16 அ அ - சுட்டு, எட்டு என்னும் எண்ணின் குறி, எதிர்மறைப் பொருள்தரும் சமக்கிருத முதனிலை. அஃறி ணைப் பன்மை ஈறு, அழகு. அஃகம் - தானியம், ஊறுநீர் முறைமை. அஃகல் - சுருங்குதல், வறுமை. அஃகான் - அ என்னும் முதல் எழுத்து. அஃகு - ஊறுநீர், சுருங்கு, நுணுகு, குறை. அஃகுல்லி - பிட்டு. அஃகேனம் - ஆய்த எழுத்து - ஃ அஃது - அப்படி, அது. அஃதை - திக்கற்றவன் அஃறிணை - மக்கள் தேவர் நகரர் அல்லாத உயிருள்ளனவும் இல் லனவும்: அல் + திணை. அகக்காழ் - உள்வயிரம். அகங்காரம் - கர்வம். அகங்காரி - கர்வமுடையவள். அகங்கை - உள்ளங்கை. அகசியம் - பகடிக்கூத்து. அகசு - பகல், இராப்பகல் கொண்ட பொழுது. அகச் சிவப்புக் கதிர்கள் - சூரிய ஒளி மாலையில் அலை நீளமான சிவப்புக் கதிருக்கு அப்பால் கண்ணுக்குப் புலனாகாதுள்ள கதிர்கள் (Infra red rays) அகச்சுட்டு - சொல்லகத்து முதனிலையா யமைந்து நிற்கும் சுட்டு. அகடம் - அநீதி, கபடம் அகடவிகடம் - தந்திரம், குறும்பு. அகடியம் - அநீதி. அகடு - உள், வயிறு, நடுவு நிலைமை, பொல்லாங்கு. அகணி - வயல், தெங்கு, பனை முதலியவற்றின் புறநார். அகண்டபரிபூரணம் - எங்கும் நிறைந்திருத்தல். அகண்டம் - முழுமை, பிளவின்மை. அகண்டாகாரம் - பகுக்கப்படாத வடிவம், பெருவெளி. அகண்டி - ஓர் இசைக்கருவி. அகண்டிதம் - முழுமை. அகணி - மருதநிலம், வயல். அகண்ட காவரி - காவிரி கொள்ளிடம் என்னும் இரு ஆறுகளாகப் பிரிவதன் மன் ஒன்றாக வரும் காவிரி. அகதம் - மருந்து. அகதி - ஆதரவற்றவன், வேலமரம், தில்லைமரம். அகத்தடிமை - அணுக்கத்தொண்டு. அகத்தடியாள் - மனைவி. அகத்தி - ஒரு செடி. அகத்திணை - காதல் ஒழுக்கம். அகத்தியநட்சத்திரம் - மிக ஒளி வாய்ந்த நட்சத்திரங்களிலொன்று. அகத்தியமாலை - திருவிதாங்கூரில் நெய்யாற்றங்கரைப் பகுதியிலுள்ள ஒரு மலை. அகத்தியம் - ஓர் இலக்கண நூல், அவசியம் அகத்தியன் - ஒரு முனிவன். அகத்தியாச்சிரமம் - பஞ்சவடிக்கு அண்மையிலுள்ள ஒரு புண்ணியத் தலம் : இப்பொழுது சத்தியபுரி என வழங்கும். அகத்தியான்பள்ளி - வேதாரணியத் துக்கு ஒரு மைல் தொலைவிலுள்ள ஒரு சிவத்தலம். அகத்தீடு - கையால் உள்ளணைத்தல், உள்ளடக்குதல். அகநகை - இகழ்ச்சிச் சிரிப்பு. அகநிலை - நகர், கடவுள். அகந்தை - செருக்கு, நான் என்கை. அகப்படுதல் - கிடைத்தல், சிக்கிக் கொள்ளுதல். அகப்பா - கோட்டை மதில், மதில் உள்மேடை, அகழி. அகப்பாட்டு - அகநானூறு என்னும் நூல். அகப்பு - ஆழம். அகப்பேய்ச்சித்தர் - பதினெண் சித்தரிலொருவர். அகப்பை - கரண்டி. அகப்பொருள் - அகத்திணையாகிய பொருள், இன்பம். அகப்பொருள் விளக்கம் - நாற் கவிராசநம்பி செய்த ஒரு நூல் (12ஆம் நூ.). அகமகிழ்ச்சி - மனமகிழ்ச்சி. அகமம் - மரம். அகமரூடனம் - பாவ நிவிர்த்தியின் பொருட்டுச் செபிக்கப்படும் ஒரு மந்திரம். அகமார்க்கம் - உயர்ந்த முறையில் பாடுதல், கூத்து. அகமுடையாள் - மனைவி. அகமுடையான் - கணவன். அகம் - இடம், உள், மனம், மார்பு, வீடு, அகங்காரம். அகம்படிமை - உள் வேலைக்குரிய அடிமை. அகம்படியார் - ஊழியஞ் செய்வோர். அகம்பல்மால் ஆதனார் - சங்ககாலப் புலவர். அகம்பாவம் - நான் என்னும் செருக்கு. அகம்பிரமஞானம் - நான் பிரமம் என்னும் அறிவு. அகரம் - முதலெழுத்து, பார்ப்பனச் சேரி, ஊர். அகராதி - அகர வரிசையாகத் தொடுத்த சொற்பொருள் கூறும் நூல். அகரு - அகில். அகர் - கடற்பாசியினின்றும் எடுக்கப் படும் பசைபோன்ற பொருள். அகலம் - மார்பு, குறுக்கு அகலம், விசாலம். அகலல் - நீங்குதல், விசாலித்தல். அகலவுரை - விரிவாக எழுதும் உரை. அகலறை - பாசறை, மலைப்பக்கம். அகலிடம் - பூமி. அகலியம் - மரம். அகலியை - கௌதமன் மனைவி. அகல் - விளக்குத்தகழி, நீங்கென்னும் மேவல், சட்டி. அகவடி - உள்ளங்கால். அகவர் - பாடுவோர், நாட்டில் வாழ்வோர். அகவலன் - பாணன். அகவல் - அழைத்தல், ஆசிரியப்பா, ஆடல், மயிலின் குரள். அகவிருள் - மெய்யறிவின்மை. அகவிலை - தானிய விலை. அகவுதல் - ஒலித்தல், பாடுதல், அழைத்தல். அகவை - உள்ளிடம், வயது. அகழான் - ஓர் எலி. அகழி - கோட்டையைச் சூழ்ந்துள்ள கிடங்கு. அகழெலி - அகழான். அகழ் - அகழி, கிடங்கு. அகழ்தல் - தோண்டுதல். அகளங்கம் - மாசின்மை. அகளம் - யாழின் பத்தர், தாழி. அகன் - வசுக்கள் எண்மருள் ஒருவன். அகறல் - அகலல் விரிதல். அகற்சி - அகலம், பிரிவு. அகற்றல் - நீக்கல். அகன்மணி - தெய்வமணி. அகன்றில் - ஆண் அன்றில். அகாதம் - மிக்க ஆழம், நீந்து புனல். அகாரணம் - காரணமின்மை. அகாரணன் - கடவுள். அகாரம் - வீடு. அகாரியம் - தகாத செய்கை. அகாலம் - காலமல்லாத காலம். அகி - பாம்பு, இரும்பு, ஆவணி, விருத்திரன். அகிதம் - இதமின்மை, தீமை. அகித்தலம் - நாகலோகம், பாதாளம். அகிம்சை - துன்பஞ் செய்யாமை. அகிலம் - எல்லாம், பூமி. அகில் - ஒரு வாசணை மரம். அகிற்கூட்டு - ஏலம், கற்பூரம், எரிகாசு, சந்தனம், தேன் இவற்றின் சேர்க்கை. அகுட்டம் - மிளகு. அகுதை - ஒரு வள்ளல். அகை - வருத்தம், கூறுபாடு, அகைத் தல் - கிளைத்தல், எழுதல், விட்டு விட்டுச் செல்லுதல், வருந்துதல், செலுத்துதல், அடித்தல், முறித்தல். அகோ - அதிசயக் குறிப்பு. அகோசரம் - புலப்படாதது. அகோபிலம் - ஒரு விட்டுணுதலம். அகோரசிவாசாரியார் - சிதம்பரத்தில் வாழ்ந்த ஆதிசைவர். (16ம் நூ.). அகோரமுனிவர் - திருவாரூரில் வாழ்ந்த ஒரு தம்பிரான். (17ம் நூ). அகோரம் - கொடுமை, சிவன், ஐம்முகத்தொன்று. அகௌரவம் - அவமரியாதை. அக்கசாலை - உலோக வேலை செய்யும் இடம். அக்கசாலையர் - தட்டார், கம்மியர். அக்கடா - அப்பா என்பது போன்ற ஒரு வியப்புச்சொல். அக்கதம், அக்கதை, அட்சதை - அறுகரிசி. அக்கந்து - தூற்றுகையில் தானியக் குவியலின் புறத்தே விலகிய பதர். அக்கப்போர் - கலகம். அக்கம் - கண், தானியம், உருத்தி ராக்கம், அருகு. அக்கமணி - உருத்திராக்கமணி. அக்கம்பக்கம் - அண்டை அயல். அக்கரம் - எழுத்து, வெள்ளெருக்கு, மாமரம், அழிவின்மை. அக்கரை - நீர்நிலையின் மறுகரை. அக்கரோட்டு - வால்நட் (walnut) என்னும் மரம். அக்கவடம் - உருத்திராக்கமாலை. அக்களிப்பு - மனமகிழ்ச்சி. அக்கறை - கவனம். அக்கன் - நாய், குருடன். அக்கா - தாய், தமக்கை. அக்காத்தை - அக்காள். அக்காந்தேசீ - ஆடாதொடைக் குடும்பத்தைச் சேர்ந்த செடிகள். அக்கார உலை - சர்க்கரை சேர்த்துச் சமைத்த சோறு. அக்காரம் - சர்க்கரை, சீலை. அக்கி - ஆனைக்கரப்பன், கண் நெருப்பு, தேர். அக்கிரகாரம் - பார்ப்பனச்சேரி. அக்கிரசந்தானி - இயமன் கணக்கு. அக்கிரபூசை - முதல் மரியாதை. அக்கிரமம் - கொடுமை. அக்கிரம் - முதன்மை, நுனி. அக்கிராசனம் - சபைத் தலைமை. அக்கினி - நெருப்பு, அக்கினி தேவன். அக்கினி காரியம் - நெருப்பில் செய்யப்படும் ஓமம் முதலியன. அக்கினி கோத்திரம் - தினந்தோறும் செய்யும் ஓமம். அக்கினித் தம்பனம் - நெருப்புச் சுடாமலிருக்கச் செய்யும் வித்தை. அக்கினி மூலை - தென்கீழ்த்திசை. அக்கு - எலும்பு, உருத்திராக்க மணி, சங்குமணி, கண், எருதுத் திமில். அக்குசை - துறவுபூண்டு தவம் புரியும் சமண விதவை. அக்குத்து - சந்தேகம். அக்குரன் - இடையேழு வள்ளல் களிலொருவன். அக்குரோணி - 109, 350 காலாள், 65, 610 குதிரை, 2, 10, 870 தேர், 21, 870 யானை கொண்ட படை. அக்குளூத்தல் - கூச்சம் செய்தல். அக்குள் - கக்கம். அக்கை, அக்கைச்சி - தமக்கை. அக்ரபூசனை - முதன்மரியாதை. அங்க கணிதம் - எண் கணக்கு நூல். அங்கக்கிரியை - மெய்யாற் செய்யும் கூத்துத் தொழில். அங்ககாரம் - நாட்டிய வகை. அங்கசன் - மன்மதன், மகன். அங்கணம் - சலதாரை, சேறு, முற்றம். அங்கணன் - சிவன். அங்கணி - உமை. அங்கண் - அவ்விடம், அழகிய இடம். அங்கச் செய்யுள் - வசைக் கவி. அங்கதம் - வசை, வாகுவலயம், பாம்பு, மார்பு. அங்கவை - பாரி மகளிரிலொருவர். அங்கதன் - வாலியின் மகன். அங்கத்தவர் - சபைக்கு உறுப்பானவர். அங்கநியாசம் - மந்திரத்தோடு உறுப்புக் களைத் தொடுகை. அங்கமணி - சீதனம். அங்கமாலை - எலும்புமாலை, பிரபந்த வகையுள் ஒன்று. அங்கம் - உடல், உறுப்பு, எலும்பு, ஒரு தேசம், கட்டில், போர். அங்கயற்கண்ணி - மீனாட்சி. அங்கராகம் - பூசும் பரிமளம். அங்கர் - அங்கதேசத்தார். அங்கர்கோமான் - கன்னன். அங்கலாய்த்தல் - ஆசைப்படுதல். அங்கவீனன் - உறுப்புக் குறைந்தவன். அங்கனை - பெண். அங்கன் - புதல்வன். அங்காடி - கடை, கடைத்தெரு. அங்காதிபாதம் - ஒரு வைத்திய நூல். அங்காத்தல் - வாய்திறத்தல். அங்காரகன், அங்காரன் - செவ்வாய். அங்காரம் - மாத்துவர் நெற்றி யிலணியும் கரிக்கோடு. அங்காலே - அங்கே. அங்காளம்மன் - பத்திரகாளி. அங்கி - நெருப்பு, சட்டை, கார்த்திகை. அங்கிகாரம், அங்கீகாரம் - ஏற்றுக் கொள்ளல். அங்கிதம் - தழும்பு, அடையாளம். அங்கிநாள் - அத்தம், கார்த்திகை. அங்கீகரணம் - உடன்படுகை. அங்கு - அவ்விடம். அங்குசம் - யானைத்தோட்டி. அங்குட்டம் - பெருவிரல். அங்குரம் - முளை, தளிர். அங்குரார்ப்பணம் - பாலிகை போடல். அங்குரித்தல் - முளைத்தல். அங்குலம் - ஒரு விரல் அகலம். அங்குலி - மோதிரம், விரல், புருவ மத்தி. அங்குலிகம், அங்குலியம் - மோதிரம். அங்கே - அங்கு. அங்கை - உள்ளங்கை அங்கனம், அங்ஙன் - அவ்விடம். அசகம் - மலையாடு. அசக்கியம் - செய்ய இயலாதது. அசங்குதல் - அசைதல். அசங்கை - பயமின்மை, ஒழுங்கின்மை. அசஞ்சலம் - சலிப்பின்மை. அசடம் - சடமல்லாதது. அசடன் - மூடன். அசடு - குற்றம், கீழ்மை. அசட்டை - புறக்கணிப்பு, கவனமின்மை. அசதி - சிரித்துப் பேசல், பரிகாசம், கற்பில்லாதவள். அசத்தி - வலியின்மை. அசத்து - இல்லாதது, பொய்ந்நெறி, மாயை. அசப்பியம் - சபைக்கடாத சொல். அசமயம் - பொருத்தமற்ற வேளை. அசமுகி - சூரபதுமன் தங்கை. அசம் - ஆடு, ஈரவுள்ளி, ஆன்மா. அசம்பவம், அசம்பாவிதம் - பொருத்த மில்லாதது, நேரக்கூடாது. அசரம் - நிலைத்திணை, நிலையற்ற பொருள். அசரீரி - சரீரமில்லாதது, ஆகாச வாணி. அசலம் - மலை, அசையாதது. அசலன் - கடவுள், அசைவில்லா தவன். அசலை - பூமி. அசல் - நுளம்பு, முதல். அசல்குறிப்பு - முதலில் கணக்குப் பதிவு செய்யப்படும் புத்தகம். அசறு - சேறு, செடிப்பூச்சி வகை. அசனம் - உணவு, சேறு வேங்கை மரம். அசனி - இடி, வச்சிராயுதம். அசன் - பிற்பில்லாதவன். அசா - தளர்ச்சி. அசாக்கிரதை - கவனக்குறைவு. அசாத்தியம் - சாதிக்க முடியாதது. அசாவிடுதல் - இளைப்பாறுதல். அசாவுதல் - தளர்தல். அசி - வாள், அவமதிப்புச் சிரிப்பு, வாட்படை, ஆயுதம். அசிகை - நகைத்துப் பேசும் பேச்சு. அசிங்கம் - அசுத்தம். அசிட்டிக் அமிலம் - காடி (acetic acid) அசிதம் - கருநிறம். அசித்தல் - உண்டல், சிரித்தல். அசித்து - சடப்பொருள். அசிபந்திரம் - நாகமரம். அசிப்பு - அவமதிப்பு. அசினம் - விலங்குகளின் தோல். அசீதி - எண்பது. அசீரணம் - செரியாமை. அசுகுணி - செடிப்பேன். அசுகி - அசுத்தம், அருவருப்பு. அசுணமா, அசுணம் - இசை அறிவதோர் விலங்கு, கேகயப்புள். அசுத்தம், அசுத்தி - சுத்தமின்மை. அசுத்தை - ஒழுக்கமற்றவள். அசுபம் - அமங்கலம். அசுமம் - கல். அசுமாற்றம் - சமுசயம். அசும்பு - வழுக்கு நிலம், கிணறு, குற்றம், பற்று. அசுரகுரு - வெள்ளி. அசுரசந்தி - அந்திநேரம். அசுரமணம், அசுரம் - எண்வகை மணங்களில் ஒன்று. அசுரநாள் - மூலநாள். அசுரமந்திரி - சுக்கிரன். அசுரர் - அவுணர், தேவரின் பகைவர். அசுவத்தாமா - துரோணாச்சாரி யனின் மகன். அசுவமேதம் - குதிரை வேள்வி. அசுவம் - குதிரை. அசுவவாரியர் - குதிரை செலுத்து வோர். அசுவினி - அச்சுவினி. அசுவினிதேவர் - தேவ மருத்துவர். அசுழம் - நாய். அசூயை - பொறாமை, அவதூறு. அசேதனம் - அறிவின்மை. அசை - அசை என்னும் ஏவல், செய்யு ளுறுப்பிலொன்று, ஆடு மாடுகள் மீட்டு மெல்லும் இரை. அசைச்சொல், அசைநிலை - அசை நிறைக்குஞ்சொல். அசைதல் - ஆடுதல், இருத்தல், இளைத்தல், உலாவல், ஓய்தல். அசைத்தல் - ஆட்டுதல், கட்டுதல். அசைப்பு - இறுமாப்பு, சொல், அசைத்தல். அசையிடுதல்,அசைபோடுதல், அசை விடுதல் - இரைமீட்டல். அசைவு - வருத்தம், அசைதல். அசோகன் - மௌரிய சக்கரவர்த்தி களுள் ஒருவன். அசோகன் - அசோக மரம், துயரின்மை. அசோகு - அசோக மரம், நெட்டிலிங்கம். அசௌகரியம் - சமயமில்லாமை, சுகங்கொடாதது. அசௌக்கியம் - தேக சுகமின்மை. அச்சம் - பயம். அச்சன் - தந்தை, கடவுள். அச்சா - மிக நன்று. அச்சாணி - கடையாணி. அச்சாரம் - முன்பணம். அச்சாறு - ஊறுகாய். அச்சி - நாயர் சாதிப்பெண். அச்சிரம் - முன்பனிக்காலம். அச்சிறுபாக்கம் - செங்கற்பட்டு ஜில்லா விலுள்ள ஒரு சிவன் கோவில். அச்சு - கட்டளைக் கருவி, அடையாளம், வண்டி அச்சு, உடல், அச்சம். அச்சுதகளப்பாளர் - மெய்கண்ட தேவரின் தந்தை. அச்சுதம் - அறுகும் அரிசியும் கூடியது. அச்சுதன் - திருமால், கடவுள். அச்சுதன்முன்வந்தோன் - பலபத்திரன். அச்சுதை - பார்வதி. அச்சுருவாணி - தேர் அகத்துச் செறி கருவி. அச்சுலக்கை - துலாவைத் தாங்கும் கட்டை. அச்சுவதி - அகமதி. அச்சுவம் - குதிரை. அச்சுறுத்தல் - பயன்படுத்துதல். அச்சோ - அதிசயச் சொல், இரக்கச் சொல். அஞர் - மனவருத்தம். அஞலம் - கொசுகு, மின்மினி. அஞ்சம் - அன்னப் பறவை. அஞ்சலர் - பகைவர். அஞ்சலி - கைகுவித்துக் கும்பிடுகை, வெளவால். அஞ்சல் - பயப்படல், தபால். அஞ்சனம் - கண்ணுக்கிடும் மை. அஞ்சனவண்ணன் - திருமால். அஞ்சனவெற்பு - திருவேங்கட மலை. அஞ்சனி - காயா, நாணற்புல். அஞ்சனை - அனுமானுடைய தாய். அஞ்சாமை - திண்மை. அஞ்சி - அதியமான். அஞ்சிதபதம் - குதிக்காலையூன்றிப் படத்தை மேல் நோக்கி நிற்கை. அஞ்சித்தல் - வணங்குதல். அஞ்சிலஞ்சியார் - சங்ககாலப் புலவர். அஞ்சிலோதி - அழகிய சிலவாகிய கூந்தல். அஞ்சு - ஐந்து, பயப்படு. அஞ்சுகம் - கிளி. அஞ்செழுத்து - பஞ்சாக்கரம். அஞ்ஞதை - அறியாமை. அஞ்ஞாதம் - அறியப்படாதது. அஞ்ஞானம் - அறியாமை. அஞ்ஞை - அன்னை. அடகு - இலைக்கறி, மகளிர் விளை யாட்டு, பொருள் பெறுவதற்கு ஈடு வைத்தல். அடக்கம் - அமைதி, ஒருவகை மேளம், வாங்கினவிலை. அடக்கல் - மறைத்தல். அடக்குமுறை - கண்டித்தடக்குகை. அடங்கலர், அடங்கார் - பகைவர். அடங்கலும் - முழுதும். அடங்கல் - சுருங்கல். அடங்கன்முறை - மூவர் தேவாரம். அடசுதல் - செறிதல். அடம்பன் - கடம்ப மரம். அடம் - பிடிவாதம், பொல்லாங்கு, பலாத்காரம். அடம்பு - அடப்பங்கொடி. அடர் - வருந்துகை, தகடு, பூவிதழ், தகட்டு வடிவம், நெருங்குதல். அடர்தல் - நெருங்குதல், வகுத்தல், அடித்தல். அடர்த்தல் - அமுக்கல், தாக்குதல். அடர்த்தி - நெருக்கம். அடலை - துன்பம், சாம்பல், விபூதி. அடல் - கொல்லுகை, பகை, வலிமை, வெற்றி, போர். அடவி - காடு, நந்தவனம், திரள். அடவியன் - துடைப்பம். அடவியில் திருடி - சதுரக் கள்ளி. அடாணா - ஒர் இராகம். அடாதது - தகாதது, பலாத்காரம். அடார் - விலங்குகளை அகப்படுத்தும் பொறி, இடார். அடி - பாதம், செய்யுளுறுப்பிலொன்று, கீழ், மூலம், மகடூஉ முன்னிலைச் சொல். அடிகள் - கடவுள், குருக்கள். அடிகோலுதல் - ஆயத்தஞ்செய்தல். அடிக்கடி - திரும்பத் திரும்ப. அடிசில் - சோறு, உணவு. அடிசிற்புறம் - உணவுக்காக விட்ட இறையிலி நிலம். அடிசிற்றளி - மடைப்பள்ளி. அடிச்சால் - உழவின் தலைச்சால். அடிச்சி - அடிமைப்பெண். அடிச்சுவடு - காலடி அடையாளம். அடிச்சேரி - அடிமைகள் குடியிருப்பு. அடிதலை - கீழ்மேல். அடித்தடம் - அடிச்சுவடு. அடித்தளம் - கீழ்ப்படை. அடித்தாறு - உள்ளங்கால் இரேகை. அடித்தொட்டி - ஆடு மாடு அடிக்கு மிடம். அடித்தொழில் - குற்றேவல். அடித்தோழி - தலைமைத்தோழி. அடிநிலை - ஒரு தூணின் அடியில் தரைக்குமேல் காணப்படும் பகுதி. அடிபடுதல் - தாக்குண்ணுதல், நீக்குண் ணுதல், பழைமையாதல். அடிதடி - சண்டை. அடிபெயர்தல் - கால் எடுத்து நகர்தல். அடிப்படுதல் - கீழ்ப்படுதல். அடிப்படை - ஆதாரம். அடிப்படை உரிமைகள் - இராச்சியங் களால் குறைக்கவோ கூட்டவோ முடியாத உரிமைகள் (Fundamental Rights) அடிப்பட்ட சான்றோர் - பழகிய புலவர். அடிப்பட்ட வழக்கு - பழைமையாக வரும் வழக்கம். அடிப்பணி - பணிவிடை. அடிப்பாய்தல் - தாவிக்குதித்தல். அடிப்போடுதல் - தொடங்குதல். அடிமனை - ஆதாரம். அடிமறி மண்டலம் - அகவற்பா வகையுளொன்று. அடிமறிமாற்று - அடிகளை எடுத்துப் பொருளுக்கு ஏற்றபடி கூட்டுவதும் எந்த அடியை எங்குக் கூட்டினும் பொருளும் ஓசையும் ஒப்ப வரு வதுமாகிய பொருள்கோள். அடிமுடி - முதலும் முடிவும். அடிமுரண்தொடை - செய்யுளின் முதலில் வரும் சொல்லாவது பொருளாவது அடுத்த அடியின் சொல்லோடும் பொருளோடும் மாறுபடத் தொடுப்பது. அடிமை - தொண்டு செய்பவன். அடிமோனைத் தொடை - அடிகள் தோறும் முதலில் மோனை எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது. அடியடியாக - தலைமுறையாகத் தலைமுறையாக. அடியவன் - அடிமை. அடியறுதல் - மூலமறுதல். அடியார்க்கு நல்லார் - சிலப்பதிகார உரையாசிரியர் (13ஆம் நூ.) அடியிடுதல் - தொடங்குதல். அடியீடு - தொடக்கம். அடியுறை - காணிக்கை, தாசன். அடியேன் - நான். அடியொற்றுதல் - பின்பற்றுதல். அடியொடு - முழுவதும். அடிவானம் - வானமும் புவியும் தொடுவது போலத் தோன்றும் வட்ட வடிவான கற்பனை வரை. அடிவிடுதல் - அடி பழுதாதல். அடிவீழ்ச்சி - வணக்கம். அடுகலன் - சமயற் பாத்திரம். அடுகளம் - போர்க்களம். அடுக்கம் - மலைச்சரிவு, செறிந்த சோலை. அடுக்கல் - அடுக்குதல், மலை, அடுக்கப்பட்டது. அடுக்களை - பாக சாலை. அடுக்கு - வரிசை. அடுக்குத்தொடர் - ஒரு சொல்லுப் பல முறை அடுக்கி வருதல். அடுதல் - சமைத்தல், கொல்லல்; போராடுதல், வெல்லல், வருத்துதல். அடுத்தல் - கிட்டுதல், ஏற்றதாதல். அடுப்பு - பரணி நட்சத்திரம், சமயல் செய்யும் அடுப்பு. அடுபோர் - வெற்றி தரும் போர். அடும்பு - அடப்பங் கொடி. அடுவல் - வரகு நெற்களின் கலப்பு. அடை - இலை, தோசை, சேரென்னு மேவல், விசேடணம், அடை காத்தல், தேன்கூடு, நிலவரி. அடைகல் - கம்மியர் பட்டடை, மதகு அடைக்கும் கல். அடைகாக்கும் பெட்டி - செயற்கை முறையில் குஞ்சு பொரிக்க உதவும் பெட்டி, ‘இங்கு பேற்றார்.’ அடைகாத்தல் - பறவைகள் முட்டைகள் மீதிருந்து காத்தல். அடைகாய் - வெற்றிலை பாக்கு, ஊறுகாய். அடைகுறடு - கம்மியர் பட்டடை, பற்றுக் குறடு. அடைக்கலங்குருவி, அடைக்கலாங் குருவி - குருவி வகை, சிட்டுகுருவி. அடைக்கலம் - புகலிடம். அடைசுதல் - நெருக்குதல், செருகல். அடைசொல் - அடைமொழி. அடைச்சுதல் - மலர் சூட்டுதல், அடைவித்தல். அடைத்தல் - புகுத்துதல், சிறை வைத்தல், தடுத்தல், காவல் செய்தல். அடைநெடுங்கல்வியார் - சங்ககாலப் புலவர். அடைப்பம் - வெற்றிலைபாக்குப்பை, நாவிதன் கருவிப்பை. அடைப்பன் - ஒருவகை மாட்டு நோய். அடைப்பான் - மூடும் பொருள். அடைப்பைக்காரன் - வெற்றிலை யெடுத்து ஊழியஞ் செய்வோன். அடைமண் - வண்டல் மண். அடைமதிற்படுதல் - முற்றுகை இடப்படுதல். அடைமழை - அடைத்துப் பெய்யும் மழை. அடைமானம் - அடைவு. அடைமொழி - விசேடணம். அடைய - முழுவதும். அடையலர், அடையார் - பகைவர். அடையல் - அடைதல், செருப்பு வகை. அடையார் - பகைவர். அடையாளம் - அறிகுறி. அடைவு - முறை, தகுதி, துணை. அட்சதை - மங்கலவரிசி. அட்சபாதன் - கௌதம முனி. அட்சம் - கண் பூகோள அட்சம். அட்சய - ஒரு ஆண்டு. அட்சய குமாரன் - இராவணன் குமாரருள் ஒருவன். அட்சயபாத்திரம் - பிச்சைப் பாத்திரம். அட்சயம் - கேடின்மை. அட்சரம் - எழுத்து. அட்சாம்சம் - பூகோள இரேகையின் பாகம். அட்சி - கண். அட்டகம் - எட்டின் தொகுதி, வசம்பு. அட்டகாசம் - பெருநகை, ஆர்ப் பாட்டம். அட்டகிரி - எட்டுமலைக் கூட்டம். அட்டகை - அட்டமி, ஒருவகைச் சிரார்த்தம். அட்டகோணம் - எட்டுமூலை. அட்டசித்தி - எட்டுச்சித்திகள். அட்டணைக்கால் - குறுக்காக மடக்கி வைக்கும் கால். அட்டதாது - எண்வகை உலோகம். அட்டதிக்குப் பாலகர் - எட்டுத் திசையைக் காக்கும் கடவுளர். அட்டமங்கலம் - எண்வகை மங்கலப் பொருள்கள். அட்டமச்சனி, அட்டமத்துச்சனி - எட்டாமிடத்துச் சனி. அட்டமம் - எட்டாவது. அட்டமி - எட்டாந் திதி. அட்டமூர்த்தம் - சிவன் வடிவம் எட்டு. அட்டமூர்த்தி - சிவன். அட்டம் - எட்டு. அட்டல் - அழித்தல். அட்டவணை - தொகுத்துச் சேர்க்கப் பட்டது. அட்டவீரட்டம் - சிவன் வீரஞ் செலுத்திய எட்டு இடங்கள். அட்டாங்கம் - எண் வகையுறுப்பு. அட்டாணி - கோட்டை மதின் மேல் மண்டபம். அட்டாதுட்டி - அடாத பேச்சு, குறும்பு. அட்டாலம், அட்டாலிகை - மேல் வீடு. அட்டாலம், அட்டாலை - காவற்பரண், மேல்வீடு. அட்டாவதானம் - ஒரே காலத்தில் வெவ்வேறு எட்டுப் பொருள்களிற் கவனஞ் செலுத்துதல். அட்டானம் - வீரட்டானம். அட்டி - தடை. அட்டிகை - கழுத்தணி. அட்டியல் - அட்டிகை. அட்டில் - மடைப்பள்ளி. அட்டு - பனாட்டு, சுவைத்தல் சமைத்து. அட்டுதல் - அழித்தல், வார்த்தல், இடுதல். அட்டும் - ஒரு வியங்கோள் (உ-ம் செய்யட்டும்). அட்டூழியம் - கொடுமை. அட்டை - நீர்ப்பிராணி வகை, காகித அட்டை. அட்டை ஆடல் - துணிக்கப்பட்ட வீரனுடல் அட்டைபோல வீரச் செயல் காட்டி ஆடுதல். அட்வொக்கேட்டு - வழக்கறிஞர். அணங்காடல் - வெறியாடல். அணங்கு - வருத்தம், அச்சம், கொலை, தெய்வம், தெய்வமகள், அழகு, குட்டி, பேய். அணங்குதல் - வருந்துதல், இறந்து படுதல். அணத்தல் - பொருந்துதல், தலை யெடுத்தல். அணரி, அணர் - மேல் வாய்ப்புறம். அணரிடுதல் - கொக்கரித்தல். அணர்தல் - மேல்நோக்கி எழுதல். அணல் - தேடி, மிடறு, கீழ் வாய்ப் புறம், மேல் வாய்ப்புறம். அணவரல் - ஆசைப்படல். அணவல், அணவுதல் - கிட்டுதல். அணவு - கிட்டு. அணா - ரூபாவின் பதினாறிலொன்று. அணாப்பு - ஏமாற்று. அணார் - கழுத்து. அணாவு - கிட்டு. அணாப்பு - ஏய். அணி - ஒப்பனை, அழகு ஆபரணம், படைவகுப்பு, இனிமை, வரிசை, அணியிலக்கணம். அணிகம் - அணிகலம், ஊர்தி. அணிகலம் - ஆபரணம். அணிதல் - அலங்கரித்தல், பூணுதல். அணித்து - சமீபம். அணிந்துரை - பாயிரம். அணிமா - எட்டுச் சித்திகளுள் ஒன்று, அணுவாகச் சுருங்கும் வன்மை. அணிமை - சமீபம். அணியம் - கப்பலின் முன்பக்கம், படை வகுப்பு. அணியல் - மாலை, அழகு செய்கை, மாலிகை. அணியொட்டிக்கால் - தலைப் பக்கம் வேலைப்பாடமைந்த கோயிற்றூண். அணிலம், அணில் - அணிற் பிள்ளை. அணிலாடு முன்றிலார் - சங்கப் புலவர். அணிவட்டம் - கழுத்துமாலை. அணிவிரல் - மோதிரவிரல். அணிவில் - பேரேடு. அணு - உயிர், நுண்மையானது. அணுகலர், அணுகார் - பகைவர். அணுகல் - கிட்டல். அணுக்கம், அணுக்கர் - அணிமை. அணுமை - அண்மை. அணை - அணைக்கட்டு, தடை, பாலம், முட்டு, உதவி, பஞ்சு மெத்தை, தலையணை. அணைசு - வங்கியம் என்னும் குழல் வாத்தியத்தின் முகத்திலமைப்பது. அணைதல் - சேர்தல், அவிதல். அணையார் - பகைவர். அண் - வேட்டை நாயின் உருவு கயிறு. அண்டகடாகம் - உலக உருண்டை யின் ஓடு. அண்டகம் - அப்ப வகை. அண்டகோசம் - உலகத்தின் மேலோடு. அண்டகோளகை - அண்ட உருண்டை. அண்டங்காக்கை - பெருந்தலைக் காக்கை. அண்டசம் - முட்டையிற் பிறப்பன. அண்டபகிரண்டம் - பூமியும் அதன் வெளியேயுள்ள கோளங்களும். அண்டப்புரட்டன் - பெரு மோசக்காரன். அண்டப் புளுகன் - பெரும் பொய்யன். அண்ட முகடு - வானத்தின் உச்சி. அண்டம் - முட்டை, பூமி, வானம், ஆண்குறி, விதை. அண்டயோனி - முட்டையிற் பிறப் பது, ஞாயிறு. அண்டர் - வானோர், இடையர், பகைவர். அண்டர்மகன் குறுவழுதி - சங்கப் புலவர். அண்டலர் - பகைவர். அண்டல், அண்டுதல் - நெருங் குதல், மாறுபடுதல். அண்டன் - கடவுள். அண்டா - ஒருவகைப் பெரிய பாத் திரம் அண்டிகம் - செந்நாய். அண்டிரன் - ஆய் என்னும் வள்ளல். அண்டுதல் - கிட்டுதல். அண்டை - அண்மை, நீர் தூவுங் கருவி. அண்ணகன் - விதை எடுக்கப்பட்டவன். அண்ணம் - மேல்வாய். அண்ணல் - பெருமை, கடவுள், முல்லை நிலத் தலைவன், தமையன். அண்ணன் - தமையன். அண்ணா - அண்ணாமலை, உண்ணாக்கு. அண்ணாத்தல் - வாய்திறத்தல், தலை நிமிர்தல். அண்ணாந்தாள் - தலை நிமிர்ந் திருக்கும் பூட்டுங் கயிறு. அண்ணார் - பகைவர். அண்ணாவி - உபாத்தியாயன். அண்ணி - அண்ணன் மனைவி. அண்ணுதல் - கிட்டுதல். அண்பல் - மேல்வாய்ப் பல். அண்முதல் - அணுகுதல். அண்மை - சமீபம். அத - அத்தி. அதகம்- மருந்து. அதகன் - வலிமையுள்ளவன். அதங்கோட்டாசிரியர் - அகத்தியர் மாணவர். அதட்டம் - பாம்பின் நச்சுப்பல், பாம்பின் மூச்சு. அதட்டுதல் - ஒலித்து உரப்புதல். அதமம் - கடையானது, இழிவு. அதமாதமம் - மிகக் கடையானது. அதம் - நாசம், அத்தி. அதரம் - உதடு. அதரிடைச்செலவு - வீரர் நிரை மீட்சிக்குப் புறப்படும் புறத்துறை. அதரிதிரித்தல் - நெற்கதிரைக் கடாவிட்டு உழக்குதல். அதருமம் - பாவம். அதர் - வழி, நீளக்கிடங்கு, ஆட்டின் கழுத்தில் தூங்கும் அதர். அதர்கோள் - வழிப்பறி. அதர்படுதல் - நெறிப்படுதல். அதர்வணம் - நான்காம் வேதம். அதர்வை - வழி. அதலகுதலம் - பெருங்குழப்பம். அதலம் - கீழேழுலகத் தொன்று. அதவம், அதவு - அத்திமரம். அதவுதல் - கொல்லுதல். அதழ் - இதழ். அதளி - குழப்பம். அதளை - வயல் வெளிக் காவற் குடிசை, நிலப்பீர்க்கு, புளியுருண்டை. அதள் - தோல், மரப்பட்டை. அதனம் - மிகுதி. அதாதா - உலோபி. அதாவன்று - அதுவல்லாமலும். அதி - மிகுதி. அதிகப்படி - அளவுக்குமேல். அதிகமான் - அதியமான். அதிகம் - மிகுதி. அதிகரணம் - ஒரு பொருளைக் குறிக்கும் நூற் பகுதி. அதிகரித்தல் - மிகுதல். அதிகர் - பெரியோர். அதிகாரம் - ஆளுந்தன்மை, நூற் பிரிவு. அதிகாரி - தலைவன், சம்பந்த முடையவன். அதிகாலை - மிக்க காலை. அதிகுணம் - கடவுள். அதிகை - அட்டவீரட்டங்களுள் ஒன்று. அதிக்கிரமம் - அநீதி. அதிக்குதி - செருக்கு நடை. அதிங்கம் - அதிமதுரம். அதிசயம் - வியப்பு. அதிசயன் - அருகன். அதிசயோக்தி - உயர்வு நவிற்சி அணி. அதிசரித்தல் - கடந்துபோதல். அதிசாரம் - கிரகங்களின் வழக்கத் துக்கு மாறான செலவு. அதிட்டம் - எதிர்பாராத இலாபம். அதிட்டானம் - நிலைக்களம். அதிட்டித்தல் - நிலைக்களமாகக் கொள்ளுதல். அதிதி - காசியப்பர் மனைவி, விருந்து. அதிதிநாள் - புநர்பூசம். அதிதிபூசை - விருந்தோம்பல். அதிதேவதை - உரிய தெய்வம். அதிபதி - தலைவன், அரசன். அதிபத்த நாயனார் - 63 நாயன்மாரு ளொருவர். அதிபன் - தலைவன். அதிமதுரகவி - காளமேகப் புலவர் காலத்து விளங்கிய ஒரு புலவர் (15ஆம் நூ.) அதிமதுரம் - வெண்குன்றி. அதிமேற்றிராணியார் - மேற்றி ராணி மாருள் பிரதானமானவர். அதியமான் - ஒரு வள்ளல். அதியர் - அதியமான் வழியினர். அதியன் - மேற்பட்டவன் அதிரசம் - பண்ணியார வகை அதிரதன் - எண்ணில்லாத தேர் வீரரை எதிர்த்துப் போர் செய்பவன் அதிரல் - காட்டு மல்லிகை, ஒலித்தல், புனில், விரிதூறு அதிருசம் - பார்வைக்கு எட்டாதது அதிரேகம் - மிகுதி, மேன்மை அதிரோகம் - எலும்புருக்கி நோய் அதிர்ச்சி - அசைவு, உடலியக்கத்தில் திடீரென உண்டாகும் தளர்ச்சி அதிர்ச்சி தாங்கி - அதிர்ச்சியைத் தாங்கி நிற்கும் சாதன (Buffer) அதிர்தல் - ஒலித்தல் அதிர்ப்பு - அதிர்ச்சி, நடுக்கம் அதிவிடயம் - மருந்துச் சரக்கு வகை அதிவியாத்தி, அதிவியாப்தி - இலக்கிய மல்லாததன் கண்ணும் இலக்கணம் செல்லும் குற்றம் அதிவிருட்டி - மிகு மழை அதிவீரராமபாண்டியன் - நைடதம் செய்தவன் (16ஆம் நூ.) அதீத அகம் - மனச்சாறு (Super Ego) அதீதம் - கடந்தது, மேற்பட்டது அதீனம் - வசம் அது - அஃறிணை ஒருமைச் சுட்டுப் பெயர், ஆறாம் வேற்றுமையின் உருபு அதுக்குதல் - வாயிலடக்குதல் அதும்புதல் - மொய்த்தல் அதுலம் - ஒப்பற்றது அதுல்லியம் - ஒப்பின்மை அதெந்து - அதென அதைப்பு - வீக்கம் அதைரியம் - தைரியமின்மை அதோகதி - தாழ்நிலை அதோமுகம் - கீழ்நோக்கிய முகம் அத்தகம் - ஆமணக்கு, கருஞ்சீரகம் அத்தகடம் - கைவளை. அத்தகிரி - பொழுது மறையும் மலை. அத்தசந்திரன் - வாலசந்திரன். அத்தசாமம் - நடு இரவு. அத்தமனம் - படுக்கை. அத்தம் - அருநெறி, ஒரு நட்சத்திரம், அத்தகிரி, பொருள், கண்ணாடி, ஆண்டு பாதி. அத்தர் - உரோசா முதலிய பூச்சாரம். அத்தவாளம் - மேற்பார்வை, காடு. அத்தனை - அவ்வளவு. அத்தன் - தகப்பன், மூத்தோன், சிவன், விஷ்ணு, அருகன். அத்தாட்சி - எடுத்துக்காட்டு, சாட்சி. அத்தாணி - அரசிருக்கை மண்டபம். அத்தாளம் - இரா உணவு. அத்தான் - அத்தைமகன், அக்காள் கணவன். அத்தி - ஒருமரம், எலும்பு, யானை, பெண்பால் விகுதி, கொலை, கடல். அத்திசஞ்யம் - தகனத்தின் பின் புண்ணிய தீர்த்தத்தில் போடும்படி எலும்பு திரட்டுகை. அத்திநாத்தி - உண்டு இல்லை. அத்திம்பேர் - அத்தை கணவன், தமக்கை கணவன். அத்தியட்சன், அத்தியக்கன் - தலைவன். அத்தியந்தம் - அளவற்றது. அத்தியயனம் - ஓதல். அத்தியாயம் - நூற்பிரிவு. அத்தியாரோபம் - ஒன்றின் தன்மையை மற்றொன்றில் ஏற்றிச் சொல்லுகை. அத்தியாவசியம் - இன்றியமை யாமை. அத்திரசத்திரம் - கைவிடுபடை கை விடாப்படை. அத்திரம் - அம்பு, கழுதை, குதிரை, நிலையற்றது. அத்திரி - கழுதை, குதிரை, கோவேறு கழுதை, ஒரு முனிவர், மலை. அத்திரு - அரசமரம். அத்தினி - பெண் யானை, பெண் வகை. அத்து - ஒரு அசைச்சொல், எல்லை சாரியை. அத்துணை - அவ்வளவு. அத்துவயம் - இரண்டன்மை. அத்துவர் - வழி. அத்துவானம் - பாழ்ங்காடு. அத்துவிதம், அத்துவைதம் - இரண்டன்மை. அத்தை - தந்தையுடன் பிறந்தவள், மனைவியின் தாய், தலைவி, காற்றாழை. அநாதன் - தனக்குமேலொரு தலை வனில்லாதவன், திக்கில்லாதவன். அநாயன் - வீண். அநிசம் - எப்பொழுதும். அநிதம் - அளவு கடந்தது. அநித்தியம் - நிலையற்றது. அநியாயம் - அக்கிரமம். அநிருத்தம் - நிரூபிக்கப்படாதது. அநீதம் - நீதியின்மை. அந்தகக்கவி வீரராகவ முதலியார் - ஒரு புலவர் (17ஆம் நூ.) அந்தகன் - குருடன், அழிப்போன் இயமன், சனி. அந்தகாரம் - இருள். அந்தக்கரணம் - உட்கருவி, (மனம் புத்தி, சித்தம், அகங்காரம்) அந்தணன் - அழகிய தட்பமுடையவன், முனிவன், சிவன், பிரமன். அந்தணாளன் - பார்ப்பான். அந்தப்புரம் - மகளிருறைவிடம். அந்தம் - முடிவு, மரணம். அந்தரங்கம் - இரகசியம், மனம், உட்கருத்து. அந்தரதுந்துபி - தேவ வாக்கியம். அந்தரம் - வெளி, தேவலோகம், தீமை, நடு. அந்தரர் - தேவர். அந்தராளம் - நடுமண்டபம். அந்தரி - துர்க்கை, தோற் கருவி வகை, உதவியற்றிரு, உடை. அந்தரியாமி - கடவுள். அந்தர் - 112 இராத்தல். அந்தர்த்தானம் - மறைகை. அந்தளம் - கவசம். அந்தாதி - முதற்பாடல் இறுதியும் பிற்பாடல் முதலும் ஒன்று படத் தொடுக்கும் நூல். அந்தி - மாலைக்காலம், செவ்வானம், முடிவு காலம், தில்லை மரம். அந்தி இளங்கீரனார் - சங்ககாலப் புலவர். அந்திசந்தி - காலை மாலை. அந்தியகாலம் - மரணகாலம். அந்தியம் - முடிவு. அந்தியேட்டி - மரணக்கிரியை. அந்திரன் - கடவுள். அந்தில் - ஓர் அசைச்சொல், அவ்விடம். அந்து - நெற்பூச்சி, யானைக்காற் சங்கிலி. அந்துவன் - ஒரு சேர அரசன். அந்துவன் கீரனைக்காவட்டனார் - சங்க காலப் புலவர். அந்தை - முற்கால நிறை வகை. அந்தோ - அதிசய இரக்கச்சொல். அபகடம் - வஞ்சகம். அபகரித்தல் - கவர்தல். அபகாரம் - தீமை. அபகீர்த்தி - நிந்தை, இகழ்ச்சி. அபக்யாதி - அபகீர்த்தி. அபக்குவம் - முதிராமை. அபங்கன் - குறைவில்லாதவன். அபசகுனம் - தீக்குறி, சகுனத்தடை. அபசயம் - கேடு. அபசவ்வியம் - இடப்பக்கம், மாறுபாடு. அபசாரம் - மரியாதை தவறிய செயல். அபத்தம் - பொய், வீண். அபயகரம் - பயன் தீரவைக்கும் கை. அபயம் - அடைக்கலம். அபயர் - வீரர். அபயவத்தம் - இணைக்கை வகை. அபயன் - சோழன். அபரகாத்திரம் - கால். அபரக்கிரியை - இறந்தவருக்குச் செய்யும் கிரியை. அபரஞானம் - சாத்திரஞானம். அபரஞ்சி - புடம் வைத்த பொன். அபரபக்கம், அபரபட்சம் - தேய்பிறை. அபரம் - பின்பக்கம், முதுகு, மேற்கு, கவசம், பொய். அபராங்கதம் - உடம்பின் பிற்பாகம். அபராணம் - பிற்பகல். அபராதம் - குற்றம், பாவம். அபராதி - துங்கு செய்தோன். அபரிமிதம் - அளவின்மை. அபரோட்சம் - நேரில் அறியும் அறிவு. அபலம் - பலவீனம். அபலை - பெண். அபவாதம் - அவதூறு, பழிச்சொல். அபவேட்டிதம் - அபிநயவகை. அபாண்டம் - பொய்க்குற்றம். அபாத்திரம் - தானம் பெறத் தகாதவன். அபாயம் - ஆபத்து. அபாரம் - அளவற்றது. அபாவம் - இன்மை. அபானம் - ஆசனவாய். அபானன் - பத்து வாயுக்களுள் ஒன்று. அபிசாரம் - மந்திர வித்தை. அபிசாரி - வேசை. அபிடேகம் - திருமுழுக்கு. அபிதானம் - பெயர். அபிநந்தனர் - சமண தீர்த்தங் கரருள் ஒருவர். அபிநயம் - மனக்கருத்தைக் குறிப் பாக விளங்கச்செய்யும் அங்கச் செய்கை. அபிநவம் - புதியது. அபிப்பிராயம் - கருத்து. அபிமதம் - விருப்பம். அபிமந்திரித்தல் - மந்திரங்களை உருவேற்றிப் பிரதிட்டை செய்தல். அபிமன்னு, அபிமன்யு - அருச் சுனன் மகன். அபிமானபுத்திரன் - வளர்ப்பு மகன். அபிமானம் - பற்று, தன்மதிப்பு. அபிமுகம் - நேர்முகம். அபியுக்தன் - அறிஞன். அபியோகம் - முறையீடு. அபிராமம் - அழகானது. அபிராமி - பார்வதி. அபிராமிப்பட்டர் - திருக்கடவூரில் வாழ்ந்த அந்தணப் புலவர் (18ஆம் நூ.) அபிலாசை, அபிலாஷை - விருப்பம். அபிவிருத்தி - மேன்மேலும் பெருகுகை. அபின், அபினி - கசகசாப் செடிக் காயின் பால். அபின்னம் - வேறுபடாதது. அபீட்டம் - பிரியமானது. அபுதன் - மூடன். அபூதம் - இன்மை. அபூர்வம் - புதிதானது. அபேட்சை - விருப்பம். அபேதம் - வேறுபாடின்மை. அபோதம் - அறியாமை. அப்தம் - ஆண்டு. அப்பனை - கட்டளை. அப்பம் - பணிகார வகை. அப்பர் - திருநாவுக்கரசர். அப்பன் - தகப்பன். அப்பாட்டன் - தந்தையின் பாட்டன். அப்பால் - அதன்மேல், அப்பக்கம். அப்பாவி - மேதை. அப்பிகை - ஐப்பசி. அப்பியங்கனம் - எண்ணெய் முழுக்கு. அப்பியத்தரம் - இடையூறு. அப்பியம் - தேவர்க்கிடும் பலி. அப்பியாசம் - பழக்கம். அப்பிரகம் - உலோக வகை. அப்பிரத்தீயட்சம் - புலப்படாதது. அப்பிரமண்ணியம் - உதவி வேண்டிக் கூறும் குறிப்பு மொழி. அப்பிரமாணம் - பிரமாணமல்லாதது. அப்பிராணி - பேதை. அப்பு - நீர், வீட்டு வேலைக்காரன். அப்புதல் - பூசுதல். அப்புறம் - அந்தப்பக்கம், அதன்பின். அப்பூதி அடிகள் - அப்பர் சுவாமி கள் காலத்து வாழ்ந்த அந்தணர். அப்பை - கொன்றை, சிறுமீன் வகை. அப்பைய தீட்சிதர் - விசயநகர அரசர் காலத்து வாழ்ந்த சைவப் பெரியார் (1554-1626). அப்பொழுது - அக்காலத்தில். அப்போத்தலன், அப்போஸ்தலன் - கிறித்துவின் பன்னிரண்டு சீடர்களுள் ஒருவன். அப்போஸ்தலர் நடபடிகள் - கிறித்துவ வேதத்தில் புதிய ஏற்பாட்டிலுள்ள ஐந்தாவது நூல். அப்லீசியா - கடல் முயல். அமங்கலம் - மங்கலம்மல்லாதது. அமங்கலி, அமங்கலை - விதவை. அமஞ்சி - கூலியில்லா வேலை, வீண். அமட்டு - ஏய்ப்பு, பயமுறுத்துகை. அமணம், அமண் - சமண மதம், அரையில் ஆடையில்லாமை. அமண்பாழி - அமணர் கோவில். அமயம் - சமயம், பொழுது. அமரகம் - போர்க்களம். அமரகோசம், அமரசிங்கம் - ஒரு வட மொழி நிகண்டு. அமரபக்கம் - அமரபக்கம். அமரம் - அமரகோசம் என்னும் நிகண்டு, படகைத் திருப்புந்துண்டு, தோணியின் பிற்பக்கம், ஆயிரம் காலாளை ஆளுகை. அமரர் - தேவர். அமராந்தேசீ - கீரைக் குடும்பத்தைச் சேர்ந்த செடிகள். அமராபதி, அமராவதி - இந்திரன் நகர், கிருட்டினா நதி ஓரத்திலுள்ள பழைய நகர். அமரார் - பகைவர். அமரி - துர்க்கை, அமிர்தம், சிறுநீர், கற்றாழை. அமரிக்கை - அமைதி. அமர் - போர். அமர்தல் - அடங்குதல், இருத்தல், விரும்புதல். அமர் நீதிநாயனார் - 63 நாயன் மாருளொருவர். அமலகம் - நெல்லி. அமலம் - மாசற்றது. அமலன் - கடவுள். அமலுதல் - நெருங்குதல், நிறைதல் அமலை - ஆரவாரம், சோற்றுத் திரளை, பட்டவேந்தனை நெருங்கி வீரர் திரண்டு பாடும் பாட்டு, தேவி. அமல் - நிறைவு, அதிகாரம், மேல் விசாரணை. அமளி - படுக்கை, ஆரவாரம். அமளை - கடுகுரோகணி. அமாத்தியன் - மந்திரி. அம்மாவாசி - அமாவாசை. அமானம் - அளவின்மை. அமானி - வரையறுக்கப்படாதது, பொது, புளியாரை. அமிசம் - பாகம். அமிசை - அமைப்பு. அமிதசாகரர் - யாப்பருங்கலக் காரி கையின் ஆசிரியர் (12 ஆம் நூ.) அமிர்தகலை - சந்திரகலை. அமிர்தகவிராயர் - ஒரு துறைக் கோவை ஆசிரியர் (27 ஆம் நூ.) அமிர்த சஞ்சீவி - உயிர்தரும் மூலிகை. அமிர்த சர்க்கரை - சீந்தில் மா. அமிர்தம் - தேவருணவு, இனிமை. அமிலங்கள் - அசிட்டுகள் (acids) அமிழ்தம் - அமிர்தம். அமிழ்தல் - ஆழ்தல். அமிழ்து - அமிர்தம். அமிழ்ந்துதல் - ஆழ்தல், அழுந்தல். அமீபா - தூசு போன்று நுண்ணிய உயிர் வகை. அமீர் - தலைவன், முகமதிய பிரபு. அமுக்கிரா - ஒரு மருந்துச் செடி. அமுக்கு - அழுத்துகை. அமுதகடிகை - சுக கருமங் களுக்குரிய நாழிகை. அமுதசுரபி - மணிமேகலை கையி லிருந்த ஒரு பிச்சைப் பாத்திரம். அமுதம் - தேவருணவு. அமுதர் - தேவர். அமுதவல்லி - சீந்தில். அமுதவெழுத்து - சொல் முதலில் வரத் தகும் சுபவெழுத்து. அமுதவேணி - சிவன். அமுதன் - கடவுள் அமுது - சோறு, நீர், பால், அமிர்தம். அமுது செய்தல் - உண்ணுதல். அமுதுபடி - அரிசி. அமுரி - சிறுநீர். அமூர்த்தன் - சிவன் அமேத்தியம் - மலம். அமை - மூங்கில், பொருந்து என்னும் ஏவல், அழகு. அமைச்சன் - மந்திரி. அமைச்சு - மந்திரித் தொழில். அமைதல் - பொருந்துதல், அடங்குதல், முடிதல். அமைதி - பொருந்துகை, தன்மை நிறைவு, அடக்கம். அமைத்தல் - படைத்தல், பதித்தல். அமைப்பு - பொருந்தியிருக்கும் நிலை. அமையம் - சமயம். அமைவன் - முனிவன், கடவுள். அமைவு - இயல்பு, நிறைவு. அமோகம் - பெருகும் தன்மை மிகுதி, இலக்குத் தவறாமை. அம் - அழகு, நீர் (ஒரு சாரியை) மேகம். அம்சம் - பகுதி, அன்னப்பறவை. அம்பகம் - கண், எழுச்சி. அம்பட்டன் - நாவிதன். அம்பணத்தி - துர்க்கை. அம்பணம் - மரக்கால், நீர்விழும் குழாய், துலாக்கோல், யாழ் வகை, வாழை. அம்பணவர் - பாணர். அம்பரம் - வான், திசை, சீலை, கடல், துயிலிடம். அம்பரவாணம் - என்காற் புள். அம்பரை - நிமிளை. அம்பர் - அங்கே, ஒருவகைப் பிசின். அம்பர்கிழார், அருவந்தை - திவாகரம், செய்வித்தோன். அம்பலக்காரன் - கிராமத் தலைவன், கள்ளர் வலையர் பட்டப்பெயர். அம்பலக்கூத்தன் - சிவன். அம்பலச்சாவடி - கிராமப் பஞ்சாயத்து மண்டபம். அம்பலம் - பலர் கூடும் வெளி, ஊர் சபை, கூத்துக் காண்போர் இருக்கை. அம்பலவாண கவிராயர் - அறப்பளீ சுர சதகம் செய்த புலவர். அம்பலி - ஒரு வாச்சியம். அம்பல் - பழிமொழி, சிலரறிந்த அலர். அம்பராத்தூணி - அம்புக்கூடு. அம்பாரம் - நெற்குவியர், பெருங் குவியல். அம்பாரி - யானை மேற்பீடம். அம்பாளிகை - பாண்டுவின் தாய், தரும தேவதை. அம்பாள் - தோட்டம். அம்பாவாடல் - தைநீராடல். அம்பாள் - உமை. அம்பி - தோணி, கள், இறைக்கூடை, மிடா. அம்பிகாபதி - கம்பர் மகன், சிவபிரான். அம்பிகேயம் - திருதராட்டிரன். அம்பிகை - பார்வதி, திருதராட்டிரன் தாய். அம்பிகை பாகன் - சிவன். அம்பு - பாணம், நீர், கடல், மேகம், மூங்கில், தளிர், எலுமிச்சை, திப்பிலி. அம்புக்கூடு - அம்பறாத்தூணி. அம்புசம், அம்புசாதம் - தாமரை. அம்புசாதன் - பிரமன். அம்புயம் - மேகம், கோரை. அம்புதி - கடல். அம்புதம் - தாமரை, இறைகூடை. அம்புராசி - கடல். அம்புலி - சந்திரன். அம்புலிப்பருவம் - பிள்ளைத் தமிழ்ப் பருவங்களுள் ஒன்று. பிள்ளைக்குச் சந்திரனைக் காட்டும் பருவம். அம்புலிமான் - சந்திரன். அம்பை - பார்வதி, காசிராசன் மகள். அம்போதரங்கம் - கலிப்பாவுறுப்பி லொன்று. அம்போதி - கடல், காற்று. அம்போருகம் - தாமரை. அம்ம - கேட்டற் பொருளைத் தழுவி வரும் இடைச்சொல், அதிசயக் குறிப்பு. அம்மணம் - நிர்வாணம். அம்மணி - பெண்ணைக் குறிக்கும் மரியாதைச் சொல். அம்மம் - பெண்ணின் முலை. அம்மள்ளனார் - சங்ககாலப் புலவர். அம்மன் - தேவதை. அம்மனே - ஒரு வியப்புக் குறிப்பு. அம்மனை - தாய், நெருப்பு, அம்மனை விளையாட்டு. அம்மா - தாய், அதிசய இரக்கக் குறிப்பு, ஓர் அசைச்சொல். அம்மாமி - மாமன் மனைவி. அம்மார் - கப்பற் கயிறு. அம்மானை - கொக்கான் வெட்டுதல், ஒருவகைப் பாடல். அம்மான் - தாயுடன் பிறந்தவன், கடவுள், தகப்பன். அம்மான் பச்சரிசி - ஒரு சிறு பூண்டு. அம்மான் பொடி - சொக்குப்பொடி. அம்மி - அரைக்கல். அம்மிக்குழவி - அம்மியில் அரைக்கும் நீண்ட திரண்ட கல். அம்முதல் - மூடுதல். அம்மூவனார் - சங்ககாலப் புலவர். அம்மெய்யன் நாகனார் - சங்க காலப் புலவர். அம்மெனல் - ஒலிக்குறிப்பு. அம்மை - தாய், அழகு, நோய் வகை, வரும் பிறப்பு. அம்மைக் குத்தல் - அம்மைப் பால் கட்டுதல். அம்மைச்சி - வருண குலாதித்தன் மடல் பாடிய அம்மையார் (17ஆம் நூ.) அயக்காந்தம் - ஊசிக்காந்தம். அயக்கு - நடுக்கம். அயசு - இரும்பு. அயணம், அயநம் - செலவு. அயன் - இரும்பு, ஆடு, குதிரை, சுனை, பள்ளம். அயர் - தளர், மற. அயர்ச்சி - சோர்பு, மறதி. அயர்தி - மறதி. அயர்வு - மயக்கம். அயர்வுயிர்த்தல் - இளைப்பாறுதல். அயலி - வெண் கடுகு. அயல் - அருகிடம், புறம்பு. அயவணம் - ஒட்டகம். அயவி - சிற்றரத்தை. அயறு - புண்வழலை, புண்ணி லிருந்து வடியும் நீர். அயனம், அயநம் - சூரியன் சம ரேகைக்கு வடக்கிலாவது, தெற்கி லாவது சஞ்சரிக்கும் காலம். அயன் - பிரமன் அயா - தளர்ச்சி. அயாவுயிர்த்தல் - பெருமூச்சு விடுதல், வருத்தம் தீர்த்தல். அயிராணி - இந்திராணி. அயிராவணம், அயிராவதம் -இந்திரன் யானை. அயிரை - ஒருவகை மீன், சேர நாட்டுள்ள ஒரு மலை, நுண்மணல் ஓர் ஆறு. அயிர் - ஐய உணர்வு, நுண்மை, நுண் மணல், புகைக்கும் வாசனை. அயிர்த்தல் - ஐயுறல். அயிலான் - முருகக் கடவுள். அயிலுழவன் - வீரன். அயிலை - ஒரு மீன். அயில் - அழகு, கூர்மை, உண், வேல், கோரை, களப்பை. அயில்தல் - உண்ணல். அயிர்பெண்டு - வரிக்கூத்து வகை. அயினி - உணவு, ஆலத்தி, சோறு. அயுதம் - பதினாயிரம். அயுத்தம் - தகுதியின்மை. அயோக்கியம் - தகாதது. அயோடோபாரம் - ஒருவகை மருந்து (Iodo form) அயோடின் - கடல் தாவரத்திலிருந்து எடுக்கப்படும் ஒரு வகை மருந்து. அயோத்தி - ஒரு பட்டினம். அர - பாம்பு. அரக்கன் - இராக்கதன். அரக்கி - இராக்கதப் பெண். அரக்கு - சாதிலிங்கம், சிவப்பு, மது, செம்மெழுகு. அரக்குதல் - தள்ளுதல், தேய்த்தல், அழித்தல். அரக்கு மாளிகை - பாண்டவரை வஞ்சனையாற் கொல்லத் துரியோ தனன் செய்வித்த வீடு. அரங்கநாதன் - சீரங்கத்துக்குத் திருமால். அரங்கம் - நாடகமாடுமிடம், போர்க் களம், ஆற்றிடைக்குறை, சபை. அரங்கு - நாடகமாடும் இடம், சூதாடு மிடம், சூதாடுவதற்கு வகுத்த தானம். அரங்குதல் - தைத்தல், அழித்தல், அழுந்துதல். அரங்கேற்றம் - புதுநூல், நடனம் முதலியவற்றை முதன் முறை சபைக்கு ஏற்பிக்கை. அரசகேசரி - தமிழ் இரகுவமிச நூலாசிரியர் (17ஆம் நூ.) அரசவாகை - வேந்தனியல்பு கூறும் புறத்துறை. அரசன் - இராசன், வியாழன். அரசாட்சி - அரசுபுரிதல். அரசாணி - அரசங்கொம்பு, அரசாணி மேடை, அரசி. அரிசு - இராணி. அரசியல் - அரசாட்சி. அரசிருக்கை - சிங்காசனம். அரசிறை - கப்பம், அரசர்க்கரசன். அரசு - அரசன், இராச்சியம். அரசுகட்டில் - சிங்காசனம். அரசுவர் - அரசயானை, பட்டத்து யானை. அரட்டவன் - குறுநிலமன்னன், துட்டன், ஆறலைப்பான். அரட்டு - கருவம், குறும்பு, அச்சம். அரட்டி - அச்சம். அரணம் - காவல், கோட்டை மதில், வேலி, செருப்பு, கவசம், கருஞ்சீரகம். அரணி - தீக்கடை கோல். அரணை - ஒருவகைப் பல்லி. அரண் - கோட்டை, காவற்காடு. அரண்மனை - அரசன் வீடு. அரதனம் - இரத்தினம், சிலம்பணி. அரதி - வேண்டாமை. அரதேசி - உள்ளூரில் திரிபவன். அரத்தம் - சிவப்பு, இரத்தம், ஒரு வகைத் துகில், செம்பரத்தம், அரக்கு, பொன், படம்பு. அரத்தன் - செவ்வாய். அரந்தை - துன்பம், குறிஞ்சி யாழிசை. அரத்தைப் பெரும்பாழி - தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில். அரபி - ஒரு மொழி. அரப்பொடி - இரும்புத்தூள். அரமகள் - தேவ மாது. அரமனை - அரண்மனை. அரமியம் - வீட்டின் மேலுலாவும் வெளி. அரம் - அராவும் கருவி, கீழ் உலகம். அரம்பு - குறும்பு, தீமை. அரம்பை - வாழை, தெய்வலோக நாடக மகள், ஓமம். அரயன் - அரசன். அரலை - கழலை, கடல், விதை, குற்றம், கொடுமுறுக்கு, பொடிக்கல். அரவக்கிரி - திருப்பதி மலை. அரவக்கொடியோன் - துரியோ தனன். அரவணை - பாம்புப் படுக்கை. அரவம் - ஒலி, சிறுமணியிட்ட சிலம்பு, பாம்பு. அரவிந்தம் - தாமரை. அரவு - பாம்பு, ஆயிலியம், ஒலி. அரளி - பீநாறி. அரறுவ - முழங்குவ. அரற்றல் - அழுதல், ஒலித்தல். அரன் - சிவன். அரா - பாம்பு. அராகம் - விரும்பாமை, பாலை யாழ்த்திறம், களிப்பாவினோருறுப்பு. அராக்கோள் - இராகு கேதுகள். அராந்தாணம் - சிவனாலயம். அராபதம் - வண்டு. அராமம் - சோலை, பைங்கூழ். அராவான் - அருச்சுனனுக்கு உலூபியிடம் பிறந்த மகன். அரி - அரிகை, கள், ஐமை, கண்வரி, சிங்கம், சிலம்பின் பருக்கைக் கற்கள், ஆட்டி அரிக்கை, மூங்கில், வண்டு, பறை, தவளை, விதை, அழகு. அரிகண்டம் - கழுத்தில் மாட்டப் படும் ஒர் இரும்பு வட்டம், தொந் தரை. அரிகரபுத்திரன் - ஐயனார். அரிகால் - அரிந்துவிட்ட தாள். அரிகூடம் - கோபுரவாயில். அரிசனம் - மஞ்சள். அரிசி - தானியம். அரிசில்கிழார் - பதிற்றுப்பத்தில் 8ம் பத்துப் பாடிய புலவர். அரிச்சந்திரபுராணம் - வீர கவிராயர் பாடிய புராணம் (கி.பி.1524) அரிச்சித்திரம் - உலோகத் தகட்டில் அமிலத்தைக் கொண்டு அரித்து உண்டாக்கப்படுவது (Etching) அரிச்சுவடி - நெடுங்கணக்கு எழுதப் பட்ட புத்தகம். அரிடம் - தீங்கு. அரிட்டம் - தீங்கு, கள், காக்கை, வேம்பு, மோர், மூட்டை. அரிட்டை - தீங்கு. அரிணம் - மான், யானை, வெள்ளை, பொன், சிவப்பு. அரிணை - கள். அரிதகி - கடுக்காய் மரம். அரிதம் - திசை, பச்சை, பொன்னிறம். அரிதாசர் - ஒரு புலவர் (18ம் நூ.) அரிதாரம் - காளக பாஷாணம், கஸ்தூரி. அரிதாள் - கதிர் அறுக்கப்பட்ட தாள். அரிது - அருமையானது. அரித்தல் - மாவரித்தல், சொறி வெடுத் தல், காய்ச்சுதல். அரித்தை - துன்பம். அரிந்தமன் - பகைவரை அடக்கு வோன். அரிப்பரித்தல் - கொழித்தெடுத்தல், தேடிப்பார்த்தல். அரிப்பு - பிரித்தெடுக்கை, சொறிவு. அரிமா, அரிமான் - ஆண் சிங்கம். அரிமாநோக்கு - முன்னுக்குப் பின் தொடர்புபடுத்துவதாகிய சூத்திர நிலை. அரிய - அருமையான. அரியகம் - காற்சரியெனும் அணி, கொன்றை. அரியணை - சிங்காசனம். அரியம் - வாச்சியம். அரியல் - கள். அரியாசம் - ஒரு வாசனைப் பொருள். அரியாசனம் - சிங்காசனம். அரியாயோகம் - அரைப்பட்டிகை. அரியேறு - ஆண் சிங்கம். அரிவாள்தாயநாயனார் - 63 நாயன் மாருளொருவர். அரில் - குற்றம், மாறுபாடு, சிறுகாடு, மூங்கில். அரிவரி - நெடுங்கணக்கு. அரிவாள் - வெட்டும் கருவி. அரிவி - கதிர்ப்பிடி. அரிவி வெட்டுதல் - கதிரறுத்தல். அரிவை - பெண், இருபது முதல் இருபதைந்தது வயதிற்குட்பட்ட பெண். அரு - உருவமற்றது. அருகம் - சமணம், யோக்கியமானது. அருகல், அருகுதல் - குறைதல். அருகன் - சைனன், தோழன். அருகாமை - சமீபம். அருகியல் - பண் வகை. அருகு - சமீபம், ஓரம். அருக்கம் - எருக்கு, சூரியன், அருமை, பொன், குறைவு, நீர்க் காக்கை. அருக்களிப்பு - அருவருப்பு. அருக்கன் - சூரியன், சுக்கு. அருக்காணி - அருமை. அருக்கியம் - மந்திர நீர் இறைத்தல். அருக்குதல் - அருமை காட்டல், பாராட்டல், சுருக்குதல். அருங்கதி - மோட்சம். அருங்கலச்செப்பு - அருங்கலான் வயத்தார் என்னும் சமணர் செய்த நூல். (13ம் நூ.) அருங்கலம் - ஆபரணம், அழகு செய்யும் பொருள். அருங்கிடை - நோய்வாய்ப்பட்டிருக்கை. அருங்கு - அருமை. அருங்கேடு - கேடின்மை. அருச்சகன் - பூசாரி. அருச்சனை - பூசனை. அருச்சி - பூசி. அருச்சுனம் - வெண்மை, எருக்க மரம், மருதமரம், பொன். அருச்சுனன் - பஞ்சபாண்டவருள் ஒருவன். அருஞ்சுரம் - நிழலற்ற நீளிடம். அருஞ்சோதி - நெல் வகை. அருட்குறி - சிவலிங்கம். அருட்டு - மயக்கு, எழுப்பு. அருட்பா - கடவுளருளால் பாடப்பட்ட பா. அருணகிரிநாதர் - திருப்புகழ் பாடியவர் (15ஆம் நூ.) அருணந்தி சிவாச்சாரியார் - சந்தான குருவருள் ஒருவர் (13 ஆம் நூ.) அருணம் - சிவப்பு, மான். அருணவம் - கடல். அருணன் - சூரியன், சூரியன் சாரதி. அருணாசலக் கவிராயர் - இராமநாடக ஆசிரியர் (1712 - 1779) அருணாசல புராணம் - எல்லப்ப நாவலர் செய்த புராணம். அருணாசலம் - திருவண்ணாமலை. அருணி - மான்சாதிப் பெண். அருணை - அண்ணாமலை. அருணோதயம் - வைகறை. அருண்மொழித்தேவர் - சேக் கிழார். அருத்த நூல் - பொருள் நூல். அருத்தம் - சொற்பொருள், செல் வம், பாதி. அருத்தல் - உண்பித்தல். அருத்தாபத்தி - சொல்லிய ஒன்றைக் கொண்டு சொல்லாத வொன்றையறிதல். அருத்தி - ஆசை, செல்வன். அருத்து - உண்பி. அருநிலம் - பாலைவனம். அருநிலை - ஆழமான நீர்நிலை. அருநெல்லி - ஒருவகை நெல்லி. அருநெறி - போவதற்கரிய வழி. அருந்தல் - உண்டல், அருமை. அருந்ததி - வசிட்டர் மனைவி, ஒரு நட்சத்திரம். அருப்பம் - அருமை, அரன், திண்மை, வழக்குநிலம், கள், மருத நிலத்தூர். அருப்பலம் - அனிச்சமரம். அருப்பு - அரும்பு, காட்டரண். அருமந்த, அருமருந்தன்ன - அருமையான. அருமருந்து - தேவாமிர்தம். அருமன் - சங்க காலத்து வாழ்ந்த ஒரு செல்வன். அருமை - அபூர்வம், பிரயாசம், இன்மை. அரும்பர் - அரும்பு. அரும்பல் - தோன்றுதல். அரும்பு - மொட்டு, அரிசி. அருவம் - உருவமின்மை. அருவர் - தமிழர். அருவருப்பு - மிகுவெறுப்பு. அருவா - அருவா நாடு. அருவாணம் - கோவிற் பிரசாதம். அருவாநாடு - தென்னார்க்காட்டில் பெண்ணை ஆற்றுக்குத் தென் பாகம். அருவாவடதலை - செங்கற்பட்டு மாவட்டம். அருவாளர் - ஒருசாதியர். அருவி - நீரூற்று, ஒழுங்கு, திணைத்தாள். அருவு - துன்பம். அருவுதல் - கண்கரித்தல், நெருங்கல். அருளிப்பாடு - கட்டளை. அருளுதல் - கிருபை செய்தல், தயவுடன் சொல்லுதல், கட்டளை யிடுதல், கொடுத்தல். அருள் - கருணை. அரூபம் - உருவமின்மை. அரூபி - உருவில்லது. அரேணுகம் - கருக்காய்வேர், வால் மிளகு. அரை - பாதி, மரத்தின் அடிப்பக்கம், இடை, தண்டு, வயிறு. அரைகுறை - முற்றுப் பெறாமை. அரைக்கச்சு, அரைக்கச்சை - இடைப்பட்டிகை. அரைக்காணி - நூற்றறுபதிலொரு பங்கு. அரைக்கால் - எட்டிலொரு பங்கு. அரைசன், அரையன், அரைசு - அரசன். அரைஞான், அரைநாண் - அரையிற் கட்டும் கயிறு. அரைதல் - தேய்தல். அரைத்தல் - தேய்த்தல், அழித்தல். அரைநாள் - நடு இராத்திரி. அரைப்பட்டிகை - ஒட்டியாணம். அரைப்பணம் - அல்குல். அரைப்பு - சாந்து, இருப்பைப் பிண் ணாக்கு. அரைமா - நாற்பதில் ஒரு பங்கு. அரைமுடி - அரசிலை வடிவான சிறுவர் அணி. அரையர் - விட்டுணு கோவில்களில் திவ்வியப் பிரபந்தங்களைப் பாடுந் தொண்டு செய்வோர். அரோ - ஒரசைச் சொல். அரோசகம், அரோகனம், அரோ சிகம் - அருவருப்பு. அர்ச்சகன் - பூசாரி. அர்ச்சனை - அருச்சனை. அர்ச்சியசிஷ்டர் - பரிசுத்தர். அர்ச்சை - மூர்த்தி. அர்த்தசந்திரம் - வியூக வகுப்பு களுள் ஒன்று. அர்த்தசாமம் - நடுச்சாமம். அர்த்தநாரீசுரன் - பாதி உடல் பெண் வடிவான சிவன். அர்த்த மண்டபம் - கருப்பக் கிரு கத்தைச் சார்ந்த மண்டபம். அர்த்தரதன் - போர்புரிந்து பின்ன டையுந் தேர் வீரன். அர்ப்பணம் - உரியதாகக் கொடுத்தல். அர்ப்பித்தல் - உரியதாக்குதல். அல - துன்புறு, வருமைப்படு. அலகிடுதல் - துடைப்பத்தால் பெருக் கல், சீர் பிரித்தல், எண்ணுதல். அலகியல் - அலகுகள், அளவுகள் பற்றிய விஞ்ஞானத் துறை. (Metrology) அலகின்மாறு - கூட்டுமாறு. அலகு - எண், தானியக்கதிர், கார்மை, ஆயுதத்தின் அலகு, பறவை மூக்கு, தாடை, கைம்மரம், துடைப்பம். அலகை - பேய், கற்றாழை. அலக்கண் - துன்பம். அலக்கழித்தல், அலைக்கழித்தல் - அலைத்து வருத்துதல். அலக்கு - வரிச்சு, தனிமை. அலக்குதல் - அசைத்தல். அலங்கடை - அல்லாதவிடத்து. அலங்கமலங்க - பொறிகலங்க. அலங்கம் - கொத்தளம், அரண். அலங்கரி - சிங்காரி. அலங்கல் - பூமாலை, தளிர், அசை யும் கதிர். அலங்காரம் - சிங்காரம், அழகு, செய்யுளணி. அலங்காரி - அழகி. அலங்கிருதம் - சிங்காரம். அலங்குதல் - அசைத்தல், ஒளி செய்தல். அலங்கை - துளசி. அலங்கோலம் - சீர்கேடு. அலசுதல் - கழுவுதல், வருத்துதல். அலட்சியம் - கவனமின்மை. அலட்டு - பிதற்றல், வருத்தம். அலதிகுலதி - அலங்கோலம். அலத்தகம் - செம்பஞ்சுக் குழம்பு. அலத்தல் - வறுமையுறுதல். அலத்தி - மின்மினி. அலந்தலை - துன்பம். அலந்தை - துன்பம், குளம். அலப்பு - மனக்கலக்கம். அலமரல் - மனச்சுழற்சி, துக்கம். அலமாப்பு - துன்பம். அலமாரி - ஒருவகைப் பெட்டகம். அலமுகம் - கலப்பை நுனி. அலம - அமைவு, கலப்பை, தேள், அலமரல். அலம்பல் - கழுவுதல், அலக்குத்தடி, கத்துதல். அலம்பு - வறுமை. அலம்வருதல் - சுழலுதல், வருந் துதல். அலரவன் - பிரமன். அலரி - ஒரு பூஞ்செடி, சூரியன். அலர் - மலர், பலர் அறிந்து கூறும் புறங்கூற்று, நீர். அலர்தல் - மலர்தல், பரத்தல், விளங் குதல், சுரத்தல். அலர்த்தல் - விரித்தல். அலவலை - ஆராயாது செய்வது, விடாது பேசுவோன், மனச்சஞ்சலம். அலவல் - வியபிசாரம், இழை நெருக்க மின்றி நெய்யப்பட்டது. அலவன் - ஆண் நண்டு, சந்திரன். அலவாங்கு - இரும்புப் பாரை. அலவாட்டு - வழக்கம். அலவு - மனத் தடுமாற்றம், அலைதல். அலவுதல் - வருந்துதல், சிந்துதல். அலவை - வியபிசாரம், விடாது பிதற்றுபவள். அலறல் - அழுதல், ஒலித்தல், விரித்தல். அலன் - பலராமன். அலாதம் - கொள்ளி, கரி. அலாதி - தனியானது. அலாபு - சுரைக்கொடி. அலாயுதன் - பலராமன். அலாரிப்பு - நாட்டிய ஆரம்பத்திற் பாடும் சொற்கட்டு. அலி - ஆண் பெண் அல்லாதது, நறு விலிமரம், பலராமன், உழவன். அலீகம் - நெற்றி. அலுக்குதல் - பிலுக்குதல். அலுத்தல் - சோர்தல். அலுப்பு - தளர்வு. அலுமினியம் - உலோக வகை. அலுவல் - வேலை. அலை - நீர்த்திரை, வருத்துகை. அலைக்கழித்தல் - அலைத்து வருத்துதல் அலைசுதல் - கழுவுதல். அலைசோலி - தொந்தரவு. அலைதல் - திரிதல். அலைத்தல் - அசைத்தல், திரித்தல், வருத்துதல். அலைநீர் - கடல். அலைப்பு - வருத்தம். அலைமகள் - திருமகள். அலையள் - திரிகை. அலைவாய் - திருச்செந்தூர், கடல் முகத்துவாரம். அலைவு - அசைகை, வருத்தம் அல் - இரா, இருள், வறுமை, மதில், ஒற்றெழுத்து. அல்கந்தி - அந்திப்பொழுது. அல்கல் - தங்குதல், குறைவு, இரவு, தினம், வறுமை. அலகு - இரவு, சிறுமை. அலகுதல் - சுருங்குதல், நிலைத்து நிற்றல், அழிதல், சேருதல். அலகுநர் - குடிகள். அல்கல் - பக்கம், அரை, பெண்குறி. அல்பக்கா - தென்ன மெரிக்காவி லுள்ள புல் மேய்ந்து அசை போடும் விலங்கு. அல்புமின் - உயிர்களில் காணப் படும் இரசாயனப் பொருளில் ஒரு வகை. அல்லகண்டம் - துன்பம். அல்லகம் - நீலோற்பலம். அல்லங்காடி - அந்திக்கடை. அல்லங்கீரனார் - சங்க காலப் புலவர். அல்லது - தீங்கு. அல்லம் - இஞ்சி. அல்லல் - துன்பம். அல்லவை - பாவம். அல்லாட்டம் - அலைச்சல். அல்லாத - மாறான. அல்லாத்தல் - வருந்தல், மகிழ்தல், துயருறல். அல்லாப்பு - வருத்தம். அல்லி - ஆம்பல், தாமரை, அக விதழ், பூந்தாது, அல்லியரசி. அல்லிப்பிஞ்சு - பூவிழாத பிஞ்சு. அல்லியம் - திருமால், ஆடல். அல்லியன் - கூட்டத்தைப் பிரிந்த யானை. அல்லியாமரம் - படகு வலிக்கும் தண்டு. அல்லியான் - பிரமன். அல்லிருள் - மிக்க இருண்ட இருள். அல்லும் பகலும் - இரவும், பகலும். அல்லை - ஒரு கொடி. அல்லோலகல்லோலம் - பேரார வாரம். அல்லோன் - சந்திரன். அல்வழிப் புணர்ச்சி - வேற்றுமை அல்லாத வழிப்புணர்ச்சி. அவகடம் - தாறுமாறு, வஞ்சகம். அவகதி - கீழ்நிலை. அவகாசம் - சமயம். அவகீர்த்தி - புகழ்க்கேடு. அவகுண்டனம் - முகம் மறைக்குஞ் சீலை. அவகேசி - பூத்துங் காயாமரம். அவகேடு - பெரும் தீங்கு. அவசகுனம் - தீய நிமித்தம். அவசம் - பரவசம், தன் வசப் படாமை. அவசரம் - விரைவு, சமயம். அவசாரி - வேசை. அவண் - அவ்விடம். அவதந்திரம் - அநியாயவழி. அவதரித்தல் - தெய்வ அமிசமாகப் பிறத்தல். அவதாரம் - பிறத்தல். அவதாரிகை - முன்னுரை. அவதானம் - கவனம், மறதியின்மை. அவதி - துன்பம், எல்லை, முற்பிறப்பு. அவதிஞானம் - தூரத்திலுள்ள வற்றைப் பொறியுதவியின்றி உணரு முணர்ச்சி. அவதூதன் - முற்றத் துறந்தவன். அவதூறு - பழி. அவத்தம் - பொய். அவத்தை - நிலை, வேதனை. அவந்தரை - சீர்கேடு, குழப்பம். அவந்தி, அவந்திகை - உச்சயினி. அவப்பொழுது - வீண்பொழுது. அவமதிப்பு - இகழ்ச்சி. அவமானம் - அவமதிப்பு. அவமிருத்து - துர்மரணம். அவம் - பயனின்மை. அவயம் - அடைக்கலம். அவயம் - உறுப்பு. அவயவி - உறுப்புடையது. அவயோகம் - தீய நிகழ்ச்சி. அவராகம் - விருப்பின்மை. அவரை - கொடிவகை. அவரோகணம், அவரோகம் - வேதத்தைத் திருப்பிச் சொல்லுகை, இறங்குதல். அவரோதம் - அந்தப்புரம். அவர் - அவன், அவள் என்பவற்றின் பன்மை. அவர்கள் - பெயரை அடுத்து வரும் மரியாதைச் சொல். அவலச்சுவை - துக்கச்சுவை. அவலட்சணம் - அழகின்மை. அவலம் - துன்பம், அழுகை, மயக்கம், பயன்படாதொழிவது. அவலம்பித்தல் - சார்ந்து நிற்றல். அவலோகிதன் - பௌத்த முனி வருள் ஒருவர். அவல் - நெற்பொறி, இடியல், பள்ளம், விளைநிலம், குளம். அவளிகை - திரைச்சீலை. அவவு - அவா. அவளிணல்லூர் - தஞ்சாவூர் மாவட்டத் திலுள்ள தேவாரம் பெற்ற தலம். அவனி - பூமி. அவனிகேள்வன் - திருமால். அவனிபன் - அரசன். அவா - ஆசை. அவாச்சியம் - சொல்லமுடியாதது. அவாந்தரம் - இடையிலுள்ளது. அவாய்நிலை - ஒருசொல் தன்னோடு சேர்ந்து பொருள் முடிதற்குரிய மற்றொரு சொல்லை வேண்டி நிற்கும் நிலை. அவாவுதல் - விரும்புதல், ஆசை கொள்ளல். அவி - நெருப்பில் தேவர்க்கு இடும் உணவு, வேகவைத்தல், அடக் குதல், கொடுத்தல். அவிகற்பம் - ஐயமின்மை. அவிசாரி - வியபிசாரி. அவிசு - உப்பின்றிச் சமைத்த சோறு, தேவருணவு. அவிச்சை, அவித்தை, அவிடி - அறியாமை, மாயைதிரைச்சீலை. அவிட்டம் - ஒரு நட்சத்திரம். அவிதல் - புழுங்குதல், குறைதல், அணைந்து போதல். அவிதா - ஆபத்தில் உதவியளிக் கும் படி கூறும் சொல். அவித்தல் - வேகவைத்தல், மாற்றுதல். அவிநயம் - அபிநயம். அவிநயனார் - அகத்தியர் மாணவர். அவிப்பலி - வீரன், சபதங் கூறி தன்னைத் தீக்குப் பலி கொடுக்கை. தேவருக்கு கொடுக்கும் உணவு. அவிமுத்தம் - காசி. அவியல் - உணவு. அவிரோதம் - மாறின்மை. அவிரோதிநாதர் - திருநூற்றந்தாதி பாடிய சமணப் புலவர் (14ஆம் நூ.) அவிர் - பிரகாசம். அவிர்ப்பாகம் - தேவருணவு. அவிவு - ஒழிவு. அவிவேகம் - மூடம். அவிழகம் - மலர்ந்த பூ. அவிழ் - சோறு. அவிழ்தல் - நெகிழ்தல். அவிழ்தம் - ஒளடதம். அவினாசி - கடவுள், கொங்கு நாட்டிலுள்ள ஒரு சிவனாலயம், அழியாதது. அவின் - கசகசாச் செடிக்காயின் பால். அவுணன் - அசுரன். அவுதா - யானைமேற்றவிசு, அம்பாரி. அவுரி - நீலச்செடி. அவை - சவை, பன்மை சுட்டு. அவைத்தல் - குற்றுதல், நெரித்தல். அவைப்பு - குற்றப்பட்ட அரிசி. அவையடக்கம் - சபையோர்க்குக் கூறும் வழிபடுசொல். அவையம் - சபை. அவையல் - குற்றலரிசி. அவையல்கிளவி - சபையில் கூறத் தகாத சொல். அவையிற்றின் - அவற்றின். அவ்வது - அவ்வாறு. அவ்வயின் - அவ்விடம். அவ்வித்தல் - அழுக்காறு கொள்ளு தல். அவ்வியம் - வஞ்சகம், பொறாமை. அவ்வை - தாய், கிழவி, ஒளவையார். அழகர் - திருமாலிருஞ்சோலைத் திருமால். அழகு - வடிவு. அழம், அழன் - பிணம். அழலவன் - சூரியன், செவ்வாய். அழலை - தொண்டைக்கரப்பு களைப்பு. அழலோம்பல் - ஓமம் வளர்த்தல். அழல் - நெருப்பு, கோபம், வெயில். அழல்தல் - எரிதல், சினத்தல். அழறு - சேறு. அழற்காய் - மிளகு. அழற்குட்டம் - கார்த்திகை நாள். அழற்சி - வெப்பம், கொதிப்பு, எரிவு. அழற்றுதல் - சுடுதல். அழனம் - நெருப்பு. அழாஅல் - அழுகை. அழி - கேடு, வைக்கோல், மிகுதி, இரக்கம். அழிகட்டு - மந்திரம் விடம் முதலிய வற்றிற்குரிய மாற்று. அழிசி - சங்க காலத்துச் சிற்றரசன். அழிசி நச்சாத்தனார் - சங்க காலப் புலவர். அழிஞ்சில் - மரவகை. அழிதகவு - துக்கம். அழிகன் - கெட்ட நடையுடையவன். அழிதலை - தலை ஓடு. அழிதல் - ஒழிதல், வருந்துதல். அழிபாடு - அழிவு. அழிபெயல் - பெருமழை. அழிப்படுத்தல் - நெற்கதிரைக் கடாவிட்டு உழக்குதல். அழிமதி - கெடுபுத்தி. அழிம்பு - புரட்டு, கேடு. அழியல் - சஞ்சலம். அழிவழக்கு - அக்கிரம வழக்கு. அழிவி - கழிமுகம். அழிவு - கேடு, செலவு, வறுமை, சாவு. அழுகணிச்சித்தர் - 18 சித்தருளொருவர். அழுகல் - பதனழிந்தது, அழுக் குள்ளது. அழுகுணி - அழு பிள்ளை. அழுக்கம் - கவலை. அழுக்கறுத்தல் - பொறாமை கொள் ளுதல். அழுக்கல் - உலோபி. அழுக்காறு - பொறாமை. அழுக்கு - மாசு, பொறாமை. அழுங்கல் - துன்பம், இரக்கம், ஆரவாரம். அழுங்காமை - அழுக்காமை (கடலாமை வகை). அழுங்கு - ஒரு விலங்கு, பாலை யாழ்த் திறவகை. அழுத்தம் - ஒப்புரவு, கடினம். அழுத்துதல் - அழுந்தச் செய்தல், பதித்தல், எய்தல். அழுந்துதல் - அமுக்குண்ணுதல், உறுதி யாகப் பற்றுதல். அழுவம் - ஆழம், குழி, கடல், பரப்பு, போர், மிகுதி. அழைத்தல் - கூப்பிடுதல், ஒலித்தல். அள - அளவிடு. அளகபாரம் - கூந்தற்றொகுதி. அளகம் - கூந்தல், மயிற்குழற்சி, நீர். அளகவல்லி - மயிர்மாட்டி. அளகாதிபன் - குபேரன். அளகாபுரி, அளகை - குபேரன் நகரம். அளகு - கோட்டான், கோழி, மயில், இவற்றின் பெண், சேவல். அளக்கர் - கடல், உப்பளம், சேறு. அளத்தல் - அளவிடுதல். அளத்தி - நெய்தல் நிலப்பெண். அளபு - அளவு, அளபெடை. அளபெடை - எழுத்து நீண் டொலித்தல். அளப்பளத்தல் - பிதற்றல். அளப்பு - எல்லை, பிதற்றுகை. அளம் - உப்பளம், களர்நிலம். அளவடி - நாற்சீரால் வரும் பாவடி. அளவர் - உப்பு விளைவிப்போர். அளவளாவுதல் - மனங்கலந்து பேசுதல். அளவியல் - நீளம் பரப்பு பருமன் ஆகியவற்றின் அளவுகளைப் பற்றிக் கூறும் கணிதவியற் பிரிவு (Men suration) அளவு - பரிமாணம், தருக்கப் பிரிமாணம். அளவுதல் - கலத்தல். அளவை - அளவு. அளறு - சேறு, நரகம். அளறுதல் - சிதறி வெடித்தல். அளாவுதல் - கலத்தல், அளைத்தல். அளி - அன்பு, அருள், குளிர்ச்சி, வண்டு, இரக்கம், எளிமை. அளிகம் - கட்டழகு, நெற்றி. அளிதல் - அறக்கனிதல், வருந்தல், புண்படல். அளித்தல் - காத்தல், கொடுத்தல், ஈதல். அளித்து - இரங்கத் தக்கது. அளிந்தம் - கோபுர வாயிலிற் றிண்ணை, முற்றம். அளியர் - அருளுடையர், அருள் பெறற்குரியர், எளியவர். அளை - தயிர், புற்று, பொந்து, குகை. அளைதல் - துழாவுதல், கலத்தல். அள் - கூர்மை, பற்றிரும்பு, செறிவு, பெண்பால் விகுதி, காது. அள்ளல் - சேறு. அள்ளுகொள்ளை - பெருங்கொள்ளை. அள்ளுதல் - செறிதல், கையால் முகத்தல். அள்ளூர்நன்முல்லையார் - சங்க காலப் பெண் புலவர். அள்ளுறல் - வாயூறல். அற - முழுதும், மிகவும். அறக்கடவுள் - இயமன், தரும தேவதை. அறக்கடை - பாவம். அறக்கழிவு - வழக்கத்துக்குப் பொருத்த மில்லாமை. அறக்காடு - சுடுகாடு. அறக்கூழ்ச்சாலை - தருமச் சோறிடு மிடம். அறங்கடை - பாவம். அறச்சாலை - தரும சத்திரம். அறத்துறை - புண்ணிய வழி. அறத்தொடு நிற்றல் - களவு ஒழுக்கத்தைப் பெற்றோருக்கு அறிவித்தல். அறநிலை - பிரமமணம். அறப்புறம் - தருமத்துக்கு விடப் பட்ட நிலம், பாவம். அறம் - தருமம், தீப் பயனுண்டாக்கும் சொல், இயமன், நீதி. அறல் - அறுகை, நீர், கருமணல், மயிர், நெளிவு. அறவர் - முனிவர், பெரியோர். அறவன் - புத்தன். அறவாணன் - கடவுள். அறவாழி - தருமக் கடல், தரும சக்கரம். அறவி - அறம், புண்ணியத்தோடு கூடியது. அறவு - ஒழிகை. அறவுரை - நீதி நெறிகூறல். அறவை - உதவியற்ற நிலை, தீமை. அறளை - முதியோரின் முறுமுறுப்பு. அறனாக்கம் - இம்மை மறுமைச் செயல்கள். அறனோம்படை - தருமம் பாதுகாக்கு மிடம். அறன்கடை - பாவம். அறன்மகன் - தருமன். அறாவுதல் - அடித்தல். அறி - அறிவு. அறிகுறி - அடையாளம். அறிக்கை - அறிவிப்பு. அறிஞன் - அறிவுடையோன். அறிதல் - உணர்தல், பழகுதல். அறிதுயில் - யோக நித்திரை. அறிநன் - அறிபவன். அறிமடம் - அறிந்தும் அறியாது போலிருக்கை. அறிமுகம் - பழக்கம். அறியாமை - மடமை. அறியுநன் - உணருகிறவன். அறிவரன் - அறிவிற் சிறந்தோன். அறிவழி - மது, பேய். அறிவரை - அறிவில்லாதவன். அறிவனாள் - உத்தரட்டாதி. அறிவன் - நல்லறிவுடையவன், புதன், கணி. அறுவாய்வு - அறிவைக் கொண்டு ஆராய்தல். (Reasoning) அறிவாளி - புத்திசாலி. அறிவி - தெரிவி. அறிவிலி - அறிவில்லாதவன். அறிவு - ஞானம், கல்வி. அறிவுகொளுத்தல் - புத்திபுகட்டல். அறிவுடைநம்பி - சங்க காலப் புலவர். அறிவுறுத்தல் - அறிவுபுகட்டல். அறுகரிசி - அறுகம்புல்லோடு கூடிய மங்கலவரிசி. அறுகால் - வண்டு. அறுகு - அறுகம்புல், சிங்கம். அறுகை - சங்க காலக் குறுநில மன்னன். அறுசுவை - கைப்பு, இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு என்னும் சுவைகள். அறுதலி - தாலி இழந்தவள். அறுதல் - இறுதல், தீர்தல், பாழாதல். அறுதி - முடிவு, உரிமை, வரை. அறுதியிடுதல் - தீர்மானித்தல். அறுதொழிலோர் - பார்ப்பார். அறுநீர் - வற்றுநீர். அறுபதம் - வண்டு. அறுப்பு - கதிரறுத்தல். அறுப்புக்கோட்டை - இராமநாதபுரம் மாவட்டத்தில் இதே பெயருள்ள தாலுக்காவின் தலைநகர். அறுமீன் - கார்த்திகை, உரோகணி. அறுமுகன் - முருகக்கடவுள். அறுமுறை வாழ்த்து - முனிவர், பார்ப்பார், ஆனிரை, மழை, முடி யுடை வேந்தர், உலகு என்ற ஆற ணையும் பற்றிக் கூறும் வாழ்த்து. அறுமை - நிலையின்மை, ஆறு. அறுவடை - கதிரறுப்பு. அறுவாய் - குறைவிடம், கார்த்திகை. அறுவிடுதல் - வரவேண்டிய பணத்தை வாங்கிவிடுதல். அறுவு - முழுமை. அறுவை - ஆடை, தோளிலிடும் பறி. அறுவைவாணிகன் இளவேட்ட னார் - சங்ககாலப் புலவர். அறை - அடி, ஓசை, வஞ்சினம், உள் வீடு, பாறை. அறைதல் - அடித்தல், பறை கொட் டுதல், சொல்லுதல். அறைக்கீரை - கீரை வகை. அறைகூவல் - போருக்கு அழைத் தல். அறைபோதல் - கீழறுக்கப்படுதல். அறையணி நல்லூர் - தென்னார்க் காட்டு ஜில்லாவில் பெண்ணை யாற்றங் கரையிலுள்ள சிவன் கோவில். அறைவாய் - மலைநெறி. அற்கம் - அடக்கம். அற்கன் - சூரியன். அற்குதல் - தங்குதல், அடைத்தல். அற்சிரம், அற்சிறை, அர்ச்சிரம் - முன் பனிக்காலம். அற்பம் - சிறுமை, இழிவு. அற்பர் - கீழ்மக்கள். அற்பு - அன்பு. அற்புதம் - அதிசயம். அற்றம் - சமயம், சோர்வு, வருத்தம், அவமானம், வறுமை, அழிவு. அற்றார் - வறியவர். அற்று - அத்தன்மைத்து, ஒரு சாரியை. அற்றேல் - அப்படியானால். அற்றை - அன்றைய தினத்தில். அனகம் - பாவமற்றது, புல்லுருவி. அனகன் - கடவுள், அழகன். அனங்கன் - மன்மதன். அனசூரியை - அத்திரி முனிவரின் மனைவி. அனதாரி - தொண்டை நாட்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர் (16 ஆம் நூ.) அனத்தம் - பொல்லாங்கு. அனந்தசதுர்த்தசி - ஒரு வைணவ விரதம். அனந்தசத்தி - வரம்பில் ஆற்றல். அனந்தசயணம் - திருமாலின் ஆதி சேடனாகிய படுக்கை. அனந்தசுகம் - அளவில்லா இன்பம். அனந்தம் - அளவின்மை, ஒரு பேரெண். அனந்தரம் - பின்பு. அனந்தர், அனந்தல் - நித்திரை, மயக்கம். அனந்தன் - கடவுள், எட்டு நாகங்களுள் ஒன்று. அனர்த்தம் - துன்பம். அனலம் - நெருப்பு. அனலன் - அக்கினிதேவன். அனலி - சூரியன். அனல் - நெருப்பு, சூடு. அனவரதம் - எப்போதும். அனற்றுதல் - எரிதல், கோபித்தல். அனாகதம் - ஆறு ஆதாரங்களுள் ஒன்று. அனாசாரம் - ஒழுக்கமின்மை. அனாதரவு - உதவியின்மை. அனாதி - தொடக்கமில்லாதது. அனாதிமுத்தன் - கடவுள். அனிகம் - சேனை, சிவிகை. அனிச்சம் - மோந்தால் வாடும் பூ. அனிச்சை - நாகமல்லி. அனிட்டம் - வெறுப்பானது. அனிலம் - காற்று. அனீகம் - அக்குரோணியில் பத்திலொரு பகுதி. அனீகினி - சேனை. அனு - பதில் செயல், தாடை, வடமொழி உபசர்கங்களுள் ஒன்று. அனுகமனம் - உடன்கட்டை ஏறுதல். அனுகரணவோசை - ஒலிக்குறிப்பு. அனுகுணம் - ஏற்பவுள்ளது. அனுகூலம் - நன்மை. அனுக்கம் - வருத்தம், அச்சம். அனுக்கிரகம் - அருள். அனுக்கிரமணி - நூற்பதிகம். அனுக்குதல் - கொடுத்தல். அனுங்குதல் - வருந்துதல். அனுசயம் - பச்சாத்தாபம். அனுசரணை - சார்தொழுகுகை. அனுசரித்தல் - பின்பற்றல். அனுசன் - தம்பி. அனுசிதம் - தகாதது. அனுசை - தங்கை. அனுஞை, அனுஞ்ஞை - அனுமதி. அனுட்டானம் - சமயக்கிரியை, வழக்கம். அனுட்டித்தல் - நடத்தல். அனுதாபம் - பிறர் துக்கத்துக்கு இரங்குதல். அனுதினம் - நாள்தோறும். அனுபந்தம் - பின்சேர்க்கப்படுவது. அனுபல்லவி - கீர்த்தனத்தில் இரண்டாம் உறுப்பு. அனுபவம் - பழக்கம், நுகர்ச்சி. அனுபவித்தல் - இன்பம் நுகர்தல். அனுபானம் - மருந்துக்குத் துணையாகச் சேர்க்கப்படுவது. அனுபூதி - அனுபவ ஞானம். அனுபூதிக்கலை - உயிர் கடவுளை அனுபவித்து அறிதல். அனுபோகம் - பழக்கம், இன்ப நுகர்ச்சி. அனுப்புதல் - போக்குதல். அனுமக்கொடியோன் - அருச்சுனன். அனுமதி - சம்மதம். அனுமரணம் - உடன் கட்டை ஏறுதல். அனுமன், அனுமான் - குரங்குக் கடவுள். அனுமானம் - தருக்க அளவை, உய்த்தறிதல். அனுமானித்தல், அனுமித்தல் - உத்தே சித்தல். அனுராகமாலை - பிரபந்த வகையுள் ஒன்று. அனுராகம் - அன்பு. அனுலோமம் - உயர்குல ஆணுக்கு இழி குலப் பெண்ணிடம் பிறந்த பிள்ளை. அனுவாதம் - திரும்பச் சொல்லுதல். அனேகதங்காபதம் - திருஞான சம்பந்தர் தேவாரம் பெற்றது வடநாட்டிலுள்ளது மாகிய ஒரு சிவத்தலம். அனேகம் - பல. அனைத்து - அவ்வளவு அத்தன் மைத்து. அனைத்தும் - எல்லாம். அனைய - அத்தன்மையான. அனோபிலிஸ் - மலேரியாச் சுரம் உண்டாக்கும் கொசு. அன் - இன்மை, பிறிது முதலிய வற்றைக் காட்டும் ஒர் இடைச்சொல். அன்டார்டிக்கா - தென் துருவத்தைச் சுற்றியுள்ள தரையும் கடலும். அன்டிமனி - உலோக வகைகளு ளொன்று. அன்பில் ஆலந்துரை - கொள்ளிடத் துக்கு வடக்கிலுள்ள தேவாரம் பெற்ற சிவத்தலம். அன்பு - பற்று, கருணை, பத்தி. அன்மயம் - மாறு. அன்மை - இன்மை. அன்வயம் - கொண்டு கூட்டு. அன்றாடு - அன்றன்று. அன்றி - இல்லாமல். அன்றில் - ஒரு புள், மூலநாள். அன்றினார் - பகைவர். அன்று - அந்நாள், முன்பு, மாறுபாடு, ஒர் அசைச்சொல். அன்றுதல் - மாறுபடுதல், கெடுதல். அன்ன - அத்தன்மைய, உவமை உருபு. அன்னணம் - அவ்விதம். அன்னதாதா - சோறு கொடுத்து ஆதரிப்போன். அன்னதாழை - அன்னாசி. அன்னது - அப்படிப்பட்டது. அன்னபானம் - சோறும் தண்ணீரும். அன்னப்பிராசனம் - குழந்தைக்கு முதலில் சோறூட்டும் கிரியை. அன்னமயகோசம் - பரு உடல். அன்னம் - சோறு, ஒரு பறவை, கவரிமா. அன்னம் பாறுதல் - புலம்புதல். அன்னவம் - கடல். அன்னவூர்தி - பிரமன். அன்னாசி - அன்ன தாழை. அன்னாய் - ஓர் அசைச்சொல். அன்னி - சங்க காலச் சிற்றரசருள் ஒருவன். அன்னியம் - வேறானது. அன்னியன் - அயல் நாட்டவன். அன்னியோன்னியம் - ஒற்றுமை. அன்னுவயம் - சம்பந்தம். அன்னை - தாய். அன்னோ - ஓர் இரக்கக் குறிப்பு. அன்னோன்றி - வலியற்றவன். ஆ ஆ - பசு, எருது, ஆச்சா, ஆக என்னும் எச்சக் குறுக்கம். அ ஆ - வியப்பிடைச்சொல். ஆக - மொத்தமாய், அவ்வாறாக. ஆகடியம் - பரிகாசம், பொல்லாங்கு. ஆகண்டலன் - இந்திரன். ஆகதர் - சைனர். ஆகந்துகம் - இடையில் வந்து ஏறியது. ஆகமம் - முதல்வன் வாக்கு. ஆகமனம் - வந்து சேருதல். ஆகம் - உடல், மார்பு, மனம். ஆகம்பிதம் - மேலுங் கீழுமாகத் தலையசைத்தல். ஆகரம் - இரத்தினங்கள் தோன்று மிடம், உறைவிடம், கவர்தல். ஆகரி - ஓர் இராகம். ஆகருடணம் - இழுத்தல், அழைத்தல். ஆகருடணை - அழைத்தல். ஆகவம் - போர், சீலை. ஆகவனீயம் - முத்தீயுளொன்று. ஆகா - வியப்புக் குறிப்பு. ஆகாசகங்கை - பால் வீதி மண்டலம் (milky way) ஆகாசகமனம், ஆகாயகமனம் - அந்தரத்தில் செல்லல். ஆகாசகாமி - அந்தரத்தில் செல்லும் குதிரை. ஆகாசக் கத்தரி - வெண்டை. ஆகாசக் கப்பல் - வான ஊர்தி; காற்றிலும் பாரம் குறைந்தது; பலூன் போன்று காற்று அடைக்கப்பட்டு வானிலியங்குவது. ஆகாசத்தாமரை - ஒருவகை நீர்ப் பூண்டு; அந்தரத் தாமரையின் வேறானது. ஆகாசம், ஆகாயம் - வானம். ஆகாசவாணி - அசரீரி. ஆகாமியம் - இப்பிறப்பிலே செய்யும் புண்ணிய பாவங்கள். ஆகாயவிமானம் - காற்றிலும் பறக்கக் கூடியது; எந்திரத்தினுதவி யால் வானில் பறப்பது. ஆகாரம் - உணவு, உருவம். ஆகாறு - பொருள் வரும் வழி. ஆகிருதி - வடிவு தேகம். ஆகு - எலி, கொப்பூழ், பெருச்சாளி. ஆகுதல் - உண்டாதல். ஆகுதி - நெருப்பில், மந்திரங்கள் சொல்லிச் செய்யும் பலி. ஆகுபெயர் - ஒன்றன் பெயரா யிருந்து அதனோடு சம்பந்தமுடைய மற் றொன்றுக்குத் தொன்று தொட்டு ஆகிவரும் பெயர். ஆகுலம் - மனக்கலக்கம், ஆரவாரம், துன்பம். ஆகுலித்தல் - துன்புறுத்தல். ஆகுவாகனன் - கணேசன். ஆகுளி - சிறுபறை. ஆகூழ் - நல்வினைப் பயன். ஆகையால் - ஆதலால். ஆகோள் - மாடுபிடித்தல். ஆக்கஞ் செப்பல் - தன்னெஞ்சில் வருத்தம் மிகுவதைப் பிறர்க்குச் சொல்லுதல். ஆக்கப் பெயர் - மரபுப் பெயர். ஆக்கம் - மேன்மேல் வளர்கை, இலாபம், செல்வம், கொடிப்படை, இலக்குமி. ஆக்கல் - சமைத்தல், உயர்த்தல், படைத்தல். ஆக்கியாபித்தல் - கட்டளையிடுதல். ஆக்கியோன் - நூல் செய்தோன். ஆக்கிரகம் - கடுங்கோபம். ஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல். ஆக்கிராணம் - மூக்கு. ஆக்கினேயபுராணம் - பதினெண் புராணங்களுக்ளொன்று. ஆக்கினேயம் - சிவாகமத்தொன்று. ஆக்கினை - கட்டளை. ஆக்குதல் - உண்டாக்குதல், சமைத்தல், மாற்றுதல். ஆக்கை - உடம்பு. ஆங்கண் - அவ்விடத்து. ஆங்கனம் - அவ்விதம். ஆங்காங்கு - அங்கங்கு. ஆங்காரம் - செருக்கு. ஆங்காரி - ஆங்காரமுள்ளவன். ஆங்காலம் - நற்காலம். ஆங்கிரசன், ஆங்கிரன் - ஓர் இருடி. ஆங்கிலம் - இங்கிரலீஷ் மொழி. ஆங்கீரச - ஒர் ஆண்டு. ஆங்கு - அவ்விடம், அப்படி, உவம உருபு, ஓர் அசை. ஆங்ஙனம் - அங்ஙனம், அவ்விடம், அத்தன்மை. ஆசங்கை - சந்தேகம், தடை, விசாரணை. ஆசந்தி - சவப்பாடை, ஆறு நட்சத்திரங் கொண்ட மண்டலம். ஆசமனம் - வலக் குடக்கையால் மந்திர பூர்வமாக நீரை மும்முறை உட் கொள்ளல். ஆசமித்தல் - உறிஞ்சுதல். ஆசம் - சிரிப்பு. ஆசயம் - உறைவிடம், உடலின் உட்பை. ஆசரித்தல் - வழிபடுதல், கைக் கொள்ளுதல். ஆசவம் - கள். ஆசற - குறையற. ஆசறுதி - கடைசி, முடிவு. ஆசனம் - பீடம் முதலிய இருக்கை, மலவாயில். ஆசாட்டம் - தெளிவின்மை. ஆசாபாசம் - ஆசைவலை. ஆசாரக்கோவை - பெருவாயில் முள் ளியார் இயற்றிய நூல் (5ஆம் நூ.) ஆசாரம் - நூல் விதிப்படி நடத்தல், வழக்கம், தூய்மை, அரசிருக்கை, பெருமழை, சீலை. ஆசாரவாயில் - கோவிலின் பிரவேச மண்டபம், அரசிருக்கை வாயில். ஆசாரி - மாத்துவ வைணவப் பிரா மணர் பட்டப் பெயர், கம்மாளார் பட்டப் பெயர். ஆசாரியன் - குரு, உபாத்தியாயன். ஆசானுபாகு - முழந்தாளளவு நீண்ட கையுடையோன். ஆசான் - உபாத்தியாயன். ஆசாடபூதி - மோசஞ்செய்பவன். ஆசி - வாழ்த்து. ஆசிடுதல் - பற்றாசு வைத்தல். ஆசிடை - வாழ்த்து. ஆசித்தல் - விரும்புதல். ஆசியம் - பரிகாசம், சிரிப்பு, முகம். ஆசியா - பூகண்டங்களுளொன்று. ஆசிரமம் - முனிவருறைவிடம். ஆசிரயம் - அடுத்திருக்கை. ஆசிரியத் தாழிசை - ஆசிரியப்பா வினம். ஆசிரியத்துறை - ஆசிரியப்பா வினம் . ஆசிரியநிகண்டு - ஆண்டிப் புலவர் செய்த நிகண்டு (17ஆம் நூ.) ஆசிரியப்பா, ஆசிரியம் - அகவல். ஆசிரிய மாலை - பழைய புறப்பொருள் நூல்களுளொன்று. ஆசிரிய விருத்தம் - ஆசிரியப் பாவின் இனம். ஆசிரியன் - உபாத்தியாயன், குரு. ஆசிரியன் பெருங்கண்ணனார் - சங்ககாலப் புலவர். ஆசினி - ஈரப்பலா, ஆகாயம். ஆசீர்வதித்தல் - வாழ்த்துதல். ஆசீர்வாதம் - வாழ்த்து. ஆசு - குற்றம், பற்றுக்கோடு, கவசம், அற்பம், பற்றாசு. ஆசுகம் - அம்பு, காற்று, பறவை. ஆசுகவி - கொடுத்த பொருளை உடனே பாடும் புலவன், கொடுத்த பொருளை உடனே பாடும் பாட்டு. ஆசுகவி இராசசிங்கம் - சேறைக் கவிராச பிள்ளை (17ஆம் நூ.) ஆசுகன் - வாயு. ஆசுசுக்கணி - அக்கினிதேவன். ஆசுமணை - நூல் சுற்றும் கருவி. ஆசுரம் - எண்மணங்களுள் ஒன்று, அசுரம். ஆசுவவாயன் - ஒரு முனிவர். அசூசம் - தீட்டு. ஆசை - விருப்பம், அன்பு, அவா. ஆசௌசம் - தீட்டு. ஆச்சரியம் - வியப்பு. ஆச்சா - ஒருவகை மரம். ஆச்சி - தாய், பாட்டி. ஆச்சிபூச்சி - ஒருவகை விளை யாட்டு. ஆச்சியம் - நெய். ஆச்சு - முடிந்து. ஆஞ்சநேயன் - அனுமான். ஆஞ்சான் - மரக்கலப் பாயை இழுக் கும் கயிறு. ஆஞ்சி - அச்சம், அசைவு, ஏலம். ஆஞ்சிக்காஞ்சி - போர்க்களத்தில் இறந்த கணவனின் வேல்வடுவைக் கண்டு மனைவி அஞ்சியப் புறத்துறை. ஆஞ்ஞாசக்கரம் - அரசன் ஆணை. ஆஞ்ஞாபனம் - அறிவிக்கை. ஆஞ்ஞை - கட்டளை. ஆடகம் - பொன், துவரை. ஆடகன் - இரணியன். ஆடம் - ஒரு முகத்தலளவை, ஆமணக்கு. ஆடம்பரம் - இடம்பம். ஆடலை - பூவாத மரம். ஆடல் - அசைதல், கூத்து, விளையாட்டு, நீராடுதல், போர், வெற்றி, சொல்லல். ஆடவள் - பெண். ஆடவன் - ஆண் மகன். ஆடவை - கூத்தாடும் சபை. ஆடாதொடை - பாவட்டைச் செடி. ஆடி - கண்ணாடி, பளிங்கு, கூத்தாடு பவன், நான்காம் மாதம். ஆடிப்பெருக்கு - ஆடித் திங்களில் நீர் பெருகி வருவதைக் களிப்புடன் வரவேற்று விளையாடும் விழா. ஆடு - விலங்குவகை, வெற்றி, மேடராசி. ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் - இமயவரம்பன் நெடுஞ்சேரலாத னுடைய இரண்டாவது மகன். ஆடுதல் - அசைதல், போரிடுதல், அனுபவித்தல், பூசுதல். ஆடுதின்னாப்பாளை - புழுக் கொல்லிப் பூண்டு. ஆடுதீண்டாப்பாளை - ஆடு தின் னாப்பாளை. ஆடுதுறைமாசாத்தனார் - சங்க காலப் புலவர். ஆடுமாலை - உல்லாசமான குமரிப் பெண். ஆடூஉ - ஆண்மகன். ஆடை - சீலை, பாலேடு, சித்திரை நட்சத்திரம். ஆட்காட்டி - ஒரு பறவை, சுட்டு விரல். ஆட்கொண்டான் - வில்லி புத்தூராரை ஆதரித்துப் பாரதம் பாடுவித்த சிற்றரசன் (14ஆம் நூ.) ஆட்கொள்ளுதல் - அடிமை கொள் ளுதல். ஆட்சி - ஆளுகை, உரிமை, ஆன்றோர் வழக்கு. ஆட்சிவீடு - கிரகம் தன் வீட்டில் இருக்கை. ஆட்சேபம் - தடை. ஆட்டக்கச்சேரி - சதிர் ஆட்டகம் - நீராடும் அறை. ஆட்டமைதானம் - விளையாட்டு வெளி. ஆட்டம் - அசைவு, விளையாட்டு. ஆட்டனத்தி - ஒரு சேர நாட்டரசன். ஆட்டாளி - ஆட்டிடையன். ஆட்டி - பெண், மனைவி, கூத்தாட்டு வோன், ஒரு விகுதி. ஆட்டு - கூத்து, விளையாட்டு, முழுக்கு, அசைப்பு. ஆட்டுக்கல் - அரைக்குங் கல்லுரல் ஆட்டுதல் - அலைத்தல், அரைத்தல். ஆட்டை - ஆண்டு. ஆட்டைத்திவசம் - வருடத்திவசம். ஆட்படுதல் - அடிமைப்படுதல். ஆணம் - குழம்பு, சிறுமை, நேயம். ஆணவமலம் - மூலமலங்களு ளொன்று. ஆணவம் - செருக்கு. ஆணி - முதன்மை, இரும்பாணி, அச்சாணி. ஆணித்தரம் - முதற்றரம். ஆணிமுத்து - உயர்ந்த முத்து. ஆணிவேர் - மூலவேர். ஆணு - நேயம். ஆணை - கட்டளை, சபதம், ஆன்றோர் மரபு. ஆண் - ஆண்பாற் பொது. ஆண்டகை - பெருமையிற் சிறந் தோன். ஆண்டலை - கோழி, பூவாது காய்க் கும் மரம். ஆண்டலைப்புள் - மனிதனின் தலை போன்ற தலையுடைய புள். ஆண்டலையடுப்பு - ஒருவகை மதிற் பொறி. ஆண்டவன் - கடவுள். ஆண்டளப்பான் - வியாழன். ஆண்டாள் - சூடிக்கொடுத்த நாச்சியார் - திருப்பாவை பாடியவர். ஆண்டி - பரதேசி, துறவி. ஆண்டிச்சி - ஆண்டியின் பெண் பால். ஆண்டிப்புலவர் - ஆசிரிய நிகண்டு செய்தவர் (17ஆம் நூ.) ஆண்டு - வருடம், பிராயம், அவ் விடம். ஆண்டை - எசமானன், அவ்விடம். ஆண்மாரி - அடங்காத குணமுள்ளவள். ஆண்மை - ஆளுந்தன்மை. ஆதங்கம் - அச்சம், ஆபத்து, துக்கம். ஆதபத்திரம் - குடை. ஆதபம் - வெயில், தீ. ஆதபன் - சூரியன். ஆதம் - ஆதரவு, விருப்பு, அறி வின்மை. ஆதரம் - அன்பு, ஊர். ஆதரவு - உதவி, அன்பு. ஆதரிசம் - கண்ணாடி. ஆதரித்தல் - அன்போடு பாது காத்தல். ஆதலால் - ஆனபடியால். ஆதவம் -ஆதபம், வெய்யில். ஆதவன் - ஆதபன், சூரியன். ஆதன் - அறிவில்லாதவன், குருடன். ஆதனம் - நிலச்சொத்து. ஆதாயம் - லாபம். ஆதாரம் - பற்றுக்கோடு, பிரமாணம். ஆதாளி - பேரொலி, பிரமாணம். ஆதானம் - வைக்கை, பற்றுகை. ஆதி - தொடக்கம், காரணம், சூரியன், கடவுள், குதிரையின் போராட்டம். ஆதிக்கம், ஆதிக்கியம் - தலைமை, மேன்மை. ஆதிசேடன் - அனந்தன் என்னும் பாம்பு. ஆதிசைவர் - சிவாலயங்களில் பூசைக்கு அதிகாரிகளாகிய சிவப்பிராமணர். ஆதிதிராவிடன் - பஞ்சமசாதியான். ஆதிதைவிகம் - தெய்வத்தால் வரும் துன்பம். ஆதித்தர் - தேவர். ஆதித்தன், ஆதித்தியன் - சூரியன். ஆதித்யம் - உபசரணை, விருந் தோம்பல். ஆதிநாதர் - சித்தருள் ஒருவர். ஆதிநாராயணன் - திருமால். ஆதிநூல் - வேதம், முதல் நூல். ஆதிபகவன் - கடவுள். ஆதிபத்தியம் - தலைமை, பிரபுத்தன்மை. ஆதிபன் - தலைவன். ஆதிபுரி - திருவொற்றியூர். ஆதிபௌதிகம் - பஞ்ச பூதங் களாலும் தன்னை ஒழிந்த பிராணி களாலும் உண்டாகும் துன்பம். ஆதிமீன் - அசுவதி நாள். ஆமிமுதல் - ஆரம்பத்திலிருந்து. ஆதிமூலம் - மூலகாரணமானது. ஆதியாழ் - ஆயிரம் நரம்புள்ள யாழ். ஆதிரம் - நெய். ஆதிரை - திருவாதிரை. ஆதிரை முதல்வன் - சிவன். ஆதிவாயிலார் - பரத சேனாபதீயம் என்னும் நாடகத் தமிழ் நூலாசிரியர். ஆதிவாரம் - ஞாயிற்றுக்கிழமை. ஆதீண்டுகுற்றி - பசுக்கள் உரைஞ்ச அமைக்கப்படும் தூண். ஆதீனகர்த்தா - சைவ மடாதிபதி. ஆதீனம் - சைவ மடம், உரிமை. ஆது - யானைப்பாகர் வழங்குஞ் சொல், ஆறனுருபு. ஆதுரம் - பரபரப்பு ஆதுவன் - வறியவன். ஆதேசம் - கட்டளை. ஆதேயம் - தாங்கப்படுவது. ஆதொண்டை - காற்றோட்டிச்செடி. ஆதோரணமஞ்சரி - போரில் யானை களை அழித்த வீரன் சிறப்பைப் பாடும் பாட்டு. ஆத்தம் - குரு சேவை. ஆத்த வாக்கியம் - வேத சாத்தி ரங்கள். ஆத்தன் - நம்பத்தக்கவன், கடவுள். ஆத்தா - சீத்தாச் செடி. ஆத்தாள் - தாய். ஆத்தானம் -அரசசபை, கோபுர வாயில், நகர வாயில். ஆத்தி - திருவாத்தி, பெண்பால் விகுதி. ஆத்திகன் - கடவுள் உண்டென்று நம்புகிறவன். ஆத்திசூடி - ஒளவையார் செய்த ஒரு நூல். ஆத்திசூடி வெண்பா - ஆத்திசூடி அடியைக் கடைசி அடிதோறும் கொண்ட வெண்பா இராமகவி செய்தது. ஆத்திரக்காரன் - அவசரக்காரன். ஆத்திரம் - கோபம், பரபரப்பு. ஆத்திரை - யாத்திரை. ஆத்திரையன் - அத்திரி குலத்திற் பிறந்தவன். ஆத்தின்னி - பாணன். ஆத்துமம் - உயிர். ஆத்துமா, ஆத்மா - உயிர். ஆத்மார்த்தம் - தன்பொருட்டு. ஆநகதுந்துபி - வசுதேவன், போர்ப் பறை. ஆநநம் - முகம், ஒரு வகை வாத் தியம், தேவதாரு. ஆநின்று - நிகழ்கால இடைநிலை. ஆந்தரங்கம் - உற்றசினேகம், இரக சியம். ஆந்திரம் - தெலுங்கு. ஆந்தை - ஒரு பறவை. ஆந்தை காதல் - ஆந்தை கத்துதலால் நன்மை தீமை அறிதல். ஆந்தோளி - சிவிகை. ஆபதம் - ஆபத்து. ஆபத்து - இடையூறு. ஆபத்துசம்பத்து - தாழ்வு வாழ்வு. ஆபம் - நீர். ஆபன் - வசுக்களுள் ஒருவன். ஆபயன் - பசும் பால். ஆபரணம் - அணிகலம். ஆபாசம் - அழுக்கு, போலி. ஆபாதசூடன் - பாதமுதல் அடி வரை. ஆபாதன் - தீயன். ஆபாலவிருத்தர் - பாலர் தொடங்கி விருத்தர் வரையும். ஆபீரம் - இடையர் வீதி. ஆபுத்திரன் - பசு வயிற்றிற் பிறந் தவன் (மணிமேகலைக் காப்பியம்.) ஆபோகம் - கீதவுறுப்புகளுள் ஒன்று. ஆப்தன் - இட்டன், நம்பத்தக்கோன். ஆப்பி - பசுச்சாணி. ஆப்பிள் - சீமை இலந்தைப் பழம். ஆப்பு - முளை, உடல், கட்டு. ஆமணக்கு - ஒரு செடி. ஆமணத்தி - கோரோசனை. ஆமந்திரிகை - இடக்கைப் பறை. ஆமம் - பாகம் பெறாத உணவுப் பொருள். ஆமயம் - பசுச்சாணி, நோய். ஆமலகம் - நெல்லி, பளிங்கு. ஆமளம் - சிவதுதி. ஆமா - காட்டுப் பசு. ஆமாத்திகன் - மந்திரி. ஆமாறு - உபாயம். ஆமான் - ஆமா. ஆமிடம் - உணவு, மாமிசம். ஆயிரம் - மாமரம், புளிப்பு. ஆமிலம் - புளிய மரம், புளிப்பு. ஆமூர்க்கவுதமன் சாதேவனார் - சங்ககாலப் புலவர். ஆமூர்முதலி - காளமேகப் புலவர் காலத்துப் பிரபு ஒருவர். ஆமை - கூர்மம். ஆமைக்கல் - அறுகோணக்கல். ஆமோதகம் - மிக்க வாசனை, மகிழ்ச்சி, நற்குணம். ஆமோதித்தல் - தீர்மானத்துக்கு உடன்பட்டதைத் தெரிவித்தல், மகிழ்தல். ஆம் - நீர், அழகு, சம்மதம் காட்டும் சொல். ஆம்பல் - அல்லி, ஆம்பற் குழல், மூங்கில், யானை, ஒரு பேரெண். ஆம்பி - காளான், இறைகூடை, ஒலி. ஆம்பிரம் - மா. ஆம்புடை - உபாயம். ஆயக்கட்டு - ஒரு நீர் நிலையை ஆதார மாகக் கொண்ட நிலப்பரப்பு. ஆயக்கால் - சிவிகையைத் தாங்கும் முட்டுக்கால். ஆயசம் - இரும்பாயுதம். ஆயதம் - நீளம். ஆயத்தம் - முன்னேற்பாடு, சித்தம். ஆயத்துறை - சுங்கச் சாவடி. ஆயப்பாலை இராக வகை. ஆயம் - தோழியர் கூட்டம், குடி இறை, சூதாட்டம், வருவாய், சூதாடுகருவி, சுங்கம், பசுத்திரள், மேகம், மல்லரிப்பறை. ஆயவியயம் - வரவு செலவு. ஆயனம் - ஆண்டு. ஆயன் - இடையன். ஆயாசம் - களைப்பு. ஆயாமம் - அடக்குகை, தடுத்தல். ஆயாள் - தாதி, முதியவள். ஆயான் - தமையன். ஆயி - தாய். ஆயிடை - அவ்விடம், அக்காலத்து. ஆயிரங்கண்ணன் - இந்திரன். ஆயிலியம் - ஒரு நட்சத்திரம். ஆயிழை - தெரிந்தெடுத்த நகை களையுடையவள், பெண். ஆயினி - இந்தியாவில் மேற்குக் கடற்கரைச் சார்ந்த மலைகளில் வளரும் மரம். ஆயின் - ஆனால். ஆயு, ஆயுசு, ஆயுள் - வாழ்நாள். ஆயுதம் - படைக்கலம், கருவி. ஆயுர்வேதம், ஆயுள்வேதம் - வைத்திய சாத்திரம். ஆயோ - குறிஞ்சி நிலப்பெண்கள் பறவை ஓட்டுதலைக் குறிப்பிடு மோசை. ஆயோதனம் - போர். ஆய் - அழகு, தாய், நுண்மை, கடை ஏழு வள்ளல்களுள் ஒருவன். ஆய்க்கு - இடைச்சேரி. ஆய்ச்சி - தாய், இடைப்பெண். ஆய்தம் - சார்பெழுத்துக்களுள் ஒன்று ஃ. ஆய்தல் - பிரித்தெடுத்தல், கொய்தல், நுணுகி அறிதல். ஆய்ந்தோர் - அறிஞர். ஆய்ப்பு - ஒடுங்குகை. ஆய்மா - ஆவிமா, கும்பி என வழங்கும் மரம். ஆய்வு - ஆராய்கை. ஆர - நிறைய. ஆரகூடம் - பித்தனை. ஆரக்கம் - அகில், சந்தனம். ஆரக்கால் - சக்கரத்தின் ஆர். ஆரங்சுப்பழம் - தோடம்பழம்; நாரத்தை இனத்தைச் சேர்ந்த ஒரு வகைப் பழம். ஆரணங்கு - தெய்வம், பெண். ஆரணம் - வேதம். ஆரணன் - பிரமன். ஆரணி - பார்வதி. ஆரணீயம் - காடு. ஆரதம் - சைவ உணவு. ஆரத்தி - ஆலத்தி, தீபாராதனை. ஆரபி - ஓரிராகம். ஆரம் - சந்தனம், சிலைக்கம்பு, மணி வடம், பறவைக் கழுத்து வடம், பூமாலை, முத்து, ஆத்தி மரம். ஆரம்பம் - தொடக்கம், முயற்சி. ஆரம்பித்தல் - தொடங்குதல். ஆரல் - ஒருமீன், மதில், கார்த்திகை. ஆரவாரம் - பேரொலி, ஆடம்பரம். ஆரறிவு - நிறைந்த அறிவு. ஆராட்டு - தாலாட்டு. ஆராதனம், ஆராதனை - பூசனை. ஆராதூரி - ஊதாரி. ஆராத்தீயர் - வீரசைவப் பிராமணர். ஆராமம் - சோலை. ஆராமை - தெவிட்டாமை, உவட்டாமை. ஆராய்ச்சி - சோதனை, தலையாரி. ஆராய்ச்சி மணி - நீதி வேண்டு வோர் அடிக்க அரண்மனை வாயிலிற் கட்டும் மணி. ஆராய்தல் - விசாரணை செய்தல். ஆரார் - பகைவர். ஆரால் - ஆரல் மீன். ஆரி - அருமை, அழகு, சோழன். ஆரிடம் - வழக்கு நிலம், முனிவர் அருளிய நூல், திருமணங்களுள் ஒன்று. ஆரிடர் - முனிவர். ஆரிடை - அரியவழி. ஆரித்தல் - ஒலித்தல். ஆரிய - சிறிய. ஆரியக் கூத்து - கழைக்கூத்து. ஆரியப்பாவை - பாவைக்கூத்து. ஆரியப்பூமாலை - காத்தவராயன் மனைவி. ஆரியம் - சமக்கிருதம், அழகு, மேன்மை ஆரியர் - ஆரிய சாதியார், மிலேச்சர், அறிவாளிகள், ஆசிரியன். ஆரியாங்கனை - சமணத்தவப் பெண். ஆரியாவர்த்தம் - விந்தத்துக்கும் இமயத் துக்கும் இடையிலுள்ள நாடு. ஆரியை - காளி, பார்வதி. ஆரீதம் - பச்சைப் புறா. ஆருகதம் - சைனமதம். ஆருத்திரை - திருவாதிரை. ஆரூடம் - நினைத்த காரியம் சொல்லும் சோதிடம், ஏறியது. ஆரூர் - திருவாரூர். ஆரை - கோட்டைமதில், அச்சு மரம், கொத்தளிப்பாய். ஆரொட்டி - கூவைக் கிழங்கு. ஆரோகணம் - ஏறுகை, ஏணி, படி. ஆரோகம் - வேதமோதும் முறை களுள் ஒன்று. ஆரோக்கியம் - நோயின்மை. ஆரோசை - ஏற்றிப் பாடும் இசை. ஆரோபம், ஆரோபணம் - ஒன்றன் மேல் மற்றொன்றன் தன்மையை ஏற்றிக் கூறுதல், ஏற்றுதல். ஆர் - யார், நிறைவு, பூமி, கூர்மை, அழகு, ஆத்தி, சிலைக் கம்பு, அருமையான, சரக்கொன்றை. ஆர்கலி - கடல். ஆர்கை - தின்னுகை. ஆர்க்கு - இலைக்காம்பு. ஆர்ச்சனம் - தேடுதல். ஆர்ச்சிதம் - சம்பாத்தியம். ஆர்தல் - புசித்தல், தங்குதல், ஒத்தல், அனுபவித்தல், நிறைதல். ஆர்த்தர் - நோயாளர். ஆர்த்தல் - ஒலித்தல், கட்டல், பொருதல். ஆர்த்தி - வேதனை, துன்பம். ஆத்திகை - பீடை, வின்னுனி. ஆர்த்துதல் - ஊட்டுதல், நிறை வித்தல். ஆர்பதம் - உணவு, வண்டு, நிழல். ஆர்ப்பரவம் - ஆரவாரம். ஆர்ப்பரித்தல் - ஆரவாரித்தல். ஆர்ப்பு - பேரொலி, கட்டு, போர். ஆர்வம் - அன்பு, ஆசை. ஆர்வலன் - அன்பன். ஆர்வு - நிறைவு, ஆசை, விருப்பம். ஆல - ஆரவாரித்து அழைக்க. ஆலகண்டன் - சிவன். ஆலகம் - நெல்லி. ஆலகாலம் - பாற்கடலில் தோன்றிய நஞ்சு. ஆலங்கட்டி, ஆலங்காட்டி - கன்மலை. ஆலங்குடி - கும்பகோணத்துக்கு 9 மைலிலுள்ள ஒரு சிற்றூர்; பாக்கு வெட்டிக்குப் பேர் போனது. ஆலங்குடிவங்கனார் - சங்ககாலப் புலவர். ஆலசியம் - சோம்புத் தன்மை. ஆலத்தி - ஆரத்தி. ஆலத்தூர் கிழார் - சங்ககாலப் புலவர். ஆலப்புழை - திருவிதாங்கூரிலுள்ள ஒரு துறைமுகப் பட்டினம். ஆலம் - நீர், கடல், ஆள், ஆகாயம், களப்பை, நஞ்ச. ஆலம்பம் - பற்றுக்கோடு, புகலிடம். ஆலம்பேரிச் சாத்தனார் - சங்க காலப் புலவர். ஆலயம் - கோயில், தங்குமிடம். ஆலல் - ஒலி, மயிற்குரல். ஆலவட்டம் - விசிறி. ஆலவாய் - மதுரை, பாம்பு. ஆலவாலம் - விளைநிலம், மரத்தின் கீழ்ப்பாத்தி. ஆலா - ஒருவகைப் பறவை. ஆலாசியம் - மதுரை. ஆலாத்தி - ஆராத்தி. ஆலாத்து - கப்பலின் பெருங்கயிறு. ஆலாபனம் - இராகத்தை நீடித்துப் பாடுதல். ஆலாலம் - நஞ்சு. ஆலி - மழைத்துளி, கள், பனிக்கட்டி, காற்று. ஆலிங்கணம் - தழுவுகை. ஆலித்தல் - ஒலித்தல், துளித்தல், களித்தல். ஆலிப்பு - ஆரவாரம். ஆலிநாடன் - திருமங்கை ஆழ்வார். ஆலீடம் - வில்லோன் நிலை. ஆலுதல் - ஆடுதல், ஒலித்தல், களித்தல். ஆலை - கரும்பு ஆலை, சாலை, யானைக் கூடம். ஆலைபாய்தல் - மணஞ்சுழலுதல், ஆலை ஆட்டுதல். ஆலேகணம் - சித்திரித்தல். ஆலேக்கியம் - சித்திரப்படம். ஆலோகம் - ஒளி, பார்வை. ஆலோசனை - யோசனை, சிந்திப்பு. ஆலோசித்தல் - சிந்தித்தல். ஆலோலம் - புல்ஒட்டும் ஒலிக் குறிப்பு, அசைவு. ஆலோன் - சந்திரன். ஆல் - ஆலமரம், நீர், அசை நிலை, நஞ்சு, கார்த்திகை நட்சத்திரம். ஆல்காக்கள் - குளம் குட்டை ஆறு கடல் நீர் முதலிய எல்லாவகை நீர் நிலைகளிலும் ஈரமான இடங் களிலும் வளரும் மிக நுன்மை யான ஓரணுத் தாவரங்கள். ஆவ - இரக்கக் குறிப்பு. ஆவசியகம் - இன்றியமையாதது. ஆவஞ்சி - இடக்கை என்னும் மேளம். ஆவணக்களம் - பத்திரப் பதிவுச் சாலை. ஆவணம் - கடைவீதி, உரிமைப் பத்திரம், அடிமை, புனர்பூசம். ஆவணமாக்கள் - குடவோலை தேரும் மாக்கள். ஆவணி - ஐந்தாம் மாதம். ஆவது - ஆக வேண்டியது. ஆவநாழி, ஆவநாழிகை - அம்பறாத்தூணி. ஆவம் - அம்புக்கூடு, வில்நாண். ஆவரணம் - மறைப்பு. ஆவர்த்தம் - ஏழு மேகங்களுள் மழைப் பொழிவது, கழி, திரும்புதல். ஆவலங்கொட்டுதல் - ஆர்த்து வாய் கொட்டுதல். ஆவலர் - நண்பர், ஆவலுடையவர். ஆவலாதி - குறை கூறுகை. ஆவலி, ஆவளி - வரிசை, வமிசப் பரம்பரை. ஆவலித்தல் - புலம்பல், அழுதல். ஆவலிப்பு - செருக்கு. ஆவல் - ஆசை, அவா. ஆவளி - வரிசை. ஆவாகனம் - மந்திரத்தால் தெய் வத்தை எழுந்தருளச் செய்கை. ஆவாசம் - மருத நிலத்தூர் வசிக்கு மிடம். ஆவாரை, ஆவிரை - ஆவிரைச் செடி. ஆவி - உயிர்ப்பு, உயிர், வலிமை, நீராவி, வேளிருள் ஒருவன். ஆவிநன்குடி - பழநிமலை. ஆவியர் - பரிசுத்த ஆவி, வேளிருள் ஒருவன், வேளாளர். ஆவிருதி - ஆவணம். ஆவிருத்தி - திரும்பி வருதல். ஆவுடை அம்மாள் - வேதாந்தப் பள்ளு என்னும் நூலியற்றியவர் (19 ஆம் நூ.) ஆவுடையார் - சிவன். ஆவுடையார் கோவில் - புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பேர்பெற்ற சிவன் கோவில். ஆவுதல் - விரும்புதல். ஆவுதி - ஓமத்திலிடப்படும் உணவு, ஆகுதி. ஆவுரிஞ்சி - ஆவுரோஞ்சு குற்றி. ஆவூர்கிழார் - சங்ககாலப் புலவர். ஆவூர்கிழார் மகனார் கண்ணனார் - சங்க காலப் புலவர். ஆவூர்க் காவிதிகள் சாதேவனார் - சங்க காலப் புலவர். ஆவூர் மூலங்கிழார் - சங்க காலப் புலவர். ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார் - சங்க காலப் புலவர். ஆவெனல் - வாய் திறத்தல். ஆவேசம் - தெய்வ மேறுகை, பேய். ஆவேதனம் - அறிக்கை. ஆவேறு - இடபம். ஆழம் - ஆழ்ந்திருக்கை. ஆழல் - கறையான். ஆழவெடி - நீராழத்தில் வெடிக்கும் சுரங்கவெடி (Depthcharge) ஆழாக்கு - அரைக்காற்படி. ஆழாரம் - வட்டமான புதைகுழி. ஆழி - சக்கராயுதம், மோதிரம், யானைக்கை நுனி, கடல், வட்டம். ஆழிதிருத்துதல் - கணவனைப் பிரிந்த மனைவி மணலில் கீறும் வட்டம். ஆழிமால்வரை - சக்கரவாளகிரி. ஆழியான் - திருமால். ஆழியிழைத்தல் - ஆழி திருத்துதல். ஆழ்தல் - மூழ்குதல், வருந்துதல், ஆழமாதல். ஆழ்வார் - திருமாலடியார். ஆழ்வாரப்பிள்ளை - முருகதாச சுவாமிகள் (1839 - 1924) ஆழ்வு - ஆழம். ஆளத்தி - ஆலாபனம். ஆளமஞ்சி - கூலியின்றி வாங்கும் வேலை. ஆளரி - நரசிங்கம், சிங்கம். ஆளவந்தார் - ஞானவாசிட்ட ஆசிரியர், ஒரு வைணவ ஆசிரியர் (யமுனா சாரியர்) ஆளன் - ஆள்பவண், கணவன். ஆளானம் - யானை கட்டும் தூண். ஆளி - ஆள்வோன், ஒருவகைச் சணல், யாளி, சிங்கம் இரண்டு ஒடுள்ள சிப்பி. ஆளியூர்தி - துர்க்கை, காளி. ஆளுகை - ஆட்சி. ஆளுங்கணத்தார் - ஊர்ச்சபை அதிகாரிகள். ஆளுடைய பிள்ளையார் - திருஞான சம்பந்தர். ஆளொட்டி - காவற்கூடு. ஆளோலை - அடிமைச் சீட்டு. ஆள் - ஆண்மகன், வீரன் காலாள் ஆள்வினை - முயற்சி, ஊக்கம். ஆறலை - வழிப்பறி. ஆறாட்டம் - நோயுற்றார் படும் வேதனை. ஆறாட்டு - கடலில் நீராடும் விழா. ஆறாமீன் - கார்த்திகை. ஆறாயிரப்படி - திருவாய் மொழி முதல் விரிவுரை. ஆறியகற்பு - அறக்கற்பு. ஆறு - நதி, பயன், அறம், உபாயம், வழி, தணிதல், குளிர்தல், இயல்பு. ஆறுதல் - தணிதல், குளிர்தல், மனஅமைதி. ஆறுமுகன் - முருகன். ஆறெறிதல் - வழி பறித்தல். ஆற்ற - மிக, முற்றாக. ஆற்றல் - வலிமை, பொறை. ஆற்றறுத்தல் - இடையே விடுதல், வலியறுத்தல். ஆற்றாமை - தாங்கமுடியாமை. ஆற்றார் - வலியிலார். ஆற்றிடைக்குறை - ஆற்றிடைமேடு. ஆற்றுக்காலாட்டி - மருத நிலப்பெண். ஆற்றுணர் - பொதி சோறு. ஆற்றுதல் - செய்தல், வலியடைதல், பொறுத்தல், துக்கம் முதலியன தணித்தல். ஆற்றுப்படுத்தல் - வழிச் செலுத் துதல், போக்குதல். ஆற்றுப்படை - பரிசில் பெற்றா னொருவன் அது பெறக்கருதிய வனை ஒரு தலைவனிடத்துச் செலுத்துவதாகப் பாடும் பிரபந்தம், வழிப்படுத்தல். ஆறுமுக சுவாமிகள் - நிட்டானுபூதி இயற்றியவர் (16ஆம் நூ.) ஆறுமுக நாவலர் - யாழ்ப்பாணத்து விளங்கிய சைவப் புலவர் (1822 - 1879) ஆறுமுகம் பிள்ளை - அரிச்சந்திர வெண்பாப் பாடிய புலவர் (19ஆம் நூ.) ஆற்றவரி - ஆற்றோரங்களில் வளரும் அவரிவகை. ஆற்றுவரி - ஒருவகை இசைப்பாடல். ஆற்றொழுக்கு - ஆற்றின் நீரோட்டம். ஆனகம் - முரசு வகை. ஆனைஞ்சு - பஞ்ச கவ்வியம். ஆனந்த - ஒர் ஆண்டு. ஆனந்தகரம் - மகிழ்ச்சி தருவது. ஆனந்தக்களிப்பு - மகிழ்ச்சி மிகையினால் பாடும் ஒருவகைப் பாடல். ஆனந்தக் கூத்தர் - பரிமளப் புலவர், திருக்காளத்திப் புராணம், திருவாசக உரை முதலியன செய்தவர் (16ஆம் நூ.) ஆனந்தக் குமாரசுவாமி - டாக்டர், கொழும்பில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்த தமிழர்; கலை ஆராய்ச்சி வல்லார் (1877 - 1947) ஆனந்தப்பையுள் - கணவன் இறப்ப மனைவி மெலிந்து வருந்தும் புறத்துறை. ஆனந்தபைரவி - ஓரிராகம். ஆனந்தம் - பேரின்பம், சாக்காடு. ஆனந்தரங்கம் பிள்ளை - இவர் பிரம்பூரில் பிறந்தவர். புதுச்சேரியில் பிரெஞ்சு அரசாங்கத்தில் உயர்ந்த பதவியிலிருந்தவர் (1709 - 1761) ஆனமட்டும் - கூடியவரை. ஆனம் - கள். ஆனனம் - முகம். ஆனன் - சிவன். ஆனா - கெடாத, அடங்காத. ஆனாமை - நீங்காமை, தனியாமை. ஆனார் நாயனார் - 63 அடியார் களுளொருவர். ஆனால் - ஆகையால். ஆனி - மூன்றாம் மாதம், கேடு. ஆனியம் - நட்சத்திரம், நாள். ஆனிரை - பசுக்கூட்டம். ஆனிலன் - அனுமான், வீமன். ஆனிலை - பசுக்கொட்டில். ஆனும் - ஆயினும். ஆனேறு - எருது. ஆனை - யானை, அத்திமரம். ஆனைக்கால் - ஒருவகை நோய். ஆனைக்கூடம் - ஆனைகட்டுமிடம். ஆனைக்கொம்பன் - ஒருவகை நெல். ஆனைத்தீநோய் - கடும்பசி விளைக்கும் நோய். ஆனைந்து - பஞ்ச கவ்வியம். ஆனைமீன் - பெருமீன். ஆனைமுகன் - விநாயகக் கடவுள். ஆனைமலை - நீலகிரி மலைக்குத் தெற்கே 65 மைல் தூரத்திலுள்ள சகயாத்திரி மலைத்தொடரின் ஒரு பகுதி. ஆன் - பசு, இடபம். ஆன்பொருநை - காரூருக்குக்கிட்ட உள்ள ஓர் ஆறு. ஆன்மா - உயிர். ஆன்மார்த்தபூசை - தன்பொருட்டுத் தானே செய்யும் பூசை. ஆன்ற - மாட்சியமைப்பட்ட, அகன்ற, அடங்கிய. ஆன்று - நிறைந்து, நீங்கி. ஆன்றோர் - அறிவுடையவர். இ இ - அண்மைச்சுட்டு, ஒரு விகுதி. இஃது - இது. இக - கட, இங்கே, இவ்வுலகம். இகத்தல் - கடத்தல். இகந்துபடல் - கடந்து போதல். இகபரம் - இம்மை, மறுமை. இகம் - இம்மை. இகலன் - பகைவன், நரி, படை, வீரன். இகலுதல் - மாறுபடுதல், ஒத்தல். இகலோகம் - இவ்வுலகம். இகல் - பகை, போர், வலி, ஒப்பு. இகழ் - இகழ்ச்சி. இகழ்ச்சி, இகழ்வு - அவமதிப்பு. இகளை - வெண்ணெய். இகனி - வெற்றிலை. இகுசு - மூங்கில். இகுதல் - தாழ்ந்து விழுதல். இகுத்தல் - தாழ்த்துதல், சொரிதல், ஒலித்தல், அறைத்தல், விரித்தல். இகுப்பம் - திரட்சி, தாழ்வு. இகுவை - வழி. இகுளி, இகுள் - இடியேறு. இகுளை - தோழி, சுற்றம். இங்கண் - இவ்விடம். இங்கிதம் - இனிமை, குறிப்பு, கருத்து. இங்கு - இவ்விடம், பெருங்காயம். இங்குதல் - தங்குதல். இங்குலிகம் - சாதிலிங்கம், சிவப்பு. இங்ஙன், இங்ஙனம் - இவ்வாறு, இவ்விடம். இசக்கி - ஒருபெண் தெய்வம். இசலி - சண்டை போடுகிறவள். இசித்தல் - முறித்தல், இழுத்தல், சிரித்தல். இசின் - ஓர் இறந்தகால இடைநிலை அசைச்சொல். இசும் - ஏற்ற இறக்கங்கள் மிகுந்த கடுவழி, வழுக்கு நிலம். இசை - ஒலி, கீர்த்தி, சொல், பண். இசைதல் - பொருந்துதல், இணங்குதல். இசைத்தல் - ஒலித்தல், சொல்லுதல், பாடுதல். இசைநிறை - செய்யுளில் இசை நிறைத்தற்கு வருஞ்சொல். இசைநுணுக்கம் - இறந்துபட்ட இசை நூல்களிலொன்று; சிகண்டி செய்தது. இசைப்பொறி - காது. இசைமரபு - ஓர் இசைநூல். இசைவாணர் - பாடகர். இசைவு - பொருந்துகை, உடன்பாடு. இச்சகம் - முகத்துதி. இச்சம் - இச்சை. இச்சி - விரும்பு, பெண்பால் விகுதி. இச்சை - விருப்பம். இஞ்சி - கோட்டை மதில், ஒரு வகைப் பூண்டு. இஞ்சை - தீங்கு, கொலை. இடக்கர் - சபையில் சொல்லத்தகாத சொல். இடக்கல் - அகழ்தல். இடக்கு - குதர்க்கம். இடக்கை - இடக்கையால் கொட்டும் பறை. இடங்கணி - சங்கிலி. இடங்கம் - கல்லுளி, கோபம். இடங்கர் - முதலை, நீர்ச்சால், சிறுவழி. இடங்கழி - எல்லை கடக்கை. இடங்கழி நாயனார் - 63 நாயன் மாருள் ஒருவர். இடங்கை - இடக்கை. இடசாரி - இடப்பக்கமாக வரும் நடை. இடத்தல் - பிளத்தல். இடந்தலைப்பாடு - இடத்திற் கூடுதல். இடபம் - எருது, இடபராசி, வைகாசி. இடப்பு - பிளப்பு, பெயர்த்த மண்கட்டி. இடமானம் - ஒருவகைப் பறை. இடம் - விசாலம், தானம், சமயம், செல்வம். இடம்படல் - விசாலமாதல். இடம்பம் - ஆடம்பரம். இடம்புரி - இடப்புறம் சுழித்த சங்கு. இடர் - துன்பம், வறுமை. இடர்ப்பாடு - துன்பம். இடல் - கொடுத்தல், விடல். இடவயின் - இடத்து. இடவழு - தன்மை முதலிய மூவிடங் களையும் பிறழக் கூறுதல். இடவன் - மண்ணாங்கட்டி இடவை - வழி. இடறு - தடை, கால்தடுக்குகை. இடறுதல் - எற்றுதல், தள்ளுதல். இடன் - இடம், அகலம். இடா - இறைகூடை. இடாகினி - இடுகாட்டில் பிணங்களைத் தின்னும் பேய் இடாப்பு - அட்டவணை. இடார் - இறைகூடை. இடி - இடியேறு, மா, உறுதிமொழி, தள்ளு. இடிஞ்சில் - விளக்குத் தகழி. இடிதல் - தகர்தல், முறிதல். இடித்தல் - தகர்த்தல், முழங்கல், உறுதி கூறல், கெடுதல். இடித்துரை - உறுதிமொழி. இடிதாங்கி -கட்டடத்தின் மீது இடி விழாதபடி காக்க வைக்கும் காந்தக் கம்பி. இடிபடுதல் - துன்பப்படுதல். இடிப்பு - ஒலி, இடி. இடிமரம் - உலக்கை. இடியப்பம் - சிற்றுண்டி வகை. இடியேறு - பேரிடி. இடிவு - அழிவு. இடுகாடு - பிணம் புதைக்குமிடம். இடுகுதல் - குறுகுதல். இடுகுறிப்பெயர் - காரணம் பற்றாது வழங்கும் பெயர். இடுகை - கொடை. இடுக்கண் - துன்பம், வறுமை. இடுக்கம் - ஒடுக்கம். இடுக்கல் - சந்து. இடுக்கி - குறடு. இடுக்கு - ஒடுங்கியவிடம். இடுக்குதல் - கவ்வுதல். இடுங்கற்குன்றம் - செய்குன்றம். இடுங்குதல் - சுருங்குதல், சோர்தல். இடுதண்டம் - அபராதம். இடுதல் - கொடுத்தல், விடுதல், வைத்தல். இடும்பாவனம் - தஞ்சாவூர் மாவட் டத்திலுள்ள தேவாரம் பெற்ற தலம் இடுப்பு - அரை. இடும்பு - அகந்தை. இடும்பை - துன்பம், தரித்திரம். இடுவந்தி - இல்லாத குற்றத்தை ஏற்றுதல். இடை - நடு, அரை, வழி, தொடர்பு, எடை, இடம். இடைகலை - இடமூக்கால் விடும் மூச்சு. இடைகழி - வாயிலைச் சேர்ந்த உள்நடை. இடைக்கட்டு - வீட்டின் நடுக்கட்டு. இடைக்கணம் - இடையினம். இடைக்கலம் - மண்பாண்டம். இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் - சங்ககாலப் புலவர். இடைக்காடர் - சங்க காலப் புல வருள் ஒருவர். இடைக்காட்டுச் சித்தர் - கொண்கணர் மாணவர். இடைக்கிடை - ஊடே ஊடே. இடைக்குன்றூர் கிழார் - சங்க காலப் புலவர். இடைச்சரி - தோள்வளை. இடைச்சி - இடைச்சாதிப் பெண். இடைச்சுரிகை - உடைவாள் இடைச்செருகல் - ஒருவர் பாட்டில் பிறர் வாக்கைக் கலத்தல். இடைச்செறி - குறங்கு செறி என் னும் ஆபரணம். இடைஞ்சல் - தடை, இடையூறு. இடைதல் - சோர்தல், சாய்தல். இடைநிலை - பெயர் வினைகளின் பகுதிகளுக்கிடையில் நிற்கும் உருபு. இடைப்பிறவரல் - எழுவாய் முதலி யன கொண்டு முடியும் சொற்களினிடை யில் ஏற்ற பிறசொல் வருகை. இடைமை - இடையின வெழுத் துக்கள். இடையல் - துகில், மெலிதல். இடையர், இடையறவு - இடைச் சாதியார். இடையறுதல் - தடைப்படுதல். இடையன் சேந்தங் கொற்றனார் - சங்க காலப் புலவர். இடையன் நெடுங்கீரனார் - சங்க காலப் புலவர். இடையன் பூச்சி - கும்பிடு பூச்சி. இடையாறு - தென்னார்க்காட்டு ஜில்லாவிலுள்ள சிவத்தலம்; சுந்தர மூர்த்தி சுவாமிகள் தேவாரம் பெற்றது. இடையினம் - இடையெழுத்து. இடையீடு - இடையில் விடுதல், தடை. இடையூறு - தடை, தீங்கு. இட்டம் - விருப்பம், நட்பு, அன்பு. இட்டலி - சிற்றுண்டி வகை. இட்டலிங்கம் - குரு மாணாக் கருக்குக் கொடுக்கும் இலிங்கம். இட்டளங்கம் - வருத்தம். இட்டனர் - மனச் சஞ்சலமுள்ளவர். இட்டறை - யானையை வீழ்த்தும் குழி. இட்டாறு - உலோபம். இட்டி - ஈட்டி, வேள்வி. இட்டிகை - செங்கல், பலிபீடம். இட்டிடை - அற்பம். இட்டிது - சிறிது. இட்டீடு - விவாதம். இட்டு - தொடங்கி, காரணமாக, அற்பம், பிரியம். இணக்கம் - இசைவு, சம்மதம். இணங்கர் - ஒப்பு. இணங்கலர் - பகைவர். இணங்கன் - நண்பன். இணங்குதல் - சம்பாதித்தல். இணர் - பூங்கொத்து, தளிர், பூ சுவாலை. இணுக்குதல் - பறித்தல். இணை - ஒப்பு, தம்முளொத்த இரண்டு. இணைகரம் - இரு இணை கோடு கள் வேறு இரு இணைகோடுகளை வெட்டுதலால் உண்டாகும் சமதள வடிவம் (Parallelogram) இணைக்கை - இரண்டு கைகளாற் புரியும் அபிநயம். இணைதல் - சேர்தல். இணைத்தல் - கொடுத்தல், சேர்த் தல். இணைமணிமாலை - தமிழ்ப் பிரபந்த வகையுள் ஒன்று. இணைவிழைச்சு - புணர்ச்சி. இண்டர் - சண்டாளர். இண்டு - புலி தொடக்கிக்கொடி. இண்டை - தாமரை, புலிதொடக்கி. இதக்கை - தோடு. இதடி - பெண்ணெருமை. இதணம், இதண் - காவற்பரண், பரண். இதம் - இன்பமானது. இதயம் - மனம், மார்பு. இதரம் - வேறு, கீழ்மை, தீங்கு. இதரேதரம் - ஒன்றற்கொன்று. இதலை - கொப்பூழ். இதல் - கவுதாரி. இதவு - இதம். இதழி - கொன்றை. இதழ் - பூவிதழ், உதடு, கண்ணிமை. இதாகிதம் - நன்மை, தீமை. இதிகம் - உபதேசப் பரம்பரை. இதிகாசம் - பழங்காலச் சரித்திரம். இதை - கப்பற்பாய், புன்செய் நிலம், ஒருவகைப் பயறு. இதைப்புனம் - புதுக்கொல்லை. இதோபதேசம் - நற்போதனை, பஞ்ச தந்திரக்கதைகளிலிருந்து எடுத்துத் தொகுக்கப்பட்ட சமக்கிருத நூல். இத்தால் - இதனால். இத்தி - கல்லால். இத்துணை - இவ்வளவு. இந்தம் - புளி. இந்தளங் குறிஞ்சி - ஒரு பண். இந்தனம் - தூபச்சட்டி, மருத யாழ் வகை. இந்தனம் - விறகு. இந்தி - வடநாட்டில் வழங்கும் சமக் கிருத்தத்துக்கு இனமுடைய மொழி. இந்தியம் - சுக்கிலம், இந்திரியம் இந்திரகாளி - வெண்பாப் பாட்டி யலின் முதல் நூல். இந்திரகாளியம் - ஓர் இசைத் தமிழ் நூல். இந்திரகோபம் - தம்பலப்பூச்சி. இந்திரசாபம் - வானவில். இந்திரசாலம் - மாயவித்தை. இந்திரசித்து - இராவணன் மகன். இந்திரஞாலம் - சூரபதுமான் தேர், மாயவித்தை. இந்திரதனு - வானவில். இந்திரதிசை - கிழக்கு. இந்திர நீலப் பருப்பதம் - வட நாட்டுச் சிவத்தலங்களுளொன்று; ஞானசம்பந்தர் தேவாரம் பெற்றது. இந்திரபுரி - அமராவதி. இந்திரம் - மேன்மையானது. இந்திரவிழா - இந்திரனுக்குச் செய் யும் திருவிழா. இந்திரன் - தேவர்க்கு அரசன். இந்திராணி - இந்திரன் மனைவி. இந்திரி - கிழக்கு. இந்திரியம் - பொறி, சுக்கிலம். இந்திரை - இலக்குமி. இந்து - சந்திரன். இந்துளம் - கடம்பு. இந்தோளம் - மாலை ராக வகை. இபம் - யானை, மரக்கொம்பு. இப்பர் - வணிக சாதி வகையர். இப்பாடு - இவ்விடம். இப்பால் - இவ்விடம், பின். இப்பி - சிப்பி. இப்பொழுது, இப்போது - இந்த நேரம். இமகரன், இமகிரணன் - சந்திரன். இமகிரி - இமயமலை. இமம் - பனி. இமயம் - இமயமலை, மேரு, பொன். இமயவதி, இமயவல்லி - பார்வதி. இமயவல்லி - பார்வதி. இமயவல்லி - சிவன். இமவான், இமாலயம் - இமயமலை. இமிசை - தீங்கு. இமிர்தல் - ஒலித்தல், முரிதல். இமில் - எருத்தின் முரிப்பு. இமிழ் - ஒலி, கயிறு. இமிழ்த்தல் - ஒலித்தல், கட்டல். இமை - கண்ணிமை. இமைத்தல் - பிரகாசித்தல், இமை கொட்டுதல், சுருங்குதல். இமைப்பு - இமை கொட்டும் நேரம், விளக்கம். இமையவர், இமையார், இமை யோர் - தேவர். இம்பரும்பர் - பூசுரர். இம்பர் - இவ்வுலகம், இவ்விடம். இம்மி - ஒரு சிற்றெண், மத்தங்காய்ப் புல்லரிசி, அற்பம். இம்மெனல் - விரைவை உணர்த்தும் குறிப்புச் சொல். இம்மென் கீரனார் - சங்ககாலப் புலவர். இம்மை - இப்பிறப்பு. இயக்கம் - அசைவு, வழி. இயக்கர் - பதினெண் கணத்து ளொருவர். இயக்கன் - தேவன், குபேரன். இயக்கி - இயக்கன் என்பதன் பெண் பால். இயக்கு - அசைவு, செலவு. இயக்குதல் - இயங்கச் செய்தல், தொழிற்படுத்துதல். இயங்குதல் - அசைதல், நடத்தல். இயங்குதிணை - இயங்கியற் பொருள். இயந்திரம் - தேர், ஆலை, மதிற் பொறி. இயபரம் - இம்மை, மறுமை. இயமம் - யோகத்துக்குரிய எட்டுப் பகுதிகளுள் ஒன்று. இயமன் - கூற்றுவன். இயமானன், இயமான் - ஆன்மா, யாகத் தலைவன். இயம் - ஒலி, சொல், வாத்தியம். இயம்புதல் - சொல்லுதல், ஒலித்தல். இயலல் - நடத்தல், அசைதல், கூடியதாதல் இயலாசிரியன் - பரத நூல் கற்பிப் போன். இயலாமை - கூடாமை. இயல் - இயற்கை, இலக்கணம், சாயல், நடை, நூற்பொருட்பாகுபாடு. இயல்பு - இயற்கை, குணம், முறைமை. இயல்புப்புணர்ச்சி - விகாரமின்றிச் சொற்கள் புணர்வது. இயல்புவழக்கு - எப்பொருளுக்கு எப்பொருள் இயல்பில் அமைந் ததோ அப்பெயராலேயே அப் பொருளைக் கூறுகை. இயல்புளி - விதிப்படி. இயவன் - தோற் கருவியாளன். இயவு - காடு, வழி, போதல். இயவுள் - தலைவன், கடவுள், மிகுபுகழாளன். இயவை - வழி, ஒரு சிற்றளவு. இயற்கை - சுபாவம், தன்மை. இயற்சொல் - திரிவுபடாத சொல். இயற்பழித்தல் - தலைவன் குணங் களைத்தோழி இகழ்ந்து கூறும் அகத்துறை. இயற்பெயர் - வழங்குதற்கு இடப் பட்ட சிறப்புப் பெயர். இயற்றமிழ் - முத்தமிழுள் ஒன்று. இயற்றல் - செய்தல், நடத்துதல். இயனம் - கள்ளிறக்குவோனது கருவிப் புட்டி. இயனெறி - நல்லொழுக்கம். இயன்மகள் - சரசுவதி. இயன் மொழி வாழ்த்து - தலைவன் குலத்தோர் செய்திகளை அவன் மேலேற்றி வாழ்த்தும் புறத்துறை. இயாத்திரை - பயணம், யாத்திரை, ஆத்திரை. இயாதம் - யானைத் தோட்டி. இயூகம் - கருங்குரங்கு. இயைதல் - பொருத்துதல். இயைத்தல் - பொருந்துதல். இயைபு, இயைவு - சேர்க்கை, பொருத்தம். இர - இரவு பிச்சையெடு. இரகசியம் - மறைபொருள். இரகு - சூரிய வமிசத்தரசருள் ஒருவன். இரகுவம்சம் - அரசகேசரி செய்த ஒரு தமிழ் நூல். இரக்கம் - தயை, மனவருத்தம். இரக்கை - காத்தல், விபூதி. இரங்குதல் - அழுதல், ஒலித்தல், வருந்துதல், அருள் செய்தல். இரசகி - வண்ணாத்தி. இரசம் - சுவை, சாறு, மிளகு நீர், பாதரசம். இரசவாதம் - உலோகங்களைப் பொன்னாக்கும் வித்தை. இரசாயன நூல் - பௌதிக இயல்பை ஆராயும் நூல். இரசிதம் - வெள்ளி. இரசித்தல் - இனித்தல். இரச்சு - நாண், பின்னல். இரசை வடமலையப்ப பிள்ளை - மச்ச புராணம் பாடிய புலவர் (17ஆம் நூ.) இரஞ்சிதம், இரஞ்சகம், இரஞ்சனம் - இன்பமானது. இரட்சணிய சேனை - கிறித்தவ சபையில் ஒரு பிரிவு. இரட்சித்தல் - காப்பாற்றுதல். இரட்சை - காப்பு. இரட்டா - இராட்டிர கூட அரசர். இரட்டல் - இரட்டிக்கை, ஒலிக்கை. இரட்டி - இரு மடங்கு. இரட்டுற மொழிதல் - இரு பொருள் படச்சொல்லல். இரட்டுறுதல் - இரு பொருள் படுதல், மாறுபடுதல். இரட்டை - கோடு, இரட்டை எண். இரட்டைக்கிளவி - இரட்டையாக நின்று பொருளுணர்த்துஞ் சொல். இரட்டையர் - முடவரும், குருடரு மாகிய இருபுலவர் (15ஆம் நூ.) இரணகளம் - போர்க்களம். இரணம் - புண், போர், கடன். இரணவைத்தியம் - அறுத்து வைத் தியம் செய்தல். இரணியகசிபு - இரணியன். இரணிய கர்ப்பம் - ஒரு யாகம். இரணிய கர்ப்பன் - பிரமன். இரணியமுட்டத்துப் பெருங்குன் றூர்ப் பெருங்கௌசிகனார் - சங்க காலப் புலவர். இரணியம் - பொன். இரணை - இரட்டை. இரண்டகம் - துரோகம். இரண்டறக்கலத்தல் - முத்தி யடைதல். இரண்டு - மலசலம். இரதம் - தேர், பாதரசம், இனிமை, அரைஞாண். இரதனம் - அரைஞாண். இராதாரூடன் - தேரில் செல்வோன். இரதி - மன்மதன் மனைவி, விருப்பம், பித்தளை. இரத்தம் - உதிரம். இரத்தல் - யாசித்தல், வேண்டுதல். இரத்தவிந்து - குருவிந்தம் என்னும் மாணிக்க வகை. இரத்தாசயம் - இருதயம். இரத்தாட்சி - ஒர் ஆண்டு. இரத்தி - இலந்தை, இத்தி. இரத்தினகசிதம் - இரத்தினம் வைத்து இழைக்கப்பட்டது. இரத்தினகம்பளம் - சித்திரக் கம் பளம். இரத்தின கவிராயர் - புலவரலாற்றுப் படை இயற்றிய புலவர் (17 ஆம் நூ.) இரத்தினதீவம் - இலங்கை. இரத்தினம் - மணி. இரத்தினாகரம் - கடல். இரத்தோற்பலம் - செங்குவளை. இரப்பு - யாசிக்கை, தரித்திரம். இரமணீயம் - இன்பஞ் செய்வது, அழகுள்ளது. இரமிந்தல் - மகிழ்தல். இரம்பம் - மரமறுக்கும் வாள். இரம்மியம் - மகிழ்ச்சி தருவது. இரலை - மான், ஊதுகொம்பு. இரவணம் - ஒட்டகம். இரவரசு - சந்திரன். இரவலன் -இரப்பவன். இரவல் - திருப்பிக் கொடுப்பதாகப் பெற்ற பொருள். இரவன் - சந்திரன். இரவி - சூரியன், மலை, எருக்கு. இரவிநாள் - இரேவதி. இரவிக்கை - தனக் கச்சு. இரவிகாந்தம் - சூரிய காந்தம். இரவிநாள் - இரேபதி. இரவு - இராத்திரி, இருள், மரம், யாசகம். இரவுக்குறி - இரவிலே தலைவனும் தலை வியும் சேரும்படி குறிக்கப்பட்ட இடம். இரவை - கோதுமைக் குறுநொய். இரவோன் - யாசகன், சந்திரன். இரளீ -கொன்றை. இரற்றுதல் - சத்தமிடுதல். இரா - இரவு. இராகம் - கீதம், ஆசை, நிறம், சிவப்பு. இராகவன் - இராமன். இராகி - பற்றாசு. இராகு - நவக்கிரகங்களுள் ஒன்று. இராக்கதம் - மனைவியை வலிதிற் கொள்ளும் மணம். இராக்கதன் - அரக்கன். இராச இராசேசுவரி நாடகம் - 1ஆம் இராச இராசன் காலத்துச் செய்யப் பட்ட ஒரு நூல் (11ஆம் நூ.) இராசக்கிருகம் - அரண்மனை. இராசகேசரி - சோழர் காலத்து அளவு கருவி. இராசசூயம் - வெற்றி வேந்தனாற் செய் யப்படும் ஒரு யாகம். இராசதம் - முக்குணத்தொன்று. இராசதானி - தலைநகர். இராசத்துவம் - அரசுத் தன்மை. இராச பவித்திர பல்லவதரையர் - அவி நயத்துக்கு உரை செய்தவர் (13ஆம் நூ.) இராசபாட்டை - பெருவழி. இராசப்ப கவிராயர் - திரிகூடராசப்ப கவிராயர்; குற்றாலத் தலபுராணம், குறவஞ்சி முதலியன பாடியவர். இராசமண்டலம் - அரசர் சங்கம். இராசரிகம் - அரசாட்சி. இராசன் - அரசன். இராசராசன் - குபேரன், துரியோ தனன், சோழ அரசருள் ஒருவன். இராசாக்கினை - அரச தண்டனை. இராசாங்கம் - அரசாட்சி. இராசாளி - வல்லூறு. இராசான்னம் - ஒருவகை உயர்ந்த நெல். இராசி - கூட்டம், பொருத்தம், வரிசை, சமாதானம், கிரங்கள் நிற்கும் வீடு. இராசியம் - இரகசியம். இராசிலம் - சாரைப் பாம்பு. இராசீகம் - அரசனால் வருவது. இராசீவம் - தாமரைப்பூ. இராச்சசம் - இராக்கதம். இராச்சியம் - அரசாளும் தேசம். இராட்டினம் - நூற்கும் யந்திரம், ஏறி விளையாடுதல் சுழல்தேர். இராணி - அரிசி. இராணுவம் - படை. இராதம் - கடைக்கொள்ளி. இராதை - கிருட்டினன் காதலித்த கோபிகளுள் ஒருத்தி. இராத்தல் - 40 ரூபாய் கொண்ட எடை. இராமபாரதி - ஆத்திசூடிப் புராணம் செய்தவர் (19 ஆம் நூ.) இராமன் - அழகு, நன்மை. இராமலிங்க சுவாமிகள் - அருட்பாப் பாடியவர் (1823 - 1874) இராமன் - தசரதன் மகன். இராமாயணம் - வால்மீகியாற் செய்யப்பட்டது (கி.மு. 6 நூ), கம்பனால் தமிழிற் செய்யப்பட்டது (கி.பி. 12 ஆம் நூ.) இராமானுசக்கவிராயர் - 19ஆம் நூற்றாண்டில் விளங்கிய ஒரு புலவர். இராமானுசர் - ஒரு வைணவ ஆசிரியர் (1097 - 1137) இராமேசுவரம், இராமேச்சுரம் - ஒரு சிவத்தலம். இராயர் - விசய நகர அரசர் பட்டப் பெயர், மராட்டிய மாத்துவப் பிராமணர் பட்டப்பெயர். இராத்திரி - இரவு. இராப்பூ - இரவில் மலரும் ஆம்பல் முதலியன. இராமதூதன் - அனுமான். இராமநாடகம் - கீர்த்தினையால மைந்த இராமாயண நூல் (கி.பி. 1772) இராமபாணம் - ஏட்டுச்சுவடிகளைத் துளைத்துக் கெடுக்கும் ஒரு பூச்சி. இராமம் - அழகு, விரும்பத்தக்கது. இராயன் - அரசன். இராவணம் - அழுகை. இராவணன் - கடவுள், இலங்கை வேந்தன். இராவணப்புல் இராவணன் மீசை - கடற் கரையிலுள்ள ஒரு வகைப் புல். இராவணாசுரம் - ஒருவகை வீணை. இராவுத்தன் - குதிரை வீரன் தமிழ் முகம்மதியருள் ஒரு பிரிவினரின் பட்டப் பெயர். இரிதல் - கெடுதல், ஓடுதல், சாய்தல். இரித்தல் - சாய்தல், கெடுத்தல். இரியல் - அச்சத்தால் நிலை கெடுகை, விரைந்து செய்கை, அழுகை. இரு - பெரிய, கரிய. இருகுருங்கின் கை - முகமுசுக் கைக்கொடி. இருக்கன் - பிரமன். இருக்கு - முதலாம் வேதம், வேதம். இருக்கை - இருக்குமிடம், ஆசனம். இருங்கோவேள் - வேளிர் தலை வருள் ஒருவன். இருங்கோன் ஒல்லையான் செங் கண்ணனார் - சங்க காலப் புலவர். இருசமயவிளக்கம் - அரிதாசரால் செய்யப்பட்ட ஒரு நூல் (16 ஆம் நூ.) இருசி - இருதுவாகுந் தன்மை யில்லாப் பெண். இருசு - மூங்கில், வண்டிச்சு, நேர்மை. இருசுடர் - சந்திர சூரியர். இருடி -முனிவர், ஆந்தை. இருடிகேசன் - விட்டுணு. இருட்சி - இருட்டு. இருணம் - கடன், நீர். இருதயம் - இரத்தாசயம், மனம், மாப்பு. இருதலை - இருமுனை. இருதலை மாணிக்கம் - முத்தி, பஞ்சாட்சரம். இருது - இரண்டு மாதம் கொண்ட பருவ காலம், மகளிர் பூப்பு. இருதுமதி - பருவமடைந்த பெண், தூரமாயிருப்பவள். இருத்தல் - உளதாதல், உட்காருதல், சீவித்தல். இருத்தி - சித்தி, வளர்ச்சி. இருத்து - வயிரங்களுள் ஒன்று. இருத்திவிக்கு, இருத்தினன் - யாக புரோகிதன் இருநிதி - சங்கநிதி, பதுமநிதி இருநிதிக்கிழவன் - குபேரன் இருநிலம் - பூமி இருந்து, இருந்தை - கரி இருந்தையூர் - மதுரையிலுள்ள விட்டுணு ஆலயம் இருந்தையூர் கருங்கோழி - இடைச் சங்கப் புலவருள் ஒருவர் இருந்தையூர்க் கொற்றன் புலவன் - சங்க காலப் புலவன் இருபாஇருபஃது - சித்தாந்த சாத்திரங் களுளொன்று இருபான் - இருபது இருபிறப்பாளன் - பிராமணன் இருபுறவசை - வசை போன்ற வாழ்த்து இருபுறவாழ்த்து - வாழ்த்துப் போன்ற வசை இருபெயரொட்டு - ஆகிய என்னும் பண்புருபு தொக்கு நிற்கப்பெயர்கள் இணைந்து வருவது இருபொருள் - கல்வி, செல்வங்கள் இருபோகம் - இரு விளைவு இருபோது - காலை மாலைகள் இருப்பு - கையிருப்பு இருப்புத் திட்டம் - செலவுநீக்கி மீதி யுள்ள தொகை இருப்புப்பாதை - புகை வண்டிப்பாதை இருப்பெழு - இரும்பினாற் செய்த தாழிடும் கோல் இருப்பை - இலுப்பை மரம் இருமுதுகுரவர் - தாய் தந்தையர் இருமை - இன்மை மறுமை இரும்பன் - அகழெலி இரும்பிடர்த் தலையார் - சங்க காலப் புலவருளொருவர் இரும்பு - கரும்பொன், ஆயுதம் இரும்புள் - மகன்றில். இரும்பொறை - சேரர் பட்டப்பெயர். இருவி - கதிர் கொய்த தினைத்தாள். இருவினை - நல்வினை தீவினை. இருவேரி - வெட்டிவேர். இருளன் - ஒரு சிறு தெய்வம், வேடருள் ஒரு பிரிவினன். இருளி - பன்றி, கருஞ்சீரகம். இருளுவா - அமாவாசை. இருள் - கறுப்பு, மயக்கம். இருள்வலி - சூரியன். இரேகை - எழுத்து, வரி. இரேசகம் - வாயுவை வெளியிடல். இரேசகி - கடுப்பாய். இரேணு - துகள். இரேவண சித்தர் - அகராதி நிகண்டு இயற்றியவர் (16ஆம் நூ.) இரை - உணவு, ஒலி. இரைச்சல் - கூச்சல். இரைதல் - ஒலித்தல். இரைத்தல் - மூச்சு வாங்குதல், ஒலித்தல், சீறுதல். இரைமீட்டல் - அசை போடுதல். இரௌத்திரம் - பெருங்கோபம் இரௌரவம் - ஒரு நகரம். இல - இலவு. இலகடம் - அம்பாரி. இலகரி - கத்தூரி. இலகிமா - எட்டுச் சித்திகளுள் ஒன்று. கனமின்மையாதல். இலகு - இலேசு, சுலபம். இலகுதல் - விளங்குதல். இலக்கணக்கொத்து - சுவாமிநாத தேசிகர் செய்த ஓர் இலக்கண நூல். இலக்கணப்போலி - இலக்கணமுடையது போல் தொன்றுதொட்டு வழங்குஞ் சொல். இலக்கணம் - சிறப்பியல்பு, மொழியைப் பிழையற வழங்கக் கற்பிக்கும் நூல். இலக்கண விளக்கச் சூறாவளி - சிவ ஞான முனிவர் எழுதிய ஒரு நூல் (18ஆம் நூ.) இலக்கண விளக்கம் - வைத்தியநாத தேசிகர் செய்த ஓர் இலக்கண நூல் (17ஆம் நூ.) இலக்கணை - ஒரு பொருளைக் காட்டற்குரிய சொல்லை மற்றொரு பொருட்குத் தந்துரைப்பது. இலக்கம் - பிகாசம், நோக்கம், நூறாயிரம். இலக்கிதம் - குறிக்கப்பட்டது. இலக்கித்தல் - இலக்குக் குறித்தல். இலக்கியம் - ஆன்றோர் நூல். இலக்கினம் - சுபமுகூர்த்தம், இராசி யினுதயம். இலக்கினாதிபதி - இலக்கினத்துக் குடையவன். இலக்கு - குறிப்பொருள், நாடிய பொருள். இலக்குமணன் - இராமன் தம்பி. இலக்குமி - திருமால் தேவி. இலக்குவன் - இலக்குமணன். இலங்கணம் - பட்டினி. இலங்கர் - நங்கூரம். இலங்கித்தல் - குதித்தல். இலங்கிழை - பெண். இலங்குதல் - பிரகாசித்தல். இலங்கை - ஈழ மண்டலம், ஆற்றி டைக் குறை. இலச்சினை - முத்திரை, முத்திரை மோதிரம். இலச்சை - வெட்கம். இலஞ்சம் - கைக்கூலி. இலஞ்சி - வாவி, மகிழமரம், மதில். இலட்சணம் - இலக்கணம். இலட்சம் - நூறாயிரம். இலட்சாதிபதி - பெருஞ்செல்வன். இலட்சியம் - மதிப்பு, குறிக்கோள். இலட்சுமி - இலக்குமி. இலட்டு - சிற்றுண்டிவகை. இலட்டுகம் - மோதகம். இலண்டம் - சிலந்தி. இலத்தி - குதிரை யானைகளின் மலம். இலந்தை - ஒரு மரம். இலபித்தல் - கைகூடுதல். இலம் - வறுமை. இலம்பகம் - நுதலணி; அத்தியாயம். இலம்பம் - தொங்கல். இலம்பாடு - வறுமை. இலம்பு - தொங்குகை. இலம்பை - துன்பம், வறுமை. இலயம் - இரண்டறக் கலக்கை, கூத்து விகற்பம், அழிவு. இலயித்தல் - ஒடுங்குதல், ஐக்கிய மாதல். இல்லாடம் - நெற்றி. இலவங்கம் - கிராம்பு, கருவாமரம். இலவசம் - விலையின்றிப் பெறுவது. இலவணம் - உப்பு. இலவந்திகை - வாவியைச் சூழ்ந்த சோலை, இயந்திர வாவி. இலவம் - இலவங்கம், இரவு பசுவாலின் மயிர். இலவு - இலவமரம். இலாகவம் - சாமர்த்தியம். இலாகிரி - மதுக்களிப்பு. இலாகு - தாங்கல். இலாங்கவி - தெங்கு, செங்காந்தள், கலப்பை. இலாங்கூலம் - வால். இலாச்சி - செருகு பெட்டியினறை. இலாஞ்சனை - அடையாளம், உருத்தோன்ற எழுதிய படம். இலாஞ்சி - எலம். இலாஞ்சினைப்பேறு - பழைய வரி வகை. இலாட சங்கிலி - கழற்றுதற்கரிய பின்னற் சங்கிலி. இலாடம் - ஒரு தேசம், விலங்குகளின் காலுக்கு இடும் இரும்பு, நெற்றி. இலாபம் - ஊதியம். இலாமிச்சை - ஒரு வகை வாசனை வேர். இலாயம் - குதிரைப்பந்தி. இலாலி - மங்கலப்பாட்டு. இலாவணியம் - அழகு. இலி -இல்லாதவன். இலிகிதம் - எழுதப்பட்டது. இலிங்கங்கட்டி - வீரசைவன். இலிங்கசரீரம் - சூக்கும் சரீரம். இலிங்கம் - அடையாளம், சிவலிங்கம், சாதிலிங்கம். இலிங்கி - துறவி. இலிபி - எழுத்து. இலிர்த்தல் - சிலிர்த்தல், தளிர்த்தல். இலிற்றுதல் - சுரத்தல். இலீலை - விளையாட்டு. இலுகை - அணில். இலுப்பை - இருப்பை. இலேகன் - எழுதுவோன். இலேகர் - தேவர். இலேகியம் - மருந்து வகை. இலேசு - நொய்மை, எளிது. இலேபம், இலேபனம் - பூச்சு. இலை - குழை, சக்கரத்தின் ஆர், தகட்டு வடிவம், வெற்றிலை. இலைக்கறி - கீரைக்கறி. இலைச்சினை - இலச்சினை. இலையமுது - வெற்றிலை. இலௌகிகம் - உலக நடை. இல் - மனைவி, இராசி. இல் பொருளுவமை - இல்லாத பொருளை உவமையாகச் சொல்லு வது. இல்லக்கிழத்தி - மனைவி. இல்லம் - வீடு, தேற்றாமரம். இல்லறம் - இல்வாழ்க்கை. இல்லாண்மை - இல்லத்தை ஆளுந் தகைமை. இல்லி - துவாரம். இல்லிடம் - வீடு. இல்லிறத்தல் - பிறன் மனையாளி டத்தில் நெறி கடந்து செல்லுதல். இல்லொடுவரவு - குடிப்பிறப்பு. இவக்காண் - இங்கே. இவண் - இவ்விடம், இம்மை. இவரித்தல் - எதிர்த்தல். இவர், இவர்கள் - இவன், இவள், என்பவைகளின் பன்மைச் சொல். இவர்தல் - உயர்தல், செல்லுதல், விரும்புதல், பாய்தல். இவறல் - உலோபம், பேராசை. இவறன்மை - உலோப குணம். இவுளி - குதிரை. இவுளிமறவன் - குதிரை வீரன். இவை - சுட்டி அறியப்படும் அண்மைப் பொருள்கள். இழத்தல் - தவறவிடல். இழவு - கேடு, ஈமக்கிரியை. இழவூழ் - கேடுதரும் ஊழ்வினை. இழவோலை - சாவை அறிவிக்கும் கடிதம். இழிகை - கை ஈட்டி. இழிசனன், இழிசினன் - புலையன். இழிசொல் - பழிச்சொல். இழிச்சுதல் - இறக்குதல். இழிஞர் - புலையர். இழிதகவு - இழிவு. இழிதல் - இறங்குதல், விழுதல், வெளிப்படுதல். இழித்தல் - நிந்தித்தல், இறக்குதல். இழிவு - தாழ்வு, குறைவு. இழிப்பு - நிந்திக்கை. இழிவழக்கு - இழிசனர் வழக்கு. இழிவு சிறப்பும்மை - இழிவின் மிகுதியை விளக்கும் உம்மை. இழுகுணி - சோம்பேறி. இழுகுதல் - தாமதித்தல். இழுகுபறை - துடிப்பறை. இழக்கடித்தல் - அலைய வைத்தல். இழுக்கு - வழு, வழுக்கு நிலம். இழுது - வெண்ணெய், நெய், குழம்பு, சோறு. இழுதை - அறிவின்மை, பேய். இழுத்தல் - ஈர்த்தல், பின்வாங்கல். இழுபறி - போராட்டம். இழுப்பு - இழுக்கை. இழுமெனல் - இளிமை. இழுவை - இழுக்கை, இழுக்கப் படும் பொருள். இழை - நூல், ஆபரணம். இழைதல் - உள்நெகிழ்தல், கூடுதல். இழைத்தல் - நூற்றல், செய்தல், மெதுவாக்குதல், பதித்துச்செய்தல், விதித்தல், முடைதல், நுண்ணிதாக ஆராய்தல். இழைபு - நூல் வனப்புளொன்று அசைப்பு. இளகுதல் - நெகிழ்தல், களைத்தல். இளக்கம் - நெகிழ்ச்சி. இளக்காரம் - மனநெகிழ்ச்சி. இளங்கு - அசைப்பு. இளங்கதிர் - உதயசூரியன். இளங்கொடி - பெண். இளங்கோ - இளவரசன். இளங்கோவடிகள் - சிலப்பதிகாரம் செய்த நூலாசிரியர் (கி.பி. 2ஆம் நூ.) இளநகை - புன்சிரிப்பு. இளநலம் - இளமை இன்பம். இளநீர் - இளந்தேங்காய். இளந்தலை - இளமைப் பருவம், வறுமை, கீழ்மை. இளந்தாரி - வாலிபன். இளந்திரையம் - இளந்திரையனாற் செய்விக்கப்பட்ட நூல். இளந்தை - வாலிபம். இளப்பம் - தாழ்மை. இளமரக்கர் - வயல் சூழ்ந்த சோலை. இளமை - பாலியம். இளம்பாடியர் - இளம் பெண்கள். இளம்பிறை - பால சந்திரன். இளம்பூரணர் - தொல்காப்பியத்தின் முதல் உரையாசிரியர். இளம்பெருமானடிகள் - சிவபெரு மான் திருமும்மணிக்கோவை செய் தவர். இக்கோவை 11ஆம் திரு முறையிலுள்ளது. இளம்பெருவழுதி - சங்க காலப் புலவர். இளம்போதியார் - சங்க காலப் புலவர். இளவணி - காலாட்படை. இளவரசன் - யுவ அரசன். இளவல் - தம்பி, புதல்வன். இளவெயினனார் - சங்க காலப் புலவர். இளவேட்டனார் - சங்க காலப் புலவர். இளவேனில் - சித்திரை, வைகாசி மாதங்கள். இளாவிருதம் - ஒன்பது கண்டத் தொன்று, இது மேருவைச் சூழ்ந் திருப்பது. இளி - இகழ்ச்சி, சிரிப்பு. இளிதல் - உதிர்தல், இகழப்பட்டு எளியனாதல். இளித்தல் - பல்லைக் காட்டுதல். இளிப்படுதல் - அகப்படுதல். இளிம்பு - கெட்டித்தனமின்மை. இளிவரல் - இழிப்புச் சுவை. இளிவரவு - இகழ்ச்சி, அவமானம். இளிவு - இகழ்ச்சி, இழிந்தன்மை. இளை - காவற்காடு, கட்டுவேலி, பூமி, இளமை. இளைச்சி - தங்கை. இளைஞன் - வாலிபன். இளையது - முதிராதது. இளைத்தல் - சோர்தல், பின்னடைதல். இளைப்படுதல் - வலையிலகப் படுதல். இளைப்பு - சோர்வு. இளையபிள்ளையார் - முருகக் கடவுள். இளையாழ்வார் - இராமானுசர். இளையாள் - தங்கை, இளையதாரம், இலக்குமி. இறகு, இறகர் - சிறுகு, மயிற்பீலி. இறக்கம் - இறங்குகை, சரிவு. இறக்குதல் - இறங்கச் செய்தல், வடித்தல். இறக்குமதி - இறக்கும் துறைமுகச் சரக்கு. இறக்குமதிச்சுங்கவரி - இறக்குமதிப் பொருள்களுக்குள்ள தீர்வை. இறக்கை - சிறகு. இறங்குகுடிக் குன்றநாடன் - சங்க காலப் புலவர். இறங்குதல் - கீழே செல்லுதல், தாழ்ந்து வணங்குதல். இறஞ்சி - ஒருவகை ஆடை. இறடி - தினை. இறத்தல் - கடத்தல், கழிதல், மிகுதல், சாதல். இறந்தகாலம் - சென்றகாலம். இறந்துபடுதல் - சாதல். இறப்ப - மிகவும். இறப்பு - மரணம், மிகுதி, வீட்டிறப்பு, இறந்த காலம். இறலி - இத்தி, மருது. இறல் - கேடு, இறுதி. இறவி - சாவு. இறவு - முடிவு, இறால், தேன்கூடு, கடத்தல். இறவுளர் - குறிஞ்சி நில மக்கள். இறவை - இறை கூடை, ஏணி. இறாஞ்சுதல் - பறவை பறந்து பாய்தல். இறாட்டுதல் - உரைஞ்சுதல். இறால் - மீன்வகை, தேன்கூடு. இறாவுதல் - மயிர்போக மழித்தல். இறுகல் - சுருங்குதல். இறுகால் - ஊழிக்காற்று. இறுகுதல் - கெட்டியாதல். இறுக்கர் - பாலை நிலமக்கள். இறுங்கு - காக்காய்ச் சோளம். இறுதல் - முறிதல், சாதல், கெடுதல். இறுதி - முடிவு. இறுதிச்சொல் - கடைசிச்சொல் (ultimatum) இறுத்தல் - முறிதல், வரி முதலியன கொடுத்தல், விடை சொல்லுதல், வடித்தல், தங்குதல். இறுப்பு - குடியிறை, கடன் செலுத்துகை. இறுமாப்பு - செருக்கு. இறும்பி - எறுப்பு. இறும்பு - குறுங்காடு. இறும்பூது - அதிசயம், தகைமை. இறுவரை - அழியும் காலம், பெரிய மலை. இறுவாய் - முடிவு. இறை - கடவுள், அரசன், தலைவன், வீட்டிறப்பு, அரசிறை, விரல், வரை, அற்பம், முன்கை. இறைச்சி - மாமிசம். இறைச்சிப்பொருள் - புறத்துச் சொல்லும் குறிப்புப் பொருள். இறைஞ்சலர் - பகைவர். இறைஞ்சுதல் - வழிபடுதல், தாழ்தல். இறைத்தல் - நீரை வீசித் தெளித் தல், நீர் பாய்ச்சுதல், செலவிடல். இறைமை - தலைமை. இறைமொழி - மறுமொழி. இறையனார் - இறையனார் களவியல் என் னும் நூல் செய்த சங்க காலப்புலவர். இறையிலி - வரி நீக்கப்பட்ட நிலம். இறைவணக்கம் - அரசனுக்கு அல்லது பிரபுவுக்குக் காட்டும் கீழ்ப்படிவு. இறைவன் - கடவுள், தலைவன். இறைவி - துர்க்கை, தலைவி. இறைவை - இறைகூடை, ஏணி. இற்கடை - வீட்டுவாயில். இற்கிழத்தி - மனையாள். இற்செறித்தல் - வீட்டில் இருத்துதல். இற்பரத்தை - வைப்பாட்டியாகக் கொண்ட பரத்தை. இற்பாலர் - நற்குடிப் பிறந்தவர். இற்பிறப்பு - உயர்குடிப் பிறப்பு. இற்புலி - பூனை. இற்றி - இத்தி (ஒருவகை மரம்) இற்று - இத்தன்மையுள்ளது. இற்றுப்போதல் - நைந்து போதல். இற்றை - இன்று. இனஞ்சனம் - உற்றார் உறவினர். இனம் - வருக்கம், சுற்றம், துணை யாகச் சேரும் கூட்டம், நிரை. இனவரிக்காசு - ஒரு பழையவரி. இனவழிக்கணக்கு - பேரேடு. இனவாரி - இனமினமாய். இனன் - சூரியன். இனாப்பித்தல் - துன்பமுண்டாக் குதல். இனாம் - மானியம். இனாம்தார் - மானியபூமிக்குரியவன். இனி - இப்போது, இனிமேல், இப் பால். இனிசந்தநாகனார் - சங்க காலப் புலவர். இனிது - இன்பந்தருவது, நன்மை யானது. இனிப்பு - தித்திப்பு, மகிழ்ச்சி. இனிமேல் - இதற்குப் பின். இனிமை - தித்திப்பு, இன்பம். இனியர் - மகளிர், இனிமை தருபவர். இனியவைநாற்பது - பதினெண் கீழ்க் கணக்குளொன்று. இனை - இன்ன. இனைதல் - வருந்துதல், இரங்குதல், அஞ்சுதல். இனைத்தல் - வருத்துதல், கெடுத் தல். இனைத்து - இத்தன்மைத்து. இனைவரல் - வருந்துதல். இனைவு - வருத்தம், இரக்கம். இன் - இனிய. இன்கண் - இன்பம், கண்ணோட்டம். இன்கவி - மதுரகவி. இன்பக்கொடி - காமவல்லி. இன்பசாரம் - ஒரு காமநூல். இன்பம் - அகமகிழ்ச்சி, கலியாணம். இன்பன் - கணவன். இன்பு - இன்பம். இன்புறவு - மகிழ்வு. இன்னம் - இல்லாமை, வறுமை. இன்றிய - இல்லாத. இன்றியமையாமை - தானில்லாமல் முடியாமை. இன்று - இந்நாள், ஓர் அசைச்சொல். இன்றைக்கு - இன்று. இன்ன - இத்தன்மையான. இன்னணம் - இவ்வாறு. இன்னம் - இன்னும். இன்னயம் - உபசார வார்த்தை. இன்னர் - உற்பாதம். இன்னல் - துன்பம். இன்னன் - இன்னான். இன்னா - தீங்கு தருபவை. இன்னாங்கு - துன்பம், கடுஞ்சொல். இன்னாது - தீது, துன்பு. இன்னாநாற்பது - பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுளொன்று. இன்னாப்பு - துன்பம். இன்னாமை - துன்பம். இன்னாரினியார் - பகைவர் நண்பர். இன்னாலை - இலைக்கள்ளி. இன்னான் - இத்தன்மையன், துன் பஞ் செய்பவன். இன்னிசை - இன்பவோசை. இன்னிசைக்காரர் - பாணர். இன்னிசை வெண்பா - நான்கடி யாய்த்தனிச் சீரின்றி வரும் வெண்பா. இன்னினி - இப்பொழுதே. இன்னும் - மறுபடியும், இவ்வளவு காலம் சென்றும், அன்றியும், மேலும். இன்னுழி - இன்ன இடத்து. இன்னே - இப்பொழுதே, இவ் விடத்தே, இவ்விதமாகவே. ஈ ஈ - தேனீ, வண்டு, அழிவு. ஈகம் - சந்தனமரம். ஈகை - கொடை, பொன், இண்டங் கொடி, காடை. ஈங்கண் - இவ்விடம். ஈங்ஙனம், ஈங்கன் - இவ்வாறு. ஈங்கிசை - உபத்திரவம், கொலை. ஈங்கு - இவ்விடம். ஈங்கை - இண்டங்கொடி. ஈசத்துவம் - அட்டமாசித்திகளுள் ஒன்று. ஈசல் - ஈயல், செட்டை முளைத்த கறையான். ஈசன் - இறைவன், அரசன், குரு, மூத்தோன், பச்சைக் கருப்பூரம். ஈசன் மைந்தன் - விநாயகர், முருகன், வீரபத்திரர். ஈசான்றார் - கொன்றை. ஈசன்றினம் - திருவாதிரை. ஈசானதிசை - வடகீழ்த்திசை. ஈசானதேசிகர் - சுவாமிநாத தேசிகர் (17ஆம் நூ.) ஈசானம் - சிவன் ஐம்முகங்களுள் ஒன்று, வடகீழ்த்திசை. ஈசானன் - சிவன். ஈசானியம் - வடகீழ்த்திசை. ஈசி - ஓர் இகழ்ச்சிக் குறிப்பு. ஈசுரபாரதியார் - பல்பொருட் சூடா மணி நிகண்டு பாடியவர் (17ம் நூ.) ஈசுரம் - ஈச்சுரம். ஈசுரவிந்து - பாதரசம். ஈசுவர - வருடம். ஈசுவரன் - சிவன், தலைவன். ஈசுவரார்ப்பணம் - கடவுளுக்கு உரிதாக்குகை. ஈசுவரி - பார்வதி. ஈசுவரிநாதம் - கந்தகம். ஈச்சுரன் - கடவுள். ஈஞ்சு - ஈந்து. ஈஞ்சை - கொலை, நிந்தை. ஈடகம் - மனத்தைக் கவருவது. ஈடணை - ஆசை. ஈடழிதல் - வலிமை பெருமைகள் கெடுதல். ஈடறவு - பெருமைக்கேடு. ஈடன் - வலியோன். ஈடாட்டம் - நெகிழ்ச்சி, ஈனநிலை. ஈடாதண்டம் - ஏர்க்கால். ஈடு - இடுகை, நிகர், அடைமானம், நிலைமை, மனவருத்தம், கவசம், திருவாய்மொழி உரை. ஈடுகொள்ளுதல் - மனங்கசிதல். ஈடுபடுதல் - வலியழிதல், அகப் படுதல், மனம் அழுந்துதல், துன்பப் படுதல். ஈடேற்றம் - உய்வு. ஈட்டம் - கூட்டம், தேட்டம், மிகுதி, வலிமை. ஈட்டல் - சம்பாதித்தல். ஈட்டி - குந்தம். ஈண்டு - இவ்விடத்தில், இம்மையில். ஈண்டுதல் - கூடுதல், செறிதல், மிகுதல், விரைந்து செல்லுதல், தோண்டுதல். ஈண்டுநீர் - கடல். ஈண்டென - விரைவாக. ஈண்டை - இங்கு. ஈதா - இந்தா. ஈதி - நாட்டுக்கு வருங்கேடு. ஈது - இது. ஈதை - துன்பம். ஈந்து - ஈஞ்சு. ஈப்பிணி - உலோபி. ஈப்புலி - ஒரு வகைச் சிலந்தி, நாய்ப் புலி விளையாட்டு. ஈமக்கடன் - பிரேதக் கிரியை. ஈமத்தாழி - முதுமக்கட்டாழி, இறந்த வரை வைத்துப் புதைக்கும் பானை. ஈமம் - சுடுகாடு, பிணஞ் சுடுதற்கு அடுக்கும் விறகடுக்கு, பாதிரி. ஈமவனம் - சுடுகாடு. ஈம் - சுடுகாடு. ஈயம் - வெள்ளியம். ஈயல் - சிறகு முளைத்த கறையான். ஈயன் மூதாய் - தம்பலப்பூச்சி. ஈயோட்டி - ஈயை ஓட்டும் கருவி. ஈரங்கொல்லி - வண்ணான். ஈரணி - நீராடும்போது மகளிர் அணியும் உடை. ஈரணை - இரண்டு சோடி. ஈரப்பலார் - ஆசினி. ஈரம் - நீர்ப்பற்று, பசுமை, குளிர்ச்சி, தயை, அறிவு. ஈரலித்தல் - ஈரமாதல். ஈரல் - வருத்துதல், கல்லீரல். ஈரவன் - சந்திரன். ஈரவெண்காயம் - ஈருள்ளி. ஈரற்குலை - ஈரலின் கொத்து. ஈரற்பித்து - பித்தநீர் தங்குமிடம். ஈரறிவுயில் - சங்கு, நந்தை முதலியன. ஈரான் - பாரசீகம். ஈரி - மகளிர் விளையாட்டிலொன்று, கந்தை, பலாக்காய்த் தும்பு. ஈரித்தல் - குளிர்தல், ஈரமாதல். ஈரிப்பு - சிரேகம். ஈரிய - குளிர்ந்த, அன்புடைய. ஈருயிர்பிணவு - சூற்கொண்ட நாய். ஈருள் - ஈரல். ஈருள்ளி - உள்ளி வகை. ஈரொட்டு - நிச்சியமின்மை. ஈர் - நுண்மை, பேன்முட்டை, ஈர்க்கு, இறகு, ஈரம், நெய்ப்பு, கரும்பு, இரண்டு. ஈர்கொல்லி - ஈர்வலி. ஈழத்துப் பூதந்தேவனார் - சங்க காலப் புலவர். ஈர்க்கில், ஈர்க்கு - ஒலை நரம்பு, அம்பி னிறகு. ஈர்ங்கை - உண்டு கழுவிய கை. ஈர்தல் - அறுத்தல், இழுக்கப்படுதல். ஈர்ங்கதிர் - சந்திரன். ஈர்த்தல் - இழுத்தல், உரித்தல், எழுதுதல். ஈர்ந்தமிழ் - இனியதமிழ். ஈர்ப்பி - ஈர். ஈர்ப்பு - இழுப்பு. ஈர்மை - நுண்மை, வருத்தம். ஈர்வடம் - பனையீர்க்குக் கயிறு. ஈர்வலி - ஈர்வாங்குக் கருவி. ஈர்வாணி - பனை ஈர்க்கும் கயிறு. ஈர்வாள் - மரமறுக்கும் வாள். ஈவித்தல் - பங்கிடுதல். ஈவிரக்கம் - மனக்கசிவு. ஈவு - கொடை, பங்கிடுகை, ஒழிவு, கணக்கிற் பிரித்துக்கண்ட பேறு. ஈழதண்டம் - ஏர்க்கால். ஈழநாடு, ஈழமண்டலம் - இலங்கை. ஈழம் - இலங்கை, பொன், கள்ளி, கள். ஈழவன், ஈழுவன் - மலையாளத் தில் கள்ளிறக்கும் சாதியார். ஈளை - கோழை, தொய்வு. ஈளைத்தரை - ஈரத்தரை. ஈறல் - துக்கம், நெருக்கம். ஈறிலான், ஈறிலி - கடவுள். ஈறாந்தம் - ஆகமுடிவு. ஈறு - அந்தம், மரணம், பல்நிற்கும் தசை. ஈற்றம் - ஈனுகை. ஈற்றயல் - இறுதிக்கடுத்த. ஈற்று - ஈனுகை. ஈற்றுளைதல் - பிரசவ வேதனைப் படுதல். ஈனசாதி - இழிந்த சாதி. ஈனசுரம் - தாழ்ந்த ஓசை. ஈனதை - இழிவு. ஈனம் - இழிவு, குறைபாடு, கதிர். ஈனவன், ஈனன் - இழிந்தோன். ஈனனன் - வெள்ளி. ஈனுதல் - பெறுதல், குலைவிடுதல், தருதல். ஈனை - இலை நரம்பு. ஈனோர் - இவ்வுலகத்தோர். ஈன் - கருவுயிர்த்தல், உண்டாக்குதல். ஈன்றணிமை - புனிறு, ஈன்று, அண்மை. ஈன்றாள் - தாய். உ உ - ஒரு சுட்டு, சிவசக்தி, சிவன், வியப்பு. உகத்தல் - மகிழ்தல், உயர்தல், விரும்புதல். உகப்பு - உயர்ச்சி, மகிழ்ச்சி, விருப்பம். உகம் - ஊழி, இணை, நுகம், பாம்பு, பூமி. உகலுதல் - தாவுதல். உகவை - மகிழ்ச்சி. உகளம் - இளை, கோடி. உகளித்தல் - குதித்தல், மகிழ்ச்சி மிகுதல். உகளுதல் - தாவுதல், ஓடித் திரிதல். உகா, உகாய் - ஓமை மரம். உகாந்தம் - ஊழி முடிவு. உகாரவுப்பு - கல்லுப்பு. உகாய்க்குடிகிழார் - சங்காலப் புலவர். உகில் - நகம். உகிர்நிலைப் பாசம் - சுட்டு விரலும் பெருவிரலும் உகிர்நுனை கல்வி நிற்பது. உகின், உகினம் - புளிமா. உகுதல் - உதிர்தல், சிதறுதல், சுரத்தல், உருகுதல், படுதல், பறத்தல், நிலை குலைதல். ஊகுத்துல் - சிதறுதல், உதிர்த்தல், வெளி யிடல், சிந்துதல். உகுணம் - மூட்டுப் பூச்சி. உகுவு - சிந்துகை. உகைதல் - செல்லுதல். உகைத்தல் - செலுத்துதல், எழுப் புதல், பதித்தல், எழுதல், உயர எழுதல். உக்கம் - இடை, பேரால வட்டம், நெருப்பு, எருது, தலை. உக்கல் - பதனழிவு, உளுத்தது. உக்கலை, உக்களை - நாரி, ஒக் கலை. உக்கலம் - சாமக்காவல், பாளையம் சூழ் கழி. உக்களி - பணிகார வகை. உக்கா - கஞ்சா முதலியவற்றின் புகை குடிக்கும் கருவி. உக்காரம் - வாந்தி பண்ணுகை, சத்தமிடுகை. உக்காரி - சிற்றுண்டிவகை. உக்கி - தோப்புக்கரணம். உக்கிடர் - சிலந்திப்பூச்சி. உக்கிரகந்தம் - பெருங்காயம், வெள்ளைப்பூண்டு, வேம்பு, கரு வேம்பு. உக்கிரநட்சத்திரம் - புதன் நின்ற நாளுக்குப் பதினெட்டாம் நாளும், இருபத்து நான்காம் நாளும். உக்கிரப்பெருவழுதி - சங்கத்திறுதிப் பாண்டியன். உக்கிரம் - கொடுமை, ஊக்க மிகுதி, தலைக்காவல், இலாமிச்சை, கீதவுறப் புக்களுளொன்று. உக்கிரன் - வீரபத்திரன். உக்கிராணம் - வீட்டுக் களஞ்சிய அறை. உக்கிராந்தி - மரண காலத்திற் செய் யும் பசுத்தானம். உக்கிரை - ஏழாஞ் சுரத்தின் பேதங் களுள் ஒன்று. உக்குதல் - மக்கிப் போதல். உக்குமம் - தூண்டுகை. உங்கண் - உவ்விடம். உங்கரித்தல் - உம்மென்றொலித்தல். உங்காரம் - அச்சுறுத்தும் தொனி. உங்கு - உவ்விடம். உங்குணி - பெருங்கிளிஞ்சில். உங்கை - உன்தங்கை. உங்ஙன், உங்ஙனம் - உவ்வாறு, உவ்விடம். உசம் - நகரம். உசரிதம் - நெருஞ்சி. உசவு - யந்திரங்கட்கு ஊட்டும் கரியு மெண்ணெயும் சேர்ந்த கூட்டு. உதவுதல் - ஆலோசித்தல். உசனன் - வெள்ளிக்கிரகம். உசா - ஆராய்ச்சி, ஒற்றன். உசாதல் - வினாவுதல். உசாக்கையர் - ஆலோசனை செய்வோர். உசாத்துணை - உற்றதுணை. உசாதேவி - சூரியன் மனைவி. உசிதம் - தகுதி, மேன்மை. உசிதன் - பாண்டியன். உசிப்பித்தல் - சேர்த்தல். உசீரம் - இலாமிச்சைவேர். உசு - ஒருவகைப் புழு. உசுப்புதல் - எழுப்புதல். உசும்புதல் - எழும்புதல். உச்சத்தானம் - கிரகத்தின் உயர்நிலை. உச்சந்தலை - தலையினுச்சி. உச்சம் - உயரம், சிறப்பு, தலைக்கு நேரிடம். உச்சயினி - ஓர் நகரம். உச்சரித்தல் - செபித்தல், ஓசையால் எழுத்துக்களைப் பிறப்பித்தல். உச்சவம் - விழா. உச்சவீடு - உச்சராசி. உச்சாகம் - மனவெழுச்சி. உச்சாடனம் - பேய் முதலியவற்றை ஏவுகை. உச்சாணி - உயரம். உச்சாயம் - உயர்வு. உச்சாரணம் - உச்சரிப்பு. உச்சி - நடுப்பகல், முகட்டிடம், தலை. உச்சிகிழான் - சூரியன். உச்சிக்குளிர்தல் - மகிழ்வடைதல். உச்சிட்டம் - எச்சில், சேடம். உச்சிதம் - உசிதம், நெருஞ்சி. உச்சித்தம் - அபிநய வகை. உச்சித்திலகம் - செம்மலருள்ள ஒருவகைப் பூஞ்செடி. உச்சிப்பிறை - பரவ மகளிரணியுந் தலையணி வகை. உச்சிப்பூ - குழந்தைகளின் தலையணி வகை. உச்சிமோத்தல் - உச்சந் தலையை மோந்து அன்பு பாராட்டல். உச்சியார் - தேவர். உச்சிவேர் - ஆணிவேர். உச்சிவனம் - உய்கை, பிழைப்பு. உச்சிவாசம் - மூச்சை உள்வாங்குதல். உஞற்று - உற்சாகம், முயற்சி. உஞற்றுதல் - முயலுதல், செய்தல். உஞ்சல் - ஊஞ்சல். உஞ்சவிருத்தி - அரிசிப் பிச்சை யெடுத்துச் செய்யும் சிவனம். உஞ்சை - உஞ்சயினி. உடக்குதல் - பிரயோகித்தல், நாணிற் செறித்தல். உடங்கு - பக்கம், ஒத்து, சேர, உடனே. உடசம் - பன்னசாலை, வெட்டாப் பாலை. உடந்தை - சேர்க்கை, துணை, உறவு. உடம்படிக்கை - உடன்படிக்கை. உடம்படுதல் - உடன்படுதல். உடம்படுமெய் - நிலைமொழி யீற்றிலும் வருமொழி முதலிலும் இரண்டு உயிர் எழுத்துக்களைச் சேர்க்கும் உயிர் எழுத்து. உடம்பாடு - சம்மதம். உடம்பிடி - வேல். உடம்பு - சரீரம், மெய்யெழுத்து. உடம்புக்கீடு - கவசம். உடம்பை - கலங்கற்புனல். உடர் - உடல். உடலுதல் - கோபங் கொள்ளுதல், மாறுபடுதல், போர் புரிதல், வருத் துதல். உடலக்கண்ணன் - இந்திரன். உடலம் - உடல். உடல்வருத்தனை - மெய்யாற் செய்யும் அபிநயம். உடலிருந்த வீடு - சீவன் முத்தி. உடலுநர் - பகைவர். உடல் - உடம்பு, மெய்யெழுத்து, பொருள், மாறுபாடு. உடல்வினை - பிரார்த்த கருமம். உடறுதல் - சினத்தல். உடற்கரித்தல் - தோள் தட்டுதல். உடற்கருவி - கவசம். உடற்காப்பு, உடற்காவல் - கவசம். உடற்குறைப்பு - கவந்தம், தலை அறுந்த உடல். உடற்சி - கோபம். உடற்றல் - பெருஞ்சினம். உடற்றுதல் - வருத்துதல், சினமூட்டுதல், பிரயோகித்தல், கெடுத்தல். உடனாதல் - கூடி நிற்றல். உடனிகழ்ச்சி - ஒருங்கு சம்பவிக்கை. உடனிலை - கூடியிருக்கை, உடனிருந்த இருவரைப் பாடும் ஒரு புறத்துறை. உடனிலைச்சிலேடை - ஒரு பாட்டு நேரே வரும் பொருளேயன்றி வேறு மொரு பொருள் கொண்டு நிற்கும் அணி. உடனுறைவு - புணர்ச்சி. உடனே - தாமதமின்றி. உடன் - ஒக்க, ஒரு சேர, அப்பொழுது. உடன்கட்டை ஏறுதல் - கணவனோடு கூட இறத்தல். உடன்கூட்டத்ததிகாரி - சோழர் காலத்துக் கிராமசபைத் தலைவர். உடன்கேடன் - கூடவே துக்கம் அனுப விப்போன். உடன்கையில் - உடனே. உடன்படிக்கை - ஒப்பந்தம். உடன்படுதல் - இசைதல். உடன்பாட்டுவினை - விதிவினை, உடன்பாட்டை உணர்த்தும் வினை. உடன்பிறந்தார் - கூடப் பிறந்தவர். உடன்போக்கு - பெற்றோரறியாமல் தலைவி தலைவனுடன் செல்கை. உடன்றல் - போர். உடன்று - கோபித்து. உடாய்த்தல் - எதிர்த்தல், ஏமாற்றுதல். உடு - அகழி, நட்சத்திரம், ஆடு, அம்பு நாணைக் கொள்ளுமிடம், அம்பி னிற்கு, அம்புத்தலை, ஒடம் இயக்கும் கோல். உடக்கு - உடுக்கை, தமருகம் என்னும் பறை. உடக்கை - உடை, இடை சுருங்கு பறை. உடுக்கோன் - சந்திரன். உடுத்தல் - ஆடை முதலியன தரித்தல். உடுத்துதல் - ஆடை அணிவித்தல். உடுபதம் - ஆகாயம். உடுபதி - சந்திரன். உடுப்பி - தென் கன்னட மாவட்ட மும் தாலுகாப் பட்டினமும். உடுப்பு - ஆடை, அங்கி முதலியன. உடுமலைப்பேட்டை - கோயம்புத்தூர் மாவட்டத்தின் தாலுகாவும் தாலுகாத் தலை நகரும். உடும்பு - பல்லி வகை. உடுவம் - அம்பின் ஈர்க்கு. உடுவை - நீர்நிலை, அகழி. உடை - உடைவேல் மரம், சூரியன் மனைவி, உடுப்பு. உடைகுளம் - பூராடம். உடைக்கல் - காவிக்கல். உடைதல் - தகர்தல், மலர்தல், தோற்றோடுதல், மனங்குலைதல், சாதல், கெடுதல், உலைதல். உடைதாரம் - அரையிலணியும் உடை விசேடம். உடைத்தல் - தகர்த்தல், பிளத்தல், வெளிப்படுத்துதல், அழித்தல், வருத்துதல். உடைநாண் - உடைமேல் தரிக்கும் நாண். உடைப்பு - உடைகை. உடைமணி - குழந்தைகளின், அரைமணி. உடைமை - உடையனாந் தன்மை, செல்வம். உடையவர் - கடவுளர், ஆன்மார்த்த லிங்கம். உடையவன் - உரியவன். உடையார் - சுவாமி, சிலசாதியாரின் பட்டப்பெயர், செல்வர். உடையார்சாலை - கோயில், அன்ன சாலை. உடையான் - சுவாமி. உடைவாரம் - மொத்த விளைவு. உடைவாள் - உடையில் செருகும் சிறியவாள். உடைவு - தகர்கை, தளர்வு. உட்கட்டு - வீட்டின் உட்பகுதி, பரதவச் சிறுமியர் குழந்தைப் பருவத்தில் அணியும் சிறு தாலி. உட்கண் - ஞானம். உட்கரணம் - அந்தக் கரணம். உட்கரு - அடங்கியிருக்கும் பொருள். உட்கார் - பகைவர். உட்கார்தல் - இருத்தல். உட்கிடக்கை - உட்கருத்து. உட்கிடை - பெருங் கிராமத்துள் அடங்கிய சிறு கிராமம், உட்கருத்து. உட்கு - அச்சம், நாணம், மிடுக்கு, மதிப்பு. உட்குதல் - அஞ்சுதல், நாணுதல், மடிதல். உட்கை - உள்ளங்கை. உட்கொள்ளுதல் - உண்ணுதல், உள்ளிழுத்தல். உட்கோட்டம் - மனக்கோணல். உட்கோள் - உட்கருத்து, ஓர் அலங் காரம். உட்சமயம் - வைரவம், வாமம், காளமுகம், மாவிரதம், பாசுபதம், சைவம். உடசாத்து - அரைக்கச்சை. உட்சுவாசம் - மூச்சை உள்ளே இழுத்தல். உட்சொல் - நெஞ்சொடு கூறல். உட்டணம் - வெப்பம். உட்டினீடம் - தலைப்பாகை. உட்டீனம் - பறவைகளின் கதி விசேடங்களுள் ஒன்று. உட்டை - விளையாட்டுக்காய். உட்பகை - நட்புப் பாராட்டிக் கெடுக்கும் பகை. உட்பட - உள்ளாக. உட்படுதல் - கிழாதல், அகப்படுதல், உடன்படுதல், சேர்தல். உட்படுத்தல் - உள்ளாக்குதல். உட்பொருள் - உண்மைக் கருத்து, மறைபொருள். உண - உணவு. உணக்கம் - வாட்டம். உணக்கு - வாட்டு. உணக்குதல் - உலர்த்துதல், கெடுத்தல். உணங்கல் - உலர்த்திய தானியம், வற்றல், உலர்ந்த பூ. உணங்குதல் - உலர்தல், மெலிதல், வாடுதல், சுருங்குதல், செயலறுதல். உணர்துதல் - வற்றுவித்தல். உணப்பாடு - உண்ணப்படுகை. உணராமை - அறியாமை, மயக்கம். உணர்ச்சி - மனம், உணர்கை, அறிவு. உணர்ச்சி நீக்கம் - நோயாளிக்குச் சத்திர சிகிச்சை செய்வதற்கு உணர்ச்சி இல்லாமல் செய்தல் (anaesthesia) உணர்தல் - அறிதல், கருதுதல், ஆராய்தல், அனுபவித்தல், பாவித் தல், துயிலெழுதல், ஊடல் நீங்குதல். உணர்த்துதல் - அறிவித்தல், துயிலெழுப்புதல், நினைப்பூட்டுதல், உடல் தீர்த்தல். உணர்ப்பு - தெளிவிக்கப்படுகை. உணர்வு - அறிவு, தெளிவு, ஆன்மா. உணவு - ஆகாரம், சோறு. உணா - உண்ணப்படுவது. உணி - நீருண்ணுங் குளம். உண்கண் - மை எழுதியகண். உண்கலம் - உணவு கொள்ளும் பாத்திரம். உண்டறுத்தல் - அனுபவித்து முடிதல், நன்றி மறத்தல். உண்டாக - காலம் பெற, மிகுதியாக உண்டாக்குதல் - விளைவித்தல், ஆக்குதல், வளர்த்தல். உண்டாதல் - உளதாதல், விளைதல், செல்வச் செழிப்பாதல், நிலையாதல். உண்டாட்டம் - விளையாட்டு. உண்டாட்டு - கள்ளுண்டு மகிழ்கை. உண்டி - உணவு, சோறு, நுகர்ச்சி, காணிக்கைக்கலம், மாற்றுச் சீட்டு. உண்டிகை - காணிக்கைக் கலம், கூட்டம். உண்டியல் - காணிக்கைப் பெட்டி. உண்டை - வில்லுண்டை, கவளம், தாயமாடு கருவி, குறுக்கிழை, படை வகுப்பு, கூட்டம். உண்ணாட்டம் - ஆராய்ச்சி. உண்ணி - இரத்தம் உண்ணும் பூச்சி. உண்ணீர்மை - உண்ணத்தின் தன்மை. உண்ணுதல் - சாப்பிடுதல், உட் கொள்ளுதல். உண்ணோக்கம் - ஒத்தல், கவர்தல், இசைவாதம், தியானம். உண்மை - உள்ளது. உதகக்கிரியை - தர்ப்பணஞ் செய்கை. உதகம் - நீர், பூமி. உதகமண்டலம் - நீலகிரி மாவட் டத்தின் தலைநகரம். உதகாரணம் - உதைத்து அழுத்துகை. உதகரித்தல் - எடுத்துக் காட்டுக் கூறுதல். உதகான்னம் - நீரும் சோறும். உதடு - வாயிதழ். உதணம், உதண் - மொட்டு வடிவான அம்பு. உததி - கடல். உதப்புதல் - கடிந்து பேசுதல், இகழ்ந்து நீக்குதல். உதயகுமரன் - நெடுமுடிக் கிள்ளியின் மகன். உதயணன் - பெருங்கதையின் கதாநாயகன். உதயம் - தோற்றம், உதயகிரி விடியல். உதயராகம் - காலைப் பண். உதயராசி - பிறக்கும்போது உதயமாயுள்ள இராசி. உதயன் - சூரியன். உதயாதிபன் - சூரியன், ஆளும் கிரகம். உதரபந்தம், உதரபந்தனம் - அரைப்பட்டிகை. உதரம் - வயிறு. உதராக்கினி - பசி. உதவகன் - நெருப்பு, கொடுவேலி. உதவடுத்தல் - உபகாரஞ் செய்தல். உதவல் - கொடுத்தல். உதவி - சகாயம், கொடை. உதவுதல் - கொடுத்தல், துணை செய்தல், தடுத்து நிற்றல், சொல்லுதல். உதளிப்பனை - கூந்தற்பனை. உதளை - காட்டலரி. உதள் - ஆட்டுக்கடா, மேடராசி. உதறுதல் - விலக்குதல், நடுங்குதல், உதைத்துத் தள்ளுதல். உதாசனன் - அக்கினி, நிந்திப்பவன். உதாசனி - கொடியவள். உதாசீனம் - இகழ்வு, விருப்பு வெறுப்பின்மை. உதாத்தம் - எடுத்தலோசை. உதாரணம் - எடுத்துக்காட்டு, மேற் கோள். உதாரதை - கொடை. உதாரம் - கொடை, மேம்பாடு. உதானன் - தசவாயுக்களுள் ஒன்று. உதி - உலைத்துருத்தி, ஒதி, வித்தை, கல்வி. உதிட்டிரன் - தருமபுத்திரன். உதிதன் - தோன்றினவன். உதித்தல் - உதயமாதல், தோன்றுதல், பிறத்தல், பருத்தல். உதிப்பு - தோற்றம், ஞானம். உதியஞ்சேரல் - பழைய சேரருள் ஒருவன். உதியன் - சேரன். உதிரம் - இரத்தம். உதிரல் - உதிர்ந்த பூ. உதிரன் - செவ்வாய். உதிரி - அம்மைநோய், உதிர்ந்த நெல், பிட்டு, சிறுகீரை. உதிர் - துகள். உதிர்தல் - கீழ்விழுதல், குலைதல், சிந்தல். உதிர்த்தல் - வீழ்த்துதல், உதறுதல். உதீசி - வடக்கு. உதீசித்தேவர் - திருக்கலம்பகம் என்னும் நூல் செய்த சமணப் புலவர். உது - சேய்மைக்கும் அண்மைக்கும் மத்திபமானதைக் குறிக்கும் ஒரு சுட்டுப் பெயர். உதும்பரம் - செம்பு, வாயிற்படி, செவ்வந்தி, எருக்கு. உதை - காலால் எற்று. உதைகால் - முட்டுக்கால். உதைசுவர் - சுவரின் பலத்துக்காக இடப்படும் சுவர் (But tress) உதைதல் - காலால் எற்றுதல். உதைத்தல் - காலாலெற்றுதல், செலுத்துதல். உதைப்பொழுது - நொடிப்பொழுது. உதைப்பு - தாக்குகை, திகில். உதோளி - உவ்விடம். உத்கிருட்டம் - சிறந்தது. உத்தண்டம் - உக்கிரம், இறுமாப்பு. உத்தமம் - முதன்மை, நன்மை. உத்தமோத்தமம் - மிகுநன்மை. உத்தரகுரு - போக பூமி. உத்தரக்கிரியை - இறந்தபின் செய்யும் கிரியை. உத்தரகோசமங்கை - இராமநாத புரம் மாவட்டத்திலுள்ள ஒரு சிவத் தலம். உத்திரட்டாதி - 26வது நட்சத்திரம். உத்திரப்பிரதேசம் - ஆக்ரா அயோத்தி சேர்ந்த ஐக்கிய மாகாணம். உத்தரம் - மறுமொழி, வடக்கு, பின் நிகழ்வது, எதிர்வாதம். உத்தரவாதம் - பொறுப்பு, எதிர்வாதம். உத்தரவு - கட்டளை. உத்தராசங்கம் - மேற்போர்வை. உத்தராயணம் - சூரியன் வடக்கு நோக்கிச் செல்லும் காலம். உத்தரிகம், உத்தரீகம், உத்தரீயம் - மேற்போர்வை. உத்தாரணம் - நிலை நிறுத்துகை, தீங்கினின்றும் மீட்கை. உத்தாள துவாதசி - சாந்திரமான முறையில் கார்த்திகை மாத வளர்பிறை துவதேசியன்ற வரும் இந்துக்களின் விரதம். உத்தி - யுக்தி, தந்திரம், கருதலளவை, பாம்பின் படப்பொறி, தேமல், சேர்க்கை, சீதேவி என்னும் தலைக் கோலம். உத்தியானம், உத்தியானவனம் - பூந்தோட்டம், அரசர் விளையாடும் சோலை. உத்தியோகம் - வேலை, முயற்சி. உத்திரம் - விட்டம். உத்துதல் - கழித்தல். உத்தூளனம் - திருநீறு பூசுதல். உத்தேசம் - மதிப்பு, நேரம், ஏறக்குறைய. உந்த - உங்கேயுள்ள. உந்தம் - ஒரு பொருளின் நிறையையும் நேர் வேகத்தையும் கணிப்பது (momentum) உந்தல் - யாழ் நரம்பு தடவுதல், உயர்ச்சி. உந்தி - கொப்பூழ், வயிறு, நீர்ச்சுழி, நதி, யாற்றிடைக்குறை, நீர், கடல், தேரின் உருளை, தேர்த்தட்டு, யாழ்ப்பத்தல், நடு, உயர்ச்சி, ஓர் மகளிர் விளை யாட்டு. உந்திச்சுடு - கொப்பூச்சுழி. உந்திடம் - உவ்விடம். உந்திநாளம் - கொப்பூழ்க் கொடி. உந்திபறத்தல் - பெண்கள் வடி உந்தி விளையாட்டாடுதல். உந்திபூத்தோன் - திருமால். உந்தியில் வந்தோன் - பிரமன். உந்து - பெயரெச்ச விகுதியாகிய உம்மின் திரிபு. உந்துதல் - தள்ளுதல், வீசி எறிதல், அம்பு முதலியன பிரயோகித்தல், செலுத்துதல், யாழ்நரம்பு தெறித்தல், எழும்புதல், பெருகுதல், செல்லுதல், பொருந்துதல். உப - சமீபம் பிரதானமின்மை என் பவைகளைக் காட்டுமோர் வட மொழி முதனினை. உபகதை - கிளைக்கதை, கட்டுக் கதை. உபகரணம் - துணைப் பொருள்கள், உதவி. உபகரித்தல் - உதவுதல். உபகற்பம் - உதவி, கொடை, காணிக்கை. உபகாரி - உதவி செய்வோன். உபகிருதன் - காணிக்கையாக வந்தவன். உபகுல்லம் - சுக்கு. உபகுல்லியை - திப்பிலி. உபகேசி - நப்பின்னை - கிருட்டிணன் மனைவி. உபக்கிரகம் -பெருங்கிரகத்தைச் சுற்றி ஓடும் சிறுகிரகம். உபக்கிரமணிகை - முகவுரை. உபசந்தானம் - தொடுக்கை. உபசரணை - உபசாரம். உபசரித்தல் - மரியாதை காட்டுதல். உபசருக்கம் - பெயர் வினைகளுக்கு முன்வரும் இடைச்சொல். உபசாகை - உட்பிரிவு. உபசாந்தம் - மனவமைதி. உபசாரம் - மரியாதை, முகமன் வார்த்தை. உபசாரவழக்கு - ஒன்றன் தன் மையை மற்றொன்றன் மேலேற்றிக் கூறுவது. உபசீவனம் - பிறரைச் சேர்ந்து வாழ்க்கை. உபதானம் - தலையணை. உபதிருட்டா - புரோகிதன். உபதேச காண்டம் - வடமொழிக் காந்தபுராணத்தினின்று கோனேரி யப்ப முதலியார் மொழி பெயர்த்துப் பாடிய தமிழ் நூல். உபதேசப்பஃறொடை - தட்சிணா மூர்த்தி தேசிகரியற்றிய ஒரு பண்டார சத்திரம். உபதேசம் - ஞானபோதனை, போதனை. உபதேசி - போதிப்போன். உபத்திரவம் - துன்பம், தொந்தரை. உபநதி - கிளை ஆறு. உபநயனம் - பூணூல் தரிக்கும் சடங்கு, மூக்குக் கண்ணாடி. உபநிடதம் - வேதத்தின் ஞான காண்டம். உபநியாசம் - பிங்சங்கம். உபபலம் - துணைவலி. உபமன்னிப்பு - ஒரு சைவ இருடி. உபமானம் - உவமை. உபமேயம் - உவமிக்கப்பட்ட பொருள். உபயகுலம் - தந்தைதாய் மரபுகள். உபயம் - கோயில் முதலிய வற்றுக்குக் கொடுக்கும் தருமம், இரண்டு. உபயோகம் - உதவி, பயன். உபயோகித்தல் - பிரயோகித்தல், பயன்படுத்துதல். உபராகம் - கிரகணம். உபரி - மேல், அதிகமாய். உபரிகை - மேல்மாடம். உபரிசரர் - ஆகாய சஞ்சாரிகள். உபலட்சணம் - ஒரு சொல் தன்னி னத்தையுந் தழுவுதல். உபலம் - கல், பளிங்கு. உபவனம் - சோலை. உபவாசம் - உண்ணாவிரதம். உபவீதம் - பூணூல். உபவேட்டம் - கூத்தின் அங்கக் கிரியைகளுள் ஒன்று. உபவேட்டிதம் - அபிநய வகை. உபாக்கியானம் - கிளைக்கதை. உபாங்கம் - தோற்கருவி வகை, வேதாக மங்களுக்கு அங்கமாயுள்ள நூல்கள். உபாசகன் - பௌத்தரில் இல்லறத் தோன். உபாசனை - வழிபாடு. உபாதானம் - முதற்காரணம், அரிசிப் பிச்சை. உபாதி - உடமை, வேதனை, இடையூறு. உபாத்தி, உபாத்தியாயன் - ஆசிரியன். உபாத்தியாயினி - ஆசிரியை. உபாயம் - தந்திரம், சூழ்ச்சி, வகை. உபேந்திரன் - திருமால். உபேந்திராசிரியர் - சிநேந்திர மாலை என்னும் சோதிட நூல் செய்த சமணப் புலவர். உபோற்காதம் - பாயிரம். உப்பக்கம் - முதுகு. உப்பங்கழி - உப்பளம், காயல். உப்பசம் - வீக்கம். உப்பரிகை - மேல்மாடி. உப்பர் - உமணர். உப்பல் - ஊதிப்பெருக்கை. உப்பளம் - உப்பு விளைநிலம். உப்பளவன் - உப்பு விளைப்போன். உப்பால் - உந்தப்பக்கம், மேலிடம். உப்பீனிகள் - உலோகங்களுடன் விரைவில் கூடி உப்புகளை அளிக் கும் தனிமங்கள் (Halogens). உப்பு - உப்புவகை, இனிமை, மகளிர் விளையாட்டு. உப்புக்கண்டம் - கருவாடு. உப்புக்கொத்தி - காடையினும் சிறிய ஒரு பறவை (Little ringed Plover) உப்புக்கோடு - கிளித்தட்டு விளை யாட்டு. உப்புத்தாவரங்கள் - உப்புத் தன்மை யுள்ள நிலத்தில் வாழக் கூடிய தாவரங்கள் (halophytes). உப்புதல் - பருத்தல், பொங்குதல். உப்புமா - ஒருவகைச் சிற்றுண்டி. உப்பை - திருவள்ளுவர் சகோ தரிகளுள் ஒருவர். உமட்டியர் - உமண சாதி மகளிர். உமட்டூர் கிழார் மகன் பரங்கொற்றனார் - சங்க காலப் புலவர். உமணன் - உப்பமைக்கும் சாதியான். உமண் - உப்பமைப்போர் சாதி. உமண் சாத்து - உப்பு வாணிகர் கூட்டம். உமண்பகடு - உமண் சாதியாரின் மூடை சுமந்து செல்லும் எருது. உமரி - ஒரு பூண்டு, பவளப்புச்சி, நந்தை. உமர் - உம்மவர். உமர்கையாம் - பாரசீக நாட்டு அறிஞர்; இவர் பல நூல்கள் செய்துள்ளார் (-1123). உமல் - ஓலைப்பை. உமறுப்புலவர் - சீராப்புராணம் பாடிய மகமதிய புலவர் (17ஆம் நூ.) உமாபதி - சிவன். உமாபதி - சிவாசாரியார் - சந்தான குரவருள் ஒருவர் (14ஆம் நூ.) உமாமகேசுவரன் - சிவன். உமி - தானியங்களின் கோது. உமிச்சட்டி - நெருப்புச்சட்டி. உமிதல் - கொப்பளித்தல், துப்புதல், உறிஞ்சுதல். உமித்தல் - கொப்புளங் கொள்ளல், அழிதல், பதராதல். உமியல் - வசம்பு. உமிரி - உமரி. உமிவு - துப்புகை. உமிழ்தல் - துப்புதல், கொப்பளித்தல், வெளிப்படுத்துதல். உமிழ்நீர் - வாயூறு நீர். உமை - பார்வதி. உமைத்தல் - தினவு, வருத்துதல். உமை மகன் - வீரபத்திரன். உமையவள், உமையாள் - பார்வதி. உம் - ஓர் இடைச்சொல், அசைநிலை விகுதி. உம்பர் - மேலிடம், உயர்ச்சி, ஆகாயம், தேவலோகம், தேவர், அப்புறம். உம்பர்கோன் - இந்திரன். உம்பல் - வழித்தோன்றல், குடி, யானை ஆடுகளின் ஆண், எழுச்சி, வலிமை குமிழ். உம்பளம் - உப்பளம், மானிய நிலம். உம்பற்காட்டு இளங்கண்ணனார் - சங்கப் காலப் புலவர். உம்பன் - உயர்ந்தோன். உம்பி - உன் தம்பி. உம்மாண்டி - பூச்சாண்டி. உம்மெனல் - உடன்பாடு சினம் முதலியவற்றின் ஒலிக்குறிப்பு, ஓர் அனுகரணவோசை. உம்மை - உம் என்னும் இடைச் சொல், முற்பிறப்பு, மறுமை. உம்மைத்தொகை - உம் என்பது கரந்து நிற்பது. உயக்கம் - வருத்தம், வாட்டம். உயங்குதல் - வருந்துதல், மெலிதல், துவளுதல். உயப்போதல் - தப்பிச் செல்லுதல். உயரி - உயரமானது. உயர் - உயர்ச்சி. உயர்குடி - மேலான குலம். உயர்ச்சி - உயரம், ஏற்றம். உயர்தல் - மேலெழுதல், வளர்தல், மேன்மையடைதல், நீங்குதல். உயர்திணை - மக்கள் நரகர் தேவர் என்னும் முக்குலத்தாரைக் குறிக் குஞ் சொல். உயர்த்தி - மேன்மை. உயர்த்துதல் - உயரச் செய்தல், அதிகப்படுத்துதல், கனப்படுத்துதல். உயர் நிலத்தவர் - தேவர். உயர்நிலம் - தேவருலகம், மேடு. உயர்நிலை - மேலானபதவி, உயர்நிலம், தெய்வத் தன்மை. உயர்நீதிமன்றம் - உச்சநீதி மன்றத் தின் தலையாய பகுதிகளுள் ஒன்று. உயர்ந்தோர் - பெரியோர், முனிவர், அந்தணர். உயர்பிறப்பாளன் - அந்தணன். உயர்பு, உயர்வு - உயரம், உயர்ந்த விடம், மேன்மை. உயர்மொழி - உயர்த்துக் கூறும் கூற்று. உயர்வு சிறப்பு உம்மை - உயர்வு மிகுதியைக் காட்டும் உம்மை. உயர்வுவமை - இயைபின்மை அணி. உயலுதல் - அசைதல். உயல் - சீவிக்கை, தப்புகை, உளதாகை. உயவல் - வருத்தம். உயவற்பெண்டிர் - கைமை நோன்பினால் வருந்தும் மகளிர். உயவு - வருத்தம், உயிர் பிழைக்கச் செய்யும் வழி. உயவுதல் - உசாவுதல், வருத்துதல். உயவுத்துணை - நட்புத்துணை. உயவுநெய் - சகடத்துக்கிடும் எண் ணெய், காக்கணம், வெண்கரு விளை. உயவை - காட்டாறு, வருத்தம், காக்கணஞ் செடி. உயா - வருத்தம், வினா. உயாவுத்துணை - உயவுத்துணை. உயிர் - ஆன்மா, பிராணி, உயி ரெழுத்து, பிராணவாயு, காற்று இலாமிச்சை. உயிரவை - உயிர்த்தொகுதி. உயிரளபு - உயிரளபெடை. உயிரளபெடை - தனக்குரிய மாத் திரையில் மிக்கொலிக்கும் உயி ரெழுத்து. உயிர் அறுவை - பிராணிகள் உயி ருடன் இருக்கும்போது உடலை அறுத்துச் செய்யப்படும் பரி சோதனை. உயிரியல் - உயிர்களைப் பற்றிய சரித்திரம் (Biology) உயிரண்ணுதல் - உயிரைப் போக் குதல், பரவசப்படுத்துதல். உயிருதவி - ஆபத்திலுதவுகை. உயிரெழுத்து - உயிரைப் போல் தனித்து இயங்கக் கூடிய எழுத்து. உயிர்குடித்தல் - உயிரைப் போக் குதல். உயிர்க்கணம் - உயிரெழுத்துக் கூட்டம். உயிர்க்கழு - ஒருவகைக் கழுமரம். உயிர்க்கிழவன் - கணவன். உயிர்க்குயிர் - கடவுள். உயிர்ச்சூது - ஆடு கோழி முதலிய வற்றைப் போர் பொருத்தி ஆடுகை. உயிர்தருமருந்து - மிருத சஞ்சீவினி. உயிர்த்தல் - தொழிற்படுதல், உயிர்பெற் றெழுதல், மூச்செறிதல், ஈனுதல், மோத்தல், கூறுதல், வெளிப்படுத்தல். உயிர்த்துணை - பிராண சிநேகிதன். உயிர்த்தோழி - பாங்கி உயிர்த்தோற்றம் - பிராணிகளின் பிறவி. உயிர் நிலை - உடம்பு, உயிர் தங்கும் இடம், பிராணயாமம். உயிர்பிழைத்தல் - உயிர் வாழ்தல் தப்பிப் பிழைத்தல். உயிர்ப்பலி - உயிரை வெட்டிப் பலியிடுதல், விரன் தன் தலையைக் கொற்றவைக்குக் கொடுக்கும் பலி. உயிர்ப்பு - உயிர்த்தெழுகை, புதுப்பலம் அடைகை, சுவாசம், காற்று, மூச்சு, இளைப்பாறுகை. உயிர்ப்புவீங்குதல் - பெருமூச்சு விடுதல். உயிர்ப்புனல், உயிர்ப்பொறை - இரத்தம். உயிர்மருந்து - மிருத சஞ்சீவினி. உயிரணு - செல் (Cell) உயிர்காப்போடம் - கப்பலில் ஆபத்து நேரும்போது கப்பலில் இருப்போரைக் காக்கும் ஓடம். உயிர்த்தூண்டிற்காரன் - அங்கம் மாள் கோயிலிலிருக்கும் ஒரு துட்ட தேவதை. உயிர்ப்பட்டி - மக்களின் வாழ்நாள் விகிதத்தைக் காட்டும் பட்டி (Life Table) உயிர்ப்பொருள் - உயிருள்ளவற் றுள் காணப்படும் ஒரு சுவராற் கட்டப்பட்ட உயிர் (Protoplasm) உயிர்ப்பொருள் இரசாயனம் - உயிர்ப் பொருள்களில் நிகழும் இரசாயன வினைகளையும் அவற் றுள் தொடர்புள்ள இரசாயனப் பொருள்களையும் ஆராயும் துறை (Bio chemistry) உயிர்மெய் - ஒற்று முன்னும் உயிர் பின்னும் இணைந்து ஒலிக்கும் எழுத்து. உயிர்வாழ்தல் - சீவித்தல். உயிர்வாழ்க்கை - சீவனம். உயில் - இறந்தபின் ஒருவருடைய சொத்த எவரைச் சேரவேண்டு மென எழுதி வைக்கும் பிரதி (Will) உயிறு - இலாமிச்சை. உயுத்தம் - போர். உயோகுதுயில் - யோக நித்திரை. உய்கை - ஈடேறுகை, துன்பம் நீங்குகை. உய்தல் - சீவித்தல், ஈடேறுதல், நீங்குதல், தப்புதல். உய்தி - உயிர் வாழ்க்கை. உய்த்தல் - உய்யச் செய்தல், நீக்குதல், செலுத்துதல், ஆயுதம் பிரயோகித்தல், கொண்டு போதல், அனுபவித்தல், கொடுத்தல். உய்யக்கொண்டார் - நாதமுனிகளின் மாணாக்கர். உய்யவந்த தேவநாயனார் - திருக்களிற்றுப் படியார் என்னும் நூல் செய்த புலவர் (12ம் நூ.) உய்த்தறிதல் - ஆராய்ந்தறிதல். உரகதம் - பாம்பு. உரலகம் - பாம்பு, நாகமல்லிகை. உரகர் - நாகர். உரகவல்லி - வெற்றிலைக்கொடி. உரகன் - பாம்பு. உரகாதிபன் - ஆதிசேடன். உரக்க - உயர்ந்த குரலில். உரக்கேசன், உரக்கேது - துரியோ தனன். உரங்கம் - பாம்பு. உரங்கொள்ளுதல் - வயிரங் கொள்ளுதல், உக்கிரங்கொள்ளுதல். உரசுதல் - உராய்தல். உரஞ்சுதல் - தேய்த்தல். உரத்தல் - வலுத்தல். உரப்பல் - சத்தமிட்டு அதட்டல். உரப்பிரம் - வெள்ளாடு. உரப்பு - அதட்டு, பேரொலி, கடினம், முகடு, மனத்திண்மை. உரம் - மார்பு, அறிவு, வியுகத்தின் முன்னணி. உரலடி - யானை. உரலாணி - உலக்கை, உரலின் அடிக்கு இடும் மரத்துண்டு. உரல் - இடிக்கும் உரல், இடியப்பம் தேங்குழல் முதலியன பிழியும் அச்சு. உரவம் - வலிமை. உரவு - வலிமை, மனோபலம், விடம். உரவுதல் - வலியுறுதல், உலாவுதல். உரவுநீர் - கடல், ஆறு. உரவோன் - வலியோன், ஊக்க முடையோன், மூத்தோன். உரறுதல் - முழங்குதல். உரற்களம் - அறிஞர் கூடிப்பேசு மிடம். உரற்றுதல் - முழங்குதல். உரன் - திண்மை, பற்றுக்கோடு, வெற்றி, அறிவு. உராய்தல் - உரிஞ்சுதல். உரால் - ஒடுகை. உராவுதல் - பரவுதல், செல்லுதல், இடம் விட்டுப் பெயர்தல், வலியடைதல். உரி - தோல், பட்டை, உரிச்சொல், அரை நாழி, கொத்துமல்லி. உரிக்குட்டி - அயன மண்டலங் களில் வாழும் மீன் : இது அப்புக் குட்டி எனவும் படும். உரிசை - சுவை. உரிச்சொல் - நால்வகைச் சொற் களுள் ஒன்று. உரிச்சொல் நிகண்டு - காங்கேயர் இயற்றிய வெண்பாவினாலமைந்த ஒரு நிகண்டு. உரிஞுதல் - உரிஞ்சுதல். உரிஞ்சுதல் - உராய்தல், தேய்த்தல், புசுதல். உரிதல் - கழலுதல், ஆடை களை தல், அபகரித்தல். உரிது - உரிமையுடையது. உரித்தல் - தோல் பட்டை முதலிய வற்றைக் கழற்றுதல். உரித்தாளி - உரித்தானவன். உரித்திரம் - மஞ்சள். உரித்து - உரியது, உரிமை. உரிப்பொருள் - புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடலும், அவற்றின் நிமித்தங்களும். உரிமை - உரித்தாந்தன்மை, மனைவி அடிமை குணம், நட்புப் பற்றிய சுதந்திரம், சுவாதீனம். உரிமைச்சுற்றம் - அடிமைத்திரள். உரிமைசெப்புதல் - மனம் பேசுதல். உரிமைப்பள்ளி - அந்தப்புரம். உரிமை மாணகர் - அந்தப்புரம். உரிமையிடம் - வீட்டில் மனைவி வசிக்கும் பாகம். உரிவை - தோல், உரிக்கை. உரிஇ - உருவி. உரு - வடிவு, உடல், விக்கிரகம், நிறம், மான். உருகுதல் - வெப்பத்தால் இளகுதல், மனம் நெகிழ்தல். உருக்கம் - மனமகிழ்ச்சி, இரக்கம், அன்பு. உருக்காட்டுதல் - தோன்றுதல். உருக்கு - எஃகு, உருக்கினபொருள். உருக்குதல் - இளகி, விழச் செய்தல், மனம் நெகிழ்த்துதல், மெலியச் செய்தல், அழித்தல், வருந்துதல். உருக்குமம் - பொன். உருக்குமினி - கண்ணபிரான் தலைமைத் தேவி. உருக்குரக்கு - கர்ப்பூர வகை. உருக்குலைதல் - முன்னுருவம் அழிதல். உருக்கொடுத்தல் - புத்தி சொல்லு தல், தூண்டுதல். உருக்கொள்ளுதல் - வடிவெடுத் தல், ஒழுங்கான வளர்ச்சியடைதல். உருங்குதல் - உண்ணுதல். உருசி - சுவை, இனிமை, விருப்பம். உருசிகரம் - இனிமையானது. உருசு - அத்தாட்சி. உருசை - உரிசி. உருடை - வண்டி. உருட்சி - உருளுகை, திரட்சி. உருட்டு - உருளச் செய்தல், வருத் துதல், இசை நிரம்பை வருடுதல், ஏமாற்று. உருண்டை - உண்டை, திரட்சி. உருது - வட இந்திய மொழிகளுள் ஒன்று. உருத்தல் - தோன்றுதல், முளைத் தல், உருவெடுத்தல், சுரத்தல், கோபித்தல். உருத்திரகணம் - சிவகணம், சிவ னடியார். உருத்திரகணிகை - சிவன் கோயில் தாசி. உருத்திரசடை - திருநிற்றுப்பச்சை. உருத்திரசருமன், உருத்திர சன்மன் - சங்க காலப்புலவருள் ஒருவர். உருத்திர பசுபதி நாயனார் - 63 நாயன்மாருளொருவர். உருத்திரம் - பெருங்கோபம், வெகுளிச் சுவை. உருத்திர வீணை - யாழ் வகை. உருத்தினார் - சங்க காலப்புலவர். உருத்திரன் - சிவன், சிவகணத் தோன், அக்கினிதேவன் உருத்திராக்கம் - உருத்திராக்கமணி. உருத்திராக்கப் பூனை - அடியார் வேடம் பூண்ட வஞ்சகன். உருத்திராட்சம் - உருத்திராக்கம். உருத்திரை - உமை. உருபு - வடிவம், நிறம், வேற்றுமை முதலியவற்றைக் காட்டும் இடைச் சொல். உருபு மயக்கம் - ஒரு வேற்றுமை உருபு இன்னொரு வேற்றுமையின் பொருள் கொண்டு நிற்றல். உருப்பசி - ஊர்வசி. உருப்படி - கணக்கிடக் கூடிய பொருள். உருப்பம் - வெப்பம். உருப்பு - வெப்பம், கொடுமை, மிகுதி. உருப்பெருக்கும் கண்ணாடி - சிறிய உருவத்தைப் பருப்பித்துக் காட்டும் கண்ணாடி (Magnifying glass) உருமம் - வெப்பம், நடுப்பகல். உருமால் - தலைப்பாகை. உருமாற்றம் - ஒரு உயிர் கரு நிலையிலிருந்து வளர்ந்து முதிர்ச்சி நிலை அடைவதற்குள் உடலின் வடிவத்திலுண்டாகும் மாறுதல் (Metamorpohsis) உருமுதல் - கர்ச்சித்தல். உருமு - இடி. உருமுத்துவசன் - இந்திரன். உருமேறு - பேரிடி. உருவ - நன்றாக. உருவகம் - உவமேயத்தை உவமானத் துடன் வேறுபாடின்றிக் கூறுதல். உருவச்சாதகம் - உருவ சாத்திரம். உருவசி - ஊர்வசி. உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி - முற்காலச் சோழ அரசருள் ஒருவன்; கரிகாலன் தந்தை. உருவம் - வடிவம், உடல், நிறம், வேடம், மந்திரவுரு, பிரதிமை. உருவழிதல் - மேனி வேறாதல். உருவாணி - அச்சாணி, கடையாணி, மெலிந்தவுடல். உருவி - குருவிச்சை, புல்லுருவி, நாயுருவி, பூமி. உருவிலாளன், உருவிலி - மன்மதன். உரு - உருவம். உருவுதடம் - சுருக்குக் கயிறு. உருவுதல் - உறை கழித்தல், ஊடுருவு தல், கையில் பொருள் வரும்படி உருவுதல். உருவுதிரை - திரைச்சீலை வகை. உருவெளி - நினைவுத் தோற்றம். உருவேற்றுதல் - மந்திரத்தைப் பலமுறை செபித்தல், நெட்டுருப் பண்ணுதல். உருவேறுதல் - ஆவேச மேறுதல். உருளரிசி - கொத்துமல்லி. உருளாயம் - சூதாட்டத்தால் வரும் இலாபம். உருளி - உருளை, வட்டம். உருளுதல் - புரளுதல், திரளுதல், சொல்லுதல். உருளை - சக்கரம், உருண்டை. உருளைக்கிழங்கு - கிழங்கு வகை. உருள் - தேருருளை, வண்டி, உரோகிணி, சக்கரம். உரூஉடூர் கிழார் மகனார் பரங்கொற்ற னார் - சங்ககாலப் புலவர். உருடி - இடுகுறி, காரியத்தைக் கண்டு காரணத்தை நிச்சயித்தல். உரூபகம் - உருவகம். உரூபம் - உருவம். உரை - உரைக்கை, விளக்கம், பேச்சு, மாற்று, சொற்பொருள். உரைகலங்குதல் - உரை தடுமாறுதல். உரைகல் - பொன், வெள்ளி உரைக்கும் கல், மருந்தரைக்கும் சிறுகல். உரைசுதல் - உரைஞ்சுதல், தேய்த் தல். உரைஞ்சுதல் - உரைசுதல். உரைதல் - தேய்த்தல், வீணாதல். உரைத்தல் - தேய்த்தல், பூசுதல், மெருகிடுதல், சொல்லுதல். உரைநடை - வாசக நடை, பேசும் நடை. உரையளவை - ஆகமப் பிரமாணம். உரையாடுதல் - சொல்லுதல், சல்லாபித்தல். உரோகணி - உரோகிணி. உரோகம் - நோய். உரோகிணி - ஒரு நட்சத்திரம், பலராமன் தாய். உரோசம் - மானம். உரோசனி - செந்தாமரை. உரோசுதல் - உராய்தல். உரோஞ்சுதல் - உரோசுதல். உரோடம் - கோபம். உரோடோக்கக் கவுணியன் சேந்தன் - சங்க காலப் புலவர். உரோடோக்கத்துக் கந்தரத்தனார் - சங்ககாலப் புலவர். உரோணி - உரோகிணி, தொண்டை நோய் வகை. உரோதனம் - அழுகை. உரோம கூபம் - மயிர் சிலிர்ப்பு. உரோம புளகிதம், உரோம புளகம் - மயிர் சிலிர்ப்பு. உரோமப் பொடிப்பு - மயிர் சிலிர்ப்பு. உரோமமுனி - புகண்டர் மாணவர். உரோமம் - புறமயிர், மயிர். உரோமரேகை - மயிரொழுங்கு. உலக கர்த்தா - கடவுள். உலக சஞ்சாரம் - உலகத்தைச் சுற்றி வகை. உலகத்தார் - உயிர்ந்தோர், உலகி லுள்ளவர், உலகப் பற்றுடையார். உலகநடை - அறிவுடையவர் ஒழுக்கம், உலக வழக்கு. உலகநாதன் - கடவுள். உலகநீதி - உலகநடை, உலகநாதன் செய்த ஒரு நீதி நூல். உலக நூல் - அறிவு நூல். உலக நோன்பிகள் - சைன, பௌத்தரில் இல்லறத்தார். உலக நோன்பு - துறவாது விரதங் காத்தல். உலகப்பற்று - பூலோக ஆசை. உலகப்பிரச்சித்தி - உலக மெங்கும் பரந்த புகழ். உலக பாலர் - எட்டுத் திக்குப் பாலகர். உலகமலைவு - நல்லவர்களின் நூற் கருத்துக்கு இசையாமை, நூற் குற்றங் களுள் ஒன்று. உலகமளந்தான் - உலகத்தை எல்லாம் தன் இரு அடிகளால் அளந்த திருமால். உலகமன்னவன் - சக்கரவர்த்தி. உலகமாதா - உமை, சரசுவதி. உலகமுண்டோன் - திருமால். உலகம் - பூமி; நிலப்பகுதி, நன்மக்கள், சீவராசிகள், வழக்கம். உலகரீதி - உலக வழக்கு. உலகர் - உலகத்தார். உலகவறவி - எல்லாச் சாதியாரும் வந்து தங்குதற்குரிய தருமசாலை. உலகவிடை கழி - மக்கள் கடந்து செல்வதற்குரிய பெருவாயில். உலக வியாபாரம் - இலௌகித கருமம். உலகவிருத்தம் - உலக வழக்கோடு மாறுபடும் உரை. உலக வேடணை - உலகப் பற்று. உலகாயதம் - கடவுளில்லை என்னும் மதம். உலகியல் - உலக வழக்கு. உலகோடுதல் - எங்கும் பரவுதல். உலக்கை - தானியம் குற்றும் கருவி, ஓர் ஆயுதம், திருவோணம், அழிவு, வெருகன்கிழங்கு. உலகைக்கணை - உலக்கைப் பூண். உலக்கைக்கொழுந்து - புத்தி குறைவுள்ளவன். உலக்கைப்பாட்டு - தானியம் குற்றும்போது மகளிர் பாடும் பாட்டு, வள்ளைப்பாட்டு. உலங்கு - கொதுகு, நுளம்பு, திரண்ட கல். உலண்டு - கோர்ப்புழு, பட்டு. உலத்தல் - குறைதல், நீங்குதல், அழிதல், சாதல். உலப்பு - அழிவு, குறைவு, சாவு, அளவு, உதவுகை. உலமரல் - துன்பம், அச்சுக்குறி காட்டுதல். உலம் - திரண்டகல், திரட்சி. உலம்பல் - ஆரவாரம். உலம்புதல் - பேரொலி செய்தல், அலம்புதல். உலர்ச்சி - காய்வு, வாட்டம். உலர்தல் - காய்தல், வாடுதல். உலர்த்துதல் - காயச் செய்தல். உலவம் - உலோபம், ஈயாமை. உலவாக்கிழி - பொன்முடிப்பு. உலவித்தல் - கூசி எழுதல். உலவுதல் - உலாவுதல். உலவை - தழை, மரக்கொம்பு, மரச் செறிவு, குடைவேல், விலங்கின் கொம்பு, கிலுகிலுப்பை. உலறல் - பெருங்கோபம். உலறுதல் - வற்றுதல், சிதைதல், பொலி வழிதல், சினத்தல், உரை தடுமாறுதல். உலா - பவனி, ஒரு பிரபந்தம். உலாஞ்சுதல் - அசைந்தாடுதல், தலை சுற்றுதல். உலாத்து - உலாவுகை. உலாத்துதல் - உலாவுதல். உலாப்போதல் - பவனிவரல். உலாமடல் - ஒரு பிரபந்தம். உலா வருதல் - பவனி வருதல். உலாவுதல் - சஞ்சரித்தல், இயங்குதல், வியாபித்தல், சூழ்தல். உலுக்குதல் - குலுக்குதல். உலுத்தத்தனம் - உலோப குணம். உலுத்தன் - உலோபி. உலுப்புதல் - உதிர்த்தல். உலூகம் - கோட்டான். உலூபலம் - உரல், குங்கிலியம். உலூதை - சிலந்திப் பூச்சி. உலை - கொல்லனுலை, நெருப் புள்ள அடுப்பு, சோறு சமைப் பதற்குக் கொதிக்க வைக்கும் நீர், மன நடுக்கம். உலைக்களம் - கொல்லன் உலைக் கூடம். உலைதல் - நிலைகுலைதல், அஞ்சு தல், கலைந்து போதல், அலைதல். உலைத்தல் - கெடுத்தல், கலைத்தல், அலைத்தல். உலைப்பு - வருத்துகை, அழிவு. உலைமுகடு - கொல்லுலையில் துருத்தி வைக்கும் துவாரம். உலைமூடி - உலைப் பானையின் மேல் மூடி. உலையேற்றுதல் - உலைப் பானையை அடுப்பில் வைத்தல். உலைவு - நடுக்கம், சஞ்சலம், தோல்வி, அலைவு, தரித்திரம், குறைவு. உலோகபாலர் - திக்குப் பாலகர். உலோகம் - உலகம், பொன் முதலிய தாதுப் பொருள். உலோக உட்கூற்றியல் - உலோகங் களைப் பூதக் கண்ணாடி மூலம் பார்த்து அவற்றின் சீரை அறிதல் (Metallography) உலோகாயதம், உலோகாயிதம் - கடவுள் இல்லை என்னும் மதம். உலோகிதம் - சிவந்தது, சந்தனம், சூதாட்ட வகை. உலோகிதன் - செவ்வாய். உலோசணம் - கண். உலோச்சனார் - இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி காலத்துப் புலவர். உலோச்சு - தம் தலைமயிரைத் தம் கையாற் பறிக்கை. உலோட்டம் - மண்கட்டி. உலோபம் - கடும் பற்றுள்ளம், குறைவு, ஈயாமை. உலோபன் - உலோபி. உலோபாமுத்திரை - அகத்தியர் மனைவி. உலோபி - ஈயாதவன். உலோமம் - புற மயிர். உலோலன் - மிகுகாமி. உலோலிதமூகம் - அபிநயங்களுள் ஒன்று. உல் - தேங்காயுரிக்கும் கருவி, கழு. உல்கு - சுங்க இறை. உல்லம் - மீன் வகை. உல்லரி - தளிர். உல்லாசம் - உள்ளக் களிப்பு. உல்லாபம் - நிரம்பா மென்மொழி. உல்லியர் - கிணற்றுக்கு நிலம் இடுவோர். உல்லேகம் - புனைந்துரை. உல்லோலம் - கடற் பெருந்திரை. உவகுருவாணன் - இல்லறத்தை அடை யும் நிலையிலிருக்கும் பிரம சாரி. உவகுலம் - திப்பிலி, திபலை. உவகை - மகிழ்ச்சி, அன்பு, காமம், சிருங்கார ரசம். உவகைக்கண்ணீர் - மகிழ்ச்சியால் உண்டாகும் கண்ணீர். உவச்சன் - பூசாரி சாதியான், சோனகன். உவட்சி - துவளுகை. உவட்டுதல் - வெறுப்புறுதல், தெவிட்டுதல், மிகுதல். உவட்டெடுத்தல் - பெருக்கெடுத் தல். உவணகேதனன் - கருடக் கொடி உடைய திருமால். உவணம் - உயர்ச்சி, கருடன், கழுகு. உவணம் - கருடா. உவணி - வாள். உவணை - தேவலோகம். உவண் - மேலிடம். உவதை - பேரருவி. உவத்தல் - மகிழ்தல். உவப்பு - மகிழ்ச்சி, பொலிவு, விருப்பம், உயரம். உவமப் போலி - உள்ளுறையுவமம். உவமம் - ஒன்றோடொன்று ஒப் பிடுகை. உவமன் - ஊமை, உவமை. உவானசங்கிரகம் - மகளிர் உறுப்புக் களுக்கு உவமை கூறும் நூல்; திரு வேங்கட ஐயர் செய்தது; 14ஆம் நூ. உவமானம் - உபமானம். உவமித்தல் - ஒப்புக் கூறுதல். உவமேயம் - உபமேயம். உவமை - ஒப்பு. உவராகம் - கிரகணம். உவர் - உப்பு நீர், மூத்திரம், கடல். உவரோதம் - இடையூறு. உவர் - உப்பு, களர் நிலம், கடல், இனிமை. உவர்க் கண்ணூர்ப் புல்லங் கீரனார் - சங்க காலப் புலவர். உவர்க்கம் - கடற்கரை. உவர்க்களம் - களர் நிலம், உப்பளம். உவர்த்தல் - உப்புக் கரித்தல், துவர்த்தல், அருவருத்தல். உவர்ப்பு - உப்புச் சுவை, வெறுப்பு, அவாமின்மை. உவலை - தழை, சருகு, இழிவு. உவல் - தழை, சருகு. உவனம் - உபவனம், பூஞ்சோலை. உவவு - உவப்பு, உவா, தவம். உவளகம் - அந்தப்புரம், சிறைச் சாலை, ஒருபக்கம், மதில், இடைச் சேரி, பள்ளம், அகழி, விசாலம், உப்பளம். உவளித்தல் - தூய்மை செய்தல். உவளுதல் - துவளுதல், நடுங்குதல், பரத்தல். உவள் - முன் நிற்பவள். உவறுதல் - சுரத்தல். உவற்றுதல் - சுரக்கச் செய்தல். உவனாயம் - துவைத்துக் கட்டும் மருந்து. உவனித்தல் - தூய்மை செய்தல், எய்யத் தொடங்குதல். உவன் - முன்நிற்பவன். உவன்றி - நீர் நிலை. உவா - பூரணை, அமாவாசை, கடல், இளையோன், இளமை, யானை, உகாமரம், பருவ காலம். உவாதி - கடுந்துன்பம், எல்லை. உவாத்தி, உவாத்திகன், உவாத் தியன், உவாத்தியாயன் - உபாத்தியாயன். உவாத்தியாயினி - ஆசிரியை. உவாந்தம் -அமாவாசை. உவாமதி - பூரணச் சந்திரன், முழு நிலா. உவிதல் - வற்றுதல், சாதல். உவித்தல் - அறிவித்தல். உவியல் - சமைத்தகறி. உவின்சுலோ - உவின்சுலோ அகராதி செய்த அமெரிக்கா மிசன் பாதிரி (19ம் நூ. பிற்.) உவேயம் - உபயம். உவை - உங்குள்ளவை. உவ்வி - தலை. உழக்கு - இரண்டு ஆழாக்கு, காற்படி. உழக்குதல் - கலக்குதல், மிதித்தல், உழு தல், கொன்று திரிதல், விளையாடுதல். உழத்தல் - வருந்துதல், பழகுதல், பிரயாசப்படுதல், வெல்லுதல். உழத்தி - உழவர் சாதிப் பெண். உழத்திப்பாட்டு - உழவர் செய்தி களைக் கூறும் ஓர் பிரபந்தம். உழப்பு - வருத்தம், மனச் சஞ்சலம், முயற்சி, பழக்கம், வலிமை. உழப்புதல் - வார்த்தையால் மழுப்பு தல், போலி வாதஞ்செய்தல், காலங் கடத்துதல். உழப்புலவஞ்சி - பகைவர் நாட்டைச் சுட்டெரித்தலைக் கூறும் புறத்துறை. உழப்பெருது - உழவெருது. உழலுதல் - அசைதல், சுழலுதல், அலைதல், நிலைகெடுதல். உழலை - செக்கு முதலியவற்றின் உழலை மரம், குறுக்கு மரம், கணைய மரம், பெருந்தாகம். உழலைமரம் - மாட்டின் கழுத்தில் கட்டும் கட்டை. உழவன் - உழுபவன், மருத நிலக் களமன், ஏர்மாடு. உழவாரப்படை - உழவாரம். உழவாரம் - புற்செதுக்கும் கருவி. உழவாரக்குருவி - தலையில்லாக் குருவி. உழவு - உழுகை, வேளாண்மை, உடம்பினாலுழைக்கை. உழவு கட்டுதல் - முதற்சால் கட்டுதல். உழவுசால் -படைச்சால். உழறுதல் - கலங்குதல், கலங்க வடித்தல், சஞ்சரித்தல், அளைதல். உழற்றல் - தாகம். உழற்றி - சுழற்சி, மிகுதாகம். உழற்றுதல் - அலையச் செய்தல், வருத்தத்தோடு கழித்தல், கைகால் நோவாற் புரளுதல், சுழலுதல். உழன்றி - மாட்டின் கழுத்தில் மாட்டுங் கட்டை. உழாஅன் - உழவன். உழால் - உழுதல், கிண்டுகை. உழி - இடம், பக்கம், அளவில், ஏழாம் வேற்றுமை உருபு. உழிஞை - கொற்றான், சிறு பூளை, பகை அரசனின் அரணை போர் சூடும் மாலை, உழிஞைத்திணை. உழிஞைத்திணை - பகையரணை வளைக்கையில் அதனைக் காத் தலை உணர்த்தும் திணை. உழிஞைமாலை - பகைவர் மதிலைச் சூழ்ந்ததைக் கூறும் நூல். உழிஞ்சில் - வாகை, உன்னமரம். உழிதரல் - அலைதல். உழு - பிள்ளைப்பூச்சி. உழுதல் - கிண்டுதல், மயிரைக் கோதுதல். உழுத்தல் - பதனழிதல். உழுதூண் - பயிர்செய்து சீவிக்கை. உழுநர் - உழவர். உழுந்து - தானிய வகை. உழுந்தோதனம் - உழுத்தம் பயற்றோடு கலந்த சோறு. உழுமகன் - உழவன். உழுவன் - எறும்பு. உழுவலன்பு - எழுமையுந் தொடர்ந்த அன்பு. உழுவல் - குணம், அன்பு. உழுவான் - ஒருவகைப் பூச்சி. உழுவை - புலி, ஒருவகை மீன். உழை - இடம், மான், பூவிதழ், மத்தி மசுரம், நரம்பு, ஏழனுருபு, பக்கத்தில், சூரியன் மனைவிகளுள் ஒருத்தி, வைகறை, வாணாசுரன் மகள். உழைக்கலம் - ஆளும் பாத்திரங் கள். உழைச்செல்வம் - நோயாளி களுக்குப் பக்கத்திலிருந்து மருந்து முதலியன கொடுப்பவன். உழைஞர் - ஏவலாளர். உழைப்பு - பிரயாசை, முயற்சி. உழையர் - பக்கத்தவர், அமைச்சர், ஏவலாளர். உழையாளன் - வேலைக்காரன். உழையிருந்தான் - அரசர் அருகில் இருப்பவன், அமைச்சன். உழைவு - யாழின் உள்ளோசை. உளகு - யாழின் தண்டு. உளது - மெய்மை, இருப்பது. உளப்படுதல் - உள்ளடங்குதல், உரியதாதல், இசைதல். உளப்பாடு - மனத்துயர், உட்படுத் துகை, எண்ணம். உளப்பு - நடுக்கம். உளமை - உண்மை. உளம் - மனம், மார்பு. உளம்புதல் - அலைதல், சத்தமிடுதல். உளர்தல் - கோதுதல், தலைமயிர் ஆற்று தல், அசைதல், சிதறுதல், தடவுதல், யாழ் வாசித்தல், கலங்குதல், தாமதித்தல். உளர்ப்பு - அலைக்கை. உளர்வு - யாழ் வாசித்தல். உளவறிதல் - துப்பறிதல். உளவன் - ஒற்றன். உளவியல் - மனோதத்துவம். உளவு - இரகசியம், இரகசியத்திலறிந்த செய்தி, ஒற்றன், உள்ள தன்மை. உளறல் - பேரொலி, குழறுபடியான மொழி. உளறுதல் - ஆரவரித்தல், பிதற்றுதல். உளறுபடை - உளறுதல். உளறுவாயன் - பிதற்றுவோன். உளி - தச்சுக் கருவிகளுள் ஒன்று, இடம், ஓர் ஏழனுருபு, மூன்றாம் வேற்றுமைப் பொருள் தரும் இடைச்சொல். உளித்தலைக்கோல் - இருப்புப் பாரை. உளியம் - கரடி. உளு - அரிக்கும் புழு, உளுத்தது. உளுக்கு - சுளுக்கு, உளுக்கை. உளுவை - உழுவை மீன், ஆற்று மீன் வகை. உளை - குதிரை சிங்கம் முதலிய வற்றின் பிடரி மயிர், ஆண் மயிர், குதிரையின் தலையாட்டம் என்னும் அணி, ஒலி, அழுகை. உளைதல் - குடைச்சல், நோவ டைதல், வயிறுளைதல், பிரசவ வேதனைப் படுதல், மனம் வருந்தல், அழிதல், தேற்றல், சிதறிப்போதல், ஊளை யிடல். உளைத்தல் - வருந்துதல், வெறுத்தல், ஒலித்தல், ஊளையிடல். உளைப்பூ - விரிந்த பூ. உளைமயிர் - பிடரி மயிர். உளைமான் - சிங்கம். உளைவு - குடைச்சல் நோவு, வயிற்றுளைவு. உள் - உள்ளிடம், மனவெழுச்சி, இடம், ஏழனுருபு. உள்கன் - உள்ளானவன். உள்குதல் - உள்ளழிதல், நினைத்தல். உள்தூண்டல் - மனத்தில் இயல்பாக எழும் எழுச்சி (Impulse) உள்ளப்படுதல் - மனமொப்பி நடத்தல், அறிதல். உள்ளமுடையான் - ஓர் சோதிட நூல். உள்வயிரம் - உட்பகை, மரங்களின் உள்வயிரம். உள்வாய் - ஏரியினுட் பக்கம். உள்வீழ்தல் - குறைதல். உள்ள - இருக்கிற. உள்ளக்கருத்து - உள்நோக்கம். உள்ளக்களிப்பு - மன மகிழ்ச்சி. உள்ளகம் - நெஞ்சு. உள்ளங்கால் - உள்ளடி. உள்ளடக்கம் - வெளி விடாமை, அடக்கி வைத்த பொருள். உள்ளது - உள்ள பொருள், மெய், விதிக்கப்பட்டது, ஆன்மா. உள்ளந்தண்டு - கழுத்தெலும்பு. உள்ளநோய் - மனவியாதி. உள்ளபடி - உண்மை. உள்ளப்புணர்ச்சி - தலைவனும் தலைவியும் உள்ளத்தார் கூடும் கூட்டம். உள்ளமிகுதி - உள்ளக் கிளர்ச்சி. உள்ளம் - மனம், கருத்து, ஞானம், அகச்சான்று, ஆன்மா. உள்ளல் - கருத்து, உள்ளான் மீன். உள்ளாக்குதல் - உட்படச் செய்தல். உள்ளாங்கு - உள்ளபடி. உள்ளார் - பொருளுடையவர், இருப்போர், பகைவர். உள்ளான் - வீட்டிற் பயில்வோன், உளவறிபவன். உள்ளாளம் - கானவகை. உள்ளாற்றுக்கவலை - ஆற்றிடைக் குறை. உள்ளான் - பறவை வகை, பொருளு டையவன். உள்ளி - வெண்காயம், வெள்ளைப் பூண்டு. உள்ளிடை - அந்தரங்கம், உள் ளிடம். உள்ளிட்டார் - முதலானவர். உள்ளவிழா - முற்காலத்தில் கரு வூரில் நிகழ்ந்த விழா. உள்ளீடு - உள்ளிருக்கும் சத்து, உள்ளான கருத்து, இரகசியம். உள்ளு - உள்ளான் பறவை. உள்ளுதல் - நினைத்தல், ஆராய்தல், மதித்தல். உள்ளுடன் - பணிகாரத்தின் உள்ளீடு. உள்ளுடை - கௌபீனம். உள்ளுடைதல் - மனம் முறிதல். உள்ளுப்புடை - உட்டுளை. உள்ளுருக்கி - கணை நோய். உள்ளுறுத்தல் - உட்செல்லுத்துதல், உட்கருதுதல், உள்ளிடுதல். உள்ளுறை - உட்கருத்து, பொரு ளடக்கம், உள்ளுறை உவமம். உள்ளுறையுவமம் - வெளிப்படை யானன்றிக் குறிப்பார் பொருளை புலப்படுத்தும் உவமம். உள்ளூர் - ஊர் நடு, சொந்தவூர். உள்ளெரி எஞ்சின் - சிலிண்டரி லுள்ள எண்ணெய் எரிந்து அதனால் உண் டாகும் வெப்ப வாயுக்களால் தொழிற் படும் எஞ்சின் (Internal combustion engine) உள்ளொற்றுதல் - உள் நிகழ்ச் சியை உய்த்தறிதல். உறக்கம் - நித்திரை. உறக்கு - உறக்கம். உறக்குதல் - தூங்கச் செய்தல், இமையை மூடச் செய்தல் உறங்குதல் - நித்திரை செய்தல், ஒடுங்குதல், தங்குதல், சோர்தல். உறட்டை - கெட்ட நாற்றம். உறண்டை - கெட்ட