்குருவி. கவுதாரி - ஓர் பட்சி. கவுதாரிப்புடம் - மூன்று எருப்புடம். கவுத்துகம் - பதுமராகம், வஞ்சகம். கவுத்துகவாதம் - கலைஞானமறு பத்தினான்கினொன்று. கவுமாரம் - இளமை. கவுமாரி - பார்பதி. கவுரகாசு - அக்குமணி. கவுரவர் - குருகுலத்தவர். கவுலவம் - பன்றிக்கரணம். கவுல் - உடன்படிக்கை, துர்க்கந்தம். கவுளி - ஓர் விததெங்கு, பல்லி. கவுள் - கதுப்பு, யானைக்கதுப்பு, யானைமதம்பாயிடம். கவுனி - குதிரைப்பற்பாஷாணம். கவை - ஆயிலியம், எள்ளிளங்காய், கவர், கவர்வழி, காடு, கோட்டை, மரக்கப்பு, தேவை. கவைதல் - மூடல். கவைத்தடி - கவர்த்தடி. கவைத்தாள் - நண்டு. கவைநா - பாம்பு. கவையடி - கவர்க்குரை. கவையம் - கவயம். கவ்வல் - கவ்வுதல். கவ்வாணம் - ஓர் பண். கவ்வியம் - கௌவியம். கவ்வு - கவ்வென்னேவல், பெருமை. கவ்வுதல் - கடித்துப்பிடித்தல், கவர் தல், வாயினாற்கொள்ளல். கவ்வை - எள்ளிளங்காய், ஒலி, கள், காரியம், துன்பம், பழிமொழி, வேலை. கழகம் - கல்வி முதலியபயிலிடம். கழகு - ஆயுதம் பயிலிடம். கழங்கம் - சூதாடுகருவி. கழங்கு - ஓராடல், கழற்சிக்கொடி, வெறியாட்டாளனாடல், அபி டேகம். கழஞ்சு - பன்னிரண்டு பண்விடை கொண்டநிறை. கழப்பன், கழப்பாடி, கழப்புணி - வேலைக் கள்ளன். கழப்பு - கள்ளத்தனம். கழப்புதல் - சோம்பாயிருத்தல். கழலல் - நெகிழ்தல், விலகல். கழலி - பிரண்டை. கழலிச்சிட்டு - ஓர்சிட்டு. கழலை - கழலைக்கட்டி. கழல் - ஆடவர்கொடையாலும் வீரத் தாலுமணியும் பூண், கழலென் னேவல், கழல்மரம், கழற்கொடி, கால், செருப்பு, பொன்வண்டு. கழல்வு - கழலுதல். கழறல் - உறுதிச்சொல், கழலுதல், சொல்லல், நெருங்கல். கழற்சி - ஓர் செடி, கழலுதல். கழற்பதி - பெருங்குமிழ். கழற்றல் - கழலப்பண்ணல், விலக்கல். கழற்றி - கழலுதல். கழற்றுதல் - கழலப்பண்ணல், நீக்கிக் கொள்ளல். கழற்றுரை - கடிந்துபேசுஞ்சொல். கழனி - சேறுதிரைச்சீலை, மருத நிலம், வயல். கழனியடுத்தவர் - வேளாளர். கழாநிலம் - கழிநிலம். கழாயர், கழாய்க்கூத்தர் - கம்பங் கூத்தர். கழாலை - உவர்நிலம், கழிநிலம். கழி - உப்பளம், கம்பு, கயிறு, கழி யென்னேவல், கோல், செம்மெழுகு, நூற்கழி, மிகுதி, யாழி னரம்பு. கழிகடை - அறக்கெட்டது. கழிகோல் - மிருகங்களைப் பிடிக்குங் கோல். கழிக்கரை - கழிமுகம். கழிக்காரை - ஓர் செடி. கழிசிறை - உறுப்புக்கேடி, நாடோடி. கழிச்சல் - பெருக்கம், வயிறுபேதி யாதல். கழிஞ்சு - ஓர்நிறை. கழிதல் - கடத்தல், சாதல், தீர்தல், நடத்தல், பிரிதல், போதல், மிகுதல், வயிறுபேதித்தல். கழித்தல் - தீர்த்தல், நீக்குதல், போக் குதல். கழிநிலம் - உப்பளம், உவாநிலம். கழிநெடிலடி - செய்யுட்டளையி னொன்று, அஃது ஐஞ்சீரின் மிக்க சீர்களடுத்து நிற்பது. கழிநெடில் - ஓர் கவி. கழிபிறப்பு - முற்பிறப்பு. கழிப்பு - கணக்குவகை நான்கி னொன்று, கழித்தல், குற்றம், தோஷந்தீர்க்கு மோர் சடங்கு. கழிமுகம் - ஆற்று நீர்க்கழிவு. கழிமுட்டாள் - ஓர் புல். கழிமை - தள்ளுதல். கழியர் - உப்பளவர், நெய்தனில மாக்கள். கழியல் - கழிக்கப்பட்டது, பிரிதல். கழியிருக்கை - நதிசூழ்ந்தவிடம். கழியுடல் - தசைகழிந்தஉடல். கழியூணன் - பெருந்தீனன். கழிவாய்நஞ்சன் - ஓர் பாம்பு. கழிவு - உள்ளதுசிறத்தல், கழிதல், தள்ளுபடியானது, பூரணம், மிகுதி. கழிவுகணக்கு - ஓர் கணக்கு. கழு - கழுமரம், கழுவென்னேவல், சூலம், புற்கற்றை. கழுகண்டு - வணங்காத்தலையன். கழுகு - ஓர் பறவை. கழுகுழுத்தல் - நொதுநொதுத்தல். கழுக்கடை - ஈட்டி, சூலம். கழுக்களம் - கொலைக்களம். கழுக்காணி - தழுக்குணி, வயிரக் கட்டை, சோம்பேறி. கழுக்குன்றம் - ஓர் மலை. கழுது - காவல், பரண், பிசாசம், வண்டு. கழுதை - வடமேற்றிசைப் பாலன் குறி, வாலேபம். கழுதைகடி - ஒருமூலைகுறைந்தவீடு. கழுதைக்கரணம் - பதினோர் கரணத் தொன்று. கழுதைக்குடத்தி - கழுதைப்புலி. கழுதைத்தும்பை - ஓர் தும்பை. கழுதைமுள்ளி - ஓர் செடி. கழுதைவண்டு - ஓர் வண்டு. கழுதைவாகினி - மூதேவி. கழுதைவிரியன் - ஓர் பாம்பு. கழுத்தடி - தோண்மேல். கழுத்தல் - பொய். கழுத்து - கண்டம். கழுத்துக்குட்டை - கழுத்திற் கட்டுகிற சீலை. கழுத்துக்கொடுத்தல் - ஒருவரிக் கட்டில்முன்னிற்றல். கழுத்துப்பட்டை - அங்கியினோ ருறுப்பு. கழுத்துமுறித்தல் - ஒருவரைக் கெடுத் தியாதொன்றடைதல், ஒன்றைச் செய்யவேண்டுமென்று தொந்த றைபண்ணல். கழுநீர் - அரிசிகிளைந்தநீர், ஆம்பல். கழுந்து - குடம்முதலியவற்றின் கழுத்து, பொருத்து, தேய்ந்து மழுங்கித்திரண்ட வடிவம். கழுப்பத்தை - புற்றக்கை. கழுமரம் - கழு. கழுமல் - நிறைதல், பற்றுதல், மயக்கம், மிகுதி. கழுமுதல் - இணைத்தல், கலக்குதல், நிறைந்திருத்தல், மயங்குதல். கழுமுள் - ஆயுதப்பொது, ஈட்டி, கழுமரம், சூலம், மாதளை. கழுவல் - கழுவுதல். கழுவன் - பொய்யில்நிலைப்பவன். கழுவாய்நிலம் - புற்றரை. கழுவுதல் - சுத்திபண்ணல். கழுவெண்ணெய்யுருக்கி - கடியவள், கழுவிலேற்றிய பிணத்தில் நெய் யுருக்குவாள், பிடித்த பிடிவிடாது சோலி பண்ணுகிறவன். கழுவெளி - புற்றரை. கழுவேறி - தழுக்குணி. கழுவேற்றுதல் - கழுவில்வைத்தல். கழை - கரும்பு, புநர்பூசம், மூங்கில். கழைக்கூத்தர் - கம்பங்கூத்தர். கழைக்கூத்து - கம்பங்கூத்து. கழைமுத்தம் - மூங்கிலிற்பிறந்தபுகை நிறமுத்து. கள - களாச்செடி. களகண்டமாலை - ஓர் வகைச்சிலந்தி. களகண்டம் - குயில். களகம் - பெருச்சாளி. களகம்பளம் - ஆட்டின்கழுத்தாரம். களகளத்தல் - ஈரடுக்காயொலித்தல். களகளப்பு - ஈரடுக்கொலிக்குறிப்பு. களகளம் - பேரொலி. களகளெனல், களகுளெனல், களகொ ளெனல் - ஈரடுக்கொலிக் குறிப்பு. களக்கடை - களவாய். களக்கட்டை - நெற்களத்தினடுங் கட்டை. களக்கர் - புலையர், வேடர். களக்குக்கொளன்கெனல் - ஒலிக் குறிப்பு. களங்கசத்துரு - ஈயமணல். களங்கட்டி - ஓர் மீன். களங்கம் - அடையாளம், கறுப்பு, குற்றம், சீதரங்கபாஷாணம், நீலம், மாசு. களங்கன் - சந்திரன், மாசுள்ளோன். களங்கு - இரசகுளிகை, அடை யாளம். களங்கொள்ளல் - போர்க்களத்திற் கலத்தல். களஞ்சி - சூதபாஷாணம். களஞ்சியம் - பண்டகசாலை. களதபுதம் - வெள்ளி, கண்ணாடி. களதம் - பெருச்சாளி. களத்திரம் - குடும்பம், சென்மத்துக் கேழாமிடம், மனைவி. களத்தூர் - ஓரூர். களந்தூரி - தான்றிக்காய். களந்தை - ஓரூர். களபகத்திணை - அகப்பொருட்டு றையினொன்று. களபகத்துரி - ஓர் வாசனைப் பண்டம். களபம் - கலப்பு, கலவைச்சாந்து, சுட்டசாந்து, யானை, யானைக் கன்று, கண்ணாடி. களப்பலி - யுத்தவீரர்செலுத்தும்பலி. களப்பன்றி - பெருங்குமிழ். களப்பன்னை - ஓர் பன்னை. களப்பாட்டு - போரடிக்கும் போது சொல்லுகிறபாட்டு. களப்பாய் - கதிர்ப்பாய். களப்பிச்சை - விளைகளத்திற் கொடுக்கும்பிச்சை. களப்பு - கடலினிடைப் பரவைத் திடர், கள்ளம். களப்புதல் - வேலைக்கள்ளம் பண் ணுதல். களப்பேச்சு - சூடுமிதிகளத்திற்பயில். களப்பேறு - குடிமக்கள்படி. களமர் - உழுநர், சூத்திரர், பூவை சியர், மருதநிலமாக்கள். களமளத்தல் - ஒலிக்குறிப்பு. களம் - இடம், இருள், ஓரூர், கடலுண்மிதப்புத்தரை, கழுத்து, களா, களாநிலம், கறுப்பு, நெற் களம், போர்க்களம், மனைவி, மிடறு, விடம். களம்பாடுதல் - போர்க்களத்தை வன்னித்தல். களரவம் - காட்டுப்புறா, புறா. களரி - அரங்கம், ஆயுதஞ்சூது கூத்துப்பயிலிடம், கருமை, களர் நிலம், காடு, கூட்டம், பாழ்நிலம், போர்க்களம், மிடறு. களரிகட்டுதல் - அவையடக்கஞ் செய்தல். களரிக்கட்டு - ஓர் வித்தை. களரிக்கோழை - சவைக்குப்பயப் படுதல். களரியேறுதல் - அரங்கிலேறுதல். களரிவிடுதல் - அரங்கிலேவிடுதல். களர் - களாநிலம், களாமரம். களர்நிலம் - உப்புநிலம். களர்மண் - உவர்மண். களவம் - கலப்பு, கலவைச்சேறு. களவர் - கள்வர். களவன் - கர்க்கடகவிராசி, கள்வன், நண்டு. களவாடுதல், களவாளல் - களவெடுத் தல். களவியல் - கள்ளப்புணர்ச்சி. களவு - உன்மத்தம், களர்ச்செடி, திருட்டு, இஃதுபஞ்ச பாதகத் தொன்று. களவுப்புணர்ச்சி - கரவுக்கூட்டம், காந்தருவமணம். களவொழுக்கம் - களவாய்ப் புணர்ந்து திரிதல். களன் - இடம், உக்கிரம், உன்மத்தம், ஒலி, கழுத்து, கூட்டம், சினேகம், போர்க்களம், மருதநிலம். களா - ஓர் செடி, களாநிலம், கறுப்பு. களாசி - படிக்கம். களாநிலம் - உப்புநிலம். களாபடனம் - தயாவிருத்தி பதினான்கி னொன்று, அஃது, கற்பித்தல். களாப்பூக்கோரை - ஓர் புல். களாவகம் - சிறுகீரை. களி - களிப்பு, களிப்புள்ளவன், களியென்னேவல், கள், குரூரம், குழம்பு, செருக்கு, மயக்கம், வெறி, சீதம், செறிவு, பெருமை, வெப்பு. களிகம் - வாலுளுவை. களிகூருதல் - அக்களித்தல், களிப்பு, மிகுதல். களிகை - இளம்பூவரும்பு. களிக்கண் - தட்டார்கருவியினொன்று. களிக்காய் - தசைக்காய். களிக்குளம் - ஓர் பட்டினம். களிதம் - பெருங்கல், வழுக்கல். களித்தல் - செருக்கடைதல், மதத்தல், மிகவுவத்தல். களித்துறை - ஓரூர். களிநெஞ்சன் - கொடூரன், செருக்கன். களிப்பாக்கு - அவித்துக்காய்ந்தபாக்கு. களிப்பு - இன்பம், உள்ளக்களிப்பு, மதாப்பு, மயக்கம். களிமண் - பசைமண். களிமம் - எலி. களிம்பு - மலினம். களியர் - நெய்தனிலமாக்கள்,வெறியர். களியாட்டு - மதுவெறியாட்டு. களிறு - அத்தநாள் ஆண்சுறா, ஆண் பன்றி, ஆண்யானை, விலங்கேற் றின் பொது, யானை. களுகொளெனல் - நழுநொழுத்தல். களுக்குக்களுக்கெனல் - ஒலிக்குறிப்பு. களேபரம் - உடல், எலும்பு, பிணம். களை - அயர்வு, அழகு, ஒளி, களை யென்னேவல், குற்றம், தாளப்பிர மாணம்பத்தினொன்று, தேவ கலை, புல். களைகட்டல் - களைபிடுங்கல். களிகட்டி, களைவெட்டி - களையெடுக் குங்கருவி. களைகண் - தாபரம், புகல். களைகொள்ளுதல் - சோர்தல், தேவ பத்திக்கடுத்தமுகக்குறியடைதல். களைகோல் - ஓர் கருவி. களைஞர் - சண்டாளர், வேலைக்காரர். களைதல் - களைகட்டல், கொல்லல், நீக்குதல், விலக்குதல். களைதீர்தல், களைதேறுதல் - சோகந் தீர்தல். களைத்தல் - இளைப்புறல். களைபறித்தல் - களைபிடுங்குதல். களைபோடுதல் - சோகம்போடுதல். களைப்புல் - பயிருக்குட்புல். களையாறுதல் - சோகநீங்குதல். களையாற்றுதல் - சோகந்தீர்த்தல். களையேறுதல் - களைகொள்ளுதல். களைவாரி - களைச்சத்தகம், களை வாருவோன். களைவு - களைதல். கள் - ஓர் வண்டு, களவு, கள்ளென் னேவல், பன்மைவிகுதி, பொய், மது, மலர்த்தேன், சோர்வு. கள்வன் - கரியவன், கர்க்கடகவிராசி, குரங்கு, திருடன், நண்டு, முசு, யானை. கள்ளக்கடன் - அநியாயவட்டிக்கு வாங்கல், மென்புரட்டு. கள்ளக்கதவு - கள்ளவாயில். கள்ளக்கயிறு - சூத்திரக்கயிறு. கள்ளக்கவறு - கவறு, வஞ்சகச்சூது. கள்ளக்கலி - சோரகவி. கள்ளக்களவு - ஒளிப்புமறைப்பு. கள்ளக்காசு - செல்லாக்காசு. கள்ளக்காதுபடல் - குற்றினகாது பழுதுபடல். கள்ளக்காய் - கனற்றபழம். கள்ளக்கோலம் - இரண்டுக் குற்ற சாயல், குணக்கேடான் சாயல். கள்ளச்சரக்கு - கள்ளமானசரக்கு. கள்ளச்சி - பூநீறு, பூவழலை, திருடி. கள்ளச்சுரம் - விட்டுவிட்டுக்காயுங் காய்ச்சல். கள்ளத்தட்டு - தந்திரத்தட்டு. கள்ளத்தோணி - ஓர்ஓடம். கள்ளநீர் - புண்ணீர். கள்ளப்பால் - இடைத்தட்டில் வருவன. கள்ளப்புணர்ச்சி - தந்தைதாயறியாது தலைவனுந்தலைவியுங்கூடல். கள்ளப்புருஷன் - சோரநாயகன். கள்ளப்பேச்சு - தந்திரப்பேச்சு. கள்ளமனம் - வஞ்சகமனம். கள்ளம் - களவு, குற்றம், பொய். கள்ளம்பண்ணல் - சோர்வுபண்ணல். கள்ளம்விடல் - வேண்டியபடி செய் யாதுவிடல். கள்ளல் - களவுசெய்தல், கள்ளுண் ணல். கள்ளவல்லியன் - ஓர்சாதியான். கள்ளவிலை - இரகசியவிலை. கள்ளவெட்டு - கள்ளத்தனம். கள்ளவேலை - மாரீசமானவேலை. கள்ளவேளை - நியமிக்கப்படாத நேரம். கள்ளறை - பெட்டகத்துள்ளறை. கள்ளன் - சோரன். கள்ளி - ஓர் மரம், திருடி. கள்ளிக்காக்கை - செம்போத்து. கள்ளிக்கோட்டை - ஓரூர். கள்ளிச்சிட்டு - ஓர் பறவை. கள்ளிமடையான், கள்ளிமுளையான் - ஓர்பூடு. கள்ளு - நீறிடாதபனைநீர். கள்ளுதல் - களவுசெய்தல். கள்ளூண் - வண்டு. கறகறத்தல் - அரிகண்டப்படுத்தல், சீக்கிரக்றிப்பு. கறகறெனல் - ஒலிக்குறிப்பு, சீக்கிரக் குறிப்பு. கறங்கல் - ஒலித்தல், சுழலல், பேய், வளைதடி. கறங்கு - கறங்கென்னேவல், காற்றாடி, சுழற்சி. கறங்குதல் - சுழலல். கறட்டி - உலர்ந்தகட்டி, வரண்ட கட்டம். கறட்டியோணான் - கட்டோணான். கறட்டுக்கறட்டெனல் - கோழை கொண்டிழுத்தல் கறத்தல் - உறத்தல், பால்முதலிய பிதுக்கல். கறமன் - காய்ந்துவரண்டது. கறல் - விறகு. கறவை - பாற்பசு. கறவையான் - பாற்காரன், பாற்பசு. கறளை - ஓர் மரம், கறாளை. கறள் - துரு. கறா - காடைக்குரல். கறாக்கி, கறார் - வரையறை. கறாளி - அடங்காக்குதிரை. கறாளை - வளர்ச்சியற்றது. கறி - கடி, கறி, கறியென்னேவல், மிளகு. கறிக்கரணை - ஓர் செடி. கறிச்சுரை - ஓர் சுரை. கறித்தல் - கடித்தல், புசித்தல். கறித்தும்பை - ஓர் தும்பை. கறிப்பாலை - ஓர் பாலை. கறிப்புடல் - ஓர் புடோல், ஒரு வண்டு. கறிமசாலை - கறிச்சரக்கு. கறிமுள்ளி - ஓர் முள்ளி. கறியுப்பு - இலவணம். கறிவடகம் - வற்றல். கறுகாய்ஞ்சொறி - ஓர் செடி. கறுக்காய் - இளநீர்க்கயர், ஓர் மரம். கறுக்கை - கோபித்தல். கறுத்தக்காக்கட்டான் - ஓர் கொடி. கறுத்தப்பாசி - கரியமணி. கறுத்தப்பூ, கருவிருளை - கருங் காக்கணம். கறுத்தல் - கறுப்பாதல், கோபித்தல், மனக்குறைப்படுதல். கறுத்தவன் - பகைவன். கறுத்தவுப்பு - காருப்பு. கறுப்பன் - ஓர் தேவதை, ஓர் நெர், கரியன். கறுப்பு - கருநிறம், கறை, கோபம், சினக்குறிப்பு, மனக்குறை. கறுப்பக்கட்டுதல் - பயிர்கறுத்துண் டாதல், மழைக்கோலங்கொள்ளல். கறுப்புக்காய்ஞ்சொறி - ஓர் செடி. கறுப்பெறிதல் - கறுத்தல், . கறுமுதல் - சினக்குறிப்புக்காட்டல், சினத்தல். கறுமுறுத்தல் - சினத்தல். கறுமுறனல், கறுமொறெனல் - ஒலிக் குறிப்பு, குறைசொல்லல். கறுமொறுத்தல் - மொறு மொறுத் தல். கறுவம் - ஆங்காரம், சினம். கறுவல் - கரியவன், சலஞ்சாதித்தல், சினக்குறிப்பு. கறுவா - ஓர் மரம். கறுவாப்பட்டை - ஓர் சரக்கு. கறுவித்தல் - சலஞ்சாதித்தல். கறுவியம் - கறுவித்தல், வைராக்கியம். கறுவு - கறுவென்னேவல், சலஞ் சாதித்தல், சினக்குறிப்பு, சினம், தணியாக்கோபம். கறுவுதல் - சலஞ்சாதித்தல். கறுள் - கடிவாளம். கறேரெனல் - ஒலிக்குறிப்பு, கருமை நிறக்குறிப்பு, விரைவின்குறிப்பு. கறை - இருள், உதிரம், உரல், கறள், கறுப்பு, குடியிறை, குற்றம், நஞ்சு, நிறம், மாசு. கறைக்கட்டுதல், கறைபிடித்தல் - கறள்பிடித்தல். கறைப்படுதல் - குற்றப்படுதல். கறைப்போக்கன் - கீழ்மகன். கரைப்போக்கி - கீழ்மை. கறைமிடற்றோன் - சிவன். கறையடி - யானை. கறையான் - சிதல். கறையான்மேய்தல் - கறையான் கட்டுதல். கறையான்புற்று - வன்மீகம். கற்கசகாரன் - கடினமுள்ளோன், சுறுக்கிளகாதவன். கற்கசம் - கடினம், பிரயாசம், குரூரம், பிசுனம். கற்கசர் - உலோபிகள், கடினர், கீழ் மக்கள். கற்கடககரம் - தேள், நண்டுவாய்க் காலி. கற்கடகசிங்கி - ஓர் பூடு. கற்கடகபாஷாணம் - விழைவுபாஷாண முப்பத்திரண்டினொன்று. கற்கடகம் - ஓரிராசி, நண்டு, தாமரை நூல், விட்டார்த் தம். கற்கடகவைரி - குரங்கு. கற்கண்டம் - கற்பார். கற்கண்டு - கருப்புக்கட்டி. கற்கம் - ஒர் சரக்கு, பலவகை கூடிய மருந்து, மருந்தின்பொது, தாமரை, நிட்டை, பாதம். கற்கரம் - மத்து. கற்கரி - கரகம், தயிர்கடைதாழி. கற்கரிகை - சதங்கை. கற்கருசிலை - ஒர் பூடு. கற்கனல் - கல்மதம். கற்கா - கொடுந்தமிழ்நாட்டி னொன்று. கற்காமி - அல்மதம். கற்காரம் - கல்லக்காரம், காரக்கல். கற்காரு - அகிலமரம், கற்காரம். கற்கி - குதிரை, திருமாலவதாரத் தொன்று, தேவர்கோயில். கற்கிச்சா - சாவாக்கியங்களி னொன்று. கற்கிணறு - கல்லுக்கிணறு. கற்கிமண்டலம் - உத்தரவீதிக்கடை. கற்குடல் - ஓர் விதநோய்க்குடல். கற்குளித்தல் - இரத்தினங்குளித் தெடுத்தல். கற்கு - கற்கடகவிராசி. கற்கோடன் - கார்க்கோடன். கற்கோவை - கருடன்கிழங்கு. கற்சத்து, கற்சவளை - கல்நார். கற்சம் - யானைபிளிறொலி. கற்சரீரம் - வயிரச்சரீரம். கற்சனம் - கோபம், தொனி, முழக்கம், யுத்தம். கற்சாகம் - மரகதம். கற்சாடி - கல்லினாற்செய்தபாத்திரம். கற்சிற்பன் - சிற்பன். கற்சுண்ணாம்பு - கன்னீறு. கற்சுவர் - செங்கல்காட்டுக்கல்லி வற்றாற்செய்யப்பட்டசுவர். கற்சூரம் - கழற்கொடி, பேரீந்து. கற்சூலை - ஓர் சூலை. கற்பகக்கரம் - கோழித்தலைக் கெந்தகம். கற்பகச்சோலை - இந்திரன்நந்தனம். கற்பகத்திணை - அகப்பொருட்டு றையினொன்று. கற்பகம் - ஐந்தருவினொன்று, அஃது வேண்டிற்றெல்லாந்தருமரம், விநாயகன், புளியாரை. கற்பகன் - சௌளகன். கற்பகோளகை - கருப்பப்பை. கற்பஞ்சாதித்தல் - காயசித்திக்கு மருந்துசாதித்தல். கற்படி - ஏறும்படி. கற்படுத்தல் - செங்கற்பதித்தல். கற்படை - கற்படுத்தநிலம், கோட் டையிற்கள்ளவழி. கற்பதரு - கற்பகவிருட்சம். கற்பதுருமம் - கற்பதாரு. கற்பதித்தல் - இரத்தினமழுத்தல், கல்லடுத்தல். கற்பநிதி - குபேரனவநிதியினொன்று. கற்பம் - ஆயிரங்கோடி, உலகமுடி யுங்காலம், ஓர்மருந்து, கருப்பம், தேவலோகம், பிரமனாயு, மந்திர சாத்திரம், அற்பம், இரண்டிரவு மொரு பகலுங்கொண்டது, கஞ்சா, நிண்ணயம், புளியாரை, வேதாங்க மாறி னொன்று. கற்பரன் - வெள்ளைப்பாஷாணம். கற்பரிபாஷாணம் - ஓர் மருந்து. கற்பலகை - எழுதும்பலகை. கற்பழிதல் - கற்புக்கெடுதல். கற்பனை - இல்லதையுள்ள தாயுண்டு பண்ணல், கட்டளை, படிப்பு. கற்பாசி - ஓர்மருந்து. கற்பாஷாணம் - ஓர் மருந்து. கற்பாட்டி - கற்புடையாள். கற்பாந்தம் - கற்பமுடிவு. கற்பாரியம் - சிற்பநூன் முப்பத்தி ரண்டினொன்று. கற்பார் - கல்லுப்பார், கல்விகற் போர். கற்பாலவணம் - ஓருப்பு. கற்பாவுதல் - கற்படுத்தல். கற்பாளி - கல்லளை. கற்பாறை - கன்னிலம், கல்லுப் பாளம். கற்பிதம் - நியமம். கற்பித்தசொல் - ஆக்கச்சொல், நியமிக்குஞ்சொல். கற்பித்தல் - கட்டளையிடல், படிப் பித்தல். கற்பிரம் - கல்லாரை. கற்பியல் - கற்பொழுக்கம். கற்பிலக்கணம் - கற்புநடை, உள்ள மகிழ்ச்சியு மூடலு மூடலுணர்த்த லும் பிரிவும் பிறவுமாம். கற்பிற்கிளவித்தொகை - பரத்தையிற் பிரிவுமுதலாகப் பொருள்வயிற் பிரிவீறாம். கற்பு - கல்வி, மகளிர்நிறை, மதிலுண் மேடை, மதில், முல்லைக்கொடி. கற்புப்பலித்தல் - கற்புச்சித்தித்தல். கற்புரம் - பொன். கற்புழை - கல்வளை. கற்பூ - கல்லாரை, கற்றாமரை. கற்பூசரம் - நாகமலை. கற்பூமி - கல்லுநிலம். கற்பூரசத்து - கருப்பூரச்சிலை. கற்பூரம் - கருப்பூரம். கற்பெறுக்கி - ஓர் புள். கற்பை - படிக்கல்லுப்பை. கற்பொடி - அன்னபேதி. கற்போன் - மாணாக்கன். கற்றசை - வாடாததசை. கற்றச்சன் - கற்சிற்பன். கற்றடிவிரியன் - ஓர் பாம்பு. கற்றலைமீன் - ஓர் மீன். கற்றல் - படித்தல், பழகுதல். கற்றவர் - புலவர். கற்றறிமூடன் - கற்றும்மதி யீனனா யிருப்பவன். கற்றறிவு - படிப்பினால்வருமறிவு. கற்றா - இளங்கன்றுப்பசு. கற்றார் - அறிஞர், படித்தோர். கற்றாழை - ஓர் செடி. கற்றானை - காவிப்புடைவை. கற்றீட்டு - கன்மதம். கற்றுக்குட்டி - படிக்கும்பிள்ளை. கற்றுக்கொடுத்தல் - படிப்பித்தல். கற்றுச்சொல்லி - சிறுகவிஞன், துணைச்சொல்லுச்சொல்வோன். கற்றூண் - கல்லாலாயதூண். கற்றேக்கு - ஓர் மரம். கற்றை - கதிர்த்தொகுதி மயிர்த் தொகுதி போல்வன, கூட்டம், தென்னோலை முதலியவற்றான் முடையுங் கற்றை. கற்றொட்டி - கல்லினாற் செய்தநீர்த் தொட்டி. கற்றோர் - அறிஞர், கலைஞர். கற்றோர்நவிற்சியணி - மிகுதிக்குக் காரணமாகாததையதற்குக் காரணமாகச் சொல்வது. கனகக்கொடியோன் - கன்னன். கனகசபை - பஞ்சசபையினொன்று. கனகதண்டிகை - பொற்சிவிகை. கனகதம் - ஒட்டகம். கனகதர் - சண்டாளர், புலைஞர். கனகபரிட்சை - கலைஞான மறுபத்தி னான்கினொன்று. கனகம் - பொன். கனகரசம் - அரிதாரம். கனகலம் - ஓர் தலம். கனகனசங்கிலிதம் - கனமாகிய வீரெண்ணின் பெருக்கம். கனகன் - இரணியன். கனகாசம் - கண்ணினோர்நோய். கனகாசலம் - மகாமேரு. கனகாபிஷேகம் - பொன்னபிஷேகம். கனகாமிரதம் - வெள்ளி. கனங்காய் - ஓர் மரம். கனசங்கலிதம் - சமமாகியமூவெண் பெருக்கத்தைக் கூட்டியது. கனசரம் - இரசம், நீர். கனசாரம் - கருப்பூரம். கனசாரி - மிகுதி. கனட்டி, கனட்டு - சிறுவயல். கனதண்டி - கனமுள்ளது. கனதி - கனம், பெருமை. கனதிக்காரன் - பெருமைக்காரன். கனத்தநாள் - தாக்குக்கொண்ட நாள். கனத்தல் - நெருங்கல், பாரங் கொள் ளுதல். கனத்தி - வைப்பரிதாரம். கனபலம் - நீளம், அகலம், கனம் மூன்றையும் பெருக்கி வருவது. கனபுடம் - நூறுஎருப்புடம். கனப்பு - தடிப்பு, பாரம், விறைப்பு. கனப்புக்காட்டல் - கனத்தல். கனமழை, கனமாரி - பெருமழை. கனமூலம் - கனத்தொகையினின்று அதின் மூலமாகிய வொருகோண மறிதல். கனம் - அகலம், கூட்டம், கோரைக் கிழங்கு சங்கை, சமமாகிய மூவெண்ணின் பெருக்கம், சீர்மை, செறிவு, நிறைவு, பாரம், பொன், மிகுதி, மேகம், வட்டம், இரசம், ஈயம், தங்கம். கனம்பண்ணுதல் - சங்கித்தல். கனம்பாடுதல் - சுரம்பாடுதலி னொன்று. கனரசம் - நீர். கனருசி - மின்னல். கனலி - சூரியன், நெருப்பு, பன்றி, கள்ளி. கனலுதல் - எரிதல், காய்தல், சூடு கொள்ளல். கனலொழுங்கு - தீத்திரள். கனல் - உட்டணம், கனலென்னே வல், நெருப்பு, பிரவை. கனல்நிறக்கல் - கெம்புக்கல். கனல்நிறம் - மாணிக்கம். கனல்பேதி - சாத்திரபேதி. கனல்மரம் - சோதிமரம். கனவட்டம் - குதிரை, பாண்டியன் குதிரை. கனவான் - கணிசவான். கனவிரதம் - நீர். கனவு - கனா, நித்திரை, மயக்கம். கனவுநூல் - கனாவின் பலனறியு நூல். கனறல் - கனற்றுதல், சினக்குறிப்பு. கனற்கூர்மை - வளையலுப்பு. கனற்சிலை - மந்தாரச்சிலை. கனற்றல், கனற்றுதல் - எரிதல், காயப் பண்ணல். கனைத்தம்பம் - கலைஞான மறு பத்தினான்கினொன்று. கனனம் - கிண்டல், புதைத்தல், விழுதல். கனன்றல் - கனலுதல், சினக்குறிப்பு. கனா - கனவு. கனாசுரம் - கார்காலம். கனி - கனியென்னேவல், தித்திப்பு, நிரசவஸ்துக்கள் பிறக்குமிடம், பழம். கனிகரம், கனிகை - கனிதல். கனாசிரயம் - ஆகாயம். கனிட்டம் - அழகு. கனிட்டம் - கடைவிரல். கனிட்டர் - கீழ்மக்கள், பின்பிறந் தோர். கனிட்டன் - பின்னோன். கனிட்டிகை - கடைவிரல். கனிட்டை - பின்பிறந்தாள். கனிதல் - இரங்கல், கரைதல், சினக் குறிப்பு, நைதல், பழுத்தல், புதைத் தல், பெருங்கோபம். கனித்திரம் - மண்வெட்டி. கனிந்தசொல் - இனியசொல். கனீயசம் - செம்பு. கனியாமணக்கு - பப்பாமரம். கனிவு - கனிதல். கனுகுபினுகெனல் - மனங்கனிந்தின் புற்றிருத்தல். கனுக்கு - கனுக்கென்னேவல், சந்தத் தினசைப்பு. கனுக்குதல் - குறைத்தல், சந்தத்தில சைத்தல், சிதைத்தல். கனுக்குப்பினுக்கு - அதிக பரிமளிப்பு. கனை - ஒலி, கனையென்னேவல், நிறைவு, நெருக்கம், செறிவு. கனைதல் - கூடுதல், நெருங்கல். கனைத்தல் - ஆரவாரித்தல், ஒலித்தல், குதிரை முதலியவனுமானித்தல், சிரித்தல். கனைப்பு - கனைத்தல். கனைவரிவண்டு - ஓர் வண்டு. கனைவு - நெருக்கம். கனோபலம் - ஆலாங்கட்டி. கன் - கல், சிறுதராசுத்தட்டு, வெண் கலவேலை. கன்பாயநாடு - ஓரூர். கன்மகாண்டம் - கன்மநிவிர்த்தி சொல்லுநூல். கன்மசண்டாளன் - பாதகன். கன்மஷம் - அழுக்கு, ஈயம், கறள், பாவம். கன்மசாதாக்கியம் - சிவசாதாக்கி யமைந்தினொன்று. கன்மசாந்தி - கன்மநிவிர்த்தி. கன்மடி - காய்மடி. கன்மதம் - ஓர் மருந்து. கனை - செறிவு. கன்மதாதான்மியம் - சரீரத்திலகங் காரங்கலத்தல். கன்மநிவிர்த்தி - பாவப் பிராயச் சித்தம். கன்மபரிபாகம் - கன்மத்தொலைவு. கன்மபூமி - கருமபூமி. கன்மம் - இருவினை, செய்தொழில், பாவம். கன்மரோகம் - தீராநோய். கன்மலி - ஏலம். கன்மவலை - இலவுகீகமயக்கு. கன்மவியாதி - தீராநோய். கன்மழை - கல்லாகவருஷிக்குமழை. கன்மாதி - தென்புலத்தோர்கடன், நித்தியகன்மம். கன்மாதிகன் - கடன்செய்வோன். கன்மாந்திரம் - தீக்கடன் முதலியன, பாவம். கன்மி - கிரியைக்காரன், பாவி. கன்முதிரை - ஓர் முதிரை மரம். கன்முரிசு - ஓர் மரம். கனமேந்திரியம் - கிரியைக்குரிய பொறி. அவை உபத்தம் - பாணி - பாதம் - பாயுரு - வாக்கு. கன்மொந்தன் - ஓர் வாழை. கன்றல் - கடுப்பு, கன்றினது, கன்று தல், சினக்குறிப்பு. கன்று - அற்பம், எருமை, ஒட்டை, கடமை, கவரி, காட்டா, குதிரை, பசு, மரை, மான், யானையிவற் றின்கன்று, கன்றென்னேவல், கைவளை, மரக்கன்று. கன்றுகொல்லி - பசுநோயினொன்று. கன்றுதல் - இரங்கல், கன்றல், கோபித்தல், நைதல், பதனழிதல். கன்றுத்தாய்ச்சி - கன்றுண்டானபசு. கன்றுபடல் - சினைப்படல். கன்றுபுக்கான் - ஓர் பூடு. கன்னகண்டு - காதசுகுணி. கன்னகம் - கன்னக்கோல். கன்னகூதம் - குறும்பி. கன்னக்காரன் - கள்வன், கன்னமிடு கிறவன். கன்னக்கிரந்தி - ஓர் நோய். கன்னக்கோல் - சுவரகழ்கருவி. கன்னங்கரியது - மிகக்கரியது. கன்னங்கறேரெனல் - மிகுகறுப்பின் குறிப்பு. கன்னசூலை - ஓர் நோய். கன்னடகௌளம் - ஓர் பண். கன்னடம் - ஓர் கூத்து, ஓரிராகம், ஓர் பாடை, சாதிநான்கினொன்று, தேயமன்பத்தாறினொன்று. கன்னடியம் - ஓர் தேசம், ஓர் பாடை. கன்னடியர் - ஓர் சாதியார். கன்னத்தட்டு - தராசுத்தட்டு. கன்னபரம்பரை - கன்னபாரம்பரை. கன்னபாகம் - காது. கன்னபாரம்பரியம், கன்னபாரம்பரை - வாக்குமூலமாய்வழங்குவது. கன்னபூஷணம் - காதணி. கன்னபூரம் - காதணியினொன்று, காது, அசோகு, நீலோற்பலம். கன்னப்பரிசை - கீழலகு. கன்னப்பிளவை - ஓர் சிலந்தி. கன்னப்புற்று - ஓர் நோய். கன்னப்பூ - ஒர் காதணி. கன்னப்பொறி - கேள்வி மூலம். கன்னமதம் - யானைமதத்தினொன்று. கன்னமலம் - குறும்பி. கன்னமிடுதல் - களவெடுத்தல், சுவர கழ்தல். கன்னமீசை - கன்னத்தின்மீசை. கன்னமூலம் - காதினடி, காது. கன்னம் - அருகு, கதுப்பு, கன்னக் கோல், காது, தராசு, நரம்பு, பொற் கொல்லன், யானைச்செவி. கன்னல் - கரகம், கரும்பு, சருக்கரை, நரம்பு, நாழிகை, நாழிகை வட்டில். கன்னவேதம், கன்னவேதனம், கன்ன வேதை - காதுகுத்தல். கன்னற்கட்டி - கற்கண்டு. கன்னன் - அங்கராசன். கன்னாடம் - ஓர் பாஷை, தேயமன் பத்தாறினொன்று. கன்னாதம் - அன்னபேதி. கன்னார் - ஓர் சாதி, ஓர் மருது. கன்னாவதங்கம் - காதிற்பூ. கன்னி - அத்தநாள், அழிவில்லாள், அழிவின்மை, இளமை, ஓரிராசி, ஓர்யாறு, கற்றாளை, காக்கணஞ் செடி, காவிளை, குமரி, தவப் பெண், துர்க்கை, தெய்வப்பெண், பார்வதி, பெண், கரந்தை. கன்னிகாசலம் - மேரு. கன்னிகாதானம் - கன்னியைமணம் முடித்துக்கொடுத்தல். கன்னிகாபதி - மருமகன். கன்னிகாரம் - கோங்கு. கன்னிகை - கலவியறியாதவள், குமரி, தாமரைக்கொட்டை, துர்க்கை, பூவரும்பு. கன்னிக்கால் - கன்னிமூலையிற்கப்பு. கன்னிக்கிழங்கு - கிட்டிக்கிழங்கு. கன்னிக்குட்டி - முதலீன்றகுட்டி. கன்னிக்கோழி - முட்டையிடாத கோழி. கன்னித்தீட்டு - இருதுத்தீட்டு. கன்னித்துவம் - கன்னிப்பருவம். கன்னித்தேங்காய் - தென்னமரம் முதற்காய்த்தகாய். கன்னிநாகு - ஈனாதநாகு. கன்னிப்பழி - கன்னிகையைக்கற் பழித்த பாவம். கன்னிமறி - ஆடு மான் முதலிய வற்றின்மறி. கன்னிமாதம் - புரட்டாதிமாதம். கன்னிமார் - வாலைப்பெண்கள். கன்னிமுத்திரை - கன்னித்தன்மை. கன்னிமை - கன்னிப்பருவம். கன்னியழிதல் - கன்னிமுத்திரையழி தல். கன்னியாகரணம் - கன்னியையப கரித்தல். கன்னியாகுமரி - ஓர்யாறு. கன்னியாக்கிரணம் - கலியாணம். கன்னியாஸ்திரி - குமரி. கன்னியாதானம் - அறம்முப்பத்தி ரண்டினொன்று, அஃது கன்னி யைத் தீ முன்னர்க்கொடுப்பது. கன்னியாதூஷிகன் - கன்னித்து ரோகி. கன்னியாதோஷம் - கன்னிகாபகீர்த்தி. கன்னியாபுத்திரன் - கானீனன். கன்னியாப்பிரதானம் - கன்னிகா தானம். கன்னியாவேதி - மருமகன். கன்னியீற்று - தலையீற்று. கன்னிறம் - இசங்கு. கன்னீகம் - ஓர்சன்னிநோய். கன்னுவர் - கன்னார். கன்னுறுகம் - சிறுகீரை. கன்னெஞ்சன் - வன்னெஞ்சன். கன்னெஞ்சி - அவுரி, வன்னெஞ்சி. கன்னை - பக்கம். கன்னைக்கொற்றி - இருகன்னைக்கு முதவி செய்வோன். கன்னைக்கோல் - நெய்வார்கருவியி னொன்று. கன்னைமாறி - அங்கிடுதத்தி. கா கா - அசைச்சொல், ஓரெழுத்து, காத்தல், காவடி, காவென் னேவல், சோலை, துலை, தோட்சுமை, பூந்தோட்டம், வருத்தம், வலி, (உம்) வேளிவட் காண்டிகா. காகங்கரைதல் - காகமழுதல். காகச்சிலை - கருமுகிற்சிலை. காகச்சுக்கான் - கருமணற்சுக்கான். காகதுண்டம் - அகில். காகதேரி - மணித்தக்காளி. காகத்துரத்தி - ஆதொண்டை. காகத்துவசத்தாள் - மூதேவி. காகநதி - காவிரிப்பூம்பட்டினம், காவேரி. காகநிமிளை - ஓர் நிமிளை. காகபதம் - காலதசப் பிரமாணத் தொன்று. அஃது குருஇரண்டு கொண்டது. காகபவி - காகத்துக்கிடுமுணவு. காகபாஷாணம் - ஓர் மருந்து. காகப்புள் - அவிட்டநாள், காக்கை. காகம் - அவிட்டம், காக்கை, வட கீழ்த்திசைப்பாலன்குறி, வைப்புப் பாஷாண முப்பத்திரண்டி னொன்று. காகவாகனன் - சனி. காகளம் - எக்காளம். காகாபிசாசு, காகாவிரிச்சி - ஓர் பேய். காகிதம் - கடுதாசி, திருமுகம். காகித்தம், காகித்திரம் - குறிஞ்சா. காகு - இசையறுப்பு. காகுத்தன் - இராமன், விட்டுணு. காகுராசி - புடோல். காகுளி - இசை, தவிசு, மந்தவிசை, மிடற்றெழுமோசை, மெத்தை. காகொடி - எட்டிமரம். காகோடகி - வாலுளுவை. காகோடியர் - நாடகர். காகோதரம் - பாம்பு. காகோலம் - அண்டங்காகம். காகோளி - அசோகமரம், கொடியரசு, தேட்கொடுக்கி. காக்கட்டான் - காக்கணம். காக்கணங்கொவ்வை - காக்குறட்டை. காக்கணம் - கருவிளை. காக்கம் - காக்கொறட்டைச்செடி. காக்காச்சி - ஓரூமச்சி. காக்காய் - காகம். காக்காய்க்கொல்லி - ஓர் புதர். காக்காய்ச்சோளம் - ஓர் சோளம். காக்காய்ப்பாலை - ஓர் பாலை. காக்காய்ப்பூ - ஓர் பூடு. காக்காய்ப்பொன் - பொன்னிறப்பிசின். காக்காய்மீன் - ஓர் மீன். காக்காய்மூக்கன் - மனுஷரிலோர் விதசாதி. காக்காய்மூக்கு - கருமுகிற் பாஷாணம். காக்காய்வலி - ஓர் நோய். காக்காரர் - தோட்சுமைகாரர். காக்குத்துவான் - ஓர் புள். காக்குறட்டை, காக்குறோட்டை - காக் கொறட்டை. காக்கை - அவிட்டநாள், காகம், காக்குதல், பஞ்சபட்சியி னொன்று. காக்கைக்கொடியாள் - மூதேவி. காக்கைபாடினியம் - ஓரிலக்கண நூல். காக்கைமுகர் - ஓர் வகை மானிடர். காக்கொறட்டை - கருங்காக்கணம். காங்கிசை, காங்கிஷை - விருப்பம். காங்கு - ஓர் புடைவை. காங்கேயம் - பொன். காங்கேசன், காங்கேயன் - குமரன், வீட்டுமாசாரி. காங்கை - வெப்பம். காங்கையன் - வைப்புநீலப்பாஷாணம். காசசுவாசம் - ஓர் நோய். காசம் - ஓர் நோய், கண்விசாதி, கற் பாஷாணம், கோழை, சிலேட்டு மம், தேயமன் பத்தாறினொன்று, பொன். காசறை - கத்தூரிமிருகம், மணி, மயிர்ச்சாந்து. காசனம் - கொலை. காசனன் - கொலைசெய்வோன். காசா - எருமை, ஓர் செடி, நாணல். காசாண்டி - ஓர் வகைச்செம்பு. காசாம்பாரை - ஓர் மீன். காசாவில்லை - சந்தனக்கூட்டு. காசி - ஓர் பட்டணம், சீரகம். காசிக்கல் - காகச்சிலை. காசிக்கிருட்டி - ஓர்புள். காசிக்குப்பி - ஒரு வகைமெல்லிய குப்பி. காசிச்சாரம் - ஓருப்பு. காசித்தும்பை - ஓர் தும்பை. காசிபம் - தரும நூல்பதினெட்டி னொன்று. காசிபன் - ஓரிருடி. காசிமீரம் - தேயமன்பத்தாறினொன்று. காசிரம் - வட்டம். காசிரோர்த்தம் - வறட்சுண்டி. காசிலவணம் - காசிச்சாரம். காசிலிங்கம் - ஒரு சிவலிங்கம். காசினி - பூமி. காசு - குற்றம் - கோழை, நாணயம், பொன், மணிப்பொது, மாதரணி வடம். காசுகட்டுதல் - ஓர் விளையாட்டு. காசுக்கடை - பொன்விற்கிறகடை. காசுக்கட்டி - ஓர் மருந்து. காசுமண் - ஓர் மண். காசை - காயா, நாணற்புல். காச்சுப்பு - சவட்டுப்பு. காச்சுரை - ஓர் கீரை. காஞா - காயா. காஞ்சம் - நீலாஞ்சனக்கல். காஞ்சனம் - புன்கமரம், பொன். காஞ்சனி - மஞ்சள். காஞ்சா - கஞ்சா. காஞ்சான்கட்டுதல், காஞ்சான் பற்றுதல் - செற்றலாதல். காஞ்சி - எண்கோவைமணி, ஓரூர், ஓர் பண், ஓர் மரம், நிலையின்மை. காஞ்சிகை - எட்டிமரம். காஞ்சிமாலை - ஓர்பிரபந்தம், படை முன் னெதிரூன்றுஞ் சேவகர்க்கு மாலை. காஞ்சிரம், காஞ்சிரை - எட்டிமரம். காஞ்சினி - மஞ்சிட்டி. காஞ்சுகம், காஞ்சுகி - சட்டை. காஞ்சொறி - காஞ்சோன்றி. காஷாயம் - ஓர்மருந்து, காவி, கூழ், பலமருந்தொன்றாயூறியது. காஷாயப்புடைவை - காவிப்புடைவை. காடகம் - சீலை. காடவிளக்கு - ஓர் வகைவிளக்கு. காடன் - ஓர் மீன். காடாக்கினி - பெருந்தீ. காடாந்தகாரம் - பேரிருள். காடாரம்பற்று - காட்டுப்புறம். காடாற்று - ஈமக்கிரியையினொன்று. காடாற்றுதல் - பிரேததகனத் தீயைத் தணித்தல். காடி - ஊறுகாய், ஓர்மருந்து, கஞ்சி, கள், நெய், மூளை, யாதொன்றூ றிப்புளித்தநீர். காடிகம் - சீலை. காடிக்காரம் - ஆயக்கல். காடினி, காடின்னியம் - கடினம். காடு - இடம், ஊர், எல்லை, ஓர் விகுதி (உம்) நோக்காடு, சுடுகாடு, செத்தை, நெருக்கம், பரணிநாள், மிகுதி, வனம். காடுகலைத்தல் - வேட்டைக்காரர் மிருகங்களைக்கலைத்தல். காடுகாட்டுதல் - கொல்லல், வெறி தாய் விடுதல். காடுகாள் - வடுகன்றாய். காடுபடுதிரவியம் - காட்டி லுண்டா குந்திரவியம். அஃது அரக்கு, கருந்தினை, தேன், நாவி, மயிற் பீலி. காடுபலியூட்டுதல் - குறவர் வேடர் செய்யுமோராராதனை. காடுபிறாண்டி - காடுவாரி. காடுமேய்த்தல் - வீணாய்த்திரிதல். காடுவசாதி - காடுவாழ்சாதி. காடுவாரி - ஓராயுதம், காடுபிறாண்டி. காடுவாழ்சாதி - சரீரத்தைப் பேணா துதிரிவோர். காடுவாழ்த்து - வனதேவதை களை வாழ்த்தல், வனதேவதை களை வாழ்த்திச் சொல்லுமோர் பிர பந்தம். காடுவெட்டி - சிறுமண்வெட்டி. காடேறி - ஓர் பிசாசம். காடை - ஓர் புள். காடைக்கழுத்தன் - ஓர் நெல். காடைப்புடம் - மூவெருப்புடம். காடசம் - சோழங்கபாஷாணம். காட்சி - அறிவு, அற்புதம், ஓரளவை, தோற்றம், பார்வை, வேடிக்கை, பத்தவத்தையினொன்று, அஃது தலைமகளைத் தலைமகன் தனி யிடங்காண்டல். காட்சிகொடுத்தல் - தரிசனங் கொடுத் தல். காட்சிப்பொருள் - உருவப்பொருள், காணப்படுபொருள். காட்சியணி - ஓரலங்காரம், அஃது உபமானோப் மேயங்களின் காட்சியை ஆரோபித்தல். காட்டசத்தி - வீழி. காட்டணம் - பெருங்குமிழ். காட்டத்தி - பேயத்து. காட்டம், காஷ்டம் - விறகு, அடித் தட்டை. காட்டல் - காண்பித்தல். காட்டவரை - ஓரவரை. காட்டழல் - காட்டாக்கினி. காட்டா - காட்டுப்பசு. காட்டாக்கினி - காட்டுத்தீ. காட்டாத்தி - ஓராத்தி. காட்டாமணக்கு - ஓராமணக்கு. காட்டான் - காட்டுப்பசு, பிறன். காட்டிக்கழித்தல் - காட்டிமறைத்தல். காட்டிக்கொடுத்தல் - குற்றத்திலேற் படுத்தல், சுட்டிக்காட்டில். காட்டிஞ்சி - சாரணை. காட்டிலுமிளி - நாகரவண்டு. காட்டிலேபோதல் - வீணிலேபோதல். காட்டில் - உவமையுருபு (உம்) அவனைக்காட்டில். காட்டு - உதாரணம், காட்டென் னேவல், காண்பித்தல். காட்டுக்கடலை - ஓர் கடலை. காட்டுக்கதவி - ஓர் வாழை. காட்டுக்கத்தூரி - பெட்டகத்துத்தி. காட்டுக்கரணை - ஓர் செடி. காட்டுக்கல் - வெள்ளைக்கல். காட்டுக்காய்ச்சுரை - ஓர் சுரை. காட்டுக்காய்வள்ளி - ஓர் வள்ளிக் கொடி. காட்டுக்கானாவாழை - ஓர் வாழை. காட்டுக்கிட்டம் - மகாகிட்டம். காட்டுக்கிராம்பு - ஓர் கிராம்பு. காட்டுக்கிரியை - ஈமக்கிரியை. காட்டுக்கீரை - ஓர் கீரை. காட்டுக்குணம் - மிருகக்குணம். காட்டுக்குருந்து - காட்டெலு மிச்சை. காட்டுக்குளவஞ்சி - ஓர் கொடி. காட்டுக்கூந்தல் - ஓர் புல். காட்டுக்கொஞ்சி - ஓர் மரம். காட்டுக்கொட்டை - காட்டாமணக்கு. காட்டுக்கொளஞ்சி - கொளஞ்சி யிலார் பேதம். காட்டுக்கொள்ளு - ஓர் கொள்ளு. காட்டுக்கோரை - ஓர் கோரை. காட்டுக்கோழி - ஓர் கோழி. காட்டுச்சீரகம் - ஓர் பயிர். காட்டுச்சீரகவள்ளி - ஓர்வள்ளி. காட்டுதல் - அத்தாட்சி பண்ணுதல், காண்பித்தல், நினைப்பூட்டுதல், வெளிப்படுத்துதல். காட்டுத்தனம் - பேதைமக்குணம். காட்டுத்தகரை - ஓர் தகரை. காட்டுத்தாரா - ஓர் தாரா. காட்டுத்தாளி - ஓர் தாளி. காட்டுத்தனை - ஓர் தினை. காட்டுத்துத்தி - ஓர் துத்தி. காட்டுத்துவரை - ஓர் துவரை. காட்டுநாரத்தை - பெருங்குருந்து. காட்டுப்பயிர் - தன்னிலேயுண்டாகும் பயிர். காட்டுப்பன்றி - ஓர் பன்றி. காட்டுப்பாகல் - பழுபாகல். காட்டுப்புத்தி - திருந்தாதபுத்தி. காட்டுப்புளிச்சை - ஓர் சுரை, ஓர்மரம். காட்டுப்பூனை - ஓர் பூனை. காட்டுமந்தாரை - காட்டாத்தி. காட்டுமரி - ஓர் பூடு. காட்டுமல்லிகை - மல்லிகையிலோர் பேதம். காட்டுமா - ஓர் மா. காட்டுமிருகாண்டி, காட்டுமிறாண்டி - காட்டில்வாழ்வோன், பாங்கு பாவனையறியாதவன். காட்டுமுந்திரிகை - ஓர் கொடி. காட்டுமுருங்கை - மாவிலங்கை. காட்டுமூரி - நாகரவண்டு. காட்டெருமை - எருக்கு, கூகைநீறு, சதுரக்கள்ளி, ஓரெருமை. காட்டெலுமிச்சை - ஓரெலுமிச்சை. காட்டெள் - ஓரெள். காட்டை - எல்லை, காலதசப் பிர மாணத்தொன்று. அஃது இலவ மெட்டுக் கொண்டது, திசை, நுனி, விறகு. காட்டொலிவம் - ஓர் மரம். காணப்படுதல் - தோற்றப்படுதல், வெளிப்படுதல். காணம் - ஓரளவு, கொள், செக்கு, பொற்காசு, பொன். காணல் - குறித்தல், நினைத்தல், வணங்கல். காணாக்கடி - காணாதுவிஷந்தீண்டல். காணாக்காட்சி - அற்புதக்காட்சி, துர்க்காட்சி. காணாக்கிரகம் - காணாக்கோள். காணாத்தலம் - ஆண்பெண்குறி, மறைவிடம். காணாமாணிக்கங்காட்டல் - விடுப்புக் காட்டல். காணார் - பகைவர். காணி - உரிமை, ஓரெண் அஃது ஒன்றிலெண்பது கொண்டது, நிலம். காணிக்கை - தெட்சணை, வெகு மானம். காணித்தாயம் - நிலவுரித்து. காணுதல் - அறிதல், காண்டல், சந்தித்தல், செய்தல், நினைக்குதல், பெறுதல், வணங்கல். காண் - ஓரிடைச்சொல் (உம்) கூறினர் காண், காணென்னேவல். காண்டகம் - ஊர், காடு, காண்டா மிருகக்கொம்பு, கெண்டிகை, நிலவேம்பு, நோய். காண்டம் - அம்பு, ஆபரணச்செப்பு, ஆயுதம், ஊன்றுகோல், எல்லை, கமண்டலம், காடு, குதிரை, கூட்டம், கோல், சமயம், சீலை, தாள், திரைச்சீலை, நிலவேம்பு, நீர், நீர்க்காக்கை, நூன் முகவுரை யினொன்று, பாட்டி னொன்று, படைக்கலம், பூந்தாள், மலை, முடிவு, வாச்சியம். காண்டல் - காணுதல், தோற்று வித்தல், பெறுதல், வணங்கல். காண்டாமிருகம் - ஓர் மிருகம். காண்டவதகனன் - அருச்சுனன். காண்டாவனம் - ஓர் வனம். காண்டாவனம் - இந்திரன். காண்டிகை, காண்டிகையுரை - கருத்து பதப் பொருள் உதாரணமெனு மூன்றோடும் வருமுரை. காண்டிபம் - சாகரண்டபாஷாணம். காண்டியகாலம் - காங்கைகாலம். காண்டியம் - காங்கை. காண்டில் - இரசதபாஷாணம். காண்டீபம் - அருச்சுனன்வில், தனுவி ராசி. காண்டீபன் - அருச்சுனன். காண்டு - கூப்பீடு தூரம். காண்டுமதம் - வருத்தம். காண்டை - ஓர் செடி. காண்பித்தல் - காட்டல். காதகம் - கொலை, பிறரைப்பீடித்தல். காதகன் - கொலையாளி. காதடைத்தல் - இளைப்பு முதலிய வற்றாற் செவிப்புலன்கலங்கல், காது மந்தித்தல், செவிடுபடல். காதட்டி - ஆதொண்டை. காதணி - கன்னபூஷணம், குண்டலம். காதம் - கள், காவதம். அஃது நாலு கூப்பீடு கொண்ட தூரம், கொலை, நாற்சதுரத்துரவு. காதம்பம் - அன்னம், கானாங்கோழி. காதரம், காதரவு - அச்சம், இக்கட்டு, தீவினைத் தொடர்பு, விருப்பம். காதரன் - அச்சமுள்ளோன். காதலன் - கணவன், சினேகிதன், தோழன், மகன். காதலி - காதலியென்னேவல், தோழி, மகள், மனைவி. காதலித்தல் - ஆசைப்பெருக்கம், விரும்பல். காதலித்தோர் - இனத்தவர், சினேகிதர். காதலிப்பு - விருப்பம். காதல் - ஆசை, ஓர்பாடல், கொலை, மகன். காதவடி - கன்னமூலம். காதவம் - ஆலமரம், வான்கோழி. காதறுதல் - பகைகொள்ளல். காதறுப்பான் - ஓர் நோய். காதறை - காதறுந்தது, கெட்டது. காதறைச்சி - சண்டைக்காரி. காதன் - கொலையாளன். காதன்மை - உருக்கம். காதாங்கி - பாற்சோற்றி. காதி - மிரதபாஷாணம், விசுமா மித்திரன்றந்தை. காதிமைந்தன் - விசுவாமித்திரன். காதிலி - செவிடன். காதிவென்றோன் - அருகன். காது - ஊசி - நறுக்கு - மடக்குக்கத்தி முதலியவற்றின் துவாரப்பக்கம், காதென்னேவல், கொலை, செவி, திரிவாய்ப்பெட்டி. காதுகன் - கொலையாளி. காதுகுற்றுதல் - கன்னவேதனஞ் செய்தல். காதுகொடுத்தல் - உற்றுக்கேட்டல். காதுக்குறும்பி - காதழுக்கு. காதுதல் - கூறுசெய்தல், கொல்லல், தறித்தல். காதுப்பூ - கன்னப்பூ. காதுப்பூச்சி - செவிப்பாம்பு. காதுமடல் - காதினிதழ். காதுவெட்டல் - நறுக்கின்று வாரத் தருகு வெட்டல். காதெழுச்சி - ஓர் நோய். காதை - கதை, கொலை, சொல், சொல்லல். காதைகரப்பு - மிறைக்கவியினொன்று, அஃது ஒருகவிமுடிய வெழுதி அதினீற்றின்மொழிக்கு முதலா மெழுத்துத்துடங்கி யொன்றிடை யிட்டெழுத பிறிதோர் செய்யு ளாவது. காதோலை - தோடு. காத்தடி - காவுதடி. காத்தல் - அரசாளுதல், அளித்தல், முத்தொழிலினொன்று. அஃது காவல் செய்தல், வளர்க்குதல். காத்தவராயன் - ஓர் தேவதை. காத்தான் - காத்தவராயன். காத்தியாயனம் - உபநிடத முப்பத்தி ரண்டி னொன்று, தரும நூல் பதினெட்டினொன்று. காத்தியாயினி - துர்க்கை. காத்திரம் - உடல், உறுப்பு, கீரீ, கூத்து, கோபம், பருமம், யானையின் முன்கால். காத்திரவேயம் - பாம்பு. காத்திரன் - வலியோன். காத்திரி - கீரி, படைக்கலம். காத்திருக்குதல் - வரவு பார்த் திருக்குதல், வழி பார்த்திருக்குதல். காத்திரை - ஆயுதம். காந்தஅயசு - அயச்சிலை. காந்தக்கல் - ஊசிக்காந்தம், சந்திர காந்தம், சூரியகாந்தம், தீக்கல். காந்தசத்துரு - நவசாரம், வெடியுப்பு. காந்தபஸமம், காந்தபற்பம் - ஓர் மருந்து. காந்தபாஷாணம் - ஓர் பாஷாணம். காந்தமணி - காந்தக்கல். காந்தமலை - ஓர் மலை. காந்தம் - அழகு, ஊசிக்காந்தம், குண வலங்காரம். அஃது உலகொழுக் கிறப்பபுகழ்ந்து சொல்வது, பதினெண் புராணத்தொன்று, பிரகாசம். காந்தருவமணம், காந்தருவம் - கன்னியுந் தலைமகனுந்தங்களிற் கூடும் மணம். காந்தருவர் - கந்தருவர். காந்தருவவாதம் - கலைஞான மறுபத்தி னான்கி னொன்று. காந்தருவவேதம் - உபவேதத் தொன்று. காந்தல் - உட்டணித்தல், உமி, ஓலை முதலியவற்றின் காந்தல், சினக் குறிப்பு, பல்லினாற் காந்துதல், முதிரவேதல், வெம்மையினாலு றிஞ்சுதல். காந்தள் - கார்த்திகைப்பூ, சவுக்காரம். காந்தன் - அரசன், எப்பொருட்கு மிறைவன், கணவன், குறிஞ்சிப் புறம், அஃது காமிகள்மடன்மா வேறுதல். காந்தாரம் - இசை, இசைப்பாட்டு, ஓர்பண், காடு, குறிஞ்சி யாழ்த் திறம், தேசமன்பத்தாறி னொன்று. காந்தாரி - கொடியவள், சத்திசாரம், திரிதராட்டி தன் மனைவி, நாபி யிற்றோன்றிச்சுரமேழுக்கு மேழு நாடியாய்க்கண்டத் துறுநரம்பு, ஓரிராகம். காந்தாரிமைந்தன் - துரியோதனன். காந்தாளம் - எரிச்சல். காந்தி - அழகு, உட்டணம், ஒளி, காணம், காவிக்கல், சிலாசத்து, வைடூரியம், ஓரலங்காரம், அஃது தமிழிற் பலகூறுபாடு பெற்றுப் புகழ்ச்சி யினும் வார்த்தையினு முலகிறந்த நன் பொருட்பொலி வினும் வரப் பாடல், சூரியகாந்தி. காந்தியதிகமேனி - காவிக்கல். காந்தியோனி - சிலாமதம். காந்தயோன் - கருப்பூரச்சிலை. காந்துகம் - வெண்காந்தள். காந்துதல் - உட்டணித்தல், எரிதல், ஒளிசெய்தல், காருதல், வெம்மை யினாலுறிஞ்சுதல். காந்தை - பெண், மனைவி. காபாலம் - சிவனிருத்தம். காபாலன் - சீர்பந்தபாஷாணம். காபாலி - சிவன், திருகுதாளி, பன் னோருருத்திரரிலொருவன். காபாலிகம் - சைவசமயத்தினொன்று. காபி - ஓரிராகம். காபிலகாலயூபம் - சிற்பநூன் முப்பத்தி ரண்டினொன்று. காபினி - நவசாரம். காப்பரிசி - அட்சதை. காப்பாற்றுதல் - இரட்சித்தல், தற் காத்தல். காப்பியம் - பொருட்டொடர்நிலைச் செய்யுள். அஃது பெருங்காப்பிய வுறுப்புட்சிலகுறைந்து வருவது. காப்பியன் - சுக்கிரன். காப்பிரி - ஓர் சாதி. காப்பிரிசல்லாத்து - ஓர் பூடு. காப்பிலியன் - காப்பிரி. காப்பு - ஆடை, இரட்சாபந்தனம், ஓர்பிரபந்தம், கதவு, காவல், கை யணியிலொன்று, நூல்களிற் றெய்வ வணக்கச்செய்யுள், மதில், மூங்கில், விபூதி. காப்புச்சொல்லல் - காரியந் தொடங் கல், தேவவணக்கஞ் சொல்லல், படித்தநூல் நிறை வேற்றுதல், புராணாரம்பஞ் செய்தல். காப்புமாலை - ஓர் பிரபந்தம். அஃது தெய்வங்காத்தலாக மூன்று ஐந்து ஏழு செய்யுளாற்பாடுவது. காமகாண்டம் - காமன்வில். காமக்கவலை, காமக்காய்ச்சல் - காம நோய். காமக்கோட்டம் - ஓரூர். காமக்கோட்டத்தி - பார்வதி. காமக்கோட்டி - பார்வதி. காமணி - நவசாரம். காமதகனன் - சிவன். காமதேனு - தெய்வப்பசு. காமத்துப்பாலர் - தூர்த்தர். காமத்துப்பால் - அகப்பொருட்பால். காமநாசன் - சிவன். காமநீர் - இரதம். காமநூல் - மதனூல். காமநோய் - மதனநோய். காமபாலன் - பலதேவன். காமபோகி - குன்றி. காமப்பயித்தியம் - காமக்கவலை. காமப்பற்று - மனத்தீக்குணம் மூன்றி னொன்று. காமப்பூ - மதனகாமியப்பூ. காமமரம் - ஓர் மரம். காமம் - அன்பு, ஆசை, உட் பகை யாறினொன்று, ஊர், காமநோய், கிராமம், குடி, சடத் தீயினொன்று, சத்தவிசனத் தொன்று, தாமத குணத்தொன்று, முக்குற்றத் தொன்று, விகார மெட்டினொன்று, மதனம். காமரசி - நெருஞ்சில். காமரம் - அகில், அடுப்பு, அத்தநாள், ஆலமரம், இசை, இசைப்பொது, காத்தடி, சோலை, வண்டு. காமரி - புளிநிறளை. காமரீசம் - புல்லூரி. காமரூபி - பச்சோந்தி. காமர் - அலங்காரம், அழகு, ஆசை, ஒளி, பேரழகு. காமவல்லி - கற்பகத்திற்படர்கொடி. காமவிகாரம் - காமநோய். காமவெறி - காமப்பயித்தியம். காமற்காய்ந்தோன் - அருகன், சிவன். காமனாள் - இளவேனில். காமனை - சிறுகிழங்கு. காமன் - திப்பிலி, மன்மதன், வண்டு. காமன்றிருநாள் - மதன்விழாச்செய்யு நாள். காமாக்கினி - காமநோய். காமாட்சி - பார்ப்பதி. காமாட்டி - வேர்கல்வி. காமாட்டியர் - கூலிக்காரர், நாடோடி கள். காமாதுரம் - காமாசை. காமாதுரன் - காமி. காமாந்தகன் - சிவன். காமாபலகை - மரக்கலப்பலகையி னொன்று. காமாரி - சிவன். காமாலை - காமாளை. காமி - உவர்மண், காமதூர்த்தன், பொன்நிமிளை. காமிகம் - சிவாகமமிருபத் தெட்டி னொன்று, வாஞ்சா விரதம். காமித்தல் - விரும்பல். காமியக்கல் - கோமேதகம். காமியதானம் - ஒன்றைக்குறித்த தானம். காமியமலம் - மும்மலத்தொன்று. காமியம் - இச்சிக்கும்பொருள், ஒன்றைவேண்டிச் செய்யும் பூசை, கன்மமலம், வில். காமியன் - காமி. காமுகர் - தூத்தர், நகரப்பதிவாழ்நர். காமுருகி - ஓந்தி, கொடியபெண். காமுறல் - ஆசைப்படல். காமூச்சு - முக்கால்நாழிகை வழி. காம்பி - இறைகூடை, சலசூத்திரம். காம்பிலி - ஓர்தேயம். காம்பீரம், காம்பீரியம் - கெம்பீரம். காம்பு - இலைமுதலியவற்றின் காம்பு, கருவிகளின் காம்பு, பட்டுச்சீலை, பூசணி, பூந்தாள், மலர்க்கொம்பு, மலர்த்தாள், மூங்கில். காம்புக்கிண்ணம் - அகப்பை. காம்போசம் - ஓர்மரம், தேசமன் பத்தாறினொன்று, பதினெண் பாடையினொன்று. காம்போதி - ஓர்பண். காயகம் - ஓர்மருந்து, பாடுதல், மருட்டுவித்தை. காயகற்பம் - சரீரத்தைப்பலப் பிக்கும் மருந்து. காயகன் - பாட்டுவாளி. காயக்கம் - மருட்டுவித்தை. காயங்கட்டுதல் - இரணவைத்தியஞ் செய்தல். காயசித்தி - காயம்மருந்துகளினாற் பலத்தல், பொன்னாங்கண்ணி. காயசித்திக்கடியான் - காந்தம். காயசித்திசுண்ணம் - கருப்பூரசலா சத்து. காயசித்தியானோன் - சூதபாஷாணம். காயசித்தியுப்பு - அமுரியுப்பு. காயத்திரி - அயன்மனைவிகளிலொ ருத்தி, ஓர்மந்திரம், கருங்காலி, சரச்சுவதி. காயத்தையிருத்தி - பூவழலை. காயத்தையுருக்கி - அஸ்திபேதி. காயப்பெண் - கனவில்வருமோகினிப் பெண். காயம் - ஆகாயம், உடல், ஓர்குழம்பு, கடுகு, கார்ப்பு, கோபம், சுக்கு, தழும்பு, பெருங்காயம், மிளகு, வெண்காயம். காயல் - உப்பளம், கழி, கழிமுகம், சுரவியாதி. காயவியல் - அவியற்காய், காயக்கறி. காயவேகம் - எரிச்சல், ஓர்நோய், கடுங்கோபமடைதல், காயம் பட்டதினால் வரும்வேகம், பசி நோய். காயா - ஓர் மரம். காயாகாயம் - உடற்றழும்பு. காயாசுவாதம் - காசசுவாதம். காயாபுரி - சரீரம். காய் - கழலைக்கட்டி, காயென்னேவல், சூதுகாய், பழம், மர முதலிய வற்றின் காய். காய்க்கடுக்கன் - உருத்திராட்சக் கடுக்கன். காய்க்குலை - காயாயிருக்குங்குலை. காய்ச்சல் - எரிச்சல், கடிந்து கொள் ளல், காய்தல், தண்டித்தல், வெப்பு நோய், வெறுத்தல், வேக்காடு. காய்ச்சற்கட்டி - வெப்புக்கட்டி. காய்ச்சற்பாஷாணம் - ஓர் மருந்து. காய்ச்சிரக்கு, காய்ச்சுரை, காய்ச் சுறுக்கு - புளிச்சற்கீரை. காய்ச்சு - கண்டிப்பு, காய்ச் சென் னேவல், காய்வு. காய்ச்சுக்கட்டி - ஓர் சரக்கு. காய்ச்சுக்கல் - நிறமிட்டகல். காய்ச்சுக்குப்பி - ஒர் கண்ணாடிக் குப்பி. காய்ச்சுண்டி - காய்ச்சுக்கட்டி. காய்ச்சுதல் - உலர்த்துதல், கண்டித் தல், சமைத்தல், சாயமிடுதல். காய்ச்சுநீர் - வெந்நீர். காய்ச்சுப்பால் - வெந்தபால். காய்ச்சுப்பு - உப்புநீர்காய்ச்சியெடுக்கு முப்பு, சவட்டுப்பு, வளையலுப்பு. காய்ச்சுவச்சிரம் - ஓர் வித வச்சிரப் பசை. காய்தல் - உலர்தல், எரிச்சலடைதல், கோபம், சினக்குறிப்பு, சினம், பிரகாசித்தல், புண்ணாறுதல், மெலிதல், வெட்டல், வெறுத்தல். காய்த்தல் - சரீரங்கன்றியுரத்தல், மர முதலியகாய்த்தல். காய்த்தானியம் - கம்பளி கொண் டான். காய்ப்பழம் - முழுதும்நிறவாத பழம். காய்ப்பறங்கி - கோழிநோயினொன்று. காய்ப்பிரும்பு - அடிக்கவெடிக்கு மிரும்பு. காய்ப்பு - காய்த்தல், தழும்பு, பழு தான இரும்பு, வெறுப்பு. காய்மகாரம் - எரிச்சல், பொறாமை. காய்மடி - கன்மடி. காய்மடை - கனிவகைகளாலிடு மடை. காய்மண்டை - காய்ந்ததலை. காய்முருங்கை - ஓர் வகைமுருங்கை. காய்மை - பொறாமை. காய்மைகரித்தல் - பொறாமையடை தல். காய்ம்பனை - பெண்பனை. காய்வள்ளி - ஓர் கிழங்குக்கொடி. காய்வு - உலர்வு, எரிச்சல், கண்டிப்பு, கோபம், சூடு, பிரகாசம். காய்வெட்டி - காயைவெட்டித் தள்ளிக் கருப்பை நீர் சேர்க்குங் குலை. காய்வெட்டிக்கள் - முதுபாளைக்கள். காய்வேளை - ஓர் பூடு. காய்வோலை - காவோலை. காரகவகத்திணை - செய்பவன்கருவி நிலம், செயல், காலம், செய் பொருள், பிறவும்வரக்காட்டல். காரகக்கருவி, காரகவேது - கருமத் துணைக்காரணம், கருவிகருத்தா முதலிய காரணமாகக் கூறு மலங் காரம், வினைமுதற் காரணம். காரகம் - வினைகொண்டு முடிவது, வெப்பம். காரகன் - செய்வோன். காரக்கல் - பட்டவிடத்தைக்கருக்கு மோர்கல். காரசாரம் - அறுசுவைக்கூட்டு, உறைப்பு, பஞ்சலவணத் தொன்று, அஃது கறியுப்பு. காரணகத்தா - நிமித்தகத்தா. காரணகாட்சி - அற்புதம். காரணக்குரு - ஞானதேசிகன். காரணக்குறி - காரணப்பெயர் (உம்) சுரேசன். காரணக்குறிமரபு - தொன்றுதொட்டு வருங்காரணப்பெயர். காரணக்குறியானாக்கம் - காரணக் குறியாக்கியப்பெயர், (உம்) பொன்னன். காரணசத்தி - எவட்சாரம். காரணச்சிறப்புப்பெயர் - காரணத்தா னொன்றற்கேவரும் பெயர். காரணச்சொல் - கதை காரணத் தானாயசொல். காரணப்பொதுப் பெயர் - காரணத் தாற்பலவற்றிற்கும் பொதுவாய் வரும் பெயர். காரணப்பெயர் - யாதானுமொரு காரணம் பற்றிப் பொருள்களை யுணர்த்தி நிற்கும்பெயர். காரணமறிநிலை - ஓரலங்காரம், அஃதுகாரண முங்காரிய முந்தம் முண்மாறவுரைத்தல். காரணமாலையணி - பின்பின்னாக வருவன வற்றிற்கு முன் முண்னாக வருவனவற்றைக் காரணங்களாக வேனுங்காரியங்களாக வேனுஞ் சொல்லுதல். காரணம் - ஏது, கருத்தாமுதற்பல காரணம், சிவாகமமிருபத் தெட்டி னொன்று, சீவதேகம் மூன்றி னொன்று, பிரதானம். காரணவகத்திணை - ஒன்றன் காரணத்தை விளக்கிக் காட்டல், (உம்) கடவுளுரைத்தநூல். காரணவாகுபெயர் - காரணத்தின் பெயரைக் காரியத்திற்கு வழங்கல், (உம்) திருவாசகம். காரணவாராய்ச்சியணி - ஓரலங் காரம், அஃது குறைவில்லாத காரண மிருந்துங்காரியம் பிறவா மையைச் சொல்லுதல். காரணவிடுகுறி - ஓர்காற்காரணப் பேராயுமொருகாலிடுகுறிப்பேராயு மிருப்பது (உம்) முண்டகம். காரணவிலக்கணை - காரணத்தைக் காரியமாயுபசரித்தல். காரணவிலக்கு - ஓரலங்காம், அஃது ஏதுவைமறுத்தல். காரணவொழிப்பு - அபநுதியுரு பகத்தொன்று, அஃது இன்ன காரணத் தானிஃது இன்னதன்று வேறின்னதெனக் கூறுவது, (உம்) கங்குல்வாய் வெம்மை கால் வதினாலிது திங்களன்று செழுந் தழலாகும். காரணன் - அரசன், கடவுள், சிவன், நிமித்தகத்தா, மூர்த்தபாஷாணம். காரணாவத்தை - ஓரவத்தை. காரணி - உமை. காரணிக்கம் - சரித்திரம். காரண்டம் - காக்கை, நீர்க்காக்கை. காரண்டவம் - நீர்க்காக்கை. காரத்திரி - காரமிட்டதிரி. காரநீர் - காரமான ஓர் நீர். காரப்பசை - ஓர் பசை. காரம் - அச்சம், உறைப்புங்கடுமையு மானசேர்வை, எழுத்தின் சாரியை (உம்) அகாரம், காரியம், கார்த்தல், சோழங்கபாஷாணம், பக்கம் (உம்) இடங்காரம், புடைவை யழுக்குநீக்குங்காரம், புண்களுக் கிடுங்காரம், பொரிகாரம், பொன், மரவயிரம். காரர் - அச்சமுள்ளோர், செய்வோர். காரல் - ஓர் மீன், காருதல், காறல். காரவல்லி - பாகல். காரன் - காரியஞ்செய்வோன். காரா - எருமை. காராகாரம் - சிறைச்சாலை. காராக்கரணை - ஓர் செடி. காராடு - வெள்ளாடு. காராமணி - கொம்புப்பயறு. காராமயத்திரி தயமோசனம் - சத்தாங் கோபகாரத்தொன்று அஃது சிறை, நோய், பயமூன்றுந் தீர்த்தல். காராம்பசு - தெய்வப்பசு, மறுநிறங் கலவாத கறுத்தப்பசு. காராம்பி - இறைகூடை, சல்சூத்திரம். காராளர் - சூத்திரர், பூவைசியர். காரானை - முகில், யானை. காரான் - எருமை. காரி - இந்திரன், ஐயன், கடையெழு வள்ளலிலொருவன், கரிக்குருவி, கருமை, களாநிலம், கள்ளு, கிளி, சனி, நஞ்சு, வயிரவன், வெண்காரம், கண்டங்கத்திரி. காரிகம் - காவிக்கல், பாதை. காரிகை - அழகு, ஓர்யாப்பு நூல், கலித்துறை, பெண். காரிக்கூன் - ஓர் காளான். காரிதாய் - வடுகி. காரிப்பிள்ளை - கரிக்குருவி. காரிமை - கொடிவேலி. காரியகருத்தா - காரியகாரன். காரியகாரன் - காரியத்தலைவன், காரியம் பார்ப்போன். காரியக்குரு - பொருணிமித்தமுப தேசிப்போன். காரியக்கெட்டி - சமர்த்தன். காரியங்கட்டுதல் - கைகூடுதல். காரியசாதகம், காரியசித்தி - காரியம் வாய்க்குதல். காரியசாதனம் - காரியத்திற்கேற்ற வேது. காரியதுரந்தரன் - மிகவல்லோன். காரியத்துவம் - செயல். காரியஸ்தன் - காரியகாரன். காரியபாகம் - காரியபக்குவம். காரியப்படுதல் - சம்பவித்தல், தொழிற் படல், தோற்றப்படல். காரியப்பிரத்துவேஷம் - சோம்பு. காரியப்பொறுப்பு - கருமப்பொறுப்பு. காரியம் - கவ்வை, தொழில், எச்சம், மூலம், வழக்கு. காரியம்பார்த்தல் - கருமம் பார்த்தல். காரியவகத்திணை - அகத்திணை பன்னிரண்டிலொன்று, அஃது காரியங் காட்டுவது. காரியவாகுப்பெயர் - காரியத்தின் பெயரைக் காரணத்திற்கு வழங்கும் பெயர். காரியவான் - காரியக்கெட்டி. காரியவிலக்கணை - காரியத்தைக் காரணமாயுபசரித்தல். காரியவிலக்கு - ஓரலங்காரம், அஃது காரியத்தை மறுத்துக் கூறுவது. காரியவேது - காரணத்தையறிவிக் குங்காரியம். காரியாகாரியம் - பலகாரியம், பெரிய காரியம். காரியார்த்தசித்தி - காரியசித்தி. காரியேட்சணம் - மேல்விசாரணை. காரிரத்தம் - ஆடுதின்னாப்பாலை. காரிருள் - பேரிருள். காரிலவணம் - பிடரலவணம். காரீயம் - கரியவீயம். காரு - செய்வோன். காருகபத்தியம் - வேதாக்கினி மூன்றி னொன்று. காருகம் - அக்கினி தேவனைக் கடவுளாய்க் கொள்ளுஞ்சமயம், உழவு, நெசவுமுதலியதொழில். காருகர் - ஓவியர், நெய்வார். காருகவினை - சூத்திரரறு தொழிலி னொன்று. அஃது நூற்றல், ஆடை யாக்கல், சுமத்தல், ஏருழத்தல் முதலியன. காருகன் - செய்வோன். காருச்சிவல் - கடற்பாசி. காருடம் - கருடன். காருடவித்தை - விஷவித்தையி னொன்று. காருடன் - கருடன், விஷவித்தைக் காரன். காருணி - கிருபையுடையோன், வானம்பாடி. காருணிகம் - கிருபை. காருணிகன், காருணியன் - கிருபை யுடையோன். காருணியம், காருண்ணியம் - கிருபை. காருதல் - காந்துதல். காருப்பு - திலாலவணம், மரவுப்பு. காரூகம் - கருங்குரங்கு. காரூடதம் - உபநிடதமுப்பத்திரண்டி னொன்று. காரூடம் - அட்டாதச புராணத் தொன்று, கருடன், கலைஞான மறுபத்தினான் கினொன்று. காரூடவித்தை - கருடவித்தை. காரெலி - ஓரெலி. காரெள் - ஓரெள். காரை - ஓர் செடி, ஓர் மரம். காரைக்காலம்மை - அறுபத்து மூவரிற் சேர்ந்தவோர் தவப்பெண். காரோடர் - உறைகாரர். கார் - அச்சம், அழகு, ஆவணி புரட் டாதியின் பருவம், இருள், கருங் குரங்கு, கருமை, காரென் னேவல், கார்நெல், நீர், மேகம், வெள்ளாடு, எலி, ஏரிற்பூட்டிய விரும்பாணி. கார்காலம் - ஆறுபருவத்தொன்று, அது ஆவணிபுரட்டாதியின் பருவம். கார்காலவுரிமை - வாடைவீசலு மிந்திரகோபம் மயில் கேகய மகிழ் தலும், வெண்காந்தள் செங்காந்தள் கொன்றை கூதாளம் வேங்கை காக்கணம் முல்லை கடம்புகாயா குருந்திவைமலா தலும், அன்னங் கிளிகுயில் வருந்தலும், தாமரை முதனீர்மல ரேங்கலுமாகும். கார்கோடன் - கருடபச்சைக்கல். கார்கோளி - கடல், முத்தக்காசு. கார்கோள் - கடல், சனி. கார்க்காய் - சந்திரநாகம். கார்க்குறட்டை - நீலக்காக்கணம். கார்க்கொள் - ஓர் கொள். கார்க்கோடகன் - அட்டநாகத் தொன்று, துட்டன். கார்க்கோழி - கருங்கோழி. காரக்கோளி - கருங்கொள், கருஞ் சீரகம். கார்கோள் - சனி. கார்த்தபட்சம், கார்த்தபத்திரம் - அம்பு. கார்த்தபம் - கழுதை. கார்த்தம் -அம்பு, காமம். கார்த்தல் - காழ்த்தல். கார்த்தவீரியன் - அறுவகைச்சக்கிர வர்த்திகளிலொருவன். கார்த்தன் - துரிசு. கார்த்திகம் - கார்த்திகைமாதம். கார்த்திகேசன் - முருகன். கார்த்திகை - ஓர் நாள், ஓர் மாதம். கார்த்திகைக்கொடி - காந்தள். கார்நாற்பது - ஓர் செய்யுள். கார்நிறம் - மாங்கிஷச்சிலை. கார்நெல் - கார்காலத்தறுக்குந்நெல். கார்புகா - ஓரரிசி. கார்ப்படிகன் - யாத்திரைகாரன். கார்ப்பண்ணியம் - உலோபம், மனத் தளர்வு, வறுமை. கார்ப்பாசம் - காற்பாசம். கார்ப்பம், கார்ப்பிகம் - கருப்பப்பை. கார்ப்பான் - கையான்தகரை. கார்ப்பு - உறைப்பு, துவர்ப்பு. கார்ப்பொகரிசி - ஓர் சரக்கு. கார்மணி - கையாந்தகரை. கார்மலி - கடல். கார்முகம் - மேகம், வில், மூங்கில். கார்முகல் - வைப்புப்பாஷாண முப்பத்திரண்டினொன்று. கார்மேகசாரம் - காசிசாரம். கார்வண்ணர் - அசுரர். கார்வண்ணன் - விட்டுணு. கார்வலயம் - கடல். காலகதி - காலத்தினடை. காலகாலன் - சிவன். காலக்கிரமம் - காலாட்சம். காலக்கிரயம் - தற்காலவிலை. காலக்குறி - காலக்குறிப்பு. காலக்குறிப்பு - காலவேற்றுமையைக் காட்டுமடையாளம். காலக்கொடுமை - காலப்பொல்லாங்கு. காலசக்கரம் - ஆயுஸகாலம். காலசங்கதி - அவ்வகாலத்துப் புராணம். காலசங்கம் - வைகறைப்பொழுது. காலசந்தி - நித்தியகருமம், வைகறை. காலசம் - காற்று, பேராலவட்டம். காலசுகம் - வேளைச்சுகம். காலசூத்திரம் - ஓர்நரகம். காலஞ்செல்லுதல் - இறத்தல், காலங் கழிதல். காலஞ்சொல்லி - காகம், பல்லி. காலடி - கரடு, காற்சுவடு. காலட்சயம் - நாள்விடுதல். காலட்சேபம் - நாட்கழித்தல், நிருவாகம். காலணி - காலிடும்பணி. காலதர் - பலகணி. காலதாமதம் - தாமதம். காலதீமை - காலக்கொடுமை, கால சுககீனம். காலத்தாலணையும் பெயர் - பருவ முதலிய காலங்களாலணையும் பெயர், (உம்) வேனிலான். காலத்திரயம் - முக்காலம். காலநுட்பம் - கணத்தினுணுகிய காலம். காலநேரம் - காலம். காலநோக்காடு - கருமுதிர்காலத்தின் வயிற்றுநோக்காடு. காலபரிச்சேதம் - ஒருகாலத்துண்டு ஒருகாலத்தின்றென்பது. காலபரிபாகம் - காலத்தினாற் பக்குவ மடைதல். காலபேதம் - காலவித்தியாசம். காலபோகம் - பருவகாலம், பிரயோ சனகாலம். காலப்பகுபதம் - காலம்பற்றி வரும் பகுபதம், (உம்) திருவோணத் தான். காலப்பண், காலப்பார் - முன்னேரம். காலப்பெயர்ச்சி - காலம் வித்தியாசப் படுதல். காலப்பிறிதின்கிழமை - காலம்பற்றிய பிறிதின்கிழமை (உம்) மாரனது வேனில். காலமல்லாக்காலம் - கொடியகாலம். காலமழை - பருவமழை. காலமறிதல் - திரிகாலவத்தமான மறிதல். காலமிருத்து - நியமமரணம். காலமீரம் - பளிங்கு. காலம் - சமயம், தாளப்பிரமாணம் பத்தினொன்று, பொழுது, விடியல், வித்தியாதத்துவ மேழி னொன்று. காலம்பார்த்தல் - சமயம்பார்த்தல். காலம்புரளுதல் - காலம்வேற்றுமைப் படல். காலம்விடுதல் - நாள்விடுதல். காலயுத்தி - ஓர் வருடம். காலல் - ஒளிமுதலியவீசல், கொப் பளித்தல், சத்திபண்ணல். காலவம் - நெருப்பு. காலவயிரவர் - சங்காரவயிரவர். காலவருத்தமானம் - காலசங்கதி. காலவழு - காலத்தை முறைபிறழக் கூறுதல், (உம்) நேற்றுண்பேன். காலவாகுபெயர் - காலத்தின் பெயரைக் காலத்திலுண்டாம் பொருட்கு வழங்குவது, (உம்) கார்நெல். காலவிடைநிலை - காலத்தைக்கூட்டி வினைச்சொற்கிடைநிற்பது. காலவித்தியாசம் - காலவேற்றுமை. காலவுரிமை -பருவமும் பொழுதும். காலவேகம் - காலத்தின்கதி, மிகுகதி. காலன் - காணாக்கோளினொன்று, காந்தபாஷாணம், சனி, நமன், நீலபாஷாணம், நமன்மந்திரி. காலா - ஓர் மீன். காலாகாலம் - அந்தந்தக்காலம், ஏற்றகாலம், ஏற்றகாலமு மேலாத காலமும். காலாக்கினி - உபநிடத முப்பத்தி ரண்டினொன்று, ஊழித்தீ, ஒரு ருத்திரன். காலாக்கினியுருத்திரம் - உபநிடத முப்பத்திரண்டினொன்று. காலாங்கன் - மூர்த்தபாடாணம். காலாடி - சுறுக்கன். காலாடுதண்ணீர் - கணுக்காலளவு தண்ணீர். காலாட்சயம், காலாட்செயம் - காலட் செயம். காலாட்டம் - நடைச்சுறுக்கு, நட்பு. காலாணி - காலிலாணி, போதிகை. காலாந்தகன் - சிவன், நமன், மிகவல் லோன். காலாயுதம் - கோழி. காலாழ் - குழைசேறு. காலாழி - காலின்மோதிரம். காலாள் - கால்நடைகாரன், நால் வகைத் தானையினொன்று. காலாறுதல் - ஓய்தல். காலி - கழிவுநாள், கள், பசுக் கூட்டம். காலித்தல் - உதித்தல். காலியம் - விடியல். காலியாங்குட்டி - ஓர் பாம்பு. காலியாந்துவரை - ஓர் துவரை. காலிலி - அருணன், காற்று, பாம்பு, மீன். காலிறால் - ஓரிறால். காலுதல் - கக்குதல், பொழிதல், வடிதல், விம்பித்தல். காலூரம் - தவளை. காலேகம், காலேகவண்ணம் - கலவைச் சாந்து. காலேயம் - கத்தூரிமஞ்சள், பசுக் கூட்டம், மோர். காலை - அடைப்பு, ஓர் மீன், தொழு வம், பொழுது, விடியற்காலம். காலைவெள்ளி - விடிவெள்ளி. காலோசிதம் - உத்தமகாலம். காலோலம் - அண்டங்காகம். கால் - அளவு, இடம், இந்துப்பு, இரு நூற்றுநாற்பதிளை கொண்ட அகலம், ஏழனுருபு (உம்) ஊர்க் கானி வந்த பொதும்பர், ஓர் வினை யெச்சவிகுதி (உம்) கை தொழுதக் கால், காலன், காற்று, குறுந்தறி, கையூன்று கோல், தூண், தேருருள், நாலினொன்று, பஞ்சபூதியத் தொன்று, பாதம், பூந்தாள், பொழுது, மகன், மரக்கால், முளை, வழி, வாய்க்கால். கால்கட்டு - தடை, தளை. கால்சீத்தல் - காலைநிலத்திலே யுரஞ்சி நடத்தல், துடைத்தல். கால்செய்வட்டம் - ஆலவட்டம், விசிறி. கால்நோக்கு - கிரகநோக்கினொன்று, அஃது காற்பார்வை. கால்பாவுதல் - கால்நிலத்திலே பற்றுதல். கால்மட்டம் - காலாலொற்றியறிதல். கால்மாடு - காற்புறம். கால்வாங்குதல் - எழுத்துக்களின் காலிழுத்தல், சாதல், பின்னிடுதல், மழைவெளித்தல். கால்வாய் - வாய்க்கால். கால்வாலாயிருத்தல் - அந்தசந்த மாயிருத்தல், ஒழுங்காயிருத்தல். காவகா - சேங்கொட்டை. காவடி - கா, காவுதடி. காவடிக்காரர் - காவடியேடுப்பொர். காவட்டம்புல், காவட்டை - மாந்தப்புல். காவணம் - பந்தல். காவணவன் - புழுக்கூடு. காவதம் - காதம். காவந்து - எசமான். காயம் - காட்டளல். காவலர் - அரசர், கணவர், காவற் காரர். காவலன் - அரசன், நாயகன், மெய் காப்பாளன். காவலாளி - காப்போன். காவல் - அரண், காத்தல், சிறைச் சாலை, மதில், கவசம், வேலி. காவல்கட்டு - மிகுந்தவச்சறுக்கை. காவற்கடவுள் - திருமால். காவற்கட்டை - தீக்கட்டை. காவற்கப்பல் - பகைவரைத் தடுக்க நிற்குங் கப்பல். காவற்கலி - வாழை. காவற்காடு - நால்வகையரணி னொன்று. காவற்காரன் - காப்போன். காவற்கூடம், காவற்சாலை - காவல் வீடு, மறியல்வீடு. காவற்சால் - புறச்சால். காவற்செய்தல் - காவல்பண்ணுதல். காவற்புரி - களக்காவற்குச்சூழும் வைக்கோற்புரி. காவற்பெருமான் - விண்டு. காவன் - சிலந்திப்பூச்சி. காவா - காட்டுமல்லிகை. காவாய் - ஓர் புல். காவாலி - வஞ்சகன். காவாளை - காட்டுமல்லிகை, காய் வேளை. காவாள் - காக்காரர். காவி - கருங்குவளை, கள், காவிக்கல், காவிமண், செம்மண், பற்காவி, கருநொச்சி, மிதப்பு. காவிதி - மந்திரி. காவிதியர் - கணக்கர், மந்திரிகள். காவிபிடித்தல், காவியேறுதல் - காவி நிறமடைதல். காவிமாலை - கலவியைவிரும்பிய தலைவன் தலைவிக்கனுப்பு மாலை. காவியம் - கலைஞான மறுபத்தி னான்கி னொன்று, காப்பியம். காவியா - கடுக்கன், மரக்கலத்தைத் தரிக்கவிடுங்கல். காவிரி - காவேரி. காவிரிப்பூம்பட்டினம் - ஓரூர். காவிவத்திரம் - காஷாயப்புடைவை. காவிளை - காய்வேளை. காவுதடி - காத்தடி. காவுதல் - தோட்சுமையெடுத்தல். காவேரி - அயமணல், சத்தநதிகளி லொன்று. காவேளை - காவிளை. காவோலை - காய்ந்தவோலை. காழகம் - ஆடை, கடாரமென்னு மூர், கருமை, சோறு. காழி - ஓர் தேவதை, சீகாழி. காழியர் - அப்பவாணிகர், வண்ணார். காழியர்கோன் - சம்பந்தன். காழ் - எட்டுமணிக்கோவை, ஒளி, காழென்னேவல், பருக்கைக்கல், பளிங்கு, மணிவட்டம், மரவயிரம், வயிரம், விதை, இரும்பிலி. காழ்த்தல் - உறைத்தல், வயிரித்தல். காழ்ப்பு - காரம், மரவயிரம், வயிரம். காளகண்டம் - குயில். காளகண்டன் - சிவன். காளகந்தரி - உமை. காளகம் - எக்காளம், மருக்காரை. காளகூடம் - நஞ்சு. காளங்கன்னாதம் - வெண்கல்மலை. காளத்தி - ஓரூர், ஓர் மலை. காளபதம் - மாடப்புறா. காளமுகி - சத்தமேகத்தொன்று, அஃது கல்பொழிவது. காளமேகம் - ஓர் புலவன், கருமுகில். காளம் - எட்டிமரம், கருமை, கழு, சிறுசின்னம், சூலம், நஞ்சு, மேகம். காளவனம் - சுடுகாடு. காளவாயன் - பெருங்குரல்வாயன். காளவாய் - ஓர் விளையாட்டு, கழுதை, நீறுசுடுங்காளவாய், பெருங்குரல் வாய். காளவாய்க்கல் - செங்கல். காளன் - மாகாளன். காளாஞ்சி - களாசி. காளாத்தி - காளத்தி. காளாத்திரி - பாம்பின் நச்சுப்பல்லி னொன்று. காளாமுகம் - உட்சமையமாறி னொன்று, சைவம். காளாமுகர் - சைவர். காளான் - புற்றிற்பூ. காளி - அட்டாதசவுபபுராணத் தொன்று, சிங்கம், சூலம், நஞ்சு, பத்திரை, பாம்பின்நச்சுப் பல்லி னொன்று. காளிகம் - மேகம். காளிக்கம் - ஓர் விதநீலச்சாயம், கறுப்பு, பித்தளைமலை. காளிங்கமர்த்தனன் - விண்டு. காளிங்கன் - ஓர் பாம்பு. காளிதம் - கறுப்பு, கறை. காளிதாசன் - ஓர் புலவன். காளிந்தம் - ஏலம். காளிந்தி - கண்ணன்மனைவியி லொருத்தி, சகரன்றாய், தேக்கின் விசேடம், நீர்ப்பசு, யமுனை யாறு, வாகைமரம். காளிமம் - கறுப்பு. காளிமர்த்தனன் - சிவன். காளிமை - கறள், கறுப்பு. காளியமர்த்தனன் - விண்டு. காளினியம் - கத்தரி. காளை - ஆண்மகன், இளவெருது, இளையொன், கட்டிளமையோன், பதினாறுவயசுக் குட்பட்டவன், பாலைநிலத்தலைவன். காளையங்கம் - போர். காறல் - ஓர் சுவை, கார்ப்பானது, காறுதல். காறற்கொட்டி - ஓர் கொட்டி. காறாப்பித்தல் - காறுதல். காறாயல் - ஓர் தலம். காறு - அளவு, காறென்னேவல், கொழு. காறுதல் - காறாப்பித்தல், நெய்முதலிய காறுதல். காறுபாறு - கண்டிப்பு, காரிய விசாரிப்பு. காறை - ஓராபரணம், நிலச்சாந்து. காறையாடுதல் - சாந்திடுதல். காறையெலும்பு - பூணாரவென்பு. காற்கட்டு - புடைவைவிளிம்பு. காற்காசு - ஓர் சின்னக்காசு. காற்குளம் - பூசநாள். காற்கொட்டை - காலணை. காற்கோடகன் - கார்க்கோடகன். காற்சரி - ஓர் பணி. காற்சவரம் - முகச்சவுளம். காற்படம் - காலிற்படம். காற்பாசம் - பருத்தி, பருத்திப்பஞ்சு. காற்றடக்கி - துருத்தி, நீர்க்குமிழி. காற்றடி - காற்று வீசுதல். காற்றாடி - கறங்கு. காற்றிளவல் - இளங்காற்று. காற்றின்சகாயன் - தீ. காற்று - உயிர்ப்பு, சோதிநாள், வாயு. காற்றுக்கடுவல் - கடுங்காற்று. காற்றுநாள் - சோதிநாள். காற்றுமுந்துநாள் - விசாகம். காற்றுவாக்கு - காரியம்பண்ணாமல் விடுதல். காற்றொதுக்கு - காற்றுச்செல்லாப் புறம். காற்றோட்டி - ஓர் மரம். கானகக்கல் - கரும்புள்ளிக்கல். கானகக்கூபரம் - நாகப்பச்சை. கானகசீதம் - கருவண்டு. கானகச்சங்கம் - நாகரவண்டு. கானகச்சேவுகள் - எலிமுள். கானகதட்டான் - செவ்வட்டை. கானகதூமம் - கற்பாஷாணம். கானகத்தும்பி - கருவண்டு. கானகநாடன் - குறிஞ்சிநிலத் தலை வன், முல்லைநிலத் தலைவன். கானகப்பச்சை - மரகதப்பச்சை. கானகம் - காடு. கானகுப்பிசம் - பஞ்சகௌடத் தொன்று. கானக்குதிரை - மரை. கானக்குறத்திமுலைப்பால் - தேன். கானமவ்வல் - காட்டுமல்லிகை. கானம் - இசைப்பாட்டு, காடு, கீதம், சோலை, பாடுதல், வாசனை, வானம்பாடி. கானயூகம் - கருங்குரங்கு. கானல் - உப்பளம், ஒளி, கடற்கரைச் சோலை, கழி, காங்கை, காடு, சூரியன்கிரணம், பேய்த்தேர். கானவர் - குறிஞ்சிநிலமாக்கள், முல்லைநிலமாக்கள், வேடர். கானவன் - குரங்கு, வேடன். கானவிருக்கம் - பாதிரிமரம். கானற்குன்று - வக்கிராந்திபாஷாணம். கானனம் - காடு. கானா - சுக்கானிற்கைபிடி. கானாங்கெளிறு - ஓர் மீன். கானாங்கோழி - கோழியிலோர் பேதம். கானான்கோனான் - பலதும். கானியமேனிக்கல் - கரும்புள்ளிக்கல். கானீனன் - கன்னிபெற்றபிள்ளை. கான் - எழுத்தின்சாரியை (உம்) ஐகான், கப்பலினறை முதலியன, காடு, கான்யாறு, மணம், வீட்டறை. கான்மரம் - ஆலமரம். கான்மா - பன்றி. கான்முனை - பிள்ளை. கான்யாறு - முல்லைநிலத்தியாறு. கான்றல் - கக்கல். கி கிகிணி - காக்கணஞ்செடி,வலியான். கிக்கிரி - மீன்குத்திப்புள். கிங்கரர், கிங்கலியர், கிங்கல்லியர் - குற்றேவற்காரர். கிங்கிரர் - ஏவல்செய்வோர், ஓர் சாதி, தூதர். கிசம், கிசலம், கிசலயம், கிசலை, கிசாலம் - தளிர். கிசில் - ஓர் பிசின். கிசுகிசுப்பு, கிசுகிசெனல் - ஈரடுக் கொலிக்குறிப்பு, விரைவின் குறிப்பு. கிச்சடி - இறுகினகூள். கிச்சலாட்டம், கிச்சிலாட்டம் - தொந் தறை. கிச்சிலி - ஓர் நாரத்தை. கிச்சு - நெருப்பு. கிஞம் - அறிவு. கிஞ்சம், கிஞ்சல் - சிறுமை. கிஞ்சனன் - அறிவிலான், தரித்திரன். கிஞ்சன் - தரித்திரன். கிஞ்சி - முதலை, வேம்பு. கிஞ்சிக்கிஞம் - சிற்றறிவு. கிஞ்சிக்கிஞர் - சிற்றறிவர். கிஞ்சிக்கியத்துவம் - சிற்றறிவுடைமை. கிஞ்சிக்கினம் - சிற்றறிவு. கிஞ்சிக்கினன் - ஆத்துமா. கிஞ்சிஞ்ஞம் - சிற்றறிவு. கிஞ்சிதம், கிஞ்சித்து - அற்பம், சிறுமை, புளிமா. கிஞ்சித்துவம் - சிற்றறிவு. கிஞ்சில் - அற்பம், கீழ்மை, சிறுமை. கிஞ்சுகம் - கேகயப்புள், சிவப்பு, பலாசு, முண்முருக்கு, கிளி. கிஞ்சுமம், கிஞ்சுமாரம் - முதலை. கிஞ்ஞா - ஓர் செடி. கிடக்கை - கிடத்தல், நிலைபரம், பூமி, மக்கட்படுக்கை, மஞ்சம். கிடங்கு - அகழி, குழி, குளம், பொக் கிஷவீடு, மறியல்வீடு. கிடத்தல் - இருந்தபடியிருத்தல், கிடத்துதல், சயனித்தல். கிடத்துதல் - படுக்கச்செய்தல். கிடப்பு - கிடக்கை. கிடவாக்கிடை - பட்டினியா யிருப்பது, வயிற்றையொறுப்பது. கிடா, கிடாய் - கடா. கிடாசுதல் - கடாவுதல். கிடாரம் - கொப்பரை. கிடாரி - கடாரி. கிடாரை - ஓர் மரம். கிடாவுதல் - கடாவுதல். கிடி - பன்றி, மருட்பன்றி. கிடுகிடாய்மானம் - அதிர்ச்சி. கிடுகிடு - ஓர்பறை, கிடுகிடென் னேவல். கிடுகிடுத்தல் - அசைதல், அஞ்சல், நடுங்குதல். கிடுகிடுப்பு - அசைவு, அச்சம், நடுக்கம். கிடுகிடெனல் - அசைதல், அச்சக் குறிப்பு, ஈரடுக்கொலிக்குறிப்பு, நடுக்கம். கிடுகு - கேடகம், சட்டப்பலகை, தேரின்மரச்சுற்று, பன்னாங்கு. கிடுக்கட்டி - ஓர் பறை. கிடுக்குக்கிடுக்கெனல் - ஒலிக் குறிப்பு. கிடுபிடி, கிடுமுடி - ஓர் வாச்சியம். கிடை - உவமை, கிடக்குந்தன்மை, கிடைச்சி, கிடையென்னேவல், படுக்கை, பட்டி, வேதவொலி. கிடைச்சரக்கு - நெடுநாட்கிடந்த சரக்கு. கிடைச்சி - ஓர் செடி. கிடைச்சை - கிடைச்சி. கிடைதலை - ஆபத்துக்காலம், மரண காலம். கிடைத்தல் - எதிர்த்தல், கிட்டுதல், பெறுதல். கிடைபாய் - படுக்கைப்பாய். கிடைப்படுதல் - நோய்ப்படுதல். கிடைப்பாடு - வியாதி. கிடைமாடு - பசுக்கூட்டம். கிடையன் - பழங்கிடையன். கிடைவாய்த்தல் - சௌக்கியமாயி ருக்கக் கிடைத்தல். கிட்கிந்தை - ஓர் மலை. கிட்ட - முடுக. கிட்டங்கி - விலைச்சரக்குகளிருக்கும் வீடு. கிட்டச்சிலைக்கல் - கற்கிட்டம். கிட்டடி - உள்ளுறவு, கிட்டுமானம். கிட்டடிப்பாடு - முடுகினபாதை. கிட்டணிசு - அதிககிட்டுமானம். கிட்டத்தட்ட, கிட்டமுட்ட - ஏறக்குறைய, முன் பின்னாக. கிட்டம் - இருப்புக்கிட்டம் முதலியன, இறுக்கம், சமீபம், மலம். கிட்டமபிடித்தல் - நிலமிறுகிப்பிடித்தல். கிட்டலர், கிட்டார் - பகைவர். கிட்டல் - இறுக்குதல், கிடைத்தல், கிட்டுதல், எதிர்த்தல். கிட்டி - இடுக்குத்தடி, குறும்பொல், கைத்தாளம், சிறுசின்னி, தலை யீற்றுப்பசு, தேய்ந்தகலப்பை, நாழிகைவட்டில், நுகக்கிட்டி, பன்றி. கிட்டிகட்டுதல் - ஓராக்கினை. கிட்டிக்கயிறு - பூட்டுக்கயிறு. கிட்டிக்கலப்பை - சிறுகலப்பை. கிட்டிக்கோல் - கைக்கிட்டி. கிட்டிணம் - கறுப்பு, மான்றோல், திருமால். கிட்டிணி - ஓர் யாறு. கிட்டியடித்தல் - ஓர் விளையாட்டு. கிட்டிரம் - நெருஞ்சில். கிட்டினர் - உறவர், சேர்ந்தோர். கிட்டினன் - திப்பிலி. கிட்டுதல் - அடுத்தல், இறுக்குதல், எதிர்தல், எதிர்த்தல், கிடைத்தல், சமீபித்தல், நெருங்குதல். கிட்டுமானம் - சமீபம். கிணகர் -அடிமை. கிணறு - கூவல். கிணாங்கு - ஓர் பூடு. கிணாட்டு - ஓலைத்தளிர், செலுப்பு. கிணி - கைத்தாளம். கிணிதி - கிலுகிலுப்பை. கிணினெனல் - ஒலிக்குறிப்பு. கிணின்கிணினெனல் - ஈரடுக்கொலிக் குறிப்பு. கிணீரெனல் - ஒலிக்குறிப்பு. கிணீர்கிணீரெனல் - ஈரடுக்கொலிக் குறிப்பு. கிணீலெனல் - ஒலிக்குறிப்பு. கிணுகிணுத்தல், கிணுகினெல் - அனுங் கல், உபயவோசை, குணுகுதல். கிணேலெனல் - ஒலிக்குறிப்பு. கிணை - மருதப்பறை. கிண்கிணி - சதங்கை. கிண்கிண்ணெனல் - ஈரடுக்கொலிக் குறிப்பு. கிண்டல் - ஆராய்தல், தோண்டல். கிண்டன் - ஓர் புடைவை. கிண்டுதல் - அகழ்ந்தெடுத்தல், அரித் தல், களிசமைத்தல், காரியத்தை வெளிப்படுத்தல், கிளறுதல், தோண்டுதல். கிண்ணம் - சிறுவட்டில், நாழிகை வட்டில். கிண்ணாரம் - ஓர் வீணை. கிண்ணி - கிண்ணம், குரைமேற் குளம்பு, நண்டின் சிறுகால். கிண்ணிக்கருப்பூரம் - இரசகருப் பூரம். கிண்ணிடுதல், கிண்ணெனல் - ஒலிக் குறிப்பு. கிதம் - பூருவம். கிதி - பத்திலட்சங்கோடாகோடி. கித்தம் - பூருவம். கித்தான் - ஓர் நூல். கிந்திசம் - திப்பிலிமூலம். கிந்துகால் - குந்தினகால். கிந்துதல் - படங்குந்திமிதித்தல். கிமாரிடுதல் - சத்தப்படுத்தல். கிமித்துக்கினம் - புழு, புழுக்கரணம். கிம்புரி - தோழணி, பூண் முடியு றுப்பு, யானைக்கொம்பி ற்பூண். கிம்புருடர் - பதினெண்கணத்தொருவர். கிம்புரோடியம் - உபநிடதம் முப்பத்தி ரண்டினொன்று. கியமதம் - இளைப்பு. கியாதம், கியாதி - புகழ், மேன்மை, பிரசித்தம். கியாதி - பிருகுவின்மனைவி. கியால் - ஓர் வகையிசைப்பாட்டு. கியானம் - ஞானம். கிரகக்கழிப்பு - கிரகபலி. கிரகசாந்தி - கிரகதோஷநிவிர்த்தி. கிரகசாரம் - கிரகநடை. கிரகசெபம் - கிரகாராதனையி னொன்று. கிரகச்சுற்று - கிரகத்தின் சுற்றுதல். கிரகணதாரணம் - பற்றித்தரித்தல். கிரகணம் - கிரகித்தல், நினைத்தல். கிரகணி - கிரகணியென்னேவல், கிராணி. கிரகணித்தல் - கிரகணம்பற்றுதல், கிரகித்தல். கிரகதானம் - கிரகாராதனையி னொன்று. கிரகதீமை - கிரகதோஷம். கிரகத்தன், கிரகஸ்தன் - இல்லொழுக் கத்திருப்பவன், சங்கையுள்ளவன். கிரகஸ்தி - இல்லொழுக்கத்திருப் பவள். கிரகநிலை - கிரகந்நிற்குந்நிலை. கிரகநீசம் - கிரகங்கள் நீசம் பெறுதல். கிரகபகை - கிரகங்கள் பகை பெறுதல். கிரசுபதி - அக்கினி, சூரியன். கிரகபாடு - சூரியனுங்கிரகமு மோரி ராசியினிற்றல். கிரகபிரீதி - கிரகாராதனை. கிரகபீடை - கிரகநிலையினால் வரு மிடர். கிரகபுடம் - கிரகங்களின் தற்கால நிலையெண். கிரகப்பிரவேசம் - குடிபுகுதல். கிரகப்பிழை - கிரகதோஷம். கிரகமாலை - கிரகவொழுங்கு. கிரகம் - கோள், தாளப்பிரமாணம் பத்தினொன்று, வீடு, பற்றுதல். கிரகவட்டம் - கிரகசக்கரம், கிரகச் சுற்று. கிரகாராதனை - கிரகவழிபாடு. கிரகி - கிரகியென்னேவல், சமுசாரி. கிரகித்தல் - பற்றுதல். கிரகிப்பு - பற்றுகை, மட்டுக் கட்டுதல். கிரசேமிரம் - பச்சைக்கருப்பூரம். கிரஞ்சனம் - முருங்கை. கிரணமாலி - சூரியன். கிரணார்த்தம், கிரணியம் - ஒளியுள்ள பொருள். கிரதோடையம் - யாகதோத்திரம். கிரத்தம் - பட்சித்தல். கிரணம் - ஒளி, கதிர். கிரணன் - சூரியன். கிரந்தம் - ஆரியம், தொடர்களுள் ஒற்றொழித்துயிருமுயிர் மெய்யு மாகக்கொள்ளு முப்பத்திரண் டெழுத்தின் கூட்டம், சாத்திரம். கிரந்தனம் - அழுதல், ஒலி. கிரந்தி - கரப்பன், முடிச்சு. கிரந்திகம் - திப்பிலிமூலம். கிரந்தித்தொய்வு - ஓர்நோய். கிரந்திநாயகன், கிரந்திநாயன் - ஒர் பூடு. கிரந்திநயல் - ஓர் நோய். கிரந்திப்புண் - ஓர் சிலந்தி. கிரந்திமூலம் - திப்பிலிமூலம். கிரந்திவாயு - ஓர் வாயு. கிரந்திவியாதி - ஓர் நோய். கிரமக்காரன் - ஒழுங்காகநடப்போன். கிரமம் - ஒழுங்கு, சடங்கு, முறைமை. கிரமி - ஒழுங்காய்நடப்போன், வைதிக முறைப்படிநடப்போன். கிரமுகம் - கமுகு. கிரம் - விழுங்கல். கிரயம் - விலை. கிரவுஞ்சம் - அன்றில், ஓர்மலை, கோழிப் பறவையளவு தூரம், சத்த தீவினொன்று. கிரவுஞ்சன் - மேனைபுத்திரரிலொரு வன். கிராகதி - நிலவேம்பு. கிராகம் - ஆமை, பற்றுதல். கிராடம் - தேயமன்பத்தாறி னொன்று. கிராணம் - கிரகணம், சிறுவட்டில். கிராணி - ஓர் நோய். கிராணித்திரவியம் - அகிலம்பட்டை, அழிஞ்சில், இந்துப்பு, கருவேம்பு, கல்லுப்பு, கறியுப்பு, காவட்டம் புல், திரிசாரணை, திரிசாரம், நற்சீரகம், நாய்வேளை, பாவட் டை, புளியாரை, பெருங்காயம், பொடுதலை, மிளகு, முட்காய் வேளை, மோர், வசம்பு, வளை யலுப்பு, வெடியுப்பு. கிராதர் - குறவர், வேடர். கிராதி - கிறாதி. கிராந்தி - சுடர்ச்செலவு, கிரகவட் டத்தின் சாய்ப்பு. கிராந்தி மண்டலம் - சூரியனது பாதை. கிராந்துதல் - ஒளித்தல், பதுங்குதல். கிராமசாந்தி - கிராமமுழுவதுக்குஞ் செய்யுமோர்சாந்தி. கிராமணி - கிராமமுற்றோன், சான் றோன், நாவிதன். கிராமதேவதை - அவ்வக் கிராமங்கட் கதி தேவதை யாயவ்வக்கிராமத் தோர்வழி படுந்தெய்வம். கிராமப்பிரதெட்சணம் - கிராமத்தை வலம் வருதல். கிராமம் - குறிஞ்சி, நூறு குடியுள்ள வூர், மருதநிலத்தூர், நீர்வாழ் பறவை. கிராமனி - பள்ளப்பூமி. கிராமியம் - திசைச்சொல், நாட்டுச் சொல், கிராமத்திலுள்ளது. கிராமியன் - கிராமமுற்றோன். கிராம்பு - கராம்பு. கிராய் - வயிரநிலம். கிராவணம், கிராவம் - கல்மலை. கிராவாதி - இரும்பு. கிரி - பன்றி, மருட்பன்றி, மலை. கிரிகம்பலை - கிலிகம்பரை. கிரிகன்னி - வெள்ளைக்காக்கணம். கிரிகித்தல் - பற்றுதல். கிரிகித்துவம் - வாங்கல். கிரிகை - கிரியை. கிரிகோலம் - கிலிகோலம். கிரிசகம் - வருத்தம். கிரிசம் - இளைப்பு. கிரிசன் - கிரீசன். கிரிசரம் - மலையிற்பிறந்தயானை. கிரிசை - பார்வதி. கிரிச்சரம் - ஓர் விரதம், மலையிற் பிறந்த யானை. கிரிச்சிரீட்டம் - சாதிக்காய். கிரிட்டணம், கிரிட்டம் - உறைத்தல். கிரிதசாக்கிரி - ஓர் பண். கிரிபயம் - மரப்பொது. கிரிமல்லிகை - மலைமல்லிகை, வெட்பாலை. கிரிமா - கரிமா. கிரியன் - சேரன். கிரியாகலாபம் - கிரியானுட்டிப்புக் குரிய போதகம். கிரியாகாண்டம் - வேதத்திற் கிரியை களைப் போதிக்கும் பகுதி. கிரியாங்கம் - கிரியை. கிரியாசத்தி - பஞ்சசத்தியினொன்று. அஃது வினைத்துணையாக நின்று லகங்களை யாக்குவது. கிரியாசாதனம் - கிரியானுட்டிப்புக் குரியது, கிரியையனுட்டிப்பு. கிரியாசைவம் - ஓர் சைவம். கிரியாதிகாரன் - விநாயகன். கிரியாபதம் - வினைச்சொல். கிரியாபாதம் - கிரியை நிலை. கிரியாபூசை - கிரியையோடுங் கூடிய பூசை. கிரியாமார்க்கம் - கிரியைநிலை. கிரியாமாலை - பெயர்ச் சொல்லை யாவது விணைச் சொல்லையாவது திணை பாலிடங்காலங்கடோன் றச்சொல்லல். கிரியாவான் - கிரியைக்காரன். கிரியை - சைவசமயநிலை நான்கி னொன்று, தாளப்பிரமாணம் பத்தினொன்று, தொழில். கிரியைகேடு - அசுத்தம், செய்காரிய வீனம். கிரியைக்காரன் - கிரியை செய்வொன். கிரிவாணம் - நீலாஞ்சனக்கல். கிரீசன் - சிவன். கிரீச்சரம் - கிரிச்சரம். கிரீடசாம்பிராச்சியம் - அதிகாரசந் தோஷம். கிரீடதாரணம் - முடிசூட்டு. கிரீடதாரி - மகுடவத்தனன். கிரீடபங்கம் - மகுடபங்கம். கிரீடம் - முடி. கிரீடாதிபதி - உத்தாமணி, முடிதரித்த வன். கிரீடாதிபத்தியம் - அதிபதித்துவம், மகுடவத்தனத்தகமை. கிரீடாப்பிரமவாதி - வேதாந்திகளி லொருவன். கிரீடி - அருச்சுனன், கிரீடியென் னேவல். கிரீடித்தல் - புணர்தல், விளையாடுதல். கிரீடை - புணர்ச்சி, மகளிர் விளை யாட்டு, விளையாட்டு. கிரீட்டி - பிரண்டை. கிரீபம் - கழுத்து. கிருகம் - மிடறு. கிருகரன் - கவுதாரி, கிருதரன், சிவன். கிருகவாகு - பல்லி, மயில். கிருகனம் - கவுதாரி. கிருசம் - மெலிவு. கிருசாட்சம் - சிலம்பி. கிருசாணு - தீ, பவளக்கொடி. கிருசானுரதசன் - உருத்திரன். கிருச்சிரம் - சாந்தபனவிரதம், அஃது பஞ்சாமிர்தத்தோடாறு நாளுண்டு ஏழாநாளுபவசிப்பது, பாவம், பிரசாபத்தியமணம், பிராயச் சித்தம். கிருச்சிராதிகிருச்சிரம் - இருபத் தொருநாளளவும் சாந்தபனமனுட் டித்தல். கிருஷகன் - வேளாளன், பயிர்ச் செய்கைக்காரன். கிருஷம் - உழவு, கலப்பை, கொழு. கிருஷி - பயிர், பயிர்ச்செய்கை. கிருடி - அருச்சுனன், பயிர், பன்றி. கிருடியை - கூத்தினோர்விகற்பம். கிருட்டி - ஓரீற்றா, பன்றி, பிரண்டை, மருட்பன்றி. கிருட்டிணசருப்பம் - ஓர்பாம்பு. கிருட்டிணசிங்குவாதோஷம் - ஓர் நோய். கிருட்டிணபக்கம், கிருட்டிணபட்சம் - அபரபக்கம். கிருட்டிணபாணம், கிருஷ்ணபாணம் - எட்டிமரம். கிருட்டிணபேடம் - கடுரோகிணி. கிருட்டிணமிருகம் - கருமான். கிருட்டிணம், கிருஷணம் - இரும்பு, கறுப்பு, காகம், குயில், சந்திரன் பின்பக்கம், துருசு, மான், மிளகு. கிருட்டிணலோகம் - உலோகமணல். கிருட்டிணவல்லி - நன்னாரி. கிருட்டிணவாணம் - உலோகமணல். கிருட்டிணனோய்ந்தமிருகம் - கலங் கொம்பு. கிருட்டிணன் - அருச்சுனன், கண்ணன், வியாசன். கிருட்டிணாசனம், கிருட்டிணாஞ்சனம் - மான்றோல். கிருட்டிணாப்பிரகம் - ஒரப்பிரகம். கிருட்டிணி - காக்கணஞ்செடி. கிருட்டிணை - ஓர்யாறு, கடுகு, கரு வட்டை, துருபதி, முந்திரிகை, வால்மிளகு. கிருதகபடம் - வஞ்சம். கிருதகாலம் - நியமநாள். கிருதகிருத்தியம் - செய்ய வேண்டு வதையேசெய்தல். கிருதகுளபாளிதபோசனம் - திருத்தி போசனம், நெய்சருக்கரை முதலிய கூடிய இனியபோசனம். கிருதசங்கேதம் - இணக்கம். கிருதசன்னிதானம் - முன்னிலை. கிருதசாபத்திரிகை - கணவன் மறுவி வாகஞ்செய்தபின்னும் அவனோடு வாழும் மனைவி. கிருதசூடன் - உச்சிச்சிகை வைக்கப் பட்டவன். கிருதசோபம் - அலங்காரம், பிரகாசம். கிருதசௌசம் - சுத்தம் செய்தல். கிருததாசன் - வேலையாள். கிருததாரன் - விவாகஞ்செய்தோன். கிருதநாசனம் - நன்றியீனம். கிருதநிர்சேனன் - பாவநிவிர்த்தி செய்தோன். கிருதபலம் - செய்பலம். கிருதம் - செய்யப்பட்டது, நெய், முதல்யுகம், செய்கை, முன். கிருதரன் - முகத்திடைநின்று தும்ம லுஞ்சினமும் வெம்மையும் விளைக்கும்வாயு. கிருதலட்சணம் - நல்லிலக்கணம். கிருதவேசம் - அலங்கரித்தல். கிருதவேதனன் - கூலியாள். கிருதாகிருதம் - செய்துகுறைவேலை. கிருதாஞ்சலி - கைகூப்பல். கிருதாந்தசனகன் - சூரியன் கிருதாந்தம் - தருக்கித்துமுடித்த தீர்மானம், இலிகி. கிருதாந்தன் - நமன். கிருதார்த்தம் - பேறு. கிருதார்த்தர் - கருமமுடித்தோர், பேறு பெற்றோர், மகிழ்ச்சி பெற் றோர், விருத்தியடைந்தோர். கிருதி - உபாதி, செய்கை, நடுக்கம். கிருதிகரன் - இராவணன், வேதனை செய்வோன். கிருது - குசால், கோமளம், செருக்கு, நெய், யாகம். கிருதோபகாரம் - உதவிசெய்தல். கிருதோபநயனன் - பூணூற்றரித்தோன். கிருத்தி - ஒரு தேவதை, தோல், மான்றோல், அறிவு. கிருத்திகாசூதன், கிருத்திகாசூனு - முருகன். கிருத்திகாபவன் - சந்திரன், முருகன். கிருத்திகை - கார்த்திகை. கிருத்திமம் - கடமை, செய்கை, தோல், பூதகணம், பொய், மாயை, வஞ்சனை, வைதீகநடை. கிருத்தியகருத்தா - கருமாதிபன். கிருத்தியப்பிழை - செய்கைப்பிழை. கிருத்தியம் - கிரியைமுறை, தொழில் நித்தியகருமம், பிதிர்கடன். கிருத்தியை - ஓர் தேவதை. கிருத்திரமம், கிருத்திரிமம் - பொய், வஞ்சனை. கிருத்திரிமபுத்திரன் - வளர்ப்புட் பிள்ளை. கிருத்திவாசன் - சிவன். கிருத்துவம் - அகாத்தியம், செய்தல். கிருபணம் - உலோபம். கிருபணன் - உலோபன். கிருபன் - குருகுலத்தவரின் பஞ்சா சாரிகளிலொருவன். கிருபாகடாட்சம் - கிருபைப்பார்வை. கிருபாகான் - கிருபையுடையோன். கிருபாசனம் - அருள்செய்யும் படி யிருக்குமாசனம். கிருபாணகம், கிருபாணம் - வாள். கிருபாணிகை - கத்தி. கிருபாமூர்த்தி - கடவுள், கிருபாரூபி. கிருபாலு, கிருபாளு - கிருபையுடை யோன். கிருபி - துரோணன்மனைவி. கிருபிபுத்திரன் - அசுபத்தாமன். கிருபீடபாலம் - கடல். கிருபீடயோனி - தீ. கிருபை - அருள், இரக்கம். கிருபை கூர்தல் - கருணை கொண்டி ருத்தல். கிருபைக்கண் - அருட்பார்வை. கிருமி - புழு. கிருமிஓமம் - ஓர் மருந்து. கிருமிக்கிரந்தி - ஓர் நோய். கிருமிக்குன்றம் - வாலுளுவை. கிருமிசத்துரு - ஓர் மருந்து. கிருமிசுத்தி - மட்டி. கிருமிச்சைலம் - கறையான்புற்று. கிருமிநாசம் - ஓமம், குறாசாணி, பங்கம்பாலை, பலாசம்விரை, பேய்ப்பீர்க்கு. கிருமிநாசி - நிலவாகை. கிரேதம், கிரேதாயுகம் - முதல்யுகம். கிரேஸதன், கிரேத்தன் - கிரகஸதன், சங்கை மான், நாணயவான். கிரேந்தி - கச்சோலம். கிரேனிடுதல் - அஞ்சுதல். கிரேன்கிரேனெனல் - அச்சக்குறிப்பு. கிலம் - அழிவு, சிறுமை. கிலி - பயம். கிலிகம்பரை - அலுசிலும்பல், கலாதி. கிலிகோலம் - சீர்கேடு. கிலிமண்டல் - அஞ்சுதல். கிலீபம் - பேடி. கிலீபலிங்கம் - அலிக்குறி. கிலுகிலுத்தல், கிலுகிலுப்பு - ஒலிக் குறிப்பு. கிலுகிலுப்பை - ஒர் செடி. கிலுகிலெனல் - ஒலிக்குறிப்பு, குரங்கு பண்ணுமொலி. கிலுக்குதல் - கிலுங்கச் செய்தல். கிலுங்கி - கிலுகிலுப்பை. கிலுசிதம் - வறுமை. கிலுட்டம் - நிறைதல். கிலுங்குதல் - கிலுகிலுத்தல். கிலுத்தம் - மணிக்கட்டு. கிலுமொலுத்தல், கிலுமொலெனல் - ஒலிக்குறிப்பு. கிலேசம் - அச்சம், கவலை, துன்பம். கிலேசித்தல் - விசாரப்படல். கிலேசு - கீழ். கில்லம் - கழுத்து. கிழக்கதை - பழங்கதை, பூராயக் கதை, வீண்கதை. கிழக்கன், கிழக்கா, கிழக்கி, கிழங்கன், கிழங்கான் - ஓர்மீன். கிழக்கு - கீழ், கீழ்த்திசை. கிழக்குவெளித்தல் - கீழ்த்திசை வெளித்து விடிதல். கிழக்கோலம் - கிழவடிவு. கிழங்கு - கந்தம். கிழங்குக்கொடி - ஓர் வகைப்பயிர்க் கொடி. கிழடு - முதிர்வயதுள்ளது. கிழண்டுதல் - வயதாற்றளர்தல். கிழத்தனம் - கிழத்தன்மை. கிழத்தி - உரியவள், தலைவி, மருதத் தலைவி, மனைவி, நாமகள். கிழத்து - ஓர் மீன். கிழமை - உரிமை, கடமை, குணம், மாட்சிமை, மூப்பு, வாரம். கிழமைவட்டம் - ஏழுவாரம். கிழமைவிரதம் - வாரவிரதம். கிழம் - கிழத்தன்மை. கிழலை - சுற்றுப்புறம். கிழவர் - உரியோர், மூப்புடையோர். கிழவன் - உரியோன், தலைவன், பரணிநாள், மருதநிலத்தலைவன், மூப்புடையோன். கிழவி - உரியவள், தலைவி, தாய்க் கிழங்கு, முருங்கை, மூப்புடை யாள். கிழவு - கிழவுத்தன்மை. கிழாத்தி - ஓர் புள், ஒரு மீன். கிழாநெல்லி - ஓர் பூடு. கிழார் - இறைகூடை, சலசூத்திரம், தோட்டம். கிழான் - உரியோன், கைக்கிளை யிசையின் சுவையுவமை. கிழி - எழுதுபடம், கிழியென்னேவல், கீற்று, நிதிப்பொதி, பொட்டணி. கிழிகடை - அறவிளப்பமானது. கிழிக்கட்டு - நிதிப்பொதி, பொட் டணி. கிழிதல் -பிளத்தல், பீறுதல், வீணாதல். கிழித்தல் - கிழிக்குதல், கீறல். கிழிப்பு - பிளவு, வெடிப்பு. கிழிமுறி - கிழித்த துண்டுச்சீலை, செல்லாச்சீட்டு. கிழியல் - அறவிளப்பமானது, கிழிவு. கிழிவு - காரியக்கேடு, கீற்று. கிளக்கல் - சொல்லல். கிளத்தல் - எழுப்பல், சொல்லுதல். கிளத்து - சொல். கிளப்பம் - எழுப்பம், வளர்ச்சி. கிளப்பல் - உயர்த்தல், எழுப்பல், கிண்டுதல், மிதத்தல், முயற்றல். கிளப்பு - கிளப்பென்னேவல், கிளம்பச் செய்தல், சொல். கிளம்பல் - அதிகரித்தல், எழும்பல், வளர்தல். கிளர் - ஒளி, கிளரென்னேவல், பூந்தாது. கிளர்ச்சி - எழுச்சி. கிளருதல், கிளர்தல் - உயர்தல், எழுதல், கிண்டல், நிறைதல், பிரகாசித்தல், வளர்தல். கிளர்த்தல் - எழுப்பல், ஒளிசெய்தல். கிளர்வு - எழுச்சி, பெருக்கம், வளர்ச்சி. கிளவரி - தண்ணீர்விட்டான். கிளவி - சொல். கிளறுதல் - கிண்டுதல், கிளப்புதல், வெளியாக்கல். கிளா - களா. கிளாய் - கோது. கிளாலை - களாலை. கிளி - ஓர் மீன், கிள்ளை. கிளிகடிகருவி, கிளிகடிகோல் - ஓர் கருவி. கிளிச்சிறை - நால்வகைப்பொன்னி னொன்று. கிளிஞ்சில் - ஏரல். கிளித்தட்டு - ஓர் விளையாட்டு. கிளிப்பிள்ளை - கிளி. கிளிப்பூச்சி - வெட்டுக்கிளி. கிளிமீன் - ஓர் மீன். கிளிமூக்கெழுத்தாணி - ஓர்வகை யெழுத்தாணி. கிளியாறு - ஓர் நதி. கிளிவெட்டுப்பாக்கு - இடையிடை யேதோலுரித்தபாக்கு. கிளுகிளுத்தல் - ஒலிக்குறிப்பு. கிளுகிளெனல் - ஒலிக்குறிப்பு. கிளுவை - ஓர் மரம், ஓர் மீன், ஓர் பறவை. கிளை - உறவு, ஒளி, ஓர்பண், கிளை யென்னேவல், கூட்டம், கைக் கிளையென்னுமிசை, தளிர், மந்தை, மரக்கிளை, மூங்கில், வீணை யினோர்நரம்பு. கிளைக்கதை - ஒன்றிலிருந்து பல கதை தோன்றுங்கதை. கிளைஞர் - உறவோர், தோழர், மருத நிலமாக்கள். கிளைதல் - கழுவல், களைதல், தெரித்தல். கிளைத்தல் - கிண்டல், கிளை வைத் தல், நிறைதல், நெருங்கல், பெருகல். கிளைப்பெயர் - சுற்றப்பெயர். கிளைமை - உறவு, சினேகம். கிளைவழி - வமிசம். கிளைவிடுதல், கிளைவைத்தல் - கப்பு வைத்தல். கிள்ளல் - கிள்ளுதல். கிள்ளாக்கு, கிள்ளாக்கை - உண்டி யற்சீட்டு. கிள்ளாப்பிறாண்டு, கிள்ளுப்பிறாண்டு- ஓர் விளையாட்டு, கிள்ளியெடுத்தல். கிள்ளி - சோழன். கிள்ளிக்காட்டுதல் - அருட்டி அறி வித்தல். கிள்ளுக்கீரையாயெண்ணல் - அற்பமா யெண்ணல். கிள்ளுதல் - நுள்ளுதல். கிள்ளை - கருங்கிளி, கிளி, குதிரை, சாதிபத்திரி. கிறாக்கி - அருமை, ஒறுப்பு. கிறாணி - ஓர் வியாதி. கிறாப்பிறாண்டு - ஓர் விளையாட்டு. கிறாம்புதல் - மெல்லச்செதுக்கல். கிறாய் - பச்சைநிறக்கழிமண். கிறி - பொய், வழி. கிறிசு - குற்றுவாள். கிறிச்சான் - ஒலிகாட்டுமோர்கருவி. கிறீச்சனம் - ஓர் நோய். கிறீச்சுக்கிறீச்செனல் - ஒலிக்குறிப்பு. கிறிஸ்துவம் - கிறிஸ்துமார்க்கம். கிறு - நிகழ்காலவிடை நிலைச் சொல். கிறுக்குப்பிடித்தல் - பைத்தியமாதல். கிறுகிறுத்தல் - அஞ்சுதல், தலை சுழற்றுதல், விரைவுக்குறிப்பு. கிறுகிறுப்பு - அச்சக்குறிப்பு, சுழற்சி, தலைச்சுழற்சி. கிறுகிறெனல் - சுழலல், விரைவுக் குறிப்பு. கிறுக்கல், கிறுக்குதல் - எழுதல், கீறித்தள்ளல். கிறுங்குதல் - அசைதல். கிற்பு - அடுமைத்தனம், கட்டுப்பாடு. கிற்புறல், கிற்புறுதல் - எழுதுதல், எழும்புதல், கட்டுப்படுதல். கிற்றல் - கட்டுப்படுத்தல். கினி - பீடை. கினிபிடித்தல் - நோய்பிடித்தல். கின்று - நிகழ்காலவிடைநிலைச் சொல். கின்னம் - உபத்திரவம், கீழ்மை, துக்கம். கின்னரம் - ஆந்தை, கின்னரப்பட்சி, நீர்வாழ்பறவை, வீணை. கின்னரர் - பதினெண்கணத் தொருவர். கின்னரர்பிரான் - குபேரன். கின்னரி - ஆந்தை, வீணை. கின்னரேசன் - குபேரன். கீ கீ - ஓரெழுத்து, கிளிக்குரல். கீசகம் - குரங்கு, தலைச்சீரா, மூங்கில். கீசகன் - ஓரரசன். கீசம்பறை - ஒழுங்கீனம். கீசரன் - சரக்கொன்றை. கீசறை, கீசறைநாடகம் - கிரியை கேடு. கீசா - பொய். கீசகாரி - வீமன். கீச்சான் - ஓர் புள், ஓர் மீன், ஓர் விளையாட்டு. கீச்சி - சிறுமணிக்கோவை. கீச்சிடுதல் - கத்துதல். கீச்சுக்கிட்டம் - இருப்புக்கறள். கீச்சுக்கீச்சுத்தம்பலம் - ஓர் விளை யாட்டு. கீச்சுக்கீச்செனல் - ஒலிக்குறிப்பு. கீச்சுக்குரல் - குருவிக்குரல் போன்ற குரல். கீச்சுத்தாரா - ஓர் வகைத்தாரா. கீடமாரி - சிறுபுள்ளடி. கீடம் - கோற்புழு, வண்டு. கீணம் - குறைபாடு. கீணர் - அற்பர். கீண்டல் - கிண்டுதல், கிழித்தல், கிளைத்தல். கீதம் - இசைப்பாட்டு, வண்டு, மூங்கில், மூன்றாம்வேதம். கீதவாத்தியம் - இசைக்கருவி. கீதவேதம் - சாமவேதம். கீதி - கீதம், கீதம்பாடுவோன். கீதை - பாட்டு, பூருவசரித்திர வெடுத்துக்காட்டல். இஃது அவ தூதகீதை, இரிபுகீதை, உத்தர கீதை, சிவ கீதை, பகவற்கீதை, பிரம கீதையென்னப்படும். கீயாக்கணக்கு - வடமொழியின் கூட்டெழுத்துக்கள். கீரணம் - விழுங்கல். கீரம் - கருங்கிளி, கிளி, பால். கீரன் - நக்கீரன். கீரி - நகுலம், கள்ளி. கீரிப்பல் - சிறுகூர்ப்பல். கீரிப்பாம்பு - ஓர் பாம்பு. கீரிப்பூடு - ஓர் புடு. கீரிமரம் - ஓர் மரம். கீரியுள்ளல் - ஓருள்ளல். கீரை - இலைக்கறிப்பொது. கீரைக்குத்தண்ணீரிறைத்தல் - ஓர் விளையாட்டு. கீரைநார்ப்பட்டு - ஓர் பட்டுச்சீலை. கீரைப்பாம்பு, கீரைப்பூச்சி - வயிற்றி லுண்டாகிற பூச்சி. கீரோதகம் - கீரநீரம். கீரோமாரோ - ஒலிக்குறிப்பு. கீர் - ஒலிக்குறிப்பு, வார்த்தை. கீர்க்கீரெனல் - உபயவொலிக்குறிப்பு. கீர்த்தனம், கீர்த்தனை, கீர்த்தி - துதி, புகழ். கீர்த்தித்தல் - புகழ்தல். கீர்த்திப்பிரதாபம் - கீர்த்திப் பிரபலியம், மிகுகீர்த்தி. கிர்த்திமான் - புகழுடையோன். கீர்வாணம் - சமஸகிருதபாஷை யினோர்பகுதி. கீலக - ஓர் வருடம். கீலகம் - அணாப்பு, தந்திரம். கீலம் - ஆணி, கீல், கீற்று, சுவாலை, பொல்லம், பிசின். கீலாலம் - உதிரம், காடி, நீர். கீலுதல் - கிண்டுதல், பிளத்தல். கீல் - கீலென்னேவல், சந்து, பிணை யல், பொருத்து. கீழண்டை - கிழக்குப்புறம். கீழறுத்தல் - சத்துருவுக்கஞ்சிக் கீழ றையாற் போதல், சுரங்கமறுத் தல். கீழறை - கீழ்வீடு, முரஞ்சு. கீழாத்தல் - தளர்தல், தாழ்வடைதல். கீழாறு - கீழூற்று. கீழாறெடுத்தல் - தோன்றாமற் சிதை தல். கீழுடை - கௌபீனத்தோடிசைந்த ஓருடை. கீழுதடு - கீழதரம். கீழுலகம் - நரகம், பாதலம். கீழேபோதல் - வளர்ச்சி படிப்பு முதலியனவரவரக்குறைதல். கீழைத்திசை - கீழ்த்திசை. கீழைப்புறம் - கிழக்குப்புறம். கீழோங்கி - கரையாரிலோர்வகை. கீழோர் - கீழ்மக்கள், சண்டாளர். கீழ் - இடம், ஈனம், ஏழனுருபு, கடி வாளம், கிண்டென்னேவல், கிழக்கு, கீழ், பள்ளம், பூமி, மறதி, ஆதி. கீழ்காய்நெல்லி - ஓர் பூடு. கீழ்காற்று - கொண்டல். கீழ்கை - ஈனகுலத்தார் பகுதி, கிழக்குப் புறம், பதிவு. கீழ்க்கணக்கு - கீழ்வாயெண். கீழ்க்கண் - கீழ்ப்பார்வை. கீழ்க்கதி - கீழ்நோக்கினசெலவு, தாழ்ந்தபதவி, நரகம். கீழ்க்கதுவாயளபெடை - கடையய லொழிந் தமற்றெல்லாவற்றின் கண்ணு மளபெடை வரத் தொடுப்பது. கீழ்க்கதுவாயியைபு - முதலய லொழிந்த மற்றெல்லாச் சீர்க் கண்ணியை புவரத்தொடுப்பது. கீழ்க்கதுவாயெதுகை - கடையயற் சீரொழிந்தமற்றெல்லாச் சீர்க் கண்ணு மெதுகைவரத் தொடுப் பது. கீழக்கதுவாய்முரண் - கடையயற் சீரொழிந்தமற்றெல்லாச் சீர்க் கண்ணும் முரண்வரத் தொடுப்பது. கீழ்க்கதுவாய்மோனை - கடையயற் சீர்க்கணின்றி யொழிந்தசீர்க்கண் மோனைவரத்தொடுப்பது. கீழ்க்குரல் - கீழோசை. கீழ்சாதி - ஈனகுலம். கீழ்தரம் - இளந்ததரம். கீழ்தல் - அழித்தல், கிழித்தல், பிளத் தல். கீழ்த்திசை - கிழக்கு. கீழ்த்திசைப்பாலன் - இந்திரன். கீழ்நோக்கம், கீழ்நோக்கு - அதோ முகம், கீழ்ப்பார்வை. கீழ்நோக்கி - நேர்வாளம். கீழ்நோக்குதல் - கீழேபார்த்தல், கீழேபோதல். கீழ்பால் - கிழக்கு. கீழ்பாலவிதேகம் - நவகண்டத்தொன்று. கீழ்பூமி - பாதலம். கீழ்ப்படிதல் - அடங்கிநடத்தல். கீழ்ப்படுதல் - அடங்குதல். கீழ்ப்படுத்துதல் - அடக்குதல். கீழ்ப்பணிதல் - அடங்குதல். கீழ்ப்பயிர் - பெரும்பயிருக்குணிற் குஞ்சிறுபயிர். கீழ்ப்பாடு - கீழ்ப்பக்கம். கீழ்ப்பாறை - கீழறை. கீழ்ப்பிள்ளை - முதுமரங்களின் கீழ் நாட்டுந் தெங்கு முதலிய வற்றின் கன்று. கீழ்ப்புறம் - கீழ்ப்பக்கம். கீழப்போக்கிப்பேசுதல் - தூஷணம் பேசுதல். கீழ்மகன் - ஈனன், சனி. கீழ்மக்கள் - சண்டாளர். கீழ்மடி - அடிமடி. கீழ்மாரி - அடிவானத்திற் கருக் கொண்டு பெய்யும்மழை. கீழ்முகம் - கீழ்நோக்கும் முகம். கீழ்மேலாதல் - தலைகீழாதல், தலை தடுமாற்றமாதல். கீழ்மை - ஈனம். கீழ்வயிறு - அடிவயிறு. கீழ்வாடை - வாடைக்கொண்டல். கீழ்வாய் - சிற்றெண், தாடி. கீழ்வாரி - கீழ்மாரி. கீழ்விதேகம் - கீழ்பாலவிதேகம். கீழ்விழுதல் - காரியத்துக்காகத் தாழ்தல். கீழ்வீடு - கீழ்க்கட்டுமனை. கீளல் - கிழித்தல். கீளி - ஓர் மீன். கீளுதல் - கிண்டல், கிழித்தல். கீறல் - எழுதல், கிழித்தல், கீறுதல், பொன் முதலியவுரைத்தல். கீறு - அடையாளம், பிளவு. கீறுதல் - கிறுக்குதல், குறிப்புக் காட்டுதல், தேய்த்தல், பிளக்குதல். கீற்றடித்தல் - கயிறடித்தல். கீற்றன் - ஓர் புடைவை. கீற்று - கிடுகு, கீறல், பிளவு, அரதனக் குற்றம். கீனம் - குறைபாடு. கீனர் - அற்பர். கீனன் - குலமில்லான். கீன்றல் - கிழித்தல். கு கு - இன்மைக்கும் எதிர்மறைக்கும் வருமோருபசற்கம், ஓரெழுத்து, குற்றம், சிறுமை, தடை, தொனி, நான்காமுருபு, நிந்தை, பாவம், பூமி, இருதிணைப்பாலொருமைத் தன்மை வினைவிகுதி, (உம்) உண்கு, சாரியை, (உம்) வருகுதி, பண்புப் பெயர்விகுதி, (உம்) நன்கு, பிற வினைவிகுதி, (உம்) போக்கு. குகம் - அங்கீகரித்தல், அணிதல், கதியுள்ளகுதிரை, குருத்துவம், நுட்பம், மலைக்குகை, மறைவு. குகரம் - மலைக்குகை, ஓரெழுத்து. குகன் - குமரன், குரு. குகனன் - எலி, பாம்பு. குகூகண்டம் - குயில். குகூகம் - குயில். குகூபாலன் - ஆதிகூர்மன். குகூமுகம் - குயில். குகலிதம் - ஒலி, குயில், குரல். குகு - அமாவாசை, குய்யம் பற்றி யிருக்குந் நரம்பு. குகுதன் - தசநாடியினொன்று. குகுரம் - ஓர் தேசம். குகுரன் - நாய். குகுலா - கடுகுரோகிணி, தேனீ. குகை - பஞ்சலோகங்களையுருக்கும் பாத்திரம், மலைமுழை, முனிவர் வாசம். குகைக்காமன் - கன்னார். குகைச்சி - புற்றாஞ்சோறு. குகைப்புடம் - ஓர் வகைப்புடம். குகைமேனாதத்தி - சொன்னபேதி. குக்கல் - இருமல். குக்கன் - நாய். குக்கி - வயிறு. குக்கிலம் - அதிவிடயம். குக்கில் - குங்குலியம், செம்போத்து. குக்குடசருப்பம் - பறைவை நாகம். குக்குடச்சூட்டு, குக்குடப்புடம் - கோழிப்புடம். குக்குடம் - கோழி. குக்கடாதிவடகம் - ஓர் மருந்து. குக்குதல் - இருமுதல். குக்குரம் - கோடகசாலை. குக்குரன் - நாய். குக்குலி - செம்போத்து. குக்குலிறத்தல் - செம்போத்துத் துவுதல். குக்குலு - குங்குலியம். குக்குறுப்பான், குக்குறுவான் - ஓர் குருவி. குங்கிலிகம் - குங்கிலியம், வாலு ளுவை. குங்கிலியம் - குங்குலியம். குங்குதல் - குறைதல். குங்குமக்காவி - செங்காவி. குங்குமச்சம்பா - ஓர் நெல். குங்குமபாஷாணம் - அஞ்சற்குளச்சி. குங்குமப்பூ - ஓர் சரக்கு. குங்குமம் - ஓர் மரம், செஞ்சாந்து. குங்குமவலரி - செவ்வலரி. குங்குமவாணிச்சி - தாளகம். குங்குமவர்னக்கல் - மஞ்சட்கல். குங்குலியக்கலையர் - அறுபத்து மூவரிலொருவர். குங்குலியம் - குக்குலு. குங்குலு - குங்குலியம். குசக்கலம் - ஓடு. குசத்தி - ஓடு, குசப்பெண், பூநீறு, பூவழலை. குசந்தனம் - செஞ்சந்தனம். குசமசக்கு - பொய், வீண்மயக்கு. குசமணை - தண்டசக்கிரம். குசம் - தருப்பைப்புல் நீர், மரப்பொது, முலை, வெறும்புறங் கூறல். குசலக்காரன் - தந்திரக்காரன், மந்திரவித்தைக்காரன். குசலப்புத்தி - தந்திரப்புத்தி. குசலம் - தந்திரம், மந்திரவித்தை, மிக்ககல்வி. குசலர் - அறிஞர், மிகவல்லோர். குசலவர் - இராமன் மக்கள். குசவர் - குயவர். குசளை - தடை. குசன் - இராமன்மக்களிலொருவன், செவ்வாய். குசாக்கிரபுத்தி - அதிக நுண்ணிய புத்தி. குசாக்கிரம் - தருட்பைநுனி. குசாங்குலியம் - பௌத்திரம். குசாட்சம் - குரங்கு. குசால் - சமாளம், வேடிக்கை. குசிருதம் - பொல்லாங்கு. குசினி - சிறியது, சிறுபயிர். குசீலன் - துட்டன். குசு - அதோவாயு. குசுகுசுத்தல் - இரகசியம் பேசுதல். குசுகுசுப்பு - இரகசியம். குசுகுசெனல் - இரகசியவொலிக் குறிப்பு. குசுமம் - பூ, காயா. குசுமாகரம் - பூந்தோட்டம், வேனிற் காலம். குசுமாசவம் - பொல்லாங்கு. குசும்பம் - ஓர் பூ, ஓர் மரம். குசும்பா - ஓர் புடைவை, செந்துருக் கம்பூ, வெண்மைகலந்தசிவப்பு. குசும்பை மலர்மணி - கோவரங் கப்பது மராகம். குசுலம் - குதிரை. குசேசயகரன் - சூரியன். குசேசயம் - தாமரை. குசை - கடிவாளம், குதிரை கட்டுங் கயிறு, குதிரைமயிர், தருப்பை. குசைத்தீவு - சத்ததீவினொன்று. குசையன் - வீரவேகி. குசோதகம் - தருப்பைநீர். குசோத்தியம் - தந்தரம். குச்சத்தின்பாதி - சிறுபுள்ளடி. குச்சம் - ஓர் வகையலங்காரத்தூக்கு, குன்றி, கொத்து, நாணற்புல், பற் படகம், வெறும்புறங்கூறல். குச்சரம் - ஓர் தேயம். குச்சரர் - குச்சவியர். குச்சரி - ஓர் பண். குச்சரியர், குச்சலியர் - குச்சரர். குச்சி - கூர்ச்சு, மயிர்ச்சிகைப்பூடு. குச்சிதம் - குற்சிதம். குச்சித்தல் - குற்சித்தல். குச்சிலியர் - குச்சரர். குச்சில் - குடில். குச்சு - அடைப்பு, குடில், குற்றி, சிறுகம்பு, சிற்றில், பாவாற்றி, மயிர்வேர்முதலியமுடிச்சி, கூர், நுதி. குச்சுக்காரி - விபசாரி. குச்சுச்சார்த்துதல் - விக்கிரகங்களின ழுக்கெடுத்தல். குச்சுப்புல் - அழுக்கெடுக்கக்கட்டிய புல். குச்சுவாங்குதல் - இரத்தினங்களை யொப்பஞ்செய்தல். குச்சை - கொய்யகம். குஞ்சம் - ஈயோட்டி, குச்சு, குச்சுப் புல், குறள், குன்றிக்கொடி, கூன், கொத்து, கோட் சொல்லல், சீதரங்க பாஷாணம், நூற்றிரு பதிழை தொடுத்திருக்கப் பட்டது, புளி நறளை, பூங்கொத்து, வீசுங் குஞ்சம், தந்தம், மருள். குஞ்சரம் - கருங்குவளை, யானை, மருள். குஞ்சராசனம் - அரசமரம். குஞ்சனம் - வளைவு. குஞ்சன் - கட்டையன். குஞ்சாயி - குஞ்சியாயி. குஞ்சி - ஆண்மயிர், குஞ்சியென் னேவல், மயிர்ப்பொது, குன்றிக் கொடி, பறவைக் குஞ்சு. குஞ்சிக்கடகம், குஞ்சுக்கடகம் - சிறு கடகம். குஞ்சிச்சடை - சிறுசடை. குஞ்சிதநிருத்தம் - ஒருகாறூக்கி யாடல். குஞ்சிதம் - ஓர்காறூக்கிநிற்றல், படங்குந்தி நிற்றல், வளைவு. குஞ்சிதாதனம் - நாற் பெருவிரலை யூன்றி நிற்பது. குஞ்சித்தல் - படங்குந்திநிற்றல். குஞ்சிப்பெட்டி - சிறுகடகம். குஞ்சியப்பன் - சிறியபிதா. குஞ்சியாயி - சிறியதாய். குஞ்சிரிப்பு - குறுநகை. குஞ்சு - எலிஅணில் முதலியவற்றின் பிள்ளை, பறவைக்குஞ்சு, ஆண்குறி. குஞ்சுபொரித்தல் - குஞ்சுபிறப் பித்தல். குஞ்சுரம் - குன்றி. குஞ்சுறை - பறவைக்கூடு. குடகம் - ஓர் மலை, தேசமன்பத்தாறி னொன்று, மேற்கு. குடகரம் - உத்தாமணி. குடகன் - சேரன். குடகு - ஓர் தேசம். குடக்கம் - வளைவு. குடக்கி - வளைவானது. குடக்கியன் - வளைவானவன். குடக்கு - மேற்கு. குடக்குழி - நீர்க்குண்டு. குடக்கூலி - வாடகை. குடக்கோ, குடக்கோன் - சேரன். குடங்கட்டுதல் - குடம் போற்றிரட்டி விடுதல். குடங்கரை - தண்ணீர்க்குடம் வைக்கு மிடம். குடங்கர் - குடம், குடிசை, கும்ப விராசி. குடங்கல், குடங்குதல் - வளைவு. குடங்கை - உள்ளங்கை. குடசப்பாலை - ஓர் மரம். குடசம் - மலைமல்லிகை, வெட் பாலை. குடச்செவி - கும்பகன்னம். குடஞ்சுட்டு - பசுப்பொது. குடதிசை - மேற்கு. குடத்தி - ஓர் மிருகம், முல்லைநிலப் பெண். குடத்தியர் - இடைச்சியர். குடநாடு - ஓர் நகர். குடநாதன் - சேரன். குடந்தம் - குடம், கும்பகோணம், திரட்சி, நால்விரன்முடக்கிப் பெருவிரனிறுத்தி நெஞ்சிடை வைத்து நிற்றல். குடந்தை - கும்பகோணம். குடப்பம் - இருப்பை. குடப்பாணா - ஓர் குடம். குடமண் - வெண்மணல். குடமல்லிகை - ஓர் மல்லிகை. குடமாடல் - மாயோனாடல். குடமுழா - ஓர் முழவு. குடமூக்கு - கும்பகோணம். குடமூதுதல் - குடத்தினுள்ளூதி ஒலி பிறப்பித்தல். குடம் - ஊர்ப்பொது, கும்பம், கும்ப விராசி, கைகொட்டிக் குவித்தல், கொடுந்தமிழ்நாட்டி னொன்று, சருக்கரை, திரட்சி, பசு, பூசம், மருதநிலத்தூர், மாயோனாடல், பட்டினம். குடம்பை - உடம்பு, பறைவைக்கூடு, முட்டை, நீர்நிலை. குடம்வைத்தல் - ஓர் விளையாட்டு. குடரி - குடாரி. குடர் - குடல். குடலேறுதல் - குடல்பிசகிமேலிடுதல். குடலேற்றம் - குடலேறுதல். குடலை - தொக்கட்டி, பூக்கூடை முதலியன, பொத்தி. குடலைப்பூச்சி - ஓர் பூச்சி. குடல் - குடர். குடல்திருகுதல் - குடர்ப்பிசகுதல். குடல்வலி - ஓர் நோய். குடல்வாதம் - ஓர் நோய். குடவப்பருப்பதம் - ஓர் மலை. குடவர் - இடையர். குடவளப்பம் - இருப்பை. குடவறை - குகை, சிற்றறை. குடவன் - ஒருகொட்டையுள்ளது, கோணலானவுருவுள்ளது. குடவிளக்கு - திருமணத்தீபம். குடவு - குடவென்னேவல், குமர னாடல், வளைவு. குடவுண்ணி - ஓரூண்ணி. குடவுதல் - வளைதல். குடவுளுந்தன் - ஓர் புலவன். குடவெழுத்தாணி - குடங்கட்டிய வெழுத்தாணி. குடற்கொழுப்பு - நெய்ப்பு. குடற்பற்றாப்பிஞ்சு - இளம்பிஞ்சு. குடற்பிடுங்கி - துருசி. குடற்பிரிவு - குடற்பிசகு. குடற்புரை - குடற்றுவாரம். குடற்பை - குடற்போர்வை. குடற்போர்வைத்தோற்றம் - நால் வகைத்தோற்றத்தினொன்று. அஃது தோற்காதுள்ளன. குடா - மூலை. குடாக்கடல் - மூலைவிழுந்தகடல். குடாசகம் - கோள், வஞ்சகம். குடாசகன் - கோட்காரன், வஞ்சகன். குடாசுதல் - தந்தரம். குடாது - மேற்கு. குடாபாகம் - சங்கீதத்தினோர் சுவை, செய்யுட்சுவையினொன்று. குடாரம் - கோடாலி. குடாரி - யானைத்தோட்டி, திப்பிலி. குடாரு - தயிர்கடைதாழி. குடார்த்தகோளம் - பூமியின் மேற்குப் பாதியுண்டை. குடாவடி - கரடி. குடி - ஊர்ப்பொது, குடியென்னேவல், குலம், கோத்திரம், சமு சாரம், நெற்றிப்புருவம், பட்டினம், மருத நிலத்தூர். குடிகாரன் - சுராபானி. குடிகெடுத்தல் - குடிகளைநட்டப் படுத்தல். குடிகேடன் - துட்டன். குடிகேடி - துட்டை. குடிகேடு - குடியழிவு. குடிகை - ஏலரிசி. குடிகொள்ளுதல் - வாசமாயிருத்தல். குடிக்காடு - ஊர்ப்பொது, மருத நிலத்தூர். குடிசனம் - அரசாட்சிக்குள்ளடங் கியசனம். குடிசெயல்வகை - தன்குடும்பத்தை உயர்த்தும்வகை. குடிசை - குடில். குடிஞை - ஆறு, கூகை, சிற்றில், பறவைப்பொது, மருதநிலத்தூர், வீடு. குடித்தல் - பருகுதல். குடித்தனகாரன் - இல்லாச்சிரமி. குடித்தனம் - இல்வாழ்க்கை. குடிநாசம் - குடியழிவு. குடிநிலம் - குடியிருக்கத்தக்கநிலம். குடிநீர் - ஓர்வகைக்கஷாயம். குடிபடை - குடிசனம். குடிபுகுதல் - புதுவீட்டிற்சேர்தல். குடிபோதல் - குடிபுகுதல், குடியெழும் பல். குடிப்பழுது - வசை. குடிப்பிறப்பு - ஒழுக்கமுடைய குடியிற் பிறத்தல். குடிப்பு - பானம். குடிப்பெண் - குலஸ்திரீ. குடிப்பெயர் - குலத்தால் வந்த பெயர். குடிமகன் - முக்குலத்தோர்க்குமேவல் செய்வோன். குடிமக்கள் - பணிசெய்யும் பதி னெண் வகைச்சாதி. குடிமதிப்பு - குடிக்கணக்கு, குடியிறை. குடிமார்க்கம் - முறைப்படிவிவாகம் முடித்திருத்தல். குடிமுறை - குடித்தனம். குடிமை - குடிமக்கட்டொழில், குடிமக்கள், குடியினியல்பு. குடியரசு - குடியாட்சி. குடியர் - கள்முதலியகுடிப்போர். குடியழிதல் - குடிகெடுதல். குடியழித்தல் - குடிகெடுத்தல். குடியழிவு - குடிநாசம். குடியன் - குடிகாரன். குடியாட்சி - தனகுடும்பத்தை நடத்தல். குடியாட்டம் - குடிவாழ்க்கை. குடியானவர் - குடிசனம். குடியியல்பு - குடிமுறை. குடியிருத்தல் - குடியாயிருத்தல், குடி வைத்தல். குடியிருப்பு - குடிநிலம், குறிச்சி. குடியிறங்குதல் - மறுதேசத்திற் சனங்கள் வந்துகுடியேறுதல். குடியிறை - குடிவீதம் வைத்தவரி. குடியெழுப்புதல் - குடிகலைத்தல். குடியெழும்புதல் - இருந்தவீட்டை விட்டுப்போதல். குடியேறுதல் - சனங்கள் குடியாய் வந்து சேர்ந்திருத்தல். குடியேற்றம் - குடியேறுந்தன்மை. குடியேற்றுதல் - குடியிருக்கச்செய்தல். குடியோட்டிப்பூண்டு - குருக்கு. குடிலச்சி - கருவண்டு. குடிலம் - ஆகாயம், குராமரம், சடை, வஞ்சகம், வட்டம், வளைவு. குடிலை - பிரணவம். குடிலைப்பொருள் - பிரணவத்தினுட் பொருள். குடில் - ஆகாயம், சிற்றில். குடிவருதல் - குடிபுகுதல். குடிவாங்குதல் - குடியெழும்பிப் போதல். குடிவாழ்க்கை - இல்வாழ்க்கை, மருத நிலத்தூர். குடிவெறி - மதுபானமஸ்து. குடிவைத்தல் - குடியிருத்துதல், வாழ் வித்தல். குடு - கள். குடுகு - குடுக்கை. குடுகுடா, குடுகுடி - கஞ்சாக் குடுக்கை. குடுகுடுகிழவன் - கூனற்கிழவன். குடுகுடுத்தல் - துரிதமாயோடித் திரிதல். குடுகுடுத்தான் - சுறுக்கன், பரபரப் பாயோடித்திரிவோன். குடுகுடுப்பு - துரிதச்செலவு. குடுகுடுப்பை - அறக்காய்ந்து வற்ற லானது, கஞ்சாக்குடுகு, சிற் றுடுக்கை. குடுகுடெனல் - விரைவின் குறிப்பு. குடுக்குக்குடுக்கெனல் - ஒலிக் குறிப்பு. குடுக்கை - குடுகு. குடுமி - ஆண்மயிர், உச்சி, கதவிற் குடுமி, மயிர்முடி, மலையுச்சி, வெற்றி, நுதி, வில்லு. குடுமிக்கதவு - சுழியாணிக்கதவு. குடுமிப்பருந்து, குடுமியன் - ஓர்பருந்து. குடுமிவைத்தல் - பார்ப்பார் முதலிய வேதத்திற்குரிய வருணத்தாரின் பிள்ளைகட்குச் செய்யுமோர் சடங்கு. குடும்பக்கோடாலி - குடிகளையழிவு பண்ணுகிறவன். குடும்பத்தானம் - களத்திரத்தானம். குடும்பப்பிரதிட்டை - குடிவைத்தல். குடும்பம் - உறவு, மனைவி, வீடு. குடும்பன் - பள்ளரிற்றலைவன். குடும்பி-சமுசாரி,பள்ளி களிற்றலைவி. குடும்பினி - மனைவி. குடும்பு - பூங்கொத்து, சுற்றம். குடுகை - கமண்டலம், குண்டான், சிறுபானை. குடுவையாறு - ஓர்நதி. குடை - இராசசின்னத்தொன்று, உடைவேல், உட்டுளைப் பொருள், கவிகை, குடையென் னேவல், குமரனாடல், மிதியடி முதலிய வற்றின் குமிழ். குடைகரி - பஞ்சலோகங்களை யுருக்குமபடிகுடையப்பட்டகரி. குடைகவித்தல் - குடைநிழற்றல். குடைக்காரன் - குடைபிடிப்போன். குடைக்கிழங்கு - சிற்றரத்தை. குடைக்கொள்ளுதல் - குடைபோ லெழும்புதல், குமிழிக் கொள்ளு தல். குடைச்சல் - குடைவு, வருத்தம். குடைச்செவி - உள்வளைந்தசெவி. குடைச்செவிக்கொள்ளல், குடைச் செவியிடுதல், குடைச்செவி யெடுத் தல் - மிருகங்கோபத்தினாலே செவியை நிமிர்த்தல். குடைதல், குடையல் - அரித்தல், கடை தல், துளைத்தல், தோண்டல், நீராடுதல், கவிதல். குடைநிழற்றல் - உலகத்தைப் பாது காத்தல், குடையானிழல் செய்தல். குடைப்புல் - ஓர் புல். குடையன் பருவதம் - பித்தளை. குடையாணி - சடையாணி. குடைவண்டு - ஓர் வண்டு. குடைவு - குடைதல், வளைவு. குடைவேல் - ஓர் மரம். குடோரம் - கடூரம். குடோரி - கீறிமருந்துபதித்தல், கீறுதல், குடாசகம், சுதைமண், வங்க மணல், வெண்காரம், வெள்ளைப் பாஷாணம். குடோரியாடல், குடோரியிடுதல் - சன்னிக்குவிஷத்துக்குக்குடோரி வைத்தல். குடோரிவைத்தல் - கீறிமருந்து வைத்தல். குட்டக்கரப்பன் - ஓர் கரப்பன். குட்டக்குறடு - ஓர் குறடு. குட்டம், குஷடம் - ஆழம், குட்ட நோய், குளம், கொடுந்தமிழ் நாட்டினொன்று, கோட்டம். குட்டநாசனம் - வெண்கடுகு. குட்டரி - மலை. குட்டல் - அபகரித்தல், குட்டுதல், தகர்த்தல். குட்டனம் - தட்டல். குட்டன் - ஆட்டுக்குட்டி, குழந்தை, மகன். குட்டாரி - கந்தகம். குட்டான் - ஓர் பெட்டி. குட்டி - ஆடு - கழுதை - கீரி - குதிரை - நரி - நாய் - பன்றி - பாம்பு - புலி - பூனை - மான் - முதலை - முயல் இவற்றின் குட்டி, குரங்குமுதல் மரக்கோட்டின் வாழ்விலங்கின் பிள்ளை, வாழைக்கன்று. குட்டிக்காய் - அடுத்திருக்குஞ் சிறுகாய், கண்பிடிக்காய். குட்டிக்கொக்கான் - கொக்கானி லோர் வகை. குட்டிச்சாத்தன் - ஓர் பேய். குட்டிச்சுவராய்ப்போதல் - கெட்டுப் போதல். குட்டிச்சுவர் - சிறுசுவர். குட்டித்தக்காளி - ஓர் பூடு. குட்டித்தாய்ச்சி - குட்டி யுண்டா யிருக்கும் விலங்கின் பெண். குட்டிபடுதல் - ஆடுமுதலிய சினை கொள்ளல். குட்டிபோடுதல்-ஒன்றுகூடப் போடல், குட்டியீனுதல். குட்டிப்பல் - பல்லோடடுத்து முளைக் கும்பல். குட்டிப்பை - சிறுபை. குட்டிமம் - கற்படுத்த இடம். குட்டியம் - சுவர். குட்டியிடுக்கி - கோடைக்கிழங்கு, கோட்டம், சிற்றரத்தை. குட்டியிடுதல் - பாம்பு முதலிய குட்டி யீனுதல். குட்டிவிரல் - விரலோடடுத்து முளைக் குஞ் சிறுவிரல். குட்டிவைத்தல் - கொக்கானிலோர் செய்கை. குட்டினம் - கருஞ்சீரகம். குட்டினி - வசவி. குட்டு - குட்டுதல், குட்டென்னேவல். குட்டுணி - குட்டுப்படுகிறவன், சுணை கெட்டவன். குட்டுண்ணல் - குட்டுப்படல். குட்டுதல் - அணாப்புதல், தலையிலே சொட்டுதல். குட்டுவன் - சேரன். குட்டை - ஓர் வியாதி, கடையாயிருப் பது, குள்ளம், சிறுகுளம், கைத் துண்டு, தொழுமரம். குட்டையன் - கட்டையன், குட்டை நோயுள்ளோன். குணகண்டி - சிவதை. குணகம் - பெருக்குந்தொகை. குணகர் - கணக்கர். குணகாங்கியம் - ஓர் நூல். குணகி - குணமுள்ளவன். குணகு - குணகென்னேவல், பிசாசம். குணகுதல் - சோம்புதல், தனகுதல், வளைதல். குணக்குறைவிசேடம் - குணக்குறை யினால் மேன்மைதோன்ற நிற்பது, (உம்) கோட்டந் திருப்புவனங் கொள்ளாதவர் செங்கோல். குணக்கு - கிழக்கு, கோணல். குணக்குதல் - பின்னிற்றல், வளைத்தல். குணக்குன்று - கடவுள், குண முள்ள வன். குணக்கெடுத்தல் - குணத்தைக் கெடுத்தல், வளைவெடுத்தல். குணக்கேடு - குணமின்மை. குணங்கர் - பிசாசம். குணங்கல் - சுணங்கல், வளைதல். குணங்கு - குணங்கென்னேவல், பிசாசம். குணங்குதல் - வளைதல். குணங்குறி - அடையாள முஞ்சு பாபமும். குணசந்தி - நிலைமொழி யீற்றினின்ற அகர ஆகாரமும் வருமொழி முதலி னின்ற இகரவீகாரமுங்கெட ஏகாரமும் நிலை மொழியீற்றகர ஆகாரமும் அவற்றொடு புணர வந்த உகர ஊகார முங்கெட ஓகாரமுந் தோன்றுவது (உம்) சுரேந்திரன் வரோதையன். குணசாலி - நற்குணன். குணசைவம் - ஓர் சைவம். குணஞ்ஞன் - குணவான். குணட்டு - கதிரின் குலை. குணதிசை - கிழக்கு. குணத்தன்மையலங்காரம் - ஓரலங் காரம். குணத்தானணையும் பெயர் - அளவு, அறிவு, ஒப்பு, வடிவு, நிறம், கதி, குடி, சாதி சிறப்பு முதலியவற்றான் வரும் பெயர். குணத்திரயம் - முக்குணம். அஃது இராசதம், சாத்துவிதம், தாமதம். குணநிதி - கடவுள், குணமுள்ளோன். குணத்தொகை - பண்புத்தொகை. குணபத்திரன் - அருகன், கடவுள். குணபம் - பிணம். குணபலம் - அதிவிடயம். குணபவூணர் - இராக்கதர். குணபாகி, குணபாசி - பிசாசம். குணபாடல் - குணவாகடம். குணபிரதி - குணம். குணபேதம் - குணமாறுதல், ஆங்காரம். குணப்படுதல் - சுகமடைதல், நற் குணமடைதல். குணப்பண்பு - குணத்தாலாயபண்பு. குணப்பிழை - துற்குணம். குணப்பெயர் - பண்புப்பெயர். குணமாதல் - சீர்ப்படுதல், சுகமாதல். குணம் - இராசமுதலியகுணம், இலட்சணம், குடம், சீர்மை, நாணி, நிறம், நூல், பண்பு. குணவி - சீந்தில். குணலை - ஓர் கூத்து, வீராவேசத் தாற் கொக்கரித்தல். குணலையீடுதல் - கைதட்டிக் கூவுதல். குணவதி, குணவந்தன் - குணமுள்ள வன். குணவாகடம் - குணங்களறிவிக்கும் வைத்தியசாத்திரம். குணவாகுபெயர் - பண்புப்பெயரைப் பண்பிக்குரைத்தல், (உம்) நீலம். குணவான் - நற்குணன். குணவிலக்கு - ஓரலங்காரம், அஃது குணத்தை மறுத்துச் சொல்வது. குணவுவமம் - பண்புவமம் (உம்) பான்மொழி. குணனம் - கணக்குப்பெருக்கல். குணாகுணம் - சாத்தியாசாத்தியம், குணமுங்குணகீனமும். குணாதீதம் - குணங்கடந்தது. குணாதீதன் - சீவமுத்தன். குணார்த்தகோளம் - கிழக்குப்பாதி யுண்டை. குணாலம் - ஓர்புள். குணாலயன் - கடவுள். குணாவநுதி - குணத்தினுயர்வு தோன்றக் கூறுமலங்காரம். குணாம்புதல் - நளினம்பண்ணுதல். குணாலை - குணாலைக்கூத்து. குணி - ஊமை, குணியென்னேவல், பண்பி, வில், முடம். குணிக்கரித்தல் - கணக்குப் பெருக்கு தல். குணிக்காரம் - கணக்குப் பெருக்குந் தன்மை. குணிதம் - பெருக்கிக்கண்ட பேறு மடங்கு. குணித்தல் - எண்பெருக்கல், மதித்தல். குணிப்பு - மதிப்பு. குணிப்பெயர் - குணத்தையுடைய பொருட்பெயர். குணில் - ஓர் பறை, கவண், குறுந்தடி, பறையடிக்குந்தடி. குணு - புழு. குணுகல் - சிணுங்குதல். குணுகுணுத்தல், குணுகுதல் - சிணுங் குதல், மூக்காற்சத்தம் வரப்பேசுதல். குணுகுணுப்பு - மூக்காலொலி யெழப் பேசல். குணுகுணெனல் - குணுகுணுத்தல். குணுக்கம் - அனுக்கம். குணுக்கல் - நுணுக்கல், வளைத்தல். குணுக்கன் - மூக்காற்சத்தம் வரப் பேசுகிறவன். குணுக்கு - மாதர்காதணியி னொன்று, வலையின் முடிந்திருக்குமீயம். குணுங்கர் - சண்டாளர், தோற்கருவி யாளர், பிசாசர், குயிலுவர். குணுங்கு - பிசாசம். குணுங்குதல் - அனுங்குதல். குண்டகன் - தலைவனைப் பிழைத் தீன்ற சோரபுத்திரன். குண்டக்கம் - குடாசகம். குண்டக்கிரியம் - ஓர் பண். குண்டக்கிரியை - ஓரிராகம். குண்டணி - பின்புறணி. குண்டம் - ஓமக்கிடங்கு, கிடங்கு, கிணறு, குடுவை, குண்டான், குளம், துட்டை, பானை. குண்டலகேசி - ஓரிலக்கியநூல். குண்டலம் - ஆகாயம், காதணியி னொன்று, தவத்தோர்காதணி, வட்டம். குண்டலன் - பலராமன். குண்டனம் - வளைதல். குண்டலி - இசங்கு, ஓர் வாயு, காளி, சீந்தில், தாளகம், பாம்பு, மயில், மான், மூலாதாரம். குண்டலிசத்தி - வல்லபசத்தி. குண்டவண்டன், குண்டவண்டியன் - குண்டல்வண்டியுள்ளது. குண்டனி - குறளை, வசவி. குண்டன் - அடிமை, குண்டனி சொல்வோன், வளைந்தது. குண்டாணிக்கொடி - ஓர் கொடி. குண்டான் - பெருஞ்சட்டி. குண்டி - ஈரல், சகனம், மீன்சினை. குண்டிகம் - எருவராட்டி, துகள். குண்டிகை - கமண்டலம், குடம். குண்டிதம் - துகள். குண்டியம் - பழிச்சொல், பொய். குண்டில் - ஓர் செடி, சிறுச்செய். குண்டினபுரம் - தமையந்தி பிறந்தபுரம். குண்டீரம் - தத்துவம். குண்டு - ஆண், ஆண்குதிரை, ஆழம், உருண்டை, குளம், தாழ்வு, திரண்டகல், நிறைகல். குண்டுக்கட்டு - கூன்வாங்கிக்கட்டுங் கட்டு. குண்டுக்கழுதை - ஆண்கழுதை. குண்டுக்கிராமம் - சிறுகிராமம். குண்டுக்குழற்றுவக்கு - பருங் குழற்று வக்கு. குண்டுக்குழை - குண்டுக்குழல். குண்டுச்சட்டி - குழிச்சட்டி. குண்டுச்சுழி - எழுத்துக்களின் குண்டாகாரச்சுழி. குண்டுப்பிணையல் - குண்டுள்ள பிணையல். குண்டுரோசனை - குண்டோசனை. குண்டூசி - கொண்டையுள்ளவூசி. குண்டெழுத்தாணி - குடவெழுத் தாணி. குண்டேறு - ஓர்மீன். குண்டை - இடபவிராசி, ஈகைக் கொடி, எருது, சட்டி. குண்டைச்சம்பா - ஓர் நெல். குண்டோசனை - ஓர் கிழங்கு. குண்டோதரன் - ஓர் பூதன். குணணியம் - கணக்கிற்பெருக்குதல், குணம். குதக்கேடு - சீர்கேடு, துப்புக்கேடு. குதட்டுதல் - அதக்குதல், கன்று முதலியன பால்குடித்து வாயுதப்பு தல். குதபகாலம் - பிதிர்புண்ணியகாலம். அஃது பதினேழரைநாழிகை தொடங்கியிருபது நாழிகை வரையும். குதபசத்தகம் - பிதிர்சிராத்தத்திற்கு வேண்டிய ஏழ்திரவியம். குதபம் - தருப்பைப்புல். குதபன் - சூரியன், தீ. குதப்பம் - கலக்கம், மாறுபாடு. குதப்பல் - குதப்புதல். குதப்புதல் - அதுக்குதல், உதப்புதல். குதம் - தருப்பை, மலவாயில். குதம்பல் - இறுக்கமில்லாதது, குதம் புதல். குதம்புதல் - அலைசுதல், கொதித்தல். குதம்பை - ஓராபரணம், ஓர் பூடு. குதம்பைச்சித்தர் - ஓர் சித்தர். குதரம் - மலை. குதர்க்கம் - முறைகெட்டதருக்கம். குதர்க்கி - வீண்தருக்கமுள்ளவன். குதர்தல் - குதறுதல், கோதிவகிர்தல், சிதறுதல். குதலை - அறிவிலான், மழலைச் சொல். குதலைவார்த்தை - மழலைமொழி. குதறுதல் - உதறுதல். குதனம் - குதனை. குதனு - அவலட்சணசரீரம், இலட் சணசீனன், குபேரன். குதனை, குதனைக்கேடு - துப்புக்கேடு. குதாங்குரம் - மூலம். குதாவிடை - ஆராய்வு, குதர்க்கம், குழப்பம். குதானன் - தாழிச்செடி. குதி - அடிப்புறத்துமூலை, அதிமிதி, கால்கைக்குதி, குதியென்னேவல், முயற்சி. குதிகால் - குதிங்கால். குதிகொள்ளல் - குதித்தல், பெருகுதல், பெருமைக் குணம்பண்ணுதல், பொலிதல். குதிக்கள்ளன் - குதிவாதம். குதிக்கால், குதிங்கால் - காற்குதி. குதித்தல் - கடத்தல், பாய்தல், வெல் லுதல். குதிப்பிளவை - ஓர் சிலந்தி. குதிப்பு - குதித்தல். குதிமுள் - குதிரைசெலுத்துங் கருவியி னொன்று. குதியன் - குதிப்பு, மதத்தாலதிமிதி பண்ணல். குதியன்குத்துதல் - களித்து விளை யாடல். குதிரை - நால்வகைத்தானையி னொன்று, அஃது, பரிமா. குதிரைகொடுத்தல் - தோற்றோர் வென்றோரைச்சுமத்தல். குதிரைகொல்லி - ஓர்நோய். குதிரைக்கசை - குதிரைச்சவுக்கு. குதிரைக்கல்லணை - சேணம். குதிரைக்கலிசனை - குதிரையுடுப்பு. குதிரைக்காரன் - குதிரைப்பாகன், குதிரைவீரன். குதிரைக்குளம்பன் - ஓர் வகைப் பொற்காசு. குதிரைக்குளம்பு - நீர்க்குளிரி. குதிரைக்குளம்புமோதிரம் - ஓர் வகை ஆழி. குதிரைச்சம்மட்டி, குதிரைச்சவுக்கு - குதிரையடிக்குங்கயிறு. குதிரைச்சாலை - குதிரைலாயம். குதிரைச்சீட்டு - பந்தயச்சீட்டு. குதிரைப்பட்டை - ஓடுதாங்கி. குதிரைப்பந்தயம் - குதிரை யோட்டத் துக்கு வைக்கும் பந்தயம். குதிரைப்பந்தி - குதிரைச்சாலை. குதிரைப்பயிரி - ஓர் பூடு. குதிரைப்பற்பாஷாணம் - ஓர்பாஷா ணம். குதிரைப்பாகன் - குதிரைவிடுவோன். குதிரைமரம் - கால்வாயடைக்குங் கதவு. குதிரைமறி - பெண்குதிரை. குதிரைமார்க்கம் - குதிரைசெல்வழி. குதிரையங்கபடி - குதிரையேறும்படி. குதிரையிலக்கணம் - குதிரையின் சுழி முதலியவுறுப்புக்கள். குதிரையேறல் - தோற்றோர்மே லேறல், பரிமேலேறல். குதிரையேற்றம் - குதிரையேறும் பயிற்சி. குதிரைராவுத்தன் - மாவுத்தன். கதிரைலாயம் - குதிரைப்பந்தி. குதிரைவலி - ஓர் நோய். குதிரைவாய்க்கருவி - கடிவாளம். குதிரைவாய்வடம் - குசைக்கயிறு. குதிரைவாலி - ஓர் சாமை, ஒரு புல். குதிரைவாலிச்சம்பா - ஓர் நெல் குதிரைவையாளிவீதி - புரவிவட்டம். குதிர் - கூடு, நென் முதலிய வைக்குங் கூடு. குதிவாதம் - ஓர் நோய். குதுகம் - விருப்பம். குதுகுலித்தல் - மிகுகளிகொள்ளல். குதுகுலிப்பு - மயிர்ச்சிலிர்ப்பு, மிகு மகிழ்ச்சி. குதும்பகர் - தும்பை. குதுவை - அடைவு, ஈடு. குதூகலம் - விருப்பம். குதூணகம் - கண்ணோயினொன்று. குதை - பாசி, முனை, விற்குதை. குதைமணி - சட்டைத்தெறி. குத்தகை - மதித்துக்கொள்ளல், மதி யத்துக்குவிற்றல். குத்தகைகாரன் - மதியத்துக்கு வாங் கினவன். குத்தகைவேலை - பொருத்தவேலை. குத்தம் - இரட்சித்தல். குத்தரசம் - பெருங்காயம். குத்தல் - அடித்தல், உரோசம் வரப் பேசல், உறைக்கச் சொல்லல், ஒருவர் சொன்ன சொற்றைத்தல், குத்துதல் இஃது நால்வகை யூறு பாட்டினொன்று, மெய்ப்பரிச மெட்டினுமொன்று, சிறுகவார்த் தல், நெரித்தல், புதைத்தல், வாயு முதலிய வடைசல். குத்தாலர் - கடுரோகிணி. குத்தி - அடக்கம், மண். குத்திக்கொல்லர் - பண அஞ்சற் காரர். குத்திடுதல் - குத்தியள்ளுதல், நிறு திட்டம். குத்திப்பேசல் - உரோசம்வரப்பேசல், உறைக்கப்பேசல். குத்திரம் - சீக்கிரம், பொய், மலை, வஞ்சகம். குத்திரன் - வஞ்சகன். குத்து - உலக்கை முதலியவற்றாற் குற்றல், குத்தென்னேவல், கையைப் புதைத்தள்ளல், சணல், தைத்தல், நிறுதிட்டமானது, நேர், வாயுக் குத்து. குத்துகோல், குத்துக்கோல் - முட்கோல். குத்துக்கரணம் - ஓர் விளையாட்டு. குத்துக்கரந்தை - ஓர் கரந்தை. குத்துக்காரை - ஓர் காரை. குத்துக்கால் - தேரினிறுத்துங் கால் கள், நிறுதிட்டமாய் நிற்குங்கால். குத்துக்காற்சம்மட்டி - ஓர்மரம். குத்துக்காற்பயறு - ஓர் பயறு. குத்துக்குளம்பு - குத்தெனநிற்குங் குளம்பு. குத்துக்கோரை - ஓர் கோரை. குத்துச்செடி - நிலம்பற்றிப்படராத செடி. குத்துணி - ஓர் புடைவை, தழுக்குணி. குத்துதல் - குத்தல். குத்துத்திராய் - ஓர் திராய். குத்துப்பகன்றை - ஓர் பகன்றை. குத்துப்பயளி - ஓர் கீரை. குத்துப்பன்னீர் - ஓர் மரம். குத்துப்புள் - புள்ளடித்தலிலோர் வகை. குத்துப்போர் - நிறுதிட்டமாய் வைக் குஞ்சூடு. குத்துவாய் - கடிவாய். குத்துவாள் - சுரிகை. குத்துவிளக்கு - ஓர் விளக்கு. குத்தூசி - ஓர் கருவி. குத்தென - நேரே. குநீதி - துன்னீதி, நீதிகேடன். குந்தகம் - குந்தக்கம், தடை. குந்தக்கம் - குழப்பம், கோள். குந்தமம் - பூனை. குந்தம் - ஓர் பாஷாணம், கண்ணோய் குதிரை, குருந்தமரம், கைவேல், சிறுசவளம், சூலம், நோய், பெருஞ்சவளம், ஓர் நிதி. குந்தரைத்தல் - வீணாயிருத்தல். குந்தலிக்கம் - வெள்ளைப்போளம். குந்தளம் - தேயமன்பத்தாறினொன்று, பெண்மயிர், மயிர்க் குழற்சி, மயிர்ப்பொது. குந்தனம் - மணியழுத்தல். குந்தாணி - குந்தநோய், பருவுரல். குந்தாணிப்பீரங்கி - ஒரு பீரங்கி. குந்தாலம் - ஓர் புள். குந்தாலி - கொந்தாலி. குந்தாலித்தல், குந்தாளித்தல், குந்தாளிப்பு - களித்துக் குதித்தல். குந்தாளம், குந்தாள் - மண்வாருங் கருவி. குந்தி - கள், பாண்டவர்தாய், ஓர் சிட்டு. குந்திக்குந்திநடத்தல் - இரு நினை வாய்நடத்தல், கிந்துகால் வைத்து வைத்து நடத்தல். குந்தியடித்தல் - ஓர் விளையாட்டு. குந்திரம் - ஓர் புள். குந்திருக்கம் - குங்குலியம். குந்து - ஒட்டுத்திண்ணை, குந்துதல், குந்தென்னேவல், திண்ணையருகு, தும்பு. குந்துகாலி - அடிப்பலமற்றமரம், கிந்திநடப்பவள். குந்துகாலினிற்றல் - படங்குந்தி நிற்றல், விரைவைக்காட்டிநிற்றல். குந்துதல் - கிந்துதல், குந்தியிருத்தல். குந்துத்தடி - குந்தெடுக்கு மலக்குத் தடி. குந்துரு, குந்துருக்கம் - ஓர் சரக்கு, ஓர் மரம். குந்தெடுத்தல் - தும்பெடுத்தல். குபங்கம் - அருவருத்தசேறு. குபசுபா - காஞ்சிரை. குபதம் - துன்னடை, பாழ்வழி. குபலம் - நட்டம், பலவீனம். குபிதம் - கோத்தல், கோபம். குபிதாந்தகம் - துன்மரணம். குபிலன் - அரசன். குபினர் - வலைஞர். குபினி - வலை. குபீரிடுதல் - இரத்த முதலிய விரைந்து பாய்தற்குறிப்பு. குபீர்குபீரெனல் - ஈரடுக்கொலிக் குறிப்பு. குபுத்திரன் - இழிகுலபுத்திரன், துற்புத்திரன். குபுருஷன் - துட்டன். குபேரசைலம் - கைலைமலை. குபேரன் - சந்திரன், வடக்கு, வட திசைப்பாலன். குபையம் - சிறுபுள்ளடி. குப்பக்காடு - காடுத்த கிராமம். குப்பம் - கிராமம், குப்பல், திடர். குப்பலை - குப்பளை. குப்பல் - குவியல், கூட்டம். குப்பளை - ஓர் செடி. குப்பாமணி - குப்பைமேனி. குப்பாயம் - சட்டை, மேற்போர்வை. குப்பி - ஓர் பாண்டம், மாதர் தலை யணியி னொன்று, வீணையின் முறுக்காணி. குப்பிக்கடுக்கன் - ஓர் வகைக்கடுக் கன். குப்பிசாரம் - காசிசாரம். குப்பிச்சரக்கு - பதங்கவைப்பு. குப்பிமா - மாக்கல்லு., குப்பியசாலை - பித்தளைப்பாத்திரஞ் செய்யுமிடம். குப்பியம் - பொன்வெள்ளி தவிர்ந்த லோகம். குப்பிலவணம் - வளையலுப்பு. குப்பிவைப்பு - குப்பியில் வைத்துச் செய்யுஞ்சரக்கு. குப்புக்குப்பெனல் - ஈரடுக்கொலிக் குறிப்பு. குப்புரகிதன் - ஒழுக்கங்குன்றிய பார்ப் பான். குப்புளாய், குப்புளை - ஓர்செடி. குப்புறக்கிடத்தல் - அதோமுகமாய்க் கிடத்தல். குப்புறல் - கடத்தல், குதித்தல், பாய்தல். குப்புறவிழுதல் - முகந்தரைநோக்க விழுதல். குப்பெனல் - ஒலிக்குறிப்பு, சீக்கிரக் குறிப்பு. குப்பை - கஞ்சல், குலிவு, கூட்டம், மேடு. குப்பைக்கீரை - முட்கீரை. குப்பைச்சி - குதனைக்கேடுள்ளவள். குப்பைப்பருத்தி - உப்பம் பருத்தி. குப்பைமேனி - ஓர் பூடு. குப்பையன் - குதனைக்கேடுள்ளவன். குப்பைவாரி - ஓர் கருவி, விளக்குமாறு. குமஞ்சம், குமஞ்சான் - ஓர்சாம் பிறாணி. குமட்டல் - தெவிட்டல். குமட்டி - ஓர் சுரைக்கொடி. குமட்டு - நிறைவு, வயிற்றுப்புரட்டு. குமட்டுதல் - அருவருத்தல், குடலைப் புரட்டல், தேக்கெடுத்தல். குமண்டையிடுதல் - நிறைந்து தெவிட்டல். குமதி - துன்மதி. குமரகண்டன் - ஓர் வலி. குமரதானம் - எழுத்துத்தானமைந்தி னொன்று. குமரம் - கொம்பிலாவிலங்கு. குமரன் - ஆண்மகன், இளையோன், பதினாறு வயசு முதல்முப்பத்தி ரண்டு வயசுக்குட்பட்டவன், மகன், முருகன், வயிரவன். குமரி - அழிவின்மை, ஓர் கண்டம், கற்றாழை, கன்னி, சத்தநதிகளி னொன்று, சத்தமாதர் களிலொ ருத்தி, மகள், அழுகண்ணி, சத்தி சாரணை. குமரிகண்டம் - நவகண்டத்தொன்று. குமரிச்சேர்ப்பன் - பாண்டியன். குமரிஞாழல் - ஓர் பூடு. குமர் - கன்னியழியாமை, விவாக மில்லாத பெண். குமல் - அரிவாள். குமாரகன் - குமரன். குமாரதந்திரம் - ஓர் நூல். குமாரத்தி - இராசாலின்மகள், புத்திரி. குமாரபாலன் - சாலிவாகன். குமாரம் - ஓடவைத்தபொன். குமாரவாகனம் - மயில். குமாரவிருத்தியை - பிள்ளைப் பரி காரம் பண்ணும்பெண், மருத்து விச்சி. குமாரன் - இராசபுத்திரன், குமரன், மகன், வாலிபன். குமாரி - குமாரிகை, துற்கை. குமாரிகை - பத்துவயசு துவக்கிப் பன்னிரண்டு வயசுப்பெண். குமிகை - இளவெள், வெள்ளெள். குமிட்கல்லு - கற்கிட்டம். குமிட்டித்தல் - திரளுதல். குமிட்டிப்பு - திரட்சி. குமிட்டில் - ஓர் கீரை. குமிட்டு - குவியல். குமிதிகம் - தேக்கமரம். குமிலம் - பேரொலி. குமிழி, குமிளி - குமிழ்ப்பு வடிவுள் ளது, நீர்க்குமிளி. குமிழிக்கொள்ளுதல் - கொப்புள் வடிவுபடக்கிளர்தல். குமிழித்தல் - குமிழிக்கொள்ளுதல், கொப்பளித்தல். குமிழ் - குமிழி, குமிழ்ப்பு. குமிழ்த்தல் - குமிழித்தல். குமிழ்ப்பு - புடைப்பு, புளகம். குமிழ்வண்டு - குடைவண்டு. குமிள் - ஓர் மரம், குமிழ். குமீர்குமீரெனல் - ஈரடுக்கொலிக் குறிப்பு. குமுகுமுத்தல், குமுகுமெனல் - மிகு மணக்குறிப்பு. குமுக்கு - திரட்சி, தொகை. குமுணன் - முதலெழுவள்ளலி லொ ருவன். குமுதசகாயன், குமுதநண்பன் - சந்திரன். குமுதபதி - சந்திரன். குமுதம் - அடுப்பு, கருப்பூரம், கற் பாஷாணம், கூட்டம், செவ்வாம் பல், தருப்பை, தென் மேற்றிசை யானை, படையி லோர்தொகை. அஃது சேனா முகம்மூன்று கொண் டது, பேரொலி, வக்கி ராந்த பாஷாணம், வெள்ளாம் பல், வெள்ளி, வெள்ளைப்பாஷாணம். குமுதவாந்தவன், குமுதேசன் - சந்திரன். குமுதிசை - ஓர் வாசனைமரம். குமுதை - ஓர் பூடு, ஓர் மரம். குமுந்தம் - கற்பாஷாணம். குமுரம் - சித்திரக்கம்பி. குமுறல், குமுறுதல் - அதிர்தல், ஒலித்தல், கிளர்தல், கொதித்தல், பேசலாலெழுமொலி, பேரொலி, முழக்கம். குமேரு - தென்முனை. குமைஞ்சான் - குமஞ்சான். குமைதல் - அழிதல், குழைதல். குமைத்தல் - அழித்தல், குழையப் பண்ணல். குமையல் - குழைவானது, குழைவு. குமைவு - அழிவு, குழைவு. குமோதகன் - விட்டுணு. கும்பகம் - கும்பித்தல், சாலாங்க பாஷாணம், தொட்டி பாஷா ணம், பிராணாயாமத் தொன்று. அஃது கும்பித்தல். கும்பகலசம் - சடங்குஸ்தாபன குடகலசம். கும்பகவிம்பம் - தொட்டிபாஷாணம். கும்பகன்னன் - இராவணன் றம்பி. கும்பசாமாலை - ஓர் நோய். கும்பகாம்போதி - ஓர் பண். கும்பகாரகன், கும்பகாரன் - குயவன். கும்பகாரி - கண்ணிடுமை, குசத்தி, செம்பாஷாணம். கும்பகாரிகை - கண்ணிடுமருந்து, குசத்தி. கும்பகோணம் - ஓர் பட்டினம். கும்பசம்பவன் - அகத்தியன், துரோணாசாரியன், வசிட்டன். கும்பசலம் - பூசாகும்பநீர். கும்பசன் - அகத்தியன், துரோணா சாரியன். கும்பசாலை - குசக்கலம் வனையு மிடம். கும்பஞ்சரிதல் - கழுத்துமடிதல். கும்பஞ்சான் - சிவதை. கும்பஞ்செய்தல் - குவித்தல், பிரேத மடக்கல். கும்பதாசி - சங்கதூதி, வேசி. கும்பதாபனம், கும்பஸ்தாபனம் - தேவர்க்குத்தாபனமாகக்கும்பம் வைத்தல். கும்பதெட்சணை - கும்பத்திற் போடுங் காசு. கும்பந்நிறுத்தல் - கும்பஸதாபனம் பண்ணல். கும்பப்பிளவை - கும்பத்திற் பிளவைக் கட்டு. கும்பமுனி - அகத்தியன். கும்பம் - ஓரிராசி, குடம், குவியல், தோண்மேல், நெற்றி, யாஊமத் தகம். கும்பம் வைத்தல் - கும்பதாபனம் பண்ணல். கும்பயோனி - அகத்தியன், துரோ ணாசாரியன், வசிட்டன். கும்பல் - கும்புதல், குவியல், கூட்டம். கும்பவத்திரம் - கும்பத்துக்குச் சார்த்தும் வத்திரம். கும்பவாதம் - ஓர் வாதநோய். கும்பளமோசு - சூரைமீன். கும்பளம் - பூசணி. கும்பளா - ஓர் மீன். கும்பன் - ஓரிராக்கதன், தூர்த்தன். கும்பா - ஓர் பாத்திரம். கும்பாகுடம் - கும்பம்வைக்கிற குடம். கும்பாரம் - கும்பம். கும்பாவிஷேகம் - தூபிவைத்தல், விக்கிரகதாபனம். கும்பி - கும்பராசி, கும்பியென்னேவல், குவியல், சிவதை, சேறு, தாலம்ப பாஷாணம், நரகம், நெற்றி, பலண்டுறுகம், மண் பாத்திரம், யானை, வயிறு, நெருப்பு. கும்பிடரி - கமக்காரனிடத்து வெளிப் பாடுகொண்டுபொகுமரிலி. கும்பிடல், கும்பிடுதல் - கைகூப்பல், வணங்கல். கும்பிடுசட்டி - தீச்சட்டி. கும்பிடுபூச்சி - ஓர் பூச்சி. கும்பிட்டுக்கட்டுதல் - தழுவிக் கொள் ளுதல். கும்பித்தல் - பிராணவாயுவைச் சமப்படுத்தி யடக்கல். கும்பிபாகம் - ஓரநரகம். கும்பிமதம் - யானைமதம். கும்பியழித்தல் - ஓர் விளையாட்டு. கும்பிலன் - திருடன், மைத்துனன். கும்பீடு - வணக்கம். கும்பீநசம் - பெரும்பாம்பு. கும்பீநசி - இராவணன்றாய்., இராவ ணன்றாயின் சகோதரி கும்பீரம், கும்பீலம் - முதலை. கும்புதல் - அடிப்பற்றுதல். கும்பை - ஓர் வாழை, குடம், கும்ப கோணம், பூசாவேதிகை, வேசி. கும்மட்டம் - ஓர்வாத்தியம். கும்மட்டி - ஓர் கூத்து, ஓர்வாத்தியம். கும்மலி - தடித்தவள். கும்மல் - அடித்தல். கும்மாயம் - குழம்பு. கும்மாளங்கொட்டுதல் - குதித்துக்கை யொடுகை தட்டல். கும்மாளம், கும்மாளி - குதியன். கும்பி - ஓர் பிரபந்தம், மகளிர்கூத்து. கும்மிப்பாட்டு - மகளிர்பாடலி னொன்று. கும்மியடித்தல் - மகளிர்கூத்தினொன்று. கும்முதல் - குதம்புதல். கும்மெனல் - இருட்குறிப்பு. குயக்கலம் - மண்பாண்டம். குயக்காலம் - நிலக்கடம்பு. குயத்தினலகை - நிலவாகை. குயபீசகம் - எட்டிமரம். குயமயக்கு - குழப்பம். குயம் - இளமை, கொடுவாள், முலை. குயவரி - புலி. குயவர் - கும்பகாரர். குயவிரிவு - மண்பாண்டங்களின் பொரிவு. குயவு - தேர். குயர - கோங்குமரம். குயிலல் - இழைத்தல், செய்தல், சொல்லல். குயிலன் - தெய்வேந்திரன். குயிலாயம் - சுவரறை, பறவைக்கூடு, மட்கலம்வனையுங்கூடம். குயிலுதல் - அழுத்துதல், அழைக்கு தல், உண்டாக்கல், உயருதல், ஊடு ருவுதல், ஒலித்தல், கட்டுதல், சொல் லுதல், தைத்தல், நெருங்குதல். குயிலுவம் - சூத்திரரறு தொழிலி னொன்று. இது தோற்கருவிகளைக் கொட்டலும் துளைக் கருவிகளை யூதலும் நரப்புக் கருவியை யிசைத் தலும். குயிலுவர் - தோல்வினைஞர், நரம்புக் கருவிக்குரியோர். குயில் - ஓர் புள், குயிலென்னேவல், சொல், துளை, துளையுடைப் பொருள், முகில், இசைக்குழல். குயிறல் - அழைத்தல், செய்தல், சொல் லுதல், துளைத்தல், நெருங்கல். குயிற்கண்மணி - சௌந்திகப்பது மராகம். குயிற்றல் - செய்தல், சொல்லுதல், பதித்தல். குயின் - குளனென்னேல், மேகம். குயின்மொழி - அதிமதுரம். குயுத்தி - நிந்தை, பரிகாசச்சொல், மனநிமிர்ச்சி. குய் - தாளித்தகறி, நறும்புகை. குய்யகர் - தேவசாதியினோர் பேதம். குய்யதீபகம் - மின்மினி. குய்யபாஷிதம் - மந்திரம். குய்யபீசம் - எட்டிமரம். குய்யம் - ஆமை, குறி, பெண்குறி, பொய், மறைவு, வஞ்சகம். குரகதம் - குதிரை, குதிரைப்பற் பாஷாணம். குரகம் - நாகணவாய்ப்புள், நீர்வாழ் பறவை. குரக்கன் - கேழ்வரகு. குரக்கு - குரங்கு. குரங்ககம் - மான். குரங்கம் - மான், விலங்கின் பொது. குரங்கல் - தாழ்தல். குரங்கன்சுறா - ஓர் மீன். குரங்கி - சந்திரன். குரங்கு - குரங்கென்னேவல், மந்தி, விலங்கின் பொது. குரங்குகடியன் - முகிழடிசுருங்கின காய். குரங்குச்சேட்டை - குணக்கெட்ட செய்கை. குரங்குதல் - இணங்குதல், இரங்கு தல், வணங்குதல், வளைதல். குரங்குப்பிடி - விடாதுபிடித்தல். குரங்குமுடி - ஓர் வகைமுடி. குரங்குவலி - ஓர் நோய். குரங்குவாற்பூட்டு - கதவிற்பூட்டுகளி னொன்று. குரங்குளை - சுருண்டபிடர்மயிர். குரச்சை - குதிரைக்குளம்பு. குரஞ்சி - ஓர் பண். குரடன் - சக்கிலியன். குரணம் - முயற்சி. குரண்டகம் - பச்சைப்பூவுளமரு தோன்றிமரம், பொன்மை கலந்த சிவப்பு. குரண்டம் - கொக்கு. குரத்தம் - ஆரவாரம். குரத்தி - தலைவி. குரப்பம் - குதிரைமயிர்கோதுஞ்சீப்பு. குரமடம் - பெருங்காயம். குரம் - ஒலி, குதிரைக்குளம்பு, தருப்பை, பசு, பாகல், விலங்கின் குளம்பு. குரம்பு - செய்கரை, வரம்பு. குரம்பை - உடல், சிறுகுடில், பறவைக் கூடு, முட்டை. குரலீனம் - கழுதை. குரலெடுத்தல் - பெருங்குரலெடுத்தல். குரல் - இறகு, இன்னிசை, ஏழிசையி னொன்று, ஒலி, கதிர், தினை, பாதிரிமரம், பெண்மயிர், மிடறு, மிடற்றாற்பிறக்குமிசை, யாழ் நரம்பினோசை, யாழ்நரம்பு. குரல்வளை - மிடறு. குரவகம் - மருதோன்றிமரம், வாடாக் குறிஞ்சி. குரவம் - ஓர் மரம், கோட்டம், நறு மணம், பேரீந்து. குரவரம் - குறிஞ்சா. குரவர் - அரசர், உவாத்தி, குரு, தந்தை, மூத்தோர். குரவளை - குரல்வளை. குரவன் - அரசன், உவாத்தி, குரு, தந்தை, பிரமன், மந்திரி, முற்பிதா, மூத்தோன். குரவு - குராமரம், நறுமணம். குரவுநிறமணி - கோவரங்கப்பது மராகம். குரவை - கடல், கூத்து, கைகோத் தாடல், பெருஞ்சத்தம், ஓர்மீன். குரவையிடுதல் - கூப்பிடுதல், சத்தஞ் செய்தல். குரற்காட்டுதல் - அழைத்தல், சத்தங் காட்டல். குரா - குராமரம். குராசாணி - ஓர் பூடு. குராசாணி ஓமம் - ஓர் பூடு. குரால் - கபிலைநிறம், கோட்டான், பசு. குரிகிற்றாளி - ஓர் கிழங்கு. குரிசில் - ஆண்மகன், இராசா, பெரு மையிற்சிறந்தோன். குரீ - புள். குரு - ஆசான், இருமாத்திரை, இரும்பு செம்புஈய முதலியவுலோ கங்களைப் பொன் வெள்ளியாகப் பேதிக்குஞ்சிந்தூரம், உவாத்தி, ஓரரசன், சுத்தசலம், சோறு, துருசி, தேசமைம் பத்தாறி னொன்று, நிமிட மறுபத்தினான்கு கொண் டது, நிறம், பாரம், பிதா, பெருமை, மேன்மை, வசூரி, வருத்தம், வியாழம், வேர்க்குரு, காலதசப் பிரமாணத் தொன்று, அஃது இலகு இரண்டுகொண்டது. குருகடாட்சம் - குருவின் கிருபை. குருகு - இளமை, உலைமூக்கு, குருக் கத்தி, கைவளை, கோழி, தேசமைம் பத்தாறினொன்று, நாரை, நீர்ப் பறவை, பறவைப் பொது, மூல நாள், யானையின் மூளை, வட்டுக் குட்குருத்து, வெண்மை, கொய்யடி நாரை. குருகுமணல், குருகுமண் - வெண் மணல். குருகுலம் - பலண்டுறுகபாஷாணம், பாரதர்குலம். குருகுலவேந்தர் - கௌரவர். குருக்கிரமம் - கன்னபாரம்பரியமாய் வழங்குவது. குருக்கண் - குருட்டுக்கண், முலை. குருக்கத்தி - ஓர் மரம். குருக்கன் - உருக்கன். குருக்கு - இக்கிரி. குருக்குத்தி - ஓர் முட்செடி, நெல் லைச்சடைவிக்கும் வியாதி. குருக்கேத்திரம் - ஓர் தலம். குருக்கொடுத்தல் - புத்திசொல்லுதல். குருக்கொள்ளுதல் - புத்தி முதிர்ச்சி காட்டல். குருசந்தானம் - குருவமிசம். குருசந்திரயோகம் - வியாழனுஞ் சந்திரனுங் கூடியிருக்கும்யோகம். குருசாரபலம் - வியாழகெதியின் பலம். குருசூரியன் - வயிரமணி. குருசேடம் - குருப்பிரசாதம். குருசேவை -குருவுக்குப் பணிசெய்தல். குருச்சனன் - சங்கைமான், தலைவன். குருச்சி - சீனக்காரம். குருடன் - கண்ணில்லான். குருடி - குருட்டுப்பெண். குருடு - அறிவின்மை, உறுப்புக் குறை யெட்டினொன்று. அஃது பார்வை யின்மை, விளக்கமற்றது. குருட்டடி - எழுந்தமானம். குருட்டாட்டம் - அறியாமை, குருட்டுத் தனம். குருட்டீ - ஓரிலையான். குருட்டுக்கல் - நிறமற்றகல். குருட்டுச்சாயம் - நிறமற்றசாயம். குருட்டுத்தனம் - குருட்டாட்டம். குருட்டுப்பத்தி - அறியாமையான பத்தி. குருட்டுமை - எழுத்துவிளங்காதமை. குருட்டவாக்கு - அறியாதவிதமாய் வந்தசெய்கை. குருட்டுமுத்து - ஒளியற்றமுத்து. குருட்டுவெளவால் - ஓர் வவ்வால். குருட்டெழுத்து - அக்கரசுத்தமில்லாத வெழுத்து. குருணி - ஓர்மரக்காலளவுள்ளது. குருதக்கணை -குருவுக்குக் கொடுக்குந் தட்சணை. குருதற்பகன், குருதற்பி - குருவின் பன்னியைக் கற்பழித்தோன். குருதி - இரத்தம், சிவப்பு, செவ்வாய். குருத்தல் - குருப்பித்தல், பெருங் கோபம். குருத்து - இளமை, மரமுதலியவற் றின்குருத்து, விலங்கின் கொம்புக் குருத்து, வெண்மை. குருத்துக்கக்குதல் - குருத்துவருதல், பயிரின் குருத்துத்தெறித்தல். குருத்துரோகம் - பஞ்சபாதகத் தொன்று. குருத்துவம் - குருதத்துவம், மகத்துவம். குருத்துவிடுதல், குருத்துவீசுதல் - குருத்துவைத்தல். குருத்தெறிதல் - குருத்துவீசுதல். குருத்தோலை - இளவோலை. குருநாடி - ஓர் நாடிவிதி. குருநாதன் - குமரன், துருசி, பரமகுரு. குருநாள் - பூசநாள். குருநிந்தை - பஞ்சபாதகத்தொன்று. குருநிலம் - குருக்கேத்திரம். குருநோய் - வைசூரி. குருந்தக்கல் - வச்சிரக்கல். குருந்து - ஓர் மரம், குருத்து, குழந்தை, வச்சிரக்கல். குருபதம் - சிரசிலோராதாரம், மோட்சம். குருபத்தி - குருவின் மேல்விசுவாசம். குருபத்திரம் - துத்துநாகம், புளியமரம். குருபத்தினி, குருபன்னி - குருவின் மனைவி. குருபரன் - குமரன், பரமகுரு. குருபாரம்பரை - குருவமிசவழி. குருபாலப்பிரபோதிகை - ஓர் நூல். குருபீடத்தாள் - குருவின்மனைவி. குருபுகாசந்திரயோகம் - வியாழன், சுக்கிரன், சந்திரன், மூன்று மோரி ராசியினிற்பது. குருபுடம் - வியாழபுடம். குருபுத்திரன் - குருவின்மகன், சீடன். குருபூசை - இறந்த குருவைக் குறித்துச் செய்யும் அன்னதானம், குரு மாருக்குப் போசனங் கொடுத்தல், குருவணக்கம். குருப்பட்டம் - குருவபிஷேகம். குருப்பித்தல் - பருக்கொள்ளுதல், முளைத்தல். குருப்பிரசாதம் - குருவினால்வரப் பட்டது. குருப்பிரமோதம் - குருவினாற்பெற்ற சந்தோஷம். குருப்பு - பரு. குருப்பூச்சி - குருவண்டு. குருமன்,குருமான் - குழந்தை, சிறுவுரு. குருமித்தல் - பேசலாலெழுமொலி. குருமுகம் - குருமுகதா. குருமுடித்தல் - உலோகங்களை நீற்றத் தக்கமருந்தைப் புடமிடுதல். குருமுறை - சவுக்காரம். குருமுன், குருமுன்னிலை - குருமுகதா. குருமூர்த்தம் - தேவன்குருவாக வருதல். குருமூர்த்தி - பரமகுரு. குருமூலம் - குருவின் வாக்குமூலம். குருமை - பெருமை. குரும்பட்டி - குரும்பை. குரும்பை - பனைதெங்கினிளங்காய், புற்றஞ்சோறு. குருவகம் - வெண்சிவப்பு. குருவங்கணை - குருபன்னி. குருவசனம் - குருமொழி. குருவஞ்செடி - ஓர்செடி. குருவண்டு - ஓர் வண்டு. குருவருடம் - நவகண்டத்தொன்று. குருவாக்கு - குருவசனம். குருவாரம் - வியாழக்கிழமை. குருவால் - ஓர் மரம். குருவி - சிறுபறவை, மூலநாள், குன்றிமணி. குருவிக்கார் - ஓர் நெல். குருவிக்குடல் - சிற்றிரைப்பை. குருவிக்கூடு - குருவிவைக்குங்கூடு. குருவிச்சி - குருவிச்சை. குருவிச்சை - புல்லுருவி. குருவித்தலைப்பாகல் - ஓர் வகைச் சிறுகாய்ப்பாகல். குருவித்தலைப்பாக்கு - ஓர் வகைச் சிறுபாக்கு. குருவித்திருக்கை - ஓர்மீன். குருவிந்தம் - குன்றிக்கொடி, சாதி லிங்கம், செம்மணி, முத்தக்காசு, வாற்கோதும்பை, பதுமராகச் சாதிநான்கி னொன்று. குருவிமீன் - ஓர் மீன். குருவுக்காதி - பச்சைக்கருப்பூரம். குருவுபதேசம் - ஓமம், குருப்பண்ணு முபதேசம். குருவெனற்சாரம் - காசிசாரம். குருவேர் - ஓர்கொடி. குருளை - ஆமை, நரி, நாய், பன்றி, புலி, மான், முசு, முயல், யாழி இவற்றின் குட்டி, இளமை. குருள் - பெண்மயிர். குரூபம் - அவலட்சணம். குரூபி, குரூபின் - அவலட்சணன், உருவிலி. குரூப்பியம் - துத்துநாகம். குரூரம் - கொடுமை. குரை - அசைச்சொல், ஒலி, குதிரை, குளம்பு. குரைத்தல் - எழுத்திலாவோசை, ஒலித்தல், குலைத்தல். குரைமுகன் - நாய். குரோசம் - கூப்பிடுதூரம். குரோட்டம் - நரி, பன்றி. குரோட்டன் - ஆணரி. குரோட்டு - பன்றி. குரோதம் - உட்பகையாறினொன்று, சினம், விகாரமெட்டினொன்று. குரோதன - ஓர் வருடம். குரோதன் - வீரபத்திரன். குரோதி - ஓராண்டு, குரோதி யென் னேவல், கோபி, பகைவன். குரோதித்தல் - பகைத்தல். குலகண்டகன் - குலத்தைவடுப் படுத்து வோன். குலகருமம் - குலாசாரம். குலகன்னி - நல்லில்லாள், பதிவிரதை. குலகாயம் - நத்தை, பேய்ப்புடோல். குலகாலம் - நிலக்கடம்பு. குலகிரி - அட்டகுலபருவதம். குலகுரு - சாதிக்குரு. குலகூடஸ்தன் - உயர்குலத்தான். குலக்காயம் - பிறவிச்சுவாபம். குலக்கு - இணுக்கு, குலை. குலக்கொடி - குலஸ்திரீ. குலக்கொழுந்து - குலத்துக்கு முதலா யிருக்கும் அரியபிள்ளை. குலசம்பலம் - குள்ளம். குலசம்பவன் - உயர்குலத்திற் பிறந் தோன். குலசன் - ஒழுக்கங்குலம் வழுவாத பிதாமாதா விடத்திற் பிறந்தோன். குலச்சிரேட்டன் - குலத்திலு மொழுக் கத்திலுங் கல்வியிலு மதிகன். குலடன் - மஞ்சனீர்ப்புத்திரன். குலடாபதி - வசவிகணவன். குலடி - செம்பாஷாணம். குலடை - குலாசாரந்தவறினவள். குலட்சயம் - குடியழிவு. குலட்டு - குலை. குலதருமம் - குலாசாரம். குலதாரகன் - புத்திரன். குலதிதி - நாலாமெட்டாம் பன்னி ரண்டாந்திதி. குலதிலகன் - குலாதிபன். குலதெய்வம் - அவ்வக்குலத்தார் வழி படுந்தெய்வம். குலத்திரி, குலஸ்திரி - கற்புள்ளவள். குலநாசகம் - ஒட்டகம். குலநிந்தை - குடிப்பழுது. குலந்தெரித்தல் - குலப்பழிகூறல். குலபதி - குலாதிபன். குலபத்தினி - கற்புடையாள். குலபருவதம் - குலமலை. குலபாலகம் - ஓர் தேன்தோடை. குலபாலகன் - குலபுத்திரன். குலபாலிகை - கற்புடையாள். குலப்பகை - சாதித்தொடர்ச்சியான பகை. குலமகள் - குலத்திரீ. குலமகன் - நற்குடியிலுள்ளவன். குலமசாதி - நீலக்கல். குலமரியாதை - வமிசத்துக்கடுத்த சங்கை. குலமலை - அட்டமலை. குலமித்திரன் - குலானுசாரி. குலமிலான் - குலவீனன். குலமுளோன் - நற்குலத்தோன். குலம் - அரண்மனை, இரேவதி, கற் கண்டு, கூட்டம், சாதி, மனை, விலங்கின் கூட்டம். குலம்பெயர்தல் - சாதிமாறுதல். குலரி - குலை. குலவரை - மந்தாரக்கல். குலவித்தை - சாதிவித்தை. குலவிருது - குலத்துக்குரியது. குலவிருத்தியை - மருத்துவிச்சி. குலவீனன் - கீழ்மகன். குலவுதல் - கொண்டாடல், பிரகா சித்தல், பொருந்துதல். குலன் - கலைவல்லோன், குலம். குலா - ஆடம்பரம், குலாவென்னேவல், கொண்டாடல், பட்சம், வளைவு. குலாகுலதிதி - ஆறாந்திதி. குலாங்கனை - உயர்குலத்தவள். குலாங்குலி - காவட்டம்புல். குலாசலம் - குலமலை. குலாசாரம் - குலநடை. குலாசாரியன் - குலக்குரு. குலாதிக்கம் - குலவிசேடம். குலாபிமானம் - குலச்சங்கை. குலாபு - முட்செவ்வந்தி. குலாயம் - பறவைக்கூடு, வலை. குலாரி - ஓர் வகைப்பண்டி. குலாலன் - குயவன். குலால் - செவ்வை. குலாவல் - கொண்டாடல், பாராட் டல், வளைவு. குலாவு - குலாவென்னேவல், கொண் டாட்டம். குலாவுதல் - சஞ்சரித்தல், சந்தோ ஷித்தல், பிரகாசித்தல், வளைதல். குலி - மனைவி, யாக்கை. குலிகம் - இலுப்பை, சாதிலிங்கம், சிவப்பு, பந்து. குலிகாக்கிரீடை - பந்தடித்தல். குலிங்கம் - ஊர்க்குருவி, ஓர்தேசம், காக்கை, குதிரை, சாதிலிங்கம். குலிங்கர் - ஓர் சாதி. குலிசபாணி - தெய்வேந்திரன். குலிசம் - இடியேறு, இலுப்பை, கற்பரிபாஷாணம், வச்சிரச்சோ, வச்சிராயுதம், வன்னிமரம். குலிசல் - நாகபாஷாணம். குலிசன் - கற்பரிபாஷாணம். குலிஞன், குலிஞ்சன் - குலமுள்ளோன். குலிந்தம் -தேயமன்பத்தாறி னொன்று. குலிலி - வீராவேசவொலி. குலீனன் - குலமுள்ளோன். குலுகுலுத்தல் - இரைதல், ஊருதல், சொறிதல். குலுகுலுப்பு - தினவு. குலுகுலெனல் - ஒலிக்குறிப்பு. குலுக்கம் - ஓர்புள். குலுக்கு - அசைப்பு, குலுக்கென் னேவல். குலுக்குதல் - அசைத்தல், கெறுவங் காட்டுதல். குலுக்கெனல் - ஒலிக்குறிப்பு, குலுங் குதல். குலுக்கை - கோரிக்கை. குலுங்கல் - நடுங்கல். குலுங்குதல் - அசைதல். குலுசம், குலுஞ்சம் - பூஞ்செண்டு. குலுத்தம் - கணுக்கால், கொள். குலுமமூலம் - இஞ்சி. குலுமம் - அணியை நடத்தல், ஒர் செடி, கோட்டை, படைத் தொகை புற்கற்றை. குலுமி - பாசறை. குலை - அம்பின்குதை, ஈரற்குலை, குதை, குலையென்னேவல், கொத்து, செய்கரை, நடுக்கம், பூங்கொத்து, மரம் முதலியவற்றின் குலை, விற்குதை. குலைகட்டுதல் - குலைபிடித்தல். குலைகுலைதல் - அச்சத் தானடுங்கு தல். குலைக்கல் - ஆட்டுக்கல், கோரோ சனம். குலைச்சல் - அழிதல், ஒழுங்குத் தப்பு, குலைதல், குலைத்தல், வெறுத் துப்பேசல். குலைதல் - அச்சக்குறிப்பு, அவிழ் தல், அழிதல், ஒழுங்கு கெடுதல், கலைதல், குன்றல், நடுங்கல், பதறுதல். குலைதள்ளுதல் - குலைபோடுதல். குலைத்தல் - அவிழ்த்தல், கலையச் செய்தல், குரைத்தல், பிரித்தல். குலைநோய் - குலைமுட்டி. குலைபடுவன் - ஓர் நோய். குலைப்பன் - சீதநோய். குலைப்பு - குலைத்தல், நடுக்கம். குலைமுட்டி - நெஞ்சிற்குத்து. குலையல் - அச்சக்குறிப்பு, குலைதல். குலையெரிவு - ஓர் நோய். குலைவயிறு - ஈரலடி. குலைவிலை - குலைமதிப்புக் குத்தகை. குலைவு - குலைதல். குலோமிசை - வசம்பு. குல்மம் - குன்மம். குல்லம் - முறம். குல்லரி - இரந்தை. குல்லா - தலைக்கோலம், படலிற்கட் டுங்குல்லா. குல்லாய் - தலைவாரை. குல்லான் - சலாகைப்பாரை. குல்லி - ஓர் பூண்டு. குல்லியம் - இனிமை, ஆலோசனை. குலிலியன் - ஆலோசனைக்காரன். குல்லிரி - குலிலி. குல்லை - கஞ்சா, துளசி, வெட்சி. குல்வலி - இலந்தை. குவங்கம் - ஈயம். குவசம் - இழந்தது. குவடு - சங்கபாஷாணம், சிறுமலை, திரட்சி, மரக்கொம்பு, மலை, மலையுச்சி. குவட்டிலுதித்தோன் - சொன்னபேதி. குவட்டிற்புனிதம் - சங்கபாஷாணம். குவட்டினீயம் - நீலாஞ்சனக்கல். குவட்டுக்கல் - ஆட்டுக்கல். குவட்டுக்கூர்மை - தொட்டி பாஷாணம். குவட்டு முலைச்சி - சொன்னபேதி. குவலம் - அவுபலபாஷாணம். குவலயம் - குவளை, நெய்தல், பூமி. குவலயாபீடம் - ஓர் யானை. குவவிடம் - ஊர். குவலையன் - துரிசு. குலவு - குவிதல், கூட்டம், திரட்சி, பருத்தது, பூமி, பெருமை. குவம் - ஆம்பல். குவளச்சி - புற்றாம்பழம். குவளை - ஓர் நீர்ப்பூக்கொடி, கடுக் கனில் வைக்குமிதழ், கண்ணிற் கோளை, கோளை, பாண்டங் களின் கழுத்து, மன்மதன்கணை யினொன்று, பொக்கணி. குவளையச்சு - தட்டாரினோர் கருவி. குவாகம் - கமுகு. குவாகுலம் - ஒட்டகம். குவாட்டி - ஓர் மட்டி. குவால் - குவிதல், கூட்டம், மேடு. குவிதல் - ஒடுங்குதல், கூட்டம், சேருதல், திரளுதல், நெருங்குதல். குவித்தல் - ஒடுங்குவித்தல், ஒளித்தல், கூட்டுவித்தல், கூப்பல். குவிப்பு - குவியல்செய்தல். குவிரம் - காடு. குவியல் - கும்பம். குவில் - அறுத்தல், சத்தம். குவிவு - குப்பை, குவிதல். குவை - குப்பை, கூட்டம், திரட்சி, மேடு. குழ - இளமை. குழகம், குழகு - அழகு. குழகன் - முருகன், சிவன். குழகுழத்தல் - கொளுகொளுத்தல். குழங்கல் - ஓர் மாலை. குழந்தை - சிறுபிள்ளை. குழப்படி, குழப்பம் - கலகம், கலக்கம். குழப்பன் - குழப்பக்காரன். குழப்புதல் - கலத்தல், குழப்பம் பண்ணுதல். குழமகன் - ஓர் பிரபந்தம், அஃது கலி வெண்பாவான மாதர்கடங்கை யிற் கண்ட இளமைத்தன்மை யுடைய குழமகனைப் புகழ்ந்து கூறுவது, பாலன். குழம்பல் - அடிதலைமாறுதல், கலங்கல், நீராளமானது. குழம்பு - ஓர் விதக்கறி, கஞ்சி, குழம் பென்னேவல், குழைசேறு, சந்தனக் குழம்பு முதலியன, நீராளமானது. குழம்புதல் - கலங்குதல், தலைதடு மாறல். குழம்புப்பால் - குழம்பாய்க் காய்ச்சப் படும் பால். குழலல் - குழற்சி. குழலுதல் - குழற்சியாதல், சுருட்டி முடித்தல். குழல் - இசைப்பாட்டு, ஊதிடுகுழல், ஐம்பாலினொன்று, அஃது சுருட்டி முடித்தல், கொண்டை, துளையுடைப் பொருள், பெண் மயிர். குழவி - அம்மிக்குழவி, இளமை, ஒட்டகம், கடமை, காட்டா, பன்றி, மான், முசு, யாழியானை இவைகளுமன்றி மரக்கோட்டில் வாழ்விலங்கின்பிள்ளைகளுமாம், குழந்தை, பெருமை, மரக்கன்று. குழவு - இளமை. குழற்கொத்து - மயிர்க்குழற்சி. குழற்சி - குழன்றிருத்தல். குழற்பிட்டு - குழலிலவிக்கும்பிட்டு. குழற்றுறப்பு - ஓர் வகைத்திறவுகோல். குழாம் - கூட்டம். குழாம்பல் - குழைவு, நீராளமானது. குழாய் - துளை, துளையுடைப் பொருள். குழி - ஒருகோல் நீளமுமொரு கோல கலமுங்கொண்ட தரை, கிடங்கு, கிணறு, குழியென் னேவல், குளம், பள்ளம், வயிறு. குழிகை - குளிகை. குழிக்கணக்கு - குழிமதிப்புக் கணக்கு. குழிங்கை - அகங்கை. குழிசி - பானை, மிடா. குழிசீலை - கௌபீனம். குழிச்சட்டி - ஓர் பணிகாரச்சட்டி. குழிதல் - குழியாதல். குழித்தல் - குழியாக்கல், நீராடல். குழித்தாமரை - ஆகாசத்தாமரை. குழிநரி - ஓர் நரி. குழிநாவல் - ஓர் மரம். குழிபறிதல் - கிடங்குவிழுதல். குழிப்பு - பிரபந்தவுறுப்பினொன்று. குழிமாறுதல், குழிமாற்று - குழியைப் பரப்பாக்கல். குழிமி - பாத்திரத்தின் மூக்கு, மதகு. குழிமிட்டான் - நத்தைச்சூரி. குழிமுயல் - ஓர் முயல். குழியச்சு - தகட்டைக்குழியாக்குங் கருவி. குழியம் - திரட்சி, திரண்டவட்டம், பாராவலையம், வலையம். குழியம்மி - மருந்தரைக்குங் குழியுள்ள வம்மி. குழிவு - குழித்தன்மை. குழிவெட்டி - சவக்கிடங்கு வெட்டு வோன். குழு - அடங்காமை, குழுவென் னேவல், கூட்டம், மகளிர் கூட்டம். குழுக்காலி - கட்டுக்ககப்படாதமாடு. குழுப்பற்றுதல் - அடங்காமைத் திரிதல். குழுப்பாய்தல் - குழுப்பற்றுதல். குழுமல் - கூட்டம், கூட்டல். குழுமாடு - குழுக்காலி. குழுமுதல் - கூடுதல். குழுமுரல் - ஓர் மீன். குழுவல் - கூடல். குழுவன் - சொற்கேளாதவன். குழுவுதல் - கூடுதல். குழுஉக்குறி - அவ்வக்கூட்டத்தார் வழங்குஞ்சொல். குழூஉப்பெயர் - கூட்டத்தான் வரும் பெயர். குழை - காடு, காது, குண்டலம், குழைசேறு, குழையென்னேவல், தளிர், துளையுடைப்பொருள், நெய்தல். குழைகறி - நீராளமானகறி. குழைக்கடித்தல் - மந்திரோச் சார ணத்துடன் குழையடித்துப் பார்த்தல். குழைக்காடு - காட்டுத்தேசம். குழைசாந்து, குழைசுண்ணம் - கலந்த சுண்ணாம்பு. குழைசேறு - குழைந்தசேறு. குழைச்சி - புற்றஞ்சோறு. குழைச்சு - ஆயுதங்களின்கழுத்து, ஆயுதமுதலியவற்றின் சுரை, கழுத்து, கைகால் முதலியவற்றிப் பொருத்து. குழைஞ்சான் - குழப்பம். குழைதல் - கயங்குதல், நெகிழ்ந் தொன்றாதல், வளைதல், வாடல். குழைத்தல் - இளகுவித்தல், ஒன்றாய்க் கலத்தல், தளிர்த்தல், வளைத்தல். குழைநாற்றம் - குழைமணம். குழைபிடித்தல் - ஒன்றைவிலக்கத் தழைபிடித்தல். குழைப்பு - குழைத்தல். குழைமறைவு - ஒளிப்பு. குழையடி, குழையடித்தல் - குழை யடித்து மந்திரோச் சாரணத்துடன் பார்க்கும் பார்வை, போதிப்பு. குழையல் - இளகியொன்று பட்டி ருப்பது. குழைவு - அணைதல், இளக்கம், உருக்கம், கலப்பு, சேர்மானம், வளைவு, வாடல். குளகச்செய்யுள் - ஓர்பிரபந்தம், அஃது பலபாட்டாயொரு வினை கொண்டு முடிவது. குளகம் - குற்றெழுத்துத்தொடர்ந்த செய்யுள், பலபாக்கூடிப் பொருண் முடியுஞ் செய்யுள், மரக்கால். குளகன் - குமரன். குளகு - இலையுணும் விலங்குணவு. குளகுளத்தல், குளகுளெனல் - ஈரடுக் கொலிக்குறிப்பு. குளக்கட்டு - குளத்தருகு. குளக்கீழ் - குழம்பார்த்தவயல். குளக்குருவி - நண்டு குளக்கொட்டி - ஓர் கொட்டி. குளக்கோட்டான் - ஓரரசன். குளக்கோரை - ஓர் புல். குளசு - குழைச்சு. குளஞ்சி - ஓர் தோடைமரம், சருக்கரை. குளத்தேபோதல் - வாகியத்துக்குப் போதல். குளநண்டு - ஓர் நண்டு. குளநெல் - ஓர் நெல். குளப்பயறு - ஒர் பயறு. குளப்பாடு - குளமடுத்தநிலம். குளமீன் - குளத்துமீன். குளம் - சருக்கரை, தடாகம், நெற்றி, வெல்லம். குளம்பு - குரம். குளவடம்பு - ஓர்கொடி. குளவஞ்சி - குளாஞ்சி. குளவட்டை - நீரட்டை. குளவரகு - ஓர் வரகு. குளவாழை - ஓர் நெல். குளவி - ஓர் வண்டு, தேனீ, மலைப் பச்சை. குளவிகொட்டுதல் - குளவிகுற்றுதல். குளவிக்கூடு - குளவியிருக்குங்கூடு. குளவிந்தம் - ஓர் மஞ்சள். குளறுதல் - உளறுதல், குளிறுதல். குளறுபடை, குளறுபிடி - குழப்பம். குளாஞ்சி - ஓர் தோடை. குளாபாகம் - குடாபாகம். குளி - குளித்தல், குளியென்னேவல். குளிகசித்தி - குளிகாசித்தி. குளிகன் - அட்டநாகத்தொன்று, கரந்துறைகோளினொன்று. குளிகம் - மருந்தின்பொது. குளிகாசித்தி - இரசகுளிகையினால் வருஞ்சித்தி, அஃது அட்டசித்தி யினுமொன்று. குளிகாரன் - சங்குமுத்துமுதலியன குளித்தெடுப்போன். குளிகை - மாத்திரை. குளிசம் - வளையம், சக்கரம்வரைந்த தகடு. குளிசமாடுதல், குளியமாடுதல் - வளையமிடுதல். குளிசீலை - கௌபீனம். குளித்தல் - சுழியோடல், நீராடல், படிதல். குளிப்பச்சை - ஆற்றுப்பச்சை. குளிப்பாட்டு - பிரேதமுழுக்காட்டு. குளிப்பாட்டுதல் - குளிக்கச் செய்தல், பிரேதலங்காரத்தொன்று. குளியம் - உண்டை, புலி, மருந்தின் பொது, வளையம். குளியோடுதல் - சுழியோடுதல். குளிரக்கொடுத்தல் - மனரம்மியப் படக்கொடுத்தல். குளிரி - கல்லாரம், பீலிக்குஞ்சம், வெற்றிலைமூக்கரிகத்தி. குளிர் - அச்சக்குறிப்பு, கவண், கற்கட கவிராசி, குளிர்ச்சி, கூதல், சூலம், நண்டு, பனிக்காற்று, மழு, மீனொழுக்கு, முலைமூக்கரிகத்தி, முளவு வெற்றிலைமூக்கரிகத்தி. குளிர்காய்ச்சல் - சீதசுரம். குளிர்காய்தல் - கூதிர்காய்தல். குளிர்காலம் - கூதல்காலம். குளிர்காற்று - குளிரானகாற்று. குளிர்குளிர்தல், குளிர்கொள்ளல் - சீதமடைதல், தோஷமேறுதல், விறைத்தல். குளிர்சுரம் - சீதசுரம். குளிர்ச்சி - குளிர்மை. குளிர்தல் - குளிருதல், சாதல், விறைத் தல். குளிர்த்தி - ஓராராதனை, குளிர்மை. குளிர்த்தி பண்ணுதல் - குளிர்மை செய்தல். குளிர்த்திபோடுதல் - சீதளா தேவிக்குச் செய்யுமோராராதனை. குளிர்ந்தகுரல் - இனியவோசை. குளிர்ந்தகொள்ளி - குளிர்ந்து கொல்லி. குளிர்ந்தநிறம் - நன்னிறம். குளிர்ந்தநீர் - இளவெந்நீர், மணி யினல்லொளி. குளிர்ந்தபரிமளம்-சீதரங்க பாஷாணம். குளிர்ந்தபார்வை - தயைநோக்கு. குளிர்ந்தபேச்சு - மதுரவசனம். குளிர்ந்தமணம் - நறுநாற்றம். குளிர்ந்தமுகம் - அலங்காரமுகம், நன்முகம். குளிர்ந்தவாசனை - நறுமணம். குளிர்ந்தவாயு - வாதவாயு. குளிர்ந்தவேளை - சாயந்திரம். குளிர்ந்தவொளி - மணிகளினல் லொளி. குளிர்ந்துகொல்லி - கொவ்வைக் கொடி, வஞ்சகன். குளிர்ந்துபற்றுதல், குளிர்ந்தேறுதல் - வாயுவிட முதலியபற்றியேறுதல். குளிர்ந்துபோதல் - இறத்தல். குளிர்ப்பித்தல் - குளிர்ச்சி செய்தல். குளிர்ப்பு - குளிர்மை. குளிர்மை - சீதம். குளிர்மைக்கட்டு - கூகைக்கட்டு. குளிறல் - எழுத்திலாவோசை, ஒலித் தல், பேசலாலெழுமொலி. குளிறு - ஒலி, குளிறென்னேவல், பேரொலி. குளிறுதல் - அலறுதல், சத்தமிடுதல். குளீரம் - நண்டு. குளுகுளுத்தல் - ஒலிக்குறிப்பு, கா மாலை கொள்ளுதல், செவ்வியழி தல், மெதுமெதுத்தல். குளுகுளுப்பை - காமாலை. குளுகுளெனல் - ஒலிக்குறிப்பு. குளுத்தி - குளிர்மை. குளுப்பை - குளுகுளுப்பை. குளுமை - குளிர்மை. குளைச்சு - காற்பங்கு, குழைச்சு. குளைமான் - ஓர்விதமான். குள்ளக்கெண்டை - ஓர் மீன். குள்ளம் - குறுமை, வஞ்சகம். குள்ளன் - கட்டையன், வஞ்சகன். குள்ளி - கட்டைச்சி, குள்ளன். குறங்கு - தொடை. குறங்கொட்டி - துலாவோடேயடுக் கும் மரம். குறங்கொள்ளி - குறைக்கொள்ளி. குறஞ்சனம் - வெண்காரம். குறஞ்சால் - உழுதுகுறைந்தநிலம். குறஞ்சி - செம்முள்ளி. குறடு - அடைகல்லு, ஒட்டுத் திண் ணை, ஓர்கருவி, செருப்பி னோரு றுப்பு, திண்ணை, நண்டு, பலகை, மரத்துண்டு, மிதியடி. குறட்டரியம் - குறை. குறட்டாழிசை - நாற்சீரின் மிக்க பல சீரான் வருமடியிரண்டாய் ஈற்றடி குறைந்து வருவதும் விழுமிய பொருளும் ஒழுகிய ஓசையு மின்றிக் குறல் வெண செந்துறை யிற் சிதைந்து வருவதும் வேற்றுத் தளைவிரவிய குறள் வெண்பா வாய் வருவது மாகியவிம் மூன்று வகையுமாம். குறட்டுச்செருப்பு - ஓர் செருப்பு. குறட்டுப்பாக்குவெட்டி - ஓர் பாக்கு வெட்டி. குறட்டை - காக்கணங்கொவ்வை, குறுகுறுப்பு. குறண்டல் - குறண்டுதல், சுருண்டது சுருண்டு வளைந்தது. குறண்டல்வாதம் - வலிவாதம். குறண்டவாங்குதல் - சுருட்டியிழுத் தல். குறண்டி - ஓர் பண். குறண்டுதல் - சுருண்டு கூனுதல். குறத்தி - குறிஞ்சிநிலப்பெண், நிலப் பனை. குறத்திப்பாட்டு - ஓர் பிரபந்தம். அஃது தலைவன் பவனிவரக் கண்ட தலைவி மயங்கித் திங்கள் முதலிய உவாலம் பனப்பட்டுக் குறிகேட்டல் முதலிய அகப் பொருளுமடங்க அகவல முதலிய செய்யுளிடையிடை விரவிவரச் சிந்து முதலிய நாடகத் தமிழாற் பாடுவது. குறம் - ஓர் சாதி, குறி. குறம்பார்த்தல் - குறிபார்த்தல். குறம்விடுத்தல் - குறட்சொல்லுதல். குறவஞ்சி - ஓர் பிரபந்தம், குறத்த லைவி. குறவணவன் - ஒரு புழு. குறவர் - குறிஞ்சிநிலமாக்கள், வேடர். குறவன் - இரதம், ஒரு சாதியான். குறவை - ஓர் மீன். குறளடி - இருசீரடி. குறளடிவஞ்சிப்பா - இருசீரடியான் வரும் வஞ்சி. குறளன் - குள்ளன். குறளி - ஓர் பிசாசு, வசவி. குறளிக்கூத்து - பேய்த்தனம். குறளிவிடுதல் - கோளாறு பண்ணல். குறளை - குள்ளம், கோட்சொல்லல். குறள் - உறுப்புக்குறை யெட்டி னொன்று, ஓர்பா, குறுமை, சிறுமை பூதகணம். குறள்வெண் செந்துறை - விழுமிய பொருளும் ஒழுகிய ஓசையு முடைத்தாய் எனைத்துச்சீரானும் அளபொத்த இரண்டடியாய் வருவது. குறள்வெண்பா - இரண்டடியா யொரு விகற்பத்தானேனு மிருவி கற்பத்தானேனும் வருவது. குறாசாணி - ஓர்மருந்து. குறாவுதல் - ஒடுங்குதல், மெலிதல். குறாள் - மறிக்குட்டி. குறி - அடையாளம் எண்ணம், ஓர் வகைச் சாத்திரஞ்சொல்லுதல், குறிப்பு, குறியென்னேவல், சகுனம், தோற்றம், நன்னடத்தை, நிமித் தம், பயில், புடைவை, மாடு முதலியவற்றினிடுங்குறி, முறை. குறிகாணுதல்-அடையாளந்தோன்றல். குறிக்கொள்வோர் - கருமம்முடிக்குந் துணிவுள்ளோர், பராயணர். குறிக்கோள் - ஒற்றுமை, கணித்தல், கருமமுடிக்குந் துணிவு. குறிசொல்லுதல் - குறியிடம் பார்த்துச் சாத்திரஞ்சொல்லல். குறிச்சி - கிராமம், குறிஞ்சிநிலத்தூர், சிற்றூர். குறிச்சூத்திரம் - பெயரீடுசூத்திரம். குறிஞ்சா - ஒரு கொடி. குறிஞ்சி - ஈந்து, ஐந்நிலத்தொன்று. அஃது, மலைச்சார்பு, ஓரிசை, ஒரு கொடி, ஒரு சிமிள், ஒரு பண், குறிஞ்சி நிலத்திராகம், குறிஞ்சி மரம், செம்முள்ளி, மருதயாழ்த் திறம், மருதோன்றிமரம். குறிஞ்சிக்கருப்பொருள் - குறிஞ்சி நிலத்துற்பத்திப்பொருள், அவை சேய் முதற்சுனையாட லீறாயலாம். குறிஞ்சித்தலைவன் - கானகநாடன். குறிஞ்சித்திணை - குறிஞ்சி நிலத்திற் குரியன, அவை மலை, கூதிர், முன்பனி, இருள், ஐவனம், தினை, வெதிர் களவுப் புணர்ச்சி, சிலம் பன், வெற்பன், பொருப்பன், சேய், கானவர், குறவர், தேன், வெறி, சிறுகுடி, குறிச்சி, அருவி, சுனை, யானை, வேங்கை, மயில். குறிஞ்சித்திணைப் பொருள் - குறிஞ்சிக் கருப்பொருள். குறிஞ்சித்தெய்வம் - சுப்பிரமணியன். குறிஞ்சிப்பறை - துடி, தொண்டகம். குறிஞ்சிப்பொருள் - குறிஞ்சி நிலத்திற் குரிய பொருள். குறிஞ்சி முதற்பொருள் - வரையும் வரைசார்ந்த விடமுமென்னு நிலப்பொருளும் கூதிர், யாமம், முன்பனியென்னும் பெரும் பொழுதுஞ் சிறுபொழுதுகளு மாம். குறிஞ்சியாழ் - குறிஞ்சிநிலத்தியாழ். குறிஞ்சிலைக்கல் - ஈரற்கல். குறிஞ்சில் - தொட்டிபாஷாணம். குறிஞ்சிவேந்தன் - குமரன். குறிது - குறுமையுடையது. குறித்தகள்வன் - பெயர் போன கள்வன். குறித்தல் - அடையாளப்படுத்தல், கருதல், சுட்டுதல், நியமித்தல், மதித்தல், வரைதல். குறிநிலையணி - புகழ் பொருளை யுணர்த்துஞ் சொற்களாற் குறித்தறி தற்குத் தகுதியாய பொருளைச் சொல்லுதல். குறிபார்த்தல் - சகுனம்பார்த்தல், சாமுத்திரிகா லக்கணம்பார்த்தல். குறிப்பறிதல் - குறிப்பினாலறிதல். குறிப்பாளி - குறிப்பறிவோன். குதிப்பானவன் - கணிசவான், மதிக் கத்தக்கவன். குறிப்பிசை - எழுத்திலாவோசை. குறிப்பிடம் - சுருக்கம். குறிப்பு - அடையாளம், எழுத்துப் பழக்குங்குறிப்பு, ஒருமை, கருத்து, நினைப்புக் கெழுதின வெழுத்து, பிறந்தநாளெழுதி வைக்குமோலை, விருப்பம். குறிப்புக்காரணவகத்திணை - குறிப்புக் காட்டல் (உம்) பேருலகள யான் பிறந்ததாயின பாருலகிழி நலம் பற்றிநக்கவோ. குறிப்புச்செயல் - செஞ்செயலினு மாக்கச்செயலினுநின்று அவைக்கு வேறாய பொருளை யுணர்த்துவது. குறிப்புச்சொல் - குறிப்பினாற் பொரு ளுணர்த்துஞ்சொல். குறிப்புநவிற்சியணி - ஒரு பொருளைக் குறித்துச்சொல்ல வேண்டியதற்கு மற்றொரு பொருளைக் குறித்துச் சொல்லுதலாம். குறிப்புப்பண்பு - மனதின் கூறுபாடு. குறிப்புப்பொருள் - குறிப்புச்சொல்லா லுணர்த்தப்படுபொருள். குறிப்புமறிநிலை - ஓரலங்காரம், அஃது சொல்வேறுணர்ந்த குறிப்பு வேறாகத் தோன்றவுரைத்தல். குறிப்புரிச்சொல் - மனத்தாற்குறித் தறியப்படு முரிச்சொல், (உம்) நுண்மை. குறிப்புவினை - பொருளிடங் காலஞ் சினை குணந்தொழிலடி யாகத் தோற்றிக் கருத்தாவை மாத்திரம் விளக்குஞ்சொல். குறிப்புவினைப்பகுபதம் - பொரு ளாதியாறுங் காரணமாகக் கருத்தா வொன்றையே விளக்கிநிற்பது. குறிப்பெஞ்சணி - ஓரணி, அஃது குறிப்பெச்சம். குறிப்போலை - காரியங்குறித்திருக்கு மோலை, சாதகவோலை. குறியர் - குள்ளர். குறியானவன் - நிதார்த்தன். குறியிடம் - அடையாளம், அடை யாளமுமிடமும். குறியிடையீடு - குறியிடத் தொழு காது தடைப்படல். குறியீடு - நாமதாரணை. குறில் - குற்றெழுத்து, நீட்டற்றது. குறுகலர் - பகைவர். குறுகல் - அணுகல், குறைதல். குறுகித்தல் - கோபமுதலியவற்றாற் பார்க்குங் குறும்பார்வை. குறுகுதல் - கிட்டுதல், குறுத்தல், குறைதல், சுருங்குதல். குறுகுத்தாளி - சிறுதாளி. குறுகுறுத்தல் - ஒலிக்குறிப்பு. குறுகுறுப்பு - குறட்டை, அஃது, யாக்கைக் குற்றமைந்தினொன்று, சினக்குறிப்பு. குறுகுறுப்பை - குறட்டை. குறுகுறெனல் - ஒலிக்குறிப்பு. குறுக்கடி - குறுக்குநியாயம், குறுக்கு வழி. குறுக்கம் - குறுகினது, கௌரி பாஷாணம், சுருக்கம். குறுக்கல் - குறைத்தல். குறுக்கல்விகாரம் - நெடில்குறிலாதல். குறுக்களவு - நடுஅளவு. குறுக்கிடுதல் - இடையேசெல்லல், கிட்டுதல். குறுக்கு - ஊடு, குறுக்கென்னேவல், குறுமை, சுருக்கம், விட்டத்தளவு, தடை. குறுக்குக்கட்டு - மார்க்கட்டு. குறுக்குக்கேள்வி - மடிப்பான கேள்வி. குறுக்குச்சட்டம் - குறுக்குவளை. குறுக்குச்சார் - குறுஞ்சார். குறுக்குச்சூத்திரம் - சுருக்க மாயறியுஞ் சூத்திரம். குறுக்குதல் - குறுகப்பண்ணுதல். குறுக்குநோய் - சந்துப்பிடிப்பு. குறுக்குப்பாடு - குறுக்கு, விட்ட அளவு. குறுக்குப்பாதை - குறுக்குவழி. குறுக்குப்புத்தி - எண்ணிக்கையற்ற புத்தி. குறுக்குமறுக்கு - இடைக்கிடை, தாறுமாறு. குறுக்குவிட்டம் - கைவிட்டம். குறுக்குவிழுதல் - ஊடுவிழுதல். குறுக்குவெட்டி - குறுக்குவழி. குறுக்கையர் - ஒரு வேளாளர். குறுங்கணக்கு - தனியட்சரங்கள். குறுங்கண் - பலகணி. குறுங்கலி - ஒரு பிரபந்தம், பாலை யாழ்த்திறம், மருதப்புறம், அஃது தலை மகன் முன்னின்றுமாதர் பழிகூறல். குறுங்காசு - ஒரு காசு. குறுங்காடு - சிறுகாடு. குறுங்கிண்ணி - வெண்கலம். குறுங்குடியாள் - தாளகம். குறுங்கோல் - இரண்டுமுளத்தடி. குறுஞ்சாலி - இளமரம். குறுஞ்சிரிப்பு - புன்னகை. குறுஞ்சீர்வண்ணம் - குற்றெழுத்துப் பயின்றுவருவது. குறுஞ்சுனை - சிறுபொய்கை. குறுணல் - குறுணி. குறுணி - ஓரளவு, சிறியது. குறுணை - குறுநோய். குறுதல் - பறித்தல். குறுத்தல் - குறுகுதல். குறுநகை - புன்சிரிப்பு. குறுநடை - தளர்நடை. குறுநிலமன்னர் - குறும்பர். குறுநெளிப்பு - ஆங்காரம், இறுமாப் பான அசைப்பு. குறுநொய் - குறுணல். குறுந்தடி - குதிரை செலுத்துங்கருவி யினொன்று, குறுத்ததடி, பறை முதலியவடிக்குந்தடி. குறுந்தறி - குறுந்தடி, போதிகை. குறுந்துணி - சீலைத்துணி. குறுந்துளசி - சிறுதுளசி. குறுந்தோட்டி - காஞ்சொறி, சிற்ற மட்டி, தோட்டி. குறுப்பி - பொன்னிமிளை. குறுமணல் - இரசதமணல். குறுமாக்கள் - சிறுவர், பிள்ளைகள். குறுமீ - ஒரு மீன். குறுமுட்டு - கிட்டுமானம், முட்டுத் தனம். குறுமுழி - குறுவிழி, வெறித்த பார்வை. குறுமுனி - அகத்தியன். குறுமை - சிறுமை, சுருக்கம், பாவம், அழகு. குறும்பச்சி - இடைச்சி. குறும்பயிர் - இளம்பயிர். குறும்பர் - குறுநிலமன்னர், துர்ச்சனர். குறும்பன் - துர்ச்சனன். குறும்பாடு - பள்ளையாடு. குறும்பாட்டம் - குறும்புத்தனம். குறும்பார்வை - குறுகித்தபார்வை, கொடியபார்வை. குறும்பி - காதழுக்கு. குறும்பிடி - உடைவாள், முட்டுப்பிடி. குறும்பிடையர் - பள்ளை யாட்டிடை யர். குறிம்பிவாங்கி - காதழுக்கு வாருங் கருவி. குறும்பு - அரணிருக்கை, சிறுமை, பாலைநிலத்தூர், பொல்லாங்கு, போர். குறும்புத்தனம் - துட்டத்தனம். குறும்புவன்னிமை - ஒரு பட்சாதி. குறும்புள், குறும்பூள் - காடை. குறும்பொறை - காடு, குறிஞ்சி நிலத் தூர், சிறுமலை, மலை. குறும்பொறைநாடன - முல்லைநிலத் தலைவன். குறுவாழ்க்கை - அற்பவாழ்பு, வறுமை. குறுவிசாரம் - கவலை. குறுவித்தல் - குறுகித்தல். குறுவித்துப்பார்த்தல் - குரூரமாயுற்றுப் பார்த்தல். குறுவிலை - ஒறுப்பு. குறுவிழி-கோபத்தாற் பயத்தாலுற்றுப் பார்த்தல். குறுவிழிக்கொள்ளுதல், குறுவிழி விழித்தல் - வெறித்துப் பார்த்தல். குறுவேர்வை - அச்சத்தால்வேர்த்தல், சிறுவேரவை. குறுனாத்தகடு, குறுனாப்பட்டை - மலாம்பூசினதகடு. குறூரம் - குரூரம். குறை - அரசிறை, குறைந்திருப்பது, குறையென்னேவல், குற்றம், சேடம், தரித்திரம், தவறு, நிறை வற்றது, மன்றாட்டு, மிச்சம், வெறுப்பு. குறைகோள் - இரத்தல். குறைக்கண்ணுக்குறங்கல் - அரைக் கண்ணுக்கு நித்திரை செய்தல். குறைச்சல் - ஒறுப்பு, தாழ்ச்சி. குறைஞ்சால் - உழுதகுறை. குறைதல் - கெடுதல், சிறுகல். குறைத்தலைப்பிணம் - கவந்தம். குறைத்தல் - குறுகுதல், சங்கரித்தல், சுருக்குதல், வெட்டுதல். குறைநிறை - ஏற்றத்தாழ்ச்சி, குறைச் சல் நிறைச்சல். குறைபாடு - ஈனம், குறை, குற்றத்தி னால்வந்தபாடு. குறைப்பிராணன் - குற்றுயிர். குறைப்பு - குறைத்தல். குறையாற்றல் - குறைதீர்த்தல். குறையிரத்தல் - பின்சென்று கேட்டல். குறையொட்டி - உறையொட்டி. குறையொற்றுமையுருவகம் - உருவகத் திலோர் குறைதோன்றச் சொல் வது, (உம்) நெற்றிவிழியில்லாச் சங்கரன். குறைவயிறு - குறைப்பசி. குறைவு - ஈனம், வறுமை. குறோட்டை - காக்கணவன், பீச்சு விளாத்தி. குற்குலு - குங்கிலியம். குற்சலை - அவுரி. குற்சனம் - இகழ்ச்சி. குற்சிதம் - அசுத்தம், அருவருப்பு. குற்சித்தல் - அருவருத்தல். குற்சிப்பு - அருவருப்பு. குற்சை - இகழ்ச்சி, சுபாபக்குண மொன்பதினொன்று, அஃது, அரு வருப்பு. குற்பகம் - நாணல். குற்றப்பாடு - குறை, குற்றம், தவறு, மானம். குற்றமில்லான் - அருகன், கடவுள், மாசிலான். குற்றம் - அபராதம், குறை, தவறு, நோய், பழுது, பிழை. குற்றம்பிடித்தல் - பிழைகாட்டல். குற்றல் - குற்றுதல், நெரித்தல், பறித்தல். குற்றவாளி - குற்றமுள்ளோன். குற்றிசை - குறுஞ்சந்தம். குற்றி - தறி. குற்றியலிகரம் - மாத்திரைகுறுகின லிகரம். குற்றியலுகரம் - மாத்திரைகுறுகினவு கரம். குற்றுடைவாள் - சிறுஉடைவாள். குற்றுதல் - குற்றல். குற்றுயிர் - குறைப்பிராணன், குற்று யிரெழுத்து. குற்றுவாய் - ஓர்மீன், கடிவாய். குற்றெழுத்து - ஓர்மாத்திரையாயுச் சரிக்கப்படுமெழுத்து. குற்றேவல் - அடித்தொண்டு. குற்றொற்று - குற்றுயிர்க்கீழொற்று. குனட்டம் - அதிவிடையம். குனட்டு - துடுக்கு. குனாபி - சுழிக்காற்று. குனி - குனியென்னேவல், வில். குனிதல் - இரங்குதல், தலை தாழ்த் தல், துக்கப்படுதல் வளைதல். குனித்தல் - ஆடல், வளைத்தல். குனிப்பு - ஆடல், கூத்தின் விகற்பம், வளைப்பு. குனிவு - வளைவு. குனுக்கம் - குணுக்கம். குன்மச்சூலை - ஒரு நோய். குன்மப்புரட்டு - ஒரு நோய். குன்மம் - ஒரு நோய், குலுமம், இஃது சேனாமுகம் மூன்றுகொண்டது, தூறு. குன்மவலி - ஒரு நோய். குன்மவாயு - ஒரு நோய். குன்றக்கூறல் - நூல்வழுவி னொன்று. குன்றத்துச்சித்தி - தாலம் பாஷாணம். குன்றம் - மலை. குன்றல் - குலைதல், குறைதல், கெடு தல். குன்றவர், குன்றவாணர் - குறிஞ்சி நிலமாக்கள், வேடர். குன்றவில்லி - சிவன், துரிசு. குன்றாவாடை - வடகீழ்க்காற்று. குன்றாவாழ்வு - குறையாத செல்வம். குன்றி - ஒரு கொடி, மனோசிலை. குன்றிநிறக்கண்ணன் - காட்டுப் பன்றி. குன்றிநிறமணி - குருவிந்தப்பதும ராகம். குன்றிமணி - குன்றிக்கொட்டை. குன்று - குன்றென்னேவல், சதய நாள், சிறுமலை, மலை. குன்று கூப்பிடுதல் - எதிரொலியெழக் கூப்பிடுதல். குன்றுதல் - குறைதல், கெடுதல், மெலிதல், வாடல். குன்றுவாடை - வடமேல்காற்று. குன்றெறிந்தோன் - குமரன். கூ கூ - ஓரெழுத்து, கூவென்னேவல், பூமி, மலங்கழித்தல். கூகமானம் - மறைவு. கூகம் - ஆந்தை, கூகை. கூகனகம் - அசப்பியவார்த்தை. கூகனம் - மாய்மாலம். கூகாகம் - கமுகு. கூகாரி - காகம். கூகை - ஒரு பருந்து, கோட்டான். கூகைக்கட்டு - பொன்னுக்குவீங்கி. கூகைநீறு - ஒரு மருந்து. கூக்குரல் - கூப்பிடுமொலி, முறையிடு. கூசம் - முலை. கூசல் - அச்சக்குறிப்பு, அச்சம், கூக் குரல், கூசுதல், நாணுதல். கூசனம் - உதாசினம், மறைத்த சொல். கூசி, கூசிகை - எழுதுகோல். கூசிதம் - புட்குரல். கூசுதல் - கண்பன் முதலிய கூசுதல், நாணுதல், பயப்படல். கூகூ - அச்சப்பொருடரு மோரி டைச்சொல். கூச்சக்காரன் - சங்கோசமுள்ளவன். கூச்சத்தம் - கூக்குரல். கூச்சந்தெளிதல் - சங்கோசந்தீர்தல். கூச்சம் - அச்சம், கண்பன் முதலிய வற்றின் கூச்சம், நாணம், வெட்கம். கூச்சல் - இரைச்சல், கூக்குரல். கூச்சி - சவரிலோத்திரம். கூச்சிரம் - கடம்பு. கூச்சு - கூர்ச்சு. கூட - ஒருங்கு, சேர, தானும் (உம்) எனக்குக்கூடப்பயம். கூடகம் - கொழு, வஞ்சனை. கூடகாரன், கூடகாரன் - கள்வன், பொய்யன், வஞ்சன். கூடகிருதன் - சிவன். கூடசதுக்கம் - ஒரு பிரபந்தம், மிறைக்கவியினொன்று, அஃது ஈற்றடி ஏனைமூன்றடி யுள்ளுஞ் சொற்புகாவெழுத்துக் கரந்து நிற்கப்பாடுவது. கூடசன் - சோரபுத்திரன். கூடசாசனம் - கள்ளத்தீரவை. கூடசாட்சி - பொய்ச்சாட்சி. கூடசாரன், கூடசாரி - அந்தரங்க தூதன். கூடசாலம் - ஒரு நரகு. கூடசான்மலி - பட்டுநூல்மரம். கூடசுவணம் - கலப்புப்பொன். கூடணை - மயிற்றோகைக்கண். கூடத்தர் - ஆன்மாகத்தாவுடன யிக்கப்படுதல். கூடத்தன் - நிருவிகாரசைதந்நியன். கூடஸதன் - முதன்மையானவன். கூடபதம் - பாம்பு, புத்தி. கூடபாகலம் - சூலை, யானைநோய். கூடபாஷிதம் - அந்தரங்கசம் பாஷணை. கூடபாதரம் - பாம்பு. கூடபுருஷர் - ஒற்றர், சோரநாயகர். கூடமார்க்கம் - கள்ளவழி. கூடமைதுனம் - காகம். கூடம் - அறை, இரகசியம், உறை யுறை கருவி, கலப்பை, கொழு, தானியக்குவியல், கொல்லன் சம் மட்டி, தீங்கு, புதைத்தல், பொய், மலையினுச்சி, மறைவு வஞ்சகம், வீடு, அண்டம், இந்திர சாலம், கூட்டம், யானைப்பந்தி. கூடம்பில் - சுரை. கூடயந்திரம் - பொறி, வலை. கூடலர் - பகைவர். கூடல் - அடுத்தல், இயலல், ஓர் விளை யாட்டு, கழிமுகம், கூடுதல், சேர் தல், புணர்தல், மதுரை, மரமுதலிய வற்றின் சொறிவு. கூடல்வளைத்தல் - மகளிர் விளை யாட்டினொன்று. கூடல்வாய் - ஒடுங்கியகால்வாய். கூடவற்சை - தவளை. கூடற்குறி -தலைமகன் பிரிந்துளிதலை விபார்க்குங்குறி. கூடற்கோ - பாண்டியன். கூடாகாரம் - மேல்வீடு. கூடாக்கு - புகையிலை. கூடாங்கம் - ஆமை. கூடாதகூட்டம் - தீயோர்நட்பு. கூடாதது - இயலாதது, தகாதது, பொருந்தாதது. கூடாமை - இயலாமை, பொருந் தாமை. கூடாமையணி - ஓரலங்காரம், அஃது ஒரு காரியம் பிறத்தலையருமை யுடையதாய்ச் சொல்லுதல். கூடாரக்கட்டில் - மூடுகட்டில். கூடாரப்பல்லக்கு - மூடுசிவிகை. கூடாரமடித்தல் - கூடாரம்போடுதல். கூடாரம் - படாம்வீடு. கூடாரவண்டில் - மேல்மூடிய வண்டில். கூடார் - பகைவர். கூடார்த்தபாஷிதம் - கட்டுக்கதை. கூடாவியற்கைவிலக்கு - ஓரலங் காரம், அஃது கூடாததனைக் கூடுவதாகக் கூறிவிலக்கல், (உம்) சீதசந்தனந் தீக்காலும். கூடாவுவமை - ஒருபொருட்கு இயல்பாயில்லாதவற்றையுள்ள தாகச் சொல்லியதனை ஒன்றற் குவமையாக்கி யுரைப்பது, (உம்) காமுகர்க்குத் தண்மதியந்தீக் கால்வபோலும். கூடாவொழுக்கம் - கள்ளவேடம். கூடியது - இயன்றது, ஏற்றது, கிடைத் தது, சேர்ந்தது. கூடிவி - தசைதின்போன். கூடு - அடைப்பு, உடம்பு, கூடென் னேவல், பறவைக்கூடு. கூடுங்கழுந்தும் - துளையுங் கழுந்தும். கூடுதல் - இயலுதல், ஏற்றிருத்தல், கிடைத்தல், சேருதல், புணர்தல். கூடுமியற்கைவிலக்கு - ஓரலங்காரம், அஃது கூடுவதனைக்கூடுவதாகக் கூறிவிலக்குவது, (உம்) கைவளை சோர்ந்தாவிகரைந்துகுவர் மெய் வெதும்ப பூத்தகையுஞ் செங் காந்தள் பொங்கொலி நீர் ஞாலத்துத் தீத்தகையார்க்கீதே செயல். கூடுவிட்டுக்கூடுபாய்தல் - ஓருடம்பை விட்டானமா மற்றோருடம் பிற்புகுதல். கூடுவிழுதல் - ஆணிச்சீவிழுதல், சாதல், வியாதியின் வேர்கழலுதல். கூடுவைத்தல் - சிலந்தியினாணிச் சிதல் காய்ந்து சவ்வுபற்றல், பட்சிகள் கூடுகட்டுதல், வியாதி வேர்வைத்துப் பலத்தல். கூடை - கூத்தின் விகற்பம், கோரியை, பூக்கூடை முதலியன. கூடையன் - பருத்தவன். கூடோற்பன்னன் - சோரபுத்திரன். கூட்டம் - சங்கம், திரள், தொகுதி, பிண்ணாக்கு, புணர்ச்சி, போர், மேவினர். கூஷடரம் - வண்டில். கூட்டரவு - கூட்டம். கூட்டரிசி - கறிக்கரைக்குமரிசி. கூட்டவணி - ஓரலங்காரம், அஃது பகையில்லாமை யானொரு காலத்துக் கூடத்தக்க பொரு ளுக்குக் கூட்டத்தைச் சொல்லு தல், பலகாரணங்கள் கூடுதலா லோர்காரியம் பிறத்தலுமாம். கூட்டற்றவன் - கூடாதவன். கூட்டாகுழப்பம் - தாறுமாறு. கூட்டாளி - கூடிநடக்கிறவன், தோழன், பங்காளி. கூட்டிமுடித்தல் - தெய்வங்கூட்டி நிறைவேற்றல். கூட்டு - கறிக்கூட்டு, கூட்டென் னேவல், சேர்மானம். கூட்டுக்கணக்கு - எண்கூட்டுதல். கூட்டுக்கறி - குழம்புக்கறி. கூட்டுக்கால் - இருகாலையுமோரடி யில் மிதித்துநிற்றல். கூட்டுணல் - கூட்டியுண்ணல். கூட்டுதல் - அதிகப்படுத்தல், சேர்த் தல், சேர்த்துண்டு பண்ணல், பலவினத்தை யொன்றாக்கல். கூட்டுத்தட்டு - ஒரு பாத்திரம். கூட்டுத்தொழில் - கூடித் தொழி னடத்துதல், வசியவித்தை. கூட்டுப்பல்லக்கு - ஒரு விதபல்லக்கு. கூட்டுமூட்டு - ஒன்றுபடுத்தல், கோள் சேர்மானமாக்கல். கூட்டுமொழி - கூட்டுச்சொல். கூட்டுவத்தகம் - கூட்டியாபாரம். கூட்டுறவு - இணைந்தஉறவு. கூட்டெழுத்து - தொடரெழுத்து, பல வெழுத்தொலியொன்றாயிருப்பது. கூஷமாணடம், கூஸமாண்டம் - நீற்றுப் பூசணி. கூணி - கூனி. கூணிகை - வீணையினோருறுப்பு. கூண்டு - கூடு, பறவைக்கூடு. கூண்டுதல் - கூடுதல். கூண்மாண்டம் - நீற்றுப்பூசணி. கூதம் - குதம். கூதரன் - தூரஸதிரீமுயங்கிப்பெற்ற பிள்ளை. கூதலோடுதல் - குளிர்தல். கூதல் - குளிர். கூதல்விறைத்தல் - கூதலோடுதல். கூதளம் - கூதாளிச்செடி, தூதுளை, வெள்ளரி. கூதறை - கிழியல், கூட்டற்றது. கூதற்காய்தல் - குளிர்காய்தல். கூதனம் - மறைத்தசொல். கூதாரி - வெள்ளரி. கூதாளம் - கூதளம். கூதாளி - ஒரு செடி. கூதி - பெண்குறி. கூதிர்-ஐப்பசிகார்த்திகையின் பருவம், காற்று, கூதல், பனிக்காற்று. கூதிர்காலம் - குளிர்காலம். கூதிர்காலவுரிமை - கூதிர்க்காற்று வீசலும் குருகு, அன்னங், கொக்கு சகோரஞ், சங்கு, நண்டு, நத்தை, இவை மகிழ்தலும், நீர்தெளிதலும் மீனினஞ் செனித்தலும் மேகஞ் சூல் கொள்ளலும் பாரிசாதஞ், சிறுசண்பகம், செம்பரத்தை, சந்தனம் நாணலிவை மலர்தலும் பலபறவை விலங்குமக்கள் வருந் தலுமாகும். கூதிர்க்காற்று - குளிர்காற்று. கூதிர்ப்பருவம் - குளிர்காலம். கூதை - காற்று, குளிர்காற்று. கூத்தரிசி - குத்திவிற்குமரிசி. கூத்தர் - நாடகர். கூத்தன் - உயிர்,சிவன், துரிசு, நாடகன். கூத்தன்குதம்பை - மூக்கொற்றிப் பூண்டு. கூத்தாடி - கூத்தாடுவான். கூத்தாடுதல் - தோரத்தமாடுதல், நடனம்பண்ணுதல். கூத்தாட்டு - தோரத்தம், நடனம். கூத்தி, கூத்திச்சி - நாடகக்கணிகை, வைப்பாட்டி. கூத்து - ஆடம்பரம், நடனம். கூத்துக்களரி - நடனசாலை. கூத்துப்பாட்டு - நாடகக்கவி. கூத்துவிடுதல் - ஏவிவிடுதல், கூத்தாடு வோனைக்களரியில் விடல். கூந்தலறுகு - ஓரறுகு. கூந்தலாற்றுதல் - மயிராற்றுதல். கூந்தல் - கமுகோலை, குதிரைமயிர், கூந்ததற்கமுகு, கூந்தற்பனை, கூந்தற்றெங்கு, பனையோலை, பெண்மயிர், மயிர், மயிற்றோகை, யானைக்கழுத்தடிமயிர். கூந்தற்கமுகு - ஒரு கமுகு. கூந்தற்பனை - ஒரு மரம். கூந்தற்பாசி - ஒரு நீர்ப்பூடு. கூந்தாலம், கூந்தால் - கொந்தாலி. கூபகம் - எண்ணைத்துருத்தி, கிணறு, சிந்றூற்றுக்குழி, பாடை, பாய் மரம். கூபம் - கிணறு. கூபரங்கம் - உரோமப்பொடிப்பு. கூபரம் - முழங்கை. கூபாரம் - கடல். கூப்பரம் - முழங்கை. கூப்பல் - கூப்புதல். கூப்பாடு - கூப்பீடு. கூப்பிடல், கூப்பிடுதல் - அழைத்தல். கூப்பீடு - குரோசம், கூப்பிடென் னெவல். கூப்பீடுதூரம் - கூப்பிட்டசத்தங் கேட்குமெல்லை. கூப்புதல் - குவியச்செய்தல், சுருக்குதல். கூமம் - நீர்நிலை. கூமா - ஒரு மரம். கூம்பல் - ஒடுங்கல், குமிழமரம், குவிதல். கூம்பு - கூம்பென்னேவல், தேர்க் கொடிஞ்சி, பாய்மரம். கூம்புதல் - குவிதல், குறாவுதல், சுருங்குதல். கூரணம் - கொடுமை, கோடக சாலை, பாகல், பொறாமை, உத்தியோகம். கூரம் - முயற்சி, கொடுமை, பாகல், பொறாமை. கூரல் - ஒரு மீன், புள்ளிறகு, பெண் மயிர். கூரன் - கூர்நெல், நாய். கூராம்பாய்ச்சி, கூராம்பிளாச்சு - சலா கைப்பாரை. கூரான் - ஒரு பூடு, குல்லான். கூரியது - கூர்மையுள்ளது. கூரியம் - கூர்மை. கூரியன் - கூர்மையுள்ளவன். கூரிலவணம் - அமுரியுப்பு. கூரை - சிற்றில், வீட்டின் மேற்புறம். கூரைதட்டல் - ஆண்பிள்ளைப்பிறப் புக்குச்செய்யுமோர் மகிழ்ச்சிக் குறி. கூர் - இலைக்காம்பு, கூரென் னேவல், கூர்மை, நுனி, மிகுதி. கூர்கேவு - வெண்கடுகு. கூர்க்கதிர் - ஒரு கருவி. கூர்க்கறுப்பன் - ஒரு நெல். கூர்ங்கோடு - கூரியகொம்பு. கூர்ச்சகம் - தந்ததாவனக்குச்சு. கூர்ச்சம் - எத்து, தருப்பை, தலை, தாடி, புருவமத்தி, மாய்மாலம், வயிரிப்பு, வீண்புகழ்ச்சி. கூர்ச்சசேகரம் - தெங்கு. கூர்ச்சரம் - ஒரு தேசம். கூர்ச்சரி - ஓரிராகம். கூர்ச்சிகை - ஊசி, எழுதுகோல், பூவரும்பு. கூர்ச்சு - சுருள்ளதடி. கூர்தல் - கூருதல், நுணுகுதல், மிகுதல், ஆராய்தல். கூர்த்தம் - விளையாட்டு. கூர்த்தல் - உவர்த்தல், மிகுத்தல். கூர்த்தனம் - பொழுது போக்கு. கூர்த்திகை - ஆயுதப்பொது. கூர்ந்தபுத்தி - கூரியவிவேகம். கூர்ப்பம் - புருவமத்தி. கூர்ப்பரம் - முழங்கை, முழந்தாள். கூர்ப்பாசகம் - முலைக்கச்சு. கூர்ப்பு - உள்ளதுசிறத்தல், உறைப்பு, கூர்மை, மிகுதி. கூர்மபிரிட்டகம், கூர்மபிரிட்டம் - ஆமை யோடு. கூர்மம் - ஆமை, திருமாலவ தாரத் தொன்று, பதினெண் புராணத் தொன்று. கூர்மராசன் - ஆதிகூர்மம். கூர்மன் - உரோமம், புழகிப்பித்து இமைப்பிக்கும் வாயு. கூர்மாண்டர் - ஒரு ருத்திரர். கூர்மை - அறிவு, கல்லுப்பு, கூர், நுண்மை, நுனி. கூர்மைக்கரிவாள் - சவுக்காரம். கூர்மைபார்த்தல் - நுண்மை பார்த்தல். கூலகம் - கறையான் புற்று, குவியல். கூலம் - அதிட்டம், கடற்கரை, கடை வீதி, கரை, காராமணி, குவியல், சிறுவரம்பு, நீர்நிலை, படையணி, பலபண்டம், பாகல், மந்திமரை, முசு, விலங்கின்வால், பசு. கூலவதி - யாறு. கூலி - வேலைகண்டு கொடுப்பது. கூலிக்காரன் - வேலையாள். கூலிப்பாடு - கூலிப்பிழைப்பு. கூவநூல் - கீழ்நீர்க்குறியறிசாத்திரம். கூவம் - கிணறு, கூகை நீறு. கூவரம் - ஏர்க்கால். கூவரன் - கூனன். கூவரி - பண்டி. கூவலர் - கூவநூல்வல்லோர். கூவல் - அழைத்தல், கிணறு, சொல் லுதல், பள்ளம். கூவியர் - மடையர். கூவிரம் - தேரிடக்கியம், தேர், தேர்க் கொடிஞ்சி, வில்வமரம். கூவிரி - தேர். கூவிளங்கனி - நேர்நிரை நிரையசைச் சீர்க்கு வாய்பாடு. கூவிளங்காய் - நேர்நிரைநேரசைச் சீர்க்குவாய்பாடு. கூவிளநறுநிழல் - நேர்நிரைநிரை நிரையசைச் சீர்க்குவாய்பாடு. கூவிளநறும்பூ - நேர்நிரைநிரை நேர சைச்சீர்க்கு வாய்பாடு. கூவிளந்தண்ணிழல் - நேர்நிரைநேர் நிரையசைச்சீர்க்குவாய்பாடு. கூவிளந்தண்பூ - நேர்நிரை நேர் நேரசைச் சீர்க்குவாய்பாடு. கூவிளம் - கோளகபாஷாணம், நேர் நிரையசைச் சீர்க்குவாய்பாடு, வில்வம். கூவிளி - அழைப்பு. கூவிளித்தல் - கூப்பிடல். கூவிளை - கோளகபாஷாணம், வில்வமரம். கூவுதல் - அழைத்தல், சேவல் முதலிய கூவுதல். கூவுவான் - சேவல். கூவெனல் - அழைத்தல், ஆரம்பித்தல், கூவென்குதல். கூவை - கூகை. கூழங்கை - குறட்கை, குறைந்தகை. கூழன் - ஒரு பலா. கூழா - ஒரு மரம். கூழாங்கல் - ஒரு கல். கூழாமட்டி - மந்தையன். கூழாமணி, கூழாம்பாணி - கரையல். கூழான் - கண்டகிக்கல். கூழுக்குப்பாடி - அங்கிடுதத்தி. கூழை - இறகு, கடையின்மை, கலி யுறுப்பினொன்று, சேறு, நடு, நீளங்குறைந்தது, படைவகுப்பு, பாம்பு, பிற்படை, பெண்மயிர், பொன், மந்தம், மயிற்றோகை. கூழைக்கடா - ஒரு கொக்கு. கூழைத்தொடை - செய்யுளினோ ருறுப்பு. கூழைமுரண் - கடைச்சீரொழிந்த மற்றெல்லாச்சீரக் கண்ணும் முரண் வரத் தொடுப்பது. கூழைமோனை - இறுதிச்சீரக் கணின்றியொழிந்த சீரக்கண் மோனைவரத் தொடுப்பது. கூழையளபெடை - கடைச் சொல் லொழிந்த மற்றெல்லா வற்றின் கண்ணுமளபெடை வரத்தொடுப் பது. கூழையியைபு - முதற்சீரொழிந்த மற்றைச் சீரக்கணியைபுவரத் தொடுப்பது. கூழையெதுகை - கடைச் சீரொழிந்த மற்றெல்லாச்சீரக் கண்ணு மெது கை வரத்தொடுப்பது. கூழ் - உணவு, கஷாயம், சோறு, பயிர், பொன், நறுவிலி. கூழ்முட்டை - கருக்கெட்டமுட்டை. கூழ்முன்ணை - ஓர்கீரை. கூழ்வரகு - கேழ்வரகு. கூளம் - கஞ்சல். கூளி - உறவு, எருது, குறள், குற்றம், தொகுதி, பூதம், பெருங்கழுகு, பேய், பொலியெருது, வலி. கூளியர் - படைவீரர், வேடர். கூறல் - கூறுதல். கூறியது கூறல் - நூற்குற்றம்பத்தி னொன்று. கூறியான் - சிவியார்தலைவன். கூறு - காரணம், கூறென்னேவல், தன்மை, பங்கு, பாதி, வசை. கூறுகொள்ளுதல் - அமர்த்துதல். கூறுதல் - சொல்லுதல், விளக்கிச் சொல்லுதல், விற்றல். கூறுபாடு - கூறு. கூறை - சீலை, மணவாட்டியுடுக் கும்பு துப்புடைவை. கூறைப்பாய் - தோணிப்பாய். கூற்சரம் - தேசமன் பத்தாறினொன்று. கூற்றம் - சொல், நமன். கூற்றன் - நமன். கூற்று - காலன், சொல், நமன். கூற்றுதைத்தோன் - சிவன். கூற்றுவன் - நமன். கூற்றோலை - பங்குபிரித்தெழுதின வோலை. கூனல் - கோணல், சங்கு, நத்தை, பிறை, வளைதல், வளைவு. கூனன் - ஆமை, கூனுள்ளோன், சங்குநத்தை. கூனி - கூனுள்ளோன், சிற்றிறால், மந்தரை, வசவி, குசினி, கோணியது. கூனிக்குயம், கூனிரும்பு - அரிவாள். கூனுதல் - வளைதல். கூனை -கருப்பஞ்சாறடுகூன், கொடிப் பட்டை, வேள்விக் குண்டம். கூன் - ஆந்தை, உறுப்புக்குறை யெட்டினொன்று, கூனென்னே வல், நத்தை, வளைவு, வெண்பா முதலிய செய்யுட்களின் முதலடி யினொரோ விடத்துப் பொருள் படத்தனித்து நிற்பது. கூன்கிடை - யாக்கைக் குற்றமைந்தி னொன்று, அஃது வளைந்து கொண்டு கிடத்தல். கெ கெக்கட்டம் - மிகச்சிரித்தல். கெக்கரித்தல் - கடினிப்பு. கெக்கவி - மகிழ்வு. கெக்கலித்தல் - மகிழ்தல். கெக்களம் - கெக்கட்டம். கெக்களித்தல் - நெளிதல். கெக்களிப்பு - நெளிவு. கெசகன்னம் - யானைசெவியை யசைப்பபோற் காதையசைக்கும் வித்தை. கெசகன்னி - வெருகு. கெசாசனை - அரசு. கெசாசைநா - கையாந்தகரை. கெச்சம் - சிறுசதங்கை. கெச்சிதநடை - உல்லாசநடை. கெச்சிதம் - கெற்சிதம். கெச்சுக்கெச்செனல் - ஒலிக்குறிப்பு. கெச்சை - சிறுசதங்கை. கெச்சைநடை, கெச்சைமிதி - உச்சாக மான நடை. கெஞ்சுதல் - மன்றாடுதல். கெடலணங்கு - மூதேவி. கெடவரல் - மகளிர்விளையாட்டு. கெடாரம் - கடாரம், கடியாரம். கெடி - ஊர், கீர்த்தி, கெடியென் னேவல், பயம். கெடிஸதலம் - அதிகார விசாரணை கதித்தவிடம், இராசதானி. கெடித்தல் - பயப்படல். கெடிமண்டுதல் - அஞ்சுதல். கெடியன் - அஞ்சப்பண்ணுவோன், அஞ்சாதவன், சமர்த்தன், சுறுக் கன், வீரன். கெடிலம் - ஆழமான ஓடை, குகை. கெடு - கெடுவென்னேவல், கேடு, தவணை, தறுவாய். கெடுகுடி - கெடுதலையான சமுசாரம். கெடுதல்விகாரம் - எழுத்துக்கெடும் விகாரம். கெடுதலை - அழிவு, கேடு. கெடுதல் - சாதல், சாய்தல், பதனழி தல், பழுதாதல். கெடுதி - அழிவு, கெட்டுப்போன பொருள், கேடு, நட்டம். கெடுத்தல் - அழித்தல், கெடச் செய்தல். கெடுநினைவு - கெடுபுத்தி. கெடுபுத்தி - கெடத்தக்கபுத்தி. கெடுப்பினை - வங்கமணல். கெடுமதி - கேடானபுத்தி. கெடும்பு - அருந்தல், கெடுதலை. கெடுவைத்தல் - கெடுச்சொல்லுதல். கெட்டகேடு - அதிககேடு. கெட்டம் - தாடி. கெட்டாகெட்டி - மகாகெட்டி. கெட்டி - உச்சிதம், உறுதி, கெட்டி யென்னேவல், நேற்றி. கெட்டிக்காரன் - சமர்த்தன். கெட்டித்தல் - கெட்டிபண்ணுதல். கெட்டித்தனம் - சமர்த்து, திரம், திராணி. கெட்டிபண்ணுதல் - பலப்படுத்தல். கெட்டிபத்திரம் - சாக்கிரதையான விசாரணை. கெட்டுவிடுதல், கெட்டுவைத்தல் - கவர்விடுதல். கெணம் - சமூலம். கெண்டம் - கண்டம். கெண்டி - கெண்டிகை, கெண்டி யென்னேவல், தறித்தல், தறிவாய். கெண்டிகை - கமண்டலம். கெண்டித்தல் - கண்டித்தல். கெண்டு - கெண்டை. கெண்டூரம் - ஒரு மருந்து. கெண்டை - சருகைத்தலைப்பு, சேல், முழந்தாளின் கீழ்க்கால். கெண்டைக்கால் - முழந்தாளின் கீழ். கெண்டைப்பீலி - மாதர்காலணியி னொன்று. கெண்டையேறல், கெண்டைவாதம் - ஓர்விதவாயு நோய். கெதம் - கதம். கெதி - கதி. கெத்திடல், கெத்திடுதல் - சில்ல பொல்லமாய் வெட்டல். கெத்து - பலகொத்து. கெத்துக்கெத்தெனல் - பலகத்துக் கத்துதல். கெத்துதல் - கண்டம் போடுதல். கெத்துவம் - பக்கல், போதல். கெந்தகபூமி - காங்கையான பூமி. கெந்தகம் - கந்தகம், கேரகண்ட பாஷாணம். கெந்தபந்தம் - கெவுரிபாஷாணம். கெந்தம் - கந்தம். கெந்தி - கந்தகம், பொன்னிமிளை. கெந்தியுப்பு - கெந்தலவணம். கெந்துதல் - புழுமுதலிய நெறிதல். கெபத்தம் - கிரணம். கெபி - குகை, குழி, வளை. கெப்பிதம் - நிந்தை. கெமனம் - கமனம். கெமிளித்தல் - கெம்பளித்தல். கெமிளிப்பு - சந்தோஷம். கெம்பரை - கூடை, நெற்கூடை. கெம்பளித்தல் - சந்தோஷித்தல். கெம்பளிப்பு - ஆடம்பரம், சந்தோஷம். கெம்பீரம் - ஆழம், மேன்மை, வீரம். கெம்பீரித்தல் - வீரங்காட்டுதல். கெம்பு - ஓரிரத்தினக்கல், கெம்பென் னேவல். கெம்புதல் - கிளர்தல், கொந்தளித்தல். கெய் - ஒரு மீன். கெரித்தல் - கரித்தல். கெரிட்டம் - கோவம். கெருடன் - கருடன். கெருடி - கருடி. கெருமத்தம் - பறவை. கெலத்தம் - பட்சித்தல். கெலி, கெலிசு - ஆசை, கெலியென் னேவல், பயம், பெருவயிறு. கெலிகெட்டவன் - அங்கலாய்த்தவன். கெலித்தல் - ஆசைப்படல், வெல்லல், அஞ்சுதல். கெலிப்பு - வெற்றி, அச்சம், ஆசை. கெல்லிக்கம்பு - கூராம்பாய்ச்சி. கெல்லுதல் - கிண்டல், தோண்டல். கெவிடு - அட்சரக்கூடு. கெவுரிசங்கம் - இரட்டையுருத் திராட்சம். கெவுரிபாஷாணம் - ஒரு மருந்து. கெவுளி - சிவத்தச்சங்கு, சிவத்தமு கிழுள்ளதேங்காய், பல்லி. கெவுளிச் செவ்விளை - ஒரு வகைத் தெங்கு. கெவுனி - பட்டணவாசல். கெழு - இடைச்சொல், உம். வேல் கெழு தடக்கை, சேர்த்திக்கை, நிறம், பிரகாசம். கெழுதகை - கெழுதகைமை. கெழுதகைமை - உரிமை. கெழுதல் - கெழுமுதல். கெழுமல் - அமைதல், கற்றல், நிறை தல், முளைத்தல். கெழுமுதல் - கற்றல், கூடுதல், நிறை தல், பொருந்துதல், முளைத்தல். கெழுமை - கெழுமுதல், நிறம், வளமை. கெழுவல் - நிறைதல். கெழுவுதல் - பெற்றுக்கொள்ளுதல், பொருந்தல், நிறைதல். கெளிசு - காமாலை வீக்கம். கெளிசுபற்றுதல் - பருவயிறு பற்றல். கெளிதம் - பெருகல், கீழ்விழல், பட்சித்தல். கெளித்தல் - நெளித்தல். கெளிப்பு - நெளிவு. கெளிர்ச்சல்லியம் - மீனெலும்பு. கெளிறு - ஒரு மீன். கெறு, கெறுவம் - ஆங்காரம். கெறுவி - ஆங்காரி, கெட்டிக்காரன். கெறுவித்தல் - கறுவித்தல். கெற்சிதம் - உக்கிராரம்பம், முழக்கம். கெற்சித்தல் - உக்கிரமாயார்த்தல். கெற்சிப்பு - முழக்கம். கெற்பக்குவளை - கருப்பை. கெற்பத்தலைவன் - வீரம். கெற்பத்தி - சாலக்கிராமம். கெற்பம் - கருப்பம். கெற்பவாயு - கருப்பமுண்டாகமாற் பண்ணும் வாயு. கெற்பவிப்புருதி - ஓரவிப்புருதி. கெற்பனி - கருப்பந்தரித்தவள். கெற்பாதானம் - கருப்பந்தரித்த நாலாம்மாதஞ் செய்யுமோர் சடங்கு. கெற்பித்தல் - கருப்பந்தரித்தல். கெற்பிரித்தல் - சுவாலித்தல். கெற்பு - தத்துவம். கெற்மோட்டம் - மார்கழிமாதத் திலவ்வம் மாதத் தைப்பற்றி முகிலோடுதல். கே கேகம் - மயிற்குரல், வீடு. கேகயம் - கெவுரிபாஷாணம், கேகயப் புள், தேசமன் பத்தாறி னொன்று, மயில். கேகயன் - கைகேயன். கேகலன் - கூத்தாடி. கேகாபலம் - மயில். கேகை - மயிற்குரல். கேகையி - கைகேயி. கேசகலாபம் - மயிர்முடி. கேசதம் - கையாந்தகரை. கேசசிதன் - நாவிதன். கேசபந்தி - மயிரொழுங்கு, மயிர் முடி. கேசபாரம் - பெண்மயிர். கேசமார்ச்சகம், கேசமார்ச்சனம் - சீப்பு. கேசமுட்டி - வேம்பு. கேசம் - குதிரைமயிர், மயிர்ப்பொது, துக்கம். கேசரம் - அப்பிரகம், சிங்கம், பூந் தாது, பெருங்காயம், மகிழ மரம், மயிர், வண்டு. கேசரர் - வித்தியாதரர். கேசரவாதனம் - இரண்டு முழந் தாளும் மாறி மடித்தூன்றியிரு முழங்கையு முழந்தாளிற் படக்கை நீட்டியிருப்பது. கேசராசம் - ஒரு நாரத்தை. கேசரி - குதிரை, சிங்கம், பெருங் காயம். கேசரி - அங்கயோகாதனத்தொன்று, அஃது பீசத்தின் கீழ்ச்சீவனி யிடத்துப் பரட்டைவைத்திட முழங்கையை முழந்ததாளில் வைத்தங்குலி விரித்து நாசியைப் பார்த்திருத்தல். கேசரிகம் - நாயுருவி. கேசரியாதனம் - பீசத்தின் கீழ்ச் சீவனியிடத்துப் பரட்டைவைத் திட முழங்கையை முழந்தாளிலங் குலி விரித்து நாசியைப் பார்த் திருத்தல். கேசரியோகம் - உதையத்துக்குநாவில் ஏழிற்சந்திரன் நிற்பது, வியாழனுஞ் சந்திரனுங்கூடி நிற்பது. கேசவம் - அட்டாதசதருமநூலில் ஒன்று, நறுமணம், பைசாசம், வண்டு, நிறைமயிர், பெண்வண்டு. கேசவற்குத்தோழன் - அரிச்சுனன். கேசவன் - சோழன், நிறைமயிருள் ளோன், விட்டுணு. கேசாதிபாதம் - ஒரு பிரபந்தம், அஃது கலிவெண்பாலான் முடிமுதலடி யளவுங் கூறுவது, சருவாங்கம். கேசாந்தம் - மயிர்களைந்து செய்யு மோர்சடங்கு. கேசி - கிருட்டிணன், சிங்கம், நிறை மயிருள்ளோன். கேசிகன் - நிறைமயிருள்ளோன். கேசிசூதனன் - கண்ணன். கேசியா - தாழை. கேசகம் - ஒரு கிழங்கு. கேஞ்சலிகை - ஒரு கிழங்கு. கேடகம் - ஓர்யாறு, ஒரு வகை ஊர்தி, பரிசை, பாசறை, மலைசெறிந்த ஊர். கேடம் - கிளியாறு, மலைசெறிந்தவூர். கேடயம் - பரிசை. கேடிக்கை - கேளிக்கை. கேடிலுவகை - மோக்கம். கேடு - அழிவு, கெடுதல், பொல் லாங்கு. கேடுகாலம் - கெடுகாலம். கேடுபாடு - அழிவு, துன்பம், நட்டம். கேட்குதல் - ஆராய்தல், கேட்டல், தரச்சொல்லுதல், வினாவல். கேட்கும்விடை - வினாவும்விடை, (உம்) என்னாலாகுமோ. கேட்கை - கேள்வி. கேட்டல் - இரத்தல், செவிகொடுத்தல், வினாவல், வேண்டுதல், செய்தல். கேட்டவாய்க்கேட்டல் - பலராலுங் கேட்டல். கேட்டி - மிலாறு. கேட்டை - ஒரு நாள், மூதேவி. கேட்பு - கேள்வி. கேணம் - செழிப்பு. கேணி - அகழி, கிணறு, குளம், துரவு. கேண்டு, கேண்டுகம் - பந்து. கேண்மை - உறவு, கண்ணோட்டம், நட்பு. கேதகை - தாழை. கேதம் - குற்றம், துன்பம், வீடு. கேதல் - அழைத்தல். கேதனம் - இடம், பெருங்கொடி, விருதுக்கொடி, வீடு, வேலை. கேதாரகவுளம் - ஒரு பண். கேதாரம் - ஒரு நகரம், மயில், மலை. கேதாரவிரதம், கேதாரன் - ஓர் விரதம், சிவன். கேது - அடையாளம், ஒரு கோள், நோய், விருதுக்கொடி, வெளிச்சம். கேதுச்சிலாங்கணம் - புருடராகம். கேதுதல் - அழைத்தல். கேதுதாரை - வால்வெள்ளி. கேதுமாலம் - நவகண்டத்தொன்று. கேதுரு - ஒரு வாசனைமரம். கேதுவசனம் - கொடி. கேத்திரபாலன் - வயிரவன். கேத்திரம் - கெடித்தலம், சேத்திரம், விளைநிலம், பூமி. கேந்திரம் - உதையம், ஏழாமிடம், நான்காமிடம், பத்தாமிடம், வட்டத்தின் மத்தி. கேந்திரித்தல் - கேந்திரம் பெற்று நிற்றல். கேந்துமுறியம் - நாய்வேளை. கேபம் - அசைவு. கேப்பை - குரக்கன். கேமாச்சி - வெண்காக்கணம். கேயம் - அகழ், இசைப்பாட்டு. கேயன் - பாடுவோன். கேயிகம் - செங்கல். கேயூரம் - தோளணி. கேரண்டம் - காகம். கேரலம் - கேரளம். கேரவி - ஒரு நெல், வானசாத்திரம். கேரளம் - தேயமன் பத்தாறினொன்று. கேரளன் - சேரன். கேரளை - இசைப்பாட்டு. கேருதல் - குரல்கம்முதல், கோழி கத்துதல், பயப்படுதல். கேலகன் - கூத்தாடி, வாள்மேல் நடனஞ்செய்வோன். கேலம் - மகளிர்விளையாட்டு, விளை யாட்டு. கேலனம், கேலிகம் - கேளி. கேலாசம் - பளிங்கு. கேலி - இகழ்ச்சி, பரிகாசம். கேலிகம் - அசோகமரம், கேளி. கேலிகலை - சரச்சுவதிகையில் வீணை, பகிடிப்பேச்சு. கேலிக்கிரகம் - வசந்தமண்டபம். கேலிமாலி - கேலி. கேலிவிருட்சம் - ஒரு கடம்பு. கேவணம் - மணிபதிக்குங்குழி. கேவர்த்தன் - கரையான். கேவலதிரவியம் - மிளகு. கேவலப்படுதல் - இளைத்தல், மயங் கல், மெலிதல். கேவலமானது - பெலனற்றது. கேவலம் - அற்பம், இட்டம், உறுதி, ஒருங்கு, ஓரவத்தை, தனிமை, துன்பம், பெருக்கம் மரணத்தறு வாய், முடிவிடம், மெலிவு, மோக் கம், விடுதல். கேவலன் - தற்பிரியன். கேவலாவன்னுவயவனுமானம் - பட்சம், ஏது, திருட்டாந்தம், உபநயம், நிகமனமைந்து. கேவேடன் - மீன்வலைஞன். கேழல் - பன்றி. கேழ் - உவமை, ஒளி, நிறம். கேழ்வரகு - குரக்கதன். கேளன் - தோழன். கேளா - அமைதி, விருதா. கேளாதகேள்வி - நிந்தை, வசை. கேளாமை - கீழ்ப்படியாமை. கேளார் - பகைவர். கேளி - தெங்கு, மகளிர்விளையாட்டு. கேளிக்கை - மகளிர்விளையாட்டு. கேளிவிலாசம் - விளையாடிப் பொழுது கழித்தல். கேளிர் - கணவர், சினேகிதர், சுற்றம். கேள் - அன்பு, உறவு, கேளென்னே வல், சினேகம், சுற்றம், மதிப்பு. கேள்மை - கேண்மை. கேள்வன் - அன்பன், கணவன், சினேகிதன். கேள்வி - கல்வி. அஃது இராசத குணத்தொன்று, காது. கேள்விக்காரன் - வழக்கில் மன்றாடிக் கேட்போன், விலைகேட்பவன். கேள்விகொடுத்தல் - செவிகொடுத்தல். கேள்விச்செவியன் - கேட்டத்தை நம்புவோன். கேள்விப்படுதல் - கேள்வியாதல். கேள்விப்பத்திரம் - மன்றாட்டுக்கடு தாசி. கேள்விமூலம் - காதடி, செவி. கேள்வு - கூலி, தோணிக்கூலி. கேள்வுத்தோணி - கூலிக்குப் பொருந் தினதோணி. கை கை - இடம், உடனே, ஒப்பனை, ஒழுக்கம், ஓரெழுத்து, ஓர்விகுதி (உம்) கடுங்கை, கரம், கை கொண் டளவு, கையென்னேவல், சிறுமை, தங்கை, தொனி, பக்கம், பங்கு, படைவகுப்பு, யானைத் துதிக்கை. கைகடத்தல் - கையைவிட்டுப்போதல். கைகடன் - ஈடுறுதியில்லாக்கடன். கைகட்டுதல் - மரியாதைக்காகக்கை கட்டிநிற்றல். கைகண்டசாரம் - நவசாரம். கைகண்டது -சித்தியுள்ளது, தேறின்று. கைகம் - வக்கிராந்தி பாஷாணம். கைகலத்தல் - ஒன்றாய்கூடுதல், யுத்தங் கலத்தல். கைகழுவுதல் - குற்றத்துக்கு விலகு மோர்குறிப்பு, தீர்த்துத்தள்ளல். கைகாட்டு - கையினாலபி நயங் காட்டல், சைகைகாட்டல். கைகாட்டுதல் - அபிநயங்காட்டல், கையாற்குறிப்புக்காட்டல். கைகாணுதல் - அத்தாட்சிப்படுதல், நம்பிக்கையாயறிதல், நிறைவேறு தல். கைகாவல் - கையுதவி. கைகீழ் - கையமைச்சல், கையுறுதி. கைகுவித்தல் - கும்பிடல், கொம்மை கொட்டல், வணங்கல். கைகுளிர்தல் - திருத்தியாதல். கைகுறண்டுதல் - உலோபித்தனம், கைமுடங்கல். கைகூடுதல் - சித்தியாதல். கைகூப்பல் - கும்பிடல், கொம்பை கொட்டல், வணங்கல். கைகூப்பு - ஐந்துமுழங் கொண்ட வளவை, கைகுவிப்பு. கைகூப்புதல் - கும்பிடல். கைகூம்புதல் - கைகுவிதல். கைகேசி - இராவணன்றாய். கைகேயன் - ஓரரசன். கைகேயி - பரதன்றாய். கைகொடுத்தல் - உதவிசெய்தல், எதிர்கொண்டு பொய்க் கைபிடித் தழைத்தல், கைகூடுதல், வாக்குப் பண்ணல். கைகொட்டல் - கொம்மை கொட்டல். கைகொட்டிக்குவித்தல் - குடந்தம். கைகோத்தல் - கூடிக்கொள்ளுதல், கையோடுகைபிடித்தல். கைகோத்தாடல் - குரவையாடல். கைகோவை - பொற்கொல்லர் தொழிலினொன்று. கைகோளன், கைக்கோளன் - நெய் வாரிலோர் சாதியான். கைகோள் - ஒழுக்கத்தின்றன்மை. கைக்கடனாற்றல் - உறுதியின்றி நம்பிக்கைக்குக் கொடுத்தல், அது வேளாண்மை மாந்தரியல்பு ளொன்று. கைக்கட்டி - ஓராபரணம், கைக் கலசம். கைக்கட்டு - ஓராபரணம். கைக்கணக்கு - ஓருறுதி. கைக்கணிசம் - கைமதியம். கைக்கத்தி - ஓராயுதம். கைக்கரணை - ஒரு சிலந்தி. கைக்கவசம் - கைச்சட்டை. கைக்காணிக்கை - வெளிப்பாடு. கைக்காய்ச்சல் - கைக்காந்தி. கைக்காரன் - உதவியுள்ளவன், பணக் காரன். கைக்கிரியை - கையினாற்செய்யுங் கிரியை. கைக்கிளை - ஏழிசையினொன்று, அது அண்ணத்தாற் பிறக்குமிசை, ஒரு தலைக்காமம், ஒரு பிரபந்தம். அஃது ஒருதலைக்காமத்தினை ஐந்துவிருத்தத்தாற் கூறுவது வெண்பாமுப்பத்திரண்டாற் கூறலுமாம், யாழினோர் நரம்பு. கைக்கிளைமணம் - ஆசுரமிராக்கதம் பைசாசமூன்றும். கைக்கீறு - கையெழுத்தின் குறிப்பு. கைக்குட்டை - சிறுகுடை. கைக்குட்டை - கையிற்பிடிக்கும் புடைவைத்துண்டு. கைக்குத்து - கைபொத்திக்குத்தல். கைக்குநீர்க்கொள்ளுதல் - சிறுநீர் விடுதல். கைக்குழந்தை - இடுக்குப்பிள்ளை. கைக்குழலூதல் - கையிலேகுழலூதல். கைக்குழி - கமுக்கட்டு. கைக்குழித்தாமரை - ஒரு வியாதி. கைக்குள் - உடனே, சடுதி. கைக்குறி - கைவரைபார்க்குஞ் சாத்திரம். கைக்குற்றம் - கைமோசம். கைக்குன்று - யானை. கைக்கூச்சம் - கைகூசுதல். கைக்கூலி - பரிதானம். கைக்கெளியது - இலேசானது, கீழ மைச்சலானது. கைக்கை - கசப்பு. கைக்கொட்டை - கையணை. கைக்கொள்ளுதல் - அங்கீகரித்தல். கைக்கோடாலி - சிறுகோடாலி. கைக்கோரணி - கைச்சித்திரம். கைக்கோல் - ஊன்றுகோல். கைங்கிரியம் - பணிவிடை. கைசருவுதல் - கைகலத்தல், கைச் சரசம். கைசலித்தல் - கைதளர்தல், தொய்ந்து போதல். கைசிகம் - இச்சை, ஓரிராகம், மயிர்க் கனம், விகாரம். கைசியம் - கேசம். கைசெய்தல் - அலங்கரித்தல், கை வேலை செய்தல், பயிர்செய்தல். கைசோரம் - பாலியம். கைச்சங்கம் - நாகரவண்டு. கைச்சட்டம் - கம்பலை, கைவிட்டம். கைச்சட்டை - கையிலிடுங்கவசம். கைச்சம்பிரதாயம் - கைச்சித்திரம். கைச்சரசம் - இலீலைவிளையாட்டு, கைச்சேட்டை. கைச்சரி - கைவளை. கைச்சல் - கைப்பானது, கைப்பு, வெறுப்பு. கைச்சற்றோடை - புளிநாரத்தை. கைச்சாத்து, கைச்சார்த்து - கை யெழுத்துத்துண்டு, நிலவிறை யிறுத்த துண்டு. கைச்சாய்ப்பு - சார்மானம். கைச்சி - ஊமற்பாசி, சிரட்டை. கைச்சித்தி - கைவாசி. கைச்சித்திரம் - கைவிற்பன்னம். கைச்சிமிட்டு - கைச்சித்திரம். கைச்சீட்டு - கைநறுக்கு. கைச்சுழி - விதைக்கிறவிதை கூடி விழுதல். கைச்சுறுக்கு - கைவிரைவு. கைச்செட்டு - அன்றன்றுகொண்டு விற்றல். கைச்செட்டை - கைமூட்டு. கைச்சேட்டை - கைச்சரசம். கைச்சைகை - கைச்சாடை. கைடவசிதன் - விட்டுணு. கைடவன் - ஓரரக்கன். கைடவாரி - விட்டுணு. கைடவை - துர்க்கை. கைதட்டல் - கையொடுகை தட்டல், கைவிடுதல், தப்புதல். கைதப்புதல் - நீங்கல். கைதருதல் - இடங்கொடுத்தல், உதவு தல், கைகூடுதல். கைதவம் - துன்பம், பொய், வஞ்சனை, பந்தயம். கைதவன் - பாண்டியன். கைதளர்தல் - கைநெகிழ்தல், சோர்தல், தொய்தல். கைதாங்கி - கைபிடி, நாற்காலியி னோருறுப்பு. கைதூக்கல் - இரட்சித்தல், விடுதலை யாக்கல். கைதூவாமை - ஒழியாவொழுக்கம். கைதை - தாழை, வயல். கைதைச்சுரிகையன் - மன்மதன். கைதொடல் - உண்ணல், கலியாணம். கைத்தலம் - கை. கைத்தல் - அலங்கரித்தல், அலைத்தல், கசத்தல், கோபித்தல், வெறுத்தல். கைத்தளை - கைவிலங்கு. கைத்தாக்கு - கைக்குக்கனம், கைக் குத்து, கைவேகம். கைத்தாய் - வளர்க்குந்தாய். கைத்தாளம் - கைமணி. கைத்திட்டம் - கைமதியம். கைத்தீவத்தி - கையிற்பிடிக்குந் தீவட்டி. கைத்தீன் - கையில் வைத்துக்கொடுக் குந்தீன். கைத்து - பொன், வெறுப்பு. கைத்துப்பாக்கி - கைத்துவக்கு. கைத்துருவுமணை - பிரயாணத் துருவுமணை. கைத்துவக்கு - சிறுதுவக்கு. கைத்தூக்கு - கைப்பற்றம், கையாற் றூக்கத்தக்கபாரம். கைத்தேங்காய் - போரடிக்குந்தேங்காய். கைத்தொண்டு - குற்றேவல். கைத்தொழில் - கைவேலை. கைத்தொழும்பு - கைத்தொண்டு. கைந்நடுக்கம் - ஒரு வியாதி, கையிறுங் காமை. கைந்நட்டம் - முதல்கூடநட்டப்படுதல். கைந்நலப்பால் - கன்றின்றிக்கைவல்ல பத்தாற் கறக்கும்பால். கைந்நலம் - கன்றின்றிக்கை வல்லபத் தாற் கறக்கும்பால். கைந்நறுக்கு - கையுறுதி. கைந்நனைத்தல் - கைகழுவல். கைந்நன்றி - செஞ்ஞன்றி. கைந்நாடிபார்த்தல் - நாடியோட்டம் பார்த்தல். கைந்நீட்டுதல் - அடிக்க முந்துதல், இழவு வினவுதல், களவெடுத்தல். கைந்நீளுதல் - அதிகமாய்க்கொடுத் தல், ஒன்றைச் செய்யமுந்துதல். கைந்நெகிழ்தல் - விட்டுவிடுதல். கைக்கொடி - மாத்திரைப்பொழுது. கைந்நொடித்தல் - விரலைநொடித்தல். கைந்நொடுநொடுத்தல் - கண்ட தெல்லாந்தொடுதல். கைபடிதல் - கைதிருந்துதல். கைபதறுதல் - கைந்நடுங்குதல். கைபரிமாறுதல் - அடிபிடிப்படுதல். கைபழகுதல் - கைப்பழக்கம் பழகுதல். கைபறிதல் - கைவிட்டுப்போதல். கைபாகம் - கைப்பழக்கம். கைபார்த்தல் - கைக்குறிப்பார்த்தல், சோதித்தல், நாடிபார்த்தல், மட் டறிதல். கைபிடி - இரம்மியம், உறுதி, கை பிடிக்க வைத்திருப்பது, கைப் பொருள், கைவிடாமை, நம்பிக் கை, நாடியோட்ட மறிதல். கைபிடித்தல் - கலியாணம் முடித்தல், நாடியறிதல். கைபிடிபத்திரம் - உற்றசினேகம், கை விடாமற் பத்திரமாயிருத்தல். கைபிடியானவன் - உற்றசினேகிதன். கைபிழைபாடு - கைமோசம். கைபுகுந்தவழக்கு - கையில் வந்து விட்டதென்று டையவனுக்கு மில்லை யென்பது. கைபுனை, கைபுனைதல் - அலங் கரித்தல், பூத்தொடுத்தல். கைபோடுதல் - கையிடுதல், வாக்குப் பண்ணல். கைப்பட்டை - கைப்பலகை, சிறு பட்டை. கைப்பணம் - கைம்மேற்பணம், கையிலிருக்கும் பணம். கைப்பணி - கற்சிற்பர் கருவியி னொன்று, கைத்தொண்டு. கைப்பதட்டம் - கள்ளம். கைப்பந்தம் - பந்தவிளக்கு. கைப்பயில் - கைச்சயிக்கினை. கைப்பழக்கம் - கைப்பரிட்சை. கைப்பற்றம் - கைப்பிடி, கைவாறு. கைப்பற்றல் - கலியாணம், கைவசத்தி லொடுக்கல், வாங்குதல். கைப்பற்று - கைத்தூக்கு, கைப்பற் றென்னேவல், வாங்குதல். கைப்பாடு - கைவசம். கைப்பாதி - இரண்டாய்ப் பிளப்பதிற் சிறு பாதி. கைப்பிசகு - கைமோசம். கைப்பிடி - கலியாணம், கைபிடித்த பிடி, உலக்கை. கைப்பிடித்தல் - கலியாணம் முடித்தல். கைப்பிடிவாள் - கைவாள். கைப்பிரட்டு - அஸதலாவித்தை. கைப்பு - அறுசுவையினொன்று. அது கசப்பு, ஒரு சரக்கு, வெறுப்பு, ஆடுதின்னாப்பாலை. கைப்புடை - கைக்கவசம். கைப்புட்டில் - விரலுறை. கைப்புலி - யானை. கைப்பூட்டு - கைப்பொருத்து, கையி னாற்பூட்டும்பூட்டு. கைப்பெட்டகம், கைப்பெட்டி - சிறு பெட்டகம். கைப்பொருள் - கைவசத்தி லிருக்கும் பொருள். கைப்பொலி - கையாலள்ளும் பொலி. கைப்பொல்லம் - சிறு துண்டு. கைப்பொறுப்பு - தன்பொறுப்பு. கைமை, கைம்பெண் - அமங்கலி. கைம்பெண்வஸதிரம் - அமங்கலி யுடுக்கத்தக்க புடைவை. கைம்மடல் - கைச்சீப்பு. கைம்மட்டம், கைம்மட்டு - கைமதியம். கைம்மணி - கைத்தாளம், சேமக்கலம். கைம்மண்டை - கையாகியபாத்திரம். கைம்மதியம் - கைம்மட்டு. கைம்மயக்கு - ஒரு வசியமருந்து. கைம்மரம் - வீட்டின் பாய்ச்சுமரம். கைம்மலை - யானை. கைம்மறதி - அயர்தி. கைம்மறித்தல் - தடுத்தல். கைம்மறுத்தல் - கொடுப்போருங் கொடாதுவிடல். கைம்மறை - உடன்மறை. கைம்மா - யானை. கைம்மாயம் - கைம்மயக்கு. கைம்மாய்ச்சி - கைவிலங்கு. கைம்மாறு - பிரதியுபகாரம். கைம்மாறுதல் - விற்றல். கைம்மாற்று - உடன்மாற்று. கைம்மிகல், கைம்மிகுதல் - அதிகப் படல், கைகடத்தல். கைம்மிடிப்பு - கையிலொன்றுமில்லா மை. கைம்மீன் - அத்தநாள். கைம்முடக்கம் - பொருள்முடடு, வினைக்கேடு. கைம்முடிப்பு - முடிப்புப்பணம். கைம்முட்டிசெய்தல் - கையைப் பொத்துதல். கைம்முட்டு - கைம்மிடிப்பு. கைம்முறை - கைம்மாறும்முறை. கைம்முட்டு - தோட்பொருத்து. கைம்மூலம் - கையினடி. கைம்மெய்காட்டல்- அபிநயங்காட்டல். கைம்மேலே - உடனே. கைம்மேற்பணம் - உடன்கையிற் கொடுக்கும் பணம். கைம்மை - கைம்பெண். கைம்மோசம் - செய்கைப்பிழை. கையகப்படுதல் - கைக்குட்சேருதல். கையகப்படுத்தல் - ஒப்புக் கொடுத் தல், சிக்கப்பண்ணுதல், பிடித்தல். கையடிப்படுதல் - கைக்குட்படுதல். கையடிப்படுத்துதல் - ஆட்சிக்குட் படுத்துதல். கையடை - அடைக்கலம். கையமர்த்தல், கையமைத்தல் - அபை யார்த்தஞ் செய்தல், அமைந் திருக்கக் குறிப்புக் காட்டல். கையம்பு - உறுதி, நம்பிக்கை. கையயர்தல் - கைசோர்தல். கையரிக்கொளல் - சேர்த்துக் கொள் ளல், தேடல். கையரியம் - இரும்பு. கையர் - கீழ்மக்கள், சண்டாளர், திருடர். கையலுத்தல் - கைசலித்தல். கையளித்தல் - ஒப்புக்கொடுத்தல், கொடுக்குதல். கையறம் - கெடும்படிபாடும் பாட்டு. கையறல் - ஒழுக்கமின்மை, செயலறல். கையறல்விலக்கு - ஓரலங்காரம், அஃது கையறுதலைக்காட்டி விலக்குவது. கையறவு - உதவியின்மை, செயலறு தல், சாதல். கையறிதல் - பழகுதல். கையறுதல் - அந்தரிக்குதல், செயலறல். கையறுதி - கையுறுதியிலே விற்கப் பட்ட வறுதி. கையறுநிலை - ஒரு பிரபந்தம். அஃது கணவனோடு மனைவி கழிந் துளியவர் கட்பட்ட அழிவுப் பொருளெல்லாவற்றையும் பிறர்க் கறிவுறுத்தியிறந்து படாதொழிந்த ஆயத்தாரும் பரிசில் பெறும் விறவி யருந் தனிப்படருழந்த செயலறு நிலையைக் கூறுவது. கையறை - ஒழுக்கமின்மை, செய லின்மை. கையாடுதல் - எடுத்து வழங்குதல், கைப்பற்றுதல். கையாட்சி - எடுத்துவழங்குதல், கைகண்டது. கையாந்தகரை - ஒரு பூடு. கையாளி - துட்டன், மாய்மாலன். கையாளித்தல் - ஒப்படைத்தல். கையாளுதல் - எடுத்துவழங்குதல். கையாள் - குற்றேவலாள். கையாறு - ஒழுக்கம், சரித்திரம், துன்பம். கையாறுதல் - இளைப்பாறுதல். கையாற்றி - ஆறுதல், உதவி. கையாற்றுதல் - அடையில் மாற்று தல், இளைப்பாற்றுதல். கையான் - கையாந்தகரை. கையிகத்தல் - அகன்றுநிற்றல், இழத் தல், ஒழுங்கு தப்புதல், கடத்தல். கையிடுதல் - தலையிட்டுக் கொள் ளுதல், நேர்ப்படுதல். கையிணக்கம் - கூத்திவைக்குதல். கையிருப்பு - கையுரக்கம். கையில் - கயில். கையிளகுதல் - கைநெகிழ்தல், கொடுக்கச்சம்மதித்தல். கையிளைத்தல் - கைசலித்தல். கையிறக்கம் - கையை விட்டிறங்குதல் கொடை. கையிறக்குதல் - கையிலிருந்திறங்கச் செய்தல். கையிறங்காமை, கையிறுக்கம் - பிசுனித்தனம். கையிறங்குதல் - கொடுக்க விணங்கு தல். கையுங்கணக்கும் - இருந்ததுஞ் சென்றதும். கையுடனே - உடனே. கையுடை - கைக்கவசம். கையுதவி - ஆளுதவி. கையுபகாரம் - ஒத்தாசை, கைக்கூலி. கையும்மெய்யும் - அத்தாட்சி, உறுதி. கையுரக்கம் - கைவசத்திலிருக்கும் பணம். கையுழைப்பு - வேலை. கையுறுதி - அட்டவணை சேர்க்கப் படாத வுறுதி. கையுறை - கைக்கவசம், தலை மகன் றலைவிக்குத் தரும் பொருள். கையெடுத்தல் - கும்பிடல், சத்தியம் பண்ணல், சம்மதித்தற்குறியாய்க் கையுயர்த்தல். கையெழுத்து - கையாலெழுது மெழுத்து, தன்பேரெழுத்து. கையேந்தல், கையேந்துதல் - இரந்து வாங்குதல். கையேறல் - நடுத்தரமானமுத்து. கையேறுதல் - கையிலேசேர்தல். கையேற்குதல் - ஏற்றுக்கொள்ளுதல். கையேற்பு - கைப்பிச்சை. கையை - தங்கை. கையொப்பம் - கையெழுத்து. கையொலி - ஐந்து முழப்புடைவை. கையொழியாமை - ஒழியாவொழுக்கம். கையொழுக்கம் - ஒழுக்கம். கையொறுப்பு - குன்றத்துச் செல்ல ழித்தல். கையொற்றி - கையுறுதியில் வைக்கப் பட்டகாணியீடு. கையோடே - உடனே, கைவிடாமல். கையோலை - கையுறுதி. கைரம் - மலை. கைரவம் - குமுதம், வஞ்சகம், வெள் ளாம்பல். கைரிகம் - பொன், நரி. கைரேயம் - மலை. கைலஞ்சம் - கைக்கூலி. கைலாகு, கைலாகை - கைகொடுத்தல். கைலாசம், கைலை - கயிலைமலை. கைலம் - கேலி. கைவசம் - கைக்குட்படல், வசமாதல். கைவண்டில் - சிறுவண்டில். கைவரல் - கைப்பழக்கம். கைவரை - கையிறை. கைவலம் - கைந்நலம், மோக்கம். கைவல்லபம் - கைச்சாமாத்தியம். கைவல்லியம் - உபநிடத முப்பத் திரண்டினொன்று, சித்தி, மோக்கம், தனிமை. கைவல்லோர் - கைப்பழக்க முள்ளோர். கைவழக்கம் - இழவுக்குக் கொடுக் கும் பணம், கைவழங்குதல். கைவழங்குதல் - இழவுக்குக் கொடுத் தல், கையேவுதல். கைவழம் - வழங்குங்கைப்பக்கம். கைவளச்சம்பா - ஒரு நெல். கைவளை - கடகம், சிறுவளை, மருதனி. கைவாக்கு - கைவழக்கம். கைவாசி - கைச்சித்தி. கைவாட்சம்பா - ஒரு நெல். கைவாய்க்கால் - சிறுவாய்க்கால். கைவாய்ச்சி - சிறுவாய்ச்சி. கைவாரம் - செய்கைப்பங்கு, வாழ்த்து. கைவாள் - சிறுவாள். கைவாறு - கைக்குவாய்ப்பு, கைத் தூக்கு. கைவிசேஷம் - கைவாசி. கைவிசை - கைக்கதி, கைமுறை. கைவிடுதல் - கைவிட்டுவிடுதல், தள்ளிப்போடுதல். கைவிட்டம் - குறுக்குவிட்டம். கைவிஸதாரம் - கைவிற்பன்னம். கைவிதை - வெந்தயச்செடி. கைவிரித்தல் - மறுத்தல். கைவிலக்கம் - மகளிர்சூதகம். கைவிலக்கு - கைம்மறைப்பு. கைவிலக்குவைத்துப்பார்த்தல் - கிரணத்தைக் கையால் மறைத்துப் பார்த்தல். கைவிலங்கு - கைக்கிடும்விலங்கு. கைவிலை - கைப்பணத்துக்கு விற்றல். கைவிளக்கு - ஒரு விளக்கு. கைவிளை - கைத்தொழில். கைவினைஞர் - கம்மாளர், செய்கை வல்லோர். கைவீச்சன் - ஒரு பணிகாரம். கைவீச்சு - அடி, கையின்வீச்சு, மிகு கொடை. கைவேகம் - கைவிசை. கைவேலை - கைச்செய்கை. கைவேல் - கைவிடாவேல், வேல். கைவைத்தல் - ஏற்படுதல், தொடுதல். கைனி - அத்தநாள், கைம்பெண். கொ கொக்கட்டி - குறண்டல். கொக்கரித்தல் - கெற்சித்தல், கோழி முதலிய பறவைகத்தல். கொக்கரிப்பு - கெற்சிப்பு, பறவை கொக்கொக்கெனவொலித்தல். கொக்கரை - கொக்கறை, சங்கு, பாம்பு, வலம்புரிச்சங்கு, வலை, வில். கொக்கறை - பனைதெங்கு முதலிய வற்றின் பிள்ளைமடல். கொக்கறையுடும்பு - ஒருடும்பு. கொக்காட்டல் - கோதாட்டு. கொக்காம்பாளை - ஒரு மரம். கொக்கான் - ஒரு மரம், ஒரு விளை யாட்டு. கொக்கான் வெட்டுதல் - கொக்கான் விளையாடுதல். கொக்கி, கொக்கில் - கொழுவி. கொக்கிறகுமந்தாரை - ஒரு பூமரம். கொக்கு - ஒரு புள், குதிரை, செந் நாய், மாமரம், மூலநாள். கொக்குக்கல் - மாந்தளிர்க்கல். கொக்குமட்டி - ஒரு மட்டி. கொக்குமந்தாரை - ஒரு மரம். கொக்குமீன் - ஒரு மீன். கொக்குமுத்து - கொக்கிற்பிறந்த வெள்ளைநிறமுத்து. கொக்குவம் - கொக்கோகம். கொக்கேறி - நெட்டிப்புல். கொக்கை - கொழுவி, கொழுவுதடி. கொக்கைச்சத்தகம் - ஓராயுதம். கொக்கைச்சால் - வளைந்த உழவுசால். கொக்கோகம் - ஒரு காமநூல். கொங்கணம் - தேசமன் பத்தாறி னொன்று, பதினெண்பாடையி னொன்று. கொங்கணன் - ஒரு சித்தன். கொங்கணி - ஒரு தென்னோலைக் கூடு. கொங்கணியர் - கொங்கண தேசத்தார். கொங்கணியான் - ஒரு மீன். கொங்கம் - ஓர்நாடு, கோளக பாஷா ணம். கொங்கரி - ஏலரிசி. கொங்களம் - பதினெண்பாடையி னொன்று. கொங்கன் - சேரன். கொங்காரம் - குங்குமமரம். கொங்கு - ஒரு தேசம், கருஞ்சுரை, கள், தேன், பூந்தாது, வாசனை. கொங்கை - மரக்கணு, முலை. கொசமசக்கு - குழப்பம். கொசு - கொசுகு, கொடுக்கு. கொசுகாந்தேன் - கொசுகுகள் வைக் குந்தேன். கொசுகு - ஈ, தேனிலையான், நுளம்பு. கொசுக்கட்டை - ஒரு குருவி. கொசுறு - பிசுக்கு. கொச்சகக்கலிப்பா - ஒரு கவி. கொச்சகம் - ஒரு கவி. கொச்சானை - கொய்ச்சானை. கொச்சி - ஒரு தேசம், சவரிலோத் திரம், நெருப்பு. கொச்சிக்காய் - மிழகுகாய். கொச்சிக்குழந்தை - வைப்பரிதாரம். கொச்சித்தமரத்தை - ஒரு தமரத்தை. கொச்சிமஞ்சள் - ஒரு மஞ்சள். கொச்சியேலம் - ஓரேலம். கொச்சிலித்தி - ஒரு புல். கொச்சை - இளப்பம், இளைத்தல், கீழ்மை, திருந்தாத பேச்சு, வெள் ளாடு, ஆட்டின்பொது. கொச்சைத்தனம் - கொச்சைப் பழக்கம். கொச்சைப்பழக்கம் - கீழ்மையான பரிட்சை. கொஞ்சத்தனம் - சின்னத்தனம். கொஞ்சப்படுதல் - சின்னத்தனப் படுதல். கொஞ்சம் - அற்பம், எளிமை, சிறு அளவு. கொஞ்சல் - கொஞ்சுதல், செல்வ மாய்ப் பேசுதல், மழலைச்சொல். கொஞ்சி - ஒரு கொடி, கிஞ்ஞா. கொஞ்சுகிளி - குதலைபேசுங்கிளி. கொஞ்சுதல் - மழலைபேசுதல், முத்தமிடல். கொடி - உச்சம், காக்கை, கீழ்த் திசைப் பாலன்குறி, குமரனாடல், துகிற்கொடி, இஃது அட்டமங் கலத்தொன்று, இராசசின்னத்து மொன்று, நீளம், புடைவை யசைவு, அவிட்டநாள், படர் கொடி. கொடிகட்டிநிற்றல் - அவசரப்படுதல். கொடிகட்டுதல் - இயாதொன்றை லிடாமல் முயன்றுநிற்றல், சயக் குறிப்பு. கொடிக்கம்பம் - கொடித்தம்பம். கொடிக்கழல், கொடிக்கழற்சி - கழற்சிக் கொடி. கொடிக்கள்ளி - ஒரு கள்ளி. கொடிக்கால் - வெற்றிலைக்கொடி. கொடிக்கையான் - ஒரு கையான் தகரை. கொடிக்கொற்றான் - ஒரு கொடி. கொடிசை - கன்னம். கொடிச்சண்பகம் - ஒரு செண்பகம். கொடிச்சி - இடைச்சி, புற்றாஞ் சோறு, சித்திரை மூலம். கொடிச்சியர்-குறிஞ்சிநிலப் பெண்கள். கொடிச்சிலால் - வெள்ளைவால். கொடிச்சீலை - சித்திரப்படாம், துகிற் கொடி. கொடிச்சூரை - ஒரு சூரை. கொடிஞ்சி - தேர், தேர்மொட்டு. கொடிது - கொடியது. கொடித்தக்காளி - ஒரு தக்காளி. கொடித்தடக்கி - ஒரு மரம், நாயின் கால்மேல்விரல். கொடித்தம்பம் - கொடிகட்டுந்தறி. கொடித்திருப்பாடகம் - ஒரு காலணி. கொடித்துத்தி - ஒரு துத்தி. கொடித்தூக்குதல் - துவசங்கட்டுதல். கொடிநாய் - தோல்நாய். கொடிநெட்டி - நீர்ச்சுண்டி. கொடிப்பசளை - ஒரு பசளை. கொடிப்படை - முற்படை. கொடிச்சி - சித்திரைமூலம். கொடிப்பவுந்திரம் - பவுந்திரநோயி னோர் பேதம். கொடிப்பாசி - ஒரு பாசி. கொடிப்பாலை - ஓரிசை, ஒரு செடி. கொடிப்பிணை - வங்கமணல். கொடிப்புலி - ஒரு வகைப்புலி. கொடிப்பூ - நால்வகைப் பூவினொன்று. கொடிப்போடுதல் - யாதொன்றைத் தனக்காக்க வழிபண்ணல், வெற்றி முதலியவற்றைக் குறித்துக் கொடி தூக்குதல். கொடிமரம் - கொடிக்கம்பம். கொடிமல்லிகை - ஒரு மல்லிகை. கொடிமாதளை - ஒரு மாதளை. கொடிமுடியன் - ஒரு பாம்பு. கொடிமுந்திரிகை - ஒரு முந்திரிகை. கொடியது - கொடுமையானது. கொடியபீசம் - சீதரங்கபாஷாணம். கொடியமன்னன் - கோடாசொரி பாஷாணம். கொடியரசு - ஓரரசமரம், அவரை. கொடியராகு - கோமேதகம். கொடியவீரன் - கோடாசொரி பாஷாணம். கொடியன் - கேது, துட்டன். கொடியாடு - வெள்ளாட்டிலோர் பேதம். கொடியாந்தரம் - கொடுமை. கொடியால் - ஓரால். கொடியாளன் - கோடாசொரி பாஷாணம். கொடியாள் கூந்தல் - ஒரு புல். கொடியிலந்தை - ஓரிலந்தை. கொடியிறக்கம் - துவசமிறக்குதல், முடிவுபண்ணுதல். கொடியெலுமிச்சை - ஓரெலுமிச்சை. கொடியேற்றம் - திருவிழாத்துடக்கம், துவசாரோகணம். கொடியேற்றுதல் - துவசாரோகனம் பண்ணல், படங்களைப் பறக்க வுயர்த்துதல். கொடியோன் - கற்றாளை, குரூரன். கொடிவசலை - ஒரு வசலைக்கொடி. கொடிவழுதலை - ஒரு வழுதுணை. கொடிவிட்டுச்சரிதல் - நிரையே நெடுகப்போதல். கொடிவேம்பு - ஒரு வேம்பு. கொடிவேலி - கொடுவேலி. கொடிறு - கதுப்பு, குறடு, பூசநாள், யாணைக்கதுப்பு. கொடு - கொடுமை, கொடென் னேவல், வளைவு. கொடுகடி - மிகுகூதல். கொடுகுதல் - கூசுதல், கூதலா லொடுங்குதல். கொடுகொடுத்தல் - மிகக்குளிர்தல். கொடுகொடெனல் - கூதிர் நடுக்கக் குறி. கொடுகொட்டி - குமரனாடல் சிவன், கூத்து. கொடுக்கன், கொடுக்கான் - ஓர்விஷ செந்து, கொடுக்குள்ள செந்து. கொடுக்கி - ஒரு பூடு. கொடுக்கு - கவர், கவைத்தாள். கொடுக்குதல் - கொடுத்தல். கொடுக்குமதி - கொடுக்கவேண்டியது. கொடுங்கண் - கொடுமை, கொடும் பார்வை. கொடுங்கரி - பொய்ச்சாட்சி. கொடுங்காலம் - கொடுமையான காலம். கொடுங்கால் - உள்வளைந்தகால். கொடுங்கீறு - கிழித்தசிறுகீற்று. கொடுங்குதல் - கொடுகுதல். கொடுங்குழை - வளைந்தகாதணி. கொடுங்கை - உள்வளைந்தகை, கொடுமை, தேர்க்கொடுங்கை, வீட்டின் வெளிப்பக்கம். கொடுங்கொடிச்சிலை - மஞ்சட்கல். கொடுங்கோல் - அநீதி, கொடுமை யான வாளுகை. கொடுங்கோள் - பின்புறணி, புறம் பேவசைகூறல். கொடுஞ்சொல் - வன்சொல். கொடுதலைமடிப்பு, கொடுதலை முடிச்சு, கொடுதலைவிற்பூட்டு - பிரியாதபடியிசைத்தல். கொடுதி - மடிப்புத்தொழில், மர ஆணி. கொடுத்தல் - அணைவித்தல், ஈதல், உண்டாக்கல். கொடுநுகம் - மகநாள். கொடுந்தமிழ் - செந்தமிழல்லாதது. கொடுந்தலை - வளைந்ததலை. கொடுப்பனவு, கொடுப்பனை, கொடுப் பினை - கொடுக்குந் தன்மை, பெண்ணை விவாகம் பண்ணிக் கொடுத்தல். கொடுப்பு - கதுப்பு. கொடுப்புப்பீறி - ஒரு சிலந்தி. கொடுப்பை - பொன்னாங்காணி. கொடுமரம் - தனுவிராசி, வில். கொடுமுடி - கோயில் முதலியவற்றின் கிரசம், மலையினுச்சி. கொடுமுடிச்சு - காரியங்களைக் கட்டுச் சுற்றாய் முடித்தல், படுமுடிச்சு. கொடுமை - கொடுங்கோன்மை, பொல்லாங்கு, முரடு, வக்கிராந்த பாஷாணம். கொடும்பாதகம் - அநீதம், கொடியது ரோகம். கொடும்பாவி - அநீதன், மழையில்லாத காலத்திற்கட்டியிழுக்கு மோருரு. கொடும்புரி - கடும்புரி. கொடும்புலி - சிங்கம், சிங்கவிராசி. கொடும்பை - ஓர் பச்சிலை, ஓர் பூடு, குளம், மதகு, மலையருவி. கொடுவரல் - கொணர்தல். கொடுவரி - புலி. கொடுவாட்கத்தி - வளைந்தகத்தி. கொடுவாய் - ஒரு மிருகம், ஒரு மீன், வெறும்புறங்கூறல். கொடுவானை - ஒரு மீன். கொடுவாள் - அரிவாள், வளைந்த வாள். கொடுவிஷம் - வெள்ளைப் பாஷா ணம். கொடுவினை - பொல்லாங்கு. கொடுவேலி - ஒரு செடி. கொடூரம் - கடுமை, குரூரம். கொடை - ஈகை. அஃது புண்ணியத் தோற்றந்நான்கினுமொன்று. கொடைசாலி - ஈகையாளன். கொடைத்தம்பம் - ஈவோர் நிறுத்துந் தம்பம். கொடைப்பொருள் - கொடுக்கப்படு பொருள். கொடைவினா - கொடுக்கும்வினா, (உம்) வேண்டுமா. கொடைமடம் - வரையாது கொடுத்தல். கொடையாளன் - ஈகையாளன். கொடைவீரம் - மிகுகொடையினு லுண்டாம் வீரம். கொட்குதல் - சுழலல், வளைதல். கொட்டகச்சி, கொட்டங்கச்சி - கொட் டாங்கச்சி. கொட்டகம், கொட்டகை - கொட்டில். கொட்டக்காரன் - தப்பிலி, பொல் லாங்கன். கொட்டங்காய் - ஒரு மரக்காய், தேங் காய். கொட்டடி - நெல்லுக்கொட்டி விற்கிற இடம். கொட்டணை - ஒரு பூடு. கொட்டத்திரட்சி - திராமலை. கொட்டம் - தவறு, தொழுவம், பொல் லாங்கு. கொட்டல் - அடித்தல், அப்புதல், கொட்டுதல், தேள் முதலிய கொட்டல். கொட்டன் - ஒரு மரம், குறும்பொல், தேங்காய், பருத்த சரீரமுள்ளவன். கொட்டன்பொல்லு - குறும்பொல்லு. கொட்டாகை - கொட்டகம். கொட்டாங்கச்சி - கொட்டைக் கையில். கொட்டாங்கரந்தை - ஒரு பூடு. கொட்டாப்பிடி, கொட்டாப்பிளி - மரச் சுத்தியல். கொட்டாப்பித்தல் - உண்ணல். கொட்டாமட்டை - தும்புமட்டை. கொட்டாய் - கொட்டகம். கொட்டாரம் - யானைப்பந்தி. கொட்டாவி - யாக்கைக்குற்றமைந்தி னொன்று. அஃது வாயால்விடுந் நெடுஞ்சுவாசம். கொட்டாவிவிட்டிறுக்கி - நாயுருவி. கொட்டி - ஒரு கிழங்குப்பூடு, கோவில் வாசல், பார்க்குங் குறி, வார்த்தை சொல்லல். கொட்டிக்கலைத்தல் - சிதறடித்தல். கொட்டிக்கோரை - ஒரு கோரை. கொட்டியம் - எருது. கொட்டில் - ஒதுக்கிடம், கொட்டகை, பசுக்கொட்டில். கொட்டு - அடி, உட்டுளையான மரத் துண்டு, கொட்டகை, கொட் டென்னேவல், சரீரம், சில்விஷ கடி, துளையுடைப் பொருள், மண்வெட்டி. கொட்டுக்கன்னார் - கொட்டுவேலை செய்யுங்கன்னார். கொட்டுக்கிணறு - சங்களைக்கிணறு. கொட்டுக்கூடை - ஒரு கூடை, ஒரு பாத்திரம். கொட்டுச்செத்தல் - அறக்காய்ந்த தேங்காய். கொட்டுண்ணல் - சிந்துண்குதல். கொட்டுதல் - அடித்தல், அப்பல், குவித்தல், கையொடு கைதட்டல், சிந்துதல், தேள்முதலியகடித்தல், பறையடித்தல், பூசுதல். கொட்டுப்பனை - தறிபட்டபனை யினடி. கொட்டுப்பித்தளை - கொட்டுவேலை செய்யும் பித்தளை. கொட்டு முழக்கு - மேளதாளமுதலிய வாச்சியம். கொட்டுமுறி - உயர்ந்தபித்தளை. கொட்டுமேளம் - நட்டுவமேளம். கொட்டுவாய் - சிறுசெந்துக்கள் குற்றினகுற்றுவாய். கொட்டுவான் - தேள் முதலியசெந்து. கொட்டுவேலை - கொட்டிச்செய்த வேலை. கொட்டை - ஒரு காதணி, ஒரு மரம், தலையணை, நூற்குங் கொட் டை, பாதகுறட்டின் குமிழ், வித்து, கொட்டைக்கரந்தை கொட்டை கட்டுதல் - ஒரு விளை யாட்டு. கொட்டைக்கரந்தை - ஒரு கரந்தை. கொட்டைக்காய் - தசையற்றகாய். கொட்டைக்கைச்சி, கொட்டைக் கையில் - சிரட்டைக்கயில். கொட்டைச்செத்தல் - அறச்செத்தல். கொட்டைத்தேங்காய் - கொப்பறா தேங்காய். கொட்டை நூற்றல் - கொஞ்சங் கொஞ்சமாய்க் கவர்தல், நூல் நூற்றல். கொட்டை பற்றுதல் - பிஞ்சுகளுக்குட் கொட்டைபிடித்தல். கொட்டைபோடுதல் - சாதல், பிலா மரம் பிஞ்சுபிடித்தல். கொட்டைப்பாக்கு - காய்ந்த பாக்கு. கொட்டைப்பாக்குத் தலைப்பா - குஞ்சுத்தலைப்பா. கொட்டைப்புளி - கொட்டையெடாத புளி. கொட்டைப்பெட்டி - பஞ்சுப்பெட்டி, மடிப்பெட்டி. கொட்டை முதல் - கைமுதல், விதை முதல். கொட்டைமுத்து - ஆமணக்குமுத்து. கொட்டைமுந்திரி, கொட்டை முந்திரிகை - ஒரு மரம். கொட்டையாடுதல், கொட்டையிடுதல் - பஞ்சுசுகிர்தல். கொட்டையிலந்தை - ஓரிலந்தை. கொட்பு - சுழற்சி, திரிபு, வளைவு. கொணர்தல் - கொண்டுவரல். கொன்கன் - தலைவன், நெய்தனிலத் தலைவன். கொண்டகுளம் - எட்டிமரம். கொண்டக்காரர் - கரையாரிலோர் பகுதி. கொண்டக்கிரி - ஒரு பண். கொண்டச்சானி - நஞ்சறுப்பான். கொண்டபாரம் - நிறைபாரம், பொறுக்கும் பாரம். கொண்டம் - குறிஞ்சா. கொண்டலடித்தல் - மகளிர் விளை யாட்டி னொன்று. கொண்டலாத்தி - கொண்டைக் கிளாறு. கொண்டல் - ஒரு விளையாட்டு, கீழ்காற்று, முன்பனிப்பரவத்தின் காற்று, மேகம். கொண்டல்மிதித்தல் - தீமிதித்தல். கொண்டல்வண்ணன் - திருமால். கொண்டற்கல் - மந்தாரச்சிலை. கொண்டாடல் - மெச்சல். கொண்டாடுதல் - ஆசரித்தல், சீராட் டுதல், பாராட்டுதல். கொண்டாட்டம் - சங்காத்தம், சந்தோ ஷம், சீராட்டு, பொழுதுபோக்கு. கொண்டாட்டு - கொள்கை, சீராட்டு. கொண்டானடித்தல் - கொண்டலடித் தல். கொண்டான் - ஒரு விளையாட்டு, கணவன். கொண்டி - கதலிற்குடுமி, கொள்ளை, கொழுமாட்டுமிரும்பு. கொண்டிமாடு - பட்டிமாடு. கொண்டியம் - வெறும்புறங்கூறல். கொண்டியாரம் - இறுமாப்பு. கொண்டிலாத்தி - கொண்டலாத்தி. கொண்டிலான் - கொண்டைக்கிளாறு. கொண்டுகூட்டு - பொருள்கோ ளெட்டினொன்று, அஃது கலி கருதிய பொருள் வசனங்களைத் தெரிந்தெடுத்துப் பயன்படுத்துவது. கொண்டுணி - கோட்சொல்வோன். கொண்டுவிற்றல் - எதிர்ச்செட்டு. கொண்டேசன் - சுக்கு. கொண்டை - ஆணிமுதலியவற்றின் கொண்டை, இலந்தைக்கனி, ஐம் பாலினொன்று. அஃது பக்கன் முடித்தல், பட்சியின் சிகை, மயிர் முடி. கொண்டைக்கரிச்சான் - கரிக்குருவி. கொண்டைக்கிருட்டி - கொண்ட லாத்தி. கொண்டைக்கிளாறு - ஒரு குருவி. கொண்டைக்குச்சு - கொண்டையிற் செருகுமோர்பணி. கொண்டைசாணிக்கிழங்கு - நஞ் சறுப்பான். கொண்டைச்சன், கொண்டைச்சான் - ஒரு குருவி. கொண்டைச்சுத்தியல் - ஒரு சுத்தியல். கொண்டைத்தலை - மயிர்முடித்தலை. கொண்டைத்துலா - தலைத்துலா. கொண்டைமுசுறு - ஒரு குரங்கு. கொண்டையன் - ஒரு பருந்து. கொண்டையாணி - சடையாணி. கொண்டையூசி - குண்டூசி. கொண்டோடி - துலாவையுங் கொடி யையும் பிணைக்குங் கயிறு. கொண்டோன் - நாயகன். கொண்மூ - ஆகாயம், முகில். கொண்மூமுத்து - மேகத்திற்பிறந்த சூரியனிறமுத்து. கொதி - காய்ச்சல், கொதித்தல், கொதியென்னேவல், கோபம், துக்கம், வெப்பம். கொதிகுடல் - பசிதாங்காவயிறு. கொதிகொள்ளுதல் - வெப்புக்கொள் ளுதல். கொதித்தல் - கோபித்தல், நீர்முதலிய கொதித்தல், வெப்பித்தல். கொதிநீர் - வெந்நீர். கொதிப்பித்தல் - சிறுபோசனஞ் சமைத்தல், சுடச்செய்தல். கொதிப்பு - கொதி. கொதிமந்தம் - வெப்புமந்தம். கொதியிறக்குதல், கொதியெடுக்குதல் - ஆங்காரங்குறைத்தல். கொதியெண்ணி - போசனத்துக்குக் காத்திருப்போன். கொதியெண்ணெய் - கொதிப்பிக்கும் மருத்தெண்ணெய். கொதுகு - கொசுகு. கொதுகுலம் - மழலைகொஞ்சுதல். கொதுகுலித்தல் - குழைந்துருகுதல். கொதுகொதுத்தல், கொதுகொதுப்பு, கொதுகொதெனல் - ஒலிக்குறிப்பு கொதித்தெழும்புதல். கொத்தடிமை - பரவணியான அடிமை, பழவடிமை. கொத்தமல்லி - ஒரு சரக்கு. கொத்தமல்லிவைசூரி - கொப்புளிப் பான். கொத்தம் - எல்லை. கொத்தரித்தல் - கொத்திடுதல். கொத்தலரி - ஓரலரி. கொத்தல் - கொத்துதல். கொத்தவரை - ஓரவரை. கொத்தவால் - சந்தைவிசாரணை காரன். கொத்தளம் - மதிற்புறம். கொத்தளி - பாய். கொத்தியரித்தல் - நாசமாக்குதல். கொத்து - கெத்திடல், கொத்துதல், கொத்தென்னேவல், திரள், நாளி. கொத்துக்கட்டி - இடமண். கொத்துக்கத்தரி - ஒரு கத்தரி. கொத்துங்குறடு - நண்டு. கொத்துச்சரப்பணி, கொத்துச்சரப்பளி - ஓர்ஆபரணம். கொத்துணி - குட்டுணி. கொத்துதல் - இரைகொத்தி யெடுத் தல், தறித்தல், மண்வெட்டுதல், வெட்டுதல். கொத்துத்தாவடம் - சிறுருத்திர மணிக்கோவை, பலவற்றைப் பிணைத் திருப்பது. கொத்துத்தூர்வை - கொத்தினா லுண்டாம்மிருது. கொத்துப்பசனை - ஒரு கீரை. கொத்துப்படல் - ஒரு புடல். கொத்துமேகம், கொத்துவானம் - கொத்துக் கொத்தாயிருக்கும் முகில். கொத்துவேலை - கொத்திச்செய்யுஞ் சித்திரவேலை. கொத்தை - இசடு, சூத்தை, பழுது. கொந்தல் - அணில் முதலியவற்றாற் கொந்தப்பட்டது, ஊனப் பட்டது, கொந்துதல், சினக்குறிப்பு, பெருங் கோபம். கொந்தழல் - தீத்திரள். கொந்தளம் - காண்டாமிருகக் கொம்பு, கூத்தின்விகற்பம், பெண் மயிர், மயிர்க்குழற்சி. கொந்தளித்தல் - கிளம்பல், மும் முரங்கொள்ளுதல். கொந்தளிப்பு - கெற்சிதம், மும்முரம். கொந்தாலி - கல்லுவெட்டுமோர் கருவி. கொந்தாழம் - ஒரு மரம், ஒரு மருந்து. கொந்தாழை - ஒரு கடல்மரம். கொந்தாளித்தல் - கொந்தளித்தல். கொந்து - கொந்தென்னேவல், நெய் வோர்கதிர், பூங்கொத்து. கொந்துதல் - பறவைகளலகினாற் கொத்துதல், மூர்க்கங்கொள்ளுதல். கொப்பம் - யானைபடுகுழி. கொப்பரம்பாய்ச்சுதல் - அதட்டுதல், மல்யுத்தத்தினொன்று. கொப்பரி - கொப்பரை. கொப்பரை - கடாரம், குடம். கொப்பளித்தல் - கக்குதல், கொப்புள மாதல். கொப்பறாத்தேங்காய் - அறக்காய்ந்த தேங்காய். கொப்பாந்தேன் - கோற்றேன். கொப்பி - கொம்மை. கொப்பிகொட்டல் - கொம்மை கொட்டல். கொப்பு - மயிர்முடி, மரக்கொம்பு, மாதர்காதணியினொன்று. கொப்புவாளி - மாதர்காதணியி னொன்று. கொப்புளம் - குமிழ்ப்பு, சீய்ப்பிடி. கொப்புளித்தல் - குமிழித்தல், கொப் புளமாதல், நீர்முதலிய குதித்தல், வாயால் நீரையல சிக்கக்கல். கொப்புளிப்பான் - ஒரு வசூரி. கொப்புள் - குமிழி, கொப்புளம். கொப்பூழ் - உந்தி. கொப்பூழ்க்கொடி - நஞ்சுக்கொடி. கொப்பெனல் - விரைவின் குறிப்பு. கொம்படித்தல் - கடாமுதலிய போர் செய்தல், முதன்மை செலுத்தல். கொம்பரக்கு - பொன்மெழுகு. கொம்பர் - மரக்கொம்பு, விலங்கின் கொம்பு. கொம்பன் - ஆண்யானை, ஒரு நோய், ஒரு மீன், கொம்புள்ளது. கொம்பாபிள்ளை - அதிகாரகுடிப் பிறந்தோன். கொம்பு - ஊதிடுகொம்பு, நந்தை, மரக்கொம்பு, விலங்கின்கொம்பு. கொம்புகாலி - சிலியான். கொம்புக்குமண்ணெடுத்தல் - யானை முதலிய களிப்புக்கொண்டு கொம் பினால் மண்ணெடுத்தல். கொம்புதல் - முயலுதல், மூரக்கங் கொள்ளல். கொம்புத்தேன் - கொப்பாந்தேன். கொம்புப்பயறு - ஒரு பயறு. கொம்புப்பாகல் - ஒரு பாகல். கொம்பெறிமூர்க்கன் - ஒரு பாம்பு. கொம்மடி, கொம்மட்டி - ஒரு கொடி. கொம்மட்டிக்கீரை - ஒரு கீரை. கொம்மட்டிச்சுரை - ஒரு சுரைக்கொடி. கொம்மட்டிமாதளை - சீதளை. கொம்மெனல் - அனுகரணவோசை, ஒலிக்குறிப்பு. கொம்மை - அகங்கைவிரித்துக் கொட்டல், அழகு, இளமை, கொம்மட்டி, திரட்சி, முலை, வட்டம், வலி. கொய் - ஒரு மீன், கொய்யென்னேவல். கொய்கை - கொய்தல், பறித்தல். கொய்சகம், கொய்சுவனம் - விடுந் தலைப்பு. கொய்ச்சாளை - ஒரு மீன். கொய்தல் - அறுத்தல், ஆய்தல், எஃகி வாங்குதல், கத்தரித்தல், சுருக்கு தல், தெரிதல். கொய்துகட்டுதல் - நெரிபிடித்துக் கட்டுதல். கொய்துவாங்குதல் - எஃகிவாங்குதல். கொய்யகச்சட்டி - ஒரு சட்டி. கொய்யகம் - கொய்சகம். கொய்யடி - ஓர்நாரை. கொய்யா - ஓர்மரம், நெய்வார்கருவி யினொன்று. கொய்யாக்கயிறு - நெய்வார்கருவியி னொன்று. கொய்யான் - பரணி. கொய்யுளை - குதிரை. கொய்யோ - சயக்குறிப்புச்சொல். கொய்யோக்கூறல் - வெற்றிகூறல் கொய்வு - கொய்தல். கொரிக்கம் - எழுத்தாணிப்பூண்டு. கொலு - இராசசமுகம், உல்காசம், உல்காசவீற்றிருப்பு. கொலுகொலுத்தல் - அசைதல், ஈடாடுதல். கொலுகொலுப்பு - ஈடாட்டம், உல் காசம். கொலுசு - காலணியினொன்று. கொலுச்சாவடி, கொலுமண்டபம் - உல்காசவீற்றிருப்பு மண்டபம். கொலுவிருத்தல் - வீற்றிருத்தல். கொலுவிருப்பு - வீற்றிருப்பு. கொலை - கொல்லுதல், அதுகாயத் தீக்குணம் மூன்றினொன்று தாமத குணத்துமொன்று பஞ்சபாத கத்துமொன்று. கொலைகாரன் - கொலை செய்வோன். கொலைக்களம் - கொல்லப்படு மிடம். கொலைசெய்தல் - கொல்லுதல். கொலைஞர் - கொலைபாதகர், சண் டாளர், வேடர். கொலைதல் - குலைதல். கொலைநினைக்கை - மனத்தீக்குண மூன்றினொன்று. கொலைபாதகம் - பஞ்சபாதகத் தொன்று. கொலைபாதகன் - கொலைத் துரோகி. கொலையுண்ணல் - கொலைப் படுதல். கொல்-அசைச்சொல்,(உம்)வருவர் கொல்ஐயக்கிளவி. (உம்) இவ்வுருக் குற்றிகொல்மகன்கொல், கொல லென்னேவல், பஞ்சலோகம், வருத்தம். கொல்லச்சேவகர் - பொக்கிஷகாவற் காரர். கொல்லத்து - சிற்பம். கொல்லத்துவேலை - சிற்பவேலை. கொல்லம்-தேயமன்பத்தாறினொன்று. கொல்லர் - கம்மாளர், கருமார். கொல்லல் - கொல்லுதல். கொல்லன்கோவை - காக்கணங் கொடி. கொல்லன்பகை - அஞ்சனபாஷாணம். கொல்லாமற்கொல்லல் - நன்மை செய்கிறதாகத்தீமைசெய்தல். கொல்லாமை - இயமத்துறையைந்தி னொன்று அஃது, கொலைசெய் யாமை. கொல்லாவிரதம் - அருகசமைய நெறியினொன்று. அஃது கொலை பண்ணா விரதம். கொல்லாவேதம் - சமணவேதம். கொல்லாவேதன் - அருகன். கொல்லி - ஓர்பண், ஓர்மலை, கொல் வோன், நெருப்பு. கொல்லிச்சி - கொல்லத்தி. கொல்லிடம் - கொள்ளிடம். கொல்லியவராடி - வராடித்திறத்தி னொன்று. கொல்லிவெற்பன் - சேரன். கொல்லுதல் - சங்கரித்தல். கொல்லுலை - கம்மாளருலைமுகம். கொல்லெனல் - ஒலிக்குறிப்பு. கொல்லை - குச்சு, சோலை, தோட் டம், பூந்தோட்டம். கொல்லைப்பல்லி - ஓர்பூடு. கொவிள் - ஓர்மரம். கொவ்வை - ஓர்கொடி. கொவ்வைக்கனிமணி - கோவரங்கப் பதுமராகம். கொழிஞ்சி - ஓர் நாரத்தை, பூவாது காய்க்குமரம். கொழிதமிழ் - வடிதமிழ். கொழித்தல் - தெரித்தல், வாருதல். கொழிப்பு - குற்றம், கொழித்தல். கொழியல் - கொழிப்பு, தவிடெடு படாதவரிசி. கொழிற்பூண்டு - குப்பைமேனி. கொழு - காறு, கொழுவென்னேவல், மழு. கொழுக்கட்டை - ஓர்பண்ணிகாரம். கொழுங்கண் - கிருபைக்கண். கொழுச்சிராய் - கொழுவடுக்குஞ் சிராய். கொழுத்தல் - சரீரந்தெளிந்து பருத்தல், மதத்தல். கொழுத்தாடுபிடித்தல் - ஓர்விளை யாட்டு. கொழுநனை - மலரும்பருவத்தரும்பு. கொழுநன் - எப்பொருட்கு மிறைவன், தலைவன், நாயகன். கொழுநீர் - வியர்வை. கொழுந்தன் - மணவாளனுடைய சகோதரன். கொழுந்தி - மணவாளியின் சகோதரி. கொழுந்து - இளங்கிளை, தீச்சு வாலை, வெற்றிலைக்கொடி, மருக்கொழுந்து. கொழுந்துக்கால் - கொழுந்தின் கொளுகொம்பு. கொழுந்துதல் - சுவாலித்தல். கொழுந்துவிடுதல் - சுவாலை விடுதல், தளிர்விடுதல். கொழுந்தொட்டி - ஓர்பூடு. கொழுப்பு - நிணம், மதர்ப்பு. கொழுமரம் - செம்மரம். கொழுமை - கொழுப்பு, செழுமை, நிறம், வளமை. கொழும்புகை - நறும்புகை. கொழுவு - கொழுகொழும்பு. கொளகொளத்தல் - ஈடாடுதல், தளர்தல், திரமற்றுப்போதல். கொளகொளெனல் - ஈரடுக்கொலிக் குறிப்பு. கொளஞ்சி - குளஞ்சிமரம். கொளல் - கொள்ளல். கொளுகொம்பு - ஆதரவுகோல். கொளுகொளுத்தல் - கொளகொளத் தல். கொளுசு - குளைச்சு. கொளுத்து - கொளுத்தென்னேவல், சந்து, மூட்டு. கொளுத்துதல் - கலைகற்பித் தழுத்தல், தெருட்டுதல், பற்றவைத்தல், மூட் டுதல், வீணைமுதலிய வாசித்தல். கொளுந்தல் - பற்றுதல். கொளுமீதி - இறைகொடுத்துமிஞ் சினதானியம். கொளுமுதல் - கொளுமீதி, செழிப்பு. கொளுவம் - கோவைத்துறைவசனம். கொளுவல் - கொளுவுதல். கொளுவி - கொக்கை. கொழுவு - கொழுகொம்பு. கொளல்வினா - கொள்ளும்வினா, (உம்) பயறுண்டோவணிகீர். கொளுவுதல் - அகப்படுதல், அகப் படுத்துதல், கூட்டிக்கொள்ளுதல், கொளுவி விடுதல், தொடுத்துக் கொள்ளல், மிதியடி முதலிய தொடுதல். கொளை - இசைப்பாட்டு. கொள் - ஓர்தானியம், கொள்ளென் னேவல். கொள்கலம் - அணி, ஆடை, சாந்து முதலிய பெய்கலம், பாத்திரம், பிழா. கொள்கை - அறிவு, குணம், கோட் பாடு, சினேகம், செய்கை. கொள்வன, கொள்வனவு - கொள்ளப் படுவது, கொள்ளுதல், சினேகம், விவாகசம்பந்தம். கொள்வனை - கொள்வனவு. கொள்விலை - கொண்டவிலை. கொள்ள - நிகழ்காலவிடைச்சொல், (உம்) அவன்வரக்கொள்ள. கொள்ளட்டு - ஓர்பூண்டு. கொள்ளம் - குழைசேறு. கொள்ளல் - பாத்திரமுதலிய வற்றி னுள்ளேயடங்குதல், மனதிலே பிடித்தல், வாருதல். கொள்ளாகொள்ளை, கொள்ளாக் கொள்ளை - மிகுதி. கொள்ளாமை - அடங்காமை, மனதி லேபிடியாமை. கொள்ளார் - பகைவர். கொள்ளி - நெருப்புறு விறகு. கொள்ளிக்கட்டை - கொடியவன், நெருப்புக் கொள்ளி. கொள்ளிக்கண்ணன் -கண்ணூறு காரன், கொடியவன், கோபக்கண் ணுள்ளது. கொள்ளிக்கரப்பன் - ஓர்கரப்பன். கொள்ளிசெருகுதல் - தீமையையுட் படுத்துதல். கொள்ளிடம் - ஓர்யாறு. கொள்ளித்தேள் - ஓர்தேள். கொள்ளியம் - உமரி, புன்கமரம். கொள்ளியெறும்பு - கொள்ளிவா லெறும்பு. கொள்ளிவட்டம் - கொள்ளிசுழற்றும் வட்டம். கொள்ளிவாய்ச்சற்பம் - கொள்ளி வாய்விரியன். கொள்ளிவாய்ப்பிசாசம், கொள்ளி வாய்ப்பேய் - நெருப்புக்காலுமாவி. கொள்ளிவாய்விரியன் - ஓர்பாம்பு. கொள்ளிவாலி - கறுப்புடலும் வெள்ளைவாலு முள்ளது. கொள்ளிவாலெறும்பு - ஓரெறும்பு. கொள்ளிவால் - நுதிவெள்ளைவால். கொள்ளிவைத்தல் - தீங்குசெய்தல், பிணஞ்சுடல். கொள்ளு - கொள், கொள்ளென் னேவல். கொள்ளுக்காய்வேளை - ஓர்காய் வேளை. கொள்ளுதல் - உள்ளேகொள்ளுதல், ஏற்றுக் கொள்ளுதல், கொண்டி ருத்தல், பற்றுதல், பெறுதல், மனதுக் கேற்றல், விலைக்கு வாங்கல். கொள்ளை - ஓர்நோய், கொள்ளை யிட்ட பொருள், கொள்ளையெடுத் தல், மிகுதி. கொள்ளைக்காய்ச்சல் - ஓர்நோய். கொள்ளைக்காரர் - பறிகாரர். கொள்ளைநோய் - கோதாரி. கொள்ளையடித்தல் – கொள்ளை யள்ளுதல், கொள்ளையாடுதல், கொள்ளையிடுதல், கொள்ளை யெடுத்தல் - திருடுதல், பறித்தல். கொறடா - சவுக்கு. கொறகொறெனல் - ஈரடுக்கொலிக் குறிப்பு. கொறி - ஆடு, கொறியென்னேவல், செம்மறியாடு, மேடவிராசி. கொறிக்குதல் - பல்முதலியவற்றாற் கோதுதல், பாம்பு முதலிய பல் நரும்பல், பொறிதல். கொறித்தலை - நிலவேம்பு. கொறித்தல் - கொறிக்குதல். கொறு - கன்றுபாலூட்டாதபடி முகத்திற்கட்டுமியற்று. கொறுகொறுத்தல் - கருகருத்தல், குறட்டைவிடுதல். கொறுகொறுப்பு - அலட்டு, குறட்டை. கொறுகொறெனல் - ஈரடுக்கொலிக் குறிப்பு. கொறுக்கா - ஓர்மரம். கொறுக்காப்புளி - ஓர்புளி. கொறுக்கை - உயிர்ப்பு, ஓர்புல், ஓர்மீன், குறட்டை. கொறுக்கைச்சி - கொறுக்கைப்புல். கொற்கை - ஓரூர். கொற்கைவேந்தன் - பாண்டியன். கொற்றம் - அரசியல், வலி, வெற்றி. கொற்றவள்ளை - பகைவர் நாடழித்தல். கொற்றவன் - அரசன். கொற்றவை - துர்க்கை. கொற்றன் - கற்சிப்பன், வெற்றியாளன். கொற்றான் - ஓர்கொடி. கொற்றி - இளங்கன்றுப்பசு, ஓர் பிசாசம், துற்கை, பசுவிளங்கன்று, வடுகி. கொற்று - கொல்லத்துவேலை, கொற்றென்னேவல். கொற்றுதல் - கொத்தல், கோதுதல். கொன் - அச்சம், காலம், பயனின்மை, பெருமை. கொன்றல் - கொல்லுதல். கொன்றை - ஓர்மரம். கொன்றைக்குழல் - ஊதுகுழலி னொன்று. கொன்றைசூடி - சிவன். கொன்னாளர் - பாவிகள். கொன்னித்தல் - பேசநாத்திரும்பா திருத்தல். கொன்னுதல் - கொன்னித்தல். கொன்னெச்சன் - மாட்டிலையான். கொன்னை - திருத்தமற்றபேச்சு, பேசநாத்திரும்பாமை. கோ கோ - அம்பு, அரசன், ஆகாயம், ஆண் மகன், இடியேறு, இரக்கக் குறிப்பு, ஓலந்தை, உரோமம், எருது, ஓரெழுத்து, கண், கிரணம், கோவென்னேவல், சந்திரன், சூரியன், திசை, கோமேதயாகம், தேவலோகம், நீர், பசு, பசுப் பொது, பூமி, மலை, மாதர், மேன்மை, வச்சிராயுதம், வாணி, வெளிச்சம். கோகடம் - ஓர்வகை முசல். கோகண்டம் - நெருஞ்சில். கோகத்தி,கோகத்தியை - பசுக்கொலை. கோகந்தம் - கந்தகபாஷாணம். கோகம் - சக்கரவாகப்புள், செந்நாய், தவளை, பல்லி. கோகயம் - தாமரை. கோகவி - கடம்பு. கோகழி - ஓர்தலம். கோகனகச்சிலை - பதுமராகக்கல். கோகனகத்தி, கோகனாசனி - இலக்குமி, கலைமகள். கோகனகம் - செந்தாமரை. கோகனகை - இலக்குமி. கோகனதம் - செந்தாமரை, செவ் வாம்பல். கோகனதை - இலக்குமி. கோகனம் - கருசாலை, கையாந் தகரை, நிலக்கடம்பு. கோகன்னம், கோகருணம் - ஓரூர், ஓர்வித்தை. கோகன்னவாதனம் - பசுவின் செவி போலிரண்டு கையையுமடித்துச் சுகாதனமாய்ச் செவி கண் மூக்கு எல்லாம் புதைத்திருப்பது. கோகானம் - வேய்ங்குழலோசை. கோகிதம் - குதிகால். கோகிரகம் - அரசரில்லம், ஆன் கொட்டில், போர்வென்றோர் கவர்ந்த திரவியம். கோகிரந்தி - ஆன்கொட்டில், எரு வராட்டி. கோகிராசம் - பசுவிற்குவாயுறை கொடுத்துச் செய்யுமோர் சடங்கு. கோகிருட்டி - ஓரீற்றுப்பசு. கோகிருதம் - ஆப்பி, பசுநெய், மழை. கோகிலம் - உலக்கை, கலப்பை, குயில், பல்லி. கோகிலவாசம் - மாமரம். கோகிலாட்சம் - கொம்மட்டி, நீர் முள்ளி, மாதளை. கோகிலோற்சவம் - மாமரம். கோகு - கழுதை, புயம். கோகுத்தம் - மல்லிகை. கோகுலம் - ஆன்கொட்டில், இடை யரூர், காலிவருக்கம், குயில், குரங்கு, துளையுடைப் பொருள், பல்லி. கோகுலிகன் - பசுக்காத்தவன். கோகோசனம் - கோரோசனை. கோகோட்டம் - ஆன்கொட்டில், ஆன்தொட்டில். கோகோயுகம் - ஓர்சோடு எருது. கோகோலெனல் - இரக்கக்குறிப்பு. கோக்கள் - சிறந்தோர், பசுக்கள், பெரியோர். கோக்குஞ்சம் - அம்புறாத்தூணி. கோங்கணாசூதன் - பரசிராமன். கோங்கணை - பரசிராமன்றாய். கோங்கம் - நடு, நெல்லி. கோங்கிலவு, கோங்கு - ஓர்மரம். கோசகம் - குறி, முட்டை. கோசகாரம் - கரும்பு, பட்டு நூற்பூச்சி. கோசக்கம் - குழப்பம். கோசக்கிரகம் - உள்வீடு. கோசங்கம் - வைகறை. கோசநாசி - அலி. கோசமம் - பீர்க்கு. கோசம் - ஆண்குறி, உறை, கருகூலம், கருப்பை, கற்பாஷாணம், சத்தியம், சாதிக்காய், செல்வம், தெரு, பண்டாரம், புத்தகம், பொக்கிஷ சாலை, மதிலுறுப்பு, முகை, முட்டை, மேற்போர்வை. கோசரபலன் - கிரகபலனினொன்று. கோசரம் - அடங்கல், அறியத்தக்கது, இராசி, ஊர், விடயம். கோசரன் - சன்னியாசி. கோசலம் -தேசமன்பத்தாறி னொன்று, பஞ்சகௌவியத் தொன்று, அஃது பசுமூத்திரம், பதினெண் பாடையி னொன்று. கோசலிகம் - கைக்கூலி. கோசலை - இராமன்றாய், ஓர்தேயம். கோசவம் - கோமேதகம். கோசனை - கோரோசனை, பேரொலி. கோசன் - சீர்பந்தபாஷாணம், வலை ஞனுக்கும் புலைச்சிக்கும் பிறந்த புத்திரன். கோசாங்கம் - நாணற்புல். கோசாதகம் - மயிர். கோசாமி - ஓர் துறவி. கோசாரி - பீர்க்கு. கோசாலம் - அகங்கை, ஆன் கூட்டம். கோசாலை - ஆன்கோட்டம். கோசிகம் - சாமவேதம், சீலை, பட்டுச்சீலை. கோசிகன் - விசுவாமித்திரன். கோசு - இரண்டுகாததூரம், கப்பலி னோர்பக்கம், தாமான்கயிறு, தெரு, தோல்வி, முறை. கோசுகால் - பருமையின்றி நெடுக வளர்ந்தது. கோசுபோதல் - தாழ்ச்சியாதல், தோல்வி போதல். கோடகசாலை - ஓர்பூடு. கோடகம் - குண்டிகை, குதிரை, நாற் சந்தி, புதுமை, முடியுறுப்பி னொன்று. கோடகன் - வீடுவேய்வோன். கோடங்கி - வருங்காரியஞ் சொல் வோன். கோடங்கிழக்கு - கோடைக்கிழங்கு. கோடணை, கோஷணை - ஒலி, கொடு மை, பேரொலி, வாச்சியப்பொது. கோடம், கோஷம் - இரைச்சல், எல்லை, குடில், குதிரை, கோசம், கோட்டை, சங்கபாஷாணம், செங்கருங்காலி, செல்வம், தவளை, வளைவு. கோடரம் - எட்டிமரம், குதிரை, குரங்கு, சோலை, தேர்மொட்டு, மயிர்ச்சாந்து, மரக்கொம்பு, மரப் பொது, மரப்பொந்து. கோடரி - கோடாலி, துர்க்கை, நிரு வாணி. கோடல் - கொள்ளல், மனங்குன்றல், வளைதல், வெண்காந்தள். கோடவதி - வீணை. கோடவி - துற்கை, நிருவாணி. கோடா - அரக்குமண்டி. கோடாகுழிகை - ஓர்மருந்து. கோடாகோடி - அளவின்மை, மகா கோடி. கோடாங்கி - வரிப்புடைவை. கோடாசூரி - கோடகசாலை. கோடாசொரி - ஓர்பாஷாணம். கோடாநீர் - தடிப்பில்லாதநீர். கோஷாபகரணம் - செல்வங்களைய பகரித்தல். கோடாய் - செவிலித்தாய். கோடாரி, கோடாலி - நலியம். கோடி - இருபது கொண்டது, இளமை, கொள்தி, கோடியென் னேவல், சீலை, நூறிலட்சம், புதுமை, முடியுறுப்பு, மூலை, வாள்முனை, விற்குதை, வீட்டின் பின்பக்கம். கோஷி - மாமரம். கோடிகம் - அணிகலச்செப்பு, கெண் டிகை, சீலை, பூந்தட்டு. கோடிகாண்பித்தல் - சுருங்கச் சொல்லி விளக்குதல். கோடிக்கரை - ஓரூர். கோடிக்கல் - மூலைக்கல். கோடிதீர்த்தம் - தனுக்கோடி. கோடிதூங்கி - வீட்டுக்கு வீடு போயி ருக்கிறவன். கோடித்தரை - புதுச்செய்கை பூண்ட தரை. கோடித்தல், கோஷித்தல் - அலங் கரித்தல், ஒலித்தல், பிராத்தித்தல், புதுப்பித்தல். கோடிப்பருவம் - வாலைப்பருவம். கோடிமுடிதல் - ஓர்விளையாட்டு. கோடியர் - சிவிகை முன்கொம்பின் முன்னும் பின்கொம்பின் பின்னும் நிற்போர், நாடகர். கோடியுடம்பு - இளையாவுடம்பு. கோடிரவம் - சதுரக்கள்ளி. கோடிலம் - கோட்டம். கோடிவயது - வாலைப்பருவம். கோடிவற்சம் - வாணாபுரம். கோடீரம் - சடை. கோடு - அரணிருக்கை, அறை, ஊதிடு, கொம்பு, கூட்டம், கோ டென்னேவல், சங்கு, சுழி, நத்தை, நீர்க்கரை, பக்கம், மரக்கொம்பு, மலையினுச்சி, வஞ்சனை, வட்டம், வரம்பு, வரி, வரிசூழ்ந்த விடம், வளைவு, விலங்கின் கொம்பு. கோடுதல் - எரிதல், குறாவுதல், நெறி தப்புதல், வளைதல். கோடுமுத்தம் - சங்கிற்பிறந்த வெள்ளை நிறமுத்து. கோடை - ஒளி, ஓர்கிழங்குப் பூடு, காற்று, குதிரை, செங்காந்தள், முதிர்வேனிற்பருவத்தின் காற்று, மேல்காற்று, வெண்காந்தள், வெயில், வேனிற்காலம். கோடைக்காற்று - முதிர்வேனிற் பருவத்தின்காற்று, மேல்காற்று. கோடைக்கிழங்கு - குட்டியிடுக்கி. கோடைக்குவாடான் - ஆவிரை. கோடைப்போகம் - கொடைப்பிர யோசனம். கோடையடிபடுதல் - வெய்யிலடி படுதல். கோடைவாகளி - சிறுசெருப்படை. கோட்காரன் - கோட்சொல்வோன். கோட்கூறு - இராசியை முப்பதாகப் பகிருதல். கோட்சொல்லல் - குண்டணி சொல்லல். அது வாக்கின்றீக் குணந் நான்கினொன்று. கோட்டகம் - குளம், கோயில். கோஷடகம், கோஷடம் - சொந்தம், நீர்த்தொட்டி, பண்டசாலை, பொக்கிஷம். கோஷட்பாலன் - பொக்கிஷகாரன், பொக்கிஷகாவற்காரன். கோட்டம் - அநீதம், அழுக்காறு, ஆன் கொட்டில், இடம், ஓர் மருந்து. அது பஞ்சவிரையி னொன்று, கடற்கொந்தளிப்பு, குராமரம், குளம், கூட்டம், கோணல், கோயில், சுடுகாடு, தேவலோகம், தொழுவம், நாடு, பசுக்கூட்டம், மருதநிலத் தூர், மாவினாலிடுங் கோலம், வயல், வளைவு, வாசனைப் பண்டம், வாட்டரவு, வீணை. கோட்டரம் - குரங்கு, கொல்லை, நீர் நிலை. கோட்டரவு - குறாவுதல், துக்கம், வாட்டம். கோட்டல் - எழுதல், வளைத்தல். கோட்டாரி - கல்லாரை. கோஷடாகாரம் - பொக்கிஷசாலை. கோட்டாக்கினி - மூலாக்கினி. கோட்டாலை - உலைவு, கஸதி, கிரீடை, துன்பம். கோட்டான் - ஓர்புள், கூகை. கோட்டி - அழகு, உலைவு, கூட்டம், கோட்டாலை, கோபுரவாயில், சம்பாஷணை, சவை, பரிகாசம். கோட்டியம் - அதிசயம். கோட்டியாழ் - நால்வகை யாழி னொன்று. கோட்டில்வாழ்விலங்கு - அணில் குரங்கு முதலியன. கோட்டுதல் - கோட்டல். கோட்டுப்பூ - நால்வகைப் பூவி னொன்று. கோட்டுமண்ணெடுத்தல் - யானை முதலியன களிப்படைந்து கோட் டினால்மண்கிண்டல். கோட்டுமலை - வெண்கலமலை. கோட்டுமா - பன்றி, யானை. கோட்டுமுத்து - யானைக்கோட்டில் முத்து. கோட்டுவான் - ஓர்நீர்ப்புள். கோட்டை - அரண், நெல்லிலோர் தொகை. கோட்டைகட்டுதல் - கோலிகை கட்டு தல். கோட்டைக்கட்டு - அணிவகுப்பி னொன்று. கோட்டைபிடித்தல் - இராச்சியம் பிடித்தல். கோட்டைப்போர் - வைக்கோற் பட்டடை. கோட்படுதல் - கொள்ளப்படுதல். கோளாறடைதல் - பிடிக்கப்படுதல். கோட்படுபதம் - மாட்டுக்குளம்பு. கோட்பதம் - மாட்டுக்குளம்பு. கோட்பறை - நெய்தற்பறை. கோட்பாடு - அனுசரிப்பு, கொண்டி ருக்குந் தன்மை, நிலைமை. கோட்பு - கொள்ளுதல். கோணங்கி - ஓர்நாடகன். கோணங்கித்தாசரி - கோணங்கி. கோணங்கியம்மை - ஓர்நோய். கோணமலை - திரிகோணமலை. கோணம் - இயந்திரதண்டுறுப்பி னொன்று, குணில், குதிரை, சனி, செவ்வாய், திசை, தூரம், முடுக் குத்தெரு, மூக்கு, மூலை, யானைத் தோட்டி, வளைந்தவாள், வளைவு, வீணையியக்கும் வில். கோணலயம் - அரிவாள். கோணல் - கூன், மாறுபாடு, வளைவு. கோணன் - கூனன். கோணாமலை - திரிகொணமலை. கோணாமுகம் - கழியிருக்கை. கோணாய் - ஆணரி, ஓனாய். கோணி - ஓர்சாக்கு, கந்தை, பதினாயி ரங்கோடாகோடி, பன்றி. கோணிகை, கோணியல் - பை. கோணுதல் - வளைதல். கோணை - அழிவின்மை கொடுமை, பீடை. கோண் - கரகங்கெண்டி முதலிய வற்றின் மூக்கு, கொடுங் கோன்மை, கோணென்னேவல், நேரின்மை, மாறுபாடு, வளைவு. கோண்டம் - குறிஞ்சா, தூக்கு, நெருஞ்சி. கோண்டன் - கீழ்மகன், கொப்புழன். கோண்டை - இலந்தை, இலந்தைக் கனி, கமுகு. கோதண்டபாணி - இராமன். கோதண்டம் - கண்ணிமை, வில். கோதநதி - கதுப்பு, தாடை. கோதமம் - ஓர்தீவு. கோதமன் - கௌதமன். கோதம் - சீதாங்கபாஷாணம். கோதல் - கொந்தல், கோதுதல். கோதனம் - பசுக்கூட்டம், பசுமடி, பசுவின்கன்று. கோதா - உடும்பு. கோதாட்டம், கோதாட்டு - கோட்டி, சீராட்டு. கோதாட்டுதல் - ஆராட்டுதல், கோட்டி பண்ணுதல். கோதாரணம் - கலப்பை, மண்வெட்டி. கோதாரி - பெருவாரிநோய். கோதாவரி, கோதாவிரி - ஓர்யாறு, அஃது சத்தநதிகளினொன்று. கோதானம் - பசுத்தானம். கோதி - கோதுமை, நெற்றி, முதலை. கோதிகை - முதலை. கோதிமுடித்தல் - மயிர்சீவிக்கட்டுதல். கோது - ஓடு, குற்றம், கோதென் னேவல், சக்கை. கோதுகுலம் - சீராட்டு. கோதுதல் - கோதல், துளைத்தல், மயிர்வகிர்தல். கோதுமம் - கோதுமை, தேன்தோடை. கோதுமை, கோதும்பை - ஓர்தானியம். கோதேரன் - காவற்காரன். கோதேனு - பாற்பசு. கோதை - ஒழுங்கு, ஓர்கட்பறை, காற்று, கௌதமநதி, சேரன், நெற் சுமை, பூமாலை, பெண், பெண் மயிர், முன்கைத் தோற் கட்டு, சத்திசாரணை. கோத்தந்தம் - மாட்டுக்கொம்பு. கோத்தல் - கதைகட்டுதல், கோக்கு தல், தொடுத்தல். கோத்தனி - முந்திரிகை. கோத்திரசம் - சேர்மானம். கோத்திரமின்மை - கடவுளதெண் குணத்தொன்று. கோத்திரம் - காடு, குடை, குலம், இது கடவுட்குத்தகாத வெண்குற்றத் தொன்று, செல்வம், தெரு, தொட்டி பாஷாணம், நெட்டிப் புல், பூமி, மலை, வரகு, விருத்தி. கோத்திரவம் - கோசலம், வரகு. கோத்திரி, கோத்திரிகை - முந்திரி கைச் செடி. கோத்திரை - பூமி, மலை. கோநசம் - ஓர்பாம்பு. கோநாதன் - இடபம், இடையன். கோநிலயம் - அரசமனை. கோந்தளங்காய் - குறுந்தேங்காய். கோந்தி - குரங்கு. கோந்து - பிசின். கோந்துரு - குடாசகம், கோளாறு, பாட்டனது பாட்டன். கோபகன் - கோபன். கோபகன்னிகை - இடைச்சி. கோபகுண்டம் - எட்டிமரம். கோபக்காரன் - கோபி. கோபக்கிரமன் - கோபி. கோபங்கம் - சரகாண்டபாஷாணம். கோபச்சுவாலிதம் - பெருங்கோபம். கோபணை - கவண். கோபதாபம் - பெருங்கோபம். கோபதி - இடபம், இந்திரன், சிவன், சூரியன். கோபதீத்தம் - பெருங்கோபம். கோபத்திரம் - தாமரை நூல். கோபநிறமணி - சாதுரங்கப்பது மராகம். கோபம் - காத்தல், சடத்தீயி னொன்று. அஃது சினம், தம்பலப் பூச்சி, துத்த பாஷாணம், பாவனை செய்தல். கோபவல்லி - ஓர்கொடி. கோபனம் - தற்காத்தல், நிந்தை, வெளிச்சம். கோபனீயம் - இரகசியம். கோபன் - அதிகாரி, இடையன், காப்போன். கோபாக்கினி - மகாகோபம். கோபாடலிகன் - இடையன். கோபாட்டமி - கார்த்திகை மாதத்துப் பூருவபக்கத்தட்டமி. கோபாயகன் - காப்போன். கோபாயிதம் - காப்பாற்றல். கோபாலகன் - இடையன், கிருட்டி ணன், சிவன், பசுக்காப் போன். கோபாலர் - இடையர். கோபாலன் - இடையன், கண்ணன். கோபாலிகை - இடைச்சி. கோபி - ஓர்மண், கோபியென் னேவல், சினமுள்ளோன், கருநொச்சி, கௌரி பாஷாணம். கோபிகாஸதிரி, கோபிகை - இடைச்சி. கோபிசந்தனம் - ஓரமண். கோபிட்டன் - கோபக்காரன். கோபிதம் - கோபம். கோபிதாரம் - குராமரம். கோபித்தல் - வாக்கின்றீக் குணந் நான்கினொன்று. அஃது சினத்தல். கோபியர் - கோவியர். கோபிரண்டை - ஓர்பிரண்டை. கோபிலன் - காவற்காரன். கோபினை - கோபம். கோபீதம் - சுத்ததலம். கோபுச்சம் - பசுவால். கோபுரக்கல் - செங்கல். கோபுரத்தும்பை - அடுக்குத்தும்பை. கோபுரந்தாங்கி - ஓர்பூடு கோபுரத் தைத்தாங்குவது போலச் செய் திருக்கும் பதுமை. கோபுரம் - நகரின்வாயில். கோபுரவாயில் - கோபுரத்தோடுங் கூடியவாயில். கோபுருட்டம் - ஆப்பி. கோபேந்திரன் - கிருட்டிணன். கோப்பியகன், கோப்பியன் - அடிமை. கோப்பியம் - காத்தல், கோலம், மறைத்தல். கோப்பியாதி - ஈடு. கோப்பு - உல்லாசம், பெருமைக் குணம். கோமகள் - தலைவி. கோமகன் - அரசன், இராசகுமாரன், தலைவன். கோமட்டி - கோமுட்டி. கோமணிக்குன்றம் - வெண்கலமலை. கோமண்டலம் - பூமி. கோமதல்லிகை - நற்பசு. கோமதை - ஓர்நதி. கோமயம் - ஆப்பி. அஃது பஞ்ச கௌவியத்தொன்று. கோமயவருணம் - கோமேதகம். கோமலகம் - தாமரைநூல். கோமலகிதம் - இன்னிசைப்பாட்டு. கோமலதை - மிருது. கோமலம் - அழகு, மிருது. கோமலை - திராமலை. கோமளம் - இளமை, இளமைச் செவ்வி, சந்தோஷம், பசு. கோமாட்டி - தலைவி. கோமாமிசபட்சணி - மாட்டிறைச்சி புசிப்பவன். கோமாமிசம் - மாட்டிறைச்சி. கோமாயு - நரி. கோமாரி - பசுக்கோதாரி. கோமாளம் - கொண்டாட்டம், சந் தோஷம், பரிகாச விளையாட்டு. கோமாளி - சமாளக்காரன். கோமாள் - தலைவி. கோமான் - அரசன், குரு, தலைவன், பன்றி, பெருமையிற்சிறந்தோன். கோமியவண்ணம் - கோமேதகம். கோமிலாய் - காட்டுக்குணன். கோமுகம் - கோமுகாதனம், கோமு கை. கோமுகாதனம்-சகனப்பக்கத்திலிரு காற்பரட்டையும் மாறவைத் தவ்விரு காற்பெருவிரலைக் கைப் பிடித்திருத்தல். கோமுகை - பசுமுகமாய்ச் செய்யப் பட்டு அபிஷேகநீர் வரும் வழி. கோமுட்டி - ஓர்சாதி. கோமூத்திரம் - கோசலம். கோமூத்திரி - ஓர்மிறைக்கவி, அஃது இருவரிநேரேயெழுதிமேல்வரியுங் கீழ்வரியும் மாறிவாசிக்கச் செவ் வேகவியாய் வரத்தொடுப்பது. கோமூத்திரிகை - ஓர்புல். கோமேதகம் - நவமணியினொன்று. கோமேதம் - ஓர்யாகம், கோமேதகம். கோம்பல் - சினக்குறிப்பு, பெருங் கோபம். கோம்பறை - ஒன்றுக்கற்றது. கோம்பி - பச்சோந்தி. கோம்புதல் - கோபித்தல். கோம்பை - தேங்காய் முதலியவற்றின் கதம்பை. கோயானம் - பண்டி. கோயிலார் - கோயிற்பணிவிடைக் காரர். கோயிலாள் - இலக்குமி. கோயில் - அரசன் மனை, தேவாலயம், விபூதிப்பை. கோயில்கொள்ளல் - குடிகொள்ளல், தங்கி வாழ்தல். கோயில்வலம்வரல் - ஆலயப்பிரதட் சணம், அது காயநற்குணம் மூன்றி னொன்று. கோயிற்கணக்கு - அவ்வவ்வூருக்குச் சனங்களைச் சேர்த்தெழுதிய புத்தகம். கோயிற்பழக்கம் - சபைப்பழக்கம். கோயிற்பற்று - ஊர். கோயிற்பிரதிட்டை - கும்பாபிஷேகம். கோயிற்புராணம் - ஓர்புராணம். கோயின்மகமை - கோயிற்காகத் தண்டப்படுந் தருமப்பணம். கோயின்மானியம் - கோயிற்கென்று விடப்பட்டது. கோய் - பரணி. கோரகம் - இளம்பூவரும்பு, வட்டில். கோரகை - இளம்பூவரும்பு, குயில். கோரக்கர் - ஓர்சித்தர். கோரக்கர்மூலி - கஞ்சா. கோரங்கி - ஏலம், ஓர்பட்டணம், ஓர்பூண்டு, ஓர்மருந்து. கோரசம் - கவுதாரி, சிவல். கோரட்சகன், கோரட்சன் - சிவன், பசுக்காப்பவன். கோரணி - ஓர்நோய், கோளாறு, சட்டை, செய்கைச்சித்திரம், விற் பன்னம். கோரண்டம் - பெருங்குறிஞ்சி, மரு தோன்றிமரம். கோரதந்தம், கோரப்பல் - வக்கிரதந்தம். கோரபுட்பம் - வெண்கலம். கோரம் - அச்சம், உட்டணம், கொடுமை, கோளகபாஷாணம், சீக்கிரம், சோழன் குதிரை, நஞ்சு, வட்டில் வளைவு, குதிரை. கோரம்பர் - கழாய்க்கூத்தர். கோரம்பலம் - கோளாறு, வேடிக்கை. கோரராசனம் - நரி. கோரவாரம் - சந்தனம். கோரவிருத்தி - இராசதகுணம். கோரன் - சிவன். கோராசன் - இடபம். கோரான் - ஓர்செடி. கோராவாரி - புயல். கோரான்குச்சு, கோரான்சுளுந்து - கோரான்சூள். கோரி - பிரேதக்குழியின் மேற்கட்டு வது, கிடங்கு, பிரேதக்குழி. கோரிகை, கோரியை - அகப்பை, கூடை. கோரிக்கை - மன்றாட்டம். கோரிதம் - துகள், விள்ளல். கோருதல் - நினைத்தல், விரும்புதல், வேண்டுதல். கோரை - ஓர்புல். கோரைப்பாய் - புற்பாய். கோரையுள்ளான் - ஓர்புள். கோரையொன்றி - ஓர்கொக்கு. கோரோசனை - ஓர்மருந்து. கோர்க்கலம் - மட்பாண்டம். கோலகம் - திப்பிலி. கோலங்கட்டுதல் - வேஷம்போடுதல். கோலங்காட்டுதல் - சாயல் கொள்ளு தல், மாதிரிகாட்டுதல். கோலங்கெடுதல் - அழகுகெடுதல், சீரழிதல். கோலங்கொள்ளுதல் - சாயல் கொள் ளுதல், வேஷங் கொள்ளுதல். கோலச்சங்கம் - முட்சங்கு. கோலஞ்செய்வாள் - வண்ணமகள். கோலபுச்சம் - ஓர்நாரை. கோலமாலம் - ஓர்மீன், மலையா மணக்கு. கோலமிடுதல் - அலங்கரித்தல், கோட்டம்போடுதல். கோலமூலம் - திப்பிலிவேர். கோலமெழுதல் - கோட்டமிடுதல், தொய்யிறீட்டல். கோலம் - அலங்கரிப்பு, அழகு, இலந்தைக்கனி, உருவம், ஒப்பனை, ஓராயுதம், ஓர்துலாம், கலிங்க தேயம், சனி, சாயல், தழுவல், தெப்பம், தொடை, தொய்யில், நீரோட்டம், பறவை, பன்றி, பாக்கு, பாம்பு, பீர்க்கு, மருட் பன்றி, மாமுதலிய வற்றாலிடுங் கோலம், மாதிரி, மிளகு, வினதை நகர், வேடம். கோலம்பண்ணுதல், கோலம்புனைதல் - அலங்கரித்தல். கோலம்போடுதல் - அலங்கரித்தல், கோட்டமிடுதல், வேஷம் போடு தல். கோலரம் - முளை. கோலலவணம் - துருசு. கோலல் - கோலுதல். கோலவல்லி - ஓர்கொடி. கோலவேர் - நிலப்பனை. கோலறை - குழித்தரை. கோலா - பறவைமீன். கோலாகலம் - இடம்பம், இடீக்கு, குசால், சம்பிரமம், பேரொலி, விலங்கினாலெழுமொலி. கோலாங்கூலம் - முசு. கோலாச்சி - ஓர்மீன். கோலாஞ்சம் - கலிங்கம். கோலாஞ்சி - அடுக்கு, அணியம், அதிகோலம். கோலாட்டம் - ஓர்விளையாட்டு. கோலாரிக்கம் - போர்க்கறை கூவல். கோலி - இலந்தைமரம், திப்பிலி, மயிர். கோலிக்கற்றை - கவரிமா. கோலியர் - நெய்வோர். கோலியை - கோரியை. கோலிவாசி - கரடி. கோலுதல் - இடங்கொள்ளப் பண்ணல், சூழ்தல், முகந்தள்ளல், வளைதல், வளைத்தல். கோலுபட்டை - ஓர்பூட்டை. கோலோகம் - கிருஷ்ணலோகம். கோல் - அஞ்சனக்கோல், அம்பு, அளவுகோல், இலந்தை, ஊன்று கோல், எழுதுகோல், குதிரைச்சம் மட்டி, கோலென்னேவல், செங் கோல், துலாக்கோல், துலாராசி, தூண்டில், தெப்பம், மரக்கொம்பு, மரக்கோல், யாழினரம்பு, புள்ளி. கோல்கொடுத்தல் - குருடருக்குப் பற்றுக்கோடுகொடுத்தல். கோல்கோடுதல் - அரசுமுறை தவறுதல். கோல்பிடித்தல் - குருடருக்குக்கோல் கொடுத்துக் கூட்டிப்போதல். கோல்வளை - அழகியவளை, பெண். கோவசூரி - ஓர்வசூரி. கோவணம் - கௌபீனம். கோவணன் - சிவன், வசிட்டன். கோவதை - கோகத்தி. கோவம் - கோபம், பொன். கோவரகழுதை - கழுதையுங் குதிரை யுங்கூடிப்பிறந்தகுட்டி. கோவரங்கம் - பதுமராகநான்கி னொன்று. கோவர் - இடையர். கோவர்த்தனதரன் - கிருட்டிணன். கோவர்த்தனம் - கிருட்டிணன்கன் மாரிக்குப் பசுக்காத்தமலை. கோவர்த்தனர், கோவலர் - இடையர். கோவலன் - கிருட்டிணன், இடையன். கோவளம் - ஓர்பட்டினம். கோவற்சை - மலட்டுப்பசு. கோவிதம் - கலையறிவு. கோவிதன் - அறிஞன். கோவிதாரம் - குராமரம். கோவிந்தர் - இடையர். கோவிந்தன் - கண்ணன். கோவியர் - இடையர், ஓர்சாதியார். கோவிரசம் - ஆனிலை. கோவிருஷம் - எருது. கோவிருந்தம் - ஆன்கூட்டம். கோவில் - இராசமனை, தேவாலயம். கோவுகந்தம் - தாலம்பாஷாணம். கோவெனல் - அதிசயவிரக்கக் குறிப்பு, அனுகரணவோசை. கோவேறுகழுதை - கோவரகழுதை. கோவை - அணிவடம், ஒழுங்கு, ஓர் பிரபந்தம், கொவ்வை, கோத்த மாலை, கோத்தல், நிரை. கோவைசியர் - மூவைசியரிலொருவர். அவர் இடையர். கோவைத்துறை -தலைவனுந் தலை வியுங்களவியலானடக்கு மொழுக் கத்தைக் கூறுவது. கோவையாணி - பிணையலாணி. கோழம் - சங்கபாஷாணம். கோழி - உறையூர், ஓர்புள். அஃது பஞ்சபட்சியினுமொன்று. கோழிக்கரணம் - பதினோர் கரணத்தி னொன்று. கோழிக்கல் - ஈரக்கல். கோழிக்காரம் - ஓர்மருந்து. கோழிக்கீரை - ஓர்கீரை. கோழிக்குரல், கோழிகூவல் - விடியற் புறம். கோழிக்குறுமான் - ஓர்பூடு. கோழிக்கொடி - கோழிமுளையான், கோழியவரை, முருகன்கொடி. கோழிக்கொடியோன் - ஐயன், குமரன். கோழிக்கொண்டை - கோழிச்சூடன். கோழிச்சூடன் - ஓர்புல். கோழித்தலைக்கந்தகம் - சிவந்தகெந் தகம். கோழிநெஞ்சு - மிதந்தநெஞ்சு. கோழிப்பசளை - ஓர்பசளை. கோழிப்பஸமம் - ஓர்சூரணம். கோழிப்புடம் - மூன்றெருப்புடம். கோழிமுட்டைத்தயிலம் - கோழி முட்டையிலெடுக்குந்தயிலம். கோழிமுளையான் - ஓர்கொடி. கோழியவரை - ஓர்கொடி. கோழியுள்ளான் - ஓர்குருவி. கோழிவேந்தன் - சோழன். கோழை - அச்சம், கண் முதலிய வற்றின் குழி, குறைவு, கொடுமை, சிலேற்பனம், தவறு, நாணம். கோழைக்கட்டு - சிலேற்பனக்கட்டு. கோழைக்குத்து - ஓர்நோய். கோழைத்தனம் - அச்சத்தன்மை, சின்னத்தனம். கோழையன் - அச்சமுள்ளோன், நாணமுள்ளோன். கோழைவிந்து - துளசி. கோளகம் - கோளகபாஷாணம், திப்பிலி, பட்டுச்சீலை, மண்டலிப் பாம்பு, மிளகு. கோளகபாஷாணம் - விளைவு பாஷாண முப்பத்திரண்டி னொன்று. கோளிப்பொருள் - கொள்ளப்படும் பொருள். கோளகவச்சிரம் - கருந்தண்ணீர்க்கல். கோளகன் - கைமைபெற்றபிள்ளை. கோளகை - மண்டலிப்பாம்பு, வட்டம். கோளம் - உண்டை, வட்டம். கோளம்பம் - கிரகணம். கோளரி - ஆண்சிங்கம், சிங்கம். கோளவங்கம் - வங்கமணல். கோளன் - கோளுரைப்போன். கோளாங்கல் - பருக்கைக்கல். கோளாறு - குடாசகம், குழப்பம். கோளி - அத்தி, ஆலமரம், கொழிஞ்சி மரம், கொள்வோன், பூவாது காய்க்குமரம். கோளிகை - பெட்டைக்கழுதை, பெட்டைக்குதிரை. கோளேசம் - குங்குமப்பூ. கோளை - எலி. கோள் - இடையூறு, கிரகம், குணம், கொலை, கொள்ளல், கோட்பாடு, தீமை, நாள், பழிமொழி, புறங் கூறல், பொய், வலி. கோறணி - குண்டணி, கோரணி. கோறல் - கொல்லல். கோறிக்கை - நினைவு. கோறுதல் - கோருதல். கோறை - துளை, பொந்து. கோற்கணக்கு - நிலமளக்கிறகணக்கு. கோற்கொடி - இலந்தை, சுரை. கோற்புழு - கீடம். கோற்றேன் - கொப்பாந்தேன். கோற்றொடி - பெண். கோனான் - இடையரின் சங்கைப்பேர். கோனிச்சி - இடைச்சி. கோன் - அரசன், இடையன், எப் பொருட்குமிறைவன். கோன்மை - ஆளுகை, இராசநீதி. கௌ கௌ - ஓரெழுத்து, கவ்வென்னேவல், கிருத்தியம், தீங்கு, மனஸதாபம். கௌகணம், கௌங்கம் - கொங்கணம். கௌகுடிகம் - தூரத்தில் வருபவரைக் காண்டல். கௌசலம் - ஓர்தேசம், வாழ்த்து. கௌசலிகை - கொடை. கௌசனை - கௌபீனம். கௌசலேயன் - இராமன். கௌசலை - இராமன்றாய். கௌசிகம் - ஓர்பண், கூகை, சாம வேதம், பட்டுச்சீலை, பதினெண் பாடையினொன்று, விளக்கத் தண்டு, சோகி, பாம்பு, வியாழம். கௌசிகன் - இந்திரன், பாம்பாட்டி, விசுவாமித்திரன். கௌசிகாயுதம் - வானவில். கௌஞ்சம் - கிரவுஞ்சம். கௌஞ்சிகர் - பொன்வினைமாக்கள். கௌடகிகன், கௌடிகன் - புலைஞன். கௌடசாட்சி - பொய்ச்சாட்சி. கௌடதருக்கம் - ஓர்தருக்கசாத்திரம். கௌடமார்க்கம் - கௌடர்களின் வழக்கு. கௌடம் - ஓர்கொடி, ஓர்தேயம், வஞ்சகம், ஓரலங்காரம், அஃது குணவலங்காரம்பத்துடனேயுங் கூடாது நடக்குமொழுக்கமுடை யது. கௌடிகம் - கண்ணி. கௌடில்லியம் - அவமதி, வளைவு. கௌணபன் - இராட்சசன். கௌணடர் - சண்டாளர், புலைஞர். கௌணம் - குணம். கௌணடிகர் - தோல்வினைஞர். கௌதமநதி - கௌதமைநதி. கௌதமம் - தருமநூல் பதினெட்டி னொன்று. கௌதமன் - சத்தவிருடிகளிலொரு வன். கௌதமி, கௌதமை - ஓர்பசு, கோதாவரி, கோரோசனம். கௌதம் - சிச்சிலிக்குருவி. கௌதாலிகன் - பரதவனும் வண் ணாத்தியுங் கூடிப்பெற்ற புத்திரன். கௌதுகபந்தனம் - இரட்சாபந்தனம். கௌதுகம் - நூதனம், சந்தோஷம், தாலி, பேராசை. கௌதுவம் - அனுபவகாலம், இணக் கம், உபசரித்தல், திருவிழா, நூத னம், பொழுது போக்கு, மகிழ்ச்சி, மங்கிலியசூத்திரம், வாஞ்சை. கௌதூசலம் - நூதனம், வாஞ்சை. கௌத்துவம் - அத்தநாள், துளசி மணி, பதுமராகம், மாணிக்கம், வஞ்சகம், அனுபவகாலம், காப்பு. கௌந்தி - அரேணுகம், ஓர்பூண்டு, குந்திதேவி, தவப்பெண். கௌந்திகர் - ஈட்டிக்காரர், குந்தி புத்திரர். கௌபம் - கூபம். கௌபீனம் - கச்சைச்சீலை, தவறு, பாவம். கௌப்பு - பெருமை. கௌமாரம் - இளம்பருவம். அஃது ஒன்றுமுதற் பதினாறுவரையு மாகிய பருவம், ஓர்சமயம், பதி னாறுவயதின் மேலுமுப்பத் திரண்டு வயதினுள்ளுமாகிய பெண் பருவம், பதினெண்கீத புராணத்தொன்று. கௌமாரி - சத்தமாதர்களிலொருத்தி, பார்வதி. கௌமோதகி - விட்டுணுவின் தண் டாயுதம். கௌமோதம் - கார்த்திகைமாதம். கௌமோதி - கார்த்திகைத்திருவிழா, திருவிழா, நிலா. கௌரமம் - கூர்மம். கௌரம் - சுத்தம், மஞ்சனிறம், வெண்மை. கௌரவம் - அச்சம், கீர்த்தி, தாமரை நூல் பொன். கௌரவர் - குருகுலவேந்தர். கௌரி - கடுகு, காளி, துர்க்கை, பத் தாண்டுப் பெண், பார்வதி, புளி நறளை, மஞ்சனிறம், துளசி, பூமி. கௌரிகேணி -வெள்ளைக் காக்கணம். கௌரிகை - கன்னி. கௌரிசங்கம் - இரட்டையுருத் திராட்சம். கௌரிசங்கரமணி - இரட்டை யுருத் திராட்சம். கௌரிசேயன் - குமரன், வினாயகன். கௌரிசேய் - விநாயகன். கௌரிச்சிப்பி - கௌரிபாத்திரம். கௌரிநந்தனன் - சுப்பிரமணியன். கௌரிபாத்திரம் - பாத்திரச்சங்கு. கௌரிபாஷாணம் - விழைவுபாஷாண முப்பத்திரண்டினொன்று. கௌரிமாயூரம் - ஓர்தலம். கௌரியன் - பாண்டியன். கௌரீலலிதம் -அரிதாரம். கௌருதற்பிகன் - குருபன்னிகற்பழித் தோன். கௌலகேயன் - வேசிபுத்திரன். கௌலவம் - பன்றி, இஃது பதினோர் கரணத்தொன்று. கௌலாலகம் - மட்பாண்டம். கௌலிகன் - எத்தன், பிரதிவாதி. கௌலினம் - உயர்குலம், துர்ச் செய்கை, மறைவிடம். கௌலேயகம் - குலத்திற்பிறத்தல். கௌலேயகன் - இல்லொழுக்கத்திற் பிதாமாதாவிடத்திற் பிறந்தவன், நாய். கௌலோகம் - கோலோகம். கௌவலம் - இரந்தை. கௌவல் - கௌவுதல். கௌவியம் - கோரோசனை, பசுவி லுள்ளபொருள். அஃது பால் - தயிர் - நெய் - கோசலம் - ஆப்பி. கௌவுதல் - கவ்வுதல். கௌவை - ஆயிலியநாள், எள்ளிளங் காய், கலக்கம், கள், காரியம், துன்பம், பழிச்சொல், சத்தம். கௌளம் - ஓரிராகம். கௌளி - பல்லி. கௌளிக்காதல் - பல்லிச்சாத்திரம். கௌளிதம் - பட்சித்தல். ச சஃகுல்லி - அப்பவருக்கம், மோக்கம். சககமனம் - உடன்கட்டையேறுதல். சககாரம் - தேமா. சகசட்சு - சூரியன். சகசண்டி - வெட்கமற்றோன். சகசதாதான்மியம் - அகங்காரஞ் சீவனுடன் பொருந்தல். சகசம் - உண்மை, ஒற்றுமை, வட்டில். சகசரன் - உடன்றிரிதோழன். சகசரி - பொன்னிறங்கலந்தகரும் பூவுளமருதோன்றிமரம், வாடாக் குறிஞ்சி. சகசன் - சகோதரன். சகசா - சிறுகுறிஞ்சா. சகசாட்சி - சூரியன். சகசை - உடன்பிறந்தாள். சகசோதி - மிகுமிரபை. சகடகனன் - கிருட்டிணன். சகடக்கால் - பண்டியுருள். சகடம் - அசுத்தம், உரோகணி, ஊர்க் குருவி, ஓர்யோகம், தமரத்தை, பண்டி, பாண்டில் பூண்டவூர்தி, வட்டில். சகடயூபம் - ஓர்படையணி. சகடயோகம் - வியாழனுக்கு, ஆறு, எட்டு, பன்னிரண்டிற்சந்திரன் நிற்பது. சகடாலன் - நந்தன் மந்திரி. சகடான்னம் - அசுத்தபோசனம். சகடிகை - கைவண்டில். சகடு - உரோகணி, ஒருமிக்க, சந்தேகம், பண்டி. சகடை - பண்டி, முரசு, வாச்சியம், ஓர்வாத்தியம். சகணம் - ஆப்பி. சகண்டை - முரசு, வாச்சியம். சகதண்டம் - உலகமுழுவதும். சகதந்தம் - உலகத்தினெல்லை, உலக முடிவு. சகதாத்திரி - துர்க்கை. சகதாத்துமா - கடவுள். சகதி - சேறு, பூமி, பொல்லாநிலம். சகதிபதி, சகதிபாலன் - அரசன். சகதேவன் - சகாதேவன். சகதேவி - இலக்குமி. சகஸதிரதாரம் - சக்கிரம். சகத்திரநாமன் - கடவுள். சகத்திரபாதன் - சூரியன். சகத்திரபேதி - கலவேதி. சகத்திரம் - ஆயிரம், சிவாகமமிரு பத்தெட்டினொன்று. சகத்திரவேதி - சாத்திரவேதி. சகத்திராட்சன் - இந்திரன். சகஸதிராமிசன் - சூரியன். சகத்திரானிகன் - ஓரரசன். சகத்து - உலகம், அனுபவம். சகநாதம் - ஓரூர். சகநாதன் - கடவுள், சிவன், விட்டுணு. சகநாயகன் - காந்தம். சகந்தம் - சுகந்தம். சகபதி - அரசன், கடவுள். சகபாடி - கற்றுச்சொல்லி, கூடப்பாடு வோன், சகலன். சகப்பிராணன் - காற்று. சகப்பிராந்தி - உலகத்தைவெறுத்து விடுகை. சகமார்க்கம் - யோகமார்க்கம். சகமோகம் - மண்ணாசை. சகம் - கூட, சட்டை, தேசமன்பத் தாறினொன்று, பூமி, மார்கழி மாதம், வெள்ளாடு. சகரச்சாரி - சத்துசாரம். சகரர் - சகரபுத்திரர். சகரன் - முதலெழுவள்ளலி லொரு வன். சகரிகம் - நாயுருவி. சகருணன் - தயாலு. சகருவம் - பெருமை. சகரூபன் - சகோதரன். சகர்மக்கத்தரிப்பிரயோகம் - செயப் படுபொருளுடைய வினைமுதலின் முடிப்பு. சகலகம் - வெள்ளாட்டுக்கடா. சகலகலாவல்லவன் - கலைஞானி, குமரன். சகலகாமேட்டி - சருவவாஞ்சாயாகம். சகலகுணசம்பன்னன் - பலநற்குண முள்ளவன். சகலத்தியாகம் - சருவத்துறவு. சகலபாசனம் - அருகன் முக்குடையி னொன்று. சகலபாடி, சகலப்பாடி - ஓர்குடியிற் கொண்டோன். சகலமங்கலை - பார்வதி. சகலமும் - எல்லாம். சகலமோகினி - மாயை. சகலர் - எல்லாம், துண்டு, தோல், மீன்முள். சகலர் - எல்லோர், ஓர்குடியிற் கொண்டோர், மூவகையான மாக்களிலொருவர். சகலவியாபி - கடவுள். சகலன் - மனைவிசகோதரிகணவன். சகலாத்து - சிவப்புக்கம்பளி. சகலாவத்தை - ஓரவத்தை. சகலி - ஓர்மீன். சகலிகரணம் - துண்டாக்கல். சகல் - கொசுகு. சகவம் - ஓர்புள். சகவாசம் - உற்றசினேகம், கூட விருத்தல். சகவாசி - உயிர்த்துணைவன், கூட விருப்போன். சகவாழ்வு - உலகவாழ்வு. சகவிசையை - ஓர்பட்டணம். சகளப்பாடி, சகளன் - சகலப்பாடி. சகளம் - மாயரூபம். சகளாதனம் - அட்டணைக் காலிட் டிருந்து இடக்கை யிருகாலினு மூன்றிக் குஞ்சித் திருப்பது. சகனமோகினி - உலகமெல்லாம் மயக்கும் மோகினி. சகனம் - ஆசனம், தொடையினுட் பக்கம், பொறுமை. சகன் - கூட்டாளி, சங்காத்தி, சாலி வாகனன், தோழன். சகன்மக்கத்துருப்பிரயோகம் - செயப் படுபொருளுடைவினை (உம்.) வளைந்தான். சகன்னம் - உற்றுக்கேட்டல். சகா - ஒர்பூடு, தோழன், எல்லாம். சகாகௌலம் - ஓர்நரகம். சகாசிதம் - அலங்காரம், பிரவை. சகாடி - பீர்க்கு. சகாதேவன் - பாண்டவர்களில் இளையோன். சகாத்தம், சகாப்தம் - சகரனாண்டு. சகாத்தன் - தோழன். சகாந்தகன் - விக்கிரமாதித்தன். சகாபாடி - சகபாடி. சகாயம் - உதவி, துணை, நயம், நன்மை. சகாயதம், சகாயானம் - சினேகக் கூட்டம். சகாயவுபாயம் - யோசனையுதவி. சகாயன் - தோழன். சகாயி - சகாயன். சகாயித்தல் - இலகுவாதல். சகாரணம் - ஏதுவுடையது. சகாரி - ஓர்வள்ளல். சகாலம் - அதிகாலம். சகி - சகியென்னேவல், தோழி. சகிதம் - ஒற்றுமை. சகிதன் - சேர்ந்திருப்போன். சகித்தல் - பொறுத்தல், மன்னித்தல். சகித்துவம் - தோழமை. சகிப்பு - பொறுதி. சகு - சவ்வரிசி. சகுடம் - சேம்பு, நாய், பொதியமலை. சகுடை - சிற்றகத்தி. சகுட்டகம் - ஆடுதின்னாப்பாலை. சகுட்டம் - கிழங்கு. சகுந்தம் - ஓர்நீர்ப்புள், கழுகு, பறவை, கமுகு, காந்தி. சகுந்தி - ஓர்புள், பறவைப்பொது. சகுப்பிரயோகம் - ஒருதரம். சகுலகண்டம் - ஓர்மீன். சகுலம் - சமுசாரம். சகுலி - ஒலி, மீன். சகுல்லியன் - உறவன். சகுனசாத்திரம் - கலைஞானமறு பத்தினான்கினொன்று. அஃது நிமித்தசாத்திரம். சகுனப்பிழை - துன்னிமித்தம். சகுனம் - கிழங்கு, நிமித்தம், பறவை. சகுனி - கூகை. அஃது கரணம் பதினொன்றினொன்றுமாம், துரியோதனன் மாமன், நிமித்தம் பார்ப்போன், பறவை. சகுனீசுபரன் - கருடன். சகோடயாழ் - நால்வகையாழி னொன்று. சகோதரத்தானம் - பிறந்தராசிக்கு மூன்றாமிராசி. சகோதரம் - உடன்பிறப்பு. சகோதரர் - உடன்பிறந்தார். சகோதரி - உடன்பிறந்தாள். சகோத்திரம் - சமுசாரம், வமிசம். சகோரகம், சகோரம் - சக்கரவாகம், செம்போத்து, பேராந்தை, நிலா முக்கிப்புள். சக்கட்டம், சக்கந்தம் - நிந்தை, பரிகாசம், மயிர். சக்கட்டை - இளப்பம், சமர்த்தின்மை. சக்கப்பணியவிருத்தல் - சக்களிய விருத்தல். சக்கரக்கவி - கோட்டிலெழுத் தடைத் துப்பாடுங்கவி. சக்கரதரன் - சக்கரந்தரித்தோன், பாம்பு, விட்டுணு. சக்கரதாபனம் - அட்சரந்தாபித்தல். சக்கரதாரி - விட்டுணு. சக்கரதிசை - ஆயுமுடிவறியுந் திசை களினொன்று. சக்கரந்திரித்தல் - இயந்திரமாட்டல். சக்கரபாணி - துர்கை, விட்டுணு. சக்கரப்பொறி - எந்திரப்பொறி. சக்கரமடைத்தல் - இயந்திரத்தி லெழுத் தடைத்தல். சக்கரமுடிவு - ஆயுள்முடிவு. சக்கரம் - அறுபதுவருடங் கொண் டது, ஆணையாசக்கரம். இஃது, இராசசின்னத்தொன்று, இயந்திரம், ஊர், கடல், காசு, கிரகநடை, சக்கரவாகப்புள், சக்கிரம், சீவிய நாள், சுழல்காற்று, சுற்று, செக்கு, தேருருளை, பிறப்பு, பூமி, பெருமை, மலை மல்லிகை, வட்டம், ஓர் சித்திரக்கவி, அஃது நான்கார்ச் சக்கரமு மெட்டார்ச் சக்கரமு மாறார்ச்சக்கரமும் வரப்பாடுவது. சக்கரயூபம் - ஓர்படையணி. சக்கரரேகை - சக்கராகாரமான ரேகை. சக்கரவட்டம் - வட்டவடிவு. சக்கரவர்த்தி - மற்றொருவரைப் பணியாது தனியாள்வோன். சக்கரவாகம் - ஓர்புள். சக்கரவாணம் - ஓர்வாணம். சக்கரவாளம் - எல்லை, ஓர்புள், ஓர்மலை, வட்டவடிவு. சக்கரன் - இந்திரன், துவாச தாதித்தரி லொருவன், விட்டுணு. சக்கராகாரம் - வட்டவடிவு. சக்கராதிபதி - சுயாதிபதி. சக்கராயுதன் - விட்டுணு. சக்கராயுதி - சக்கரதரன், துர்க்கை. சக்கரேசுவரன் - ஏகாதிபதி. சக்கரை, சருக்கரை - வட்டித்தது. சக்கரையமுது - சக்கரைச்சாதம். சக்கல் - சக்குக்கட்டினது, சாரம் வடித்தது. சக்களத்தி - ஓர்பொருளுக்கின மாயிருக்கும் வேறொருபொருள், கொழுநனின் சகோதரன் மனைவி, மாற்றாடிச்சி. சக்களமை - மாற்றாடிமாரினெ திரிடை. சக்களவன் - மாற்றவன். சக்களிதல் - சளிதல். சக்களியல் - சக்களிந்திருப்பது. சக்களையன் - சழுங்கலன், சழுங்கல். சக்காரம் - தேமா. சக்கிமுக்கி - சக்கைமுக்கி. சக்கியம் - அன்பு, இயன்றது, சேர் மானம். சக்கியன் - சினேகிதன். சக்கிரகம் - தருக்கசாத்திரத்தொன்று, பீசாங்குரநியாயம். சக்கிரசீவகன் - குயவன். சக்கிரதரன், சக்கிரபாணி - திருமால். சக்கிரபாதம் - பண்டி, யானை. சக்கிரபாலன் - அதிபதி. சக்கிரபேதினி - இரவு. சக்கிரமணம் - உலாநடை. சக்கிரமண்டலி - ஓர்பாம்பு. சக்கிரமுகம் - பன்றி. சக்கிரம் - சக்கராயுதம், சுழல்காற்று, சேனை, தண்டசக்கிரம், திசை. சக்கிரயானம் - பண்டி. சக்கிரவதன் - சக்கரதரன். சக்கிரவாடம் - எல்லை. சக்கிரவாதம் - சுழல்காற்று. சக்கிரவாந்தவன் - சூரியன். சக்கிரவாளம் - திகாந்தம், வட்டம். சக்கிரவிருதன் - விட்டுணு. சக்கிரவிருதி - வட்டிமேல்வட்டி. சக்கிரவேதினி - இரவு. சக்கிராங்கம் - ஓர்புள், பண்டி. சக்கிராங்கி - ஓர்புள். சக்கிராடி - எத்தன், பாம்பாட்டி. சக்கிராதம் - பன்றி. சக்கிராதிவாசி - தேன்தோடை. சக்கிராவத்தம் - சுழற்றுதல். சக்கிரி - அரசன், குயவன், சக்கர வாகப்புள், செக்கான், திருமால், தேவேந்திரன், பாம்பு, தலைவன். சக்கிரிகை - முழந்தாள். சக்கிரீவதம் - கழுதை. சக்கிலிச்சி - சத்துசாரம், செம்மாத்தி. சக்கிலியன் - செம்மான். சக்கு - கண், பூஞ்சு. சக்குச்சக்கெனல் - ஈரடுக்கொலிக் குறிப்பு. சக்குதானம் - விக்கிரகாராதனையி னொன்று. அஃது விக்கிரகத்தின் கண்கழுவல். சக்குபு - கரிசாலைப்பூடு. சக்குப்பூத்தல் - பூஞ்சுபிடித்தல். சக்கை - கஞ்சல், கோது, தக்கை. சக்கைமுக்கி - தீத்தட்டி. சக்கையன் - உறுப்பின்றிப் பருத்தவன். சக்கோலி - ஓர்பூடு. சங்கக்குழையோன் - சிவன். சங்கக்கூவி - சங்கதூதர்கூலி. சங்கங்குப்பி - பீச்சுவிளாத்தி. சங்கசீலி - வாயில்காவலன். சங்கச்செய்யுள் - சங்கத்துக்கேற்ற செய்யுள், சங்கப்புலவர் செய்யுள். சங்கஞ்செடி - இயங்கஞ்செடி. சங்கடம் - ஒடுக்கவழி, தொந்தரவு, நெருக்கம், மிதவை, முதற்றலை வாய்தல், வருத்தம். சங்கடாட்சம் - கண்மூடுதல். சங்கடை - மரணத்தறுவாய், மரண வேதனை. சங்கதம் - சம்பந்தம், தேவர்மொழி, நட்பு, முறைப்பாடு, பொருந்தல். சங்கதாளம் - கைப்பை. சங்கதி - சரித்திரம், தொடர்பு, வரலாறு. சங்கதை - சங்கதி. சங்கத்தமிழ் - சங்கப்புலவர் தமிழ், தெளிதமிழ். சங்கத்தலைவன் - சங்கத்தில் முதல்வன், குமரன். சங்கத்தார் - ஆலோசனைக்காரர், கூட்டத்தார். சங்கத்திராவகம் - ஓர்திராவகம். சங்கநாதம் - சங்கோதை. சங்கநிதி - சங்குருவாய்க்கிடக்கு நிதி. சங்கநிவிர்த்தி - அவைக்கு நியாய சாந்தி. சங்கபதம் - அட்டாதசதரும நூலி னொன்று. சங்கபாடாணம் - தாலம்பபாஷாணம். சங்கபரணி - விட்டுணு. சங்கபாலன் - அட்டமாநாகத்தொன்று. சங்கபுங்கி - கடுரோகிணி. சங்கப்பலகை - மதுரைச்சங்கத் திருந்த சங்கப்புலவராசனம். சங்கப்புலவர் - கல்விச்சங்கத்தவர், மதுரைச்சங்கத்துப்புலவர். சங்கமக்குரு - வீரசைவர்குரு. சங்கமம் - இயங்குதிணைப்பொருள், கலத்தல், கூட்டம், நிலை யின்மை, புணர்ச்சி, யாறுகூடுமிடம், ஓர் கவி, புத்திகூடல். சங்கமரூபம் - சிவரூபம். சங்கமர் - திருக்கூட்டத்தார், வீரசை வர். சங்கமாராதனை, சங்கமார்த்தனை - பண்டாரங்கட்கன்னங் கொடுத் தல். சங்கமேந்தி - திருமால். சங்கம் - அழகு, ஐக்கம், ஓர்நிதி, கணைக்கால், கூடுதல், கூட்டம், கைக்குழி,சங்கு, சவை, தேறினவன், நூறுகோடாகோடி, நெற்றி, படையிலோர்தொகை. அஃது சமுத்திரம் மூன்று கொண்டது, புலவர், யாறுகூடுமிடம், விருப்பம். சங்கம்வாங்கி - சங்கிரதத்திற்குக் கூட்டிவிட்டுவாங்கி. சங்கம்வாங்குதல் - பெண்ணை யொருவனுக்கு விட்டுவாங்குதல். சங்கரகம், சங்கரிகம் - சபையியல். சங்கரகிதம் - ஒன்றிப்பின்மை, பேதம். சங்கரகிதன் - சங்கந்துறந்தோன். சங்கரசாதி - கலந்தசாதி. சங்கரம் - கலப்பு, குப்பை, துகள், நஞ்சு, போர், வருத்தம், வியாபாரம். சங்கரர் - போர்செய்வோர். சங்கரன் - சிவன், பலவருணக் கலப் பாய்ப் பிறந்தோன், பன்னோரு ருத்திரரிலொ ருவன். சங்கராசாரியர் - ஓர்வேதாந்தகுரு. சங்கராதனம் - இருகான்மடித்து இருபடத்தையுங்கூட்டி நேரே யூன்றியிரு காலின் மேனிற்பது. சங்கராபரணம் - ஓரிசை. சங்கரி - சங்கரியென்னேவல், பார்வதி. சங்கரித்தல் - அழித்தல். சங்கரிப்பு - அழிப்பு, கொலை. சங்கரீகரணம் - குழப்பம், சாதிக் கலப்பு, சுபாப ஒழுங்குத்தப்பான புணர்ச்சி. சங்கரீகிருதன் - கீழ்மகன். சங்கருடணம் - இழுத்தல், உழுதல். சங்கருடணன் - பலபத்திரன். சங்கருடம் - எதிரிடை. சங்கரேகை - சங்கினாகாரமான ரேகை. சங்கலம் - எண்கூட்டுதல், காடு, கூட்டம், சேர்மானம், நட்பு, மாமிசம். சங்கலனம் - எண்கூட்டல், கலப்பு, குவித்தல், சேர்மானம். சங்கலார் - பகைவர். சங்கலிதசங்கவிதம் - ஓர்கணக்கு. சங்கலிதம் - எண்கூட்டல், ஓரெண் கலத்தல், தருமநூல்பதினெட்டி னொன்று. சங்கவாசிதம் - வீடடைதல். சங்களை - மண்கிணற்றின் பலகைக்கட்டு. சங்களைக்கிணறு - பலகைக்கட்டுக் கிணறு. சங்கறுப்போர் - வளைபோழ்நர். சங்கற்பசம் - சங்கற்பம்போல் வாய்த்தல். சங்கற்பசம்பவம் - சங்கற்பித்தபடி பெறுதல். சங்கற்பசம்பன், சங்கற்பசன் - காமன். சங்கற்பசன்மன் - காமன். சங்கற்பஞ்சொல்லுதல் - சங்கற்பித்தல். சங்கற்பம் - நியமம், விருப்பம். சங்கற்பயோனி, சங்கற்பவன் - காமன். சங்கற்பித்தல் - சங்கற்பம்பண்ணு தல். சங்கன்னம் - நரம்பு. சங்காகாரிகன் - முற்றூதன். சங்காசம் - உவமை, தோழமை. சங்காடுதல் - சங்கினாற்புடைவை மினுக்குதல். சங்காதம் - அழித்தல், ஐந்துதர மீரடி களையு மொருங்கெடுத்து வைத்து நடத்தல், ஓர்நரகம், கூட்டம், வசனம், சமூலம். சங்காத்தம் - இணக்கம், சினேகம். சங்காத்தி - அனுசாரி, கூட்டாளி. சங்காரகத்தா - உருத்திரன். சங்காரகாலத்துப்பு - அமுரியுப்பு. சங்காரக்கிரமம் - சங்காரப்படு மொழுங்கு. சங்காரம் - அழிவு. சங்காரி - குதிரைவாலி, சங்காரி யென்னேவல், புதுமணமுடித்த பெண். சங்காரித்தம் - சத்தமுகிலினொன்று, அஃது பூப்பொழிவது. சங்காலம் - விரைவு. சங்காவியங்கட்டுதல், சங்காவேசங் கட்டுதல் - அச்சத்தாலவசமாதல். சங்காவியம் - அச்சத்தான் வருமவசம். சங்கிதை - சரித்திரம். சங்கித்தல் - கனம்பண்ணல், சந்தேகப் படல், பயப்படல். சங்கியை - எண். சங்கிரகணம் - ஏற்றுக்கொள்ளல், கலவிப்பேச்சு, நம்பிக்கை. சங்கிரகம் - உயர்ச்சி, காடு, காத்தல், சம்மதம், சுருக்கம், திரட்சி, கைச் சண்டை. சங்கிரகித்தல் - சுருக்குதல், வழி யோட்டம். சங்கிரதம் - காதலோர் கூட்டம். சங்கிரந்தனன் - இந்திரன். சங்கிரபுரி - இடையரூர், முல்லை நிலம். சங்கிரமசாதி - சங்கரசாதி. சங்கிரமணம் - நடை. சங்கிரமம் - கலப்பு, கிரகநடை, மாதப்பிறப்பு, உபாயவழி. சங்கிரமித்தல் - சூரியன் முதலிய கிரகங்களோரிராசியிலிருந்து மற்றோரிராசிக்குச் செல்லல். சங்கிரம் - காடு. சங்கிராந்தம், சங்கிராந்தி - ஒன்றி லிருந்துவேறொன்றிற்குப் போதல், மாதப்பிறப்பு. சங்கிராமம் - போர், மலைமேல்வழி. சங்கிராமவிலக்கணம் - கலைஞான மறுபத்தினான்கினொன்று, அஃது போர்வித்தை. சங்கிரீடணம், சங்கிரீடமாணம் - விளையாட்டு. சங்கிருதம் - கலப்பு, சமஸ்கிருதம். சங்கிலி - ஓராபரணம், தொடர், தொடை, விலங்கு. சங்கிலிகரணம் - இயல்புக்கு விரோத மான புணர்ச்சி. சங்கிலிதம் - சங்கலிதம். சங்கிலிப்பூட்டு - ஓர்வகைப்பூட்டு, பிசகு. சங்கிற்கூர்மை - சிந்துலவணம், பிடாலவணம். சங்கினி - உபத்தத்தைப் பற்றி நிற்குந் நாடி, நால்வகைப்பெண்ணு ளொருத்தி. சங்கின்கொடியோன் - நாகரவண்டு. சங்கின்பிள்ளை - முத்து. சங்கீதகோலாகலன் - கீதவாத்தியப் பிரியன். சங்கீதசாயித்தியம் - சங்கீதப் பரிட்சை. சங்கீதம் - வாச்சியத்தோடே பாடுதல், வாச்சியத்தோடுபாடும் பாட்டு. சங்கீதலோலன் - கீதவினோதன். சங்கீதவாத்தியம் - சங்கீதத்திற்கிசைய இயக்கும் வாச்சியக்கருவி. சங்கீதி - சங்கீதசாத்திரம், சம்பாஷணை. சங்கீரணம் - அசுத்தம், ஓரலங்காரம், கலப்பு, நெருக்கம், சம்மதித்தல். சங்கீர்தம், சங்கீர்த்தம் - எழுத்துப் புணர்ச்சி, புணர்ச்சி. சங்கீர்த்தனம் - புகழ்ச்சி. சங்கு - இயங்கு, இராசசின்னத் தொன்று, ஒன்றிப்பு, ஓரெண், கடிகாரவூசி, கணைக்கால், கூடுதல், கைவளை, சங்கு, நெற்றி, படைக் கலம். சங்குகாசம் - கண்ணோயுளொன்று. சங்குக்கீரை - ஓர்கீரை. சங்குசக்கரம் - சங்குசக்கரவடிவாய ரேகை, பாம்பின் படப்பொறி. சங்குச்சலாபம் - சங்குக்குழி. சங்குச்சுரி - சங்குப்புரி, புரியாணி. சங்குச்சுரை - புரியாணி, புரியுள்ள சுரை. சங்குட்டம் - எதிரொலி. சங்குதிரி - சங்குப்புரி. சங்குதிருகி - சங்கறுக்குங்கருவி. சங்குத்தாலி - ஓராபரணம். சங்குநாதம் - சங்கோசை. சங்குநாதித்தல் - சங்கூதல். சங்குபுட்பம் - ஞாழல். சங்குப்புரி - சங்குச்சுரி. சங்குமடப்பளி - ஓர்சாதி. சங்குமணி - சங்காற்செய்தமணி. சங்குமரு - வேம்பு. சங்குமறை - துய்யவெள்ளைமறை. சங்குமுத்து - சங்கின்முத்து. சங்குருளை - ஆமை. சங்குலம் - எதிர்மொழி, கூட்டம், நஞ்சு, போர். சங்குவளையல் - சங்காலானவளை. சங்குவெள்ளை - சங்குச்சுண்ணக் காறை, சுத்தவெள்ளை. சங்கூடம் - அடுக்கு, குவியல், சுருக்கம். சங்கூதி - பதினெண்குடிமையி னொருவன். சங்கூபிலம் - அட்டாதசகீதபுராணத் தொன்று. சங்கூமச்சி - ஓர்வகையூமச்சி. சங்கேதம் - குழூஉக்குறி, நியமம், பொருத்தம். சங்கை - அச்சம், ஐயம், சுண்டி, மதிப்பு. சங்கைமான் - சங்கைக்காரன். சங்கையீனம் - சங்கைத்தாழ்ச்சி. சங்கோசம் - அடக்கம், கண்கூச்சம், தந்திரம், மஞ்சல், வெட்கம். சங்கோபனம் - மறைவு. சங்ஙிதை - சரித்திரம். சசம் - முயல். சசலம் - ஈரம். சசவிடாணம் - முயற்கொம்பு, அஃது ஓரில்பொருள் வழக்கு. சசாங்கம் - சந்திரன். சசி - இந்திராணி, ஐக்கம், கருப் பூரம், சந்திரன். சசிகடல் - மழை. சசிதரன் - சிவன், விநாயகன். சசிதரி - சிவன், பார்வதி, விநாயகன். சசித்துருவம் - சந்திரன்நிலை. சசிப்புடம் - சந்திரன் சுத்தபுடம். சசிமணாளன் - இந்திரன். சசியம் - கஞ்சா, நிலப்பனை, பயிர், மராமரம், விளைவு. சசியாதிபன் - விளைவுகாரகக்கிரகம். சசிவன் - சினேகிதன், மந்திரி. சசேதனம் - அறிவு. சசேலஸநானம் - புடைவையோடே முழுகுதல். சசேலம் - உடை. சச்சடம் - தாமரை. சச்சடி - கலம்பகம், சனக்கூட்டத் தின்றொந்தறை. சச்சம் - மெய். சச்சரவு - சச்சடி. சச்சரி - ஓர்வாத்தியம். சச்சரை - சண்டை. சச்சரைப்படுதல் - சண்டைபிடித்தல். சச்சற்புடம் - பஞ்சதாளத்தொன்று. சச்சனம் - காவல். சச்சிதம் - அணிதல், அலங்கரிப்பு, ஞானம். சச்சிதானந்தம் - ஞானத்துக்குக் காரணமாயது, சத்துஞ்சித்து மானந்தமுமாய் நிற்கும்பிரமம். சச்சிதானந்தன் - கடவுள், பிரமன். சச்சு - அற்பம், இளந்தது, சந்தடி, நீர்ச்சுண்டி, பறவைமூக்கு. சஞ்சடி - சச்சடி. சஞ்சம் - கச்சு. சஞ்சயம் - கூட்டம். சஞ்சயவாதம் - ஓர்சமயநூல். சஞ்சயனம் - காடாற்றுதல். சஞ்சயன் - பாண்டவர்புரோகிதன். சஞ்சரம் - உடல், கொலை, சங்கடம், பாதை. சஞ்சரி - தேனீ. சஞ்சரிகம் - வண்டு. சஞ்சரித்தல் - வாசம்பண்ணல். சஞ்சரிப்பு - சகவாசம். சஞ்சரீகம் - வண்டு. சஞ்சலத்துவம் - உறுதியின்மை. சஞ்சலம் - அசைவு, காற்று, மனக் கவலை, மின்னல், சுடலையிற் கொண்டு போகும் பால். சஞ்சலனம் - அச்சத்தான் வந்த நடுக்கம். சஞ்சவித்தல் - கலங்கல், கிலேசித்தல். சஞ்சலை - இலக்குமி, திப்பிலி, மின்னல். சஞ்சலைசீவகன் - புருடராகம். சஞ்சனம் - பணிகளானெழுமொலி. சஞ்சனனம் - பிறப்பித்தல். சஞ்சன் - பிரமன். சஞ்சாயம் - இலவசம், வாரப்பங்கு. சஞ்சாயம்விடுதல் - வாரத்துக்கு விடுதல். சஞ்சாரகன் - நடத்துபவன். சஞ்சாரணம் - தூண்டுதல், நடத்துதல். சஞ்சாரப்பிரேதம் - வனவாசி. சஞ்சாரம் - ஏற்றியிறக்கிப்பாடுதல், கூடியிருத்தல், கூட்டம், தொற்று வியாதி, நாகரத்தினம், வாசம். சஞ்சாரம்பண்ணுதல் - கூடியிருத்தல், வாசம்பண்ணுதல். சஞ்சாரன் - உயிர். சஞ்சாரி - சஞ்சரிப்போன். சஞ்சாரிகன் - தூதன். சஞ்சாரிகை - தூதி. சஞ்சாவாதம், சஞ்சானிலம் - காற்றும் மழையும். சஞ்சாளிகம் - வண்டு. சஞ்சிதம் - ஈட்டியது, கட்டுப்பட்ட வினை. சஞ்சிந்தனம் - ஆலோசனை. சஞ்சிந்தியம் - தியானித்தல். சஞ்சிலேட்டுமம் - ஒன்றுக்குட்புகுதல். சஞ்சீவகரணி - புளியமரம், மூர்ச்சை தீர்த்துயிர் தருமருந்து. சஞ்சீவனம் - உயிர்ப்பித்தல். சஞ்சீவனை, சஞ்சீவி, சஞ்சீவினி - பூநாகம், மூர்ச்சை தீர்த்துயிர் தருமருந்து, சீந்தில். சஞ்சு - ஆமணக்கு, சாயல், பறவை மூக்கு. சஞ்சுகை - பறவைமூக்கு. சஞ்சுபம் - முஸதிப்பு. சஞ்சுவிருதம் - பறவை. சஞ்சூரியமாணம் - பொல்லாங்கிற் கிசைந்திருத்தல். சஞ்சேபம் - அடையாளம், சுருக்கம், சோறு, தருக்கம். சஞ்சேபித்தல் - சுருக்குதல். சஞ்சேயம் - ஈட்டியது. சஞ்சை - பெருமழை, பேரொலி. சடகம் - ஊர்க்குருவி, குடிக்கும் பாத்திரம், சாராயம், தேன். சடக்குச்சடக்கெனல், சடக்குப்புடக் கெனல் - ஈரடுக்கொலிக்குறிப்பு. சடக்கெனல் - ஒலிக்குறிப்பு, சீக்கிரக் குறிப்பு. சடக்கோதன் - வசம்பு. சடங்கப்படுதல் - கட்டுப்படுதல், சோலிக்குட்படல். சடங்கப்பூட்டு - மல்லருடைய பூட்டி னொன்று. சடங்கம் - சோலி, பூட்டு, மூட்டைப் பை, ஆறுசாத்திரம். சடங்கு - கிரியை, செய்முறை. சடசடப்பு, சடசடெனல் - ஈரடுக்கொலிக் குறிப்பு. சடசீதி - ஓர்யோகம். சடதி - சிதைவு. சடத்துவம் - சடத்தன்மை. சடநிறம் - மாமிசச்சிலை. சடபதார்த்தம் - அசித்துப்பொருள். சடபுடத்தல், சடபுடாவெனல், சடபு டெனல் - ஒலிக்குறிப்பு. சடப்பால் - முலைப்பால். சடம் - ஆறு, உடல், கொடுமை, சடத் தீயினொன்று, பொய், விருட்ச மூலம். சடரச்சுவாலை - மூலாக்கினி. சடரம் - வயிறு. சடரயாதனை - கருப்பவேதனை. சடராக்கினி - மூலாக்கினி. சடராமயம் - ஓர்நோய். சடர் - மூடர். சடலட்சணம் - மாயயாக்கையின் குணம், அஃது தன்னையுந் தலை வனையு மறியாதிருத்தல். சடலபுடலம் - பருத்தது. சடலம் - சரீரம். சடலை - பருத்தது. சடவத்து, சடவஸது - அசித்துப் பொருள். சடவுப்பு - அமுரியுப்பு. சடன் - மதியீனன், மூடன். சடாங்கம் - உடலுறுப்பாறு, அஃது கால்-கை-தலை-மார்பு, சிங்கம். சடாசுவாலம் - தீபம். சடாகுடம் - சடாமுடி, சடை. சடாடங்கண் - சிவன். சடாடவி - சடைத்திரன். சடாட்சரம் - குமரன் மந்திரம். சடாட்சரன் - முருகன். சடாட்சரி - உமை, சத்திமந்திரம். சடாதரன் - அருநெல்லி, சிவன், இருடி, வீரபத்திரன். சடாதரி - சடாதாரி. சடாதாரம் - ஆறாதாரம், அஃது மூலாதாரம், சுவாதிட்டானம், மணி பூரகம், அனாகதம், விஸதி, ஆஞ்ஞை. சடாதாரி - கொடியாள் கூந்தல், சடையுள்ளோர், சிவன், பார்பதி. சடாபலம் - பனை. சடாபாரம் - சடை. சடாமகுடம் - சடாமுடி. சடாமகுடன் - சிவன். சடாமாஞ்சி, சடாமாஞ்சில் - ஓர்சரக்கு. சடாமுடி - சடைமுடி. சடாயு - அருணன்மக்களி லொருவன். சடாய்த்தல் - இடித்துரைத்தல், துவக் கில் மருந்திடல். சடாரட்டியென்னல் - ஒலிக்குறிப்பு, விரைவுக்குறிப்பு. சடாரி - கவசம். சடாரிடுதல், சடாரெனல் - ஒலிக் குறிப்பு. சடார்ப்புடாரெனல் - ஒலிக்குறிப்பு. சடாலம் - ஆலமரம், தேன்கூடு, யாகத் தறியினிடும் வளையம். சடானனன் - குமரன். சடிதி - சீக்கிரம். சடிதிவு - கச்சோலம். சடிலம் - குதிரை, சடை, சிங்கம், நெருக்கம். சடினம் - சடைமரம், வசம்பு. சடு - அழுதல், ஆறு, வயிறு. சடுதி - சீக்கிரம். சடுத்தம் - வலோற்காரம், வில்லங்கம். சடுத்தம்பூட்டுதல் - வலோற் கார மாகப்பொறுப்பித்தல். சடுலம் - அசைவு, அச்சம், அழகு, மறு. சடுலவோசை - தீக்கொழுந்து முதலிய வற்றினசைவானெழுமொலி. சடுலை - மின்னல். சடுலோலம் - சடுலம். சடை - அடைக்குந்தடி, ஆணியின் கொண்டை, இரேகை, கிடைச்சி, கூட்டம், சடையென்னேவல், பிரவை, பின்னல்மயிர், வேர். சடைக்கஞ்சா - முறுகுகஞ்சா. சடைக்கந்தம் - வசம்பு. சடைச்சி - ஓர்பூடு, நெட்டி, பாசி, பார்வதி, பொன்னிமிளை, புளி யாரை. சடைச்சிவேர் - ஓர்பூடு. சடைதல் - ஆணி முதலியவை தறைந்து அகற்றுதல், கிலேசப்படுதல், தயிரிய கீனமாதல், மனமடிதல், வளராது நிற்றல். சடைத்தல் - கிளைத்து நெருங்குதல். சடைநாகம் - ஓராபரணம் பாம்பு. சடைநாய் - ஓர்நாய். சடைப்பயறு - ஓர்பயறு. சடைப்புல் - ஓர்புல். சடைப்பாசி - ஓர்பாசி. சடைமுடி - சரக்கொன்றை. சடைமுடியோர் - தபத்தர். சடையன் - சிவன், வீரபத்திரன். சடையாணி - குடுமியாணி. சடைவு - ஆணிமுதலியவற்றின் தறைவு, தடை, தயிரியவீனம், துக்கம். சட்கருமம் - அந்தணர்தொழிலாறு. அஃது இஸநானம், ஓமம், சுவாத்தி யாயம், செபம், தருப்பணம், பிதிர் பூசை, விசுவதேவம் அன்றியும் ஈதல், ஏற்றல், ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட் பித்தல். சட்சணம் - பட்சணம். சட்சரணம் - வண்டு. சட்சள்ளெனல் - ஒலிக்குறிப்பு. சட்சு - கண். சட்சுதீட்சை - சற்குருதீட்சையி னொன்று. சட்சுவிந்திரியக்காட்சி - ஓரளவை, அஃது உருவமறிதல். சட்டகப்பை - ஓரகப்பை. சட்டகம் - உடல், மக்கட்படுக்கை, வடிவு. சட்டங்கட்டுதல் - ஒழுங்குபடுத்துதல், கட்டளையுண்டாக்கல். சட்டதிட்டம், சட்டபட்டம், சட்டவட்டம் - ஒழுங்கு, கட்டளைச்சட்டம், பூரணம். சட்டப்பலகை - மட்டப்பலகை. சட்டம் - எழுதுமோலை, கட்ட ளைத் திட்டம், கட்டில் முதலிய வற்றின் சட்டம், திருத்தம், நாவிச் சட்டம், பூரணம். சட்டம்பி - உவாத்தி. சட்டம்பிப்பிள்ளை, சட்டம்பிள்ளை - மாணாக்கரிற்றலைவன். சட்டவளை - குறுக்குவளை. சட்டவாள் - சட்டம் பூட்டிய ஈர்வாள். சட்டவிளக்கு - ஓர்வகைநிலை விளக்கு. சட்டி - ஆறாந்திதி, ஆறு, ஓர் பாண் டம், சட்டியென்னேவல். சட்டித்தலை - பருந்தலை. சட்டித்தலைப்பா - வட்டத்தலைப்பா. சட்டித்தலையுள்ளான் - ஓர்குருவி. சட்டித்தல் - அழித்தல், கொல்லல். சட்டிபூர்த்திசாந்தி - அறுபதுவயதிற் செய்யுமோர் சடங்கு. சட்டிப்பீரங்கி - அகன்றபீரங்கி. சட்டிப்புல் - ஓர்புல். சட்டியாட்டுதல், சட்டியுருட்டுதல் - ஓர் சூது. சட்டிவிரதம் - ஓர்விரதம். சட்டு - அழிவு, ஆறு, சேதம். சட்டுவம் - அகப்பை. சட்டுவருக்கம் - இலக்கினத்திலிருந்து பிரியுமாறுவருக்கம். சட்டை - அங்கி, கணிப்பு, சிறகு, பாம்பின்றோல், பொதி. சட்டைகழற்றல் - பாம்புதோல் கழற்றல். சட்டைக்காரர் - காற்சட்டைக்காரர். சட்டைச்சாம்பு - சட்டைக்குக் கூடிய புடைவை. சட்டைநாதன் - சிவன், வயிரவன். சட்டைபண்ணல் - கனம்பண்ணல். சட்டைமுனி - ஓர்சித்தன். சட்டோலை - எழுதுதற்கான வோலை. சட்பதம் - வண்டு. சட்பதாதி - சண்பகம், மாமரம். சட்பம் - அறுகு, பசும்புல், மயிர். சட்பிதாபுத்திரிகம் - பஞ்சதாளத் தொன்று. சட்பிரஞ்ஞன் - ஆறுகாரிய மறியுமறி வுடையோன். அஃது சன்மார்க்கம், தேவதன்மை, பாக்கியம், பிர பஞ்சவியல்பு, முத்தி, விருப்பம். சட்புள்ளெனல் - கோபித்துப்பேசல். சணப்பு - சணல். சணம் - கணம், சணல்மரம், தருப்பை, ஏகசித்தம், கடலை. சணம்பு, சணல் - ஓர்பயிர், மகள். சணற்பனார் - சணற்றும்பு. சணைத்தல் - விரிந்துண்டாதல். சணைப்பு - கிளைப்பு, செழிப்பு. சண்டகன் - இலிங்கபாஷாணம். சண்டப்பிரசண்டம் - மிகுவேகம். சண்டமாருதம் - பெருங்காற்று. சண்டமாருதம்பொழிதல் - மிகுதி யாய்ப் பொழிதல். சண்டம் - உறைப்பு, எருது, கருப்பம், கொடுமை, கோபம், சீக்கிரம், பேடு, வேகம். சண்டவேகம் - மிகுவேகம். சண்டன் - அசுரன், அலி, காலன், சிவன், சூரியன், நமன், புளியமரம், பேடி, வேகி. சண்டாளநீர் - நீசர்பரிசனநீர். சண்டாளப்பிராயச்சித்தம் - சண்டா ளரால் வந்த குற்றத்துக்குப் பண்ணுந் நிவிர்த்தி. சண்டாளம் - துரோகம், புலைத் தன்மை. சண்டாளன் - துரோகி, பார்ப்பனத்தி யிடத்திற்சூத்திரனுக்குப் பிறந்த புத்திரன், புலையன். சண்டாளி - துரோகி, புலைச்சி. சண்டி - உரோசமற்றவன், ஓர்மரம், துர்க்கை. சண்டிகை - காளி, துர்க்கை. சண்டிக்கார் - ஓர்நெல். சண்டிக்கீரை - ஓர்கீரை. சண்டித்தனம் - நாணயக்கேடு. சண்டிலன் - சிவன், நாவிதன். சண்டிவாளம் - முன்தீர்த்த விலையை யழிக்கும்படி கொடுக்கிறபணம். சண்டை - பிணக்கு, போர். சண்ணுதல் - செய்தல், வைத்தல். சண்பகம் - செண்பகம். சண்பனி - யோகினிகாளி. சண்பை - சீகாளி. சண்பையர்கோன் - சம்பந்தன். சண்முகன் - குமரன். சதகம் - நூறுசெய்யுட் கொண்ட பிரபந்தம். சதகுப்பி, சதகுப்பை - ஓர்பயிர். சதகோடி - இடி, ஓரெண், வச்சிராயுதம். சதக்கல் - சேறு. சதக்கிரதம் - மின்னல். சதக்கிரது, சதக்கிருது - இந்திரன். சதங்கை - சலங்கை. சதசதத்தல் - நொதுநொதுத்தல். சதசதப்பு - நொதுநொதுப்பு. சதசத்து - சத்துமசத்துமாயது. சதசு - சபை. சதசுலோபி - பண்டிதன். சதச்சதம் - தச்சன்குருவி. சதஞ்சீவி - நூறுவயதிற்கிருப்பவன். சததம் - எப்போழ்தும். சததளம் - தாமரை. சததாமன் - விட்டுணு. சததாரை - இடி. சதத்திருதி - இந்திரன், பிரமன். சதத்துவம் - சுபாவம். சதபதுமம் - தாமரை. சதபத்திரகம் - தச்சன்குருவி. சதபத்திரம் - கிளி, தச்சன்குருவி, தாமரை, மயில், வெண்ணாரை. சதபத்திரி - தாமரை, புழுக்கொல்லி. சதமகன், சதமன்னியு - இந்திரன். சதமுனை - வச்சிராயுதம். சதமூலி - ஓர்பூடு. சதம் - அறுபடுபயிர், இடி, இலை, இறகு, எல்லாம், தமாலமரம், நித்தியம், நிலைமை, நூறு, தாழ் தல், போதல். சதயம் - ஓர்நாள். சதவல் - சதுப்புநிலம். சதவீரு - ஓர்மல்லிகை. சதளம் - கூட்டம். சதனம் - இலை, இறகு, உறை, வீடு. சதா - மரக்கலம், மரத்தினுட்பழுது, எப்பொழுதும். சதாகதி - ஓயாநடை, காற்று. சதாகாலம் - எப்போழ்தும். சதாக்கினி - தேள். சதாங்கம் - பாண்டில்பூண்டவூர்தி. சதாசிவம் - சதாசிவன், முடியா நன்மை. சதாசிவன் - பஞ்சகத்தாக்களி லொருவன். சதாபடம் - எருக்கு. சதாபதி - மரவட்டை. சதாபலம் - எலுமிச்சை. சதாபுயம் - வண்டு. சதாப்பு - ஓர்பூண்டு. சதாமூர்க்கம் - பாம்புகொல்லி. சதாமூலம், சதாவேரி - நீர்மீட்டான். சதாரம் - இடி. சதாவர்த்தன் - விட்டுணு. சதானகம் - இடுகாடு. சதானந்தன் - கடவுள், கௌதமன், பிரமன், விட்டுணு. சதானீகன் - ஓரரசன், விருத்தன். சதி - அழிவு, உரோகணி, கற்புடை யாள், சோறு, தாழ்வாரம், தாள வொத்து, பார்வதி, மனைவி, வஞ்சனை, வட்டம். சதிகாரன் - வஞ்சகன். சதித்தல் - சதிசெய்தல். சதித்துவம் - கற்புடைமை. சதிபதி - சிவன். சதிபுருஷநியாயம் - திரீபுருஷருக் குள்ள உரித்து. சதிமகள் - இந்திராணி. சதிமானம், சதியோசனை - அபகடம். சதிமோசம் - மடிப்பு. சதிரம் - கக்கரி. சதிரிசம் - உவமை. சதிர் - இலகு, எல்லை. சதிர்க்கிராமம் -ஊரின் தலைக்கிராமம். சதீலம் - காற்று, மூங்கில். சதீனகம், சதீனம் - பயறு. சது - நான்கு. சதுகம் - பெருங்காயம். சதுக்கம் - சதுரம், நாற்றெருக் கூடு மிடம், சத்திரம். சதுங்கம் - பறவை. சதுச்சமம் - நால்வகைச் சாந்தின் கலவை. சதுட்கம் - நான்கு. சதுட்டயம் - நான்மடங்கு கொண்டது. சதுட்பதம், சதுட்பாதம் - சதுர்ப்பதம், நாற்காலுள்ளது, நாற்றெருக் கூடுமிடம், நான்கடிகொண்ட பாட்டு. சதுப்பு - சதசதப்பானநிலம். சதுமணி - கழலை. சதுமுகன் - அருகன், பிரமன். சதுரக்கள்ளி - ஓர்கள்ளி. சதுரங்கசேனை - காலாள் - தேர் - பரி யானையாகிய நால்வகைச் சேனை. சதுரங்கதாரணை - நவதாரணையி னொன்று. சதுரங்கதானை - சதுரங்கசேனை. சதுரங்கபட்டினம் - ஓர்பட்டினம். சதுரங்கபந்தம் - சித்திரகவியி னொன்று. சதுரங்கபலம் - நால்வகைத்தானை. சதுரங்கம் - ஓர்விளையாட்டு, நால் வகைத்தானை, நாற்கோணம். சதுரசாலை - நாற்சார்வீடு. சதுரந்தயானம் - சிவிகை. சதுரம் - அகலநீளமொத்த நாற் கோணம், சமர்த்து, யானைப் பந்தி, விரைவு. சதுரர் - அறிஞர், நகரப்பதியோர், நாகரிகர். சதுரன் - கற்றவன், நாகரிகன், பேரா சைக்காரன். சதுரானனன் - பிரமன். சதுரியுகம் -நாலுகமுங்கூடிய பேருகம். சதுரை - சதுரங்கபட்டினம். சதுர் - சபைகூடிச்செய்யுநடனம், திறம், நான்கு, புத்தி. சதுர்க்கதி - ஆமை. சதுர்க்குணன் - ஓர்ப்பு, கடைப்பிடி, குறிக்கோள், தோற்றம் எனுநாற் குண முடையான். சதுர்க்குணி - நாணம், மடம், அச்சம், பயிற்பு எனு நாற்குணமுடையாள். சதுர்த்தசபுவனம் - பதினாலுலகம். சதுர்த்தசம் - பதினான்கு. சதுர்த்தசி - பதினான்காந்திதி. சதுர்த்தந்தம் - இந்திரன்யானை. சதுர்த்தபலம் - நாலாவதாகவந்த பேறு. சதுர்த்தம் - நான்காவது. சதுர்த்தர் - சமர்த்தர், சூத்திரர். சதுர்த்தல் - அப்புதல். சதுர்த்தாங்கிசம் - நாலிலொன்று. சதுர்த்தி - கவிபாடக்கொடுத்த வோரடி, நான்காந்திதி. சதுர்ப்பதம் - கரணம்பதினொன்றி னொன்று, அஃது நாய்க்கரணம். சதுர்ப்பாகம் - நாலாம்பங்கு. சதுர்ப்பாதை - நாற்றெருக்கூடுமிடம். சதுர்ப்புயன் - சிவன், விட்டுணு. சதுர்முகன் - சதுமுகன். சதுர்யுகம் - சதுரியுகம். சதுர்வேதம் - நாலுவேதம், அஃது இருக்கு, எசுர், அதர்வணம், சாமம். சதுலம் - வைத்தல். சதுனி - வெளவால். சதேகரு - இலவங்கப்பட்டை. சதேசன் - நூறுகிராமத்துக்குத் தலைவன். சதேரன் - பகைவன். சதை - தசை, பாலைமரம், முன்னை மரம். சதைதல் - நசுங்குதல். சதைத்தல் - தசைபிடிகொள்ளுதல், நசுக்குதல். சதைபொருத்தி - ஓர்நீர்ப்பூடு. சதையம் - சதயம். சதையொட்டி - ஓர்பூடு. சதோகநாதர் - நவநாதசித்தரிலொருவர். சதோடம் - மரகதத்தின் குணம், அஃது கரடவிலக்கணம். சத்தகம் - ஓராயுதம். சத்தகன்னிகை - ஏழுமாதர்கள். அஃது அபிராமி, இந்திராணி கவு மாரி, காளி, நாராயணி, மயேசு வரி, வராகி. சத்தகுலாசலம் - ஏழுமலை, அஃது இமயம், ஏமகூடம், கைலை, நிடதம், நீலகிரி, மந்தரம், விந்தம். சத்தசமுத்திரம் - எழுகடல் அஃது உவர்நீர், கருப்பஞ்சாறு, தயிர், தேன், நன்னீர், நெய், பால். சத்தசாகரம் - சத்தசமுத்திரம். சத்தசாத்திரம் - சொல்லிலக்கணம். சத்தசிப்பி - கிளிஞ்சில். சத்தசியம் - கிரந்தச்சொல்லிலக்கண விரிவு. சத்தசுரம் - ஏழ்சுரம். சத்தசுராக்கரம் - ஏழ்சுரத்திற்குரிய வக்கரம், அவை ச-ரி-க-ம-ப-த-நி. சத்ததனமாத்திரை - ஒலிப்பிரகிருதி. சத்ததாது - ஏழ்தாது, உடல். சத்ததாரணை - நவதாரணையி னொன்று. சத்ததானம் - வெடியுப்பு. சத்தபருணி - ஏழிலைம்பாலை. சத்தபுரி - காஞ்சிமுதலேழுதலம். சத்தப்படுதல் - ஒலிப்படுதல். சத்தப்பிரதி - சத்தவுணர்ச்சி. சத்தப்பிரமம் - எழுத்தொலியே தெய்வ மென்னுந் நூல், கலை ஞானமறு பத்தினான்கி னொன்று. சத்தப்பிரமவாதம் - ஓர்சமயம். சத்தப்பிரமவாதி - ஓர்சமயி. சத்தமி - ஏழாந்திதி. சத்தம் - ஏழு, ஒலி, அஃது பஞ்ச விடயத் தொன்று, வார்த்தை. சத்தயோனி - சொன்மூலம். சத்தவருக்கம் - ஏழ்வகைமருந்து, அஃது இலவங்கம், ஏலம், குரு வேர், சடாமாஞ்சி, திராட்சம், நெல்லிக் காய், வெட்டிவேர். சத்தவிதம் - தோத்திரஞ்செய்தல். சத்தவெடி - இலக்கங்குறியாது வைக்கும் வெடி. சத்தாபாசம் - அசத்து. சத்தார் - மூலையோட்டம். சத்தார்த்தம் - சொற்பயன். சத்தி - இந்துப்பு, கக்கல், கந்தகம், குடை, குமட்டிக்கொடி, கைவேல், சத்திசாரம், சத்தி யென்னேவல், சவுக்காரம், சிவதத்துவமைந்தி னொன்று, அஃது கிரியைநாடல், சூலம், தேரிடக்கியம், நீர்முள்ளி, பார்வதி, பெண், பெண்கலை, பெலம், பொன்னிமிளை, மறியல், வலிமை, விருதுக்கொடி, வெண் குடை, உபாயவழி, சத்திசாரணை, சுரோணிதம், வேம்பு. சத்திகம் -குதிரை. சத்திகர் - சத்துவகர். சத்திகீலம் - வீணைமுறுக்காணி. சத்திகுன்மம் - ஓர்நோய். சத்திக்கொடி - குமட்டிக்கொடி. சத்திசாரணை - ஓர்பூடு. சத்திசாரம் - ஓருப்பு. சத்திதத்துவம் - சிவதத்துவமைந்தி னொன்று, அஃது கிரியையாயி ருப்பது. சத்தித்தல் - உவாந்தித்தல், ஒலித்தல். சத்தநாதம் - பொன்னிமிளை. சத்திநிபாதம் - சத்தியைவிடுதல். சத்தியநாதர் - நவநாதசித்தரிலொருவர். சத்தியநிருவாணம் - தீட்சைகளிற்சி ரேட்டதீட்சை, பிறவியறுத்தல். சத்தியபாமை - கிருட்டிணன் மனைவி களிலொருத்தி. சத்தியப்பிரமாணம் - உண்மைப் பிரமாணம். சத்தியம் - ஆணை, சபதம், மெய். சத்தியன் - பஞ்சகோசவுற்பத்திக்கு முன்னும் அவையழிந்த பின்னும் ஒரு படித்தாக விருக்குமான் மாவை யுடையவன். சத்தியயுகம் - கிரேதாயுகம். சத்தியலோகம் - பிரமலோகம், அஃது மேலேழுலகினொன்று. சத்தியவசனம், சத்தியவாசகம் - மெய்மொழி. சத்தியவாசகன் - பேச்சுத் தவறாதோன். சத்தியவாதி, சத்தியவான் - மெய்யன். சத்தியவிரதன் - உண்மையினிலை நிற்போன், ஓர்மனு, தருமன். சத்தியவேதம் - மெய்வேதம். சத்தியோசாதம் - சிவனைம்முகத் தொன்று. சத்திரக்கத்தி - இரணவைத்தியத்துக்கு வழங்குங்கத்தி. சத்திரசாலை - அன்னசத்திரம், ஆயுத சாலை. சத்திரபதி - தனிக்குடைநிழற்றி அரசு புரிவோன். சத்திரப்பிரயோகம் - இரணவைத்தியம். சத்திராப்பை - இருப்புச்சட்டி. சத்திரமிடுதல், சத்திரம் வைத்தல் - கத்திவைத்தல். சத்திரம் - அன்னசத்திரம், கத்தி, கை விடாப்படை, கைவேல், பாணம், மடம், யாகம், வெண்குடை. சத்திரயாகம் - ஓர்யாகம். சத்திரவிதி, சத்திரவித்தை - இரண வைத்திய சாத்திரம். சத்திரவைத்தியம் - இரணவைத்தியம். சத்திரி - யானை. சத்திரித்தல் - சத்திரம் வைத்தல். சத்திரியர் - இரண்டாம் வருணத் தோர், அவர் அரசர். சத்திலி - கருப்பூரம். சத்து - அவுபலபாஷாணம், உண்மை, நன்மை, பெரியோர், பெலன், பிரமம். சத்துச்சாரணை - ஓர்பூடு. சத்துராதி, சத்துரு - பகைவன். சத்துருசகம் - பொறுமை. சத்துருதை - பகை. சத்துருத்தனம் - பகைக்குணம். சத்துருத்தானம் - சென்மத்துக்கைந் தாமிடம். சத்துருநாமத்தி - ஏகம்பபாஷாணம். சத்துவகர் - கடவுளருளாலற்புதஞ் செய்வோர். சத்துவக்குறிவிளக்கம் - பாவனா வுரூவகம். சத்துவக்கேடு - பலவீனம். சத்துவம் - சாத்துவிககுணம், சுபாவம், வலி. சத்துவரம் - வேதிகை. சத்துவாங்கல், சத்தெடுத்தல் - பாஷா ணங்களின் சத்தெடுத்தல். சத்தை - இருக்கை. சத்துவாங்குதல் - தத்துவத்தைக் குறைத்தல். சத்துவாலம் - ஓமகுண்டம், கருப்பம், தருப்பைப்புல். சத்துவேது - காரணகாரியவேது. சந்தகபுட்பம் - கராம்பு. சந்தகம் - சந்தோஷம். சந்தகன் - சந்திரன். சந்தடி - இரைச்சல், சனக் கூட்டத் தாலாகுந்தொந்தறை. சந்தணி - சந்தனம். சந்தணுகி - பாம்பு. சந்ததம் - எப்பொழுதும், பலகாற் கேட்டல். சந்ததி - சந்தானம், மகன். சந்தப்பா - இருபத்தாறெழுத்து நான் கடியாய்வரும்பா. சந்தப்பாணம் - ஓர்மருந்து. சந்தம் - அழகு, கவியின் வண்ணம், கற்பரிபாஷாணம், குணம், சந்தனம், நிறம், வடிவு, ஆசை. சந்தரி - துளசி. சந்தவாக்கு - இளந்தகுணம், சுய குணம். சந்தவிருத்தம் - இன்னோசையான விருத்தம். சந்தற்பம் - தருணம். சந்தனகுடம் - ஓர்திருவிழா. சந்தனக்காப்பு - சந்தனாபிஷேகம். சந்தனக்குழம்பு - கலவைச்சாந்து, இழைத்த சந்தனம். சந்தனக்கூட்டு - அகில் முதலிய பஞ்சவாசம். சந்தனக்கோரை - ஓர்புல். சந்தனத்திரி - சந்தனத்தாற் செய்யுந்திரி. சந்தனமிழைத்தல் - சந்தனஞ் சேர்த்தல். சந்தனம் - ஓர்மரம், அஃது பஞ்ச விரையினொன்று. சந்தனாசலம் - பொதியம். சந்தனுமைந்தன் - வீடுமன். சந்தனாத்திரி, சந்தாத்திரி - பொதிய மலை. சந்தாதிகம் - சந்திவிக்கிரகம். சந்தாபம் - மன்மதன் கணையி னொன்று, வெப்பம். சந்தாபிதம் - அக்கினியில் மரித்தல். சந்தாயம் - சஞ்சாயம். சந்தானகரணி - முரிந்தவுறுப்பு களைச் சந்துசெய்மருந்து. சந்தானகுரு - பாரம்பரியகுரு. சந்தானக்கூர்மை - பிடாலவணம். சந்தானசருவோத்தம் - சிவாகம மிருபத்தெட்டினொன்று. சந்தானதீபிகை - ஓர்நூல். சந்தானந்தழைத்தல் - வமிசம் வாழ்தல். சந்தானபாரம்பரை - தொன்று தொட்டு வருங்குலமுறை. சந்தானம் - ஐந்தருவினொன்று, சம்பந்தம், வமிசம், கூடல். சந்தானவிரதம் - ஓர்விரதம். சந்தானவிருத்தி - வமிசவத்திப்பு. சந்தானவுவமை - சிலேடையுவமை, அஃது ஓராச் சரியங்காட்டிப் பொருளையு முவமையையு மொப்புமை செய்தல், (உம்) மரை மலரும் முகமுந்தடத்துளுந் தலைவியிடத்து மிருப்ப தொன்றே யன்றி மற்றொரு வேற்றுமை யின்று. சந்தானி - வெண்காரம். சந்தி - இசைப்பு, எழுத்துச் சொற் களின்புணர்ச்சி, காலை, காலை நியமம், சந்தியென்னேவல், சுரங்கம், பலவழிகூடு மிடம், பொருத்து, மாலைநேரம், பகுபதவுறுப்பி லொன்று, மூங்கில். சந்திகம் - ஓர்நோய். சந்திகாரகன் - கள்வன். சந்திகாவலன் - ஓர்தேவதை. சந்தித்தல் - எதிர்த்தல், கூடல், பொருந்துதல். சந்திபண்ணுதல் - நியமநிட்டை முடித்தல். சந்திபந்தனம் - நரம்பு. சந்திப்பாடு - சந்திப்பிற்றேவதை களால்வரும்பிணி. சந்திப்பு - எதிர்தல், பலவழிகூடு மிடம், பொருத்து, பொருந்தல், வெளிப்பாடு. சந்திமான் - இடையெழுவள்ளலி லொருவன். சந்திமிதித்தல் - பிறந்த ஆறாமாதத் திற்செய்யுமோர் சடங்கு. சந்திமுடித்தல் - நியமநிட்டை முடித்தல். சந்தியாகாலம் - சாயங்காலம். சந்தியாவந்தனை - திரிகாலகருமம். சந்தியை - இணக்கம், எல்லை, காலை மாலையின்வெளிச்சம், தியானம், மல்லிகை. சந்தியோகம் - மழைபெய்தல். சந்திரகம் - நகம், பொன்வண்டு, மயிற்றோகைக்கண், மிளகு. சந்திரகலை - இடைகலை, ஓர்பறை, சந்திரன் கூறு. சந்திரகாந்தம் - சந்திரன் சன்னிதி யினீர்காலுங்கல், வெள்ளாம்பல். சந்திரகாந்தி - ஓர்பூச்செடி. சந்திரகாந்தை - இரவு. சந்திரகாவி - ஓர்சீலை, ஓர்நிறம். சந்திரகி - மயில். சந்திரகுத்தன் - யமன்கணக்கரி லொருவன். சந்திரகும்பம் - வருணகலசம். சந்திரகுலம் - சந்திரவமிசம். சந்திரசம்பவன் - புதன். சந்திரசாலிகை, சந்திரசாலை - நிலா முற்றம். சந்திரசாலோக்கியம் - சந்திரலோக மடைதல். சந்திரசுவணம் - குதிரைப்பற்பாஷா ணம். சந்திரசூடன் - சிவன். சந்திரசேகரன் - சிவன். சந்திரசேகரி - உமை, சிவன், விநாயகன். சந்திரசைலம் - ஓர்மலை. சந்திரஞானம் - சிவாகமமிருபத் தெட்டினொன்று. சந்திரதரிசனம் - பிறைதொழுதல். சந்திரதிலகம் - சந்தனம். சந்திரநாகம் - ஓர்சரக்கு. சந்திரபாகை - ஓர்யாறு, சந்திரன் பங்கு. சந்திரமணி - சந்திரகாந்தம். சந்திரமண்டலம் - நிலாமண்டலம், இலாடத்தானம், இஃது மும் மண்டலத்தொன்று. சந்திரமந்தோச்சம் - சந்திரன் சூரிய னுக்குத் தூரமாய்ப் போகத்தக்க முனை. சந்திரமானம் - சந்திரன் சஞ்சரிக்கு மளவு. சந்திரமுத்து - ஓர்முத்து. சந்திரமோலி, சந்திரமௌலி - சிவன். சந்திரம் - கருப்பூரம், நீர், பொன், மயிற்றோகைக்கண். சந்திரரேகை - சந்திரகலை. சந்திரரோகம் - குஷடரோகம். சந்திரலவணம் - இந்துப்பு. சந்திரலோகம் - சந்திரமண்டலம், வெள்ளி. சந்திரவட்டம் - அருகன்முக்குடை யினொன்று, தவளச்சத்திரம். சந்திரவமிசம் - சத்திரியரதுமுக்குலத் தொன்று. சந்திரவளையம் - ஓர்விளையாட்டுக் கருவி. சந்திரவாதம் - ஓர் சமயம். சந்திரவாலை - பேரேலம். சந்திரவிரதம் - ஓர்விரதம். சந்திரனாள் - திதி. சந்திரன் - சந்திரபகவான். அஃது அட்டமூர்த்தத்தொன்று, சிவன். சந்திரன் சிப்பி - முத்துச்சிப்பி. சந்திராதம் - தாளகம். சந்திராதபம் - சந்திரகிரணம். சந்திராபீடன் - சிவன். சந்திராந்தம் - பெயரெச்சம். சந்திரிகம் - செந்துருக்கம். சந்திரிகாபாயி - சகோரப்புள். சந்திரிகாம்புயம் - வெண்டாமரை. சந்திரிகை - சந்திரகிரணம், பேரேலம். சந்திரேகம் - கார்போகரிசி. சந்திரோதயம் - நிலவுதையம். சந்திரோபலம் - சந்திரகாந்தக்கல். சந்திரோபாலம்பனம் - சந்திரனால் வருங்காமநோய். சந்தில் - சனி. சந்திவந்தனை - நியமநிட்டை. சந்திவழு - எழுத்திலக்கணத்திற்கு வழுவாய்த் தொடுப்பது. சந்திவிக்கிரகம் - சத்துருசினேகம். சந்திவிசட்சனன் - சமாதானஞ் செய் தூதன். சந்து - சந்தனமரம், தூது, தொடை, பலவழிகூடுமிடம், பொருத்து. சந்துசெய்தல் - பொருத்தல். சந்துஷடியம் - சொல்லல். சந்துட்டம், சந்துஷம், சந்துட்டி, சந்துஷடி - மகிழ்ச்சி. சந்துநயத்தான் - தூதுளை. சந்துமந்து, சந்துமுந்து - குழப்பம், முடுக்கு. சந்துயிர் - எலும்பு. சந்துவாதம் - ஓர்நோய். சந்துவாய் - பொருத்து. சந்துவிப்புருதி - ஓர்சிலந்தி. சந்தேகநிவாரணம் - ஐயந்தீர்த்தல், அஃது தயாவிருத்திபதினான்கினு மொன்று. சந்தேகம் - ஐயம். சந்தை - கடைவீதி. சந்தோஷம், சந்தோடம் - மனமகிழ்ச்சி. சந்தோபிசிதம், சந்தோபிசிதி - வேதாங்கமாறினொன்று. சந்நிகருஷணம் - சமுகம். சந்நிபம் - உவமை. சந்நியம் - போர். சபக்கம், சபட்சம் - ஒத்தபட்சம். சபடம் - விரித்தகை. சபதமொட்டுதல் - சபதங்கூறல். சபதம் - ஆணை, சபிப்பு, சாபம், மெய், வாக்குநிண்ணயம். சபதரித்தல் - ஆதரித்தல். சபதி - விரைவு. சபத்துவம் - சேபித்தல். சபம் - மூங்கில், வீழ். சபரணை - ஆதரவு, ஆயத்தம், பூரணம். சபரம் - கெண்டைமீன். சபா - பிரயாணம். சபலத்துவம் - அனுகூலம். சபலம் - இரதம், இலாபம், நடுக்கம் நிறைவேறல், மின்னல். சபலி - மாலைவெளிச்சம். சபலை - இலக்குமி, திப்பிலி, நா, மஸ்துள்ளது, மின்னல், வேசி. சபனம் - சபதம். சபாகம்பம் - சபைக்கோழை. சபாசனம் - சங்கம், சந்தோஷிப் பித்தல். சபாநாதன், சபாநாயகன், சபாபதி - சிவன். சபாமண்டபம் - சபைமண்டபம். சபாரஞ்சிதம் - சபையாருக் குளுண் டான கொள்கை. சபிண்டர் - பிதிர்கள். சபிண்டி - பிதிர், பிதிர்பிண்ட மூன் றோடு பிரேதபிண்டத்தைக் கூட்டல். சபிண்டிகரணம் - பிதிர்பூசை. சபித்தல் - சாபமிடல், திட்டுதல். சபிப்பு - சாபம், திட்டு. சபீனம் - வசம்பு. சபேடம் - விரித்தகரம். சபை - சங்கம், சபைமண்டபம், திருச் சபை, புலவர். சபைச்சேகரத்தார் - சபையார். சபைநாயகன் - சங்கத்தலைவன். சபையார் - கூட்டத்தார், சங்கத்தார். சபையுள்ளார் - கூத்தாடிகட்குதவி யாய்ப் படிப்போர். சபையேறுதல் - கூட்டத்திலறியப் படுதல். சபையேற்றுதல் - அரங்கேற்றுதல். சப்பங்கி - ஓர்தேயம், ஓர்மரம், வீர மற்றவன். சப்பட்டை - பதர். சப்பணங்கூட்டுதல், சப்பணங் கோலு தல் - அட்டணைக் காலிடுதல். சப்பணம் - அட்டணைக்கால். சப்பரமஞ்சம் - சப்பிரமஞ்சம். சப்பரம் - ஓர்வகைச்சித்திரவிருக்கை, யானைமேற்றவிசு. சப்பல் - சப்பப்பட்டது, சப்புதல். சப்பளிதல் - சழிதல். சப்பளியல், சப்பளியன் - சப்பையாய்ச் சழிந்திருப்பது. சப்பாணி - கைகொட்டல், நடக்கக் கூடாதவன். சப்பாணிகொட்டுதல் - கால்மடித் திருத்தல், கைகொட்டல். சப்பாணிமாடன் - ஓர்பிசாசம். சப்பாத்து - ஓர்தொடுதோல். சப்பி - சாவி. சப்பியம் - சபைக்கேற்றவார்த்தை. சப்பியன் - சபைக்கேற்றவன். சப்பிரமஞ்சம் - அலங்கரித்தகட்டில். சப்பிரமை - வாஞ்சை. சப்பிரம் - சப்பரம். சப்புச்சப்பெனல் - ஒலிக்குறிப்பு, அசுவைக்குறிப்பு. சப்புச்சவர் - கழிகடை, கழிநிலம், சவர்நிலம். சப்புதல் - குதப்புதல், பல்லானருக்கல். சப்பெனல் - ஒலிக்குறிப்பு, விரைவின் குறிப்பு. சப்பை - தட்டை, ஆட்டின் முன் றொடை, விபசாரி. சமகட்சி - சரிவந்தபக்கம். சமகம் - சமாதானம். சமகன் - சமாதானஞ்செய்வோன். சமகன்னி - பக்குவமானபெண். சமகாலம் - தற்சமயம். சமகை - பூரணம். சமஸ்காரம் - அறிந்ததை ஞாபகப் படுத்தல், நிலை பெறுத்தல், மந்திரத் தினாலே சுத்தம் பண்ணுகிற கிரியை. சமக்கிரம் - எல்லாம். சமக்கிராமம் - ஒத்தகிராமம். சமக்கிருதம், சமஸ்கிருதம் - ஆரிய மொழி. சமங்கை - வரட்சுண்டி, தொட்டால் வாடி. சமசக்கிரம் - சமரேகை. சமசந்தி - இணக்கம். சமசனம் - அடக்குதல். சமசி - பூரணம். சமஞ்சசம் - தகுதி, நன்முறை. சமட்சம் - சமுகம், சுருக்கம். சமட்டி - எல்லாம். சமட்டியுரூபம் - சூக்குமமாயடங்கிய ரூபம். சமணகன் - சமணன். சமணம் - புறச்சமையமாறி னொன்று. சமணர் - அமணர். சமண் - சமண்மதம். சமண்டலை - சவண்டலை. சமண்மை - குறை. சமதத்கினி - ஓரிருடி. சமதரிசனம் - அத்தாட்சி. சமதரிசி - சமாதிமான். சமதளம் - கூட்டம். சமதம் - பொறுமை. சமதன் - சங்காத்தி. சமதாளம் - நவதாளத்தொன்று. சமதி - யுத்தம். சமதீதப்பிரயோசனம் - பொதுநயம். சமதீதம் - ஐக்கம். சமதை - ஒப்பு, நான்கடியுமெழுத்துத் தொடுத்துவரும்பா. சமத்தம், சமஸ்தம் - எல்லாம், சரி. சமத்தானம், சமஸ்தானம் - அரசவை, நகரம், பிரதானவிடம், ஆதாரம். சமத்தவம் - நெடுநாட்கூடியிருத்தல். சமத்தாவம் - யாகதோத்திரம். சமத்து - சமர், வீரம், சாமாத்தியம். சமநிலை - குணவலங்காரத்தொன்று. அஃது மூவினவெழுத்தும் விரவத் தொடுப்பது, நடுநிலை. சமநிலைச்செய்யுள் - ஓர்பிரபந்தம். அஃது மூவினவெழுத்தும் வரத் தொடுப்பது. சமநிலைவெண்பா - சவலை வெண்பா. சமந்தம் - சமஸ்தம், பலவிதம். சமபந்தி - ஒத்தவர்களிருக்கும் போசன பந்தி, சரியிடம். சமபலம் - சரியொத்தபலன். சமபாகம் - சரிபங்கு. சமபூமி - ஒப்பரவானநிலம். சமபோகம் - இருவருக்குமொத்த போகம். சமப்பால் -நெய்தனிலம், முல்லைநிலம். சமமுகம் - தலையசையாதிருத்தல். சமம் - உவமை, எல்லாம், ஒப்பம், சரி, தாளப்பிரமாணத்தொன்று, அஃது குரலுந்தாளமுமொத்தது, நடு, நியாயம், போர், மனோலயம், மோக்கம், இந்திரியநிவிர்த்தி, பொறுமை. சமயகருமம் - சமயசடங்கு. சமயக்கட்டு - சமயமுறை. சமயசாத்திரம் - சமயநூல். சமயதீட்சை - தீட்சைவகையி னொன்று. அஃது சமயானு சரிப்பின் முதலுபதேசம். சமயத்தறுவாய் - உற்றசமயம். சமயநிலை - சமயஒழுங்கு. சமயநூல் - சமயசாத்திரம். சமயபேதம் - காலவிகற்பம், மதவி கற்பம். சமயபேதி - புறச்சமயத்தான். சமயமானம் - சமயப்பற்று. சமயம் - அடையாளம், உடம்படிக் கை, எல்லை, காலம், சமயமதம், நியாயத்தீர்ப்பு. சமயம் பார்த்தல் - தருணம்பார்த்தல். சமயவாதி - மதானுசாரி. சமயாசமயம் - சமயத்தறுவாய். சமயாசாரம் - சமயவொழுக்கம். சமயி - சமயவாதி. சமயுத்தம் - ஒத்தபோர். சமயை - ஏற்றகாலம், சமீபம், நடு. சமரசம் - ஒன்றிப்பு, சமாதானம், வித்தியாசமின்மை, தொகை நிலை. சமரசர் - ஒன்றினர். சமரம் - போர். சமராத்திரம் - கிரகவீதிவரியும் பூமி யின் நடுரேகையு மொன்றிக்கு மிடம். சமரி - துற்கை, பாம்பு. சமரேகை - மையவரி. சமர் - போர், முட்பன்றி. சமர்த்தகம் - உபகாரம். சமர்த்தம் - சரிநிலம். சமர்த்தனம் - சமப்படுத்தல், தியானம். சமர்த்தன் - சாமார்த்தியன், வல்லபன். சமர்த்தி - சமசி, சமர்த்துள்ளவள், சமுத்தி. சமர்த்தித்தல் - பூரணப்படுத்தல். சமர்த்து - சமத்து, பலம், வீரம். சமர்ப்பகம், சமர்ப்பணை - உயர்ந் தோர்க்குக் கொடுத்தல். சமர்ப்பிதம் - ஒப்புக்கொடுத்தல், பூரணம். சமர்ப்பித்தல் - உயர்ந்தோர்க்குக் கொடுத்தல், ஒப்புக்கொடுத்தல். சமலம், சமலை - அழுக்கு. சமலாம்பம் - பூசுதல். சமவற்சி - நமன். சமவாசி - நடுத்தரம், பூரணம். சமவாதம் - சமானதருக்கம். சமவாயம் - கூட்டம், தற்கிழமை. சமவணி, சமவுவமை - ஓரலங்காரம், (உம்) தந்தையொக்கு மகன். சமழ்த்தல் - தாழ்த்தல், நாணுதல், வருத்தல். சமழ்ப்பு - நாணம், வருத்தம். சமற்கரணம், சமற்காரம் - அதிசயம், ஆடம்பரம், திருவிழா, நற்காட்சி. சமற்கிருதம் - அதிசயப்படத்தக்கது. சமற்கிருதி - நற்காட்சி. சமற்சனம் - வணக்கம். சமற்பகம், சமற்பனை, சமற்பித்தல் - கொடுத்தல், செலுத்தல். சமனம் - புழுக்கொல்லி, போசனம், வசம்பு. சமனாதம் - உவர்மண். சமனிக்கை - சவனிக்கை. சமனிசை - ஓரிசை. சமனியகரணி - ஓர்மருந்து. சமனிலை - மூவினவெழுத்தும் விரவத்தொடுப்பது. சமன் - ஒப்பு, காலன், சமம், நடு, நமன். சமன் - சங்கலிதம், ஓர் கணிதம். அஃது இரட்டைநிரை யிலக்கங் களைக் கூட்டல். சமன்சமன் சங்கலிதம் - ஓர்கணிதம், அஃது இரட்டைத்தானத் திரட்டை நிரைகூட்டல். சமன்வியன்சங்கலிதம் - ஓர்கணிதம், அஃது இரட்டைத்தானத் தொற்றை நிரை கூட்டல். சமாகதம் - ஒன்றிப்பு, சமீபம். சமாகாதம் - போர். சமாகாரம் - எழுத்துப்புணர்ச்சி, கூட்டம், சொற்புணர்ச்சி. சமாகிதம் - ஓரலங்காரம். சமாசம் - இலிங்கபாஷாணம், தொகைப்பட்டுநிற்பது. சமாசாரம், சமாச்சாரம் - சுகசெய்தி, செய்தி, நன்னடை. சமாதானகரணி - இரணந்தீர்க்கும் மருந்து. சமாதானம் - இணக்கம், முற்றத்துறந் திருத்தல், உபாதிநீக்கியுள்ளொளி கருதல். சமாதானவுருவகம் - யாதொன்று தீங்கு செயினுமத்தீங்கதிலுள்ள தன் றெனக்கூறுமுருவகம். சமாதானி - சமாதானமுடையோன். சமாதி - அட்டயோகத்தொன்று, அஃது இந்திரியமுதலியதத்துவ சேட்டை கட்கேதுவாய யாக்கை யுணின்றவற்றோடு கூடினு மவற்றிற் பற்றின்றியிருக்குமான் மாவாகிய தன்னைத்தான் காண்டல், அமைதி, ஓரலங்காரம், அஃது முக்கியப் பொருள துவினையை யொப் புடைப் பொருண்மேலேற்றிக் கூறுவது, சமப்படுத்தல், சாவு, பிரேதக்குழி. சமாதிக்குழி - பிரேதக்குழி. சமாதிட்டற்கசம்பத்தி - உபாதி, சமம், சமாதானம், சிரத்தை, தமம், தீட்சை. சமாதிபண்ணுதல் - சமாதிருத்தல், யோகாப்பியாசஞ்செய்தல். சமாதிமான் - தியானநிட்டை செய் வோன். சமாதியில் வைத்தல் - பிரேத மடக்கல். சமாதிவைத்தல் - யோகிகளிருக்கு முறையாய்ப் பிரேதத்தை வைத்தல். சமாபிகாரம் - கூறியதுகூறல். சமாயிதம் - சம்மதித்தல், முயல்வுறுந் தொழிற் பயன்பிறிதொன்றான் முடிந்ததாகக் கூறுமலங்காரம். சமாயுதம் - ஓரலங்காரம். சமாயோகம் - ஏது, ஐக்கம், கூட்டம். சமாரம், சமுச்சியம் - சிதறியதைக் கூட்டல். சமாராதனை - திருத்தி, பிராமண போசனம். சமார்ச்சனம் - தூர்த்தல். சமாலம் - பீலிக்குஞ்சம். சமாலி - பூஞ்செண்டு. சமாலித்தல் - சமாளித்தல். சமாலுகம் - குறிஞ்சா. சமாலேபனம் - மெழுகல். சமாவத்தனை, சமாவருத்தனம் - ஓர்சடங்கு. சமாவிருத்தன் - பிரமசரிய முடித்தவன். சமாளம் - சந்தோஷம். சமாளித்தல் - சந்தோஷித்தல், சரிக் கட்டிநடத்தல். சமாளிப்பு - சந்தோஷம், சரிக்கட்டி நடத்துதல். சமானகட்சி - வாதிகளினொத்தபுறம். சமானகரணி - இரணத்தழும்பு தீர்க்கும் மருந்து. சமானஸ்தர் - சரிவந்தவர்கள். சமானம் - உவமை, சன்மார்க்கம். சமானரகிதம் - ஒப்பின்மை. சமானன் - தசவாயுவினொன்று, அஃது கந்தரக்குழியிற் சந்திடை நிற்கும் வாயு. சமானி - சரியொத்தவன். சமானித்தல் - ஒப்பாதல், ஒப்பிடுதல். சமானியம் - பொது. சமி - அருகன், சமியென்னேவல், தணக்கு, வன்னிமரம். சமிக்கை - சயிக்கை. சமிட்சேபம் - சுருக்கம். சமிட்சேபித்தல் - சுருக்குதல். சமிதம் - அமைதி, தீ, போர். சமிதர் - பூதங்கள். சமிதன் - அக்கினிதேவன். சமிதி - கூட்டம், போர். சமிதை - ஓமவிறகு, விறகு. சமித்தம் - ஓமமண்டபம், தயை. சமித்தல் - சகித்தல், சீரணித்தல். சமித்து - ஓமப்பண்டம், ஓமவிறகு, கஞ்சா. சமிந்தனம் - விறகு. சமிபாடு - சீரணிக்குந்நேரம். சமிப்பாகம் - கொன்றைமரம். சமிப்பு - சீரணிப்பு. சமியம் - விசாரித்தல். சமியன் - அருகன். சமியாமை - அசீரணம். சமிரட்சணை - தற்காத்தல். சமிர்த்து - ஓமவிறகு. சமிலாகி - திப்பிலி. சமீகம் - அம்பு, போர். சமீகரணம் - சமதை செய்தல். சமீகிரணம் - சமதை. சமீட்சணம் - ஆராய்வு. சமீபம் - அருகு, கிட்டுமானம். சமீபித்தல் - கிட்டுதல். சமீரணம் - எறிதல், வீசல். சமீரணன் - காற்று. சமீரம் - காற்று, போர். சமீரன் - காற்று. சமீனம் - வருடாந்தம். சமீனிகை - ஆட்டைக்கற்றா. சமீன் - நிலம். சமு - சமுகம், படை, படையிலோர் தொகை. சமுகசேவை - சமுகஞ்சேவித்தல். சமுகம் - கூட்டம், முன்னிலை. சமுகவிலாசம் - சமுகத்திற்கூறுமோர் வகைப்புகழ்ச்சி. சமுக்கா - காந்தப்பெட்டி. சமுக்காரம், சமுஸ்காரம் - ஓர் சடங்கு நிறைவேற்றம். சமுக்காளக்கோட்டுப்புலி - ஓர்புலி. சமுக்காளம் - கம்பளம். சமுசயம் - சந்தேகம். சமுசாரக்கட்டு - சமுசாரமுறை. சமுசாரக்காரன் - இல்லறம் பொறுத் தவன். சமுசாரசன்னியாசம் - இல்லறத்தை விடுதல். சமுசாரபந்தம் - குடித்தனமுறை, அபிமானம். சமுசாரப்பொறுப்பு - இல்லறச்சுமை. சமுசாரமார்க்கம் - இல்லறநெறி. சமுசாரம் - குடும்பம், மனைவி. சமுசாரவிருத்தி - சமுசாரவத்திப்பு. சமுசாரி - இல்லாச்சிரமத்துக்குட் பட்ட ஆள், கற்புடையாள். சமுசு - கலகக்கூட்டம். சமுச்சயம் - கூட்டம், சந்தேகம், சிறியதைக் கூட்டல். சமுச்சயவுவமை - இதனானேயன்றி மற்றிதனானு மொக்கு மெனக் கூறுவது. சமுச்சரணம் - பிள்ளைபிறப்பு. சமுச்சேபனம் - விரிவைக்குறுக்கல். சமுதாடு - ஓராயுதம். சமுதாயக்கிராமம் - பொதுக்கிராமம். சமுதாயம் - கூட்டம், பின்னணி, பொது, போர். சமுதீதம் - பொது. சமுத்தானம் - செய்துமுற்றல், வளர்ச்சி. சமுத்தி - பாடும்படி எதிரி கொடுக்கு முள்ளுறை வசனம். சமுத்திகட்டுதல் - பாட்டுக்கடி தொடுத்தல். சமுத்திரகோஷம் - கடற்குமிறல். சமுத்திரகோஷடம் - கடனுரை. சமுத்திரசுண்டி - ஏரல். சமுத்திரச்சோகி - ஓர்பூடு. சமுத்திரதோயம் - கடனீர், முடக் கொற்றான். சமுத்திரபகவான் - வருணன். சமுத்திரப்பாலை - ஓர்பூடு. சமுத்திரம் - ஓரெண், கடல், படையி னோர்தொகை, அஃது பிரளயம் மூன்றுகொண்டது, பத்துலட்சங் கோடாகோடி. சமுத்திரயானம் - கடல்யாத்திரை. சமுத்திரராசன் - வருணன். சமுத்திரவருணச்சிலை - ஓர்கல். சமுத்திரவன்னச்சீலை - ஓர்பட்டு. சமுத்திரவேலை - கடற்றிரை. சமுத்திராதேவி - வருணன்றேவி. சமுத்திராந்தம் - சாதிக்காய். சமுத்திராப்பச்சை - ஓர்செடி. சமுத்திராப்பழம் - குந்தாழங்காய். சமுத்திராம்பரை - பூமி. சமுப்பவம் - தைவேளை. சமுருதம் - அதிகம். சமுற்பத்தி, சமுற்பன்னம் - பிறப்பு. சமுனையம் - ஈரம். சமூ - சமுகம். சமூகம் - கூட்டம், சபை, முன்னிலை. சமூகனி - துடைப்பம். சமூசரன் - படைவீரன். சமூபதி - சேனாபதி. சமூர்ச்சனம் - பரம்புதல். சமூலம் - வேர்முதலிலையீறாக. சமேதம் - கூடியிருத்தல். சமேதர் - கூடியொன்றாயிருப்பவர். சமை - அமவாசி, சமை யென்னே வல், சேர்த்தல், படை, பொறாமை, வருடம். சமைகடை - ஈறு. சமைதலை, சமைதலைப்பு - புடைவை யில் நெய்து முடிந்த தலைப்பு. சமைதல் - இருதுவாதல், உண்டு பண்ணப்படல், ஒழிதல், பாக மாதல். சமைதார் - பன்னிரண்டு படைச் சனத்துக்குத் தலைவன். சமைத்தல் - உணவு சமைத்தல், உண்டாக்கல், ஒழிவித்தல். சமைந்தவள் - பக்குவமானவள். சமையம் - சமயம். சமையல் - சமைக்கப்படுதல். சமையல்வீடு - அடுக்களை. சமையற்காரன் - மடைத்தொழி லாளன். சமோதீதம் - பொதுவானது. சம் - அழகு, அன்பு, கலக்கம், சீக்கிரம், சுகம், சுத்தம், நன்மை, பிறப்பு, வெற்றி, கூட, பூரணம்.. சம்பகம் - சண்பகம். சம்பங்கி - சாலங்கபாஷாணம், வாசனைத்திரவியம். சம்பங்கியெண்ணெய் - வாசனைத் தைலம். சம்பங்கூடு - சம்பம்புல்லாற் செய்த கூடு. சம்பங்கோரை - ஓர்புல். சம்பங்கோழி - ஓர்கோழி. சம்படம் - சீலை, சோம்பல். சம்பதி - பாக்கியம். சம்பத்து - செல்வம், தளபாடம். சம்பத்துவேட்டம் - பஞ்சதாளத் தொன்று. சம்பந்தக்குடியார் - சம்பந்தங்கலந்த வர்கள். சம்பந்தங்கலத்தல் - விவாகவழியாற் கலத்தல். சம்பந்தப்பொருள் - ஆறாம் வேற்று மைப் பொருள். சம்பந்தமூர்த்தி - சண்பையர்கோன். சம்பந்தம் - இணக்கம், விவாகம். சம்பந்தம் பண்ணுதல் - விவாகஞ் செய்தல். சம்பந்தவெதிரேகம் - இணக்கம், எதிர். சம்பந்தி - ஒற்றுமையானவன், மாப் பிள்ளை பெண் பிள்ளையின் பிதா. சம்பந்தித்தல் - கலத்தல், சம்பந்தம் பண்ணல். சம்பம் - அங்கதேயம், இடி, இரண்டா முழவு தண்ணீர், மரவயிரம், மேட்டிமை, வச்சிராயுதம், வயிர மணி. சம்பம்புல் - ஓர்புல். சம்பரசூதனன் - காமன். சம்பரம் - எண்காற்புள், சீலை, செல்வம், நீர், வரம்பு. சம்பரன் - ஓரசுரன். சம்பராரி - இந்திரன், காமன். சம்பலவனம் - இருந்தது. சம்பவப்பிரமாணம் - ஓரளவை, அஃது ஒருகல் இரும்பையீர்க்கு மென்றுளி அது காந்தமெனக் கோடல். சம்பவம் - அழிவு, இணக்கம், ஒன்றின் காரணம், ஓரளவை, கலப்பு, சம்பவிப்பு, பிறப்பு. சம்பவித்தல் - நடந்தேறுதல். சம்பளம் - கரை, களஞ்சியம், கூலி, பொறாமை, வழிச்சேறற்கு வேண் டும் பொருள், வழியுணவு. சம்பளி - அடைப்பை. சம்பற்கார்த்தம் - இராகுதேகஞ்சசி தேகமிவற்றின்றொகை. சம்பன் - ஓரிராக்கதன். சம்பன்னகரணி - இரணந்தீர்க்கும் மருந்து. சம்பன்னகிரகஸ்தன் - பேர் பெற்றவன். சம்பன்னம் - குறைவில்லாமை. சம்பன்னன் - நிறைவுள்ளவன். சம்பா - ஓர்வகைநெல், ஓர்விளை யாட்டு, நால்விரலளவை. சம்பாகம் - நாடு. சம்பாஷணம், சம்பாஷணை, சம்பாட ணை, சம்பாஷித்தல் - கூடிப்பேசல். சம்பாதனை - தேட்டம். சம்பாதி - அருணன்மகன், சம்பாதி யென்னேவல். சம்பாதித்தல் - தேடல். சம்பாதிபன் - கன்னன். சம்பாத்தியம் - தேட்டம், ஒன்றை முடித்தல். சம்பாரமிடுதல் - சம்பாரம்போடல். சம்பாரம் - சாமான். சம்பாரி - அக்கினி, இந்திரன். சம்பாலம் - ஆட்டுக்கடா. சம்பாவனம், சம்பாவனை - சங்கை, மதிப்பு. சம்பாளம் - சேறு. சம்பானோட்டி - படகோட்டுவோன். சம்பான் - படகு. சம்பான்காரர் - படகுகாரர். சம்பிரகாசம் - மகிழ்ச்சிநகை. சம்பிரகாரம் - யுத்தம். சம்பிரசாதம் - நம்பிக்கை. சம்பிரதம் - சித்து. சம்பிரதாயம் - உபாயம், குலாசாரம், பாரம்பரியவாக்குவிச்சித்திரம். சம்பிரதாயவிளக்கம் - ஓர் நூல். சம்பிரதாரணை - தீர்ப்பு, நான்க னுருபு. சம்பிரதானம் - வெகுமதி. சம்பிரதி - ஓர்பிரதானவெழுத்துக் கணக்கன். சம்பிரமம் - கலியாணம், சந்தோஷம், செல்விக்கை, பறங்கிப் பாஷா ணம், தீவிரம். சம்பிரம் - எலுமிச்சை, செல்விக்கை, உடலசைத்தல். சம்பிரேட்சியம் - ஆராய்ந்தறிந்தது.. சம்பீரம் - எலுமிச்சை. சம்பு - அருகன், ஆதித்தன், எலுமிச் சை, ஓர்தீவு, ஓர்நதி, ஓர்புல், கடவுள், சிவன், சீர்பந்த பாஷா ணம், நரி, நாவல்மரம், பிதா, பிரமன், புத்தன், விட்டுணு, தட்டை. சம்புகம் - சம்பூகம், வருணன். சம்புகேச்சுவாம் - திருவானைக்கா. சம்புச்சயனம் - ஆலமரம், பாம்பு. சம்புத்தி - அழைத்தல், நற்புத்தி. சம்புத்தீவு - சத்ததீவுகளினொன்று. அஃது நாவலந்தீவு. சம்புநாவல் - ஓர்நாவல். சம்பூகம் - சங்கு, நத்தை, நரி, நாவல். சம்பூதம், சம்பூதி - பிறப்பு. சம்பூயகாரி - உடன்வேலையாள். சம்பூரணம் - நிறைவு. சம்பூலமாலிகை - புதுமணப் பெண் ணுக்கும் மணவாளனுக்கும் பெண்ணின் தோழி களெழுதும் வினோதவெழுத்து. சம்பேசன் - கன்னன். சம்பேதம் - யாற்றுப்பொருத்து. சம்பை - இளந்தது, சத்ததாளத் தொன்று, செழிப்பு, மின்னல், ஓரிராகம், சம்பு. சம்போகம் - அனுபவம், புணர்ச்சி. சம்போதனம் - எட்டாம் வேற்றுமை. சம்போதனை - விளிவேற்றுமை. சம்மட்டி - ஓர்பூடு, குதிரையோட்டுங் கருவியினொன்று, கூடம். சம்மணம் - அட்டணைக்கால். சம்மதம் - இணக்கம், உத்தரவு, கோட்பாடு. சம்மதி - சம்மதம், சம்மதியென் னேவல். சம்மதித்தல் - இணங்குதல். சம்மந்தம் - சம்பந்தம். சம்மனசு - தேவதூதுன், நன்மனசு. சம்மாணம், சம்மாணி - அட்டணைக் கால. சம்மாதுரன் - கற்புடையாள் புத்திரன். சம்மார்ச்சனம் - மூடல். சம்மானம் - உபசரிப்பு, சருவமானியம். சம்மானனம் - வணக்கம். சம்மியத்துவம் - சம்பூரணம். சம்மியம் - கூத்தினோர்விகற்பம். சம்மோகம் - பேராசை. சம்மோதிதம் - தகுதியானகூலி. சம்யாமம் - விசாரித்தல். சம்யோகம் - புணர்ச்சி. சம்ரட்சணை - சமிரட்சணை. சம்வர்த்தம் - சத்தமேகத்தொன்று, அஃது மணிபொழிவது, தரும நூல் பதினெட்டினொன்று. சம்வற்சரம் - வருடம். சம்வாகம் - மலைமேலேற்றியவூர். சம்வன்னம் - வசிகரித்தல். சம்வாயிகாரணம் - முதற்காரணம். சம்வேதம் - அனுபவித்தல். சய - ஓராண்டு, போற்றி. சயகண்டை - பரந்தவட்டிகை. சயகம் - பூவரும்பு. சயசய - போற்றிபோற்றி. சயதாளம் - நவதாளத்தொன்று. சயத்தம்பம் - வெற்றித்தம்பம். சயத்திரதன் - ஓரரசன். சயந்தனம் - தேர். சயந்தன் - இந்திரகுமரன், சந்திரன், சிவன். சயந்தி - இந்திரன்மகள், துகிற் கொடி, துற்கை. சயபத்திரம் - வெற்றிச்சீட்டு. சயபாலன் - அரசன், திருமால், பிரமன். சயபித்தம் - ஓர்நோய். சயமகள் - துற்கை, மிதுனவிராசி, விந்தை. சயமங்களம் - இராசயானை. சயமடந்தை - துற்கை, விந்தை. சயமரம் - சுவயம்வரம். சயம் - ஆம்பல், ஓர்வியாதி, கூட்டம், கெடுதல், கை, சருக்கரை, சாரம், சூரியன், மாலை, வெற்றி, நட்டம், படுக்கை. சயம்பு - அருகன், சிவன், சுயம்பு. சயம்புனைதல் - வெற்றிபுனைதல். சயரோகம் - ஓர் வியாதி. சயனகிரகம் - பள்ளியறை. சயனம் - நித்திரை, படுக்கை, புணர்ச்சி. சயனார்த்தம் - படுக்கை. சயனி - சயனிப்போர், சயனியென் னேவல். சயனித்தல் - நித்திரைசெய்தல், புணர்தல். சயனிப்பு - நித்திரை, புணர்ச்சி. சயன் - சயந்தன். சயாபாகம் - வெற்றி. சயாலு - நித்திரைச்சோம்பன். சயிக்கச்சீலை - மெல்லியபுடைவை. சயிக்கம் - மென்மை. சயிக்கா - அரசு. சயிக்கினை, சயிக்கை - சாடை. சயித்தகம் - சிற்பநூன் முப்பத் திரண்டி னொன்று. சயித்தல் - சகித்தல், வெல்லுதல். சயித்தியம் - குளிர். சயித்திரம் - சித்திரைமாதம். சயித்திரியம் - அனுபவவிசித்திரம், நானாவிந்தை. சயிந்தலவணம், சயிந்தனம் - இந்துப்பு. சயிந்தவம் - சைந்தவம். சயிரேகம் - மேகவண்ணப் பூவுளமரு தோன்றிமரம். சயிலம் - சைலம். சயை - சந்திரன் மூன்றாம், எட்டாம், பதின்மூன்றாம் பக்கங்கள், பார்வதி. சயோத்தியம் - சுகம். சய்யோகம் - சையோகம். சரகம் - தேனீ, வண்டு. சரகன் - தூதாள். சரகாண்டபாஷாணம் - பாஷாணம் முப்பத்திரண்டினொன்று. சரகாண்டம் - அம்புக்கூடு, ஓர்பாஷா ணம். சரகூடம் - அத்திரத்தாற்றொடுக்கும் பின்னற்செறிவு. சரக்கு - கறிச்சரக்கு, பொருள், மருந் துச்சரக்கு, வியாபாரப் பொருள். சரக்குச்சுண்ணம் - சவ்வீரம். சரக்கொன்றை - ஓர்கொன்றை. சரங்கட்டல் - தனித்தனிப்பூவான் மாலைகட்டல். சரங்கம் - சங்கபாஷாணம். சரசம் - இனியகுணம், பரிகாசம், வெண்ணெய். சரசரப்பு - சரசரத்தல். சரசரெனல் - ஈரடுக்கொலிக்குறிப்பு, விரைவுக்குறிப்பு. சரசவித்தை - இன்பசேட்டைப் பயிற்சி, பரிகாசம். சரசன்மசன் - குமரன். சரசாத்திரம் - சுவாசக்குறியறியுமோர் சாத்திரம். சரசி - இனியகுணி. சரசித்தல் - சரசம்பண்ணுதல். சரசு - குளம். சரசுவதி - பிரமன்றேவி, மனோசிலை. சரசுவதிநெய் - ஓர் மருந்து. சரசுவதிபீடம் - ஓர்பிரதானகல்விச் சங்கவாசனம். சரசுவதிமாலை - ஓர் நூல். சரசுவதியாறு - ஓர்யாறு. சரசுவதிவாக்கு - கற்றறியாதுவருங் கல்விவல்லபம். சரடம் - ஓணான், கடுமை, குரூரம், பல்லி, பழயது. சரடு - நிரைபடவிருப்பது, நூல், பொன் முதலியவற்றாற் செய்யுங் கொடி. சரட்டுத்தாலி - கொடித்தாலி. சரணக்கிரந்தி - கணுக்கால். சரணம் - அபலம், அரசு, கால், புகலிடம், பெருங்காயம், மயில், மயிற்றோகை, மருதநிலத்தூர், வணக்கம், வீடு. சரணம்புகுதல் - அடைக்கலம் புகுதல். சரணவாதம் - ஓர்நோய். சரணாகதம், சரணாகதி - அடைக் கலம். சரணாபரணம் - காலணி. சரணாமிருதம் - பாதப்பிரட்சாளண நீர். சரணாயுதம் - கோழி. சரணாரவிந்தம் - பாதபங்கயம். சரணி - பாதை. சரணியம் - அடைக்கலம், வீடு. சரணோதகம் - சரணாமிருதம். சரண் - கால், புகல். சரண்டம் - பல்லி, பழயது, புட்பொது. சரண்புகல் - அடைக்கலம்புகல். சரதம் - மெய். சரதிசம் - கோடைகாலம். சரநட்சத்திரம் - இயங்குந் நட்சத்திரம். சரநூல் - சரசாத்திரம். சரந்தம் - எருது. சரபத்திரம் - அம்புக்குப்பி. சரபடி - வமிசம், வழி, வாடிக்கை. சரபம் - எண்காற்புள், ஒட்டகம், குறும்பாடு, தத்துக்கிளி, யானைக் கன்று, வரையாடு. சரபலம் - அம்பலகு. சரபாதஸ்தானம் - எய்த அம்பு விழுந் தூரம். சரபுங்கை - அம்பிறகு. சரப்பணி, சரப்பளி - ஓராபரணம். சரப்பம் - மயிர். சரமசரம் - சராசரம். சரமணி - அரைப்பட்டிகை. சரமண் - சுதைமண். சரமண்டலம் - ஓர்வாச்சியம். சரமம் - முடிவு. சரமாதம் - ஆடி - ஐப்பசி - சித்திரை - தை. சரமாலை - தோரணமாலை. சரமுல்லை - பல்லு. சரமோடல் - மூச்சோடல். சரம் - அம்பு, இருவகைத் தோற்றத்தி னொன்று, அஃது மூச்சுள்ளது, கொறுக்கை, சரராசி, சுவாச நடை, நடை, நாணல், நீர், பாலேடு, மணிவடம், மாலை. சரம்பரம் - சரகாண்டபாஷாணம். சரம்பார்த்தல் - சுவாசநடைபார்த்தல். சரயு - ஓர்யாறு, காற்று. சரராசி - கற்கடகம், துலாம், மகரம், மேடம். சரலகம் - நீர். சரவட்டை - அற்பம், பிரயோசன மற்றது. சரவணபவன், சரவணோற்பவன் - கந்தன். சரவணம் - கொறுக்கை, நாணல். சரவருடம் - அம்புமாரி. சரவழகி, சரவாசி - குதிரைப்பற் பாஷாணம். சரவாணி - அம்பெய்வோன். சரவியம் - இலக்கு. சரவை - அற்பம், குறை, பரும்படி, மாலை. சரளம் - ஒழுங்கு, தகுதி, நேர்மை. சரளி - கோழை. சரளிக்கட்டு, சரளிக்கூடு - சளிக்கூடு. சரளிபாடுதல் - சத்தசுரங்களையும் பாடிப்பயிலல். சரளியலங்காரம் - சரளிபாடுதல். சரற்காலம் - மாரிகாலம். சரன் - தூதாள். சராகம் - தடையின்மை, போர், வண்டு. சராகை - வட்டில். சராங்கம் - உறுதி, தடையின்மை. சராசந்தன் - ஓரரசன். சராசரம் - அவுபலபாஷாணம், ஆகாயம், நடையுள்ளது மில்ல தும், பிரபஞ்சம், முத்தி. சராசரி - சரிபங்கு. சராசரிக்கணக்கு - வீதக்கணக்கு. சராசனம் - வில். சராடி - ஓர் புள். சராதுரம் - துற்பலம். சராத்திரயம் - அம்புக்கூடு. சராப்பியாசம் - சரந்தொடுக்கப் பயிலுதல், சுவாசநடையறியப் பழகுதல். சராயணி - சராசந்தன். சராய - கருப்பாசயம். சராயுசம் - கருப்பையிற்பிறப்பன. சராரோபம் - வில். சராவம் - அகன்மணி, மூடி, சலாகை. சராளம் - சராகம். சராளித்தல் - பிராந்தித்தல். சரி - ஒப்பு, கூட்டம், கைவளை, சமன், சரியென்னேவல், நிதானம், பிசகின்மை, மலைச்சாரல், வழி. சரிகமபதநி - சத்தசுரங்களினட்சரம். சரிகாணுதல் - அத்தாட்சிகாணுதல், ஒப்புக்காணுதல், சரிக்கட்டுதல், முடிவுகாணுதல். சரிகை - சரியை. சரிகைப்பட்டை - சரியைத்தலைப்பு. சரிகைமலை - பித்தளைமலை. சரிக்கட்டுதல் - ஒப்பிடுதல், குறை தீர்த்தல், சரிவரப்பண்ணுதல், திருத்தல், நேர்பிடித்தல், பதிற் சாதித்தல். சரிக்குச்சரி கட்டல் - பதிற்செலுத்தல். சரிசமானம் - ஏற்றத்தாழ்ச்சியின்மை. சரிசாமம் - நடுச்சாமம். சரிசு - ஓராபரணம், வளை. சரிதம் - சரித்திரம், சுபாவம், நடை, வாசம். சரிதர் - சஞ்சரிப்போர். சரிதல் - சாய்தல், பின்னிடல். சரிதாப்பிரசங்கன் - புராணிகன். சரிதை - ஒழுக்கம், கதை, நான்கு பாதத்தினொன்று, வரலாறு. சரித்தல் - சஞ்சரித்தல், சரியச் செய் தல், நடத்தல். சரித்திரம் - இயல்பு, ஒழுக்கம், கதை, நடக்கை. சரித்திரை - புளியமரம். சரித்து - கங்கை. சரிபங்கு, சரிபாதி - அரைவாசி. சரிபம் - அசோகு. சரிபொழுது - பின்பொழுது. சரிபோதல் - இணக்கமாதல். சரிப்படுதல் - கைகூடுதல், சம்மதித் தல், சரிபோதல், திருத்தமடை தல். சரிப்படுத்தல் - இணக்கமாக்கல், ஒப்பனை செய்தல், நேர்ப்படுத்தல். சரிப்பிடித்தல் - சரிக்கட்டுதல், நிறை வேற்றல், நேர்படுத்தல். சரிப்பு - சரித்தல், சாய்ப்பு. சரிப்போகுதல் - இணங்கல், சம்மதித் தல். சரியம் - சிறுநன்னாரி. சரியாகுதல் - சமனாக்குதல், முற்றுதல். சரியாக்குதல் - சமனாக்குதல், செய்து முடித்தல், நிறைவேற்றுதல். சரியிடுதல் - ஒப்பிடுதல். சரியை - ஒழுக்கம், பிச்சை, பொன் முதலியவற்றினூல். சரியொத்தல் - ஒப்பாயிருத்தல். சரிலம் - தண்ணீர். சரிவயது - ஒத்தவயது, நடுவயது. சரிவருதல் - இணங்குதல், ஒத்துவரு தல், சமனாதல், நேர்வருதல். சரிவு - சாய்வு. சரிவைக்குதல் - ஒப்பிடுதல். சரிற்பதி - சமுத்திரம். சரிற்புதல்வன் - வீடுமன். சரீரகம் - சுகதேகம். சரீரகோடணம் - மெலிவு. சரீரக்கட்டு - இறுகியசரீரம். சரீரக்கனப்பு - சரீரக்கொழுப்பு, திமிர்க்குணம். சரீரக்கூறு, சரீரக்கூறுபாடு - சரீர வியல்பு. சரீரசஞ்சலம் - சரீரவருத்தம். சரீரசுத்தி - சரீரபலம். சரீரசமிரட்சணை - சரீரத்தைப் பேணல். சரீரசுகம் - தேகசவுக்கியம். சரீரசுத்தி - சரீரபுனிதம். சரீரத்திரயம் - முத்தேகம், அவை தூலம், சூக்குமம், காரணம். சரீரஸமரணை - சரீரவுணர்ச்சி. சரீரப்போக்கு, சரீரப்போங்கு - உடம் பின்றன்மை. சரீரம் - உடல். சரீராவச்சின்னவான்மா - சீவியத்துக் கடுத்தவான்மா. சரீராவரணம் - தோல். சரீரி - சரீரமுள்ளது. சரு - சோறு, தேவருணவு. சருகட்டை - ஓரட்டை. சருகாமை - ஓராமை. சருகு - உலர்ந்த இலை. சருகுசன்னாயம் - இருப்புக்கவசம். சருகுசாதனம் - ஓலையுறுதி. சருகுண்ணி - ஓருண்ணி, சருகுநுகர் வோன். சருகுதிரி - ஓருதிரிநோய். சருகுபித்தளை - உயர்ந்தபித்தளை. சருகுபுலி - ஒர்சிறுபுலி. சருகுமடைப்பளி - மடைப் பளியாரி னோர்பேதம். சருகுமுசல் - உக்குளான். சருகொட்டி - ஓர்புள். சருக்கம் - இலக்கியச்செய்யுட் கூறு பாடு. சருக்கரை - கன்னிலம், சற்கரை, துண்டு. சருக்கரைக்கொம்மட்டி - ஓர்கொம் மட்டி. சருக்கரைநாரத்தை - ஓர்நாரத்தை. சருக்கரையமுது - சித்திரான்னத் தொன்று. சருக்கரைவள்ளி - ஓர்கிழங்கு. சருசபம் - கடுகு. சருசுரபணம் - நெய்பால்கூட்டித் தெளித்தல். சருச்சரை - எண்வகையூறி னொன்று, அஃது ஒப்பரவின்மை. சருத்தி - தேரிடக்கியம், விருதுக் கொடி. சருப்பகங்கணி - காளி, பார்ப்பதி. சருப்பகணை - நாகஸ்திரம். சருப்பகுண்டலன் - சிவன். சருப்பசாத்திரம் - விஷவித்தை. சருப்பசாந்தி - நாகசாபநிவிர்த்தி. சருப்பதானம் - உலகங்களாற் சருப்பம் போலச் செய்து பண்ணுந்தானம். சருப்பதோபத்திரம் - மிறைக்கவியி னொன்று. அஃது ஒருநிரையே எவ்வெட்டாக அறுபத்து நான் கறை கீறி ஒரு செய்யுளை யெட் டெட்டெழுத்தோரடியாக நான் கடிபாடி அஃதை மேனின்று கீழிழிய நான்கடியுமெழுதி அதனைக் கீழ்நின்று மேலேற நான் கடியுமெழுதி மேனின்று கீழிழியவும் கீழ்நின்று மேலேற வும் முதறுடங்கி இறுதிவரவும் இறுதிதுடங்கி முதல்வரவும் மாலை மாற்றாக நான்குமுகத் தானும் வாசிக்கவச் செய்யுளே யாவது. சருப்பம் - பாம்பு. சருப்பயாகம் - நாகத்தைத் தலை கீழாகக்கட்டித் தீவளர்த்துச் சத்துருவைக் கொல்லல். சருப்பராசி - நாணல். சருப்பராச்சியம் - சங்கங்குப்பி. சருப்பாத்திரம் - நாகாஸ்திரம். சருப்பாபரணன் - சிவன். சருப்பாபரணி - காளி, பார்ப்பதி. சருப்பாராதி - கருடன், கீரி, மயில். சருமகரணன் - செம்மான். சருமகாரகன், சருமகாரன், சரும காரியன் - சக்கிலியன். சருமக்கருவி - தோற்கருவி. சருமசம் - இரத்தம், மயிர். சருமணி - தோவிடம். சருமதண்டம், சருமநாசிகை, சருமயட்டி - சவுக்கு. சருமம் - தோல், தோற்பாய், பரிசை. சருமர் - சக்கிலியர். சருமன் - சக்கிலியன், சற்குணன். சருவகத்திருத்துவம் - சருவ அதிகாரம். சருவகாரணன் - கடவுள். சருவகாருண்ணியம் - சகலத்திற்குங் கிருபையாயிருப்பது. சருவக்கியத்துவம் - சருவஞ்ஞத்துவம். சருவக்கியன் - சருவஞ்ஞன். சருவக்கியானம் - எல்லாமறிகிற அறிவு. சருவக்கியானி - சருவரவத்தை களையு மறிகின்றஞானி. சருவசங்கபரித்தியாகம் - முற்றத் துறத்தல். சருவசங்கராதனம் - சுகாதனமாகக் காலைப் போட்டுக்கை யிரண் டையுங் காலுக்குட் செருகிக் காலிரண்டையும் பிடித்து முழங் கையிரண்டும் வயிற்றிற்படக் குழிந்திருப்பது. சருவசங்காரகாலம் - யுகமுடிவு காலம். சருவசங்காரமூர்த்தி - உருத்திரன். சருவசங்காரம் - உருத்திரசங்காரம், முற்றுமழிதல். சருவசங்காரி - உருத்திரன். சருவசத்தித்துவம் - சருவவல்லமை பொருந்தல். சருவசனவசீகரம் - சமஸ்தசனங் களையும் வசமாக்கும் வித்தை. சருவசாட்சி - கடவுள், சூரியன். சருவசாதகம் - வேங்கைமரம். சருவசித்தி - சகலவிதசித்தி. சருவசித்து - ஓர்வருடம். சருவசிரேட்டன், சருவச்சிரேட்டன் - சகலத்துக்கும் அதிகாரி. சருவசீவதயாபரன் - கடவுள், சிவன், திருமால். சருவஞானம் - எல்லாமறிதல். சருவஞ்ஞத்துவம் - எல்லாவற்றையு மறியுந்தத்துவம். சருவஞ்ஞன் - கடவுள். சருவதப்பறை - முற்றுந்தவறு. சருவதா - எப்போழ்தும். சருவதாரி - ஓர்வருடம். சருவத்தியாகம் - முற்றத்துறத்தல். சருவத்திரம் - எல்லாம். சருவத்திரவித்தியேகம் - எங்கும். சருவப்பிரகாசம் - சொப்பனாவத்தை. சருவநியந்திருத்துவம் - சருவத்தையு மேவலல்லனாதல். சருவமானியம் - ஊர்ப்பொதுவாய்க் கொடுக்கப்படுவது. சருவம் - எல்லாம், பித்தளைமுதலிய வுலோகங்களாற் செய்யும் பாத் திரம், வெண்கலம். சருவரசம் - கறியுப்பு. சருவரி - இரவு, பெண், மஞ்சள். சருவல் - சருவுதல். சருவவல்லபம், சருவவல்லமை - எல்லாஞ்செய்ய வல்லபம். சருவவியாபகம் - எல்லாவற்றினுமி, சாக்கிராவத்தை. சருவவாயாபி - கடவுள். சருவாங்கதகணம் - முற்றுஞ்சுடுதல். சருவாங்கம் - முழுச்சரீரம். சருவாணி - பார்வதி. சருவாந்தரியாமி - கடவுள். சருவாதரன் - எல்லாவற்றிற்குமா தாரன். சருவாதிட்டானம் - காரியஞ்யாவற் றிற்குங் காரணமாயிருப்பது. சருவாந்தரியாமித்துவம் - சருவத் திலும்வியாபித்திருத்தல். சருவாலங்காரம் - வத்திராபரண முதலியபூஷணம். சருவானுகூலம் - சருவசித்தி. சருவிதம் - பட்சித்தல். சருவித்திரவிதேயம் - எவ்விடத்தும். சருவுதல் - இலீலைபாராட்டல், கிட்டுதல், கொழுவிப்போதல், பொருதல் மருவுதல். சருவேசுரன், சருவேசுவரன், சருவேச் சுவரன் - கடவுள். சருவேச்சுரத்துவம் - எல்லாவற் றிற்கும் மேலாயிருக்குந் தத்துவம். சரேந்திரன் - வில்வல்லவன். சரேரிடுதல், சரேரெனல், சரேலெனல் - ஒலிக்குறிப்பு. சரை - ஓரரக்கி, கிழத்தன்மை, நரை, முதிர்வயது, வைக்கோல் முதலிய வற்றாற்செய்யுஞ்சரை. சரையாப்பித்தல் - உள்ளேசெலுத்தல். சரையு - ஓர்நதி. சரோசம், சரோருகம் - தாமரை. சரோருகசரம் - தாமரைமாலை. சரோருகன் - பிரமா. சலகண்டகம் - ஓர் நீர்ப்பூடு, முதலை. சலகண்டம் - மிகுவேர்வை. சலகந்தி - சகத்திரபேதி. சலகம் - சங்கு, நீராடல், நீருளவீடு, பொட்டுப்பூச்சி. சலகற்கம் - சேறு. சலகனனம் - பூமிக்குங்கிரகத்திற்கு முள்ளதூரம். சலகாங்கம் - சங்கு, தாமரை, திரை, தேங்காய். சலகாங்கிஷம் - நீர் வேட்பு. சலகாந்தாரன் - வருணன். சலகாமி - நீர்மேனடக்குங்குதிரை. சலகிராடம் - முதலை. சலகு - கப்பாத்து. சலகுந்தலம் - ஓர்நீர்ப்பூடு. சலகுபிடித்தல் - கப்பாத்துப் பண்ணு தல். சலகை - வெளிப்பாடு, தெப்பம், மரக்கலம். சலக்கடுப்பு - நீர்க்கடுப்பு. சலக்கமனை - மலசலங்கழிக்கு மிடம். சலக்கமாடுதல் - நீராடுதல். சலக்கம் - நீராட்டு. சலக்கரணை - விடுதலை. சலக்கழிச்சல் - சலரோகம். சலக்கி - நவட்சாரம். சலக்கிரீடை - நீர்விளையாட்டு. சலக்குடர், சலக்குடல் - சலப்பை. சலக்கூர்மை - அமுரியுப்பு. சலக்கோவை - விஷநீரேற்றம். சலங்கு - வள்ளம். சலங்கை - சதங்கை. சலங்கைக்கொதி - கடுங்கொதி. சலங்கைச்செடி - ஓர்பூடு. சலசந்தி - என்புப்பொருத்து. சலசம் - தாமரை. சலசயனன், சலசயன் - திருமால். சலசரக்குழி - சலதாரை. சலசரம் - மீனவிராசி, மீன். சலசலப்பு, சலசலித்தல், சலசலெனல் - ஈரடுக்கொலிக்குறிப்பு. சலசலோசனன் - விட்டுணு. சலசற்பிணி - நீரட்டை. சலசன்மம் - தாமரை. சலசாதி - நீர் வாழ்வன. சலசாயி - திருமால். சலசாலை - நீர்க்கால். சலசூகரம் - கடற்பன்றி, முதலை. சலசூசி - நீரட்டை. சலசூத்திரம் - நீரிறைக்குஞ்சூத்திரம். சலசெந்து - சலப்பூச்சி, மீன். சலசை - இலக்குமி. சலஞ்சலம் - சங்கு, வலம்புரியாயிரஞ் சூழந்தசங்கு. சலஞ்சாதித்தல் - பகைசாதித்தல். சலதசங்கதி - மந்தாரம். சலதம் - முகில். சலதரம் - குளம், சமுத்திரம், முகில். சலதரன் - சிவன். சலதளம் - அரசமரம். சலதாகமம் - மழைக்காலம். சலதாரை - மதகு. சலதி - சமுத்திரம். சலதோஷம் - நீர்த்தோஷம். சலத்தம்பம்,சலஸதம்பம்,சலத்தம்பனம் - கலைஞானமறு பத்தினான்கி னொன்று, அஃது நீரினியல் பைத் தடுத்தல். சலத்திரம் - ஓலைக்குடை. சலத்துவாரம் - சலவாயில். சலநிதி - கடல். சலபடலம் - மேகம். சலபதி - வருணன். சலபந்தகம் - நீர்க்கால். சலபம் - விட்டிற்பறவை. சலபாதை - சிறுநீர்க்கழித்தல். சலபானம் - நீரருந்தல். சலபிதம் - சொல்லல். சலபித்தம் - தீ. சலபிப்பிலி - நீர்த்திப்பிலி. சலபுட்பம், சலபெந்து - மீன். சலப்பரிசம் - நீராட்டு. சலப்பிரவாகம் - நீர்ப்பெருக்கு. சலப்பிரளயம் - உலகத்தைச் சமுத்திரம் மூடல். சலப்பிராயம் - நீர்சூழ்ந்த நாடு. சலப்பிலாவனம் - நீர்ப் பெருக்கு. சலப்பை - சலக்குடர். சலமடைப்பு, சலமறிப்பு - சிறுநீரடை படல். சலமலம் - நீர்ப்பஞ்சு. சலமானம் - போதல். சலமூர்த்தி - சிவன். சலமூர்த்திகை - ஆலாங்கட்டி. சலமை - குளிர்மை, சன்னி. சலம் - அசைவு, ஓர்வாசனை, குளிர், சலஞ்சாதித்தல், தணியாக் கோபம், நீர், பன்றிமுள், பொய். சலம்புரி - சங்கு. சலயந்திரம் - சலசூத்திரம். சலரசம் - உப்பு. சலராகம் - வெண்சிவப்பு. சலராசி - கடல். சலருகம் - தாமரை. சலரோகம் - ஓர்நோய். சலலம், சலவி - முட்பன்றிமுள். சலவியம் - முட்பன்றி. சலவகு - இலவம்பிசின். சலவர் - நெய்தனிலமாக்கள். சலவன் - பரதவன், பெரு நூலுள்ளது. சலவாசயம் - சலக்குடர். சலவாண்டம் - கொப்புளம். சலவாதி - கோபி, சிறுநீர்விடுதல், முட்பன்றிமுள், முரண்டன், மரணவோலை கொண்டு செல்வோன். சலவாதை - சிறுநீர்விடுதல். சலவாயில் - சலங்கழியுமிடம். சலவிசுவம் - ஐப்பசிதொடங்கிப் பங்குனிமட்டுஞ் சூரியனிற்கு மிடம். சலவிந்து - நீர்த்துளி. சலவியாழம் - நீர்ப்பாம்பு. சலவு - ஆண்குறி. சலவை - எண்குறித்திடுமுறை, புடை வை முதலியவற்றை வெண்மை யாக்கல். சலவைக்கல் - கருங்கல். சலவைமண் - சுதைமண். சலனகாலம் - உபத்திரவகாலம், பஞ்சகாலம். சலனப்படுதல் - அசைதல். சலனம் - அசைவு, கால், காற்று, சஞ்சலம், போதல், மான். சலனன் - காற்று. சலன் - கால். சலாகம் - நீரட்டை. சலாகு - சலாகை. சலாகை - அகன்மணி, அம்பு, ஈட்டி, ஊசிக்காந்தம், சலாகு, சூதாடு கருவி, நாராசம், முட்பன்றி முள். சலாகையாணி - தையலாணி. சலாக்கியம் - செல்வம், மேன்மை. சலாங்கம் - ஓர்நாரை. சலாங்கு - பொய்யாட்புள். சலாசம் - உப்பு. சலாசயம் - சலவாசயம், நீர்நிலை. சலாசலம் - நிலையின்மை, பசு. சலாசிரயம் - நீர்மண்டபம். சலாஞ்சலி - தத்தநீர். சலாஞ்செய்தல் - வணங்கல். சலாத்தி - திரைச்சீலை. சலாத்தியம் - நீர்ப்பிடியானது. சலாபக்குழி, சலாபம் - முத்துக் குளித்தல். சலாபாகரம் - கடல், நீரூற்று, நீர்நிலை. சலாம் - வணக்கம். சலாலோகை - நீரட்டை. சலிகை - அதிகாரம், செல்வாக்கு, தத்துவம், நீரட்டை, பெருமை. சலிகைக்கிராமம் - தலைக்கிராமம். சலித்தல் - அசைவுகொள்ளுதல், இளைத்தோய்தல், ஒலித்தல், சலனமுறுதல், துக்கப்படுதல். சலிப்பு - அசைவு, இளைப்பு, துக்கம். சலியாமை - அசைவின்மை. சலிலக்கிரியை - பிரேதத்தைக் குழிப் பாட்டல். சலிலசம் - தாமரை. சலிலம் - நீர். சலினி - திப்பிலி. சலு - சிறங்கைநீர். சலுகை - சலிகை. சலுப்பு - சலதோஷம், சிறுச்செலுப்பு. சலேசரம் - நீர்ப்புள், மீன். சலேந்திரயம் - அடக்கமின்மை. சலேந்திரன் - வருணன். சலோகசம், சலோகை - நீரட்டை. சலோபாதை - சலவாதை. சலோர்க்கம், சலோர்ச்சம் - குங்கிலியம். சல்லகண்டம் - புறா. சல்லகம் - கைத்தாளம், நார். சல்லகி - ஆத்திமரம், இலவு. சல்லக்கடுப்பு - சரீரநோ. சல்லடம் - குறுங்காற்சட்டை. சல்லடை - தானியமுதலியவற்றைச் சல்லுங்கருவி, துவாரம். சல்லடைக்கண் - அரிப்பெட்டிக் கண். சல்லடைக்கொப்பு - ஓர் காதணி. சல்லபம் - முட்பன்றி. சல்லம் - நார், பன்றிமுள். சல்லரி - ஓர்கைமணி, சல்லரி யென் னேவல், பம்பைமேளம். சல்லரிதல் - துண்டுதுண்டாய் வெட்டல். சல்லா - ஓர்வகைச்சீலை. சல்லாபம் - வினாவும்விடையுங் கூடியசொல், நாடகவகைபத்தி னொன்று. சல்லாரி - அபாத்திரன், வேஷக் காரன். சல்லி - கலவோடு, தகட்டுக்கல், தூக் கங்கள், பொய், மூன்றுசின்னங் கொண்டகாசு. சல்லிக்கல் - சிறுதகட்டுக்கல். சல்லித்தல் - துண்டாக்கல். சல்லியகண்டம் - முட்பன்றி. சல்லியகரணி - இரணமாற்றும் மருந்து. சல்லியகரு - சல்லியவித்தைக்குரிய கரு. சல்லியம் - அம்பு, ஆயுதநுனி, இக் கட்டு, ஈட்டி, எலும்பு, ஓர்வித்தை, கலக்கம், செஞ் சந்தனம், நஞ்சு, முட்பன்றி. சல்லியர் - ஓர்சாதியார். சல்லியவித்தை - சல்லியத்தொழில். சல்லியன் - ஓரரசன், சுக்கிரன். சல்லியாதேவி - ஓர்தேவதை. சல்லுதல் - அரித்தல். சவக்கம் - சோப்பம். சவக்களித்தல் - சவர்க்களித்தல். சவக்காடு - இடுகாடு, சுடுகாடு. சவக்காமியம் - நாய். சவக்காலை - பிரேதம்புதைக்குமிடம். சவக்கிரியை - பிரேதக்கிரியை. சவக்குழி - பிரேதக்குழி. சவங்குதல் - சோம்புதல். சவசாதனம் - பிரேதலங்காரம். சவசசேமம் - பிணமடக்கல். சவடி, சவடிக்கோவை - ஓராபரணம், ஓர்பாம்பு. சவடிக்கதிர், சவடிமுள் - சவடி பின்னுங் கருவி. சவடியெலும்பு - பூணாரவெலும்பு. சவடு - நெரிவு, வண்டல். சவட்டல் - அதிகப்படச்செய்தல், அழித்தல், துவட்டல், மெல்லல், வளைத்தல். சவட்டுக்கூர்மை - சவட்டுப்பு. சவட்டுதல் - சவட்டல். சவட்டுப்பு - ஓருப்பு. சவண்டலை - ஓர்மரம். சவதம் - சபதம். சவதரித்தல் - சம்பாதித்தல். சவதாகம் - பிரேததகனம். சவப்பெட்டி - பிரேதம்வைக்கும் பெட்டகம். சவம் - சீக்கிரம், நீர், பிசாசம், பிணம். சவரகன் - சௌளகன். சவரணை - ஆயத்தம், நேர்த்தி. சவரட்சணைசெய்தல், சவரணை செய்தல் - காப்பாற்றல். சவரம் - சாமரம், மயிர், வால்மயிர். சவரம் பண்ணுதல் - மயிர்கழித்தல். சவரர் - கீழ்மக்கள், குறவர், வேடர். சவரன் - கீழ்மக்கள்,சிவன், மிலேச்சன். சவராலையம் - கீழ்மக்கள் குடியிருப்பு. சவரி - கவரிமா, சாமரம், ஓர்கீரை, கதம்பைத்தும்பு. சவரிக்கொடி - கொடியாள் கூந்தல். சவரிலோத்திரம் - ஓர்மருந்து. சவர் - உப்பூறனிலம். சவர்க்கம் - கல்லுப்பு. சவர்க்களி - சவருங்களியுஞ் சேர்ந்த மண். சவர்க்களித்தல் - உப்புச்சுவை கொள்ளல். சவர்க்காரம் - ஓர்மருந்து. சவர்நாயகம் - ஓர்நெல். சவர்நிலம் - உவர்த்தரை. சவலம் - அவுபலபாஷாணம், நீர், பிரயோசனம். சவலை - இளமையுள்ளது, மெலிவு. சவலைப்புத்தி - பிள்ளைமை. சவலைவெண்பா - ஓர்வெண்பா, அஃது முதலாமடியும் மூன்றா மடியும் நாற்சீராய்க் கடையடியும் இரண்டாமடியு முச்சீராயத்தனிச் சொல்லின்றி ஒரு விகற்பத்தான் வருவது. சவளசோழியம் - நாகரீகம், விற்பன்னம். சவளச்சி - சத்திசாரம். சவளம் - ஈட்டி, ஓர்மீன். சவளி - சவடி, சவண்டகாலுள்ளது, புடைவை. சவளிக்கடை, சவிளிக்கடை, சவுளிக் கடை - புடைவைக்கடை. சவளுதல் - வளைதல். சவளை - வங்கமணல். சவள் - தோணியோட்டுங்கோல். சவறுகேடு - தாழ்ச்சி, மெலிவு. சவற்சலம் - கல்லுப்பு. சவனம் - புண்ணியநீராடல், வேகம். சவனன் - வேகி. சவனிகை - திரைச்சீலை. சவனிக்கை - சவனிகை. சவாசு - வியப்பிடைச்சொல். சவாது - ஒன்றைப்பார்த்தெழுதும் பிரதி, ஓர்வாசனைப்பண்டம். சவாதுப்பிள்ளை, சவாதுப்பூனை - நாவிப்பிள்ளை. சவாபுட்பம் - முட்செவ்வந்தி. சவாரி - உலாத்து. சவானிலம் - தென்றல். சவி - அழகு, ஒளி, சரமணிக் கோவை, செவ்வை, பெலன், மிளகுகொடி. சவிகம் - திப்பிலிக்கொடி, விட்டுணு கரந்தை. சவிகை - சதுக்கம். சவிசங்கவாதம் - ஓர்வாதநோய். சவிதா - சூரியன். சவித்தல் - சபித்தல். சவிஸ்தாரம் - விஸ்தாரம். சவித்திரு - துவாதசாதித்தரிலொரு வன். சவிர்ச்சங்கி - சிறுபீரங்கி. சவுகரியம் - சோகரியம். சவுக்கம் - அகலம்நீளஞ்சரி கொண்ட புடைவைத்துண்டு, சதுக்கம். சவுக்களி - சவளி. சவுக்களித்தல் - புளித்தல். சவுக்காரம் - ஓர்வகைச்சரக்கு. சவுக்கியம் - சுகம். சவுக்கு - அடிக்குங்கயிறு. சவுக்கை - ஆயத்துறை, இளைத்துப் போதல், இளைப்பாறுமிடம், சதுக்கம், சவுக்கம், சவுத்தல். சவுக்கைதார் - தீர்வைக்காரன். சவுங்குதல் - சோம்புதல். சவுசம் - சுத்திபண்ணுதல், தூய்மை. சவுசயம் - முருக்கு. சவுசன்னியம் - பட்சம். சவுடோல் - சப்பரம். சவுண்டம் - திப்பிலி. சவுண்டிகர் - கள்விற்போர். சவுதம் - இளைத்தல், தணிவு, பலவீனம், விலைக்குறைவு. சவுதரித்தல் - ஆதாயப்படுத்தல், ஆயத்தமாக்கல், சம்பாதித்தல், தாங்கல். சவுத்தல் - அலுத்தல், இளகுதல், குறைதல், மெலிதல். சவுத்து - முன்மாதிரி. சவுந்தரமுகம் - மலர்ந்தமுகங் காட்டல். சவுந்தரம், சவுந்தரியம் - அழகு. சவுந்தரி - பார்பதி. சவுபாக்கியம் - ஐசுவரியம், நித்திய யோகத்தொன்று. சவுமம் - சிற்பநூன்முப்பத்திரண்டி னொன்று. சவுரகன் - சௌளகன். சவுரமானம் - சௌரமானம். சவுரம் - சௌளம். சவிரி - முதியாள்கூந்தல். சவை - அம்பலம், கூட்டம், புலவர். சவ்வரிசி - ஓர்மரச்சோற்றியரிசி. சவ்வாசு - சவாசு. சவ்வாது - மரவள்ளி. சவ்வியசாசி - அரிச்சுனன். சவ்வியம் - இடப்பக்கம், மிளகு. சவ்வியை - தெற்கு, பார்பதி. சவ்வீரம் - தேசமன்பத்தாறி னொன்று, பறங்கிப்பாஷாணம். சவ்வு - சவ்வரிசி, தசைமுதலிய வற்றை மூடியவெண்ணிறத்தோல். சழக்கு - அறியாமை, ஒலிக்குறிப்பு, குற்றம், பொய். சழிதல் - சப்பளிதல். சழியல், சழுங்கல் - சப்பளிதல், சப் பளிந்தது. சழுக்கம் - தளர்ச்சி. சழுங்குதல் -நுகைந்துசழிந்து போதல், பிதுங்குதல். சளகந்தம் - வசம்பு. சளக்குப்புளக்கெனல் - ஈரடுக்கொலிக் குறிப்பு. சளசண்டி - சகசண்டி. சளசளத்தல் - நீர்ப்பிடிகொள்ளல், விருதாவாயலட்டுதல். சளசளப்பு - நீர்ப்பிடிகொண்ட விளக்கம், விருதாவலட்டு. சளசளெனல் - ஈரடுக்கொலிக் குறிப்பு, நீர்ப்பிடி கொண்டிளகி யிருத்தல். சளபுளத்தல் - இளகுதல், ஒலிக் குறிப்பு, நீர்ப்பிடி கொண்டிளகி யிருத்தல். சளப்புதல் - அளப்புதல், பிதற்றுதல். சளம் - பொய், வஞ்சனை. சளவட்டை - இளந்தது. சளாரிடுதல் - ஒலிக்குறிப்பு. சளார்ப்பிளாரெனல் - ஈரடுக்கொலிக் குறிப்பு. சளி - கோழை. சளிச்சல் - புளிச்சல். சளித்தல் - புளிப்பாதல். சளிப்பு - புளிப்பு. சளுக்கன் - அகந்தைக்காரன், வீணன். சளுக்கு - கீழ்மை, திரிகையினோ ருறுப்பு, துணிகரம். சளுக்குவேந்தர் - சாளுவர். சளுக்கையர் - சாளுவர். சளுவுவாயன் - அலப்புவாயன், பேச்சுக்காரன். சளூகம் - அட்டை. சள்ளட்டியெனல், சள்ளிடுதல் - ஒலிக் குறிப்பு. சள்ளல் - சேறு, சாரமற்றது. சள்ளு - தொந்தறை. சள்ளுப்புள்ளு - சண்டை, தொந்தரவு. சள்ளெனல் - ஒலிக்குறிப்பு. சள்ளை - ஓர்மீன், தொந்தரவு, வயிற்றருகு. சறசறெனல் - ஒலிக்குறிப்பு, சீக்கிரக் குறிப்பு. சறடு - சரடு. சறுகுதல் - வழுவுதல். சறக்கல் - வழுக்கல். சறுக்கார் - தாழ்வாரம், பொறிவு. சறுக்கு - சறுக்குதல், சறுக்கென் னேவல், சில்லுமுதலிய திருப்பும் மிண்டி, தவறு. சறுக்குதல் - பெலப்படாமற் போதல், வழுக்குதல். சறுதாகம் - வேங்கைமரம். சறுவசனவசீகரம் - ஓர்வசியம். சறுவம் - சமஸ்தம். சற்கதம், சறுகம் - நீர், பங்கு, மீன்முள். சற்கம் - சகலம், முறிசல். சற்கருமம் - நற்கருமம். சற்கரை - சருக்கரை. சற்காரம் - உபசரிப்பு, சங்கிப்பு. சற்காரித்தல் - உபசரித்தல், சங்கித்தல். சற்கிருதம் - உபசரணை, சங்கை, நல்லொழுக்கம். சற்கிருதி - நல்லொழுக்கம். சற்குணம் - சன்மார்க்கம், நற்குணம். சற்குணன் - சன்மார்க்கன், நற்குணன். சற்குரு - காரணக்குரு. சற்சகுனம் - நற்சகுனம். சற்சங்கம் - நல்லோர்கூட்டம். சற்சரை - சருச்சரை. சற்சலம் - தெளிநீர். சற்சனன் - நற்குணன். சற்சன்னிதானம் - நல்லோர்முகதா. சற்சிதம் - வாசனை, விருப்பம். சற்சுகாதி - பெருமருந்து. சற்பகன் - விக்கல்வசனன். சற்பம் - சருப்பம். சற்பனை - சதி. சற்பன்னபாஷை - சமஸ்தபாஷை. சற்பாகாரம் - அலகுவைக்குமுறையி னொன்று. சற்பாத்திரம் - உத்தமன், சன்மார்க்கி. சற்பிணி - கூத்தினோர்விகற்பம். சற்பிதம் - விக்கிப்பேசல். சற்பிரசாதம் - தேவபிரசாதம், தேவர் கள்பெரியோர்களினனுக்கிரகம், நற்கருணை. சற்புத்தி - நற்புத்தி. சற்புத்திரன் - நற்குணமுள்ள பிள்ளை. சற்புருடன் - சன்மார்க்கன். சற்று - அற்பம், கொஞ்சநேரம். சனகத்துவம் - பிறப்பிக்குங் காரணம். சனகந்தகம் - வசம்பு. சனகம் - புளியாரை. சனகன் - சீதையின்பிதா, பிதா, பிரம