நாற்றம், முரட்டுத் தனம், தொந்தரவு. உறத்தல் - கிள்ளியெடுத்தல், உறிஞ்சு தல், அழுத்துதல். உறந்தை - உறையூர். உறப்பு - செறிவு. உறல் - அடைகை, உறவு, பரிசம். உறவி - உயிர், உலைக்களம், உலகப் பற்று, கிணறு, மலை முருக்கை, பொருத்தம். உறவின்முறையார் - பந்துக்கள். உறவு - உறுகை, சுற்றம், நட்பு, விருப்பம், பற்று. உறழ - ஓர் உவமையுருபு. உறழ்ச்சி - மாறுபாடு, திரிகை, விகற்பம். உறழ்தல் - திரிதல், எதிராதல், வீணை யின் ஒரு நரம்பைவிட்டு ஒன்றைத் தெறித்தல், பெருக்குதல், ஓத்தல். உறழ்பொரு - உவமையினும் பொருளைமிக்குக் கூறும் ஒப்பு. உறழ்பொருள் - ஒப்பு மாறுபடக் கூறுவது. உறழ்ப்பு - காந்தார பஞ்சமம். உறழ்வு - பகை, போர், ஒப்பு, செறிவு, மாறுபாடு. உறன்முறை - உறவின்முறை. உறாதவன் - பகையும் நட்புமல்லா தவன், நொதுமலன். உறாமை - உதாசீனச் செயல். உறார் - பகைவர். உறாவரை - தனது ஆட்சியிலுள்ள சொத்து. உறான் - உறவினனல்லாதவன். உறி - பண்டங்கள் வைத்தற்கு தொங்க விடும் உறி, தூக்கு. உறிக்கா - இருபக்கங்களிலும் உறி தொங்கும் கா. உறிச்சமணர் - சமணரிலொரு சாரார். உறிஞ்சுதல் - வாயால் உள்ளிழுத்தல். உறியடி - கண்ணன் உறி வெண்ணெ யெடுத்ததைக் கொண்டாடும் திருநாள். உறு - மிக்க, நிகழ்கின்ற. உறுகணாளன் - தரித்திரன், தீவினை யாளன். உறுகண் - வருத்தம், நோய், அச்சம். உறுகோள் - சம்பவம். உறுக்காட்டம் - அதட்டுகை. உறுக்கு - அதட்டுகை. உறுக்குதல் - அதட்டுதல், கோபித்தல், தண்டித்தல். உறுதரல் - தீண்டல். உறுதல் - இருத்தல், நிகழ்ச்சி, தங்கு தல், நன்மையாதல், உறுதியாதல், வருந்துதல், மிகுதல், சார்ந்திருத்தல், பொருந்துதல், ஓரிடம் அடைதல், தொட்டறிதல், அன்பு கொள்ளுதல், ஒத்தல், தொடங்குதல், அனுபவித் தல், நினைத்தல். உறுதி - திடம், வல்லமை, செய்யத் தக்கது, நன்மை, மந்திரம், இலாபம், கல்வி, ஆட்சிப்பத்திரம். உறுதிப்பாடு - திடம். உறுதியோர் - தூதர். உறுதுணை - நம்பிக்கையான துணை. உறுத்தல் - மிகுக்கை, ஒற்றுகை. உறுத்துதல் - உண்டாக்குதல், அமைத் தல், அடைவித்தல், அழுத்தச் செய்தல், மனத்தை வருத்துதல், விரித்தல், கோபித்துச் சீறுதல். உறுத்தை - அணில். உறுநன் - சேர்ந்தவன். உறுப்பறை - அங்கவீனன், அங்க சேதம். உறுப்பா - கப்பல் செய்தற்கு உபயோக மான மரவகை. உறுப்பில் பிண்டம் - கருவில் வடிவுறுமுன் சிதைந்த தசைப் பிண்டம். உறுப்பு - அவயவம், அங்கம், மெய் யெழுத்து, பாலையாழ்த்திறம், மரக் கொம்பு. உறுப்புத்தோல் - மான்தோல். உறுபூசல் - கை கலந்த போர். உறுபொருள் - உடையாரில்லாமையால் ஒருவனுக்குக் கிடைக்கும் பொருள். உறுப்படக்கி - ஐந்து உறுப்பையும் அடக்கும் ஆமை. உறுமால் - உருமால், தலைப்பாகை. உறுமாலை - உருமால். உறுமி - ஒருவகைத் தோற்கருவி. உறுமுதல் - உறுமென்று ஒலித்தல், முறுமுறுத்தல். உறுவது - சம்பவிப்பது, ஊதியம், ஒப்பது, தகுவது. உறுவார் - தேவர். உறுவலி - மிக்க வலியுடையோர். உறுவல் - துன்பம். உறுவன் - மிக்கோன், முனிவன், அடைந்தோன், அருகன். உறுவித்தல் - அனுபவித்தல். உறை - பெருமை, உயரம், நீளம், பொருள், பேரளவைக் குறிக்க இடும் சிற்றளவுக் குறி, மிகக் குறைவானது, ஓரளவு - 60 மரக்கால், இருப்பிடம், வாணாள், ஆயுதக்கூடு, மேல் இடப் படுவது, கூடு, காணிக்கைப் பொருள், ஒழுகல், நீர் முதலியவற்றின் துளி, மழைக்காலம், உறைமோர், காரம், மருந்தும், உணவு, ஆடையின் அழுக் ககற்றும் நீர். உறைக்கிணறு - சுடுமண்ணுறை யிட்ட கிணறு. உறைகாரன் - சாணைக்காரன். உறைகுத்துதல் - பாலுக்குப் பிரை குத்துதல். உறைகோடுதல் - பருவ மழை பெய்யா தொழிதல். உறைச்சாலை - மருத்துவசாலை. உறைதல் - வசித்தல், ஒழுகுதல், இறுகுதல். உறைத்தல் - உதிர்தல், மிகுதல். உறைநாழி - வெட்டியான் மானியம். உறைபதி - உறைவிடம். உறைபனி - காற்றிலுள்ள நீராவி உறைந்து கட்டியாதல் (Frost) உறைபனி - இறுகிய பனி. உறைபோதல் - எண்ணமுடியாது போதல். உறைப்பு - காரம், மிகுதி, கொடுமை, அழுத்தம், மழை பெய்கை, தாக் குகை. உறையிடுதல் - பேரளவிடுதற்குச் சிற்றளவமைத்துக் கொள்ளுதல். உறையுள் - உறைகை, தங்குமிடம், வீடு, நாடு, துயிலுமிடம். உறையூர் - சோழர் பழைய தலைநகருள் ஒன்று. உறையூர் இளம்பொன் வாணிகனார் - சங்க காலப் புலவர். உறையூர் இளம்பொன் வாணிகன், சாத்தன் கொற்றன் - சங்க காலப் புலவர். உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் - சங்க காலப் புலவர் உறையூர் கதுவாய்ச் சாத்தனார் - சங்க காலப் புலவர். உறையூர் சல்லியங் குமரனார் - சங்க காலப் புலவர். உறையூர் சிறுகந்தனார் - சங்க காலப் புலவர். உறையூர்ப் பராயனார் - சங்க காலப் புலவர். உறையூர் மருத்துவன் தாமோதரனார் - சங்க காலப் புலவர். உறையூர் முது கண்ணன் சாத்தனார் - சங்க காலப் புலவர். உறையூர் முதுகூத்தனார் - சங்க காலப் புலவர். உறைவி - உறைபவன். உறைவிடம் - இருக்குமிடம், களஞ் சியம். உறைவு - தங்குகை, இருக்குமிடம். உற்கடிதம் - பஞ்ச தாளத்தொன்று. உற்கம் - கடைக்கொள்ளி, விண்வீழ், கொள்ளி, தீத்திரள். உற்கலம் - பஞ்சகௌட நாட்டி லொன்று. உற்காதர் - யாகம் செய்யும் ஆசிரியருள் ஒருவன். உற்காரம் - வாந்தி. உற்கிருதி - வடமொழிச் சந்தவகை. உற்கீதை - பிரணவம். உற்குதல் - விண்ணினின்று ஏரி கொள்ளி விழுதல். உற்குரோசம் - நீர்ப் பறவை. உற்கை - கடைக்கொள்ளி, விண் வீழ் கொள்ளி, விண்மீன். உற்சங்கக்கை - அபிநயக்கை வகை. உற்சங்கம் - இணைக்கை வகை. உற்சர்ப்பிணி - வாழ்நாள் போகம் முதலியவை பெருகும் காலம். உற்சவம் - திருவிழா. உற்சாகம் - ஊக்கம், முயற்சி. உற்பத்தி - தோற்றம். உற்பலம் - கருநெய்தல், செங் குவளை, செங்கழுநீர், கோட்டம். உற்பலவரை - திருத்தணிகைமலை. உற்பவமாலை - பிரபந்த வகை. உற்பவம் - உற்பத்தி. உற்பவித்தல் - தோன்றுதல், பிறப் பித்தல். உற்பனம் - விரைவில், அறிகை, உத்தமம், தோன்றியது, நிமித்தம். உற்பாதம் - தீயகுறி. உற்பாதித்தல் - உண்டாக்குதல். உற்பிச்சம் - வித்து வேர் முதலிய வற்றினின்றும் தோன்றுவன. உற்பீசம் - உற்பிச்சம். உற்றது - நிகழ்ந்த காரியம், உண்மை. உற்றவன் - சுற்றத்தான், நோயாளி, நண்பன். உற்றவிடம் - ஆபத்துக் காலம். உற்றறிதல் - தொட்டறிதல், பயின் றறிதல். உற்றார் - சுற்றத்தார். உற்றாருறவினர் - இனஞ்சனம். உற்றான் - கணவன். உற்றுக்கேட்டல் - கூர்ந்து கேட்டல். உற்றுழி - துன்பமுறு காலத்தில். உன்மதம் - மிக்க காமம். உன்மத்தகி - குறிஞ்சா, சிறுகுறிஞ்சா. உன்மத்தம் - வெறி, மயக்கம், உமத்தை, காமன் கணைகளுள் ஒன்று. உன்மத்தன் - பித்தன். உன்மத்தை - ஊமத்தை. உன்மனி - உடலிலேயுள்ள ஒரு யோகத்தானம். உன்மாதம் - வெறி. உன்மானம் - நிறுக்கை. உன்முகம் - முன்நோக்குகை, அனுகூலமாயிருக்கை. உன்னதம் - உயர்ச்சி, மேன்மை. உன்னநிலை - போருக்கு முன் உன்ன மரத்தா நிமித்தமறியும் புறத்துறை. உன்னம் - ஒரு மரம், தியானம், கருத்து, தசை கிழிக்கும் கருவி, அன்னப் பறவை வகை, அபிநய வகை . உன்னயம் - அசுவ நூல்களில் ஒன்று. உன்னல் - நினைக்கை, மனம். உன்னாங்கொடி - பெருமுசுட்டை. உன்னி - தியானித்தற்குரிய பொருள், அழிஞ்சில். உன்னித்தல் - தியானித்தல். உன்னிப்பு - கவனிப்பு, ஊகிப்பு, புத்திக் கூர்மை, குறிப்பு, முயற்சி, உயரம். உன்னு - விரைந்தெழுகை, இழுக்கை. உன்னுகன் - இழிந்தவன். உன்னுதல் - நினைத்தல், பேசுவாய் கூட்டுதல், எழும்புதல், உந்துதல், முன்னங்கால் விரலை ஊன்றி நிமிர்தல். ஊ ஊ - கைக்கிளை என்னும் இசையின் எழுத்து, தசை, வினையெச்ச விகுதி. ஊகடன் - முருங்கை. ஊகம் - பெண் குரங்கு, ஒரு வகைப்புல், ஊகித்தறிகை, ஆலோசனை, ஊமத்தை, படை வகுப்பு. ஊகாஞ்சம் - தற்குறிப்பேற்றம். ஊகி - நுண்ணறிவுடையோன். ஊகித்தல் - உத்தேசித்தல், ஆலோசித்தல். ஊகூ - கந்தருவருள் ஒருவன். ஊகை - ஊகம், கல்வி. ஊக்கப்பாடு - ஊக்கம், கொள்கை. ஊக்கம் - மனக்கிளர்ச்சி, முயற்சி, வலிமை, உயர்ச்சி, உண்மை, மேற்கொண்ட எண்ணம். ஊக்கலர் - முயற்சியுடையோர். ஊக்கல் - முயலுகை, மிகுதி. ஊக்கு - ஊக்கம். ஊக்குதல் - ஆட்டுதல், நெகிழ்த் துதல், உற்சாக மூட்டுதல், முயலுதல், கற்பித்தல். ஊங்கணோர் - முன்னுள்ளோர். ஊங்கண் - உவ்விடத்து, முன்பு ஊங்கு - மிகுதி, மேம்பட்டது, உவ்விடம், முன்பு. ஊங்குதல் - ஆடுதல். ஊசரம் - உவர்மண், உவர்த்தரை. ஊசலாடுதல் - ஊஞ்சலாடுதல், அசை தல், போக்குவரத்தாயிருத்தல். ஊசல் - அசைவு, ஊஞ்சல், ஒரு வகைப் பிரபந்தம், மனத் தடு மாற்றம், பதனழிந்தது. ஊசல்காட்டி - மாறு மின்னோட்டம் ஒளி யலைகள் போன்ற அதிர்வு விளைவு களைக்காண உதவும் கருவி (Oscillo scope) ஊசல்வரி - ஊசற்பாட்டு. ஊசற்பருவம் - பெண்பாற் பிள்ளைத் தமிழ்ப் பருவங்களுள் ஒன்று. ஊசாடுதல் - ஊசலாடுதல். ஊசி - தையலூசி, எழுத்தாணி, நிரைக்கழு, கூர்மை, சிறுமை, வடக்கு. ஊசிக்காது - ஊசித்துளை. ஊசிக்காந்தம் - இரும்பை இழுக் கும் காந்தம். ஊசிக்கால் - நடுக்குத்துக்கால். ஊசிமுறி - இடைக்காடரியற்றிய ஒரு நூல். ஊசிவேர் - சிறுவேர். ஊசுதல் - அழுகுதல், சீவுதல். ஊச்சுதல் - உறிஞ்சுதல். ஊஞ்சல் - ஊசல், ஊசற்பாட்டு. ஊடரம் - உவர் நிலம். ஊடலுவகை - புலவியின்பின் கூடலால் நிகழும் மகிழ்ச்சி. ஊடல் - புலவி, கணவன் மனைவி யருக்கிடையில் காதற்பிணக்கு, பொய்க்கோபம். ஊடறுத்தல் - ஊடுருவுதல், இடை அறுத்துச் செல்லல். ஊடன் - மீன்வகை. ஊடாடுதல் - பலகாற் பழகுதல், நடுவே திரிதல், கலந்து பழகுதல், பெரு முயற்சி செய்தல். ஊடாட்டம் - பலகாற் பயிலுகை. ஊடு - நடு, இடை, நெசவின்தார் நூல். ஊடுதல் - புலத்தல். ஊடுருவுதல் - இடை உருவிச் செல்லுதல். ஊடூடே - இடையிடையே. ஊடை - ஆடையின் குறுக்கிழை. ஊடையம் - வீரரண். ஊட்டம் - உணவு, செழிப்பு. ஊட்ட விடுதல் - கன்றைப் பால் குடிக்க விடுதல். ஊட்டி - பறவை விலங்குகளின் உணவு, உணவு, குரல்வளை, மழை. ஊட்டித்தல் - வயலை மட்டஞ் செய்தல், தாளியடித்தல். ஊட்டியார் - சங்க காலப் புலவர். ஊட்டு - உணவு, உண்பிக்கை. ஊட்டுதல் - உண்ணும்படி உண வைப் பிறர் வாயில் இடுதல், புகட் டுதல், சாய மேற்றுதல், அனு பவிக்கச் செய்தல், கன்று அல்லது குட்டி பால் குடித்தல். ஊட்டுப்புரை - கேரள நாட்டில் பிராம ணருக்கு உணவளிக்கும் சாலை. ஊட்டுமறத்தல் - பால்குடி மறத்தல். ஊட்டுவான் - சமையற்காரன். ஊண் - உணவு. ஊண்பித்தை - சங்க காலப் புலவர். ஊதம் - யானைக்கூட்டம். ஊதல் - குளிர்க்காற்று, வீக்கம், மிகுதி, குழந்தைகள் ஊதும் குருவி, வாதநோய். ஊதா - செம்மை கலந்த நீலநிறம். ஊதாரி - வீண் செலவு செய்பவன். ஊதாரிபடுதல் - கெடுதல். ஊதிகை - முல்லைக்கொடி. ஊதியம் - இலாபம், பயன், கல்வி. ஊது - ஊதுகுழல். ஊதுகுழல் - ஊதும் இசைக்குழல், நெருப்பூதுங்குழல். ஊதுகொம்பு - கொம்பு வாத்திய வகை. ஊதுதல் - குழல் முதலியன ஊதுதல், துளைத்தல், புடம் போடுதல், வண்டு முதலியன ஒலித்தல், வீங்குதல், துருத்தியால் காற்றெழுப் புதல். ஊது துருத்தி - அடுப்பின் சுடரிடையே காற்றைச் செலுத்திச் சுடரின் வெப்ப நிலையை அதிகப்படுத்தி அதை வேண்டிய இடத்தில் தாக்கச் செய்ய உதவும் கருவி (Blow pipe) ஊதுலைக் குருகு - துரத்தி. ஊதூவர்த்தி - வாசனைச் சரக்குத் தீற்றிய குச்சி. ஊதை - வாடைக்காற்று, காற்று, வாத நோய். ஊதுவத்தி - ஊதுவர்த்தி. ஊத்தை - அழுக்கு. ஊமச்சி - ஊமைப்பெண். ஊமத்தம், ஊமத்தை - செடிவகை. ஊமல் - கிழங்கழிந்த பனங் கொட்டை. ஊமன் - ஊமையன், கூகை, பெருங் கோட்டான். ஊமாண்டி - பூச்சாண்டி. ஊமிள் - சிறு பூளை. ஊமெனல் - சம்மத கவனங்களின் குறிப்பு. ஊமை - மூங்கைத்தன்மை, ஒரு வாச் சியம், கீரி, வாய்பேசாமை. ஊத்துக்குழி - பொள்ளாச்சிக் கருகி லுள்ள ஒரு பாளையப்பட்டு. ஊமைத்தசும்பு - வாயில்லாத குடம். ஊமைத்துரை - பாஞ்சாலக் குறிச் சியை ஆண்டுவந்த வீர பாண்டியன் கட்டபொம்முவின் தம்பி. ஊமைச்சி - சமமான இரண்டு ஓடுள்ள சிப்பி (Cockle) ஊமைமணி - நாக்கில்லாத மணி. ஊமையன் - மூங்கையன். ஊமையெழுத்து - பிரணவம். ஊம் - ஊமை. ஊம்பு - சப்பு. ஊய்தல் - பதனழிதல். ஊரணி - ஊருணி. ஊரல் - ஊர்வது, கிளிஞ்சில், கிளுவைப் பறவை. ஊரவர் - ஊரார். ஊரன் - மருதநிலத் தலைவன். ஊரா - ஊர்ப்பசு. ஊராட்சி - ஒரு பழைய வரி. ஊராண்மை - உபகாரியாந் தன்மை, மிக்கசெயல், பகைமேற் செல்லுகை. ஊராநற்றேர் - ஆகாய விமானம். ஊரார் - ஊரவர், அன்னியர். ஊராளி - ஊரதிகாரி, ஒரு மலைச் சாதியான், வரிக்கூத்து. ஊரி - சங்கு, இளமை, மேகம். ஊரிருக்கை - ஊரைச் சார்ந்த இடம். ஊர்ன்னிசை - தலைவனூரை இன் னிசை வெண்பாக்களாற் சிறப் பிக்கும் பிரபந்த வகை. ஊரு - தொடை. ஊருகால் - ஊர்ந்து செல்லும் நத்தை, சங்கு. ஊருசன் - வைசியன். ஊருடையார் - ஊர்க்கணக்கர். ஊருடை - முருங்கை. ஊருணி - ஊரார் நீருண்ணும் நீர் நிலை, குளம். ஊரெறிதல் - ஊரைக் கொள்ளை யிடுதல். ஊரெறிபறை - பாலை நிலத்துப் பறை. ஊரோசம் - பரந்த கீர்த்தி. ஊர் - வசிக்கும் ஊர், ஊர்கை, இடம், சந்திர சூரியரைச் சூழும் பரிவேடம். ஊர்கொண்டன்று - நிரம்புதல டைந்தது. ஊர்கொலை - பகைமேற் செல் வோர் நிரை காவலரைக் கொல்லும் புறத்துறை. ஊர்கொள்ளுதல் - குறைவின்றி வட்டமாக ஒளி பரத்தல். ஊர்கோலம் - ஊர்வலம் வருதல். ஊர்கோல் - பரிவேடம். ஊராங் ஊட்டான் - மனிதக் குரங்கு (Orang - outang) ஊர்ச்சிதம் - உறுதி. ஊர்ணநாபி - சிலந்திப்பூச்சி. ஊர்தல் - நகர்தல், வடிதல், அடர்தல், கழலுதல், தினவுறுதல், ஏறி நடத்தல். ஊர்தி - வாகனம், ஏறியிருப்பது. ஊர்த்தல் - ஊற்றுதல். ஊர்த்துவம் - மேல். ஊர்நத்தம் - கிராமம், கிராமத்தில் வீடு கட்டுவதற்காக விடப்பட்டிருக்கும் இடம். ஊர்நேரிசை - தலைவனது ஊரை நேரிசை வெண்பாக்களாற் சிறப் பிக்கும் பிரபந்தவகை. ஊர்ப்புள் - ஊர்க்குருவி. ஊர்மன்று - ஊர்ப் பொதுவிடம். ஊர்முகம் - படைகள் பொருமிடம். ஊர்வசி - தேவலோகத்து ஆடல் மகளிரில் ஒருத்தி. ஊர்வன - ஊரும் உயிர்கள். ஊர்வாரி - ஊர்ச்சலதாரை. ஊர்வாரியம் - கிராம சபை. ஊழல் - நரகம், கெட்டது. ஊர்க்குருவி - சிட்டுக்குருவி, அடைக் கலாங்குருவி எனப்படும் குருவி. ஊர்விருத்தம் - தலைவனூரை; விருத்தச் செய்யுள் பத்துக்கொண்டு சிறப்பித்துப் பாடும் பிரபந்த வகை. ஊர்வெண்பா - தலைனூரைப் பத்து வெண்பாக்களாற் பாடும் பிரபந்தம். ஊழலித்தல் - பதனழிதல், மெலிதல். ஊழி - வெள்ளப் பெருக்கால் உலகம் அழியும் காலம், வாழ்நாள், நெடுங் காலம், விதி, முறைமை. ஊழிக்காலம் - உக முடிவுக் காலம். ஊழிக்கால் - உக முடிவில் தோன்றும் காற்று. ஊழ்த்தீ - உக முடிவில் தோன்றும் நெருப்பு. ஊழிமுதல்வன் - கடவுள். ஊழியக்காரன் - வேலைக்காரன். ஊழியம் - தொண்டு. ஊழியன் - பணியாள். ஊழியான் - பிரளய காலத்தும் அழியாதிருக்கும் கடவுள். ஊழிலை - இலைச்சருகு. ஊழில் - அருவருப்புறு சோறு. ஊழுறுதல் - குடைதல், முடிவு பெறுதல். ஊழை - பித்தம். ஊழ் - பழமை, பழவினைப்பயன், முறைமை, தடவை, முதிர்வு, முடிவு, பகை, மலர்ச்சி, சூரியன். ஊழ்குதல் - தியானித்தல். ஊழ்த்தசை - புலால். ஊழ்த்தல் - முடை நாற்றம், இறைச்சி, நரகம், பருவம், கழலுதல், விரிதல், மலர்தல், நினைத்தல், உதிர்தல். ஊழந்நல் - ஊருதல். ஊழ்பாடு - முடிவு படுகை. ஊழ்மை - முறைமை. ஊழ்வினை - வினைப்பயன், உழு வலன்பு. ஊளன் - நரி. ஊளா - நெடுவாய் மீன். ஊளான் - கடல் மீன்வகை. ஊளி - பசி, சத்தம். ஊளை - நரி முதலியன இடும் சத்தம். ஊளையிடுதல் - நரி முதலிய சத்த மிடுதல். ஊறணி - சேற்று நிலம், வருவாய். ஊறல் - நீரூற்ற, சாறு, களிம்பு, தினவு. ஊறவைத்தல் - நீரில் பதம்பெறச் செய்தல். ஊறு - உறுகை, பரிசம், இடையூறு, கொலை, நாசம், உடம்பு, காயம், வல்லூறு. ஊறுகறி - ஊறுகாய். ஊறுகனி - உப்பு முதலியவற்றின் ஊறினகாய். ஊறுகோள் - காயம், கொலை. ஊறுதல் - நீரூறல், கசிதல், வாயூறல், பெருகல். ஊறுபாடு - இடையூறு, துன்பம், காயமுண்டாக்கை. ஊறை - சவ்வரிசி. ஊற்றங்கோல் - ஊன்றுகோல். ஊற்றம் - பற்றுக்கோடு, மன வெழுச்சி, இடையூறு, கேடு. ஊற்றாணி - கலப்பை உறுப்பி லொன்று. ஊற்றால் - மீன் பிடிக்கும் கூடு. ஊற்று - சுரக்கை, நீரூற்று, ஊன்று கோல், ஆதரவு. ஊற்றுக்கோல் - ஊன்றுகோல். ஊற்றதல் - வார்த்தல். ஊற்றுமரம் - செக்குவகை. ஊனகாரன் - இழிதொழில் செய்விப் போன். ஊனகிரகணம் - பாரிச கிரகணம் ஊனக்கண் - இறைச்சியாலாகிய கண், பசு, ஞானம், உயிரின் அறிவு. ஊனமர்குறடு - இறைச்சி கொத்தும் பட்டடை. ஊனம் - குறைவு, பழி, தீமை, அழிவு, இறைச்சி கொத்தும் பட்டடை. ஊனவன் - மனிதன். ஊனன் - உடற்குறைபாடுள்ளவன். ஊனி - மாமிச தேகத்திலுள்ளவன். ஊனொட்டி - உடும்பிறைச்சி. ஊன் - தசை, உடல். ஊன்கணார் - மானிடர். ஊன்செய்கோட்டம் - உடல். ஊன்பசை - விலங்குகளின் எலும்பு தோல்களிலிருந்து எடுக்கும் ஒரு புரோட்டீன் (gelatine) இதன் பருக்கன் வகைகள் குளூ (glue) எனப்படும். ஊன்பொதி பசுங் கூடையார் - சங்க காலப் புலவர். ஊன்றி - பாம்பு. ஊன்றிப் பார்த்தல் - ஆராய்ந்து பார்த்தல். ஊன்று - சார்பு. ஊன்றுகோல் - கைத்தடி, பற்றுக்கோடு. ஊன்றுதல் - நிலைபெறுதல், சென்று தங்குதல், அழுந்த வைத்தல், நடுதல், துணையாகப் பற்றுதல், தாங்குதல், தீர்மானித்தல், அமுக் குதல், உறுத்துதல், குத்துதல். எ எ - தமிழில் ஏழென்னும் எண்ணின் குறி, ஒரு வினா. எஃகம் - கூர்மை, உருக்காயுதம், வாள், வேல், சூலம். எஃகு - கூர்மை, உருக்கு, மதி நுட்பம், வேல், ஆயுதப் பொது. எஃகுசெவி - நுனித்தறியுஞ் செவி. எஃகுதல் - பண்ணுதல், ஆராய்தல், எட்டுதல், நெகிழ்தல், ஏறுதல். எஃகுறுதல் - அறுக்கப்படுதல், பன்னப்படுதல். எகிப்து - ஆப்பிரிக்காவில் நீல் நதிக் கரைகளிலுள்ள நாடு. எகினம் - அன்னம், கவரிமா, நீர் நாய், நாய், புளியமரம். எகினன் - அன்னவாகனமுடைய பிரமன். எகின் - அன்னம், கவரிமா, புளிமா, புளியமரம், அழுஞ்சில். எக்கச்சக்கம் - தாறுமாறு. எக்கமத்தளி - ஒருவகை முழவு. எக்கம் - ஏக தந்திரி, என்னும் இசைக்கருவி. எக்கர் - இடுமணல், மணற்குன்று, நுண்மணல், இறுமாப்புடையவர், பலர் முன்சொல்லத் தகாத சொல். எக்கல் - எக்கர், நெருக்கம். எக்களிப்பு - செருக்கோடு கூடிய மகிழ்ச்சி. எக்காளம் - ஓர் ஊது சின்னம் எக்கி - நீர்வீசுங் கருவி. எக்கியம் - யாகம். எக்குதல் - குவிதல், மிசைச் செல் லுதல், உள்ளிழுத்தல். எக்கே - வருத்தக் குறிப்பு. எக்ஸ் கதிர்கள் - ஒருவகை மின் ஒளி (X-Rays) எங்கணும் - எவ்விடத்தும். எங்கித்தை - எவ்விடத்தில் எங்கு, எங்கே - எவ்விடம். எங்கை - என் தங்கை. எங்ஙன் - எங்ஙனம், எப்படி. எசமாட்டி - தலைவி. எசமானன் - தலைவன், கணவன். எசமான் - தலைவன், எசமானன். எசம் - நரம்பு. எசு - யசுர் வேதம். எசுர்வேதம் - நால் வேதங்களில் ஒன்று. எச்சம் - மிச்சம், சந்ததி, மகன், எச்சில், பிறப்பிலே வரும் குறை, தொக்கு நிற்பது, எக்கியம். எச்சமிடுதல் - பறவைகள் மலம் கழித்தல். எச்சரிக்கை - முன்னறிவிப்பு, கவன மாக இருக்கும்படிக் குறிப்பிடும் சொல். எச்சரித்தல் - சாக்கிரதைப் படுத்துதல். எச்சரிப்பு - முன்னறிவிப்பு. எச்சவனுமானம் - காரியங்கொண்டு காரணமறிதல். எச்ச வுறுப்புக்கள் - முற்காலத்தி லிருந்து பின் அடையாளமளவி லுள்ள உறுப்புக்கள் (Vestigial organs) எச்சன் - யாகஞ் செய்வோன், யாக தேவதை. எச்சில் - உமிர்நீர், உமிழ்நீர் பட்டு அழுக் கானது, மிச்சில். எச்சு - குறைவு. எஞ்சலார் - புதியவர். எஞ்சல் - குறைவு, ஒழிகை குறைவு இல்லாமை. எஞ்சாமை - முழுமை. எஞ்சிநிற்றல் - தொக்கு நிற்றல், ஒழிந்து நிற்றல். எஞ்சுதல் - மிஞ்சுதல், குறைதல், கெடுதல், ஒழிதல், செய்யா தொழி தல். எஞ்சம் - எக்கியம், யாகம். எஞ்ஞான்றும் - எல்லாக் காலமும். எடார் - மைதானம். எடுக்கல் - தூக்குகை, அளவிட்ட றிகை. எடுத்தலளவை - நிறை. எத்தலோசை - உயர்த்துக் கூறு மோசை. எடுத்தல் - உயர்த்துதல், சுமத்தல், தூக்கிப்பிடித்தல், நிறுத்தல், திரட் டுதல், உரத்துச் சொல்லுதல், குறிப் பிடுதல், தெரிந்தெடுத்தல், கட்டுதல், நீக்குதல், புடை பருத்தல், மேல் நோக்கி இருத்தல், நிறுத்தலளவு. எடுத்தன் - பொதிமாடு. எடுத்தாளுதல் - வழங்குதல். எடுத்தியல்கிளவி - எடுத்துக்காட்டு. எடுத்துக்காட்டு - மேற்கோள். எடுத்துக்கோள் - எடுத்துக்காட்டு. எடுத்து நிலை - போனதை மீண்டும் நிறுத்துகை. எடுத்துமொழிதல் - விளங்கச் சொல்லுதல். எடுத்தேத்து - புகழ்ச்சி. எடுத்தேறு - எடுத்தெறிகை. எடுத்தோத்து - எடுத்துக்கூறும் விதி. எடுபடுதல் - நீக்கப்படுதல், நிலை பெயாதல், அதிர்தல், கைக் கொள்ளப்படுதல், மேம்படுதல். எடுபட்டவள் - கற்பழிந்து குடும்பத் தினின்று வெளிப்பட்டவள். எடுபாடு - பிரசித்தம், குலைவு, ஆடம்பரம். எடுபிடி - முயற்சி, விருது. எடுப்பு - உயரம், ஏற்றம், தொடங்கின காரியம். எடுப்புச்சாய்ப்பு - ஒப்புரவான நடை, உயர்வு தாழ்வு. எடுப்புதல் - துயிலெழுதல், இசை யெழுப்புதல். எடுவுதல் - துயிலெழுதல், இசை யெழுப்புதல். எடை - நிறுத்தல், நிறையளவு, துயி லெழுப்புகை, மிகுதல். எட்கசி, எட்கசிவு - எள்ளாற் செய்யப்பட்ட ஓர் உணவு. எட்கிடை - எள் கிடத்தற்கு வேண்டிய இடம். எட்சத்து - (எள் + சத்து) நல்லெண் ணெய். எட்சி - உதயம். எட்சிணி - யட்சிணி தேவதை. எட்ட - தூரமாக. எட்டடிப்பறவை - சிம்புள். எட்டம் - நீளம். எட்டர் - அரசனுக்கு நாழிழுகைக் கணக்குக் கூறும் மங்கலப் பாடகர். எட்டவிடுதல் - பரப்புதல். எட்டன் - மூடன். எட்டன் மட்டம் - தாளவகை. எட்டி - வைசியர் பெறும் பட்டம், காஞ்சிர மரம். எட்டிகம் - காஞ்சிதை, எட்டிமரம், சீந்தில். எட்டிப்புரவு - வாணிகத்தாற் சிறந் தார்க்கு அரசன் கொடுக்கும் பூமி. எட்டிப்பூ - எட்டிப் பட்டம் பெற்ற வர்க்கு அரசன் கொடுக்கும் பூமி. எட்டுக்காற்பூச்சி - சிலந்திப்பூச்சி. எட்டுணை - (எள் + துணை) எள்ளளவு. எட்டுதல் - கிட்டுதல், அகப்படுதல், புலப்படுதல், தாவிப் பார்த்தல், நீளம் போதியதாதல். எட்டுத்தொகை - சங்க காலத்துத் தொகுக்கப்பட்ட எட்டு நூல்கள். எண் - கணக்கிடுகை, ஆலோசனை, மனம், மதிப்பு, கணிதம், சோதிட நூல், வரையறை, தர்க்கம், மாற்று, மந்திரம், எள். எண்கணிதம் - இலக்கங்கள் மூலம் போடப்படும் கணக்கு. எண்கண்ணன் - எட்டுக் கண்கள் உள்ளவன், பிரமா. எண்காற்புள் - சரபம். எண்குணத்தான் - எட்டுக் கு™ முள்ளவன், கடவுள். எண்குணன் - அருகன், சிவன். எண்கோவை - காஞ்சி என்னும் அரையணி. எண்சுவடி - பெருக்கல் வாய்ப்பாட்டு நூல். எண்டோளன் - (எட்டு + தோளன்) சிவன். எண்டோளி - துர்க்கை. எண்ணப்படுதல் - மதிக்கப்படுதல், கணிக்கப்படுதல். எண்ணம் - நினைப்பு, நாடிய பொருள், சூழ்ச்சி, கணிதம். எண்ணர் - கணிதர், மந்திரிகள். எண்ணலளவை - இலக்கணத்தால் எண்ணும் அளவை. எண்ணல் - கருத்து, கணக்கிடுகை. எண்ணாயிரவர் - சமணரிலொரு தொகுதியார். எண்ணார், எண்ணலர் - பகைவர். எண்ணிக்கை - கணக்கிடுகை. எண்ணிடுதல் - கணக்கிடுதல். எண்ணியார் - எண்ணங் கொண் டவர். எண்ணிலி - எண்ணிலடங்காதது. எண்ணிறந்த - எண்ணமுடியாத. எண்ணீர் - (எள் + நீர்) - எள்ளும் நீரும். எண்ணுதல் - நினைத்தல், ஆலோ சித்தல், தீர்மானித்தல், மதித்தல், தியானித்தல், கணக்கிடுதல், மதிப் பிடுதல். எண்ணூல் - (எண் + நீர்) - கணிதநூல். எண்ணூறு - எட்டு நூறு. எண்ணெய் - எண்ணெய்ப் பொது, நல்லெண்ணெய். எண்ணெய்க்காப்பு - தைல முழுக்கு. எண்ணெய்ப்பனை - தென்னை போன்ற ஒரு சாதிமரம் (oil - palm) எண்பதம் - தருணம், எளிய சமயம், நெல் புல் வரகு திணை, சாமை இறுங்கு துவரை இராகி. எண்பேராயம் - அரசர்க்குரிய எண் பெருந் துணைவர், கணக்கர், கரும விதிகள் (ஆணை நிறைவேற்று வோர்), கனகச் சுற்றம், கடை காப்பாளர், நகரமாந்தர், படைத்தலைவர், யானை வீரர், குதிரை வீரர். எண்மதி - எட்டாம் நாள் சந்திரன். எண்மயம் - எண் வகைச்செருக்கு. எண்மர் - எட்டுப் பேர். எண்மை - சுலபம், தாழ்மை. எதளா - புளியமரம். எதா - எப்படி. எதாசத்தி - கூடியவரை. எதார்த்தம் - உண்மை. எதி - துறவி. எதிர - ஓர் உவமவுருபு. எதிரது போற்றல் - முன்னில்லாதன வாயினும் தற்கால வழக்காயின் அவற்றைக் கொள்ளும் உத்தி. எதிராசன் - சன்னியாசிகளுள் சிறந் தவன். எதிராளி, எதிரி - பகைவன். எதிரிடுதல் - எதிர்ப்படுதல், எதிரித் தல், மாறுபடுதல். எதிரிடை - எதிர்ச்செயல், போட்டி. எதிரிலி - எதிரில்லாதவன். எதிரூன்றல் - போருக்கு எதிர்நிற்றல். எதிரெடுத்தல் - வாந்தி பண்ணுதல். எதிரேறு - வலிமை. எதிரேற்றம் - பெருக்குக்கு எதிரேறிச் செல்லுதல். எதிரேற்றல் - எதிர்கொள்ளுதல், எதிர்நிற்றல். எதிரொலி - பிரதித்தொனி. எதிர் - முன்னுள்ளது, வருங்காலம், இலக்கு முன், முரண், போர், எதிரிடையானது, ஒப்பு. எதிர்காலம் - வருங்காலம். எதிர்கொள்ளுதல் - வரவேற்றல், ஏற்றுக் கொள்ளுதல். எதிர்கோள் - எதிர் கொள்ளுதல். எதிர்செலவு - வரவேற்க முன் எழுந்து செல்லுகை. எதிர்தல் - தோன்றுதல், சம்பவித்தல், முன்னாதல், மலர்தல், மாறுபடுதல், எதிர்த்தல், பெறுதல், பொருந்துதல், ஏற்றுக் கொள்ளுதல். எதிர்த்தல் - சந்தித்தல், தாக்குதல். எதிர்நிற்றல் - முன் நிற்றல், எதிர்த்து நிற்றல். எதிர்நூல் - தன் கொள்கையை நிறுத்திப் பிறகொள்கையை மறுக் கும் நூல். எதிர்ந்தோர் - பகைவர். எதிர்பார்த்தல் - ஒன்றை நோக்கி யிருத்தல், வரவு பார்த்திருத்தல். எதிர்பொழுது - வருங்காலம். எதிர்ப்படுதல் - முன் தோன்றுதல் சந்தித்தல், ஒப்பாதல். எதிர்ப்பாடு - சந்திக்கை. எதிர்ப்பை - திருப்பிக் கொடுப்பது. எதிர்மறை - எதிர்மறுப்பு. எதிர்மறை இலக்கணை - எதிர் முறைப் பொருளைக் குறிப்பா லுணர்த்துவது. எதிர்முகம் - நேர்முகம், முன்னிலை. எதிர்மை - எதிர்காலத்து நிகழ்கை. எதிர்மொழி - மறுமொழி, மறுப்பு உரை. எதிர்வரவு -பிற்காலத்து வருகை. எதிர்வழக்கு - பிரதிவாதம், எதிர் வியாச்சியம். எதிர்வனன் - ஏற்றுக்கொள்பவன். எதிர்வாதம் - மாறுபடக் கூறுகை, பிரதிவாதியின் வாதம். எதிர்வினை - எதிர்காலத்துக் காரியம். எதிர்வு - எதிர்ப்படுகை, எதிர்காலம். எதிர்வெட்டு - மறுதலை. எதுகை - இரண்டாமெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது. எதேச்சை - விருப்பப்படி. எத்தனம் - முயற்சி, ஆயத்தம். எத்தனித்தல் - முயலுதல். எத்தனை - எவ்வளவு. எத்தன் - ஏமாற்றுவோன். எத்தாப்பு - ஆடை, துணி. எத்தி - ஏமாற்றுபவன். எத்து - வஞ்சகம். எத்துதல் - வஞ்சித்தல். எத்துணை - எவ்வளவு. எத்தும் - எவ்வகையாலும். எந்திரக்கிணறு - நீரை இறைக்கும் பொறி உடைய கிணறு. எந்திரநாழிகை - ஒரு வகை நீர் வீசும் கருவி. எந்திரப்பொருப்பு - பல்வகைப் பொறிகளமைத்த செய் குன்று. எந்திரம் - சூத்திரப்பொறி, ஆலை, செக்கு, தேர்ச்சக்கரம், குயவன் சக்கரம், மதிற் பொறி, மந்திர சக்கரம். எந்திரவாவி - யந்திரத்தால் நீர்வரவும் போகவும் அமைக்கப்பட்ட நீர் நிலை. எந்திரவில் - தானே எய்யும் வில் பொறி. எந்திரவூசல் - தானே ஆடும் பொறி அமைந்த ஊசல். எந்திரவூர்தி - சூத்திரத்தால் தானே இயங்கும் வாகனம். எந்திரவெழினி - சூத்திரத்தால் எழவும் விழவுங் கூடிய திரை. எந்திரி - பாவையை ஆட்டுவோன். எந்திருத்தல் - மந்திர சக்கரம் வரைதல். எந்து - என்ன, எப்படி. எந்தை - எம்தந்தை, எம் தமையன், எம் தலைவன். எபிரேயமொழி - யூதருடைய மொழி. எப்படி - எவ்வாறு. எப்பேர்ப்பட்ட - எவ்வகையான. எப்பொழுது, எப்போது, எப் போழுது - எக்காலம். எப்பொழுதும் - எல்லாக் காலமும். எம்கிங்கரன் - இயமனது வேலை செய்வோன். எமதங்கி - சமதக்கினி. எமதருமன் - யமன். எமபுரம் - வைவச்சுத நரகம். எமரங்கள் - எமர். எமரன் - எமன். எமர் - எம்மவர், நம்மவர். எமன் - எம்மைச் சேர்ந்தவன், யமன். எமி - தனிமை, கூடியிருப்போன். எமுனை - யமுனை. எம்பரும் - எவ்விடத்தும். எம்பார் - இராமாநுசரின் சிற்றன்னை யின் புதல்வர். எம்பி - எம் தம்பி. எம்பிராட்டி - எங்கள் தலைவி. எம்பிரான், எம்பெருமான் - ஆண்டவன். எம்மனை - எம்தாய். எம்மனோர் - எம்மை ஒத்தவர். எம்மான் - எம் சுவாமி, என் மகன், எம் தந்தை. எம்முன் - எம் தமையன். எம்மை - எப்பிறப்பு, எவ்வுலகு, எந்தலைவன் (எம் + ஐ) எயில் - மதில், அரண், ஊர். எயிறலைத்தல் - சினத்தால் பல்லைக் கடித்தல். எயிறு - பல், பல்லின் விளிம்பு, யானை பன்றிகளின் வாய்க்கோடு. எயிறு தின்னுதல் - சினத்தால் பல்லைக் கடித்தல். எயிற்றம்பு - அலகம்பு. எயிற்றி - வேடப்பெண். எயிற்றியனார் - சங்க காலப் புலவர். எயினந்தையார் - சங்க காலப் புலவர். எயினன் - வேடன். எயின் - வேட்டுவ சாதி. எய் - முள்ளம்பன்றி, அம்பு, ஓர் உவம உருபு. எய்த - நன்றாக, நிரம்ப. எய்தல் - பாணம் விடல். எய்துதல் - அணுகுதல், அடைதல், பணிதல், நீங்குதல், பொருந்துதல், சம்பவித்தல், உண்டாதல், போதிய தாதல். எய்த்தல் - இளைத்தல், மெய்வருந் துதல், குறைவுறுதல், அறிதல். எய்ப்பன்றி - முள்ளம் பன்றி. எய்ப்பில் வைப்பு - இளைத்த காலத்தில் உதவுதற்காகச் சேர்த்து வைக்கப்படும் பொருள். எய்ப்பு - இளைப்பு, வறுமைக் காலம். எய்ப்போத்து - ஆண் முள்ளம் பன்றி. எய்மான் - முட்பன்றி. எய்யாமை - அறியாமை, வருந் தாமை. எரி - பிரகாசம், நெருப்பு, அக்கினி தேவன், நரகம், புனர்பூசம், கேட்டை, கந்தகம், இடபராசி. எரிகதிர் - சூரியன். எரிகரும்பு - அடுப்பு, விறகு. எரிகாசு - காசுக்கட்டி. எரிக்கொள்ளி - கடைக்கொள்ளி. எரிசுடர் - எரியும் நெருப்பு, மிக்க ஒளி. எரிச்சல் - பொறாமை, எரிவு. எரிதல் - சுவாலித்தல், பிரகாசித்தல், எரிச்சலுண்டாதல், துயரமடைதல், கோபங் கொள்ளுதல், முதிர்தல். எரிதூவுதல் - தீ பற்றுதல். எரித்தல் - தீயால் வெந்தழியச் செய்தல், விளக்கு முதலியன எரித்தல், அழற்றுதல், சீரணிக்கச் செய்தல். எரிநகை - வெட்சி மலர். எரிநாள் - கார்த்திகை. எரிபந்தம் - தீவர்த்தி. எரிபொத்துதல் - அழல் மூட்டுதல். எரிபொருள்கலக்கி - உள்ளெரி எஞ்சினிலுள்ள ஒரு பகுதி (Carburettor) எரிபொருள்கள் - வெப்பத்தைப் பெறப் பயன்படும் பொருள்கள் (Fuels) எரிப்பு - எரிக்கை, கார்ப்புச்சுவை, பொறாமை. எரிமணி - பிரகாசமுள்ள மணி. எரிமலர் - முருக்குமலர், செந்தாமரை. எரிமலைக் குழம்பு - எரிமலை வாய் வழியே வரும் உருகிய குழம்பு (Lava) எரிமுகி - செங்கோட்டை. எரியூட்டுதல் - தீக்கொளுத்துதல். எரியோம்புதல் - ஓமஞ் செய்தல். எரியோன் - அக்கினிதேவன். எரிவந்தம் - எரிச்சல், நோய், கோபம். எரிவனம் - சுடுகாடு. எரிவாயு - எரிபொருளாகப் பயன் படும் வாயுக்கள். எரிவிழித்தல் - கோபித்துப் பார்த்தல். எரிவிளக்குறுத்தல் - குற்றவாளி யின் தலைமீது எரியும் விளக்கை வைத்து நகரைச் சுற்றி வரும்படி செய்து தண்டித்தல். எரிவு - எரிகை, உடற்காந்தல், பொறாமை, கோபம். எரு - உரம், மலம். எருக்காட்டூர் தாயங் கண்ணனார் - சங்க காலப் புலவர். எருக்கிலைமணி - பரவ மகளிர் பூணுங் கழுத்தணிவகை. எருக்கு - எருக்கஞ் செடி. எருக்குதல் - கொல்லுதல், வருத் துதல், வெட்டுதல், தாக்குதல், அடித்தல், அழித்தல், சுமத்தல், தாக்கி ஒலி யெழச் செய்தல். எருக்குரல் - தட்டுதலாலுண்டாகும் ஒலி. எருசலேம் - பாலஸ்தீன நாட்டின் தலைநகர். எருச்சலூர்மலாடனார் - சங்க காலப் புலவர். எருதடித்தல் - உழுதல், சூடடித்தல். எருது - இடபம், இடபராசி. எருத்தடி - ஈற்றயலடி. எருத்தம் - கழுத்து, பிடர், ஈற்றயல். எருத்து - கழுத்து, ஈற்றயல். எருத்தன் - காளை போல் வலியன் எருத்துவாலன் - கொண்டைக் கரிச்சான் என்னும் பறவை. எருந்தி - இப்பி. எருந்து - கிளிஞ்சில். எகுமணம் - செங்குவளை. எருமன்றம் - மாடுகள் கூடுமிடம். எருமுட்டை - வறட்டி. எருமை - எருமை மாடு, எருமை, மறம், யமன். எருமைநாக்கு - ஒருவகை மீன். எருமை வெளியனார் - சங்க காலப் புலவர். எருமை வெளியனார் மகனார் மோகனக் கடலார் - சங்க காலப் புலவர். எருமைக்கடா - ஆணெருமை. எருமைக் குழவி - எருமைக் கன்று. எருமைப் புல் - ஒருவகை நீர்ப்புல். எருமைப்போத்து - எருமைக்கடா. எருமைமறம் - வீரனொருவன் தன் சேனை முதுகிடவும் பகைவர் சேனையைத்தான் அஞ்சாது எதிர்த்து நிற்கும் புறத்துறை. எருமையின்றிசை - தெற்கு. எருமையூரன் - அதிகமான் நெடு மான் அஞ்சியால் வெல்லப்பட்ட குறுநில மன்னன். எருமையூர்தி - யமன். எருவிடும் வாசல் - மலவாயில். எருவை - செம்பு, உதிரம், முக வெள்ளைப் பருந்து, கழுகு, பஞ்சாய்க் கோரை, கோரைக் கிழங்கு. எர்கட்டு - கோதுமை, இரை, ஓட்ஸ் போன்ற தானியங்கள் பற்கள் நாணல் களின் கதிர்களைப் பற்றியுள்ள ஒரு வகைக் காளானின் உணவு சேகரிக் கும் கடின பாகம் (Ergot) எலா - நண்பினரை விளிக்கும் ஒரு விளிப் பெயர். எலி - பெருச்சாளி, கள், கள்ளி. எலிக்குச்சிப்புல் - இராவணன், மீசை என்னும் புல். எலிச்செவி - கொடியாள் கூந்தல் என்னுஞ் செடி. எலிபண்டா - காராபுரியிலுள்ள மலையில் குடையப்பட்ட கோயில் கள். எலிப்பகை - பூனை. எலிப்புலி - பூனை. எலியாலங்காய் - காட்டாமணக்கு விதை. எலியோடி - நடுமுகட்டிலே வைக் கும் உருட்டு மரம். எலிவனை - எலிப்புற்று. எலு - கரடி, பிஞ்சு. எலுமிச்சை - ஒரு செடி. எலும்பியல் - உடலிலுள்ள எலும்புக் கூடுகளைப் பற்றிக் கூறும் சாத்திரம் (Osteology) எலும்புக்கூடு - ஊன் நீங்கிய எலும்பின் கோவை. எலும்புருக்கி - கயரோக வகை. எலுவ - தோழன் முன்னிலைப் பெயர். எலுவல், எலுவன் - தோழன். எலுவை - தோழி. எல் - ஒளி, சூரியன், வெயில், நாள், இரவு இகழ்மொழி. எல்ம் - உலகிற் சிறந்த மரங்களில் ஒரு சாதி. எல்லப்பநாவலர் - அருணாசல புராணஞ் செய்த புலவர் (17ம் நூ.) எல்லம் - இஞ்சி. எல்லம்மன், எல்லம்மா - ஒரு கிராம தேவதை. எல்லரி - பறை வகை. எல்லவரும் - எல்லாரும். எல்லவன் - சூரியன். எல்லா - ஒருவிளிப்பெயர், தோழி முன்னிலைப் பெயர். எல்லாம் - முழுதும். எல்லாரும் - யாவரும். எல்லார் - தேவர். எல்லி - பகல், இரவு, இருள். எல்லிநாதன் - சந்திரன். எல்லிமனை - தாமரை. எல்லியறிவன் - கோழிச் சேவல். எல்லியருள் - விடியற் காலத்திருள். எல்லினான் - சூரியன். எல்லீரும் - நீங்கள் யாவரும். எல்லெண் - பன்னிரண்டு. எல்லே - தோழி, முன்னிலைச் சொல், ஓர் அதிசய இரக்கச் சொல், வெளியே. எல்லேமும் - நாங்கள் எல்லாரும். எல்லை - வரம்பு, அளவை, கூப்பிடு தூரம், தறுவாய், இடம், சூரியன், நாள். எல்லைகட்டுதல் - வரையறுத்தல். எல்லைக்கறுப்பன் - ஒரு கிராம தேவதை. எல்லோன் - சூரியன். எல்லைப்பிடாரி - ஊரின், நாற் சந்தியிலுள்ள கிராம தேவதை. எல்லைப்புறம் - எல்லைக் கரைகள். எல்லையம்மன் - எல்லம்மன். எல்லோரா - பீகார் பகுதியிலுள்ள எல்லோரா என்னும் இடத்தில் காணப் படும் பாறையில் குடையப்பட்ட கோயில். எல்வளி - பெருங்காற்று. எவண் - எவ்விடம். எவரஸ்ட்டு - மிக உயர்ந்த இமயமலைச் சிகரம். எவரும் - யாரும். எவன் - யாது, யாவை, எவ்வண்ணம், அதிசய இரக்கச்சொல். எவ்வது - எவ்வாறு. எவ்வி - சங்க கால வள்ளல்களி லொருவன். எழல் - கிளர்ச்சி, புறப்படுகை, உதிக்கை. எழாநிலை - யானை கட்டுங் கூடம். எழால் - புல்லூறு என்னும் பறவை, யாழிbழும் இன்னிசை, மக்கள் மிடற்றிசை. எழிலி - மேகம். எழிலிய - அழகு வாய்ந்த. எழில் - அழகு, இளமை, தோற்றப் பொலிவு, உயர்ச்சி, வலி. எழிற்கை - அழகு பெறக்காட்டும் கை. எழினி - அதியமான் நெடுமான் அஞ்சியின் மறுபெயர். எழு - தூண், கதவை உள்வாயிற் படியில் தடுக்கும் மரம், படைக்கல வகை. எழுகளம் - போர்க்களம். எழுகூற்றிருக்கை - பாடல் வகை. எழுச்சி - எழுகை, புறப்பாடு பள்ளி எழுச்சிப் பாட்டு, தொடக்கம், முயற்சி. எழுச்சிகொட்டுதல் - புறப்பாட்டுக் குரிய வாத்தியம் கொட்டுதல். எழுச்சிமுரசம் - புறப்பாட்டு முரசு. எழுதகம் - ஓவிய வேலை. எழுதல் - எழுந்திருத்தல், எழும்புதல், தோன்றுதல், புறப்படுதல், மனங் கிளர்தல், மிகுதல், வளர்தல், பரவுதல், தொடங்குதல். எழுதாக்கிளவி - வேதம். எழுதுதல் - எழுத்து வரைதல், ஒவியம் தீட்டுதல், இயற்றுதல், விதியேற் படுத்துதல், பாவை முதலி யன செய்தல், அழுந்திப் பதிதல். எழுதுகொடி - முலைமேல் எழுதும் தொய்யில். எழுதுகோல் - சித்திரம் வரையும் கோல், எழுதும்கோல். எழுத்ததிகாரம் - எழுத்திலக்கணம் கூறும் பகுதி. எழுத்தந்தாதி - ஒரு பாட்டின் ஓரடி யினீற்றெழுத்து அடுத்த அடியின் முதலெழுத்தாக வரத்தொடுப்பது. எழுத்தலிசை - எழுத்தோசையாகாத ஈளை தும்மல் முதலியவை. எழுத்தறப்படித்தல் - எழுத்தோசை தெளிவாக வாசித்தல். எழுத்தாணி - எழுது கருவி, ஒரு வகைப் பூண்டு. எழுத்தாளன் - புலவன், எழுது வோன். எழுத்தானந்தம் - ஒரு செய்யுட் குற்றம். எழுத்தியல் - எழுத்தின் அகத் திலக்கணம் கூறும் பகுதி. எழுத்தின் கிழத்தி - சுரசுவதி. எழுத்து - அக்கரம், இலக்கணம், கல்வி, கையெழுத்து, ஆதாரச்சீட்டு, ஓவியம். எழுத்தூசி - எழுத்தாணி (எழுத்து + ஊசி) எழுத்தெண்ணிப்படித்தல் - ஒன்றும் விடாது கற்றல். எழுத்தொலியியல் - நா முதலான உறுப்புக்களைக் கொண்டு நுரை யீரலிலிருந்து வரும் காற்றால் உண்டாகும் அசைவுகள் (Phone tics) எழுநரகம் - கூடசாலம், கும்பி பாகம், அள்ளல், அதோகதி, ஆர்வம், பூதி, செந்து என்னும் எழு வகையான நரகங்கள். எழுநா - நெருப்பு, கொடிவேலி. எழுநிலைமாடம் - ஏழடுக்கு மாளிகை. எழுந்தபடி, எழுந்தமானம் - கண்டபடி. எழுந்தருளுதல் - வருதல், புறப் படுதல். எழுந்தருளியிருத்தல் - குடி கொண்டிருத்தல், வீற்றிருத்தல். எழுந்திருப்பு - எழுந்திருக்கை. எழுவம் - ஏழு வகையான பிறவி. எழுபிறப்பு - மேல் வரும் பிறப்பு, எழு வகையான பிறவி. எழுபோது - உதய காலம். எழுப்புதல் - எழும்பச் செய்தல். எழுமதம் - நூலாசிரியக்குரிய எழுவகைக் கொள்கை, யானைக் குத் தோன்றம் மதநிர். எழுமலை - உதயகிரி. எழுமீன் - ஏழு இருடி மண்டலம். எழுமுகனை - தொடக்கம். எழுமுடி - எழு அரசர் முடியால் செய்த சேரன் மலை. எழுமுரசு - அரசனது பயணத்தை அறிவிக்கும் முரசு. எழுமை - உயர்ச்சி, எழுபிறப்பு, ஏழு வகைப் பிறப்பு. எழுவாய் - உற்பத்தி, முதல், முதல் வேற்றுமை, கருத்தா. எழுவான் - கிழக்குத் திசை. எழுவுதல் - எழச்செய்தல், ஓசை எழுப்புதல். எழூஉப்பன்றிநாகன் குமரனார் - சங்க காலப் புலவர். எளிஞர் - எளியவர். எளிதரவு - தாழ்மை, தரித்திரம். எளிதல் - எளிமையடைதல். எளிதாதல் - இலகுவாதல். எளிது - இலகு, தாழ்ந்தது. எளித்தல் - தாழ்த்திக் கூறல். எளிமை - இலகு, தாழ்வு, தரித்திரம், வலியின்மை, தளர்வு. எளியன் - இலகுவாய், அடையப் படுபவன், தரித்திரன். எளிவருதல் - இலகுவாதல், எளிதில், கிடைத்தல், இழிவடைதல். எளிவு - சுலபம். எள் - செடிவகை, ஒரு சிற்றளவு, நிந்தை. எள்குதல் - இகழ்தல், அஞ்சுதல், ஏய்த்தல், கூசுதல், வருந்துதல். எள்ள - ஓர் உவம உருபு. எள்ளல் - இகழ்ச்சி. எள்ளளவும் - சிறிதளவும். எள்ளற்பாடு - இகழ்ச்சி. எள்ளிடை - எள்ளளவு. எள்ளு - எள். எள்ளுதல் - இகழ்தல், ஒப்பாதல். எள்ளுநர் - இகழ்பவர். எள்ளுரை - இகழ்ச்சி உரை. எள்ளோதனம் - எள் கலந்து சமைத்த சோறு. எறட்டுதல் - வீசியிறைத்தல். எறி - வீச்சு, அடிக்கை. எறிச்சலூர் மலாடனார் - சங்க காலப் புலவர். எறிக்கேசீ - இரட்டை விதையிலைக் குடும்பம். எறிகுண்டு - எறியப்பட்டு வெடிக் கும் குண்டுகள் (Grenade) எறிதல் - வீசியெறிதல், வெட்டுதல், அறுத்தல், முறித்தல், அழித்தல், கொடுக்காற் கொட்டுதல், ஒட்டுதல், வெல்லுதல், கொள்ளையிடுதல், பொழிதல், செறித்தல், காற்று வீசுதல், இரையைப் பாய்ந்தெடுத் தல், உதைத்தல். எறித்தல் - ஒளி வீசுதல், தைத்தல், பரத்தல். எறிபடை - கைவிடுபடை. எறிபடையியல் - துப்பாக்கி பீரங்கி இவற்றால் சுட்ட குண்டுகளின் இயக்கத்தை அறிவதற்கும், விமா னத்திலிருந்து குண்டு வீசினால் அவற்றின் போக்கை அறிந்து கொள்வதற்கும் உதவும் கல்வி (Ballistics) எறிபத்தநாயனார் - அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவர். எறிபாவாடை - தெய்வங்களுக்கு முன்னும் பெரியோர் முன்னும் வீசும் பாவாடை விருது. எறிப்பு - பிரகாசம், கடுவெயில். எறிமணி - சேமக்கலம், சேகண்டி. எறியால் - மீன் வகை. எறியுப்பு - கல்லுப்பு. எறிவ - எறியப்படும் ஆயுதங்கள். எறிவல்லியம் - கைவிட்டெறியும் ஒரு ஆயுதம். எறும்பி - யானை. எறும்பு - பூச்சி வகை. எறும்புதின்னி - எறும்பு தின்னும் அழுங்கு கரடி வகைகள் (Anteater) எறுழம் - வலிமை, தண்டாயுதம், தூண். எறுழி - பன்றி. எறுழ் - வலிமை, தண்டாயுதம், தூண், மரவகை. எறழ் வலி - மிக்க வலி. எற்பாடு - பிற்பகல், காலை. எற்பு - என்பு. எற்புச்சட்டகம் - உடல். எற்றம் - மனத்துணிவு. எற்றித்தல் - இரங்குதல். எற்று - எத்தன்மைத்து, அதிசய இரக்கக் குறிப்பு. எற்றுண்ணுதல் - எறியப்படுதல். எற்றுதல் - அடித்தல், உதைத்தல், மோதுதல், எறிதல், வெட்டுதல், குத்துதல், நீக்குதல், நூல் தெறித்தல், எழுப்புதல், இரங்குதல். எற்றுநூல் - மரமறுக்கப்போடும் நூல். எற்றே, எற்றோ - எற்று. எற்றைக்கும் - என்றென்றைக்கும். என - என்று. எனவ - என்னுடையவை. எனா - ஓர் எண்ணிடைச் சொல். எனாமல் - உலோகப் பரப்பைப் பாதுகாக்கவோ அழகு படுத்தவோ அதன்மேல் பூசப்படும் மினுமினுப் பான பொருள் (Enamel) எனின் - என்று சொல்லின். எனும் - சிறிதும், என்று சொல்லும். எனை - என்ன, எவ்வளவு. எனைத்து, எனைத்துணை - எவ்வளவு. எனைத்தும் - முழுதும், சிறிதும். எனைப்பல - எத்தனையோ. எனையதும் - சிறிதும். எனையவர் - யாவர். என் - என்ன, எது அல்லது எதை எனப் பொருள்படும் இடைச்சொல். என்கை - சொல்லுகை. என்ப - என்று சொல்வர், ஓர் அசைச் சொல். என்பது - சார்ந்து நின்ற சொல்லின் பொருளை உணர்த்தும் பிரிவில் அசைநிலை. என்பாக்கு - என்று சொல்லுவோ மென்று. என்பான் - என்று சொல்பவன். என்பிலி - புழு, எலும்பில்லாத உடம்பு. என்பு - எலும்பு, உடம்பு. என்மனார் - என்று சொல்வர். என்றவன் - சூரியன். என்றால் - என்று சொன்னால். என்றாலும் - ஆயினும். என்று- என்று சொல்லி, ஒரு சொல்லசை. என்றும் - என்றைக்கும். என்றூழ் - கோடை காலம், வெயில், சூரியன். என்றைக்கு - எந்நாள். என்ன - யாது, ஓர் உவம உருபு. என்னணம் - எவ்வகையான. என்னர் - யாவர், சிறிதும். என்னவன் - யாவன், எப்படிப் பட்டவன், எனக்குரியவன். என்னாங்கு - என்னிடத்து. என்னாதி - என்ன செய்யக் கடவாய், எவ்வாறு வாழ்கிறாய். என்னுக்கு - எதற்கு. என்னும் - யாவும், சிறிதும். என்னே - என்ன, ஓர் அதிசய இரக்கக் குறிப்பு. என்னை - என் பிதா, என் தலைவன், என் தாய், (என் + ஐ) என்னையினாப் புலவர் - முக்கூடற் பள்ளுச் செய்த புலவர் (17ம் நூ.) என்னோரும் - எல்லோரும் எத்தன் மையோரும். எஸ்கிமோ - அமெரிக்காவின் வடகரை யில் வசிக்கும் அமெரிக்க ஆதி குடிகள். எஸ்டோனியா - ஐரோப்பாவின் வட கிழக்கில் உள்ள பால்டிக் மாகாணங் களில் ஒன்று. ஏ ஏ - பெருக்கம், அடுக்கு, மேல்நோக் குகை, இறுமாப்பு, எய்யும் தொழில், அம்பு, ஒரு விளிக்குறிப்பு, ஓர் இகழ்ச்சிக் குறிப்பு. ஏக உரிமை - ஒரு பண்டத்தை வாணிகம் செய்வதற்கு ஒரு வருக்கே வழங்கப் படும் முழு உரிமை (Monopoly) ஏககுடும்பம் - ஒரு தந்தையின் கீழ் உள்ள கூட்டுக் குடும்பம். ஏஎ - சாமவேதம், இரக்கக் குறிப்பு. ஏககுண்டலன் - பலராமன். ஏகசக்கராதிபதி - தனி ஆணை செலுத்தும் அரசன். ஏகதண்டி - ஒற்றைக்கோல் தரிக்கும் சன்யாசி. ஏகதந்தன் - விநாயகர். ஏகதேசப்படுதல் - வேறுபடுதல். ஏகதேசம் - ஒருபுடை, சிறுபான்மை, அருமை, வித்தியாசம், மாறுபாடு, நிந்தை. ஏகதேசவறிவு - சிற்றறிவு. ஏகதேசி -ஓரிடத்திருப்புடையது. ஏகத்துவம் - ஒன்றாக இருக்கும் தன்மை. ஏகபாதம் - ஒரு வகைக் கவி, ஒற்றைக்காற் பிராணி. ஏகபாவம் - ஒத்த எண்ணம். ஏகபிங்கலன் - குபேரன். ஏகபோகம் - தனக்கே உரிய அனுபவம், ஒரு போகம். ஏகம் - ஒன்ற, ஒப்பற்றது, தனிமை, வீடு, மொத்தம், அபேதம், எட்டு மக்குரோணி கொண்ட சேனை, மிகுதி, திப்பிலி. ஏகம்பம் - காஞ்சியிலுள்ள சிவன் தலம். ஏகராசி - அமாவாசை. ஏகல் - செல்லல், கடத்தல். ஏகவடம், ஏகவாரம் - ஏகாவலி என்னும் அணிகலன். ஏகவீரியன் - வீரபத்திரன். ஏகவெளி - பெருவெளி. ஏகவேணி - ஒற்றைச்சடையுடைய மூதேவி. ஏகன் - கடவுள், ஒருவன். ஏகாங்கி - திருமாலடியாருள் ஒரு வகையார், குடும்பமின்றித் தனித்து வசிப்பவன். ஏகாசம் - உத்தரீயம், மேல் ஆடை. ஏகாதசம் - பதினோராமிடம். ஏகாதசி - பதினோராம் திதி. ஏகாதிபத்தியங்கள் - சாம்ராச்சி யங்கள். ஏகாதிபத்தியம் - தனி ஆட்சி. ஏகாந்தம் - தனிமை, இரகசியம், நாடிய ஒரே பொருள். ஏகாந்தவாதி - ஆருகரல்லாத கமயி. ஏகாம்பரநாதர் - காஞ்சீபுரத்தில் கோயில் கொண்டுள்ள சிவ பெருமான். ஏகாம்பரம் - மாமரத்தின் கீழ் சிவன் கோயில் கொண்டிருக்கும் காஞ்சி புரம். ஏகாலி - வண்ணான். ஏகாவலி - ஒற்றை வடம். ஏகி - தனியன். ஏகுதல் - போகுதல். ஏகை - வயிரக் குற்றங்களுள் ஒன்று, உமை. ஏகோதிட்டம் - இறந்தவர்க்குச் செய் யும் சிரார்த்தம். ஏகோபித்தல் - ஒன்றுபடுதல். ஏக்கம் - அச்சம், துக்கம். ஏக்கழுத்தம் - தலையெடுப்பு, இறு மாப்பு. ஏக்கறவு - இச்சை. ஏக்கறுதல் - இளைத்து இடைதல், ஆசையால் தாழ்தல், விரும்புதல். ஏக்கெறிதல் - கவலை ஒழிதல். ஏக்கை - இகழ்ச்சி. ஏங்கல் - ஆரவாரித்தல், மயிலின் குரல், அழுகை. ஏங்குதல் - ஒலித்தல், இளைத்தல், மனம் வாடுதல், அழுதல், அஞ்சுதல். ஏசம் - வெண்கலம். ஏசல் - இகழ்கை, பழிமொழி, ஒருவரை ஒருவர் ஏசிக்கூறும் பாட்டு. ஏசறவு - விருப்பம், தோத்திரம். ஏசறுதல் - வருத்த முறுதல், ஆசைப் படுதல், பழித்தல். ஏசி - கிளி. ஏசு - குற்றம், ஏசுநாதர். ஏசுதல் - பழித்தல், செலுத்துதல். ஏச்சு - வைவு, பழிப்பு. ஏட - தோழன் முன்னிலை விளி. ஏடகணி - ஓலை ஈர்க்கு. ஏடகம் - பூ, தெங்கு, பனை, ஒரு வகைத் துகில். ஏடணை - ஆசை. ஏடல் - கருத்து. ஏடுன் - இது தென்மேற்கு அரேபியாவி லுள்ள ஒரு நகர், ஒரு குடியேற்ற நாடு ஒரு காப்பு நாடு என்பவற்றையும் இது குறிக்கும். ஏடன் -தொழும்பன், தோழன். ஏடர் - தோழன், தாழ்ந்தோன், விளியில் வரும் இடைச்சொல். ஏடாகூடம் - தாறுமாறு. ஏடி - தோழி முதலிய பெண்பாலரை விளித்தலில் வரும் இடைச்சொல். ஏடு - பூவிதழ், மலர், கண்ணிமை, பனையோலையிதழ், புத்தகவிதழ், பாலின் ஆடை, உடல், மேன்மை, குற்றம். ஏடுகோளாளன் - கணக்கன். ஏடை - ஆசை. ஏட்சி - உதயம், திடம். ஏட்டுச்சுரைக்காய் - அனுபவத் தோடு கூடாத கல்வி அறிவு. ஏட்டுப்பொறி - ஓலைப்பத்திரத்தில் பதித்த முத்திரை. ஏட்டுவினை - ஏடெழுதும் வேலை. ஏட்டை - தரித்திரம், இளைப்பு, விருப்பம். ஏட்ரியக்கடல் - மத்தியதரைக் கடலில் ஒரு வளைகுடா. ஏணம் -நிலைபேறு, மான். ஏணி - ஏண், அடுக்கு, ஏறுதற் கருவி, எல்லை, மான் கன்று. ஏணிப்படுகால் - மேகலை. ஏணி மயக்கம் - கோட்டைக்கு உள்ளும் புறமுமுள்ளார் ஏணி மீது நின்று போர் செய்தலைக் கூறும் புறத்துறை. ஏணை - புடைவைத் தொட்டில், நிலை. ஏண் - எல்லை, வலிமை, திண்மை, உயர்ச்சி. ஏதண்டை - பலகைத் தூக்கு, நீர்த் துறையிற் கட்டிய பரண். ஏதப்பாடு - குற்றமுண்டாதல். ஏதம் - குற்றம், துன்பம், கேடு. ஏதலன் - பகைவன். ஏதன் - மூல காரணன், கடவுள். ஏதி - ஆயுதப் பொது, துண்டம். ஏதிலன் - அன்னியன். ஏதிலார் - அன்னியர், பகைவர், சக்களத்தி. ஏதிலாளன் -அன்னியன். ஏதின்மை - அன்னியம், பகைமை. ஏதீடு - தோழி அறத்தொடு நிற் கையில் தலைவி தலைவனை மணத்தற்கு அவன் செய்த உதவி களைக் கவனமாக இட்டு உரைக்கை. ஏது - ஏன், எப்படி, காரணம். ஏதுவின் முடித்தல் - முன் காரணம் விளங்கப் பெறாத தொன்றைப் பின் காரணத்தால் முடிவு செய்தலாகிய உத்தி. ஏதை - பேதை. ஏத்து - புகழ். ஏத்துதல் - துதித்தல், வாழ்த்துதல். ஏந்தல் - கையேந்துகை, தாங்கு களை, தேக்கம், அழகின்மை, உயர்ச்சி, பெருமை, அரசன், வாதநோய். ஏந்தல்வண்ணம் - ஒருவகைச் சந்தம். ஏந்தி - தாங்குபவன். ஏந்திசை - செய்யுளோசை வகை. ஏந்திரக்கல் - திரிகைக்கல். ஏந்திரம் -மாவரைக்கும் திரிகை, கரும்பு ஆலை. ஏந்திலை - (ஏத்து + இலை) வேல். ஏந்திழை - அழகிய ஆபரணம், பெண். ஏந்துதல் - கை நீட்டுதல், தாங்குதல், தரித்தல், சுமத்தல், ஓங்குதல், சிறத்தல். ஏந்தெழில் - மிக்க அழகு. ஏப்பம் - தேக்கெறிவு. ஏப்பாடு - அம்பு விழும் எல்லை. ஏப்ரிக்காட் - பழவகைகளிலொன்று (Apricot) ஏப்புழை - அம்பு எய்ய அமைக்கப் பட்டிருக்கும் மதிலின் துவாரம். ஏமகூடம் - புராணங்களிற் கூறப்படும் எட்டுமலைகளில் ஒன்ற, மேரு விஞ்சையர் வாழுமிடம். ஏமதவஞ்சி - போக பூமி வகை. ஏமந்தம் - பனி. ஏமந்தருது - முன்பனிப் பருவம். ஏமந்தாசலம் - இமயமலை. ஏமம் - இன்பம், களிப்பு, உன்மத்தம், கலக்கம், சேமம், திருநீறு, சேமநிதி, இடுதிரை, இரா, பொன். ஏமருதல் - காக்கப்படுதல், களிப் புறுதல். ஏமவதி - கடுக்காய். ஏமன் - யமன். ஏமாசலம் - மாமேரு. ஏமாத்தல் - அரணாதல், ஆசைப் படுதல், இன்புறுதல், கலக்கமுறுதல், செருக்குதல், நிச்சயித்தல். ஏமாந்துபோதல் - ஏமாறுதல். ஏமாப்பு - அரணாகை, வலியாகை, இறுமாப்பு, கருத்து. ஏமார்தல் - மனங்கலங்குதல். ஏமார்த்தல் - பலப்படுதல். ஏமாளி - பேதை. ஏமாறுதல் - மோசம் போதல். ஏமாற்றம் - வஞ்சத்துக்குள்ளாகை, வஞ்சகம், மனக் கலக்கம். ஏமிலாந்துதல் - திகைத்து நிற்றல். ஏமுறுதல் - மகிழ்வுறுதல், தன்மை திரிதல், வருத்தமுறுதல், பித்துறுதல், மயக்கமுறுதல், பாதுகாப்படைதல், பொருத்தமுறுதல். ஏம் - இன்பம், ஏமம். ஏம்பல் - ஆரவாரம், வருத்தம். ஏம்பலித்தல் -அவாக் கொள்ளுதல். ஏம்புதல் - களித்தல், வருந்துதல். ஏய - ஓர் உவம உருபு. ஏயம் - தள்ளத்தக்கது. ஏயர் - ஏய வமிசத்தவர். ஏயர்கோன் கலிக்காமநாயனார் - அறு பத்து மூன்று நாயன்மாருள் ஒருவர். ஏயான் - ஒரு தொழிலைச் செய்யத் தகாதவன். ஏயில் - இசை. ஏயெனல் - ஓர் விரைவுக் குறிப்பு. ஏயே - பரிகாசக் குறிப்பு. ஏய்தல் - பொருந்துதல், தகுதல், ஒத்தல், எதிர்ப்படுதல். ஏய்த்தல் - பொருந்தச் சொல்லல், ஒத்தல், வஞ்சித்தல். ஏய்ப்ப - ஓர் உவம உருபு. ஏய்ப்பு - வஞ்சகம். ஏய்வு - உவமை. ஏரகம் - திருவேரகம், சுவாமி மலை. ஏரடித்தல் - உழுதல். ஏரணம் - தருக்க நூல். ஏரண்டம் - இரண்டு தலைப்புள் ஆமணக்கு. ஏரம்பம் - ஒரு கணித நூல். ஏரம்பன் - விநாயகர். ஏரல் - கிளிஞ்சில். ஏரா - கப்பலின் அடிப்பொருத்து மரம். ஏராண்மை - உழவு. ஏராளம் - மிகுதி. ஏராளர் - உழவர். ஏரி - நீர்நிலை, எருத்துத் திமில். ஏரிவாரியத்தார் - ஏரியை மேற் பார்க்குஞ் சபையார். ஏரெழுபது - ஏரைப் புகழ்ந்து கம்பர் பாடிய ஒரு நூல். ஏரோர் - உழுவோர். ஏர் - கலப்பை, உழவு மாடு, உழவு, அழகு, பொலிவு, எழுச்சி, நன்மை. ஏர்க்களம் - நெற்களம். ஏர்க்கள உருவகம் - போர்க் களத்தை ஏர்க்களமாக உருவகப் படுத்தும் புறத்துறை. ஏர்க்காடு - சேலம் மாவட்டத்தில் தென் பகுதியிலுள்ள ஒருமலை. ஏர்க்கால் - கலப்பை, வண்டி இவற்றின் நுகங்கொளுவுமுறுப்பு. ஏர்ச்சீர் - உழவுத் தொழிலுக்குரிய கருவிகள். ஏர்பு - எழுச்சி. ஏர்ப்ப - ஒர் உவம உருபு. ஏர்ப்பு - ஈர்ப்பு. ஏர்மங்கலம் - பொன் ஏர் பூட்டிப் பாடும் மங்கலப் பாட்டு. ஏல - முன்னமே. ஏலக்காய் - ஏலச்செடியின் காய். ஏலப்பாட்டு - கப்பற் பாட்டு. ஏலம் - செடி வகை, ஒரு வாசனைப் பண்டம், மயிர்ச்சாந்து, சடாமாஞ்சி, விலை கூறுதல். ஏலரிசி - ஏல அரிசி. ஏலவாலுகை - பேரேலம். ஏலா - தோழன் தோழியரை முன் னிலைப்படுத்துஞ் சொல், முடியாது. ஏலாதி - பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்று - கணி மேதாவியார் செய்தது. ஏலாமை - பொருந்தாமை. ஏலி - கள். ஏலு, ஏலை - ஏலம். ஏல் - பொருத்தம், உணர்ச்சி. ஏல்தல் - தகுதல், மாறுபடுதல், சம்ப வித்தல், மிகுதல், ஒப்புக் கொள்ளு தல், இரத்தல், மேற்கொள்ளுதல், அன்புகூர்தல், சுமத்தல். ஏவதும் - ஒவ்வொன்றும், எதுவும். ஏவம் - குற்றம், ஏவல். ஏவலன் - பணிவிடை செய்வோன். ஏவல் - தூண்டுகை, ஆணை, பணிவிடை, ஏவலாள், வறுமை. ஏவறை - ஏப்பம், ஏப்புழை. ஏவற்சிலதி - குற்றேவல் புரியும் பெண். ஏவன் - யாவன். ஏவாள் - பைபிளில் சொல்லப்படும் ஆதித்தாய் (Eve) ஏவிளம்பி - ஓர் ஆண்டு. ஏவு - அம்பு. ஏவுண்ணுதல் - அம்பு பாயப்படுதல். ஏவுபடைக்கலங்கள் - எறியப்படும் வினாடியிலிருந்து இலக்கை அடை யும் வரை கட்டுப்படுத்த முடிகிற படைக்கலங்கள் (Guided missiles) ஏவுதல் - கட்டளையிடுதல், தூண்டி விடுதல், செலுத்துதல். ஏவ்வை - நாள், பொழுது, நீர் நிலை. ஏழகம் - செம்மறியாட்டுக்கடா. ஏழரை நாட்டுச்சனி - ஏழரை யாண்டுச் சனி. ஏழிசை - குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளி, தாரம் முதலிய ஏழு இசைகள். ஏழிசைவாணர் - கந்தருவர். ஏழிலைக்கிழங்கு - மரவள்ளி. ஏழிலைப் பாலை - ஒரு வகை மரம். ஏழில் - இசை. ஏழை - அறிவிலாதவர், பெண் தரித்திரன். ஏழைமை - அறியாமை, வறுமை. ஏழ்ச்சி - தோற்றம். ஏழ்பரியோன் - சூரியன். ஏழ்மை - ஏழு. ஏளனம் - இகழ்ச்சி. ஏற - அதிகமாக, உயர, முழுவதும், முற்ப. ஏறக்குறைய - முன்பின், ஏறத்தாழ. ஏறங்கோள் - ஏறுகோட்பறை. ஏறடுதல் - மேல்வைத்தல், மேற் கொள் ளுதல். ஏறப்போதல் - குறித்துப போதல். ஏறாண்முல்லை - ஆண்மை மிகுந்த வீரக்குடியின் ஒழுக்கத்தைப் புகழும் புறத்துறை. ஏறாவழக்கு - அடாவழக்கு. ஏறாவேணி - கோக்காலி. ஏறிடுதல் - உயர்த்துதல், புகப் பண்ணு தல், நாணேற்றுதல், ஏறியிருத்தல். ஏறிட்டுப்பார்த்தல் - நிமிர்ந்து பார்த்தல். ஏறு - உயரம், இடபம், நந்திதேவர், இடபராசி, விலங்குகளின் ஆண், எறிகை, அடிக்கை, இடி, அழிக்கை, எறிந்ததலான வடு. ஏறுகோட்பறை - ஏறு தழுவுதற் குரிய முல்லை நிலப்பறை. ஏறுகோள் - ஏறு தழுவுகை. ஏறுண்ணுதல் - அறுக்கப்படுதல், தைக்கப்படுதல், தள்ளப்படுதல். ஏறுதல் - உயர்தல், மேலேறுதல், முற்றுப் பெறுதல், மிகுதல், பரவுதல், ஆவேசித்தல், வளர்தல், உட்செல் லுதல், குடியேறுதல். ஏறுதழுவுதல் - எருதைத் தழுவிப் பிடித்தல். ஏறுமாறு - தாறுமாறு, ஏறும்படி. ஏறுமுகம் - வளரும் நிலை. ஏறூர்ந்தோன் - சிவன். ஏறெடுத்துப்பார்த்தல் - நிமிர்ந்து பார்த்தல். ஏறைக்கோன் - சங்க காலத்து மலைநாட்டை ஆண்ட குறவர் தலைவன் (புறம் 157) ஏற்கவே, ஏற்கனவே - முன்னமே. ஏற்கை - அங்கீகாரம், வாங்குதல். ஏற்ப - தக்கபடி. ஏற்படுதல் - உண்டாதல், தலைப் படுதல். ஏற்படுத்துதல் - உண்டுபண்ணுதல், இணங்கச் செய்தல், நிச்சயித்தல், ஆயத்தப்படுத்துதல். ஏற்பது - இரப்பது. ஏற்பாடு - ஒழுங்கு, உடன்படிக்கை. ஏற்பு - பொருத்தம், இரப்பு. ஏற்புடைக்கடவுள் - நூற்கு உரிமை பூண்டுள்ள கடவுள். ஏற்புழி - ஏற்குமிடத்து. ஏற்போன் - யாசிப்போன். ஏற்றக்கால் - துலாவைத் தாங்கும் கால். ஏற்றணை - சிங்காசனம் (எறு + அணை) ஏற்றம் - மேடு, மேல் ஏறுகை, உயர்த்துகை, நீர்ப்பெருக்கு, அதிகப் படி, மேன்மை, துலா, துணிவு. ஏற்றரவு - மிகக் கிட்டினகாலம், முதல். ஏற்றவற்றம் - சந்திர சூரியர்களின் கவர்ச்சியால் கடலில் ஏற்படும் வற்றுப் பெருக்குகள் (Tides) ஏற்றார் - பகைவர். ஏற்றியல் - இடபராசி. ஏற்றிழிவு - பெருமை சிறுமை. ஏற்றுக்கொள்ளுதல் - அங்கீ கரித்தல். ஏற்றுதரகர் - தம்முடைய செயலால் பண்டங்களின் விலை உயர்வை ஏற்படுத்தும் தரகர் (Bulls) ஏற்றுதல் - தூக்குதல், சுமத்துதல், ஏறச்செய்தல், அடுக்குதல், கொளுத் துதல், நினைத்தல், துணிதல, நிவே தித்தல். ஏற்றுத்தொழில் - யானை முதலிய வற்றை ஏறி நடத்துந்தொழில். ஏற்றுமதி - ஏற்றுமதிப் பண்டம். ஏற்றூண் - (ஏற்று + ஊண்) இரந் துண்ணுமுணவு. ஏற்றெழுதல் - மயக்கம் துயில்களி னின்றும் எழுதல். ஏற்றை - சேரமன்னன் ஒருவனின் படைத்தலைவன் (அகம். 44) ஏற்றை - ஆண்பால் விலங்கு. ஏற்றைப்பனை - ஆண்பனை. ஏன - பிற. ஏனப்படம் - பன்றிமுகக் கேடகம். ஏனம் - பாத்திரம், ஒலைக்கலம், பன்றி, ஆய்தவெழுத்தின் சாரியை. ஏனல் - தினை, கருந்திணை. ஏனாதி - மறவன், படைத்தலைவன், நாவிதன், சாணாரிலொரு வகுப்பு, முற்கால அரசரால் வழங்கப்பட்ட ஒரு பட்டம். ஏனாதிச்சித்தர் - சித்தருள் ஒருவர். ஏனாதிநாயனார் - அறுபத்து மூவருள் ஒருவர். ஏனாதிமோதிரம் - ஏனாதிப் பட்டத் தார்க்கு அரசர் அளிக்கும் மோதிரம். ஏனும் - என்றாலும். ஏனென்னுதல் - ஆபத்தில் உதவ விசாரித்தல். ஏனை - மற்றை. ஏனையுவமம் - வெளிப்படை உவமம். ஏன் - பன்றி, எதற்கு. ஏன்றுகொள்ளுதல் - ஏற்றுக் கொள்ளுதல். ஏன்றுகோள் - ஆதரிக்கை. ஐ ஐ - வியப்பு, அழகு, மேன்மை, நுண்மை, கோழை, கபவியாதி, தலைவன், கணவன், அரசன், ஆசான், பிதா, இரண்டாம் வேற் றுமை உருபு. ஐஐ - மடகாசர் தீவில் காணப்படும் பாலூட்டும் விலங்கு. ஐகண்மயம் - கருத்து ஒத்திருக்கை. ஐக்கியம் - ஒன்றாந்தன்மை, ஒற்றுமை. ஐங்கணை - காமனுடைய மல்லிகை, முல்லை, அசோகு, நீலம், சண்பகம் என்ற ஐந்து மலரம்புகள். ஐங்கணைக்கிழவன் - மன்மதன். ஐங்கரன் - விநாயகர். ஐங்குரவர் - அரசன், உபாத்தியாயன், தாய், தந்தை, தமையன் முதலிய பெரியோர். ஐங்குருநூறு - சங்கத்தொகை நூல்களுள் ஒன்று. ஐங்கூந்தல் - ஐந்து வகையாக வாரி முடித்த கூந்தல். ஐசுவரியம் - செல்வம். ஐஞ்ஞுறு - ஐந்நூறு ஐதராபாத் - தக்காண பீடபூமி யிலுள்ள பெரிய இராச்சியம். ஐதரேயம் - உபநிடதங்களுள் ஒன்று. ஐதிகம் - கேள்வி வழக்கு. ஐது - அழகுள்ளது, அழகு, மெல்லி யது, வியப்புடையது, நுண்ணியது, செறிவின்மை. ஐதுநொய்தாக - மிக்க இலேசாக. ஐந்தடக்குதல் - ஐம்புலன்களை அடக்குதல். ஐந்தரு - இந்திரன் உலகத்திலுள்ள ஐந்து மரங்கள். ஐந்தலை நாகம் - ஐந்து தலைகளை உடைய நாகம். ஐந்தவத்தை - சாக்கிரம், சொப் பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்னும் ஐவகை நிலை. ஐந்தவித்தல்-ஐம்பொறிகளை அடக்கல். ஐந்தாம் படை - எதிரிக்கு உதவி செய் பவர் (Fifth column) ஐந்தார் - பனை. ஐந்திணை - குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐவகை நிலங்கள். ஐந்திணையெழுபது - பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று - மூவாதியார் செய்தது. ஐந்திணையைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று - மாறன் பொறையனார் செய்தது. ஐந்திரம் - வடமொழி இலக்கண நூல்களுள் ஒன்று, கிழக்கு. ஐந்துகாயம் - பாசன் (Passion) கொடி. ஐந்துகில் போர்ப்போர் - பௌத்தர். ஐந்தெழுத்து - பஞ்சாட்சரம். ஐந்தை - கடுகு. ஐந்தொகை - விழுமுதல், வரவு, செலவு, இருப்பு, ஆதாயம் முதலிய விவரம் அடங்கிய கணக்கு. ஐந்நூறு - ஐஞ்ஞூறு. ஐபீரியா - ஸ்பெயினும் போர்ச்சுக் கலும் சேர்ந்த தீபகற்பத்தின் பழைய பெயர். ஐப்பசி - ஏழாவது மாதம். ஐப்பசி முழுக்கு - துலாக் காவேரி முழுக்கு. ஐமிச்சம் - சந்தேகம், அச்சம். ஐம்படை - பஞ்சாயுதம். ஐம்படைத்தாலி - கழுத்திலே சிறுவர் அணியும் சங்கு, சக்கரம், வாள், வில், தண்டம் என்ற பஞ் சாயுத உருவமைந்த அணி. ஐம்பால் - ஆண், பெண், பலர், ஒன்று, பல என்னும் பால்கள்; ஐந்து வகையாக முடிக்கப்படும் மகளிர் கூந்தல். ஐம்புலம் - ஐம்பொறிகளுக்குரிய உணர்ச்சிகள். ஐம்பெருங்காப்பியம் - சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்பன. ஐம்பெருங்குழு - மந்திரியர், புரோகி தர், சேனாபதியர், தூதர், சாரணர் என்னும் அரசியல் தலைவர். ஐம்பொறி - மெய், வாய், கண், மூக்கு, செவி. ஐம்பொன் - பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம். ஐம்முகன் - சிவன். ஐமை - தகட்டு வடிவம், செறி வின்மை. ஐய - வியக்கத்தக்க, அழகிய, அதி சயக்குறிப்பு, இரக்கக்குறிப்பு. ஐயகோ - இரக்கம், துக்கங்களின் குறிப்பு. ஐயக்கடிஞை - பிச்சை வாங்கும் கலம். ஐயங்கவீனம் - வெண்ணெய். ஐயங்கார் - வைணவப் பிராமணர் பட்டப் பெயர். ஐயஞ்சு - நிலப்பனை. ஐய்யடிகள் காடவர் கோனாயனார் - அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவர்; சேத்திரத் திருவெண்பா பாடியவர். ஐயப்பாடு - சந்தேகம். ஐயம் - சந்தேகம், பிச்சை, சிறு பொழுது. ஐயம்புகுதல் - பிச்சை எடுத்தல். ஐயம் பெருமாள் சிவந்த கவிராயர் - புரூரவ சரிதை என்னும் நூல் செய்த புலவர் (16ம் நூற்.) ஐயம் பெருமாள்பிள்ளை - பாண்டி மண்டல சதகம் செய்த புலவர். ஐயர் - பெரியோர், முனிவர், வேதியர், பார்ப்பார், பாதிரிமார் பட்டப் பெயர். ஐயவி - வெண்சிறு கடுகு, ஒரு நிறை, கடுக்காய், கதவிற்குக் காவலாகப் புறவாயிலிலே தூக்கப்படும் துலா மரம். ஐயவித்துலாம் - தலைகளைப் பிடித்துத் திருகும்படி செருக்கும் ஒரு மதிற் பொறி. ஐயவுணர்வு - நிச்சயமில்லா அறிவு. ஐயள் - வியக்கத்தக்கவள். ஐயறிவுயிர் - ஐம்புலன்கள் வழியாய் அறிவடையுமுயிர். ஐயனாரிதனார் - புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் (9ம் நூ.) ஐயனார் - அரிகரபுத்திரன். ஐயன் - முனிவன், ஆசான், பார்ப் பான், தந்தை. ஐயன்பாழி - ஐயனார் கோவில். ஐயன்பிடாரி - ஒரு கிராமதேவதை. ஐயா - ஒருவரை மரியாதையாக அழைக்கும் ஒரு விளிப்பெயர். ஐயாதிச் சிறு வெண்டரையார் - சங்க காலப் புலவர். ஐயாறு - திருவையாறு. ஐயானனம் - சிங்கம், சிங்கராசி. ஐயுணர்வு - ஐம்புலன் அறிவு. ஐயுறவு - சந்தேகம். ஐயூர்முடவனார் - சங்க காலப் புலவர். ஐயூர்மூலங்கிழார் - சங்க காலப் புலவர். ஐயெனல் - அதிசயம், வருத்தம், உடன்பாடு, விரைவு, அதட்டல் களைக் காட்டும் குறிப்பு. ஐயே - ஐயன் என்பதன் விளி. ஐயை - துர்க்கை, காளி, தவப்பெண், குருபத்தினி, தலைவி. ஐயோன் - நுண்ணியன். ஐராவணம் - இந்திரன், சிவபிரான் வாகன மாகிய யானை, பட்டத்து யானை. ஐராவணன் - இந்திரன். ஐராவதம் - இந்திரன் யானை. ஐராவதி - பர்மாவிலுள்ள பெரிய ஆறு. ஐரோப்பா - ஆசியாக்கண்டத்தின் மேற்குப் புறத்தோடு இணைந்த பெரிய தீபகற்பம். ஐராபதம் - இந்திரன் யானை. ஐவகைத்தாயர் - ஈன்றதாய், ஊட்டுந் தாய், முலைத்தாய், கைத்தாய், செவிலித்தாய். ஐவகையாகம் - கருமயாகம், தவ யாகம், செபயாகம், தியானயாகம், ஞானயாகம். ஐவண்ணம் - மருதோன்றி. ஐவர் - பஞ்சபாண்டவர், தருமன், பீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன். ஐவர்ணம் - பரவமகளிர் கால் விரல்களிற் பூணும் அணி. ஐவனம் - மலை நெல். ஐவாய்மான் - சிங்கம். ஐவிரலி - ஐவேலி, கொவ்வை. ஐவேசு - சொத்துடைமை. ஐவேலி - ஐவிரலி இலிங்கக் கொவ்வை. ஐஸ்லாந்து - வட அட்லாண்டிக் கடலிலுள்ள ஒரு தீவு. ஒ ஒஃகுதல் - பின்வாங்குதல். ஒகரம் - மயில். ஒக்க - ஒருசேர, சமமாக. ஒக்கடித்தல் - தாளங் கொட்டுதல் செப்பனிடுதல். ஒக்கம் - ஓமம் என்னும் சரக்கு. ஒக்கலித்தல் - மகிழ்ச்சியால் ஆரவாரித்தல், உறவினரோடு கலந்து பேசுதல், சுற்றத்தாரைப் பாதுகாத்தல். ஒக்கலை - இடுப்பு. ஒக்கல் - சுற்றம். ஒக்கிலியன் - தமிழ் நாட்டில் குடியே றிய ஒரு கன்னட சாதியான். ஒக்கூர் மாசாத்தியார் - சங்க காலப் புலவர். ஒசிதல் - முறிதல், நுடங்குதல், நாணுதல், வருந்துதல். ஒசித்தல் - முறித்தல். ஒசிந்த நோக்கு - ஒதுங்கிப் பார்க்கும் பார்வை. ஒசியல் - கிளை முறிக்கப்பட்ட மரம். ஒச்சம் - நாணம், குறைவு. ஒச்சியம் - கூச்சம், சரசமொழி, நிந்தை. ஒச்சை - காந்தல் சோறு. ஒஞ்சட்டி - ஒல்லி, மெலிந்த. ஒஞ்சி - முலை. ஒஞ்சித்தல் - நாணுதல். ஒடிசில் - கவண். ஒடிதல் - முறிதல், கெடுதல், ஒளி செய்தல். ஒடி நட்சத்திர மீன் - முள்தோலி என்னும் உயிர்த் தொகுதியைச் சேர்ந்த ஒருவகைப் பிராணி. ஒடிபு - இடைமுறிவு. ஒடியல் - பனங்கிழங்கின் காய்ந்த பிளவு. ஒடியெறிதல் - நாட்டுப் புதல்களை வெட்டி எறிதல், குறைத்தல். ஒடிவு - முறிகை, குறைவு, தவிர்பு. ஒடிவை - இடையறவு. ஒடு - நிலப்பாலை, மூன்றாம் வேற்றுமையுருபு, முதுபுண். ஒடுக்கம் - குறுக்கம், அடக்கம், கருங்குகை, மறைவிடம், முடிவு. ஒடுக்கு - ஒடுக்கமாயிருப்பது, மூலை. ஒடுக்குதல் - அடக்குதல், வருத் துதல், சிறுகுதல், சுருக்குதல், கீழ்ப் படுதல். ஒடுக்குப்படி - ஒரு பழைய வரி. ஒடுங்கி - ஆமை. ஒடுங்குதல் - அடங்குதல், சுருங்கு தல், ஒதுங்குதல், கீழ்ப்படிதல், சோம்புதல், குவிதல், சோர்தல், இலயித்தல். ஒடுவடக்கி - குப்பைமேனி. ஒட்ட - அடியோடு, நெருங்க, இறுக. ஒட்டக்கூத்தர் - சோழ நாட்டில் விளங்கிய ஒரு புலவர் - 12 ஆம் நூற். ஒட்டகச்சிவிங்கி - ஆப்பிரிக்காவிற் காணப்படும் நீண்ட கழுத்துள்ள விலங்கு (Girafe) ஒட்டகம், ஒட்டகை - ஒரு விலங்கு. ஒட்டச்சி - ஒட்ட சாதிப் பெண், பூவழலை. ஒட்டடை - சிலந்தி வலையும் தூசும், நூலாம் படை. ஒட்டம் - பந்தயம். ஒட்டர் - ஒட்டர தேசத்தார், மண் வேலை செய்வோர். ஒட்டலன் - பகைவன். ஒட்டல் - உள்ளொடுங்குகை, உடன்பாடு. ஒட்டறை - ஒட்டடை. ஒட்டாரம் - நெல்வகை, பிடிவாதம். ஒட்டார் - பகைவர். ஒட்டுதல் - பந்தயம் போடுதல், ஆணையிடுதல். ஒட்டுவர்ணம் - வச்சிரப்பசை சுண்ணாம்பு கலந்த கலவை (Distemper) ஒட்டியம் - ஒரு தேசம் (ஒருசா), ஒரு வித மாந்திரிக வித்தை. ஒட்டியன் - ஒட்டர தேசத்தான். ஒட்டியாணம் - யோகப்பட்டை, பெண்கள் இடையணியுளொன்று. ஒட்டிரட்டி - ஒன்றுக்கு இரண்டு மடங்கு. ஒட்டு - இணைக்கப்பட்டது, புள் பிடிக்கும் கருவி, சினேகம் அற்பம், சார்பு, ஆணை, ஒப்பு, படைவகுப்பு, மரப்பட்டை. ஒட்டுண்ணி - இன்னொரு உயிரைச் சார்ந்து வாழும் உயிர் (Parasite). ஒட்டுதல் - ஒட்ட வைத்தல், சார்தல், பந்தயம் வைத்தல், துணிதல், தாக்குதல், படைத்தல், கிட்டுதல், அறுதியிடல், பதுங்கி நிற்றல். ஒட்டுத்திண்ணை - பெருந்திண்ணைக்குச் சார்பாகக் கீழ்ப்புறம் கட்டப்படும் சிறிய திண்ணை. ஒட்டுநர் - நண்பர். ஒட்டுப்பலகை - பல மெல்லிய பல கைகளை ஒட்டிச் செய்யப்படும் பலகை (Plywood) ஒட்டுப்புதவம் - இரட்டைக் கதவு. ஒட்டை - ஒட்டகம். ஒட்டைச்சாண் - சிறு சாண். ஒட்டொட்டி - ஒட்டங் காய்ப்பூடு. ஒட்பம் - அறிவு, ஒளி, அழகு. ஒண்டன் - நரி. ஒண்டி - தனிமையானது, ஊற்றாணி என்னும் கலப்பை உறுப்பு. ஒண்டுதல் - சார்தல். ஒண்டொடி - பெண். ஒண்ணுதல் - (ஒண் + நுதல்) பெண், இயலுதல். ஒண்மை - விளக்கம், இயற்கை யழகு, நன்மை, நல்லறிவு, மிகுதி, ஒழுங்கு. ஒதி - ஒருவகை மரம். ஒதுக்கம் - தனிமை, நடை, இருப்பிடம், ஓர் அபசுரம். ஒதுக்கிடம் - மறைவிடம், அண்டி வசிக்குமிடம். ஒதுக்கிருத்தல் - பிறர் வீட்டில் குடியிருத்தல். ஒதுக்கு - விலகியிருப்பது, பிறர் வீட்டிற் குடியிருக்கை, புகலிடம். ஒதுங்குதல் - விலகுதல், கரையில் சார்தல், அடைக்கலமடைதல், நடத்தல், பின்னடைதல், தீர்தல். ஒதுக்குதல் - ஒதுங்கச் செய்தல். ஒத்தணம் - ஒற்றணம். ஒத்தது - தகுதியானது, உலகத்தார் ஏற்றுக்கொண்டது. ஒத்தல் - தெளிந்தவற்றில் மனம் ஊன்றி நிற்கை, நடு, போல இருத்தல். ஒத்தறுத்தல் - தாளவரையறை செய்தல். ஒத்தரங்கு - ஒத்தபடி. ஒத்தாசை - உதவி. ஒத்தாப்பு - மறைவு, குடில். ஒத்தாழிசை - கலிப்பாவின் வகை. ஒத்தி - ஒருத்தி. ஒத்திகை - ஒப்பு, நாடகத்தை முன் ஆடிப் பார்க்கை, சரிபார்க்கை. ஒத்திடம் - ஒற்றடம், ஒத்தணம், சூடு உண்டாக ஒற்றுதல். ஒத்திருத்தல் - போன்றிருத்தல். ஒத்து - தாளவொற்று, நாகசுரத்துக்குச் சுருதி கூட்டும் ஓர் ஊதுகுழல். ஒத்துக் கொள்ளுதல் - சம்மதித்தல், இணங்குதல், ஏற்றதாதல். ஒத்துதல் - தாளம் போடுதல், தாக்குதல், ஒற்றுதல். ஒத்துவாழ்தல் - மனமொத்து வசித்தல். ஒத்துழைத்தல் - பலர் மனமொத்துத் தொழில் செய்தல். ஒப்ப - போல. ஒப்படை - ஒப்புக் கொடுக்கை. ஒப்படைத்தல் - ஒப்புவித்தல். ஒப்பந்தம் - உடன்படிக்கை, கட்டுப்பாடு. ஒப்பம் - ஒரு தன்மை, மெருகு, அலங்காரம், கையொப்பம். ஒப்பல் - உடன்படல். ஒப்பளவை - உவமானப் பிரமாணம். ஒப்பனை - சாட்சியம், அலங்காரம், சமம். ஒப்பாரி - அழுகைப்பாட்டு, போலி. ஒப்பாரித்தல் - ஒத்தல். ஒப்பிடுதல் - உவமித்தல். ஒப்பித்தல் - உவமித்தல், ஒத்துக் கொள்ளச் செய்தல், பாடத்தை மன்னஞ் செய்து சொல்லுதல். ஒப்பிதம் - நியாயமாக இருக்கை. ஒப்பிலாமணிப்புலர் - சிவரகசியம் என்னும் நூல் செய்த புலவர் (18ம் நூற்.) ஒப்பீன் முடித்தல் - ஒன்றனதிலக் கணத்தை அதுபோன்ற வேறொன் றுக்கும் முடிபு செய்தலாகிய உத்தி. ஒப்பின்மை - நிகரின்மை, வேறுபாடு. ஒப்பு - போல் இருத்தல், அழகு, கவனம், ஒருதன்மை, ஏற்புடையது. ஒப்புக்கழுதல் - போலியாக அழுதல். ஒப்புதல் - ஏற்றுக்கொள்ளுதல், மனத்துக்குப் பிடித்தல். ஒப்புமை - சமானம், உவமானம். ஒப்புமைக் கூட்டம் - புகழ்தலிலும் இகழ்தலிலும் ஒன்றை அதனினும் மிக்க வேறொன்றோடு உவமிக்கும் ஒரலங்காரம். ஒப்புரவறிதல் - உலக நடைக்கேற்ப உபகாரங்களைத் தெரிதல். ஒப்புரவு - உலக ஒழுக்கம், உபகாரம். ஒப்புவித்தல் - ஏற்கும்படி செய்தல், மெய்ப்பித்தல். ஒப்போசம் - பூனையளவுள்ள ஒரு பைப்பாலூட்டி விலங்கு (Opos sum) ஒப்போலை - உடன்படிக்கைச்சீட்டு. ஒமெனல் - ஓர் ஒலிக் குறிப்பு. ஒமை - மா. ஒயில் - ஒய்யாரம்; ஒருவகைக் கூத்து. ஒயில்வண்டி - உல்லாசமான சவாரிக் கேற்ற வண்டி. ஒயிற் கும்மி - ஒயிலாட்டத்தில் பாடும் பாட்டு. ஒய் - யானையைப் பாகர் வையும் ஆரிய மொழி. ஒய்தல் - இழுத்தல், செலுத்தல், கொடுத்தல், போக்குதல், விட்டொ துங்குதல், தப்புதல். ஒய்யல் - செலுத்துதல். ஒய்யாரம் - உல்லாச நிலை, ஆடம்பரம். ஒய்யுதல் - செலுத்துதல். ஒய்யென - விரைவாக, மெல்ல. ஒரணை - இரண்டு. ஒராங்கு - ஒன்று ஆங்கு, ஒருபடியாக. ஒரால் - நீங்குதல். ஒரானொரு - ஏதோ ஒன்று. ஒரியாமொழி - ஒரிசா மாகாணத்தில் வழங்கும் ஒரு மொழி. ஒரீஇ - நீக்கி. ஒரு - ஒன்று, ஆடு, அழிஞ்சில். ஒருகால் - ஒருமுறை, ஒருவேளை, சிலவேளை. ஒருகுழையன் - பலராமன், ஒரு காதில் குழை அணிந்தவன். ஒருகுறி - ஒருமுறை. ஒருகூட்டு - ஒரு சேர்க்கை. ஒருகை - ஒரு கட்சி. ஒருகை பார்த்தல் - வெல்ல முயலுதல். ஒருக்க - எப்பொழுதும். ஒருக்கடுத்தல் - சமமாக நினைத்தல். ஒருக்கணித்தல் - ஒரு பக்கமாகச் சாய்தல். ஒருக்கம் - மனவொடுக்கம், ஒரு தன்மை. ஒருக்கால் - ஒருகால். ஒருக்குதல் - ஒன்றுசேர்தல். ஒருங்கு - முழுதும், ஒரே காலத்தில் அடக்கம். ஒருங்கே - ஒன்று சேர. ஒருங்குதல் - ஒருபடியாதல், ஒன்று கூடுதல், ஒடுங்குதல், அழிதல். ஒருசந்தி - ஒருநாளைக்கு ஒருமுறை உணவு கொள்ளும் விரதம். ஒருசாயல் - வடிவத்தால் ஒத் திருத்தல். ஒருசாரார் - சிலர். ஒருசார் - ஒருபக்கம், ஒருகட்சி. ஒருசாலை மாணாக்கர் - ஒரு பள்ளியிற் படித்த மாணாக்கர். ஒருசிறிது - அற்பம். ஒருசிறை - ஒருபக்கம், வேறிடம். ஒருசிறைப் பெரியனார் - சங்க காலப் புலவர். ஒருசேர - ஒருமிக்க. ஒருசொல் - உறுதிச் சொல், பல சொல்லாயிருந்தும் ஒரு பொருள் தருவது. ஒருசொன்னீர்மை - சொற்கள் இணைத்து ஒரு பொருள் தருந் தன்மை (சொல் + நீர்மை) ஒருஞார் - பண்டைக்காலத்து வழங்கிய ஓர் அளவுப் பெயர். ஒருதந்தன் - விநாயகர். ஒருதலை - ஒருசார்பு, நிச்சயம். ஒருதலைக்காமம் - கைக்கிளை, ஒரு பக்கமான காதல். ஒருதலை துணிபு - ஒன்றுக் கொன்று மாறபாடான இரண்டு கொள்கைகளில் ஒன்றை ஏற்ற லாகிய உத்தி. ஒருதலைப்படுதல் - முடிவு பெறதல். ஒருதலையுள்ளுதல் - அவத்தை பத்தினுள் ஒன்றாகிய இடைவிடா நினைவு. ஒருதன்மை - ஒப்பற்ற தன்மை, மாறாத் தன்மை. ஒருதிறம்பற்றுதல் - ஒரு பட்சமாக இருத்தல். ஒருதுவலி - பண்டைக்காலத்து வழங்கிய ஓர் அளவுப் பெயர். ஒருத்தலை - ஒரு பக்கம். ஒருத்தல் - எருமை, கரடி, பன்றி, யானை, புலி, மான் இவற்றின் ஆண். ஒருத்தன் - ஒருவன், ஒப்பற்றவன். ஒருத்தி - ஒரு பெண். ஒருத்து - மன ஒருமைப்பாடு. ஒருநாயகம் - ஒரே ஆட்சி. ஒருநெறிப்படுதல் - ஒருவழிப் படுதல். ஒருபடம் - இடுதிரை. ஒருபடி - ஒரேவிதம், ஒருவாறு. ஒருபடித்தாய் - ஒரேவிதமாய். ஒருபது - பத்து. ஒருபாட்டம் - ஒருமுறை பொழியும் மழை. ஒருபான் - பத்து. ஒருபிடி - உறுதி, விடாப்பற்று, கைப் பிடியளவு. ஒருபுடை - ஒரு பக்கம். ஒருபோது - ஒரு பொழுது. ஒருப்படி - ஒரேவகை உடை (Uniform) ஒருப்படுதல் - ஒரு தன்மையாதல், உடன்படல், முயலுதல், ஒன்று கூடுதல். ஒருப்படுத்துதல் - ஒன்று கூட்டுதல் வழிவிடுதல், முடிவு செய்தல். ஒருப்பாடு - முயற்சி, உடன்பாடு, ஒரு தன்மையாதல், ஒன்றி நிற்கை, மனத்திண்மை. ஒருமடைப்படுத்துதல் - ஒரே முகமாக்குதல். ஒருமனப்பாடு - மனத்தை ஒன்றிலே செலுத்தல், மனஅடக்கம். ஒருமா - இருபதில் ஒரு கூறாகிய பின்ன எண். ஒருமாதிரி - ஒருவிதம். ஒருமாவரை - ஒருமாவும் அரை மாவுஞ் சேர்ந்த ஒரு கீழ்வா யிலக்கம். ஒருமிக்க - ஒருசேர. ஒருமித்தல் - ஒன்றுசேர்தல். ஒருமிப்பு - ஒற்றுமைப்படுகை. ஒருமுகம் - ஒற்றுமை, நேர்வழி. ஒருமுகவெழினி - ஒருவகைத் திரை. ஒருமை - ஒற்றுமை, தனிமை, ஒரே தன்மை, ஒரு பிறப்பு. ஒருமை பன்மை மயக்கம் - வாக்கியங் களுள் ஒருமை பன்மைகள் மயங்கி வருவது. ஒருமொழி - ஆணை, பல சொற் களாய்ப் பிரிக்க முடியாத மொழி. ஒருவண்ணம் - ஒருவாறு. ஒருவந்தம் - நிச்சயம், நிலைபேறு. ஒருவயிற்றோர் - சகோதரர். ஒருவழித்தணத்தல் - அலரடங்கு தற் பொருட்டுத் தலைவன் சிலநாள் வேற்றிடத்துச் சென்று உறைதல். ஒருவழியுறுப்பு - முழுமையில் ஒரு பகுதி. ஒருவன் - ஒருத்தன், ஒப்பற்றவன். ஒருவாமை - பிறழாமை, நீங்காமை. ஒருவாய்க்கோதை - ஒரு கண் பறை. ஒருவாறு - ஒருவிதமாக, ஒரளவாக, ஒரு சேர. ஒருவாற்றான் - ஒருவாறு. ஒருவு - நீங்குகை, ஆடு. ஒருவுதல் - விடுதல், கடத்தல், ஒத்தல், தப்புதல், ஒழிதல். ஒருவேளை - ஒரு முறை. ஒரூஉ - ஒருவு. ஒரோடோகத்துக் கந்தரத்தனார் - சங்க காலப் புலவர். ஒரோவழி - சிறுபான்மையாய். ஒரோவொருவர் - தனித்தனி. ஒரோவொன்று - ஒவவ்வொன்று. ஒலி - ஓசை, இடி, சொல். ஒலிதல் - தழைத்தல். ஒலித்தல் - சந்தித்தல், ஆடை வெளுத்தல், விளக்குதல். ஒலிபரப்புதல் - வானொலி மூலம் செய்தி முதலியவற்றைப் பரப்புதல் (Broadcasting) ஒலிபெருக்கி - ஒலியை மின்சார சக்தியாக மாற்றி அதேவித ஒலி யாகக் கேட்கும்படி மாற்றக்கூடிய அமைப்பு (Loud speaker) ஒலிப்பு - பெருஞ்சத்தம். ஒலிமுகவாயில் - கோயில் கோட்டை களின் முன்புற வாயில். ஒலிம்பஸ் மலை - வடகிழக்குக் கிரீசிலுள்ள மிக உயர்ந்த மலை. ஒலிம்பிக் ஆட்டங்கள் - நான்கு ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறும் எல்லா நாடுகளினதும் ஆட்டப்போட்டிகள். ஒலிமுறை - உச்சரிப்புமுறை (Pronunciation) ஒலிம்பியா - கிரீஸ் நாட்டிலுள்ள ஒரு பள்ளத்தாக்கு. ஒலியந்தாதி, ஒலியலந்தாதி - பத்துச் செய்யுள் கொண்ட அந்தாதி வகை. ஒலியல் - தழைக்கை, தளிர், மாலை, வளைய மாலை, ஈயோட்டுங் கருவி, ஆடை, தோல், தெரு, நதி. ஒலியன் - ஆடை. ஒலியெழுத்து - ஒலி வடிவமான எழுத்து. ஒலிவமரம் - மேற்கு ஆசியா கிரீஸ் முதலிய நாடுகளில் வளரும் ஒரு வகை மரம். ஒலுங்கு - பெருங்கொசு. ஒலோவுதல் - குறைவாதல். ஒல் - முடிவிடம். ஒல்குதல் - தளர்தல், மெலிதல், குழைதல், சுருங்குதல், அசைதல், ஒதுங்கதல், நடத்தல், வறுமைப் படுதல், மேலே படுதல், மன மடங் குதல், கெடுதல், எதிர் கொள்ளுதல். ஒல்லல் - இயலுதல். ஒல்லாங்கு - பொருந்தும் வழியால். ஒல்லாதவர் - பகைவர். ஒல்லாமை - இயலாமை, இகழ்ச்சி. ஒல்லார் - பகைவர். ஒல்லி - மெலிந்தவன், மெலிந்தது. ஒல்லுதல் - இயலுதல், உடன்படுதல், பொருந்துதல், தகுதல், பொறுத்தல். ஒல்லுநர் - நண்பர். ஒல்லென - விரைய, வெளியாக. ஒல்லே - விரைவாக. ஒல்லை - வேகமாக, பழமை. ஒல்லையுர்தந்த பூதப் பாண்டியன் - சங்க காலப் பாண்டிய அரசன்; தமிழ்ப் புலமை பெற்ற விளங்கி யவன். ஒவ்வாமை - இசையாமை. ஒவ்வுதல் - ஒத்திருத்தல், பொருந் துதல். ஒவ்வொன் - ஒப்பில்லாதவன். ஒழிச்சுதல் - போக்குதல். ஒழி - வெட்டு (Cancel) ஒழிதல் - தீர்தல், அழிதல், தவிர்தல். ஒழித்தல் - முடித்தல், அழித்தல், நீக்குதல். ஒழிந்தார் - மற்றவர். ஒழிபியல் - நூலின்கண் முன்னியல் களிற் சொல்லாதொழிந்தவற்றைக் கூறுமியல். ஒழிபு - எச்சம். ஒழிப்பு - விலக்கு. ஒழிய - தவிர. ஒழியாவிளக்கு - விடிவிளக்கு, பொழுது விடியுமளவும் எரியும் விளக்கு. ஒழியிசை - ஒழிந்த பொருள் தருஞ் சொற்களைத் தருவது. ஒழிவிலொடுக்கம் - கண்ணுடைய வள்ளலார் செய்த ஒரு சைவ நூல் 18 ஆம் நூற்றாண்டு. ஒழிவு - முடிபு, குறைவு, மிச்சம், பற்றின்மை. ஒழுக - மெதுவாக. ஒழுகலாறு - ஒழுக்கநெறி. ஒழுகல் - நீர் பாய்கை, நடக்கை. ஒழுகிசை - மெல்லிசை. ஒழுகு - நிலத்தின் வரலாறு கூறும் கணக்கு. ஒழுகுதல் - நீர் பாய்தல், நடத்தல், மெடுமையாதல், பரத்தல், வளர்த் தல், அமிழ்தல், இளகுதல். ஒழுகுமாடம் - உடம்பு. ஒழுகை - வரிசை, வண்டி. ஒழுக்கம் - நடை, விதித்த கடமைகளினின்று வழுவாமை, நடக்கை, செல்லுகை, வழி, உயர்ச்சி, குலம். ஒழுக்கல் - பொருந்துகை, ஒழுக்கு, வரிசையாக வைத்தல், வார்க்கை. ஒழுக்கு - நீரோட்டம், நீர் சொட்டுகை, ஒழுக்கம். ஒழுக்குதல் - வார்த்தல், நடப்பித்தல், நீள இழுத்தல். ஒழுக்கெறும்பு - ஒரு வகை எறும்பு. ஒழுங்கீனம் - சீர்கேடு. ஒழுங்கு - வரிசை, நேர்மை, நன்னடை. ஒழுங்கை - இடுக்கு வழி, கட்டிய முகப்பு. ஒளரி - உலரிமீன். ஒளி - சூரியன், சந்திரன், நெருப்பு, எரிக்குந்தன்மை, வெயில், விளக்கு, கட்புலன், அழகு, மறைகை, மறைவிடம், வேட்டைக்காரர் பதுங்கியிருக்கும் மறைப்பு, (photo). ஒளி இரசாயனவியல் - ஒளியாற்ற லால் நிகழும் இரசாயன விளைவு களைப் பற்றிக் கூறும் பகுதி (Photo Chemistry) ஒளிச்செதுக்குச் சித்திரம் - போட் டோக்கள் மூலம் செய்யப்படும் பிளாக்குகள் (Photo Engraving) ஒளிச்சேர்க்கை - தாவரங்கள் தம் இலை முதலிய பசிய உறுப்புக்களிலுள்ள பச்சையம் என்னும் நிறமியின் உதவி யினால் சூரிய ஒளியின்றும் பெறும் சக்தியைக் கொண்டு நீரையும் கரிய மில வாயுவையும் கூட்டி சர்க்கரை அல்லது மாப்பொருளாகிய கார்போ ஹைடிரேட்டு என்னும் பொருளைத் தொகுக்கும் செயல் (Photosynthesis) ஒளிதல் - மறைதல், தவிர்தல். ஒளித்தல் - மறைத்தல், பதுங்குதல். ஒளித்துகள்கள் - (Photons) ஒளிநாடு - செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்த பன்னிரு நாடுகளுள் ஒன்று. ஒளிப்படுதல் - கண்ணுக்குத் தோன் றுதல். ஒளிப்பிறழ்ச்சி - ஒளி தன் பாதையை விட்டுப் பிறழ்தல் (Aberration of light) ஒளிப்பு - ஒளிக்கை, மனத்துள் அடக்குகை. ஒளிமரம் - சோதி விருட்சம். ஒளிமானி - Photometer. ஒளி மின்சாரவியல் - ஒளியினால் தோன்றும் மின்சார விளைவுகள் (Photo Electricity) ஒளியர் - ஒளிநாட்டு வேளாளர். ஒளியளவை - Photometry. ஒளியவன் - சூரியன். ஒளியியல் - ஒளியின் தன்மை, பண்புகள், ஒளியைப் பற்றிய கொள் கைகள் முதலியவற்றைப்பற்றி ஆராய்கின்ற பௌதிகத்தின் ஒரு பகுதி. ஒளியிருத்தல் - பதுங்கியிருத்தல். ஒளிர்தல் - ஒளிக்கதிர்கள், புற ஊதாக் கதிர்கள், எக்ஸ்கதிர்கள், எதிர் முனைக் கதிர்கள் இவற்றால் சில பொருள்கள் கிளர்ந்தால் ஒளியை வெளி விடுகின்ற விளைவு (Luminescence) ஒளிர்தல் - விளங்குதல். ஒளிர்விளக்கு - எக்ஸ்கதிர்கள் புற வூதாக்கதிர்கள் முதலிய குறுகலான அலைகளையுடைய மின்காந்தக் கதிர்கள் சில இரசாயனப் பொருள்கள் மீது விழுந்தால் அவை ஒளிரும் பண்பைப் பயன்படுத்தி ஒளிரும் விளக்கு (Fluresent lamp) ஒளிர்வு - பிரகாசம். ஒளிவுப்பொறியியல் - ஒளியை விஞ்ஞானமுறையில் பயன்படுத் தும் கலை (Illuminating Engi neering) ஒளிவட்டம் - கண்ணாடி, சக்கரா யுதம், பிரபை, சந்திரன். ஒளிவு - மறைவிடம். ஒளிவைத்தல் - கண்ணி வைத்தல், பார்வை மிருகம் வைத்தல். ஒளிறு - பிரகாசம். ஒளிறுதல் - விளங்குதல். ஒள் - ஒளி, அழகு, மேன்மை, நல்லவன். ஒள்ளியன் - அறிவுடையவன், நல்லவன். ஒறுத்தல் - தண்டித்தல், கடிதல், வெறுத்தல், இகழ்தல், அழித்தல், ஒடுக்குதல், வருத்துதல். ஒறுப்பு - தண்டனை, கடிந்து பேசுகை, வெறுப்பு. ஒறுவாய் - ஒடிந்த விளிம்பு. ஒறுவாய்போதல் - வாயொடிதல். ஒறுவு - வருத்தம். ஒற்கம் - வறுமை, குறைவு, அடக்கம், தளர்ச்சி. ஒற்குதல் - குறைதல், தளர்தல். ஒற்றடம் - சூடு படும்படி ஒற்றுகை. ஒற்றளபெடை - மெல்லின இடையின மெய்கள் மாத்திரையில் கூடி ஒலிக்கை. ஒற்றறுத்தல் - தாளத்தை அறுதி யிடல். ஒற்றன் - வேவுகாரன், உளவன். ஒற்றாடல் - வேவுகாரனைப் போக்கி வினைசெய்தல். ஒற்றாள் - வேவுகாரன். ஒற்றி - அடைமானம் (Mortage) ஒற்றித்தல் - ஒற்றுமைப்படுதல், ஒற்றையாக இருத்தல். ஒற்றிப்போடுதல் - தவணை போடு தல். ஒற்றியூர் - திருவொற்றியூர். ஒற்று - எழுத்து, மேவு, வேவு, செல்வோன். ஒற்றுதல் - ஒன்றிற்படும்படி சேர்தல், முத்திரையிடுதல், தாளம் போடுதல், உளவறிதல், அடித்தல், அமுக்குதல், தாக்குதல், தழுவுதல், துடைத் தல், உய்த்துணர்தல், வீழ்த்துதல், கட்டுதல், வலித்தல், அடுத்தல், தீர்மானித்தல், மெய்யெழுத்தாய் நிற்றல், தத்துதல், காற்று வீசுதல், ஒட்டிக் கொள்ளுதல், ஒற்றடம் போடுதல், நினைதல். ஒற்றுக்கேட்டல் - பிறர் பேச்சை மறைந்து நின்று கேட்டல். ஒற்றுமை - மனம் ஒன்றாக இருக்கும் தன்மை, மனம் ஒரு நிலைப்படுகை. ஒற்றுவன் - ஒற்றன். ஒற்றுவித்தல் - ஒற்று மூலமறிதல். ஒற்றிறுப்பு - யாழினுறுப்பு வகை. ஒற்றெழுத்து - மெய்யெழுத்து. ஒற்றை ஆட்சி - தனிப்பட்ட பல பிரதேசங்களை ஒற்றுமைப்படுத்தி ஒன்றாக அமைப்பதினாலுண்டான ஒரேவகைப்பட்ட ஆட்சி (United Government) ஒற்றை உலோக நாணயமுறை - ஒரே உலோகத்தைப் பெரும்பாலும் தங்கத்தை மதிப்புப் பிரமாணமாகப் பயன்படுத்தும் நாணய முறை. ஒற்றை எண் - Odd number. ஒற்றைக்கண்ணன் - சுக்கிரன், குபேரன், ஒரே கண் உடையவன். ஒற்றைக்குடை - தனி ஆளுகைச் சின்னமான வெண்குடை. ஒற்றைக் கொம்பு விலங்கு - குதிரையின் தலையும் உடலும் மானின் பின்னங் காலும் சிங்கத்தின் வாலும் நெற்றியில் முளைத்திருக்கும் ஒற்றைக் கொம்பு முள்ளதாகக் கருதப்படும் கற்பித விலங்கு (Unicorn) ஒற்றைத்தலைவி - ஒரு பக்கத்திலுண் டாகும் தலைவலிநோய் (Migraine) ஒற்றைவரி - நிலம் ஒன்றிற்கு மாத் திரம் வரிவிதிக்கலாம் என்பது (Single Tax) ஒற்றைவிதைத்தாவரம் - விதை யில் ஒரே விதையிலை யிருக்கும் தாவரம். ஒன் - ஒரு சாரியை. ஒன்பதினாயிரப்படி - திருவாய் மொழிக்கு நஞ்சீயர் செய்த உரை. ஒன்பான் - ஒன்பது. ஒன்ற - ஓர் உவமச் சொல். ஒன்றடிமன்றடி - குழப்பம். ஒன்றலர் - பகைவர். ஒன்றறிசொல் - ஒன்றன்பாற்சொல். ஒன்றன்கூட்டம் - ஒரே பொருளின் கூட்டம். ஒன்றாக - நிச்சயமாக, ஒருமிக்க. ஒன்றாதல் - ஐக்கியப்படுதல், முதலாதல், இணையின்றாதல். ஒன்றாமை - பகைமை. ஒன்றார் - பகைவர். ஒன்றி - தனிமை, தனித்த ஆள். ஒன்றித்தல் - பொருந்துதல். ஒன்றியார் - தன்னைச் சேர்ந்தவர். ஒன்று - மதிப்புக்குரிய பொருள், ஒற்றுமை, வாய்மை, இந்திரியம். ஒன்றுதல் - ஒன்றாதல், சம்மதித்தல், மனங்கலத்தல், ஒருமுகப்படுதல், உவமையாதல். பொருந்துதல். ஒன்றுநன் - நண்பன். ஒன்றுபாதி - நடுச்சாமம். ஒன்றுமொழிதல் - சபதங் கூறுதல். ஒன்றுவிட்ட - Alternate. ஒன்னவன் - பகைவன். ஒன்னாதோர், ஒன்னார் - பகைவர். ஒன்னுதல் - பொருந்துதல், பொறுத் தல். ஓ ஓ - சென்று தங்குகை, மதகுநீர் தங்கும் பலகை, ஒழியசை, ஒழிவு. ஓகம் - வெள்ளம், பெருங்கூட்டம். ஓகாரம் - மயில். ஓகை - மகிழ்ச்சி. ஓகோ - அதிசயம் முதலிய மனநிலை காட்டுஞ்சொல். ஓக் - கருவாலி (Oak) ஓக்கம் - பெருமை, உயர்ச்சி. ஓக்காப்பி - ஒட்டைச்சிவிங்கிக்கு இனமுடைய ஒரு விலங்கு. ஓக்காளம், ஓகாளம் - வாந்தி. ஓக்குதல் - உயர்த்துதல், எழும்பச் செய்தல், அறுதியிடுதல், எறிதல், ஆக்குதல். ஓங்கல் - உயர்ச்சி, எழுச்சி, மலை, மலை உச்சி, மூங்கில், தலைவன், வழித் தோன்றல், யானை, சாதகப் புள். ஓங்காரம் - பிரணவம். ஓங்காரவுரு - கடவுள். ஓங்கானம் - வாந்தி. ஓங்கில் - மீன் வகை. ஓங்குதல் - உயர்தல், பரவுதல், வளர்தல், பெருமையுறுதல், பெரு குதல், மேலே செல்லல், உயர்த் துதல். ஓசம் - பிரகாசம், கீர்த்தி. ஓசரி - கேடு, அதிசயம். ஓசளித்தல் - பறவை சிறகடித்தல். ஓசனை - நாற்காதம். ஓசன் - ஆசாரியன். ஓசாக்கா - ஜப்பான் நாட்டில் தோக்கி யோவுக்கு அடுத்த பெரிய நகரம். ஓசி - ஆசாரியன் மனைவி. ஓசு - வலி. ஓசுநன் - பரவசாதியான், எண்ணெய் வாணிகள், மீகாமன், வலியோன். ஓசை - மிடற்றோலி, ஓசை, கீர்த்தி, பாம்பு, வாழை. ஓசைசெய்தளை - ஒரு காலணி. ஓசையூட்டுதல் - செய்யுளோ சையை வாய்பாட்டால் அளந் தறிதல். ஓச்சம் - உயர்வு, கீர்த்தி. ஓச்சல் - உயர்வு. ஓச்சன் - பிடாரி கோயில் பூசை புரியுஞ் சாதியான். ஓச்சுதல் - எறிதல், உயர்த்துதல், ஒட்டுதல், செலுத்துதல், பாய்ச்சுதல். ஓச்சை - வறையல். ஓட - ஓர் உவமையுருபு. ஓடக்காரன் - ஓடமோட்டி. ஓடக்கோல் - படகு தள்ளும் கழி. ஓடதி - மருந்துக்குரிய செடி பூடு முதலியன, ஆண்டில் ஒருமுறை காய்த்துப் படும் செடி. ஓடதிநாதன் - சந்திரன். ஓடப்பாட்டு - ஓடம் தள்ளுவோர் பாடும் பாட்டு. ஓடப்பாட்டு - ஏலப்பாட்டு. ஓடம் - தோணி, மிதவை, நெசவு, நாடா, செங்கருங்காலி. ஓடல் - குலைவு, ஓடுகை, கெடுகை, ஒருமரம். ஓடவிடுதல் - புடமிடுதல். ஓடாணி - ஆணி முதலியவற்றில் மாட்டும் ஆணி. ஓடி - ஒருவகை நிலம். ஓடியம் - சபைக்குத் தகாத பேச்சு. ஓடியவோடம் - கிளிஞ்சில். ஓடியாடுதல் - ஒட்டமும் ஆட்டமு மாக இருத்தல். ஓடின் - வடஐரோப்பிய புராணங்கள் கூறும் தலைமைக்கடவுள் (Odin) ஓடு - ஆமை முதலியவற்றின் ஓடு, பழம் முதலியவற்றின் கோது, வீடு வேயும் ஓடு, மட்பாத்திர உடைவு, இரப்போர்கலம். ஓடுகால் - நீரோடுங் கால்வாய். ஓடுதல் - ஓட்டமாகச் செல்லுதல், நீளுதல், வருந்துதல், கழலுதல், பொருந்துதல், குலைதல், விரைதல், பறத்தல். ஓடுபடம் - இடுதிரை. ஓடுவித்தல் - மனங்கொள்ளச் செய்தல். ஓடை - நீரோடை, குளம், அகழி, நெற்றிப்பட்டம், யானையின் நெற்றிப்பட்டம், சந்தனம் வைக்கும் மடல், குடைவேல், உலவைமரம், கிலுகிலுப்பை, ஒடுங்கிய நிலம். ஓட்டப்பம் - அப்ப வகை. ஓட்டம் - ஓடுகை, நிரோடுகை, தோல்வி, வருவாய், உருக்கிச் சுத்தஞ்செய்கை, மனஞ் செல்லுகை, உதடு, மேலுதடு. ஓட்டமெடுத்தல் - பயந்து ஓடுதல். ஓட்டருதல் - ஓடி வருதல். ஓட்டன் - நடந்து செல்லும் தூதன். ஓட்டன்துள்ளல் - கேரளநாட்டில் ஆடப்படும் நாட்டுக்கூத்து. ஓட்டாங்குச்சு - மட்கல ஓடு. ஓட்டாண்டி - பிச்சைக்காரன். ஓட்டி - பாடடிக்குப் பாட்டி. ஓட்டியம் - சித்திரகவி வகை (மாறன் 275) ஓட்டிரம் - உற்கல தேசம் (ஒரிசா) ஓட்டு - ஓடுகை, புறங்கொடுக்கை, தானிய வகை (Oats) ஓட்டுதல் - செலுத்துதல், நீங்கச் செய்தல், புகுத்துதல், அழித்தல், செய்து முடித்தல், காலந்தாழ்த்தல். ஓட்டெழுத்து - தலையெழுத்து. ஓட்டை - துவாரம், சிதைவு, உடனொத்த. ஓட்டைச்செவி - கேள்வி தரிக்காத செவி, கேட்டதை மறந்து விடுதல். ஓட்டைமனம் - மறதியுடைய மனம், இளநெஞ்சு. ஓணம் - ஆறு, திருவோணம். ஓணான் - ஓந்தி. ஓதக்கலம் - ஒடிக்கலோன் என்னும் நறுமணத் திரவம் (Eaude Cologne) ஓதப்புரோதம் - நெசவின் நெட்டிழை குறுக்கிழைகள். ஓதம் - ஈரம், வெள்ளம், கடல் நுரை, அண்டவாதம். ஓதல் - கல்வி பயிலுதல். ஓதலாந்தையார் - ஐங்குறு நூற்றில் பாலைப் பகுதியின் ஆசிரியர். ஓதவனம் - கடல். ஓதனம் - சோறு, உணவு. ஓதனை - காசுக்கட்டி. ஓதா - யாகஞ்செய்யும் ஆசிரியருள் ஒருவன். ஓதா - யாகஞ்செய்யும் ஆசிரியருள் ஒருவன். ஓதி - ஞானம், கல்வி, நூல், ஓதுபவன், செறிவு, பெண்மயில், அன்னம். ஓதிமம் - அன்னம், மலை, கவரிமா, புளி. ஓதிமவிளக்கு - அன்ன விளக்கு. ஓதிமன் - பிரமன். ஓதியிடுதல் - கலியாணம் முதலிய வற்றில் மொய்யிடுதல். ஓது - புனை. ஓதுதுல் - படித்தல், சொல்லுதல், செபம் செய்தல், பாடுதல், இரகசி யத்தில் போதித்தல். ஓதுவார் - கோவிலில் தேவாரம் பாடுவோர். ஓதை - எழுத்தொலி, மதில், பதிலின் மேல் வழி. ஓத்தி - பச்சோந்தி, ஓணான். ஓத்திரம் - ஓமத்துக்குரிய பொருள். ஓத்திரி - யாகஞ் செய்வோன். ஓத்து - ஓதுகை, வேதம், இயல் வீதி. ஓத்துமுறைவைப்பு - இயல் முதலியவற்றை முறைப்படி அமைத்தலாகிய உத்திவகை. ஓத்துரைப்போன் - உபாத்தியாயன். ஓநாய் - கோநாய், காட்டு நாய். ஓந்தி - ஓணான். ஓபாதி - அஞ்ஞானம். ஓபு - கதவு. ஓப்பல்மணி - ஒருவகை நிறக்கல் (Opal) ஓப்புதல் - ஓட்டுதல், உயர எடுத்தல். ஓமகுண்டம் - வேள்விக்குழி. ஓமப்பொடி - திருநீறு, ஓமம் செய்த சாம்பல் சிற்றுண்டி வகை. ஓமம் - அசுமதாகம், வேள்வித் தீயில் நெய் முதலியன விடுகை. ஓமலிப்பு, ஓமல் - ஊர்ப்பேச்சு. ஓமவல்லி - கர்ப்பூரவல்லி. ஓமறத்தல் - ஒழிவறுதல். ஓமாலிகை - நறும் நீருக்கு உப யோகப்படும் சரக்குகள். ஓமித்தல் - ஓமஞ் செய்தல். ஓமியம் - யாகம். ஓமை - மா, உகா என்ற மரம். ஓம் - ஆம், பிரணவம். ஓம்படுத்தல் - பாதுகாக்குமாறு சேர்த்தல், பரிகரித்தல், உறுதி கூறுதல். ஓம்படை - பாதுகாப்பு, பாதுகாக்கு மிடம், பரிகாரம், மறவாமை. ஓம்படைக்கிளவி - தலைவியைப் பாதுகாத்துக் கொள்வதைத் தலை விக்குத் தோழி கூறும் கூற்று. ஓம்புதல் - பாதுகாத்தல், பேணுதல், பரிகரித்தல், வளர்த்தல், சீர் தூக் குதல், மனத்தை ஒடுக்குதல், விலக் குதல். ஓம்மீட்டர் - மின்தடையை அளக்கும் கருவி (Ohmmeter) ஓய் - ஓர் விளியுருபு. ஓய்ச்சல் - தளர்ச்சி. ஓய்தல் - முடிவுறுதல், மாறுதல், தளர்தல், அழிதல், இளைப்பாறுதல். ஓய்மான் - முற்காலச் சிற்றரசர் மரபு வகை. ஓய்மானாட்டு நல்லியல் கோடன் - சிறுபாணாற்றுப் படையின் பாட்டுடைத் தலைவன். ஓய்வு - ஒழிவு, தளர்வு. ஓரடிக்கோரடி - அடிக்கடி. ஓரகத்தி - கணவனுடன் பிறந்தான் மனைவி, ஒரே வீட்டுக்கு உரியவள். ஓரடை - ஒரு சிற்றளவு. ஓரi™ - ஒரு சோடி. ஓரம் - விளிம்பு, பட்சபாதம். ஓரம்பம் - ஒரு கணித நூல். ஓரம்போகியார் - சங்காலப் புலவர். ஓரவாரம் - பட்சபாதம். ஓரற்று - ஒரு தன்மையானது. ஓராங்கு - ஒரு சேர, ஒன்றுபோல இடைவிடாமல். ஓராட்டு - தாலாட்டு. ஓராயம் - சேர்க்கை, சாய்வு. ஓரானொரு - ஏதோ ஒன்று. ஓரி - ஆண்நரி, ஆண் தேவாங்கு, குதிரைப் பிடரி மயிர், தேன் முதிர்த லாற் பிறக்கும் நீலநிறம் கடை வள்ளல் களுள் ஒருவன், ஓரியின் குதிரை. ஓரிதழ்த்தாமரை - ஒருசிறு புண்டு, வல்லாரை. ஓரியர் - சக்கரவாளமலை நாட்டுச் சக்கர வர்த்திகள், வித்தியாதரர், நாகர். ஓரிலைத்தாமரை - ஓரிதழ்த்தாமரை. ஓரிற்பிச்சையார் - சங்க காலப் புலவர். ஓரீற்றா - (ஓர் + ஈற்று + ஆ) ஒருமுறை கன்று ஈன்ற பசு. ஓருருத்தன்மை - ஒரேவகை இரசா யன அமைப்புள்ள பொருள்கள் படிக அமைப்பில் ஒத்திருத்தல் (Isomorphism) ஓரும் - ஓரசைச்சொல். ஓரேலியீரேலி - பரவர் விளையாட்டு வகை. ஓரேருழவர் - சங்க காலப் புலவர். ஓரை - மாதர் கூட்டம், மகளிர் விளை யாட்டு, குரவை, இராசி, ஒரு முகூர்த்தம், நேரம், சித்திரான்னம் என்னும் உணவு, ஓர் இடைச்சொல். ஓரைப்பாவை - மகளிர் விளையாட்டுப் பாவை. ஓரையயர்தல் - மகளிர் விளையாடுதல். ஓரையன் - வடவானில் உச்ச ஒளியுள்ள நட்சத்திர மண்டலம் (Orion) ஓரோற்றுவாரம் - ஒரு மாத்திரை பெற்று வரும் செய்யுள். ஓரொன்று - ஒவ்வொன்று. ஓர் - ஒன்று, ஓர் அசைநிலை. ஓர்ச்சி - ஆராய்ச்சி, அறிவு, உணர்ச்சி. ஓர்தல் - ஆராய்ந்தறிதல், அறிதல். ஓர்த்தல் - ஆராய்தல், நினைத்தல், கூர்ந்து கேட்டல். ஓர்பு - ஆராய்கை. ஓர்ப்பு - ஆராய்ந்துணர்கை, தெளிவு, பொறை. ஓர்மித்தல் - மனந்திடப்படல். ஓர்மை - ஒற்றுமை, துணிவு, ஆடம் பரம். ஓர்வு - ஓர்பு. ஓலக்கம் - அத்தாணிக் காட்சி சபா மண்டபம். ஓலமிடுதல் - அபயமிடுதல், சத்த மிடுதல். ஓலம் - சத்தம், அபயம் வேண்டும் குறிப்பு மொழி, பாம்பு. ஓலிடுதல் - சத்தமிடுதல். ஓலியிக அமிலம் - அமில வகை (Oleic Acid) ஓலியேசி - மல்லிகைக் குடும்பம். ஓலுறுதல் - ஓசை பொருந்துதல். ஓலுறுத்தல் - இன்னோசை யுண்டாக் குதல், தாலாட்டுதல். ஓலை - பனை தென்னை முதலிய வற்றின் ஓலை, ஓலை முடங்கில் செய்தி எழுதப்பட்ட ஓலை, காதிலணி யும் ஓலைச் சுருள் ஓலைக் குடை. ஓலைக்கணக்கர் - பள்ளியில் படிப் போர். ஓலைத்தீட்டும்படை - எழுத் தாணி. ஓலைத்தூக்கு - சீட்டுக்கவி. ஓலைப்பாசுரம் - கடிதச் செய்தி. ஓலைப்புறம் - கட்டளை. ஓலைப்பூ - தாழம்பூ. ஓலைபோக்குதல் - ஓலையில் செய்தி எழுதி அனுப்புதல். ஓலைமுகப்பாசுரம் - கடிதத் தொடக்கத் தெழுதும் வக்கணை. ஓலைவார்தல் - ஓலை சீவுதல். ஓலைவாளை - மீன்வகை. ஓலைவிநாயகன் - சோழருடைய தலைமைக் காரிய நிருவாகி. ஓல் - ஒரு விளியுருபு. ஓவம் - சித்திரம். ஓவர் - சித்திரக்காரர், ஏத்தாளர். ஓவாவருதல் - ஒழிதல். ஓவாமை - இடைவிடாமை. ஓவியகாயம் - புலி. ஓவியம் - சித்திரம், அழகு. ஓவியன் - சித்திரமெழுதுவோன். ஓவு - சித்திரம், ஒழிகை. ஓவுதல் - நீங்குதல், முடிதல், நீக்குதல். ஓளி - ஒழுங்கு, யானைக்கூடம். ஓற்பலம் - கோங்கு. ஓனகிரேசீ - இரட்டை விதையிலைக் குடும்பம். ஓனம் - எழுத்தின் சாரியை. ஒள ஒளகம் - கடைப்பாட்டு. ஒளசனம் - உபபுராணம் பதினெட்டினொன்று. ஒளசித்தியம் - தகுதி. ஒளடதம் - மருந்து. ஒளட்டு - ஒருவகை ஆகாசவெடி. ஒளதர் - அம்பாரி. ஒளதாரியம் - உதார குணம். ஒளரங்கசீபு - இந்தியாவை ஆண்ட ஒரு மொகலாய அரசன் (1618 - 1707) ஒளவித்தல் - அழுக்காறு கொள் ளல். ஒளவியம் - பொறாமை. ஒளவை - அவ்வை, ஆரியாங்கனை, தாய். ஒளவை இல்லம் - ஆதரவற்ற ஆண் பெண் குழந்தைகளைப் பேணும் இல்லம்; அடையாற்றி லுள்ளது. ஒளவை நோன்பு - செவ்வாய் நோன்பு. ஒளவையார் - சங்க காலப் பெண் புலவருளொருவர், இப்பெயருடைய இன்னொருவர் 12ம் நூற்றாண்டில் வாழ்ந்தார். ஒளன்ஸ் - இமயமலைப் பக்கங்களில் வாழும் ஒரு வகைச் சிறுத்தை (Ounce) ஃ ஃ - ஆய்தவெழுத்து. க க - தமிழில் ஒன்று என்னும் எண்ணின் குறி, பிரமன், அக்கினி, ஒரு வியங்கோள் விகுதி. கஃசு - கால் பள அளவு. கஃறெனல் - கறுத்துள்ளமை காட்டும் குறிப்பு. ககணி - ஆகாயத்திலுள்ள பொருள் களின் கதியை அறிபவன். ககபதி - கருடன். ககம் - பறவை, அம்பு. ககனசாரி - ஆகாயத்தில் சஞ்சரிப் பவன். ககனசாரிகை - ஆகாயத்தில் சஞ்சரிக்கை, பரத நாட்டிய நிலை களுள் ஒன்று. ககனம் - ஆகாயம், காடு, சேனை. ககனாரவிந்தம் - ஆகாசத் தாமரை, கொட்டைப் பாசி (ககன + அரவிந்தம்) ககுத்து - திமில். ககுபம் - திசை. ககுளம் - ஒரு வகை இசை அளவை ககேசன் - கருடன், சூரியன். ககோதரம் - பாம்பு. ககோளம் - வான மண்டலம். கக்கம் - அக்குள். கக்கரி - முள் வெள்ளரி. கக்கல் - உண்டதை வாயினால் வெளிப்படுத்தல், சத்திசெய்கை. கக்கு - வாந்தி, செய்தல், வெளிப் படுதல். கக்குவான் - கக்கிருமல். கங்கணகிரகணம் - வளையம் போலத் தோன்றும் சூரிய கிரகணம். கங்கணம் - கைவளை, காப்பு நாண். கங்கதம் - சீப்பு. கங்கபத்திரம் - பருந்தின் இறகு, அம்பு. கங்கபாடி - கங்க அரசர் ஆண்ட நாடு. கங்கம் - பருந்து, கழுகு, சீப்பு, ஒரு தேசம். கங்கர் - ஓர் அரச குலத்தார், கக்கான் கல். கங்காதரன் - கங்கையைத் தலையில் அடக்கிய சிவன். கங்காபவானி - கங்கா தேவி. கங்காபுரம் - கங்கை கொண்ட சோழ புரம். கங்காளம் - எலும்புக் கூடு, ஒரு வகைக் கலம். கங்காளன் - சிவன். கங்காளி - உமை, காளி. கங்கு - வயல் வரம்பு, அணை, எல்லை, வரிசை, மட்டையின் அடிப்புறம், கழுகு, பருந்து. கங்குகரையில்லாமை - அள வின்மை. கங்குரோகம் - கொப்புள் நோய் வகை. கங்குல் - இரவு, பரணி நாள். கங்குல்வாணர் - அரக்கர். கங்குல் வெள்ளத்தார் - சங்க காலப் புலவர். கங்கை - ஓர் ஆறு, ஆறு. கங்கைகுலம் - வேளாளர் குலம். கங்கைகொண்டசோழபுரம் - சோழ இராசதானியுள் ஒன்று. கங்கைகொண்ட சோழன் - முதலாம் இராசேந்திர சோழன். கங்கைதனயன் - முருகக் கடவுள். கங்கைபெற்றோன் - விநாயகர். கசகசத்தல் - ஒலித்தல், வியர்த்தல். கசகசா - அபினிச் செடி, கசகசா விதை. கசகம் - வெள்ளரி. கசகர்ணம் - காதாட்டும் வித்தை, பெரு முயற்சியால் ஆக வேண்டிய காரியம். கசகர்ணி - வெருகஞ் செடி. கசகுதல் - பின்வாங்குதல், தளர்தல். கசக்கல் - கசங்கச் செய்கை. கசக்குதல் - கசங்கச் செய்தல், நெருக்குதல். கசங்குதல் - குழைதல், மனம் நோதல், உரைஞ்சுதலால் மெல்லிய பொருள்கள் தம் நிலைகெடுதல். கசங்கு - ஈந்து, ஈச்சமரம். கசடன் - குற்றமுள்ளவன், கீழ்மகன். கசடு - குற்றம், அழுக்கு, வீடு. கசதி - கஷ்டம். கசதீபம் - ஒருவகை கோயில் விளக்கு. கசத்தல் - கைத்தல், வெறுப்படைதல். கசபுடம் - நூறு எரு இட்டு எரிக்கும் புடம். கசப்பி - வேம்பு, மயிற்சிகை, வல்லாரை, காசித்தும்பை. கசப்பு - வெறுப்பு. கசம் - மிகுதி, குளம், யானை, தலை மயிர், மூன்றடி கொண்ட அளவு. கசரத்து - தேகப் பயிற்சி. கசரை - காலே அரைக்கால் பலம். கசர் - சிவப்புக் கல்லின் குற்றம். கசவம் - கடுகு. கசனை - உப்புப் பற்று, ஈரம். கசாகூளம் -தாறுமாறு. கசாக்கிரகம் - ஒரு சிற்றளவை. கசாப்பு - ஆடுமாடுகளைக் கொல் லுதல். கசாயம் - கஷாயம், குடிநீர். கசானன் - விநாயகன். கசிதம் - கல்பதித்தல், சிறு அகப்பை. கசிதல் - ஈரமுறுதல், வியர்த்தல், இளகுதல். கசிவு - ஈரம், நெகிழ்வு வருத்தம் அழுகை. கசு - கால்பலம். கசுகுசெனல் - காதுக்குள் மெது வாகப் பேசுங் குறிப்பு. கசுமலர் - அசுத்தர். கசேந்திரன் - சிறந்த யானை. கசை - கவசம், அடிக்கும் சவுக்கு, மயிர் மாட்டி. கச்சகம் - குரங்கு. கச்சங்கம் - ஒப்பந்தம். கச்சபம் - ஆமை, நவநிதியுள் ஒன்று. கச்சபீ - சரசுவதியின் வீணை. கச்சம் - மரக்கால், அளவை, ஓரெ ண்ணுப் பெயர், ஒப்பந்தம், இறகு, கடு குரோகிணி, தானைச்செருக்க, யானைக்கழுத்திலிடு கயிறு. கச்சவடம் - வியாபாரம். கச்சா - தாழ்மை, ஒரு நிறை. கச்சாயம் - ஒருவகைச் சிற்றுண்டி. கச்சாலை - காஞ்சீபுரத்திலுள்ள சிவா லயம். கச்சால் - மீன் பிடிக்கும் கூடு. கச்சான் - மேல் திசைக் காற்று. கச்சி - காஞ்சீபுரம், சிரட்டை. கச்சிப்பேடு - கச்சி. கச்சிப்பேட்டு இளந்தச்சனார் - சங்க காலப் புலவர். கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்ற னார் - சங்க காலப் புலவர். கச்சிப்பேட்டு நன்னாகையார் - சங்க கால புலவர். கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார் - சங்க காலப் புலவர். கச்சியப்ப சிவாசாரியார் - கந்த புராண ஆசிரியர் (12ஆம் நூ.) கச்சியப்ப முனிவர் - தணிகைப் புராணம் முதலியவற்றின் ஆசிரியர் - 18 ஆம் நூற்றாண்டு. கச்சு - அரைப்பட்டி, கச்சை கயிறு, பெண்கள் சட்டை. கச்சுரி - நெருப்பு. கச்சூரம் - பேரீந்து, கழற்காய். கச்சேரி - உத்தியோகசாலை, ஆடல் பாடலுக்காகக் கூடும் கூட்டம். கச்சை - கவசம், தழும்பு, கயிறு, யானைக் கீழ்வயிற்றில் கட்டும் கயிறு, அரைக் கச்சு. கச்சைக்கொடியோன் - கன்னன். கச்சைகட்டுதல் - ஆடையை இறுகக் கட்டுதல், ஒன்றைச் செய்ய முயன்று நிற்றல். கச்சோதம் - மின்மினி. கச்சோரம் - பூலாங்கிழங்கு, கிச்சிலிக் கிழங்கு. கச்சோலம் - ஒருவகை, வாசனைப் பண்டம், சிறு பாத்திரம். கஞலுதல் - நெருங்குதல், விளங்குதல், எழுதல், சிறப்படைதல், சினங் கொள்ளுதல். கஞறம் - கள். கஞற்றுதல் - நிரப்புதல், செய்தல். கஞ்சகம் - கறிவேம்பு, கச்சின் தலைப்பு. கஞ்சகாரன் - கன்னான். கஞ்சக்கருவி - வெண்கலத்தால் செய்த தாளவாத்தியம். கஞ்சங்குல்லை - கஞ்சாங்கோரை. கஞ்சம் - தாமரை, அப்பவருக்கம், துளசி, கைத்தாளம், வஞ்சனை, நீர். கஞ்சல் - கூளம், குப்பை. கஞ்சனம் - கைத்தாளம், கண்ணாடி, கரிக்குருவி, வலியன். கஞ்சனை - கண்ணாடி, தூபகலசம். கஞ்சன் - கம்சன், நொண்டி, குறளன், பிரமன். கஞ்சா - ஒருவகைச் செடி. கஞ்சாங்கோரை - நாய்த்துளசி, திருநீற்றுப் பச்சை. கஞ்சி - சோற்றின் வடிதண்ணீர், காஞ்சிபுரம். கஞ்சிகை - மணி பதித்த பல்லக்கு, பரிபூண்ட தேர், ஆடை உருவு திரை. கஞ்சிரா - சிறு கைப்பறை வகை. கஞ்சுகம் - சட்டை, முருக்கு, அதி மதுரம். கஞ்சுகன் - சட்டை அணிந்த பிரதானி, வைரவன். கஞ்சுகி - மெய்க்காப்பாளன், பாம்பு, திரைச்சீலை. கஞ்சுளி - சட்டை. கடகசங்கிராந்தி - ஆடிமாதப் பிறப்பு. கடகடத்தல் - ஆட்டங்கொடுத்தல். கடகடவெனல் - ஒலிக் குறிப்பு, விரைவுக் குறிப்பு. கடகண்டு - ஒரு பழைய நாடகநூல். கடகத்தண்டு - சிவிகை. கடகநாதன் - சேனாபதி. கடகம் - கைவளை, வாகுவலயம், பனை ஓலையால் முடைந்த கூடை, ஒரு அபிநயம், கேடகம், படை, மதில், ஒரு தலை நகரம்; மலைப் பக்கம். கடகன் - காரியத்தைக் கூட்டி வைப்பவன், வல்லவன். கடகாவருத்தம் - அபிநயவகை. கடகு - இரட்சிப்பது. கடதாசி - காகிதம், தாள். கடத்தல் - கடந்துபோதல், தாவுதல், மேற்படுதல், மீறுதல், அளத்தல், நீங்குதல், பொருதல், வெல்லுதல், அழித்தல், கழிந்து போதல், ஓர் இசைக் குற்றம். கடத்திகள் - கடத்திச் செல்வன (Carriers, conductors) கடத்துதல் - செலுத்துதல், கடப் பித்தல், காலம் போக்குதல். கடந்தேறுதல் - கடந்து போதல். கடப்பாடு - கடமை, முறைமை, கொடை, ஒப்புரவு, அதிகப்படுதல். கடப்பு - கடத்தல், கடமை, மிகுதி யானது. கடமணை - தேர் அல்லது வண்டியின் முன்னுறுப்பு. கடமா, கடமான் - காட்டு ஆ, மதயானை. கடமாதம் - மாசி மாதம். கடமுனி - அகத்தியர். கடமை - கடப்பாடு, குடியிறை, பெண் ஆடு, ஒருவகை மரை. கடம் - கடன், தெய்வக் கடன், நீதி, பாவம், காடு, கோபம், யானைக் கதுப்பு, யானை மதம், கயிறு, பாலை நிலத்து வழி, குடம், கும்பராசி, குட முழவு, இரண்டு மரக்கால் அளவு, உடம்பு, யானைக் கூட்டம், மலைச் சாரல், மஞ்சள். கடம்படுதல் - நேர்ந்து கொள்ளுதல், கோபமடைதல். கடம்பம் - வெண்கடம்பு, வாலு ளுவை. கடம்பவனம் - மதுரை. கடம்பனூர் சாண்டிலியன் - சங்க காலப் புலவர். கடம்பன் - கடம்ப மலர் அணிந்த முருகன். கடம்பி - கெட்டவள். கடம்பு - தீங்கு, கடம்பமரம். கடம்பை - கடமா குளவிவகை. கடயம் - கைவளை. கடரி - மர மஞ்சள். கடலகம் - ஊர்க்குருவி, ஆமணக்கு. கடலர் - நெய்தல் நிலமக்கள். கடலமிழ்து - உப்பு. கடலிறைவன் - வருணன். கடலுப்பு - கறியுப்பு. கடலுய் மாய்ந்த இளம்பெருவழுதி - சங்க காலப் புலவர். கடலூர்ப்பல் கண்ணனார் - சங்க காலப் புலவர். கடலெல்லை - கடல் சூழ்ந்த உலகம். கடலை - நவதானியத்திலொன்று. கடலோடி - கடற்பிரயாணி. கடல் - சமுத்திரம், ஒரு பேரெண், சதய நாள், மிகுதி. கடல் எழுத்தாணி - கடலுயிர்வகை. கடல்படுதிரவியம் - ஓர்க்கோலை சங்கம், பவளம், முதது, உப்பு முதலிய கடலிற் பிறக்கும் பொருள் கள். கடல் பேனா - கடலுயிர் (Sea pen) கடல்முள்ளெலி - Sea urchin. கடல்வண்ணன் - திருமால், ஐய னார். கடல்விளையமுதம் - உப்பு. கடல்வெள்ளரி - கடலுயிர் (Sea cucumber) கடவது - செய்யவேண்டியது. கடவல்லி - ஒர் உபநிடதம். கடவன் - கடமைப்பட்டவன், எசமானன். கடவாத்தியம் - இசைக் கருவியாகப் பயன்படுத்தும் மண்குடம். கடவு - வழி, எருமைக் கடா ஆட்டுக் கடா. கடவுட்கணிகை - தெய்வ உலகத்து ஆடல் மகள். கடவுட்சடை - கூத்துவகை. கடவுட்டீ - உலகம் அழியும் போதும் எழும் ஊழித்தீ (கடவுள் + தீ) கடவுட்பள்ளி - பௌத்த கோயில். கடவுணதி - கங்கை (கடவுள் + நதி) கடவுண்மங்கலம் - தெய்வப் பிரதிட்டை. கடவுண்மண்டிலம் - சூரியன். கடவுண்மாமுனிவர் - திருவாதவூரடி கள் புராணத்தைச் செய்த புலவர் (18ஆம் நூ.) கடவுண்மை - தெய்வத்தன்மை. கடவுதல் - செலுத்துதல், முடுக்குதல், கேட்டல். கடவுநர் - செலுத்துவோர். கடவுளரிடன் - கோயிலுக்குரிய வரி இல்லாத நிலம். கடவுளாளர் - தேவர். கடவுளெழுதுதல் - தெய்வவுருவை அமைத்தல். கடவுள் - இறைவன், முனிவன், நன்மை, தெய்வத்தன்மை. கடவை - கடக்கை, வாயில், கடப்பு. கடற்காக்கை - நீர்ப் பறவைவகை (Gull) கடறு - காடு, அருநெறி, பாலை, நிலம், மலைச்சாரல். கடற்கோ - வருணன் (கடல் + கோ) கடற்கோடு - கடற்கரை. கடற்சாமந்தி - குருயுடலி (Sea anumone) கடற்பசு - கடல் விலங்குவகை (Sea cow) கடற்படை - கப்பற் சேனை. கடற்பன்றி - கடல் விலங்குவகை (Dolphin) கடற்பிணா - நெய்தல் நிலப்பெண். கடற்பிறந்தாள் - திருமகள். கடற்றெய்வம் - வருணன். கடனிறுத்தல் - கடனைக் கொடுத் தல், கடமை செய்தல். கடனாளி - கடன் பட்டவன். கடனுரை - ஒரு வகைக் கணவாய் மீன் ஓடு (கடல் + நுரை) கடன் - கடமை, இரவற்பொருள், இயல்பு, உபசாரம், மரக்கால், குடியிறை, மானம். கடன்கழித்தல் - கடமை செய்தல். கடன்கோடல் - கடன் வாங்குதல். கடன்மரம் - மரக்கலம். கடன்மல்லை - மகாபலிபுரம். கடன்முரசோன் - மன்மதன். கடன்முறை - பெரியோருக்குச் செய்யும் மரியாதை. கடன்மை - தன்மை. கடன்றானம் - இலக்கினத்துககு ஆறாமிடம். கடா - வினா, ஆட்டின் ஆண், ஆட்டின் பொது, எருமைக்கடா. கடாகம் - உலக உருண்டை, கொப் பரை. கடாக்களிறு - மல்யானை. கடாசலம் -யானை (கட + அசலம்) கடாசுதல் - எறிதல், ஆப்படித்தல். கடாட்சம் - அருள். கடாம் - யானையின் மதம்படுதுளை, யானை மதநீர். கடாய்க்கன்று - காளைக்கன்று. கடாரம் - கொப்பரை, காழகம் (பர்மா), பெருநாரதை. கடாரி - ஈனாத இளம் பசு. கடாவிடுதல் - மாடுகளால் உழக்கச் செய்தல். கடாவு - செலுத்துகை. கடாவுதல் - செலுத்துதல், ஆணி முதலியன அறைதல், குட்டுதல், வினாவுதல், தூண்டுதல். கடி - பல்லால் கடிக்கை, கடித்த வடு, விடக்கடி, ஊறுகாய், நீக்கம், வாசனை, கலியாணம், புதுமை, மிகுதி, விரைவு, பூசை, சிறப்பு, கூர்மை, இன்பம், அச்சம், அதிசயம், தேற்றம், சந்தேகம், கரிப்பு, காலம், பேய், சிறுகொடி. கடிகாரம் - நேரங்காட்டும் கருவி. கடிகுரங்கு - ஒரு மதிற்பொறி. கடிகை - துண்டம், காம்பு, குத்துக் கோல், கதவிடுதாழ், கேடகம், திரைச்சீலை, நாழிகை, முகூர்த்தம், விதிப்பவன், மங்கல பாடகன், வேதம், கெண்டி, உண்கலம், கட்டு வடம், தோள்வளை, காப்பு, ஊர்ச் சபை. கடிகைமாக்கள் - மங்கலபாடகர். கடிகைமுத்துப் புலவர் - சமுத்திர விலாசம் முதலிய பல நூல்கள் செய்த புலவர் (17ம் நூ.) கடிகையர் - அரசனுக்குச் சென்ற நாழி கைக்குக் கவி சொல்வோர், பறை மூலம் அரசனாணையை அறிவிப்போர். கடிகொள்ளுதல் - விளக்குதல். கடிகோல் - பறவை ஓட்டுங்கழி. கடிசரி - கூத்து நிலைகளுள் ஒன்று. கடிசூத்திரம் - அரைஞாண் (கயிறு) கடிசை - பாய்மரந்தாங்கி. கடிஞை - பிச்சைப் பாத்திரம், மட்கலம். கடிதம் - திருமுகம், எழுதவேனும் சித்திர மெழுதவேனும் பசைக் கூழ் தடவிய சீலை. கடிதடம் - அரை, நிதம்பம். கடிதல் - கோபித்தல், நீக்குதல், ஓர் அபசுரம், அழித்தல், கண்டித்தல், அரிதல், அடக்குதல். கடிது - கடுமையானது, விரைவாக. கடித்தல் - பல்லால் மெல்லுதல். கடி நகர் - காவலுள்ள நகரம், மண் வீடு. கடிநாய் - கடிக்கும் நாய். கடிநிலை - நீக்கும் நிலை. கடிந்தோன் - முனிவன். கடிப்பகை - வேம்பு, வெண்கடகு. கடிப்பம் - காதணி, ஆபரணச் செப்பு, கெண்டி. கடிப்பிணை - காதணி. கடிப்பு - குறுந்தடி, ஆயுதவிசேடம், துருத்தியின் கைப்பிடி, குமிழ், காதணி. கடிமரம் - காவல்மரம். கடிமனை - காவலிடம். கடிமாடம் - காவலமைந்த கன்னி மாடம். கடிமுரசம் - அரசாங்கத்துக்குரிய முரசம். கடிமூலம் - முள்ளங்கி. கடிய - விரைவில். கடியலூருருத்திரங்கண்ணன் - பெரும் பாணாற்றுப்படை, பட்டினப் பாலை என்னும் நூல்களைப் பாடிய ஆசிரியர். கடியறை - மண அறை. கடியன் - கடுமையுள்ளவன். கடியிருக்கை - திருமண மண்டபம். கடிவாய் - கடித்த இடம். கடிவாளம் - குதிரை வாயில்மாட்டும் இரும்புக் கருவி. கடிவை, கடிறு - யானை. கடினம் - இலகுவின்மை, மிருது வின்மை. கடு - கடுக்காய், கைப்பு, நஞ்சு, பாம்பு, முள், துவர்ப்பு. கடுக - விரைய. கடுகடுத்தல் - சினக்குறிப்புக் காட்டு தல், விறுவிறுப்போடு வலித்தல். கடுகம் - கார்ப்பு, திரிகடுகங்களுள் ஒன்று - சுக்கு திப்பிலி மிளகு. கடுகு - கடுகு விதை. கடுகுதல் - விரைதல், மிகுதல், குறைதல். கடுகு ரோகிணி - ஒரு மருந்துச் சரக்கு. கடுகு பெருந்தேவனார் - சங்க காலப் புலவர். கடுகென - விரைவாக. கடுக்கம் - விரைவு. கடுக்கன் - காதில் அணியும் அணி. கடுக்காய் - கடுக்காய் மரத்தின் காய். கடுக்குதல் - முலாம் பூசுதல், ஒதுக் குதல், கோபக்குறி காட்டுதல், வலித்தல். கடுக்கும் - ஓர் உவம உருபு. கடுக்கெனல் - கடுமைக் குறிப்பு, வளர்தல். கடுக்கை - கொன்றை மரம், மருது. கடுங்கண் - கொடுமை, அஞ்சாமை. கடுங்கை - வருத்துகின்றகை. கடுங்கோன் - கடைச்சங்கத்து இறுதிப் பாண்டியன். கடுஞ்சூல் - முதல் கருப்பம். கடுஞ்சொல் - கொடிய பேச்சு. கடுதல் - களை பிடுங்குதல். கடுதாசி - கடதாசி, காகிதம். கடுத்தல் - நோவெடுத்தல், உளை தல், உறைத்தல், விரைந்து ஓடுதல், மிகுதல், வெறுத்தல், சந்தேகித்தல், ஒத்தல். கடுநகை - எள்ளல் பற்றிய நகை, பெருஞ் சிரிப்பு. கடுந்தொடைக் காவினார் - சங்க காலப் புலவர் (அகம் 109) கடுந்தோட் கரவீரன் - சங்க காலப் புலவர் (குறு. 69) கடுப்ப - ஒப்ப. கடுப்பு - நோவு, வெகுளி, வேகம், ஒப்பு, செருக்கு. கடுமரம் - எட்டி, கடுக்காய் மரம். கடுமா - சிங்கம், யானை, விரைந்து செல்லும் விலங்கு. கடுமான் - சிங்கம். கடுமீன் - சுறா. கடுமுள் - பேராயுதம். கடுமை - கொடுமை, வேகம், கடினம், மிகதி, சினம், வெம்மை. கடும் உவர்க்காரம் - கோஸ்டிக் சோடா (Caustic soda) கடும்பு - கம்மாடு, சுற்றம், ஈண்றணிய ஆடுமாடுகளின் பால். கடுவால் - விரைந்து வருதல். கடுவழி - கடத்தற்கரிய வழி. கடுவளி - பெருங்காற்று. கடுவனிள் மள்ளனார் - சங்க காலப் புலவர் (நள். 150) கடுவனிள வெயினனார் - பரிபாடல் 3,4, 5 - பாடல்கள் செய்தவர். கடுவன் - ஆண் குரங்கு, ஆண் பூனை. கடுவாய் - கழுதைப்புலி, காவிரி ஆற்றின் கிளைகளுள் ஒன்று. கடுவாய்ப்பறை - ஒரு வகைப் போர்ப் பறை. கடுவினை - தீவினை. கடுவெளி - நிழலற்ற வெளியிடம், ஆகாசம். கணக்காயனார் - நக்கீரரின் தந்தை. கணபதி தாசர் - நெஞ்சறி விளக்கம் என்னும் நூல் செய்தவர் (18ம் நூ.) கடுவெளிச் சித்தர் - சித்தருள் ஒருவர். கடுவை - பறைவகை. கடூரம் - கடினம், கொடுமை. கடை - இடம், எல்லை, அங்காடி, கீழ்மை, தாழ்ந்தோன், வாயில், கைபிடி, பின், ஒரு வினையெச்ச விகுதி, முடிவு. கடைகயிறு - தயிர்கடையும் கயிறு. கடைகழிமகளிர் - பொதுமகளிர். கடைகாப்பாளன் - வாயில் காவலன். கடைகூடுதல் - கை கூடுதல். கடைகொள்ளுதல் - முடிவு பெறு தல். கடைக்கண் - கண்ணின் கடை, நுனியிடம், கடாட்சம். கடைக்கணித்தல் - அருளல். கடைக்கண்பார்வை - அருள் நோக்கம். கடைக்கருவி - உடுக்கை. கடைக்கனல் - ஊழித்தீ. கடைக்காப்பு - பதிகத்தின் இறுதிப் பாட்டு. கடைக்கால் - மிகத் தாழ்ந்த கீழிடம், ஊழிக்காற்று, பின்வருங்காலம். கடைக்குளம் - உத்தராடம். கடைக்கூடுதல் - சம்மதித்தல், கைகூடுதல். கடைக்கூட்டிலக்கை - ஒரு பழைய வரி. கடைக்கூட்டு - உயிர்விடும் காலம். கடைக்கூட்டுதல் - செய்து முடித் தல், ஒருப்படுத்துதல், சம்பாதித்தல், இறுதி அடைவித்தல். கடைக்கூழை - செய்யுள்தொடை வகை, படையின் பின்னணி. கடைக் கொள்ளுதல் - உறுதியாகக் கொள்ளுதல், பின் செல்லுதல், சேர்த்தல், முடிவு பெறுதல். கடைக்கொள்ளி - முனையில் எரியும் கொள்ளிக்கட்டை. கடைக்கோள் - முடிவு பெறுகை. கடைசி - முடிவு. கடைசோரி - அப்பக் கடை. கடைச்சங்கம் - மூன்றாஞ்சங்கம். கடைச்சரி - முன் கைவளை. கடைச்சல் - மரம் முதலியவற்றைக் கடைகை, கடையப்பட்ட பொருள். கடைச்சன் - கடைசிப் பிள்ளை. கடைச்சி - மருதநிலப் பெண். கடைஞன் - இழி குலத்தோன், மருதநிலத்தான், குணக்கேடன். கடைதல் - மத்தால் கடைதல், மரம் முதலியன கடைதல், மசித்தல், மிகப் பண்ணுதல், அரித்தல். கடைதிறப்பு - கதவு திறக்கை. கடைத்தலை - தலைவாயில். கடைத்தும் - இடத்தும். கடைத்தெரு - ஆவண வீதி. கடைத்தேறுதல் - ஈடேறுதல். கடைநாள் - கடைசிநாள், ஊழிக் காலம். கடைநிலை - புறவாயில், சான்றோர் தம் வரவைத் தலைவனுக்கு உணர்த்துமாறு வாயிலில் நின்று வாயில் காவலர்க்குக் கூறுவதாகிய புறத்துறை. கடைபோதல் - முற்றுப் பெறுதல், நிலை வேறுதல். கடைப்படுதல் - இழிவாதல், நிறை வேறுதல். கடைப்பந்தி - கடைசி வரிசை. கடைப்பிடி - உறுதி, தேற்றம், அபிமானம், அறிந்துகொண்ட பொருளை மறவாமை. கடைபிடித்தல் - உறுதியாகப் பற்றுதல், தெளிவுறவறிதல், மறவா திருத்தல், சேர்த்து வைத்தல். கடைமடை - கடைசி மதகு. கடைமணி - ஆராய்ச்சி மணி, வேத முதலியவற்றின் அடிப்பகுதி, கண் மணியின் கடை, பரதவ மகளிர் கையணி வகை. கடைமுகம் - தலைவாயில். கடைமுறை - முடிவில், இழிந்த நிலை. கடைமை - கீழ்மை. கடையடைக்காய் - ஒரு பழைய வரி. கடையம் - இந்திராணிக் கூத்து. கடையர் - இழிந்தோர், மருத நில மார்கள், வாயில் காப்போர். கடையல் - கடைகை, அலைக்கை. கடையனல் - ஊழித்தீ. கடையாணி - அச்சாணி. கடையால் - பால் கறக்கும் மூங்கிற் குழாய்க்கலம். கடைசியலாக்காட்சி - எல்லை யில்லாது யாவற்றையுங் காணுங் குணம். கடையுவா - அமாவாசை. கடையுற - முழுதும். கடையுறுநோக்கு - மெய்யுணர்வு. கடையூழி - கலியுகம். கடையெழுத்து - கையொப்பம். கடைவழி - இறந்தபின் உயிர் செல்லும் வழி. கடைவள்ளல்கள் - பாரி, ஆய், எழினி, நள்ளி, மலையன், பேகன், ஓரி என்போர். கடைவாய் - வாயில் கடை. கடைவீதி - கடைத்தெரு. கடோபநிடதம் - ஓர் உபநிடதம். கடோற்கசன் - வீமனுக்க இடும்பி யிடம் பிறந்த மகன். கட்கண் - ஊனக்கண். கட்கம் - காண்டாமிருகத்தின் கொம்பு, அக்குள், வாள். கட்காஞ்சி - அரசன், வீரர்க்கு உண்ண மதுவளிக்கும் புறத்துறை. கட்கிலி - புலப்படாதவன். கட்குத்திக்கள்வன் - விழித்திருக் கும் போதே ஏமாற்றுபவன். கட்சி - காடு, புகலிடம், கறவைக் கூடு, மக்கள் துயிலிடம், பக்கம், போர்க் களம், சார்பு. கட்செவி - பாம்பு, ஆயிலியம். கட்டகம் - சித்திர வேலைப்பாடு, காந்தக் கல். கட்டங்கம் - மழுவாயுதம். கட்டங்கன் - சிவன். கட்டடம் - கட்டிடம். கட்டணம் - பாடை, பல்லக்கு, செலுத்தும் பணம். கட்டதரம் - மிகக்கொடியது. கட்டப்பாரை - இரும்புப் பாரை. கட்டம் - சிரமம், பீடை, மலம், காடு, நீராடுதுறை, மோவாய், பகுதி, சூதாட்டத்து அறை. கட்டர் - துன்பமடைவோர். கட்டல் - களவு, பறிக்கை, களை பறிக்கை. கட்டவிழ்தல் - முறுக்கு நெகிழ்தல். கட்டழகு - பேரழகு. கட்டழல் - பெருநெருப்பு. கட்டழிதல் - கட்டுக் குலைதல். கட்டழித்தல் - நிலைகெடுத்தல், காவலைக் கெடுத்தல். கட்டளை - அளவு, அச்சு, ஒன்றைப் போல் அமைக்கும் உருபு, உவமை, துலாம், நிறை அறி கருவி, உரைகல், விதித்தரம், முறைமை, ஒழுங்கு, எல்லை, குதிரைக்குப் பூட்டும் கடிவாளம், முதலியன, கட்டுப்பாடு, கோயிலுக்கு ஏற்படுத்தப்பட்ட தருமம், உத்தரவு. கட்டளைக்கலி - பாவகை. கட்டளைக்கலித்துறை - பாவகை. கட்டளைக்கலிப்பா - பாவகை. கட்டளைக்கல் - உரைகல். கட்டளைச்சட்டம் - நியாயப் பிரமாணம். கட்டளைத்தம்பிரான் - சைவ மடத்தைச் சார்ந்த கோயில்களை மேல்பார்க்க மடாதிபதியால் நியமிக்கப்பட்ட சைவத்துறவி. கட்டளையிடுதல் - பணிதல். கட்டளைவலித்தல் - அவரவர் தரத்தை நிச்சியித்தல். கட்டளை விரியன் - மலைப் பாம்பு வகை. கட்டாடி - குறி சொல்வோன், வண்ணான். கட்டாணி - உலாபி, சமர்த்தன். கட்டாண்மை - பெருவீரம். கட்டாந்தரை - வறண்டு இறுகிய தரை. கட்டாம்பாரை - மீன்வகை. கட்டாயம் - ஒரு பழையவரி, அவ சியம், வலாற்காரம். கட்டாரி - குத்துவாள், சூலம். கட்டான் - ஒருவகை விளையாட்டு. கட்டி - இறுகின பொருள், கற்கண்டு, சிலந்திப்புண், பொன். கட்டிக்காத்தல் - கவனித்துப் பாது காத்தல். கட்டிக்கொடுத்தல் - கலியாணஞ் செய்து கொடுத்தல். கட்டிக்கொள்ளுதல் - தழுவுதல், மணஞ் செய்து கொள்ளுதல், பற்றுதல், உடுத்தல். கட்டிச்சம்பா - நெல்வகை. கட்டிடம் - கட்டடம். கட்டிப்பிடித்தல் - இறுகத் தழுவுதல். கட்டிப்புழுக்கு - வெல்லத்துடன் கூடிய அவரை விதை முதலிய வற்றின் புழுக்கு. கட்டிமை - உலோபம், கட்டுப்பாடு. கட்டியக்காரன் - சீவகன் தந்தை யாகிய சச்சந்தன் மந்திரி. கட்டியங்கூறுதல் - புகழ் சொல்லு தல். கட்டியம் - அரசர் முதலியோரைக் குறித்துச்சொல்லும் புகழ்த்தொடர். கட்டியர் - பழைய சிற்றரச வகுப்பினர் ஒருவர். கட்டில் - மஞ்சம், சிங்காசனம். கட்டிலெய்துதல், கட்டிலேறுதல் - சிங்காசன மேறுதல். கட்டிளமை - காளைப்பருவம். கட்டு - பந்தம், பொய்யுரை, கட்டுப்பாடு, அணை, உறவின்கட்டு, அரண், வகுப்பு, உறுதி, மிகுதி, மரியாதை, நிகழ்வது சொல்லுங்குறி, மூடை, கற்பிக்கை, வளைப்பு. கட்டுக்கடத்தல் - வரம்பு கடத்தல். கட்டுக்கதை - பொய்க்கதை. கட்டுக்கழுத்தி - தாலிதரித்தவள், மனைவி. கட்டுக்காரன் - குறிசொல்லுவோன். கட்டுக்காவல் - கடுமையான காவல். கட்டுக்கிடை - நாட்பட்ட சரக்கு. கட்டுச்சொல்லுதல் - குறி சொல்லுதல். கட்டுச்சோறு - வழிப் பயணத் துக்குக் கொண்டு செல்லும் சோறு. கட்டுச்சரக்கு - இரசத்தைக் கட்டும் சரக்கு. கட்டுதல் - பிணித்தல், அமைத்தல், தழுவுதல், பேணுதல், சூடுதல், உடுத்தல், செலுத்துதல், கற்பித்துச் சொல்லுதல், இறுகச் செய்தல், வசப்படுத்துதல். கட்டுத்தறி - விலங்குகளைக் கட்டும் தூண். கட்டுபடி - சிறிது இலாபமாக அமைகை. கட்டுப்படுதல் - கட்டுக்குள் அடங் குதல், தடைப்படுதல், கட்டப் படுதல். கட்டுப்படுத்தல் - குறி கேட்டல், அடங்கச் செய்தல். கட்டுப்பாடு - சமூக ஏற்பாடு நிபந்தனை. கட்டுப்புனை - கட்டுமரம். கட்டுப்பெட்டி - பிரம்பு ஓலை முதலியவற்றால் முடைந்தபெட்டி. கட்டுமரம் - மிதவை. கட்டுமா - ஒட்டுமா. கட்டுமுகனை - அதிகாரம். கட்டுரை - உறுதிச்சொல், பொருள் பொதிந்த சொல், பழமொழி, புனைந் துரை, பொய். கட்டுரைத்தல் - உறுதியாகச் சொல்லுதல். கட்டுவாங்கம் - மழு, ஒருவகைத் தைலம். கட்டுவாங்கன் -விநாயகர், சிவன். கட்டுவிச்சி, கட்டுவித்தி - குறி சொல்பவன். கட்டுவிரியன் - பாம்புவகை (Krait) கட்டுவை - கட்டில். கட்டுறவை - கட்டெறும்பு. கட்டூண் - களவு செய்து உண்கை. கட்டூர் - பாசறை. கட்டெறும்பு - ஒருவகை எறும்பு. கட்டேறுதல் - ஆவேசம் வருதல். கட்டை - விறகு, குற்றி, தேய்ந்தது, குட்டை. கட்டைவிரல் - பெருவிரல். கட்டோசை - பேரொலி. கட்டோடு - முழுதும். கட்டோர் - கள்ளர். கட்படாம் - யானை முகத்து அணியும் ஆடை. கட்பு - களைபறிக்கை. கட்புலம் - பார்வை, கண்ணால் அறியும் அறிவு (கண் + புலம்) கட்போன் - கள்வன். கணக்கதிகாரம் - காரியார் இயற்றிய ஒரு கணித நுல் (15ஆம் நூ.) கணகணத்தல் - உடம்பு வெப்ப முறுதல், ஒலித்தல். கணகம் - 27 தேர், 27 யானை, 81 குதிரை, 135 காலாட்கள் கொண்ட படைப் பகுப்பு. கணகன் - சோதிடன், கணக்கன். கணக்கப்பிள்ளை, கணக்கன் - கணக்கு எழுதுவோன், ஒரு சாதி, புதன். கணக்காயர் - ஆசிரியர். கணக்காயனார் - நக்கீரரின் தந்தை. கணக்கிடுதல் - அளவிடுதல். கணக்கு - எண், கணக்குக் குறிப்பு, சூழ்ச்சி, முடிவு, தொகை, அளவு, வழக்கு, விதம். கணக்குவழக்கு - முறைமை, அளவு, கொடுக்கல், வாங்கல். கணங்கள் - ஒன்று சேர்ந்த பொருள்கள் (Sets) கணதரன் - அருகன். கணத்தார் - ஊர்க்காரிய நிர்வாகி கள். ககணநாயனார் - அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவர். கணந்துள் - ஒரு பறவை. கணபங்கம் - நொடியில் தோன்றி அழிவது. கணபதி - விநாயகன். கணபதிதாசர் - நெஞ்சறி விளக்கம் என்னும் நூல் செய்தவர். கணபதியணி - கணபதிக்கு அணியும் அழகு. கணபர் - சிவகணத் தலைவர். கணபிச்சை - இல்வாழ்வான் வாங்கும் பிச்சை. கணப்பறை - தோற்கருவி வகை. கணப்பு - தீச்சட்டி, குளிர்காயுந் தீ. கணப்பெருமக்கள் - ஊர்க்காரிய நிர்வாகிகள். கணப்பொருத்தம் - கலியாணப் பொருத்தங்களுள் ஒன்று, செய்யுள் முதன்மொழிப் பொருத்தவகை. கணப்பொழுது - நொடிப்பொழுது. கணம் - அற்பம், திப்பலி, கூட்டம், பேய், நட்சத்திரம், பதினெண் கணம், திரட்சி, வட்டம், கால நுட்பம். கணம்புல்ல நாயனார் - 63 நாயன் மாருளொருவர். கணவம் - அரசமரம். கணவர் - கூட்டத்தார். கணவலர் - அலரி. கணவன் - நாயகன். கணவாட்டி - கணவாள சாதிப்பெண். கணவாய் - மலைகளுக்கு இடையி லுள்ள சிறுவழி, மீன்வகை. கணவாளம் - பழங்காலத் தென் னிந்திய சாதிகளுள் ஒன்று. கணவிரம், கணவீரம் - செவ்வலரி. கணனம் - கிரக நடை முதலியன கணிக்கை. கணனை - எண். கணன் - தொகுதி, திருடன். கணாதமதம் - வைசேடிக மதம். கணாதர் - தர்க்கிகர். கணாதன் - வைசேடிக மதாசாரிய னான முனிவன். கணி - சோதிடம், ஓவியன், வேங்கை, கலை, மருதநிலம். கணிகம் - நூறுகோடி, கால நுட்பம், இலிங்கம், கணப்பொழுது இருக் கக் கூடியது கணிகவெற்பு - திருத்தணிகை. கணிகன் - சோதிடன். கணிகாரம் - கோங்கு. கணிகை - பொது மகள், முல்லை. கணிக்காரிகை, கணிக்காரி - குறி சொல்லும் பெண். கணிசம் - மதிப்பு, மேம்பாடு, சத்தம். கணிச்சி - குந்தாலி, மழு, யானைத் தோட்டி, உளி, கோடரி. கணிச்சியோன் - மழுப்படை உடைய சிவன். கணிதம் - கணக்கு வகை, சோதிடம், கணக்கு நூல், அளவு. கணிதன் - கணக்கெழுதுவோன். கணித்தல் - கணக்கிடுதல், அளவு குறித்தல், மதித்தல், படித்தல், உண் டாக்குதல். கணிபுன் குன்றனார் - சங்க காலப் புலவர் (புறம். 192) கணிப்பு - அளவிடுகை, மதிப் பிடுகை. கணிமேதாவியார் - ஏலாதி, திணை மாலை நூற்றைம்பது என்ற நூல் களின் ஆசிரியர் (5ம் நூ.) கணிலை - மர வகை. கணிவன் - சோதிடன். கணிவன்முல்லை - சோதிடனின் புகழைக்கூறும் புறத்துறை. கணீரெனல் - ஒலிக்குறிப்பு. கணு - மூங்கில் முதலியவற்றின் கணு, மரம் முதலியவற்றின் கணு, அவ யவப் பொருத்து. கணுக்காலிகள் - காலில் பொருத்துள்ள பிராணிகள் (Arthropoda) கணுவை - ஒருவகைத் தோற்கருவி. கணேச பண்டிதர் - இளைசைப் புராணம் செய்தவர்; யாழ்ப்பாணப் புலவர் (1843-1881) கணேசன் - விநாயகன். கணை - திரட்சி, அம்பு, அம்பின் அலகு, பூரநாள், ஆயுதக் காம்பு, சிவிகையின் வளை கொம்பு, கரும்பு, நோய் வகை (Rickets) திப்பலி. கணைக்கட்டு - அம்புக்கட்டு. கணைக்கால் - முழங்தாளுக்கும் பாட் டுக்கும் இடையிலுள்ள உறுப்பு, திண்டநாளம். கணையமரம் - கோட்டை மதிற் கதவுக்குத் தடையாகக் குறுக்கிடும் மரம், குறுக்கு மரம். கணையம் - தண்டாயுதம், வளைதடி, யானைத்தூண், காவற்காடு, போர், வாத்தியவகை, குடலின் வெளியே யுள்ள சவ்வு (Pancreas) கணையாழி - முத்திரை மோதிரம். கணையுலக்கை - உலக்கைக் கடை. கண் - விழி, பீலிக்கண், கண் ணோட்டம், துவாரம், மரக்கணு, முரசு முதலிய வற்றின் அடிக்கு மிடம், மூங்கில், பெருமை, ஞானம், இடம், முன்பு, பற்றுக்கோடு, உடம்பு, ஏழனுருபு. கண்கட்டுவித்தை - தந்திரவித்தை. கண்கண்ணி - சிறிய பூமாலை. கண்கலத்தல் - ஒருவரை ஒருவர் பார்த்தல். கண்கனலுதல் - கண்சிவத்தல். கண்காட்சி - விநோதக்காட்சி. கண்காட்டிவிடுதல் - சாடையால் ஏவி விடுதல். கண்காட்டுதல் - குறிப்பாகக் கண் சிமிட்டுதல். கண்காணம் - மேல் விசாரணை. கண்காணி - மேல் விசாரணை செய் வோன், கூலியாட்களை மேல் பார்ப்போன். கண்காணிநாயகம் - மேல் விசா ரணைத் தலைமை உத்தியோகம். கண்காணிப்பு - மேற்பார்வை. கண்குத்திப்பாம்பு - பச்சைப்பாம்பு. கண்குளிர்ச்சி - கண்களிப்பு. கண்குறைத்தல் - கண்ணைப் பிடுங்கி விடுதல். கண்கூடு - நேரிற் காண்பது. கண்கூடுவரி - தலைவன் தலைவியர் தாமே சந்திக்கும் நிலைமையை நடித்துக்காட்டும் நடிப்பு. கண்கொள்ளாக்காட்சி - அதிசயக் காட்சி. கண்சாத்துதல் - அன்போடு பார்த் தல். கண்சாய்தல் - அறிவு தளர்தல், அன்பு குறைதல். கண்சிம்புளித்தல் - கண்கூசுதல். கண்சிமிட்டுதல் - கண் இமைத்தல். கண்சிவத்தல் - கோபித்தல். கண்டகம் - முள், நீர்முள்ளி, காடு, உடைவாள், வாள், கொடுமை. கண்டகன் - கொடியோன். கண்டகாந்தாரம் - பண்வகை. கண்டகி - தீயவள், தாழை, மூங்கில், இலந்தை, ஒரு நதி. கண்டகிச்சிலை - சாளக்கிராமம். கண்டகோடரி - கைக்கோடரி. கண்டக்கரப்பன் - தொண்டை நோய் வகை. கண்டசர்க்கரை - ஒருவகைச் சர்க் கரை. கண்டசரம் - கழுத்தணி வகை. கண்டசருக்கரைத்தேறு - கற்கண்டு. கண்டதும் கடியதும் - நல்லதும் தீயதும். கண்டதுண்டம் - பலதுண்டம். கண்டி - எருமைக்கடா, உருத்திராக்க மாலை, கழுத்தணிவகை கண்டியூர், ஒரு சிறையளவு, சிறுகீரை. கண்டிகை - கழுத்தணி, உருத்திராக்க மாலை, வாகுவலயம், ஆபரணச் செப்பு, ஒரு வகைப்பறை. கண்டித்தல் - கடிந்து கூறுதல், துண் டித்தல். கண்டிப்பு - கடிந்துகொள்கை, வரை யறை உறதி. கண்டியர் - பாணர். கண்டியூர் - சிவன் பிரமன் தலையைக் கிள்ளிய இடம். கண்டிருந்தல் - தோன்றியிருத்தல். கண்டில்வெண்ணெய் - பெருஞ் சீரகம். கண்டீரவம் - சிங்கம், சதுரக்கள்ளி. கண்டீர் - ஒரு முன்னிலையசை. கண்டு - கற்கண்டு. கண்டுகழித்தல் - வெறுப்புண்டாகு மட்டும் அனுபவித்துக் கழிதல். கண்டுகாணுதல் - கவனமாகப் பார்த்தல். கண்டுசருக்கரை - புகைத்தற்குரிய ஒருவகை வாசனைப் பண்டம். கண்டுபாவனை - கண்டு பின் பற்றுதல். கண்டுபிடித்தல் - ஆராய்ந்து கண்டறிதல். கண்டுமுட்டு - சைனர் சைவரைக் கண்டால் மேற்கொள்ளும் தீட்டு. கண்டுமுதல் - மொத்தவரவு. கண்டுயிலுதல் - தூங்குதல், பார்வை மங்குதல். கண்டூதி - தினவு. கண்டை - ஓர் அசைநிலை, பார், நெசவுத் தாறு, சிறுதுகில், சரிகை, பெருமணி, வீரக்கழல், தோற்கருவி வகை. கண்ணகனார் - சங்க காலப் புலவர். கண்ணகாரன் கொற்றனார் - சங்க காலப் புலவர். கண்ணகி - கோவலன், மனைவி, பேகன் மனைவி. கண்ணங்கூத்தனார் - கார் நாற்பது செய்த புலவர். கண்ணங் கொற்றனார் - சங்க காலப் புலவர் (நற். 143) கண்ணஞ்சுதல் - பயப்படுதல். கண்ணஞ் சேந்தனார் - திணை மொழியைம்பது இயற்றிய ஆசி ரியர். கண்ணடி - கண்ணாடி. கண்ணப்பநாயனார் - அறுபத்து மூவருவள் ஒருவர். கண்ணம் புல்லனார் - சங்க காலப் புலவர் (அகம் 63 : நற். 159) கண்ணயத்தல் - விரும்புதல். கண்ணயர்தல் - உறங்குதல். கண்ணராவி - துக்க நிலை. கண்ணரிதல் - நீக்குதல். கண்ணருகுதல் - கண்ணை இடுக் குதல். கண்ணவர் - அமைச்சர், அரசனுக்கு கண் போன்றவர். கண்ணவேணி - கிருட்டிணா ஆறு. கண்ணழித்தல் - பதம் பதமாகப் பொருளுரைத்தல். கண்ணழிவு - பதப்பொருள் கூறுகை. கண்ணளி - கண்ணாற் செய்யும் அருள். கண்ணறுதல் - கண்ணோட்டமழிதல், நட்புக் குலைதல். கண்ணறை - குருடு, துவாரம், அகலம். கண்ணறையன் - குருடன், வன் னெஞ்சன். கண்ணனாகனார் - பரிபாடல் 21ம் பாடலுக்கு இசை வகுத்தவர். கண்ணார் - சங்க காலப் புலவர். கண்ணான் - புரோகிதன். கண்ணன் - திருமால், கிருட்டிணன். கண்ணாடி - படிமக்கலம், உருவம் பிரதி பிம்பிக்கும் ஆடி. கண்ணாடிவிரியன் - பாம்பு வகை (Russell’s viper) கண்ணாட்டி - காதலி, கண்போல் காப்பவள். கண்ணாதல் - கருத்தாதல். கண்ணாம்பூச்சி - கண்கட்டி விளை யாடும் பிள்ளை விளையாட்டு வகை. கண்ணாரக்காணுதல் - கண்கூடாகப் பார்த்தல், ஆசைதீரப் பார்த்தல். கண்ணார் - பகைவர். கண்ணாலக்காணம் - திருமணத் தின் பொருட்டுச் செலுத்தும் ஒரு பழைய வரி. கண்ணாலம் - கலியாணம். கண்ணாளன் - கணவன், அன்பன். கண்ணி - தலையில் சூடும் பூமாலை, போர்ப்பூ, பூங்கொத்து, புள்ளைப் படுக்கும் முடிப்புக்கயிறு, முடிச்சு, கொழுந்து, இசைப்பாட்டு, கரிசலாங் கண்ணி. கண்ணிகண்ணுதல் - சூடிய போர்க் கண்ணிக்கேற்ப வினை செய்யக் கருதுதல். கண்ணிகுத்துதல் - சுருக்குக் கயிறு வைத்தல். கண்ணிமை - கண்ணிதழ், ஒரு மாத்திரைக் கால அளவு. கண்ணியம் - கௌரவம், மரமஞ்சள். கண்ணிரங்குதல் - ஒலித்தல், அருள் செய்தல். கண்ணிலன் - குருடன், இரக்க மற்றவன் (கண் + இலன்) கண்ணிறை - தூக்கம். கண்ணிற்றல் - எதிர் நிற்றல். கண்ணீர் - (கண் + நீர்) விழிநீர், (கள் + நீர்) கள்ளாகிய நீர். கண்ணுதல் - கருதுதல், பொருந்துதல், நெற்றியில் கண்ணுடைய சிவன் (கண் + நுதல்) கண்ணுக்குக்கண்ணாதல் - மிகப் பாராட்டப்படுதல். கண்ணுங்கருத்துமாய் - முழுக் கவனத்துடன். கண்ணுடையவள்ளலார் - ஒழிவி லொடுத்த நூலாசிரியர், 18 நூற். கண்ணுமை - காட்சி. கண்ணுள் - கூத்து, அரும்புத் தொழில். கண்ணுளன், கண்ணுளாளன் - கூத்தன். கண்ணுள்வினைஞன் - ஓவிய காரன். கண்ணுறுதல் - பார்த்தல், எதிர்ப் படல், கிட்டுதல். கண்ணூறு - பார்வையாலுண்டாகும் தீங்கு (கண் + ஊறு) கண்ணூறை - கறி மசாலை, கண் ணாற், கண்டஞ்சு மச்சம். கண்ணெழுத்தாளன் - அரசனது திருமுகம் எழுதுவோன். கண்ணெறி - (கண் + எறி) கண்ணூறு, தோற்கருவிகளை வாசிக்கை. கண்ணேணி - மூங்கிலேணி. கண்ணேறு - கண்ணூறு. கண்ணோடுதல் - விரும்பியதில் பார்வை செல்லுதல், இரங்குதல், தாட்சணியப்படுதல், மேற்பார்வை செய்தல். கண்ணோட்டம் - கண் பார்வை, தாட்சணியம், பார்வையிடுதல். கண்திட்டி - கண்ணூறு. கண்திறத்தல் - கண்விழித்தல், அறிவுண்டாதல், கல்வி கற்பித்தல். கண்பசத்தல் - கண்ணின் நிறம் மாறுதல், உறங்குதல். கண்பஞ்சடைதல் - கண் ஒளி மழுங்குதல். கண்படுதல் - நித்திரை செய்தல், பரவுதல், கண்ணோடுதல். கண்படுத்தல் - நித்திரை செய்தல், பதிக்கப்பட்டிருத்தல். கண்படை - நித்திரை. கண்படைநிலை - சபையில் இர வில் நெடுநேரம் தங்குதலால் அரசனை நோக்க மருத்துவர் முதலியோர் அவன் துயில் கோட லைக் கருதிக் கூறும் புறத்துறை. கண்பனித்தல் - கண் நீர் சிந்துதல். கண்பாடு - நித்திரை. கண்பு - சம்பங்கோரை. கண்புதைத்தல் - கண் பொத்துதல். கண்பூத்தல் - ஒளி குன்றுதல். கண்மணி - கண்ணின் கருமணி, உருத்திராக்கம். கண்மயக்கு - கண்களால் கவர்கை, மாயத் தோற்றம். கண்மாயம் - கண்கட்டுவித்தை. கண்மாறுதல் - தோன்றி உடனே மறை தல், நிலைகெடுதல், புறக்கணித்தல். கண்மிச்சில் - கண்ணூறு. கண்முகிழ் - இமை. கண்முகிழ்த்தல் - கண்மூடுதல். கண்வரி - வெள்விழியின் செவ்வரி (சிவந்த கோடு) கண்வளர்தல் - தூங்குதல். கண்வளையம் - மத்தளத்தின் கண்ணைச்சுற்றியுள்ள வட்டம். கண்விடுதூம்பு - தோற்கருவி வகை. கண்விடுத்தல் - விழித்துப் பார்த்தல். கண்விதுப்பழிதல் - தலைவனைக் காண்பதற்கு விரைந்து தலைவி வருந்துதல். கண்விழித்தல் - அழைத்தல். கதகம் - தேற்றா. கதக்கண்ணனார் - சங்க காலப் புலவர் (குறு. 88, 94) கதண்டு - கருவண்டு. கதம் - கோபம், பாம்பு, வலி. கதம்பம் - கடம்பு, கலப்பு உணவு, பரிமளப் பொடி, மேகம். கதம்பை - தேங்காய் மட்டைத் தும்பு. கதர் - கைராட்டை நூல் கொண்டு செய்த ஆடை. கதலி - வாழை, துகிற்கொடி, பறக்க விடுங் காற்றாடி, தேற்றா. கதலிகை - ஆபரண உறுப்பு, கதலி. கதலிமலடு - வாழைபோல் ஒரு முறை ஈன்றவல். கதவம் - கதவு. கதவு - காவல், வீட்டுக்கதவு. கதவுதல் - கோபித்தல். கதவுநிலை - வாசற்கால். கதழ்தல் - கோபித்தல், பிறத்தல், விரைதல், வக்கிரமாதல், மிகுதல். கதழ்வு - விரைவு, உக்கிரம் மிகுதி. கதழ்வுறுதல் - அச்சத்தால் கலங்கிக் கூச்சலிடுதல். கதறுதல் - உரக்க அழுதல். கதனம் - கடுமை, கலக்கம். கதாநாயகன் - கதையின் தலைவன். கதாப்பிரசங்கம் - புராணசரித்திர விரிவுரை. கதாமஞ்சரி - கதைத்தொகுதி. கதாயுதம் - தண்டாயுதம் (கதை) கதாயுதன் - தண்டாயுதம் உடைய வீமன். கதாவுதல் - செல்லுதல். கதி - நடை, வழி, விரைவு, புகலிடம், மோட்சம், குதிரை நடை, உயிர் எடுக்கும் பிறப்பு, இயல்பு, சாதனம். ககிதம் - சொல்லப்பட்டது. கதித்தல் - கோபித்தல், சொல்லுதல், ஒலித்தல், விரைதல், நடத்தல், எழுதல், பருத்தல், மிகுதல், அறிதல். கதிரம் - அம்பு, கருங்காலி. கதிரவன் - சூரியன். கதிரவன்புதல்வி - யமுனை. கதிரியக்கம் - இரேடியோக் கதிர் களின் இயக்கம் (Radioactivity) கதிரெழுதுகள் - அணுவைக் கொண்டு அளக்கும் ஓர் நுட்ப அளவை. கதிரை - கதிர்காமம் என்னும் இடம், சாய்வு நாற்காலி. கதிரோன் - சூரியன். கதிர் - கிரணம், வெயில், சூரிய சந்திரர், பயிர்க்கதிர், நூல் நூற்கும் கருவி, சக்கரத்தின் கம்பு. கதிர்காமம் - இலங்கையிலுள்ள முருகன் கோயில். கதிர்க்கடவுள் - சூரியன். கதிர்க்கணம் - பழைய வரிவகை. கதிர்க்கோல் - நூல் நூற்கும் கருவி. கதிர்செய்தல் - ஒளி செய்தல். கதிர்ச்சாலேகம் - இரும்புக் கம்பி களுடைய சாளரம். கதிர்ச்சிலை - சூரியகாந்தம். கதிர்த்தல் - பிரகாசித்தல், வெளிப் படுதல், மிகுதல். கதிர்நாள் - உத்தரம். கதிர்ப்பகை - சூரிய சந்திரரைப் பற்றும் இராகு கேதுக்கள், சூரியன் வரவைக் கண்டால் மூடும் அல்லி. கதிர்ப்பு - பிரகாசம். கதிர்மகன் - யமன், சனி, சுக்கிரீவன், கன்னன். கதிர்முத்து - ஆணிமுத்து. கதிர்வட்டம் - சூரியன். கதீடிரல் - கிறித்துவ கோயில், குரு பீடம். கது - வடு, மலைப் பிளப்பு. கதுக்கு - இராட்டினத்தில் நூலைப் பற்றும் உறுப்பு. கதுப்பு - கன்னம், தலைமயிர், பசுக் கூட்டம். கதுமெனல் - விரைவுக் குறிப்பு. கதுவாய் - வடுப்படுகை, குறைகை. கதுவுதல் - பற்றுதல், அபகரித்தல், கலங்குதல், பிரதிபலித்தல். கதை - வரலாறு, பொய் வார்த்தை, சொல், விதம், தண்டாயுதம். கதைத்தல் - சொல்லுதல், பேசுதல். கத்தக்கதித்தல் - நிரம்ப மிகுதல். கத்தணம் - கவசம். கத்தபம் - கழுதை. கத்தம் - மலச்சேறு. கத்தரி - ஒரு செடிவகை, கத்தரிக் கோல். கத்தரிக்கோல், கத்தரிகை - கத்தரிக் குங் கருவி. கத்தரித்தல் - நறுக்குதல், பிரித்தல். கத்தன், கத்தர் - செய்பவன், கடவுள். கத்தி - அறுக்கும் கருவி. கத்திகாணம் - ஆயுதவரி. கத்திகை - பூமாலை, குருக்கத்தி, கருக்கு, வாய்ச்சி, சிறுதுகிற்கொடி. கத்தியம் - நல்லாடை வகை. கத்திரி - சௌராட்டிரர் பேசும் மொழி. கத்திரு - கர்த்தா. கத்துதல் - சத்தமிடுதல், கூவுதல், பிதற்றுதல், ஓதல். கத்துரு - காசியப்பமுனிவர் மனைவி. கத்தூரி - மான்மதம். கத்தூரிகை - வால் மிளகு. கந்தகம் - ஒருவகைத் தாதுப் பொருள், முருங்கை. கந்தசாமிக் கவிராயர் - தனிச் செய்யுட் சிந்தாமணி என்னும் நூல் இயற்றியவர் (19ம் நூ.) கந்தசாரம் - பனிநீர், சந்தனம். கந்தசாலி - ஒருவகை மேலான நெல். கந்தபுராணம் - கச்சியப்ப சிவா சாரியார் செய்த புராணம். கந்தப்பிள்ளைச் சாத்தனார் - சங்க காலப் புலவர் (புறம். 168) கந்தப்பையர் - விசாகப் பெரு மாளையர் சரவணப் பெருமாளை யர் என்போரின் தந்தை; தணிகை உலா, தணிகைக் கலம்பகம் முதலிய பல நூல்கள் செய்தவர். கந்தப்பொடி - வாசனைப்பொடி. கந்தமாதனம் - எட்டு மலைக் கூட்டங்களுள் ஒன்று. கந்தம் - கிழங்கு, கருணை, வெள் ளைப் பூண்டு, வாசனை, பாதரசம். கந்தரகம் - சந்தனம். கந்தரத்தனார் - சங்க காலப் புலவர். கந்தரந்தாதி - அருணகிரிநாதர் முருகன் மீது செய்த நூல். கந்தரமுட்டி - நேரே அம்பெய் தற்கு விற்பிடிக்கை. கந்தரம் - கழுத்து, மேகம், மலைக் குகை, கடற்பாசி. கந்தரலங்காரம் - அருணகிரிநாதர் செய்த ஒரு நூல் (15ம் நூ.) கந்தரனுபூதி - அருணகிரிநாதர் முருகன்மீது செய்த ஒரு நூல். கந்தருவ நூல் - இசைநூல். கந்தருவமணம் - தலைவனும் தலைவியும் தாமே எதிர்ப்பட்டுக் கூடுங் கூட்டம். கந்தருவம் - கந்தருவசாதி, குதிரை, இரவு பதினைந்து முகூர்த்தங் களுள் ஐந்தாவது, இசை, கந்தருவ மணம். கந்தருவர் - பதினெண்கணத்துள் ஒரு பகுதியார். கந்தருவதேவம் - இசை நூல். கந்தர்ப்பர் - கந்தருவர். கந்தர்ப்பன் - மன்மதன். கந்தல் - கந்தை. கந்தவன் - வாயுதேவன். கந்தவர்க்கம் - வாசனைத் திரவி யங்கள் (கந்தம் - வாசனை) கந்தவாரம் - அரண்மனையிலுள்ள அந்தப்புரம். கந்தழி - கடவுள், கண்ணன், வாண னது சோ நகரத்தை அழித்ததைக் கூறும் புறத்துறை. கந்தளம் - கவசம். கந்தன் - முருகக்கடவுள், அருகன். கந்தன் பாட்டு - ஒருவகை வரிக் கூத்து. கந்தாயம் - ஆண்டின் மூன்றிலொரு பாகம், ஆதாயம். கந்தாரம் - கள், ஒருபண். கந்தாவகன் - வாயுதேவன். கந்தானனசிரம் - அபிநய வகை. கந்தி - ஆரியாங்கனை, மரகதம். கந்தித்தல் - மணத்தல். கந்தியார் - சீவக சிந்தாமணியில் இடைச் செருகலாக 445 பாடல்கள் எழுதிச் சேர்ந்த வைணவப் பெண் புலவர் (12ம் நூ.?) கந்தியுப்பு - கந்தக உப்பு. கந்திரி - ஒரு முகமதிய பண்டிகை. கந்திற்பாவை - தூண்களில் பிர திமை வடிவாயமைந்த பெண் தெய்வம். கந்து - தூண், நெற்களத்திற், பொலிப் புறத்தடையும் பதர், யானை கட்டும் தறி, ஆதிண்டு குற்றி, தெய்வமுறை யுந்தறி, புற்றுக்கோடு, குதிரையின் முழுப் பாய்ச்சல். கந்துகம் - பந்து, குதிரை. கந்துகவரி - பெண்கள் பந்தாடும் போதும் பாடும் பாடல். கந்துள் - கரி. கந்தூரி - கந்திரி. கந்தை - பிற்றலாடை, கிழிந்த ஆடை, கருணைக் கிழங்கு. கபடநாடகம் - போலி நடிப்பு. கபடம் - வஞ்சகம். கபடி - கபடமுடையவள். கபம் - சிலேட்டுமம். கபர்த்தம் - சிவபிரான் சடை. கபர்த்தி - சிவன். கபரோகம் - சிலேட்டும் நோய். கபளீகரித்தல் - மொத்தமாக விழுங்குதல். கபாடபுரம் - இடைச் சங்கமிருந்த பாண்டியன் தலைநகர். கபாடம் - கதவு, காவல், பொதி. கபாத்து - படைப் பயிற்சி. கபாய் - நீண்ட சட்டை, அங்கி. கபாலம் - தலைஓடு. கபாலரேகை - தலையெழுத்து. கபாலி - வைரவன், உருத்திரருள் ஒருவர். கபி - குரங்கு. கபிஞ்சலம் - காடை. கபித்தம் - அபிநய வகை. கபிலதேவர் - சிவபெருமான் திருவந்தாதி, மூத்த நாயனார் திருவிரட்டை மணிமாலை முதலிய 11ம் திருமுறை நூல்களியற்றியவர்; சங்க காலப் கபிலரின் வேறானவர். கபிலம் - புகர்நிறம், கரிக்குருவி. கபிலமதம் - சாங்கிய மதம். கபிலர் - உருத்திரர், சங்க காலப் புலவருளொருவர். கபிலன் - ஒரு முனிவர், சங்க காலப் புலவருள் ஒருவர். கபிலை - எருதுகளைக் கட்டி, நீரி றைக்கும் ஏற்றம், பசு, தெய்வப்பசு, தென்கீழ்த் திசைப் பெண் யானை, கபிலவாஸ்து. கபோதகத்தலை - கொடுங்கை யைத் தாக்குதலுடைய பலகை. கபோதம், கபோதகம் - புறா, வீட்டின் கொடுங்கை, அபிநய வகை. கபோதி - கண்தெரியாதவன், அறிவிலி. கபோலம் - கன்னம். கப்படம் - ஆடை. கப்பணம் - இரும்பாற் செய்த ஆனை நெருஞ்சிமுள், ஒரு கழுத் தணி. கப்பம் - அரசர்க்கிடுந்திறை, கற்பம். கப்பரை - பிச்சைக்கலம், மட்கலம், கிடாரம். கப்பல் - மரக்கலம். கப்பற்படை - கடற்படை. கப்பி - தெள்ளி நீக்கிய நொய், கயிறிழுக்கும் கருவி, பொடிக்கல். கப்பித்தல் - கவர்படுதல், பெருத்தல். கப்பு - கவர்கொம்பு, பிளவு, சிறுதூண், தோள், ஆதாரம், கவர்ச்சி. கப்புதல் - மூடிக் கொள்ளுதல், வாய்க் கொள்ளுமளவு இட்டு விழுங்குதல். கப்புரம் - கர்ப்பூரம். கமஞ்சூல் - மேகம். கமடம் - ஆமை. கமடாதனம் - கூர்மாசனம். கமண்டலம், கமண்டலு - கரகம். கமத்தல் - நிறைதல். கமம் - நிறைவு, வயல். கமர் - நிலப் பிளவு. கமலகோசிகம் - அபிநயவகை. கமலத்தேவி - தாமரையில் இருக் கும் இலக்குமி. கமலத்தோன் - பிரமன். கமலாசனம் - யோக ஆசனத் தொன்று. கமலாசனன் - பிரமன், அருகன். கமலாசனி - இலக்குமி. கமலாலயம் - திருவாரூர். கமலாலயன் - பிரமன். கமலை - இலக்குமி, திருவாரூர். கமலைஞானப் பிரகாசர் - தருமபுர ஆதினத்தைச் சேர்ந்தவர்; திரு வானைக் காப்புராணம் முதலிய பல நூல்கள் பாடியவர் (16ஆம் நூ.) கமழ்தல் - மணத்தல், தோன்றுதல். கமறுதல் - மிகவொலித்தல், மிக வேகுதல். கமனகுளிகை - ஆகாச வழியே செல்லுதற்குரிய குழிகை. கமன சித்தர் - ஆகாச வழியே செல்லும் சித்தர். கமனம் - செல்லுதல். கமாசு - ஓர் இராகம். கமத்தில் - நடத்தல், பொருத்தல், தாங்குதல். கமீர் - புளிப்பு. கமுகு- பாக்குமரம். கமுக்கட்டு - அக்குள். கமை - பொறுமை, மலை, பூமி. கமைப்பு - பொறுமை. கம் - நீர், தலை, காற்று, பிரமன், வீட்டின்பம், தொழில், ஆகாசம், தேவலோகம், ஆடு, விரைவு. கம்பக்கூத்து - கழைக்கூத்து. கம்பசூத்திரம் - உய்த்துணர் பொருள வாய் கம்பர் தம் இராமாயணத்தில் அமைந்த அருங்கவி. கம்பஞ்சம்பா - சம்பா நெல் வகை. கம்பட்டம் - நாணயம். கம்பதாளி - ஒருவகை நோய். கம்பநாடன் - கம்பன். கம்பநாடு - சோழ நாட்டைச் சேர்ந்த ஒரு நாடு. கம்பமா - யானை. கம்பம் - தூண், விளக்குத் தண்டு, அசைவு, நடுக்கம், கச்சி ஏகாம்பரர் கோயில். கம்பம்புல் - புல்வகை. கம்பலம் - கம்பளி, மேற்கட்டி, பறவை வகை. கம்பலை - ஆரவாரம், யாழோசை, மருத நிலம், நடுக்கம், அச்சம், துன்பம், வயல். கம்பல் - ஆடை. கம்பலத்தான் - தொட்டிய சாதியான். கம்பளம் - கம்பளிப் போர்வை, செம்மறிக்கடா. கம்பளர் - மருத நில மக்கள், தொட்டிய சாதியார். கம்பளி - உரோம ஆடை. கம்பளியாடு - குறும்பாடு. கம்பனம் - அசைவு, நடுக்கம். கம்பனி - வியாபாரச் சங்கம். கம்பன் - தமிழில் இராமாயணஞ் செய்த புலவர் (12ம் நூ.) கம்பாயம் - முகம்மதியர் உடுக்கும் கைலி ஆடை. கம்பி - உலோகக் கம்பி, காதணி வகை, கடிவாளம். கம்பிதம் - நடுக்கம். கம்பித்தல் - அசைதல், நடுங்குதல், முழங்குதல். கம்பி நீட்டுதல் - ஓடிவிடுதல். கம்பிலி - வடநாட்டு ஓரூர். கம்பீரம் - ஆழம், வீறு. கம்பு - கட்டுத்தறி, கழி, செடிகளின் சிறு தண்டு, கம்புத் தானியம், சங்கு. கம்புகட்டி - ஏரி நீர் பாய்ச்சுவோன். கம்புகம் - அபின். கம்புள் - ஒருவகை நீர்ப்பறவை, வானம்பாடி, சங்கு. கம்பை - ஏட்டுச்சுவடிச் சட்டம். கம்மக்காரர் - கப்பலோட்டிகள். கம்மக்கை - நெருக்கு வேலை, கடின வேலை. கம்மம் - கம்மியர் தொழில். கம்மல் - மகளிர் காதணி வகை, குரலடைப்பு, குறைவு. கம்மாட்டி - கம்மாளச்சி. கம்மாலை - உலோக வேலை செய்யுமிடம். கம்மாளன் - உலோக வேலை செய்யும் சாதியான். கம்மி - தொழிலாளி. கம்மியநூல் - சிற்பநூல். கம்மியன் - தொழிலாளி, கம்மாளன், நெய்பவன். கம்முதல் - குரல் குறைந்து மாறு படுதல். கம்மெனல் - மணமிகக் கமழ்தற் குறிப்பு, விரைவுக் குறிப்பு. கய - பெரிய, மெல்லிய. கயக்கம் - வாட்டம், இடையீடு, கலக்கம். கயக்கால் - ஆற்று வாய்க்கால். கயக்கு - சோர்வு, மனக் கலக்கம். கயக்குதல் - கலங்கச் செய்தல், கலங்குதல். கயங்குதல் - கசங்குதல், சோர்தல், கலக்குதல். கயத்தி - கொடியவள். கயந்தலை - மெல்லியதலை, யானைக் கன்று. கயப்பு - கைப்பு. கயப்பூ - நீரில் உண்டாகும் பூ. கயமுனி - யானைக் கன்று. கயமுகன் - யானை முகமுடைய விநாயகன், ஓர் அசுரன். கயம் - பெருமை, மென்மை, இளமை, கீழ்மை, கீழ்மக்கள், கரிக்குருவி, நீர்நிலை, கடல், ஆழம், யானை, தேய்வு, குறைபாடு, தேடு, கய ரோகம். கயமை - கீழ்மை. கயரோகம் - இருமல் நோய். கயர் - துவர்ப்பு, கறை உண்டாக்கும் துவருள்ள பொருள். கயல் - கெண்டைமீன். கயவன் - கீழ்மகன், கொடியவன். கயவாய் - நிதியின் சங்க முகம், கரிக்குருவி, எருமை. கயாகரம் - கயாகரர் இயற்றிய நிகண்டு. கயிரவம் - ஆம்பல். கயிரிகம் - காவிக்கல். கயில் - பிடர், மூட்டுவாய். கயிலாயம் - கைலாயம். கயிலை - கைலாசம். கயிறு - பாசம் மங்கள நாண், சாத்திரம். கயிறு மாறுதல் - மாடு, குதிரை முதலிய வற்றின் விற்பனையை உறுதிப்படுத்த அவற்றின் கயிற்றை மாற்றுதல். கயிறுருவிவிடுதல் - தூண்டி விடுதல். கயிற்கடை - கொளுக்கி, கொக்கு வாய். கயிற்றரவு - கயிற்றில் தோன்றும் பாம்புணர்வு. கயிணி - அத்தநாள். கர - அறுபது ஆண்டில் இருபத்தைந் தாவது. கரகம் - கமண்டலம், ஆலங்கட்டி நீர்த்துளி, கங்கை, பிரார்த்தனையாக எடுக்கும் பூங்குடம். கரகரணம் - கை அபிநயம். கரகரத்தல் - உறுத்துதல், அறி புண்டாதல். கரகரப்பிரியா - ஓர் இராகம். கரசரணாதிகள் - கை கால் முதலிய உறுப்புக்கள். கரசல் - ஓர் வைத்திய நூல். கரசை - 400 மரக்கால் கொண்ட ஓர் அளவை. கரடகம் - கபடம். கரஞ்சம் - புன்கு. கரடகன் - தந்திரி. கரடம் - யானை மதம்பாய் சுவடு, காக்கை. கரடி - விலங்குவகை, கரடிப்பறை, சிலம்பம், புரட்டு. கரடிக்கூடம் - மல், சிலம்பம் முதலி யன பயிலுஞ்சாலை. கரடிகை - கரடி கத்தினாற் போலும் ஓசையுடைய பறை வகை. கரடிவித்தை - சிலம்ப வித்தை. கரடு - முரடு, காற்பரடு, மரக்கணு ஒருவகை முத்து. கரடுமுரடு, கரடுமுருடு - ஒழுங் கின்மை. கரணத்தான் - கணக்கன். கரணத்தியலவர் - அரசர் கணக்கர். கரணம் - கையாற் செய்யுந் தொழில், இந்திரியம், அந்தக்கரணம், மனம், மணச்சடங்கு, கூத்து விகற்பம், தலை கீழாகப்பாய்கை, உபகரணம், எண். கரணம்பலம் - வரி தண்டும் உத்தி யோகம். கரணம் பாய்தல் - கூத்தாடுதல். கரணன் - கணக்கன். கரணி - மருந்து. கரணீக்கசோடி - கணக்கர் வரி. கரண்டகம் - நீர்க்காக்கை, அணிகலச் செப்பு, கரண்டி. கரண்டி - உலோகத் துடுப்பு. கரண்டிகம் - ஓலையால் குடைந்த பூங்குடலை, சுண்ணாம்புச் சிமிழ். கரண்டிகை - பூங்கூடை, முடியினோ ருறுப்பு. கரண்டுதல் - சுரண்டுதல். கரண்டை - குகை, முனிவர் வாழிடம், பறவையின் கதிவிசேடம், கமண்டலம். கரதலம் - கைத்தலம். கரதலாமலகம் - (கரம் + தலம் + ஆமலகம்) உள்ளங்கை நெல்லிக் கனி. கரத்தல் - மறைத்தல், கவர்தல். கரந்தகற்படை, கரந்துபடை - கற்படுத்து மூடப்பட்ட நகர் நீர்க் கால். கரந்துவரல்எழினி - நாடகத் திரைச் சீலை. கரந்துறை - கரந்த கற்படை. கரந்தை - திரு நீற்றுப் பச்சை, கொட் டைக் கரந்தை, நிரை மீட்போர் அணியும் கரந்தைப் பூமாலை, குரு. கரந்தையார் - நிரை மீட்கும் மறவர். கரபத்திரம் - நீர்வாள், வாள். கரபம் - மணிக்கட்டிலிருந்து விரல் வரையிலுள்ள பகுதி, யானை. கரப்பறை - ஒளித்திருத்தற்குரிய அறை (கரப்பு = அறை) கரப்பான் - கரப்பன், சொறி புண் வகை. கரப்பிரசாரம் - அபிநயம். கரப்பு - மறைக்கை, களவு, வஞ்சகம், மீன்பிடிக்கும் கூடை, கரப்பான் பூச்சி. கரப்புநீர்க்கேணி - மறைக்கப்பட்ட கிணறு. கரமஞ்சரி - நாயுருவி. கரமுகிழ்த்தல் - கை கூப்புதல். கரம் - கை, கிரணம், வரி, விலை யேற்றம், நஞ்சு. கரம்பு, கரம்பை - தரிசு, பாழ்நிலம். கரலட்சணம் - கையால் புரியும் அபிநயம். கரவடநூல் - களவைப் பற்றிக் கூறும் நூல். கரவடம் - வஞ்சகம், களவு. கரவடர் - திருடர். கரவர் - கள்வர். கரவல் - கொடாது மறைக்கை. கரவாரம் - எடுத்து வீசுகை. கரவாளம், கரவாள் - கைவாள். கரவீரம் - அலரி. கரவு - மறைவு, வஞ்சனை, களவு, முதலை, பொய். கரளம் - நஞ்சு, எட்டி. கரன் - நிலையுள்ளவன், ஒர்அரக்கன். கரா - முதலை. கராசலம் - யானை (கரம் + அசலம்) கராட்டீன் - மஞ்சள் முள்ளங்கிக் கிழங்கின் மஞ்சள் நிறத்திலுள்ள வைட்டமின். கராத்திரி - யானை. கராம் - முதலைவகை, ஆண் முதலை. கராம்பு - இலவங்கம், கராம்பு மரத்தின் பூ, கிராம்பு. கரார் - உறுதி. கராளம் - தீக்குணம், பயங்கரம். கராளன் - சிவகணத் தலைவருள் ஒருவன். கராளி - அக்கினியின் ஏழு நாக்கு களுள் ஒன்று, தீக்குணம். கரி - எரிந்தது, நஞ்சு, யானை, பெட் டைக் கழுதை, சாட்சியம், விருந் தினன். கரிகரம் - சுரதலீலை வகை. கரிகாடு - பாலை நிலம், சுடுகாடு. கரிகாலன் - சோழ அரசருள் ஒருவன் (கி.பி. இரண்டாம் நூற்.) கரிகால் - கரிகாலன். கரிகை - செந்நிறக் கத்தூரி. கரிக்கணை - யானைத் திப்பிலி. கரிக்குருவி - குருவி வகை. கரிசண்ணி - வெள்ளைக் காக்கணம். கரிசலாங்கண்ணி, கரிசலை - கையாந்த கரை. கரிசனம் - யானைக்கோடு, அன்பு, சிரத்தை. கரிசனை - அன்பு, சிறத்தை. கரிசு - குற்றம், பாவம். கரிசை - 400 மரக்காலளவு. கரிஞ்சம் - அன்றில். கரிணி - மலை, மலைக்குகை, யானை. கரிதல் - கரியாதல். கரித்துணி - அழுக்குச் சீலை. கரிநாள் - தீயநாள். கரிபோக்குதல் - கண்ணுக்கு மையெழுதுதல், சான்று கூறுதல். கரிப்பு - காரம், நித்திரை. கரிமா - எட்டுச்சித்திகளுள் ஒன்று, அச்சம், மிகக்கணமாகை. கரிமுகவம்பி - யானைமுகவோடம். கரிமுகன் - விநாயகர், கசமுக அசுரன். கரியநிம்பம் - கரிவேம்பு. கரிபோளம் - ஒரு பூடு, ஒரு செடியின் பிசின். கரியமிலவாயு - கார்பன்டை யாக்சைடு. கரியர் - நடுச்செய்வோர், கீழ்மக்கள், சாட்சிக்காரர். கரியல் - ஒருவகைத் துகில். கரியவன் - திருமால், இந்திரன், சனி, கள்வன், நடுச் செய்வோன். கரியார் - கீழ்மக்கள், சான்று கூறுவோர். கரியாள் - குதிரை வகை. கரில் - குற்றம், கொடுமை, கார்ப்பு. கரீரம் - மிடா, கும்பராசி, அகத்தி, கருவேல், மூங்கில், முளை, ஆனைத் தந்த மூலம். கரு - கறுப்பு நிறம், குப்பை மேடு, ஆயுதப்பல், கருப்பம், முட்டைக் கரு, உடம்பு, பிறப்பு, குழந்தை, குட்டி, நிமித்தக் காரணம், நடு, கருப்பொருள், பரமாணு. கருகல் - மரகதக்குற்றம், கருகிய பொருள். கருகுதல் - நிறங்கறுத்தல், தீதல், இருளுதல். கருகூலம் - கருவூலம். ககுக்குட்டுதல் - அச்சுக்கரு அமைத்தல், மழைக் குணங் கொள் ளுதல். கருக்கம் - கார்மேகம். கருக்கல் - இருள், மங்கலிருட்டு. கருக்காய் - பிஞ்சு. கருக்கிடை - ஆலோசனை. கருக்குதல் - கருகச் செய்தல், காய்ச் சுதல், எரித்தல். கருக்கு - ஆயுதப்பற்கூர், கூர்மை, அழகு. கருக்குப்பீர்க்கு - பீர்க்குவகை. கருக்குமட்டை - கருக்குள்ள பனை மட்டை. கருக்குவாள் - கூரியவாள். கருக்குழி - கருப்பாசயம். கருக்கொள்ளுதல் - கருப்ப மடைதல். கருங்கண்ணிப்பாரை - ஒரு வகை மீன். கருங்கலம் - மட்பாத்திரம். கருங்கல் - கறுப்பு நிறக்கல் (Granite) கருங்களமர் - பறையர். கருங்களா - கடல் மீன் வகை. கருங்கற்றலை - கடல் மீன் வகை. கருங்காஞ்சொறி - சிறுகாஞ் சொறி. கருங்காடு - சுடுகாடு. கருங்காய்ச்சல் - Kala azar. கருங்காலி - மரவகை, எட்டி. கருங்கால் - காலிற்காணும் மாட்டு வியாதிவகை. கருங்காவி - கருங்குவளை. கருங்காற்சம்பான் - குதிரை வகை. கருங்குடைவு - கனயன் ஆற்றின் குடைவு Black Canyon. கருங்குட்டம் - குட்டவகை. கருங்குணம் - தீக்குணம். கருங்குதிரையாளி - வைரவன். கருங்குரங்கு - குரங்கு வகை. கருங்குருவி - கரிக்குவி. கருங்குவளை - நெய்தல். கருங்குளவி - குளவி வகை. கருங்குழலாதனார் - சங்க காலப் புலவர் (புறம். 7: 224) கருங்கூத்து - இழிவான நாடகம். கருங்கொண்டை - ஆற்று மீன் வகை. கருங்கேசம் - வெண்கலம். கருங்கை - வலிய கை, கொல்லுங் கை. கருங்கொல் - இருப்பு. கருங்கொள்ளை நோய் - ஒரு வகைப் பிளேக்கு நோய் (Black Death) கருஞ்சரக்கு - கூலம். கருஞ்சனம் - முருங்கை. கருஞ்சிறைப்பறவை - மயில். கருஞ்சுக்கிரன் - கண் நோய் வகை. கருஞ்செய் - நன்செய். கருஞ்சேரா - கடித்தலால் உடம்பில் கறுப்பு நிறுத்தடிப்பு உண்டாகும் ஒரு நச்சுப் பூச்சி. கருடக்கல் - பாம்பின் கடிவிடத்தை நீக்கும் கல். கருடக்கை - நின்று வணங்குதல் காட்டும் அபிநயம். கருடக்கொடியோன் - திருமால். கருடத்தம்பம் - திருமால் கோயில் துவசத்தம்பம். கருடசேவை - ஒரு விழா. கருடதியானம் - பாம்புவிடத்தை நீக்கும் மருத்துவன் தன்னைக் கருடனாகப் பாவிக்கை. கருடபக்கம் - ஒரு வகை அபிநயம். கருடபஞ்சமி - ஆவணி மாதத்துச் சுக்கிலபட்ச பஞ்சமியில் சுமங்கலி களால் கொண்டாடப்படும் விரதம். கருடபுராணம் - பதிணென் புராணத் தொன்று. கருடபச்சை - ஒருவகை மரகதம். கருடர் - பதினெண் கணத்து ளொருவர். கருடன் - பருந்து, கொல்லங் கோவைச் செடி. கருடன்கிழங்கு - பெரு மருந்து. கருடன்சம்பா - ஒரு வகை நெல். கருடி - சிலம்பம். கருணம் - காது. கருணன் - கன்னன், கும்பகர்ணன். கருணா - கருணை, அருள். கருணாகரன் - கடவுள், வேதகிரிப் புராணஞ் செய்த புலவர். கருணாடகம் - கன்னடம், ஓர் இராகம். கருணாநிதி - அருளுக்கு இருப்பிட மானவன். கருணாலயன் - அருளுக்கு நிலைக் களமானவன். கருணி - குகை, மலை. கருணீகம் - கிராமக் கணக்கு வேலை. கருணை - கிருபை, அவலச்சவை, கருணைக்கிழங்கு, கருணையாற் செய்யும் தண்டனை. கருணைப் பிரகாசர் - துறை மங் கலம் சிவப்பிரகாச சுவாமி களின் இளைய சகோதரர்; இட்டலிங்க அகவல் செய்தவர். கருணையானந்தசுவாமி - குநாத சதகம் பாடியவர். கருதலர் - பகைவர். கருதலளவை - அனுமானப் பிரமாணம். கருதல் - அனுமானம். கருதாதார், கருதார் - பகைவர். கருதுதல் - எண்ணுதல், மறந்ததை நினைத்தல், நிதானித்தல், உத்தேசித் தல், மதித்தல், அனுமானித்தல், ஆலோசித்தல், ஒத்தல். கருத்தரித்தல் - கருக்கொள்ளுதல். கருத்தளவை - அனுமானம். கருத்தன் - கர்த்தா, செய்வோன். கருத்தா - கர்த்தர். கருத்தாவாகு பெயர் - கருத்தாவின் பெயரைக் காரியத்துக்கு வழங்கும் ஆகு பெயர். கருத்து - நோக்கம், தாற்பரியம், கொள்கை, இச்சை, விவேகம், சம்மதம், மனம் பயன், தன்மதிப்பு. கருத்துப்பொருள் - மனத்தாற் கருதப்பட்ட பொருள். கருத்துரை - தாற்பரியம். கருநச்சுழி - கடல் மீன்வகை. கருநடம் - கன்னடம். கருநாகப்படலம் - கண்ணோவகை. கருநாகம் - கறுப்புப் பாம்பு (King cobra) இராகு, காரியம். கருநாடகம் - கன்னடம், தென் னாட்டுச் சங்கீதம். கருநாடார் - கன்னடநாட்டார். கருநாவி - நாவிப்பூடு. கருநாழிகை - இரவு. கருநாள் - கரிநாள். கருநிமிளை - அம்பர் வகை. கருநிலம் - பயன்படாத நிலம். கருநீலப்பிறப்பு - நரக சென் மத்துக்குச் சிறிது மேற்பட்ட பிறப்பு. கருநெய்தல் - நீலோற்பலம். கருநெல்லி - மரவகை. கருநெறி - நெருப்பு. கருந்தரை - பாழ்நிலம். கருந்தலை - கால்பாகம், முடிவு. கருந்தனம் - பொன், பணம். கருந்தாது - இரும்பு. கருந்தாமக்கொடி - சிறுசெங்குரலி என்னும் மலைக்கொடி. கருந்துகிலோன் - பலராமன். கருந்தும்பை - பேய் மருட்டி. கருந்தொழில் - வலிய தொழில், கொலைத்தொழில், தச்சு. கருப்பட்டி - பனைவெல்லம். கருப்பத்துளை - பவளக் குற்றங்களுள் ஒன்று. கருப்பதீக்கை - மனைவியின் கர்ப்ப காலத்து மயிர் வளர்க்கை. கருப்பநாள் - பிறந்த ஒன்பதாம் நாள். கருப்பநீர் - கருப்பஞ்சாறு, பதநீர். கருப்பந்தெப்பம் - பேய்க் கரும்பி னால் செய்யப்பட்ட மிதவை. கருப்பம் - உட்பொருளாகக் கொண்டது. கருப்பாசயம் - கருப்பை. கருப்பாலை - கரும்பாட்டும் ஆலை. கருப்புக்கட்டி - வெல்லம். கருப்புரம் - கர்ப்பூரம். கருப்புவில்லி - கரும்புவில் உடைய மன்மதன். கருப்பூரம் - கர்ப்பூரம். கருப்பை - கருப்பாசயம், எலி. கருப்பொருள் - காரணப்பொருள் ஐந்திணைக்குமுரிய தெய்வம் முதலிய பொருள்கள். கருமகர்த்தா - கருமம் செய்பவன். கருமகள் - சண்டாளி. கருமகன் - கொல்லன். கருமகாண்டி - வைதிக கிரியை களை அனுட்டிப்போன். கருமக்கழிபலம் - பாவத்தைக் கழிக்கும் புண்ணியம். கருமசேடம் - வினைக்குறை. கருமணல் - கடற்கரை முதலிய இடத்திலுள்ள கரிய மணல். கருமணி - கண்மணி. கருமத்தம் - கருவூமத்தை. கருமத்தலைவன் - காரியத் தலைவன். கருமபலன் - வினைப்பயன். கருமபாகை - கருமகாண்டம். கருமபூமி - உழவு, வாணிகம் முதலிய தொழில்களைச் செய்ததற் குரிய பூமி. கருமம் - செயல், வினைப்பயன், தொழில். கருமயாகம் - நித்தியகரும் அனுட் டானம். கருமயோகம் - பயன் கருதாது செய்யும் கடமை, உடல் நிலைக்கு மாறு, பிராணவாயுவை அடக்கிச் செய்யும் யோகம். கருமருதம் - மரவகை. கருமவதிகாரர் - இராச்சியகாரியம் நடத்தும் தலைவர். கருமவிதிகள் - இராச்சியகாரியம் நடத்தும் தலைவர். கருமவிதிகள் - கரும அதிகாரி. கருமவினைஞன் - புரோகிதன். கருமன் - கொல்லன். கருமா - பன்றி, யானை. கருமாதிகாரி - காரியத்தலைவன். கருமாதிபதி - சாதகன் பிறந்த இலக் கணத்துக்குப் பத்தாமிடத்து அதி பதி. கருமாந்தம், கருமாந்தரம் - இறந்தவர் பொருட்டுச் செய்யும் சடங்கு. கருமாறிப்பாய்ச்சல் - காஞ்சீபுரத்துக் காமாட்சி கோயிற் குளத்துள் நாட்டப் பட்ட இரண்டு கழுக் கோல்களின் இடையே உயர்ந்த இடத்தினின்று தவறாது குதிக்கை. கருமான் - ஆண்மான், பன்றி. கருமி - கிரியைகள் செய்வோன். கருமுகில் - நீருண்ட மேகம். கருமுகை - சாதிமல்லிகை, சிறு சண்பகம், இருவாட்சி. கருமேனி - தூல உடல். கருமை - கறுப்பு, பெருமை பசுமை, வெள்ளாடு. கரும்பணி - பெண்கள் தோளிலும் மார்பிலும் சந்தனக் குழம்பு முதலியவற்றால் கரும்பின் வடிவாக எழுதப்படும் கோலம். கரும்பன் - மன்மதன். கரும்பாம்பு - இராகு. கரும்பிள்ளை - காக்கை. கரும்பிள்ளைப் பூதனார் - சங்க காலப் புலவர் (பரி - 10). கரும்பிறப்பு - நரகப்பிறவி. கரும்பு - புல்வகை, புனர்பூசம். கரும்புரசு - Satin Wood. கரும்புல் - பனை. கரும்புள் - வண்டுவகை, பெண் வண்டு. கரும்புறத்தோர் - வேடர். கரும்புறம் - பனை, கருமை. கரும்பொன் - இரும்பு. கருவங்கம் - காரீயம். கருவடம் - ஆறு சூழ்ந்த ஊர். கருவரி - கண்ணிலுள்ள கரிய இரேகை. கருவலி - மிகுந்தபலம். கருவழலை - பாம்புவகை. கருவறுத்தல் - வேரோடு அழித்தல். கருவறை - கர்ப்பக்குழி. கருவன் - சங்கார மூர்த்தி. கருவா - இலவங்கப்பட்டை. கருவாடு - உப்புமீன் கண்டம். கருவாலி - ஒருவகை மரம். கருவாழை - ஒருவகை வாழை. கருவி - ஆயுதம், சாதனம், கேடகம், குதிரைமேலிடும் தவிசு, குதிரைச் சம்மட்டு, உடை, துணைக்காரணம், இசை உண்டாக்கும் யாழ்க்கருவி முதலியன. கருவிகரணங்கள் - இத்திரியங் களும் மனமும். கருவிக்கருத்தன் - கருவி வினை முதலாக வருவது. கருவிக்குயிலுவர் - தோற்கருவி வாசிப்பவர். கருவிடும் வாசல் - ஆண்குறி. கருவிநூல் - கல்வியறிவை வளர்த் தற்கு உதவியான நூல். கருவிப்புட்டில் - ஆயுத உறை. கருவிமாக்கள் - பாணர். கருவியல் - கருவைப் பற்றிக் கூறும் நூல் (Enbryology) கருவியாகு பெயர் - கருவி, காரியத்துக்கு ஆகிவரும் பெயர். கருவிலூகம் - ஒருமதிற்பொறி. கருவிழி - கண்மணி. கருவிளம் - வில்வம், காக்கட்டான். கருவினை - பாவம். கருவீரல் - பித்தாசயம். கருவுயிர்த்தல் - பிறவி எடுத்தலால் வரும் விளைவு, ஈனுதல். கருவுறுதல் - கருத்தரித்தல் மலர்தல். கருவூரானிலை - கருவூரிலுள்ள சிவன் கோயில். கருவூர் - பழைய சேரர் தலைநகர். கருவூர் ஒதஞானியார் - சங்க காலப் புலவர் (குறு. 71 : 227) கருவூர் கண்ணம்பாளனார் - சங்க காலப் புலவர் (நற். 128; அகம் 180, 263) கருவூர் கிழார் - சங்க காலப் புலவர் (குறு. 170) கருவூர்க் கந்தப்பிள்ளை - சங்க காலப் புலவர் (புறம். 380) கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார் - சங்க காலப் புலவர் (புறம். 168) கருவூர்க் கலிங்கத்தார் - சங்க காலப் புலவர் (அகம். 183) கருவூர்க் கோசனார் - சங்க காலப் புலவர் (நற். 214) கருவூர்ச் சேரமான் சாத்தன் - சங்க காலப் புலவர் (குறு. 268) கருவூர்த் தேவர் - திருவிசைப்பா ஆசிரியருள் ஒருவர் (11ம் நூ.) கருவூர் நன்மார்பனார் - சங்க காலப் புலவர் (அகம். 277) கருவூர்ப் பவுந்திரன் - சங்க காலப் புலவர் (குறு. 162) கருவூர்ப் பூதஞ்சாத்தனார் - சங்க காலப் புலவர் (அகம். 50) கருவூர்ப் பெருஞ் சதுக்கத்துப் பூதநாதனார் - சங்க காலப் புலவர் (புறம். 219) கருவூலம் - பொக்கிஷம். கருவேப்பில்லை - கறிவேம்பின் இலை. கருவேல் - முள்மரவகை. கருவை - கருவைக்கோல், ஒரு சிவத்தலம். கருளன் - கருடன். கருள் - இருள், கறுப்பு, குற்றம், சீற்றம். கருணை - பொரிக்கறி. கரூசம் - ஐம்பத்தாறு தேசங்களுள் ஒன்று. கரேணு - பெண்யானை. கரை - நீர்க்கரை, எல்லை, ஆடை விளிம்பு, இடம், வார்த்தை. கரைகாணுதல் - எல்லைகாணுதல். கரைசல் - கரைந்த நீர் (Solution) கரைதல் - கரைந்துபோதல், உரு குதல், இளைத்தல், கெடுதல், வருந் துதல், தாமதித்தல், ஒலித்தல், அழை த்தல், சொல்லுதல், கொண்டு போதல். கரைபுரளுதல் - பெருக்கெடுத்தல், மிகுதல். கரைப்படுத்தல் - கரையிற் சேர்த் தல். கரைப்பான் - கரையச் செய்வது (Solvent) கரையான் - கடற்கரைப் பக்கத்து வாழும் வலைஞன். கரையேற்றம் - ஈடேறுகை. கரைவு - இளக்கம், கரைகை. கரோடி - சிரமாலை. கர்க்கசம் - கடினமானது. கர்க்கடகசங்கிராந்தி - ஆடி மாதப் பிறப்பு. கர்க்கடகசந்திரன் - கர்க்கடக இராசியில் நிற்கும் சந்திரன். கர்க்கடகம் - நாண்டு, ஒர் இராசி. கர்க்கரி - கரகம், தயிர்கடைதாழி. கர்க்கர் - வானசாத்திரஞ் செய்த ஒரு முனிவர். கர்ச்சினை - பேரொலி. கர்ச்சிதம், கர்ச்சிப்பு - முழக்கம். கர்ச்சு - செலவு. கர்ச்சூரம் - பேரீந்து, கழற்கொடி. கர்ணகடூரம் - காதுக்குக் கடுமை யானது. கர்ணசூலை - காதில் குத்துநோய். கர்ணபரம்பரை - கேள்வி வழியாக வந்த செய்தி. கர்ணம் - கிராமக் கணக்கன், காது. கர்ணா - ஒருவகை வாத்தியம். கர்ணிகம் - சன்னி வகை. கர்ணிகை - தாமரைப் பொகுட்டு. கர்த்தபம், கர்த்தவம் - கழுதை. கர்த்தவியம் - செய்யத்தக்கது. கர்த்தன், கர்த்தர் - செய்வோன், தலைவன். கர்த்தாக்கள் - தலைவர், மதுரை நாயக்க அரசர் பட்டப்பெயர். கர்நாடம் - கன்னடம், ஒர் இராகம், பழைய மாதிரி. கர்ப்பக்கிருகம், கர்ப்பக்கிரகம் - கோயிலிலுள்ள மூலத்தானம். கர்ப்பம் - கரு. கருப்பாசயம் - கருப்பை. கருப்பாதானம் - கருத்தரித்தற்காகச் செய்யும் சடங்கு. கர்ப்பிணி - கருப்பவதி. கர்ப்பூரம் - சூடம். கர்ப்பூரவள்ளி - ஒரு வகை மருந்துச் செடி. கர்ப்போட்டம் - மார்கழி மாதப் பிற் பகுதியில் கருக்கொண்ட மேகத் தின் தென்சார்பான ஓட்டம். கர்மகாண்டம் - தருமங்களைப் பற்றிக் கூறும் வேதத்தின் பகுதி. கர்மம் - கருமம். கர்வடம் - மலையும் ஆறும் சூழ்ந்த ஊர். கர்வம் - செருக்கு, ஒரு பேரெண். கர்வி - செருக்கன். கலகக்குருவி - மீன்குத்தி. கலகக்கை - அபிநய வகை. கலகம் - குழப்பம். கலகல - கலகலென ஒலித்தல். கலகலத்தல் - ஒலித்தல், கட்டுக் குலைத்தல். கலகலம் - பறவை ஒலி. கலகி - கலகக்காரி. கலக்கம் - கலங்குகை, குழப்பம், அச்சம், அழுகை, புத்தி மாறாட்டம். கலக்கு - கலக்கம், பொருத்து. கலக்குதல் - கலங்கச் செய்தல். கலங்கடித்தல் - கலங்கும்படி செய்தல். கலங்கரை விளக்கம் - வெளிச்ச வீடு. கலங்கல் - கலங்குகை, கலங்கல் நீர், அச்சம், மயங்குகை. கலங்குதல் - நீர் முதலிய குழம்புதல், மனங் குழம்புதல், துன்பமுறுதல், தவறுதல். கலங்கொம்பு - மான்கொம்பு. கலசப்படை - பரவ மகளிர் காதணி வகை. கலசப்பானை - தூப கலசம். கலசமுனி - அகத்தியர். கலசம் - குடம், கிண்ணம், தூபி. கலணை - சேணம், கலனை. கலதி - தலைவழுக்கையை உண்டாக் கும் நோய், கேடு, மூதேவி, தீக்குண முடையவள். கல்திமை - தீவினை. கலத்தல் - கூட்டுதல், வட்டுறவாதல், பரத்தல், நெருங்குதல், புணர்தல். கலந்தான் - மைக்கூடு. கலகம் - மயிலின் தோகை, கலாபம். கலம்பு - வந்துகூடுகை, நட்பாகை. கலப்பை - உழுபடை, ஒன்றுக்கு வேண்டிய உறுப்புகள், வாத்திய முதலியனவைக்கும் பை. கலப்பைக்கிழங்கு - காந்தட் கொடியின் கிழங்கு. கலப்பைச்சக்கரம் - ஏர்ப்பொருத்தம் பார்க்கும் சக்கரம். கலப்பைநூல் - உழவு நூல். கலப்பைப்படை - பலராமனின் கலப்பை ஆயுதம். கலமர் - பாணர். கலமலக்குதல் - உழக்குதல். கலம் - பாத்திரம், குப்பி, மரக்கலம், இரேவதி, ஆபரணம், யாழ், உழு படை, ஆயுதம், ஓலைப்பாத்திரம், ஒரு முகத்தலளவு. கலம்பகக்கலி - அடிகள் எழுத் தொவ்வாது வருங்கலி. கலம்பகம் - கலவை, பிரபந்தவகை, ஒரு கணித நூல் குழப்பம். கலம்பூச்சு - பாத்திரம் தேய்க்கும் ஓசை. கலயம் - கலசம். கலரை - ஓர் அளவுப் பெயர். கலர் - கீழோர், தீயவர். கலலம் - கருவைச் சூழ்ந்து தோன்றும் தோல். கலவம் - மயில் தோகை, மயில், கலாபமென்னும் இடையணி. கலவரம் - மனக்கலக்கம். கலவர் - மரக்கலமாக்கள், நெய்தல் நில மாக்கள். கலவன் - கலப்பானது. கலவார் - பகைவர். கலவி - கலக்கை, புணர்ச்சி. கலவிருக்கை - விருப்பமான இடம், பண்டசாலை. கலவினார் - உற்றார். கலவுதல் - கலத்தல். கலவு - உடலின் மூட்டுவாய். கலவை - கலப்புடைய பொருள், சந்தனக் குழம்பு. கலவைச் சேறு - கலவைச் சந்தனம். கலனம் - வாய்பிதற்றுகை, இந்திரிய நெகிழ்ச்சி. கலனரசு - தாலி. கலனை - சேணம், கலப்பை. கலன் - ஆபரணம். கலாதத்துவம் - சுத்தாசுத்த தத்துவங் களுளொன்று. கலாநிதி - சந்திரன், கல்விக் களஞ் சியம். கலாபம் - பதினாறு கோவையுள்ள மாதரிடையணி, மேகலை, மயிற் றோகை, பிலிக்குடை. கலாபி - மயில். கலாபேதம் - வேறுபட்ட சமயம். கலாபித்தல் - கலத்தல். கலாம் - மாறுபாடு, கோபம், கொடுமை. கலாய்த்தல் - கலகித்தல். கலாவம் - கலாபம். கலாவுதல் - கலக்கமடைதல், கோபித்தல். கலி - கடல், செருக்கு, தழைக்கை, துளக்கம், மனஎழுச்சி, போர், கலித்தொகை, கலியுகம், சனி, தரித்திரம், வஞ்சகம். கலிகம் - கண்ணுக்கிடு மருந்து. கலிகன்றி - திருமங்கையாழ்வார். கலிகொள்ளுதல் - வெளிப்படுதல். கலிக்கம் - கண்ணுக்கிடு மருந்து. கலிங்கத்துப்பரணி - சயங்கொண் டார் செய்த ஒரு நூல். (கி.பி. 1115) கலிங்கம் - ஒரு தேசம், ஒரு மொழி, ஆடை, வானம்பாடி, ஊர்க் குருவி. கலிங்கு - ஏரி மதகு. கலிசம் - வன்னிமரம். கலித்தல் - ஒலித்தல், செழித்தல், பெருகுதல், மகிழ்தல், செருக்குதல், வேகமாதல், நெருங்கியிருத்தல், நீங்குதல். கலித்தளை - நேரீற்று உரிச்சீர் முன்னர் நிரைவருவது. கலித்தாழிசை - ஒருவகைக் கலிப்பா. கலித்துறை - பாடல் வகை. கலித்தொகை - எட்டுத் தொகை நூல்களுள் ஒன்று. கலிநடம் - கழாய்க் கூத்து. கலிநீதியார் - கலிநாயனார். கலிபிலி - ஆரவாரம். கலிபுருடன் - கலிகாலத்துக்குரிய தேவதை. கலிப்பா - ஒருவகைப் பா. கலிப்பு - ஒலிக்கை, பொலிவு. கலிமகிழ் - ஒலக்கம். கலியநாயனார் - அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவர். கலியப்தம் - கலியுகம் பிறந்தது முதலாக எண்ணப்படும் ஆண்டு கி.மு. 3102. கலியன் - படைவீரன், திருமங்கை ஆழ்வார், கலிபுருடன், தரித்திரன். கலியாணசுந்தர முதலியார், பூவை - திருவான்மியூர்ப் புராணம் செய்தவர் (1854 - 1918) கலியாணப் பூசனி - பெரும் பூசணி, நீற்றுப் பூசணி. கலியாணம் - திருமணம். கலியாண முருக்கு - முள் முருக்கு. கலியாணன் - நற்குண நற்செய்கை யுள்ளவன். கலியாணி -ஓரிராகம். கலியாணிக் குட்டி - காளியன் குட்டி என்னும் பாம்பு. கலியுகம் - நான்காம் யுகம். கலிவிருத்தம் - கலிப்பாவின் இனமாகிய பாடல். கலிவெண்பா - பாடல் வகை. கலிழிநீர் - கலங்கல் நீர். கலிழ் - கலங்கல் நீர். கலிழ்தல் - அழுதல், ஒழுகுதல், புடை பெயர்தல். கலினம் - கடிவாளம். கலினி - திப்பிலி. கலினெனல் - கலின் கலினெனல். கலினை - மிளகு, கொள்ளு, கடிவாளம். கலீரம் - முருக்கு. கலுடம் - பாவம். கலுவடம் - பூவரும்பு. கலுவம் - மருந்து அரைக்கும் குழி, அம்மி. கலுழன் - கருடன். கலுழி - கலங்கனீர், காட்டாறு, நீர்ப் பெருக்கு, கலக்கம். கலுழ் - நீர்க்கலக்கம், அழுகை. கலுழ்ச்சி - துக்கம், அழுகை. கலுழ்வு - கலுழ்ச்சி. கலை - ஆண் மான், ஆண் முசு, சுறா மீன், மகராசி, குதிரைக்கலணை, பகுதி, சந்திரனின் பதினாறு பகுதியி லொன்று, கால அளவு, அறுபத்து நாலு கலை, கல்வி, நூல், வித்தியா தத்துவம் ஏழனுள் ஒன்று, உடல், ஆண் பெண் புணர்ச்சிக்குரிய நிலை, மேகலை, காஞ்சி என்னும் இடை அணிகள், மரவயிரம், கர்ப்பூரவகை. கலைகணாளர் - அமைச்சர். கலைகுறைதல் - தெய்வத் தன்மை குறைதல். கலைக்கொம்பு - கலைமான் கொம்பு. கலைக்கோட்டுத் தண்டு - பழைய ஒரு தமிழ் நூல். கலைக்கோட்டு முனிவர் - இராமாயணத் திற் சொல்லப்படும் ஒரு முனிவர். கலைச்சாலை - கல்விச்சாலை. கலைஞன் - கல்விமான். கலைஞானம் - நூலறிவு. கலைஞானி - நூல் கற்றவன். கலைதல் - குலைதல், அழிதல், நிலை குலைதல். கலைத்தல் - குலைத்தல், பிரித்து நீக்குதல், துரத்துதல். கலைத்தொழில் - யாழ் வாசித்தற் குரிய செய்கைகள். கலைநாதன் - புத்தன். கலைநியமம் - மதுரையிலிருந்த சிந்தா தேவி கோயில். கலைப்பாகி - துர்க்கை. கலைமகள் - சரசுவதி. கலைமடந்தை - கலைமகள். கலைமலைவு - கலை நூல்களிற் கூறப்பட்டவற்றோடு மாறுபடுவது. கலைமான் - மான்வகை, சரசுவதி. கலையறிபுலவன் - முருகக்கடவுள். கலையானத்தி - கலையுர்த்தி. கலையினன் - சந்திரன். கலையுருவினன் - சிவன். கலையூர்தி - துர்க்கை. கலையேறுதல் - தெய்வ சக்தி மிகுதல். கலையோன் - சந்திரன். கலைவல்லார் - புலவர், பரத்தையர். கலைவாகன் - வாயு. கலோரி - ஒரு கிராமம் நீரை ஒரு செண்டி கிரேட்டுக்கு உயர்த்தக் கூடிய வெப்ப அளவை (Calorie) கல் - கல், பாறை, மலை, இரத்தினம், காவிக்கல், முத்து, விரக்கல், மரக தக் குற்றத்துள் ஒன்று, தோண்டு. கல்சிலை - பறவை வகை. கல்நார் - ஒருவகை மருந்து. கல்பொரு சிறுநுரையார் - சங்க காலப் புலவர் (குறு. 290). கல்மழை, கல்மாரி - ஆலங்கட்டியாக விழும் மழை. கல்மூங்கில் - மூங்கில் வகை. கல்யாணசுந்தரர் - சிவ மூர்த்தங் களுள் ஒன்று. கல்யாணம் - சுபம், விவாகம், சுப காரியம், பொன், நற்குணம். கல்யாணன் - நற்குணமுடையவன். கல்யாண முருங்கை - கலியாண முருங்கை. கல்லக்காரம் - பனங்கற்கண்டு. கல்லகச்சத்து - சிலாசத்து. கல்லகம் - மலை. கல்லகாரம் - நீர்க்குளிரி. கல்லலகு - ஒருவகை வாச்சியம். கல்லச்சு - இலிதோ (Litho) கல்லாடர் - விலங்குகளை அகப் படுத்தும் பொறி. கல்லல் - குழப்பம். கல்லவடம் - ஒரு வகைப் பறை. கல்லளை - மலைக்குகை. கல்லறை - குகை, பிணக்குழி. கல்லன் - தீயோன். கல்லாடம் - ஒரு சிவத்தலம், கல்லாடராற் செய்யப்பட்ட ஒரு நூல் (10ம் நூ.) கல்லாடனார் - கடைச் சங்கப் புலவருள் ஒருவர். கல்லாடை - காவிச்சீலை. கல்லாணக்காணம் - கலியாணத் திற்காகச் செலுத்தும் ஒரு பழைய வரி. கல்லாமை - படியாதிருக்கை, அறியாமை. கல்லாரம் - செங்கழுநீர், நீர்க்குளிர், கருங்குவளை. கல்லால், கல்லாலம் - ஆல் வகை, குருக்கத்தி. கல்லான் - கல்வியில்லாதவன். கல்லி - ஆமை, ஊர்க்குருவி. கல்லித்தி - இத்தி வகை. கல்லியம் - கள். கல்லியாணம் - கலியாணம். கல்லிழைத்தல் - இரத்தினக் கற்பதித்தல். கல்லீரல் - பித்தாசயம் (Liver) கல்லுண்டைச் சம்பர் - நெல்வகை. கல்லுதல் - தோண்டுதல், தின்னுதல், ஒலித்தல். கல்லுப்பு - உப்புவகை. கல்லுருவி - ஒருவகைப் பூடு. கல்லுளி - கல்வெட்டும் உளி. கல்லுளிச்சித்தன் - ஓர் சித்தர். கல்லூரி - கல்வி பயிலுமிடம். கல்லேறு - கல்லெறிக்கை, பத்துக் குற்றங்களுள் ஒன்று. கல்லை - தையல் இலைக்கலம், அவதூறு. கல்லோலம் - அலை. கல்வழி - கல் வைத்தெண்ணும் ஒரு வகைக் கணக்கு. கல்வாழை - பூ வாழை, காட்டு வாழை. கல்வி - கற்கை, கல்வியறிவு. கல்விமான் - படிப்பாளி. கல்வெட்டு - சிலாசாசனம். கல்வெள்ளி - கலப்பு வெள்ளி. கவசகுண்டலன் - கன்னன். கவசம் - போர் வீரர் அணியும் இரும்புச் சட்டை, இரட்சை. கவசித்தல் - சீலை மண் செய்தல். கவடி - வெள்வரகு, பலகறை, ஒரு வகை விளையாட்டு, கபட முள்ளவள். கவடு - மரக்கிளை, யானைக் கழுத்திடு கயிறு, கபடம். கவடுவட்டம் - முத்துவகை. கவட்டை - கவர். கவணை - கவண். கவண் - கல்லெறியுங் கருவி. கவந்தம் - தலையற்ற உடல் பேய், நீர். கவந்தன் - ஓர் அரக்கன். கவந்தி, கவந்திகை - கந்தைகளாலாகிய மெத்தைப்போர்வை. கவம் - கபம். கவயம், கவயமா - காட்டுப் பசு, கவசம். கவரி - எருமை, கவரிமான், சாமரை, தேர். கவரிச்சம்பா - நெல்வகை. கவரிமா, கவரிமான் - மான் வகை. கவரிறுக்கி - வேலி முதலியவற்றின் முகப்பில் விலங்குகள் உட்புகாத படி இடப்படும் தடைமரம். கவர் - பிரியுங்கிளை, பலவாகப் பிரிகை, வஞ்சகம், வாழை. கவர்கோடல் - சந்தேக நிலை. கவர்ச்சி - இழுக்கை. கவர்ச்சி நிறங்கள் - விலங்குகள் பறவைகளின் ஆண்கள் பெண்ணி னத்தைக் கவரக் கொள்ளும் நிறம் (Courting Colours) கவர்தல் - அகப்படுதல், கொள்ளை யிடுதல், வசப்படுத்தல், பெற்றுக் கொள்ளுதல், நுகர்தல், முயங்குதல், அழைத்தல், பிரித்தல், மாறுபடுதல். கவர்த்தல் - பிரிவுபடுதல், மாறு படுதல். கவர்நெறி - கிளைவழி. கவர்ந்தூண் - அடித்து உண்ணும் உணவு. கவர்ப்பு - பலவாகப் பிரிகை. கவர்வு - விருப்பம், துக்கம். கவலம் - துயரம். கவலித்தல் - கவலையடைதல். கவலுதல் - மனம் வருந்துதல். கவலை - மனச்சஞ்சலம், பல நினைவு, அக்கறை, அச்சம், பலதெரு கூடு மிடம், கவர்ந்த வழி, மரக்கிளை, செந் தினை, ஒரு வகைக் கிழங்குக்கொடி, கடல் மீன்வகை. கவலைகவற்றுதல் - வருத்தஞ் செய்தல். கவல், கவல்வு - கவலை. கவவு - அகத்திடுகை, உள்ளீடு, முயக்கம். கவவுக்கை - அணைத்தகை. கவவுதல் - அகத்திடுதல், விரும்புதல், தழுவுதல், நெருங்குதல், முயங்குதல். கவழம் - கவளம். கவழிகை - திரைச்சீலை. கவளம் - வாயளவுகொண்ட உணவு, சோறு. கவளி, கவளிகை - கட்டு. கவளீகரித்தல் - மொத்தமாக விழுங்குதல். கவறல் - வருந்துகை. கவறாடல் - சூதாடுகை. கவறு - சூது, சூதாடு கருவி. கவறை - வடுகருள் ஒருசாதி. கவற்சி - மனோவிசாரம், மனவருத்தம். கவற்றி - கவற்சி, விருப்பம். கவற்றுதல் - கவலையுறச் செய்தல். கவற்றுமடி - கட்டாடைவகை. கவனம் - போர், படை, கலக்கம், வெப்பம், கருத்து, வேகம், காடு. கவனன் - வேகமுடையவன். கவனித்தல் - கருத்தூன்றி அறிதல். கவனிப்பு - கருத்தூன்றுகை. கவாஅன் - கள்வன். கவாடம் - கதவு, ஒரு ஆள் சுமக்கக் கூடியவிறகு அல்லது வைக்கோற் பொதி. கவாத்து - போர்வீரர் செய்யும் தேகப் பயிற்சி. கவாலி - சிவன். கவாளம் - காயக்கட்டு. கவான் - தொடை, மலைப்பக்கம், திரள். கவான்செறி - தொடையில் அணியும் ஓர் ஆபரணம். கவி - பாவலன், பாட்டு, ஞானி, சுக்கிரன், குரங்கு, பூனைக்காலி. கவிகண்ணோக்கு - புருவத்துக்கு அருகாகக் கையைக் கவித்துக் கொண்டு பார்க்கும் பார்வை. கவிகம் - கடிவாள இரும்பு. கவிகூற்று - நூலுள் தன் கருத்தாகக் கவி கூறும் கூற்று. கவிகை - குடை, நன்மை, தீமை கொடை. கவிக்கடை - பனிச்சை. கவிசனை - உறை, சேணம். கவிஞன் - பாவலன், சுக்கிரன். கவிதல் - மூடுதல், வளைதல், கருத் தூன்றுதல். கவிதை - பாடல். கவித்தல் - வளைந்துமூடுதல், சூட்டுதல். கவித்தல் - விளா, கைம்மூட்டி, அபிநய வகை. கவித்தல் - சூட்டுதல், வளைந்து மூடுதல். கவிநாதன் - புலவருள் சிறந்தவன். கவிப்பர் - ஒரு வணிக குலத்தினர். கவிப்பு - குடை, மூடுகை, மனம் பற்றுகை. கவியம் - கடிவாளம், கவித்துமூட உதவுவது. கவியரங்கேறுதல் - நூல் ஏற்றுக் கொள்ளுப்படுதல். கவிரம் - அலரி, தேவவிருட்சம். கவிராசபாண்டிதர் - சௌந்தரி யலகரி இயற்றிய புலவர் (16ம் நூ.) கவிராசர் - கோணேசர் கல்வெட் டைப் பாடியவர் (18ம் நூ.) கவிர் - முண்முருங்கை. கவிவாணர் - செய்யுள் செய்யும் புலவர். கவிழ்தல் - தலைகீழாதல், தலை இறங் குதல், நிலைகுலைத்தல், அழிதல். கவிழ்த்தல் - கவிழச் செய்தல், கெடுத்தல், ஒழுகவிடல். கவினுதல் - அழகுறுதல். கவின் - அழகு. கவீரம் - அலரி. கவுசனை - உறை, சேணம். கவுசி - ஒருவகை வரிக்கூத்து, பாட்டு, ஒருவகை நோய். கவுசிகம் - வெண்பட்டு, கோட்டான், ஒரு பண், சாமவேதம், விளக்குத் தண்டு. கவுசிகன் - விசுவாமித்திரன். கவுஞ்சயுகம் - அன்றில்போல் வகுக்கும் அணிவகுப்பு. கவுடமாய் - பொருள் வெளிப்படை யின்றி மறைந்து. கவுடம் - வங்காளத்திலுள்ள கௌட நாடு, கொடிவகை. கவுடி - ஒருபண், கவடி. கவுணம் - ஒருவகைத் திருநீறு. கவுணி - கவுணியன். கவுணியனார் - ‘சிந்தனைக்கினி’ என்னும் திருவள்ளுமாலைச் செய் யளியற்றியவர். கவுணியன் - கவுண்டினிய கோத் திரத் தான். கவுண்டன் - சண்டாளன், தமிழ்க் கன்னடர் சிலருக்கு வழங்கும் பட்டப் பெயர். கவுதகம் - மீன்கொத்தி. கவுதாரி - ஒரு பறவை. கவுதாரிபுடம் - கவுதாரி அளவாக மூன்று எரு விட்டெரிக்கும் மருந்துப் புடம். கவுத்துவம் - திருமால் மார்பிலணி யும் மணி. கவுந்தி - தவப்பெண், சைன தவப்பெண், குந்திதேவி. கவுமாரம் - இளமை. கவுமோதகி - திருமாலின் தண்டாயுதம். கவுரம் - வெண்மை. கவுரிசங்கம், கவுரிசங்கரம் - சிவன் உமை என்பவர்களது உருவினதாய் இரு பிளவுபட்ட ஒற்றை உருத்திராக்கம். கவுளி - பல்லி. கவுள் - கன்னம், யானையின் கன்னம், யானையின் உள்வாய், பக்கம். கவேரகன்னி - கவேரன் மகளாகிய காவேரி ஆறு. கவேரவனம் - கவேர முனிவர் வசித்த வனம். கவேரன் - ஓர் இருடி. கவை - கவர், மரக்கிளை, கவர்வழி, அகில், காரியம், எள்ளின்காய், ஆயிலியம். கவைக்கோல் - கவரான கழி, குத்துக் கோல். கவைத்தாம்பு - தாமணியை யுடைய கயிறு. கவைமகன் - சங்க காலப் புலவர் (குறு. 324) கவைமுட்கருவி - யானையை அடக்கும் குத்துக்கோல். கவையடி - பிளவுபட்ட அடி. கவையமா - காட்டுப பசு. கவ்வம் - மத்து. கவ்வாணம் - குறிஞ்சியாழ் ஓசை வகையிலொன்று. கவ்வியம் - பசுவினின்று எடுக்கும் தூய ஐந்து பொருள்களுள் ஒன்று. கவ்வு - வாயாற் கவ்வுகை, தின்கை. கவ்வுதல் - வெளவுதல். கவ்வை - ஒலி, பழிச்சொல், துன்பம், கவலை, பொறாமை, கள், காரியம், எள்ளிளங்காய், ஆயிலியம். கழகண்டு - குறும்பு, தீம்பு. கழகம் - ஓலக்கம், சபை, கல்வி பயிலுமிடம், படை மல் முதலியன பயிலுமிடம், சூது. கழங்கம் - சூதாடு கருவி. கழங்காடல் - பெண்கள் ஆடும் கழற்சிக் காயாட்டம். கழங்கிட்டுரைத்தல் - கழற்சிக் காயால் குறியறிந்து சொல்லுதல். கழங்கு - கழற்சிக்காய், கழற்சி விளையாட்டு, சூது, கழற்சிக் காயைக் கொண்டு வெறியாட்டில் வேலன் சொல்லும் குறி. கழங்குபடுத்தல் - கழங்கு கொண்டு குறியறிதல். கழங்கு மெய்ப்படுத்தல் - பயிர் களை விலங்குகள் அழிக்காதபடி புலிபோய் செய்து வைக்கும் உருவுக்குக் கழற்சிக்காயைக் கண்ணாக அமைத்தல், கழங்காற் குறியறிதல். கழஞ்சு - ஓர் எடுத்தலளவை - 1/6 அவுன்சு. கழப்பு - சோம்பல். கழலுதல் - நெகிழ்ந்து போதல், நீங்குதல், பிதுங்குதல், விழுதல். கழலை - சதைக்கட்டி. கழல் - வீரக்கழல், சிலம்பு, கால் மோதிரம், செருப்பு, பாதம், கழற்சி, காற்றாடி. கழறல் - சொல்லுதல், உறுதிமொழி. கழறியுரைத்தல் - இடித்துரைத்தல். கழறிற்றறிவார் - சேரமான் பெருமாணாயனார். கழறுதல் - இடித்தல், சூளுரைத்தல், சொல்லுதல், அவமதித்தல். கழற்காய் - கழற்சிக்காய். கழற்சி - கழற்சிக்காய், கழலப் பண்ணுவது. கழற்சிங்க நாயனார் - அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவர். கழற்று - உறுதிமொழி. கழற்றுதல் - நெகிழச்செய்தல், நீக்குதல், போக்குதல். கழற்றெதிர்மறுத்தல் - உறுதி மொழியைத் தலைவன் கேளாது மறுத்தல். கழனி - வயல், மருத நிலம். கழனிக்கடைத்தவர் - மருத நிலமாக்கள். கழனிலை - இளைஞனொருவன் போரில் புறங் கொடாமையைக் கண்டு வியந்து வீரர் அவனுக்கு வீரக்கழ லணிவித்துப் புகழ்ந்தாடும் புறத்துறை. கழாஅல - கழற்ற. கழாஅல் - கழுவுகை. கழாத் தலையார் - சங்க காலப் புலவர் (புறம். 62) கழாயினர் - கழைக் கூத்தர். கழாய் - மூங்கில், கழைக்கூத்தன் ஏறி நின்று ஆடுதற்கு நாட்டும் மூங்கிற் கம்பம். கழாய்க்கூத்து - கழைக்கூத்து. கழாரம்பர் - அகத்தியர் மாணவர் - கழாரம்பம் என்னும் இலக்கணம் செய்தவர். கழாலுதல் - நெகிழ்தல். கழார்க்கீரனெயிற்றியனார் - சங்க காலப் புலவர் (அகம். 163) கழால் - களைவு. கழாற்றூக்கு - ஆறு சீரளவுள்ள தாளவுறுப்பு. கழி - கடலையடுத்த உப்பு நீர்ப் பரப்பு, உப்பளம், கோல், ஆயுதக்காம்பு, மாமிசம், மிகுதி. கழிகண்ணோட்டம் - அளவு கடந்த மகிழ்ச்சி. கரிகலமகடூ - கைம்பெண். கழிகோல் - பசுவை அசையாமல் நிறுத்திக் கறப்பதற்குப் பயன் படுத்தும் இணைப்புக் கழி. கழிக்கான் - கடற்கரைச் சோலை. கரிச்சல் - பேதி, மலப்போக்கு. கழிச்சியர் - நெய்தல் நிலத்து மகளிர். கழிதல் - கடந்து போதல், நடத்தல், அழிதல், சாதல், முடிவடைதல், வெளிப்படுதல். கரித்தல் - நீக்குதல், பெரிய எண்ணினின்று சிறிய எண்ணைக் குறைத்தல், வெட்டுதல், வெளிப் படுத்துதல். கழித்தல் விகிதசமம் - (Dividendo) கழித்தற்குறி - சயக்குறி. கழிநெடிலடி - செய்யுள் ஐந்தின் மிக்க சீரால் வரும் அடி. கழிந்தார் - பொருளில்லாதார், இறந்தவர். கழிந்தோர் - வலி மிக்கோர். கழிபடர் - மிக்க துயர். கழிப்பாம்பு - ஆறு காலுடைய ஒரு பிராணி. கழிப்பு - ஒழிக்கை, குற்றம். கழிப்புதல் - போக்குதல், முடித்தல். கழிமுகம் - ஆறு கடலோடு கலக்குமிடம். கழிமுள்ளி - முள்ளி. கழிய - மிக. கழியல் - கழிகை. கரியவர் - நெய்தல்நில மக்கள். கழிவிரக்கம் - மிக்க இரக்கம், பச்சா தாபம். கழிவு - கழிந்துபோகை, இறந்த காலம், மிச்சம், அழிவு, மிகுதி, வியாபாரிக் குக் கொடுக்கும் கழிவு (Discount) கழிவெண்பிறப்பு - ஆன்மா அடையும் பற்றற்ற (நிர்வாண) நிலை. கழினி - இடுதிரை. கழு - கழுமரம், சூலம், பசுவைக் கறப்பதற்கு அதன் கழுத்தில் மாலை போல் கட்டிவிடும் கழி, கழுகு. கழுகு - ஒரு பறவை. கழுகுப்பொறி - ஒரு மதிற்பொறி. கழுக்கடை - சிறிய ஈட்டி, சூலம். கழுக்காணி - அறிவற்ற தடியன், உலக்கை, வேங்கைமரம், தாமரை. கழுக்கோல் - கழுமரம். கழுதிரதம் - பேய்த்தேர். கழுது - பேய், காவற்பரண், வண்டு. கழுதைப்புலி - கழுதைபோல் வடிவ முள்ள கடுவாய் விலங்கு ஒரு வகை ஓநாய். கழுத்து - கண்டம், நிலத்தில் பானை முதலியன வைத்தற்கேற்ற இடம். கழுநர் - அழுக்கைக் கழுவுவோர். கழுநீர் - செங்குவளை மலர், நீலோற்பல மலர், அரிசி கழுவிய நீர், தீர்த்த நீர். கழுந்தன் - பகுத்தறிவு மழுங்கினவன். கழுந்து - உலக்கை வில் முதலிய வற்றின் திரண்ட நுனி, முரட்டுத் தனம். கழுமணி - சுத்தம் செய்யப்பட்ட மணி. கழுமம் - குற்றம். கழுமல் - மயக்கம், பற்றுகை. கழுமலம் - உயிர்கள் மலத்தைப் போக்கும் சிகாழி, சேரநாட்டுள்ள ஓர் ஊர். கழுமுதல் - சேர்தல், திரளுதல், கலத்தல், மிகுதல், மயங்குதல். கழுமுள் - ஆயுதம், மாதுளை. கழுவாய் - பிராயச்சித்தம். கழுவுதல் - நீராட்டுதல், நிழற் படத் தட்டைக் கழுவுதல் (Develop ment) கழை - மூங்கில், வேய்ங்குழல், ஓடக்கோல், குத்துக்கோல், கரும்பு, புனர்பூசம். கழைக்கூத்தன் - மூங்கில் மேற் நின்று கூத்தாடி. கழைநின் யானையார் - சங்க காலப் புலவர் (புறம். 204) கழைநெல் - மூங்கிலரிசி. களகண்டம் - குயில். களகம் - பெருச்சாளி, நெற்கதிர், சுண்ணாம்புச்சாந்து, அன்னம். களகம்பளம் - எருத்தின் அலைதாடி. களகளப்பு - பேரொலி. களகளம் - களகளப்பு. களங்கம் - மறு, குற்றம், துரு, களிம்பு, வயிரக் குற்றத்துள் ஒன்று, நீலம், அடையாளம். களங்கள் - சந்திரன். களங்கு - களங்கம். களங்கொள்ளுதல் - இருப்பிட மாகுதல். களஞ்சம் - கஞ்சா முதலிய வெறிப் பண்டங்கள். களஞ்சியம் - பண்டசாலை. களத்திரகாரகன் - சுக்கிரன். களத்திரத்தானம் - இலக்கிணத்திற்கு எட்டாமிடம். களத்திரம் - மனைவி. களத்தூர் கிழார் - திருவள்ளுவ மாலை 44ம் செய்யுளைப் பாடியவர். களந்தைக் குமரன் - திருவாஞ்சிப் புராணம் செய்தவர் (17ம் நூ.) களபம் - சுண்ணச்சாந்து, சலவைச் சாந்து, யானைக்காற்று, யானை. களப்பலி - போர்க் களத்தில் காளிக்குக் கொடுக்கும் பலி. களப்பு - கடலில் ஆழமில்லாத இடம். களமர் - மருத நிலமக்கள், வீரர், அடிமைகள். களமாலை - ஒரு நோய். களம் - இடம், நெற்களம், சபை, போர்க்களம், உள்ளம், இன்னோசை, மனைவி, தொண்டை, விடம். களம்பளம் - களாவின்பழம். களம்வேட்டல் - பகைப் படையைக் கொன்று பேய்க்கு விருந்தூட்டுதல். களரவம் - புறா. களரி - களர்நிலம், பாழ்நிலம், காடு, போர்க்களம், விசாரணைத் தலம். களரியாவிரை - பழைய நூல்களுள் ஒன்று. களர் - உவர்நிலம், சேற்றுநிலம், கூட்டம், கறுப்பு, கழுத்து. களவழிநாற்பது - பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்று - பொய்கையார் பாடியது. களவழிவாழ்த்து - அரசன் போர்க் களத்துப் பெற்ற செல்வத்தைப் பாணர் புகழ்ந்து கூறும் புறத்துறை. களவன் - நண்டு. களவாணி - திருடன். களவியல் - இறையனாரகப் பொருள், அகப்பொருளுறுப்புகளுளொன்று. களவு - திருட்டு, திருடிய பொருள், வஞ்சனை. களவுகாணுதல் - திருடுதல். களவேர்வாழ்க்கை - திருட்டுத் தொழில். களவேள்வி - பேய்கள் வயிறு நிறைய உண்ணும்படி வீரன் போர்புரிந்து பகையழித்ததைக் கூறும் புறத்துறை. களன் - மருதநிலம், பொய்கை, களம், கழுத்து, தொடர்பு, மயக்கம். களா - களாச்செடி, முள் முருங்கை. களாசம் - பிரம்பு. களாசாத்திரம் - காமநூல். களாசி, களாஞ்சி - காளாஞ்சி. களாவதி - வீணைவகை. களாவம் - இடையணி. களி - மகிழ்ச்சி, கள்ளுண்டு மகிழ்கை, தேன், கள், கட்குடியன், உன்மத்தம், யானை, மதம், குழைவு, குழம்பு, உணவு வகை, வண்டல், உலோக நீர், களிமண். களிகூர்தல் - மகிழ்ச்சி மிகுதல். களிகை - மொட்டு, ஒரு வகைக் கழுத்தணி. களிதம் - வழுக்கல், பெருங்கல். களிதூங்குதல் -மகிழ்ச்சி மிகுதல். களித்தல் - மகிழ்தல், கள்ளுண்டு வெளி கொள்ளுதல, மதமுடைய தாதல், செருக்குறுதல். களித்துழவை - களியாகத் துழாவிச் சமைத்த கூழ். களிப்பாக்கு - அவித்துச் சாயமூட்டிய பாக்கு களிப்பு - மகிழ்ச்சி, செருக்கு, மயக்கம், மதுவெறி. களிமகன் - கட்குடியன். களிமம் - எலி. களிம்பு - செம்பின் மலப்பற்று, துரு, மாசு. களியம் - கூத்துநிலை வகை. களியாட்டு - கள்ளுண்டு ஆடும் ஆட்டம். களிவருதல் - மகிழ்தல். களிறு - ஆண் யானை, ஆண் பன்றி, ஆண் சுறா, அத்தம். களிறுதருபுணர்ச்சி - தலைவன் தலைவியை யானையினின்ற காத்தமை அவ்விருவருக்கும் உண்டான் கூட்டம். களிற்றரசு - ஐராவதம். களிற்றியானை - ஆண்யானை. களிற்றியானரைநிரை - அக நானூற்றின் முற்பகுதி. களிற்றினம்பு - யானைத்திப்பிலி. களிற்றுடனிலை - வீரனொருவன் யானையை வேலால் எறிந்து அதன் கீழ் இறந்துபட்டதைக் குறிக்கும் புறத்துறை. களிற்றுப்பன்றி - ஆண் பன்றி. களிற்றுப்பொறி - மதிப்பொறிகளுள் ஒன்று. களூசி - சிந்தில் கொடி. களேபரம், களேவரம் - உடம்பு, எலும்பு, பிணம். களை - பயிர் வளர்தற்குத் தடையாக வளரும் புல் முதலியன, குற்றம், அயர்வு, சந்திரகலை, அழகு. களைகட்டல் - களைபறித்தல். களைகண் - பற்றுக்கோடு. களைக்கோல் - கறை பறிக்கும் கருவி. களைஞன் - களை பறிப்போன். களைப்பு - சோர்வு. களைபறித்தல் - களைபிடுங்குதல். களைவு - நீக்குகை. கள் - களவு, மது, தேன், வண்டு, பன்மை, விகுதி, அசைநிலை. கள்வம் - திருட்டுச் செயல். கள்வன் - திருடன், நண்டு, கர்க்கடகம், யானை. கள்விலையாட்டி - கள்விற்பவள். கள்ள - ஓர் உவம உருபு. கள்ளப்பூமி - பகைவரை அகப் படுத்த உள்ளிடம் படுகுழியாய் மேலிடம் தரைபோல் அமைக்கப் பட்ட நிலம். கள்ளம் - வஞ்சனை, பொய், களவு. கள்ளவேடம் - பொய்வேடம். கள்ளழகர் - கள்ளர் நாட்டுள்ள அழகர் மலையிற் கோயில் கொண்ட திருமால். கள்ளன் - திருடன். கள்ளாட்டு - களியாட்டு. கள்ளி - செடிவகை, திருடி. கள்ளிக்குடிப் பூதம் புல்லனார் - சங்ககாலப் புலவர் (நற். 333) கள்ளிப்புறா - தவிட்டுப் புறா. கள்ளிப்பூ - ஒருவகை ஆபரணம். கள்ளிமுளையான் - கள்ளி மந்தாரை. கள்ளில் - கள், கட்கடை. கறகற - ஓர் ஒலிக்குறிப்பு. கறகறத்தல் - ஒலித்தல். கறங்கல் - ஒலிக்கை, சுழற்சி, வளைந்த தடி. கறங்கு - காற்றாடி, சுழற்சி, சத்தம். கறங்குதல் - ஒலித்தல், சுழலுதல். கறங்கோலை - ஓலைக் காற்றாடி. கறடிகை - ஓர் ஆபரண உறுப்பு. கறடி - தாழ்தர முத்து. கறண்டிகை - முடியுறுப்புள் ஒன்று. கறம் - கொடுமை. கறல் - விறகு. கறவு - கப்பம். கறவை - பசு. கறவைக்கலம் - பால் கறக்கும் கலம். கறளைப் பூண்டு - சிற்றிலைக் கிழங்கு (Bulbil) கறி - மிளகு, கடித்துத் தின்னுகை, கறி வகை. கறித்தல் - கடித்துத் தின்னுதல். கறிவேம்பு - கறிவேப்பிலை மரம். கறு - மன வைரம். கறுக்காய் - இளநீர்க் காயின் கண் பக்கத்துள்ள பகுதி. கறுத்தோர் - பகைவர். கறுப்பு - கருமை, வெகுளி, குற்றம், கறை, தழும்பு, இராகு. கறும்புதல் - துன்புறுத்தல். கறுவு - சினம். கறுவுதல் - சின்னக்குறிப்புக் காட்டுதல், மனவைரங்கொள்ளு தல். கறுழ் - கடிவாளம். கறேலெனல் - மிகக் கறுப்பாதற் குறிப்பு. கறை - மாச, குற்றம், கறுப்பு நிறம், விடம், இரத்தம், மாதவிடாய், உரல், குடியிறை. கறைக்கண்டன் - கழுத்தில் கரு நிறம் உள்ள சிவன். கறையடி - உரல் போல் அடி உடைய யானை. கறையம் - அயோடின் (Iodine) கறையான் - சிதல், செல்லு. கறையோர் - வரி செலுத்துவோர். கற்கசம் - கடினம், உலோபம், வேலிப் பருத்தி. கற்கசன் - வன்னெஞ்சன். கற்கடகம் - அபிநயவகை, இராசி களி லொன்று. கற்கண்டு - கருப்பஞ்சாற்றுக் கட்டி. கற்கந்து - கற்றூண். கற்கலை - காவி மண்ணில் தோய்த்த ஆடை. கற்கவி - கதவு நிலையின் மேலே இடப்பட்டிருக்கும் பாவுகல். கற்கா - கற்கா நாடு. கற்காண்டல் - போரிட்ட வீரனது உருவம் வகுப்பதற்கேற்ற சிலையைத் தெரிந்துகொள்வதைக் கூறும் புறத்துறை. கற்காநாடு - செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்த பன்னிரண்டு நாடுகளள் ஒன்று. கற்காரு - அகில். கற்காவி - காவிக்கல். கற்கி - கோயில், திருமாலின் பத்தாவது அவதாரம், குதிரை. கற்குரு - கற்பூர சிலாசத்து. கற்குளிமாக்கள் - முத்துக் குளிப் போர். கற்கை - படிக்கை. கற்கோணிலை - போரில்பட்ட வீரனது உருவைப் பொறிப்பதற்குத் தெரிந்துகொண்ட கல்லைக் கைக் கொள்ளுதலைக் கூறும் புறத்துறை. கற்சிறை - கல்லணை. கற்சிற்பர் - கல்தச்சர். கற்பகச்சோலை - இந்திரனது பூங்கா வனம். கற்பகநாடு - தேவருலகம். கற்பகம் - ஐந்தருக்களுள் ஒன்று, தென்னை. கற்பகவல்லி - காமவல்லி. கற்படுத்தல் - கற்பதித்தல். கற்படை - கல்பதித்த இடம், கற்களால் மறைத்து மூடிய சுருங்கை, கோட்டை யின் கள்ளவழி. கற்பணம் - கைவேல். கற்பம் - 432 கோடி, பிரமனாயுள், ஆயுள் நீட்சிக்கு மருந்து, திருநீறு. கற்பனை - கல்வி, போதனை, சங்கற்பம், கட்டளை, இல்லாததைக் கட்டிச் சொல்லுதல், கபடம், மாயை. கற்பா - கோட்டை உள்மதிலின் வாரியுள் உயர்ந்த நிலம். கற்பாட்டி - கற்புடையவள். கற்பாந்தம் - ஊழி முடிவு. கற்பாழி - மலைக்குகை. கற்பாள் - மனைவி. கற்பித்தல் - போதனை செய்தல், கட்டிச் சொல்லுதல். கற்பிதம் - பொய். கற்பியல் - கற்பொழுக்கத்தைப் பற்றிக் கூறும் அகத்திணைப் பகுதி. கற்பு - பதிவிரதாதருமம், தலைவன் தலைவியைப் பலரறிய மணந்து இல்லறம் புரிதல், முல்லை, கல்வி தியானம், வேலைப்பாடு, சங்கற்பம், ஆணை, கதி. கற்புரை - சாம்பிராணி. கற்புழை - மலைக்குகை. கற்பூ - பரவமகளிர் அணியும் காதணி. கற்பூரம் - கர்ப்பூரம், பொன்னாங் காணி. கற்பூரவிளக்கு - கர்ப்பூர தீபம். கற்பொறி - மதிற்பொறி வகை. கற்றச்சன் - கல்வேலை செய்பவன். கற்றடம் - கல் அடர்ந்த காடு. கற்றலம் - கல்மேடை. கற்றவன் - அறிவாளி. கற்றளம் - கற்பதித்த தரை. கற்றளி - கற்கோயில் கற்றா - (கன்று + ஆ) கன்றுடைய பசு. கற்றாமரை - மலைப்பூடு வகை. கற்றாழை - ஒரு பூடு. கற்றானை - காவிச்சீலை. கற்றுச்சொல்வோன் - புலவன் ஒருவ னிடங் கற்று அவனுக்குத் துணைப் புலவனாக இருப்போன். கற்றை - திரள், கட்டு, பென்சில். கனகசபை - பொன்னம்பலம். கனகசபைப் பிள்ளை வீ - 1800 ஆண்டு களுக்கு முந்திய தமிழ ரென்னும் நூல் செய்தவர் 91855 - 1906) கனகசபைப் புலவர் - திருவாக்குப் புராணம் செய்த யாழ்ப்பாணப் புலவர் (1829- 1873) கனக சுந்தரம் பிள்ளை - த.-த. இலங்கைத் தமிழறிஞர் (1863 - 1922). கனகச்சுற்றம் - அரசன் பொக்கிச அதிகாரி. கனகதண்டி - கனக தண்டிகை. கனகதண்டிகை - பொற் பல்லக்கு. கனகதம் - ஒட்டகம். கனகதர் - சண்டாளர். கனகதோராவல்லி - ஒருவகை இரத்தினம். கனகபரீட்சை - பொன்னின் தன்மையைச் சோதித்தறிகை. கனகமாழை - பொன்கட்டி. கனகம் - பொன். கனகன் - பொன்நிறமுள்ள இரணியன். கனகி - ஊமத்தை. கனங்குழை - கனத்த காதணி யணிந்த பெண். கனசாரம் - பச்சைக் கர்ப்பூரம். கனதை - கௌரவம். கனபாடி - வேதத்துக்குக் கனஞ்சொல்ல வல்லவன். கனப்பு - பருமை, அழுத்தம் பாரம். கனம் - பருமன், பெருமை, செறிவு, உறுதி, மிகுதி, வேதபாட விசேடம், வட்டம், மேகம், பொன். களமாப்பலகை - சங்கப் பலகை. கனராகம் - ஒருசார் இராகங்களின் தொகுதி. கனருசி - மின்னல். கனலி - சூரியன், நெருப்பு, பன்றி. கனலிநாள் - அத்தம். கனலுதல் - எரிதல், கொதித்தல், சினத்தல், சிவத்தல். கனலோன் - சூரியன். கனல் - நெருப்பு. கனல்பு - கோபம். கனவாட்டம் - பாண்டியன் குதிரை, குதிரை. கனவல் - கனாக் காண்கை. கனவனவை - அகல நீளங்களுடன் ஆழம் அல்லது உயரம் அல்லது கனத்தைப் பெருக்குதலால் வரும் கணக்கு, கனஅளவு கொள்வது (Volume) கனவான் - பிரபு. கனவிரதம் - நீர். கனவு - கனா, நித்திரை, மயக்கம். கனவுதல் - கனவுகாணுதல். கனறல் - கோபம். கனற்கூர்மை - வளையலுப்பு. கனற்சி - உள்ளக்கொதிப்பு, வெப்பம். கனற்சுக்கிரன் - கண்நோவகை. கனற்றுதல் - எரியச் செய்தல், சுடச்செய்தல், வெதுப்புதல், மிக்கு விளங்குதல். கனன்மரம் - சோதிமரம். கனா - கனவு. கனாநூல் - கனாவைப் பற்றிப் பொன்னவன் என்னும் புலவர் பாடிய நூல். கனி - கனிவு, பழம், இனிமை, சாரம், பொன் முதலியன எடுக்கும் சுரங்கம். கனிக்காய் - பழுக்கும் நிலையி லுள்ள காய். கனிக்காழ் - பழத்தின் விதை. கனிட்டன் - கடைசிப்பிள்ளை, தம்பி, கீழ்மகன். கனிட்டை - கடைசியாகப் பிறந்த மகள், தங்கை, சிறுவிரல். கனிதல் - பழுத்தல் அழிதல் முதிர்தல், இனித்தல், இளகுதல். கனித்தல் - இளகச் செய்தல். கனிப்பு - இனிமை. கனிய - முழுதாய். கனிவு - முதிர்கை, இரக்கம். கனை - நெசவு, நிறைவு, மிகுதி ஒலி. கனைதல் - நெருங்குதல் மிகுதல் ஒலித்தல். கனைத்தல் - ஒலித்தல், குதிரை முதலியன கத்துதல், கொக்கரித்தல், வடமொழி நான்காம் மெய்களை அழுத்தி ஒலித்தல், திரளுதல், இருளுதல், விரைந்துசெல்லுதல். கனைவு - நெருக்கம். கனோபவம் - ஆலங்கட்டி. கன் - கல், உறுதிப்பாடு. கன்மதம் - ஒரு மருந்துச் சரக்கு. கன்மம் - கருமம், வினைப்பயன். கன்மலி - ஏலக்காய்ச் செடி. கன்மழை - ஆலங்கட்டியாகப் பெய்யும் மழை. கன்மா - காட்டுமா. கன்மாடன் - களங்கமுடையன். கன்மீ - தொழிலாளி, கருமங்களைச் சரியாக அனுட்டிப்போன், தீ வினையாளன். கன்மிட்டன் - காரியஞ் செய்வதில் வல்லவன். கன்முகை - மலைக் குகை. கல்முழை - மலைக் குகை. கன்மேந்திரியம் - கருமேந்திரியம். கன்மேய்வு - மாடப்புறா. கன்றல் - சினக்குறி, வளர்ச்சியின் மிகுதி, அடிப்பட்டுக் காய்த்தல். கன்று - குட்டி, இளமரம், கைவளை. கன்றுதல் - முதிர்தல், சினக்குறிப்புக் கொள்ளுதல், வெயிலாற் கருகுதல், மனமுருகுதல், வருந்துதல், வாடுதல். கன்னகடுரம் - காதுக்கு இனிமை யில்லாதது. கன்னகம் - கன்னக்கோல். கன்னக்கோல் - கவலைத் துளைப் பதற்குக் கள்ளர் கையாளுங் கருவி. கன்னங்கரிய - மிகக்கரிய. கன்னங்கறேலெனல் - மிகக் கறுத்ததற் குறிப்பு. கன்னசாமரை - குதிரையின் காதில் தொங்கவிடும் சாமரை. கன்னசாலை - மேல்மாளிகைப் பக்கங்களில் முன்புறம் நீண்டுள்ள பரண்கூடு. கன்னஞ்செய்தல் - கேட்டல். கன்னகௌளம் - ஓர் இராகம். கன்னடம் - ஒரு தேசம், கன்னட மொழி, ஓர் இராகம். கன்னடுதல் - இறந்த வீரனுக்குக்கல் நடுதல். கன்னத்தட்டு - சிறு தராசுத் தட்டு. கன்னப்பூ - ஓர் ஆபரணம். கன்னப்பரம்பரை - கன்னப்பாரம் பரியம் - கேள்வி வழக்கில் வருவது. கன்னபூரம் - காதணிவகை. கன்னபூஷணம் - காதுகுத்தும் சடங்கு. கன்னம் - சிறிய தராசுத்தட்டு, கோயிற் பிரார்த்தனைக்காகச் செய்து கொடுக்கும் சிறுஉருவம், காது, யானைச் செவி, கதுப்பு, கன்னக் கோல், களவு, பெருமை. கன்னமதம் - கன்னத்தில் தோன்றும் மதம். கன்னமிடுதல் - கொள்ளையிடுதல். கன்னல் - கரகம், நாழிகை, வட்டில், நாழிகை, கரும்பு, கற்கண்டு. கன்னற்கட்டி - கருப்புக்கட்டி. கன்னன் - அங்க தேசத்தரசன். கன்னன்மணி - கண்ட சருக்கரைத் தேறு. கன்னாடர் - கருநாடர். கன்னாருரித்தல் - கல்லில் நார் உரித்தல் (கல் + நார் + உரித்தல்). கன்னாவதஞ்சம் - செவிமலர் என்னும் ஆபரணம். கன்னான் - செம்பில் வேலை செய்பவன். கன்னி - குமரி, இளமை, புதுமை, அழிவின்மை, தவப்பெண், துர்க்கை, குமரியாறு, கன்னியிராசி, புரட்டாசி, தசநாடியுளொன்று, கற்றாழைடகாக் கணம். கன்னிகாரம் - கோங்கு. கன்னிகை - குமரி, தாமரைக் கொட்டை, பூவின்மொட்டு. கன்னிகாரம் - கோங்கு. கன்னிகை - குமரி, தாமரைக் கொட்டை, பூவின்மொட்டு. கன்னிக்கால் - கன்னிப் பருவத்துக் காக்குங் கற்பு. கன்னித்தமிழ் - அழிவில்லாத தமிழ். கன்னிநகர் - கன்னிமாடம். கன்னிநாடு - பாண்டிநாடு. கன்னிப்போர் - வீரனது முதற்போர். கன்னிமதில் - அழியாத கோட்டை. கன்னிமாடம் - இராச கன்னிகள் வசிக்கும் மாளிகை. கன்னிமார் - மணமாகாத பெண்கள், ஏழு கன்னியர் என்னும் தேவதைகள். கன்னிமை - கன்னித்தன்மை. கன்னியாகுமரி - ஓர் ஆறு, ஓர் முனை. கன்னியாமடம் - கன்னிப் பெண்கள் வாழும் மடம். கன்னீர்ப்படுதல் - போரிலிறந்த வீரனது நடுகல்லை நீராட்டும் புறத்துறை. கன்னுவர் - கன்னார். கன்னெஞ்சன் - வன்மன் முள்வன். கன்னை - கட்சி. கா கா - பாதுகாப்பு, காவடித்தண்டு, 100 பலம் கொண்ட அளவு, பூ முதலியன இடும்பொடி, சரசுவதி. காகக்கரிப்பன் - கருங்கையாந்த கரை. காகசுரம் - ஓர் அபஸ்வரம். காகதாலீயம் - காகமிருக்கப் பனம் பழம் வீழ்ந்தது போலத் தற்செயல் குறிக்கும் நியாயம். காகதுண்டம் - அகில். காகநாசம் - நரி முருக்கு. காகந்தி - காவிரிப்பூம் பட்டினம். காகபதம் - ஒரு கால அளவை. காகபாதம் - வயிரக் குற்றங்களுள் ஒன்று. காகபிந்து - கரும்புள்ளி. காகபீலி - குன்றி. காகப்புள் - காகம், அவிட்டம். காகமாசி - மணித்தக்காளி. காகம் - காக்கை, அவிட்டம். காகவிருத்தல் - வயிர மணிவகை. காகளம் - எக்காளம். காககாட்சி - கோளநியாயம் - காகத்தின் இரு கண்களுக்கும் ஒன்றே மணியானாற் போல ஒரே சொல் அல்லது தொடர் ஈரிடத்து இயைந்து பொருள் விளங்கு நெறி. காகிதம் - சுடுதாசி, கடிதம். காகு - கூறப்படாத பொருளைத் தரக் கூடிய சொல்லின் ஓசை வேறுபாடு. காகுத்தன் - இராமன். காகுளி - பேய்கத்தினாற் போலப் பாடுவது, மிடற்றெழும் மந்த இசை. காகோடியன் - கழைக்கூத்தன். காகோதரம் - பாம்பு. காகோலம் - அண்டங் காக்கை. காகோளி - அசோகு, தேட்கொடுக்கி. காக்காட்டான் - காக்கணங் கொவ்வை, ஒரு மருந்துக்கொடி. காக்காய் - காகம். காக்காய்ப்பொன் - பொன் போன்ற நிறத்தகடு. காக்கைக்குணம் - மடியின்மை, கலங்காமை, நெடுகக் காண்டல், பொழுதிறவாதிடம் புகுதல், மறைந்து புணர்ச்சி முதலிய காக்கைக்குரிய ஐந்து தன்மைகள். காக்கைக்கொடியன் - மூதேவி. காக்கைப்பொன் - காக்காயப் பொன். காக்கைபாடினியம் - காக்கை பாடினியார் இயற்றிய யாப்பிலக் கண நூல். காக்கையாடினியார் நச்செள்ளை யார் - பதிற்றுப்பத்தின் ஆறாம் பத்தினை இயற்றிய பெண் புலவர். காக்கைவலி - வலிப்பு நோய் வகை. காக்கைவேலி - வேலிப் பருத்தி. காங்கி - பேராசைக்காரன். காங்கிசை - விருப்பம். காங்கூலம் - அபிநயவகை. காங்கேயம் - பொன். காங்கேயர் - கங்கை நாட்டினர், உரிச் சொல் நிகண்டு செய்த ஆசிரியர் (17ம் நூ.) காங்கேயன் - முருகக்கடவுள், வீட்டுமன். காங்கை - வெப்பம். காசசுவாசம் - காச இழுப்பு. காசண்டி - வாயகன்ற ஒருவகைப் பாத்திரம். காசம் - நாணல், கோழை, ஈளை, முதலிய நோய், ஆகாயம், பளிங்கு கண்ணோய் வகை. காசமர்த்தகம் - பெரும்புல். காசறை - கத்தூரி மிருகம், கத்தூரி, மயிர்ச்சாந்து. காசாயம் - காவித்துணி. காசி - காசிநகர், சீரகம். காசிகண்டம் - அதிவீரராம பாண்டியன் இயற்றிய ஒரு நூல். காசிக்கலம்பகம் - குமரகுருபரமுனிவர் காசியில் இறைவரைப் பாடிய நூல். காசிபன் - ஒரு முனிவர். காசினி - பூமி. காசு - சூதாடுங்கருவி, பொன், அச்சுத் தாலி, பழைய பொன் நாணயம், சிறு செப்புக்காசு, மணி, மேகலா பரணம், கோழை. காசுக்கட்டி - ஒருவகைக் கூட்டு மருந்துச் சரக்கு, ஒரு மரம். காசுக்கடல் - நிறைகல். காசுமீரம் - ஓர் தேசம். காசை - காயா, நாணல், புற்பற்றை. காசையாடை - காவி ஆடை. காஞ்சனம் - பொன், புன்கு. காஞ்சினி - மஞ்சள், பொன்மை நிறம், கோரோசனை. காஞ்சி - ஆற்றுப் பூவரசு, காஞ்சிப் பூமாலை, எதிரூன்றல், செவ்வழிப் பண்வகை, பெண்கள் இடை யிலணியும் ஏழு கோவைமணி, மயிர். காஞ்சித்திணை - நிலையாமையைக் கூறும் புறத்துறை. காஞ்சிப்புராணம் - சிவஞான முனி வர் கச்சியப்ப முனிவர் இவர் இருவராலும் இயற்றப் பெற்ற காஞ்சித்தல புராணம் (18ம் நூ.) காஞ்சிரை - எட்டி. காஞ்சிபுரம் - ஓர் நகரம். காஞ்சுகம் - சட்டை. காஞ்சுகன் - சட்டையிட்ட மெய்காப் பாளன். காஞ்சுகி - சட்டை. காஞ்சொறி - பூடுவகை. காடகம் - ஆடை. காடபந்தம் - தீவர்த்தி. காடமர்செல்வி - துர்க்கை. காடர் - வனவாசிகள், ஆனை மலையில் வாழும் ஒரு சாதியார். காடவன் - பல்லவர்களின் சிறப்புப் பெயர். காடவிளக்கு - பெருவிளக்கு. காடாற்று - இறந்தவரைச் சுட்ட எலும்பு திரட்டும் கிரியை. காடி - புளித்த கஞ்சி, புளித்தகள், கஞ்சி, ஊறுகாய், நெய், கழுத்து, மிடா முதலியன வைத்ததற்கு அமைக்கப் பட்ட மேடை, தானிய அளவை. காடிகம் - சீலை. காடு - வனம், மிகுதி, நெருக்கம், செத்தை, எல்லை, சுடுகாடு, இடம், சிறிய ஊர். காடுகாள் - காடுகிழாள். காடுகிழவோள், காடுகிழாள் - பாலை நிலத் தெய்வமாகிய துர்க்கை. காடுகிழாள்வெயில் - பொழுதுபடும் போது தோன்றும் மஞ்சள் வெயில். காடுகெடுத்தல் - காடு அழித்தல். காடுகெழுசெல்வி - துர்க்கை. காடுகொல்லுதல் - காட்டை அழித்தல். காடுபடுதிரவியம் - காட்டிலுண் டாகும் பொருள். காடுபலியூட்டுதல் - காட்டில் வாழுந் தெய்வங்களுக்குப் பலி யூட்டுதல். காடுவாழ்த்து - எல்லோரும் இறந்து போகவும் தான் இறப்பின்றி நிலை பெற்ற புறங்காட்டை வாழ்த்தி உலகவியல்பை விளக்கும் ஒரு புறத்துறை. காடுவெட்டி - பல்லவர் பட்டப் பெயர், காடுகளை அழித்து நாடாக்கியவர். காடைப்புடம் - காடையளவாக எருவிட்டு எரிக்கும் மருந்துப்புடம். காட்சிகொடுத்தல் - தரிசனமளித் தல், காணுமாறு தோன்றுதல். காட்சிப்பிரமாணம் - பிரத்தியட்சப் பிரமாணம், கண்ணால் நேரே பார்த்து அறிதல். காட்சிப்பொருள் - கண்ணாற் பார்க்கும் பொருள். காட்சிப்போலி - பொய்த் தோற்றம் (illusion) காட்சியவர் - அறிஞர். காட்சியெருதுக்காசு - ஒரு பழைய வரி. காட்சியோகு - ஞானயோகம். காட்சிவரி - தன் வருத்தத்தைப் பலருங் காணும்படி நடிக்கும் கூத்து. காட்டகதத்தமிர்து - காட்டில் உண்டாகும் பொருள்களான அரக்கு, உலண்டு, தேன், மயிற்பீலி, நாவி என்பன. காட்டம் - விறகு, சமித்து. காட்டரண் - காடாகிய அரண். காட்டா, காட்டான் - காட்டுப்பசு. காட்டாளத்தி - இசையின் ஆலாபன வகை. காட்டி - காட்டும்கருவி (Indicator) காட்டிமறைத்தல் - எளிதிற் கிடைப்பதுபோல் தோற்றுவித்து ஏமாறச் செய்தல், நிரூபித்தல், நினைப்பூட்டுதல், பிரதி பலிக்கச் செய்தல், ஊட்டுதல், மீட்டுத்தருதல். காட்டு - காண்பிக்கை, துணைக் கருவி. காட்டுக்கோழி - சம்பங்கோழி. காட்டுதல் - காண்பித்தல், அறி வித்தல். காட்டுமா - சாரை என்னும் மரம். காட்டூர்கிழார் மகனார் கண்ணனார் - சங்க காலப் புலவர் (அ. 85) காட்டெருமை - (Bison) காட்டேரி - ஓர் துர்த்ததேவதை. காட்டை - திசை, எல்லை, கால அளவை. காட்பு - வயிரம். காணம் - பொன், பொற்காசு, பொருள், கொள்ளு, செக்கு. காணலன் - பகைவன். காணலிங்கம் - சிவகணங்களால் தாபிக்கப்பட்ட இலிங்கம். காணல் - காண்கை, மனத்தால் குறிக்கை. காணாக்கடி - சிறு பாம்புக்கடி. காணாக்காட்சி - அற்புதக் காட்சி. காணார் - குருடர், பகைவர். காணாவுயிர் - நுண்ணிய உடம்புள்ள உயிர். காணி - 1/8. 100 குழியளவுள்ள நிலம், பரம்பரையுரிமை. காணிக்கை - கடவுளுக்கு அல்லது பெரியோருக்கு அளிக்கும் பொருள். காணியாளன் - காணியையுடைய வன், உழவின்மேல் ஊக்கமுள்ள குடி. காணுமோர் - காண்போர். காணும் - முன்னிலைப் பன்மையில் வரும் ஓசை. காதகம் - கொலை. காதகன் - கொலையாளி, கொடியவன். காதம் - ஏழரை நாழிகைவழி (10 மைல் அளவில்) காதம்பம் - அன்னப்புள், கானாங் கோழி. காதம்பரி - ஆதிவராக கவியால் வடமொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட தமிழ்க் காவியம், கள். காதரம் - அச்சம், தீவினைத் தொடர். காதலவர் - கற்றத்தார். காதலன் - கணவன், அன்புள்ளவன். காதலி - மனைவி, அன்புடையவள். காதலித்தல் - அன்பு மிகுதல், விரும்புதல். காதல் - அன்பு, காம இச்சை, பத்தி விருப்பு, கொல்லுகை. காதவம் - ஆல். காதற்பரத்தை - பரத்தையின் மக ளாய்த் தலைவனது காதற்குரிமை பூண்டு அவனையே சார்ந்திருப் பவள். காதற்பாங்கன் - தலைவனுக்கு உற்ற நண்பன். காதற்பிள்ளை - வளர்ப்புப் பிள்ளை. காதற்றோழி - தலைவியின் அன்புக் குரிய தோழி. காதன் - கொலை செய்பவன். காதன்மை - அன்பு, ஆசை. காதார - தன் காதிற்பட, செவிப்புலன் நிறைய. காதி - விசுவாமித்திர முனிவரின் தந்தை. காதிகள் - முத்திக்குப் பாதகமாயுள்ள கன்மங்கள். காது - செவி, ஊசி, முதலியவற்றின் துளை, கவண், கல்வைக்குமிடம், கொலை. காதுதல் - கொல்லுதல், வெட்டுதல். காதை - சரித்திரம், கதையைக் கொண்ட பகுதி. காதோலை - மகளிர் காதணி வகை. காத்தண்டு - காவடியின் தண்டு. காத்தவராயன் - ஒரு கிராம தேவதை. காத்தாயி - ஓர் கிராம தேவதை. காத்தியாயனம் - வடமொழி நிதி நூலுள் ஒன்று. காத்தியாயினி - பார்வதி, துர்க்கை. காத்திரம் - கீரி, கோபம், உடல், உறுப்பு, யானையின் முன்கால், கனம். காத்திரவேணம் - பாம்பு. காத்திருத்தல் - எதிர்பார்த்திருத்தல், காவல் பூண்டிருத்தல். காத்தூலம் - பண்டைக் காலத்து வழங்கிய துகில்வகை. காத்தை - ஒர் அசைநிலை. காத்தோட்டி - ஒரு செடி. காந்தப்பர் - கந்தருவர். காந்தம் - காந்தக்கல், அழகு, மின்சாரம், புராணம். காந்தர்ப்பம் - கந்தருவம். காந்தருவம் - காதலர் தம்முள் மனமொத்துக் கூடும் கூட்டம், இசைப்பாட்டு. காந்தருவர் - கந்தருவர். காந்தருவவேதம் - சங்கீத சாத்திரம். காந்தருவி - பாடுபவள். காந்தல் - காந்துகை, கருகல், சினம். காந்தவர் - காந்தருவர். காந்தள் - கார்த்திகைப்பூ, காந்தள் மலரணிந்து வெறியோடு தலைக் கூறும் புறத்துறை. காந்தன் - கணவன், ஒரு சோழன். காந்தாராக்கிராமம் - தேவலோகத்து வழங்குவதாகக் கொள்ளப்படும் இசைச் சுரவகை. காந்தாரபஞ்சமம் - பாலையாழ் இசை வகைகளுள் ஒன்று. காந்தாரம் - ஐம்பத்தாறு தேசங் களுள் ஒன்று, ஏழிசைகளுள் ஒன்று, பாலையாழ்த் திறவகை, காடு. காந்தாரி - துரியோதனன் தாய், சிவனோர் வேம்பு, தசநாடியுள் ஒன்று, ஓர் இராகம், கொடியவள். காந்தி - ஒளி, கிரணம், வைடூரியம். காந்திமதி - ஒளியுள்ளவள். காந்துகம் - வெண்காந்தள். காத்துதல் - எரிவெடுத்தல், வெப்பங் கொள்ளுதல், பிரகாசித்தல், கோபித் தல், பல்லினால் சுரண்டுதல். காந்தை - மனைவி, பெண். காபட்டியம் - கபடத்தன்மை. காபணங்கட்டுதல் - தெய்வத்துக்கு நேர்ந்த பணத்தை மஞ்சள் தோய் த்த துணியிற் கட்டுதல். காபந்து - பாதுகாப்பு. காபாலம் - பிரமன் மண்டை யோட்டைக் கையில் ஏந்திச் சிவன் ஆடுங்கூத்து, அகப்புறச்சமயம் ஆறுள் ஒன்று. காபாலி - சிவன், காபாலல் மதத்தவன். காபி - ஓர் இராகம். காபிலம் - சாங்கியம், நீராடும் வகையுள் ஒன்று, கபிலப்பசுவின் நெய். காபோதி - அறிவில்லாதவன். காப்பாளர் - வாடன்கள் (Wardens) காப்பாள் - காவல் வீரன். காப்பாற்றுதல் - ஆதரித்துப் பாது காத்தல். காபோஹைடிரேட்டு - சர்க்கரை, மாவு முதலிய எரிபொருள்கள் (Carbohydrate) காப்பிடுதல் - நெற்றியில் திருநீர் அல்லது மண்ணைக் குழைத் திட் டுக் காப்புச் செய்தல், உறையிடுதல் (Insulate) காப்பியக்குடி - பார்ப்பனரது பழைய குடிவகை, சீகாழிக்கு அயலிலுள்ள ஓர் ஊர். காப்பியஞ் சேந்தனார் - சங்க காலப் புலவர் (நற். 246) காப்பியம் - நான்கு உறுதிப் பொருள் களைக் கூறுவதாய்க் கதை பற்றி வரும் செய்யுள் நூல். காப்பியன் - சுக்கிரன். காப்பியாற்றுந் காப்பியனார் - பதிற்றுப்பத்தின் 4-ம் பத்துப் பாடியவர். காப்பிரி - நீகோர சாதியான். காப்பிலியர் - பாண்டியநாட்டிற் குடியேறிய கன்னட சாதி வகையினர். காப்பில் - மீன்பிடிக்கப் பயன்படுத் தும் கூரிய ஈட்டி போன்ற ஆயுதம், தோணியின் உறுப்புக்களில் ஒன்று. காபீன் - தேயிலை காப்பியில் காணப்படும் நஞ்சு (Caffeine) காப்பு - பாதுகாவல், காப்பாகக் கட்டும் கயிறு, நூலின் தொடக்கத்தில் வரும் கடவுள் வாழ்த்து, திருநீறு, கை கால்களில் அணியும் வளை, வேலி, கதவு, அரச முத்திரை, கதவின் தாழ், ஊர், திக்குப்பாலகர், மிரிதடி. காப்புக்காடு - Forest Reserve. காப்புநாடு - இன்னொரு இராச்சியத் தின் பாதுகாப்பிலுள்ள நாடு (Pro tected state) காப்புநாண் - காவலாகக் கட்டும் மஞ்சட் கயிறு. காப்புப்பருவம் - பிள்ளைத்தமிழ் கூறும் பருவங்களுள் ஒன்று - பிள்ளை பிறந்த இரண்டாம் மாதம். காப்புமறம் - காவல்வீரர். காப்பொன் - நூறுபலம் நிறையுள்ள பொன். காமக்கடப்பு - காம மிகுதி. காமக்கடவுள் - வழிபடு தெய்வம். காமக்கணி நப்பசலையார் - சங்க காலப் புலவர். (நற். 244) காமக்கண்ணி - காஞ்சியில் கோயில் கொண்டிருக்கும் காமாட்சி அம்மை. காமக்கலகம் - புணர்ச்சி, ஊடல். காமக்கிழத்தி - ஒருவர்க்கே உரிமை பூணுங் குலப்பரத்தை மகளாய்க் காமங் காரணமாகத் தலைமகனால் வரைந்து கொள்ளப்பட்டவள். காமக்கூட்டம் - தலைவனுந் தலைவி யும் தம்முள் அன்பொத்துக் கூடும் கூட்டம். காமக்கோட்டத்தி - உமை. காமக்கோட்டம் - காஞ்சியிலுள்ள காமாட்சி கோயில். காமசாலை - சிற்றின்பத்துக்கு இடம். காமஞ்சேர்குளத்தார் - சங்க காலப் புலவர் (குறு.4) காமதகனன் - சிவன். காமதம் - நிலத்தில் விழுந்தபின் எடுத்துக் கொள்ளும் பசுவின் சாணம். காமத்துப்பால் - காமத்தைப் பற்றிக் கூறும் பகுதி. காமதேனு - தேவலோகப் பசு. காமநீர் - சுக்கிலம். காமபாலன் - பலராமன். காமபீடம் - மக்கள் விரும்பும் முத்தி போகங்களைக் கொடுக்கும் காஞ்சீபுரம். காமபூமி - போகபூமி. காமப்புணர்ச்சி - இயற்கைப் புணர்ச்சி. காமமலடி - கனவினால் கருப்பம் சிதைக்கப்படுபவள். காமம் - விருப்பம், இன்பம், புணர்ச்சி இன்பம். காமரம் - அடுப்பு, அத்தநாள், இசை, சீகாமரம் என்னும் பண், அகில், காவடித்தண்டு. காமரூபம் - ஒரு நாடு, விரும்பியபடி எடுக்கும் உருவம். காமரூபி - விரும்பிய வடிவங் கொள்பவள், பச்சோந்தி. காமர் - விருப்பம், அழகு, காமுகர். காமலை - காமாலை நோய். காமல்லிகை - காட்டு மல்லிகை. காமவல்லி - கற்பகமரத்திற் படரும் கொடி. காமவாயில் - இயற்கையன்பு. காமவிடாய் - கலவி விருப்பம். காமவேழம் - நாணல். காமவேள் - மன்மதன். காமற்கடந்தோன் - புத்தன். காமனாள் - இளவேனில். காமனூர்தி - தென்றல். காமனை - விருப்பம். காமன் - மன்மதன், ஒருவகை வரிக் கூத்து, இந்திரன், வண்டு, திப்பிலி. காமன்கொடி - மீன். காமன்பண்டிகை - மன்மத தகனத் திருவிழா. காமன்வில் - கரும்பு. காமாகதிர் - ஊடுருவுந் தன்மையுள்ள ஒரு கதிர் (Gamma rays) காமாட்சி - காஞ்சீபுரத்து அம்பிகை, உமை. காமாட்டி - மூடன், மண்வெட்டு வோன். காமாந்தகன் - சிவன், காமத்தால் விவேகமற்றவன். காமாரி - சிவன், காளி. காமாலை - ஒருவகை நோய். காமி - காம இச்சை மிக்கவன். காமிகம் - சிவாகமம் இருபத் தெட்டுள் ஒன்று. காமியம் - பயன் கருதிச் செய்யுங் கிரியை, ஆகாமியம். காமினி - பெண், ஆகாசகமனஞ் செய் தற்குரிய மந்திரம். காமுகன் - காமஇச்சை நிறைந்தவன். காமுறுதல் - விரும்புதல், வேண்டிக் கொள்ளுதல். காம்பி - நீரிறைக்குங்கருவி. காம்பிலி - வடநாடுகளுள் ஒன்று. காம்பு - இலை பூ முதலியவற்றின் தாள், கைப்பிடி, மூங்கில், ஒரு வகைப் பட்டாடை. காம்போசம் - ஐம்பாத்தாறு தேசங்களுள் ஒன்று, பதினெண் மொழியுள் ஒன்று. காம்போதி - ஓர் இராகம். காம்போதியார் - சங்க காலப் புலவர் (குறு. 384) காயகற்பம் - உடல் நீடித்திருக்க உண்ணும் மருந்து. காயகன் - பாடுவோன். காயக்கம் - மோகமயக்கம், உறுப் பினால் செய்யும் அபிநயம். காயக்கிலேசம் - உடலை வருத்தி ஒடுக்குகை. காயசித்தி - உடலை நெடுநாளி ருக்கச் செய்யும் சித்தி, பொன்னாங் காணி. காயத்திரி - ஒரு வேத மந்திரம், பிரமன் மனைவியாகிய காயத்திரி தேவதை. காயநூல் -சாமுத்திரிக சாத்திரம். காயமலர் - காயாம் பூ. காயம் - உறைப்பு, குழம்பில் வெந்த கறித்துண்டு, கறிச்சரக்கு, பெருங்காயம், காய மருந்து, வயிரம், புண்வடு, உடல், ஆகாயம். காயல் - கழி, கழிமுகம், காயற் பட்டினம். காயா - கிஞ்ஞாச்செடி. காயாம்பூ வண்ணன் - திருமால். காயிகம் - உடம்பினாற் செய்வது. காய் - பழுக்காதது, ஆடுதற்குரிய காய், வஞ்சனை. காய்கறி - உணவுக்குரிய மரக்கறிகள். காய்சினவழுதி - கடைச்சங்கத்தின் தொடக்கத்திலிருந்த பாண்டியன். காய்ச்சி வடித்தல் - நீராவியாக்கி வடித்தல் (Distillation) காய்ச்சல் - உலர்ச்சி, கரநோய். காய்ச்சுண்டை - காசுக் கட்டி. காய்ச்சுதல் - காயச் செய்தல், சமைத்தல். காய்தல் - காய்ச்சப் பெறுதல், சுடுதல், உலர்தல், எறித்தல், அழித்தல், விலக் குதல், வெறுத்தல், கோபித்தல், வருந்துதல். காய்த்தல் - மரஞ்செடி முதலியன காய் கொள்ளுதல், தழும்புண்டாதல். காய்த்துதல் - எரியச் செய்தல், கோபித்தல். காய்பசி - மிக்க பசி. காய்ப்பு - வெறுப்பு, மரஞ்செடி முதலியன பயன் தருகை, தழும்பு. காரகம் - வேற்றுமை பெற்ற பெயர், வினைகொண்டு முடியும் நிலை, சிறைச்சாலை, மேக நோய். காரகஏது - தொழில் நிகழ்ச்சிக்குக் கருவியாயுள்ள ஏது. காரகன் - செய்வோன், சூரிய ரேகா மிசம். காரசாரம் - அளவோடுகூடிய காரச் சுவை. காரவிடத்தை - சாலவித்தை. காரடை -ஒருவகைப் பணிகாரம். காரணகர்த்தா - முதற்கடவுள். காரணக்குறி - காரணப்பெயர். காரணசரீரம் - சூக்கும உடல். காரணச்சிறப்புப் பெயர் - காரணத்தால் ஓரினத்தில் ஒன்றற்குச் சிறப்பாக வரும் பெயர்ச்சொல். காரணப்பெயர் - ஒரு காரணம் பற்றி வழங்கும் பெயர். காரணப்பொதுப்பெயர் - பல பொருட்குப் பொதுவாக வரும் காரணப் பெயர்ச்சொல். காரணம் - மூலம், ஏது, நோக்கம் சீவாகமத்தொன்று. காரணவாகுபெயர் - திருவாசகம் என்றால்போலக் காரணம் காரியத் திற்கு ஆகிவரும் பெயர்ச்சொல். காரணவிடுகுறி - முக்கண்ணன் என் றாற்போல் சொல்லின் காரணங் கருதியவழிப்பலர்க்குஞ் சொல்லி னும் இடுகுறிபோல ஒரு பொருட்கே செல்லும் பெயர்ச் சொல். காரஉப்பு - மோப்ப உப்பு (Smelling salt) காரணி - சினை (Factor) காரணிகன் - நியாயநடுவன். காரண்டம் - நீர்க்காக்கை. காரம் - உறைப்பு, அழிவு, சாம்பலுப்பு (Alkali) காரவல்லி - பாகல். காரறிவு - மயக்கந்தரும் அறிவு. காரன் - வினைமுதல் உடைமை முதலியபொருளில் வரும் ஆண்பாற் பெயர் விகுதி. காரா - எருமை. காராகிருதம், காராகரகம் - சிறைச் சாலை. காராடு - வெள்ளாடு. காராண்மை - நிலத்தைப்பயிரிடுங் குடியுரிமை. காராபூத்தி - ஒரு பணிகாரம். காராமணி - ஒரு வகைப் பயறு. காராம் பசு - நாக்கும் முலைக் காம் பும் கருநிறமாகவுள்ள பசுச்சாதி, மனித முகமுள்ளதாகவும் தேவலோ கத்துள்ளதாகவும் கொள்ளப்படும் கற்பிதப் பசு. காராம்பி - எருது பூட்டி நீரிறைக்கும் கருவி வகை. காராளர் - வேளாளர், பயிரிடுவோர். காரானை - கடலின்மீது குவிந்து கீழிறங்கி நீரைமுகந்து பெருந்தூண் போல் நிற்கும் மேகம். காரான் - எருமை. காரி - கருமை, கரிக்குருவி, காக்கை, நஞ்சு, கரிய எருது, இந்திரன், ஐயனார், வயிரவன், கடைவள்ளல்களுள் ஒருவன், காரிநாயனார், காரி வள்ள லின் குதிரை, ஒரு ஆறு, செய்பவன், வினை முதல் உடைமை முதலிய பொருளில் வரும் ஒரு பெண்பாற் பெயர் விகுதி, பதினாறு படி அளவு. காரி - இரத்தினக் கவிராயர் - பரி மேலழகருரை நுண்பொருண் மாலை செய்தவர் (18ஆம் நூ.) காரிகம் - காவிக்கல். காரிகிழார் - சங்க காலப் புலவர் (புறம். 6) காரிகை - பெண், அழகு, அலங்காரம், கட்டளைக் கலித்துறை, அமிதசாகரர் இயற்றிய யாப்பிலக்கணம் (11ஆம் நூ.) காரிக் கண்ணனார் - சங்க காலப் புலவர்; அகம், குறுந்தொகைப் பாடல்கள் சில செய்தவர். காரிக்கன் - சலவை செய்யாத வெள்ளைத்துணி. காரிக்குதிரை - ஐயனாரது குதிரை. காரிதாய் - காடு கிழாள். காரிநாயனார் - அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவர். காரிமாறன் - காரியன் புதல்வனான் நம்மாழ்வார். காரியகர்த்தன் - தொழில் நடத்து வோன், மேலதிகாரி. காரியசாதனம் - துணைக்கருவி. காரியசித்தி - காரியம் கைகூடுகை. காரியதரிசி - ஒரு சபையின் காரியங் களை நிர்வகிப்பவன். காரியதுரந்தரன் - காரியப் பொறுப்பு வகித்தலில் வல்லவன். காரியப்படுத்தல் - தொழிற் படுத்துதல், கைகூடுதல். காரியப்பாடு - பயன். காரியம் - காரணத்தாலாவது, செய்கை, நோக்கம். காரியாசான் - சிறுபஞ்சமூலம் செய்தவர். காரியார் - கணக்கரிகாரம் என்னும் நூலின் ஆசிரியர் (15ஆம் நூ.) காரியாலயம் - அலுவலகம். காரிருள் - மிக்க இருள். காரியம் - ஈய வகை. காரு - வண்ணான். காருகத்தம் - இல்லற நிலை. காருகத்தியம் - இல்லற நிலை. காருகத்தொழில் - நெய்தற்றொழில். காருகபத்தியம் - முத்தீயுள் ஒன்று. காருகம் - நெய்யுந்தொழில், இல்லறம். காருகவடி - கிரகநிலை. காருகன் - நெய்வோன், வண்ணான், ஓவியன், கொலைக்காரன். காருடம் - பருந்து, விடம் நீக்கும் வித்தை, பச்சைக்கல், புல். காருணி - வானம்பாடி. காருணியம் - கருணை. காருவாகன் - வண்ணான். காரூகம் - கருங்குரங்கு. காரெட்டு - நக்கீர தேவரியற்றிய ஓர் நூல். காரெலி - கறுப்பெலி. காரெனல் - கறுப்பு நிறமாதல், ஒளி மழுங்குதல். காரேறு - எருமைக் கடா, இடி. காரை - காட்டுச் செடி வகை, ஆடை, சுண்ணச் சாந்து, பாகல். காரைக்காலம்மையார் - அறு பத்து மூவர் நாயன்மாருள் ஒருவர் (6ம் நூ.) காரோடன் - ஆயுத உறை செப வோன், சாணைக்கல் செய்வோன் காரோணம் - மகாசங்கார காலத்துச் சிவபெருமான் உயிர்களைத் தன்னில் ஐக்கியமாகக் கொண்ட தலம். கார் - எருமை, மேகம், நீர், கார்காலம், கருங்குரங்கு, இருள், கருங்குட்டம், அறிவு மயக்கம், பசுமை, செல்வி. கார்காத்தவேளாளர் - வேளாளரில் ஒரு பிரிவினர். கார்காலம் - ஆவணி, புரட்டாசி மாதங்கள். கார்கோள் - கடல், ஓமை மரம். கார்க்கோடகன் - எட்டு நாகங்களுள் ஒன்று. கார்த்தல் - உறைத்தல், உப்புக் கரித்தல், கறுப்பாதல், அரும்புதல். கார்த்த வீரியார்ச்சுனன் - பரசு ராமானாற் கொல்லப்பட்ட மகிஷ்மதி அரசன். கார்த்திகேயன் - முருகக் கடவுள். கார்த்திகை - ஒரு நட்சத்திரம், ஒரு மாதம், கார்த்திகைப் பூ, துர்க்கை. கார்த்திகைச்சம்பா - சம்பாவகை. கார்த்திகைப்பச்சை - பழைய வரிவகை. கார்த்திகைப்பூ - காந்தட்பூ. கார்நாற்பது - பதினென் கீழ்க் கணக்குகளுள் ஒன்று; கண்ணங் கூத்தனார் செய்தது. கார்பன் டை யாக்சைடு - வாயு வகை. கார்போகி - பூண்டுவகை. கார்ப்பணியம் - உலோபம். கார்ப்பாசம் - பருத்தி. கார்ப்பாளன் - கொடியவன். கார்ப்பு - காரம் உவர்ப்பு. கார்முகம் - வில், மூங்கில். கார்முகில் - கருக்கொண்ட முகில். கார்முல்லை - பிரிந்த தலைவன் வருமுன் அவன் வருதற்குரிய கார்ப்பருவத்தின் குறியாக மேகம் முன் வந்ததைக் கூறும் புறத்துறை. கார்வண்ணம் - திருமால். கார்வலயம் - கடல். கார்வழலை - இராசநாகம். கார்வாரி - காரியம் மேற்பார்ப்போன். கார்வினை - பாவத் தொழில். காலஅட்டவணை - பஞ்சாங்கம் (Calender) காலகட்கம் - ஒரு நரகம். காலகதி - காலச் செலவு, விதி. காலகரணம் - கால தாமதம். காலகாலன் - சிவன். காலகூடம் - பாற்கடலில் தோன்றிய விடம். காலக்கடவுள் - சிவன். காலக்கணிதம் - வான சாத்திரம். காலக்கணிதர் - காலத்தைக் கணித்தற்குரிய சோதிடர். காலக்கனல் - ஊழித் தீ. காலக்கிரமம் - நாளடைவு, கால ஒழுங்கு. காலங்கண்டவன் - வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்தவன். காலங்கழித்தல் - சீவனம் பண் ணுதல், வாழ்நாள் போக்குதல். காலசக்கரம் - விடாது சுழன்று வரும் காலம், கிரக நிலையால் ஒருவனுக்கு உண்டாகும் பலன். காலசங்கை - காலக் கணக்கு. காலசந்தி - கால வழிபாடு. காலசம் - பேரால வட்டம், காற்று. காலசூத்திரம் - ஒரு நரகம். காலசேயம் - மோர். காலஞ்செய்தல் - மரணமடைதல். காலஞ்செல்லுதல் - மரணமடைதல், தாமதப்படுதல். காலஞ்சொல்லி - காக்கை, பல்லி. காலடி - உள்ளங்கால், காற்சுவடு. காலனி - காலிலணியும் ஆபரணம். காலதண்டம் - இயமனது தண்டா யுதம். காலதத்துவம் - ஆன்ம போகங்களை அளக்கும் காலம் என்னும் சுத்தா சுத்த தத்துவம். காலதர் - சாளரம், சன்னல். காலதேசவர்த்தமானம் - கால இடங் களின் நிலைமை. காலத்தில் - உரிய போதில், காலம் பெற. காலத்திரயம் - இறப்பு, நிகழ்வு எதிர்வு என்னும் மூவகைக் காலம். காலத்தீ - ஊழித் தீ. காலநிரூபணம் - காலத்தை வரை யறுக்கை. காலநுட்பம் - காலத்தின் நுண்ணிய பகுதி. காலநேமி - திருமாலாற் கொல்லப் பட்ட ஓர் அசுரன், கால சக்கரம். காலநேரம் - கிரக பலன். காலபடர் - இயமதூதர். காலபரிச்சேரம் - காலத்தால் ஒரு பொருளை அளவிடுகை. காலபாசம் - கயிற்றின் வடிவான இயம னாயுதம். காலபோகம் - பருவத்திற்குரிய பயிர் கனி முதலியன. காலமயக்கம் - கால வழுவமைதி. காலமயக்கு - பிரிந்த தலைவன் வருதற் குரிய கார்காலம் இஃதன்றெனத் தலைவிக்குத் தோழி காலத்தை மயக்கிக் கூறும் அகத் துறை. காலமலைவு - ஒரு காலத்துக் குரியதை மற்றொரு காலத்துக் குரியதாகக் கூறும் வழ. காலமழை - பருவமழை. காலமறிதல் - வினைசெய்தற்கேற்ற காலமறிதல். காலமானி - காலமளக்கும் கருவி (Chronometer) காலமிருத்து - விதித்த காலத்தில் அடை யும் மரணம். காலமேகம் - ஊழிக் காலத்தில் தோன்றும் மேகம். காலம் - பொழுது, தக்கசமயம். காலம்பெற - தக்க காலத்தில், விடியற் காலையில். காலயுக்தி - அறுபது ஆண்டுகளுள் ஒன்று. காலருத்திரன் - ஊழிக்காலத்துச் சங்கார மூர்த்தியான மகாருத்திரன் காலவகை - காலவேறுபாடு. காலவம் - நெருப்பு. காலவரை, காலவரையறை - கால நியமிப்பு. காலவர்த்தமானம் - நடப்புச் செய்தி. காலவழு - ஒருகாலச் சொல் தன்னோடு இயையாக் காலத்தோடு புணரும் குற்றம். காலவழுவமைதி - காலவழுவை இலக் கணமுடையதாக அமைப்பது. காலவாகுபெயர் - ஒரு காலத்தின் பெயர் அக் காலத்தோடு இயைபுடைய பொருளுக்கு ஆகிவருவது. காலவிடைநிலை - காலத்தைக் காட்டும் இடைநிலை. காலளப்பான் - தானியமளப்பவன். காலறிகடிகையார் - சங்காலப் புலவர் (குறு. 279) காலன் - இயமகிங்கரன், இயமன், சனி. காலாகோலம் - அலங்கோலம், உல்லாசம். காலாங்கி - ஒரு மந்திரம். காலாசு - காற்கவசம். காலரடுதல் - முயற்சியால் செல்வம் செழித்தல். காலாட்டம் - முயற்சி. காலாந்தகன் - சிவன். காலாந்தரம் - வேறுபட்ட காலம், இடைப்பட்ட காலம். காலாயுதம் - கோழி. காலாரி - இயமனைச் சங்கரித்தற்காக எடுத்த சிவமூர்த்தம். காலாவதி - கால எல்லை. காலாழி - கால்மோதிரம். காலாழ் - சேறு. காலாள் - பாதசாரியாகிய போர் வீரன். காலாறு - வண்டு, சிற்றாறு. காலி - பசுக்கூட்டம், பசு, துன் மார்க்கம். காலிசெய்தல் - விட்டுப் போதல் (Evacauation) காலித்தல் - கிரகங்கள் உதயமாதல். காலிலி - முடவன், அருணன், பாம்பு, காற்று. காலுதல் - தோற்றுவித்தல், விளங்குதல், குதித்தல், கக்குதல். காலூரம் - தவளை. காலூன்றுதல் - நிலையுறுதல். காலேகம் - முத்து. காலேகவண்ணம் - கலவைச் சாந்து. காலேந்திரம் - காலத்தைப் புலப் படுத்தும் இயந்திரம். காலேயம், காலேசம் - புல்லுண்ணும் நாற்கால் உயிர்கள், மோர், கள், அகில். காலை - வாழ்நாள், முறை, தருணம், விடியற்காலம், சூரியன், பள்ளி யெழுச்சி முரசம். காலைக்கடன் - காலையில் செய்ய வேண்டிய கடமைகள். காலைமுரசன் - பள்ளியெழுச்சி முரசு. காலொற்றுதல் - காற்று வீசுதல். காலோடுதல் - வழுக்குதல். காலோலம் - அண்டங்காக்கை. கால் - நாலிலொன்று, பாதம், பூவின் தாள், தேருருள் வண்டி, கோல், குறுந்தடி, தூண், முளை, வமிசம், பிறப்பிடம், வாய்க்கால், பிரிவு, வழி, நடை, இடம், வனம், முனை, மரக்கால், கிரணம், மழைக்கால், காற்று, வாதநோய், பஞ்சபூதம், பொழுது செவ்வி, தடவை, காலன், ஒருநிறம், ஒரு வினையெச்ச விகுதி. கால்கடியள் - வல்லவன். கால்கழீ - மலங்கழுவி என்பதைக் குறிக்கும் இடக்கரடக்கு. கால்கிளர்த்தல் - ஓடுதல், படையெடுத்துச் செல்லுதல். கால்கொள்ளுதல் - தொடங்குதல், இடங்கொள்ளுதல், ஏறியிருத்தல். கால்கோள் - தொடக்கம், இறந்த வீரனுக்குக் கல்லில் அவன் உருவு வெட்டத் தொடங்குதலைக் கூறும் புறத்துறை. கால்சாய்தல் - அடியோடழிதல். கால்சிதைத்தல் - காலால் பறண் டுதல். கால்சியம் - சுண்ணாம்புச் சத்து. கால்சீத்தல் - காலினாற் கீறுதல். கால்செய் வட்டம் -பேரால வட்டம். கால்ட்வேல் ஐயர் - ஓர் ஆங்கில பாதிரியார்; திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூல் செய்தவர் (1815 - 1891) கால்தாழ்தல் - தாமதித்தல், ஈடு படுதல், மூழ்கிவிடுதல். கால்நடை - ஆடுமாடு. கால்நோக்கு - கிரகங்களின் காற் பார்வை. கால்பரிதல் - அறுபடுதல். கால்பாவுதல் - கால்வைத்தல். கால்மிதி - அடிச்சுவடு, அடி வைக்கும் வரை, அடிவைப்பு. கால்யாத்தல் - நெருங்குதல், தேக் குதல், பரத்தல். கால்வடம் - காலணி வகை. கால்வழி - வமிசம். கால்வாங்குதல் - பின்வாங்குதல். கால்வாசி - நாலிலொருபங்கு. கால்வாய் - வாய்க்கால். கால்விழுதல் - இறங்குதல், ஒளி வீசுதல். காவடி - காத்தாண்டு, பிரார்த்தனைக்கு எடுக்கும் காவடி. காவட்டனார் - சங்க காலப் புலவர் (அகம். 378) காவணப்பந்தி - மண்டபத்தின் அலங்காரமான மேல்தளம். காவணம் - பந்தல், சோலை. காவதம் - காதம், முன் பின் பத்து மைல் கொண்ட தூரம். காவதன் - வரிக்கூத்து வகை. காவலன் - அரசன், பாதுகாப்போன், கணவன். காவல் - பாதுகாப்பு, வேலி, மதில், பரண், கவசம். காவற்கடவுள் - திருமால். காவற்கணிகை - களத்தாடும் கூத்தி. காவற்காடு - கோட்டையைச் சூழக் காவலாக வளர்க்கப்படும் காடு. காவற்கூடம் - சிறைச்சாலை. காவற்பெண்டு - செவிலி, பெண்பாற் புலவருள் ஒருவர். காவற்றெய்வம் - காக்கும் தெய்வம். காவனிகுதி - காவற்காரர் கொடுக்கும் கடமை. காவன் - சிலந்திப் பூச்சி. காவன் மகளிர் - சிறைபிடிக்கப்பட்ட பகைவன் மனைவியர். காவன்மரம் - பகைவர் அணுகாமல் பாதுகாக்கப்படும் மரம். காவன்முரசம் - காத்தற்றொழிலுக்கு அறிகுறியான அரசாங்க முரசு. காவன்முல்லை - அரசனாட்சியைச் சிறப்பிக்கும் புறத்துறை. காவன்முல்லை - அரசனாட்சியைச் சிறப்பிக்கும் புறத்துறை. காவன் முல்லைப் பூதஞ்சாத்தனார் - சங்ககாலப் புலவர் (அகம். 151) காவன் முல்லைப்பூதனார் - சங்க காலப் புலவர் (நற். குறு. அகம். பாடல்கள் சில) காவாலி - சிவன். காவி - பழுப்புநிறம், கருங்குவளை. காவிதி - வேளாளர்க்கு அரசர் கொடுக் கும் பட்டம், மந்திரி, கணக்கர் சாதி. காவிதிப்புரவு -அரசராற் காவிதி யர்க்குக் கொடுக்கப்பட்ட ஊர். காவிதிப்பூ - காவிதிப் பட்டத்துடன் அளிக்கப்படும் பொற்பூ. காவிதிமை - கணக்கு வேலை. காவிப்படுவான் - கப்பலின் தலைப் பாய் மரம். காவியம் - பழைய கதை பற்றிய தொடர் நிலைச் செய்யுள். காலியன் - சுக்கிரன். காவியாக்கட்டை - நங்கூரக் கட்டை. காவிரி - காவேரி. காவிரிப்பட்டினம் - காவிரிப்பூம்பட்டினம் காவிரிப்பூம்பட்டினத்துக் கந்தரத்தனார் - சங்க காலப் புலவர் (குறு. 342) காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ண னார் - திருவள்ளுவ மாலை 28ஆம் பாடல் செய்த புலவர். காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ண னார் - சங்க காலப் புலவர் (நற். 389) காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வாணிக னார் மகனார் நம் பூதனார் - முல்லைப் பாட்டுச் செய்தவர். காவு - சிறு தெய்வங்களுக்கிடும் பலி. காவுதடி - காவடித்தண்டு. காவுதல் - சுமத்தல். காவேரி - காவிரி ஆறு. காவோலை - முற்றின பனை ஓலை. காழகம் - கடாரம் (பர்மா), ஆடை, கைக் கவசம், கருமை. காழம் - ஒருவகை உடை, மனவுறுதி, தூண், மர வைரம். காழி - உறுதி சீகாழி. காழியர்கோன் - திருஞான சம்பந்தர். காழியன் - வண்ணான், பிட்டு வாணிகன் உப்பு வாணிகன். காழுன்று கடிகை - குத்துக்கோல், கூடாரம். காழோர் - யானைப்பாகர். காழ் - ஓடஞ் செலுத்தும் தண்டு இரும்புக்கம்பி, யானையைச் செலுத்தும் பரிக்கோல், காம்பு, கழி, ஒளி, இரத்தினம், முத்து, பளிங்கு, பூமாலை, நூற்சரடு, விதை, கனித் தோல், பருக்கைக்கல், கருமை, குற்றம். காழ்கொள்ளுதல் - முதிர்தல். காழ்த்தல் - முற்றுதல், மன வைரங் கொள்ளுதல், அளவு கடந்து மிகுதல், உறைத்தல். காழ்ப்பு - உறைப்பு, வைரம். காழ்வை - அகில். காளகண்டம் - குயில். காளகண்டன் - சிவன். காளகண்டி - துர்க்கை, ஓர் அமங்கல நாள். காளகம் - எக்காளம். காளகூடம் - ஓர் நரகம். காளத்தி - சீகாளத்தி. காளபதம் - மாடப்புறா. காளபம் - போர். காளம் - நஞ்சு, எட்டி, கருமை, மேகம், சூலம், கழு. காளமுகி - கல்மழை பெய்யும் மேகம். காளமேகப்புலவர் - 15ஆம் நூற்றாண்டில் விளங்கிய பெரும் புலவர். காளமேகம் - கார்மேகம். காளம்பிடித்தல் - எக்காள மூதுதல். காளயுக்தி, காளயுத்தி - அறுபது ஆண்டுகளில் 52 வது. காளவனம் - சுடுகாடு. காளவாய் - கழுதை, சுண்ணம் செங்கல் சுடும் சூளை. காளவிளக்கு - விழாக்களில் பயன் படுத்தும் பெரிய விளக்கு. காவாஞ்சி - தம்பலம் துப்புங்கலம், தாம்பூல மெடுக்கும் கலம். காளாத்திரி - பாம்பின் நச்சுப் பற்களுள் ஒன்று. காளாமுகம் - சைவசமயத்தின் உட்பகுதி ஒன்று. காளாம்பி - காளான். காளான் - நாய்க்குடை. காளி - துர்க்கை, பார்வதி, பரிமளகந்தி, பாம்பின் நச்சுப் பற்களுள் ஒன்று, மணித்தக்காளி. காளிகம் - உப புராணங்களுள் ஒன்று. காளிங்கராயன் - பாண்டியர் காலத்து அரசாங்கத் தலைவருக்கு வழங்கிய பட்டப் பெயர். காளிங்கர் - திருக்குறள் உரையாசிரி யருள் ஒருவர். காளிங்கன் - கலிங்கதேசத் துள்ளவன், கண்ணனால் அடக்கப் பட்ட ஒரு பாம்பு. காளிதம் - களிம்பு. காளிதாசன் - வடமொழிப் புலவருள் ஒருவர். காளிந்தி - யமுனை. காளிப்பணம் - மூன்று அணா நான்கு பை மதிப்புள் பழைய நாணயம். காளிமம், காளிமை - கறுப்பு. காளியன் - கண்ணன் மிதித்தாடிய பாம்பு. காளை - இளவெருது, கட்டிளமைப் பருவத்தினன், ஆண்மகன், பாலை நிலத் தலைவன், வீரன். காளைக்கன்று - பசுவின் ஆண்கன்று. காளையம் - பேராரவாரம். காறல் - தொண்டையில் உண்டாகும் கறகறப்பு, காறும் பொருள். காறாக்கருணை - சேனைச்செடி. காறு - கால அளவு, கொழு. காறுகருணை - கருணைக்கிழங்கு. காறுதல் - காறற் சுவையாதல், கோழையைத் தொண்டையி லிருந்து கொண்டுவர முயலுதல், கறுத்தல், வைரங் கொள்ளுதல். காறுபாறு - கவனிப்பு. காறை - சிறுவர் கழுத்தணி வகை. காறையெலும்பு - கழுத்தெழும்பு. காற்கடைகொள்ளுதல் - அலட் சியம் செய்தல். காற்காறை - காலாபரணம். காற்குளம் - பூரநட்சத்திரம். காற்சரி - பாதசரம். காற்சவடி - காற்காப்பு. காற்சிலம்பு - காலணி வகை. காற்படுதல் - அழிதல். காற்படை - கோழி, காலாட்படை. காற்பரடு - புறவடி. காற்பனிகம் - கற்பிக்கப்பட்டது. காற்பாசம் - பருத்தி. காற்பெய்தல் - ஓடுதல். காற்றாடி - கழற்கறங்கு, காற்றாடிப் பட்டம். காற்றாலை - காற்றாடிகள் சுழல் வதால் நீரிறைக்கும் எந்திரம் (Wind mill) காற்றின் சகாயன் - தீ. காற்றினாள் - சுவாதி நாள். காற்று - வாயு, உயிர்ப்பு. காற்றுதல் - வெளிப்படுத்துதல், அழித்தல். காற்றுமானி - காற்றின் அழுத்தத்தை அளக்கும் கருவி. காற்றேறு - காற்றினால் உண்டாகும் ஒருவகை முத்துக் குற்றம். காற்றொழில் - அற்பவேலை. காற்றோட்டம் - காற்று உலாவுதல் (Ventilation) காற்றோட்டி - ஒருவகைக் கொடி. கானகம் - காடு. கானக்குறுத்தி முலைப்பால் - தேன். கானக்கோழி, கானங்கோழி - காட்டுக்கோழி. கானசரம் - நாணல். கானடா - ஓர் இராகம். கானநாடன் - முல்லைநிலத் தலைவன். கானப்படம் - காடெழுதின கேடயம், வலை. கானப்பேர் - காளையார் கோயில். கானம் - காடு, நந்தவனம், வாசனை, தொகுதி, பேதை, தேர், இசைப் பாட்டு, வானம்பாடி. கானல் - வாசனை, கடற்கரை, கடற்கரைச் சோலை, கழி, உப்பளம், உவர்நிலம், மலை சார்ந்த சோலை, வெப்பம், சூரிய கிரணம், ஒளி, பேய்த் தேர். கானல்வரி - கழிக்கரைப் பாடல். கானவன் - குறிஞ்சி முல்லை அல்லது பாலைநிலத்துமகன், குரங்கு. கானனம் - காடு. கானனீர் - கானலில் தோன்றும் நீர்த்தோற்றம். கானா - சுக்கான் கைப்பிடி. கானாங்கள்ளி - இலைக்கள்ளி. கானாங்கோழி - காட்டுக்கோழி. கானான் - ஒருவகைக் கொடி. கானீனன் - கன்னிபெற்ற மகன், கன்னன். கானெறி - சன்னல். கானை - காளையார்கோயில். கான் - எழுத்துச்சாரியைகளுள் ஒன்று, வாய்க்கால், காடு, வாசனை, பூ. கான்கிரீட்டு - மணலும் சீமெந்தும் கல்லும் கலந்த கலவை. (Con crete) கான்படுதிரவியம் - அரக்கு, தேன், இறால், பீலி, நாவி. கான்புலி - காட்டுப்பூனை. கான்மரம் - ஆல். கான்மியம் - மும்மலத்துள் ஒன்றாய் அநாதியாயுள்ள கன்மலம். கான்மிரம் - காசுமீரம். கான்முனை - குழந்தை. கான்யாறு - முல்லை நிலத்துள்ள ஆறு. கான்றல் - இருமிக்கோழை துப்புகை, வெளிப்படுத்துதல், சிந்துதல். கான்றை - மரவகை. கி கிகிணி - காக்கணம், கரிக்குருவி. கிக்கிரி - மீன்கொத்திப் புள். கிங்கரன் - ஏவலாள். கிங்கிணி - பாதசதங்கை, அரைச் சதங்கை. கிங்கிலியன் - ஏவலாளன். கிகலயம் - தளிர். கிசனி - பறவையின் செலவு. கிச்சடி - சோற்றுவகை, கறிவகை. கிச்சிலி - கொழிஞ்சி, நாரத்தை, பூலாங் கிழங்கு. கிச்சு - நெருப்பு. கிஞ்சம் - சிறிது, புளி. கிஞ்சல் - சுருக்கம். கிஞ்சனன் - ஏழை. கிஞ்சிஞ்ஞத்துவம் - சிற்றறி வுடைமை. கிஞ்சித்து - கொஞ்சமாக. கிஞ்சில், கிஞ்சு - சிறிதான. கிஞ்சுகம் - முள்முருக்கு, பலாசு, சிவப்பு, கிளி. கிஞ்சுகி - பலாசு. கிஞ்ஞா - காயா. கிட - ஒரு நிகழ்கால இடைநிலை. கிடகு - இருபத்து நான்கு விரல் கொண்ட முழம். கிடக்கை - படுக்கை, படுத்திருக்கும் நிலை, பூமி, இடம், பரப்பு, உள்ளுறு பொருதுள். கிடங்கர் - கடல், அகழி. கிடங்கில் காவிதி பெருங் கண்ண னார் - சங்ககாலப் புலவர் (நற். 364) கிடங்கில் குலபதினைக் கண்ண னார் - சங்க காலப் புலவர் (குறு. 252) கிடங்கு - அகழ், குளம், குழி, பண்ட சாலை (Ware House) கிடத்தல் - படுத்தல், உறங்குதல், தங்குதல், கூடியதாதல். கிடப்பு - கிடந்து நிலை, துயிலகை. கிடா - கடா. கிடாய் - ஆட்டின் ஆண். கிடாரம் - பெரிய மிடா. கிடாரவன் - அகில். கிடிகி - சன்னல். கிடுகிடு - ஒரு பறை, நடுக்கம். கிடுகிடுத்தல் - நடுங்குதல், ஒலித்தல். கிடுகின்படம் - தோற்கேடகம். கிடுகு - கேடகம், சட்டப்பலகை, தேர் மரச்சுற்று, முடைந்த ஒலைக் கீறு, வட்டவடிவமான பாறை. கிடுமுடி - ஒருவகைச் சிறு பறை கிடேச்சு - ஒருவகை நீர்ச்செடி, (கிடைச்சி) நெட்டி. கிடை - கிடக்கை, இருப்பிடம், வேதமோதும் பாடசாலை, ஆயுதம் பயிலிடம், உட்கருத்து, சந்தேகம், உவமை, கிடேச்சு, நேர் சரிவாக (Horizontal). கிடைப்படம் - ‘பிளான்’ (plan). கிடைப்படுதல் - கட்டுப்படுதல். கிட்கிந்தை - வாலி சுக்கிரீவர்களின் இராசதானி - மைசூருக்கு வடபா லுள்ள மலை. கிட்ட - அருகே. கிட்டத்தட்ட - ஏறக்குறைய. கிட்டம் - இரும்பு முதலியவற்றின் துரு, இறுக்கம். கிட்டமுட்ட - ஏறக்குறைய. கிட்டலர் - பகைவர். கிட்டாக்கனிக்கொட்டை - சேராங் கொட்டை. கிட்டார் - பகைவர். கிட்டி - நுகமுளை, சிறுவர் விளை யாட்டுக் கருவிகளுள் ஒன்று, கைத் தாளம், சின்னிச்செடி, பன்றி, தலை யீற்றுப் பசு. கிட்டிகட்டுதல் - நெருக்கி வருத்துதல். கிட்டிணம் - கறுப்பு. கிட்டுதல் - சமீபித்தல், கிடைத்தல், இறுகுதல், கட்டுதல். கிணகன் - அடிமை. கிணறு - கேணி வகை. கிணற்றுத்தானம் - பிறந்த இலக்கி னத்திலிருந்து நாலாமிடம். கிணாட்டு - ஓலை நறுக்கு, மீன் செலுப்பு முதலியன. கிணீரெனல் - ஓர் ஒலிக் குறிப்பு. கிணை - ஒருவகை மருதப் பறை, உடுக்கை. கிணைநிலை - கிணையன், வேளா ளனைக் கிணைகொட்டிப் புகழும் புறத்துறை. கிணைமகள் - விறலி. கிணைமகன், கிணையன் - கிணைவன் - கிணைப்பறை கொட்டுபவன். கிண்கிணி - கிங்கிணி, காற்சதங்கை. கிண்டி - மூக்குத்துளையால் நீர் விழும் சிறுகலம். கிண்டுதல் - கிளறுதல், தோண்டுதல், ஆராய்தல். கிண்ணகம் - நீர்ப் பெருக்கு. கிண்ணம் - சிறு வட்டில். கிண்ணாரம் - ஒரு நரம்பிசைக் கருவி. கிண்ணி - கிண்ணம், பசு முதலிய விலங்குகளின் குளம் பின் மேலுள்ள திரட்சி. கிண்ணனல் - ஓர் ஒலிக்குறிப்பு. கித்த - விரைவாக. கித்தம் - செய்யப்பட்டது. கித்தான் - சணற்கயிறு, ஒரு வகை உரப்புத்துணி. கித்தில் - கூந்தற் கமுகு. கித்துதல் - ஒற்றைக்காலால் தத்தி நடத்தல். கிந்துதல் - நொண்டி நடத்துதல். கிம்புரி - யானைத் தந்தத்திலிடும் பூண், முடியுறுப்புள் ஒன்று, நீர் விழுதற்கு மகரவாய் வடிவில் அமைக்கப்பட்ட தூம்பு, மகரவா யென்னும் ஆபரணம். கிம்புருடர் - மனிதமுகமும் குதிரை யுடலும் படைத்த தேவசாதியார். கிம்புருடவருடய் - ஒன்பது நிலங் களுள் ஒன்று. கியாதி - புகழ் பிருகுவின் மனைவி. கியாழம் - குடிநீர், கசாயம். கிரகச்சித்திரம் - குடும்பச் சச்சரவு. கிரகணம் - பற்றுகை, மனதிற் கிர கிக்கை, சந்திர சூரியர்களின் கிர கணம். கிரகபதி - சூரியன். கிரகபரிவிருத்தி - கிரகத்தின் சுற்று. கிராகம் - கோள்கள், தாளப் பிர மாணத்தொன்று. கிரகவக்கிரம் - கிரகம் பின் நோக்கிச் செல்லும் கதி. கிரகித்தல் - பற்றுதல், உணர்தல், குறிப்பாலறிதல். கிரணமாலி - சூரியன். கிரணம் - கதிர், ஒளி, சிவாகமங் களின் ஒன்று. கிரணன் - சூரியன். கிரது - ஒரு நரகம், ஒரு முனிவர். கிரந்தம் - நூல், வட மொழியை எழுதற்குத் தமிழ் மக்கள் வழங்கிய எழுத்து, வடமொழி. கிரந்தி - முடிச்சு, கிரந்தி நோய் (syphilis) கிரந்திதகரம் - நந்தியாவர்தம். கிரந்திநாயகம் - ஒருவகைப் பூடு. கிரந்து - தீர்த்தங்கரருள் ஒருவர். கிரமச்சா - கிரக கணிதத்தின் உறுப்பு. கிரமதாடி - வேதத்தின் கிரமபாட மோதுவதில் வல்லவன். கிரமம் - ஒழுங்கு, நீதிமுறை, வேதமோது முறை. கிரயம் - விற்பனை, விலைத்தொகை. கிரவுஞ்சகிரி - இமயமலைத் தொடரின் கீழ்ப்பாகத்துள்ள ஒரு மலை. கிரவுஞ்சத்தீவு - ஏழு தீவுகளுள் ஒன்று. கிரவுஞ்சம் - அன்றில், கோழி, பறக்கும் அளவுள்ள தூரம், ஒரு மலை. கிராமபோன் - ஒலிப்பெட்டி. கிராக்கி - அருவிலை. கிராணம் - மூக்கு, கிரகணம், சிறு வட்டில். கிராதம் - ஐம்பத்தாறு தேசங்களுள் ஒன்று. கிராதன் - மலைக்குறவன், கொடி யவன். கிராதி - படல் (Grating) கிராந்தி - கிரகச்சாய்வு. கிராந்திவீதி - சூரிய வீதி. கிராந்துதல் - மறைந்து கொள் ளுதல். கிராமசிம்மம் - நாய். கிராமணி - கிராமத் தலைவன், சான்றார், கைக்கோளர் பட்டப் பெயர். கிராமம் - மருதநிலத்தூர், ஊர் நீர்ப் பறவை. கிராமாந்தரம் - நாட்டுப்புறம். கிராமியம் - இழிசனரது கொச்சைப் பேச்சு, இழிவானது. கிராம் - கடிவாளம். கிராம்பு - இலவங்கம். கிராம்புப்பூடி - கிராம்பு வடிவான ஒரு காதணி. கிராய் - பற்காடு. கிரி - பன்றி, மலை. கிரிகன்னி - துர்க்கை. கிரிகிரி - காட்டுப் பன்றி. கிரசரம் - யானை. கிரிசன் - சிவன். கிரிசு - ஒருவகைக் குற்றுவாள். கிரிசை - பார்வதி, கிரியை. கிரிச்சம் - வருத்தம். கிரிச்சரோகம் - மூத்திரரோகம். கிரிதுர்க்கம் - மலையரண். கிரிமிஞ்சி - ஒருவகைச் சிவப்புச் சாயம். கிரியாசத்தி - உலகப் படைப்பைச் செய்து கன்மங்களுக்கு ஈடாக தனுகரணங்களை உயிர்களுக்குக் கொடுக்கும் சிவசத்தி. கிரியாவதி - தீக்கைவகை. கிரியாவான் - அனுட்டான முள்ள வன். கிரியை - செய்கை, பூசை, தாளப் பிரமாணத்தொன்று, வினை. கிரீராசம் - இமயமலை. கிரீசன் - சிவன். கிரீடதாரணம் - முடிதரிக்கை. கிரீடம் - மணிமுடி. கிரீடி - அருச்சுனன், அரசன், விளையாடுதல், புணர்தல். கிரீடை - விளையாட்டு, புணர்ச்சி. கிரீட்டுமம் - முதுவேனிற்காலம். கிரீட்டுமசுந்தரி - செருப்படிப் பூண்டு. கிரீதன் - பெற்றோரிடமிருந்து விலைக்கு வாங்கப்பட்ட சுவீகார புத்திரன். கிரீவம் - கழுத்து. கிருகசாரி - இல்லற நிலையிலுள்ள வன். கிருகச்சித்திரம் - குடும்பச் சச்சரவு. கிருகத்தன் - இல்லறத்தான். கிருகப்பிரவேசம் - புது வீட்டிற் புகும்போது செய்யும் சடங்கு. கிருகம் - வீடு. கிருகரன் - தச வாயுக்களில் ஒன்று. கிருகி - இல்லறத்தான். கிருகிணி - மனைவி. கிருசம் - இளைப்பு. கிருசரான்னம் - அன்னத்துடன் எள்ளுப் பொடி கலந்த உணவு. கிருசரோகம் - தேகத்தை வற்றி ஒடுக்கும் நோய். கிருட்டி - தலை ஈற்றுப் பசு, பன்றி, ஒரு வகைப் பறவை. கிருட்டிணசகாயன் - அருச்சுனன். கிருட்டிணபக்கம் - தேய்பிறைப் பக்கம். கிருட்டிணம் - கறுப்பு, மிளகு. கிருட்டிணமிருகம் - கருநிறமுள்ள மான்வகை. கிருட்டிணராயன் - 16ஆம் நுற்றாண்டுத் தொடக்கத்தில் விசய நகரத்தை ஆண்ட அரசருள் ஒருவன். கிருட்டிணன் - கண்ணன், அருச் சுனன். கிருட்டிணை - திரௌபதி, ஓர் ஆறு, கடுகு, வால்மிளகு. கிருதகிருத்தியன் - செய்தற்குரிய கடமையைச் செய்து முடித்தவன். கிருதஞ்ஞன் - செய்நன்றியறிபவன். கிருதம் - செய்யப்பட்டது, கிருதயுகம், நெய். கிருதயுகம் - முதல்யுகம், 17,28,000 கொண்ட ஆண்டு. கிருதா - கன்னமீசை. கிருதி - கீர்த்தனம். கிருது - செருக்கு, ஒய்யாரம். கிருத்தம் - செய்யப்பட்டது. கிருத்தி - தோல். கிருத்திகை - கார்த்திகை. கிருத்திமம் - கிருத்தி, செயற்கை யானது, பொய், பூதம். கிருத்தியம் - தொழில், கிரிகை வகை. கிருத்திரம் - கழுகு. கிருந்திரிமம் - போலியானது, வஞ்சனை. கிருத்திரிமன் - பெற்றோர் அனுமதி யின்றிச் சுவீகார புத்திரனாகச் செய்து கொள்ளப்பட்டவன். கிருபணம் - உலோபம். கிருபன் - கிருபாசாரியன். கிருபாகடாட்சம் - அருட்பாவை. கிருபாகரம் - திருவாரூர். கிருபாகரன் - அருளுக்கு இருப்பிட மானவன். கிருபாசாரியன் - கௌரவ பாண்ட வரின் வில்லாசிரியருள் ஒருவன். கிருபை - கருணை. கிருமி - புழு. கிருமியுணா - ஒருவகை நரகம். கிருஷி - வேளாண்மை. கிரேதம், கிரதேயுதம் - கிருதயுகம். கிரேனிடல் - அஞ்சி ஒடுங்குதல். கிலம் - சிதைந்தது. கிலாசு - கப்பற் றொழிலாளி. கிலாம் - கோபம். கிலாய்த்தல் - கோபித்தல், அங்க லாய்த்தல். கிலி - பயம். கிலீபம் - அலி. கிலிகிலி - கிலுகிலுப்பை. கிலுகிலுத்தல் - ஒலித்தல், ஆர வாரித்தல். கிலுகிலுப்பை - ஒலிசெய்யும் ஒரு விளையாட்டுக் கருவி, செடிவகை, மீன்கொத்திப் பறவை. கிலுக்கம் - பறவை வகை. கிலுக்கு - ஒலிக்கை. கிலுங்குதல் - ஒலித்தல். கிலுத்தம் - மணிக்கட்டு, மக்கள் வடிவான பழமுள்ள மரவகை. கிலேசம் - துக்கம். கிலேதம் - உடலின்மேலிடும் மருந்து நீர். கில்தல் - ஆற்றல் கொள்ளுதல். கில்லம் - கழுத்து. கில்லோமீட்டர் -0.621 மைல் (Kilo Metre) கிழகத்தி, கிழகித்திய - கிழக்குத் திசைக்குரிய. கிழக்கு - கீழ்த்திசை, கீழிடம், இழிவு, பள்ளம். கிழங்கு - கொடி செடி முதலிய வற்றின் மூலம், காரணம். கிழடு - முதியது. கிழத்தி - உரியவள், தலைவி. கிழமை - உரிமை, சிநேகம், குணம், வாரநாள். கிழம் - முதுமை. கிழலை - திசை, மரக்கலத்தின் சாய்வுப் பக்கம். கிழவது - உரியது. கிழவன் - உரியவன், தலைவன், மருத நிலத் தலைவன், வயது முதிர்ந் தவன், பரணி. கிழவி - தலைவி, முதியவள். கிழவு - கிழத்தனம். கிழவோன் - உரியவன், தலைவன். கிழாஆன் - தயிர், தயிர்த்தாழி. கிழார் - வேளாளர் பட்டப்பெயர், தண்ணீர் இறைக்கும் பொறி, தோட்டம். கிழாள் - உரியவள். கிழி - கிழிக்கப்பட்ட ஆடை, துணி யில் எழுதிய ஓவியம், பொருள் முடிப்பு. கிழிதம் - பொன் முடிப்பு. கிழிப்பு - கிழிக்கை, பிளப்பு, குகை. கிழியல் - கிழிவு, கிழிந்தது. கிழியிடு - பொன் முடிப்பு. கிளத்தல், கிளத்துதல் - புலப்படக் கூறுதல், விதந்து கூறுதல். கிளப்பம் - கிளர்ச்சி. கிளப்பு - எழுப்புவகை, சொல்லுகை. கிளப்புதல் - எழுப்புதல், நீக்குதல், உண்டாக்குதல். கிளம்புதல் - மேல்வருதல், மூண் டெழுதல், உண்டாதல். கிளராலயம் - ஒரு தமிழ்க் கணித நூல். கிளர் - பூந்தாது, ஒளி. கிளர்தல் - மேலெழுதல், வளர்தல், மிகுதல், விளங்குதல், சிறத்தல், உள்ள எழுச்சி, கொள்ளுதல், சினத்தல். கிளர்வரி - நடப்புவகை. கிளவி - மொழி, பேச்சு, அகப் பொருட்டுறை. கிளவிக்கொத்து - கோவைப் பிர பந்தத்தின் பலதுறை கொண்ட அதிகாரம். கிளவிக்கோவை - அகப் பொருட் கோவை. கிளவித்தலைவன் - அகப்பொருள் தலைவன். கிளவியாக்கம் - தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் வழுவற மொழி களை ஆக்குதற்கரிய விதிகளைக் கூறும் முதற்பகுதி. கிளறுதல் - கிண்டுதல், கலக்குதல், துழாவுதல். கிளி - பறவை வகை. கிளிச்சிறை - கிளிச் சிறகு போன்ற நிறமுள்ள பொன்வகை. கிளிஞ்சில் - சிப்பி, ஓடு. கிளித்தட்டு - ஒருவகை விளையாட்டு. கிளிப்பிள்ளை - இளங்கிளி. கிளிமூக்கு - சுவடிகளில் ஏடுவிழாமல் தடுக்க வைக்கும் ஓலையீர்க்கு. கிளியீடு - கிளியினால் சேர்த்து வைக்கப்பட்ட கதிர்கள். கிளுகிளுத்தல் - மகிழ்தல். கிளுவை - செடிவகை, பறவை வகை. கிளை - கப்பு, தளிர், பூங்கொத்து, சுற்றம், இனம், ஓர் இசைக்கருவி. கிளைசிரைசா - கிளுவை வகை (Glycyrhieza) கிளைஞர் - உறவினர், மருது நிலமாக்கள், நட்பினர். கிளைசிரைசின் - இனிப் பெண்ணெய் (Gycerine) கிளைதல் - நீக்குதல். கிளைத்தல் - கிளைவிடுதல், பெருகுதல், நெருங்குதல், வளைதல், விளைதல். கிளைப்பு - கவர்விடுகை, கிண்டுகை. கிளைமை - உறவு. கிளையிதழ் - புறவிதழ். கிள்ளாக்கு - அதிகாரச் சீட்டு. கிள்ளாப்பிறாண்டு - பிள்ளைகளின் விளையாட்டு. கிள்ளி - சோழர் பட்டப்பெயர். கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சோகோவனார் - சங்க காலப் புலவர் (நற். 365) கிள்ளுக்கீரை - கிள்ளி எடுக்கப்படும் கீரை, எளிமையானது. கிள்ளுதல் - நகத்தாலெடுத்தல், தோண்டுதல், அழித்தல். கிள்ளை - கிளி, குதிரை. கிள்ளைச்சாதம் - கிளிக்குஞ்சு. கிள்ளைவிடுதூது - தலைவி காதல னிடம் கிளியைத் தூதுவிடுவதாகச் செய்யப்படும் பிரபந்தம். கிறவுன் - நாணய வகை (Crown) கிறாம் - 15.43 தானிய எடை (Gramme) கிறி - வழி, குழந்தையின் முன் கையி லணியும் சிறு பவளவடம், பொய், தந்திரம், மாயம். கிறிச்சிடுதல் - கிறிச்சென்று ஒலித்தல். கிறிசு - குத்துவாள். கிறித்தல் - மாயஞ்செய்தல். கிறு - ஒரு நிகழ்கால இடைநிலை. கிறுகிறுத்தல் - மயக்கமாதல், தலை சுழலுதல். கிறுகிறுப்பு - தலைச்சுழற்சி. கிறுகிறெனல் - விரைவுக் குறிப்பு. கிறுக்கல் - தாறுமாறாக எழுதுகை. கிறுக்கன் - கருவமுடையவன், பைத்தியக்காரன். கிறுக்கு - உருத்தெரியாத எழுத்து, பைத்தியம், அகங்காரம். கிறுங்குதல் - அசைதல். கின்று - ஒரு நிகழ்கால இடைநிலை. கின்னகம் - தூக்கணங் குருவி. கின்னம் - துன்பம். கின்னரமிதுனம் - ஆண் பெண் இரட்டை. கின்னரம் - இசை எழுப்பும் பறவை வகை, நீர்வாழ் பறவை, ஒருவகை யாழ், ஆந்தை. கின்னரர் - மனிதவுடலும் குதிரை முகமுடையவராய் இசைவல்ல தேவசாதியார். கின்னரர்பிரான் - குபேரன். கின்னரி - யாழ்வகை, கின்னருவப் பெண். கின்னிக்கோழி - கினியா தேசத்துக் கோழி. கீ கீகசம் - எலும்பை ஒட்டிய தசை, மூங்கில், குரங்கு, தலைச்சீரா. கீசகன் - விராட சேனாதிபதியாய் வீமனாற் கொல்லப்பட்டவன். கீசர - சரக்கொன்றை. கீச்சி - பாசிமணியாலான கழுத்தணி. கீச்சிடுதல் - கீச்சென்று சத்தமிடுதல். கீச்சு - அழுகை ஒலி, புள் ஒலி. கீச்சுக்கிட்டம் - இரும்புக்கிட்டம். கீச்சுக்கீச்சுத்தம்பலம் - சிறுவர் விளையாட்டு. கீடணம் - கீழ்மை, கேடு. கீடப்பகை - வாய் விளங்கம். கீடமணி - மின்மினி. கீடம் - புழு, வண்டு. கீண்டல் - கிழிக்கை. கீதநடை - சாமவேதம். கீதம் - இசைப்பாட்டு, இசை, வண்டு, மூங்கில். கீதவேதம் - சாமவேதம். கீதாங்கம் - கீதத்துக்கு வாசிக்கும் வாச்சியக் கூறு. கீதி - பாட்டு, கருங்காலி. கீதை - பகவற்கீதை, நல்ல நீதிகளைக் கூறும் தெய்வப்பாடல். கீரங்கீரனார் - சங்க காலப் புலவர் (நற். 79) கீரங்கொற்றனார் - சங்க காலப் புலவர். கீரந்தை - இடைச்சங்கப் புலவருள் ஒருவர். கீரந்தையார் - பரிபாடல் 2ம் பாடல் செய்தவர். கீரம் - கிளி, பால், நீர். கீரவாணி - ஓர் இராகம். கீரன் - நக்கீரன். கீரி - கீரிப்பிள்ளை. கீரை - இலைக்கறி. கீரைப்பாம்பு - வயிற்றிலுண்டாகும் நாகப்பூச்சி (Thread Worm) கீரைமணி - கழுத்திலணியும் ஒரு வகைப் பாசிமணி. கீர் - சொல். கீர்த்தனம், கீர்த்தனை - இசைப் பாட்டு. கீர்த்தி - புகழ். கீர்த்தித்தானம் - சென்மலக்கினம். கீர்த்திப்பிரதாபம் - புகழும் ஆற்ற லும். கீர்வாணம் - வடமொழி. கீலக - ஓர் ஆண்டு. கீலகம் - தந்திரம், ஆணி, பொருத்து. கீலம் - ஆணி, சுடர்க்கொழுந்து, பிசின், கிழித்துண்டம், வெட்டு. கீலாரி - இடையர் தலைவன். கீலாலம் - நீர், இரத்தம். கீலி - தந்திரமுள்ளவள். கீலுதல் - கிழித்தல். கீலெண்ணெய் - தார். கீல் - உடற்பொருத்து, கதவின் பிணைப்பு, தார் (Pitch) கீல்வாதம் - நோய்வகை (Gout, Rheumatism) கீழங்கம் - பின்னத்தின் கீழ்த்தொகை. கீழண்டை - கிழக்குப் பக்கம், கீழ்ப் புறம். கீழறுதல் - சேனைகளின் மனப் போக்குப் பகைவராற் பேதிக்கப் படுதல். கீழறுத்தல் - சதி செய்தல், நிலத்தில் சுரங்கஞ் செய்தல். கீழறை - நிலவறை. கீழாநெல்லி - கீழ்வாய் நெல்லி. கீழிசை - பாடுதற் குற்றங்களுள் ஒன்று. கீழிடுதல் - தாழ்த்துதல். கீழுலகு - நாகலோகம். கீழோங்கி - செம்படவரிற் கீழ்க் குலத்தார். கீழோர் - தாழ்ந்தோர், உழவர். கீழ் - கீழிடம், கிழக்கு, பள்ளம், முற் காலம், குற்றம், கயமை, இழிந்தவன், மறதி. கீழ்க்கடை - கடந்துபோன நாட்கள், இழிந்தது. கீழ்க்கணக்கு - வெண்பாவின்பால் அறம் பொருள் இன்பங்களைப் பற்றிக் கூறும் நூல் வகை. கீழ்காற்று - கிழக்கினின்று வீசுங்காற்று. கீழ்சாதி - இழிகுலம். கீழ்தல் - கிழித்தல். கீழ்த்திசை - கிழக்கு. கீழ்நிலை - தாழ்ந்த நிலைமை, கீழ் மாடம், நிலவறை. கீழ்நோக்கிராசி - நிலத்தில் நடுகை கிணறு வெட்டுகை முதலிய வற்றுக் கேற்ற கர்க்கடகம் விருச்சிகம் என்னும் இராசிகள். கீழ்பால்விதேகம் - நவ கண்டங் களுள் ஒன்று. கீழ்ப்படிதல் - அடங்கி நடத்தல். கீழ்ப்படுதல் - அடங்குதல், இழிவு படுதல். கீழ்ப்பால் - கீழ்சாதி. கீழ்மக்கள் - இழிந்தோர். கீழ்மகன் - கீழ்சாதியான், இழிந்தவன், சனி. கீழ்மடங்கு - காரணி (Submultiple) கீழ்மடை - கடைமடை, நீர்பாய் தற்குத் தூரமான நிலம். கீழ்மரம் - அச்சுமரம். கீழ்மேலாதல் - தலைகீழாதல். கீழ்மை - இழிவு. கீழ்வயிறு - அடிவயிறு. கீழ்வாய் - மோவாய். கீழ்வாய்நெல்லி - கீழாநெல்லி. கீழ்வாயிலக்கம் - ஒன்றுக்குக் கீழ்ப் பட்ட எண் வாய்ப்பாடு. கீழ்வு - கீழிடம். கீளி - கடல்மீன்வகை. கீளுதல் - கீழித்தல், உடைதல். கீள் - கூறு, அரையிற்கட்டும் துணி. கீறல் - கிழிகை, வரிவகை. கீறு - பிளப்பு, வரி (Dash), துண்டம். கீறுதல் - வரிகீறுதல், எழுதுதல், கிழித்தல், விரலால் பறண்டுதல், ஆயுதத்தால் அறுத்தல், வகிர்தல், குறிப்பித்தல், கடத்தல். கீற்பிடிப்பு - வாதப்பிடிப்பு. கீற்று - வரி, துண்டு, கூரைவேயுங் கிடுகு, வயிரக் குற்றத்தில் ஒன்று. கீற்றுமதி - மூன்றாம்பிறைச் சந்திரன். கீன்றல் - கீறுவகை. கீனம் - இழிவு, குறைவு. கு கு - நான்கனுருபு, ஒரு சாரியை, பூமி, நிறம். குகப்பிரியா - ஓர் இராகம். குகரம் - மலைக்குகை, சுரங்கம். குகரர் - சாகத் துவில் வாழும் ஒரு சாதியார். குகவேளாளர் - செம்படவர் சிலர்க்கு வழங்கும் சாதிப்பெயர். குகு - வசை, தன நாடிகளுளொன்று. குகுரம் - ஐம்பத்தாறு தேசங்களுள் ஒன்று. குகை - மலைக்குகை, முனிவர் இருப்பிடம், சிமிழ், உலோகங்களை உருக்கும் கலம், சமாதி அறை. குகை நமச்சிவாயர் - 16ஆம் நூற் றாண்டில் வாழ்ந்த புலவர் அருண கிரி அந்தாதி பாடியவர். குக்கர் - மிக இழிந்தோர். குக்கல் - கக்குவான், நாய். குக்கன் - நாய். குக்கி - வயிறு. குக்கில் - செம்போத்து, குங்குலியப் பிசின். குக்குதல் - இருமுதல். குக்குடசர்ப்பம் - வயது நீடித்தலால் உடல் குறைந்து கோழி பறக்குமளவு பறந்து செல்லும் தன்மையான பாம்பு. குக்குடதீபம் - கோழி வடிவான கோயில் விளக்கு. குக்குடம் - கோழி, குக்குடசர்ப்பம். குக்குடாசனம் - இரு பாதங்களையும் கீழ்வைத்துக் குந்தி யிருந்துயோகஞ் செய்யும் ஆசனம். குக்குலு, குக்குலுவம் - குங் குலியம். குக்கூடல் - முட்டாக்கு. குக்கூவெனல் - கோழி கூவும் ஒலிக் குறிப்பு. குங்கிலியக்கலநாயனார் - அறு பத்து மூன்று நாயன்மாருள் ஒருவர். குங்கிலியம் - ஒருவகை மரம் (பயினி). குங்குதல் - குன்றுதல். குங்குமச்சேராரன் - குதிரையில் ஒரு சாதி. குங்குமப்பூ - குங்குமச்செடியின் பூ. குங்குமம் - ஒருவகைச் செடி, செஞ் சாந்து. குங்குலு - குங்கிலியா மரம். குசக்காணம் - குசவர் செலுத்தும் பழைய வரி. குசம் - தருப்பை, நீர், மரம், பெண்ணின் தனம். குசலம் - சேமம், நற்குணம், மாட்சிமை, சாமர்த்தியம். குசலவித்தை - எண்ணல், எழுதல், இலை கிள்ளல், பூத்தொடுத்தல், யாழ் வாசித்தல், முதலிய மகளிர்க் குரிய விநோதக் கைத்தொழில்கள். குசலன் - மிக வல்லோன். குசவம் - கொய்சகம். குசன் - செவ்வாய். குசால் - மனக்களிப்பு, நடையுடை களின் மினுக்கு. குசிகன் - விசுவாமித்திரன் தந்தை. குசு - அபான வாயு. குசுகுசெனல் - காதுக்குள் ஓதுதற் குறிப்பு. குசுமம் - பூ. குசூர் - அசாக்கிரதை. குசேசயம் - தாமரை. குசேலன் - கண்ணன் நண்பனாகிய ஒரு முனிவன். குசை - தருப்பை, குதிரை வார்க் கயிற்றில் கோத்து முடியும் கயிறு, கடிவாளம், மகிழ்ச்சி, குதிiர்ப் பிடரி மயிர். குசைத்தீவு - ஏழு தீவுகளுள் ஒன்று. குச்சம் - கொத்து, அலங்காரக்குஞ்சம், நாணல். குச்சரம் - கூர்ச்சரம். குச்சரி - ஓர் இராகம், முற்காலத்து வழங்கிய துகில் வகை. குச்சரித்தல் - அருவருப்பு கொள் ளுதல். குச்சி - மரக் குச்சி, முகடு. குச்சிகை - வீணை வகை. குச்சிதம் - இழிவு. குச்சித்தல் - அருவருத்தல். குச்சில் - சிறிய வீடு, குச்சுப்புல். குச்சிலியர் - கூர்ச்சர தேசத் தலைவர். குச்சு - மரக்குச்சு, சிறுகுடில், குஞ்சம், குச்சுப்புல், பாவாற்றி என்னும் நெவுக் கருவி. குச்சுக்காரி - இழிந்த வியபிசாரி. குச்சுமணி - மகளிர் கழுத்தணி. குச்செறிதல் - மயிர் சிலிர்த்தல். குச்சை - கொய்சகம். குஞ்சம் - குறள், கூன், குறளை, பூங் கொத்து, ஈயோட்டி, குன்றி, நாழி, கொய்யகம். குஞ்சரக்குரலகுருகு - யானையங் குருகு என்னும் புள். குஞ்சரணி - கழுத்தணி வகை. குஞ்சரம் - யானை, கருங்குவளை. குஞ்சரவொழுகை - யானை பூட்டிய வண்டி. குஞ்சரி - தெய்வ யானையார். குஞ்சன் - குறளன். குஞ்சாமணி - ஆண் குழந்தைகளின் அரையில் கட்டும் மணி விசேடம். குஞ்சு - குடுமி, யானை, மயில் முதலியவற்றின் உச்சிமயிர், தலை, விருது, சிறுமையானது, பறவைக் குஞ்சு. குஞ்சிதம் - வளைந்தது. குஞ்சித்தல் - கால் தூக்கி வளைத் தல். குஞ்சியப்பன் - தந்தையின் தம்பி, தாயின் இரண்டாம் கணவன். குஞ்சு - பறவைக் குஞ்சு, எலி, அணில் முதலியவற்றின் பிள்ளை. குஞ்சுறை - பறவைக் கூடு. குஞ்சை - நெய்வோர் பாவில் தேய்க்கும் குஞ்சம். குட - வளைந்த. குடகச்செலவு - யாழில் இசைபட வாசிக்கும் வகையுள் ஒன்று. குடகம் - மேற்கு, குடகுமலை. குடகன் - சேரன், மேல் நாட்டான். குடகாற்று - மேல் காற்று. குடகு - மேற்கு. குடக்கம் - வளைவு. குடக்கனி - பலாப்பழம். குடக்கால் - குடம் போன்ற விளக்குத் தண்டு. குடக்கு - மேற்கு. குடக்கூத்து - கண்ணன் குடமெடுத் தாடிய கூத்து. குடக்கோ - சேரன். குடங்கர் - குடம், கும்பராசி, குடிசை. குடங்கால் - மடி. குடங்குதல் - வளைதல். குடங்கை - உள்ளங்கை. குடசப்பாலை - கசப்பு வெட்பாலை. குடசம் - குடசப்பாலை, மலை மல்லிகை. குடச்சூல் - பாதச் சிலம்பு வகை. குடஞ்சுட்டவர் - மாட்டிடையர். குடஞ்சுட்டு - பசு. குடதாடி - தூணின்மேல் வைக்குஞ் குடவடிவான உறுப்பு. குடதேவர் - அகத்தியர். குடத்தி - இடைச்சி. குடநாடன் - சேரன். குடநாடு - மேல்நாடு, செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்த பன்னிரண்டில் ஒன்று. குடந்தம் - குடம், கைகூப்பி வளைந்து வழிபடுகை. குடந்தம்படுதல் - வழிபடுதல். குடந்தை - வளைவு, கும்பகோணம். குடபலை - மணித்தக்காளி. குடபுலவியனார் - சங்ககாலப் புலவர் (புறம். 18,19) குடப்பறை - குடவடிவான பன்றிப் பறை. குடப்பாம்பிற்கையீடுதல் - பாம்பை அடைத்த குடத்தில் கையிட்டுச் சத்தியஞ் செய்தல். குடப்பாம்பு - மதிப்பொறி வகை. குடப்பிழுக்கை - வரிக் கூத்து வகை. குடமலை - குடகுமலை. குடமுழா - முழவு வாத்திய வகை. குடமூக்கிற்பகவர் - முற்காலப் புலவருளொருவர் - வாசுதேவனார் சிந்தம் என்னும் நூல் செய்தவர் (யா-வி -உ). குடமூக்கு - கும்பகோணம். குடம் - நீர்க்குடம், கும்பராசி, பசு, பூசம், குடநாடு, கரும்புக்கட்டி, சதுரக்கள்ளி. குடர் - குடல். குடம்பை - முட்டை, கூடு. குடலுறிஞ்சி - செரித்த பொருள் களை உறிஞ்சும் துய் போன்ற பகுதிகள் (Villi) குடலை - பூக்குடலை, பழக்கூடு, கதிர்க்குடலை. குடல்சுரம் - எண்டரிச்சுரம் (Enteric fever) குடல் - இரைப்பையைத் தொடர்ந் துள்ள குழாய் (Bowel) குடல்வால் அழற்சி - அப்பண்டி சிட்டிஸ் என்னும் நோய் (Appen dicitis) குடவர் - குடநாட்டினர். குடவழுந்தனார் - சங்க காலப் புலவர் (அகம். 97) குடவன் - இடையன், காணிக்கை, ஒருவகை உண்ணி. குடவாயிலினல்லாதனார் - சங்க காலப் புலவர் (புறம். 242). குடவாயிற் கீரத்தனார் - சங்க காலப் புலவர் (அகம். 35) குடவியிடுதல் - வளைத்து அகப் படுத்துதல். குடவு - குகை, வளைவு. குடவோலை - சபையோரைத் தெரிந்தெடுக்கத் குடத்திலிடும் ஓலை நறுக்கு. குடற்பிடுங்கி - துரிசு. குடற்போர்வை - கருப்பை. குடா - வளைவு, குடைவு, மூலை. குடாகாயம் - குடத்தால், அளவு படுத்தப்பட்ட ஆகாயம். குடாக்கடல் - மூன்று பக்கம் தரை சூழ்ந்த கடல். குடாசகம் - கபடம். குடாது - மேற்கு, மேற்கிலுள்ளது. குடாரம் - கோடரி, தயிர் கடைதற்கு நட்ட தறி, தயிர்கடை தாழி. குடாரி - கோடரி, யானைத் தோட்டி. குடாவடி - கரடி. குடி - பருவகை, புருவம், குடியான வன், ஆட்சிக்குட்பட்ட மக்கள், குடும்பம், வமிசம், குலம், ஊர், வாழ்விடம். குடிகேடு - குடும்பநாசம். குடிகை - பர்ணசாலை, கோயில், கமண்டலம். குடிகொள்ளுதல் - நிலையாகத் தங்கியிருத்தல். குடிகோள் - உபாயத்தால் குடியைக் கெடுக்கை. குடிக்கரணம் - குடிவரி. குடிக்காடு - ஊர். குடிக்கிழார் மகனார் நெய்தற்றத்த னார் - சங்க காலப் புலவர் (அகம். 243) குடிக்குச்சகுனி - குடியோட்டிப் பூண்டு. குடிக்கூலி - வீட்டுவாடகை. குடிங்கு - பறவை. குடிசனம் - நாட்டில் வாழும் மக்கள். குடிசெய்தல் - பிறந்த குடியை உயர்த்தல், வசித்தல். குடிசை - சிறு குடில். குடிஞை - நதி, குடிசை, நோட்டான், பறவை. குடிஞைக்கல் - சோழர் காலத்து வழங்கிய ஒருவகை நிறைக்கல். குடிஞைப்பள்ளி - கண்ணுளாளர் தங்கும் நாடக வரங்கின் பகுதி. குடிதாங்கி - குலத்தைத் தாங்கு பவன். குடிதாங்கிக்கோல் - ஒரு பழைய அளவுகோல். குடிதிருத்துதல் - ஆட்சிக்குட்பட்ட குடிகளை நன்னிலையில் நிறுத் துதல். குடித்தனக்காரன் - பயிரிடுவோன், வீட்டில் செல்வாக்குள்ளவன், வீட் டுத் தலைவன். குடித்தனம் - இல்வாழ்க்கை. குடித்தெய்வம் - குலதெய்வம். குடிநற்கல் - குடிஞைக்கல். குடிநிலம் - குடியிருக்கும்மனைநிலம். குடிநிலை - வீரக்குடியின் புகழையும் அஞ்சாமையையும் கூறும் புறத்துறை. குடிநீர் - குடித்தற்குரிய நீர், கியாழம், கசாயம். குடிபுகுதல் - வீட்டில் வசிக்கச் செல்லுதல், நுழைதல். குடிபோதல் - இருப்பிடத்தை விட்டு வெளியேறுதல் குடிபுகுதல், பண்டம் காற்றாக வேனும் ஆவியாக வேனும் கரைதல். குடிப்பழி - குலத்துக்கு ஏற்பட்ட நிந்தை. குடப்பாங்கு - குடியானவன் பின் பற்றும் ஒழுங்கு. குடிப்பாழ் - குடிகள் விட்டு நீங்குதலால் ஊருக்கு உண்டாகும் அழிவு. குடிப்பிறப்பு - உயர்குடியில் தோன்றுகை. குடிப்பெயர் - பிறந்த குலம்பற்றி வரும் பெயர். குடிமகன் - நற்குடும்பத்திற் பிறந் தவன், பரம்பரையடிமை, அம் பட்டன். குடிமக்கள் - பணி செய்தற்குரிய 18 வரைக் கிராம குடிகள். குடிமிராசு - பரம்பரை உரிமை. குடிமை - உயர் குலத்தார் ஒழுக்கம், பிறந்த குடியை உயரச் செய்யும் தன்மை, குடிப்பிறப்பு, அடிமை, குடிகளிடமிருந்து பெறும் வரி. குடிமைப்பாடு - ஊழியம். குடியரசு - பிரசைகளால் நடத்தப்படும் அரசாங்கம் (Republic). குடியானவன் - பயிரிடுவோன். குடியிருக்கை - கிராமத்தில் குடிகள் தங்கியிருக்கும் இடம். குடியிருத்தல் - வசித்தல். குடியிருப்பு - வாழ்வு, குடியிருக்கை, கிராமம். குடியிறை - குடிகள் செலுத்தும் வரி. குடியுரிமை - நாட்டுக்குரியவராகக் கொள்ளப்படுமுரிமை (Domicile) குடியேறுதல் - தம் நாடுவிட்டு வேறு நாடு சென்றுவசித்தல். குடிலம் - வளைவு, சடை, வஞ்சகம், உள்வாங்கிப்பாடும் இசைத் தொழில், குரா, ஈயமணல், வெள்ளீ யம். குடிலை - பிரணவம், சுத்தமாயை. குடில் - குடிசை, ஆகாயம். குடிவாழ்க்கை - இல்வாழ்க்கை, வாழ்வின் ஒழுங்கு. குடீசம் - சன்னியாசம். குடீரம் - குடிசை, பார்ப்பனசாலை. குடு - கள். குடுகு - குடுக்கை. குடுகுடுத்தல் - ஒலித்தல். குடுகுடுப்பை - குடுகுடு என்று ஒலிக்கும் பொருள், பறை வகை. குடுப்பம் - நான்கு பலம் உள்ள அளவு. குடுமி - ஆண் மக்களது மயிர் மாடத்தின் உச்சி, தலை உச்சி, உச்சிக் கொண்டை, நுனி, கிரீடம், கதவின் குடுமி, முடிவு, வெற்றி. குடுமிக்கூந்தல் - உச்சிக்கூந்தல். குடுமிகொள்ளுதல் - வெல்லுதல். குடும்பத்தானம் - இலக்கினத்துக்கு இரண்டாவதாகிய இடம். குடும்பபாரம் - குடும்பத்தைத் தாங்கும் பொறுப்பு. குடும்பன் - குடும்பத் தலைவன். குடும்பி - சமுசாரி. குடும்பினி - மனைவி. குடும்பு - காய் முதலியவற்றின் குலை. குடுவை - வாய்குறுகிய குண்டுப் பாத்திரம், கமண்டலம், சிறுகலம். குடை - கவிகை, அரசாட்சி, மிதி அடியின் குமிழ், நீருண்ணும் ஓலைப் பட்டை, குடைவேல், கவிப்பு. குடைகரி - பொன்னுருக்கும் கரிக்குகை. குடைக்காம்பு - குடையின் கைப்பிடி. குடைக்கூத்து - முருகனாடல். குடைச்சூல் - சிலம்பு, உள்ளிடம் குடைவு படுகை. குடைச்செலவு - எதிர்த்து வந்த படையைத் தடுத்தற்காகச் செல்லு முன் தன் கொற்றக் குடையை நல் வேளையில் புறவீடு விடும் காஞ்சித் திணைத்துறை. குடைதல் - துளைத்தல், நீரில் மூழ்குதல், உணவு எடுத்தல், கிண்டுதல். குடைநாட்கோள் - பகையரசனைக் கொள்ள நினைந்து மேற்சென்ற வேந்தன், தன் குடையை நல் வேளையில் புறவீடு செய்யும் உழிஞைத்துறை. குடைநிலை - பகைமேற்செல்லும் அரசன் தன் குடையை நல் வேளையிற் புறவீடுவிடும் வஞ்சித் திணைத்துறை. குடைந்தாடுதல் - அமிழ்ந்து நீராடு தல். குடைமங்கலம் - நான்குதிக்கும் கீர்த்திமிக வீற்றிருந்த அரசனது குடையைப் புகழ்ந்து கூறும் பாடாண்துறை. குடைமுல்லை - போரில் வெற்றி கொண்ட அரசனது குடையைப் புகழ்ந்து கூறும் வாகைத் துறை. குடையோலை - இழிந்த சாதியார் உண்டற்குரிய ஏனமான ஓலைப் பட்டை, பிழா, தட்டுவம். குடைவிருத்தி - விழாக் காலத்தில் சுவாமிக்குக் குடை பிடிப்பதற்காக ஏற்பட்ட மானியம். குடைவு - பொந்து, குகை. குடைவேல் - உடை மரம். குடோரி - கீறுகை, மண்டையைக் கீறி மருந்திடுகை. குட்சி - வயிறு. குட்டநாடு - கொடுந் தமிழ் நாடுகளுள் ஒன்று. குட்டம் - சிறுமை, குரங்குக்குட்டி, குட்டநோய், ஆழம், மடு, குட்டநாடு, பரப்புள்ள இடம், திரள், சபை. குடைப்பனை - தாளி( (Corypha). குட்டன் - சிறுபிள்ளை, ஆட்டுக் குட்டி. குட்டான் - ஓலைப்பொடி. குட்டி - விலங்கின் பிள்ளைப் பொது. குட்டிக்கரணம் - தலைகீழாகப் புரளும் வித்தை, பெருமுயற்சி. குட்டிச்சாத்தான் - குறளித்தேவதை. குட்டிச்சுவர் - இடித்த சுவர், பாழ் மனை. குட்டித்தொல்காப்பியம் - இலக் கண விளக்கம். குட்டிமரம் - கல் பாவினதரை. குட்டியாண்டவன் - பட்டினவர் வணங்கும் தெய்வம். குட்டியாத்தாள் - சிறியதாய். குட்டினி - கற்பழிந்தவள், கூட்டிக் கொடுப்பவள். குட்டு - கைமுட்டியால் தலையில் இடிக்கை, இரகசியம். குட்டுணி - பிறரால் குட்டுண்டவன். குட்டுதல் - கைமுட்டியால் தலையில் இடித்தல். குட்டுவன் - சேரன், குட்டநாட்டி லுள்ளவன். குட்டுவன் கண்ணன் - சங்க காலப் புலவர் (குறு. 179). குட்டுவன் கீரனார் - சங்க காலப் புலவர் (குறு. 179). குட்டேறு - சிறிய காளை, எருதின் திமில். குட்டை - குறுகிய உருவம், சிறுதுணி, சிறுகுளம், குறுணி, குட்டம். குணகம்-பெருக்குமெண் (Co-efficient) குணகாங்கியம் - பழையதொரு கன்னட யாப்பு நூல். குணகாரம் - பெருக்கல். குணகு - பூத பிசாசம். குணகுதல் - வளைதல், மனந்தளர்தல். குணகோளார்த்தம் - பூமியின் கிழக்குப் பாதிக்கோளம். குணங்கர், குணங்கு - பூதபிசாசம். குணங்குறி - தன்மையும் வடிவும். குணசந்தி - அ, ஆ முன இ ஈ வத்தால் அவ்விரண்டுங்கெட எகாரமும், உ, ஊ வந்தால் அவ் வாறே ஓகாரமுந் தோன்றும் வட மொழிச் சந்தி. குணசாகரர் - யாப்பருங் கலக் காரிகையின் உரையாசிரியர் (12ம் நூ.) குணசீலன் - நற்குண நற்செய்கை களுடையவன். குணஞ்ஞன் - பிறர் நற்குணங்களை யறிந்து மகிழ்பவன். குணதரன் - முனிவன், நற்குண முள்ளவன். குணதிசை - கிழக்கு. குணதிரயம் - சாத்துவிகம், இராசதம், தாமதம் என்னும் மூவகை மூலகணங்கள். குணத்தொகை - பண்புத்தொகை. குணத்தொனி - வில்லின நாணோசை. குணநாற்பது - நாற்பது பாடலா லாகிய இறந்துபட்ட ஒரு பழைய நூல். குணநிதி - நற்குணம் நிறைந்தவன். குணநூல் - நாடகத் தமிழ் நூல் களுள் ஒன்று. குணபம் - சுடுகாட்டிலுள்ள பிசாசு. குணபாகம் - அனுகூலமான நிலை. குணபாசி - பிணம் தின்னும் பிசாசு. குணப்படுதல் - சுகமடைதல், சீர்ப் படுதல். குணப்பண்பு - தன்மையைக் குறிக்கும் பண்புச் சொல். குணப்பெயர் - பண்பு குறிக்கும் பெயர்ச்சொல், பண்படியாகப் பிறந்த பெயர்ச்சொல், சிறப்பியல்பு பற்றி மக்கட்குப் புலவரால் கொடுக்கப் பட்டு வழங்கும் பெயர். குணமால் - சௌக்கியமாதல். குணம் - பொருளின் தன்மை, ஒழுக்கத் தன்மை, கொள்கை, அனுகூலம், நிறம், கயிறு, வில்லின் நாண், குடம். குணலை - ஆரவாரத்துடன் நடிக் கும் கூத்து, வீராவேசத்தாற் கொக் கரிக்கை, நாணத்தால் உடல் வளைகை. குணலையீடுதல் - இரைந்து கூத்தாடுதல். குணவதன் - நற்குணமுடையவன், குண விரதம் அனுட்டிப்பவன். குணவதி - நற்குணமுடையவள். குணவத்தன் - குணவான். குணவாகடம் - நோய்க் குறிகளைக் கூறும் ஒரு வைத்திய நூல். குணவாகுபெயர் - பண்புப்பெயர் பண்பிக்கு ஆவது. குணவாயில் - கீழ்த்திசை. குணவியது - மேன்மையானது. குணவிரதம் - மகா விரதத்துக்கு அடுத்தபடியாகக் கொள்ளப்படும் ஒரு சைவ நோன்பு. குணவீரபண்டிதர் - நேமிநாத நூலாசிரியர் (13ம் நூற்.) குணனம் - பெருக்கல். குணனியம் - பெருக்கப்படும் தொகை. குணாகுணம் - நன்மையும் தீமை யும். குணாக்கிரநியாயம் - மரம் புத்தகம் முதலியவற்றில் புழுவின் அரிப்பு எழுந்தாற்போலத் தற்செயலாக நேர்வதைக் குறிக்கும் நெறி. குணாட்டம் - வரிக்கூத்துவகை. குணாதிசயம் - குணவிசேடம். குணாதீதம் - குணங்கடந்தது. குணாது - கிழக்கிலுள்ளது. குணாலம் - ஒருவகை மகிழ்ச்சிக் கூத்து, வீராவேசத்தால் கொக் கரிக்கை, ஒரு பறவை. குணாளன் - நற்குணமிக்கவன். குணி - குணமுள்ளது, முடமானது, சொத்தைக்கையன். குணிதம் - பெருக்கிவந்த தொகை, மடங்கு. குணித்தல் - கணித்தல், ஆலோ சித்தல், வரையறுத்தல். குணிப்பு - அளவு, ஆராய்ச்சி, மதிப்பு. குணில் - குறுந்தடி, பறையடிக்கும் தடி, கவண். குணு - புழு. குணுகுதல் - கொஞ்சுதல். குணுக்கு - கடிப்பிணை என்னும் காதணி. குணுங்கர் - இழிந்தோர், புலையர், தோற் கருவியாளர், குழற்கருவி வாசிப்போர். குணுங்கு - பேய், கொச்சை நாற்றம். குண்டகன் - சோரபுருடனுக்குப் பிறந்தவன். குண்டக்கணிகை - கற்பழிந்து வேசையானவள். குண்டக்கம் - கோள், வஞ்சனை. குண்டக்கிரியை - ஓர் இராகம். குண்டணி - குறளைச்சொல். குண்டம் - ஓமகுண்டம், வாவி, பானை, கற்பழித்தவன். குண்டலகேசி - ஒரு பௌத்தத் துறவி, பஞ்ச காவியத்துள் ஒன்றுநாத குத்தனார் செய்தது. குண்டலப்பூச்சி - வளைந்து சுருண்டு கொள்ளும் புழுவகை. குண்டலம் - ஆடவர் காதணி, ஆகாயம், வட்டம். குண்டலி - நாபித்தானம், மூலாதாரம், சீந்தில், கஞ்சாச்செடி, சுத்தமாயை. குண்டலினி - மகாமாயை, முதலா தாரத்திலுள்ள பாம்பின் வடி வமைந்த ஒருசக்தி. குண்டற்கச்சி - தென்னைவகை. குண்டன் - வியபிசாரத்திற் பிறந்தோன், இழிந்தோன். குண்டாக்கன் - தலைவன். குண்டாந்தடி - பருத்துக் குறுகியதடி. குண்டான்சட்டி - வாயகன்ற பாத்திர வகை. குண்டி - ஆசனப்பக்கம், மூத்திரா சயம். குண்டியம் - குறளை. குண்டு - பந்துபோல் உருண்டு கன மானது, நிறைக்கல், வகை, ஆண் குதிரை, ஆழம், தாழ்வு, சிறு வயல். குண்டுக்கலம் - 24 மரக்கால் கொண்ட ஓரளவு. குண்டுக்கழுதை - ஆண் கழுதை. குண்டுச்சட்டி - உருண்டையான சட்டி வகை. குண்டுணி - கலகமூட்டுகை, கோள் சொல்லுவோன். குண்டுநீர் - கடல். குண்டுநூல் - தூக்குக்குண்டு நூல் (Plump line) குண்டுப்பாலியாதனார் - சங்க காலப் புலவர் (புறம். 387) குண்டுமரக்கால் - எட்டுப்படி. குண்டூசி - தலைதிரண்டுள்ள ஊசி. குண்டை - எருது, இடபராசி, குறுகித் தடித்தது, குறுமை. குண்டோதரன் - சிவகணத்தாருள் ஒருவன். குதட்டுதல் - குதப்புதல், குழறிப் பேசுதல். குதப்புதல் - மெல்லுதல். குதம் - தீ வளர்த்துச் செய்யும் ஓமம், மலங்கழிக்கும் வாயில் (anus), தும்பல், தருப்பை. குதம்பை - காதில் இடும் ஓலைச் சுருள், காதணி வகை. குதம்பைச்சித்தர் - சித்தருள் ஒரு வர், குதம் பேய்ச்சித்தர். குதர் - பிரிவு. குதர்க்கம் - விதண்டாவாதம். குதர்சொல்லுதல் - நெறிதவறிச் செல்லுதல். குதர்தல் - கோதியெடுத்தல், அடி யோடு எடுத்தல், குதர்க்கவாதம் பண்ணுதல். குதலை - மழலைச் சொல், இனியமொழி, அறிவில்லான். குதலைமை - பொருள் விளங் காமை, தளர்ச்சி. குதறுதல் - சிதறுதல், நெறிதவறுதல், குலைதல். குதற்று - நெறி தவறுகை. குதனம் - அசட்டை, துப்புரவின்மை. குதனைக்கேடு - துப்புரவின்மை. குதி - குதிக்கால், குதிப்பு. குதித்தல் - பாய்தல், எழும்பிவிழுதல், கூத்தாடுதல், கடந்துவிடுதல். குதிப்பு - குதிக்கை, கருவங் கொள்கை. குதிரம் - 35 கழஞ்சளவுள்ள கர்ப்பூரம். குதிரி - அடங்காதவள். குதிரை - பரி, யாழின், ஓர் உறுப்பு, ஊர்க்குருவி, அதியமானின் குதிரை மலை. குதிரைக்கயிறு - குதிரையின் கடிவாளம். குதிரைக்கலணை - குதிரைச் சேணம். குதிரைக்குளம்படி - நீர்ச்சேம்பு. குதிரைக்கொம்பு - கிடைத்தற் கரியது. குதிரைச்சம்மட்டி - குதிரைச் சவுக்கு. குதிரைச்சாரி - குதிரையின் சுற்றி யோடும் கதி. குதிரைச்சேவகன் - குதிரை வீரன். குதிரைத்தறி - நீருடைப்பை அடைத் தற்கு வைக்கோல் முதலியவற்றோடு நிறுத்தும் மரச்சட்டம். குதிரைத்தறியனார் - சங்க காலப் புலவர் (நற். 296). குதிரைத்திறன் - 33,000 இறாத்தல் எடையை ஒரு அடிக்கு ஒரு நிமிடத்தில் உயர்த்தக்கூடிய ஆற்றல் (Horse Power) குதிரை நிலை - குதிரைலாயம். குதிரைப்பந்தி - குதிரைலாயம். குதிரைமறம் - போர்க்குதிரையின் திறப்பாட்டைக் கூறும் புறத்துறை. குதிரைமுக வோடம் - குதிரையின் உருவை முகப்பிற்கொண்ட தோணி. குதிரைமுள் - குதிரையைச் செலுத்து வோர் காலில் இட்டுக் கொள்ளும் முள். குதிரையிராவுத்தன் - குதிரை வீரன். குதிரையேற்றம் - குதிரையேறி நடத்தும் வித்தை. குதிரை வடிப்போர் - குதிரை நடத்துவோர். குதிரைவலி - பெண்களுக்குப் பிள்ளைப் பேற்றுக் காலத்தில் உண்டாகும் பெருவலி. குதிரைவையாளிவீதி - குதிரை செலுத்துதற்குரிய செண்டுவெளி. குதிர் - ஒருவகை மரம், நெல் முதலியன வைக்கும் கூடு. குதுகலம் - மனக்களிப்பு. குதுகுதுத்தல் - ஆசைப்படுதல். குதுகுலம் - குதூகலம். குதூகலம் - மனக்களிப்பு. குதை - அம்பினடி, அம்பு. குதைதல் - செலுத்துதல், தடுமாறச் செய்தல், பசி. குதைத்தல் - விற்குதையில் நாணைப் பூட்டுதல். குத்தம் - எருது. குத்தலரிசி - குற்றித் தீட்டிய அரிசி. குத்தல் - நோவச்செய்கை, ஊன்றல், தின்னல். குத்தன் - காப்பவன், வணிகர் பட்டப் பெயர், குப்த வமிசத்து அரசன். குத்தாலம் - திருவாத்தி. குத்தி - கலப்பைக் கூர், குத்தி யெடுக்கும் கருவி, திரிகரண அடக்கம், குப்பி, மதண், மாறுபாடு. குத்திரம் - வஞ்சம், இழிவு, மலை. குத்து - கை முட்டியால் தாக்கும் இடி, உரலில் குத்துகை, புள்ளி, நோவு, பிடி. குத்துக்கரணம் - குட்டிக்கரணம். குத்துக்கால் - தாங்குதல், தடை. குத்துக்கோல் - தாற்றுக்கோல், பரிக் கோல், முனையில் கூரிய இரும்புள்ள கோல். குத்துதல் - துளையிடுதல், ஆயுதங் களால் குத்துதல், தைத்தல், இடித்தல், களைதல், பறவை கொத்துதல், தின்னுதல், ஊன்றுதல், கிண்டுதல். குத்துயரம் - குத்துக் கோடு (altitude) குத்துவாள் - உடைவாள். குத்துவிளக்கு - உலோகத்தினால் செய்யப்பட்ட நிலைவிளக்கு. குத்தூசி - குத்தித் தைக்கும் ஊசி. குந்தணை - காய்ச்சும்போது பாத்திரம் சிதையுமாயின் தைலம் வீணாகாமல் காத்தற் பொருட்டு அப் பாத்திரத் துககு ஆதாரமாக வைக்கப்படும் இரும்பு அண்டா. குந்தம் - குதிரை, 4 பலங்கொண்ட ஒரு நிறை, துக்கந்தருவது, எறி கோல், வேல், குத்துக்கோல், குருந்து, குபேரன் நவநிதிகளுள் ஒன்று. குந்தலவராளி - ஓர் இராகம். குந்தளம் - மகளிர் தலைமயிர், மயிற் குழற்சி, குழற்கொத்து, சாளுக்கி யரது நாடு. குந்தனம் - இரத்தினம் பதிக்குமிடம், தங்கம். குந்தன் - திருமால், தூய தன்மை யுடையவன். குந்தா - கப்பலின் பின்புறம். குந்தாணி - பேருரல், உரலின் வாய்க் கூடு. குந்தாலி - குத்தித் தோண்டும் கருவி, கணிச்சி. குந்தி - கள், பாண்டுவின் மனைவி யருள் மூத்தவள். குந்து - உட்காருகை, திண்ணை ஒட்டு, நொண்டுகை, பழத்தின் சிம்பு. குந்துதல் - உட்காருதல், முன்னங் கால்களை மட்டும், ஊன்றி, நடத்தல், நொண்டி நடத்தல், வளைதல், தவறுதல். குந்துரக்கம் - பரங்கிச் சாம்பிராணி, வெள்ளைக் குங்குலியம். குபதன் - தீநெறியிற்செல்வோன். குபிதன் - கோபங்கொண்டவன். குபீரெனல் - வேகமாதற் குறிப்பு. குபேசம்பத்து - குபேரனுக்கு உரியது போன்ற பெருஞ் செல்வம். குபேரன் - செல்வத்திற்குத் தலைவ ரான தேவன், பணக்காரன், சந்திரன். குப்பம் - செம்படவர் முதலியோர் வாழும் சிற்றூர், கூட்டம். குப்பல் - குவியல், மேடு, கூட்டம். குப்பாசம் - சட்டை, பாம்புச்சட்டை. குப்பாயம் - சட்டை. குப்பி - ஒருவகைக் குடுவை, சடைக் குச்சு, சிமிழ், வயிரவகை. குப்புறுதல் - கடத்தல், தலைகவிழ விழுதல். குப்பை - குவியல், கூட்டம், செத்தை, மேடு, சதகுப்பை. குப்பைகிளைத்தல் - குப்பையைக் கிண்டுதல். குப்பைகூளம் - செத்தை முதலியன. குப்பைக்கீரை - அறைக்கீரை. குப்பைக்கோழியார் - சங்க காலப் புலவர் (குறு. 305) குப்பைமேனி - ஒருவகைப் பூடு. குடடெறிவான் - கருப்பூர வகை. குமட்டு - குமட்டல், வாந்தி. குமட்டூர்க் கண்ணனார் - பதிற்றுப் பத்தின் இரண்டாம் பத்தினை இயற்றிய புலவர். குமணன் - ஒரு பெருவள்ளல். குமண்டை - மகிழ்ச்சிக் கூற்று, செருக்கு மேலிட்டுச் செய்யும் செயல். குமதி - அறிவுகேடன். குமரகச்சாணம் - பழைய வரிவகை. குமரகண்டம், குமரகண்டன் - ஒருவகை வலிப்பு. குமரகுருபரர் - பதினேழாம் நூற்றாண் டில் விளங்கிய ஓர் புலவர். குமரகோட்டம் - கச்சியிலுள்ள முருகக்கடவுள் கோயில். குமரதண்டம் - முருகக் கடவுளைச் சேனாதிபதியாகக் கொண்ட தேவர் படை. குமரம் - கொம்பில்லாத விலங்கு, பூர்வத்திலிருந்ததாகச் சிலர் கருதும் தமிழ் இலக்கண நூல். குமரவேள் - முருகக் கடவுள். குமரன் - இளைஞன், புதல்வன், முருகன், வைரவன். குமரி - கன்னி, பருவமடைந்த பெண், புதல்வி, துர்க்கை, குமரியாறு, குமரிமுனை, கன்னியாகுமரி தீர்த் தம், அழிவின்மை, கற்றாழை. குமரிகண்டம் - பாரத வருடத்தின் ஒரு பகுதியாகிய பூபாகம். குமரிக்கோடு - குமரிக் கடற் பக்கத் திருந்த ஒரு மலை. குமரிச்சேர்ப்பன் - குமரித்துறைக் குரிய பாண்டியன். குமரிஞாழல் - சங்க புட்பி, மல்லிகை. குமரித்துறை - கன்னியாகுமரி தீர்த்தத்துறை. குமரித் தெய்வம் - கன்னியாகுமரித் தேவதை. குமரிப் படை - அழியாச் சேனை. குமரிப்போர் - கன்னிப்போர். குமரி மதில் - அழியாக் கோட்டை. குமரிமுத்தல் - கன்னியாக இருந்து மூப்படைதல், பயனின்றிக் கெடுதல். குமரியாடுதல் - கன்னியாகுமரியில் தீர்த்தமாடுதல், கன்னியோடு சேர்தல். குமரியாறு - தமிழ்நாட்டின் தெற் கெல்லையிலிருந்து கடல் கொண்ட ஆறு. குமரியிருத்தல் - வீணே கழித்தல். குமரிவாழை - ஈனாத வாழை. குமரேசசதகம் - குருபாததாசர் இயற்றிய ஒரு சதக நூல் (18ம் நூற்.) குமல் - அரிவாள். குமாரகுலசிங்க முதலியார் - பதிவிரதை வியாசம் என்னும் நூல் செய்த யாழ்ப்பாணத்துக் கிறித்துவ புலவர் (1826 - 1884) குமாரசரசுவதி - கிருட்டிணதேவராயரின் அரண்மனைப் புலவர் (16ம் நூற்.) குமாரசுவாமி - முருகக்கடவுள். குமாரசுவாமி அவதானி - தெய்வச் சிலையார் விறலிவிடுதூது என்னும் நூல் செய்தவர் (16ம் நூ.) குமாரசுவாமிப் புலவர் அ - யாழ்ப்பாணப் புலவர் (1850 - 1922) குமாரசுவாமி முதலியார் - அருளம்பலக் கோவை செய்த யாழ்ப்பாணப் புலவர் (19ம் நூ.). குமாரசுவாமீயம் - நல்லூர்க் குமார சுவாமி தேசிகர் செய்த ஒரு சோதிட நூல் (18ம் நூ.) குமாரத்தி - மகள். குமாரதந்திரம் - முருக வழிபாட்டு நெறியைத் தெரிக்கும் ஆகமம். குமாரதெய்வம் - முருகக் கடவுள். குமாரதேவர் - மகாராசா துறவு என்னும் நூல் செய்தவர் (18ம் நூ.) குமாரன் - புதல்வன், இளைஞன், முருகக்கடவுள். குமாரி - காளி, அழியா இளமை யினள், புதல்வி. குமிகை - முதிராத எள்ளு, வெள்ளெள்ளு. குமிண்சிரிப்பு - புன்சிரிப்பு. குமிண்டி - கீரை வகை. குமிலம் - பேரொலி. குமிழி - நீர் முதலியவற்றில் எழும் குமிழி, குமிழ். குமிழிஞாழலார் நப்பசலையார் - சங்க காலப் புலவர் (அகம். 160) குமிழ் - நீர்க்குமிழி, உருண்டு திரண்ட வடிவம், குமிழ மரம். குமிழ்குழித்தல் - பிறர்க்குத் தோன் றாமல் மறைத்தல். குமிழ்த்தல் - குமிழியிடுதல், மயிர் சிலிர்த்தல், ஒலிக்கச் செய்தல், கொழித்தல். குமிழ்ப்பு - குமிழி எழுகை, மயிர் சிலிர்ப்பு, கொழிக்கை. குமிறுதல் - ஒலித்தல். குமின்குமீனெனல் - சிலம்பு முதலிய அணிகளின் ஒலிக் குறிப்பு. குமுகுமுத்தல் - மணம் வீசுதல். குமுகுமெனல் - பேரொலிக் குறிப்பு, மணம் வீசுதற் குறிப்பு. குமுக்கு - மொத்தம், கூட்டம். குமுங்குதல் - மசிதல். குமுதநாதன் - குமுதம் மலர்வதற் குரிய சந்திரன். குமுகப்படை - கர்ப்பக் கிருகத்து வெளிப்புற மதிலில் வேலைப் பாடமைந்த அடிப் பகுதி. குமதப்பிரியா - ஓர் இராகம். குமுதம் - ஆம்பல், தென்மேற்றிசை யானை, பாஷாண வகை, 9 யானை, 9 தேர், 27 குதிரை, 45 காலாள் கொண்ட படை, கட்டிடத்தின் எழுதக வகை, அடுப்பு, பேராலி, தருப்பை. குமுறல் - பேரொலி. குமுறுதல் - அதிரொலி செய்தல், மனத்துள் வருந்துதல், பீரிடுதல், கொதித்தல். குமேரு - பேய் பிசாசுகளுக்கு இருப்பிடமான தென்துருவம். குமை - அழிவு, துன்பம், அடி. குமைதல் - குழைய வேகுதல், சேர்தல், வருந்துதல். குமைத்தல் - துவைத்தல், குழைய வேகச் செய்தல், வருந்துதல், அழித்தல். கும்பகம் - வாயுவை உள்ளே அடக்குதல். கும்பகருணன் - இராவணன் தம்பியருள் ஒருவன். கும்பகலசம் - தானியக் குவியல் மீது வைக்கும் மந்திரகலசம். கும்பகவி - படிக்காசுப் புலவர் காலத்துப் புலவர் (17ம் நூ.) கும்பகாரன் - குயவன். கும்பகோணம் - குடந்தை. கும்பசன் - அகத்தியன். கும்பச்சம்பவன் - அகத்தியன், துரோணன். கும்பம் - குடம், யானை, மத்தகம், கும்பராசி, மாசி மாதம், நூறு கோடி. கும்பமுனி, கும்பயோனி - அகத்தியர். கும்பல் - குவியல், கூட்டம். கும்பளம் - கலியாணப் பூசணி. கும்பன் - சிவகணத் தலைவருள் ஒருவன், அகத்தியர். கும்பா - உண்கலம். கும்பாபிடேகம் - கோயில்களில் பிரதிட்டை செய்வதற்கும் சுத்தி செய்வதற்கும் உரிய சடங்கு. கும்பாலத்தி - சுவாமிக்கு முன் எடுக்கும் கும்ப தீபம். கும்பி - சேறு, சுடுசாம்பல், வயிறு, யானை, நரகம், குவியல். கும்பிகை - வாத்திய வகை. கும்பிடு - வணக்கம். கும்பிடுபூச்சி - ஒருவகை இலைப் பூச்சி. கும்பித்தல் - மூச்சடக்கல். கும்பிநசம் - பாம்பு. கும்பிபாகம் - நரகம். கும்பு - திரள், கூட்டம். கும்மட்டம் - ஒருவகைச் சிறுபறை, அரை வட்டவடிமான முகடு (Dome) கும்மட்டி - குதிக்கை, தீச்சட்டி, கொம்மட்டி. கும்மலித்தல் - விளையாடுதல். கும்மாயம் - குழையச் சமைத்த பருப்பு. கும்மாளம் - குதித்து விளையாடுதல். கும்மி - மகளிர் கைகொட்டிப் பாடி ஆடுங் கூத்து. கும்முதல் - அமுக்கிக் குற்றுதல். குயக்கலம் - ஒரு நூல். குயத்தி - குசத்தி. குயமயக்கு - தாறுமாறு. குயம் - அரிவாள், நாவிதன் கத்தி, இளமை, முலை, தருப்பை. குயலன் - தேர்ந்தவன். குயவரி - புலி. குயவன் - மட்கலம் செய்வோன், மறை பொருளானவன். குயவு - தேர் குயா - கோங்கு குயிலாயம் - பறவைக் கூடு, சுவருள் அறை குயிலுதல் - சொல்லுதல், கூவுதல், செய்தல், நெய்தல், பின்னுதல், துளைத்தல், பதித்தல், நடைபெறுதல், செறிதல், வாத்திய மொலித்தல் குயிலுவம் - வாத்தியம் வாசிக்கை குயில் - சொல், கோகிலம், துறை, மேகம் குயிற்றுதல் - சொல்லுதல், செய்தல், இரத்தினம் பதித்தல் குயினர் - இரத்தினத்தில் துளையிடுவோர், தையற்காரர் குயின் - மேகம், செயல் குயுக்தி - நேர்மையற்ற விவேகம் குய் - தாளதக்கறி, நறும்புவகை, சாம்பி ராணி குய்மனத்தாளர் - வஞ்சகர் குய்யகர் - குபேரன் நிதியைக் காப்போர் குய்யம் - மறைவானது, வஞ்சகம், பெண்ணின் மர்ம உறுப்பு குரதகம் - குதிரை குரகம் - நாகண வாய்ப்புள், நீர் வாழ் பறவைப் பொது குரக்கன் - கேழ்வரகு குரங்கம் - மான், விலங்கு குரங்கன் - களங்கமுள்ள சந்திரன் குரங்கு - விளைவு, வானரம், விலங்கு குரங்குதல் - வளைதல், தாழ்தல், தொங்குதல், தங்குதல், குறைதல், இரங்குதல் குரங்கு மார்க்கம் - குதிரை நடையுள் ஒன்றான வானர கதி குரசு - குதிரைக் குளம்பு குரச்சை - முரசு குரண்டகம் - பெருங்குறிஞ்சி குரண்டம் - கொக்கு வகை குரதாரம் - எட்டு நரகங்களுள் ஒன்று குரத்தி - குரு பத்தினி, ஆசாரிய பதவி வகிப்பவள், தலைவி. குரமி - மீன் வகை. குரம் - குதிரைக் குளம்பு, பசு. குரம்பு - அணைக்கட்டு, வரம்பு, எல்லை, ஆற்றினின்று பாசனக் கால்களுக்கு நீரைத் திருப்பும் அணை. குரம்பை - சிறு குடில், உடல், தானியக் கூடு. குரல் - மகளிர் தலைமயிர், மகளிர் கூந்தல், முடிக்கும் ஐவகையுள் ஒன்று, பறவையின் இறகு, பேச்சொலி, மொழி, ஏழிசையில் முதலாவது ஒசை. குரல்பெருக்கி - மெகாபோன் (Megaphone) குரல்வளை - மிடற்றின் உறுப்பு (Larynx) குரல்நாண் - ஒலியுண்டாக்கும் மிடற்று நரம்பு (Vocal chord) குரல்வளை மணி - தொண்டை முடிச்சு (Adam’s apple) குரவகம் - வாடாக் குறிஞ்சி, மரு தோன்றி. குரவம் - குரா, பேரீந்து. குரவம்பாவை - பாவையின் வடி வுடைய குரவம்பூ. குரவன் - குரு தாய் தந்தை தமையன் அரசன் உபாத்தியாயன் என்ற ஐவருள் ஒருவர். குரவு - குரா, ஆசிரியத் தன்மை. குரவை - முல்லை அல்லது குறிஞ்சி நில மகளிர் தம்முள் கைகோத் தாடும் கூத்து வகை, கடல். குரவைப்பறை - ஒருவகைக் குறிஞ்சிப்பறை. குரா - குராமரம். குரால் - பசு, புகர் நிறம், கோட்டான். குராற்பசு - கபிலை நிறப் பசு. குரிசில் - பெருமையிற் சிறந்தோன், உபகாரி, தலைவன். குரீஇ - பறவை, குருவி. குரீஇப்பூளை - சிறுபூனை. குரு - கொப்புளங்காணும் வைசூரி முதலியநோய், புண், வேர்க்குரு, புளகம், ஒளி, ஞானாசிரியன், உபாத்தியாயன், புரோகிதன், தகப்பன், அரசன், வியாழன், பூச, நாள், கனம், பெருமை, குருகுலத் தலைவன், குரு வருடம். குருகு - விலங்கு முதலியவற்றின் இளமை, குட்டி, குருத்து, வெண்மை, பறவை, கோழி, அன்றில், கொல் லனுலை, மூக்கு, கைவளை, இடைச்சங்க நூல்களுள் ஒன்று. குருகுபெயர்க்குன்றம் - பறவைப் பெயருடைய பிரௌஞ்ச மலை. குருகுமண் - வெண்மணல். குருகுலம் - குருவின் வமிசம், குருவின் வாழ்விடம். குருகூர் - ஆழ்வார் திருநகரி. குருகூர்நம்பி - சடகோபர். குருகைப்பெருமான் கவிராயர் - மாற னலங்காரம் செய்த புலவர் (16ம் நூ.) குருக்கண் - முலை. குருக்கத்தி - மாதவிக்கொடி. குருக்கள் - ஆசாரியர், கௌரவர், கோயிற் பூசை செய்வோர். குருசந்திரோதயம் - வியாழனும் சந்திரனும் ஒர் இராசியில் கூடுவது. குருசம்பாவனை - ஆசிரியனுக்குச் செய்யும் மரியாதை. குருசாமி - குரு சிரேட்டன். குருசில் - குரிசில். குருசு - சிலுவை. குருசேத்திரம் - பாரதப் போர் நடந்த பூமி. குருடன் - கண்ணில்லாதவன், ஒருகண் இழந்த சுக்கிரன். குருடு - பார்வையின்மை, ஒளி யின்மை. குருட்டாட்டம் - கண் மூடித்தனமான செய்கை. குருட்டுக்கொக்கு - நொள்ளை மடையான் கொக்கு, உண்ணிக். குருட்டுநாள் - செவ்வாயும் சனியும். குருதி - இரத்தம், செவ்வாய். குருதிக்காந்தள் - செங்காந்தள். குருதிப்பலி - வீரன் தன் இரத் தத்தைக் கொற்றவைக்குக் கொடுக் கும் பலி. குருதிப்புனல் - இரத்த நீர். குருதிவாரம் - செவ்வாய்க்கிழமை. குருத்து - மர முதலியவற்றின் குருத்து, வெண்மை, இளமை. குருத்துவம் - ஆசாரியத் தன்மை, பெருமை, கனம். குருநகை - புன்சிரிப்பு. குருநமச்சிவராயர் - அண்ணாமலை வெண்பாச் செய்த ஞானி (16ஆம் நூற்.) குருநாடி - நாடிகொண்டு நோயியல்பு அறியும் வகையையுணர்த்தும் ஒரு வைத்திய நூல், தேவகுருவின் அருளால் இயற்றப் பெற்றதாகக் கூறும் ஆரூட நூல். குருநாடு - குருவமிசத்தார் ஆண்ட நாடு. குருநாதன் - பரமகுரு, முருகக் கடவுள். குருநாள் - வியாழக்கிழமை. குருநிலம் - குரு வமிசத்தார் நாடு. குருநோய் - வைசூரி முதலிய கொப்புளம் காணும் நோய். குருந்தம் - குருந்து. குருந்து - காட்டெலுமிச்சை, குருக் கத்தி. குருபரன் - குருக்களுள் சிறந்தவன். குருபாததாசர் - குமரேச சதகம் இயற்றிய ஆசிரியர் (18ம் நூ.). குருபூசை - சமாதியடைந்த குருவின் ஆண்டு நட்சத்திரங்கள் தோறும் செய்யும் ஆராதனை. குருப்பிரசாதம் - குருவின் அருள். குருமகன் - குரு, குருவின் புத்திரன். குருமணி - குருபுதல்வன். குருமித்தல் - பேரொலி செய்தல். குருமுடித்தல் - இரசவாத்திற் பொன்னாக்குதற்கு மருந்து செய்தல். குருமை - நிறம், பெருமை. குரும்பி - புற்றாஞ் சோறு. குரும்பை - இளங்காய், இளநீர். குருலிங்கங்கமம் - குருவும் சிவமும் திருக்கூட்டமும். குருவரன் - குருபரன். குருவருடம் - நவ வருடங்களுள் ஒன்று. குருவன் - குரு. குருவாரம் - வியாழக்கிழமை. குருவி - பறவை, மூலநாள். குருவிக்காரன் - குருவிகளைப் பிடிக்கும் சாதியான். குருவிச்சை - புல்லுருவி. குருவித்தலை - வில்லாளிகள் எய்து மறைந்திருக்கும் ஞாயில் என்னும் மதிலுறுப்பு. குருவிந்தம் - தாழ்ந்ததர மாணிக்கம், குன்றி, சாதிலிங்கம். குருவுக்காதி - பச்சைக் கற்பூரம். குருளுதல் - சுருளாதல். குருளை - ஒருசார் விலங்கின் இளமை, பாம்பின் குஞ்சு, ஆமை. குருள் - மகளிர் தலைமயிர். குரூஉப்புகை - மணமுள்ள புகை. குரூபி - விகாரமுள்ளவர். குரூரம் - கொடுமை. குரை - ஒலி, இசைநிறை, குதிரை. குரைத்தல் - ஆரவாரித்தல். குரைப்பு - ஓசை. குரைமுகன் - நாய். குரோசம் - 2½ மைல் கொண்ட தூரம். குரோடம் - பன்றி. குரோட்டம் - நரி. குரோதம் - கோபம். குரோதன - ஐம்பத்தொன்பதாவது ஆண்டு. குரோதன் - வீரபத்திரன். குரோதி - முபபத்தெட்டாமாண்டு. குரோமியம் - உலோக வகை. குர்ஆன் - முகமதியார் வேதம். குலக்காலன் - யமன்போல் குலத்தை நாசஞ் செய்பவன். குலகிரி - அட்டகுல மலை. குலசிரேட்டன் - குடியிற் பிறந்தவருள் கீர்த்தி மிக்கவன். குலசேகரப்பெருமாள் - பன்னிரு ஆழ்வாருள் ஒருவர். குலசேகரவரதுங்க பாண்டியன் - வாயு சங்கிதையைத் தமிழிற் பாடியவர் (16ம் நூ.) குலச்சிறை நாயனார் - அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவர் (சம்பந்த சுவாமி காலத்தவர்) குலஞ்செப்புதல் - தன் குலப் பெருமை கூறுதல். குலஞ்செய்தல் - குலத்தை நாட் டுதல். குலதருமம் - குலத்துக்கு உரிய ஒழுக்கம். குலதிலகன் - குலத்திற் சிறந்து விளங்குபவன். குலதெய்வம் - ஒரு குலத்தார் பரம்பரையாக வழிபடும் தேவதை. குலபதியார் - திருவள்ளுவ மாலைப் பாடல்களில் ஒன்று செய்தவர். குலபருவதம் - சம்புத்தீவின் முக்கிய மலைத் தொடர்கள். குலப்பகை - பரம்பரைபாயுள்ள சாதி விரோதம். குலப்பரத்தை - ஒருவற்கே உரிமை பூண்டொழுகும் பரத்தையர் குலத் தவள். குலப்பன் - குயவன். குலப்பெயர் - குலம்பற்றி விளங்கும் பெயர். குலமகள் - நற் குடியிற் பிறந்தவள். குலமகன் - நற் குடியிற் பிறந்தவன். குலமீன் - அருந்ததி. குலமுதல் - வமிசத்தின் மூலப் புருடன், மகன், குலதெய்வம். குலமுதற்பாலை - பண்வகை. குலமுள்ளோன் - நற்குடி பிறந்தவன். குலமுறை - வமிச வரலாறு. குலம் - குடி, உயர்குலம், சாதி, மகன், இனம், கூட்டம், வீடு, நன்மை, அழகு, மலை, மூங்கில். குலவரை - உயர்ந்த மலை. குலவன் - உயர் குலத்தில் பிறந்தவன். குலவிச்சை - குலவித்தை. குலவித்தை - குலத்தின் பரம்பரை யாக வரும் வித்தை. குலவிளக்கு - குலத்தை விளங்கச் செய்பவர். குலவு - வளைவு. குலவுதல் - விளங்குதல், மகிழ்தல், உலாவுதல், நெருங்கி உறவாடுதல், தங்குதல், வளைதல், குவிதல். குலவேளை - நல்வேளை. குலா - மகிழ்ச்சி. குலாதினி - கடுகுரோகிணி. குலாமர் - உலோபிகள். குலாயம் - பறவைக் கூடு. குவாலன் - குயவன். குலாவுதல் - உலாவுதல், நட்பாடுதல், விளங்குதல், மகிழ்தல், நிலை பெறுதல், கொண்டாடுதல், வளை தல், வசப்படுத்துதல். குலிகம் - சாதிலிங்கம். குலிங்கம் - ஒரு தேசம், ஊர்க்குருவி. குலிசபாணி - இந்திரன். குலிசம் - வச்சிராயுதம், வயிரம். குலிசவேறு - வச்சிராயுதம். குலிசி - குலிசப்படை உடைய இந்திரன். குலிலி - வீராவேசவொலி. குலினன் - உயர்குலத்தோன். குலுக்கு - அசைப்பு, பிலுக்கு. குலுங்குதல் - அசைதல், நடுங்குதல். குலுத்தம் - கொள்ளு. குலை - கொத்து, ஈரற்குலை, முதலியன, செய்கரை, பாலம், வில்லின் குதை, நாணி. குலைதல் - அவிழ்தல், கலைதல், நிலை கெடுதல், நடுங்குதல், அழிதல். குலைப்பு - நடுக்குவாதம். குலைவட்டம் - அம்புக்குகை. குலைவியாதி - ஈரல் வியாதி. குலோத்துங்க சோழனுலா - 2ஆம் குலோத்துங்க சோழன்மீது ஒட்டக் கூத்தர் பாடிய உலா (12ம் நூற்.). குல்மம் - 45 காலாட்களும், 27 குதிரைகளும், 9 தேர்களும், 9 யானைகளும் அடங்கிய படைப் பிரிவு. குல்லகம் - வறுமை. குல்லம் - முறம். குல்லா - வெளி, தலைக்குல்லா பாய் மரத்தைக் கட்டும் கயிறு. குல்லியம் - குடலில் ஒரு குழாய் (Meatus) குல்லை - துளசி, வெட்சி, கஞ்சா. குவடு - திரட்சி, மலை, குன்று, மலையுச்சி, மரக்கப்பு. குவரிகுண்டல் - வாலுளுவை. குவலயம் - பூமி, நெய்தல், கருங் குவளை. குவலயாபீடம் - கஞ்சன் கண் ணனைக் கொல்ல ஏவிய யானை. குவலி - இலந்தை. குவலிடம் - ஊர். குவவு - திரட்சி, குவியல், கூட்டம், ஒன்றோடொன்று பிணைகை, பெருமை, பூமி. குவவுதல் - குவித்தல், குவிதல். குவளை - கருங்குவளை, செங் கழுநீர், ஓர் பேரெண், கண்குழி. குவளைக்கடுக்கன் - மணியழுத்தின கடுக்கன். குவளைத்தாரன் - குவளை மாலை அணிந்த தருமன். குவாதம் - கியாழம், குதர்க்கம். குவால் - குவியல், கூட்டம், மேடு, அதிகம். குவி - சுவர். குவிதல் - கூம்புதல், பொருந்துதல், குவியலாதல், ஒருமுகப்படுதல். குவித்தல் - கும்பலாக்குதல், தொகுத் தல், கைகூப்புதல், கூம்பச் செய்தல், கூட்டுதல். குவிமுட்கரு - யானையை அடக்கும் ஓர் ஆயுதம். குவியம் - ஒருமுனைப்படுவது (Focus) குவியல் - குவிக்கப்பட்டது. குவை - குவியல், தொகுதி, குப்பை மேடு, கண்நோய் வகை, பொன் னுருக்கும் குகை. குழ - இளமை. குழகன் - இளையோன், அழகன், முருகக்கடவுள், பிறர்க்கு இணங்கு பவன். குழகு - இளமைச் செவ்வி, அழகு, குழந்தை. குழகுதல் - கொஞ்சி விளையாடுதல், வசீகரித்தல். குழங்கல் - கழுத்து மாலை. குழணிதூரம் - தம்மீது வென்றவர் இரங்குமாறு பாடிக்கொண்டு தோற்றவர் ஆடும் ஒருவகைக் கூத்து. குழந்தை - இளமைப் பருவம், கைப் பிள்ளை. குழந்தைக் கவிராயர் - மான்விடு தூது செய்த புலவர். குழப்பம் - தாறுமாறு, மனக்கலக்கம், கலகம். குழமகன் - இளமைப்பருவ முள்ளவன், மரப்பாவை. குழமணம் - பாவைக்குச் செய்யும் கலியாணம். குழமணன் - மரப்பாவை. குழம்பு - குழப்பமான பொருள், காய்கறிக் குழம்பு. குழம்புதல் - கலங்குதல், நிலைகுலை தல். குழலுதல் - சுருளுதல். குழலோன் - வேய்ங்குழல் வாசிப் பவன். குழல் - மயிர்ச்சுருட்சி, ஐம்பாலுள் சுருட்டி மடிக்கப்படுவது, துளை யுடை பொருள், இசைக்குழல், குழலிசை, மீன் வகை, மயிர். குழவி - கைக்குழந்தை, ஒருசார் விலங்குகளின் பிள்ளைப் பெயர், ஓரறிவுயிரின் இளமைப் பெயர், அம்மிக் குழவி. குழவிஞாயிறு - உதய ஞாயிறு. குழவித்திங்கள் - இளஞ்சந்திரன். குழவு - இளமை. குழறுதல் - பேச்சுத் தெளிவின்றித் தடுமாறுதல் கூவுதல், கலத்தல், கேடுதருதல். குழறுபடை - சொல் தடுமாறுதல், தாறுமாறு. குழற்சி - சுருண்டிருக்கை. குழற்கிகை - தலைமயிர். குழற்றத்தன் - சங்க காலப் புலவர் (குறு. 242) குழற்றுதல் - குழறியொலித்தல். குழாஅல் - கூடுகை. குழாம் - கூட்டம், சபை. குழாய் - துறையுடைப் பொருள். குழி - பள்ளம், நீர்நிலை, வயிறு, பாத்தி, ஒரு அளவு. குழிசி - மிடா, சக்கரத்தின் குடம். குழித்தல் - குழியாக்குதல். குழித்தாமரை - கொட்டைப்பாசி. குழித்தைலம் - குடத்தில் மூலிகை களை நிரப்பி எரித்து வடிக்கும் தைலம். குழிநரி - குள்ளநரி. குழிப்பணம் - மதுரை நாட்டில் வழங்கி வந்த ஒருவகை நாணயம். குழிப்பாடி - குழிப்பாடி என்னும் ஊரில் நெய்யப்படும் ஒரு ஆடை. குழிப்பு - தாழ்வு. குழியம் - திரள்வடிவு, வாசனை யுண்டை. குழிவிரியன் - (Pit viper) குழிவு - குழிந்திருக்கை மாணிக்கக் (Concave) குற்றங்களுள் ஒன்று. குழு - மக்கட்கூட்டம், தொகுதி. குழுமல் - கூடுகை, கூட்டம். குழுமுதல் - கூடுதல், கலத்தல், கூடி முழங்குதல். குழும்பு - குழி, திரள். குழுவல், குழுவுதல் - கூடுகை, கூட்டம். குழூஉ - கூட்டம். குழூஉக்குறி - சிற்சில கூட்டத்தாருள் வழங்கும் சங்கேத மொழி. குழூஉநிலை - கோபுர முதலிய கட்டிடத்தின் தனிநிலை. குழூஉப்பெயர் - கூட்டம் பற்றி வரும் பெயர்ச்சொல். குழை - தளிர், சேறு, துளை, குழல், காது, குண்டலம், ஆகாசம். குழைகுழைத்தல் - குழம்பிக் கிடத்தல். குழைச்சரக்கு - சாரமற்ற பண்டம், காக்கப்படும் பொருள். குழைச்சு - உடம்பிலுள்ள எலும்பின் சந்து. குழைதல் - இளகுதல், வருந்துதல், வாடுதல். குழைமுகப்புரீசை - அந்தப்புரம். குழைவு - நெகிழ்ச்சி, இரக்கம், வாடுகை. குளகம் - மரக்கால், பல பாட்டுக்கள் ஒருவினை கொள்ளும் அமைதி, குற்றெழுத்துத் தொடர்ந்த செய்யுள். குளகன் - வாலிபன். குளகு - தழையுணவு, தழை. குளப்படி - குளம்பு படிந்த சுவடு. குளம்புக் கூறுகொள்ளுதல் - பெருந் துன்பமுறுதல். குளம் - தடாகம், ஏரி, மார்கழி, நெற்றி, வெல்லம். குளம்பாதாயனார் - சங்க காலப் புலவர் (புறம். 253) குளம்பு - விலங்குகளின் பாதம். குளவடை - பழைய ஏரி வரி. குளவட்டை - நீரட்டை. குளவரகு - வரகு வகை. குளவலிங்கன் - திருவிடைக் கலைத்தல புராணஞ் செய்தவர். குளவி - கொட்டும் ஈவகை, வண்டு வகை, காட்டு மல்லிகை. குன்றுதல் - பயத்தால் மொழி தடுமாறு தல், நரி முதலியன ஊளையிடுதல். குளறுபடை - குழறு படை. குளாம்பல் - குளத்திலுண்டாகும் ஆம்பல். குளி - நீராட்டு, முத்துக்குளி. குளிகன் - காணாக்கோளுள் ஒன்று. குளிகாரன் - சங்கு முத்து முதலியன மூழ்கி எடுப்போன். குளிகை - மாத்திரை. குளிக்காலம் - ஒவ்வொரு தினத்திலும் சூரியன் உதயத்திலிருந்து 3¾ நாழிகை வரையுள்ள காலம். குளிசம் - இரட்டையாகக் கட்டிக் கொள்வது. குளிதுறை - நீராடும்துறை. குளித்தல் - நீராடுதல், தைத்தல், அழுந் துதல், மறைதல், மூழ்கி எடுத்தல். குளியம் - வேங்கைப்புலி. குளிரநோக்குதல் - அருளோடு பார்த்தல். குளிரம் - நண்டு. குளிரி - பீலிக் குஞ்சம். குளிர் - குளிர்ச்சி, நடுக்கம், வெண் குடை, மீனொழுங்கு, தங்குகை, குடமுழவு, கிளிகடி குருவி, கவண், மழு, சூலம், அரிவாள், இலைமூக் கரிகத்தி, நண்டு, கர்க்கடக ராசி, ஆடி மாதம். குளிர் இரத்தப்பிராணி - ஊர்வன மீன் போல்வன (Cold blooded animals) குளிர்காப்புப்பெட்டி - Refrege rator. குளிர்கால ஒடுக்கம் - பிராணிகள் குளிர்காலத்தில் பல மாதங்கள் உறங்கும் உறக்கம். குளிர்ச்சி - சீதளம், இனிமையானது. குளிர்ந்துகொல்லி - வஞ்சகன். குளிர்மை - குளிர்ச்சி. குளிறு - ஒலி. குளுக்கோசு, குளூக்கோசு - முந்திரிகைப் பழச் சர்க்கரை. குளுந்தை - கஸ்தூரி வகை. குளுவன் - குறவனுடைய பாங்கன். குளோரோபாரம் - மூர்ச்சையாக்க மருந்து. குளுவை - பறவை. குள்ளக்குடைதல் - நீருள் மிகக் குடைந்து மூழ்குதல். குள்ளக்குளிர்தல் - மிகக் குளிர்தல். குள்ளநரி - நரிவகை. குள்ளம் - குறுமை, தந்திரம். குறங்கறுத்தல் - கால் வாயினின்று வேறு தனிக்கால் பிரித்தல். குறங்கு - தொடை, கிளைவாய்க்கால். குறங்குசெறி - துடையாபரணம். குறடா - குதிரைச்சவுக்கு. குறடு - கம்மியரது பற்றுக்குறடு, மரத் துண்டு, இறைச்சி கொத்தும் பட்டடை, தேர் முதலியவற்றின் அச்சுக் கோக்கு மிடம், பாதக்குறடு, திண்ணை ஒட்டு, திண்ணை சுவர் முதலியவற்றிலுள்ள எழுதகம், பறை வகை. குறட்டாழிசை - குறள்வெண்பாவிற் சிதைந்து வருவதாகிய பாவினம். குறட்டை - நித்திரையில் மூச்சு விடும் ஒலி. குறட்பா - குறள்வெண்பா. குறண்டி - செவ்வழிப் பண்வகை முட்செடி, தூண்டில்முள். குறண்டுதல் - வளைதல், வலிப்புக் கொள்ளுதல். குறத்தி - குறிஞ்சிநிலப் பெண். குறத்திப்பாட்டு - குறவஞ்சி நாடகம். குறமகளிளவெயினி - சங்க காலப் பெண் பாற் புலவருளொருவர் (புறம். 157) குறம் - குறத்தி சொல்லும் குறி, குறத்திப் பாட்டு. குறவஞ்சி - குறத்தி, குறத்திப் பாட்டு. குறவன் - குறிஞ்சி நிலத்தவன், பாலை நிலத்தவன். குறவாணர் - மலைக்குறவர். குறவி - குறச்சாதிப் பெண். குறவை - வரால்மீன். குறழ்தல் - குனிதல். குறளடி - இரண்டு சீரால்வரும் அடி. குறளன் - குள்ளன், வாமனன். குறளி - குறியவள், குறளிப் பிசாசு, குறளி வித்தை, கற்பழிந்தவள். குரளிவித்தை - குறளியின் உதவி யால் செய்யும் மாயவித்தை. குறளை - கோட்சொல், வறுமை. குறள் - குறுமை, ஈரடி உயரமுள்ள குள்ளன், பூதம், சிறுமை, குறளடி, திருக்குறள். குறாவுதல் - வாடுதல். குறி - அடையாளம், இலக்கு, குறியிடம், நோக்கம், நிமித்தம், சபை, இலக்கணம், கோடு. குறிகூடுதல் - நோக்கம், நிறை வேறுதல். குறிக்கொள்ளுதல் - கைக்கொள்ளு தல், மனத்துட்கொள்ளுதல், குறி யாகப் பற்றுதல். குறிக்கோள் - ஞாபகத்தில் வைக்கை, அறியும் திறம். குறிசொல்லுதல் - அதிட்டம் முதலியவற்றைக் குறிப்பாகக் கூறுதல். குறிச்சி - குறிஞ்சி நிலத்தூர், ஊர். குறிஞ்சா - கொடிவகை. குறிஞ்சி - மலையும் மலைசார்ந்த நிலமும், குறிஞ்சிப்பண், ஒர் இராகம், மரவகை. குறிஞ்சிக்கிழவன் - முருகன். குறிஞ்சிப்பறை - தொண்டகப்பறை. குறிஞ்சிப்பாட்டு - பத்துப்பாட்டுள் ஒன்று (கபிலர் பாடியது). குறிஞ்சிலி - காதில் அணிதற்குரிய பூவகை. குறித்தல் - கருதுதல், தியானித்தல், வரையறுத்தல், கட்டுதல், பற்றுதல், சொல்லுதல், ஊதி யொலித்தல். குறிப்பறிதல் - நோக்கமறிதல். குறிப்பு - உள்ளக்கருத்து குறித்து உணரப்படுவது, மனநிலை, இங் கிதம், சைகை, பிறர் கருதியதைக் காணவல்ல அறிவு, அடையாளம், இலக்கு. குறிப்புச்சொல் - சொல்லுவோன் குறிப்பினால் நேர்பொருளன்றி வேறு பொருளை உணர்த்துஞ் சொல். குறிப்புநிலை - குறிப்புச் சொல். குறிப்புப்பொருள் - குறிப்பாலுரைக் கப்படும் பொருள். குறியிடம் - தலைவனுந் தலைவியும் கூடுதற்குக் குறிப்பிட்ட இடம். குறியிடையீடு - தலைவனுந் தலைவி யும் குறித்தவிடத்துக் கூடாதவாறு நேரும் இடையூறு. குறியிறையார் - சங்க காலப் புலவர் (குறு. 394). குறியீடு - குறியாக இட்டாளும் பெயர், சங்கேதம் (Code, Symbol) குறியெதிர்ப்பை - அளவு குறித்து வாங்கியவாறே எதிர்கொடுப்பது. குறியோன் - அகத்தியன். குறில் - குற்றெழுத்து, குறுமை. குறுகலர், குறுகார் - பகைவர். குறுகுதல் - குள்ளமாதல், சிறுகுதல். குறுகுறுநடத்தல் - குறுகக் குறுக நடந்து செல்லுதல். குறுக்கம் - சுருக்கம் (Abbreviation) குறுக்குவெட்டி - குறுக்குக் கோடு (Transversal). குறியீடான - சங்கேத (Symbolic) குறுங்கண் - சாளரம். குறுங்கண்ணி - முடியிலணியும் மாலை. குறுங்கலி - பாலையாழ்த் திறத் தொன்று, தன் மனைவியை விரும் பாது விகற்பித்த ஒருவனுடைய காதல் போம்படி சொல்லும் புறத்துறை, சிறுகாடு. குறுங்காடு - சிறு காடு. குறுங்கீரன் - சங்க காலப் புலவர் (குறு. 382). குறுங்குடி மருதனார் - சங்க காலப் புலவர் (அகம். 5, குறு. 344). குறுங்கூலி - நெல் முதலியன குற்றுங் கூலி. குறுங்கோழியூர் கிழார் - சங்க காலப் புலவர் (புறம். 17,20, 22). குறுஞ்சூலி - ஒருவகைப் பூடு. குறுணல் - குறு நொய். குறுணி - எட்டுப்படி கொண்ட தானிய அளவு. குறுதல் - குற்றுதல், பறித்தல், நீங்குதல். குறுநகை - புன்சிரிப்பு. குறுநடை - சிறுநடை. குறுநர் - களை முதலியன பறிப்போர். குறுநறுங்கண்ணி - குன்றி. குறுநிலமன்னன் - சிற்றரசன். குறுநிலைவழக்கு - குழூஉக் குறி வழக்கு. குறுநொய் - குறுணல். குறுந்தடி - பறையடிக்கும் கோல், சிறியகழி. குறுந்தாள் - குறுகிய படிக்கட்டு. குறுந்திரட்டு - தத்துவராயர் தொகுத்த ஒரு வேதாந்த நூல். குறுந்தொகை - எட்டுத் தொகையுள் ஒன்று (பூரிக்கோ தொகுத்தது.) குறுந்தொடி - சிறு வளையலணிந்த பெண். குறுமகள் - இளம் பெண், மனைவி. குறுமக்கள் - சிறுபிள்ளைகள். குறுமல் - பொடி. குறுமுடிகுடி - சிற்றரசுரிமையுடைய குடி. குறுமுயல் - குழிமுயல். குறுமுனிவன் - அகத்தியன். குறுமை - குறுகிய தன்மை, குறைவு, அண்மை. குறுமொழிக்கோட்டி - பிறரை இகழ்ந்து நகையாடுதலையே பொழுது போக்காகவுடைய கீழ் மக்கள் கூட்டம். குறும்படை - கோட்டை. குறும்பர் - குறுநில மன்னர், வேடர், முரட்டுக் கம்பளி நெய்யும் இடையர். குறும்பலா - கூழைப் பலாமரம், குற்றாலத்திலுள்ள சிவாலயம். குறும்பறை - பறவைப் பேடு. குறும்பனை நாடு - கடல்கொண்ட தமிழ் நாடுகளுள் ஒன்று. குறும்பாடு - ஒருவகை ஆடு. குறும்பி - காதுள் அழுக்கு, மல மூத்திரம் முதலியன. குறும் பிடி - உடைவாள். குறும்பு - பாலைநிலத்தூர், ஊர், குறுநில மன்னர், பகைவர், அரண், வலிமை. குறும்புத்தனம் - துட்டத்தனம். குறும்பூழ் - காடை. குறும்பொறி - உதரபந்தம். குறும்பொறை - சிறுமலை, குறிஞ்சி நிலம், குறிஞ்சி நிலத்தூர். குறும்பொறைநாடன் - முல்லை நிலத் தலைவன். குறும்போக்கு - யாழ் வாசிக்கும் முறைகளுள் ஒன்று. குறும்போது - மலரும் பருவமுள்ள அரும்பு. குறுவட்டம் - குறுக்களவு. குறுவிழிக்கொள்ளுதல் - கண்ணி தழ்களைக் குவித்தல். குறுவேர்வை - அச்சம் முதலிய வற்றால் தோன்றும் வேர்வை. குறுவை - ஒருவகை நெல். குறை - குறைபாடு, குற்றம், எஞ்சியது, இன்றியமையாப் பொருள், வேண்டு கோள், வேண்டுவது, துன்பம், ஆற்றிடைக்குறை, உண்ணுதற்குப் பக்குவப்படுத்தியதிசை, மிடற்றுப் பாடல் வகை. குறைகோள் - யாசிக்கை. குறைக்கொள்ளி - பாதி எரிந்த கட்டை. குறைதல் - சிறுகுதல், தாழ்தல், அரு குதல், வெட்டப்படுதல், தோல்வி யுறல், அழிதல். குறைத்தலை - தலையில்லாத பிணம். குறைத்தல் - சுருக்குதல், தறித்தல், வெட்டுதல், அராவுதல், முகத்தல். குறைநிறை - சௌகரிய அசௌ கரியங்கள். குறைநேர்தல் - குறையை நீக்க உடன் படுதல். குறைபடுதல் - குறைவாதல், துணி படுதல். குறைபடுத்தல் - குறைவுண்டாக்குதல், முகத்தல். குறைபாடு - குறைவு, மனக்குறை. குறைமகன் - நிலையிழந்தவன். குறைமதி - தேய்பிறை. குறையரவு - குக்குட சர்ப்பம். குறையலாளி - திருமங்கை மன்னன். குறையவை - அறிவு குணங்களால் குறைவுபட்டார் கூடிய சபை. குறையறுத்தல் - குறை நீங்கச் செய்தல். குறையாக்கேள்வி - நிரம்பிய ஞானம். குறையிரத்தல் - தன் குறையைக் கூறி வேண்டுதல். குறையுடல் - தலையில்லாத உடல். குறையுறுதல் - குறைகூறி வேண்டு தல். குறைவண்ணம் - Halftone. குறைவில் - வானவில். குறைவு - குறைபாடு, குற்றம், தரித்திரம். குறோக்கை - குறட்டை. குறோசு - 12 டசன் (Gross) குற்குலு - குங்குலியம். குற்சிதம், குற்சை - அருவருப் பானது. குற்றம் - பிழை, பழி, துன்பம், தீங்கு. குற்றுச்செடி - படராது நேரே வளரும் செடி. குற்றுமரம் - செடி (shrub). குற்றவாளி - குற்றம் செய்தோன். குற்றாலம் - ஒரு சிவத்தலம். குற்றி - மரக்கட்டை. குற்றிசை - தலைவன் மனைவியைப் புறக்கணித்து அறநெறி பிறழ்ந் தொழுகுவதைக் கூறும் புறத்துறை. குற்றுதல் - இடித்தல், ஊடுருவக் குத்துதல். குற்றுகரம் - ஒலி குறைந்த உகரம். குற்றுதல் - இடித்தல், தாக்குதல். குற்றுயிர் - குறை உயிர். குற்றெழுத்து - ஒரு மாத்திரையுள்ள எழுத்து. குற்றேவல் - பணிவிடை. குனகுதல் - கொஞ்சிப் பேசுதல். குனி - வளைகை. குனிதல் - வளைதல், வணங்குதல், தாழ்தல், விழுதல். குனித்தல் - வளைத்தல், ஆடுதல். குனிப்பு - ஆடல், வளைகை. குனை - கூர்மையான பக்கம். குன்மம் - வயிற்று நோய், படை வகுப்பு. குன்றம் - சிறுமலை. குன்றம்பூதனார் - பரிபாடல் 9, 18ம் பாடல்கள் செய்தவர். குன்றல் - குறைகை. குன்றவாணர் - குறிஞ்சிநில மக்கள். குன்றவல்லி - மலையை வில்லாகக் கொண்ட சிவன். குன்றி - குன்றிமணி. குன்றிமணி - நாலு நெல் அல்லது ½ மஞ்சாடி எடையுள்ள பொன் நிறை வகை, குன்றி. குன்றியனார் - சங்க காலப் புலவர் (அகம். 40). குன்றிவேர் - அதிமதுரம். குன்று - குறைதல், அழிதல், நிலை கெடுதல், வாடுதல், சிறுமலை, சதயம். குன்றுபயன் - களவொழுக்கம். குன்றூர்கிழார் மகனார் கண்ணத்த னார் - சங்க காலப் புலவர் (நற். 322; புறம் 338). குன்றெறிந்தோன் - முருகக் கடவுள். குன்னம் - பழி, அவமானம். குன்னாத்தல் - குளிரால் உடம்பு கூனிப்போதல். கூ கூ - பூமி, கூவுகை. கூகை - கோட்டான், செடிவகை. கூகைக்கட்டு - முகத்தை வீங்கச் செய்யும் ஒருவகை நோய். கூக்குரல் - பேரொலி. கூசம் - கூச்சம். கூசல் - கூச்சம், அச்சம். கூசுதல் - நாணுதல், கூச்சங் கொள் ளுதல், அஞ்சிப் பின்வாங்குதல், நிலைகுலைதல். கூசமாண்டார் - நரக லோகங்களுக் குத் தலைவர். கூச்சம் -நாணுகை, கூசுகை. கூச்சல் - பேரொலி. கூச்சு - கூரியமுனை, புளகம். கூட - உடன், மேற்பட. கூடகம் - வஞ்சகம். கூடகாரம் - மேன்மாடம், நெற்கூடு. கூடசன் - தகப்பன் அறியப்படாத புதல்வன். கூடசன்மலி - முள்ளிலவு நிரம்பிய நரகம். கூடசாலம் - ஏழு நரகத் தொன்று. கூடபாகலம் - யானைக்கு உண்டாகும் கடும் சுரநோய். கூடம் - வீட்டின்கூடம், யானைச் சாலை, மேலிடம், கோபுரம், சம்மட்டி, அண்டகோளகை, திரள், மறைவு, வஞ்சகம், பொய். கூடரணம் - திரிபுரம். கூடலித்தல் - கிளர்ந்து வளைதல். கூட்லிழைத்தல் - கூடற்சுழி வரைதல். கூடலூர்கிழார் - முது மொழிக் காஞ்சி செய்தவரும், ஐங்குறுநூறு தொகுத்தவருமான புலவர். கூடலூர்ப்பல் கண்ணணார் - சங்க காலப் புலவர் (நற். 200, 380) கூடல் - பொருந்துகை, புணர்ச்சி, தலை வனைப் பிரிந்த மகளிர் அவர் வரும் நிமித்தமறியத் தரையிற்சுழிக்கும் குறி, மதுரை, அடர்த்தியான தோப்பு. கூடற்கோமான் - பாண்டியன். கூடற்சங்கமம் - துங்கபத்திரை கிருட்டிணா நதியுடன் கூடும் இடம். கூடற்றெய்வம் - கூடற் குழிக்குரிய தேவதை. கூடாநட்பு - அகத்தாற் கூடாது புறத்தாற் கூடி ஒழுகும் பொய் நட்பு. கூடாரம் - படங்கினால் வேய்ந்த வீடு, வண்டிற் கூடு. கூடார் - பகைவர். கூடாவொழுக்கம் - தகாத ஒழுக்கம். கூடியவரை - ஆனமட்டும். கூடியார்ப்பெயர் - கூட்டத்தைக் குறிக்கும் பெயர். கூடிலி - புலால் உண்போன். கூடு - பறவை முதலியவற்றின் கூடு, நெற்கூடு, உடம்பு, அதிகம், அனு கூலம், ஒன்று சேர். கூடுதல் - திரளுதல், கிடைத்தல், இயலுதல், மிகுதி, கிடைத்தல், சிநேகித்தல், உடன்படுதல். கூடுவிடுதல் - இறத்தல். கூடை - ஓலை பிரம்பு முதலியவற்றால் பின்னப்படும் பெட்டி, அபிநயவகை, கூடைப் பாடல். கூட்ட்மைதீ - மணவேள்வித் தீ. கூட்டமைவு - கூடியிருக்கை. கூட்டம் - கூடுகை, திரள், சபை, இனத்தார், சேர்க்கை, மலை உச்சி. கூட்டரக்கு - செல்வரக்கு. கூட்டரவு - கூடுகை, சேர்க்கை. கூட்டர் - தோழர், இனத்தார். கூட்டல் - கூட்டுகை. கூட்டாட்சி - பெடரேசன் (Federation). கூட்டாளன் - கூட்டாளி. கூட்டாளி - பங்காளி நண்பன். கூட்டிமுடித்தல் - சேர்த்துக் கட்டுதல். கூட்டியுரைத்தல் - ஒரு சொல்லை மற்றோரிடத்திற் சேர்த்துப் பொருள் கூறுதல். கூட்டிவைத்தல் - சேர்த்து வைத் தல், அனுகூலஞ் செய்தல். கூட்டு - நட்பு, துணை, திரள், ஒப்புமை, கறிமசாலை, கொள் ளைப்பொருள், திறை, அரை ஞாண். கூட்டுதல் - இணைத்தல், கலத்தல், அதிகப்படுத்துதல், பெருக்குதல். கூட்டுப்புழு - அந்துப்பூச்சி அல் லது வண்ணாத்திப் பூச்சியா வதன் முன் கூட்டிலிருக்கும் புழு (Chry salis) கூட்டுவியாபாரம் - பங்கு வியா பாரம் (Partnership) கூட்டுறவு - நெருங்கிய தொடர்பு. கூட்டோடு - அடியோடு. கூண்டு - கூடு. கூதல் - குளிர். கூதளம் - கூதாளி. கூதறை - இழிந்த குணமுடைய. கூதனம் - இடக்கர்ச்சொல். கூதாளம், கூதாளி - செடி வகை. கூதிர் - ஐப்பசி கார்த்திகை மாதங் கள், காற்று, காலம். கூதை - காற்று. கூத்தநூல் - அபிநயத்தைப் பற்றிய நூல். கூத்தப்பள்ளி - அரண்மனையைச் சார்ந்த நாடக அரங்கு. கூத்தராற்றுப்படை - அபி நயித் தாடுதற் குரிய கோயிலரங்கு. கூத்தராற்றுப்படை - பரிசில் பெறச் செல்பவனைப் பிரிசில் பெற்றனவன் ஒரு தலைவனிடம் ஆற்றுப் படுத் தும் புறத்துறை. கூத்தரிசி - கூலிக்குக் குத்து மரிசி. கூத்தர் - கூத்து நடிப்போர். கூத்தன் - கூத்தாடுவோன், உயிர், சிவன், ஒட்டக்கூத்தர். கூத்தாட்டு - நடிப்பு. கூத்தி - நாடகக் கணிகை, வைப் பாட்டி. கூத்து - நடனம், நாடகம், குழப்பம், வேடிக்கை. கூத்துள்படுவோன் - ஆடலா சிரியன். கூந்தல் - பெண்கள், தலைமயிர், மயிற் றோகை, குதிரைப் பிடர்மயிர், குதிரை, கேசி என்னும் அசுரன், பூ முதலிய வற்றின் மெல்லிய தோருறுப்பு. கூந்தல்கொள்ளுதல் - மகளிரைத் தழுவுதல். கூந்தற்பனை - தாளிப்பனை, தளைப் பத்து. கூந்தன்மா - குதிரை. கூந்து - கூந்தல். கூபகம் - எலும்புக் கூட்டின் இடுப் பிலுள்ள குழிவிடம், ஒரு தேசம். கூபம் - கிணறு. கூப்பாடு, கூப்பீடு - முறையீடு, கூப்பிடுதல், குமிழ்மரம். கூப்புதல் - குவித்தல், ஒடுங்குதல், கைகுவித்தல். கூம்பல் - குமிழ்மரம். கூம்பு - பாய்மரம், தேர்மொட்டு, பூ மொட்டு, சேறு, கூர் (cone). கூம்புகனித்தாவரம் - குவிந்த கனியுள்ள தாவரம் (conefer). கூம்புதல் - குவித்தல், ஒடுங்குதல், ஊக்கங்குறைதல். கூரம் - பாகல், கொடுமை, பொறாமை, யாழ். கூரம்பு - ஒரு நரகம். கூரல் - பெண்கள் தலைமயிர் இறகு. கூரன் - நாய். கூரியன் - புதன், கூர்மையுள்ளவன். கூரை - இறப்பு, சிறுகுடில். கூர் - மிகுதி, கூர்மை, குயவன், சக்கரத் துறுப்பு. கூர்க்கர் - நேபாளத்தில் ஒரு சாதியினர். கூர்ச்சம் - தருப்பை. கூர்ச்சரம் - குசராத்து தேசம். கூர்ச்சரி - ஓர் ராகம். கூர்ச்சி - கூர்மை. கூர்தல் - மிகுதல், விரும்புதல், வளைதல், ஒடுங்குதல். கூர்த்திகை - ஆயுதம். கூர்ந்தபஞ்சமம் - மருத யாழ்த்திற வகை. கூர்ப்பரம் - முழங்கை. கூர்ப்பிடுதல் - கூராக்குதல். கூர்ப்பு - உள்ளது சிறந்து மிகுகை, புத்திநுட்பம். கூர்மக்கை - அபிநயவகை. கூர்மபுராணம் - திருமால் கூர்ம அவ தாரமெடுத்தபோது உபதேசித்த புராணம், அதிவீர ராமபாண்டியன் வடமொழியிலிருந்து செய்யுளுரு வாக இயற்றிய தமிழ்நூல் (16ம் நூ.). கூர்மம் - ஆமை, ஒரு புராணம். கூர்மன் - தசவாயுக்களுள் ஒன்று. கூர்மாண்டர் - கூசுமாண்டர் என்னும் சிவகணர். கூர்மிகை - வீணை வகை. கூர்முள் - குதிரை செலுத்துங் கருவி. கூர்மை - ஆயுதங்களின் கூர், நுண்மை, சிறப்பு. கூர்வாயிரும்பு - மணையிலிறுக்கிய அரிவாள். கூர்மை - கப்பலின் குறுக்குக் கட்டை. கூலம் - தானியவகை, கடைத்தெரு, பண்ணிகாரம், பாகல், நீர்க்கரை, வரம்பு, முறை, விலங்கின் வால், குரங்கு, பசு. கூலவாணிகன் சாத்தனார் - சங்கப் புலவருள் ஒருவர்; மணிமேகலை என்னும் நூல் செய்தவர். கூலி - வேலைக்குப் பெறும் ஊதியம். கூலிப்படை - கூலிக்கும் அமர்த்தும் படை. கூலியாள் - கூலிக்காரன். கூவகர் - கூபக நாட்டவர். கூவம் - கிணறு. கூவல் - கூவுகை, கிணறு. கூவனூல் - கிணறு தோண்டுதற் குரிய இடம் முதலிய உணர்த்தும் நூல். கூவன்மைந்தன் - சங்க காலப் புலவர் (நற். 344). கூவியர் - அப்பவாணிகர். கூவிரம் - வில்வம், மலைமரவகை, தேரில் நாட்டப்படும் தாமரை மொட்டு, தேர், தேர்க்கொடி, தேரின் தலையலங்காரம். கூவிரி - தேர். கூவிளம் - வில்வம். கூவிளி - கூப்பிடுமோசை, கூப்பிடு தூரம். கூவுதல் - அழைத்தல், ஓலமிடுதல், பறவை முதலியன கூவுதல். கூவை - செடிவகை, கூட்டம். கூழங்கை - முடமான கை. கூழங்கைத் தம்பிரான் - யோசோப்பு புராணஞ் செய்த யாழ்ப்பாணப் புலவர் (1795) கூழன் - தெளிந்த அறிவில்லாதவன், பலாவகை. கூழாங்கல் - வழுவழுப்பான சிறு கல் வகை (Pebbles). கூழிக்கொற்றன் - சங்க காலப் புலவர் (குறு. 276). கூழை - மகளிர் தலைமயிர், இறகு, மயிற்றோகை, நடு, குட்டையானது, புத்திக் குறைவு, கூழைத்தொடை, சேற, படையின் பின்னணி. கூழைக்கடா - நீர்வாழ் பறவை வகை, தோணிக்கொக்கு (Grey pelican) கூழைப்பார்வை - வஞ்சகப் பார்வை. கூழைமை - கடமை, குழைந்து நடக்கை. கூழ் - குழையச்சமைத்த உணவு, பல வகை உணவுப் பொருள், பொன். கூழ்த்தல், கூழ்ப்பு - சந்தேகித்தல். கூழ்படுதல் - கலக்கமுண்டாதல். கூனம் - ஒடிந்த வைக்கோற்றுண்டு. கூளன் - பயனற்றவன். கூளி - கூட்டம், குடும்பம், படைத் தலைவன், பேய், குள்ளம், குற்றம், கற்பில்லாதவள், பொலி எருது. கூளியர் - படை வீரர், வேட்டுவர், வழிப் பறி செய்யும் கள்வர், குறவர், சிநேகிதர். கூளுதல் - திரளுதல். கூறிடுதல் - பங்கிடுதல், துண்டாக் குதல். கூறியதுகூறல் - சொன்னதைப் பின்னும் சொல்லலாகிய நூற் குற்றம். கூறு - கூறுபாடு, பங்கு, பிளவுபட்ட துண்டு, பாதி, தன்மை. கூறுதல் - சொல்லுதல், விலை கூறுதல். கூறுபாடல் - வாயாற்பாடும் பாடல். கூறுபாடு - பகுதி, தன்மை. கூறை - ஆடை, கலியாண ஆடை. கூற்றங்குமரனார் - சங்க காலப் புலவர் (நற். 244). கூற்றம் - பகுதி, யமன், அழிவுண் டாக்குவது, நாட்டின் பகுதி, வார்த்தை. கூற்றரிசி - குத்தலரிசி. கூற்றன் - யமன். கூற்றன்வாய் - தலை மதகு. கூற்று - கூறுகை, மொழி, இயமன். கூற்றுதைத்தோன் - சிவன். கூற்றுவநாயனார் - அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவர். கூற்றுவன் - இயமன். கூனலங்காய் - புளியங்காய். கூனல் - வளைவு. கூனான் - கூனி. கூனி - கூனுள்ளவன், கூனிய முது குள்ள மந்தரை, பங்குனி, இறால். கூனிரும்பு - அரிவாள். கூனுதல் - முதுகு வளைதல். கூனை - மிடா, நீர்ச்சால். கூன் - வளைவு, கூனன், நத்தை, பெரும் பாத்திரம், செய்யுளில் அளவுக்கு மேல் வரும் அசையும் சீரும். கூன்பாண்டியன் - திருஞான சம்பந்தர் காலத்து அரசு செய்த பாண்டியன் (7ஆம் நூ.). கெ கெக்கட்டம் - மிகச் சிரிக்கை. கெக்கலி - குலுங்கச் சிரித்தல். கெங்கை - கங்கை. கெசம் - கசம் (யார்), யானை. கெச்சம் - முல்லை, அரசமரம், காலணி வகை. கெச்சிதம் - கம்பீரம். கெச்சை - காலணி, முல்லை. கெஞ்சுதல் - இரந்து குறையுறுதல். கெடலணங்கு - மூதேவி. கெடலூழ் - கெடுதற்கு உரிய தீவினை. கெடவரல் - மகளிர் விளையாட்டு, மகளிர் கூட்டம். கெடி - நிறைவேறிவருங் காரியம், மலைக்கோட்டை, ஊர், வல்லமை, அச்சம். கெடிலம் - கடலூருக்கு அண்மையி லுள்ள ஒரு ஆறு. கெடிறு - கெளிற்று மீன். கெடு - கேடு, தரித்திரம், தவணை. கெடுகிடுதல் - கெட்டொழிதல். கெடுதலை - கேடு. கெடுதல் - அழிதல், வறுமையடை தல் தோற்றோடுதல், விபத்து, தீங்கு. கெடுதி - அழிவு, நட்டம், இழந்த பொருள், துன்பம், தீமை. கெடுத்தல் - அழித்தல், பழுதாக்கல், ஒழுக்கங்கெடுதல், நீக்குதல். கெடுமதி - தீமை, துன்பம். கெடும்பு - கேடு. கெட்ட - அழிந்த. கெட்டி - உறுதி, சாமர்த்தியம், மிக நன்று. கெட்டித்தனம் - சாமர்த்தியம். கெண்டி, கெண்டிகை - கமண்டலம். கெண்டுதல் - தோண்டுதல், அறுத் துத் தின்னுதல். கெண்டை - சேல்மீன், கணைக்கால். கெண்டைபுரட்டுதல் - பசி தாகம் முதலியவற்றால் கை கால்கள் வலித் திழுத்தல். கெண்ணை - எண்ணிக்கை. கெதாயு - ஆயுள் முடிந்தவன். கெத்து - தந்திரம். கெத்துதல் - கீறிப்பிளத்தல். கெந்தகம் - கந்தகம். கெந்தபொடி - வாசனைப்பொடி. கெந்தித்தல் - தத்துதல். கெந்து - ஒற்றைக்காலால் தத்துதல். கெம்பீரம் - கம்பீரம், வீரங்காட்டுதல். கெம்பு - பதுமராகம் (Ruby). கெம்புதல் - கொத்தளித்தல், உரத்துப் பேசுதல். கெருடி - கருவம். கெலிப்பு - வெற்றி, மகிழ்ச்சி. கெலுழன் - கருடன். கெல்லுதல் - கல்லுதல். கெவி - குகை. கெவியூதி - நாலரை மைல் தூரம். கெவுளி - கவுளி. கெழி - நட்பு. கெழீஇயிலி - கூடாத பகைவன். கெழு - நிறம், பிரகாசம், ஒரு சாரியை, பெருக்குமெண். கெழுதகை, கெழுதகைமை - உரிமை. கெழுமுதல் - நிறைதல், முதிர்தல், முளைத்தல், பொருந்துதல், கிட்டுதல். கெழுமை - வளமை. கெழுவ - உவம உருபு. கெழுவு - நட்பு. கெழுவுதல் - பொருந்துதல், நிறை தல், பற்றுக்கொள்ளுதல். கெளிறு, கெளித்தி - கெளுத்திமீன். கே கேகயப்புள் - அசுணமா. கேகயம் - மயில், ஓர் நாடு, பண்வகை, கேகயப்புள். கேசஞ்சனம் - பொற்றலைக் கையாந்த கரை. கேசம் - தலைமயிர், விலங்கின் மயிர். கேசரம் - பூந்தாது மகிழமரம், குங்குமப் பூ, வண்டு. கேசரர் - வித்தியாதரர். கேசரி - சிங்கம். கேசரியோகம் - பிறக்கும்போது சந்திர னுள்ள இலக்கினத்துக்குக் கேந்திர இலக்கினத்தில் வியாழன் இருக்கும் யோகம். கேசவம் - வண்டு. கேசவன் - திருமால், சோழன். கேசாதிபாதம் - முடிமுதல், அடி வரையும். கேசாரி - குதிரைக் கழுத்தில் மயிர். கேசாவர்த்தம் - குதிரைக் காலிலுள்ள தீய சுழி. கேசி - அழகிய மயிருடையவன். கேசீன் - பிளாஸ்டிக் போன்ற ஒரு வகைச் செயற்கைப் பொருள் (Casein). கேடகம் - கேடயம், பரிசை, மலைகள் அடுத்துள்ள ஊர், பாசறை. கேடகவால் பாம்பு - (Uropeltidae) கேடயம் - மலைகள் அடுத்துள்ள ஊர் விக்கிரகத்தை எழுந்தருளப் பண்ணும் ஒருவகை வாகனம், கேடகம். கேடி - அழிப்பவள், பழந்திருடன். கேடு - அழிவு, நட்டம், வறுமை, தீமை. கேட்டல் - செவிக்குப் புலனாக்குதல், வினாதல், விசாரித்தல், தண்டித்தல், பொறுத்தல். கேட்டுமுட்டு - புறச் சமயத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதால் சைனர் மேற் கொள்ளும் தீட்டு. கேசட்டை - பதினெட்டாவது நட்சத்திரம், ஓர் அசைநிலை. கேணி - சிறுகுளம், கிணறு, அகழி. கேண்மை - நட்பு, உறவு. கேதம் - துக்கம், இளைப்பு. கேதல் - அழைக்கை. கேதனம் - கொடி. கேதாரகௌளம் - ஓர் இராகம். கேதாரம் - இமயமலையிலுள்ள ஒர் சிவன் கோயில், விளைநிலம், ஓர் இராகம், மயில். கேதாரயோகம் - ஏழு கிரகங்கள் இடையீடின்றி நான்கு இராசிகளில் நிற்கவரும் யோகம். கேதாரி - குதிரைப் பிடர், குதிரைக் கழிவகை. கேதாளி - குறிஞ்சி யாழ்த் திறத்தி லொன்று. கேதானம் - கொடி. கேது - நவக்கிரங்களுள் ஒன்று, கொடி, ஒளி. கேதுதல் - கதறியழைத்தல். கேதுமால், கேதுமாலம் - நவ கண்டங்களுள் ஒன்று. கேத்திரகணிதம் - ‘சியோமற்றி என்னும் வடிவ கணிதம்.’ கேத்திரி - திருமால். கேத்திரம் - வட்டத்தின் மத்திய சென்ம இலக்கனத்தினின்று ஒன்று நான்கு ஏழு அல்லது பத்தாம் இடம், குவியம் (Focus). கேயம் - இசைப்பாட்டு, இசைத்தற் குரியது. கேயூரம் - தோளணி வகை. கேரளம் - சேரநாடு. கேரளன் - சேரன். கேலி - விளையாட்டுப் பேச்சு, பரிகாசம். கேவணம் - மணிபதிக்கும் குழி. கேவலக்கிடை - ஆன்மா ஆணவத் தால் மறைப்புண்டு செயலற்றுக் கிடக்கும் நிலை. கேவலஞானம் - திரிகால ஞானம். கேவலம் - தனிமை, மோட்சம், அற்பமானது, தாழ்நிலை. கேவேடன் - மீன் வலைஞன். கேழல் - நிறம், பன்றி, குளநெல். கேழற்பன்றி - ஆண்பன்றி. கேழ் - ஒளி, நிறம், ஒப்பு. கேழ்பு - நன்மை. கேழ்வரகு - கேப்பை, குரக்கன். கேழ்வு - கூலி (Freight). கேலலர் - பகைவர். கேளர்கேளிர் - பகையும் நட்புமில்லாத அயலார். கேளன் - தோழன். கேளா - ஒரு பயனுமின்றி. கேளார் - பகைவர், செவிடர். கேளி - விளையாட்டு, தென்னை வகை. கேளிக்கை - பெண்கள் விளை யாட்டு. கேளிதம் - பெருங்கல். கேளிர் - நண்பர், சுற்றத்தார். கேள் - உறவு, நட்பு, நண்பன், கணவன். கேள்வன் - கணவன், தோழன். கேள்வி - கேட்கை, பாடங்கேட்கை, கல்வி, வேதம், நூல், இசைச்சுருதி. கேள்விப்பந்தர் - பலர் கூடி நூல்கள் கேட்டற்கு இடனாம்படி அமைந்த பந்தர். கேள்வி வரி - அரசன் கட்டளை களைப் பதியும் புத்தகம். கை கை - கரம், பக்கம், கை மரம், கைபிடி, சிறகு, படையுறுப்பு, இடம், கைப் பொருள், சிறுமை, உலகவொழுக்கம், ஒழுங்கு தங்கை, தொழிற் பெயர் விகுதி. கைகடத்தல் - கைக்கு எட்டாமல் போதல் கைகண்ட - அனுபவத்தில் அறிந்த. கைகயன் - கேகய நாட்டரசன். கைகரத்தல் - ஒளித்தல். கைகலத்தல் - நெருங்கிப் பொருதல், கூடுதல். கைகாட்டு - கைச்சைகை. கைகாய்த்துதல் - எரியச் செய்தல். கைகூடுதல் - கிட்டுதல், அனுகூல மாதல் கைகூப்பு - கையைக் குவித்து வணங்குகை. கைகேசி, கைகேயி - கேகய அரசன் மகளாகிய பரதன் தாய். கைகொடுத்தல் - உதவுதல். கைகோள் - ஒழுக்கம். கைக்கடன் - கடமை. கைக்கட்டி - கைக்கவசம். கைக்கத்தி - சிறுகத்தி. கைக்காணி - காணிக்கை. கைக்காறை - ஒருவகைக் கையணி. கைக்கிளை - ஒருதலைக்காமம், ஏழிசையில் மூன்றாகிய காந்தார சுரம், மருட்பா. கைக்குடை - சிறுகுடை. கைக்குழவி - சிறுகுழந்தை. கைக்குளசு - கைக்குழைச்சு. கைக்கூட்டம் - அணிவகுப்புக் கூட்டம். கைக்கூட்டன் - காவற்காரன். கைக்கூலி - இலஞ்சம். கைக்கொள்ளுதல் - கையில் எடுத்தல், ஏற்றுக்கொள்ளுதல். கைக்கோல் - ஊன்றுகோற், பற்றுக் கொடிறு. கைக்கோளன் - நெசவுத் தொழில் செய்யும் சாதியான். கைங்கரியம் - தொண்டு. கைசா - இருகழஞ்சு கொண்ட நிறை. கைசிகம் - ஓர் இராகம். கைசிகிவிருத்தி - காமம் பொரு ளாகக் காமுகராகிய மக்கள் தலைவ ராக வரும் நாடகநடை. கைசு - காற்பலம். கைசெய்தல் - அலங்கரித்தல், உதவி செய்தல், நடத்துதல். கைச்சரி - மகளிரது கையணி வகை. கைச்சாடு, கைச்சரடு - கைக்கவசம். கைச்சாத்து - கையெழுத்து. கைச்சோலம் - ஒருவகைப் பாத்திரம். கைஞ்ஞானம் - அற்ப அறிவு. கைதருதல் - உதவி செய்தல். கைதலைவைத்தல் - பெருந் துக்கமடைதல். கைதல் - தாழை. கைதவம் - கபடம், துன்பம். கைதவன் - பாண்டியன், வஞ்சகன். கைதி - சிறைப்பட்ட குற்றவாளி. கைத்திட்டம் - திருந்திய அலங்காரம். கைதூவுதல் - கையொழிதல், செய லற்றிருத்தல். கைதேர்தல் - திறமையடைதல். கைதை - தாழை, வயல். கைதைச்சுரிகையன் - மன்மதன். கைதொடல் - உண்கை, உணவு. கைதோய்வு - கையால் எட்டிப் பிடிக்கக் கூடிய நிலை. கைத்தடி - ஊன்று கோல். கைத்தலம் - உள்ளங்கை. கைத்தல் - கசத்தல், கோபித்தல், செலுத்துதல், அலங்கரித்தல், ஊட்டுதல். கைத்தளம் - ஒருவகைக் கேடகம். கைத்தாய் - வளர்ப்புத் தாய். கைத்திரி - இடக்கை என்னும் தோற்கருவி. கைத்தீட்டு - ஆவணம், பத்திரம். கைத்து - செல்வம், வெறுப்பு. கைத்தூண் - பிறர் கையால் உண்கை. கைநிலை - வீரர் தங்குதற்குப் பாசறையில் தனித்தனி அமைக்கப் பட்ட குடிசை. கைந்தலை - விதவை. கைந்நவிலாளர் - தொழில் செய்யப் பழகியவர். கைந்நாகம் - யானை. கைந்நிலை - புல்லங்காடர் என்னும் புலவரியற்றிய நூல் (பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஓன்று). கைந்நிறுத்தல் - நிலைநிறுத்துதல், அடக்குதல். கைந்நீட்டு - கைபிடி. கைந்நீவுதல் - அவமதித்துக் கடத்தல். கைந்நூல் - கையிற்கட்டும் காப்பு நூல். கைபரிதல் - ஒழுங்கு குலைதல். கைபுடைத்தல் - கைதட்டுதல். கைபுனை - அலங்கரிக்கை, பூத்தொடுக்கை. கைபூசுதல் - உண்ட கையைக் கழுவுதல். கைபோதல் - முற்றும் வல்லவனாதல், கடந்து செல்லுதல். கைப்படுதல் - கைவசமாதல், பார்த்தல். கைப்படை - ஆயுதம். கைப்பரிசு - சிறு தெப்பம். கைப்பாணி - மணியாசப் பலகை, தவழ்வதற்குக் கொள்ளும் கைப்பிடி. கைப்பு - கசப்பு. கைப்புடை - கைப்புட்டில், வாயில் காவலர் தங்குமிடம், அருகு. கைப்புட்டில் - கை விரலுறை. கைமரம் - வீட்டுக் கூரையின் கை. கைமாறு - பதிலுபகாரம். கைமுட்டி - விரல் மடங்கியுள்ள கை. கைமுறை - அனுபவ முறை. கைமேல் - உடன் கையில். கைம்பெண் - கணவனை இழந் தவள். கைம்பெண்டாட்டி - விதவை. கைம்மயக்கம் - மோக மயக்கம். கைம்மருந்து - அனுபவ மருந்து. கைம்மறித்தல் - கையால் தடுத்தல், கைகவித்து விலக்குதல். கைம்மலை, கைம்மா - யானை. கைம்மாறு - பதில் உபகாரம். கைம்மிகுதல் - அளவு கடத்தல். கைம்முதல் - முடிவு பெறுதல். கைம்மை - கணவனையிழந்த நிலை, சிறுமை, அறிவின்மை, செய். கையடக்கம் - கைக்குள் அடங் குகை. கையடை - பிறர் கையில் ஒப்பு விக்கை, பாதுகாக்குமாறு ஒப்பித்த பொருள். கையயர்தல் - சோர்வடைதல். கையமர்த்துதல் - கையால் சைகை காட்டி அடங்கச் செய்தல். கையரி - தேடல். கையர் - கீழ் மக்கள், கள்ளர், வஞ்சகர், மூடர். கையலகு - கைமரம். கையலைத்தல் - கொடுத்தல். கையறம் - இரங்கற்பா. கையறவு - செயலற்ற நிலை, மரணம், துன்பம், ஊடல், தரித்திரம். கையறிதல் - செய்யும் முறைமையறிதல். கையறுதல் - செயலறுதல், மனமழிதல், அளவு கடத்தல், மீட்சியரிதாதல், இறத்தல். கையறுநிலை - தலைவனேனும் தலைவியேனும் இறந்தமைக்கு அவன் சுற்றத்தார் செயலற்று மிக வருந்தியமை கூறும் புறத்துறை. கையனார் - பழைய இலக்கண ஆசிரியருள் ஒருவர். கையாட்சி - கைப்பழக்கம். கையாந்தகரை - கரிசலாங்கண்ணி. கையாளுதல் - வழக்கத்துக்குக் கொண்டு வருதல், அபகரித்தல். கையாள் - குற்றேவல் செய்வோன். கையாறுதல் - இளைப்பாறுதல். கையாறு - துன்பம், செயலறுகை, ஒழுக்க நெறி. கையிகழ்தல் - அளவு கடத்தல். கையிறை - கையிரேகை, கைவிரலி னிடுக்கு. கையுண்ணுதல் - பிறர் கைபார்த்து உண்டு வாழ்தல். கையுதிர்க்கோடல் - விட்டுவிலகும் படி கையசைத்துக் குறிப்பிடுகை. கையுறுதல் - கையிற் கிடைத்தல், தீண்டுதல். கையுறை - காணிக்கைப் பொருள், மெய்ப்பணம். கையூட்டு - இலஞ்சம். கையூழ் - வண்ணத்திற் செய்த பாடலெல்லாம் இன்பமாக யாழிற் பாடுகை. கையேடு - சிறிய ஏட்டுப் புத்தகம். கையை - தங்கை. கையொட்டுக்கால் - கருப்பூர வகை. கையொப்பம் - கையெழுத்து. கையொலி - சிறிய ஆடை. கையோடு - உடன். கைரவம் - ஆம்பல். கைராட்டு - கையால் நூல் நூற்கும் எந்திரம். கைரியம் - காவிக்கல். கைலாகு - கைத்தாங்கல். கைலாசநாதர் - கைலாசநாதர் சதகம் செய்தவர். கைலாசம் - கைலாயம், சிவன் வாழ் மலை. கைவட்டணை - கையாற் செய்யும் அபிநயம். கைவந்தி - தோளின் கீழாகக் கையில் அணியப்படும் ஓரணி. கைவருதல் - தேர்ச்சி பெறுதல் ஒருங்கே நிகழ்தல், கைகூடுதல். கைவலச்செல்வன் - அருகன். கைவலம் - மோட்சம். கைவல்லியநவநீதம் - தாண்டவராய சுவாமி தமிழில் செய்த ஓர் அத்துவித நூல். கைவல்லியம் - மோட்சம். கைவழங்குதல் - கொடுத்தல். கைவழி - யாழ். கைவளம் - கைத்தொழிற்றிறம். கைவளர்தல் - போற்றப்படுதல். கைவாய்க்கால் - சிறு வாய்க்கால். கைவாரம் - கையைத் தூக்கி கூறும் வாழ்த்து. கைவாரிகள் - நின்றேத்துவோர். கைவாளப்பை, கைவாளை - அடைப்பை. கைவாள் - சிறுவாள். கைவிடுதல் - விட்டொழிதல். கைவிதிர்த்தல் - மறுப்பு, அச்சம், புகழ்ச்சி என்பனவற்றின் குறியாகக் கையை அசைத்தல். கைவிளக்கு - சிறு விளக்கு. கைவினி - சீழ்க்கை ஒலி. கைவினை - கை வேலை. கைனி - கைம்பெண், அத்தம். கொ கொகுடி - முல்லைக் கொடி வகை. கொக்கரித்தல் - ஆரவாரித்தல், கர்ச்சித்தல். கொக்கரை - வைக்கோலெடுக்கும் கருவி, வாத்திய வகை, வில், பாம்பு, தாளம், வலை. கொக்கான் - பெண்கள் விளை யாட்டு, அம்மானை. கொக்கி - கொளுவி. கொக்கிப் பின்னல் - கொளுக்கி ஊசி களால் பின்னல் வேலை செய்தல் (Croochet). கொக்கிப்புழு - புழுவகை (Hook worm). கொக்கிற்கு - கொக்கு மந்தாரை. கொக்கு - பறவை வகை, மூல நட் சத்திரம், மாமரம், செந்நாய், குதிரை. கொக்குவம் - கொக்கோகம். கொக்குவாய், கொக்கிவாய் - ஆபரணத் திற் படுகண்ணியிற் சேரும் பூட்டு. கொக்கோகம் - வரகுணராம பாண்டியனால் வட மொழியி னின்றும் மொழி பெயர்க்கப்பட்டு ஒரு காமநூல் (16ம் நூ). கொங்கணம் - மேற்குத் தொடர்ச்சி மலைக்கு மேற்கும் அரபிக் கட லுக்குக் கிழக்கும் கூர்ச்சரத்துக்குத் தெற்கும் கோவாவுக்கு வடக்குமாக வுள்ளதும் ஐம்பத்தாறு தேசங்களில் ஒன்றுமான நாடு. கொங்கணர் - தமிழ்ச் சித்தருள் ஒருவர், கொங்கண தேசத்தார். கொங்கணி - கொங்கண தேசத்தான். கொங்கன் - சேரன், கொங்க நாட்டான். கொங்காளன் - குதிரை வகை. கொங்கு - கோயம்புத்தூர் சேலம் சில்லாக்களும் மைசூர் நாட்டின் ஒரு பகுதியுமாக அடங்கிய தமிழ் நாடு, பூந்தாது, வாசனை, தேன், கள். கொங்குவேள் - பெருங்கதை என்னும் தமிழ்க்காவியம் செய்த ஆசிரியர். கொங்கை - முலை. கொசவம் - கொய்யகம். கொசு, கொசுகு - நுளம்பு, சிறு கொதுகு. கொச்சகம் - பாடலுறுப்புக்களு ளொன்று, கொய்யகம், கொச்சை. கொச்சி - ஓர் இராச்சியம். கொச்சி மிளகாய் - ஊசி மிளகாய். கொச்சு - குஞ்சம். கொச்சை - இழிவு, இழிந்தவன், சீகாழி, ஆடு. கொச்சை முனி - திருஞான சம்பந்தர். கொச்சையர் - இடையர், இளையார். கொச்சைவயம் - சீகாழி. கொஞ்சத்தனம் - எளிமை. கொஞ்சம் - சிறிது. கொஞ்சல் - சரசப்பேச்சு, மழலைச் சொல், முத்தமிடல். கொஞ்சன் - அற்பன். கொடவர் - கோயிற் பணியாருள் ஒரு சாரார். கொடாரி - கோடரி. கொடி - படர்கொடி, கயிறு, ஒழுங்கு, நீளம், துவசம், கேது, காக்கை, கிழக்குத் திசை. கொடிக்கரும்பு - நேராக வளர்ந்த கரும்பு. கொடிக்கவி - உமாபதி சிவாசாரியார் செய்த ஒரு நூல். கொடிக்கால் - வெற்றிலை. கொடிச்சி - குறிஞ்சி நிலப் பெண். கொடிஞாழல்மணிபூதனார் - ‘அறனறிந்தேம்’ என்னும் செய்யுள் செய்தவர். கொடிஞ்சி - தேர்த்தட்டின் முன் நடப் படும் தாமரைப் பூ வடிவுள்ள அலங் கார உறுப்பு, தேர். கொடிநிலை - திரிமூர்த்திகளின் கொடி களுள் ஒன்றனோடு அரசன் கொடியை உவமித்துப் புகழும் புறத்துறை, சூரியன். கொடிப்படை - சேனையின் முன்னணிப் படை. கொடிப்புல் - அறுகு. கொடிப்பூ - கொடிகளிற் பூக்கும் பூ. கொடிமங்கலம் வாதுனி நற் சேந்தன் - சங்க காலப் புலவர் (அகம். 179, 232) கொடியன் - தீயன். கொடியாள் - பெண், கொடுமை யானவள். கொடிவிடுதல் - மிகுதியாதல். கொடிவழி - ஒற்றையடிப் பாதை, வமிசவழி. கொடிறு - கதுப்பு, குறடு, யானை மதச்சுவடு, பூதம். கொடிற்றுக்கோல் - கன்னக்கோல். கொடுகுதல் - கொடுமையாதல். கொடுகொடுத்தல் - குளிராக நடுங்குதல். கொடுகொட்டி - சிவன் கூத்து, ஒரு வகைப் பறை. கொடுக்காய்ப்புளி - மரவகை. கொடுக்கு - தேள் முதலியன கொட் டும் உறுப்பு, ஆடை முதலிய வற்றில் கட்டிவிடுந்தொங்கல், மூலைத்தாறு. கொடுங்காய் - வெள்ளரி. கொடுங்குன்றம் - பிரான்மலை. கொடுங்கை - மடித்தகை, வீட்டின் உறுப்பு. கொடுங்கோல் - நீதி தவறிய ஆட்சி. கொடுஞ்சி - கொடிஞ்சி. கொடுநாக்கெறிதல் - விருப்பக் குறி யாக நாக்கால் வாய்ப்புறத்தைத் துழாவுதல். கொடுநுகம் - நுகத்தடி, மகம். கொடுந்தமிழ் - செந்தமிழ்நாட்டைச் சூழ்ந்திருக்கும் நிலங்களில் வழங்கும் தமிழ். கொடுந்தமிழ்நாடு - தென்பாண்டி, குட்டம், குடம், கற்கா, வேணாடு, பூழி, பன்றி, அருவா, அருவா வடதலை, சீதம், மலாடு புனல்நாடு என்னும் பன்னிரு நிலங்கள். கொடுந்துயர் - சாவு. கொடுப்பு - கதுப்பு. கொடுமடி - பண்டம் இடுவதற்கு வளைத்துக்கட்டிய மடி. கொடுமணம் - பழைய ஓர் ஊர். கொடுமரம் - வில், ஏணிப்பழு, தனுராசி. கொடுமுடி - மலையுச்சி, உப்பரிகை. கொடுமுடிச்சு - அவிழ்க்க முடியாத முடிச்சு. கொடுமுறுக்கு - நூலின் மிகச் சுற்றியேற்றிய முறுக்கு. கொடுமை - குரூரம், தீமை, வளைவு. கொடுமைத்தானம் - இலக்கினத் துக்கு எட்டாமிடம். கொடும்பாடு - மாறுபாடு, கொடுமை. கொடும்பாவி - கிராம சாந்தியாகத் தெருவிலிழுத்துக் கொளுத்தப் படும் பாவை, பெரும்பாவி. கொடும்பு - சிம்பு. கொடும்புலி - சிங்கம், சிங்கராசி. கொடும்பை - நீர் அருவி, குன்றம், குளம், தாம்பு. கொடுவரி - புலி. கொடுவாய் - வளைந்தவாய், குறளை, புலிவகை, மீன்வகை. கொடுவாள் - அரிவாள், மழு. கொடுவேலி - சித்திரமூலம் என்னுங் கொடி. கொடூரம் - குரூரம். கொடை - ஈகை. கொடைக்கடம் - கொடையாகிய கடமை. கொடைக்கை - வீட்டின் முகடு. கொடைநேர்தல் - மகளை மணஞ் செய்து கொடுக்க உடன்படுதல். கொடைமனம் - வரைவின்றிக் கொடுக்கை. கொடையெதிர்தல் - கொடுத்தலை மேற்கொள்ளுதல். கொடைவஞ்சி - போரில் வென்ற பொருளை அரசன் பாணர்க்குப் பரிசிலளிப்பதாகக் கூறும் புறத்துறை. கொட்குதல் - சூழலுதல், திரிதல், வெளிப்படுத்தல். கொட்டகாரம் - பண்டம் வைக்கும் அறை. கொட்டகை - பந்தல்வகை, மாட்டுக் கொட்டில். கொட்டடி - மாட்டுக் கொட்டில், அறை, சிறைச்சாலை. கொட்டம் - இறுமாப்பு, நூற்கும் கொடை, ஓலைப்பெட்டி, வாசனைப் பண்டம், தொழுவம், முழக்கம். கொட்டம்பலவனார் - சங்க காலப் புலவர் (நற். 95). கொட்டாப்புளி - தட்டும் கருவி (Striker). கொட்டாரம் - தானியக் களஞ்சியம். கொட்டாவி - நெட்டுயிர்ப்பு. கொட்டி - நீர்க் கொடிவகை, கோபுர வாயில், கூட்டம். கொட்டிகள் - குவியலாகப் போடும் கருவிகள் (Dumpers). கொட்டில் - மாட்டுத் தொழுவம், வில்வித்தை பயிலுமிடம், கொட்டகை சிறுகுடில். கொட்டு - கொட்டுகை, வாத்தியம், தாளக்காலம், தோண்டு கருவி வகை, மண்வெட்டி, நெற்கூடு. கொட்டுதல் - வாத்தியம் முழங் குதல், சம்மட்டியடித்தல், பஞ்சரைத் தல், குற்றுதல், அடித்தல், சொறிதல், தோண்டுதல். கொட்டுப்பிடி - உளியடிக்கும் ஆயுதம். கொதிஊற்றுகள் - வெந்நீருற்றுகள் (Hot springs). கொதிகலம் - போயிலர் (Boiler). கொட்டுவான் - தேள், கொட்டுப் பிடி. கொட்டை - விதை, நூற்குங் கதிரின் கொட்டை. கொட்டி - சூழற்சி, வளைவு, நிலை யின்மை, கருத்து, குதிரைக்கதி. கொட்பு - திரிபு, மாறுபாடு. கொணர்தல் - கொண்டு வருதல். கொண்கன் - கணவன், நெய்தல், நிலத்தலைவன். கொண்கானம் - ஒரு மலை. கொண்ட - ஓர் உவமச் சொல். கொண்டபாடு - கோட்பாடு. கொண்டல் - மேகம், கொள்ளுதல், கீழ்காற்று, மேடராசி, மழை. கொண்டல்வண்ணன் - திருமால். கொண்டவன் - கணவன். கொண்டாடுதல் - பாராட்டுதல், விழா முதலியன கொண்டாடல். கொண்டாட்டம் - மகிழ்ச்சி, பாராட்டு. கொண்டி - பிறர் பொருளைக் கொள்ளுகை, உணவு, கப்பம், களவு, கொள்ளை, அடங்காதது, பரத்தை. கொண்டிமகளிர் - சிறைப் பிடிக்கப்பட்ட மகளிர். கொண்டியம் - குறளை. கொண்டு - முதல், குறித்து. கொண்கூட்டு - அடிகள் பல வற்றிலும் உள்ள சொற்களைப் பொருளுக்கேற்ற இடத்தில் எடுத் துக் கூட்டிப் பொருள்கொள்ளும் முறை. கொண்டுகூற்று - அயலார் நேரிற் சொல்வதாகக் கூறும் மொழி. கொண்டுநிலை - குரவைக் கூத்தில் தலைவனது வரைவு வேண்டிப் பாடும் பாட்டு. கொண்டுநிலை கூற்று - இறந்து படாமல் தலைமகளைத் தாங்கிக் கூறும் தோழியின் கூற்று. கொதிநிலை - நீர் கொதிக்கும் வெப்ப அளவு (Boiling point). கொண்டுமொழிதல் - அயலார் சொல்லை அவர் சொல்லுவதாக எடுத்துக் கூறுதல். கொண்டுவிற்றல் - பண்டங்களை வாங்கி விற்றல். கொண்டை - கூந்தலைத் திரளாகச் சேர்த்து முடிகை, இலந்தை, பறவைச் சூட்டு. கொண்டைக்கிரி - முல்லை நிலப் பண் வகை. கொண்டைக்கிளாறன் - குருவி வகை (The red - vented Bulbul). கொண்டைத்திருகு - மகளிர் தலையி லணியும் செவ்வந்திப்பூ வடிவின தான அணிவகை. கொண்டைமேற்காற்றடிக்க - உல்லாசமாக. கொண்மு - முகில். கொதி - கொதிப்பு, வெப்பம். கொதிப்பு - கோபம். கொதுகு - கொசுகு. கொதுவை - அடைமானம். கொத்தடிமை - குடும்பத்தோடு அடிமையாகை. கொத்தமல்லி - ஒருவகைச் செடி. கொத்தமுரி - கொத்தமல்லி. கொத்தம் - எல்லை, கொத்தமல்லி. கொத்தளம் - மதிலுறுப்பு, மதிற்புறம். கொத்தளிப்பாய் - புற்பாய். கொத்தன் - கட்டிட வேலை செய் வோன். கொத்திதழி - சரக்கொன்றை. கொத்து - குலை, திரள், சோறு, கொத்துகை. கொத்துக்காரி - பரம்பரை உரிமை யுடைய கோயிற்றேவடியாள். கொத்தை - சொத்தை, குருடன், அஞ்ஞானம், பாவி. கொந்தகன் - படைத்தலைவன். கொந்தம் - மயிர்க் குழற்சி. கொந்தழல் - முறுகிய தீ. கொந்தல் - தணியாக் கோபம், கொத்துகை, குளிர். கொத்தளம் - மாதர் தலைமயிர், மாதர் தலைமயிர்ச் சுருள், சளுக் கியர் ஆண்ட நாடு, குழப்பம், விலங்கி னிளமை. கொந்தளித்தல் - பொங்கீயெழல். கொந்தி - வரிக் கூத்து வகை. கொந்திக்காய் - மகளிர் கை மூட்டுக்கு மேல் அணியும் ஆபரண வகை. கொந்து - ஒற்றைக்காலால் குதித் தாடும் விளையாட்டு, கோபம், திரள், கொத்துகை. கொந்துதல் - கொத்துதல், குத்துதல், எரிதல், கோபம் மூளுதல். கொப்பம் - யானை பிடிப்பதற்காக வெட்டும் பெருங் குழி, ஒரு தேசம். கொப்பரை - பிடியோடு கூடியபெரும் பாத்திரம். கொப்பளித்தல் - உமிழ்தல். கொப்பறா - காய்ந்த தேங்காய். கொப்பு - மரக்கிளை, மகளிர்காதணி வகை, மயிர் முடி. கொப்புளம் - குமிழி போன்ற பரு. கொப்பளித்தல் - உமிழ்தல். கொப்புளிப்பான் - வைசூரி. கொப்புள் - கொப்புளம். கொப்பூழ் - நாபி. கொம்பர் - கொம்பு. கொம்பி - சனி. கொம்பு - மரக்கிளை, பல்லக்கு, முதலியவற்றின் கொம்பு, ஊது கொம்பு, நீர்விசுங்கருவி, விலங்கு களின் கொம்பு. கொம்பேறிமூக்கன் - கொம்பேறி மூக்கன், பாம்பு வகை. கொம்மட்டி - தும்மட்டி. கொம்மி - கும்மி. கொம்மெனல் - விரைவுக் குறிப்பு, பெருக்கக் குறிப்பு. கொரில்லா - ஒருவகை வாலிலில்லாக் குரங்கு, (Gorilla) மறைந்து அங்கு மிங்கும் நின்று செய்யும் போர் (Guerilla). கொம்மை - வட்டம், பெருமை, திரட்சி, இளமை, மார்பு, வலிமை, மேடு, கைகுவித்துக் கொட்டுகை. கொம்மைகொட்டுதல் - தட்டி அழைத்தல், புகழ்தற்குறியாக முது குப்புறத்தைத் தட்டிக் கொடுத்தல். கொயினா - மருந்து வகை (Quinine). கொய் - ஒருவகை மீன். கொய்சகம் - ஓரம் கொய்து சுருக்கப்பட்ட உடை. கொய்தல் - பறித்தல், ஆடை கொய்தல், தெரிந்தெடுத்தல். கொய்யகம் - கொய்சகம், மண்ட பத்தில் அலங்காரமாகக் கொய்து தொங்கவிடப்பட்ட ஆடை. கொய்யடி நாரை - வண்டான மென்னும் நாரை. கொய்யல் - கொய்யா. கொய்யுளை - குதிரைப் பிடர்மயிர், குதிரை. கொரவி - தினை. கொலு - ஓலக்க இருப்பு. கொலுசு - ஒருவகைக் கைவளை. கொலை - வதை. கொலைக்களம் - கொல்லப்படும் இடம். கொலைஞன் - கொலைக்காரன். கொலைமலை - யானை. கொலைமறுத்தல் - சாந்தலிங்க சுவாமிகள் செய்த ஒரு நூல். கொலைவன் - வேடன், கொலை காரன், சிவன். கொல் - கொலைத்தொழில், வருத்தம், கொற்றொழிதல், பூட்டு, ஐயப் பொருளில் வரும் ஒரு இடைச் சொல், பெரும்பாலும் செய்யுளில் வரும் ஓர் அசைநிலை. கொல்குறும்பு - பாலை நிலத்தூர். கொல்லம் - கடல்கொண்ட தென் றமிழ் நாடுகளுள் ஒன்று, சேர நாட்டிலுள்ள ஒரு பட்டினம். கொல்லமண்டு - கி.பி. 824ல் தொடங்கி நடக்கும் மலையாள ஆண்டு. கொல்லர் - கொற்றொழில், புரிவோர், அரண்மனைவாயில் காப்போர். கொல்லறு - கொத்தன்கரண்டி. கொல்லனழிசி - சங்க காலப் புலவர் (குறு. 26, 138). கொல்லாபண்டி - கொல்லாவண்டி, வண்டி. கொல்லி - கொல்வது, ஒரு மலை, மருதயாழ்த் திறவகை. கொல்லிக் கண்ணன் - சங்க காலப் புலவர் (குறு. 34). கொல்லிக்கௌவாணம் - முற் காலத்து வழங்கிய ஒருவகைச் சிறுபண். கொல்லிச்சிலம்பன் - சேரன். கொல்லிப்பரவை - கொல்லிமலையில் தேவரால் நிருமிக்கப்பட்டு நோக்குவாரைத் தன்வசப்படுத்தும் மோகினிப் பாவை. கொல்லிவராடி - பாலை யாழ்த் திறவகை. கொல்லுதல் - வகைத்தல், அழித் தல், வெட்டுதல், துன்புறுத்தல். கொல்லெனல் - ஓர் ஒலிக்குறிப்பு. கொல்லை - முல்லைநிலம், புன்செய் நிலம், தரிசு, புழைக்கடை, மலங் கழிக்குமிடம், தோட்டம், வரம்பு கடந்து நடப்பவன். கொல்லிப்பல்லி - பூடுவகை. கொல்லமை - வரம்பு கடந்து ஒழுகுதல். கொவ்வை - கொவ்வைக்கொடி. கொழிஞ்சி - நாரத்தை, பூவாது காய்க்குமரம், காட்டு அவரி. கொழித்தல் - தெள்ளுதல், ஒதுக்குதல், வாருதல், பொழிதல், குற்றங் கூறுதல், மேலே கிளம்புதல். கொழியலரிசி - நன்றாகத் தீட்டப் படாத அரிசி. கொழு - கலப்பைக் கொழுவாணி, துளையிடுமூசி. கொழுகொழும்பு - மரங்கள் ஏறிப் படர்தற்கு நடும் கொம்பு. கொழுக்கட்டை - பணிகாரவகை. கொழுதல் - குடைதல், பறித்தல், கிழித்தல். கொழுத்தாடுபிடிக்கை - புலி ஆட்டு மந்தையிற் புகுந்து பிடிப்பது போலும் விளையாட்டு. கொழுநனை - மலரும் பருவத் தரும்பு. கொழுநன் - கணவன். கொழுநீர் - பெருகிய நீர். கொழுந்தன் - கணவனுடன் பிறந் தான். கொழுந்தி - மனைவியுடன் பிறந் தான். கொழுந்து - தளிர். கொழுந்துதல் - சுவாலித்தல். கொழும்பு - செழிப்பு, புஷ்டி, திமிர், நிலத்தின் மதர்ப்பு. கொழுமீன் - கழிமீன்வகை. கொழுமுதல் - மரத்தின் பருத்த அடிப்பாகம். கொழுமை - செழுமை, இளமை, அழகு, நிறம், குளிர்ச்சி. கொளகொளத்தல் - இளகிப் போதல். கொளாஅல் - கொள்ளச்செய்கை. கொளு - செய்யுளின் கருத்து விளக் கும் சொற்றொடர், உருவுத்திரை மாட்டுங்கருவி, பொருத்துவாய், பழுவெலும்பு. கொளுகொம்பு - கொழுகொம்பு. கொளுக்கி - கொக்கி. கொளுத்து - உடற்சந்து, ஆபரணங் களின் பூட்டு. கொளுத்துதல் - கொள்ளச் செய் தல், விளக்குதல், தீப்பற்ற வைத்தல். கொளுவுதல் - கொள்ளச் செய்தல், தீமுட்டுதல், பூட்டுதல், தூண்டி விடுதல். கொளை - பிடிப்பு, கோட்பாடு, பயன், இசைப்பாட்டு, தாளமிட்டு ஒற்றறுக்கை. கொளையமைத்தல் - வில்லை நாணேற்றுதல். கொள் - கொள்ளு, குடைவேல், பழைய சிறு நிறை அளவு. கொள்கலம் - பண்டம் இடும்கலம். கொள்கை - பெறுகை, கோட்பாடு, ஒழுக்கம், இயல்பு, செருக்கு. கொள்கையிடம் - தவச்சாலை. கொள்கொம்பு - கொழுகொழுப்பு. கொள்முதல் - வாங்கினவிலை. கொள்ள - நிரம்ப. கொள்ளப்படுதல் - மதிக்கப்படுதல். கொள்ளம் - குழைசேறு. கொள்ளம்பக்கனார் - சங்க காலப் புலவர் (குறு. 34). கொள்ளளவு - நிரம்புமளவு (Capacity). கொள்ளார் - பகைவர். கொள்ளி - கொள்ளிக்கட்டை, நெருப்பு. கொள்ளிக்கால் - குதிரைக் குற்றங் களுள் ஒன்று. கொள்ளிடம் - காவிரியாற்றின் ஒரு கிளை. கொள்ளிமலை - பிணத்துக்கு அணியும் மாலை. கொள்ளியெறும்பு - எறும்புவகை. கொள்ளி வட்டம் - நெருப்பைச் சுற்றும்போது உண்டாகும் வட்டம். கொள்ளிவாய்ப்பேய் - கொள்ளி வாய்ப் பிசாசு. கொள்ளிவைத்தல் - நெருப்பு. கொள்ளு - கொள். கொள்ளுதல் - எடுத்துக் கொள் ளுதல், பெறுதல், விலைக்கு வாங் குதல், மணஞ்செய்தல், கவர்தல், ஏற்றுக் கொள்ளுதல். கொள்ளுப்பாட்டான் - பாட்டனுக்குத் தந்தை. கொள்ளுப்பேரன் - பேரன்மகன். கொள்ளை - சூறையிடுகை, மிகுதி, கூட்டம், நோய்வகை, விலை, பயன். கொள்ளை கொள்ளுதல் - வசீகரித்தல், கொள்ளையடித்தல். கொறி - ஆடு, மேடராசி. கொறித்துத் தின்பன் - கொறிக்கும் பிராணிகள் (Rodents). கொறித்தல் - சிறிது சிறிதாக உண் ணுதல். கொறுகொறுத்தல் - கோபங் காட்டுதல். கொறுக்காய்ப்புளி - கொடுக்காய்ப் புளி. கொற்கை - தாமிரபர்ணி முகத்து வாரத்துள்ள பழைய துறை முகம். கொற்றக்குடை - அரசாங்கக் குடை. கொற்றங்கொற்றனார் - சங்க காலப் புலவர் (நற். 259). கொற்றத்தேவி - பட்டத்தரசி. கொற்றமுரசு - வெற்றிமுரசு. கொற்றம் - வெற்றி, வீரம், வன்மை, அரசியல். கொற்றவஞ்சி - பகைவரை வாளோச்சி அழித்த அரசனது புகழைப் பெருக வுரைக்கும் புறத்துறை. கொற்றவள்ளை - பகைவர் தேசம் கெடுவதற்கு வருந்துவதைக் கூறு முகத்தான் அரசன் கீர்த்தியைச் சொல்லும் புறத்துறை, தோற்ற வேந் தன் கொடுக்கும் திறை, பகைவர் நாடழிகை. கொற்றவன் - அரசன், வெற்றியாளன். கொற்றவாயில் - ஆசாரவாசல். கொற்றவி - அரிசி. கொற்றவுழிஞை - பகைவர் பதியைக் கைக் கொள்ளுதற் பொருட்டு அரசன் படையெடுத்துச் செல்லுதலைக் கூறும் புறத்துறை. கொற்றவை - துர்க்கை. கொற்றவைநிலை - கொற்ற வைக்குப் பலியிட்டுப் பரவும் புறத்துறை. கொற்றன் - கொத்தன். கொற்றான் - வேலை செய்பவன். கொற்றான் - கொடிவகை. கொற்றி - கொற்றவை, ஒருவகை வரிக்கூத்து, பசுவின் இளங்கன்று. கொற்றியார் - துளசிமாலை முதலிய சின்னங்களையணிந்து திருமாலடியராய்த் திரியும் பெண் துறவிகள். கொற்றிலக்கை - ஒரு பழைய வரி. கொற்றுறை - கொல்லன் பட்டடை. கொனை - நுனி. கொன் - பயனின்மை, அச்சம், கலம், விடியற்காலம், பெருமை. கொன்றை - மரவகை. கொன்றைதேந்தன் - ஒளவையார் செய்த ஒரு நீதி நூல். கொன்னாளன் - பயனற்றவன். கொன்னுதல் - திக்கிப் பேசுதல், குழறுதல். கொன்னே - வீணாக. கொன்னை - திருந்தாப் பேச்சு. கோ கோ - அரசன், தகப்பன், தலைவன், மலை, குசவன், எருது, சுவர்க்கம், பூமி, கிரணம், கண், நீர், சாறு. கோகத்தி - பசுக் கொலையாலாகிய பாவம். கோகம் - சக்கரவாகம், செந்நாய், தவளை, உலர்ந்த பூ. கோகயம் - தாமரை. கோகரணம் - பசுப்போல் காதை மாத்திரம் அசைத்துக் கொண் டிருக்கும் வித்தை. கோகழி - திருவாடுதுறை என்னும் கோயில். கோகனகம், கோகனதம் - செந் தாமரை. கோகிலம் - குயில், குரங்கு. கோகு - புயம், கபடம், கழுகை. கோகுதட்டுதல் - ஆரவாரஞ் செய் தல். கோகுலம் - கண்ணன் வளர்ந்த ஆயர்பாடி, கோகிலம். கோக்காலி - சட்டங்கள் கோத்துச் செய்யப்படும் மேடை போன்ற தட்டு. கோக்குலமுற்றனார் - சங்க காலப் புலவர் (நற். 96, குறு. 98). கோங்கம் - கோங்கிலவு, நெல்லி. கோங்கலர் - முற்காலத்து வழங்கிய ஒருவகைத் துகில். கோங்கு - மரவகை, முள்ளிலவு. கோசகாரம் - பட்டுப்பூச்சி. கோசணை - பேரொலி. கோசம் - முட்டை, உறை, ஆண்குறி, கருப்பை, பொக்கிஷசாலை, புத்தகம், வீதி. கோசமதம் - ஆண் யானையின் குறியினின்று வரும் மதநீர். கோசரம் - பொறி யுணர்வு, குறித்த காலத்தில் கிரகங்கள் நிற்கும் நிலை, கோத்திரம், பூந்தாது. கோசரித்தல் - அறிவுக்குப் புலனா தல். கோசர் - ஒரு சாதியார், கொங்கு நாட்டினரெனக் கருதப்படுவோர். கோசலம் - ஐம்பத்தாறு தேசங்களி லொன்று, பசு மூத்திரம். கோசலை - இராமன் தாய். கோசிகம் - பட்டாடை, ஒரு பண், சாம வேதம், கூகை. கோசிகன் - விசுவாமித்திரன். கோசு - கூப்பிடு தூரவளவு. கோடகசாலை - ஒருவகைப் பூடு. கோடகம் - சிகரமாகச் செய்த முடி வகை, பல தெருக்கூடுமிடம், குதிரை, புதுமை. கோட்டுப்படம் - விளக்கப் படம் (Diagram). கோடணை - ஒலி, முழக்கம், யாழ், வாசிக்கை, அலங்காரம், வாசியப் பொது, கொடுமை. கோடதகம் - சுக்கு. கோடபதி - உதயணனுடைய யாழ். கோடம் - பேரொலி எல்லை, வெண்கலம். கோடரம் - மரக்கொம்பு, தேரின் மொட்டு, குரங்கு, மரப்பொந்து, குதிரை. கோடரவம் - துன்பம். கோடரி - கோடாலி. கோடர் - சிகரம். கோடல் - கொள்ளுகை, பாடங் கேட்கை, வளைவு, வெண்காந்தள். கோடவதி - வீணை. கோடாசலம் - பேதியைக் கட்டும் மருந்து வகை. கோடாய் - செவிலித்தாய். கோடாலம் - பிறைபோல் வளைந்த மாலை வகை. கோடானுகோடி - பல கோடி. கோடி - ஆடை, புதிய ஆடை, புதுமை, வளைவு, நூறு நூறாயிரம் (Crore), தொகுதி, நுனி, கடலுட் செல்லும் தரை முனை, மூலை, சேனையின் பிற் கூழை, எல்லை. கோடிகம் - பூத்தட்டு, குண்டிகை, அணிகலச் செப்பு, ஆடை. கோடிகர் - ஆடை நெய்வோர். கோடிக்கரை - தனுக்கோடி முதலிய தீர்த்தக்கரை. கோடிப்பாம்பு - பழகாத பாம்பு. கோடியர் - கூத்தர். கோடீரம் - சடை முடி, இந்திரன் வில். கோடு - வளைவு, நடுநிலை நீங்குதல், யானை பன்றிகளின் தந்தம், ஊது கொம்பு, மரக்கொம்பு, பிறைமதி, சங்கு, மயிர்முடி, மலைச் சிகரம், மலை, வரி, நீர்க்கரை, குளம், வரம்பு, ஆடைக்கரை, முனை, பக்கம், கொடுமை. கோடுதல் - வளைதல், நெறி தவறுதல், நடுநிலைமை தவறுதல். கோடை - மேல்காற்று, வேனிற் காலம், வெயில், கோடைக்கானல், குதிரை காந்தள். கோடைக்கானல் - பழநி மலையின் உயர்ந்த பகுதி. கோடைபாடிய பெரும்பூதனார் - சங்க காலப் புலவர் (புறம். 259). கோட்டகம் - கரை, பள்ளம், ஆழமான நீர்நிலை. கோட்டம் - வளைவு, வணக்கம், நடுநிலை, நிறம்புகை, மனக் கோணல், பகைமை, நாடு, நகரம், கரை, யாழ், அறை, கோயில், பாசறை, இடம், ஒருவகை வாசனைச் செடி, குரா, பசுக்கொட் டில், பசுக்கூட்டம். கோட்டம்பலத்துத்துஞ்சியசேரமான் - சங்க காலப் புலவர் (அகம். 168 : புறம். 245). கோட்டாலை - துன்பம், விகடக் கூத்து. கோட்டான் - கூகை. கோட்டி - பைத்தியம், சபை, கூட்டம், பேச்சு, கூடியிருக்கை, கோபுர வாயில், மனைவாயில். கோட்டிகொள்ளுதல் - சபையில் பேசுதல். கோட்டியூர் நல்லாந்தையார் - சங்க காலப் புலவர் (நற். 21). கோட்டினம் - எருமைக் கூட்டம். கோட்டுதல் - வளைத்தல், முறித்தல், எழுதுதல், கட்டுதல். கோட்டுநீறு - கிளிஞ்சிற் சுண்ணாம்பு. கோட்டுப்படம் - விளக்கப்படம் (Diagram). கோட்டுப்பூ - மரக்கொம்புகளில் தோன்றும் பூ. கோட்டுமா - யானை, காட்டுப்பன்றி, எருமைக் கடா. கோட்டுமீன் - சுறா. கோட்டுவாத்தியம் - தந்தியுள்ள ஒருவகை வாத்தியம். கோட்டெங்கு - குலைகளையுடைய தெங்கு. கோட்டை - 21 மரக்கால் கொண்ட அளவை, நெல்லை, உள்ளே கொட்டிக் கட்டிய வைக்கோற்புரி, மதிலரண், காடு, இஞ்சி, பரிவேடம். கோட்படுதல் - பிடிக்கப்படுதல், அறியப்படுதல், வலிமை கொள்ளுதல். கோட்பறை - செய்திகளை நகரத் தார்க்கு அறிவிக்கும் பறை. கோட்பாடு - கொள்கை, நடத்தை. கோட்பு - வலிமை, கொள்ளுகை. கோட்புகுதல் - மரம் முதலியன பயன்கொள்ளும் பருவத்தன வாதல். கோணங்கி - கோமாளி. கோணமாநெடுங் கோட்டனார் - சங்க காலப் புலவர் (நற். 40). கோணமானி - கோணம் அளக்கும் கருவி (Sextant). கோணம் - வளைவு, கூன்வாள், யானைத் தோட்டி, குறுந்தெரு, மூலை, மூக்கு, குதிரை. கோணல் - வளைவு, கூன், மாறுபாடு. கோணன் - கூனன், நிதிகேடன். கோணாகோணம் - கோணத்துட் கோணம். கோணாவட்டம் - அரச விருது களுள் ஒன்று. கோணி - எட்டுமரக்கால் கொண்ட ஓர் அளவு பன்றி, சாக்குப்பை. கோணுதல் - வளைதல், நெறி பிறழ்தல், மாறுபடுதல், வெறுப்புக் கொள்ளுதல். கோணை - கோணல், கொடுமை, உபத்திரவம், வலிமை, அழி வின்மை. கோண் - வளைவு, மாறுபாடு, கொடுங்கோன்மை, நுண்ணிய பகுதி. கோண்டுகள் - இந்தியாவில் வாழும் ஒரு சாதியினர் (Gonds). கோண்டுவானா - பறையடுக்கு வகை. கோண்டை - இலந்தைக்கனி. கோண்மா - புலி சிங்கம் முதலியன. கோண்மீன் - கிரகம். கோதடி - கப்பற்கயிற்றை உரைசாமற் காக்கும் தடி. கோதண்டபாணி - இராமன். கோதண்டம் - வில், இராமனது வில், புருவமத்தி, பள்ளிச்சிறாரைத் தண்டிக்கும் தொங்கு கயிறு. கோதமனார் - சங்க காலப் புலவர் (புறம். 366). கோதமன் - கௌதமன். கோதம் - சினம், கோத்திரம். கோதனம் - பசுக்கன்று, பசுச் செல்வம். கோதா - உடும்பு. கோதாட்டு - பாராட்டு, வஞ்சிக்கை, குறும்பு விளையாட்டு. கோதாட்டுதல் - பாவம் முதலிய குற்றங்களைப் போக்குதல், சீராட் டுதல். கோதாரி - வாந்திபேதி. கோதாவரி, கோதாவிரி - ஓர் ஆறு. கோதி - கோதுமை. கோதிகை - உடும்பு. கோது - சக்கை, பழத்தின்தோல், குற்றம், பயனின்மை. கோதுகம், கோதுகலம், கோதுகுலம் - உள்ளக்களிப்பு. கோதுதல் - மூக்கால் இறகைத் துளைத்து நேராக்குதல், மயிர்ச்சிக் கெடுத்தல், வெளிச்சிதறுதல், வாரு தல். கோதுமை - தானியவகை. கோதூமம் - கோதுமை. கோதூளி - அந்திநேரம். கோதை - பெண்கள், தலைமயிர், ஆண்டாள், பூமாலை, முத்தாரம், ஒழுங்கு, பெண், சேரன், காற்று, பூதம், உடும்பு, வில்லாளர், கையிற் பூணும் தோலுறை, மரக்காற்பறை, கௌதமி. கோதையர் - பயனில்லாதன கூறு வோர், பெண்கள். கோத்திரம் - வமிசம், மலை. கோத்திரை - பூமி. கோத்தும்பி - தும்பி என்ற சொல்லை இறுதியிலுடைய திருவாசகப் பாட்டு. கோத்தை - பழுது. கோநகர் - இராசதானி, கோயில். கோநாய் - ஓநாய். கோந்தி - குரங்கு. கோந்துரு - பூட்டனுக்குப் பாட்டன். கோபதி - எருது, இந்திரன். கோபப்பிரசாதம் - நக்கீரதேவர் செய்த ஓர் நூல் (11ஆம் திரு முறையி லுள்ளது.) கோபம் - சினம், தம்பலப்பூச்சி ஒரு வகைத் துகில். கோபன் - சிவன், இடையன். கோபாலன், கோபாலகன் - இடையன், கண்ணன். கோபாலகிருஷ்ண தாசர் - எம் பிரான் சதகம் பாடியவர் (18ம் நூ.). கோபாலகிருஷ்ண பாரதியார் - நந்தனார் கீர்த்தனம் பாடியவர் (19ம் நூ.). கோபால்ட் - உலோக வகை (Cobalt). கோபி - சினமுள்ளவன், நன்னாரி, கோபிநாமம். கோபிசந்தனம் - திருமாலடியார் அணி யும் ஒருவகைத் திருமண். கோபுரதாங்கி - கோபுரதாங்கிப் பதுமை. கோபுரம் - நகரம் அல்லது கோயி லின் பெருவாயில். கோப்பழித்தல் - சீரழித்தல். கோப்பிடுதல் - ஏற்பாடு செய்தல். கோப்பு - கோக்கை, ஒழுங்கு, அமைப் பழகு, அலங்காரம், கவிவு, உபாயம், கோக்கப்படும் சுமை. கோப்புத் தட்டு - அச்சுக் கோக்கும் தட்டு (Composing stick). கோப்பெண்டு - அரசன் தேவி. கோப்பெருங்கணக்கர் - அரசாங் கத்துத் தலைமைக் கணக்கர். கோப்பெருஞ்சோழன் - சங்க காலப் புலவர் (புறம். 214). கோப்பெருந்தேவி - பட்டத்தரசி. கோப்பை - உண்ணும் தட்டுகள். கோமகன் - அரசன். கோமட்டி - கோமுட்டி. கோமடந்தை - இராச இலக்குமி. கோமதி - ஒரு ஆறு. கோமயம் - சாணம். கோமரம் - தெய்வ ஆவேசம். கோமளம் - இளமை, மென்மை, அழகு, கறவைப் பசு, மாணிக்க வகை. கோமாட்டி - கோமகள். கோமயு - நரி. கோமாரி - பசுக்களின் காலிலும் வாயிலும் காணும் நோய். கோமாளி - கோணங்கி. கோமான் - அரசன், பெருமையிற் சிறந்தோன், பன்றி. கோமி - கோமதி. கோமுகி, கோமுகை - பசு முகவடிவாகச் செய்யப்பட்ட நீர் விழும்வாய். கோமுட்டி - கோமாட்டி, மார்வாடி சாதியினரில் ஒரு பிரிவினர். கோமுத்திரிகை - ஒருவகைச் சித் திரகவி. கோமுளி - இராச இருடி. கோமேதகம், கோமேதம் - நவமணி களுள் ஒன்று. கோம்பல் - தணியாக்கோபம். கோம்பி - பச்சோந்தி, ஓந்தி. கோம்பு - சினக்குறிப்பு. கோயிலாழ்வார் - கருப்பக்கிருகம். கோயில் - அரண்மனை, ஆலயம். கோயில்கொள்ளுதல் - வாழுமிட மாகக் கொள்ளுதல். கோயில்வாரியம் - கோயில் விசாரணைச் சபை. கோயிற்பற்று - கோயிலின் அதி காரத்துக்குட்பட்ட ஊர்ப்பகுதி. கோயிற்புராணம் - உமாபதி சிவா சாரியர் சிதம்பரத்தைப் பற்றிச் செய்த புராணம். கோயிற் பெருச்சாளி - கோயிற் சொத்தை அபகரிப்போன். கோயினான்மணிமாலை - பட்டினத் தடிகள் சிதம்பரத்தைப் பற்றிப் பாடிய ஒரு பிரபந்தம். கோயின்மை - செருக்கு. கோய் - கன்முகக்கும்பாத்திரம், வாசனைச் செப்பு. கோரகம் - அரும்பு. கோரகை - பௌத்தபிக்குகளின் பிச்சைப்பாத்திரம், அகப்பை கோரக்கர் மூலி. கோரக்கநாதர், கோரக்கர் - சித்தருள் ஒருவர். கோரக்கர்மூலி - கஞ்சா. கோரசம் - சிவல் என்னும் பறவை. கோரணி - கேலிக்கூத்து. கோரதரம் - நகரத்தொன்று. கோரப்பல் - விகாரமான பல், நீண்டு வளைந்தபல். கோரம் - கொடுமை, அச்சந்தருவது, நரகவகை, வட்டில், விரைவு, சோழன் குதிரை. கோரம்பு - தீம்பு. கோரான் - குறான், முகமதியர் வேதம். கோரி - பார்வதி, முகமதியர் கல்லறைச் சமாதி. கோரிகை - அகப்பை. கோரிக்கை - வேண்டுகோள். கோருதல் - வேண்டுதல், விரும் புதல். கோரை - புல்வகை. கோரோசனை - பசுவின் வயிற்றி னின்று எடுக்கப்படும் ஒரு வாசனைப் பொருள். கோலச்சாரி - வேட்டுவ மகள் கொற்றவையுருக்கொண்டு ஆடும் கூத்து. கோலம் - அழகு, நிறம், உருவம், தன்மை, வேடம், ஆபரணம், தரை யிலிடும் கோலம், விளையாட்டு, முயற்சி, சிறு நீரோட்டம், பன்றி, இலந்தை, குரங்கு, பாக்கு, பீர்க்கு. கோலறை - அளந்து கொடுக்கப் படும் நிலம். கோலாகலம், கோலாலம் - ஆடம் பரம். கோலாங்கூலம் - முசு. கோலாடி - அரசராணை செல்லு மிடம். கோலாட்டம் - ஒருவிளையாட்டு. கோலாள் - தேர்ப்பாகன். கோலி - சிறுகுண்டு வடிவான விளையாட்டுக் கருவி. கோலிகன் - நெசவுதொழில் செய்யும் கீழ்ச்சாதி. கோலிளகுதல் - அரசனிறக்கை. கோலுதல் - பாத்தி வகுத்தல், வளைத்தல், திரட்டிவைத்தல், முகந்து அள்ளுதல், விரித்தல், தொடங்குதல், ஆலோசித்தல். கோலெரி - விளக்குத்தண்டின் மீதுள்ள விளக்கு. கோலெழுத்து - மலையாள நாட்டில் வழங்கிய ஒருவகை எழுத்து. கோலை - மிளகு. கோலொற்றுதல் - அம்பு எய்தல். கோலோர் - யானையை அடக்கும் குத்துக்கோற்காரர். கோல் - கம்பு, செங்கோல், ஊன்று கோல், குதிரைச் சம்மட்டி, அம்பு, ஈட்டி, யாழ்நரம்பு, துலாராசி, துலாக்கோல், அரசாட்சி, ஐப்பசி மாதம், அணியின் சித்திரவேலை, திரட்சி. கோல்கொள்ளுதல் - தேர் செலுத் துதல். கோவணம் - கௌபீனம். கோவத்தன் - சங்க காலப் புலவர் (குறு. 66, 194). கோவம் - கோபம், தம்பலப்பூச்சி, பொன். கோவர்த்தனம் - வடமதுரைப் பக்கத்துள்ள ஒரு மலை. கோவலன் - முல்லை நிலமக்கள், இடையர். கோவலன் - கண்ணகியின் கணவன். கோவளம் - தரைமுனையிலுள்ள ஊர். கோவன் - இடையன், அரசன், வசிட்டன். கோவாங்கு - ஒருவகை மாணிக்கம். கோவாலவண்டி - ஒருவகை வண்டி. கோவி - இடைச்சி, கோபமுள்ளவள். கோவிட்டு - பசுச்சாணம். கோவித்தியர் - முல்லை நிலமகளிர். கோவிந்தசதகம் - நாராயண பாரதி யாரியற்றிய ஓர் சதகம். கோவிந்தம்போடுதல் - கோவிந்தா என்று சொல்லிக் கையால் வணங்குதல். கோவிந்தர் - முல்லைநிலமாக்கள். கோவிந்தன் - திருமால். கோவிலங்கு - சிங்கம். கோவில் - கோயில். கோவில்வாசல்மறியல் - நாட்டுக்கோட்டைச் செட்டிகள் நடத்தும் கோயிற் பஞ்சாயத்து வகை. கோவூர்கிழார் மகனார் செழியனார் - சங்ககாலப் புலவர் (நற். 383). கோவேங்கைப் பெருங்கதவன் - சங்க காலப்புலவர் (குறு. 134). கோவேன் -குயவர். கோவேறுகழுதை - கழுதை வகை. கோவை - கோக்கை, வரிசை, கோத்தவடம், ஏற்பாடு. கோவைசியர் - இடையர். கோழம்பம் - குழப்பம். கோழரை - வழுவழுப்பான மரத்தடி. கோழி - குக்குடம், உறையூர். கோழிக்கொடியோன் - முருகக் கடவுள், ஐயனார். கோழிக்கொற்றனார் - சங்க காலப் புலவரொரவர் (குறு. 276). கோழிச்சேவல் - ஆண்கோழி. கோழிப்பண்ணை - கோழிகளை வளர்க்கும் நிலையம் (poultry farm). கோழியூர்கிழார் மகனார் செழியனார் - சங்ககாலப் புலவர் (நற். 383). கோழிவென்றி - சேவலின் வெற்றியைக் கூறும் புறத்துறை. கோழிவேந்தன் - சோழன். கோழை - கபம், உமிழ்நீர், மனவலி மையின்மை, சிறுபிள்ளை. கோழைபடுதல் - கீழ்மையடைதல். கோழ் - வழுவழுப்பான, செழிப்பான, கொழுப்பான. கோளகம் - மிளகு, திப்பிலி, தாளகம், விரியன்பாம்பு. கோளகன் - விதவை பெற்ற மகன். கோளகை - வட்டவடிவம், யானைக் கிம்புரி, மண்டலிப் பாம்பு. கோளம் - உருண்டை, பிராணிகளின் உடலில் நீருறும் தசைப்பற்று. கோளையோகம் - ஓர் இராசியில் ஏழு கிரகங்கள் நிற்கவரும் யோகம். கோளரி - சிங்கம். கோள்hர்த்தம் - பூகோளத்தின் பாதி. கோளாளன் - நூற்பொருளை மறவாது உட்கொள்பவன். கோளாறு - குற்றம், கலகம். கோளி - பூவாது காய்க்கும் மரம், ஆல், ஆத்தி, குதிரை கழுதைகளின் பெட்டை. கோளிகை - கழுதை குதிரைகளின் பெட்டை. கோளிழைத்தல் - கொல்லுதல். கோள் - கொள்ளுகை, துணிபு, மதிப்பு, வலிமை, தன்மை, குறளை, பொய், தீமை, கொலை, பாம்பு, விடம், இராகு, மேகம், ஒளி, பரிவேடம், குலை, கொழு. கோறம்பு - ஒருவகை நெற்றியணி. கோறல் - கொல்லுகை. கோறின்னல் - பல்விளக்குகை. கோறை - துவரம். கோற்புழு - உலண்டு. கோற்றொடி - வேலைப்பாடமைந்த கைவளை. கோற்றொழில் - அரிய வேலைப்பாடு. கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரனார் - சங்ககாலப் புலவர் (புறம். 54, 61) கோனான் - இடையர் பட்டப்பெயர். கோனேரி - திருப்பதியிலுள்ள புட்கரிணி என்னும் குளம். கோனேரியப்ப முதலியார் - தமிழில் உபதேச காண்டம் பாடிய ஆசிரியர் (18ம் நூ). கோனோலை - அரசனாணை எழுதப் பட்ட திருமுகம். கோன் - அரசன், தலைவன், அரசாட்சி. கௌ கௌ - கொள்ளு. கௌசலை - இராமன்தாய். கௌசாம்பி - கங்கைக் கரையிலுள்ள ஒரு பழைய நகரம். கௌசிகம் - பட்டாடை, விளக்குத் தண்டு, பண்வகை. கௌசிகன் - விசுவாமித்திரன், இந்திரன். கௌடநெறி - சொற் செறிவின்றி சொற் பெருகத் தொடுக்கும் செய்யுள் நெறி. கௌடம் - ஒருதேசம், கௌடநெறி. கௌடிலம் - வளைவு. கௌடிலியர் - சாணக்கியர். கௌணப்பொருள் - இலக்ணை வகையாற் கொள்ளும் பொருள். கௌணம் - முக்கியமல்லாதது. கௌதகம் - போதிகை. கௌதமன் - புத்தன், கிருபாசாரியர், ஒரு முனிவர். கௌபீனம் - கோவணம். கௌமாரம் - இளமை, முருக சமயம். கௌமாரி - காளி, சத்தமாதருள் ஒருத்தி. கௌரம் - வெண்மை, பொன்னிறம். கௌரவம் - மேன்மை, பெருமிதம். கௌரவர் - குருகுலத்தார், பாண்டவர். கௌரி - பார்வதி, காளி, எட்டு அல்லது பத்து வயதுள்ள பெண். கௌரிசங்கம் - உத்திராக்க வகை. கௌரியன் - பாண்டியன் பட்டப் பெயர். கௌவி - கௌவ்விப் பிடிப்பது (Clip). கௌவியம் - பசுவினின்றெடுக்கப் படும் பால், தயிர், நெய், கோசலம், கோமயம் ஆகிய பொருள்கள். கௌவுதல் - கவர்தல், கவ்வுதல். கௌவை - ஒலி, வெளிப்பாடு, பழிச்சொல், துன்பம், கள். கௌனம் - இராகவகை. கௌளி - பல்லி, வெற்றிலைக் கட்டு, தேங்காயோட்டுப் பாத்திரம். ங ஙகரம் - குறுணியளவு. ஙனம் - சுட்டு வினாவெழுத்துக்களை ஒட்டிப் படி என்னும் பொருள் தருவது (எங்ஙனம், இங்ஙனம்), இடம். ச ச - உடன் என்னும் பொருள் தரும் வட மொழியிடைச் சொல். சஃகுல்லி - சிற்றுண்டிவகை. சக - கூட்டு (Plus). சககமனம் - இறந்த கணவனோடு உடன்கட்டை ஏறுகை. சககாரம் - தேமா. சகசண்டி - பெருமூடன். சகசநிட்டை - அப்பியாசத்தால் இயற்கையாயமைந்த நிட்டை. சகசம் - இயற்கையானது. சகசாலம் - மாயவித்தை. சசசோதி - பேரொளி. சகச்சிரம் - சிவாகமங்களுள் ஒன்று. சகடக்கால் - வண்டிச்சக்கரம். சகடப்பொறி - சக்கர வடிவான ஒரு யந்திரம். சகடம் - வண்டி, சகட, வியூகம், உரோகிணி, துந்துபி வாத்தியம், ஊர்க்குருவி, வட்டில். சகடயோகம் - குருவுக்கு ஆறு எட்டு பன்னிரண்டாம் வீட்டில் சந்திரன் இருத்தலால் உண்டாகும் பலன். சகடு, சகடை - வண்டி, தேரைக் குறிக்கும் சதுரங்கக்காய், உரோ கிணி. சகண்டை - துந்துபி என்னும் மேளம், வாச்சியப் பொது. சகதண்டம் - உலக உருண்டை. சகதி - சேறு, பொல்லா நிலம். சகதீசன் - உலகை நடத்தும் கடவுள். சகதேவன் - பாண்டவரில் இளையான். சகதேவி - நெய்ச் சிட்டிச்செடி. சகத்குரு - பரமகுரு, உலகுக் கெல்லாம் குரு. சகத்தன் - நடுவுநிலைமையுள்ளவன். சகத்திரம் - ஆயிரம். சகத்து - உலகம். சகந்நாதம் - ஒரிசா மாகாணத்தி லுள்ள பூரி என்னும் விட்டுணுத் தலம். சகபாடி - ஒருசாலை மாணாக்கன். சகமார்க்கம் - சாரூப்பியத்தைப் பெறுதற்குரிய யோகநெறி. சகமீன்றவள் - உலகத்தைப் பெற்ற தாயாகிய உமை. சகம் - உலகம், குறிக்கப்பட்ட காலங்களிலிருந்து தொடங்கிக் காலங்கணிக்க வழங்கப்பட்டுவரும் ஆண்டுமானம், வெள்ளாடு, சட்டை. சகரநீர் - கடல். சகரர் - கடல் தோன்றுமாறு பூமியைத் தோண்டிய சகர குமாரர். சகரன் - முதல் ஏழுவள்ளல்களுள் ஒருவன். சகலகலாவல்லி - கலைகளுக் கெல்லாம் தலைவியாகிய சரசுவதி. சகலகுணசம்பன்னன் - நற்குணங் களெல்லாம் நிரம்பியவன். சகலம் - எல்லாம், துண்டு, சகலாவத்தை. சகலர் - ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மலமுடைய உயிர்கள். சகலன் - தன்மனைவியின் உடன் பிறந்தாளுடைய கணவன். சகலாகபண்டிதர் - அருணந்தி சிவாசாரியார். சகலாத்து - ஒருவகைக் கம்பளித் துணி. சகலாவத்தை - மேலாவத்தை. சகல் - கொசுகு. சகவாசம் - நட்பு. சகளத்திருமேனி - சிவனது உருவ வடிவு. சகளநிட்களம் - சிவனது அருவுரு வத் திருமேனியாகிய இலிங்கம். சகளம் - உருவத் திருமேனி. சகளவல்லி - வீணை வகை. சகளீ கரித்தல் - உருவங் கொள்ளு தல். சகனம் - பிட்டம், சகாப்தம். சகன் - சாலிவாகனன், உலக நாயகன். சகா - தோழன், நட்பு. சசாத்தம், சகாப்தம் - கி.