புத்திரர்நால்வரிலொருவன், இவன் திருமால் பதினைந் தவதாரத் தொருவன். சனசதளம் - சனத்திரள். சனசமுகம் - சனக்கூட்டம். சனசித்திரம் - புளியாரை. சனச்சச்சடி - சனக்கூட்டத்தின் றொந்தரை. சனதை - சனம். சனந்தரன் - பிரமபுத்திரர்நால்வரி லொருவன். சனந்தனன் - ஓரிருடி, இவன் திருமால் பதினைந்தவதாரத் தொருவன். சனபதம் - நாடு. சனப்பிரவாதம் - பேசலாலெழு மொலி. சனமேசயன் - குருகுலவரசரி லொரு வன். சனம் - இனம், மனுஷர். சனலோகம் - மேலேழுலகி னொன்று. சனற்காரம் - பணிகளானெழு மொலி. சனற்குமாரம் - ஓர்நூல். சனற்குமாரன் - பிரமபுத்திரர்நால்வரி லொருவன், இவன் திருமால் பதினைந்தவதாரத்தொருவன். சனனகாலம் - சென்மகாலம். சனனசாபல்லியம் - சனனமெடுத்த பலன். சனனசூதகம் - சன்மவாசூசம். சன்னபூமி - சென்மபூமி. சனனமரணம் - பிறப்பிறப்பு. சனைமாலி - சதகுப்பி. சனனமெடுத்தல் - பிறத்தல். சனனமோசனம் - பிறவிநீங்கல். சனனம் - பிறப்பு, வமிசம். சனனாசூசம் - சென்மசூதகம். சனனி - உருக்கம், ஓர்மல்லிகை, சனனியென்னேவல், தாய், பிதா, பிள்ளை, பிறந்தது. சனனனித்தல் - உற்பத்தியாதல், பிறத்தல். சனாசனம் - கோணாய். சனாசாரம் - நன்னடை. சனாதரன் - பிரமபுத்திரர்நால்வரி லொருவன். சனாதனன் - ஓரிருடி இவன் திருமால் பதினைந்தவதாரத் தொருவன். சனாதிகம் - தலைமை. சனாதிநாதன் - அரசன், விட்டுணு. சனாந்தம் - குடியிருக்குமிடம். சனாந்திகம் - இரகசியம். சனார்த்தனன் - திருமால். சனார்ப்பியம் - மூழ்கல். சனி - ஓர்கிரகம், ஓர்வாரம், கெட்ட வன், சனியென்னேவல், தாய். சனிகை - பெண். சனிதம் - பிறந்தது, பிறப்பு, பெண், மருமகள். சனித்தல் - உண்டாதல், பிறத்தல். சனித்துவன் - பிதா. சனிபிடித்தல் - கேடுபிடித்தல். சனிப்பாட்டு - ஓர்கவி. சனிப்பித்தல் - பிறப்பித்தல். சனிப்பு - பிறப்பு. சனிமூலை - வடகிழக்கு. சனியன் - அதிட்டங்கெட்டது, ஓர் கிரகம். சனிவிந்து - நீலக்கல். சனிவேதை - சனியினால்வருந்நோய். சனீச்சுவரன் - சனிபகவான். சனு - உதவி, சுகிர்தம், தயவு, பிறப்பு. சனுசம் - மிளகு. சன்மகீலன் - விட்டுணு. சன்மசாபல்லியம் - இறத்தல், பிறவிப் பேறு. சன்மதன் - பிதா. சன்மபாவம் - செனனபாவம். சன்மபூமி - பிறந்தவூர். சன்மப்பகை - பிறவிப்பகை. சன்மம் - பிறப்பு. சன்மலி - இலவு. சன்மவைலட்சண்ணியம் - பிறப் பொழுக்கங்குன்றல். சன்மனசு - சம்மனசு. சன்மனம் - உற்பத்தி. சன்மன் - சருமன். சன்மாந்தரம், சன்மாந்திரம் - பிறவி தோறும், மறுமை. சன்மார்க்கம் - நல்லொழுக்கம். சன்மானம் - உபசாரம். சன்மி - செனித்தோன். சன்மித்தல் - பிறத்தல். சன்மினி - காளியேவல்செய்வாள். சன்னகாரை, சன்னக்காறை - அரை சாந்திடுதல். சன்னசம்பா - ஓர்சம்பா. சன்னசாலை - ஓர்பூடு. சன்னசிலம்புரி - ஓர்விதப்புடைவை. சன்னதம் - ஆவேசம், மிகுகோபம். சன்னதி - சன்னிதானம். சன்னத்தம் - போர்க்காயத்தம். சன்னத்தன் - போருக்காயத்த மானோன். சன்னபின்னப்படுத்தல் - துண்டு துண்டாய்வெட்டல். சன்னபின்னம் - கண்டதுண்டம். சன்னம் - குறுணி, சிறுமுத்து, சிற்றரும்பு, மென்மை, மறைக்கப் பட்டது. சன்னயம் - கூட்டம். சன்னராட்டகம் - சிற்றரத்தை. சன்னல்பின்னல் - கொடிமுதலிய வொன்றொடொன்றுநெருங்கிப் பின்னியிருத்தல். சன்னவாளப்பூச்சோலை - ஓர்சீலை. சன்னவாளம் - ஓர்தேயம். சன்னவீரம் - வென்றிமாலை. சன்னவோரா - ஓர்மீன். சன்னாகம் - போர்க்கவசம். சன்னாசம் - சன்னியாசம். சன்னாசி - துறவி. சன்னி - சீதநோய். சன்னிகணாயன் - ஓர்பூடு. சன்னிகுன்மம் - ஓர்நோய். சன்னிக்கட்டு - சன்னிதோஷக்கட்டு. சன்னிதானம், சன்னிதி - சமுகம். சன்னிநரம்பு - காலிற்பெரு விரலிற் றொட்ட நரம்பு. சன்னிநாயகம் - ஓர் தும்பை. சன்னிபம் - உவமையுருபு. சன்னிபாதம் - இறங்குதல், ஓர்நோய், கலப்பு, கூட்டம், கூத்தினோர் விகற்பம். சந்நியம் - கடைவீதி, பிறந்தஇயல்பு, போர், மரமஞ்சள். சன்னியன் - தோழன், பிதா. சந்நியாசமுத்திரை - தண்டு, கமண் டலம் முதலியபஞ்ச முத்திரை. சந்நியாசம் - துறவு, அஃது நால்வகை யாச்சிரமத்தொன்று. சந்நியாசி - முற்றத்துறந்தோன். சன்னியை - தோழி, மாதா. சந்நிரோதனம் - தடை. சந்நிவேசம் - வெளிநிலம். சன்னிவாதசுரம் - ஓர்நோய். சன்னை - சரசம். சன்னைகாட்டுதல், சன்னை பண்ணுதல் - சரசம்பண்ணுதல். சா சா - ஓரெழுத்து, சாவென்னேவல், பேய். சாககம் - படுக்கை, பூனை. சாகங்காரம் - பெருமை. சாகசம் - ஓர்பட்சி, கொடுமை, திடன், பகை, மெய்ம்மை, யானை, வலோர்க்காரம், வீரம். சாகசரியம் - தோழமை. சாகச்சூம்பி, சாகச்சோம்பி - மெலி வானவன். சாசதம் - சாகசம். சாகமனம் - உடன்கட்டையேறுதல். சாகம் - ஆடு, இலைச்சாறு, கீரை, சத்ததீவினொன்று, சிறுகீரை, தேக்கமரம், தேனீ, வெள்ளாட்டுக் கடா, தாழை. சாகயகம் - தோழமை. சாகரணம் - விழிப்பு. சாகரநேமி - பூமி. சாகரப்பிரவை - ஏழ்நரகவட்டத் தொன்று, அஃது துயிலாமை. சாகரமேகலை - பூமி. சாகரம் - கடல், பதினாயிரங்கோடி, கோடாகோடி, விழிப்பு. சாகராம்பரை - பூமி. சாகரி - ஓர்பண். சாகல்லியம் - சகலம். சாகவில்வம் - சேம்பு. சாகாங்கம் - மிளகு. சாகாசிவை - விழுது. சாகாடு - உரோகணி, பண்டி. சாகாதுண்டம் - அகில். சாகாமருந்து - ஓர்மூலி, தேவாமுதம். சாகாமிருகம் - அணில், குரங்கு. சாகாமூலி - சாவாமூலி, சீந்தில். சாகாமை - அழியாமை. சாகி - மரப்பொது. சாகித்தியம் - கூட்டம், சங்கீத சாத்திரத்தின் படிதவறாதுபாடல். சாகியகிருது - தோழன். சாகியம் - கூட்டம். சாகிரகம், சாகிரியம் - விழித்தல். சாகிரதை - சாக்கிரதை. சாகினி-சிறுகீரை,சேம்பு, வெள்ளாடு. சாகுதல் - சாதல். சாகுந்தலேயன் - பாரதன். சாகுலிகர் - கரையார். சாகுனிகம் - சகுனசாத்திரம். சாகேதம் - அயோத்தி. சாகை - இலை, சாதல், தங்குமிடம், பிரிவு, புயம், மரக்கொப்பு, வட்டில், வீடு, வேதநூற்பிரிவு, கஞ்சி, வேதம். சாகைமாமிருகம் - சாகாமிருகம். சாக்கடை - சேறு. சாக்காடு - சாவு, பத்தாமவத்தை, அஃது இறந்துபடல். சாக்காட்டுதல் - சாகிறவர்களைப் பிராமரித்தல். சாக்கி - சாட்சி. சாக்கிடுதல் - போக்குச்சொல்லுதல். சாக்கியநாயன் - அறுபத்துமூவரி லொருவன். சாக்கியம் - கூட்டம், சமணமதம், புத்தமதம். சாக்கியர் - புத்தர். சாக்கிரதை - கவனிப்பு, விழிப்பு. சாக்கிரத்தானம் - இலலாடத்தானம். சாக்கிரம் - ஓரவத்தை, கவனிப்பு, விழிப்பு. சாக்கிரிகம் - வட்டமானது. சாக்கிரிகன் - எண்ணெய்வாணிபன், சூதன், புகழ்ந்துபாடுவோன். சாக்கு - சாட்டு, பை, பொன். சாக்குமாண்டி, சாக்கும்மாண்டி - பருத்தவன், விபரீதமற்றவன். சாக்குருவி - ஆந்தை. சாக்குறி - மரணவடையாளம். சாக்கை - நிமித்திகன், புரோகிதன். சாங்கம் - ஒழுங்கு, கரசரணாதி யவயவம், சங்கபாஷாணம், சங்கொலி, சாயல். சாங்கரன் - தோழன். சாங்கரிகம், சாங்கரியம் - கலப்பு. சாங்காலம் - மரணகாலம். சாங்கியம் - ஓர்மதம், சாத்திரம் மூன்றினொன்று, அஃது கபிலர் செய்தநூல். சாங்கியாயநீயம் - உபநிடதம் முப்பத் திரண்டினொன்று. சாங்கியயோகம் - பிரமமேசீவன் சீவனேபிரமமென்னுமதம். சாங்கிருதம் - சதங்கை. சாங்கு - ஓர்விதமானஅம்பு. சாங்குகௌரி - புளிநறளை. சாங்குசித்தன் - குருவிடத்துப தேசம் பெறவிரும்புவோன். சாங்குலம் - நஞ்சு. சாங்குலி - விடவைத்தியம். சாங்குவாதி - சாங்கியமதக்காரன். சாங்குவாதிகன் - தற்கசாத்திரி. சாங்கோபாங்கம் - அந்தசந்தம், அவயவங்களுமணியப்பட்டதும், உதவி. சாசயந்தகம் - பல்லி. சாசற்புடம் - பஞ்சதாளத்தொன்று. சாசனகரன் - ஓலைகொண்டு போவோன். சாசனபத்திரம் - இராசகட்டளை, பத்திரிகை. சாசனம் - அரசனாணை, ஆணை, இறையிறாதவூர், ஒழுங்கு, தண்ட னை, தானபத்திரிகை, பத்திரிகை, புலனடக்கல், வலையர்சேரி, உறுதிப்பத்திரம். சாசி - திராய். சாசிபம் - தவளை. சாசுவதம் - அசையாநிலை, நிச்சயம், நித்தியம். சாச்சடங்கு - மரணச்சடங்கு. சாச்சரியம் - ஆச்சிரியம். சாச்சா - சாரிலோத்திரம். சாஞ்சலியம் - அநித்தியம். சாஞ்சிதம் - மரகதக்குற்றத்தொன்று, அஃது எலுமிச்சையிலை நிறம் அலரிநிறம். சாடன் - நம்பிக்கைத்துரோகி. சாடாத்திரகம் - வத்தகு. சாடி - ஆண்மயிர், கும்பவிராசி, குற்றஞ்சாட்டுதல், சீலை, தாழி, திப்பிலி, பஸ்மம். சாடிலி - மனிதர்தசைதின்போன். சாடு - சாடென்னேவல், சாதுரியம், பண்டி, புலவர்கூட்டம், மணி முற் றாதசோளம், முகமன் வார்த்தை. சாடுதல் - அசைதல், அடித்தல், கடிந்து கொள்ளுதல், கொல்லு தல், சாய்தல், முரிதல், வாருதல். சாடை - கோள், சயிக்கை, சாயல், சாய்வு. சாடைக்காரன் - கோட்காரன். சாட்குண்ணியம் - ஆறுகுணங் கூடி யது, ஆறுமடங்கு. சாட்குலம் - மாமிசவூண். சாட்குலிகம் - முறுக்குப்பணிகாரம். சாட்கூலி - தசையுண்போன். சாட்சாது - சமுகம், நிலைபெற்றமகிமை. சாட்சாற்காரம் - கருவிகரணாதிகட் கெல்லாஞ்சாட்சியாயிருப்பது. சாட்சி - அத்தாட்சி, நடந்ததைக் கண்டவர்கள். சாட்சிவிளக்கம் - சாட்சிவிசாரணை. சாட்டம் - நூற்றெட்டு. சாட்டாங்கதெண்டன், சாட்டாங்கம், சாஷ்டாங்கம் - எட்டங்கம் நிலத் திற்பட வணங்கல், நமஸ்காரம். சாட்டி - சவுக்கு, பயிர்செய்தறுத்த நிலம், மிலாறு. சாட்டித்தரை - பயிர்செய்த தரை. சாட்டியம் - பொல்லாங்கு, வஞ்சகம், வருத்தம். சாட்டு - சாட்டிவிடுதல், சாட்டென் னேவல், புற்றரை, போக்கு. சாட்டுதல் - சாட்டிவிடுதல், சாரப் பண்ணுதல், போக்குச்சொல்லு தல். சாட்டுவலம் - பசும்புற்றரை. சாட்டை - ஓர்விதசவுக்கு, ஓர் வித பலகை. சாணகம் - சாணாகம். சாணக்கியம் - ஓர்நூல். சாணங்கி - துளசி. சாணம் - அம்மிக்கல், சாணகம், சாணைக்கல். சாணளப்பான் - ஓர்புழு. சாணன் - கெட்டிக்காரன். சாணாகமுதலை - ஓர்முதலை. சாணாகமூக்கன் - ஓர்பாம்பு, ஓர் வண்டு. சாணாகம் - சாணி. சாணாக்கி - ஓர்பூடு. சாணான் - சான்றான். சாணி - சாணாகம், விபூதி. சாணிக்கெண்டை - ஓர்மீன். சாணை - அம்மி, சாணைக்கல், சிறு குழந்தைகளுடைய படுக்கைச் சீலை. சாணைக்கல் - ஆயுதந்தீட்டுமோர் கருவி, கருந் தண்ணீர்க்கல். சாணைக்கூறை - பெண்ணை விவாகம் பண்ணிக் கொள்ளும் படி சாணையிற் பெண்பிள்ளைக் கிட்ட புடைவை. சாணைச்சீலை - குழந்தைகட்கிடும் மெத்தைச் சீலை. சாணைபிடித்தல் - சாணைக் கல்லி லாயுதந் தீட்டல். சாணைப்பனங்கட்டி - தட்டையாய் வார்த்தபனங்கட்டி. சாணைப்பிள்ளை - நான்கு மாத வயசுக்குட்பட்ட பிள்ளை. சாண் - அரைமுழம். சாண்சீலை - கௌபீனம். சாண்மாதுரன் - கந்தன். சாண்வயிறு - கீழ்வயிறு. சாதககட்சி - காந்தம். சாதககிள்ளையோன் - காச்சற் பாஷாணம். சாதககுணசலம் - கந்தகம். சாதகக்கோடு - சங்கபாஷாணம். சாதகசக்கிலி - சத்திசாரம். சாதகசூதகம் - பிறவித்தீட்டு. சாதகச்சீர்த்தி - சாதகவானத்தி. சாதகதிசை - முத்திதிசை. சாதகநீர்ச்சிலை - கண்டகிச்சிலை. சாதகபலன் - பிறப்பின்படி கிரகங் களாலாகும் பலாபலம். சாதகபுட்பம் - கடனுரை. சாதகப்புள் - வானம்பாடி. சாதகம் - ஓர்பிரபந்தம், அஃது திதி நிலை முதலிய ஏழ்வகை யுறுப்புக் கணிலையையுஞ் சோதிட நூலா னுணர்ந்து அவற்றால் வருபயன் கூறுவது, காரியசித்தி, சனனம், துணைக்காரணம், பயிற்சி, பிர மாணம், பூதகணம், வானம்பாடி, எருக்கு. சாதகராகத்தி - கோழித்தலைக் கந்தகம். சாதகருமம், சாதகன்மம் - பிறந்த போதுசெய்யுமோர் சடங்கு. சாதகர் - மெய்காப்பாளர். சாதகலங்காரம் - சாதகவோலை யெழுதும்விபரமறியுமோர் நூல். சாதகலம்பம் - தாலம்பபாஷாணம். சாதகவன்னி - அக்கினிக்கட்டி. சாதகவாதி - நாகமணல். சாதகவானத்தி - இரதபாஷாணம். சாதகவித்தை - பயின்று கைவந்த செய்கை. சாதகன் - சாதகமுடையோன், சாதிப் போன், யாசகன். சாதகாசாரியன் - குருப்பட்டத்துக்குப் பக்குவவான், துணைக் குரு. சாதகி - சாதகக்காரி. சாதகும்பம் - பொன். சாதக்கல் - தேகக்கல். சாதசூத்திரம் - வைடூரியம். சாதம் - உண்மை, சந்தோஷம், சுத்தம், சேறு, சோறு, பிறப்பு, பூதம், மேன்மை, இளம்புல். சாதரூபம் - நால்வகைப்பொன்னி னொன்று, பொன். சாதரூபி - அருகன், கந்தகம். சாதல் - இறத்தல். சாதவண்டு - ஓர் வண்டு. சாதவாகனன் - அய்யன், சாலி வாகனன். சாதவேதா - நெருப்பு. சாதனசதுட்டயம் - இகபரபுத்தி ரார்த்த பரபோகவிராகம், சமா திட்டற்க சம்பத்தி, நித்தியா நித்திய வத்து விவேகம், முமூட் சுத்துவ நான்கும். சாதனசாத்தியம் - காரணகாரியம். சாதனபத்திரம், சாதனமுறி - உரிமைப் பத்திரம், உறுதிப் பத்திரம். சாதனம் - அடையாளம், அழித்தல், ஆண்குறி, இடம், உறுதி, ஊர், ஏது, ஐக்கம், கருவி, கிராமம், சமையாசாரத்தைச் சாதித்தல், சாச்சடங்கு, சாத்தியப் பொரு ளையுறுதிப் படுத்துமத் தாட்சி, சித்தியாதல், செல்வம், சேனை, தகுதி, பதார்த்தம், பஸ்மமாக்கல், பயிற்சி, முயற்சி, மெலிவு, வீடு. சாதனம் பண்ணுதல் - அப்பி யாசித்தல், உறுதிமுடித்தல். சாதனன் - பிறந்தவன். சாதனாந்தரம் - துணையுறுதி. சாதனை - சலஞ்சாதித்தல், பயிற்சி, பொய். சாதா - பருமட்டுவேலை. சாதாக்கியம் - சிவதத்துவமைந்தி னொன்று, அஃது ஞானமுங்கிரி யையு மொத்தது. சாதாபத்தியை - மாதா. சாதாரண - ஓராண்டு. சாதாரணம் - இலேசு, பழக்கம், பொது, பொதுமுறை. சாதாரண்ணியம் - எங்கும். சாதாரி - ஓர்பண், முல்லைநிலத்தி ராகம். சாதாவேலி - சதாவேரி. சாதாழை - கடற்பயிரினொன்று. சாதாழைநிம்பம் - எருக்கிலை. சாதான்மம் - தருமநூல் பதினெட்டி னொன்று. சாதி - ஆடாதோடை, உயர்வானது, கள், குலம், சாதிமரம், சாதியென் னேவல், சிறுசண்பகம், சீந்தில், தாளப்பிரமாணம் பத்தினொன்று, தேக்கமரம், தேர்ப்பாகன், பிரம்பு, பிறப்பு, மரப்பொது, யுத்தவீரன். சாதிகம் - சாதியின்றன்மை. சாதிகோசம் - சாதிக்காய். சாதிகை - சாமாத்தியம். சாதிக்கட்டு - சாதியாசாரம், சாதி யினொருமிப்பு. சாதிக்கலப்பு - பலகுலங்கலந்திருத்தல். சாதிக்காய் - ஓர்சரக்கு, அஃது பஞ்ச வாசத்தொன்று. சாதிக்காரை - தகுதி. சாதிக்குறைவிசேடம் - குலவிழி பானுயர்வு தோன்றக்கூறுவது, (உம்) ஆயனாய் வாழ்மாயனா யோதனம் வென்றான்றூயபுரந் தரனோ தோற்றாளும். சாதிசம் - நறும்பிசின். சாதிசாங்கரியம் - சாதிக்கலப்பு. சாதிட்டம் - மிகநீளம். சாதிதம் - மறைக்கப்பட்டது. சாதித்தருமம் - குலதருமம். சாதித்தலைமை - வமிசத்தலைமை, மேன்மை. சாதித்தலைவன் - சாதியாரெல் லார்க்கு முதலீடா யிருப்பவன், மேன்மையுள்ளவன். சாதித்தல் - அழுத்தல், எண்ணெய் முதலியன தேய்த்தல், சலஞ்சாதித் தல், பழகல், வெல்லுதல். சாதித்தன்மை - தன்மையலங்காரக் குறியினொன்று, அஃது சாதிப் பொதுவியல்பு. சாதிபத்திரி - வசுவாசி. சாதிப்பதங்கம் - சாதிலிங்கம். சாதிப்பாய் - பிரப்பம்பாய். சாதிப்பிரஞ்சகரம் - ஈனசாதிப் புணர்ச்சி, குலாசாரந்தவறுதல். சாதிப்பிரஞ்சம் - குலாசாரத்தவறு. சாதிப்பு - சாதித்தல். சாதிப்பூ - ஓர்சரக்கு. சாதிமல்லிகை - ஓர்மல்லிகை. சாதிமானம் - குலமொத்திருத்தல். சாதிமான் - நற்குலத்தோன். சாதியாசாரம் - சாதியொழுக்கம். சாதியுவமம் - சாதியாலுவமிப்பது. (உம்) கரணம்போலுமான்மா. சாதிரம் - விட்டுணுகரந்தை. சாதிரேகம் - குங்குமப்பூ. சாதிலிங்கம் - ஓர்சரக்கு. சாதினி - கம்பளி, பீர்க்கு. சாதீகம், சாதீயம் - சாதிக்கடுத்தது. சாது - அருகன், சற்குணத்தோன், சற்குணம், தயிர், பதமை, மேன்மை. சாதுகம் - பெருங்காயம். சாதுசங்கம் - சற்சனரின் கூட்டம். சாதுதி - மாமி. சாதுத்துவம் - மேலானதன்மை. சாதுரங்கம் - சதுரங்கம். சாதுரம் - இரதம். சாதுரன் - சூதன், விவேகி. சாதுரிகன் - சூதன். சாதுரியம் - கண்டுங்காணாமையுமா யிருத்தல், சாமாத்தியம், நாகரீகம். சாதுருசியம் - ஒப்புமை. சாதூரியம் - நாகரீகம், வாசாலகம். சாதுருமாசியம் - யாகமிரு பத்தொன்றி னொன்று. சாதுர்ப்பாகம் - நாலத்தொன்று. சாதேட்டி - சனனச்சடங்கினொன்று. சாதேவம் - குழிநாவல், சிறுநாவல். சாதேவன் - பஞ்சபாண்டவரிலொரு வன். சாத்தல் - அப்புதல், ஆடையணி மாலை முதலியன சாத்தல். சாத்தவர் - குதிரைவீரர். சாத்தன் - அருகன், ஐயன், தண்டிப் போன், தெரிவிக்கிறவன், வயிரவன், புத்தன். சாத்தாவாரி - நீர்மீட்டான். சாத்திகம் - அனுகூலப்படத்தக்கது, சாத்துவிகம், சிற்பநூன் முப்பத்தி ரண்டி னொன்று. சாத்தியதேவர் - வியாசர். சாத்தியந்தன் - பிறவிக்குருடன். சாத்தியம் - சாதிக்கத்தக்கது, சாதனத் தாலுறுதிப்பட்டது, நித்திய யோகத்தொன்று, பூரணம், உண்மை. சாத்தியரோகம் - மாற்றத்தக்கவியாதி. சாத்தியவதேயன் - ஓரிருடி. சாத்தியன் - ஒத்தகுலத்திற் பிறந்தோன். சாத்திரகாரர் - சோதிடர். சாத்திரசக்கு - இலக்கணம். சாத்திரசித்தம் - நூற்கருத்து. சாத்திரதீட்சை - ஞானசாத்திரம் போதித்துவிளக்கல். சாத்திரபேதி - ஓர்பூடு. சாத்திரப்பிரசங்கம் - வேதப்பொருள். சாத்திரம் - ஒழுங்கு, கட்டளை, கல்வி நூல், சோதிடம், புத்தகம், வேதம். சாத்திரம் பார்த்தல் - குறிபார்த்தல், சோதிட நூலானன்மை தீமை பார்த்தல். சாத்திரவதேயன் - வியாசன். சாத்திரவேரி - நீர்விட்டான். சாத்திராசரணன் - பண்டிதன். சாத்திரி - கணிதன், நிமித்தகாரன், வேத நூன் முதலியன வோது விட்போன். சாத்திரை - ஓர்திருவிழா. சாத்தீகம் - சாத்துவிகம். சாத்து - அடி, அணிகை, அப்புகை, சாத்தென்னேவல். சாத்துக்கவி - ஒருவர்செய்யும் பாவி கையைப் பார்த்துப்பாடுவோன். சாத்துதல் - அடித்தல், அணிதல், அப்புதல், சார்த்துதல், மூடுதல். சாத்துநாற்று - நடுந்நாற்று. சாத்துப்படி - மாலைமுதலிய சாத்தி யலங்கரித்தல். சாத்துப்பெட்டி - சார்த்துப்பெட்டி. சாத்துவசம் - பயம். சரத்துவாலம் - யாககுண்டம். சாத்துவிகம் - முக்குணத்தொன்று, அஃது அருள்,ஐம்பொறி யடக்கல், ஞானம், தவம், பொறை மேன்மை, மோனம், வாய்மை என்னு மெண் குணம். சாத்துவிகன் - பிரமா. சாநித்தியம் - சமுகம். சாந்தகப்பை - ஓர்கருவி. சாந்தகம், சாந்தகைமை - மெத்தெனவு. சாந்தபனம் - ஓர்விரதம். சாந்தமுகம் - தண்ணெனவானமுகம். சாந்தம் - அமைதி, கலவை, குளிர்ச்சி, சந்தனம், சாணி, தண்ணெனவு, நவரசத்தினொன்று, அஃது பொறுமை, தயவு. சாந்தரூபம் - தண்ணெனவான காட்சி, தண்ணெனவான கோலம். சாந்தலிங்கதேசிகன் - வயிராக்கிய சதகஞ்செய்தோன். சாந்தவம் - மலைப்பக்கம். சாந்தவாரி - நீர்விட்டான். சாந்தனிகம் - சந்தனக்கலவை. சாந்தனு - சந்தனு. சாந்தனையும் - சாமளவும். சாந்தன் - அருகன், சந்திரன், தண் ணெனவானவன், புத்தன், பிரகிருதியைச் சுட்டவன். சாந்தாற்றி - கால்செய்வட்டம், சிற்றாலவட்டம், பீலிக்குஞ்சம். சாந்தானிகபிச்சை - பெரியோர் பரம்பரையாயனுபவிக்கும் படி கொடுக்கப்பட்டன. சாந்தி - ஆற்றுதல், கழிப்பு, சாந்தம், தணிவு, தோஷநிவாரணம். சாந்திகலை - பஞ்சகலையினொன்று. சாந்தியாதீதகலை - பஞ்சகலையி னொன்று. சாந்திரகம் - இஞ்சி. சாந்திரமாதம் - சந்திரன் சுற்றிவருவதி னாலுண்டானமாதம். சாந்திரமானம் - சாந்திரமாதங்களால் வரும்வருடம். சாந்திரம் - சந்திரகாந்தம், சுக்கில பக்கம், நெருக்கம், மிகுதி, மிருது. சாந்திராண்டு - சாந்திரமானம். சாந்திராயணம் - ஓர்விரதம். சாந்திராயனம் - சந்திரன் வீதி. சாந்திவிருத்தி - சாத்துவிகவிருத்தி. சாந்து - கலவைச்சாந்து, சந்தனம், சாந்தகுணம், சுண்ணச்சாந்து, பராகம், வாசனைத்தூள். சாந்துக்காறை - சுண்ணத்தளம். சாந்துருவம் - சுண்ணச்சீலை. சாந்துப்பொடி - வாசனைத்தூள். சாந்துவாரி - சுத்திசெய்பவன், பீவாரி. சாந்தை - கங்கை, பூமி. சாந்தோக்கியம் - உபநிடதத்தொன்று. சாபத்திரி - சாதிபத்திரி. சாபத்தீடு - சாபம். சாபம் - சபிப்பு, தனுவிராசி, வட்டத் திற்பாதி, வில். சாபலம், சாபலாச்சிரயம் - அநித்தியம், சாபங்கொண்டு பெற்றபலம், இஃது கணிதமுறையினொன்று. சாபலன் - ஆட்டுவாணிபன். சாபல்லியம் - அநித்தியம், அனுகூலம், பேறு. சாபறை - நெய்தனிலப்பறை, பிணப் பறை. சாபாலி - ஓர்முனி. சாபிணம் - அறக்கிழடு. சாபித்தல் - சபித்தல். சாபிள்ளை - செத்துப்பிறக்கும் பிள்ளை, பிறந்தவுடன் சாகும் பிள்ளை. சாபினை - சபிப்பு. சாபேட்சை - தீராதவாஞ்சை. சாப்படுதல் - உண்ணல், பருகல். சாப்பாடு - உணவு. சாப்பை - சப்பை, சாட்டை, புற்பாய். சாப்பைச்சொண்டன் - ஓர்நாரை. சாமகம் - சாணைக்கல். சாமகானம் - சாமவேதகீதம். சாமகானன் - சிவன். சாமக்காவல் - சாமந்தோறும் மாறிக் காத்தல். சாமக்கிரிகை - தளபாடம். சாமணம் - சாவணம். சாமத்தியம் - சாமர்த்தியம். சாமத்துரோகி - குரூரன், மிகுபாதகன். சாமந்தம் - அயல், ஓர்பண். சாமந்தர் - அமைச்சர், தானைத் தலைவர். சாமந்தி - ஓர்பூமரம். சாமம் - இரா, ஓருபாயம், கருமை, சமாதானம், பச்சை, பஞ்சம், பாதியிரா, மரணம், மூன்றாம் வேதம், யாமம், பலவீனம். சாமயோனி - பிரமன். சாமரபுட்பம் - கமுகு, மாமரம். சாமரம், சாமரை - கவரி, இஃது அட்ட மங்கலத்துமொன்று. சாமரி - குதிரை. சாமரீகரம் - பொன். சாமர்த்தியம் - இருது, சாமாத்தியம். சாமளம் - பச்சை. சாமளாதேவி, சாமளை - ஓர்தேவதை. சாமன் - காமன்றம்பி, புதன். சாமாசி, சாமாஞ்சி - யோசனை. சாமாத்தியம் - சமத்து. சாமானியசங்கமம் - சிற்றின்ப நிவாரணம். சாமானியசுபாபம் - பொதுச்சுபாபம். சாமானியம் - பொது. சாமான் - சரக்கு, தளபாடம். சாமி - அருகன், கடவுள், கந்தன், கற்புடையாள், குரு, தலைவன், தலைவி, தாய், பொன், மூத்தோன், கடந்தஞானி. சாமிநாதன் - சுவாமிநாதன். சாமியம் - போசனம், ஒப்புமை. சாமியன் - பிறர்கடனுக்கீடு நின்றோன். சாமீகரம் - பொன். சாமீபம், சாமீப்பியம் - ஓர்பதவி, அஃது கடவுளது சமீபத்திருத்தல். சாமுகுர்த்தம் - அசுபமுகுர்த்தம். சாமுண்டி - காளி, துற்கை. சாமுத்திரிகம், சாமுத்திரிகலெட்சணம் - அங்கலட்சணம், ஓர் நூல். சாமேளம் - சாபறை. சாமை - ஓர்பயிர், கற்சேம்பு. சாமோபாயம் - நான்குபாயத்தி னொன்று, அஃது இணக்குமு பாயம். சாம்பம் - யானைநெருஞ்சில். சாம்பர் - சாம்பல். சாம்பலச்சி - எவட்சாரம். சாம்பல் - ஒடுங்கல், சாம்பர், பழம்பூ. சாம்பலமொந்தன் - ஓர்வாழை. சாம்பலொட்டி - எருக்கு. சாம்பவம் - அட்டாதசவுப புராணத் தொன்று, சம்புநாவல், பொன். சாம்பவன் - இராமன் படைத்தலை வரிலொருவன், சிவன். சாம்பவி - பார்வதி, பெருநாவல். சாம்பவிவிந்து - கௌரிபாஷாணம். சாம்பற்பூசணி - நீற்றுப்பூசணி. சாம்பனாரை - ஓர்நாரை. சாம்பாத்தி - பறைச்சி. சாம்பான் - பறையன். சாம்பி - கப்பியல். சாம்பிராச்சியம் - ஆளுகை, சக்கிரவத் தித்தன்மை, தத்துவம், பாக்கியம், மேன்மை. சாம்பிராச்சியலட்சுமி - பாக்கிய லட்சுமி. சாம்பிராணி - ஓர்வாசனைப் பண்டம், ஓர்மரம். சாம்பிராணித்தயிலம் - ஓர்வாசனைத் தயிலம். சாம்பிராணிப்பட்டயம் - எழுதிக் கொடுத்த பத்திரம். சாம்பிராணிப்பதங்கம் - ஓர் மருந்து. சாம்பு - சாம்பென்னேவல், பறைச் சாதி, புடைவை. சாம்புசண்பகம் - நாவற்பூ. சாம்புதல் - இழுத்தல், ஒடுங்குதல், கூம்புதல், அடித்தல். சாம்புவன் - சுடலைகாப்பவன். சாம்பூனதம் - நால்வகைப்பொன்னி னொன்று, பொன். சாம்வத்தம் - சமவத்தம். சாயகம் - அம்பு, வாள். சாயக்காரர் - வன்னக்காரர். சாயங்காலம், சாயந்திரம் - அந்திப் பொழுது. சாயசாந்தி - அந்தியேட்டி. சாயந்தீருதல் - வன்னமிடுதல். சாயப்பணி - செஞ்சாயம் போடுதல், சாயவேலை. சாயம் - அந்திநேரம், அம்பு, நிறம். சாயரட்சை - அந்தி. சாயரி - ஓர்பண். சாயல் - அழகு, ஒப்பு, சாய்தல், நிறம், நுண்மை, மக்கட்படுக்கை, மஞ்சள், மாதிரி, மேன்மை. சாயவிடுதல் - மரக்கலத்தைக் கரைக் கடுக்கவிடுதல். சாயவேர் - ஓர்பூண்டு. சாயவேளாகொல்லி - கொல்லித் திறத்தினொன்று. சாயனதம் - சாயானதம். சாயனம் - கள். சாயாகவுளம் - ஓரிசை. சாயாக்கிரகம் - இராகு, கேது. சாயாதேவி - சூரியன் மனைவிகளி லொருத்தி. சாயாத்துவம் - நல்லில்லாட்குரிய குணம். சாயாபதி - சூரியன். சாயாபுத்திரன் - சனி. சாயானதம் - ஓந்தி. சாயித்தியம் - சேர்மானம், புலமை. சாயுச்சியகாரர் - இலிங்கதாரிகள். சாயுச்சியம் - ஒன்றிப்பு, ஓர்பதவி, அஃது கடவுளோடயிக்கப் பட்டி ருத்தல், கலத்தல், மோக்கம். சாயை - சாயாதேவி, நிழல், நிறம், மனைவி. சாய் - ஓர்வகைக்கோரை, சாயென் னேவல். சாய்கை - பன்னகசாலை. சாய்தல் - அசைதல், அழிதல், இரிதல், சரிதல், திரும்புதல், நுண்மை, இறத்தல். சாய்த்தல் - அசைத்தல், சரித்தல், திருப்புதல். சாய்ப்பு - சரிப்பு, சார்மானம், தாழ் வாரம், தாழ்வு, நடத்தல், பத்தி, வெற்றிலை. சாய்மானம் - ஒப்பாசாரம், சாருதற் கிடுமணை, சார்வு. சாய்வு - சரிவு, பக்கம். சாரகந்தம் - சந்தனம். சாரகம் - தேன். சாரகன் - குதிரைப்பாகன், தோழன். சாரங்கபாணி - விட்டுணு. சாரங்கம் - ஆபரணம், இரா, இராகம் முப்பத்திரண்டி னொன்று, ஓரிசை, கருப்பூரம், குயில், சங்கு, சாதகப் புள், சிங்கம், சிறுகுறிஞ்சா, புடைவை, பூமி, மயில், மான், மேகம், யானை, வண்டு, விட்டு ணுவின் வில்லு, வெளிச்சம். சாரங்கன் - விட்டுணு. சாரங்கி - ஓர்யாழ். சாரசம் - குருகு, தாமரை, மாதரிடை யணி, வெண்ணாரை. சாரசனம் - மாதரிடையணியி னொன்று. சாரசன், சாரசாதன் - சோரபுத்திரன். சாரசி - இலக்குமி. சாரசியம் - விற்பன்னம். சாரசுவதம் - சாதுரியம், பஞ்ச கௌடத்தொன்று. சாரணத்தி - சாரணை. சாரணம் - உலகங்களைப் பஸ்ம மாக்குதல், போதல். சாரணர் - ஒற்றர், அவர் அரசர்க்குப் பஞ்சகுழுவிலொருவர், கூத்தாடி, சமண்முனிவர், புலவர். சாரணை - ஓர்பூடு, பிடாலவணம். சாரதம் - இனியபண், ஓர்பூடு, ஓர் வகைப்பாட்டு, அஃது அடி களி னிறுதி ஒரே தொடையாகவுங் கடைக் கட்டனிச் சொல்லாய்ச் செயாரதமென முடிவ து, பூதம். சாரதன் - சாரதி. சாரதி - தேர்ப்பாகன், புலவன், விட்டுணு. சாரதிகம் - ஓர்சாச்சடங்கு. சாரதீயம் - கூதிர்காலம். சாரதை - ஓர்வீணை, சரச்சுவதி, துற்கை. சாரத்தியம் - தேர்முதலிய செலுத்துந் தொழில். சாரஸ்திரி - வேசி. சாரத்தின், சத்துரு - முட்டை. சாரத்துவம் - விபசாரம். சாரபதம் - முச்சந்தி. சாரபூமி - நன்னிலம். சாரப்பருப்பு - காட்டுமாவிரை. சாரமிறக்குதல் - சாரம்வடித்தல். சாரமேயன் - நாய். சாரம் - இலுப்பை, இனிமை, உருக்கு, ஏதண்டை, சத்து, நடை, நிலா முக்கிப்புள், பாலாடை, புடைவை யழுக்ககற்றுங்காரம், மரவயிரம், முந்திரிகை, மேடு, விபசாரம். சாரர் - ஒற்றர், நட்பாளர். சாரலம் - எள். சாரவி - ஓர்நெல். சாரல் - கிட்டல், குளிர்காற்று, சாருதல், மருதயாழிசை, மலைப் பக்கம். சாரவறுதி - இலேசு. சாரவாக்கியம் - கிரகமானம். சாரன் - விபசாரன். சாராசாரி - கூட்டமாய்ப்போதல். சாராயப்பாவாலை - சாராயப்பானை. சாராயம் - அரக்கு, மது. சாரி - அஞ்சனபாஷாணம், உலாப் போதல், சூதாடுகருவி, சூறைக் காற்று, யானை மேற்றவிசு, அரசர்க்குச் செங்கோல் செல்லல், பரதவுறுப்புளொன்று. சாரிகை - கடமை, கவசம், சுங்கம், சுழல்காற்று, சூதாடுகருவி, நாகண வாய்ப்புள், யாழ்வாசிக்குங் கருவி, வட்டமாயோடல். சாரிசம் - கறியுப்பு. சாரிசாதன் - கத்தூரிமிருகம். சாரிசிருங்கலை - சூதாடுகருவி. சாரிசெய்தல் - இழந்த உத்தியோகத் தைத்திரும்பக்கொடுத்தல், தீர்த் தல், முறையிடுதல். சாரிதம், சாரீரம் - ஒழுக்கம். சாரித்திரம் - ஒழுக்கம், கதை, வரலாறு. சாரிபம் - நன்னாரி. சாரியம் - எட்டி. சாரியல் - இந்துப்பு. சாரியை - சார்ந்துவருமிடைச்சொல். சாரிரத்தை - எட்டி. சாரீரம் - ஆன்மா, இன்னிசை, மலம். சாரீரிகம் - சரீரம். சாரு - அழகு, கிள்ளை. சாருகம் - கொலை. சாருகன் - கொலைசெய்வோன். சாருசம் - கல்லுப்பு. சாருதல் - அடுத்துக்கொள்ளுதல், சாய்தல். சாருலோசனம் - மான். சாருவபூமம் - சார்வபூமம். சாருவாகம் - உலசாயிதமதத்தினோர் பேதம். சாரூபம் - கண்டுசாய்ப்பு, சாயல், நாலுபதவியினொன்று, அஃது கடவுளதுருப்பெற்றிருக்குதல், பொன். சாரூப்பியம் - இசைதல், ஒரே தன்மை, சாதுரியம், சாரூபம். சாரூரகம் - கல்லுப்பு. சாரை - ஓர்பாம்பு. சாரையோட்டம் - நேரோட்டம். சாரைவாலன் - நீண்டவாலெருது, புகைமரத்திலோரினம். சாரோசி - நவட்சாரம். சார் - அழகு, இடம், இளமோலை, கடலுண்மேடு, சாரென்னேவல், தட்டி, திண்ணை, பகுதி, பக்கம். சார்கேசபுஞ்சம் - இலவம்பிசின். சார்க்ககம் - கற்கண்டு, பாலாடை. சார்ங்கம் - சாரங்கம். சார்ச்சி, சார்தல் - அடைதல், கலத்தல், கிட்டல், கூடுதல், சாருதல், பட்ச பாதமாயிருத்தல். சார்த்தவகன் - வியாபாரி. சார்த்துதல் - கதவுமுதலியனவற்றை யணைத்தல், சாரச்செய்தல். சார்த்துப்பெட்டி - அரிப்பெட்டியின் கீழ்ப்பெட்டி. சார்த்தூலம் - ஓர்பட்சி, ஓர்பண், புலி. சார்ந்தார், சார்ந்தோர் - உறவோர், சினேகிதர். சார்பறுத்தல் - துறவு. சார்பிலார் - பகைவர், முனிவர். சார்பு - அடைக்கலம், அணைவு, இடம், உதவி, கடவுள், குணம், சேர்பு, தன்மை. சார்புநூல் - முதநூல்வழி நூல்களது பொருட் கூட்டித் திரிபு வேறு டைய நூல். சார்பெழுத்து - சார்ந்துவருமெழுத்து. சார்மனை - சாருகிறதற்கிடுமணை. சார்மானம் - சார்பு. சார்வகாலம் - எப்போழ்தும். சார்வபூமம், சார்வபௌமம் - வடதிசை யானை. சார்வபூமன், சார்வபௌமன் - ஒரு வனைப்பணியாதுலகாள்வோன். சார்வரி - ஓராண்டு. சார்வாகம் - புறச்சமயமாறி னொன்று. சார்வாய் - அறுத்தவித்தனங்காய். சார்வாரம் - கச்சின்கடைக்கயிறு, முன்றானை. சார்வு - ஆசைப்பெருக்கம், இள மோலை, சார்பு. சால - மிகுதி. சாலகடங்கடர் - இராக்கதர். சாலகம் - அதலலோகம், இளம் பூ வரும்பு, கூட்டம், சலதாரை, பலகணி, பறவைக்கூடு, பெருமை, வலை. சாலகன் - விரிவாய்ப் பேசுகிறவன். சாலகாரகன் - சிலம்பி, வலைசெய் வோன். சாலகிரி - அழுக்ககற்றுமிடம். சாலக்காரன் - மாயவித்தைக்காரன். சாலக்கிராமம் - ஓரூர், ஓர்வகைச் சிலை. சாலசாரம் - ஓர்மரம், பெருங்காயம். சாலடிமேடு - உழவிடைப்பிட்டி. சாலபஞ்சி - சித்திரப்பாவை. சாலபஞ்சிகை - பாவை, வேசி. சாலப்பிராயம் - போர்க்கவசம். சாலமாலம் - கண்டுசாய்ப்பு, மாயம். சாலம் - அரண், ஆச்சாமரம், இளம் பூவரும்பு, எசுர்வேதம், கடம்பு, கூட்டம், சவை, செடி, தாழ் வாரம், பலகணி, பெருமை, மரப் பொது, மாயவித்தை, வலை, விகற்பம், விலங்கின் கூட்டம், வலைபோன்ற தோரணம். சாலம்பம் - ஓர்மரம். சாலரி - ஓர்வாத்தியம். சாலர் - நெய்தனிலமாக்கள். சாலல் - மிகுதியாயிருத்தல், மேன்மை யுடைத்தாதல். சாலவகன் - திருமால். சாலவம் - தேயமன்பத்தாறி னொன்று. சாலன் - சாலிவாகனன். சாலாங்கபாஷாணம் - ஓர் மருந்து. சாலாங்கி - பாவை. சாலாரம் - ஏணி, படி, பறவைக்கூடு. சாலாவிரகம் - குரங்கு. சாலி - அருந்ததி, கவசம், கள், நாவி, மிக்கோன். சாலிகர் - நெய்வோர். சாலிகை - கவசம். சாலிகோத்திரம் - குதிரை. சாலிச்சி - சாலியப்பெண். சாலியர் - சாலிகர். சாலிவாகனன் - ஓரரசன். சாலினி - கள்வாணிச்சி, தேவராட்டி, பீர்க்கு. சாலினிகரணம் - நிந்தை. சாலீனத்துவம் - மரியாதை. சாலுகம், சாலூகம் - சாதிக்காய், தாமரைக்கிழங்கு. சாலூரம் - தவளை, மேன்மை. சாலேகம்-சந்தனம்,சிந்தூரம், பலகணி, பூவரும்பு. சாலேயம் - கம்பளப் புடைவை, நெல்விளை நிலம். சாலை - அரசன்மனை, அறத்தின் சாலை, அறை, இருமருங்கும் விருட்சங்கள் செறிந்த பாறை, குதிரைப்பந்தி, வெளிமண்டபம். சாலோகம், சாலோக்கியம் - ஓர்பதவி, அஃது கடவுள துலகத்திருத்தல். சால் - சாலென்னேவல், தண்ணீர் மொள்ளும்பாத்திரம், நீர்ச்சால், படைச்சால், மிகுதி. சால்கட்டுதல், சால்வளைத்தல் - உழவு சால்விடுதல். சால்பு - இசைவு, ஊக்கம், கல்வி, குணம், மாட்சிமை, மேன்மை. சால்வை - உத்தரீகம். சாவகம் - செபம், பதினெண் பாடை யினொன்று. சாவகர் - ஓர்பாடைக்காரர், சமணர். சாவகன் - சனி. சாவகன் குறிஞ்சி - குறிஞ்சித்திறத்தி னொன்று. சாவகாசம் - வசதி. சாவகாரியம் - பகுத்தறிதல். சாவகேலம் - நிந்தை. சாவசேடம் - மிச்சம். சாவடி - சத்திரம். சாவட்டை - சாவீர், வண்ணாத்திப் பூச்சி, வாடல். சாவணம் - ஓர்கருவி. சாவதானம் - கவனம், விழிப்பு, மிருது. சாவம் - விலங்கின் பிள்ளை. சாவரம் - இகழ், தப்பு, பாவம். சாவருணன் - இரண்டாம்மனு. சாவருணியம் - கலப்பற்றசாதி. சாவல் - சேவல். சாவறுதி - மரணகாலம். சாவனம் - பூரணாகுதி. சாவாக்கியம் - கணிதமுறையி னொன்று. சரவாக்கிழங்கு - கருடன் கிழங்கு. சாவாமூலி - மயிர்ச்சிகைப்பூடு, வேம்பு. சாவாமை - அழியாமை. சாவாளை - ஓர்மீன், மெலிந்தது. சாவி - சப்பட்டை, சாவீர். சாவிகை - மருத்துவிச்சி. சாவிசேடம் - மரணச்செய்தி. சாவித்திரன் - காற்று, சிவன், சூரியன், பிரமன். சாவித்திரி - உமை, சூரியகிரணம், பிரமன் மனைவிகளிலொருத்தி, பூணூலணியாதவன். சாவித்திரிசூத்திரம் - பூணூல். சாவீர் - செத்தவீர். சாவு - பிசாசம், மரணம். சாவுன் - சவுக்காரம். சாவெடில் - பிணநாற்றம். சாவெழுத்து - நச்செழுத்து. சாவேரி - ஓர்பண். சாவோடுதல் - வாடுதல். சாவோலை - மரணச்சீட்டு. சாழல் - ஓர்பிரபந்தம், கரடி, மகளிர் விளையாட்டினொன்று. சாழை - குச்சு, கைகொட்டல். சாழையகத்தி - ஓரகத்தி. சாளக்கிராமம் - சாலக்கிராமம். சாளம் - குங்கிலியம், மணல். சாளரம் - பலகணி. சாளிகம் - வண்டு. சாளிகை - சாடி, பணப்பை, வண்டு. சானியா - ஓர்சரக்கு. சாளுவர் - சளுக்குவேந்தர். சாளேசுரம் - குறும்பார்வை, வெள் ளெழுத்து. சாளை - ஓர்மீன். சாளைக்கெண்டை - ஓர்மீன். சாறடை, சாறணை - ஓர்பூடு. சாறயர்தல் - விழாவயர்தல். சாறல் - குளிர்காற்று, சாறுதல். சாறு - ஆணம், கள், குலை, கொத்து, சாரம், சாறென்னேவல், திருவிழா. சாறுதல் - களங்கூட்டுதல், சறுகக் கொத்துதல், சறுக்குதல், வடிதல். சாறுதாரி - கையாந்தகரை. சாறுவேளை - சாறணை. சாற்சமந்தம் - மலையாத்தி. சாற்றுதல் - சொல்லுதல். சாற்றுவாய் - நீர்வடியும்வாய். சானகம் - வில். சானகி - ஓரரக்கன், சீதை, பொன் னாங்காணி, மூங்கில். சானசி - பொன். சானம் - அம்மி, உரைகல், சாதி லிங்கம், தியானம், பெருங்காயம். சானவி - கங்கை. சானி - வேசி. சானித்தியம் - கிட்டுதல், முற்படுதல். சானினி - சாகினி. சானு - மலைச்சாரல், முழந்தாள், வில், தோள். சானுக்கிரகம் - தேவர்மொழி. சானுசந்தி - முழந்தாட் பொருத்து. சானுபலகம் - முழந்தாட்சில்லு. சானுவி - சானவி. சான்மலம், சான்மலி -இலவமரம், ஓர்தீவு. சான்மலிசாரம் - இலவம்பிசின். சான்றவர் - அறிஞர். சான்றாண்மை - ஊக்கம், ஞானம். சான்றார் - ஓர்சாதியார். சான்று - சாட்சி. சான்றோராட்சி, சான்றோர்வழக்கு - கற்றோர்வழக்கு. சான்றோர் - அறிஞர். சான்றோன் - அறிஞன், சூரியன். சி சிஃகுவீகம் - ஓர்நோய். சிஃறாழிசைக்கொச்சகக்கலிப்பா - ஓர்கலிப்பா, அஃது சிலதாழிசை களோடு பிறவுறுப்புகளையுங் கொண்டு முடிவது. சிகண்டகம் - உச்சிச்சிகை. சிகண்டம் -உச்சிச்சிகை, மயிற்றோகை. சிகண்டி - அம்பு, அலி, ஆமணக்கு, ஓர்பண், சேவல், பேடு, மயில், மயிற்றோகை, பாலையாழி னோசை. சிகண்டிசன், சிகண்டிதன் - வியாழன். சிகநாதம் - அப்பிரகம். சிகம் - கிரணம். சிகரகேந்திரம் - சூரியனுக்கும் மற் றொருகிரகத்துக்குமுள்ள தூரம். சிகரப்பாடி - கோஷடம். சிகரம் - உயர்ச்சி, கோபுரமுடி, சுக்கு, தலை, தலைச்சீரா, திரை, நீர்த் துளி, மயிர்முடி, மலை, மலை முடி, வட்டில், வீடு, கவரிமா, காக்கை. சிகரி - எலி, கருநாரை, கோபுரம், சிகரம், புல்லுருவி, மலை, மலை மேற்கோட்டை. சிகரிநிம்பம் - மலைவேம்பு. சிகரியந்தம் - புல்லுருவி. சிகல் - குறைதல், கெடுதல். சிகழிகை-தொடுத்தமாலை, மயிர்முடி, மாலை, வாசிகை. சிகாச்சேதம் - அபரக்கிரியைக்கு மயிர்களைதல். சிகாதரு - விளக்குத்தண்டு. சிகாதாரம் - மயில். சிகாமணி - சிரோரத்தினம், முதல்வன். சிகாமூலம் - கிழங்குள்ள பூடு. சிகாரி - வேட்டை. சிகாவலம் - பாசி. சிகாவளம் - மயில். சிகானகம் - உலக அழிவு. சிகி - அம்பு, எருது, குதிரை, கேது, சேவல், தீ, தீபம், மயில், மலை, சிலம்பு. சிகிசேகரம் - மயிற்சூடு. சிகிச்சகன் - வைத்தியன். சிகிச்சை - பரிகாரம். சிகிடிமா - கொட்டை முந்திரிகை. சிகித்துவசன் - கந்தன். சிகிபுச்சம் - மயிற்றோகை. சிகிலம் - சேறு. சிகிலாடுதல் - மினுக்குதல். சிசிலி - ஒப்பஞ்செய்யுங்கருவி. சிகிவாகனன் - குமரன். சிகிற்சை - வைத்தியம். சிகுதல் - அழிதல், குறைதல். சிகுரம் - மயிர்ப்பொது. சிகுவாக்கிரம் - நுனிநா. சிகுவாநீரிலேகனம் - நாவலம்புதல். சிகுவாபம் - நாய். சிகுவாமூலம் - அடிநா. சிகுவீகசன்னி - ஓர்சன்னி. சிகுவை - கண்ணினிற்குந்நரம்பு. சிகூரம் - தலைமயிர். சிகை - கிரணம், குடுமி, கொப்பு, சுவாலை, நுதி, படைத்தசாதம், மயிர்முடி. சிகைதாடு - கொண்டையணியி னொன்று. சிக்கடி - அவரை, சிக்கு. சிக்கடிமுக்கடி - சிக்குமுக்கு. சிக்கணதை - அழுத்தம். சிக்கம் - உச்சி, உறி, குடுமி, சிறைச் சாலை, சீப்பு, பின்னல், மெலிவு, வண்டு, வேலை. சிக்கர் - கள். சிக்கல் - இளைத்தல், ஓரூர், காக்கை, கிடைத்தல், சிக்குதல். சிக்கறுக்கி - சீப்பு. சிக்கனவு - இறுக்கம். சிக்காரம் - அழுகை. சிக்கிலிதம் - ஈரம். சிக்கு - எண்ணெய்ப் பற்று முதலியன, கண்ணி, பிசகு, மயிர்ச்சிக்கு. சிக்குச்சடை - மிகுபிசகு. சிக்குண்ணல் - சிக்குப்படுதல். சிக்குதல் - அகப்படுதல், பின்னுப் படுதல். சிக்குப்பிக்கு, சிக்குமுக்கு - தொந்தறை, பிசகு. சிக்குப்பாடு - தடை, பிசகு. சிக்குரு - முருங்கை. சிக்குவாங்கி, சிக்குவாரி - சீப்பு. சிக்குவை - சிங்ஙுவை. சிக்கெனவு - இறுக்கம். சிங்கத்திசை - தெற்கு. சிங்கத்தோலுடையோன் - வீரபத்திரன். சிங்கநாதம் - ஓர்துளைக்கருவி, சிங்கத்தின் கெற்சிப்பு, வீராவேசத் தாலார்த்தல். சிங்கநோக்கு - ஒருதலையிருபுறமும் பார்த்தல், சூத்திரநிலையெட்டி னொன்று. சிங்கமதாணி - திக்குவிசையம் பண்ணிய வேந்தர்மார்பிலணியுஞ் சிங்கமுகப் பதக்கம். சிங்கமடித்தல் - கிட்டிபுள்ளடித்தல். சிங்கமுகக்காப்பு - ஓர்வகைக்காப்பு. சிங்கமுகப்பல்லக்கு - ஓர்வகைச் சிவிகை. சிங்கமுகி - பொன்னூமத்தை. சிங்கம் - இராசசின்னத்தொன்று, ஓர் மிருகம், ஓரிராசி,ஓர் விளையாட்டு, சரகாண்ட பாஷாணம். சிங்கல் - இளைத்தல், குறைதல். சிங்கவாகினி - துற்கை, பார்வதி. சிங்களம் - ஓர்கூத்து, தேயமன் பத்தாறி னொன்று, அஃது ஈளம், பதினெண் பாடையினொன்று. சிங்களர், சிங்களவர் - ஓர்பாடைக் காரர். சிங்கன்வாழை - ஓர்விதவாழை. சிங்காசனம் - சிங்காதனம். சிங்காடி, சிங்காணி - சுண்டுவில். சிங்காணகம், சிங்காணம் - மூக்குச் சளி. சிங்காதனம் - பத்திராசனம். சிங்காரத்தோட்டம் - நந்தனவனம். சிங்காரம் - அணி, அலங்காரம், திருத்தம், நவரசத்தினொன்று. சிங்காரவனம் - பூந்தோட்டம். சிங்காரி - அலங்காரி, சிங்காரியென் னேவல். சிங்காரித்தல் - அலங்கரித்தல். சிங்காரிப்பு - அலங்கரிப்பு. சிங்கி - ஓர்நோய், ஓர்மீன், கடுக்காய், கற்கடகசிங்கி, துட்டை, நஞ்சு, மிருதாரசிங்கி, வைப்புப்பாஷாண முப்பத்திரண்டி னொன்று. சிங்கிகம் - கறிமுள்ளி. சிங்கிட்டம் - பாலை. சிங்கியடித்தல் - ஓர்விளையாட்டு. சிங்கிரம் - பாலை. சிங்கிலி - ஓர்செடி, குன்றிக்கொடி. சிங்கிவேரம் - சுக்கு. சிங்குதல் - அழிதல், இளைத்தல், தேய்தல். சிங்குவை - சிங்ஙுவை. சிங்கேறு - ஆண்சிங்கம். சிங்ஙுவை - நா. சிங்ஙுவையிந்திரியக்காட்சி - நாப் பொறியறிவு. சிசம் - தமரத்தை. சிசிரம் - சந்தனம், குளிர், பின்பனிக் காலம். சிசு - எட்டுவயதிற்குட்பட்டவன், குழந்தை, மாணாக்கன். சிசுகத்தி - சிசுவதை. சிசுகம் - ஓர்மரம், கடற்பன்றி, குழந்தை. சிசுத்துவம் - பிள்ளைத்தன்மை. சிசுபாலகன் - கிருட்டிணன். சிசுபாலன் - இடையெழுவள்ளலி லொருவன். சிசுபுடம் - இருபதெருப்புடம். சிசுமாரம் - கடற்பன்றி, முதலை. சிசுருட்சை - உண்டுபண்ணல், கரும முடிக்கும்பேட்சை. சிசுவதை - குழந்தையைக்கொல்லல், புரூணகத்தி. சிச்சிலி - பொன்வாய்ப்புள். சிச்சிலிப்பான், சிச்சிலிர்ப்பான் - வசூரிவகையினொன்று. சிச்சிலுப்பான் - ஓர்கருவி. சிச்சீ - இகழ்ச்சிக்குறிப்பு. சிஞ்சதை - திப்பிலி. சிஞ்சம் - சிஞ்சிதம், புளிமா. சிஞ்சாரி - புளியமரம். சிஞ்சிதம் - அசையுமாபரணங்களா லெழுமொலி. சிஞ்சினி - வின்னாண். சிஞ்சினிதம் - நானொலி. சிஞ்சுகம் - கேகயப்புள். சிஞ்சுமாரம் - முதலை. சிஞ்சை - அணிகளானெழுமொலி, நாணொலி, புளியமரம். சிடம் - சாதிக்காய். சிட்சகன் - மாணாக்கன். சிட்சன் - சீஷன். சிட்சாகரன் - உவாத்தி, வியாசன். சிட்சிதாட்சரன் - மாணாக்கன். சிட்சித்தல் - தண்டித்தல், போதித்தல். சிட்சிப்பு - சிட்சித்தல். சிட்சை - கல்வி, சிட்சித்தல். சிட்சைப்படுதல் - அறிவு பயிற்றப் படுதல், ஏவற்செய்தல். சிட்டபரிபாலனம் - சற்சனரைக்காத்தல். சிட்டர், சிஷ்டர் - தெய்வதொண்டர், நல்லோர், பெரியோர். சிட்டாசாரம் - படிந்தவொழுக்கம். சிஷ்டி, சிட்டி - ஒழுங்கு, கட்டளை, சூதுகவற்றுச் செப்பு, படைப்பு. சிட்டிகன் - ஆக்கியோன், கடவுள், பிரமன். சிட்டித்தல் - படைத்தல். சிட்டிப்பு - படைப்பு. சிட்டிலிங்கி - ஓர்மரம். சிட்டு - ஓர்குருவி. சிணாறு - மரக்கிளை. சிணி - நாற்றம். சிணுக்கம் - அழுகை. சிணுக்கு - அழுகை, உழலைமரம், சிக்கு, சிணுக்கென்னேவல். சிணுக்குதல் - பிதுக்கல், பொசியப் பண்ணல். சிணுக்குவாங்கி - மயிர்ச்சிக்குவாங்கி. சிணுங்கல், சிணுங்குதல் - அழுதல். சிண் - கையாள். சிண்டி, சிண்டு - அளவுபடி, குடுமி, தலை மயிர். சிண்டுதல் - சருவுதல், தொடுதல், நெருங்குதல். சிதகம் - இடியேறு, தூக்கணங் குருவி. சிதகன் - சுக்கிரன், தூக்கணங்குருவி. சிதகுஞ்சரம் - ஐராவதம். சிதசத்திரம் - வெண்குடை. சிதசிந்து - கங்கை. சிதடன் - அறிவில்லான், குருடன். சிதடி - அறிவிலி, குருடி, சிள்வண்டு, சல்லி. சிதடு - பேதமை. சிதப்பூரம் - பொன்னாங்காணி. சிதமருசம் - வெண்மிளகு. சிதம் - சந்தனம், சயமுறப்படல், ஞானம், புளியாரை, விட்டுணு கரந்தை, விண்மீன், வெண்மை, வெள்ளி, அசையப்பட்டவை, வறுமை. சிதம்பரம் - ஓர்தலம். சிதம்பல் - பதனழிதல். சிதம்பு - குணமின்மை, சிதம்பென் னேவல், பதனழிவு. சிதம்புதல் - பதனழிதல். சிதரம் - உறி, மழைத்துளி. சிதர் - உறி, சிதரென்னேவல், சீலைத் துணி, தேனீ, பராகம், பூந்தாது, மழைத்துளி, மழைத்தூவல், பூமி. சிதர்ச்சி, சிதர்தல் - சிந்தல். சிதர்த்தல் - சிந்துதல். சிதலம் - பதனழிவு. சிதலை - கறையான், சீலைத்துணி, நோய். சிதல் - ஓர்பூச்சி, கறையான். சிதவல் - குறைவுபட்டது, சிதறுதல், சீரை, செத்தல், தேரிடக்கியம், படுக்கை. சிதளி - பொன்னாங்கண்ணி. சிதள் - கறையான், மீன்செகிள். சிதறடித்தல் - சேதப்படுத்தல், தோற் கடித்தல். சிதறி - மழை, பாடலமரம். சிதறுதல் - சிந்துதல். சிதனம் - கோடகசாலை. சிதன் - அச்சமுள்ளோன், சுக்கிரன். சிதாகாசம் - ஞானாகாசம். சிதாக்கினி - ஈமாக்கினி. சிதாத்துமா - கடவுள். சிதாபாங்கம் - மயில். சிதாபாசம் - மயக்கு. சிதாபாசனம் - முக்குணங்களு ளொன்றில் விவேகமழுந்தி யிருத்தல். சிதாபாசன் - சீவன். சிதாப்பிரம் - வெள்ளைமுகில். சிதாம்புசம், சிதாம்போசம் - வெண்டா மரை. சிதாயம் - சுடலை. சிதாரம் - தேரிடக்கியம். சிதார் - சீரை. சிதானந்தம் - ஞானானந்தம். சிதானன் - கருடன். சிதி - ஈமவிறகு, கறுப்பு, கோடாலி, வெண்மை. சிதிகண்டன் - சிவன். சிதிகை - மாதரிடையணியி னொன்று. சிதிரம் - கோடாலி, தீ, வாள். சிதிலம் - சிதலம், நெகிழ்தல். சிதுமலர் - நீர்விட்டான். சிதுரம் - நேர்வாளம். சிதுரன் - சத்துரு. சிதேகி - கடுக்காய். சிதேசகதிரம் - வெண்கருங்காலி. சிதேதரம் - கருமை. சிதேந்திரியம் - ஞானேந்திரியம். சிதை - ஈமவிறகு, கீழ்மை, சிதை யென்னேவல். சிதைசுற்று - ஆலை, சக்கரம், செக்கு. சித்தாபாசம் - சடம். சிதைதல் - அழிதல், கெடுதல். சிதைத்தல் - அழித்தல், கெடுத்தல். சிதைந்தசொல் - எழுத்துத்திரிந்துங் கெட்டும் வழங்குஞ்சொல். சிதைப்பு - அழிப்பு. சிதையர் - கீழ்மக்கள். சிதைவு - குறைவு, கேடு. சிதோதரன் - குபேரன். சித்தகங்கை - ஆகாயநதி. சித்தகம் - தலைச்சீரா. சித்தகலிதம் - அறியப்பட்டது. சித்தகாசம் - பேரறிவு. சித்தக்கல் - ஈரக்கல், சிலாநாகக்கல். சித்தசமாதானம் - சமுசயமற்றிருத்தல். சித்தசமுசயம் - மனச்சந்தேகம். சித்தசமுன்னதி - சத்தவிசனத் தொன்று, அஃது அகங்காரம். சித்தசலனம் - மனத்தளப்பம். சித்தசன் - மன்மதன். சித்தசாதனம் - வெண்கடுகு. சித்தசாந்தி - மனதையடக்கல். சித்தசுத்தி - மனத்தூய்மை. சித்தசேனன் - முருகன். சித்தஞானம் - கேவலஞானம். சித்தத்தியாகம், சித்தநிவிர்த்தி - துறத்தல். சித்தபதம் - ஒவ்வாமை. சித்தப்பிரசன்னதை - மகிழ்ச்சி. சித்தப்பிரமை - பைத்தியம், மன மயக்கம். சித்தமன் - ஆமணக்கு. சித்தம் - உட்கரணந்நான்கினொன்று உண்மை, உப்பு, உள்ளம், எப் போழ்தும், கீர்த்தி, சிவாகம மிருபத் தெட்டினொன்று, துறவு, நித்திய யோகத்தொன்று, முடிப்பு, முருங்கை. சித்தம்பலம் - சிதம்பரம். சித்தயோகம் - சுபயோகம். சித்தராரூடம் - விஷவாகடத் தொன்று. சித்தர் - சித்திபெற்றவர்கள். சித்தலயம் - மனவொடுக்கம். சித்தல் - சீலை. சித்தவிப்பிரமம் - ஓர்நோய். சித்தவிலாசம் - பிரபஞ்சவிச்சை. சித்தவேதனை - மனக்கலக்கம். சித்தன் - அருகன், காந்தக்கல், சித்தி பெற்றோன், சிவன், வயிரவன். சித்தன் சாபக்கல் - தவளைக்கல். சித்தாகாரம் - அரூபம். சித்தாசங்கம் - பற்று. சித்தாதிகள் - சித்தர். சித்தாந்தசாராவலி - ஓர்நூல். சித்தாந்தம் - ஓர்சைவசமயவிகற்பம், தருக்கமுடிவு. சித்தாந்தன் - சிவன். சித்தாந்தி - சித்தாந்தசமயி, தருக்க முடிவுசாற்றுவோன். சித்தாமோகம் - பேரோசனை. சித்தாராகம் - விருப்பம். சித்தார்த்தம் - கடுகு, தத்துவஞானம், வெண்கடுகு. சித்தார்த்தி - ஓராண்டு. சித்தி - அறிவு, இறைமுதலிய விறுத் தல், ஊறுசெய்தல், எண்ணெய்க் குத்தி, சித்தித்தல், சித்தியென்னே வல், செல்வாக்கு, நித்தியயோகத் தொன்று, நிறைவேற்றம், பெலம், மகிழ்ச்சி, மந்திரோச்சாரணமிதி யடி, மறைவு, மோக்கம், வெட்டல், பொன்னாங்கண்ணி. சித்தித்தல் - கைகூடுதல், சம்பவித்தல். சித்திநெறி - முத்திவழி. சித்தியம் - கோரி, உறி. சித்தியாடிரோகணம், சித்தியாரோகணம் - உடன்கட்டையேறுதல். சித்தியாமலகம் - ஓர்நெல்லி. சித்தியாரூடம் - விஷவாகடங்களி னொன்று. சித்தியார் - சித்தாந்தநூலினொன்று. சித்திரகடம் - காடு. சித்திரகண்டம் - புறவு. சித்திரகம் - ஆமணக்கு, ஓர்பூடு, திலகம், புலி. சித்திரகம்பலம் - வன்னக்கம்பளி. சித்திரகரன் - சித்திரகாரன். சித்திரகவி - நாற்கவியினொன்று, அஃது எழுகூற்றிருக்கை, எழுத்து வருத்தனம், ஏகபாதம், ஒற்றெ ழுத்துத்தீர்ந்தவொரு பொருட் பாட்டு, ஓரெழுத்தினம், கரந்துறை, காதைகரப்பு, கூடசதுக்கம், கோ மூத்திரி, சக்கரம், சருப்பதோ பத்திரம், சித்தரப்பா, சுழிகுளம், தூசங்கொளல், பாதமயக்கு, பாவின்புணர்ப்பு, மாலைமாற்று, வாவனஞாற்று, விசித்திரப்பா, வினாவுத்தரம் இவை முதலிய மிறைக்கவி. சித்திரகாயம் - புலி. சித்திரகாரர் - சித்திரஞ்செய்வோர், சிற்பர். சித்திரகுத்தன் - இயமன் கணக்கன். சித்திரகூடம் - ஓர்மலை, சமஸ்தான மண்டபம். சித்திரகோலம் - நச்சுப்பல்லி. சித்திரக்காலி - ஓர்நெல். சித்திரக்கிளிச்சி - கதண்டு. சித்திரக்குள்ளன் - குறுத்தவன். சித்திரசருப்பம் - பெரும்பாம்பு. சித்திரசாலை - சித்திரமண்டபம். சித்திரசுரூபம் - எழுதப்பட்டரூபம், வெட்டப்பட்டரூபம். சித்திரதண்டகம் - பருத்தி. சித்திரதரம் - மார்க்கசடப்பிரமாணத் தொன்று, அஃது ஒருமாத்திரை யோர் களையாகக்கொண்டது. சித்திரதாரணை - நவதாரணையி னொன்று. சித்திரதாளம் - நவதாளத்தொன்று. சித்திரபானு - ஓர்வருடம் சூரியன், தீ. சித்திரபுச்சகம் - மயில். சித்திரப்படம், சித்திரப்படாம் - எழுத்துச் சீலை. சித்திரப்பா - மிறைக்கவியினொன்று. சித்திரப்பாலாவி - சித்திரைப்பாலாவி சித்திரப்பாவை, சித்திரப்பிரதிமை - சித்திரித்தவோவியம். சித்திரப்பூம்பட்டாடை - சித்திரித்த நல்லாடை. சித்திரமிருகம் - மான். சித்திரமூலம் - கொடிவேலி, அஃது பஞ்சமூலத்தொன்று. சித்திரமெழுகுதல் - வன்னந்தீட்டுதல். சித்திரமெழுதுமண் - செம்மண். சித்திரமேகலை - மயில். சித்திரம் - அதிசயம், ஆகாயம், ஆமணக்கு, ஓர்கவி, சித்திரப் பாவை, சித்திரிக்கப்பட்டது, சிறப்பு, சிற்ப நூன்முப்பத் திரண்டி னொன்று, நூதனம், நொடிக்கதை, பேரழகு, மார்க்க சடப்பிரமாணத் தொன்று, அஃது இரண்டு மாத் திரை யோர்களையாகக் கொண் டது, மெய்போற் பொய் கூறல், அற்பம். சித்திரரதன் - ஓர்கந்தருவன், சூரியன். சித்திரரேகை - ஓரிரேகை, அரசமரம். சித்திரர் - சித்திரகாரர், தச்சர். சித்திரலேகை - சித்திரப்படம். சித்திரவகவல் - சித்திரமுள்ள வாசி ரியம். சித்திரவதை - கண்டதுண்டமாய் வெட்டிக்கொல்லல். சித்திரவண்ணம் - குறியவுநெடியவு மொத்து நேர்ந்தடுக்கி வருவது. சித்திரவாராத்தி - கண்டங்கத்தரி. சித்திரவிதழ் - துத்தி. சித்திரவித்தாரன் - விற்பன்னன். சித்திரவித்தை - நூதனவித்தை. சித்திரவேலை - வன்னவேலை. சித்திரவேளாகொல்லி - கொல்லித் திறத்தினொன்று. சித்திரவோடாவி - சித்திரகாரன். சித்திராங்கதன் - குருகுலவரசரி லொருவன். சித்திராங்கம் - குங்குமம். சித்திராபூபம் - பணிகாரம். சித்திராபூரணை - சித்திரையிற் பௌர்ணமி, அஃது சித்திரகுத்தர் பிறந்தநாள். சித்திரான்னம் - பலவகைச்சாதம். சித்திரி - கெந்தலவணம், சித்திரி யென்னேவல். சித்திரித்தல் - ஓவியந்தீட்டல், கொத்து வேலைசெய்தல். சித்திரினி - சித்தினி. சித்திரை - ஓர்நாள், ஓர்மாதம். சித்திரைக்கதை - சித்திரகுத்தர்கதை. சித்திரைச்சிலம்பன் - சித்திரை மாதத் திற்பாயுங்காவிரியாறு. சித்திரைப் பாலாவி - அம்மாபச்சரிசி. சித்திரைவசந்தன் - சித்திரைத் தென்றல். சித்திரோதனம் - மஞ்சலரிசிச்சோறு. சித்திரோத்தி - அசரீரிவார்த்தை. சித்திலி - சிற்றெறும்பு. சித்திலிகை - எழுத்துச்சீலை, புடைவை. சித்தில் - அறிவு. சித்தினி - நால்வகைப் பெண்ணி னொருத்தி. சித்து - அரூபம், அறிவு, மாயவித்தை, யாகம். சித்துஞானம் - சூக்குமஞானம். சித்துடு - கிலுகிலுப்பை. சித்துப்பொருள் - அறிவுமயமான பொருள். சித்துரூபம் - சூக்குமரூபம், நேர்வாளம். சித்துரூபன் - கடவுள். சித்தை - தோற்றுருத்தி, பாகமாதல். சித்தோன்னதி - அகங்காரம். சிந்தகம்-தூக்கணங்குருவி, புளியமரம். சிந்தடி - முச்சீரடி. சிந்தடிவஞ்சிப்பா - முச்சீரடியான் வந்து தனிச் சொற்பெற்று ஆசிரியச் சுரிதகத்தான் முடிவது. சிந்தம் - புளியமரம். சிந்தனாபோகம் - மனதினாற் பண்ணும்போகம். சிந்தனை - எண்ணம், தியானம், நினைவு, விருப்பம். சிந்தன் - குறளன், சீர்பந்த பாஷாணம், தூக்கணங்குருவி. சிந்தாகுலம் - மனக்கவலை. சிந்தாக்கட்டிகை - ஓரட்டிகை. சிந்தாக்கு - ஓராபரணம். சிந்தாத்திரை - சுகவாழ்வு, நல்லபயனம். சிந்தாமணி - ஓர்நூல், ஓர்மருந்து, தேவமணியினொன்று. சிந்தாமணிமாத்திரை - ஓர்மருந்து. சிந்தித்தல் - நினைத்தல். சிந்திப்பு - நினைப்பு. சிந்தியம் - சிவாகமமிருபத் தெட்டி னொன்று. சிந்தியல்வெண்பா - மூன்றடியாய் நேரிசைவெண்பாப்போலவும் இன்னிசைவெண்பாப்போலவும் வருவது. சிந்து - ஓர்பா, ஓர்யாறு, கடல், குறள், சிந்தென்னேவல், தேயமன் பத்தாறி னொன்று, நீர், பதினெண் பாடையி னொன்று முச்சீரடி, யானை, யானைமதம், வைடூரியம். சிந்துசங்கமம் - ஆறுங்கடலும் பொருந்துமுகம், ஆற்றுப் பொருத்து. சிந்துசம் - உப்பு. சிந்துச்சாரம் - சிந்துலவணம். சிந்துதல் - கெடுதல், சிதறல், செரிதல். சிந்துநதி - ஓர்நதி. சிந்துநந்தனன் - சந்திரன், வீடுமன். சிந்துநாடர் - நெய்தனிலமாக்கள். சிந்துநாதன் - வருணன். சிந்துபுட்பம் - சங்கு. சிந்துரதம் - இந்துப்பு. சிந்துரத்தம் - ஓருப்பு. சிந்துரம் - சிந்தூரம். சிந்துவாரம் - கடல், வில், வெண் ணொச்சி. சிந்தூரம் - சிவப்பு, செங்கிடை, செந்திலகம், திலகம், புடமிட்ட பஸ்மம், புளியமரம், யானை, வெட்சி. சிந்தூரவிதி - சிந்தூரம்வைக்கும் முறை. சிந்தூரவைப்பு - சிந்தூரமாகப் புடமி டல், சிந்தூரவிதி. சிந்தூரிகை - சிந்தூரம். சிந்தூரித்தல் - சிவப்பாக்கல், பஸ்ம மாக்கல். சிந்தை - கருத்து, குறிப்பு, துன்பம், மனம். சிந்தைகூரியன் - புதன். சிபாயம் - சுவறுதல். சிபிட்டகம் - அவல், குழந்தை. சிபித்துவம் - உடைத்தல். சிபிவிட்டம் - சொட்டைத்தலை. சிபுகம் - நாடி. சிப்பாரிசு - அறிமுகப்படுதல், புகழ் மொழி. சிப்பம் - சிறுகட்டு. சிப்பி - இப்பி, கிளிஞ்சில், நச்சுப்பல். சிப்பிநீறு - சிப்பிசுட்டநீறு. சிப்பிமுத்து - சிப்பியில்விளையு முத்து. சிப்பியச்சு - கம்மக்கருவியினொன்று. சிப்பியர் - தையற்காரர், புகழ்ந்துபாடு வோர். சிப்பிரம் - அற்பம். சிப்பிலாட்டி - சில்லறை, தொந்தறை. சிப்பிலாட்டு - தொந்தறை. சிப்பிவேலை - சிப்பியாகாரமான செய்கை. சிமட்டி - பேய்க்கொம்மட்டி. சிமம் - எல்லாம். சிமயம் - மலையுச்சி, பொதியமலை. சிமாளம் - களிப்பு. சிமாளித்தல் - சந்தோஷித்தல். சிமி - குடுமி. சிமிகம் - கிளி. சிமிக்கி - ஓர்பணி. சிமிக்கிப்பது - ஓர்பணி. சிமிடன் - சுமடன். சிமிட்டி - பேய்த்திமிட்டி. சிமிட்டு - சிமிட்டென்னேவல், மருட்டு. சிமிட்டுதல் - அணாப்புதல், கண் சிமிட்டுதல். சிமிண்டி - நிமிண்டி. சிமிண்டுதல் - தோன்றாமலெடுத்தல், நுள்ளுதல். சிமிலம் - மலை. சிமிலி - உறி, குடுமி, சிள்வண்டு, தோணி, பூளை. சிமிழ் - சிமிழென்னேவல், செப்பு. சிமிழ்த்தல் - கட்டல். சிமிழ்ப்பு - கட்டு. சிமிள்த்தல் - சிமிட்டுதல். சிமுக்கிடுதல் - அசைதல், சிற்றொலிக் குறிப்பு. சிமுட்டி - கீழ்காய்நெல்லி. சிமை - குடுமி. சிம்பத்தை - சிறுபுள்ளடி. சிம்பர் - துப்பாக்கியிலிடுந்தக்கை. சிம்பல் - ஒலித்தல், சிம்பு, பாய்தல். சிம்பு - சிராய், தும்பு. சிம்புதல் -உச்சுதல், ஒலித்தல், கரவாய்க் கவருதல். சிம்புரி - சும்மாடு. சிம்புளானோன் - வீரபத்திரன். சிம்புளி - கம்பளி, செவ்வாடை. சிம்புள் - எண்காற்புள். சிம்பை - அவரை. சிம்மதம் - பாம்பு. சிம்மம் - சிங்கம். சிம்மாசனம் - சிங்காசனம். சிம்மு - எல்லை. சியச்சினி - உத்தாமணி. சியநாகம் - துத்தபாஷாணம். சியிருதம் - கடுக்காய். சிரகபாலம் - தலையோடு. சிரகம் - கரகம், தலைச்சீரா, திவலை, மழைத்துளி. சிரகம்பம், சிரகம்பிதம், சிரக்கம்பம் - தலையசைப்பு. சிரகரகருமம் - பரதவுறுப்புளொன்று, அஃது அபிநயம். சிரக்கோழி - குழலாதொண்டை, வசம்பு. சிரங்கம் - தலை, பிரதானம். சிரங்கு - ஓர்குருநோய். சிரசம் - மயிர். சிரசன் - சீர்பந்தபாஷாணம். சிரசாவகித்தல் - தலைமேல்வைத்தல். சிரசீவி - காகம், திருமால், நெடுங் காலம்வாழ்வோன். சிரசு - தலை, முதல். சிரசுதையம் - பிறவிநோக்கம். சிரசேவகன் - பழயவேலைகாரன். சிரச்சேதம் - தலையவதாரம். சிரச்சௌளம் - தலைச்சௌளம். சிரஞ்சீவி - காகம், நெடுங்காலஞ் சீவிப்போன். சிரஞ்சீவியர் - நெடுங்காலஞ்சீவிப் போர். சிரட்டை - தேங்காயோடு. சிரணி - ஓமச்செடி. சிரத்தக்காழகம் - மருக்காரை. சிரத்தம் - அசையப்பட்டவை. சிரஸ்தம் - நெடுநாள். சிரஸ்தர் - சிரேஷ்டர். சிரத்தல் - அழித்தல், எழுத்திலா வோசை, ஒலித்தல். சிரஸதாதார் - பிரதானி. சிரத்தினம் - பழயது. சிரத்துதல் - ஒலித்தல், பேசலாலெழு மொலி. சிரத்தை - அன்பு, முதன்மை, விசுவாசம், ஆங்காரம், குருவி னிடத்திலுஞ் சாத்திரங்களினிடத் திலுமனதை நிறுத்தல். சிரத்தைக்காழகம் - மருக்காரை. சிரநதி - கங்கை. சிரபங்கம் - சிரச்சேதம். சிரமம் - இரைச்சல், இளைப்பு, சிலம்பம். சிரமருகி - உடற்குறை. சிரமாலை - கபாலமாலை, சிர சிற்றரிக்கு முருத்திராக்கமாலை. சிரமித்திரன் - பழயசினேகிதன். சிரமிலி - நண்டு. சிரமை - இளைப்பு. சிரம் - உயர்ச்சி, தலை, திப்பிலமூலம், நெடுங்காலம். சிரம்பம் - சாலாங்கபாஷாணம், சிலம்பம். சிரல் - சிச்சிலிக்குருவி, முடிவிடம். சிரவணம் - உபநிடதம் முப்பத்தி ரண்டினொன்று, காது, கேள்வி, திருவோணம். சிரவம், சிரவை - கவுதாரி, காது, பெருகல். சிரற்புள் - பொன்வாய்ப்புள். சிராங்கம் - தலை. சிராத்தம் - இறந்தோர்க்குச் செய்யு மோர்கிரியை, அஃது யாகமிருபத் தொன்றினொன்று. சிராயம், சிராயனம் - அனுசரித்தல். சிராய் - சிறாம்பு. சிராய்ப்பாக்கு - ஓர்பருவப்பாக்கு. சிராய்ப்பீனசம் - ஓர்நோய். சிராவணம் - ஆவணிமாதம், கல். சிராவணி - யாகமிருபத்தொன்றி னொன்று. சிராவிருத்தம் - ஈயம். சிரி - அம்பு, கொலைசெய்வோன், சிரியென்னேவல், வாள், வெட்டுக் கிளி. சிரிட்டம் - வெள்ளிலோத்திரம். சிரித்துப்பேசல் - நயச்சொல், பரிகாசச் சொல், மலர்ந்த முகமாய்ப் பேசல். சிரிப்பாணி - சிரிக்கத்தக்கவன், சிரிப்புக் கிடம். சிரிப்பு - நகை. சிரீடம் - வாகைமரம், குன்றி. சிரு - தோட்பொருத்து, போதல். சிருகம் - அம்பு, காற்று, தாமரை. சிருகாலன் - கடுஞ்சொற்காரன், நரி, வீரமில்லான். சிருக்கு - சுருக்கு. சிருங்கம் - அடையாளம், கூர், மலை முடி, விலங்கின் கொம்பு. சிருங்கலம் - சங்கிலி, யானைச்சங்கிலி, விலங்கு. சிருங்கலை - ஓர்செடி, கால்விலங்கு. சிருங்கவேரம் - இஞ்சி. சிருங்காடகம், சிருங்காடம் - நாற்றெருக் கூடுமிடம். சிருங்காரம்-அன்பு, கராம்பு, சிங்காரம், சிந்தூரத்திலகம், புணர்ச்சி. சிருங்காரித்தல் - சிங்காரித்தல். சிருங்கி - பொன். சிருட்டம் - சிற்பநூன் முப்பத்திரண்டி னொன்று. சிருட்டி -சிட்டியென்னேவல், சுபாவம், படைப்பு. சிருட்டிகத்தா, சிருட்டிகர் - கடவுள், பிரமா. சிருட்டிகாலம் - உலகத்தைத்தோற்று விக்குங்காலம். சிருட்டித்தல் - பிறப்பித்தல். சிருட்டிப்பு - படைப்பு. சிருட்டியாளன் - சவுக்காரம். சிருணி - சத்துரு, யானைத்தோட்டி. சிருணிகை - உமிழ்நீர். சிருதம் - நன்மை. சிருதரம் - பாம்பு. சிருதி - காது, தெரு. சிருபாடிகை - பறவைமூக்கு. சிரும்பணம் - கொட்டாவிவிடுதல். சிரும்பிகை - கொட்டாவி. சிரேசு - செல்வம். சிரேஷ்டபுத்திரன் - முதற்புத்திரன். சிரேடம் - கூடுதல். சிரேட்டம், சிரேஷடம் - செழிப்பு, முதன்மை, மேன்மை. சிரேட்டர் - உயர்ந்தோர், முன்பிறந் தோர். சிரேட்டாதேவி - மூதேவி. சிரேணம் - நெடுநாள். சிரேணி - இடையர்வீதி, ஒழுங்கு, படி. சிரேயசு - கீர்த்தி. சிரேவணம் - காட்டாமணக்கு. சிரை - குரங்கு, சிரையென்னேவல், நரம்பு. சிரைத்தல் - மயிர்கழித்தல், புடை வையொதுக்கல். சிரைப்பித்தல் - சௌளம்பண்ணு வித்தல். சிரைப்பு - சௌளம். சிரையன் - நாவிதன். சிரோசம் - மயிர். சிரோட்டம் - திறிகடுகு. சிரோதரம் - கழுத்து. சிரோத்தி - தலையோடு. சிரோத்திரம் - காது, கேள்வி. சிரோந்தம் - மயிர்ச்செறிவு. சிரோபத்தியம் - கடுக்காய். சிரோமணி, சிரோரத்தினம் - முடியி லணியும்மணி. சிரோருகம் - தலைமயிர். சிரோவல்லி - மயிர்சூடு. சிரோவிருத்தம் - மிளகு. சிரோவேட்டம் - தலைச்சீரா. சிரோவேட்டனம் - தலைச்சீரா. சில - கொஞ்சம். சிலகம் - சட்டுவம். சிலக்குணம் - திமிங்கிலம். சிலங்கம் - வெள்ளிலோத்திரம். சிலதர் - ஏவல்செய்வோர், தோழர். சிலதி - ஏவல்செய்வாள், தோழி. சிலதியர் - ஏவல்செய்தோழியர், தோழியர். சிலத்திற்கடுகு - திமிங்கலம். சிலத்தின்பிரிதிவி - கற்பூரசிலாசத்து. சிலந்தி - ஓர்பூச்சி, ஓர்பூமரம், பரு. சிலந்திநாயகம் - ஓர்பூடு. சிலப்பதிகாரம் - ஓர்நூல். சிலமக்காரன் - அதட்டி, சிலம்பக் காரன். சிலமங்காட்டுதல் - அசுமாற்றங் காண் பித்தல், சிலமித்தல், பய முறுத்தி வெருட்டல். சிலமப்படுதல் - அசுமாற்றப்படுதல். சிலமம் - அசுமாற்றம், சிலம்பம். சிலமன் - அசுமாற்றம். சிலமி - சிலம்பக்காரன், பகடக்காரன். சிலமித்தல் - அதட்டுதல், சிலம்பம் பண்ணுதல். சிலமீலிகை - மின்மினி, மின்னல். சிலம் - இந்துப்பு. சிலம்பக்காரன் - சிலம்பப்பயிற்சி யுள்ளோன், பகடக்காரன். சிலம்பக்கூடம் - சிலம்பம்பழகுமிடம். சிலம்பம் - படைக்கலப்பயிற்சி. சிலம்பல் - ஒலி. சிலம்பன் - குமரன், குறிஞ்சிநிலத் தலைவன். சிலம்பி - சிலந்திப்பூச்சி. சிலம்பிநூல் - சிலந்திப்பூச்சிநூல். சிலம்பு - ஒலி, காற்சிலம்பு, சிலம்பென் னேவல், மலை. சிலம்புகூறல் - ஓர்பிரபந்தம். சிலம்புதல் - ஒலித்தல். சிலர் - சிலபெயர். சிலவங்கம் - மீனெலும்பு. சிலவர் - வேடர். சிலாகை-சலாகை,தேகக்கல், தொட்டி பாஷாணம். சிலாக்கியம் - சலாக்கியம். சிலாசத்து - கற்பூரச்சிலை. சிலாசாதனம் - கற்பொளி கருவியி னொன்று. சிலாசாரம் - இரும்பு. சிலாஞ்சனம் - நீலாஞ்சனம். சிலாடகம் - மேல்வீடு. சிலாதரன் - நந்திதேவன்பிதா. சிலாதலம் - கற்படி, பாறை. சிலாதிக்குமரி - கௌரிபாஷாணம். சிலாத்துமசம் - இரும்பு. சிலாநஞ்சு - கன்மதம். சிலாநாகம் - சூடாலைக்கல். சிலாந்தி - சீந்தில். சிலாபம் - முத்துக்குளிப்பு. சிலாபேசி - செப்புநெருஞ்சில். சிலாப்பி - வேலைக்கள்ளன். சிலாப்புதல் - வீண்பொழுதுபோக்கல். சிலாமணி - கற்பூரச்சிலை. சிலாமதம் - கன்மதம். சிலாமனா - மனோசிலை. சிலாமேனி - கண்டகிச்சிலை. சிலாம்பு - செகிள். சிலாயுதன் - ஆமை. சிலாரு - குழப்பம். சிலாவங்கம் - ஈயக்கல். சிலாவட்டம் - அரைகல், சாணைக்கல். சிலாவருடம் - கன்மழை, சத்தமுகிலி னொன்று, அஃது கன்மழை பொழிவது. சிலாவி, சிலாவிந்து - கன்னார். சிலாவுதல் - சுலாவுதல். சிலாவுறட்டி - ஓர்பணிகாரம். சிலாவைரம் - சிலாசத்து. சிலிட்டம் - ஓரலங்காரம், அஃது சொற்செறிவுடையது, (உம்) பற்றுக பற்றற்றான் பற்றினையப் பற்றை பற்று கபற்றுவிடற்கு. சிலியானை - முடக்குற்றான். சிலிர்த்தல் - தளிர்த்தல், மயிர்க்கூச்சுக் கொள்ளல். சிலிர்ப்பு - உரோமப்பொடிப்பு. சிலீபதம் - யானைக்கால். சிலீமுகம் - அம்பு, தேனீ, முலைக் கண், மூடன், யுத்தம், வண்டு. சிலீரிடுதல் - ஒலிக்குறிப்பு, குளிர்தல், பயப்படுதல். சிலுகன் - கலகக்காரன். சிலுகி - கலகக்காரி. சிலுகு - சண்டை, சிலுகென்னேவல், தப்பிதம், துன்பம். சிலுகுதல் - சண்டைபிடித்தல், துன்பப் படுதல். சிலுக்கு - இரும்புமோதிரம், சண்டை, பலது, வாட்பல். சிலுசிலுத்தல் - அலட்டுதல், ஒலிக் குறிப்பு, குளிர்விறைத்தல். சிலுசிலுப்பான் - ஓர்வசூரி. சிலுசிலுப்பு - அலட்டு, ஒலிக்குறிப்பு, குளிர்க்குறிப்பு. சிலுசிலெனல் - ஒலிக்குறிப்பு, குளிர்தல். சிலுத்தல் - அறக்கரைதல், கோபித்தல், விள்ளுதல். சிலுநீர் - இலையிற்றங்கி விழும் மழைத்துளி. சிலுப்பு - அசைப்பு, சிலுப்பென்னேவல். சிலுப்புதல் - அசைத்தல். சிலும்பலாடுதல் - சிலும்பலாதல். சிலும்பலி - அவலட்சணமுள்ளவள். சிலும்பல், சிலும்புதல் - அசைதல், ஒலித்தல், சிராய்முதலிய சிலும்பு தல். சிலுவலி - சிலும்பலி. சிலுவல் - அலுசிலும்பல், மரியாதை யற்றது. சிலுவை - கொல்லப்படுபவர்களை யறையு மோர்மரம். சிலேடாதீபகம் - ஓரலங்காரம், அஃது சிலேடையிடத்து தீபகமாய் நின்று பயன்றருவது. சிலேடித்தல் - உபயார்த்தம்படச் சொல்லல். சிலேடை - ஓரலங்காரம், அஃது உபயார்த்தமுள்ளது. சிலேடையின் முடித்தல் விலக்கு - ஓரலங்காரம், அஃது முன்னர் வைத்த பொருளையும் பின்னர் வைத்தபொருளையுமொரு சொற்றொடராற் சிலேடித்துக் கூறியோர்காரியத்தை விலக்கல், (உம்) கொடியோர்க்கு முண்டோ குணம். சிலேடையுருவகம் - உவமையையும் பொருளையுமொரு சொற் றொடையாற் சிலேடித்துரு வகஞ் செய்வது, (உம்) கண்ணெ கிழந்து காதல் கரையிறப்பவை குமரல் வண்ணமதனாம்புயம். சிலேடையுவமை - சிலேடையு முவமையுமொருங்குவருதல். சிலேடைவிலக்கு - ஓரலங்காரம், அஃது இருபொருளை ஒன்று போற்சிலேடித்துக் கூறிக் காரியத் திற்கின்னது வேண்டாவென வொன்றை விலக்கல். சிலேட்டர், சிலேட்டியர் - செட்டிகள். சிலேட்டுமகரசம் - ஓர்நோய். சிலேட்டுமகிரந்தி - கிரந்திநோயி னொன்று. சிலேட்டுமகுன்மம் - ஓர்நோய் சிலேட்டுமசூலை - ஓர் சூலை சிலேட்டுமபித்தசூலை - ஒர் நோய். சிலேட்டுமம் - சிலேற்பனம். சிலேபியர் - செட்டிகள். சிலேற்பனநாடி - சேடநாடி. சிலேற்பனம் - கோழை. சிலை - ஒலி, ஓர்மரம், கல், சிலை யேன்னேவல், சூதபாஷாணம், தனுவிராசி, மலை, மனோசிலை, மூலநாள், விக்கிரகம், வில். சிலைக்கல் - ஈரக்கல், சிலாநாகக்கல். சிலைக்காறி - அஞ்சனபாஷாணம். சிலைக்கெந்தி - சாத்திரவேதி. சிலைச்சாதனம் - சிலாசாதனம். சிலைச்சோணிதம் - கன்மதம். சிலைத்தல் - ஒலித்தல். சிலைத்தாசி - சாளக்கிராமம். சிலைத்தாது - சிலாமதபாஷாணம். சிலைத்தீட்டு, சிலைத்தூமம் - கன்மதம். சிலைநஞ்சு - சிலையிரத்தம். சிலைநார் - கல்நார். சிலைநிறக்கல் - மாமிசச்சிலை. சிலைமா - மாக்கல்லு. சிலையாவி - சிலைவிந்து. சிலையிரத்தம் - கன்மதம். சிலையிராசன் - வயிரம். சிலையுருக்குக்கல் - செங்கல். சிலையொழுக்கு - கன்மதம். சிலைவங்கம் - அஞ்சனபாஷாணம். சிலைவயிரம் - வயிரக்கல். சிலைவிந்து - கல்நார். சிலோச்சயம் - மலை. சில் - அற்பம், ஆரவாரம், ஒலிக் குறிப்பு, தேர், பண்டி முதலிய வற்றினுருள், மூக்குக்கண்ணாடி, வட்டம். சில்லங்கெடுதல் - சிதறுண்ணல். சில்லந்தட்டல் - வெறுத்தல். சில்லந்தட்டிப்போதல் - தரித்திரத்துக் குட்படல். சில்லபொல்லம் - சிதறுதல், பல துண்டாயுடைந்தது. சில்லம் - அவதி, துண்டு, தேற்றாமரம். சில்லம்பாய் - சீலம்பாய். சில்லரி - சிலம்பின் பருக்கைக்கல். சில்லர் - வேடர். சில்லறை - அற்பகாரியம், உபத்திரம், சிதறினதொகை, சொச்சம். சில்லா - ஒருநியாயாதிபதிக்குள்ள டங்கியவிடம். சில்லாட்டு - சில்லறை, சிறுகாரியம். சில்லாட்டை - பன்னாடை. சில்லி - கண்ணறை, சிள்வண்டு, சிறு கீரை, சௌவு, தேருருள், வட்டம். சில்லிகை - சிள்வண்டு, சீலை, சூரிய கிராணம், நல்லாடை. சில்லிடுதல் - ஒலிக்குறிப்பு, பயப்படல், விம்முதல். சில்லிரத்தம் - விம்மிப்பொசியுமிரத்தம். சில்லிவாயன் - வெளிவாயன். சில்லு - ஓடு, சில். சில்லை - கிலுகிலுப்பை, சிவல், சிள்வண்டு, தூர்த்தை. சில்வண்டு - ஓர்வண்டு. சில்வாய் - கடைவாய். சில்வானம் - சொச்சம். சில்விடம், சில்விஷம் - சில்விஷ செந்து, சிறுவிஷம். சிவகணம் - சிவசேவைப்பரிவாரர். சிவகதி - அருகன், புத்தன், மோட்சம். சிவகதியிறைவன் - அருகன். சிவகம் - சாதிக்காய், நாய்ச்சீரகம். சிவகரந்தை - ஒர்பூடு. சிவகளை - தெய்வசோபை. சிவகன்மசன் - செவ்வாய். சிவகாமி - பார்வதி. சிவகீர்த்தனன் - திருமால். சிவசங்கற்பம் - உபநிடதம் முப்பத்தி ரண்டினொன்று. சிவசக்தி - உமை, சிற்சத்தி முதலிய பஞ்சசத்தி, துருசு. சிவசமயம் - சைவமதம். சிவசாத்திரம் - பதிநூல். சிவசேகரம் - சந்திரன். சிவசேத்திரம் - சிவதலம். சிவச்சி - சாதிக்காய். சிவஞானசித்தியார் - ஓர்நூல். சிவஞானபோதம் - ஓர்சைவாகம சாதத்திரம். சிவஞானம் - பதிஞானம். சிவண - உவமைச்சொல். சிவணல், சிவணுதல் - கலத்தல், கிட்டல், பொருதல், பொருந்தல். சிவதத்ததுவம் - தொண்ணூற்றாறு தத்துவத்திற்கடவுட் பகுதியான வைந்துதத்துவம். சிவதம் - இருக்குவேதம். சிவதரிசி - தாமேபரமெனத்தெளிந் தவன். சிவதலம் - சிவசேத்திரம். சிவதன்மம் - அட்டாதசவு புராணத் தொன்று, தெய்வ புண்ணியம். சிவதன்மோத்தரம் - சைவசாத்திரத் தொன்று. சிவதாது - ஓர்கல், இரதம். சிவதாரம் - தேவதாரம். சிவதுளசி - ஓர்பூடு. சிவதூதி - துற்கை. சிவதை - ஓர்கொடி. சிவதொண்டர் - சிவனடியார். சிவதொண்டு - சிவபணிவிடை. சிவத்ததாசி - செம்பரத்தை, பருத்தி. சிவத்தம் - செம்முருங்கை. சிவத்தல் - கோபம், சிவக்குதல், சினக் குறிப்பு. சிவத்தாபனம் - சிவலிங்கபிரதிட்டை. சிவத்தானம் - சிவதலம். சிவத்துரோகம் - சிவபுண்ணியத்துக் கிடையூறுசெய்தல். சிவநிசி - சிவராத்திரி. சிவந்தலோகமண் - செம்புமணல். சிவந்தி - பாலை. சிவபத்தி - சிவநேசம், சைவசமய வொழுக்கம். சிவபாவம் - சிவனிடத்துள்ளகுணம். சிவபுராணம் - சிவனதுமகிமையைக் கூறும் புராணம், அஃது இலிங்கம், காந்தம், கூர்மம், சைவம், பிர மாண்டம், பௌடிகம், மச்சியம், மார்க்கண்டேயம், வராகம், வாமனம். சிவபுரி - ஓர்தலம். சிவபூசை - சிவாற்சனை. சிவபோகம் - ஆனந்தம். சிவப்பம்மான்பச்சரிசி - ஓர்பூடு. சிவப்பவரை - ஓர்கொடி. சிவப்பானவெள்ளைச்சி - புற்றாம் பழம். சிவப்பிரகாசம் - ஓர்நூல். சிவப்பிரியை - பார்வதி. சிவப்பிரீதி - சிவாராதனை. சிவப்பு - சினக்குறிப்பு, செம்மை நிறம். சிவப்புக்கந்தி - கோழித்தலைக் கந்தகம். சிவப்புக்கொடிப்பசளை - ஓர்பூடு. சிவப்புமந்தாரை - ஓர்மரம். சிவமது - சிவகிருபை, சிறுபுள்ளடி. சிவமயம் - சிவத்தின்றன்மை. சிவமரம் - ஓர்மரம். சிவம் - ஓர்குளிகை, ஓர்செய்கை யுப்பு, ஓர்வாசனை, கடலுப்பு, கடவுள், குறுணி, சந்தோஷம், சிவதத்துவமைந்தினொன்று, அஃது ஞானமொன்றல், சிவலிங் கம், தண்ணீர், நன்முகிர்த்தம், நன்மை, நித்திய யோகத்தொன்று, பசுவணைதறி, முத்தி, முற்றத் துறத்தல், யோனி, வேதம், ஆண் குறி, உப்பு, பாதரசம், வெண் காரம். சிவரசம் - மூன்றுநாளூறியகஞ்சி. சிவராத்திரி - ஓர்தினம். சிவலிங்கப்பெருமாள் - சிவலிங்கத்திற் கோயில்கொண்டசுவாமி. சிவலிங்கம் - சிவபூசைத்திருவுரு. சிவலை - சிவப்புநிறமுள்ளது, செந் நிறமுள்ளோன். சிவலோகச்சேவகன் - காந்தம். சிவலோகம் - மோக்கம். சிவல் - கவுதாரி, பகன்றை. சிவவல்லபன் - சிவபத்தன். சிவவல்லபை - பார்வதி. சிவவிந்து, சிவவீசம் - இரதம். சிவவேடம் - சைவவேடம். சிவனார்பாகல், சிவனார்வேம்பு, சிவன் வேம்பு - ஓர் செடி. சிவனி - கழுதை. சிவனுள்மலை - அயச்சிலை. சிவனோங்கிவன்னி - காந்தம். சிவன் - கடவுள், சங்கரன், வைடூரியம். சிவன்றேகம் - காசிமீர்ப்படிகம். சிவா - நெல்லி, வெறுமை. சிவாகமம் - பதிநூல். சிவாட்சம் - உருத்திராக்கம். சிவாதரம் - மரக்பொம்பு. சிவாராதி - நாய். சிவாருகம் - ஆலமரம். சிவார்ச்சனை - சிவாற்சனை. சிவாலயம் - சிவன்கோயில், மசானம். சிவாலையம் - சிவாலயம். சிவாற்சனை - சிவபூசை. சிவானுபவம் - சிவபோகம். சிவிகரம் - சாதிக்காய். சிவிகை - தண்டிகை, பாண்டில் பூண்டவூர்தி. சிவிங்கி - ஓர்பட்சி, ஓர்மிருகம், ஓர்மீன். சிவிடு - சிறிசு, முந்நூற்றறுபது நெல்லுக்கொண்டது. சிவியார் - ஓர்சாதியார். சிவிரதம் - சிவிகை. சிவிரம் - அரசிருக்கை, படை. சிவிறி - நீர்வீசுந்துருத்தி, பெருந் துருத்தி. சிவேதை - சீந்திற்கொடி, தெற்கு, பகன்றை. சிவேரெனல் - சிவப்புநிறக்குறிப்பு. சிவை - ஆணரி, உலை, உலைத் துருத்தி, ஓரளவு, துற்கை, பார்வதி, புத்தன்றாய், மூக்கு, வேர், நரி. சிவைகத்துவம் - சிவனுஞ்சீவனு மொன்றாயிருப்பது. சிவைக்கியம் - சிவனுஞ்சீவனுமைக் கமாயிருத்தல். சிறப்பிலசீர் - வகையுளியுள்ள சீர். சிறப்புடைச்சீர் - வகையுளியில்லாச் சீர். சிறப்புப்பேர் - ஒன்றற்கேயுரித்தாய் வரும் பெயர். சிவ்வல் - கடற்பாசி. சிளுசிளுத்தல், சிளுசிளுப்பு, சிளுசி ளெனல் - ஒலிக்குறிப்பு, பதனழிவு. சிளுபிளுத்தல் - ஒலிக்குறிப்பு, நொது நொதுத்தல். சிள்வண்டு, சிள்வீடு, சிள்ளீடு - சில் வண்டு. சிள்ளுப்பிள்ளு - கம்பலை. சிறகடி - சிறகடித்தல். சிறகர் - இறகு. சிறகாற்றல் - சிறகடித்தல். சிறகாற்றுதல் - சிறகுவிரித்துலர்த்தல், புள்ளெழச்சிறகுவிரித்தல். சிறகி - ஓர்மீன். சிறகு - இறகு, பக்கம். சிறகுகதவு - இருபுறத்து நிலையினு மிடுங்கதவு. சிறகுகுடில் - சிறகோலை யால்வேய்ந்த சிற்றில். சிறகுகோதுதல், சிறகுதெரித்தல், சிற குலர்த்தல், சிறகுளர்தல் - சிறகையல கால்வகிர்தல், சிறகையுணர்த் தல். சிறகை - ஓர்புள். சிறகொதுக்குதல் - சிறகைச் சுருக்குதல். சிறக்கணித்தல் - குறைத்தல், சிறுமை