பி. 78-இல் தொடங்கும் சாலிவாகனன் பெய ரால் வழங்கும் ஆண்டுமானம். சகாமியம் - பயனை விரும்பிச் செய்யும் கருமம். சகாயம் - துணை விலை நயம். சகாயன் - தோழன். சகானா - ஓர் இராகம். சகி - தோழி, தோழன். சகிதம் - கூட. சகிதன் - உடன்கூடியவன். சகித்தல் - பொறுத்தல். சகிப்பு - பொறுக்கை. சகியம் - நிலப்பனை, மஞ்சள், மாமரம், காவிரி ஆறு உற்பத்தியாகும் மலை. சகுடம் - சேம்பு, நாய். சகுணம் - குணத்தோடு கூடியது. சகுந்தம் - பறவை, கழுகு, பூதம், கமுகு. சகுலி - அப்பவருக்கம். சகுல்யன் - பேரனுக்குப் பேரன் முதலிய தூரதாயாதி. சகுனம் - பறவை, நிமித்தம், சகோரம், கிழங்கு. சகுனி - பறவை, துரியோதனன் மாமன், நிமித்தம் பார்ப்போன். சகுனிகிரகம் - குழந்தை பிறந்த ஆறாம் நாளிலேனும் ஆறாம் மாதத்திலேனும் ஆறாமாண்டிலேனும் குழந்தையை அல்லது தாயை வருத்துவதாகிய தீக்கோள். சகோக்தி - உடனிகழ்ச்சியணி. சகோடம் - 16 நரம்பு கொண்ட யாழ். சகோடன் - பிறனுக்குண்டான கர்ப்பத் தோடு மணமான பெண்ணிடம் பிறந்தவன். சகோதரன் - உடன் பிறந்தவன். சகோதரி - உடன் பிறந்தவள். சகோதரம் - சந்திர கிரணத்தை உண்டு வாழும் நிலாமுகிப்புள், சக்கர வாகம், பேராந்தை, செம்பரத்தை. சக்கட்டம் - பரிகாசம், நிந்தை. சக்கட்டை - சாமார்த்தியமின்மை. சக்கணி - சக்கடி (கூத்துவகை). சக்கம்மா - ஒரு பெண், தேவதை. சக்கரக்கோட்டம் - மத்திய மாகா ணத்திலுள்ள ஓர் இராச்சியம். சக்கரச்செல்வம் - பெருஞ்செல்வம். சக்கரத்தாழ்வார் - தெய்வமாகக் கொள்ளப்படும் விட்டுணுவின் சக்கரம். சக்கரபந்தம் - வண்டிச் சக்கரம் போன்ற சித்திரத்திலமையுமாறு பாடும் கவி. சக்கரபாணி - சக்கரப் படை உடைய திருமால். சக்கரப்பொறி - வைணவர் வலத்தோளில் பொறித்துக் கொள்ளும் சக்கர முத்திரை. சக்கரம் - வட்டம், உருளை, சக்கரா யுதம், குயவன் சக்கரம், ஆணை, எழுத்தடிகளும் யந்திரம், பூமி, செக்கு, மதில், கடல், பதக்கு, மலை, பெருமை. சக்கரவர்த்தி -பேரரசன். சக்கரவர்த்தித்திருமகன் - இராமன். சக்கரவர்த்தினி - பேரரசி. சக்கரவாகம் - இரவில் இணை பிரிந்து வருந்துவதாகச் சொல்லப்படும் பறவை வகை. சக்கரவாளக்கோட்டம் - காவிரிப் பூம்பட்டினத்தில் கடலையின் புறத்திருந்த ஓர் இடம். சக்காவாளம் - பூவுலகத்தைச் சூழ்ந் துள்ளதாகக் கருதப்படும் ஓர் மலை, மேருமலையின் மூன்றாம் தாழ்வரை, சக்கரவாளக் கோட்டம், சக்கரவாகம், வட்டவடிவு. சக்கராயுதன் - சக்கரப்படை உடைய திருமால். சக்கராயுதி - துர்க்கை. சக்களத்தி - மாற்றாளான மனைவி, போலிப் பொருள். சக்கிமுக்கிக்கல் - நெருப்புண்டாக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு வகைக் கல், தீக்கல். சக்கிரபாணி - துர்க்கை, சக்கரபாணி. சக்கிரம் - சக்கரம். சக்கிரன் - இந்திரன். சக்கிராங்கி - கடுகுரோகிணி. சக்கிரி - குயவன், செக்கான், பாம்பு. சக்கிலியன் - செம்மான். சக்கு - கண், பூஞ்சாணம். சக்கை - கோது, சாறு எடுக்கப்பட்டது. சக்தி - சத்தி. சங்கச் செய்யுள் - சங்க காலத்துப் பாடல். சங்கடம் - வேதனை, ஒடுக்கவழி. சங்கட்டம் - சங்கடம். சங்கணிதுறை - ஆழ்வார் திருநகரியில் தாமிரபருணியின் தென் கரை. சங்கதம் - வடமொழி. சங்கதி - கருமம். சங்கத்தமிழ் - சங்க காலத்துத் தமிழ் நூல், சங்க காலத்து உயர்ந்த தமிழ். சங்கத்தார் - சபையார், சங்கப்புலவர். சங்கநிதி - குபேரனது நவநிதிகளுள் ஒன்று. சங்கபாலன் - அட்டநாகத்தொன்று. சங்கமம் - கூடுகை, சீவனடியார் திருக்கூட்டம், இயங்குதிணைப் பொருள், அசைந்து வேறு இடம் போகும் பொருள். சங்கமருவுதல் - தமிழ்ச் சங்கத்தாரது அங்கீகாரம் பெறுதல். சங்கமர் - வீரசைவருள் ஒரு சாரார். சங்கமிருத்தல் - சங்கத்தின் அங்கத் தினராயிருத்தல். சங்கமுகம் - ஆறு கடலுடன் கூடுமிடம். சங்கமுத்திரை - வலக்கைப் பெரு விரல் நுனி சுட்டு விரலினடியைத் தொடும் முத்திரை. சங்கம் - கூட்டம், சபை, புலவர், முச் சங்கம், சங்கு, சைவளை, இலட்சங் கோடி, 2187 தேர், 2187 யானை, 6561 குதிரை, 10,935 காலாளடங்கிய சேனை, கணைக் கால் அழகு. சங்கயம் - சந்தேகம். சங்க யாப்பு - பழைய இலக்கண நூல்களிலொன்று (யா.வி.). சங்கரசாதி - கலப்புச்சாதி. சங்கரநமச்சிவாயர் - நன்னூல் விருத்தியுரை செய்த புலவர் (18ஆம் நுற்றாண்டு.). சங்கரநாராயணன் - அரி அர வடிவான சிவமூர்த்தம். சங்கர பண்டிதர் - யாழ்ப்பாணப் புலவர்; சைவப் பிரகாசனமென் னும் நூல் செய்தவர் (1829 - 1891). சங்கரம் - போர், நஞ்சு, சாதிக் கலப்பு. சங்கரன் - சிவன், கலப்புச் சாதியிற் பிறந்தவன். சங்கராசாரியார் - மாயா வாதம் என்னும் வேதாந்தக் கருத்து நூல் களியற்றிய ஓர் ஆசிரியர். சங்கராபரணம் - ஓர் இராகம். சங்கரி - பார்வதி. சங்கரித்தல் - அழித்தல். சங்கருடணன் - திருமாலின் அழித் தல் முகூர்த்தங்களுள் ஒன்று. சங்கரேகை - சங்கின் வடிவாகக் கையிலமைந்திருக்கும் இரேகை. சங்கலார் - பகைவர். சங்கலிகரணம் - சாதிக் கலப்பினை யுண்டாக்குதலாகிய பாவம். சங்கலிகிதம் - கலப்பு, எண் கூட்டல். சங்கலேகை - சங்கரேகை. சங்க வருணர் என்னும் நாகரிகர் - சங்க காலப் புலவர் (புறம். 390). சங்கவளை - சங்குக் காப்பு. சங்கற்பநிராகரணம் - மெய்கண்ட சாத்திரங்களுள் ஒன்று (உமாபதி சிவாசாரியார் செய்தது). சங்கற்பமாசம் - இரண்டு அமா வாசைகளைக் கொண்ட மாதம், சாந்ததிரமான மாதம். சங்கற்பம் - மன உறுதி, கருத்து, கொள்கை. சங்கனனம் - நரம்பு. சங்காட்டம், சங்காத்தம் - சேர்க்கை, இணக்கம், வாசம். சங்காதம் - கூட்டம். சங்காத்தி - தோழன். சங்காபிடேகம் - சங்கினாற் செய்யப் படும் அபிடேகம். சங்காரம் - அழிக்கை. சங்காரித்தம் - ஏழு மேகங்களுள் பூவைப் பொழிவது. சங்காளர் - கலவியையே நாடுபவர். சங்கி - சம்பந்தமுடையது. சங்கிதம் - சந்தேகிக்கப்பட்டது. சங்கிதை - தொகுதி, வேதத்தின் ஒரு பகுதி. சங்கித்தல் - சந்தேகித்தல் கனப்படுத்துதல். சங்கியை - எண்ணிக்கை. சங்கிரகம் - சுருக்கம். சங்கிரந்தனன் - இந்திரன். சங்கிரமணம் - கிரகம் ஓர் இராசியி லிருந்து அடுத்த இராசிக்குச் செல்லுகை. சங்கிரமம் - சென்று பற்றுகை, சங்கிர மணம். சங்கிரமித்தல் - இராசி மாறுதல். சங்கிரம் - காடு. சங்கிராந்தவாதம் - மலம் நீங்கிய உயிரில் திருவருள் பிரதிபலித்து அதனை அருள் வடிவாக்கும் என்று கூறும் சமயம். சங்கிராந்தி - மாதப் பிறப்பு. சங்கிராமம் - போர். சங்கிலி - தொடர், 22 கசம் கொண்ட நீட்டலளவை. சங்கிலிக்கறுப்பன் - ஒரு கிராம தேவதை. சங்கிலியார் - சுந்தரமூர்த்தி நாயனார் மனைவியருள் ஒருவர். சங்கினி - சங்குச்சாதிப் பெண். சங்கீதம் - இசை. சங்கீரணம் - கலப்பு. சங்கீர்த்தனம் - புகழ்கை. சங்கு - நீர்வாழ் சங்கு, அபிநய வகை, கோழி, மட்டிப்படைக்கலம், இரங்கு, ஒரு பேரெண். சங்குகுளித்தல் - மூழ்கிச் சங் கெடுத்தல். சங்குப்புரி - சங்குச் சுரி. சங்கேதம் - குறி, (Symbol) குழூக்குறி, ஒரு கூட்டத்தினர் வழங்கும் சொல், உடன்படிக்கை, சாதி சமயங்களா லுண்டாகும் ஒற்றுமையுணர்ச்சி. சங்கை - ஐயம், பூதபிசாசம், எண் ணம், எண், கணைக்கால், மரி யாதை. சங்கோசவரிவாரம் - தக்கோரை உபசரித்து அழைப்பதற்கென்று அரசனால் நியமிக்கப்பட்ட சிறு கூட்டத்தார். சங்கோசம் - கருங்குகை, கூச்சம், மஞ்சள். சசம் - முயல். சசி - கற்பூரம், இந்துப்பு, கடல், மழை, இந்திராணி, சந்திரன். சசிவர்ணபோதம் - தத்துவராயர் தமிழில் இயற்றிய ஒரு வேதாந்த நூல். சசிவர்ணர் - தத்துவராயரின் மாணவர் (15-ம் நூ.). சச்சந்தன் - சீவகன் என்ற மன்னன் தந்தை. சச்சரவு - கலகம். சச்சரி - வாத்தியவகை. சச்சரை - பிளந்த துண்டு. சச்சற்புடம் - தாளவகை. சச்சாரம் - யானைக் கூடம். சச்சிதானந்தம் - உண்மை அறிவு, ஆனந்தம். சச்சை - பலமுறை ஒதுகை, ஆராய்ச்சி. சச்சையன் - உண்மைப் பொருளான வன். சஞ்சத்தகர் - வீரச்செயல் செய்வ தாகச் சபதங்கூறி அதன்படி தவ றாது நடக்கும் அரச வீரர். சஞ்சயன் - திருதராட்டிரனுடைய சாரதி. சஞ்சயனம் - பால் தெளித்தலாகிய ஈமச் சடங்கு. சஞ்கரம் - சஞ்சலம், உடல். சஞ்சரித்தல் - நடமாடுதல். சஞ்சரீகம் - வண்டு வகை. சஞ்சலம் - நிலையின்மை, துன்பம். சஞ்சாரம் - நடமாட்டம். சஞ்சிகை - புத்தகத்தின் அல்லது பத்திரிகையின் பகுதி. சஞ்சிதம் - அனுபவித்தது போக எஞ்சிய கன்மம். சஞ்சீவகராணி - மூர்ச்சை தீர்த்து உயிர்தரும் மருந்து, புளியமரம். சஞ்சீவி, சஞ்சீவினி - உயிர்ப் பிக்கும் மருந்து, சீந்தில். சஞ்சுபம் - அரசர்க்குரிய விருதுகள். சடகம் - ஊர்க்குருவி, கரிக்குருவி, வட்டில். சடகோபதாசர் - அரிசமய தீபம் என்னும் நூலை இயற்றியவர் (17 ஆம் நூ.). சடகோபப் புலவர் - குருகூர்ப் பள்ளு இயற்றியவர். சடகோபம் - திருமால் கோயில்களில் தரிசிப்பவர்களது முடியில் வைத்து அருளுவதற்கும் பிறவற்றுக்குமாக அமைக்கப்பட்டுச் சுவாமி முன் வைக்கப்பட்டுள்ள திருவடி பொறிக்கப்பட்ட முடி. சடகோபரந்தாதி - கம்பர் செய்த ஓர் அந்தாதி நூல். சடகோபன் - நம்மாழ்வார். சடக்கு - செருக்கு, உடல். சடங்கம் - சடங்கு. சடங்கர், சடங்கன் - வேதத்துக்குரிய ஆறங்கங்களையும் அறிந்தவன். சடங்கு - கிரியை, மற்பிடி வகை. சடம் - அறிவில் பொருள், உடல், பொய், வஞ்சகம், கொடுமை. சடம்பு - சணல். சடரம் - வயிறு. சடலம் - உடல். சடன் - மூடன். சடாக்கரம் - ஆறு எழுத்துக் களாலாகிய முருக மந்திரம். சடாடவி - அடர்ந்த சடை. சடாதரன் - சிவன், வீரபத்திரன். சடாபாரம் - சடைக்கற்றை. சடாயு, சடாய் - கழுகரசன். சடாரி - கவசம். சடாலம் - ஆலமரம், தேன் கூடு. சடானனன் - ஆறு முகமுள்ள முருகன். சடிதி - விரைவு. சடிலம் - சடை, குதிரை, வேர், செறிவு. சடிலை - சடாமாஞ்சி. சடுலவோசை - தீக்கொழுந்தினசை வினால் எழும் ஒலி. சடை - பின்னால் விழுந்ததலை மயிர், பின்னிய கூந்தல், வேர், விழுது, வெட்டிவேர், சடாமாஞ்சி, திருவா திரை, மிதுன ராசி, வேத மோதும் முறைகளுள் ஒன்று. சடைச்செந்நெல் - சடைச்சம்பா நெல். சடைநாகம் - நாகம் போல் செய்த பெண்கள் தலையணி. சடைநாயணார் - சுந்தரமூர்த்தி நாயனாருக்குத் தந்தை (63 நாயன் மாருள் ஒருவர்). சடையப்பன் - சிவன். சடையன் - கம்பனை ஆதரித்த வேளாளப் பிரிவு. சட் - ஆறு. சட்சு - கண். சட்ட - செவ்விதமாக, முழுதும், விரைவாக. சட்டகம் - சட்டம், மக்களது படுக்கை, வடிவு, உடல், சவம், சட்டை. சட்டம் - எழுதும் ஓலை, நியாய ஏற்பாடு, செப்பம், மரச் சட்டம். சட்டம்பி - உபாத்தியாயர், எசமான். சட்டன் - மாணாக்கன். சட்டாம்பிள்ளை - வகுப்பில் தலைமை வகிக்கும் மாணவன். சட்டி - மட்பாண்டம், ஆறாந்திதி, அறுபது. சட்டு - ஆறு. சட்டுவம் - அகப்பை. சட்டென - விரைவாக. சட்டை - அங்கி, பாம்புச் சட்டை, மதிப்பு. சட்டைநாத வள்ளல் - சதாசி வரூபம் என்னும் நூலியற்றியவர் (18ஆம் நூ.). சட்டைமுனி - ஒரு சித்தர். சட்பம் - இளம்புல், அறுகு. சணப்பு - சணல்வகை. சணம் - நொடிப்பொழுது. சணம்பு - சணல். சண்டகோலாகலம் - ஒரு நரகம். சண்டதரம் - ஒரு நகரம். சண்டப்பிரசண்டம் - மிகு கடமை, ஆர்ப்பாட்டம். சண்டப்பை - கருப்பை. சண்டமாருதம் - பெருங்காற்று. சண்டம் - கொடுமை, கோபம், விரைவு, ஒரு நரகம். சண்டவேகம் - மிகு விரைவு. சண்டன் - கடுங்கோபி, யமன், சூரியன், சண்டேசுரர், அலி. சண்டாளம் - நீசத் தன்மை. சண்டி - கொடியவள், துர்க்கை, ஒரு மரம். சண்டிகை - துர்க்கை. சண்டீனம் - பறவைகளின் கதி விசேடங்களிலொன்று. சண்டு - கூளம், பயிரில் விழும் வண்டுவகை. சண்டை - சச்சரவு. சண்ணம் - ஆண் குறி. சண்ணித்தல் - பூசுதல், சார்ந்திருத்தல். சண்ணுதல் - தாக்குதல், நீக்குதல். சண்பகம் - ஒருவகைப் பூமரம். சண்பங்கோரை, சண்பு - சம்பங் கோரை. சண்பை - சீகாழி. சண்முகன் - ஆறுமுகன். சதகம் - நூறுபாட்டுள்ள பிரபந்தவகை. சதகுப்பி, சதகுப்பை - மருந்துப் பூண்டு வகை (Dill). சதகோடி - நூறுகோடி, வச்சிராயுதம், 100 முனைகளுடையது. சதக்கிரது - இந்திரன். சதக்கினி - நூற்றுவரைக் கொல்லி என்னும் மதிற் பொறி. சதங்கை - கிண்கிணி. சதங்கைத்தாமம் - ஒரு வகைப் பூ மாலை. சதசத்து - உள்ளதும் இல்லதும், அறித லும், அறியாமையும் உள்ள ஆன்மா. சததளம் - தாமரை. சதநியுதம் - கோடி. சதபத்திரம் - தாமரை, கிளி, மயில். சதபுட்பி - சதகுப்பை. சதமகன், சதன்யு - நூறு யாகம் செய்த இந்திரன். சதமூலை - தண்ணீர் விட்டான். சதம் - நிலையானது, இறகு, நூற்றில் ஒரு பகுதி (Cent). சதயம் - சதய நட்சத்திரம். சதவீதம் - நூற்றுக்கு வீதம் (Percentage). சதனம் - சதம், வீடு. சதா - மரக்கலம், பழுது, எப்பொழு தும். சதாகதி - காற்று. சதாங்கம் - இரதம். சதாசிவ நாவலர் - வைத்தியநாத நாவலரின் புதல்வர். இலக்கண விளக்க உரை செய்தவர் (17 ஆம் நூ.). சதாசிவம் - பஞ்ச கர்த்தாக்களில் முதல் வராய் உயிர்களுக்கு அருள் செய்யும் பொருட்டுச் சிவன் மேற்கொள்ளும் மூர்த்தம். சதாசிவம் பிள்ளை - பாவலர் சரித்திர தீபகம் செய்தவர் (1820 - 1896). சதாசிவன் - அனுக்கிரகஞ் செய்யும் சிவ மூர்த்தி. சதாபுட்பி, சதாபூடம் - எருக்கு. சதாம்ச அளவை - சென்டிகிரேட் அளவை (Centigrade Scale). சதாவுதல் - பழுதாதல். சதி - வஞ்சனை, சோறு, தீ உண்டாக்கும் கருவி, தாள வொற்று, கற்புடையவள், உரோகிணி, பார் வதி, இறந்த கணவ னோடு மனைவி உடன்கட்டை ஏறுகை, வட்டம். சதித்தல் - அழித்தல். சதிபாய்தல் - நாட்டியமாடுதல். சதிரம் - சதுரம். சதிரி - சாமர்த்தயமுள்ளவர். சதிர் - பெருமை, அழகு, வலிமை, நாட்டியம். சதுக்கப்பூதர் - நாற்சந்தியில் குடிகொண் டுள்ள பூதங்கள். சதுக்கம் - நான்கு சந்து கூடியது, சந்து. சதுககல் - வழுக்கல். சதுட்டயம் - நான்கன் தொகுதி, கேந்திரம். சதுப்பு - சேறு. சதுமுகன் - நான்முகன், பிரமன். சதுரக்கள்ளி - கள்ளி வகை. சதுரகராதி - 18ஆம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் இயற்றிய அகராதி. சதுரங்கசேனை - யானை, தேர், குதிரை, காலாள் கொண்ட சேனை. சதுரங்கம் - யானை, குதிரை, தேர், காலாட்கள் என்னும் காய்கள் வைத்து ஆடும் விளையாட்டு. சதுரந்தயானம் - பல்லக்கு. சதுரப்பாடு - ஆற்றல். சதுரம் - சாமர்த்தியம், அளவொத்த நாற்கோணம். சதுரவளவு - அகலத்தையும் நீளத் தையும் பெருக்கி வந்த அளவு. சதுரவளவு - அகலத்தையும் நீளத் தையும் பெருக்கி வந்த அளவு. சதுரடியங்கள் - நால் வகைச் சேனைகள். சதுர் - நான்கு, சாமர்த்தியம், உபாயம். சதுர்த்தசி - பதினான்காம் திதி. சதுர்த்தம் - நான்காவது. சதுர்த்தி - நான்காம் திதி. சதுர்த்திகை - காற்பலம். சதுர்த்திறை - திருமணத்தில் நான் காம் நாளிரவு மணமகனும் மண மகளும் கூடியுறையும் அறை. சதுர்யுகம் - கிருதயுகம், திரேதாயுகம் தூவபரயுகம், கலியுகமென்ற நான்கு யுகங்கள். சதுர்வேதம் - இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்கள். சதேகமுத்தி - சீவன் முத்தி. சதை - மாமிசம். சதைத்தல் - நெரித்தல். சதையம் - சதய நட்சத்திரம். சதோடம் - குற்றத்துடன் கூடியது. சத்தக்கருவி - தோற்கருவி, துளைக் கருவி, நரம்புக்கருவி, கஞ்சக் கருவி, மிடற்றுக் கருவி என்ற ஐவகைப் பட்ட இசைக்கருவி. சத்ததாது - உடம்பின்மைப்பிலுள்ள இரத்தம், உதிரம், எலும்பு, தோல், இறைச்சி, மூளை, சுக்கிலம் என்ற ஏழு வகைப் பொருள்கள். சத்தமன் - யாவரினுஞ் சிறந்தவன். சத்தமாதர் - ஏழு மாதர். சத்தமி - ஏழாந்திதி. சத்தமேகம் - சம்வர்த்தம், ஆவர்த் தம், புட்கலாவருத்தம், சங்காரித்தம், துரோகணம், காளமுகி, நீல வரு ணம் என்னும் ஏழு மேகங்கள். சத்தம் - சொல், ஒலி, எழுத்துச் சொற்களைப் பற்றிய இலக்கண நூல், ஏழு. சத்தலேகம் - பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம், தரா என்னும் ஏழு உலோகங்கள். சத்தவருக்கம் - நெல்லி, வெட்டி வேர், இலாமிச்சைவேர், சடா மாஞ்சி, இலவங்கம், ஏலம், திராட்சை என்னும் ஏழு வகை மருந்துப் பொருள்கள். சத்தவிடங்கத்தலம் - ஆரூர், நாகை, நள்ளாறு, மறைக்காடு, காறாயல், வாய்மூர், கோளிலி என்ற ஏழு சிவ தலங்கள். சத்தவிருடிகள் - அகத்தியன், புலத்தி யன், அங்கிரசு, கௌதமன், வசிட் டன், காசிபன், மார்க்கண்டன். சத்தவிருடிமண்டலம் - சத்த இருடிகளாகிய ஏழு நட்சத்திரங்கள் தோன்றும் வானிடம். சத்தன் - ஆற்றலுடையவன். சத்தார் - சாய்வு. சத்தி - ஆற்றல், மூன்று, பெருங் கொடி, சிவனது அருள், உமை, வேல், சூலம், குடை, வாந்தி. சத்திக்குடம் - மாளிகை மேல் வைக்கப்படும் சூலம், நாட்டிய குடம். சத்தித்தல் - ஒலித்தல், வாந்தி செய்தல். சத்திநாயனார் - 63 நாயன்மாருள் ஒருவர். சத்தியநிபாதம் - பக்குவமுடைய ஆன்மாவிலே திருவருள் பதிகை. சத்திமுகம் - அரசனது ஆணைப் பத்திரம். சத்திமுற்றப் புலவர் - “நாராய் நாராய் செங்கண் நாராய்” என்னும் பாடல் செய்தவர் (13ம் நூ.). சத்தியபாமை - கண்ணன் தேவியரு ளொருத்தி. சத்தியம் - உண்மை, பிரமாணம். சத்தியயுகம் - கிருதயுகம். சத்தியலோகம் - பிரமன் வசிக்கும் உலகம். சத்தியவான் - சாவித்திரியின் கணவன், உண்மை பேசுவோன். சத்தியயோசாதம் - சிவன் ஐம்முகங் களுள் மேற்கு நோக்கியது, ஒரு சைவ மந்திரம். சத்தியோநிர்வாணதீட்சை - மாணாக்கனை உடனே வீடுபேறு சேர்க்கும் நிர்வாண தீட்சை. சத்திரபதி - அரசன். சத்திரம் - அன்னசாலை, யாகவகை, கைவிடாப் படை, வேல், இரும்பு, குடை, அதிசயம். சத்திரியன் - அரச வகுப்பினன். சத்து - உண்மை, நன்மை, வலி, அறிவு. சத்துரு - பகைவன். சத்துருக்கன் - இராமன் தம்பி, மார் பில் நான்கு கழிகளுள்ள குதிரை. சத்துருத்தானம் - இலக்கினத்துக்க ஆறாம் வீடு. சத்துருதுரந்தரன் - பகைவரை வெல்பவன். சத்துவகுணம் - நற்காரியங்களிலே நோக்கம் உண்டாக்குவதான குணம். சத்துவம் - தன்மை, சுபாவம், வலிமை, உள்ள நிகழ்ச்சி வெளிப் படத் தோன்றும் மெய்ப்பாடு. சந்தடி - இரைச்சல், கூட்டம். சந்ததம் - எப்பொழுதும். சந்ததி - வழித்தோன்றல் வமிசம். சந்தமாமா - கூத்திற் கோமாளி தன்னோடு பேசுபவரை விளித்தற்குக் கூறும் சொல், தாசிகள் தொழிலுக்கு உதவியா யிருப்பவனைக் குறிக்கும் சொல். சந்தம் - நிறம், அழகு, வடிவு, சுகம், செய்யுள் வண்ணம், வேதம், செய்யுள் சந்தனம், துவாரம். சந்தயம் - சந்தேகம். சந்தர்ப்பணை - சமாராதனை. சந்தர்ப்பம் - சமயம். சந்தவடி - நான்குமுதல் இருபத்தாறு வரையும் உள்ள எழுத்துக்களாலி யன்ற விருத்த அடி. சந்தவாக்கு - சுயகுணம், இழிந்த பக்கம். சந்தனம் - சந்தனமரம், அரைத்த சந்தனம், தேர். சந்தனவெற்பு - பொதியமலை. சந்தனவேம்பு - தேவதாரம். சந்தனு - வீடுமன் தந்தை. சந்தா - கட்டணம். சந்தாபம் - கடுகை, மனத்துன்பம், நரகங்களில் ஒன்று. சந்தாளர் - இராசமஹால் மலைச் சாரலிலுள்ள ஒரு சாதியார் (Santals). சந்தானகரணி - அறுந்த உறுப்பைப் பொருத்தும் மருந்து. நந்தானகுரவர் - மெய்கண்ட தேவர் அருணந்தி சிவாசாரியார், மறை ஞானசம்பந்தர், உமா பதிசிவாசாரி யாரென்ற ஆசிரியர் நால்வர். சந்தானம் - பரம்பரை, சந்ததி, குரு பரம்பரை, தேவலோகப் பஞ்சதருக் களுள் ஒன்று. சந்தானலட்சுமி - புத்திர பாக்கியம். சந்தி - பல தெருக் கூடுமிடம் எழுத்துப் புணர்ச்சி, தறுவாய், மூங்கில் ஒரு பண், வரிக்கூத்து வகை, மாலைக் காலம், வணக்கம், திருவிழா, கோயிற் கட்டளை, பாடை. சந்திக்கூத்து - திருவிழாவில் கோயில் முன் பெண்கள் ஆடும் கூத்து. சந்திக்கோணம் - தேர் உறுப்புக் களுள் ஒன்று. சந்தித்தல் - சேர்த்தல், எதிர்த்தல் காணுதல். சந்திபண்ணுதல் - சந்தியாவந்தனஞ் செய்தல். சந்திப்பு - எதிர்கை, ஆறு தெரு முதலியன கூடுமிடம், இசைவு. சந்திமான் - இடைவள்ளல் எழு வருள் ஒருவன். சந்திமிதித்தல் - நான்காம் மாதத்தில் நல்லவேளையில் குழந்தையைத் தெருச் சந்திக்குத் தூக்கிச் செல் லுதல். சந்தியாமடம் - நித்திய வழிபாடு செய்தற்குரிய நீர்க்கரை மண்டபம். சந்தியாவந்தனம், சந்திய வந் தனை - காலை உச்சி மாலைகளில் வேத மந்திரங்களாற் செய்யும் வழிபாடு. சந்திரகணம் - நூலின் முதற் செய்யுளின் முதலில் அமையும்படி புளிமாங்காய் என்னும் வாய்பாடு பற்றி வரும் நந்தணச் சீர்வகை. சந்திரகம் - வண்டு, மயில் தேகை. சந்திரகலை - சந்திரன் கூறு, நிலா, பெண்கள் கொண்டையிலணியும் ஓர் அணி. சத்திரகாசம் - சிவன் இராவண னுக்குக் கொடுத்த வாள். சந்திரகாந்தம் - சந்திர ஒளியில் நீர் சுரப்பதாகிய ஒரு கல். சந்திரகி - மயில். சந்திரகிரகணம் - இராகு கேதுக் களால் சந்திரன் பீடிக்கப்படுகை. சத்திரகுப்தன் - கி.மு. நாலாம் நூற்றாண்டில் வாழ்ந்த மௌரிய சக்கரவர்த்தி. சந்திரகுரு - வெண்முத்து, சுக்கிரன். சந்திரகுலம் - சந்திரனைக் குல முதல்வனாகக் கொண்ட மரபு. சந்திரசேகரன் - சந்திரனை அணிந்த சிவன். சந்திரத்தவு - குருவருடத்துக் கயலில் வடதிசையிலுள்ள தீவு. சந்திரதிசை - வடக்கு. சந்திரநாடி - பெண்குறி வாயிற் படிந்திருக்கும் சவ்வு. சந்திரபாணி - வயிரக்கல். சந்திரபிம்பம் - சந்திரவட்டம். சந்திரபிரபர் - தீர்த்தங்கரர் இருபத்து நால்வருள் ஒருவர். சந்திரபிரபை - நிலவு, மகளிர் தலையணி வகை. சந்திரபிறை - மகளிர் கழுத்தணி வகை. சந்திரமண்டலம் - சந்திரனது வட்டம். சந்திரமதி - அரிச்சந்திரன் மனைவி. சந்திரமானம் - சந்திரனின் செலவைக் கொண்டு அளக்கப்படும் மாதம் ஆண்டு முதலியன. சந்திமௌலி - சந்திரசேகரன். சந்திரம் - பொன், இரவின் 15 முகூர்த் தங்களுள் ஒன்பதாவது, மிருக சீரிடம். சந்திரயோகம் - சன்மராசியிலிருந்து ஏழாமிடம் முதுல் பன்னிரண்டாம் இடம் வரையும் ஏழு கிரகங்கள் வரிசையாக நிற்கும் யோகம். சந்திரலக்கினம் - பிறந்த காலத்தில் சந்திரனிருக்கும் இராசி. சந்திரவங்கி - பிறைவடிவான தலையணி. சந்திரன் - திங்கள், குபேரன், இடைகலை. சந்திராதித்தம் - அருகனது முக் குடையுள் ஒன்று. சந்திராபரணம் - ஒரு பழைய சோதிட நூல். சந்திரிகை - ஓலைச்சுருள், நிலவு. சந்திரோதயம் - சந்திரன் உதிக்கை. சந்திரோபாலம்பனம் - பிரிந்த காதலர் விரகவேதனையால் சந்தி ரனைப் பழித்துக் கூறுகை. சந்தில் - சனி. சந்திவந்தனம், சந்திவந்தனை - சந்தியாவந்தனம். சந்திவிக்கிரகம் - அடுத்துக் கெடுக்கை. சந்து - பொந்து, பொருத்து, பல வழி கூடு மிடம், தூது, தூதன், பிளவு, சமாதானம், சந்தன மரம், இசை. சந்தேகம் - ஐயம். சந்தேசம் - தூது. சந்தை - குறித்த காலத்திற் கூடும் கடைகள், கூட்டம், பருவங்களின் நடுவிடம், வேதம். சந்தைசொல்லுதல் - வேதம் முதலியன ஓதுதல். சந்தைமுதல் - சந்தை வரி. சந்தேகன் - சாமவேதத்துக்குரியவன். சந்தோடம் - மகிழ்ச்சி. சபக்கம் - துணியப்பட்ட பொருள். சபதம் - சூளுறவு, உறுதி கூறுதல். சபம் - செபம், மூங்கில், குதிரைக் குளம்பு. சபரம் - கெண்டைமீன். சபரன் - வேடன். சபரி - இராமனருள் பெற்ற ஒரு வேடப் பெண். சபரியை - பூசை. சபலம் - பயனள்ளது, சித்தி, நிலை யற்ற உள்ளம். சபலை - மின்னல், இலக்குமி. சபாசு - மிக நன்று. சபாபதி - நடராசமூர்த்தி. சபாபதி நாவலர் - “திராவிடப் பிரகா சிகை” செய்தவர் (1843 - 1903). சபித்தல் - சாபமிடல், செபித்தல். சபிண்டர் - பிதிர்ப் பிண்டமிடுதற் குரிய ஏழு தலைமுறைக்குட்பட்ட ஞாதியர். சபிண்டி, சபிண்டீகரணம் - சிரார்த்தம். சபை - கழகம், அம்பலம், சபா மண்டபம். சப்தசுரம் - ஏழிசை. சப்தபங்கி - சைனர் கூறும் ஏழு வகை வாதமுறை. சப்தபாதாளம் - அதலம் விதலம் சுதலம் மகாதலம் இரசாதலம் தலாதலம் பாதாளம் என்னும் கீழேழுலகங்கள். சப்படி - வயிரக் குற்றங்களுள் ஒன்று. சப்பத்தி - சப்பை முத்து. சப்பரம் - தேர் வகை. சப்பரை - மூடன். சப்பளாக்கட்டை - தாளக்கட்டை. சப்பளிதல் - தட்டையாதல். சப்பாணி - நொண்டி, கைகொட்டுகை. சப்பாணிப்பருவம் - குழந்தை கை கொட்டி விளையாடும் பருவம். சப்பியம் - நெறிப்பட்ட பேச்சு. சப்பிரமஞ்சம் - மேற்கட்டி உள்ள சிங்காரக் கட்டில். சப்புதல் - மெல்லுதல், அதுக்குதல். சப்பை - சப்பட்டையானது, வளைவு. சப்பைச்சொண்டன் - நாரை வகை (Spoonbill). சம அழுத்தக்கோடுகள் - சமகாற்று அழுத்தமுள்ள இடங்களைத் தொடும் கோடுகள் (Isobars). சமகம் - ஒரு வேத மந்திரம். சமகரணம் - சமன்பாடு (Equation). சமக்கிரதம் - சமக்கிருதம், வடமொழி. சமசத்தமம் - வியாழன் நின்ற இராசிக்கு ஏழாம் இராசியில் சுக்கிரன் நிற்கும் நிலை. சமசம் - யாகத்தில் சோமரசம் வைக்கும் பாத்திரம். சமசிதத்துவம் - எல்லாவற்றையும் சமமாகக் கருதும் மனநிலை. சமசை - பாடிமுடிக்கும்படி ஒரு வனுக்குக் கொடுக்கும் கவியுறுப்பு. சமச்சீர் - ஒரு அமைப்புக்கு இருக்க வேண்டிய பொருத்தமான அளவு கள். சமஞ்சிதன் - கிராமக் கணக்கன். சமட்டி - தொகுதி. சமணம் - சமண். சமண் - அருகமதம், அம்மணம். சமதலமஞ்சரி - பூவின் பகுதி (Corymb). சமதலை - புடவையின் உள் தலைப்பு. சமதிருட்டி - வியாழன் அத்தமிக்கச் சுக்கிரன் தோன்றும் தோஷகாலம். சமதை - சமநிலை. சமத்காரம் - தோற்றம், பேச்சுத் திறமை. சமத்தன் - வல்லவன். சமத்தக்கினி - பரசுராமன் தந்தை. சமத்தானம் - இராச்சியம். சமத்து - திறமை. சமநிலை - நடுவு நிலைமை, சாந்த மென்னும் சுவை. சமநிலைவஞ்சி - இரு சீரடியால் வரும் வஞ்சி. சமந்தகம் - கண்ணபிரான் கழுத்தி லணிந்த மணி. சமந்தகூடம், சமந்தம் - இலங்கையி லுள்ள சிவனொளி மலை. சமபூமி - மேடு பள்ளமில்லாத பூமி. சமப்பால் - முல்லை, நெய்தல், நிலங் கள். சமம் - ஒப்பு, இரட்டை எண், போர், முதுவேனில். சமயக்கணக்கர் - மதவாதிகள். சமயதத்துவம் - மதத்தின் அடிப் படையான உண்மைகள். சமயதிவாகரர் - நீலகேசி என்னும் சைன நூலின் உரைகாரராகிய வாமன முனிவர். சமயமிருத்தல் - ஓலக்கமிருத்தல். சமயம் - தருணம், அவகாசம், உடன்படிக்கை, மதம். சமயலங்கனம் - சமயக் கொள் கையை மீறுதல். சமயவாற்றல் - சொல்லாற்றல். சமயாசாரியர் - அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்ற சிவனடியார்கள். சமயாதீதம் - பரம்பொருள். சமயோசிதம் - சமயத்துக்குப் பொருத்தம். சமரசம் - ஒற்றுமை. சமரதன் - வேறு தேர் வீரனோடு தோலாமற் போர் செய்யவல்ல தேர் வீரன். சமரதி - கலவிவகை. சமரபுரி - திருப்போரூர். சமரம் - போர், முள்ளம்பன்றி. சமராத்திரம் - சம இரவு (equinox). சமரி - துர்க்கை. சமரேகை - பூமத்தியரேகை. சமர் - போர். சமர்த்தம் - மிருதிகளில் விதிக்கப் பட்ட சடங்கு. சமர்த்தல் - பொருதல். சமர்த்தன் - வல்லவன். சமர்த்து - திறமை. சமர்ப்பணம் - காணிக்கை முதலியன அளிக்கை. சமலன். - உயிர். சமலாவத்தை - மலத்தோடு கூடி யிருக்கும்போது உயிர் அடையும் நிலை. சமவாகாரம் - தேவாசுரர்களுடைய வீரச் செயல்களைக் காட்டுவதாய் மூன்றங்கங்களைக் கொண்ட உருபக வகை. சமவாதசைவம் - முத்தியில் சிவமும், ஆன்மாவும் ஒக்குமெனக் கொள் ளும் சைவ மதப் பேதம். சமவாயம் - கூட்டம். சமவாயிகாரணம் - முதற்காரணம். சமவேதம் - பிறிதோடு நீக்கமின்றி யிருக்கும் பொருள். சமழ்தல் - வருந்துதல். சமழ்த்தல் - வருத்துதல், நாணுதல், தாழ்தல். சமழ்வு - இழிவு. சமனியகரணி - புண்ணையும் தழும்பையும் மாற்றும் மருந்து. சமனை - சிவசத்தி, உயிர் பெத்த நிலை யில் அடையக் கூடிய உத்தம பதவி. சமனொளி - இலங்கையிலுள்ள சிவனொளி மலை. சமாகிதம் - அணி வகை. சமரசம் - சபை, கூட்டுச்சொல். சமாசாரம் - பத்திரிகை. சமாசோக்தி - ஒட்டணி. சமாதானம் - அமைதி, நட்பு, தடைக்கு விடை. சமாதி - மனதைக் கடவுளோடு ஒன்று படுத்தி நிறுத்துகை, சங் கற்பம், சமாதிக் குழி. சமாதிக்கல் - கல்லறை மூடுங்கல் சமாந்தரமான (Parallel) இணைக் கோடான. சமாப்தி - முடிவு. சமாராதனை - பிராமண உண்டி. சமாலம் - பீலிக்குஞ்சம். சமாவர்த்தனம், சமாவர்த்தனை - பிரமசரிய விரதம் நீங்கும்படிச் செய்யும் சடங்கு. சமாளித்தல் - பெருமுயற்சியோடு ஒன்றை நிறைவேற்றுதல். சமானதை - சமானம். சமானம் - ஒப்பு. சமானன் - பத்து வாயுக்களுள் ஒன்று. சமி - அருகன், வன்னி. சமிக்கை - சைகை. சமிதை - யாகத்துக்குரிய சுள்ளி விறகு. சமித்தம் -வேள்வி மண்டபம். சமித்தல் - சீரணித்தல், அழிதல், பொறுத்தல், நடத்தல். சமித்து - சமிதை. சமிராட்டு - ஏக சக்கராதிபதி. சமிர்த்தி - நிறைவு. சமீந்தார் - குடிகளிடம் தண்டிக் கொண்டு, அரசர்க்கு மொத்த வரி கொடுத்து நிலத்தை ஆள்வோர். சமீபம் - அண்மை. சமீரணன் - வாயு. சமீரணி - வீமன். சமு - 729 யானை 729 தேர் 2187 குதிரை 3645 காலாள் கொண்ட சேனை. சமுகம் - சன்னிதானம், ஒரு கூட்டத் தினர். சமுக்காளம், சமக்காளம் - விரிப்பு வகை. சமுக்கு - குதிரை மாடு முதலிய வற்றின் முதுகில் இடப்படும் தவிசு. சமுசயம் - சந்தேகம். சமுசாரம் - உலக வாழ்க்கை, குடும்பம். சமுசாரி - குடியானவன், இல்லறத்தான். சமுச்சயம் - தொகுதி. சமுதாடு - ஈட்டி வகை. சமுதாயம் - மக்களின் திரள், பொது வானது. சமுத்திரகலசநியாயம் - சமுத்திரத்தில் நீரிருப்பினும் முகக்கும் முகவையளவே நீர் கொள்ளுதல் போலும் நெறி. சமுத்திரம் - கடல், ஒன்றை அடுத்துப் பதினான்கு வட்டம் கொண்ட பேரெண். சமூகம் - திரள், சேனை வகுப்பு. சமூலம் - இலையீறாகவுள்ள எல் லாம், முழுவதும். சமேதன் - கூடியிருப்பவன். சமை - பொறுமை. சமைதல் - அமைதல், ஆயத்தமாதல், பொருந்தல், நிரம்புதல், பூப்படைதல், புழுங்குதல், அழிதல், முடித்தல். சமைத்தல் - படைத்தல், செய்தல், ஆயத்தஞ் செய்தல், பாகஞ் செய்தல், அழித்தல். சமைப்பு - முயற்சி. சமையல் - சமைத்த உணவு. சமைவு - நிலைமை, அழிவு, உட் கரணம் அடங்குகை. சம் - சுகப் பொருளில் சொல்லுக்கு முதலில் வரும் வடசொல், மிகுதி, சிறப்பு முதலிய பொருளில் வரும் வட மொழி இடைச்சொல். சம்பகம் - சண்முகம். சம்பங்கி - ஒருவகைப் பூங்கொடி. சம்பங்கோழி - காட்டுக்கோழி. சம்மடம் - ஆடை, ஒரு பழைய வரி. சம்பத்து - செல்வம். சம்பந்தசரணாலயர் - திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரின் நல்மாமன், 16ஆம் நூற்றாண்டில் கந்தபுராணச் சுருக்கம் செய்த ஆசிரியர். சம்பந்தம் - திருமண உறவு. சம்பந்தர் - திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார். சம்பந்தாண்டான் - காளமேகப் புலவர் காலப் புலவர் (15ஆம் நூற்.). சம்பம் - வச்சிராயுதம், மர வைரம், எலுமிச்சை, இடம்பம். சம்பரசூதனன் - காமதேவன். சம்பரம் - நீர், எண்காற்பறவை. சம்பரன் - தசரதனாற் கொல்லப்பட்ட அசுரன், காமனாற் கொல்லப்பட்ட அசுரன். சம்பராரி - காமன். சம்பர்க்கார்த்தம் - சூரிய கிரகணத்தில் சூரியன் சந்திரன் இவற்றின் பாதிக் குறுக்களவைக் கூட்டியளந்த அளவு. சம்பவம் - நிகழ்ச்சி, பிறப்பு. சம்பவை - உமை. சம்பளம் - வழியுணவு, வேதனம், எலுமிச்சை. சம்பன்னன் - செல்வமுள்ளவன், நிறைத்தவன். சம்பா - உயர்ந்த நெல் வகை. சம்பாகம் - நற்காகச் சமைத்தது. சம்பாஷணை - பேச்சு. சம்பாதி - சடாயுவின் சகோதரனாகிய கழுகரசன். சம்பாதித்தல் - தேடிப் பெறுதல். சம்பாத்தியம் - பொருள் ஈட்டுகை. சம்பாரம் - கூட்டு வர்க்கம். சம்பாவனை - மரியாதை, வெகு மானம். சம்பாவிதம் - நிகழக் கூடியது. சம்பான் - தோணி (சீனம்). சம்பிரதம் - இந்திரசாலம். சம்பிரதாயம் - குரு பரம்பரையாக வந்த உபதேசம், சாமர்த்தியம், தொன்று தொட்ட வழக்கம். சம்பிரதி - கணக்கன். சம்பிரமம் - களிப்பு, சிறப்பு, பரபரப்பு. சம்பு - சம்பங்கோரை, நெட்டி, சிவன், திருமால், பிரமன், சூரியன், நாவல் நாவலந்தீவு நரி. சம்புகம் - நரி. சம்புகேச்சுரம் - ஆனைக்கா. சம்புடம் - சிறுசெப்பு, புத்தகப் பகுதி. சம்புத்தீவு - நாவலந்தீவு. சம்புநாவல் - பெருநாவல். சம்புவராயர் - வன்னியர், கள்ளர் களின் பட்டப்பெயர். சம்பூரணம் - முடிவு நிறைவு. சம்பை - மின்னல், செழிப்பு. சப்பைச்சரக்கு - மட்டச்சரக்கு. சம்போகம் - புணர்ச்சி. சம்போர் - பூதம். சம்மட்டி - குதிரைச் சவுக்கு, சுத்தியல் வகை. சம்மட்டிமக்கள் - உறிவினரல்லாதா ரோடு மணம் புரிந்து கொள்ளும் கள்ளச் சாதியினர். சம்மதம் - உடன்பாடு, நட்பு. சம்மதி - சம்மதம். சம்மனசு - தேவதூதன். சம்மாரம் - அழிவு. சம்மானம் - வெகுமதி. சம்மௌனம் - கலப்பு, கூட்டம். சம்யோகம் - சேர்க்கை. சம்ரட்சணம், சம்ரட்சணை - காப்பாற்றுகை. சம்வச்சரம் - ஆண்டு. சம்வரை - உயிரைக் கன்மம் அணுகா மற்றடுப்பது. சம்வர்த்தம் - மணிபொழியும் மேகம். சம்வாகம் - நெல்லும் புல்லும் நிறைந்த மலையூர். சம்வாதம் - தர்க்கம். சம்வித்து - அறிவு. சம்வேகம் - அறத்திலும் அறப்பயனி லும் ஆசை உடைமை. சய - இருபத்தெட்டாது ஆண்டு கழி. சயகண்டி - சேமக்கலம். சயங்கொண்டசோழன் - 1 ஆம் இராசராச சோழன். சயங்கொண்டான் - கலிங்கத்துப் பரணி செய்த புலவர் (11ம் நூற்.). சயசய - வெற்றி குறித்த வாழ்த்து மொழி. சயசீலன் - வெற்றியாளன். சயதரன் - 1ஆம் குலோத்துங்கன் சிறப்புப் பெயர். சயதாளம் - ஒன்பது தாளத்தி லொன்று. சயத்திரதன் - துரியோதனனின் சகோதரி கணவன். சயந்தம் - இந்திரனது ஒலக்க மண்டபம், இறந்துபட்ட ஒரு நாடகத்தமிழ் நூல், அபிநய வகை. சயந்தனம் - தேர். சயந்தன் - இந்திரகுமாரன். சயந்தி - வாதமடக்கி, சிற்றகத்தி. சயபாளம் - நேர்பாளம். சயபேரிகை - வெற்றிமுரசு. சயமகள் - துர்க்கை. சயமரம் - கயம்வரம், வெற்றித் தோரணம். சயமாகீர்த்தியன் - நிலந்தருதிரு விற் பாண்டியன். சயம் - வெற்றி, சூரியன், கூட்டம், மாலை, சயரோகம், சர்க்கரை, ஆம்பல். சயம்பு - சிவன், பிரமன், அருகன், தானே உண்டாவது. சயம்புலிங்கம் - பரார்த்தலிங்கத் தொன்று. சயவிசயர் - வைகுண்டத்தில் திருமால் கோயில் காக்கும் இருவர். சயனம் - படுக்கை, நித்திரை, புணர்ச்சி. சயா - கடுக்காய். சயிக்கம் - மேன்மை. சயிக்கினை, சயிக்கை, சயிகை - சைகை. சயித்தம் - பௌத்த ஆலயம். சயித்தல் - வெல்லுதல். சயித்தியம் - குளிர்ந்த காலம், குளிர்ச்சி. சயிந்தர் - சிந்து தேசத்தினர். சயிந்தவம் - குதிரை, தலை. ச யிந்தவி- ஓர் இராகம். சயிலகோபன் - இந்திரன். சயிலம் - மலை. சயிலாதி - கைலாசம், நந்தி. சயிலேகம் - ஒரு வாசனைப்பண்டம். சயை - திதியை அட்டமி திரயோதசி என்னும் திதிகள், துர்க்கை. சரகண்டம் - பூமத்திய ரேகைக்கும் குறிப்பிட்ட இடத்திற்குமுள்ள கிரகங்களின் உச்ச வேறுபாடு. சரகதி - அம்புபோல் செல்லும் குதிரைக்கதி. சரகம் - தேனீ, வண்டு. சரகூடம் - பகைவர் படைக்கலம் தாக்காதவாறு அம்பினாற் கட்டும் பந்தல். சரக்க - விரைவாக. சரக்கறை - பண்டங்கள் வைக்கு மிடம், பொன்னறை. சரக்கு - வாணிகப்பண்டம், பொன், மருந்துப் பொருள். சரக்கொன்றை - சரமாகப் பூக்கும் கொன்றை. சரசசல்லாபம் - காதற் பேச்சு. சரசம் - பரிகாசம், காமச்சேட்டை, இனிய குணம். சரசரத்தல் - சருகு ஒலித்தல். சரசரப்பு - ஒலிக்கை, மொருமொரு வென்றிருக்கை. சரசு - நீர்நிலை. சரசுவதி - கலைமகள், ஒருநதி. சரசுவதிபண்டாரம் - புத்தக சாலை. சரசுவதிபூசை - நவராத்திரியின் ஒன்பதாம் நாள். சரசுவதிமால் - தஞ்சை அரண் மனையிலிருப்பது போன்ற புத்தக சாலை, தஞ்சை அரண்மனை. சரசுவதியந்தாதி - கம்பர் சரசு வதியைப் புகழ்ந்து பாடிய ஓர் அந்தாதி. சரசோதி - சரசுவதி. சரச்சொதி - பார்வதி. சரடம் - ஓந்தி. சரடு - முறுக்குநூல், கழுத்தணிவகை. சரணம் - பாதம், வேதப்பகுதி, கீர்த்தனத்தின் மூன்றாம் உறுப்பு, அடைக்கலம், மருதநிலத்து நகரம், வீடு மயிற்றோகை, பெருங்காயம், யானைத்தோட்டி. சரணர் - வீரசைவப் பெரியார். சரணாகதி - அடைக்கலம் புகுகை. சரணாரவிந்தம் - பாததாமரை. சரணார்த்தி - அடைக்கலம் தேடுபவன். சரணி - வழி. சரணியன் - இரட்சகன். சரண் - பாதம், அடைக்கலம். சரதம் - உண்மை. சரத்ருது - கூதிர் காலம், இலையுதிர் காலம், (Autumn). சரநட்சத்திரம் - புனர்பூசம், சுவாதி, திருவோணம், அவிட்டம், சதயம் என்னும் சுப நட்சத்திரங்கள். சரபம் - எண்காற்புள், மலையாடு. சரப்பணி - வயிரமழுத்திய கழுத் தணி வகை. சரப்பளி - பொன்னலான கழுத்தணி வகை. சரமகவி - இறந்தவர் மீது இரங்கிப் பாடும் கவி. சரமம் - முடிவு, மேற்கு. சரமாரி - அம்பு மழை. சரம் - நடை, இயங்குதிணை, அம்புதிப்பிலி, மணிவடம், நீர் இசைச்சுரம், யுத்தம், தனிமை. சரயு - அயோத்திக்கருகிலுள்ள ஆறு. சரராசி - பயணத்துக்குச் சுப காலமாகக் கொள்ளப்படும் மேடம் கற்கடகம் துலாம் மகரம் என்னும் இராசிகளுள் ஒன்று. சரவண தேசிகர் - முத்தி முடிவு என்னும் நூல் செய்தவர் (19ஆம் நூ.). சரவணபவன் - முருகக் கடவுள். சரவணப் பெருமாளையர் - விசாகப் பெருமாளையரின் சகோதரர் (19ஆம் நூ.) சரவணப் பொய்கை - முருகக் கடவுள் தோன்றிய நீர்நிலை. சரவணம் - நாணற்காடு. சரவன் - அம்பெய்வோன். சரளம் - சுலபம் ஒழுங்கு. சரளி - சுர வரிசை. சரளை - சிறுமணல் சேர்ந்து கட்டியான கல். சரற் காலம் - மழைக் காலம். சரன் - ஒற்றன், தூதன். சராசரம் - இயங்குதிணை நிலைத் திணைப் பொருள், உலகம். சராசரி - சமவீதம் (Average). சராசனம் - வில், அரசமரம். சராயு - கருப்பை. சராயுசம் - கருப்பையில் தோன்றுவன. சராவம் - அகல், சலாகை. சரி - மலைச்சாரல், கூட்டம், கை வளை, ஒப்பு, சம்மதிக் குறிப்பு. சரிகை - பொன் வெள்ளிகளாலாகிய இழைகள். சரிக்கட்டுதல் - ஒப்பிடுதல், இணக்க மாகச் செய்தல். சரிதம் - சரித்திரம். சரிதல் - சாய்தல், குலைதல். சரிதன் - செயலிற் சிறந்தவன். சரிதை - சரித்திரம், சரியை பிச்சை. சரித்தல் - சஞ்சரித்தல். சரித்திரம் - வரலாறு. சரிபார்த்தல் - பிழைபார்த்துத் திருத்து தல் (proof reading). சரிமணி - மகளிர் இடையிலணியும் ஓரணி. சரிமேரை - குடிகளின் உரிமை. சரியாதல் - முடிவாதல். சரியை - கடவுளை உருவத் திருமேனி யாக வழிபடுகை, ஒழுக்கம். சரியையில் ஞானம் - தியான பாவனை யில் உறைப்பான அனுபவ உணர்ச்சி. சரியையில் யோகம் - மனத்தில் கடவுளைத் தியானித்தல். சரியையிற்சரியை - கோயிலில் பெருக்கல் மெழுகல் முதலிய பணிச் செயல்கள். சரியொப்பமிடுதல் - சரிபார்த்துக் கையெழுத்திடுதல் (Certification). சரிவர - முழுதும், கிரமமாய். சரிவு - சாய்வு, ஓரம். சரிற்புதல்வன் - வீடுமன். சரீரசாத்திரம் - உடற் கலைகளைப் பற்றிய நூல் (Physiology). சரீரபதனம் - மரணம். சரீரம் - உடல். சரீரி - ஆன்மா. சரு - சோறு. சருகு - உலர்ந்த இலை. சருக்கம் - நூற் பிரிவு. சருக்கரை - சர்க்கரை. சருக்கரைமாமணி - கற்கண்டு. சருக்கி - பாண்டு விளையாட்டு. சருச்சரை - சொரசொரப்பு. சருப்பதோத்திரம் - கோல வகை, கவிவகை. சருமபந்தம் - மிளகு. சருமம் - தோல், கேடகம். சருமாசனம் - யோகாசனம். சருவாக்கியன் - சர்வஞ்ஞன். சருவந்து - தலைக்கவசம். சருவம் - வாயகன்ற பாத்திரம், சட்டுவம், சர்வம். சருவரி - இரவு, இருள். சருவல் - நேசப்பான்மை, கொஞ்சிக் குலாவுகை. சருவுதல் - பழகுதல், போராடுதல், கொஞ்சிக் குலாவுகை. சரை - நரைமயிர், கிழத்தனம். சரைமலம் - வயிரக் குற்றம். சரோசனம் - கோபத்தோடிருக்கை. சரோருகம் - தாமரை. சரோருகன் - பிரமன். சர்க்கம் - சருக்கம். சர்க்கரை - கரும்பிலிருந்து எடுக்கும் இனிய பொருள். சர்க்கரைவள்ளி - வற்றாழை. சர்க்கரை - சருச்சரை. சர்ச்சை - ஆராய்ச்சி. சர்ப்ப - விரைந்து நட. சர்ப்பகேது - துரியோதனன். சர்ப்பசயனம் - பாம்பணை. சர்ப்பம் - பாம்பு, பகல் முகூர்த்தம் 15-ல் 3 - வயது. சர்ப்பணை - வஞ்சணை. சர்மா - பிராமணர் பட்டப்பெயர். சர்வசங்கநிவிர்த்தி - எல்லாப் பொருளிலும் பற்றுவிடுகை. சர்வசங்காரகாலம் - உலக முழுவதும் அழியுங் காலம். சர்வசார மூலிகை - கற்றாழை, நீராரை, சிறுசின்னி, பற்படாகம், வெள்ளறுகு, வல்லாரை, பெருங் கரந்தை, விட்டுணு காந்தி சிவனார் வேம்பு, முதலிய ஒன்பது மூலிகை களுக்கும் வழங்கும் பொதுப் பெயர். சர்வசித்து - இருபத்தொன்றாவது ஆண்டு. சர்வஞ்ஞத்துவம் - முற்றுமறிந்த வனாயிருக்கும் தன்மை. சர்வஞ்ஞன் - கடவுள். சர்வதாரி - இருபத்திரண்டாவது ஆண்டு. சர்வதேச - அனைத்துலகு (Inter national). சர்வமானியம - வரியின்றி விடப் படும் நிலம். சர்வம் - முழுதும். சர்வவியாபி - எங்கும் நிறைந்த கடவுள். சர்வாதிகாரி - எல்லாக் காரியங் களையும் கவனிக்கும் அதிகாரி. சர்வேச்சுரன் - கடவுள். சலகு - முத்துச் சிப்பி. சலகை - தோணி. சல்க்கிரீட்டை - நீர் விளையாட்டு. சலங்கு - பெரிய படகு. சலங்கை - சதங்கை. சலங்கை முன்தாங்கி - இரண்டாம் விரலில் அணியும் மோதிரம். சலசந்தி - இரண்டு கடல்களை இணைக்கும் குறுகிய நீர்ப்பகுதி. சலசம் - தாமரை, முத்து, பாசி. சலசரம் - மீன், மீனராசி, தோணி முதலியன. சலசலோசனன் -திருமால். சலசாதி - நீர் வாழ்வன. சலசை - இலக்குமி. சலஞ்சலம் - ஆயிரம் வலம்புரி சூழ்ந்த சங்கு. சலதம் - மேகம். சலதரங்கம் - நீரலை, ஒருவகை வாத்தியம். சலதரம் - முகில், நீர்நிலை. சலதாரி - சிவன். சலதாரை - சாக்கடை. சலதி - பொய் பேசுபவள். சலதோடம் - தடுமல், சளிப்பு. சலத்தம்பனம் - நீரின் சக்தியை மாற்றும் வித்தை. சலநிதி - கடல். சலந்தரன் - சிவனால் மடிந்த அசுரன். சலபதி - வருணன். சலபம் - வீட்டில். சலப்பிரளயம் - பெருவெள்ளம். சலமிடுதல் - அர்க்கியங்கொடுத்தல். சலம் - மூத்திரம், நடுக்கம், அசையும் அம்புக்குறி, சுழற்சி, தணியாக் கோபம், பொய்மை, வஞ்சனை, தீய செயல், மாறுபாடு, போட்டி இலாமிச்சை. சலராசி - கடல். சலரோகம் - நீரிழிவு நோய். சலலம் - முட்பன்றியின் முள். சலலிங்கம் - மார்பில் அணியும் இலிங்கம். சலவர் - நெய்தல்நில மக்கள். சலவன் - வஞ்சகன், பகைவன், நெய்தல் நிலத்தோன். சலிவியன் - கோபமுள்ளவன். சலவை - வெளுத்த துணி. சலவை உவர்காரம் - கழுவும் சோடா (Washing Soda). சலவைக்கல் - அழுத்தஞ் செய்யப்பட்ட கல் (Marble). சலவைத்தூள் - நிறம் நீக்கிப் பொடி (Bleaching powder). சலனம் - அசைவு, சஞ்சலம், துன்பம், மனதிற் கற்பித்துப் பூசிக்கப்படும் சிவலிங்கம். சலனன் - அசையும் காற்று. சலனை - துன்பம். சலன் - கால். சலாகாபுருடர் - 24 தீர்த்தங்கரரை உள்ளிட்ட 63 சைனப் பெரியார். சலாகை - சிறு இரும்பு, காந்தம், சவளம், நன்மணி, வாகுவலயம், வரிச்சல். சலாங்கு - சிறு இரும்பு, காந்தம், சவளம், நன்மணி, வாகுவலயம், வரிச்சல். சலாங்க - பொய்யாப் புள், கொசுகு. சலாந்தரு - நாட்டிய உறுப்பு வகை. சலாபம் - இலங்கையில் முத்துக் குளிக்கும் இடம். சலாம் - வந்தனம். சலாவணி - எங்கும் வழங்குகை. சலிகை - செல்வாக்கு, இளக்காரம். சலித்தல் - சோர்தல், அசைதல், வெறுத்தல். சலிப்பு - வெறுப்பு, சோர்வு. சலிலம் - நீர். சலிகம் - போர். சல்லகம் - முள்ளம் பன்றி. சல்லகி - ஆத்தி, கருவா. சல்லடம் - குறுகிய கால்சட்டை. சல்லடை - தானியமரிக்கும் கருவி. சல்லரி - கைத்தாளம், மேளம். சல்லவட்டம் - கேடயம். சல்லா - மெல்லிய துணி வகை. சல்லாத்து - ஒருவகை உணவு, லெட்டீஸ் கீரை. சல்லாபம் - சம்பாஷைணை, சரசப் பேச்சு. சல்லாபித்தல் - கலந்து பேசுதல். சல்லி - எல்லரி, சிறுகல், ஆபரணத் தொங்கல், அதிமதுரம், சிறுகாசு. சல்லிகை - பெரும்பறை. சல்லிக்கட்டு - ஏறுதழுவும் விழா. சல்லியகரணி - காயத்தை மாற்றும் மருந்து. சல்லியம் - முள்ளம்பன்றி, எலும்பு, ஆணி, இரும்புக் கோல், ஈட்டி, உபத்திரவம், பூமிக்குள் இருப்பதை அறியும் ஆருடம், செஞ் சந்தனம். சல்லியம் - நகுல சகாதேவரின் மாமன், சுக்கிரன். சல்லுதல் - நீர்தெளித்தல். சவக்கம் - சதுரவடிவமான வைரம். சவக்களித்தல் - கெட்ட சுவை யுடைய தாயிருத்தல். சவங்குதல் - மெலிதல். சவடன் - பயனற்றவன். சவடி - கழுத்தணிவகை, காதணி, காறையெலும்பு. சவடு - உவர்மண். சவட்டு - உவர். சவண்டலை - மரவகை. சவட்டுதல் - மெல்லுதல், வளை வாக்குதல். சவணம் - கேள்வி. சவம் - பிணம், பிசாசம், மூங்கில். சவரம் - மயிர்மழிக்கை, சாமரம். சவரன் - வேடன், பாலைநில மக்கள், பாலைநிலத் தலைவன். சவரி - சாமரம், கவரிமான், வேடசாதிப் பெண். சவர் - உவர். சவர்க்காரம் - சோப் (Soap). சவலம் - அரைக்கால் வராகன். சவலை - மனக்குழப்பம், வருத்தம், இளமை, மின்னல், இசைப்பா வகையுள் ஒன்று. சவலைவெண்பா - தனிச் சொல் லின்றி இரண்டு குறள் வெண் பாக்களை இணைத்துச் செய்யும் வெண்பா. சவளம் - குந்தம். சவளி - மகளிர் கழுத்தணி வகை. சவளுதல் - வளைதல். சவள்தடி - ஓடக்கோல். சவனம் - வேதம், வேள்வி. சவனன் - வேகமுடையவன். சவன்னன் - சத்திரியப் பெண்ணுக்கும் பிராமணனுக்கும் பிறந்தவன். சவாது - சவ்வாது. சவாய் - பாய்மரந்தாங்கும் கயிறு. சவாரி - வண்டி முதலியவற்றில் செல்லுகை. சவாலாக்கம் - வயிரமுண்டாகும் இடங்களில் ஒன்று. சவி - ஒளி, அழகு, நேர்மை, வல்லமை, திருவிழா, சுவை. சவிகற்பம் - ஒரு பொருளைப் பெயர் சாதி குணம் முதலியவற்றில் வேறு பிரித்தல். சவிதா - சூரியன். சவியம் - ஆனைத் திப்பிலி. சவுகதன் - புத்தன். சவுக்கம் - சதுரம், துணித்துண்டு. சவுக்களி - காதணி வகை. சவுக்காரம் - வழலை உப்பு, அழுக்கு நிக்கும் பொருள். சவுக்கு - குதிரைச் சாட்டை ஒருவகை மரம். சவுக்கை - சதுரத் திண்ணைக் கொட்டகை, காவற்கூடம், சுங்கச் சாவடி. சவுங்கல் - சவங்கல், மானம் மழுங் கினவன். சவுசம் - சௌசம். சவுதம் - நாட்டியவகை, வைதிகச் சடங்கு. சவுந்தரம், சவுந்தரியம் - அழகு. சவுபானம் - படிக்கட்டு. சவுமியம் - சாந்தம். சவுரமாதம் - சூரியன் ஓர் இராசியைக் கடந்து செல்லும் நாள் அளவாற் கணக்கிடப் பெறும் மாதம். சவுரி - திருமால், யமன். சவுரியம் - களவு, சூரத்தனம். சவை - கற்றறிந்தோர், ஆடவர் கூட்டம், மிதுனராசி. சவைவாரியர் - கிராமச் சபையின் நிர்வாக கூட்டத்தார். சவ்வாது - ஒருவகை வாசனைப் பொருள். சவ்வாதுப்புலவர் - சேதுபதியின் வாயிற் புலவருள் ஒருவராயிருந்த முகமதியப் புலவர். சவ்வியசசி - அருச்சுனன். சவ்வியம் - இடைப்பக்கம். சவ்வீரம் - ஒரு நாடு, ஒரு மருந்து (Arsenic), காடி. சவ்வீராஞ்சனம் - அண்டி மனிசல் பைடு. சவ்வு - மூடுதோல். சழக்கு - குற்றம், தீமை, தளர்ச்சி. சழங்குதல் - சோர்தல், நெகிழ்தல், தொங்கியசைதல். சழிதல் - சப்பளிதல், நெருங்கிக் கிடத்தல். சபக்கம் -மனமழிகை. சளகன் - நிலையற்ற மனமுடையவன். சளம் - துன்பம், வஞ்சகம். சளம் - வஞ்சகம். சளி - குளிர்ச்சி, மூக்குச்சளி, கபம், பிசின். சளித்தல் - புளித்தல், பதனழிதல். சளுக்கன் - இடம்பக்காரன். சளுக்கி - இடம்பக்காரி. சளுக்கியன், சளுக்கன் - சளுக்கி வேந்தன். சளுக்கு - இடம்பம். சளுகம் - அட்டை. சளைத்தல் - இளைத்தல். சள்ளிடுதல் - குரைத்தல். சள்ளை - தொந்தரவு. சறுக்கல் - வழுக்கல். சறுக்குதல் - வழுக்குதல். சறுக்குவிமானம் - கிளைடர் விமானம் (Glider). சறைமணி - பசுக்கள் ஓசையைக் கேட்டு உடன் வருதற்காக இடையர் அரையிற் கட்டி ஒலிக்கும் மணி. சறையினான் - பேணாதவன். சற்கரித்தல் - உபசரித்தல். சற்கருமம் - நற்செய்கை. சற்காரம் - உபசாரம். சற்காரியவாதம் - உற்பத்திக்கு முன்னும் காரியப் பொருள் காரணப் பொருளில் உள்ளது என்னும் கொள்கை. சற்குரு - ஞானாசிரியன். சற்சனர் - நல்லோர். சற்சூத்திரன் - சமயா சாரத்தோடி ருக்கும் சூத்திரன். சற்பம் - சர்ப்பம். சற்பனை - வஞ்சனை. சற்பாத்திரம் - தானம் பெறுதற்குத் தகுதியானவன். சற்பம் - சர்ப்பம். சற்பனை - வஞ்சனை. சற்பாத்திரம் - தானம் பெறுதற்குத் தகுதியானவன். சற்பாவம் - உளதாந்தன்மை, சற் குருவைப் பிரமமாகப் பாவிக்கை. சற்புத்திரன் - நற்குண நற்செய்கை யுள்ள புதல்வன். சற்று - சுலபம், கொஞ்சம். சனகம் - சாதிக்குக் காரணமான சூக்கும் வினை. சனகன் - பிதா, சீதையின், பிதா, சன காதியருள் ஒருவராகிய முனிவர். சனகாதியர் - சனற் குமாரர், சனந்தனன் என்னும் நான்கு முனிவர். சனகி - சானகி. சனபதம் - நாடு. சனபதி - அரசன். சமமேசயன் - பரீட்சித்தின் மகன். சனம் - மக்கட் கூட்டம். சனலோகம் - பிதிரர் வாழிடம். சனற்குமாரம் - உபபுராணத்தொன்று. சனனம் - பிறப்பு. சனாதனதர்மம் - பழமையான அற ஒழுக்கம். சனார்த்தனம் - வற்கலை என்னும் திருமால் தலம். சனி - ஓர் கிரகம், சனிக்கிழமை, துன்பம். சனித்தல் - பிறத்தல். சனிப்பு - பிறப்பு. சனி வாளையம் - மகளிரணியும் காதணி வகை. சனு - வேண்டியவன். சன்மச்சனி - சன்ம ராசிலிருக்கும் சனி. சன்மநட்சத்திரம் - ஒருவன் பிறந்த நட்சத்திரம். சன்மப்பகை - இயற்கைப் பகை, தீராப் பகை. சன்மம் - பிறப்பு. சன்மராசி - பிறந்த காலத்தில் சந்திரனிருந்த இராசி. சன்மலி - இலவு, நரகத்தொன்று. சன்மாந்தரம் - வேறு பிறவி. சன்மார்க்கசித்தியார் - அம்பலவாண தேசிகரியற்றிய சித்தாந்த சாத்திரம். சன்மார்க்கம் - நன்னெறி. சன்மானம் - வெகுமதி. சன்மினி - துர்க்கைக்குத் தொண்டு புரியும் பெண்பேய். சன்னகம் - பூங்கருவி என்னும் படைக்கலம். சன்னதம் - ஆவேசம், கடுங்கோபம். சன்னது - உரிமைச் சாசனம். சன்னத்தம் - ஆயத்தம். சன்னத்தன் - கவசம் பூண்டவன், போருக் காயத்தமாயிருப்பவன். சன்னபின்னம் - சின்ன பின்னம். சன்னம் - நுண்மை, நுண்ணிய பொடி. சன்னல் - சாளரம். சன்னவீரம் - வெற்றி மாலை. சன்னாகம் - போர்க் கவசம். சன்னாசம் - சன்னியாசம். சன்னாசி - சன்னியாசி. சன்னி - நோய் வகை, தோற் செவி யுடையது. சன்னிதானம் - திருமுன்பு, மடாதிபதி களைக் குறிக்க வழங்கும் மரி யாதைச் சொல். சன்னிதி - கோயில் அல்லது பெரியோர் களின் திருமுன்பு. சன்னிபாதசுரம் - தைபோயிட்டுச் சுரம். சன்னியாசம் - துறவு. சன்னியாசி - துறவி. சன்னு - கங்கையை உண்டு செவி வழியாக விட்ட முனிவர். சன்னை - குறிப்பு, சமிக்கை, பரிகாச வார்த்தை. சன்னைசயிக்கிளை - சாடைமாடை. சா சா - வட்டக் கோட்டின் ஒரு பகுதியின் இரு முனைகளையும் சேர்க்கும் கோடு, சாதல். சாகசம் - துணிவு, பாசாங்கு மெய்மை, யானை. சாகதன் - துணிவுள்ளவன். சாகதுண்டம் - அகில். சாகத்தீவு - தேக்கந் தீவு. சாகசம் - வெள்ளாடு, தேனீ, இலை, இலைக்கறி, தேக்கு, சாகத்தீவு. சாகசபட்சி - குலிங்கமென்னும் பறவை. சாகபட்சிணி - இலையுணவு கொள் ளும் பிராணி (Herbivorous). சாகரம் - கடல், விழித்திருக்கை, பதினாயிரம் கோடி எனும் எண். சாகளம் - வெள்ளாடு. சாகாடு - வண்டி, வண்டியுருளை. சாகாமூவாப்பேருகு - திரு விளக் கெரிக்கும் நெய்யின் பொருட்டுக் கோயிற்கு விடப்படும் ஆடு மாடுகள். சாகி - மரம். சாகித்தியம் - செய்யுள், இசைப்பாட்டு. சாகியம் - நட்பு. சாகினி - சிறுகீரை, சேம்பு. சாகுபடி - பயிர்ச்செய்கை. சாகேதம் - அயோத்தி. சாகை -மரக்கிளை, வசிக்குமிடம், வேதத்தின் உட்பிரிவு, வேதம், இலை, வட்டில், இறப்பு. சாக்கடை - சலதாரை. சாக்காடு - சாவு. சாக்காளி - தன்னுருவை மறைத்து கிடக்கும் புழு. சாக்கி - சாட்சி, சக்கிமுக்கிக்கல். சாக்கியநாயனார் - அறுபத்து மூவருள் ஒருவர். சாக்கியமுனி - புத்தர். சாக்கியம் - பௌத்தமதம். சாக்கியர் - பௌத்தர், சைனர். சாக்கிரதை - ஒழிப்பு. சாக்கிரம் - விழிப்புநிலை. சாக்கு - வீண்காரணம், கோணிப் பை. சாக்குருவி - துன்னிமித்தக் குறியான சத்தமுடைய ஆந்தைவகை. சாக்கை - நிமித்தகன், அரசர் கருமத் தலைவன், சோதிடன். சாக்கையன் - கூத்தாடும் ஒரு சாதி யான், நிமித்தகன். சாங்கமிலார் - சாதியால் விலக்குப் பட்டவர். சாங்கம் - சாயல், பத்திரம். சாங்கரம் - கலப்புச்சாதி. சாங்காரியம் - கலப்பு. சாங்கிமம் - மருத யாழ்த்திறவகை. சாங்கியம் - கபிலமதம். சாங்கேதிகம் - அடையாளம் கட்டுப் பாடு முதலியவற்றால் நிகழ்வது. சாங்கோபாங்கம் - முழுமை. சாசபுடம் - பஞ்சதாளத்தொன்று. சாசனம் - கட்டளை, கல்வெட்டு, செப்புப் பட்டையம் முதலியன. சாசாரம் - ஒரு தேவருக்கு. சாசி - முலைப்பால். சாசுவதம் - நித்தியம், அசையா நிலை. சாடவம் - ஆறுசுரமுள்ள இராகம். சாடி - பாண்டவகை, கோள், மொழி, உழுகால், ஓர் அளவை, சீலை. சாடிச்செடி - ஒருவகை புலா லுண்ணிச் செடி (Pitcher plant). சாடு - கைக்கிடும் உறை, பேச்சுச் சாதுரியம், வண்டி. சாடுதல் - அசைதல், சாய்ந்து நிற்றல், கையால் எறிதல். சாடுவர் - நாவலர். சாடை - சாயல், ஒப்பு, சைகை. சாட்கோல் - சாணளவுள்ளகோல். சாட்சாத்து - கண்கூடாக. சாட்சி - சான்று, நேரிற் பார்த்தவன். சாட்சியம் - சாட்சி. சாட்டி - பயிரிடும்நிலம் சாட்டியம் - பொய். சாட்டுதல் - சுமத்துதல். சாட்டுநிலம் - பசும்புற்றரை. சாட்டை - சவுக்கு, பம்பரமாட்டுங் கயிறு. சாணகம் - சாணம். சாணக்கியம் - தந்திரம். சாணக்கியன் - சந்திரகுப்த மௌரி யனின் மந்திரி. சாணம் - சாணி, சந்தனக்கல், தழும்பு, நாராலாகியபொருள். சாணளந்தான் - ஒருவகைப் புழு. சாணன் - வீரன். சாணாகம் - சாணம். சாணான் - கள்ளிறக்கும் சாதியான். சாணி - சாணம். சாணை - சாணைக்கல். சாணைக்கல் - ஆயுதம் தீட்டும் கல். சாண் - ஒன்பதங்குலமுள்ள அளவு. சாண்டு - பூப்புநீர். சாதகபுடம் - சாதகம் கணிக்கை. சாதகப்புள் - வானத்தினின்று விழும் மழைத்துளியை உண்டு வாழும் பறவை. சாதகம் - பிறப்பு, பிறவிக் குணம், கிரகபலன், பயிற்சி, துணைக் கார ணம், அனுகூலம், பூதம், சாதகப்புள் மறைப்பு. சாதகன் - பயிற்சியுள்ளவன், யோக வழி நிற்போன், மாணாக்கன், உதவி யாளன், பூதம், சாதகத்துக்குரியவன். சாதகாலங்காரம் - கி.பி. 1665-ல் கீரனூர் நடராசன் இயற்றிய ஒரு சோதிட நூல். சாதகும்பம் - பொன். சாதம் - பிறப்பு, இளமையுடையது, உண்மை, கூட்டம், சத்தியோ சாதமந்திரம் சோறு. சாதரூபம் - நால்வகைப் பொன்களுள் ஒன்று. சாதல் - இறத்தல். சாதவாகனம் - சாதாவாகனால் செய்யப் பெற்ற ஒரு தமிழ் நூல். சாதவாகனன் - சாதவாக வமிசத்து ஓர் அரசன், ஐயனார். சாதவேதா - நெருப்பு. சாதனசதுட்டயம் - நான்கு குணங் கள். சாதனம் - கருவி, பயிற்சி, அடை யாளம், துணைக்காரணம், இடம். சாதனை - சாதிக்கை, பயிற்சி, பொய். சாதன்மியம் - ஒப்புமை. சாதா - சாதாரணம். சாதாக்கியம் - சத்தியுடன் சேர்ந்த சிவம். சாதாரண - அறுபது ஆண்டுகளுள் ஒன்று. சாதாரணம் - பொதுவானது, எளிது. சாதாரம் - ஆதாரத்தோடு கூடியது. சாதாரி - செவ்வழியாழ்த் திறவகை. சாதாழை - கடற்பூண்டு வகை. சாதாளி - மருத யாழ்த்திற வகை. சாதி - குலம், பிறப்பு, இனம், திரள், சாதிக்காய், பிரம்பு. சாதிக்காய் - ஒரு வாசனைக் காய். சாதிங்குலிகம் - சாதிலிங்கம். சாதிசம் - சாதிக்காய். சாதித்தல் - நிறைவேற்றுதல், நிலை நாட்டுதல், விடாது பற்றுதல், கண் டித்தல், அளித்தல், அழித்தல். சாதிப்பன்னம் - சாதிப்பத்திரி. சாதிப்பாய் - பிரப்பம் பாய். சாதிப்பிரட்டம் - சாதியிலிருந்து நீக்குதல். சாதிப்பிரட்டம் - சாதிவிலக் குண்டவன். சாதிபத்திரி - சாதிக்காயை மூடி யிருக்கும் தோல். சாதிப்பூ - சாதிபத்திரி. சாதிமை - பெருமை. சாதிரை - ஊர்வலம். சாதிலிங்தம் - பாஷாணவகை. சாரது - நல்லது, அருகன், துறவி, காரணமின்மை. சாதுகை - சாத்துவிகம். சாதுயர் - மரணாவத்தை. சாதுரங்கம் - சதுரங்க சேனை. சாதுரியம் - சாமர்த்தியம், நாகரிகம். சாதுவன் - நல்லவன், புலன்களடக்கி யவன். சாதேவன் - சகதேவன். சாத்தந்தை - சாத்தனுக்குத் தந்தை. சாத்தந்தையார் - சங்க காலப் புலவர் (நற். 26; புறம் 80). சாத்தம் - சத்தி மதம். சாத்தலி - வேதம். சாத்தவி - சத்தி. சாத்தன் - அருகன், புத்தன், ஒரு வனைக் குறிக்கச் சொல்லும் சொல், வாணிகக் கூட்டத் தலைவன். சாத்தா - ஐயனார். சாத்தானி - கோயிலில் பூமாலைத் தொண்டு செய்யும் வைணவன். சாத்தியம் - சாதிக்கத்தக்கது, தீர்க்கக் கூடியது. சாத்தியர் - தேவருள் ஒரு சாரன். சாத்திரம் - கலை. சாத்து - வாணிகக்கூட்டம். சாத்துக்கவி - சிறப்புப் பாயிரக்கவி. சாத்துதல் - அணிதல், பூசுதல், அடைதல். சாத்துப்படி - விக்கிரகத்துக்குச் செய் யும் அலங்காரம். சாத்துவம் - புலி. சாத்துவதி - அறம் பொருளாகவும், தெய்வ மானிடம் தலைவராகவும் வரும் நாடகவிருத்தி. சாத்துவம் - சாத்துவிகம். சாத்துவிகம் - சத்துவகுணம். சாத்துறி - உறிவகை. சாத்தெறிதல் - வாணிகர் கூட்டத் தைக் கொள்ளையிடுதல். சாந்தகவிராயர் - இரங்கேச வெண் பாவைப் பாடிய புலவர். சாந்தபனம் - ஒரு விரதம். சாந்தம் - அமைதி, பொறுமை, ஒன் பது இரசங்களுள் ஒன்று, குளிர்ச்சி, சந்தனம். சாந்தம்பி - சந்தனக்கல். சாந்தலிங்ககவிராயர் - தண்டலை யார் சதகம் செய்தவர் (18 - ம் நூற்). சாந்தலிங்கசிவாமிகள் - 17 ஆம் நூற்றாண்டிலிருந்த ஒரு வீரசைவ முனிவர். சாந்திகலியாணம் - பெண் பூப் படைந்த பின்பு கணவனுடன் சேர்த்தற்குச் செய்யும் சடங்கு. சாந்திக்கூத்து - தலைவன் முதலி யோர் மன அமைதி அடைதற்கு ஆடுங்கூத்து. சாந்திமத்நீவு - பரசுராமருக்கு உரிய தான ஒரு தீவு. சாந்திரம் - சந்திரன் சம்பந்தமானது. சாந்திரமாதம் - சந்திரகதியைக் கொண்டு அளவிடப்படும் மாதம். சாந்திர்மானம் - சந்திரகதியைக் கொண்டு மாத வருடங்கள் அள விடும் முறை. சாந்திராயணம் - ஓர் விரதம். சாந்து - சந்தனமரம், கலவைச் சந் தனம்,விழுது, சுண்ணாம்பு. சாந்துக்கோய் - சாந்துப்பெட்டி. சாந்துப்புலவர் - மயூரகிரிப் புராணம் பாடியவர் (18 - ஆம் நூ). சாந்தை - பூமி. சாந்தோக்கியம் - உபநிடதங்களுள் ஒன்று. சாபசரத்தி - தவப்பெண். சாபம் - சபித்துக் கூறும்மொழி, வில், தனுவிராசி, விலங்குக் குட்டி. சாபலம் - எளிமை. சாபல்லியம் - பயனுளதாதல். சாபாலன் - ஆட்டு வாணிகன். சாப்பாறை - சாவில் அடிக்கப்படும் பறை. சாப்பாடு - உணவு. சாப்பை - புற்பாய் சாமகண்டர் - சிவன். சாமகானம், சாமகீதம் - சாமவேதம் பாடுகை. சாந்தன் - அருகன், புத்தன். சாந்தாற்றி - பீலி விசிறி, சிற்றால வாட்டம். சாந்தி - அமைதி, தணிவு, பரிகாரம், விழா, பூசை. சாமக்கிரியை - உணவுப் பண்டம், உபகரணம். சாமணம் - சாவணம். சாமந்தன் - படைத்தலைவன். சாமந்தி - பூஞ்செடி வகை. சாமம் - 7½ நாழிகை கொண்ட கால அளவை, இரவு, சாமவேதம், பகை வனை வசப்படுத்தும் உபாயம், பசு மை, கருமை. சாமரம் - கழு, கவரி. சாமரை - சாமரம். சாமர்த்தியம் - திறமை. சாமவேதம் - மூன்றாம் வேதம். சாமனம் - கருமை, பசுமை. சாமளை - பார்வதி. சாமன் - புதன், காமன்தம்பி. சாமானியம் - பொது, பெறுதற் கெளி மையுடையது. சாமி - கடவுள், முருகன், அருகன், தலைவன், குரு, மூத்தோன், தலை வி, பொன், செல்வம், சாமை. சாமிநாத கவிராயர் - சிவ சைலப் பள்ளு இயற்றியவர் (18ம் நூ.). சாமிநாத தேசிகர் - ஈசான தேசிகர். சாமிநாத முதலியார் - தரும புத்ர நாடகம் செய்த யாழ்ப்பாணப் புல வர் (18ம் நூ.). சாமிநாதன் - முருகக்கடவுள். சாமிநாதையர், உ. வே. - பல அருந்தமிழ் நூல்களை அச் சேற் றித் தமிழுக்குப் பணியாற்றிய புல வர் (1855 - 1942). சாமியம் - சமன்பாடு. சாமீகரம் - பொன். சாமீபம், சாமீப்பியம் - கடவுளை அணுகியிருக்கும் நிலை. சாமுசித்தன் - முற்பிறப்பில் பெற்ற ஞானத்துடன் பிறத்து சிவனிடத்தில் பக்தி செய்வோன். சாமுண்டி - துர்க்கை. சாமுண்டதேவநாயகர் - புறப் பொ ருள் வெண்பாமாலை உரை யாசிரியர். சாமுத்திரிகம் - அங்க இலக்கண நூல். சாமை - தானியவகை. சாமோற்பவை - யானை. சாம்பசிவன் - அம்மனோடு கூடிய சிவன். சாம்பர் - சாம்பல். சாம்பலடிப்பெருநாள் - கிறித்துவர் திருநாட்களுள் ஒன்று. சாம்பலாண்டி - உடல் முழுவதும் நீறு பூசிய பரதேசி. சாம்பலுப்பு - மரவுப்பு. சாம்பல் - எரிப்பட்டநீறு, வாடற் பூ, முதுமை, நாவல். சாம்பவம் - சைவ மத பேதம். சாம்பவன் - இராமயணத்தில் கூறப்படும் கரடிவேந்தன். சாம்பவி - பார்வதி. சாம்பவிதீட்சை - ஆசிரியன் பார்வை யால் மாணாக்கனது பாசத்தைச் சேதிக்கும் தீட்சை. சாம்பன் - சிவன். சாம்பான் - பறையர் பட்டப்பெயர். சாம்பிராணி - ஒருநாடு, தூபவர்க்கம், மூடன். சாம்பு - பறை, படுக்கை, புடைவை, பொன் நாவல். சாம்புதல் - வாடுதல், கெடுதல், ஒடுங்குதல். சாம்புநதம், சாம்பூநதம் - மேரு மலைக்கு வடக்கில் நாவற்சாறு பெருகி ஓடும் நதி, நால்வகைப் பொன்களுள் ஒன்று. சாம்ராச்சியம் - ஏகாபத்தியம். சாயகம் - அம்பு, வாள். சாயம் - நிறம். சாயரட்சை - மாலைக்காலம், மாலைப் பூசை. சாயரி - பாலைப் பண்வகை. சாயல் - சாய்வு, இணைப்பு, நுணுக்கம், துயிலிடம், அழகு, நிறம், மேனி, ஒப்பு, நிழல், சார்பு, மென்மை, மேம்பாடு, அருள், மேம்பாடாகிய சொல். சாயல்வரி - வரிப்பாட்டு வகை. சாயவேளாகொல்லி - பண்வகை. சாயனபோகம் - தீர்க்கரேகை. சாயனம் - கிரகபுடம், இரசயானம், கள். சாயாக்கிரகம் - இராகு கேதுக்கள். சாயாகௌளம் - ஓர் இராகம். சாயாதேவி - சூரியன் மனைவிகளுள் ஒருத்தி. சாயாநீர் - கானல்நீர். சாயாபதி - சூரியன். சாயாபுருடன் - நிழல் வடிவாகத் தோன்றும் புருடன். சாயான்னம் - மாலை வழிபாடு. சாயினகம் - ஓந்தி. சாயினம் - மென்மையான மகளிர் கூட்டம். சாயுச்சியம் - உயிர் கடவுளோடு ஐக்கிய மாகும் நிலை. சாயை - நிழல், புகழ், பாவம். சாய் - தட்டான், கோரை, செறும்பு, நிறம், புகழ். சாய்தல் - கவிழ்தல், வளைதல், முறிதல், தோற்றோடுதல், நடுநிலை, கோணுதல், சார்தல், தளர்தல், வருந்துதல், மெலி தல், வற்றுதல் அழிதல். சாய்த்தல் - சாயச்செய்தல், ஓட்டுதல், கெடுத்தல், தோல்வியுறச் செய்தல், முறித்தல், மெய்ப்படுத்துதல், முற்று வித்தல். சாய்ப்பாவை - கோரைப் பாவை. சாய்ப்பிடம் - படை பின்வாங்கும் இடம். சாய்ப்பு - தாழ்வு. சாய்வு - சரிவு, குறைவு, அழிவு. சாரகம் - தேன். சாரங்கபாணி - திருமால். சாரங்கம் - வில், மான், வண்டு, ஓர் இராகம். சாரங்கி - ஓர் இசைக்கருவி. சாரசம் - வெண்ணாரை, கொக்கு, தாமரை. சாரணர் - ஒற்றர், தூதுவர், சமணரிலும் பௌத்தரிலும் பெற்றோர், பதி னெண் கணத்துள் ஒருவர், தேச வூழியத் தொண்டர். சாரதம் - பூதம், இன்னோசை. சாரதர் - பூத கணத்தார். சாரதா - சரசுவதி. சாரதி - தேர்ப்பாகன், புலவன். சாரப்பருப்பு - காட்டுமா விதை. சாரமேயன் - நாய். சாரம் - மேலேறக்கட்டும் மரம், கிரகத்தின் இயக்கம், இரசம், இனிமை, மருந்து, சிறந்தது, வடித்தெடுத்த பகுதி, பயன், ஆற்றல், மரவயிரம், வியபிசாரம், நவச்சாரம். சாரல் - கிட்டுகை, பக்கம், பக்கமலை, மலை, தூவானம், காந்தாரப்பண். சாரற்கட்டு - கோடைக் காலத்தில் மலையுச்சியில் மேகங் கூடி யிருக்கை. சாரன் - ஒற்றன். சாராம்சம் - வடித்தெடுத்த பகுதி. சாராயம் - காய்ச்சி வடித்த மது (Spirit). சாரி - வட்டமாயோடுகை, நடை, வாகன மீது செல்லுகை, இசைக் கருவி வகை, சூதாடு காய், ஆடை வகை. சாரிகை - கதி, சுழல்காற்று, கவசம், சுங்க இறை, நாகண வாய்ப்புள். சாரிகொள்ளுதல் - நாட்டியத்தில் இடம் வலமாக ஆடுதல். சாரித்தல் - கீழ்வீழ்தல். சாரித்திரம் - ஒழுக்கம். சாரியை - சார்ந்துவரும் இடைச் சொல், குதிரையின் சுற்று வரவு, வீரனுடைய கதிவகை, ஆடல் வகை. சாரீரம் - பாடுதற்குரிய குரல். சாரு - அழகு, கிளி. சாருகன் - கொலையாளன். சாருவாகன் - சார்வாகன். சாரூபம், சாரூப்பியம் - கடவுளைப் போல் வடிவம் பெறுகை. சாரை - பாம்புவகை, கட்டுமா. சார் - கூடுகை, இடம், பக்கம், வகை, தாழ்வாரம், அழகு, ஒரு மரம், தேர். சார்ச்சார் - இடந்தோறும் இடந்தோறும். சார்ச்சி - சேருகை, வருகை, தொடர்பு, சார்விடம். சார்தல் - சென்றடைதல், புகலடைதல், அடுத்தல், ஒத்தல். சார்த்தியளத்தல் - ஒன்றோடு மற்றொன்றை ஒப்பிட்டளத்தல். சார்த்தியளத்தல் - ஒன்றோடு மற்றொன்றை ஒப்பிட்டளத்தல். சார்த்துதல் - சாரச் செய்தல், இணைத் தல். சார்த்துகவி - பாட்டுடைத் தலைவன் பதியோடும் பெயரோடும் சார்த்திப் பாடும் வரிப்பாட்டு வகை. சார்த்தூலம் - புலி. சார்பிலார் - பகைவர், முனிவர். சார்பு - இடம், பக்கம், ஆதாரம், துணை, புகலிடம், பிறப்பு. சார்புநூல் - முதல் நூல் வழி நூல்களோடு பொருள் முடிவு ஒரு புடையொத்து ஒழிந்தன ஒவ் வொமையுடைய புடை நூல். சார்பெழுத்து - குற்றியலுகரம் குற்றியலிகரம் முதலிய சார்பில் தோன்றும் எழுத்து. சார்மணை - சுவரோடு ஒட்டித் திண்ணையில் கட்டிய சாய்மானத் திண்டு. சார்வபௌமம், சார்வபூமன் - எட்டுத் திக்கு யானைகளுள் ஒன்றாகிய வடதிசை யானை. சார்வரி - அறுபது ஆண்டுகளுள் ஒன்று. சார்வாகம் - உலகாயத மதம். சார்வாரம் - கச்சின் தலைப்பு. சார்வு - இடம், ஒட்டுத் திண்ணை, ஆதாரம், துணை, உபாயம், பற்று, அயலிடம். சால - மிக. சாலகடங்கடர் - அரக்கர். சாலகம் - சிலந்தி, வலை, யாக பத்தினி யின் நெற்றியிலணியும், அணி விசேடம், சன்னல், அரும்பு. சாலபஞ்சிகை - மரப்பாவை. சாலமலி - முள்ளிலவு. சாலம் - நடிப்பு, கூட்டம், சபை, சாலவித்தை, வலை, குறளை, கல்வி, மதில், ஆச்சா, மதில். சாலம்பம் - பற்றுக்கோடு. சாலர் - நெய்தல் நிலமாக்கள். சாலவம் - ஐம்பத்தாறு தேசங்களுள் ஒன்று. சாலவிருட்சம் - ஆதொண்டை. சாலாதார் - பெருமையில்லாதார். சாலாபோகம் - அறச்சாலைகளுக் காக விடப்படும் இறையிலி நிலம். சாலாமிசிரி - எகிப்து தேசத்துக் கிழங்கு வகை. சாலி - செந்நெல், நெற்பயிர்ப்பொது, புழுகுச் சட்டம், உடையவன் உடையவள் என்னும் பொருளில் வரும் சொல், அருந்ததி, வேலமரம். சாலிகன் - நெசவு செய்யும் சாதியான். சாலிவாகனசகாப்தம் - கி.பி. 78 ஆம் ஆண்டில் சைத்திர மாதத்தில் தொடங்கிச் சாலிவாகனன் பெயரால் வழங்கும் ஆப்தம். சாலிவாகனன் - விக்கிரமாதித்த னுக்குப் பகைவன். சாலினி - தேவராட்டி, அருந்ததி, பேய்ப் பீர்க்கு, கள் வாணிச்சி. சாலுகம் - சாதிக்காய். சாலுதல் - நிறைதல் பொருந்துதல், முற்றுதல். சாலூரம் - மேன்மை, தவளை. சாலேகம் - சாளரம், பூவரும்பு. சாலேயம் - செந்நெல் விளையும் நிலம். சாலை - உணவு அளிக்கும் அறச் சாலை, மண்டபம், பள்ளிக்கூடம், வீதி. சாலோகம் - கடவுளுடன் ஓரிடத் துறைகை. சால் - தண்ணீர்ப் பானை, உழவு சால், கும்பராசி. சால்பு - மேன்மை, நற்குணம், தன்மை, நிறைவு. சால்புமுல்லை - சான்றோருடைய அமைதி கூறும் புறத்துறை. சால்புளி - முறைப்படி. சால்வை - மயிர்க் கம்பளம். சாவக்குறிஞ்சி - குறிஞ்சி யாழ்த் திறத்துள் ஒன்று. சாவகநோன்பி - இல்லறத்திலிருந்து விரதங் காப்போன். சாவகம் - மாணாக்கன், சனி, சாவகத் தீவினன். சாவகாசம் - சௌகரியம். சாவடி - வழிப்போக்கர் தங்குமிடம், வீட்டுக்கு முன்னாலுள்ள கொட் டகை. சாவணம் - கம்மியர் கருவி வகை. சாவணமாதம் - 30 நாள் கொண்ட சௌரமான மாதம். சாவதானம் - அவசரமின்மை. சாவம் - வில், சாபம், சாத்தீட்டு. சாவரம் - குற்றம், பாவம். சாவாமருந்து - அமிழ்து. சாவாவுடம்பு - அழியாத புகழ். சாவி - மணி பிடியாமற் போன பயிர், திறவுகோல். சாவித்திரி - பிரமன் மனைவியருள் ஒருத்தி, சரசுவதி, காயத்திரி மந் திரம், சத்தியவான் மனைவி. சாவு - மரணம், பேய். சாவேரி - ஓர் இராகம். சாவேறு - பகை அரசரைச் சூழ்ந்து காக்கும் படைமீது ஒரு முகமாகப் பாய்ந்து ஊடறுத்துச் செல்ல முயன்று அந்நிலையில் உயிர் துறத்தலையே விரதமாகக் கொண்ட வீரர் தொகுதி. சாழல் - பிரபந்த வகை, மகளிர் விளையாட்டு வகை. சாழை - மகளிர் கைகொட்டி ஆடும் விளையாட்டு. சாளகம் - இசைப்பாவுக்குரிய சாதி ஓசை மூன்றினுள் ஒன்று. சாளக்கிராமம் - திருமாலுருவமாகக் கொண்டு பூசித்தற்குரிய கண்டகிச் சிலை. சாளரம் - சன்னல். சாளர் - செவ்வழியாழ்த் திறவகை. சாளி, சாளிகை - வண்டு, பணப்பை, சாடி. சாளுக்கியர் - தக்கண தேசத்தை ஆறாவது முதல் பதின்மூன்றாவது நூற்றாண்டு வரை ஆண்டு வந்த ஓர் அரச வகுப்பினர். சாளுவம் - சாளவ தேசம். சாறணை - பூடுவகை. சாறு - இலை பழம் முதலியவற்றின் சாறு, கள், மிளகிரசம், விழா, திரு மணம், மரத்தின் குலை. சாறுண்ணி - பிற செடிகளின் சாற்றை உண்ணும் செடி. சாறுதல் - நழுவுதல், வழுக்குதல், வடிதல். சாற்று - ஒசை, விளம்பரப்படுத்துகை. சாற்றுதல் - சொல்லுதல், புகழ்தல், அடித்தல், நிறைத்தல், அமைத்தல், விளம்பரப்படுத்தல். சாற்றுவாய் - உமிழ்நீர் வடியும் வாய். சானகம் - வில். சானகி - சீதை. சானம் - தியானம். சானவி - கங்கை. சானி - மனைவி. சானு - மலை, தாழ்வரை, முழந்தாள். சான்மலித்தீவு - இலவந்தீவு. சான்றாண்மை - பொருந்தன்மை, பொறுமை, கள்ளிறக்குந் தொழில். சான்றார் - பெரியார், சாணார். சான்று - சாட்சி. சான்றோர் - அறிவொழுக்கங்களால் நிறைந்தோர், சங்க காலத்துப் புலவர் வீரர். சான்றோன் - ஒழுக்கங்களிற் சிறந் தோன், மிருக சீரிடம், சூரியன். சான்னித்தியம் - தெய்வ முதலிய வற்றின் பிரசன்னம். சி சி - ஒரு பெண்பால் விகுதி. சிகண்டம் - மயிற்றோகை, தலைமுடி. சிகண்டி - மயில், திருமால், வீட்டுமனைக் கொன்றவன், அலி, யாழ்த்திறவகை, இசை நுணுக்கம் என்னும் நூலாசிரியர். சிகண்டிசன் - வியாழன். சிகதை - வெண்மணல். சிகரம் - மலையுச்சி, மலை, உயர்ச்சி, தலை, கோபுரம், விற்பிடி, நீர்த்துளி, அலை, புளகம், வட்டில், காக்கை, கிராம்பு. சிகரி - மலை, கோபுரம், கருநாரை, எலி வகை. சிகல் - குறைவு, கேடு, தொழில். சிகழி, சிகழிகை - தலைமயிரின் முடிப்பு, சிகரத்தைச் சூழ அணியும் மாலை, மாலை. சிகாமணி - முடியிலணியும் மணி, சிறந்தோன். சிகாவலம், சிகவளம் - மயில். சிகாவிம்பம் - வட்ட வடிவாகிய தலை. சிகி - நெருப்பு, கேது, மலை, மரம், ஆமணக்கு. சிகிச்சை - பரிகாரம். சிகுவை - நாக்கு, வாக்கு. சிகை - குடுமி, தலையின் உச்சி, மயிலின் கொண்டை, சுவாலை, சேடம், தளை, கவளம். சிகைக்காய் - சீயக்காய் மரம். சிக்க - சுருக்கமாக, நன்றாக. சிக்கணம் - மழமழவென்று வழுக்குந் தன்மையுள்ளது. சிக்கம் - சீப்பு, ஈயம், வெள்ளி, செம்பு, உறி, வலை, குடுமி. சிக்கரத்தெளியல் - உசிலம்பட்டை யிலிருந்து இறக்கும் கள். சிக்கர் - தலை நோவுடையார், கள். சிக்கல் - தாறுமாறு, இளைக்கை. சிக்கனம் - செட்டு. சிக்கனவு - மனவுறுதி. சிக்கிமுக்கி - நெருப்புண்டாக்குங்கல். சிக்கு - நூல் முதலியவற்றின் சிக்கு, சந்தேகம். சிக்குதல் - சிக்குப்படுதல், இறுகுதல், அகப்படுதல், கிடைத்தல், இணைத் தல். சிக்குண்ணுதல் - அகப்படுதல், முடிச்சுப்படுதல். சிக்குப்பாகம் - கையில் ஒட்டிக் கொள்ளக் கூடியதான பக்குவம். சிக்குரு - முருங்கை. சிக்குவை - தண்ணீர் விட்டான். சிக்கென - உறுதியாக, இறுக, உலோபத் தனமாக, விரைவாக. சிக்கை -சிட்சை. சிங்கச்சுவணம் - ஒருவகை உயர்ந்த பொன். சிங்கடியப்பன் -சுந்தரமூர்த்தி நாயனார். சிங்கத்திசை - தெற்கு. சிங்கநாதம் - வீரர் செய்யும் கர்ச் சனை, ஊதுகொம்பு. சிங்கமடங்கல் - சிங்கக்குட்டி. சிங்கமுகவோடம் - சிங்கத்தி னுருவை முகத்தினிற் கொண்ட தோணி. சிங்கம் - ஒரு விலங்கு, தாவரங்களின் மட்டம். சிங்கவல்லி - தூதுளை. சிங்கவாகனி - துர்க்கை. சிங்கவாதனம் - சிங்காசனம். சிங்கவிளக்கெரிக்கை - பகைவன் தலையிலே சாணத்தையிட்டு விளக்கேற்றி அவமதிக்கை. சிங்களம் - இலங்கை. சிங்கன் - குறவன். சிங்காசனம், சிங்காதனம் - சிங்கந் தாங்குவது போல் செய்யப்பட்ட கட்டில். சிங்காரம் -காதற்சுவை, அலங்காரம். சிங்காரவேலு முதலியார். ஆ - அபிதான சிந்தாமணி என்னும் நூலியற்றியவர் (1931). சிங்கி - பின்னல், நஞ்சு, குறத்தி, துணங்கைக் கூத்து. சிங்கிகொள்ளுதல் - வசப்படுத்து தல். சிங்குதல் - குன்றுதல், இளைத்தல், அழிதல், கழிந்துபோதல், சிக்கிக் கொள்ளுதல். சிங்குவை - நாக்கு. சிசிரம், சிசிரகுது - பின் பனிக் காலமாகிய மாசி பங்குனிக் காலம். சிசினம் - ஆண்குறி. சிசு - குழந்தை. சிசுகத்தி - சிசுக்களை அழிக்கை. சிசுபாலன் - கண்ணனாற் கொல்லப் பட்ட ஓர் அரசன், கடை ஏழு வள்ளல் களுள் ஒருவன். சிச்சன் - மாணாக்கன். சிச்சிரம், சிச்சிலி - மீன்கொத்திப்புள். சிச்சிலிப்பொறி - மதிற்பொறி வகை. சிச்சீ - இகழ்ச்சிக் குறிப்பு. சிஞ்சிதம் - ஆபரணவொலி. சிஞ்சீனி - வில்லின் நாண். சிஞ்சுமாரம் - முதலை. சிஞ்சை - முழக்கம், புளிப்பு. சிஞ்ஞாசு - மெய்யறிவை ஈட்ட விரும்புவோன். சிடுக்கு - மகளிர் அணிவகை. சிடுசிடுப்பு - கோபக்குறி. சிட்சை - தண்டனை, பயிற்சி, எழுத்துக்களின் உச்சரிப்பு முதலிய வற்றை உணர்த்தும் நூல். சிட்டப்பட்டார் - அடியார். சிட்டம் - பெருமை, எரிந்து கருகியது. சிட்டர் - கல்வி நிரம்பிய சான்றோர். சிட்டன் - மாணாக்கன், அறிஞன். சிட்டி - சிருட்டி, ஓர் அளவு கருவி. சிட்டிகை - விரற்பிடியளவு. சிட்டு - அற்பம். சிட்டுக்குருவி - ஊர்க்குருவி. சிணி - கெட்ட நாற்றம். சிணுக்கம் - மூக்கால் அழுகை. சிணுக்கன் - பயனற்றவன். சிணுங்குதல் - மூக்காலழுதல். சிண் - கூட்டாளி. சிதகம் - தூக்கணாங் குருவி. சிதகு - குற்றம். சிதகுதல் - உருவுதல். சிதசுரசம் - வெண்ணொச்சி. சிதடன் - குருடன், அறிவிலி. சிதடி - சிள்வண்டு. சிதடு - குருடு, பேதைமை, உள்ளீ டின்மை. சிதமை - வெள்ளாடு. சிதம் - வெண்மை, நட்சத்திரம், வெல்லப் பட்டது, மனைவாயில், ஞானம். சிதம்பர சுவாமிகள் - வைராக்கிய சாதகம் இயற்றியவர் (18ஆம் நூ.). சிதம்பரச்செய்யுட்கோவை - குமர குருபரர் செய்த ஒரு நூல். சிதம்பரப்பாட்டியல் - செய்யுளமைதி களைக் கூறும் நூல், இது 16ஆம் நூற் றாண்டினாரான பரஞ்சோதியரால் இயற்றப்பட்டது. சிதம்பரபதம் - 34 அங்குல அளவுள்ள கோல். சிதம்பரம் - ஒரு சிவத்தலம். சிதம்பரரேவணசித்தர் - அகராதி நிகண்டு செய்த புலவர் (16ஆம்நூ.). சிதம்பர் - இழிந்தோர். சிதம்பு - தன்மையினழிவு, இழிவு, பதனழிவு. சிதரம் - மழைத்துளி. சிதரல் - சிதறுகை. சிதர் - மழைத்துளி, பூந்தாது, கொடி, கந்தை, உறி, வண்டு, மெதுமை, சிந்துகை, சிச்சிலிப் பறவை. சிதர்தல் - சிதறுதல், பரத்தல், சீத்தல். சிதர்வை - நைந்து இற்றுப் போன துணி. சிதலை - கறையான், ஈசல். சிதவலிப்பு - மனவுறுதி. சிதவல் - சீலைத்துணி, கந்தைத்துணி, கிழிந்த துண்டு, வெட்டுகை. சிதள் - மீன் செதிள், புண்ணின் அசடு. சிதறடித்தல், சிதறவடித்தல் - முறியடித்தல். சிதறி - மழை. சிதறுதல் - இறைத்தல், மிகுதியாகக் கொடுத்தல், கலைதல், பயன்படாது போதல். சிதன் - சுக்கிரன், அச்சமுள்ளோன். சிதாகாசம் - ஞானவெளி. சிதாரம் - தேர்க்கொடி. சிதாரி - தூபமிடும் பண்டம். சிதார் - சீலை, மரவுரி. சிதேந்திரம் - கோயில். சிதை - கப்பற்பாய், இழிசொற்கள். சிதைதல் - கெடுதல், சிதறுதல், கோபித் தல், வரம்பழிதல், குலைதல். சிதையர் - கீழ் மக்கள். சிதைவு - கேடு, குற்றம். சித்தகம் - தலைச்சீரா, மெழுகு. சித்தசன் - மன்மதன். சித்தத்தைச் சிவன்பாலே வைத் தார் - தொகையடியாருள் ஒரு கூட்டத்தார், மனத்தில் எப்போதும் சிவனையே நினைப்போர். சிதம்பரரேவணசித்தர் - அகராதி நிகண்டு செய்த புலவர் (16ஆம் நூ.) சிதம்பர் - இழிந்தோர். சிதம்பு - தன்மையினழிவு, இழிவு, பதனழிவு. சித்தநெறி - முடிவான மார்க்கம். சித்தப்படுத்துதல் - ஆயத்தஞ் செய்தல். சித்தப்பிரமை - மனமயக்கம். சித்தம் - மனம், கொள்கை, திடம், முடிவு, ஆயத்தமானது. சித்தயோகம் - யோகம் ஆறனுள் ஒன்று. சித்தராரூடம் - விட வைத்திய நூல். சித்தர் - 18 கணத்துள் ஒரு சாரார், அட்டமாசித்தி அடைந்தோர். சித்தர் - சிவப்பிரகாசர் அத்துவித பெண்பாச் செய்தவர் (17ம் நூ.). சித்தன் - சித்தி பெற்றவன், முருகக் கடவுள், அருகன், சிவன், வியாழன், காந்தக்கல். சித்தன் வாழ்வு - திருவாவினன் குடி. சித்தாசனம் - யோகாசன வகை. சித்தாந்தசிகாமணி - 17ம் நூற்றாண் டில் சிவப்பிரகாசர் செய்த ஒரு வீர சைவ நூல், அம்பலவாணதேசிகர் செய்த ஒரு சித்தாந்த நூல். சித்தாந்தத் தொகை - தமிழிற் செய்யப் பட்ட ஒரு பௌத்த நூல். சிந்தாந்தப்பஃறொடை - அம்பலவாண தேசிகரியற்றிய ஒரு சித்தாந்த நூல். சித்தாந்தப்பிரகாசிகை - சர்வான் மசம்பு சிவாசாரியார் இயற்றிய சைவ சித்தாந்த நூல். சித்தாந்தம் - முடிந்த முடிவு, வான சாத்திரங்கூறும் நூல், சைவ சித் தாந்தம் சிர்த்தார்த்தம் - வெண் கடுகு. சித்தார்த்தன் - புத்தன். சித்தார்த்தி - 60 ஆண்டில் 53வது. சித்தி - கைகூடுகை, சிவஞான சித்தியார் என்ற நூல். சித்திபத்தனம் - மோட்சம். சிந்தியர் - தெய்வப் பெண்கள். சித்திரகாயம் - புலி. சித்திரகுத்தன் - இயமனிடம் உள்ள கணக்கன். சித்திரகூடம் - சித்திரசாலை, ஒரு மலை, சிதம்பரத்தில் திருமால் கோயில். சித்திரக்கம்மம் - விசித்திரப்பாடான வேலை. சித்திரக்கம்மி - ஆடைவகை. சித்திரக்கரணம் - கையினாற் செய்யும் செய்கை, புணர்ச்சி வகை. சித்திரக்கர் - சித்திரக் கவிவகை. சித்திரக்கிரீவன் - பல நிறக் கழுத்துடையது, புறா. சித்திரசபை - குற்றாலத்து நடராச சபை. சித்திரச்சாலை - சித்திர மண்டபம். சித்திரச்சோறு - சித்திரான்னம். சித்திரபானு - நெருப்பு, சூரியன், ஓர் ஆண்டு. சித்திரபுத்திரன் - சித்திரகுத்தன். சித்திரப்படம் - பூந்துகில், யாழ் முதலியவற்றின் பல வர்ணமுள்ள உறை. சிந்திரப்பணி - ஓவியம். சித்திரப்பாலாடை - அம்மான் பச்சரிசி. சித்திரபாலை - சிற்றம்மான் பச்சரிசி. சித்திரப்பாவை - சித்திரத்திற் செய்த பெண் வடிவம். சித்திரப்புறா - பறாவகை. சித்திரப்பூமி - விசித்திரமான சோலை, செய்குன்று முதலியன. சித்திரமண்டபம் - ஓலக்க மண்டபம். சித்திரமாடம் - சிங்காரமாளிகை. சித்திரமூலம் - கொடுவேலி. சித்திரம் - ஓவியம், சிறப்பு, காடு புலி, ஓட்டை, குறைவு, வெளி, பொய், இரகசியம், உட்கலகம். சித்திரர் - கலகம் விளைப்போர். சித்திரவதை - வேதனைப்படுத்திக் கொல்லுகை. சித்திரவேளாகொல்லி - யாழ்த்திற வகை. சித்திராங்கதை - அருச்சுனன் மனைவியருள் ஒருத்தி. சித்திரான்னம் - புளி எள் சர்க்கரை முதலியன கலந்திட்ட அன்னம். சித்திரித்தல் -அலங்கரித்தல், சித்திரமெழுதல். சித்திரிகை - வீணைவகை, நல் லாடை வகை. சித்திரிணி - சித்தனி. சித்திரை - ஆண்டில் முதல்மாதம், ஒரு நட்சத்திரம். சித்தினி - பதுமினிக்கு அடுத்த தரப் பெண். சித்தின்பம் - ஞானத்தால் விளையும் இன்பம். சித்து - அறிவு, ஆன்மா, சித்தி, மாயவித்தை, யாகம், வெற்றி, வரிக் கூத்து. சித்துநீர் - பாதரசம். சித்தை - பார்வதி. சிந்தகம் - புளியமரம். சிந்தடி - முச்சீரடி. சிந்தம் - புளியமரம். சிந்தனை - எண்ணம், நினைக்கை, தியானம், கவலை. சிந்தன் - குறளனிலும் சிறிது நெடியவன். சிந்தாகுலம் - மனக்கவலை. சிந்தாக்கு - அட்டிகைவகை. சிந்தாதேவி - சரசுவதி. சிந்தாமணி - விரும்பியதைக் கொடுக்க வல்ல தெய்வமணி, சீவக சிந்தாமணி என்ற நூல், குதிரச் சுழிவகை. சிந்தாவிளக்கு - சரசுவதி. சிந்தி - ஒரு தலை அணி. சிந்தித்தல் - நினைத்தல், விரும் புதல், கவலைப்படுதல். சிந்தியல்வெண்பா - மூன்றடியால் அமைத்த வெண்பாவகை. சிந்தினர் - குள்ளர். சிந்து - மூன்றடி உயரமுள்ளவன், இசைப்பா வகை, ஒரு வரிக்கூத்து, கடல், நீர், சிந்துநதி, பண், கொடி. சிந்துரக்கட்டி - செங்காவி. சிந்துரம் - செங்காவி, திலகம், யானை, புளியமரம். சிந்துரை - தெய்வ யானை. சிந்துவாரம் - கருநொச்சி. சிந்தூரம் - சிவப்பு, செம்பொடி, யானைப் புகர்முகம், பறைவகை. சிந்தூராகரம் - உதயகிரியில் சிந்தூர அருவி விழுமிடம். சிந்தூரித்தல் - உலோகங்களைச் சிந்தூரமாக்குதல். சிந்தை - மனம், அறிவு, கவலை, தியானம். சிந்தை கூரியன் - புதன். சிந்தைவிளக்கு - தெளிவுக் காட்சி. சிபாரிசு, சிபார்சு - ஒருவனைக் குறித்து ஆதரித்துப் பேசும் பேச்சு. சிபி - சோழ மன்னருள் ஒரு வள்ளல். சிப்பந்தி - வேலைக்காரன். சிப்பம் - சிற்பம், மூடை. சிப்பாய் - போர்ச் சேவகன். சிப்பி - ஒரு நீர் வாழ் உயிர். சிப்பு - தும்பு போன்றது. சிமயம் - இமயமலை, பொதியமலை. சிமி - ஆண்மக்களின் குடுமி. சிமிக்கி - காதணிவகை. சிமிட்டு - இமைப்பு. சிமிட்டுதல் - கண்ணிமைத்தல், சாடை தோன்ற விழித்தல். சிமிலம் - மலை. சிமிலி - உறி, ஆண்மக்களின் குடுமி, சிள்வீடு என்னும் பூச்சி. சிமிழ் - செப்பு, திமில். சிமிழ்த்தல் - கட்டுதல், அகப்படுத் துதல், கண்கொட்டுதல். சிமிழ்ப்பு - பந்தம். சிமை - மலை உச்சி, குடுமி. சிமையம் - உச்சி, கொடுமுடி, மலை. சிம்பன்சி - வாலில்லாக் குரங்கு வகை. சிம்பு - சிலிம்பு, சிராய், செதும்பு, தும்பு. சிம்புளித்தல் - கண்மூடுதல். சிம்புள் - சரபம். சிம்மாளம் - மகிழ்ச்சி. சியேனம் - பருந்து, வீயூக வகை. சிரகம் - திவலை, கரகம், தலைச்சீரா. சிரக்கம்பம் - தலை அசைப்பு. சிரங்கு - புண். சிரசு - தலை. சிரஞ்சீவி - நிறைந்த ஆயுளுடை யவர், காகம், இலவு. சிரட்டை - கொட்டாங்கச்சி. சிரதரம் - கழுத்து. சிரத்தை - அன்பு, நம்பிக்கை. சிரநதி - கங்கை. சிரந்தை - உடுக்கை. சிரபாத்திரி - சிவன். சிரபுரம் - சீகாழி. சிரமச்சாலை - ஆயுதப் பயிற்சி செய்யுமிடம். சிரமஞ்சரி - பூத்தலை, கொண்டை. சிரமஞ்செய்தல் - சிலம்பம் முதலியன பழகுதல். சிரமநிலை - ஆயுதப் பயிற்சி. சிரமபரிகாரம் - இளைப்பாறுகை. சிரமம் - களைப்பு, உழைப்பு, ஆயுதப் பயிற்சி. சிரமாலை - சிவனணியும் தலை மாலை. சிரமிலி - நண்டு. சிரமேற்கொள்ளுதல் - மரியாதை யாக ஏற்றுக்கொள்ளுதல். சிரமை - சிரமம். சிரம் - தலை, உச்சி, நெடுங்காலம். சிரல் - மீன்கொத்துப் புள், சிக்கிலிப் பறவை. சிரவணம் - காது கேள்வி, திரு வோண நட்சத்திரம். சிரவம் - கவுதாரி, காது. சிரறுதல் - மாறுபடுதல், சிதறுதல். சிதற்றுதல் - உரக்க ஒலித்தல், கோபித்தல். சிராத்தம் - திவசம். சிராபரன் - சிவன். சிராப்பள்ளி - திருச்சிராப்பள்ளி. சிராய் - பனஞ்சிறாம்பு, மரச்சக்கை. சிராய்த்தல் - உராய்ந்து ஊறு படுத்தல். சிராவணம் - வேதபாடம் தொடங் கும் சடங்கு, கல், ஆவணிப் புதுப் பூணூலணிதல், சரவணம். சிராவணி - ஒரு யாகம். சிரானந்தம் - அழியாத இன்பம். சிரிதம் - கியாழம். சிரிதரன் - திருமால். சிரித்தல் - நகைத்தல், மலர்தல், பரிசுசித்தல். சிரிப்பு - நகைப்பு, பரிகாசம். சிரீமுக - ஆண்டு 60ல் ஏழாவது. சிருவற்சம் - மார்பில் ஐந்து நற் கழியுடைய குதிரை. சிருகாலன் - நரி. சிருக்கு - யாகக் கரண்டி, யாகத்தில் பயன்படுத்தும் நெய்த்துடுப்பு. சிருங்கம் - விலங்கின் கொம்பு, கொடுமுடி. சிருங்கலை - விலங்கு, இரும்புச் சங்கிலி. சிருங்கவான் - பூமியின் எல்லை யில் நிற்கும் மலைகளுள் ஒன்று. சிருங்கவேரம் - குகனது தலைநகரம். சிருங்காடகம் - நாற்சந்தி. சிருங்காரநிலை - இறந்த வீரனது மார்பை அவன் மனைவி போர்க் களத்துத் தழுவுதலைக் கூறும் புறத்துறை. சிருங்கி - விடம்போக்கும் மருந்து, சுக்கு. சிருங்கேரிமடம் - மைசூரிலே சிருங் கேரியியுள்ள சங்கராச்சாரிய மடம். சிருட்டி - படைப்பு. சிரேட்டம் - முதன்மை. சிரேட்டி - வைசியன். சிரேணி - தெரு, வீதி, வரிசை. சிரை - நரம்பு (Vein), குரங்கு. சிரைத்தல் - மயிர் மழித்தல். சிரையன் - நாவிதன். சிரோமணி - தலைமணி, பண்டிதர் பட்டப் பெயர். சிரோமுட்டி - கீழ்நோக்கி அம்பு எய்கை. சிரோருகம் - தலைமயிர். சில - சின்மையானவை. சிலகம் - சட்டுவம். சிலதன் - ஏவல் செய்வோன், மருதநில வாசி, தோழன். சிலதி - சேடி. சிலதை - நீண்டு மெலிந்து கருநிறத் தளாய்க் காம மிக்க பெண். சிலந்தி - சிலந்திப்பூச்சி, கொப்புளம். சிலப்பதிகாரம் - இளங்கோடிகள் செய்த பழைய காப்பியம் (கி.பி. 2வது நூற்.). சிலம்பம் - கழிவீசும் படைக்கலப் பயிற்சி. சிலம்பன் - குறிஞ்சிநிலத் தலைவன், முருகன். சிலம்பாறு - அழகர் மலையில் ஊற்றெடுக்கும் சிற்றாறு. சிலம்பி - சிலந்தி. சிலம்பு - ஒலி, மகளிர் காலணி வகை, மலை, பக்கமலை, குகை. சிலம்புகழி நோன்பு - மணத்துக்கு முன் பெண்ணிற்கு நடத்தும் சிலம்பு கழற்றுதலாகிய சடங்கு. சிலம்புதல் - ஒலித்தல், எதிரொலித் தல். சிலவர் - பாலை நில மக்கள், வேடர். சிலாகித்தல் - புகழ்தல். சிலாகை - புகழ்ச்சி. சிலாக்கியம் - சிறந்தது, புகழ். சிலாசத்து - நிலக்கீழ் (Bitumen). சிலாசாசனம் - அறக்கொடை முதலிய வற்றைக் குறித்து வரையப்படும் கல்வெட்டு. சிலாதலம் - பாறை, கற்பாவிய ஆசனமேடை. சிலாதன் - நந்திதேவர் பிதா. சிலாலேகை - கல்வெட்டு. சிலாவட்டம் - சந்தனக்கல், சாணைக்கல், கல் பீடம். சிலாவருடம் - கல்மழை. சிலாவி - உத்தரத்துக்கு மேல் கூரையைத் தாங்குவதான வளைவு. சிலிங்காரம் - அலங்காரம். சிலிட்டம் - செறிவு. சிலிண்டர் - உருளை (Cylinder). சிலிர் - மரவகை. சிலிர்சிலிர்த்தல் - உடல் புளகித்தல். சிலிர்த்தல் - தளிர்த்தல், புளகித்தல். சிலின் - நாணய வகை (Shilling). சிலீமுகம் - அம்பு, வண்டு, முலைக் கண். சிலீரெனல் - புகைக் குறிப்பு, குளிரா லுண்டாகும் உணர்ச்சிக் குறிப்பு. சிலுகு - குழப்பம், துன்பம், சண்டை. சிலுசிலுத்தல் - படபடவென்று பேசுதல், ஒலித்தல். சிலுத்தல் - பதமாதல், கனிதல், குலுங்கக் காய்த்தல். சிலுப்பா - தொங்கும் பக்கக்குடுமி. சிலுப்புதல் - சுழற்றுதல். சிலும்பு - மரச்சிறாம்பு. சிலும்புதல் - தும்பு முதலியன வெளிப் பட்டு நிற்றல், ஒலித்தல். சிலுவை - கிறித்துவ சின்னத்துள் ஒன்று. சிலேடை - இரண்டு அல்லது பல கருத்துத் தரும் சொற்றொடர். சிலேட்டி - செட்டி. சிலேட்டுமம், சிலேற்பனம் - கபம். சிலை - முழக்கம், வில், தனுராசி, மார்கழி மாதம், மூலம், வானவில், ஒளி, வால், கல், மலை, அம்மி, கல்லில் வெட்டிய உருவம், சில்லி. சிலைத்தல் - ஒலித்தல், சினங் கொள்ளுதல், பின்னிடுதல். சிலோச்சயம் - மலை. சில் - சில, உருளை. சில்காற்று - தென்றல். சில்குதல் - சிலவாதல். சிலிசொல் - மென்மொழி. சில்பத உணவு - உப்பு. சில்லம் - மேற்கு. சில்லி - சிள்வண்டு, ஓட்டை, வட்டம், தேர் உருளை. சில்லிகை - நல்லாடு வகை. சில்லிடுதல் - குளிர்ந்து போதல். சில்லித்தாரா - பறவை வகை (Whistling teal). சில்லியடை - சல்லடை வகை. சில்லிவாயன் - வாயில் வந்ததைப் பிதற்றுபவன். சில்லு - சக்கரம், துண்டு. சில்லை - இழிவு, பழிச்சொல், தூர்த்தை. சில்வாய் - கடைவாய். சிவகணம் - சிவனுடைய பரிவாரம். சிவகணமுதல் - நந்திதேவர். சிவகதி - முத்தி. சிவகதிக்கிறை - அருகன். சிவகாமி - அம்பிகை. சிவகீதை - அகத்தியர் செய்ததாகச் சொல்லப்படும் ஒரு தமிழ்நூல். சிவகூர்ச்சம் - பஞ்சகவ்வியம். சிவக்கொழுந்து தேசிகர் - சரபேந்திர பூபால குறவஞ்சி நாடகம் செய்தவர். சிவசங்கிராந்தவாத சைவம் - மலங்கள் நீங்கிய வழி உயிர் சிவமாய் நிற்கும் எனக் கூறும் சைவம். சிவசதாக்கியம் - தியான மூர்த்தியாய் நின்ற சிவம். சிவசமவாத சைவம் - மலங்கள் நீங்கிய வழி இறைவன் உயிர்களைத் தன் வடிவாக்கிப் பஞ்ச கிருத்தியங்களை யும் புரியும் படி செய்பவன் என்று கூறும் சைவ மதம். சிவம்புப்புலவர் - யாழ்ப்பாணப் புலவர் களுளொருவர் (1852 - 1910). சிவசாதனம் - சிவ சின்னங்கள். சிவசித்தர் - பரமுத்தியடைந்தவர். சிவஞானசித்தியார் - அருணந்தி சிவா சாரியார் செய்த சைவ சித் தாந்த நூல். சிவஞானபோதம் - மெய்கண்டார் செய்த சைவசித்தாந்த நூல். சிவஞானமுனிவர் - 18ஆம் நூற் றாண்டில் திருவாவடுதுறை மடத் தில் வாழ்ந்த ஒரு சைவத் துறவி. சிவஞானம் - பதியுணர்வு. சிவஞான வள்ளல் - வள்ளலார் சாத்திரம் செய்தவர் (18ஆம் நூ.). சிவணுதல் - நட்புக் கொள்ளுதல், பொருந்துதல், அணுகுதல், ஒத்தல், பெறுதல். சிவதத்துவம் - ஞானத்தின் இருப்பிடம். சிவதரம் - மங்களமானது. சிவதருமோத்தரம் - மறைஞான சம்பந்த ரால் வடமொழியினின்று மொழி பெயர்க்கப்பெற்ற ஒரு சைவ நூல். சிவதலம் - சிவபிரான் கோயில் கொண்ட இடம். சிவதை - கொடி வகை. சிவத்துவசர் - ஆதிசைவர். சிவநாபம் - ஒருவகைச் சிவலிங்கம். சிவநெறிப்பிரகாசம் - ஒரு சைவ நூல். சிவந்தி - கடுக்காய் வகை. சிவபண்டாரி - சிவன் கோயிற் பொக்கிஷக்காரன். சிவபுண்ணியத் தெளிவு - உமாபதி சிவா சாரியாரியற்றிய சைவ தரும நூல் (13ம் நூ.). சிவபுண்ணியம் - சிவனுக்குச் செய் யும் நற்கருமங்கள். சிவபுராணம் - திருவாசகத்தில் ஒரு பகுதி. சிவபோகம் - இறைவன் மயமான உயிர்களின் ஆனந்தானுபவ நிலை. சிவப்பிரகாசம் - உமாபதி சிவாசாரி யரியற்றிய சைவ சித்தாந்த சாத்திரம். சிவப்பிரகாசர் - 17ஆம் நூற்றாண்டில் விளங்கிய ஒரு வீரசைவத் துறவி. சிவப்பிராமணர் - ஆதிசைவர். சிவப்பு - செந்நிறம், கோபம். சிவப்புக்கீழ்க்கதிர்கள் - நிற மாலையி லுள்ள சிவப்புக் கீழ்க்கதிர் (Infra Red Rays). சிவமயம் - சிவமாந்தன்மை. சிவம் - நன்மை, கடவுளின் அருவ நிலை, முத்தி. சிவயோகம் - சிவனோடு இசைந்து நிற்கும் ஆன்மாவின் அனுபவ நிலை. சிவரகசியம் - 18ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் ஒப்பிலா மணித் தேசிகர் செய்த ஒரு செய்யுள் நூல். சிவராத்திரி - மாசி மாதக் கிருட்டிண சதுர்த்தியில் கொண்டாடும் சிவ விரதம். சிவலை - செந்நிறமுள்ளது. சிவலோகம் - கைலாசம். சிவல் - கவுதாரி, செவ்வன்னிலம். சிலவாக்கியர் - ஒரு சிவஞானி. சிவளிகை - தலையணி. சிவன் - சிவபெருமான். சிவாக்கிரயோகி - சிவஞான சித்தியாரின் உரைகாரருள் ஒருவர் (16ம் நூ.). சிவாச்சிரமத்தெளிவு - அம்பல வாண தேசிகரியற்றிய ஒரு சைவ சித்தாந்த நூல். சிவாசாரியார் - ஆதிசைவர் பட்டப் பெயர். சிவாத்துவிதசைவம் - நிமித்த காரணனாகிய இறைவனே உலகிற்கு முதற்காரணம் ஆவன் என்று கூறும் சைவ சமய பேதம். சிவாயநம - திரு ஐந்தெழுத்து. சிவாலயமுனிவர் - ஒரு முனிவர், அகத்தியர் இவர் பொருட்டுத் தேவாரங்களைத் திரட்டினார் என்று சொல்லப்படுகிறது. சிவானுபூதி - சிவனோடு இரண்டறக் கலக்கும் அனுபவம். சிவிகை - பல்லக்கு, எருது பூட்டிய ஊர்தி. சிவிங்கி - கழுதைப் புலி. சிவிடு - 360 பிடிக்குமளவு. சிவிட்கென - விரைவாக. சிவிட்டு - கோபம். சிவியார் - பல்லக்குச் சுமப்போர். சிவிரம் - படையெடுத்த அரசன் தங்குமிடம். சிவிறி - விசிறி, நீர்வீசுங் கருவி. சிவிறுதல் - பரத்தல். சிவுகம் - மோவாய். சிவேதை - தெற்கு. சிவை - பார்வதி, காளி, நரி, நெல்லி, வேர், உலை மூக்கு. சிவோகம்பாவனை - சிவன் நான் என்ற பாவிக்கை. சிள்வண்டு, சிள்வீடு - சிள்வண்டு. சிறகர் - சிறகு. சிறகு - இறகு, பக்கம், தெரு. சிறக்கணித்தல், சிறங்கணித்தல் - சுருக்கிப் பார்த்தல், கடைக் கண் ணால் பார்த்தல். சிறங்கை - கைநிறை அளவு. சிறத்தல் - மேன்மையடைதல், மிகுதல், மகிழ்தல். சிறப்பியற்பெயர் - சாதியிலுள் ளோர் சிறப்பினால் தமக்குத் தாமே வழங்கும் பெயர். சிறப்பிலாதான் - மூதேவி. சிறப்பு - தலைமை, ஆடம்பரம், ஒன்றற்கே உரியது, மிகுதி, செல்வம், இன்பம், மதிப்பு, உபசாரம், சன் மானம், மோட்சம். சிறப்பாடு - சிறப்பு. சிறப்புடைக்கிளவி - உபசார வார்த்தை. சிறப்புப்பாயிரம் - முன்னுரை. சிறப்புப்பெயர் - ஒன்றற்கே உரியதாக வரும் பெயர். சிறப்புலிநாயனார் - அறுபத்து மூவருள் ஒருவர். சிறவு - சிறந்த செயல். சிறாம்பு - மரச் சிலும்பு. சிறார் - சிறுவர். சிறியதிருமடல் - திருமங்கை யாழ்வார் செய்த ஒரு பிரபந்தம். சிறியன் - அற்பன். சிறியிலை - சிறிய இலை. சிறுகாக்கைபாடினியார் - சிறு காக்கை பாடினிய மென்னும் நூல் செய்த பழம் புலவர். சிறுகாப்பியம் - பெருங் காப்பியத்திற் குள்ள உறுப்புகளிற் சில குறைந்து நடைபெறும் நூல்வகை. சிறுகாலை - உதயம், இளம் பருவம். சிறுகால் - தென்றல். சிறுகிராமம் - 100 குடி உள்ள ஊர். சிறுகுதல் - சுருங்குதல், சிறிதாதல். சிறுகுடி - குறிஞ்சி நிலத்தூர், சிற்றூர். சிறுகுரீஇயுரை - நகை விளைப் பதும் வழக்கு வீழ்ந்ததுமான ஒரு பழைய நூல். சிறுக்கன் - சிறுவன். சிறுக்கி - இளம்பெண், வேலைக்காரி. சிறுசவளம் - குந்தப்படை. சிறுசாமம் - 3¾ நாழிகை கொண்ட பொழுது. சிறுசின்னம் - ஒருவகைக் குழற் கருவி. சிறுசெய் - பாத்தி. சிறுசொல் - இழிசொல். சிறுசோறு - குழந்தைகள் விளை யாட்டாகச் சமைக்கும் மணற்சோறு, சித்திரான்னம். சிறுசோற்று விழவு - சோற்றைத் தயிரோடு கலந்து உருண்டைகளாக்கி அவற்றை வருவோருக்குக் கொடுத்து மகிழும் கொண்டாட்டம். சிறுதகை, சிறுதகைமை - தலை வணக்கம். சிறுதடி - பாத்தி. சிறுதாரை - நீர் வீசும் துருத்தி. சிறுதிசை - கோணத்திசை. சிறுதேர் - விளையாட்டு வண்டி. சிறுதேவபாணி - இசைப்பா வகை. சிறுதொழில் - இகழத்தக்க செயல். சிறுத்தை - புலிவகை. சிறுத்தொண்டநாயனார் - திருஞான சம்பந்தர் காலத்தவரான ஒரு சிவனடியார். சிறுநகை - புன்சிரிப்பு. சிறுநனி - சிறிதுநேரம், விரைவாக. சிறுநாக்கு - உண்ணாக்கு. சிறுநீரகம் - குண்டிக்காய் (Kidney). சிறுநீர் - மூத்திரம். சிறுநெறி - இழிந்த மார்க்கம், தீய வழி. சிறுநோக்கு - அலட்சியப் பார்வை. சிறுபஞ்சமூலம் - சிறுவழுதுணை சிறுநெருஞ்சி சிறு மல்லிகை பெரு மல்லிகை கண்டங்கத்தரி என்ற ஐந்தன் வேர்களும் சேர்ந்த மருந்து, காரியாசான் செய்த ஒரு நீதி நூல். சிறுபட்டி - கட்டுக்கடங்காத இளைஞன். சிறுபதம் - வழி, தண்ணிராகிய உணவு. சிறுபயறு - பாசிப்பயறு. சிறுபருப்பு - பச்சைப் பயற்றம் பருப்பு. சிறுபறை - ஒருவகைத் தோற்கருவி. சிறுபாணாற்றுப்படை - நல்லூர் நத்தத்தனார் ஓய்மாநாட்டு நல்லியக் கோடனைப் பாடிய நூல். சிறுபாண்டரங்கன் - இடைச்சங்கப் புலவருள் ஒருவர். சிறுபான்மை - சில இடங்களில். சிறுபுறம் - முதுகு, பிடர், சிறு கொடை. சிறுபொழுது - மாலை, இடையாமம், விடியல், காலை, நண்பகல் ஏற்பாடு என்னும் பொழுதுகள். சிறுப்பனை - அவமரியாதை. சிறுப்பெரியார் - சிறுமைக் குணங் கொண்டு பெரியார் போலத் தோன்று பவர். சிறுமகன் - அறிவில்லாதவன். சிறுமணி -சதங்கை. சிறுமாரோடம் - செங்கருங்காலி. சிறுமாலை - அந்திவேளை. சிறுமி - மகள், இளம்பெண். சிறுமீன் - அருந்ததி, அயிரை. சிறுமுதுக்குறைமை - இளமையி லேயே பேரறிவுடைமை. சிறுமுத்தன் - ஆண் பொம்மை. சிறுமென்தூவி - பொடி இறகு. சிறுமேதாவியார் - கடைச்சங்கப் புலவருளொருவர். சிறுமை - அற்பத்தனம், குறைபாடு, பிறர் மனத்தை வருத்துகை, குற்றம், நோய், கழிகாமம், கயமை. சிறுமோலிகனார் - சங்க காலப் புலவர் (நற். 6). சிறுமையர் - கீழ்மக்கள். சிறுவது - சிறிது. சிறுவரை - சிறிது நேரம். சிறுவன் - இளைஞன், மகன். சிறுவாய்க்கயிறு - குதிரையின் பிடிவார். சிறுவி - மகள். சிறுவிதி - தக்கன். சிறுவித்தம் - சூதாட்டத்தில் பந்தயம் வைக்கப்பட்ட சிறுபொருள். சிறுவிரல் - சுண்டுவிரல். சிறுவிலை - இளைத்துள்ளது, பஞ்சம். சிறுவிலைநாள் - பஞ்ச காலம். சிறுவீடு - கறப்பதற்குமுன் மாடு களை அதிகாலையில் மேய விடுகை, சிற்றில். சிறுவெண்காக்கை - கழுத்தில் சிறிது வெண்மை உடைய காகம், கடற்காகம். சிறுவெண்டேரையார் - சங்க காலப் புலவர் (புறம். 362). சிறை - காவல், சிறைச்சாலை, அடிமை, அணை, நீர்நிலை, இடம், பக்கம், மதில் வரம்பு, இறகு, யாழ் நரம்புக் குற்றம். சிறைக்கணித்தல் - அலட்சியம் செய்தல். சிறைக்களம், சிறைக்கோட்டம், சிறைப் பள்ளி - சிறைக்கூட்டம். சிறைக்குடி ஆந்தையார் - சங்க காலப் புலவர் (நற். 16, குறு. 56). சிறைதல் - நிறங்கெடுதல். சிறைப்புறம் - ஒதுக்கிடம், வேலிப்புறம், சிறைச்சாலை. சிறைவன் - காவற்பட்டவன். சிற்குணம் - ஞானமாகிய குணம். சிற்குணன் - கடவுள். சிற்சத்தி - ஞானசக்தி. சிற்சபை - சிற்றம்பலம். சிற்பக்கயிறு - சிற்பசாத்திரம். சிற்பம் - தொழிற்றிறமை, சிந்திக்கை, அற்பம். சிற்பரன் - கடவுள். சிற்பன் - பிரமன். சிற்பி - கம்மியன். சிற்றகத்தி - செடிவகை. சிற்றணுக்கள் - விசிறி அல்லது ஈசசோப்பி யாகிய அரச சின்னம். சிற்றண்ணவாசல் - புதுக்கோட்டைப் பகுதியிலுள்ள குகைகள்; இங்கு ஓவியங்களுண்டு. சிற்றம்பலநாடிகள் - துகளறு போதஞ் செய்தவர் (15ம் நூ.) சிற்றம்பலம் - சிதம்பர நடனசபை. சிற்றாடை - சிறிய ஆடை. சிற்றாமரைப்பூ - உரோசாப் பூ. சிற்றமுட்டி - செடி வகை. சிற்றால வட்டம் - பீலி வட்ட விசிறி. சிற்றாள் - பையன், ஏவலாள். சிற்றாறு, சிற்றியாறு - சிறிய ஆறு. சிற்றிசை - இசையைப் பற்றிக் கூறும் ஒரு கடைச்சங்க நூல். சிற்றிலிழைத்தல் - சிறுமியர் மணல் வீடு கட்டி விளையாடுதல். சிற்றிலைவட்டம் - பூவடி, கனியடி. சிற்றில் - சிறுகுடில், சிறுமியர் கட்டி விளையாடும் மணல்வீடு, கந்தை. சிற்றினம் - நல்லறிவில்லாத தாழ்ந்தோர். சிற்றின்பம் - காம இன்பம், இம்மைக் குரிய சுகம். சிற்றுதல் - சஞ்சலப்படுதல். சிற்றுண்டி, சிற்றூண் - பணிக்காரம், இலேசான உணவு. சிற்றுண்டியகங்கள் - சிறு உணவு விற்கும் கடைகள் (Canteens). சிற்றுயிரணுக்கள் - செல்கள் (Cells). சிற்றுயிர் - சில வாழ்நாளை உடைய உயிர். சிற்றுளி - தச்சுவேலைக்கு உரிய சிறிய உளி. சிற்றூர் - குறிஞ்சி நிலத்தூர், சிறிய ஊர். சிற்றெறும்பு - எறும்புவகை. சினகரம் - சைனக் கோயில், கோயில், அரண்மனை. சினகர் - சைனர். சினத்தல் - கோபித்தல். சினம் - கோபம், போர், நெருப்பு. சினவல் - போர். சினவுநர் - பகைவர். சினன் - புத்தன். சினிமா - படக்காட்சி (Cinema). சினேகபலம் - எள். சினேகம், சினேகிதம் - நட்பு. சினேந்திரமாலை - உபேந்திரா சிரியர் செய்த தமிழ் ஆரூடநூல். சினேந்திரன் - அருகன், புத்தன். சினை - சூல் முட்டை, பூமொட்டு, மரக்கிளை, உறுப்பு (Factor). சினைத்தல் - தோன்றுதல், அரும் புதல். சினைப்பெயர் - உறுப்பு அடியாகப் பிறக்கும் பெயர். சினையாகுபெயர் - சினைப்பெயர் அதன் முதலுக்கு ஆகும் பெயர். சின்மதி - ஏழைப்புத்தி. சின்மயம் - ஞானமயம். சின்முத்திரை - சுட்டுவிரல், நுனியைப் பெருவிரல் நுனியுடன் சேர்த்துக்காட்டும் ஞான் முத்திரை. சின்மை - சிறுமை இழிவு. சின்னகை - புன்னகை. சின்னக்குட்டிப்புலவர் - கனக தண்டிகைக் கனகராயன் பள்ளுச் செய்த யாழ்ப் புலவர் (19ம் நூ. முற்). சின்னஞ்சிறிய - மிகச்சிறிய. சின்னத்தட்டு - பொற்கொல்லர் தராசுத் தட்டு. சின்னத்தம்பிப்புலவர் - மறைசை யந்தாதி செய்த யாழ்ப்பாணப் புலவர் (1716 - 1780). சின்னபின்னம் - கண்டதுண்டம். சின்னப்பட்டம் - பெரிய மடாதி, பதிக்கு அடுத்தபடியான மடாதிபதி. சின்னப்பூ - அரசனது தசாங் கத்தைப் புகழ்ந்துகூறும் பிரபந்த வகை, விடுபூ. சின்னமாம்பழக் குருவி - சிறு குருவி வகை (The commoniora). சின்னமுத்து - நோய்வகை. சின்னமூதி - அரசாணையைச் சின்னம் உதிக்கொண்டு படைக்குச் சாற்றுவேன். சின்னம் - அற்பம், முறம், அடை யாளம், பெண்குறி, காளம், துண்டு, முறிந்தது, பொடி, கிள்ளுப்பூ, போர்க்குப் போகும்போது வீரர் வாயிலிட்டுக் கொள்ளும் பொன் தகடு, சீந்தில். சின்னம்மை - வைசூரி, கொப்புளிப் பான். சின்னீர் - கலங்கல் நீர். சின்னூல் - நேமிநாதம், சிறுநூல். சின்னெறி - கள்ளச் சிறுவழி. சீ சீ - சீழ், சளி, இகழ்ச்சிக் குறிப்பு, இலக்குமி, ஒளி, சிறப்புக் குறிக்கும் ஓர் அடைமொழி ஸ்ரீ. சீகண்டர் - சிவமுர்த்தங்களுள் ஒன்று. சீகத்தம் - அழகியகை. சீகரம் - நீர்த்துளி, மழை, அலை. சீகாமரம் - மருத யாழ்த் திறங்களுள் ஒன்று. சீகாழி - ஒரு சிவத்தலம். சீகாளத்தி - கண்ணப்ப நாயனார் முத்தியடைந்த சிவத்தலம். சீகு - ஊகம்புல். சீக்கிரம் - விரைவு. சீக்கியர் - பஞ்சாப்பிலுள்ள ஒரு மதத்தினர். சீக்கை - கோழை. சீங்குழல் - குழல் வகை. சீசா - கண்ணாடிக் குப்பி. சீச்சீ - இகழ்ச்சிக் குறிப்பு. சீடன் - மாணாக்கன். சீடை - உருண்டை வடிவான பலகார வகை. சீட்டி - சீழ்க்கை, ஊதுகுழல். சீட்டித்துணி - அச்சடியன் துணி. சீட்டு - பத்திரம். சீட்டுக்கவி - ஓலைப்பாசுரம். சீணித்தல் - வலிகுறைதல், அழிவுறுதல். சீண்டுதல் - தீண்டியுணர்த்துதல், தொந்தரவு செய்தல். சீதகன் - சுக்கிரன். சீதநாடு - கோயம்புத்தூர் நீலகிரி சில்லாக்களைக் கொண்ட நாடு. சீதபேதி - வயிற்றுளைவு (Dysentry). சீதமமண்டலம் - சந்திரமண்டலம். சீதம் - குளிர், நீர், மேகம், கள், சீத நாடு, சீதமலம் (Slimie). சீதரன் - திருமால். சீதவலயம் - பூகோளத்தின் சீதமண்டலப் பகுதி. சீதனம் - குளிர்ச்சி. சீதனம் - மணமகள் கொண்டு வரும் சீர் வரிசை. சீதன் - சந்திரன். சீதாரி - சாம்பிராணி, தாளிப்பனை. சீது - மது. சீதேவி - இலக்குமி, மகளிர் தலைக் கோலம். சீதை - உழுபடைச்சால், இராமன் தேவி, பொன்னாங்காணி. சீத்தடித்தல் - காற்றுவாரி வீசுதல். சீத்தலைச்சாத்தனார் - மணி மேகலை என்ற நூலின் ஆசிரியர், சங்கப் புலவருள் ஒருவர். சீத்தல் - கீறிக்கிளறுதல், துடைத்தல், சீவுதல். சீத்துவம் - வளம். சீத்தை - குணமின்மை, கீழ்மகன். சீந்தில் - ஒரு மருந்துச்கொடி. சீந்துதல் - சினத்தல், சீறுதல். சீபட்டர் - பகவத்கீதையைத் தமிழில் பாடியவர் (13ஆம் நூ.). சீபண்டாரம் - கோயிற் பொக்கிசம். சீபதி - திருமால், அருகன். சீபலி - கோயிலில் இடும் அன்னப் பலி, கோயிலில் நடக்கும் நித்திய விழா. சீபன்னம் - குமிழ் மர வகை. சீப்பு - மயிர் சீவுங்கருவி, கதவின் தாழ், கதவுக்குவலியாக உள் வாயிற் படியில் நிலத்தே விழவிடும் மரம். சீமங்கலி - நாவிதன், அம்பட்டன். சீமதி - அழகுள்ளவன். சீமத்து - பாக்கியம். சீமந்தம் - முதற்கருப்பத்தில் ஆறு அல்லது எட்டாம் மாதத்தில் கருக் கொண்ட பெண்ணுக்குச் செய்யும் சடங்கு. சீமந்தரேகை - பெண்கள் தலை மயிரை வகிர்ந்தால் உச்சியிலுண் டாகும் இரேகை. சீமம் - எல்லை. சீமாட்டி - செல்வமுள்ளவள். சீமான் - செல்வமுள்ளவன், அருகன். சீமுக - 60 ஆண்டுகளுள் ஏழாவது. சீமுதம் - நீருண்ட மேகம். சீமை - தேசம். சீமைச்சுண்ணாம்பு - சோக் (Chalk). சீயகங்கன் - நன்னூல் செய்வித்த கங்க அரசன், (13ஆம் நூ.). சீயம் - சிங்கம், சிங்கராசி, ஒரு தேசம். சீயர் - பெரியோர். சீயாக்காய் - சிகைக்காய். சீய்த்தல் - பெருக்குதல், வெட்டுதல். சீரகத்தாரோன் - குபேரன். சீரகம் - செடிவகை, ஒரு நிறை அளவு. சீரகரை - அரைச்சீரக அளவு. சீரங்கம் - ஒரு திருமால்கோயில். சீரணம் - செரிக்கை, பழுது. சீரணி - காடு. சீரம் - மரவுரி, கலப்பை. சீரலைவாய் - ஒரு முருகன் கோயில். சீரா - தலைக் கவசம். சீராகம் - ஒருவகைப் பண். சீராட்டு - செல்வம் பாராட்டுகை. சீராளன் - சிறுத்தொண்டர் மகன், சிறப்புற்றவன். சீரிடம் - வாய்த்த இடம். சீரித்தல் - சிறப்புறுதல். சீரிய - சிறப்பான. சீருணம் - செம்பு. சீரை - மரவுரி, சீலை, கந்தை, துலாத் தட்டு. சீர் - செல்வம், அழகு, பெருமை, மதிப்பு இயல்பு, சமம், துலாம், அளவு, கனம், காத்தண்டு, தண்டா யுகம், தாளம், செய்யுளின் ஓர் உறுப்பு, ஓசை. சீர்குலைதல், சீர்கெடுதல் - நிலைகெடுதல், ஒழுங்கீனமாதல். சீர்கேடி - செல்வத்தைக் கொடுக்கும் மூதேவி. சீர்க்கம் - அலங்கார மண்டபத்தில் அமைக்கப்படும் சிற்ப விசேடம். சீர்திருத்தம் - செவ்வைப்படுத்துகை. சீர்தூக்குதல் - நிறையளவை வரையறுத்தல், ஒப்புநோக்குதல். சீர்த்தல் - சிறத்தல், சமயம் வாய்த்தல். சீர்த்தவர் - சிறந்தவர். சீர்த்தி - மிகுபுகழ். சீர்மை - சிறப்பு, புகழ் கனம், நன்னடை. சீலம் - தன்மை, நல்லொழுக்கம், யானையைப் பயிற்றும் நிலை. சீலி - ஒழுக்கமுள்ளவர். சீலித்தல் - நல்லொழுக்கத்தில் நிறுத்துதல். சீலை - துணி. சீலைப்பேன் - சீலையிற் பிடிக்கும் பேன். சீலைமண் - மருந்துச் சட்டி வாயில் சுற்றும் சீலையில் பூசும் மண். சீவ - நீடு வாழ்க என்று வாழ்த்துதற் குறிப்பு. சீவகசிந்தாமணி - திருத்தக்கதேவரி யற்றிய தமிழ்நூல் 10 ஆம் நூற் றாண்டுத் தொடக்கம். சீவகர் - பௌத்த பிக்குகள். சீவகன் - சீவக சிந்தாமணிக் கதா நாயகன். சீவகாருண்ணியம் - உயிர்களிடத்து இரக்கம். சீவகோடி - உயிர்த்தொகுதி. சீவசெந்து - உயிர்ப் பிராணி. சீவதசை - வாழ்நாள். சீவதம் - முகில். சீவந்தன் - உயிரோடிருப்பவன். சீவரத்தார் - சீவரர். சீவரத்தினம் - பாம்புக்குச் சீவாதார மாயுள்ள மணி. சீவரம் - பௌத்த பிக்குகள் அணியும் ஆடை. சீவரர் - பௌத்த பிக்குகள். சீவராசி - பிராணி வகை. சீவல் - செதுக்கப்பட்டது. சீவற்சம் - திருமாலின் மார்பிலுள்ள மறு அல்லது மயிர்ச்சுழி. சீவனம் - சீவிக்கை, சீவனோபாயம், நீர். சீவானம்சம் - விதவை முதலி யோரின் சீவனத்துக்குக் கொடுக் கும் பொருள். சீவனி - உயிர் தரு மருந்து, செவ் வழியாழ்த் திறத்தொன்று. சீவனியம் - நீர். சீவனோபாயம் - பிழைப்புக்குரிய தொழில். சீவன் - உயிர், ஆற்றல். சீவன்முத்தர் - இம்மையிலே முத்தராயினார். சீவாத்துமா, சீவான்மா - சிற்றுயிர். சீவிதம் - சீவனாதாரம். சீவித்தல் - உயிர் வாழ்தல். சீவுதல் - செதுக்குதல், தலைவாருதல். சீவையர் - கூத்தியர். சீழ் - புண்ணின் சீழ் (Pus). சீழ்கு - ஊகம்புல். சீழ்க்கட்டி - திரட்சி (Abscess). சீழ்க்கை - நாக்கின் நுனியை மடித்துச் செய்யும் ஒலி. சீறடி - சீறிய கால். சீறல் - பெருங்கோபம். சீறப்புராணம் - உமாறுப் புலவர் செய்த முகம்மதியப் புராணம் (17ஆம் நூ.). சீறியகற்பு - வீரக் கற்பு. சீறியாழ் - சிறிய யாழ். சீறில் - சிறு வீடு. சீறுதல் - வெகுளுதல், மூச்செறிதல், அழித்தல். சீறுமாறு - மிகுதொந்தரை, தாறுமாறு. சீறூர் - சிறிய ஊர், குறிஞ்சி நிலத்தூர். சீறெலி - சுண்டெலி. சீற்றம் - கோபம். சீனக்காரம் - படிகாரம். சீனச்சூடன் - கருப்பூர வகை. சீனப்புல் - இறாமிப் புல் (Ramie). சீனம் - ஒரு தேசம். சீனி - வெண்சர்க்கரை, சேணம். சு சு - நன்மை, மங்கலம், முதலிய பொருளைக் குறிக்க வடமொழிப் பெயர்கட்கு முன்வரும் சொல். சுகசன்னி - பொருந்தாப்புணர்ச்சி, ஆகாலப் புணர்ச்சியினாலுண் டாகும் சன்னிநோய். சுதகம் - ஓர் பௌத்த நூல். சுதகன் - புத்தன், அருகன். சுகத்தானம் - சென்மலக்கினத்தி லிருந்து நான்காவதாகச் சுகத்தைக் குறிக்குமிடம். சுகந்தம் - நறுமணம். சுகந்தி - செவ்வந்திக்கல். சுகம் - இன்பம், நன்மை தருவது, கிளி, முலைக்கண். சுகரம் - எளிதிற் செய்யக் கூடியது. சுகவழி - சுகாதார நூல். சுகவாரி - ஆனந்த சாகரம். சுகன் - வியாச புத்திரன். சுகாதாரம் - சுகவழி. சுகித்தல் - சுகமாயிருத்தல், சிற்றின்பம் அனுபவித்தல். சுகிப்பு - இன்ப அனுபவம். சுகிர் - உட்டுளை. சுகிர்தம் - நன்மை, இன்பம். சுகிர்தல் - பஞ்செஃகுதல், மபிர் வகிர்தல், கிழித்தல். சுகிர்புரிதல் - யாழ் நரம்பினை வடித்து முறுக்குதல். சுகிர்லாபம் - நண்பரைப் பெறு தலைப் பற்றிக் கூறும் பஞ்சதந்திரப் பகுதி. சுகுச்சை - அருவருப்பு. சுகுணம் - நற்குணம். சுகுமாரநெய் - பெண்களுக்கு மலடு நீங்கக் கொடுக்கும் நெய். சுகுமாரன் - மெல்லிய தேக முள்ளவன். சுகோடம் - நகுலன் கைச்சங்கு. சுகோதயன் - சுகத்துக்கு இருப்பிட மானவள். சுக்கல் - சிறுதுண்டு. சுக்கன் - கப்பல் திருப்புங் கருவி. சுக்கான்கல் - சுண்ணாம்புக்கல். சுக்கான்காய் - தும்மட்டிக்காய். சுக்கிரதசை - சுக்கிரனுடைய இருப தாண்டு ஆட்சிக் காலம். சுக்கிரவாரம் - வெள்ளிக்கிழமை. சுக்கிரன் - வெள்ளி. சுக்கிராசாரி - அசுரகுரு. சுக்கிரீவன் - குரங்கு அரசன். சுக்கில - 60 ஆண்டில் 3வது. சுக்கிலபக்கம், சுக்கில் பட்சம் - அமாவாசையின் மறுநாளிலிருந்து பௌர்ணமி வரையிலுள்ள காலம். சுக்கிலம் - வெண்மை, இந்திரியம். சுக்கிலயசுர்வேதம் - யசுர் வேதத் தின் பகுதி. சுக்கிலை - பராசத்தி பேதம். சுக்கு - உலர்ந்த இஞ்சி, ஆறு துண்டு. சுக்கமாந்தடி - சிறு தெய்வங்கள் கையில் அமைக்கப்படும் சிறு தண்டம், மந்திரக்கோல். சுக்கை - நட்சத்திரம், பூமாலை. சுங்கச்சாவடி - ஆயத்துறை. சுங்கம் - ஆயம். சுங்கன் - சுக்கிரன். சுங்கான் - புகைபிடிக்கும் குழாய். சுங்கு - கொய்யகம். சுசி - சுத்தம் வெண்மை, சந்திரன், நெருப்பு. சுசிரம் - முதுவேனில், கொடி வேலி, உட்டுளை. சுசீலம் - இனிய பண்பு. சுசீலை - நல்லொழுக்க முள்ளவள், புகை நிறப்பசு. சுசுந்தரி - மூஞ்சூறு. சுசுரூட்சை - பணிவிடை. சுடரவன், சுடரோன் - சூரியன். சுடரார் - கடவுள். சுடரெண்ணெய் - சுடரிலிருந்து விழும் எண்ணெய்த்துளி. சுடர் - ஒளி, சூரியன், சந்திரன், கிரகம், நெருப்பு, விளக்கு, தீப்பொறி. சுடர்க்கடை - மின்மினி, மயில். சுடர்க்கடை - துருவசக்கரம். சுடர்தல் - ஒளிவிடுதல். சுடர்நிலை - விளக்குத் தண்டு, விளக்கு. சுடலை - சுடுகாடு. சுடலைநோன்பிகள் - கபால மதக் கொள்கையுடைய துறவிகள். சுடலைமாடன் - சுடலையிலுள்ள ஒரு வகை பேய். சுடலையாடி - சுடலையில் நடமாடும் சிவன். சுடிகை - தலையுச்சி, மகுடம், நெற்றிச் சுட்டி, திலகம், மயிர்முடி, சூட்டு. சுடீரம் - துவாரம். சுடு - சுடுகை, சும்மாடு. சுடுகாடு - சுடலை. சுடுசொல் - துன்புறுத்தும் மொழி. சுடுதல் - காய்தல், வருத்தல், எரித்தல். சுடுநிலம் - சுடுகாடு. சுடுபடை - சூட்டுக்கோல். சுடுபொன் - புடமிட்ட பொன். சுடுமட்பலகை - செங்கல். சுடுமண் - செங்கல், மட்பாண்டம். சுடுவல் - இரத்தம். சுட்டசுண்ணாம்பு - சூளையிட்ட சுண்ணாம்பு (Lime quick). சுட்ட நிலக்கரி - இரசாயனப் பொருள் எடுக்கப்பட்ட நிலக்கரி, கல்கரி (coke). சுட்டி - நெற்றி அணி, விலங்கின் நெற்றியிலுள்ள வெண்சுழி, காரண மாக. சுட்டிகை - மகளிர் நுதலணி. சுட்டு - குறிப்பிடுகை, கருதப்படும் பொருள், நன்மதிப்பு, சுட்டெழுத்து. சுட்டுக்குவி - பிணங்களைச் சுட்டுக் குவி எனப் பொருள்படும்படி அமைந்த ஆந்தையின் ஒலிக் குறிப்பு. சுட்டுக்கோல் - உலையாணிக் கோல். சுட்டுணர்வு - புலன்களால் அறியும் அறிவு. சுட்டுப்பெயர் - சுட்டெழுத்தை முதலில் பெற்ற பெயர். சுட்டுவிரல் - ஆள்காட்டி விரல். சுட்டெழுத்து - அ இ உ என்ற எழுத்துக்கள். சுணக்கம் - தாமதம். சுணங்கறை - புணர்ச்சி. சுணங்கன் - நாய். சுணங்கு - அழகு தேமல், பசலை, பூந்தாது, நாய். சுணங்குதல் - தாமதித்தல். சுணங்கை - துணங்கை. சுணம் - அழகு தேமல், சுண்ணம். சுணை - சுரணை, கூர்மை, தினவு, காய் முதலியவற்றின் மேலுள்ள சிறுமுள். சுணைத்தல் - தினவெடுத்தல். சுண்ட - முற்றும், இழுத்து, வற்ற. சுண்டம் - யானைத் துதிக்கை, கள். சுண்டல் - கறிவகை, பண்ணிகார வகை. சுண்டன் - மூஞ்சுறு, சதயம். சுண்டாயம் - விளையாட்டு. சுண்டு - சிறு பாத்திரவகை, தெறிக்கை. சுண்டுதல் - வற்றுதல், விரல்களால் தெளித்தல். சுண்டுவிரல் - சிறு விரல். சுண்டுவில் - விளையாட்டுக் குரிய சிறய வில். சுண்டெலி - சிற்றெலி வகை. சுண்ணக்குற்றி - சுகந்தப் பொடி வைக்கும் சிமிழ். சுண்ணம் - பொடி, சுண்ணாம்பு, இசைப் பாட்டு வகை, பட்டு வகை. சுண்ணாம்பு - நீற்றின் சுண்ணாம்பு. சுதகம் - குறைவு. சுதந்தரம் - விடுதலை, உரிமை. சுதம் - நாசம், முறைமை, ஞானம். சுதரிசனம் - திருமாலின், சக்கரம். சுதலம் - கீழேழுலங்களுள் மூன்றாவது. சுதனம் - பெரும்பாக்கியம், ஆயுதம். சுதன் - மகன். சுதன்மை - இந்திரனது அத்தாணி மண்டபம். சுதாகரன் - சந்திரன். சுதி - சுருதி. சுதேசம் - சொந்த நாடு. சுதேசி - தனது நாட்டிற் பிறந்து வளர்ந்தவன். சுதை - தேவாமிர்தம், பால், சுண் ணாம்பு, வெண்மை, நட்சத்திரம், மகள், உதை காற்பசு, கேடு. சுதைஓவியம் - சாந்தின்மேல் சுவரில் தீட்டும் ஓவியம் (Fesco Painting). சுத்தசாரி - நாட்டியவகை. சுத்தசானங்கம் - மத்தள வகை. சுத்தசிவபதம் - பரமுத்தி. சுத்தசூனியம் - முழுப்பாழ். சுத்தபரிசம் - கிரணம் பிடிக்கும் காலம். சுத்தபாடம் - பிழையற்ற மூலபாடம். சுத்தம் - தூய்மை, கலப்பில்லாமை, முழுமை. சுத்தவீரன் - போரிற் பின்னிடாத வீரன். சுத்தரங்கமாய் - முழுதும், இசை யுடன் கூடாமல். சுத்தாத்துவைதம் - சீவன்களோடு இரண்டற கலந்து அனுபவிக்கும் நிலை. சுத்தானத்தப்பிரகாசம் - தமிழி லுள்ள ஒரு பரத நூல். சுத்தி - மாசின்மை, குற்றம், நிக்குகை, புடம், வைத்தல், சிப்பி, சங்கு, சிறு பாத்திரவகை, சுத்தியல், அரைப் பலம். சுத்திகை - அகல், கிளிஞ்சில். சுத்தியல் - கம்மாளர் கருவி வகை. சுத்தோதகம் - நன்னீர். சுத்தோதனன் - சித்தார்த்தரின் மகன். சுந்தரத்தோளுடையான் - அழகர் கோயில் திருமால். சுந்தரபாண்டியம் - அனதாரி என்பவரால் இயற்றப்பட்ட ஒரு தமிழ்க் காவியம். சுந்தரபாண்டியன் - பாண்டியர் பலருக்கு வழங்கிய பெயர். சுந்தரபாண்டியன்கோல் - 24 அடி நீளமுள்ள ஓர் அளவுகோல். சுந்தரபாண்டியன் தொகுதி - வெற்றிவேற்கை என்னும் நூல். சுந்தரப்பொடி - சிந்துரப்பொடி. சுந்தரம் - அழகு, நிறம், நன்மை, சிந்தூரம். சுந்தரமூர்த்திநாயனார், சுந்தரர் - 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தேவாரம் பாடிய ஒரு சிவனடியார். சுந்தரம் பிள்ளை எம். ஏ. இராவ் பகதூர் - மனோன்மணீயம் செய் தவர் (1855 - 1897). சுந்தரி - அழகுள்ளவன், இந்திராணி, துர்க்கை, பார்வதி, மூஞ்சூறு, வட நாட்டில் வழங்கும் ஊதுகுழல். சுந்தரேசன் - மதுரைக் கோயிலி லுள்ள சிவபிரான். சுந்து - நீர். சுந்தோபசுந்தர் - திலோத்தமையைக் காதலித்துத் தம்முட்போர் புரிந்து மாண்ட சுந்தன் உபசுந்தன் என்ற சகோதரர் இருவர். சுபகரம் - சுகஞ் செய்வது. சுபகிருது - 60 ஆண்டில் 36 ஆவது. சுபக்கோள் - சுபக்கிரகம். சுபசரிதை - மங்கல வரவு. சுபசோபனம் - மங்களச் செய்தி. சுபடன் - வீரன். சுபட்சம் - வாதத்தில் தன் கொள்கை. சுபதம் - சுபத்தைக் கொடுப்பது. சுபத்திரை - அருச்சுனன் மனைவி, கறுப்புப் பசு. சுபம் - மங்களம் பேறு, முத்தி, அழகு, வெண்மை. சுபன்னன் - கருடன், சேவல். சுபாவம் - இயல்பு. சுபிட்சம் - செழிப்பு. சுபுகம் - மோவாய். சுபுத்திரன் - நன்மகன். சுப்பிரதீபக்கவிராயர் - விறலிவிடு தூது செய்த புலவர் (18ஆம் நூ.). சுப்பிரமணியதீட்சிதர் - பிரயோக விவேகமென்னும் இலக்கண நூல் செய்ய பிராணப் புலவர் (17ஆம் நூ.). சுப்பிரமணி பாரதியார் சி. - தேசியப் பாடல்கள் செய்த புலவர் (1882 - 1921). சுப்பிரமணியபிள்ளை, கா. (எம்.ஏ.எம்.எல்.) - தமிழ் இலக்கிய வரலாறு செய்தவர் (1954). சுப்பிரமணிய முதலியார், வெள்ளக் கால் - அகலிகை வெண்பாச் செய்தவர் (1857 - 1947). சுப்பிரமணியமுனிவர் - கலைசை சிலேடை வெண்பாச் செய்தவர் (18ஆம் நூ.). சுப்பிரமணியன் - முருகக் கடவுள். சுப்பிரம் - மிக்க ஒளி, தூய்மை, வெண்மை. சுப்பிரயோகம் - காதலரைக் குறித்து நினைவும் பேச்சுமாக இருக்கும் நிலை. சுமங்கலி - தாலி தரித்திருப்பவள். சுமடம் - அறிவீனம். சுமடன் - அறிவில்லாதவன், கீழ் மகன். சுமடு - சும்மாடு, சுமை. சுமடை - சும்மாடு. சுமத்தல் - தாங்குதல், மிகுதல் மேற் கொள்ளுதல், பணிதல். சுமத்துதல் - பாரமேற்றுதல். சுமந்திரன் - தசரதனுக்குச் சாரதித் தொழில் புரிந்துவந்த மாதிரி. சுமம் - பூ. சுமனசம் - பூ. சுமனை - சிவப்புப் பசு. சுமார் - ஏறக்குறைய, மட்டம். சுமார்த்தம் - மிருதிகளிற் கூறிய விதிகள். சுமார்த்தர் - அத்வைதக் கொள்கையைத் தழுவிய பிராமணர். சுமத்திரை - தசரதன் மனைவி இலக்கு மணன் சத்துருக்கன் என்பவரைப் பெற்றவள். சுமேரு - தேவர்க்கு இருப்பிடமான மேருச் சிகரம். சுமை - சுமக்கை, பாரம், தொகுதி. சுமைதாங்கி - சுமை இறக்கித் தலைப் பாரம் ஆற்றுவதற்கு உதவியாக உயர்த்தி நிறுத்தப்பட்ட கற்கட்டு. சுமையடை - சும்மாடு. சும்பகம் - ஊசிக்காந்தம். சும்பனம் - சூப்புகை, முத்தமிடுகை. சும்பிதகரணம் - புணர்ச்சி வகை. சும்புளித்தல் - கண் கூசுதல். சும்மா - தொழிலின்றி, அமைதி, விளை யாட்டாக. சும்மாடு - சுமை தூக்குதற்குத் தலையில் வைக்கும் சுமை, அடை. சும்மை - சுமை, தொகுதி, நெற்போர், ஊர், நாடு, ஓசை. சுயஅறிவு - சொந்த அறிவு. சுயம் - சொந்தமானது. சுயம்பாகி - சமயற்காரன். சுயம்பாவித்தல் - அலங்கரித்தல். சுயம்பு - தானாக உண்டானது. சுயம்வரம் - தலைவி கணவனைத் தானே தெரிந்து மணந்து கொள்ளுதல். சுயேச்சை - தனது எண்ணம். சுயோதனன் - துரியோதனன். சுரகுரு - தேவர் குருவான வியாழன், இந்திரன், சோழ குலத்தலைவரு ளொருவன். சுரங்கம் - கீழறுக்கும் அறை. சுரசி - வெண்ணொச்சி. சுரசுரப்பு - முரடு, சொரசொரப்பு. சுரசை - சிற்றரத்தை. சுரணை - உணர்ச்சி, அறிவு. சுரண்டி - சுரண்டுங் கருவி. சுரண்டுதல் - பிராண்டுதல், கவர்தல். சுரதநீர் - காமநீர். சுரதம் - புணர்ச்சி, இளிமை, சாறு. சுரத்தல் - ஊறுதல், நிறைதல், மிகக் கொடுத்தல். சுரதுருமம் - தேவதாரு. சுரநட்சத்திரம் - வியாழன் நின்ற நாளுக்கு ஏழு அல்லது ஒன்பதாம் நட்சத்திரம். சுரநதி - கங்கை. சுரபதி - இந்திரன். சுரபி - காமதேனு, வெண்பசு, வாசனை. சுரப்பி - சுரப்பது (Gland). சுரப்பு - ஊற்று. சுரம் - பாலைநிலம், காடு, அருநெறி, வழி, இசைகள், ஏழிசை, குரல் உட்டுளை, காய்ச்சல். சுரம்பாடுதல் - எடுத்துக் கொண்ட இராகத்துக்கேற்ற சுரவரிசை களாலே கீர்த்தனம் முதலியன பாடுதல். சுரம்போக்கு - தலைவனுடன் தலைவி பாலை வழியில் செல்லும் உடன் போக்குத் துறை. சுரர் - தேவர். சுரவி - சுரபி. சுரா - கள். சுராபானம் - கள் குடிக்கை. சுராலயம் - மேரு. சுராலை - சாம்பிராணி. சுரி - சுழற்சி, எருத்தின் சுட்டி, நரி, துவாரம். சுரிகுழல் - சுருண்ட கூந்தலுள்ள பெண். சுரிகை - உடைவாள், கவசம் கத்தி. சுரிதகம் - கலிப்பா வகையின் இறுதி யுறுப்பு ஒருவகைத் தலையணி. சுரித்தல் - சுழித்தல், வற்றுதல், சுருளுதல், மனஞ் சுழலுதல். சுரிந்து - நீர்ச்சுழி. சுருக்கப்படம் - Sketch. சுரிமுகம் - சங்கு, நத்தை. சுரியல் - வளைவு, குழன்ற மயிர், நீர்ச்சுழி. சுருக்கம் - குறைவு, வறுமை, சங்கிரகம். சுருக்கு - சுருக்குகை, மடிப்பு, உருவு தடம், நெய்த்துடுப்பு, பூமாலை. சுருக்குவார் - விலங்குகளைப் பிடித்தற்குரிய கருவி வகை. சுருங்கல் - மடிப்பு, ஒடுங்குதல், தவறுதல். சுருங்கில் - சிறு வீடு. சுருங்கை - நீர் முதலியன செல்லுதற்கு நிலத்துள் கற்களால் கரந்துபடுத்தவழி, கோட்டையிற் கள்ள வழி, நுழை வாயில், மாளிகையின் சாளரம். சுருட்டி - எடுபிடி வகை, ஓர் இராகம். சுருட்டு - சுருட்டுகை, சுருள், புகை யிலைச் சுருட்டு. சுருட்டை - சுருள் மயிர், பாம்பு வகை. சுருட்டைவிரியன் - பாம்பு வகை (Saw scaled viper). சுருணி - யானைத் தோட்டி. சுருணை - சுருட்டி வைத்த பொருள். சுருதம் - கேள்வி. சுருதி - ஒலி, வேதம், காது, இசையைச் சிறப்பிக்க அதனுடன் ஒத்தெழுப்பப் படும் துணையொலி. சுருதிகாந்தாரம் - பாலை யாழ்த் திறவகை. சுருதிகூட்டுதல் - ஒலித்தல். சுருதிமானி - இசைக் கவை (Tuning Fork). சுரும்பித்தல் - வாத்தியங்களில் இசைகள் தம்முள் ஒத்தொலிக்க அமைத்தல். சுரும்பர் - வண்டு. சுரும்பு - வண்டு, மலை. சுருவம், சுருவை - நெய்த் துடுப்பு. சுருளமுது - தாம்பூலம். சுருளை - குருத்து. சுருள் - சுருளுகை, சுருண்ட பொருள், ஐவகை முடிகளுள் ஒன்று, மகளிர் காதணிவகை. சுரூபம் - தன்மை. சுரேசுவரி - முசுமுசுக்கை. சுரை - சுரக்கை, விலங்குகளின் மடி, கறவைப் பசு, ஒரு கொடி, கள், தேன், குழிந்த இடம், உட்டுளை, திரிக்குழாய், மூட்டுவாய், பூண், பாரை வகை. சுதேராணிதம் - உதிரம், மகளிர், சூதகம், பெண்கள் விந்து. சுரோத்திரம் - காது. சுலபம் - எளிது. சுலவுதல் - சுற்றுதல். சுலனன் - நெருப்பு. சுலாவு - காற்று. சுலாவுதல் - கலவுதல். சுலோகம் - வடமொழிச் செய்யுள், சொன்மாலை. சுலோகி - கள். சுலோசனம் - கண். சுலோபம் - எறும்பு. சுலகம் - மகட்கொள்ள அளிக்கும் பரிசம், பந்தயப் பொருள். சுல்தான் - துருக்க அரசன் பட்டப் பெயர். சுல்லி - அடுப்பு. சுல்லு - வெள்ளி. சுல்லம் - தாமிரம். சுவசம் - தன் வசமுள்ளது. சுவசனவிருத்தி - தன் சொற்குமாறு பாடாக இயம்பலாகிய பக்கப் போலி. சுவடன் - இரசிகள். சுவடி - ஏட்டுப் புத்தகம். சுவடித்தல் - தின்னுதல், அலங் கரித்தல். சுவடு - அடித்தடம், நடக்கும், ஒலி, அடையாளம், தழும்பு, ஆற்றல், உபாயம், பழக்கம், வச்சிரச்சட்டை. சுவட்டவர் - காடையைப் பழக்கிப் போர் மூட்டுபோர். சுவணம் - பொன், உலோகக் கட்டி. சுவண்டு - பொருத்தம். சுவதந்திரம் - சுதந்திரம். சுவத்தன் - ஆரோக்கியமுள்ளவன். சுவத்திகம் - சுவஸ்திகம், யோகாசனத் தொன்று. சுவஸ்தி - சௌக்கியம். சுவப்பிரம் - நரகம். சுவம் - சுபம், சுவர்க்கம். சுவரம் - இசை. சுவர் - மதில், தேருறுப்பு, உச்ச ஒலி, அலங்காரம். சுவர்க்கம் - இந்திரன். சுவர்ணபூமி - அண்டத்தின் வரம்பை ஒட்டியுள்ள கடைசிப் பூகண்டம், சுவர்க்கம், பர்மா தேசம். சுவர்ணபேதி - தங்கத்தை இளக்கும் திராவகம். சுவர்ணம் - பொன். சுவர்மேற்பூனை - இரண்டும் கெட்ட நிலை. சுவர்யோனி - தேவப் பிறப்பு. சுவல் - தோட்கட்டு, முதுகு, குதிரைக் கழுத்து மயிர், மேடு. சுவவு - பறவை மூக்கு, மூஞ்சூறு, சுவர்க்கலோகம். சுவறுதல் - வற்றுதல், உறிஞ்சப் படுதல். சுவற்றுதல் - வற்றச் செய்தல், முற்றுமழித்தல். சுவனம் - சொப்பனம். சுவா - நாய். சுவாகதம் - வரவேற்கும் மொழி, கிளி. சுவாகா - ஆகுதி செய்யும்போது தேவதையின் பெயர்க்குப்பின் கூறும் மொழி. சுவாகாதேவி, சுவாகை - அக்கினி தேவன் மனைவி. சுவாகு - இராமனாற் கொல்லப்பட்ட ஓர் அரக்கன். சுவாங்கி - கத்தூரி மஞ்சள். சுவாசகம் - கிலி. சுவாசகாசம் - ஈளை நோய். சுவாசகோசம் - மூச்சுப்பை. சுவாசப்பை - நுரையீரல். சுவாசம் - உயிர்ப்பு. சுவாதந்திரியம் - சுதந்திரம். சுவாதி - சோதி நாள். சுவாதிட்டானம் - ஆறு ஆதாரங் களுள் ஒன்று. சுவாதீனம் - சுதந்திரம். சுவாது - இனிமை ஆடாதோடை. சுவாத்தியம் - திருப்தி, சுகம். சுவாமி - கடவுள், முருகன், மூத் தோன், ஒரு மரியாதைச் சொல், துறவி. சுவாமி கவிராயர் - பொதிகை நிகண்டு செய்தவர். சுவாமிநாததேசிகர் - திருவாவடுதுறை ஆதினத்தைச் சார்ந்தவர், இலக்கண விளக்கம், தசகாரியம் முதலிய நூல்கள் செய்தவர் - 18 ஆம் நூற். சுவாமிமலை - கும்பகோணத்துக்கு மேற்கே உள்ள முருகன் கோயில். சுவாயம்புவம் - தானாகத் தோன்றி யது. சுவாயம்புவமனு, சுவாயம்புமனு - பிரமனிடம் தோன்றிய மனு. சுவார்ச்சிதம் - தானே தேடிய பொருள். சுவாலை - எரியும் நெருப்பு. சுவாவி - உண்மையானவள். சுவானசக்கரம் - நாய் கடியாது விலக்குவ தாகக் கருதப்படும் சக்கரம். சுவானம் - நாய், நாயுருவி. சுவானுபவம், சுபானுபூதி - தன் அனுபவம். சுவிகை - கள். சுவிசேடம் - நற்செய்தி. சுவீகரித்தல் - அங்கீகரித்தல், தத்தெடுத்தல். சுவீகாரம் - தத்தெடுக்கை. சுவுகம் - மோவாய்க் கட்டை. சுவேகம் - உறை. சுதேசம் - வியர்வையில் தோன்றும் உயிர்கள். சுவேதநீர் - வீரியம். சுவேதம் - வெண்மை, பாதரசம், வெள்ளி, வியர்வை. சுவேதவனப்பெருமாள் - மெய் கண்டதேவர். சுவேதவனம் - திருவெண்காடு என்னும் சிவத்தலம். சுவேதவாகனன், சுவேதவாகன் - அருச்சுனன். சுவேதாம்பரர் - வெள்ளாடை உடுத்த சைன முனிவர். சுவை - இரசம், உருசி, நாவின் உணர்வு, சித்திரை. சுவைஅரும்புகள் - நாக்கிலுள்ள சுவை யறியும் அரும்புகள் (Taste buds). சுவைத்தல் - உருசி பார்த்தல், முத்த மிடல், உண்ணுதல். சுழங்குதல் - சுழலல். சுழலுதல் - உருளுதல், வட்டமாகச் சுற்றுதல், சஞ்சலப் படுதல், மயங் குதல். சுழலை - கொளகலம், வஞ்சகம். சுழல் - சுழற்சி, வளைவு, சுழிநீர், காற்றாடி, பீலிக்குடை, சஞ்சலம். சுழல்படை - வளைதடி. சுழற்சி - சுழல்கை, மனக்கலக்கம். சுழற்றுதல் - சுழலச் செய்தல். சுழல்மரம் - தானியம் திரிக்கும் மர எந்திரம். சுழி - சுழலுகை, நீர்ச்சுழி, உச்சி, கடல் பூச்சியம். சுழிகுளம் - மிறைக்கவிவகை. சுழிதல் - சுழிபோல் வளைவாதல், வெறுப்பின் குறியாக முகஞ்சுருங் குகை, கபடமாதல். சுழித்தல் - நீர்ச்சுழியுண்டாதல், சுழியுண்டாக்குதல், கோபித்தல். சுழிமுனை - சுழுமுனை. சுழியம் - மகளிர் தலையணி வகையுளொன்று. சுழியன் - சுழற்காற்று, வஞ்சகன். சுழியாணி - கதவுக் குடுமியின் முள்ளாணி. சுழிவு - மனக் கவலை. சுழுத்தி - புலன்கள் செயலாற்று உறங்கும் நிலை. சுழுமுனை, சுழுனா, சுழுனை - இட கலைக்கும் பிங்கலைக்கும் இடையி லுள்ளது. சுளகு - முறம், விசாகம். சுளகம் - உள்ளங்கை. சுளிகை - அணி வகை. சுளிதல் - சினத்தல். சுளித்தல் - கோபித்தல், காலால் துவைத்தல், வெறுத்தல். சுளுகு - தந்திரவார்த்தை, நுட்ப அறிவு. சுளுக்கு - நரம்புப் புரட்சி (sprain). சுளுவு - இலேசு, எளிது. சுளை - பலாப்பழத்தின் சதைப்பற்று. சுள் - கருவாடு, சிறுமை. சுள்ளாணி - சிற்றாணி. சுள்ளாப்பு - உறைப்பு, விரைவு, அடி. சுள்ளி - மாமரம், ஆச்சா, நறவம், அனிச்சம், கொன்றை, சிறுகிளை. சுற - சுறா. சுறட்டு - தொந்தரை. சுறண்டல் - பொருளை உறிஞ்சுதல் (Exploitation). சுறவம், சுறவு, சுறா - சுறாமீன். சுறு - மயிர் தீயில் பொசுங்குதலால் உண்டாகும் நாற்றம். சுறுக்கு - விரைவு. சுறுக்கொள்ளுதல் - தீய்ந்து போதல், மயிர்க்குச் செறிதல். சுற்பம் - பரிசம், சீதனம், வரி. சுற்பம் - செம்பு. சுற்றத்தார் - உறவினர். சுற்றந்தழால் - சுற்றத்தாரைத் தழுவிக் கொள்ளுதல். சுற்றம் - உறவினர், ஆயத்தார்; கூட்டம். சுற்றளவு - வட்ட அளவு. சுற்று - வட்டமாகச் செல்லுகை, சுற்றளவு, சுற்றிடம், கால்விரலணி, மதில், புரி (Sluice). சுற்றுதல் - சுழன்று, செல்லுதல், அலைதல், கிறுகிறுத்தல், உடுத்துதல், சுருட்டுதல். சுற்றுப்பலி - கோயிலைச் சூழ்ந்துள்ள தேவதைகளுக்கு இடும் பலி. சுற்றுமண் - ஓலைக்கடிதத்திலிடும் முத்திரை மண். சுனகன் - தென்மேற்றிசைக் குரிய வன்; நாய். சுனாசீரன் - இந்திரன். சுளை - மலை ஊற்று, நீர்நிலை, தினவு சுரசுரப்பு. சுனைதல் - குழைதல். சுனைத்தல் - தினவெடுத்தல். சுன - சனி. சுன்னத்துக்கலியாணம் - விருத்த சேதனச் சடங்கு. சுன்னம் - சுழி, சுண்ணாம்பு. சூ சூகம் - தாமரை, நெல்வால், ஊர்ந்து செல்வன. சூகரம் - பன்றி, மான். சூகை - கரிய சிற்றெறும்பு வகை, யானை. சூக்கம் - நுண்ணிய பொருள், சூட்சுமம். சூக்குமம் - நுண்மை, ஆகமங்களு ளொன்று. சூக்குமை - எழுத்தினை உச்சரிக்கத் தொடங்குகையில் நாபியிலிருந்த எழுவதாகக் கருதப்படும் பரை என்னும் ஒலி. சூக்தம் - வேதத்தில் பல இருக்குகள் கொண்ட பகுதி. சூசகம் - உளவு, அறிகுறி, தருப்பை. சூசனம், சூசனை - குறிப்பிடுகை. சூசி - வியூகவகை, ஊசி, துளை, அட்டவணை. சூசிகாவியூகம் - ஊசிமுனைபோல் முனை சிறுத்துவர அமைக்கும் படை வகுப்பு. சூசிபத்திரம் - பொருளட்டவணை. சூசியம் - சூட்டிறைச்சி. சூசுகம் - முலைக்கண். சூடகம் - கைவளை. சூடடித்தல் - கதிரைக் கடாவிட்டு ழக்குதல். சூடம் - தலையின் உச்சி, சூடன். சூடன் - கர்ப்பூரம், மீன்வகை. சூடாகரணம் - குடுமி வைக்கும் சடங்கு. சூடாமணி - முடிமணி, தெய்வமணி. சூடாமணி நிகண்டு - மண்டல புருடன் செய்த நிகண்டு, 16ம் நூற். சூடாமணியுள்ளமுடையான் - திருக் கோட்டி நம்பி செய்த சோதிட கணித நூல் 12ஆம் நூற்றாண்டு. சூடாலம் - சணல் விதை. சூடி - சீலை. சூடிகை - முடிமணி, தூபி. சூடிக்கொடுத்தநாச்சியார் - தான் சூடிய பூமாலையைத் திருமால் சூடக் கொடுத்த ஆண்டாள். சூடு - சுடப்பட்டது, வெப்பம், கோபம், வடு, அரிந்தகட்டு, குடுமி, உச்சிக் கொண்டை. சூடுதல் - தரித்தல், கவிதல். சூடை - குடுமி, மீன்வகை. சூட்சித்தல் - ஆராய்ந்தறிதல். சூட்சுமம் - நுண்ணிய வடிவம், நுண்மை. சூட்டடுப்பு - அடுப்புவகை. சூட்டாணி - சூட்டுக்கோல். சூட்டிஞ்சி - ஏவறைகளைக் கொண்ட மதில். சூட்டு - தரிக்கை, மாலை, பெண்கள் நுதலணி, பறவைகளின் உச்சிக் கொண்டை, பாம்பின் படம், வண்டிச் சக்கரங்களின் விள்மபைச்சூழ அமைக்கப்பட்ட வளைவு மரம், ஏவறை, சூடப்பட்டது. சூட்டுக்கத்திகை - பூமாலை வகை. சூட்டுதல் - அணிவித்தல், பட்டம் முதலியன கொடுத்தல், சுமத்துதல். சூதகம் - பிறப்பு, மாதவிடாய் விலக்கம், ஆசௌசம், மாமரம், முலைக் கண். சூதசங்கிதை - வல்லூர்த் தேவராச பிள்ளை தமிழில் மொழி பெயர்த்த ஒரு நூல் (19ம் நூ.). சூதநதி - ஆன்பொருநை. சூதமுனிவர் - இருடிகளுக்குப் புராணங் கூறிய முனிவர். சூதம் - பிறப்பு, பாதரசம், மாமரம், சூது. சூதர் - அரசர்முன் நின்று ஏத்துவோர், பாணர். சூதன் - தேர்ப்பாகன், சூதமுனிவர், சூதாடுவோன். சூதாடுகருவி - சூதாடு கட்டத்தில் வைக்கும் காய். சூடு - சூதாட்டம், சூதாடுகாய், வெற்றி, தந்திரம். சூதுபவழம் - ஒருவகை நிறக்கல் (Carnnelian). சூதுமுத்து - செயற்கை முத்து. சூத்திரக்கயிறு - பாவையை ஆட்டும் கயிறு. சூத்திரதாரி - பாவையைச் சூத்திரங் கொண்டு ஆட்டுவோன். சூத்திரநிலை - சூத்திரங்கள் ஒன் றோடு ஒன்று பொருளால் தொடர் ந்து நிற்கும் நிலை. சூத்திரப்பா - நூற்பா. சூத்திரப்பாவை - கயிற்றினால் ஆட்டப் படும் பாவை. சூத்திரம் - பஞ்சு நூல், இயந்திரம், தந்திரம், யாப்பு வகை. சூத்திரன் - நான்காம் வருணத்தான். சூத்திரி - எந்திரம் இயக்குவதில் வல்லவன். சூத்திரித்தல் - பொருளடங்கக் கூறுதல். சூத்தி - பிட்டம். சூப்பு - காய்கறி இறைச்சி முதலிய வற்றின் சத்தைக் கொண்டு சமைத்த இரசம். சூம்புதல் - சுருங்குதல். சூயை - அனுசூயை. சூரணம் - பொடி, கருணைக்கிழங்கு. சூரபதுமன், சூரபத்மன், சூரபன் மன் - ஆறுமுகக் கடவுளால் வெல்லப்பட்ட ஓர் அசுரன். சூரம் - வீரம். சூராமகளிர் - தெய்வப் பெண்கள். சூரல் - சுழித்தடிக்கை, பிரம்பு, சூரை. சூரன் - வீரன், சூரபதுமன், நாய், சூரியன், நெருப்பு. சூராட்டி - தேவராட்டி. சூரி - புலவன், வீரமுள்ளவன், மாகாளி, காடுகிழாள். சூரியஒளிவட்டம் - சூரியப்பிரவை, சூரியனைச்சுற்றிப் பரிவேடம் போல் சில சமயங்களில் காணப் படுவது (Corona). சூரியகடிகாரம் - பகலில் நாழிகை தெரிவிக்கும் கருவி. சூரியகலை - பிற்கலை. சூரியகாந்தம் - வெயில்பட்டால் நெருப்பு, உண்டாகும் பளிங்கு. சூரியகாந்தி - செடிவகை. சூரியகௌளி - இளநீர் வகை. சூரியசித்தாந்தம் - ஒரு வானசாத்திர நூல். சூரியதிசை - கிழக்கு. சூரிய நாராயண சாத்திரியார் வி. கோ. - தமிழ்மொழி வரலாறு என் னும் நூல் செய்தவர் (1370 - 1903). சூரியப்படாம் - விருது வகை. சூரியப்பிரபை - மகளிர் தலையில் வலப்பக்கத்தில் அணிந்து கொள் ளும் மணி பதித்த பொன்னா பரணம். சூரியபுடம் - வெயிலில் வைக்கும் மருந்துப் புடம். சூரியமண்டலம் - சூரிய லோகம், சூரிய வட்டம். சூரியவிதீ - கிராந்தி மண்டலம், அயன விருத்தம் (Ecliptic). சூரியன் - ஞாயிறு, சோழன். சூரினர் - தெய்வப் பெண்கள். சூருமம் - தருப்பை. சூரை - செடிவகை, மீன்வகை. சூர் - அச்சம், துன்பம், நோய், கடுப்பு, கொடுமை, தெய்வமகளிர், வீரர், சூரபதுமன், அஞ்சாமை. சூர்ணிகை - செய்யுட் கருத்தை விளக்கி நிற்கும் இனிய சொற் றொடர். சூர்த்தம் - நடுக்கம். சூர்த்தல் - பயமுறுத்தல் கொடுமை செய்தல். சூர்ப்பகை - முருகக் கடவுள். சூர்ப்பணகை - இராவணன் தங்கை. சூர்ப்பணம் - முறம், தூணி. சூர்ப்பு - கொடுந்தொழில், கைக் கடகம். சூர்மகள் - துர்க்கைக்கு ஏவல் மொழி செய்யும் இடாகினி அல்லது யோகினி என்ற பெண் பேய். சூலகம் - மலரின் அல்லித்தாள் (Pistil). சூலக்கல் - சிவன் கோயிலுக்கு விடப்பட்ட நிலங்களின் எல்லை யில் நடப்படும் சூலக் குறியுள்ள கல். சூலக்கால் - சூலக்குறி பொறிக்கப் பெற்ற சிவன் கோயில் அளவை மரக்கால். சூலபாணி - சிவன். சூலம் - மூன்று கூறான முனையுடைய ஆயுதம், இடிதாங்கி, இரேவதி நாள். சூலறை - பூக்களில் விதை உண் டாகும் பகுதி (Carpel). சூலி - கருப்பவதி, சிவன், துர்க்கை. சூலிகை - இடிதாங்கி. சூலினி - பார்வதி, வெற்றிலை. சூலுதல் - கருப்பங்கொள்ளுதல், குடைதல். சூலுலைதல் - பிரசவ வேதனைப் படுதல். சூலை - காலந்தாழும் மாதவிடாயால் உண்டாகும் நோய். சூல் - கருப்பம், முட்டை, நீர் நிரம்பி யிருக்கை. சூல்தண்டு - பூவின் நடுவிலுள்ள தண்டு (Style). சூல்முடி - சூல்தண்டு நுனி (Stigma). சூழல் - சூழ்க்கை, மணற்குன்று, கூட்டம், சூழ்ச்சி. சூழி - யானையின் முகபடாம், நீர், நிலை, கடல். சூழிகை - கள். சூழியம் - உச்சிக் கொண்டை, கொண்டையிலணியும் ஆபரணம். சூழ் - ஆலோசனை, சுற்று, தலையில் அணியும் மாலை. சூழ்கோடை - சூல்வழி. சூழ்ச்சி - ஆலோசனை, நுண்ணறிவு, உபாயம், மனத்தடு மாற்றம். சூழ்ச்சித்துணைவர் - மந்திரிகள். சூழ்தல் - சுற்றியிருத்தல், ஆராய்தல், கருதுதல், தேர்ந்தெடுத்தல், பண்ணுதல், எழுதுதல். சூழ்த்தல் - சுற்றுதல், சுற்றி மொய்த் தல். சூழ்நிலை - சுற்றியுள்ளவற்றின் தன்மை. சூழ்நிலைக்கலை - பரிசர சாத்திரம் (Ecology). சூழ்போதல் - வளைதல், வலம் வருதல், ஆராய்தல், சூற்றிக் கிடத்தல். சூழ்வல்லோர் - அமைச்சர். சூழ்வளி - சூழல் காற்று. சூழ்வினை, சூழ்வு - சூழ்ச்சி. சூழ்வோர் - அமைச்சர். சூளரவு - சூளுறவு. சூளாமணி - இந்திரன், அணியும் மணி, தோலாமொழித்தேவர் செய்த ஒரு சைனநூல். சூளிகம் - அப்பவர்க்கம். சூளிகை - நீர்க்கரை, செய்குன்று, யானைந் செவியடி, நிலா முற்றம், தலையணி வகை. சூளுறவு, சூளுறுதல் - ஆணை யிடுகை, சபதம். சூளை - காளவாய், வேசி. சூள் - சபதம், ஆணை, பாபம். சூள்தல் - ஆணையிடுதல், சபதங் கூறுதல். சூறல் - தோண்டுகை. சூறன் - மூஞ்சூறு. சூறாவளி - சூழல்காற்று (cyclone). சூறுதல் - சூழ்தல். சூறை - சுழல், காற்று, கொள்ளை, மயிர் முடிவகை, சல்லடம், மீன் வகை, கழுத்தின் பின்குழி. சூறைகோட்பறை - வழிப்பறி செய் வோர்க்குரிய பாலைப் பறை. சூறைக்காற்று - சுழல் காற்று. சூறைச்சின்னம் - சூறைவிடு வோர்க் குரிய ஊது கொம்பு. சூறையர் - பரத்தையர். சூற்பை - கருப்பை (Ovary). சூனம் - மான். சூனர் - ஊன் விற்போர். சூனியதிசை - தென்கிழக்குத் திசை. சூனியமாதம் - மங்கள காரியங்களுக்குத் தகாத ஆடி புரட்டாசி மார்கழி மாசி மாதங்கள். சூனியம் - இன்மை, வறிதாயிருக்கை, சூனிய வித்தை. சூனியவாதி - நாத்திகள். சூனியன் - மூடவன். சூனு - மகன். சூன்மி - நாக விசேடம். செ செகசாலம் - மாயவித்தை. செகசோதி - பேரொளி. செகத்தரு - உலககுரு, சங்கராசாரி மடத் தலைவரின் பட்டப் பெயர். செகம் - உலகம். செகராச சேகரமன்னர் - தக்கண கைலாச புராணம் செய்த யாழ்ப்பாணத்துப் புலவர். பண்டிதராசரென்பவரும் ஓர் தக்கண கைலாச புராணம் செய் துள்ளார். செகாரச சேகரம் - ஒரு சோதிட நூல். செகில் - தோலின் மேற்புறம், சிவப்பு. செகிள் - கனியின் தோல், மீன் செதிள். செகுத்தல் - வெல்லுதல், கொல் லுதல். செக்கச்சிவத்தல் - மிகச்சிவத்தல். செக்கணி - கூத்து வகை. செக்கம் - சிவப்பு, கோபம், மரணம். செக்கர் - சிவப்பு செவ்வாழை. செக்கன் - வினாடி (Second). செக்கான் - செக்காட்டி. செக்கு - எண்ணெயாட்டும் எந்திரம், உண்டியல். செங்கடல் - அராபியா தேசத்துக்கு மேற்கே உள்ள கடல். செங்கண்மா - நன்னனுடைய தலை நகரம், கரடி. செங்கதிர் - சூரியன். செங்கதிர்கள் - உத்தராட நாள். செங்கமலம் - செந்தாமரை. செங்கல் - கடுமண்கல், காவிக்கல். செங்கல்மங்கல் - மங்கிய செந்நிறம். செங்கல்வராயன் - முருகக்கடவுள். செங்கழூ நீர் - செவ்வாம்பல். செங்களம் - போர்க்களம். செங்களி - செம்பஞ்சுக் குழம்பு. செங்காந்தள் - கார்த்திகைக் கொடி. செங்காரி - கருஞ் சிவலை நிறமுள்ள மாடு முதலியன. செங்காலி - செங்கருங்காலி. செங்காவி - செங்கழுநீர், குங்குமக் காவி. செங்கீரைப்பருவம் - கைகளையும் முழங்கால்களையும் ஊன்றிக் கொண்டு 5ஆம் மாதத்தில் பிள்ளைகள் தலை நிமிர்ந்தாடும் பருவம். செங்குத்து - நிறுதிட்டம் (virtical). செங்குந்தர் - கைக்கோளர். செங்குமுதல் - செவ்வாம்பல். செங்குலிகம் - சாதிலிங்கம். செங்குவளை - செங்கழுநீர். செகை - கொடுக்கும் கை, திருவாதிரை. செங்கோடு - செங்குத்தான மலை, செருந்தி. செங்கோட்டியாழ் - நால் வகை யாழில் ஒன்று. செங்கோணம் - 90 பாகையுள்ள கோணம் (Right Angle). செங்கோல் - அரசாட்சிச் சின்னமான கோல், நல்லரசாட்சி. செங்கோற்கடவுள் - சிவப்பு, வெட்சி, ஆடு, மேட ராசி, சந்தனக் குழம்பு, சட்டை, தழைகள் வேய்ந்த விடுதி, இலிங்கங் கட்டிகள் அணி யும் இலிங்கப் பெட்டகம், இரட்டை. செஞ்ச - நேராக. செஞ்சம் - நேர்மை. செஞ்சாந்து - குங்குமம், சந்தனக் கூட்டு. செஞ்சாமாருதம் - மழையோடு கூடிய காற்று. செஞ்சாவி - உயர்ந்த நெல்வகை. செஞ்சி - ஒரு குறிஞ்சி நிலத்தூர். செஞ்சிலுவைச்சங்கம் - போர்க் களத்தில் காயம்பட்டவர்களுக்குச் சிகிச்சை செய்யும் சங்கம் (Red Cross Society). செஞ்சு - நேர்மை. செஞ்சுடர் - சூரியன். செஞ்சுருட்டி - ஒர் இராகம். செஞ்செவே - நேராக, எளிதாக, முழுதும். செஞ்சொல் - திருந்திய சொல், வெளிப்படையான சொல். செஞ்சொன்மாலை - புகழ்மாலை. செஞ்சோற்றுக்கடன் - அரசனிடம் பெற்றுண்ட உணவுக்காக அவன் பொருட்டு வீரன் தன்னுயிரைப் போரிடைக் கொடுத்தலாகிய கடமை. செடி - பூடு, நெருக்கம், பாவம், தீமை, துன்பம், துர்நாற்றம், இழிவு, ஒளி. செடிச்சி - இழிந்தவள். செடிப்பேன் - அசுகுணி. செடில் - நேர்த்திக் கடனுக்காக முதுகில் குத்தும் கொக்கி. செட்டி - வணிகர் பட்டப் பெயர், முருகன். செட்டியப்பன் - சிவன். செட்டு - வியாபாரம், சிக்கனம். செட்டை - சிறகு, தோட்பட்டை. செண் - கொடை. செண்டா - கொடி. செண்டாடுதல் - பந்தாடுதல், நிலை குலைதல். செண்டாயுதன் - ஐயனார். செண்டிகிரேடு - சதம் (Centigrade). செண்டு - பூச்செண்டு, குதிரைச் சவுக்கு, வையாளி வீதி, பந்து. செண்டுகோல் - பந்தடிக்கும் கோல். செண்டுவெளி - அரண்மனையைச் சார்ந்துள்ள வையாளி வீதி. செண்டை - கொட்டு வாத்தியம். செண்ணம், செண்ணை - நுண் டொழில், அழகிய வடிவு. செண்ணிகைக்கோதை - பூமாலை வகை. செண்ணுதுல் - அலங்கரித்தல். செண்பகம் - வண்டுணாமலர், செம்போத்துப் புள் (Row pwasant). செதில் - முன் மேலுள்ள செதிள். செதிள் - செதில், தூளி. செதுகு - கூளம், சருகு, தீங்கு. செதுகுதல் - தவறுதல். செதுக்கணார்தல் - கைம்மிஞ்சுதல். செதுக்கு - செதுக்குகை, பூவாடல், பூதம், மந்தி. செதுக்குச் சித்திரம் - உலோகத்தில் ஊசியைக் கொண்டு செதுக்கும் ஓவியம் (Engraving). செதுக்கை - தழும்பு. செதுத்தல் - ஒளி மழுங்குகை, வற்றுதல், சோர்தல். செதுமகவு - சாபிள்ளை. செதுமொழி - பொல்லாச் சொல். செதும்பு - சேறு, சிலவாக ஓடும் நீர். செதுவல் - பட்டுப்போகை. செத்து - செதுக்குகை, கருகி, ஒத்து. செத்தை - குப்பை. செந்தமிழ் - கலப்பற்ற தூயதமிழ், திருந்திய தமிழ். செந்தமிழ்நாடு - வைகையாற்றின் வடக்கும் மருதயாற்றின் தெற்கும் மரு வூரின் மேற்கும் கருவூரின் கிழக்கும் ஆகிய செந்தமிழ் வழங்கும் நிலம். செந்தலிப்பு - செழிப்பு. செந்தலை - அரைக்கால். செந்தளிர்ப்பு - செழிப்பு, மகிழ்ச்சி. செந்தாது - பொன். செந்தார் - கிளிக்கழுத்தின் செவ் வரை. செந்திரு - இலக்குமி. செந்திருக்கம் - காற்றாடிக் கயிற்றில் ஏறிச் செல்லுமாறு தொடுக்கும் ஓலைச் சுருள், ஓலைக்கடிதத்தின் மூடு சுருள். செந்தில் - திருச்செந்தூர். செந்நிறம் - குறிஞ்சி யாழ்த்திறத் தொன்று, தெளிவு. செந்தீ - கொழுந்துவிட்டெரியும் தீ. செந்து - பிராணி, நரி, நரகத்தொன்று, ஓசை. செந்துருக்கம் - செடிவகை. செந்துருதி - குறிஞ்சி யாழ்ப்பண் களுள் ஒன்று. செந்துறை - பாடற்கேற்ற பா. செந்தூக்கு - நேராகத் தூக்குகை, செங்குத்து, தாளவகை. செந்தூரம் - சிவந்த பொடி. செந்தேன் - உயர்தரமான தேன், அறு வகைத் தூபவருக்கங்களுள் ஒன்று. செந்தொடை - மோனை முதலியன அமையாது வேறுபடத்தொடுக்கும் தொடை, எய்யுங்குறி. செந்நாகம் - கேது. செந்நாய்போதார் - திருவள்ளுவர். செந்நிலை - செங்குத்து. செந்நீர் - இரத்தம், புது வெள்ளம். செந்நெல் - நெல்வகை, பனை யேறிக் கெண்டை. செந்நெறி - நல்ல நெறி. செபம் - பிரார்த்தனை, தந்திரம். செபித்தல் - மந்திரஞ் சொல்லுதல். செப்பட - செவ்விதாக. செப்பட்டை - பறவைச் சிறகு, தோட்பட்டை. செப்பம் - செவ்வை, நடுநிலை, தெரு, நெஞ்சு, இரட்சை. செப்பலோசை - வெண்பாவுக்குரிய ஓசை. செப்பல் - சொல்லுகை. செப்பனிடுதல் - சீர்திருத்துதல். செப்பிடித்தல் - வித்தை செய்தல். செப்பிடிவித்தை - தந்திர வித்தை. செப்பு - சொல், விடை, சிமிழ், நீர் வைக்கும் கரகம். செப்புக்கால் திருச்சிற்றம்பலமுடை யான் - முற்காலத்து வழங்கிய நெல் அளக்கும் கருவி வகை. செப்புதல் - சொல்லுதல். செப்புவழு - விடைக் குற்றம். செமித்தல் - சீரணித்தல், பிறத்தல், மன்னித்தல். செம்பகம் - செம்போத்து (Crow peasant). செம்பகை - யாழ்க்குற்றம். செம்பஞ்சுக்குழம்பு - செம்பஞ்சாற் செய்யப்பட்டு மகளிர் காலில் பூசி யணியப்பட்டு வந்த குழம்பு வகை. செம்படவன் - வலைஞன். செம்படை - மயிரின் ஒருவகை நிறம். செம்பட்டை, செம்பக்கம் - செங் கோண முககோணத்தின் மிக நீளமான பக்கம் (Hypotenuse). செம்பத்தி - உண்மை, அன்பு. செம்பரத்தை - செடிவகை. செம்பாகம் - சரிபாதி, இயற்கைத் தன்மை, இனிமை. செம்பாட்டுநிலம் - செம்மண் பூமி. செம்பாம்பு - கேது. செம்பாலை - பாலைப் பண்வகை. செம்பால் - இரத்தம், சுரோணிதம், சரிபாதி. செம்பியனார் - சங்ககாலப் புலவர் (நற். 102). செம்பியன் - சோழன், முதல் வள்ளல் எழுவரில் ஒருவன். செம்பியன் தமிழ்ப் பேரரையன் செம் பியன் தமிழவேள் - பிற்காலத்துத் சோழர்களால் கொடுக்கப்பட்ட பட்டங்களிலொன்று. செம்பு - தாமிரம், செம்புப் பாத்திரம். செம்புகம் - செண்பகம். செம்புதல் - செம்முதல். செம்புயிர் - கீழாயினாரும் விலங்கும் கொண்டுள்ள உயிர். செம்புலம் - செழிப்பான பூமி போர்க் களம், சுடுகாடு. செம்புலப் பெய்நீரார் - சங்க காலப் புலவர் (குறு. 40). செம்புலியோடு - செம்மறியாடு. செம்புள் - கருடன். செம்புளிச்சை - தேவதாரு. செம்புனல் - இரத்தம், புது வெள்ளம். செம்பூட்சேய் - அகத்தியர் மாணாக் கரிலொருவரும் கூத்தியல் என்னும் நூல் செய்தவருமாகிய ஆசிரியர். செம்பொடி - மகரந்தம். செம்பொத்தி - ஆடை வகை. செம்பொருள் - சிறந்த பொருள், உண்மைப் பொருள், கடவுள். செம்பொருளங்கதம் - வாய்கரவாது சொல்லிய வசைப்பாட்டு. செம்பொறி - அரச முத்திரை. செம்பொன் - சிறந்த பொன். செம்பொன்வரை - மேருமலை. செம்போக்கு - உயிர்கள் பிறவியில் சென்று கொண்டிருக்கை. செம்போதகர் - அருகரில் ஒரு பகுதியார். செம்போத்து - செண்பகம். செம்மகள் - இலக்குமி, அனுபவமற்ற பெண். செம்மல் - தலைமை, தருக்கு, பெருமை யிற் சிறந்தோன், சிவன், அருகன், புதல்வன், பழம்பூ, வாடாப்பூ, நீர். செம்மறி - ஆட்டுவகை. செம்மாத்தல் - இறுமாத்தல், மிக்க களித்தல். செம்மாப்பு - இறுமாப்பு, வீற்றிருக்கை. செம்மானம் - செவ்வானம். செம்மான் - சக்கிலியன். செம்மீன் - ஆருந்ததி, செவ்வாய், திருவாதிரை. செம்மீன் வயிரம் - மீனம்பர். செம்முதல் - மூடுதல், தூர்த்தல். செம்மை - சிவப்பு, செவ்வை, நேர்மை, பெருமை, கேது, கந்தகம். செம்மொழி - நல்வார்த்தை, தொகை மொழியல்லாத ஒரு மொழி. செய - வெற்றி குறிக்குஞ்சொல், 60 ஆண்டில் 28 - ஆவது. செயந்திரபுரம் - திருச்செந்தூர். செயநீர் - சுண்ணாம்பு நவச்சாரமும் கலந்த நீர். செயப்டுபொருள் - வினை முதலின் பொருளின் பயனையடைவது. செயப்பாட்டுவினை - செயப்பாடு பொருளை எழுவாயாகக் கொண்ட வினை. செயமங்களம் - நற்சுழியுள்ள குதிரைச் சாதி செயம் - வெற்றி. செயலறவு - வலியின்மை. செயலூர்க்கோசங்கண்ணனார் - சங்க காலப் புலவர் (அகம். 66). செயலை - அசோகு, பிண்டி. செயல் - தொழில், காவல், ஒழுக்கம். செயவீரமார்த்தாண்டதேவன் - பஞ்ச தந்திரக்கதையைச் செய்யுளி லியற்றியவர். செயற்கை - இயற்கைக்கு மாறானது, உண்டாக்கப்படுவது. செயற்கையூற்று - செய்கை நீர்ப் பீச்சு (Fountain). செயித்தல் - வெற்றியடைதல். செயிரியர் - பாணர். செயிர் - குற்றம், கோபம், போர், வருத்துகை, நோய். செயிற்றியம் - செயிற்றியனாரியற்றிய நாடக இலக்கண நூல். செய் - செய்கை, வயல், சிவப்பு. செய்கடன் - கடமைச் செயல். செய்கரை - வரம்பு, பாலம். செய்கால் - சோலை, விளைநிலம். செய்குன்று - மலைபோல் செய்யப் பட்ட மேடு. செய்கை - செயல், வேலைப்பாடு, ஒழுக்கம், உடன்படிக்கை. செய்க்கடன் - நிலவரி. செய்தல் - இயற்றுதல், சம்பாதித்தல். செய்தி - செய்கை, தொழில், ஒழுக் கம், செய்நன்றி, சங்கதி. செய்தித்தாள் - புதினப் பத்திரிகை. செய்திறம் - மருத யாழ்த் திறத் தொன்று. செய்நன்றி - உபகாரம். செய்பாகம் - மருந்து செய்யும் முறை. செய்ய - சிவந்த, செப்பமான. செய்யல் - ஒழுக்கம், செய்தொழில், காவல். செய்யன் - நேர்மையானவன். செய்யாக்கோலம் - இயற்கையழகு. செய்யாமொழி - ஒருவரால் செய்யப் படாத வேதம். செய்யார் - பகைவர். செய்யாள் - இலக்குமி. செய்யுள் - பாட்டு, காவியம், விளை நிலம். செரித்தல் - சீரணமாதல். செரு - போர், உடல். செருகுதல் - போர், ஊடல். செருகுதல் - சொருகுதல். செருக்கடுத்தல் - அகந்தை கொள் ளுதல். செருக்கம் - மயக்கம். செருக்கு - அகந்தை, மகிழ்ச்சி, ஆண்மை, மயக்கம், செல்வம். செருக்குதல் - அகந்தை கொள்ளுதல், மதர்த்தல், களித்தல், மயங்குதல், மிகுத்தல், நன்கு அனுபவித்தல், தொண்டையை அடைத்தல். செருத்தணி - திருத்தணி. செருத்தல் - அழித்தல், மாண்டு மடிதல். செருத்துணை நாயனார் - அறு பத்து மூவருளொருவர். செருநர் - படைவீரர். செருந்தி - வாட்கோரை, குறிஞ்சி யாழ்த் திறத்தொன்று. செறுந்து - பூவிதழ், செருந்தி. செருப்படை - போர் வீரர்களடங்கிய சேனை. செருப்பு - காலுக்கிடும் செருப்பு, பூழி நாட்டிலுள்ள ஒரு மலை. செருமகள் - துர்க்கை. செருமல் - கனைத்தல், இருமுதல். செருமுதல் - நிரம்புதல், பதிதல், கனைத்தல், விக்குதல். செருவஞ்செய்தல் - மாறுபடுதல். செருவிடை வீழ்தல் - அகழினையும் காவற்காட்டையுங் காத்துப்பட்ட வீரரது வெற்றியைப் புகழும் புறத்துறை. செருவுறுதல் - ஊடுதல். செலசரம் - நீர்வாழ்வன. செலம் - நீர். செலவயர்தல் - செல்லவிரும்புதல். செலவழித்தல் - செலவிடுதல். செலவழுங்குதல் - தலைவன் தலைவியிடமிருந்து பிரிதலைத் தவிர்த்தல். செலவு - போக்கு, ஓட்டம், நடை, பயணம், வழி, ஒழுக்கம், இறந்த காலம், பிரிவு. செலாமணி, செலாவணி - செல்லக் கூடியது, செல்வாக்கு. செலவாணி - நாணயம் (Currency). செலு - மீன் செதிள். செலுத்தி - முன்தள்ளி (Por peller). செலுத்துதல் - செல்லச் செய்தல், எய்தல், ஒட்டுதல், நடத்துதல். செல் - போகை, கடன், மேகம், ஆகாயம், இடி, வேல், கறையான். செல்கதி - புகல், உய்வு. செல்சார் - பற்றுக்கோடு. செல்ல - அகல, முடிய, காலங்கழித்து. செல்லப்பிள்ளை - அருமைக் குழந்தை சொகுசாக வாழ்பவன். செல்வப்பிள்ளை - செல்லப் பிள்ளை. செல்லல் - துன்பம், வெறுப்பு. செல்லாநெறி - ஆகாயம். செல்லாமை - வறுமை, வலி யின்மை. செல்லாவாழ்க்கை - வறுமை வாழ்வு. செல்லாவிடம் - வறுமைக் காலம். செல்லி - செல்வப் பெண். செல்லிடம் - பொருளுள்ள காலம், பலிக்குமிடம். செல்லுதல் - போதல், நிகழ்தல், வீழ்தல், ஆதல், பரவுதல், கழிதல், தணிதல், கிட்டுதல். செல்லுலோசு - தாவரங்களில் உள்ள ஒருவகை இரசாயனப் பொருள் (Cellulose). செல்லூர்க் கோசிகன் கண்ணனார் - சங்க காலப் புலவர் (அகம். 66). செல்வம் - ஐசுவரியம், செழிப்பு, அழகு, நுகர்ச்சி, கல்வி. செல்வன் - செல்வமுள்ளவன் இறைவன், மகன். செல்வாக்கு - செல்லும் மதிப்பு (Influence). செல்வி - இலக்குமி, தலைவி, புதல்வி, செல்வமுள்ளவள். செவம் - செபம். செவி - காது, கேட்டை. செவிகொள்ளுதல் - கேட்டல். செவிச்சொல் - இரகசியமாகச் சொல் லும் சொல். செவிடு - காது கேளாமை, கன்னம், ஆழாக்கில் 1/5. செவிடுபடுதல் - சத்த மிகுதியால் காது கேளாது போதல். செவிடெறிதல் - உயர்ந்த சத்தத்தால் அலைவுறுதல். செவிப்பறை - காதுக்குள்ளிருக்கும் சவ்வு (Drum of the ear). செவிப்பறையறைதல் - பிறர் கேளாது இரகசியமாக ஓதுதல். செவிப்பாடு - காதிற்குகை, கேள்வி யால் வரும் இன்பம். செவிப்புலன் - காதாலறியும் ஓசை, உணர்வு. செவிமடுத்தல் - கேட்டல். செவிமலர் - காதணி வகை. செவியறிவுறுத்துதல் - நல்லறிவு புகட்டுதல். செசியறிவுறூஉ - அரசர்க்கு நல்ல றிவு புகட்டுதலைக் கூறம் புறத் துறை. செவியறை - காதுகேளாதவன். செவியம் - முயல். செவியுறுதல் - காது கொடுத்துக் கேட்டல். செவியுறை - செவியறிவுறூஉ. செவியேறு - கேள்வி. செவிரம் - ஒருவகைப் பாசி. செவிலி - செவிலித்தாய், தமக்கை. செவிலித்தாய் - வளர்ப்புத்தாய். செவுள் - மீனின் சுவாச உறுப்பு. செவேரெனல் - சிவந்திருக்கும் குறிப்பு. செவ்வகத்திண்மம் - கனசதுரம் (Cuboid). செவ்வகம் - நீண்ட சதுரம் (Oblong, rectangle). செவ்வணி - தலை மகற்குத் தலைவி யின் பூப்பு உணர்த்துதற்குறியாகத் தோழி அணிந்து கொள்ளும் செங் கோலம். செவ்வந்தி - பூச்செடிவகை. செவ்வந்திப்புராணம் - எல்லப்ப நாவல ரியற்றிய ஒரு புராணம். செவ்வரக்கு - சாதிலிங்கம். செவ்வரத்தை - செம்பரத்தை. செவ்வரி - சிவந்த ரேகை, நாரை வகை. செவ்வல்லி - செவ்வாம்பல். செவ்வழி - ஒருபண், நல்லவழி. செவ்வன், செவ்வனம் - செவ்வை யாக. செவ்வனிறை - நேர்விடை. செவ்வாயாட்சி - செவ்வாயின் சொந்த ராசிகளான மேட விருச்சிகங்கள். செவ்வாய் - கிரகங்களுள் ஒன்று, கிழமைகளுள் ஒன்று. செவ்வானம் - சிவந்தவானம், செக்கர் வானம். செவ்வி - ஏற்ற சமயம், காட்சி, அரும்பு, பக்குவம், புதுமை, அழகு, வாசனை, தன்மை, தகுதி. செவ்விஞ்சி - எலுமிச்சம் பழச் சாற்றில் ஊறிய இஞ்சி. செவ்விதின் - செவ்வனம். செவ்விது - நேரானது, நன்று. செவ்வியம் - மிளகு. செவ்வெண் - பெயர் வினைகளுள் எண்ணிடைச்சொல் தொக்கு வருந் தொடர். செவ்வே - நன்றாக, நேராக. செவ்வேள் - முருகக்கடவுள். செவ்வை - நேர்மை, மிகுதி, செப்பம். செவ்வைச்சூடுவார் - தமிழில் பாகவத புராணம் பாடிய புலவர் 16ம் நூ. செழிதல் - வளர்தல். செழித்தல் - தழைத்தல், சிறப்புறுதல். செழிப்பு - வளம். செழியன் - பாண்டியன். செழுகம், செழுகை - அட்டை, சாணளந்தான் புழு. செழுசெழுத்தல் - மிகு வளப்ப மாதல். செழுது - செழிப்பு. செழுந்து, செழுமை - செழிப்பு, மாட்சிமை, அழகு. செளிம்பு - களிம்பு. செளைப்பு - சோர்வு. செறல் - வெகுட்சி, கொல்லுகை. செறிதல் - நெருங்குதல், திண்ணிதா தல், அடங்குதல், மறைதல், பொருந் துதல், மிகுதல், புணர்தல். செறித்தல் - சேர்த்தல், இறுக்குதல், அடைத்தல், அடக்குதல், திரட்டுதல், திணித்தல், பதித்தல், அடைவித்தல், மூழ்குதல். செறிப்பு - செறிவு. செறிவன் - அருகன், சலியாதவன். செறிவு - நெருக்கம், கூட்டம், உறவு, உள்ளீடு, தன்னடக்கம். செறு - கோபம், வயல், குளம், பாத்தி. செறுதல் - அடக்குதல், தடுத்தல், சினத்தல், வெறுத்தல், வருத்துதல், அழித்தல், வேறுபடுதல். செறுதொழில் - தீய செயல். செறுநர் - பகைவர். செறும்பு - பகை, பனஞ்சிறாம்பு. செறுவு - வயல். செற்றம் - மன வைரம், வெறுப்பு, கோபம், ஊடற்சினம். செற்றல் - கொல்லுதல், ஈ முட்டை. செற்றார் - பகைவர். செற்று - செறிவு. செற்றுதல் - கொல்லுதல், பதித்தல், செறிதல், அழுந்துதல். செற்றை - சிறுதூறு, கூட்டம். செனககெனனியர் - தாய்தந்தையர். செனகன் - தந்தை. செனனம் - பிறப்பு. செனித்தல் - பிறத்தல். செணு - உற்பத்தியிடம். சென்மம் - பிறப்பு. சென்றஞான்றை - நேற்றையத் தினம். சென்றுதேய்ந்து இறுதல் - வர வர அழகு குறைந்து கொண்டு வரும் நூற்குற்றம். சென்னக்கூநி - இறால் வகை. சென்னப்பட்டினம் - சென்னப்ப நாயகனூராகிய சென்னை நகர். சென்னமல்லையர் - சிவசிவ வெண்பா இயற்றிய புலவர், கி.பி. 1768. சென்னம் - நீர்ப்பறவை வகை. சே சே - சிவப்பு, வெறுப்புக் குறிப்பு, அழிஞ்சில். சேகண்டி - சேமக்கலம். சேகம் - மர வைரம். சேகரம் - கூட்டம், சம்பாத்தியம், மணி முடி, தலை, அழகு, மாமரம். சேகரன் - சிறந்தோன். சேகரித்தல் - சம்பாதித்தல். சேகன் - சேவகன். சேகிலி - வாழை. சேகில் - சிவந்த எருது. சேகு - மரவைரம், திண்மை, சிவப்பு, குற்றம், ஐயம். சேகுணம் - ஒரு தேசம். சேகை - சிவப்பு. சேக்கிழார் - தொண்டை நாட்டு வேளாளரின் குடிப்பெயர், பெரிய புராணம் இயற்றிய ஆசிரியர் (12ம் நூ.). சேக்கை - படுக்கை, தங்குமிடம், பறவைக்கூடு வலை, முலை, உடற்றழும்பு, கடகராசி. சேக்கைப்பள்ளி - சயனம். சேக்கோள் - ஆகோள். சேங்கன்று - ஆண்கன்று. சேங்கொட்டை - சேமரக்கொட்டை. சேசேயெனல் - வெறுப்புக் குறிப்பு. சேடகம் - கேடகம். சேடசேடிபாவம் - ஆண்டானடிமைத் திறம். சேடம் - எஞ்சிய பொருள், பிரசாதம், அடிமை, சிலேட்டுமம். சேடல் - பவள மல்லிகை, உச்சிச் செலுந்தில் என்னும் மரம். சேடன் - கடவுள், பெரியோன், இளைஞன், தோழன், சிருங்கார கருமங்களில் துணைபுரிபவன், ஆதிசேடன், நாகலோகத்தினர், அடியவன். சேடி - செய்பவள், தோழி, தெருச் சிறகு, வித்தியாதரர் உலகு. சேடிகை - பணிப்பெண். சேடித்தல் - எஞ்சுதல். சேடு - பெருமை, திரட்சி, நன்மை, அழகு, இளமை. சேடை - மணமக்கள் மீது அட் சதையிடும் மணச்சடங்கு. சேட்சி - தூரம். சேட்டித்தல் - தொழிற்படுத்துதல். சேட்படுதல் - தூரத்தாதல். சேட்படை - தூரத்திலிருக்கை. சேண - உயர. சேணம் - உயர, மெத்தை, கலணை. சேணி - செடி. சேணிகன் - சேணியன். சேணியர் - வித்தியாதரர். சேணியன் - இந்திரன், துணி நெய் வோன், வித்தியாதரன். சேணுவணன் - ஆகாச கருடன் கொடி. சேணோன் - மலைவாசி, பரணியி லிருந்து விலங்குகள் பயிரையழியா மற் காப்பவன். சேண் - உயரம், மலைமுகடு, ஆகா யம் அகலம், நீளம், நெடுங்காலம். சேதகம் - சிவப்பு, சேறு. சேதம் - கேடு, விரிப்பு, வெட்டு. சேதனம் - பிளவு செய்கை, அறிவுடைப் பொருள். சேதனன் - அறிவுடையோன் ஆன்மா. சேதனை - அறிவு. சேதா - சிவப்புப் பசு. சேதாம்பல் - செவ்வாம்பல். சேதாரம் - தேமா, தேய்வு (Wear and Tear). சேதி - செய்தி, தன்மை, சேதி நாடு. சேதிகை - மூங்கில் நாழியின்பின் புறத்தால் குதிரையுடலிற் குத்தும் வண்ணத் தொழில். சேதித்தல் - வெட்டுதல், அழித்தல். சேதிநாடு - திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்ட நாடு. சேதிபன் - சேதி நாட்டரசன். சேதிமம், சேதியம் - சைன பௌத்தர் பள்ளி, தேவாலயம். சேதிராயர் - திருவிசைப்பாசிரியருள் ஒருவரான, சிவனடியார், தமிழகத் தின் நடுநாட்டரசர், கள்ளர் பட்டங் களிலொன்று. சேது - சிவப்பு, செய்கரை, இராமேசு வரம். சேதுபதி - இராமநாதபுர அரசரின் பட்டப் பெயர். சேதுபுராணம் - நிரம்ப வழகிய தேசிகர் சேதுவைப் பற்றிப் பாடிய புராணம் (16ஆம் நூ.). சேத்தல் - தங்குதல், கிடத்தல், உறங்குதல், எய்துதல். சேத்திரபாலன் - பைரவர். சேத்திரம் - கோயில். சேத்து - சிவப்பு, ஒப்பு, கருத்து. சேந்தங்கண்ணனார் - சங்க காலப் புலவர் (அகம். 350). சேந்தம்பூதனார் - திருவிசைப்பா ஆசிரியருள் ஒருவரும் திருப் பல்லாண்டு இயற்றியவருமாகிய சிவனடியார். சேந்தன் - முருகன், சேந்தனார், திவா கரஞ்செய்வித்த அம்பர் தலைவன். சேந்தன்கீரனார் - சங்க காலப் புலவர் (குறு. 311). சேந்தி - கள், காட்டீஞ்சு. சேந்து - சிவப்பு, தீ, அசோகு. சேந்துதல் - இழுத்தல். சேப்பு - சிவப்பு. சேப்புதல் - தங்குதல். சேமக்கலம் - சேகண்டி, சேமிக்கும் கலம் (Accumulator). சேமஞ்செய்தல் - முடிவைத்தல். சேமத்தேர் - வைப்புத்தேர். சேமநிதி - வைப்புப்பொருள். சேமம் - நல்வாழ்வு, இன்பம், காவல், அரணான இடம், புதைபொருள், ஓலைச்சுவடியின் கட்டு, பகைவர் அம்பு தன்மேற்படாமல் செய்யும் செய்கை. சேமரம் - அழிஞ்சில். சேமவில் - துணைவில். சேமன் - போக்கிலி. சேமா - எருது. சேமாறி - எருத்தின் விதையடிப் போன். சேமித்தல் - போற்றி வைத்தல், புதைத்து வைத்தல், பரிகரித்தல். சேமியா - பலகாரஞ் செய்ய உதவும் ஒருவகை உணவுப்பொருள். சேம்பு - ஒருவகைச் செடி. சேயம் - கரை. சேயவன் - செவ்வாய், முருகன். சேயன் - செந்நிற முள்ளவன், தூரத்திலுள்ளவன். சேயாறு - தொண்டை நாட்டிலுள்ள செய்யாறு. சேயிழை - பெண். சேயோன் - முருகன், தூரமாயிருப் பவன். சேய் - சிவப்பு, முருகன், தூரம், இளமகள், தலைவன். சேய்மை - தூரம். சேர - கூட, முழுதும். சேரங்கை - சிறங்கை. சேரமானெந்தை - சங்க காலப் புலவர் (குறு. 22). சேரமான் - சேரநாட்டரசன். சேரமான் இளங்குட்டுவன் - சங்க காலப் புலவர் (அகம். 153). சேரமான் கணைக்காலிரும் பொறை - சங்க கால அரசன் (புறம். 74). சேரமான் கோட்டம் பலத்துத்துஞ் சியமாக் கோதை - சங்க கால அரசன் (புறம். 245). சேரமான் பெருமாணயனார் - ஆதியுலா பொன்வண்ணத்தந்தாதி முதலிய நூல்களின் ஆசிரியரான சேர அரசர். சேரமான்றோழர் - சேரர் நண்பராகிய சுந்தரமூர்த்தி நாயனார். சேரலன் - சேரன், பகைவன். சேரலி - நெல். சேரல் - சேரன். சேரன் - சேரமான். சேரார் - பகைவர். சேரி - ஊர், முல்லை நிலத்தூர், தெரு. சேரிகை - சேரி. சேரிடுதல் - பிணைத்தல். சேரிப்பரத்தை - ஊர்ப்புறச் சேரியில் வாழும் பரத்தை. சேருகம் - நாகணவாய்ப்புள். சேரை - சாரைப்பாம்பு, சிறங்கை. சேர் - திரட்சி, ஒரு அளவை. சேர்கொடுத்தல் - காட்டிக் கொடுத் தல். சேர்க்கை - கூடுகை, கூட்டுறவு, புணர்ச்சி. சேர்ச்சி - சேர்க்கை. சேர்தல் - கலத்தல், கூடுதல். சேர்ந்தார்க்கொல்லி - நெருப்பு. சேர்பு - வாழிடம், வீடு. சேர்ப்பன் - நெய்தல், நிலத்தலைவன், வருணன். சேர்ப்பு - இடம், கடற்கரை, கலப்பான பொருள். சேர்வை - கலவை, கூட்டுறவு, கள்ளர், மறவர், அகம்படியார் பட்டப்பெயர். சேலம் - ஆடை, ஓர் ஊர். சேலவன் - திருமால். சேலேகம் - சிந்தூரம். சேலை - மாதர் ஆடை, அசோகு. சேல் - கெண்டைமீன். சேவகம் - யானைக் கூட்டம், நித்திரை, ஊழியம், வீரம். சேவகன் - வீரன், ஊழியஞ் செய் வோன். சேவடி - சிவந்தபாதம். சேவணர் - சேவணநாட்டார். சேவதக்குதல் - சேமாறுதல். சேவல் - பறவைகளின் ஆண், கருடன், முருகக் கடவுளுக்குரிய மயில், ஆண்குதிரை, காவல். சேவல்காத்தல் - பயிர்களுக்குப் புள் ளாலும் விலங்காலும் கேடு விளை யாமற் காத்தல். சேவற்கொடியோன், சேவலன் - முருகக்கடவுள். சேவனை - ஊழியத்தொழில். சேவித்தல் - பணி செய்தல், வணங் குதல். சேவை - மேலிடம். சேறல் - செல்லுதல். சேறாடி - ஒருவகை விருது. சேறு - சகதி, குழம்பு, திருவிழா, சாரம், இனிமை, கள், பாகு. சேறைக் கவிராசபிள்ளை - காளத்தி நாதருலாப் பாடியவர் (16ம் நூ.). சேனம் - மருந்து. சேனன் - பழைய பட்டப் பெயர். சேனாதிபதி, சேனாபதி - படைத் தலைவன். சேனாதிராச முதலியார் - நல்லை வெண்பாச் செய்த யாழ்ப்பாணப் புலவர் (1750 - 1840). சேனாமுகம் - முற்படை 3, தேர் 3, யானை 3, குதிரை 15, காலாள் கொண்ட ஒரு படைத்தொகை. சேனாவரையம் - தொல்காப்பியச் சொல்லதிகாரத்துக்குச் சேனாவரை யர் செய்த உரை. சேனாவரையர் - தொல்காப்பியச் சொல்லதிகாரத்துக்கு உரை செய்த ஆசிரியர் (13ம் நூ.). சேனை - படை, ஆயுதம், கூட்டம், தெரு, கருணைவகை, குழந்தை, பிறந்ததும் ஊட்டும் இனிப்புப் பால். சேனையுள்படுநன் - காளன் ஊதி அரச ஆணையைச் சேனைக்கு அறிவிப்போன். சை சை - இகழ்ச்சிக் குறிப்பு. சைகதம் - மணல், மணற்கரை. சைகை - சைக்கினை. சைக்கினை - சமிக்கை. சைசவம் - இளமை. சைதனியம் - அறிவு. சைத்தியம் - பௌத்தர் ஆலயம், குளிர்ச்சி. சைத்தியன் - சுக்கிரன். சைத்திரி - சித்திரா பூரணையில் நடத்தப்படும் யாகம். சைநாமாமுனிவர் - உபோந்திரா சிரியர்; சிநேந்திரமாலை செய்தவர். சைந்தவம் - சிந்துதேசம், தலை. சைமன்காசிச் செட்டி - தமிழ்ப் புலவர் (Tamil Plutarch) என்னும் நூல் செய்த இலங்கையர் (1807 - 1861). சைமினி - பூரவ மீமாஞ்சையின் ஆசிரியரான ஒரு முனிவர். சையகம் - படுக்கை. சையம் - மலை, கல், காவிரிநதி உற்பத்தியாகும் மலை, செல்வம். சையுத்தம் - சையோக சம்பந்தம். சையெனல் - இகழ்ச்சிக்குறிப்பு. சையோகம் - கலக்கை, புணர்ச்சி. சைரிபம் - எருமை. சைலம் - மலை. சைவக்குருக்கள் - பார்ப்பனரல்லாத சிவதீக்கை பெற்ற குருக்கள். சைவசமயநெறி - மறைஞான சம்பந்தர் இயற்றிய ஒரு நூல். சைவசித்தாந்தம் - சித்தாந்த சைவம். சைவசூக்கம் - சிவபிரானுக்குரிய வேதமந்திரம். சைவம் - சிவமதம், இளமை. சைவரல் - இகழல். சைவலம் - ஒருவகைப் பாசி. சைவன் - சிவனை வழிபடுவோன். சைனம் - சமண மதம். சைனன் - அருகக்கடவுள், புத்தன். சைனியம் - சேனை. சொ சொகினம் - நிமித்தம், சகுனம். சொகுசா - துத்த நாகமும் செம்பும் கலந்த உலோகம். சொகுசு - சுகானுபவம். சொக்கட்டான் - கவறு உருட்டி ஆடும் தாய விளையாட்டு. சொக்கப்ப நாவலர் - தஞ்சை வாணன் கோவை உரையாசிரியர் 18ம் நூ.) சொக்கப்பனை - கார்த்திகைத் திருவிழாவில் கோயில்களுக்கு முன் எரிக்கும் பனையோலைக்கூடு. சொக்கன் - சிவன், அழகன், கையாள். சொக்காய், சொக்கர் - சட்டை. சொக்கிடுதல் - மாயப்பொடி தூவுகை. சொக்கு - மயக்கம், பொன். சொங்கு - குற்றம். சொச்சம் - மிச்சம், சில்வானம், சுத்தம். சொடக்கு - சோம்பல், கைநொடிப் பொழுது. சொட்டான் - குற்றமுள்ளவன். சொட்டு - துளி, துண்டு, குற்றம். சொட்டுதல் - துளித்தல், கொத்துதல். சொட்டை - பார்ப்பனர் பழங்குடி களுள் ஒன்று, வாள், சொட்டைச் சொல். சொட்டையாளன் - படைவீரன். சொண்டன் - செருக்கள். சொண்டு - பறவை மூக்கு, உதடு, செருக்கு. சொத்தி - நொண்டி, அங்கவீனம். சொத்து - பொன், உடைமை. சொத்தை - ஊனம், புழு வண்டு முதலியன அரித்தது. சொத்தைப்பல் - பழுதான பல். சொந்தம் - தனக்குரியது. சொப்பட - நன்றாக. சொப்பனம் - கனவு. சொம் - சொத்து. சொம்பு - அழகு. சொரசொரப்பு - கரடுமுரடு. சொரி - தினவு. சொறிதல் - உதிர்தல், மிகுதல், பொழி தல், சுழலுதல். சொருகுதல் - சிக்கிக் கொள்ளுதல், மறைத்தல். சொரூபம் - இயற்கைத் தன்மை, வடிவம், அழகு. சொரூபானந்தம் - தமிழிலுள்ள ஒரு வேதாந்த நூல். சொரூபானந்தர் - தமிழில் அத்துவித நூல்கள் பல இயற்றிய ஒரு பெரியார் (15ஆம் நூ.) சொரூபானுபூதி - கடவுளோடு உயிர் ஐக்கியமுற்று நிற்கும் நிலை. சொர்க்கம் - தேவருலகு, மாதர் தானம். சொர்ணம் - பொன். சொலவு - சொல்லுகை. சொலி - மர முதலியவற்றின் தோல். சொலித்தல் - உரித்தல், பேர்த்தல், விளங்குதல், எரிதல். சொலிய - நீங்க, பெயர. சொல் - மொழி, பேச்சு, புகழ், சத்தம், நெல். சொல்லகத்தியம் - இப்போது வழக்கில் இல்லாத ஓர் இசை நூல் (சிலப். அ. உரை) சொல்லணி - சொல்லினோசை முதலியன இன்பப்பட அமைக்கும் அலங்காரம். சொல்லதிகாரம் - சொல்லின் பாகுபாடு செய்கை முதலிய வற்றைப் பற்றிக்கூறும் இலக்கணப் பகுதி. சொல்லலங்காரம் - சொல்லணி. சொல்லற்பாடு - சொல்லப்படுகை. சொல்லறிகணை - மறைந்துள்ள இலக்கைச் சத்தத்தைக் கேட்டே எய்யுங் கணை. சொல்லாக்கம் - சொற்களைச் செய்து கொள்கை. சொல்லாடுதல் - பேசுதல். சொல்லாட்டி - திறமையாகப் பேசுபவள். சொல்லனாந்தம் - பிரபந்தத் தலைவனது இயற்பெயரையடுத்துக் கேடு பயக்கும் அமங்கலச் சொல்லைப் புணர்த்துப் பாடுவது. சொல்லறித்தல் - பேச்சினை மீறுதல். சொல்லுதல் - பேசுதல், அறிவித்தல், கட்டளையிடுதல், களைதல். சொல்லுருபு - வேற்றுமை உருபுகட்குப் பதிலாக வழங்கும் சொல். சொல்லெச்சம் - சொல் எஞ்சி நிற்பது. சொல்லேருழவர் - மந்திரிகள், புலவர். சொல் விழுக்காடு - பொருளின்றிக் கூட்டுஞ் சொல். சொல்விளம்பி - தன்னை மறந்து பேச செய்யும் கள். சொல்வென்றி - வாதத்தில் வெல்லுகை. சொறி - தினவு, சுரசுரப்பு. சொறிகரப்பான் - நோய் வகை (Scurvy) சொறிதல் - நகத்தால் தேய்த்தல். சொறுண்டுதல் - சொறிதல். சொற்கம் - சொர்க்கம். சொற் காத்தல் - புகழைப் போற்றுதல். சொற்காரி - எழுவகை முகிலில் ஒன்று. சொற்கோ - திருநாவுக்கரசு நாயனார். சொற்சோர்வு - சொற்பிழை, பேச்சில் தடுமாறுகை. சொற்பதம் - சொல்லளவு, சொல்லாற் குறிக்கப்படும் நிலை. சொற்பம் - அற்பம். சொற்பழுத்தவர் - நாவன்மையுடை. சொற்பாடு - உடன்படிக்கை. சொற்பானு - இராகு. சொற்பு - சொல்லுகை. சொற்புள் - வருங்குறியைத் தெரி விக்கும் காக்கை. சொற்பொழிவு - பிரசங்கம். சொற்றல் - சொல்லுகை. சொன்மடந்தை - சரசுவதி. சொன்மாலை - புகழ்ச்சி. சொன்றி - சோறு. சொன்னகாரன் - தட்டான். சொன்னம் - பொன். சொன்னல் - சோளம், இரும்பு. சொன்னி - நறுமணம். சோ சோ - வாணாசுரன் நகர், அரண். சோகம் - துக்கம், சோம்பல் கூம்புகை, உணவில் வெறுப்புண்டாகும் மிகுந்த காமநோய், திரள், அசோகம், ஒட்டகம், துடை, சோகம், பாவனை. சோகம்பாவனை -கடவுளும் உயிரும் ஒன்று எனப் பாவிக்கை. சோகாப்பு - துன்பப்படுதல். சோகி -பலகறை, பாம்பைப் பிடித் தாட்டி வயிறு வளர்க்கும் தொட்டி யக்காரப் பிச்சைக்காரன். சோகு - பிரகாசம். சோகை -முகம் வெளுக்கச் செய்யும் நோய். சோக்கு - ஆடம்பரம். சோங்கு - நாரை, கானாறு சூழ்ந்த மலைச்சோலை, மரக்கலம். சோசம் - தென்னை. சோசித்தல் - வற்றுதல், கவலைப் படுதல், சோர்வடைதல். சோசியம் - சோதிடம். சோடசகலை - உடலிற் சக்தி பரிணமித்து நிற்கும் பதினாறு யோகத் தானங்கள். சோடசம் - பதினாறு. சோடசி - ஒரு யாகம். சோடசோபசாரம் - 16 வகை உப சாரங்கள்; தவிசளித்தல், கைகழுவ நீர் கொடுத்தல், கால் கழுவ நீர் கொடுத்தல், முக்குடி நீர்கொடுத்தல், நீராட்டல், ஆடைசாத்தல், முப்புரி நூல் கொடுத்தல், தேய்வை பூசல், மலர் சாத்தல், மஞ்சளரிசி தூவல், தூபங்காட்டல், விளக்கிடல், கற்பூர மேற்றல், அமுதம் படைத்தல், அடைக்காய் கொடுத்தல், மந்திர மலரால் அர்ச்சித்தல். சோடல் - புடைவை. சோடி - இரட்டை, ஒப்பு. சோடித்தல் - அலங்கரித்தல். சோடிப்பு - அலங்கரிக்கை, கற்பனை. சோடினை - அலங்கரிக்கை. சோடு - காற்கவசம், கவசம், ஒரு அளவு, ஒப்பு, பறவை, விலங்கு களின் ஆண் பெண் இரட்டை களுள் ஒன்று. சோடை - வறட்சி, அறிவிலி, விருப்பம், மகிழ்ச்சி, தொழில், வண்டிப் பாதை. சோட்டை - பேராவல். சோணகிரி, சோணசைலம் - திருவண்ணாமலை. சோணப்பூ - செம்பருத்திப் பூ. சோணம் -சிவப்பு, பொன். சோணாடு - சோழ தேசம். சோணாட்டு முகையலூர் சிறு கருந்தும் பியார் - சங்க காலப் புலவர் (புறம். 181) சோணாலு - தாய விளையாட்டில் விழும் ஒரு நல்விருத்தம். சோணி - இரத்தம். சோணிதபுரம் -வாணாசுரம் நகர். சோணிதம் - இரத்தம், சிவப்பு, சுரோணிதம். சோணேசன் -திருவண்ணாமலைச் சிவன். சோணை - காதினடித் தண்டு, ஒரு நதி, திருவோணம். சோதகம் - தலைப் பெயர் மழை. சோதகன் -கற்றவன். சோதரன் -உடன் பிறந்தவன். சோதரி - உடன் பிறந்தவள். சோதனம் - நிமித்தம், சோதிக்கை. சோதணி - துடைப்பம், செத்தை. சோதனை - பரீட்சை, குறிப்பு, ஆராய்ச்சி. சோதனைக்குழாய் - இரசாயனப் பொருள்களைச் சோதிக்கும் கண்ணாடிக்குழாய் (Test tube). சோதி - ஒளி, கிரணம், தீபம், தீ, சூரியன், நட்சத்திரம், அருகன், சுவாதி நாள். சோதி சம்பாதம் - சுவாதி நட்சத் திரமும் சூரியனும் கூடும் அசுப நாள். சோதிட சார்பபௌமர் - சாதக அலங்காரம் செய்தவர் (17ம் நூ.) சோதிடம் - கிரகங்களின் பலன்களை அறிவிக்கும் நூல். சோதிடர் - சோதிட வல்லவர். சோதிட்டோமம் - சோமயாக வகை. சோதிமண்டலம் - ஒளி வட்டம், வான வட்டம். சோத்தம் - இழிந்தோர் செய்யும் வணக்கம். சோத்திரம் - காது. சோத்திரியர் - வேத அத்தியயனஞ் செய்த பிராமணர். சோந்தை - சொந்தம். சோபகிருது - 60 ஆண்டில் 37 ஆவது. சோபம் - இரக்கம், கள், ஆயாசம், அழகு, பத்துக்கோடி, கோடானு கோடி. சோபனமடித்தல் - கும்மியடித்தல். சோபனடம் - வாழ்த்து, கபச்செய்தி, நல் நிமித்தம். சோபாலிகை - அடம்பு. சோபானம் - படிக்கட்டு. சோபான வகை - பாரம்பரியம். சோபித்தல் - பிரகாசித்தல், அலங் காரமாக இருத்தல். சோபை - அழகு, ஒளி, நோய் வகை. சோப்பு - அடித்தல். சோமகர், சோமகேசர் - பாஞ்சால அரசர். சோமகுண்டம் - காவிரிப்பூம்பட்டினத் திலிருந்த ஒரு புண்ணிய தீர்த்தம். சோமசம்புசிவாசாரியார் - சைவ பத்ததி ஒன்று இயற்றிய ஆசிரியர் (16ஆம் நூ.) சோமசுந்தரன் - மதுரைக் கோயிலி லுள்ள சிவன். சோமசூத்திரம் - சிவன் கோயிலில் அபிடேக நிர் விழும் கோமுகம். சோமசேகரன் - சந்திரனை அணிந்த சிவன். சோமதிசை - வடதிசை. சோமபானம் - சோம யாகத்தில் சோமச் சாறு குடிக்கை, சோமயாகம் கள். சோமம் - ஒருவகைப் பூண்டு. சோமராகம் - பாலைப் பண்களுள் ஒன்று. சோமவட்டம் -அமுதம் பெருகுமிட மென்று கருதப்படும் புருவமத்தி. சோமவாரம் - திங்கட்கிழமை. சோமன் - சந்திரன், குபேரன், ஒரு வள்ளல், கர்ப்பூரம், ஆடை. சோமன்புத்திரி - நருமதை. சோமாறி - சோம்பேறி. சோமாற்கந்தன் - சோமாஸ்கந்தன். சோமி - துர்க்கை, காளமேகப் புலவர் காலத்திலிருந்த தமிழ்வல்ல தாசி. சோமுகன் - திருமாலாற் கொல்லப் பட்ட ஒரு அசுரன். சோம்பல் - மயக்கம், ஊக்கமின்மை. சோம்பு - மடிமை மந்தம், பெருஞ்சீரகம் (anise). சோம்பேறி - சோம்பலுள்ளவன். சோயா அவரை - ஒருவகை அவரை. சோரம் - களவு, வஞ்சனை, வியபி சாரம். சோரல் - தளர்தல், கெடுகை, சொரிதல். சோரன் - வியபிசரிப்பவன். சோரி - இரத்தம். சோரியிளநீர் - செவ்விளநீர். சோருதல் - வடிதல், வாடுதல். சோர், சோர்ச்சி - வஞ்சகம். சோர்தல் - தளர்தல், மூச்சித்தல், நழுவுதல், வடிதல், கசிதல், கழலு தல், தள்ளாடுதல், விட்டொழிதல். சோர்பதன் - தளர்ந்த காலம். சோர்பு - சோர்வு. சோர்பொழுது - மாலைக்காலம். சோர்வு - தளர்ச்சி, மெலிவு, மறதி, இழுக்கு. சோலி - காரியம். சோலுதல் - அபகரித்தல், மீட்டுக் கொள்ளுதல். சோலை - மரங்கள் செறிந்து நிழல் செய்யுமிடம். சோலைமலை - அழகர் மலை. சோழகம் - தென்காற்று. சோழமண்டல சதகம் - ஆன்ம நாத தேசிகரியற்றிய நூல் (17 ஆம் நூற்.) சோழமண்டலம் - சோழநாடு. சோழம் - சோழநாடு. சோழன் - சோழ அரசன். சோழன்செங்கண்ணான் - களவழி நாற்பது என்ற நூலின் பாட்டுடைத் தலைவனான சோழன். சோழன் நல்லுருத்திரனார் -சங்க காலப் புலவர் (புறம். 73, 75). சோழி - பலகறை, சோகி. சோழிச்சி - சோழநாட்டுப் பெண். சோழியப்பாரை - மண்வெட்டி வகை. சோழியப் பிராமணன் - முன்குடுமிப் பார்ப்பான். சோழியப்பை - பரதேசிகள் பிச்சை எடுக்கும் பை. சோழியன் - சோழநாட்டான். சோளகம் - குடுமி வைக்கும் சடங்கு. சோளம் - தானிய வகை. சோளிகை - பிச்சைக்காரன் பை. சோறு - அன்னம், சோற்றி, முத்தி, பரணி நாள். சோறுமாட்டு - பழைய வரி வகை. சோறுவாய்த்தல் - செஞ்சோற்றுக் கடன் கழித்தல். சோற்றமலை - சோற்றுக்கட்டி. சோற்றி - மரத்தினுள் வெளிறு. சோற்றுக்கடன் - உண்ட சோற் றுக்குக் கைம்மாறாகச் செய்யும் நன்றி. சோற்றுத்தடி - சோற்றுக் கட்டி. சோற்றுத்துருத்தி - உடம்பு. சோனகச்சிடுக்கு - மகளிர் அணி வகை. சோனகம் - பதினெண் மொழிகளில் ஒன்று. சோனகன் - யவனதேசத்தான். சோனம் - மேகம். சோனாமேகம் - விடாமழை. சோனை - கார்மேகம், விடாமழை, திருவோணம். சௌ சௌகந்தி, சௌகந்திகம் - மாணிக்க வகை. சௌகரியம் - வசதி, சுகம், மலிவு. சௌசம் - சுத்தம். சௌசன்னியம் - இனிய குணம். சௌளத்திராமணி - இந்திரனைக் குறித்துச் செய்யும் யாகம். சௌந்தரியம் - அழகு. சௌந்தரீயலகரி - வீரைக் கவிராச பண்டிதர் சங்கராச்சாரியார் செய்தி வடமொழிச் சௌந்தரலகரியின் மொழிபெயர்ப்பாகத் தமிழில் செய்த நூல். சௌபலன் - சகுனி. சௌபாக்கியம் - சிறுபெண்கள், மாங் கலியந் தரித்த மகளிர் இவர்களின் பெயர்க்கு முன் வழங்கும் ஒரு மங்கலச் சொல். சௌபானம் - படிக்கட்டு. சௌப்திகம் - துயில்வோரை எதிர்த்துக் கொல்லுகை. சௌமன் - புதன். சௌமிய - 60 ஆண்டில் 43 ஆவது. சௌமியம் - அழகு, சாந்தம். சௌரமாசம் - சூரிய கதியினால் ஏற் படும் மாதம். சௌரமானம் - சூரிய கதியைக் கொண்டு மாத வருடங்களை அளவிடும் முறை. சௌரம் - சூரியனை வழிபடுஞ் சமயம். சௌராட்டிரம் - கத்தியவார் என்று இக்காலம் வழங்கும் தேசம். சௌரி - சனி, யமன், கன்னன், ஆறு, திருமால். சௌகரியம் - களவு, வீரம். சௌவீராஞ்சனம் - அண்டிமனி சல்பைடு. சௌளம் - முடிவாங்குகை. ஞ ஞஃகான் - ஞ என்னும் எழுத்து. ஞஞ்ஞை - மயக்கம். ஞண்டு - நண்டு, கற்கடகராசி. ஞத்துவம் - அறியுந் தன்மை. ஞமர்தல் - ஞெமிர்தல். ஞமலி - நாய், மயில். ஞமன் - யமன், துலைக்கோலின் சமன்வாய். ஞயம் - இனிமை. ஞரலுதல் - முழங்குதல், ஒலித்தல். ஞரிவாளை - சிறுதேக்கு. ஞலவல், ஞவல் - மின்மினிப்பூச்சி. ஞறா - மயிற்குரல். ஞா ஞாங்கர் - பக்கம், வேலாயுதம், மேல், அங்கே, முன், இனி. ஞாஞ்சில் - கலப்பை, மதிலுறுப்பு. ஞாடு - நாட்டுப்பகுதி. ஞாட்பு - போர்க்களம், படை, கூட்டம், கனம், வலிமை. ஞாண் - நாண். ஞாதம் - அறியப்பட்டது. ஞாதர் - உயிர். ஞாதி - தாயாதி, சுற்றம். ஞாதுரு - அறிதற்கருத்தாவாகிய உயிர். ஞாத்தல் - கட்டுதல், பொருந்துதல். ஞாபகம் - நினைவு, குறிப்பிப்பது, நற்பொருள். ஞாயம் - நியாயம். ஞாயில் - கோட்டையின் ஏவறை. ஞாயிறு - சூரியன், ஞாயிற்றுக் கிழமை. ஞாய் - தாய். ஞாலம் - பூமி, உலகம், உயர்ந்தோர், வித்தை. ஞாலித்தட்டு - ஆபரண வகை. ஞாலுதல் - தொங்குதல், பொழுது சாய்தல். ஞாழழல் - புலிநகக் கொன்றை, கோங்கு, குங்குமம் ஆண்மரம். ஞாழ் - யாழ். ஞாளம் - தண்டு. ஞாளி - நாய், கள். ஞாளி ஊர்தி - வைரவன். ஞாறுதல் - தோன்றுதல், மணம் வீசுதல். ஞாற்சி - தொங்குகை. ஞாற்று - ஞாற்சி. ஞாற்றுதல் - தொங்குவிடுதல். ஞானகாண்டம் - வேதத்தில் ஞான முணர்த்தும் பகுதியான உபநிட தங்கள். ஞானகாண்டி - தான் செய்யும் நற்காரியங்களிற் பற்றின்றித் தானே அவற்றிற்குச் சாட்சி என்னும் உணவினன். ஞானகிதம் - தெரிந்து செய்யும் பாவம். ஞானக்காட்சி - ஞானதிருட்டி, பதிஞானம். ஞானக்கூத்தர் - திருவையாற்றுப் புராணம் பாடியவர் (16ஆம் நூ.), விருத்தாசல புராணமியற்றியவர், (17ஆம் நூ.) ஞானக்கூத்தன் - சிவன். ஞானசமாதி - நிட்டையின் பொருட்டு நேராக நிமிந்திருக்கும் நிலை. ஞானசம்பந்தர் - திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார், தருமபுர மடத்தாபகரும் சிவசொரூபசாரம், முத்தி நிச்சயம் முதலிய நூல்கள் செய்த வருமாயுள்ளவர் (15ம் நூ.) ஞானசரிதன் - ஞான நெறியிலே ஒழுகுபவன். ஞானசாரம் - ஒரு சைவ சித்தாந்த நூல், அருளாளப் பெருமாள் எம்பெரு மானார் தமிழிற் செய்த வைணவ நூல். ஞானசித்தன் - மோட்ச சாதனத்தில் ஞானம் கைவரப் பெற்றோன். ஞானசுகம் - தியானத்தால், இறைவ னோடு இரண்டறக் கலந்து நிற்கும் ஞானியின் பேரின்பம். ஞானதிருட்டி, ஞானதிட்டி - ஞானத்தாலறிகை. ஞானத்தில்ஞானம் - ஞானநிட்டை, கூடுகை. ஞானத்தில்யோகம் - ஞானத்தைச் சிந்தித்துத் தெளிகை. ஞானத்திற்கிரியை - ஞான நூற் பொருளைச் சிந்திக்கை, ஞான நூற் பொருளைக் கேட்கை. ஞானத்திறைவி - சரசுவதி. ஞானஸ்தானம் - கிறித்து மதக் கிரியை. ஞானநிட்டை - உயிர் இறை வனோடு ஒன்றிநிற்கும் அனுபவ நிலை. ஞானபரன் - கடவுள். ஞானபாகை - ஞானகாண்டம். ஞானபாதம் - பதி பசு பாசங்களைப் பற்றிக் கூறும் பகுதி. ஞானபூசனை - ஞானநிலையில் நின்று ஞான நூல்களை ஓதல் ஒதுவித்தல் முதலியவற்றைச் செய்தல். ஞானப்பிரகாசர் - திருமழுவாடிப் புராணம் பாடியவர் (15ஆம் நூ.), சிவஞான சித்தியாரின் உரைகாரருள் ஒருவர் (18ஆம் நூ.) ஞானப்பூங்கோதை - திருக்காளத் தியிலுள்ள உமாதேவி. ஞானமுத்திரை - சின்முத்திரை. ஞானமூர்த்தி - கடவுள், சிவன், சரசு வதி. ஞானம் - அறிவு, கல்வி, தத்துவ நூல். ஞானயாகம் - ஓதல், ஓதுவித்தல், தெளிதல், தெளிவித்தல், மனத்தில் தரித்தல் என்ற ஞான மார்க்கத்துக்குரிய யாகம். ஞானரக்கை - வாசனையற்றமனம் தத்துவஞானத்தில் அழுந்தி நிற்கை. ஞானவதி - தீட்சைவகை. ஞானவரோதயபண்டாரம் - உபதேச காண்டம் இயற்றியவர் (16ஆம் நூ.) ஞானவல்லியம் - கிணறு முதலிய வெட்டுதற்குரிய நிலத்தின் இயல் பினைக் கூறுங் கூவனூல். ஞானவாசிட்டம் - வடமொழியோக வாசிட்டத்தினின்று வேம்பத்தூர் ஆளவந்தாரால் தமிழில் செய்யு ளாக மொழி பெயர்க்கப்பட்ட நூல். ஞானவுத்திரி - ஞானவதி. ஞானன் - பிரமன். ஞானாமிருதம் - வாகீச முனிவர் செய்த ஒரு சைவ சித்தாந்த நூல். ஞானி - ஞானமுள்ளவன், அருகன், சேது, சேவல். ஞானேந்திரியம் - மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐம் பொறிகள். ஞான்றஞாயிறு - பொழுதுபடும் நேரம். ஞான்று - காலத்தில், நாள். ஞான்றுகொள்ளுதல் - கழுத்தில் சுருக்கிட்டுச் சாதல். ஞான்றை - ஞான்று. ஞிஞி ஞிமிர் - ஒலி. ஞிமிர்தல் - வண்டு ஒலித்தல், நிமிர்தல். ஞிமிறு - தேனீ, வண்டு. ஞெ ஞெகிழம், ஞெகிழி - கடைக் கொள்ளி, தீக்கடை கோல், தீ, சிலப்பு. ஞெகிழ்தல் - கழலுதல், தளர்தல், மலர்தல், உருகுதல், மெலிதல், சோம்புதல். ஞெண்டு - நண்டு, கடகராசி, கிண்டுதல். ஞெமர்தல் - பரத்தல், நிறைதல். ஞெமலி - மகம். ஞெமல் - திரிதல், சருகு. ஞெமன்கோல் - துலாக்கோல். ஞெமிடுதல் - கசக்குதல். ஞெமிதல் - நெரிசல். ஞெமிய - மறைய. ஞெமிர்தல் - பரத்தல், தங்குதல், முற்றுதல், ஒடிதல். நெரிதல். ஞெமுக்குதல் - நெருக்கி வருத் துகை. ஞெமுங்குதல் - அழுந்துதல், செறிதல். ஞெமை - மர வகை. ஞெரல் - ஒலி, விரைவு. ஞெரி - முறிந்ததுண்டு. ஞெரேரெனல் - பொதுக்கெனல். ஞெலி - கடையப்பட்ட மூங்கில். ஞெலிகோல் - தீக்கடை கோல். ஞெலிதல் - தீக்கடைதல். ஞெலுவன் - தோழன். ஞெளி - நெளி. ஞெளிர் - உள்ளோசை. ஞெள்ளல் - சோர்ப்பு, குற்றம், வீதி, மேன்மை, விரைவு, உடன்படுகை, மிகுதி, ஒலிக்கை, பூசல். ஞெள்ளுதல் - பள்ளமாதல், ஒலித்தல், உடன்படுதல். ஞெள்ளை - நாய். ஞே ஞேயம் - அறியப்படும் பொருள், சிநேகம், கடவுள். ஞொ ஞொள்குதல் - மெலிதல், குறைவு படுதல், சோம்புதல், அஞ்சுதல். ஞொள்ளெனல் - ஒலிக்குறிப்பு. த தகசு - நீர்நாய் (Badger). தகடு - தட்டையான வடிவு, இலை, பூவின் புறவிதழ், உலோகத்தட்டு. தகடூர் - அதியமானின் தலைநகர், (சேலம் ஜில்லாவிலுள்ள தருமபுரி). தகடூர் யாத்திரை - அதியமான் மீது பெருஞ் சேரலிரும்பொறை படையெடுத்துச்சென்று புரிந்த நிகழ்ச்சி கூறும் தமிழ் நூல். தகணி - துந்துபி. தகணேறுதல் - தழும்புபடுதல், முற்றுதல். தகணை - உலோகக் கட்டி. தகண் - தடை, தழும்பு, பழக்கம். தகப்படுதல் - மேன்மை, தங்குதல். தகப்பன் - தந்தை. தகப்பன்சாமி - முருகக்கடவுள். தகப்பன்மார் - முதுவர் என்னும் மலைச்சாதியாரின் பட்டப்பெயர். தகம் - சூடு, எரிவு. தகரஞாழல் - மயிர்ச்சாந்து. தகரம் - வாசனை மரவகை, மயிர்ச் சாந்து, வாசனை, வாசனை, இருதயத் தின் உள்ளிடம், வெள்ளீயம். தகரவித்தை - இறைவனை, இருதய ஆகாசத்தில் வைத்துத் தியானம் செய்தல். தகராறு, தகரார் - வாதம், பிணக்கு. தகரை - செடிவகை. தகர் - ஆல், செம்மறிக்கடா, ஆண் யானை, ஆண்சுறா, ஆண்யாளி, வெள்ளாடு, மேட்டு நிலம். தகர்தல் - நொறுங்குதல், சாய்தல், அழிதல், விழுதல். தகர்த்தல் - நொறுக்குதல், புடைத்தல், சிதறடித்தல், அழித்தல். தகர்ப்பொறி - ஆட்டின் வடிவான மதிற்பொறி. தகல் - தகுதி, தடை. தகல்பாசி - பெரும் புரட்டன். தகவல் - செய்தி. தகவின்மை - நடுநிலையின்மை, வருத்தம். தகவு - தகுதி, குணம், அருள், நடுவு நிலை, அறிவு, தெளிவு. தகவுரை - சிபாரிசு. தகவை - சாயக்கட்டி. தகழி - அகல், உண்கலம். தகளி - தகழி. தகனம் - எரிக்கை. தகனன் - நெருபபு. தகா - மிக்க ஆசை. தகித்தல் - எரித்தல். தகுணிச்சம், தகுணிதம் - பறைப் பொது, வரிக்கூத்து வகை. தகுதல் - ஏற்றதாதல், மேம்படுதல், தொடங்குதல், கிட்டுதல், ஒத்தல். தகுதி - பொருத்தம், மேன்மை, நடுவு நிலைமை, பொறுமை, கூட்டம். தகுதிப்பத்திரம் - நற்சாட்சிப் பத்திரம் (Certificate) தகுதியணி - இரண்டு பொருள் களின் சேர்க்கையை உணர்த்தும் அணி. தகுதியின்மை அணி - தகாத இரண்டு பொருள்களின் சேர்க் கையை உணர்த்தும் அணி. தகுதியோர் - அறிஞர். தகுதிவழக்கு - பொருள்களுக்கு இயல்பாயமைந்த சொற்களை யொழித்துத் தகுதியான வேறு சொற்களாற் கூறும் இடக்கரடக்கல் மங்கலம் குழூஉக்குறி என்ற மூவகை வழக்கு. தகுவன் - அசுரன். தகுவியர் - அசுரமகளிர். தகுளம் - மகளிர் விளையாட்டு. தகை - பொருத்தம், ஒப்பு, மேம்பாடு, பெருமை, அருள், அன்பு, அழகு, நன்மை, குணம், நிகழ்ச்சி, கட்டுகை, மாலை, தடை, தளர்ச்சி. தகைதல் - தடுத்தல், பிடித்தல், அடக்குதல், ஒத்தல், அழகு பெற்றி ருத்தல். தகைத்தல் - தடுத்தல், தட்டுதல், கட்டுதல், சுற்றுதல், அரிதல், நெருங் குதல். தகைபாடுதல் - தலைவன் தலைவியின் நலம் பாராட்டுதல். தகைப்பு - மதிற்சுற்று, வீட்டின் பகுதி, படைவகுப்பு. தகைமை - தகுதி, பெருமை, மதிப்பு, அழகு, ஒழுக்கம், நிகழ்ச்சி. தகையணங்குறுத்தல் - தலைவி யின் அழகு தலைவனுக்கு வருத்த முறுத்தலைக் கூறும் அகத்துறை. தக்ககன் - தக்கன். தக்கணம் - தெற்கு, தக்கண நாடு, வலப்பக்கம். தக்கணன் - தட்சிணாமூர்த்தி. தக்கணாக்கினி - தக்கிணாக்கினி. தக்கணாதி - குறிஞ்சியாழ்த் திறங் களுள் ஒன்று. தக்கணாமூர்த்தி - தென்முகக் கடவுள். தக்கணாயனம் - தட்சிணாயனம். தக்கணை - தட்சிணை. தக்கம் - நிலைபெறு, பற்று. தக்கயாகப்பரணி - ஒட்டக்கூத்தர் பாடிய பரணி நூல் (12ஆம் நூ.) தக்கரம் - வஞ்சகம், களவு. தக்கராகம் - பாலைப்பண் வகை. தக்கவர் - தக்கோர். தக்கன் - பிரசாபதிகளி லொருவன், எட்டு நரகங்களில் ஒன்று, கள்வன். தக்காணப்டிக்கட்டுகள் - படிக் கட்டுகள் போன்று உயர்ந்த தக்கண பீடிபூமி (Decantraps). தக்காணம் - தக்கணம். தக்காணியம் - இறந்துபட்ட ஒரு தமிழிலக்கண நூல் (யாப். வி.) தக்கார் - மேன்மக்கள், நடுவு நிலைமை யுடையார். தக்காளி - செடிவகை. தக்கிணன் - தக்கணாமூர்த்தி. தக்கிணாக்கினி - யாகத்தீ மூன்றி னில் ஒன்று. தக்கிணாமூர்த்தி - தென்முகக் கடவுள். தக்கிணாயனம் - தட்சிணாயனம். தக்கிணை - தட்சினை. தக்கிரம் - போர். தக்கிருத்தல் - தனக்குத்தக வொழு குதல். தக்குதல் - நிலைபெறுதல், பயன் படுதல். தக்கேசி - மருதநிலப் பண்வகை. தக்கை - ஒருவகைப்பறை, காதிலி டுங்குதம்பை, நெட்டி (Cork). தக்கோர் - தகுதியுடையோர். தக்கோலம் - தாம்பூலம், வால் மிளகு, ஒருவகை, வாசனைச் சரக்கு. தக்கோலி - அகில் வகை. தங்கசாலை - நாணயம் அடிக்கும் சாலை. தங்கணர் - தங்கண தேசத்தார். தங்கப்பவுண் - தங்க நாணயம், தங்கம் (Soverign). தங்கம் - பசும்பொன், உயர்ந்த பொன். தங்கரேக்கு - மிக மெல்லிய தங்கத் தகடு. தங்கலர் - பகைவர். தங்களான் - பறையர் சிலருடைய பட்டப் பெயர். தங்கள் - தம். தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார் - சங்க காலப் புலவர் (நற். 368). தங்காள் - தங்கை. தங்காற்பொற்கொல்லனார் - சங்க காலப் புலவர் (அகம். 48) தங்கான் - அரை என்னும் குழூஉக் குறி. தங்குதல் - நிலைபெறுதல், உள தாதல், அடங்குதல், தாமதப்படுத்தல், தடைப்பட்டு நிற்றல். தங்கை - இளையசகோதரி. தங்கைச்சி - தங்கை. தச - பத்து, கடி. தசகண்டன் - இராவணன். தசகம் - பத்துப் பாட்டுகள் கொண்ட பிரபந்தம். தசகாரியம் - சிதம்பரநாத தேசி கரியற்றிய சைவ சித்தாந்த நூல், அம்பலவாண தேசிகர் சுவாமிநாத தேசிகர் தட்சிணாமூர்த்தி தேசிகர் என்னும் மூவரால் இயற்றப்பட்ட மூன்று சைவ சித்தாந்த நூல்கள், பத்து ஆன்மானுபவ நிலைகள். தசக்கிரீவன் - இராவணன். தசநவம் - ஒரு தேசம். தசநாடி - இடை, பிங்கலை, கழு முனை, காந்தாரி, அத்தி, சிங்குவை, சங்கினி, பூடா, குரு, கன்னி, அலம் புடை எனப் பத்துவகைப் பட்டுப் பிராணவாயு இயங்குதற்குரிய வழியாகிய நாடிகள். தசமம் - பத்து அமிசமான (Deciamal). தசமி - பத்தாந்திதி. தசமுகநதி - கங்கை. தசமுகன் - இராவணன். தசமூலம் - கண்டங்கத்தரி, சிறுவழு துணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி, வில்வம், பெருங்குமிழ் தழுதாழை, பாதிரி, வாகை என்ற பத்து மருந்து வேர்கள். தசம் - பத்து. தசரதன் - இராமன் தந்தை. தசரா - துர்க்கையின் பொருட்டு மாளய அமாவாசையை அடுத்து நடத்தும் பத்து நாள் விழா. தசவருக்கம் - இராசி, ஓரை, திரேக் காணம், சத்தமாங்கிசம், நவாங்கிசம், தசாங்கிசம், துவதாசாங்கிசம், கலாங்கிசம், திரிஞ்சாங்கிசம், சட்டியாங்கிசம் எனப் பிறந்தகால சக்கரத்தைப் பிரிக்கும் பிரிவு. தசவதாரன் - திருமால். தசவாயு - பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவ தத்தன், தனஞ்சயன் என்ற பத்து வாயுக்கள். தசனம் - கவசம், பல், மலைமுடி. தசாக்கிரி - பண்வகை. தசாங்கத்தயல் - அரசியலுறுப் புக்கள் பத்தையும் ஆசிரிய விருத் தத்தால் பாடும் பிரபந்தம். தசாங்கப்பத்து - அரசியலுறுப் புக்கள் பத்தையும் நேரிசை வெண் பாவால் பாடும் பிரபந்த வகை. தசாங்கம் - யானை, நாடு, ஊர், ஆறு, மலை, குதிரை, தேர், முரசு, தேர், கொடி என்னும் பத்து அரசியலுறுப் புக்கள். தசாங்கிசம் - இராசிகளைப் பத்தாகப் பிரித்துக் கிரகங்களின் நிலையைக் குறிக்கும் சக்கரம். தசாநாதன் - தசைக்குத் தலைமை வகிக்கும் கிரகம். தசாபலன் - கிரகவாட்சிக் காலத்தின் பலன். தசாமிசம், தசாம்சம் - பத்திலொரு பாகம். தசாவதாரம் - மச்சம், கூர்மம், வராகம், நரசிங்கம், வாமனன், பரசுராமன், இராமன், கிருட்டிணன், கல்கி என்னும், திருமாவதாரங்கள். தசும்பு - குடம், மிடா, கோபுர விமானங்களின் உச்சிக் கலசம். தசை - மாமிசம் (Muscle), முடை நாற்றம், கிரக ஆட்சிக்காலம், நிலைமை. தசைநார் - நரம்பு ( Sinewas). தச்சத்தி - தச்சிச்சி. தச்சன் - மரவேலை செய்பவன், சித்திரை நாள். தச்சன்குருவி - மரங்கொத்தி. தச்சிச்சி - தச்சசாதிப் பெண். தச்சு - தச்சுத்தொழில். தஞ்சம் - எளிது, தாழ்வு, அற்பம், பற்றுக் கோடு, அடைக்கலப் பொருள், நிச்சயம், ஆதரவு. தஞ்சாக்கூர், தஞ்சை - தஞ்சை வாணன் கோவைப் பாட்டுடைத் தலைவனது தலைநகர், (இராமநாதபுரம் சில்லா வில் உள்ளது. தஞ்சாவூர், தஞ்சை - சோழர் தலை நகரங்களுள் ஒன்று. தஞ்சு - தஞ்சம். தஞ்சைவாணன்கோவை - தஞ்சை வாணன் மீது பொய்யாமொழிப் புலவ ரியற்றிய கோவைப் பிரபந்தம். தடக்காற்று - வடக்கிலிருந்தும் தெற்கி லிருக்கும் பூமத்திய ரேகையை நோக்கி வீசும் காற்று (Trade wind). தட - பெரிய, வளைந்த. தடக்கு - தடை. தடங்கல் - தடை. தடத்தம் - நடுநிலை, பஞ்சகிருத்தியங் களைப் பண்ணும் பதிநிலை, இயற்கை யானன்றிப் பிறிதொன்றன் சார்பு முதலியன பற்றிப் பொருட்கு உளதாம் இலக்கணம். தடம் - பெருமை, அகலம், வளைவு கரை, நீர்நிலை, தார்வரை, வரம்பு, மூங்கில், இடம், வழி, மனைவாயில், சுவடு, சுருக்கு, கண்ணி. தடவரல் - வளைவு. தடவாதல் - தடவுதல், பூசுதல், தேடுதல். தடவு - பருமை, பகுதி, ஓமகுண்டம், கணப்புச்சட்டி, மரவகை. தடவுத்தாழி - பெழுஞ்சாடி. தடவுநிலை - சுவர்க்கம். தடவுவாய் - மலைச்சுனை. தடவை - முறை. தடறு - ஆயுத உறை, தொண்டகப் பறை. தடா - மிடா, பானை, கணப்புச்சட்டி, பருமை. தடாகருமம் - மலங்கழிக்கை. தடாகம் - குளம். தடாகயோகம் - பிறந்த இலக்கினத்துக்கு 2, 5, 8ஆம் வீடுகளிலேனும் 3, 6, 9 ஆம் வீடுகளிலேனும் ஏழு கிரகங்கள் கூடியிருந்து பெருஞ்செல்வமுள்ள வாயினும் உலோபியாவானென் பதைக் குறிக்கும் அவயோகம். தடாதகை - மீனாட்சி. தடாதிவங்குசம் - பறவை பறக்கும் வகைகளில் ஒன்று. தடாம் - வளைவு. தடாரம் - ஈரொத்துத்தாளம். தடாரி - உடுக்கை, கிணைப்பறை, பம்பைப்பறை. தடாரித்தல் - ஊடுருவுதல். தடாவுறல் - வளைதல். தடி - கழி, தண்டாயுதம், வில், வயல், தசை, கருவாடு, உடும்பு, மிதுன ராசி, மரத்துண்டு, மின்னல். தடிதல் - வெட்டுதல், குறைத்தல், அழித்தல். தடித்தல் - பெருத்தல், மிகுதல், உறைதல், உரப்பாதல். தடித்து - மின்னல். தடிப்பு - கனம், வீக்கம், பூரிப்பு. தடிமன் - சலதோடம். தடியம் - இரண்டு வீசைகொண்ட நிறை. தடியன் - முரடன். தடினி - ஆறு. தடு - தடுக்கை. தடுகுட்டம் - குணாலக் கூத்து. தடுக்கு - பாய், தவிசு. தடுக்குதல் - இடறுதல். தடுத்தாட்கொள்ளுதல் - தடுத்து வசமாக்குதல். தடுதாளி - அவசரம். தடுப்பு - தடுக்கை. தடுப்புஊசி - (Inaugulation). தடுமாறுதல் - தள்ளாடுதல், மனங் கலங்குதல், ஒழுங்கீனமாதல். தடுமாற்றம் - மனக்கலக்கம், தவறு. தடை - தடுக்கை, இடையூறு, ஆட் சேபம், கவசம், வாயில், மனைவி. தடைஇ - சரிந்து. தடைஇய - பெருத்த, திரண்ட. தடைதல் - தடுத்தல். தடையம் - நிறுக்க இருக்கும் பொருளை வைத்திருக்கும் ஏனத் துக்குரிய எடை. தட்சணம் - உடனே. தட்சிணம் - தெற்கு, வலப்பக்கம். தட்சிணாமூர்த்தி - சிவன் தென் முகமாக இருந்து சனசாதியருக்கு உபதேசித்த திருவுருவம். தட்சிணாயனம் - ஆடிமுதல் சூரி யன் தெற்கு முகமாகச் செல்லும் ஆறு மாத காலம். தட்சிணை - குரு முதலியோருக்குக் கொடுக்கும் பொருள். தட்டம் - உண்கலம், தாம்பாளம், பரந்த இதழுடைய பூ, துயிலிடம், அகன்ற நாடா, கை கொட்டுகை, நீர்நிலை, பல், பாம்பின் மேல்வாய் நச்சுப்பல், நிலத்தில் வீழ்ந்து வணங்குகை, யானை செல்லும் வழி. தட்டம்மை - சின்னமுத்து நோய். தட்டழி - ஒருவகை மேளம். தட்டழித்தல் - நிலைகுலைதல், திகைத்தல். தட்டழிவு - கலக்கம். தட்டறை - பையிலுள்ள சிறிய உட்பை. தட்டாத்தி - தட்டாரப் பெண். தட்டாரப்பூச்சி - பூச்சிவகை. தட்டான் - பொற்கொல்லன், கிழக்குரங்கு. தட்டி - காலம், கதவு, கேடகம், ஆயுத வகை, வாத்திய வகை, அரைச் சல்லடம். தட்டிக்கவி - கர்ப்பூர ஆரத்திக்கவி. தட்டியம் - நெடும்பரிசை. தட்டு - தட்டுகை, அடி, தடை, குற்றம், தீமை, தகடு, வளைவு, கேடகம், குயவன் திரிகை, முறம், நடுவிடம், கட்டிடத்தின் மேல் நிலை, ஆசனத் தடுக்கு, அடுக்க, பூவிதழ், பக்கம். தட்டுக்கேடு - வறுமை. தட்டுச்சாரி - மகளிர் கையணி. தட்டுதல் - புடைத்தல், மோதுதல், கிட்டுதல், கொடுத்தல், உடைத்தல், தட்டையாக்குதல், கவர்தல், தடுத் தல், நினைவெழுப்புதல். தட்டுப்பா - தேரின் மேலிருக்கும் பரப்பு. தட்டுப்பிழா - தட்டமாய் முடைந்த பெட்டி. தட்டுப்புடை - தானியத்தை முறம் முதலியவற்றால் புடைக்கை. தட்டுமுட்டு - வீட்டுச் சாமான்கள் கருவிகள். தட்டுவாணி - மராட்டிய தேசக் குதிரை, விபச்சாரி. தட்டுளுப்பு - தடுமாற்றம். தட்டை - பரந்த வடிவம், முறம், திருகாணி என்னும் ஆபரணம், தினைத்தாள், மூங்கில், கிளிகடி கருவி, கரடிகைப் பறை, அறிவிலி, தீ ஒரு காலணி, முளை, மடம். தட்டைப்பயறு - பயறுவகை. தட்டைப்பீலி - விரலணி. தட்டொளி - உலோகக் கண்ணாடி வகை. தட்டோடு - தட்டை ஓடு. தட்பம் - குளிர்ச்சி, அருள். தட்பவெப்பநிலை - கால சுவாத் தியம். தணக்கு - வால், நுணாக்கொடி. தணத்தல் - பிரிதல். தணப்பு - நீங்குகை, தடை. தணல் - கனிந்தநெருப்பு. தணி - மலை, குளிர்ச்சி. தணிகை - திருத்தணிகை என்ற தலம். தணிகைப்புராணம் - கச்சியப்ப முனிவர் இயற்றிய புராணம் (19ஆம் நூற்.) தணியல் - தணிகை, கள். தணிவு - குறைகை, சாந்தம். தண் - குளிர்ச்சி. தண்கடற்சேர்ப்பன் - நெய்தல் நிலத் தலைவன். தண்கதிர், தண்சுடர், தண்சுடர்க் கலையோன் - சந்திரன். தண்டகநாடு - தொண்டைநாடு. தண்டகமாலை - 300 வெண்பா வாலியன்ற பிரபந்தம். தண்டகம் - தொண்டைநாடு, தண்ட காரணியம், தண்டனை, முது கெலும்பு. தண்டகன் - தண்டக நாடு, தண்ட காரணியம் இவற்றின் பெயருக்குக் காரணமான அரசன், யமன். தண்டகாரணியம், தண்டகை - ஒருகாடு. தண்டகக்கட்டு - களத்தில் பொலி வீசுஞ் சமயத்தில் காற்று அடித்துக் கொண்டுபோன நெல்லை அடை தற்குரிய சுதந்தரம். தண்டக்காரன் - வேலைக்காரன். தண்டக்கூற்றம் - வரிவகை. தண்டசக்கரம் - குயவனது சுழற்றுங் கருவி. தண்டஞ் செய்தல் - விழுந்து வணங்குதல், தண்டித்தல், கோலால ளத்தல். தண்டதரன் - யமன், குயவன். தண்டடித்தல் - சேனை பாளைய மடித்து இறங்குதல். தண்டத்தலைவன் - சேனைத் தலைவன். தண்டத்தான் - யமன். தண்டநாயகன் - படைத்தலைவன். தண்டநீதி - அரசியல் கூறும் நூல். தண்டபாணி - முருகன், திருமால், யமன். தண்டபாளம் - இரும்புப்பாளம். தண்டப்பொருள் - அபராதமாக வாங்கும் பொருள். தண்டம் - கோல், தண்டாயுதம், உலக்கை, குடைக் காம்பு, படை, படை வகுப்பு, திரள், ஒறுத் தடக்குகை, தண்டனை, கருகூலம், யானை சுட்டுமிடம், யானை செல்வழி, வணக்கம். தண்டர் - தண்டனை செய்வோர். தண்டலர் - பகைவர். தண்டலை - சோலை, பூந்தோட்டம், ஒரு சிவதலம். தண்டலையார்சதகம் - சாந்த லிங்கக் கவிராயர் இயற்றிய ஒரு நூல். தண்டல் - வசூலித்தல், தவறுகை, ஏதிர்க்கை, தண்டனை. தண்டவாணி - பொன்னின் மாற்று அறிய உதவும் ஆணி. தண்டவாளம் - உருக்கிரும்பு. தண்டவிடுதல் - விழுந்து வணங்கு தல். தண்டனை - சிட்சை. தண்டன் - கோல், வணக்கம். தண்டபூபதிநியாயம் - தண் டத்தைத் தின்ற எலி அதிலே உள்ள அப்பம் முதலியவற்றையும் தின்றிருப்பது அறியப்படுவது போல வெளிப்படையான செய் தியை உணர்த்தும் ஒருவகை நியாயம். தண்டாமை - நீங்காமை. தண்டாயுதபாணி - முருகக்கடவுள். தண்டாயுதம் - கதைப்படை. தண்டாரணியம் - தண்டகாரணியம், ஓர் ஆரிய நாடு. தண்டான் - கோரை வகை. தண்டி - மிகுதி, தண்டியலங்காரம் தமிழிற் செய்தவர் (12ம் நூ.), 63 நாயன்மாருளொருவர், யமன், கருவமுள்ளவர், சண்டேசுவரர். தண்டிகை - பல்லக்குவகை. தண்டித்தல் - ஒறுத்தல். தண்டியம் - பல்லக்குக் கொம்பு, வாயிற் படியின் மேற்கட்டை. தண்டியலங்காரம் - வடமொழித் தண்டிசெய்த காவியா தரிசனம் என்னும் அணி நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல். தண்டிலம் - ஓமஞ் செய்வதற்கு நியமித்துக் கொண்ட இடம். தண்டு - கோல், கதாயுதம், தண் டிகைக் கொம்பு, உலக்கை, விளக்குத் தண்டு, வீணை, வரம்பு, பச்சோந்தி, மூங்கிற் குழாய், மிதுன ராசி, பூவிதழ். தண்டுதல் - வசூலித்தல், வருத்துதல், இணைத்தல், கெடுத்தல், விலகுதல், விருப்பங் கொள்ளுதல், நீங்குதல். தண்டுமாரி - அடக்கமற்ற பெண். தண்டுலம் - அரிசி, தண்டிலம். தண்டுவடம் - முதுகெலும்பு, (Spicnal code). தண்டேல் - படவுகாரரின் தலைவன். தண்டை - காலணிவகை, கேடகம். தண்டைமாலை - பூமாலை வகை. தண்டொட்டி - பெண்கள் காதணி வகை. தண்டோரா - பறை சாற்றுகை. தண்ண - எளிமையடைய. தண்ணடை - நாடு, மருதநிலத்தூர், சிற்றூர், பச்சிலை, காடு. தண்ணம் - ஒரு கட்பறை, மழு, குளிர்ச்சி, காடு. தண்ணவன் - குளிர்ந்த சந்திரன். தண்ணளி - கருணை. தண்ணாத்தல் - தாழ்த்தல். தண்ணீர்க்கதவு - ஏரி முதலியவற்றி லிருந்து நீர் விடுதற்குரிய கதவு. தண்ணீர்த்துரும்பு - இடையூறு. தண்ணீர்த்துறையேறுதல் - மாத விடாயாதல். தண்ணீர்ப்பந்தல், தண்ணீர்ப்பந்தர் - தண்ணீர் ஊற்றும் அறச்சாலை. தண்ணுமை - மத்தளம், குழவு, உடுக்கை. தண்ணெனல் - குளிர்ச்சிக் குறிப்பு, இரங்கற் குறிப்பு. தண்பணை - மருதநிலம். தண்பதம் - புதுப்புனல், தாழ்ந்த நிலை. தண்பு - குளிர்ச்சி. தண்பொருநை - தாம்பிரபரணி ஆறு, ஆன் பொருந்தம் என்ற ஆறு. தண்மை - குளிர்ச்சி, சாந்தம், இன்பம், தாழ்வு, அறிவின்மை. ததரல் - மரப்பட்டை. ததர் - செறிவு, கொத்து, சிதறுகை. தகர்தல் - நெரிதல். ததர்த்தல் - வருத்துதல். ததாஸ்து - அப்படியே யாகுக என்னும் வடசொற்றொடர். ததி - தக்க சமயம், தயிர். ததியர் - அடியார். ததீசி - ஒரு முனிவர். ததீயாராதனை - திருமாலடி யவர்க்கிடும் விருந்துணவு. ததும்புதல் - மிகுதல், நிரம்பி வழிதல், அசைதல், முழங்குதல். ததைதல் - நெருங்குதல், சிதைதல். ததைத்தல் - நிறைதல். தத் - அந்த, அது. தத்தம்பண்ணுதல் - பிறருக்குப் பொருளை நீர் வார்த்துக் கொடுத் தல். தத்தயோகம் - தீய யோகங்களுள் ஒன்று. தத்தரம் - மிகு விரைவு, தந்திரம். தத்தளபஞ்சமம் - மருதப் பண் வகை. தத்தளித்தல் - ஆபத்திற் பட்டுத் திகைத்தல். தத்களிப்பு - கலங்குகை. தத்தன் - சுவீகார புத்திரன். தத்திகாரம் - பொய். தத்தியம் - துகில்வகை. தத்து - தாவி நடக்கை, கவலை, ஆபத்து, தவறு, சுவீகாரம். தத்துதல் - குதித்தல், தாவிச் செல் லுதல், ததும்புதல், பரவுதல், ஒளி வீசுதல். தத்துவஞானம் - உண்மை உணர்வு. தத்துவஞானி - உண்மையை உணர்ந்தோன். தத்துவபோதசுவாமி - (Roberto De Nobelie) என்னும் ஐரோப்பிய பாதிரி (16ஆம் நூ.). தத்துவப்பிரகாசம் - தத்துவப் பிரகாசர் இயற்றிய சைவசித்தாந்த நூல். தத்துவப்பிரகாசர் - 16 ஆம் நூற்றாண்டில் விளங்கிய ஒரு சைவத் துறவி. தத்தவமசி - அது நீயாக இருக்கின்றாய் என்னும் பொருள் கொண்ட வேத வாக்கியம். தத்துவம் - உண்மை இயல்பான அமைப்பு, (Principle), பொருள் களின் குணம், பரமான்மா, அதி காரம். தத்தவராயர் - 16ஆம் நூற்றாண்டி லிருந்த ஓர் ஆசிரியர். தத்துவன் - கடவுள். தத்துறத்தல் - தத்தி வருதல், வருத் தப்படுதல். தத்தை - கிளி, தமக்கை. தந்தசடம் - எலுமிச்சை. தந்தசடை - புளியாரை. தந்தசுத்தி - பல் விளக்குகை. தந்தசூகம் - பாம்புகள் நிரம்பிய நரக வகை. தந்தசூலை - பல்வலி. தந்தப்பூண் - யானைக் கொம் பிலணியும் கிம்புரி. தந்தம் - யானை பன்றி முதலிய வற்றின் கொம்பு, பல். தந்தவக்கிரன் - கடை வள்ளல்கள் எழுவரில் ஒருவன். தந்தவள் - தாய். தந்தனப்பாட்டு - பிச்சை எடுக்கும் சிறுவர் பாடும் ஒரு வகைப் பாட்டு. தந்தனம் - தந்திரம். தந்தார் - பெற்றோர். தந்தாவனம் - யானை. தந்தி - ஆண் யானை, பாம்பு, கம்பி, யாழ், நரம்பு, யாழ், மின்சாரக் கம்பி மூலம் அனுப்பும் செய்தி, சிறிய நரம்புகள். (Capillary). தந்திகர்ணி - வெருகக் கிழங்கு. தந்திக்கடவுள் - யானை முகம் உள்ள விநாயகர். தந்தித்தீ - யானைத் தீ என்னும் நோய். தந்திமருப்பு - முள்ளங்கி. தந்தியுரியோன் - யானையை உரித்து உடுத்த சிவன். தந்திரகரணம் - களவு நூலிற் சொல்லப்படும் தொழில்கள். தந்திரம் - உபாயம், கல்வி நூல், படை, காலாள், ஆகமம். தந்திரர் - கந்தருவர். தந்திரி - மந்திரி, யாழ், குழலின் துளை, யாழ் நரம்பு. தந்திரிகரம் - செங்கோட்டு யாழு றுப்புகளுள் ஒன்று. தந்திரிகை - கம்பி. தந்தினி - பல்லிலமைந்துள்ள பொருள் (Dentine). தந்து - நூல், கயிறு, கல்வி நூல். தந்துகி - மயிரிழை போன்ற குழாய் (capillary). தந்துநிறை - வீரர் பகையிடத் தினின்று கொணர்ந்த பசுநிரையைத் தம்மூர்ப்புறத்து நிறுத்துதலைக் கூறும் புறத்துறை. தந்துரம் - ஒழுங்கின்மை. தந்துரை - பாயிரம். தந்துரைக்கிளவி - பிற உயிர்களைப் போன்று செய்யும் ஒலி. தந்துரைத்தல் - மூலத்தில் இல்லாத சொற்பொருளை வருவித்துக் கூறுதல். தந்துவாயர் - கைக்கோளர். தந்துவை - தம்மாமி. தந்தை - தகப்பன். தந்தைபெயரன் - மகன். தந்தையன் - தந்தை. தந்நகரம் - ந என்னும் எழுத்து. தபசு - தவம். தபச்சரணம் - தவஞ் செய்கை. தபதி - சிற்பி. தபம் - தவம், மாசி மாதம். தபலை - பாத்திர வகை, மத்தன வகை. தபனம் - நரக வகை, தாகம். தபனற்கஞ்சி - மஞ்சள். தபனன் - சூரியன், அக்கினி. தபனியம் - பொன். தபித்தல் - காய்தல். தபுதல் - கெடுதல், இறத்தல். தபுதாரநிலை - கணவன் தன் மனைவியை இழந்து துயருறும் நிலையைக் கூறும் புறத்துறை. தபுதி - அழிவு. தபுத்துதல் - ஈரம் புலர்த்துதல். தபோதன், தபோதனன், தபோநிதி - முனிவன். தபோவனம் - தவம் புரியும் வனம். தப்பட்டை - ஒருகண்பறை. தப்பறை - சூது, தப்பு. தப்பிதம் - குற்றம். தப்பித்தான் - தப்புசெய்தவன். தப்பு - குற்றம், துவைக்கை, ஒரு வகைப் பறை, தப்பித்துக் கொள் ளுதல். தப்புதல் - தவறுதல், பிறழ்தல், அபாயத்தினின்று நீங்குதல், பிழை செய்தல், அழித்தல், சீலை துவைத் தல், விட்டு விலகுதல். தப்புத்தண்ணீர் - ஆழமில்லாத நீர். தப்பை - சிறு பறைவகை. தமக்கை - அக்காள். தமசு - இருள், தாமத குணம். தமத்தமப்பிரபை, தமப்பிரயை - இருள் நிறைந்த நரகம். தமப்பன் - தகப்பன். தமத்தல் - தணிதல், மலிதல், நிரம்புதல். தமம் - இருள், தாமத குணம், இராகு, ஒரு நரகம், கரணங்களை அடக் குகை. தமயந்தி - நளனுடைய மனைவி. தமரகம் - சுவாசக்குழல். தமரம் - ஒலி, மெழுகு. தமருகம் - உடுக்கை. தமர் - சுற்றத்தார், சிறந்தார், பரிசனம், துளை, துளையிடுங் கருவி. தமர்மை - நட்பு. தமலி - சட்டுவம். தமள் - உற்றாள். தமனகம் - மருக்கொழுந்து. தமனி - வன்னி, இருதயத்திலிருந்து இரத்தத்தைக் கொண்டு செல்லும் குழாய் (Artery). தமனியப்பொதியில் தமனியக் கூடம் - பலர் கூடும் பொன் வேய்ந்த அம்பலம். தமனியம் - பொன். தமனியன் - இரணியன், பிரமன், சனி. தமன் - உற்றான். தமாலகி - கீழாநெல்லி. தமாலாம் - பச்சிலை, இலை, பெரிய இலவங்கம். தமி - தனிமை, ஒப்பின்மை, இரவு. தமிசி - வேங்கை. தமிட்டம் - தம்பட்டம். தமித்தல் - தண்டித்தல், தனியாதல். தமியள் - தனித்திருப்பவள். தமியன் - தனித்திருப்பவன், கதியற்றவன். தமிழகம் - தமிழ்நாடு. தமிழறியும்பெருமாள் கதை - ஒரு தமிழ் வசன நூல். தமிழன் - தமிழைத் தாய்மொழியாக உடையவன். ஆரியனல்லாத தென் நாட்டான். தமிழாகரன் - தமிழில் சிறந்த திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார். தமிழியல் வழக்கு - முற்காலத் தமிழ் நூல்கள் கூறும் காமக் கூட்டம். தமிழோர் - தமிழ் மக்கள், தமிழ்ப் புலவர். தமிழ் - இனிமை, நீர்மை, தமிழர், தமிழ்நாடு. தமிழ்க்குச்சரி - குறிஞ்சி யாழ்த் திறன் வகை. தமிழ்க்கூத்தர் - தமிழக் கூத்து ஆடுவோர். தமிழ்க்கூத்து - தமிழ் நாட்டுக்குரிய கூத்து. தமிழ்நதி - வையை ஆறு. தமிழ்நர் - தமிழர். தமிழ்நாடன் - தமிழ்நாட்டு வேந்தன். தமிழ்நாவலர்சரிதை - பலர் பாடிய தனிப் பாடல்களை அவை பாடப்பெற்ற சரித்திரக் குறிப்புடன் கூறும் ஒரு நூல். தமிழ்ப்படுத்துதல் - தமிழில் மொழி பெயர்த்தல். தமிழ்மலை - பொதியமலை. தமிழ்முத்தரையர்கோவை - முத்தரையர் என்னும் தமிழ்த் தலைவர் மீது இயற்றப் பெற்ற கோவை. தமிழ்முனிவன் - அகத்தியன். தமிழ்வாணன் - தமிழ்ப் புலவன். தமிழ் விரதன் - திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். தமிழ் வேதம் - திருக்குறள், சைவத் திருமுறைகள், நாலாயிர திவ்யப் பிரபந்தங்கள். தமிழ்வேளர்கொல்லி - மருத யாழ்த் திறவகை. தமுக்கம் - வசந்த மாளிகை, போருக்குச் செல்லும் யானைகள் திரளுமிடம். தமுக்கு - செய்தி தெரிவிக்க முழக்கம் ஒருகண் உள்ள பறை. தமை - புலன்களை அடக்குகை. தமையன் - அண்ணன். தமோகுணம் - காமம் வெகுளி மயக்கங்களுக்குக் காரணமாக இருப்பது. தம் - பெரிதும் படர்க்கைப் பன்மை யுடன் சேர்ந்துவரும் சாரியை, மூச்சு. தம்படி - அணாவில் பன்னிரண்டில் ஒன்றாகிய அளவை. தம்பட்டங்காய் - வாளை அவரை. தம்பட்டம் - ஒருவகைப் பறை. தம்பட்டை - வாள் அவரை. தம்பதி - கணவனும் மனைவியும். தம்பம் - தூண், தம்பனம், பற்றுக் கோடு, கவசம். தம்பலப்பூச்சி - இந்திரகோபம். தம்பலம் - வெற்றிலை பாக்கு, தாம்பூல எச்சில். தம்பல் - தாம்பூல எச்சில். தம்பனம், தம்பனை - இயக் கத்தைத் தடுக்கும் செய்கை, மந்தி ரத்தால் தடுத்துக் கட்டுகை. தம்பி - இளைய சகோதரன். தம்பித்தல் - அசையாதிருத்தல், மந்திர சக்தியால் தடுத்தல். தம்பிரான் - தலைவன், கடவுள், தலைவன், திருவிதாங்கூர் அர சருக்கு வழங்கும் பட்டம், சைவ மடத் துறவி. தம்பிரான்தோழர் - இறைவனையே தோழமை கொண்ட சுந்தரமூர்த்தி நாயனார். தம்புரா, தம்புரு, தம்பூரு - பக்க சுருதிக் குதவும் நரம்புக் கருவி. தம்மடக்குதல் - மூச்சடக்குதல். தாம்மனை - தாய். தம்மான் - தலைவன். தம்மி - தாமரை. தம்மிலம் - மகளிர் மயிர்முடி. தம்முன் - மூத்த சகோதரன். தம்மோய் - தாய். தயக்கம் - தோற்றம், கலக்கம், அசைவு, ஒளிவிடுகை. தயங்குதல் - ஒளிவிடுதல், தெளி வாதல், திகைத்தல், வாடுதல், அசைதல். தயரதன் - தசரதன். தயல் - பெண். தயவு - அருள், அன்பு, பத்தி. தயனினியம் - தயைசெய்யத் தக்கது. தயா - தயவு. தயாபரன் - அருள் உள்ள கடவுள். தயார் - ஆயத்தம். தயாவீரன் - புத்தன். தயாவு - தயவு. தயாளம் - தயவு. தயாளு - தயவுள்ளவன். தயித்தியர் - அசுரர். தயிரிற்றிமிரல் - தயிர்ச்சாதம். தயிர் - உறைந்த பால், மூளைக் கொழுப்பு. தயிர்கடைதறி - மத்து. தயிர்க்கோல் - தயிர் கடையும் மத்து. தயிலக்காப்பு - கடவுள் மேனிக்குத் தயிலம் தேய்க்கை. தயிலமாட்டுதல் - பிரேதத்தை எண்ணெயிலிட்டுக் கெடாமற் காத்தல். தயிலம் - வடித்த மருந்தெண்ணெய், எண்ணெய். தயை - தயவு. தரகரி - தரகன். தரகன் - கொள்பவன் விற்பவன் ஆகிய வருக்கு இடைநின்று தீர்த்துக் கொடுப் போன். தரகு - தரகர் பெறும் கூலி (Commission). தரக்கு - புலி. தரங்கம் - அலை, கடல், மனக் கலக்கம்; இசையலைவு, ஈட்டி. தரங்கிணி - ஆறு. தரங்கித்தல் - மனமசைத்தல். தரங்கு - வழி, ஈட்டிமுனை, அலை. தரணம் - பாலம், தரிக்கை. தரணி - சூரியன், படகு, மருத்துவன், பூமி. தரணிபன் - உலகு ஆளும் அரசன். தரந்தம் - தவளை. தரப்பு - பக்கம். தரம் - தகுதி, மேன்மை, தலை, வகுப்பு, மட்டம், தடவை, வரிசை, கூட்டம், அச்சம், மலை, பூமி, அரக்கு (மெழுகு). தரவு - தருகை (data), கலிப்பாவின் முதலுறுப்பு, வரி, பிடர். தரவுகொச்சகம் - கொச்சகக் கலிப்பா வகை. தரவுக்காரன் - தண்டக் கட்டளையை நிறைவேற்றுவோன். தரவை - கரம்பு நிலம். தரளதரம் -நரக வகை. தரளநீராஞ்சனம் - முத்து ஆராத்தி. தரளம் - முத்து, நடுக்கம், உருட்சி. தரன் - தரிப்பவன், அட்டவசுக்களுள் ஒருவன். தரா - செம்பும் காரீயமுங் கலந்த உலோகம், திராய், பூமி, சங்கு. தராசம் - வயிரத்தின் குணங்களில் ஒன்று. தராசு - நிறைகோல், துலாராசி, பரணி, 800 பல அளவு. தராதரம் - மலை, ஏற்றத்தாழ்வு. தராதலம் - பூமி, கீழேழுலகத் தொன்று. தராபதி - அரசன். தராய் - மேட்டு நிலம், கீரை வகை, பிரமிப் பூண்டு. தரிசபூரணம் - கிருட்டிண பூரணை யிற் செய்யும் பலி. தரிசனம் - பார்வை, கண், பெரி யோரைக் காண்கை, கண்ணாடி, மதக் கொள்கை, சொப்பனம். தரிசனவிசுத்தி - மோட்ச வழியை ஐயமின்றித் தெளிகை. தரிசனவேதி - பொன்னாக்கும் பச்சிலை. தரிசனாவரணியம் - உண்மைக் கொள்கையைக் காணவொட்டாமல் தடுக்கும் கருமம். தரிசனை - அறிகை, கண்ணாடி. தரிசாப்பள்ளி - கொல்லத்தில் 9 ஆம் நூற்றாண்டிலிருந்த சிரியன் கிறித்துவ கோயில். தரிசித்தல் - கடவுள், பெரியோர் முதலியோரையும் காணுதல். தரிசு - பயிரிடப்படாத நிலம், உள்ளிடு பரல். தரிஞ்சகம் - அன்றில். தரித்திரம் - வறுமை. தரித்திரி - பூமி. தரிப்பு - தங்குகை, நிச்சயம். தரியலர், தரியார் - பகைவர். தரு - மரக்கலப்பாய், இறக்குகை, மரம், கற்பகமரம், இசைப்பாட்டு வகை, தேவதாரு. தருக்கசங்கிரகம் - சிவஞான முனிவர் தமிழிற் செய்த ஒரு மொழி பெயர்ப்புத் தமிழ்த் தருக்க நூல். தருக்கபரிபாடை - சிவப் பிரகாச முனிவர் செய்த ஒரு மொழி பெயர்ப்பு நூல். தருக்கம் - நியாய வாதம், மேம்பாடு. தருக்கு - செருக்கு, வலிமை, களிப்பு, தருக்கம். தருக்குதல் - அகங்கரித்தல், களித் தல், ஊக்கமிகுதல், பெருகச் செய் தல், இடித்தல், வருத்துதல், உடைத்து விடுதல், மேற்கொள்ளுதல். தருணநாரி - சிறு நன்னாரி. தருணம் - ஏற்ற சமயம், இளமை. தருணன் - இளைஞன். தருணி, தருணை - இளம்பெண், 16 முதல் 30 வரை வயது வரையி லுள்ள மகளிர் பருவம். தருதல் - கொடை, கொடுத்தல், இயற்று தல், சம்பாதித்தல், உணர்த்துதல், அழைத்தல். தருநன் - கொடுப்பவன். தருநிலைக்கோட்டம் - காவிரிப் பூம்பட்டினத்தில் கற்பகமரம் நின்ற கோயில். தருப்பசயனம் - திருப்புல்லாணி. தருப்பணம் - உணவு, அவல், தர்ப்பணம். தருப்பம் - கருவம். தருப்பாக்கியம் - தருப்பை நுனி. தருப்பு - ஒருவகை வெள்ளைக்கல். தருப்பை - குசைப்புல். தருமகர்த்தர் - கோயிலதிகாரி. தருமக்கிழவர் - வைசியர். தருமசக்கரம் - தரும ஆழி. தருமசங்கடம் - மாறுபட்ட இரண்டு கடமைகளுள் எதை முடிப்பது என்று தெரியாத நிலைமை. தருமசபை - நியாயத்தலம். தருமசாதனம் - அறச் செயலைக் குறிக்கும் செப்புப் பட்டயம். தருமணல் - புதிதாகக் கொண்டு வந்து பரப்பும் மணல். தரும தலைவன் - புத்தன். தருமதாயம் - அறத்திற்காக விடும் வரி இல்லாத நிலம். தருமதேவன் - கிருத யுகத்தில் நான்கு கால்களையும், திரேதாயுகத்தில் மூன்று கால்களையும் துவாபர யுகத்தில் இரண்டு கால்களையும், கலியுகத்தில் ஒரு காலையும் பூமியில் ஊன்றி நிற்பதாகக் கருதப்படும் அறக் கடவுள். தருமத்தியானம் - ஆன்மா ஈடேற் றத்தைப் பற்றிய நினைவு. தருமநாள் - பரணிநாள். தருமநீதி - தரும நூல்கள் கூறும் நீதி. தருமநூல் - மனு, அத்திரி, வண்டு, வாசிட்டம், யமம், ஆபத்தம்பம், யாஞ்ஞவற்கியம், பராசரம், ஆங்கீரசம், உசனம், காத்தியாயனம், சம்பவர்த்தம், வியாசம், பிரகற்பதி, சங்கலிதம், சாதாதபம், கௌதமம், தக்கம் எனப் பதினெட்டு. தருமபீடிகை - புத்தரது பாதங்கள் அமைந்த பீடம். தருமபுத்திரன் - பாண்டு புத்திரருள் ஒருவன். தருமபுரம் - சைவ வடமுள்ள ஒரு சோழ நாட்டுத் தலம். தருமம் - நற்செயல், விதி, தருமநூல், நீதி, அறம், இயற்கை. தருமர் - திருக்குறளுக்கு உரை செய்த பதின்மருள் ஒருவர். தருமவான் - தரும சிந்தையுள்ள வன். தருமவினையர் - அறச் செயல் களைக் கவனிக்கும் அரசாங்க அதிகாரிகள். தருமன் - அறக்கடவுள், யமன், புத்தன், தருமபுத்திரன், அருகன், திருக்குற ளுரைகாரருள் ஒருவர். தருமாசனத்தார், தருமாசனக் கருத் தாக்கள் - நீதிபதிகள். தருமாசனம் - தரும சபை. தருமி - ஓர் ஆதிசைவப் பிராமணன். தருமிட்டர் - தருமவான்கள். தருவாய் - தக்கசமயம், தறுவாய். தருவி - துடுப்பு, இலைக்கரண்டி. தரை - நிலம். தரைத்தேவர் - அந்தணர். தரைதட்டுதல் - கப்பல் தரையில் மோதுதல். தரைமகன் - செவ்வாய். தரையர் - பூமியிலுள்ளோர். தர்க்கம் - தருக்கம். தர்சனம் - தரிசனம். தர்ச்சனி - சுட்டு விரல். தர்பார் - ஓலக்கம். தர்ப்பசயன் - திருப்புல்லாணி. தர்ப்பணம் - தேவர் பிதிரர் இருடி களுக்கு இறுக்கும் நீர்க்கடன், கண்ணாடி. தர்ப்பணானனன் - தரும சபை, பிராமணருக்கு விடப்பட்ட தரும நிலம். தலக்கம் - இழிசெயல். தலக்கு - நாணம். தலசம் - முத்து. தலத்தார் - கோயிலதிகாரிகள். தலபுராணம் - தலப் பெருமைகளைக் கூறும் நூல். தலமுகம் - அபிநயவகை. தலம் - இடம், கோயில், பூமி, வீடு, சிறு விளைநிலம், இலை. தலன் - கீழானவன். தலை - சிரம், சிறந்தது, உயர்ந்தோன், தலைவன், முடிவு. தலைஇ - பெய்து. தலைகாணுதல் - பரிபாலித்தல். தலைகிழக்காதல் - ஒப்பு, ஆகாசம், மேலே, அழிவடைதல். தலைக்கடை - முதல்வாசல். தலைக்கட்டு - தலைப்பாகை, முடிவு. தலைக்கழிதல் - பிரிதல். தலைக்காஞ்சி - பகைவரை அழித்து விட்ட வீரனது தலையைப் புகழ்ந்து கூறும் புறத்துறை. தலைக்காவல் - முக்கிய காவல். தலைக்கீடு - போலிக் காரணம், தலைப்பாகை. தலைக்குத்து - தலைவலி. தலைக்கூடுதல் - ஒன்று சேர்தல், நிறைவேறுதல். தலைக்கூட்டுதல் - நிறைவேற்றுதல், கூட்டுவித்தல். தலைக்கை - தலைமையானவன். தலைக்கைதருதல் - கையால் தழுவி அன்பு காட்டல். தலைக்கொள்ளுதல் - தொடங்குதல், மிகுதல், இறத்தல், கிட்டுதல், கைப்பற்றுதல், கெடுத்தல். தலைக்கோதை - நெற்றிக்கட்டு மாலை. தலைக்கோலம் - பெண்கள் தலையணி வகை. தலைக்கோலாசான் - நட்டுவன். தலைக்கோலி - ஆடி முதிர்ந்த கணிகை. தலைக்கோல் - ஆடற்கணிகை பெறும் பட்டம். தலைக்கோழி - விடியமுன் முதலில் கூவும் கோழி. தலைக்கோற்றானம் - ஆடரங்கு. தலைசாய்தல் - நாணுதல். தலைசாய்த்தல் - நாணுதல், வணங்குதல். தலைசிறத்தல் - மிக மேன்மை யடைதல். தலைசுற்றியாடுதல் - இறுமாத்தல். தலைசெய்தல் - தலைமை வகித்தல், தலையெடுத்தல், தலைவைத்துப் படுத்தல். தலைச்சங்கம் - கடல்கொண்ட தென் மதுரையில் இருந்ததாகக் கொள் ளப்படும் முதற்சங்கம். தலைச்சன் - முதற் பிள்ளை. தலைச்சாத்து - தலைப்பாகை. தலைச்சாவகன் - முதல் மாணாக்கன். தலைச்சிறத்தல் - மிகப் பெருத்தல். தலைச்சீரா - தலைக்கவசம். தலைச்சுற்று - கிறுகிறுப்பு. தலைச்சூல் - முதற் கருப்பம். தலைச்செல்லுதல் - எதிர்த்துச் செல்லுதல். தலைதடவுதல் - வஞ்சித்துக் கொடுத்தல். தலைதடுமாறுதல் - கலங்குதல், மயங் குதல். தலைதல் - மேன்மையாதல், கூடுதல், கொடுத்தல், பரத்தல், மழைபெய்தல். தலைகொடுதல் - தலையில் தொட்டுச் சத்தியஞ் செய்தல். தலைத்தருதல் - அன்பினைக் கையால் தழுவிக் காட்டுதல். தலைத்தலை - ஒவ்வொருவரும், மென்மேல், இடந்தோறும். தலைத்தாழ்வு - அவமானம். தலைத்தான் - பெரியவர் முன்னி லையில். தலைத்திராணம் - தலைச்சீரா. தலைத்தோற்றம் - வீரனொருவன் பகைவர் பசுநிரையைக் கைப்பற்றி வருதலறிந்து அவன் உறவு முறையார் மன மகிழ்தலைக் கூறும் ஒரு புறத் துறை. தலைநகரம் - இராசதானி, பிரதான நகரம். தலைநாண்மீன் - உச்ச நட்சத்திரம். தலைநாள் - அசுவதி, முதல் நாள். தலைநிலம் - முதன்மையான இடம். தலைநீங்குதல் - விட்டொழிதல். தலைநீர்ப்பாடு - கிளைக்கால்கள் பிரியும் முதல் மடை. தலைநீர்ப்பெருந்தளி - தண்ணீர்ப் பந்தல். தலைநோவு - தலைவலி. தலைபிணங்குதல் - ஒன்றோ டொன்று மாறுபடுதல் கண பீடபூமி (Decantraps). தலைப்படி - ஆறு பலங்கொண்ட நிறை. தலைப்படுதல் - ஒன்றுகூடுதல், எதிர்ப் படுதல், மேற்கொள்ளுதல், பெறுதல், தலைமையாதல், புகுதல், வழிப்படு தல், தொங்குதல். தலைப்படுத்துதல் - கூட்டுதல். தலைப்பட்டை - ஒலைக் குல்லா. தலைப்பணிலம் - வலம்புரி. தலைப்பறை - யானை முதலிய வற்றின் முன்னே கொட்டும் பறை. தலைப்பா, தலைப்பாகை - தலையிற் கட்டும் துணி. தலைப்பாக்கட்டிக் கோரை - பூங்கோரை. தலைப்பாடு - கலந்திருக்கை, தற்செயல், நிகழ்ச்சி. தலைப்பாட்டு - கூத்தின் முதலில் தொடங்கும்பாட்டு. தலைப்பாளை - தலையணிவகை. தலைப்பிரட்டை - தவளைமீன். தலைப்பிரித்தல் - நீக்குதல். தலைப்பிள்ளை - முதலிற் பிறக்கும் பிள்ளை. தலைப்பு - தலைபெயர், ஆதி, முன் தானை. தலைப்புணர்த்தல் - பை முதலிய வற்றின் வாயைக் கட்டுவதற்காகச் சுருக்குதல். தலைப்புணை - முக்கியமான ஆதாரம். தலைப்பெயர்த்தல் - மீளச்செய்தல். தலைப்பெயலுவமை - எதிர் நிலை யணி. தலைப்பெயல் - முதலில் பெய்யும் மழை. தலைப்பெயனிலை - மக்கட் பேறாகிய கடனைச் செய்து தாய் இறந்த நிலையைக் கூறும் புறத்துறை, போரிற் புறங்காட்டிச் சென்ற மகனது செயற்கு ஆற்றாது தாய் இறந்துபட்ட நிலை கூறும் புறத்துறை. அமளி அகத்தீடு 1 2 அகநகை அமல் 15 14 அபகடம் அக்கினி மூலை 3 4 அக்கு அந்தோ 13 12 அதிதேவதை அசைதல் 5 6 அசைத்தல் அதிதிபூசை 11 10 அணவரல் அடிமோனைத் தொடை 7 8 அடியடியாக அணல் 9 32 ஆங்காலம் அம்மைச்சி 17 18 அயக்காந்தம் ஆங்காரி 31 30 அனுமரணம் அரிடம் 19 20 அரிட்டம் அனுமதி 29 28 அறிவரன் அரைசன் 21 22 அரைஞாண் அறியுநன் 27 26 அழறு அல்லாத 23 24 அல்லாத்தல் அழல்தல் 25 48 இராசக்கிருதம் ஆட்டுதல் 33 34 ஆட்டை இராச இராசேசுவரி... 47 46 இயம் ஆப்பி 35 36 ஆப்பிள் இயமானன் 45 44 இடையன் பூச்சி ஆரோபம் 37 38 ஆர் இடையன் நெடுங்கீரனார் 43 42 இகுவை ஆழிமால் வரை 39 40 ஆழியான் இகுப்பம் 41 64 உபகாரி இருவேரி 49 50 இருளன் உபகற்பம் 63 62 உதகக்கிரியை இவக்காண் 51 52 இவண் உண்மை 61 60 உடன்கையில் இறுதி 53 54 இறுதிச்சொல் உடன்கேடன் 59 58 உக்கம் ஈசுவரிநாதம் 55 56 ஈச்சுரன் உகைத்தல் 57 80 ஊசல்காட்டி உம்மெனல் 65 66 உம்மை ஊசல் 79 78 உறைதல் உரம் 67 68 உரலடி உறைச்சாலை 77 76 உள்ளான் உருவுதல் 69 70 உருவுதிரை உள்ளாற்றுக்கவலை 75 74 உழலைமரம் உலை 71 72 உலைக்களம் உழலை 73 96 ஏமகூடம் ஊர்ணநாபி 81 82 ஊர்தல் ஏப்புழை 95 94 ஏகதேசவறிவு எக்கி 83 84 எக்கியம் ஏகதேசம் 93 92 எளிவு எண்ணூறு 85 86 எண்ணெய் எளிவருதல் 91 90 எல்லப்பநாவலர் எயிறு தின்னுதல் 87 88 எயிற்றம்பு எல்ம் 89 112 ஓரணை ஏறிடுதல் 97 98 ஏறிட்டுப்பார்த்தல் ஓரடை 111 110 ஓச்சம் ஐபீரியா 99 100 ஐப்பசி ஓசையூட்டுதல் 109 108 ஒளிர்வு ஒடுக்கு 101 102 ஒடுக்குதல் ஒளிர்விளக்கு 107 106 ஒலிப்பு ஒயிற்கும்மி 103 104 ஒய் ஒலிபெருக்கி 105 128 கதக்கண்ணனார் ககோளம் 113 114 கக்கம் கதகம் 127 126 கண்டூதி கஞ்சா 115 116 கஞ்சாங்கோரை கண்டுயிலுதல் 125 124 கணவாட்டி கடன்றானம் 117 118 கடா கணவன் 123 122 கட்டளைவலித்தல் கணபதி தாசர் 119 120 கடுவெளிச் சித்தர் கட்டளையிடுதல் 121 144 கவந்தி, கவந்திகை கந்தவாரம் 129 130 கந்தழி கவந்தன் 143 142 கலியுகம் கம்பளர் 131 132 கம்பளி கலியாணிக் குட்டி 141 140 கர்ப்பூரவள்ளி கரப்பிரசாரம் 133 134 கரப்பு கர்ப்பூரம் 139 138 கருமுகை கருடக்கொடியோன் 135 136 கருடத்தம்பம் கருமுகில் 137 160 காம்போதி கவுளி 145 146 கவுள் காம்போசம் 159 158 காந்தி கழுத்து 147 148 கழுநர் காந்தாரி 157 156 காடுகிழாள்வெயில் கள்ள 149 150 கள்ளப்பூமி காடுகிழவோள் 155 154 கன்னிகை கனகதம் 151 152 கனகதர் கன்னிகாரம் 153 176 குக்குடாசனம் காருகம் 161 162 காருகவடி குக்குடம் 175 174 கீச்சு காலவாகு பெயர் 163 164 காலவிடை நிலை கீச்சிடுதல் 173 172 கிலுக்கம் காவிரிப்பூம்பட்டினத்து... 165 166 காவிரிப்பூம்பட்டினத்து... கிலுகிலுப்பை 171 170 கிரகித்தல் கானாங்கள்ளி 167 168 கானாங்கோழி கிரகவக்கிரம் 169 192 குழாய் குடல் 177 178 குடல்வால் அழற்சி குழாம் 191 190 குலப்பகை குடைநாட்கோள் 179 180 குடைநிலை குலபருவதம் 189 188 குரவைப்பறை குணுக்கு 181 182 குணுங்கர் குரவை 187 186 குமிழ்ப்பு குத்துவாள் 183 184 குத்துவிளக்கு குமிழ்த்தல் 185 208 கொட்டடி குறள் 193 194 குறாவுதல் கொட்டகை 207 206 கொக்கிற்கு குறைநேர்தல் 195 196 குறைபடுதல் கொக்கிப்புழு 205 204 கைநிலை கூட்டியுரைத்தல் 197 198 கூட்டிவைத்தல் கைத்தூண் 203 202 கேட்டுமுட்டு கூளன் 199 200 கூளி கேட்டல் 201 224 சடம் கொம்மைகொட்டுதல் 209 210 கொயினா சடங்கு 223 222 சங்கயம் கொள்ளை... 211 212 கொறி சங்கம் 221 220 சகமீன்றவள் கோடை 213 214 கோடைக்கானல் சகமார்க்கம் 219 218 கோவைசியர் கோப்பெண்டு 215 216 கோப்பெருங்கணக்கர் கோவை 217 240 சன்னாசி சதுரந்தயானம் 225 226 சதுரப்பாடு சன்னாசம் 239 238 சவாது சந்திபண்ணுதல் 227 228 சந்திப்பு சவன்னன் 237 236 சர்வசித்து சமதிருட்டி 229 230 சமதை சர்வசார மூலிகை 235 234 சரசுவதி சம்பங்கி 231 232 சம்பங்கோழி சரசு 233 256 சிறப்பிலாதான் சாதி 241 242 சாதிக்காய் சிறப்பிற்பெயர் 255 254 சிலேட்டி சாம்பலடிப்பெருநாள் 243 244 சாம்பலாண்டி சிலேடை 253 252 சிமிழ்ப்பு சாலகம் 245 246 சாலபஞ்சிகை சிமிழ்த்தல் 251 250 சிதம்பர் சிக்கணம் 247 248 சிக்கம் சிதம்பரரேவணசித்தர் 249 272 சூல்தண்டு சிற்றம்பலநாடிகள் 257 258 சிற்றம்பலம் சூல் 271 270 சூடடித்தல் சீப்பு 259 260 சீமங்கலி சூடகம் 269 268 சுவாத்தியம் சுகாதாரம் 261 262 சுகித்தல் சுவாது 267 266 சுரப்பு சுதைஓவியம் 263 264 சுத்தசாரி சுரப்பி 265 288 சௌமன் செஞ்சோற்றுக்கடன் 273 274 செடி சொளப்திகம் 287 286 சோதனம் செம்பொருள் 275 276 செம்பொருளங்கதம் சோதரி 285 284 சொறிதல் செல்லுதல் 277 278 செல்லுலோக சொரி 283 282 சேரிகை சேகிலி 279 280 சேகில் சேரி 281 304 தலைச்சன் ஞான்றை 289 290 ஞிமிர் தலைச்சங்கம் 303 302 தருக்கபரிபாடை தக்கம் 291 292 தக்கயாகப்பரணி தருக்கசங்கிரகம் 301 300 தமிழ்முத்தரையர்கோவை தடம் 293 294 தடவரல் தமிழ்மணல் 299 298 தந்தசடம் தண்டக்கூற்றம் 295 296 தண்டசக்கரம் தத்தை 297 320 தலைப்பெய்தல் - ஒன்றுகூடுதல், கிட்டுதல், பெயதுரைத்தல், கூடுதல். தலைப்போகுதல் - முடிவு போதல். தலைப்போகுமண்டலம் - இசைப்பா வகை. தலைமகள் - அகப்பொருள் தலைவி. தலைமகன் - தலைவன், கணவன். தலைமக்கள் - மேன்மக்கள், படைத் தலைவர். தலைமடங்குதல் - கீழ்ப்படிதல். தலைமடிதல் - இறத்தல். தலைமடுத்தல் - தலையணைக்காகக் கொள்ளுதல். தலைமடை - முதல்மடை. தலைமணத்தல் - ஒன்றோடு ஒன்று பின்னுதல், நெருங்கிக் கலத்தல். தலைமயங்குதல் - பெருகுதல், கை கலத்தல், கலந்திருத்தல், கெடுதல். தலைமலைகண்டதேவர் - மரு தூரந்தாதி பாடியவர் (18ஆம் நூ.). தலைமறிதல் - நோய் முதலியன நீங்குதல். தலைமாடு - தலைப்பக்கம். தலைமாராயம் - பகைவனது தலையைக் கொண்டு வந்தவன் மனமுவக்கும்படி மன்னன் செல்வ மளித்ததைக் கூறும் புறத்துறை. தலைமார்பு - தலையோடு சேர்ந்திருக் கும் மார்பு (Chephalo thorax) தலைமாலை - தலைக்கணியும் கண்ணி, தலைகளாலான மாலை. தலைமாறு - பதில். தலைமிதழ் - மூளை. தலைமுழுக்கு - மகளிர் சூதகம், மெய் முழுதுங் குளிக்கை. தலைமுறை - பரம்பரை. தலைமேற்கொள்ளுதல் - தலைமேல் தாங்குதல், பொறுப்பை ஏற்றல். தலைமை - முதன்மை, மேன்மை. தலைமைப்பாடு - பெருமை. தலைய - பெய்ய. தலையடித்தல் - தொந்தரவு படுதல். தலையடுத்தல் - சேர்த்துக் கூறுதல். தலையணி - தலையிலணியும் ஆபரணம். தலையணை - தலை வைப்பதற்குரிய பஞ்சு முதலியன வைத்துத் தைத்த பை. தலையணைமந்திரம் - மனைவி கணவ னுக்கு இரகசியத்திலோதும் உபதேசம். தலையரங்கேறுதல் - முதல்முறை அவையோர்க்குக் காட்டுதல். தலையலங்காரம் - தேர்க் கொடிஞ்சி, தலையை அலங் கரிக்கை. தலையல் - தலைப்பெயல். தலையழிதல் - அடியோடு கெடுதல். தலையெழித்தல் - அடியோடு கெடுத்தல், தலைமை தீர்த்தல். தலையளி - இனியவை கூறுதல், உத்தம அன்பு, கருணை. தலையளித்தல் - காத்தல், நோக்குதல். தலையறை - உடற்குறை. தலையன்பு - தலையளி. தலையாகுமோனை - செய்யுளின் ஓரடியின் எல்லாச் சீரிலும் மோனை யெழுத்து ஒன்றி வரத்தொடுப்பது. தலையாகெதுகை - முதற்சீர் முழுதும் ஒன்றிவரும் எதுகை. தலையாட்டம் - தலை நடுக்கம், குதிரைத் தலையணி வகை. தலையாப்பு - கஞ்சி ஆடை. தலையாரி - கிராமக்காவற்காரன். தலையாயார் - பெரியோர். தலையாலங்காரம் - சேரனோடு நெடுஞ் செழியன் போர் புரிந்து வெற்றி கொண்ட சோழநாட்டுப் பகுதி. தலையிடி - தலைவலி. தலையிடுதல் - கூட்டுதல், பிரவே சித்தல் தலையீண்டுதல் - ஒன்று கூடுதல். தலையீற்று - முதற்கன்று. தலையுவா - அமாவாசை. தலையெடுத்தல் - தலைநிமிர்தல், பிரசித்தமாதல், விருத்தியடைதல், உற்பத்தியாதல், திரும்ப அடைதல். தலையெடுப்பு - செருக்கு, தாழ்நிலையி னின்று மேம்படுகை. தலையெழுத்து - விதி. தலையொடுமுடிதல் - போர்க்களத்தில் மாண்ட கணவனது வெட்டுண்ட தலையைப் பிடித்துக் கொண்டு இறந்துபட்ட மனைவியைப் பற்றிக் கூறும் புறத்துறை. தலையோடு - கபாலம். தலைவரி - ஒவ்வொருவர் மீதும் விதிக்கப்படும் வரி (Poll - tax). தலைவரிசை - சன்மானம். தலைவருதல் - தோன்றுதல், மிகுதியாக நேர்தல், எதிர்க்குமாறு முன் வருதல் மென்மையாதல். தலைவன் - முதல்வன், அரசன், குரு, சிறந்தோன், கடவுள், கதாநாயகன். தலைவாசல் - தலைவாயில். தலைவாயில் - முதல் வாசல். தலைவாய் - முதன்மடை. தலைவாழையிலை - நுனியோடு வடிய வாழையிலை. தலைவி - தலைமைப்பெண், அகப் பொருட் கிழத்தி. தலைவிதி - ஊழ். தலைவிரிகோலம் - அலங்கோலம். தலைவிரிபறை - பறைவகை. தலைவிளை - வயலின் முதல் விளைவு. தவ - மிக. தவக்கம் - தடை, கவலை. தவக்கு - நாணம். தவசம் - தானியம். தவசி - தவம் செய்வோன். தவசிப்பட்சி - வெளவால். தவசிப்பிள்ளை - சைவரிடம் சமையல் வேலை செய்வோன். தவசு - தவம். தவசுமுருங்கை - ஒருவகைச் செடி. தவணை - கெடு, தடவை. தவணைத்தொகை - தவணையில் கட்ட வேண்டிய தொகை (Instal ment). தவண்டை - பேருடுக்கை, தவிப்பு. தவத்தர் - முனிவர். தவத்தல் - நீங்குதல். தவத்தி - தவப்பெண். தவநிலை - தவச்செயல். தவப்பள்ளி - முனிவர் வாழ் இடம். தவம் - பட்டினி முதலியவற்றால் உடலை வாட்டிக் கடவுளை வழிபடுகை, புண்ணியம் இல்லறம், தோத்திரம். தவர் - துளை, வில். தவர்தல் - துளைத்தல். தவலுதல் - நீங்குதல். தவலை - பாத்திர வகை. தவலோகம் - மேல் உலகத்தொன்று. தவல் - குறைவு, கேடு, குற்றம், மரணம், வறுமையால் வருந்துகை. தவவீரர் - முனிவர். தவவேடம் - முனிவர் கோலம். தவழ்தல் - ஊர்தல், தத்துதல், பரத்தல். தவளசத்திரம் - வெண் கொற்றக் குடை. தவளத்தொடை - தும்பை மாலை. தவளம் - வெண்மை, கர்ப்பூரம். தவளை - தவக்கை. தவளைக்கிண்கிணி - தவளை போல் ஒலிக்கும் கிண்கிணி கொண்ட காலணி. தவளைப்பாய்ந்து - தவளைப் பாய்ச்சல் போல இடை விட்டுச் செல்லும் நிலை. தவறு - பிழை, நெறி தவறுகை, அழுக்கு பஞ்சம். தவறுதல் - தாண்டுதல், தப்பி விடுதல், வாய்க்காமற் போதல், குற்றப்படுதல், பிசகுதல். தவனம் - வெப்பம், தாகம், வருத்தம், சூரியன், மருக்கொழுந்து. தவனியம் - பொன். தவவாளிப்பு - குடைவு, வெட்டு. தவிசு - தடுக்கு, பாய், மெத்தை, பீடம். தவிடு - கொடி, தானியத் தவிடு. தவிட்டுப்புறா - தவிட்டு நிறமுள்ள புறா. தவிப்பு - வருந்துகை, தாகம். தவிர - நீங்க, ஒழிய. தவிர்ச்சி - தங்குகை, இடையீடு. தவிர்தல் - விலகுதல், தங்கிவருதல், தணிதல், பிரிதல். தவிர்த்தல் - நீக்குதல், அடக்குதல். தவில் - மேள வகை. தவிவு - இடையிடு. தவிதபடம் - வெண்முகில். தவ்வல் - சிறு குழந்தை. தவ்வி - அகப்பை. தவ்வு - துவாரம், பாய்ச்சல். தவ்வுதல் - குறைதல், குவிதல், கெடுதல், தவறுதல், தாவுதல், மிதித்தல். தவ்வெனல் - சுருங்கற் குறிப்பு, மழையின் ஒலிக்குறிப்பு. தவ்வை - தமக்கை, தாய், மூதேவி. தழங்குதல் - முழங்குதல். தழலாடிவீதி - நெற்றி. தழலுதல் - அழலுதல், பிரகாசித்தல். தழல் - நெருப்பு, கார்த்திகை, நஞ்சு, கிளிகடிகருவி, கவண். தழற்சொல் - தண்டத்தைத் தோற்று விக்கும் சொல். தழனாள் - கார்த்திகைநாள். தழாத்தொடர் - ஒருசொல் அடுத்து வருஞ்சொல்லை நேரேதழுவாது அமையுந் தொடர். தழால் - தழுவுகை. தழிச்சுதல் - தழுவுதல், புகுதல். தழிஞ்சி - போரில் ஆயுதங்களால் தாக் குண்டுற்ற தன் படையாளரை முகமன் கூறியும் பொருள் கொடுத்தும் அரசன் தழுவிக் கொள்ளுதலைக் கூறும் புறத்துறை, ஒரு வீரன் தனக்குத் தோற்றோடுவோர் மீது படையெடாத மறப்பண்பினைக் கூறும் புறத்துறை, பகைவர் சேனை தம் மெல்லையிற் புகாதபடி அரிய வழியைக் காத் தலைக் கூறும் புறத்துறை. தழு - தழுவுகை. தழுக்குதல் - செழிப்புறுதல். தழுதழுத்தல் - நாக்குழறுதல். தழும்பன் - ஓர் சிற்றரசன். தழும்பு - வடு, சிதைவு, குற்றம். தழும்புதல் - தழும்புண்டாதல், பழகியிருத்தல். தழுவணி - குரவைக்கூத்து. தழுவு - அணைப்பு. தழுவுதல் - அணைத்தல், நட்பாக் குதல், பூசுதல், பொருந்துதல். தழுவுதொடர் - ஒருசொல் மற்றொரு சொல்லை நேரே தழுவி நிற்குந் தொடர். தழூஉ - மகளிராடுங் குரவைக் கூத்து, அணைக்கை. தழை - தளிர், இலை, மயிற்றோகை, பீலிக்குடை, தழைஉடை. தழைதல் - தளிர்த்தல், செழித்தல், தாழ்தல். தழைத்தல் - பூரித்தல், செழித்தல், மிகுதல். தழைத்தானை - தழையாற் செய்த மேலாடை. தழையணி - தழையுடை. தழையிடுவோர் - திருத்துழாய் முதலிய பச்சிலைத் திருப்பணி செய்வோர். தழையுடை - தழையாலான மகளிர் உடை. தழைவு - தளிர்க்கை, மிகுதி. தளகர்த்தன் - படைத் தலைவன். தளசிங்கம் - பெருவீரன். தளதளத்தல் - பிரகாசித்தல். தளபதி - தளகர்த்தன். தளபாடம் - தளவாடம். தளப்பம் - மனஉலைவு, காதணி வகை. தளப்பற்று - தாளிப்பனை ஓலை. தளப்பு - கேடு. தளமெடுத்தல் - சண்டை தொடங்குதல். தளம் - கனம், வெண்சாந்து, தளவரிசை, உப்பரிகை, தட்டு, புவிதழ், முல்லை, படை, சட்டம், மேடை. தளம்பு - மதகு, சேறுகுத்தி. தளம்புதல், தளும்புதல் - ததும்புதல், சாய்ந்தாடுதல், பழக்கமுறுதல். தளர்ச்சி - நெகிழ்ச்சி, சோர்வு. தளர்தல் - சோர்தல், மனங்கலங்குதல், தவறுதல். தளர்நடை - தடுமாறி நடக்கும் நடை. தளர்வு - சோர்வு, நெகிழ்வு, துயரம். தளவட்டம் - பூவிதழ்ச் சுற்று. தளவம் - முல்லை, செம்முல்லை. தளவரிசை, தளவிகை - கற்பரப்பு. தளவாடம் - வேலைசெய்யும் கருவிகள். தளவாய், தளவான் - படைத் தலைவன். தளவு - யானையின் வாய், முல்லை, ஊசி மல்லிகை. தளா - முல்லை. தளி - நீர்த்துளி, தலைப்பெயல் மழை, முகில், குளிர், கோயில், இடம், விளக்குத்தகழி, விளக்குத் தண்டு. தளிகை - உண்கலம், ஊரளவு கொண்ட நைவேத்தியப் பிரசாதம், பீடம். தளிச்சேரி - தேவதாசிகள் வசிக்கும் தெரு. தளிச்சேரிப்பெண்டுகள், தளிப் பெண்டுகள் - தேவதாசிகள். தளித்தல் - துளித்தல், பூசுதல். தளிமம் - படுக்கை, மெத்தை, அழகு. தளியிலார் - தளிச்சேரிப் பெண்டுகள். தளிரியல் - பெண். தளிர் - முளைக்கும் பருவத்துள்ள இலை. தளிர்தல் - துளிர்த்தல், செழித்தல், மகிழ்தல். தளிர்ப்பு - மன எழுச்சி. தளிவம் - தகடு. தளுக்கு - மினுக்கு, ஆடம்பரம், மூக்கணி, தந்திரம். தளுக்குதல் - பூசுதல், பிரகாசித்தல். தளும்புதல் - தளம்புதல். தளுவம் - கைத்துண்டு. தளை - கட்டு, கயிறு, விலங்கு, மலர் முறுக்கு, தொடர்பு, ஆண்கள் மயிர், வயல், செய்யுளில் ஒரு சீரின் ஈற்ற சைக்கும் அதனை அடுத்து வரும் சீரின் முதலசைக்குமுள்ள தொடர்பு. தளைதட்டல் - வேறுதளை விரவிய தனால் எடுத்துக்கொண்ட செய்யுளின் தளைமாறுபடுதல். தளைதல் - பிணித்தல், தடுத்தல், நீர் முதலியவற்றைத் தளைதல். தளைத்தல் - கட்டுதல். தளைபடுதல், தளைப்படுதல் - சிறைப்படுதல், கட்டுப்படுதல். தளையம் - விலங்கு. தளையாளர் - காலில் தளையிடப் பட்டவர். தள்ளல் - பொய். தள்ளாடுதல் - தளர்ந்து நடத்தல், தடு மாறுதல், ஆடுதல். தள்ளாமை - தளர்ச்சி. தள்ளாவாரம், தள்ளவாரம் - மதிற்பொறி வகை. தள்ளுதல் - விலகுதல், தவறுதல், குன்றுதல், சோர்தல், நீக்குதல், தூண்டுதல், கொல்லுதல். தள்ளை - தாய். தறி - வெட்டுகை, நடுதறி, முளைக் கோல், நெய்யும் எந்திரம், பறை யடிக்கும் குறுந்தடி. தறிகை - கோடரி, உளி. தறிக்கடமை - நெசவுத் தறிகட்கு இட்டவரி. தறித்தல் - வெட்டுதல். தறிபடுகு - தறியின் நெட்டிழை. தறியிறை - தறிக்கடமை. தறிவலை - நடுதறியுடையதாய் மான் பிடிக்க உதவும் வலை. தறுகட்பம் - தறுகண். தறுகண் - கொடுமை, அஞ்சாவீரம், கொல்லுகை. தறுகுதல் - தாமதித்தல். தறுக்கணித்தல் - காய்த்துப் போதல், கன்றிப்போதல். தறுதலை - தறிதலை, அடங்காதவன். தறுவாய் - உற்றசமயம், பருவம். தறை - தரை. தறைதல் - தடையாதல், இறுக்குதல். தற்காத்தல் - தன்னைக்காத்தல். தற்காலம் - நிகழ்காலம், இப்போது. தற்காலிக - நிகழ்காலத்துக்குள்ள (Temporary). தற்கிழமை - பிரியாதிருக்கும் சம்பந்தம். தற்கு - செருக்கு. தற்குறி - எழுதத் தெரியாதவன் இடும் கைக்கீறு. தற்குறிப்பேற்றம் - பொருளிடத்து இயல்பாக நிகழ்ந்தன்மையை ஒழித்துக் கவிஞன் வேறொரு வகையை ஏற்றிச் சொல்லும் அணி. தற்குறிமாட்டெறிதல் - கைக் கீறிடுதல். தற்கொண்டான் - மணந்த கணவன். தற்கொலை - தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளுதல். தற்கோலம் - தாம்பூலத்துடன் உட்கொள்ளும் வால்மிளகு. தற்சமம் - ஒலி மாறுபாடின்றித் தமிழில் வழங்கும் ஆரியச் சொல். தற்சனி - சுட்டுவிரல். தற்சுட்டு - தன்னைச்சுட்டுகை. தற்செயலாய் - எதிர்பாராமல். தற்செய்தல் - பலித்தல், தன்னைப் பெருக்குதல். தற்பணம் - கண்ணாடி, தர்ப்பணம். தற்பதம் - பிரமசொருபம், தத் என்னும் பதம். தற்பம் - கருவம், கந்தூரி, துயிலிடம். தற்பரம் - மேம்பட்டது. தற்பரன் - பரம்பொருள். தற்பரை - தன்னைப் பதியாகக் கருதும் ஞானம், ஒருவினாடியில் அறுபதில் ஒரு பகுதி. தற்பவம் - தமிழில் திரிந்து வழங்கும் வடசொல். தற்பாடி - வானம்பாடி. தற்பின் - தம்பி. தற்பு - உள்ளநிலைமை, கருவம். தற்புகழ்ச்சி - தன்னைத்தான் புகழ்ந்து கொள்ளுதல். தற்புருடம் - சிவன் ஐம்முகத்துள் கிழக்கு நோக்கியிருப்பது. தற்போதம் - தன்னையும் கடவுளையும் அறியும் அறிவு, அகங்காரம். தனகு - உள்ளக்களிப்பு. தனக்குதல் - சரசஞ்செய்தல், உள்ளங்களித்தல். தனசாரம் - முலைப்பால். தனஞ்சயன் - அருச்சுனன், அக் கினி, தசவாயுக்களில் ஒன்று. தனதன் - குபேரன். தனதானியம் - பொன்னும் விளை பொருளும். தனது - சொந்தம், உரிமை. தனதுபண்ணுதல் - தன் வசப்படுத் துதல். தனத்தானம் - சென்மலக் கினத்திலிருந்து இரண்டாம் வீடு. தனத்தோர் - வைசியர். தனந்தயன் - பாலுண்குழவி. தனபதி - பெருஞ் செல்வமுள்ள குபேரன். தனபாரம் - கொங்கைச் சுமை. தனம் - செல்வம், முத்திரை, உத்திரம், முலை, பசுக்கன்று, சந்தனம், வருத்தம். தனயன் - மகன். தனவைசியர் - பொன் வாணிகர். தனன் - வைசியர் பட்டப்பெயர். தனாசி - ஓர் இராகம். தனி - ஒற்றை, தனிமை, ஒப்பின்மை, உதவியின்மை, தேர் நெம்புத்தடி. தனிகன் - செல்வன். தனிகை - இளம்பெண். தனிசு - கடன். தனிச்சர் - நேரிசைவெண்பா கலி வெண்பாக்களின் இரண்டாமடியில் எதுகை பெற்று வரும் சீர். தனிதம் - முழக்கம். தனிதர் - தனிமையாயுள்ளவர். தனித்தன்மைப்பன்மை - தன் னொருவனையே குறிக்கும் தன்மைப் பன்மை. தனிநிலை - ஆய்தம், ஒரு செய்யுளால் வரும் பிரபந்தம். தனிப்பாடல் - விடுகவி. தனிமகனார் - சங்ககாலப் புலவர் (நற். 153). தனிமங்கள் - ஒன்று இன்னொன்றாக மாறாத பூதியங்கள் (Elements). தனிமுடி - ஏகாதிபத்தியம். தனிமுதல் - கடவுள். தனிமை - ஒன்றியாக இருக்கும் தன்மை. தனிமையாற்றல் - வியாபாரத்தின் பொருட்டுக் குடும்பத்தினின்று பிரிந் திருத்தலைப் பொறுத்திருக்கும் வணிகர் குணம். தனியன் - இனத்தினின்றும் பிரிந்தமை யால் மூர்க்கங்கொண்ட விலங்கு. தனியூர் - பெருநகர். தனிவட்டி - சாதாரண வட்டி (Simple interest). தனிவழி - துணையற்றவழி. தனு - உடல், சிறுமை, காசிபர் மனைவி, வில், தனுராசி, 4 கரங் கொண்ட நீட்டலவை, ஊன்றிப் பேசுகை. தனுக்காஞ்சி - செவ்வழி யாழ்த்திறத் தொன்று. தனுக்கோடி - தனுஷ்கோடி. தனுசன் - அசுரன், மகன். தனுமணி - ஆயிரவரைப் போரிற் கொன்ற வீரர் வில்லிற்கட்டும் மணி. தனுமாசம் - மார்கழி மாசம். தனை - அளவு குறிக்கப் பிற சொல்லின் பின்வரும் ஒரு சொல். தனையன் - மகன். தனையை - மகள். தன் - தான் என்னும் சொல் வேற்றுமையுருபு ஏற்கும் போது பெறும் திரிபு. தன்கு - மகிழ்ச்சி. தன்குறி வழக்க மிக வெடுத் துரைத்தல் - தான் உண்டாக்கிய குறியீட்டைத் தன்நூலின் மிகுதியும் எடுத்தாளும் தந்திர உத்தி. தன்பாலிருத்தல் - சிவ பதங்களிலொன்றாகிய சாமீப்பியம். தன்சரணம் - தன்மததைச் சரண் புகுகை. தன்ம சாதனம் - தரும சாதனம். தன்மபுத்திரன் - தரும புத்திரன். தன்மம் - தருமம், வேதம். தன்மய ஆக்கம் - தனது மயமாக்கித் தன்னோடு கலந்து கொள்ளுதல். (Assimilation). தன்மாத்திரை - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற மூலப் பொருள்கள். தன்மீட்டன் - நன்னெறியிலுள்ள வன். தன்மூலம் - திப்பலிக்கட்டை. தன்மேம்பாட்டுரை - தற்புகழ்ச்சி அணி. தன்மை - இயல்பு, குணம், நிலைமை, முறை, ஆற்றல், நன்மை, அழகு, மூவிடங்களில் தன்னைக் குறிக்கு மிடம். தன்மைநவிற்சி - பொருள் முதலிய வற்றை இயற்கையிலுள்ள வாறே கூறும் அணி. தன்மை மிகுத்துரை - ஒரு பொரு ளின் இயல்பை மிகுத்துக் கூறுகை. தன்வந்தரி -தேவ மருத்துவன். தன்வயத்தனாதல் - சுவதந்திரனாந் தன்மை. தன்வினை - இயற்றுதற் கருத்தா வின் வினையை யுணர்த்துஞ் சொல். தன்னடக்கம் - அமைதி. தன்னடிச்சோதி - பரபதம். தன்னந்தனி - முற்றுந் தனிமையாதல். தன்னம் - சிறுமை, பசுவின் கன்று, மரக்கன்று. தன்னயம் - சுயநலம். தன்னரசு - சுதந்திர அரசு, அரச னில்லா அரசு. தன்னறிவு - சுயவறிவு. தன்னாரவண்ணம் - மனம் போன படி. தன்னியம் - முலைப்பால். தன்னியாசி - ஓர் இராகம். தன்னினமுடித்தல் - ஒன்றைச் சொல்லும்போது விரிவுறாமை வேண்டி அதற்கினமாகிய மற்றொன் றையும் அதனோடு கூட்டி முடித்த லாகிய உத்தி. தன்னுதல் - பொருந்துதல், மெல்லத் தள்ளுதல். தன்னுறுதொழில் - அரசனது கட்ட ளையை எதிர்பாராத அவன் வீரர் பகைவரின் ஆநிரை கவர்தலைக் கூறும் வெட்சித் திணைப்பகுதி. தன்னுட்டி - தாய்ப்பாலைத் தடை யின்றி உண்டு வளர்ந்த சேங்கன்று. தன்னை - (தன் + ஐ) தலைவன், தமையன், தமக்கை. தன்னைவேட்டல் - இறந்த கணவ னுடலைப் போர்க் களத்தில் அவன் மனைவி தேடுதலைக் கூறும் புறத் துறை. தா தா - வலிமை, வருத்தம், கேடு, பாய்கை, பகை, குற்றம். தாஅவண்ணம் - இடையிட்டுவரும் எதுகையுடைய வண்ணம். தாஅனாட்டித் தனாஅது நிறுப்பு - தானாக ஒன்றனைக்கூறி அதனை நிலை நிறுத்துகை. தாகம் - நீர்வேட்கை, ஆசை, காமம். தாக்கணங்கு - காமநோயை உண்டாக்கி வருந்தும் தெய்வம், இலக்குமி. தாக்கம் - கனத்திருக்கை. தாக்கல் - பாய்ந்து மோதுகை, எதிர்க்கை, தகவல். தாக்காட்டுதல் - உணவளித்து உதவி செய்தல். தாக்கு - எதிர்க்கை, போர், வேகம், அதிபாரம், குறுந்தடி, இடம், பற்று, உத்தரவு. தாக்குதல் - மோதுதல், பாரமாதல், எதிர்த்தல், தீண்டுதல், பெருக்குதல். தாங்கல் - தாங்குகை, துன்பம், மனக் குறை, சகிப்பு, நிர்நிலை, பூமி, தூக்குகை. தாங்கள் - மரியாதை குறிக்கும் முன் னிலைப் பன்மைச் சொல். தாங்கி - ஆதாரமானது, தாங்குபவன், பூண், கிம்புரி, ஆபரணங்களின் பூட்டு, யந்திரங்களுக்கு உராய் வைப் குறைக்க அமைக்கப்படுவது (Bearing) யுத்தத் தாங்கி (Tank). தாங்குகட்டை - தண்டபாளத்தின் கீழிடம் கட்டை (Sleepers). தாங்குதல் - ஆதரித்தல், புரத்தல், இளைப்பாற்றுதல், சகித்தல், சுமத் தல், ஏற்றுக்கொள்ளுதல், அணிதல், அனுட்டித்தல், தாமதித்தல், நிறுத் துதல், தடுத்தல், எரித்தல், தள்ளுதல், மாறுபடுதல், வருந்துதல். தாசநம்பி - சாத்தானிய வகுப்பினரின் பட்டப் பெயர். தாசரதி - இராமன். தாசரீப்பாம்பு - பைத்தான் என்னும் மலைப்பாம்பு. தாசன் - அடிமை, வேலைக்காரன் வலைஞர். தாசி - சேடி, விலைமகள், பரணிநாள். தாசில் - அரசிறைத் தண்டல். தாசேரகம், தாசேரம் - ஒட்டகம். தாடகை - ஓர் அரக்கி. தாடங்கம் - பெண்கள் காதிலணியும் தோடு. தாடம் - அடிக்கை. தாடனக்கை - அபிநயவகை. தாடனம் - தட்டுகை. தாடி - மோவாய், தாடி, பசு முதலிய வற்றின் அலைதாடி, வாளின் பிடி, தட்டுகை. தாடித்தல் - தட்டுதல். தாடிமஞ்சம் - சத்திக்கொடி. தாடிமம் - தாதுமாதுளை. தாடு - வலிமை, தலைமை. தாடை - கன்னம், அலகு (Jaw). தாடையெழும்பு - கன்னத்தின் கீழ் எலும்பு. தாட்கவசம் - செருப்பு. தாட்காட்டு - மகளிர் கையணி. தாட்கோல் - தாழ்ப்பாள். தாட்சணியம் - இரக்கம், கண்ணோட் டம். தாட்சணை - தயவு. தாட்சாயணி - பார்வதி. தாட்சி - இழிவு, தாமதம். தாட்சிணியம், தாட்சிண்ணியம் - தாட்சணியம். தாட்டன் - தலைமை ஆண் குரங்கு. தாட்டாந்தம், தாட்டாந்திகம் - உபமேயம். தாட்டானை - கிழக்குரங்கு. தாட்டி - வைப்பாட்டி. தாட்டிகம் - பெருமை, பலம். தாட்டிகன் - பலவான், துட்டன். தாட்டோட்டக்காரன் - புரட்டான். தாட்போர் - தலையடியான நெற்போர். தாணி - தான்றி. தாணித்தல் - பதித்தல். தாணு - நிலைபேறு, தாவரம், மலை, தூண் குன்றி, சிவன், பற்றுக் கோடு, செவ்வழி யாழ்த் திறவகை. தாண்டகம் - அறு சீராலேனும் எண் சீராலேனும் இயன்ற ஒத்த நான்கடி கொண்ட செய்யுள்களுடையதும் கடவுளரைப் புகழ்வதுமான பிரபந்த வகை. தாண்டகவடி - இருபத்தாறுக்கு மேற் பட்ட எழுத்துக்களால் இயன்ற அடி. தாண்டவம் - தாவுகை, கூத்துவகை. தாண்டவராய சுவாமிகள் - கை வல்லிய நவநிதம் இயற்றிய ஆசிரியர் (17ம் நூ.). தாண்டு - குதி. தாண்டுதல் - குதித்தாடுதல், கடத்தல், செல்லுதல். தாண்முதல் - அடிப்பாதம். தாண்முளை - மகன். தாதகி - ஆத்தி. தாதணிவளையம் - விரலணிவகை. தாதன் - அடியவன். தாதா - தந்தை, பெரியோன், கொடை யாளன், பிரமன். தாதான்மியம் - ஒன்றுபட்டிருக்கை. தாதி - வேலைக்காரி, வேசை, பரணி, செவிலித்தாய். தாதிற்றூள், தாதின்றூள் - மகரந்தப் பொடி. தாது - இயற்கைப் பொருள், பொன் முதலிய உலோகங்கள், காவிக்கல், பூதம், வாதபித்த சிலேட்டுமங்கள், சுக்கிலம், நீறு, பூந்தாது, பூவினிதழ், தேன், வினைப்பகுதி, ஆண்டு அறுபதுள் பத்தாவது அடிமை. தாதுகோபம் - தாகபா, புத்தருடைய சாம்பல் முதலிய தாதுகளைப் பாதுகாத் தற்குக் கட்டிய கட்டிடம் (Dagoba). தாதுபரீட்சை - நோயறியமாறு நாடி பார்க்கை. தாதெருமன்றம் - இடையர் குரவை முதலியன நிகழ்த்துதற்கிடமானதும் எருதுகள் சூழ்ந்ததுமான மரத்து அடியீலுள்ள பொதுவிடம். தாதை - பிரமன், தந்தை. தாத்தா - பாட்டன். தாத்திரம் - கூன்வாள். தாத்திரி - பூமி, நெல்லி. தாத்துதல் - கொழித்தல். தாத்துரு - பன்னிரண்டு ஆதித்தருள் ஒருவர். தாத்துவிகம் - தத்துவ சம்பந்தமுடையது. தாந்தி - மன அடக்கம். தாந்திரம் - ஆகம சம்பந்தமானது. தாந்துவிகன் - தையற்காரன். தாபததிலை - காதலனை இழந்த மனைவி தவம்புரிந்தொழுகிய நிலைமையைத் தெரிவிக்கும் புறத் துறை. தாபதப்பக்கம் - நீராடல், வேறு நிலத்தில் படுத்தல், தோலுடுத்தல், எரியோம்பல், ஊரடையாமை, சடை புனைதல், காட்டிலுணவு, கடவுட் பூசை என்னும் தவத்தர்க்குரிய எண்வகை ஒழுக்கங்களைக் கூறும் புறத்துறை. தாபதம் - முனிவர் வாசம். தாபதவகை - தவவேடத்தார் புண் ணியத்தைத் தழுவி ஒழுகும் நடையைக் கூறும் புறத்துறை. தாபதன் - முனிவன். தாபம் - வெப்பம், தாகம், துன்பம். தாபரம் - மரப்பொது, அசரப்பொருள், இடம், பூமி, உடல், கோயில், இலிங்கம், உறுதி, பற்றுக்கோடு. தாபரன் - கடவுள். தாபரித்தல் - நிலைபெற்றிருத்தல். தாபவாகினி - வெப்பத்தைப் பரப்புங் கருவி. தாபனமுத்திரை - எழுந்தருள வேண்டும் என்பதைப் பூசையிற் குறிப்பிக்குமாறு கையைக் குப்புற விரித்துக் காட்டுங் குறி. தாபனம் - நிலைநிறுத்துகை, பிரதிட்டை, செய்கை. தாபனன் - சூரியன். தாபிதம் - நிலைநிறுத்தப்பட்டது. தாபித்தல் - நிலைநிறுத்துதல், பிரதிட்டை செய்கை. தாப்பிசை - செய்யுளின் இடையில் உள்ள மொழி முன்னும் பின்னும் சென்று கூடும் பொருள்கோள். தாப்புலி - வலிமிக்க புலி, ஒரு வகைப் பழைய பா. தாமக்கிரந்தி - அஞ்ஞாதவாசத்தில் நகுலன் வகித்த புனைபெயர். தாமசம் - தாமதம். தாமணி - மாடுகளைக் கட்ட உதவும் சுவையுள்ள தாம்புக்கயிறு, கயிறு, கப்பாற்பாயின் பின்பக்கத்தின் கயிறு. தாமதம் - காலநீட்டம், மந்தகுணம். தாமத்தர் - திருக்குறளுரை ஆசிரி யருள் ஒருவர். தாமநூல் - ஆயுள்வேதம். தாமப்பல் கண்ணனார் - சங்க காலப் புலவர் (புறம். 43). தாமம் - கயிறு, பூமாலை, 18 கோவையுள் மாதரிடையணி, பூ முடியுறுப்புக்கள் ஐந்தனுள் ஒன்று. கொன்றை, யானை, இடம், பரமபதம், நகரம், மருதநிலத் தூர், மலை, ஒளி, சந்தனம், யானை. தாமரை - கொடிவகை, பதுமவியூகம், ஒரு பேரெண், புலி எச்சிற்றழும்பு. தாமரைக்கண்ணான் - திருமால். தாமரைநாதன், தாமரைநாயகன் - சூரியன். தாமரைப்பீடிகை - புத்தரது திரு வடிப் பீடிகை. தாமரைப்பூ - நீரின் அடையாளமான தாமரைப்பூ. தாமரைமணி - தாமரை விதை. தாமரைமுகை - கொடிஞ்சி. தாமரைமொட்டு - இதயம். தாமரையாள் - இலக்குமி. தாமரைவளையம் - தாமரைத் தண்டு. தாமன் - சூரியன். தாமாவிருவர் - அசுவினிதேவர்கள். தாமானிலேவருதல் - காற்றுப் போக்கில் கப்பலோடுதல். தாமிரம் - செம்பு. தாமிரயுகம் - செம்புக் காலம் (Copper age). தாமோதரம் - பிடர். தாமோதரம் பிள்ளை சி.வை. - கலித் தொகை தொல்காப்பியம் முதலிய சங்க நூல்களை அச்சிட்ட வர் (1832 - 1901). தாமோதரனார் - சங்க காலப் புலவர் (குறு. 92). தாமோதரன் - கிருட்டிணன். தாம் - அவர்கள், முதல் வேற்றுமை யில் பன்மைப் பெயரைச் சார்ந்து வரும் சாரியை, அசை நிலை, தாகம். தாம்பரம் - தாமிரம், செம்பு. தாம்பாளம் - தட்டு. தாம்பிரசூடம் - அபிநயவகை. தாம்பிரபன்னி, தாபிரவர்ணி - தாமிர பருணி. தாம்பிரம் - செம்பு. தாம்பிரை - தாமரை. தாம்பு - கயிறு, ஊஞ்சல். தாம்பூலதாரணம் - வெற்றிலை பாக்குப் போடுதல். தாம்பூலம் - வெற்றிலை பாக்கு. தாம்பூலவல்லி, தாம்பூலி - வெற்றிலைக் கொடி. தாயகம் - அடைக்கலம். தாயங்கண்ணியார் - சங்க காலப் புலவர் (புறம். 250). தாயங்கூறுதல் - சூதாட்டில் வேண்டிய இலக்கணம் கூறுதல். தாயத்து - தாயித்து (amulet). தாயபனுவல் - இடையிடையே இலக்கணங்கள் கலந்துவரும் இலக்கிய வகை. தாயமாடுதல் - கவறாடுதல், சூதாடல். தாயம் - பாகத்துக்குரிய முன்னோர் சொத்து, பங்கு, கவறுருட்ட விழும் எண், கவறு, மேன்மை. தாயாதி - உரிமைப் பங்காளி. தாயித்து - மந்திரத்தகடு அடங்கிய அணி. தாயுமானவர் - திருச்சிராப்பள்ளி சிவபெருமான், 18ஆம் நூற்றாண்டி லிருந்த சைவப் பெரியார். தாயோலை - மூலவோலை. தாய் - அன்னை, அரசன், தேவி, குருவின் தேவி, அண்ணன், தேவி, மகட்கொடுத்தவர் இவரில் ஒருத்தி, முதன்மை. தாய்க்கட்டுமனை - வீட்டில் நடுப் பகுதி. தாய்க்கிழவி - தாசியின் தாய். தாய்ச்சி - கர்ப்பிணி, தாய்ப்பால் கொடுப்பவன். தாய்மை - தாயாந்தன்மை. தாரகப்பிரமம் - பிரணவ சொரூப மான பிரமம். தாரகம் - பிரணவம், கடப்பதற்கு உதவுவது, உச்சவிசை, ஆதாரம், நட்சத்திரம். தாரகற்காய்ந்தாள் - காளி. தாரகற்செற்றான் - முருகக் கடவுள். தாரகன் - ஓர் அசுரன், கடப்பிப் போன், தாருகன். தாரகாபதி - சந்திரன். தாரகாரி - முருகன். தாரகை - நட்சத்திரம், கண்மணி. தாரகைக்கோவை - ஏகாவலி என்னும் அணிகலன். தாரணமாலை - அருந்ததி போன்ற கற்புடை மகளிர்க்குள்ள இயற்கைக் குணங்களைக் கூறும் பிரபந்தம். தாரணம் - தரிக்கை, உறுதி. தாரணி - பூமி, மலை, யமன். தாரணித்தல் - தரித்தல். தாரணை - மனத்தை ஒருவழி நிறுத்தல். தாரதம்மியம் - ஏற்றத்தாழ்வு. தாரம் - அரும்பண்டம், எல்லை, நிஷதாசுரம், யாழின் நரம்பு, ஒருபண், பிரணவம், வெள்ளி, தாரா என்னும் உலோகம், வெண்கலம், பார்வை, நா, மனைவி, விவாகமான நிலை, மந்தாரமரம், தேவதாரம், கயிறு, அரிதாரம். தாரவெழுத்து - ஏழாவது கரத்தைக் குறிக்கும் ஒள. தாரா - வாத்துவகை, விண்மீன், நீர்த்தாரை. தாராகணம் - நட்சத்திரக் கூட்டம். தாராகிருகம் - நீர்த்தரையாற் குளிர்ச்சி தரும்படி அமைத்த மாளிகை. தாராசந்தானம் - நீங்காது வரும் தொடர்ச்சி. தாராட்டு - தாலாட்டு. தாராதரம் - மேகம். தாராபதி - சந்திரன். தாராய் - திராய். தாராளம் - உதாரம், நிறைவு. தாரி - வழி, முறைமை, வண்டு முதலியவற்றின் ஒலி, தரிப்பவன். தாரிணி - பூமி, இலவமரம். தாரித்தல் - பொறுத்தல், உடைத் தாதல். தாரித்திரியம் - தரித்திரம். தாரிப்பு - உதவி, மதிப்பு, தாங்கிப் பேசுகை. தாரின்வாழ்நன் - நெய்யும் தொழி லாளன். தாரு - மரம், மரக்கிளை, தேவதாரு, மரத்துண்டு. தாருகவிநாசினி - காளி. தாருகன் - ஓர் அசுரன். தாருகாரி - காளி. தாருகாவனம் - ஒரு தபோவனம். தாருண - 60 ஆண்டில் 18வது. தாருணம் - அச்சம். தாருவனம் - தாருகாவனம். தாரை - கண்மணி, கண், வியாழன், மனைவி, வாலியின் மனைவி, நட்சத்திரம், வரிசை, கோடு, ஒழுங்கு வழி, அடிச்சுவடு, நேரே ஓடுகை, குதிரைக்கதி, பெருமழை, நீரொ ழுக்கு, விரைவு, நா, ஆயுத அலகு, கூர்மை, சக்கராயுதம, நீண்ட ஊதுங் குழல், நீர் வீசுங்குருவி. தாரைவார்த்தல் - நீர் வார்த்துத் தத்தம் பண்ணுதல். தார் - மாலை, பூ, பூ வரும்பு, பூங் கொத்து, கிண்கிணிமாலை, கிளியின் கழுத்து வரை, கொடிப்படை, சேனை, ஒழுங்கு, முட்பதித்த மாடோட்டுங் கருவி, கயிறு, பிடர் மயிர், தோற் கருவி வகை, உபாயம். தார்க்கியன் - கருடன். தார்க்கச்சி - இருப்புமுள் பதித்த மாட்டை ஒட்டுங் கழி. தார்ட்டியம் - வலிமை. தார்த்தரட்டி, தார்த்தராட்டிரர் - திருதராட் டிரன் புத்திரரான் துரியோதனாதியர். தார்நிலை - தம்மரசனைச் சூழ்ந்த மொய்த்த பகைவரை வேற்றிடத்துப் பொருது நின்ற அவன் தானைத் தலைவர் முதலியோர் விரைந்து வந்து எறிதலைக் கூறும் புறத்துறை, வீர னொருவன் பகைவரது தூசிப் படையையானே தடுப்பேன் என்று தன் தறுகண்மை கூறும்புறத்துறை. தார்ப்பாய்ச்சுதல் - மூலைக் கச்சங் கட்டுதல். தார்ப்பிசின் - நிலக்கீல் (Pitch). தார்ப்பூ - அரசர்க்குரிய அடை யாளப்பூ. தார்மிகன் - தருமசிந்தனை உள்ளவன். தாலகேதனன், தாலகேது - பலராமன், வீட்டுமன். தாலப்பருவம் - பிள்ளைத் தமிழில் தாலாட்டுதலைக்கூறும் பருவம். தாலம் - பனை, கூந்தற்கமுகு, கூந்தற் பனை, மடன்மா, பூமி, நா, உண்கலம், யானைக்காது. தாலவட்டம் - யானைவால், விசிறி. தாலவிருத்தம் - பேராலவட்டம். தாலாட்டு - குழந்தைகளை உறங்கச் செய்ய நா அசைத்துப் பாடும் பாட்டு. தாலி - கழுத்திலணியும் ஆபரண வகை, திருமண காலத்தில் கணவன் மனைவி கழுத்தில் அணிவது, பல கறை, மட் பாத்திரம். தாலிக்கொழுத்து - ஆமைத்தாலி, பனைவெண்குருத்தால் செய்த ஆபரணம். தாலியமாறு - கப்பலின் முக அலங் காரம். தாலியைம்படை - ஐம்படைத்தாலி. தாலிபுலாகநியாயம் - ஒரு பானைச் சோற்றிற்கு ஓர் அவிழைப்பதம் பார்ப்பதுபோல ஒன்றன் ஒருபுடைத் தன்மையிலிருந்து அதன் முழு நிலையையும் அறியும் நெறி. தாலுறுத்துதல் - தாலாட்டுதல். தால் - தாலாட்டு. தாவகம் - காட்டுத்தீ. தாவடம் - உருத்திராக்க மாலை. தாவடி - போர். தாவடிபோதல் - படையெடுத்தல். தாவட்டம் - சிற்ப நூல்களுள் ஒன்று. தாவணி - சிறு பெண்களணியும் மேலாடை. தாவம் - காட்டுத் தீ, காடு, தீ, மரப் புழு, துன்பம். தாவர சங்கமம் - அசையும் பொருள் அசையாப் பொருள், இலிங்கமும் அடியாரும். தாவரத் தோட்டம் - (Botanical garden). தாவரநூல் - தாவரங்களைப் பற்றிக் கூறும் நூல் (Botany). தாவரம் - நிலைத்திணை, அசையாப் பொருள், மரப்பொது, ஆதாரம், உடல், இலிங்கம், தங்குதல், ஆதரித்தல். தாவல் - தாண்டுகை, பரப்பு, வருத்தம். தாவளக்காரர் - தேசாந்தர வணிகர், பொதிமாட்டுக்காரர். தாவளம் - தங்குமிடம், மருத நிலத்தூர். தாவள் - தங்குமிடம், மருத நிலத்தூர். தாவனம் - தாபனம், சுத்தி செய்கை. தாவித்தல் - தாபித்தல். தாவு - பாய்கை, செலவு, கேடு. தாவுதல் - குதித்தல், பரத்தல், தழைத்தல், பறத்தல், தாண்டுதல், கடத்தல், கெடுதல், ஒழிதல். தாழ - கீழே. தாழக்கோல் - தாழ்ப்பாள், திறவு கோல். தாழி - வாயகன்ற சட்டி, சாடி, இறந்தோரை அடக்கஞ் செய்து வைக்கும் பாண்டம், பரணி, கடல். தாழிக்குவளை - தாழியில் வைத்த குவளை. தாழிசை - பாவினங்களிலொன்று. தாழிவில்லை - மகளிர் தலையணி வகை. தாழை - செடிவகை, தெங்கம் பாளை. தாழ் - தாழ்ப்பாள், விரலணி, வணக்கம். தாழ்குழல் - பெண். தாழ்கோத்தல் - தாழிடுதல். தாழ்க்கோல் - தாழக்கோல். தாழ்ச்சி - தாழ்க்கை, ஆழம், கீழ்மை, ஈடுபடுகை, கால நீடிப்பு. தாழ்தல் - ஆழ்தல், விழுதல், நிலை கெடுதல், தங்குதல், நீளுதல், விரும்புதல், அழிதல், வணங்குதல். தாழ்த்துதல் - கீழ்படுத்துதல், தாமதித்தல். தாழ்ந்துபடுதல் - ஓரிடத்தே சேர்ந்து தங்குதல். தாழ்பீலி - சிறுசின்னம். தாழ்புயல் - காலிறங்கின மேகம். தாழ்ப்பாளர் - உரிய காலத்தில் எதிர்பார்த்திருப்பவர். தாழ்ப்பாள் - கதவை அடைக்கும். தாழ்மை - பணிவு, கீழ்மை, இழிவு, தாமதம். தார்வடம் - கழுத்தணி, உருத்திராக்க மாலை. தாழ்வர், தாழ்வரை - மலையடிவாரம். தாழ்வாய் - மோவாய். தாழ்வாரம் - தாழ்ந்த இறப்பு. தாழ்வு - பள்ளம், குறுமை, அவமானம், குற்றம், வறுமை அடிவாரம், தங்குமிடம், அடக்கம், துன்பம், வணக்கம். தாளகம் - அரிதாரம். தாளசமுத்திரம் - பரத சூடாமணி என்ற அரசன் இயற்றிய தாள வகையைக் கூறும் பழைய நூல். தாளமானம் - தாளவளவு. தாளம் - கைத்தாளக் கருவி, பாடு கையில் தாளத்தை அளக்கும் அளவு. தாளவொற்று - சதி, காலம் ஒத்திருக்கை. தாளவோத்து - தாளங்களை விவரிக்கும் ஒரு பழைய நூல். தாளாண்மை - ஊக்கம், விடா முயற்சி. தாளி - பனை, கூந்தற்பனை, மருந்துச் செடி வகை, அனுடம், கொடி வகை. தாளிசபத்திரி - பேரிலங்கப் பட்டை மரம். தாளிசம் - சிறுமரவகை. தாளிதம் - கறிக்குக் கடுகு முதலியவற்றை வாசனை உண்டாகும்படி இடுதல். தாளிப்பனை - கூந்தற்பனை. தாளிம்பம் - நுதலணிவகை. தாளியடித்ததல் - நெருக்கி முளைத்த பயிர்களை விலக்குதற்கும் வருத்த மின்றிக் களை பிடுங்குதற்குமாகக் கீழ் நோக்கிய பல முனைகளையுடைய பலகையால் உழுது பண்படுத்துத்தல். தாளுரு - ஒருவகைக் காதணி. தாள் - கால், மர முதலியவற்றின் அடிப் பகுதி, அடித்தண்டு, வைக்கோல், முயற்சி, படி, ஆதி, சட்டைக் கயிறு, வால் நட்சத்திரம், தாழ்ப்பாள், திறவு கோல், மூட்டுவாயின் ஊடுருவச் செறிக்கும் கடையாணி. தாள்வரை - தாழ்வரை. தாள்வினை - உற்சாகம், முயற்சி. தாறு - வாழை முதலியவற்றின் குலை, இரேகை, வரையில், முட்கோல், அங்குசம், தாற்றுக் கோவிலுள்ள இரும்பு ஊசி. தாறுபாச்சிக்கட்டுதல் - மூலைக் கச்சங் கட்டுதல். தாறுமாறு - குழப்பம், அதிக்கிரமம். தாற்பரியம், தாற்பர்யம் - பொருள் விவரம். தாற்பருவம் - எட்டாம் மாதத்தில் தாலாட்டுவதாகக் கூறும் பகுதி. தாற்றுக்கோல் - இரும்பு முட்கோல், அங்குசம். தாற்றுதல் - கொழித்தல், தரித்தல். தானக்கோல் - யார் நரம்புகளைத் தெளிக்கப் பயன்படுத்தும் கருவி. தானசுத்தி - சுத்தமாக்குகை. தானசூரன் - பெருங் கொடையாளி. தானத்தார் - கோயிலதிகாரிகள். தானதருமம் - ஈகை. தானநிலை - இசைக் கூறுபாடு. தானம் - இசைச்சுரும், இடம், பதவி, சுவர்க்கம், அசனம், எழுத்துப் பிறக்குமிடம், சக்தி, ஆற்றல் சமமாக இருத்தல், நன்கொடை, கொடை, இல்லறம், யானை மதம், வேள்வி, மகர வாழை, குளிக்கை. தானம்பாடுதல் - ஒரு இராகத்தை சுரமார்க்கத்தால் விவரித்துப் பாடுதல். தானவர் - அசுரச்சாதியார், வித்தியாதரர். தானவன் - சந்திரன். தானாக - தனது எண்ணப்படி. தானாகரன் - பெருங்கொடையாளி. தானாகுதல் - சாயுச்சியம். தானாதல் - ஐக்கியமாதல். தானாபதி - படைத்தலைவன், தூதன். தானாம்பதம்பெறல் - சாரூபம். தானாளுலகிருத்தல் - சாலோகம். தானி - இடத்திலிருப்பது. தானிகம், தானிகை - கொத்தமல்லி. தானியம் - நெல் முதலியன. தானியாகுபெயர் - தானியின் பெயர் தானத்துக்கு ஆவது. தானெடுத்துமொழிதல் - முன்னோர் கூற்றை எடுத்தாளுதலாகிய உத்தி. தானை - சேனை, ஆயுதப்பொது, ஆடை, கரந்துவர லெழினி, முகண்டி என்னும் ஆயுதம். தானைத்திருப்பட்டிகை - அரை யாடையின்மேல் அணியும் திருவா பரணவகை. தானைத்தூக்கம் - திருப்பட்டிகை உறுப்பிலொன்று. தானை நிலை - பகைவரஞ்சும் காலாள் நிலைகூறும் புறத்துறை, இருதிறச் சேனையும் புகழும்படி பொருத வீரனது திறனைக் கூறும் புறத்துறை. தானைமறம் - சேனையின் தறுகண் மையைப் புகழ்ந்து பகைவரின் கேட்டிற்கு இரங்குதலைக் கூறும் புறத்துறை. தானைமாலை - ஆசிரியப்பாவால் அரசனது கொடிப் படையைப் பாடும் பிரபந்தவகை. தான் - மூவிடப் பொதுப்பெயர், தேற்றச் சொல், அசைச்சொல். தான்குறியிடுதல் - உலகத்து வழங்குத லன்றித் தன் நூலுள்ளே வேறு குறி யிட்டு ஆளுதலாகிய உத்தி வகை. தான்றி - எல்லை, மரவகை, மரு தோன்றி. தி தி - ஒரு பெண்பால் விகுதி. திகதி - தேதி. திகந்தம், திகாந்தம் - திக்கின் முடிவு. திகம்பரம் - அம்மணம். திகம்பரன் - நிர்வாண சன்யாசி, சமண முனி, அருகன், சிவன். திகம்பரி - பார்வதி. திகழ்தல் - விளங்குதல், மிகுதல், உள்ளடக்கிக் கொள்ளுதல். திகழ்த்துதல் - விளக்குதல். திகழ்வு - பிரகாசம். திகிரி - வட்டவடிவு, உருளை, தண்ட சக்கரம், சக்கராயுதம், அரசனாணை, தேர், சூரியன், மூங்கில், உட்டண அளவை (Degree). திகிரிகை - குயவன் சக்கரம். திகிரிப்புள் - சக்கரவாகப் பறவை. திகிரிமன்னவர் - அரிச்சந்திரன், நளன், முசுகுந்தன், புருகுச்சன், புரூரவா, கார்த்தவீரன் என்னும் சக்கர வர்த்திகள் அறுவர். திகிரியான் - திருமால். திகிரி - நடுக்கம். திகிலெனல் - திடுக்கிடுதற் குறிப்பு. திகில் - பயம். திகை - தேமல், திசை, பிரமிப்பு. திகைத்தல் - மயங்குதல், பிரமித்தல், அடங்குதல். திகைப்பூடு - மிதித்தவர்களை மயங்கச் செய்யும் பூண்டு. திக்கங்கணம் - திக்குப் பாலகர்குறி. திக்கயம் - திக்கு யானை. திக்கரித்தல் - மறுத்தல், வெறுத்தல். திக்கற்றவன் - கதியற்றவன். திக்கிராந்தம் - கூத்துவகை. திக்கு - திசை, புகலிடம், சமயம். திக்குதல் - சொற்குழறுதல், சொற் கள், தடைப்படத் தெற்றியுச்சரித்தல். திக்குப்பலி - திக்குத் தேவதைகட்கு இடும் பலி. திக்குப்பாலகர் - திசைகளைக் காக்கும் தெய்வங்கள். திக்குப்பாலகர் - திசைகளைக் காக்கும் தெய்வங்கள். திக்குமுக்கு - மூச்சு முட்டுகை. திக்குவிசயம் - எல்லாத் திசைகளிலும் சென்று அரசரை வெல்லுகை. திங்கட்கண்ணியன் - சிவன். திங்கட்காசு - பழைய வரிவகை. திங்கட்கிழமை - வாரத்தில் இரண் டாவது நாள். திங்கட்குடையோன் - மன்மதன். திங்கட்குலன் - பாண்டியன். திங்கட்குழவி - பிறைச் சந்திரன். திங்கணாள் - மிருகசீரிடம். திங்கண்மணி - சந்திர காந்தம். திங்கண்முக்குடையான் - அருகன். திங்கள் - சந்திரன், திங்கட்கிழமை. திசு - பிராணிகளின் உடலமைப்பில் உள்ள பகுதி (Tissue). திசை - தசை, திக்கு, பக்கம். திசைகாட்டி - திசையறி கருவி (Compass). திசைக்கோள் - கருத்து, சம்பந்தம். திசைச்சொல் - செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரு நிலத்தினுமிருந்து தமிழில் வந்து வழங்கும் சொற்கள். திசைத்தல் - திகைத்தல். திசைபோதல் - எங்கும் வியாபித்தல். திசைமுகன் - பிரமன். திசையோனி - கொடி, புகை, சிங்கம், நாய், இடபம், கழுதை, யானை, காகம் என்ற எண்டிசைக் குறிகள். திடகாத்திரம் - கட்டுள்ளதேகம். திடசாலி - பலசாலி. திடம் - வலிமை, உறுதி, கலங்கா நிலை, மனவுறுதி, சத்தியம். திடர் - திட்டு, தீவு. திடல், திடறு - திடர், வெளியிடம். திடுக்கிடுதல் - பயப்படுதல், நடுங்குதல். திடுக்கு - அச்சம். திடுமெனல் - மனங்குலைதல். திக்குதல் - திடீரெனல். திட்டகன்மம் - அரசர் பகைவரால் இப்பிறவியில் உண்டாகும் துன்பம். திட்டத் துய்மன் - திரௌபதியின் சகோதரன். திட்டபஞ்சர் - செய்காற்றிரிசு நிலம். திட்டம் - நிச்சயம், நிலைவரம், செவ்வை, ஏற்பாடு, கட்டளை, காணப்படுவது. திட்டவட்டம் - செவ்வை, ஏற்பாடு. திட்டாணி - மரத்தைச் சுற்றியமேடை. திட்டாந்தப்போலி - இயல்பில்லாத உதாரணம். திட்டாந்தம், திட்டாந்தரம் - உதாரணம், உறுதி. திட்டாந்தவாபாசம் - திட்டாந்தப் போலி. திட்டி - மேடு, பார்வை, கண்ணூறு, மஞ்சிட்டி. திட்டிவாசல் - பெரிய கதவுகள் மூடப்படும்போது உட்செல்வதற்கு அமைக்கப்படும் சிறிய நுழை வாயில். திட்டிவிடம் - பார்வையால் விட மூட்டிக் கொல்லும் பாம்பு. திட்டு - மேட்டுநிலம், ஆற்றிடைக் குறை, 100 எண்கொடை குதிரை காலாள் முதலியவற்றின் தொகை, வசை. திட்டுதல் - நிந்தித்தல், வைதல். திட்டை - திட்டு, திண்ணை, உரல். திட்டம் - உறுதி, மனவுறுதி, கால நுட்பம், நிச்சயம். திணம் - திண்ணம். திணர் - செறிவு. திணர்தல் - சோர்தல். திணர்த்தல் - நெருக்கமாதல். திணறுதல் - மூச்சுத் தடுமாறுதல். திணி - திட்பம், செறிவு, பூமி. திணிதல் - செறிதல். திணித்தல் - பணித்தல், செயி உட்புகுத்தல். திணிப்பு - வலிமை. திணிமூங்கில் - கெட்டி மூங்கில். திணிவு - வன்மை, நெருக்கம். திணுக்கம் - செறிவு. திணுங்குதல் - செறிதல். திணை - இடம், நிலம், வீடு, குலம், ஒழுக்கம், பகுப்புக்கள். திணைகள் - மக்கள். திணைக்களம் - ஆட்சிப்பகுதி (Department). திணைநிலைப்பெயர் - சாதி குறிக்கும் பெயர், ஐந்திணைத் தலைமக்கட்கு வழங்கும் பெயர். திணைநிலைவரி - ஐந்திணைச் செய்தி களைக் காமக் குறிப்புத் தோன்றப் பாடும் பாவகை. திணைப்பாட்டு - எடுத்ததிணைக்குரிய தொழிலைப் பொதுப்படக் கூறும் பாடல். திணைப்பெயர் - ஐந்திணை நிலங்களில் வாழும் மக்கட்கு வழங்கும் பெயர். திணைமயக்கம் - ஒரு நிலத்துக்குரிய காலம் உரிப்பொருள் கருப்பொருள் கள் மற்ற நிலத்துக்குரிய அகப்பொரு ளுடன் கலந்துவரப் பாடல மைக்கை. திணைமாலை நூற்றைம்பது - கணி மேதாவியாரியற்றிய நூல் (18 கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்று.). திணைமொழியைம்பது - கண்ணஞ் சேந்தனாரியற்றிய நூல் (18 கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்று.) திணைவழு - ஒரு திணைச் சொல்லை மற்றொரு திணைப் பொருளில் சொல்லுவதாகிய வழுவகை. திணைவழுவமைதி - மரபுபற்றி ஆன்றோரால் அமைத்துக் கொள்ளப் பட்ட திணைவழு. திண்டாட்டம் - மனக்கலக்கம். திண்டி - பருமன், யானை, அரசு, தம் பட்டம். திண்டிமகவி - பறை முழக்கிக் கொண்டு பாதஞ் செய்யும் கவி. திண்டிமம் - ஒருவகைப் பறை. திண்டிறல் - மிகுவலி. திண்டு - அரை வட்டமான பஞ்சணை, பருமன். திண்டுமுண்டு - எதிரிடைப் பேச்சு. திண்ணகம் - செம்மறிக்கடா. திண்ணம் - நிச்சயம், வலிமை, இறுக்கம், பொய்மை. திண்ணறிவு - தெளிந்த ஞானம். திண்ணன் - கண்ணப்ப நாயனா ருக்குப் பெற்றோரிட்ட பெயர். திண்ணனவு - நிச்சயம், நெஞ்சுரம். திண்ணிமை - மனவுறுதி. திண்ணியன் - வலியவன். திண்ணை - மேடு, வீட்டின் வேதிகை. திண்ணைப்பள்ளிக்கூடம் - தெருப் பள்ளிக்கூடம். திண்பொற்கோழி காவிதி மகன் கண்னார் - சங்க காலப் புலவர் (அகம். 252). திண்மம் - திடப்பொருள் (Solid). திண்மை - வலிமை, உறுதி, கலங்கா நிலைமை. திதம் - நிலை. திதலை, திதனி - தேமல் போன்ற பெண்களுக்குள்ள வெளுப்பு நிறம். திதி - திவசம், நிலைபேறு, வளர்ச்சி, காத்தல், காசிபர் மனைவி. திதித்தல் - காத்தல். திதித்திரயம் - மூன்று திதிகள் ஒரு நாளிற் சந்திப்பது. திதைதல் - பரவுதல். தித்தகோசாகதி - பேய்ப்பீர்க்கு. தித்தன் - ஒரு பழைய சோழ அரசன். தித்தி - தேமல், இனிப்பு, தாளச்சதி, துருத்தி, ஒருவகை வாத்தியம். தித்தித்தல் - இனித்தல். தித்தியம் - வேள்விக்குண்டம். தித்திரி - மீன்கொத்தி வகை. தித்திரிப்பு - புரட்டு. திந்திருணி - புளி. திந்நாகம் - எட்டுத்திக்கு யானை. திபதை - இரண்டடிக் கண்ணி. திப்பலி - நீண்ட மிளகு. திப்பியம் - தெய்வத்தன்மையுடையது, சுவர்க்கம், வியக்கத்தக்கது, நெல் விசேடம். திப்பிரமை - தடுமாற்றம். திப்பிலி - திப்பலி. திப்பிலியாட்டம் - பிறனைக் கிள்ளி யும் அலைத்தும் விளையாடும் விளையாட்டு வகை. திப்புத்தோளார் - சங்க காலப் புலவர் (குறு.1). திப்பை - மேடு. திமி - பெருமீன். திமிங்கிலகிலம் - திமிங்கிலத்தை விழுங்கக்கூடிய பெருமீன். திமிங்கிலம் - பெருமீனை விழுங்கக் கூடிய பெருமீன். திமிசு - வேங்கை, இளகிய தரையைக் கெட்டியாக்குங்கட்டை. திமிதகுமுதம் - இரைச்சல். திமிதம் - பேரொலி. திமிரம் - இருள், இரவு, கருநிறம், நரகம். திமிராகரன் - அறிவிலி. திமிராரி - சூரியன். திமிர் - தடவுதல், மரத்துப்போகை, தேகக் கொழுப்பு. திமிர்தம் - பேரொலி. திமிர்தல் - பூசுதல், தடவுதல், அப் புதல், வாரியிறைத்தல், கம்பித்தல். திமிர்த்தல் - தடவுதல், அடித்தல், குறுக்குதல், மரத்தல். திமிலம் - பேரொலி, பெருமீன் வகை. திமிலர் - நெய்தல் நிலமாக்கள். திமிலை - ஒருவகைப் பறை, கடல்மீன் வகை. திமில் - மீன்படகு, எருத்தின் முரிப்பு, திமிலம். திமிறுதல் - வலிந்து தன்னைப் பிறரிடமிருந்து விடுவித்தல். தியக்கம் - சோர்வு. தியங்குதல் - சோர்தல், சங்சலப் படுதல். தியதி - திகதி. தியம்பகன் - திரயம்பகன். தியாகமுரசு - கொடை முரசு. தியாகம் - கொடை, பிறர்பொருட்டுத் தன் நலமிழக்குந் தன்மை. தியாகராசர் - திருவாரூர் சிவபிரான். தியாகி - கொடையாளி, பிறர் பொருட்டுத் தன்னல மிழப்போன். தியாச்சியம் - விலக்கப்படும் நேரம். தியாதன் - தியானிக்கப்பட்டவன். தியானம் - சிந்தனை, இடைவிடாது நினைத்தல், சிந்தனை. திரக்குதல் - சுருங்குதல். திரங்கல் - சுருங்குகை, மிசகு. திரங்கல்முகன் - குரங்கு. திரங்குதல் - வற்றிச் சுருங்குதல், உலர்தல், சுருளுதல், தளர்தல். திரட்கோரை - பஞ்சாய்க்கோரை. திரட்சி - கூட்டம், உருண்டை வடிவம், முத்து. திரட்டு - உருண்டையாக்குதல், ஒன்ற கூட்டுதல், கலத்தல், குவித்தல், தொகை நூல், திரட்டுகை. திரட்டுப்பால் - சர்க்கரையிட்டு இறுகக் காச்சிய பால். திர™தூமாக்கினி - தொல்காப்பி யரின் மற்றொரு பெயர். திரணம் - துரும்பு, புல், அற்பம். திரணாரணி மணிநியாயம் - புல் அரணிக்கட்டை பளிங்கு இவற்றி லுண்டான நெருப்பு பார்வைக்கு ஒன்று போன்று வேறுபட்ட இயல்பினது போல வேறுபட்ட காரணங்களினால் உண்டான ஒரே பொருள் வேறு இயல்பினை உடையது என்பதை விளக்கும் நெறி. திரணுகம் - மூன்று, துவி அணுகங் களாலாகிய அணுக்கூட்டம். திரணை - உருண்டை, மாலைவகை. திரண் - புல். திரத்துவம் - நிலைப்பு. திரநட்சத்திரம் - உரோகிணி, உத்தரம், உத்திராடம், உத்திரட்டாதி நாள்கள். திரவு - நரக வகை. திரமியம் - திராவிடம். திரம் - உறுதி, நிலைவரம், மலை. திரயமுகம் - குறுக்குப்பார்வை, முத்தி, பூமி. திரயம் - மூன்று. திரயம்பகன் - சிவன். திரயோதசி - 13 ஆம் திதி. திரராசி - இடபம், சிங்கம், விருச் சிகம், கும்பம் என்ற இராசிகள். திரவகாரிகள் - எச்சில் நீரை அதிகப்படுத்தும் மருந்து. திரவத்துவம் - நெகிழ்ச்சித்தன்மை. திரவம் - நீர்ப்பொருள். திரவியசுத்தி - மந்திர நீரைத் தெளித்துப் பொருள்களைச் சுத்தி செய்வது. திருவியப்பாணம் - தாமரை, மாம்பூ, அசோகம் பூ, முல்லை, நீலோற் பலமாகிய மன்மத பாணம். திரவியம் - பொருள், பொன். திரளுதல் - உருண்டையாதல் மிகக் கூடுதல், இறுகுதல், வீங்குதல், பருத்தல். திரளை - கட்டி, உருண்டை. திரள் - உண்டை, கூட்டம். திராசனம் - அசையா இருக்கை. திராடம் - பாலையாழ்த் திறத்தி லொன்று. திராட்சாபாகம் - திராட்சை இரசம் போல அனுபவித்தற்கு எளிதான செய்யுள் நடை. திராட்சை - கொடி முந்திரிகை. திராணம் - இரட்சிக்கை. திராணி - வல்லமை. திராய் - ஒரு கீரை. திராவகத்துக்காதி - அன்னபேதி. திராவகம் - மருந்துச் சரக்குகளின்று இறக்கப்படும் மருந்து நீர். திராவணஞ்செய்தல் - ஒட்டுதல். திராவிடப்பிராமணர் - தக்கண தேசத்துப் பார்ப்பார். திராவிடமொழிகள் - தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, தொடகு, கோடா முதலிய தென்னாட்டு மொழிகள். திராவிடம் - தமிழ்நாடு, திராவிடம், ஆந்திரம், கன்னடம், மகாராட்டிரம், கூர்ச்சரம் என்ற பஞ்ச திராவிட தேசங்கள்; தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு முதலிய மொழிகள். திரி - முறுக்கதல், விளக்குத் திரி, வெள்ளைப் பூடு, மூன்று. திரிகடுகம் - சுக்கு மிளகு திப்பலி, நல்லாதனாரியற்றிய ஒரு பதிணெண் கீழ்க்கணக்கு நீதி நூல். திரிகண் - மூங்கில். திரிகண்டம், திரிகண்டகை - நெருஞ்சி. திரிகந்தம் - கிராம்பு, நாவற்பூ, சண்பகப்பூ, அல்லது சந்தனம் செஞ்சந்தனம், அகில் ஆகிய மூவகை வாசனைப் பண்டங்கள். திரிகம் - முதுகெலும்பின் கீழ் நனிப் பகுதி (Sacrum). திரிகரணம் - மனம் வாக்கு காயம் என்பன. திரிகர்த்தம் - ஓர் நாடு. திரிகல் - எந்திரக்கல். திரிகாலம் - இறப்பு நிகழ்வு எதிர்வு என்ற முக்காலங்கள், காலை மாலை உச்சி. திரிகூடம் - ஒரு மலை, திருக்குற்றால மலை. திரிகூடாராசப்ப கவிராயர் - குற்றாலத் தலபுராணம், குற்றாலக் குறவஞ்சி முதலிய நூல்கள் பாடிய புலவர் (18ஆம் நூ.). திரிகை - எந்திரம், குயவன் சக்கரம், இடக்கைமேளம், கூத்தின் அபிநய வகை. திரிகோண கணிதம் - முக் கோணத்தின் கோணங்களுக்கும் பக்கங்களுக்குமுள்ள சம்பந் தத்தைப் பற்றிய கணிதம் (Trigno metry). திரிகோணப்பாலை - பாலைப் பண்வகை. திரிகோணமலை - இலங்கையி லுள்ள ஒரு சிவத்தலம். திரிக்குழாய் - எண்ணெய் வார்க்கும் கருவி. திரிசங்கு - ஒரு சூரிய குலத்தரசன். திரிசங்கு சுவர்க்கம் - இடையில் நின்று வருந்தும் நிலை. திரிசடை - விபீடணன் மகள். திரிசரேணு - நுண்ணணு. திரிசாதம் - இலவங்கபத்திரி இலவங்கப் பட்டை ஏலம் என்று மூன்றும் கூட்டிச் செய்த மருந்து. திரிசிகை - சூலம். திரிசியம் - மாயா காரியமான சடப் பொருள். திரிசிரபுரம் - திரிசிராப்பள்ளி. திரிசிரா - திசிரசு என்னும் அசுரன். திரிசுகந்தம் - சாதிபத்திரி இலவங்கம் சாதிக்காய் என்னும் மூன்று வாசனைப் பொருள். திரிசூலக்கல் - சிவன் கோயில் நிலங்களின் எல்லையைக் குறிக்க நாட்டப்படும் திரிசூலக் குறி கொண்டகல். திரிசூலக்காக - பழைய வரிவகை. திரிசூலம் - முத்தலைச்சூலம். திரிசூலன் - யமன். திரிசூலி - கற்றாழை, காளி, சிவன். திரிசொல் - செய்யுளில் மட்டும் வழங்குதற்குரிய தமிழ்சொல். திரிதண்டம், திரிதண்டு - சைவ வைணவ சன்னியாசிகள் கையில் தாங்கம் முக்கோல். திரிதல் - அலைதல், கழலுதல், திருகுதல், சலித்தல், போதல், திரும்புதல், வேறுபடுதல், எழுத்து மாறுதல், கெடுதல், கைவிடுதல். திரிதியை - மூன்றாந் திதி. திரிதீர்க்கம் - திருமணப் பொருத்தம் பத்தினுள் மணமக்களின் நட்சத்தி ரங்களின் பொருத்த வகை. திரித்தல் - அலைத்தல், முறுக்குதல், அரைத்தல், வேறுபடுத்துதல். திரிபங்கி - சித்திர கவிவகை. திரிபதகை - கங்கை. திரிபதாகம், திதிபதாகை - அபிநயவகை. திரிபதார்த்தம் - பதி பசு பாசம் என்னும் முப்பொருள்கள். திரிபதை - இசைப்பாவகை, அபிநய வகை. திரிபலம், திரிபலை - கடுக்காய், தான்றிக்காய் நெல்லிக்காய்கள். திரிபன்றி - வில்லாளியின் திற மையைச் சோதிப்பதற்குப் பன்றி வடிவாயமைக்கப்பட்ட சுழலும் பன்றி வகை. திரிபாலைத்திறம் - பாலைப் பண்வகை. திரிபிடகம் - சூத்திரபிடகம், வினய பிடகம், அபிதர்ம பிடகம் என்ற மூன்று பௌத்த ஆகமத் தொகுதி. திரிபு - மாறுபாடு, விபரீத உணர்வு. திரிபுக்காட்சி - ஒன்றை மற்றொன்றாக உணர்கை. திரிபுடி - ஞாதிரு ஞான ஞேயங்கள். திரிபுடை - தாளத்தொன்று. திரிபுண்டரம் - மூன்று வரிகொண்ட திருநீற்றுப் பூச்சு. திரிபுசுந்தரி - பார்வதி. திரிபுரதகனன் - சிவன். திரிபுரம் - விண்ணிற் சஞ்சரித்த பொன் வெள்ளி இரும்புகளாலான மூன்று நகரங்கள். திரிபுராந்தகன் - சிவன். திரபுராரி - சிவன். திரிபுரை - பார்வதி. திரிபுவனசக்கரவர்த்தி - சோழர் பட்டப் பெயர். திரிபுவனதிலகம் - ஒரு பழைய கணக்கு நூல். திரிபுவனம் - திரிலோகம், சோணாட்டில் ஒரு சிவத்தலம். திரிமணி - புத்தன் புத்த தருமம் புத்த சங்கம் என்று மூன்று. திரிமரம் - தானியமரைக்கும் திரிகை. திரிமுண்டரம் - திரிபுண்டரம். திரிமூர்த்தி - பிரமா விட்டுணு உருத்திரன் என்னும் மூவர். திரிமூலம் - திப்பிலி சித்திரம் கண்டு மூலம் என்பன. திரியக்கு - விலங்கு, குறுக்கானது. திரியக்கோடல் - ஒன்றை மற்றொன் றாகக் கொள்ளல். திரியஞ்கமுகம் - கிரகங்களின் குறுக்குப் பார்வை. திரியட்சி - தேங்காய். திரியம்பகம் - சிவன் வில். திரியம்பகன் - சிவன். திரியம்பகி - சத்தி. திரியவும் - திரும்பவும். திரியாயுடம் - ஆயுளை நீடிக்கச் செய்யு மந்திர வகை. திரிராத்திரி - திரிமஞ்சள். திரிலிங்கம் - அபிநயவகை. திரிலோகம் - பூமி அந்தரம் சுவர்க்கம். திரிவிக்கிரமன் - திருமால், சூரியன். திரிவு - வேறுபாடு, தவறுகை, கேடு, திரிபுக்காட்சி. திரிலிங்கம் - பெண்பால். திரு - இலக்குமி, செல்வம், சிறப்பு, பொலிவு, தெய்வத்தன்மை, நல்வினை, மாங்கலியம், பழைய தலையணி வகை ஒன்று. திருகாணி - பெண்கள் காதிலும் மூக்கிலும் அணியும் அணி வகை. திருகு - குற்றம், முறுக்கு, சங்குப்புரி (Screw). திருகுதல் - முறுக்குதல், முறுகுதல், மாறுபடுதல். திருகுதள்ளி - புரி அமைப் புள்ள தள்ளி (Screw propeller). திருகுபலை - வலம்புரிக்காய். திருகுப்பூ - மகளிர் தலையணி வகை. திருக்கடன்மல்லை - மாமல்லபுரம். திருக்கடைக்காப்பு - தேவாரம் முதலியவற்றின் இறுதிச் செய்யுள். திருக்கண் - அருட்பார்வை. திருக்கண்ணப்பதேவர் திருமறம் - கண்ணப்ப நாயனார்மீது கல்லாட தேவ நாயனார் பாடிய நூல். திருக்கண்ணாமடை - உணவு வகை. திருக்கண்மலர் - சுவாமியின் திருமேனியில் சாத்தும் மலர் போன்ற கண்ணுரு. திருக்கம் - வஞ்சகம். திருக்கருவைப் பதிற்றுப் பத்தந் தாதி - அதிவீரராம பாண்டியன் பாடிய ஒரு நூல். திருக்கருவைக் கலித்துறையந் தாதி - அதிவீரராம பாண்டியன் பாடிய ஒரு நூல். திருக்கலமுடித்தல் - கும்பாபி டேகஞ் செய்தல். திருக்களிற்றுப்படி - சிதம்பரம் கனக சபையில் யானை உருவ மைந்தபடி. திருக்களிற்றுப்பாடியார் - திருக்கடவூர் உய்யவந்த தேவர் இயற்றிய சைவசித்தாந்த நூல். திருக்கற்றளி - கல்லாற் கட்டப்பட்ட கோயில். திருகாப்பிடுதல் - கோயிற் கதவு மூடுதல். திருக்காப்பு - தெய்வக் காவல் கோயிற்கதவு, திருமுறைகளைத் கயிற்றாற் கட்டிவைக்கை. திருக்காரோணம் - நாகபட்டினத்துச் சிவத்தலம். திருக்காளத்திப் புராணம் - ஆனந்தக் கூத்தர் பாடிய தல புராணம் 16ஆம் நூற்றாண்டு. திருக்கானப்போர் - இராமநாதபுர வட்டத்திலுள்ள காளையார் கோயில் என்னும் சிவத்தலம். திருக்கு - முறுக்கு, ஒருவகைத் துகில், மாறுபாடு, கண், காண்பவன். திருக்குருகூர், திருக்குருகை - ஆழ்வார்திருநகரி. திருக்குருகைப்பெருமாட் கவிராயர் - மாறனலங்காரம், மாறனகப் பொருள் முதலியன இயற்றிய ஆசிரியர் - 16ஆம் நூற்றாண்டு. திருக்குறணுண்பொருண்மாலை - திருக்குறட் பரிமேலழகருக்கு ஆழ் வார் திருநகரித் திருமேனி இரத்தின கவிராயர் எழுதிய குறிப்புரை. திருக்குறள் - திருவள்ளுவர் செய்த நூல் - 18 கீழ்க்கணக்கு நூல்களி லொன்று. திருக்குறிப்பு - திருவுள்ளக் கருத்து. திருக்குறிப்புத்தொண்டநாயானர் - 63 நாயனமாருள் ஒருவர். திருக்குறுத்தாண்டகம் - திருமங்கை ஆழ்வார் இயற்றிய பிரபந்தம். திருக்குற்றாலத்தலபுராணம் - திரி கூடாராசப்ப கவிராயர் செய்த தலபுராணம் - 18ஆம் நூற்றாண்டு. திருக்கூட்டம் - பத்தர் கூட்டம். திருக்கூத்து - சிவன் திருநடனம், கடவுள் திருவிளையாட்டு. திருக்கூவப்புராணம் -சிவப்பிரகாச முனிவர் செய்த தலபுராணம். திருக்கை - மீன்கை. திருக்கைக்காறை - கடவுளர்க்குச் சாத்தும் கையணிவகை. திருக்கைக்கோட்டி - திருமுறை ஒதுதற்குரிய கோயில் மண்டபம். திருக்கைக்சிறப்பு - ஏனாதிப் பட்டத்திற்கு அறிகுறியாய் அளிக்கும் மோதிரம். திருக்கைலாயஞானவுலா - சேரமான் பெருமாணாயனார் செய்த உலா. திருக்கைவழக்கம் - வேளாளர் கொடையைச் சிறப்பித்துக் கம்பர் செய்த நூல், கோயில் விசேடகாலங் களில் தெய்வப் பிரசாதம் வாங்குகை. திருக்கோட்டிநம்பி - சூடாமணி உள்ள முடையானென்னும் சோதிடநூல் இயற்றியவர். (19ஆம் நூ.). திருக்கேட்டியூர்நம்பி - இராமானுசாரியரின் குரு. திருக்கோலம் - கடவுளுக்குச் செய்யும் அலங்காரம். திருக்கோவை - சுவாமிக்குமுன் நின்று வேதம் ஒதும் கூட்டம், திருச்சிற்றம்பலக்கோவை என்ற நூல். திருசியம் - காணப்படும் பொருள். திருச்சந்தவிருத்தம் - திருமழிசை யாழ்வார் இயற்றிய ஒரு நூல். திருச்சபை - நடராச சபை, கிறித்துவ சபை (Church). திருச்சிராப்பள்ளி - திருச்சிராப் பள்ளி. திருச்சிற்றம்பலக்கோவை - மாணிக்கவாசக சுவாமிகள் செய்த ஒரு கோவை நூல். திருச்சிற்றப்பலநாவலர், மாம்பாக்கம் - அண்ணாமலைச் சதகம் செய்தவர் (19ம் நூ.) திருச்சிற்றம்பலம் - சிதம்பரத்தி லுள்ள சிற்சபை, சைவசமயிகள் வழங்கும் ஒரு வணக்கச்சொல். திருச்சின்னம் - ஒருவகை ஊது குழல். திருச்சீரலைவாய் - திருச்செந்ததூர். திருச்சுற்றாலயம் - பிரகாரத்திலுள் பரிவாரத் தேவதைகளினாலயம். திருச்சுற்று - பிரகாரம். திருச்சுற்றுமாளிகை - திருச்சுற்றுப் பத்தி. திருச்செந்தில் - திருச்செந்தூர். திருச்செந்தூர் - முருகக் கடவுளின் ஆறுபடை வீடுகளில் ஒன்று. திருச்செந்நெல்நடை - கோயில் அமுதுபடித்தரம். திருச்செவிசாத்துதல் - கேட்டரு ளுதல். திருஞானசம்பந்த மூர்த்தி நாய னார் - 63 நாயன்மாருள் ஒருவர் (7ஆம் நூ.). திருடம் - வலிமை. திருடன் - கள்வன். திருடி - திருடுபவள். திருட்டாந்தம் - உதாரணம். திருட்டி - பார்வை, தீக்கண். திருட்டு - களவு. திருணகம் - வாளுறை. திருணம் - உலர்ந்த புல், உடைவாள். திருதம் - தாளவகை. திருதராட்டிரன் - பாண்டுவின் சகோதரன். திருதிமை - மனத்திடம். திருதியை - மூன்றாந் திதி. திருத்தகுதல் - பரிசுத்தம் பொருந் துதல். திருத்தகுமாமூனி - திருத்தக்க தேவர். திருத்தக்கத்தேவர் - சீவக சிந்தாமணியினாசிரியர் (10 ஆம் நூ.) திருத்தணி, திருத்தணிகை - முருகன் தலத்தொன்று. திருத்தம் - செப்பனிடுகை, பிழைத் திருத்தம், சிறிது மாற்றுகை, புண்ய நீர். திருத்தன் - கடவுள். திருத்தாமனார் - சங்ககாலப் புலவர் (புறம். 398). திருத்தி - மன நிறைவு. திருத்து - நன்செய் நிலம். திருத்துதல் - செவ்விதாக்குதல், அணிதல். திருத்தெள்ளேணம் - திருவாச கத்தின் ஒரு பகுதி. திருத்தொண்டத்தொகை - அறுபத்து மூன்று நாயன்மாரையும் தொகை அடியாரையும் சந்தர மூர்த்தி சுவாமிகள் பாடிய பதிகம். திருத்தொண்டர் - கடவுளடியார். திருதொண்டர் திருவந்தாதி - நம்பியாண்டர் நம்பிய பாடிய ஒரு பிரபந்தம். திருந்தொண்டர்புராணம் - பெரிய புராணம். திருத்தோப்பு - கோயிலுக்குரிய நந்தவனம். திருநகர் - செல்வநகரம். திருநடைமாளிகை - கோயிற் பிரகாரம். திருநயனந்துயிலுதல் - கடவுளர் முதலியோர் துயில் கொள்ளுதல். திருநல்லியாண்டு - சுபகரமான ஆட்சி ஆண்டு. திருநாடு - வைகுண்டம். திருநாமத்துக்கனி - தேவதான நிலம். திருநாமம் - தெய்வம் அல்லது பெரியோரின் பெயர், வைணவரிடும் நாமம். திருநாவுக்கரசுநாயனார் - சமய குரவருள் ஒருவர் (7ஆம் நூ.). திருநாள் - விழா. திருநாளைப்போவார் - நந்தனார். திருநிலைமகளிர் - சுமங்கிலிகள். திருநீலகண்டயாழ்பாங்ண நாயனார் - 63 நாயன்மாரு ளொருவர் (7ஆம் நூ.) திருநீலநக்கநாயனார் - 63 நாயன் மாருளொருவர். திருநீறு - வீபூதி. திருநீற்றுக்காப்பு - பெரியோரால் ஒருவர்க்கிடப்படும் விபூதி. திருநீற்றுநானம் - திருநீற்று முழுக்கு. திருநூற்றந்தாதி - அவிரோதி ஆழ் வார் அருகக்கடவுள் மீது இயற்றிய ஒர் அந்தாதி நூல். திருநெடுந்தாண்டகம் - நாலா யிரப் பிரபந்தத்தில் திருமங்கை மன்னன் இயற்றிய ஒரு பகுதி, எண் சீர்த்தாண்ட கத்தாலாகிய தேவாரப் பதிகங்கள். திருநெல்வேலி - பாண்டி நாட்டிலுள்ள ஒரு சிவத்தலம். திருந்தலர், திருந்தார் - பகைவர். திருந்திழை - பெண். திகுந்துதல் - செவ்விதாதல், சீர்ப்படுதல், தொழில் முற்றுதல், அழகு பெறுதல். திருப்தி - திருத்தி. திருப்படிமாற்று - சுவாமிக்கு நிவேதிக் கத்தகும் அரிசி முதலிய பண்டம். திருப்படைவீடு - கடவுள் கோயில் கொண்ட தலம். திருப்பட்டம் - திருமுடி. திருப்பணி - கோயிறகைங்கரியம், கோயில் புதுப்பித்தல். திருப்பதி - திருவேங்கடம் என்ற தலம். திருப்பதிகம் - தெய்வத்தைப் புகழ்ந் துரைக்கும் பாடற்றொகை. திருப்பம் - திரும்புகை. திருப்பரங்குன்றம் - மதுரைக்குத் தென் மேற்கிலுள்ள ஒரு குன்று, முருகக் கடவுளின் படை வீடுகளுள் ஒன்று. திருப்பரிவட்டம் - தெய்வத்திற்குச் சாத்தும் ஆடை. திருப்பல்லாண்டு - சிவபிரான் மீது சேந்தனார் பாடிய பிரபந்தம், பெரி யாழ்வார் திருமால் மீது பாடிய ஒரு பிரபந்தம். திருப்பவித்திரமாலை - கோயில் மூர்த்தி களுக்குச் சாத்தப்பட்டு வைணவர் அணியும் பட்டு முடிச்சு மாலை. திருப்பவித்திரோற்சவம் - அவ் வாண்டில் நடந்த குற்றங்களுக்குப் பரிகாரமாகச் செய்யப்படும் பிராயச் சித்த விழா. திருப்பள்ளித்தாமம், திருப்பள்ளித் தொங்கல் - கோயில் மூர்த்திகட்குச் சாத்தப் படும் மாலை. திருப்பளிப்படுத்துதல் - சன்னியாசியை அடக்கஞ்செய்தல். திருப்பள்ளியறை - கோயில் மூர்த்தி இரவிற் பள்ளிக்கு எழுந்தருளும் அறை. திருப்பள்ளியெழுச்சி - கடவுளைத் துயிலெழுப்பும் பாசுரங்களமைந்த பதிகம். திருப்பாட்டு - கடவுளைப் பற்றிப் பெரியோர் பாடிய பாடல்கள். திருப்பாணாழ்வார் - ஆழ்வார் பதின்மருள் ஒருவரும், நாலாயிரப் பிரபந்தத்தில் அமலனாதிபிரான் என்ற பிரபந்தத்தைப் பாடியவரு மான திருமாலடியார் (9ம் நூ.). திருப்பாவாடை - ஆடைமேல் கோயில் மூர்த்திப் படைக்கும் திவேதனம். திருப்பாவை - நாலாயிரப் பிரபந் தத்துள் ஆண்டாள் பாடிய பகுதி. திருப்பாற்கடல் - திருமால் பள்ளி கொள்ளும் பாற்கடல். திருப்புகழ் - அருணகிரிநாதர் முருகக் கடவுள்மீது பாடிய ஒரு நூல். திருப்புதல் - மொழி பெயர்த்தல் திரும்பச்செய்தல், மாற்றுதல், முறுக்குதல். திருப்புல்லாணி - இராமநாதபுரத்துக் கருகிலுள்ள ஒருவிட்டுணு தலம். திருப்புறக்கூடை - சுவாமிக்குப் பின்புறமாகப் பிடிக்கும் கூடை. திருப்புற்கூடை - மடியாடை முதலியன வைக்கும் ஓலைப்பொடி. திருப்பூட்டு - தாலி. திருப்பூவல்லி - மகளிர் பூக்கொய் தலைப் பற்றிக் கூறும் திருவாசகப் பகுதி. திருப்பெருந்துறை - தாஞ்சாவூர் வட்டத்திலுள்ள ஒரு சிவத்தலம். திருப்பொறி - அரசர் முதலி யோருக்குள்ள அங்க இலக்கணம். திருப்போனகம் - கடவுட்கு நிவேதித்த அமுது. திருமகள் - இலக்குமி. திருமகள்மைந்தன் - மன்மதன். திருமங்கலியம், திருமங்கிலியம் - திருமணத்தாலி. திருமங்கைமன்னன், திருமங்கை யாழ்வார் - நாலாயிரப் பிரபந் தத்துள் பெரிய திருமொழி பாடிய திருமாலடி யார் (9ஆம் நூ.). திருமஞ்சனக்கவி - கோயிலபிடேகத் திற் சொல்லுங் கவி. திருமஞ்சனம் - திருமுழுக்கு. திருமடந்தை - இலக்குமி. திருமடம் - குருவின் மாளிகை. திருமடவிளாகம் - கோயிலைச் சுற்றி யுள்ள இடம். திருமணம் - விவாகம். திருமணிகுயிற்றுநர் - முத்துக் கோப்போர். திருமணுத்தானம் - நீராடிய பின் செய்யும் தானம். திருமண் - நாமக்கட்டி. திருமந்திரம் - திருமூலர் அருளிச் செய்த ஒரு நூல் (5ஆம் நூ.). திருமந்திரவோலை - இராசகாரியத்தன். திருமந்திரவோலைநாயகம் - இராசகாரியத்தார் தலைவன். திருமரம் - அரசமரம். திருமருதத்துறைக்கா - மதுரையில் வைகைக் கரையிலிருந்த ஒரு பூஞ்சோலை. திருமருதமுன்றுறை - மதுரையில் வையை நதித் துறை. திருமலர் - தாமரை மலர். திருமலை - திருப்பதி மலை, கைலை, பரிசுத்த மலை. திருமலைநாதர் - சிதம்பரபுராணம் பாடியவர். திருமலைநாயக்கர் - கி.பி. 1623- 1969 வரை மதுரையை அரசாண்ட நாயக்க வமிசத்து அரசர். திருமலையர் - திருக்குறளுரை காரருளொருவர் (16ஆம் நூ.) திருமழிசையாழ்வார் - திருமாலடிய வருளொருவர் (8ஆம் நூ.). திருமறுமார்பன் - திருமால், அருகன். திருமாடம்பு - திருவிதாங்கூர் அரசு குமாரர்களின் பூணூற்சடங்கு. திருமாலாயுதம் - சங்கம் சக்கரம் வில் வாள் தாண்டம் என்னும் ஐம்படைகள். திருமாலிருஞ்சோலை, திருமால்குன்றம் - அழகர்மலை. திருமால் - விட்டுணு, அரசன். திருமால்குன்றம் - அழகர்மலை. திருமாளிகைத் தேவர் - திருவிசைப் பாவின் ஒரு பகுதி இயற்றிய ஆசிரியர் (11ஆம் நூ.) திருமுகக்காணம் - பழைய வரி வகை. திருமுகத்துறை - காவிரி கடலுடன் கலக்கும் சங்கமத் துறை. திருமுகம் - கடிதம். திருமுடி - திருநாமம், தலை. திருமுடிச்சாத்து - தலைப்பாகை. திருமுடித்திலகம் - திருமுடியிற் சூட்டு மணி. திருமுடியோன் - அரசன். திருமுண்டம் - திரிபுண்டரம். திருமுதல் - திருப்புதல். திருமுருகாற்றுப்படை - முருகன் மீது நக்கீரர் செய்த ஒரு நூல். திருமுறை - தேவாரம் திருவாசகம் திரு விசைப்பா திருப்பல்லாண்டு, திரு மந்திரம் பதினோராந் திருமுறை பெரிய புராணம் என்ற சைவ நூல்கள். திருமுறைகண்டசோழன் - திருமுறைகளைக் கண்டு வெளிப் படுத்திய சோழன். திருமுறைகண்டபுராணம் - உமாபதி சிவாசாரியார் இயற்றிய புராணம். திருமுற்றத்தார் - கோயிற்பணி செய்வோர். திருமுற்றம் - குதிரை வையாளி வீதி, சுவாமி சன்னிதி. திருமுனைப்பாடிநாடு - திருக்கோவ லூரைச் சூழ்ந்துள்ள திருநாடு. திருமூப்பு - அரச பதவி. திருமூலட்டானம் - திருவாரூர் சிவத்தலம். திருமூலர் - திருமந்திர நூலாசிரியர் (கி.பி.5ஆம் நூ.). திருமெழுக்கு - கோயில் மெழுக்கு. திருமேனி - கடவுள் முனிவர்களின் உடல். திருமேனிக்கீடு - கவசம். திருமை - அழகு. திருவகுப்பு - சந்தக் குழிப்பிலமைந்த செய்யுள் வகை. திருவடி - பாதம், சுவாமி, அனுமான், கருடன், திருவிதாங்கூர், அரசர். திருவடிக்கம் - திருமால் கோயிலில் படிக்கத்தினின்று எடுத்து வழங்கும் சுவாமி தீர்த்தம். திருவடிக்காறை - காலணிவகை. திருவடி தீட்சை - சீடன் தலையில் குரு தன் பாதத்தை வைத்து அருள் புரியும் தீட்சை. திருவடிதேசம் - திருவிதாங்கூர் நாடு. திருவடிநிலை - கடவுளர் முதலி யோர் மிதியடி. திருவடிப்பிடித்தல் - கோயில் பூசை செய்தல். திருவடிமார் - அரசர், பார்ப்பன அதி காரிகள், மடாதிபதிகள், கோயிலர்ச்சகர் முதலியோர்க்கு வழங்கும் பழைய சிறப்புப் பெயர். திருவணுக்கன் றிருவாயில் - கருப்பக் கிருகத்தை அடுத்துள்ள வாயில். திருவணை - சேது. திருவத்தவர் - பாக்கியவான்கள். திருவந்திக்காப்பு - திருவிழாப் புறப்பாடு களின் முடிவில் கண்ணூறு போகச் செய்யும் சடங்கு. திருவமுது - நிவேதன உணவு. திருவம்பலம் - சிதம்பரம். திருவரங்கத்தமுதனார் - இராமானுச நூற்றந்தாதி இயற்றியவர் (13ஆம் நூ.) திருவரங்கம் - சீரங்கம். திருவரங்கு - கோயிலுள்ள பிரதான மண்டபம். திருவருட் பயன் - உமாபதி சிவாசாரியார் இயற்றிய ஒரு நூல். திருவருட்பா - இராமலிங்க சுவாமிகள் பாடல்கள் (19ஆம் நூ.) திருவருள் - கடவுள் கிருபை. திருவல்லிக்கேணி - சென்னையில் உள்ள திருமால் கோயில். திருவலகு - கோயில் பெருக்கும் துடைப்பம். திருவள்ளுவப்பயன் - திருக்குறள். திருவள்ளுவமாலை - புலவர்கள் திருக்குறளையும் திருவள்ளுவரை யும் புகழ்ந்து பாடிய பாடல்கள். திருவள்ளுவர் - திருக்குறளாசிரியர். திருவறம் - சமய தருமம். திருவனந்தபுரம் - திருவிதாங்கூரின் தலைநகர். திருவன் - திருமால், விகடன். திருவாக்கு - தெய்வப் பெரியோரின் வாய்மொழி. திருவாங்குதல் - தாலி களைதல். திருவாசகம் - மாணிக்கவாசகர் செய்த துதி நூல். திருவாசி, திருவாசிகை - வாகனப் பிரபை முதலியன. திருவாடுதண்டு - வாகனக் காவு தண்டு. திருவாட்டி - செல்வி, பல்லக்கு வகை. திருவாண்டெடுத்தல் - அரசன் முடி சூடிய ஆண்டு தொடங்கி வருடக் கணக்கிட்டெழுதுதல். திருவாணை - அரச ஆணை. திருவாத்தி - ஆத்தி. திருவாதவூர் - மாணிக்கவாசகர் பிறந்த இடம். திருவாதவூர் - மாணிக்கவாசகர். திருவாதவூரர் புராணம் - கடவுள் முனிவர் செய்த ஒரு புராணம் (18ஆம் நூ.). திருவாதிரை - ஆறாவது நட்சத்திரம். திருவாய்க் கேள்வி - அரச ஆணை, இராச விசாரணை. திருவாய்மொழி - நாலாயிரப் பிரபந் தத்துள் திருமால் தொடர்பாக 1000 பாடல்களால் நம்மாழ்வார் அருளிச் செய்த பிரபந்தம். திருவாய்மொழி நூற்றுந்தாதி - மணவாள முனிவரியற்றிய ஒரு பிரபந்தம். திருவாரூருலா - அந்தக் கவி வீரராகவ முதலியார் செய்த ஒரு பிரபந்தம் (17ம் நூ.). திருவாரூர் நான்மணி மாலை - குமர குருபரர் செய்த ஒரு பிரபந்தம், வைத்தியநாத தேசிகர் செய்த ஒரு பிரபந்தம். திருவாரூர்ப்பள்ளு - ஞானப் பிரகாசர் பாடிய பள்ளுப் பிரபந்தம். திருவாரூர் மும்மணிக் கோவை - சேர மான் பெருமாணாயனார் செய்த ஒரு நூல். திருவாலவாய் - மதுரை. திருவாலவாயுடையார் திருவிளை யாடற் புராணம் - பெரும்பற்றப் புலியூர் நம்பி மதுரையைப் பற்றி இயற்றிய புராணம். திருவாலி - புரட்டன். திருவாலியமுதனார் - திருவிசைப் பாவி லடங்கிய பிரபந்தமொன்றின் ஆசிரியர் (12ஆம் நூ.). திருவாவினன்குடி - பழநி. திருவாழி - திருமாலின், சக்கரம், கணையாழி. திருவாழிக்கல் - சக்கர முத்திரை யிட்ட எல்லைக்கல். திருவாளர் - ஒருவர் பெயருக்கு முன்னால் வழங்கப்பெறும் மரியாதைச் சொல். திருவானிலை - கருவூர்ச் சிவா லயம். திருவானைக்கா - திருசிராப் பள்ளிக்கு அருகிலிருக்கும் ஒரு சிவத்தலம். திருவானைக்காப் புராணம் - கச்சியப்ப முனிவர் செய்த ஒரு தல புராணம். திருவானைக்காவுலா - காளமேகப் புலவர் செய்த உலா நூல். திருவிசைப்பா - ஒன்பது சிவனடியார் செய்த பிரபந்தங்கள். திருவிடையாட்டம் - தேவதான மானியம். திருவிருத்தம் - நம்மாழ்வார் அருளிச் செய்த நூல். திருவிருப்பு - கோவிலமைந்த இடம். திருவிலி - ஏழை, கைம்பெண். திருவில் - வானவில். திருவிழா - உற்சவம். திருவிளக்கு - கோயில்தீபம். திருவிளக்குடையார் - கோயில் விளக்கேற்றுவோர். திருவிளக்கு நகரத்தார் - எண் ணெய்ப் வாணிகர் பட்டப் பெயர். திருவிளக்கு நாச்சியார் - தீப தேவதை, கையில் தீபங்கொண்ட பாவை. திருவிளையாடற் புராணம் - பரஞ்சோதி முனிவர் மதுரையைப் பற்றிச் செய்த புராணம். திருவினாள் - இலக்குமி. திருவினை - நல்வினை. திருவீதியலங்கரித்தல் - கோயில் மூர்த்தி புறப்பாடாக வருதல். திரும்வுடம்பு - விக்கிரகம். திருவுந்தியார் - திருவியலூர் உய்ய வந்த நாயனார் செய்த நூல். திருவுரு - விக்கரகம். திருவுழுத்து - அணிவகை. திருவுளச்சீட்டு - குலுக்கிப்போட்டு எடுத்தல் முதலியவற்றால் தெய்வ சித்தமறியுஞ் சீட்டு. திருவுள்ளம் - அரசன் குரு முதலி யோரின் உள்ளக் கருத்து. திருவுறுப்பு - நெற்றியிலணியும் சீதேவி என்னும் அணி. திருவெஃகா - காஞ்சிபுரத்துள்ள பழைய விட்டுணுத் தலம். திருவெண்காட்டடிகள் - பட்டினத்தார். திருவெண்காட்டுநங்கை - சிறுத் தொண்ட நாயனாரின் மனைவி. திருவெம்பாவை - மார்கழி மாதத் தில் ஓதப்படும் திருவாசகப் பாட்டு. திருவெழுத்து - அரசன் கட்டளை, அரசன் கையெழுத்து. திருவேங்கடநாதர் - பிரபோத சந்திர ரோதயம் செய்தவரும் இலக்கண விளக்கம் இயற்றுவித்தவருமான ஒரு பார்ப்பனர் (17ஆம் நூ.) திருவேங்கடம் - திருப்பதி. திருவேங்கடையர் - உவமான சங்கிரகம் செய்தவர் (14ம் நூ.). திருவேடம் - சிவனடியார், சைவக் கோலம். திருவேரகம் - முருகனுடைய ஆறு படை வீரர்களுள் ஒன்று. திருவொற்றாடை - திருமுழுக் குக்குப் பின் சுவாமிமேனியில் ஒற்றும் ஆடை. திருவோடு - பரதேசிகள் பிச்சை ஏற்கும் ஓடு திருவோணம் 22 ஆவது நட்சத்திரம். திருவோலக்கம் - அத்தாணியிருப்பு. திருவோலை - திருமுகம். திரேதயுகம், திரேதம் - 1296000 ஆண்டுகள் கொண்ட இரண்டாம் யுகம். திரை - கருங்கல், திரைச்சிலை, அலை, நதி, கடல், வெற்றிலைச் சுருள், வெற்றிலை, பூமி. திரைதல் - தோல் சுருங்குதல், சுருங்குதல், திரிதல், திரளுதல். திரைத்தல் - அலையெழுதல், தன் னுடைக்குதல், கொய்தல், அணைத் தல். திரைத்து - சுருங்குகை, அலை யெழுகை, திரையால் மறைந்த இடம். திரையல் - சுருங்குகை, வெற்றிலை. திரையன் - நெய்தல், நிலத்தலைவன், பழைய தொண்டை நாட்டரச வகுப் பினன். திரோதகம், திரோதம் - மறைத் தலைச் செய்வது. திரோதானசத்தி, திரோபவம் - உயிர் களுக்கு உலோகானு பவங்களைக் கொடுத்து உண்மையை மறைக்கும் ஒருசத்தி. திரௌபதி - பஞ்சபாண்டவர் மனைவி. திரௌபதியர் - திரளபெதியின் புதல்வர். திலகடம் - எள்ளுப் பிண்ணாக்கு. திலகம் - நெற்றிப் பொட்டு, சிறந்தது, மஞ்சாடி மரம். திலகவதியார் - திருநாவுக்கரசருடன் பிறந்த அம்மையார். திலலதண்டுலம் - எண்வகைக் கலவி ஆலிங்கனத் தொன்று. திலகம் - திலகம். திலப்பொறி - எள்ளிட்டாட்டும் செக்கு. திலம் - எள்ளு, மஞ்சாடி. திலரசம் - நல்லெண்ணெய். திலோத்தமை - தெய்வமகளிரில் ஒருத்தி தில், தில்ல - விருப்பு, காலம், ஒழியிசை என்னும் பொருளில் வரும் ஓரிடைச் சொல். தில்லகம் - விளா. தில்லம் - காடு. தில்லியம் - நல்லெண்ணெய், புதி தாகத் திருத்தப்பட்ட விளைநிலம். தில்லுமுல்லு - உருட்டுப் புரட்டு. தில்லை - மரவகை, சிதம்பரம். தில்லைத்திருச்சிரகூடம் - சிதம் பரத்திலுள்ள திருமால் கோயில். தில்லைமூவாயிரவர் - தில்லை வாழந்தணர். தில்லையம்பலம் - நடராசனது கனகசபை. தில்லைவனம் - சிதம்பரம். தில்லைவாழந்தணர் - சிதம்பரக் கோயிலுக்குரிய அந்தணர். திவசம் - பகல், நாள், சிராத்தம். திவம் - பரம பதம். திவலை - சிதறுந்துளி, மழைத்துளி, மழை. திவவு - யாழ்த்தண்டிலுள்ள நரம்புக் கட்டு, படிக்கட்டு. திவளுதல் - துவளுதல், வாடுதல், அசைதல், விளங்கதல், நீர் முதலிய வற்றிலே விளையாடுதல், தொடு தல், தீண்டி இன்புறுத்துதல். திவா - பகல், நாள். திவாகரம் - திவாகரமுனிவர் அம்பர் சேந்தன் ஆதரவில் செய்த நிகண்டு. திவாகரன் - சூரியன், திவாகர நிகண்டின் ஆசிரியர் (10ம் நூ.). திவாந்தகாலம் - மாலை. திவான் - பிரதான மந்திரி. திவான்பகதூர் - அரசாங்கத்தார் வழங்கும் ஒரு பட்டப் பெயர். திவி - சுவர்க்கம். திவிபிநாமம் - கொடுவேலி. திவ்விய - இனிய. திவ்வியத்தொனி - தேவர் அருகக் கடவுள் முன் செய்யும் ஆரவாரம். திவ்விய நாம சங்கீர்த்தனம் - பாகவதர் பலர் விளக்கைச் சுற்றி நடனஞ் செய்து கடவுளின் திரு நாமகங்களைச் சொல்லிப் புகழ்ந்து பாடுகை. திவ்வியப்பிரபந்தம் - ஆழ்வார் பன்னிருவர் அருளிச் செய்ததும் 4000 செய்யுள் கொண்டதுமான தொகுதி. திவ்வியம் - தெய்வத் தன்மை யுள்ளது. திவ்வியவராடி - குறிஞ்சிப் பண்வகை. திளைத்தல் - நெருங்குதல், நிறைதல், அசைதல், விளையாடுதல், முழுகுதல், இடைவிடாதொழுகுதல், மகிழ்தல், பொருதல், அனுபவித்தல், துளைத்தல். திறத்திறம் - நான்கு கரமுள்ள இராகம். திறப்படுத்துதல் - கூறுபடுத்துதல். திறப்பண் - குறைந்த நரம்புள்ள இராகங்கள். திறப்பாடு - கூறுபாடு, திறமை. திறப்பு - வெளியிடம், திறவுகோல். திறமை - சாமர்த்தியம், வலிமை. திறம் - கூறுபாடு, வகை, சார்பு, ஐந்து கரமுள்ள இசை, பாதி, வழி, வரலாறு, குலம், சுற்றம், உடம்பு, கோட்பாடு, இயல்பு, செய்தி, உபாயம், காரணம், பாக்கியம், மிருதி, கூட்டம், நிலைபேறு, மேன்மை, கற்பு, ஒழுக்கம், நேர்மை. திறம்புதல் - மாறுபடுதல். திறலோன் - 15 ஆண்டுள்ளவன். திறல் - வலி, வெற்றி, ஒளி. திறவது - உறுதியானது, செவ்விது. திறவு - வாயில், வெளியிடம். திறவோன் - பகுத்தறிவுள்ளவன் வல்லமையுடையவன். திறனில்யாழ் - நெய்தல் யாழ்த் திறத்தொன்று. திறாம் - அவுன்சு என்னும் நிறையில் 1/6 பங்கு (Dram). திறை - கப்பம். திற்றி - கடித்துத் தின்னற்குரிய உணவு. தினகரன் - சூரியன். தினகவி - அரசன் ஒலக்க மண்ட பத்தில் இருக்கும்போது பாடும் பாட்டு. தினகாரி - சூரியன். தினசரி - தினந்தோறும். தினந்தோறும் - ஒவ்வொருநாளும். தினநாதன் - சூரியன். தினப்பாடு - தின்னுகை. தினப்பொருத்தம் - நட்சத்திரப் பொருத்தம். தினமணி - சூரியன். தினமுகம் - உதய காலம். தினம் - பகல், நட்சத்திரம், தினந்தோறும். தினவு - சொறிவு. தினிசு - பொருளின் தன்மை. தினை - சிறுதானியவகை, மிகச்சிறிய அளவு. தினைக்குருவி - (The Ceylon great reed wabbler). தினைப்புளம் - திணை விளையும் நிலம். தின்மதிநாகனார் - சங்க காலப் புலவர் (குறு.111). தின்மை - தீமை, சாவு. தின்றி - தின்பண்டம். தின்னுதல் - உண்ணுதல், மெல்லுதல், கடித்தல், அரித்தல், வருத்துதல், அழித்தல், அராவுதல், பெறுதல். தீ தீ - நெருப்பு, விளக்கு, கோபம், தீமை, விடம், நரகம், அறிவு. தீக்கடன் - ஈமகக்கிரியை. தீக்கல் - சக்குமுக்கி (Flint). தீக்கடைக்கோல் - உரைஞ்சித் தீ உண் டாக்கும் தடி. தீக்கடைதல் - தடிகளை உரைஞ்சி நெருப்புண்டாக்குதல். தீக்கதி - நரகம். தீக்காய்தல் - குளிர்காய்தல். தீக்கிதர் - தீட்சிதர். தீக்குணர் - கீழ்மக்கள். தீக்குருவி - தீக்கோழி. தீக்குளித்தல் - நெருப்புக் குளித்தல். தீக்கை - தீட்சை. தீக்கோழி - தீக்குருவி. தீக்கோள் - கேடு குறிக்கும் கிரகம். தீங்கு - தீமை, துன்பம், குற்றம். தீச்சொல் - பழிச்சொல். தீஞ்சேறு - இனியபாகு. தீஞ்சேற்றுக்கடிகை - கண்ட சருக்கரைத் தேறு. தீஞ்சொல் - இன்சொல். தீட்சணம், தீட்சணியம் - உக்கிரம், உறைப்பு, கூர்மை, மிளகு. தீட்சிதர் - தில்லை மூவாயிரவர், பிராம ணரில் சிலர் தரிக்கும் பட்டப் பெயர். தீட்சை - உபதேசம். தீட்டு - கூராக்குகை, சீட்டு, பூச்சு, ஆசௌசம், மாதவிடாய். தீட்டுக்கவி - சீட்டுக்கவி. தீண்டாச்சேரி - தொடத்தகாதவர் இருக்கும் குடியிருப்பு. தீண்டுதல் - தொடுதல், பாம்பு முதலியன கடித்தல், அடித்தல். தீதல் - எரிந்துபோதல், அழிதல். தீதான் - ஊசியால் தைப்போர் விரல் நுனியில் இடும் கருவி. தீது - தீமை, குற்றம் துன்பம், மரணம், கேடு, உடம்பு. தீத்தருகோல் - தீக்கடைகோல். தீத்தல் - சுடுதல், அழிதல், கருகச் செய்தல். தீத்தானம் - கேடு விளைக்கும் செய்யுட் டானம். தீத்திரன் - ஊழித்தீ. தீத்திறம் - கொலை முதலிய தீச்செயல், அக்கினி காரியம். தீநா - கப்பல்கள் திசை தப்பாமலிருத் தற்காகப் பனைகளைக் காலாக நாட்டி அதன்மீது மண்ணிட்டு எரிக்கும் விளக்கு. தீநாக்கு - சுவாலை. தீநாய் - கடலையில் திரியும் நாய். தீநீர் - நன்னீர், திராவகம், இனிய இளநீர். தீந்தமிழ் - இனிய தமிழ். தீந்தொடை - யாழ், தேனடை, யாழ் நரம்பு. தீபகம் - விளக்கு, பார்வை விலங்கு. தீபகற்பம் - கிட்டத்தட்ட முழுமையும் நீர் சூழ்ந்த நிலம் (Peninsula). தீபக்கால் - தீபாராதனைக் கருவி. தீபக்காற்கட்டில் - ஒரு வகைக் கட்டில். தீபசந்தானம் - விளக்கிலிருந்து வெளிப் படும் ஒளியின் தொடர்பு. தீபசந்தி - இந்திர விழா. தீபமரம் - சோதிமரம். தீபம் - விளக்கு, விளக்குத் தண்டு, சோதி நாள், ஒரு வகை மரம், தீவு. தீபவதி - நதி. தீபனம் - பசி, அதிக பசி. தீபாந்தரம் - தீவாந்தரம். தீபாராதனை - தீபங்காட்டிப் பூசிக்கை. தீபாவளி - ஐப்பசிக் கிட்டிண பக்கச் சதுர்த்தசியில் கொண்டாடும் கொண்டாட்டம். தீபி - புலி. தீபீகை - விளக்கு. தீபு - தீவு. தீப்பறவை - நெருப்புக்கோழி. தீப்பாறை - பாறை அடுக்கு வகை (gneiss). தீப்பிணி - காய்ச்சல், கொடிய நோய். தீப்புண் - தீயாற் சுட்டப்புண். தீப்போக்கு செம்பொன் - புடமிட்ட தங்கம். தீமகம் - எதிரியைக் கொல்லச் செய்யும் யாகம். தீமடுத்தல் - நெருப்பு மூட்டுதல். தீமானம் - மானக்கேடு. தீமுரன் பச்சை - சந்தன வகை. தீமுறி - பாஷாண வகை. தீமுறுகல் - பாஷாண வகை. தீமுறை - நெருப்பில் செய்யும் ஓமம். தீமேனியான் - சிவபெருமான். தீமை - குற்றம், கொடுமை. தீம் - இனிமை, இனிய. தீம்பன் - கீழ் மகன். தீம்பு - கேடு, குறும்பு. தீம்புழல் - இருப்பைப் பூ, இனிய பண்ணிகாரம். தீம்புளி - கருப்புக்கட்டி கூட்டிப் பொரித்த புளி. தீம்பூ - வாசனைப் பொருள்களுள் ஒன்று. தீய - தீமையான, போலியான. தீயழக்கம் - பக்கப்போலி. தீயகம் - பாசுவரம் (phosphorus). தீயணைப்படை - நெருப்பை அணைக்கும் படை (Fire bridge). தீயர் - ஒரு மலையாள சாதியார். தீயவெடுத்துக்காட்டு - திருட்டாந்தப் போலி. தீயவை - தீச்செயல், துன்பம், தீயவர் கூடிய சபை. தீயழல் - சுவாலை. தீயளி - பசுங்காய். தீயாடி - சிவபிரான். தீயினம் - தீயார் கூட்டம். தீயின்வயிரம் - மீனம்பர். தீயுண்புள் - தீப்பறவை. தீயோம்புதல் - யாகத் தீ வளர்த்தல். தீயோர் - கொடியோர். தீய்தல் - எரிந்து போதல். தீர - முற்ற, மிக. தீரதை - தீரம். தீரம் - தைரியம், வலி, கரை, வயல், வரம்பு. தீரன் - துணிவுள்ளவன். தீராமாற்று - பரிகாரமில்லாத செயல். தீராமை - துரோகம், கொடுமை. தீரை - தீரமுள்ளவள். தீர்க்கந்தை - வெருகங்கிழங்கு. தீர்க்கசதுர - கோணங்கள் ஒத்ததும் பக்கங்கள் ஒவ்வாதது மான நாற்கோட்டுருவம். தீர்க்கசந்தி - ஒரு உயிர் தன்னினத்து உயிரோடு புணரும் போது அவ் விரண்டும் அவ்வின நெட்டுயிராக மாறும் வடமொழிச் சந்தி. தீர்க்கசுமங்கலி - சுமங்கலையாய் நெடுங்காலம் வாழ்பவள். தீர்க்கசுவாதம் - பெருமூச்சு. தீர்க்கதண்டன் - சாட்டாங்க வணக்கம். தீர்க்கதரிசனம் - மேல் வருவதை உணரும் அறிவு. தீர்க்கரேகை - நெடுக்குத் தொலை (Longitude). தீர்க்கதரிசி - மேல்வருங்காரியம் அறிந்தவன். தீர்க்கபர்ணி - வாழை. தீர்க்கம் - நீட்சி, நிச்சயம், நிறைவு. தீர்க்காயுள் - நீண்ட வாழ்நாள். தீர்க்காலோசனை - ஆழ்ந்த யோசனை. தீர்தல் - முற்றுப் பெறுதல், போதல், நீங்குதல், இல்லையாதல், நிச்சயித்தல். தீர்த்தகரர் - தீர்த்தங்கரர். தீத்தங்கரர் - அருகரில் அருக பதவியடையந்த விருசபர் இவர் 24ல்வர். தீர்த்தம் - பரிசுத்தம், நீர், புண்ணிய நீர்த் துறை, சைனாகமம், ஆராதனை நீர். தீர்த்தல் - விடுதல், முடிதல் அழித் தல் போக்குதல். தீர்த்தன் - கடவுள், புனிதன், அருகன். தீர்த்திகை - நதி. தீர்ந்தவன் - தேர்ந்தவன். தீர்ப்பான் - வைத்தியன். தீர்ப்பு - முடிவு. தீர்மானம் - முடிவு. தீர்மானித்தல் - நிர்ணயித்தல். தீர்மை - நீக்கம். தீர்வு - நீங்குகை, தீர்மானம், பரி காரம். தீர்வை - முடிவு, நியாயத் தீர்ப்பு, சுங்க வரி. தீவகச்சாந்தி - முற்காலத்தில் காவிரிப் பூம்பட்டனத்தில் நடந்த இந்திர விழா. தீவகம் - விளக்கு, ஒரு சொல் ஓரிடத்தினின்று பல விடத்துஞ் சென்ற பொருள் விளக்கும் அணி, தீவு. தீவட்டி - தீப்பந்தம். தீவண்ணன் - தீ நிறமுள்ள சிவன். தீவம் - தீவு. தீவரம் - தீவிரம். தீவர்த்தி - தீவட்டி. தீவளி - கடுங்காற்று. தீவனம் - உணவு. தீவாதை - நெருப்புப் பிடித்தல். தீவாந்தரம் - தூரத் தீவு. தீவாளியாதல் - கடனால் நிலை குலைதல். தீவி - பலி. தீவிகை - விளக்கு. தீவிய - இனிமையான. தீவிரகந்தம் - துளசி. தீவிரம் - விரைவு, பெருங்கோபம், உறைப்பு. தீவிழித்தல் - பெருங் கோபத்தோடு பார்த்தல். தீவிளி - பசுங்காய், கொடுஞ்சொல். தீவினை - கொடுஞ்செயல், அக்கினி காரியம். தீவு - நாற்புறமும் நீர் சூழ்ந்த நிலம். தீவேட்டல் - யாகஞ் செய்தல். தீவேள்வி - அக்கினிசான்றாகச் செய்யும் கலியாணம். தீழ்ப்பு - கீழ்மை, திட்டு. தீற்றுதல் - ஊட்டுதல், பூசுதல். தீனதயாளு - வறியவரிடத்துக் கிருபையுள்ளவன். தீனம் - வறுமை, நோய், நட்பு. தீனி - உணவு. து து - உணவு, தன்மையொருமை, முற்று விகுதி, ஒன்றன்பால், வினை விகுதி பகுதிப்பொருள் விகுதி. துகள் - தூளி, பூந்தாது, குற்றம். துகிர் - பவளம் பவளக்கொடி. துகிலிகை - எழுதுகோல், துகிற் கொடி. துகில் - நல்லாடை, துகிற்கொடி. துகிற்கிழி - உறை. துகினம் - பனி. துகினூல் - வெண்ணூல். துகின்மனை - கூடாரம். துகின்முடி - தலைப்பாகை. துகுத்தல் - தொகுதியாக்குதல். துகைத்தல் - மிதித்துழக்கல், வருத்துதல், சஞ்சரித்தல். துக்கசாகரம் - பெருந்துயர். துக்கடா - சிறுதுண்டு, அற்பமான. துக்கம் - துன்பம், ஆகாசம். துக்கரம் - செய்தற்கரியது. துக்கராகம் - பாலையாழ்த்திறவகை. துக்கர் - கயநோயினர். துக்காணி - இரண்டு அல்லது நாலுதம்படி மதிப்புள்ள சிறுசெம்பு நாணயம். துக்கிணி - துக்குணி, சிறிதளவு. துக்கித்தல் - மனம் வருந்துதல். துக்கு - உடல். துங்கதை - பெருமை. துங்கபத்திரி - ஓர் ஆறு. துங்கபத்திரை, துங்கமத்திமதிப்பு - சந்திர சஞ்சார வட்டத்தில் தூரநிலை. துங்கம் - உயர்ச்சி, பெருமை. துசங்கட்டுதல் - காரியத்தில் முனைந்து நிற்றல். துசபரிசம் - சிறுகாஞ்சொறி. துசம் - கோடி, குங்கிலியம். துச்சம் - இழிவு, பதர், பொய், நிலை யின்மை. துச்சாரி - கெட்ட நடத்தையுள்ளவள். துச்சில் - ஒதுக்கிடம். துஞ்சரித்தல் - கண் விழித்தல். துஞ்சு - தொங்கு. துஞ்சுகுழல் - பின்னித் தொங்க விட்ட கூந்தல். துஞ்சுதல் - தூங்குதல், தொழிலின்றி யிருத்தல், இறத்தல், குறைதல், வலியழிதல், தங்குதல், நிலை பெறுதல், தொங்குதல். துஞ்சுமரம் - மதில்வாயிற்கணைய மரம், கழுக்கோல். துஞ்சை - துஞ்சுகுழல். துடக்கம் - தொடக்கம். துடக்கு - தன்கைப்படுவது, சம்பந்தம், சூதகம். துடக்குதல் - கட்டுதல், அகப் படுத்துதல், சம்பந்தப் படுத்தல், தொடக்குதல். துடராமுறி - விடுதலைப்பத்திரம். துடரி - ஒரு மலை. துடர் - சங்கிலி, தொடர். துடவர் - நீலகிரிமலைச் சாதியார், தோதவர் (Todas). துடவு - ஓர் அளவு. துடவை - தோட்டம், விளைநிலம். துடி - வேகம், சுறுசுறுப்பு, உடுக்கைப் பறை, கூத்துவகை, தூ துளை, காலநுட்பம், 4096 கணங் கொண்ட காலம், மயிர்ச் சாந்து. துடிக்கூத்து - முருகக்கடவுளும் சத்தமாதரும் துடிகொட்டி ஆடிய கூத்து. துடிதலோகம் - தேவலோகம். துடிதுடித்தல் - மனம் பதை பதைத்தல், கடுகடுத்தல். துடித்தல் - பரபரத்தல். துடிநிலை - மறவரின் வீரம் பெருகத்துடிகொட்டுதலைக் கூறும் புறத்துறை. துடிப்பு - பரபரப்பு, கோபம். துடியடி - யானைக்கன்று. துடியன் - துடிகொட்டும் சாதியான். துடியாடல் - துடிக்கூத்து. துடியிடை - பெண். துடுக்கு - துறும்புத்தனம், சுறுசுறுப்பு. துடுக்கெனல் - அச்சக் குறிப்பு. துடுப்பு - அகப்பை, காந்தள் மடல், வலி தண்டு. துடுமெனல் - நீரில் விழுதற் குறிப்பு. துடுமை - தோற்கருவிவகை. துடும்புதல் - ததும்புதல், கூடுதல். துடுவை - நெய்த்துடுப்பு. துடை - தொடை. துடைத்தல் - தடவி நீக்குதல், பெருக்கித் தள்ளுதல், பூசுதல், அழித்தல், கொல்லுதல். துடைப்பம் - விளக்குமாறு. துடைப்பான் - புருசு (brush). துடைவாழை - அரையாப்புக் கட்டி. துட்கு - அச்சம். துட்கெனல் - அச்சக்குறிப்பு. துட்டநிக்கிரகம் - தீயாரை அழிக்கை. துட்டம் - கொடுமை. துட்டி - திருப்தி, சாதுயர், சாதீட்டு, கெட்டவள், தம்படி, தீமை. துட்டு - பணம், திசை. துட்டுத்துக்காணி - சில்லரைப் பணம். துட்டை - கட்டுக்கடங்காதவள். துட்பதம் - பாசாங்கு. துணங்கல் - ஒரு கூத்து. துணங்கறல் - இருள், திருவிழா. துணங்கை - ஒருவகைக் கூத்து, விழா திருவாதிரை. துணரி - பூங்கொத்து. துணர் - பூங்கொத்து, பூ, குலை, பூந்தாது. துணி - துண்டு, ஆடை, தொங்கல், ஒளி, சோதிநாள், மரவுரி, நிச்சயம். துணிகரம் - துடுக்கு, துணிவு. துணிதல் - வெட்டுண்ணுதல், நீங்குதல், கிழிதல், தெளிதல். துணித்தல் - வெட்டுதல், கிழித்தல். துணிநிலா - பிறைத்திங்கள். துணிபு - துணிவு. துணியல் - துண்டு. துணிவு - ஆண்மை, மனத்திட்பம், கொள்கை, நிச்சயம், தெளிவு. துணுக்கம் - அச்சம், நடுக்கம். துணுக்குண்ணி - பொறுக்கித் தின்பவன். துணுக்கொனல் - அச்சக் குறிப்பு. துணை - உதவி, கூட்டு, இரட்டை, கணவன், மனைவி, உடன்பிறப்பு, ஒப்பு, அளவு, புணர்ச்சி, வரையும், அம்பு. துணைக்காரணம் - காரிய நிகழ்ச் சிக்குத் துணையாக இருக்கும் காரணம். துணைப்படை - நட்பரசரதாய்த் தனக்குதவும் படை. துணைப்பொருள் - ஒப்புமை கூறப்படுவது. துணைமுத்தம் - பலவடஞ் சேர்ந்த முத்து. துணைமை - பிரிவின்மை, ஆற்றல், உதவி. துணையரண் - வன்மைமிக்க சுற்றத்தாராகிய அரண். துணையல் - பூமாலை. துi™யறை - தோரணத்தொங்கல். துணைவஞ்சி - பிறரை வெல்ல வேனும் கொல்லவேனும் துணிந்து நின்றானொருவனைச் சில சொல்லிச் சந்திசெய்தலைக் கூறும் புறத்துறை. துணைவலி - நட்பரசரால் ஆகிய ஆற்றல். துணைவன் - கணவன், தோழன், உதவி செய்வோன், சகோதரன். துணைவி - மனைவி, சகோதரி, பாங்கி. துண்டம் - துண்டு, பறவை மூக்கு, முகம். துண்டன் - கொலைஞன். துண்டித்தல் - வெட்டுதல். துண்டீரபுரம் - காஞ்சிபுரம். துண்டீரன் - காஞ்சியில் ஆட்சி செய்த அரசன். துண்டு - கூறு, சிறுதுணி. துண்ணெனல் - அச்சக் குறிப்பு, திடுக்கிடுதற் குறிப்பு. துதசிரம் - பேய்பிடித்தவர் போலத் தலையை ஆட்டும் அபிநயவகை. துதி - தோத்திரம், புகழ், நுனி, துருத்தி, உறை. துதிகை - துதியை. துதிக்கை - தும்பிக்கை. துதிதம் - துதி, அசைவு. துதித்தல் - புகழ்தல், தொழுதல். துதியரிசி - சோபனாட்சதை. துதியை - இரண்டாந்திதி. துதிவாதம் - புகழுரை. துதை - நெருக்கம். துதைத்தல் - நெருக்குதல். துத்த அமிலம் - (Oil of vitrol). துத்தநாகம் - ஓர் உலோகம். துத்தம் - ஏழு இசையில் இரண் டாவது, வாசவகை, நாய், பாஷாண வகை, கண்மருந்தாக உதவும் துரிசு, பால். துத்தரி, துத்தரிக்கொம்பு - ஊது கொம்பு. துத்தாரி - துத்தரி. துத்தி - செடிவகை, வரித்தேமல், பாம்பின் படப்பொறி, யானை மத்தகப் புள்ளி, ஒத்துக்கருவி. துத்தியம் - புகழ்ச்சி. துத்திரி - ஊதுகுழல். துத்துர - தாமரைப் பொகுட்டு போன்ற அணி. துந்தி - நாபி, வயிறு. துந்துபி - பேரிகை, 56ஆவது ஆண்டு, ஓரசுரன். துந்துளம் - காரெலி. துப்பட்டி - குளிருக்காகப் போர்த் துக் கொள்ளும் துணிப் போர்வை. துப்பம் - நெய். துப்பல் - உமிழ்நீர். துப்பன் - வலிமையுள்ளவன் உளவு அறிவோன். துப்பாக்கி - சுடுங்கருவி (துருக்கிச் சொல்). துப்பாக்கி உலோகம் - உலோகக் கலவை (gun metal). துப்பார் - உண்பவர். துப்பிரபன் - மூதேவி கணவனான கலிபுருடன். துப்பிலார் - வறியவர். துப்பு - வலி, அறிவு, உறச்hகம், நன்மை, பற்றுக்கோடு, துணை, துணைக் கருவி, தன்மை, நுகர்ச்சி, நுகர் பொருள், உணவு, நெய், தூய்மை, பகை, உளவு, பவளம், மெழுகு, சிவப்பு, உமிழ் நீர். துப்புதல் - உமிழ்தல். துப்புரவு - சுத்தம், பொறிநுகர்ச்சி, நுகர்ச்சிப் பொருள், அனுபவம். துமானம் - ஆபரணம் வைக்கும் கலம். துமி - வெட்டு, மழைத் துளி. துளித்தல் - வெட்டுதல், அறுத்தல், விலக்குதல். துமிலம் - பேராரவாரம். தும் - இறப்பு எதிர்காலங்களைக் காட்டும் தன்மைப் பன்மை வினைமுற்று விகுதி. தும்சம் - அழிவு. தும்பரம் - அத்தி. தும்பி - யானை, வண்டு, ஆண் வண்டு. தும்பிக்கை - துதிக்கை. தும்பிசோகீரனார் - சங்க காலப் புலவர் (குறுந். 392). தும்பிபறத்தல் - மகளிர் விளை யாட்டு வகை. தும்பிப்பதக்கம் - வண்டின் வடி வாகச் செய்யப்பட்ட பதக்கம். தும்பிப்பாட்டு - இறந்துபட்ட ஒரு நூல். தும்பிலி - மரவகை, மீன்வகை. தும்பு - குற்றம், சிம்பு, வரம்பு, சில சாதி மகளிர் அணியும் தாலியுரு. தும்புரு - ஒரு கத்தருவன், ஒரு வகை யாழ். தும்பை - செடிவகை, போர் வீரர் போரிலணியும் அடையாளப் பூ, பெருவீரச்செயல் காட்டிப் பகைவ ரோடு போர் செய்தலைக் கூறும் புறத்துறை. தும்பைமணி - ஒருசார் மறவமகளிர் அணியும் தாலிவகை. துதும்பையரவம் - தன்சேனையை அரசன் தலையளி செய்தலைக் கூறும் புறத்துறை. தும்பையன் - மீன்வகை. தும்மட்டி - வரிக்கொம்மட்டி. தும்மல் - தும்முகை, மூச்சு. தும்மு - தும்முதல். தும்முதல் - மூச்சுத் தடைப்பட்டு மூக்கு வாய்கள் வழியாக ஒலி யுடன் வெளிவருதல். துயக்கம் - சோர்வு. துயக்கு - சோர்வு, துக்கம், மன மக்கம், பந்தம், ஆசை. துயம் - இரண்டு, மந்திர விசேடம். துயரம் - துக்கம், கட்டம். துயரி - யாழ்நரம்பு. துயர் - துன்பம். துயர்தல் - வருந்துதல். துயலுதல் - அசைதல், தொங்குதல், பறத்தல். துயல்வருதல் - அசைதல். துயவு - அறிவின்திரிவு. துயிலார் - துயிலாத தேவர். துயிலார்தல் - உறங்குதல். துயிலி - கீரைவகை, துயிலியில் நெய்யப்படும் ஆடை. துயிலிடம் - படுக்கை. துயிலுணர்தல் - நித்திரை நீங்குதல். துயிலுதல், துயிறல் - உறங்குதல், தங்குதல், இறத்தல். துயிலெடுப்பு, துயிலெடை - நித்திரையி லிருந்து எழுப்புகை. துயிலெடைநிலை - பாசறைக்கண் துயிலும் வேந்தரைச் சூதல் அவர் புகழ் கூறித் துயிலெழுப்பல் கூறும் புறத்துறை. துயிலெடைமாக்கள் - அரசரைத் துயிலெழுப்பும் சூதர். துயிலேழுமங்கலம் - பாணர் முதலி யோர் அரசர் துயிலெழப்பாடும் மங்கலப் பாட்டு. துயிலேய்தல், துயிலேற்றல் - துயிலெழுதல். துயில் - நித்திரை, சாவு, புணர்ச்சி. துயிற்சி - நித்திரை. துயிற்றுதல் - உறங்கச் செய்தல். துயினடை - தூக்கத்தில் நடக்கும் நோய். துயின்மடிதல் - உறங்குதல். துரகதம் - குதிரை. துரகதாமன் - அசுவத்தாமன், குதிரைத் தறி. துரகம் - குதிரை. துரகரம் - கத்தூரி. துரங்கம் - குதிரை. துரத்துதல் - வெருட்டியோட்டுதல், அப்புறப்படுத்துதல். துரந்தரன், துரந்தரிகன் - பொறுப்பு வகிப்போன், வெற்றியாளன், முயன்று நிற்போன். துரப்பணம் - தச்சர் துளையிடுங் கருவி. துரப்பு - முடுக்கை, விடுகை. துரப்புதல் - தேடுதல். துரம் - ஓரிசைக் கருவி, சுமை, பொறுப்பு. துரவு - நீர்ப்பாய்ச்சலுக் குதவும், பெருங் கிணறு, மணற்கேணி. துரா - செடிவகை. துராகதம், துராகிருதம் - கெட்ட நடத்தை, நிந்தை. துராசர் - தீய ஆசையுடையவர். துராசை - தகாத ஆசை. துராய் - திரித்த பழுதை. துராரம்பம் - தீச்செயல். துராலிங்கர் - அகத்தியர் மாணவரு ளொருவர். துரால் - செத்தை. துரி - பாரம், எழுதுகோல், தேடுதல். துரிசு - குற்றம், துக்கம், மயிற்றுத்தம், என்ற மருந்து. துரிஞ்சில் - துருஞ்சில். துரிதம் - விரைவு, பாடல், ஆடல் களின் தாள விரைவு, பாவம், கலக்கம். துரிதம்போடுதல் - காலவிரைவு படநடித்தல். துரியத்தானம் - ஆன்மா துரிய நிலையில் அடங்குதற்குரிய உந்தியை அடுத்த இடம். துரியம் - பொதி, எருது, யோகியர் தன்மையாய் நிற்கும் உயர்நிலை. துரியன் - கடவுள், சுத்தான்மா. துரியாதீதம் - முதலாதாரத்தில் ஆன்மா தங்கி அவிச்சை மாத்திரையை அறியும் ஐந்தாம் ஆன்ம நிலை. துரியோதனன் - திருதராட்டிரன் மக்களில் மூத்தவன். துரீ - பாவாற்றி. துரு - இரும்புக்கறை, குற்றம், மரம், செம்மறியாடு. துருக்கம் - கத்தூரிமான், குங்குமம், செல்லுதற்குரிய இடம், மலையரண், குறிஞ்சிநிலம், மதில். துருக்கல் - இரும்புக் கிட்டம். துருக்கன் - துருக்கி தேசத்தவன். துருக்கு - துருக்கி மொழி. துருசு - விரைவு. துருஞ்சில் - சிறு ஒளவால். துருணன் - சிவபிரான். துருதுருத்தல் - துடித்தல். துருத்தி - ஆற்றிடைக்குறை, உலையூது கருவி, தோல். துருநாமம் - மூலநோய். துருபதன் - துரௌபதியின் தந்தை யாகிய பாஞ்சாலன். துருப்பு - சேனை. துருப்புக்கூடு - தூற்றாத பொலி. துருமதி - துர்ப்புத்தி. துருமம் - மரம், மனக்கலக்கம். துருமவியாதி - கொம்பரக்கு. துருமோற்பலம் - கோங்கு. துருவசக்கரம் - சப்த இருடி மண்ட லம், இராப்பகல்களை உண்டாக்குவ தாகக் கருதப்படும் வானசக்கரம். துருவதானம் - நவதாளத் தொன்று. துருவபதம் - துருவமண்டலம். துருவமண்டலம் - துருவதேசம். துருவம் - பூசக்கரமுனை, ஒப்பு, ஊழ். துருவர்ணம் - வெள்ளி. துருவல் - தேடுகை, கடைகை, துருவு துண்டு. துருவன் - உத்தானபாத அரசன் மகன், அழிவில்லாதவன். துருவாசன் - துர்வாச முனிவன். துருவாடு - செம்மறியாடு, மலையாடு. துருவு - தேடுகை, கடைந்து சீவு. துருவு விளக்கு - துருவிப்பார்க்கும் விளக்கு (Search Light). துருவேறாஎஃகு - உருக்கும் குறோமியமும் கலந்து கலப்பு உலோகம் (Stainless steel). துருவை - செம்மறியாடு, ஆடு, பார்வதி, கீதவுறுப்புள் ஒன்று. துரை - தலைவன், வேகம், மிருதிப் பாடு பிரபு. துரைத்தனம் - இராசாங்கம். துரோகம் - தீங்கு. துரோணம் - பதக்கு, மண்சொரியும் மேகம், காக்கை, சரப்புள், வில். துரோணாசிரியன் - குருகுலத் தரசரின் வில்லாசிரியர். துரோணி - தோணி. துரோபதை - துரௌபதி. துரௌபதி - பாண்டவர் மனைவி. துர்க்கதன் - தரித்திரன். துர்க்கந்தம் - கெட்ட நாற்றம். துர்க்கம் - அரண். துர்க்குறி - தீயநிமித்தம். துர்க்கை - காளி, காடுகிழாள், பூரநாள். துர்க்கைவாகனம் - கலைமான். துர்ச்சனன் - தீயோன். துர்ப்பலம் - பலவீனம். துர்மரணம் - தற்கொலை முதலிய வற்றால் உண்டாகும் மரணம். துர்வாசர் - ஒரு முனிவர். துர்வினியோகம் - தீயவழியிற் செலவிடுகை. துலக்கம் - பிரகாசம், தெளிவு. துலக்கு - மினுக்கு. துலக்குதல் - விளக்குதல் வெளிப் படையாக்குதல். துலங்கு - தொழுமரம். துலங்கூர்தி - தூங்குகட்டில். துலா - நிறைகோல், துலாம், துலாராசி, ஏற்றமரம். துலாக்கோல் - நிறைகோல். துலாதானம், துலாபாரம், துலாபுருட தானம் - பிராமணர்க்குத் தானஞ் செய்யும் பொருட்டு அரசன் போன்றோர் ஒரு தட்டில் பொன்னும் ஒரு தட்டில் தாமுமாக இருந்து பொன் நிறுக்கும் சடங்கு. துலாந்து - வீட்டிற் சாமான் வைக்க உதவும் ஒரு வகைப்பரண். துலாம் - நிறைகோல், துலாராசி, ஐப்பசி, உத்தரக்கட்டை, தூண்மே லுள்ள போதிகையின் கீழ் வாழைப் பூ வடிவிலமைந்த அலங்கார வுறுப்பு, ஒரு நிறை. துலாம்பரம் - துலக்கம். துலி - பெண் ஆமை. துலுக்கக்கற்றாழை - கரியபோளம். துலுக்கன் - துருக்கன். துலுக்காணியம், துலுக்காவனம் - துருக்க அரசாட்சி. துலுக்கானம் - துருக்கித்தானம் என்னும் நாடு. துலுக்குதல் - குலுக்குதல், செருக்கி நடத்தல். துலுங்குதல் - அசைதல். துலை - வெகுதூரம், நிறைகோல்; துலாராசி, 100 பலங்கொண்ட நிறை, ஒப்பு, ஏற்றமரம், தோட்டம், துலைக்கிடங்கு. துலைத்தாலம் - துலைநா. துணைநா - தராசுமுள். துல்லியம் - ஒப்பு, சரி, சுத்தம், ஆப்பிரகம். துல்லியயோகிதை - ஒப்புமைக் கூட்டம். துவக்கு - கட்டு, சங்கிலி, தொடர்பு, பற்று, தோல், உடல், பரிசேந்திரியம். துவசம் - கொடி, அடையாளம், மரவுரி. துவசமங்கையர் - கள் விற்கும் பெண்கள். துரசர் - கள்விற்போர். துவசாரோகணம் - கொடியேற்றம். துவஞ்சம் - அழிவு. துவடர் - பகைவர். துவட்சி - வளையுந்தன்மை, வாடுகை, சோர்வு, அசைவு. துவட்டர் - சிற்பியர். துவட்டன் - துவாதச ஆதித்தருள் ஒருவன். துவட்டா - தெய்வத் தச்சனாகிய விசுவ கருமா. துவட்டாநாள் - சித்திரை. துவட்டு - துவட்டுகை, கறிவகை. துவந்தனை - பந்தம், தடை. துவந்துவம் - இரட்டை, மாறுபட்ட இருவகை நிலை. துவம் - அசையாநிலை, இரண்டு, பண்புணர்த்தும் ஒரு வடமொழி விகுதி. துவயம் - இரண்டு. துவர - முழுதும், மிக. துவரம் - துவர்ப்பு. துவராடை - காவிச்சீலை. துவராபதி - துவாரவகை. துவரி - காவிநியம், இலவம்பூ. துவரிதழ் - யானை. துவரை - துவாரகை, துவரஞ்செடி (pigehon - pea). துவரைக்கோமான் - இடைச் சங்கப் புலவருள் ஒருவர், கண்ணன். துவர் - துவர்ப்பு, பகை, பாக்கு, பவளம், சிவப்பு, காவி, துவரை, விறகு, சருகிலை. துவர்க்காய் - பாக்கு. துவர்ச்சிகை - கடுக்காய்ப் பிஞ்சு. துவர்தல் - பகிர்தல், புலர்த்துதல், முதிர்தல், முழுதுமாதல், ஆடுதல். துவர்த்தல் - சிவத்தல், பூசுதல். துவர்பிடித்தல் - தடுத்தற்கு ஆடையைப் பிடித்தல். துவர்ப்பு - அறுசுவைகளுள் ஒன்று, பத்து. துவர்ப்பூ - வாடிய பூ. துவலை - நீர்த்திவலை, மழைத்தூவல், கூட்டம். துவல் - அருச்சிக்கும் பூ. துவளல் - வளைதல். துவளுதல் - வளைதல், வாடுதல், துடித்தல், வருந்துதல், ஒழிதல், அடர்தல், இறுகுதல், புணர்தல், தொடுதல். துவளை - வாட்டம், மேற்பூச்சு. துவள் - வாட்டம், குற்றம். துவற்றுதல் - தூவுதல், கெடுத்தல். துவனம் - ஒலி. துவனி - ஒலி. துவன்று - நிறைவு. துவன்றுதல் - நிறைதல், நெருங்குதல், கூடிநிற்றல், சாதல். துவாதசம் - பன்னிரண்டு. துவாதசி - 12 ஆம் திதி. துவாந்தம் - இருள், நரகம். துவாபரம், துவாபரயுகம் - 8,64,000 ஆண்டுகள் கொண்ட மூன்றாம் யுகம். துவாரகை - கண்ணன் அரசு புரிந்த நரகம். துவாரசமுத்திரம் - வல்லாள அரசர் தலைநகர். துவாரடை - மரக்கல உறுப்பினுள் ஒன்று. துவாரபாலகர், துவாரபாலர் - கோயிலின் வாயிற் காவல் தெய்வங்கள். துவாரமண்டபம் - கோயிலில் உள் மண்டபம். துவாரம் - தொளை, மனைவாயில், வழி. துவாலை - சூதகப் பெருக்கு, உடலிற் பூசும் பூச்சு, துணித்துண்டு (போர்த்துக் கேயம்). துவாலைசெய்தல் - மேற்பூசுதல். துவி - இரண்டு. துவிகளை - தாள அளவு. துவிசன் - பார்ப்பான். துவிதம் - இருமை, துவைதம். துவிதியை - இரண்டாந்திதி, கோரோ சனை. துவியம் - இரண்டாவது. துவிரம் - தேனீ. துவீபம் - தீவு. துவேசம் - பகை. துவை - மிதிக்கை, ஒலி, இறைச்சி, பிண்ணாக்கு, புளிங்கறி, ஆணம், துவையல். துவைதம் - சீவான்மாவும் பரமான் மாவும் வேறு வேறு என்னும் கொள்கை. துவைதல் - தோய்தல், உறைதல். துவைத்தல் - ஆரவாரித்தல், புகழப்படுதல், மிதித்துழக்குதல், குற்றுதல், கடைதல், சேர்த்து வைத்தல். துவையல் - துவையல் என்னும் கறி. துவைவரல் - கலப்பு ஓசை. துவ்வாதவன் - தரித்திரன். துவ்வாமை - நுகராமை, வறுமை, வேண்டாமை. துவ்வு - உணர்ச்சி, நுகர்ச்சி, இழிவு. துவ்வுதல் - நுகர்தல், வலியுறுதல், நீங்கியொழிதல், பற்றுக்கோடு. துழதி - துன்பம். துழத்தல் - துழாவுதல். துழவுதல் - துழாவுதல், சூழவருதல். துழவை - துழாவிச் சமைத்த வழ். துழனி - ஒலி, குறை, குற்றம். துழாதல் - துழாவுதல். துழாய் - துளிச. துழாய்மௌலி - திருமால். துழாவுதல் - அளைதல், கலக்கம், அச்சம், ஒளி, சோதிநாள். துளக்கு - அசைவு, வருத்தம். துளக்குதல் - அசைத்தல், வணங்கு தல், விளக்குதல், ஒலித்தல். துளங்கொளி - மிக்க ஒளி, கேட்டை. துளசிமாடம் - துளசிச் செடி நட்ட மேடை. துளபம் - துளசி. துளம் - மாதுளை, மயிலிறகினடி. துளர் - பயிரின் களை. துளர்தல் - நிலத்தைக் கொத்துதல், மணம் வீசுதல். துளவம் - துளசி. துளவன் - திருமால். துளவு - துளசி. துளி - துளிக்கை, திவலை, சொட்டு, விடம், பெண் ஆமை. துளித்தல் - கொட்டுதல், மழை பெய்தல். துளிர் - தளிர். துளிர்த்தல் - தளிர்த்தல். துளு - துளுவம். துளுப்பிடுதல் - கலக்குதல். துளும்புதல் - அசைதல், ததும்புதல், துள்ளுதல், விளங்குதல், இளகுதல், மேலெழுதல், வருந்துதல், மிகுதல். துளுவம் - துளுவமொழி. துளுவவேளாளர் - துளுவ நாட்டினின்றும் சென்று தொண்டை நாட்டிற் குடியேறின வேளாள வகையார். துளை - துவாரம், மூங்கில், கருட்சி. துளைகை - நீரில் துளைக்கை. துளைக்கருவி - உள் துளையுள்ள வாத்தியம். துளைத்தல் - துவாரஞ் செய்தல், ஊடுருவுதல். துளைப்பொன் - புடமிட்ட சுத்தப் பொன். துள்ளம் - சிறுதுளி. துள்ளல் - கூத்து, துள்ளுகை, ஆடு, நுளம்பு, துள்ளலோசை. துள்ளற் செலவு - யாழ்வாசிக்கும் முறையுள் ஒன்று. துள்ளி - துளி. துள்ளுசீட்டு - அபயச்சீட்டு. துள்ளுதல் - குதித்தல், செருக்குதல், மிகுதல். துள்ளுமறி - ஆட்டுக்குட்டி. துள்ளொலி - அலை எறியும் ஒலி. துறக்கநாடு - சுவர்க்கம். துறட்டி - தலையில் கொளுவி உள்ள கோல், அங்குசம். துறட்டு - அபாயம், மரவகை. துறட்டுமுள் - செடில். துறத்தல் - விடுதல், நீங்குதல், பற்றொழித்தல். துறந்தார் - துறவிகள். துறப்பணம் - துரப்பணம் என்ற கருவி. துறப்பு - பூட்டு. துறம் - துறவு. துறவறம் - துறவிகளுக்கு விதித் துள்ள தருமம். துறவி - சன்னியாசி. துறவு - பற்று விடுகை, சன்னியாசம். துறு - நெருக்கம். துறுகல் - பாறை, குன்று. துறுதல் - நெருங்குதல், குவிதல், அடைதல். துறுமல் - நெருக்கம், திரட்சி. துறுமுதல் - நெருங்குதல், திரட்டல். துறும்புதல் - துறுமுதல். துறுவல் - நெருங்குகை, நுகர்ச்சி. துறை - இடம், நியாயவழி, பகுதி ஆறு, வண்ணான், ஒலிக்குமிடம், நீர்த்துறை, சாத்திரம், அகம்புறம், பற்றிய பொருட்கூறு, ஒழுங்கு, வரலாறு. துறைக்குறுமாவிற் பாலங் கொற்ற னார் - சங்க காலப் புலவர் (நற். 286). துறைக்குறை - ஆற்றிடைக்குறை. துறைபடிதல் - நீர்நிலைகளில் முழுகுதல். துறைபிடித்தல் - துறைமுகஞ் சேர்தல். துறைபோதல் - காரியம், முடிவு போதல், கற்றுத்தீர்த்தல். துறைப்பேச்சு - கொச்சைப் பேச்சு. துறைமுகம் - கப்பல் வந்து தங்கும் கடற்கரைப் பட்டினம். துறைமூன்றில் - வீட்டின் முற்ற மாகிய இடம். துறையர் - கோயம்புத்தூர் சலேம் சில்லாக்களில் வாழும் பயிரிடுவோ ரான கன்னட சாதியார். துறையூர் - அரிசில்கிழார் சங்க காலப் புலவர் (புறம். 136). துறைவன் - நெய்தல் நிலத் தலைவன். துறோட்டி, துறட்டி - அங்குசம். துற்குறி - தீச்சகுணம். துற்றர் - உண்பவர். துற்றவை - நுகர் பொருள். துற்றி - உண்பவை. துற்று - உணவு, கவளம், கூட்டம். துற்றுதல் - உண்ணுதல், கவ்வுதல், நெருங்குதல், மேற்கொண்டு நடத்தல். துறோயளவை - Troy measure. துனி - வெறுப்பு, கோபம், புலவி நீட்டம், பிரிவு, துன்பம், குற்றம், இடையூறு, வறுமை, நதி. துனித்தல் - வெறுத்தல், கலாய்த்தல், நெடிது புலத்தல். துனைத்தல் - விரைதல். துனைவு - விரைவு. துன் - விளை. துன்பம் - வருத்தம், வறுமை. துன்பு - துன்பம். துன்மதி - மூடம், கெடுதி, தீயோன், 55வது ஆண்டு. துன்மரணம் - துர்மரணம். துன்றுதல் - நெருங்குதல், கிட்டுதல், பொருந்துதல். துன்றுநர் - நண்பர். துன்னகாரர் - தையற்காரர். துன்னம் - தையல், ஊசித்துளை. துன்னம்பெய்தல் - தைத்தலைக் கொள்ளுதல். துன்னல் - தையல், நெருங்குதல், சிறு திவலை. துன்னலர் - பகைவர். துன்னார் - பகைவர். துன்னிமித்தம் - தீய சகுனம். துன்னியார், துன்னினர் - நண்பர். துன்னுதல் - பொருந்துதல், செறிதல், அணுகுதல், மேவுதல், செய்தல், அடைதல், ஆலோசித்தல், தைத்தல், உழுதல். துன்னுநர் - துன்னியார். துன்னூசி - தையலூசி. துன்னெலி - வளை தோண்டும் எலி. துன்னெறி - தீயவழி. தூ தூ - தூய்மை, வெண்மை, வலிமை பற்றுக்கோடு, பகை, இறைச்சி, பறவையினிறகு. தூகுதல் - அலகிடுதல். தூக்கணங்குருவி, தூக்கணாங் குருவி - குருவி வகை Straited weaver - fitch. தூக்கணம் - தொங்கல், உறி, தூங்கணங் குருவி. தூக்கம் - உறக்கம், காலம் நீட்டிக்கை, தொங்கல், நிறுப்பு, ஏற்றம். தூக்கானந்தம் - பாடற்குற்றவகை. தூக்கி - தூக்கும் கருவி (Jack). தூக்கிலி - ஆலோசனை யில்லாதவன். தூக்கு - தொங்கற் பொருள், உறி, நிறைகோல், தூக்கு மரம், துலாராசி, எடை, காத்தண்டு, உயர்ச்சி, ஒப்பு, ஆராய்ச்சி, செய்யுள், வத்து, இசை, தாளவகை. தூக்குணி - மானமற்றவன். தூக்குதல் - உயர்த்துதல், நிறுத்துதல், ஆராய்தல், ஒப்புநோக்குதல், தொங்க விடுதல், அசைத்தல், ஒற்றறுத்தல். தூக்குமரம் - தூக்குத் தண்டனைக் காக அமைத்த மரம். தூக்குமூக்குத்தி - மூக்குத்திவகை. தூக்கணங்குரீஇ, தூங்கணம் - தூக்கணங் குருவி. தூங்கமளி - ஊஞ்சற்கட்டில். தூங்கலோசை - வஞ்சிப்பாவிற்குரிய ஓசை. தூங்கலோரியார் - சங்க காலப் புலவர் (குறு. 151). தூங்கல் - தொங்கல், நித்திரை, மயக்கம், சோம்பு, யானை, தராசு, தாழ்கை, கூத்து, இசைவகை, வஞ்சி ஓசை. தூங்கல்வண்ணம் - வஞ்சியோசை பயின்றுவரும் வண்ணம். தூங்காமை - சோர்வில்லாமை. தூங்கானைமாடம் - பெண்ணாக டத்துள்ள சிவன்கோயில். தூங்கிசம் - நாசம். தூங்குகட்டில் - தூங்குமஞ்சம். தூங்குதல் - ஆடுதல், அசைதல், கூத்தாடுதல், இடையறாது விழுதல், ஒலித்தல், துயிலுதல், சாதல், வாடுதல், தாமதித்தல். தூங்குதோல் - பாம்பின் சட்டை, தங்குதல், செறிதல், மிகுதல், மெல் லென நடத்தல். தூங்கெயில் - ஆகாயக்கோட்டை. தூசகத்தறி - முற்கால வரிவகை. தூசக்குடிஞை - கூடாரம். தூசங்கொளல் - ஒருவன் பாடிய வெண்பாவின் கடைசி முதல் எழுத்துக்களே கடைசி முதல் எழுத்துக்களாக மற்றொரு வெண் பாப் பாடுவது. தூசணம் - ஊத்தைப்பேச்சு. தூசம் - யானைக் கழுத்திலிடும் கயிறு. தூசர் - படைஞர், வண்ணார். தூசி - கொடிப்படை, குதிரை, போர், அற்பம், புழுதி. தூசிப்படை - கொடிப்படை. தூசு - சுத்தம், ஆடை, பஞ்சு, சித்திரை, நாள், முன்னணிப்படை, யானைக் கழுத்திலிடுங் கயிறு. தூடணம், தூடணை - தூசணம். தூட்டி - ஆடை. தூணம் - தூண், தீயநாள். தூணாநிகனன்நியாயம் - தூணை நடும்போது ஆட்டி அசைத்து உறுதிப்படுத்துவது போல் ஒரு விடயத்தைப் பல வகையாக அசைத்து நிலைநாட்டும் நெறி. தூணி - அம்புப்புட்டில், நான்கு மரக்காலளவு. தூணிகர் - வணிகர். தூணித்தல் - பருத்தல். தூணீரம் - அம்புக்கூடு. தூண் - தம்பம், பற்றுக்கோடு. தூண்டாவிளக்கு - தூண்ட வேண்டாத படி எரியும் விளக்கு, நாகரத்தின மாகிய மணிவிளக்கு. தூண்டி - தானே சொல்லுகை. தூண்டில் - மீன் பிடிக்குங் கருவி, வரிக்கூத்து வகை. தூண்டில்வேட்டுவன் - மீன் பிடிப்போன். தூண்டுகோல் - விளக்குத்திரி தூண் டும் ஈர்க்கு. தூண்டுதல் - கிளப்பிவிடுதல், செலுத்துதல், அனுப்புதல், ஏவுதல், குற்றுதல், தள்ளுதல், விளக்குத் தூண்டுதல். தூதன் - செய்தி அறிவிப்போன், ஏவலாளன், அரச தூதன். தூதாடுதல் - தூதாகப் போதல். தூதாள் - தூதாகப் போதல். தூதாள் - தூதன். தூதி - பாம்பின் நச்சுப் பற்களுள் ஒன்று. தூதிடையாடல் - மாலைக் காலத்துத் தலைவியுற்ற துன்பம் நோக்கித் தோழி தலைவனிடம் தூதாக நடத்தலைக் கூறும் புறத்துறை. தூதிற்பிரிவு - தன் அரசனின் தூதாகத் தலைவன் பிரியும் பிரிவு. தூது - அரச தூதர் தன்மை, தூது மொழி, தூது செல்வோன், செய்தி பிரபந்த வகை, கூழாங்கல், தூது வளை. தூதுணம் - புறாவகை, தூக்கணங் குருவி. தூதுவளை - கொடி வகை. தூதுவன் - தூதன். தூதுவென்றி - தூதுவன் தான் சென்ற காரியத்தில் அடைந்த வெற்றியைக் கூறும் புறத்துறை. தூதுளம், தூதுளை - தூதுவளை. தூதூவெனல் - உமிழ்தற் குறிப்பு. தூதை - மண்சிறுகலம், விளையாட்டு மரப்பானை, ஒர் சிறிய அளவு. தூதைகூலம் - பஞ்சு பண்ணும்வில். தூத்திரக்கூர்ச்சம் - ஆண் தருப்பை. தூபக்கால் - தூபங்காட்டுங் கருவி. தூபங்கள் - தூபிகள். தூபம் - நறும்புகை, புகை, நெருப்பு, அபிநயவகை, கடம்பு. தூபி, தூபிகை - விமான சிகரம், கோபுரம், மலைச் சிகரம். தூபிதம் - சுடுகை. தூபை - தூபி. தூமகேது - வால்வெள்ளி. தூமக்கொடி - புகை ஒழுங்கு. தூமக்கோள் - வால்வெள்ளி. தூமணி - முத்து. தூமதேவன் - தீக்கடவுள். தூமபுடம் - ஆதித்தியனுடைய சுத்தபுடத்தோடு நாலுராசியும் பதின் மூன்று பாகையுங்கூட்டி நின்ற நிலை. தூமப்போக்கி - புகைப்போக்கி. தூமம் - நறும்புகை மணம், தூம கலசம். தூமை - மகளிர் சூதகம். தூம்பு - உட்டுளை, உட்டுளைப் பொருள், மதகு, வாய்க்கால், மூங் கில், வங்கியம் என்னும் இசைக் கருவி, மரக்கால், நீர்ப்பத்தர், மனை வாயில். தூய - பரிசுத்தமான. தூயம் - பரிசுத்தம். தூய்தன்மை - பரிசுத்தமின்மை. தூய்து - சுத்தமானது. தூய்மை - பரிசுத்தம், மெய்மை, நன்மை. தூர - விலக. தூரகமனம் - தூரதேசயாத்திரை. தூரகாரி - வருங் காரியமறிந்து செய்வோன். தூரம் - சேய்மை. தூராகி - எலிக்காது என்னும் செடி. தூராதி தூரம் - மிக்க தூரம். தூரி - சோகி, எருது, ஊசல். தூரிகை - எழுதுகோல். தூரிது - மேன்மையானது. தூரிய - தூரமான. தூரியம் - வாச்சியப்பொது, முரசு, தூரிகை, ஒருவகை ஆடை, பொதி மாடு, எறிபடை, கைவேல், ஈயம், விடம். தூரியன் - தூரத்துள்ளவன். தூரு - வேர். தூருதல் - நிரம்புதல், அடைபடுதல், அழிதல், மறைதல், நெருங்குதல். தூர் - வேர், அடிப்பகுதி, சேறு. தூர் எடுத்தல் - சேறு எடுத்தல் (Dredging). தூர்க்கை - பூரநாள். தூர்ச்சடி - சிவன். தூர்த்தல் - நிரப்புதல், அடைத்தல். தூர்த்தன் - காமுகன், கொடியோன். தூர்வகம் - பொதி சுமக்கும் எருது. தூர்வு - சேற்றால் அடைபடுதல். தூர்வை - அறுகு, கிணற்றைச் சார்ந்த நிலம். தூர்வை செய்தல் - நிலத்தை வெட்டித் திருத்துதல். தூர்வைத்தைலம் - அறுகம்புல்லுத் தைலம். தூலசரீரம் - சூக்கும் உடலைப் போர்த்திருக்கும் பரு உடல். தூலசித்து - ஆன்மா. தூலம் - பருமை, கண்ணுக்குப் புலனாவது வீட்டு உத்திரம். தூலலிங்கம் - கோபுரம், சிவாலயம். தூலாருந்ததி நியாயம் - நுண்மை யான அருந்ததி நட்சத்திரத்தைக் காட்ட அதன் அருகிலுள்ள பெரிய நட்சத் திரத்தைக் கொண்டு குறிப்பிடுதல் போல நுண்பொருளை விளக்குதற்கு அதன் சம்பந்தமான பருப் பொருளைக் கொண்டு குறிப்பிட்டுணர்த்தும் நெறி. தூலி, தூலிகை - எழுதுகோல், அன்னத் தினிறகு. தூலித்தல் - பருத்தல். தூவத்தி - வாள். தூவல் - தூவுகை, துவலை, மழை, இறகு. தூவாத - வேண்டாதவை. தூவானம் - சிதறுமழை, அருவி வீழிடம். தூவி - பறவையிறகு, மயில் தோகை, அன்னத்தினிற்கு, அன்னம், எழுதுகோல், தூபி, பறவைகளின் குடுமி. தூவிப்பொன் - கிளிச்சிறை. தூவு - ஊன். தூவுதல் - தெளித்தல், சொரிதல், அருச்சித்தல். தூவுரை - நல்லுபதேசம். தூவெளி - அறிவுவெளி. தூவையர் - இறைச்சி உண்போர். தூளனம் - விபூதியை நீரிற் குழை யாது பூசுகை. தூளி - புழுதி, ஆர்ப்பு, ஏணை. தூளிசாலம் - அருகன் கோயிலின் முதல் மதில். தூளிதம் - பொடியானது. தூள் - துகள், மருந்துச் சூரணம். தூறு - புதர், குவியல், குறுங்காடு, சுடுகாடு, பழிச்சொல், தீங்கு. தூறுதல் - மழை தூவுதல், விளைத்தல், செய்தி பரப்பல். தூற்றாப்பொலி - தூற்றாத நெற் குவியல். தூற்றிக்கொள்ளுதல் - தெரிந்து கொள்ளுதல். தூற்று - பழிப்பு. தூற்றுதல் - சிதறுதல், தூசிபோம்படி நெல்லைத் தூவுதல், தூவுதல், பரப்புதல், பழிகூறுதல், அறிவித்தல். தெ தெகிழ்தல் - விளங்குதல், வாய் விடுதல், நிறைதல். தெகுள்தல் - நிறைதல், பெருகுதல். தெக்கணம் - தெற்கு, வலப்பக்கம். தெங்கங்காய் - தேங்காய். தெங்கநாடு - கடல் கொண்ட தமிழ் நிலப்பகுதி. தெங்கம் - தெங்கு. தெங்கம்பழம் - தெங்கின் பழம். தெங்கு - தென்னை, தித்திப்பு. தெச - பத்து. தெசகண்டன் - இராவணன். தெட்ட - தெளிவான, முற்றிய. தெட்டத்தெளிய - மிகத்தெளிய. தெட்டரசர் - வென்றடிப்படுத்தப் பட்ட அரசர். தெட்டவர் - தெளிந்தவர். தெட்டி - வஞ்சிப்பவன், யானை, செட்டி, வணிகன். தெட்டுதல் - வஞ்சித்தல். தெட்பம் - அறிவு, தெளிவு. தெண்டகை - நெருக்கிடை, தேவை. தெண்டகைக்குத் தேவை - வேண்டா வெறுப்பு. தெண்டபங்கி - சிவனை அக்கி னித் தூணாகப் பூசிக்கை. தெண்டம் - தண்டம். தெண்டன் - தண்டன். தெண்டனிடுதல் - தண்டனிடுதல். தெண்டித்தல் - வருந்தி முயலுதல். தெண்டிரை - கடல். தெண்டு - கற்றை. தெண்டுதல் - கிளப்புதல், மிண்டுதல், நரம்பு வலித்தல். தெண்ணர் - அறிவிலிகள். தெண்மை - தெளிவு, அறிவு. தெத்தேயனெல் - ஓர் ஒலிக் குறிப்பு. தெந்தனம் - கவலையற்ற தன்மை. தெப்பக்குளம் - தெப்பத் திருவிழா நடைபெறும் குளம். தெப்பம் - மிதவை. தெம்பு - தைரியம், அகம்பாவம், தேகபலம். தெம்மாங்கு - பாட்டுவகை. தெம்முனை - போர்க்களம். தெய் - கொலை, தெய்வம். தெய்ரிப்பழங்கயிற்றனார் - சங்க காலப் புலவர் (நற். 284). தெய்ய, தெய்யோ - ஓர் அசை நிலை. தெய்வக்கண்ணோர் - ஞான முடையோர். தெய்வகுஞ்சரி - தெய்வயானை. தெய்வச்சிலையார் - தொல்காப் பியச் சொல்லதிகாரத்துக்கு உரை செய்தவருள் ஒருவர். தெய்வஞ்செப்புதல் - கடவுளைத் துணைவேண்டி வழிபடுதல். தெய்வதம் - தெய்வம், வருடம். தெய்வதுந்துமி - தேவலோக முரசு. தெய்வதை - தேவதை. தெய்வத்தச்சான் - விசுவகன்மா. தெய்வத்தரு - கற்பகமரம். தெய்வத்தானம் - தேவாலயம். தெய்வத்துவனி - தேவர் அருகக் கடவுளுக்குச் செய்யும் சிறப்புகளுள் ஒன்று. தெய்வநதி - கங்கை. தெய்வநானம் - வெயிலெறிக்கும் போது பெய்யும் மழையில் கிழக்குநோக்கி ஏழடிசென்று மீளுகை. தெய்வப்பகை - பால அரிட்டத்தை உண்டாக்கும் கிரகம். தெய்வப்பசு - காமதேனு. தெய்வப்பாடல் - தெய்வத்தைப் பற்றிய பாடல். தெய்வப்பாவை - கொல்லிப்பாவை. தெய்வப்பிரமம் - தெய்வத் தன்மையுடைய கொல்ப்பாவை. தெய்வப்புணர்ச்சி - இயற்கைப் புணர்ச்சி. தெய்வப்புள் - கருடன். தெய்வமணம் - ஒருவன் தன் பெண் ணைத் தீ முன்னர் தக்கணையாகக் கொடுப்பது. தெய்வமணி - சிந்தாமணி, இரசவாத மணி. தெய்வமந்திரி - வியாழன். தெய்வமயக்கம் - தெய்வ ஆவேசம். தெய்வமாடம் - கோயில். தெய்வமானுடம் - தெய்வத்தன்மை யோடு வடிய மானிடத்தன்மை. தெய்வமேறுதல் - ஆவேச முறுதல். தெய்வம் - கடவுள், ஊழ், ஆண்டு, புதுமை. தெய்வயானை - ஐராவதம், முருகக் கடவுளின் மனைவி. தெய்வவணக்கம் - நூலின் முதலில் சொல்லும் கடவுள் வாழ்த்து. தெய்வவீடு - விமானம். தெய்வவுத்தி - சீதேவி என்னும் தலைக்கோலம். தெய்வாதனம் - ஒருகால் மடித்து ஒரு காலூன்றியிருக்கும் ஆசன வகை. தெய்வாதீனம் - தெய்வச் செயல். தெய்விகம், தெய்வீகம் - தற்செயல், தெய்வச் செயல். தெய்வீகமாதல் - இறத்தல். தெய்வீகவுலா - இரட்டையரியற்றிய ஏகாம்பரநாதருலா. தெரிக்கல் - விவரித்துச் சொல் லுகை. தெரிசம் - அமாவாசை. தெரிசனம் - தரிசனம். தெரிதல் - தோன்றுதல், விளக்க மாதல், அறிதல், ஆராய்தல், தெரிந் தெடுத்தல். தெரித்தல் - வெளிப்படுத்துதல், சொல்லுதல், விளக்குதல், எழுதுதல். தெரிந்து செயல்வகை - அரசன் தான் செய்யும் கருமங்களை ஆராய்ந்து செய்யும் நிறம். தெரிந்து தெளிதல் - அமைச்சர் முதலானாரைப் பல்வகையாலும் ஆராய்ந்து தெளிகை. தெரிநிலை - தெளிவுபட அறி விக்கும் நிலை. தெரிநிலைவினை - காலத்தை வெளிப்படையாகத் தோற்று விக்கும் வினை. தெரிந்துவினையாடல் - அமைச்சர் முதலாயினாரை அவர் செய்ய வல்ல வினைகளையறிந்து அவற் றின் கண்ணே ஆளும் திறம் தெரிபொருள் - ஆன்மா. தெரிப்பு - அறிவிப்பு, எழுதுகை. தெரிமா - சிங்கம். தெரியத்தெரிதல் - தெளிவாயறிதல். தெரியலர் - அறிவில்லார், பகைவர். தெரியல் - பூமாலை, தெரிந்து கொள்ளுகை. தெரியுமோர் - தெரிவோர். தெரிவில்புகழ்ச்சி - ஒன்றைப் பழித் தற்கு வேறொன்றைப் புகழ்கை. தெரிவு - அறிவு, தெரிந்தெடுக்கை. தெரிவை - 25 வயது முதல் 31 வயதுக்குட்பட்ட பெண், பெண். தெரு - வீதி, வழி. தெருக்கூத்து - தெருவில் நடக்கும் நாடகம். தெருட்சி - அறிவு, தெளிவு, முதற்பூப்பு. தெருட்டல் - யாழ்நரம்பை உருட் டும் இசைக்கரண வகை. தெருட்டுதல் - அறிவுறுத்துதல், ஊடல் தீர்த்தல், இசை பார்க்க யாழ் நரம்பை அழுந்தத் தீண்டித் திருகி விடுதல். தெருண்டபெண் - இருதுவான பெண். தெருமரல் - சுழற்சி, அச்சம். தெருமருதல் - மனஞ் சுழலுதல். தெருவம் - தெரு. தெர்மோஸ்குடுவை - வெந்நீர்ப் புட்டி (Thermos flask). தெருவிலழகி - குப்பை மேனி. தெருவு - தெரு. தெருவுபாடு - வீட்டின் முன்புறம். தெருளுதல் - உணர்தல், தெளிதல், இருதுவாதல், பிரசித்தமாதல். தெருள் - அறிவின் தெளிவு, ஞானம். தெலிங்கம் - தெலுங்கம். தெல்லடித்தல் - வஞ்சனை செய்தல். தெல்லாட்டம் - வஞ்சனை. தெல்லு - நெடும்பாத்தி. தெவிட்டல் - உமிழப்பட்டது. தெவிட்டு - உணவில் வெறுப்பு. தெவிட்டுதல் - உமிழ்தல், அசை யிடுதல், திரளுதல், தங்குதல், ஒலித்தல், நிறைத்தல் (Saturation). தெவிள்தல் - நிறைதல், திரளுதல். தெவு - பெற்றுக்கொள்ளுகை. தெவ் - பகை. தெவ்வம் - பகைவன். தெவ்வர்முனைப்பதி - பாசறை. தெவ்வு - தெவ். தெவ்வுதல் - கொள்ளுதல், கவர்தல், நிறைத்தல். தெவ்வூன்றி - இராகு. தெழி - ஒலி. தெழித்தல் - ஆரவாரம், அதட்டு தல், முழக்குதல், அடக்குதல், பிரித்தல், வருத்துதல். தெழிப்பு - ஆரவாரம். தெழ்கு - இடையிலணியும் ஆப ரணம். தெளி - தெளிவு, சாறு, ஒளி. தெளிஞன் - அறிஞன். தெளிதல் - தெளிவாதல், அமைதி யுறுதல், ஐயம் நீங்குதல், அறிதல், நம்புதல். தெளித்தல் - துப்புரவாக்குதல், தெளிவித்தல், வடித்தல், ஊட லுணர்த்துதல், தூவுதல், புடைத்தல், சூளுறுதல். தெளிநீர் - சுத்த நீர். தெளியாநோக்கம் - வெருவின் பார்வை. தெளிரல் - யாழின் உள்ளோசை. தெளிர் - யாழின் உள்ளோசை. தெளிர்தல் - ஒளி பெறுதல். தெளிர்த்தல் - ஒலித்தல், செழித்தல், மகிழ்ச்சியுறுதல். தெளிவு - துலக்கம், உடற்செழிப்பு, அறிவு, நனவு, ஆராய்ந்து கொண்ட முடிவு, நற்காட்சி, உள்ளக் குறிப்பு. தெளிவுக்காட்சி - கிளைரவே யான்சு (Clairvoyance). தெளிவெண்ணெய் - வேப்பெண் ணெய். தெள் - தெளிவு. தெள்குதல் - தேங்குதல். தெள்விளி - தெளிந்த ஓசை, கூவி வெருட்டும் ஓசை, இசைப்பாட்டு. தெள்ளி - யானை. தெள்ளிமை - அறிவு நுட்பம். தெள்ளியர் - தெளிந்த அறிவினர். தெள்ளு - பூச்சி வகை. தெள்ளுதல் - தெளிவாதல், ஆராய்தல், கொழித்தல். தெள்ளேணம் - கை கொட்டிப் பாடும் மகளிர் விளையாட்டு. தெறல் - அழிக்கை, கோபிக்கை, வருத்துகை. தெறி - சிதறுகை, பொத்தான். தெறிகெடுதல் - நிலைகுலைதல். தெறித்தல் - வெளிப்படுதல், பிதுங்குதல், சிதறுதல், முறிதல், அறுதல், குலைதல், துள்ளுதல், பிளத்தல், முற்றுதல், சுண்டுதல், விரலால் உந்துதல். தெறித்தளத்தல் - ஒன்றனைத் தட்டு தலாலுண்டாகும் ஒலியின் தன் மையை நிதானித்துச் செவியா லளக்கை. தெறித்துநடை - துள்ளு நடை. தெறிநடை - தெறித்து நடை. தெறிப்பு - செருக்கு மேலிட்ட ஒழுக்கம். தெறிவில் - சுண்டுவில். தெறு - கடுகை, கோபம், அச்சம், துன்பம். தெறக்கால் - தேள், விருச்சிகராசி. தெறுதல் - சுடுதல், தண்டஞ் செய் தல், அழித்தல், கொல்லுதல், வருத் துதல், காய்ச்சுதல், கோபித்தல், கோபப்படுதல், மிகுத்தல். தெறுநர் - பகைவர். தெறுபொருள் - தேள். தெறுவர் - பகைவர். தெறுவி - அகப்பை. தெறுழ் - காட்டுக் கொடிவகை. தெற்கத்தி, தெற்கித்தி - தெற்கி லுள்ள. தெற்கு - தென்திசை. தெற்றல் - மாறுபாடு, தெள்ளிய அறிவினன். தெற்றி - திண்ணை, மாடம், மேட்டிடம், மரவகை, பழிபாவம், விளைப்பவன். தெற்றிக்காளை - பின்கால் முட்டி யிடும் காளை. தெற்றியம்பலம் - கோயில் முதலிய வற்றில் மேட்டிடமாக அமைந்த சித்திரகூடம். தெற்றுப்பல் - ஒன்றோடு ஒன்று பின்னியிருக்கும் பல். தெற்றுவாசல் - திட்டி வாசல். தெற்றென - விரைவாக, உடனே, தெளிவாக. தெற்றெனவு - தெளிவு, வெட்க மின்மை. தெற்றென்னுதல் - தெளிதல். தெனாநு - தெற்கு, தெற்கிருள்ளது. தென்கலை - தமிழ். தென்காசி - குற்றாலத்தருகிலுள்ள ஒரு நகரம். தென்கால், தென்காற்று - தென்றல். தென்கீழ்த்திசை - தென்கிழக்கு. தென்கீழ்த்திசையிறை - அக்கினி தேவன். தென்கோடு - பிறைத்திங்களின் தென்முனை. தென்படுதல் - தெரிதல். தென்பல்லி - புல்லகம் என்ற தலை யணியின் உறுப்பினரண்டனுள் ஒன்று. தென்பாண்டி - தென்பாண்டி நாடு, பாண்டிய நாடு. தென்பாண்டிநாடு - நாஞ்சி நாடாகக் கருதப்படும் பாண்டி நாட்டுத் தென்பகுதி. தென்பார் - தென்னாடு. தென்பாலி - பழைய ஒரு தமிழ்நாடு. தென்பாலிரேவதம் - ஒன்பது கண்டத் தொன்று. தென்பால்விதேகம் - ஒன்பது கண்டத்த தொன்று. தென்பாற்பரதம் - ஒன்பது கண்டத் தொன்று. தென்பு - தெம்பு. தென்புலக்கோன் - யமன். தென்புலத்தார் - பிதிரர். தென்புலத்தார்வேள்வி - பிதிரர் பொருட்டு இடும் உணவு. தென்புலம் - தென்தேயம், பிதிரர் உலகம், இயமனுலகம். தென்மதுரை - தலைச்சங்கமிருந்து கடல்கொண்ட மதுரை. தென்மலை - பொதியமலை. தென்ழுனி - அகத்தியன். தென்மேற்றிசைப்பாலன் - நிருதி. தென்மொழி - தமிழ். தென்விதேகம் - ஒன்பது கண்டத்துள் ஒன்று. தென்றமிழ் - இனிய தமிழ். தென்றலை - தெற்கு. தென்றல் - தென்காற்று. தென்றற்கோன் - பாண்டியன். தென்றற்றேரான் - மன்மதன். தென்றி - தெற்கு, தென்றல். தென்றிசைமுதல்வன், தென்றிசைக் கோன் - இயமன். தென்றிசையங்கி -தக்கிணாக்கினி. தென்றுதல் - சிதறுதல், இனம் பிரிதல். தென்னங்கீற்று - தெங்கினோலைக் கீற்று. தென்னம்பிள்ளை - தென்னங் கன்று. தென்னம்பொருப்பு - பொதிய மலை. தென்னர் - தென்நாட்டவர், தெற்கு. தென்னவன் - பாண்டியன், யமன், இராவணன். தென்னவன்பிரமராயன் - ஓர் அரச பட்டம். தென்னன் - தென்னவன். தென்னாதெனாவெனல் - தெந்தனா. தென்னாலிராமன் - தென்னாலியி லிருந்த ஒரு விகடகவி. தென்னூரை - தென்மொழி. தென்னை - தெங்கு. தே தே - தெய்வம், சொள்ளுகை. தேகம் - உடம்பு. தேகராசம் - கையாந்தகரை. தேகவியோகம் - சாவு. தேகி - ஆன்மா. தேகியெனல் - ஈ என இரத்தற் குறிப்பு. தேக்கந்தீவு - ஏழு தீவுகளுள் ஒன்று. தேக்கம் - நிறைவு, நீரோட்டத்தின் தடை, ஏப்பம். தேக்கர் - மிகுதி. தேக்கிடுதல் - நிரம்பிவழிதல், ஏப்ப மிடுதல். தேநீர்ச்சாலைகள் - Tea rooms. தேக்கு - நிறைவு, ஏப்பம், மரவகை. தேக்கெறிதல் - ஏப்பமிடுதல், நிரம்ப உண்ணுதல், நிறைதல். தேங்கணை - புட்பபாணம். தேங்கமுகந்தளத்தல் - படியால் அளக்கும் அளவுகை. தேங்காய் - இனியகாய், தெங்கின் காய். தேங்குதல் - நிறைதல், தங்குதல், மிகுதல், மனங்கலங்குதல், தாமதித் தல், கெடுதல். தேங்குழல் - பணிகாரவகை. தேசசுவாத்தியம் - தேசத்தின் குளிர் வெப்பநிலை. தேசம் - நாடு, ஒளி. தேசவழமை - தேசவழக்கம். தேசன் - ஒளி வடிவாயுள்ளவன், பெரியோன். தேசாக்கிரி - பாலையாழ்த்திறவகை. தேசாதிபதி - நாடாள்வோன். தேசாந்தரம் - அயல்நாடு, பூமத்தி ரேகையின் தூர அளவு. தேசாந்தரரேகை - ஒருத்தியின் மாங்கலியத்தைக் குறிப்பதாகக் கருதப்படும் உள்ளங்கைரேகை வகை. தேசி - பெரிய குதிரை, ஓர் இராகம், கூத்துவகை; அழகுள்ளவள், எலும்பிச்சை. தேசிகம் - அவ்வந்நாட்டுச் சொல், கூத்து வகை, ஒளி, பொன், அழகு. தேசிகன் - குரு, சைவக் குருக்களுள் ஒரு சாரர், மடாதி பதிகளுக்கு வழங்கும் பட்டப் பெயர், பிதா, தேசாந்தரி, உபாத்தியாயன். தேசு - ஒளி, பொன், அழகு, ஞானம், பெருமை. தேசோமயம் - பேரொளி. தேடி - அதிவிடயம். தேசப்படப்புத்தகம் - Atlas. தேடுதல் - ஆராய்தல், ஈட்டுதல், பராமரித்தல். தேட்கடை - மூலநாள். தேட்கொடுக்கி - செடிவகை. தேட்டம், தேட்டாண்மை - சம் பாதித்த பொருள், விருப்பம். தேட்டாளன் - சம்பாத்தியமிக்கவன். தேட்டு - தேட்டம். தேண்டுதல் - தேடுதல். தேதி - நாள். தேது - தேசு. தேத்தடை - தேன்கூடு. தேத்திறால் - தேனிறால். தேப்பானை - தேன்பானை. தேமல் - தோலைப்பற்றி வரும் நோய். தேமா - மாமரவகை, செய்யுளில் நேர் நேர் என்ற சீரைக்குறிக்கும் வாய் பாடு. தேமாங்கனி - செய்யுளில் நேர் நேர் நிரை என்ற சீரைக் குறிக்கும் வாய்பாடு. தேமாங்காய் - செய்யுளில் நேர் நேர் நேர் என்ற சீரைக் குறிக்கும் வாய்பாடு. தேமாநறுநிழல் - நேர் நேர் நிரை நிரை என்ற சீரைக் குறிக்கும் வாய்பாடு. தேமாநறும்பூ - நேர் நேர் நிரை நேர் என்ற சீரைக் குறிக்கும் வாய்பாடு. தேமாந்தண்ணிழல் - நேர் நேர் நேர் நிரை என்ற சீரைக் குறிக்கும் வாய்பாடு. தேமாந்தண்பூ - நேர் நேர் நேர் நேர் என்ற சீரைக் குறிக்கும் வாய்பாடு. தேம் - இனிமை, வாசனை, தேன், தேனீ, கள், நெய், தேசம், திக்கு. தேம்பல் - வாட்டம், பழம்பூ, விம்மியழல், குறைந்த நிலை. தேம்பாவணி - வீரமா முனிவர் 1726இல் பாடிய ஒரு கிறித்துவ தமிழ் நூல். தேம்புதல் - விம்மியழதல், மெலிதல், வாடுதல், வருந்துதல், அழிதல், அனுபவிக்க, உரியதாதல். தேயம் - தேசு, பொருள், நாடு, உடல், தியானிக்கத்தக்கது, களவு. தேயவியற்கை - தேச ஒழுக்கம். தேயனம் - ஒளி. தேயன் - திருடுபவன். தேயாமணிடிலம் - சூரியமண்டிலம். தேயாமதி - நிறை திங்கள். தேயிலை - தேயிலைச் செடி. தேயு - மயக்கம், நெருப்பு. தேயுசகர் - காற்று. தேயுலிங்கம் - திருவண்ணா மலையிலுள்ள அக்கினி வடிவான லிங்கம். தேய்தல் - உரைசுதல், குறைதல், மெலிதல், வலிகுன்றல், அழிதல், கழிதல், சாதல். தேய்த்தல் - உரைசச் செய்தல், குறைத்தல், அழித்தல், செதுக்கதல், பூசுதல். தேய்பிறை - குறைமதி. தேய்பிறையிரும்பு - அரிவாள். தேய்வு - குறைபாடு, அழிவு, மெலிவு. தேய்வை - சந்தனக் குழம்பு. தேரடி - தேர்முட்டி, திருமாலின் சக்கராயுதம். தேரர் - பௌத்த முனிவர். தேரலர் - பகைவர். தேரறேர் - கானல் நீர். தேரார் - அளிவீனர், பகைவர். தேரை - தவளை, தூண்டிலுணவு. தேரையர் - தமிழ் வைத்திய நூல்க ளியற்றிய ஒரு சித்தர். தேரோர் - தேர் வீரர், தேரேறி வந்து ஏர்க்களத்தையும் போர்க்களத்தை யும் இசைக் கருவிகளுடன் பாடும் புலவர். தேரோள் - சூரியன். தேர் - இரதம், சிறுதேர், உரோகிணி, கானல். தேர்க்கால் - தேர்ச்சக்கரம், குயவன் சக்கரம். தேர்க்குழிசி, தேர்க்குறடு - தேர்க் குடம். தேர்க்கொடிஞ்சி, தேர்க்கூம்பு - தேரின் நுகக்காலை இணைக்கும் அடிமரம். தேர்ச்சி - தெளிவு. தேர்ச்சித்துணைவர் - மந்திரத் தலைவர், நட்பாளர். தேர்ச்சிவரி - கூத்துவகை. தேர்ச்சினை - கொடிஞ்சி. தேர்சேனை - தேர்ப்படை. தேர்தல் - ஆராய்தல், அறிதல். தேர்த்தல் - கலத்தல். தேர்ந்துசெயல் - வாய்குந்திறன், நாடிச் செய்கை. தேர்ப்பாகன் - சாரதி, புதன். தேர்பார் - தேர்த்தட்டு. தேர்மரச்சுற்று - தேர்த் தட்டைச் சுற்றி வர அமைக்கப்பட்ட பலகை. தேர்மறம் - அரசனது போர்த்தினைக் கூறும் புறத்துறை. தேர்முட்டி - தேர் தங்கி நிற்கும் இடம். தேர்முல்லை - பகைவரை வென்று மீண்ட தன் தலைவனது தேர் வருவதறிந்து தலைவி மகிழ்ந்து கூறும் புறத்துறை. தேர்மொட்டு - கொடிஞ்சி. தேர்வட்டை - தேர்க்கால். தேர்வண்மை - புலவர்க்கு அரசர் அளிக்கும் தேர்க்கொடை. தேர்வலவன், தேர்வலான் - தேர்ப்பாகன். தேர்வு - ஆராய்ச்சி, பியிற்சி, சுவை. தேர்வென்றி - தன் தேரைச் செலுத்திப் பகைவர் தேர்களை அழிக்கும் வீரரது செயலைக் கூறும் புறத்துறை. தேவகணம் - அச்சுவினி, மிருக சீரிடம், புனர்பூசம், பூசம், அத்தம், சுவாதி, அனுடம், திருவோணம், இரேவதி என்னும் ஏழு நட்சத்திரங்கள். தேவகணிகை - தேவதாசி. தேவகதி - சைனர் கூறும் நாற்கதிகளுள் ஒன்று. தேவகந்தம் - குங்கிலியம், நெய்ச் சிட்டிப் பூண்டு. தேவகன்மி - சுவாமி காரியம் பார்ப் போன். தேவகாந்தாரி - ஓரிராகம். தேவகானம் - தேவர்கள் பாடும் இசை. தேவகி - கண்ணன் தாய். தேவகிரி - துகில் வகை, ஓர் மலை. தேவகுஞ்சரி - தெய்வ யானை. தேவகுண்டம் - தானாக உண்டான ஊற்று. தேவகுமரான் - இயேசு கிறிஸ்து. தேவகுரு - வியாழன். தேவகுருவம் - போக பூமியுள் ஒன்று. தேவகுலம் - கோயில். தேவகோடி - ஒரு பேரெண். தேவகோட்டம் - கோயில். தேவசத்துவம் - தேவ சம்பந்தமான குணம். தேவசபை - இந்திர சபை. தேவசுத்தி - தெய்வத்தை ஆசனத் திருத்தி ஆவாகனஞ் செய்து திருமஞ்சனமாட்டி அலங்கார தூப தீபங்களால் அலங்கரிக்கை. தேவகுலத்தார் - சங்க காலப் புலவர் (குறு. 3). தேவசேனாபதி - முருகக் கடவுள். தேவடியாள் - தேவதாசி. தேவதச்சன் - விசுவகன்மா. தேவதத்தன் - யாரானுமொருவனைக் குறிக்குஞ் சொல், கொட்டாவியை உண்டு பண்ணும் வாயு. தேவதரு - கற்பகம், தேவதாரம். தேவதாசன் - அரிச்சந்திரன் மகன். தேவதாசி - தேவடியாள். தேவதாயம் - கோயிலுக்கு விடப்பட்ட நிலம் முதலிய தருமம். தேவதாரம் - தேவதாரு, பஞ்ச தருக் களுள் ஒன்று, சந்தன வேம்பு. தேவதாரு - வண்டு கொல்லி, நெட்டி லிங்கம். தேவதானம் - இறையிலிநிலம். தேவதுந்துபி - தேவவாச்சியம். தேவதூபம் - வெள்ளைக் குங்கிலியம். தேவதை - தெய்வம். தேவநற்கருணை - கிறித்தவரின் சற்பிரசாதச் சடங்கு. தேவநாகரம், தேவநாகரி - வட நாட்டில் வழங்கும் ஆரிய மொழியின் வடி வெழுத்து. தேவபாடை - வடமொழி. தேவபோகம் - தேவதானம். தேவப்பிரணவம் - தேவபானி. தேவமருத்துவர் - அசுவினி தேவதைகள். தேவயானம் - கடவுளூர்தி. தேவயுகம் - 12,00 தெய்வ ஆண்டு கொண்ட கால அளவு. தேவரகண்டன் - திருவாரூர்ச் சிவன். தேவரடியார் - தேவடியாள். தேவரநீதி - கணவனிறந்த பின்வமிச விருத்தி கருதி மைத்துனரைக் கூடி மகப்பெறும் பண்டை வழக்கு. தேவரம்பை - தெய்வலோகத்தில் ஒரு ஆடற்கணிகை. தேவரன் - கணவனுடன் பிறந்தான். தேவைப்பட்டி - தேவையான பொருள் களைக் குறிக்கும் பட்டியல் (Indent). தேறியநயம் - (Profit net). தேவராட்டி - சன்னதக்காரி. தேவராலாயம் - மகாமேரு. தேவராலன் - சன்னதக்காரன். தேவரான் - காமதேனு. தேவரீர் - பெரியோரை முன்னிலைப் படுத்துஞ் சொல். தேவருணவு - அமிர்தம். தேவரூர் - பொன்னாங்காணி. தேவர் - கடவுளர், மறவர் பட்டப் பெயர், திருவள்ளுவர். தேவர்கோள் - இந்திரன். தேவர்பகைவர் - அசுரர். தேவர்வாசம் - அரசு. தேவவருடம் - 365 மானுட வருடங் கொண்ட ஆண்டு. தேவன் - கடவுள், மறவர் பட்டப் பெயர். தேவாங்கசெட்டி - நெசவுச் சாதி யாருள் ஒருவகையார். தேவாங்கு - ஆடைவகை. தேவாசிரியன் - திருவாரூரிலுள்ள ஆயிரக்கால் மண்டபம். தேவாசுரம் - தேவர்க்கும் அசுரர்க்கும் நடந்த போர். தேவாதிதேவன் - முதற்கடவுள். தேவாரதேவர் - ஆண்மார்த்த பூசைக் குரிய தேவர். தேவாரம் - பூசனை, சம்பந்தர் அப்பர் சுந்தரர் என்ற மூவர் பாடிய பாக்களின் தொகை. தேவி - தெய்வ மகள், பெண் தெய்வம். தேவில் - கோயில். தேவு - தெய்வம். தேவேந்திரன் - தேவர்க்கரசன். தேவை - வேண்டியது, காரியம், நிர்ப்பந்தம், இராமேசுவரம். தேளி - கெளிற்று மீன் வகை. தேனேறு - தேள்கொட்டு. தேள் - கொடுக்காற் கொட்டும் ஒரு பிராணி, விருச்சிகராசி. தேள்தண்டட்டி - மகளிரணியும் காதணி வகை. தேற - கடைபோக. தேறலர், தேறார் - பகைவர். தேறல் - தெளிவு, கள், தேன், சாரம். தேறினர் - ஆராய்ந்து கொண்ட நண்பர். தேறு - துண்டு, கொட்டுகை, தெளிவு, நிச்சயம், தேற்றாங் கொட்டை. தேறுகடை - தீர்மானம். தேறுதலை - ஆறுதல். தேறுதல் - தெளிதல், தைரியங் கொள்ளுதல், நம்புதல், கூடுதல். தேறுமுகம் - பற்றுக்கோடு. தேற்றம் - நிச்சயம், தெளிவு, சூளுறவு, நிரூபிக்கப்பட வேண்டியது (Theorem). தேற்றரவு - தேற்றம். தேற்றன் - உண்மையுள்ளவன். தேற்றன்மை - தெளிவு. தேற்றா - ஒருமரம். தேற்றாவொழுக்கம் - ஐயுறத்தக்க தீய நடை. தேற்றான்மரம் - தேற்றா. தேற்று - தெளிவு. தேற்றுதல் - தெளிவித்தல், ஆற்றுதல், சூளுறுதல். தேற்றேகாரம் - நிச்சயப்பொருளை உணர்த்தும் ஏகாரம். தேனருவி - குற்றால மலையின் மேலருவி. தேனழித்தல் - தேனெடுத்தல். தேனன் - திருடன். தேனிழைத்தல் - தேன் கூடு கட்டுதல். தேனிறால் - தேன்கூடு. தேனீ - தேன் வண்டு. தேனு - பசு, எருமை, குதிரை, களவு. தேனுகாரி - கண்ணன். தேனெய் - தேன். தேன் - மது, கள், இனிமை, இரசம், வண்டுவகை, தேன் கூடு. தேன்குழல் - தேங்குழல். தை தை - ஒரு மாதம், தையல், அலங்காரம், மகரராசி. தைசதன் - சூக்கும உடலைத்தா னென்று அகங்கரிக்கும் உயிர். தைத்தல் - தையலிடுதல், பொருத்துதல், ஊடுருவுதல், தொடுத்தல், கோத்தல், அலங்கரித்தல், சூழ்தல். தைத்தியர் - திதியின் புதல்வரான அசுரர். தைத்தீரியம் - உபநிடதத்தொன்று. தையல் - பெண், தைப்பு, அழகு புனையப்படுவது. தையல்பாகன் - சிவன். தையான் - தையற்காரன். தையெனல் - இசைக்குறிப்பு. தைரியநாதர் - வீரமாமுனிவர். தைரியம் - மனத்துணிவு. தைலக்காப்பு - எண்ணெய் சாத்துகை. தைலமாட்டுதல் - பிணத்தைத் தைலத்தால் சேமித்து வைக்கை. தைலம் - எண்ணெய், நறுநெய். தைலவருக்கச்சுருக்கம் - தேரையர் இயற்றிய தமிழ் வைத்திய நூல். தைவதம் - தெய்வம், ஏழுசுரத்துள் ஒன்று. தைவம் - தெய்வம். தைவரல், தைவருதல் - யாழில் அனுசுருதியேற்றுகை, தடவுதல். தைவிகம் - தெய்வத் தன்மையுள்ளது. தொ தொகா நிலைத் தொடர் - இடையில் வேற்றுமையுருபு முதலி யன தொக்கு நில்லாமலும் ஒரு மொழித் தன்மைப்படாமலுமுள்ள தொடர் சொற்கள். தொகுதல் - கூடுதல், மொத்தமாதல், சுருங்குதல், வீணாதல். தொகுதி - கூட்டம், சபை, பகுதி. தொகுத்தல் - திரட்டிக் கூட்டுதல், ஈட்டுதல், செய்தல், சுருக்குதல். தொகுத்து மொழியில் வகுத்தன கோடல் - பலவாக வகை செய்து கூறியதனை ஒரு சொல்லால் தொகுத்துக் கூறும் உத்தி. தொகுத்தறி முறை - (Induction). தொகுத்துரை - பொழிப்புரை. தொகுபயன் - முடிவுப் பயன் (Result). தொகுப்பு - கூட்டம், தொகை. தொகை - கூட்டம், சேர்க்கை, கணக்கு, புலவர் சங்கம். தொகைநிலை - சுருங்கி நிற்கை, வென்றவேந்தன் தன் படைக்குச் சிறப்புச் செய்யுமாறு அதனை ஒருங்கு தொகுக்கும் உழிஞைத் திணை, போரில் இருதிறத்தாரும் ஒருங்கு மாய்ந்ததைக் கூறும் புறத்துறை. தொகைநிலைச்செய்யுள் - ஒருவராலே னும் பலராலேனும் பாடப்பட்டுள்ள பொருள், இடம், காலம், தொழில் என்பன பற்றியும் பாட்டின் அளவு என்பனபற்றியும் ஒருங்க திரட்டப் பட்ட செய்யுள். தொகைநூல் - தொகைநிலைச் செய்யுள். தொகைப்பொருள் - பொழிப்பு. தொகையுருவகம் - ஆகிய என்ற உருபு தொக்குவரும் உருவகம். தொகையுவமம் - பொதுத்தன்மை வெளிப்பட வராமல் ஆராய்ந் துணரும் படி மறைத்துக் கூறும் உவமை. தொகைவிரி - விரித்துக் கூறிய தனைத் தொகுத்தும், தொகுத்துக் கூறியதனை விரித்தும் கூறும் முறை. தொக்கு - நேர்மை, உடம்புத் தோல், மரப்பட்டை, பரிசு உணர்ச்சியறியும் இந்திரியம். தொக்குநிற்றல் - வெளிப்படாது நிற்றல். தொங்கல் - தொங்குகை, ஐம்பாலுள் ஒருவகை, பீலிக்குஞ்சம், வெண் குடை, தொங்கற் பொருள். தொங்கான் - சில்லரை அணி கலன்கள். தொங்குதல் - நாலுதல், அண்டிக் கிடத்தல், குதித்தல். தொங்குபாலம் - நீர்ப் பரப்பில் வண்டி செல்லும்படி பிணைக்கப்பட்டிருக் கும் இரும்புப் பாலம். தொடக்கப்பிழை - சூனியப்பிழை (zero error). தொடக்கம் - ஆரம்பம். தொடக்கறை - மனித உடல். தொடக்கு - கட்டு, பற்று, பாசம். தொடக்குதல் - ஆரம்பித்தல், கட்டுதல், அகப்படுத்துதல், தரித்தல், சிக்கிக் கொள்ளுதல். தொடங்கல் - ஆரம்பிக்கை. தொடங்கி - ஆதிமுதல். தொடங்குதல் - ஆரம்பித்தல், முயலுதல். தொடராமுறி - விடுதலைப் பத்திரம். தொடரி - செடிவகை. தொடரிடுதல் - இடைவிடாது செய்தல். தொடர் - சங்கிலி, தொடர்கை, விலங்கு நட்பு. தொடர்ச்சி - தொடர்கை, சம்பந்தம், வரிசை. தொடர்தல் - இடையறாது வருதல், மிகுதல், அமைதல், தேடுதல், கட்டுதல், பற்றுதல், தொங்கவிடுதல். தொடர்நிலைச்செய்யுள் - பழையதொரு கதைமேல் நாற் பொருளும் வனப்பும் அமைய இயற்றப்படும் செய்யுள் நூல். தொடர்ந்தார் - நண்பர். தொடர்பற - முழுதும். தொடர்பு - தொடர்ச்சி, நட்பு பாட்டு, நியதி. தொடர்மொழி - இரண்டு சொற்களா லாகும் தொடர். தொடர்வட்டி - கூட்டு வட்டி (Compound interest). தொடர்வு - தொடர்ச்சி. தொடலை - தொங்க விடுகை, மாலை, மகளிர் விளையாட்டுவகை, மணிகள் தொடுத்தமேகலை. தொடவர் - தோடர். தொடவல் - மாலை. தொடி - வளைவு, கைவளை, தோள், வளை, பூண், பலம் என்னும் நிறை. தொடித்தலைவிழுத்தண்டினார் - சங்க காலப் புலவருள் ஒருவர் (புறம். 243). தொடிமகள் - விறலி. தொடு - தீண்டுதல், மருத நிலம். தொடுகழல் - செருப்பு. தொடுக்கம் - பொன். தொடுதல் - தீண்டுதல், பிடித்தல், தரித்தல், தோண்டுதல், துளைத்தல், தொடங்குதல், செலுத்துதல், அடித் தல், பிழிதல், எடுத்தல், செருப் பணிதல். தொடுதோல் - செருப்பு. தொடுத்தல் - இயைத்தல், விடாது புரிதல், கட்டுதல், எய்தல், தொடங்குதல், மேற்கொள்ளுதல், அணிதல். தொடுத்து - முதல். தொடுபதம் - சோறு. தொடுப்பு - எய்கை, தொடர்ந் திருக்கை, கட்டு, விதைப்பு, கலப்பை, உழுகை, குறளை, கூட்டுறவு. தொடுவழக்கு - விடாது வரும் வழக்கம். தொடுவானம் - வான் கீழே முட்டுவது போலத் தெரியும் பகுதி (Horizon). தொடுவு - களவு. தொடுவை - தொடுத்திருப்பது. தொடை - அம்பெய்கை, பின்னுகை, இடையாறமை, கட்டுகை, எற்றுகை, தொடர்ச்சி, சந்து, கொத்து, பூ மாலை, மலர் முறுக்கு, வில் நாண், அம்பு, படிக்கட்டு, தாறு, மதிற்சுற்று, பாட்டு, செய்யுள் தொடுக்கும் வகை, சட்டம், தொடைக்கயிறு, துடை. தொடை தட்டிவேளாளர் -நாவிதர். தொடையல் - மாலை, தேன்கூடு, கட்டு, தொடர்ச்சி. தொட்டல் - தீண்டுகை, உண்ணுகை, தோண்டுகை, துளைக்கை. தொட்டவினை - முற்பிறவியில் தொடங்கிவிட்ட வினைக்குறை. தொட்டாற்சுருங்கி, தொட்டால் வாடி, தொட்டாற்சிணுங்கி - செடி வகை. தொட்டி - அம்பாரி, நீர்த்தொட்டி, சிற்றாமுட்டி, சிறுகாஞ்சொறி, சிற்றூர். தொட்டிக்கால் - படப்புக்கால் (Bowed leg, knocked knees). தொட்டிச்சி - தொட்டியப் பெண். தொட்டிமை - ஒற்றுமை, அழகு. தொட்டியம் - சூனிய வித்தை. தொட்டியன் - மதுரை நாட்டில் நாய்க்கன் என்ற பெயர் கொண்டு வாழும் ஒரு தெலுங்குச் சாதியான். தொட்டில் - குழந்தை வைத்து ஆடும் தொட்டில். தொட்டு - தொடங்கி. தொட்பம் - சாமர்த்தியம். தொண்டகம் - குறிஞ்சிப் பறை, ஆகோட்பறை. தொண்ரடிப்பொடி - ஆழ்வார் பன்னிருவருள் ஒருவர் (9ம் நூற்.) தொண்டர் - அடியார். தொண்டர்சீர்பரவார் - சேக்கிழார் பட்டப் பெயர். தொண்டலம் - யானைத் துதிக்கை கள். தொண்டாடுதல் - பணி செய்தல். தொண்டி - இராமநாதபுரப் பிரிவி லிருந்த பழைய துறைமுகம், மேற்குக் கடற்கரையிலிருந்த பழைய துறை முகம், கலப்பைக் கிழங்கு, தேவடியாள். தொண்டி ஆ மூர்ச்சாத்தனார் - சங்க காலப் புலவர் (அகம். 169). தொண்டிக்கள் - நெல்லாற் சமைத்த கள். தொண்டியோர் - சோழ குலத்தோர், சேரர். தொண்டு - அடிமைத்தனம், கடவுள் வழிபாடு, பழமை, ஒன்பது, உருவுதடம். தொண்டு கிழவன் - முதிர்ந்த கிழவன். தொண்டை - மிடறு, ஆதொண்டை. தொண்டைக்குழி - குரல் வளைக்குழி. தொண்டைநாடு - தொண்டை மண்டலம். தொண்டை மண்டல சதகம் - படிக்காசுப் புலவர் செய்த ஒரு நூல். தொண்டைமான் - தொண்டை நாட்டு அரசன், புதுக்கோட்டை அரசர் பட்டப் பெயர், சில சாதியார் பட்டப் பெயர். தொண்டைவிடுதல் - பெருங் குரலிடுதல். தொண்ணூறு - ஒன்பது பத்து சேர்ந்த எண். தொத்தாள் - அடிமை. தொத்து - திரள், சம்பந்தம், சார்பு, அடிமை. தொத்துவியாதி - ஒட்டுநோய். தொத்துளிப்பாய் - புற்பாய். தொத்தூன் - தொங்குசதை. தொந்தப்படுதல் - உடம்பில் நோய் காணும்படி ஒன்றோடொன்று பிணைந்திருத்தல். தொந்தமுறுதல் - பிணைந் திருக்கை. தொந்தம் - சம்பந்தம், பகை, ஆயுத வகை. தொந்தயுத்தம் - இருவர் ஒருவரோடு ஒருவர் செய்யும் போர். தொந்தரவு, தொந்தரை - துன்பம். தொந்தனை - புணர்ச்சி. தொந்தி - பெருவயிறு, பரவ மகளிர் அணியும் கைக்காப்பு. தொப்பணம் - தோப்ப்புக்கரணம். தொப்பாரம் - முடிவிசேடம். தொப்பி - குல்லா, கமுகின் பாளை மடல். தொப்புள் - கொப்பூழ். தொப்பை - தொந்தி. தொம்பதம் - தவம் என்னும் சொல். தொம்பன் - கழைக்கூத்தன். தொம்பை - மூங்கிலால் முடைந்த நெற்குதிர். தொம்மை - பருமன், தொம்பை. தொய் - குற்றம். தொய்தல் - இளைத்தல், சோர்தல், துவளுதல், கெடுதல், உழுதல், வேலை செய்தல். தொய்படுதல் - நனைதல். தொய்யகம் - தலைக்கோலத்தின் ஓர் உறுப்பு. தொய்யல் - சோர்க்கை, துன்பம், சேறு. தொய்யாவுலகம் - சுவர்க்கம். தொய்யில் - மகளிர் தனங்களில் சந் தனக் குழம்பால் எழுதும் கோலம், அழகு, நீர்க்கொடி வகை. தொய்வு - தளர்வு, சோர்வு. தொரட்டி - ஒருவகைக் கொடி. தொலி - தோல். தொலித்தல் - உமிபோக இடித்தல். தொலை - தூரம். தொலைக்காட்சி - தெலிவிசன் (Television). தொலைச்சுதல் - கொல்லுதல், முடித்தல், செலுத்துதல். தொலைதல் - அழிதல், கழிதல், தோற்றல், நீங்குதல். தொலைபு - அழிகை. தொலைவிலுணர்தல் - தெலிபதி (Telepathy). தொலைவு - முடிவு, அழிவு, தோல்வி, சோர்வு, குறைவு. தொல் - பழைய, இயற்கையான. தொல்கதை - புராணம். தொல்கபிலர் - சங்க காலப் புலவர் (குறு. 14). தொல்காப்பியச் சூத்திரவிருத்தி - தொல்காப்பியப் பாயிரத்துக்கும் முதற் சூத்திரத்துக்கும் சிவஞான முனிவர் செய்த விருத்தி (18 ஆம் நூ.). தொல்காப்பியதேவர் - 13ஆம் நுற்றாண்டிலிருந்து வரும் திருப்பா திரிப்புலியூர்க் கலம்பகம் இயற்றிய வருமான ஆசிரியர். தொல்காப்பியம் - தொல்காப்பிய னார் செய்த பழைய தமிழ் இலக்கண நூல் கி.மு. 350. தொல்காப்பியர் - தொல்காப்பியம் என்ற இலக்கண மியற்றிய ஆசிரியர் கி.மு. 