யாகவெண்ணுதல், சுருக்குதல். சிறக்கணிப்பு, சிறங்கணிப்பு - குறை. சிறங்கித்தல் - கணிசக்குறைவு பண்ணல், கைநிறையவள்ளுதல். சிறங்கை - கைநிறைந்தவளவு. சிறத்தல் - அருமை, சிறப்பாதல், சிறப்பு, திறப்படல், மிகுதல், மேன்மைப்படல். சிறந்தோர் - அழகுள்ளோர், உறவோர், பெருமையிற் சிறந்தோர். சிறப்பகத்திணை - அகத்திணை வகையினொன்று. சிறப்பித்தல் - அலங்கரித்தல், கனப் படுத்தல், புகழ்தல். சிறப்பில்லாதாள், சிறப்பில்லாள் - மூதேவி. சிறப்பு - அழகு, உயர்ச்சி, ஒன்றற்கே யுரியது, மிகுதி, வரிசை, விசேடம், வேடிக்கை. சிறப்புச்சூத்திரம் - ஒன்றிற்குரித்தாய்ச் சொல்லுஞ்சூத்திரம். சிறப்புப்பாயிரம் - நூற்பெயருங் காரணமும் ஆக்கியோன் பெயரும் அளவும் பயனுமுரைப்பது. சிறப்பும்மை - உயர்புப் பொருடரு மும்மை, (உம்) அரசனும் பொய் சொன்னான். சிறப்புருவகம் - உருவகவலங்காரத் தொன்று, அஃது ஒரு பொருளை யெடுத்ததற்குச் சிறந்த வடைகளை யுரூபித்த வற்றானுருவகமாக்கி யுரைப்பது. சிறப்பெழுத்து - அவ்வப்பாஷைக்கு மாத்திரமுரியதாய் வழங்கு மெழுத்து. சிறப்போகாரம் - சிறப்புப்பொருடரு மோகாரம், (உம்) ஓபெரியன். சிறப்புவிதி - ஒன்றற்குரியமுறை. சிறப்பை - மரமணி. சிறாம்பி - அட்டாலை. சிறாம்பு - சிராய், சிறாம் பென்னேவல். சிறாம்புதல் - தழும்புபடுத்தல். சிறாய்த்தல் - சீய்த்தல். சிறாய்த்துக்குச்சி - ஓர்பூடு. சிறார் - சிறுவர். சிறிசு, சிறிது - கொஞ்சம், சிறியது. சிறியசிந்தையர் - கீழ்மக்கள். சிறியதகப்பன், சிறியபிதா - தந்தை பின்னோன். சிறியதாய், சிறியமாதா - தாயின்றங்கை. சிறியத்தினி - உத்தாமணி. சிறியர் - அற்பர், கீழ்மக்கள், குறள் வடிவோர். சிறியாணங்கை - ஓர்செடி. சிறியோர் - கீழ்மக்கள், குள்ளர். சிறிவில் - அகிலமரம். சிறீ - ஓரிராகம், திரு, தெய்வத் தன்மை, பெண். சிறீகண்டம் - சிவன். சிறீகரம் - இலட்சுமீகரம். சிறீகாந்தன் - விட்டுணு. சிறீசைந்தி - விட்டுணுவின் திருநாளி லொன்று. சிறீதரன் - சீதரன். சிறீநிவாசன் - திருமால். சிறீபதி - விட்டுணு. சிறீமது - இலட்சுமீகரமான, தெய் வீகமான. சிறீமான் - செல்வவான், திருமால். சிறீமுக - சீமுக. சிறீராகம் - ஓரிராகம். சிறீலிங்கம் - பெண்குறி, பெண்பால். சிறீவச்சம் - திருமால்மார்பின்மறு. சிறீவதி - பாக்கியவதி. சிறுக - அற்பமாய். சிறுகடலாடி - நாய்குருவி. சிறுகடுகு - ஓர்கடுகு. சிறுகண்ணாகம் - ஓர்நாகம். சிறுகம்மான்பச்சரிசி - சிற்றிலைப் பாலாவி. சிறுகல் - சிறுகுதல். சிறுகல்லூரி - ஓர்மருந்து. சிறுகளா - ஓர்மரம். சிறுகாஞ்சொறி, சிறுகாஞ்சோன்றி - ஓர்கொடி. சிறுகாடு - தூற்றுக்காடு. சிறுகாப்பியம் - பெருங்காப்பியம் போன்றிருந்துஞ் சில குறை பாடுள்ள பொருட்டொடர் நிலைச்செய்யுள். சிறுகாய் - சாதிக்காய். சிறுகாரிடம் - சாதிக்காய். சிறுகாலை - பிராதக்காலம். சிறுகால் - காவட்டம்புல், தென்றல். சிறுகாற்று - மிருதுவாகவீசுங்காற்று. சிறுகானாவாழை - ஓர்பூடு. சிறுகிடைச்சி - ஓர்கிடைச்சி. சிறுகிண்ணம் - சிறுவட்டில். சிறுகிராமம் - குடிநூறுகொண்ட குறிச்சி. சிறுகிழங்கு - ஓர்கிழங்கு. சிறுகீரை - அறைக்கீரை, ஓர்கீரை. சிறுகு - இடைஞ்சல், சிறுகென் னேவல். சிறுகுடி - குறிஞ்சிநிலத்தூர், சிற்றில். சிறுகுடில் - சிற்றில். சிறுகுதல் - குறைதல். சிறுகுரங்கு - ஓர்குரங்கு. சிறுகுரு - உவர்மண். சிறுகுரும்பை - ஓர்நெல். சிறுகுழி - சிறுகோனீளமகலங் கொண்டது. சிறுகுறடு - ஓர்குறடு. சிறுகுறட்டை - ஓர்பூடு. சிறுகுறிஞ்சா - ஓர்குறிஞ்சா. சிறுகொடி - ஓர்கிழங்குக்கொடி. சிறுகொட்டைக்கரந்தை - அட்டாதச மூலத்தொன்று. சிறுகொம்மட்டி - ஓர்கொம்மட்டி. சிறுகொன்றை - ஓர்கொன்றை. சிறுகோல் - நாலுமுழங்கொண்ட கோல். சிறுக்கன் - வாலிபன். சிறுக்கி - வாலிபஸ்திரி. சிறுக்குதல் - கோபித்தல், சிறிதாக்கல். சிறுசண்பகம் - ஓர்மரம். சிறுசின்னம் - ஓர்குழல். சிறுசின்னி - ஓர்செடி. சிறுசெய், சிறுச்செய் - பாத்தி. சிறுசெருப்படி - ஓர்பூடு. சிறுசொல் - பழிச்சொல். சிறுசோறு - பிள்ளைகள் விளை யாட்டுக்குச் சமைக்குஞ் சோறு. சிறுதக்காளி - மணித்தக்காளி. சிறுதாரை - நீர்வீசுந்துருத்தி. சிறுதாளி - ஓர்செடி. சிறுதானியம் - புன்றானியம். சிறுதிப்பிலி - ஓர்திப்பிலி. சிறுதுடி - ஓர்பறை. சிறுதுத்தி - ஓர்பூடு. சிறுதுருமம் - வெடியுப்பு. சிறுதுளசி - ஓர்துளசி. சிறுதூறு - தூற்றுக்காடு. சிறுதென்றல் - இளஞ்சோளகம். சிறுதேக்கு - ஓர்மரம். சிறுதேங்காய் - சமுத்திராப்பழம். சிறுதேர் - பிள்ளைக் கவியிலோர் பகுதி, விளையாட்டுத்தேர். சிறுதேன் - கொசுகாந்தேன். சிறுத்தல் - சிறிதாதல், சிறுப்பன வாதல், சினத்தல். சிறத்துத்தி - ஓர்துத்தி. சிறுத்தை - சிறுபுலி. சிறுத்தொண்டன் - அறுபத்துமூவரி லொருவன். சிறுநறளை - ஓர்பூடு. சிறுநன்னாரி - ஓர்பூடு. சிறுபசளி - ஓர்பசளை. சிறுநாகம் - ஓர்மரம். சிறுநாகம்பூ - ஓர்சரக்கு. சிறுநார் - கன்னார். சிறுநாவல் - ஓர்செடி. சிறுநிம்பம் - மலைவேம்பு. சிறுநீர் - மூத்திரம். சிறுநெரிஞ்சி - ஓர்பூடு. சிறுபகன்றை - ஓர்பூடு. சிறுபசி - இளம்பசி, காலப்பசி. சிறுபஞ்சமூலம் - ஓர்நூல், கண்டங் கத்திரி, சிறுமல்லி, சிறுவழு துணை, நெருஞ்சி, பெருமல்லி. சிறுபதம் - சிறுவழி. சிறுபதி - சிறுகிராமம். சிறுபயறு - ஓர்பயறு. சிறுபயிர் - இளம்பயிர், புன்பயிர். சிறுபறை - ஓர்பறை, பிள்ளைக் கவியிலோர்பகுதி. சிறுபாலாடை - ஓர்பூடு. சிறுபாலி - கள்ளி. சிறுபான்மை - சிறுவழக்கு. சிறுபிராயம் - இளம்பிராயம். சிறுபிள்ளை - இளம்பிள்ளை. சிறுபுள்ளடி - ஓர்பூடு. சிறுபுறம் - பிடரி. சிறுபூளை - ஓர்பூடு. சிறுபெண் - இளம்பெண். சிறுபொழுது - பத்துநாழிகை கொண்ட நேரம், அஃது காலை, உச்சி, மாலை, யாமம், அத்த சாமம், வைகறை, ஐந்திணைக்குரிய முதற்பொருளி னொன்று, அஃது மாலை, யாமம், வைகறை, ஏற்பாடு, காலை, நண் பகல் இவை யன்றி ஏற்பாடு விலக் கியைம் பொழுதாய்க்கூறுவாரு முளர். சிறுபோகம் - புன்பயிர்ப்போகம். சிறுப்பம் - சிறுபிராயம். சிறுப்பனை - எளிமை, குறைவு. சிறுப்பித்தல் - கணிசக்குறைவு படுத்தல், சிறுகப்பண்ணுதல். சிறுமட்டம் - இளமட்டம். சிறுமணி - ஓர்நெல், சதங்கை. சிறுமணிகொட்டுவான் - ஓர்நீர்ப்புள். சிறுமலை - குன்று. சிறுமல் - நீர்விட்டான். சிறுமல்லி - சிறுபஞ்சமூலத் தொன்று, தசமூலத்துமொன்று. சிறுமாரோடம் - செங்கருங்காலி. சிறுமி - புத்திரி, பெண். சிறுமியம் - சேறு. சிறுமுட்டி - சுத்தியல். சிறுமுள்ளி - ஓர்முள்ளி. சிறுமூலகம் - ஓர்கிழுங்கு, திப்பிலி. சிறுமூலம் - திப்பிலி. சிறுமை - அற்பம், இடைஞ்சல், எளிமை, கீழ்மை, குறைவு, தரித்திரம், துன்பம், நோய், இளமை. சிறுமைத்தனம் - இடைஞ்சல், எளிமை, தரித்திரம். சிறுமைப்படுதல் - இடைஞ்சற்படு தல், எளிமைப்படுதல், தரித்திரப் படுதல். சிறுமையர் - கீழ்மக்கள். சிறுவது - அற்பம். சிறுவம், சிறுவயது - இளம்பிராயம். சிறுவயல் - பாத்தி. சிறுவரை - அற்பம், காலவிரைவு, சிறுபொழுது. சிறுவர் - மக்கள். சிறுவல் - இளம்பிராயமானது, இளம் பிராயம். சிறுவழுதுணை - ஓர்செடி, அஃது தசமூலத்தொன்று, சிறுபஞ்ச மூலத்து மொன்று. சிறுவள்ளி - ஓர்பூடு. சிறுவன் - மகன். சிறுவி - மகள். சிறுவிதி - தக்கன். சிறுவிதிமகஞ்சிதைத்தோன் - வீர பத்திரன். சிறுவிரல் - கனிட்டிகைவிரல். சிறுவிலை - குறுவிலை. சிறுவீடு - சிற்றில். சிறுவுமரி - சிற்றுமரி. சிறுவெள்ளரி - ஓர்வெள்ளரி. சிறை - அடிமை, அழகுள்ளவள், இடம், இறகு, கட்டுப்பாடு, காவல், சிறைச்சாலை, பக்கம், மதில். சிறைக்கணித்தல் - கடைக் கண்ணாற் பார்த்தல், புறக்கணித்தல். சிறைக்களம், சிறைக்கூடம் - சிறைச் சாலை. சிறைசெய்தல் - அடிமைப்படுத்தல், கட்டுப்படுத்தல். சிறைச்சாலை - மறியல்வீடு. சிறைச்சோறு - காவலிலகப்பட்டவர் களுக்கன்னங்கொடுத்தல், அஃது அறம்முப்பத்திரண்டினொன்று. சிறைநீக்குதல் - சிறைமீட்குதல். சிறைபிடித்தல் - அடிமையாகப் பிடித்தல். சிறைப்படுதல் - அடிமைப்படுதல், தடைப்படுதல். சிறைப்படுத்தல் - அடிமைப்படுத்தல், காவலுக்குட்படுத்தல், தடைப் படுத்தல். சிறைப்பாடு - அடிமைத்தனம், கட்டுப் பாடு, தடை. சிறைமீட்குதல் - இட்டமாக்குதல். சிறைமீளுதல் - இட்டமாக்கல், இட்டமாதல். சிறையிருப்பு - அடிமைத்தனம். சிறையெடுத்தல் - சிறைமீட்டல். பெண்கொள்ளல். சிறைவிடுதல், சிறைவிடுத்தல் - சிறை யிருப்பைநீக்குதல். சிறைவைத்தல் - அடிமைப்படுத்தல், காவலில்வைத்தல். சிற்குணம் - பரிசுத்தகுணம். சிற்சத்தி - பஞ்சசத்தியினொன்று, அஃது உயிர்க்கொளியாய்நிற்பது. சிற்சபை - ஞானசபை. சிற்சிலிர்ப்பான் - ஓர்வைசூரிநோய். சிற்சோமன் - சீர்பந்தபாஷாணம். சிற்பசாத்திரம் - கோயில்முதலியன கட்டுஞ்சாத்திரம், அஃது கலை ஞான மறுபத்துநான்கினொன்று. சிற்பசாலை - சிற்பவேலைவீடு. சிற்பத்தொழில் - இல்லமெடுத்தல் முதலியகற்சிற்பவேலை. சிற்பம் - அறுதொழிலினொன்று, அற்பம். சிறிசு, சிற்பநூல், நுண்மை. சிற்பரக்கூர்மை - கந்தகவுப்பு. சிற்பரவுப்பு - கெந்தலவணம், சிந்துல வணம். சிற்பரன் - கடவுள். சிற்பரி - பொன்னிமிளை, வெண் காரம். சிற்பரை - சவுக்காரம், பராசத்தி. சிற்பர் - சித்திரகாரர், சிற்பாசாரியர். சிற்பாசாரி - கற்சிற்பன். சிற்பியர் - கம்மாளர். சிற்றகத்தி - ஓர்மரம். சிற்றடி - சிறுகாற்சுவடு, சிறுக்கால். சிற்றடிப்பாடு - சிறுவழி. சிற்றடியார் - குற்றேவல்செய்வோர். சிற்றண்டம் - இருவகையண்டத்து ளொன்று, அஃது உடம்பு, கோழி முட்டை. சிற்பரம் - கடவுள். சிற்பொருள் - சித்துப்பொருள். சிற்றப்பன் - தந்தைக்கிளையோன். சிற்றமட்டி, சிற்றமுட்டி - ஓர்செடி. சிற்றம்பலம் - சிதம்பரம். சிற்றம்மான்பச்சரிசி - சிற்றிலைப் பாலாவி. சிற்றரத்தை - ஓர்செடி, ஓர்மருந்து. சிற்றருக்கன் - ஓரருக்கன். சிற்றவரை - ஓர்கொடி. சிற்றறிவு - சொற்பவறிவு, புல்லறிவு. சிற்றறுகு - ஓரறுகு. சிற்றாடை - சிறுபிள்ளையுடுப்பு. சிற்றாத்தாள் - சிறியதாய். சிற்றாமணக்கு - ஓராமணக்கு. சிற்றாமுட்டி - ஓர்செடி. சிற்றாலவட்டம் - விசிறி. சிற்றாள் - ஏவலாள். சிற்றி - சிறியதாய், பசரி. சிற்றிதழ் - அகவிதழ். சிற்றிரு - கிலுகிலுப்பை. சிற்றிரை - சிற்றுணா. சிற்றிலக்கம் - கீழ்வாயிலக்கம். சிற்றிலை - கடுமரம், குன்றி, நெய்ச் சிட்டி. சிற்றிலைப்பாலாவி - ஓர்பூடு. சிற்றில் - குடிசை, சீலை, பிள்ளைக் கலியினோர்பகுதி, பிள்ளை விளை யாட்டி னொன்று, அஃது சிற்றில் சிதைத்தலும் சிற்றில் புனைதலு மாம். சிற்றிளைப்பு - மெல்லிளைப்பு. சிற்றினஞ்சேர்தல் - துன்மார்க் கருடன் கூடுதல். சிற்றினம் - ஆகாதகூட்டம். சிற்றினிப்பு - சுள்ளிட்டவினிப்பு. சிற்றின்பம் - இலௌகீகவின்பம். சிற்றீரம் - அற்பவீரம். சிற்றுணர்வு - சிற்றறிவு. சிற்றுண்டி - அப்பவருக்கம், ஓர் பண்ணிகாரம், பலமூலசா கவுணா, பொரிக்கறி. சிற்றுமரி - ஓர்பூடு. சிற்றுமல் - கையுமல். சிற்றுமல்லிகை - ஓர்மல்லிகை. சிற்றுயிர் - அற்பசீவபிராணி. சிற்றுரு - குறள், சிறுத்தோணி, சின்னவுரு. சிற்றுலாத்து - பதமையானநடை. சிற்றுளி - சிறுளி. சிற்றுள்ளான் - ஓர்நுள்ளான். சிற்றூர் - குறிஞ்சிநிலத்தூர். சிற்றூறல், சிற்றூற்று - சின்னநீரூற்று. சிற்றெண் - கீழெண், குறளடி பதினா றான் வருவது. சிற்றெள் - ஓரெள். சிற்றெறும்பு - ஓரெறும்பு. சிற்றேலம் - ஓரேலம். சிற்றொழுங்கை - கையொழுங்கை. சினகரம் - கோவில். சினத்தல் - கோபித்தல். சினத்திலெழுந்தீ - உயிர்முத்தீயி னொன்று. சினந்தவிர்ந்தோன் - அருகன். சினப்பு - கோபம், பரு, விம்முதல். சினம் - கோபம். சினவரன் - அருகன், புத்தன். சினவர் - பகைவர். சினவல் - கோபித்தல். சினவுதல் - கோபித்தல், சினக் குறிப்பு, பொருதல். சினன் - அருகன், சருவஞ்ஞன், திரு மால், புத்தன், விருத்தன். சினா - வட்டத்திருப்பி. சினாடி - மூக்குறட்டை. சினாது - செத்தல். சினாவில் - தும்பை. சினிவாலி - அமவாசிக்கு முதனாளிரா. சினேகசத்துரு - சினேகிதன்போல நடக்குஞ்சத்துரு. சினேகம் - எண்ணெய், நட்பு, அஃது புண்ணியமேழினுனொன்று. சினேகி - சினேகிதன், சினேகிதி. சினேகிதம் - நட்பு. சினேகிதர் - மித்துருக்கள். சினேகிதி - அன்புள்ளவள். சினேகித்தல் - நட்பாயிருத்தல். சினேகிப்பு - சினேகம். சினேசதாரு - சாதிக்காய்மரம். சினேசம் - சாதிக்காய். சினேந்திரன் - அருகன், புத்தன். சினை - உறுப்பு, கருப்பம், கொழுப்பு, சினையென்னேவல், பூவரும்பு, மரக்கொம்பு, முட்டை, மூங்கில். சினைகொள்ளுதல், சினைத்தல் - அரும்புதல், கருக்கொள்ளல், கொழுக்குதல், புளகப் பொடிப் புக் கொள்ளுதல். சினைதல் - சினைகொள்ளல். சினைபருவம், சினைப்பருவம் - கருக் கொள்ளும்பருவம். சினைப்பகுபதம் - ஓர்பகுபதம், அஃது சினையான் வந்த பகுபதம், (உம்) கண்ணன். சினைப்படுதல் - கருக்கொள்ளுதல். சினைப்பு - கொழுப்பு, சினைத்தல், வெயர்க்குறி. சினைப்பெயர் - உறுப்புக்காரணமாய் வரும்பெயர், (உம்) முடவன். சினையாகுபெயர் - சினையான் வந்த பெயர், (உம்) வெற்றிலை நட்டான். சினைவினை - சினையின்றொழி லைக்காட்டி நிற்கும் வினைச் சொல், (உம்) காலொடிந்தது. சினைவினை - உறுப்புப் பொருளது தொழில், சினையடுத்துவரு முதற் பெயர், (உம்) முடக்கொற்றன். சின் - அசைச்சொல், (உம்) கண்ணும் படுமோஎன்றிசின்யானே, ஞானம். சின்மதனூல் - சீவகன்சிந்தாமணி. சின்மயம் - ஞானமயம். சின்மாத்திரம் - ஆன்மாவின்சுய தன்மை. சின்முத்திரை - ஞானமுத்திரை. சின்மூர்த்தி - கடவுள். சின்மை - சிறிசாந்தன்மை. சின்னக்காசு - ஓர்காசிலெட்டி லொன்று. சின்னச்சலவாதை - சிறுநீர்க்கழித்தல். சின்னஞ்சிறியது - மிகச்சிறியது. சின்னட்டி - ஓர்பூடு, சின்னன். சின்னத்தனம் - எளியதன்மை. சின்னபின்னம் - கண்டதுண்டம். சின்னப்படுதல் - துற்கீர்த்தியடைதல், பங்கப்படுதல். சின்னப்பன் - சிற்றப்பன். சின்னப்பூ - ஓர்பிரபந்தம், அஃது நேரிசைவெண்பாவாற்றசாங்கம் வைத்துநூறு, தொண்ணூறு, எழுபது, ஐம்பது, முப்பது பாட்டுப்பாடுவது. சின்மந்திரன் - அறிவுவடிவன். சின்னமுத்து - ஓர்குருநோய். சின்னமேளம் - மத்தளம். சின்னம் - அடையாளம், ஈனம், ஓர் காசு, காளம், சங்கு, சிறுமை, தட்டு, துண்டு, பராகம், பெண்குறி, முறம், விசித்திரம். சின்னம்மை, சின்னவைசூரி - சின்ன முத்து. சின்னயோகம் - அடையாளம். சின்னன் - சிறியது. சின்னன்பென்னன் - சிறிசும் பெரிசும். சின்னாயி - சிறியதாய். சின்னாருகம் - சீந்தில். சின்னி - ஓர்செடி, இலவுங்கம். சின்னிவிரல் - சிறுவிரல். சின்னீர் - அற்பநீர், சிலுநீர். சின்னை - ஓர்மீன். சீ சீ - அடக்கம், இகழ்ச்சிக்குறிப்பு, இலக்குமி, இலக்குமீகரம், காந்தி, சம்பத்து, சரச்சுபதி, சிதல், சீயென் னேவல், நித்திரை, பார்வதி, பெண், விடம். சீகண்டன் - சிவன். சீகம் - தமரத்தை. சீகரம் - இலக்குமீகரம், கடற்றிரை, கரகம், கவரி, திவலை, புனற்றிரை, மழை, மழைத்துளி, மழைத்தூவல். சீகரி - நீர்த்திவலை. சீகர் - திவலை, பஞ்சலோகம். சீகாரம் - ஓர்பண். சீகாழி - ஓர்தலம். சீகு - துடைப்பம். சீக்கரம் - சீக்கிரம். சீக்கல் - சீழ்க்கை. சீக்காச்சா - நாய்ப்புடோல். சீக்காய் - சீழ்க்கை, பழாதகாய். சீக்காய்நிறம் - வெளிறினநிறம். சீக்கிரகதி - மிகுவிரைவு. சீக்கிரகம் - விரைதல். சீக்கிரகேந்திரம் - சூரியனுக்குங் கிரகத்திற்குமுள்ள தூரம். சீக்கிரசேதனம் - நாய். சீக்கிரதை - சீக்கிரம். சீக்கிரம் - காரம், குரூரம், கோபம், விரைவு. சீக்கிரான், சீக்கிரி - உசிலமரம். சீக்கிரியம் - சீக்கிரம். சீக்கிரியன் - சிவன், திருமால். சீக்கிரியான் - உசிலமரம். சீக்கு - செத்தை. சீக்குரு - முருங்கை. சீக்கூட்டுதல் - சிதல்கொள்ளுதல். சீசகம், சீசபத்திரகம், சீசம் - ஈயம். சீசா - ஓர்குப்பி. சீசீ, சீச்சீ - இகழ்ச்சிக்குறிப்பு. சீஷப்பிள்ளை - சீஷன். சீஷர், சீடர் - மாணாக்கர். சீடு - நூற்சீடு. சீடை - ஓர்பணிகாரம், சடைவு. சீட்டி - எழுத்துப்புடைவை. சீட்டு - பத்திரிகை. சீட்டுத்தெரிப்பு - கையுறுதி. சீட்டுப்போடுதல் - பீலிபோடுதல். சீட்டுவாங்குதல் - சாதலைக் காட்டுங் குறிப்புச்சொல், சீட்டுப்பெறுதல். சீணசந்திரன் - தேய்பிறை. சீணம் - பதனவு. சீணராகம் - ஆசையற்றது. சீணித்தல் - பதனழிதல். சீண்டல் - நாறல். சீண்டறம் - ஊழல், தொந்தறை. சீண்டிரம் - ஈனவார்த்தை. சீண்டுதல் - சருவுதல், தொடுதல். சீகம் - ஈயம், தரா. சீதகன் -சுந்திரன், சுக்கிரன், சோம்பன். சீதகாத்திரகம் - ஓர்சன்னி. சீதகிருச்சரம் - மூன்றுநாணீர்பருகி யிருக்குமோர்விரதம். சீதக்கடுப்பு - வயிற்றுக்கடுப்பு. சீதக்கட்டு - சீதப்பற்று. சீதசுரம் - குளிர்காய்ச்சல். சீதபானு - சந்திரன். சீதபேதி - ஓர்நோய். சீதப்பற்று - சீதப்பிடிப்பு. சீதப்பிரபம் - கருப்பூரம். சீதமண்டலி - ஓர்பாம்பு. சீதமரீசி - சந்திரன். சீதம் - ஆமம், குளிர்ச்சி, அதுஉயிர் வேதனையினொன்று, கொடுந் தமிழ்நாட்டினொன்று, சீதாங்க பாஷாணம், சீரணித்தது, சோம்பு, நீர், மாரிகாலம், மேகம். சீதரன் - அரி. சீதவழும்பு - ஆமம். சீதவாதக்கடுப்பு - சலக்கடுப்பு. சீதவாதம் - குளிர்நோய், சலரோகம். சீதவாரம் - உத்தாமணி. சீதளகாலம் - மழைகாலம். சீதளம் - குளிர்ச்சி, கோடகசாலை, சந்தனம், தாமரை, துரிசு, பச்சைக் கருப்பூரம், முத்து. சீதளாதேவி - ஓர்சத்தி. சீதளி - பொன்னாங்காணி. சீதளை - ஓர்நாரத்தை, கொடி மாதளை. சீதனம் - மகட்குக்கொடுக்கும் பொருள். சீதனவோலை - சீதனவுறுதி. சீதன் - சந்திரன். சீதாங்கபாஷாணம் - ஓர்பாஷாணம். சீதாங்கம் - ஓர்சன்னி, ஓர்பாஷாணம். சீதாங்கனி, சீதாதேவி - இராமன்றேவி. சீதாத்திரி - இமயமலை. சீதாபதி - இராமன். சீதாரி - கேதுருமரம். சீதாலபத்திரம், சீதாளபத்திரம், சீதாளை - தளப்பத்தோலை. சீதாளம் - சீதாளை. சீதி - குளிர், பாவம், முற்றத்துறத்தல். சீது - ஈயம், கள். சீதுளாய் - ஓர் துளசி. சீதேவி - இலக்குமி. சீதேவியார்செங்கழுநீர் - ஓர்பூடு. சீதை - இராமன்றேவி, அவள் பஞ்ச கன்னிகளிலொருத்தி, உமை, உழு படைச்சால், பொன்னாங்காணி மது. சீதோகம் - குளிர்நீர். சீத்தலைச்சாத்தன் - சங்கப்புலவரி லொருவன். சீத்தல் - சீக்குதல், சீவுதல், செப்பம் பண்ணல், தூய்தாக்கல், நீக்கல். சீத்தா - ஓர்மரம். சீத்தி - இளப்பம். சீத்தியம் - தானியம். சீத்தியோணான் - ஓர்ஓணான். சீத்துப்பூத்தெனல் - கடிந்து கொள் ளுதல், முறுமுறுத்தல். சீத்துவம் - செம்மை, திறம். சீத்தை - கீழ்மகள், சிதம்பல், சீட்டிச் சீலை, பதனழிவு, பீழை, பூரான் பீழை. சீத்தைக்கண் - பீழைசாறுங்கண். சீந்தல் - துளிமழை. சீந்தில் - ஓர்கொடி. சீந்துதல் - மூக்குச்சீறுதல், விரும்புதல். சீந்தை - சீத்தை. சீபதி - அருகன், கடவுள், விட்டுணு. சீபம் - சரகாண்டபாஷாணம். சீபாதம் - திருப்பாதம். சீப்பங்கோரை - ஓர்புல். சீப்பாய்தல் - சிதலவடிதல். சீப்பிடுதல் - மயிர்சீவுதல். சீப்பு - எலும்புக்கோவை, கதவின் றாழ், மயிர்சீவுஞ்சீப்பு, வாழைக் குலைச்சீப்பு. சீப்புச்சரட்டை - ஓர்விதமீன். சீப்புப்பணிகாரம் - அப்பவருக்கத் தொன்று. சீமங்கலி - நாவிதன். சீமணல் - நாகமணல். சீமந்தகம் - சிந்தூரச்சாந்து. சீமந்தபுத்திரன் - தலைமகன். சீமந்தம் - கருப்பந்தரித்த ஆறா மாதம்உச்சி வகிர்ந்து செய்யும் மோர் சடங்கு. சீமந்தரேகை - ஓரிரேகை. சீமந்தனி - ஓர் கற்புடையபெண். சீமாட்டி, சீமாள் - செல்வி, தலைவி. சீமாலிங்கம் - எல்லையடையாளம். சீமாவிவாதம் - எல்லைவழக்கு. சீமான் - அருகன், செல்வ முள்ளவன், தலைவன். சீமுக - ஓராண்டு. சீமூதம் - இந்திரன், நீருண்டமேகம், பிடியன்யானை, மலை, மேகம். சீமூதன் - இந்திரன், உழவன், ஓரசுரன், சிவன், துன்புறுவோன், நாகா சுரன்சாரதி. சீமூதை - இரவு, கொடிமுந்திரிகை. சீமை - அனுட்டிப்பு, எல்லை, கரை, தேசம், தோண்மேல், வயல். சீமைக்கரி - ஓர்கரி. சீமைச்சுண்ணாம்பு - ஓர் சுண்ணாம்பு. சீமைத்தக்காளி - ஓர் தக்காளி. சீயக்காய், சீயங்காய் - சீயாக்காய். சீயம் - எருக்கம்பால், சிங்கம், சிங்க விராசி, தென்றிசைப்பாலன்குறி. சீயா - ஓர்மரம். சீயாக்காய் - ஓர்காய். சீயாள் - பாட்டி. சீயான் - பாட்டன். சீயெனல் - இகழ்ச்சிக்குறிப்பு. சீய்த்தல் - உரஞ்சுதல், சிறாய்த்தல், சீவுதல், செருக்குதல். சீரகக்கோரை - ஓர்கோரை. சீரகச்சம்பா - ஓர்நெல். சீரகத்தாமர் - வணிகர். சீரகத்தாமன், சீரகத்தாரோன் - குபேரன். சீரகம் - ஓர்சரக்கு, ஓர்பயிர், பன்றி. சீரங்கம் - ஓர்பட்டினம் சீரணம் - சமித்தல், சிவாகமமிரு பத்தெட்டினொன்று, பதனழிவு, கிழம். சீரணவாடிகை - இடிந்தவீடு. சீரணன் - விருத்தன். சீரணி - காடு, கூத்தினோர் பேதம் சிரணியென்னேவல், ஓமச்செடி. சீரணித்தல் - சமித்தல், பதனழிதல். சீரணை - பழக்கம். சீரபாணி - பலபத்திரன். சீரந்தாதி - ஈற்றுச்சீராதியாகப் பாடல். சீரமோடா - வீழி. சீரம் - இரேகை, எழுத்து, கலப்பை, காட்டெருமைப்பால், சீரை, சூரியன், மரவுரி, மாலை, முடி. சீரா - கவசம், பலாசு. சீராங்கம் - கலப்பை, கொழு. சீராட்டல் - கொண்டாடல், கோது குலம்பண்ணல், சிறப்புப் பண்ணு தல். சீராட்டு - கொண்டாட்டம், கோது குலம், சிறப்பு, சிறப்புச் செய்தல், சீராட்டென்னேவல். சீராபதிதனையை - இலக்குமி. சீராளன் - சிறுத்தொண்டர்புத்திரன். சீரி - முக்காடு. சீரிகை - ஓர்வண்டு. சீரிடம் - தலை, வாகை. சீரிணபன்னம் - வேம்பு. சீரிணன் - கற்றோன். சீரித்தல் - பழகல். சீரிப்பு - பழக்கம். சீரியர் - அறிஞர் சிறந்தோர், புலவர். சீரிவிருக்கம் - புளியமரம். சீருகை - வண்டு. சீருணம், சீருணி - செம்பு. சீருத்திரம் - உபநிடதம் முப்பத்தி ரண்டினொன்று. சீருள் - ஈயம், செம்பு, செல்வம், பஞ்சலோகம். சீரை - சீலை, மரத்தோல், மரவுரி. சீர் - அழகு, இரைச்சல், ஒழுங்கு, காற்றண்டை, சித்திரம், சுபாவம், செல்வம், சொல், அஃது செய்யு ளுறுப்பினுமொன்று, தண்டா யுதம், தாளவொத்து, துலாராசி, நடுத்தரம், நன்மை, நிலைபரம், பாரம், புகழ், வான், முச்சை, தளைக்குறுப்பாய்வருவன, அவை அசைச்சீர், இயற்சீர், உரிச்சீர், பொதுச் சீரென்னப் படும். சீர்காரம் - எதிரொலி. சீர்குலைதல் - ஒழுங்குகெடல், பதன ழிதல். சீர்கேடி - மூதேவி. சீர்கேடு - கேடானநிலைமை, சிறப் பில்லாமை. சீர்க்காரம், சீர்க்கிருதம் - எதிரொலி. சீர்க்கோள் - ஓர்கோள். சீர்சிறப்பு - வாழ்வு. சீர்செய்தல் - சீராக்கல். சீர்திருத்தல் - சீராக்கல். சீர்திருத்துதல் - சீராக்குதல். சீர்திருந்தல் - செப்பமாதல். சீர்தூக்கல், சீர்தூக்குதல் - ஆராய்தல், ஒத்துப்பார்த்தல். சீர்த்தல் - சிறப்புக்கொள்ளுதல். சீர்த்தி - மிகுபுகழ். சீர்த்துளாய் - ஓர்துளசி. சீர்நிருவாகம் - இயல்பு, நிலைபரம். சீர்பண்ணுதல் - ஆயத்தப்படுத்தல், ஒழுங்குப்படுத்தல். சீர்பதி - கடவுள். சீர்பந்தபாஷாணம் - ஓர்பாஷாணம். சீர்பந்தம் - விழைவுபாஷாண முப்பத் திரண்டினொன்று. சீர்பாதம் - திருப்பாதம். சீர்ப்படுதல் - ஒழுங்குப்படுதல், குணப்படுதல். சீர்ப்படுத்துதல் - குணப்படுத்துதல். சீர்ப்பாடு - சிறப்புறல். சீர்ப்பிழை - ஒழுங்குத்தப்பு. சீர்மடக்கு - சீரைமடக்கிப்பாடல். சீர்மரம் - நெய்வார்கருவியி னொன்று. சீர்மை - எண்வகையூறினொன்று, அஃது ஒப்பம், சங்கை, சிறப்பு செம்மை. சீர்வண்டு - நெய்வார்கருவியி னொன்று. சீலசம்பன்னன் - நற்குணன். சீலத்துவம் - குணம். சீலம் - அழகு, குணம், சரித்திரம், சீந்தில், சுபாவம், தருமம், நல்லறிவு, நல்லொழுக்கம். சீலம்பாய் - கிழியற்பாய். சீலவான், சீலன் - நற்குணசாலி. சீலவிருத்தன் - நல்லொழுக்கிற்றிறம் பாதோன். சீலனம் - சாத்திராப்பியாசம். சீலா - இறைபட்டை, ஓர்மீன். சீலாப்பட்டை, சீலாப்பூட்டை - இறை கூடை. சீலி - நற்குணமுடையாள். சீலிதன் - கலைகற்றோன். சீலை - வத்திரம். சீலைப்பாம்பு - ஓர்விஷமுள்ளபாம்பு. சீலைப்பேன் - சீலையிற்பற்றும்பேன். சீலைமண் - மருந்து எரிய வைக்கும் பாத்திரங்களைச் செம்முமண் சீலை. சீவகர் - புத்த தவத்தோர். சீவகன் - ஓரரசன், குறவன், சீவ முத்தன், தருமம்வாங்கியுண்போன், புத்ததவத்தோன், வேலைகாரன். சீவகாருண்ணியன் - கிருபையுள் ளோன். சீவசஞ்சீவி - சீந்தில். சீவசாட்சி - அறிவுக்காதாரமாயிருப்பது. சீவசாதனம் - தானியம். சீவசிதாபாசர் - பிரமசைதந்நியர். சீவசெந்து - உயிருள்ளவைகள். சீவதம் - ஆமை, சன்மார்க்கம், சீவன், மயில், முகில். சீவதயை - சீவானுக்கிரகம். சீவதருமம் - சீவபுண்ணியம். சீவதனம் - சீவனுள்ளதிரவியம். சீவதன் - சத்துரு, சன்மார்க்கன், நீண்ட ஆயுசுகாரன், வைத்தியன். சீவதாது - சீவவாயுசஞ்சரிக்குந்நாடி. சீவதிசை - பிராணதிசை. சீவதேகம் - ஆன்மாசீவிக்கும் வடிவம். சீவத்தறுவாய் - மரணத்தறுவாய். சீவத்துவம் - அநாதி. சீவநாடி - பிராணவாயுவுலாவுநரம்பு. சீவநாயகன் - பிராணநாயகன். சீவநாள் - ஆயுள். சீவந்தி - சீந்திற்கொடி, பாலைமரம். சீவந்திகன் - பாவைவேட்டைக் காரன். சீவந்தில் - சீந்தில். சீவபிராணி - உயிர்ப்பிராணி. சீவபுண்ணியம் - உயிர்கட்குச் செய்யும் புண்ணியம். சீவபேதம் - உயிர்ப்பேதம். சீவமந்திரம் - உடல். சீவரட்சை - ஈடேற்றம், சீவபரி பாலனம். சீவரம் - நீலவண்ணப்புடைவை. சீவரர் - புத்தர். சீவர் - சீவனுள்ளோர். சீவலம் - ஓர்நீர்ப்பூடு. சீவல் - சீவப்பட்டது, சீவுதல், பெல மற்றது, மிருதுவானது. சீவவிலயம் - மரணம். சீவனகம் - சோறு. சீவனம் - அமுதம், உயிர்வாழ்தல், தைத்தல், நீர், புசிப்பனவு, மூளை, வெண்ணெய். சீவனாகாதம் - நஞ்சு. சீவனாந்தம் - மரணம். சீவனார்த்தம் - உயிர்வாழ்தற்குரியது, சீவன்முகாந்தரம். சீவனாவரசன் - வருணன். சிவனாவுடதம் - உயிர்தருமருந்து. சிவனாளி - உயிருடையாள், உயிருள் ளோன். சீவனி - சஞ்சீவி சீவநாடி, பாலை மரம், ஆடுதின்னாப்பாலை. சீவனித்தல் - சீவனம்பண்ணுதல். சீவனியம் - நீர். சீவனோபாயம் - சீவனத்துக்கடுத்தவு பாயம், சீவனார்த்தம். சீவன் - உயிர், உயிர்தருமருந்து, சீந் தில், சீவியம், வியாழம் வைடூரியம், அனுபவிக்கப்படுதல். சீவன்கொடுத்தல் - உயிர்கொடுத்தல், திடப்படுத்தல். சீவன்முத்தன் - துறந்துஞான மடைந் தோன். சீவன்முத்தி - ஞானமடைந்து பிறப் பறுத்திருத்தல். சீவாதாரம் - உலகம். சீவாத்துமா - சரீராவச்சின்ன வான்மா. சிவாந்தகன் - கொலையாளி, வேட் டைக்காரன். சீவாந்தம் - சீவியமுடிவு. சீவாவத்தை - ஆத்துமாவடங்கு மவத்தை. சீவி - உயிருடையாள், உயிருடை யோன், அழிஞ்சில். சீவிகை - சீவனம். சீவிதகாலம் - சீவிக்குங்காலம். சீவிதசமுசயம் - மரணபயம். சீவிதஞ்ஞை - இரத்தாசயம். சீவிதேசன்-உயிர்தருமருந்து, கடவுள், கணவன், சந்திரன், சூரியன். சீவித்தல் - சீவியம்பண்ணுதல், மரித் தல், மோட்சஞ்சேருதல். சீவிப்பித்தல் - சாக்காட்டல். சீவிமுடித்தல் - கோதிக்கட்டல். சீவியகாலம், சீவியநாள் - ஆயுணாள். சீவியங்கம் - கல்லுப்பு. சீவியம் - ஆயுள், காலட்சயம், சீவனம். சீவியம்பண்ணுதல் - சீவனம் பண் ணுதல். சீவியர் - சீவிப்போர். சீவியன் - சீவன், சீவிப்போன், திரு மால். சீவினி - ஓர்மருந்து, செவ்வழிப்பண். சீவிசுரப்பிராந்தி-சீவனைச் சிவனெனக் காண்டல். சீவீசுரம் - ஆன்மா. சீவு - ஓர்புல். சீவுதல் - செதுக்குதல், மயிர் கோது தல், மெல்லிதாயரிதல். சீவுளி - ஓர்கருவி. சீவுளியாடுதல் - சீவுளிபோடுதல். சீவோபகாரம் - சீவதயை. சீவோற்பத்தி - உயிர்த்தோற்றம், கருக்கொள்ளுங்காலம். சீழ் - ஒலிக்குறிப்பு, சிதல், சீழ்க்கை விடுதல். சீழ்க்கை - வாயாலூதுமோர் வகைச் சத்தம். சீழ்க்கைக்கருவி - சீழ்க்கைக்குழல். சீறடி - சிற்றடி. சீறல், சீறுதல் - அதட்டல், இரைதல், உரத்ததிகரித்தல், கோபித்தல், சினக்குறிப்பு, பெருங்கோபம், மூக்குச்சீறுதல், வேகம். சீறுபூறெனல் - ஒலிக்குறிப்பு, சினக் குறிப்பு. சீறுமாறு - கலகம், குழப்பம். சீறூர் - வேடரூர். சீற்காரம் - சீர்காரம். சீற்றம் - கோபம், சினம். சீனக்கண்ணாடி - மூக்குக்கண்ணாடி. சீனக்காக்காய் - ஓரினக்காகம். சீனக்காரம் - ஓர்மருந்து. சீனக்கிழங்கு - ஓர்மருந்துக்கிழங்கு. சீனக்குடை - கடுதாசிக்குடை. சீனசம் - உடுக்கு. சீனச்சட்டி - ஓருலோகம். சீனட்டங்குருவி - ஓர்குருவி. சீனட்டி - ஓர்நெல். சீனபிட்டம் - செவ்வீயம். சீனப்பாகு - ஓர்மருந்து. சினப்பூ - ஓர்புட்பம். சீனமல்லிகை - ஓர்பூச்செடி. சீனமிளகு - ஓர்மிளகு. சீனமுத்து - ஓர்செய்கைமுத்து. சீனம் - ஓர்புடைவை, தேயமன்பத் தாறினொன்று, நூல், பதினெண் பாடையினொன்று, மான். சீனவங்கம் - ஈயம். சீனவெடி - ஓர்வெடி. சீனன் - சீனதேயத்தான். சீனி - ஓர்வகைச்சருக்கரை, சீனக் காரம், பித்தளைமணல், மரநங் கூரம். சீனிக்கிழங்கு - ஓர்வகைக்கிழங்கு. சீனிப்பாகு - அதிரசத்துதிர்பாகு. சீனியதிரசம் - ஓர்பண்ணிகாரம். சு சு - அதட்டுமோசை, ஓரேழுத்து, நன்மை, சுகம்முதலியவற்றைக் காட்டு மோருபசருக்கம், வியப்புக் குறிப்பு. சுஃறெனல் - ஒலிக்குறிப்பு. சுககீனம் - சௌக்கியவீனம். சுகசரீரம் - துன்பமற்றசரீரம். சுகசரீரி - சவுக்கியதேகி. சுகசன்னி - ஓர்சன்னி, திரீதோஷம். சுகசீவி - சுகவாழ்வுடையாள், சுக வாழ்வுடையோன். சுகசெய்தி - நற்செய்தி. சுகண்டி - ஓரிரத்தினம். சுகதபேதம் - பேதம்மூன்றினொன்று, அஃது மரத்துக்கிலைகாய் முதலிய வித்தியாசம். சுகதம் - சொந்தமானது. சுகதர் - புத்தர். சுகதுக்கம் - இன்பதுன்பம். சுகநயம் - சௌக்கியநன்மைகள். சுகந்தகம் - ஈரவெண்காயம், கந்தகத் தூள், தேன்தோடம்பழம். சுகந்தபரிமளம் - மிகுவாசனை, வாச னைப்பண்டம். சுகந்தமா - கஸ்தூரிமிருகம், கருப்பூர மரம். சுகந்தமூலி - வெட்டிவேர். சுகந்தம் - ஈரவெண்காயம், கந்தகம், கிழங்கு, சந்தனம், சீரகம், நறு மணம், நீலோற்பலம். சுகந்தவருக்கம், சுகந்தவற்கம் - வாச னைப்பண்டம். சுகந்திகம் - ஓர்நெல், கந்ததூபம், வெண்டாமரை. சுகந்திக்கல் - ஓரிரத்தினம். சுகபுச்சம் - கந்தகநீறு. சுகபேதி - ஓர்பேதிமருந்து. சுகபோகம் - சுகானுபவம். சுகபோசனம் - நல்லூண். சுகப்படுதல் - சுகமடைதல். சுகப்பிரியை - சம்புநாவல். சுகப்பிழை - சௌக்கியவீனம். சுகம் - இன்பம், கிளி, சுபம், தருமம், தலைப்பாகை, நன்மை, நீர், புடைவை, முத்தி, முலைக்கண். சுகரம் - தருமம். சுகருமம் - நற்கருமம், நித்தியயோகத் தொன்று. சுகவல்லபம் - மாதளை. சுகவாகன் - மதன். சுகவாழ்வு - நல்வாழ்வு. சுகவிருத்தி - சுகசெய்தி, சுகவாழ்வு. சுகவிரேசனம் - சுகபேதி. சுகவீனம் - துன்பம். சுகவேளை - சுகமானகாலம், நற்காலம். சுகன் - சுகப்பிரமா, சுவற்கமுற்றோன். சுகன்மம் - சுகருமம். சுகன்றாதை - வியாசன். சுகாசகம், சுகாசம் - வெள்ளரி. சுகாசனம் - சுகாதனம். சுகாசுகம் - சுகதுக்கம். சுகாதனம் - சுகமுந்திடனு மெவ்வாறி ருக்கினெயது மோவவ்வாறிருத் தல், மாதளை. சுகாதாரம் - சுவற்கம். சுகாதிசயம் - சுகசெய்தி. சுகாதீதம் - மேற்பட்டசுகம். சுகாந்தம் - ஈரவெண்காயம். சுகானந்தம் - மிகுவின்பம், மோட்சம். சுகானுபவம் - நல்லனுபவம். சுகி - சுகபோகி, சுகியென்னேவல், சுபானுபவம், சௌக்கியம். சுகித்தல் - இன்பமனுபவித்தல், செல் வங்களையனுபவித்தல். சுகிப்பு - நல்லனுபவம். சுகியன் - சுகானுபோகி, போசனாதி சௌக்கியமுடையோன். சுகியாதி - நற்கீர்த்தி. சுகிர் - உட்டுளை, சுகிரென்னேவல், சுகிர்வு. சுகிர்தகுணம் - நற்குணம். சுகிர்த நூல் - ஓர் நூல். சுகிர்த குறள் - வேத நூல். சுகிர்தபுண்ணியம் - நற்புண்ணியம். சுகிர்தம் - அதிட்டம், அறம், சன் மார்க்கம், சுசி, தயவு, நன்மை, நெய். சுகிர்தலாபம் - சினேகசம்பாத்தியம். சுகிர்தல் - வகிர்தல். சுகிர்தவசனம் - சுத்தவசனம், மெய் வசனம். சுகு - ஓர்பாத்திரம். சுகுடம் - சேம்பு. சுகுணம் - நற்குணம். சுகுணன் - நற்குணமுடையோன். சுகுமாரதூலி - இலவமரம். சுகுமாரம் - ஓர் கரும்பு, ஓர்தானியம், மிருது. சுகுமாரதை - ஓரலங்காரம், அஃது வல்லொற்று நீங்கியுள்ள சொற் களாலாக்கப் பட்டது. சுகுவது - தீ. சுகோச்சம் - மகாசுகம். சுகோற்சவன் - கணவன். சுக்கங்காய் - மிதக்கங்காய். சுக்கங்கீரை - ஓர்கீரை. சுக்கச்சிலை - வங்கக்கல். சுக்கம் - களவு, பொதுக்கு. சுக்கம் வைத்தல் - களவாயபகரித்தல். சுக்கல் - அற்பம், துண்டு. சுக்காணி - கப்பலோட்டி. சுக்காரம் - கெற்சிதம். சுக்கானீறு - சுண்ணாம்புக்கன்னீறு. சுக்கான் - கப்பலைநடத்துங்கருவி. சுக்கான்கல் - சுண்ணாம்புக்கல். சுக்கான்கீரை - புளிக்கீரை. சுக்கான் - பருப்பதம், வங்கக்கல். சுக்கிரசீடர் - அசுரர். சுக்கிரபகவான் - வெள்ளி. சுக்கிரம் - ஆனிமாதம். சுக்கிரவாரம் - வெள்ளிக்கிழமை. சுக்கிரனாளி - முத்து. சுக்கிரன் - அசுரர்மந்திரி, கண்ணோயு ளொன்று, தீ. சுக்கிராசாரியன் - சுக்கிரன். சுக்கிரீபன் - குரக்கிறை. சுக்கிரீபேசன் - இராமன். சுக்கில - ஓராண்டு. சுக்கிலகலிதம் - இந்திரியக்கலிப்பு. சுக்கிலத்தம்பம் - கலைஞான மறு பத்தினான்கினொன்று. சுக்கிலத்துவம் - வெண்மை. சுக்கிலபம் - நாணம். சுக்கிலபக்கம், சுக்கிலபட்சம் - பூருவ பக்கம். சுக்கிலமண்டலம் - வெள்ளைவிழி. சுக்கிலம் - இந்திரியம், ஓர்யோகம், கண்ணோயினொன்று, வெண் ணெய், வெண்மை, வெள்ளி. சுக்கிலாங்கம் - வெள்ளைத்தேகம். சுக்கிலாசயம் - இந்திரியகோசம். சுக்கிலாபாங்கம் - மயில். சுக்கு - சுக்கான்கல், சுண்டி, துண்டு, வேர்க்கொம்பு, அஃது திரிகடுகத் தொன்று, பஞ்ச மூலத்து மொன்று. சுக்குப்பொடி - வேர்க்கொம்புச் சூரணம். சுக்கை - நட்சத்திரம், மாலை. சுங்கம் - ஆயம், இறை, களவு, பொதுக்கு. சுங்கன் - ஓர்மீன், சுக்கிரன். சுங்கான் - புகைகுடிக்கிறகுழல். சுங்கிதன் - ஈனன். சுங்கு - மடிப்பு. சுசலம் - சுத்தசலம். சுசனம் - காற்று. சுசாதி - சுயசாதி. சுசாதிபேதம் - சுயசாதிக்குளுள்ள பேதம்,அஃது மரத்துக்கு மறுமரம். சுசி - ஆடிமாதம், இணக்கம், காமக் கவலை, கோடைகாலம், சந்திரன், சிவன், சுக்கிரன், சுத்தம், சூரியன், நிதார்த்தம், நெருப்பு, பிரமன், மாணாக்கன்றன்மை, முலை, வெண்குடை, வெண்மை. சுசிகரம் - சுத்தம், நேர்மை, மேன்மை. சுசிந்தனம் - தியானம். சுசிமணி - இரத்தினம். சுசிமிதம் - புன்னகை. சுசிரம் - அக்கினி, ஊதுகுழல், துளை. சுசீலம் - காற்று, நற்குணம், நேர்மை. சுசீலன் - நற்குணன். சுசுகம் - முலைக்கண். சுகந்தரி - கோபி, நாலி, மூஞ்சூறு. சுகுக்குமை - நான்குவாக்கினொன்று. சுசேலகம் - புடைவை. சுச்சு - சுண்டி, பறவைமூக்கு. சுடகமாமிசம் - கருவாடு. சுடகம் - காய்வு, சடை. சுடரெண்ணெய் - சூட்டெண்ணெய், பந்ததயிலம். சுடரோன் - சூரியன். சுடர் - அக்கினி, ஒளி, சந்திரன், சூரியன், தீச்சிகை, விளக்கு, தளிர். சுடர்க்கொடி - கருப்பூரம், பெண். சுடர்ச்செலவு -சட்டுவருக்கத் தொன்று, அஃது இராசியை யிரண்டாகப் பகிர்தல். சுடர்தல் - ஒளிசெய்தல். சுடர்நிலை - தகழி, விளக்குத்தண்டு. சுடர்மௌலியர் - வானோர். சுடர்விடுதல் - சுவாலித்தல். சுடர்விழியோன் - வீரபத்திரன். சுடர்விழுதல் - தீயிலிருந்து சுடரிழிதல், விளக்கு முதலிய வற்றிலிருந்து தீச்சிகைவிடுதல். சுடர்வு - சுடர்தல். சுடலை - சுடுகாடு. சுடலைக்காடு - சுடுகாடு. சுடலைக்குருவி - ஓர்குருவி. சுடலைஞானம் - மயான வைராக்கியம். சுடலைமாடன் - ஓர்தேவதை. சுடலையாடி - சிவன். சுடலையினீறு - சவச்சாம்பல். சுடலையோன் - துரிசு. சுடலைவயிரவன் - மயானவயிரவன். சுடாரி - கவசம். சுடிகை - உச்சி, நெற்றிச்சுட்டி, மயிர்முடி, முடி. சுடீரியம் - வீரியம். சுடுகலம் - குயக்கலம், செங்கல். சுடுகாடு - ஈமம். சுடுகோல் - சுட்டுக்கோல். சுடுசுடுத்தல் - தீவிரித்தல். சுடுசுடுப்பு - தீவிரம். சுடுசுடெனல் - தீவிரித்தல், வெடு வெடுத்தல். சுடுசுண்ணம் - சுட்டசாந்து. சுடுதல் - உலோகங்களை யொட்டு தல், சூடுகாணுதல், தகித்தல், நீற்றுதல், விசனமடைதல், விசன மடை வித்தல், வேகவைத்தல். சுடுதொறட்டி - ஓர்செடி. சுடுநிலம் - சுடுகாடு. சுடுநீர் - வெந்நீர். சுடுமருந்து - எரிமருந்து. சுடுவல் - இரத்தம். சுடுவனம் - இரத்தம், சுடுகாடு. சுடுவான் - படகிற்சமையல் பண்ணு மிடம். சுடுவு - சும்மாடு. சுட்சுள்ளெனல் - முள்ளு, வாயு முதலியகுற்றுங்குறிப்பு. சுட்டல் - காட்டுதல், குறித்தல், சுடல், சுடுதல். சுட்டாவிரல் - சுட்டுவிரல். சுட்டி, சுட்டிகை - உச்சிவெள்ளை, நெற்றிச்சுட்டி. சுட்டிக்காட்டுதல் - குறித்துக் காண் பித்தல். சுட்டித்தலை - குறும்புத்தனம், திரியா புரம். சுட்டித்தலையன், சுட்டியன் - துட்டன், நெற்றிச்சுட்டியுள்ளது. சுட்டு - எண்ணம், குறிப்பு, சுட்டென் னேவல். சுட்டுக்கோல் - உலையாணிக்கோல். சுட்டுச்சொல் - ஒன்றைக் குறித்துக் காட்டுமொழி. சுட்டுதல் - எண்ணுதல், குறித்தல். சுட்டுப்பொருள் - குறித்தபொருள். சுட்டுவிடை - சுட்டிக்காட்டும்விடை (உம்) இஃது. சுட்டுவிரல் - ஆட்காட்டிவிரல். சுட்டு வைத்தல் - இலக்குவைத்தல். சுட்டெழுத்து - அ-இ-உ-என்னு மெழுத்துக்கள். சுணக்கம் - சோர்வு, தாமதம். சுணக்குதல் - தாமதப்படுத்தல், மெலியச்செய்தல். சுணங்கல் - சோர்தல், தாமதித்தல். சுணங்கன் - நாய். சுணங்கன்முத்திரை - நாயாகாரமான வோர் முத்திரை. சுணங்கு - சுணங்கென்னேவல், தேமல். சுணை - சுனை. சுணைவு - பேய்க்கடலை. சுணைக்கோரை - ஓர்புல். சுணைத்தல் - சுனைத்தல். சுணைநெருஞ்சில் - ஓர்பூடு. சுண்டகன் - சாராயம் வடிப்போன். சுண்டக்கட்டுதல் - இறுகக்கட்டுதல். சுண்டக்காய்தல் - இறுகக்காய்தல். சுண்டங்காய் - சிறுகாய், சுண்டிக் காய். சுண்டப்பிடித்தல் - இறுகப்பிடித்தல். சுண்டம் - கள், யானைத்துதிக்கை. சுண்டல் - இறுகல், எய்தல், சுண்டற் கறி, சுண்டுதல், தெறித்தல், வற்று தல். சுண்டற்கறி - தீயற்கறி. சுண்டன் - அறிவிலி, சதையநாள், மூஞ்சூறு. சுண்டாங்கி - அற்பம். சுண்டாபானம் - சுராபானம். சுண்டாரன் - சாராயம்வடிப்போன். சுண்டாலம், சுண்டாலி - யானை. சுண்டி - கள், சுக்கு, சுண்டில். சுண்டிகை - உண்ணா. சுண்டில் - சுண்டிற்செடி. சுண்டு - அடிப்பற்றியது, அற்பம், ஓர்சிறு, அளவுபடி, சுண்டென் னேவல். சுண்டுகட்டை - நெய்வார்கருவியி னொன்று. சுண்டுவிரல் - சின்னிவிரல். சுண்டுவில் - கன்முதலியசெலுத்தும் வில். சுண்டெலி - ஓரெலி. சுண்டை - சுண்டைச்செடி, நீர்க் குண்டு. சுண்ணக்கல் - சுக்கான்கல். சுண்ணப்பொடி - பராகம், வாசனைப் பொடி. சுண்ணமிடித்தல் - ஓமக்கிரியையி னொன்று. சுண்ணமொழிமாற்று - மொழி மாற்றுப் பொருள் கோள்களி னொன்று. சுண்ணம் - சதயம், சுட்டசாந்து, சுண் ணப்பொடி, பராகம், புழுதி. சுண்ணவரசி - முல்லை. சுண்ணவிரோதி - சவ்வீரம். சுண்ணாம்படித்தல் - சுண்ணாம்பு பூசுதல். சுண்ணாம்பு - சிப்பிமுதலியவற்றின் சுண்ணம். சுண்ணாம்புக்காறை - சுண்ணாம்புச் சாந்திடுதல். சுண்ணாம்புத்துடுப்பு - சுண்ணாம்பு தோண்டி. சுண்ணித்தல் - நீற்றுதல், பூசுதல். சுதஸதம் - தோத்திரம். சுதந்தன் - கூத்தாடி. சுதந்தி - வடமேற்றிசையானைக்குப் பெண்யானை. சுதந்திரம் - இட்டமானவாளுகை, உரிமை. சுதந்திரர் - உரிமைக்காரர். சுதந்திரவாளி - உரித்தாளி. சுதந்திரி - இட்டமாய் நடத்துவோன், உரிமைக்காரன், உரிமையுடை யாள். சுதந்திரித்தல் - இட்டமாய் நடத்தல், உரிமை பெற்றனுபவித்தல். சுதந்திரியம் - இட்டம். சுதமாரதை - ஓரலங்காரம், அஃது வல்லொற்று நீங்கியுள்ள சொற் களாலாக்கப்பட்டு மெல்லின மாக விசைப்பது. சுதம் - கேடு, முறைமை. சுதரிசனம் - அழகு, கண்ணாடி, சக்கிரம், சம்புநாவல், தேவலோகம், மேருமலை, வலியான். சுதருமம் - நற்கிரியை. சுதர்த்தனம் - குயில். சுதலம் - கீழேழுலகினொன்று. சுதனபாரம் - ஆயுதவுறை. சுதனம் - ஆயுதப்பொது. சுதனுவன் - விச்சுவகன்மா, வில்லாச் சிரமி. சுதன் - மகன். சுதன்மம், சுதன்மை - இந்திரன்வசந்த மண்டபம். சுதாகரன் - கருடன், சந்திரன். சுதாகிருது - கருடன். சுதாங்கரன் - சந்திரன். சுதாசூதி - சந்திரன், யாகம், வனசம். சுதாதாரன் - சந்திரன். சுதாத்துமசன் - பேரப்பிள்ளை. சுதாநிதி - சந்திரன். சுதாபிரீதி - சந்திரன், யாகம். சுதாமனு - மலை, முகில். சுதி - அறிஞன், சுருதி, பூருவபக்கம். சுதிக்கியானம் - சுருதிவித்தை. சுதினம் - நற்றினம். சுதுப்புநாங்காரை - ஓர்காரை. சுதும்பு - ஓர்மீன். சுதை - அமிழ்து, உதைகாற்பசு, கங்கை, சுண்ணச்சாந்து, சுவை நீர், பால், பூந்தேன், மகள், மின், வெண்மை, அக்கினிதேவி. சுதோற்பத்தி - பிள்ளைப்பேறு. சுத்தகாரணம், சுத்தசாரி - பரத வுறுப்புளொன்று. சுத்தகேவலம் - ஓரவத்தை. சுத்தகௌடம் - பஞ்சகௌடத் தொன்று. சுத்தக்கட்டி - கலப்பற்றபொற்கட்டி. சுத்தசத்தியம் - மகாவுண்மை. சுத்தசலம் - தெளிநீர். சுத்தசாத்துவிகம் - சித்துரூபசத்தி. சுத்தசாந்தம் - ஆனந்தரூபசத்தி. சுத்தசீவன் - குற்றமற்றபிராணி. சுத்தசூனியம் - அறத்தீர்ந்த வெறுமை. சுத்தசைதன்னியம் - சுத்தசுரூப ஞானம். சுத்தசைவம் - ஓர்சைவம். சுத்தஞானம் - மயக்கந்தீர்ந்தஞானம். சுத்தஞானி - பக்குவஞானி. சுத்ததாமதம் - சத்திரூபசத்தி. சுத்ததினம் - புண்ணியதினம், வருடத் தின் முதனாள், சென்றநாள். சுத்தநீர்க்கடல் - புறவாழிக்கடல். சுத்தபத்தி - மாசற்றபத்தி. சுத்தபுடம் - சுத்தப்புடம். சுத்தபோசனம் - ஆரதபோசனம். சுத்தப்பிரமம் - சருவசாட்சி. சுத்தப்பிழை - முற்றும்பிழை. சுத்தப்புடம் - எண்ணலிற்களைந் தெடுத்தது. சுத்தப்பொய் - முற்றும்பொய். சுத்தமனம் - வஞ்சகமற்றமனம். சுத்தமாயை - மகாமாயை. சுத்தமார்க்கம் - சத்தியமார்க்கம், நன்னடை. சுத்தம் - உண்மை, கலப்பற்றது, குற்றமற்றது, பவித்திரம், பொரிக் கறி. சுத்தம்பண்ணுதல் - தூயதாக்கல். சுத்தவாசனை - நறுமணம். சுத்தவாளர் - தெய்வபத்தர். சுத்தவாளி - சுத்தன். சுத்தவித்தை - சிவதத்துவமைந்தி னொன்று, அஃது ஞானமேறிக் கிரியை குறைந்தது. சுத்தவீரன் - மிகுவீரன். சுத்தவுபவாசம் - பட்டினி. சுத்தன் - அருகன், கடவுள், மெய்யன், சிவன், வருணாச்சிரம மில்லா ஞானி. சுத்தாங்கம் - கலப்பற்றது, முற்றும். சுத்தாத்துமா - பரிசுத்தவான். சுத்தாந்தபாலகன் - அரண்மனை காவலன். சுத்தாந்தம் - அரசன்றேவியில்லம். சுத்தாவத்தை - பரிசுத்தவவத்தை. சுத்தி - சங்கு, சுத்தியல், நெய்க்குத்தி முதலியபாத்திரம், பவித்திரம். சுத்திகரம் - சுத்திசெய்தல். சுத்திகரித்தல் - சுத்தமாக்குதல். சுத்திகரிப்பு - சுத்தம்பண்ணுதல். சுத்திகை - அகல், இப்பி. சுத்திசெய்தல், சுத்திபண்ணுதல் - பவித்திரஞ்செய்தல். சுத்தியடைதல் - சுத்தியாதல். சுத்தியல் - சிறுசம்மட்டி. சுத்தோதகம் - சுத்தசலம். சுநயம், சுநீதம் - நன்னடை. சுநாரம் - அடைக்கலான்குருவி, பாம்பின்முட்டை. சுந்தரத்தாது - துத்தபாஷாணம். சுந்தரமூர்த்தி - அறுபத்துமூவரி லொருவன். சுந்தரம் - அழகு. சுந்தரவல்லி - தெய்வயானை. சுந்தரன் - காமன், சுந்தரமூர்த்தி. சுந்தரி - அழகுள்ளவள், இந்திராணி துற்கை, பார்வதி, பெண், மூஞ்சூறு. சுந்தரிசுட்டது - இந்துப்பு. சுந்தன் - ஓரரக்கன். சுபகதி - சந்தோஷம், மோக்கம். சுபகரன் - ஈகையாளன். சுபகருமம், சுபகன்மம், சுபகாரியம், சுபகிரியை - மங்கலகாரியம். சுபகாலம் - நற்காலம். சுபகிருது - ஓராண்டு. சுபக்கம் - பொருளிருக்கும் பக்கம். சுபக்கிரகம் - சுபக்கோள். சுபங்கரி - பார்வதி. சுபசகுனம் - நன்னிமித்தம். சுபசெய்தி - நற்செய்தி. சுபசோபனம் - மங்கலம். சுபட்சம் - சுபக்கம். சுபதினம் - நற்றினம். சுபத்தலம் - தேவாலயம். சுபத்திகாதனம் - தொடைக்கும் முழங் காற்கு நடுவேயிரண்டுள்ளங் காலையுஞ் செலுத்திநிமிர்ந்திருத் தல். சுபத்திரேசன் - அருச்சுனன். சுபத்திரை - அருச்சுனன் மனைவி களிலொருத்தி. சுபமங்களம் - வாழ்த்து. சுபமிருத்து - நன்மரணம். சுபமுகுர்த்தம் - நன்முகுர்த்தம். சுபம் - காற்று, நன்மை, நித்திய யோகத்தொன்று, பரிசம், மங்களம், யுத்தம். சுபயோகம் - ஓர்யோகம். சுபர்ணகேது - சுபன்னகேது. சுபர்ணன் - சுபன்னன். சுபவசனம் - மங்கலவசனம். சுபவாக்கு - வினவுதல். சுபவாசகம் - நல்வசனம். சுபவாதனை - ஆன்மாவானந் தத் தழுந்தல். சுபவாரம் - நற்கிரகவாரம். சுபன்னகேது - விட்டுணு. சுபன்னன் - கருடன், சேவல். சுபாங்கி - அழகுள்ளவள், இரதி. சுபாசுபம் - இன்பதுன்பம், நன்மை தீமை. சுபாதிசயம் - நற்செய்தி. சுபாதிட்டானம் - சுவாதிட்டானம். சுபாபம் - சுவாபம். சுபாபாங்கை - அழகுடையாள். சுபாபாவிகம் - இயற்கையாயுள்ளது. சுபாலிகை - அடுப்பு. சுபாவக்குணம் - இயற்கைக்குணம். சுபாவஞானம் - அதிட்டானமுமா ரோபமுமற்றிருத்தல். சுபாவமுத்தி - சுத்தமுத்தி. சுபாவம் - இயல்பு, கரடகமின்மை. சுபாவவாதம் - ஓர்நூல். சுபாவி - நற்குணன், மெய்யன். சுபாவீகம் - சுபாவக்குணம். சுபானு - ஓர்வருடம். சுபானுபாலாதீதம் - பிரமம். சுபிஷம் - மிகுதி. சுபுட்பம் - கராம்பு, பவளமரம். சுபுத்தி - நற்புத்தி. சுபை - அரசாட்சி, தேவகூட்டம், நியாயஸ்தலம், மூங்கில். சுபையதார் - ஓரதிகாரி. சுபோகம் - சுபானுபோகம். சுபோகி - சுபானுபோகி. சுப்பி - விறகுசுள்ளி. சுப்பியம் - விளாம்பட்டை, வெள்ளி லோத்திரம். சுப்பிரசுதை - காட்டெருமைப்பால். சுப்பிரதந்தி - வட மேற்றிசை யானை யின் பெண்யானை. சுப்பிரதீகம், சுப்பிரதீபம் - மிக்க வொளி, வடகீழ்த்திசையானை. சுப்பிரதீபன் - கீர்த்திபெற்றோன். சுப்பிரபேதகம் - சிவாகமமிருபத் தெட்டினொன்று. சுப்பிரமணி - வச்சிரம். சுப்பிரமணியன் - குமரன். சுப்பிரம் - ஒளி, நித்தியயோகத் தொன்று, மிக்கவொளி, வெண் மை, வெள்ளி, கருடபச்சையின் குணம். சுப்பிரயோகம் - பஞ்சபாணாவத்தை யினொன்று, அஃது சொல்லுந் நினைவுமாயிருத்தல். சுப்பிரலாபம் - சாதூரியம். சுப்பெனல் - ஒலிக்குறிப்பு, விரைவின் குறிப்பு. சுமங்கலம் - நன்மங்கலம். சுமங்கலி - உமை, மங்கலியப்பெண். சுமங்கை - வரட்சுண்டி. சுமடர் - அறிவிலார், கீழ்மக்கள். சுமடி - அறிவிலாள். சுமடு - அறிவின்மை, சும்மாடு. சுமதி -நற்குணமுடையாள், நற்குணன், நன்மதி. சுமத்தல் - தாங்குதல், பாரமேற்றல், பொறுத்தல். சுமத்திரை - பாண்டுவின் மனைவி களுளொருத்தி. சுமத்து - சுமத்துதல், சுமத்தென் னேவல். சுமத்துதல் - ஏற்றுதல். சுமப்பு - சுமைதி. சுமம் - பூ. சுமரணை - சுவரணை. சுமருதல் - சுமக்குதல். சுமவாச்சுமை - சுமக்கொணாச்சுமை. சுமனசம் - பூ. சுமாரகம் - நினைப்பு. சுமாலி - ஓரிராக்கதன், கள். சுமானம் - நினைப்பு. சுமுகம் - நன்முகம். சுழகன் - நன்முகமுள்ளவன். சுமுத்திரை - சரிநிறை, சரியளவு, தசரதன் மனைவிகளுளொருத்தி, நன் முத்திரை, நிதானம். சுமை - பாரம். சுமைகாரன் - சுமைசுமப்பவன். சுமைகூலி - சுமையெடுத்தகூலி. சுமைதலை - பொறுப்பு. சுமைதாங்கி - ஏதண்டை, பொறுப் பாளி. சுமைதி - பாரம், பொறுப்பு. சுமையடி, சுமையடை - சும்மாடு. சுமையாள் - சுமைகாரர். சுமையிறக்கி - சுமைதாங்கி. சும்பகம் - ஊசிக்காந்தம், தீத்தட்டிக் கல், முத்தஞ்செய்தல். சும்பனம், சும்பிதம் - சூப்புதல், முத்தம். சும்பித்தல் - சும்பனஞ்செய்தல். சும்புள் - கடம்பு. சும்மா - இலவசம், விருதா. சும்மாடு - பட்டடை. சும்மை - ஆவாரை, ஊர், ஒலி, ஒலித் தல், சுமை, நகர், நாடு, நெற்போர். சுயகுணம் - சுபாவக்குணம். சுயகுரு - வமிசக்குரு. சுயசாதி - கலப்பற்றசாதி. சுயசோதி, சுயஞ்சோதி - இயற்கை யொளி, கடவுள், கலப்பில்லா வொளி. சுயபழக்கம் - இயல்பு. சுயபாரபத்தியம் - சுதந்திரவதிகாரம். சுயபாஷை - சொந்தப்பாஷை. சுயபுணர்ச்சி - தற்புணர்ச்சி. சுயபுத்தி - சொந்தப்புத்தி. சுயம் - இயல்பு, கலப்பற்றது, சொந்தம். சுயம்பாகம் - சமைத்தல். சுயம்பாகன், சுயம்பாகி - சமையற் காரன், சவுக்காரம். சுயம்பாடுதல் - சங்கீதம்பாடுதல். சுயம்பாரபத்தியம் - சுயபாரபத்தியம், தனியதிகாரம். சுயம்பிரகாசம் - இயற்கையொளி, கடவுள், கலப்பற்றவொளி. சுயம்பிரகாசன் - தற்சோதியானவன். சுயம்பிலிங்கம் - தானேயானவிலிங்கம். சுயம்பு - கடவுள், சிவன், தானாக வாதல், பிரமன். சுயம்வரம் - சுவயம்வரம். சுயாதிபதி - சக்கிரவத்தி, தன்னரசு காரன். சுயாதிபத்தியம் - சக்கிரவத்தித்துவம், சுயவதிகாரம். சுயாதீனம் - சொந்தம், தன்னிட்டம். சுயாதீனன் - தன்னிட்டகாரன். சுயிரகம் - குசப்புல். சுயேச்சை - தன்னிச்சை, தன்னிட்டம். சுயோகி - கள். சுயோதனன் - துரியோதனன். சுரகுரு - வியாழன். சுரங்கம் - கீழறை, சாதிலிங்கம், திலக சிந்தூரம், தேன்தோடம் பழம், தோன்றா மலுள்ளறுக்குந் துவாரம். சுரசத்துரு - அசுரர். சுரசந்தி - ஓரிசை. சுரசம் - கற்கண்டு முதலிய சுயசார வஸ்து, சாறு, சிறு கிழங்கு, சுகிர்த சாரம், துளசி, நறும்பிசின், பாதரசம். சுரசனி - இரவு. சுரசன்னிதி - வானோர் கூட்டம். சுரசிதம் - இரட்சிப்பு. சுரசூலை - ஓர்சூலை. சுரச்சதி - சுரத்தின்றாளம். சுரஞ்சனம் - கமுகு. சுரடி - ஓர்பண். சுரணை - சுவரணை. சுரத்தாலி - கும்பதாசி. சுரதநீர் - காமநீர். சுரதநூல் - காமநூல். சுரதமங்கை - வேசி. சுரதம் - அன்பு, பாதரசம், புணர்ச்சி, மருந்திழிசாரம், இசைப்பு, ஒட்டல். சுரதரு - தேவதரு. சுரதலீலாவினோதம் - புணர்ச்சி விளை யாட்டிற்பொழுது போக்கு. சுரதலீலை - புணர்ச்சி விளையாட்டு. சுரதவித்தை - புணர்ச்சிவிற்பன்னம். சுரதனு - வானவில். சுரதாபதயிலம் - ஓர்மருத்தெண்ணெய். சுரத்தல் - உண்டாதல், ஊறுதல், நிறைதல், பயத்தல். சுரநடை - பாலைப்புறம், அஃது சுரம்புகுமாதர்வருத்தங்கூறல். சுரநதி - கங்கை. சுரபதம் - ஆகாயம், தேவுலோகம். சுரபதி - சுரர்பதி. சுரபி - கந்தகத்தூள், சாதிக்காய், சித்திரைமாதம், துளசி, பசு, பிரமி, பூமி, மது, மல்லிகை, வாசனை, கள்ளி. சுரபிபத்திரை - சம்புநாவல். சுரபிவாணன் - காமன். சுரபு - இலவம்பிசின். சுரபுன்னை - ஓர்மரம். சுரப்பு - இரத்தமுதலிய சுரந்ததினால் வருங்கனப்பு, சுரத்தல். சுரப்புவடிவு - முலைமேற்றிரள். சுரமண்டலம் - ஓர்வாத்தியம். சுரமதி - சிலம்பி. சுரம் - அருநெறி, இசை, உட்டுளை, ஓருப்பு, கள், காடு, காய்ச்சல், கொம்பினுட்குருத்து, பாலை நிலம், வழி. சுரம்பாடுதல் - சத்தசுரப்பரிட்சை பண்ணல். சுரம்போக்கு - பாலையிற்செல்லல். சுரம்போடுதல் - சுரஞ்சொல்லிப்பாடு தல். சுரரிடம் - தேவலோகம். சுரர் - வானோர். சுரர்பகைவர் - அசுரர். சுரர்பதி - இந்திரன், தேவுலோகம். சுரலோகம் - தேவுலோகம். சுரழ் - இலவம்பிசின். சுரளிகை - பாலைமரம். சுரன் - அறிஞன், சூரியன். சுராகரம் - தெங்கு. சுராட்டு - இந்திரன், உலகபுருடன். சுராட்புருடன் -உலகபுருடன், விட்டுணு. சுராபகை - கங்கை. சுராபானம் - கள்முதலியனகுடித்தல். சுராபானி - குடிகாரன். சுராரலர் - இராக்கதர். சுராரி - அசுரன், பைசாசம். சுரார்க்கம் - பொன். சுராலயம் - கள்விற்குமிடம், சுவர்க்க லோகம், மேரு. சுராளம் - கெச்சைநடை. சுரி - ஆணரி, சங்குச்சுரி, சுரியென் னேவல், சுழற்சி, சேறு, தமர், முறுக்கு. சுரிகுழல் - அளகம், கவசம், பெண். சுரிகை - உடைவாள், கவசம். சுரிதகம் - கலிப்பாவுறுப்பாறனு ளொன்று. சுரிதம் - கலக்கப்பட்டது, வெட்டப் பட்டது. சுரிதல், சுரித்தல் - சுருங்கல், சுழித்தல், சுழித்துள்ளேவாங்கல், சேறாதல். சுரிபோடுதல் - தமரிடுதல். சுரிப்புறம் - சங்கு, நத்தை. சுரிமண் - சேறு. சுரிமுகம் - சங்கு, நத்தை. சுரியல் - இளைஞர்மயிர், சுரிதல், சுழலல், நீர்ச்சுழி, பெண்மயிர், மயிர். சுரியாணி - புரியாணி. சுரியூசி - தமரூசி. சுரீரிடுதல் - அச்சக்குறிப்பு, ஒலிக் குறிப்பு. சுரீரெனல் - ஒலிக்குறிப்பு, விரைவுக் குறிப்பு. சுருக்கங்கோரை - ஓர்கோரை. சுருக்கம் - அடக்கமானசெய்கை, கட்டு, குறைவு, சுருங்கல். சுருக்கல் - சுருக்குதல். சுருக்கி - ஆமை, சிறுகீரை, தொட் டாற் சுருக்கி. சுருக்கு - உருவுதடம், கட்டு, கண்ணி, சுருக்கம், சுருக்கென்னேவல், சுருங்கப் பிடித்துக்கட்டியது, நெய்த்துடுப்பு, மடிப்பு. சுருக்குதல் - அடக்குதல், ஒடுக்குதல், கட்டுதல், சிறுகப்பண்ணல், சுருங்கச்செய்தல். சுருக்குப்பிடித்தல் - சுருக்குப்பிடித்துக் கட்டுதல். சுருக்குப்பை - சுருக்கிவிடும்பை. சுருக்குப்போடுதல் - உருவுகயிறிடுதல். சுருக்குவைத்தல் - கண்ணிவைத்தல். சுருங்கச்சொல்லணி - ஓரலங்காரம், அஃது அடைமொழி யொப்புமை யாற்றலான் அல்பொருட் செய்தி தோன்றப் புகழ்பொருட் செய்தியைச் சொல்வது. சுருங்கச்சொல்லல் - நூலழகிலொன்று. சுருங்கப்பிடித்தல் - குறைத்தல். சுருங்கல் - குறைதல், சுருங்குதல், நுழைவாயில், மாலை. சுருங்கு - சலதாரை, சுருங்கென்னே வல். சுருங்குதல் - அடக்கமாயிருத்தல், இறுகுதல், ஒடுங்குதல், குறைதல், கூம்புதல், கெடுதல். சுருங்கை - கோட்டையிற்கள்ள வழி, நுழைவாயில், மதகு. சுருசுருத்தல் - ஊடுருவுமொலிக் குறிப்பு, விரைவுக்குறிப்பு. சுருசுருப்பு, சுருசுரெனல் - சுருசுருத்தல். சுருட்டி - ஆலவட்டம், ஓரிராகம், மயிர்ச்சிகைப்பூடு. சுருட்டிப்பிடித்தல் - குறைக்குதல். சுருட்டிவாங்குதல் - குறண்டவாங்குதல். சுருட்டு - சுருட்டென்னேவல், சுருள். சுருட்டுக்கொழுக்கட்டை - ஓர்கொழுக் கட்டை. சுருட்டுதல் - சுருளச்செய்தல். சுருட்டுவாள் - சுருட்டும்வாள். சுருட்டை - ஓர்பாம்பு. சுருட்டைவிரியன் - ஓர்விரியன்பாம்பு. சுருணி - யானைத்தோட்டி. சுருணை - சுருண்டது, நூல் முதலிய வற்றின் பந்து. சுருதம் - சரித்திரம். சுருதி - ஒலி, காது, சுதி, வேதம். சுருதிசம்மதம் - பிரமானுபவம். சுருதிசாரம் - ஓர்ஞானநூல். சுருதிகூட்டுதல் - சுதியெடுத்தல். சுருதிவிலோசனம் - வேதமறியும் விவேகம். சுரும்பா - வண்டு. சுரும்பாவன் - மன்மதன். சுரும்பு - ஆண்வண்டு, வண்டு. சுருவம், சுருவை - நெய்த்துடுப்பு. சுருளி - தொழுகண்ணி. சுருளுதல் - சுருளாதல், வளைதல். சுருளை - சுருள், நூற்சுருள் முதலியன. சுருள் - ஐம்பாலினொன்று, அஃது பின்னேசெருகல், சுருளென்னே வல், தாமரையுட்சுருள், நூற்சுருள் முதலியன, பெண்மயிர், வெற்றி லைச்சுருள். சுருள்வு - சுருட்சி. சுரூபம் - உருவம், நல்லுருவம். சுரூபி - அழகுள்ளவள், அழகுள்ள வன், உரூபி. சுரூபிணி - நல்லரூபி. சுரேசன் - இந்திரன், ஈசானன், குமரன். சுரேசுவரி - உமை, தேவகங்கை. சுரேந்திரன் - இந்திரன். சுரை - அம்புத்தலை, உட்டுளை, களவு, கள், சுரைக்கொடி, பசு, விலங்கின் முலை, பசுவின்முலை. சுரைக்கந்தகம், சுரைக்காய்க்கந்தகம் - ஓர்வகைக் கந்தகம். சுரோணி - யோனி. சுரோணிதம் - உதிரம், மகளிர் சூதகம். சுரோத்தமன் - சூரியன். சுரோத்திரம் - காது, கேள்வி. சுரோத்திரியம் - கற்றோர்க்கிடப் பட்டகாணி முதலியன. சுலபம் - அற்பம், இலேசு. சுலவல், சுலவுதல் - சுழலல், சுழற்றுதல். சுலனன் - அக்கினி. சுலாவல், சுலாவுதல் - சுற்றிவருதல், சுற்றுதல். சுலாவுறட்டி - ஓர்பணிகாரம். சுலு - இலேசு. சுலுகம் - கலகம், குறைவு, சிறங்கை, சேறு. சுலுபம், சுலூடம் - அற்பம். சுலுப்பு - ஓர்மரக்கலம். சுலோகம் - புகழ், வசனம். சுலோகி - கள். சுலோசனம் -மான்,மூக்குக் கண்ணாடி. சுலோசனை - மூக்குக்கண்ணாடி. சுலோபம் - அற்பம், எறும்பு. சுல் - வெள்ளி. சுல்லம் - கயிறு. சுல்லி - அடுப்பு, மடைப்பள்ளி. சுல்லு - வெள்ளி. சுல்வம் - சிறங்கை, சிறுமை, செம்பு. சுவகதம் - சுகதம். சுவசந்தம் - சித்தீராபூரணை. சுவசனம் - சாதூரியம், நல்வசனம். சுவச்சம் - குற்றமற்றது, சொச்சம். சுவடி - எழுதிய புத்தகம். சுவடு - அடையாளம், கட்டு, குறிப்பு, சுளுகு, தழும்பு, பக்கரை. சுவணகாரர் - தட்டார். சுவணதானம் - இரணியதானம். சுவணபுட்பம் - அருச்சனைசெய்யும் பொன். சுவணபூமி - தேவுலோகம். சுவணமயம் - பொன்மயம். சுவணம் - பொன். சுவதந்தரம், சுவதந்திரம், சுவதந்திரியம் - சுதந்திரம். சுவத்தம் - சொஸ்தம். சுவத்தி, சுவஸ்தி - ஓரடையாளம், மங்கலவடை. சுவத்திகம்,சுவஸ்திகம் - ஓரடையாளம். சுவத்திகாதனம் - தொடைக்குமுழங் காற்கு நடுவேயிரண்டுள்ளங் காலையுஞ் செலுத்தியிறு மாந் திருப்பது. சுவப்பிரம - நரகம், பாதலம், வளை. சுவயங்கிருதம் - தானேயானது. சுவயத்தானம் - சொந்தஇடம். சுவயம் - சுயம். சுவயம்பு - சுயம்பு. சுவயம்புவன் - சுவாயம்பு. சுவயம்வரம் - தன்னிட்டம், தானாக வரித்து மணமாலையிடல். சுவயம்வரை - மாலையிட்டு மண முடித்தபெண். சுவரகழ்கருவி - கன்னக்கோல். சுவரணை - உணர்ச்சி. சுவரொட்டி - அணைசுவர், ஓர்பூடு. சுவர்க்கபதவி, சுவர்க்கபூமி - தேவு லோகம். சுவர்க்கம் - சொற்கலோகம், முலை. சுவர்க்கருவிலி - ஓர்பாம்பு. சுவர்க்கர் - வானோர். சுவர்க்கலோகம் - விண்ணுலகம். சுவர்க்கவீடு - மோக்கம். சுவர்க்கோழி - ஓர்வண்டு. சுவர்ணம் - சொன்னம். சுவர்தாங்கி - அணைசுவர். சுவர்த்தலம் - சுவர். சுவர்ப்பாம்பு, சுவர்வளையன் - சுவர்ப் புடையன். சுவர்வைத்தல் - சுவர்கட்டுதல். சுவலை - அரசமரம். சுவலோகம் - மேலேழுலகினொன்று. சுவல் - குதிரைமயிர், தோண்மேல், பிடர், முதுகு, மேடு. சுவல்வரி - அணில். சுவவு - சுவர்க்கம், பறவைமூக்கு, மூஞ்சூறு. சுவறல், சுவறுதல் - ஊறுதல், காய்தல், வற்றல். சுவற்பம் - சொற்பம், நெற்றி. சுவற்றல் - குடித்தல். சுவற்றுதல் - குடித்தல், சுவறப்பண் ணுதல். சுவனன் - சந்திரன், சூரியன், தீ. சுவன்னகாரன் - பொற்கொல்லன். சுவன்னயூதி - செப்புமல்லிகை. சுவா - நாய். சுவாகசம், சுவாகதம் - கிளி. சுவாகா - அக்கினிதேவி, மந்திர முடி வினொன்று. சுவாசகந்தி - இத்தி. சுவாக்கீரை - ஓர்பூடு. சுவாசகம் - கிளி, சவட்டுமண், பேர முட்டி, விஷமுட்டி. சுவாசகாசம் - ஓர்நோய். சுவாசக்குத்து - ஓர்நோய். சுவாசங்கட்டியேற்றல் - பிராண வாயு வைச் சுழிமுனை நாடி வழியாய்ச் செலுத்தல். சுவாசமடக்குதல் - பிராண வாயு வைக்கும் பித்தல். சுவாசம் - உயிர்ப்பு, சவட்டுமண், நல்லிருப்பிடம். சுவாசம்வாங்குதல்-பிராண வாயுவைப் பூரித்தல். சுவாசம்விடுதல் - பிராண வாயுவை யிரேசித்தல். சுவாதந்திரியம் - சுதந்திரம். சுவாதம் - ஓர்நோய், சுவாசம். சுவாதி - சோதிநாள். சுவாதிட்டானம் - ஆறாதாரத்தொன்று, அஃது குய்யத்தானம். சுவாதீனம் - சுயாதீனம். சுவாது - தித்திப்பு. சுவாத்தியம் - சுகம். சுவாத்தியாயம் - ஏடாசிரியனாகப் படித்தகல்வி, மந்திரமுச்சரித்தல், வேதமோதல், வேதம். சுவாபப்பிரமாணம் - ஓரளவை, அஃது ஒரு சொற்பல பொருள் விரிந்த வழி அதற்கேற்ற பொருள் கொள் ளல், (உம்) பானையூர்ந் தோன் தோட்டி தாவென்றாற் பிறதொரு தோட்டி யென்றுணராமல் யானைத் தோட்டி கொடுத்தல். சுவாந்தம் - மனது. சுவாபம் - இயல்பு. சுவாபாவிகம் - தானாயிருத்தல். சுவாமி - அரசன், அருகன், உவாத்தி, கடவுள், கந்தன், குரு, சிவன், பொன். சுவாமிநாதன் - கந்தன். சுவாமிமலை - ஓர்மலை. சுவாயம்பு - ஓர்மனு. சுவாயம்புகம் - சிவாகமமிருபத் தெட்டினொன்று. சுவாரசம் - வெள்ளிலோத்திரம். சுவாரி - கப்பலின்பின்னணியம், சிவி கைமுதலியயானம். சுவார்த்தம் - இயல்பாயுள்ளது, சுய திரவியம். சுவார்த்தவனுமானம் - இயல்பனு மானம், சுயமதிப்பு. சுவாலித்தல் - சொலித்தல், பற்றியெரி தல். சுவானம் - நாய், நாயுருவி, பொன். சுவானுபவம் - சுகவனுபவம், சுயவனு போகம். சுவானுபூதி - தெய்வவருள், தெய்வ வறிவு. சுவானுபூதிகம் - சுயமுயற்சியாற் பெற்றுக்கொண்டவறிவு. சுவி - இத்திமரம், துளசி. சுவிகரித்தல் - அனுபவித்தல், தன தாக்கல், வழங்குதல். சுவிகாரம் - சுவிகரிப்பு. சுவிகை - கச்சோலம், கள். சுவிக்கிராதம் - வீரம். சுவிசட்சணம் - பேரறிவு. சுவிசாலம் - விசாலம். சுவிசேடகன் - சுவிசேஷம் போதிப் போன், நற்செய்தி சொல்வோன். சுவிசேஷம் - நற்செய்தி. சுவீகரச்சுதன் - சுவீகாரபுத்திரன். சுவீகரம், சுவீகாரம் - சுவிகாரம். சுவேச்சை - தன்னிச்சை. சுவேதகம் - சவரிலோத்திரம். சுவேதகாண்டம் - வஞ்சிக்கொடி. சுவேதகம் - வேர்வையிற்பிறப்பன. சுவேதசாரம் - நாணற்புல். சுவேததீவு - ஓர்தீவு. சுவேதமூலம் - சாரணை. சுவேதம் - நாணல், மாவிலங்கமரம், வஞ்சி, வியர்வை, வெண்மை, வெள்ளி. சுவேதநாதம் - இந்திரியம். சுவேதவராககற்பம் - விட்டுணுபன்றி யாகவந்தகற்பம். சுவேதவராகமூர்த்தி - விட்டுணு. சுவேதவனப்பெருமாள் - மெய்கண்ட தேவர். சுவேதவனம் - திருவெண்காடு. சுவேதவாகனன் - அருச்சுனன். சுவேதாசுவதரம் - உபநிடதம் முப்பத்தி ரண்டினொன்று. சுவை - இரசம், இனிமை, ஓரலங் காரம், சித்திரைநாள், சுவையென் னேவல். சுவைத்தல் - உண்டல், உருசித்தல். சுவைப்பண்புத்தொகை - மதுரப் பண்பு தொக்குநிற்றல், (உம்) தேன்மொழி. சுழங்குதல் - சுழலுதல். சுழலமாடுதல் - சுற்றுதல். சுழலன் - எத்தன். சுழலாவிரை - ஓர்ஆவிரைச்செடி. சுழலுதல் - கலங்குதல், சுற்றுதல். சுழலையாடுதல் - சோருதல். சுழல் - காற்றாடி, சுழலென்னேவல், சுழல்வு. சுழல்காற்று - சூறைக்காற்று. சுழல்நோய் - ஓர்நோய். சுழல்படை - வளைதடி. சுழல்வண்டு - ஓர்வண்டு. சுழல்வு - சுழற்சி. சுழற்சி - கலக்கம், சுற்று. சுழற்றல் - கிறுகிறுப்பு, சுற்றி யாட்டல். சுழற்றி - கருவண்டு, சுழற்சி. சுழற்று - சுழற்சி, சுழற்றென்னேவல். சுழற்றுதல் - சுழலச்செய்தல், சுற்றுதல். சுழாரை - பொன்னாவிரை. சுழி - இலக்கணச்சுழி, உரோமச் சுழி, கபடம், சுழியென்னேவல், நீர்ச்சுழி முதலியன, மூர்க்கம், விந்து. சுழிகுளம் - சித்திரக்கவியினொன்று, அஃது நான்கடியுஞ்சுற்றிவாசிக் கினுஞ் சரிவரத்தொடுக்குங்கவி. சுழிகை - ஓர்தலம், கள், சுருள், சுழிதல். சுழிக்காற்று - சூறைக்காற்று. சுழிக்குணம் - சுழித்தனம். சுழிக்குதல் - சுருட்டுதல், சுற்றிவாங்கு தல், வட்டமிடுதல். சுழிதல் - கலங்கல், சுழித்தல். சுழித்தல் - எழுச்சி, சுழிக்குதல். சுழித்தனம் - கபடப்புத்தி. சுழித்துவாங்குதல் - உள்ளேயிழுத்தல். சுழிப்பு - சுழித்தல், தொட்டம். சுழிப்புத்தி - கபடத்தனம். சுழிமழை - திக்குத்திக்காய்ப் பெய்யும் மழை. சுழிமாந்தம் - ஓர்நோய். சுழிமின்னல் - பகிர்விடும்மின். சுழிமுனை - மூலாதாரத்திலிருந்து உச்சித்து வாரம்வரைக்குநிற்குந் நாடி. சுழியச்சு - தட்டார் கருவியி னொன்று. சுழியப்பேசுதல் - குத்திரமாய்ப் பேசுதல். சுழியல் - ஆண்பெண்மயிர், சுருள். சுழியன் - வஞ்சகன். சுழியாணி, சுழியாணிக்கட்டை - கதவு நிற்குங்குழிக்குற்றி. சுழியாணிக்கதவு - குழிக்குற்றியினிற் குங்கதவு. சுழியோடுதல் - நீரினுருவித்தாழ்தல். சுழுத்தி - மயக்கமானநித்திரை, மூன்றாமவத்தை, அஃது இதயத் தானம். சுழுந்து - சுளுந்து. சுழுனை - சுழிமுனை. சுளகு - முறம், விசாகநாள். சுளகுப்பின்னல் - ஓர்வகைப்பின்னல். சுளாவுதல் - சுலாவுதல். சுளி - புளியாரை. சுளிகை - முருங்கை. சுளிக்கு - ஊன்றுகோல். சுளிதல் - கோபித்தல். சுளித்தல் - கோபித்தல், சினக்குறிப்பு. சுளிப்பு, சுளிவு - சினக்குறிப்பு, சினம். சுளுகன் - உபாயப்புத்திக்காரன். சுளுகு - உபாயம், அற்பம், சிறுமை. சுளுகோதகம் - சிறங்கைநீர். சுளுக்கு - உளுக்கு. சுளுக்குதல் - உளுக்குதல். சுளுந்து - சூள். சுளுவு - சலக்கரணை, சுலபம். சுளை - பலாக்காய் முதலியவற்றின் சுளை. சுள்-அற்பம்,கருவாடு,சூள், மெல்லிது. சுள்ளக்கம் - கோபம். சுள்ளக்கன் - கோபி. சுள்ளம் - கோபம். சுள்ளலன் - ஒல்லாடி. சுள்ளலி - உயரத்துக்குத்தக்க பருமை யற்றது, பருமையற்றவள். சுள்ளல் - சுள்ளி, பருமையற்றது. சுள்ளாக்காய் - மிளகுகாய். சுள்ளாணி - மெல்லியவாணி. சுள்ளாப்பித்தல் - அடித்தல், உறைத் தல், எரிதல், சூடுகாட்டல், வீசுதல், வேகங்கொள்ளல். சுள்ளாப்பு - உறைப்பு, சீக்கிரம், வெப்பம். சுள்ளி - அனிச்சமரம், ஆச்சாமரம், சிறுவிறகு, ஞாழல், மயிர்க் கொன் றை, மாமரம். சுள்ளிடுதல் - உறைத்தல், நோதல். சுள்ளிடுவான் - ஓர்பூச்சி, மிளகுகாய். சுள்ளு - கோபம், சுள், வெப்பம். சுள்ளுப்பூச்சி - சுள்ளிடுவான். சுள்ளெறும்பு - கொள்ளியெறும்பு. சுள்ளை - மட்கலஞ்சுடுசூளை. சுறடு - வரண்டது. சுறட்டலன் - முரடன், வரண்டவன். சுறட்டன் - முரடன். சுறட்டு - துறட்டு. சுறட்டுத்தனம் - முரட்டுத்தனம். சுறட்டுப்பண்ணுதல் - முரண்டு பண் ணுதல். சுறட்டுப்பிடி - முரட்டுப்பிடி. சுறட்டுவலி - குறண்டலவலி, முரட்டுப் பிடி. சுறட்டை - பசையற்றுறண்டினது. சுறணம் - கரணை. சுறண்டி - ஓர்கரண்டி, கவர்பவன், தூண்டிலிடுபவன். சுறண்டிவிடுதல் - மூட்டிவிடுதல். சுறண்டு - கோள், சருவல், சுறண் டென்னேவல். சுறண்டுதல் - கவர்தல், சருவுதல், தூண்டிவிடுதல், பிறாண்டுதல். சுறவம், சுறவு - சுறா. சுறா - மகரமீன், மகரராசி. சுறாக்கவடி - ஓர்விளையாட்டு, மறியற்கூடம். சுறாக்களிறு - ஆன்சுறா. சுறாளம் - கதி, கோபம். சுறீரெனல் - ஒலிக்குறிப்பு, விரைவுக் குறிப்பு. சுறுக்கன் - சுறுக்குள்ளது, சுறுக் குள்ளவன். சுறுக்கு - கதி, கூர்மை. சுறுக்கெனல் - விரைவின்குறிப்பு. சுறுசுறுத்தல் - சுறுசுறுப்பு. சுறுசுறுப்பு - விரைவு, வேகம். சுறுசுறெனல் - சினக்குறிப்பு, விரை வின்குறிப்பு. சுறுதி - சுறுசுறுப்பு. சுறை - கொத்தான். சுறோணிதம் - சுரோணிதம். சுறோணிதவழலை - இந்துப்பு. சுற்பம் - செம்பு. சுற்றத்தார் - இனத்தார், துணைவர், பரிசாரகாரர். சுற்றந்தழால் - இனந்தழுவியிருத்தல். சுற்றம் - அரசர்க்குத்துணையி னொன்று, உறவு. சுற்றல் - சுற்றுதல். சுற்றளவு - புறஅளவு. சுற்றிக்கொள்ளுதல் - கவர்தல், சிக்குப் படுதல், சூழ்ந்து கொள்ளுதல். சுற்று - உழற்சி, கயிறுமுதலிய சுற்றுஞ் சுற்று, கவர்தல், சுருள், சுற்றளவு, சுற்றுப்புறம், சுற்றென்னேவல், மதில், மதிற்சுற்று, வட்டமா யோடல். சுற்றுக்கட்டு - எழுத்துக் கூட்டிக் கட்டியெழுதல், வீடுகளின் புறக் கட்டு. சுற்றுக்கோயில் - சுற்றுத்தேவதை கோயில். சுற்றுச்சுழற்சி - சுற்றுத்திரிபு, மாறு பாடு. சுற்றுதல் - கவர்தல், சுருட்டுதல், சூழுதல், நூன் முதலிய சுற்றுதல். சுற்றுப்படாகை - அயற்கிராமம். சுற்றுப்பட்டு - சுற்றுப்புறம். சுற்றுப்பலி - திக்குப்பலி. சுற்றுப்பிரகாரம் - கோயின் முதலிய வற்றில் வீதி. சுற்றுப்புறம் - அயல். சுற்றுப்பூசை - திக்குப்பூசை. சுற்றுமதில், சுற்றுமதிள் - உப்பரிகை, அஃது இராசசின்னத்தொன்று. சுற்றுவழி - நேரற்றபாதை. சுற்றுவாரி - கல்வியூரி, சுவர்ப்புறத்து நீண்டவுத்திரம். சுனகன் - நாய். சுனக்குடம் - சதுரக்கள்ளி. சுனம் - வெள்ளுள்ளி. சுனாசி, சுனாசீரன் - இந்திரன். சுனி - பெண்ணாய். சுனுக்கு - சதுரக்கள்ளி. சுனை - உரோசம், கரு, குளம், கூர், நீரடுத்தவிடம், நீரூற்று, தினவு. சுனைதல் - குழியாக்கல், குழைதல், மிருதுவாதல், வாடல். சுனைத்தல் - சொறிதல். சுனைத்தவிடு - உமித்தவிடு. சுனைவு - பேய்க்கடலை. சுன் - சனி, வட்டம், விந்து, வெண்மை, வெறுமை. சுனன்ச்சி - சத்துச்சாரம். சுன்னத்து - விருத்தசேதனம். சுன்னம் - விந்து. சுன்னுக்கட்டி - திரட்டுப்பாற்கட்டி. சூ சூ - மிருகங்களையோட்டுங் குறிப்பு, வியப்புச்சொல். சூகம் - அம்பு, இரக்கம், காற்று, சுனை, தவழ்சாதிப்பொது, தாமரை, நெல்வால், முண்மயிர். சூகரம் - பன்றி, மான். சூகை - ஓரெறும்பு, சுழற்சி, தலைச் சுழற்சி, யானை, வீட்டின்பின் புறம். சூகைக்கண் - கூச்சக்கண். சூகையாடுதல் - கிறுகிறுத்தல், சுழலல். சூக்கம் - சூட்சம். சூக்காட்டுதல் - உச்சுக்காட்டுதல். சூக்காய்நண்டு - ஓர்நண்டு. சூககீடம் - மயிர்க்குட்டி. சூக்குமகாயம், சூக்குமசரீரம், சூக்கும தேகம் - நுண்வடிவானவுட் சரீரம், புரியட்டகாயம். சூக்குமதண்டுலம் - திப்பிலி. சூக்குமதாரி - வஞ்சகன். சூக்குமபஞ்சாக்கரம் - ஒர்பஞ்சாக் கரம். சூக்குமபத்திரம் - கடுகு, கொத்த மல்லி, சீரகம், செங்கரும்பு. சூக்குமபூதம் - நுண்வடிவானவுட் பூதம். சூக்குமம் - அணு, ஓரலங்காரம், கடவுள், சிவாகமமிருபத்தெட்டி னொன்று, சீவதேகம்மூன்றி னொன்று, தவறு, நுண்ணிய வறிவு, நுண்மை, வஞ்சகம், வானோர் வரந்நாலி னொன்று, அஃது கண்டிப்பின்மை. சூக்குமர் - ஓர்வகைத்தேவர். சூக்குமித்தல் - நுட்பமாயிருத்தல். சூக்குமை - நான்குவாக்கினொன்று. சூக்குளி - வெற்றிலை. சூசகம் - உளவு. சூசகன் - உவாத்தி, ஒற்றன். சூசம் - துருவாட்டேறு. சூசனம் - அறிவித்தல், பார்த்தல். சூசனை - சயிக்கை, நுண்மை, போதனை, விவேகம். சூசாக்கிரம் - ஊசிமுனை. சூசி - ஊசி, குறிப்பு, துளை. சூசிகன் - தையற்காரன். சூசிகாதரம் - யானை. சூசிகாபாணம் - அத்திரம். சூசிகாமுகம் - சங்கு. சூசிகாவாயு - சூதகவாயு. சூசிகை - ஊசி, யானைத்துதிக்கை. சூசிக்கல் - ஊசிக்காந்தம். சூசியம் - சூட்டிறைச்சி. சூசியாசியம் - மூஞ்சூறு. சூசுகம் - முலைக்கண். சூச்சான் - ஓர்விளையாட்டு. சூடகம் - கிணறு, கைவளை. சூடம் - சடை. சூடல் - சூடுதல். சூடன் - ஓர்மீன், கருப்பூரம். சூடாகரணம், சூடாகருமம் - குடுமி வைத்தல். சூடாக்கல் - ஓர்கல். சூடாமணி - ஓர்தேவமணி. சூடாமணிநிகண்டு - ஓர்நிகண்டு. சூடாலம் - தலை. சூடாலைக்கல் - ஓர்கல். சூடி - புடைவை. சூடிகை - முடி. சூடிச்சி - எவட்சாரம். சூடு - உச்சிக்குடுமி, எருத்துத்திமில், சுடுதல், சூடுதல், சூடென்னேவல், சேவற்சூடு, தலை, நுனி, நென் முதலியவற்றினருவிக்குவியல், மயிற்சூடு, முடி, வெடி, வெப்பம். சூடுகட்டுதல் - போரடுக்குதல். சூடுகாட்டுதல் - சிறுசூடுபடுத்தல். சூடுதல் - அணிதல். சூடுமிதித்தல் - போரடித்தல். சூடை - ஓர்மீன். சூட்சம் - அற்பம், சுருக்கம், சூக்குமம். சூட்சாதிசூட்சம், சூட்சானுசூட்சம் - அதிசூக்குமம். சூட்சுமதரிசனம், சூட்சுமதிஷ்டி - அறி வினாற்காண்டல், கூர்மையாய்க் காணல். சூட்சுமபுத்தி - நுண்ணியபுத்தி. சூட்சுமம் - சூக்குமம். சூட்டடுப்பு - ஓரடுப்பு. சூட்டல் - அணிதல், ஏற்றுதல். சூட்டிறைச்சி - சுட்டவிறைச்சி. சூட்டு - சூட்டுந்தன்மை, சூட்டென் னேவல், நுதலணிமாலை, மாலை. சூட்டு - சூடுந்தன்மை, முடிப்பு. சூட்டுக்கோல் - சுடுங்கோல். சூட்டுதல் - அணிதல், ஏற்றிச்சொல் லுதல், நியமித்தல், முடித்தல். சூட்டுப்பாய் - களப்பாய். சூட்டுமாலை - தோளணிமாலை. சூட்டுமிதி - நென்முதலிய வற்றின் சூடுமிதித்தல். சூட்டெண்ணெய் - எரித்துவடிக்கு மெண்ணெய். சூதகக்கட்டி - இருதுநீர்க்கட்டி. சூதகக்கிராணி - ஓர்நோய். சூதகசத்துரு - காந்தம். சூதகசன்னி - ஓர்சன்னி. சூதகண்டகி - சத்திசாரம். சூதகமலடு - ஓர்மலடு. சூதகம் - ஆசூசம், பழமை, பிறப்பு, மகளிர்பூப்பம், மாமரம், அரு வருப்பு. சூதகவாயு - இருதுநீர்க்கட்டும் வாயு. சூதகவீடு - ஆசூசவீடு. சூதசாலை - மடைப்பள்ளி. சூதத்தைப்பொன்னாக்கி - நாகபா ஷாணம். சூதநதி - ஓர்நதி. சூதநோக்கல் - நீலாஞ்சனக்கல். சூதபாஷாணம் - இரசத்திலுண்டாக் கும் பாஷாணம். சூதமாமுனி - ஓரிருடி. சூதம் - இரசம், குறி, சூதாடுகருவி, சூது, பவளமல்லிகை, பாதரதம், புளிமா, மடைத்தொழில், மன் மதன் கணையினொன்று, மா மரம், வண்டு, கேட்டல், விழுதல். சூதராட்சசன் - பொன்னம்பர். சூதர் - சூதாடுவார், தேர்ப்பாகர், பரணர், புகழ்வோர். சூதவஞ்சனம் - நீலாஞ்சனக்கல். சூதவம் - வண்டு. சூதவைரி - மூவிலைக்குருத்து. சூதனம் - அழித்தல். சூதன் - அரசர்க்குப் பார்ப்பனத்தி