350. தொல்பொருட்கலை - பழம் பொருள் ஆராய்ச்சி. (Archaeo logy). தொல்லெழில் - இயற்கையழகு. தொல்லை - பழமை, துன்பம். தொல்லையார் - தேவர். தொல்லைவையகம் - மோட்சம். தொல்வரவு - பழைய குடிவரவு. தொல்வரைவு - அடிப்பட்ட குடியொழுக்கம். தொல்வினை - பழவினை. தொழிதல் - சிதறுதல். தொழித்தல் - கோபித்தல், ஒலித்தல். தொழிலாகுபெயர் - தொழிலின் பெயர் அதையுடைய பொருட்கு ஆவது. தொழிலாளி - வேலைக்காரன். தொழில் - செயல், ஏவல், வேலை. தொழில்படுதல் - காரியப்படுதல். தொழிற்படுத்துஞ்சொல் - வினைச்சொல். தொழிற்பண்பு - செய்கை குறிக்கும் பண்புச் சொல். தொழிற்பயில்வு - தொழில் மேன் மேலும் நிகழ்கை. தொழிற்பெயர் - வினைப்பெயர். தொழின்முதன் - ஏவுதற்கருத்தா. தொழீஇ - பணிப்பெண். தொழு - மாட்டுக்கொட்டில், சிறைக் கூடம், தொழுமரம், இல்வாழ்க்கை, இரேவதி, கட்சாடியிருக்கும் ஏணி, உழலைமரம், காட்டு விலங்குகளை அடைக்கும் கூடு. தொழுகள்ளன் - பாசாங்கு செய்பவன். தொழுகு - மாட்டுத் தொழு. தொழுகுலத்தோர் - பிராமணர். தொழுகுலம் - அந்தணர்குலம். தொழுகை - வணங்குகை. தொழுக்கன் - அடிமை. தொழுதகுதல் - நன்கு மதித்தல், விரும்புதல். தொழுதகுதெய்வம் - அருந்ததி. தொழுதி - கூட்டம், திரட்சி. தொழுத்தை - அடிமைப்பெண். தொழுநோய் - குட்ட நோய்வகை. தொழுமகளிர் - குற்றேவல் மகளிர். தொழுமாடு - சல்லிக்கட்டுமாடு. தொழும்பன் - அடியவன். தொழும்பு - அடிமை. தொழுவம் - மாட்டுக்கொட்டில். தொழுவார் - தொழில் செய்வோர், உழவர். தொழுவறை - மாட்டுக்கொட்டில். தொழுவிளிப்பூசல் - துதிமுழக்கம். தொழுவு - வணங்குகை. தொழுனை - தொழுநோய், யமுனை. தொளி - சேறு. தொளை - துளை, மூங்கில். தொள்கல் - துளைக்கை. தொள்கு - வலை, சேறு பள்ளம். தொள்ளம் - தெப்பம், சேறு. தொள்ளல் - துளை. தொள்ளாயிரம் - ஒன்பது நூறு. தொள்ளி - சோறு. தொள்ளை - துளை, குழி, மரக்கலம், குற்றம், மரக்கால், அறியாமை. தொள்ளைக்காது - பெரிய துளையுள்ள காது. தொறு - பசுக்கூட்டம், தொழு இடைச்சாதி, கூட்டம், அடிமையாள், ஆங்காங்கு. தொறுத்தி, தொறுவி, தொறுவன் - இடையன். தொறுவு - தொறு. தொற்பதம் - தொம்பதம். தொற்று - ஒட்டுத் தொடர்பு, சம்பந்தம். தொற்றுநீக்கி - கிருமிகளைக் கொல்லும் மருந்து (Disinfectant). தொனி - ஒலி. தொன் - 20 அந்தர் கொண்ட நிறை (ton). தொன்மரம் - ஆலமரம். தொன்மை - பழமை, உரைவிரவி வரப் பழைய கதைப் பொருளாகச் செய்யப்படுவது. தொன்று - பழமை, பழையது, ஊழ். தொன்று தொட்டு - முதலிலிருந்து. தொன்னீர் - கடல். தொன்னூல் - புராணம். தொன்னூல் விளக்கம் - வீரமாமுனிவர் செய்த தமிழிலக்கணம். தொன்னை - இலக்கணம். தோ தோகம் - சிறுமை, துக்கம். தோகை - மயில், மயிற்பீலி, பெண், விலங்கின் வால், ஆடை, கொய்யகம் நெல் கரும்பு வாழை முதலியவற்றின் தாள், துகிற்கொடி, மீன்வகை. தோகைப்பகை - ஓந்தி தோகை மயில் - ஆண் மயில். தோகை முகபூடணம் - மஞ்சள். தோக்கை - முன்தானை, கொய்யகம், சீலை. தோசம் - குற்றம். தோசை - பணிகார வகை. தோடம் - குற்றம், பாவம். தோடயம் - நாடகத்தின் முன் மொழிப் பாட்டு தோடர் - துடவர் நீலகிரியில் வாழும் மலைச்சாதியார். தோடாழ்குளம் - கை உயர்த்தி நின்றால் கையை மறைக்கக் கூடிய நீராழமுள்ள குளம். தோடி - ஓர் இராகம். தோடு - ஓலை, காதோலை, காதணி, பூவிதழ், கதிர்த்தாள், தொகுதி. தோடை - கிச்சிலிவகை. தோட்கட்டு - தோட்சந்து. தோட்கோப்பு - கட்டுச்சோறு. தோட்டம் - வீட்டுக்கொல்லை, சோலை, பயன் மரங்கள் பயிரிட்ட நிலம் (plantation). தோட்டவாரியம் - தோட்டக் கண்காணிப்பு. தோட்டா - வெடிமருந்துச்சுருள் (Cartridge). தோட்டி - ஆணை, காவல், கதவு, மனை வாயில், கட்டழகு, செங்காந்தள், அங்குசம், ஆயுதவகை, வெட்டியான். தோட்டிமை - ஒற்றுமை. தோட்பட்டை - தோட்புறத் தெழும்பு. தோணாமுகம் - அகழ் சூழ்ந்ததும் 400 கிராமங்களுக்குத் தலைமையானது மான நகரம். தோணி - ஓடம், கப்பல், நீர்த்தொட்டி, இரேவதி, மதிலுறுப்பு, அம்பு சேறு, சிறுவழுதுணை. தோணுதல் - தோன்றுதல். தோணோக்கம் - மகளிர் விளை யாட்டு வகை. தோண்டான் - ஓநாய். தோண்டுதல் - கிண்டுதல், முகத்தல், பண்டமிறக்குதல். தோண்முதல் - புயவலி. தோண்மேல் - பிடர். தோண்மை - புயவலி. தோதகம் - வருத்தம், வஞ்சகம், சால வித்தை. தோதவத்தி - தூய ஆடை. தோதாத்திரி - வானமாமலை எனப் படும் நாங்குநேரி. தோது - பொருத்தம், ஒப்பு. தோத்திரம் - துதிமொழி. தோப்பி - கள், நெல்லாற் சமைத்த கள். தோப்பிக்கரணம், தோப்புக்கரணம் - காதுகளைக்கைகளால் மாறிப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து எழுந்திருத்தல். தோப்பு - சோலை. தோமம் - கூட்டம், தொகுதி. தோமரம் - தண்டாயுதம். தோம் - குற்றம், தீமை. தோம்பு - நிலவிவரக் கணக்கு. தோயதரம் - முகில். தோயதி - கடல். தோயபாணம் - பொடுதலை. தோய்தல் - முழுகுதல், நனைதல், நிலத்தில் படிதல், உறைதல், அணை தல், ஒத்தல். தோய்த்தல் - நனைதல், உறையும் செய்தல், ஆடை துவத்தல். தோய்ந்தார் - நண்பர். தோய்ப்பன் - சிற்றுண்டி வகை. தோய்ப்பாடி - தோப்பாடி (துட்டி). தோரணம் - அலங்காரத் தொங்கல், அலங்கார வளைவுள்ள வாயில், குரங்கு முன்னங்காலை வைத்து சுவட்டிடத்தில் பின்னங் காலை வைத்து நடக்கும் யானைக் கதி. தோரணம் - யானைப்பாகன். தோரத்தம் - சண்டையிடும் குணம். தோரம் - அபிநயவகை. தோராயம், தோராவல்லி, தோர மல்லி - சுமார், ஏறக்குறைய ஒருவகை அரதனம். தோராவழக்கு - ஓயாத வழக்கு. தோரி - சோறு. தோரியம் - கூத்து, உலோக வகை. தோரியமகள் - ஆடிமுதிர்ந்தவள். தோரை - மலைநெல், மூங்கிலரிசி, பீலிவிசிறி, அணிவடம், நீட்ட லளவை வகை. தோர்த்தண்டன் - புயபலமுடை யவன். தோலா - ஒரு ரூபா எடை. தோலாநாவினர் - நாவன்மையுடை யார். தோலாமொழித்தேவர் - சூளாமணி யியற்றிய சைன முனிவர் (10ம் நூ.). தோலாவழக்கு - தீராவாதம். தோலுமிழை - கிடுகுப் படையைச் சிறப்பித்துக் கூறும் புறத்துறை. தோல் - தோல்வி, சருமம், புறணி, உடம்பு, கேடகம், துரத்தி, சேணம், பழைய தொரு பொருண்மேல் மெல் லென்ற சொல்லான் அறம் பொருள் இன்பம் வீடு என்ற நாற்பொருள் பயப்பச் செய்யப்படும் நூல், வார்த்தை. தோல்தல் - தோல்வியடைதல் ஒப்பிற்றாழ்தல், இழத்தல். தோல்வி - அபசயம். தோல்வித்தானம் - பகைவர் தோல் வியடைதற் கேதுவானது. தோல்வினைஞர் - செம்மார். தோல்வு - தோல்வி. தோவம் - ஒரு கால அளவு. தோழமை - நட்பு. தோழம் - மாட்டுத் தொழுவம், கடல், பேரெண். தோழன் - நண்பன். தோழி, தோழிச்சி - பாங்கி, செவிலித்தாயின் மகள், மனைவி. தோழ் - கொட்டில். தோளாமணி - துளையிடப்படாத மணி. தோளிற்கொள்ளுதல் - மணந்து கொள்ளுதல். தோளுதல் - துளைத்தல், தோண்டு தல், நீக்குதல். தோள் - புயம், கை, துளை. தோள்தீண்டி - நெருங்கி வருத்து வது. தோள்வந்தி - தோள்வளை. தோள்வளை - தோளிலணியும் வளை. தோறும் - ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொழுதும் என்ற பொருளில் வரும் இடைச்சொல். தோற்கடகு - தோற்கேடகம். தோற்கருவி - தோலாற் செய்யப் பட்ட இசைக் கருவி. தோற்கைத்தளம் - முன் கையில் அணியும் தோற் கவசம். தோற்செவி - வெளியே உள்ள செவி. தோற்பரம் - தோற் கேடகம். தோற்பாடி - வேசி. தோற்பு - தோல்வி. தோற்புரை - மேல்தோல். தோற்பை - உடம்பு. தோற்றநிலைப் பொருள் - இயற்கைக் காட்சிப் பொருள்கள் (phenomena). தோற்றம் - காட்சி, பார்வை, உயர்ச்சி தொடக்கம், பிறப்பு, சாதி, சாயை, புகழ், வேடம், தன்மை, உதயம். தோற்றரவு - காட்சி, உற்பத்தி அவதாரம். தோற்றல் - தோல்வி, தோன்றுகை. தோற்றுதல் - தோன்றுதல், பிறப் பித்தல். தோற்றுவாய் - பின் வருவதை முன் கூறும் குறிப்பு. தௌ தௌமியன் - பாண்டவர் புரோகி தன் தௌவல் - கேடு. தௌவை - தவ்வை, தாய். ந ந - சிறப்புப் பொருள் அல்லது மிகுதிப் பொருள் உணர்த்தும் ஓர் இடைச் சொல். நகக்குறி - நகத்தினாற் பதிக்கும் அடையாளம். நகடு - உடல் வெளுக்கை. நகத்தயிர் - பூச்சர்க்கரைக்கிழங்கு. நகம் - உகிர், மலை, பூமி, மரம், நாகணம் என்னும் வாசப் பொருள். நகரத்தார் - நாட்டுக் கோட்டைச் செட்டியார். நகரப்பதி - தலைநகர். நகரமாந்தர் - தலைமை பெற்ற நகர வாசிகள். நகரமீன் - பரவமகளிர் கால் சுண்டு விரலிற் பூணும் அணிவகை. நகரம் - பேரூர், கோயில், வாழிடம். நகரா - பெருமுரசு வகை. நகராண்மைத் தலைவர் - நகராட்சித் தலைவர் (மேயர்). நகராட்சிநூல் - (civics). நகரி - நகரம். நகர் - நகரம், கோயில், மாளிகை, அரண் மனை, விசேடங்கள் நிகழும் மண் டபம், மனைவி. நகர்தல் - ஊர்தல். நகர்த்துதல் - அசைத்தல். நகல் - சிரிக்கை, மகிழ்ச்சி, நட்பு, பரிகாசம், பிரதி. நகழ்தல் - துன்பப்படுதல், நகர்தல். நகழ்வு - துன்பம். நகளுதல் - நகர்ந்து செல்லுதல். நகாஅர் - பல். நகாஅல் - சிரிப்பு. நகாசுமணி - பரவமகளிர் கழுத்தணி. நகாசுவேலை - நகை முதலியவற்றிற் செய்யப்படும் அலங்கார வேலை. நகாயுதம் - சிங்கம். நகில் - முலை. நகுடன் - அகத்தியர் சாபத்தால் பாம்புரு வான ஒர் அரசன். நகுதல் - சிரித்தல், மகிழ்தல், மலர்தல், அவமதித்தல், விளங்குதல். நகுநயமறைத்தல் - களவுக் கூட்டத்தின் முன் தலைவி நாணால் உள்ளடக்கிய தன் மகிழ்ச்சியைத் தலைவனுக்குப் புலனாகாதவாறு மறைத்தல். நகுலம் - கீரி. நகுலன் - பாண்டவருள் ஒருவன். நகை - சிரிப்பு, மகிழ்ச்சி, இன்பம், அவ மதிப்பு, விளையாட்டு, நட்பு, மலர், ஒளி, மகிழ்ச்சி, பல், முத்து, ஒப்பு. நகைப்பு - சிரிப்பு, பரிகாசம். நகைப்புலவாணர் - நட்புக்குரியரானவர். நகைமுகம் - சிரித்தமுகம், உடன் பட்டமை தோற்றும் முகப்பொலிவு. நகையாடுதல் - சிரித்தல், பரி கசித்தல். நகைவர் - நட்பினர். நகைவேழம்பர் - விகடம் செய்வோர். நக்கசாரணர் - நாகசாதி வகையினர். நக்கண்ணன் - சங்க காலப் புலவர் (அகம். 282). நக்கண்ணையார் - சங்க காலப் புலவர் (நற். 19). நக்கப்பறையன் - பறையர் தலைவன். நக்கம் - அம்மணம். நக்கரம் - முதலை. நக்கரித்தல் - நகர்ந்து செல்லுதல். நக்கல் - நக்கி உண்ணுதல் பொருள், உண்டல், உலோபி, ஒளி. நக்கவாரக் கச்சவடம் - நம்பிக்கை யற்ற வியாபாரம். நக்கவாரம் - வங்காளக்குடாக் கடலி லுள்ள ஒரு தீவு (நிக்கோபார்). நக்கன் - நிர்வாணி, அருகன், சிவன், தேவதாசிகளுக்கு முற்காலத்து வழங்கிய சிறப்புப் பெயர். நக்கி - ஆடை அல்லது திரைகளின் ஓரங்களில் அலங்காரமாக அமைக் கப்படும் பின்னல். நக்கிரப்பலகை - முதலை வடி வுள்ள காலால் தாங்கப்பட்ட பலகை. நக்கிரம் - முதலை. நக்கினம் - இறந்தவர் பொருட்டு தகனத்துக்குப்பின் செய்யப்படும் முதல் சிராத்தம், பெண் குறி. நக்கீரர் - கடைச் சங்கப் புலவரு ளொருவர். நக்கு - நிர்வாணம். நக்குதல் - நாவினாற் பரிசித்தல், தீண்டுதல், அழித்தல், சுடுதல். நக்குப்பொறுக்கி - எச்சில் பொருக்கி உண்போன். நங்கள் - நாங்கள். நங்கனை - அரைப்பட்டி கையின் உறுப்பு. நங்கு - பரிகாசம். நங்குதல் - பரிகசித்தல். நங்கூரம் - கப்பலை ஓரிடத்தில் நிறுத்த நீருள் இடும் இரும்பு கருவி. நங்கை - பெண், பெண்ணிற் சிறந்த வள். நசல் - வியாதி. நசிதல் - நசங்குதல், அழிதல். நசித்தல் - அழிதல், நசங்குதல். நசியம் - மூக்கிலிடும் மருந்து. நசிவு - கேடு. நசங்குதல் - பிதுங்குதல். நசை - ஆடை, அன்பு, நம்பிக்கை. நசைதல் - அன்பு செய்தல். நசைநர், நசையுநர் - நண்பர். நச்சர் - திருக்குறள் உரையாசிரியருள் ஒருவர். நச்சறை - நஞ்சுக்கு இருப்பிடம். நச்சினார்க்கினியம் - தொல்காப்பி யத்திற்கு நச்சினார்க்கினியர் இயற்றிய உரை. நச்சினார்க்கினியர் - பழைய உரையாசிரியருள் ஒருவர் (14ஆம் நூ.). நச்சு - விரும்பப்படும் பொருள். நச்சுச் சொல் - செய்யுளில் வழங்கக் கூடாத தீச்சொல், கொடுஞ்சொல். நச்சுதல் - விரும்புதல். நச்சுத்தானம் - சிற்சிலகாலங்களில் ஆடவர் தொட மகளிர்க்கு வெறுப் புண்டாகும் உறுப்பு. நச்சுப்பல் - பாம்பின் விடப்பல். நச்சுப்பொய்கை - விடநீர் நிறைந்த நீர்நிலை. நச்சுமரம் - நஞ்சுமரம், எட்டிமரம். நச்சுமனார் - திருவள்ளுவமாலைச் செய்யுள்களுள் ஒன்றைச் சொல் லிய ஆசிரியர். நச்சுவாயன் - ஓயாமல் பிதற்று பவன். நச்செழுத்து - பிரபந்தத்தின் முதற் சொல்லில் வரக்கூடாத எழுத் துக்கள். நச்செள்ளையார் - பதிற்றுப்பத்தில் ஆறாம் பத்துப் பாடிய பெண் புலவர். நஞ்சம் - நஞ்சு, விடம். நஞ்சீயர் - திருவாய் மொழிக்கு ஒன்பதி னாயிரப்படி உரை இயற்றியவர் (13ஆம் நூ.). நஞ்சு - விடம் (Toxin). நஞ்சுகொடி - குழந்தை பிறந்தபின் வெளிப்படுவது. நஞ்சுண்டோன் - சிவன், கள்ளரி லொரு பிரிவினர். நஞ்சுவிழியரவு - திட்டிவிடம், கண் ணால், பார்த்து நஞ்சு உண்டாக்கும் பாம்பு. நஞ்சுறுதல் - மனமுருகுதல். நஞ்சூட்டுதல் -நஞ்சு கொடுத்தல். நஞ்செய் - நன்செய், பண்படுத்தப் பட்ட நிலம். நடக்கை - செல்கை, வழக்கு, ஒழுக்கம். நடத்தல் - காலாற் செல்லல், ஓழுகுதல், நிகழ்தல், நிகராதல். நடத்துதல் - செலுத்துதல். நடத்தை - ஒழுக்கம். நடபடி - வழக்கம், நடவடிக்கை. நடப்பன - காலால் நடந்து செல்லும் உயிர்வகை. நடப்பு - போக்கு, நடத்தை, செல்வாக்கு. நடப்பு நாணயம் - பழக்கத்திலுள்ள நாணயம் (Currency). நடமாடுதல் - உலாவுதல், கூத் தாடுதல். நடமாட்டம் - நடக்கை, நடனம். நடம் - கூத்து. நடராசன் - நடமாடும் சிவமூர்த்தம். நடலம் - செருக்கு, இகழ்ச்சி. நடலை - வஞ்சனை, பொய்மை, பாசாங்கு, துன்பம், அசைவு. நடல் - ஊன்றுகை. நடவடிக்கை - செயல். நடவு -நாற்றுப்பிடுங்கி நடுதல், நட்ட பயிர். நடவுதல் - செலுத்துதல். நடவை - வழி, வழங்குமிடம், உபாயம். நடனம் - கூத்து. நடனியர் - கூத்தியர். நடன் கூத்தன், நடாதூரம்மாள் - இராமானுசர் சீடருள் ஒருவர். நடாத்துதல் - நடத்துதல். நடாவுதல் - செலுத்துதல். நடி - ஆட்டம், நாட்டியப் பெண். நடித்தல் - கூத்தாடுதல். நடு - இடை, நடுநிலை. நடுகலுமலை - நட்ட கற்களின் துளைகளில் மூங்கிற் கழிகளை யிட்டுப் பசுக்களை அடைத்து வைக்குமிடம். நடுகல் - போரில் இறந்த வீரரின் உருவமும் பெயரும் பெருமையுன் எழுதி அவர் இறந்த இடத்தில் நடும் கல். நடுகை - நடுதல். நடுக்கம் - நடுங்குகை, அச்சம், துன்பம். நடுக்கு - நடுக்கம், சோர்வு. நடுங்க - ஓர் உவம உருபு. நடுங்க நாட்டம் - தலைவற்கு ஏதமுளதோ எனத் தலைவியுற்று நடுங்கு மாற்றால் தோழி அவளிடஞ் செய்தி ஒன்று கூறிக் களவொழுக் கத்தை அவள் வாயிலாகவே அறிய முயல்வதைக் கூறும் அகத்துறை. நடுங்குதல் - அசைதல், அஞ்சுதல், தடுமாறுதல், ஒப்பாதல். நடுச்செய்தல் - நியாயஞ் செய்தல். நடுச்சொல்லுதல் - சான்று கூறுதல், நியாயம் சொல்லுதல். நடுதறி - கன்றாப்பூரில் எழுந்தருளி யிருக்கும் சிவபெருமான். நடுத்திட்டம் - பட்சபாதகமின்மை. நடுத்துஞ்சல் - அவமிருந்து. நடுத்தெரு - தெருவிந் நடு. நடுத்தெருவில் வீடுதல் - ஆதர வின்றிக் கைவிடுதல். நடுநடுங்குதல் - உடல் மிகப்பதறுதல். நடுநாடி - சுழுமுனை. நடுநாயகம் - ஆபரண நடுவிற் பதிக்கும் மனி சிறந்தவன். நடுநாள் - இடையாமம், சித்திரை. நடுநிலை, நடுநிலைமை - நியாயம், மத்தியஸ்தம். நடுவணாள் - பரணி. நடுவண் - இடையில். நடுவன் - இமயன், மத்தியத்தன். நடுவாந்தரம் - நடு. நடுவீட்டுத்தாலி - விதவை மணத் துக்கு வன்னியர் என்னும் மரபினர் வழங்கும் பெயர். நடுவு - இடை, நடுவு, நடுவு நிலை யம், நீதி, மாதரிடை. நடுவுநிலை, நடுவுநிலைமை - ஒரு பக்கம் சாயாமை. நடுவுநிலைத்திணை - பாலைத் திணை. நடுவுபாடு - நடு இடம். நடுவூர் - ஊரின் நடு இடம். நடுவே - இடையில். நடேசன் - நடனமாடும் சிவன். நடை - காலாற்செல்கை, செலவு, வாசல், இடைகழி, ஒழுக்கம், மொழியின் போக்கு, இயல்பு, பாதம், கூத்து, நித்திய பூசை, கோயில். நடைக்கூடம் - வாயிலிடம், உடம்பு. நடைத்தேர் - சிறுதேர். நடைபடி - வழக்கம். நடைப்படாம், நடைப்படம், நடைபாவடை - நடைபாவாடை. நடைப்பந்தல் - விழாக் காலத்தில் நடந்து செல்வதற்கு அமைக்கும் உபசாரப் பந்தல். நடைப்பரிகாரம் - வாழ்க்கைக்குரிய பொருள். நடைப்பிணம் - பயனற்றவன். நடைமலை - யானை. நடைமனை - உடல். நடையாடுதல் - சஞ்சரித்தல், பார்த்தல். நடையாட்டம் - வழக்கிற் பயின்று வருகை. நடையுடை பாவனை - வழக்கம் உடை ஒழுக்கம் முதலியன. நடையுடையோன் - அசையும் காற்று. நடையொத்து - ஒருவகைத்தாளம். நடைவண்டி - சிறுபிள்ளைகள் பிடித்துக் கொண்டு நடை பழகும் வண்டி. நடை விளக் கெரித்தல் - தண்ட னையாகத் தலையில் விளக்கை வைத்துக் குற்றம் செய்தோரை ஊரில் வலம் வரச் செய்தல். நட்சத்திரகண்டகி - அன்னாசி. நட்சத்திரமாதம் - 27 நட்சத்திரங் களைக் கொண்டு கணிக்கப்படும் மாதம். நட்சத்திரமாலை - 27 பாடல் கொண்ட பிரபந்தவகை. நட்சத்திரம் மீன் - தோலின்மீது (Star Fish). நட்சத்திரம் - விண்மீன், அசுவதி முதல் இரேவதி வரையிலுள்ள நாள், மீன். நட்சத்திர வீதி - பால் வீதி மண்டலம் (Milky way). நட்சத்திரையன் - விசுவாமித்தி ரருடைய கடனைக் கொடுக்கும் படி அரிச்சந்திரனை வருத்திய பிரா மணன். நட்டணை - நடிப்பு, கொடுமை. நட்டதுட்டி - வருவாய்க் குறைவு. நட்டநடு - நடுமையம். நட்டபாடை - குறிஞ்சிப் பண்வகை. நட்டமுட்டிசிந்தனை - இழந்த பொருளையும் ஒளித்து வைத்த பொருளையும் நினைத்த பொரு ளையும் பற்றி நிமித்தத் தாலறிந்து கூறுகை. நட்டம் - நேர்நிலை, நடனம், இழப்பு. நட்டராகம் - குறிஞ்சிப்பண். நட்டல் - நட்புக்கொள்ளல். நட்டவர் - நண்பர். நட்டாமுட்டி - கீழ்மை. நட்டார் - உறவினர். நட்டி - நட்டம். நட்டுவம் - நாட்டியம் பழக்கி ஆடுவிக்கும் தொழில். நட்டுவன் - நாட்டியமாட்டுவிப் போன். நட்டுவாய்க்காலி - தேள்வகை. நட்டுவீழல் - தலை சாய்தல். நட்டோர் - நண்பர், உறவினர். நட் பாடல் - நட்புக்கொள்ளல். நட்பாராய்தல் - நட்புக்குரியவற்றை ஆராயும் திறம். நநட்பாளர் - அரசர் உறுதிச் சுற்றத் துள் அந்தரங்க நட்பாயுள்ளவர். நட்பு - சிநேகம், நட்பரசர், உறவு, யாழின் நாலாம் நரம்பு, காதல். நட்புத்தானம் - கிரகங்களின் நட்பு வீடு. நணி - அண்மை இடம். நணுகுதல் - சமீபத்தில். நணுங்கல் - நணுகுதல். நண்டு - உயிர்வகை, கற்கடகராசி. நண்டுக்கரம் - கற்கடகம். நண்டுக்கல் - விடம் நீக்குவதும் நண்டு இறுகி மாறியதாகக் கருதப்படுவதுமான கல்வகை. நண்ணம் - சிறிது. நண்ணலார், நண்ணார் - பகைவர். நண்ணுதல் - கிட்டுதல், செய்தல். நண்பகல் - நடுப்பகல். நண்பு - நட்பு. நதம் - மேற்கு நோக்கிச் செல்லும் ஆறு. நதி - ஆறு, வணக்கம். நதிகரந்தை - திப்பிலி மூலம். நதிகேள்வன் - வருணன். நதிசரம் - ஆற்றுப் பக்கங்களில் வளர்ந்த யானை. நதிதீரம் - ஆற்றங்கரை. நதிபதி - கடல், வருணன். நதுத்தல் - தணித்தல், கெடுத்தல். நத்தகாலம் - மாலைப்பொழுது. நத்தங்கோயில் - கிராமத்திலுள்ள கோயில். நத்தத்தனார் - சிறுபாணாற்றுப்படை செய்த சங்கப் புலவர், இலக்கண ஆசிரியருளொருவர் (யா.வி.உ). நத்தப்பாழ் - அழிந்து போன கிராமம். நத்தமாலம் - புன்கு. நத்தமான் - நத்தம்பாடி. நத்தம் - ஊர், இடம், சங்கு, நத்தை, இரவு, இருள், புன்கு. நத்மதபாடி - உடையார் சாதிவகை. நத்தி - இன்மை. நத்து - சங்கு, நத்தை, மூக்கணி வகை, கூகை. நத்துதல் - விரும்புதல், அண்டுதல். நத்தை - ஊரும் உயிர் வகை. நந்த - ஓர் உவம உருபு. நந்தகம் - திருமாலின்வால். நந்தகோபன், நந்தகோபாலன் - கண் ணனை வளர்த்த தந்தை. நந்தம் - குபேரன் நிதிகளுள் ஒன்று. நந்தல் - ஆக்கம், கேடு. நந்தவனம் - பூந்தோட்டம். நந்தனம், நந்தனவனம் - பூந்தோட்டம், இந்திரனது பூந்தோட்டம். நந்தனன் - குமாரன். நந்தனார் - திருநாளைப் போவார் நாயனார். நந்தன் - இடையன், திருமால், பாடலிபுரத்தை ஆண்ட ஓர் அரச வம்சத்தினன், திருநாளைப்போவார், புத்திரன். நந்தாவனம் - நந்தவனம். நந்தாவிளக்கு - அவியாவிளக்கு. நந்தி - நந்திதேவர், சிவன், சமணர் பட்டப்பெயர், இடபம், நந்தியா வட்டம், பேரிகை. நந்திக்கலம்பகம் - 9 ஆம் நூற் றாண்டில் 3ஆம் நந்திவன் மனைப் பற்றிப் பெருந்தேவனார் பாடிய கலம்பகம். நந்திக்கோல் - வள்ளுவ சாதியாருள் கிராம காரியத்தன். நந்திநாகரம் - ஒருவகை நாகர எழுத்து. நந்தியாவட்டம் - ஒரு மலர்ச்செடி. நந்தியாவர்த்தத்தாமன் - நந்தியாவர்த்தம் அணிந்த துரியோதனன். நந்தியாவர்த்தம - நந்தியாவட்டம். நந்தினி - காமதேனுவின் கன்று, மகள். நந்து - ஆக்கம், சங்கு, நத்தை, பறவை. நந்துதல் - வளர்த்தல், தழைத்தல், விளங்குதல், செருக்குதல், கெடுதல், சாதல், அவிதல், மறைதல். நந்தை - 1ஆம் 6ஆம் 11ஆம் திதிகள், கபிலைப்பசு, கலப்பைக் கயிறு. நந்நான்கு - நாலு நாலாக. நபம் - ஆகாயம், கார்காலம். நபணம் - நீரோட்டம். நபி - முகம்மது. நபுஞ்சகன் - ஆண் தன்மை இழந்தோன். நப்பண்ணனார் - பரிபாடல் 19ஆம் பாடல் செய்தவர். நப்பாலத்தனார் - சங்ககாலப் புலவர் (நற். 52), இலக்கண ஆசிரியர்களுள் ஒருவர் (யா.வி.உ). நப்பிரிதல் - நம்மைப் பிரிதல். நப்பின்னை - கண்ணன் விரும்பிய தேவியருள் ஒருத்தி. நப்பூதனார் - முல்லைப் பாட்டுச் செய்த ஆசிரியர். நம - வணக்கம். நமகம் - ஒரு மந்திரம். நமக்கரித்தல் - வணங்குதல். நமச்சிவாய - திரு ஐந்தெழுத்து. நமச்சிவாயத் தம்பிரான் - சைவ சித்தாந்த சாத்திரம் சிலவற்றுக்கு உரை எழுதியவரான திருவாவடு துறை மடத் தம்பிரான் (1678). நமச்சிவாயமாலை - அம்பலவாண தேசிகர் செய்த ஒரு நூல், பண்டார சாத்திரத்தொன்று. நமச்சிவயமூர்த்தி - திருவாவடு துறை மடத்தைத் தாபித்த குரு. நமர் - சுற்றத்தார். நமலுதல் - வணங்குதல். நமன் - யமன் நம்மவன். நமி - தீர்த்தங்கரர் இருபத்து நால்வருள் ஒருவர். நமிடு - நாரைவகை. நமித்திரர் - பகைவர். நமிநந்தியடிகள் - 63 நாயன்மாருள் ஒருவர். நமிபட்டாரகர் - நமி. நமுகுதல் - குழைதல். நமுதாக்கம்பளி - நெய்யாது அழுத்திச் செய்யப்பட்டக் கம்பளி (Felt). நமை - தினவு, ஒரு மரம். நமைக்காய் - கத்தரிக்காய். நமைதல் - தினவெடுத்தல். நமைப்பு - வருத்தம், தினவு. நம் - நாம் என்பதன் வேறுபாடு, வணக்கம். நம்பல் - விருப்பம், நம்புகை. நம்பன் - கடவுள், சிவன். நம்பாடுவான் - ஓர் விட்டணு பத்தன். நம்பி - ஆடவரிற் சிறந்தோன், கடவுள். நம்பிகாளியார் - குலோத்துங்க சோழன் காலத்திருந்த ஒரு தமிழ்ப் புலவர். நம்பிக்கை - விசுவாசம். நம்பிகுட்டுவன் - சங்ககாலப் புலவர் (குறு. 109). நம்பி மூத்தபிரான் - பலராமன். நம்பியகப்பொருள் - நாற்கவிராச நம்பி செய்த அகப்பொருள். நம்பியாண்டார் நம்பி - தேவாரத் திருமுறையைக் கண்டெடுத்த ஆதி சைவர் (10ம் நூ.). நம்பியாரூரர் - சுந்தரர். நம்பியான் - கோயிலருச்சகரின் பட்டப் பெயர். நம்பிராட்டியார் - அரசனின் தேவி, கடவுளின் தேவி. நம்பிள்ளை - ஈடுஎன வழங்கும் திருவாய் மொழிக்கு உரை செய்த வைணவ ஆசிரியர் (14ம் நூ.). நம்பு - விருப்பம். நம்பு செய்வார் - அருச்சகர். நம்புதல் - நம்பிக்கை வைத்தல், விரும்புதல். நம்பூதிரி - மலையாளப் பிரமாண வகுப்பினர். நம்பெருமாள் - திருவரங்கத்துத் திருமால். நம்மனோர் -எம்மனோர். நம்மாழ்வார் - ஆழ்வார் பன்னிரு வருள் தலையானவரும் திருவாய் மொழி முதலிய பிரபந்தங்களினா சிரியரு மான திருமாலடியார் (8ஆம் நூ.). நயக்கிளவி - அசதியாடல். நயத்தகுதல் - விரும்பத் தகுதல், நன்மையாதல். நயத்தல் - விரும்புதல், அன்பு செய்தல், தலைவனைக் கண்ட தலைவி தனது ஆசைப்பாடு கூறும் புறத்துறை. நயநாட்டம் - நயத்தையும் நட்டத்தையும் காட்டும் கணக்கு (Profit and Loss). நயப்பு - அன்பு, இன்பம், தலைவியின் அழவைப் புகழ்தல். நயம் - அருள், விருப்பம், மகிழ்ச்சி, மேம்பாடு, பயன், இனிமை, நீதி. நயர் - அறிவுடையவர். நயவருதல் - விரும்புதல், நன்மையுண்டாதல். நயவர் - காதலர், நீதியுடையோர். நயவன் - இரசிக்கின்றவன். நயவார் - பகைவர். நயனதீட்சை - குரு சீடனுக்குத் தனது அருட்பார்வையால் ஞான முண் டாக்குவது. நயனத்தானம் - படுக்கை. நயனப்பத்து - தலைவனது கண்களைப் பத்துப் பாட்டுக்களாற் புகழ்ந்து கூறும் பிரபந்தவகை. நயனமாலை - உருத்திராக்கமாலை. நயனமோக்கம் - சிற்பிகள் விக்கிர கங்களுக்குக் கண்ணைத் திறந்து விடுகை. நயனமோட்சம், நயனம் - கண். நயனவிதி - கண் வைத்திய நூல். நயன் - அன்பு, நயம். நயினார் - சுவாமி, சைனர் பட்டப் பெயர். நரகதி - நரகத்திற் பிறக்கும் பிறவி. நரகம் - உயிர்கள் தீவினைப் பயனை அனுபவிக்கும் உலகம். நரகரி - நரசிம்மமான திருமால். நரகர் - நரகத்தில் வாழ்வோர். நரகல் - மலம். நரகன் - நரகாசுரன், பாவி, நரகத்தி லுள்ளவன். நரகாலி - மாட்டுநோய் வகை. நரகி - நரக உலகத்துள்ளவர். நரகு - நரகம். நரகேசரி - நரசிங்கம், மக்களுட் சிறந்தவன். நரசிங்கம் - சிங்கத் தலையும் மனித உடலுமுள்ள வடிவம். நரதுங்கன் - மனிதருள் சிறந்தவன். நரதேவன் - அரசன். நரத்துவம் - மனிதத் தன்மை. நரநாராயணர் - திருமாலின் அவதாரமான இரு முனிவர். நரந்தம் - கத்தூரி மிருகம், கத்தூரி, வாசனைப் புல், நாரத்தை. நரபதி - அரசன், சோழ அரசர் விசய நகர அரசரின் பட்டப் பெயர். நரபலி - மனித பலி. நரபாலன் - நரபதி. நரபுடம் - 50 வறட்டிகளால் இடப்படும் எரி புடம். நரப்புக்கருவி - நரம்புக் கருவி. நரமடங்கல் - நரசிங்கம். நரமேதம் - நரபலியிட்டுச் செய்யும் யாகம். நரம் - மனிதப் பிறவி. நரம்பின்மறை - யாழ் நூல். நரம்பு - தசை நார், யாழ்நரம்பு, வில் நாண். நரம்புக்கட்டு - திவவு. நரம்புக்கருவி - நரம்பால் ஒலிக்கப் படும் இசைக் கருவி. நரம்புச்சிலந்தி - கிருமிவகை (Guinea - worm). நரலுதல் - ஒலித்தல், கத்துதல். நரலை - ஒலி, கடல், மதிலுறுப்புகளுள் ஒன்று. நரலோகம் - பூமி. நரல் - சனக் கூட்டம், செத்தை. நரல்வு - ஒலிக்கை. நரவாகனம் - சிவிகை, ஊர்தி. நரவாகனரேகை - ஒருவனுக்குப் பல்லக்கு ஏறும் யோகத்தைக் குறிப்ப தான கையிலமைந்த வரை. நரவாகனன் - குபேரன். நரற்றுதல் - ஒலிக்கச் செய்தல். நரன் - மனிதன், அருச்சுனன், ஓர் இருடி, ஓர் இயக்கன். நராதிபன் - அரசன். நராயணன் - திருமால். நரி - ஒரு விலங்கு. நரிகுளிப்பாட்டுதல் - நயவார்த்தை. நரிதல் - வருந்துதல். நரித்தல் - வருத்துதல், கெடுத்தல். நரிநிறம் - பல எண்ணம், வெறுப்பு. நநிப்பல் - ஒருவகைக் கழுத்தணி உரு. நரிப்பு - இழிவு. நரிப்புறம் - மிருக சீரிடம். நரிமிரட்டல் - தூக்கத்தில் குழந் தைக்கு உண்டாகும் சிரிப்பும் அழுகையும். நரிவிருத்தம் - திருத்தக்க தேவர் இயற்றிய ஒரு நூல் (10ம் நூ.). நரிவெங்காயம் - ஈருள்ளிவகை. நரிவெரூஉத்தலையார் - சங்கப் புலவருள் ஒருவர் (குறு. 5). நருக்குதல் - நொறுக்குதல், கொல் லுதல். நருமதை - ஓர் ஆறு. நரை - வெளுத்த மயிர், வெண்மை, எருது, சாமரம், கவரிமா, மூப்பு, பெருமை வெள்ளைக் குதிரை. நரைஞ்சர் - முதியவர். நரைத்தல் - மயிர் வெண்மையாதல். நரைமை - மூப்பு. நரைமுடிநெட்டியார் - சங்க காலப் புலவர் (அகம். 339). நரையான் - மீன்கொத்திப் புள். நர்த்தனம் - கூத்து. நர்மதை - நருமதை. நலக்குதல் - அழுக்காக்குதல். நலங்கனிதல் - அன்பு முதிர்தல். நலங்கு - கலியாணத்தில் மண மகளைச் சபையிலிருத்தி ஒருவர்க் கொருவர் சந்தனம் முதலியன பூசி விளையாடச் செய்யும் கொண் டாட்டம். நலஞ்சாற்றுதல் - அரசனாணையை வெளியிடுதல். நலத்தல் - விரும்புதல். நலம் - நன்மை, அழகு, ஆசை, இன்பம், குணம், நிறம், எருத்தின் விதை. நலம்பாடு - தகுதி. நலம்பாராட்டல் - தலைவியின் அழகை வியந்துரைக்கும் அகத் துறை. நலவர் - நல்லோர். நலிதல் - மெலிதல், வருந்துதல். நலிபு - ஆய்தவெழுத்திற்குச் செய்யு ளில் வழங்குமொரு பெயர், துன்பம், கேடு. நல் - நல்ல. நல்கல் - கொடுத்தல், அருள். நல்குதல் - கொடுத்தல், விரும்புதல், வளர்த்தல், பயன்படுதல், அருளல். நல்குரவு - வறுமை. நல்கூர் - எளிமை. நல்கூர்தல் - வறுமைப்படல், துன்புறுதல். நல்ல - மிக நன்மையான. நல்லச்சுதனார் - பரிபாடலில் 21 ஆம் பாடல் செய்தவர். நல்லணி - மங்கலநாண். நல்லதண்ணீர் - குடிதண்ணீர். நல்லதம்பிரான் - தெய்வமாகக் கருதப்படும் பாம்பு. நல்லந்துவனார் - கலித்தொகை தொகுத்த சங்கப் புலவர். நல்லபாம்பு - நாகபாம்பு. நல்லம் - கரி, இஞ்சி. நல்லரிவஞ்சம் - போகபூமி, ஆறனுள் ஒன்று. நல்லவர் - நண்பர், அறிஞர், பெண்கள். நல்லவேளை - நெருக்கடியான நேரம். நல்லவை - நற்காரியங்கள், பட்சபாத மில்லாமல் நியாயம் பேசுவோர் சபை (நல் + அவை). நல்லழுசியார் - பரிபாடலில் 16, 17 ஆம் பாடல்களைச் செய்தவர். நல்லா - முற்காலம் பசுக்கள் மேல் விதிக்கப்பட்டிருந்த வரி. நல்லாக - நன்றாக. நல்லாதனார் - திரிகடுகம் என்ற நூல் இயற்றிய ஆசிரியர் (கி.பி. 5ம் நூ.). நல்லாப்பிள்ளை - வில்லிபுத்தூரர் பாரத்தை விரித்துப் பாடிய புலவர் 1732. நல்லார் - நற்குணமுடையோர், கற்றார், மகளிர். நல்லாவூர்கிழார் - சங்க காலப் புலவர் (அகம். 86). நல்லாள் - குணத்தில் சிறந்தவள். நல்லாறனார் - நல்லாறன் மொழிவரி என்னும் இலக்கணமியற்றியவர் (யா.வி.உ). நல்லாறன்மொழிவரி - இறந்துபட்ட ஒரு தமிழ் இலக்கண நூல். நல்லிசைவஞ்சி - பகைப்புலம் அழிவெய்தியதற்கு இரங்குதலைக் கூறம் புறத்துறை. நல்லியக்கோடன் - சிறுபாணாற்றுப் படையிற் புகழப்பட்ட அரசன். நல்லிளம்படியர் - அழகிய இளமாதர். நல்லிறையனார் - சங்க காலப் புலவர் (புறம். 393). நல்லினம் - நல்லோர் கூட்டம், பசு நிரை. நல்லுத்திரனார் - சங்க காலப் புலவர் (கலி. 101-117). நல்லுயிர் - கணவன். நல்லுறவு - நெருங்கிய உறவு. நல்லூழ் - புண்ணியம். நல்லெண்ணெய் - எள் நெய். நல்லெருது - பழைய காலத்தில் எருதுகள் மேல் விதிக்கப்பட் டிருந்த வரி. நல்லெழுனியார் - பரிபாடலில் 13 ஆம் பாடல் செய்தவர். நல்லேறு - ஆண் எருமை, இடபம். நல்லோர் - மகளிர், நல்லவர். நல்வசி - சூலம். நல்வழி - நல்லொழுக்கம், ஒளவையார் இயற்றிய நீதி நூல். நல்வழுதியார் - பரிபாடலில் 12 ஆம் பாடல் செய்தவர். நல்வாக்கு - நன்னிமித்தமான சொல். நல்வினை - முற்பிறப்பிலே செய்த புண்ணியம். நல்வெள்ளியார் - சங்க காலப் புலவர் (நற். 7). நல்வேட்டனார் - சங்க காலப் புலவர் (நற். 53). நவகண்டம் - கீழ்பால்விதேகம், மேல் பால்விதேகம், வடபால் விதேகம், தென்பால்விதேகம், வடபாலிரேதம், தென்பாலிதேபதம், வடபாற்பரதம், தென்பாற்பரதம், மத்தியகண்டம் என்பன. நவகதிர் - ஆசீவகரது சமய நூல். நவகோடி சித்தபுரம் - திருவாவடு துறை. நவகோடிசித்தர் - ஒன்பது வகைச் சித்தர் கூட்டம். நவகோணத்தாள் - பார்வதி. நவக்கிரகம் - சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது ஆகிய ஒன்பது கோள் மீன்கள். நவசக்தி - ஒன்பது சிவசத்திகள். நவசி - தெங்குவகை. நவச்சாரம் - ஒருவகை உப்பு. நவச்சாரவளி - அமோனியா (Ammonia). நவதாரணை - ஒன்பது அவ தானங்கள். நவதானியம் - கோதுமை, நெல், துவரை, பயறு, கடலை, அவரை, எள், உழுந்து, கொள் ஆகிய ஒன்பது வகைத் தானியங்கள். நவதீர்த்தம் - கங்கை, யமுனை, சரசுவதி, நருமதை, சிந்து, காவேரி, கோதாவரி, சோணை, துங்கபத்திரை என்னும் தீர்த்தங்கள். நவநாதசித்தர் - சத்தியநாதர், சதோகநாதர், ஆதிநாதர், அனாதி நாதர், வகுளிநாதர், மதங்க நாதர், மச்சேந்திர நாதர், கடேந்திரநாதர், கோரக்கர் என்னும் சித்தர் ஒன்ப தின்மர். நவநாயகர் - ஒவ்வொரு ஆண்டுக் கும் அமையும் இராசா, மந்திரி, சேனாதிபதி, சசியாதிபதி, தானியாதி பதி, அர்க்காதிபதி, மேகாதிபதி, ராசதிபதி, நீசாதிபதி ஆகிய தலை வர் ஒன்பதின்மர். நவநிதி - பதுமம், மாபதுமம், சங்கம், மகரம், கச்சபம், முகுந்தம், நந்தம், நீலம், கர்வம் என்னும் ஒன்பது குபேர நிதி. நவநீதிப்பாட்டியல் - நவநீதன் செய்த நூல் (14 ஆம் நூ.). நவநீதம் - வெண்ணெய். நவபண்டம் - நவதானியம். நவபுண்ணியம் - எதிர்கொள்ளல், பணிதல், இருக்கை, உதவல், கால் கழுவல், அருச்சித்தல், தூபம், கொடுத்தல், தீபங்காட்டல், புகழ்தல், உண்டியீதல் என ஒன்பது வகைப் பட்ட உபசாரச் செயல்கள். நவப்பிரமர் - மரீசி, பிருகு, அங்கிரர், கிரது, புலவன், புலத்தியன், தக்கன், வசிட்டன், அத்திரி என்னும் ஒன்பதின்மர். நவமணி - கோமேதகம், நீலம், பவளம், மரகதம், மாணிக்கம், முத்து, புருடராகம், வைடூரியம், வயிரம் என்னும் மணிகள். நவமணிமாலை - ஒன்பது பாவகை யால் அந்தாதியாக இயற்றப்படும் ஒரு பிரபந்தம். நவமி - ஒன்பதாந் திதி. நவமுகில் - நமவர்க்கம், ஆவர்த்தம், புட்கலம், துரோணம், காளம், நீலம், வாருணம், வாயுவம், தமம் ஆகிய ஒன்பதுவகை மேகங்கள். நவம் - ஒன்பது, புதுமை பூமி, கார் காலம். நவரசம் - சிருங்காரம், நகை, கருணை, வெகுளி, வீரம், பயம், இகழ்ச்சி, வியப்பு, சாந்தம் என்னும் ஒன்பது வகைப்பட்ட நூற் சுவைகள். நவராத்திரி - புரட்டாசி மாதத்தில் துர்க்கை, இலக்குமி, சரசுவதி என்னும் தெய்வங்கள் பொருட்டுக் கொண்டாடப்படும் திருநாள். நவலோகம் - பொன், இரும்பு, செம்பு, ஈயம், வெள்ளி, பித்தளை, தரா, துத்தநாகம், வெண்கலம் என்னும் உலோகங்கள். நவவருடம் - குரு, இரணிய, இரமிய இளவிருத, கேதுமால பத்திர, அரி, கிம்புருட, பாரத வருடங்கள் என் னும் பூமியின் பெரும் பிரிவுகள். நவவீரர் - முருகக் கடவுளின் துணைவரான ஒன்பது வீரர். நவாக்காரி - ஒன்பது எழுத்துக்கள் உள்ள மந்திர வகை. நவாங்கிசம், நவாமிசம் - இராசியை ஒன்பதாகப் பகிர்கை. நவி, நவியம் - குந்தாலி, புதுமை சோடரி. நவிரம் - ஆய் மயிர், உச்சி, தலை, மலை, மயில், நன்னனுடைய மலை, புன்மை. நவிரல் - மரவகை. நவிர் - ஆண் மயிர், தக்கேசிப்பண், முண்முருக்கு, புன்மை, திரணம். நவிலுதல் - சொல்லுதல், கற்றல், பெரிதொலித்தல், பாடுதல், செய்தல், தாங்குதல், குறித்தல். நவிழ்த்தல் - அவிழ்த்தல். நவிற்றுதல் - சொல்லுதல், ஆராய்தல். நவீனம் - புதுமை. நவுரி - ஒருவகை எக்காளம். நவை - குற்றம், தண்டனை. நவைத்தல் - கொல்லுதல். நவ்வார் - பகைவர். நவ்வி - பெண்மான் (Gazelle), இளமை, அழகு, மரக்கலம், புள் ளின் பெண். நவ்வு - மரக்கலம். நழக்குதல் - வருத்துதல். நழுப்புதல் - மயங்கச் செய்தல். நழுவல் - நழுவும் தட்டு (Slide). நழுவுதல் - வழுவுதல். நள - 56ஆவது ஆண்டு. நளபாகம் - மேன்மையான சமையல். நளம் - சிற்பநூல்களுள் ஒன்று. நளவெண்பா - புகழேந்திப் புலவர் நளனைப் பாடிய ஒரு நூல் (15ஆம் நூ.). நளன் - தலை வள்ளல்களுள் ஒருவன், நளச்சக்கரவர்த்தி. நளி - செறிவு, கூட்டம், செருக்கு, குளிர்ச்சி, வெள்ளைச்சாரணை, தேள். நளிதல் - செறிதல், பரத்தல், ஒத்தல். நளிப்பு - செறிவு. நளிய - ஓர் உவம உருபு. நளிர் - குளிர், நண்டு, பகை. நளிவிடம் - அகலம். நளிவு - செறிவு. நளினம் - தாமரை, பரிசாகப் பேச்சு நயச்சொல். நளினாட்சமாலை - தாமரைமணி மாலை. நளினி - இலக்குமி, தாமரைத் தடாகம். நள் - நடு, இரவு, திருவோணம், செறிந்த. நள்ளலர், நள்ளார் - பகைவர். நள்ளி - கடை வள்ளல்களுள் ஒருவன், கர்க்கடகராசி, உறவு. நள்ளிடை - நடுவிடம். நள்ளிருணாறி - இருவாட்சிப்பூ. நள்ளிருள் - செறிந்த இருள். நள்ளுநர் - சிநேகர். நள்ளெனல் - ஓர் அசைக்குறிப்பு. நறவம் - கள், பால், நறை, வாசனை. நறவு - நறவம், சேர நாட்டிலுள்ள ஓர் ஊர். நறா - கள், வாசனை. நறுக்கு - துண்டு. நறுக்குதல் - துண்டித்தல். நறுக்குமூலம் - கண்டந்திப்பிலி. நறுங்காழ் - நல்ல மணமுள்ள அகில் சந்தனம் முதலியன. நறுஞ்சுதை - சுத்தமான பசுவின் பால். நறுநுதல் - நன்னுதல். நறுநெய் - பசுவின் நெய். நறுமண் - மகளிர் கூந்தலில் தேய்த் துக் கொள்ளும் வாசனை மண். நறுமருப்பு - இஞ்சி. நறுமாதுளம் - தித்திப்பு மாதுளை. நறுமுதல் - நெறுமுதல். நறுமை - வாசனை, நன்மை. நறும்பிசின் - கரியபோளம். நறுவட்டாணி - மிகுசாமர்த்தியம். நறுவிலி - மரவகை. நறை - தேன், கள், நறுமாற்றம் நறும்புகை, வாசனைக்கொடி வகை. நறைக்காய் - சாதிக்காய். நறையால் - பகன்றைக்கொடி. நற்கருணை - இராப்போசனம் (கிறித்தவர்), கம்முனியன். நற்காட்சி - உண்மை விளக்கம். நற்காமம் - ஒத்தகாமம். நற்கு - நன்றாக. நற்குடி - நற்குலம். நற்கோள் - வியாழன், வெள்ளி, பூரண சந்திரன் முதலிய சுபக்கிரகங்கள். நற்சணல் - ஆளி (Flax). நநற்சாட்சி - சிபாரிசு. நற்சாட்சிப்பத்திரம் - நல்நடத் தையைக் குறிக்கும் பத்திரம். நற்சார்வு - நல்லோர் கூட்டம். நற்செங்கல் - காவிக்கல். நற்சொல் - நன்னிமித்த மொழி. நற்பு - நன்மை. நற்போர் - தருமநெறி தவறாத போர். நற்றங்கொற்றனார் - சங்க காலப் புலவர் (நற். 136). நற்றத்தம் - ஓர் யாப்புநூல். நற்றத்தனார் - அகத்தியர் மாணவர் பன்னிருவருள் ஒருவர், நற்றத்தம் என்னும் இலக்கணம் செய்தவர். நற்றமனார் - சங்க காலப் புலவர் (அகம். 94). நற்றம் - நற்குணம். நற்றரித்தல் - நன்றாக நிலைத்தல். நற்றவம் - வீடுபெறச் செய்யும் தவம். நற்றவமூர்த்தி - புத்தன். நற்றாய் - பெற்றதாய். நற்றானம் - நன்மை விளைக்கும் செய்யுட்டானம். நற்றிணை - பன்னாடு தந்த பாண்டி யன் மாறன் வழுதி தொகுப்பித்த தும் எட்டுத் தொகையுள் ஒன்றான தும் அகப்பொருளைப் பற்றியது மான தொகை நிலை. நற்றிறம் - நீதிநெறி, விரதம். நற்று - நன்மை. நற்றோழி - அருமைத்தோழி. நனந்தலை - அகன்ற இடம், நடு, உச்சி, திசை. நனம் - அகலம். நனவு - விழிப்பு, தேற்றம், மெய்ம்மை, பகல், போர்க்களம். நனா - விழிப்பு. நனி - மிகுதி. நனை - பூவரும்பு, தேன், கள். நனைதல் - ஈரமாதல், அரும்புதல், தோன்றுதல். நனைவு - ஈரம். நன்கலந்தருநன் - இரத்தின வேலை செய்யும் தட்டான். நன்கனம் - நன்றாக. நந்காடு - சுடுகாடு. நன்கு - நல்லது, மிகுதி, அழகு, நிலை பேறு, நற்சகுனம், மகிழ்ச்சி. நன்கு மதித்தல் - கௌரவித்தல். நன்கொடை - வெகுமதி. நன்செய் - நெல் உண்டாகும்நிலை. நன்பகலந்தி - உச்சிக்காலம். நன்பலூர் சிறுமேதாவியார் - சங்க காலப் புலவர் (அகம். 94). நன்பால் - நல்லொழுக்கம். நன்பு - நன்மை, நன்றாக. நன்பொருள் - மகன். நன்மக்கள் - சான்றோர், நல்ல பிள்ளைகள். நன்முகம் - அழகிய முகம். நன்மை - நலம், சிறப்பு, நல்வழி, நற்குணம், மிகுதி, மேம்பாடு, புதுமை, அழகு. நன்மை தின்மை - வாழ்வு தாழ்வு. நன்மொழி - உறுதிமொழி. நன்விளக்கனார் - சங்க காலப் புலவர் (நற். 85). நன்றாக - செம்மையாக. நன்றி - உபகாரம், அறம், செய்நன்றி. நன்றியறிதல் - நன்றி உணர்தல். நன்றியில் செல்வம் - பயன்படாத செல்வம். நன்ற - நல்லது, சிறப்பு, பெரிது, அறம், நல்வினை, உபகாரம், ஆக்கம், அங்கீகாரக் குறிப்பு. நன்னயம் - இன்சொல்லும் செயல் களும். நன்னர் - நன்மை. நன்னன் - செங்கண்மாத்து வேள், மலைபடுகடாத்தின் பாட்டுடைத் தலைவன். நன்னன்வேண்மான் - நன்னன். நன்னாகனார் - சங்க காலப் புலவர் (புறம். 176). நன்னாகையார் - சங்க காலப் புலவர் (குறு. 30). நன்னாட்கொள்ளுதல் - மங்கல மான தினத்தைக் குறிப்பிடுதல். நன்னாள் - விழவுநாள். நன்னி - சிறிய. நன்னிக்கல் - மருந்து அரைக்கும் அம்மி. நன்னிலமிதித்தல் - மணமான அரசன் தன்மனைவியைவிட்டு முதன்முதல் அத்தாணி மண்டபத்துக்கு அடி வைக்கும் சடங்கு. நன்னிலை - நல்ல நிலைமை. நன்னீர் - பனிநீர், நல்ல இயற்கை. நன்னுதல் - பெண், பல்லாற் கடித்தல். நன்னூல் - பவணந்தி முனிவர் செய்த இலக்கணநூல் (13 ஆம் நூ.). நன்னெறி - சிவப்பிரகாச சுவாமிகள் செய்த நீதிநூல் (17ஆம் நூ.). நா நா - நாக்கு, வார்த்தை, நடு, துலை, நாமணியின் நாக்கு, தீயின் சுவாலை. நாஇ - நாய். நாககன்னிகை - நாகலோகத்துப் பெண். நாககுமார காவியம் - ஒரு சைன காவியம். நாகசுரன் - நாக சின்னம். நாகணம் - நறும்பண்டவகை. நாகணவாய்ச்சி, நாகணவாய்ப்புள் - பூவைப் பறவை. நாகதம்பிராள் - பாம்புக்கடவுள். நாகதாளி - சப்பாத்துக்கள்ளி. நாகதொனி - மருதப்பண்புகளுள் ஒன்று. நாகநாடு - சுவர்க்கலோகம், நாக சாதியார் வசிக்கும் நாடு, கீழ் உலகம். நாகநாதன் - இந்திரன். நாகபடம் - மகளிர் அணிவகை. நாகபந்தம் - சித்திர கவி வகை. நாகபலை - நாகமல்லி. நாகபாசம் - பாம்புருவான மந்திரக் கயிறு. நாகபுரம் - சாவகநாட்டுத் தலைநகர். நாகப்பூச்சி - மலத்துடன் விழும் பூச்சி. நாகமாபுரம் - மதுரை. நாகமுகன் - யானைமுகம் கொண்ட கணபதி. நாகம் - பாம்பு, விடம், யானை, நாக லோகம், குரங்கு, காரியம், துத்தநாகம், துகில், ஆகாயம், சுவர்க்கம், மேகம், மலை, சுர புன்னை, ஞாழல் வகை. நாகமணி - நாகத்தின் தலையிலுள்ள மணி. நாகரம் - தேவநாகரி, சுக்கு. நாகராகம் - பெரும் பண்களுள் ஒன்று. நாகராசன் - தினகரவெண்பாப் பாடியவர் (16ம் நூ.). நாகராயர் - பாம்புகட்கு அரசர். நாகரி - தேவநாகரி குருக்கத்தி. நாகரிகம் - நகரசம்பந்தமான செப்பம், நகரவொழுக்கம், மரியாதை, கண் ணோட்டம், பிலுக்கு. நாகரிகர் - நகரில் வாழ்வோர், கண்ணோட்டமுடையவர், சதுரர் காமுகர், இரசிகர். நாகரிகர் - நகரில் வாழ்வோர், கண்ணோட்டமுடையவர், சதுரர், காமுகர், இரசிகர். நாகரிகி - செப்பமான நடை யுடையவள். நாகரையன் - நாக அரசன். நாகர் - ஒரு பழைய சாதியார், நாகலோகவாசிகள். நாகலிங்கம் - ஒரு மரம். நாகவம் - அமாவாசிப் பிற்பகுதி. நாகவராளி - பண்வகை. நாகவொத்து - மகளிர் தோளணி வகை. நாகனார் - பரிபாடல் 6 பாடலுக்கு இசைவகுத்தவர். நாகன் - தசவாயுக்களுள் ஒன்று. நாகாதிபன் - இந்திரன், ஐராவதம், ஆதிசேடன், இமயமலை. நாகியர் - தேவமாதர். நாகு - இளமை, எருமை, மரைமாடு என்பவற்றின் பெண், தத்தை, சங்கு. நாகை - நாகைப்பட்டினம். நாகைக்காரோணம் - நாகைப் பட்டினத்துள்ள சிவன் கோயில். நாக்கு - நா. நாக்குப்பூச்சி - மலைப்பைச் சிறுபுழு (Round worm). நாங்குழு, நாங்கூழ் - நாக்குப் பூச்சி, மண்புழு. நாசம் - அழிவு, மரணம். நாசனன் - நாசஞ்செய்பவன். நாசன் - யமன், அழிப்பவன். நாசி - மூக்கு, வீட்டு மாடியிலுள்ள ஓர் உறுப்பு. நாசிகாபரணம் - மூக்குத்தி. நாசிகை - மூக்கு, வீட்டு உறப்பு. நாசுவன் - அம்பட்டன். நாச்சி - தலைவி. நாச்சிமார் - சத்தமாதர். நாச்சியார் - அரிசி அல்லது தலைவி, ஆண்டாள். நாச்செறு - வசை. நாஞ்சிலான் - பலராமன். நாஞ்சில் - கலப்பை, மதிலுறுப்பு, ஒரு மலை. நாஞ்சில்நாடு, நாஞ்சிநாடு - நாகர் கோயிற் பகுதி. நாஞ்சில் வள்ளுவன் - நாஞ்சில் மலைக்குரிய அரசன். நாடகக் கணிகை - நாட்டியப் பெண். நாடகக் காப்பியம் - நாடகத் தமிழ் நூல். நாடகசாலை - நாடக அரங்கு, நாடகக் கணிகை. நாடகசாலையர் - கூத்தர். நாடகத்தமிழ் - வத்துப்பற்றி வழங்கும் தமிழிலக்கியப் பகுதி. நாடகத்தரம்பையர் - மேனகை, அரம்பை, உருப்பசி, திலோத்தமை என்ற தேவகணிகையர். நாகபாத்திரம் - நாடக மேடையில் நடிப்போன். நாடகமகள் - நாடகக்கணிகை. நாடகம் - கூத்து, ஒரு கதையை நடந்தது போல் நடத்துக் காட்டுவது. நாடகவழக்கு - புனைந்துரை வழக்கு, நாடகத்துக்குரிய நெறி. நாடவர் - தேசத்தவர். நாடறிவான் - சந்திரன். நாடன் - தேசத்தான், தலைவன், குறிஞ்சி நிலத் தலைவன், கார்த் திகை. நாடர் - நெசவுக் கருவிவகை, நெய்யப்பட்ட நூற்பட்டை. நாடாத்தி - சான்றோர் வகுப்புப் பெண். நாடாப்புழு - வயிற்றிலுண்டாகும் புழுவகை (Tape worm). நாடான் - சான்றோர் பட்டப்பெயர். நாடி - கைநாடி, நாழிகை, மயிர், மோவாய், நாட்டிலுள்ளவள், மூக்கு, மாளிகை மேற்பாக உறுப்பு, இடம். நாடு - தேசப்பகுதி, இடம் மருத நிலம். நாடுதல் - தேடுதல், ஆராய்தல், விரும்புதல், ஒத்தல், அளத்தல், கிட்டுதல். நாடுபடுதிரவியம் - செந்நெல், சிறுபயறு, ஆன்நெய், கரும்பு, வாழை, முதலியன. நாடுரி - 1½ நாழிகொண்ட முகத் தலளவை. நாடோடிகள் - அலைந்து திரிவோர் (Nomads). நாடோடிக்கதை - நாட்டு மக் களிடையே வழங்கும் பழங்கதை கள் (Folk tales.) நாடோறும் - தினமும். நாட்கவி - அன்றன்று அரசனைப் புகழ்ந்து கூறும் பாடல். நாட்காலம் - விடியற்காலம். நாட்கூறு - முற்பகல். நாட்கொடி - விசேடநளை அறி வித்தற்குக் கட்டும் கொடி. நாட்கொல்லி - யமன். நாட்கொள்ளுதல் - அரச சின்னங்களைப் புறவீடு விடுதல். நாட்சோறு - காலை உணவு. நாட்டமைதி - செல்வம், விளைவு கள், பல்வளம், செங்கோல், குறும்பின்மை, பிணியின்மை என்பன. நாட்டம் - பார்வை, கண், ஆராய்ச்சி, சோதிட நூல், விருப்பம், சஞ்சாரம், நோக்கம், நிலை நிறுத்துகை, வாள். நாட்டம்பலம் - ஊர்ச்சபை. நாட்டாண்மை - ஊரதிகாரம். நாட்டார் - தேசத்தார், நாட்டு மகா சனம். நாட்டான் - தேசத்தான், நாட்டுப் புறத்தான். நாட்டிடர் - குற்றம். நாட்டியக்காரி - கூத்தாடுபவன். நாட்டியம் - கூத்து. நாட்டிலமிர்து - நாடுபடு திரவியம். நாட்டு - நிலை. நாட்டுக்கல் - கொங்கு வேளாளர் திருமணத்தில் அரசனுக்குப் பதி லாக மணமகன் வணங்கற்கு நாட்டும் சிலை. நாட்டுக்கவுண்டன் - கொங்கு வேளாளருள் பெரியதனக்காரன். நாட்டுக்குற்றம் - விட்டில், கிளி, நால்வாய், வேற்றரசு, தன்னரசு, நட்டம், பெரும் பெயல், காற்று என எண் வகை நாட்டுத் துன்பங்கள். நாட்டுப்படை - நாட்டிலுள்ள மக்களாலியன்ற படை. நாட்டுப்புறம் - பட்டிக்காடு. நாட்டுப்பெண் - மகன் மனைவி. நாட்டுமானிடம் - சாமானிய மக்கள். நாட்டுவளப்பம் - நாட்டு வழக்கம். நாட்டை - ஓர் இராகம். நாட்டைக்குறிஞ்சி - ஓர் இராகம். நாட்பறை - நாழிகைப் பறை. நாட்பு - ஞாட்பு. நாணகம் - நாணயம். நாணநாட்டம் - தலைவி நாணும் வகையால் அவட்குத் தலை வனுடன் கூட்ட முணமையைச் சோதித்தறிகை. நாணம் - வெட்கம், கூச்சம். நாணயம் - முத்திரையிடப்பட்ட காசு, நேர்மை, மூக்காங்கயிறு. நாணல் - புல்வகை, நாணுதல். நாணாளும் - தினமும். நாணி - வில்லின் நாண். நாணிக்கொள்ளுதல் - நான்று கொள்ளுதல். நாணிலி - நாணமில்லாதவர். நாணிழல் - காலை நிழல். நாணு - நாணம். நாணுதல் - வெட்கமடைதல், மனம் குன்றதல், அஞ்சுதல், குவிதல். நாணுவரையிறத்தல் - பத்து அவத்தையுள் நாண் நீங்கலாகிய அவத்தை வகை. நாணெறிதல் - நாணைத்தெறித்து ஒலி எழுப்புதல். நாணேற்றுதல் - வில்லை வளைத்து நாணைக் கொளுவுதல். நாண் - வெட்கம், கூச்சம், கயிறு. நாண்ஞாயிறு - காலை நாண்புடை - வில்லின் நாணொலி. நாண்மகிழிருக்கை - நாளோலக்கம். நாண்மங்கலம் - அரசற்கு யாண்டு இத்துணை சென்றது என்று எழுதும் மங்கலம். நாண்மதி - நிறைமதி. நாண்மலர் - அன்ற மலர்ந்த பூ. நாண்மீன் - விண்மீன். நாண்முதல் - அதிகாலை. நாண்முல்லை - போரின் பொருட்டுக் கணவன் பிரிந்த தற்காத்துத் தங்கிய நிலைமை கூறும் புறத்துறை. நாண்முழவு - காலை முரசு, நாழிகைப் பறை. நாண்மேயல் - காலைபேய்ச்சல். நாண்மை - நாணம். நாதஇயற்கலை - ஒலிநூல் (Counties). நாதகுத்தர் - குண்டலகேசி ஆசிரியர். நாதநாமக்கிரியை - இராகவகை. நாதமுனி - திருவாய்மொழி முதலிய திவ்வியப் பிரபந்தங்களை முதன் முதல் கண்டு பிரபலப்படுத்திய வைணவ ஆசிரியத் தலைவன் (11ஆம் நூ.). நாதம் - சத்தம், வாச்சிய ஓசை, இசைப் பாட்டு, சோணிதம். நாதன் - தலைவன், கணவன், கடவுள், சிவன். நாதாக்கியை - பார்வதி. நாதி - ஞாதி. நாதியன் - தலைவன். நாதேயம் - துரிசு. நாத்தழும்பேறுதல் - பலமுறை சொல்லுதலால் நாவுக்குப் பழக்க முண்டாதல். நாத்தி - கணவனுடன் பிறந்தவள், இன்மை. நாத்திகம் - கடவுளில்லை என்னும் மதம். நாத்தூண் - நாத்தி. நாந்தகம் - திருமாலின் வாள், வாள். நாந்தல் - மந்தாரம், ஈரம். நாந்தி - பாயிரம், சிராத்த வகை. நாபி - கொப்பூழ், கத்தூரி. நாபிதன் - நாவிதன். நாபிநாளம் - கொப்பூழ்க்கொடி. நாப்பண் - நடு, தேர்நடு, யாழிநுறுப்பு. நாப்பாடம் - நெட்டுருப் பண்ணிய பாடம். நாப்பு - பரிகாசம். நாமகரணம் - குழந்தைக்குப் பெய ரிடும் சடங்கு. நாமகள் - சரசுவதி. நாமஞ்சாத்துதல் - திருமண் தரித்தல், பெயரிடுதல். நாமடந்தை - வைணவன். நாமதீபநிகண்டு - கல்லிடைக் குறிச்சி சிவசுப்பிரமணிய கவிரா யரால் இயற்றப்பட்ட நிகண்டு. நாமதேயம் - பெயர். நாமத்தாலி - கார்காத்தவேளாளரது விளக்கிடு கலியாணத்தில் பெண் கழுத்திலணியும் தாலிவகை. நாமநீர் - கடல். நாமமாலை - தலைவன் பெயர் களை வஞ்சிப்பாவால் புகழ்ந்து கூறும் பிரபந்த வகை. நாமம் - அச்சம், நிறைவு, புகழ், பெயர், வைணவர் தரிக்கும் திருமண குறி. நாமயம் - தற்போதம். நாமறுதல் - முற்றுமழிந்துபோதல். நாமனூரனலைவாய் - திருச் செந்தூர். நாமாவளி - திருப்பெயர் வரிசை. நாம் - தன்மைப் பன்மைச் சொல், அச்சம். நாம்பு - மெல்லியகொடி. நாயகப்பத்தி - நாடகமாடும் தலைமையிடம். நாயகமணி - ஆபரணத்தின் நடு மணி. நாயகம் - தலைமை மேம்பாடு. நாயகன் - தலைவன், கணவன், கடவுள், அரசன். நாயகி - தலைவி, மனைவி. நாயக்கச்சி - வன்னியர் வடுகர் வேடர் இருளர் முதலிய சாதி மகளிர். நாயக்கவரசர் - மதுரையையும் தஞ்சையையும் தலநகர்களாகக் கொண்டு ஆண்டு வடுக மன்னர். நாயக்கன் - வடுகருள் ஒரு சாதியார் பட்டப்பெயர். நாயடியேன் - நாய்போல் அடிமைப் பட்டயான். நாயர் - மலையாள சாதியாருள் ஒருவர். நாயனார் -தலைவன், கடவுள், தந்தை, சிவனடியார். நாயன் - கடவுள், அரசன், தலைவன். நாயன்மார் - பெரிய புராணத்தில் கூறப்படும் சிவனடியார். நாயாடி - திருவிதாங்கூரிலுள்ள ஒரு காட்டுச் சாதியினர். நாயில் - மதிலுறுப்பு வகை. நாயிறு - ஞாயிறு. நாயுடு - வடுகநாயக்க சாதியாரின் குலப் பெயர். நாயுரீஇ - நாயுருவிச்செடி. நாயுருவி - பூடுவகை. நாயோட்டுமந்திரம் - திருவைந் தெழுத்தில் சி என்னும் எழுத்து. நாய் - ஒரு விலங்கு, சூதாடு கருவி. நாய்கன் - வணிகன். நாய்க்கடுவான் - பிராமணப் பெண்ணிடம் சண்டாளனுக்குப் பிறந்த மகன். நாய்க்குடை - நாய்க்காளான். நாய்க்கெரிப்போன் - சண்டாளன். நாய்ச்சி - தலைவி. நாய்ப்பல் - முன்வாயில் முளைக்கும் இரண்டு கூரிய பல் (Canine Teeth). நாய் விருத்தி - ஊழியம் செய்யும் வாழ்வு. நாரணன் - திருமால். நாரணி - துர்க்கை. நாரணியவன் - சிவன். நாரதசரிதை - இறந்துபட்ட ஒரு நூல் (புறத்திரட்டு). நாரதப்பிரியம் - தணிகைமலை. நாரதம் - பெரிய யாழ்வகை. நாரதன் - ஒரு முனிவர். நாரதீயம் - ஒரு புராணம். நாரம் - கயிறு, அன்பு, நீர், பாசி, நாரத்தை. நாரன் - மன்மதன். நாராசநாழி - ஒருவகை அளவுப்படி. நாராசம் - இரும்புச் சலாகை. நாராயணகௌளம் - ஓர் இராகம். நாராயணபாரதி - திருவேங்கட சதகம் பாடியவர் (18 ஆம் நூ.). நாராயணன் - திருமால். நாராயணி - துர்க்கை, பார்வதி, சத்த மாதரிலொருத்தி, தண்ணீர் விட்டான். நாராயணீயம் - ஒரு வடமொழிக் கணித நூல். நாராயம் - அம்பு. நாரி - வில்நாண், பன்னடை, தேன், நன்னரி, பெண், பார்வதி, இடுப்பு. நாரிகௌபாகம் - மட்டை முதலிய வற்றை உரித்து நீக்கி உட்புறத்துள்ள பருப்பைக் கடித்து மென்றாலன்றித் தேங்காயின் சுவையை அறிய முடியாதது போல மிக வருந்தாது அழகை அறியமுடியாத செய்யுள் நடை. நாரிகேளம் - தென்னை. நாரிகை - பெண். நாரியங்கம் - தேன் தொடை. நாரை - ஒரு பறவை. நார் - தும்பு, கயிறு, நாண், பன்னாடை, அன்பு, கல்நார். நார்ப்பாட்டு - வலைக்கோணி, நார்மடி. நார்மடி - நாரால் செய்த ஆடை. நாலடி நானூறு - பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்றும் சைனப் புலவர்கள் இயற்றியது மாகிய ஒரு நீதி நூல். நாலறிவுயிர் - சுவை ஒளி ஊறு நாற்றம் என்னும் நான்கறிவுடைய வண்டு, தும்பி முதலியன. நாலாநீராடுதல் - நாலாம் நாள் இருது நீராடுதல். நாலாயிரப்பிரபந்தம் - ஆழ்வார்கள் அருளிச் செய்த 4000 பாடல் கொண்ட நூல். நாலு - நான்கு. நாலுகவிப்பெருமாள் - திருமங்கை ஆழ்வார். நாலுசதுரக்கமலம் - மூலாதாரம். நாலுதல் - தொங்குதல். நாலுமா - 1/5க் குறிக்கும் பின்ன எண். நால் - நான்கு. நால்கு - நான்கு. நால்வகைத் தோற்றம் - அண்டசம், சுவேதசம், உற்பிச்சம், சாரயுசம் என்ற நால்வகை உயிர்த்தேற்றம். நால்வகைப் பூ - கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ என்பன. நால்வகைப்பொருள் - அறம், பொருள், இன்பம், வீடு என்பன. நால்வகையுணவு - உண்டல், தின்றல், நக்கல், பருகல். நால்வர்நான்மணிமாலை - சமய குரவர் நால்வர்மீது சிவப்பிரகாசர் செய்த பிரபந்தம். நால்வாய் - தொங்கும்வாய், யானை. நாவசைத்தல் - பேசுதல். நாவடக்கம் - மௌனம். நாவடம் - தாலியுருவகை. நாவரசு - திருநாவுக்கரசு நாயனார். நாவரையர், நாவலகலிடம் - நாவலந்தீவு. நாவலந்தீவு - பரதகண்டம். நாவலர் - புலவர், அமைச்சர். நாவலர்கோன், நாவலூரளி - சுந்தரர். நாவல் - மரவகை, நாவல்ந்தீவு, போர்க்கழைக்கை, வெற்றிக் குறி யாக இடும் ஒலி, நெற் கோரிடு வோர் மகிழ்ச்சியினாலிடும் ஒலி, நெற்போர் தெழிக்கும் பகட்டினங் களைத் துரப்பதாகிய ஒரு சொல். நாவழி - நாவழிக்குங்கருவி. நாவற்பொழில் - நாவலந்தீவு. நாவாய் - மரக்கலம், இரேவதி, நாவாய்ப் பறை. நாவாய்ப்பறை - இரங்கற்பறை. நாவாள் - சரசுவதி. நாவி - புழுகு, புழுகுபூனை, கத்தூரி நாபி, பச்சை நாவிவிலங்கு. நாவிகன் - கப்பலோட்டி. நாவிக்குழம்பு - புழுகு. நாவிசம் - நாவிதத்தொழில். நாவிசன் - நாவிதன். நாவிதன் - அம்பட்டன். நாவின்கிழத்தி - சரசுவதி. நாவினார் - நாவலர். நாவு - நாக்கு. நாவுரி - 1½ நாழி கொண்ட அளவை. நாவேறுசெல்வி - சரசுவதி. நாவை - கலப்பைநா. நாழம் - வசை. நாழல் - ஞாழல். நாழி - ஒருபடி, காற்படி, நாழிகை, அம்பறாத்தூணி, பூரட்டாதி, உட்டுளைப் பொருள். நாழிகை - அறுபது விநாடிகொண்ட நேரம், நாடா. நாழிகைக்கணக்கன் - நாழிகை வட்டிலில் நேரமறிந்து சொல்வோன். நாழிகைத்தூம்பு - நீர்வீசுங் கருவி. நாழிகைப்பறை - ஒருவகைத் தோற்கருவி. நாழிகைவட்டம், நாழிகைவட்டில் - நேரமறியும் கருவி. நாழ் - குற்றம், சாமார்த்தியம், கர்வம். நாளங்காடி - பகல் கடை. நாளது - நடக்கின்ற. நாளந்தி - சிறுகாலை. நாளம் - உட்டுளை, தண்டு, நரம்பு. நாளவை - நாளோலக்கம். நாளாய்ந்தோர் - வைத்தியர். நாளார் - யமன். நாளாவட்டம் - நாளடைவு. நாளிகம் - கோட்டை மதிற்சுவரில் அமைக்கப்படும் எறிபடை வகை. நாளிகேரபாகம் - நெரிகேளபாகம். நாளிகோம் - தென்னை. நாளிருக்கை - நாளோலக்கம். நாளினு நாளும் - தினமும். நாளும் - தினமும். நாளுலத்தல் - சாதல். நானை - அடுத்ததினம். நாளோலக்கம் - காலை அத்தாணி யிருப்பு. நாளோலை - முகூர்த்த ஓலை. நாள் - தினம், சாலம், ஆயுள், காலை, நட்சத்திரம், புதுமை, இளமை, அன்று அலர்ந்தபூ. நாறல் - கெட்ட மணம். நாறு - நாற்று. நாறுதல் - மணத்தல், முளைத்தல். நாற்கதி - மக்கள், தேவர், நரகர், விலங்கு என்னும் நாற்பிறப்பு. நாற்கவி - ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நால்வகைக் கவி. நாற்கவிராசநம்பி - அகப் பொருள் விளக்கம் செய்த சைன ஆசிரியர் (12 நூ.). நாற்கலி - நாற்கால் விலங்கு, நான்கு காலுள்ளவீடம். நாற்சி - தொங்குகை. நாற்படை - யானை, தேர், குதிரை, காலாள் என நால்வகைப் படை. நாற்பண் - பாலை, மருதம், குறிஞ்சி, செவ்வழி என்பன. நாற்பால் - நாற்குலம். நாற்பால்மரம் - ஆல் அரசு அத்தி இத்தி என்பன. நாற்பான் - நாற்பது. நாற்பொருள் - அறம், பொருள், இன்பம், வீடு என்பன. நாற்பொன் - ஆடகம், கிளிஞசிறை, சாதரூபம், சாம்பூந்தம் என்பன. நாற்றங்கால் - நாற்றுக்காக விதை யிடும் நிலம், தொடக்கம். நாற்றங்கொள்ளுதல் - மணமறிதல். நாற்றம் - மணம், மூக்காலறியும் புலன், சம்பந்தம் தோற்றம். நாற்றவுணவு - அவியுணவு. நாற்றி - நான்கு மடங்கு. நாற்று - பிடுங்கி நடும் பயிர், நெற்று. நாற்றுதல் - தொங்கவிடுதல். நானம் - வாசனைப்பண்டம், கத்தூரி, புழுகு, பூசுவன, வாசனைப்பொடி, நீராடுகை, ஞானம். நானா - பல. நானாவிகாரி - பலவிதமாகப் பரிணமிக்கம் ஒரு பொருள். நானாற்றிசை - பலதிசை. நானிலம் - பலதிசை. நானிலம் - பூமி. நானூல் - பூணூல். நானூறு - நான்குநூறு. நான்கு - நாலு. நான்மணிக்கடிகை - விளம்பி நாகனார் செய்த ஒரு நீதி நூல் 18 கீழ்க் கணக்கு நூலுள் ஒன்று. நான்மணிமாலை - பிரபந்தவகை. நான்மறைமுதல்வர் - அந்தணர். நான்மறையோன் - பிரமன். நான்மாடக்கூடல் - மதுரை. நான்முகன் - பிரமன். நான்மாடக்கூடல் - மதுரை. நான்முகன் - பிரமன். நான்முகன்திருவந்தாதி - திருமழிசை ஆழ்வார் இயற்றிய நாலாயிரப் பிரபந்தப் பகுதி. நான்முலையாயம் - பசுக் கூட்டம். நான்று - காலம். நான்றுகொள்ளுதல் - தூங்கிச் சாதல். நி நி - உறுதி, சமீபம், ஐயம், நிச்சயம், இன்மை, நிலைபேறு, நிறைவு, மிகுதி இவற்றைக் குறிக்கும் ஒரு வடமொழி முதனிலை, ஏழு சுரங்களில் ஓர் எழுத்து. நிகண்டவாதி - சைனரில் ஒருசாரார். நிகண்டன் கலைக் கோட்டுத் தண்டனார் - சங்க காலப் புலவர் (நற். 382). நிகண்டு - அகராதி. நிகமம் - முடிவு, வேதம், நெடுந்தெரு. நிகமாந்ததேசிகர் - வேதாந்த தேசிகர். நிகம் - ஒளி. நிகர - ஓர் உவம உருபு, செலவுகள் கழித்த (Net). நிகரம் - கூட்டம், குவியல், விழுங் குதல், நிகரார் - பகைவர். நிகரிலிசோழன் - இராசராசன் பட்டப் பெயர்களுள் ஒன்று. நிகர் - ஒப்பு, போர். நிகலம் - பிடர். நிகழ்காலம் - தொழில் நடைபெறும் காலம். நிகழ்ச்சி - சம்பவம், நிலைமை. நிகழ்தல் - சம்பவித்தல், செல்லுதல், தங்குதல், நடந்துவருதல், விளங் குதல். நிகழ்த்துதல் - நடப்பித்தல், சொல் லுதல். நிகழ்ப்பு - நிகழ்ச்சி. நிகழ்வு - நிகழ்காலம். நிகளம் - யானைக்காலில் கட்டும் சங்கிலி, விலங்கு. நிகற்பம் - பத்து இலட்சங்கோடி. நிகாதம் - நரகம். நிகாதன் - வஞ்சகன். நிகாயம் - கூட்டம், இடம், நகரம். நிகிதம் - இடமின்மை. நிகிலம் - எல்லாம். நிகுஞ்சம் - குகை. நிகுஞ்சனம் - நாட்டிய நிலைகளுள் ஒன்று. நிகுத்தை - கதவு. நிகும்பலை - இலங்கையில் உள்ள ஒரு காடு. நிகும்பன் - கும்பகருணன் மகன். நிகேதனம் - வீடு, கோயில், நகரம். நிகோதம் - நரகம், விலங்கினம். நிக்கந்தன் - அருகன். நிக்கல் - உலோக வகை. நிக்கல் - முகம்மதியர் கலியாணம். நிக்கிரகம் - அழிக்கை, அடக்குகை, தண்டனை. நிசதம் - தினமும். நிசதி, நிசம் - சத்தியம், உண்மை. நிசனம் - தனிமை. நிசா - இரவு. நிசாகரன் - சந்திரன். நிசாசரன் - அசுரன், சந்திரன். நிசாசரி - அரக்கி, கூகை. நிசாதனம் - இடம், நகரம். நிசாதன் - வஞ்சகன். நிசாபதி - சந்திரன். நிசாரி - சூரியன். நிசார் - நீண்ட காற்சட்டை. நிசாளம் - ஒரு கண் பறை. நிசாறு - நிசார். நிசான் - கொடி. நிசி - இருள், நடு இரவு, இரவு, பொன். நிசிசரன் - சந்திரன். நிசிதம் - கூர்மை. நிசிதன் - அசுரன். நிசித்தம் - விதிக்கு முரணானது. நிசிந்தன் - ஈசன். நிசிதிகை - உண்ணா நோன்பால் உயிர் விடுகை. நிசும்பன் - கொலைஞன். நிசுவாசம் - நிச்சுவாசம். நிசுளாபுரி - உறையூர். நிச்சம் - எப்பொழுதும், நிச்சயம். நிச்சயதாம்பூலம் - மணத்தை உறுதிப் படுத்த மணமகனின் தகப்பன் மணமகள் தகப்பனுக்குத் தாம்பூலமளிக்கை. நிச்சயம் - உறுதி, துணிவு. நிதிப்பலகை - பொற்பலகை. நிதியம் - நிதி. நிதியின்கிழவன் - குபேரன், தலைச் சங்கப் புலவருள் ஒருவர். நித்தத்துவம் - என்றும் உளதாம் தன்மை. நித்தநிமந்தம் - கோயில் நித்தியக் கட்டளை. நித்தம் - என்றும் அழியாதநிலை, ஓமகுண்டம், எப்பொழுதும். நித்தலம் - நித்திலம். நித்தலும், நித்தல் - எந்நாளும். நித்தன் - கடவுள். நித்தியகருமம் - தினசரி கருமங்கள். நித்திய கல்யாணி - அல்லிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு செடி. நித்திய நைமித்திகம் - தினசரி சடங்கும் விசேட சடங்கும். நித்தியப்படி - நாள்தோறும். நித்தியம் - அழிவில்லாதது, நாடோறும். நித்தியவிதி - நித்திய கடமை கூறும் நூல். நித்தியவிதி - மூதேவி. நித்திராலு - தூங்குபவன். நித்திரை - உறக்கம். நித்திலக்கோவை - அகநானூறு என்ற நூலில் மூன்றாவது பகுதி. நித்திலம் - முத்து. நித்தல் - மின்மினி. நித்தை - உமை, தூக்கம். நித்தியசகலம் - ஆன்மா ஞானமின்றி நிற்கை. நிந்தனை - இகழ்ந்து பேசுதல். நித்தாத்துதி - இகழ்தல் பேசுதல். நிந்தித்தல் - இகழ்தல். நிந்தி - இகழ்ச்சி. நிபந்தம் - கோவிற் கட்டளைக்கு விடப்பட்ட சொத்து. நிபந்தனை - கட்டுப்பாடு, ஏற்பாடு. நிபம் - காரணம், வஞ்சனை, கோள். நிபாதம் - இறங்குகை. நிபுடம் - நெருக்கம். நிபீடனம் - மல்வித்தை. நிபுணம் - மிக வல்லோன். நிமந்தக்காரர் - கோயில் வேலைக் காரர். நிமந்தம் - கோயிலூழியம், கோயில் ஏற்பாடு. நிமம் - பிடர்த்தலை. நிமலம் - குற்றமில்லாத கடவுள். நிமலி, நிமலை - பார்வதி. நிமி - சூரிய குல அரசருள் ஒருவன். நிமிடம் - நிமிஷம். நிமிடுதல் - நெருடுதல். நிமிண்டுதல் - கசக்குதல், கிள்ளுதல். நிமிதல் - வாய் நெளிதல். நிமித்தகாரணம் - நிகழ்ச்சிக்கு ஏதுவாகிய காரணம். நிமித்தம் - காரணம். நிமித்தி - சோதிடன். நிமித்திகர் - அரசர் உறுதிச் சுற்றத் தார் ஐவருள் வருவது கூறவல்ல சோதிடர், குறிசொல்பவர். நிமித்து - நிமத்தம். நிமிரல் - நிமிர்கை, சோறு. நிமிருதல் - உயர்தல், நீளுதல், வளர்தல், ஏறுதல், பரத்தல், நடத்தல், ஓடுதல். நிமிர்த்துதல் - வளைவு நீக்குதல், நேர் நிற்கச் செய்தல். நிமளை - கல்வகை (Bismuth) அம்பர். நிமை - இமை. நிமைத்தல் - இமைத்தல். நிம்பத்தின்சனி - வேப்பம் பிசின். நிம்பம் - வேம்பு. நிம்பன் - பாண்டியன். நிம்பிரி - பொறாமை. நிம்பொளம் - முத்துவகை. நிம்மதி - மன அமைதி. நியதம் - எப்பொழுதும். நியதி - செய்கடன், ஒழுக்க விதி வரையறை, எப்பொழுதும். நியதிதத்துவம் - ஒவ்வொர் உயிரும் தன் கன்ம பலனை அனுபவிக்கச் செய்வது. நியதிபண்ணுதல் - நீக்குதல். நியந்தா - கடவுள். நியமச்சூத்திரம் - ஓரிடத்தில் பல விதிகள் நிகழும் நிலையில் குறித்த ஒன்றை வரையறுக்கும் சூத்திரம். நியமம் - செய்கடன், தவம், தூய்மை, தத்துவ மோர்தல், மனமுவந்திருத் தல், தெய்வ, வழிபாடு என்ற விதி முறைகளில் வழுவாதொழுகுகை; விதி, வரையறுக்கை, நிச்சயம், நகரம், கோயில், கடைத்தெரு, வீதி இடம். நியமவிஞ்சனம் - இன்றியமையாச் சாதனம். நியமனம் - நியமிக்கப் பெறுகை, கட்டளை, வகைப்படுகை. நியமித்தல் - அமர்த்துதல், தீர்மா னித்தல், வரையறுத்தல், கட்டளை யிடுதல். நியர் - ஒளி. நியர்ப்புதம் - தேவர்களை உறுப்புக் களில் வைக்கும் கிரியை, வைக்கை. நியாமகன் - நியமிப்பவன். நியாயதுரந்தரன் - நியாயவாதி. நியாயத்தார் - நீதிபதிகள். நியாயத்தீர்ப்புநாள் - உலக முடிவில் கர்த்தர் நியாயத் தீர்ப்புக் கொடுக்கும் நாள். நியாயநூல் - தருக்கநூல். நியாயமலைவு - தருக்க நூலுக்கு மாறான கூற்று. நியாயமுரசு - அரசன் நியாயம் புரிதற்கு அறிகுறியாக முழங்கும் முரசு. நியாயம் - நீதி, நன்னெறி, சட்டம், தருக்க நூல். நியாயர் - தருக்க நூல் வல்லோர். நியாயவாதி - சட்டத்தில் வல்லோன். நியாளம் - ஒருவகைப்பறை. நியுதம் - இலட்சம். நியூனம் - குறைவு. நியோகதர்மம், நிரட்சதேசம் - இராப் பகல் நாழிகை சமமாக உள்ள தேசம். நிரட்சம் - பூமத்தியரேகை. நிரட்சரகுட்சி - எழுத்தறியாதவன். நிரதல் - எப்பொழுதும். நிரதிசயவின்பம் - மோட்சம். நிரத்தல் - பரத்தல், நிரப்புதல், கலத்தல், நெருங்குதல், ஒழுங்கு படுதல். நிரந்தரம் - இடைவிடாமை, எப் பொழுதுமிருக்கை, நெருக்கம், அழிவு, குரங்கு. நிரந்தரன் - கடவுள். நிரபராதி - குற்றமில்லாதவன். நிரப்பம் - நிறைவு, சிறப்பு, சமம், கற்பு. நிரப்பு - வறுமை, நிறைவு. நிரப்புதல் - நிறைத்தல். நிரப்போர் - வறியவர். நிரம்ப - மிகுதியாக. நிரம்பரன் - உடையிலான். நிரம்பவழகியார் - சேதுபுராணம், திருப்பரங்குன்றப் புராணம் முதலிய நூல்களியற்றியவர் (16ம் நூ.). நிரம்பாநோக்கு - இடுக்கிப் பார்க்கும் பாவை. நிரம்பாமென்சொல் - மதலைச் சொல். நிரம்புதல் - நிறைதல், மிகுதல், முடிவுறுதல். நிரம்பையர் தலைவன் - கொங்கு நாட்டிலுள்ள நிரம்பை என்ற ஊர்த் தலைவரான அடியார்க்கு நல்லார். நிரயபாலர் - நரகத்திலுள்ள தலைவர். நிரயம் - நரகம். நிரயவட்டம் - நரகங்கள். நிரல் - வரிசை, ஒப்பு. நிரவதி - எல்லையற்றது. நிரவயவம் - உறுப்பற்றது, பரவுதல், சமனாக்குதல். நிரவுதல் - அழித்தல். நிரனிறுத்தல் - வரிசையாக நிறுத்தல். நிரனிறை நிறுத்தமுறையே சொற்களை அன்னுவயிக்கை. நிராகரணம் - மறுப்பு. நிராகாரம் - உருவின்மை, உணவின்மை. நிராகிருதம் - தள்ளுண்டது. நிராகுலம் - கலக்கமின்மை. நிராசனார் - கடவுளர். நிராசை - ஆசையின்மை. நிராதாரம் - ஆதாரமின்மை. நிராதாரயோகம் - தற்போதமழிந்த உயிர் கடவுளை அடைந்து பற்றற நிற்கும் நிலை. நிராமயம் - நோயற்றது. நிராமயன் - கடவுள். நிராயுதன் - ஆயுதமில்லாதவன். நிராலம்பம் - பற்றுக்கோடின்மை, வெளி. நிராலம்பன் - கடவுள். நிரியாசம் - ஒருவகைப் பிசின். நிரியாணம் - மரணம், யானையின் கடைக்கண். நிரீச்சுரம் - கடவுள் இல்லை என்ற கூறும் மதம். நிருச்சுவாசம் - மூச்சுவிடாதிருக்கை. நிருணயித்தல் - நிச்சயித்தல். நிருதர் - அரக்கர். நிருதி - தென்மேற்றிசைக் காவலன், அரக்கி. நிருத்தம் - நடனம், வேதங்களிலுள்ள சொற்களை ஆராயும் நூல், பற்றின்மை. நிருததமாது - நடக்கக் காணிக்கை. நிருத்தாங்கம் - நிருத்தத்துக்கு வாசிக் கும் மத்தளம், தாளம் முதலியன. நிருத்தாசனம் - தெளிவு. நிருத்தி - சொற்கு உறுப்புப் பொருள் கூறுகை. நிருபதுங்கராகம் - பெரும் பண்வகை. நிருபம் - எழுதி அனுப்பும் கட்டளை, கடிதம். நிருபன் - அரசன். நிருமதம் - யானை. நிருமலம் - மாசு இன்மை. நிருமலன் - கடவுள். நிருமலி - பார்வதி. நிருமாலியம் - நிர்மாலியம் நிருமித்தல் - படைத்தல், தீர்மானித் தல், ஏற்படுத்துதல், ஆராய்தல். நிருவாணம் - நிர்வாணம். நிரூபணம் - ஆராய்ச்சி, அத்தாட்சிப் படுத்துகை. நிரூபித்தல் - உருசுப்படுத்துதல். நிரை - வரிசை, ஒழுங்கு கொடிப் படை, கிராமம், பசுக்கூட்டம், பசு, நிரையசை. நிரைகோடல் - பகைவர் பசுக் கூட் டத்தைக் கவர்கை. நிரைகோட்பறை - நிரை கவரும் போது கொட்டப்படும் பாலைப் பறை. நிறைகோள் - நிரைகோடல். நிரைக்கழு - மதிற் கதவுகளுக்குக் காவலாக வைக்கப்படும் ஒரு வகை முட்கழு. நிரைதல் - வரிசையாதல், முறைப் படுதல். நிரைத்தல் - ஒழுங்காக நிறுத்துதல், பரப்புதல், கோத்தல், திரளுதல், கூட்டுதல், தொடர்ந்து வருதல். நிரைப்பசை - முற்றியலுகரத்தாலேனும் குற்றி யலுகரத்தாலேனும் தொடரப் படும் நிரை அசை. நிரைபு - நிரை அசை. நிரைபெயர்த்தல் - நிரைமீட்டல். நிரையம் - நரகம். நிரோட்டகம், நிரோடியம் - இதழிசைந்து பிறவா எழுத்துக் களாலாகிய செய்யுள். நிரோதனை - புலடைக்கை. நிர்க்கந்தவாதி - நிகண்டவாதி. நிர்க்குணன் - கடவுள். நிர்க்குண்டி - நொச்சி. நிர்ச்சரம் - சுடு பாறையில் கிடத்தல், மயிர் பறித்தல் முதலிய சைனர் விரதம். நிர்ணயித்தல் - முடிவுபடுத்துதல். நிர்த்தமாராயன் - நட்டுவர் தலைவன். நிர்த்தம் - நிருத்தம். நிர்த்துகம் - கியாழம், கசாயம். நிர்த்தூளி - சர்வநாசம். நிர்ப்பந்தம் - பலவந்தம். நிர்மலம் - மாசிமை. நிர்மலன் - கடவுள். நிர்மாணம் - படைத்தல், ஏற்பாடு. நிர்மாலியம் - பூசித்துக் கழித்த பொருள். நிர்மூடன் - முழுமூடன். நிர்மூலம் - முழு நாசம். நிர்வகித்தல் - காரியம், நடப்பித்தல், சகித்தல். நிர்வாகசபை - காரியங்களைச் செய்து முடிக்கும் சபை. நிர்வாகம் - நடப்பிக்கை, பொறுப்பு, பராமரிப்பு. நிர்வாணதீட்சை - மூன்றாம் தீட்சை. நிர்வாணம் - பௌத்தரின் மோட்ச நிலை, அம்மணம். நிர்விகற்பக்காட்சி - பொருளின் உண்மையை மாத்திரம் உணரும் உணர்வு. நிர்விகற்பசமாதி - கடவுள் வேறு தான் வேறு என்ற உணர்வற்ற யோக நிலை. நிர்விகற்பம் - வேறுபாடு இன்மை. நிலக்கடலை - வேர்க்கடலை. நிலக்கரி - நிலத்திலிருந்து எடுக்கும் கரி. நிலக்காட்சி - Landscape. நிலக்கீல் - தார் போன்ற பொருள் (As Phalt). நிலங்கு - பெரிய காடை. நிலத்தாமரை - உரோசாக் செடி. நிலத்தி - நுளம்பு. நிலத்துளக்கு - பூகம்பம். நிலத்தேவர் - பிராமணர். நிலநீர் வாழ்வன - நிலத்திலும் நீரிலும் வாழக்கூடிய உயிர்கள் (Amphibians). நிலத்தருதிருவிற்பாண்டியன் - தொல்காப்பியம் அரங்கேற்றிய காலத்துப் பாண்டியன். நிலந்தருதிருவினெடியோன் - நிலந்தரு திருவிற் பாண்டியன். நிலப்பனை - செடிவகை. நிலப்பூ - புதர்ப்பூ. நிலப்பெயர் - நிலம்பற்றி ஒரு வனுக்கு இடும் பெயர். நிலமகள் - பூமாதேவி. நிலமகன் - செவ்வாய். நிலமயக்கம் - திணை மயக்கம். நிலமளந்தோன் - திருமால். நிலம் - தரை, மண், உலகு, பதவி, தானம். நிலயம் - தங்குமிடம், கோயில், மருத நிலத்தூர், கூத்து. நிலவரண் - நீரும் நிழலுமில்லாத மருதநில அரண்வகை. நிலவருந்தி - சகோரம். நிலவலயம் - பூமண்டலம். நிலவறை - பூமிக்குள் அமைத்த அறை. நிலவாசி - நிலத்தன்மை. நிலவீரியம் - பூநீறு. நிலவு - நிலா. நிலவுதல் - நிலைத்திருத்தல், வழங் குதல், ஒளிவிடுதல். நிலவேர் - நாங்குழுப் புழு. நிலா - சந்திரன், நிலவு, ஒளி. நிலாக்கல் - சந்திரகாந்தம். நிலாத்திரி - மத்தாப்பு. நிலாமணிக்கல் - அரைவட்டமான சந்திரகாந்தக் கல் (Moonstone). நிலாமண்டபம், நிலாமாடம் - நிலாமுற்றம். நிலாமுகி - சந்திரனின் கிரணங்களை உண்டு வாழும் புள். நிலாமுற்றம் - நிலாவில் இன்பம் துய்க்கும் மாடம். நிலாவுதல் - தியானித்தல், ஒப்பாதல். நிலுவை - தங்குகை, பாக்கி. நிலை - நிற்கை, உறுதி, தன்மை, நிலைமை, தங்குமிடம், தட்டு, தூண், ஆச்சிரமம், குலம், முகூர்த்தம், நீர்நிலை, அம்பெய்யும் நிலை. நிலைகுலைதல் - நெறிதவறுதல், சிதறுண்ணுதல். நிலைகோலுதல் - இடம் தேடுதல். நிலைக்கண்ணாடி - நாட்டப்பட்ட பெரிய முகம் பார்க்கும் கண்ணாடி. நிலைக்கதவம் - நிலையிலமைந்த பெருங்கதவம். நிலைக்களம் - தங்குமிடம். நிலைக்கால் - கட்டில் முதலிய வற்றின் கால். நிலைக்கிடை - நாட்டியத்தில் உட்காரும் நிலை. நிலைக்குத்து - நிறுதிட்டம் (Vertical). நிலைச்செரு - இடையறாப் போர். நிலைதிரிதல் - முறைகெடுதல். நிலைத்தாணம் - கோயில். நிலைத்திணை - அசைவற்ற பொருள். நிலைத்திருவமிர்து - கோயிலில் தினசரி நிவேதனத்திற்கு விடப்பட்ட நிலையான தருமம். நிலைத்துறை - வழக்கமாக இறங் கும் நிலை, ஆழமுள்ள நீர்த்துறை. நிலைத்தேர் - அலங்காரம் செய்து நிறுத்தப்படும் தேர். நிலைநாட்டுதல் - தாபித்தல். நிறைநிற்றல் - கொள்கையில் உறுதியாக நிற்றல். நிலைநீர் - ஓட்டமற்ற நீர், கடல். நிலைபரம் - நிலைமை. நிலைபெறுதல் - திடமாகத் தங் குதல், துன்பமற்ற நிலையடைதல். நிலைபேறு - உறுதி, நிலையிடம். நிலைபொலியூட்டு - நிலையான வட்டி. நிலைமடக்கு - செய்யுள் அணி வகை. நிலைமண்டல ஆசிரியப்பா - சீர்கள் தம்மிலொத்த அடி களுடைய ஆசிரியப்பா. நிலைமை - தன்மை, வாழ்விலுள்ள நிலை, திண்மை, புகழ், மோட்சம். நிலைமொழி - முதல் நிற்கும் சொல். நிலையங்கி - நீண்ட சட்டை. நிலையம் - நிலையான இடம். நிலையல் - நிற்கை. நிலையாமை - உறுதியின்மை. நிலையாறுதல் - அமைதியுறுதல். நிலையிடுதல் - நிலைநிறுத்துதல், அளந்தறிதல். நிலையியற்பொருள் - நிலைத் திணை. நிலையுதல் - நிலைபெறுதல். நிலையூன்றுதல் - உறுதிப்படல். நிலையெடுத்தல் - நிலைபெற்று விளங்குதல். நிலைவரம் - நிலைபேறு, நிச்சயம். நிலைவரி - இசைப்பாட்டு வகை. நிலைவிளக்கு - குத்துவிளக்கு. நிவகம் - கூட்டம். நிவத்தல் - உயர்தல், வளர்தல், படர்தல், மேலாதல், தோன்றுதல். நிவந்தம் - கோயில், கோயில் தொண்டு, வேலைத் திட்டம். நிவப்பு - உயரம். நிவப்புத்தூக்கு - ஐஞ்சீருள்ள இசைப் பாட்டு. நிவம் - தோண்மேல். நிவர்தல் - உயர்தல். நிவா - ஓர் ஆறு. நிவாசம் - தெய்வம் அல்லது பெரியார் வாழிடம். நிவாரணம் - தடுக்கை, துன்ப நீக்கம். நிவிர்த்தி - விடுதலை, துறவு. நிவிர்த்திகலை - ஆன்மாக்களைப் பாசத்தினின்றும் விடுவிக்கும் கலை. நிவேசனம் - இடம், வீடு, ஊர். நிவேதனம், நிவேத்தியம் - கட வுளுக்குப் படைக்கும் அமுது. நிழத்துதல் - முன்னுள்ள நிலையி னின்றும் நுணுகுதல், தின்றழித்தல், இல்லையாக்குதல். நிழலி - நீதி, காற்று, நோய். நிழலிடுதல் - ஒளிவிடுதல், நிழல் கொடுத்தல், பிரதிபலித்தல். நிழல் - சாயை, பிரதி பிம்பம், ஒளி, குளிர்ச்சி, நீதி, இடம், செல்வம். நிழல்காண்மண்டிலம் - கண்ணாடி. நிறமாலை - சூரிய ஒளியில் தோன்றும் நிறங்கள் (Spectrum). நிறமாலைகாட்டி - (Spectro scope). நிறமி - நிறம் கொடுப்பது (Pigment). நிறம் - வர்ணம், இயல்பு, ஒளி, புகழ், இசை, மார்பு, நடுவிடம், உடல், தோல். நிறவாளத்தி - இசையின் ஆலாபன வகை. நிறுதிட்டம் - நேர் நிற்கை. நிறுத்தசொல் - நிலைமொழி. நிறுத்தலலளவை - நிறைஅளவு. நிறுத்தல் - தூக்குதல், தீர்மானித்தல், படைத்தல், வைத்தல். நிறுத்துதல் - நிமிர நிற்கச் செய்தல், தழுவிக்கொள்ளுதல், செய்யாது விடுதல், நிலைநாட்டுதல், இருத் துதல். நிறுபூசல், நிறைபூசல் - மும்மரம். நிறுவல் - சான்று (Proof). நிறுவுதல் - நிலைநாட்டுதல். நிறை - பூர்த்தி, மாட்சிமை, நீர்ச்சால், நிறுக்கை, துலாராசி, எடை, நூறு பலம்கொண்ட அளவு, வரையறவு, நிறுத்துகை, மனதைக் கற்பு வழியில் நிறுத்துகை, ஆடூஉக்குணம் நான்கனுள் காப்பன காத்துக் கடிவனகடியும் திண்மை, மன அடக்கம், கற்பு, விரதம், வலி, அறிவு, இரகசியம், அழிவின்மை, ஒரே சிந்தை. நிறைகல் - படிக்கல். நிறைகுடம் - பூரண கும்பம். நிறைகோல் - தராசுக்கோல். நிறைதல் - நிரம்புதல், மிகுதல். நிறைத்தல் - நிரப்புதல். நிறைநரம்பு - ஏழு சுரமுள்ள பண். நிறைநாழி - மங்கலக் குறியாக நெல் வைத்து நிரம்பிய நாழி. நிறைநீர்வேலி - பேய்த்தேர், உடை குளம். நிறைமதி - பூரண சந்திரன், முழு நிலா. நிறைமொழி - பலிக்கும் சொல், பயன்கள் தவறாத வாக்கு. நிறைய - நிரம்ப. நிநைறையவை - எல்லாப் பொருள் களையும் அறிந்து எதிர்வரும் மொழிகளை எடுத்துரைக்க வல்லவர் கூடிய சபை. நிறையழிதல் - கற்பழிதல், யானை மதம் பிடித்தல். நிறையறிகருவி - கட்டளைக்கல், தராசு. நிறையுரை - நிறையும் மாற்றும். நிறையெடுத்தல் - நிறுத்துதல். நிறைவு - பூரணம், மிகுதி, திருத்தி, மகிழ்ச்சி, மாட்சிமை, மோட்சம், நிரம்புதல். நிறைவேறுதல் - முற்றுதல். நிறைவேற்றுதல் - முற்றச்செய்தல். நிற்பது - தாவரம். நிற்புதம் - நியர்ப்புதம். நிற்றல் - நிற்கை. நினவ - உன்னுடையன. நினைதல் - எண்ணம், ஆலோசனை, நோக்கம், தியானம், வருத்தம். நினைவுப்பொருள் - எண்ணப் பொருள், மிகுதிப்பொருள், அழி பாடு (Remains). நின்மலம் - மாசு இன்மை. நின்மலன் - கடவுள், அருகன். நின்மலி - வில்வம். நின்மாலியம் - நிர்மாலியம். நின்மிதி - தொடக்கம். நின்மூடன் - முழுமூடன். நின்றசீர்நெடுமாறன் - நெடுமாறநாயனார். நின்றதிருக்கோலம் - திருமாலின் நின்றருளும் திருக்கோல் நிலை. நின்றது - நிலைத்த பொருள், தாவரம், எஞ்சியது. நின்றாடல் - நின்றாடும் அல்லியம், கொட்டி, குடை, குடம், பாண்டரங் கம், மல், என்னும் தெய்வக் கூத்து நின்றாற்சிணுங்கி - சிறியா நங்கை. நின்றாற் போல - திடீரென. நின்று - எப்பொழுதும், ஐந்தாம் வேற்றுமைப் பொருள்பட வரும் ஓரிடைச் சொல். நின்றுவற்றுதல் - சொல் அல்லது தொடர் இருந்தும் பயனிலதாதல். நின்றேத்துவார் - நின்றுகொண்டு அரசரின் புகழ்பாடுவோர். நின்றை - அசைநிலை, திருநின்றவூர். நின்னாமன் - சிவன். நீ நீகம் - தவளை. நீகாரம் - பவனி. நீகான் - மாலும். நீக்கம் - நீங்குகை, நீளம், முடிவு. நீக்கல் - அழிக்கை. நீக்கு - விலக்கு. நீக்குதல் - ஒழித்தல், கழித்தல், ஒதுக்குதல். நீங்கள் - முன்னிலைப் பன்மைப் பெயர். நீங்குதல் - பிரிதல், ஒழிதல். நீசக்கிரகம் - இராகுவும் கேதுவும். நீசத்தானம் - ஒரு கிரகத்தின் உச்சிக்கு ஏழாவதான இடம். நீசபங்கராயோகம் - நன்மை பயக்கும் யோகங்களுள் ஒன்று. நீசம் - இழிவு, தாழ்ச்சி, கிரகம், வலியிழந்து நிற்கும் நிலை, பொருத்தமில்லாத ஆண் பெண் களின் புணர்ச்சி. நீசன் - இழிந்தோன். நீச்சு - நீந்துகை, வெள்ளம் மீனின் நாற்றம். நீடம் - பறவைக்கூடு. நீடித்தல் - நீளுதல். நீடு - வியாபகம், நிலைத்திருக்கை. நீடுதல் - நீளுதல், பரத்தல், நிலைத் தல், தாமதித்தல், கெடுதல், தேடுதல். நீடுநினைந்திரங்கல் - கூட்டம் பெறாது காலம் நீடிக்கத் தலைவன் தலைவியை நினைந்து இரங்குத லாகிய அகப்பொருள் துறை. நீடுநீர் - தீர்த்தநீர். நீடூழி - நெடுநாள். நீட்சி - நீட்டம். நீட்டலளவை - நீட்டி அளக்கும் முழம் அல்லது காதம் போன்ற அளவு. நீட்டல் - நீளச்செய்தல், தலைவி மயிரைச் சடையாக்குகை. நீட்டாள் - வேலையாள். நீட்டித்தல் - நீளச்செய்தல், காலம் தாழ்தல். நீட்டியளத்தல் - நீளச்செய்தல், காலம் தாழ்தல். நீட்டியளத்தல் - கோல் முதலிய கருவி கொண்டு அளத்தல். நீட்டு - நீளம், தூரம், திருமுக ஓலை. நீட்டுதல் - நீளச்செய்தல், கொடுத்தல், தாமதித்தல். நீட்டோலை - திருமுக ஓலை. நீணாளம் - நீண்ட புகைக் குழாய். நீணிதி - பெரிய செல்வம். நீணிலை - ஆழம். நீணுதல் - நெடுந்தூரம் செல்லுதல். நீணெறி - நீண்டவழி. நீண்டவன் - திருமால். நீண்முடி - அரசன். நீண்மை - பழமை. நீண்மொழி - வஞ்சினம், சபதம். நீதம் - நீதி. நீதன் - நீதிவான், நீசன். நீதி - நியாயம், ஒழுக்க நெறி, இயல்பு, நீதிநூல், உபாயம். நீதிநெறி - நியாயம், ஒழுக்க நெறி, இயல்பு, நீதிநூல், உபாயம். நீதிநெறிவிளக்கம் - குமரகுருபரர் இயற்றிய ஒருநீதி நூல். நீதிமன்றம் - நீதி விசாரணைத்தலம். நீதினி - நியாயந் தவறாதவள். நீத்தம் - வெள்ளம், ஆழம், கடல், மிகுதி. நீத்தல் - துறத்தல், பிரிதல். நீத்திடுதல் - பெருக்கிடுதல், மிகுத் திடுதல். நீத்து - நீந்துகை, வெள்ளம். நீந்தப்பெய்தல் - மிகுதியாகக் கொடுத்தல். நீந்து - கடல். நீந்துதல் - நீரில் மிதந்து செல்லுதல், கடத்தல், பெருகுதல், கழிதல். நீந்துபுனல் - ஆழமுள்ள நீர். நீபம் - கடம்பு, உத்திரட்டாதி, காரணம். நீமம் - ஒளி. நீம் - முன்னிலைப் பன்மைப் பெயர். நீயான் - மாலுமி. நீயிர் - முன்னிலைப் பன்மைப் பெயர். நீரகம் - பூமி, கச்சியிலுள்ள திருமால் கோயில்களுள் ஒன்ற. நீரடைப்பு - மூத்திரத்தடை நோய். நீரட்டுதல் - தாரை வார்த்தல். நீரணிமாடம் - நீர்மாடம். நீரதம் - நீரற்றது. நீரம் - நீர். நீரரண் - நீர் நிறைந்துள்ள அகழ். நீரரமகள் - நீரில் வாழும் தெய்வப் பெண். நீரவன் - அறிவுடையோன். நீரழிவு - நீரழிவு நோய். நீராகாரம் - பழஞ்சோற்றில் கலந்த நீர். நீராசனம், நீராசனை, நீராஞ்சனம் - நீராரத்தி. நீராடல் - நீர் விளையாட்டு, நீராட்டு. நீராட்டணி - நீர்க்கோலம். நீராணி - பழைய காலத்து நீர்வரி. நீராணிக்கன் - ஏரி மதகின் காவற் காரன். நீராத்திரை - நீர் விழாவுக்குச் செல்லும் யாத்திரை. நீராம்பல் - ஆம்பல் மலர். நீராரத்தி - மஞ்சள் நீர் ஆராத்தி. நீராரை - கீரை வகை. நீராவி - நீர் வெப்பத்தால் மாறிய ஆவி, தடாகம். நீராவி மண்டபம் - நீராவி மண்டபம். நீராளம் - நீர்த்தன்மை, நீர்மிகுதி. நீரழிச்சல் - நீரிழிவு. நீரிழிபிரமேகம் - கடுமையான வெட்டை நோய். நீரிழிவு - சிறுநீர் சர்க்கரைத்தன்மை கலந்து மிதமிஞ்சி இறங்கும் நோய். நீருருள் - தண்ணீரேற்றி உருட்டும் ஒரு வகைக் கருவி. நீரூறி - கீழாநெல்லி. நீரெட்டிமுத்து - பேய் ஆமணக்கு. நீரோடை - நீரோடுகால். நீரோட்டம் - ஓடும் நீர். நீர் - தண்ணீர், கடல், குணம். நீர் குடித்தல் - சூளுறுதலின் அறிகுறியாக நீர் குடித்தல். நீர்க்கடவுள் - வருணன். நீர்க்கடன் - பிதிரர் பொருட்டுச் செய்யும் கிரியை. நீர்க்கடுப்பு - எரிச்சலோடு துளிதுளி யாய் நீர் இறங்கும் நோய். நீர்க்கண்டகி - நீர்முள்ளி. நீர்க்கம்மல் - நோய்வகை. நீர்க்கால் - வாய்க்கால். நீர்க்காவி - ஆடையில் பற்றும் செந்நிறம். நீர்க்கொழுந்து - நீரோட்டம். நீர்க்கோலம் - நீர்விளையாட்டில் கொள்ளும் உடை அணி முதலியன, நீரில் எழுதும் வரை. நீர்க்கோவை - நீரால் உண்டாகும் உடம்பு வீக்கம். நீர்க்கோழி - நீரில் வாழும் கோழி. நீர்ச்சால் - தண்ணீர் மிடா. நீர்ச்சாவி - பயிர்ச்சாவி. நீர்ச்சித்திரம் - நீரடி முத்து. நீர்ச்சுழி - தண்ணீரில் உண்டாகும் வழி. நீர்ச்செறும்பு - மூத்திர அடைப்பு. நீர்ச்சோறு - நீர் கலந்து பழைய சோறு. நீர்தலைப்படுதல் - சந்தி செய்தல். நீர்தொடுதல் - சிறுநீர் பெய்தல். நீர்த்தடை - அலைவேகத்தைத் தடுக்கும் அணை (Break water). நீர்த்தல் - நீராதல். நீர்த்தித்திப்பு - நீரிழிவு. நீர்த்தூம்பு - மதகு. நீர்த்தெளியான் - தரைக்கு நீர் தெளித்துச் சுத்தி செய்யும் வேலை யாள். நீர்நக்கல் - ஏரியின் உள்வாய், நீர் தேங்கும் எல்லையிடம். நீர்நாடு - சோழநாடு. நீர்நாய் - நீரில் வாழ் விலங்கு வகை (Ottter). நீர்நாள் - பூராடம். நீர்நிலம் - நன்செய். நீர்நிலவாழ்வன - Amphiba. நீர்நிலை - ஏரி குளம் முதலியன, ஆழம். நீர்நிறக்காக்கை - நீர்க்காக்கை. நீர்நெட்டி - கிடைப்பூண்டு வகை. நீர்பிரிதல் - கோபித்தல். நீர்போக்கி - மதகு. நீர்ப்படை - நடுகல்லை நீராட்டித் தூய்மை செய்தலைக் கூறும் புறத்துறை. நீர்ப்பண்டமாதல் - உருகுதல். நீர்ப்பாசனம் - நீர்ப்பாய்ச்சுதல் (Irrigation). நீர்ப்பத்தர் - தூம்பு. நீர்ப்பாசிக அமிலம் - Hydro chloric acid. நீர்ப்பாடு - கழிச்சல்நோய். நீர்ப்பாய்ச்சல் - தண்ணீர் விடுகை. நீர்ப்போர் - நீரில் போலிப்போர் புரியும் விளையாட்டு. நீர்மட்டம் - கடல் மட்டம், கொத்தன் கருவி. நீர்மாடம் - பள்ளியோடம் என்னும் தோணி. நீர்மேல்நெருப்பு - அந்தரத் தாமரை. நீர்மேலெழுத்து - தண்ணீரில் எழுதும் எழுத்து. நீர்மை - நிரின் தன்மை, தன்மை, அழகு நிலைமை, ஒளி. நீர்மோர் - நீரோடுவடிய மோர். நீர்யானை - கிப்பப்பட்டமஸ் என்னும் விலங்கு (Hippopo tamus). நீர்வண்ணம் - நீர்ச்சாயம் (Water Colour). நீர்வரைப்பு - உலகம். நீர்வலயம் - பூமி. நீர்வார்த்தல் - தாரைவார்த்துக் கொடுத்தல். நீர்வாரி - யானைக் காலில் கட்டும் சங்கிலி. நீர்விழவு - நீர் விளையாட்டு. நீர்விளையாட்டு - நீரில் ஆடிக் களித்தல். நீர்வீசுகருவி - நீர் விளையாட்டில் நீரை வீச உதவும் கருவி. நீர்வேட்கை - தாகம். நீலகண்ட சிவாசாரியார் - பிரம சூத்திரத்துக்குச் சிவபரமாகப் பாடியம் செய்தவர். நீலகண்டபாடியம் - பிரமசூத்தி ரததுக்கு நீலகண்டாசிரியர் செய்த உரை. நீலகண்டம் - விடம் தங்கிய சிவனின் கண்டம், மயில். நீலகண்டன் - சிவன். நீலகண்டி - துர்க்கை, பாம்பின் நச்சுப் பற்களுள் ஒன்று. நீலகிரி - இளாவிருத வருடத்துக்கு வடக்கிலுள்ள மலைத்தொடர், கோயம்புத்தூருக்கு வடக்கிலுள்ள மலை. நீலகேசி - ஒரு சைன நூல் (7ம் நூ.). நீலகேசித்திரட்டு, நீலகேசித் தெருட்டு - நீலகேசி. நீலதரு - தென்னை. நீலநாகம் - கருநாகம். நீலநெல் - கருநெல். நீலப்பறவை - மயில். நீலமணிவோன் - முருகக் கடவுள். நீலமேகம் - கார்மேகம். நீலமேகன் - உருத்திரருள் ஒருவன். நீலம் - நீலநிறம், நவமணியிலொன்று, கறுப்பு, இருள், கருங்குவளை, நீல ஆடை, விடம், கண்ணுக்குத் தீட்டும் மை, நீலகிரி, பனை, பழைய நாணய வகை. நீலவண்ணன் - திருமால். நீலவருணம் - தீப்பொழியும் மேகம். நீலன் - சனி, கொடியவன், ஒரு வானர வீரன். நீலாஞ்சனக்கல் - கறுப்புக்கல். நீலாம்பரன் - பலபத்திரன். நீலாம்புரி - ஒர் இராகம். நீலி - கருநிறம், துர்க்கை, பார்வதி, ஒரு பெண்பேய், அவுரி, கொடி யவள், பாம்பின் நச்சுப் பற்களுள் ஒன்று. நீலிக்கண்ணீர் - பொய் அழுகை. நீலிதம் - நீலநிறமானது. நீலோற்பலம் - கருங்குவளை. நீல் - நீலம், கறுப்பு, கருங்குவளை, வாதக் கூறுள்ள நோய். நீவரம் - நாடு. நீவாரம் - குளநெல். நீவி - கொய்சகம், ஆடை, பொருள் முடிச்சு, மகளிர் ஆடை உடுக்கும் போது இடையில் முடியும் முடிச்சு. நீவியம் - கொய்சகம். நீவிர் - நீங்கள், முன்னிலைப் பன்மை. நீவுதல் - தடவுதல், கோதுதல், துடைத்தல், பரப்புதல், பூசுதல், கைவிடுதல் கடத்தல், அறுத்தல். நீழல் - நிழல், காற்று. நீளம் - நெடுமை, தூரம், பறவைக்கூடு. நீளாதேவி - திருமால் தேவியருள் ஒருத்தி. நீளி - நெடியது. நீளிடை - நெடிய தூரம், நெடுவழி காடு. நீளுதல் - நீளமாதல், ஓடுதல். நீளெரி - நெடிய தூரம், நெடுவழி, காடு. நீளுதல் - நீளமாதல், ஓடுதல். நீளெரி - பெருநெருப்பு, மிகுவெப்பம். நீளை - காற்று, நீளாதேவி. நீள் - நீளம், நெடுங்காலம், ஆழம். நீள்சதுரம் - செவ்வகம் (oblong). நீறாடி - நீறுபூசிய சிவபெருமான். நீறாடுதல் - விபூதி, அணிதல். நீறு - சாம்பல், விபூதி, புழுதி, சுண் ணாம்பு. நீறுதல் - சுண்ணமாதல், அழிதல். நீறுபூத்தல் - சாம்பல் நிறம் பிடித்தல். நீற்றறை - சுண்ணாம்புக் காளவாய். நீற்றுதல் - உலோகங்களை நீறாக் குதல். நீற்றுக்கோயில் - விபூதிப்பை. நீற்றுப்பூசணி - சாம்பற்பூசணி. நு நுகத்தடி - நுகம். நுகத்தாணி - நுகத்தடியை ஏர்க் காலில் இணைக்கும் ஆணி. நுகம் - எருதுகளின் கழுத்தில் பூட்டும் மரம், பாரம், வலிமை, சோதிநாள் மகர நாள், கதவுக்குக் காப்பாக இடப்படும் கணைய மரம். நுகர்ச்சி, நுகர்வு - அனுபவம், உண்ணுகை, வேதனை. நுகர்தல் - அனுபவித்தல், அருந்து தல், செய்தல். நுகும்பு - மடல் விரியாத குருத்து, பனை ஓலை. நுகைதல் - தளர்தல். நுகைவு - தளர்வு. நுகைத்தல் - தளரச் செய்தல். நுங்கள் - நீங்கள் என்பது வேற்றுமை உருபை ஏற்கும் போது அடையும் உருவம். நுங்கு - இளம் பனங்காயின் உள்ளீடு. நுங்குதல் - விழுங்குதல், ஆரப் பருகுதல், கைக்கொள்ளுதல், கெடுதல். நுங்கை - உன் தங்கை, உன்தாய். நுகப்பு - மகளிர் இடை. நுசை - சிவதை வேர். நுடக்கம் - துவட்சி, தள்ளாட்டம் கூத்து. நுடக்குதல் - கழுவுதல், துவட்டுதல், மாய்த்தல், கரைத்தல். நுடங்கு - அசைவு. நுடங்குதல் - அசைதல், துவளுதல், கூத்தாடுதல், நுட்பமாதல், ஈடு படுதல். நுட்பம் - நுன்மை, கரந்துறை கோள்களுள் ஒன்று, நுண்ணிய ஆராய்ச்சி தோன்ற எழுதப்பட்ட உரை. நுணக்கம் - கூர்மை, வாட்டம். நுணங்கு - நுட்பம், பொடி, நுண்மை, நுடக்கம், தேமல். நுணங்குதல் - நுட்பமாதல், வளைதல், செறிதல். நுணம், நுணலை - தவளை. நுணவு - நுணா. நுணவை - எள்ளுருண்டை, நெல் முதலியவற்றின் மா, நுணா. நுணா - மஞ்சணாறிமரம். நுணாவுதல் - தடவித்தெரிதல். நுணிதல் - தேய்த்தல். நுணித்தல் - நுணுகி ஆராய்தல். நுணுகுதல் - நுட்பமாதல். நுணுக்கம் - நுண்மை, கூரறிவு, நுட்பம், பொருளடக்கம். நுணுக்குதல் - நுண்மை, கூரறிவு, நுட்பம், பொருளடக்கம். நுணுக்கு - நுண்மையானது. நுணுக்குதல் - நுண்மை செய்தல், சிதைத்தல், யாழில் ஓசை எழுப்பு தல், கூர்மையாக்குதல். நுணுங்கு - பொடி. நுணுங்குதல் - மெல்லப்பாடுதல். நுண்ணாக்கை - சூட்சுமசரீரம். நுண்ணிடை - பெண். நுண்ணிமை - நுண்மை. நுண்ணியான் - கூரிய அறிவுடையான் நுண்ணுணர்வு - கூரியபுத்தி நுண்ணுயிர் - பாக்டீரியா (Bacteria). நுண்ணேலம் - வாசனைப் பண்டம். நுண்பு - நுண்மை. நுண்பொருள் - நுட்பமான கருத்து. நுண்மணல் - சிறுமணல். நுண்மம் - பாக்டீரியா. நுண்மயிர் - விலங்குத் தோலிலுள்ள நுண்மயிர் (Fur). நுண்மை - நுட்பம், மிகுதி. நுதம் - நீராடுந்துறை. நுதம்பு - கள், சோறு. நுதம்புதல் - நனைந்து இளகுதல். நுதலிப்புகுதல் - முதலில் கூறிப்பின் விளக்குதல். நுதலுதல் - கருதுதல், கூறுதல் தோற்றுவித்தல். நுதல் - நெற்றி, புருவம், மேலிடம். நுதற்கடிகை - நெற்றி அணி. நுதற்சூட்டு - நெற்றியணி. நுதனாட்டி - துர்க்கை. நுதி - கூர்மை, முன்பு. நுதித்தல் - அடைசுதல். நுதிவிழுதல் - பஞ்சாங்க வாக்கிய கணனத்தில் ஏற்படும் பிழை. நுதுத்தல் - அவித்தல், அழித்தல், நீக்குதல். நுந்தாவிளக்கு - நந்தா விளக்கு. நுந்துதல் - தள்ளுதல், தூண்டுதல். நுந்தை - உன்தந்தை. நுமன் - உம்மைச் சார்ந்தவன். நுமையன் - உன் தமையன். நும் - எல்லீர் என்ற முன்னிலைப் பெயர் வேற்றுமை உருபு ஏற்கும் போது கொள்ளும் சாரியை. நும்பி - உன் தம்பி. நும்முன் - உன்முன்னோன், உன் அண்ணன். நுரை - நீர்க்குமிழின் கூட்டம், வெண்ணெய். நுரையீரல் - மூச்சுப் பை. நுவணம் - நுட்பம், இடித்த மா, தினை, கல்வி நூல். நுவலாச்சொல் - ஒருசொல்லைப் பழித்தது போற் புகழும் சொல். நுவலாநுவற்சி - ஒட்டணி, குறிப் பெச்சம். நுவலுழித்தேற்றம் - ஊரிலுள்ளார் கண்டு மகிழ்ந்துரைத்தற்குக் காரணமான நிரைமீட்டோர் வரவு உணர்த்தும் புறத்துறை. நுவல் - சொல். நுவல்வோன் - ஆசிரியன். நுவறுதல் - அராவுதல். நுகர்ச்சி - கரகம். நுவற்சி - சொல்லுகை. நுவ்வை - உன் தங்கை. நுழுதுதல் - முடித்தல். நுழுந்துதல் - முடித்தல், நுழைதல். நுழை - சிறுவழி, குகை, துவாரம், நுண்மை. நுழைதல் - புகுதல், நுண்மையாதல், கடத்தல். நுழைத்தல் - புகுத்துதல். நுழைபுலம் - நுண்ணிய அறிவு. நுழைவு - நுண்மை, நுட்ப அறிவு. நுளம்பு - பெருங் கொசுகு. நுளை - வலைச்சாதி. நுளைச்சி - செம்படவப் பெண். நுறுககுதல் - கொடியாக்குதல். நுறுங்கு - குறுநொய். நுறுங்குதல் - பொடியாதல், அழிதல். நுனி - முனை, நுண்மை. நுனித்தல் - கூர்ந்து நோக்குதல், குணம். நுனிப்பு - கூர்ந்து அறிகை. நுனை - முனை. நூ நூ - எள், யானை. நூக்கம் - உயரம். நூக்கு - ஈட்டிமரம். நூக்குதல் - தள்ளுதல், ஊசலாடுதல், அசைத்தல், தூண்டுதல், எறிதல், முறித்தல், நீக்குதல், பரிகாரம் செய்தல், சாத்துதல், பொடியாக் குதல். நூங்கர் - தேவர். நூங்கு - பெருமை. நூதனம் - புதியது. நூபம் - எருது. நூபுர கங்கை - சிலம்பாறு. நூபுரம் - சிலம்பு. நூர்தல் - அவிதல். நூலழகு - சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல், நவின் றோர்க்கு இனிமை, நன்மொழி புணர்த்தல் ஓசையுடைமை, ஆழமுடைத் தாதல், முனையின் வைப்பு, உலகம் மலையாமை, விழுமியது பயத்தல், விளங்கு உதாரணத்தாகுதல் என் னும் பத்து அழகுகள். நூலறி புலவர் - அமைச்சர். நூலறிவு - கல்வி அறிவு. நூலாக்கலிங்கம் - பட்டாடை. நூலாசிரியன் - நூலாக்கியோன். நூலார் - கற்றார். நூலில்லாமாலை - ஓர் கழுத்தாணி. நூலிழத்தல் - கைம்மையாதல். நூலிழை - ஓர் இழை நூல். நூலுரைப்போர் - உபாத்தியாயர். நூலெச்சம் - நூல் உரை வகை. நூலேணி - நூற் கயிற்றார் அமைத்த ஏணி. நூலோர் - நூல்செய்தோர், கற்றோர், மந்திரிகள். நூல் - பஞ்சுநூல், புத்தகம், பூணூல், ஆயுதவகை, மங்கல் நாண், பழைய நாடகத் தமிழ் நூல்களுள் ஒன்று, ஆலோசனை. நூல்போதல் - கல்வியில் தேர்ந்தவ னாதல், விதவையாதல். நூல்யாப்பு - தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழி பெயர்ப்பு என நான்கு வகையாக இயற்றப்படும் நூலின் அமைதி, ஒருவகைப் புடைவை. நூல்வழக்கு - செய்யுள் வழக்கு. நூல்வெண்மாடம் - கூடாரம். நூவு - எள். நூவுதல் - நீர்ப் பாய்ச்சுதல். நூழில் - கொன்றுகுவிக்கை, நெருங் கிய போர் கொடிகளின் பின்னல், செக்கு, திரை, யானை, துவாரம். நூழை - வாயில், துவாரம், சன்னல், குகை, நுண்மை. நூழைவாயில் - சருங்கைவழி. நூறாயிரம் - இலட்சம். நூறு - நீறு, பொடி, மா, எண். நூறுகோடி - பதினாயிரம் லட்சம், வச்சிராயுதம். நூறுதல் - அழித்தல் அடித்துக் கொல்லுதல், வெட்டுதல், நெரித்தல், இடித்தல், வளைதல், துரத்துதல். நூறும்புகுதல் - நூறாண்டு வாழ்தல். நூறை - வள்ளிவகை, மீன்வகை. நூற்கிடக்கை - சாத்திரவிதி. நூற்கிரந்தம் - சாத்திரம். நூற்குற்றம் - குன்றக்கூறல், மிகை படக்கூறல், கூறியது கூறல், மாறு கொளக் கூறல், வழூஉச் சொற் புணர்த்தல், மயங்கவைத்தல், வெற் றெனத் தொடுத்தல், மற்றொன்று விரித்தல், சென்று தேய்ந்திறுதல், நின்றுபயனின்மை என்னும் பத்துக் குற்றங்கள். நூற்பா, நூற்பாஅகவல் - சூத்திரம். நூற்பொருள் - நூலில் கூறப்படும் பொருள். நூற்றாண்டு - நூறுவருடம், கால அளவை. நூற்றுரிறை - நூறுபலம். நூற்றுலாமண்டபம் - உலாவுதற் குரிய உமுது செய்யப்படும் நூறடி மண்டபம். நூற்றுவரைக்கொல்லி - மதிற்பொறி வகை. நூற்றுவர் - துரியோதனாதியர். நூற்றைக்கிழங்கு - நூறை. நூனம் - நிச்சயம், குறைபாடு. நூனாழி - நெசவுநாடா. நூன்மடந்தை - சரசுவதி. நூன்மாடம் - நூல்வெண்மாடம். நூன்முகம் - முகவுரை. நெ நெகிடி - நெருப்புக்குவை. நெகிழி - பாதச்சிலம்பு. நெகிழ்தல் - நிலைகுலைதல், தளர் தல், நழுவுதல், மெலிதல், மலர்தல், இளகுதல். நெகிழ்த்தல் - தளர்த்தல், எய்தல். நெகுதல் - உருகுதல், கரைதல், இரங்குதல், வருந்துதல், கெடுதல். நெக்குதல் - இளகுதல். நெக்குருகுதல் - இளகுதல். நெக்குவிடுதல் - பிளவுப்படுதல். நெசவு - நெய்யும் தொழில். நெஞ்சகம் - மனம். நெஞ்சம் - மனம், அன்பு. நெஞ்சழிதல் - மனம்குலைதல். நெஞ்சறிசுட்டு - சொல்லால் குறியாது மனத்திலுள்ள பொருளைக் குறிக்க வரும் சுட்டு. நெஞ்சார - மனமார. நெஞ்சாறல் - துக்கம். நெஞ்சிடித்தல் - பயத்தால் இதயம் துடித்தல். நெஞ்சு - மார்பு, மனம், இருதயம், நடு, தைரியம், தொண்டை. நெஞ்சுபுண்ணாதல் - மனம் நோதல். நெஞ்சு விடுதூது - மனதைக் காத லரிடம் தூதுவிடுவதாக அதனை முன்னிலைப் படுத்திப் பாடும் பிரபந்த வகை, மெய்கண்ட சாத்தி ரங்களுள் ஒன்று. நெஞ்சுளுத்தல் - மனம் முறிதல். நெஞ்சுள் - மனம். நெஞ்சொடுபுலத்தல் - அன்பற்ற காதலரிடம் செல்லும் மனத்தோடு புலந்து தலைவனேனும் தலைவி யேனும் கூறும் புறத்துறை. நெடலை - நாரைவகை. நெடி - சிள்வண்டு. நெடிது - தாமதமாக. நெடிதுயிர்த்தல் - நெட்டுயிர்த்தல். நெடித்தல் - பொழுது நீட்டித்தல். நெடிப்பு - நெடுநேரம். நெடியவட்டம் - பெருங்கேடகம். நெடியவாயன் - மீன்வகை. நெடியோன் - திருமால், பெரியோன். நெடியோன்குன்றம் - திருப்பதி மலை. நெடிலடி - ஐஞ்சீரால் வரும் அடி. நெடில் - நெட்டெழுத்து, நீளம், மூங்கில், மிக்கது. நெடுக - நீளமாக, தொடர்ந்து. நெடுகுதல் - நீளாதல், தாமதித்தல். நெடுக்கு - நீட்சி. நெடுங்கடை - பெரியவாயில். நெடுங்கணக்கு - அரிச்சுவடி. நெடுங்கழுத்தல் - ஒட்டகம், கோவேறு கழுதை. நெடுங்கழுத்துப் பரணர் - சங்க காலப் புலவர் புறம். 291. நெடுங்கிளாத்தி - நெடுங்கழுத் தன், கருநாரை (Indian darter or snake bird). நெடுங்கூவிளி - பெருமுழக்கம். நெடுங்கை - யானை. நெடுஞ்சாண்கிடை - நெடுமனே தலையிற் கிடக்கை. நெடுஞ்செழியன் - தலையாலங் கானத்துச் செருவென்றவனும், மதுரைக் காஞ்சியில் புகழப்பட்ட வனுமாகிய பாண்டியன். நெடுஞ்சொல் - புகழ். நெடுநல்வாடை - நக்கீரரால் நெடுஞ்செழியன்மீது பாடப் பட்டதும் பத்துப்பாட்டின் ஏழாவது மான பாடல். நெடுநீர் - கடல், நீடித்தச் செய்யும் இயல்பு. நெடுந்தகை - மேம்பாடுள்ளவன். நெடுந்தகைமை - மேம்பாடு. நெடுந்துருத்தி - நீர்வீசுங் கருவி வகை. நெடுஞ்சேரலாதன் - பதிற்றுப் பத்தின் இரண்டாம்பத்தின் பாட்டு டைத் தலைவனான சேரன். நெடுந்தெய்வம் - பெருமை பெற்ற தெய்வம். நெடுந்தெரு - அங்காடித்தெரு, பெரு வீதி. நெடுங்தொகை - அகநானூறு. நெடுப்பம் - நீட்சி. நெடுமன் - நீண்டது. நெடுமால் - திருமால். நெடுமாறனாயனார் - திருஞான சம்பந்தர் காலத்திருந்த பாண்டியன். நெடுமிசை - உச்சி. நெடுமிடல் - பெருவலி, அதியமான், நெடுமான் அஞ்சியின் இயற்பெயர். நெடுமூக்கு - துதிக்கை. நெடுமூச்சு - பெருமூச்சு. நெடுமை - நீளம், பெருமை, ஆழம், கொடுமை, மகளிர், தலைமயிர். நெடுமொழி - புகழுரை, சபதம், யாவரும் அறிந்த செய்தி. நெடுமொழிகூறதல் - புகழ்தல். நெடுமொழிவஞ்சி - வீரனொருவன் பகைவர் சேனையைக் கிட்டித் தன் ஆண்மையை எடுத்துக் கூறம் புறத்துறை. நெடும்பல்லியத்தனார் - சங்க காலப் புலவர் (குறு. 178). நெடும்பழி - அழியாபழி. நெடும்பாடு - பெருங்குறைவு. நெடுவசி - பெருவீரனது புண்ணைத் தைத்தலால் உண்டாகும் ஊசித் தழும்பு. நெடுவரி - ஒழுங்கு. நெடுவாசி - பெருவேறுபாடு. நெடுவாலூடகம் - மீன்வகை. நெடுவீடு - மோட்சம். நெடுவெண்ணிலவினார் - சங்க காலப் புலவர் (குறு. 47). நெடுவெண்பாட்டு - ஏழடிச் சிறுமையும் 12 அடிப் பெருமையி முடைய வெண்பா வகை. நெடுவெள்ளூசி - புண் தைக்கும் ஊசி. நெட்டங்கம் - செருக்கு. நெட்டநெடுமை - மிகு தைக்கும் ஊசி. நெட்டங்கம் - செருக்கு. நெட்டநெடுமை - மிகு நீளம். நெட்டம் - நெடுமை. நெட்டாண்டு - 366 (நாட்கள் கொண்ட ஆண்டு (Leap year). நெட்டி - கிடேச்சு, சோம்பல். நெட்டிடை - நெடுந்தூரம். நெட்டிமையார் - சங்க காலப் புலவர் (புறம். 9). நெட்டிலிங்கம் - மரவகை. நெட்டு - நெடுந்தூரம், செருக்கு. நெட்டுயிர் - உயிரில் நெட்டெழுத்து. நெட்டுயிர்த்தல் - பெருமூச்சு விடுதல். நெட்டுரு - மனப்பாடம். நெட்டுலை - விடாச்சமையல். நெட்டூரம் - நிட்டூரம், கொடுமை. நெட்டெழுத்து - 2 மாத்திரை கொண்ட எழுத்து. நெட்டை - நீளம், சோம்பல் முறிக்கை. நெட்டோலை - திருமுகம். நெண்டுதல் - நொண்டுதல், தோண் டுதல். நெதி, நெதியம் - செல்வம், முத்து, தியானம். நெதியாளன் - குபேரன். நெத்தப்பலகை - சூதாடுபலகை. நெபுலா - புகையுரு (nebula). நெமிரல் - சோறு. நெம்பு - மேவெழும்புகை, மடலாணி. நெம்புகோல் - மிண்டி (Lever). நெய் - உருக்கிய வெண்ணெய், எண்ணெய், தேன், இரத்தம், நிணம், நட்பு, சித்திரை. நெய்க்குறி சாத்திரம் - தேரையர் செய்த ஒருவாகட நூல். நெய்தல் - கருங்குவளை, கடலும் கடல் சார்ந்த இடமும், இரங்கல், சாப்பறை, ஒரு பேரெண், வெள்ளா பல், துணி செய்தல். நெய்வண்ணம் - எண்ணெய்ப்பசை கலந்த வர்ணம் (Oil Colour). நெய்தல்பூண்டோன் - ஐயனார். நெய்தல்யாழ் - நெய்தற் பெரும் பண்களுள் ஒன்று. நெய்தற்கார்க்கியார் - சங்க காலப் புலவர் (குறு. 55). நெய்தற்சாய்த்த ஆவூர்கிழார் - சங்க காலப் புலவர் (அகம். 112). நெய்தற்பறை - சாப்பறை, நெய்தல் நிலத்துக்குரிய பறை. நெய்தற்றத்தனார் - சங்க காலப் புலவர் (அகம். 243). நெய்தை - பெருமை. நெய்த்தல் - பளபளத்தல், கொழுத் தல். நெய்த்தோர் - இரத்தம். நெய்த்தோலி - நெத்தலின்மீன். நெய்ப்பு - நெய்ப்பற்று, பளபளப்பு. நெய்ம்மிதிகவளம் - நெய்கலந்து மிதித்துத் திரட்டப்பட்ட கவள உணவு. நெய்யணி - பிள்ளைப்பேற்றின் பின் தீட்டு நீங்கச்செய்யும் முழுக்கு. நெய்யேற்றுதல் - அறுகைநெய் யில் தோய்த்து மணமக்கள் சிரத் தில் மகளிர் வாழ்த்தித் தடவுதல். நெய்வான்மீன் - சித்திரைநாள். நெய்விழா - நெய்யாடல். நெரி - நெரிவு, சீலைக்கொய்சகம், கரகரப்பு. நெரிசல் - பசலை. நெரிதல் - நொறுக்குதல், நிலை கெடுதல், நெருங்குதல், வளைதல். நெரித்தல் - நசுக்குதல், கையை நெரிதல், நெருங்குதல். நெரியல் - மிளகு. நெரி - நசுங்குகை. நெருக்கடி - நெருக்கம். நெருக்கம் - செறிவு, சமீபம், ஒடுக்கம். நெருக்குதல் - கிட்டுதல், சமீபித்தல் இடித்துக் கூறுதல், கோபித்தல். நெருஞ்சி - பூடுவகை. நெருஞ்சிப்பூச்செயல் - நெற்றிப் பட்டையின் தொங்கல் வகை. நெருஞ்சில் - நெருஞ்சி. நெருஞ்சின்முள் - ஆயுத வகை. நெருடு - விரல்களால் கசக்குகை. நெருடுதல் - நிமிடுதல், திரித்தல். நெருநல் - நேற்று. நெருநற்று - நெருநல். நெருப்பு - தீ, இடி. நெருப்புக்கோழி - தீப்பறவை (ostritch). நெரேலெனல் - விரைவுக்குறிப்பு. நெல் - பயிர்வகை, நெல்மணி, உணவு, எட்டு எள்ளளவு கொண்ட நீட்டலளவை, வாகை. நெல்லரிகிணை - மருத நிலப் பறை வகை. நெல்லாயம் - நெல்லாகக் கொடுக்கும் அரசிறை. நெல்லி - நெல்லிமரம். நெல்லிச்சி - வரிக்கூத்துவகை. நெல்லிமுள்ளி - காய்ந்த நெல்லித் தோல். நெல்லிவட்டு - நெல்லிக் காயா லாகிய விளையாட்டு வகை. நெல்லு - நெல். நெல்லை - திருநெல்வேலி. நெல்லைநாதர் - சிவராத்திரிப் புராணம் பாடியவர் (18ம் நூ.). நெல்லையப்பிள்ளை - திருநெல் வேலித் தலபுராணம் பாடியவர். நெல்வால் - நெல்லின்கூர். நெளி - வளைந்த விரலணிவகை. நெளிதல் - வளைதல், சுருளுதல், குழிதல், வருந்துதல், குலைதல், மிகுதியாதல். நெளித்தல் - வளைத்தல், கோணுதல். நெளிப்பு - பரிகாசம், துன்பம். நெளிர் - எடுத்தலோசை. நெளிர்தல் - சத்தமிடுதல். நெளிவு - வளைவு, வருத்தம். நெறி - வழி, வளைவு, சுருள், சமயம், விதி, நல்லொழுக்கம், குலம், உபாயம், ஆளுகை, முத்தி புறஇதழ் ஒடிக்கை, தாழ்ப்பாள், நெறிக்கட்டி. நெறிசெய்தல் - ஆளுதல், நல்வழிப் படுத்துதல். நெறிதல் - மயிர் குழற்சியாதல். நெறிதல் - வளைத்தல், புறவித ழொடித்தல், மயிர்குழலுதல். நெறிநீர் - கடல். நெறிப்படுதல் - ஒழுங்குப்படுதல். நெறிப்பு - புருவத்தைவளைக்கை. நெறிமருப்பு - முடங்கினகொம்பு. நெறிமாறுதல் - வழிமாறுதல். நெறிமை - விதி, வழக்கு. நெறியோன் - பெரியோன். நெறிவிலக்கல் - வழியின் ஏத முணர்த்தி, இரவில் அவ்வழியே தலைவியிடம் வருதல் தகாதெனத் தோழி தலைவனை விலக்கும் அகத்துறை. நெறு - ஓசை. நெறுநெறெனல் - முறிதற் குறிப்பு. நெற்கடை - மூலநாள். நெற்கிடை - ஒருநெல் அளவு கொண்ட இடம். நெற்குறி - நெல்லைக்கொண்டு கட்டு வித்தி கூறும் சோதிடம். நெற்கூடு - குதிர். நெற்சிறுதாலி - தாலிவகை. நெற்சூடு - மிதிக்காத நெற் கதிர்த் தொகுதி. நெற்புடம் - மருந்தை நெற் குவியலுள் புதைத்துச் செய்யும் புடம். நெற்போர் - கடா அடி அடிக்காத வைக்கோர்போர். நெற்றம் - நெற்று. நெற்றி - பண்புருவங்களுக்கு மேலுள்ள பகுதி, முன்பகுதி, உச்சி, ஆகாயம், முன்படை, கட்டடத்தின் மேல் நிலை முகப்பு, முயற்சி. நெற்றிக்கட்டு - பெண்களணியும் தலைமாலை. நெற்றிக்கண் - சிவனின் மூன்றாங் கண, கட்டடப் பகுதி. நெற்றிச்சுட்டி - மகளிர் சிறுவர் நுதலணிவகை. நெற்றிப்பட்டம் - நுதலணி வகை. நெற்று - முதிர்ந்து காய்ந்த காய். நே நே - ஈரம், அன்பு. நேகல் - பொடி மணல். நேசநாயனார் - 63 நாயன்மாருள் ஒருவர். நேசம் - அன்பு, ஆர்வம், தகுதி. நேசம் - அன்பன், நன்பன். நேசானுசாரி - உண்மையாக நடப்பவன். நேசித்தல் - அன்பு வைத்தல். நேடுதல் - தேடுதல், எண்ணுதல். நேதா - தலைவன். நேதி - முறை, இவ்வாறன்று. நேத்திரம் - கண், மயிற் பீலிக்கண், பட்டாடை. நேபத்தியம் - அலங்காரம். நேபாளம் - ஒருதேசம். நேமகம் - ஒழுங்கு, இருப்பிடம். நேமம் - விதிமுறை. நேமி - வட்டம், தேர்உருளை, சக்கரா யுதம், சக்கரவாளம், ஆஞ்ஞா சக்கரம், மோதிரம், சக்கரவாகம், திருமால், தீர்த்தங்கரருள் ஒருவர். நேமிகாதகம் - நரகவகை. நேமிநாதம் - குணவீர பண்டி தரியற்றிய ஒரு இலக்கண நூல். நேமிநாதர் - குணவீரபண்டிதர். நேமிநாதன் - அருகக்கடவுள். நேமிப்புள் - சக்கரவாகப்புள். நேமியஞ்செல்வன் - சக்கரவர்த்தி. நேமியான் - திருமால். நேமிவலவன் - திருமால். நேயம் - அன்பு, பக்தி, நெய், எண்ணெய். நேயவை - இடுதிரை. நேரசை - குறிலும் நெடிலும் தனித்தேனும் ஒற்றடுத்தேனும் வரும் அசை. நேரடி - நாற்சீரால் வரும் அடி. நேரம் - காலம், தருணம். நேரலன் - பகைவன். நேரல் - நேர்வு. நேரல்லார் - கீழோர். நேராதார், நேரார் - பகைவர். நேரி - சோழர்க்குரிய ஒருமலை. நேரிசம் - எறிபடை, அம்பு. நேரிசை - நேரிசைவெண்பா, இராக வகை. நேரிவையாசிரியப்பா - ஈற்றடி முச்சீராகவரும் ஆசிரியப்பா. நேரிசைவெண்பா - இரண்டாம் அடியின் ஈற்றில் தனிச்சொல் பெற்று வரும் வெண்பா. நேரிடுதல் - சம்பவித்தல். நேரியன் - சோழன், அணுவுக்கு அணுவாக இருப்பவன். நேரிழை - பெண். நேரேடம், நேரேடு - நாவல். நேரொத்தல் - இணையாக இருத்தல். நேர் - வளைவின்மை, நீதி, உவமை, திருந்தியதன்மை, நீளம், பாதி, நுண்மை, மிகுதி, வலிமை, முன், நேரசை. நேர்கட்டி - ஒருவகை வாசனைப் பொருள். நேர்கொடுநேரே - வெளிப் படையாக. நேர்சங்கிலி - கழுத்திலணியும் வேலைப்பாடுள்ள சங்கிலி. நேர்தல் - பொருந்துதல், நிரம்புதல், நிகழ்தல், எதிர்படுதல், நெருங்குதல், பெறுதல், கொடுத்தல், உடன்படுதல், ஒத்தல், நிச்சயித்தல், சொல்லுதல், பிரார்த்தனை வைத்தல், எதிர்த்தல். நேர்த்தரவு - பிழைபெறுந்தோம் என்று நேரிலே கூறும் ஆணை. நேர்த்தி - சிறப்பு, முயற்சி. நேர்த்திக்கடன் - நேர்ந்து கொள்ளும் பிரார்த்தனை. நேர்நிரத்தல் - சமமாய் நிற்றல். நேர்நிற்றல் - எதிர் நிற்றல். நேர்ந்தார் - நண்பர். நேர்பசை - குற்றுகர முற்றுகரங் களோடு இயைந்துவரும் நேரசை. நேர்படுதல் - எதிர்ப்படுதல், ஏற் புடையதாதல், வாய்த்தல், ஒழுங்கு படுதல். நேர்பாடு - தற்செயல் நிகழ்ச்சி, உபாயம், நீதி, நீளம். நேர்பு - நேர்பு அசை நீளம். நேர்மின்சாரம் - Positive elec tricity. நேர்முகம் - எதிர்முகம். நேர்மை - செம்மை, அறம், நுண்மை, சமம். நேர்ம்புணை - இலேசானதெப்பம். நேர்வருதல் - ஒத்திருத்தல். நேர்வாய்க்கட்டளை - மாடத்தின் கண் சன்னல். நேர்வாளம் - மரவகை. நேர்வான் - சித்திரைநாள். நேர்விடை - உடன்பாட்டைக் குறிக்கும் விடை. நேர்வு - உடன்பாடு, கொடுக்கை. நேளி - தாமரை. நேற்று - நிகழும் நாளுக்கு முன் நாள். நை நை - இகழ்ச்சிக் குறிப்பு. நைகரம் - துன்பம். நைசர்க்கிகம் - இயற்கையாகத் தோன்றியது. நைச்சியம் - தாழ்மை. நைடதம் - அதிவீரராம பாண்டியன் நளனைப் பற்றிச் செய்த தமிழ்க் காப்பியம். நைட்டிகப்பிரமசாரி - மரணம் வரை பிரமசாரியம் பூண்டிருப்போன். நைட்டிகாசிரியன் - யாவற்றையும் ஞானத்தால் பண்ணும் ஆசிரியன். நைதல் - வருந்துதல், சுருங்குதல், தளர்தல், இரங்குதல், அவசரமாதல். நைதிகை - ஊசிமல்லிகை. நைத்தல் - அழித்தல், எரித்தல். நைத்தியம் - நித்தியத்துவம். நைபத்தியம் - நடிப்பவன் கொள்ளும் வேடம். நைமிசாரணியம் - ஒர்தபோவனம். நைமித்திகசிரார்த்தம் - பிதிரர்க்குச் செய்யும் விசேட சிரார்த்தம். நைமித்திகம் - விசேடகாலங்களில் நிகழ்வது. நையம் - நைசியம், நாசியிற் புகுத்தும் மருந்து. நையான்டி - நாடோடிப் பாட்ட வகை, கேலி. நையாண்டிப்புலவர் - தொண்டை நாட்டில் விளங்கிய புலவர் (19ம் நூ). நையாயிகம் - கௌதமரியற்றிய நியாய நூற்கொள்கை. நைலான் - நிலக்கரிப் பொருளி லிருந்து செய்யப்படும் பட்டு. நைவருதல் - வருந்துதல். நைவளம் - பாலைப்பண், குறிஞ்சி யாழ்த்திறம். நைவு - நோய். நைவேதித்தல் - கடவுளுக்கு உணவு படைத்தல். நைவேத்தியம் - கடவுகளுக்குப் படைக்கும் உணவு. நொ நொ - துன்பம், நொய்மை. நொக்குதல் - உண்டுகுறை செய்தல், அடித்தல். நொக்கென - உடனே. நொங்குதல் - விழுங்குதல். நொசிதல் - நுண்மையாதல், அருமையாதல், வருந்துதல், வளை தல், நைதல், குறைவுபடுதல். நொசித்தல் - வருத்துதல். நொசிப்பு - சமாதி. நொசிவு - வருத்தம் வளைவு. நொச்சி - செடிவகை, நொச்சித் திணை, வீரர் சூடிய நொச்சிப் பூவைப் புகழும் புறத்துறை, எயில் காவல், மதில் சிற்றூர். நொச்சித்திணை - நொச்சிப்பூச்சூடி வீரர்மதில் காத்தலைக் கூறும் புறத்துறை. நொச்சிநியமங்கிழார் - சங்க காலப் புலவர் (அகம். 52). நொடி- சொல், முதுமொழி, பிதிர், செய்யுள், ஓசை, கை, நொடிப் பொழுது, இரண்டு விரல்களைத் தெளித்துண்டாக்கும் ஒலி, நோய், விடுகதை, வினாடி (Second). நொடிக்கணக்கு - (Ready reckoner). நொடிதல் - சொல்லுதல். நொடித்தல் - சொல்லுதல், பழித்தல், அழித்தல், நொடி சொல்லுதல். நொடித்தான்மலை - கைலாய மலை. நொடிபயிற்றுதல் - பேச்சுக் கற் பித்தல். நொடிபோக்குதல் - தாளத்திற்கு இயையக்கையை நொடித்தல். நொடிப்பு - கணப்பொழுது. நொடிவரை - விரைவில். நொடுத்தல் - விற்றல். நொடை- விலை, விற்கை, பல பண்டம். நொடைமை - நொடை. நொட்டை - குற்றம் கூறும் சொல். நொண்டி - முடம். நொண்டிச்சிந்து - நொண்டி நாடகம். நொண்டி நாடகம் - ஒரு நாடக நூல். நொண்டுதல்- காலை ஊன்றாது குந்தி நடத்தல். நொதித்தல் - புளித்தல் (Fermen tation). நொதுமலர் - அயலார். நொதுமல் - மென்மை, அயல். நொந்தன்னம் - பதனிழந்த சோறு. நொந்தார் - பகைவர். நொந்துதல் - அழிதல், தூண்டுதல். நொப்பம் - சமர்த்து. நொய் - குறுநொய், இலேசு. நொய்து- இலேசானது, மெல்லியது, இழிவானது, விரைவு. நொய்தெனல் - விரைவுக்குறிப்பு. நொய் பாடியார் - சங்க காலப் புலவர் (அகம் 6). நொய்ப்பம் - சாமர்த்தியம். நொய்மை - கனமின்மை, இழிவு. நொய்வு - நொய்மை, வருத்தம். நொலை, நொலையல் - பூரிகை என்னும் அப்பவகை. நொவ்விதாக - விரைவாக. நொவ்வு - மெலிவு. நொழுந்துதல் - நுழைத்தல். நொளம்பர் - பல்லவர் வகையினர். நொளம்பவாடி - நொளம்பர் ஆண்டு நாடு. நொளில் - அருவருக்கத்தக்க சேறு. நொள்குதல் - சுருங்குதல். நொள்ளல் - நுளம்பு. நொள்ளுதல் - முகத்தல், விழுங்குதல். நொள்ளை - குருடு, வண்டு, விலங்கு வகை. நொறிதல் - விரைவு, நுடக்கம், சேறு, ஒடுக்கம். நொறுக்கு - பொடியாக்கு. நொறுங்குதல் - பொடியாதல். நோ நோ - வலி, துன்பம். நோக்க - ஒர் உவமஉருபு. நோக்கம் - பார்வை, கண், அழகு, கருத்து, கவனம். நோக்கலங்காரம் - தற்குறிப்பு ஏற்றம் என்ற அணி. நோக்கனோக்கம் - மனத்தால் நோக்கும் நோக்கம். நோக்கன் - கழைக்கூத்தன். நோக்காடு - வியாதி, நோய். நோக்க - பார்வை, கண், அழகு, கருத்து, விருப்பம், ஓர் உவம உருபு. நோக்குவல்லாமவையேபோறல் - அவத்தை பத்தனுள் பார்ப்பன எல்லாம் தான் கருதிய தலைவியின் உருவமாகவே தலைவனுக்குத் தோன்றல். நோக்குவித்தை - கண்கட்டி வித்தை. நோக்கெதிர்நோக்குதல் - தலைவன் நோக்கியவிடத்துத் தலைவி எதிர் நோக்குதல். நோடாலம் - அதிநாகரிகம், பரிசோதிப்போன். நோட்டம் - நாணய சோதனை, விலை. நோட்டம் பார்த்தல் - தகுதி அறிதல், மதித்தல். நோண்டுதல் - கிளறுதல், குடைந்து எடுத்தல். நோதல் - வருத்தம், நோ, துன்பத்தைச் சொல்லுதல், பகனழிதல், வறுமைப் படுதல். நோதிறம் - முல்லை பாலைக்குரிய துக்கராக வகை. நோப்பாளம் - கோபம். நோயணுகாவிதி - தேரையர் செய்த ஒரு மருந்து நூல். நோயாளி - பிணியாளன். நோய் - வியாதி, துக்கம், குற்றம், அச்சம். நோய்த்தல் - நோயால் வருந்துதல், மெலிதல், வாடுதல். நோலை - எள்ளுருண்டை, எட் கசிவு. நோல் - கிரியை. நோவல் - அப்பம். நோவு - வலி, துன்பம் பிள்ளைப் பெறும் நோவு, இரக்கம். நோவுசாத்துதல் - பெரியார் நோய் வாய்ப்படுதல். நோற்பார் - தவம் செய்வார். நோற்பாள் - துறவிப் பெண். நோற்பு - தவம் செய்கை, பெறுமை. நோற்றல் - பொறுத்தல், தவம் செய்தல், ஒழுகுதல். நோனாமை - தவம் செய்யாமை, அழுக்காறு. நோனார் - ஆற்றாதார், பகைவர், தவமில்லாதவர். நோன்பி - விரதி. நோன்பிருத்தல் - விரதம் கொள்ளு தல். நோன்பு - விரதம், தவம். நோன்புயர்த்தல் - விரதத்தை நிறுத்துதல். நோன்மை - பொறுமை, வலிமை, பெருமை, நோன்பு. நோன்றல் - சகிப்பு, பொறுத்தல். நௌ நௌ - மரக்கலம். நௌகாதானம் - இற்ந்த பதினொரா வது நாள் இறந்தவர் பொருட்டுப் படகு வடிவமாகக் கரும்பால் செய்து பிராமணர்க்குக் கொடுக்கும் தானம். நௌவி - மான். ப ப - பஞ்சமம் என்னும் இளி இசையின் எழுத்து. பஃதி - பகுதி. பஃது - பத்து. பஃபத்து - நூறு. பஃறி - மரக்கலம், படகு, இரேபதி. பஃறுளி - குமரியாற்றின் தெற்கேயி லிருந்து கடலார் கொள்ளப்பட்ட தாகக் கருதப்படும் ஓர் ஆறு. பஃறொடை - பஃறொடை வெண்பா. பஃறொடை வெண்பா - நான்கடி யின் கருதப்படும் வெண்பா. பகடம் - பகட்டு. பகடி - பரிகாசம், வெளிவேடக்காரன், கூத்தாடி, வரிக்கூத்துவகை, பிர கிருதி தத்துவம். பகடை - சூதின்காய்களுள் ஒன்று. பகட்டு - ஆடம்பரம். பகட்டுதல் - மயக்குதல், வஞ்சித்தல், ஆடம்பரம் காட்டுதல். பகட்டுமுல்லை - முயற்சியால் வந்த இளைப்பாலும் பாரம் பொறுத்த லாலும், மனைக்கிழவனை உழு கின்ற எருத்துடன் உவமிக்கும் புறத்துறை. பக்ண்டை - விகடப் பாடல். பகந்தரம் - ஆசனத்தில் புரைவைத்த புண் (Fistula). பகம் - பெண்குறி, கொக்குவகை, குயில், காக்கட்டான். பகரம் - அழகு, பிரதி. பகரி - ஆவிரை. பகர் - ஒளி. பகர்ச்சி - சொல், விலை. பகர்தல் - சொல்லுதல், விற்றல், கொடுத்தல், உணர்தல், ஒளி விடுதல். பகலங்காடி - பகற்கடை. பகலடி - சிங்கியடித்தல். பகலவன் - சூரியன், பரணிநாள். பகலாணி - நுகத்தின் ஆணி. பகலிருக்கை - நாளோலக்கம், தனியிருக்கை. பகலோன் - சூரியன். பகல் - சூரியன், பிரகாசம், பகுக்கை, நடு, நுக ஆணி, முகூர்த்தம், அரையாமம், பகற்காலம், இள வெயில், ஊழிக்காலம், இராப் பகல் கொண்ட காலம். பகல்வர்த்தி - வாணவகை. பகல்வாயில் - கிழக்குத்திசை. பகல்வினையாளன் - நாவிதன். பகல்வெண்யோன் - நடுவுநிலை விரும்புவோன். பகவதி - துர்க்கை, தருமதேவதை, தாம்பிர பரணி. பகவதிநாள் - பூராநாள். பகவத்கீதை, பகவற்கீதை - அருச்சுனனுக்குக் கண்ணன் உபதேசித்ததாகக் கருதப்படும் ஞான நூல், பட்டனார் என்னும் புலவர் இதனைத் தமிழில் மொழி பெயர்த்தார். பகவன் - கடவுள், அருகன், புத்தன், பிரமன், குரு. பகவான் - பெரியன், சிவன், ஆதித்தருள் ஒருவன். பகவு - துண்டு. பகழி - அம்பு, அம்பின் அடி. பகழிக்கூத்தர் - திருச்செந்தூர் பிள்ளைத் தமிழியற்றியவர் (18ம் நூ.). பகற்குருடு - கூகை. பகற்குறி - பகற்காலத்தே தலை வனும் தலைவியும் கூடக் குறிப் பிட்ட இடம். பகற்போது - பகற்காலத்து மலரும் பூ. பகற்றி வேட்டல் - பகலின் பகைவரின் ஊர்களை எரித்தல். பகன் - பகாசுரன், ஆதித்தருள் ஒருவன். பகன்றை - சிவதை, கிலுகிலுப்பை. பகாசுரன் - வீமனால் கொல்லப்பட்ட ஓர் அசுரன். பகாப்பதம் - பிரிக்கமுடியாத சொல். பகாரம் - அழகு. பகிடி - பகடி. பகிட்கரித்தல் - விலக்குதல். பகிரங்கம் - வெளிப்படை. பகிரண்டம் - வெளி அண்டம். பகிரதன் - கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்த அரசன். பகிர் - பங்கு, துண்டம், வெளிப்புறம். பகிர்தல் - பங்கிடுதல். பகினி - உடன்பிறந்தாள். பகீரதப்பிரயத்தனம் - பெரு முயற்சி. பகீரதி - கங்கை. பகீரெனல் - அச்சக்குறிப்பு. பகு - அதிகமான. பகுசுருதியாகமம் - சைனாகமம் மூன்றனுள் ஒன்று. பகுதல் - பிரிதல். பகுதிக்கிளவி - பக்கச்சொல். பகுதிப்பொருள் விகுதி - தனக்கு ஒரு பொருளின்றிப் பகுதியின் பொருளிலேயே வரும் விகுதி. பகுதிஎண் - பின்ன எண்ணில் கீழிருக்கும் எண். பகுத்தல் - பங்கிடுதல், கொடுத்தல், கோது நீக்குதல். பகுபதம் - பகுதி விகுதிகளாகப் பிரிக்கக்கூடிய பதம். பகுபதவுறுப்பு - பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை சந்தி, விகாரம் என்னும் சொல்லுருபுகள். பகுப்பு - பிரிவு. பகுவசனம் - பன்மை. பகுவாய் - அகன்றவாய், தாழி, பிழா. பகுவாய்ப்பறை - பறைவகை. பகுவொளி - பேரொளி. பகுதகம் - காயாதமரம். பகை - விரோதம், விரோதி, தீங்கு மாறு. பகைஞன் - எதிரி, பகைவன். பகைதணிவினை - தூதுசெல்லுதல். பகைத்தல் - விரோதித்தல். பகைத்தானம் - விரோதித்தல். பகைத்தானம் - கிரகத்தின் பகை வீடு. பகைத்தி - பகைப் பெண். பகைநரம்பு - யாழில்நின்ற நரம்புக்கு மூன்று ஆறாவதாக உள்ள சத்துரு நரம்புகள். பகைநாள் - சென்ம நட்சத்திரத்துக்கு முந்திய நட்சித்திரம். பகைப்படை - பகைவர் படையினின்று விலகுண்டு வந்தோர் அல்லது அவரி னின்று வேறுபடுத்து வசமாக்கிக் கொள்ளப் பட்டோராலாகிய படை. பகைப்புலம் - எதிரியின் இடம், போர்க்களம். பகைமுனை - போர்க்களம். பகைமை - விரோதம். பகையகம் - பகைப்புலம். பகையாக்கல் - வேற்றரசரோடு பகைகொள்ளுதல். பகையாளி - பகைவன். பகைவன் - எதிரி. பக்கச்சித்திரை - சுக்கிலப்பட்சத் திலும் கிருட்டிண பட்சத்திலும் வரும் சதுர்த்தி, சட்டி, அட்டமி, நவமி, துவாதாசி, சதுர்த்தசி என்னும் திதிகள். பக்கச்சொல் - தகுதிபற்றியும் வழக்குப் பற்றியும் வழங்கும் சொற்கள். பக்கஞ்செய்தல் - ஒளிவிடுதல். பக்கடுத்தல் - நொறுங்குதல். பக்கவாதம் - காரிவாதம் (Paral yasis). பக்கணம் - பட்சணம், ஊர், வேடர் வீதி. பக்கத்தார் - அடுத்தவர். பக்கப்போலி - பக்கத்தின் நியாய ஆபாசம். பக்கம் - அருகு, விலாப்புறம், சிறகு, நட்பு, சுற்றம், சேனை, திதி, தன்மை, ஒளி. பக்கம்படுதல் - பட்சபாசதமாக இருத்தல். பக்கரை - அங்கவடி, சேணம். பக்கல் - பக்கம். பக்கவாதம் - பட்சபாதகம். பக்கவாத்தியம் - வாய்ப்பாட்டுக்குத் துணையான இசைக் கருவிகள். பக்கறை - துணியுறை. பக்காத்திருடன் - பேர்போன கள்வன். பக்கி - பறவை, பட்சி. பக்கிசைத்தல் - ஒலிவிட்டிசைத்தல். பக்கித்தல் - பட்சித்தல். பக்கிரி, பக்கீரி - முகமதிய பரதேசி. பக்கு - கவர்கடுகை, பை. பக்குடுக்கை நன் கணியார் - சங்க காலப் புலவர் (புறம். 194). பக்குவம் - தகுதி, முதிர்ச்சி, இருது வாகுகை. பக்குவாசயம் - இரைப்பை. பக்குசுவாசயம் - இரைப்பை. பக்குவிடுதல் - பிளத்தல். பக்தவச்சலன் - அடியவர்க்கு அன்பன், கடவுள். பங்கசம், பங்கசாதம் - பங்கயம், தாமரை. பங்கம் - தோல்வி, குற்றம், அவமானம், விகாரம், கேடு, இடர், பங்கு, பிரிவு, துண்டு, சிறுதுகில், சேறு. பங்கயச்செல்வி - இலக்குமி. பங்கயப்படு - தாமரைமடு. பங்கயப்பீடிகை - புத்தரது பாதங் களமைந்த பீடம். பங்கயம் - தாமரை, ஓராயுதம், நாரை. பங்கயனாள் - உரோகிணி. பங்கயன் - பிரமன், சூரியன். பங்கயாசனன் - பிரமா. பங்களம் - பதர்க்குவியல். பங்களன் - பங்காளி. பங்கன் - பாகமுடையவன். பங்காளம் - ஓரிராகம். பங்காளி - உடன்கூட்டாக இருப்பவன், தாயாதி. பங்கி - ஆண்மக்களின் மயிர் வகை, பாகமாக பெற்றுக் கொள்பவன், சடைக்கஞ்சா. பங்கித்தல் - வெட்டுதல். பங்கீடு - பங்கிடுகை. பங்கு - பாகம், பாதி, பக்கம், முடம், சனி. பங்குசம் - தலைக்கோலம். பங்குணன் - அருச்சுனன். பங்குனி - 12 ஆம் மாதம், உத்தரம். பங்கேருகம் - தாமரை. பசத்தல் - மேனி பசலைநிறம் அடை தல், பொன்னிறம் கொள்ளுதல், பசுமையாதல். பசப்பு - பச்சைநிறம், நிறவேறுபாடு. பசப்புதல் - இன்முகங்காட்டி ஏய்த்தல். பசலி - கி.பி. 591-இல் தொடங்குவதும் கி.பி. 1555-ஆம் ஆண்டில் அக்பர் சக்கரவர்த்தியால் ஏற்படுத்தப் பட்டதுமான ஒரு அப்தம். பசலை - அழகு தேமல், பொன்நிறம், இளமை, மனச்சஞ்சலம், வருத்தம். பசலைக்கலம் - பச்சைப்பாளை. பசல் - சிறுவன். பசளை - உரம். பசாசம் - இரும்பு, பேய். பசாசரதம் - பேய்த்தேர். பசாசு - பேய். பசி - உணவுவேட்கை, வறுமை. பசிதம் - சாம்பல், திருநீறு. பசிது - பசியது. பசியாட்டி - பசித்திருப்பவள். பசிரி - பசளைக்கொடி. பசு - ஆ, இடபம், இடபராசி, உயிர். பசுகரணம் - உயிர்களின் செயல். பசுங்கதிர்க்கடவுள் - சந்திரன். பசுங்கற்பூரம் - பச்சைக் கற்பூரம். பசுங்கல் - சந்தனமரைக்குங் கல். பசுங்காய் - இளங்காய், பாக்குவகை. பசுங்குழவி - இளங்குழந்தை. பசுங்கூட்டு - வாசனைக்கலவை. பசுஞானம் - சிற்றறிவு. பசுத்துவம் - சீவத்தன்மை. பசுநா - பிராய மரம். பசுநிலை - மாட்டுக்கொட்டில். பசுநூல் - உலகநூல். பசுந்தமிழ் - செந்தமிழ். பசுந்தரை - புல்தரை. பசுபதி - சிவன். பசுபதிநாயனார் - 63 நாயன்மாருள் ஒருவர். பசுபுண்ணியம் - உயிர்களின் பொருட்டுச் செய்யும் அறச்செயல். பசுபோதம் - ஆன்ம அறிவு. பசுப்புரை - பசுத்தொப. பசுமம் - திருநீறு. பசுமை - பச்சைநிறம், குளிர்ச்சி, இளமை, அழகு. பசும்பட்டு - நேர்த்தியானபட்டு. பசும்பதம் - உணவுக்கு வேண்டிய பொருள்கள். பசும்பயறு - சிறுபயறு. பசும்பால் - பசுமாட்டின் பால். பசும்பிடி - பச்சிலை. பசும்புண் - புதுப்புண். பசும்புல் - பச்சைப்புல். பசும்பை - வணிகர் தோளில் மாட்டும் நீண்ட பை. பசும்பொன் - மாற்றுயர்ந்த பொன். பசுவுக்குவாயுறை - பசுவுக்கு உணவிடுகை. பசுவெயில் - மாலைவெயில். பசை - ஒட்டுநிலை, பிசின், சாரம்பத்தி, அன்பு, இரக்கம், செல்வம், கொழுப்பு. பசைதல் - அன்பு கொள்ளுதல், நட்புக் கொள்ளுதல், செறிதல், ஒன்று சேர்த்தல். பசைந்தார் - நண்பர். பசையாப்பு - உலகப் பற்றாகிய பந்தம். பசைவு - அன்பு. பச்சடம் - பச்சவடம். பச்சடி - ஒருவகைக்கறி. பச்சரிசி - பச்சையரிசி. பச்சவடம் - மேற்போர்வைவிரிப்பு, திரை முதலியவற்றுக்குப் பயன் படும் நீண்டசீலை. பச்சாதாபம் - கழிவிரக்கம். பச்சிமம் - மேற்கு, பின்புறம். பச்சிரும்பு - உருகின இரும்பு. பச்சிலை - பச்சையிலை, மரவகை, நறைக்கொடி, ஒருவகைத்துகில். பச்சிலைப்பட்டு - இலைத் தொழி லுடைய பட்டு. பச்சூன் - பச்சிறைச்சி. பச்செனல் - பசுமையாதற் குறிப்பு. பச்செனவு - ஈரம், பச்சை. பச்சை - பசுமைநிறம், மரகதம், வெற்றிலை, வாசனைப்புல், பசப்பு நிறம், புதன், நன்கொடை, கைம்மாறு, வேகாதது, தோல், குளிர்ச்சி, போர்வை, இலாபம். பச்சைக்குப்பி - மதுவடைக்கும் குப்பி வகை. பச்சைக்குழந்தை - இளங்குழந்தை. பச்சைநாடான் - வாழைவகை. பச்சைநாவி - நஞ்சுவகை. பச்சையெழுதுதல் - திருமணம் முதுலிய சிறப்புகளில் கொடுத்த பொருள்களுக்குக் கணக்கெழுது தல். பச்சைவெட்டு - சுத்தி செய்யப்படாத பாஷாண மருந்து. பச்சைவெட்டை - சந்தனவகை. பச்சைவெயில் - மாலைக் கால வெயில். பச்சோந்தி - பச்சை ஓணான். பச்சோலை - காயாத ஓலை. பச்சோலைப்பாம்பு - பச்சைப் பாம்பு. பஞ்ச - ஐந்து. பஞ்சகச்சம் - ஆடவர் ஐந்து இடங்களில் ஆடையைச் செருகி உடுக்கும் வகை. பஞ்சகஞ்சுகம் - காலம், நியதி, கலை, வித்தை, அராகம் என்னும் ஐந்து ஆன்ம தத்துவச் சட்டைகள். பஞ்சகந்தம் - இலவங்கம், ஏலம், கர்ப்பூரம், சாதிக்காய், தக்கோலம் என்னும் வாசனைப் பண்டங்கள். பஞ்சகம் - அசுபமாகக் கருதப்படும் வேளை. பஞ்சகம்மாளர் - தச்சன், கொல்லன், தட்டான், கன்னான், சிற்பன் என்னும் ஐவகையினர். பஞ்சகமம் - ஆடாதோடை, சீந்தில், கண்டங்கத்திரி, கையாந்தகரை பெரும்பலா என்னும் மருந்துப் பூடுகள். பஞ்சகர்த்தாக்கள் - பிரமா, விட்டுணு, உருத்திரன், மககேசு வரன், சதாசிவன் என்னும் ஐவர். பஞ்சகருவி - தோற்கருவி, துளைக் கருவி, நரம்புக்கருவி, கஞ்சக்கருவி மிடற்றுக்கருவி என்னும் இசைக் கருவிகள். பஞ்சகலை - நிவிர்த்திகலை, சாந்திகலை, சாந்தியாதீதகலை, பிரதிட்டாகலை, வித்தியாகலை என்பன. பஞ்சகல்யாணி - நாலுகால்களிலும் முகத்திலும் வெண்மை நிறமுள்ள குதிரை. பஞ்சகிற்பம் - கத்தூரி மஞ்சள், மிளகு வேப்பங்கொட்டை, கடுக்காய்த் தோல், நெல்லிப்பருப்பு என்னும் பண்டங்களா லாயதும் தலையில் பூசப்படுவதுமான பூச்சு. பஞ்சகன்னியர் - அகலியை, திரௌ பதி, சீதை, தாரை, மண்டோதரி என்னும் ஐவர். பஞ்சகாலம் - உணவு அகப்படாத காலம், கருப்பு. பஞ்சகாவியம் - சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி, வளை யாபதி, குண்டலகேசி. பஞ்சகிருதியம் - சிருட்டி, திதி, சங்காரம், திரோபவம், அனுக் கிரகம்; வீரர்செய்தற்குரிய கொடை விலக்கு செலவு சேமம் தவிர்த்து வினைசெயல் என்பன. பஞ்சகோலம் - சுக்கு திப்பலி திப்பிலி மூலம் செவ்வியம் சித்திர மூலம் என்பனவற்றின் கூட்டு. பஞ்சக்கிராமிகள் - ஒருசார் பிரா மணர். பஞ்சக்கிலேசம் - அவிச்சை, ஆங் காரம், அவா, விருப்பு, கோபம் என்பன. பஞ்சசக்தி - பராசத்தி, திரோதான சத்தி, இச்சசத்தி, ஞானசத்தி, கிரியாசத்தி. பஞ்சசயனம் - அன்னத்தூவி, பூ, இலவம்பஞ்சு, கோரை, மயிர் இவற்றாலான படுக்கை; அழகு, குளிர்ச்சி, மார்த்தவம், பரிமளம் வெண்மை என்னும் தன்மைகள் கொண்ட படுக்கை. பஞ்சசரி - ஐந்து சரங்கொண்ட அணி. பஞ்சனன் - திருமாலால் கொல்லப் பட்ட ஓர் அசுரன். பஞ்சசீலம் - காமம், கொலை, கள், பொய், களவு என்னும் ஐந்தனையும் துறத்தலாகிய பௌத்த ஒழுக்கம். பஞ்சசுத்தி - பூதசுத்தி, ஆன்மகத்தி, திரவியசுத்தி, மந்திரசுத்தி, இலிங் கத்தி என்பன. பஞ்சடைதல் - பார்வைமங்குதல். பஞ்சணை - பஞ்சுமெத்தை. பஞ்சதந்திரம் - தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள ஒரு நூல். பஞ்சதரு - சந்தனம், கற்பகம், சந்தானம், பாரிசாதம், மந்தாரம் என்பன. பஞ்சுதாரை - சருக்கரை, குதிரை நடை வகை. பஞ்சதிரவியம் - மலைபடுதிரவியம், காடுபடுதிரவியம், நாடுபடு திர வியம், நகர்படுதிரவியம், கடல்படு திரவியம். பஞ்சதிராவிடம் - திராவிடம், ஆந்திரம், கன்னடம், மகாராட்டிரம், கூச்சரம் என்பன. பஞ்சதீர்க்கம் - நீண்டிருக்க வேண் டிய புயம், கண், வயிறு, மூக்கு மார்பு என்பன. பஞ்சநகாயுதம் - சிங்கம். பஞ்சநமக்காரம் - அருகர், சித்தர், ஆசிரியர், உபாத்தியாயர் சாதுக்கள் என்போரை வணங்கும் குறியாகச் சைனர் வழங்கும் அ, சி, ஆ, உ, சா என்னும் மந்திரம். பஞ்சபட்சி - வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் என்பன. பஞ்சபாண்டவர் - பாண்டுபுத்திரர். பஞ்சபாண்டவர்படுக்கை - மலைக் குகையிலுள்ள கற்படுக்கை. பஞ்சபாணச்செயல் - உன்மத்தம், மதனம், மோகனம், சந்தாபம், வசீகரணம். பஞ்சபாணம் - தாமரைப்பூ, அசோ கம்பூ, மாம்பூ, கருக்குவளைப்பூ, முல்லைப்பூ. பஞ்சபாணன் - மன்மதன். பஞ்சபாணாவத்தை - சுப்பிர யோகம், விப்பிரயோகம், சோகம், மோகம், மரணம் என்பன. பஞ்சபாணி - பார்வதி. பஞ்சபாரதீயம் - நாரதமுனிவர் இயற்றியதாகக் கருதப்படும் ஓர் இசைத்தமிழ் நூல். பஞ்சபாலை - ஒருவகைநெல். பஞ்சபூதம் - மண், விண், நீர், நெருப்பு, காற்று. பஞ்சமகாயாகம் - பிரமயாகம், தெய்வ யாகம், பூதயாகம், பிதிரி யாகம், மானிடயாகம் என்னும் இல்லறத்தான் செய்யும் ஐவகை வேள்வி. பஞ்சமந்திரம் - திரு ஐந்தெழுத்து. பஞ்சமம் - குறிஞ்சி அல்லது பாலைப் பண்வகை. பஞ்சமரபு - அறிவனார் இயற்றிய ஓர் இசைத்தமிழ் நூல். பஞ்சமர் - ஐந்தாம் வருணத்தார், தாழ்த்தப்பட்டோர். பஞ்சமலம் - ஆணவன், கன்மம், மாயை, மாயேயம், திரோதானம். பஞ்சமாசத்தக்கருவி - தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, கஞ்சக்கருவி, மிடற்றுக் கருவி. பஞ்சமாபாதகம் - கொலை, பொய், களவு, கள்ளுண்ணல், குரு நிந்தை. பஞ்சமி - ஐந்தாம் திதி. பஞ்சமுகன் - சிவன். பஞ்சமுத்திரை - திருநீறு, உருத்தி ராக்கம், பூணூல் உத்தரீயம், உட்டி ணீடம் என்னும் ஆசாரியார்க்குரிய அடையாளங்கள். பஞ்சமூர்த்தி - சதாசிவன், மகேசு வரன், உருத்திரன், விட்டுணு, பிரமன். பஞ்சமூலி - வெள்ளெருக்கு, மாவி லிங்கம், சித்திரமூலம், வாலுளுவை, முருங்கை. பஞ்சம் - சிறுவிலைக்காலம் ஐந்து. பஞ்சரத்தினம் - செம்மணி, முத்து வயிரம், பச்சை, நீலம். பஞ்சரம் - பறவை அடைக்கும் கூடு. பஞ்சரித்தல் - தொந்தரவுபடுத்துதல், கொஞ்சிப் பேசுதல். பஞ்சலித்தல் - மனம் தடுமாறுதல். பஞ்சலிங்கம் - பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்னும் ஐந்து சிவலிங்கங்கள். பஞ்சலோகம் - பொன், இரும்பு, செம்பு, ஈயம், வெள்ளி. பஞ்சவடி - கோதாவரிக் கரையி லுள்ள ஓர் இடம், மயிர்க் கயிற்றா லாகிய பூணூல். பஞ்சவமுது - பஞ்சாமிர்தம். பஞ்சவர் - பஞ்சபாண்டவர். பஞ்சவர்ணக்கிளி - ஐந்து நிற முடைய கிளி. பஞ்சவர்ணம் - வெள்ளை, கறுப்பு, சிவப்பு, மஞ்சள், பச்சை. பஞ்சவன் - பாண்டியன். பஞ்சவாசம் - இலவங்கம், ஏலம், கர்ப்பூரம், சாதிக்காய், தக்கோலம் என்பன. பஞ்சவாரியம் - கிராமவரிகளை வசூலிக்கும் அதிகாரக்கூட்டம். பஞ்சவிடயம் - சுவை, ஒளி, ஊறு ஓசை, நாற்றம் என்பன. பஞ்சவில்வம் - வில்வம், நொச்சி, மா விலங்கை, முட்கிளுவை, விளா. பஞ்சாக்கரப்பஃறொடை - பின்வேலப்பதேசிகர் இயற்றிய நூல். பஞ்சாக்கரம் - பஞ்சாட்சரம். பஞ்சாக்கினி - தவம் செய்வோன் தன்னைச்சுற்றி நாலுதிசைகளிலும் மூட்டிய நெருப்பும் மேலே காய்கிற சூரியனும். பஞ்சாக்கினிவித்தை - ஆன்மா சுவர்க்கத்தினின்று பூமியில் பிறத் தற்காக முறையே செல்லுதற்குரிய துறக்கம், மேக மண்டலம், நிலம், தந்தை, தாய் என்னும் ஐந்திடத் தையும் நெருப்பாகவும் தன்னை ஆகுதியாகவும் வைத்துப்புரியும் தியானம். பஞ்சாங்க நமக்காரம் - முழங்கால்கள், கைகள், தலை ஆகிய ஐந்துறுப்புக்கள் நிலத்தில் தோய வணங்குதல். பஞ்சாங்கம் - திதி, வாரம், நட் சத்திரம், யோகம், கரணம் என்னும் ஐந்துறுப்புக்களுடைய காலக் குறிப்பு நூல் (Almanac). பஞ்சாட்சரக்கோயில் - திருநீற் றுப்பை. பஞ்சாட்பரப்படி - சிதம்பரக் கோயிலுள் சிற்சபையில் ஏறுதற் கமைந்த ஐந்துபடிகள். பஞ்சாட்சரம் - திரு ஐந்தெழுத்து. பஞ்சாமிர்தம் - வாழைப்பழம், தேன், சர்க்கரை, நெய், திராட்சை என்னும் ஐந்து பண்டங்களாலாகியதும் அபிடேகத்தில் பயன்படுவதுமான பண்டம். பஞ்சாமிலம் - இலந்தை, மாதுளை, புளியாரை, நெல்லி, எலுமிச்சை என்னும் புளிப்புச்சுவையுள்ள ஐவகை மரங்கள். பஞ்சாயத்தார் - நியாயநடுவர், யூரிமார். பஞ்சாயத்து - நியாயத்தார் ஐவர் கூடிய சபை. பஞ்சாயுதம் - சங்கு, சக்கரம், கதை, சாரங்கம், வாள் என்னும் திரு மாலின் ஆயுதங்கள்; ஐம்படைத் தாலி. பஞ்சாய் - கோரைவகை. பஞ்சாய்க்கோதை, பஞ்சாய்ப் பாவை - பஞ்சாய்க் கோரையால் செய்த பாவை. பஞ்சானன்முரசு - ஐம்முகமுடைய முரசு. பஞ்சானனம் - ஐம்முகமுடைய முரசு. பஞ்சானன் - சிங்கம். பஞ்சானன் - சிவன். பஞ்சி - பஞ்சு, பஞ்சணை, வெண்துகில், பெருந்தூறு வருத்தம். பஞ்சிநாண் - பூணூல். பஞ்சியடர் - சுத்தஞ்செய்தபஞ்சு. பஞ்சியூட்டுதல் - பாதங்களில் செம்பங்குச் குழம்பு பூசுதல். பஞ்சு - பருத்தி, சீலை, விளக்குத்திரி, சூதாட்டத்தில் வழங்கும் குழூஉக் குறி. பஞ்சுகடைதல் - பஞ்சைக் கொட்டை போக்குதல். பஞ்சுதல் - கூறமையைக் காட்டுதல். பஞ்சுத்துய் - பன்னிய பஞ்சுநுனி. பஞ்சுரம் - குறிஞ்சி அல்லது பாலை யாழ்த்திறத்தொன்று. பஞ்சுவணம் - யாக வகை. பஞ்சூகம் - பெருமை. பஞ்சேந்திரியம் - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம் பொறி கள். பஞ்சை - பஞ்சம், ஏழை, அற்பத்தன முள்ளவன். பஞ்ஞிலம், பஞ்ஞில், பஞிலம் - மக்கள் தொகுதி. பட - ஓர் உவம உருபு. படகம் - சிறு பறைவகை, பரண், கவரிமா. படகிதழ் - கப்பலினடிக்கட்டை (Keel). படகு - ஓடம். படங்கம் - கூடாரம். படங்கு - சீலை, கூடாரம், மேற்கட்டி, இடுதிரை, பெருங்கொடி, சாம் பிராணிப் பதங்கம். படங்குவீடு - கூடாரம். படதீபம் - நாகவிளக்கு. படப்பு - கைக்கோற் போர், கொல்லை. படப்பை - தோட்டம், புழக்கடை, பக்கத்துள்ள இடம், ஊர்ப்புறம், மருதநிலத்தூர், நாடு பசுக்கொட்டில். படப்பொறி - பாம்பின் படத்திலுள்ள புள்ளி. படமஞ்சரி, படமாடம் - ஓர் இராகம். படமாளிகை - கூடாரம். படம் - சீலை, சித்திரச் சீலை, சட்டை, போர்வை, திரைச்சீலை, பெருங் கொடி, விருதுக் கொடி, யானை முகபடாம், பாம்பின் படம், கற்றாடி, பாதத்தின் முன்பகுதி. படம்புகுதல் - சட்டை தரித்தல். படர் - வருத்தம், நினைவு, செல்லுகை, தேமல், நூறு, பகை, ஒழுக்கம், துகிற்கொடி, படை வீரர், யமதூதர். படர்க்கை - தன்மை முன்னிலை அல்லாத இடம். படர்ச்சி - செலவு, நல்லொழுக்கம், விதி, படர்ந்தவடிவு. படர்தல் - பரவுதல், ஓடுதல், பெருகு தல், வருந்துதல், விட்டுநீங்குதல், அடைதல், நினைத்தல், பாடுதல். படர்தாமரை - தேமல்வகை (Ring worm). படர்நோய் - நினைவினால் உண் டாகும் நோய். படலம் - கூட்டம், அடுக்கு, நூலின் பகுதி, மேற்கட்டி, தட்டு (Film). படலிகை - வட்டவடிவு, கைம்மணி, பெரும்பீர்க்கு, கண்நோய் வகை, பூ இடுபெட்டி. படலிடம் - குடிசை. படலியம் - குதிரைக்கு அணியும் கருவிகளுள் ஒன்று. படலை - படர்க்கை, பரந்த இடம், வாயகன்ற பறை தழை, தழை மாலை, கூட்டம், படல். படலைக்கண்ணி, படலைமாலை - பச்சிலையோடு பூக்கலந்து தொடுத்த மாலை. படல் - ஓலையாலேனும் முள்ளா லேனும் செய்யப்பட்ட அடைப்பு, உறக்கம். படவன் - படகு ஓட்டி. படவாள் - படைவாள். படவிளக்கு - படம் காட்டும் விளக்கு (Magic Iantern). படவு - படகு. படா - பெரிய. படாகை - கொடி, கூட்டம். படாக்கொட்டில் - கூடாரம். படாம் - சீலை, திரைச்சீலை, கூடாரம், கொடி, முகபடாம். படார் - சிறுதூறு. படி - படிக்கட்டு, நிலை, அங்கவடி, தராசின் நிறைக்கல், நாழி, நித்தியக் கட்டளை, விதம், வமிச பரம்பரை, தகுதி, முறைமை, பகை, ஒத்தபிரதி, உவமை, பூமி. படிகம் - பளிங்கு (Crystal). படிகாரன் - வாயில் காப்பாளன். படிகால் - தலைமுறை. படிகை - யானை மேலிடும் தவிசு. படிக்கம் - எச்சிலுமிழுங்கலம். படிக்காசு - நாள் செலவுக்குக் கொடுக்கும் பணம். படிக்காசுப் புலவர் - தொண்டை மண்டல சதகம் இயற்றிய புலவர் 1686 - 1723). படிக்கால் - ஏணி. படிச்சந்தம் - ஒன்றைப் போன்ற வடிவு. படிதம் - கூத்து, துதி, மாணிக்கவகை. படிதல் - அடியில்தங்குதல் மூழ்குதல், தணிதல். படித்தல் - கற்றல். படிப்படை - கூலிப்படை. படிப்பனை - படிப்பு. படிப்புறம் - கோயிற் பூசகருக்கு விடும் மானியம். படிமகன் - செவ்வாய். படிமக்கலம் - முகம்பார்க்கும் கண்ணாடி. படிமத்தாள் - தேவராட்டி. படிமத்தோன் - தவராளன். படிமம் - பிரதிமை, விரதம், சன்னதம், படிமக்கலம், தூய்மை. படிமவிரதம் - பிரமசாரிய விரதம். படிமா - ஒப்பு. படிமுழுதிடந்தோன் - திருமால். படிமுறை - கிரமம். படிமை - படிவம். படியகம் - படிக்கம். படியச்சு - நேர் ஒப்பு ஒடையது. படியளத்தல் - சீவனத்துக்குப் படி கொடுத்தல். படியளந்தோன் - உலகளந்த திருமால். படியுருவம் - விம்பம் (Image). படியெடுத்தல் - ஒன்றைப் போல் மற்றொன்று செய்தல். படியோர் - பகைவர். படியோலை - மூலவோலையைப் பார்த்து எழுதிய ஓலை. படிவம் - வழிபடும், தெய்வம், உடம்பு, உருவம், வடிவழகு, தவ வேடம், விரதம். படிவர் - முனிவர். படிறன் - பொய்யன், கொடுமை யானவன், தீம்பன். படிறி - வஞ்சகமுள்ளவள். படிறு - வஞ்சனை, அடங்காத்தனம், திருட்டு, கொடுமை. படிற்றுரை - பொய்மொழி. படிற்றொழுக்கர் - தூர்த்தர். படினம் - மேன்மை. படீரம் - சந்தனம், சிவப்பு. படீனம் - பறவைக்கதி விசேடங் களில் ஒன்று. படு - கள், மரத்தின் குலை, குளம், மடு, உப்பு, பெரிய, பேரறிவு. படுகண், படுகண்ணி - ஆபரணத் தின் கொக்குவாய் மாட்டும் உறுப்பு. படுகர் - இழிந்து ஏறும்வழி, பள்ளம், நீர்நிலை, மருதநிலம். படுகல் - மருதநிலம். படுகளம் - போர்க்களம். படுகளி - மிகுமகிழ்ச்சி. படுகாடு - சுடுகாடு. படுகால் - ஏணி. படுகுழி - பெருங்குழி. படுகை - நீர் நிலை. படுகொலை - கொடுங்கொலை. படுக்காளி - போக்கிரி. படுக்கைப்பற்று - சீதனம், அந்தப் புரம். படுசூல் - முதிர்ந்த கர்ப்பம். படுதம் - கூத்துவகை. படுதல் - உண்டாதல், தோன்றுதல், உதித்தல், மொய்த்தல், அகப்படுதல், பெய்தல், பெரிதாதல், அழிதல், சாதல், பழுதுபடுதல், சாய்தல், தொங்குதல், ஒலித்தல், பாய்தல், உடன்படுதல், ஒத்தல். படுதா - மூடுசிலை. படுத்தலோசை - தாழ உச்சரிக்கப் படும் ஒலி. படுத்தல் - செய்தல், அகப்படுத்தல், நிலைபெறச் செய்தல், வளர்த்தல், உடம்பில் பூசுதல், பரப்புதல், தளவரிசை செய்தல், அழித்தல், ஒழித்தல், வீழச்செய்தல், தாழ்த்து ஒலித்தல், பறை, அறைதல், கிடத்தல். படுத்துதல் - துன்பஞ் செய்தல், செய்தல். படுநுகம் - இராச்சியபாரம். படுபட்சி - பட்சி சாத்திரத்தில் வலியிழந்த பட்சி. படுபனை - காய்க்கும்பனை. படுபாவி - மிகக்கொடியவன். படுபொருள் - புதையல், நிகழ்வது, மிகுதியாகத் தேடியபொருள். படுபோர் - கொடும்போர். படுமரத்துமோசிகீரனார் - சங்க காலப் புலவர் (குறு. 33). படுமலைப்பாலை - பாலை யாழ்த் திற வகை. படுமுதலாக - தன்னடைவே. படுமுறை - அபராதம். படுவு - குறள்வடிவுடைய வேலைப் பெண். படுவை - தெப்பம். படை - சேனை, ஆயுதம், சாதனம், கலப்பை, குதிரைக்கலனை, யானைச் சூல், போர், அடுக்கு, படுக்கை, நித்திரை. படைக்கர்த்தர் - படைத்தலைவர். படைக்கலத்தொழில் - படைக் கலத்தைப் பயன்படுத்தும் தொழில். படைக்கலம் - ஆயுதம். படைக்கிழவன்சிறுக்கன் - படை யுள் படுவோன். படைசாற்றுதல் - போருக் கழைத்தல். படைசெய்தல் - போர் புரிதல். படைச்சாத்து - சேனைக்கூட்டம். படைச்சால் - உழவுசால். படைஞர் - படைவீரர். படைத்தலைவன் - சேனாதிபதி. படைத்தல் - உண்டாக்கல், நிவேதித்தல். படைத்துக்கோட்பெயர் - கூத்தில் நடிகனுக்கு இட்டு வழங்கும் பெயர். படைத்துணை - போரில் உதவி. படைத்துமொழிதல் - கற்பித்துச் சொல்லுதல். படைநர் - போர்வீரர். படைநாள் - படை எழுச்சிநாள். படைநிலை - படையாளர் மகளிருடன் தங்குமிடம். படைப்பற்று - பாளையம். படைப்பு - சிருட்டி, படைக்கப் பட்டது, பெறுகை, செல்வம், காடு. படைமடம் - அறப்போர் நெறியி னின்றும் மாறுபடுகை. படைமயிர் - பாவாற்றி. படைமானியத்திட்டம் - பாளை யக்காரர் முறை (feudal system). படையல் - தெய்வத்திற்குப் படைக்கும் உணவு. படையாட்சி - வீரன், வன்னியர், சவளைக்காரருள் வழங்கும் பட்டப் பெயர். படையுடன்படாமை - ஆயுதம் எடேன் என்று வரைந்து கொள் ளுகை. படையுள்படுவோன் - சின்னமூதி. படையுறை - ஆயுத உறை. படைவகுப்பு - படை அணிவகுப்பு. படைவட்டம் - வளைதடி. படைவழக்கு - தம்மில் இனமொத்த படை வீரர்க்கு அரசன் படை வழங்குதலைக் கூறும் புறத்துறை. படைவாள் - கலப்பைக்கொழு, கலப்பை. படைவீடு - இராசதானி, திருப்பரங் குன்றம், திருச்சீரலைவாய், திருவா வினன்குடி, திருவேரகம், பழமுதிர் சோலை குன்றுகள் என்னும் முருகக் கடவுள் இருப்பிடம். பட்சணம் - உண்கை, சிற்றுண்டி. பட்சணி - உண்போன். பட்சத்தில் - ஆயின். பட்சபாதம் - ஒரு பக்கம் சார்பு. பட்சம் - அன்பு, கட்சி. பட்சி - பறவை, குதிரை. பட்சித்தல் - உண்ணுதல். பட்டங்கட்டுதல் - அரசு முதலிய பதவி அளித்தல். பட்டடை - அடைகல், இளியிசை. பட்டணம் - கடற்கரை ஊர். பட்டணவன் - மீன்பிடி சாதிவகை, நெசவு சாதி வகை. பட்டணை - பட்டுப் படுக்கை. பட்டத்தரசி - தலைமை அரசி. பட்டப்பகல் - நடுப்பகல். பட்டபாடு - அனுபவித்த துன்பம். பட்டம் - பருவம், வாள், நீர் நிலை, ஆயுதவகை, வழி, விலங்கு துயிலிடம், கவரிமா, நெற்றியிலணியும் பொன் தகடு, காற்றாடி, சீலை, பெருங்கொடி, பதவி, பலபண்டம். பட்டயம் - வாள், கல்வெட்டு. பட்டர் - இராமனுசாரியருக்குப்பின் வைணவாசிரியத் தலைமை வகித்த பராசரர் என்ற பெயருடைய பெரியார். பட்டர்பிரான் - பெரியாழ்வார். பட்டவர்த்தனம் - அரசயானை, குதிரைச் சாதி. பட்டவர்த்தனர் - பட்டந்தரித்த சிற்றரசர். பட்டன் - அருச்சகன், புலவன். பட்டாங்கு - உள்ள நிலைமை, உண்மை நூல். பட்டாசாரியன் - மீமாம்சை மதத்துள் ஒரு பகுதிக்கு ஆசிரியன். பட்டாகாரன் - கடவுள், குரு, அருக பதவி பெற்றோன். பட்டாவளி - பட்டுத்தினிசு, குரு மாரின் தலைமுறை வரிசை. பட்டாளம் - 500 முதல் 1000 வரை காலாள் கொண்ட படை. பட்டி - பசுக்கொட்டில், சிற்றூhர், இடம், காவலில்லாதவன், களவு, வியபி சாரி, நாள், மகள், தெப்பம், சீலை, விக்கிரமாதித்தன் மந்திரி, பட்டியல். பட்டிகம் - பறவையின் கதி விசேடம். பட்டிகன் - திருடன். பட்டிகை - தெப்பம், ஏடு, இராச பத்திரம், மேகலை, அரைக்கச்சு, முலைக்கச்சு, தோளிலிடும் யோக பட்டி, மதிலடியைச் சுற்றியமைக்கப் படும் அலங்கார வேலையுள்ள பகுதி, இராசபத்திரம், சீந்தில் செவ்வந்திதாழை, பாதிரி, தேற்றா. பட்டிக்காடு - நாட்டுப்புறம். பட்டிநியமம், பட்டி மண்டபம் - வித்தியா மண்டபம். பட்டிமம் - கல்வி பயில் கழகம். பட்டிமாடு - விடுகாலி மாடு. பட்டிமை - வஞ்சனை. பட்டியல் - விலை அட்டவணை (Invoice). பட்டியுரை - வாய்காவாமல் சொல் லும் சொல். பட்டினத்தடிகள் - திருவெண்காடர் (10 ம் நூ). பட்டினப்பாக்கம் - அரசரும் மேன் மக்களும் வாழ்ந்து வந்த புகார் நகரின் ஒரு பகுதி. பட்டினப்பாலை - கரிகாற் பெரு வளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய பாடல் (பத்துப் பாட்டில் ஒன்று.). பட்டினம் - நெய்தல் நிலத்து ஊர். பட்டியனவன் - பரவ சாதியான். பட்டினி - உணவு கொள்ளாமை. பட்டு - பட்டாடை, பட்டு, நூல், சிற்றூர், இருந்து ஏத்தும் மாகதர். பட்டுருவுதல் - ஊடுருவுதல். பட்டை - தகடு, மரத்தோல், மரவுரிவார் (Belt). பட்டைச்சாதம் - நிவேதிக்கப்படும் அன்னக்கட்டி. பட்டைச்சீலை - அரத்தாள் (Sand paper). பட்டையம் - வாள், பத்திரம். பட்டோலை - எழுதிய ஓலை, அட்டவணை. பட்பு - குணம். பணதரம் - படம் உள்ள பாம்பு. பணதி - வேலைப்பாடு, செயல், சிருட்டி, ஆபரணம், கற்பனை. பணம் - காசு, சிறுநாணயம், பாம்பின் படம், காம்பு, யானையை நடத்துதற்குரிய ஆயுதம். பணயம் - பந்தயமாக வைக்கும் பொருள், வேசிக்குக் கொடுக்கும் கூலி. பணவம் - தம்பட்டம். பணவை - பரண், கழுகு, பேய், அளவு. பணாடவி - பாம்புப் படத்தின் கூட்டம். பணாதரம் - பாம்பு. பணி - செயல், தொழில், தொண்டு, ஆபரணம், தோற் கருவி, பட்டாடை, வேலைப்பாடு, சொல் கட்டளை, நாகம். பணிகொள்ளுதல் - அடியானாக ஏற்றுக் கொள்ளுதல். பணிகோள் - வணக்கம். பணிக்களரி - தொழில் செய்யுமிடம். பணிக்கன் - ஆசிரியன், படைக்கலம், பயிற்றுவோன், தச்சன், பள்ளர் சாதி வகையான். பணிக்காயன் - உத்தியோசத்தன். பணிதம் - பந்தயப் பொருள். பணிதல் - தாழ்தல், பரத்தல், வணங்குதல். பணிதி - வேலை, ஆபரணம், அலங்கரிப்பு, செல்வச்செருக்கு, துதிக்கத்தக்கது, வார்த்தை. பணித்தல் - தாழ்த்துதல், மிதித்தல், அருளிச்செய்தல், பட்டளை யிடுதல், கொடுத்தல். பணித்தூசு - அலங்காரச்சீலை. பணிநர் - ஏவலர். பணிபதம் - தாழ்ந்தசொல். பணிப்பகை - கருடன். பணிப்பு - தணிவு, ஏவல். பணிப்பொத்தி - நல்லாடை வகை. பணிமடங்குதல் - வேலைமுடிகை. பணிமாறுதல் - தொண்டுசெய்தல். பணிமூப்பிலார் - தேவடியாட் பெண்கள். பணிமொழி - மென்மொழி, பெண், கட்டளை. பணியறுத்தல் - தன்செயலாற்று நிற்றல். பணியாரம் - தின் பண்டம். பணியார் - பகைவர். பணியிறை - ஆதிசேடன். பணியோள் - வேலைக்காரி. பணிலம் - சங்கு, முத்து. பணிவிடை - குற்றேவல், திருப்பணி, தொழில் கட்டளை. பணிவிளக்கு - கோயில் விளக்கு. பணிவு - கீழ்ப்படிவு, வணக்கம், குறை. பணிசன் - ஆதிசேடன். பணை - பெருமை, மூங்கில், மருத நிலம், வயல், யானை குதிரைகள் தங்கும் கூடம், முரசு வாத்தியம், மருதநிலப்பறை, உயரம், தவறுகை, சாணைக்கல், மரக்கொம்பு. பணைத்தல் - பருத்தல். பணையம் - பந்தயப் பொருள், காலணி, ஈடு. பணையவன் - முரசறைவோன். பணையான் - சாணைக்கல் செய் வோன். பண் - இசை, இசைப்பாட்டு, இசைக் கருவிகள், குதிரைச்சேணம், அலங்காரம், நீர்நிலை, குதிரைக்கதி. பண்டகன் - அலி. பண்டக்கலம் - பொன்னாபரணம். பண்டங்கன் - பண்டரங்கள். பண்டசாலை - களங்சியம். பண்டமாற்று - ஒரு பொருளைக் கொடுத்து மற்றொரு பொருளை வாங்குகை. பண்டம் - பொருள், பணியாரம், பயன், பொன், நிதி, உண்மை, உடல், பழம். பண்டரங்கன் - சிவபிரான். பண்டர் - அசுரர், பாணர். பண்டறிசுட்டு - முன்னம் அறிந்த தைக் குறிக்கும் சுட்டு. பண்டனம் - கவசம். பண்டாரக்குரு - ஆகமக்குரு. பண்டாரசன்னிதி - சைவமடத்தின் பிராமணனல்லாத சைவத்துறவி. பண்டாரசாத்திரம் - தசகாரியம் என்னும் மூன்று நூல்கள், சன்மார்க் சித்தியார், சிவாச்சிரமத் தெளிவு, சித்தாந் தப்பஃறொடை, சித்தாந்த சிகாமணி, உபாயநிட்டை வெண்பா, உபதேச வெண்பா, நிட்டை விளக்கம், அதிசய மாலை, நமச்சிவாயமாலை, உபதேசப் பஃறொடை என்ற 14- (திருவாடு துறை ஆதினத்துத் துறவிகள் இயற்றியவை). பண்டாரம் - பண்டங்கள் வைக்குமிடம், பல்பண்டம். பண்டாரவாரியம் - கோயில் விசாரணைச் சபையார். பண்டி - வண்டி, உரோகிணி, வயிறு, உடல், யானை. பண்டிகை - திருநாள். பண்டிதம் - வைத்தியம். பண்டிதராசர் - கோணாலய புராணமியற்றியவர் (18ம் நூ). பண்டிதவாய் - கடுக்காய். பண்டிதன் - புலவன், வைத்தியன், புதன், நாவிதர் பட்டப்பெயர். பண்டியுளிரும்பு - வண்டியின் இரும்பு அச்சு. பண்டு, பண்டை - பழமை, முற்காலம். பண்ணத்தி - உரையும் பாட்டுமாகச் செய்யப்படும் ஒருவகை நூல். பண்ணப்பணைத்தல் - கப்புங் கிளையும் விட்டுச் செழித்தல். பண்மைத்தல் - ஆயத்தஞ் செய்தல். பண்ணமைமுழவு - வீரமுழவு. பண்ணல் - பாடநினைத்த பண் ணுக்கு இணை, கிளை, பகை, நட்பான நரம்புகள் பெயருந் தன்மை மாத்திரையறிந்து வீக்குகை. பண்ணவன் - கடவுள், முனிவன், குரு, பாணன். பண்ணவி - தேவி. பண்ணறை - இசை அறிவற்றவன். பண்ணன் - சிறுகுடிகிழான். பண்ணாலத்தி - இராக ஆலாபனம். பண்ணிகாரம் - பலபண்டம், பணியாரம். பண்ணியம் - இசைக்கருவி, பண் டம், பணியாரம், விற்கப்படும் பொருள், சோறு. பண்ணிற்றிறம் - ஆறுசுரமுள்ள இசை. பண்ணியாரம் - பணியாரம். பண்ணுதல் - செய்தல், ஆயத்தஞ் செய்தல், அலங்கரித்தல், இசை வாசித்தல், கருதியமைத்தல், சமைத் தல். பண்ணுமை - இசைத்தன்மை. பண்ணுரை - புனைந்துரை. பண்ணுவன் - குதிரைப்பாகன். பண்ணுறுதல் - ஆயத்தமாதல். பண்ணுறுத்தல் - நுகத்தில் பூட்டு தல், ஆயத்தஞ் செய்தல், அலங் கரித்தல். பண்ணை - மருதநிலம், வயல், தோட்டம், நீர்நிலை, ஓடை, மகளிர்கூட்டம், தொகுதி, மிகுதி, மகளிர் விளையாட்டு, துயிலிடம், ஒருவகைக் கீரை, பண். பண்ணைக்காரன் - வேளாண்மை செய்வோன். பண்ணைபாய்தல் - நீரில் பாய்ந்து விளையாடுதல். பண்ணையாடுதல் - விளை யாடுதல். பண்படுதல் - செப்பமாதல், சீர்திருந் துதல். பண்பாகுபெயர் - பண்புப்பெயர் பண்பிக்கு ஆகிவருவது. பண்பாளன் - குணவான். பண்பி - பண்பையுடைய பொருள். பண்பு - குணம், இயல்பு, தன்மை அழகு, முறை, செய்கை. பண்புரு - பண்பைக் குறிக்கும் ஆகிய என்னும் சொல்லுருபு. பண்புரைப்பார் - தூதர். பண்புலம் - உரம் இட்டவயல். பண்பொட்டு - பண்புத் தொகை. பண்மகள் - விறலி. பண்மாறு - தேசிக் கூத்தை ஒரு முறை ஆடி முடித்தல். பண்விடுதல் - நிலைகுலைதல். பதகம் - பறவை, பாதகம். பதக்கணம் - பிரதக்கணம், வலம் வருகை. பதக்கம் - கல்லிழைத்த தொங்கற் கழுத்தணி. பதக்க - இரண்டு குறுணி கொண்ட அளவு. பதங்கம் - விட்டில், மருந்துச் சரக்கு வகை, புடமிடப்படுதல் (Subli mate). பதங்கன் - சூரியன். பதசாரி - நாட்டியத்திற் காலடியிடும் வகை. பதசாலம் - மகளிர் காலணிவகை. பதச்சாயை - மக்கள் நிழல். பதச்சேதம் - சொற்றொடரைத் தனித் தனி சொல்லாகப் பிரிக்கை, சீர். பதடிவைகலார் - சங்க காலப் புலவர் (குறு. 323). பதநீர் - இனிப்புக் கள்ளு, கருப்ப நீர். பதமூத்தி - இந்திரன் முதலிய இறையவர் பதங்கள். பதமை - மென்மை, தாழ்மை. பதம் - பக்குவம், உணவு, சோறு, ஈரம், கல், அறுகம்புல், இனிமை, அழகு, பொழுது, கூர்மை, கால், நாலி லொன்று, பூரட்டாதி, மொழி, இசைப்பாட்டு வகை, பதவி, தெய்வ பதவி, தரம், வரிசை, ஒளி. பபதம்பார்த்தல் - சுவையை அறிதல். பதயுகம் - இரண்டுபாதம். பதரி - இலந்தை. பதர் - உள்ளீடு, இல்லாத நெல், பயனற்றவன், குற்றம். பதர்ச்சொல் - பொருளில்லாத சொல். பதலம் - பதனம். பதலை - மலை, ஒரு கண்பறை, தாழி, கோபுரத்தில் வைக்கும் கலசம். பதலைவங்கு - மலைக்குகை. பதவம் - அறுகு. பதவாயுதம் - கோழி. பதவி - அமைதியுள்ளவன், நிலை, வழி, முத்திநிலை. பதவு - அறுகு, புல், புன்மை. பதவுரை - பதமாகப் பிரித்துக் கூறும் உரை. பதவை - வழி. பதறுதல் - கலங்குதல், அவசரப் படுதல். பதற்றம் - முன்பின் யோசியாமல் அவசரப்படுகை. பதனம் - பத்திரம், பாதுகாப்பு, அமைதி. பதனழிவு - பதக்கேடு. பதனிடுதல் - மெதுவாக்குதல். பதாகினி - சேனை. பதாகை - விருதுக்கொடி, பெரிய கொடி. பதாதி - காலாட் படை, 1 யானை, 1 தேர், 3 குதிரை, 5 காலாள் கொண்ட சேனைத் தொகுதி. பதாயுதம் - பதவாயுதம். பதார்த்தகுணசிந்தாமணி - தேரை யர் செய்த ஒருவைத்திய நூல். பதார்த்தம் - பண்டம். பதி - பதிகை, உறைவிடம், ஊர், பூமி, தலைவன், அரசன், மூத்தோர் குரு, கடவுள். பதிகம் - பத்துப்பாடல் கொண்ட பிரபந்தம், பாயிரம். பதிகன் - வழிப்போக்கன். பதியம்போடுதல் - செடிகளை வைத்துப் பயிராக்குதல். பதிஞானம் - கடவுளைப் பற்றிய அறிவு. பதிட்டிதம் - நிலையாக ஆக்கப் பட்டது. பதிட்டை - பிரதிட்டை. பதிதல் - அழுந்துதல், தங்குதல். பதிதன் - ஒழுக்கம் தவறியவன். பதித்தல் - அழுத்துதல். பதிபுண்ணியம் - கடவுளுக்கச் செய்யும் பணி. பதிப்பு - அழுத்துகை; அச்சிட்ட நூல். பதிப்புரிமை - நூலை அல்லது படங்களைப் பதிக்கும் உரிமை (Copy Right). பதிமினுக்கி - துடைப்பம். பதியம் - இலைப்பாசி. பதியரி - நாற்று. பதியிலார் - கணிகையர். பதியெழவு, பதியெழுதல் - அரசனுக்கு அல்லது பகைப் படைக்கு அஞ்சி வீட்டை விட்டு ஓடுகை. பதில் - பிரதி, விடை. பதிவகம் - பதிவு நிலையம் (Registration Office). பதிவதம் - பதிவிரதம். பதிவிம்பம் - பிரதி விம்பம். பதிவிரதம் - கற்புநெறி. பதிவிரதமுல்லை - கற்புக்கு அறிகுறியாக அணியும் முல்லை. பதிவிரதை - கற்புடையவள். பதிவிருத்தல் - ஒளிந்து இருத்தல். பதிவு - அழுந்துகை, பள்ளம். பதிற்றந்தாதி - வெண்பா அல்லது கலித்துறையில் பத்துப்பாடலால் அந்தாதித் தொடையாகப் பாடப் படும் பிரபந்தம். பதிற்றுப்பத்தந்தாதி - 10ம் பாடற்கு ஒரு சந்தமாக 100 செய்யுளில் அந்தாதியாகப் பாடப்படும் பிர பந்தம். பதிற்றுப்பத்து - சங்கத் தொகை நூல்களுள் ஒன்று, நூறு. பதினெட்டாம்படி - அழகர் கோயில் முதலியவற்றில் பிரமா ணஞ் செய்தற்கு இடமாக உள்ளதும் பதினெட்டுப் படிகளுடையதுமான கட்டு. பதினெட்டாம்படிக் கறுப்பன் - பதினெட்டாம் படிக்கட்டில் வாழும் ஒரு சிறு தெய்வம். பதினெண்கீழ்க்கணக்கு - அடி நிமிர்வில்லாது பெரும்பாலும் வெண்பாவாலமைந்து அறம் பொருள் இன்பங்களுள் ஒன்றை யேனும் பலவற்றையேனும் பலவற்றையேனும் கூறம் நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறு பஞ்ச மூலம், முதுமொழிக் காஞ்சி, ஏலாதி, இன்னிலை என்னும் 18 நூல்கள். பதினெண்சித்தர் - திருமூலர் இராமதேவர், கும்பமுனி, இடைக் காடர், தன்வந்திரி, வால்மீகி, கமலமுனி, போகநாதர், மச்சமுனி, கொங்கணர், பதஞ்சலி, நந்திதேவர், போதகுரு, பாம்பாட்டி, சட்டைமுனி, சுத்தானந்த தேவர், குதும்பைச் சித்தர், கோரக்கர் எனப் பதி னெண்மர். பதினெண்பூமி - சிங்களம், சோனகம், சாவகம், சீனம், துளுவம், குடகம், கொங்கணம், கொல்லம், தெலிங்கம் கலிங்கம், வங்கம், கங்கம், மகதம், கடாரம், கவுடம், கோசலம், தமிழகம். பதின்மர் - பத்துப்பேர். பதுக்காயன் - குறுக்கே வளர்ந்த குள்ளன். பதுக்குதல் - கற்குவியல், இலைக் குவியல், மணற்குன்று, சிறுதூறு, பாறை. பதுக்கை - கற்குவியல், இலைக் குவியல், மணற்குன்று, சிறுதூறு, பாறை. பதுக்கைக்கடவுள் - மணற் குன்றின் மேலுள்ள நடுகல் தெய்வம். பதுங்குகுழி - பதுங்கியிருக்கும் குழி (Trench). பதுங்குதல் - ஒளித்தல், பதி விருத்தல். பதுமகூடம் - 154 சிகரங்களையும் 19 மேனிலைக் கட்டினையும் உடைய கோயில். பதுமகோமளை - சூரபன்மன் தேவி. பதுமநிதி - குபேரன் நவநிதிகளுள் ஒன்று. பதுமபீடத்தன் - பிரமன். பதுமபீடம் - தாமரை, வடிவாகச் செய்யப் பட்ட ஆசனம். பத்தசீலர் - பத்திமான் (Confessor). பத்துலட்சம் - Million. பதுமம் - தாமரை, புராணத்தொன்று, தாமரை வடிவமான முடி உறுப்பு, கோடா கோடி. பதுமயோனி - பிரமன். பதுமராகம் - மாணிக்க வகை. பதுமர் - புத்தருள் ஒருவர். பதுமவியூகம் - தாமரைப்பூ வடிவவாக வகுக்கப்பட்ட அணி வகுப்பு. பதுமனார் - நாலடியாருக்குப் பாலியல் அதிகாரங்கள் வகுத்து உரையிட்ட ஆசிரியர் (9ம் நூ.). பதுமன் - பிரமன். பதுமாக்கன் - திருமால். பதுமாசனம் - யோக ஆசனத்துள் ஒன்று. பதுமாசனன் - பிரமன். பதுமாசனி - இலக்குமி. பதுமினி - தாமரைச்சாதிப் பெண். பதுமுகம் - மஞ்சன நீரில் கலக்கும் நறும் பண்டவகை. பதுமை - திருமகள், மாகாளி, பதும கோமளை, திருமகள் தோன்றிய பொய்கை, ஓரிலைத் தாமரை, பாவை. பதேசம் - நாடு. பதைத்தல் - துடித்தல், ஆத்திரப் படுதல். பத்ததி - ஆகமக் கிரியைகளுக்கு வழிகாட்டும் நூல், வழி, ஒழுங்கு. பத்தராய்ப்பணிவார் - சிவ பிரானுக்கும் பத்தருக்கும் தொண்டு புரியும் ஒருசாரார். பத்தர் - தொட்டி, குடுக்கை, அடியார். பத்தல் - மரத்தாலான நீர் இறைக்கும் கருவி, குழி. பத்தனம் - பட்டணம். பத்தா - கணவன். பத்தாசு - படகு. பத்தாயம் - தானியமிட்டு வைக்கும் களங்சியம். பத்தி - வரிசை, முறைமை, வீட்டின் இறப்பு, அலங்கார வேலைப்பாடு, யானையின் நடைவகை, கடவுள் பத்தி. பத்திக்கீற்று - மகளிர் தோள் தனங் களில் சந்தனக் குழம்பால் எழுதும் வரிக்கோலம். பத்திபாய்தல் - ஒளிவீசுதல், பிரதிபலித்தல். பத்திமுகம் - பந்தல். பத்திமை - பத்தி, காதல். பத்தியம் - மருந்துக்கு ஏற்ற உணவு, இதம், பூவாது காய்க்கும் மரம், கடுக்காய், செய்யுள். பத்திரகாளி - துர்க்கை. பத்திரகிரி - பட்டினத்தார் காலத்து விளங்கிய ஒரு பெரியார் (10ம் நூ.) பத்திரபதி - சிற்றாமுட்டி. பத்திரம் - இலை, புத்தகத்தின் ஏடு, இலை போன்ற தகடு, சாசனம், (Bond), திருமுகம், இறகு, அம்பு, சிறுவாள், அழகு, கவனம், நன்மையானவகை, மலை பத்திரலிங்கம் - பலிபீடம். பத்திரவருடம் - நவ வருடத் தொன்று. பத்திரன் - வீரபத்திரன், பாணபத் திரன். பத்திராதனம் - சிங்காசனம். பத்திராலாபனம் - சேமம் கூறுகை. பத்திரி - அம்பு, குதிரை, இலை. பத்திரிகை - விளம்பரத்துண்டு, புதினத்தாள். பத்திரிப்பு - சுவரின் அடிப்பாகம் பிதுங்கி வரும்படி கட்டும் கட்டு. பத்திரை - காளி, கண்ணன் தேவியருள் ஒருத்தி. பத்தினி - மனைவி, கற்புடையவள். பத்தினி - மனைவி, கற்புடையவள். பத்தினிக்கடவுள் - கண்ணகி. பத்தினிக்கல் - இறந்த கற்புடை யவள் பொருட்டு நாட்டப்பட்ட கல். பத்துப்பாட்டு - சங்கத் தொகை நூல்களுள் ஒன்று. பத்துமாற்றுத்தங்கம் - உயர் தங்கம். பத்தூரம் - பொன்னாங்காணி. பத்தைகள் - சிதறிய துண்டுகள் (Splints). பந்தடி - பந்து விளையாட்டு. பந்தணம் - பற்று. பந்தம் - பாசம், சம்பந்தம், பற்று, கட்டு, பாவின்தளை, முறைமை, தீவர்த்தி, விளக்கு, உருண்டை பொன், நூலிழை. பந்தயம் - போட்டி. பந்தர் - பந்தல், நிழல், பண்டசாலை, ஒலக்க மண்டபம், பழைய கடற் கரைப் பட்டினமொன்று. பந்தல் - பந்தர், நீர் விழுதற்குக் குழாய் வடிவாகச் செய்யப்பட்ட கருவி. பந்தற்கால் - முகூர்த்தக்கால். பந்தனந்தாதி - ஒளவையார் பந்தன் என்பவன் மீது பாடிய அந்தாதி. பந்தனம் - கட்டு, கட்டுகை. பந்தனை - கட்டு, பற்று. பந்தாதிகாரி - சிறைச்சாலை அதிகாரி. பந்தி - ஒழுங்கு, குதிரை முதலியவற்றின் சாலை, உண்டற்கு அமர்ந்தவர் வரிசை. பந்திபோசனம் - உடன் உண்ணுகை. பந்தியர் - ஒரு வகுப்பினர். பந்து - சுற்றம், விளையாடும் பந்து, நீர் வீசுங்கருவிவகை, திரிகை. பந்துவராளி - இராக வகை. பந்தெறிகளம் - பந்தடி மேடை. பந்தோபஸ்து - காவல். பப்படம் - அப்பளம். பப்பத்து - பத்துக்கொண்ட கூறுகள். பப்பரத்தி - பம்பரத்தி. பப்பரம் - ஒரு தேசம். பப்பாதி - இரண்டு சமமாக. பப்பாளி - செடி வகை. பப்பு - பரப்பு, ஒப்பு. பப்புருவாகன் - சித்திராங்கதையிடம் அருச்சுனனுக்குப் பிறந்த மகன். பப்புவர் - அரசன் புகழைப் புகழ்வோர். பமரம் - வண்டு. பமாதம் - அசாக்கிரதை. பம் - விண்மீன். பம்பரத்தி - அடக்கம் அற்றவள். பம்பரம் - சுழன்றாடும் கருவி. பம்பல் - பரந்த வடிவு, பொலிவு, துளி. பம்பளிமாசு - கிச்சிலி வகை. பம்பாய் - ஒரு நகரம். பம்புதல் - செறிதல், நிறைதல், பரவுதல், எழுதல், ஒலித்தல். பம்பை - பறைப்பொது,நெய்தல், முல்லை, நிலப்பறை, பறட்டைமயிர். பம்மகத்தி - பிரமகத்தி. பம்மல் - கவிதல், மூடுதல். பம்மன் - சைன பிரமகத்தி. பம்முதல் - மூடுதல், செறிதல், ஒலித்தல். பயங்கரம் - பயம் தருவது. பயங்காளி - பயங் கொள்ளி. பயத்தல் - விளைதல், உண்டாதல், பலித்தல், பெறுதல், கொடுத்தல், பசத்தல், அச்சமுறுதல். பயந்தோர் - பெற்றோர். பயந்தோர்பழிச்சல் - தலைவியின் பெற்றோரைத் தலைவன் வாழ்த்திப் புகழும் புறத்துறை. பயப்படுதல் - அஞ்சுதல். பயப்பய - மெல்லமெல்ல. பயப்பாடு - அச்சம், பயப்படுகை. பயப்பு - பயன், பசப்பு. பயம் - பலன், இன்பம், அரசிறை, தன்மை, அச்சம், நீர்நிலை, யானை, படுகுழி, வசம்பு. பயம்பகர்தல் - பயன்படுதல். பயம்பு - பள்ளம், நீர்நிலை, யானை, படுகுழி, வசம்பு. பயலைநோய் - பசலைநோய். பயல் - சிறுபிள்ளை, இழியன், பாதி, பாகம். பயறு - சித்திரை, பாசிப்பயறு. பயனிலாள் - வேசை. பயனிலை - எழுவாய் கொண்டு முடியும் சொல். பயனில்சொல் - வீண் சொல். பயனுவமம் - பயன்பற்றி வரும் ஒப்புமை. பயம் - பலன், பொருள். பயானகம் - பயம். பயிக்கம் - பிச்சை. பயித்தியம் - பித்து. பயிரவி - ஓர் இராகம். பயிராகி - பிச்சைக்காரருள் ஒரு வகையினர். பயிரிடுதல் - விலங்கு ஒலிக்குறி காட்டி அழைத்தல். பயிரிலி - தரிசுநிலம். பயிர் - விலங்கு அழைக்கும் ஒலிக்குறிப்பு, பறவைக் குரல், ஒலி, வாக்கியம், சைகை, ஒலிக்குறிப்பு, பைங்கூழ், குருத்து. பயிர்ப்பு - அருவருப்பு, கண்டறி யாதன கண்டுழி உண்டாம் மனம் கொள்ளாநிலை, பிசின். பயிர்தல் - விலங்குகள் ஒன்றை ஒன்று ஒலியிட்டு அழைத்தல், அழைத்தல், இசைத்தல். பயிர்த்தல் - அருவருத்தல். பயிலல் - எடுத்தலோசை. பயில் - சைகை, குழுவுக்குறி, பழக்கம். பயில்தல் - பழகுதல், தேர்ச்சி யடைதல், நெருங்குதல், கற்றல், ஒலித்தல், அழைத்தல். பயில்வு - இருப்பு. பயிற்சி - பழக்கம். பயிற்றி - பயிற்சி. பயிற்றுதல் - பழக்குதல், கற்பித்தல், பலகால் கூறுதல், சொல்லுதல், செய்தல். பயினன் - ஆதிசேடன். பயினி - கூடுகை, குங்குலியமரம். பயின் - பிசின், பாலேடு, கப்பலின் சுக்கான். பயோததி - பாற்கடல், கடல். பயோதரம் - முலை, கடல், மேகம். பயோதி - கடல். பரகதி - மோட்சம். பரகாயசரிகர் - கூடுவிட்டுக் கூடுபாய வல்லோர். பரகிதம் - பழைய சோதிட கணன வகை. பரிகீயம் - பிறர்க்கு உரியது. பரகீயை - பிறருக்குரியவள். பரகுபரகெனல் - தடுமாற்றக் குறிப்பு. பரகேசரி - சோழர் சிலர்க்கு வழங்கிய பட்டப் பெயர். பரகேசரிக்கல் - பொன் நிறுத்தற்குச் சோழர் காலத்தில் பயன்படுத்தப் பட்ட பழைய எடைவகை. பரக்க - விரிவாய். பரக்கழி - பெரும்பழி. பரக்கழிதல் - பெரும்பழி உறுதல். பரக்குதல் - அலைந்துதிரிதல். பரங்கருணை - தெய்வ அருள். பரங்குன்று - திருப்பரங்குன்று. பரசமயகோளரி - திருஞான சம்பந்தரின் பட்டப்பெயர். பரசிவம் - எல்லோரும் அறிந்தது. பரசு - மழு, மூங்கில், கோடரி. பரசுகம் - வீட்டு இன்பம். பரசுதல் - துதித்தல். பரசுபரணி - சிவன். பரசுராமன் - சமதக்கினியின் மகன். பரசை - சிறிய ஓடம். பரஞானம் - கடவுளைப்பற்றிய அறிவு. பரஞ்சாட்டுதல் - பொறுப்புக் காட்டுதல். பரஞ்சுடர் - பரஞ்சோதி. பரஞ்சோதி - கடவுள். பரஞ்சோதி முனிவர் - மெய் கண்டாரின் ஞானகுரு, திருவிளை யாடற் புராணம் செய்த ஆசிரியர் (16ம் நூ.). பரடு - காற்பரண்டை, கணு. பரடையார் - சபையின் அங்கத் தினர். பரடையம் - ஒட்டுச் சல்லடம். பரணதேவர் - பதினோராம் திரு முறையில் சிவபெருமான் திருவந் தாதி இயற்றிய ஆசிரியர். பரணர் - கடைச் சங்கப் புலவருள் ஒருவர் (அகம்.6). பரணி - இரண்டாம் நட்சத்திரம், பிரபந்தவகை, முகூர்த்தத் தொன்று, அடுப்பு, செப்பு, பரண், ஏரிமதகு, சிலந்திக் கூடு. பரணை - தண்ணீர் விட்டான், பரண். பரண் - காவல்மேடை, மச்சு. பரண்டை - பரடு. பரதகண்டம் - விந்தியத்துக்குத் தெற்கிலுள்ள தேசம், இந்தியா. பரதசாத்திரம் - அரபத்த நாவலர் இயற்றிய ஒரு தமிழ் நாட்டிய நூல், பரதர் இயற்றிய நாட்டிய நூல். பரதசூடாமணி - தாளத்தைப் பற்றிக் கூறும் தாளசமுத்திரம் என்னும் இசைநூலின் ஆசிரியர். பரதசேனாபதீயம் - ஆதிவாயிலார் வெண்பாவால் இயற்றிய ஒரு நாடக நூல். பரதசேனாபதீயம் - ஆதிவாயிலார் வெண்பாவால் இயற்றிய ஒரு நாடக நூல். பரதச்சவுதம் - பரதசாத்திரம். பரதத்துவம் - பரம்பொருள். பரதநாட்டியம் - சதிர் ஆட்டம். பரதந்திரியம் - பிறரைச் சார்ந்து இருக்கை. பரதமோகினி - நாட்டியத்தால் பிறரை மயக்குபவள். பரதம் - கூத்து, ஒரு நாடகத் தமிழ் நூல், ஒரு பேரெண். பரதர் - குருகுலத்தரசர், பரதவர், தீயோர், செம்படவர். பரதவர் - நெய்தல் நிலமாக்கள், தமிழ் நாட்டை ஆண்ட ஒருசார் குறுநில அரசர். பரதவித்தல் - இயங்குதல், வருந் துதல். பரதன் - ஓர் அரசன், இராமன் தம்பி, பரத நூல் செய்தவன். பரதாரம் - பிறன் மனைவி. பரதெய்வம் - முழுமுதற் கடவுள். பரதேசம் - அயல்நாடு. பரதேசி - அயல் நாட்டான், ஆண்டி, கதியற்றவன். பரத்தன் - பரத்தையரிடம் செல் வோன். பரத்தி - நெய்தல் நிலப் பெண். பரத்திரயம் - இரத்தினத்திரவியம். பரத்திரவியம் - பிறர் பொருள். பரத்துதல் - விரித்தல். பரத்துவம் - கடவுளின் தன்மை, முதன்மை. பரத்துவன், பரத்துவாசன் - ஒரு முனிவன். பரத்தை - பொதுமகள், அயன்மை. பரத்தைமை - பரத்தையைச் சேரும் ஒழுக்கம். பரத்தையிற்பிரிவு - பரத்தையைக் குறித்துத் தலைவன் மனைவியை விட்டுப் பிரிந்திருத்தலைக் கூறும் அகத்துறை. பரநியாசம் - குரு அல்லது தெய்வத்தி னிடம் ஆன்ம பாரத்தை வைக்கை. பரநிருபர் - பகை அரசர். பரந்தாமன் - திருமால். பரபூர்வை - மறுமணம் செய்தவள். பரப்பற - சுருங்க. பரப்பாழ் - வானவெளி. பரப்பிரமம் - முழுமுதற்கடவுள். பரப்பு - இடவிரிவு. பரப்புதல் - பரவச் செய்தல். பரமகாரணன் - கடவுள். பரமகுரு - சிறந்த குரு. பரமசிவன் - சிவபிரான். பரமசுந்தரி - அழகர்மலைத்திருமால். பரமஞானம் - பதி அறிவு. பரமண்டலம் - அன்னிய நாடு, மோட்சம். பரமம் - சிறப்பு. பரமலோபி - மிக்க உலோபி. பரமனையே பாடுவார் - தொகை யடியாருள் சிவனையே பாடும் ஒரு தொகுதியினர். பரமன் - கடவுள். பரமாகமம் - சைன ஆகமங்களுள் முதன்மையானது. பரமாகாசம் - பரவெளி. பரமாசாரியன் - பெரியகுரு. பரமாணு - சூரியகிரணத்தில் படரும் துகளில் 30ல் ஒரு பாகமாகிய மிகச் சிறிய அணு. பரமாத்தம், பரமாத்தியம் - ஒரு கற்ப நூல். பரமாத்துமா - கடவுள். பரமார்த்த குரு கதை - தமிழில் வீரமா முனிவர் இயற்றிய ஒரு கதை. பரமார்த்தம் - மேலான பொருள், மோட்சம். பரமானந்தம் - சிறந்த ஆனந்தம். பரமானந்தமுனி - ஞானாமிர்தம் என்ற நூலாசிரியரின் குரு. பரமுக்தி - பாசங்களினின்று முற்றும் விடுபட்டமின் அடையும் முத்தி. பரமேசுவரன் - கடவுள். பரமேசுவரி - பார்வதி. பரமேட்டி - சிவன், பரம்பொருள், பிரமன், திருமால். பரமைகாந்தி - கடவுளை நினை வோன். பரம் - மேலானது, கடவுள். பரமேசுவரி - பார்வதி. பரமேட்டி - சிவன், பரம்பொருள், பிரமன், திருமால். பரமைகாந்தி - கடவுளை நினைவோன். பரம் - மேலானது, கடவுள். பரம்பரம் - முத்தி, மேலானது. பரம்பரை - தலைமுறைத் தொடர்பு. பரம்பு - வரம்பு சமப்படுத்தும் பலகை. பரம்புதல் - பரவுதல். பரராசசிங்கம் - பகை அரசர்க்குச் சிங்கம் போல்வான். பரர் - பகைவர். பரலோகப்பிராப்தி - சாதல். பரலோகம் - மேல் உலகம். பரல் - பருக்கைகல், விதை. பரவசம் - மிகுகளிப்பு, தன்வசம் இழக்கை, பராக்கு. பரவணி - வமிசாவளி, பரம்பரை. பரவர் - கடற்கரைகளில் மீன்பிடித்து வாழும் சாதியார். பரவல் - துதித்தல், பரவின இடம். பரவாதி - பிறசமயி. பரவிசயம் - தும்பை. பரவுக்கடன் - நேர்த்திக்கடன். பரவுதல் - புகழ்தல், துதித்தல். பரவெளி - கடவுள், ஞானாகாசம். பரவை - கடல், பரப்பு, ஆடல், மதில், பரவையார். பரவைநாச்சியார் - சுந்தரமூர்த்தி நாயானர் மனைவியருள் ஒருவர். பரவையாழ் - பேர்யாழ். பரவையுண் மண்டலி - திருவாரூரி லுள்ள ஒரு சிவாலயம். பரவைவழக்கு - உலக வழக்கு. பரனந்தி - பர தெய்வம். பரன் - கடவுள், அன்னியன், சிவான்மா. பரா - மிகுதி. பராகண்டம் - பராக்கு. பராகம் - தூளி, மகரந்தம், வாசனைப் பொடி, விரதவகை. பராகாசம் - பரவெளி. பராக்கதம், கராக்கிரதம் - கடியப் பட்டது. பராக்கு - கவனக்குறைவு. பராக்கிரமம் - வீரம், வல்லமை. பராங்கதி - மோட்சம். பராங்குசன் - எதிரிகளாகிய யானை களை அடக்கும் அடங்குசம் போன்றவன், நம்மாழ்வார். பராசக்தி - சிவசக்தி. பராசரபட்டர் - இராமனுசருக்குப் பின் வைணவ ஆசிரியத் தலைமை வகித்தவர். பராசரம் - தரும நூலுள் ஒன்று. பராசரன் - வியாசர் தந்தை. பராசலம் - திருப்பரங்குன்றம். பராதீனம் - சுதந்திரம் இன்மை. பராந்தகன் - புகழ்பெற்ற ஒரு சோழ அரசன், பகைவர்க்கு யமன் போன்றவன், 8 ஆம் நூற்றாண்டில் விளங்கிய சோழருள் ஒருவன். பராபரன் - கடவுள். பராபரை - சிவசத்தி. பராபவ - 40ஆவது ஆண்டு. பராபவம் - தோல்வி. பராமரி - ஆலோசித்தல். பராமரித்தல், பராமரிப்பு - ஆதரித் தல். பராமுகம் - பாராமுகம், அலட்சியம். பராய் - பிராய். பராயணம் - குறிக்கோள். பராரி - ஓடிப்போனவன். பராரை - மரத்தின் பருத்த அடி, விலங்கின் பருத்தமேல் தொடை. பரார்த்தபூசை - பிறர் பொருட்டுச் செய்யும் சிவபூசை. பரார்த்தம் - பிறர் பொருட்டானது, ஒரு பேரெண், பிரமகற்பத்தில் பாதி. பராவணம் - துகிக்கப்படுவது. பராவமுது - தெய்வங்களுக்கு உரிய அமுதம். பராவுதல் - புகழ்தல். பராவர்த்திதம் - கூத்து உறுப்புக்களுள் ஒன்று. பரானுபவம் - பேரின்பம். பரானுபூதி - பிறர் அனுபவம். பரி - குதிரை, குதிரைக்கதி, செலவு, வேகம், அசுவதி, குதிரை, மரம், உயர்ச்சி, பெருமை, கறுப்பு, மாயம், பருத்தி, பாதுகாக்கை, சுமை, பரிச உணர்வு. வருத்தம், மிகுதிப்பொருள் குறிக்கும் ஓர் இடைச்சொல். பரிகம் - மதில், எழுமரம், ஓர் இரும்பாயுதம். பரிகரம் - உபகரணம், பரிவாரம், செய்யுள்அணிவகை, கட்டில். பரிகரித்தல் - நோயைக் குணப்படுத்துதல், அடக்குதல், போற்றுதல். பரிகலசேடம் - ஞானாசிரியன் உண்ட மிச்சில். பரிகலபரிசின்னங்கள் - எடுபிடி முதலியன கொண்டு செல்லும் ஏவலாளர். பரிகலம் - பெரியோர் உண்ட மிச்சிம், சேனை, பேய்க் கூட்டம். பரிகாசம் - பகடி, விளையாட்டு. பரிகாரம் - வைத்தியம், நீக்குகை, கழுவாய், கேடு நீங்கக் கூறும் வாழ்த்து,வழு அமைதி, பொருள். பரிகாரி - வைத்தியன். பரிகை - அகழி, மதிலுள்மேடை. பரிக்கந்தி - அமுக்கிரா. பரிக்காரர் - குத்துக்கோற்காரர். பரிக்காரர் - ஊர்ச்சபையார். பரிக்கிரகத்துப்பெண்டுகள் - கோயிற் பணிசெய்யும் பெண்கள். பரிக்கிரகம் - ஊர்ச்சபை. பரிக்கிரயம் - விற்பனை. பரிக்கீது - பரீட்சித்து அரசன். பரிக்கை - தாங்குகை. பரிக்கோல் - குத்துக்கோல். பரிசம் - தொடுகை, தொட்டு உணரும் அறிவு, கிரகணம் பற்றுகை, மணமகளுக்கு மணமகன் அளிக்கும் ஆபரணாதிகள், கூத்திக்குக் கொடுக்கும் முன் பணம். பரிசமணி - பள்ளர் கலியாணத்தின் பொருட்டுக் கட்டும் கழுத்தணி. பரிசயம் - பழக்கம், பரிச்சயம். பரிசயித்தல் - பழகுதல். பரிசனம் - பரிவாரம், ஏவல், செய்வோர், சுற்றம், தொடுகை. பரிசனவேதி - தாழ்ந்த உலோகங்களைப் பொன்னாக்குதல். பரிசனன் - காற்று. பரிசனை - பழக்கம். பரிசாரகம் - ஏவற்றொழில், சமயற்றொழில். பரிசாரம் - பரிகாசம், வணக்கம். பரிசாரிகை - வேலைக்காரி. பரிசித்தல் - தொடுத்தல். பரிசிலர், பரிசிலாளர் - இரப்போர். பரிசில் - பரிசு, கொடை. பரிசில்கடாநிலை - பரிசில் நீட்டித்த தலைவனுக்குப் பரிசில் வேட்டோன் தன்னிடும்பை கூறிக் கேட்கும் புறத்துறை. பரிசில்விடை - தன்புகழ் கூறுவோர்க்கு அரசன் வேண்டியன வழங்கி அவர் மகிழ விடை கொடுத்தலைக் கூறும் புறத்துறை. பரிசிற்றுறை - அரசன் முன்னே பரிசலர் தாம் கருதியபேறு இது எனக் கூறும் புறத்துறை. பரிசினிலை - பரிசில் கொடுத்த பின்னும் விடைகொடுக்கத் தாழ்க்கும் தலைவனிடத்து நின்று பரிசில் பெற்றோன் தானே செல்ல ஒருப்படுதலைக் கூறும் புறத்துறை. பரிசீலனை - பரிசோதனை. பரிசு - கொடை, குணம், விதம், விதி, பெருமை. பரிசுகெடுதல் - சீரழிதல், அவமானப்படுதல். பரிசுத்தம் - துப்புரவு. பரசை - கேடகம். பரிசோதனை - நன்கு ஆராய்கை. பரிச்சந்தம் - பரிச்சின்னம். பரிச்சாத்து - குதிரைக் கூட்டம். பரிச்சித்து - பரிட்சித்து. பரிச்சினம் - அளவுபட்டது, அரச சின்னம். பரிச்செண்டு - விளையாடும் பந்து வகை. பரிச்சேதம் - துண்டிக்கை, எல்லை. பரிடையார் - நிர்வாக சபையார். பரிட்டவணை - மாறுகை. பரிட்டனம் - பறவை வட்டமிடுகை. பரிணதன் - கற்றோன். பரிணமித்தல் - நிலைமாறுதல். பரிணயம் - திருமணம். பரிணாமம் - ஒன்ற வேறு ஒன்றாக மாறுகை. பரிணாமவாதம் - காரணம் தன்னோடொத்த காரியமாக மாறும் என்ற கொள்கை. பரிதபித்தல், பரிதவித்தல் - துக்கித்தல், இரங்குதல். பரிதல் - இரங்குதல். பரிதாகம் - வெம்மை. பரிதாபம் - இரக்கம், துக்கம். பரிதானம் - இலஞ்சம், பண்டமாற்று. பரிதி - பரிவேடம், வட்ட வடிவு, சூரியன், தேருருளை, சக்கராயுதம், சக்கரவாகப்புள், ஒளி, ஒமாக் கினியைச் சுற்றியிடும் தருப்பை, திருக்குறள் உரை ஆசிரியருள் ஒருவர், சுற்றளவு (Circum ference). பரிதிகாந்தம் - சூரிய காந்தம். பரிதிவட்டம் - சூரிய மண்டலம். பரித்தல் - சுமத்தல், பாதுகாத்தல். பரித்தியாகம் - முற்றும் துறக்கை. பரித்திராசம் - பெரும்பயம். பரிநிர்வாணம் - வீடுபேறு. பரிநீதி - குதிரையின் இலக்கணம் கூறும் நூல். பரிந்துபேசுதல் - ஒருவருக்காகப் பேசுதல். பரிபக்குவம் - ஞானமுதிர்ச்சி. பரிபரி - யானையை அடக்குவதற்குரிய ஒரு பரிபாடை. பரிபவம் - அவமானம், எளிமை. பரிபாகம் - பக்குவம், முதிர்வு. பரிபாடல் - சங்கத் தொகை நூல்களுள் ஒன்று. பரிபாடை - குறியீடு, குழூஉக்குறி. பரிபாட்டு - பரிபாடல். பரிபாலனம் - பாதுகாப்பு. பரிபுரம் - சிலம்பு. பரிபுலம்புதல் - மிகவருந்துதல். பரிபூரணம் - நிறைவு, பெண் குழந்தைகளைப் பெற்ற தாய் தந்தையர் இனிப் பெண் குழந்தை பிறக்க வேண்டா மென்னும் கருத்துடன் கடைசிப் பெண்ணிற்கு இடும் பெயர். பரிபூரணன் - எங்கும் நிறைந்த கடவுள். பரிப்பு - இயக்கம், துக்கம், தாங்குகை. பரிமளகந்தி - வியாசரின் தாய். பரிமளம் - மிகுமணம். பரிமளிப்பு - வாசனை வீசுகை, சிறப்பு. பரிமா - குதிரை. பரிமாணம் - அளவு (Dimension). பரிமாணனார் - ஓர் இலக்கண ஆசிரியர். பரிமாறுதல் - உணவு படைத்தல், மாற்றிக் கொள்ளுதல். பரிமுகம் - அசுவினி. பரிமுகமாக்கள் - கின்னரர். பரிமுகவம்பி - குதிரை முகுஓடம். பரிமேயம் - அளவுபட்டது. பரிமேலழகர் - திருக்குறள் உரையாசிரியருள் ஒருவர் (13ம் நூ.). பரிய - பருத்த. பரியகம் - பாதகிங்கிணி, கைச்சரி. பரியங்கம் - கட்டில், துயிலிடம். பரியங்கியோகம் - யோகமுறை களுள் ஒன்று. பரியட்டக்காசு - துகில்வகை. பரியட்டம் - பரிவட்டம். பரியந்தம் - எல்லை. பரியம் - மணப்பரிசு, பரத்தையர் கூலி. பரியரை - மரத்தின் பெரிய அடிப் பகுதி. பரியல் - இரங்குகை, விரைந்து செல்லுகை. பரியழல் - வடவைத்தீ. பரியன் - பெரியோன். பரியாசகர் - வேடிக்கைக்காரர். பரியாசம், பரியாசை - பரியாசம். பரியாயம் - பிரதிபதம். பரியாளம் - பரிவாரம். பரியாறுடையான் - கேது. பரிவட்டணை - யாழ்நரம்பைக் கரணஞ்செய்து தடவுகை. பரிவட்டம் - கடவுள், ஆடை, பரிவேடம். பரிவத்தனம் - சுற்றுகை. பரிவர் - அன்பு உள்ளவர். பரிவர்த்தனை - பண்டம் மாற்றுகை. பரிவாதம் - பழிச்சொல். பரிவாதினி - வீணை வகை. பரிவார தேவதைகள் - சுற்றுத் தேவதைகள். பரிவாரம் - சூழ்வோர், மறவர், அகம் பாடியாருள் ஒரு பகுதியினர். பரிவிருத்தி - அன்பு, பத்தி, இன்பம், அனுதாபம், வருத்தம், குற்றம். பரிவேடம், பரிவேடிப்பு - சந்திர சூரியரைச் சுற்றிக் காணப்படும் ஊர்கோள் வட்டம். பரிவேட்டி - வலம் வருகை. பரிவேட்பு - பறவை வட்டமிடுகை. பரீஇ - பருத்தி. பரீசித்து - அபிமன்யுவின் மகன். பரீட்சை - சோதனை. பரீதாபி - 60 ஆண்டுகளுள் ஒன்று. பரு - உடம்பிலுண்டாகும் கட்டி வகை. பருகுதல் - பருகச் செய்தல். பருக்கென்னுதல் - கொப்பளித்தல். பருக்கை - பருமனாகை, சோற்று அவிழ், பளிங்கு. பருக்கைக்கல் - சிறு கூழாங்கல். பருங்கி - வண்டு. பருங்குதல் - பறித்தல், கொல்லுதல். பருங்குறடு - இரும்பு முதலிய வற்றைப் பற்றும் குறடு. பருச்சனியம் - மேகம். பருங்சாய் - சடாமாஞ்சி. பருணன் - நிருவகிப்பவன். பருணிதன் - புலவன், ஞானபக்குவ முடையவன். பருதி - சூரியன், தேர், உருள், வட்டம், சக்கரம். பருத்தி - பஞ்சு, பஞ்சுச்செடி. பருத்திப்பெண்டு - பருத்தி நூற்கும் பெண். பருத்திவீடு - சுகிர்ந்த பஞ்சு. பருந்தாட்டம் - பெருந் துன்பம். பருந்தின்வீழ்வு - முன்பின் சூத்தி ரங்களோடு இயைபில்லாத சேய் மையிலுள்ள சூத்திரத்தோடு இயைபுபட்டு நிற்பது. பருந்து - பறவைவகை, வளையல். பருபருக்கை - சிறிதும் பெரிதுமான பொருளின் தொகுதி. பருப்பதம் - மலை. பருப்பம் - பெருக்கை. பருப்பு - பெருமை, தோல் நீக்கிய தானிய வகை. பருப்பொருள் - நூலின் பிண்டப் பொருள், பாட்டின் மேல் எழுந்த வாரியான் பொருள். பருமணல் - வரிக்கூத்து வகை. பருமம் - 18 வடங்கொண்ட அரைப் பட்டிகை, பருமை, கவசம், குதிரைச் சேணம், யானைக் கழுத்துமெத்தை. பருமன் - பெருமை. பருமிதம் - எக்களிப்பு. பருமித்தல் - அலங்கரித்தல், படைக் கலம் பயிலுதல். பரும்படி - கறி பதார்த்தங்களோடு அமைந்த அன்னம். பருவகாலம் - ஏற்ற காலம். பருவக்காற்று - குறித்த பருவத்தில் ஒரு முகமாக அடிக்கும் காற்று. பருவதம் - மலை. பருவத்தொழுக்கம் - காலத்துக்கு ஏற்ப நடிக்கும் செயல். பருவம் - காலம், இருதுக்கள், மாதம், தக்க காலம், வயது, இளமை, நூலின் கூறு. பருவரல் - துன்பம். பருவருதல் - துன்புறுதல். பருவி - பருத்தி. பருவுதல் - அழித்தல். பரூஉ - பருமை, பறிக்கை. பரூஉக்கை - பருத்தகை, வண்டி யின் தெப்பக்கட்டை. பரூஉமோவாய்ப் பதுமனார் - சங்க காலப் புலவர் (குறு. 101). பரேண் - மிக்க வன்மை. பரேர் - மிக்க அழகு. பரை - பார்வதி, உயிர் கடவுள் அருளைப் பெற்று நிற்கும்நிலை, 2 கனஅடி 544 கன அங்குலம் கொண்ட அளவு. பரைச்சி - பார்வதி. பரைநாதன் - நெல்லிக்காய்க் கெந்தி. பரோட்சஞானம் - பரஞானம். பரோட்சம் - கண்ணுக் கெட்டாதது. பரோபகாரம் - பிறர்க்குச் செய்யும் உதவி. பர்க்கன் - ஒளி, சிவன். பர்ணசாலை - இலைவேய்ந்த குடில். பர்ணம் - இலை. பர்த்தா - கணவன். பர்லாங் - 220 கசம் (யார்) கொண்ட தூரம். பர்வதராசன் - இமயம். பல - ஒன்றுக்கு மேற்பட்டவை. பலகணி - சாளரம். பலகறை - சோகி. பலகாரம் - சிற்றுண்டி வகை. பலகை - மரப்பலகை, சூதாடு பலகை, நெடும்பரிசை, பறைவகை, யானை மேலிடும் தவிசு. பலங்கனி - பலாக்கனி. பலசரக்கு - பலவகைப் பண்டம். பலசாலி - பலமுள்ளவன். பலசூதனன் - இந்திரன். பலதேவன் - பலராமன். பலத்தல் - உறுதி அடைதல். பலபடட்டைச் சொக்கநாதப் புலவர் - தொண்டை நாட்டில் வாழ்ந்த புலவர் (18ம் நூ.). பலபத்திரன் - பலராமன். பலபத்தின்கொடி - பனை. பலபத்தின்படை - ஏர். பலபந்தம், பலவந்தம் - பலாத்காரம். பலபல - அனேகமானவை. பலபொருளொருசொல் - பல பொருளைக் குறிக்கும் ஒரு சொல். பலமிலி - காய்த்தலில்லாத மரம். பலம் - கனி, காய், கிழங்கு, பயன், வெட்பாலை, வலி, படை, உறுதி, நிறைகை. பலரறிசுட்டு - உலகறி பொருள் மேல் வரும் சுட்டு. பலரறிசொல் - வதந்தி. பலராமன் - கண்ணபிரானின் அண்ணன். பலர் - அனேகர். பலர்பால் - உயர்திணைப் பன் மையைக் குறிக்கும் பால். பலவு - பலா. பலன் - வருவாய், நன்மை, திண்மை, வலிமை, ஓரசுரன். பலா - மரவகை, சிற்றாமுட்டி. பலாக்காய்முருகு - காதணிவகை. பலாகம் - கொக்கு. பலாசம், பலாசு - புனமுருக்கு, இலை, பசுமை, ஈரப்பலா. பலாண்டு - ஈருள்ளி. பலாத்காரம், கலாற்காரம் - வலிமை செய்தல். பலாயனம் - புறங்காட்டுகை. பலாயனன் - கரந்துறைந்தபோது வீமன் வைத்துக் கொண்ட பெயர். பலாலம் - வைக்கோல். பலி - பலிப்பது, தேவர் பிதிரர்க்கு இடும் உணவு, பலியிடும் உயிர், சோறு, சாம்பல், காக்கை, மரவகை, கந்தகம். பலிசக்கரவர்த்தி - மாபலிச் சக்கர வர்த்தி. பலிசை - இலாபம். பலிதம் - பலிக்கை, இலாபம். பலிதேர்தல் - பிச்சையெடுத்தல். பலிதை - கிழவி. பலிபீடம், பலிபீடிகை - பலியிடும் மேடை. பலிபுட்டம் - காக்கை. பலிப்பு - நன்றாக விளையும் தன்மை. பலினி - ஞாழல், மிளகு, மல்லிகை. பலு - சோகி. பலுகு - பயிர்களைப் பெயர்க்கும் பாரை. பலுக்குதல் - தற்புகழ்ச்சியாகப் பேசுதல். பலை - திரிபலை, சிற்றாமுட்டி. பலோதகம் - பழச்சாறு. பலோத்தனம் - திராட்சைவகை. பல் - எயிறு. பல்கலைக்கழகம் - உயர்த்தரப் படிப்பு நடத்தும் கல்வி நிலையம். பல்காப்பியனார் - பல்காப்பிய மென்னும் இலக்கணஞ் செய்தவர். பல்காயனார் - பழைய நூலாசிரிரு ளொருவர். பல்காழ் - மேகலை. பல்காற்பறவை - வண்டு. பல்குதல் - பெருகுதல். பல்பொருட்சூடாமணி - ஈசுரபாரதியார் இயற்றிய ஒரு நிகண்டு 17ஆம் நூற்றாண்டு. பல்பொருட்பெயர் - பலபொருள் தரும் சொல். பல்லக்கு - ஆட்கள் தூக்கிச் செல்லும் வாகனம். பல்லணம் - குதிரைக்கலனை. பல்லதி - இராகவகை. பல்லம் - ஒரு பேரெண், கரடி, ஆயுதவகை, அம்பு. பல்லரணை - பல்லீற்று நோய். பல்லவதரையர் - பல்லவர். பல்லவமல்லன் - இரண்டாம் நந்தி வன்மன். பல்லவம் - தளிர், அம்பு. பல்லவர் - பலர், கி.பி.3ஆம் நூற் றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை காஞ்சிநகரிலிருந்து ஆண்ட அரசவமிசத்தினர். பல்லவராயன் - சோழர் தன் சேனாபதிகளுக்கு அளித்த பட்டங்களுள் ஒன்று, கள்ளர், ஒச்சச் சாதியாரின் பட்டப் பெயர். பல்லவன் - கீழ்மகன். பல்லவி - கீர்த்தனத்தின் முதலுறுப்பு. பல்லவை - பலபொருள். பல்லாங்குழி - ஒருவகை விளை யாட்டு. பல்லாண்டு - நீடுவாழ்க என்னும் வாழ்த்து, பல ஆண்டு. பல்லார் - பலர். பல்லி - சிறுபிராணிவகை, பூடுவகை, ஓர் பறவை. பல்லிதழ் - மலர். பல்லிப்பூண்டு - கொல்லைப்பல்லி. பல்லிபடுதல் - பல்லி சொல்லுதல். பல்லியங்காசனம் - யோக ஆசன வகை. பல்லியம் - பலவகை வாத்தியங்கள். பல்லியாடுதல் - விதைத்தபின் மட்டஞ் செய்தல். பல்லீறு - பற்களைப் பற்றியுள்ள தசை. பல்லுகம் - கரடி. பல்லுறைப்பை - பல அறை களுடைய பை. பல்லூழ் - பலமுறை. பல்வலம் - சிறுகுளம். பல்வலிப்பறவை - சரபம். பல்வளம் - நிலம் நீர் முதலியவற்றின் வளம். பவ - 60 ஆண்டில் 8 ஆவது. பவகாரணி - அழகர் மலையி லுள்ள ஒரு பழம் பொய்கை. பவஞ்சம் - பிரபஞ்சம். பவணந்தி - நன்னூலாசிரியர் 13ஆம் நூற்றாண்டு. பவணம் - நாகலோகம். பவணர் - நாக உலகத்தினர். பவணேந்திரன் - இந்திரருள் ஒருவன். பவணை - கழுகு. பவதி - பார்வதி. பவத்தல் - தோன்றுதல். பவமானன் - வாயுதேவன். பவமின்மை - பிறப்பின்மை. பவம் - பிறப்பு, உலகம், வாழ்க்கை, பாவம், மனவைரம். பவர் - கொடி, நெருக்கம். பவழக்கடகம் - பவளவளையல். பவழக்காசு - பவழம். பவழக்கான் மல்லிகை - பவள மல்லிகை. பவழம் - பவளம். பவழவாய் - கருத்தங்கும் பை. பவளக்கொடி - கடலில் வளரும் கொடி வகை. பவளக்கொடிமாலை - புகழேந்திப் புலவர் செய்த ஒரு நூல். பவளங்கட்டி - பவளமாலையணியும் கொங்கு வேளாளர் வகை. பவளப் பாம்பு - ஒருவகைப் பாம்பு. பவளமனோசிலை - சாதிலிங்கம். பவளம் - நவமணியிலொன்று. பவனம் - ஞவடு, அரண்மனை, பூமி, நாகலோகம், சுவர்க்கம், தேர். பவனன் - வாயுதேவன். பவனி - உலாவருகை. பவன் - கடவுள். பவானி - பார்வதி, காவிரியில் கலக்கும் உபநதி. பவித்தல் - உண்டாதல். பவித்திரம் - பரிசுத்தம், தருப்பை, மோதிரம், பூணூல். பவித்திரன் - தூயவன். பவிழியம் - இருக்குவேதம். பவுசு - செருக்கு, கௌரவம். பவுஞ்சு - சேனை. பவுண் - பவுண் நாணயம். பவுண்டரன் - வீமன் கைச்சங்கு. பவுண்டரிகம் - யாகவகை. பவுத்திரநோய் - ஆண்குறிக்கு அருகில் உண்டாகும் கட்டிவகை. பவுமன் - செவ்வாய். பவுரி - மண்டலமிடுகை, ஒரு பெரும் பண். பவுழியன் - சேரன். பல்வம் - கடல், மரக்கணு, பௌர் ணமி, பருவ காலம், நீர்க்குமிழி. பவ்வியசீவன் - நல்லுயிர். பவ்வீ - மலம். பழகுதல் - பயிலுதல். பழக்கம் - பயிற்சி, அறிமுகம். பழக்குழம்பு - பழப்பாணி (Jam). பழங்கண் - துன்பம், ஒலி. பழங்கள் - புளித்தகர். பழங்கற்காலம் - மக்கள் முரடான கல்லாயுதங்களைப் பயன்படுத்திய காலம் (Palaeolithic age). பழச்சர்க்கரை - குளுக்கோஸ் (Glucose). பழஞ்சொல் - பழமொழி. பழநடை - வழக்கம். பழமா - தேமா. பழமுதிர்சோலை - முருகன் படை வீடுகளிலொன்று. பழமை - தொன்மை. பழமைபாராட்டுதல் - நெடு நாளுள்ள பெரும் பழக்கத்தைத் தெரிவித்தல். பழமொழி - முதுமொழி, மூன்றுறை யரையர் செய்த ஒரு நூல். பழம் - கனி. பழம்பஞ்சுரம் - குறிஞ்சிப்பண்வகை. பழம்பிராணி யுகம் - பாலியோ சோயில் உகம். பழவடியார் - வழித் தொண்டர். பழனம் - சோலை. பழி - நிந்தை, அலர், குற்றம். பழிச்சு - துதி. பழிச்சுதல் - துதித்தல், வணங்குதல், கூறுதல். பழிதீர்த்தல் - பாவம்போக்குதல். பழித்தல் - நீந்தித்தல். பழிப்பு - நிந்தை, குறை. பழிவாங்குதல் - தீமைக்குத் தீமை செய்தல். பழு - விலா, பழுப்பு, பேய், ஏணிப் படி. பழுக்க - முற்ற, சிவக்க. பழுக்காய் - பழுத்த பாக்கு. பழுது - பயனின்மை, குற்றம் தீங்கு. பழுதை - வைக்கோற்புரி, கயிறு. பழுத்தல் - பழமாதல், முதிர்தல், கனிதல், பழுப்பு நிறமாதல். பழுநுதல் - முற்றுதல், முடிதல். பழுப்பு - பொன்நிறம், அரிதாரம், பழுத்த இலை. பழுமணி - மாணிக்கம். பழுமரம் - ஆல், பழுத்தமரம். பழுவம் - காடு, தொகுதி. பழுனுநல் - பழுதடைதல், முதிர்தல். பழூஉ - பேய். பழை - கள். பழைது - பழையது. பழைய - நாட்பட்ட. பழையர் - முன்னோர், கள் விற் போர். பழைய ஏற்பாடு - விவிலிய வேதத்தின் முற்பாகம். பழையன் - ஒரு சிற்றரசன். பழையான் - நீண்ட கால நட்புடை யவன். பழையோள் - துர்க்கை. பளகம் - மலை, பவளம். பளகர் - மூடர், குற்றமுடையவர். பளகு - குற்றம், மூடத்தனம். பளக்கு - கொப்புளம். பளபளப்பு - ஒளி. பளிக்கு - பளிங்கு. பளிக்கறை - பளிங்கினாற் செய்த மண்டபம். பளிங்கு - படிகம், சுக்கிரன், கற்பூரம். பளிதம் - பச்சைக் கர்ப்பூரம், ஒரு பேரெண், பச்சடி. பளு - பாரம். பள் - பள்ளு. பள்ளுதல் - பதுங்குதல். பள்ளம் - தாழ்வு. பள்ளன் - பள்ளச் சாதியான், உழவன். பள்ளி - இடம், சிற்றூர், முனிவர் ஆச்சிரமம், சைன பௌத்த கோயில், வேலைக் களம், மக்கள் படுக்கை, தூக்கம், பள்ளிக்கூடம், சாலை. பள்ளிக்கட்டில் - சிங்காசனம். பள்ளிக்கணக்கன் - பள்ளிக்கூடச் சிறுவன். பள்ளிக்கணக்கு - பள்ளிக் கூடத்துப் படிப்பு. பள்ளிக்கூடம் - கல்வி கற்குமிடம். பள்ளிகொள்ளுதல் - நித்திரை கொள்ளுதல். பள்ளிச்சந்தம் - சைன பௌத்த கோயில் களுக்கு விடப்பட்ட மானியம். பள்ளித்தாமம் - கோயிலில் சாத்தும் மாலை. பள்ளியந்துலா - படுக்கைப் பல்லக்கு. பள்ளியம்பலம் - துயிலிடம். பள்ளியறை - படுக்கையறை. பள்ளியெழுச்சி - துயிலெழுகை. பள்ளியோடம் - ஒருவகை ஓடம். பள்ளிவாசல் - முகமதியர் தொழுமிடம். பள்ளு - பள், பிரபந்த வகை. பள்ளை - பள்ளை ஆடு. பள்ளையம் - சிறுதெய்வ ஆரா தனை, உண்கலம். பறங்கிப்பட்டை - ஒருவகை மரத்தின் வேர் (China root). பறங்கியாமணக்கு - பப்பாளி. பறட்டை - தூற்றுமயிர், செழிப் பற்றது. பறண்டுதல் - நகத்தால் சுரண்டுதல். பறண்டை - கையின் முட்டி, ஒரு வாத்தியம். பறத்தல் - ஆகாயத்தில் செல்லுதல், சிதறுதல் , வேகமாகச் செல்லுதல் பறநாட்டுப்பெருங்கொற்றனார் - சங்க காலப் புலவர் (அகம். 