பெற்று இரதமூர்வோன், சமை யற்காரன், சூதமாமுனி, சூதாடு வோன், சூரியன், தச்சன், தேர்ப் பாகன், பாணன், புகழ்வோன், வஞ்சகன். சூதாஞ்சனம் - நீலாஞ்சனம். சூதாடல் - சூதுவிளையாடல், வஞ்சித்தல். சூதாடுகருவி - தாயக்கட்டை. சூதாடுதல் - தாயம்விளையாடல். சூதாட்டம் - கவறுருட்டியாட்டல், தந்திரம். சூதானம் - எச்சரிப்பு, சேமம். சூதி - அசைவு, கதி, பிள்ளை பெற்றவள், நடை. சூதிகாகிரகம், சூதிகாபவனம் - பிள்ளைப்பெற்ற வீடு. சூதிகை - பிள்ளைப்பெற்றவள், பிள்ளைப் பெற்ற வீடு. சூதிக்கிரகம் - சூதிகாகிரகம். சூதிமம் - தைத்தல். சூது - ஓரிதழ்த்தாமரை, சூதாடு கருவி, தாமரை, தாயவிளை யாட்டு, வஞ்சகம். சூதுகாரன் - சூதுவிளையாடுபவன், தந்திரகாரன். சூதுபோர் - சூதுவிளையாட்டு. சூத்தாடியுள்ளான் - ஓர்புள். சூத்திரகண்டன் - பார்ப்பான். சூத்திரதருமம் - சூத்திரர் தொழில். சூத்திரதாரி - சூத்திரகாரன். சூத்திரநாகம் - ஓர்நாகம். சூத்திரநிலை - கருத்துத் தொடர்ந்து நிற்குந்நிலை, சூத்திரப்பாடல். சூத்திரபதிமை - சூத்திரப்பிரதிமை. சூத்திரபுட்பம் - பருத்தி. சூத்திரப்பா - ஓரகவல், நூற்பா. சூத்திரப்பாவை, சூத்திரப்பிரதிமை - கயிற்றினாலாட்டும் பாவை. சூத்திரப்புறனடை - சூத்திரக் கடை யில்வி சேடித்துச் சொல்வது. சூத்திரம் - இயந்திரம், உபாயம், ஒழுங்கு, தீர்ப்பு, நூல், பஞ்சினூல், பூணூல். சூத்திரம் - வழிநூல். சூத்திரயாசகன் - சூத்திரபுரகிதன். சூத்திரர் - சூத்திரவேலை செய்பவர், நான்காம் வருணத்தோர். சூத்திரர்தொழில் - சூத்திரர்க்குரிய வறு தொழில். அஃது உழுதல், காருகவினை களாக்கல், குயிலு வத்தொழில், பசுக்காத்தல், பிரம சத்திரிய வைசியர் முதலிய மூவரு ணத் தோர்க்கு மேவல் செய்தல், பொருளீட்டல். சூத்திரவேட்டணம் - நூல்சுற்றல். சூத்திரவிருத்தி - சூத்திரர் தொழில். சூத்திரவுருவம் - ஆடும்பதிமை. சூத்திரவீணை - ஓர்வீணை. சூத்திரன் - நான்காம்வருணத்தோன், புருடராகம், வைடூரியம், முப்புரி நூலணிந்தோன். சூத்திரி - சூத்திரவேலைசெய்பவன். சூத்திரிச்சி - சூத்திரப்பெண். சூத்திரித்தல் - சூத்திரநடத்துதல். சூத்து - குதம், யோனி. சூத்தை - கெடுதல், புழுக்குற்றல். சூத்தைகுற்றுதல் - புழுக்குற்றுதல். சூந்துமம் - சிலந்திநாயகம். சூபகாரன் - சமையற்காரன். சூபதூபனம் - பெருங்காயம். சூபம் - அம்பு, ஓர்பயறு, மடைத் தொழில். சூபாங்கம் - பெருங்காயம். சூப்பி - உச்சிட்டவூணன், திரிந்து வாங்கித்தின்போன். சூப்பிக்கலியாணம் - சுன்னத்துச் சடங்கு. சூப்பியறுத்தல் - சுன்னத்துப் பண்ணல். சூப்புதல் - உமிந்தெடுத்தல், சும்பனம் பண்ணல், சுருக்குதல். சூமம் - ஆகாயம், நீர், பால். சூம்புதல் - வாடியிரத்தம் முதலிய சுண்டிச்சிறுத்தல். சூரசுதன் - புதன். சூரசூதன் - அருணன். சூரசேனம் - தேயமன்பத்தாறி னொன்று. சூரணபாரதம் -இரசபஸ்மம். சூரணம் - கரணைக்கிழங்கு, பஸ்மம். சூரணிகை - ஓர்வகைப்பா, விபரம். சூரணித்தல் - பொடிசெய்தல். சூரதை - வீரம். சூரத்துவம் - வீரம். சூரபன்மன் - சூரன். சூரமரனம் - வீரத்திறம். சூரம் - அச்சம், கடலை, வீரம். சூரம் - படைவீரர். சூரலன் - பாண்டியன். சூரல் - பிரம்பு. சூரன் - ஓரசுரன், கரடி, கோழிச் சேவல், கௌரி பாஷாணம், சிங்கம், சூரியன், தீ, நவசாரம், நாய், புலவன், வீரன். சூரி - காடுகாள், காளி, கிருட்டிணன், சூரியன், பண்டிதன், புத்த குரு, புலவன், மடக்குக்கத்தி, வீரமுள்ள வன், எருக்கு, நத்தைச்சூரி. சூரிக்கத்தி - எழுத்தாணிக்கத்தி. சூரிக்கிளிஞ்சில் - ஓர்கிளிஞ்சில். சூரியகடியாரம் - பகல்நாழிகையறி விக்குமோர் கருவி. சூரியகணம் - நேர்நிரை நேரடுத்து வருஞ்சொல். சூரியகதி - சூரியசெலவு. சூரியகலை - பிங்கலை. சூரியகளை - சூரியப்பிரவை. சூரியகாந்தப்பட்டு - ஓர்பட்டாடை. சூரியகாந்தம் - சூரியசன்னி தானத்துத் தீக்காலுங்கல். சூரியகாந்தாமணக்கு - ஓராமணக்கு. சூரியகாந்தி - எட்பூ, ஓர்பூமரம், சூரியப்பிரவை. சூரியகாலம் - பகல். சூரியகிரகணம் - சூரியகிராணம். சூரியகிரகம் - இராகு, கேது. சூரியகிரணம் - ஆதித்தன்கதிர். சூரியகும்பம் - சூரியனைக் குறித்து வைக்குங்கும்பம். சூரியகுலம் - சூரியவமிசம். சூரியசங்கிரமம், சூரியசங்கிராந்தி - மாதப்பிறப்பு. சூரியசரம் - பிங்கலை. சூரியசித்தாந்தம் - வைணவாகமத் தொன்று. சூரியநமற்காரம் - சூரியபிரீதியி னொன்று. சூரியபகவான் - சூரியன். சூரியபுடம்-கணிதபுடங்களி னொன்று, வெயிற்புடம். சூரியபுத்திரன் - சனி, நமன், வருணன். சூரியபுராணம் - பதினெண்புராணத் தொன்று. சூரியபூசை - ஆதித்தபூசை. சூரியப்பிரவை - பரிவேடம். சூரியமணி - ஓர்மரம், சூரியகாந்தம். சூரியமண்டலம் - சூரியபதவி. சூரியமூர்த்தி - சூரியன். சூரியர் - துவாதகாதித்தர், புலவர். சூரியலோகம் - சூரியபதவி. சூரியவட்டம் - சூரியகடியாரம், சூரிய விம்பம். சூரியவாதம் - சூரியனைக் கடவுளாய்க் கொள்ளுஞ்சமயம். சூரியவாதி - ஒர்சமயத்தான். சூரியவிட்சேபம் - சூரியனதுபதன கேந்திரம். சூரியவிம்பம் - சூரியனொளி. சூரியன் - ஆதித்தன், அஃது சிவனட்ட மூர்த்தத்தொன்று, செப்பு, மலை, செவ்வெருக்கு சோழன். சூரியன்வீதி - மேட, இடப, மிதுன வீதிகள். சூரியாஸ்தமனம், சூரியாஸ்தம் - சூரியனத் தமித்தல், மாலைப் பொழுது. சூரியாஸ்திரம் - ஓர்பாணம். சூரியாலோகம் - சூரியகிரணம். சூரியேந்துசங்கமம் - அமாவாசி. சூரியை - புதுமணப்பெண். சூரியோதயம் - உதயகாலம். சூருமம் - குசைப்புல், மாந்தப்புல். சூரை - ஓர்செடி, ஓர்பயிர், ஓர்மீன், கள், தூதுளை. சூர் - அச்சம், ஓரசுரன், சூரென் னேவல், துன்பம், தெய்வப்பெண், தெய்வம், நோய், மிளகு, யோகினி, வால்மிளகு. சூர்தல் - சுகிர்தல். சூர்த்தநோக்கு - கொடுங்கண், கொடுமை. சூர்த்தல் - அச்சங்கொடுத்தல், சினத் தல், சுகிர்த்தல், சுழற்றல். சூர்ப்பகன்னம் - யானை. சூர்ப்பகைவன் - முருகன். சூர்ப்பம் - சுழகு. சூர்ப்பநகை - இராவணன்றங்கை. சூர்ப்பு - சுழற்சி, பயம். சூர்மகள் - தெய்வப்பெண், யோகினி. சூர்வு - சுகிர்வு. சூலக்குறடு - ஓராயுதம். சூலதரன்,சூலபாணி - சிவன், வயிரவன். சூலம் - இரேவதிநாள், ஓராயுதம், சூலை, துகிற்கொடி, நித்திய யோகத் தொன்று, மரணம். சூலல் - சூலுதல். சூலவாசனம் - ஓருப்பு. சூலவிளக்கு - ஓர்விளக்கு. சூலவேல் - கழுமுள். சூலி - கருப்பிணி, காளி, சிவன், துற்கை, யோகினிகாளி, சதுரக் கள்ளி. சூலிகை - யானைக்காதடி. சூலுதல் - குடைதல். சூலுளைதல் - ஈற்றுளைதல். சூலை - ஓர்நோய். சூலைகிருது - பெருங்காயம். சூலைகுன்மம் - ஓர்நோய். சூலைக்கட்டு - ஓர்நோய். சூலைசத்துரு - ஆமணக்கு. சூலைநீர் - உடம்பிலுண்டா மோர் நோய்நீர். சூல் - கருப்பம், சூலென்னேவல். சூவாரை - ஒர்மீன். சூவானக்காரன் - சமையற்காரன். சூவானக்காரி - சமையற்காரி. சூவானம் - அடுக்களை. சூழல் - ஆராய்தல், ஆலோசனை, இடம், கருத்து, குறிப்பு, கூட்டம், சுற்றுப்புறம். சூழாமை - ஆராய்வின்மை. சூழி - உச்சி, உச்சிக்கொண்டை, கடல், குளம், சுனை, யானைமுக படாம். சூழுதல் - ஆலோசனை பண்ணல், சூழ்ந்திடல். சூழ் - சுற்று, சூழென்னேவல். சூழ்கழியிருக்கை - தோணாமுகம். சூழ்ச்சம் - ஆலோசனை, உபாயம். சூழ்ச்சி - ஆராய்தல், ஆலோசனை. சூழ்ச்சித்துணைவர் - மந்திரிமார். சூழ்தல் - ஆலோசனைபண்ணல், சூழ்ந்திடல், பிற்படை. சூழ்தழை - தாமரை. சூழ்ந்திடல் - வளைந்துகொள்ளல். சூழ்ந்தோர் - அடுத்தோர், உறவோர், சூழநிற்போர், மந்திரிகள். சூளாமணி - சூடாமணி. சூளாமணிநிகண்டு - ஓர்நிகண்டு. சூளி - ஆண்மயிர். சூளிகை - யானைச்செவியடி. சூளுதல் - குடைதல். சூளுறல் - சத்தியஞ்செய்தல். சூளை - சுடுசூளை, வேசி. சூளைக்கல் - செங்கல். சூளையாடுதல் - கொள்ளையாடுதல். சூள் - ஆணை, சபதம், பாளை முதலியவற்றின் சூள். சூறல் - தோண்டல். சூறன் - மூஞ்சூறு. சூறாவளி - சூறாவாரி. சூறாவளிச்சட்டம் - நீர்தெளியவிடும், பெருநெல்லிக்கட்டை. சூறாவாரி - சூறைக்காற்று. சூறு - சூத்து. சூறை - கொள்ளை, சுழல்காற்று. சூறைக்காற்று - சுழல்காற்று. சூறையாடல், சூறையாடுதல், சூறை யிடுதல் - கொள்ளையிடுதல். சூற்கொள்ளுதல் - கருக்கொள்ளுதல். சூற்பகன்னம் - யானை. சூற்பம் - சூர்ப்பம். சூனம் - பிறப்பித்தல், பூமொட்டு, மான், வீக்கம். சூனர் - ஊன்விற்போர். சூனன் - ஊன்விற்போன், பெரு வயிறன். சூனியகாரன் - மாரணவித்தைக்காரன். சூனியதிசை - இயங்காத்திசை, வட கீழ்த்திசை. சூனியதிதி - சிராத்தத்திற்கடாததிதி. சூனியத்துவம் - நாசம்பண்ணுதல், வெறுமை. சூனியப்படுதல் - பலனற்றுப்போதல், பாழாதல். சூனியமாதம் - ஆடி-புரட்டாதி-மாசி - மார்கழிமாதங்கள். சூனியம் - அசுசி, ஆகாயம், இன்மை, பாழ், புள்ளி, பொறி, மாரண வித்தை. சூனியம்பண்ணுதல் - கெடுத்தல், சூனியஞ்செய்தல். சூனியவாதம் - கடவுளில்லை யென்னு மோர் சமயவாதம். சூனியவாதி - ஓர்சமயத்தான். சூனியவித்தை - மாரணவித்தை. சூனியன் - அந்தரித்தவன், முடவன். சூனு - சூரியன், பின்னோன், மகள், மகன். சூனை - மகள். சூன் - ஊன், பெருவயிறு. சூன்மதம் - பைத்தியம். சூன்முகில் - கருமுகில். சூன்றல் - தோண்டல். செ செகசோதி - மிக்கவொளி. செகதம் - பட்சித்தல். செகதி - இங்கீதம். செகநாதன் - கடவுள், சிவன். செகம் - சகம். செகற்பிதா - கடவுள். செகனவாதம் - ஓர்நோய். செகில் - தோண்மேல். செகிள் - செதிள். செகுத்தல் - அழித்தல். செக்கச்சிவத்தல் - மிகச்சிவத்தல். செக்கர் - சிவப்பு, செவ்வானம். செக்கர்ச்சிவப்பு - மிகுசிவப்பு. செக்கர்மேகம் - செவ்வானம். செக்கர்வானிறத்தோன் - சிவன், வீரபத்திரன். செக்கர்வான் - செம்மேகம். செக்கல் - மாலைநேரம். செக்காடுதல், செக்காட்டுதல் - எண் ணெயூற்றுதல். செக்காட்டி, செக்கான் - எண்ணெய் வாணிபன். செக்கு - காணம், சதயநாள். செக்குக்கீரை - ஓர்கீரை. செங்கடம்பு - ஓர்கடம்பு. செங்கட்டி - செங்கற்கட்டி, காவிக்கல், சாதிலிங்கம். செங்கணான் - விட்டுணு. செங்கண் - சிவந்தகண். செங்கண்ணி - ஓர்மீன். செங்கண்மாரி - ஓர்நோய். செங்கண்மால் - விட்டுணு. செங்கதிரோன், செங்கதிர் - சூரியன். செங்கதிர்நாள், செங்கதிர்பிறந்தநாள் - உத்திரநாள். செங்கத்தாரி - ஓர்செடி. செங்கமலம் - செந்தாமரை. செங்கமலை - இலக்குமி. செங்கரப்பன் - ஓர்நோய். செங்கரா - ஓர்மீன். செங்கருங்காலி - ஓர்மரம். செங்கரும்பு - ஓர்கரும்பு. செங்கலங்கல் - செந்நிறமானகலங்கல். செங்கல் - காவிக்கல், சுட்டமண்கல். செங்கல்மங்கல் - கருமைவெண்மை, கலந்தசிவப்பு, மங்கினசிவப்பு. செங்கழல்நாரை - செங்கானாரை. செங்கழுநீர் - செங்குவளை. செங்களம் - போர்க்களம். செங்களை - குதிரைப் பற்பாஷாணம், செங்கரும்பு. செங்கற்கட்டளை - செங்கல்லச்சு. செங்காடு - சிவந்தநிலம், செங்காட் டங்குடி. செங்கற்றலை - ஓர்மீன். செங்கனிறமணி - கோவரங்கப்பதும ராகம். செங்காகம் - செம்போத்து. செங்காட்டங்குடி - ஓர்தலம். செங்காந்தள் - ஓர்காந்தள். செங்காய் - பழத்துக்குச் சாய்ந்தகாய். செங்காய்வேளை - ஓர்பூடு. செங்காரன், செங்காரி - கருஞ்சிவலை. செங்கார் - ஓர்விதநெல், கருஞ் சிவப்பு. செங்கானாரை - ஓர்கொக்கு. செங்கிடை, செங்கிடைச்சி - ஓர் கிடைச்சி. செங்கிரந்தி - ஓர்கிரந்தி. செங்கிளுவை - ஓர்கிளுவை. செங்கீரை - ஓர்கீரை, பிள்ளை யிருகையு முழந்தாள்களுமூன்றித் தலைநிமிர்த்தியாடல். செங்கீரையாடுதல் - சாணையிற் பிள்ளை தலையுயர்த்திக்கை காலூன்றியுடம் பையசைத்தல். செங்குங்கிலியம் - ஓர்சரக்கு. செங்குத்து - நேரேநிமிர்ந்தது. செங்குந்தம் - கண்ணோயுளொன்று. செங்குமிழ் - ஓர்மரம். செங்குமுதம் - செவ்வாம்பல். செங்குரங்கு - ஓர்குரங்கு. செங்குவளை - ஓர்நீர்ப்பூ. செங்குளவி - ஓர்குளவி. செங்குன்றி - ஓர்குன்றி. செங்குன்று - ஓர்தலம். செங்கை - ஆதிரைநாள். செங்கையான் - ஓர்பூடு. செங்கொடிவேலி, செங்கொடுவேலி - ஓர்கொடி. செங்கொல் - பொன். செங்கொல்லர் - தட்டார். செங்கோடு - ஓர்மலை, செருந்தி மரம். செங்கோடுபாய்தல் - மலையுச்சி யிலிருந்துபாய்தல். செங்கோட்டம் - ஓர்மருந்து. செங்கோட்டியாழ் - நால்வகை யாழி னொன்று. செங்கோலம் - செம்புமணல். செங்கோலன் - இராசன். செங்கோலாணை - செங்கோல் செலுத்தல். செங்கோல் - ஆணை நடத்துங் கோல், நீதி. செங்கோற்கடவுள் -இயமன். செங்கோன்மை - நீதிவழுவா வாளுகை. செச்சை - உதயசந்திரன், சிவந்த நிலம், செங்காடு, செஞ்சாந்தின் குழம்பு, செந்துளசி, சோடு, நீறு, வீட்டின் மேற்பக்கம், வெட்சி மரம், வெள்ளாட்டுக்கடா. செஞ்சு - சேர, நிறைய. செஞ்சடையோன் - காசிமீரப்படிகம், சிவன், வயிரவன், வீரபத்திரன். செஞ்சந்தனம் - ஓர்சந்தனம். செஞ்சம்பா - ஓர்நெல். செஞ்சாந்து - குங்கும முதலான சிவந்தபரிமளத்தாற்கூட்டுகிற கூட்டு. செஞ்சாலி - செந்நெல். செஞ்சால் - துப்பாக்கி முதலியன. செஞ்சி - அரணானபட்டினம், ஓரூர். செஞ்சிலை - கற்காவி, சாத்திரவேதி, செங்கல். செஞ்சீரகம் - ஓர்சீரகம். செஞ்சுடர் - ஆதித்தன், தீ. செஞ்சுடர்ப்பகவன் - அக்கினிதேவன், சூரியன், தீ. செஞ்செயல் - உரியபொருளை யுணர்த்துவது. செஞ்செவியர் - செல்வர். செஞ்செவ் - நேரே. செஞ்செழிப்பு - செழிப்பு, தாராளம். செஞ்சேறு - சிவந்தசுரி. செஞ்சொல் - வெளிப்படைச்சொல், செஞ்செயலையுடைய சொல். செஞ்சோதி - சிவந்தஒளி, மிகுபிரவை. செஞ்சோளம் - ஓர்சோளம். செஞ்சோறு - இரத்தமூட்டியசோறு. செடகன், செடன் - அடிமை, வேலை காரன். செடி - ஒளி, குணமின்மை, செத்தை, பதனழிவு, பற்றை, பாவம், புதல. செடிக்காடு - பற்றைக்காடு. செடிக்குடிபுக்கி - நாகரவண்டு. செடிச்சி - கெட்டவள். செடித்தல் - செடிபற்றல். செடியன் - கூட்டற்றவன். செடிலூஞ்சல் - செடில்குற்றியாடு மூஞ்சல். செடில் - ஓர்கருவி. செட்டி - குமரன், வாணிபன், வைசியன். செட்டிச்சி - செட்டிப்பெண். செட்டிநாகம் - ஓர்பாம்பு. செட்டிமை - செட்டித்தன்மை. செட்டு - வியாபாரம். செட்டை - இறகு, கைப்பட்டை. செணம் - சணம். செண்டாயுதன் - ஐயன். செண்டு - குதிரைவையாளிவீதி, பந்து, பந்தெறிவீதி, பூஞ்செண்டு. செண்டுவெளி - வெளி, வையாளி வீதி. செண்ணம் - வடிவு. செண்பகம் - சண்பகம். செண்பகவருக்கை - ஓர்பலா. செதில் - செகிள், தோல், பொருக்கு. செகிள் - சிறுதுண்டு, சீவல், தோல், பொருக்கு. செதுக்கல் - செதுக்குதல். செதுக்கி - உளவாரமுதலியகருவி. செதுக்கு - உடற்றழும்பு, செதுக்கென் னேவல், சேறு, பூதம், மந்தி. செதுக்குதல் - சீவுதல், புன்முதலிய செதுக்கல். செதுக்குவேலை - இரத்தினமுதலிய வழுத்தும் வேலை. செதுக்கை - தழும்பு. செதும்பு - சேறு. செத்தல் - அறக்காய்ந்தது, சாகுதல், பசுமையற்றது, மெலிந்தது. செத்து - சந்தேகம். செத்தை - துரால். செந்தட்டு - அந்தரத்தட்டு, பொறுப் பில்லாமை. செந்தண்டு - செங்குருத்து, பவளம். செந்தமிழ் - இயற்றமிழ். செந்தமிழ்க்குரியோன் - அகத்தியன், வயிரவன். செந்தமிழ்நாடு - பாண்டி. செந்தமிழ்நிலம் - தமிழ்வழங்குமிடம். செந்தமிழ்வழக்கு - இயற்றமிழ்வழக்கு. செந்தருப்பை - நச்சுப்புல். செந்தலைவிரியன் - ஓர்பாம்பு. செந்தழல் - கேட்டைநாள், தீ, தீத்தழல். செந்தழற்கொடி - பவளக்கொடி. செந்தளித்தல் - செளிப்பு. செந்தாது - செம்பொன். செந்தாமரை - சிவந்ததாமரை. செந்தாளி - ஓர்தாளி. செந்தாள் - செந்தண்டு. செந்தி - திருச்செந்தூர். செந்திரம் - சிவப்பு, நெய்தனிலம். செந்திரு - இலக்குமி. செந்திருக்கம் - செந்துருக்கம். செந்திருக்கை - ஓர்மஞ்சள். செந்தில் - திருச்செந்தூர். செந்திறம் - குறிஞ்சியாழ்த்திறம், சிவப்பு. செந்தினை - கம்பு, சிவந்ததினை. செந்தீ - அக்கினி, ஓர்சிலந்தி. செந்தீவண்ணன் - செவ்வாய். செந்தீவளர்ப்போர் - பார்ப்பார். செந்து - அணு, ஊர்வன, கிழநரி, சடாமாஞ்சி, சீவப்பிராணி, நரகம், பெருங்காயம். செந்துத்தானம் - ஓர்நரகு. செந்துத்தி - ஓர்துத்தி. செந்துநாசனம் - பெருங்காயம். செந்தும்பை - ஓர் தும்பை. செந்துரசம் - ஓர்பிசின். செந்துருக்கம் - ஓர்செடி, ஓலையை யடைக்குஞ்சுருள். செந்துருக்கு - ஓர்செடி. செந்துருதி - ஓர்நரகம், ஓர்பண். செந்துளசி - ஓர்துளசி. செந்துளிர் - செந்தளிர். செந்துறை - ஆடற்கேற்கும்பாட்டு, ஓர்வெண்பா. செந்துறைவெள்ளை - ஈரடியாயள பொத்துமுடியும் வெண்பா. செந்தூக்கு - ஓர் கையாற்றூக்கு மிலேசான தூக்கு, கைத்தூக்கு. செந்தூரம் - இலிங்பாஷாணம், பொன் முதலியவற்றாலாகிய சுண்ணம். செந்தூரித்தல் - சிந்தூரநீற்றுதல், சிந்தூரமாதல். செந்தூள் - செம்பராகம், மிருது வானதூள். செந்தொடை -சிவந்தமாலை, மோனை முதலாகப்புகன்ற தொடைபு கலாது தொடுப்பது. செந்தொடையன் - சிவன், வயிரவன். செந்தொட்டி - ஓர்பாஷாணம். செந்தோட்டி - ஓர்செடி, சிறுகாஞ் சொறி, பெருங்காஞ்சொறி. செந்நகரை - ஓர்மரம். செந்நல் - ஓர்மீன். செந்நாகம் - கேது. செந்நாடிக்கா - மூக்கிரட்டை. செந்நாயுருவி - ஓர்நாயுருவி. செந்நாய் - ஓர்நாய். செந்நிறக்கல் - மாமிசசிலை. செந்நீர் - இரத்தம். செந்நீர்ப்பவளம் - சிவந்தபவளம். செந்நெல் - நன்னெல். செந்நெறி - சன்மார்க்கம், நல்வழி. செந்நென்முத்து - நெல்லிற்பிறந்த முத்து. செந்நொச்சி - ஓர்நொச்சி. செபத்தியானம் - அந்தரங்கசெபம். செபத்துவம் - செபக்குணம். செபமந்திரம் - செபிக்கும் மந்திரம். செபமாலை - செபமெண்ணுமாலை. செபம் - மந்திரமுச்சரித்தல், மன் றாட்டு. செபவடம் - செபமாலை. செபவான் - செபவனுட்டிப்புக் காரன். செபனம் - செபம்பண்ணுதல். செபித்தல் - உருவேற்றுதல், மன்றாடு தல். செப்படி, செப்படிவித்தை - செப்பிடு வித்தை. செப்பட்டை - செட்டை, தோட் பட்டை. செப்பமிடுதல் - செவ்வைபண்ணுதல், திருத்துதல். செப்பம் - இணக்கம், ஒப்பரவு, செவ் வை, திருத்தி, நடுநீதி, மார்பு, வழி, வீதி. செப்பல்வெண்பா - எழுசீரானிசைப் பது. செப்பவாய் - இடை. செப்பலோசை - மத்திமவோசை, வெண்பாவினோசை. செப்பல் - ஓரோசை, சொல்லுதல். செப்பனிடுதல் - ஒப்பமாக்கல், செவ் வைபண்ணுதல். செப்பன் - செப்பம். செப்பிடில் - சடாமாஞ்சில். செப்பிடுவித்தை - ஓர்தந்திரவித்தை. செப்பியம் - திரும்பத் திரும்பவுச் சரித்தல். செப்பிலை - தும்பை. செப்பு - சிமிழ், செப்பென்னேவல், சொல், விடை. செப்புச்சிலை - மாந்தளிர்க்கல். செப்புதல் - சொல்லுதல். செப்புத்தொட்டி - வைப்புப்பாஷாண முப்பத்திரண்டினொன்று. செப்புநிறம் - கருஞ்சிவப்பு. செப்புநெரிஞ்சி - சிவப்புநெரிஞ்சி. செப்புப்பட்டயம் - செப்புத்த கட்டி லெழுதியவுறுதி. செப்புப்பாளம் - செம்புப்பாளம். செப்புமணல் - செம்புமணல் செப்புமலை - காஷாயம். செப்போடு - செம்பாலாயவோடு. செம் - சிவப்பு, செம்மை. செம்பசலை, செம்பசளை - சிவப்புப் பசளை. செம்பஞ்சி, செம்பஞ்சு - சிவத்தப் பஞ்சு. செம்பஞ்சுநிறமணி - கௌந்திகப்பது மராகம். செம்பஞ்சூட்டுதல் - செம்பஞ்சழுத்தல். செம்படத்தி - செம்படவப்பெண். செம்படவர் - மீன்பிடிகாரரிலோர் வகை. செம்படாம் - சிவப்புச்சீலை. செம்படிகம் - காசிமீரப்படிகம். செம்படை - சிவந்தமயிர். செம்படைச்சி - சிவந்த மயிருடை யாள், செம்பட்டத்தி. செம்பட்டத்தி - செம்படத்தி. செம்பட்டை - செம்படை. செம்பண்ணை - காவற்பண்ணை. செம்பருத்தி - ஓர்செடி. செம்பருந்து - கலுழன். செம்பலகை - செங்கல். செம்பவளச்சம்பா - ஓர்நெல். செம்பழம் - காய்ப்பழம். செம்பனசை - ஓர்பாம்பு. செம்பன் - சிவலை. செம்பாகம் - சரிபங்கு, செவ்வை யானது, நடுநிலை. செம்பாடு - சிவந்தநிலம். செம்பாதி - சரிபாதி. செம்பாம்பு - கேது. செம்பாரை - ஓர்நண்டு. செம்பாலை - மிடற்றிற் பிறந்து மிடற்றினின்றிசைக்கு மிசை. செம்பால் - இரத்தம். செம்பால்முடாங்கி - ஓர்பூடு. செம்பாளை - செந்நெல். செம்பாற்சிட்டி - ஓர்கீரை. செம்பி - கருவண்டு, சிவப்பி, மருதணி. செம்பிச்சி - செந்தோட்டி. செம்பியன்-சோழன் அவன் முதலெழு வள்ளலிலொருவன். செம்பிரால் - ஓர்மீன். செம்பில்வேதை - சோரபாஷாணம். செம்பிறை - கற்கிட்டம், கானற்கல், தேகக்கல். செம்பினிறம் - மாந்தளிர்க்கல். செம்பின்பச்சை - நாகப்பச்சை. செம்பு - தபலை, பஞ்சலோகத்தொன்று, அஃது தாம்பிரம். செம்புகம் - செம்போத்து. செம்புக்குள்வேதை - கற்பூர பாஷா ணம். செம்புலம் - சுடுகாடு, செம்புமலை, பாலைநிலம், போர்க்களம். செம்புலி - ஓர்புலி. செம்புளிச்சை - செம்மணத்தி. செம்புறா - ஓர்மீன். செம்புறைக்கல் - ஓர்சிவத்தக்கல். செம்புனல் - இரத்தம். செம்பூரம், செம்பூரான் - ஓர்தேள். செம்பூறல் - செம்பிற்களிம்பு. செம்பை - ஓர்மரம். செம்பொடி - செம்புமணல், செம் மணல், தேகக்கல். செம்பொருள் - கடவுள், சொல்லொடு பொருள், செஞ்சொல்லாலு ணர்த்தப்படும் பொருள். செம்பொன் - சுத்தபொன், பொன். செம்போத்து - சண்பகம். செம்மட்டி - ஓர்மட்டி. செம்மணத்தி - செம்புளிச்சை. செம்மணல் - சிவத்த மணல். செம்மணி - கண்ணின் கருமணியைச் சூழ்ந்திருக்குஞ் சிவந்தமணி, குருந் தக்கல், குருவிந்தம், கெம்பு, பது மராகம், மாணிக்கம், மாமிசகந்தி. செம்மண் - காவிமண், சிவந்தமண். செம்மண்சிலை - கற்காலி. செம்மந்தாரை - ஓர்பூமரம். செம்மயிர்க்கொன்றை - ஓர்கொன்றை. செம்மரம் - அழிஞ்சில். செம்மலைப்பார் - சிவந்தகற்பார். செம்மலைப்பாலை - செம்பாலை. செம்மல் - அரசன், அருகன், ஈசன், எப் பொருட்குமிறைவன், செம்முதல், தலைமகன், பழம்பூ, புதல்வன், பெருமை, பெருமையிற்சிறந் தோன். செம்மறி, செம்மறியாடு - ஒர்வகையாடு, ஆட்டின்பொது. செம்மாணி - ஓர்வகைப்பாதரட்சை. செம்மாத்தல் - அகந்தையாயிருத்தல், நிமிர்ச்சியாயிருத்தல், மிகக் களித்தல். செம்மாத்தி - சக்கிலிச்சி. செம்மாப்பு - இறுமாப்பு. செம்மார் - சக்கிலியர். செம்மாளி - பரவரிடும்பாதகுறடு. செம்மானம் - செக்கர்மேகம். செம்மான் - சக்கிலியன். செம்மீன் - ஓர்மீன். செம்மீன்வயிரம் - மீனம்பர். செம்முதல் - பொருமுதல், மூடுதல். செம்முருங்கை - ஓர்முருங்கை. செம்முள்ளி - ஓர்முள்ளி. செம்மூக்கன் - ஓர்வகைமுதலை. செம்மேவுதல் - இணக்குதல், இணங் குதல், சரிப்படுதல். செம்மை - அழகு, இணக்கம், கனம், சிவப்பு, செப்பம், செவ்வை, நிதார்த்தம், மாணிக்கம். செம்மைகட்டுதல் - நேர்கட்டுதல். செம்மைக்கல் - கானக்கல். செம்மைபண்ணல் - அலங்கரித்தல், ஒழுங்குபடுத்தல். செம்மைப்படுதல் - நற்சீரடைதல். செம்மையாதல் - நேராதல். செம்மொழி - இயற்றமிழ்வசனம், நயவசனம். செம்மொழிச்சிலேடை - சிலேடை யிலோர்பேதம், அஃது மொழிப் பிரிப்பின் றிநிற்பச் சிலேடிப்பது. செயசூறை - வென்றுவருங்கொள்ளை. செயசெயவெனல் - போற்றுதல். செயத்தம்பம் - வெற்றித்தம்பம். செயநீர்க்கருத்தன் - நவட்சாரம். செயந்தி - திருச்செந்தி. செயபரம் - மரமஞ்சள். செயப்பரி - பட்டத்துக்குதிரை. செயபீதம் - கௌரிபாஷாணம். செயப்படுபொருள் - காரியப்படு பொருள். செயசூறை - வென்றுவாருங் கொள்ளை. செயம் - சயம். செயலறல், செயலறுதல் - உதவி யற்றுப்போதல், தத்துவ மற்றுப் போதல். செயலறவு - கையறவு. செயலறுநிலை - கையறுநிலை. செயலுவமம் - செயலையேயுவமான மாகக் கொண்டுவமிப்பது (உம்) நனவிற்செயல்போலுங்கனவிற்செயல். செயலை - அசோகமரம். செயல் - ஒழுக்கம், காவல், செய்கை, சேறு, தொழில். செயபரி - பட்டத்துக்குதிரை. செயப்பாட்டுவினை - படுவிகுதி புணர்ந்து முதனிலைகளையுடைய வாய் மூன்றாம் வேற்றுமைக் கருத்தாவைக் கொண்டுவருவன. செயமணி - வெற்றிபெற்றடிக்குமணி. செயமன்னர் - போர்மன்னர். செயமுரசு - வெற்றிமுரசு. செயவானை - பட்டத்தியானை. செயவீரர் - போர்வீரர். செயற்கையுணர்வு - செயற்கையான் வந்தவுணர்வு. செயித்தல் - சயித்தல். செயிரியர் - வீணைமுதலியவியக்கு வோர். செயிர் - குற்றம், கோபம், சினம், செயிரென்னேவல், துன்பம். செயிர்த்தல் - சினத்தல். செயிர்ப்பு - சினப்பு. செய் - சிவப்பு, செய்யென்னேவல், வயல். செய்கடன் - நித்தியகருமம், பிதிர் கடன், முறைமை. செய்கரை - கட்டுக்கரை. செய்காரியம் - செய்கருமம், செய்ய வேண்டிய பிரகாரமெல்லாஞ் செய்வது. செய்கின்ற - நிகழ்காலப்பெயரெச்ச வாய்பாடு. செய்குதல் - உண்டாக்கல். செய்குறை - செய்கைத்தப்பிதம். செய்குற்றம் - செய்கைக்குறை. செய்குன்று - செய்கைமலை. செய்கூலி - செய்தகூலி. செய்கை - ஒழுக்கம், தொழில், பண் படுத்துவது. செய்கைக்காரன் - செய்கையிட் டோன், வேலைகாரன். செய்கைச்சரக்கு - வைப்புச்சரக்கு. செய்கைச்சீட்டு - செய்கையொப்பம். செய்கைத்தரை - பண்படுத்தினநிலம். செய்கைத்தாழ்ச்சி - செய்கைப்பிழை. செய்கைபூணுதல் - செய்கைப்படுதல். செய்கைப்பங்கு - செய்கைக்கு வரும் பங்கு. செய்கையாட்சி - செய்கையினால் வந்தவாட்சி. செய்கையுப்பு - விளைவிக்குமுப்பு. செய்த - செல்காலட் பெயரெச்ச வாய்பாடு. செய்தல் - செய்குதல். செய்தவம் - செய்யப்பட்டதவம். செய்தி - ஒழுக்கம், சமாசாரம், சரித் திரம், செய்கை, செய்வா யென்னு முற்று. செய்திகொன்றார் - நன்றியீனர். செய்து - வினையெச்சவாய் பாட்டி னொன்று. செய்நன்றி - செய்தநன்றி. செய்நீர்ச்சித்திரம் - நவசாரம். செய்பாகம் - செய்யும்பக்குவம். செய்பாட்டுவினை - படுவென்னும் விகுதி புணர்ந்த முதனிலைகளை யுடையனவாய் மூன்றாம் வேற்று மைக்கருத்தாவைக் கொண்டு வரும்வினை. செய்பு - வினையெச்சவாய் பாட்டி னொன்று. செய்ய - அழகிய, சிவந்த சிறந்த வென்னும்பொருள் படவரும் பெயரெச்சப்பண்புச் சொல், வினையெச்சவாய் பாட்டி னொன்று. செய்யல் - செய்தல், சேறு. செய்யவன் - சிவத்தமேனியன், செவ் வாய். செய்யள் - இலக்குமி. செய்யன் - சிவலை, சிவன், நேராளி. செய்யா - வினையெச்சவாய் பாட்டி னொன்று. செய்யாள் - இலக்குமி. செய்யாள் - ஓர்பூரம். செய்யிய - வினையெச்சவாய் பாட்டி னொன்று. செய்யியர் - வினையெச்சவாய் பாட்டி னொன்று செய்யிழை - பெண். செய்யுட்சொல் - உயர்ந்தசொல், திரி சொல். செய்யுட்பொருத்தம் - பாட்டுப் பொருத்தம் பத்து, அஃது உண்டி, எழுத்து, கணம், கதி, சொல், தானம், பால், மங்கலம், வருணம். செய்யுட்டாரணை - நவதாரணை யினொன்று. செய்யுணடை - செய்யுள் வழக்கு. செய்யும் - இருதிணைக்குமைம் பாற்கு முரிய வருகால வினைமுற்று, வருகாலப் பெயரெச்ச வாய்பாடு. செய்யுளுறுப்பு - செய்யுட்குவேண்டு முறுப்பு. செய்யுள் - பாட்டு. செய்யுள்வழக்கு - பாலின்வழக்கு. செய்யுள்விகாரம் - மெலித்தல்வலித்தன் முதலிய ஒன்பது விகாரம். செய்யூ - வினையெச்சவாய்பாட்டி னொன்று. செய்யோன் - அருகன், செந்நிற முள் ளோன், செம்மை யுடையோன், செவ்வாய். செய்வித்தல் - செய்யப்பண்ணுதல். செய்வினை - சூனியம், செய்கை, செய்தொழில், நடவா முதலிய முதனிலைகளையுடையன வாய்ப்படு விகுதி புணராது எழு வாய்க் கருத்தாவைக் கொண்டு வரும் வினைச் சொல். செரிகுடர், செரிகுடல் - உண்டது தங்காதுகழியுமுடல். செரித்தல் - சமித்தல். செரியாக்குணம் - சமியாக்குணம். செரியாப்படுவன் - ஓர்நோய். செரியாமை - சமியாமை. செரு - சண்டை, போர். செருகல் - அடைசுதல், சொருகுதல். செருகுகொண்டை - ஐம்பாலி னொன்று, அஃது சுருள். செருகுபூ - இடையிடைவைக்கும் பூ. செருக்கல் - செருக்குதல். செருக்களம் - போர்க்களம். செருக்களவஞ்சி - ஓர்பிரபந்தம், அஃது பறந்தலைச்சிறப்புக் கூறுவது. செருக்கன் - ஆங்காரி. செருக்கு - ஆங்காரம், களிப்பு, செருக்கென்னேவல். செருக்குதல் - அகங்கரித்தல், களிக் குதல், மயக்கடியாக்குதல். செருத்தல் - எருமை - பசுவிவற்றின் மடி. செருத்தி - விருதுக்கொடி. செருநர் - படைவீரர். செருந்தி - ஓர்மரம், மணித்தக்காளி, வாட்கோரை. செருப்படி, செருப்படிநாயன் - ஓர்பூடு. செருப்பு - காறொடுதோல். செருமல், செருமுதல் - அடைசுதல், இருமுதல், திணித்தல், நெருக்கல். செருனர் - செருநர். செலக்கனல் - அக்கினிக்கட்டி. செலக்குரு, செலக்கூர்மை - நவசாரம். செலக்கூபம் - நண்டு. செலப்பிரீதி - கருப்பூரச்சிலை. செலமலம் - கடற்பாசி. செலம் - இலாமிச்சு, சலம். செலல் - கழிதல், போதல். செலவயர்தல் - போதல். செலவழிதல் - செலவுபோதல். செலவழித்தல் - செலவிடுதல். செலவாளி - செலவுகாரன். செலவிடல், செலவிடுதல் - அனுப்புதல், எறிதல், செலவழித்தல், விடுதல். செலவு - உத்தரவு, செலவிடுதல், செல்லும் பொறுப்பு, பயணம், போக்கு, போதல், முடிவு, வழி, பெருங்காப்பிய வுறுப்பு ளொன்று. செலவுநடத்தல் - செலவு நடத்தி வருதல், செலவுநடந்துவருதல். செலவோடுதல் - விசாலித்தல். செலியம் - இலாமிச்சை. செலு - செத்தல், நறுவிலிமரம், மீன் செலு. செலுத்தல், செலுத்துதல் - அனுப்புதல், கொடுத்தல், செருகுதல், நடத்து தல், விடுதல். செலுந்தி, செலுந்தில் - செத்தல். செலுப்பு - சிறுதுண்டு. செலுமுரல் - ஓர்மீன். செலுவல் - செத்தல். செலுவன் - செத்தலன். செல் - இடி, உண்டியற்சீட்டு, கறை யான், கையொப்பம், செல்லென் னேவல், மேகம், வேல். செல்காலம் - இறந்தகாலம், காரியஞ் சித்திக்குங்காலம். செல்லக்கட்டுதல் -இறுத்தல், சேர்த்தல். செல்லம் - செல்வம். செல்லல் - துன்பம், நடத்தல், போதல். செல்லன் - செல்வன். செல்லாக்காசு - வழங்காதகாசு. செல்லாக்காலம் - நடப்பற்றகாலம். செல்லி - செல்வி. செல்லியம் - கோழி. செல்லு - செல். செல்லுதல் - கழிதல், காரிய சித்தி யாதல், சாதல், போதல், வழங்குதல். செல்லுமதி - செல்லவேண்டுவது. செல்லொளி - வைடூரியம். செல்வக்கடி - பருங்கடி. செல்வச்சிரிப்பு - புன்முறுவல். செல்வத்தீன் - சிறுதீன். செல்வநடை - மிருதுநடை. செல்வநரை - இடைநரை. செல்வப்பிள்ளைக்காய்ச்சல் - ஓர் காய்ச்சல். செல்வப்பேச்சு - குதலைப்பேச்சு. செல்வமடி - மிருகங்களுக்குச் சௌக் கியத்தினால் வளர்ந்திருக்கும் மடி. செல்வமட்டி - ஓர்கொடி. செல்வம் - ஐசுவரியம், கல்வி, சீர், சுவர்க்கம், பாக்கியம். செல்வம்பொழிதல் - செல்வங்காட்டல். செல்வன் - அரசன், அருகன், கடவுள், செல்வமுள்ளோன், மகன். செல்வாக்கு - பெறும்பேச்சு. செல்வி - இலக்குமி, ஐசுவரிய முடை யாள், தலைவி, மகள். செல்விக்கை - ஐசுவரியம், செல்வாக்கு. செவி - காது, கேள்வி, அஃது பஞ்சப் பொறியினொன்று. செவிகொடுத்தல் - உற்றுக்கேட்டல். செவிக்கெட்டுதல், செவிக்கேறுதல் - கேள்விப்படுதல். செவிசாய்த்தல் - செவிகொடுத்தல். செவிச்சொல் - கேள்விச்சொல். செவிடர் - செவிமந்தர். செவிடு - செவிப்புலனற்றது, அஃது உறுப்புக்குறையெட்டினொன்று. செவிட்டல், செவிட்டுதல் - அழித்தல். செவிதாழ்த்தல் - செவிகொடுத்தல். செவிதின்றல் - இரகசியம் பேசுதல். செவிபடுவாதம் - ஓர்வாதம். செவிப்பாம்பு - ஓர்செந்து. செவிப்புலன் - கேள்வி. செவிப்புற்று - ஓர்நோய். செவிமந்தம் - செவிடு. செவியடி - கன்னம். செவியடித்தல் - செவியாட்டல். செவியம் - செவ்வியம். செவியறிவுறுத்தல் - செவியுப தேச மாய்ச் சொல்லும்புத்தி. செவியறிவுறுமருட்பா - வியப்பின்றி யுயர்ந்தோர்கண் நயந்தொழுகல் கடனெனவரசர் முதலியவர்க்கு மருட்பாவானுரைப்பது. செவியறிவுறூஉ - உபதேசம், ஓர்பிர பந்தம், அஃது அவை யடக்கியற் பொருளுறக் கூறுவது. செவியறை - காதறை. செவியிலி - செவிடு. செவிரம் - பாசி. செவிலி - அக்காள், வளர்த்ததாய். செவ் - சிவப்பு, செவ்வை. செவ்வகத்தி - ஓரகத்தி. செவ்வட்டை - ஓரட்டை. செவ்வணி - தலைமகனையூடிய தலை மகள் அவன்விட்ட பெண்ணுக் கணியுஞ் செந்நிறவணி. செவ்வண் - செங்குத்து, நேரேநிற்றல். செவ்வந்தி - ஓர்பூச்செடி, செக்கர் மேகம். செவ்வந்திக்கல் - ஓர்கல். செவ்வம்மான் பச்சரிசி - ஓர்செடி. செவ்வலரி - ஓரலரி. செவ்வல் - சிவந்தநிலம். செவ்வல்நார், செவ்வல்லி - செவ் வாம்பல். செவ்வரத்தமணி - குருவிந்தப்பது மராகம். செவ்வவரை - ஓரவரை. செவ்வழி - ஓர்பண், அஃது நெய் தனிலத்தியாழ். செவ்வழிப்பாலை - ஓரிராகம். செவ்வழியாழ் - நால்வகையாழி னொன்று. செவ்வனிறை - இருவகைவிடையி னொன்று, அஃது வினாவுக்கு நேர்விடை கூறுவது. செவ்வள்ளி - ஓர்கொடி. செவ்வனார் - செவ்வல்லி. செவ்வன - செவ்வை. செவ்வாக்கு - நீண்டவளைவு. செவ்வாப்பு - ஓர்கட்டு. செவ்வாமணக்கு - ஓராமணக்கு. செவ்வாம்பல் - அரக்காம்பல். செவ்வாய் - ஓர்கிரகம், ஓர்நாள். செவ்வாரம் - செய்கைக்குங்க மத்துக்கு முள்ள சரிவாரம். செவ்வாவிரை - ஓராவிரை. செவ்வாழை - ஓர்வாழை. செவ்வானம் - செக்கர்மேகம். செவ்வி - அழகு, காலம், சித்திரை நாள், பருவம். செவ்விண்டு - ஓர் பூச்செடி. செவ்விநிறம் - மாந்துளிர்க்கல். செவ்வியம் - ஓர்மருந்து, அஃது பஞ்ச மூலத் தொன்று, மிளகு கொடி. செவ்வியருமை - சமயம்பெறு மருமை. செவ்விளகி - கழுதைவண்டு. செவ்விளநீர் - சிவந்ததோலுள்ள விளநீர். செவ்விளை - ஓர்வகைத்தென்ன மரம். செவ்வு - சிவப்பு, செவ்வை, முத் தெண்கணக்கிலோர் சூத்திரம். செவ்வெண் - எண்ணிடைச்சொல், தொக்குவருகிறவெண். செவ்வெண்ணெய் - வாலபுத்திரர்க் கிடுமெண்ணெய். செவ்வேள் - குமரன். செவ்வை - செப்பம். செழிச்சி - செழிப்பு. செழித்தல் - செழிக்குதல், பெருகுதல். செழிப்பு - ஐசுபரியம், செழுமை, பொலிவு, வளர்ச்சி. செழியன் - பாண்டியன். செழுப்பம் - செழுமை. செழுமறை - நெருப்பு. செழுமை - அழகு, கொழுப்பு, சவுந் தரியம், மாட்சிமை, வளமை. செழும்பல் - செழிப்பு. செளிம்பண் - குணக்கேடன். செளிம்பு - களிம்பு. செளிம்பூறல் - களிம்புப்பற்று. செறல் - கொலை, பகை. செறி - செறியென்னேவல், நெருக்கம். செறிதல் - கலத்தல், குளித்தல், சோதல், நெருங்கல், பொருந்தல், மிகுதல். செறித்தல் - அழித்தல், கொல்லல், சேர்த்தல், நெரித்தல், பாதீடு, மூழ்கல். செறிப்பு - சேர்த்தல், நெருக்கம். செறிமை - நெருக்கம், மிகுதி. செறிவு - குணவலங்காரம் பத்தி னொன்று, அஃது நெகிழிசை யின்றிவரச் செய்யுட்டொடுப்பது, நிறைவு, நெருக்கம், மிகுதி. செறு - சிறுவயல், செறுவென்னேவல், வயல். செறுக்குதல் - செறுத்தல். செறுதல் - கொல்லல், கோபித்தல். செறுத்தல் - கொல்லல், கோபித்தல், தூக்குதல், நெருக்குதல், வெறுத்தல். செறுநர் - பகைவர். செறுப்பு - கொலை. செறும்பு - சலஞ்சாதித்தல், சிறாம்பு. செறுவு - வயல். செற்றம் - கோபம், சலஞ்சாதித்தல் சினம். செற்றலர் - பகைவர். செற்றல் - செறிதல், செறுத்தல், வெறுத்தல். செற்றார் - கொலைசெய்வோர், பகைவர். செற்று - செடி, நெருக்கம். செற்றுதல் - நெருக்குதல். செற்றை - செத்தை. செனனம் - பிறப்பு. செனத்தல் - கருப்படுதல், பிறத்தல். செனிப்பித்தல் - பிறப்பித்தல். செனிப்பு - சனிப்பு. சென்மசாபல்லியம் - செனனமெடுத்த பலன். சென்மபத்திரிகை - சாதகம். சென்மம், சென்மாந்திரம் - சன்மம். சென்மித்தல் - கருப்படுதல், பிறத்தல். சென்மிப்பு - பிறப்பு. சென்றுதேய்ந்திறுதல் - நூற்குற்றம், பத்தினொன்று, அஃது வரவரச் சொன்னயம் பொருணயங் குறை தல். சென்னம் - ஓர்புள், வடிவு. சென்னல் - தேட்கெண்டை. சென்னாக்கூனி - இறால். சென்னாங்கூனி - சன்னவோரா. சென்னி - அச்சுவினிநாள், சோழன், தலை, பாணன், முடி. சென்னியர் - பாணர். சென்னை - கதுப்பு, சென்னை பட்டினம். சே சே - அழிஞ்சில்மரம், இடபவிராசி, எதிர்மறை, எருது, ஓரெழுத்து, சிவப்பு, சேரான்மரம், சேவென் னேவல், விலங்கேற்றின் பொது. சேகண்டி - சேமக்கலம், தெருக்காவல். சேகம் - தெளித்தல். சேகரத்தார் - கூட்டத்தார். சேகரம் - கூட்டம், சம்பாத்தியம், சேகரித்தல், தலை, தலையில் முடிக்கப் படுவன, மாமரம், முடி, முருங்கை. சேகரி - சேகரியென்னேவல், நாயுருவி. சேகரித்தல் - கூட்டுதல், சம்பாதித்தல். சேகரிப்பு - சேகரம். சேகிலி - வாழை. சேகு - வயிரம், தழும்பு. சேக்கரித்தல் - கொக்கரித்தல். சேக்கு - முலைப்பால். சேக்குதல் - சிவத்தல். சேக்கை - உடற்றழும்பு, கற்கடக விராசி, சிவத்தல், செம்பசளை, நண்டு, மக்கட்படுக்கை, முலை, விலங்கின் படுக்கை. சேங்கன்று - நாம்பன்கன்று. சேங்கொட்டை - சேரான்கொட்டை. சேசனம் - நனைத்தல். சேசூரணம் - கௌரிபாஷாணம். சேசூனம் - தெளித்தல், புசித்தல். சேடகம் - பரிசை. சேடசாயி, சேஷசாயி - விட்டுணு. சேடசுரம் - ஓர்நோய். சேடநீர் - சிலேற்பனநீர். சேடபாகம் - மிச்சப்பங்கு. சேடம், சேஷம் - அழித்தல், எச்சில், சிலேற்பனம், மிச்சப்பொருள். சேடர் - அடிமைக்காரர், ஏவல் செய் வோர், நெய்வாரினோர் பகுதி. சேடவட்டில் - உண்கலம். சேடார்த்தம் - குறைப்பொருள். சேடன், சேஷன் - அடிமைக்காரன், அனந்தன், இளையோன், ஏவல் செய்வோன், ஓர்சாதியான், கட்டிளமையோன், பலதேவன், பாங்கன். சேடி - அடிமைக்காரி, அழகுள்ள வள், இடையர்வீதி, இளையாள், ஏவல்செய்வாள், சேடியென்னே வல், தோழி, வித்தியாதரருலகு. சேடித்தல் - அலங்கரித்தல், குறைத்தல், மிஞ்சிநிற்றல். சேடியர் - அடிமைகளிற்சிறந்தோர், ஏவற்பெண்கள், பாங்கியர். சேடு - அழகு, இளமை, திரட்சி, நன்மை, பெருமை. சேஷை, சேடை - மாக்காப்பு. சேஷையரிசி - அறுகரிசி. சேட்சி - தூரம். சேட்செலவு - தூரமாய்ப்போதல். சேட்டகம் - அதிசத்தம். சேட்டபாரி - முதன்மனைவி. சேட்டம், சேஷடம் - ஆனிமாதம், திறம், முதன்மை, மேன்மை. சேட்டனம் - முயற்சி. சேட்டன், சேஷ்டன் - மூத்தோன். சேட்டாதேவி - மூதேவி. சேட்டாநாசம் - உலகமுடிவு. சேட்டி,சேஷ்டி - அக்காள், பெருமையிற் சிறந்தாள். சேட்டித்தல், சேஷ்டித்தல் - காரியப் படுதல், திறப்படல், நடத்தல். சேட்டிப்பித்தல் - நடப்பித்தல். சேட்டை, சேஷ்டை - அக்காள், குணங் கெட்டதொழில், கேட்டை நாள், முறம், மூதேவி, வியாகநாள், தொழில். சேட்படைநிலை - காதலன்றலைவி யொடுசேராது தோழிதடுத்தல். சேணம் - கல்லணை, மெத்தை. சேணவி - அறிவு. சேணாடர் - வானோர். சேணாடு - சுவர்க்கம். சேணி - ஏணி, தரங்கல், முறை, வித் தியாதரருலகு. சேணிச்சி - சேணியப்பெண். சேணியர் - நெய்வாரிலோர் பகுதி. சேண் - அகலம், ஆகாயம், உயர்ச்சி, தூரம், நீளம். சேண்டிரவர் - நெய்வார். சேதகம் - சிவப்பு, சேறு. சேதகரம் - வெட்டுதல். சேதபாதம் - நட்டம். சேதம் - இடையூறு, கேடு, நட்டம், பிரிவு. சேதனம் - அறிவு, வெட்டுதல். சேதனன் - அறிவுடையோன், ஆத்துமா. சேதா - சிவப்புப்பசு, நற்பசு. சேதாம்பல் - செவ்வாம்பல். சேதாரம் - அழிவு, தேமாமரம், பொன்னுரை, வெட்சிமரம். சேதி - ஓர்நாடு. சேதிதம் - வெட்டப்பட்டது. சேதித்தல் - அறுத்தல், வெட்டல். சேதிமம் - தேவர்கோயில். சேது - ஓர்தீர்த்தம், சிவப்பு, செய் கரை, பாலம். சேதுநாதன் - இராமேச்சுரன். சேதுபதி - ஓரரசன். சேதுபந்தனம் - அணைக்கட்டு. சேதுப்புராணம் - சேதுவின்சரித்திரம். சேத்தல் - சிவத்தல். சேத்திரக்கோவை - சேத்திரநாம மாலை. சேத்திரஞ்ஞன் - ஆன்மா, சரீரத்திர யத்தையறிபவன். சேத்திரம் - உடம்பு, தலம், வயல், காற்று, சரீரத்திரயம். சேத்திரவாசம் - தலவாசம். சேத்து - உறுப்பு, ஐயம், ஒப்பு, கருத்து, சிவப்பு, நெருக்கம், மிகுசிவப்பு. சேஷார்த்தம் - சம்பந்தப்பொருள். சேந்தன் - குமரன், திவாகரநிகண்டு செய்வித்தோன். சேந்து - அசோகமரம், சிவப்பு, நெருப்பு. சேந்துபந்தம் - அரக்கு. சேந்தை - மேற்படாம். சேபம் - இலிங்கம். சேபனம் - சுவருதல். சேபனார்த்தகம் - இறைத்தல். சேபாலங்கொட்டை - சேங்கொட்டை. சேபிட்டம் - வேகம். சேபேது - உடைத்தல், போடல். சேப்பு - சிவப்பு. சேமக்கலம் - எறிமணி. சேமக்காரன் - சூதானகாரன், பொருட் பத்திரம் பண்ணுவோன். சேமங்கொள்ளுதல் - சேமம் பண்ணு தல். சேமணி - ஆமணி, சேமக்கலம். சேமதருமம் - சுயதருமம். சேமத்தேர் - உதவித்தேர். சேமநிதி - புதையல். சேமப்படைக்கலம் - தறுவாய்க்கு வைத்திருக்கும்படை. சேமப்பொருள் - அடைக்கலப்பொருள், சேமமாயிருக்கும் பொருள், புதையல். சேமம் - அடக்கம், அரண், இன்பம், காவல், காவல்வீடு, புதையல். சேமம்பண்ணுதல் - சேமித்தல், பிரே தங்களையடக்கம் பண்ணல். சேமரம் - அழிஞ்சில், சேரான். சேமறி - எருதும்பசுவும் புணர்தல். சேமனவம் - சிவந்தமணி. சேமன் - தந்தரி. சேமாசாரம், சேமாதிசயம் - சேமிக்குந் தன்மை. சேமாளைச்சம்பா - ஓர்நெல். சேமித்தல் - காவல் பண்ணிவைத்தல், புதைத்தல். சேமை, சேம்பு, சேம்பை - ஓர்செடி. சேயமம் - கௌரிபாஷாணம். சேயம் - கரை, கூடப்பட்டது. சேயவன் - கந்தன், செவ்வாய். சேயா - கடுக்காய். சேயார் - பகைவர், பிறர். சேயிலம் - இருப்பை. சேயிழை - ஆபரணம், பெண். சேயேபசம் - மரமஞ்சள். சேயோன் - கந்தன், சிவன். சேய் - இளமை, குமரன், குழந்தை, சிவப்பு, செவ்வாய், தூரம், நீளம், மனை, மூங்கில். சேய்த்து - தூரம், நீளம். சேய்நீர் - ஓர்விதமருத்துநீர். சேய்மை - தூரம், நீளம். சேய்மைச்சுட்டு - தூரப்பொருளைச் சுட்டிக்காட்டல், (உம்) அஃது. சேர - ஓன்றாய். சேரக்கட்டுதல் - சேர்த்தல், சேர்த்துக் கட்டுதல். சேரமண்டலம் - சேரநாடு. சேரமான் - சேரன். சேரலர் - பகைவர். சேரலன் - சேரன், பகைவன். சேரல் - கிட்டல், கொழியலரிசி. சேரன் - ஓரரசன். சேரா - கள். சேராங்கொட்டை - சேரான் கொட்டை. சேரார் - பகைவர். சேரான் - ஓர்மரம், பகைவன். சேரி - ஊர், தெரு. சேரிடுதல் - பிணைத்தல். சேரிப்பரத்தையர் - பொது ஸ்திரீகளி லோர் வகையார். சேருகம் - நாகணவாய்ப்புள். சேருதல் - சேர்தல். சேரும்பாடும் - அடிதலைமாறி. சேரை - சிறங்கை. சேர் - ஓரளவு, ஓர்நிறை, சேரென் னேவல், பிணையல். சேர்க்கை - ஒன்றிப்பு, சேருமிடம், சேர்க்குதல், புணர்ச்சி. சேர்தல் - அடுத்தல், இணங்குதல், ஒருமித்தல், கிட்டுதல், கூடுதல், புணர்தல், அடைத்தல். சேர்த்தல் - அடுத்தல், அணிதல், அறுத்தல், இணைத்தல், கலத்தல், கூட்டுதல், சமைத்தல், சேகரித்தல், சேரப்பண்ணுதல். சேர்த்தி, சேர்த்திக்கை - உறவு, சேர் மானம். சேர்த்துதல் - இணைத்தல், சேரப் பண்ணுதல். சேர்ந்தகைமை - சேரத்தகுந்தன்மை. சேர்ந்தலை - உற்றசினேகம், ஒன்றிப்பு. சேர்ந்தவன் -அடுத்தவன். சேர்ந்தார் - உற்றார். சேர்ந்தார்க்கொல்லி - நெருப்பு. சேர்பு - சேர்மானம், வீடு. சேர்ப்பன் - நெய்தனிலத்தலைவன். சேர்ப்பு - இறங்குதுறை, சேர்க்கப் படுவது. சேர்ப்பூட்டு - சோடு. சேர்மானம் - ஒன்றிப்பு, கூட்டு. சேர்விடம் - சேருமிடம், சேர்மானம், மனிதர்படுக்கை. சேர்வு - திரட்சி, மருதநிலத்தூர், வீடு. சேர்வை - ஓர்மருந்து, கூட்டம், சேர்ப்பு, சேர்மானம், சேனை. சேர்வைக்காரன் - சேனைத் தலைவன், போர்ச்சேவுகன். சேர்வைக்கால் - உண்கலமுதலிய வைக்குந்தாள். சேலகம் - முத்தக்காசு. சேலப்பிரட்சாளகன் - வண்ணான். சேலம் - ஓரூர், புடைவை. சேலியால் - இலாமிச்சை. சேலேகம் - சந்தனம், சிந்தூரம். சேலை - அசோகு, சீலை. சேலோதம் - சந்தனம். சேல் - கயல். சேவகம் - சேவகத்தொழில், சோம்பு, துயில், யானைதுயிலிடம், வணக் கம், வீரம், வேலை. சேவகன் - ஐயன், பணிவிடைகாரன், பேயுள்ளி, வீரன். சேவகன்பூடு - காந்தள், சிறுபுள்ளடி, சிற்றமட்டி. சேவதி - குபேரன்றிரவியம். சேவல் - காவல், பறவையினாண். சேவற்கத்தி - சாவற்போருக்குக் கட்டுங்கத்தி. சேவற்கொடியோன் - ஐயன், கந்தன். சேவற்பண்ணை - ஓர்பூமரம். சேவனம் - சேவகம், தைத்தல். சேவனை - சேவிப்பு. சேவனைகாரர் - ஊழியஞ் செய் வோர், வழிபடுவோர். சேவாலங்கொட்டை - நேர்வாளம். சேவிதம் - சேவகம். சேவித்தல் - ஊழியஞ்செய்தல், வழி படுதல். சேவுகம் - சேவகம். சேவை - ஊழியம், வழிபடுதல். சேவையூர் - சிதம்பரம். சேறல் - எழுச்சி, செல்லல். சேறாடல் - செள்ளலாடுதல். சேறு - இனிமை, கள், குறிப்பு, செள்ளல், தித்திப்பு, திருவிழா. சேற்கண்ணி - அரிதாரம். சேற்பம் - சிலேற்பனம். சேற்பனசுரம் - ஓர்காய்ச்சல். சேற்பனம், சேற்றுமம் - சிலேட்டுமம். சேனம் - பருந்து. சேனன் - பிறப்பிலேசிலாக்கிய முடை யோன். சேனா - ஓர்பூடு, விலாங்குமீன். சேனாங்கம் - படையுறுப்பு. சேனாசமுத்திரம் - பெருஞ்சேனை. சேனாசரன் - படைவீரன். சேனாதிபதி - படைத்தலைவன். சேனாதிபன், சேனாபதி - படைத் தலைவன். சேனாதிராயன் - கந்தன், சேனாதிபதி. சேனாபத்தியம் - தானாபத்தியம். சேனாமுகம் - படையினோர் தொகை, அஃது பதாதிமூன்று கொண்டது, முற்படை. சேனாவரையர் - ஓராசிரியர். சேனாவு - தகரை. சேனானியன் - குமரன், படைத் தலைவன். சேனை - ஆயுதம், கடைவீதி, படை, மிகுதி. சேனைத்தலைவன் - படைத் தலைவன். சை சை - இகழ்ச்சிக்குறிப்பு, ஓரெழுத்து. சைகதம் - மணல், மணற்கரை. சைகன் - ஒழுக்கந்தவறின பார்ப் பனப்புத்திரன். சைகை, சைக்கினை - பயில். சைகதவுண்டை - மலை. சைங்கம், சைங்கியம் - சிங்கம். சைங்கிகேயம் - இராகு. சைசவம் - இளமை, பதினாறு வயதிற் குள்ளானபருவம். சைதன்னியதரிசனம் - தானுந்தலை வனு மொன்றெனக் காண்டல். சைதன்னியம் - அறிவு, ஆத்துமா, கடவுள். சைதிதம் - பிரம்பு. சைதியமுகம் - கமண்டலம். சைத்தியம் - இறப்புக்கல்வெட்டு, குளிர்மை, பலிபீடம். சைத்திரகம் - சித்திரைமாதம். சைத்திரம் - சித்திரைமாதம், வெற்றி. சைத்திராதம் - குபேரனந்தனம். சைத்திராதன் - வீரன். சைத்திராவலி - சித்திராபூரணை. சைத்திரி - சித்திரைமாதம், யாகமிரு பத்தொன்றினொன்று. சைத்திரிகம் - சித்திரைமாதம். சைத்திரியஞானம் - சித்தஞானம், பேரறிவு. சைத்திரியம் - தெளிவு. சைத்துவம் - செய்தல். சைந்தவம் - இந்துப்பு, குதிரை, தலை. சைமானம் - வெகுமானம். சைமினி - உத்தரமீமாமிச நூலாசிரி யன், ஓரிருடி, யமலோகம். சைமினிநகரோன் - நமன். சைமினிநகர் - இயமலோகம். சையகிரி - ஓர்மலை. சையம் - கல், செல்வம், மலை. சையெனல் - இகழ்ச்சிக்குறிப்பு. சையை - சைகை. சையோகம் - கூட்டம், புணர்ச்சி. சையோகித்தல் - கூடுதல். சையோகை - சத்தியினாற்சிவத்துக் குண்டாகுந்துன்பம். சையோத்திகம் - அயிக்கம். சைரிகம் - கலப்பை. சைரிகன் - உழவன், ஏர்மாடு. சைரிபம் - எருது, எருமை. சைலகம் - மலையிருவேலி. சைலசிருங்கம் - மலைமுடி. சைலதரன் - கிருட்டிணன். சைலபதி - இமயமலை. சைலபித்தி - கல்லுளி. சைலம் - சேலை, மலை. சைலாந்திரம் - மலைக்குகை. சைவகுரு - ஆகமமார்க்ககுரு. சைவசமயம் - சிவசமயம். சைவசாத்திரம் - சிவாகமம். சைவசித்தாந்தம் - ஓர்நூல், சைவ சமயத்தெளிவுண்மை. சைவநூல் - சிவாகமநூல். சைவபூடணம் - ஓர்நூல். சைவம் - சிவசமயம், அஃது உட் சமயமாறினொன்று, பதினெண் புராணத் தொன்று. சைவர் - சிவசமயத்தார், விசேட தீட்சைபெற்றோர். சைவலம் - பாசி. சைவாகமம் - சிவாகமம். சைவாசாரம் - சிவசமயவொழுங்கு. சைவியம் - சைவத்திற்குரியது. சைனர் - சமணர், சீனர். சைனன் -அருகசமயத்தவன், அருகன், புத்தன். சைனாபத்தியம் - சேனாபதித்துவம். சொ சொகுசா - உயர்ந்தசெம்பு. சொகுசு - அழகு, சௌக்கியம். சொக்கட்டான் - ஓர்சூது. சொக்கட்டான்கவறு - பாச்சிகை. சொக்கட்டான்காய் - சொக் கட்டா னாட வைக்குங்கருவி. சொக்கட்டான்பந்தல் - சொக்கட்டான் மனைபோற் செய்த பந்தர். சொக்கட்டான்பாச்சிகை - சொக்காட் டான் கவறு. சொக்கட்டான்மனை - சொக்கட் டான் விளையாடு மறைப்பலகை முதலியன. சொக்கதேவன் - கூகை, கூகைக்கட்டு. சொக்கநாதன் - சிவன். சொக்கப்பனை - விளக்கீட்டி லெரிக்கு மோர்செய்கை விருட்சம். சொக்கப்பையன் - வேலைகாரன். சொக்கம் - அழகு, கலப்பின்மை, களவு, கெம்புக்கல், தூய்மை, நன்மை, மேன்மை. சொக்கரை - குறை. சொக்கலி - ஓர்செடி. சொக்கலிங்கன் - சொக்கநாதன். சொக்கறை - சொக்கரை. சொக்கன் - சிவன், சொக்கப்பையன். சொக்கா - ஓர்வகையங்கி. சொக்காளி - ஓர்பூடு. சொக்கிடுவித்தை - களவுபண்ண மயக்கும்வித்தை. சொக்கு - அழகு, அறியாமை, கண் தூக்கம், கதுப்பு, சொக்கென் னேவல், சோர்வு, பொன், மயக்கு. சொக்குப்பொடி - அயர்ந்த நித்திரை யாகும் படிமேலிற் போடும்பொடி. சொக்குவித்தல் - மயக்குதல். சொக்குவித்தை - மயக்குவித்தை. சொச்சம் - குறை, பணவட்டி, மாசின் மை, மிச்சம். சொச்சோர் - சொற்சோர். சொடக்கு - கடுகு, கிலுகிலுப்பை. சொடித்தல் - குறைத்தல். சொடுகு - சொறி, பொடுகு. சொடுதலை - போகணி. சொட்டா - ஓர்வகைப்பட்டையம். சொட்டு - குட்டு, சொட்டென் னேவல், திவலை, துண்டு. சொட்டுதல் - அணாப்புதல், இடித்தல், குட்டுதல். சொட்டுத்தண்டம் - இடுவந்தி. சொட்டுப்போடுதல் - திவலை விழுத்தல். சொட்டை - ஓராயுதம், கோணல், நொன்னை. சொட்டைத்தலை - வெண்டலை. சொண்டறை - சொண்டிலி. சொண்டி - உத்தியோகம், கடனுறுதி, வேர்க்கொம்பு. சொண்டு - அற்பன், ஆயுதநுனி, உதடு, உத்தியோகம், கனத்த விளிம்பு, நிந்தை, பறவைமூக்கு. சொண்டுக்கதை - கோட்கதை, முகமன்கதை. சொண்டுத்தீன் - உருசியானசிறுதீன். சொண்டுபண்ணல் - இகழ்ச்சி பண்ணல். சொதை - ஐசுவரியம். சொஸ்தம் - சுகம். சொத்தலி - பனங்காயின் பொய்க் கொட்டை. சொஸதானம் - உயிர்த்தெழுதல், சரியிடம். சொத்தி - முடம். சொத்திரி, சொஸ்திரி - குலஸதிரி. சொத்து - உடைமை, குறை, பசை. சொத்துவம் - உரிமை. சொத்தை - கதுப்பு, சூத்தை. சொந்தம் - சுயம். சொப்பணம் - இரண்டாமவத்தை, கனா. சொப்பனாவத்தை - ஓரவத்தை. சொம் -உடைமை,உரிமைப் பொருள். சொம்மாளி - உரிமைக்காரன். சொயம் - சுயம். சொயம்பு - சுயம்பு. சொயாதீனம் - சுயாதீனம். சொரங்கம் - கச்சோலம். சொரசத்தோரசி - இலவங்கம். சொரடு - இரும்பு, வளையற்றடி. சொரணை - சொருணை. சொரிகுரும்பை - ஓர்நெல். சொரிதரல் - சுழலல், பொழிதல். சொரிதல் - உதிர்தல், பொழிதல், மிகவீதல். சொரிவு - உதிர்வு, பொழிவு. சொருகம்புல் - ஓர்புல். சொருகுதல் - செருகுதல். சொருணை - சுவரணை. சொருணைகேடு - உணர்ச்சி யின்மை. சொரூபஞானம் - பரமஞானம். சொரூபம் - உடம்பு, பரம், வடிவு, விக்கிரகம். சொரூபன் - கடவுள். சொரூபானந்தம் - ஓர்வேதாந்தநூல். சொரூபி - உரூபி, சுரூபி. சொலித்தல், சொலித்திடல் - இடந் திடல், சுவாலித்தல், பிரகாசித்தல். சொலிப்பித்தல் - சொலிக்கச்செய்தல். சொலிப்பு - சுவாலை, பிரகாசம். சொலியன் - முடக்கொத்தான். சொலுசொலுத்தல் - பொலு பொலுத் தல். சொலுசொலுப்பு - பொலுபொலுப்பு. சொலுசொலெனல் - பொலுபொ லெனல். சொல் - எழுத்தினோசைச்சொல், கட்டளை, கள், செந்நெல், செந் நெற்கதிர், சொல்லென்னேவல், நெல், புகழ், பேச்சு. சொல்லணி, சொல்லலங்காரம் - சொற் றொடை வகைச்சிறப்பு. சொல்லறிபுள் - கிளி. சொல்லாகுப்பெயர் - ஓராகுபெயர், அஃது சொல்லின்பெயரதன் பொருட்கு வழங்குவது, (உம்) உரைசெய்தான். சொல்லாதசொல் - அசப்பியம், இரகசியம், வசை. சொல்லானந்தம் - சொற்குற்றம். சொல்லிக்கொள்ளுதல் - எடுத்துப் பேசுதல், பிணைநிற்றல், பொறுப்புச் சொல்லுதல். சொல்லிலக்கணம் - சொல்லினியல்பு. சொல்லின்பம் - சொற்சுவை. சொல்லின்முடிவினப்பொருண்முடித்தல் - ஓர்யுத்தி. சொல்லுதல் - புலமைபாடுதல், மொழிதல். சொல்லுதவி - வாயுதவி. சொல்லுரை - சொற்பயன். சொல்வகை - நூலுரைபதினான்கி னொன்று. சொல்லுவான்குறிப்பு - சொல்வோன் கருத்து. சொல்லுறுதி - மெய்வார்த்தை. சொல்லெச்சம் - சொல்லெஞ்சி நிற்பது. சொல்லெஞ்சணி - ஓரணி, அஃது சொல்லெச்சம். சொல்லேருழவர் - புலவர், மந்திரிகள். சொல்லொடுபொருள் - சொற் றோறும் பண்ணும்பயன். சொல்லொப்பணி - ஓரணி, அஃது சொல்லொத்துவருவது. சொல்வரை - சொற்பகுதி. சொல்வளம் சொற்சாதூரியம் - சொன்னயம். சொல்வன்மை - சொல்லுறுதி, சொற் சாதூரியம், வாக்குவல்லபம். சொல்விலக்கு - ஓரலங்காரம், அஃது ஆராயாது சொன்னதைவிலக்கல். சொல்விளம்பி - கள். சொளுசொளுத்தல் - நீர்ப்பிடிப் பாயிளகிக்காட்டல். சொள்ளல் - குறைவு, சூத்தை. சொள்ளை - பழுதுபட்டது, புழு வரித்தது. சொறி - குட்டம், சொறியென் னேவல், தினவு. சொறிகட்டை - ஆவுரிஞ்சுதறி. சொறிக்கல் - சுக்கான்கல், தவளைக் கல், மஞ்சட்கல். சொறிக்கிட்டம் - கீச்சுக்கிட்டம். சொறிதல் - அரித்தல், பிறாண்டல். சொறிமண்டலி - ஓர்பாம்பு. சொறியன் - தவளை. சொறிவு - தினவு. சொற்கப்பனை - சொக்கப்பனை. சொற்கம் - சுவர்க்கம், மாணிக்கம், முலை. சொற்கருவி - உரைக்காரகவேது, அஃது உதடு - நா - பல். சொற்கலகம் - வாக்குவாதம், விபரீதம். சொற்காத்தல் - சோற்றவறாமை. சொற்குறி - சூதபாஷாணம். சொற்குற்றம் - சொற்பிழை. சொற்சந்தி - சொற்புணர்ச்சி. சொற்சாதூரியம் - வாக்குவிற் பன்னம். சொற்சித்திரம் - கருவானபேச்சு. சொற்சிமிட்டு - சொற்சாதூரியம். சொற்சீரடி - தளைகள் ஒன்றும் பலவுமடுத்து வருவது. சொற்சுவை - சொல்லின்பம். சொற்சோர் - சொல்லிழுக்கு. சொற்பம் - அற்பம். சொற்பயன் - சொற்பொருள். சொற்பணம் - சொப்பனம். சொற்பின்வருநிலை - மொழிந்த சொல்லேமொழியினும் பொருள் வேறுபட்டு நிற்பது. சொற்பொருட்பின்வருநிலை - சொல்லும் பொருளுமொன்றே மறுத்தும் வருவது வெவ்வேறு பயன் படுவது, (உம்) வைகலும் வைகல் வரக்கண்டு. சொற்பொருள் - சததார்த்தம், நூலுரைபதினான்கி னொன்று. சொற்பொருள்விரித்தல் - ஓர்யுத்தி, அஃது சொற்பொருள் விளங்க உருபுமுதலானவற்றை விரித்துச் சொல்லல். சொற்றல் - சொல்லல். சொற்றுணை - சொல்லுதவி. சொற்றொடர்நிலைச்செய்யுள் - ஓர்பிர பந்தம், அஃது சொல்லாற்று டர்ந்து வருவது. சொனாகம் - உத்தாமணி. சொன்மாலை - ஏற்றமொழி. சொன்மிக்கணி - ஓரலங்காரம் அஃது வந்தசொல்லே மீண்டு மீண்டும் வரத்தொடுத்தல். சொன்றி - சுக்கு, சோறு. சொன்னகாரர் - தட்டார். சொன்னசீரம் - கரும்பு. சொன்னதானம் -இரணியதானம். சொன்னபுட்பம் - சுவணபுட்பம். சொன்னபேதி - ஓர்மருந்து. சொன்னமயம் - பொன்னிறம் சொன்னமாக்கி - பவளபாஷாணம். சொன்னம் - பொன். சொன்னல் - இரும்பு, சோளம். சோ சோ - அரண், உமை, ஓரெழுத்து, வியப்புச்சொல். சோகநீக்கி - மாதவி. சோகம் - உண்டை, ஒட்டகம், சோம் பல், சோர்வு, துன்பம், தொடை, பஞ்சபாணத்தவத்தையினொன்று, அஃது வெதுப்புந் துய்ப்பன தெவிட்டலுமாயிருத்தல். சோகரிகன் - வேட்டைகாரன். சோகரியம், சோகரீயம் - சௌகரியம். சோகவிருத்தி - சத்தவத்தையி லொன்று, அஃது சீவாவத்தை யிற்சனனமரண துக்கந் தனக் கில்லை யென்று தள்ளி நிற்றல். சோகாக்கினி - மிகுதுயர். சோகாத்தல் - துக்கப்படுதல், வதங்கு தல். சோகாபனோதன் - ஞானசாரியன். சோகாப்பு - துயரம். சோகாரி - கடம்பு. சோகி - பலகறை, விடவைத்தியன். சோகித்தல் - அவசப்படல், துக்கப் படுதல். சோகு - பிசாசம். சோகை - ஓர்நோய். சோகையன் - காமாலையன். சோங்கம் - அகிலமரம், கிச்சிலிக் கிழங்கு. சோங்கு - ஓர்மரக்கலம், குருகு, துப்பாக்கி முதலியவற்றினடி, மறத்தல். சோங்குவெட்டு - குதிவெட்டு. சோசகம் - மரப்பட்டை. சோசனம் - உள்ளி. சோசாக்கினி - மிகுதுயர். சோசியம் - சோதிடசாத்திரம். சோசியர் - சோதிடகாரர். சோச்சி - சோறு. சோச்சியகன் - கீழ்மகன். சோடசம் - பதினாறு, மரப்பட்டை நார். சோடசசைவம் - சைவபேதம் பதினாறு பதினாறு பாதச்சைவம். சோடசமுத்திரை - சைவமுத்திரை பதினாறு. சோடசவுபசாரம் - பதினாறுவகை வழிபாடு, அஃது அடைகாய்தரல், அமுதமேந்தல், ஆசமன நீர்தரல், ஆடைசார்த்தல், கருப்பூரதீப மேந்தல், கால்கழு நீர்தரல், கை கழுநீர் தரல், தவிச்ளித்தல், தேய் வைபூசல், நறும்புகைகாட்டல், நீராட்டல்,மஞ்சலரிசிதூவல், மந்திர மலரானருச்சித்தல், மலர் சார்த்தல், முப்புரிநூறரல், விளக் கிடல். சோடசி - யாகமிருபத்தொன்றி னொன்று. சோடசோபசாரம் - சோடசவு பசாரம். சோடணம் - உமிந்துகுடித்தல். சோடம், சோஷம் - சந்தோஷம், மார்ச் சட்டை, பொறுமை. சோடன் - கீழ்மகன், சோம்பன், மூடன். சோடித்தல் - அலங்கரித்தல். சோஷித்தல் - களைத்தல், வற்றுதல். சோடிப்பு, சோடினை - அலங்காரத் திற்கு வேண்டுவன. சோடு - இரண்டு, கவசம், சரியொப்பு, தொடுதோல், பாதகுறடு. சோடுகட்டுதல் - சரிவரவிணைத்தல், சூதாட்டத்தொன்று. சோடை - சடைந்தது, சடைவு. சோஷை - திரீ. சோட்டா - வளைதடி. சோட்டை - ஆசை. சோணகிரி - அருணாசலம். சோணங்கி - ஓர்நாய். சோணம் - இரத்தம், ஓர்யாறு, கடல், சிவப்பு, செங்கரும்பு, செந்தூரம், தீ. சோணாகம் - பெருவாகை. சோணாசலம் - அருணாசலம். சோணாடு - சோழநாடு. சோணாலு - விருத்தம். சோணிதபுரம் - அசுரரிருக்கு மோர் பட்டினம். சோணிதம் - இரத்தம், சிவப்பு, சுரோணிதம், மஞ்சள். சோணேசன் - சிவன். சோணை - அருகு, ஓர்பட்டினம், ஓர் மலை, காதினருகு, புகையிலை முதலியவற்றினடிப் புறம், சோணைநதி. சோதகம் - கழிக்குந்தொகை, சுத்தி பண்ணல். சோதகர் - ஏழ்தலைமுறையளவு மிறந்தபிதிர், ஏழ்தலைமுறையிற் புத்திரர். சோதகும்பம் - சுத்தோதககும்பம். சோதம் - ஒழுகல். சோதரம் - சகோதரம். சோதரன் - சகோதரன். சோதரி - சகோதரி. சோதனம் - சுத்தஞ்செய்தல், சோதித் தல், துரிசு. சோதனை - அளவு, ஆராய்வு, கட்ட ளை, சோதிப்பு, பிரமாணம். சோதி - அருகன், ஒளி, ஓர்நாள், கடவுள், கருப்பூரம், சாதிலிங்கம், சிவன், சூரியன், சோதியென் னேவல், தீ, பூநாகம், வான்மீன், விட்டுணு. சோதிக்குட்சோதி - கடவுள். சோதிக்குண்மணி - முத்து. சோதிசக்கரம் - துருவசக்கிரம். சோதிடகாரர் - சோசியர். சோதிடசாத்திரம், சோதிடநூல் - கலைஞானமறு பத்தினான்கி னொன்று. சோதிடநூலோர் - எண்கலைஞர். சோதிடம் - சோதிடசாத்திரம், நன்னி மித்தம். சோதிடர் - சோசியர். சோதிடவாதம் - சோதிடவிசுவாசு மார்க்கம். சோதிடவாதி - சோதிடமார்க்கி. சோதிதம் - அறிவிக்கப்பட்டது, நிய மிக்கப்பட்டது. சோதிட்டம் - மிகவற்பம். சோதித்தல் - ஆராய்தல். சோதிநாயகன் - கடவுள். சோதிநீச்சடம் - முத்துச்சிப்பி. சோதிப்பிழம்பு - ஒளிப்பிளம்பு, கடவுள். சோதிமண்டலம் - வானசோதிகளின் மண்டலம். சோதிமயம் - ஒளியுருவம், மிக்கவொளி, வாலுளுவை. சோதிமா - சோதிமரம். சோதிராத்திரி - நடிராத்திரி. சோதிரூபம் - ஒளிவடிவு. சோதிவிருட்சம் - இரவெரிமரம். சோதினி - செத்தை, துடைப்பம். சோத்தி - அத்தசாமம், சுழுத்தி. சோத்தியம் - அதிசயம், கழிக்கப்படுந் தொகை, சுத்தம், சோதிக்கப் படுவது, தவறு, வினா. சோத்திரம் - காது. சோத்திரியவிந்திரியக்காட்சி - சத்ததன்மாத்திரை. சோநிசி - குகை. சோந்தை - உடந்தை, தடை. சோபகிருது - ஓராண்டு. சோபபிரகாசன் - எல்லாவற்றையு மறிவாலறிபவன். சோபாதானம் - முதற்காரணம். சோபம் - அழகு, கள், சோம்பல், சோர்வு, தாமதகுணத்தொன்று, பத்துக்கோடி கோடாகோடி, பிரவை. சோபனம் - அழகு, சந்தோஷம், சுபம், தாமரை, நித்தியயோகத் தொன்று, அஃது நன்மை, வாழ்த்து. சோபாலிகை - அடுப்பு, சுவாலை யுள்ளது, விரிதூறு. சோபானம் - கற்படி, தாழ்வாரம், நன்னிமித்தம், வசதி. சோபிதம் - சௌந்தரியம், பிரவை. சோபித்தல் - ஒளிசெய்தல், சோர்தல். சோபை - அழகு, ஒளி. சோப்பம் - சோர்வு. சோப்பறுதி - மிகுவாட்டம். சோப்பி - ஈச்சோப்பி. சோப்பு - அடி, சோப்பென்னேவல். சோப்புதல் - அடித்தல், வாட்டுதல். சோமக்கொடி - ஓர்வகையாகத்திற் கட்டுங்கொடி. சோமசுந்தரன் - ஓர்பாண்டியன், சிவன். சோமசூரியவமிசம் - சந்திரகுலமுஞ் சூரியகுலமுங்கலந்தவமிசம். சோமசேகரன் - ஓர்பாண்டியன், சிவன். சோமதாரி - இந்துப்பு, சிவன். சோமதாரை - ஆகாயம். சோமநாதன் - சிவன். சோமநாதி - ஓர்பெருங்காயம். சோமபந்து - ஆம்பல். சோமபானம் - மதுபானம். சோமமண்டலம் - சந்திரமண்டலம். சோமம் - ஆதாயம், ஓர்பூடு, ஓர்யாகம், கஞ்சி, கள். சோமயாகம் - பூரணாதினத்துச் செய்யுமோர் வேள்வி. சோமவுலுக்கம் - தேக்கு, வணங்கல். சோமலிங்கன் - சோமாரணியேசுரன். சோமவல்லி - ஓர்கொடி. சோமன் - அட்டவசுக்களி லொருவன், அமுதம், ஓர்வள்ளல், கருப்பூரம், காற்று, சந்திரன், சிவன், தூசு, நமன், பன்னிரண்டு முழமுள்ள புடைவை, மலை, புதன். சோமன்சோடு - அங்கவத்திரமு முடையும். சோமாக்கியம் - தாமரை. சோமாரணியம் - ஓர்வனம். சோமாறுதல் - சோர்மாறுதல். சோமாற்று - சோர்மாற்று. சோமயாகம், சோமிகயாகம் - பூரணா தினத்துச் செய்யுமோர் வேள்வி சோமுகன் - ஓரசுரன். சோமேசுரன் - சிவன். சோம்பல் - அழுங்கல், சோம்புதல், வசூரி. சோம்பறை - சோம்பு. சோம்பன், சோம்பி - சோம்பறை காரன். சோம்பு - அழுங்கல், சோம்பென் னேவல், தாமதகுணத் தொன்று, மடி, அஃது, மாய யாக்கை பதினெண்குற்றத் தொன்று, பெருஞ்சீரகம். சோம்புதல் - மடியாதல், வாட்டங் கொள்ளுதல். சோம்பேறி - சோம்பி. சோய்வு - சோர்வு. சோரகவி - ஒருவர் பாவையெடுத்துச் சில மாற்றுதல் செய்துவேறொரு வர்க்குரைப்பவன். சோரகன் - கள்வன். சோரக்க தண்டு - கருவண்டு. சோரசத்துரு - சவ்வீரம். சோரணம் - விடுதல். சோரத்திரவியம் - கொள்ளையிட்ட பொருள். சோரத்திரீ, சோரஸ்திரீ- விபசாரி, வேசி. சோரநாசம், சோரபஞ்சதம் - கள்வர் சேதம். சோரபயம் - கள்வர்பயம். சோரபுத்திரன் - விபசாரபுத்திரன். சோரபுத்திரி - விபசாரபுத்திரி. சோரபுருஷன் - கள்ளப்புருஷன். சோரப்போடுதல் - ஆறப்போடுதல், பின்போடுதல். சோரமார்க்கம் - தூர்த்தத்தனம். சோரமிடுதல் - களவெடுத்தல். சோரம் - களவு, வைப்புப்பாஷாண முப்பத்திரண்டிலொன்று. சோரம்போதல் - களவுபோதல், கற்பழிதல், தவறுதல். சோரர் - திருடர். சோரல் - சோருதல், தளர்தல். சோரவிடுதல் - இளகவிடுதல், காரியத் தைப்பின் போடுதல், தவறவிடுதல். சோரன் - ஆட்டுக்குட்டி, ஓர்வருட தேவதை, திருடன். சோராவாரி - கொள்ளை. சோரி - இரத்தம், மழை, சிறுசெருப் படை. சோரிகை - களவு. சோருதல் - வாடுதல். சோர் - சோரென்னேவல், சோர்வு. சோர்ச்சி - அயர்ச்சி,சோகம், தளர்வு. சோர்தல் - தவறுதல், தளர்தல், பொசிதல், வதங்குதல், வாடல், விழுதல். சோர்த்தல் - கவர்தல். சோர்மாறுதல் - நெகிழவிடுதல். சோர்மாற்று - நெகிழ்ச்சி. சோர்வாதம் - ஓர்நோய். சோர்வு - அயர்ச்சி, களவு, தவறு, தளர்வு, நிறையழிவு, நெகிழ்வு, மறதி வதக்கம். சோவி - தொந்தறை, மார்க்கச்சு. சோலை - தோப்பு, மரச்செறிவு. சோலைமலை - ஓர்மலை. சோழகக்கச்சான் - தென்மேற்றிசை, தென்மேற்றிசைக்காற்று. சோழகக்கொண்டல் - தென்கீழ்த் திசை, தென்கீழ்த்திசைக்காற்று. சோழகம் - தெற்கு, தென்காற்று. சோழங்கபாஷாணம் - ஓர்பாஷாணம். சோழமண்டலம்,சோழம் - சோழ தேயம், அஃது தேயமைம் பத்தாறி னொன்று. சோழன் - தமிழ்நாட்டு மூவேந்தரி லொருவன். சோழியக்கடகம் - மண்ணள்ளுங் கடகம். சோழியர்,சோழியவேளாளர் - ஓர் சாதியார். சோழியன் - ஓர்வேளாளன், மண் வெட்டி. சோளகம் - சௌளம். சோளம் - ஓர் பயிர். சோளனா - ஓர்பை. சோளன் - சோளம். சோளி, சோளிகை - ஓர்கூடை. சோறு - அன்னம், கற்றாழஞ் சோற்றி முதலியன, பரணிநாள், பூஞ்சுண் ணம். சோறூட்டு - அன்னப்பிராசனம். சோற்றாலாத்தி - ஓராலாத்தி. சோற்றி - வயிரமற்றது. சோற்றிலை - கற்றாளை. சோற்றுக்கற்றலை - ஓர்மீன். சோற்றுப்பதம் - காய்கள் பழுக்கத் தக்க பருவம். சோனகம் - தேயமைம்பத்தாறி னொன்று, பதினெண்பாடை யினொன்று. சோனகர் - துலுக்கர். சோனாமாரி - சோனாவாரி. சோனாமேகம் - பெருமழை பொழியு முகில். சோனாவாரி - பெருமழை, விடாமழை. சோனை - சொரிதல், திருவோண நாள், விடாமழை. சோனைமழை - பெருமழை. சோன்மதன் - பித்தன். சௌ சௌகசூத்திகன் - பள்ளி யெழுச்சி பாடுவோன். சௌகதன் - சூனியவாதி, புத்தன். சௌகதிகம் - சந்தேகம். சௌகந்தகம் - சுகந்தம். சௌகந்தி - கந்தகபாஷாணம். சௌகந்திகம் - வெள்ளாம்பல். சௌகந்திம் - சுகந்தம். சௌகம் - கிளி, துக்கம். சௌகரியம் - சுகம்,சோகரியம். சௌகாத்தியம்,சௌகிருத்தியம் - சினேகம். சௌகார்த்தகம் - சினேகம். சௌகுமாரியம் - இளமை, சுகுமாரம். சௌக்கியம் - சந்தோஷம், சுகம், வசதி. சௌசம் - சுத்தம். சௌசவிதி - சுத்தஞ்செய்விதி. சௌசன்னியம் - இரக்கம், சினேகம், பட்சம். சௌசன்னியன் - பட்சமுடை யோன். சௌசாசாரம் - ஆசவுசநிவிர்த்தி செய்விதி. சௌசி, சௌசிகன் - தையற்காரன். சௌசேயன் - வண்ணான். சௌடீரியம் - வீரம். சௌண்டி - ஓர்பிதிர், திப்பிலி. சௌண்டிகரணம் - சிராத்தக் கிரியையி னொன்று. சௌண்டிகர் - கள்விற்போர். சௌதம் - சாலை, மலிவு, வெள்ளி. சௌதாகிரி - குதிரைவியாபாரி. சௌதாகிரிக்குதிரை - விலைக்குதிரை. சௌதாமினி - மின். சௌதாயம் - நன்கொடை, பந்தயப் பொருள். சௌதாயிகம் - சீதளம். சௌத்திரன் - சூத்திரன். சௌத்திராமணி - யாகமிருபத் தொன்றினொன்று. சௌந்தரமுகம் - பூரித்த மகிழ்ச்சி யான் மலர்ந்தமுகம். சௌந்தரம் - அழகு. சௌந்தரலகிரி - ஓர் நூல். சௌந்தரன் - அழகன், சிவன் . சௌந்தரி - அழகி, பார்வதி. சௌந்தரிகம், சௌந்தரியம் - சௌந் தரம். சௌந்தரியவதி - அழகுள்ளவள். சௌந்தரேசன் - சிவன். சௌபஞ்சனம் - புனன்முருங்கை. சௌபன்னம் - சுக்கு, மரகதம். சௌபாக்கியம் - நித்தியோகத் தொன்று. சௌபிகன் - மாந்திரிகன். சௌமனசியம் - பூரணம். சௌமன் - புதன். சௌமாரம் - இளமை. சௌமிகம் - சோமிகயாகம். சௌமித்திரன் - இலக்குமன். சௌமித்திரை - சுமித்திரை. சௌமிய - ஓராண்டு. சௌமியதாது - கோழை. சௌமியத்துவம், சௌமியம் - அழகு, சாந்தம், மனவொடுக்கம். சௌமியர் - சாந்தர், முனிவர். சௌமியன் - அருகன், சாந்தன், பன் னோருருத்திரரிலொருவன், புதன். சௌமேசகம் - பொன். சௌமேருகம் - பொன். சௌரகன் - நாவிதன். சௌரமாதம், சௌரமானம் - சூரிய மாதம். சௌரம் - அட்டாதசவுப புராணத் தொன்று, சூரம், சூரியமாதம், சௌளம், நாள். சௌரவம் - வாசனை. சௌரன் - சனி, சூரியன், சோரன். சௌராடி,சௌராட்டிரம் - ஓர்பண். சௌரி - கருடன், கன்னன், சனி, திருமால், துற்கை, நமன். சௌரிகம் - மோக்கம். சௌரிகன் - கள்விற்போன். சௌரிகை - சோரம். சௌரியப்பிரதாபம் - இராசமகிமை. சௌரியம் - களவு, பலம், வீரம். சௌரியவான் - சூரன், பலசாலி, வீரவான். சௌரியன் - சௌரியவான். சௌரியார்ச்சிதம் - சோரத்திரவியம். சௌவம் - கட்டளை. சௌவிதன் - அண்ணகன். சௌவீரம் - இரந்தைக்கனி, ஓர்மருந்து. சௌளகருமம் - குடுமிச்சடங்கு. சௌளகம், சௌளம் - மயிர்கழித்தல். சௌனகன் - ஓரிருடி. சௌனகீயம் - உபநிடத முப்பத்தி ரண்டினொன்று. சௌனந்தி - பலராமன். சௌனிகன் - ஊன்விற்போன், புலை ஞன். ஞ ஞண்டு - கற்கடகவிராசி, நண்டு ஞமகண்டன் - காணாக்கிரகத்தொன்று. ஞமறு - கள், நாய், மயில். ஞமலி - யமன். ஞரலுதல் - ஒலித்தல். ஞரல்வு - ஒலி. ஞலவல் - மின்மினிப்பூச்சி. ஞறா - மயிற்குரல். ஞா ஞாங்கர் - இடம், பக்கம், முன்பு, மேல், வேல். ஞாஞ்சில் - கலப்பை, மதிலுறுப்பு. ஞாட்பு - கூட்டம், படை, பாரம், போர், வலி. ஞாணோதை - ஞாண்டெறிக்கு மொலி. ஞாண் - கயிறு, வின்னாண். ஞாதசித்தாந்தம் - அறிவிற்றேற்றம். ஞாதம் - அறியப்பட்டது. ஞாதர் - அறிவுடையோர், நாதர். ஞாதி - சுற்றம், தாயத்தான். ஞாதிகருமம் - சுற்றத்தார்க்குச் செய்யுங் கருமாதி. ஞாதிகள் - தாயத்தார். ஞாதியர் - தாயத்தார். ஞாதுரு - அறிவு, காண்போன். ஞாத்தல் - கட்டுதல். ஞாபகக்கரவி - அறிவிற்குத்தாரக மாயகரணங்களும் பொறிகளும். ஞாபகத்துணைக்கருவி - அறிவிற்குக் காரணமாயகருவி, அஃது கண் - செவி-மூக்கு-மெய்-வாய். ஞாபகநிமித்தகருவி - ஆத்துமா. ஞாபகப்படுதல் - நினைவுகூருதல். ஞாபகப்படுத்தல் - அவதானப் படுத்தல், நினைப்பித்தல். ஞாபகமுதற்கருவி - சீவசாட்சி. ஞாபகம் - அரும்பொருள், அறிவு, இலக்கியவெடுத்துக்காட்டு, நினைவு, புறனடை. ஞாபகவேது - அறிவிற்குக் காரண மாயது, கருவி முதலியகாரண மாறு மன்றிப்பிற காரணத்தானுய்த் துணரக் கூறுவது. ஞாபகச்சூத்திரம் - எளிதினியற்றற் பாலவாயதனையரி தாய்ப்பிறி தொரு பொருளான்றி விப்பது. ஞாபகி - நினைப்பாளி. ஞாபிதம், ஞாபிதை - அறிவித்தல். ஞாயம் - நியாயம். ஞாயில் - மதிலுறுப்பு. ஞாயிறு - ஓர்வாரம், சூரியன். ஞாயிறுதிரும்பி - சூரியகாந்தம். ஞாலமாது - ஊமத்தை, பூமதேவி. ஞாலமுண்டோன் - திருமால். ஞாலம் -பூமி. ஞாலல், ஞாலுதல் - தூங்குதல். ஞாழல் - குங்குமமரம், குங்குமம், கோங்குமரம், சங்கபுட்பம், பலினி, பொன்னாவிரை, மயிர்க்கொன்றை, வைரம். ஞாளி - கள், நாய். ஞாளிகம் - வள்ளைக்கொடி. ஞாளியூர்தி - வயிரவன். ஞாற்சி - தூங்குதல். ஞானகாண்டம் - வேதத்தினோர் பகுதி. ஞானகாண்டிகர் - முவகைப் பக்குவரி லொருவர். ஞானகுரு - காரணகுரு, பரமகுரு. ஞானக்கண் - தேவஞானம், பிரத்தி யட்சப்படாதவற்றையறியத் தகு மறிவு. ஞானக்களை - ஞானசாதனத்தா லுண்டாகுங்குறி. ஞானக்காட்சி - சைதன்னியதரிசனம். ஞானசத்தி - ஞானசத்தி. ஞானசமாதி - ஞானநிட்டையி னொன்று. ஞானசரிதர் - ஞானிகள். ஞானசாதனம், ஞானசாதனை - ஞானப்பயிற்சி. ஞானசாத்திரம் - ஞானநூல். ஞானசுகம் - பேரின்பசந்தோஷம். ஞானசூட்சம் - பரமரகசியம். ஞானசைவம் - ஓர்சைவம். ஞானதிசை - ஞானாசாரதினிற்குங் காலம். ஞானதிட்டி, ஞானதிருட்டி - ஞானக்கண். ஞானதீட்சை - ஞானவுபதேசம் ஞானத்தகப்பன் - ஞானஸ்நானப் பிதா. ஞானத்தாய் - ஞானஸ்நானத்தாய். ஞானஸ்தானம், ஞானஸ்நானம் - அகஸ்நானம், கிறிஸ்துமார்க்கத் தோர் சடங்கு. ஞானத்திற்கிரியை, ஞானத்திற் சரிதை, ஞானத்தில்ஞானம், ஞானத்தில யோகம் - சைவநிலை பதினாறு பாதத்துளொன்று. ஞானநாயகன் - கடவுள், சிவன். ஞானநிட்டை - ஞானானுட்டிப்பு. ஞானநிலை - ஞானமார்க்கம். ஞானநூல் - ஞானசாத்திரம். ஞானபரன் - கடவுள், குரு. ஞானபாகை - வேதநூற்பொருள்களி னொன்று. ஞானபாதம் - நான்குபாதத்தொன்று, அஃது சிவனுஞ் சீவனு மொன் றெனக் கண்டுநிற்கை. ஞானபாரகன் - ஞானவறிவிலே தெளிந்தவன். ஞானபுத்திரன் - சீஷன். ஞானபூசை - மனோபூசை. ஞானபூரணி - பார்பதி. ஞானபூருவம் - முன்னறிவு. ஞானபூர்த்தி - மிகுஞானம். ஞானப்பிராந்தி, ஞானப்பைத்தியம் - ஞானமயல் ஞானமார்க்கம் - ஞானநிலை. ஞானமுத்திரை - தேவதியானமுத்திரை. ஞானமூர்த்தி - சரச்சுவதி, சிவன். ஞானம் - அறிவு, இராசதகுணத் தொன்று, கல்வி, சாத்துவிக குணத்து மொன்று, நல்லொழுக்கம். ஞானரேகை - கைவரையினொன்று. ஞானவதி - ஞானமுள்ளவள். ஞானவஸ்து - கடவுள். ஞானவல்லி - பார்பதி. ஞானவழி - சைவநிலைநான்கு பாதத்தொன்று. ஞானவான் - ஞானி. ஞானவிரல் - ஆழிவிரல். ஞானன் - கடவுள், பிரமன். ஞானாகாயம் - பரவெளி. ஞானாசத்தி - பஞ்சசத்தியி னொன்று. அஃது ஐம்பொறி யுணர்ச்சியாக நின்று கருமங்களையறிந் தூட்டு வது. ஞானாசாரம் - ஞானவொழுக்கம். ஞானாசாரியன் - ஞானபோதகன். ஞானாதிக்கம் - ஞானாதிகாரம். ஞானாதிக்கர் - கடவுளைக்குறித்த ஞானத்திலாதிக்கம் பெற்றோர். ஞானாத்துமா - சுத்தாத்துமா. ஞானார்த்தம் - உட்பொருள். ஞானாவரணியம் - அறிவுமறைப்பு. ஞானானந்தம் - பேரின்பம். ஞானானந்தன் - கடவுள். ஞானானுட்டானம் - ஞானநிட்டை. ஞானானுபவம் - ஞானபோகம். ஞானானுபானம் - திரவியம், திரு விருந்துவஸ்து. ஞானி - அருகன், பிரமன், பேரறி வுடையோன். ஞானேந்திரியம் - அறிகருவி, அஃது மெய், வாய், கண், மூக்கு, செவி. ஞானோபதேசம் - ஞானபோதகம். ஞான்று - ஓரிடைச்சொல், காலம், நாள். ஞி ஞிமிர் - ஒலி, நிமிரென்னேவல். ஞிமிர்தல் - ஒலித்தல், நிமிருதல். ஞிமிறு - வண்டு. ஞெ ஞெகிழம் - பொற்சிலம்பு. ஞெகிழி - சிலம்பணி, சிலம்பு, தீ, தீப்பொறி, நெருப்புக்கொள்ளி. ஞெகிழ்தல் - அலையல், அவிழ்தல், வாடுதல். ஞெண்டு - கற்கடகவிராசி, நண்டு. ஞெமிர்தல் - ஒடிதல், நெரிதல், பரத்தல். ஞெமுக்கம் - அழுந்துகை. ஞெமுங்கல், ஞெமுங்குதல் - அழுந்தல். ஞெரி - ஞெரியென்னேவல், நெரிவு. ஞெரிதல் - நெரிதல். ஞெரித்தல் - நெரித்தல். ஞெரேலெனல் - அச்சக்குறிப்பு, அனு கரணவோசை, ஒலிக்குறிப்பு, சீக்கிரக்குறிப்பு. ஞெலிகோல் - தீக்கடைகோல். ஞெலிதல் - கடைதல், குடைதல். ஞெலுவல் - செத்தல். ஞெலுவன் - தோழன். ஞெளிர் - உள்ளோசை, ஒலி. ஞெள்ளல் - உடன்படல், ஒலித்தல், சீக்கிரம், சோர்பு, தவறு, பள்ளம், மிகுதி, மேன்மை, வீதி. ஞெள்ளெனல் - அனுகரணவோசை. ஞே ஞேயம் - அறியப்படுவது, நேயம். ஞேயர் - அறிவுடையோர், நேயர். ஞேயா - பெருமருந்து. ஞை ஞை - இகழ்ச்சிக்குறிப்பு. ஞொ ஞொள்கல், ஞொள்குதல் - அச்சக் குறிப்பு, அலைதல், இளைத்தல், சோம்பல்.