323). பறந்தலை - பாழிடம், பாலை நிலத்தூர், சுடுகாடு, போர்க்களம், படைவீடு. பறப்பன் - தேள், விருச்சிக ராசி. பறப்பை - பறவை படிவமாகச் செய்த யோக வேதிகை, யாகத்தில் நெய் வைக்கும் மர ஏன வகை. பறம்பர் - தேல்வினைஞர். பறம்பி - மோசக்காரி. பறம்பு - மலை, பாரியின் மலை, முலை. பறம்புதல் - அடித்தல். பறல் - பறவை. பறவை - புள், சிறகு, வண்டு, அவிட்டம். பறவைவேந்தன் - கருடன். பறழ் - ஒருசார் விலங்கினங்களின் இளமைப் பெயர். பறி - பிடுங்குகை, கொள்ளை, மீன் பிடிக்கும் கூடை, பனை ஓலைப் பாய், உடம்பு, பொன். பறிதலையர் - தலைமயிரைப் பறித்து விடும் சமணர். பறிதல் - தப்பிப்போதல், வெளிப் படுதல், அவிழ்தல், ஆறுதல், நிலை தளர்தல். பறித்தல் - பிடுங்குதல், கவர்தல், தோண்டுதல், அழித்தல், நீக்குதல். பறிமுதல் - கைப்பற்றப்பட்ட பொருள். பறிமுறை - பல்விழுந்து முளைக்கை. பறியலூர் - சிவன் அட்ட வீரட்டானத் துள் ஒன்று. பறை - முரசு, வட்டம், விரும்பிய பொருள், ஒரு அளவை, ஒருவகைப் பிரபந்தம், குகை பறக்கை, இறகு, பறவை. பறைச்சி - பறைக்குலப் பெண். பறைச்சேரி - பறையர் வாழும் ஊர்ப் தேய்தல். பறைத்தல் - சொல்லுதல், நீக்குதல். பறையலகு - பலகறை. பறையறைதல் - செய்தி தெரிவிக்கு மாறு பறை அடித்தல். பறையன் - பறைச் சாதியான். பறைவிடுதல் - பறை அடித்தல். பற்குறி - பல் பட்டால் உண்டாகும் தழும்பு. பற்குனன் - அருச்சுனன். பற்குனி - பங்குனி, உத்திர நாள். பற்சன்னியன் - வருணன். பற்சீவுதல் - பல் விளக்குதல். பற்பணம் - ஒரு பலம் கொண்ட நிறை அளவு. பற்பதம் - பருவதம். பற்பநாபன் - பதுமநாபன். பற்பம் - துகள், நீறு, தாமரை, ஒரு பேரெண். பற்பராகம் - பதுமராகம். பற்பல - மிகுதியானவை. பற்பறைகொட்டுதல் - குளிரால் பற்களை ஒன்றோடு ஒன்ற உராய்ந்து ஒலி உண்டாக்குதல். பற்பு - பற்பம். பற்றடைப்பு - நிலக் குத்தகை. பற்றம் - கற்றை, கூட்டம். பற்றலர் - பகைவர். பற்றற - முழுதும். பற்றாக்கை - அம்பு கட்டும் கயிறு, அம்புத்திரள். பற்றாசு - உலோகங்களைப் பொருத்த இடையிலிடும் பொடி, பற்றுக் கோடு, நேரிசை வெண்பா வில் முதற் குறளினிறுதிச் சீரோடு தனிச் சொல்லைப் பொருத்தும் அசை. பற்றாயம் - பெரும் பெட்டி. பற்றாயார் - முனிவர். பற்றார் - பகைவர். பற்றி - குதித்து. பற்றிலார் - முனிவர். பற்றினர் - உறவினர், நண்பர். பற்று - பிடிக்கை, ஏற்றுக் கொள்கை, ஒட்டு, சம்பந்தம், தங்குமிடம், நாட்டுப் பகுதி, தூண், அன்பு, வீட்டு நெறி, கட்டு. பற்றுக்கோடு - ஆதாரம், கட்டுத்தறி. பற்றுதல் - பிடித்தல், தகுதியாதல், ஒட்டுதல், போதியதாதல், மூளுதல். பற்றுள்ளம் - உலோபம். பற்றை - தூறு, செங்காந்தள். பனங்குடை - நீர் சோறு முதலியவற்றை இறுதற்குப் பனை ஓலையால் செய்த பட்டை. பனசம் - பலா, முள். பனசை - திருப்பனந்தாள். பனஞ்சோறு - பனஞ்சோற்றி. பனத்தி - பார்ப்பனத்தி. பனந்தாமன் - பலபத்திரன். பனந்துவசன் - சேரன், பலராமன். பனந்துவசன் - பலபத்திரன். பனந்தோடு - பனையின் குருத்து ஓலை. பனம் - பருமை. பனம்பாரம் - பனம்பாரானர் இயற்றிய இலக்கண நூல். பனம்பாரானார் - அகத்தியர் மாண வருள் ஒருவர். பனம்புடையல் - பனம்பூமாலை. பனம்போந்தை - பனங் குருத்து. பனவன் - பார்ப்பான். பனாட்டு - காய்ந்த பனங்காளி. பனி - நீராவி குளிர்ந்து விழும் துளி, குளிர் நீர், மழை, இனிமை, அச்சம் நடுக்கம், துன்பம். பனிக்கதிர் - சந்திரன். பனிச்சை - ஐம்பால் மயிர் முடிகளுள் ஒன்று, கழுத்தின் குழி. பனித்து - கர்ப்பூரம். பனிநீர் - பனித் துளி, பன்னீர். பனிப்பகை - சூரியன். பனிப்பு - நடுக்கம், அச்சம். பனிமொழி - பெண். பனியெதிர்பருவம் - மார்கழி தை மாதங்களாகிய முன் பனிப்பருவம். பனிற்றுதல் - தூவுதல். பனுவலாட்டி - சரசுவதி. பனுவல் - பாட்டு, நூல், சுகிர்ந்த பஞ்சு. பனுவுதல் - சொல்லுதல். பனை - மரவகை, ஒரு பேரளவு, அனுடம். பனைக்கொடியோன் - பலபத்திரன், வீடுமன். பனைநாடு - கடல்கொண்ட ஒரு தமிழ்நாடு. பன் - பருத்தி, அருவாட்பல். பன்மம் - பதுமம், விபூதி. பன்மாண் - பலபடியாக. பன்மினி - பதுமினி. பன்மை - ஒன்றல்லாதது, பல. பன்றி - விலங்கு வகை, ஓர் நாடு, ஒரு பொறி. பன்றிககூழ்ப்பத்தர் - பன்றிப் பத்தர். பன்றிநாடு - பழனி மலையைச் சுற்றி உள்ள நாடு. பன்றிப்பத்தர் - பன்றிக்குக் கூழிடும் தொட்டி, நீரிறைக்குங் கருவி. பன்றிப்பறை - காட்டுப்பன்றிகளை வெருட்ட அடிக்கும் பறை. பன்னகம் - இலை, பாம்பு. பன்னகவைரி - கருடன். பன்னசாலை - இலையால் வேய்ந்த குடில். பன்னம் - இலை, இலைக்கறி, சாதி பத்திரி. பன்னல் - பஞ்செஃகுகை, பருத்தி, சொல், நெருக்கம், ஆராய்கை, ஓலை முடைகை. பன்னாடு - ஒருநாடு. பன்னாடுதந்தமாறன்வழுதி - நற்றிணை தொகுப்பித்த பாண்டியன். பன்னாடை - பனை தெங்கில் கிடைக்கும் பன்னாடை. பன்னி - பத்தின். பன்னிருபடலம் - அகத்தியர் மாணவர் பன்னிருவர் செய்ததாகச் சொல்லப்படும் ஓர் இலக்கண நூல். பன்னிருபாட்டியல் - ஓரிலக்கண நூல். பன்னீர் - வாசனை நீர், மரவகை. பன்னிராயிரப்படி - அழகிய மணவாளசீயர் பன்னீராயிரங்கிரந் தங்களில் இயற்றிய திருவாய் மொழி. பன்னுதல் - பஞ்செஃகுதல், ஆராய்ந்து செய்தல், புகழ்தல், நெருங்குதல், பாடுதல், பின்னுதல், நெருங்குதல். பா பா - பாட்டு, பரப்பு, தேர்த்தட்டு கை மரம், நெசவுப்பா பஞ்சி நூல், பாதுகாப்பு, பருகுகை தூய்மை. பாகசாதனன் - இந்திரன். பாகசாதனி - இந்திரன் மகன். பாகசாத்திரம் - உணவு சமைத்தலை அறிவிக்கும் நூல். பாகடை - பாக்கும் வெற்றிலையும். பாகண்டன் - வெளிவேடக்காரன். பாகதம் - பிராகிருத மொழி, வடமொழியின் திரிபு. பாகபுடி - குயவன் சூளை. பாகாம் - சமையல், வெப்பமாக்குகை, பக்குவம், செய்யுள்நடை, மன நிலை, கூறு, பங்கு, பாதி, பக்கம், பங்கம் பிச்சை, பறைவகை, கை நீட்டளவு. பாகரப்பிரபை - சூரிய ஒளி. பாகர் - தேரின் தட்டைச் சுற்றிய மரக்கை பிடிச்சுவர், தேர். பாகல் - கொடி வகை, பலா. பாகவதபுராணம் - பதினெண் புராணத்தொன்று, செவ்வைச் சூடு வார் தமிழில் பாடிய மொழி பெயர்ப்பு நூல். பாகவதர் - திருமால் வணக்கத்தினர், சங்கிதத்தோடு கதாபிரசங்கம் செய்வோர். பாகன் - செலுத்துவோன், பக்குவ மடைந்தவன், காரியத் துணைவன், புதன். பாகாரம் - வகுத்தல். பாகி - சாரதி, வேலை செய்யும் பெண், நாய். பாகிடுதல் - பிச்சையிடுதல். பாகித்தல் - பங்கிடுதல். பாகியம் - புறம்பானது. பாகினேயன் - உடன் பிறந்தாள் மகன். பாகீடு - பங்கிடுகை. பாகீரதி - கங்கை. பாகு - குழப்பான உணவு, இளகக் காய்ச்சிய வெல்லம், சர்க்கரை, பால், பாக்கு, பரணி, பிச்சை, கரை, உமை, பாகன், நிர்வகிக்கும் திறமை, கை, தலைப்பாகை, அழகு. பாகுடம் - கையுறை, அரிசிறை. பாகுடி - வெகுதூரம். பாகுபடுதல் - பிரிவுபடுதல். பாகுபாடு - பிரிவுபடுகை, பகுப்பு. பாகுலம் - கார்த்திகை மாதம். பாகுவலயம் - தோள் வளை. பாகுவன் - சமையற்காரன். பாகுளி - புரட்டாசி மாதத்துப் பௌர்ணமி. பாகை - பகுதி, வட்டத்தை 360 ஆகப் பிரித்துவந்த ஒரு பகுதி, கால அளவை, தலைப்பாகை. பாகைமானி - பாகை அளக்கும் கருவி (Protractor). பாக்கட்டுதல் - நெசவுப் பாவில் அறுந்த இழையை இணைத்தல். பாக்கம் - கடற்கரை ஊர், அரசனிருப்பு, மருத நிலத்தூர். பாக்கழி - மருதயாழ்த் திறங்களுள் ஒன்று. பாக்கன் - காட்டுப் பூனை. பாக்கி - மிச்சம். பாக்கியசாலி - நல்வினையாளன். பாக்கியத்தானம் - பிறந்த இலக்கி யனத்துக்க ஒன்பதாவதும், செல் வத்தைக் குறிப்பதுமான தானம். பாக்கியம் - நல்வினை, செல்வம், பகல் 15வது முகூர்த்தம். பாக்கியவதி - செல்வமுள்ளவள். பாக்கியாதிபதி - ஒன்பதாம் வீட்டுக்குரிய கிரகம். பாக்கிலை - பாக்கு வெற்றிலை. பாக்கு - கழுகின் காய், கமுகு, எதிர்கால வினையெச்ச விகுதி, தொழிற் பெயர் விகுதி. பாக்குவெட்டி - பாக்குச் சீவுள் கருவி. பாக்கை - ஊர், பாக்கம். பாங்கர் - பக்கம், இடம். பாங்கற்கூட்டம் - தோழனது உதவியால் தலைவியைத் தலைவன் குறியிடத்துக் கூடுகை. பாங்கன் - தோழன், கணவன். பாங்கி - தோழி. பாங்கியிற்கூட்டம் - தோழியின் உதவியால் தலைவியைத் தலைவன் குறியிடத்துக் கூடுகை. பாங்கினம் - தோழிற் கூட்டம், ஆயம். பாங்கு - பக்கம், இடம், ஒப்பு, நன்மை, அழகு, தகுதி, ஒழுக்கம், தோழமை, இணக்கம், பட்சம். பாங்கோர் - நட்பினர். பாசகம் - உண்ட உணவைச் சீரணிக்கச் செய்வதும் இரைப் பையில் உண்டாவதுமான நீர். பாசகன் - சமையற்காரன். பாசகுசுமம் - இலவங்கம். பாசஞானம் - அஞ்ஞானம். பாசடம் - வெற்றிலை. பாசடை - பசிய இலை. பாசண்டசாத்தன் - ஐயனார். பாசண்டம் - புறச்சமயக் கொள்கை. பாசண்டன் - சமயத்தை நம்பாதவன் (Heretic). பாசண்டிமூடம் - புறச் சமயத்த வரைப் போற்றும் மடமை. பாசதரன், பாசத்தன் - யமன். பாசபாணி - சிவன், யமன், வருணன். பாசமாலை - கழுத்தணிவகை. பாசம் - கயிறு, கயிறுவடிவமான ஆயுதம், வியூகவகை, தளை, மும்மலம், அன்பு, பற்று, பத்தி, கவசம், தையல் ஊசித்தொளை, நூல் சுற்றம், பேய், பாசி. பாசருகம் - அகில். பாசவர் - வெற்றிலை, ஆட்டிறைச்சி, கயிறு முதலியன விற்போர். பாசவல் - நல்ல அவல், பசிய விளை நிலம். பாசவினை - பந்தத்துக்கேதுவாய வினை. பாசறவு - பற்றுகை, நிறத்தினழிவு. பாசறை - படை தங்குமிடம், இலை அடர்ந்த குகை, துன்பம். பாசறைநிலை - பகை அரசர் வணங்கி ஒடுங்கவும், வெற்றி வேந்தன் அவரிடத்தை விட்டு நீங்கானாய்ப் பாசறையில் தங்கு தலைக் கூறும் புறத்துறை. பாசறைமுல்லை - பாசறையில் தலைமகள் தன் தலைவியை நினைக்கும் புறத்துறை. பாசனம் - வெள்ளம், நீர்ப்பாய்ச்சல், பாத்திரம், மரக்கலம், ஆதாரம், தங்குமிடம், சுற்றம், நெருப்பு, புளிப்பு. பாசன் - உயிர், யமன், சிவன். பாசாங்கு - போலி நடிப்பு. பாசாங்குசதரன் - விநாயகர். பாசாண்டி - புறச்சமய நூல் வல்லோன். பாசி - சுமையுடையது, நீர்ப்பாசி, பூஞ்சாணம், சிறுபயறு, கழுத் தனைக்கு உதவும் மணிவகை, மேகம், ஆன்மா, கிழக்கு. பாசிதம் - பிரிக்கப்பட்ட பங்கு. பாசிநிலை - பகைவரின் வலிகெட அவரது அகழிடத்துப் போர் செய்வதைக் கூறும் புறத்துறை. பாசிநீக்கம், பாசிநீக்கு - சொற்றோறும் அடிதோறும் பொரு ளேற்றுவரும் பொருள்கோள். பாசிப்படை - திடீரென்று தாக்கும் சேனை. பாசிப்பந்து - தோளணி வகை. பாசிப்பயறு - சிறுபயறு. பாசிப்பருவம் - மீசையின் இளம் பருவம். பாசிமணி - கரியமணி வடம். பாசிமாறன் - போர்மேற் சென்ற படை பாசிநிலை வெற்றிக்குப்பின் பகைவர் ஊரகத்தும் போர் விரும்புதலைக் கூறும் புறத்துறை. பாசிலை - பச்சைஇலை, வெற் றிலை. பாசில் - கற்படி உருவம் (Fossil). பாசிவரி - மீன் பிடித்துக் கொள் வதற்குக் கொடுக்கும் வரி. பாசிழை - அலங்கரிக்கப்பட்ட பெண். பாசினம் - கிளிக் கூட்டம். பாசிகன் - சமையற்காரன். பாசு - பசுமை, மூங்கில், பாசம், தைரியம், அன்பு. பாசுணம் - பக்கம். பாசுபதம் - சிவன், அம்பு, ஆணவமலம் இல்லையென்றம் கடவுள் பக்கு மடைந்த உயிர்களுக்குத் தன் குணங் களைப் பற்றிவித்துத் தான் அவற்றின் மீது அதிகார ஒழிவு பெற்றிருப்பர் என்றும் கூறும் அகப்புறச் சமயம். பாசுபதன் - சிவன், சிவனை வழிபடுவோன். பாசுபதாத்திரம் - சிவனைத் தேவதையாகக் கொண்ட அன்பு. பாசுரம் - திருப்பாடல், திருமுகம், மொழி, வகை, வாய்ப்பாடு. பாசுவரம் - தீயகம் (Phosphorus). பாசை - மொழி, ஆணை. பாச்சா - அரசன் (உருது), வல்லமை. பாச்சி - தாய்ப்பால். பாச்சிகை - சூதாடு கருவி. பாச்சியம் - பகுதி. பாச்சை - புத்தகப் பூச்சி, கரப்புப் பூச்சி. பாஞ்சசன்னியம் - திருமாலின் சங்கு, நெருப்பு, நாணல். பாஞ்சராத்திரம் - வைணவ மதங்களுள் ஒன்று. பாஞ்சலம் - காற்று, கனல். பாஞ்சாலம் - 56 தேசங்களுள் ஒன்று. பாஞ்சாலி - திரௌபதி. பாஞ்சாலிகம் - மரப்பாவை விளையாட்டு. பாடகம் - மகளிர் காலணி, ஒரு வகை ஆடை, சிவப்பு, கூலி, தெரு, காஞ்சி யிலுள்ள ஒரு விட்டுணுத்தலம், நிழல், பறைவகை, சூது கருவியை உருட்டுகை. பாடகன் - பாடுவோன். பாடசாலை - பள்ளிக்கூடம். பாடஞ்செய்தல் - ஒளிவிடுதல், பாடம் பண்ணுதல். பாடணம் - பேச்சு. பாடம் - பாரம் வைத்து அழுத்துகை, பதப்படுத்துகை, இரத்தினம் முதலியவற்றின் ஒளி, முடிமாலை, வெற்றிலை படிக்கும் புத்தகப் பகுதி, படிப்பு, தெரு, இடையர் வீதி, சம்மதி, கடுமை, மிகுதி. பாடம்பண்ணுதல் - பதனிடுதல், பக்குவப்படுத்துதல். பாடம்போற்றுதல் - பாடத்தை நினைத்தல். பாடலம் - சிவப்பு, குதிரை, சேரன் குதிரை, பாதிரிமரம், மழைக் காலத்து விளையும் நெல், சபதம். பாடலனார் - பழைய இலக்கண நூலாசிரியர். பாடலி - பாதிரி, பாடலிபுரம், கள். பாடலிபுத்திரம் - பாடலிபுரம், திருபபாதிரிப் புலியூர். பாடல் - பாடுகை, இசைப்பா செய்யுள், புகழ், படிக்கை, பாகல், பாடலிபுரம். பாடல்பெற்றதலம் - சமய குரவல் அல்லது ஆழ்வாரால் பாடப்பட்ட கோயில். பாடவம் - ஊழித்தீ, வல்லமை, களிப்பு. பாடவியம் - வாத்திய வகை. பாடவை - மிதுன ராசி. பாடற்பயன் - இன்பம், தெளிவு, நிறை, ஒளி, வன்சொல், இறுதி, மந்தம், உச்சம் என்னும் எண்வகை இசைப் பயன். பாடன்மகடூஉ - விறலி. பாடாணம் - கல்லு. பாடாணவாதம் - ஆன்மாவுக்கு முத்திநிலையிலும் ஆணவ மலம் உண்டு என்றும் அந்நிலையில் கற்போல் அது கிடக்கும் என்றுங் கூறும் கொள்கை. பாடாண், பாடாண்டிணை - பாட்டுடைத் தலைவனது புகழ், வலி, கொடை, அருள் முதுலிய வற்றைப் புகழ்ந்து கூறம் புறத்துறை. பாடாவாரி - பெருநட்டம். பாடி - நகரம், சேரி, முல்லை நிலத்தூர், பாடி வீடு, சேனை, கவசம், பாடுகிறவன். பாடிகாவல் - ஊர் காவல், வழக்கு விசாரித்து ஒப்பநாடிச் செய்யும் குற்றம், பாதுகாவல். பாடிதம் - உச்சரிக்கப்படுவது. பாடித்தல் - பேசுதல், உச்சரித்தல். பாடிமாற்றம் - வழக்குச் சொற்கள். பாடிமிழ்தல் - ஒலித்தல். பாடியம் - பேரூரை. பாடியோட்டம் - விளையாட்டு வகை. பாடிவீடு - பாசறை. பாடிவீரர் - போர் வீரர். பாடினி - பாணசாதிப் பெண். பாடீநம் - குங்கிலியம். பாடீரம் - சந்தனம், முகில், கீல்வாதம், மூங்கிலரிசி, கிழங்கு வகை, துத்த நாகம். பாடு - உண்டாகை, நிகழ்ச்சி, அனுபவம், முறைமை, நிலைமை, செம்மை, கடமை, கூறு. பயன், உலக ஒழுக்கம், குணம், பெருமை, ஓசை, உடல், உழைப்பு, காரியம், வருத்தம், படுக்கை, நிலை, விழுகை, தூக்கம், சாவு, கேடு, பூசுகை, பொழுது, படுக்கை, நீசராசி, இடம், அருகு, ஏழாம் வேற்றுமை உருபு. பாடுகிடத்தல் - வரங்கிடத்தல். பாடுதல் - பண்ணிசைத்தல், ஒலித் தல், பாட்டுச் செய்தல், பாராட்டுதல், துதித்தல், கூறுதல். பாடுதாங்குதல் - துணை நிற்றல். பாடுதுறை - புலவர் பாடுதற்குரிய போர்த்துறை, தத்துவராயர் செய்த ஒரு நூல். பாடுநர் - புலவர், பாடுவோர். பாடுபடுதல் - மிக உழைத்தல். பாடுபடுத்துதல் - மிகத் துன்பப் படுத்துதல். பாடுபார்த்தல் - காரியம் கவனித் தல். பாடுபெயல் - விடாமழை. பாடுவாசிச்சிட்டை - Waste book. பாடுவான் - பாடகன். பாடுவி - புகழ்பவள். பாடுவிச்சி - பாணப்பெண். பாடேடு - தாயேடு. பாடை - மொழி, பிணக்கட்டில், சபதம், குறிஞ்சியாழ்த்திறவகை, வட்டத்திருப்பிப் பூடு. பாடைகூறுதல் - சபதஞ் செய்தல். பாடைப்பாடல் - அகபுற நாடகங் களுக்குரிய செய்யுளுருக்கள். பாட்டநிலம் - குறைந்த தானிய வரி உடைய நன்செய் நிலம். பாட்டம் - தோட்டம், மேகம், ஆச்சலாகப் பெய்யும் மழை, வரி, தடவை, குறுக்காக இருக்கும் நிலை, குமாரிலபட்டர் பரப்பிய பூர்வ மீமாம்சை மதம், தகைமை. பாட்டலாக்குக்கம்மல் - கம்மல் வகை. பாட்டன் - பெற்றோரின் தந்தை முன்னோன், பாட்டமதத்தான். பாட்டா - புளித்த கள். பாட்டாசாரியம் - பாட்டம். பாட்டாசாரியார் - குமாரிலபட்டர். பாட்டாளி - தொழிலாளி. பாட்டாள் - உழைப்பாளி. பாட்டி - பெற்றோரின் தாய், கிழவி, பன்றி, நாய்நரி முதலிய விலங்கு களின் பெண்பாற் பெயர், பாடன் மகளிர். பாட்டிமார் - ஒருவகைக் கப்பல். பாட்டியல் - பிரபந்த இலக்கணம் கூறும் நூல். பாட்டில் - பெண்கள், கையணி வகை. பாட்டு - பாடுகை, இசைப்பாடல் செய்யுள். பாட்டுடைத்தலைவன் - காப்பியத் தலைவன். பாட்டுவாளி - உடுக்கை அடித்துப் பாடுவோன். பாட்டை - இசையின் நடை. பாட்டைசாரி - வழிப்போக்கன். பாணம் - அம்பு, திப்பலி, செடிவகை, நாடகவகை, பூம்பட்டு. பாணம்பழை - மேகவண்ணக் குறிஞ்சி. பாணர்மாலையர் - பாண் குல மகளிர். பாணன் - பாண்சாதியினன், வீணன், சிவபத்தனான ஓர் அசுரன். பாணாத்தடி - சிலப்பக்கழி. பாணாற்றுப்படை - ஒரு வள்ளலிடத்தில் பரிசு பெற்று வரும் பாணனொருவன் மற்றொரு பாணனை அவ்வள்ளலிடம் பரிசு பெறுதற்கு வழிச் செலுத்துவதைக் கூறும் புறத்துறை. பாணாறு - பாணாற்றுப்படை. பாணான் - தையற்காரச் சாதியான். பாணி - காலம், தாமதம், நீண்ட காலம், இசைப்பாட்டு, ஒலி, தாளம், அழகு, அன்பு, முல்லையாழ்த் திறத் தொன்று, பறைப்பொது, கூத்து, கை, சொல், குழம்பு, கள், நீர், ஊர், நாடு, சோலை, காடு, பூம்பந்தர், பல பண்டம், தன்மை, பாகு. பாணிக்கிரகணம் - திருமணம். பாணிச்சாய் - கள் போன்ற முத்து நிறம். பாணிச்சி - பாணாசாதிப் பெண். பாணிச்சீர் - கைத்தாளம். பாணிதம் - கருப்பஞ்சாறு. பாணிதூங்குதல் - தாளத்திற்க ஏற்றபடி ஆடுதல். பாணித்தல் - பின் வாங்குதல், தாமதித்தல். பாணிநடை - தாளத்துக்கு ஏற்ற குதிரை நடை. பாணிப்பல்லி - வலம்புரி மரம். பாணிப்பனாட்டு - பாகு கலந்த பனாட்டு. பாணிப்பு - பாவிப்ப மதிப்பு, சூழ்ச்சி, தாமதம். பாணிமுகம் - உடலைவிட்டு உயிர் போகும் முறைகளில் ஒன்று. பாணியாதல் - வெல்லம் முதலியன கரைந்து நீர்த்தன்மையாதல். பாணியொத்துதல் - தாளம் போடுதல் பாணிருகம் - தாமரை. பாணினி - வடமொழி இலக்கணம் செய்த ஆசிரியர், கி.மு. 4ஆம் நூற். பாணினியம் - பாணிணி செய்த வட மொழி இலக்கணம். பாணு - பாட்டு. பாண் - பாட்டு, பாணாற்றுப்படை, பாணர் சாதி, புகழ், வார்த்தை, தாழ்ச்சி. பாண்டம் - கொள்கலம், உடம்பு, வயிற்று வீக்கநோய், பாண்டரங்கம் என்னும் கூத்து. பாண்டரங்கம் - முப்புரத்தை எரித்த போது சிவபிரான் வெண்ணீறு அணிந்து ஆடிய கூத்து. பாண்டரங்கன் - சிவன். பாண்டரம் - வெண்மை. பாண்டல் - பாசி பிடித்து நாறுகை. பாண்டவக்குழி - பாண்டவர் கட்டிய தாகக் கருதப்படுவதும் மலைப் பிரதேசத்தில் காணப்படுவதுமான பழைய நாள் புதை குழி. பாண்டவர் - பாண்டு புத்திரர். பாண்டவர்படுக்கை - சைனத் துறவிகளின் மலைக்கற் படுக்கை. பாண்டாகாரம் - பண்டசாலை. பாண்டி - பாண்டிநாடு, எருது, மாட்டு வண்டி, பல்லாங்குழி, சிறுவர் விளையாட்டு வகை. பாண்டிகம் - பறைவகை. பாண்டிக் கொடுமுடி - கொடிமுடி என்னும் சிவன் கோயில். பாண்டிக்கோவை - இறையனாராகப் பொருளில் மேற்கோளாக வந்த கோவை நூல் - நெடுமாறனைப் பற்றியது. பாண்டித்தியம் - கல்வித்திறம். பாண்டித்துரைத்தேவர் - இப்போதுள்ள மதுரைத் தமிழ்ச் சங்கத்தை நாட்டியவர் (1867 - 1911). பாண்டிப்பிழுக்கை - வரிக் கூத்து வகை. பாண்டிப்பெருமாள் - சிவஞான போதத் துக்கு ஒர் உரை செய்தவர் (17ஆம் நூ.). பாண்டியம் - எருது, உழவு. பாண்டியன்மதிவாணனார் - நாடகத் தமிழ் நூல் செய்த ஒரு பாண்டிய அரசன். பாண்டில் - வட்டம், விளக்குக்கழி, கஞ்சதானம், குதிரை பூட்டிய தேர், இரண்டு சக்கரமுடைய வண்டி, வட்டக்கட்டில், கண்ணாடி, கேடகம், நாடு, எருது, இடப்ராசி, விளக்கின் கால், மூங்கில். பாண்டில்விளக்கு - கால்விளக்கு. பாண்டிவட்டம் - கண்ணபிரான் கன்றுகள் மேய்த்த பிரதேசம். பாண்டிற்காக - வட்டக்காசு என்னும் அணி வகை. பாண்டு - வெண்மை நோய்வகை, பண்டவர் தந்தை. பாண்டுகம்பளம் - இந்திரன் ஆசனம். பாண்டுச்சிலந்தி - சிலந்திப் பூச்சி வகை. பாண்டூரம் - வெண்மை, நோய் வகை. பாண்பாட்டு - யானையைக் கொன்று போரில் மாண்ட வீரர்க்கு யாழ் வல்லபாணர் சாப்பண் பாடித்தும் உரிமை செய்தலைக் கூறும் புறத்துறை. பாண்மகன் - பாணன். பாதகடகம் - சிலம்பு, காலணி. பாதகம் - பெரும்பாவம், நடை. பாதகமலம் - பாதமாகிய தாமரை. பாதகன் - பெரும் பாவம் செய்தவன். பாதகாணிக்கை - குருதக்கணை. பாதகி - பெரும் பாவம் செய்தவள். பாதகுறடு - மிதி அடி. பாதகேசம் - அடிமுதல் தலைவரை. பாதக்காப்பு - பாதங்களாகிய பாதுகாவல் செருப்பு. பாதங்கம் - சாம்பல். பாதசரம் - பெண்கள் காலணி வகை. பாதசாகை - கால் விரல். பாதயாசலம் - காலணி வகை. பாதசாரம் - கிரகங்கள் நட்சத்திரங் களில் செல்லும் செலவு. பாதசாரி - காலால் செல்வோன். பாதசாலகம் பாதசாலம் - காலணி வகை. பாதசுத்தி - கால் கழுவுகை. பாதசேவை - பணிவிடை செய்கை. பாதச்சனி - வாக்குத் தானத்துச் சனி. பாதச்சாயை - ஆளினி நிழல். பாததரிசனம் - பெரியோரைக் காணுகை. பாததாடனம் - கால் உதை. பததீட்iசா - காலைத் தலைமீது வைத்துச் செய்யும் தீட்சை. பாததீர்த்தம் - பெரியவரின் கால் கழுவிய நீர். பாததூளி - பெரியோரின் கால் கழுவிய நீர். பாதபங்கயமலை - புத்தரது திருவடிச் சுவடுகளுள்ள மலை, சிவனடி மலை. பாதபம் - மரம். பாதபாசம் - காலணி வகை. பாதபீடிகை - புத்தரது பாத அடை யாளமுள்ள பீடம். பாதபூசை - பெரியோரின் பாதங்களைப் பூ முதலியன இட்டு வழி படுகை. பாதமயக்கு - வேறு புலவர்கள் பாடிய அடிகள் மூன்றனோடு தம் ஓரடி பாடி முடிக்கும் மிறைக்கவி. பாதமுத்திரை - திருவடிக் சுவடு. பாதமூலம் - முத்திக்குக் காரண மானதும் அடைக்கலமாகக் கருதப் படுவதுமான திருவடி. பாதம் - கால், செய்யுளடி, காற்பங்க, மார்க்கம், சமூகம், நட்சத்திரக்குக் குரிய காலத்தின் நாலிலொரு பங்கு நீர், பக்குவம். பாதரசம் - இரசம் என்னும் உலோகம். பாதரட்சை - செருப்பு. பாதநாரயணன் - வியாசர். பாதலத்தாம்பி - நிலக்காளான். பாதலம் - பாதாளம். பாதவக்காணி - கோயில் வேலைக் காரருக்குரிய படித்தர நிலம். பாதவம் - தோப்பு, மரம். பாதவன்மீகம் - யானைக்கால். பாதனம் - வணக்கம், கீழ் முகமாகச் செல்கை. பாதாதி - சேனை, படை. பாதாதிகேசம் - அடிமுதல் தலைவரை. பாதாரவிந்தம் - திருவடித் தாமரை. பாதாலம் - வடவைத்தீ. பாதாளகரண்டி - கிணற்றில் விழுந்த பொருளை எடுக்கும் கருவி. பாதாளகங்கை - பூமியின் கீழ் ஓடும் நீரோட்டம். பாதாளமூலம் - ஒருவகைக் கறையான், சீந்தில், சிறு நெருஞ்சி. பாதாளமமூலி - கறையான், கொடி வகை. பாதாளம் - கீழ் உலகம், நரகம். பாதி - சமபாகமாகப் பகுக்கப்பட்ட பகுதி நாடு. பாதிடுதல் - பங்கிடுதல். பாதித்தல் - தடைசெய்தல், வருத் துதல். பாதிமதி - பிறைச்சந்திரன். பாதிரி - மரவகை, மூங்கில், கிறித்துவ மத போதகர். பாதீடு - பங்கிடுகை. பாது - பங்கு சூரியன். பாதுகம் - பாதுகை. பாதுகாத்தல் - காப்பாற்றுதல், வராமல் தடுத்தல். பாதுகாப்பு - காப்பாற்றுதல், வராமல் தடுத்தல். பாதுகாவல் - பாதுகாப்பு. பாதுகை - பாதரட்சை, சிறு செருப்படி என்னும் மூலி. பாதுஷா - முகம்மதிய அரசன். பாதேயம் - கட்டுச்சோறு. பாதை - வழி, முறை, மிதவை, துன்பம். பாத்தருதல் - பரவுதல், உருகி ஓடுதல். பாத்தல் - பங்கிடுதல். பாத்தி - பகுதி, நீர் நிற்கும் பொருட்டு வரம்பு கட்டப்பட்ட நிலம் வீடு. பாத்திபம் - பூமி. பாத்தியப்படுத்துதல் - நிலைபெறச் செய்தல். பாத்தியதை - உரிமை. பாத்தியப்படுதல் - உத்தரவாதி ஆதல் உரிமைப்படுதல். பாத்தியம் - உரிமை, பங்கு, கால், கழுவக் கொடுக்கும்நீர். பாத்தியன் - கடவுளின் அடியான், சுற்றத்தான். பாத்திரம் - கொள்கலம், கூத்தில் வேடமிட்டு நடிப்பவர், இலை. பாத்திரன் - தக்கோன். பாத்திரை- இரப்போர் கலம். பாத்திலார் - வேசியர். பாத்து - பகுக்கை, இணை, நீக்கம், சோறு, கஞ்சி, ஐம்புல இன்பம். பாத்துதல் - பகுத்தல். பாத்துமகற்பம் - பிரமன் ஆயுளில் முன் பகுதி. பாத்தூண் - பகுத்துண்கை. பாந்தட்படார் - பாம்புச்செடி. பாந்தம் - ஒழுங்கு, இணக்கம். பாந்தல் - பதுங்குதல், துன்பம். பாந்தவம் - உறவுமுறை. பாந்தன் - பாம்பு, மலைப்பாம்பு. பாந்தன் - வழிச்செல்வோன். பாந்து - பொந்து, வில், வளைவுக்கும் சுவருக்கும் இடையிலுள்ள பாகம். பாத்துதல் - பதுங்குதல், பிராண்டுதல். பாபக்கிரகம் - சுபமில்லாத கிரகம். பாபசங்கீர்த்தனம் - பாவம் நீங்கப் பாவத்தைக் குருவிடம் தெரி வித்தல். பாபதண்டி - பாபத்திற்காகத் தண் டணைக்கு உரியவன். பாபம் - பாவம். பாபு - எசமானன். பாப்படுத்தல் - பரப்பி விரித்தல். பாப்பம் - சோறு. பாப்பர் - பொருளற்றவன். பாப்பு - பார்ப்பான், கத்தோலிக்க மதகுரு. பாப்புப்பகை - கருடன். பாமகள் - சரசுவதி. பாமம் - பரப்பு, சிரங்கு, புண், ஒளி. பாமரம் - மூடத்தனம், மூடன். பாமரன் - அறிவிலான். பாமினி - பெண். பாமை - சிரங்கு. பாம்பணை - ஆதிசேடனாகிய படுக்கை. பாம்பாக்கள் - தென் அமெரிக்கப் புல்வெளி (Pampas). பாம்பாடி - திருமால். பாம்பாட்டுதல் - பாம்பைப் பட மெடுத்தாடச் செய்தல். பாம்பாடி - திருமால். பாம்பாட்டுதல் - பாம்பைப் படமெடுத்தாடச் செய்தல். பாம்பு - ஊரும் பிராணிவகை, இராகு அல்லது கேது, ஆயிலியம், நாணலையும் வைக்கோலையும் பரப்பி மண்ணைக் கொட்டித் திரட்டப்பட்ட திரணை, நீர்க்கரை, தாளக் கருவி வகை. பாம்புக்கண்ணி - பீநாறி மரம். பாம்புக்கல் - பாம்பின் விடத்தை நீக்கும் கல். பாம்புக்குத்தச்சன் - கறையான். பாம்புகண்டசித்தன் - கரடி. பாம்புச்சட்டை - பாம்பு கழற்றும் தோல். பாம்புண்பறவை - கருடன். பாம்புணிக்கருங்கல் - ஒருவகைக் கல். பாம்புத்திசை - மேற்கு. பாம்புரி - பாம்புச் சட்டை, அகழ், ஒரு மதிலுறுப்பு. பாம்புவிரல் - நடுவிரல். பாய - பரவ. பாயக்கட்டு - கிராமாதிகாரி. பாயசம் - உணவு வகை, பாற்சோற்றிப் பூடு. பாயதாளம் - பாலன்னம். பாயமங்கள் - நீர்ப்பொருள்கள் (fluids). பாயம் - புணர்ச்சி விருப்பம், மனத்துக்கு விருப்பமானது. பாயல் - படுக்கை, உறக்கம், பாதி. பாயிரம் - முகவுரை, பொருடக்கம், வரலாறு. பாயு, பாயுரு - குதம். பாயுடுக்கையர் - சமணத் துறவி வகையினர். பாய் - பரவுகை, பரப்பு, ஓலை முதலியவற்றால் முடைந்த விரிப்பு வகை, கப்பற்பாய், குதி. பாய்கலப்பாவை - துர்க்கை. பாய்க்கிடை - நோயோடு படுக் கையில் கிடக்கும் நிலை. பாய்ச்சல் - தாவுகை, குதிப்பு, எழுச்சி, நீரோடுகை, குத்துகை, செருகுகை. பாய்ச்சிகை - சூதாடு கருவி. பாய்ச்சு - உருட்டுகை, சூதாடு கருவி, குத்துகை, வரிச்சு. பாய்ச்சுதல் - நீரை வெளியே செலுத் துதல், தள்ளுதல், உட்செலுத்துதல். பாய்ச்சுத்தேன் - பொய்த் தேளிட்டுப் பிறரைக் கலக்கம் பண்ணுதல் போல உண்டாகும் திகில். பாய்த்து - பாய்ச்சல். பாய்மரம் - மரக்கலத்தில் பாய் தூக்கும் மரம். பாய்மா - குதிரை, புலி. பாரகம் - பூமி, திரைச்சீலை, தோணி. பாரகன் - கல்வித்துறை, கண்டோன், சுமப்போன், தாங்குபவன். பாரகாவியம் - பெருங்காப்பியம். பாரங்கதன் - கல்வித்துறையில், கரைகண்டவன். பாரங்கம் - இலவங்கப்பட்டை. பாரங்கு - சிறுதேக்கு. பாரசி - துவாதசி. பாரசிகர் - பாரசிக சாதியார். பாரசிகை - மருந்து. பாரசீகம் - பேர்சியா நாடு. பாரணம் - உண்ணுகை, திருப்தி, மேகம். பாரதகண்டம் - இந்திய நாடு. பாரதந்திரியம் - பிறன் வசமாதல். பாரதப்போர் - பாண்டவர் கௌரவர் போர். பாரதம் - இந்திய நாடு, பாரதப்போர், மாகாபாரதம், பாதரசம். பாரதம் பாடிய பெருந் தேவனார் - பாரத வெண்பா நூலாசிரியர் - கி.பி. 9ஆம் நூற். பாரதர் - பரத வமிசத்தோர். பாரதவருடம் - இந்தியா. பாரதவெண்பா - பெருந்தேவனார் செய்த பாரத நூல். பாரதன் - கூத்தாடி தீ. பாரதாயன் - பாரத்துவாச கோத்திரத்தான். பாரதி - சரசுவதி, பண்டிதன், மரக்கலம். பாரதிக்கை - அபிநய வகை. பாரதிகொழுநன் - பிரமன். பாரதிதீபம் - தென்கடம்பை நக ரத்துத் திருவேங்கடபாரதி கட்ட ளைக் கலித்துறையில் செய்தி நிகண்டு. பாரதியரங்கம் - சுடுகாடு. பாரதியினாம் - கோயில்களில் பாரதம் படிப்பதற்கு நியமிக்கப்பட்ட இனாம். பாரதிரசம் - இரசம் கந்தகம் முதுலியன சேர்ந்த கூட்டு மருந்து. பாரதிவிருத்தம் - கூத்தன் தலைவனாகவும் நடன் நடிகர் பொருளாகவும் வரும் நாடகவகை. பாரதூரம் - பெருந்தூரம், முக்கிய மானது. பாரத்துவாசம் - வலியன், கற்ப நூலுள் ஒன்று. பாரத்துவாசன் - துரோணிhசிரியன், ஒரு முனிவர். பாரபட்சம் - ஒரு பக்கம் சார்வானது. பாரபத்தியம் - மேல் விசாரணை. பாரமார்த்திகம் - உண்மை ஞானத்துக்கு உரியது. பாரமேட்டி - ஒருவகைச் சன்னியாசி. பாரம் - பூமி, பருத்தி, பொறுக்கை, கனம், சுமை, நிறுத்தல், அளவை வகை, பொறுப்பு, பெருமை, குதிரைச் சேணம், தோணி, கரை, 8 அல்லது 16 பக்கங்களாகக் கோக்கப்பட்ட அச்சு (Frome). பாரம்பரம் - பாரம்பரியம். பாரம்பரியம் - பரம்பரை, செவிவழிச் செய்தி (ஐதீகம்). பாரம்பரை - பாரம்பரியம். பாரம்பரை நியாயம் - பரம்பரையாக வரும் வழக்கம். பாரவம் - வில்லின் நாண். பாரன்ஹைட்டு - (Fahrienheit). பாரா - பாரதசம், காவல் (உருது). பாராசாரியன் - வியாசன். பாராசாரியம் - சிற்ப நூல் வகை. பாராட்டு - புகழ்ச்சி, அன்பு செய்கை, கொண்டாட்டம். பாராட்டுதல் - புகழ்தல், பலகாலும் சொல்லுதல், மனத்தில் வைத்தல். பாராட்டுந்தாய் - ஈன்ற தாய். பாராபசலி - கர்நாடக நாடு ஆங்கிலே யரிடம் முடிவாக ஒப்புவிக்கப்பட்ட கி.பி. 1801 ஆகிய 1212 ஆம் பசலி ஆண்டு. பாராயணம் - சமய நூல்களை முறையாக ஒதுகை. பாராயணன் - ஒன்றைக் குறிக் கொள்வோன், நியமமாக ஓது வோன். பாரார் - பகைவர், பூவுலகத்தார். பாராவதம் - புறா. பாராவனை, பாராவளையம் - வளைதடி. பாராவாரம் - கடல், கடற்கரை. பாரி - பூமி, நல்லாடை, கட்டில், வள்ளல்களுள் ஒருவன், கடல், மனைவிகள், கொட்டு, முழக்குடன் செய்யும் இராக் காவல். பாரிசச்சூலை - பக்கவாதம். பாரிசம் - பக்கம், வசம். பாரிசவாதம் - பக்கவாதம். பாரிசாதம் - பஞ்சதருக்களுள் ஒன்று, பவள மல்லிகை, முள்முருக்கு. பாரிசேடப்பிரமாணம் - எஞ்சு வதைக் கொள்ளுகை ஆகிய பிரமாணம். பாரரிஸ்சாந்து - சுண்ணாம்புக் கல்லை அரைத்துச் செய்யப்பட்ட பசை (Plaster of Paris). பாரிடம் - பூமி, பூதம். பாரிணேயம் - திருமணத்தில் மணமகட்குக் கொடுக்கப்படும் ஆடை ஆபரணம் முதலியன. பாரித்தல் - பரவுதல், படுத்தல், மிகுதல், தோன்றுதல், ஆயத்தப் படுத்துதல், வளர்தல், உண்டாக் குதல், அணிதல், அருச்சித்தல், வளைத்தல், விரும்புதல், பரப்புதல், பரக்கக் கூறுதல், சுமையாதல், சுமத்துதல், காத்தல். பாரிபவியம் - வெண்கோட்டம். பாரிபோகம் - மணமகட்குக் கொடுக் கும் பொருள். பாரிபோதல் - நடுயாமத்தில் சுற்றுக் காவல் செய்தல். பாரிப்பு - பருமன், பரப்பு, விருப்பம், விரச் செயல், கனம். பாரியாத்திரம் - 449 சிகரங்களையும் 57 மேல்நிலைக் கட்டுகளையும் உடைய கோயில். பாரியை - மனைவி. பாருபத்தியம் - நிர்வாகம். பார்காப்பான் - சங்க காலப் புலவர் (குறு. 254). பாரை - கடப்பரை, எறிபடை வகை, செடிவகை, மீன்வகை. பார் - பரப்பு, தேர்ப்பரப்பு, வண்டியின் அடிப்பாகத்துள்ள நெடுஞ் சட்டம், பூமி, நாடு, நன்னிலம் பாறை அடுக்கு, தடை, உரோகிணி, பருமை. பார்க்க - உறழ்ச்சிப் பொருளில் வரும் சொல். பார்க்கவம் - உப புராணத்தொன்று. பார்க்கவன் - சுக்கிரன். பார்க்கவி - இலக்குமி. பார்சுவகிரகணம் - குறைக் கிரகணம். பார்சுவர் - தீர்த்தங்கரருள் ஒருவர். பார்த்தசாரதி - கண்ணபிரான். பார்த்தன் - அருச்சுனன். பார்திப - 60 ஆண்டுகளுள் 10 ஆவது. பார்த்திவம் - பூமி சம்பந்தமானது. பார்த்திவ லிங்கம் - ஈர மண்ணால் பிடித்த இலிங்கம். பார்த்திவன் - அரசன். பார்ப்பதி - பார்வதி. பார்பதிபுதல்வன் - கணபதி. பார்ப்பனச்சேரி - பார்ப்பார் குடி யிருக்கும் இடம். பார்ப்பனமுல்லை - பகைத்த மன்னர் இருவருடைய மாறு பாட்டை நீக்க முயலும் பார்ப்பானது நடுவுநிலை கூறும் புறத்துறை. பார்ப்பனவாகை - அந்தணன் வேள்வி வேட்டலாற் பெறும் பெருமையைக் கூறும் புறத்துறை. பார்ப்பனன் - பார்ப்பான். பார்ப்பனி, பார்பினி - பிராமணப் பெண். பார்ப்பான் - கோயிற் பூசகன். பார்ப்பி - பார்ப்பனி. பார்ப்பு - பறவைக் குஞ்சு, விலங்கின் குட்டி, பார்ப்பனச் சாதி. பார்ப்புத்தேள் - பூமாதேவி. பார்மகள் - பூமிதேவி. பார்மிசைநடந்தோன் - புத்தன். பார்வணசிராத்தம் - பருவ காலங் களில் பிதிர்களுக்குச் செய்யும் சடங்கு. பார்வாணவோமம் - சிராத்தத்திற் செய்யும் ஓமம். பார்வதி - உமை. பார்வதிலோசனம் - தாள வகை. பார்வல் - பார்க்கை, காவல், பறவைக் குஞ்சு. பார்வை - காட்சி, கண், தோற்றம், மந்திரிக்கை, கண்ணோட்டம், பார்வை, மிருகம். பார்வைச்சட்டம் - இரட்டைக் கதவு களின் சந்தினை மூடவிளிம்பில் தைக்கும் மரக் கம்பிச் சட்டம். பார்வைமான் - மானைப் பிடிக்கப் பழக்கப்பட்ட மான். பார்வைமிருகன் - மிருகங்களைப் பிடித்தற்குப் பழக்கிய விலங்கு. பார்வையிலி - குருடன். பாலகம் - எள். பாலகன் - காப்போன், குழந்தை, புத்திரன். பாலகாப்பியம் - பாலகாப்பியர் செய்த யானை வைத்தியநூல். பாலகிரகாரிட்டம் - கிரகங்களின் தீயபார்வையும் குழந்தைகளுக் குண்டாகும் பீடை. பாலசந்திரன் - பிறைச்சந்திரன். பாலசிட்டை - சிறுவர்க்குப் போதிக்கை. பாலடிசில் - பாற்சோறு. பாலடை - குழந்தைக்குப் பாலூட்டும் சடங்கு. பாலடைக்கட்டி - சீஸ் (Cheese). பாலமர்தம் - அறியாமை. பாலம் - பூமி, மரக்கொம்பு, நெற்றி, மழு, வாராவதி. பாலர் - முல்லை நில மக்கள், சிறுவர். பாலலோசனன் - சிவன். பாலவன் - பால் நிறமான சிவன். பாலவி - பாற்சோறு. பாலனம் - பாதுகாப்பு. பாலன் - குழந்தை, காப்போன். பாலாசிரியன் - பாலர்க்குக் கற்பிக்கும் ஆசிரியன். பாலாறு - ஓர் ஆறு. பாலி - பாலாறு, ஒரு மொழி. பாலிகை - நவதானிய முளை, மண்பாத்திரம், ஆயுதக்வர் இளம் பெண், ஒருவகைக் காதணி, உதடு, சுத்திப் பிடி, வட்டம், நீரோட்டம். பாலித்தல் - காத்தல், கொடுத்தல், விரித்தல். பாலியம் - இளமை. பாலினி - காப்பவள். பாலுகம் - கற்பூரம். பாலுண்ணி - ஒருவகைச் சதை வளர்ச்சி. பாலூட்டிகள் - குட்டிக்குப் பால் கொடுக்கும் விலங்குகள் (Mammals). பாலேடு - பாலாடை. பாலை - முல்லையும் குறிஞ்சியும் திரிந்தநிலம், புறங்காடு, மரவகை, பண்வகை, ஒருவகை யாழ், புனர்பூசம், சூதாட்டத்தில் ஒரு குழூக்குறி, 16 ஆண்டுக்குட்பட்ட பெண், சிவசத்தி, பிரிவு, வெப்பம், மணல் நிலம். பாலைக்கிழத்தி - துர்க்கை. பாலைக்கௌதமனார் - பதிற்றுப் பத்தில் மூன்றாம் பத்தினைப் பாடிய புலவர். பாலைநிலை - இறந்த கணவனுடன் தீப்பாய்வாள் தான் உடன் கட்டையேறுதலை விலக்கினோ ருடன் உறழ்ந்து கூறும் புறத்துறை. பாலைபாடியபெருங்கடுங்கோ - பாலைக் கலிபாடியவர். பாலையாழ் - பாலைப்பண். பாலமானி - பாலில் நீரிருப்பதைச் சோதிக்கும் கருவி (Lactometer). பாலைவனம் - பரந்த மணல்வெளி. பால் - பால், மரப்பால், வெண்மை, சாறு, பகுதி, பிரித்துக் கொடுக்கை, பாதி, பக்கம், வரிசை, குலம், திக்கு, இயல்பு, ஊழ், தகுதி, ஆண்பால் வெண்பால் முதலிய பிரிவு. பால்பகாவஃறிணைப்பெயர் - ஒன்றன் பால் பலவின்பால் இரண் டிற்கும் பொதுவான் பேசுதல். பால்மாறுதல் - சோம்பியிருத்தல், பின் வாங்குதல். பால்வண்ணன் - பலராமன். பால்வரைகிளவி - அளவு முதலிய வற்றின் பகுதியைக் குறிக்கும் சொல். பால்வரைதெய்வம் - நல்வினை தீவினைகளை வகுக்கும் தெய்வம். பால்வழு - ஒரு பாற்சொல் ஏனைப் பாற்சொல்லோடு முடிதலாகிய குற்றம். பால்வழுவமைதி - பால்வழுவை ஆமென்று அமைத்துக் கொள்வது. பால்வன்னத்தி - சிவசத்தி. பால்வீதிமண்டலம் - வானத்தின் ஒருபுறமாக நீளத்தோன்றும் நட்சத் திரத்திரள் ஒளி. பாவகன் - நெருப்பு, கருத்து, தியானம், உருவம், பாசாங்கு. பாவகன் - பரிசுத்தன், தீக்கடவுள், விடவைத்தியன். பாவகாரி - பாவஞ்செய்வோன். பாவகி - முருகக் கடவுள். பாவசங்கீர்த்தனை - குருவிடம் பாவத்தைச் சொல்லுகை (கத் தோலிக்கம்.) பாவடி - கால் வைத்து ஏறும் அடி. பாவண்ணம் - நூற்பாவிற்குரிய சாதம். பாவபாணம் - மனோபாவங்களாகிய மன்மத பாணங்கள். பாவம் - தீவினைப்பயன், தீச்செயல், இரக்கக் குறிப்பு, தியானம், உள தாந்தன்மை, அபிநயம், முறைமை. பாவமூர்த்தி - வேடன். பாவரசம் - கருத்துநயம், அபிநயச் சுவை. பாவர் - பாவிகள். பாவலர் - கவிஞர். பாவல் - மிதியடி, மரக்கல் உறுப் புக்களுள் ஒன்று. பாவறை - கூடாரம். பாவனத்துவளி - சங்கு. பாவனம் - தூய்மை. பாவனன் - சுத்தஞ் செய்பவன், வீமன், அனுமான். பாவனாதீதம் - நினைத்தற்க அரியது. பாவனை - நினைப்பு, தெளிகை, தியானம், பஞ்சகந்தங்களுள் ஒன்று, ஒப்பு, நடத்தை, போலி. பாவனைகாட்டுதல் - பின்பற்றிக் காட்டுதல், அபிநயித்தல். பாவனைக்கொள்கை - உள்ளதாக மனதில் கொள்ளுதல் (Supposi ton). பாவாடம் - நாக்கறுத்துக் கொள்ளுங் பிரார்த்தனை. பாவாடை - பெரியோர் நடந்து செல்ல நிலத்தில் விரிக்கு சீலை, கடவுள் முதலியோர்க்கு ஆடை யில் படைக்கும் சோறு, பெண் உடைவகை, மேலே வீசும் ஒரு வகை விருதுச் சீலை. பாவாடைராயன், பாவாடைவீரன் - ஒரு கிராம தேவதை. பாவாணர் - புலவர். பாவாற்றி - நெய்வோர் குச்சி. பாவாற்றுதல் - நெசவுப் பாவை, தறிக்கு ஆயத்தஞ் செய்தல். பாவி - தீமையாளன், சம்பவிக்கக் கூடியது. பாவிகம் - தொடக்கம் முதல் முடிவு வரை வனப்புடையதாக அமையும் காவியப்பண்பு. பாவித்தல் - பாவனை செய்தல், தியானித்தல், நினைத்தல். பாவியம் - பாவிக்கத்தக்கது, தகுதி. பாவியர் - கருத்துடையவர். பாவிரிமண்டபம் -சங்கமண்டபம். பாவு - நெசவுப்பா. பாவுகல் - தளம் பரப்பும் கல். பாவை - பதுமை, அழகிய உருவம், கருவிழி, பெண், குரவமலர், பாவைக் கூத்து, நோன்பு வகை, திருவெம் பாவை, இஞ்சிக் கிழங்கு. பாவைக்கூத்து - அவுணர் மோகித்து விழும்படி கொல்லிப் பாவை வடிவு கொண்டு திருமகள் ஆடிய ஆடல், பொம்மை ஆட்டம். பாவைக்கொட்டிலார் - சங்க காலப் புலவர் (அகம். 336). பாவைஞாழல் - ஞாழல் வகை. பாவைத்தீபம் - கோயிலில் வழங்கும் தீபாராதனைக் கருவி வகை. பாவைப்பாட்டு - திருவெம்பாவை திருப்பாவகைளில் உள்ளன போல நான்கடியின் மிக்குவரும் செய்யுள். பாவையாடல் - பெண்பாற் பிள்ளைத் தமிழின் உறுப்புகளுள் பாட்டுடைத் தலைவி பாவை வைத்து விளையாடுகை. பாவையிஞ்சி - இஞ்சிக் கிழங்கு. பாவைவிளக்கு - பெண் போன்ற தாளுடைய விளக்கு. பாவோடுதல் - நூலை நெசவுப் பாவாக்குதல். பாழாக்குதல் - பயனற்றதாகச் செய்தல். பாழி - வெறும், கடல் அகலம், பெருமை, வலிமை, போர், இடம், கோயில், நகரம், மருத நிலத்தூர், பகைவர் ஊர், பாசறை, முனிவர், வாசம், குகை, துயிலிடம், சிறு குளம், இறங்குதுறை, சுபாவம், சொல், சடை என்னும் வேத மோதுதல். பாழிமை - வெறுமை, வலிமை. பாழிவாய் - கழிமுகத்துள்ள திடர். பாழுக்கிறைத்தல் - வீணான காரியம் செய்தல். பாழூர் - குடி நீங்கிய ஊர். பாழ் - நாசம், நாட்டம், அழகு கெட்டது, வீண், ஒன்றுமற்ற இடம், குற்றம், உயிர். பாழ்க்கோட்டம் - சுடுகாடு. பாழ்ங்கிணறு - இடிந்த அல்லது தூர்ந்து போன கிணறு. பாழ்ந்தாற - படுகுழி. பாழ்படுதல் - கேடுறுதல். பாளம் - உலோகக் கட்டி. பாளயம் - பாளையம். பாளி - பூவேலை செய்த உடை, விதானச் சீலை. பாளிதம் - சோறு குழம்பு, விதானச் சீலை, கண்டசருக்கரை, பச்சைக் கர்ப்பூரம், சந்தனம். பாளித்தியம் - பிராகிருத இலக்கணத் தொன்று. பாளை - கருப்பருவம். பாளையப்பட்டு - அரசனுக்குப் போரில் உதவவேண்டும் என்னும் கட்டுப்பாட்டுடன் பாளையக் காரருக்கு விடப்பட்ட கிராமத் தொகுதி. பாளையம் - சேனை, பாசறை. பாறல் - இடபம், மழைப்பாட்டம். பாரறாங்கல் - பாறைக்கல். பாறு - கேடு, பருந்து, சிதறுதல், கிழிபடுதல், அடிபறிதல், கடத்தல், ஒழுங்கற்றுப் பரந்துகிடத்தல். பாறை - நிலத்திலுள்ள கருங்கல், திரள். பாறைபடுதல் - இறுகுதல். பாற்கதிர் - நிலா. பாற்சர்க்கரை - இலக்டோஸ் (Lactose). பாற்கரன் - சூரியன். பாற்கரியம் - பிரமத்தினின்றும் உலகம் தோன்றியது என்னும் மதம். பாற்கரியோன் - இந்திரன். பாற்காவடி - காற்கலசங்கள் கொண்ட காவடி. பாற்கிண்டல் - பால் கலந்த உணவு வகை. பாற்குனம் - பங்குனி. பாற்குனி - உத்தர நாள். பாற்படுதல் - ஒழுங்குபடுதல், நன் முறையில் நடத்தல். பாற்பட்டார் - துறவியர். பாற்பல் - முதலில் முளைக்கும் பல். பாற்றுதல் - நீக்குதல், அழித்தல். பானகம் - சர்க்கரை ஏலம் முதலியன கலந்த குடிநிர், நீர்மோர், குடிக்கை. பானசம் - பலாச் சுளையிலிருந்து வடித்த மது. பானசியர் - சமையற்காரர். பானம் - குடிக்கை, பருகுமுணவு. பானல் - மருதநிலம், வயல், கருங்கு வளை, கடல், கள், குதிரை, வெற்றிலை. பானவட்டம் - இலிங்கத்தின் அடிப்பாகம். பானான் - நள்ளிரவு. பானியம், பானீயம் - நீர், பருகும் உணவு. பானு - ஒளி, சூரியன். பானுகம்பன் - சிவகணத்தான். பானுகோபன் - சூரபதுமன் மகன். பானை - மண்மிடா, ஓர் அளவு. பான் - ஒரு வினைஎச்ச விகுதி. பான்மடை - பாற்சோறு. பான்மயக்கம் - ஒரு பால் ஏனைப் பாலின்கண் மயங்குதலாகிய வழுவின் அமைதி. பான்முல்லை - தலைவியை மணந்த தலைவன் மனமகிழ்ந்து தம்மை ஒருங்கு கூட்டிய நல்வினையைப் புகழ்ந்து கூறும் புறத்துறை. பான்மை - குணம், பகுதி, தகுதி, முறைமை, சிறப்பு, நல்வினைப் பயன். பாஸ்கரன் - சூரியன். பி பி - பிறவினை விகுதி. பிகம் - குயில். பிகவல்லபம் - மாமரம். பிகு - இறுக்கம், செருக்கு, உரத்த குரல். பிக்கம் - யானைக் கன்று. பிக்காசு - குந்தாலி. பிக்காரி - தரித்திரன். பிக்கு - பிசகு, பௌத்த குரு. பிக்குணி - பௌத்த பெண் துறவி. பிங்கலகேசி - இறந்துபட்ட ஒரு வாத நூல். பிங்கலந்தை - பிங்கல் நிகண்டு (11ம் நூ.). பிங்கலம் - பொன்னிறம், பொன், வடக்கு, பிங்கலமுனிவர் செய்த நிகண்டு. பிங்கலை - வலது மூக்கு வழியாக வரும் மூச்சு, பத்து வாயுக்களுள் ஒன்று, ஆந்தை வகை, தென் திசைக்குரிய திக்கு, யானை, பார்வதி. பிங்கள - 51வது ஆண்டு. பிங்களித்தல் - அருவருத்தல், பின் வாங்குதல். பிசங்கம் - பொன்மை கலந்த சிவப்பு. பிசங்கல் - அழுக்கு ஏறினது. பிசம் - தாமரை தண்டு. பிசல் - தோள், பிடர். பிசறுதல் - கலத்தல். பிசாசக்கை - அபிநய வகை. பிசாசப்பிரியம் - வேம்பு. பிசாசம் - பேய். பிசாசர் - 18 கணத்துள் ஒரு சாரார். பிசாசு - பேய். பிசான் - பிசுபிசுப்பு. பிசி - நொடி, பிதிர், சோறு. பிசிதம் - இறைச்சி, வேம்பு, நீறு. பிசிதாசனர் - அரக்கர். பிசிராந்தையார் - சங்க காலப் புலவர் (அகம். 308). பிசிர் - நீர்த்துளி, ஊற்று நீர், சிம்பு. பிசிர்தல் - துளியாகச் சிதறுதல். பிசின் - மரத்திலிருந்து வடிந்து உறைந்த பால், ஒட்டுகை, பிரம்பு, வெட்டுக் குருத்து. பிசினாறி - உலோபி. பிசு - குட்டநோய் வகை, பருத்தி. பிசுகம் - வேலிப் பருத்தி. பிசுகுதல் - தடுமாறுதல், உலோபம் செய்தல். பிசுக்கர் - அற்பர். பிசுக்கு - பீர்க்கு, உலோபம். பிசுக்கெனல் - பசைத் தன்மையாதற் குறிப்பு. பிசுபிசப்பு - ஒட்டுந் தன்மை. பிசுமந்தம் - வேம்பு, செங்கழுநீர். பிசுனம் - கோள் சொல்லுகை, காக்கை, குங்குமம், உலோபம். பிசுனன் - பொய்யன், உலோபி. பிசைதல் - நீர்விட்டுக் கையால் நன்றாகத் துழாவுதல், கசக்குதல், தேய்த்தல், உரசுதல். பிச்சம் - ஆண்கள் மயிர், பீலிக் குஞ்சம், பீலிக்குஞ்சக் குடை. பிச்சன் - பைத்தியக்காரன், சிவன். பிச்சாடனம் - இரத்தல். பிச்சி - சாதி மல்லிகை, முல்லை, சிறுசெண்பகம், பித்துப் பிடித்தவள். பிச்சியார் - சைவத் தவப் பெண், கலம்பக உறுப்பு. பிச்சிலம் - குழம்பு, கஞ்சி. பிச்சு - பித்தநீர், பைத்தியம். பிச்சுவா - கை ஈட்டி. பிச்சை - இரப்போர்க்கு உணவு, வாழை, மரகதம், பளிங்கு. பிச்சைத்தேவன் - சிவன். பிஞ்சகன் - சிவன், சங்கரிப்போன். பிஞ்சம் - இறகு, மயிலின் தோகை. பிஞ்சரம் - அதிகாரம், பொன், கருமை கலந்த செந்நிறம். பிஞ்சலம் - தருப்பை. பிஞ்சு - இளங்காய், இளமையானது, அணியின் அரும்புக்கட்டடம், கால் (1/4). பிஞ்சுக்கட்டை - தலை அகன்ற தூண். பிஞ்செழுத்து - பஞ்சாக் கரத்தில் சக்தியைக் குறிக்கும் வ என்னும் எழுத்து. பிஞ்சை - பிஞ்சு, மஞ்சள். பிஞ்ஞகம் - மகளிர் தலைக்கோலம். பிஞ்ஞகன் - சிவன். பிஞ்ஞை - நப்பின்னை கிருட்டிணன் மனைவி. பிடகம் - திரிபிடகம், பிச்சை, கூடை. பிடகன் - புத்தன், வைத்தியன். பிடகை - பூந்தட்டு. பிடக்கு - கௌத்தாது பிடகநூல். பிடங்கு - கத்தியின் முதுகுப்புறம், துப்பாக்கி முதலியவற்றின் அடிப் பாகம். பிடரி,பிடர் - பின் கழுத்து. பிடல் - கதவு. பிடவம், பிடவு - ஒரு கொடி. பிடாகை - உட்கிடை ஊர். பிடாம் - போர்வை. பிடாரன் - பாம்பு பிடிப்போன், இசைகாரன். பிடாரி - ஒரு கிராம பெண் தெய்வம். பிடார் - கருவம், பெருமை. பிடாலவணம் - ஐந்து உப்புகளில் ஒன்று. பிடி - பற்றுகை, நம்பிக்கை, ஆயுதப் பிடி, உறுதி, உள்ளங்கைப்பிடி அளவு, பெண் யானை, பேய். பிடகம் - பிள்ளைக் கைவளை. பிடிகை - ஒரு பீடமுள்ள ஊர்திவகை. பிடிகொடுத்தல் - அகப்படுதல், இழத்தல். பிடிதம் - பிச்சை. பிடித்தம் - கழிவு, சிக்கனம், மனப் பொருத்தம், விருப்பம். பிடித்தல் - கைப்பற்றுதல், அகப் படுத்துதல், அழுத்தித் தடவுதல், பிரியமாதல், செலவாதல். பிடித்தாடி - சோகி. பிடித்து - கைப்பிடிப் பொருள். பிடித்தைலம் - பிடிப்புக்குத் தடவும் தைலம். பிடிநாள் - நல்ல நாள். பிடிப்பு - பற்றுகை, ஒட்டுகை, பிடித்தம். பிடியல் - சிறிதுகில். பிடியன் - குறித்த அளவு கொள்ளத் தக்க பானை. பிடிவாதம் - கொண்டது விடாமை. பிடுங்குதல் - கத்துதல். பிட்சாடனம் - இரப்பு. பிட்டகம் - சிற்றுண்டி வகை. பிட்டடித்தல் - கால்கள் பிட்டத்திற் படக் குதித்தல். பிட்டபேடணநியாயம் - பிசைந்து தீர்ந்த மாவைப் பின்னும் பிசைதல் போல முன் கூறப்பட்டதையே பின்னும் கூறும் நெறி. பிட்டம் - குண்டி, பிசைந்தமா. பிட்டன் - சமயத்துக்குப் புறம் பானவன். பிட்டு - சிற்றுண்டி வகை. பிட்டுவம் - அரைக்கை. பிணக்கட்டில் - பாடை. பிணக்கம் - மாறுபாடு. பிணக்காடு - சுடுகாடு. பிணக்கு - மாறுபாடு, பற்றை, தூறு. பிணக்குதல் - மாறுபடுதல், ஊடுதல், பின்னுதல். பி™நெஞ்சு - உணர்ச்சி அறை மனம். பிணப்பறை - சாப்பறை. பிணம் - சவம், பேய். பிணர் - சருச்சரை (சொர சொரப்பு). பிணவல், பிணவு - பன்றி, மான், நாய் முதலியவற்றின் பெண். பிணன் - பிணம். பிணா - பிணவல். பிணி - கட்டுகை, கட்டு, பற்று, அரும்பு, நோய். பிணன் - பிணம். பிணா - பிணவல். பிணி - கட்டுகை, கட்டு, பற்று, அரும்பு நோய். பிணிகை - கச்சு. பிணிதல் - சாதல். பிணித்தல் - சேர்த்துக் கட்டுதல், வசப்படுத்துதல். பிணித்தோர் - நோய் கொண்டோர். பிணிப்பு - கட்டு, பற்று. பிணிமுகம் - மயில், முருகக் கடவுளின் யானை, அன்னம். பிணியகம் - காவலிடம். பிணிவீடு - இடையூறு நீங்குகை. பிணுக்கன் - மாறுபட்ட கொள்கையினன். பிணை - இணை, கட்டு, உத்தர வாதம், விலங்கின் பெண், பெண் மான்,பூமாலை, புறந்தருகை, விருப்பம். பிணைச்சு - புணர்ச்சி. பிணைத்தல் - தொடுத்தல், கட்டுதல். பிணைபோடுதல் - பொறுப்பேற்றுக் கொள்ளுதல். பிணையல் - ஒன்று சேர்க்கை, பூ மாலை, கதவின்கீழ், அபிநயவகை. பிணையிலி - தக்கோரால் பேணப்படாதவர். பிண்டகை - ஒருவகைக் கஸ்தூரி. பிண்டசூத்திரம் - தலைமைப் பொருளைப் பொதுப்படக் கூறும் சூத்திரம். பிண்டப்பொருள் - கருத்து. பிண்டம் - உருண்டை, உருவற்றகரு, உடல், சோற்று, உருண்டை, தொகுதி. பிண்டி - நுண்பொடி, பிண்ணாக்கு, வடிவம் புனர்பூசம், அபிநயவகை ஆசோகு. பிண்டிகை - கடிவாளம். பிண்டித்தல் - திரளை ஆக்குதல், தொகுத்தல். பிண்டிப்பகவன் - அருகன். பிண்டிப்பாலம் - எறிபடை வகை. பிண்டியான் - சைனக் கடவுள். பிண்டீகரணம் - உண்டாகத் திரட்டுகை. பிண்டீரி - வல்லாரை. பிண்டு - பிண்டம். பிண்டோதகம் - பிதிரர்க்குப் பிண்டபலியுடன் எள்ளுக் கலந்த நீர்விடும் கிரியை. பிண்ணாக்கு - எள் முதலியவற்றின் எண்ணெய் நீக்கிய சக்கை. பிதக்குதல் - நசுக்குதல். பிதற்று - அறிவின்றிக் குழறுகை. பிதா - தந்தை, கடவுள், பெருநாரை. பிதாப்பிதாக்கள் - மூதாதையர். பிதாமகன் - பாட்டன். பிதாமகி - தந்தையைப் பெற்ற பாட்டி. பிதிகாரம் - பரிகாரம். பிதிராச்சிதம் - முன்னோர் தேடிய சொத்து. பிதிர் - இறந்தவரின் உயிர், மகரந்தம், பொடி, திவலை, துண்டம், பொறி, காலநுட்பம், விடுகதை, அதிசயச் செயல், சேறு, தேமல். பிதிர்க்கடன் - இறந்தவர்க்குச் செய்யும் கடன். பிதிர்த்தருப்பணம் - இறந்தவர்க் குச் செய்யும் நீர்க்கடன். பிதிர்தல் - உதிர்தல், சிதறுதல், கிழிதல், பரத்தல், மனம் கலங்குதல். பிதிர்த்தல் - உதிர்த்தல். பிதிர்வனம் - சுடுகாடு. பிது - பிதா, பெருமை. பிதுக்கம் - பிதுங்ககை, பிதுங்கி யிருக்கும் பாகம். பிதுக்குதல் - பிதுங்கச் செய்தல், அமுக்குதலால் உள்ளீடு வெளிக் கிளம்புதல். பித்தகோபம் - பித்த ஆதிக்கம். பித்தம் - ஈரலினின்று தோன்றும் நீர் வகை, மயக்கம், பைத்தியம், மிளகு. பித்தரோசனம் - பூவரசு. பித்தளை - செம்பும் நாகமும் கலந்த உலாக வகை. பித்தன் - பைத்தியக்காரன், சிவன். பித்தாமத்தர் - பரிபாடல் 7ம் பாடலுக்கு இசை வகுத்தவர். பித்தி - சவர், பங்கு. பித்திகம் - கவர், அண்டச் சுவர், சாதி மல்லிகை, சிறுசெண்பகம். பித்து - பித்தநீர், பைத்தியம், அறியாமை, மிக்க ஈடுபாடு. பித்தை - மக்கள், தலைமயிர். பிந்து - துளி, சத்திதத்துவம், விந்து. பிபீலிகா நியாயம் - எறும்பு போல முறைப்பட ஆராய்ந்து தவறாது துணியும் நெறி. பிபீலிகாமத்திமம் - முதலடியும் ஈற்றடியும் எழுத்துமிக்கும் நடு விரண் டடியும் எழுத்துக் குறைந்தும் நாலடி யும் சீரொத்தும் வரும் செய்யுள். பிபீலிகை - எறும்பு. பிப்பிலம் - அரசு, நீர். பிப்பலி, பிப்பிலி - திப்பிலி. பிம்பம் - உருவம், உருவின் சாயை. பிம்பி - கோவைக்கொடி. பியந்தை - மருதப்பண் வகை. பியல் - பிடர். பியூப்பா - கூட்டுப் புழு (Pupa). பிய்தல் - கிழிதல், பிரிந்து போதல், சிதைதல். பிய்த்தல் - கிழித்தல், வேறாகும்படி பிரித்தல், பிடுங்குதல். பிரகடம், பிரகடனம் - வெளிப் படுத்துகை. பிரகதி - கத்தரி, தும்புருவின் வீணை. பிரகணப் பிரகரணம் - அறம் பொருள் இன்பம் இவற்றைப் பொருளாகக் கொண்ட நாடக வகை. பிரகரணம் - நாடக வகை. பிரகலாதன் - இரணிய கசிபுவின் புதல்வன். பிரகலை - கீதவுறுப்பு நான்கனு ளொன்று. பிரகற்பதி - வியாழன், தேவகுரு. பிரகாசம் - ஒளி புகழ். பிரகாசனம் - பிரகாசம், விரித்து விளங்குகை. பிராகாசித்தல் - ஒளிவிடுதல். பிரகாரம் - வீதம், ஒப்பு. பிரகருதி - மூலம், சுபாவம், வேறு பாடுறாதது. பிரகிருதிகள் - அரசனிடம் ஊதியம் பெற்று அரசியல் தொழில் செய்வோருள் தலைவர். பிரகிருதி சாத்திரம் - இயற்கை விஞ்ஞானம் (Natural Science). பிரசங்கம் - விரிவுரை, சொற்பொழிவு. பிரசண்டம் - கடுமை. பிரசம் - பூந்தாது, தேன், தேனிறால், கள், தேனீ, வண்டு. பிரசலை - மனக் கலக்கம். பிரசவம் - பிள்ளைப்பேறு. பிரசவவைராக்கியம் - பிரசவ வேத னைப்படுபவள் பின்னர் காம நுகர்ச்சியை வெறுத்துவிடுவதாக அப்போது கருதும் எண்ணம். பிரசவித்தல் - ஈனுதல். பிரசன்னம் - சமுகம், தெளிவு, மகிழ்ச்சி, காட்சி. பிரசாட்சயம் - பிரசைத் தொகையின் குறைவு. பிரசாதப்படுதல் - உண்ணுதல், அரசன் ஆணையை ஏற்றல். பிரசாதம் - கடவுளுக்கு நிவேதிக்கும் அன்னம் முதலியன, தெளிவு, அனுக்கிரகம். பிரசாதிபத்தியம் - சனநாயக ஆட்சி. பிரசாந்தி - உள்ளும் புறமும் அஞ்ஞானத்தை ஒழிக்கை. பிரசாபதி - பிரமன், அரசன். பிரசாரம் - பரவச் செய்கை. பிரசாபத்தியம் - எண் வகைத் திரு மணங்களுள் ஒன்று, முகூர்த்தங் களுள் ஒன்று. பிரசித்தம் - வெளிப்படை அறிவிப்பு. பிரசித்தி - புகழ். பிரசுரம் - நூற்பதிப்பு, அறிவிப்பு. பிரசுரன் - மிக்கவன். பிரசை - குடியானவன், சந்ததி. பிரசோற்பத்தி - 60 ஆண்டில் 5 ஆவது. பிரபஞ்ஞை - அறிவு. பிரடை - அடைப்புக்குச்சு (Cork) முறுக்காணி. பிரட்டம் - முதன்மை, கள்ளுண்கை. பிரட்டன் - நெறியினின்று வழுவினவன். பிரட்டை - முறுக்காணி. பிரணயம் - அன்பு. பிரணவம் - ஓங்காரம். பிரணீதபாத்திரம் - ஓமச்சடங்கிற்கு உரிய பாத்திரம். பிரண்டை - கொடி வகை. பிரதக்கணம், பிரதட்சிணம் - வலம் வருகை. பிரததி - படர்கொடி. பிரதமம் - முதன்மை. பிரதமை - முதல் திதி. பிரதனை - படை வகுப்புள் ஒன்று. பிரதாபம் - வீரம், பெருமை, புகழ். பிரதாபலங்கேச்சுரம் - பாதரசம் கந்தகம் முதலியவற்றால் செய்த கூட்டு மருந்து வகை. பிரதானம் - முக்கியம். பிரதானி - மந்திரி. பிரதானை - பார்வதி. பிரதி - பதில், விடை, நகல், புத்தகம். பிரதிகூலம் - தீமை, தடை. பிரதிகை - தும்புருவின் வீணை. பிரதிக்கிரகம் - சேனையின் பின் பாகம். பிரதிக்கினை - தீர்மானம், உத்தே சித்த கருமம். பிரதிசருக்கர் - உபப் பிரமர்களால் செய்யப்படும் சிருட்டி. பிரதிஞ்ஞை - பிரதிக்கினை. பிரதிட்டாகலை - சிவசத்தியின் கலைகளுள் சீவான்மாவை முத்தியில் செலுத்தும் கலை. பிரதிட்டை - தெய்வத்தைப் புதுக்கோயிலில் தாபிக்கை, நிலை பெறுத்துகை. பிரதிதானம் - கைம்மாறு. பிரதிதொனி - எதிரொலி. பிரதிநிதி - பதில் ஆள். பிரதிபடன் - எதிராளி. பிரதிபலனம் - பிரதிவிம்பம். பிரதிபலன் - கைம்மாறு. பிரதிபலித்தல் - பிரதிபிம்பம் தோன்றுதல். பிரதிபாதித்தல் - எடுத்து விளக்குதல். பிரதிபிம்பம் - சாயை. பிரதிபேதம் - பாடபேதம். பிரதிமை - புதிதுபுதிதாகப் பொருளை ஆராய்ந்து காணுமறிவு. பிரதிமானம் - யானைக் கொம்புகளுக்கு இடையிலுள்ள முகப்பகுதி. பிரதிமை - உருவம். பிரதியீடு - பதில் ஈடு (Substitution). பிரதியுத்தரம் - மறுமொழி. பிரதிலோமசன், பிரதிலோமன் - உயர்குல பெண்ணுக்கும் இழிகுல ஆணுக்கும் பிறந்தவன். பிரதிவாதம் - எதிர்வாதம். பிரதிவாதி - எதிர்வாதி, எதிரி. பிரதிவிம்பம் - சாயை, நிழல். பிரதீசி - மேற்கு. பிரதீபம் - எதிர்நிலை. பிரதேசம் - இடம். பிரதை - குந்திதேவி. பிரதோடம் - அந்த கணத்துக்கு முன்னும் பின்னுமுள்ள மூன்றே முக்கால் நாழிகை. பிரத்தம் - ஒர் முகத்தலளவை, துயரம். பிரத்தாபம் - பகிரங்கம். பிரத்தியக்கம் - பிரத்தியட்சம். பிரத்தியட்சவிருத்தம் - காட்சிக்கு மாறுபட்டது. பிரத்தியட்சவிருத்தம் - காட்சிக்கு மாறுபட்டது. பிரத்தியகான்மா - சீவான்மா. பிரத்தியக்கு - மேற்கு. பிரத்தியட்சம் - காட்சி, காண்டலளவை. பிரத்தியம் - பிரத்தியட்சம். பிரத்தியாகாரம் - அட்டாங்க யோகத்துள் இந்திரியங்களை விடயங்களிலிருந்து திருப்புகை. பிரத்தியாலிடம் - வில்லோர் நிலை நான்கனுள் இடக்கால் முனனுற வலக்கால் பின்னுற நிற்கும் நிலை. பிரத்தியுனன் - கண்ணபிரானுக்கு உருக்குமணியிடம் பிறந்த மகன். பிரத்தியூசன், பிரத்தியூடன் - அட்டவசுக்களுள் ஒருவன். பிரத்தியோகம் - தனிமை. பிரபஞ்சம் - உலகம். பிரபஞ்சனன் - காற்று. பிரபஞ்சி - பிரபஞ்சத்தினை உடையது. பிரபத்தி - சரணமாக அடைகை. பிரபந்தநிர்மாணம் - நூலியற்று விக்கை. பிரபந்தம் - 96 வகைப்பட்ட நூல். பிரபலம் - புகழ், வலியுள்ளது. பிரபல்லியம் - பிரபலம். பிரபாகரன் - சூரியன், மீமாம்ச மதக் கொள்கையைப் பரப்பிய ஆசிரியன். பிரபாகீடம் - மின்மினி. பிரபாசன் - அட்டவசுக்களுள் ஒருவன். பிரபாவம் - கீர்த்தி, ஒளி. பிரபிரதாமகன் - பாட்டனின் தகப்பன். பிரபு - பெருமையிற் சிறந்தோன், கொடையாளி. பிரபுசத்தி - பொருள் படைகளால் அரசர்க்கு அமையும் ஆற்றல். பிரபுத்தன் - யௌவன பருவமடைந்தவன். பிரபுத்துவம் - பிரபுவின் தன்மை. பிரபுமோடி - பெருமிதம். பிரபுலிங்கமலை - சிவப்பிரகாச சுவாமிகள் செய்த அல்லமாப் பிரபுவின் சரித்திரம் - 1652. பிரபை - ஒளி, திருவாசி. பிரபோதசந்திரோதயம் - மாதைத் திருவேங்கட நாதரியற்றிய வேதாந்த நூல். பிரபோதம் - பேரறிவு. பிரபோதிகை - கற்பிப்பது. பிரப்பம்பழம் - பிரம்படி. பிரப்பு - கலத்தில் பரப்பி வைக்கும் குறணித் தானியப் பலி. பிரமகண்டம் - வலி வகை. பிரமகத்தி - கொலைப் பாவம். பிரமகற்பம் - பிரமனின் ஆயுட் காலம், ஒருபேரெண். பிரமகாண்டம் - ஞானகாண்டம். பிரமகீதை - தத்துவராயர் செய்த ஒரு வேதாந்தநூல். பிரமசூலம் - பார்ப்பனச் சாதி. பிரமகூர்ச்சம் - தருப்பை முடிச்சு. பிரமக்கிரந்தி - பூணூல் முடிச்ச வகை. பிரமக்கிழத்தி - இறைவனது சத்தி. பிரமக்கொலை - பிரமகத்தி. பிரமசரியம் - திருமணமற்ற வாழ்வு. பிரமசாத்தன் - முருகக் கடவுளின் வடிவங்களுள் ஒன்று. பிரமசாயை - பிரமகத்தி. பிரமசாரி - கலியாணமாகாதவன். பிரரமசூத்திரம் - வியாசர் செய்த உத்திர மீமாம்சை சூத்திரம். பிரமஞானம் - கடவுளைப் பற்றிய அறிவு. பிரமஞானி - கடவுளை அறிந்தவன். பிரமதண்டம், பிரமதண்டு - மந்திரயுத வகை, சுப கருமங் களுக்கு உதவாத நட்சத்திரம். பிரமதரிசனம் - தன்னைப் பிரமமாக அறிந்து கொள்கை. பிரமதரு - பலாசு. பிரதமர் - சிவகணம். பிரமதாயம் - பிராமணருக்கு விடப்படும் இறையிலி நிலம். பிரமதாளம் - கச்சரி. பிரமதானம் - பிராமணருக்குச் செய்யும் தானம். பிரமதேயம் - பிராமணருக்குத் தருமமாகக் கொடுக்கப்பட்ட ஊர். பிரமநாடி - சுழுமுனை. பிரமநாதை - தாம்பிரபர்ணி ஆறு. பிரமபதவி - பிரமலோகம். பிரமபத்திரம் - பிரமலோகம். பிரமபாவனை - தன்னைப் பிரமமாகப் பாவிக்கை. பிரமபுரம் - சீர்காழி, காஞ்சிபுரம். பிரமமீமாம்சை - பிரம சூத்திரம். பிரமமுகூர்த்தம் - சூரிய உதயத்துக்கு இரண்டு நாழிகைக்கு முன்னுள்ள இரண்டு நாழிகை. பிரமமுடி - தருப்பை. பிரமமுடிச்சு - பூணூலிலுள்ள ஒரு வகை முடிச்சு. பிரமமூலி - பிரமி. பிரமமேதம் - பெரியோருக்குச் செய்யும் ஒருவகைத் தகனச் சடங்கு. பிரமம் - முதற்பொருள், பிரமசரியம், எண்மணத்துள் ஒன்று, வீணை வகை, கலகம். பிரமயாகம் - வேதமோதுகை. பிரமயோனி - பிராமணப் பிறப்பு. பிரமரகசியம் - அதி இரகசியம். பிரமரசம் - பிரமானந்தம். பிரமரதம் - பெரியோரை மரியாதை யாக எழுந்தருளுவிக்கும் வாகனம். பிரரமரந்திரம் - உச்சித் துவாரம். பிரமரம் - அபிநயவகை, குதிரைச் சுழி வகை. பிரமராக்கதன் - துன் மரணமடைந்த பிராமணனுடைய பேய் வடிவம். பிரமராசனர் - தபோதனர். பிரமராட்சதி - துன்மரணமடைந்த பார்ப்பனியின் பேய் வடிவம். பிரமராயன் - பார்ப்பன அமைச்சர் பட்டப் பெயர். பிரமரி - சுழற்சி, கூத்தின் வேறுபாடு, ஒரு சைனமந்திரம். பிரமலிபி - தலையெழுத்து. பிரமவரர் - சீவன்முத்தருள் சமாதியில் நின்று தாமே உணர் பவராகிய ஞானிகள். பிரமவரியர் - சீவன் முத்தருள் சமாதியினின்றும் பிறரால் கலைக் கப்படுவோராகிய ஞானிகள். பிரமவாதம் - உலகமெல்லாம் பிரமனிட்ட முட்டை என்னும் மதம். பிரமவிந்து - பிரமஞானமடைந்தும் உலக உபகாரமாகத் தமக்க முன் விதிக்கப்பட்ட விதிகளின்படி ஒழுகும் ஞானி. பிரமனாள் - உரோகிணி. பிரமனூர்தி - அன்னம். பிரமன் - படைப்புக் கடவுள். பிரமன்கொடி - வேதம். பிரமன்படை - தண்டம். பிரமன்றந்தை - திருமால். பிரமா - பிரமன், ஞானம். பிரமாஞ்சலி - வேதமோதும் போது குவித்த இரண்டு கைகளையும் ஏந்துகை. பிரமாட்சரம் - பிரணவம். பிரமாணக் கச்சாத்து - ஆதாரப் பத்திரம். பிரமாணரஞ்செய்தல் - சத்தியம் செய்தல். பிரமாணம் - ஆதாரம், அளவு, சாட்சியம், மேற்கோள், உண்மை யான நிலை. பிரரமாணி - சாத்திரங்களைக் கற்றறிந்தவன், பிரமாவின் மனைவி. பிரமாணிக்கம் - சத்தியம், எடுத்துக் காட்டு. பிரமாதம் - அளவின்மிக்கது, தவறி, அபாயம். பிரமாதா - பிராமணங்களை அறி பவன். பிரமாதிராயன் - பிரமராயன். பிரமாதீச - 60ம் ஆண்டுகளில் 47 ஆவது. பிரரமாலயம் - பிராமணர் வீடு. பிரமானந்தபைரவம் - ஒருவகை மருந்துக் குளிகை. பிரமானந்தம் - மோட்ச இன்பம். பிரமி - பூடு வகை. பிரமிசம் - கேடு, நழுவுகை. பிரமிடு, பிரமித்து, பிரமிதி - எகிப்திய சமாதிக் கட்டடம். (pyramid). பிரமிதி - அறியும் அறிவு. பிரமித்தல் - திகைத்தல், மயங்குதல். பிரமிப்பு - மயக்கம், திகைப்பு. பிரமிருதம் - உழல்வால் வரும் பொருள். பிரமுகம் - சிறந்தது. பிரமேகம் - வெட்டைநோய். பிரமேயசாரம் - அருளாளப் பெருமானர் செய்த வைணவ நூல். பிரமேயம் - நியாய அளவையால் அளந்து அறியப்பட்ட பொருள். பிரமை - மயக்கம், பெருமோகம். பிரமோதம் - பெருமகிழ்ச்சி. பிரமோதூத - 60 ஆண்டுகளில் 4 ஆவது. பிரமோபதேசம் - பூணூலணியும் காலத்தில் காயத்திரி உபதேசிக்கும் சடங்கு. பிரமோத்தரகாண்டம் - வரதுங்க பாண்டியனியற்றிய ஒரு சைவ புராணம் (16 ஆம் நூ.). பிரமோற்சவம் - ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் முக்கிய விழா. பிரயத்தனம் - முயற்சி. பிரயாகை - கங்கை, யமுனை, சரசுவதி என்ற மூன்று ஆறுகளும் கூடும் புண்ணிய தலம். பிரயாசம் - முயற்சி. பிரயாசி - முயற்சியுள்ளவன். பிரயுக்தம் - உண்டானது. பிரயுதம் - பத்துலட்சம், கோடி. பிரயோகம் - செலுத்துகை, மேற் கோள். பிரயோகவிவேகம் - சுப்பிரமணிய தீட்சிதர் இயற்றிய தமிழ் இலக்கணம் (17ம் நூ.). பிரயோகித்தல் - செலுத்துதல். பிரயோசனம் - பயன்படுகை, பயன். பிரலாபம் - புலம்பல். பிரலாபித்தல் - புலம்புதல். பிரவசனபக்தி - பரமாகமத்து எழு கின்ற பத்தி. பிரவசனம் - பலறியப் போதிக்கை. பிரவத்தி - பிரயத்தனம். பிரவர்த்தகம் - முயற்சி. பிரவர்த்தனம் - செல்லுகை, செய்கை. பிரவர்த்தனை - நடத்தை. பிரவாகம் - வெள்ளம். பிரவாசம் - முதன்முறை குழந்தை யைக் கோயிலுக்கு அழைத்துச் செல்லும் சடங்கு. பிரவாளம் - பவளம். பிரவிசாரம் - பரத நாட்டிய வகை. பிரவிருத்தன் - முயல்பவன். பிரவிருத்தி - முயற்சி, மலக்கழிவு. பிரவீணன் - சமர்த்தன். பிரவுடை - 31 முதல் 55 வயது முடியவுள்ள பெண்பாற் பருவம். பிரவேசக்கட்டணம் - முதலில் சேருவதற்குரிய கட்டுத் தொகை. பிரவேசம் - தொடக்கம், நுழைவு. பிரளயகாலம் - உலகம் முடியும் சாலம். பிரளயம் - வெள்ளம், ஒரு பேரெண், படைவகை, உலக முடிவு. பிரளயாகலர் - ஆணவம் கன்மம் என்னும் இரண்டினையுடைய உயிர் கள். பிரற்றல் - எடுத்தல் ஓசை. பிரற்றுதல் - உரத்துச் சத்தமிடுகை. பிரா - முசுமுசுக்கை. பிராகாமியம் - எட்டுச் சித்திகளுள் விரும்பியவற்றை அடையும் பெரும்பேறு. பிராகாரம் - மதில், கோயிற் சுற்றுப் புறம். பிராகிருதம் - மூலப் பிரகிருதியில் யாவும் கரைந்திருக்கும் பிரளயம், வடமொழித் திரிவு. பிராகிருதர் - உலகில் தோன்றிய பொருள்களையே உண்மை என்று எண்ணுவோர், சாமானியர். பிராசம் - ஆயுத வகை. பிராசயம் - ஆதி. பிராசனம் - சோறு ஊட்டுகை, உண்கை. பிராசாதம் - கோயில், உப்பரிகை, ஒரு மந்திரம். பிராசாபத்தியம் - பரிசம் பெறாது மகக்கொட்டை நேரும் மணவகை. பிராசி - கிழக்கு, முன்னே உள்ளது. பிராசீனம் - பழமை பிராசீனாவிதி - பூணூலை இடமாகத் தரிக்கை. பிராஞ்ஞன் - அறிவன், உயிர். பிராட்டி - தலைவி, தேவி. பிராணசகி - உயிர்த்தோழி. பிராணசங்கடம் - பெருந்துன்பம். பிராணநாயகன் - கணவன். பிராணநாயகி - மனைவி. பிராணமயகோசம் - பிராணனுக்கு உறையாக உள்ள உடல். பிராணம் - பிராணன். பிரணலிங்கம் - வீரசைவர் உடலில் தரித்துப் பூசிக்கும் இலிங்கம். பிராணவாயு - வாயு வகை. பிராணவேதனை - மரணவேதனை. பிராணன் - உயிர், சுவாசத்தை நிகழ்விக்கும் வாயு. பிராணாசாரம் - வரம் வேண்டித் தெய்வத்தின்முன் கிடையாய்க் கிடக்கை. பிராணாபாயம் - உயிருக்கு வரும் ஆபத்து. பிராணாயாமம் - இரேசகம், பூரகம், கும்பகம் என்று மூன்று வகையாகச் சுவாசத்தை அடக்கி அருளும் யோக வகை. பிராணி - உயிருடையது. பிரராதக்காலம் - விடியற்காலம். பிராதா - சகோதரன், அண்ணன். பிராதிபதிகம் - பெயர்ப்பாகாப் பதம். பிராதிபாசிதம் - பிரதிபலித்த தோற்றம். பிராது - முறையீடு (உருது). பிராத்தி - விரும்பியதை அடையும் பேறு. பிராந்தகன், பிராந்தன் - அறிவு மயங்கியவன். பிராந்தி - மயக்கம். பிராந்து - பருந்து. பிராப்தி - அனுபோகம். பிராமணம் - வேள்விக் கிரியை களைக் கூறும் வடமொழி நூல். பிராமணன் - பிராமணங்களைப் பயின்றவன். பிராமணி - சத்தமாதருள் ஒருத்தி, பிராமணப்பெண், பிராமணன் மனைவி. பிராமி - சரசுவதி, பழைய எழுத்து வகை. பிராயச்சித்தம் - பாவசாந்தி, கழுவாய். பிராயம் - மரவகை. பிராரத்தம் - பழவினை. பிரார்த்தனை - வேண்டுகோள், துதி, நேர்த்திக்கடன். பிராறு - நிறைபுனல். பிரான் - தலைவன், கடவுள். பிரான்மலை - பாண்டி நாட்டுச் சிவன் கோயில்களுள் ஒன்று. பிரிகதிப்படுதல் - கேடுறுதல். பிரிதல் - விட்டு விலகுதல், வேறு படுதல், பகுக்கப்படுதல். பிரிதி - இமயத்திலுள்ள நந்தப் பிரயாகை என்ற விட்டுணு தலம். பிரித்தல் - பிரியச் செய்தல், வகுத்தல், பங்கிடுதல். பிரிநிலை - வேறுபடுத்திக் காட்டும் நிலை. பிரிநிலை எச்சம் - பிரிக்கப்பட்ட பொருள் விளங்கக் கூறப்பெறாமல் எஞ்சி நிற்கும் வாக்கியம். பிரிந்திசைக்குறள் - அம்போ தரங்கம் என்னும் செய்யுள் வகை. பிரிந்திசைத்துள்ளல் - பல தளையும் விரவிவரும் கலிப்பா ஓசை வகை. பிரிந்திசைத்தூங்கல் - பல தளையும் விரவிவரும் வஞ்சிப்பா ஓசை வகை. பிரிபு, பிரிப்பு - பிரிவு. பிரிமொழிச்சிலேடை - பிரிக்கப் பட்டுப் பல பொருள் பயக்கும் சொல் தொடர். பிரியங்கு - ஞாழல். பிரியதரிசி - புத்தருள் ஒருவர். பிரியம் - விருப்பம். பிரியலர் - நண்பர். பிரியவசனம் - இன்பமான சொல். பிரியன் - அன்புள்ளவன், கணவன். பிரியாவிடை - உள்ளம் பிரியாது விடைபெறுகை. பிரியாளம் - மரல். பிரியை - பெண். பிரிவரும்புள் - இருதலைப்புள். பிரிவாற்றாமை - தலைவன் பிரிவைத் தலைவி பொறுக்க மாட்டாமை. பிரிவிலசைநிலை - தனியே வழங்காது இரட்டித்து நிற்கும் அசை நிலை. பிரிவினை - விரிவு. பிரிவு - பிரிகை, பாகம், இடையீடு. பிரீதி - விருப்பம். பிரு - கத்தரி. பிருகத்கதை - பெருங்கதைக்கு முதல் நூலானதும் குணாட்டியரால் பைசாச மொழியில் இயற்றப்பட்டது மான நூல். பிரகத்சங்கிதை - வராகமிரர் செய்த வான நூல். பிரகதீ - ஒருவகை வீணை. பிருகற்பதி - வியாழன். பிருகன்னளை - அருச்சுனன் பேடி உருவோடு கரந்துறைந்தபோது புனைந்து கொண்ட பெயர். பிருகு - ஒருமுனிவர், சுக்கிரன். பிருகுடி - புருவம். பிருங்கம் - வண்டு. பிருகரீடன் - சிவகணத் தலைவருள் ஒருவன். பிருங்கலாதன் - பிரகலாதன். பிருங்கி - சத்தியை வணங்காது சிவ பிரானை வழிபட்ட ஒரு முனிவர். பிருசன் - கொலைஞன். பிருடை - சுழலாணி. பிருட்டம் - இடுப்பில் பூட்டு. பிருட்டோதயராசி - மேடம், இடபம், கடகம், தனுசு, மகரம் என்ற இராசிகள். பிருதுவி - நிலம். பிருதை - குந்திதேவி. பிருத்தியன் - அடிமை. பிருந்தம் - துளசி. பிருந்தாவனம் - கண்ணன் இளமையில் விளையாடிய காடு. பிரேதகம் - பேய். பிரேதசமக்காரம் - பிரேதத்தை எரிக்கும் சடங்கும். பிரேதம் - பிணம், பேய். பிரேரகன் - காரியத்தை நடத்து வோன். பிரேரணை - ஒரு கருமத்தைச் சபையில் எடுத்துக் கூறுகை. பிரேரியம் - செலுத்தப்படுவது. பிரேளிகை - விடுக்கும் நொடி. பிரை - உறைமோர், பயன். பிரௌடை - பிரவுடை. பிலஞ்சுலோபம் - எறும்பு. பிலத்துவாரம் - நில அறை. பிலம் - பாதாளம், குகை, கீழறை. பிலயம் - பிரளயம். பிலவ - 60 ஆண்டுள் 35 ஆவது. பிலவகம் - குரங்கு, தவளை. பிலவங்க - 49ஆவது ஆண்டு. பிலவங்க - மான், விடசெந்து. பிலன் - எறும்பு. பிலாக்காய்க்கொத்துமணி - பரவப் பெண்கள் அணியும் கழுத்து மணி. பிலாக்கு - மூக்கில் தொங்கும் பெண்கள் அணி. பிலாவகம் - பிராணாயாம வகை. பிலாவனம் - நனைக்கை, சுத்தம் செய்யும் சடங்கு. பிலாளகம் - புழுகுச் சட்டம். பிலி - பூனைக்காஞ் சொறி. பிலிம்பி - புளிச்சைக்காய். பிலிற்றுதல் - தூவுதல், வெளி யிடுதல். பிலுக்கு - பகட்டு. பிலிகுதல் - சிறிது வலை வீசுதல், பொசிதல், கொப்பளித்தல், வழிதல். பில்லடை - அப்ப வகை. பில்லம் - நேத்திர நோய் வகை. பில்லாக்கு - பிலாக்கு. பில்லாணி - பெண்கள் கால் விரலிலணி யும் மோதிரம். பில்லி - சூனிய வித்தை, பூனை. பில்லிசூனியம் - சூனிய வித்தை. பில்லு - நெசவு பாவைச் செம்மை செய்யும் கருவி வகை. பில்லை - திரண்டு உருண்டது, தலையி லணியும் அணிவகை. பிவாயம் - சோறு சமைத்த மிடாக் களுக்கு இடும் நீற்றுப் பூச்சு. பிழக்கடை - புழக்கடை. பிழக்கு - பிழை. பிழம்பு - திரட்சி, உடல், கொடுமை. பிழற்பேய்மண்டை - நீரூற்றும் ஈமச்சட்டி. பிழா,பிழார் - தட்டுப்பிழா, இறை கூடை. பிழி - கள். பிழிஞன் - கள் விற்போன். பிழிதல் - சாறு வெளியேறச் செய்தல், சொதல். பிழியல் - பிழி. பிழுக்கை - மலம், ஒன்றுக்கு முதவாதவர். பிழுக்கைமாணி - சிறுவன், இளம் பிரமசாரி. பிழை - குற்றம், குறைவு, தவறு. பிழைத்தல் - குற்றம் செய்தல், தவறிப் போதல், ஆபத்தினின்று தப்புதல், சீவனம் பண்ணுதல். பிழைபாடு - தவறுபடுகை. பிழைப்பு - குற்றம், உயிர் வாழ்வு. பிளத்தல் - கிழித்தல், வெடிக்கச் செய்தல், பாகுபாடு படுத்துதல். பிளப்பு - வெடிப்பு. பிளவு - விரிந்து உண்டாகும் சந்து, துண்டு, வெட்டுப் பாக்கு. பிளவை - புண்கட்டி, பிளக்கப்பட்ட துண்டு. பிளவைகொல்லி - பூடுவகை. பிளாச்சு - மூங்கில் முதலியவற்றின் பிளவு. பிளாட்டினம் - உலோக வகை. பிளாஸ்டிக்கு - ஒருவகைச் செலு லோயிட்டு. பிளிச்சு - பிளாச்சு. பிளிரல் - கிளைவிடுகை. பிளிர்த்தல் - கொப்பளித்தல். பிளிறல் - முழுங்குதல். பிளிறு - பிளிறல். பிளிற்றுதல் - கக்குதல், ஆர வாரித்தல், வெகுளுதல். பிள் - அழகு. பிள்ளுறுதல் - பிளவுண்டாதல், விள்ளுதல், நொறுங்குதல். பிள்ளுவம் - யானை. பிள்ளை - குழந்தை, பறவைக் குஞ்சு, இளமை, வேளாளர் பட்டப் பெயர். பிள்ளைக்கவி - முன்னோர் மொழிந்த சொல்நடை பொருள் நடை கொண்டு கவி பாடுவோன். பிள்ளைத்தண்டு - விக்கிரங் களைத் தூக்கிச் செல்ல உதவும் சிறுதண்டு. பிள்ளைத் தமிழ் - பிள்ளையின் பல பருவங்களைப்பற்றிக் கூறும் பிரபந்த வகை. பிள்ளைத்தாலி - கலியாணமாகாத பரவ மகளிர் அணியும் கழுத்தணி வகை. பிள்ளைத்திருநாமம் - இளமையில் பெற்றோரிட்ட பெயர். பிள்ளைத்தெளிவு - பிள்ளைத் தன்மை உள்ள போர் வீரனொருவன் போரிற்பட்ட தன் புண்ணைப் பார்த்து மகிழ்ந்து கூத்தாடுதலைக் கூறும் புறத்துறை. பிள்ளைநிலை - போரில் சென்று அறியாத மறக்குடிச் சிறுவர் தாமே செய்யும் தறுகண்ணான்மையைக் கூறும் புறத்துறை. பிள்ளைப்பன்மை - மக்கள். பிள்ளைப்பிறை - இளம்பிறை. பிள்ளைப்பூச்சி - பூச்சி வகை. பிள்ளைப்பெயர்ச்சி - பிள்ளைத் தன்மை உள்ள போர் வீரனொருவன் தீய நிமித்தங்களுக்கு அஞ்சாது போருக்குச் செல்வதையும் அதற்காக அரசன் அவனைப் புகழ்வதையும் கூறும் புறத்துறை. பிள்ளைப் பெருமாற் ஐயங்கார் - அட்டப் பிரபந்தமியற்றிய ஆசிரியர் (17ம் நூ.). பிள்ளைமை - அறியாமை, பிள் ளைத் தன்மை. பிள்ளையன் - வாலிபன். பிள்ளையாட்டு - வாளால் பொருது மேம்பட்ட அரசிளங்குமரனைக் கண்டு அந்நாட்டுலுள்ளோர் மகிழ்ந்து பறை ஒலிக்க அரசு கொடுத்தலைக் கூறும் புறத்துறை. பிள்ளையாண்டான் - வாலிபன். பிள்ளையார் - மகன், விநாயகர். பிள்ளைலோகாசாரியர் - அட்டாதச ரகசியம் செய்த வைணவ ஆசிரியர் (14ஆம் நூ.). பிற - மற்றவை, ஓர் அசைநிலை. பிறகள் - பிற பிறகிடுதல் - பின் வாங்குதல், தோல்வி அடைதல். பிறகு - பின்புறம், முதுகு. பிறகு காணுதல் - தோற்கடித்தல். பிறகுவாளி - பின்புறமாகச் செலுத்தும் ஆபரணம். பிறக்கடி - பின் வாங்கின் அடி. பிறக்கடியிடுதல் - நிலைகெட்டு ஓடுதல். பிறக்கம் - ஒளி, உயர்ச்சி, குவியல், மரக்கிளை, அச்சம். பிறக்கிடுதல் - பின்வாங்குதல், கொண்டையில் முடித்தல். பிறக்கீடு - பின்னிடுகை. பிறக்கு - பின்பு, முதுகு, குற்றம், ஓர் அசைச்சொல், வேறாக. பிறக்குதல் - அடுக்குதல். பிறங்கடை -மகன், வழித்தோன்றல், மருமகன், அயலிடம். பிறங்கல் - விளங்குதல், உயர்தல், சிறத்தல், மிகுதல், செறிதல், நிலை மாறுதல். பிறசான்றோர் - சங்கப் புலவரல்லாத புலவர் பெருமக்கள். பிறந்தகம் - பிறந்த வீடு. பிறந்தை - துன்பம், பிறவி, பாவம், பிறந்த இடம். பிறப்பிலி - கடவுள். பிறப்பிறப்பு - பிறப்பும் மரணமும். பிறப்பு - பிறத்தல், சாதி, தொடக்கம், பெண்களணியும் முளைத்தாலி. பிறப்புவாசி - பிறவிச்சுபாவம். பிறமுகம்பார்த்தல் - பிறர் தயவு வேண்டுதல். பிறர் - அன்னியர். பிறிதினவிற்சி - கருதிய பொருளை அதற்குரிய நேர் வகையால் கூறாது மற்றொரு வகையால் கூறும் அணி வகை. பிறிது - வேறானது. பிறிதுசாபம் - சாபமாற்று. பிறிதுமொழிதல் - கருதிய பொருளை மறைத்து, அதனைப் புலப்படுத்தற்கு அதுபோன்ற பிறிது ஒன்றைக் கூறும் அணி. பிறியோலை - இடையர் ஆடு களைப் பிரித்தற்கு உதவும் ஓலைத் தட்டி. பிறிவு - பிரிவு. பிறை - இளஞ்சந்திரன், மகளிர் தலையணி வகை. பிறைக்கை - அபிநய வகை. பிறைக்கொழுந்து - இளம் பிறை. பிறைக்கோடு - பிறையின் நுனி. பிறைசூடி - சிவ பிரான். பிறைதொழுதல் - பிறையை வணங்குதல். பிறைத்தலையம்பு - அர்த்த சந்திர பாணம். பிறையிரும்பு - அரிவாள். பிறைவடம் - பிறைவடிவான பதக்கம். பிற்கட்டு - பாட்டின் இறுதியிலுள்ள நல்லோசைவகை. பிற்காலம் - வருங்காலம். பிற்காலித்தல் - பிற்படுதல், பின்வாங்குதல், தாமதித்தல். பிற்கு - பின், மழை. பிற்குளம் - உத்திராடம். பிற்கொழுங்கோல் - உத்திராட்டாதி. பிற்சனி - உத்தரம். பிற்பகல் - பின்நேரம். பிற்பலம் - பிற்பலி, அரசு. பிற்பாடர் - பிற்பட்டவர். பிற்பாடு - பின்நிகழ்ச்சி, பிறகு. பிற்றை - பின்றை. பிற்றைநிலை - பிற்பட்ட நிலை, வழிபாட்டு நிலை. பினாகபாணி - சிவபிரான். பினாகம் - சிவன் வில். பினாகி - சிவபிரான், அறுகு. பினாகினி - பெண்ணையாறு. பிளைதல் - பிசைதல். பின் - பின்பக்கம், இடம், கடை, பிந்தின காலம், தம்பி, பிறகு, 7ஆம் வேற்றுமையுருபு. பின்கட்டு - வீட்டின் பின்புறக் கட்டிடம். பின்காட்டுதல் - தோற்று ஓடுதல். பின்கொக்கி - கழுத்தணியின் கொக்கி. பின்சந்ததி - பின்வரும் வமிசம். பின்செல்லுதல் - பின்தொடர்தல், வழிபடுதல். பின்பற்றுதல் - பின்செல்லுதல். பின்பனி - இரவில் பின்பனி உள்ள மாசி பங்குனி மாதங்கள். பின்பு - பிறகு. பின்புத்தி - புத்தியீனம். பின்மாலை - வைகறை. பின்முடுகு வெண்பா - பின் இரண்டடிகளும் முடுகிச் செல்லும் வெண்பா. பின்முரண் - இரண்டாம் சீரும் நான்காம் சீரும் மறுதலைப்பட்டு வரும் தொடை. பின்மோனை - இரண்டாம் சீரிலும் இறுதிச் சீரிலும் வரும் மோனை. பின்வருநிலை - முன் வந்துள்ள சொல்லும் பொருளும் தனித் தாயினும் கூடியாயினும் பல இடத் தும் பின்னும் வரும் அணிவகை. பின்வாங்குதல் - தோல்வி அடைதல். பின்வேலப்பதேசிகர் - பஞ்சாக்கரப் பாஃறொடை இயற்றிய திருவாவடு துறை ஆதீனத்தலைவர். பின்றாலி - முதுகு மறையத் தொங்கும் கழுத்தணி வகை. பின்றி - மீள. பின்றுதல் - பின்னிடுதல், மீளுதல், தூரமாதல், மாறுபடுதல், ஒழுக்கத் தில் பிறழ்தல். பின்றேர்குரவை - தேர் வீரரை வென்ற அரசனது தேரின் பின்னே நின்று கொற்றவையும் கூளிச் சுற்றமும் களித்தாடுதலைக் கூறும் புறத்துறை. பின்றை - பின்பு, பின்னை நாள். பின்றொடரி - திகைப்பூடு, ஆடை ஒட்டி. பின்றோன்றல் - தம்பி. பின்னகம் - பின்னிய மயிர், ஆண் பால் மயிர்முடி, பேதம். பின்னங்கால் - விலங்கின் பின்புறத் துக்கால். பின்னடி - வருங்காலம். பின்னணி - பிற்படை. பின்னணியம் - கப்பலின் பின்புறம். பின்னணை - வீட்டுக்கொல்லை. பின்னதுநிறுத்தல் - முன்வைக்க வேண்டியதைப் பின்னே வைக்கும் உத்திவகை. பின்னம் - மாறுபாடு, வேறுபாடு, சிதைவு, பிளவு, கீழ்வாயிலக்கம், பின்னர். பின்னரை - நட்சத்திரத்தின் பிற்பாதி. பின்னர் - பின்பு, பிற்பட்டவர், பின் தொடர்வோர், தம்பி. பின்னல் - பின்னுகை, தொடர்ச்சிக்கு, தவறு, பருத்தி. பின்னவர் - பிற்பட்டவர். பின்னவள் - தங்கை. பின்னவன் - தம்பி. பின்னனை - செவித்தாய். பின்னாடி - பின்பு. பின்னாதாரம் - மூலாதாரத்திலிருந்து நான்கு விரற்கடை மேலிருக்கும் உடன்பின்பகுதி. பின்னி - தங்கை. பின்னிடுதல் - பின்வாங்குதல் தோற்றல். பின்னடைதல் - பின்னிடுதல். பின்னிதம் - பின்மை. பின்னியையு - இரண்டாம் சீர்க் கண்ணும் நான்காம் சீர்க்காணும் இயைபுத் தொடை அமையத் தொடுப்பது. பின்னிற்றல் - பிறகிடுதல், இரந்து நிற்றல், பின்னிலை, குறைவேண்டுகை, வழிபாடு, பிற்காலத்து வருவது, பின்சென்று பொருகை. பின்னி வருதல் - நெருங்கி வருதல். பின்னதல் - கூந்தல் ஓலை முதலிய வற்றை மிடைந்து இணைத்தல், பிணித்தல், தழுவுதல், மணம் கலத்தல். பின்னும் - மேலும். பின்னெதுகை - இரண்டாம் சீர்க் கண்ணும் நான்காம் சீர்க்கண்ணும் எதுகை வரக்கொடுப்பது. பின்னேரம் - பிற்பகல். பின்னை - பின் தங்கை, தம்பி, மேலும், பிறகு, கிருட்டிணன் மனைவியாகிய நப்பின்னை. பின்னைக்கணம் - வருங்காலம். பின்னோக்குதல் - வருவதை எதிர் பார்த்தல், பின்புறம் பார்த்தல். பின்னோன் - தம்பி. பீ பீ - மலம். பீங்கான் - ஒருவகை வழுவழுப் பான மண்பாத்திரம். பீசகணிதம் - கணித வகை (அல்சிபிரா). பீசகோசம் - பூவில் விதை உள்ள இடம். பீசபூரம் - மாதுளை. பீசம் - விதை, பீசாட்சரம். பீசாங்குரநியாயம் - வித்தும் முளையும் போல எது முந்தியது என்ற கூறமுடியாத நியாயம். பீசாட்ரம் - ஒரு மந்திரத்தின் சிறப்பியலான எழுத்து. பீச்சாங்குழல் - நீர் முதலியன பீச்சும் குழற்கருவி (Syringe). பீச்சுதல் - பேதியாதல், திரவப் பொருளைக் கருவி மூலம் வெளியே செலுத்துதல். பீடணி - பாலாரிட்டம் உண்டாக்கும் ஒரு தேவதை. பீடபூமி - உயர்ந்து இகன்ற பூ பாகம். பீடம் - இருக்கை, மேடை. பீடர் - பெருமையுடையவர். பீடிகை - பீடம், தேர் முதலியவற்றின் தட்டு, முகவுரை, பூந்தட்டு. பீடிகைத்தெரு - கடைவீதி. பீடித்தல் - துன்புறுத்துதல். பீடிப்பு - துன்பம். பீடீலிகைவாரி - கோயிலதி காரிகளுள் ஒருவன். பீடு - பெருமை, வலிமை, தரிசு நிலம். பீடை - துன்பம், கொள்ளை (Pest). பீடைமாதம் - மார்கழி. பீட்டன் - பாட்டனின் அல்லது பாட்டியின் தந்தை. பீட்டி - பீட்டன் என்பதன் பெண்பால். பீட்டை - பயிரின் இளஞ்சூல். பீதகம் - பொன்நிறம், பொன், மஞ்சள், துகில்வகை, இருவேரி என்னும் புல். பீதகவாடை - பீதாம்பரம். பீதகன் - வியாழன். பீதகி - அரிதாரம். பீதம் - பொன், பொன்நிலம், மஞ்சள், நால்வகைச் சாந்துள் ஒன்று, கத்தூரி. பீதரோகிணி - மருந்துச் செடிவகை. பீதன் - குடிப்பவன், அஞ்சுபவன். பீதாம்பரம் - பொன் ஆடை. பீதாம்பரன் - திருமால். பீதி - அச்சம், வேதனை செய்யும் நோய். பீதை - மறுதோன்றி. பீநாறி - மரவகை. பீந்தோல் - மேல் தோல். பீபற்சம் - நரகங்களுள் ஒன்று. பீபற்சு - அருச்சுனன். பீப்பா, பீப்பாய் - எண்ணெய் முதலியன அடைக்கும் மரப் பெட்டி. பீமசேனன் - வீமன். பீமம் - அச்சம். பீமன் - தமயந்தியின் தந்தை, பாண்டு பத்திரருள் ஒருவன். பீரங்கி - பெருங்குழாயுள்ள வெடிக் கருவி. பீரம் - பீர்க்கு, பசலை நிறம், பூவரசு, தாய்ப்பால். பீரிடுதல் - விரைந்து பாய்தல். பீரு - புருவம், அச்சமுள்ளோன். பீருகந்தி - தண்ணீர் விட்டான். பீரெனல் - விரைந்து பாய்தற்குறிப்பு. பீரை - பீர்க்கு. பீரோ - அலமாரி. பீரோடுதல் - முலைப்பால், வெளிபடுதல். பீர் - பெருக்கு, முலைப்பால், அச்சம், பீர்க்கு, பசலை நிறம். பீர்க்கு - கொடி வகை. பீர்பூத்தல் - காமநோயால் பீர்க்கம் பூப்போல உடல் பசத்தல். பீர்விடுதல் - பெருக்கெடுத்தல். பீலி - மயில்தோகை, மயில், சிற்றால வட்டம், குடை, பொன், மகளிரிடும் கால் விரலணி, சிறுசின்னம், வாத்தியப் பொது, பெருஞ்சவளம், மலை, மதில், பனங்குருத்து. பீலிகை - எறும்பு. பீலிக்கருஞ்சம் - அலங்காரத் தொங்கல். பீலிக்குடை - மயில் இறகாலான குடை. பீலித்தண்டு - பிண்டி பாலம். பீலிப்பட்டை - பெரிய இறை கூடை. பீலியார் - சமணர். பீழித்தல் - வருத்துதல். பீழை - துன்பம். பீழ்தல் - பிடுங்குதல். பீனை - கண்ணில் வரும் அழுக்கு. பீளைசாறுதல் - கண் அழுக்கு பொங்குதல். பீள் - கரு, இளங்கதிர், இளமை. பீறல் - கிழிக்கை, கிழிந்தது. பீறு - கிழிவு. பீறுதல் - கிழிதல், பிளத்தல். பீற்றம் - கிழியல். பீனசம் - சளி நோய். பீனம் - பருமை, நீர்ப்பாசி, பேடி, ஊர். பீனிசம் - பீனசம். பு பு - பண்பு, தொழிற் பெயர் விகுதி, இறந்தகால வினையெச்ச விகுதி. புகடு - அடுப்பின் சுற்றுப் புறத்துள்ள மேடு. புகடுதல் - வீசி எறிதல். புகட்டுதல் - ஊட்டுதல், அறிவுறுத் துதல். புகர் - கபிலநிறம், கபில நிறமாடு, ஒளி, அழகு, சுக்கிரன், புள்ளி குற்றம், அருவி, சோறு. புகர்க்கலை - புள்ளிமான் கலை. புகர்முகம் - யானை, ஒருவகை அம்பு. புகலி - புதிதாகக் குடியேறினவன், சீகாழி. புகலிடம் - தஞ்சம், ஊர், இருப்பிடம். புகலுதல் - சொல்லுதல், விரும்புதல், தெரிதல், ஒலித்தல், மகிழ்தல். புகல் - விருப்பம், கொண்டாடுகை, புகழ், சரண், வெற்றி, இருப்பிடம், துணை. புகல்லி - விலங்கின ஏறு. புகல்வு - மனச்செருக்கு, விருப்பு. புகவு - புகுகை, மேலேறுகை, உணவு. புகழாப்புகழ்ச்சி - பழிப்பதுபோலப் புகழும் அணிவகை. புகழாவாகை - அகத்தி, அகங்காரம். புகழாளன் - சித்தியுடையோன். புகழேந்தி - நளவெண்பா இயற்றிய புலவர். புகழ் - கீர்த்தி, துதி, வாகை, அகத்தி. புகழ்க்கூத்து - கதாநாயகன் புகழ் குறித்து நிகழும் ஆடல். புகழ்ச்சி - துதி. புகழ்ச்சிமாலை - அகவலடியும், கலிஅடி யும் மயங்கிய வஞ்சிப் பாவால் மகளிரது சிறப்பைக் கூறும் பிரபந்தம். புகழ்பொருள் - உவமேயம். புகழ்மாலை - புகழைத் தெரிவிக்கும் பாடல். புகழ்மை - புகழுடைமை. புகழ்வதினிகழ்தல் - இகழா இகழ்ச்சி. புகழ்வு - புகழ்ச்சி. புகற்சி - விருப்பம், காதல். புகற்றுதல் - விரும்பச் செய்தல். புகனான்கு - நால் வகைப்பட்ட பாடல் முறை. புகர் - உணவு. புகார் - ஆற்றுமுகம், காவிரிப்பூம் பட்டினம், பனிப்படலம், மந்தாரம், மேகம், கபிலநிறம், முறையீடு. புகுடி - புகுதல். புகுதல் - நுழைதல், தொடங்குதல், அடைதல், உட்படுதல். புகுதி - மனைவாயில், சம்பவம், ஆழ்ந்தறியும் நுண்ணறிவு, வழி, வருவாய். புகுதுதல் - நுழைதல், நிகழ்தல். புகுத்தல் - உட்செலுத்தல், போக விடுதல். புகுந்தகம் - புக்ககம். புகுமுகம்புரிதல் - ஒருவரை ஒருவர் எதிர்ப்பட்ட இடத்துத் தலைவன் தன்னை நோக்குதலை விரும்பும் தலைவியின் உள்ள நிகழ்ச்சி. புகை - எரியும் பொருளில் இருந்து எழும் கரும்படலம், ஆவி, துக்கம். புகைக்கொடி - தூமகேது (வால் வெள்ளி). புனைச்சல் - பார்வை மழுக்கம், புகை, தொண்டையிலுண்டாகும் கரகரப்பு. புகைதல் - புகை, எழுதல், வருந்துதல், சினங்கொள்ளுதல், மாறுபடுதல். புகைத்தல் - புகையச் செய்தல். புகைநாள் - தீக்கோள் நிற்கும் நட்சத் திரத்துக்கு அடுத்த நட்சத்திரம். புகைபோக்கி - புகைபோகும் கூடு. புகைஉயிர்த்தல் - கொதிப்படைதல். புகையுறுப்பு - நேர்கட்டி, செந்தேன், நிரியாசம், பச்சிலை, சந்தனம், அகில் என்ற அறுவகைத் தூம வர்க்கம். புக்ககம் - கணவன் வீடு. புக்கில் - தங்குமிடம், வீடு, புகலிடம், உடம்பு. புக்கு - பிராய். புக்குழி - புக்ககம். புக்கை - ஒருவகைக் கூழ். புக்தம் - அனுபவிக்கப்பட்டது. புக்தி - அனுபவம். புங்கம் - அம்பின் அடிப்பாகம், அம்பு, உயர்ச்சி, மெல்லாடை, சிறுதுகில், குவியல். புங்கவம் - நந்தி, சிறந்தது, உயர்ச்சி. புங்கவன் - சிறந்தோன், குரு, புத்தன், தேவன், அருகன். புங்கவி - பார்வதி. புங்கு - புன்கு. புசகம், புசங்கம் - பாம்பு. புசல் - ஓர் அளவு. புசித்தல் - உண்ணுதல், அனுப வித்தல். புசிப்பு - உண்ணுகை, வினைப் பயனை அனுபவித்தல். புச்சத்தலம் - குதம். புச்சம் - பிட்டம், வால்வெள்ளி, பின்புறம் தொங்கும் ஆடைக் கொடுக்கு. புஞ்சம் - திரட்சி, கூட்டம். புஞ்சவனம் - ஆண்மகவு பிறக்க வேண்டுமென்னும் நோக்கத்தோடு நான்கு ஆறு அல்லது எட்டாவது மாதத்தில் கருப்பிணிக்குச் செய்யும் சடங்கு. புஞ்சுதல் - ஒன்றுசேர்தல். புஞ்சை - புன்செய். புடகம் - தென்னை, தாமரை. புடகினி - தாமரைக் குளம். புடபாகம் - புடமிடுகை. புடமிடுதல் - சுத்தி செய்தல். புடம் - சுத்தி, புமிடுங்கலம், பக்குவப் படுத்துகை, இடம், பக்கம், கிரகங் களின் உண்மையான தினசரிக்கதி. புடலை - புடல். புடவி - பூமி. புடவிட்சேபம் - ஒரு கிரகத்தின் சரியான அட்சாம்சம். புடாயம் - மாணிக்கக் குறை வகை. புடை - அடி, அடித்து உண்டாக்கும் ஒலி, பகை, போர், பக்கம், இடம், பகுதி. புடைகவலுதல் - வேற சிந்தை யுடைத்தாதல். புடைகவற்றி - வேறு சிந்தை. புடைகொள்ளுதல் - அருகு பருத்தல். புடைக்காலம் - இடைப்பட்ட காலம். புடைக்கொள்ளுதல் - தட்டுதல், பருத்தல். புடைத்தல் - அடித்தல், களகிலிட்டுத் தட்டுதல், வீங்குதல், ஆரவாரித்தல். புடைநகர் - புறநகர். புடைநூல் - சார்பு நூல். புடைபடுதல் - அணுகுதல், மிகுதி யாதல் திரண்டு பருத்தல். புடைபருத்தல் - பக்கம் பருத்தல். புடைபெயர்தல் - நிலைமாறுதல், அசைதல், எழுந்திருத்தல். புடைபெயர்ச்சி - நிலைபெயர்ச்சி. புடைப்பு - அடிக்கை, கொழிக்கை, வீங்குகை. புடைப்பெண்டிர் - வைப்பாட்டிகள். புடையல் - மாலை. புடையன் - பாம்பு வகை. புடையுண்ணுதல் - அடிபடுதல். புடைவை - மகளிர் ஆடை. புடேல் - புடல். புடோலங்காய் - புடலங்காய். புட்கரத்தீவு - ஏழு தீவுகளில் நன்னீரால் சூழப்பட்ட பூபாகம். புட்கரம் - ஆகாயம், கோட்டம், நிறைவு, பருந்து, நீர், தாமரைப் பூ, நாரை, யானைத் துதிக்கை, நுனி, பாத்திரத்தின் வாய், வாள். புட்கரனார் - மந்திர நூலாசிரியர். புட்கரிணி - தாமரைக்குளம், புட்கரத்தீவு, கோயில் வாவி, பெண் யானை. புட்கலம் - நிறைவு, உடம்பு, பிச்சை, உணவு. புட்காலவருத்தம் - பொன் மொழி யும் மேகம், அதிக மழையும் பெய்யும் மேகம். புட்கலை - ஐயனார் தேவியருள் ஒருவர். புட்கலைமணாளன் - ஐயனார். புட்குரல் - நிமித்தமாகக் கருதப்படும் பறவை ஒலி. புட்கோ - கருடன். புட்டகமண்டபம் - கூடாரம். புட்டகம் - புடைவை. புட்டம் - புடைவை, காக்கை, உடலின் ஆசனப் பக்கம். புட்டா - துணியில் செய்யப்பட்ட பூத்தொழில். புட்டி - இடை, பருமை, குப்பி, ஓர் அளவை வகை. புட்டில் - அம்பறாத்தூணி, விரலுறை, கூடை, குதிரையின் உணவு கட்டும் பை, கெச்சை என்னும் அணி, தக்கோலக் காய். புட்பகம் - புட்பக விமானம், குபேர விமானம். புட்பகவூர்தி - குபேரன், புட்பக விமானம். புட்பகாசம் - 273 கோபுரங்களையும் 32 மாடிகளையும் உடைய கோயில். புட்பகேசி - உமாதேவி. புட்பகை - சோழன் நலங்கிள்ளியின் புனைபெயர். புட்பசயனம் - சோழன் நலங் கிள்ளியின் புனைபெயர். புட்பசயனம் - மலர்ப்படுக்கை. புட்பசாமரம் - தாழை. புட்படுத்தல் - பறவைகளை வலையில் அகப்படுத்தல். புட்பகந்தம் - எட்டுத்திக்கு யானை களுள் வடமேற்றிசை யானை. புட்பபாணம் - மன்மதனம்பு, வரிக்கூத்து வகை. புட்பபுடம் - அபிநய வகை. புட்பம் - பூ வாழை. புட்பரசம் - தேன், மகரந்தம். புட்பராகம் - நவமணியிலொன்று. புட்பவதி - இருதுவானவள். புட்பவருடம் - மலர் மழை. புட்பறை - பறை வகை. புட்பாகன் - திருமால். புட்பாஞ்சலி - கை நிறைந்த பூவைக் கொண்டு வழிபடுகை, அபிநய வகை. புட்பித்தல் - மலர்தல். புட்பேந்திரம் - சண்பகம். புணராவிரக்கம் - தான் காதலித்த வளைக்கூட நேராமையால் உண்டான கவலையோடு தலைவன் தனித்து இருந்து வருந்துதலைக் கூறும் புறத்துறை. புணரி - கடல், அலை, கரை, ஒலிக்கை. புணரிசூழ்வேலி - சக்கரவாளம். புணரியோர் - ஒன்று கூட்டியவர். புணர் - சேர்க்கை, புதுமை. புணர்குறி - தலைவன் தலைவியர் சந்திக்கும் குறியிடம். புணர்ச்சி - ஒரு தேசத்தவரா யிருக்கை, கல்வி, எழுத்தின் சந்தி. புணர்ச்சிவிகாரம் - சொற்கள் சேரும் போது தொன்றல் திரிதல் கெடுதல் என்னும் சந்தி விகாரங்கள். புணர்ச்சிவிதும்பல் - புணர்ச்சிக்கு விரையும் விருப்பம். புணர்தல் - கலவிசெய்தல், பொருந் துதல், அளவாளாவுதல், ஏற்புடைய தாதல், எழுத்து முதலிய சந்தித்தல், இயலுதல். புணர்தை - பூசம். புணர்த்தல் - சேர்த்தல், நிகழ்த்துதல், பாகுபடுத்துதல், உண்டாக்குதல். புணர்ப்பாவை - சக்கரக்கவி முதலியவற்றின் இலக்கணம் கூறுவதும் வழக்கற்றதுமான ஒரு பழைய நூல். புணர்ப்பு - சம்பந்தம், புணர்ச்சி, நட்பு உடல், கடல், சூழ்ச்சி, ஏவல், மாயம், செயல். புணர்மீன் - இணைக்கயல். புணர்வு - சேர்க்கை, கல்வி, இசைப்பு. புணை - தெப்பம், உதவி, மூங்கில், விலங்கு, ஒப்பு. புணைகட்டு - பூட்டாங் கயிறு. புணைப்படுதல் - உத்தரவாதமாதல். புண் - உடலிலுண்டாகும் ஊறு, வடுமனந் நோவு. புண்டரம் - நீறு சந்தனம் முதலிய வற்றால் நெற்றியில் தரிக்கும் குறி, கழுகு, குருக்கத்தி. புண்டரிகத்தவன் - பிரமன். புண்டரிகம் - தாமரை, தென்கீழ்த் திசை யானை, வண்டு. புண்டரிகன் - திருமால். புண்டரிகை - இலக்குமி. புண்டரீகபுரம் - சிதம்பரம். புண்டரீகம் - வெண்டாமரை, குட்ட நோய் வகை, வெண்கொற்றக்குடை, யாக வகை, புற்று, சோகி. புண்டரீகாட்சன் - திருமால். புண்ணாங்குழி - குழிப்புண். புண்ணியகாலம் - முழுக்கு தர்ப்பணம் முதலியவற்றுக்கு ஏற்ற காலம். புண்ணியசரவணம் - அழகர் மலையி லுள்ள ஒரு பழைய பொய்கை. புண்ணியசனம் - அல்லது இராக்கதர் வகை. புண்ணியசாந்தம் - திருநீறு. புண்ணியதானம் - புண்ணியம் தரும் கொடை, புண்ணியாக வாசனம். புண்ணியதிசை - வடக்கு. புன்னியத்தானம் - சாதனுடைய புண்ணித்தைக் குறிப்பதாகிய ஒன்பதாமிடம். புண்ணியத்துறை - புண்ணிய தீர்த்தம். புண்ணியத்தோற்றம் - நன்மக் களிடம் தோன்றுதற்குரிய தவம், ஒழுக்கம், கொடை, கல்வி என்ற நால்வகைச்சிறந்த குணங்கள். புண்ணியமுதல்வன் - கடவுள், புத்தன். புண்ணியமுதல்வி - பார்வதி, தவத்தில் சிறந்தவள். புண்ணியமூர்த்தி - கடவுள், புத்தன், அருகன். புண்ணியம் - தருமம், நல்வினை, நல்வினைப்பயன். புண்ணியவதி - பாக்கியவதி. புண்ணியன் - கடவுள், அருகன், புத்தன். புண்ணியாகவாசனம், புண்ணியா வாசனம் - சுத்தி செய்யும் சடங்கு. புண்ணீர் - இரத்தம். புண்ணுறுத்துதல் - வருத்துதல், காயமுண்டாக்குதல். புண்வழலை - புண்ணிலிருந்து வடியும் சீழ். புத - வாயில். புதசனன் - அறிஞன். புதஞ்செய்தல், புதமெழுதல் - தாவி எழுதல். புதம் - மேகம். புதர் - தூறு, பற்றை. புதல் - தூறு, புற்சாதி, அரும்பு, புருவம். புதல்வர்பேறு - ஆண் மக்களைப் பெறுகை. புதல்வன் - மகன், மாணாக்கன். புதல்வி - மகள். புதவம் - வாயில், அறுகு. புதவு - வாயில், மதகு, கதவு, அறுகு. புதளி - புலால். புதன் - கிரகங்களுள் ஒன்று, புதன் கிழமை, வானவன். புதா - நாரை, கதவு. புதாநாழி - பழைய வரி வகை. புதிது - நூதனமானது, புதியது. புதிதுண்ணல், புதியதுண்ணல் - புதிதாக விளைந்த தானியத்தை நல்ல வேளையில் சமைத்து உண்ணல். புதியவேற்பாடு - கிறித்துவ வேதத்தின் பிற்பகுதி. புதியனபுகுதல் - சொல் வழக்கம் முதலியன புதியனவாக உண்டாகை. புதியிளநீர் - புதிதாகப் பறித்த இளநீர். புதிர் - புதியது, விடுகதை. புதினம் - செய்தி, நூதனம். புதினா, புதீனா - கீரை வகை. புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான் - சங்க காலப் புலவர் (நற். 294). புதுக்கற்காலம் - மக்கள் திருந்திய கல்லாயுதங்களைப் பயன்படுத்திய காலம் (Neolithic age). புதுக்கணிப்பு - புதிய அழகு. புதுக்குதல் - புதுப்பித்தல், அலங் கரித்தல். புதுக்குப்புறம் - கோயில் முதலிய வற்றைப் புதுப்பிப்பதற்கு வைத்த தரும சொத்து. புதுக்கோள் - புதியதாகப் பற்றிக் கொள்ளப்பட்டது. புது நாணயம் - புதிய நாணயம் புதிய வழக்கு. புதுநிறை - ஆறு முதலியவற்றின் புதுப்பெருக்கு. புதுநீராட்டு, புதுநீர்விழவு - புதுப்புனல் விழவு. புதுப்பணம் - புதிய செல்வம். புதுப்பிராணிஉகம் - புது வகைப் பிராணிகள் தோன்றிய காலம், கைனோ சோயிக். புதுப்புனலாட்டு, புதுப்புனல்விழவு - ஆற்றில் புதுநீர் வரும்போது நிகழ்த் தும் கொண்டாட்டம். புதுப்பெயல் - முதல் முதல் பெய்யும் மழை. புதுமுகனை - தொடக்கம். புதுமை - புதிதாந்தன்மை, பழக்கமின்மை, அபூர்வம், அழகு. புதுவது - புதிது. புதுவை - புதுச்சேரி, புதுக்கோட்டை. புதுவோர் - புதிய மக்கள். புதை - மறைவு, மறைவிடம், உடல், அம்புக்கட்டு, புதுமை. புதைத்தல் - மறைத்தல், அமிழ்த்தல். புதைபொருள் - பூமியில் புதைந்து கிடக்கும் திரவியம். புதையல் - பூமியில் புதைந்து கிடக்கும் திரவியம். புதையல் - மறைகை, புதைபொருள், அம்புக்கட்டு, கேடகம். புதையிருள் - காரிருள். புத்தகம் - நூல், சித்திரம் தீட்டிய துணி, மயிலிறகு. புத்தசாதகக் கதை - கௌதம புத்தரின் பழம் பிறப்புக்களைப் பற்றிப் பாலி மொழியில் எழுதப்பட்ட நூல். புத்தசேடம் - புத்தரின் சாம்பல் பல் மயிர் எலும்பு முதலியன. புத்தசைத்தியம் - புத்தாலயம். புத்த தன்ம சங்கம் - திரிமணி. புத்தம்புதிய - மிகப் புதிய. புத்தமலராதனம் - யோகாசனத் தொன்று. புத்தமித்திரன் - வீரசோழியம் என்ற இலக்கணம் செய்த நூலாசிரியர் (11ஆம் நூ.) புத்தர் - கௌதம் புத்தர், பௌத்தர். புத்தன் - கௌதம புத்தர் புதியவன், நாய் வகை. புத்தி - ஆராய்ந்து செய்யும் கரணம், அறிவு, இயற்கை உணர்வு, அனு போகம், கிரகதிசையின் உட்பிரிவு. புத்திகோசரம் - அறிவுக்குப் புலப் படுவது. புத்தித்தானம் - இலக்கினத்துக்கு இரண்டாமிடம். புத்திபூர்வமாய் - மனமறிய. புத்திபோதரவு - புத்திமதி. புத்திமதி - அறிவுறுத்தும் உரை. புத்திமான் - புத்திசாலி. புத்தியட்டகர் - புத்தி தத்துவத்தி லுள்ள எண்வகை உருத்திரர். புத்தியறிதல் - விவேகமுண்டாதல், புட்பவதியாதல். புத்தியந்தியம் - ஞானேந்திரியம். புத்திரகன் - விசேட தீட்சை பெற்றோன். புத்திரகாமியம், புத்திரகாமேட்டி - மகப்பேறு விரும்பிச் செய்யும் யாகம். புத்திரசீவி - குழந்தைகள் சுகமாக இருத்தற்குக் காவலாகங் கட்டும் விதையுள்ள மரம். புத்திரத்தானம் - இலக்கினத்துக்க ஐந்தாமிடம். புத்திமார்க்கம் - கிரியாமார்க்கம். புத்திரன் - மகன், மாணாக்கன். புத்திரி - மகள். புத்திவிருத்தி - புத்தி தொழிற் படுகை. புத்து - நரகவகை, பௌத்தமதம். புத்தேனாடு, புத்தேளுலகம் - வானுலகம். புத்தேள் - தெய்வம், புதுமை, புதியவள். புத்தோடு - புதுப்பானை. புந்தி - அறிவு, மனம், புதன். புந்திகன் - புதன். புந்தியர் - புலமையோர். புப்புசநாளம் - நுரையீரலிலிருந்து இருதயத்துக்குச் செல்லும் இரத்தக் குழாய். புப்புசம் - நுரையீரல். புமான் - ஆண்மகன், கணவன், ஆன்மா அசுத்த தத்துவம். புயகம் - பாம்பு. புயக்கு - விட்டு நீங்குகை, மனக் கவலை. புயங்கமலை - திருவேங்கடமலை. புயங்கம் - பாம்பு. புயங்கன் - சிவன். புயமுட்டி - வில்லைத் தோள் மேல் பிடித்து மேல் நோக்கி அம்பெய்கை. புயம் - தோள், கோணத்தின் பக்கக் கோடுகள். புயல் - மழை, பொய்கை, நீர், மேகம், கடுங்காற்று. புயலேறு - இடி. புயல்வண்ணன் - திருமால். புய்தல் - பறிக்கப்படுதல், மறைதல். புய்த்தல் - பறிதல், வெளியேறுதல். புரகரன் - சிவ பிரான். புரகிதன் - புரோகிதன். புரசு - மர வகை. புரசை - புரோசை. புரட்சி - பிறழ்வு. புரட்டாதி - புரட்டாசி. புரட்டு - கீழ் மேலாக திருப்புகை, மாறுபட்ட பேச்சு. புரட்டுதல் - கீழ் மேலாகத் திருப்புதல், உருட்டுதல். புரட்டோப்பிளாசம் - உயிர்ப் பொருள் (Protopalsm). புரணப்பொருள் - குறிப்பில் தோன்றும் பொருள். புரணம் - நிறைவு, அசைகை, துடிக்கை, தோன்றுகை, ஒளி. புரணி - ஊன், தோல், சாரமற்றது. புரத்தல் - காத்தல், கொடுத்தல், கருணை செய்தல். புரத்திரயம் - திரிபுரம். புரந்தரன் - இந்திரன். புரந்தார் - அரசர். புரம் - ஊர், நகரம், இராசதானி, கோயில், உடல், வீடு. புரவரியார் - அரசிறைக் கணக்கர். புரவலர் - அரசர், காத்து உதவுவோர். புரவாயில் - கோபுர வாயில். புரவி - குதிரை, அசுவதி, குதிரை, அல்லது யானை கட்டும் இடம். புரவிசயன் - சிவன். புரவித்யன் - சிவன். புரவித்தேவர் - அசுவினி தேவர். புரவிரட்டாதி - பூரட்டாதி. புரவிவட்டம் - வையாளிவீதி (சவாரி செய்யும் வெளி). புரவு - பாதுகாப்பு, கொடை, ஆட்சி யிடம், அரசிறை, அரசனாலளிக்கப் பட்ட இறையிலி நிலம், ஆறு முதலியவற்றிலிருந்து நீர் பாயும் வயல், நிலம், செழுமை. புரவுபொன் - வரி வகை. புரவுவரி - அரசிறைக் கணக்கு வைப்போர் கூடும் உத்தியோக சாலை. புரளி - குறும்பு, பொய். புரளுதல் - உருளுதல், கழிதல், அலைபோல உருளுதல், நிரம்பி வழிதல், சொற்பிரளுதல், மாறிமாறி வருதல், சாதல். புராணபடனம் - புராணம் வாசிக்கை. புராணம் - பழமை, பழங்கதை (Mytho-logy). புராணவைராக்கியம் - புராணம் கேட்கும் போது உலகப்பற்றை நீக்க வேண்டுமென்று தோன்றிய பிறகு ஒழியும் எண்ணம். புராணன் - கடவுள். புராணி - பட்டை, தோல். புராணிகன் - புராணப் பிரசங்கம் செய்வோன். புராணை - பார்வதி. புராதனம் - பழைமை, பழைமையானது, கிழத்தனம். புராந்தகன் - புரமெரித்தவன். புராந்தகி - சிவ சத்தி. புராரி - புரமெரித்தோன், சிவன். புராவிருத்தம் - இதிகாசம். புரி - செய்கை, கயிறு, முறுக்கு, சுருள், விருப்பம், யாழ், நரம்பு, மாலை, கட்டு, சங்கு, இராசதாணி, மருதநிலத்தூர், உடல். புரிகுழல் - கடை குழன்று சுருண்ட கூந்தல். புரிகை - அபிநய வகை. புரிககூடு - நெற்கூடு. புரிசை - மதில். புரிதல் - விரும்புதல், தியானித்தல், செய்தல், படைத்தல், ஈனுதல், கொடுத்தல், விசாரணை செய்தல், சொல்லுதல், நடத்துதல், மிகுதல், அசைதல். புரித்தல் - விரும்பச் செய்தல், நிறைத்தல், பதித்தல். புரிநூல் - பூணூல். புரிந்தோர் - நண்பர். புரிப்பித்தல் - வளைந்து திரும்பச் செய்தல். புரிமுகம் - நத்தை, கோபுரம், சங்கு. புரிமுந்நூல் - பூணூல். புரியட்டகம், புரியட்டரூபம் - சூக்கும தேகம். புரியணை - புரிமணை. புரியம் - கூத்து வகை. புரிவளை - முறுக்கு வளையல். புரிவில்புகழ்ச்சியணி - பழிப்பது போலப் புகழும் அணிவகை. புரிவு - அன்பு, விருப்பம், தொழில், தவறு, நம்பிகை, நீங்குகை, தெளிவு. புரீடம் - மலம், அழுக்கு. புரு - பருமை, மிகுதி, குழந்தை. புருகூதன் - இந்திரன். புருசு - துடைப்பான் (brush). புருடசூக்தம், புருடசூத்தம் - இருக்கு வேதத்திலுள்ள மந்திர விசேடம். புருடசூக்தம், புருடசூத்தம் - இருக்கு வேதத்திலுள்ள மந்திர விசேடம். புருடதத்துவம் - மும்மலங்களோடு கூடிய தத்துவம். புருடநாள் - இரேவதி. புருடம் - ஒரு மந்திரம், தற்புருடம். புருடம்மேதம் - நரமேதம். புருடமேதினி - பார்வதி. புருடராகம் - நவமணிகளுள் ஒன்று. புருடன் - மனிதன், சீவான்மா, கணவன். புருடா - பொய் (தெலுங்கு). புருடார்த்தம் - அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள். புருடோத்தமநம்பி - திருவிசைப்பா பாடிய அடியாருளொருவர். புருவநெரித்தல் - புருவங்களை வளைத்தல். புருவம் - வரம்பு, விளிம்பு, கண்ணின் மேலுள்ள உரோம வளைவு. புருவை - ஆடு, பெண்ணாடு, இளமை. புரூணம் - கரு. புரூரம் - புருவம். புரூரவா - சந்திர வமிசத்து அரசருள் ஒருவன். புரை - உள்துளை, பெருமையாதல், ஒப்பு, உயர்ச்சி, பெருமை, குற்றம், உள்ளே ஒடும் புண், பொய், இலேசு, கூறுபாடு, வியப்பு, கோயில், மாட்டுத் தொழுவம், இடம். புரைசல் - பலவீனம். புரைசை - புரோசை. புரைதல் - ஒத்தல், பொருந்துதல், மறைத்தல், நேர்தல். புரைத்தல் - குற்றப்படுதல், தப்புதல், பெருமையாதல். புரைபடுதல் - வருந்துதல். புரைப்பு - குற்றம், சந்தேகம், ஒப்பு. புரைய - ஓர் உவம உருபு. புரையிடம் - தோப்பு. புரையுநர் - ஒப்பவர். புரையுள் - வீடு. புரையேறுதல் - உணவு சுவாசக் குழலில் சென்று அடைத்துக் கொள்ளுதல். புரையோர் - பெரியோர், காதன் மகளிர், கீழோர், திருடர். புரோகம் - நாய், முன்செல்லல். புரோகிதன் - சடங்கு செய்யும் குரு, இந்திரன். புரோக்கணம் - புரோட்சணம். புரோசர் - குறுநில மன்னர். புரோசனம் - பிரயோசனம். புரோசு - புரோகிதன். புரோசை - யானைக் கழுத்திலிடு கயிறு. புரோடாசம் - வேள்வித் தீயில் இடும் அரிசிமாவாலகிய ஓமப் பொருள். புரோட்சணம் - மந்திரம் சொல்லி நீர் தெளிக்கை. புரோட்டீன் - புரதம், சதையை வளர்க்கும் சத்துப் பொருள். புரோதம் - குதிரை மூக்கு. புரோதாயம் - சுத்திக்காகச் செய்யும் முழுக்கு. புல - புலவு. புலங்கொள்ளுதல் - விளங்குதல். புலச்சி - அறிவு நிறைந்தவள். புலத்தகை - ஊடல். புலத்தல் - மனம் வேறுபடல், துன் புறுதல், வெறுத்தல், அறிவுறுத்தல். புலத்தி - வண்ணாத்தி. புலத்தியன் - ஒரு முனிவர். புலத்துறைமுற்றிய கூடலூர் கிழார் - ஐங்குறுநூறு தொகுத்த சங்க காலத்துப் புலவர். புலத்தோர் - ஞானிகள். புலநெறிவழக்கம் - புலவரால் கைக் கொள்ளப்படும் செய்யுள் வழக்கு. புலபுலெனல் - விரைந்து தொடர்ந்து வருதற் குறிப்பு. புலப்படுதல் - தெரிதல், வெளிப் படுதல். புலப்படுத்துதல் - தெரிவித்தல். புலப்பம் - பிதற்று. புலமகள் - சரசுவதி. புலமகன் - புலமை உடையவன். புலமாக்குதல் - புலப்படுத்துதல். புலமினுக்கி - துடைப்பம். புலமை - கல்வி. புலமையோர் - கற்றோர். புலம் - வயல், இடம், திக்கு, புலனுணர்வு, அறிவு, துப்பு, நூல், வேகம். புலம்பல் - ஒலி, தனிமை, கூறுகை, பிதற்றுகை, அழுகை, அழுகைப் பாட்டு. புலம்புநீர் - கண்ணீர். புலம்புமுத்து - அழுகைக் கண்ணீர். புலம்புவித்தல் - அவசமாதல். புலம்புள் - புலம்பல். புலம்பெயர்மாக்கள் - அயல் நாட்டினர். புலரி - விடியல், சூரியன். புலர் - உலர்கை, விடிகை. புலர்காலை - சங்கர காலம், புலரி. புலர்ச்சி - புலர்கை, விடிகை. புலர்த்துதல் - உலத்த்துதல், பூசுதல். புலர்பு - புலரி. புலவராற்றுப்படை - ஒரு புலவன் தனக்குப் பரிசளித்த அரசனையும் அவனது தலைநகரையும் வேறு புலவனிடம் சிறப்பித்து அவ்வர சனிடத்து அவனை ஆற்றுப் படுத்தலைக் கூறும் புறத்துறை. புலவராற்றுவழக்கம் - புலநெறி வழக்கம். புலவரை - நில எல்லை, அறிவின் எல்லை. புலவர் - அறிஞர், தேவர், கூத்தர், ஓவியம் முதலிய கலை வல்லார், சாளுக்கியர், சில சாதியார் பட்டப் பெயர். புலவல் - வெறுப்பு, புலவு. புலவன் - அறிஞன், கவிவாணன், தேவன், இந்திரன், அருகன், புத்தன். புலவி - ஊடல், வெறுப்பு. புலவிநீட்டம் - ஊடல் மிகுதி. புலவிநுணுக்கம் - அற்பகாரணத் தைக் கொண்டு தலைவி ஊடுகை. புலவு - வெறுப்பு, புலால், புலால் நாற்றம், இரத்தம், நரகம், வயல். புலவோன் - புலவன், உயிர். புலனறிசிறப்பு - பகைவரது நிலையை உளவு அறிவித்தார்க் கும் தாம் முன் கூறியதினும் மிகக் கொடுத்தலை உணர்த்தும் ஒரு புறத்துறை. புலனிடம் - வாய். புலனுழுதுண்மார் - கற்றோர். புலனெறிதல் - ஐம்புலனை வெல் லுதல். புலா - புலவு. புலாகம் - சோற்று அவிழ். புலாதி - கவனம் கவலை. புலலாலுண்ணி - புலாலுண்ணும் விலங்குகள் (Carnivora). புலால் - ஊன் முதலியன, புலால் நாற்றம். புலாவுதல் - ஒலித்தல், விடிதல். புலாழி - புலால் நாற்றமுள்ள சக்கரப் படை. புலாற்றானம் - உடம்பு. புலாற்றுருத்தி - உடம்பு. புலான்மறுத்தல் - ஊன் ஆகிய உணவை விலக்குதல். புலி - விலங்குவகை, புலிக்கால் முனி, சிங்கராசி, வேங்கை மரம், வாசனைச் சாந்து. புலிகடிமால் - இருங்கோவேள். புலிக்கான்முனி - வியாக்கிரபாதர். புலிக்கொடியோன் - சோழன். புலிங்கம் - ஊர்க்குருவி, நெருப்புப் பொறி. புலிச்சங்கிலி - சங்கிலி வகை. புலித்தண்டை - விருது வகை. புலித்தொடர் - சங்கிலி வகை. புலிநகக் கொன்றை - புலிநகம் போன்ற பூ உடைய கொன்றை மரம். புலிநெய் - புலிக்கொழுப்பு. புலிந்தம் - ஐம்பத்தாறு தேசங்களுள் ஒன்று. புலிப்பற்றாலி - புலியின் பற் களாலாகிய கழுத்தணி. புலிப்பாணி - ஒரு சித்தர். புலிப்பொறி - மதிற் பொறிவகை. புலிப்போத்து - புலிக்குட்டி. புலிமுகக்கடுக்கன் - மகளிர் காதணி வகை. புலிமுகச்சிலந்தி - சிலந்திவகை. புலிமுகப்பு - புலிமுக மாடம். புலிமுகமாடம் - புலி உருவம் முகப்பிலுள்ள மாளிகை. புலிமுகவாயில் - புலிமுக உருவம் அமைந்த வாயில். புலியுறை - புலித்தோலால் செய்த ஆயுதத்தின் மேலுறை. புலியூர் - சிதம்பரம். புலினி - பறவை வகை (The Common Ceylon Babbler). புலுட்டுதல் - சுடுதல். புலுட்டை - செழிப்பற்றது. புலுண்டுதல் - மெய்யெழுத்து, இசையில் கால அளவை. புலை - இழிவு, அசுத்தம், தீட்டு, தீய நெறி, பொய், வியபிசாரம், ஊன், கீழ்மகன். புலைசு - புலால். புலைச்சி - பறைச்சி. புலைச்சேரி - பறைச்சேரி. புலைஞர் - சண்டாளர், இழிஞர். புலைத்தி - வண்ணாத்தி, இழிகுலப் பெண். புலைத்தொழில் - இழிசெயல். புலைமகன் - கீழ்சாதியான், புரோகி தன், நாவிதன். புலைமை - இழிவு. புலையன் - கீழ்மகன், புரோகிதன், பாணன், ஒருசார் மலைச்சாதி. புலைவினையர் - இழிதொழிலாளர். புலோமனை - இந்திராணி. புல் - திரணசாதி, பனை, அனுடம், தென்னை, புதர், புன்செய்தானியம், அற்பம், இழிவு, கபிலநிறம், புணர்ச்சி, புலி. புல்குதல் - அணைதல், புணர்தல். புல்லகண்டம் - கரும்பு, கண்ட சருக்கரை (கற்கண்டு). புல்லகம் - நெற்றி அணி. புல்லணல் - இளந்தாடி. புல்லம் - எருது, இடபராசி, வசை மொழி, பூ. புல்லர் - அற்பர். புல்லறிவாண்மை - அறிவு இன்மை. புல்லற்கூறுதல் - ஏசுதல். புல்லன் - அறிவீனன், இழிந்தவன். புல்லாங்குழல் - இசை வாசிக்கும் மூங்கிற் குழல். புல்லாஞ்சி - செடி வகை. புல்லாடவன் - பறவை, விலங்கு முதலியவற்றை அச்சமுறுத்த வைக்கும் வெருளி. புல்லாணி - ஒரு விட்டுணு தலம். புல்லாந்தி - ஒரு செடி. புல்லாமணக்கு - நீர்ப்பனை. புல்லார்தல் - தோல்வி உறல். புல்லார் - பகைவர். புல்லாள் - ஆறலை கள்வன், வெருளி. புல்லி - புறஇதழ், பூ இதழ். புல்லிகை - கன்னசாமரை (குதிரைக்குக் கட்டும் குஞ்சம்). புல்லிங்கம் - வடசொல்லின் ஆண்பால். புல்லிதழ் - புறஇதழ். புல்லியர் - இழிந்தவர். புல்லிலைவைப்பு - இலைகளால் வேயப்பட்ட குடிசைகளை உடைய ஊர். புல்லிவட்டம் - மலரின் பசுமையான வெளிப்புற இதழ்களின் தொகுதி (Calyx). புல்லினத்தாயன் - ஆட்டிடையன். புல்லினம் - ஆட்டினம். புல்லீரம் - அற்ப ஈரம். புல்லு - புல். புல்லுதல் - தழுவுதல், புணர்தல், பொருந்துதல், வரவேற்றல், ஒத் திருத்தல், நட்புச் செய்தல். புல்லுநர் - நண்பர். புல்லுயிர் - குழந்தை. புல்லுரு - பயிரை அழிக்கும் விலங்கு பறவை முதலியன வெருண்டு ஓடும்படி புல்லால் செய்து புலத்தில் வைக்கப்பட்ட உருவம், வெருளி. புல்லுருவி - குருவிச்சை. புல்லுறுத்தல் - நிகழ்த்துதல். புல்லூறு - பறவை வகை. புல்ணெய்ணெய் - பற்களினின்றும் எடுத்த வாசனை எண்ணெய். புல்லெழுதல் - ஆட்கள் நடமாட்டம் ஒழிதல். புல்லெனல் - பொலிவழிதற் குறிப்பு. புல்வாண்டைக்காசு - சிறு நாணய வகை. புல்வாய் - கலைமான். புவம் -ஆகாயம். புவலோகம் - பூலோகம். புவனசாரம் - பூமியில் சிறந்த பாகம். புவனநாயகன் - உலகிற்கு இறை வன். புவனம் - உலகம், பூமி. புவனி - பூமி. புவனை - பார்வதி. புவன் - இறைவன். புவி - பூமி. புவி ஈர்ப்பு - பூமியின் கவர்ச்சி (Gravity). புவி இடைக்காலம் - மத்திய உகம் (Mesozoic). புவிப்பாத்திரம் - மண் பாத்திரம். புவியடக்கியல் - (Stratigraphy). புவியீர்ப்பு - பூமியின் கவர்ச்சி (Gravity). புழகு - மலை, எருக்கு, புன முருங்கை. புழக்கம் - பழக்கம். புழங்குதல் - கையாளுதல். புழல் - உள்துளை, சலதாரை, பணியாரம். புழல்வல்சி - தேங்குழல். புழற்கால் - துவாரமுள்ள தண்டு. புழாந்தை - பழான் என்பவனுடைய தந்தை. புழு - கிருமி. புழுகு - புனுகு, புனுகு பூனை, அம்புத் தலை. புழுகுசட்டம் - புனுகு. புழுகுப்புள்ளை - புனுகு பூனை. புழுக்கம் - வெப்பம், துன்பம். புழுக்கல் - சோறு, அவித்தது. புழுக்கு - அவிக்கை, வெந்த உணவு, சமைத்த பருப்பு, பருப்புச் சோறு, இறைச்சி. புழுக்குதல் - அவித்தல். புழுக்கூடு - புழுக்கள் தம்மை மூடிக் கட்டும் கூடு (Cocoon). புழுக்கை - அடிமை, இழிந்தவன், பிழுக்கை. புழுங்கல் - அவித்த நெல், சினம். புழுங்குதல் - வேதல், சினத்தல். புழுதி - மண் தூள். புழுதியாடுதல் - புழுதி அளைதல். புழுத்தல் - புழு உண்டாதல், மிகுதல். புழுப்பகை - வாயு விளங்கம். புழை - துளை, வாயில், குழாய், ஒடுக்க வழி, நரகம், மதிலில் அம்பெய்யு மிடம் (ஏவறை). புழைக்கடை - வீட்டின் பின்வாயில். புழைக்கை - தும்பிக்கை, யானை. புழைத்தல் - துளையிடல். புனகம் - மயிர்ச்சிலிர்க்கை, சோறு கண்ணாடி. புளகாங்கிதம், புளகிதம், புளகு - புளகம். புளங்கொள்ளுதல் - விளங்குதல். புளி - புளிப்புச்சுவை, மரவகை, புளிங்கறி, தித்திப்பு. புளிச்சாறு - குழம்பு. புளிஞன் - வேடன். புளிதன் - மாமிசம், ஒருவகை உணவு. புளித்தல் - புளிப்பேறுதல், வெறுத்துப் போதல். புளிந்தன் - புளிஞன். புளிப்பு - புளிப்புள்ளது. புளிமதுரை - செடி வகை. புளிமா - புளிப்புக்கனி உண்டாகும் மாமரம், நிரை நேர்வாய்ப்பாடு. புளிமாங்கனி - நிரை நேர் நிரை வாய்ப் பாடு. புளிமாங்காய் - நிரை நேர் நேர் வாய்ப் பாடு. புளிமாந்தண்ணிழல் - நிரை நேர் நேர் நிரை வாய்ப்பாடு. புளிமாந்தண்பூ - நிரை நேர் நேர் நேர் நிரை வாய்ப்பாடு. புளிமாநறு நிழல் - நிரை நேர் நிரை நிரை வாய்ப்பாடு. புளிமா நறும்பூ - நிரை நேர் நிரை நேர் வாய்ப்பாடு. புளிமாறு - புளியம் மிலாறு. புளிமிதவை - புளியங்கூழ். புளியங்கொட்டை - புளிய விதை. புளியாரை - பூடு வகை. புளியோதனம் - புளிச்சோறு. புளினன் - புளிஞன். புளுகு - பொய், கற்பனை. புளுட்டோனியம் - உலோக வகை (Plutonium). புளைதல் - அலங்கரிக்கப்படுதல். புள் - பறவை, வண்டு, பறவை நிமித்தம், அவிட்டம், கைவளை, மதுபானம், கிட்டிப்புள். புள்ளிவிபரம் - வரிசையாயெழுதிய விபரம் (Statistics). புள்வாய்கீண்டோன் - பறவையின் வாயைக் கிழித்த கண்ணபிரான். புள்ளடி - பறவையின் பாதம், புள்ளின் கால் போன்ற குறி. புள்ளம் - வாள், அரிவாள்மணை. புள்ளரசு - கருடன். புள்ளி - பொட்டுக்குறி, எழுத்தின் மேலிடும் புள்ளி, மெய்யெழுத்து, ஆய்தம், இமயமலை, பல்லி, நண்டு. புள்ளிமான் - புள்ளிகளுடைய மான். புள்ளியற் கலிமா, புள்ளியன்மா - பறவை யின் வேகமுடைய குதிரை. புள்ளீடு - ஒருவகைப் பிசாசகணம். புள்ளுரைத்தல் - நிமித்தம், கூறுதல். புள்ளுவம் - பறவையின் ஓசை, வஞ்சகம். புள்ளுர்கடவுள் - திருமால். புள்ளோப்புதல் - பறவை ஓட்டுதல். புற - புறா. புறகிடுதல் - முதுகிடுதல். புறகு - புறம்பானது. புறக்கடை - வீட்டின் பின்புறம். புறக்கணித்தல் - அலட்சியம் செய்தல். புறக்கந்து - களத்தில் தூற்றி விழுந்த பதர்க்குப்பை. புறக்கரணம் - வெளி உறுப்பு. புறக்கழுத்து - பிடர். புறக்காழ் - வெளி வயிரம். புறக்கிடுதல் - முதுகு காட்டி ஓடுதல். புறக்கு - வெளிப்புறம். புறக்குடி - புறஞ்சேரி. புறக்கொடை - முதுகு காட்டி ஓடுகை, வெளிப்புறம், பிரிந்த நிலை. புறங்கடை - வீட்டின் காட்டி ஓடுகை, வெளிப்புறம், பிரிந்த நிலை. புறங்காடு - சுடுகாடு. புறங்காட்டுதல் - தோற்றோடுதல், முதுகு காட்டுதல். புறங்காணுதல் - முறிய அடித்தல். புறங்காத்தல் - பாதுகாத்தல். புறங்கால் - பாதத்தின் மேற்புறம். புறங்கான் - முல்லைநிறம். புறங்கூறுதல் - காணாத இடத்துப் பிறர்மீது குற்றம் கூறுதல். புறங்கை - கைப்புறம். புறங்கொடுத்தல் - பின்புறம் காட்டுதல். புறச்சுட்டு - சொற்குப் புறத்துறுப்பாக வரும் சுட்டெழுத்து. புறச்சொல் - எல்லாரும் கேட்கும்படி கூறும் சொல். புறஞ்சாய்தல் - தோற்றல். புறஞ்சிறை - வீட்டுக்கு அருகிலுள்ள இடம், அருகிடம். புறஞ்சிறைப்பாடி - நகர்க்கு வெளி யிலமைந்துள்ள சேரி. புறஞ்சுவர் கோலஞ்செய்தல் - உட் குற்றத்தைக் களையாது உடம்பை அலங்கரித்தல். புறஞ்செய்தல் - உடம்பை அலங்கரித் தல், காப்பாற்றுதல். புறஞ்சேரி - நகர்ப்புறத்தே மக்கள் வாழும் இடம். புறஞ்சொல் - பழிச்சொல். புறஞ்சொல்லுதல் - கோள் சொல்லுதல். புறணி - புறங்கூறுகை, மரப்பட்டை, தோல், புலால் புறம்பானது, முல்லை நிலம். புறத்தி - புறம்பானது. புறத்திடுதல் - வெளிவிடுதல். புறத்திணை - புறம்பொருள் பற்றிய ஒழுக்கங்கள். புறத்திணைநன்னாகனார் - சங்க காலப் புலவர் (புறம். 176). புறத்திரட்டு - புறப்பொருள் பற்றிய செய்யுள்களை பல நூல்களிலிருந்து திரட்டி அமைத்த ஒரு தொகை நூல். புறத்திறுத்தல் - முற்றுகையிடுதல், புறத்துறை - வேற்றரசனுடைய மதிலை மேற்சென்ற அரசன் முற்றுகை செய் தலைக் கூறும் புறத்துறை. புறத்துழிஞை - பகை அரசனுடைய மதிலைச் சூழ்ந்த அகழின் கரையில் மேற்சென்ற வேந்தன் சேனையுடன் தங்கிமுற்றுகையிடுதலைக் கூறும் புறத்துறை. புறத்துறவு - அகப்பற்று விடாமல் துறவிபோல வேடங் கொள்ளுகை. புறத்துறுப்பு - உடலின் புறத்துள்ள அங்கம், இடம் பொருள் ஏவல் முதலிய பக்கத்துணை. புறத்துறை - புறத்திணையின் பகுதி. புறத்தொழுக்கம் - பரத்தையரோடு கூடி ஒழுகுகை. புறநடை - விதிக்கு விலக்கு. புறநாடகம் - சிருங்காரம் தவிர மற்றச் சுவை பற்றி வரும் நாடக வகை. புறநானூறு - எட்டுத்தொகை நூல் களுள் ஒன்று. புறநிலை - வெளிப்புறம், வேறுபட்ட நிலை, உதவி நோக்கிப் பிறர் புறங் கடையில் நிற்கும் நிலை, பின்நிற்கை, பண்வகை. புறநிலைமருதம் - பண்வகை. புறநிலைவாழ்த்து - வழிபடு தெய்வம் நின்னைக் காப்ப வழிவழி செல்வத் தோடு சிறந்து பொலிக என்று தலைவன் ஒருவனைக் கூறும் வாழ்த்து. புறநீர்மை - பண் வகை. புறந்தருதல் - பாதுகாத்தல், கை விடுதல், புகழ்தல், தோற்றுப் போதல், ஒளி உண்டாதல். புறந்தருநர் - பாதுகாப்பவர். புறந்துரத்தல் - முதுகிலடித்து ஒட்டுதல். புறப்பகை - வெளிப்படையான பகை. புறப்படுதல் - பயணமாதல், செல்லுதல். புறப்படுத்துதல் - வெளிப்படுத் துதல். புறப்படைவீடு - புறஞ்சேரி. புறப்பற்று - எனது என்னும் பற்று. புறப்பாடு - எழுந்தருள்கை, வெளி யேறுகை. புறப்பாட்டு - புறநானூறு. புறப்பாட்டுவண்ணம் - இறுதி அடி முடியாதிருக்கவும் முடிந்த அடிபோல் காட்டும் சந்தம். புறப்புண் - முதுகில்பட்ட புண். புறப்புறமுழவு - மேளவகை. புறப்பெண்டீர் - பரத்தையர். புறப்பொருள் - புறத்திணை, வீரம். புறப்பொருள்வெண்பாமாலை - ஐயனாரி தனார் செய்த புறப் பொருள் இலக்கண நூல். புறமதிற்சேரி - புறஞ்சேரி. புறமலை - பக்கமலை. புறமறிப்பார்த்தல் - நன்கு ஆராய்தல். புறமறிவு - பிறர்க்கு நன்மை நினைக்கை. புறமறைத்தல் - வெளித் தோன்றா மல் மறைத்தல். புறமாறுதல் - இடம் மாறுதல், வலிமை யிழத்தல், கைவிடுதல். புறமுழவு - தோற் கருவி வகை. புறமொழி - புறங்கூற்று. புறம் - வெளியிடம், புறத்திணை, வீரம் பக்கம், முதுகு, புறங்கூற்று, புறக் கொடை, இடம், இறையிலி நிலம், காலம், உடம்பு, மருத நிலத்தூர், மதில். புறம்படி - நகரின் புறப்பகுதி. புறம்பணை - முல்லை நிலம், நகர்ப் புறமாகிய மருத நிலம். புறம்பாணையான் - ஐயனார். புறம்பர் - புறப்பக்கம். புறம்பர் - புறபக்கம். புறம்பாக்குதல் - நீக்குதல். புறம்பு - வெளியிடம், முதுகு, தனியானது. புறம்புல்லுதல் - பின்புறத்தைக் கட்டிக் தழுவுதல். புறம்பெறுதல் - பகைவரை வெற்றி காணல். புறம்பொசிதல் - வெளியில் கசிதல். புறம்போதல் - விட்டு நீங்குதல். புறம்போக்கு - குடிகள் வசம்விடப் படாததும் தீர்வையில்லாததுமாகிய நிலம். புறம்போக்குதல் - அகற்றுதல். புறம்விடுதல் - விலக்கி விடுதல். புறவடி - பாதத்தின் மேற்புரம். புறவடை - கிணற்று நீரால் விளையும் நன்செய். புறவணி - காடு, முல்லை, நிலம், குறிஞ்சி, நிலம். புறவம் - காடு, முல்லைநிலம், குறிஞ்சி நிலம், புறா. புறவரி - தலைவனுடன் அணையாது தலைவி புறத்தே நின்று படிக்கும் நடிப்பு. புறவளையம் - கண் நோய்க்குப் பூசும் மருந்து வகை. புறவாயம் - பணமாகத் தண்டப்படும் செக்கிறை முதலியவரிகள். புறவாழி - ஏழு கண்டங்களையும் சூழ்ந்துள்ள பெரிய புறக்கடல். புறவிடை - பிரிதற்குப் பெறும் விடை. புறவீடு - யாத்திரைக்கு முன் நன் முகூர்த்தத்தில் இராச சின்னத்தைப் புறத்தே அனுப்புகை, புறவிடுதி. புறவு - காடு, சிறுகாடு, முல்லை நிலம், குறிஞ்சிநிலம், முல்லைக் கொடி, புறா. புறவுரு - உடம்பினுறுப்பு. புறவுரை - பாயிரம். புறனடை - விதியிலடங்காதது. புறனழிதல் - புறங்கூறல். புறனுரை - பழிச்சொல், வெற்றுரை. புறனோக்குதல் - ஒருவன் நீங்கும் சமயம் பார்த்தல். புறன் - காணாதபோது, பழிச்சொல். புறா - பறவை வகை. புறாத்தலை - சிறியதலை. புற்கம் - புல்லறிவு, குறைவு. புற்கலம் - உடல், உயிரற்ற பொருள். புற்கலன் - உயிர். புற்கவ்வுதல் - தோல்வியை ஒத்துக் கொள்ளுதல். புற்கு - கபில நிறம். புற்கெனல் - ஒளிமழுங்கற் குறிப்பு, பயனில்லாமைக் குறிப்பு, புன்மைக் குறிப்பு. புற்கை - சோறு, கஞ்சி, கூழ். புற்பதி - பனை, வாழைக்கிழங்கு. புற்புதம் - நீர்க்குமிழி. புற்றம் - புற்று. புற்றாஞ்சோறு, புற்றாம்பழஞ்சோறு - புற்றிலுள்ள கறையான் திரள். புற்றாளி - பனை, அனுடநாள். புற்றானியம் - கூலம் (Cereal). புற்று - கறையான் கட்டிய மண்கூடு, எறும்பின் வளை. புனகம் - உணவு. புனக்குளம் - மழைநீர் நிறைந்து நிற்கும் குட்டை. புனம் - மலைச்சார் கொல்லை. புனராவர்த்தி - மீட்சி. புனருத்தாரணம் - மீண்டும் நிலை நிறுத்துகை. புனருத்தி - கூறியது கூறல். புனருற்பவம் - மறுபடைப்பு. புனர்தம் - புனர்பூசம். புனர்பூசம் - ஏழாவது நட்சத்திரம் புனலாடையாள் - பூமிதேவி. புனலி - காட்டுமல்லிகை. புனல் - நீர், ஆறு, குளிர்ச்சி, பூராடம், பாத்திரத்தில் நீர்ப்பொருளை ஊற்ற உதவும் கருவி. புனல்பாய்தல் - நீரில் விளை யாடுதல். புனல்வாயில் - மதகு. புனவர் - குறிஞ்சி நிலமக்கள். புனவேடு - வரிக்கூத்து வகை. புனறருபுணர்ச்சி - நீரிடை வீழ்ந்த தலைவியைத் தலைவன் காத்த விடத்து அவ்விருவர்க்கும் உண் டாகும் கூட்டம் புனற்கடல் - நன்னீர்க்கடல். புனற்படுநெருப்பு - வடவைத் தீ. புனனாடன் - சோழன். புனனாடு - சோழநாடு, செந்தமிழ் சேர்ந்த 12 நாடுகளுள் ஒன்று. புனிதம் - தூய்மை. புனிதன் - பரிசுத்தன், சிவன், இந்திரன், அருகன், புத்தன். புனிறு - ஈற்றணிமை, மகப்பேற்றா லான தீட்டு. புனிற்றா - ஈற்றணிமை, மகப் பேற்றா லான தீட்டு. புனிற்றா - ஈன்றணிமையுள்ள பசு. புனிற்றுமதி - இளமதி. புனுகு - புழுகு. புனுகுசட்டம் - நாவிப் பூனையின் புனுகு உண்டாகும் உறுப்பு. புகுப்பூனை - நாவிப் பூனை. புனை - அழகு, பொலிவு, அலங்காரம், ஆபரணம், விலங்கு, நீர். புனைதல் - தரித்தல், அழகு செய்தல், கற்பித்தல். புனைந்துரை - பாயிரம். புனைந்தோர் - கம்மாளர். புனைபெயர் - கற்பித்துக் கொண்ட பெயர். புனையல் - மாலை. புனையிழை - சிறந்தபெண். புபுனையிறும்பு - செய்காடு. புனைவன் - கம்மியன். புனைவிலிகழ்ச்சி - பிறிதுமொழிதல். புனைவு - அழகு, செய்கை. புனைவுளி - உவமேயப் பொருள். புன்கண் - துன்பம், மெலிவு, வறுமை, பொலிவழிவு, அச்சம், இழிவு. புன்கம் - சோறு, புன்கு. புன்கு - மர வகை. புன்கூர்தல் - வருந்துதல். புன்சிரிப்பு - இளமுறுவல். புன்செய் - நெல்லொழிந்த மற்றப் பயிர் செய்வதற்கேற்ற நிலம். புன்சொல் - பழித்துரை. புன்பயிர் - அற்ப விளைவு, புன்செய் பயிர். புன்புலம் - தரிசு நிலம், புன்செய் நிலம், கீழான அறிவு. புன்மரம் - புறவயிரமுள்ள மரம். புன்மாலை - புற்கென்ற மாலைக் காலம். புன்முறுவல் - இளநகை. புன்முரல் - புன்சிரிப்பு. புன்மை - இழிவு, அசுத்தம், சிறுமை, துன்பம், வறுமை, குற்றம், புகர் நிறம், பார்வை மழுக்கம். புன்றலை - சிறியதலை, இளந்தலை, சிவந்த மயிருள்ளதலை. புன்னகை - புன்சிரிப்பு. புன்னம்புலரி - வைகறை. புன்னாகம் - புன்னை. புன்னாகவராளி - இராக வகை. புன்னாதர் - அறிவீனர். புன்னீர் - கழிவுநீர். புன்னெறி - தீயவழி. புன்னை - மரவகை. பூ பூ - மலர், பூந்தொழில், சேவலின் தலைச் சூடு, நிறம், அழகு, யானை யின் நெற்றிப்புகர், யானையின் நெற்றிப் பட்டம், கூர்மை, பூப்பு, பிறப்பு பூமி. பூகண்டகர் - அசுரர். பூகண்டம் - பூமிப்பரப்பின் பெரும் பகுதி. பூகதம் - கமுகு. பூகதர் - புகழ்வோர். பூகதன் - பூமியை அடைந்தோன். பூகநிழலுற்றவஞ்சி - தரும தேவதை. பூகம் - கமுகு, திரட்சி, இருள், நேரம், பிளப்பு. பூகம்பம் - பூமி அதிர்ச்சி. பூகரம் - நஞ்சு வகை. பூகர்ப்பசாத்திரம் - புவிநூல் (Geology). பூகளிந்தம் - பூமி சர்க்கரை. பூகாகம் - அன்றில். பூகோளம் - பூமி உருண்டை. பூக்கம் - கமுகு, ஊர். பூக்கவர்ந்துண்ணி - குரங்கு. பூக்குடலை - பூக்குடை. பூக்குடிச்சான் - தேன் சிட்டு. பூக்கொய்தல் - பூப்பறித்தல். பூக்கோட்காஞ்சி - பூக்கோணிலை. பூக்கோணிலை - போருக்குச் செல்லும் போது வீரன் வெட்சி முதலிய மலர் களை அரசனிட மிருந்து பெற்றுக் கொள்ளுதலைக் கூறும் புறத்துறை. பூக்கோள் - பூக்கோணிலை. பூங்கணுத்தரையார் - சங்க காலப் புலவர். பூங்கண்ணன் - சங்க காலப் புலவர் (குறு. 253). பூங்கருவி - படைக்கலவகை. பூங்கலன் - பூக்குடலை. பூங்கற்று - பூதம், அழகு. பூங்கா - பூஞ்சோலை (Park). பூங்காவனம் - பூங்கா. பூங்காவி - காவிக்கல் வகை. பூங்கு - பல. பூங்கொடி - பெண், மலருள்ள கொடி. பூங்கோயில் - திருவாரூர்ச் சிவன் கோயில். பூசகன் - அருச்சகன். பூசணம் - அழுக்கு, பூஞ்சு. பூசணி - பூசனி. பூசம் - எட்டாம் நட்சத்திரம். பூசலிசைத்தல் - கலகச் சொல்லால் கலகம் மூட்டுதல். பூசல - போர், பேரொலி, பலரறிய வெளிப்படுத்துகை கூப்பீடு, வருத் தம், ஒப்பனை, போர்முகம். பூசறுத்தல் - வாய் கழுவுதல். பூசனம் - ஆராதனை. பூசனி - பூசணி. பூசனிக்காய் கொத்துமணி - கழுத்தணி வகை. பூசனை - பூசை, கௌரவிக்கை. பூசாந்திரம் - அருமை பண்ணுகை. பூசாரி - கோயிற் பூசை செய்பவன். பூசிதம் - வணக்கம். பூசித்தல் - பூசை செய்தல். பூசுசாந்தாற்றி - சிற்றால வட்டம். பூசணி - பூசனி. பூசுதல் - தடவுதல், மெழுதல், கழுவுதல், நீராலலம்புதல், இயைதல். பூசுரக்கடி - பிரமராக்கதன். பூசுரன் - அந்தணன். பூசுறுதல் - அலங்கரித்தல். பூசை - காட்டுப்பூனை, ஆராதனை. பூசைமணி - பூசை செய்யும் போது அடிக்கும் மணி. பூச்சக்கரவாளக்குடை - கோவில் மூர்த்திக்கு பிடிக்கும் பெரிய வெண் குடை. பூச்சக்கரக்கிழங்கு - நிலப் பூசனி. பூச்சாண்டி - குழந்தைகளுக்குப் பய முண்டாகும் உருவம். பூச்சி - சிறுசெந்து. பூச்சிகாட்டுதல் - பயங்காட்டுதல். பூச்சிதம் - மதிப்பு. பூச்சிதின்னி - (Insectivora). பூசந்தி - பூமிகளை இணைக்கும் பகுதி (Isthmus). பூச்சியத்துவம் - கௌரவம். பூச்சியம் - ஒன்றுமின்மை, நன்மதிப்பு, வட்டம் (zero). பூச்சியன் - பூசிக்கத்தக்கவன். பூச்சு - தடவுகை, மேற்பூசுகை, வெளிப் பகட்டு. பூச்சூட்டு - முதற்கருவுற்ற மகளிர்க்கு ஐந்து அல்லது ஆறாம் மாதத்தில் கூந்தலைப் பூவால் அலங்கரித்துப் பிறந்த வீட்டில் நிகழ்த்தும் சடங்கு. பூச்சை - பூனை. பூஞை - பூனை. பூஞையாதனம் - பூனைபோல் முழங் காலை மடக்கிக் கைகளை ஊன்றி ஆகாயத்தைப் பார்த்தி ருக்கும் யோக ஆசனவகை. பூஞ்சக்காளம் - பூஞ்சணம். பூஞ்சணம், பூஞ்சணவன் - ஒட்டடை பூஞ்சக் காளான். பூஞ்சல் - மங்கல், கண்ணொளி மங்கல். பூஞ்சாந்து - பூசாந்திரப் பட்டை. பூஞ்சீப்பு - வாழைக்குலையின் நுனிச் சீப்பு. பூஞ்சு - பூஞ்சணம். பூஞ்சுமடு - பூவினாலகிய சும்மாடு. பூடணம் - ஆபரணம். பூடன் - பன்னிரண்டு ஆதித்தருள் ஒருவர். பூடா - தசநாடியுள் ஒன்று. பூடு - பூண்டு. பூட்கை - வலிமை, ஒரு செயலை முடித்தற்கு மேற்கொள்ளும் உறுதி, சிங்கம், யானை, யாளி. பூட்சி -ஆபரணம், உடல், புணர்ப்பு, மனவுறுதி, வரி வகை. பூட்டகம் - வீண்பெருமை, வஞ்சகம். பூட்டழித்தல் - கட்டுக்குலைதல். பூட்டறுதல் - கட்டுக்குலைதல். பூட்டன் - பீட்டன், பாட்டனுக்குத் தகப்பன். பூட்டாங்கயிறு - எருதைப் பிணைக்கும் நுகக்கயிறு. பூட்டி - பாட்டனைப் பெற்றதாய். பூட்டு - பிணிப்பு, திறவுகோல், பூட்டித் திறக்கக்கூடிய கருவி, நாண் கயிறு, உடற்பொருத்து, பெண்கள் மயிரில் சூடும் அணிவகை. பூட்டுதல் - மாட்டுதல், இணைத்தல் பொறுப்பேற்றுதல், அணைதல், இறுகக்கட்டுதல், நாணேற்றுதல், வழக்குத் தொடுத்தல். பூட்டுவிற்பொருள்கோள் - செய்யுளின் முதலினும் ஈற்றினும் உள்ள சொற்கள் தம்முளியைப் பொருள் கொள்ளும் முறை. பூட்டை - ஏற்றமரம், இராட்டின, சக்கரம், இறைகூடை, செக்கு, பூட்டாங்கயிறு. பூட்டைப்பொறி - நீரிறைக்கும் கருவி வகை. பூணநூல் - பூணூல். பூணாரம் - ஆபரணம். பூணாரவெலும்பு - காறை எலும்பு (Clavicle). பூணி - எருது, ஆனினம், இடபராசி, நீர்ப் பறவை வகை. பூணித்தல் - தோற்றுவித்தல், தீர்மானம் பண்ணுதல். பூணிப்பு - விரதம் கொள்ளுதல். பூணுதல் - அணிதல், விலங்கு முதலியன தரித்தல், உடைத்தாதல். பூணுநூல், பூணூல் - பிராமணரணியும் நூல். பூண் - அணி, உலக்கை தடி நுனிகளில் செறிக்கும் வளையம், கிம்புரி. பூண்கடைப்புணர்வு - ஆபரணக் கொக்கி. பூண்டான் - கணவன். பூண்டி - ஊர். பூண்டு - பூடு, சிற்றடையாளம் உள்ளிப் பூடு. பூதகாலம் - இறந்த காலம். பூதக்கண்ணாடி - சிறிதைப் பெரி தாகக் காட்டும் கண்ணாடி. பூதக்கலம் - மணப்பெண் மணமகனுக்கு முதல் முறை உணவு பரிமாறுகை. பூதக்கலவி - சில சாதியாருள் சிறந்த தினத்தொருநாள் சீட்டு விழுந்த பெண்ணோடு கூடும் கூட்டம். பூதக்குயம் - ஆலம் விழுது. பூதசதுக்கம் - காவிரிப்பூம் பட்டினத்தில் பூதம்நின்று காவல் புரிந்து வந்த நாற்சந்தி. பூதசரீரம் - ஐம்பூதத்தாலான பருஉடல். பூதசாரசரீரம் - நுண்ணுடல், சூக்கும தேகம். பூதசுத்தி - அன்றுசெய்த பாவங்களை நீக்குவதாகிய ஆன்மசுத்தியின் அங்கம். பூதஞ்சேந்தனார் - இனியவை நாற்பது இயற்றிய பழைய புலவர். பூததயை - உயிர்களிடத்தில் காட்டும் அன்பு. பூதத்தேவன் - சங்க காலப் புலவர் (குறு. 285). பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப் பெண்டு - சங்க காலப் புலவர் (புறம். 247). பூதத்தார் - பூதத்தாழ்வார். பூதத்தாழ்வார் - 10 ஆழ்வாரில் ஒருவர் (8ம் நூ.). பூதநாசினி - பெருங்காயம. பூதநாடி - பேய் பிடித்தவரிடத்து ஒழுங் கின்றித் துடிக்கும் நாடி. பூதநாதன் - சிவன். பூதபரிணாமதேகம் - ஐந்து பூதங்களின் வேறுபாட்டால் தோன்றிய உடல். பூதபுராணம் - இறந்துபட்டதோர் பழைய இலக்கணநூல். பூதம் - ஐந்துபூதம், உடம்பு, பேயுருவம், உயிர்வர்க்கம், இருப்பு, இறந்தகாலம், சுத்தம். பூதம்புல்லனார் - சங்க காலப்புலவர் (குறு. 190). பூதரநாதன் - இமவான் (மலைகளுக் கரசன்). பூதரம் - இமயம். பூதரோதரம் - மலைக்குகை. பூதர் - பதினெண்கணத்துளொருவர், மனிதர். பூதலக்கிழத்தி - பூமாதேவி. பூதலம் - பூமி. பூதவக்குக்கண் - ஆலம் விழுது. பூதவம் - பூமருது. பூதவனல் - கோப நெருப்பு. பூதவாதம் - பூதங்களின் விகாரச் சேர்க்கையால், உலக உற்பத்தி கூறும் வாதம். பூதவாளி - சிவன். பூதவிருள் - மிக்க இருள். பூதவுரு - நிலம், நீர், தீ, காற்று என்னும் நான்கும் கொண்ட உருவப்பகுதி. பூதவேள்வி - விதிப்படி உயிர்களுக்குப் பலியுணவு ஈகை. பூதனாசரீரம் - தூல உடல், ஐம்பூதத்தா லானது. பூதனார் - சங்க காலப் புலவர் (குறு. 190). பூதனை - தனது நஞ்சுப் பாலூட்டிக் கண்ணனைக் கொல்ல வந்த ஓர் அரக்கி, நோய் வகை. பூதன் - அன்மா, பூதத்தாழ்வார். பூதாக்கலம் - பூதக்கலம். பூதாச்சிறையன் - பச்சைக் கர்ப்பூரவகை. பூதாண்டம் - பிரகிருதி, உலகம். பூதாரம் - பன்றி. பூதானம் - பூமிதானம். பூதி - துர்ககந்தம் புனுகுச் சட்டம், நரகத்தொன்று, செல்வம், சாம்பல், திருநீறு, புழுதி, கொடுமை. பூதிகந்தம் - துர்நாற்றம். பூதிகம் - உடம்பு, ஆயில் மரம், புன்கு. பூதிசாதனம் - விபூதி உருத்திராக்கம் முதலிய சிவசின்னம். பூதியம் - உடம்பு, பூமி, பஞ்சபூதம். பூதுரந்தரர் - அரசர். பூதேசன் - சிவன். பூதேவர் - பிராமணர். பூதை - அம்பு. பூத்தருபுணர்ச்சி - தனக்கு எட்டாத மரத்துப்பூவைப் பறித்துக் கொடுத்து நன்றிக்காகத் தலைவி தலைவனைக் கூடும் கூட்டம். பூத்தல் - நெருப்பில் சாம்பல் படர்தல், மலர்தல். பூநாகம் - பூவில் இருக்கும் பாம்பு, குடலி லிருக்கும் சிறுபூச்சி. பூநீர் - அரக்குநீர் (சிவப்பு நீர்), உவர் மண்ணில் எடுக்கும் நீர். பூநீறு - ஒருவசை வெள்ளை உவர் மண். பூந்தட்டம் - பூ வைத்தற்குரிய தட்டு. பூந்தராய் - சீகாழி. பூந்தாது - மகரந்தப் பொடி. பூந்தி - பணிகார வகை. பூந்துகில் - பூவேலை செய்த ஆடை, பீதாம்பரம். பூந்துணர் - பூங்கொத்து. பூந்துருத்தி நம்பி காடவ நம்பி - திருவிசைப்பாப்பாடியவர் (11ம் நூ.). பூந்தை - பூதன் என்பவனது தந்தை. பூந்தோட்டம் - நந்தவனம். பூபதி - அரசன், ஆதிசேடன், மருந்து வகை, மல்லிகை. பூபரிதி - அயனரேகை, (நடுக்கோடு) பூமியின் சுற்றளவு. பூபன் - அரசன். பூபாலன் - அரசன், வேளாளன். பூபாளம் - காலையிற் பாடும் ஓர் இராகம். பூப்பலி - அருச்சனை, அருச்சனைக் குரிய பூ. பூப்பிள்ளை - சிவ பூசையின்போது உதவியாக இருப்பவன். பூப்பிள்ளையட்டவணை - திருவாவடு துறை அம்பலவாண தேசிகரியற்றிய சைவ சித்தாந்த நூல். பூப்பு - மாதவிடாய். பூப்பேசுதல் - வேசியருக்குரிய நாட் பரிசம் பேசி முடித்தல். பூமகள் - இலக்குமி, பூமிதேவி. பூமகன் - பிரமன், செவ்வாய். பூமங்கை - இலக்குமி. பூமண்டபம் - பூத்தொடுக்கும் மண்டபம். பூமண்டலம் - பூ உலகம். பூமத்திய அமைதி மண்டலம் - (Dol-drums). பூமத்தியரேகை - பூமியின் நடுரேகை (Equator). பூமன் - பிரமன், அரசன், செவ்வாய். பூமாது - இலக்குமி, சரசுவதி. பூமாரி - பூமழை. பூமான் - அரசன், இலக்குமி. பூமி - பூவுலகு, பூமிதேவி. பூமிகனாதல் - பிறத்தல். பூமிகொழுநன் - திருமால். பூமிசைநடந்தோன் - அரசன், புத்தன். பூமிநாதன் - திருமால். பூமிநாயகன் - அரசன், திருமால். பூமிபாரம் - தீயோர், இராச்சியபாரம். பூமின - இலக்குமி. பூமுகம் - பொலிந்தமுகம். பூம்பந்தர் - பூப்பந்தல். பூம்பாளை - இளம்பாளை, நெல் வகை. பூம்பிடகை - பூங்கூடை. பூம்பிள்ளை - இளம்பிள்ளை. பூம்புகை - வாசனைப் புகை. பூம்போர்வை - பூத்தொழிலுடைய மேற்பார்வை. பூயம் - வெறுக்கத்தக்க பொருள். பூரகம் - காற்றை உள்ளே இழுப்பது. பூரட்டாதி - 25ஆம் நட்சத்திரம். பூரணகிரகணம் - சந்திர சூரியர் முற்றும் மறையுங் கிரகணம். பூரணசந்திரோதயம் - மருந்து வகை. பூரணம் - நிறைவு. பூரணன் - கடவுள். பூரணகுதி - ஓம முடிவுச் சடங்கு. பூரணாதி - இலேகிய வகை. பூரணி - சிவசத்தி. பூரணை - நிறைவு, பூர்ணிமை, ஐயனார் தேவி. பூரப்பாளை- தலைக்கோலத்தில் ஓர் உறுப்பு. பூரம் - வெள்ளம், நிறைவு, கற்பூரம், இரச கற்பூரம், 11ஆம் நட்சத்திரம், பூரணை. பூரவாகினி - சரசுவதி. பூராடம் - 20 ஆம் நட்சத்திரம். பூராயம் - ஆராய்ச்சி, விசித்திரமானது. பூரான் - ஊரும் செந்துவகை, முளை கொண்ட தேங்காய், பனங்கொட்டைக் களுள் இருப்பது. பூரி - மிகுதி, பொன், மொத்தம், பணியார வகை, வில்நாண். பூரிகம் - அப்பவகை. பூரிகை - ஊதுகுழல், அப்ப வகை. பூரிக்கோ - குறுந்தொகை தொகுப்பித் தவர். பூரிதம் - உள் இழுத்தல் (Saturation). பூரித்தல் - நிறைதல், பருத்தல், பொலி தல், பூரகம் செய்தல். பூரிப்பு - மிகுதி, மனமகிழ்ச்சி. பூரிமம் - தெருவன் சிறகு. பூரிமாயன் - நரி. பூரியம் - ஊர், மருத நிலத்தூர், அரசர் வீதி. பூரியமாக்கள் - கீழ் மக்கள். பூரியர், பூரியார் - கீழ் மக்கள். பூரு - புருவம், சந்திரவமிசத்து ஓர் அரசன். பூருகம் - மரம். பூருண்டி - மல்லிகை. பூருது - பூநீறு. பூருவநியாயம் - முன்னே தீர்ப்புச் செய்யப்பட்டதென்னும் வாதம். பூருவம் - மழை, கிழக்கு, முன்பு. பூருவாசாரியர் - பழைய சமயா சாரியர், பண்டை நூலாசிரியர். பூரை - போதியது, முடிவு, ஒன்றுக்கும் உதவாதவர். பூரைபூரையெனல் - போதும் போது மெனல். பூரையிடுதல் - முடிவடைதல். பூர்ச்சம் - மர வகை. பூர்த்தி - நிறைவு. பூர்த்தியன் - வேலை செய்து கூலி பெறுவோன். பூர்வகாலம் - சென்ற காலம். பூர்வஞானம் - பிறப்பு நிகழ்ச்சியைப் பற்றிய அறிவு. பூர்வதிக்கு - கிழக்கு. பூர்வபக்கம் - அமாவாசைக்குப் பின் 15 நாள், எதிரியின் வாதம். பூர்வபுண்ணியத்தானம் - முன்னை நல்வினையைத் தெரிவிக்கும் ஐந்தாம் வீடு. பூர்வமாய் - முன்னிட்டு. பூர்வமீமாம்சை - வேதத்தில் கரும காண்ட ஆராய்ச்சி பற்றிச் சைமினி முனிவர் இயற்றிய சாத்திரம். பூர்வம் - ஆதி, கிழக்கு. பூர்வாகமம் - சைன ஆகமத் தொன்று. பூர்வாங்கம் - முன்நிகழ்த்தப்படுவது பிராரத்த வினை. பூர்விகம்,பூர்வீகம் - முற்காலம். பூர்வோத்தரம் - வரலாறு. பூலதை - மண்புழு. பூலா - செடிவகை. பூலாஞ்சி - பூலா. பூலித்தல் - பூரித்தல். பூலோக கயிலாயம் - சிதம்பரம், குற் றாலம் போன்ற தலங்கள். பூலோகசிங்க முதலியார் - திருச்செல்வ ராசர் காப்பியமியற்றியவர் (19ம் நூ.). பூலோகம் - மேலேழு உலகத்தில் முதலா வது. பூல் - பூலா. பூவட்டம் - விரலணிகளுள் ஒன்று. பூவணி - பூமாலை, சதுக்கம். பூவணை - மலர்ப் படுக்கை. பூவந்தி - நிலவாகை பணியார வகை. பூவம் - பூர்வாகம், 84 நூறாயிரம்யுகம் கொண்ட காலம். பூவம்பர் - ஒருவகை வாசனைப் பண்டம். பூவரசு - மரவகை. பூவராகன் - பன்றி அடையாளம் பொறித்த பொன் நாணய வகை. பூவலயம் - மண்ணுலகம். பூவல் - சிவப்பு. பூவல்லிகொய்தல் - பூக் கொய்து ஆடும் மகளிர் விளையாட்டு வகை. பூவள்ளம் - மண் கிண்ணம். பூவன் - பிரமன், வாழை வகை. பூவாடைக்காரி - மாங்கலியத்துடன் இறந்து தெய்வமான பெண். பூவாளி - மன்மதன், மன்மதன் பாணம். பூவித்தல் - புகுவித்தல். பூவிலி - பிறப்பற்றவர். பூவிலை - விலைமாதர் பெறும் ஒரு நாள் பரிசம். பூவிற்கொம்பு, பூவின்கிழத்தி - இலக்குமி. பூவிக்கிடுதல் - காதலன் காதலிக்குப் பரிசமிடுதல். பூவுயிர்த்தல் - மலர்தல். பூவுலகு - பூமி. பூவேர் - மண்புழு. பூவேளைக்காரர் - அரசர்க்கு உரிய காலங்களில் பூ இடாவிடில் தம்மைத் தாமே குத்திக்கொண்டு மடியும் வீரர் கூட்டத்தினர். பூவை - நாகணவாய்ப்புள், காயா, பெண். பூவைசியர் - வேளாளர். பூவைநிலை - காயாம்பூவை, மாயவன் நிறத்தேடு உவமித்துப் புகழும் புறத்துறை. பூவைவண்ணன் - திருமால். பூழான் - கவுதாரி, கானாங்கோழி. பூழி - தூள், புழுதி, விபூதி, பூழி, நாடு, குழைசேறு. பூழிநாடு - செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த பன்னிரு நாடுகளுள் ஒன்று. பூழியன் - சேரன். பூழியான் - சிவன். பூழில் - அகில், பூமி. பூழை - சிறுவாயில், மலைக்கணவாய், துவாரம். பூழ் -கானாங்கோழி, காடை வகை, துவாரம். பூழ்க்கை - யானை. பூளை - இலவு, தேங்காய்ப் பூக்கீரை, வெற்றிக்கு அடையாளமாக அணியும் பூ, பீளை. பூளைசூடி - சிவன். பூனதம் - பொன். பூனைக்கண் - பூனையின் கண் போன்ற கண், வைடூரியம். பூனைக்கழற்சி - கொடிவகை. பூனைப்பருந்து - பருந்து வகை (The marsh harriar). பூனைமூலி, பூனைவணங்கி - குப்பைமேனி. பூனைவால் - மலர்களோடு வளைந்து தொங்கும் கொம்பு, மஞ்சரி (Catkin). பூன்றம் - நிறைவு. பெ பெகுலம் - அதிகம். பெங்கு - தீயொழுக்கம், கள். பெடம் - மிகுதி. பெடை - பறவைகளின் பெண். பெட்டகம் - பெட்டி. பெட்டல் - விரும்பல். பெட்டனாகனார் - பரிபாடல் 3,4ம் பாடல் களுக்கு இசை வகுத்தவர். பெட்டன் - பொய்யன். பெட்டார் - நண்பர். பெட்டி - பண்டங்கள் வைக்கும் மூடியுள்ள கலம். பெட்டி - பொய், மயக்கு வார்த்தை. பெட்டெனல் - விரைவுக் குறிப்பு. பெட்டை - விலங்கு அல்லது பறவைகளின் பெண்பால். பெட்ப - மிக. பெட்பு - விருப்பம், பேணுகை, அன்பு, பெருமை. பெட்ரோலியம் - மண்ணெண் ணெய். பெட்ரோல் - சுத்தஞ் செய்யப்பட்ட மண்ணெண்ணெய். பெண் - மாது, மகள், சிறுமி, மணமகள், மனைவி, கற்றாழை. பெண்கிரகம் - சந்திர சுக்கிரர்கள். பெண்சாதி - மனைவி, மகளிர். பெண்டகன் -அலி. பெண்டகைமை - பெண்மைக் குணம். பெண்டாட்டி - மனைவி. பெண்டாளுதல் - மனைவியாக அனுபவித்தல். பெண்டு - பெண், மனைவி. பெண்ணடி - பெண்சந்ததி. பெண்ணரசி - இராணி. பெண்ணருங்கலம் - பெண்களுள் சிறந்தவள். பெண்ணலம் - பெண்ணின் அழகு, பெண்ணின் இன்பம். பெண்ணாறு - கிழக்கு நோக்கி ஓடும் ஆறு. பெண்ணீர்மை - பெண்மைக் குணம். பெண்ணெழுத்து - உயிர்மெய், உயிர் நெடில். பெண்ணை - பனை, அனுடநாள், தென் பெண்ணையாறு. பெண்பனை - காய்க்கும்பனை. பெண்புத்தி - பெண்களுக்குரிய புத்தி. பெண்பெருமாள் - பெண்ணரசி. பெண்மை - பெண் பிறப்பு, பெண் ணுக் குரிய அழகு, பெண்ணின் தன்மை, பெண்ணின்பம், அமைதித் தன்மை, நிறை. பெண்வழிச்சேறல் - மனைவியின் விருப்பப்படியே ஒழுகுதல். பெண்விளக்கு - பெண்களில் சிறந்தவள். பெதும்பை - 16 வயதுள்ள பெண். பெத்தம் - கட்டு, உயிரின் பாசபந்தம். பெத்தமுத்தி - பந்தமும் வீடும். பெத்தரிக்கம் - பெருமை. பெத்தர் - பாசமுள்ள உயிர்கள். பெந்தகம் - சம்பந்தம். பெந்தித்தல் - பந்தித்தல், சித்திரக் கவியில் எழுத்துகளை அடைத்தல். பெந்தைகயிறு - கொழுவுள்ள கட்டையைக் கலப்பையோ டிணைக்கும் கயிறு. பெந்தைவிழி - அச்சத்தால் கண் மருண்டு பார்க்கை. பெருமான் - கடவுள், பெரியோன். பெயரன் - மகன் அல்லது மக ளுடைய புதல்வன். பெயரிடைநிலை - பெயரின் பகுதி விகுதிகட்கு இடையில் நிற்கும் எழுத்து. பெயரிய - பெயர்பெற்ற, பெயரா லழைத்த. பெயரியல் - சொல்லிலக்கணம் கூறும் பகுதி. பெயரியற்சொல் - தன் பொருளை இயல்பாகவிளக்கும் பெயர்சொல். பெயரின்னிசை - பிரபந்த வகை. பெயருரிச்சொல் - பெயர்ச் சொல்லை விவரிக்கும் சொல். பெயரெச்சம் - பெயர்கொண்டு முடியும் வினைக்குறை. பெயரெஞ்சுகிளவி - பெயரெச்சம். பெயர் - காமம், புகழ், பெருமை, பொருள், சபதம், பெயர்ச்சொல், முதல் வேற்றுமை. பெயர்ச்சி - இடமாற்றுகை. பெயர்ச்செவ்வெண் - பெயர்களில் எண்ணிடைச் சொல் தொக்கு விட்டிசைத்து வரும் தொடர். பெயர்ச்சொல் - பெயரைக் குறிக்க வழங்கும் சொல். பெயர்தல் - போதல், பிறழ்தல், மீளுதல், மாறுதல், சிதைவுறுதல், விடுதல். பெயர்த்தி - மகள் பெற்ற பெண், பேர்த்தி. பெயர்த்திரிசொல் - திரிந்து வழங்கும் பெயர்ச்சொல், தம் பொருளை அரிதில் விளக்கும் பெயர்ச்சொல். பெயர்த்தும் - பின்னும். பெயர்நேரிசை - பிரபந்த வகை. பெயர்ந்து - பிற்பாடு, மறுபடி. பெயர்புறம் - புறங்கொடுக்கை. பெயர்பொறித்தல் - நிலை நிறுத்துதல். பெயர்போதல் - பிரபலமாதல். பெயர்ப்படுதல் - பேரிடுதல். பெயர்வேற்றுமை - முதல் வேற்றுமை. பெயல் - பொழிகை, மழைத்துளி, மேகம். பெய்கலம் - பாத்திரம். பெய்தல் - மேல் நின்று பொழிதல், வார்த்தல், இடுதல், எறிந்துவிடுதல், கொடுத்தல், அமைத்தல், பரப்புதல், எழுதுதல், அணிதல், கட்டுதல், பங்கிடுதல், செறிதல். பெய்தளத்தல் - படியாலளக்கும் அளவை வகை. பெய்துரை - இடைப்பெய்து உரைக்கை. பெய்வளை - பெண். பெரணி - தாவர வகை (Ferm). பெரிது - மிகவும், பெரியது. பெரிய உள்ளான் குறவை - பறவை வகை (Wood cock). பெரிய குணம் - தாராள சிந்தை. பெரியசீயர் - மணவாள முனிகள். பெரிய தகப்பன் - தந்தையின் அண்ணன். பெரியதனம் - மேட்டிமை. பெரியதாய் - தந்தையின் அக்காள். பெரியதிருமடல் - திருமங்கை ஆழ்வார் செய்த மடற் பிரபந்த வகை. பெரிய திருவடி - கருடாழ்வார். பெரியதிருவந்தாதி - வெண்பாக் களால் அந்தாதியாக நம்மாழ்வார் இயற்றிய பிரபந்தவகை. பெரியதிருவோலக்கம் - அடியார் பெருங்கூட்டம். பெரியநம்பி - இராமானுசரின் ஆசிரிய ருள் ஒருவர். பெரியபிராட்டி - இலக்குமி. பெரியபுராணம் - சேக்கிழார் செய்த அடியார் புராணம். பெரிய பெருமாள் - திருவரங் கத்துத் திருமால். பெரிய பென் - Big Ben என்னும் மணிக்கூடு. பெரியமுப்பழம் - பாட்டியல் மரபு கூறும் ஒரு பழைய நூல். பெரியமேளம் - தவுல் முதலிய பெரிய வாத்தியங்கள் கொண்டு வாசிக்கப்படும் மேளம். பெரியர் - பெரியார். பெரியவராடி - பாலையாழ்த்திற வகை. பெரியவாச்சான்பிள்ளை - திவ்வியப் பிரபந்ததுக்கு உரையும் மற்றும் பல நூல்களும் இயற்றியவர் (13 ஆம் நூ.). பெரியவுடையார் - சடாயு. பெரியவெள்ளிக்கிழமை - இயேசு நாதர் சிலுவையிலறைந்து கொல்லப் பட்ட தினம். பெரியார்நங்கை - செடிவகை. பெரியார் - சிறந்தோர், மூத்தோர். பெரியாழ்வார் - 10 ஆழ்வாருள் ஒருவர் (9ம் நூ). பெரியோர்பெருமான் - பிரமன். பெரியோன் - கடவுள், உயர்தோன். பெருக - நிரம்ப. பெருகல் - மிகுதி. பெருகியல் - பண்வகை. பெருகியன் மருதம் - பண்வகை. பெருகு - தயிர். பெருக்கம் - வளர்ச்சி, மிகுதி, செல்வம், வெள்ளம், நிறைவு, நீடிப்பு. பெருக்கல் - வளர்த்தல், எண்களைப் பெருக்குதல். பெருக்கு - வெள்ளம், நீரேற்றம், மிகுதி. பெருக்குதல் - விரியச் செய்தல், குப்பை கூட்டுதல், கணக்குப் பெருக்குதல். பெருக்குரல் - பாடுகையில் தோன் றும் வெடித்த குரல். பெருக்கெடுத்தல் - வெள்ளம் அதிகமாதல். பெருங்கணி - சோதிடன். பெருங்கண்ணனார் - சங்க காலப் புலவர் (குறு. 289). பெருங்கதை - கொங்கு வேளிர் செய்த ஒரு நூல். பெருங்கரம் - கோவேறு கழுதை. பெருங்கலம் - 1000 நரம்புடைய பேரியாழ். பெருங்கவித்தொகை - இறந்து பட்டசங்க நூல்களுள் ஒன்று. பெருங்கவி - வித்தாரகவி பாட வல்ல வன். பெருங்கலன் செய்தல் - தெய்வம் எழுந்தருளுதற்கு உரிய இடமாகத் தயார் செய்தல். பெருங்களா - ஒருவகைக் களாமரம் (முட்செடி). பெருங்களிற்று வட்டம் - நரகத் தொன்று. பெருங்கறையான் - தாய்க் கறையான். பெருங்காக்கைபாடினியம் - இறந்து பட்ட ஒரு யாப்பிலக்கண நூல். பெருங்காஞ்சி - ஒவ்வொருவருக்கும் மரணம் என்பதைக் கூறும் புறத்துறை, வீரர் படை முகத்துத்தம் ஆற்றல் தோற்று வித்தலைக் கூறும் புறத்துறை. பெருங்காடு - சுடுகாடு. பெருங்காப்பியம் - தன் நிகரில்லாத தலைவனைப் பற்றியதாக நாற் பொருள் பயப்ப நாடு நகர் முதலிய வற்றைச் சிறப்பித்துப் பாடப்படும் தொடர்நிலைச் செய்யுள் வகை. பெருங்காயம் - ஒருவகைக் கிழங்கின் பால். பெருங்கிராமம் - 500 குடி உள்ள ஊர். பெருங்கிழமை - பெரு நட்பு. பெருங்கீழ்வட்டம் - ஒரு நகரம். பெருங்குடி - உயர் குடி. பெருங்குடியாட்டம் - நாட்டாண்மை. பெருங்குயம் - குயவர்க்கு அரசளிக்கும் பட்டப் பெயர். பெருங்குருகு - இறந்துபட்ட சங்க கால இசை நூல்களுள் ஒன்று. பெருங்குழி - கடல். பெருங்குறடு - விறகு முதலியன பிளப் பதற்கு அடியில் வைக்கும் தாங்குக் கட்டை. பெருங்குறிச்சபை - ஊர்ப்பெருஞ் சபை. பெருங்குறிஞ்சி - பூடு வகை, குறிஞ்சிப் பாட்டு. பெருங்குன்றூர்கிழார் - பதிற்றுப் பத்தில் 9ஆம் பத்துப் பாடியவர். பெருங்கை - யானை. பெருங்கையால் - பகன்றை. பெருங்கொடி - பதாகை. பெருங்கோப்பெண்டு - பட்டத்துத் தேவி. பெருங்கோழி நாய்கன் மகள் நக்கணை யார் - சங்க காலப் புலவர் (புறம். 83). பெருங்கௌசியனார் - மலைபடுகடாம் இயற்றிய புலவர். பெருச்சாளி - எலி வகை. பெருஞ்சவளம் - ஈட்டி வகை. பெருஞ்சாந்தி - கோயிற் பெரிய விழா முடிவில் நடக்கும் பெரிய அபிடேகம். பெருஞ்சாமம் - 7½ நாழிகை கொண்ட கால அளவை. பெருஞ்சாய் - பேராற்றல். பெருஞ்சாத்தனார் - சங்க காலப் புலவர் (குறு. 263). பெருஞ்சித்திரனார் - சங்க காலப் புலவர் (புறம். 38). பெருஞ்சூட்டு - தலையணி வகை. பெருஞ்செக்கு - சதய நாள். பெருஞ்செய் - மேம்பாடுள்ள செயல். பெருஞ்சேரலிரும்பொறை - பதிற்றுப் பத்தினுள் எட்டாம் பத்தினால் புகழப் பட்ட சேரன். பெருஞ்சொல் - பலரறி சொல். பெருஞ்சோறு - அரசன் தன் படைத் தலைவருக்கு அளிக்கும் சோறு. பெருஞ்சோற்றுநிலை - அரசன் வீரர்க்கு உணவளித்து முகமன் செய்தலைக் கூறும் புறத்துறை. பெருஞ்சோற்றுவஞ்சி - பெருஞ் சோற்று நிலை. பெருநகை - பெருஞ்சிரிப்பு, பேரிகழ்ச்சி. பெருநடை - விரைந்த செலவு, உயர்ந்த ஒழுக்கம். பெருநம்பி - அரச குமாரர்க்குரிய பட்டப் பெயர், அரசர்க்குள்ள சிறப்பு எல்லாம் பெறும் மந்திரியின் பட்டம். பெருநம்பிகள் - கடிகைமாக்கள் (நேரம் அளந்து கூறுவோர்). பெருநாரை - இறந்து பட்ட சங்ககால இசை நூல்களுள் ஒன்று. பெருநாவல் - சம்பு நாவல். பெருநாளிகம் - ஒருவகைப் பீரங்கி. பெருநானிருக்கை - அரசனது சிறப்பு நாள் ஒலக்கம். பெருநாள் - திருநாள், நீண்டகாலம், இரேவதி. பெருநிலம் - பூமி, மேலான சுவர்க்கம். பெருநிலைநிற்றல் - சகாயம், செய்தல், சாட்சி சொல்லுதல், செய்து முடித்தல். பெருநீர் - கடல். பெருநெறி - முத்திவழி, பெருவழி. பெருந்தகை - பெருமையுள்ளவன், மிக்க அழகு, பெருந்தன்மை. பெருந்தமனி - இதயத்திலிருந்து சுத்த இரத்தத்தை உடலுக்கு எடுத்துச் செல்லும் குழாய், மகாதமனி (Aorta). பெருந்தரம் - பழைய அரச உத்தி யோக வகை, கணிகையரில் ஒரு பிரிவினர். பெருந்தானம் - நெஞ்சு, மிடறு, நாக்கு, மூக்கு, அண்ணாக்கு, உதடு, பல், தலையாகிய ஒலி எழும் எட்டு உறுப்புக்கள். பெருந்திகிரி - சக்கரவாளத்துக்கு அப்பா லுள்ள சக்கரவாளகிரி. பெருந்திசை - நீண்ட நிலப்பரப்புள்ள திக்கு. பெருந்திணை - ஒவ்வாக்காத லொழுக்கம். பெருந்திரட்டு - தத்துவராயர் செய்த வேதாந்த நூல். பெருந்திருப்பாவாடை - பெருந் திருவமிர்து. பெருந்திருவமிர்து - கடவுளுக்குப் படைக்கும் பெரிய நிவேதனம். பெருந்திருவி - பெருஞ் செல்வ முள்ளவள். பெருந்துத்தி, பெருந்துருத்தி - நீர் வீசும் கருவி வகை. பெருந்துறை - ஆவுடையார் கோயில். பெருந்தெரு - நகரின் பெரிய வீதி. பெருந்தேவபாணி - நக்கீரதேவர் செய்த ஒரு நூல் 11ஆம் திருமுறை யிலடங்கியது. பெருந்தேவனார் - பாரதம் பாடிய சங்கப் புலவர், 9ஆம் நூற்றாண்டில் பாரத வெண்பாப் பாடிய புலவர், 11ஆம் நூற்றாண்டில் வீரசோழிய உரை செய்தவர். பெருந்தேவி - பட்டத்துத்தேவி. பெருந்தோட்குறுஞ் சாத்தன் - சங்க காலப் புலவர் (குறு. 308). பெருப்பம் - பருமன். பெருப்பித்தல் - பெரிதாக்குதல். பெருப்பு - பெருக்கை. பெருமகன் - பெரியோன், அரசன். பெருமகிழ்ச்சிமாலை - 96 பிரபந்த தங்களுள் ஒன்று. பெருமக்கள் - பெரியோர், ஊர்க்காரியங் களை மேற்பார்க்கும் சபையார். பெருமங்கலம் - சுபவிழா, வாழ்த்துப் பாடல், அரசன் பிறந்த நாளில் குடி கட்கு அருள் செய்வதைக் கூறும் புறத் துறை. பெருமஞ்சிகன் - நாவிதன். பெருமடை - தெய்வங்களுக்கு இடும் சோற்றுப் படையல். பெருமணம் - கலியாணம். பெருமணல் வட்டம் - நரகத் தொன்று. பெருமருந்து - செடி வகை. பெருமலை - மாமேரு. பெருமா - யானை. பெருமாக்கோதையார் - சேரமான் பெருமாள் நாயனாரின் பிள்ளைத் திருநாமம். பெருமாட்டி - தலைவி. பெருமான் - பெருமையிற் சிறந்த வள், திருமால், சேரர் பட்டப் பெயர். பெருமாள்திருமொழி - குலசேக ராழ்வார் செய்த பாடல் தொகுதி. பெருமானடிகள் - சுவாமி, அரசர் தலைவர்களது பட்டப் பெயர். பெருமான் - பெருமையிற் சிறந்தவன், அரசன், மூத்தோன். பெருமிடறுசெய்தல் - உரத்தழுதல். பெருமிதம் - மேம்பாடு, பேரெல்லை, செருக்கு, உள்ளக்களிப்பு, கல்வி முதலிய பெருமைகளில் மேம் படுகை. பெருமீன் - யானைமீன். பெருமுதலி - தலைவன். பெருமுத்தரையர் - கொடையிற் சிறந்த பழைய சிற்றரசர் வகையினர். பெருமுளை - இசைவகை. பெருமூச்சு - பெரிதாக விடும் மூச்சு. பெருமூத்திரம் - நீரிழிவு. பெருமை - பருமை, மாட்சிமை, மிகுதி, அகந்தை. பெரும்பஞ்சமூலம் - வில்வம் வாகை பெருங்குமிழ் தழுதாழை பாதிரி முதலிய வேர்களைக் கொண்டு செய்த மருந்து. பெரும்படை - பெரியசேனை, வீரன் பெயரை நடுகல்லில் பொறித்தலைக் கூறும் புறத்துறை, தெய்வமாகிய நடுகற்குப் பெருஞ்சிறப்புப் படைத் தலைக் கூறும் புறத்துறை. பெரும்பணி - கிடைத்தற்கரியது. பெரும்பண் - தலைமைப் பண். பெரும்பதுமனார் - சங்க காலப் புலவர் (நற். 2). பெரும்பறை - தோற்கருவிவகை. பெரும்பற்றப்புலியூர் - சிதம்பரம். பெரும்பற்றப்புலியூர் நம்பி - திருவால வுடையார் திருவிளை யாடற் புராண மியற்றியவர் (12ம் நூ.) பெரும்பாக்கன் - சங்க காலப் புலவர் (குறு. 296). பெரும்பாடு - சூதக உதிர இறைப்பு நோய். பெரும்பாணர், பெரும்பாண் - யாழ் வாசிக்கும் பாணர் சாதியினர். பெரும்பாணாற்றுப்படை - தொண்டைமா னிளந்திரையனைக் கடியலூர் உருத் திரங்கண்ணனார் பாடிய ஆற்றுப் படை. பெரும்பாலார் - மிகுதியானவர். பெரும்பாலும் - அனேகமாக. பெரும்பாலை - பண் வகை. பெரும்பாழ் - பெருவெளி, மூலப் பிரகிருதி (உலகப் படைப்புக்கு ஆதாரமாக உள்ள சடப்பொருள்). பெரும்பாழ்செய்தல் - அழித்தல். பெரும்பான்மை - புகழுரை, பெரும் பாலும். பெரும்பிழுக்கை - கூத்து வகை. பெரும்பிறிது - மரணம். பெரும்புயல் - பெரும் மழை, பெருங்காற்று. பெரும்புலர்காலை - அதிகாலை. பெரும்புள் - கோட்டான், சரபம். பெரும்புறக்கடல் - சக்கரவாள மலையைச் சூழ்ந்த கடல். பெரும்புறம் - பெருவெளி. பெரும்பூ - நிலத்தின் ஆண்டு வருவாய். பெரும்புண் - மார்பிலணியும் பேரணி. பெரும்பூனை - செடிவகை. பெரும்பெயர் - முத்தி, புகழ். பெரும்பெயருலகம் - சுவர்க்கம். பெரும்பெயல் - பெருமழை. பெரும்பேச்சு - புகழ். பெரும்பேது - சாக்காடு, பெரும் பித்து. பெரும்பொருள் விளக்கம் - ஒரு நீதி நூல். பெரும்பொழுது - கார், கூதிர், முன்பனி, பின்பனி இளவேனில், முதுவேனில் என்னும் பருவங்கள். பெரும்பொன்படுதல் - தோற்றப் பொலிவு உண்டாதல். பெரும்போக்கு - பெருந்தன்மை, சாக்காடு. பெரும்போகம் - பேரின்பம். பெருவங்கியம் - யானைத் துதிக்கை போன்ற குழல் வாத்தியம். பெருவஞ்சி - பகைவர் நாட்டை எரி கொளுத்துவதைக் கூறும் புறத் துறை. பெருவண்ணம் - இசைவகை. பெருவண்மை - பெருங்கொடை, அம்பெய்யும் இலக்கு. பெருவயிறு - மகோதர நோய். பெருவரை - மேரு. பெருவர் - பெருமையுடையவர். பெருவலி - மிக்க வலிமை. பெருவழக்கு - பலரும் கையாளும் முறை. பெருவழி - பெரும்பாதை, முத்திநெறி. பெருவழுதி - சங்க காலப் புலவர் (நற். 55). பெருவளி - பெருங்காற்று. பெருவளைப்பு - பெருங் காவல். பெருவனம் - கடல். பெருவாய்மலர் - இருவாட்சி. பெருவாயன் - கழுதை. பெருவாயின்முள்ளியார் - ஆசாரக் கோவை இயற்றிய புலவர். பெருவாரல்வலை - மீன் பிடிக்கும் பெரிய வலை. பெருவாரி - பெருவெள்ளம், மிகுதி. பெருவாழ்வு - நிரம்பிய செல்வம், பேரின்பம். பெருவியாதி - குட்டநோய். பெருவிரல் - கட்டைவிரல், நெல் எட்டுக் கொண்ட நீட்டலளவை. பெருவிறல் - முருகக்கடவுள், மிகுவலி. பெருவெழுத்து - திருவைந் தெழுத்தில் சி என்னும் எழுத்து. பெறாப்பேறு - கிடைத்தற்கரிய பேறு. பெறுதல் - அடைதல், பிரசவித்தல், அறிதல். பெறுதி - இலாபம் அடையத்தகும் பொருள். பெற்றம் - பெருமை, காற்று, எருமை, மாடு, இடபராசி. பெற்றான் - கணவன், தகப்பன். பெற்றி - இயல்பு, தன்மை, பெருமை, நிகழ்ச்சி, பேறு, விரதம். பெற்றிமை - செய்ய வேண்டும் முறை, பிரிவு. பெற்று - பெருக்கம், அடுக்கு, செல்வாக்கு, எருது. பெனிசிலின், பென்சிலின் - மருந்து வகை. பென்சில்கரி - காரீயம் (பிளம்பாகோ). பென்னம்பெரிய - மிகப் பெரிய. பே பே - அச்சம், நுரை, மேகம். பேஎம் - அச்சம், மேல். பேகணித்தல் - துன்புறுதல், நிறம் வேறுபடுதல். பேகம் - தவளை. பேகன் - கடை ஏழு வள்ளல்களுள் ஒருவன். பேசல் - பேசுதல். பேசாமடந்தை - பேசாத பெண். பேசாமை - மௌனம். பேசார் - ஊமர். பேசாமெழுத்து - திருவைந் தெழுத்தில் சி என்னும் எழுத்து. பேசுதல் - சொல்லுதல், சபதம் முடித்தல், இசைத்தல், துடித்தல், துதித்தல். பேசுமெழுத்து - சிவ சத்தியைக் குறிக்கும் வ என்னும் எழுத்து. பேப்சு - வார்த்தை. பேடகம் - பெட்டி, ஒரு வகைத் துகில். பேடன் - ஆண் தன்மை மிகுந்த அலி. பேடி - பெண் தன்மை மிகுந்த அலி, நடுவிரல், அச்சம். பேடு - பேடி கூத்து வகை, பெண் பால், ஒரு சார் விலங்குகளின் பெண், சிறுமை, சிற்றூர். பேடை - பறவையின் பெண்பால். பேட்டி - கண்டு பேசுதல் (Interview). பேணலர் - பகைவர். பேணல் - காப்பாற்றுகை, மிகு விருப்பம். பேணாமாக்கன் - ஆதரவற்றோர். பேணாமை - பகைமை. பேணார் - பகைவர். பேணியார் - விரும்பப்பட்டோர். பேணுதல் - போற்றுதல், பாதுகாத்தல், மதித்தல், விரும்புதல், உபசரித்தல், வழிபடுதல், பொருட்படுத்துதல், பரிகரித்தல், அலங்கரித்தல், உட் கொள்ளுதல், அறிதல், ஒத்தல். பேணுநர் - பாதுகாப்போர். பேண் - பாதுகாத்தல், விருப்பம். பேதகம் - மன வேறுபாடு, வஞ்சனை. பேதகன் - கருத்து வேறுபட்டவன். பேதப்படுதல் - வேற்றுமைப் படுதல், மயங்குதல். பேதம் - வேறுபாடு, மாறுபாடு. பேதலிப்பு - வேறுபாடு. பேதறுத்தல் - கலக்கம் ஒழித்தல். பேதாபேதம் - வேற்றுமையும் ஒற்றுமை யும். பேதி - கழிச்சல், பிரிப்பது. பேதித்தல் - மாறுபடுதல், பேதி யாதல், வெட்டுதல். பேது - மயக்கம், துன்பம், அறி வின்மை. பேதுறவு - மயக்கம், துன்பம். பேதை - அறிவிலி, பெண், 5 வயது முதல் 7 வயது வரையுள்ள பெண், தரித்திரன், அலி. பேதைப்படுத்துதல் - மடமையாக் குதல். பேதைமை - மடமை. பேத்தி - பேர்த்தி. பேத்தை - மீன்வகை. பேந்தவிழித்தல் - மருண்டு விழித் தல். பேம் - அச்சம். பேயமன்று - மது அருந்தும் சாலை. பேயனார் - ஐங்குறு நூற்றில் முல்லைத் திணையைப் பாடிய புலவர். பேயன் - பைத்தியக்காரன், வாழை வகை. பேயார் - பேயாழ்வார், காரைக்காலம் மையார். பேயாழ்வார் - 12 ஆழ்வாரில் ஒருவர். 3 ஆம் திருவந்தாதி செய்தவர் (8ம் நூ.). பேயோடாடி - சிவன். பேய் - பிசாசம். பேய்காணுதல் - பேய் பிடித்தல். பேய்க்கண் - சுழல்விழி. பேய்க்கரும்பு - நாணல்வகை. பேய்க்கனி - பேயன் வாழை. பேய்க்காஞ்சி - புண்பட்ட வீரனை இரவில் பேய் காத்தமை கூறும் புறத்துறை. பேய்க்கோலம் - பேயின் வடிவம். பேய்ச்சி - பெண் பேய், பேய் பிடித்தவள். பேயத்தனம் - அறிவினம். பேய்த்தேர் - கானல் நீர். பேய்மகள் இளவெயினி - சங்க காலப் புலவர் (புறம். 11). பேய்நிலை - எண் வகை மணத்துள் ஒன்று. பேய்ப்பெண் - அறிவில்லாத பெண். பேய்மனம் - அறிவற்ற மனம். பேய்மை - பேயின் தன்மை. பேரணி - சேனையின் பின்னணி, பேரணி கலம், கிம்புரி. பேரணிகலம் - பெரும் பதக்கம். பேரணை - பெரிய அணைக்கட்டு. பேரண்டம் - பெரிய உலகம், மூளை, தலை ஓடு. பேரம் - வடிவம், விலைப்பேச்சு. பேரருளாளன் - சின்னக் காஞ்சி புரத்தில் வீற்றிருக்கும் திருமால். பேரருளுடைமை - பெருங் கருணை உடைமை. பேரளவு - பெருஞ்சிறப்பு. பேரறிவாளன் - உயர்ந்த அறிவு டையவன். பேரறிவு - மூதறிவு. பேரன் - மகள் அல்லது மகனின் புத்திரன், பாட்டன். பேராசிரியர் - உரையாசிரியருள் ஒருவர் (12ம் நூ.). பேராசை - மிக்க பொருளாசை. பேராட்டி - மிக்க பெருமை யுடையவள். பேராண்முல்லை - சினம்மிக்க மன்னன் போர்க் களத்தைக்கைக் கொண்டதைக் கூறும் புறத்துறை. பேராந்தை - ஆந்தை வகை, நிலா முகிப்புள். பேராமுட்டி - செடி வகை. பேராயம் - எண்பேராயம். பேராயிரம் - கடவுளின் 1000 பெயர். பேராரம் - பெரிய முத்து மாலை. பேராலவட்டம் - பெரிய விசிறி வகை. பேராளன் - பெருமையுடையவள், பேருடையவன், மிருக சீரிடம். பேராறு - மேற்குக் கடலில் விழும் ஒரு ஆறு, கிருட்டிணர் ஆறு. பேரானந்தம் - பெரிய மகிழ்ச்சி. பேரி - மேளம், மர வகை (Pear). பேரிகை - மேளம். பேரிசை - பெரும்புகழ், சங்க காலத்து ஒரு இசை நூல். பேரியம் - உலோக வகை (Barium). பேரியல் - பெருந்தன்மை. பேரியற்காஞ்சி - கேட்டினியல்புகளைப் புலவர் எடுத்துக்கூறும் துறைவகை. பேரியாழ் - 21 நரம்புள்ள யாழ். பேரிரையான் - மிகுதியாக உண் போன். பேரிலக்கம் - பின்னமில்லாத முழு எண். பேரில் - மீது பிறகு. பேரிளமை - நடுப்பிராயம். பேரிளம்பெண் - 32 வயதுக்குமேல் 40 வயதுவரையுள்ள பெண். பேரின்பம் - மோட்ச இன்பம். பேரீச்சு - பேரீந்து. பேந்து - ஈந்து வகை. பேருண்டி - மிகுதியாக உட் கொள்ளும் உணவு. பேருதவி - பெரிய உபகாரம். பேருகாரம் - பெருநன்றி. பேருரியோன் - சக்கிலியன். பேருறக்கம் - பெருந்தூக்கம், மரணம். பேருர் - மருத நிலம், மேலைச் சிதம்பரம். பேரூர்ப்புராணம் - பேரூர்க் கோயில் மீது கச்சியப்ப முனிவர் செய்த புராணம். பேரெண் - பெருந்தொகை, நாற்சீர் ஈரடியாய் வரும் அம்போதரங்க உறுப்பு வகை. பேரெயின் முறுவலார் - சங்க காலப் புலவர் (குறு. 17). பேரெல்லை - பெருமைக்கு அமைந்த வரையறை. பேரேடு - பேர்வழி இனக் கணக்கு (Ledger). பேரேற்றபண்டாரம் - தமிழ்ச் சைவ வேளாளருக்குத் திருவாங்கூர் அரசர் வழங்குப் பட்டம். பேரொளி - பெருவெளிச்சம், சந்திரன். பேரோலக்கம் - அரசர் பெருஞ்சபை. பேர் - நாமம், ஆள், பிராணி, புகழ், பெருமை. பேர்த்தி - பௌத்திரி, பாட்டி. பேர்த்து - மறுபடி. பேர்படைத்தல் - புகழ்பெறுதல். பேழி - புடைவை. பேழை - பெருமை, பெட்டி. பேழ் - பெருமை. பேழ்களித்தல் - அஞ்சுதல், கண் மூடுதல், மிரண்டு விழித்தல். பேழ்வாய் - பெரிய வாய். பேறு - பெறுகை, அடையத் தக்கது, இலாபம் பயன், குழந்தை பெறுகை, இரை. பேனம் - நுரை. பேன் - தலைமயிரிலுண்டாகும் சிறு செந்து. பை பை - பசுமை இளமை, அழகு உடல் வலிமை, துணி முதலியவற்றால் தைத்த கொள்கலம், பாம்புப்படம். பைக்கலம் - பச்சைக் குப்பி. பைங்கண் - குளிர்ந்தகண், கோபத் தாற் பசியகண், பச்சையாக உள்ள இடம். பைங்கிளி - பச்சைக்கிளி, இளம் பெண். பைங்குழி - கருத்தங்குமிடம். பைங்கூழ் - இளம்பயிர், விளை நிலம். பைங்கொடி - நறுமணமுள்ள கொடி வகை, பெண். பைசந்தி - நறுமணமுள்ள கொடி வகை, பெண். பைசந்தி - கழுக்குழி, நாத ரூபமான ஒலி வடிவு எழுத்து. பைசல் - பையன். பைசாசம் - பேய், வில்லோர் நிலையு ளொன்று, எண்வகை மணங்களுள் ஒன்று, மூத்தாள் இழிந்தாள் களித்தாள் துயின்றாள் முதலி யோரைக் கூடும் மணம். பைசாசி - பிராகிருதமொழியின் வகை, சடாமாஞ்சி. பைஞ்சாய் - ஒருவகைப்புல். பைஞ்சேறு - சாணம். பைஞ்ஞிணம் - இறைச்சி. பைஞ்ஞிலம், பைஞ்ஞில், பைஞ் ஞீலம் - மக்கள் தொகுதி. பைதல் - இளையது, சிறுவன், துன்பம், குளிர். பைதிரம் - நாடு. பைதிருகம் - தந்தைக்குரியது, முகூர்த்த வகை. பைது - பசுமை, ஈரம். பைத்தல் - பசுமையாதல், விளங் குதல், படம்விரித்தல், கோபித்தல், பொங்குதல். பைந்தார் - புதிய பூமாலை. பைந்து - ஒரு அளவை (Pint). பைந்தொடி - பொன் வளையல், பெண். பைந்தாகம் - நாகப்பாம்பு. பைபய, பைப்பய - மெல்ல மெல்ல. பைப்பாலூட்டி - பாற்பையுள்ள விலங்குகள் (Marsupials). பைமறி - பையின் உட்புறத்தை வெளிப் புறமாகத் திருப்புகை. பைம்பூண் - பசும் பொன்னால் செய்யப் பட்ட அணி. பைம்பொன் - பசும்பொன். பையரவு - நாகம். பையல் - சிறுவன். பையாத்தல் - வருந்துதல். பையாப்பு - துன்பம். பையுள் - நோய், துன்பம், சிறுமை, மயக்கம். பையெனல் - மெதுவாதற் குறிப்பு, ஒளி மழுங்குதற் குறிப்பு, வருந்தற் குறிப்பு. பையோடதி - பச்சைக் கொடி. பையோலை - பச்சை ஓலை. பைரவம் - இசை வகையிலொன்று. பைரவர் - துர்க்கையின் படையின ரான கணங்கள். பைரவன் - சிவமூர்த்தங்களுள் ஒன்று. பைரவி - ஒரு இராகம். பைராகி - வடதேசத்துத் துறவி. பைல்வான் - மற்போர் செய்பவன் (உருது). பொ பொகடி - காதணி வகை (கன்னடம்). பொகில் - அரும்பு. பொகுட்டு - குமிழி, தாமரைக் கொட்டை, மலை. பொகுவல் - பறவை. பொக்கணம் - சோழிப்பை. பொக்கணை - பொந்து. பொக்கம் - பொய், வஞ்சகம், குற்றம், மிகுதி, பொலிவு. பொக்கரணி - புட்கரணி. பொக்கிசம் - திரவிய சாலை. பொக்கு - மரப்பொந்து, குற்றம், பொருக்கு. பொக்குவாய் - பல்போன வாய். பொக்குளிப்பான் - வைசூரி நோய் வகை. பொக்குள் - கொப்பூழ். பொக்கெனல் - விரைவுக் குறிப்பு. பொக்கை - குற்றம். பொங்கடி - யானை, சிங்கம். பொங்கத்தம்பொங்கோ - போரில் தோற்றவர் ஆடிக்கொண்டு கூறும் அபயக் குரல். பொங்கம் - பொலிவு, மிகுதி. பொங்கர் - மரக்கொம்பு, மலை, இலவு, வாடற்பூ. பொங்கலாடுதல் - பஞ்சு போலப் பரவி எழுதல். பொங்கல் - சோறுவகை, உயர்ச்சி, பருமை, மிகுதி, கள், பொலிவு, பொங்குகை. பொங்கழி - தூற்றாப் பொலி. பொங்குசனி - இரண்டாம் முறை வரும் ஏழரையாண்டுச் சனி. பொங்குதல் - கொதித்தல், கொந் தளித்தல், மிகுதல், பருத்தல், மேற்கிளர்தல், கோபித்தல், நுரைத் தெழுதல், வீங்குதல், செழித்தல், ஒலித்தல். பொசி - ஊன் நீர். பொசிதல் - கசிதல். பொசிவு - நெகிழ்வு. பொசுக்குதல் - வாட்டுதல், சாம்ப லாக எரித்தல். பொச்சம் - குற்றம், பொய். பொச்சாத்தல் - மறத்தல், இகழ்தல். பொச்சாப்பு - மறதி, குற்றம், உறுதியின்றி மனநெகிழ்ந்திருக் கை. பொச்சை - காடு, எரிந்த காடு, மலை, குற்றம், தொப்பை வயிறு. பொடி - தூள், புழுதி, மகரந்தம், மூக்குத் தூள், சாம்பல், திருநீறு, சிறு துண்டு. பொடிதல் - தூளாதல், தீய்தல், கோபித் தல், வெறுத்தல். பொடித்தல் - தூளாக்குதல், கெடுத் தல், அரும்புதல், தோன்றுதல், விளங் குதல், வியர்வரும்புதல், புளகித்தல், பொடியாதல். பொடிபடுதல் - உடைபடுதல். பொடிப்பு - புளகம். பொடியன் - அற்பன், சிறுவன். பொடியாடம் - அழிதல். பொடியாடி - சிவன். பொடுக்கெனல் - விரைவுக் குறிப்பு. பொட்ட - விரைவாக. பொட்டணம் - சிறு மூடை, ஒத்தடம். பொட்டம் - பாழிடம். பொட்டி - வேசி. பொட்டிமகன் - வேசிமகன், கெட்டிக் காரன் (வெறுப்பில் கூறும் கூற்று). பொட்டு - திலகம், ஒருவகைத்தாலி, அற்பம், துளி. பொட்டுக்கட்டுதல் - தாசிக்குத் தாலி கட்டும் சடங்கு. பொட்டுக்காறை - மகளிர் கழுத்தணி வகை. பொட்டுக்கேடு - இழிவு. பொட்டுப்பூச்சி - சிலந்திப்பூச்சி. பொட்டெழுதல் - அழிவுறுதல். பொட்டை - குருடு. பொதி - நிறைவு, மூடை, பலபண்டம், நிதி, சொற்பயன், பிணிப்பு, கட்டுச் சோறு, அரும்பு, கொத்து, முளை, தவிடு, மூங்கில் முதலியவற்றின் பட்டை, குடை, ஓலை, பொதியில். பொதிகைநிகண்டு - கல்லிடைக் குறிச்சி சுவாமி கவிராயர் செய்த தமிழ் நிகண்டு. பொதிசோறு - கட்டுச்சோறு. பொதிதல் - நிறைத்தல், உள்ளடக் குதல், மறைத்தல், கடைப்பிடித்தல். பொதிமாடு - சுமக்கும் எருது. பொதியப்பொருப்பன் - பாண்டியன். பொதியம் - பொதியமலை. பொதியவிழ்தல் - அரும்பு முறுக்க விழ்தல், மலர்தல். பொதியறுத்தல் - பணத்தைக் கவர்தல். பொதியறை - காற்றோட்டமில்லாத கீழறை. பொதியில் - அம்பலம், பொதியம். பொதிரெறிதல் - நடுங்குதல். பொதிர்தல் - வீங்குதல், நடுங்குதல், அஞ்சுதல். பொதிர்த்தல் - குத்துதல், முரித்தல், பருத்தல். பொதிர்வு - நடுக்கம், அச்சம். பொதிவைத்தல் - செல்வத்தைப் புதைத்து வைத்தல். பொது - பொதுமையானது, சிறப்பின் மை, சாதாரணமானது, சகசம், நடுவுநிலை, ஒப்புமன்று, பகிரங்க மானது, தில்லையம்பலம். பொதுக்கு - விலக்கு, மறைப்பு. பொதுக்குதல் - மறைத்தல். பொதுக்கை - அபிநய வகை. பொதுங்குதல் - வருந்துதல். பொதுச்சொல் - பலரறிசொல், இரு திணைக்கும் பொதுவான சொல். பொதுத்தல் - முள் பாய்தல், துளைத்தல். பொதுத்தன்மை - நடுவுநிலைமை, பெரும்பாலும் காணப்படும் குணம். பொதுநல அரசு - Common wealth. பொதுநலத்தார் - பொதுமகளிர். பொதுநலம் - பொது நன்மை, பொருள் கொடுப்பார் பெறும் சிற்றன்பம். பொதுநிறம் - வெண்மைக்கும் கறுப்புக் கும் இடையிலுள்ள நிறம். பொதுநீக்குதல் - தனக்கே உரிமையாக் குதல். பொதுநீங்குவமை - இயைபின்மை யணி. பொதுநெறி - யாவரும் செல்லும் வழி. பொதுநோக்கு - எல்லாரையும் ஒப்ப நோக்குகை, அலட்சியமான பார்வை. பொதுப்படுதல் - பொதுவாதல், ஒப்பாதல். பொதுப்பாயிரம் - நுவல்வோன் திறம், நுவலும்றின், கொள்வோன் கூற்று, கோடல் கூற்று ஆகியவற்றைக் கூறும் முன்னுரை. பொதுப்பெண்டு - பொதுமகள். பொதுப்பெயர் - இருதிணைக்கும் அல்லது அஃறிணை இருபாற்கும் பொதுவாக வரும் பெயர். பொதுமகள் - இடைக்குலப் பெண், வேசி. பொதுமக்கள் - பொதுசனங்கள், சிறப் பில்லாத மக்கள். பொதுமக்கள் தொல்லை - (Public nuisance). பொதுமை - சாமானியம், பொது வுடைமை, நன்மை. பொதுமொழி - சிறப்பில்லாத சொல், குறிப்பான பொருளில்லாத சொல். பொதும்பர் - இளமரக்கா. பொதும்பு - சோலை, குறுங்காடு, மரப்பொது, குகை. பொதுவர் - நடுவர், பொதுமகளிர், இடையர். பொதுவறிவு - சாதாரண அறிவு. பொதுவறுதல் - தனக்கே உரியதாதல். பொதுவியர் - இடைச்சியர். பொதுவியல் - பலவற்றுக்குப் பொது வாக உள்ள குணம். பொதுவில் - அம்பலம். பொதுவுடைமைக் கொள்கை - (Communication). பொதுவெழுத்து - ஆரியத்துக்கும் தமிழுக்கும் பொதுவாக உள்ள எழுத்து. பொதுளுதல் - நெருங்குதல், நிறைதல், தழைத்தல். பொத்தகம் - சித்திரமெழுதிய படங்கு, புத்தகம், நிலக்கணக்கு, மயிலிறகு. பொத்தர், பொத்தல் - துவாரம், குற்றம். பொத்தாறு - ஏர்க்கால். பொத்தான் - கொளுவி (Button) குமிழ் போன்ற அமைப்பு. பொத்தி - வாழைப்பூ, தானியக்கதிர், சீலை, பழைய சோழநகர், வரால். பொத்திரம் - எறி, ஆயுதம். பொத்திலம் - மரப்பொந்து. பொத்து - மூடுகை, பொந்து, வயிறு, தவறு, பொய், பல்லி. பொத்துதல் - புதைத்தல், மறைத்தல், தைத்துமூட்டுதல், தீமூட்டுதல், மாலைகட்டுதல், கலத்தல், நிறைதல். பொத்துப்படுதல் - காரியம் கை கூடாது தீமை பயத்தல். பொத்தை - உடம்பு, துவாரம். பொத்தி - உடல், பருமை. பொந்து - மரப்பொந்து, எலி, பாம்பு, முதலியவற்றின் வளை, பல்லி. பொந்தை - உடல். பொம்மக்காதேவி - தொட்டிய ருடைய குலதெய்வம். பொம்மலாட்டம் - பொம்மையை வைத்து ஆட்டும் நாடகம், மாயம். பொம்மல் - பொலிவு, மிகுதி, கூட்டம், சோறு, மகிழ்ச்சி, பாவை. பொம்முதல் - பொலிதல். பொம்மெனல் - அடர்த்திக் குறிப்பு, ஓர் ஒலிக் குறிப்பு. பொம்மை - பாவை. பொய் - உண்மையல்லாதது, போலி யானது, மாயை, நிலையாமை, மரப்பொந்து. பொய்க்கரிமாக்கள் - பொய்ச்சாட்சி கூறுவோர். பொய்கை - இயற்கையிலுண்டான நீர்நிலை. பொய்கையார் - களவழி நாற்பது செய்த புலவர். பொய்கையாழ்வார் - 10 திருமாலடி யாருள் ஒருவர். பொய்ச்சான்றேறுதல் - பொய்ச் சாட்சி சொல்லுதல். பொய்ச்சீத்தை - பொய் பேசும் கீழ் மகன். பொய்தல் - மகளிர் விளையாட்டு, சுற்றில், மகளிர் கூட்டம், பிடுங்கப்படு தல், துளைக்கப்படுதல், வீழ்த்துதல். பொய்த்தல் - தவறுதல், பின் வாங்குதல், கெடுதல், பொய் பேசு தல், வஞ்சித்தல். பொய்த்தேர் - பேய்த்தேர். பொய்ந்நெறி - தீயவழி. பொய்ப்பு - உண்மையற்றது. பொய்மையாளர் - பொய்யர். பொய்யடிமை - போலிப்பத்தி. பொய்யடிமையில்லாதபுலவர் - சிவபெருமானை வழிபடும் சங்கப் புலவர்களான தொகையடியார். பொய்யறை - பொய்க்குழி. பொய்யாடல் - சிறுவர் விளையாட்டு. பொய்யாப்புள் - நீர்ப் பறவைவகை. பொய்யாமை - பொய் சொல்லாமை, நடுநிலைமை. பொய்யாமொழி - குறள், வேதா கமம், மெய், தஞ்சைவாணன் கோவை ஆசிரியர். பொய்யிகந்தோர் - முனிவர். பொய்யிடை - நுண்ணிய இடை. பொய்யில்புலவன் - திருவள்ளுவர், மெய்ஞானி. பொய்யுகம் - கலியுகம். பொய்யுறக்கம் - கள்ளத் தூக்கம். பொரி - பொரிக்கப்பட்டது, பொரிக்கறி, பொரித்த நெல் முதலியன, எருமைக் கன்று. பொரிக்கஞ்சி - பொரிமாவால் சமைத்த கஞ்சி. பொரிதல் - வறுதல், தீய்தல், மெல்லென ஒலித்தல். பொரித்தல் - வறுத்தல், குஞ்சு பொரித்தல். பொரிமா - வறுத்த அரிசியின் மா. பொரியரை - மரத்தின் வெடித்த பொருக்குகள், அடிப்பகுதி. பொரியல் - பொரித்த உணவு. பொரிவிளாங்காய் - பணிகார வகை. பொரிவு - மாணிக்கக் குற்றத்துள் ஒன்று. பொரு - உவமை, ஒப்பு, தடை. பொருகளம் - போர்க்களம். பொருகு - சோறு. பொருக்கு - பருக்கை, மரப்பட்டை, வண்டல் மண். பொருக்கெனல் - விரைவுக் குறிப்பு. பொருட்காட்சிச்சாலை - நூதன பொருள்கள் காட்சிக்கு வைக்கப் பட்டிருக்குமிடம் (Museum). பொருட்குற்றம் - பாடலின் பொருளில் உண்டாகும் குற்றம். பொருட்குன்று - மேரு. பொருட்கை - அபிநய வகை. பொருட்செல்வம் - பொருளாகிய செல்வம். பொருட்டன்மை - பொருளிலுள்ள உருவ இயல்புகளை உள்ளவாறு அலங்கரித்துக் கூறும் அணிவகை. பொருட்டு - காரணம், நிமித்தமாக. பொருட்டொடர் நிலைச் செய்யுள் - காவியம். பொருட்படுத்துதல் - மதித்தல். பொருட்பால் - அறம் பொருள் இன்பம் என்பவற்றுள் பொருளைப் பற்றிக் கூறும் பகுதி. பொருட்பிறிதின்கிழமை - ஒரு பொருளுக்குத் தன்னிலும் வேறான தோடு உள்ள உரிமை. பொருட்பின்வருநிலை - முன் வைத்த பொருளே பின்னும் பல இடங்களில் வரும் அணி. பொருட்பெண்டீர் - விலைமாதர். பொருட்பெயர் - பொருட் பெயரடி யாகப் பிறந்த பெயர்ச் சொல். பொருணிலை - பொருளின் தன்மை. பொருணூல் - அகப்பொருள் நூல், அர்த்த நூல். பொருண்மயக்கம் - தன் பொருளில் முடியாது வேறு ஒன்றின் பொருளி லும் உருபு வருகை. பொருண்மன்னன் - குபேரன். பொருண்மை - கருத்துப் பொருள், உளதாந் தன்மை. பொருண்மொழி - உபதேச மந்திரம், மெய் வார்த்தை. பொருண்மொழிக்காஞ்சி - இம்மை மறுமைகளில் உறுதி தரும் பொருள்களை ஒருவனுக்குக் கூறுதல் பற்றிய புறத்துறை. பொருதல் - போர், சூதாடுதல், மாறுபடுதல், ஒப்பாதல், பொருந் துதல். பொருத்தம் - பொருந்துகை, தகுதி, இணக்கம், உடன்படிக்கை. பொருத்து - இணைப்பு, உடல் மூட்டு, ஒன்று சேர்க்கை. பொருத்துதல் - பொருந்தச் செய்தல், உடன்படுத்துதல், கூட்டுதல், போர் மூட்டுதல். பொருநராற்றுப்படை - கரிகாற் சோழனை முடத்தாமக் கண்ணியார் பாடிய ஆற்றுப் படை நூல். பொருநல் - தாமிரபரணி. பொருநன் - வீரன், வலிமையுடை யவன், அரசன், குறிஞ்சி நிலத் தலைவன், படைத்தலைவன், உவ மிக்கப்படுவோன், தலைவன், பகைவன், ஏர்க்களத்தேனும் போர்க்களத்தேனும் சென்று பாடும் கூத்தன். பொருநாறு - பொருநராற்றுப்படை. பொருநை - தாமிரபரணி, ஆன்பொருநை. பொருநைத்துறைவன் - சேரன், பாண்டியன். பொருந்தம் - பொருநை. பொருந்தர் - கூடை முதலியன முடைவோர். பொருந்தலன் - பகைவன். பொருந்தாக்காமம் - பெருந்திணை. பொருந்தார் - பகைவர். பொருந்துதல் - மனமிசைவதால், தகுதி யாதல், நிகழ்தல், இயலுதல், கலத்தல், அடைதல், அளவளாவுதல், சேர்தல். பொருப்பரையன் - இமயமலை. பொருப்பன் - குறிஞ்சி நிலத் தலை வன், பாண்டியன், மலைக்குரியவன், இமயமலை. பொருப்பு - மலை, பக்கமலை. பொருப்பெறிந்தான் - முருகக் கடவுள். பொருமல் - அழாது விம்முகை, அச்சம், துன்பம், வயிறு ஊதும் நோய் வகை, பூரிப்பு. பொருமுகவெழினி - அரங்கின் இரண்டு வலத் தூணகத்தும் பொருந்திய உருவுதிரை. பொருவ - ஓர் உவமச்சொல். பொருவு - ஒப்பு. பொருவுதல் - ஒத்தல், உராய்தல், நேர்தல். பொருளடக்கம் - பொருளட்டவணை. பொருளதிகாரம் - அகப்பொருள் புறப்பொருள்களின் இலக்கணம் கூறும் பகுதி. பொருளறை - பொக்கிச் சாலை. பொருளன் - பரம்பொருள். பொருளாகுபெயர் - முதற் பொரு ளின் பெயர் அதன் சினைக்கு ஆகும் ஆகு பெயர். பொருளாதாரம் - பொருள வரவு செலவு சம்பந்தம் (Economy). பொருளாள் - மனைவி. பொருளானந்தம் - ஆனந்தக் குற்ற வகை. பொருளிசையந்தாதி - ஓசையா லன்றிப் பொருளால் வரும் அந்தாதித்தொடை. பொருளுபதை - அமைச்சர் முதலி யோரை அரசன் தெரிந் தெடுக்கும் போது வேற்றரசனிடம் அதிக பொருள் பெறலாம் என்று கூறுவித்துச் சோதிக்கும் முறை. பொருளுரை - மெய்யுரை, பயனுள்ள வார்த்தை, புகழுரை, மந்திரம். பொருளுரையாளர் - சான்றோர். பொருள் - யாதும் ஒன்று, சொற் பொருள், காரியம், மெய்மை, அறிவு, பயன், செல்வம், பொன், சுணங்கு. பொருள்கோள் - பொருள் கொள்ளும் முறை. பொருள்செய்தல் - திரவியம் தேடுதல். பொருள்வயிற்பிரிவு - பொருள் தேடுதற் காரணம் பற்றித் தலை வியைத் தலைவன் பிரிகை. பொருள்விலையாட்டி - விலை மாது. பொரேனெனல் - சடுதிக் குறிப்பு. பொலங்கர் - இந்திரனுடைய சோலை. பொலங்கலம் - பொன்னாபரணம். பொலம் - பொன், அழகு, ஆபரணம், மீன் கொத்திப்புள். பொலன் - பொன். பொலி - தூற்றா, நெற்குவியல். பொலிசை - இலாபம். பொலிசையூட்டு - வட்டிபெறுகை. பொலிதல் - செழித்தல், மிகுதல், விளங்குதல், நீடுவாழ்தல், நிகழ்தல். பொலிபாடுதல் - சூடடிக்கும்போது உழவர் பாட்டுப்பாடுதல். பொலிப்பாடு, பொலிப்புக்கடா - பொலி எருது. பொலியெருது - பசுக்களைச் சினை யாக்கும் பொருட்டு வளர்க்கப் படும் கடா. பொலிவீடு - கோயிற்செலவுக்கு விடப்படும் கிராமம். பொலிவு - முகமலர்ச்சி, அழகு, செழிப்பு, மிகுதி, எழுச்சி, பொன். பொலிவுமங்கலம் - அரசன் மகிழப் பிறந்த பாலனைப் பலரும் பொண் டாடுதலைக் கூறும் புறத்துறை. பொல்லம் - தைத்தல், இணைத்தல். பொல்லம்பொத்துதல் - கிழிந்த துணியின் இரண்டு தலையையும் கூட்டித் தைத்தல். பொல்லர் - தையற்காரர். பொல்லா - தீமையான. பொல்லாக்காட்சி - மயக்க அறிவு. பொல்லாங்கு - தீமை, குற்றம், கேடு, மறதி. பொல்லாது - தீயது. பொல்லாநிலம் - சகதி நிலம். பொல்லாமணி - துளையிடப்படாத மணி, மாசற்ற கடவுள். பொல்லாமை - குற்றம். பொல்லாவாறு - தீச்செயல். பொல்லான் - தீயவன், குதிரை வகை. பொல்லுதல் - துளைத்தல். பொழி - கணு, உரிக்கப்பட்டது, வயல் வரம்பு. பொழிதல் - பெய்தல், மிகச் செலுத்துதல், நிறைதல், தங்குதல். பொழிப்பு - பொழிப்புரை, நூற்பதிகம். பொழிப்புத்திரட்டுதல் - பிண்டப் பொருள் கூறுதல். பொழிப்புத்தொடை - அளவடியுள் முதற் சீர்க்கண்ணும் மூன்றாஞ் சீர்க் கண்ணும் மோனை முதலாயின வரத்தொடுப்பது. பொழிப்புரை - பொருளைத் திரட்டிக் கூறும் உரை. பொழில் - பெருமை, சோலை, பூந்தோட்டம், பூமி, உலகம், நாடு கூறு. பொழிவு - மழைபெய்கை, பெரு குகை. பொழுது - காலம், வாழ்நாள், கணம், சூரியன். பொழுதுகண்டிரங்கம் - பிரிவாற்றாத் தலைவி மாலைப்பொழுது கண்டு வருந்துகை. பொழுது போக்கிச் சங்கம் - கிளப்புகள் (Clubs). பொழுதுபோக்கு - காலங்கழிக்கை. பொழுதொடுபுணர்தல் - காரியங் களைக் காலத்துக் கேற்பக் கொண்டு நடத்துகை. பொளி - உளியாலிட்ட துளை. பொளிதல் - உளியால் கொத்துதல், பிளத்தல், இடித்தல். பொள் - துளை. பொள்ளல் - துளைக்கை, துவாரம், அப்ப வர்க்கம். பொள்ளுதல் - துளைத்தல். பொள்ளெனல் - விரைக்குறிப்பு. பொள்ளை - துளை. பொறாமை - பிறர் ஆக்கம், பொறாமை, பொறுமையின்மை, அழுக்காறு. பொறி - வரி, இரேகை, புள்ளி, தழும்பு, முத்திரை, விருது, வண்டு, பீலி, தேமல், இயந்திரம், விதி, மூட்டு வாய், ஐம்பொறி, மனம், அறிவு, நெருப்புப் பொறி, மதி லுறுப்பு, மரக்கலம், தந்திரம், நெற்றிப் பட்டம், இலக்குமி, செல்வம், பொலிவு, பூர்வ புண்ணியம், திரட்சி. பொறிகலங்குதல் - அறிவு மயங் குதல். பொறிதல் - பறிதல். பொறித்தல் - முத்திரையிடுதல், எழுதுதல், சித்திரித்தல், அழுத் துதல். பொறிமுதல் - உயிர். பொறியறை - ஆதிட்டமற்றவன். பொறியியல் - எந்திர அமைப்பு இயல். பொறியிலார் - கீழோர். பொறியொற்றோலை - முத்திரை யிட்ட ஓலைக் கடிதம். பொறிவாயில் - புலன். பொறிவு - பறிகை. பொறுதி - பொறுமை, மன்னிப்பு. பொறுத்தல் - சுமத்தல், தாங்குதல், மன்னித்தல், சகித்தல், தாமதித்தல். பொறுப்பு - பாரம். பொறுமை - சகிப்பு, அடக்கம். பொறை - சிறு குன்று, பாரம், பூமி, பொறுமை, அடக்கம், கருப்பம், வலிமை. பொறையன் - சேரன், தரும புத்திரன். பொறையாட்டி - பலி கொடுக்கும் பூசாரிப் பெண், பொறையுள்ளவள். பொறையாற்றுதல் - பொறுத்தல். பொறையுயிர்த்தல் - பிரசவித்தல், இளைப்பாறும்படி சுமை இறக்குதல். பொற்கிழி - சீலையின் முடிந்த பணம். பொற்கூடங் - ஏம கூடம் (இமயத்துக்கு வடக்கிலுள்ளது). பொற்கெனல் - பொன்னிறமுடைய தாதற் குறிப்பு. பொற்கொல்லன் - தட்டான். பொற்கோள் - வியாழன். பொற்சபை - கனகசபை. பொற்சின்னம் - போர்க்குச் செல்லும் வீரர் வாயிலிட்டுக் கொள்ளும் பொன் துண்டு. பொற்சீந்தில் - நற்சீந்தில். பொற்கண்ணம் - விழாக்களில் மக்கள் உடலின்மீது தூவப்படும் வாசனைப் பொடி. பொற்சூட்டு - நெற்றிப்பட்டம். பொற்ப - பொலிவு பெற, ஓர் உவமச் சொல். பொற்படி - பொன்னுலகம். பொற்கண்டாரம் - பொன்னும் பொற்கலங்களும் வைக்கும் அறை. பொற்பாதம் - திருவடி. பொற்பாவை - அழகிய பெண், பொன்னாலான பாவை. பொற்பிதிர் - பசலை. பொற்பு - அழகு, அலங்காரம், பொலிவு, மிகுதி, தன்மை. பொற்புறுத்துதல் - அலங்கரித்தல். பொற்பூ - பாணர்க்கு அரசர் அளிக்கும் தாமரை வடிவான பொன் பூ. பொற்ற - பொன்னாலாகிய, சிறந்த. பொற்றலைக்கையாந்தகரை - பூடு வகை. பொற்றாப்பு - விழா. பொற்றேகராசன் - பொற்றலைக் கையாந்திகரை. பொற்றை - சிறுமலை, கற்பாறை, மலை, சிறுதூறு, கரிந்தகாடு. பொற்றொடி - பொன்னாலாகிய தோள் வளை, பெண். பொற்றோரை - இடையிலணியும் பொன்வடம். பொன் - தங்கம், உலோகம், இரும்பு, செல்வம் ஆபரணம், திருமாங் கலியம், பொன் நாணயம், பொலிவு, பசலை, அழகு, இலக்குமி, வியா ழன், சூரியன், பெண்குறி. பொன்கண்ணன் - இரணியாக்கன். பொன்செய்தல் - நற்காரியம் செய்தல். பொன்செய்கொல்லன், பொன் செய்புலவன் - தட்டான். பொன்ஞெகிழி - உள் மணியிட்ட சிலம்பு. பொன்படுதல் - தோற்றப் பொலி வுறுத்தல். பொன்புனைதல் - மங்கலியம் பூட்டி மணத்தல். பொன்பெயரோன் - இரணிய கசிபு. பொன்மணியார் - சங்க காலப் புலவர் (குறு. 391). பொன்மயம் - பொன்னிறமான பளபளப்பு. பொன்மரம் - சுவர்க்கத்திலுள்ள பொன் மயமான மரம். பொன்மலை - மாமேரு, இமயமலை, அத்தகிரி, திரிபுரங்களுள் ஒன்று. பொன்மலைவல்லி - பார்வதி. பொன்மாளிகை - அரசன் தங்கும் பொன்மாடம். பொன்முடியார் - சங்க காலப் புலவர்; பெண்பாலினர்; இவரும் அரிசில் கிழாரும் தகடூர் யாத்திரை என்னும் நூல் செய்தனர். பொன்முலாம் - பொன்பூச்சு. பொன்மை - பொன்னிறம். பொன்வண்ணக்காரினை - கந்தகம். பொன்வண்ணத்தந்தாதி - சேரமான் பெருமாள் நாயனார் செய்த நூல்களுள் ஒன்று. பொன்வாய்ப்புள் - சிச்சிலிக் குருவி (மீன் கொதிப்புள்). பொன்விலைமகளிர் - விலைமாதர். பொன்வில்லி - சிவன். பொன்விழா - 50ஆம் ஆண்டுக் கொண்டாட்டம். பொன்வினைமாக்கள் - தட்டார். பொன்றக்கெடுதல் - முற்றும் அழிதல். பொன்றாவல்லி - சீந்தில். பொன்றுதல் - அழிதல், தவறுதல். பொன்றொடுதல் - பொன்னைத் தொட்டுச் சத்தியம் செய்தல். பொன்னகர் - அமராவதி, சிவ லோகம். பொன்னஞ்சிலம்பு - பொன்மலை. பொன்னடர் - தகட்டுப் பொன். பொன்னம்பர் - ஒருவகை வாச னைப் பொருள். பொன்னம்பலத்தார் - கைக்கோ ளரைச் சேர்ந்த பிச்சைக்கார வகையினர். பொன்னம்பலம் - பொன்னா லமைந்த கூடம், சிதம்பரத்திலுள்ள கனகசபை. பொன்னரி - கிண்கிணி முதலிய வற்றுள் இடும் பொற்பரல். பொன்னரிமாலை - கழுத்தணி வகை. பொன்னவன் - பொன் போலருமை யானவன், வியாழன், கனா நூலியற்றிய புலவர் (14ம் நூ.). பொன்னறை - பொற்பேழை, அரசன் தங்கும் பொன்மண்டபம், பொக்கிச மாலை. பொன்னாகனார் - சங்க காலப் புலவர் (குறு. 114). பொன்னாங்காணி - பூடு வகை. பொன்னாடை - பீதாம்பரம். பொன்னாட்சி - வியாழக்கிழமை. பொன்னாண் - மாங்கலியம். பொன்னாந்தட்டான் - பறவை வகை. பொன்னாயகன் - நெல் வகை. பொன்னி - காவிரி ஆறு. பொன்னிடம் - பிரமரந்திரம். பொன்னித்துறைவன் - சோழன். பொன்னிநாடான் - சோழன். பொன்னிநாடு - சோழநாடு. பொன்னிமினை - தாதுப் பொருள் வகை. பொன்னிரேக்கு - பொன் இலைத் தகடு. பொன்னிலம் - தேவலோகம். பொன்னிலேபிறத்தல் - இரணி கற்பம். பொன்னிற்பொதிதல் - பொன் போலப் பேணிக் கொள்ளுதல். பொன்னுக்குவீங்கி - கூகைக்கட்டு. பொன்னுடம்பு - தேவ உடல். பொன்னுரை - உரை கல்லில் உரைத்த பொன்னின் தேய்மானம். பொன்னுலகம் - தேவலோகம். பொன்னூசல் - பொன்னாலாகிய ஊஞ்சல். பொன்னுமத்தை - செடி வகை. பொன்னூல் - பொற்கம்பி, கழுத் தணி வகை. பொன்னெயில், பொன்னெயில் வட்டம் - சுவர்க்கமயமான மாளிகை. பொன்னெயினாதன் - அருகக் கடவுள். பொன்னெழுத்து - ஒருவகை ஆடை. பொன்னேர் - பருவ காலத்தில் நல்ல நாளில் முதன்முறையாக உழும் கலப்பை. பொன்னோர் - தேவர். பொன்னோலை - பெண்கள் காதணி. போ போக - தவிர. போககாரகன் - சாதகனின் போகங் களைக் குறிக்கும் சுக்கிரன். போகக்கலப்பை - போக நுகர்ச்சிக் குரிய பல்வகைப் பண்டம். போகடுதல் - கழித்து விடுதல், போக விடுதல், விலகுதல். போகத்தானம் - போகங்களைக் குறிக்கும் ஏழாமிடம். போகநாதர் - 18 சித்தருள் ஒருவர். போகநீர் - சுக்கிலம். போகபுவனம் - வினைப்பயனை நுகரும் சுவர்க்கமும் நரகமும். போகபூமி - சுவர்க்கம். போகபூமியர் - 18 கணத்துளொரு சாரார். போகபோக்கியம் - அனுபவப் பொருள். போகமீன்றபுண்ணியன் - சிவன். போகம் - இன்பம், புணர்ச்சி, புசிக்கை, செல்வம், பாம்பினுடல், வியூகம். போகர் - சித்தருளொருவர், தேவர். போகல் - நீளம். போகவதி - நாகலோகத்துத் தலைநகரம், நல்லனுபவளளமுடைய பெண். போகந்தராயம் - நுகர்தற்குரிய போகங் களை விலக்குகை. போகாறு - பொருளைச் செலவிடும் வழி. போகி - இந்திரன், சுக்கிரன், பாம்பு, நல்லனுபவமுடையவன். போகிபண்டிகை - பொங்கல் நாளுக்கு முன்றாள் கொண்டாடும் கொண் டாட்டம். போகில் - பூவரும்பு, கொப்பூழ், பறவை. போகூழ் - இழக்கச் செய்யும் விதி. போகொட்டுதல் - போகவிடுதல். போக்கடித்தல் - இழத்தல். போக்கடியறுத்தல் - செல்லுதல். போக்கம் - மஞ்சாடி மரம். போக்கிடம் - ஒதுக்கிடம். போக்கியம் - சுக அனுபவத்துக்கு உரியது. போக்கிரி, போக்கிலி - துட்டன், கதி அற்றவன். போக்கு - புகல், செயல், வழி, நடை, மீட்சி, அடைக்கலம், கேடு, சிறப்பு, மரக்கன்று. போக்குவரத்து - போதலும் வருதலும். போசலம் - தஞ்சாவூர் மராட்டிய அரசரின் குலப் பெயர். போசனகத்தூரி - கடாரநாரத்தை. போசனக்குடாரி - சீரகம். போசனம் - உணவு. போசனாங்கம் - நால்வகை உண்டி களையும் உதவும் கற்பகம். போஞ்சிக்காய் - அவரைக் காய் வகை. போடம் - 56 தேசத் தொன்று, தகர்க்கை, உடைத்தல். போடுதடி - பயனற்றவன். போடுதல் - எறிதல், இடுதல். போட்கன் - பொய்யன். போணி - முதல் விற்பனை. போத - செவ்வையாக, விரைவாக, போதுமானபடி. போதகம் - யானைக் கன்று, இளமை, யானை, விலங்கின் பிள்ளை, உப தேசம். போதகன் - கல்வி கற்பிப்போன். போதந்து - ஒரு சொல் விழுக்காடு, (பொருளில்லாத சொல்). போதம் - ஞானம், அறிவு, மரக்கலம், பரணிநாள். போதர - அதிகமாக. போதரவு - போதை, நயச்சொல். போதருதல் - செல்லுதல், திரும்புதல், வருதல், பெறப்படுதல், கொண்டு போதல். போதனார் - சங்க காலப் புலவர் (நற். 110). போதனை - கற்பிக்கை. போதன் - பிரமன், அருகன். போதா - பெரு நாரை. போதாந்தம் - ஞான முடிவு. போதாயனர் - தருமநூலும் கற்ப நூலும் இயற்றிய முனிவர். போதாயனீயம் - போதாயனர் செய்த ஒரு நூல். போதாலயம் - ஞானத்துக்கு இருப் பிடம். போதி - அரசு, ஞானம், மலை. போதிகன் - ஆன்மா. போதிகைக்கட்டை - தூண்மேல் வைக்கும் தாங்குகட்டை. போதிசத்துவன் - ஞான முதிர்ச்சி யால் அடுத்த பிறப்பில் புத்தனாக ஆவதற்குரியோன், புத்தன். போதிப்பகவன் - புத்தன். போதியார் - பௌத்தர். போதினன் - பிரமன். போது - பொழுது, பொழுதில், மலரும் பருவத்து அரும்பு, செவ்வி, மலர், சமயம். போதுசெய்தல் - அலருதல், மூடுதல், உண்ணுதல். போதுதல் - செல்லுதல், ஒழுகுதல். போத்தரசர் - பல்லவர் பட்டப் பெயர் களுள் ஒன்று. போத்தருதல் - போய்க் கொண்டு வருதல், கொடுத்தனுப்புதல், புறப்பட விடுதல், போதலைச் செய்தல், வெளி வருதல். போத்தீரி - பன்றி. போத்திருத்துவம் - அனுபவிக்கும் தன்மை. போத்து - பெற்றம் எருமை புலி மரை புல்வாய் முதலிய விலங்கேற்றின் பொது, மயில் எழால் என்பவற்றின் ஆண், ஓரறிவுயிரினிளமை, பொந்து, விலங்கு துயிலிடம், மனக் குற்றம். போத்துக்கால் - கரும்பு. போந்தின்தாரோன் - சேரன். போந்து - பல்லி. போந்தை - பனை, அனுடநாள். போந்தைப்பசலையார் - சங்க காலப் புலவர் (அகம். 20). போப்பு - கத்தோலிக்கரின் தலைமைக் குரு (Pope). போப்பையர் - தமிழ் வல்ல ஆங்கிலப் பாதிரியார் (1810 - 1907). போயர்கள் - ஒரு சாதியார் (Boers). போய்ப்பாடு - புகழ், பெரிதாக இருக்கை. போர - மிக. போரடித்தல் - நெற்கதிரை அடித்தல். போரப்பொலிய - நிறைவாக. போராட்டம் - சண்டையிடுகை, போட்டி. போரி - திருப்போரூர். போரெதிர்தல் - போர்மேற் கொள்ளுதல். போரேறு - போர் செய்யவல்ல காளை, போர்வீரன். போர் - சண்டை, போட்டி. போர்க்கதவு - இரட்டைக் கதவு. போர்க்களத் தொழிதல் - போரில் புறங்கொடாது வீரன் போர்க் களத்தே பட்டத்தைக் கூறும் புறத்துறை. போர்க்களரி - போர்க்களம். போர்ச்சுகீசியர் - போர்ச்சுக்கல் நாட்டினர். போர்பு - தானியப்போர். போர்ப்பு - போர்வை, நெற்போர். போர்ப்பூ - போரில்வீரர் அணிந்து கொள் ளும் அடையாளப் பூ. போர்மகள், போர்மடந்தை - துர்க்கை, வீர இலக்குமி. போர்முகம் - போர்முகப்பு, போர் முனைந்து நிகழுமிடம். போர்வை - மேல் மூடும் துணி, தோல், வாள் முதலியவற்றின் உறை, தேர்த் தட்டின் வெளி மறையப் பாவின பலகை. போலி - ஒப்புடையது, ஒப்பு, பொய். போலிஎழுத்து - ஒரு எழுத்துக்குப் பதிலாக வரும் எழுத்து. போலிநாணயம் - கள்ள நாணயம். போலிநியாயம் - நியாயம்போல் காணப் படும் நியாயமற்றது. போலிமை - போன்றிருத்தல் (Mimicry). போலுதல் - ஒத்தல். போலும் - ஓர் அசைச்சொல். போலோனியம் - உலோக வகை. போல் - ஓர் உவம உருபு, ஒர் அசைச் சொல் வெற்றி, வாள். போவித்தல் - போக்குதல். போவு - போகை. போழம் - பிளவு, துண்டம், தோலால் அமைந்த வார், தகடு, வார், பனங் குருத்து. போழ்க்கமை - ஒழுங்குக்கேடு. போழ்தல் - பிளத்தல், கிழித்தல், ஊடுருவுதல். போழ்து - பொழுது, நன்முகூர்த்தம். போழ்முகம், போழ்முகி - பன்றி. போழ்வாய் - பிளந்தவாய், பொக்கை வாய். போறல் - போலுதல். போற்றரவு - பேணுகை. போற்றன் - பாட்டன். போற்றார் - பகைவர். போற்றி - புகழ்மொழி, மலையாளப் பிராமணர், துதி. போற்றிசைத்தல் - துதித்தல். போற்றிப்பஃறொடை - உமாபதி சிவசாரியார் இயற்றிய சைவ சித்தாந்த நூல். போற்றீடு - பாதுகாவல் வகை. போற்றுதல் - துதித்தல், வணங்குதல், பாதுகாத்தல், பரிகரித்தல், கடைப் பிடித்தல், உபசரித்தல், கருதுதல், மணத்துக் கொள்ளுதல். போற்றுநர் - சுற்றத்தார், நன்கு உணர்ந்தார். போனகக்குருத்து - வாழையிலை. போனகம் - உணவு, அப்பவருக்கம், உண்கை. போனம் - போனகம். போன் - பொறி. பௌ பௌடியம் - இருக்குவேதம். பௌதிகப்பிரமசாரி - பிரமசாரிய விரதம் முடித்த மணம் புரிவோர். பௌதிகம் - பூத சம்பந்தமானது. பௌத்தம் - புத்தமதம். பௌத்தன் - புத்த சமயத்தான். பௌத்திரன் - பேரன். பௌத்திரி - பேர்த்தி. பௌமம் - பூமி சம்பந்தமானது. பௌமன் - செவ்வாய். பௌரவர் - பூருவின் வமிசத்தார். பௌராணிகன் - புராணத்தைப் பின்பற்றுபவன். பௌரணிமி, பௌர்ணமி - பூரணை, நிறைமதி நாள். பௌவம் - கடல், ஆழம். பௌழியம் - பௌடியம். பௌனி - இராக வகை. ம ம - சிவன், இயமன். மஃகான் - மகர ஒற்று. மக - பிள்ளை. மகக்குழை - மாஇலை. மகசிரம் - மிரூகசீரிடநாள். மகச்சோறு - குழந்தைகட்குச் சோறளிக்கும் அறம். மகடூஉ - பெண், மனைவி. மகடூஉக்குணம் - நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் நாற் குணம். மகடூஉமுன்னிலை - பெண்ணை முன்னிலைப்படுத்திக் கூறுகை. மகட்கருமம் - மணந்து கொள்கை. மகட்கொடை - தன்மகளை மணம் செய்து கொடுக்கை. மகட்கோடல் - பெண்ணை மணம் செய்து கொள்ளல். மகட்பாற்காஞ்சி - முதுகுடித் தலைவ னிடம் நின்மகளைத் தருக என்று கேட்கும் அரசனோடு அவன் மாறு பட்டு நிற்பதைக் கூறும் புறத்துறை. மகட்பேசுதல் - மணத்துக்குப் பெண்ணை நிச்சயித்தல். மகண்மறுத்து மொழிதல் - சிற்றரசரது மகளை மணத்தற்குக் கேட்ட பகை வீரர்க்கு அவர் மறுத்த மொழிதலைக் கூறும் புறத்துறை. மகண்மா - பெண்வடிவம் கொண்ட ஒரு விலங்கு. மகண்மை - பெண்தன்மை, மகளாகுந் தன்மை. மகதந்திரம் - ஒரு சிற்ப நூல். மகதம் - தென்பீகார், மகத மொழி. மகதவன் - மகத தேசத்தவன். மகதி - நாரதர், வீணை, பார்வதி. மகதேசன் - மகத தேசத்தரசன். மகதை - திப்பிலி, மகதம். மகபதி - இந்திரன். மகப்பால் வார்த்தல் - அநாதைப் பிள்ளைக்குப் பால் வார்த்தலாகிய தருமம். மகப்பெறுவித்தல் - பிள்ளைப் பேற்றுக் காலத்தில் செய்யும் உதவி. மகப்பேறு - பிள்ளைப்பேறு. மகமாயி - பார்வதி, பெரியம்மைக் குரிய தேவதை. மகமேரு - மகாமேரு. மகமை - வியாபாரிகள் தங்கள் இலாபத்திலிருந்து தருமத்திற்குக் கொடுக்கும் நிதி, பழைய நிலவரி வகை. மகம் - யாகம், 10 ஆவது நட்சத்திரம். மகம்பூ - பெருஞ்சீரகம். மகயிரம் - மிருக சீரிடம். மகரகுண்டலம் - சுறாமீன் வடி வமைந்த காதணி. மகரகேது - மகரக் கொடியோன். மகரக்குறுக்கம் - தன்மாத்திரையில் குறைந்த மகரமெய். மகரக்கொடியோன் - மன்மதன். மகரசங்கிராந்தி - தை மாதப் பிறப்பு. மகரசலம் - கடல். மகரதோரணம் - மீன் வடிவமைந்த ஓர் அலங்காரத் தொங்கல் மகரநீர் - கடல் மகரந்தக்கேசரம் - மகரந்தப் பையைத் தாங்கும் மெல்லிய காம்பு (Stamen). மகரந்தப்பை - மகரந்தமிருக்கும்பை (Anther). மகரந்தம் - பூந்தாது, பூந்தேன், கள், வண்டு, குயில், தேமா. மகரப்பருவாய் - அங்காந்த சுறா மீன் வடிவாகச் செய்த தலைக் கோலம். மகரமீன் - சுறாமீன். மகரமுகம் - அபிநயவகை. மகரம் - சுறாமீன், முதலை, ஒரு பேரெண், குறங்குசெறி அணி, மகரராசி, தை, மாதம், மகரந்தம். மகரயாழ் - மீன் வடிவினதாய் 19 நரம்பு கொண்ட யாழ். மகரரேகை - செல்வத்தைக் காட்ட உள்ளங் கையிலமைந்த ரேகை. மகரவலயம் - மகரப்பகுவாய். மகரவாகனன் - வருணன். மகரவாய்மோதிரம் - கால் மோதிர வகை. மகரவியூகம் - சூறாமீன் வடிவான படை வகுப்பு. மகரவீணை - மகரயாழ். மகரவுச்சன் - செவ்வாய். மகரன் - சனி. மகராசி - இராணி, செல்வமுள்ளவள். மகராயனம் - சூரியன் வடக்கு நோக்கித் திரும்புங் காலம். மகராலயம் - கடல். மகரி - கடல். மகரிகை - அணிகளிலமைந்த சுறா மீன் வடிவு, மகர வடிவாகச் செய்த பெட்டி. மகரிடி - பெரிய முனிவர். மகலோகம் - மேலேழு உலகத் தொன்று. மகவான் - புத்திரப் பேறுடையவன், இந்திரன், யாகம் செய்பவன். மகவின்கோள் - வியாழன். மகவு - குழந்தை, மகன், மரத்தில் வாழ்விலங்கின் பிள்ளை, குழந்தை களை வளர்த்தலாகிய அறம். மகவேள்வி - புத்திரனைப் பெற வேண்டிச் செய்யும் யாகம். மகவோட்டம் - மாசி மாதத்து மக நட்சத்திரத்தின் தென்பாகத்தில் செல்லின் செழிப்பையும் வட பாகத்தில் செல்லின் பஞ்சத்தையும் குறிப்பதான சந்திரனது கதி. மகளிரான்மலர்மரம் - மகிழ், ஏழிலைப் பாலை, பாதிரி, புன்னை, அசோகு, குருக்கத்தி, மரா, செண் பகம். மகளிர் - பெண்கள். மகளிர்சாதி - அருணி, வடவை, அத்தினி என்ற மூவகைப் பெண்கள். மகளிர்பருவம் - பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என்ற ஏழும்; வாலை, தருணி, பிரவுடை, விருத்தை என்ற நான்கும். மகள் - புதல்வி, மனைவி. மகற்பலன் - பெரும்பலன். மகன் - புதல்வன், ஆண்பிள்ளை, சிறந்தோன், வீரன், கணவன். மகன்றில் - ஆண் பெண்களுள் ஒன்றை விட்டு ஒன்று பிரியாத நீர் வாழ் பறவை வகை. மகா - பெருமையான. மகாகண்டம் - பாலி மொழியிலுள்ள ஒரு பௌத்த நூல். மகாகாளமூர்த்தி - உருத்திரன். மகாகாளர் - மகாசாத்தாவின் வீரருள் தலைமை பெற்றவன். மகாகாளி - சத்திகளிலொருத்தி. மகாகாளிசரண் - களா விழுது. மகாகிதி - கோடாகோடி. மகாகும்பம் - நூறாயிரங்கோடி. மகாகெசம் - நூறு முழம் கொண்ட அளவு. மகாகோடி - ஒரு பேரெண். மகாசங்கம் - ஆயிரம் கோடாகோடி, குபேரன் நிதியிலொன்று, மகாநாடு. மகாசங்காரம் - சர்வசங்காரம். மகாசண்டம் - நரக வகை. மகாசண்டன் - யமனின் ஏவ லாளருள் ஒருவன். மகாசதிக்கல் - உடன்கட்டை ஏறினவளின் ஞாபகத்துக்காக அவள் வடிவம் பொறித்த கல். மகாசத்தி - சிவசத்தி. மகாசபை - ஊர்ப்பொதுக் காரியங் களை நிர்வாகிக்கும் அதிகார சபை. மகாசமுத்திரம் - பெருங்கடல், ஒரு பேரெண். மகாசலம் - புண்ணிய நீர். மகாசனம் - ஊரில் முதன்மை யானவர். மகாசன்னிதானம் - அருள் திருவாளர், ஸ்ரீலஸ்ரீ. மகாசாகரம் - ஒரு பேரெண். மகாசாத்திரன் - சமயங்களின் மூலசாத்திரங்களைப் பயின்றவன். மகாசாந்தபனம் - ஒரு விரதம். மகாசாமந்தன் - பரிய சேனாபதி. மகாசிவராத்திரி - மாசி மாதத்துக் கிருட்டிண பக்கத்துச் சதுர்தசியும் திருவோணமும் கூடிய இராத்திரி. மகாசைவன் - சிவதீட்சை பெற்ற பார்ப்பான். மகாசோபம் - ஒரு பேரெண். மகாதசை - சாதகனுக்கு ஒரு கிரகத்தின் நடப்புக் காலம். மகாதண்பனை - ஒரு பேரெண். மகாதமனி - இருதயத்திலிருந்து சுத்த இரத்தத்தை உடலுக்கு எடுத்துச் செல்லும் குழாய் (Aorta). மகாதலம் - பூமி, கீழேலுலகத் தொன்று. மகாதிசை - மகா தசை. மகாதேவன் - கடவுள், சிவன். மகாதேவி - பார்வதி, தலைமை அரசி. மகாநாடு - மகாசனங்களின் கூட்டம். மகாநானிகம் - போரில் பயன்படும் யந்திர வகை. மகாபதுமபெந்தம் - சித்திரக் கவி வகை. மகாபதுமம் - குபேரன் நவநிதி களுள் ஒன்று, ஒரு பேரெண். மகாபதுமன் - பூமியை வட பக்கத்தில் தாங்கும் நாகம். மகாபரணி - பிதிரர்களுக்குச் சிறந்த தும் மகாளய பட்சத்தில் வருவது மான பரணி நட்சத்திரம். மகாபலை - வில்வம். மகாபற்பம் - ஒரு பேரெண். மகாபாகவதம் - நெல்லிநகர் வரத ராச ஐயங்கார் வடமொழியினின்று தமிழ் மொழியில் செய்யுளாக இயற்றிய பாகவத நூல் - கி.பி. 1543. மகாபாரதம் - பாண்டவர் சரித்திரம் கூறும் நூல். மகாபாரதவிருத்தி - கோயிலில் மகாபாரதம் படித்துப் பிரசங்கித் தற்கு விடப்படும் மானியம். மகாபூதம் - நிலம் முதலிய ஐம்பெரும் பூதங்கள். மகாபூரி - ஒரு பேரெண். மகாபோதி - கௌதமர் தங்கியிருந்து ஞானோதயம் பெற்றுப் புத்தரான அரசமரம். மகாமகம் - 12 ஆண்டுக்கு ஒரு முறை மாசி மாதத்தில் குருசிங்க ராசி யிருக்கப் பௌரணிமியோடு மகம் சேரப்பெறுவதான தினத்தில் கும்பகோணத்தில் நிகழும் விழா. மகாமகரம் - ஒரு பேரெண். மகாமகோபாத்தியாய - அரசாங் கத்தார் மகா வித்துவான்களுக்கு அளிக்கும் பட்டம். மகாமண்டபம் - அர்த்த மண்ட பத்தை அடுத்துள்ள பெரிய மண்டபம். மகாமண்டலேசுவரன் - மண்ட லத்தை ஆளும் அரசன். மகாமண்டூரம் - பாண்டு நோயைத் தீர்க்கும் மருந்து. மகாமாயி - துர்க்கை. மாகமுத்திரை - அபிநயவகை. மகாமேரு - மேருமலை. மகாயுகம் - நான்கு யுகங்கள் (43, 20,000 ஆண்டுகள்) கொண்ட காலம். மகாரதன் - தான் ஒருவனாகி 10,000 வீரரை எதிர்த்துப் பொருத வல்ல தேர்வீரன். மகாராசா துறவு - குமாரதேவர் இயற்றிய ஒரு நூல். மகாராட்டிரம் - ஒரு நாடு, ஒரு மொழி. மகார் - பாலர், மக்கள். மகாலிங்கம் - இலிங்க வடிவான சிவன். மகாலிங்கையர் மழவை - 19 ஆம் நூற்றாண்டினிறுதியில் விளங்கி யவர், இலக்கணம் செய்தவர். மகால் - அரண்மனை (உருது). மகாவற்புதம் - ஒரு பேரெண். மகாவாக்கியம் - தத்துவமசி என்னும் தொடர். மகாவிரதம் - சைவசமயத்தின் உட் சமயத்தொன்று. மகாவீசி - நரக வகை. மகாவீரர் - அருக சமயத்தைத் தோற்றுவித்தவர் (புத்தர் காலத் தவர்). மகாளயம் - பிதிரர்க்குப் புரட்டாதி மாதத்துக் கிருட்டிண பக்கத்தில் செய்யும் சிரார்த்தம். மகானந்தை - பார்வதி. மகானுபாவன் - பேரறிஞன். மகான் - பெரியவர். மகி - பூமி. மகிடம் - எருமைக்கடா. மகிடவாகனன் - யமன். மகிடற்செற்றாள் - துர்க்கை. மகிடன் - துர்க்கையால் கொல்லப் பட்ட ஒரு அசுரன். மகிடி - பாம்பாட்டியின் ஊதுகுழல். மகிடிவைத்தல் - பொருளை மந்திரத் தால் மறைத்தல். மகிணன் - கணவன், மருத நிலத் தலைவன், சுவாமி. மகிதலம் - பூதலம். மகிபன் - அரசன். மகிமா - எட்டுச் சித்திகளுள் விருப்பம் போல் உருவத்தைப் பெருக்கச் செய்யும் பேராற்றல். மகிமை - பெருமை. மகிழடிசேவை - திருவொற்றியூர் சிவன் கோயிலில் நடக்கும் ஒரு விழா. மகிழம் - மகிழ மரம். மகழிலகு - மகிழம்வித்து. மகிழின்பரல் - மகிழம் வித்து. மகிழ் - அகம்களித்தல், விரும்புதல், உண்ணுதல், மரவகை, கள். மகிழ்ச்சி - உவகை. மகிழ்ச்சிவினை - புண்ணியம். மகிழ்தல் - அகம் களித்தல். மகிழ்த்தாரான் - மன்மதன். மகிழ்நன் - கணவன். மகிழ்வு - மகிழ்ச்சி. மகீதரம் - மலை. மகீபதி, மகீபன் - அரசன். மகீருகம் - தாவரம். மகுடம் - முடி, அல்லிவட்டம், மலரின் பூவிதழ்கள் (Corolla). மகுடயோகம் - ஐந்தாமிடத்தில் குருவும் பத்தாமிடத்தில் சனியும் ஒன்பதாமிடத்தில் பஞ்சமாதிபதியும் இருக்க வரும் யோகம். மகுடராமக்கிரி - ஓர் இராகம். மகுடவர்த்தனர் - முடி அரசர். மகுடாபிடேகம் - முடி சூட்டும் சடங்கு. மகுடி - மகிடி, ஓர் இசைக்கருவி. மகுளி - எள்ளுப் பயிர் முதலிய வற்றுக்கு வரும்நோய். மகசேன் - சிவன். மகேசுரபூசை - சிவனடியார்க்கு உணவளிக்கை. மகேசுவரவடிவம் - இலிங்க வடிவொழிந்த சிவ முகூர்த்தம். மகேசுரன் - சிவன். மகேசுவரி - பார்வதி. மகேசை - சிவசக்தி. மகேந்திரசாலம் - அற்புதச் செயல் செய்யும் வித்தை. மகேந்திரம் - கஞ்சம் பிரிவிலுள்ள தும் சிவாலயமுடையதுமான ஒரு மலைத்தொடர். மகோகனி - மரவகை (Mahogany). மகோததி - கடல். மகோததிசூத்தம் - இறந்துபட்ட ஒரு வடமொழி மீமாம்சை நூல். மகோதரம் - பெருவயிறு, பூதம். மகோதரன் - இராவணன் மந்திரி. மகோதை - கொடுங்கோளூர். மகோதையை - தாம்பிரபாணி. மக்கட்கதி - மக்களாகப் பிறக்கும் பிறப்பு. மக்கட்டு - மணிக்கட்டு, அரையின் ஆடையின்மேல் கட்டும் கட்டு. மக்கட்பாடு - மக்களுடைய முயற்சி. மக்கட்பேறு - புத்திரரைப் பெறுகை. மக்கண்முரி - வடிவில் சிறியவன். மக்கம் - மகமது பிறந்த நாடு, நெய் வோர் தறி. மக்களித்தல் - சறுக்குதல், மூட்டுப் பிசகுதல். மக்கள் - மனிதர், பிள்ளைகள். மக்காச்சோளம் - பொத்திவிடும் சோளம். மக்கு - மந்தம், அடைமண். மக்குதல் - அழிதல், மந்தமாதல். மங்கலக்கருவி - சவரக்கத்தி, இசைக் கருவிகள். மங்கலக்கிழமை - செவ்வாய்க் கிழமை. மங்கலசூத்திரம் - தாலி தொங்க விடும் கயிறு. மங்கலச்சொல் - செய்யுட்களின் முதலில் வரும் திரு பூ உலகம் முதலிய நற்சொற்கள். மங்கலத்துகில் - வெண்டுகில். மங்கலநாண் - மங்கலசூத்திரம். மங்கலபாடகர் - அரசர் முதலியவரைப் புகழ்வோர். மங்கலப்பொருத்தம் - முதல் மொழியிடத்து மங்கலச் சொல் நிற்பது. மங்கலமங்கையர் - தாலி தரித்த பெண்கள். மங்கலம் - சுபம், ஆக்கம், பொலிவு, நற்செயல், கலியாணம், தருமம், சிறப்பு, வாழ்த்து, மங்கல வாழ்த்து. மங்கலம் பதினாறு - அட்டமங் கலத் தோடுவாள், குடை ஆல வட்டம் சங்கம் தவிசு திரு அரசிய லாழி மாலிகை என்ற எட்டும் சேர்ந்த பதினாறு. மங்கலவணி - திருமங்கலியம், இயற்கை யழகு, வெள்ளணி. மங்கலவண்ணம் - மங்கலத்துக் குரியதான வெண்மை நிறம். மங்கலவயினி - ஆலத்தி. மங்கலவழக்கு - மங்கலமல்லாததை மங்கலமாகக் கூறும் வழக்கு. மங்கலவள்ளை - உயர்குல மங்கையை ஒன்பது வெண்பாவால் பாடும் பிரபந்தவகை. மங்கலவாழ்த்து - பிரபந்தத் திறுதியில் செய்யப்படும் கவி, மண மக்களுக்கு ஆசி கூறுகை. மங்கல விளைஞன் - நாவிதன். மங்கலவெள்ளை - உயர்குடிக் கற்புடை மடந்தையைப் புகழ்ந்து பாடும் பிரபந்தவகை, சந்தனக் குழம்பு. மங்கலன் - செவ்வாய். மங்கலாதேவி - ஒரு பெண் தேவதை. மங்கலி - சுமங்கலி. மங்கலியப்பெண்டுகள் - சுமங்கலி களாக இறந்த மகளிர் பொருட்டுச் செய்யப்படும் சடங்கு. மங்கலியப் பொருத்தம் - இரச்சுப் பொருத்தம். மங்கலியம் - கலியாணத்தில் கட்டப் படும் தாலி. மங்கலியன் - நாவிதன். மங்களம் - மங்கலம். மங்களம் பாடுதல் - சுபகாரிய முடிவில் வாழ்த்துப்பாட்டு பாடுதல். மங்களர் - புத்தருள் ஒருவர். மங்களாசாசனம் - பெரியோர்களது வழிபாடு. மங்களாசாரம் - மங்கல வாழ்த்து. மங்கு - கேடு. மங்குசனி - ஒருவனுடைய வாழ்நாளில் முதலில் வந்து தீமை செய்யும் ஏழரை யாண்டுச் சனி. மங்குதல் - ஒளி மழுங்குதல், குறைதல், கெடுதல். மங்குலி - இந்திரன். மங்குல் - மேகம், மூடுபனி, ஆகாயம், இரவு, இருட்சி, திசை. மங்குல்வாணி - அசரீரி. மங்கை - பெண், 12 முதல் 13 வயது வரையிலுள்ள பெண், கற்றாழை. மங்கைபாககவிராயர் - கொடுங் கன்றூர் புராணஞ் செய்தவர் (19ம் நூ.). மங்கைபாகன் - பாகம் பெண்ணான வன், சிவன். மங்கையர்க்கரசியார் - நின்ற சீர் நெடுமாறனின் மனைவியும் 63 நாயன்மாருள் ஒருவரும். மங்கையர்கோன் - திருமங்கையாழ் வார். மசகம் - கொசுகு. நீர்த்துரத்தி. மசகாரி - சித்திரவேலை எழுதியதும் கொசுக்களை விலக்குவதுமாகிய படுக்கைத் தரை. மசகுதல் - சுணங்கி நிற்றல். மசக்குதல் - மயங்குதல், குழப்புதல். மசங்கல் - மயக்கம். மசங்குதல் - மயங்குதல், ஒளி குறைதல். மசடன் - குணம் கெட்டவன். மசரதம் - பேய்த்தேர். மசாலை - கறிச்சரக்கு (உருது). மசானம் - சுடுகாடு, இடுகாடு. மசி - எழுதும் மை. மசிகம் - பாம்புப் புற்று, புற்று. மசித்தல் - கடைந்து குழையச் செய்தல். மசிமையிலை - நாணமில்லாதவன். மசியகிரி - அத்தமனகிரி. மசுரம் - கடலை. மசூதி - பள்ளிவாசல் (உருது). மசோதா - சட்டமாவதற்குமுன் சட்ட சபையில் கொண்டு வரப்படும் சட்ட நகல் குறிப்பு (உருது). மச்சகந்தி - வியாசரின் தாய், பரிமள கந்தி. மச்சக்காவடி - மீன் கலசங்கள் கொண்ட காவடி. மச்சபுராணம் - மச்சாவதாரமெடுத்த திருமாலால் சிவபெருமானின் பெருமை தோன்றி உபதேசிக்கப் பெற்ற புராணம் திருநெல்வேலி வடமலையப்ப பிள்ளையால் கி.பி. 1706இல் தமிழில் மொழிபெயர்க்கப் பட்ட நூல். மச்சமுனி - 18 சித்தருளொருவர். மச்சம் - மீன், பங்குனிமாதம், மச்ச புராணம், மச்சப்பொன், உடம் பிலுண்டாகும் கறுப்புப் புள்ளி. மச்சயந்திரம் - அம்பு எய்வதற்கு மீன் வடிவமாக அமைந்த குறி. மச்சாங்கி - பொன்னாங்காணி. மச்சாள் - தாய்மாமன் அல்லது அத்தையின் மகள். மச்சான் - தாய்மாமன் அத்தையின் மகன். மச்சிகை - தெள்ளுப்பூச்சி. மச்சு - மேல்மாடம், செய்யத் தகாதது. மச்சுச்செட்டியார் - ஞானபூசைத் திருவிருத்தம் செய்தவர் (14ம் நூ.). மச்சுவீடு - மேல்தளமுள்ள கட்டிடம். மச்சேந்திரநதர் - சித்தளொருவர். மச்சை - நரம்புத்தண்டின் மேல்மூளை (Medulla). மஞ்சகம் - கட்டில். மஞ்சட்கச்சி - தென்னை வகை. மஞ்சட்கரு - முட்டையிலிருக்கும் மஞ்சள் நிறப் பகுதி. மஞ்சட்காப்பு - தெய்வங்களுக்குச் சாத்தும் அரைத்த மஞ்சள் விழுது, மஞ்சள் பொட்டு. மஞ்சட்காமலை - உடல் மஞ்சளாகும் நோய் (Jaundice). மஞ்சட்குளித்தல், மஞ்சட்குளி - பெண்கள் உடலுக்கு மஞ்சள் பூசி நீராடுதல். மஞ்சட்டேறு - மங்கட்கிழங்குத் துண்டு. மஞ்சணீர் குடிப்பித்தல் - சுவீகாரம் செய்து கொள்ளும் குழந்தையை மஞ்சள் நீர் குடிப்பிக்கும் சடங்கு செய்தல். மஞ்சணீர்நதி - வேகவதி ஆறு. மஞ்சணை - சில சாதி மகளிர் கழுத் திலும் சிறு தேவதைகளின் உருவங் களிலும் பூசப்படும் எண்ணெய்க் குங்குமம். மஞ்சம் - கட்டில். மஞ்சரம் - முத்து. மஞ்சரி - பூங்கொத்து, பூமாலை, தளிர், ஒழுக்கம். மஞ்சரிப்பா - பிரபந்த வகை. மஞ்சள் - செடிவகை. மஞ்சள்முள்ளங்கி - கரட் (Carrot). மஞ்சனம் - நீராட்டம். மஞ்சனி - பெண். மஞ்சன் - மகன், ஆண்மகன். மஞ்சாடி - இரண்டு குன்றி மணி களின் எடையுள்ள மஞ்சாடி வித்து. மஞ்சிகன் - நாவிதன். மஞ்சிகை - பெட்டி, கொட்டாரம், தொம்பை (குதிர்). மஞ்சிமம் - அழகு. மஞ்சிரம் - காலாழி. மஞ்சில் - முதுவரம்பு வழி. மஞ்சீரம் - காற் சிலம்பு. மஞ்சு - அழகு, ஆபரணம், வெண்மேகம், பனி, யானை முதுகு, வீட்டுமுகடு, இளமை, வலிமை. மஞ்சுகம் - கொக்கு வகை. மஞ்சுளம் - அழகு, மிருது. மஞ்சூரம் - கடலை. மஞ்ஞை - மயில். மஞ்ஞையூர்தி - முருகக் கடவுள். மடக்கிளி - இளங்கிளி, பெண். மடக்கு - வளைவு, பெரிய மண்தட்டு, செய்யுளில் சொல் சீர் முதலியன பொருள் வேறுபட்டு மீண்டும் மீண்டும் வருவதாகிய சொல்லணி வகை. மடக்குதல் - மடித்தல், திருப்புதல், அழித்தல், உடுத்தல். மடக்கொடி - பெண். மடங்கக்கூறுதல் - திரும்பக் கூறுதல். மடங்கலூதி - துர்க்கை. மடங்கல் - வளைகை, அடக்கம், முடிவு, வடிவைத்தீ, ஊழிக்காலம், இயமனே வல் செய்யும் கூற்றம், சிங்கம், யாளி. மடங்கற்கொடியோன் - வீமன். மடங்காநீர் - வற்றாத நீருற்று. மடங்கு - அளவு, அடக்கம், நோய், பெருக்கு மெண். மடங்குதல் - வளைதல், கோணுதல், சொல் முதலியன திரும்ப வருதல், தார்தல், செயலறுதல், நிறுத்தப் பெறுதல். மடத்துவாசல் மறியல் - நாட்டுக் கோட்டைச் செட்டிகள் மடத்து அதிகாரிகளை முன்னிட்டுக் கொண்டு செய்யும் பஞ்சாயத்து வகை. மடநடை - மென்மை நடை. மடநோக்கு - மருண்ட பார்வை. மடந்தை - பெண், 14 முதல் 19 வயது வரையுள்ள பெண். மடப்பம் - மடம், மருதநிலத்தூர், 500 கிராமத்திற்குத் தலைமை பெற்ற கிராமம். மடப்புறம் - மடத்துக்கு விடப்பட்ட வரியில்லாத நிலம். மடமயில் - அழகிய பெண். மடமான் - பெண். மடமை - பேதைமை. மடம் - அறியாமை, கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை, அழகு, மேன்மை, இணக்கம், வாழிடம், சத்திரம். மடலரிதாரம் - மனோ சிலை. மடலூர்தல், மடலேறுதல் - தான் காதலித்த தலைவியை அடைதல் வேண்டிப் பனை மடலாலான குதிரையைத் தலைவன் ஏறி ஊர்தல். மடல் - ஏடு, பனங்கருக்கு, பூவிதழ், கிளை, திருநீறும் சத்தனமும் வைக்கும் கலம், ஆயுதவலகு. மடல்பாடிய மாதங்கீரனார் - சங்க காலப் புலவர் (நற். 377; குறு. 182). மடல்மஞ்சரி - பூக்களின் ஆணி போன்ற சதை. மடவரல் - பெண். மடவளாகம் - கோயிலைச் சூழ்ந்துள்ள வீதி. மடவள் - அறிவிலாள். மடவன் - அறிவிலான். மடவாதல் - மடப்பம் வருதல் (அழகு வருதல்). மடவாயம் - மகளிர் விளையாட்டுக் கூட்டம். மடவார் - மகளிர். மடவாள் - பெண். மடவியர் - மடவார். மடவை - கவர்ப்பட்ட தூண். மடற்பனை - கருக்கு மட்டை விழாத ஆண்பனை. மடன் - அறியாமை, கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை. மடன்மா - கருக்குமட்டைக் குதிரை. மடா - பாண்ட வகை. மடி - மடங்குகை, வயிறு, மடித்த தொடையின் மேற்பாகம், மடிப்பு, தூய்மையாக உடுத்தும் பட்டு பருத்தி மர உடை முதலியன, பசு ஆடு முதலியவற்றின் முலையிடம், அடக்கம், சோம்பல், சோம்பலுடையவன், நோய், கேடு, பொய் பகை, கெட்ட நாற்றம், தாழை, தாழை விழுது, மடங்கு. மடிதல் - மடங்குதல், நுனி மழுங்குதல், தலை சாய்தல், சுருளுதல், முயற்சி யறுதல், உறங்குதல், சுருங்குதல், சாதல், மறத்தல். மடிதாறு - உடையின் பின் கச்சம். மடித்தல் - மடக்குதல், அழித்தல், வளைத்தல், உழக்குதல். மடிபிடி - பலாத்காரம். மடிபிடித்தல் - வலிதில் சண்டைக்கு அழைத்தல். மடிமை - சோம்பு. மடியில் - கூடாரம். மடியுறை - விம்மிதம் (அதிசயம்). மடியேற்றல் - பிச்சை கேட்டல். மடிவு - சோம்பல். மடிவை - தழை. மடு - நீர்நிலை, ஆற்றிடைப் பள்ளம். மடுத்தல் - உண்ணுதல், நிறைத்தல், சேர் தல், அடக்கிக் கொள்ளுதல், ஊட்டு தல், தீ மூட்டுதல், அமிழ்த்துதல், குத்து தல், விழுங்குதல், செலுத்துதல், இடை யூறு எதிர்ப் படுதல். மடுப்படுத்தல் - ஆழ்ந்திருத்தல். மடுப்பு - நிறைப்பு, மோசம் செய்கை, உண்கை. மடை - சமையல் வேலை, சோறு, தெய்வ பலி, மதகு, துளை, மதகுப் பலகை, ஓடை, ஆபரணக் கடைப் பூட்டு, ஆயுத மூட்டு, ஆணி. மடைக்கலம் - சமையல் பாத்திரம். மடைத்தலை - மதகு. மடைத்தனம் - அறிவீனம். மடைநூல் - பாக சாத்திரம். மடைப்பள்ளி - அடுக்களை. மடைமாறி - புரட்டுக்காரி. மடையன் - சமையற்காரன், அறிவீனன். மடையான் - பறவை வகை. மட்கலம் - மண்பாண்டம். மட்குதல் - ஒளிமழுங்குதல், வலி குன்றுதல், மயங்குதல், அழிதல். மட்டஞ்செய்தல் - சமமாக்குதல், செவ்விதாகச் செய்தல். மட்டத்தாரை - கூர்மை அற்ற விளிம் புடையது. மட்டத்துருத்தி - நீர் வீசுங் கருவி வகை. மட்டம் - அளவு, மத்திம நிலை, கள், வாழை, கரும்பு முதலியவற்றின் கன்று. மட்டனம் - பூசுகை. மட்டன் - மூடன். மட்டி - மூடன், ஆயுதம், மண்டலிக்கை, சிப்பிவகை. மட்டித்தல் - அழித்தல், முறித்தல், பூசுதல், மெழுகுதல், பிசைதல். மட்டு - அளவு, எல்லை, தேன், கள், சாறு, மது வைக்குஞ்சாடி, வாசனை. மட்டுக்கட்டுதல் - வரையறைப்படுதல். மட்டுப்பால் - மட்டிப்பால். மட்டும் - வரை, மாத்திரம். மட்டை - தெங்கு பனை முதலிய வற்றின் மடல், மொட்டை, உடற்குறை. மட்டைத்தேள் - தேள் வகை. மட்டையர்- சமணர். மட்பகை - மட்கலத்தை அறுக்கும் கருவி. மட்பகைவன் - குயவன். மட்பலகை - கடாத செங்கல். மட்பனை - நிலப்பனை. மட்பாம்பு - ஆதிசேடன். மணக்கால்நம்பி - வைணவ ஆசாரி யர்களுள் ஒருவர். மணக்கோலம் - கலியாணத்துக்குரிய அலங்காரம். மணக்கோல் - மலர்ப்பாணம். மணங்கல் - பெரும்பானை. மணங்கு - ஆட்டுக்குட்டி, 25 இராத்தல் கொண்ட நிறை. மணங்குலைதல் - நிலைகுலைதல். மணத்தக்காளி - செடி வகை. மணந்தவன் - கணவன். மணப்பறை - கலியாண மேளம். மணப்பு - நறுமணம். மணப்பூச்சு - உடம்பில் பூசும் சந்தனக் குழம்பு முதலியன. மணமகன் - கலியாண மாப்பிள்ளை. மணமலி - மருக்கொழுந்து. மணமாலை - திருமணத்தில் மண மக்கள் பூணும் பூமாலை. மணமுழவு - மருத நிலப்பறை. மணம் - கூடுகை, கலியாணம், வாசனைப் பொருள், நன்னிலை, நறுநாற்றம். மணம்பிடித்தல் - மோப்பம் பிடித்தல். மணவாளதாசர் - பிள்ளைப் பெரு மாளையங்கார் (17ம் நூ.). மணவாளமுனிவர் - பெரிய சீயர் (15ம் நூ). மணாட்டு - மணமகளாகும் நிலை. மணாட்டப்பெண் - மருமகள். மணாளன் - மணமகன். மணி - நவரத்தினம், சிந்தாமணி, பளிங்கு, கண்மணி, உருத்திராக்கம், தாமரை மணி, சந்திரகாந்தக்கல், அழகு, சூரியன், ஒளி, சிறந்தது, பூசைமணி, ஒன்பது. மணிகண்டன் - சிவன். மணிகர்ணிகை, மணிகன்றிகை - காசி யில் பேர்போன ஒரு தீர்த்தம். மணிகானனம் - கழுத்து. மணிகுயிற்றுநர் - முத்துக் கோப்போர். மணிகூடம் - இந்திரனது விளை யாட்டுச் செய்குன்று. மணிக்கட்டு - கைக்கும் முன்கைக்கும் இடையிலுள்ள பொருத்து. மணிக்கயிறு - முத்துவடம், பாசக் கயிறு. மணிக்காம்பு - இரத்தினம் இழைத்துச் செய்த கால். மணிக்காலறிஞர் - இரத்தினங்களின் தன்மையை அறிந்த வணிகர். மணிக்காற்பள்ளி - சிவிகை வகை. மணிக்குடல் - சிறுகுடல். மணிக்கூடு - நேரம் காட்டும் கருவி. மணிச்சிகை - குன்றி. மணிச்செப்பு - மணிபதித்த செப்பு. மணித்தீவு - பெண்கள் மட்டும் வாழும் ஒரு தீவு. மணிநா - மணியின் நாக்கு. மணிநிறம் - கரு நீலநிறம். மணிநீர் - கருநீலம்போலும் நிறமுடைய நீர். மணிநெய் - சிற்றாமணக்கு நெய். மணிபந்தம் - மணிக்கட்டு. மணிபல்லவம் - இலங்கைக்கு வடக்கி லுள்ள ஒரு தீவு. மணிபுட்பகம் - சகதேவன் சங்கு. மணிபூரகம் - நாபியில் பத்து இதழ்த் தாமரை வடிவுடையதாகக் கருதப் படும் தானம். மணிபூரம் - கொப்பூழ். மணிப்பவம் - இருபது. மணிப்பிரவாளம் - வடமொழி தென் மொழிச் சொற்கள் கலந்துவரும் நடை. மணிமந்தம் - இந்துப்பு. மணிமலர் - குவளை. மணிமலை - மேருமலை. மணிமாடம் - சிறந்த மாளிகை, திரு நறையூர் திருமால் கோயில். மணிமாலை - பிரபந்தவகை. மணிமிடைபவளம் - மணியும் பவளமும் கலந்த அணி, அகநா னூற்றின் இரண்டாம் பிரிவு. மணிமுடி - இறுதித் திரண்ட முடிச்சு, மணிமகுடம். மணிமேகலை - இந்திரனே வலால தீவுகள் சிலவற்றைக் காவல் புரிந்து வந்த தேவதை, கோவலனுக்கு மாதவி யிடம் பிறந்த மகள், கூலவாணிகன் சாத்தனார் செய்த ஒரு நூல், இடையில் அணியும் ஆபரண வகை. மணியகாரன் - கிராமம், கோயில் முதலியவற்றில் மேல் விசாரணை செய்வோன். மணியச்சட்டம் - அதிகாரம். மணியம்பலம் - சபா மண்டபம். மணியரங்கம் - நிலா முற்றம். மணியாசு - சுவர் அழுத்தஞ் செய்யும் பலகை. மணியுயிர் - முத்திபெற்ற உயிர். மணிலாக்கொட்டை - நிலக்கடலை. மணிவடம் - இரத்தினமாலை. மணிவண்ணன் - திருமால். மணிவாசல் - அலங்காரத் தலை வாயில். மணு - 25 இராத்தல் கொண்ட ஒரு அளவு. மமணை - ஆசனப் பலகை, யானை மேலிடும் தவிசு, வெட்டுக் கருவி யின், மரப்பிடி, மழுங்கல். மண் - பூவுலகம், நிலம், புழுதி, திருமண், அணு, சுண்ணச்சாந்து, மத்தளம் முதலியவற்றில் பூசும் பசை, மனை, கழுவுகை, ஒப்பனை, மாட்சிமை. மண்கணை - மேளவகை. மண்கல் - செங்கல். மண்குத்துநோவு - பிரசவத்தின் பின் உண்டாகும் நோவு. மண்குழைக்கும் இயந்திரம் - (Pugmill). மண்கூட்டாளன் - குயவன். மண்கொட்டு - மண்வெட்டி. மண்சீலை - மருந்து புடமிடக் கலத்தின் மேல் சுற்றும் மண் பூசிய துணி. மண்சேய் - செவ்வாய். மண்டக்கான் - முத்துக் குளிப்பவனைக் கயிறுகொண்டு மேலிழுப்பவன். மண்டபம் - அலங்காரப்பந்தல். மண்டபவெழினி - கூடாரம். மண்டர் - படைவீரர். மண்டலச்சீரந்தாதி - ஒரு செய்யுளின் இறுதியடியின் இறுதிச் சீரும் முதலடி யின் முதற்சீரும் ஒன்றாக வரப்பாடும் அந்தாதி வகை. மண்டலபுருடர் - சூடாமணி நிகண் டாசிரியர், (16 ஆம் நூற்.). மண்டலமாக்கன் - அரசர். மண்டலமிடுதல் - பாம்பு முதலியன வட்டமாகச் சுருண்டு இருத்தல், உண்ணுதல், பூசை முதலியவற்றிற் காக நீர்தெளித்துத் தடவி இடம் பண்ணுதல், பரிவேடம் கொள்ளுதல். மண்டலம் - வட்டம், வட்டவடிவம், வட்ட வடிவான அணி வகுப்பு, நாட்டின் பெரும் பகுதி. ஊர் 45 நாள் கொண்ட கால அளவு, குதிரைக் கதிவகை, கூட்டம், பரிவேடம், அபிநய வகை, வில்லோர் நிலை யுள் ஒன்று. மண்டலர் - அருகபதம் பெற்றவரில் ஒரு சாரார். மண்டலவியூகம் - வட்டமாக அமைக்கும் படை வகுப்பு. மண்டலாசி - திருவனந்தபுர இராச்சி யத்தில் அரசனிறந்தபோது தலை விரித்துப் போட்டு இழவு கொண்டாட நியமிக்கப்படுவோர். மண்டலாதிபதி - சிற்றரசன். மண்டலாபிடேகம் - கும்பாபி டேகத்தைத் தொடர்ந்து 40, 41 அல்லது 45 நாள், நடத்தப் பெறும் நித்திய அபிடேகம். மண்டலி - விடப்பாம்புவகை, நாப, மண். மண்டலிகன் - அரசன். மண்டலியாழ் - பெரும்பண்களுள் ஒன்று. மண்டலீகன் - அரசன். மண்டர் - மீன், பன்றி முதலிய வற்றைக் குத்த உதவும் ஈட்டி வகை. மண்டி - காலை முடக்கி முழந்தாளால் நிற்கை, வண்டல், தானியம் விற்கப் படுமிடம், வியாபாரம், பண்டசாலை. மண்டிகை - அப்ப வருக்கம். மண்டிவரல் - இரவலாக வாங்கிய நகையை வறுமையால் அடகு வைத்தல். மண்டிலக்கடவுள் - சந்திரன். மண்டிலம் - வட்டம், வட்டமாக ஓடுகை, குதிரை, பூமி, சூரியன், சந்திரன், ஆகாயம் கண்ணாடி, கமண்டலம். மண்டிலமாக்கள் - நாட்டின் பகுதியை ஆளும் அதிகாரிகள். மண்டிலயாப்பு - நாற்சீரடிச் செய்யுள். மண்டு - செறிவு, மிகுதி. மண்டுதல் - நெருங்குதல், விரைந்து செல்லுதல், திரளுதல், உக்கிரமாதல், அதிகமாதல், ஈடுபடுதல், செலுத் துதல், மூண்டு பொருதல். மண்டூகம் - தவளை. மண்டூரம் - இரும்புக்கிட்டம். மண்டை - தலை, தலைஓடு, இரப் போர் கலம், ஓரளவை, வேசை. மண்டைப்பாணர் - உணகலம் ஏந்தி இரக்கும் பாணர். மண்டைப் பெரியதனக்காரன் - தொட் டியர் தலைவனது பட்டப் பெயர். மண்டோதரி - இராவணன் மனைவி. மண்ணகம் - பூமி. மண்ணம் - சுண்ணாம்பு. மண்ணவர் - மனிதர். மண்ணாங்கட்டி - மண்கட்டி. மண்ணான் - ஆதித் திராவிடரின் வண்ணான். மண்ணி - சோழ நாட்டிலுள்ள ஓர் ஆறு. மண்ணீட்டாளர் - குழை சாந்தினால் பாவை முதலிய செய்வோர், சிறப்பாசி ரியர், குயவர். மண்ணீடு - குழை சாந்தினால் செய்த பாவை வடிவம், திண்ணை, வேயா மாடம், மாடப்புரை. மண்ணீரல் - இடது விலாவை ஒட்டிய ஈரல் (Spleen). மண்ணீர் - கழுவ உதவும் நீர். மண்ணீர்மை - உலக இயல்பு. மண்ணுதல் - நீராடுதல், கழுவுதல், பூசுதல், செய்தல், அலங்கரித்தல், செப்பமிடுதல். மண்ணுண்ணி - மண் புழுவகை, திருமால். மண்ணுண்ணுதல் - தோற்று விழு தல். மண்ணுநீர் - குளிக்கும் நீர். மண்ணுப்பெய்தல் - குளிப் பாட்டுதல். மண்ணுமங்கலம் - அரசன் முடி புனைந்த காலம் தொடங்கி ஆண்டு தோறும் முடிபுனைந்து நன்னிராடு தலைக் கூறும் புறத்துறை. மண்ணுலகு - பூமி. மண்ணுளிப்பாம்பு - மண்ணுணி. மண்ணுறுத்தல் - கழுவுதல், அலங்கரித்தல். மண்ணெண்ணெய் - நிலத்தி லிருந்து எடுக்கப்படும் எண்ணெய் வகை. மண்ணை - மனிதர். மண்புரை - மண் பொதிந்த வீடு. மண்பொதுத்தந்தை - பிரமன். மண்பொறி - மண்ணிட்டு அதன் மேல் பொதிந்த முத்திரை. மண்மகள் புதல்வர் - வேளாளர். மண்மகன் - குயவன். மண்வினைமாக்கள் - குயவர். மத - வலிமை, அழகு, மிகுதி. மதகம் - யானை மத்தகம். மதகயம் - மதகரி. மதகரி - ஆண் யானை. மதகரிக்கணை - யானைத் திப்பலி. மததகு - குளம் முதலியவற்றில் நீர் பாயும் தூம்பு வகை. மதங்கம் - மத்தளம், யானை, முகில், ஒருமலை. மதங்கயம் - யானை. மதங்கன் - ஒரு முனிவன், பாணன். மதங்கி - உமை, காளி, ஆடல் பாடல் வல்லவள். மதங்கியர் - இரண்டு கைகளிலும் வாளெடுத்துச் சுழற்றி ஆடும் இளம் பெண்ணான மதங்கி மீது ஒருவன் காமுறுவதாகப் பாடும் கலம்பக உறுப்பு. மதசத்தி - மதக்களி. மதசலம் - மதநீர். மதச்சுவடு - யானையின் மதநீர் வழிந்து உண்டான தழும்பு. மதததயிலம் - மதநீர். மதத்தல் - மதம் கொள்ளுதல், கொழுத் தல், மிகுதல். மதமதப்பு - செழிப்பு. மதமதர்த்தல் - களிப்பு மிகுதல். மதமத்தம் - பொன்னுமத்தை. மதமலை, மதமா - யானை. மதமொய - மதமா. மதம் - கொள்கை, சமயம், மகிழ்ச்சி, வலிமை, செருக்கு, தேன், வெற்றி, மதுக்களிப்பு, கன்மதம். மதரணி - ஒளிமிக்க ஆபரணம். மதர் - செருக்கு, மிகுதி, மகிழ்ச்சி. மதர்த்தல் - செழித்தல், மதம், கொள்ளு தல், களித்தல், மிகுதல். மதர்வு - அழகு, வலிமை, மிகுதி இடம். மதர்வை - செழிப்பு, செருக்கு, களிப்பு, மயக்கம். மதலிகை - ஆபரணத்தொங்கல், அலங் காரத்தொங்கல். மதலை - பற்றுக்கோடு, தூண், யூபத் தூண், வீட்டின், கொடுங்கை, பற்று, மரக்கலம், குழந்தை, மகன், கொன்றை, மழலை மொழி. மதலைக்கிளி - இளங்கிளி. மதலைத்தூக்கு - இரு சீருடைய இசைப் பாட்டு. மதலைப்பள்ளி - கொடுங்கையைத் தாங்கும் பலகையாகிய கபோதத் தலை. மதலைவாழ்த்து - தலைவனது சபை மண்டபத்துத் தூணைப் புகழ்ந்து கூறும் துறை வகை. மதவலி - மிகுவலி, முருகன். மதனகாமப்பூ - கொடிச்சம்பங்கி. மதனகீதம் - காமப்பாடல். மதனசாத்திரம் - காம நூல். மதனபாடகம் - குயில். மதனம் - காமம், வசந்தகாலம், கடைகை, அழிக்கை, மனக் கலக்கம். மதனலீலை - காம விளையாட்டு. மதனவேள் - மன்மதன். மதனன் - மன்மதன், காமுகன். மதனாகமம் - மதனநூல். மதனாலயம் - பெண்குறி. மதனி - அண்ணன் மனைவி. மதன் - செருக்கு, வலிமை, மனஎழுச்சி, மாட்சிமை, மடமை, மன்மதன், அழகு. மதாணி - கழுத்தணியின் தொங்கல். மதாவரிசி - வாசனைப் பொருள் களுள் ஒன்று. மதாவளம் - யானை. மதானித்தல் - கொழுத்துச் செழித்தல். மதி - இயற்கை அறிவு, பகுத்தறிவு, காசிபரின் மனைவி, பிண்டிமரம், சந்திரன், மாதம், இராசி, குபேரன், இடைகலை, ஒன்று என்னும் எண்ணைக் குறிக்கும் குழூ உக்குறி, கற்கடகராசி, ஓர் முன்னிலை அசைச் சொல் யானை. மதிகேடு - புத்தியீனம். மதிக்கண்ணியான் - சிவன். மதிக்கலை - சந்திரகலை, பதினாறு. மதிக்கொழுந்து - காலசந்திரன். மதிசகன் - மன்மதன். மதிசூடி - சிவபிரான். மதிஞன் - அறிஞன். மதிஞானம் - இயற்கை அறிவு. மதிதம் - மோர், தயிர். மதிதிசை - வடக்கு. மதித்தல் - அளவிடுதல், பொருட் படுத்துதல், கருதுதல், தியானித்தல், துணிதல். மதிநாள் - மிருகசீரிட நாள். மதிநுட்பம் - நுண்ணறிவு. மதிநூல் - சைனபரமாகமம். மதிநெறி - சந்திர வமிசம். மதிப்ப - ஓர் உவம வாய்பாடு. மதிப்பகை - இராகு, கேது. மதிப்பாகம், மதிப்பாகு - இளம்பிறை. மதிப்பிள்ளை, மதிப்பிளவு - பிறைச்சந்திரன். மதிப்பு - அளவிடுகை, கௌர விக்கை, கருத்து. மதிமகன் - புதன். மதிமண்டலம் - புருவமத்தி, நாபித் தானம். மதிமயக்கம் - புத்தி மாறாட்டம். மதிமுகம் - சந்திரன் போன்ற முகம், மந்திர வித்தை வகை. மதிமை - அறிவு. மதிமோகம் - அறிவின்மை. மதியங்கு - ஒருவகை வாசனைப் பண்டம். மதியந்திரும்புதல் - பொழுது சாய்தல். மதியப்பூப்பு - சந்திரோதயம். மதியம் - சந்திரன், மாதம், நடு, மதிப்பு. மதியிலி - புத்தி அற்றவன். மதியீனம் - அறிவு இன்மை. மதிதியுடம்படுதல் - தலைவன் தலைவியர் இருவருக்கும் கூட்ட முண்மையை அவர்தம் கருத்து ஒற்றுமை பற்றித் தோழி உணர்தல். மதியுடம்படுத்தல் - தலைவி மீது தான் கொண்ட காதலைத் தலைவன் தோழிக்கு உணர்த்தி அவளது துணையைப் பெறும் அகத்துறை. மதியழைத்தல் - அம்புலிப் பருவம், குழந்தை விளையாடச் சந்திரனை அழைப்பதுபோல் பாடுதல். மதிரை - கள். மதிலுண்மேடை - கொத்தளம். மதில் - கோட்டைச்சுவர், சுவர், இஞ்சி. மதிவல்லி - கொற்றான் செடி. மதிவல்லோர் - அறிவாளர். மதிவாணனார் - ஒரு நாடகத் தமிழ் நூலியற்றிய இடைச் சங்க காலப் பாண்டியன். மதிற்சுற்று - சுற்றுமதில். மதினி - அண்ணன் மனைவி, மைத்துனி. மதின்மரம் - கோட்டை மதில், கதவி லிடும் கணையமரம். மது - தேன், கள், இனிமை, இள வேனில், ஓர் அசுரன். மதுகம் - வண்டு, அதிமதுரம், தரா (உலோகம்), இருப்பை, கள், எட்டி. மதுகரம் - தேனீ, ஆண் வண்டு, கள், வச்சநாபி. மதுகை - வலிமை, அறிவு. மதுங்குதல் - இனிமையாதல். மதுசாரம் - ஆல்கஹால். மதுசூதன், மதுசூதனன் - திருமால். மதுத்தண்டு - கள்ளடைக்கும் மூங்கிற் குழாய். மதுபதி - காளி. மதுபம் - வண்டு. மதுபரிணிகை - சீந்தில். மதுப்ர்க்கம், மதுபருக்கம் - தேன் பால் பழம் சேர்ந்த கூட்டுணவு. மதுபாகம் - தேன்போலத் தெளிவும் இனிமையுமுடைய செய்யுள் நடை. மதுபானம் - கள் குடிக்கை. மதுமா - மாமரம். மதுரகவி - இனிமை பெருகப் பாடும் கவி, ஆழ்வாருளொருவர் (19ம் நூ). மதுரகவிராயர் - திருக்கச்சூர் நொண்டி நாடகம் பாடியவர் (18ம் நூ.). மதுரசம் - கொடி முந்திரிகை. மதுரபாகம் - மூக்கு. மதுரம் - இனிமை, அதிமதுரம், நஞ்சு, சமனிசை. மதுராபதி - மதுரையின் காவல் தெய்வம். மதுரித்தல் - தித்தித்தல். மதுரை - பாண்டியர் தலைநகரம், கண்ணன் பிறந்த வடமதுரை, கள். மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார் - சங்க காலப் புலவர் (புறம். 309). மதுரை இளம்பாலாசியன் சேந்தன் கூத்தன் - சங்க காலப் புலவர் அகம் (102). மதுரைக்கணக்காயனார் - நக் கீரனாரின் தந்தை. மதுரைக்காஞ்சி - தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடிய பாட்டு. மதுரைக் கூலவாணிகன் சாத்தன் - மணிமேகலையின் ஆசிரியர். மதுரைத்தொகை - மதுரைச்சங்கம். மதுரையுப்பூரிகுடிகிழான் - உருத்திரசன்மனின் தந்தை. மதுரைவீரன் - ஒரு கிராம தேவதை. மதுவம் - தேன். மதுவனம் - சுக்கிரீவனுக்குரிய ஒரு வனம். மதூகம் - இருப்பை. மதூத்தம் - சிறு நாகப்பூ. மதைஇய - மகர்த்த, அழகிய. மதோமதி - பெருங்களிப்புடை யவள். மதோற்கடம் - மதயானை, யானை மத்தகம். மத்தகமாலை - தலையில் அணியும் மாலை. மத்தகம் - தலை, உச்சி, நெற்றி, தலைக் கோலம், யானையின் கும்பத்தலம், யானை நெற்றி, மலை நெற்றி. மத்தகன் - மதிமயங்கியவன். மத்தமா - யானை. மத்தம் - களிப்பு, மயக்கம், யானை மதம், பைத்தியம், செருக்கு, கருவு மத்தை, மத்து. மத்தரி - பறைவகை. மத்தவராணம் - மதயானை, வீட்டின் மேல்மாடத்து உறுப்பு. மத்தளம் - பறைவகை. மத்தவி - வாத்திய வகை, உடல். மத்தளிகன் - மத்தளம் வாசிப்பவன். மத்தனம் - அழுத்திப் பிடிக்கை, கடைகை. மத்தன் - பைத்தியம் பிடித்தவன் புத்தி மயக்கமடைந்தவன், அதி உற்சாகி, பெருமிதமுள்ளவன். மத்தாடுதல் - பெண்கள் கைகோத் தாடுதல். மத்தாப்பு - வாண வகை. மத்தாளமணி - கழுத்தணி வகை. மத்தான்சாயிபு - குணங்குடியார் (19ம் நூ.). மத்தி - நடு. மத்திகை - குதிரைச் சம்மடி (சவுக்கு), கழி, விளக்குத் தண்டு, பூமாலை. மத்திடுதல் - கடைதல். மத்தித்தல் - கடைதல். மத்திமதானம் - குருடர் முதலி யோர்க்குப் கொடுக்கும் கொடை. மத்திமை - நடுவிரல், இதயத்து நின்று எழும் நாதரூபமான ஒலி. மந்திமம் - நடு, நடுத்தரம், மட்டானது, ஏழு சுரத்தில், ‘ம’ என்ற சுரம், அசுவதியுள் ஒன்று. மத்தியபானி - கள்ளுண்போன். மத்தியம் - நடு, சேனையின் நடு இடமாகிய உறுப்பு, ஒரு பேரெண். மத்தியரேகை - பூமியின் நடுக்கோடு. மத்தியானம் - நடுப்பகல். மத்திரம் - ஒரு நாடு, மகிழ்ச்சி. மத்திரித்தல் - கோபித்தல். மத்தரிப்பு - கோபம். மத்திரைமந்தர் - நகுல சகாதேவர். மத்து - தயிர் முதலியன கடையும் கருவி, ஊமத்தை, மோர். மத்துவாசாரியார் - 13ம் நூற்hண்டில் வாழ்ந்த துவைத மத தாபகர். மத்தை - ஊமத்தை. மத்தோன்மத்தன் - முழுப்பித்தன். மந்தகாசம் - புன்சிரிப்பு. மந்தணம் - இரகசியம். மந்தமாருதம் - தென்றல். மந்தம் - தாமதம், அறிவு, மழுக்கம், சோம்பல், மிருதுத்தன்மை, தென் றல், அசீரணம், செறிவு. மந்தரம் - மந்தரமலை, மகாமேரு, படுத்தலோசை. மந்தரை - கைகேயின் தாதியான கூனி. மந்தல் - மந்தம். மந்தவாரம் - சனிக்கிழமை. மந்தனி - தயிர் கடைதாழி. மந்தன் - அறிவு மழுங்கினவன், சனி. மந்தாகினி - ஆகாய கங்கை, பால் வீதி மண்டலம், கங்கை 60 வயதானவள். மந்தாரம் - மர வகை. மந்தானிலம் - தென்றல். மந்தி - பெண்குரங்கு, குரங்கு, வண்டு, சூரியன். மந்தித்தல் - தாமதித்தல், அசீரண மாதல். மந்திரகலப்பை - மந்திர செபத்துக் குரிய பண்டம். மந்திரக்கிழவர் - ஆலோசனைச் சபையார். மந்திரக்கோட்டி - ஆலோசனை செய்யும் சபை. மந்திரசாதகம் - மந்திர உரு ஏற்றிப் பெற்ற பேறு. மந்திரதந்திரம் - மந்திரமும் கிரியை யும். மந்திரதாரணை - திரு ஐந்தெழுத்தின் மூலம் சிவபெருமானைத் தியானிப்பதாகிய வித்தை. மந்திரத்தோழி - தலைவியின் அந்த ரங்கமான பாங்கி. மந்திரபாரகர் - மந்திராலோசனையில் தேர்ந்தவர். மந்திரமாலிகை, மந்திரமாலை - திருமந்திரம். மந்திரமூர்த்தி - மந்திர வடிவான கடவுள். மந்திரமைந்து - பஞ்ச நமஸ்காரம் என்னும் மந்திரம். மந்திரம் - ஆலோசனை, மந்திரிகள் சபை, எண்ணம், வேதமந்திரம், திருமந்திரம், வீடு, அரண்மனை, தேவர் கோயில், மண்டபம், உறைவிடம், குகை, குதிரைச்சாலை, கள், மந்திரம். மந்திரயோனி - சுத்த மாயை. மந்திரர் - அமைச்சர். மந்திரவாதி - மந்திர சித்தியால் பேய் ஓட்டுதல் முதலியன செய்பவன். மந்திரவாள் - மந்திர சக்தி வாய்ந்த வாள். மந்திரவீதி - கோயிலைச் சுற்றி உள்ள வீதி. மந்திரவோலை - அரசன் திருமுகம். மந்திராசரணை - மந்திரஞ் செபிக்கை. மந்திரலோசனை - அரசன் மந்திரி களோடு ஆராய்கை. மந்திரி - அமைச்சன், வியாழன், சுக்கிரன், பித்தம். மந்திரரோபாசனை - ஒரு தேவ தையை அதற்குரிய மந்திரத்தால் வழிபடுகை. மந்தினி - தயிர்க்கடை தாழி. மந்துரை - குதிரைப்பந்தி. மந்தேகர் - சூரியன் உதிக்கும் போதும் படும்போதும் அக்கட வுளைத் தினந்தோறும் தடுத்து எரிந்து இறந்திறந்து பிறக்கும் இராக்கதர். மந்தேகாருணம் - மந்தேகர் என்னும் அசுரர் வாழும் தீவு. மந்தை - ஆடு மாடுகளின் கூட்டம், பொது மேய்ச்சலிடம். மந்தைவெளி - மேய்ச்சல் வெளி. மந்தோதரி - இராவணன் மனைவி. மம - என்னுடைய. மமகராம் - மமதை. மமதை - செருக்கு. மம்மர் - துக்கம், மயக்கம், கல்லாமை. மயக்கடி - மயக்கம். மயக்காந்தாதி - எழுத்து அசைச்சீர் இவற்றின் அந்தாதிகள் கலந்து வரப்பாடும் அந்தாதி வகை. மயக்கம் - அறிவின் திரிபு, பிழைபட உணர்கை, கலப்பு, எழுத்துப் புணர்ச்சி. மயக்கவணி - ஒரு பொருளை, வேறொரு பொருளென மயங்குவ தாகக் கூறும் அணி. மயக்கவிதி - தமிழ்ச் சொல்லில் இன்ன மெய்யெழுத்து இன்ன மெய்யெழுத்தோடு சேர்ந்துவரும் என்பது பற்றிய விதி. மயக்கு - திகைக்கச் செய்யும் செயல். மயக்குச்சர்ப்பம் - திட்டி என்னும் பாம்புவிடம். மயக்குதல் - மனங்குழம்பச் செய் தல், வெளிகொள்ளுதல், மாறுபடு தல், திகைக்கச் செய்தல், கலத்தல், சிதைத்தல், மயக்கமடையச் செய்தல். மயங்க வைத்தல் - பொருள் இன் னது என்று துணியக் கூடாமல் கூறும் குற்றம். மயங்குகால் - சுழல் காற்று. மயங்குதல் - மருளுதல், பரவச மாதல், நிலையழிதல், வருந்துதல், கலத்தல், போலுதல், நெருங்குதல், கை கலத்தல், அறிவு கெடுத்தல், கலக்கமுறுதல். மயங்குதிணை நிலைவரி - வரிப் பாட்டு வகை. மயம் - தன்மை, நிறைவு, மகிழ்ச்சி அழகு, செருக்கு, சாணி. மயரி - மனங் கலங்கினவன், காமுகன், அறிவினன். மயல் - மயக்கம், பைத்தியம், ஆசை, காம இச்சை, மாயை, சந்தேகம், செத்தை, பிசாசம். மயற்கை - மயக்கம். மயற்பகை - பித்து, பித்துக்குக் காரணமான மருந்து. மயன் - அசுரதச்சன், தச்சன். மயானஞானம் - மயானத்தைக் கண்டதும் தேகம் நிலையற்ற தெனச் சிறிது நேரம் தோன்றும் பற்றின்மை. மயானம் - சுடுகாடு. மயானவாசி - துர்க்கை. மயிடன் - துர்க்கையால் கொல்லப் பட்ட அசுரன். மயித்திரி - நட்புத் தன்மை. மயித்திரியாழ்வார் - இனிப் பிறக்கப் போகும் புத்ததேவர். மயிந்தர் - ஒரு சாதியினர். மயிந்துதல் - பதுங்குதல். மயிரெறிகருவி - கத்தரிக்கோல். மயிரை - ஆரல்மீன். மயிரொழுக்கு - உந்தியினின்று மேற்செல்லும் மயில் ஒழுங்கு. மயிர் - உரோமம், சாமரை. மயிர்குறைகருவி - கத்தரி. மயிர்க்கட்டு - தலைப்பாகை. மயிர்க்கண்முரசம் - புலியை கொன்ற இடபம் இறந்தபின் அதன் தோலை மயிர் சீவாமல் போர்த்த வீரமுரசம். மயிர்க்குத்தி - நாவிதன் கத்தி. மயிர்க்கால் - உரோமத் துவாரம். மயிர்க்கிடுகு - மயிர் செறிந்த தோலால் மூடப்பட்ட கேடகம். மயிர்க்குச்சம் - விதைகளில் குஞ்சம் போன்றிருக்கும் பஞ்சு. மயிர்க்குசெறிதல் - மயிர் பொடித் தல். மயிர்க்குட்டி - கம்பளிப்பூச்சி. மயிர்க்குழற்சி - மயிர் நெளிவு. மயிர்க்கூச்சு - புளகம். மயிர்ச்சாந்து - கூந்தலுக்கு இடும் வாசனைச் சாந்து. மயிர்ச்சிலிர்ப்பு - மயிர்பொடிப்பு. மயிர்ப்படம், மயிர்ப்படாம் - கம்பளி ஆடை. மயிர்ப்பாடு - மயிர்செறிந்து தோன் றுகை. மயிர்ப்புழு - கம்பளிப் பூச்சி. மயிர்பொடிதல் - மயிர் புளகித்தல். மயிர்மாணிக்கம் - அரிவாள் மணைப் பூண்டு. மயிர்முகிழ்த்தல் - மயிர் பொடித்தல். மயிர்முடி - முடிந்த மலர். மயிர்முள் - முள்ளம் பன்றியின் மயிர். மயிர்வினை - மயிர் மழித்தல். மயிர்வினைஞன் - நாவிதன். மயிலடி - கால்விரல், மோதிரம், காட்டு நொச்சி. மயிலம் - ஒரு முருகன் தலம். மயிலாடுதுறை - மயூரம். மயிலாப்பூர் - சென்னையின் பகுதியாகிய ஓர் ஊர். மயிலாளி - முருகக் கடவுள். மயிலி - மயில் போன்றவள். மயிலியல் - மயிலின் சாயை உள்ள பெண். மயிலூர்தி - மயிலேறும் பெருமாள். மயிலெண்ணெய் - மயிலின் கொழுப்பிலிருந்து எடுக்கும் மருந்து எண்ணெய். மயிலேரும் பெருமாள் - முருகன். மயிலேரும் பெருமாள்பிள்ளை - சுவாமி நாத தேசிகரின் ஆசிரியரும் கல்லாடத்தின் முதல் 37 பாடல் களுக்கு உரை எழுதிய வருமான புலவர் (17ம் நூ.). மயிலை - மீன், மீனராசி, இருவாட்சி, மயிலாப்பூர். மயிலைநாதர் - நன்னூல் உரை ஆசிரியருள் ஒருவரான சைன ஆசிரியர் (13ம் நூ.). மயில் - பறவை வகை, மயிற் கொன்றை. மயில்துத்தம் - (Copper sulphate). மயில்வாகனப்புலவர் - யாழ்ப்பாண வைபவம் செய்தவர் (1779 - 1816). மயில் விரோதி - பச்சோந்தி. மயிற்கழுத்து - மயில் கழுத்து உருவமும் நிறமும் அமைந்த மாலை. மயிற்கூத்து - ஒரு காலை ஊன்றி ஒரு காலைத் தூக்கிக் கொண்டு ஆடும் கூத்து. மயிற்கொடி - மயிலெழுதிய கொடி, கொண்டையங்கோட்டை மறவசாதிப் பெண்டிர் திருமணத்திற் கட்டும் தாலி விசேடம். மயிற்சிகை - மயிலின் கொண்டை. மயிற்பகை - பச்சோந்தி. மயிற்பிச்சம் - மயிலிறகுக் குடை. மயிற்பீலி - மயிலிறகு. மயிற்றோகை - வாலாக நீண்ட மயிலிறகு. மயினா - நாகண வாய்ப்புள். மயூரகதி - குதிரை வேகத்தொன்று. மயூரபதம் - நகக்குறி வகை. மயூரம் - மயில், குராசானியோமம். மயேச்சுரன் - சிவன், யாப்பிலக்கண நூலாசிரியருள் ஒருவர். மயேந்திரசாலம் - மகேந்திரசாலம். மரகதக்குணம் - நெய்தல், கிளிக் கழுத் தொத்தல், மயிற்கழுத்தொத்தல், பயிரில் பசுத்தல், பொன்மையுடன் பசுத்தல், பத்தி பாய்தல், பொன்வண்டின் வயி றொத்தல், தெளிதல் என்பன. மரகதக்குற்றம் - கருகல், வெள்ளை, கல், மணல், கீற்று, பொரிவு, தராசம், இறகுதல் என்னும் எட்டு. மரகதநாயகம் - நடுவில் பச்சைக் கல் வைத்துச் செய்த கல் மோதிர வகை. மரகதம் - பச்சை இரத்தினம் (Emerald), பச்சைநிறம். மரகதவல்லி - தருமதேவதை. மரகதன் - குபேரன். மரக்கண் - மரக்கணு, புலனற்ற கணு, மரப்பாவையின் கண். மரக்கலம் - கப்பல். மரக்கலன் - மீகாமன். மரக்கறி - காய்கறி. மரக்கன்று - இளமரம். மரக்கா - புஞ்சோலை. மரக்காயர் - தமிழ் துலுக்க வகையினர். மரக்காலாடல் - திருமால் கூத்து. மரக்கால் - முகத்தலளவைக் கருவி வகை, ஆண்டு மழையினளவு, திருமால் கூத்து, உப்பளம், ஆயி லியநாள், சோதிநாள். மரக்காழ் - மர வயிரம். மரக்கானாரை - நாரை வகை. மரக்கொல்லர் - தச்சர். மரக்கோவை - கப்பல். மரங்கொத்தி - பறவை வகை. மரச்செவி - சோலை. மரணகண்டி - மரணக் குறியை அறி விக்கும் ஒரு நூல். மரணக்குறி - இறக்கும் தறுவாயில் தோன்றும் அறிகுறி. மரணசாசனம் - ஒருவன் தனக்குப் பின் தனது சொத்து எப்படிப் பிரிக்கப்பட வேண்டும் என்பதைக் குறித்து எழுதி வைக்கும் பத்திரம். மரணசிட்சை - மரணதண்டனை. மரணம் - சாவு, மிகுமயக்கமும் அயர்ச்சி யும் உண்டாகும் பஞ்ச பாணாவத்தை. மரணயோகம் - கெடுதியைக் குறிக்கும் யோகவகை. மரணை - சாதல், நினைவு. மரத்தல் - விறைத்தல், உணர்ச்சி இல்லாது போதல். மரண் - மரணம். மரத்தார் - பகுத்தறிவில்லாதார். மரத்தோல் - மரப்பட்டை. மரநாய் - விலங்கு வகை. மரபியல் - முன்னோர் வழங்கிய சொல் வழக்கைக் கூறும் இலக் கணப் பகுதி. மரபினோர் - வழித்தோன்றியோர். மரபு - முறைமை, சான்றோரின் சொல், வழக்குமுறை, பாரம்பரியம், நல் லொழுக்கம், மேம்பாடு, வழிபாடு, பருவம். மரபுப்பெயர் - ஒன்றற்குத் தொன்று தொட்டு வழங்கிவரும் பெயர். மரபுமயக்கம் - மரபுவழு. மரபுவழு - தொன்றுதொட்டு வழங்கி வரும் முறைக்கு மாறானது. மரபுவழுவமைதி - மரபு வழுவை அமைதியுடையதென்று சான்றோர் அமைத்துக் கொள்வது. மரபுளோர் - மரபினோர். மரப்பந்தர் - சோலை. மரப்பாச்சி - சிறுவர் விளையாட்டுக் குரிய மரப்பொம்மை. மரப்புணை - தெப்பம். மரப்பொது - சோலை. மரமணி - ஆடு மாடுகளை அழைப் பதற்கு இடையர் அரையில் கட்டும் மணி. மரமூஞ்சூறு - எலிவகை (Tree shrew). மரம் - உள்வயிருமுள்ள தாவரம், அறுக்கப்பட்ட மரம், மூலிகை, மரக்கலம், போர் மேளம். மரல் - ஒருவகைக் கற்றாழை. மரவடி - மிரிதடி. மரவட்டணம் - மரப்பரிசை. மரவம் - குங்கும மரம், வெண்கடம்பு. மரவள்ளி - செடி வகை. மரவிடம் - தாவர நஞ்சு. மரவு - மரா. மராவுரி - மரப்பட்டை. மரவை - மரத்தாலான பாத்திரம். மரா - ஆச்சா. மராஅடி - மிரிதடி. மராஅம் - மரவம். மராடம் - மகாராட்டிரம். மராடர் - மகராட்டிரர். மராடி - மரத்தின் அடி. மராட்டம் - புறமயிர், பெண்மயிர், மகாராட்டிபுரம். மராட்டிமொக்கு - வெறிப்பொருள் வகை. மராம் - மரவம். மராமத்து - பொதுக்கட்டிடச் சீர் திருத்த வேலை. மராமரம் - ஆச்சீர், அரச. மராளம் - அன்னம், பூநாரை, பாம்பு. மரிசம் - மிளகு. மரிசாதி - மரியாதை. மரிசி - புதுவரம்பு வழி. மரித்தல் - சாதல். மரிப்பு - சாவு. மரிமங்காய் - மரவகை. மரியவர் - பின்பற்றி ஒழுகுபவர். மரியாதை - கௌரவமாக நடக்கை. மரிசளம் - மிளகு. மரீசி - ஒரு முனிவர், கிரணம், மிளகு, வரம்பு. மரீசிகை - கானல். மரீசினம் - வால்மிளகு. மரு - வாசனை, மருக்கொழுந்து, இடம், நீரும் நிழலுமற்ற நிலம், மணவிருந்து. மருகம் - ஆதொண்டை. மருகன் - சகோதரியின் மகன் அல்லது ஒருத்தியின் சகோதரன், மகன், வழித்தோன்றல். மருகி - மருமகள். மருகு - மருகன், மகர வாழை. மருக்கணம் - மருந்துக்கள். மருக்கம் - காற்று, குரங்கு, உடல், மிளகு. மருக்கொழுந்து - வாசனைச் செடி வகை. மருங்கு - பக்கம், விலாப்பக்கம், இடை, வடிவு, எல்லை, இடம், சுவடு, சுற்றம், குலம், செல்வம், நூல். மருங்குல் - இடை, வயிறு, உடம்பு. மருங்குற்பக்கம் - இடுப்பு. மருங்கூர்கிழா பெருங்கண்ணனார் - சங்க காலப் புலவர் (அகம். 80). மருங்கூர்ப்பட்டினத்துச் சேந்தன் குமரனார் - சங்க காலப் புலவர் (நற். 289). மருங்கூர்ப்பாகை சாத்தன் பூதனார் - சங்ககாலப் புலவர் (அகம். 327). மருச்சுகன் - நெருப்பு. மருச்சுதன் - வீமன். மருட்கை - வியப்பு, மருட்சி. மருட்சி - மயக்கம். மருட்டம் - கள். மருட்டி - மயக்கும்படி மினுக்குபவள். மருட்டுதல் - மயக்குதல், மாறுபடச் செய்தல், ஒத்தல், மனம் கவியச் செய்தல். மருட்பா - வெண்பாவும் ஆசிரியப் பாவும் கலந்து வரும் செய்யும் வகை. மருணீக்கியார் - திருநாவுக்கரசரின் பிள்ளைத் திருநாமம். மருண்மாலை - மஞ்சட்பொழுது. மருதக்கிழவன் - மருதநிலத் தலைவன் இந்திரன். மருதம் - வயலும் வயல் சூழ்ந்த நிலமும், ஊடியும் கூடியும் துய்ப்ப தாகிய ஒழுக்கம், மருதப்பண், வயல். மருதம் பாடிய இளங்கடுங்கோ - சங்க காலப் புலவர் (அகம் 96; நற். 50). மருதயாழ் - மருத நிலத்துக்குரிய யாழ். மருதயாழ்திறம் - மருதப்பண் வகை. மருதயாறு - திருச்சிராப்பள்ளிப் பகுதியி லுள்ள ஒரு சிற்றாறு. மருதல் - 7 வகையான காற்று. மருதவைப்பு - வயலும் வயல் சூழ்ந்த நிலமும். மருத்தன் - வைத்தியன், வாயு தேவன். மயத்தீடு - வசிய மருந்தால் வரும் நோய்வகை. மருத்து - காற்று, வாதநோய். மருத்துச்சஞ்சீவி - மருந்தாக உதவும் புல் மரம் புதல் பூடுசொடி முதலியன. மருத்துநீர் - முழுகுவதற்கான மருந்திட்ட நீர். மருத்துநூல் - மருந்து நூல். மருத்துவச்சி - பிரசவம் பார்ப்பவள். மருத்துவதி - தாமிரபரணி ஆறு. மருத்துநாள் - அச்சுவினி. மருத்துவத்தாதி - நேர்ஸ் (Nurse). மருத்துவம் - வைத்தியம், பரிகாரம், மருந்து, ஒருவகை யாழ். மருத்துவர் - அச்சுவினி தேவர், வைத்தியர். மருத்துவனல்லச்சுதனார் - பரிகாடற் பாடல்கள் சிலவற்றுக்கு இசை வகுத்தவர். மருத்துவன் தாமோதரனார் - கடைச் சங்கப் புலவருளொருவர். மருத்துவி - வைத்தியம் செய்பவள். மருத்தெண்ணெய் - மருந்து எண்ணெய். மருநிலம் - நீரும் நிழலும் அற்றநிலம். மருந்து - ஒளடதம், பரிகாரம், அமிர்தம், சோறு, குடிதண்ணீர், இனிமை. மருபூமி - மரு நிலம். மருப்பு - விலங்கின் கொம்பு, யானைத் தந்தம், யாழினுறுப்பு வகை, இஞ்சி. மருப்புத்தாடி - யானைத் தந்தத் தால் செய்த விரற் கவசம். மருமக்கட்டாயம் - ஒருவனுடைய சொத்து அவனுக்குப்பின் அவ னுடைய சகோதரி பிள்ளைகளைச் சாரும் உரிமை முறை. மருமதாரை - உயிர் நிலை. மருமம் - உயிர்நிலை, மார்பு, இரகசியம். மருமராஞ்சம் - வில்லின் நாணொலி, காற்றால் அலையும் சீலை இலை முதலியவற்றாலெழும் ஒலி. மருமாட்டி - வழித்தோன்றியவள். மருமான் - வழித் தோன்றியவன், மருமகன். மருவலர், மருவார் - பகைவர். மருவிதழ் - பூவிதழ். மருவுதல் - கலந்திருத்தல், வழக்கப் படுதல், தோன்றுதல், கிட்டுதல், தழுவு தல், பயிலுதல், புணர்தல், தியானித்தல், பதித்தல். மருவூர்ப்பாக்கம் - காவிரிப்பூம் பட்டினத்தின் ஒரு பகுதி. மருளன், மருளி - அறிவு மயக்க முற்றவன். மருளிந்தளம் - பண் வகை. மருளுதல் - மயங்குதல், வெருவுதல், வியத்தல், ஒப்பாதல். மருள் - மயக்கம், திரிவு உணர்ச்சி, வியப்பு, ஓர் உவம உருபு. மருள்நீக்கியார் - அப்பர். மரூஉ - இலக்கணம் சிதைந்து வரும் சொல், நட்பு. மரை - மான் வகை, தாமரை, தவளை, கானக்குதிரை. மரையா, மரையான் - காட்டுப்பசு. மர்க்கடமுட்டி - குரங்குப்பிடி. மர்க்கடம் - குரங்கு. மர்த்தனம் - பிசைகை, கடைகை. மர்மம் - மருமம். மலகரி - குறிஞ்சிப் பண் வகை. மலக்கம் - துன்பம், மாறு, மனக் கலக்கம். மலக்கு - மயக்கம். மலக்குதல் - கலக்குதல். மலங்கு - விலாங்கு மீன். மலங்குதல் - கலங்குதல், பிறழ்தல், ததும்புதல். மலடன் - மகப் பெறாதவன். மலடி - மகப் பெறாதவள். மலடு - கருத்தரியாமை. மலத்திரயம் - மும்மலம். மலநீர் - மூத்திரம். மலபரிபாகம் - மலம் நீங்குதற்குரிய பக்குவம். மலபாண்டம் - உடல். மலப்பு - கடவுள்முன் ஆடும் ஒரு வகைக் கூத்து. மலம் - பல்வீ, மாசு, மும்மலம். மலயக்கோ - பாண்டியன். மலயத்துவசன் - தடாதகைப் பிராட்டி யின் தந்தையாகிய பாண்டிய அரசன். மலயமாருதம் - தென்றற் காற்று. மலயமுனி - அகத்தியர். மலயம் - பொதியமலை, சந்தனம். மலயானிலம் - தென்றல். மலரகிதர் - மும்மலம், நீக்கியவர். மலரடி - தாமரை போன்ற பாதங்கள். மலரணை - மலர் பரப்பிய படுக்கை. மலரோன் - பிரமன். மலர் - பூ, தாமரை, ஆயுத முதலிய வற்றின் மேற் குமிழ், வெண்பாவின் இறுதிச்சீர் வாய்பாடுகளுள் ஒன்று, மும்மலமுடையவர். மலர்க்கணையோன் - மன்மதன். மலர்ச்சி - மலர்கை, மகிழ்ச்சி. மலர்த்துதல் - விரித்தல். மலர்த்தேவி - இலக்குமி. மலர்ப்பு - மலர்விக்கை, வெளிப்படக் காட்டுகை. மலர்மண்டபம் - பூத்தொடுக்கும் மண்டபம். மலர்மிசை நடந்தோன், மலர்மிசை ஏகினோன் - தியானிப்பவரின் இருதயத்தை அடைந்தோன், கடவுள், புத்தன். மலவைரி - சிவன். மலாடு - செந்தமிழ் சேர்ந்த 12 நாடு களுள் ஒன்று (திருக்கோவலூரைச் சூழ்ந்த நாடு.) மலாம் - முலாம். மலாரடி - கலக்கம். மலார் - வளார். மலாவகம் - பிண்ணாக்கு. மலி - மிகுதி. மலிசம் - அரச மரம். மலிர்தல் - பெருகுதல், நீர் முதலியன ஒழுகுதல், பயிலுதல். மலிர்நிறை - பெருவெள்ளம், நீர் ஊற்று. மலிவு - நிறைவு, மிகுதி, காதலரின் சேர்க்கை உவகை, நயவிலை, தன்மை, உத்தமம். மலினம் - மாசு, பாவம், பச்சிலை. மலை - பருவதம், ஈட்டம், போர்த் தொழில். மலைகுனியநின்றான் - திருவேங் கடத்துத் திருமால். மலைக்கொடிமன்னன் - மலயத் துவசன். மலைக்கோட்டான் - பறவை வகை (The eastern redshand). மலைச்சரக்கு - கர்ப்பூர வகை, மலை மூலி வகை. மலைச்சாரல் - மலைப்பக்கம். மலைச்சார்பு - மலைநாடு. மலைதல் - சூடுதல், மேற்கொள்ளு தல், ஒத்தல், பறித்தல், எதிர்த்தல், மாறுபடுதல், மயங்குதல், வாதாடுதல். மலைதாங்கி - அரிவாள், மணைப் பூண்டு. மலைத்தல் - பொருதல், மாறுபடுதல், மயங்குதல். மலைத்தாரம் - மலைபடு திரவியம். மலைத்தொடக்கு - கன்மதம். மலைநாடன் - மலை வளமுடைய நாட்டுக்கு அரசன். மலைபடுகடாம் - நன்னன்சேய் நன்னனைப் பொருங் குன்றூர்ப் பெருங் கௌசிகனார் பாடிய ஆற்றுப்படை. மலைபடுதிரவியம் - அகில், மிளகு, கோட்டம், தக்கோலம், குங்குமம் என்னும் 5 வாசனைப் பண்டம். மலைப்பழம் - மலை வாழைப்பழம். மலைப்பள்ளி - அருந்தவர் வாழும் மலையிடம். மலைப்பு - அறிவு மயக்கம், திகைப்பு, போர் மாறுபாடு. மலைமகள் - பார்வதி. மலைமண்டலம் - மலைநாடு. மலைமல்லிகை - காட்டு மல்லிகை. மலைமுழக்கு - மலையினின்று கேட்கும் எதிரொலி. மலைமுழைஞ்சு - மலைக் குகை. மலைய - ஓர் உவம வாய்பாடு. மலையகராதி - மூலிகை அகராதி. மலையடி - மலையின் அடி, சேவற் கோழி. மலையப்பொருப்பன் - பாண்டியன். மலையமானாடு - மலாடு. மலையமான் - சேர அரசன், மலாடு ஆளும் அரசன். மலையம் - மலயம், மலையினுச்சி. மலையரண் - மலையாகிய காப்பிடம், மலைமேற் கோட்டை. மலையரையன் - இமயமலை (இமவான்). மலையனார் - சங்ககாலப் புலவர் (நற்.93). மலையன் - குறிஞ்சிநிலத் தலைவன், சேரவரசன், காரி. மலையாட்டி - மலைநாட்டுப் பெண். மலையாரம் - சந்தனம். மலையாள பகவதி - மந்திரங் களுக்கு அதிதேவதையான துர்க்கை. மலையாள் - பார்வதி. மலையானிலம் - தென்றல். மலையிலக்கு - வெளிப்படை யானது. மலையின்முனிவன் - அகத்தி, பிளகு. மலைவளம் - மலை நிலத்தின் செழிப்பு, மலைபடு திரவியம். மலைவளர்காதலி - பார்வதி. மலைவாணர் - மலைவாசிகள். மலைவு - மயக்கம், முன்னுக்குப்பின் விரோதம், உவமச்சொல். மல் - வலிமை, மற்றொழில், கண்ணன் ஆடிய கூத்து வகை. மல்குதல் - அதிகமாதல், நிறைதல், செழித்தல். மல்யுத்தம் - மற்போர். மல்லகதி - குதிரைப் பாய்ச்சல் வகையுள் ஒன்று. மல்லசம் - மிளகு. மல்லம் - மல் யுத்தம், பள்ளி அறை, கதுப்பு. மல்லர் - திருக்குறளுரை ஆசிரி யருள் ஒருவர். மல்லல் - வலிமை, மிகுதி, செல்வம், வளம், பொலிவு, அழகு. மல்லன் - மற்போர் செய்பவன். மல்லாட்டம் - போர். மல்லாத்துதல் - முதுகு மேலாக முகம் கீழாகக் கிடக்கச் செய்தல். மல்லி - கொத்தமல்லி, தீர்த்தரங் கரருள் ஒருவர். மல்லிகை - பூங்கொடிவகை, விளக்குத் தண்டு. மல்லிகைமொட்டு - மலராத மல்லிகைப்பூ, மகளிர் தலை அணி வகை. மல்லிசேணர் - வாமனாச்சாரியார், மேருமந்தர புராணஞ் செய்தவர். மல்லுக்கட்டுதல் - சண்டை செய்தல். மல்லை - வளம், பெருமை, இரப்போர் கலம், மாமல்லபுரம். மல்வென்றி - வாகைத்திணையுள் மற்போர் வெற்றியைக் கூறும் புறத்துறை. மவுணன் - கணவன். மவுரியர் - மௌரியர் (வடநாட்டார்). மவுலி - முடி, சடை, தலை. மவ்வம் - அழகு. மழ - இளமை, குழந்தை, மன மயக்கம். மழநாடு - திருச்சிராப்பள்ளிக்கு மேற்பால் காவேரி ஆற்றுக்கு வடபுறத்திலுள்ள பகுதி. மழபுலம் - மழ நாடு. மழபுலவஞ்சி - பகைவரது புலம் பாழ் படக் கொள்ளையூட்டுதலைக் கூறும் புறத்துறை. மழபுலவர் - பள்ளியில் படிக்கும் சிறுவர். மழமழப்பு - மினுக்கம். மழலை - குழந்தைகளின் திருந்தாச் சொல், மென்மொழி, இளமை, மெல்லோசை. மழலைத்தேன் - புதுத்தேன். மழவராயன் - கள்ளர் முதலிய ஒரு சார் சாதியினர் பட்டப் பெயர். மழவர் - வீரர். மழவன் - இளைஞன் வீரன், மழ நாட்டான். மழவு - மழ. மழறுதல் - மென்மையாதல், தெளி வில்லாதிருத்தல். மழித்தலை - மொட்டைத்தலை. மழித்தல் - தலையை முண்டனஞ் செய்தல். மழு - கோடாலி, பழுக்கக்காய்ச்சிய இரும்பு, கடல். மழுகுதல் - மழுங்குதல், ஒளிகுறை தல். மழுக்கம் - கூரின்மை, ஒளி மழுங் குகை. மழுங்கி - நாணமிழந்தவள். மழுங்குதல் - கூர்நீங்குதல், ஞெரலி வழிதல், கெடுதல். மழுப்புதல் - ஏமாற்றுதல். மழுமட்டை - மழு மொட்டை. மழுமொட்டை - கூர் மழுங்கினது. மழுவலான் - சிவன். மழுவாளி - சிவன், பரசுராமன். மழுவாள் - மழு, கோடரி. மழுவெடுத்தல் - மழுவை ஏந்திச் சபதம் செய்தல். மழுவோன் - சிவன். மழை - மேகத்தினின்று விழும் நீர், நீருண்டமேகம் நீர், கருமை, குளிர்ச்சி, மிகுதி. மழைக்கரு - புகை. மழைக்காலிருட்டு - மழை பெய்யும் காலத்தில் இரவிலுண்டாகும் செறிந்த இருட்டு. மழைக்கால் - கரு நிறத்துடன் இறங்கும் நீர்க்கால். மழைக்கோள் - சுக்கிரன். மழைச்சிலை - வானவில். மழைமரக்கால் - ஓர் ஆண்டில் பெய்யும் மழையை அளக்கும் அளவு வகை. மழையடை - விடாது பெய்யும் மழை. மழையலர் - நீர். மழையான் - திருமால். மழையேறு - இடி. மழைவண்ணக்குறிச்சி - மேகவண் ணப் பூவுள்ள மருதோன்றி. மழைவறங்கூர்தல் - மழை பெய்யா தொழிதல். மழைவீற்றிருத்தல் - மழை பெய்தல். மளிகைக்கடை - பலசரக்குக்கடை. மள்குதல் - குறைதல். மள்ளல் - வலிமை. மள்ளனார் - சங்க காலப் புலவர் (குறு. 72; நற். 204). மள்ளன் - வலிமையுடையவன், படை வீரன், படைத்தலைவன், இளைஞன், மருதநிலத்தில் வாழ்வோன், குறிஞ்சி நிலத்தில் வாழ்வோன். மறக்கருணை - நிக்கிரக உருவமான கருணை. மறக்களம் - போர்க்களம். மறக்களவழி - போரில் பகையை அழிக் கும் அரசனை உழும் வேளாளனாக மிகுத்துக் கூறும் புறத்துறை. மறக்களவேள்வி - களவேள்வி. மறக்கற்பு - பத்தினி தன் சீற்றத்தால் கடுஞ்செயல் தோற்றுவிக்கும் கற்பு. மறக்காஞ்சி - போரில் விழுப்புண் பெற்ற வீரன் தன் வாழ்க்கை வேண்டாது அப் புண்ணைக் கிழித்துக் கொண்டு இறத்தலைக் கூறும் புறத்துறை. மறக்குடி - வீர குலம். மறங்குதல் - கலங்குதல். மறச்செவி - பாவம் பயக்கும் மொழி களைக் கேட்கும் காது. மறதி - நினைவின்மை. மறத்தி - பாலை நிலப்பெண், மறக்குடிப் பெண், குறிஞ்சி நிலப் பெண். மறத்துறை - பாவ நெறி, வீரச் செயல். மறநிலைப்பொருள் - வெற்றி திறை தண்டம் முதலியவற்றால் அரசன் தேடிய பொருள். மறநிலையறம் - அரசன் பகை அறுத்து நாட்டினைக் காவல் புரியும் அறச் செயல். மறநிலையின்பம் - வீரச் செயல், ஏறு தழுவுதல், இலக்கமெய்தல், வலிதிற் கோடல் முதலியவற்றால் விரும்பிய பெண்ணை அரசன் அடையும் இன்பம். மறப்பு - மறதி. மறப்புகழ் - வீரச் செயலால் வரும் புகழ். மறமலி - யானை. மறமுல்லை - அரசன் வேண்டியது கொடுப்பவும் கொள்ளாது வீரனது பயன் கருதா நிலையைக் கூறும் புறத்துறை. மறம் - வீரம், சினம், பகை, வலிமை, பெற்றி, போர், கொலைத்தொழில், யமன், பாவம், மயக்கம். மறலி - இயமன், பொறாமை. மறலுதல் - மாறுபடுதல், போர் செய்தல். மறலை - புல்லறிவாளன். மறல் - பகை, போர், எழுச்சி, சாவு. மறவணம் - பாவகுண்டம். மறவன் - பாலைநிலத்தான், மலை வேடன், வீரன், படைத்தலைவன், கொடியோன். மறவாணர் - மலைவேடர். மறவி - மறதி, தேன், அழுக்காறு, இழிவு, குற்றம். மறவுரை - தீய உபதேச மொழி. மறவை - வன்கண்மை உடையது. மறவோன் - வீரன், 10 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட ஆண்மகன். மறனுடைப்பாசி - வீர சொர்க்க மடைந்ததைக் கூறும் புறத்துறை. மறி - ஆடு குதிரை மான் முதலிய வற்றின் பெட்டை, ஆடு, மேடராசி, அழுங்கின், குட்டி, மான். மறிதரல் - மீளுகை. மறிதல் - கீழ் மேலாதல், மீளுதல், முதுகிடல், சாய்தல், கிளாதல், முறுக் குண்ணுதல், பலகாலும் திரிதல், நிலை குலைதல். மறித்தல் - தடுத்தல், திருப்புதல், அழித்தல். மறித்தும் - மீண்டும். மறியல் - தடை, பண்டங்கள் வாங்காமல் தடுத்தல் (Ficketung). மறிவு - திரும்புகை, கேடு. மறு - குற்றம், களங்கம், தீமை அடையாளம், அச்சம், மற்ற. மறுகல் - சுழற்சி, கலங்குகை. மறுகால் - மறுபடி. மறுகு - தெரு, குறுந்தெரு. மறுகுசிறை - வீதியன் இருபுறத்து முள்ள வீட்டுவரிசை. மறுகுதல் - சுழலுதல், பலகாலும் திரிதல், மனம் கலங்குதல், சிதைதல், கொண்டுபோதல். மயக்கம் - சுழற்சி, துன்பம், கலக்கம். மறுசொல் - மறுமொழி. மறுதரவு - மீட்கை. மறுதலித்தல், மறுதலிப்பு - மறுத்தல். மறுதலை - மறுகட்சி, எதிர்பொருள், பகை, நிகர், இரண்டாம் முறை. மறுதலைத்தல் - மறுத்தல், எதிரிட் டுத் தோன்றதல். மறுதலைப்பெண் - மறுதாரம். மறுதொழில் - பாவம். மறுநோய் - பூர்வ வாசனை, மறுதலித்த நோய். மறுபிறப்பு - வரப்போகும் பிறப்பு. மறுபுலம் - பாலை நிலம். மறுப்படுதல் - வசையுறுதல். மறுப்பு - கண்டனம், மறுத்தல். மறுமணம் - கணவன், இறந்தபின் செய்து கொள்ளும் கலியாணம். மறுமலர்ச்சி - திரும்ப விரிதல் (Renaissance). மறுமாற்றம் - மறுசொல். மறுமை - மறுபிறவி. மறுவருதல் - மனம் சுழலுதல். மறுவலும் - மீண்டும். மறுவி - கத்தூரி விலங்கு. மறை - மறைக்கை, இரகசியம், வேதம், மந்திரம், களவுப்புணர்ச்சி, புகலிடம், எதிர், கறை, விலக்குகை, புள்ளி. மறைக்காடு - வேதாரணியம். மறைசை - மறைக்காடு. மறைசையந்தாதி - யாழ்ப் பாணத்துச் சின்னத்தம்பிப் புலவர் பாடிய ஓர் அந்தாதி (18ஆம் நூ.). மறைச்சிரம் - உபநிடதம். மறைஞான சம்பந்த சிவாசாரியார் - 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வரும் அருணந்தி சிவாசாரியரின் குருவு மான சந்தான குரவர். மறைஞானசம்பந்தர் - சைவ சமய நெறி, சிவ தருமோத்தரம் கமலாலய புராணம் முதலிய நூல்களியற்றிய ஆசிரியர் (16ஆம் நூ.). மறைத்தலைவி - திருமகள். மறைத்துமொழிகிளவி - இடக்கர டக்கல். மறைபனி - மூடுபனி (Mist). மறைபுகல் - அடைக்கலம்புகல். மறைபொருட்கொள்கை - சாதாரண அறிவுக்கு எட்டாத காட்சி. (Occultism). மறைமலை அடிகள் - சுவாமி வேதாசலம் (1876 - 1950). மறைமுடிவு - வேதாந்தம். மறைமுதல் - சிவன், பிரணவம். மறைமுதல்வன் - அந்தணன். மறைமூலம் - பிரமரந்திரம். மறைமொழி - மந்திரம். மறையோள் - பிரமன், அந்தணன். மறைவாணர் - பார்ப்பார். மறைவிடை - மறுத்துக்கூறும் விடை. மற்கடம் - மர்க்கடம், குரங்கு. மற்கலி - ஆசீவக சைனர் வணங்கும் கடவுள். மற்குணம் - மூட்டைப்பூச்சி. மற்சம் - மீன், மீனராசி. மற்று - அசைநிலை, வினைமாற்றுக் குறிப்பு, பிறிதுப் பொருட்குறிப்பு. மற்றும் - மீண்டும். மற்றை - பிற. மற்றொழில் - மல்வித்தை. மன - மிகவும். மனக்கொள்ளுதல் - நன்கறிதல். மனக்கோட்டம் - புத்தியின் கோணல், அழுக்காறு. மனக்கோட்டை - வீண் எண்ணம் புலவி நீட்டம். மனக்கோள் - மனக்குறிப்பு. மனங்கரைதல் - நெஞ்சு இளகுதல். மனங்குவிதல் - மனமொடுங்குதல். மனங்கொள்ளுதல் - விரும்புதல். மனசறிய, சனசார - மனச்சாட்சிப்படி. மனது - உள்ளம். மனத்தழுக்கு - பொறாமை. மனத்தாபம் - மனவருத்தம். மனநிலை - உள்ளப்பாங்கு. மனப்பரிப்பு - மனத்துயர். மனப்பால் குடித்தல் - கைகூடாத வற்றைப் பற்றி நெடுக எண்ணி அகமகிழ்தல். மனப்பிரிப்பு - மனக்கலக்கம். மனமுறிதல் - துன்பத்தால் ஊக்கம் குன்றுதல். மனம் - நெஞ்சம், எண்ணம், விருப்பு. மனவாசங்கடந்தார் - மெய்கண்ட தேவரின் சீடரும் உண்மை விளக் கம் செய்வருமாகிய ஆசிரியர் (13 ஆம் நூ.). மனவு - மணி, சங்குமணி, சங்க அரைப் பட்டிகை. மனவெழுச்சி - உற்சாகம். மனனம் - சிந்திக்கை, ஞாபகத்தில் வைக்கை. மனா - சங்குமணி, அரைப்பட்டிகை. மனாலம் - குங்குமம், சாதிலிங்கம். மனிச்சடித்தல் - பெருமிதமாகப் பேசுதல். மனிதகணம் - உரோகிணி, பரணி, திருவாதிரை, பூரத்திரயம், உத்திரத் திரயம் ஆகிய ஒன்பது நட் சத்திரங்கள். மனிதசஞ்சாரம் - மனித நடமாடுகை. மனிதன் - ஆண்மகன். மனு - படைப்புக்காலத்தில் மனி தரைத் தோற்றுவிப்பவர், மனுநூல், மந்திரம், விண்ணப்பம், வார்த்தை. மனுசரிதன் - அனுநீதிப்படி அரசியல் புரிவோன். மனுநெறி - மனுநீதி. மனுமுறை கண்ட சோழன் - ஒரு சோழ அரசன். மனுவந்தரம் - மனுவின் ஆயுட்காலம். மனுவர் - கொல்லர், மனிதர். மனை - வீடு, வீட்டுக்குரிய வெற் றிடம், மனைவி, குடும்பம், சூதாடு பலகையின் அறை. மனைகோலுதல் - வீடு கட்டுதல். மனைக்கட்டு - வீடுகட்டுதற்குரிய நிலம். மனைக்கிழத்தி - மனைவி. மனைக்கிழவன் - கணவன். மனைப்பலி - வீட்டிலுறை தெய்வங் கட்குப் பலி. மனைமரம் - தேற்றா மரம். மனைமுதல் - மனைவி. மனையடிசாத்திரம் - வீடுகட்டும் முறைகளை உணர்த்தும் நூல். மனையாட்டி - மனையாள். மனையிறை - வீட்டுவரி. மனையுறைமகள் - மணமான பெண். மமனையோள் - மனையாள். மனைவழி - வீட்டுக்குரிய நிலம். மனைவாழ்க்கை - இல்வாழ்க்கை. மனைவி - இல்லாள், முல்லை மருத நிலங்களின் தலைவி. மனைவேள்வி - இல்லறம். மனோகதி - மனத்தின் வேகம். மனோகரம் - விரும்பப்படும் தன்மை. மனோக்கியம் - மனோகரம். மனோசிலை - பாசாண வகை. மனோபவன் - மன்மதன். மனோபாவனை - மனத்தால் பாவிக்கை. மனோமயம் - மனமாகிய உடல். மனோரஞ்சிதம் - இன்பமானது, ஒரு வாசனைப் பூங்கொடி. மனோரதம் - விருப்பம். மனரோஞ்சிதம் - இன்பம் தருவது. மனோரம்மியம் - மனோபா வனையில் நினைத்தது. மனோலயம் - மன ஒடுக்கம். மனோவதி - பிரமன் நகரம். மனோன்மணி - பார்வதி. மனோன்மணித்தாய் - இந்துப்பு. மனோன்மணியம் - ஆசிரியர் சுந்தரம் பிள்ளை இயற்றிய ஒரு நாடக நூல் 19ஆம் நூற்றாண்டு இறுதி. மன் - ஓர் அசைநிலை, எதிர்காலம் காட்டும் இடைநிலை, ஒழியிசைக் குறிப்பு, மிகுதிக்குறிப்பு, பிறிதோன் றாகைக் குறிப்பு, ஆக்கக் குறிப்பு, அரசன், தலைவன் கண்வன், உத்திரட்டாதி, பெருமை, இழிவு, மந்திரம். மன்பது, மன்பதை - மக்கட்பரப்பு, படை. மன்மகளிர் - அரசனல் தலைக் கோல் பெற்ற ஆடல் மகளிர். மன்மத - 60 ஆண்டில் 29 ஆவது. மன்மதபாணம் - பஞ்சபாணம். மன்மதன் - காமன். மன்மம் - கடுஞ் சபதம். மன்ற - தெளிவாக, நிச்சயமாக, மிக, ஓர் அசைச் சொல். மன்றகம் - சபை. மன்றப்பொதியில் - மன்றமாகிய பொது இடம். மன்றம் - சபை, நியாய சபை, ஊருக்கு நடுவிலுள்ள மரத்தடிப் பொது இடம், செண்டு வெளி, வெளியிடம், சிதம்பரம், வீடு, பசுத் தொழு, நெடுங்தெரு, மெய்மை, வாசனை. மன்றல் - வாசனை, கலியாணம், நெடுந்தெரு, பாலைப் பண்வகை. மன்றவாணன் - தில்லைச் சிவன். மன்றாடி - சிவன், பிறர்க்காக வழக்கெடுத்துரைப்போன், சபையில் வழக்காடுதல். மன்றாட்டம் - வேண்டுகோள். மன்றில் - வாயில் முற்றம். மன்று - சபை, சிதம்பரத்துள்ள கனக சபை, பசுத்தொழு, பசுமந்தை, மரத் தடியிலுள்ள திண்ணைப் பொது விடம், தோட்டத்தின்நடு, நாற்சந்தி வாசனை. மன்றதல் - தண்டம் செய்தல். மன்றுபடுதல் - வெளிப்படுதல். மன்றுபாடு - தருமாசனத்தின் முன் இருக்கும் தண்டப் பொருள். மன்னர்பின்னோர் - வணிகர். மன்னர்மன்னவன் - சக்கரவர்த்தி, துரியோதனன். மன்னர்விழைச்சி - அரசனால் அனு பவித்தற்குரியது. மன்னல் - நிலைபேறு, வலிமை. மன்னவன் - அரசன், இந்திரன். மன்னறம் - இராசதருமம். மன்னன் - அரசன், எப்பொருட்கும் இறைவன், கணவன், உத்தரட்டாதி. மன்னனார் - திருமால். மன்னார் - பகைவர். மன்னார்சாமி - ஒரு கிராம தேவதை. மன்னாவுலகம் - சுவர்க்கம். மன்ன - தமையன் மனைவி. மன்னித்தல் - பிழைபொறுத்தல். மன்னியர் - மதிக்கத் தக்கவர். மன்னுதல் - நிலைபெறுதல், தங்குதல், பொருந்துதல், அடுத்தல். மன்னுமான் - கடவுள். மன்னும் - பெரும்பான்மையும், ஓர் இடைச்சொல். மன்னுயிர் - மானிடசாதி. மன்னுலகு - சுவர்க்கம். மன்னுறுதொழில் - அரசன் கட் டளை பெற்றுப் பகைவரின் பசுநிரை கவர்தலைக் கூறும் புறத்துறை. மன்னைக்காஞ்சி - இறந்தவனைப் பற்றிச் சிறப்பித்து ஏனையோர் இரங்கிக் கூறும் புறத்துறை. மன்னைப்பிடி - தொண்டையை இறுகப் பிடிக்கை. மா மா - விலங்கு, குதிரை, யானை, வண்டு, மாமரம், ஓர் அசைச்சொல், இலக்குமி, செல்வம், மாற்று, ஒருநிறை, 1/20 வேலி, பெருமை, வலிமை அழகு, கருமை, நிறம், மாமை நிறம், தானியமாவு, தாய். மாகதப்படி - 12 பலம் கொண்ட நிறை. மாகதம் - மகதம். மாகதர் - மகத நாட்டினர், இருந்து ஏத்துவோர். மாகத்தார் - தேவர். மாகந்தம் - மாமரம். மாகம் - மகம், மேலிடம், ஆகாயம், சுவர்க்கம், திசை, மேகம். மாகர் - தேவர். மாகாணம் - நாட்டுப்பகுதி. மாகாணி - பதினாறில் ஒன்று (1/16). மாகாத்மியம் - மகிமை. மாகாளன் - மகாசாத்தனுடைய முதன்மைக் கிரங்கரன். மாகாளி - துர்க்கை, சத்த மாதரி லொருத்தி, களா வகை. மாகாளிசரண் - களா விழுது. மாகீர்த்தி - பாண்டியருள் ஒருவன். மாகு - வலை, வலையில் கோத்த மணி. மாகுலர் - வேடர். மாகுலன் - உயர்குடியில் பிறந்தவன். மாகூர்தல் - விலங்குகள் குளிரால் உடல் வளைதல். மாகேசம் - வரிக்கூத்து வகை. மாகேசுவரபூசை - சிவனடியார்க்கு உணவிடுகை. மாகேச்சுவரி - பார்வதி. மாகேந்திரப்பொருத்தம் - கலி யாணப் பொருத்தங்களுள் ஒன்று. மாகேந்திரி - சத்த மாதரில் ஒருத்தி. மாக்கடு - சூரத்துக் கடுக்காய். மாக்கல் - ஒருவகைக் கல் (Soap Stone). மாக்கள் - மனிதர், பகுத்தறிவிலார், குழந்தைகள். மாங்கல்யசூத்திரம் - தாலிச்சரடு. மாங்கல்யம் - தாலி. மாங்கல்யதந்து - தாலிச்சரடு. மாங்காய் - மாவின்காய். மாங்காய்க்குயில் - கம்பலக் குருவி (Black headed oriole). மாங்காய்ப்பால் - பாலோடு முப் பழமும் சர்க்கரையும் சேர்த்துக் காய்சிய சாறு. மாங்கிசம் - மாமிசம். மாங்குடிமருதனார் - மதுரைக் காஞ்சி நூலின் ஆசிரியர். மாங்குரோவ் - ஆற்றங் கழிமுகங் களில் வளரும் கண்டல் மரம் (Mangrove). மாசதிர் - பெரிய அதிசயம். மாசம் - ஆண்டில் 12 இல் ஒரு பகுதி. மாசறுதல் - குற்றம் நீங்குதல். மாசனம் - மக்கள் தொகுதி, மந்திரி, புரோகிதர் முதலியோர். மாசாத்தன் - ஐயனார். மாசாத்துவன் - வணிகரில் ஒரு பிரிவினர். மாசாலம் - ஏமாற்று வித்தை. மாசி - பதினோராம் மாதம், மேகம். மாசிகம் - இறந்தவர் பேரால் ஆண் டில் மாசம்தோறும் செய்யும் சிரார்த்தம். மாசிதறிருக்கை - பகைவரிடத்துக் கவர்ந்த யானை பசு முதலிய விலங்குகளை இரப்போர்க்கு அளவிறந்து கொடுக்கும் பாசறை. மாசிமகம் - மாசிப் பௌர்ணமியும் மக நட்சத்திருமம் வடிய புண்ணிய காலம். மாசியம் - மாசிகம். மாசிலாமணி - மறு அற்றமணி, கடவுள். மாசு - மறு, அழுக்கு, குற்றம், பால் வீதி மண்டலம், இருள். மாகணம் - பாம்பு. மாகணி - அழுக்கு உள்ள ஆடை. மாகமறு - குற்றம். மாசூல் - பயிரின் விளைச்சல் (உருது). மாசை - பொன், உழுந்து நிறை உள்ள பழைய நாணய வகை. மாச்சரியம் - பொறாமை, பகைமை. மாச்சீர் - நேரசையால் இறும் இயற்சீர். மாச்சு - குற்றம். மாச்சுமாக்கத்தம்பலம் - பிள்ளை விளையாட்டு வகை. மாடகம் - யாழின் முறுக்காணி. மாடகூடம் - உப்பரிகை உள்ள வீடு. மாடக்கோயில் - கோச்செங்கண்ணான் கட்டிய ஒரு சிவாலயம். மாடநிலை - உப்பரிகை. மாடப்புறா - மாடக்குழி. மாடாபத்தியம் - கோயில் விசாரணை. மாடி - உப்பரிகை. மாடிகை, மாடியம் - கவசம். மாடு - எருமை, இடம், பக்கம், அழகு, இயல்பு. மாட்சிமை - சிறப்பு, பெருமை. மாட்டாதார் - வல்லமை இல்லாதார். மாட்டு - சொல் அகன்று கிடப்பினும் அணுகிக் கிடப்பினும் பொருள் கொள்ளும்போது கொண்டு கூட்டிச் சொல் முடிவு கொள்ளும் முறை. மாட்டுதல் - இணைத்தல், தொடுத்தல், செருகுதல், கொளுவுதல், கூடிய தாதல், வலிபெறுதல், மாளச் செய்தல், அழித்தல், போக்குதல். மாட்டுப்பறங்கிக்காய் - சாம்பற் பூசணி. மாட்டுப்பெண் - மகனின் மனைவி. மாட்டுவாகடம் - மாட்டு வைத்தியம் கூறும் நூல். மாட்டுவித்தல் - அழித்தல். மாட்டெறிதல் - ஏற்றிக்கூறுதல். மாணவகன் - பிரமசாரி, படிக்கும் சீடன். மாணவன் - மாணாக்கன். மாணவி - மாணாக்கி. மாணாக்கி - பள்ளிக்கூடத்தில் படிப்பவள். மாணார் - பகைவர். மாணி - பிரமசாரி, குறள், வடிவம், அழகு, ஆண்குறி. மாணிக்கம் - சிவப்புமணி. மாணிக்கவாசகர் - சமய குரவருள் ஒருவர். மாணுதல் - சிறத்தல், நிறைதல். மாணை - ஒருவகைக் கொடி. மாண் - மாட்சிமை. மாண்டல் - மாட்சிமையாகை, மரிக்கை. மாண்டவியர் - ஓர் குடி. மாண்டார் - மாட்சிமையுள்ளார், இறந்தவர். மாண்டுக்கியம் - உபநிடதங்களுள் ஒன்று. மாண்பு - மாட்சிமை, அழகு, நன்மை. மாண்மகன் - பிராமணச் சிறுவன். மாதங்கம் - யானை, இளமை, உருவம், கடல். மாதங்கி - பார்வதி, யாழ்த்தெய்வம். மாதசங்கிராந்தி - மாதப்பிறப்பு. மாதசூனியம் - மாதத்தில் சுபகாரியங் களுக்கு ஆகாகென விலக்கப்பட்ட நாள். மாதம் - முன்பின் 30 நாள் கொண்ட காலப் பகுதி. மாதராள் - பெண். மாதரி - காளி. மாதர் - பெண், அழகு, காதல், பொன். மாதலம் - கீழுலகத் தொன்று. மாதலி - இந்திரன் சாரதி. மாதவம் - இளவேனில், வைகாசி, மது, பெருந்தவம். மாதவர் - முனிவர். மாதவர்பள்ளி - முனிவர் ஆச்சிரமம். மாதவன் - திருமால். மாதவி - குருக்கத்திக் கொடி, கோவ லனின் காதற்கணிகை, சுபத்திரை. மாதவிடாய் - மாதப் பூப்பு. மாதா - தாய். மாதானுபங்கி - திருவள்ளுவர். மாதி - வட்டமாக ஓடல், மாமரம். மாதிசை - மகாதசை. மாதிமை - தகுதி, காதல். மாதிரம் - திக்க, யானை, மலை, ஆகாயம், நிலம் வட்டம். மாதிரி - தினிசு (Specimen, type ஆதிவிடை என்னும் மருந்துச் சரக்கு. மாதிரிகை - மாதிரி. மாதிரு - பூமி, இலக்குமி, தாய். மாது - பெண், பெருமை, அசைச் சொல், காதல். மாதுங்கராகம் - மருதப் பண்டிகை. மாதுமை - பெண் தன்மை, அறிவின்மை. மாதுரியம் - இனிமை, விவேகம். மாதுரியார் - விவேகிகள். மாதுலங்கம் - மாதுளை. மாதுலன் - தாயுடன் பிறந்த மாமன், பெண்கொடுத்த மாமன். மாதுளை - செடிவகை. மாதூகரம் -பிச்சையெடுத்தல். மாதேவன் - சிவன். மாதேவி - பார்வதி, அரச பத்தினி. மாதோயம் - கடல். மாத்தான் - பெரியோன். மாத்திக்கு - முத்தி நெறி. மாத்தியானிகம் - உச்சிப் போதில் செய்யும் அனுட்டானம். மாத்திரத்தில் - உடனே. மாத்திரம் - தனிமை. மாத்திரி - பாண்டுவின் இளைய மனைவி. மாத்திரை - கணப்போது, துறவியின் தண்டம் கமண்டலம் முலிய பொருள். மாத்திரைக்கோல் - அளவுகோல், மந்திரக்கோல். மாத்து - செருக்கு, பெருமை. மாத்துவம் - பெருமை, துவைதம். மாத்துவர் - மாத்துவர் மதத்தினரான துவைதர். மாநிலம் - பூமி. மாந்தம் - அசீரண நோய். மாந்தரன் - ஒரு பழைய சேர அரசன். மாந்தர் - மக்கள், ஆடவர், ஊர்க் காவலர். மாந்தன் - ஆண் மகன். மாந்தாதா - சூரிய வமிசத்தில் புகழ் பெற்ற ஒரு அரசர். மாந்தி - மாமரம். மாந்திரீகன் - மந்திர வித்தை அறிந்தவன். மாரந்துதல் - உண்ணுதல், குடித்தல், அனுபவித்தல், வருந்துதல், இறத்தல். மாந்தை - சேரனுக்குரிய ஒரு பழைய நகரம் மாதோட்டம். மாபதுமம் - நரகத்திலொன்று. மாபலன் - காற்று. மாபலி - மாபலிச் சக்கரவர்த்தி. மாபலிபுரம் - மாவலிபுரம் என்னும் ஊர். மாபாடியம் - பேருரை. மாபாரதம் - கௌரவ பாண்டவருக்கு இடையில் நடந்த போர். மாபாவி - பெரும்பாவி. மாபுராணம் - இறந்துபட்ட இலக்கண நூலுளொன்று. மாபெலை - பார்வதி. மாப்பிள்ளை - மணவாளப்பிள்ளை. மாப்பொருள் - ஸ்டார்ச் (Starch). மாமகன் - மன்மதன். மாமடி - மாமன். மாமணி - மாணிக்கம். மாம்தம் - பழங்கால யானை (Mammoth). மாமலர் - சரக்கொன்றை. மாமல்லை - மாவலிபுரம். மாமன் - தாயோடு பிறந்தோன். மாமாங்கம் - மகாமகம். மாமாத்திரன் - வைத்தியன். மாமாத்து - மிகப்பெரியது, பெருஞ் செருக்கு. மாமாயி - துர்க்கை. மாமிசபட்சிணி - ஊன் உண்ணும் விலங்கு. மாமிசம் - இறைச்சி. மாமிசி - சடாமாஞ்சி. மாமுகவன் - விநாயகன். மாமுனி - பெருந்துறவி, அருகன். மாமூல் - புராதன வழக்கு (அரபு). மாமூலனார் - சங்கப் புலவரு ளொருவர் (கி.மு. 3ஆம் நூ.) மாமேரு - மகாமேரு. மாமை - அழகு, கருமை, மேனி, நிறம். மாமோகம் - ஐம்புல நுகர்ச்சிப் பற்று. மாயக்குரம்பை - உடல். மாயக்கூத்தன் - திருமால். மாயப்புணர்ச்சி - களவுக்கூட்டம். மாயப்பொடி - மயக்குப் பொடி. மாயம் - மாயை, வஞ்சனை, பாசாங்கு, பொய், களவு, நிலையின்மை, ஆச்சரியம், அழகு, தீமை, கறுப்பு. மாயவண்ணன் - திருமால். மாயவள் - கரிய நிறமுடையவள், துர்க்கை, தெய்வப்பெண். மாயவன், மாயன் - திருமால். மாயாகாரியம் - மாயையின் தோற்றமான பிரபஞ்சம் முதலியன. மாயாதாரணை - மாயையில் தோன்றிய பிரபஞ்சப் பொருள். மாயாதேவி - கௌதமரின் தாய். மாயாபுரி - அரித்துவாரம், தேகம். மாயாவாதம் - பிரமமே யான் என்றும் உலகம் மித்தை என்றும் கூறும் மதம். மாயாவி - மாய வித்தைக்காரன். மாயி - துர்க்கை. மாயிகாஞ்சனம் - வித்தியாதரரின் விஞ்சை வகை. மாயிடம் - எருமை. மாயிரம் - புறமாக உள்ளது. மாயூரம் - மயில், ஒரு சிவத்தலம். மாயேயம் - ஐந்து மலத்துள் ஒன்று. மாயை - மூலப்பிரகிருதி, அசுத்த மாயை, பொய்த் தோற்றம், மாய வித்தை, வஞ்சகம். மாயோள் - கருநிறமுடையவள், மாமை நிறமுடையவள், பெண். மாயோனான் - திருவோணம். மாயோன் - கருநிறமுடையோன், திருமால். மாயோன்மருகன் - முருகக் கடவுள். மாய் - நரி. மாய்தல் - மறைதல், அழிதல், ஒளி மழுங்குதல். மாய்மாலம் - பாசாங்கு. மாய்வு - வருத்தம், மரணம். மாரகத்தானம் - சாதகனின் மரணத் தைக் குறிக்கும் இலக்கினத்துக்கு எட்டாமிடம். மாரகம் - மரணத்தைச் செய்வது. மாரகாளகம் - குயில். மாரடி - இழவில் அழும்போது மகளிர் மார்பில் அடித்துக் கொள்ளுதல். மாராட்டம் - மகாராட்டிர தேசம். மாரணம் - மரணம், ஒருவனை மந்திரத் தால் இறக்கச் செய்யும் வித்தை. மாரணி - காஞ்சுரை. மாரப்பற்று - கருப்பூர வகை. மாரனாலயம - பெய்குறி. மாரன் - காமன், மன்மதன். மாராப்பு - முதுகுடன் இணைத்து மூட்டை கட்டும் கச்சை, வண்ணான் துணி மூடை. மாராயம் - வேந்தனால் பெறும் சிறப்பு, மகிழ்ச்சி, நற்செய்தி. மாராயவஞ்சி - அரசனால் சிறப்பெய்திய வெற்றி வீரனின் தன்மை கூறும் புறத்துறை. மாரி - நீர், மழை, மேகம், மாரி காலம், பூராடம், கள், புள்வகை, வைசூரி தேவதை, துர்க்கை. மாரிசி - மிளகு. மாரிநாள் - உத்தரம். மாரியாத்தாள் - மாரியம்மன். மாரீசம் -மூர்ச்சை, வஞ்சகம், மிளகு தைலம். மாரீசன் - ஓரரக்கன். மாருசி - மிளகு. மாருதப்படை - வாயுப்படை. மாருதம் - காற்று. மாருதன் - வாயுதேவன். மாருதி - அனுமான், வீமன். மாருதேயன் - அனுமான். மாரோடம் - செங்கருங்காலி. மார் - மார்பு, பல்லோர் படர்க்கை விகுதியுள் ஒன்று, ஒரு வியங்கோள் விகுதி, ஒரு பன்மை விகுதி. மார்கழி - 9ஆம் மாதம். மார்க்கசகாயர் - திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழின் ஆசிரியராகிய புலவர். மார்க்கடம் - குரங்குக் கூட்டம். மார்க்கணம் - அம்பு. மார்க்கண்டன், மார்க்கண்டி, மார்க்கண் டேயன் - ஒரு முனிவர். மார்க்கண்டேயனார் - சங்க காலப் புலவருளொருவர். மார்க்கம் - வழி, நெடுந்தெரு, முறை, சமயம், மூலம், உபயம். மார்க்கவதி - நல்லநடத்தை உள்ளவள். மார்க்கவம் - கையாந்தகரை. மார்ச்சனம் - துடைப்பு, சிரசில் நீர் தெளிக்கை. மார்ச்சனி - துடைப்பம். மார்ச்சனை - இனிது ஒலிக்க மேளத்தில் வாய்ப்பூச்சிடும் கரிய சாந்து, முழவின் வார். மார்ச்சாலம் - பூனை. மார்த்தம் - சுமார்த்தம். மார்த்தட்டுதல் - அறைகூவிப் போட்டி யிடுதல். மார்த்தாண்டன் - சூரியன். மார்பம் - மார்பு. மார்பு - நெஞ்சு, நுனி, கருப்பூர வகை. மார்புசோதனி, மார்புசோதினி - இருதய அடிப்பை அறியும் கருவி (Stethoscope). மார்வம் - மார்பு. மார்வாடி - மார்வாடா நாட்டினர். மாலதி - மல்லிகை, சிறுசண்பகம், சந்திரிகை, விளக்குத்தண்டு, முத்தி. மாவரும்பு - மராட்டிமொக்கு. மாலர் - வேடர், புலைஞர். மாலவன் - புதன். மாலவித்தை - வஞ்சகம். மாலி - சூரியன். மாலிகாரேகை - நல்வாழ்வைக் குறிக்கும் கையிரேகை. மாலிகை - மாலை. மாலியம் - தெய்வத்துக்கிட்ட பலியாகிய சேடம். மாலியவான் - இராவணன் பாட்டனும் தலைமை அமைச்சனுமான அரக்கன், ஒரு மலை. மாலியாங்கம் - நானாவித மாலைகளை உதவும் தெய்வம். மாலிருஞ்சொலை - அழகர் மலை. மாலினி - துர்க்கை. மாலினுக்கிளையநங்கை - துர்க்கை. மாலுதல் - மாட்சிமைப்படுதல். மாலுந்திவந்தோன் - பிரமன். மாலுமி - கப்பலோட்டி (Crew). மாலூரம் - வில்வம். மாலை - அந்திப்பொழுது, இரா, இருள், சமயம், குற்றம், இயல்பு, குணம், தொடுக்கப்பட்டது, தொடுத்த பூமாலை, மாதரணிவடம், பாசம், விறலி, பெண். மாலைக்கண் - இரவில் கண் தெரியாமை. மாலைக்குளியல் - அந்தி நேரக்குளிப்பு. மாலைசாத்துதல் - மாலையால் அலங்கரித்தல். மாலைநிலை - இறந்த கணவனுடைய சிதையில் தீப்பாயும் பொருட்டு அவன் மனைவி மாலைக்காலத்து நிற்றலைக்கூறும் புறத்துறை. மாலைப்பண் - அந்திவேளை. மாலையிடுதல் - மாலை சூட்டி மணத்தல். மாலையீடு - மாலை சூட்டு, உடன் கட்டை ஏறிய பெண்ணின் பொருட்டு எழுப்பிய ஞாபகக் கட்டிடம். மாலைவாங்குதல் - பரிசம் கொடுத்தல். மாலோன் - திருமால், புதன். மால் - மயக்கம், ஆசை, காமம், கருமை, bருமை, திருமால், இந்திரன், காற்று, புதன், சோழன், பழைமை, மேகம், அரண்மனை (அரபு). மால்பு - மூங்கிலேணி. மாவடி - மாவடு. மாமாவடு - மாவின் பிஞ்சு. மாவட்டணம் - நெடும்பரிசை. மாவட்டம் - மாகாணத்தின் பகுதி, சில்லா. மாவதம் - பாவங்கள் நீங்கக் கைக் கொள்ளும் சைன விரதம். மாவலான் - குதிரை ஏற்றத்தில் வல்லவன். மாவலி - ஓர் அரசன். மாவலிபுரம் - மாமல்லபுரம். மாவிரதியர் - சைவத்துறவியர். மாவிலங்கை - திண்டிவனத்திலிருந்த ஓய்மான் நல்லியக்கோடானது தலைநகர். மாவிளம் - வில்வம். மாவுத்தன் - யானைப்பாகன் (இந்தி). மாவெனல் - அழைத்தற் குறிப்பு. மாழாத்தல் - மயங்குதல், ஒளி மழுங்குதல். மாழை - இளமை, அழகு, மாமரம், மாவடு, புளிமா, மாதர் கூட்டம், ஓலை, உலோகக்கட்டி, பொன், திரட்சி. மாழ்கு - மிருக சீரிடம். மாழ்குதல் - மயங்குதல், கெடுதல். மாளவி - ஓர் இராகம். மாளிகை - பெருவீடு, வீடு. மாளிகைசாந்து - உயர்ந்த கலவைச் சந்தனம். மாளுதல் - சாதல், அழிதல், கழிதல். மாளுவம் - மாளவ தேசம். மாறனலங்காரம் - 1525இல் திருக் கருகைப் பெருமாள் கவிராயரியற்றிய அலங்கா நூல். மாறன்பொறையன் - ஐந்திணை ஐம்பது இயற்றிய பழைய புலவர். மாறன் - பாண்டியன், மாற்றான், சடகோபன். மாறாடுதல் - தடுமாறுதல், எதிர்த்து நிற்றல், மாறிப் புகுதல். மாறாட்டம் - தடுமாற்றம். மாறி - பொன்மாற்று. மாறியாடுதல் - காலை மாற்றி நடனமாடுதல். மாறிருமார்பினள் - திருமகள் (மால் திரு - மார்பினள்). மாறு - வேறுபாடு, பகை, ஒவ்வாதது, ஒப்பு, பிறவி, பதில் உபகாரம், உத்தரம், துடைப்பம், மிலாறு, பிறம்பு, விதம். மாறுகண் - வக்கிரக்கண் (வாக்குக்கண்). மாறுகொள்ளக்கூறல் - முன்னோடுபின் முரணாகக் கூறல். மாறுகோள் - மாறுபாடு. மாறுதல் - வேறுபாடு, குணமாதல், நீங்குதல், முதுகிடுதல், விற்றல், பணிசெய்தல். மாறுபடுதல் - விரோதம், ஒவ் வாமை. மாறுமுகம் - நினைத்தவாறு மாற்றிக் கொள்ளும் முகவடிவு. மாறுரை - மறுமொழி. மாறை - பாண்டி மண்டலத்திலுள்ள ஒரு நாடு. மாறோகம், மாறோக்கம் - பாண்டி நாட்டில் கொற்கையைச் சூழ்ந்த பகுதி. மாற்றம் - வார்த்தை, விடை, வஞ்சினமொழி, மாறுபாடு, பகை. மாற்றரசன் - பகை அரசன். மாற்றலர் - பகைவர். மாற்றல் - கொடாமை. மாற்றவன் - மாற்றான். மாற்றாண்மை - பகைமை. மாற்றாள் - சக்களத்தி. மாற்றான் - பகைவன். மாற்று - வேறுபடுத்துகை, ஒழிக்கை, பொன் உரைமாற்று, வலிமை. மாற்றுதல் - வேறுபடுத்துதல், நீக்குதல், ஓடச்செய்தல், தடுத்தல், ஒழிதல். மாற்றுப்பொருள்கள் - விடமுறிவு (Antidotes). மாற்றோலைப்படுதல் - ஒரு அட்டவணையினின்றும் நீக்கி வேறு அட்டவணையில் சேர்க்கப் பெறுதல். மான - ஓர் உவமைச் சொல். மானக்கவரி - கவரிமான், சாமரை. மானசம் - மன சம்பந்தமானது. மானசி - உமாதேவி. மானதண்டு - அளவைக்கோல். மானதம் - அரசன், மனத்தினின்று தோன்றியவன். மானதுங்கன் - மானமிக்கவன். மானபரன் - தன்மதிப்புள்ளோன். மானமா - கவரிமான். மானமுறுதல் - பார்த்தல். மானம் - கௌரவம், தன்மதிப்பு, புலவி, ஒப்புமை, பிரமாணம், குற்றம், வானவூர்தி, கோயில், விமானம், மண்டபம், கத்தூரி, ஆகாயம். மானல் - ஒத்தல். மானவன் - மனிதன் பெருமை, உடையவன், அரசன், சேனைத் தலைவன், வீரன். மானவாரி - புன்செய். மானவிறல்வேள் - முற்காலச் சிற்றரசர் சிலர்க்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர். மானா - மோவக் கொக்கு (Lesser adjulant). மானாபரணன் - மானத்தை அணி யாக உடையவன். மானார் - பெண்கள். மானாவி - நவராத்திரி விழா. மானாவிச்சோலை - விழாவில் அமைக்கும்அலங்காரச் சோலை. மானாள் - பெண். மானி - கர்வமுள்ளவன், மங்கையர்க் கரசியார். மானிடமேந்தி - சிவன். மானிடம் - மனிதன். மானிடவன் - மனிதன். மானிடவியல் - மனிதனைப் பற்றிய வரலாறு (Anthropology). மானிடவேள்வி - விருந்தினரைத் தினந்தோறும் உபசரித்து விருந் திடுவது. மானித்தல் - நாணுதல், கர்வம் கொள்ளுதல், பெருமைப்படுத்துதல். மானியம் - இறையிலி நிலம். மானினி - பெண். மானுடகணம் - மானிடசாதி, பரணி உரோகிணி திருவாதிரை பூரம் உத்திரம் புராடம் உத்தராடம் பூரட்டாதி உத்தரட் டாதி என்ற ஒன்பது நட்சத்திரங்கள். மானுடசிகிச்சை - மூலிகைகளால் வியாதிகளுக்குச் செய்யும் பரிகாரம். மானுடதீர்த்தம் - சிறுவிரல் மூலம் விடும் மந்திரநீர். மானுடத்தி - பெண். மானுடம் - மனித சாதி. மானுடமடங்கல் - நரசிங்க அவதாரம். மானடலிங்கம் - மனிதரால் தாபிக்கப் பட்ட இலிங்கம். மானுதல் - ஒத்தல். மான் - விலங்குவகை, குதிரை, சிங்கம், மகரமீன், மகரஇராசி, பெயர்விகுதி, மூலப்பகுதி, மானுடன், பெரியோன், ஒப்பு. மான்குளம்பு - அடம்பு, மானின் பாதம். மான்மகன் - பிரமன். மான்மதச்சோறு - கத்தூரியால் செய்த வாசனைக் குழம்பு. மான்மதம் - கஸ்தூரி, சவ்வாது. மான்மறி - மான்குட்டி, பெண்மான், வள்ளி நாயகி. மான்மியம் - மகிமை. மான்மைந்தன் - மன்மதன். மான்றலை - மிருகசீரிடம். மான்றல் - மயக்கம். மான்றார் - புத்தி மயங்கியவர். மி மிக - அதிகம். மிகல் - மிகுகை, பெருமை, வெற்றி அதிகரித்தல். மிகவு - மிகுதி. மிகற்கை - எழுத்து இரட்டிக்கை. மிகு - பெரிய. மிகுதல் - அதிகமாதல், பெறுகுதல், பொங்குதல், எழுத்து இரட்டித்தல், நெருங்குதல், சிறத்தல், செருக் குறுதல். மிகுதி - அதிகம், செருக்கு. மிகுதிச்சொல் - வரம்பு கடந்த சொல். மிகுத்தல் - அதிகப்படுத்துதல், பெருக்குதல். மிகை - மிகுதி, பெருமை, செருக்கு, தீச்செயல், தவறு, தண்டனை. மிகைத்தல் - அதிகமாதல். மிகைபடக்கூறல் - வேண்டு மளவுக்கு மேல் கூறும் குற்றம். மிக்க - மிகுந்த, உயர்ந்த. மிக்கது - இறந்தது, எஞ்சியது, அதிக்கிரமச் செயல், வேறானது. மிக்கார் - பெரியார், பெரும்பாலார், தீமை செய்வார். மிக்கு - மிக. மிக்கோர் - அறிவுடையோர். மிசிரசாதி - ஏழு அட்சர காலம் கொண்ட தாள கால அளவை. மிசிரம் - கலப்பானது. மிசை - உணவு சோறு, உயர்ச்சி, மேலிடம், மேடு, வானம், முன்னிடம். மிசைதல் - உண்ணுதல். மிசைத்திரன் - காற்பரடு. மிசைபாடும்புள் - வானம்பாடி. மிசைவு - உண்கை, உணவு. மிச்சம் - மீதி, அதிகம், பொய். மிச்சிரம் - கலப்பானது. மிச்சில் - எஞ்சிய பொருள், எச்சில், கரி. மிச்சில் சீப்பவர் - எச்சிலிலை எடுத்துச் சுத்திச் செய்பவர். மிச்சை - அஞ்ஞானம், இலாமிச்சை. மிஞிறு - தேனி, வண்டு. மிஞ்சி - மோதிர வகை (கன்னடம்). மிஞ்சிகம் - பெண்பால். மிஞ்சிகை - பேழை, குண்டலம். மிஞ்சி - மிகுவது, வண்டு. மிஞ்சுதல் - மீறுதல், செருக்குதல். மிடல் - வலி. மிடறு - கழுத்து, தொண்டை, ஒலி எழும் கண்ட உறுப்பு. மிடற்றுக்கருவி - உடற்கருவியாகிய கண்டம். மிடா - பானை. மிடி - வறுமை, துன்பம். மிடித்தல் - வறுமையுறுதல். மிடிமை - வறுமை. மிடியன் - தரித்திரன். மிடுக்கு - வலிமை, செருக்கு. மிடை - பரண், புணர்ச்சி, புதர். மிடைதல் - செறிதல், நிறைதல், கலத்தல். மிட்டாய் - பணிகார வகை. மிண்டன் - முரடன், அறிவில்லாத வன். மிண்டு - வலிமை, முட்டு, துடுக்கு. மிண்டுதல் - நெருங்குதல், வலிய தாதல், போரிற்கலத்தல், நெம்புதல், குத்திக்கிளம்புதல், செருக்கிப் பேசுதல். மிண்டை - கண்ணின் கருவிழி. மிதடி - நீர். மிதத்தல் - நீரின்மேல் எழும்புதல், மேலெழும்புதல். மிதப்பு - தெப்பம், நீர்மேல் கிடக்கை, மேல் எழும் தன்மை. மிதவாதிகள் - அளவு கடந்து செல்லாதவர்கள் (Moderates). மிதவை - தெப்பம், சோறு, கூழ், உழுத்தங்களி. மிதாசனி - அற்பமாக உண்பவன். மிதி - மிதிக்கை, அடிவைப்பு, படித்தல், மிதித்துத் திரட்டப்பட்ட கவளம், நடை. மிதிதோல் - துருத்தி. மிதியடி - விதேக நாட்டுத் தலைநகர். மிதிலைநாடி - சீதை. மிதுனம் - ஆனி, மிதுனராசி, ஆண் பெண் இரட்டை இணைபிரியாததும் இசையில் வல்லதுமான புள்வகை. மிதுனவீதி - விருச்சிகம், தனுசு, கும்பம் ஆகிய இராசிகள் சேர்ந்த சூரிய வீதியின் பகுதி. மிதுனன் - புதன். மித்தாச்சமயம் - பொய்ச் சமயம். மித்திரநாள் - அனுடம். மித்திரபேதம் - நட்பினரைப் பிரிக்கை. மித்திரம் - நட்பு. மித்திரன் - நண்பன், உறவினன். மித்துரு - நண்பன். மித்துருத்தானம் - சன்மலக்கினத் திற்கு நாலாமிடம். மித்தை - பொய். மியா - ஒரு முன்னிலை அசைச் சொல். மிரட்டுதல் - பயமுறுத்துதல். மிரளுதல் - மயங்கி அஞ்சுதல். மிராசு - நிலம் உத்தியோகம் இவை தொடர்பாக பரம்பரையாக வரும் முழுப் பாத்திரம் (உருது). மிரியம், மிரியல் - மிளகு. மிருகக்கரி - எலும்புக்கரி (Animal charcoal). மிருகசிரம் - அபிநய வகை. மிருகசீரிடம் - 5 ஆவது நட்சத்திரம். மிருகண்டு - மார்க்கண்டேயரின் தந்தை. மிருகபதி - சிங்கம். மிருகமதம் - கத்தூரி, கத்தூரி மஞ்சள். மிருகம் - மான், விலங்கின் பொது. மிருகாண்டசம் - கத்தூரி. மிருகாதிபதி - ஐயனார், சிங்கம். மிருகேந்திரன் - சிங்கம். மிருதங்கம் - மத்தளம். மிருதசஞ்சீவனி - மிருத சஞ்சீவி. மிருதசஞ்சீவி - இறந்த உயிரை மீட்கும் மருந்து. மிருதம் - மரணம், வச்சநாபி, இரந்து தேடும் பொருள். மிருதாரசிங்கி - வைப்புப் பாஷாண வகை. மிகுதி - நினைவு, தருமநூல், பார்வதி. மிருதித்தல் - மரித்தல். மிருது - மென்மை. மிருதுபாகம் - மெழுகு பாகம். மிருதுபாஷி - மென்மொழியாள. மிருதுளம் - மென்மையானது. மிருதுநாளம் - தாமரைத் தண்டு. மிருத்தியுபஞ்சகம் - ஒரு காரியம் தொடங்குவார்க்கு யமவாதை காரிய நாசம் உண்டாக்கும் கெட்ட வேளை. மிருத்து - மண், சாவு, யமன். மிருத்துகாரகன் - மரணத்தைத் தரும் கிரகம். மிருத்துநட்சத்திரம் - அனுடம், இரேவதி, மிருகசீரிடம், சித்திரை நாள்கள். மிலாடு - மலையமானது நாடு. மிலாந்துதல் - வெறித்துப் பார்த்தல். மிலேச்சத்தனம் - அநாகரிகம். மிலேச்சன் - நாகரிகமற்ற புற நாட்டான், ஆரியன். மிலைச்சா - அநாகரிகர். மிலைச்சுதல் - சூடுதல். மிலைதல் - சூடுதல். மிலைத்தல் - மயங்குதல், கனைத்தல். மில்லிமீட்டர் - மீட்டரில் 1000ல் ஒரு பகுதி, 0.03937 அங்குலம் (Mille metre). மிழலை - மழலைச்சொல். மிழலைக்கூற்றம் - சோழ நாட்டில் ஒரு பகுதி. மிழற்றல் - சொல்லுதல். மிழற்றுதல் - மெல்லக் கூறுதல், மழலைச் சொல், சொல்லுதல். மிளகாய் - செடி வகை. மிளகு - கொடிவகை, மிளகு கொடியின் காய். மிளகுப்பட்டுமணி - பரவ மகளிர் கழுத்தணிவகை. மிளகோதனம் - மிளகு கலந்த சோறு. மிளிர் - ஒளி. மிளிர்தல் - புரளுதல், கீழ்மேலாதல், குதித்தல், பிரகாசித்தல். மிளிர்தல் - புரட்டுதல், கீழ்மேலாக் குதல். மிளிர்த்தல் - புரட்டுதல், கீழ்மேலக் குதல். மிளிர்வை - குழம்பிலிடும் கறித் துண்டு. மிளை - காவற்காடு, குறுங்காடு, சிறுதூறு. மிறுக்கு - சிரமம், மிடுக்கு. மிறை - அச்சம், குற்றம், வருத்தம், வேதனை, வளைவு. மிறைக்கவி - சித்தரக்கவி. மிறைக்கொளி - திருத்துதல். மிளைகொளுவுதல் - ஆயுதத்தை வளைவு நீக்குதல். மிறைத்தல் - துன்புறுத்துதல், விறைத்தல், மிடுக்காக, இருத்தல், துன்பப்படுதல். மிற்கு - இரை, உரைக்கை, மென்மை. மினுக்கு - மினுக்கம். மினுக்குதல் - பளபளப்பு உண் டாக்கல். மினுக்குத்தொடர் - ஆபரண வகை. மினுங்குதல் - ஒளிவீசுதல். மின் - ஒளி, மின்னல், முன்னிலை ஏவற்பன்மை விகுதி. மின் அழுத்தமானி - மின்சார அழுத்தம் அளக்கும் கருவி. (Voltmeter). மின்கலஅடுக்கு - பாட்டரி (Battery). மின்சாரம் - மின்சக்தி. மின்துகள் - எலக்ரான்கள் (Elec tons). மின்மினி - ஒருவகைப் பூச்சி. மின்னல் - மின்னொளி. மின்னார் - அழகிய பெண்கள். மின்னிடை - பெண். மின்னுதல் - ஒளிவிடுதல், மின்னல் விடுதல். மீ மீ - மேலிடம், ஆகாயம், மேன்மை. மீகண் - கண்ணின்மேலிடம். மீகாமன் - மாலுமி. மீகாரம் - மாளிகையின் மேலிடம். மீகான் - மீகாமன். மீகை - மேலெடுத்த கை. மீக்குணம் - பெருந்தன்மை. மீக்கூர்தல் - அதிகமாதல், மேம்படல். மீக்கூற்றம் - புகழ், அதிகப் பேச்சு. மீக்கோள் - மேற்பார்வை, பொலிவு, ஏறுசை. மீசரம் - மேலானது. மீசு - மீது. மீசுரம் - மீசரம். மீசை - உதட்டின் மேற்புறமயிர், மேலிடம். மீச்செலவு - அதிக்கிரமச் செயல். மீட்சி - திரும்புகை, விடுதலை செய்கை. மீட்டுதல் - மீளச்செய்தல், யாழ் முதலிய வற்றின் நரம்பைத் தெறித்தல். மீட்பு - மீட்கை. மீண்டு - திரும்ப. மீதாடுதல் - கடந்து செல்லுதல். மீதாரி - ஒருவகை வாசனைத் தூபம். மீதி - எச்சம். மீது - மேற்புறம், மேல். மீதூர்தல் - மேல் மேல் வருதல், அடர்தல். மீதோல், மீத்தோல் - மேல்தோல். மீநீர் - நீரின் மேற்பரப்பு. மீந்தோல் - மீத்தோல். மீட்பு - மிகுதி, மேன்மை. மீப்போர்வை - மேற்போர்வை. மீமாங்கிசன் - மிமாம்சகன். மீமாஞ்சை, மீமாம்சகம் - வேத வேதாந்தப் பொருள்களை ஆராய் தற்குக் கருவியாக உள்ள சாத்திரம். மீமிசை - மிக்கது, மேலிடத்தில். மீமிசைச்சொல் - சிறப்புப் பொரு ளைத் தெரிவித்தற்கு முன்னுள்ள சொல்லின் பொருளிலேயே அடுத்து வரும் சொல். மீமீசையண்டம் - உயர்ந்த பதம். மீயடுப்பு - பக்க அடுப்பு. மீயாளுதல் - மேலதிகாரம் செய்தல். மீயை - சிவப்புக்குடை. மீவான் - மீகாமன். மீளாக்கதி - மோட்சம். மீளி - மீளுகை, இரங்கல், தலைவன், பாலைநிலத் தலைவன், திண்ணி யன், பெருமை, கூற்றுவன், பேய், இளைஞன், 10 வயது முடியுமள வுள்ள பருவம். மீளிமை - வலிமை, வீரம். மீளுதல் - திரும்புதல், இல்லையாதல். மீறுதல் - கடத்தல், மிகுதல். மீற்றர், மீட்டர் - 1.09363 கசம் (Metre). மீனநிலையம் - கடல். மீனம் - 12 ஆவது இராசி, பங்குனி, மீன், நட்சத்திரம். மீனம்பர் - மீன் வயிற்றிலக்கப்படும் ஒருவகை வாசனைப் பண்டம். மீனரசு - சந்திரன். மீனவன் - பாண்டியன். மீனன் - வியாழன். மீனாட்சி - உமாதேவி, பொன்னாங் காணி. மீனுணங்கல் - கருவாடு. மீனூர்தி - வருணன். மீனெண்ணெய் - மீனின் கல்லீரலிருந்து எடுக்கப்படும் எண்ணெய். மீனெய் - மீன்நெய். மீனெறிபறவை - மீன்கொத்தி. மீனேறு - சுறாமீன். மீன் - நட்சத்திரம், சித்திரை, மீனராசி, அத்தம். மீன்கொத்தி - சிச்சிலிப் பறவை. மீன்கோட்பறை - நெய்தல் நிலப் பறை. மீன்சினை - மீன்முட்டை. மீன்துடுப்பு - மீனின் செட்டை (fin). மீன்பண்ணை - மீன்பிடிக்கும் தொழிற்சாலை (Fisheries). மு முகக்கண்ணாடி - முகம் பார்க்கும் கண்ணாடி. முகக்கருவி - கடிவாளம். முகக்கொள்ளி - கொள்ளிவாய்ப் பேய். முகக்கோட்டம் - வெறுப்பு துக்கம் முதலியன காரணமாக முகம் கோணுதல். முகங்கொள்ளுதல் - சம்மதம் பெறுதல், சம்மதக் குறிகாட்டுதல். முகசோதி - எலுமிச்சை. முகச்சார்த்து - இசைப்பாட்டு வகை. முகஞ்செய்தல் - நோக்குதல், தோன்றுதல், முன்னாதல். முகடி - மூதேவி. முகடு - உச்சி, அண்டமுகடு, வாயில், பாழ், முகடுபடுதல் - பாழாதல். முகத்தலளவை - தானியம் முதலிய வற்றை முகத்தளக்கும் அளவை. முகத்தல் - மொள்ளுதல், விரும் புதல். முகந்திரிதல் - முகம் வேறுபடுதல். முகபடாம் - முகத்திலிடும் அலங் காரத் துணி. முகப்படுதல் - முன்தோன்றுதல். முகப்பு - தலைப்பு, முற்பகுதி. முகமண்டபம் - முன்பண்டபம். முகமலர்ச்சி - முகத்தில் மகிழ்ச்சி தோன்றுகை. முகமறிதல் - அறிமுகமாதல். முகமன் - உபசாரம், துதி. முகமாடு - தலை மறைவுச் சீலை. முகமாதல் - உடன்படுதல். முகமில்வரி - இசைப்பாட்டு வகை. முகமுறிவு - வெறுப்பு. முகம் - நெற்றிமுதல் மோவாய் வரையி லுள்ள முன்புறம், வாய், வாயில் நுனி, வடிவு, நோக்கு, தியானம், முன்பு, இயல்பு, முனையிடம், யாகம். முகம்புகுதல் - தயவுக்காக எதிர் சென்று நிற்றல், முகமலர்தல். முகம்பெறுதல் - தோன்றுதல். முகய்யார் - அங்கோரா ஆட்டு உரோமம். முகரம் - கடியஒலி, சங்கு, காகம். முகராசி - முக வசியம். முகரி - ஆரவாரம் செய்வோன், மூக்கின் அடி. முகரிமை - பேரறிவு, தலைமை. முகரை - மூக்கின் அடி. முகர்தல் - மோத்தல். முகலி - ஓர் ஆறு. முகவட்டு - விலங்கின் நெற்றி உச்சியில் அணியும் அணி வகை. முகவரி - மேல் விலாசம். முகவல்லபம் - மாதுளை. முகவாசம் - வாசனைக்காக வாயிலிட்டுக் கொள்ளும் நறுமணப் பண்டங்கள், நெற்றிலை. முகவாள் - கலப்பைக் கூர். முகவியர் - இன்முகமுள்ளோர். முகவீணை - ஒருவகை இசைக்கருவி. முகவு - முகப்பு. முகவுரை - முன்னுரை. முகவெழுத்து - முகத்தில் எழுதிப் புனையும் அலங்காரம். முகவை - மிகுதியாகக் கொடுக்கும் பொருள், நீர் முகக்குங் கருவி, நெற்பொலி, இராமநாதபுரம். முகவைப்பாட்டு - களத்தில் சூடு அடிக்கும்போது பாடும் பொலிப் பாட்டு. முகவோலை - அரசர் முதலியோர் எழுதும் திருமுகம். முகனை - முன்புறம், தலைமை. முகாந்தரம் - காரணம், கருமம். முகாமை - முதன்மை. முகாம் - சுற்றுப்பயணத்தில் தாமதிக்குமிடம் (அரபி). முகாம்புயம் - தாமரை போன்ற முகம். முகாரி - இராக வகை. முகிதல் - முடிதல். முகில் - மேகம், திரள். முகில்வண்ணன் - திருமால். முகிழ் - அரும்பு, புவின்காம்படி, தயிர் முதலியவற்றின் கட்டி. முகிழ்த்தம் - முகூர்த்தம். முகிழ்த்தல் - அரும்புதல், தோன்றுதல், தோற்றுவித்தல். முகிழ்நகை - புன்சிரிப்பு. முகிளம் - முகிழ். முகிளிதம் - சிறிது குவிகை. முகினாயகன் - வருணன். முகின்மேனி - திருமால். முகுடம் - மகுடம், முடியுறுப்பு ஐந்தினுளொன்று. முகுத்தம் - முகூர்த்தம். முகுந்தம் - குபேரன் நவநிதியில் ஒன்று. முகுந்தன் - திருமால். முகுரம் - கண்ணாடி. முகுரவானன் - திருதராட்டிரன். முகுர்த்தம் - முகூர்த்தம். முகுலி - தாழை. முகுளம் - அரும்பு, தாமரைத்தண்டு, யோக ஆசன வகை, நரம்புத் தண்டின் மேன்மூளை. முகுளித்தல் - குவிதல். முகூர்த்தம் - நேரம் 1½ மணி கொண்ட ஒரு கால அளவை, சுப வேளை. முகூர்த்தவிதானி - முகூர்த்தம் வைப்பவன். முகேரெனல் - ஒலிக்குறிப்பு வகை. முகை - அரும்பு, குகை, கூட்டம். முக்கட்செல்வன், முக்கட்பகவன் - சிவன். முக்கண்டம் - நெருஞ்சி. முக்கண்ணி - பார்வதி. முக்கப்பு - சூலாயுதம். முக்கரணம் - மனம், மொழி, மெய் என்ற திரிகரணம், குட்டிக் கரணம். முக்கருணை - காறுகருணை காறாக் கருணை புளிக்கருணை என்ற மூ வகைக் கருணைச் செடியின் கிழங்குகள். முக்கல் - பெருமுயற்சி. முக்கனி - வாழை, மா, பலா என்னும் பழங்கள். முக்கணி - 3/80 என்ற அளவு. முக்காரமிடுதல் - துவாரம் முதலியன அடைத்தல். முக்காரம் - எருதின் முழக்கம், தாழ்ப்பாள். முக்காலம் - இறப்பு, நிகழ்வு, எதிர்வு. முக்காலி - மூன்று கால் பீடம். முக்கால் - ஒருவகைச் சந்தம், நான்கில் மூன்று பங்கு. முக்காழ் - மூன்று கோவையான முத்து வடம். முக்கியம் - சிறப்புடையது, தலைமை. முக்குடுமி - சூலம். முக்குடை - அருகக் கடவுட்குரிய மூன்றடுக்குடைய குடை. முக்குடைச்செல்வன் - அருகக் கடவுள். முக்குதல் - மூழ்குவித்தல், நிரம்ப வாயிலிட்டு உண்ணுதல், இறுகப் பிடித்த மூச்சைச் சிற்றொலி பட வெளிவிடுகை. முக்குளித்தல் - முழுகுதல். முக்குறுணிப்பிள்ளையார் - மூன்று குறுணி அரிசி சமைத்து நிவேதிக் கப்படும் பிள்ளையார். முக்குற்றம் - காமம் வெகுளி மயக்கம் என்பன. முக்கூடல் - திருநெல்வேலிப் பகுதியிலுள்ள ஒரு திருமால் கோயில். முக்கூடற்பள்ளு - முக்கூடல் அழகர் பேரில் என்னயினாப் புலவர் பாடிய பள்ளு (17 ஆம் நூ.). முக்கூட்டரத்தம் - வெற்றிலை பாக்கு சுண்ணாம்புகளை மெல்லுதலால் உண்டாகும் சிவப்பு நிறம். முக்கூட்டு - பரணி, மூன்று சரக்குக் கூட்டிய மருந்து. முக்கைப்புனல் - நீர் முகந்து பிதிரர்க்குச் செய்யும் கடன். முக்கோணம் - மூன்று கோணங்களையுடைய வடிவம். முக்கோல் - திரிதண்டம். முக்கோற்பகவர் - திரிதண்டம் தாங்கிய துறவிகள். முங்குதல் - மூழ்குதல், நிரம்பி யிருத்தல். முசர், முசரு - தயிர். முசலம் - உலக்கை, ஓர் ஆயுதம். முசலன் - பலராமன். முசலி - ஓந்தி, பச்சோணான், முதலை வெருகக்கிழங்கு, தாழை. முசற்காது - ஆட்டுக்காலடம்பு. முசிதல் - அறுதல், கசங்குதல், ஊக்கம், குன்றுதல். முசித்தல் - அழிதல், திருகுதல் களைத்தல், மெலிதல். முசிப்பு - மெலிவு, களைப்பு, இடை. முசிரி - முசிறி. முசிவு - களைப்பு. முசிறி - மேற் கடற்கரையிலுள்ள பழைய துறைமுகம். முசிறு - செந்நிற எறும்பு. முசு - கருங்குரங்கு வகை. முசுக்கட்டை - மரவகை. முசுகுந்தன் - ஒரு சக்கரவர்த்தி. முசுட்டை - முசுண்டை. முசுண்டர் - கீழ்மக்கள். முசுண்டி - ஆயுத வகை. முசுண்டை - கொடி வகை. முசுப்பாத்தி - பொழுதுபோக்கு. முசுமுசுக்கை - கொடி வகை. முசுறி - முசிறி. முச்சக்கரம் - மூவுலகம். முச்சங்கம் - மதுரையில் நடைபெற்ற தமிழ்ச் சங்கம். முச்சதுரம் - முக்கோணம். முச்சந்தி - மூன்று வழி சந்திக்கும் இடம். முச்சலீலிகை - வாய்நீர் சிறுநீர் நாதநீர் என்னும் மூவகைநீர். முச்சாரிக்கை - குதிரை தேர் யானை என்ற இவை சேர்ந்து சாரி போகை. முச்சி - தலைஉச்சி, கொண்டை முடி, சூட்டு. முச்சிரம் - பெருஞ்சீரகம். முச்சில் - சிறுமுறம். முச்சுடர் - சூரியன், சந்திரன், நெருப்பு என்பன. முச்சுதல் - மூடுதல், செய்தல். முச்சூடும் - முழுவதும். முஞ்சம் - குழந்தைகளின் உச்சியிலணியும் அணிவகை. முஞ்சி - உபவீதத்தில் கட்டும் புல், நாணற்புல். முஞ்சுதல் - முடிதல், சாதல். முடக்கம் - தடை, கை கால் முடங்கை. முடக்கற்றான் - முடக்கொற்றான். முடக்கறை - மறைந்து அம்பெய்தற் குரிய மதிலுறுப்பு. முடக்கு - வளைவு, நாக்கு, முடக்கு மோதிரம். முடக்குதல் - மடக்குதல், சுற்றிக் கொள்ளுதல், தடுத்தல். முடக்கு மோதிரம் - ஒரு வகை மோதிரம். முடங்கர் - ஈன்றணிமையிலுண்டாம் களை. முடங்கல் - மடங்குகை, தடைப்படுகை, சுருளோலைக் கடிதம், மூங்கில், தாழை. முடங்கன்முலை - தாழை விழுது. முடங்கிறை - கூரையில் சரிவு. முடங்கு - முடக்குவாதம். முடங்குதல் - சுருங்குதல், கை கால் வழங்காமற்போதல், தடைப்படுதல், வளைதல், கெடுதல், தங்குதல், படுத்துக் கொள்ளுதல். முடங்குளை - பிடரி மயிர், சிங்கம். முடத்தாமக்கண்ணியார் - பொரு நராற்றுப்படை இயற்றிய புலவர். முடத்திருமாறன் - இடைச் சங்க காலப் பாண்டியனொருவன். முடந்தை - வளைந்தது. முடமயிர் - புருவ மயிர், நோய். முடம் - கால்கை வழங்காத நிலை, வளைவு. முடலை - உருண்டை, முறுக்கு, முரடு, கழலை, புலால் நாற்றம். முடவன் - நொண்டி. முடி - முடிச்சு, ஐம்பாலுள் உச்சியில் முடிக்கும் மயிர்க்கட்டு வகை, குடுமி, தலை, உச்சி, கிரீடம் நாற்றுமுடி, துளசி. முடிகொண்டசோழன் - முதல் இராசேந்திர சோழனது பட்டப் பெயர். முடிக்கணி - முடிமாலை. முடிக்கலம் - முடி. முடிசாய்த்தல் - படுத்துக் கொள்ளு தல், தலைவணங்குதல். முடிச்சடைமுனிவன் - வீரபத்திர தேவன். முடிச்சாத்து - தலைப்பாகை. முடிச்சு - சிறு மூட்டை. முடிச்சுற்று - தலைப்பாகை. முடிச்சூட்டு - முடியிலணியும் மாலை. முடிதீட்டுதல் - வணங்குதல். முடிதும்பை - பூடு வகை. முடிதுளக்குதல் - முடியசைத்தல், வணங்குதல். முடிநர் - கட்டுபவர். முடிநாறு - நாற்றுமுடி. முடிந்தது முடித்தல் - முன்னர் விளக்கிக் கிடந்தவற்றைத் தொகுத் துக் கூறுதல். முடிந்த நூல் - முழுதும் கூறும் நூல். முடிபிசைக்குறி - வாக்கிய முடிவைக் காட்டும் மற்றுக் குறி. முடிபு - முடிவு. முடிப்பு - முடிச்சு, பண முடிச்சு. முடிமார் - முடிப்பவர். முடிமாலை - தலையிலணியும் மாலை. முடிய - முழுதும். முடியரசு - அரசனாளப்படுமரசு (Monarchy). முடியுலகு - மேலுலகம். முடியுறுப்பு - தாமம், மகுடம், பதுமம், கோடகம், கிம்புரி என ஐவகைப் பட்ட மகுட வகுப்புக்கள். முடியெடுத்தல் - தலையெடுத்து ஓங்குதல். முடிவிடங்குறித்தல் - இலக்கணத் திற்கு விதி கூறும் இடத்தைக் குறிப்பது. முடிவிலாற்றல் - அழிவு இல்லாத ஆற்றலுடைமை. முடிவு - இறுதி, பூர்த்தி, தீர்மானம், மரணம். முடிவுபோதல் - நிறைவேறுதல். முடிவுரை - நூலின் இறுதியில் அமையும் கட்டுரை. முடிகியல் - விரைந்து செல்லும் செய்யுள் நடை. முடுகு - நாற்றம். முடுகுதல் - விரைந்து செல்லுதல், நெருங்கி வருதல், எதிர்தல். முடுக்கர் - குறுந்தெரு, அருவழி, தெருச்சந்து. முடுக்கு - கோணல், வலிமை. முடுக்குதல் - நெருக்குதல், உட்செலுத்துதல், உழுதல், விரைதல். முடுவல் - நாய். முடுவல்வெம்படையோன் - வயிரவன். முடை - புலால், கெட்டநாற்றம், ஓலைக் குடை, ஓலைப்பெட்டி. முடைதல் - பின்னுதல். முடக்ரம் - ஓராயுதம். முட்கோல் - குதிரையைத் தூண்டும் தாற்றுக்கோல் வகை. முட்ட - நிறைய, தலையால் தாக்க. முட்டம் - ஊர், பக்கம், காக்கை, ஒரு திருமால் தலம். முட்டரிசி - நன்றாக வேகாத சோறு. முட்டாக்கிடுதல் - முகத்தைப் போர்த்தல், உள்ளடக்குதல். முட்டாக்கு - தலைமூடு சீலை. முட்டாள் - மூடன், சிற்றாள். முட்டாறு - முட்கோல். முட்டி - எட்டி, விரல் முடக்கிய கை, கைக்குத்து, பிச்சை, ஆயுதம் பிடிக்கும் கை, கையுள் மறைத்ததை இன்னதென்று அறிந்து கூறும் வித்தை, சிறுபானை, ஒருபல அளவு. முட்டிகை - சிறுசுத்தி. முட்டிப்பிச்சை - பிடி அரிசியாகப் பெறும் பிச்சை. முட்டு - விலங்குகள் கொம்பால் தாக்குகை, முட்டப்பாடு, குறைவு, கண்டு முட்டு கேட்டு முட்டு முதலிய தீட்டுகள், கருவி, சில்லறைப் பொருள். முட்டுக்கட்டை - தாங்கும் கம்பம், தடை (Brake). முட்டுக்கால் - தாங்கு கால். முட்டுக்கால்தட்டுதல் - முழங்கால் ஒன்றோடு ஒன்று இடித்தல். முட்டுதல் - மோதுதல், தடத்தல், எதிர்த் தல், பிடித்தல், தேடுதல், குன்றுதல், நிறைதல், தடைப்படுதல், பொருதல். முட்டுப்படுதல் - தடைப்படுதல். முட்டுப்பாடு - தொல்லை, தட்டுப்பாடு, இடையூறு. முட்டை - அண்டம், உலக உருண்டை, உடல், சாண வறட்டி, தவிடு, சிறுகரண்டி. முட்டைக்கண்ணீர் - கண்ணீர்ப் பெருந்துளி. முட்டைக்கோசு - கீரை வகை. முட்பன்றி - முள்ளம் பன்றி. முட்புறக்கனி - பலாப்பழம். முணக்குதல் - உள்வளைத்தல். முணங்கு - அடக்கம், சோம்பலால் உடம்பை முறிப்பு. முணங்குதல் - உள்ளடங்குதல், மெல்லப் பேசுதல். முணங்குமுரிதல் - சோம்பல் முறித்தல். முணவல் - கோபம். முணவுதல் - வெறுத்தல். முணை - வெறுப்பு, மிகுதி. முண்டகம் - முள், முள்ளுடைத்தாறு, தாழை, தாமரை, நீர் முள்ளி, கள், நெற்றி. முண்டகன் - பிரமன். முண்டகாசனை - இலக்குமி. முண்டணி - விட்டுணு கரந்தை. முண்டபங்கி - சிவபெருமானை ஐந்து முகங்களோடு கூடியவராகத் தியானிக்கை. முண்டம் - தலை, நெற்றி, மழித்த தல, கபாலம், உடற்குறை, நிரம்பாக் கருப்பிண்டம், திரட்சி. முண்டனம் - தலை சிரைத்தல். முண்டன் - மழித்தலையன், சிவபிரான், சைவன், வலியவன். முண்டா - தோள். முண்டாசு - தலைப்பா வகை (இந்தி). முண்டாரி - முண்டர்கள் பேசும் மொழி. முண்டி - மழித்த தலையன், நெற்றியில் திரிபுண்டரம் அணிந்தவன். முண்டிதம் - மொட்டையடிக்கை. முண்டிதை - தேவாங்கு. முண்டு - கணு. முண்டை - முட்டை, கைம்பெண். முதம் - உவகை. முதலி - தலைவன், பெரியோர். முதலிய - முதலான. முதலியார் - சில சாதியாரின் பட்டப் பெயர். முதலீடு - முதலிடுகை, வாணிகத் துக்கு முதலாகப் பொருள் வைத்தல். முதலுதல் - முதலாதல், தோன்றுதல். முதலூழி - கிருதயுகம். முதலை - ஓர் நீர்வாழ் உயிர். முதலோன் - கடவுள். முதல் - ஆதி, முதலாக இருப்பது, காரணம், கடவுள், உயர்வு, மூலதனம், வேர், அடிப்பாகம், முதன்மை. முதல்வர் - முதலாயினார். முதல்வன் - தலைவன், காரணமாக உள்ளவன், தந்தை. முதல்வன்சேய் - முருகன். முதல்வன்வாக்கு - ஆகமம். முதல்வி - தலைவி. முதற்காரணம் - காரிய நிகழ்ச்சிக்கு இன்றியுமையாத காரணம். முதற்கைகொடுத்தல் - ஒருவர் கையைப் பிடித்து அன்பை வெளிப் படுத்துதல். முதற்கொண்டு - தொடங்கி. முதற்சீர் - ஈரசைச்சீர். முதற்பெயர் - அவயவியான முழுப் பொருளைக் குறிக்கும் பெயர். முதற்பேறு - தலைப்பிள்ளை. முதற்பொருள் - அகப்பொருளுக் குரிய நிலம், பொழுதுகளின் இயல்பு, மூலதனம். முதற்றிருவந்தாதி - பொய்கை யாழ் வாரியற்றிய அந்தாதி நூல். முதனடை - தாழ்ந்த செலவுடைய பாடல். முதனா - நாக்கின் அடிப்பாகம். முதனாள் - அசுவினி, முந்தினதினம். முதனிலை - முதலில் நிற்பது, பகுதி, தலைவாயில். முதனிலை திரிந்த தொழிற் பெயர் - வினைப் பகுதி முதலெழுத்து திரிந்து வருவதனால் தொழிற் பெயராக நிற்பது. முதனிலைத்தீவகம் - ஒரு சொல் கவியின் முதலில் நின்று குண முதலிய பொருள் குறிக்கு ஏனையிடத்துஞ் சென்று பொருள் விளக்கும் தீவக அணிவகை. முதனிலைத் தொழிற்பெயர் - தன்னியல்பின் மாறாத வினைப் பகுதியே தொழிற்பெயராக நிற்கும் சொல். முதனினைப்பு - நூல் அல்லது மேற்கோள் பாடல்களை நினைப் பூட்டும் அப்பாடல்களின் முதுற் குறிப்புச் செய்யுள். முதனூல் - பிறநூலைப் பின்பற்றாத முதல்வன் செய்த நூல். முதன்மடை - தலைவாய்க்கால். முதன்மறிநிலை - சினைப் பெயர் முதற்கும் முதற் பெயர் சினைக்கும் வரும் அலங்காரம். முதன்முதல் - தொடக்கத்தின். முதன்மை - தலைமை. முதாரி - முதன்மையுறுகை, முன்கை வளையல். முதிசம் - பூர்வீகச் சொத்து. முதிதை - மகிழ்ச்சி, மனத்தூய்மை கோபத்தை நீக்கும் பொருட்டுப் பௌத்தரால் செய்யப்படும் தியானம். முதியகுழல் - குதிரை வாலிப்புல். முதியவன் - பிரமன், மூத்தவன். முதியார்கூந்தல் - ஒருவகைப் பூடு. முதியாள் - மூத்தவள், தேவராட்டி. முதியோர் - அறிஞர், கிழவர். முதியோள் - கிழப் பருவமடைந் தவள். முதிரம் - குமணனுக்குரிய மலை, மேகம். முதிரை - அவரை துவரை முதலி யன, துவரம் பருப்பு. முதிர்ச்சி - பக்குவம், முதுமை. முதிர்தல் - முற்றுதல், பக்குவமாதல், மற்படுதல், உயர்தல், ஒழிதல். முதிர்ந்த குறிஞ்சி - பண்வகை. முதிர்ந்தவிந்தளம் - குறிஞ்சி யாழ்த் திறவகை. முதிர்வு - முதிர்ச்சி, மிகுதி. முது - பேரறிவு. முதுகண் - முக்கிய ஆதாரம். முதுகயம் - கடல். முதுகாஞ்சி - அறிவின்மிக்க மூத் தோர் அறிவில்லாத இளை யோர்க்கு இளமை நிலையாமை முதலியவற்றை எடுத்துமொழியும் புறத்துறை. முதுகாடு - சுடுகாடு. முதுகிடுதல் - புறங்காட்டி ஓடுதல். முதுகு - உடம்பின் பின்புறம், வரப்பு மேடு. முதுகுகாணுதல் - தோல்வியுறச் செய்தல். முதுகுடி - தொன்றுதொட்ட உயர்வு பெற்று வரும் குடி. முதுகுத்தண்டு - முள்ளந் தண்டு (Spinal code). முதுகுரவர் - தாய்தந்தையர். முதுகுருகு - இறந்துபட்ட தலைச் சங்க நூல்களுள் ஒன்று. முதுகுன்றம், முதுகுன்று - விருத்தாச்சலம். முதுக்குறைவி - பேரறிவு, பேதைமை. முதுசூரியர் - இரட்டைப் புலவருள் ஒருவர். முதுசொல் - பழமொழி. முதுதலை - மரத்தின் முற்றிய அடிப்பாகம். முதுநாரை - இறந்துபோன தலைச் சங்க நூல்களுள் ஒன்று. முத்தண்டு - திரிதண்டம். முத்தப்பருவம் - குழந்தையை முத்தம் தரும்படியாகப் பாடும் பகுதி. முத்தமாலை - முத்துமாலை. முத்தமிழ் - இயல் இசை நாடகம். முத்தமிக்கவி வீரராகவ முதலியார் - 19 ஆம் நூற்றாண்டில் விளங்கிய புலவர். முத்தமிழ் முனிவர் - அகத்தியன். முத்தம் - கொஞ்சுதல், மருதநிலம், ஆமணக்கு விதை, ஆண்குறி, பிரியம், மகிழ்ச்சி, மோட்சம், கோரை, முத்து. முத்தரை - அரையிலணியும் முத்து வடம். முத்தரையர் - ஒருசார் சிற்றரசர். முத்தலை, முத்தலைக்கழு, முத்தலைவேல் - சூலம். முத்தவள்ளி - முத்துக் கோத்த கொடி போன்ற ஒரு கழுத்து மாலை. முத்தழல் - முத்தீ. முத்தன் - முத்தி பெற்றவன், சிவன், வைரவன். முத்தாசனம் - யோகாசனத்தொன்று. முத்தாடுதல் - முத்தமிடுதல். முத்தானம் - காலிரண்டும் நீட்டி யிருக்கும் யோகாசன வகை. முத்தாந்தம் - முத்தியாகிய உயர்ந்த கதி. முத்தாபலம் - முத்து, சங்கஞ்செடி. முத்தாமணக்கு - ஆமணக்கு வகை. முத்தாலாத்தி - சோற்று ஆலாத்தி. முத்தாவளி - முத்து மாலை. முத்தானம் - அடுப்பு. முத்தி - விடுபடுகை, மோட்சம், முத்தம். முத்திதாசாரியன் - சீடனுக்கு முத்தி அளிக்கவல்ல ஆசிரியன். முத்திபஞ்சாட்சரம் - பிரணவம் சேர்ந்த பஞ்சாட்சரம். முத்திமுதல் - உயிர். முத்திமுத்திரை - தாமிரபருணி. முத்தியெறிதல் - கழித்தல். முத்திராசர் - கைலாய மாலை என்னும் நூல் செய்தவர்; உறை யூரினர் (18ம் நூற்.). முத்திராதாரணம் - சங்குசக்கரம் முதலிய முத்திரைகளை உடலில் ஒற்றிக் கொள்ளுதல். முத்திராதானம் - நெருப்பில் காய்ச்சிய சங்கு சக்கர முத்திரைகளைத் தோள் களில் ஒற்றும் சடங்கு. முத்திரை - அடையாளம், குண்டல வகை, புகை செய்யும் போது காட்டும் கை அடையாளம், அபிநயக் குறி. முத்தீ - காருக பத்தியம் ஆகவனீயம் தட்சிணாக்கினி என்ற மூவகை ஓமத்தீ. முத்தீ மரபினர் - பார்ப்பார். முத்து - நவமணியிலொன்று, கண்ணீர் ஆமணக்கு விதை, மாதுளையின் விதை, அழகு, மகிழ்ச்சி. முத்துக்கறுப்பன் - ஒரு கிராம தேவதை. முத்துக்குமாரகவிராயர் - யாழ்ப் பாணப் புலவர் (1780 - 1851). முத்துக்குமாரன் - முருகக் கடவுள். முத்துக்குளி - நீரில் மூழ்கி முத்து எடுத்தல். முத்துக்கொம்பன் - முத்து நிறமான கொம்புள்ள யானை. முத்துச்சல்லி - முத்துத் தொங்கல். முத்துதல் - சேர்தல், முத்தமிடுதல். முத்துத்தாண்டவர் - சீகாழியில் விளங்கிய சிவனடியார் (18ம் நூ.). முத்துநீர் - பனிநீர்த் திவலை. முத்துநெய் - சிற்றாமணக்கு நெய். முத்துப்புரி - முத்துத் தொங்கல். முத்தூர்க்கூற்றம், முத்தூற்றுக் கூற்றம், முத்தூறு - வேளிர்க் குரியதாக இருந்து பாண்டிய நாட்டின் பகுதியான நிலப்பிரிவு. முத்தெயில் - பழமையான மதில். முத்தெருக்கன்செவி - நிலக்கடம்பு. முத்தை - முன்னிடம், திரட்சி. முத்தையா சுவாமி - சின்மய தீபிகை என்னும் நூல் செய்தவர். முத்தொழில் - படைப்பு, காப்பு, அழிப்பு. முத்தொள்ளாயிரம் - சேரு சோழ பாண்டியருள் ஒவ்வொருவருக் கும் 900 செய்யுட்களாக செய்யப் பட்ட ஒரு பழைய நூல். முத்தோடம் - வர்த பித்தசிலேட்டு மங்கள். முந்தன் - கடவுள். முந்தாநாள் - முந்திய நாள். முந்தி - முற்காலம், முன்தானை. முந்திசினோர் - முன்னோர். முந்திரி - 1/320 என்னும் பின்ன எண், முந்திரிகை. முந்திரிகை - முந்திரி, திராட்சை. முந்து - முற்காலம், முன்பு, ஆதி. முந்துநூல் - வேதம், முன்னுள்ள நூல். முந்துறுதல் - தோற்றுவித்தல், காட்டிக் கொள்ளுதல், ஒருவன் முன்னிலையில் அறிவித்தல். முந்தூழ் - மூங்கில், பழவினை. முந்தை - பழமை, முன்னோன், முன். முந்நீர் - கடல். முந்நூல் - பூணூல். முந்நூறு - 300, மூன்று நூறு. முப்பகை - காமம், வெகுளி, மயக்கம். முப்பட்டகம் - முப்பட்டப் பளிங்கு (Prism). முப்பத்தாறாயிரம்படி - ஈடு முப்பத்தாறா யிரம். முப்பத்திரண்டறம் - ஆதலர் சாலை, ஓதுவார்க்குணவு, அற சமணத்தோர்க் குணவு, பசுவுக்கு வாயுறை, சிறைச் சோறு, ஐயம், நடைத்தின்பண்டம், மகச்சோறு, மகப் பெறுவித்தல், மக வளர்த்தல், மகப்பால் அறவைப் பிணஞ்சுடுதல், அழிந்தோரை நிறுத்து தல், வண்ணார், நவிதர்வதுவை, பூணூல், நோய் மருந்து, கண்ணாடி, நாளோலை, கண்மருந்து, தலைக்கெண் ணெய், பெண்போகம், அட்டூண், பிறரங்காத்தல், தண்ணீர்ப் பந்தல், மடம், தடம், கா, ஆவுரிஞ்சு நடுதறி, ஏறுவிடுதல், விலைகொடுத்துக் கொலை உயிர் மீட்டல் என்னும் 32 அறம். முப்பது முக்கோடித்தேவர் - முப்பத்து மூன்று கோடியாகக் கணக்கிடப்படும் தேவர். முப்பதம் - ‘தத்துவமசி’ என்னும் வாக்கியம். முப்பாட்டன் - பாட்டனுக்குத் தந்தை. முப்பாலகர் - பால் குடிப்பவர், பாலும் சோறும் உண்பவர், சோறு மட்டும் உண்பவர். முப்பால் - அறம் பொருள் இன்பம் என்னும் மூன்று பகுப்புக்கள் கூறும் திருக்குறள். முப்பாழ் - உடம்பிற்குள் சூனியமான மூன்றிடம். முப்பாற்புள்ளி - ஆய்த எழுத்து. முப்புடைக்காய் - தேங்காய். முப்புரி - மூன்று நூல் சேர்த்துத் திரித்த கயிறு, முப்புரம். முப்புரிநூல் - பூணுல். முப்பூ - இரும்பு முதலியவற்றைப் பொன்னாக்கவும், ஒரு இலக்கணம் ஆண்டு உயிர் வாழச் செய்யவும் வல்ல மருந்து. முப்பூரம் - பூரம், பூராடம், பூரட்டாதி. முப்பொருள் - பதி பசு பாசம். முப்பொழுதுத்திருமேனி தீண்டுவார் - காலை உச்சி மாலை என்ற மூன்று வேளையும் சிவனது திரு மேனியைத் தொட்டுப் பூசை செய்தற்குரிய சைவப் பிராமணர். முப்போது - காலை உச்சி மாலை. முமூட்சு - மோட்ச தாகமுள்ளவன். மும்மடி - மூன்று மடங்கு. மும்மடியாகுபெயர் - கருமை என்பது பொருள் படுங்கார் என்பது மேகத்தை உணர்த்திப் பின் மழைக் காலப் பயிரை உணர்த்துவதுபோல ஒன்றன் மேலொன்றாக மும்முறை சென்று பொருளுணர்த்தும் ஆகு பெயர் வகை. மும்மண்டலம் - சந்திர சூரிய அக்கினி மண்டலங்கள். மும்மணி - புருடராகம், கோமேதகம், வைடூரியம். மும்மணிக்காசு - ஆபரண வகை. மும்மணிக்கோவை -அகவல் வெண்பா, கலித்துறை என்பன முறையே மாறிவர அந்தாதித் தொடையாகப் பாடப்பெறும் 30 பாடல்களுடைய பிரபந்தம். மும்மணிமாலை - வெண்பா, கலித்துறை, அகவல் என்பன முறையே மாறிவர அந்தாதித் தொடையாகப் பாடப்பெறும் 30 பாடல்களுடைய பிரபந்தம். மும்மலம் - ஆணவம் கன்மம் மாயை. மும்மாக்காணி - 3/16 என்னும் பின்ன எண். மும்மாமுந்திரி - 49/320 என்னும் பின்ன எண். மும்மாரி - ஒரு மாதத்தில் மூன்று மழை. மும்மீன் - மிருக சீரிடம். மும்முடிச்சோழன் - முதல் இராச ராசன். மும்முட்டி - சிற்றாமுட்டி பேராமுட்டி நாகமுட்டி என்பன. மும்முரசு - நியாயமுரசு, வீரமுரசு, கொடை முரசு என்பன. மும்முரம் - கடுமை. மும்மூடர் - முழுமூடம். மும்மூர்த்தி - பிர்மா, விட்டுணு உருத்திரன், திரிகடுகம். மும்மை - இறப்பு, நிகழ்வு, எதிர்வு, மூன்றாக இருக்கும் தன்மை. மும்மைத்தமிழ் - முத்தமிழ், எழுத்து சொல் பொருள். மும்மையணு - சூரிய ஒளியில் தோன்றும் சிற்றணு. மும்மொழி - பழிகூறல், புகழ் கூறல், மெய்கூறல். முயக்கம் - தழுவுகை, புணர்ச்சி, சம்பந்தம். முயக்கு - முயக்கம். முயங்குதல் - தழுவுதல், புணர்தல், பொருந்துதல், செய்தல். முயல்கன் - நடராசக் கடவுள் ஏறி நடிக்கும் பூதம் முயல்வலி என்ற நோய். முயல் - சிறு விலங்கு வகை. முயல்கிணான்டி - குருவி வகை (The greatt stone plover). முயல்வு - முயலுகை. முயற்கறை - சந்திரனிடத்துள்ள களங்கம். முயற்காது - அடம்பு. முயற்கூடு - சந்திரன். முயற்கொம்பு - உலகில் இல்லாத பொருள். முயற்சி - வேலை, ஊக்கம். முயற்புல் - அறுகு. முயற்றி, முயற்று - முயற்சி. முயறு - முசிறு. முரகரி - திருமால். முரசகேது, முரசக்கொடியோன் - தருமன். முரசபந்தம் - சித்திர கவிவகை. முரசம் - பறைப்பொது, மருத நிலப்பறை வகை, போர்ப்பறை. முரசவாகை - அரசனது மாளிகையில் பலிபெறும் வீரமுரசினுடைய தன்மையைக் கூறும் புறத்துறை. முரசவுழிஞை - பொன்னால் செய்த உழிஞைமாலை அணிந்து ஆடு வெட்டியிடும் பலியை நுகரும் விழா முரசின் நிலைமையைக் கூறும் புறத்துறை. முரசறைதல் - பறை அடித்துச் சொல்லுதல். முரசு - பல்லடித்தசை, மேளம், உத்தரட்டாதி. முரசுக்கட்டில் - முரசு வைக்கும் கட்டில். முரச்சுதல் - முற்றுவித்தல். முரஞ்சியூர் முடிநாகனார் - சங்க காலப்புலவர். முரஞ்சு - முதிர்கை, பாறை. முரஞ்சுதல் - முதிர்தல், வலிபெறுதல், நிரம்புதல். முரடு - கரடி, பிடிவாதம். முரட்டடி - இரக்கமற்ற குணம். முரணர் - பகைவர். முரணுதல் - மாறுபடுதல், பெருக்குதல். முரண் - வலிமை, மாறுபாடு. முரப்பு - கைக்கு மென்மை அற்றுத் தோன்றும் தன்மை. முரம்பு - பருக்கைக் கல்லுள்ள மேட்டு நிலம், மேடு, பாறை, வன்னிலம், கரு, உப்பளம். முரரை - மரத்தின் வயிரமான பருத்த அடி. முரலல் - ஒலிக்கை, எடுத்தலோசை. முரலுதல் - ஒலித்தல், கதறுதல், பாடுதல். முரல் - மீன் வகை. முரல்வு - யாழின் மெல்லோசை. முரவம் - பறை வகை, முழக்கம். முரவு - உடைவு, ஒறுவாய், பறவை வகை. முரவை - அரிசியிலுள்ள வரி. முரளி - வேய்ங்குழல். முரளீதரன் - கண்ணன். முரள் - இப்பி வகை. முரற்கை - ஒலி, பாட்டு, கலிப்பா, தாளவகை. முரற்சி - பாட்டு, கயிறு. முரற்றுதல் - ஒலித்தல், கதறுதல். முரற்றுமம் - குடம். முரன் - ஓரசுரன். முரன்றுபாடுதல் - ஆலாபனம் செய்தல். முராந்தகன், முராரி - திருமால். முரி - துண்டு, நொய்யரிசி, குள்ள மானது, சிதைவு, வளைவு, நாடகத் தமிழின் இறுதியில் வரும் சுரிதகம், இசைப்பாவின் இறுதிப் பகுதி. முரிகம் - மயிர்ப்போர்வை. முரிதல் - ஒடிதல், கெடுதல், சிதறுதல், தவறுதல், தோல்வியுறுதல், நீங்கு தல், நிலைகெடுதல், வளைதல், தளர்தல். முரித்தல் - ஒடித்தல், அழித்தல். முரிப்பு - மாட்டின் திமில். முரிவரி - வரிப்பாட்டு வகை. முரிவாய் - இடித்து உண்டாக்கின வாசல். முரிவு - சுருக்குகை, நீங்குகை, வருத்தம், ஊழ். முருகதாசசுவாமி - புலவர் புராணம் செய்தவர் (1840 - 99). முருகயர்தல் - முருகபூசை செய்தல், வெறியாடுதல். முருகவேள் - முருகக் கடவுள். முருகனாடல் - துடி, குடை என்னும் இருவகைக் கூத்து. முருகன் - கட்டிளமையோன், வெறி யாட்டாளன், முருகக் கடவுள். முருகு - இளமை, மணம், முருகன், அழகு, வெறியாடு, வேள்வி, விழா, பூத்தட்டு, தேன், கள், எலுமிச்சை, எழுச்சி, திருமுருகாற்றுப்படை, விறகு. முருகேசபண்டிதர் - யாழ்பாணப் புலவர் (1830 - 1900). முருகை - ஒருவகைக்கல். முருக்கம்புளி - எலுமிச்சம் புளி. முருக்கு - பலாசம், எலுமிச்சை. முருக்குதல் - அழித்தல், கொல்லுதல். முருங்கன் - நெல் வகை. முருங்குதல் - அழிதல், முறிதல், அடங்கி எரிதல். முருங்கை - மரவகை. முருடன் - முரடன், பிடிவாத முள்ளவன், மூடன், வேடன். முருடு - கரடுமுரடு, பிடிவாதம், கொடுமை, மரக்கணு விறகு, மரக்கட்டை, பறைப்பொது, மத்தள வகை, பருமை. முருந்தம் - முருந்து. முருந்தன் - சமர்த்தன். முருந்து - இறகினடிக் குருத்து, வேரின் மேல் தண்டு, எறும்பு, வெண்மை. முரைசு - முரசு. முலாம் - பொன்வெள்ளிப் பூச்சு. முலை - தனம். முலைக்கச்சு - இரவிக்கை. முலைக்கண் - முலைக்காம்பு. முலைக்கால் - முலை. முலைக்கோள் - முலைப்பால். முலைத்தாய் - குழந்தைக்குப் பால் கொடுப்பவள். முலைப்பால் - தாய்ப்பால். முலைப்பாற்கூலி - பெண்ணின் தாய்க்குப் பெண்ணை வளர்த்ததன் பொருட்டு மணமகன் கொடுக்கும் பரிசப்பணம். முலைமுகம் - தனம். முலைவிலை - முலைப்பாற் கூலி, பரிசம். முல்லை - கொடிவகை, முல்லை நிலம், சாதாரிப்பண், உரிப்பொருளு றொன்றாகிய இருத்தல், கற்பு, வெற்றி, முல்லைப்பாட்டு. முல்லைக்கருவி - குடுமியான் பருந்து (Serpent eagle). முல்லைக்குழல் - இசைக் குழல் வகை. முல்லைச்சூட்டு - கற்பிற்கு அறிகுறியாகத் தலையிலணியும் முல்லைப் பூவாலான மாலை. முல்லைப்பாட்டு - நப்பூதனார் பாடிய ஒரு நூல். முல்லையாழ்த்திறம் - செவ்வழிப் பண், இனம். முல்லையாளர் - முல்லைநில மக்கள். முவட்டிபண்டு - எட்டிப்பழம். முழ - முழவு. முழக்கம் - பேரொலி. முழக்கு - ஒலி. முழக்குதல் - ஒலிப்பித்தல். முழங்கதல் - பெரிதொலித்தல். முழந்தாள், முழந்து - முழங்கால். முழம் - இருசாண் கொண்ட தன் முழங்கை நீள அளவு. முழல் - கழற்சி. முழவம் - மேளம். முழம் - இருசாண் கொண்ட தன் முழங்கை நீள அளவு. முழல் - கழற்சி. முழவம் - மேளம். முழவு - முரசு, பால் கறத்தற்குரிய பாத்திரம். முழா - முழவு. முழால் - தழுவுகை. முழு - எல்லாம், பருத்த. முழுக - முழுவதும். முழுகுதல் - நீராடுதல், அமிழ்ந்து இருத்தல். முழுக்க - முழுதும். முழுக்காட்டுதல் - நீராட்டுதல். முழுக்கு - நீராட்டு. முழுசுதல் - உட்புகுதல், முட்டுதல். முழுது - எஞ்சாமை. முழுதும் - எஞ்சுதலின்றி. முழுதோன் - கடவுள். முழுத்த - முதிர்ச்சி பெற்ற. முழுத்தம் - முகூர்த்தம். முழுத்தும் - முழுதும். முழுநெறி - புற இதழ் ஒடிக்கப்பட்ட முழுப்பூ, இதழொடிக்கப்படாத முழுப்பூ. முழுநோக்கு - கிரகம் முழுப் பலத்தோடு நோக்குகை. முழுந்து - முழுமை. முழுப்பொருள் - கடவுள். முழுமகன் - அறிவிலான். முழுமணி - துளையிடாதமணி, குற்றமற்ற இரத்தினம். முழுமதி - பூரணச்சந்திரன். முழுமுதல் - கடவுள், மரத்தின் அடிப்பகுதி. முழுமூச்சு - முழுப்பலத்துடன் செய்யும் முயற்சி. முழுமுடன் - பெருமூடன். முழுமை - எல்லாம். முழுவலி - நிறைந்த வலிமை. முழுவல் - நீர்ப்பறவை வகை, விடாது தொடர்ந்த அன்பு. முழுவுதல் - முத்தமிடுதல். முழுவென்பு - என்புக்கூடு. முழை - குகை, துடுப்பு. முழைஞ்சு - குகை, துளை. முழைத்தல் - துளைத்தல். முளரி - தாமரை, பிரமலோகம், முட்செடி, காடு, முள்ளுள்ள கள்ளி, விறகு, சமிதை, நெருப்பு, காய்ச்சல், நுண்மை. முளரிப்பகை - சந்திரன். முளரிப்பாவை - இலக்குமி. முளவு - முள்ளம் பன்றி, முட்கோல். முளா - முள்ளங்கி. முளி - உலர்ச்சி, வாட்டம், உடல், மூட்டு, செம்முள்ளி. முளை - அங்குரம், இளமை மரக் கன்று, மூங்கில், குறுந்தறி, முனை. முளைக்காற்கோதை - நெல்முளை களால் தொடுக்கப்பட்ட மாலை. முளைக்குடம் - பாலிகைக் குடம். முவைக்கோல் - குத்தி நாட்டிய கோல். முளைத்தல் - முளை தோன்றுதல், உதித்தல். முளைத்தாலி - கழுத்தணியில் கோக்கும் முளைபோன்ற பொன்னா பரணம். முளைப்பாலிகை - சுபகருமங்களில் நவதானிய விதை முளைக்க வைத்த மட்பாண்டம். முளைமா - தானியமுளைமா (Malt). முளைமூலம் - மூலநோய். முளையரில் - மூங்கிற்புதர். முளையாணி - கதவு நின்றாடும் இரும்புக் குடுமி. முளையான் - குழந்தை. முள் - மரம் செடிகளில் உள்ள ஊசி போன்ற கூரிய பகுதி, குதிரை தூண் டும், முள் கடிவாளம், இறகினடி, கூர்மை. முள்காத்தல் - குந்தியிருத்தல். முள்குதல் - தழுவுதல், உட் செல்லுதல். முள்தோலி - நட்சத்திர மின்வகை. முள்ளங்கி - கீரை வகை. முள்ளந்தண்டு - முதுகிலுள்ள நடு எலும்பு. முள்ளம்பன்றி - முட்பன்றி. முள்ளி - முள்ளுள்ள செடி, தாழை, கள், முள்ளிச்செடி. முள்ளிப்பூ - வரிக்கூத்து வகை. முள்ளூர்மலை - மலையமான் திரு முடிக்காரியின் மலை. முள்ளெலி - எலிகை (Hedgehog). முள்ளெலும்பு - முள்ளந்தண்டின் எலும்பு. முறம் - களகு, விசாகம். முறி - துண்டு, ஆவணம், தளிர், கொழுந்து இலை, சேரி. முறிகுளம் - பூராடம், கரை உடைந்த குளம். முறிக்கலைச்சுருக்கு - துறவியின் முக்கோலில் சுருக்கிக் கட்டிய சிறு துணி. முறிசெய்தல் - அடிமையாக்குதல். முறிதல் - ஒடிதல், தோற்றல், கெடுதல், வலிகெடுதல். முறிப்பு - மாற்று மருந்து. முறுகல் - காய்ந்து கரிந்தது. முறுகு - திண்மை. முறுகுகஞ்சா - கடைக்கஞ்சா. முறுகுடை - சிக்கலுள்ள தலைமயிர். முறுகுதல் - திருகுதல், விரைதல், முதிர்தல், மிகுதல், கடுமையாதல், செருக்குதல், மீறுதல். முறுக்கவிழ்தல் - அரும்பு மலர்தல். முறுக்காணி - வீணை முதலிய வற்றின் நரம்பை முறுக்குங் கருவி. முறுக்கு - திரிக்கை, மிடுக்கு, பணி கார வகை, வலிப்பு. முறுக்குதல் - திரித்தல், ஒடித்தல், சுழற்றுதல், சினத்தல். முறுமுறுத்தல் - முணுமுணுத்தல். முறுவஞ்சி - முத்து. முறுவலித்தல் - புன்நகை செய்தல். முறுவல் - பல், புன்நகை, மகிழ்ச்சி இறந்துபோன ஒரு பழைய நாடகத் தமிழ் நூல். முறுவிலி - வவ்வாலோட்டி. முறை - ஒழுங்கு, ஆள் மாறி மாறி வேலை செய்யும் ஒழுங்கு, தடவை, பிறப்பு, உறவு, இராசநீதி, பழமை, ஊழ், கூட்டு, நூல், தன்மை, முறையீடு, கற்பு. முறைகேடு - நீதித் தவறு. முறைசிறத்தல் - ஒன்று ஒன்றினிற் சிறந்து வருதல். முறைசுரம் - மலேரியா. முறைசெய்தல் - இராச நீதி அளித்தல், தண்டித்தல். முறைசெய்வோர் - இராச கட்ட ளையை நிறைவேற்றும் ஏவலாளர். முறைத்துப்பார்த்தல் - ஏறவிழித்து நோக்குதல். முறைநிரனிறை - பெயர்களை நிறுத்தமுறைக் கேற்ப அவற்றிற் குரிய வினை முதலியவற்றை அடைவே நிறுத்துகை. முறைநிலைப்பெயர் - முறைப் பெயர். முறைப்படுதல் - ஒழுங்குபடுதல், முறையிடுதல். முறைப்பாடு - முறையீடு. முறைப்பு - விறைப்பு. முறைப்பெயர் - உறவு முறையைக் காட்டும் பெயர்ச்சொல். முறைமயக்கு - ஒழுங்கீனம். முறைமுதற்கட்டில் - சிங்காசனம். முறைமை - முறை, உரிமை. முறையம்பிள்ளை - கிராம வேலைக் காரன். முறையிடுதல் - குறை சொல்லிக் கொள்ளுதல். முறையிலார் - கீழ்மக்கள். முறையின்வைப்பு - எடுத்துக் கொண்ட பொருளை வரிசைப்படி வைப்பது. முறையீடு - முறைப்பாடு. முறையுளி - நியமப்படி. முறையோர் - முறைசெய்வோர். முறைவன் - சிவன், பாகன். முற்கட்டு - பாட்டின் ஆரம்பத்தி லுள்ள எடுப்பு. முற்கந்தெறிதல் - பல்லி சொல்லு தல். முற்கம் - பல்லி செய்யும் ஒலி சிறு பயறு. முற்கரம் - முகண்டி என்னும் ஆயுதம், பெரியதடி. முற்கவன் - குபேரன். முற்கு - எழுத்திலா ஒலி. முற்குளம் - பூராடம். முற்கூறு - முற்பகுதி. முற்கொழுங்கால் - பூரட்டாதி. முற்கொள்ளுதல் - முந்துதல். முற்பக்கம் - முன்பகுதி, வளர்பிறை. முற்படர்தல் - முன் செல்லுதல், மேம்படுதல். முற்படுதல் - முந்துதல், முன் அமைத்தல், எதிர்படுதல். முற்பவம் - முற்பிறப்பு, செய்த பாவம். முற்பா - வெண்பா. முற்பாடன் - முற்பட்டவன். முற்பாடு - முற்படுகை, முன்னிடம். முற்பால் - முன்பு. முற்பாற்கிழமை - பழமையான நட்புரிமை. முற்பூண் - திருமங்கலியம். முற்பெரியான் - பிரமன். முற்ற - முழுதும், மிகவும். முற்றகப்படுதல் - முற்றுகையிலகப் படுதல். முற்றம் - வீட்டின் முன்புறம், ஊரின் வெளியிடம், பாப்பு. முற்றல் - முதிர்ச்சி, முற்றியது, வைரம், கொள்கை, முடிகை, திண்மை, மூப்பு. முற்றவெளி - வெளியிடம். முற்றவை - அறிவால் முதிர்ந்தோர் கூடிய சபை, பாட்டி. முற்றளபெடை - அடியின் எல்லாச் சீர்க்கண்ணும் அளபெடைவரத் தொடுப்பது. முற்றறிவன் - எல்லாம் அறிந்த கடவுள். முற்றறிவு - எல்லாவற்றையும் அறியும் அறிவு. முற்றன் - நிறைவுடையவன். முற்றாநிலக்கிரி - சேறுபோலுள்ள நிலக்கரி (Peat). முற்றாய்தம் - தன் மாத்திரையில் குறைவில்லாத ஆய்த எழுத்து. முற்றித்தல் - முடித்தல். முற்றிமை - முதிர்ந்த அறிவு. முற்றியலுகரம் - தனது மாத்திரையில் குறையாத உகரம். முற்றியார் - முற்றுகை செய்தவர். முற்றிலும் - முற்ற. முற்றில் - சிறுமுறம், விசாகம், சிப்பி வகை. முற்றிழை - பெண். முற்று - நிறைவு, முதிர்ச்சி, முடிவு, முற்றுகை. முற்றுகரம் - முற்றியலுகரம். முற்றுகை - கோட்டை முதலிய வற்றை வளைக்கை. முற்றுச்சொல் - வினைமுற்றாகிய சொல். முற்றுணர்வு - எல்லாமறியும் தன்மை. முற்றுதல் - முதிர்தல், பெருகுதல், வைரங்கொள்ளுதல், தங்குதல், நிறைவேறுதல், முடிதல், இறத்தல், செய்து முடித்தல், சூழ்தல், வளைத் தல், தேர்தல். முற்றுப்பெறுதல் - முடிவடைதல். முற்றுவமை - எல்லா வகையினும் உவமான உவமேயங்கள் ஒத்துவர அமைக்கும் உவமை. முற்றுவிடுத்தல் - முற்றுகை நீக்குதல். முற்றுவினை - கருத்து முடிந்ததைக் காட்டும் வினைச்சொல். முற்றுழிஞை - முப்புரங்களை அழித்த போது சிவபெருமான் சூடிய உழிஞைப் பூமாலையின் சிறப்புரைக்கும் புறத்துறை. முற்றூட்டு - எல்லா உரிமையுமுள்ள நிலம். முற்றெச்சம் - எச்சப் பொருளில் வரும் முற்று. முற்றெதுகை - அளவடியின் எல்லாச் சீர்க் கண்ணும் எதுகை வரத்தொடுப்பது. முற்றை - முன்பு. முணகர் - நீசர். முனகு - குற்றம். முனகுதல், முனங்குதல் - முணு முணுத்தல், வேதனையால் புலம் புதல். முனாது - முன்னிடத்துள்ளது. முனி - இரடி, அகத்தி, வில், யானைக் கன்று. முனிதல் - வெறுத்தல், கோபம் கொள்ளுதல். முனித்துறை - சடங்கு. முனிநன் - வெறுப்பவன். முனிமரபு - தெய்வத்தன்மை. முனிமை - முனிவனுக்குரிய தன்மை. முனிமையின் வடிவு - சைன தீட்சை வகை. முனிவரன் - முனிவன். முனிவர் - இருடிகள், 18 கணத்தில் ஒரு கூட்டத்தினர். முனிவறாமை - தீராக்கோபம். முனிவன் - கடவுள். முனிவிலனாதல் - வணிகர் குணம் எட்டனுளொன்றாகிய கோபமின்மை. முனிவு - கோபம், வெறுப்பு, வருத்தம். முனீந்திரன் - முனிவருள், சிறந் தவன், புத்தன் அருகன். முனை - போர், போர்க்களம், பகைவர் நாடு, பகை, வெறுப்பு, தவம், முன், நுனி, கடலுள் செல்லும் நீண்டு கூரிய தரைப்பாகம். முனைஞர் - படைத்தலைவர். முனைதல் - பொருதல், ஊக்கம் கொள்ளுதல், கோபித்தல், வெறுத்தல். முனைத்தல் - எதிர்த்தல், காரியத்தில் முற்படுதல். முனைந்தோர் - பகைவர். முனைப்பதி - பாசறை. முனைப்பாடி - பழைய தமிழ்நாடு களுள் ஒன்று. முனைப்பாடியார் - அறநெறிச் சாரம் செய்த புலவர் (13ம் நூற்.). முனைப்புலம் - பாசறை. முனைமுகம் - போர்களத்தின் முன்னிடம், போரின் தொடக்கம். முனைமேற் செல்லுதல் - பகைமேற் படையெடுத்தல். முனையரையர், முனையர் - திரு முனைப்பாடி நாடாண்ட சிற்றரசர். முனையிடம் - போர்க்களம், பாலை நிலத்தூர். முனையோர் - பகைவர். முனைவன் - கடவுள், முனிவன், தலைவன், புத்தன், அருகன். முனைவு - வெறுப்பு, அவாவின்மை, கோபம். முன் - எதிரில், காலத்தால் முன், முதல், உயர்ச்சி, முன்பிறந்தவன், மனக்குறிப்பு. முன்கடை - வீட்டு வாயில். முன்கட்டு - வீட்டின் முற்பகுதி. முன்கோபம் - சடுதியில் தோன்றும் கோபம். முன்சொல் - பழமொழி. முன்தாங்கி - மகளிர் கால் விரலணி வகை. முன்பனி - மார்கழி தை மாதங்கள். முன்பன்-வலிமையுடையவன், தலைவன். முன்பால் - முன்னாக. முன்பாலை நாடு - கடல் கொண்ட தாகக் கருதப்படும் தமிழ்நாட்டுப் பகுதி. முன்பில் - முன. முன்பிறந்தாள் - தமக்கை, மூதேவி. முன்பிற்படி - முன்போல். முன்பின் - ஏறக்குறைய. முன்புத்தை - முன்பு. முன்மாதிரி - எடுத்துக்காட்டு. முன்முகனை - தொடக்கம். முன்முடுகுவெண்பா - முன்னிரண் டடிகள் முடுகிய சந்தம் கொண்டு வரும் வெண்பா. முன்முறை - முற்பிறப்பு. முன்மொழிந்துகோடல் - அடிக்கடி கூற வேண்டியவற்றை முன்னர் எடுத்துக் கூறும் உத்தி வகை. முன்மொழிநிலையம் - கூட்டு மொழியுள் இரண்டாவது சொல்லின் கண் பொருள் சிறந்து நிற்கை. முன்றானை - சிலையின் முன் தலைப்பு. முன்றிணைமுதல்வன் - குல முன் னோரின் முதல்வன். முன்றில் - வீட்டின் முன்னிடம். முன்றுறை - துறைமுகம். முன்றுறையரையர் - பழமொழி இயற்றிய புலவர் (கி.பி. 5ம் நூற்.). முன்றேர்க்குரவை - வெற்றி அடைந்த அரசன் வெற்றிக் களிப்பால் தன் தேர்த்தட்டிலே நின்று போர்த் தலைவ ரோடு கைப்பிணைத்து ஆடுவதைக் கூறும் புறத்துறை. முன்றோன்றல் - முன்பிறந்தவன். முன்னடிபின்னடி சேவித்தல் - திவ்வியப் பிரவந்தப் பாடல் களுடைய முன்பாதி பின்பாதிகளின் முதல் நினைப்புகளை மாத்திரம் அனுசரிக்கை. முன்னணி - தூசிப்படை. முன்னணிசு - தலை முண்டாசு வகை. முன்னம் - முன், கருத்து, குறிப்பு, குறிப்புப் பொருள். முன்னர் - முன்பு, முற்காலத்தில். முன்னல் - நினைவு, நெஞ்சு. முன்னவன் - கடவுள், தமையன். முன்னிடுதல் - எதிர்ப்படுதல், நோக்கமாகக் கொள்ளுதல். முன்னிற்றல் - முன் தோன்றுதல், பொறுப்பை ஏற்றல். முன்னிலை - தன்மை முதலிய மூவிடங்களுள் ஒன்று, காரணம், சமூகம். முன்னிலைப்படர்க்கை - முன்னி லைப் பொருளில் வழங்கும் படர்க்கைச் சொல். முன்னிலைப்புறமொழி - முன்னி லையாக நிற்பாரைக் குறித்துப் பிறனைக் கூறுமாறு போலக் கூறும் சொல். முன்னிலைப்பெயர் - முன்னிலை யில் வரும் பெயர்ச்சொல். முன்னிலையசை - முன்னிலையில் வழங்கும் அசைச்சொல். முன்னிளவல் - முன்பிறந்தவன். முன்னீடு - தலைமை. முன்னீர் - கடல். முன்னுதல் - கருதுதல், எதிர்ப் படுதல், அடைதல், பொருந்துதல், கிளர்தல், படர்ந்து செல்லுதல், நிகழ்தல். முன்னுரை - பழமொழி, முகவுரை. முன்னுற - முன்பாக. முன்னுறவுணர்தல் - தலைவிக்கு முன்னுற்ற களவு நிலையைத் தோழி அறிதலைக் கூறும் அகத்துறை. முன்னுறுபுணர்ச்சி - இயற்கைப் புணர்ச்சி. முன்னூல் - ஆதிநூல். முன்னேரம் - இளம்பகல். முன்னேற்றம் - வளர்ச்சி அடைகை. முன்னை - பழமை, தமையன். முன்னையோர் - முன்னோர். முன்னைவினை - பழவினை. முன்னோர் - குலத்தலைவர், மந்திரித் தலைவர், பூர்வீகர். முன்னோன் - கடவுள், குலத்தவன், தகப்பன், தமையன். மூ மூ - மூன்று, மூப்பு. மூகன் - ஊமையன், ஓர் அசுரன், கீழ் மகன். மூகாத்தல் - வாய் பேசாதிருத்தல். மூகி - கேழ்வரகு. மூகை - ஊமை, படைக்கூட்டம். மூக்கம் - சீற்றம், கீழ்மை. மூக்கர் - கீழ்மக்கள். மூக்கறுப்பு - அவமானம். மூக்கறை - குறை மூக்குள்ளவன். மூக்கன் - மீன்கொத்தி. மூக்காங்கயிறு - எருதின் மூக்குக் கயிறு. மூக்கு - நாசி, பறவை அலகு, யானைத் துதிக்கை, வண்டிப் பாரின் தலைப் பகுதி, வித்தின் முளை, இலைக் காம்பு, முரட்டுப் பேச்சு. மூக்குத்தி - மகளிர் மூக்கணி. மூக்குரட்டை - பூடுவகை (Hog weed). மூக்குறிஞ்சுதல் - மூச்சை உள் வாங்குதல். மூங்கர் - ஊமையர். மூங்கா - கீரி வகை. மூங்கில் - பெரும்புல் வகை, புனர்பூச நாள். மூங்கிற்பிளிச்சு - ஒல்லியான மூங்கிற் கழி. மூங்கை - ஊமை. மூசல் - மொய்க்கை, சாவு, கெடுதல். மூசாம்பரம் - கரியபோளம், கற்றாழை யிலிருந்து எடுக்கப்படும் பால். மூசு - மொய்க்கை. மூசுதல் - மொய்த்தல், சாதல், மோப்பம் பிடித்தல். மூசுமல்லிகை - ஊசி மல்லிகை. மூசை - புடக்குகை (Crucible). மூச்சி - சுவாசம். மூஞ்சி - முகம். மூஞ்சூறு - எலி வகை. மூஞ்சை - கோணிய முகம். மூடம் - மந்தாரம், 8 மரக்கால் கொண்ட முகத்தலளவை, மறைந்த இடம், அறிவின்மை. மூடல் - மூடி, மூடுகை. மூடன் - அறிவில்லாதவன். மூடாம்பரக்கண் - அரைக்கண் பார்வை யான அபிநயவகை. மூடி - மூடுகருவி, மூடத்தன்மை உள்ளவள். மூடிகம் - பெருச்சாளி. மூடு - மூடன், மூட்டுப்பூச்சி, வேர், காரணம், பெண் ஆடு. மூடுமந்திரம் - பரம இரகசியம். மூடுபனி - மறைபனி (Fog). மூடுசன்னி - அபசிவமாரமென்னும் நோய் (Catalepsy). மூடை - பண்டப் பொதி, தானியக் கோட்டை, தானியக்குதிர். மூட்சி - மிகுதி. மூட்டம் - ஆயத்தம். மூட்டு - பொருத்து, குதிரைக் கடி வாளம், கட்டு, தையல், மூடுகின்ற பொருள். மூட்டுதல் - மூளச் செய்தல், செலுத்துதல், பொருத்துதல், தூண்டி விடுதல். மூட்டை - மூட்டைப்பூச்சி, மூடை. மூதணங்கு - துர்க்கை. மூதண்டம் - உலகம், அண்டத்தின் முகடு. மூதலித்தல் - நிரூபித்தல். மூதறிதல் - அறிவுமிகுதல், பழைய செய்திகளை அறிதல். மூதறிவாளன் - அறிவு முதிர்ந்தவன். மூதறிவு - பேரறிவு. மூதா - வயது சென்ற பசு, தம்பலப் பூச்சி. மூதாட்டி - முதியவள். மூதாதை - பாட்டன். மூதாய் - தம்பலப் பூச்சி, பாட்டி. மூதாளன் - முதியவன். மூதானந்தம் - பேரானந்தம், தன் கணவன் இறந்தபோது மனைவி உயிர் நீக்கிய பேரன்பை நினைத்துக் கண்டோர் கூறும் புறத்துறை. மூதிரை - திருவாதிரை நாள், சிவபிரான். மூதில் - பழங்குடி, பழைய மறக்குடி. மூதிற்பெண்டிர் - மறக்குடியில் பிறந்த ஆடவர்க்கே அன்றி அக்குடியி லுள்ள மகளிர்க்கும் மறமுண்டா தலைச் சிறப்பித்துக் கூறும் புறத்துறை. மூது - முதுமை, ஈகை. மூதுணர்தல் - நன்றாக உணர்தல். மூதுரை - பழமொழி, ஒளவையார் செய்த ஒரு நீதி நூல், வேதம். மூதுவர் - முன்னோர். மூதூர் - பழைய ஊர். மூதேவி - துர்ப்பாக்கியத்தின் அதி தேவதை. மூதேவிகொடி - காகம். மூதேவிபடை - துடைப்பம். மூதேவியூர்தி - கழுதை. மூதை - வெட்டித் திருத்திய காடு, துர்க்கை, முந்தை. மூத்ததிருப்பதிகம் - காரைக்காலம் மையார் செய்த ஒரு திருப்பதிகம். மூத்தநயினார், மூத்தநாயனார் - விநாயகர். மூத்தபிள்ளையார் - மூத்த நயினார். மூத்தம் - முகூர்த்தம். மூத்தல் - முதுமையுறல், முடிதல், கேடுறுதல். மூத்திரம் - சிறுநீர். மூத்தோர் - முதியவர், பண்டிதர், மந்திரிமார். மூத்தோன் - அண்ணன், முதியவன். மூப்பர் - முதியோர். மூப்பன் - சில கூட்டத்தினரின் தலைமைக்காரன். மூப்பி - முதுமகள். மூப்பு - முதுமை. மூய் - மூடி, பூப்பெட்டி. மூய்தல் - மூடுதல், செறிதல், நிரம்புதல். மூரலித்தல் - புன்முறுவல் செய்தல். மூரல் - பல், புன்சிரிப்பு, சோறு, பால். மூரன்முறுவல் - புன்சிரிப்பு. மூரி - வலிமை, பெருமை, கிழம், எருமை, எருது, இடமுரண், சோம்பல், சோம்பல் முறிப்பு. மூரிநிமிர்தல் - சோம்பல் முறிப்பு, முறித்தல். மூர் - மொறக்கோ வாசி (Moor). மூர்க்கம் - கடுஞ்சினம், முரட்டுப் பலம். மூர்க்கன் - மூடன், கடுஞ்சினத்தன், பிடிவாதக்காரன், அகங்காரன், கீழ் மகன். மூர்க்கு - பிடிவாதம், செருக்கு. மூர்ச்சனை - மூர்ச்சை, நெட்டுயிர்ப்பு. மூர்ச்சித்தல், மூர்ச்சை - அறிவு கெடுதல். மூர்த்தம் - வடிவுடைப்பொருள், உடல், உறுப்பு, தலை, முகூர்த்தம். மூர்த்தின்னியன் - பிரதானன். மூர்த்தி - உடல், வடிவம், கடவுள், அருகன், சிவன், தவவேடமுடை யவன், பெரியார். மூர்த்திகரம், மூர்த்தீகரம் - தெய்வ அருள், தெய்வத் தன்மை. மூலகந்தம் - இருவேலி. மூலகபல்லவம் - முள்முருங்கை. மூலகம் - கிழங்கு, ஆடு தின்னாப் பாளை, தனிமம். மூலகரணம் - முதற்காரணம். மூலகன்மம் - அனாதியே உள்ள கன்மம். மூலக்கூறு - மூல அணு (Molecule). மூலட்டானம் - திருவாரூர். மூலட்டானன் - திருவாரூரில் கோயில் கொண்டுள்ள கடவுள். மூலதனம் - முதற்பொருள். மூலத்தானம் - கருப்பக்கிருகம். மூலநாசம் - அழிகை. மூலநாடி - கழுமுனை. மூலநோய் - ஆணவமலம், ஆசனத் துவாரத்திலுண்டாகும் நோய். மூலபண்டாரம் - சேம வைப்பு. மூலபலம் - மூலபடை. மூலப்பகுதி - எல்லாவற்றுக்கும் மூலகாரணமான பிரகிருதி தத் துவம். மூலப்படை - நீண்ட காலமாகத் தொடர்ந்து வரும் சேனை. மூலமந்திரம் - பிரணவம், தலைமை, மந்திரம். மூலமலம் - ஆணவ மலம். மூலம் - அடி, கிழங்கு, ஆதி, வாயில், மூலநோய், தலைமை, மூலநாள். மூலர் - திருமூலர். மூலர்முறை - திருமந்திரம். மூலவர் - மூலதானமூர்த்தி. மூலவல்லி - வெற்றிலை. மூலவாசல் - பிரமரந்திரம். மூலவெழுத்து - பிரணவம். மூலவேர் - அடிவேர். மூலவோலை - மூல ஆவணம். மூலாதாரம் - அடிப்படை, குய்யத் துக்கும் குதத்துக்கும் மத்தியில் நான் கிலைத் தாமரைபோலுள்ள சக்கரம். மூலி - காரணமாயுள்ளவன், மருந்துச் செடி கொடி வேர் முதலியன. மூலை - கோணம். மூலைக்கச்சம் - கொடுக்கு, தாறு. மூலைமட்டம் - மூலைமட்டம் பார்க்கும் கருவி (Set Square). மூலோங்காரம் - பிரணவம். மூவசைசீர் - உரிச்சீர். மூவடிமுப்பது - இடைக்காடர் செய்த ஒரு நூல். மூவடிவு - ஆண் பெண் அலி என்னும் மூவுருவம். மூவட்சி - தேங்காய். மூவர் - திரிமூர்த்திகள், தமிழ்நாட்டு மூவரசர், தேவாரம் பாடிய மூவர். மூவறிவுயிர் - ஊறு, சுவை, நாற்றங்களை அறியும் சிதல் எறும்பு முதலிய உயிர்கள். மூவாசை - மண் பெண் பொன் ஆசை. மூவாதியார் - ஐந்திணை எழுபது என்னும் நூல்செய்த ஆசிரியர் (கி.பி. 5ம் நூற்.). மூவாமருந்து - அமிர்தம். மூவாமலை - மேருமலை. மூவாமுதல் - கடவுள். மூவாயிரவர் - தில்லை மூவாயிரவர். மூவார் - தேவர். மூவிசை - மந்தம் மத்திமம் உச்சம். மூவிடம் - தன்மை முன்னிலை படர்க்கை. மூவிலைவேல் - திரிசூலம். மூவிலைவேலோன் - வயிரவன். மூவுலகம் - சுவர்க்கம், மத்தியம், பாதாளம். மூவெயில் - முப்புரம். மூழக்கு - மூன்று உழக்கு. மூழல் - மூடல். மூழாக்கு - மூழக்கு. மூழி - அகப்பை, யாகத்தில் பயன்படுத்தும் பாண்டம், நீர்நிலை, சோறு, மத்துக்காம்பு. மூழிவாய் - பூக்கூடை. மூழை - மூழி, மத்து, குழிந்த இடம். மூழ் - முகிழ். மூழ்குதல் - அமிழ்தல், மறைதல், புகுதல், அழுந்துதல். மூழ்தல் - பற்றிக் கொள்ளுதல். மூழ்த்தம் - முகூர்த்தம். மூழ்த்தல் - மூழ்கச்செய்தல், முதிர்தல், மூடுதல், மொய்த்தல், வளைத்தல். மூளி - உறுப்புக்குறை. மூளுதல் - பற்றுதல், ஊக்கத்துடன் முற்படுதல். மூளை - மண்டையின் உள்ளீடு, மச்சை, அறிவு. மூற்றை - மும்மடங்கு. மூன்றாந்திருவந்தாதி - பேயாழ்வார் செய்த அந்தாதி நூல். மூன்றாம்வியுகம் - (Tertiary period). மூன்றுதண்டர் - துறவிகள். மூன்றுநூல் - பூணூல். மெ மெச்சுதல் - புகழ்தல், வியத்தல். மெட்டி - கால் விரலணி. மெட்டிமை - இறுமாப்பு, செருக்கு. மெட்டு - மேடு, கௌரவம், பாட்டின் இராகப் போக்கு. மெட்டுதல் - காலால் தாக்குதல். மெது - மிருது, மத்தம். மெதுமெதுப்பு - மெதுத் தன்மை. மெத்த - மிகவும். மெத்துதல் - மிகுதல், நிரம்புதல், அப்புதல். மெத்தெனல் - மென்மைக்குறிப்பு, அமைதிக் குறிப்பு. மெத்தெனவு - சாந்தகுணம், கவலை யின்மை. மெத்தை - படுக்கை, துயிலிடம், சட்டை, வேட்டையாடும் போது தோளிலிடும் சாதனம். மெத்தைவீடு - மாடிவீடு. மெய் - உண்மை, உணர்ச்சி, உடம்பு, மார்பு, ஒற்றெழுத்து. மெய்கண்ட சாத்திரம் - சைவசித்தாந்தத்தைக் கூறும் 14 நூல்கள். மெய்கண்டதேவர் - சந்தான குரவருள் முதல்வர் (13 ஆம் நூ.). மெய்காணுதல் - உண்மையாக ஆராய்ந்தறிதல். மெய்காப்பாளன், மெய்க்காவலன் - பிறருக்கு ஆபத்து நேராமல் காப்பவன். மெய்க்கலவை - உடம்பில் பூசும் கலவைச் சாந்து. மெய்க்காட்டு - நேரில் வந்து தோற்றுகை, சேனையைப் பார்வையிடுகை. மெய்க்கீர்த்தி - அரசனது புகழ வரலாறு களைக் கூறி அவன் தேவியிடம் வாழ்க என்று வாழ்த்தி அவன் இயற் பெயரோடு ஆட்சி ஆண்டைக் கூறும் பாடல் வகை. மெய்க்குற்றம் - கொட்டாவி, நெட்டை, குறுகுறுப்பு, கூன்கிடை, நட்டுவிழல் என்னும் 5 வகைக் குற்றங்கள். மெய்க்கூத்து - தேசி வடுகு சிங்களம் என்ற முப்பாற் பகுதியை உடைய அபிநயக்கூத்து. மெய்சிலிர்த்தல் - மயிர்க்குச் செறிதல். மெய்ஞ்ஞானம் - உண்மை அறிவு. மெய்ஞ்ஞானவிளக்கம் - பிரபோத சந்திரோதயம். மெய்தீண்டுதல் - அன்போடு ஒருவர் உடலைத் தொடுதல். மெய்தொட்டுப்பயிறல் - தலைவியின் குறிப்பையறிதற் பொருட்டுத் தலைவன் அவளைத் தொட்டுப் பழகுவதைக் கூறும் அகத்துறை. மெய்த்தகை - இயற்கை, அழகு, உண்மைக் கற்பு. மெய்த்திறம் - மத உண்மையை உணர்த்தும் நூல். மெய்நீர்மை - உண்மை, முத்தி. மெய்நலம் - உடம்பினழகு, வலிமை. மெய்ந்நவை - உடற் குற்றம். மெய்ந்நிலை - அபிநய வகை. மெய்ந்நிலைமயக்கம் - மெய் மயக்கம். மெய்ந்நூல் - உண்மையை உணர்த்தும் நூல். மெய்ப்படுபருவம் - பாளை, பாலன், காளை, இளையோன், முதியோன் என்ற ஐவகை ஆண்மக்கட்பருவம். மெய்புகுகருவி, மெய்புதையரணம் - கவசம். மெய்பெறுதல் - எழுத்துக்கள் திருந்திய ஒலி வடிவு பெறுதல். மெய்ப்படுதல் - உண்மையாதல், ஆவேசிக்கப் பெறுதல். மெய்ப்பரிசம் - ஊன்றல், கட்டல், குத்தல், தடவல், தட்டல், தீண்டல், பற்றல், வெட்டல் என்ற எண் வகை உணர்ச்சிக் காரணங்கள். மெய்ப்பாடு - நகை, அழுகை, இளிவரல் மருட்கை, அச்சம் பெருமிதம், வெகுளி, உவகை, முதலியன புலப்படுவதான உள்ள நிகழ்ச்சி. மெய்ப்பாட்டிசைக்குறி - வியப்பைக் குறிக்கச் சொல்லின் பின் இடும் அடையாளம். மெய்ப்பாட்டியற்கை - சைன பரமாகமம். மெய்ப்பிரம் - மேகம். மெய்ப்பு - புகழ்ச்சி. மெய்ப்பூச்சு - உடலில் பூசும் கலவைச் சாந்து முதலியன. மெய்ப்பை - சட்டை. மெய்ப்பொருள் - உண்மை, உண்மையான செல்வம், கடவுள். மெய்மறத்தல் - அறிவு நீங்குதல். மெய்ம்மயக்கம் - சொற்களில் ஒற்றெழுத்து இயைந்து வருகை. மெய்கை - இயல்பான தன்மை, உள்ளதாந்தன்மை. மெய்ம்மறை - கவசம். மெய்யவற்குக்காட்டல்வினா - பிறனை அறிவுறுத்தற்குக் கேட்கும் வினா வகை. மெய்யன் - உண்மையானவள், முனிவன். மெய்யாப்பு - சட்டை. மெய்யீறு - மெய்யெழுத்தை இறுதியிலுள்ள சொல். மெய்யுவமம் - வடிவு பற்றி வரும் உவமம். மெய்யுறுபுணர்ச்சி - உடலால் கூடும் கூட்டம். மெய்யுறை - உடற்கவசம். மெய்யெழுத்து - ஒற்றெழுத்து. மெற்வசை - வசைப்பாட்டு வகை. மெய்வருக்கை - மெய்யெழுத்துக் களின் வரிசை. மெய்வாழ்த்து - ஒருவனை வாழ்த்திக் கூறும் பாட்டுவகை. மெய்விடுதல் - இறத்தல். மெய்வேறு - தனித்தனியாய். மெய்வைத்தல் - இறத்தல். மெருகங்கிழங்கு - வெருகங் கிழங்கு. மெருகு - பளபளப்பு. மெருள் - அச்சம். மெலி - மெல்லெழுத்து. மெலிகோல் - கொடுங்கோல். மெலிதல் - வலி குறைதல், இளைத்தல், வருந்துதல், அழிதல், இனமொத்த மெல்லெழுத்தாக மாறுதல், ஓசையில் தாழ்தல். மெலிப்பு - மெல்லெழுத்து. மெலியார் - பலவீனர். மெலிவு - தளர்ச்சி, களைப்பு, துன்பம், தோல்வி, கொடுமை, படுத்த லோசை. மெலுக்கு - மென்மை, வெளியலங் காரம். மெல்குதல் - மிருதுவாதல், மெல்லுதல். மெல்கோல் - பற்குச்சி. மெல்ல - மெதுவாக. மெல்லடை - அப்ப வருக்கம். மெல்லணை - மெத்தை, சட்டை. மெல்லம்புலம்பன் - நெய்தல் நிலத் தலைவன். மெலம்புலம்பு - நெய்தல் நிலம். மெல்லரி - உயர்ந்த அரிசிவகை. மெல்லி - மெல்லியல். மெல்லிசைவண்ணம் - மெல் லெழுத்து மிகுந்துவரும் சந்தம். மெல்லிது - மென்மை வாய்ந்த பொருள். மெல்லியர் - பெண்கள், வலியில்லாத வர், எளியர், கீழான குணமுள்ளவர். மெல்லியல் - பெண், மென்மையான இயல்பு, இளங்கொம்பு. மெல்லிலை - வெற்றிலை. மெல்லெழுத்து - ங் ஞ் ண் ந் ம் ன் . மெல்லெனல் - மெத்தெனற் குறிப்பு, மந்தக் குறிப்பு. மெல்வினை - சரியை கிரியைகள். மெழுகு - சாணம், மிருது, தேனடையின் சக்கை, பிசின். மெழுகுதல் - சாணியிட்டுச் சுத்தம் செய்தல், பூசுதல். மெழுகுபதம் - மெழுகு போல் திரண்டு வரும் பதம். மெழுக்கம் - சாணியால் மெழுகி வைத்த இடம். மெழுக்கு - மெழுகுகை, சாணம். மெள்ள - மெல்ல. மென்கணம் - மெல்லினம். மென்கண் - இரக்கம். மென்கால் - தென்றல். மென்செய் - நன்செய். மென்சொல் - இன்சொல். மென்பறை - பறவைக் குஞ்சு. மென்பால் - மருத நிலம். மென்பிணி - சிறுதுயில். மென்புலம் - மருத நிலம், நெய்தல் நிலம். மென்மெல - மெல்ல. மென்மேல் - மேலும் மேலும். மென்கை - நுண்மை, மிருதுத் தன்மை, மெல்லெழுத்து, தாழ்வு, வலியின்மை அமைதி. மென்றொடர்க் குற்றியலுகரம் - மெல்லொற்றைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் (சங்கு). மென்னகை - புன்சிரிப்பு. மென்னை - மிடறு. மே மே - மேம்பாடு. மேகக்காங்கை - வெட்டை நோய். மேகக்கிரந்தி - சிபிலிஸ் (Syphilis). மேதக்குறிஞ்சி - ஓரிராகம். மேகதனு - வானவில். மேகதிமிரம் - பார்வையை மங்கச் செய்யும் கண்ணோய் வகை. மேகத்தின் வித்து - மண்புழு. மேகநாதம் - சிறுகீரை, பலாசம். மேகநாதன் - இந்திர சித்து. மேமநீர் - துர்நீர். மேகபதம் - மேகமண்டலம். மேகப்படை - தோல் மேலுண்டாகும் சொறி வகை. மேகப்புள் - வானம்பாடி. மேகம் - முகில், நீர், நோய் வகை. மேகரணம் - குட்டம். மேகாகக் குறிஞ்சி - குறிஞ்சி இசை வகையிலொன்று. மேகராகம் - பாலை இசை வகை. மேகர் - செல்லும் வழியில் நீர் தெளிப் போர். மேகலை - மாதர் இடை அணி, அரை ஞாண், ஓமகுண்டத்தைச் சற்றியிடும் கோலம், கோயில் விமான வெளிப்புற எழுதக வேலை. மேகவண்ணம் - கருநீலம். மேகவண்ணன் - திருமால். மேகவாகனன் - இந்திரன். மேகவிடுதூது - காதலரிடம் மேகத்தைத் தூதாக விடுவதாகக் கூறும் பிரபந்த வகை. மேகவிநாசம் - மழை மேகம் கலைகை. மேகாதிபதி - மழைக்குரிய கிரகம். மேகாரம் - மயில். மேகாரி - அறுகு, அவரை. மேக்கு - மேலிடம், மேற்கு. மேசகம் - விரிந்த மயில்தோகை, குதிரையின் பிடரி மயிர். மேடம் - ஆடு இராசி மண்டலத்தின் முற்பகுதி, சித்திரை, கவசம். மேடவீதி - இடபம் மிதுனம் கடகம் சிங்கம் ஆகிய இராசிகள் சேர்ந்த சூரிய வீதிகளின் பகுதி. மேடன் - செவ்வாய். மேடு - உயரம், சிறுதிடர், பெருமை, வயிறு. மேடை - மாடி, தளமுயர்ந்த இடம். மேட்டி - உதவி வேலைக்காரன். மேட்டிமை - அகந்தை, தலைமை. மேட்டுநாயக்கன் - தொட்டியர் தலைவன். மேதகவு, மேதகை - மேன்மை. மேதங்கரர் - சாக்கிய முனிக்கு முன் தோன்றிய புத்தருள் ஒருவன். மேதம் - யாகம், கொலை. மேதரம் - மலை. மேதன் - மேதாவி. மேதாமனு - தக்கணாமூர்த்தியை வழிபடும் மந்திரங்களுளொன்று. மேதாவி - புத்திமான். மேதாவினி - நாகணவாய்ப்புள். மேதி - எருமை, ஓர் அசுரன், வெந்த யம், பொலியெருதுகளைக் களத்திற் கட்டும் கட்டை. மேதித்தலைமிசைநின்றாள் - துர்க்கை. மேதியான் - இயமன். மேதினி - பூமி. மேதினிபடைத்தோன் - பிரமன், திருமால். மேதை - பேரறிவு, மேன்மை, புதன், கள், கொழுப்பு, இறைச்சி, தோல், பொற்றலைக் கையாந்தகரை. மேதையர் - புலவர். மேதோசம் - எலும்பு. மேத்தியம் - பரிசுத்தம், சீரகம். மேத்தியாசம் - வசம்பு. மேத்திரம் - ஆட்டுக்கடா. மேந்தோல் - நீந்தோல் (மேற்றோல்). மேந்தோன்றுதல் - மேற்பட்டு விளங்குதல். மேம்படுதல் - சிறத்தல். மேம்படுநன் - மேம்பாடுற்றவன். மேம்பாடு - சிறப்பு. மேயம் - உவமேயம், அறியத் தகுந்தது. மேயல் - மேய்கை, மேயும் புல் முதலியன. மேயான் - உறைபவன். மேய்க்கி - ஆடு மாடு மேய்ப்பவன். மேய்ச்சல் - மேய்கை, தீனி. மேய்தல் - மாடு முதலியன உணவு கொள்ளுதல், பருகுதல், சஞ்சரித்தல். மேய்த்தல் - விலங்குகள் உண்ணச் செய்தல், வேய்தல். மேய்ப்பன் - இடையன். மேய்மணி - நாகமணி. மேரு - பூமத்தியிலுள்ளதாகக் கருதப் படும் மலை, பெண்குறி. மேருமந்தரபுராணம் - வாமனாசாரியர் செய்ததும் மேருமந்தர்களின் சரிதத்தைக் கூறுவதுமான சைன நூல் 16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி. மேருவில்லி - சிவன். மேரை - எல்லை, மரியாதை. மேலவன் - பெரியோன், அறிஞன், தேவன், மேலிடத்துள்ளவன். மேலாக்கு - மாதர் மார்பின் மேலிடும் சீலை. மேலாத்தல் - மேற்புறமாக்குதல். மேலாடை - உத்தரியம். மேலாப்பு - மேற்கட்டி. மேலாலவத்தை - உயிர் நெற்றியில் நிற்கும் அவத்தை. மேலாழியார் - வித்தியாதர மன்னர். மேலிடுதல் - அதிகமாதல். மேலீடு - மேலிடுவது. மேலும் - பின்னும். மேலுலகம் - சுவர்க்கம். மேலெழுத்து - சாட்சிக் கையெ ழுத்து, அரசியற் கணக்கதிகாரி. மேலேழுலகம் - பூலோகம் புவ லோகம் சுவலோகம் மகலோகம் சனலோகம் தவலோகம் சத்திய லோகம் என்பன. மேலை - மேலிடமான மேற்கிலுள்ள, முந்தின, அடுத்த, முன்பு. மேலைக்கரை - மேற்குக்கரை. மேலைச்சிதம்பரம் - திருப்போரூர். மேலையுலகு - சுவர்க்கம். மேலைவீடு - மேல்வீடு. மேலைவெளி - பரவெளி. மேலோர் - உயர்ந்தோர், புலவர், முன்னோர், வானோர். மேல் - மேலிடம், அதிகப்படி, மேற்கு, தலை, மேன்மை, உயர்ந்தோர், முன், பற்றி, அப்பால், இனி, ஏழனுருபு. மேல்காற்று - கோடைக் காற்று. மேல்பால்விதேகம் - நவ கண்டத் தொன்று. மேல்மடை - நீர்மடையை அடுத் துள்ள நிலம். மேல்மாடி - வீட்டின்மேல் நிலைக் கட்டு. மேல்வட்டம் - வெளிச்சுற்று. மேல்வரிச்சட்டம் - முன்மாதிரி. மேல்வருதல் - எழுதல், நெருங்கி வருதல். மேல்வாயிலக்கம் - ஒன்றிலிருந்து எண்ணப்படும் எண்முறை, பின்னத் தில் மேல் எழுதப்படும் எண். மேல்வாரம் - விளைவிலிருந்து காணியாளனுக்குக் கொடுத்தற்குரிய தானியம். மேல்விலாசம் - முகவரி. மேல்வினை - மேல் வர இருக்கும் கன்மம். மேவலர் - பகைவர். மேவல் - ஆசை, கலக்கை. மேவருதல் - பொருத்தமாதல். மேவார் - பகைவர். மேவித்தல் - தங்கச் செய்தல். மேவினர் - நண்பர், உறவினர். மேவு - ஆசை. மேவுதல் - அடைதல், விரும்புதல், நேசித்தல், ஓதுதல், மேலிட்டுக் கொள்ளுதல், அமர்தல், பொருந்துதல். மேழகம் - கவசம், ஆடு. மேழி - கலப்பை, கலப்பையின் கைபிடி. மேழிச்செல்வம் - ஏரால் வரும் செல்வம். மேழியர் - உழவர், மருத நிலமாக்கள். மேழை - கொம்பில்லாத விலங்கு, கரடி. மேளகம் - கஞ்சி. மேளகர்த்தர் - மற்ற இராகங்களுக்கு மூலமாகிய இராகங்கள். மேளம் - தவில் வாத்தியம். மேற்கட்டி - மேல் விதானம். மேற்கட்டு - மேல்மாடி. மேற்கதி - மோட்சம். மேற்கதுவாய்த்தொடை - அளவடியுள் முதல் மூன்று நான்கு சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுப்பது. மேற்கவடி - ஒருவகை விளையாட்டு. மேற்கு - காணியாளர். மேற்குத் தொடர்ச்சிமலை - மேற்குப் புறத்தில் தெற்கு வடக்காகத் தொடர்ந்து செல்லும் மலை. மேற்கொள்ளுதல் - மேலேறுதல், முயலுதல் பொறுப்பு வகித்தல், மேம்படுதல். மேற்கோண்மலைவு - தருக்கத்தில் முற்கூறியதற்கு மாறுபடத் கூறுகையாகிய குற்றம். மேற்கோப்பு - வீட்டின் கூரைப்பகுதி. மேற்கோள் - உதாரணம், பொறுப்பு வகிக்கை. மேற்படி - முன்குறித்து. மேற்பார்த்தல் - கண்காணித்தல். மேற்பால் - மேற்சாதி. மேற்புரம் - கவர்க்கம். மேற்புலவர் - தேவர். மேற்றளம் - மேல்மாடி. மேற்றிசை - மேற்கு. மேற்றிசைப்பாலன் - வருணன். மேற்றிணை - உயர்குலம். மேற்றிராசனம் - மேற்றிராணியின்தானம். மேற்றிராணி - கிறித்துவக் கண்காணியார். மேற்றொழில் - உயர்ந்த செயல். மேற்றோன்றி - செங்காந்தள். மேன -ஏழாம் வேற்றுமை உருபு. மேனகை - தேவலோகக் கணிகையருளொருத்தி. மேனாடு - மேல்நாடு, கணிகையருளொருத்தி. மேனாடு - மேல்நாடு, பொன்னாங்காணி. மேனாணிப்பு - பெருமிதம். மேனாள் - முன்னாள், பின்னாள். மேனி - உடம்பு, வடிவம், அழகு, குப்பை மேனி. மேனிலை - மேன்மாடி, முன்னுள்ளது. மேனீர்- மழைநீர். மேனை - மலையரசன் மனைவி. மேன்மக்கள் - உயர்ந்தோர். மேன்முறையாளர் - மேன்மக்கள். மேன்மை - சிறப்பு, மகத்துவம். மை மை - கண்ணுக்குத் தீட்டும் மை, எழுதும் மை, கருநிறம், இருள், பசுமை, களங்கம், கருமேகம், குற்றம் பிறவி, மலடு, எருமை, மேடராசி, இளமை, பண்புப் பெயர், தொழிற்பெயர், வினையெச்சவிகுதிகளுள் ஒன்று. மைகிராஸ்கோப்பு - உருபெருக்கிக் காட்டும் கருவி, அணு பெருக்கி ஆடி. மைக்கர் - அப்பிரகம். மைக்காப்பு - எழுத்து நன்கு தெரியுமாறு ஏட்டுச் சுவடிக்கு மை தடவுகை. மைக்காலிருட்டு - காரிருள். மைக்கிரோபோன் - மின்சார அலைகள் மூலம் ஒலி பெருக்கும் கருவி (Microhone). மைசூர்ப்பருப்பு - துவரை வகை. மைஞ்சு - மஞ்சு. மைதானம் - திறந்த வெளியிடம். மைதிலி -சீதை. மைதுனம் - புணர்ச்சி. மைத்திரம் - பகல் 15 முகூர்த்தங்களுள் மூன்றாவது. மைத்திராவருணி - அகத்தியன். மைத்திரி - நட்பு. மைத்திரிபாவனை - எல்லா உயிர்களிடத்தும் அன்பு பாராட்டி அவற்றின் நல்வாழ்வைக் கருதி பௌத்தபிக்கு புரியும் தியான வகை. மைத்துனன் - மனைவிக்கு அல்லது கணவனுக்குச் சகோதரன், மாமன் அல்லது அத்தையின் மகன், சகோதரியின் கணவன். மைத்துனி - மைத்துனன் என்பதன் பெண்பால். மைநாகம் - ஓர் மலை. மைந்தன் - மகன், இளைஞன், ஆண்மகன், வீரன், கணவன், விலங்கு, ஊர்வனவற்றின் குட்டி. மைந்து - வலிமை, அழகு, விருப்பம், காமமயக்கம், பித்து, அறியாமை. மைந்நூறு - அஞ்சனப் பொடி. மைப்பு - கறுப்பு. மைப்போது - கருங்குவளை. மைமல் - பூசை. மைமலர் - கருங்குவளை. மைமல் - மாலைநேரம். மைம்மா - பன்றி. மைம்மீன் - சனி. மைம்முகன் - குரங்கு. மைம்மை - மலட்டெருமை. மைமமைப்பு - பார்வைக்குறை. மையம் - நடு. மையலவர் - பித்தர். மையல் - காம மயக்கம், பித்து, செருக்கு. யானைமதம். மையநோக்கம் - துக்கப் பார்வை. மையாடுதல் - மயக்குதல், ஒளிமழுங்குதல், பொலிவழிதல். மையான் - எருமை. மையிழுது - ஆட்டுநிணநெய், கண்ணுக்கிடும் மை. மையுடை - கருவேல். மையோடக்கோவனார் - பரிபாடல் 7 - ம் பாடல் செய்த புலவர். மைல் - நீட்டலளவை - 5280 அடி. மைவாகனன் - ஆட்டுக்கடா வாகனன், அக்கினிக் கடவுள். மைவிடை - ஆட்டுக்கிடாய். மைவிளக்கு - எரி விளக்கு. மைனா - நாகணவாய். மொ மொகமொகெனல் - நீர்க் கொதிப் பின் ஒலிக் குறிப்பு, கழுத்து குறுகிய பாத்திரத்தினின்றும் நீர் ஊற்றுங்காலுண்டாகும் ஈரடுக்கு ஒலிக் குறிப்பு. மொகரம் - மொகரம் என்னும் அரபி மாதத்து வரும் முகம்மதிய விழா. மொக்கணி - குதிரைக்குக் கொள்ளு முதலிய உணவு கட்டும் பை. மொக்கு - பூமொட்டு, மரக்கணு. மொக்குதல் - துடித்தல். மொக்குள் - நீர்க்குமிழி, மலரும் பருவத்தரும்பு, கொப்புளம். மொக்கையீனம் - மதிப்புக் குறைவு. மொங்கான் - இடிகட்டை. மொசிதல் - மொய்த்தல். மொசித்தல் - தின்னல். மொசுப்பு - செருக்கு. மொச்சை - துர்நாற்றம். மொஞ்சகம் - மயிலிறகுக் குஞ்சம். மொஞ்சி - முலை. மொடு - விலைநயம், மிகுதி. மொட்டம்பு - கூரற்ற அம்பு. மொட்டித்தல் - குவிதல். மொட்டு - அரும்பு, தேரின் கூம்பு. மொட்டை - மயிர் நீங்கிய தலை. மொட்டைக்கோபுரம் - அரை குறையாகச் செய்து நிறுத்தி விடப்பட்ட கோபுரம். மொண்டல் - முகத்தல். மொண்ணன் - வழுக்குத்தலையன். மொத்தம் - முழுமை, கூட்டுத் தொகை, பருமன். மொத்தி - படைப்பு. மொத்துதல் - அடித்தல். மொத்தை - உருண்டை, பருமன். மொந்தன் - வாழை வகை. மொந்தை - சிறு மட்பாண்ட வகை, ஒரு கண்பறை, பருத்தது. மொப்பு - ஆட்டுப்பால் நாற்றம். மொய் - நெருக்கம், கூட்டம், இறு குகை, பெருமை, வலிமை, போர், போர்க்களம், பகை, யானை, வண்டு, தாய், திருமணத்தில் வழங்கும் நன்கொடைப் பணம். மொய்கதிர் - முலை. மொய்த்தல் - நெருங்குதல், மேற் பரவுதல். மொய்ம்பன் - வீரன். மொய்ம்பு - வலிமை, தோள். மொய்யெனல் - மந்தக் குறிப்பு. மொல்லை - மேடம். மொழி - கட்டுரை, கருத்து, பாஷை, உடற்பொருத்து. மொழிதல் - சொல்லுதல். மொழிநூல் - மொழி வரலாற்றைக் கூறும் நூல். மொழிந்ததுமொழிவு - கூறியது கூறல். மொழிபெயர்தேம் - வேறு மொழி வழங்கும் நாடு. மொழிபெயர்ப்பு - ஒரு மொழியில் இருப்பதை வேறு மொழியில் திருப்புதல். மொழிப்பொருள் - சொற்கு ஏற்பட்ட பொருள், நிமித்தச் சொல், மந்திரம். மொழிமாற்று - ஏற்ற பொருளுக்கு இயையுமாறு மொழிகளை மாற்றிப் பொருள்கொள்ளும் முறை. மொழிமை - பழமொழி. மொழியிறுதி - மொழியீற்றெழுத்து. மொழுப்பு - கட்டு, சோலை செறிந்த இடம். மொள்ளுதல் - தண்ணீர் முதலிய முகத்தல். மொறுமொறுத்தல் - வெறுப்புக் குறி காட்டுதல். மோ மோ - முன்னிலை அசைச் சொற் களுள் ஒன்று. மோத்தல், மோகநூல் - காமநூல். மோகம் - மயக்கவுணர்ச்சி, மூர்ச்சை, காம மயக்கம், மோர். மோகரம் - பேராரவாரம். மோகர் - சித்திரக்காரர், மோகமுடை யவர். மோகலாயர் - பாபர் என்னும் முகமதிய அரசன் தோற்றுவித்த பரம்பரை புதிய துருக்கியர். மோகனமாலை - பொன்னும் பவளமும் கோத்தமாலை. மோகனம் - மயக்கம் உண்டாக்குகை, மனமயக்கம் ஆசை மிகுகை, ஓர் இராகம். மோகனாங்கினி - கண்டோரை மயக்கும் பெண். மோகனை - மோகனம். மோகி - கஞ்சா, அபின். மோகிதம் - காம மயக்கம். மோகித்தல் - காமத்தால் மயங்குதல். மோகினி - மோகாங்கினி, திருமாலின் பெண் வடிவான அவதாரம், அசுத்த மாயை, பெண் பேய் வகை. மோக்கம் - மோட்சம். மோங்கில் - திமிங்கல வகை. மோசம் - அபாயம், வஞ்சனை. மோசனம் - விடுபகை. மோசனி - இலவு. மோசி - பழைய புலவருள் ஒருவர். மோசித்தல் - விட்டொழிதல். மோசிமல்லிகை - காட்டுமல்லிகை. மோசை - விரலணி வகை, வசம்பு. மோசையிலவம் - இலவு. மோடனம் - அவமானம், மாய வித்தை, காற்று. மோடன் - வளர்ந்தவன், மூடன். மோடி - காடுகிழாள், செருக்கு, விதம், வேடிக்கைக் காட்சி, பிணக்கு. மோடிநாணயம் - பொன் நாணய வகை. மோடு - உயர்ச்சி, மேடு, பருமை, பெருமை, உயர்நிலை, வயிறு, கருப்பை, பிளப்பு, மடமை. மோடுபருத்தல் - பிடரியில் சதை திரண்டிருத்தல். மோட்சம் - முத்திநிலை. மோட்டன் - மூர்க்கன். மோட்டுமீன் - நட்சத்திரம் மோட்டுவலயம் - மாலை வகை. மோதகம் - பலகார வகை, கொழுக் கட்டை. மோதம் - மகிழ்ச்சி, களிப்பு, வாசனை. மோதரம் - மோதிரம். மோதவம் - வாசனை. மோதிரப்பாட்டு - ஒரு நாடக நூல் வகை. மோதிரம் - கணையாழி. மோது - தாக்கு. மோதுதல் - புடைத்தல், தாக்குதல். மோத்தை - ஆட்டுக்கிடாய், மேடராசி, வாழை தாழை முதலிய வற்றின் மடல் விரியாத பூ. மோந்தை - தோற்கருவி வகை. மோப்பம் - வாசனை. மோப்பவுப்பு - கார உப்பு (Smelling salt). மோப்பு - காதல். மோம்பழம் - நன்மணமுள்ள பழம். மோய் - தாய். மோரடம் - கரும்புவேர், வீழிப்பூடு. மோரியர் - மௌரிய வமிசத்தவர் வித்தியாதரர், நாகர். மோரோடம் - செங்கருங்காலி. மோர் - நீர் விட்டுக் கடைந்த தயிர். மோர்சங்கு - வாத்திய வகை. மோலி - முடி. மோவம் - ஆன்மாவுக்கு மயக் கத்தைச் செய்யும் குற்றம். மோவாக்குகொக்கு - மானாக் கொக்கு. மோவாய் - வாய்க்குக் கீழுள்ள இடம், தாடி, நாடி. மோழலம்பன்றி - ஆண் பன்றி. மோழல் - பன்றி. மோழை - கொம்பில்லாத விலங்கு, மடமை, கீழாறு, குமிழி, மடு. மோழைமுகம் - பன்றி. மோழைமை - மடமை, பரிகாச வார்த்தை. மோழைவழி - நுழைவழி. மோறாத்தல் - அங்காத்தல், சோம்பி யிருத்தல். மோறை - முரட்டுத்தனம், மோவாய். மோனம் - மௌனம். மோனமுத்திரை - மோன நிலை யைக் காட்டும் முத்திரை. மோனி - மௌனி. மோனிகம் - பெருச்சாளி. மோனை - மோனைத் தொடை, முதன்மை. மோனைத்தொடை - சீர்களின் முதல் எழுத்து ஒன்றி வாத் தொடுப்பது. மௌ மௌகூர்த்திகன் - முகூர்த்தம் நியமிக்கும் சோதிடன். மௌசலம் - தண்டாயுதத்தால் செய்யும் போர். மௌசாரி - பண்வகை. மௌசு - மிகுபிரியம் (உருது). மௌட்டியம் - அறியாமை. மௌத்திகம் - முத்து. மௌத்து - மரணம் (அரபி). மௌரியர் - மோரியர், சந்திர குப்தன் தோற்றுவித்த அரச பரம்பரை. மௌலி - மயிர்முடி, தலை, பூ மாலை. மௌவல் - முல்லை, காட்டு மல்லிகை, தாமரை. மௌவை - தாய். மௌனம் - பேசாமை. மௌனி - பேசாவிரதமுடையவன், ஆமை. ய யக்கதரு - ஆலமரம். யக்கியபுருடன் - திருமால். யக்கியம் - யாகம். யக்ஞமூர்த்தி - அக்கினிதேவன். யசு - இரண்டாம் வேதம். யசோதரகாவியம் - உச்சயினி நகரத்து அரசனாகிய யசோதரனைப் பற்றிக் கூறும் ஒரு சைன நூல் (11ம் நூற்.). யசோதை - கண்ணபிரானை வளர்த்த தாய். யச்சு - புகழ். யஞ்ஞம் - யாகம். யஞ்ஞன் - தீக்கடவுள். யடசம் - நாய். யட்சவாதம் - ஆல். யட்சிணி - இயக்கி, துர்க்கைக்குப் பணி செய்யும் பெண் தெய்வம். யட்டி - அதிமதுரம். யதா - எவ்வாறு. யதார்த்தம் - உண்மை. யதி - துறவி, சீரோசை முடியுமிடம். யதிராசன் - முனிவர், தலைவன். யது - யாதவ குலத்துக்கு முதல் வனாகிய அரசன். யதேச்சை - தனது எண்ணப்படி. யத்தனம் - எத்தனம். யந்திரசாபம் - வெற்றி வில். யந்திரம் - சூத்திரப்பொறி, மந்திர சக்கரம், தேர். யமகண்டம் - ஒவ்வொரு நாளும் அசுபமான மூன்றே முக்கால் நாழிகை, ஆயுளில் உயிருக்கு உபாயமான காலம். யமகண்டம்பாடுதல் - உயிருக்கு அபாயமான நிபந்தனைக்குட் பட்டுக் கவி பாடுதல். யமகண்டன் - வலிய கொடியவன். யமகம் - வந்த எழுத்துக்களே பொருள் வேறுபடச் செய்யுளின் சீர் அல்லது அடிகளில் பின்னும் வருவதாகிய மடக்கு என்னும் அணி. யமகாதகன் - மிகப் பொல்லாதவன். யமகிங்கரன் - யம தூதன். யமதங்கி - சமதக்கினி. யமதங்கிமைந்தன் - பரசுராமன். யமதூதி - நாகத்தின் நச்சுப்பால் நான் கனுளொன்று. யமபடன் - யமனது வேலையாள். யமம் - தவம். யமன் - மரணக் கடவுள், நாகத்தின் நச்சுப் பற்களுள் ஒன்று. யமாரி - சிவன். யமுனாகல்யாணி - ஓரிராகம். யமுனை - பிரயாகையில் கங்கை யோடு கலக்கும் ஒரு ஆறு. யமுனைத்துறைவன் - உண்ணன், ஆளவந்தார். யயமானன் - யாகத் தலைவன், தலைவன். யயாதி - நகுடன் மகனாகிய ஓர் அரசன். யவனத்தச்சர் - கிரேக்க நாட்டுத் தச்சர். யவனப்பிரியம் - மிளகு. யவனம் - கீரீசு நாடு, இளமை. யவனர் - யவன தேசத்தினர், சித்திர காரர், கைப்பணியாளர். யவனிகை - இடுதிரை. யவை - கோதுமை, அங்குலத்தில் எட்டிலொன்று. யா யா - யாவை, அசைநிலைச் சொல், யா மரம். யாகசம்மினி - யாகத்துக்கு உதவும் ஒரு சார் தேவதைகள். யாகசாலை - வேள்விச்சாலை, கோயிலில் ஓமம் செய்யும் மண்டபம். யாகசேனன் - துரௌபதையின் தந்தையான பாஞ்சால அரசன். யாகத்தம்பன் - யூபம். யாகநிலை - யாகசாலை. யாகபத்தினி - யாகம் செய்விப் பவனின் மனைவி. யாகபாரி - யாக தட்சிணை. யாகப்பிறையான் - தக்கன் யாகத்தில் தோன்றிய சந்திரன். யாகம் - வேள்வி. யாகவிபாகம் - அவிர்ப்பாகம். யாக்கியவற்கியம் - யாஞ்ஞ வல்கியம். யாக்கை - உடம்பு. யாங்கணும் - எங்கும். யாங்கண் - எங்கு. யாங்கனம், யாங்கு - எவ்விடம், எவ்வாறு. யாங்கும் - எவ்விடத்தும். யாங்ஙனம் - யாங்கனம். யாசகம் - இரப்பு. யாஞ்ஞவல்கியம் - உபநிடதங்களுள் ஒன்று. யாடம் - சிறுகாஞ் சொறி. யாடு - ஆடு. யாட்டை - ஓராண்டுக் காலம். யாணர் - புதிது, படல், புது வருவாய், வளப்பம், செல்வம், நன்மை, முறைமை, அழகு. யாணர்நகர் - வித்தியாதரருலகு. யாணன் - அழகுள்ளவன். யாணு, யாண் - அழகு. யாண்டு - எங்கு, எப்பொழுது, ஆண்டு. யாண்டை - எவ்விடம். யாதவர் - யது வமிசத்தவர். யாதவன் - கண்ணன். யாதவி - குந்தி. யாதனாசரீரம் - நரக அனுபவத்துக் குரிய தேகம். யாதனை - வேதனை, துக்கம். யாது - எது. யாதுதானன் - இராக்கதன். யாத்தல் - பிணித்தல், விட்டு நீங்கா திருத்தல், செய்யுள் முதலியன செய்தல், சொல்லுதல். யாத்திரைப்பெரியார்கள் - (Pilgrim fathers) இங்கிலாந்தினின்றும் ஆதியில் கனடாவுக்குச் சென்று குடியேறி யவர்கள். யாப்பண்டம் - கருப்பமுற்றவள் விரும்பும் உண் பண்டம். யாப்பருவங்கலக்காரிகை - அமித சாகரர் செய்த யாப்பிலக்கண நூல் (11ஆம் நூற்.). யாப்பருங்கலம் - அமிதசாகரர் நூற்பாவாற் செய்த யாப்பிலக்கண நூல் (11ஆம் நூற்.). யாப்பறை - கற்பில்லாதவள். யாப்பானந்தம் - பாட்டில் தலைவன் பெயர்க்கு முன்னும் பின்னும் சிறப்புடை மொழியினைப் புணர்ந்து இடர்ப்படப்பாடும் குற்றம். யாப்பிமம் - யாப்பியரோகம், பொழுது போக்கு. யாப்பிமரோகம் - நாட்பட்ட நோய். யாப்பு - கட்டுகை, கட்டு, செய்யுள், அன்பு, உறுதி, சூழ்ச்சி, சம்பந்தம். யாப்புறவு - தள்ளத்தகாத நியதி, தகுதி. யாப்புறுதல் - பொருள் நிரம்பி யிருத்தல், சம்பாதித்தல். யாப்புறுத்தல் - வலியுறுத்தல். யாமக்கோட்டம் - அந்தப்புரம். யாமங்கொள்பவர் - ஊர் காப்பவர், நாழிகைக் கணக்கர். யாமசரிதன் - அரக்கன். யாமபேரி - இரவில் ஒவ்வொரு சாமத் தொடக்கத்திலும் கொட்டும் பேரிகை. யாமம் - சாமம், நள்ளிரவு, இடக்கை என்னும் பறை. யாமளசாத்திரம் - சத்தி பூசையைப் பற்றிக் கூறும் ஒரு அகமநூல். யாமளபுராதனர் - காளியின் படை வீரர். யாமளம் - அபிசார மந்திரம் கூறும் வேதப்பகுதி, பச்சை, இளமை. யாமளாக்கினி - காளியின் அக்கினி. யாமளேந்திரர் - இந்திரகாளிய மென்னும் நாடகத் தமிழ்நூல் செய்தவர். யாமளை - பார்வதி, காளி. யாமிகன் - இரவில் நகர் சோதனை செய்யும் காவற்காரன். யாமியம் - தெற்கு. யாமினி - இரவு. யாமுனாசாரியர் - ஆளவந்தார் என்னும் வைணவ ஆசிரியர். யாமை - ஆமை, செவ்வழியாழ்த் திறத்தொன்று. யாமைமணை - ஆமை வடிவான பீடம். யாமைமயிர்க்கம்பலம் - இல்பொருள் குறிக்கும் ஒருவாய்பாடு. யாம் - தன்மைப் பன்மைப் பெயர். யாய் - தாய். யாரன் - யாவள். யாரி - எதிரி. யாரும் - எவரும். யார் - யாவர், மூன்றடி கொண்ட அளவை (இலங்கைத் தமிழ்). யாலம் - ஆச்சா, இரவு. யாவண் - எவ்விடம். யாவது - எது, எவ்விதம். யாழ - ஒரு முன்னிலை அசைச் சொல். யாழோர் - காந்தருவர். யாழ் - இசைக்கருவி வகை, மிதுனம், அசுவதி, திருவாதிரை, பண். யாழ்க்கரணம் - யாழ் வாசித்தற்குரிய செய்கை. யாழ்செய்தல் - பாடுதல். யாழ்த்திறம் - பண். யாழ்ப்பாணர் - பாணர் வகையினர். யாழ்முறி - திருஞான சம்பந்த சுவாமி கள் யாழிலடங்காத இசையுடைய தாகப் பாடிய பண். யாழ்முனிவன் - நாரதர். யாழ்வல்லோர் - கந்தருவர். யாளி - யானையின் துதிக்கையும் சிங்க வடிவமுமுடையதாகக் கருதப்படும் விலங்கு, சிங்கம், சிங்கராசி. யாளியூர்தி - காளி. யாறு - ஆறு. யாற்றுநீர் - சொற்களை முன்பின்னாக மாற்றாது நேராகவே பொருள் கொள்ளும் முறை. யானஞ்செய்தல் - மோதல். யானம் - வாகனம், சிவிகை, மரக்கலம், போருக்குச் செல்லுகை. யானை - ஆனை. யானைக்கச்சை - யானைக் கழுத்தணி கயிறு. யானைக்கண் - சிறுகண், காய் இலைகளில் புள்ளிவிழும் நோய். யானைக்கதி - நடனம், துரிதம், மந்தம், ஓட்டம் என நாலு. யானைக்கால் - கால் வீங்கும் நோய் வகை. யானைக்குப்பு - சதுரங்கம். யானைக்குருகு - சக்கரவாகப் புள். யானைத்தீ - தீராத பசியை விளைக்கும் நோய். யானைப்பட்டம் - யானையின் முகத்திலிடும் தகடு. யானைமறம் - அரசனது யானையின் போர் வீரத்தைச் சிறப்பித்துக் கூறும் புறத்துறை. யானைமீன் - திமிங்கில வகை. யானைமுகவன் - விநாயகக் கடவுள். யானையங்குருகு - கொக்கை வகை. யானையுண்குருகு - ஆனையிறாஞ் சிப்புள். யானையுரித்தோன் - சிவன். யானைவாரி - யானைக்கூடம், யானை பிடிக்குமிடம். யானைவென்றி - ஒரு யானை பிறிதொரு யானையோடு பொருது வெற்றிபெறுதலைக் கூறும் புறத்துறை. யான் - தன்மை ஒருமைப் பெயர். யு யுகம் - கிருதயுகம் திரேதாயுகம் துவாபரயுகம் கலியுகம் என்னும் உகங்கள், இரட்டை, உகம். யுகளம் - இரட்டை. யுகாந்தம் - உகமுடிவு. யுக்தி - கூரறிவு, பொருத்தம். யுதிட்டிரன் - தருமன். யுத்தசன்னத்தன் - போர்க்கோலம் கொண்டவன். யுத்தம் - போர். யுத்தாயுத்தம் - தக்கதும் தகாததும். யுவ - 60 ஆண்டில் 9 ஆவது. யுவதி - இளம்பெண், 16 வயதுள்ள வள். யுவன் - இளைஞன். யுனானி - முகமதிய வைத்தியர் கையாளும் கிரேக்க வைத்திய முறை. யூ யூகம் - கருங்குரங்கு, பெண்குரங்கு, ஊகம், உத்தேசம், விவேகம், அணி வகுப்பு, படை உடற்குறை, கோட்டான். யூகி - புத்திசாலி, உதயணனின் மந்திரி. யூகித்தல் - அனுமானித்தல். யூகை - ஊமை. யூக்காலிப்டஸ் - மரவகை. யூதநாயகன் - படைத்தலைவன். யூதபன் - தன் கூட்டத்தைக் காக்கும் தலைமை யானை. யூதம் - விலங்கின் கூட்டம், பெரும் படை. யூதர் - எபிரேய சாதியார். யூதிகை - முல்லை. யூபம் - வேள்வித்தூண், அணி வகுப்பு, உடற்குறை. யோ யோகக்காட்சி - தெளிவுக் காட்சி. யோகசம் - சிவாகமத்தொன்று. யோகசமாதி - உயிர் உடலையும் மனத்தையும் விட்டுப் பிரிந்து நிற்கும் யோகநிலை. யோகசாதனம் - யோகப் பயிற்சி. யோகசித்தி - யோகம் செய்து பெற்ற பேறு. யோகதண்டம் - யோகிகள் கைக்கொள்ளும் கோல். யோகதீட்டை - யோக மார்க்கத்தால் குரு சீடனது உடலுட் பிரவேசித்து அவனது உயிரைக் கிரகித்துச் சிவன் திருவடியில் சேர்ப்பிக்கும் தீட்சை. யோகநிட்டை - யோக முறையில் தியானத்தில் ஆழ்ந்திருக்கை. யோகநித்திரை - உறங்குவது போன்றிருந்தும் அறிவுற்றிருக்கும் யோக நிலை. யோகபதம் - காரணச்சொல். யோகபரன் - யோகசித்தி அடைந் தவன். யோகப்பட்டம் - யோகிகள் தியானத் தில் இருக்கும்போது முதுகையும் முழங்காலையும் சேர்த்துக்கட்ட உதவும் கச்சை. யோகம் - சேர்க்கை, கிரகங்களின் நற்சேர்க்கை, அதிட்டம், உயர்ச்சி, காரணப் பெயர், உபாயம், மருந்து, அரைப்பட்டிகை, நற்சுழி, தியான நிட்டை, உணர்ச்சி, யோகப்பயிற்சி, அமிர்த யோகம் முதலிய சுப அசுப காலங்கள். யோகயாமளம் - ஒரு சாத்தேய ஆகமம். யோகர் - முனிவர், யோகியர். யோகரூடி - காரண இடுகுறி. யோகவான் - அதிட்டமுள்ளவன். யோகவிபாகம் - ஒரு சூத்திரத்தில் ஒரு பகுதியைத் தனியே பகுத்து வேறு சூத்திரமாக்கிப் பொருள் கோடலாகிய நூற் புணர்ப்பு. யோகாசாரம் - விஞ்ஞானம் ஒன்றே என்றைக்கும் உள்ளதெனக்கூறும் பௌத்த மதப் பிரிவு. யோகாதிசயம் - சுகநிலை. யோகி - யோகப்பயிற்சியுடையவன், சிவன், ஐயனார், அருகன். யோகினி - மந்திரவாதம் செய்பவள், காளிக்கு ஏவல் செய்யும் மகளிர், தெய்வப் பெண். யோகினிச்சி - வரிச்கூத்து வகை. யோகு - யோகம். யோக்கியதை - தகுதி, பெருமை. யோக்கியம் - ஒழுங்கு. யோசனை - சிந்தனை, கருத்து, உபாயம், 4 குரோசங் கொண்ட நீட்டலளவு, ஓசை. யோசனைகந்தி - பரிமளகந்தி. யோதனம் - போர். யோனி - பிறவி, பெண்குறி, பூர நட்சத்திரம், நீர், ஒரு, நாடகவுறுப்பு. யேனிபேதம் - பிறப்பு வகை. யோனிவாய்ப்படுதல் - பிறத்தல். யௌ யௌவனதசை - வாலிபப் பருவம். யௌவனம் - இளமை, அழகு. யௌவினிகை - 16க்கு மேல் 50 வயதுக்குட்பட்ட பெண். வ வ - பலவின்பால் விகுதிகளுள் ஒன்று. வகச்சல் - மாலைவகை. வகித்தல் - தாங்குதல். வகிர் - கீறு, பிளந்ததுண்டு, வழி. வகிர்தல் - பிளத்தல், கீறுதல். வகு - பிரி (Divide). வகுஞ்சம் - இராத்திரி. வகுணி - ஒலி. வகுதல் - பிளத்தல். வகுதி - வகுப்பு. வகுத்தல் - கூறுபடுத்துதல், பகிர்ந்து கொடுத்தல், நியமித்தல், படைத்தல், பூசுதல், பிரித்தல். வகுத்தான் - ஊழ். வகுத்துக்காட்டல் - முன்தொகுத்துக் கூறியதைப் பின் முறையே விரித்துக் கூறுவது. வகுந்து - வழி, கீறுதல். வகுப்பு - பிரிப்பு, சாதி, தரம் சந்தனம். வகுலி - மீன். வகுளம் - மகிழ மரம். வகுளாபரணர் - நம்மாழ்வார். வகுளிநாதர் - நவநாத சித்தருள் ஒருவர். வகை - கூறுபாடு, இனம், முறை உபாயம், வலிமை, தன்மை, இடம், உறுப்பு, குறுந்தெரு. வகைசெய்தல் - ஏற்பாடு செய்தல். வகைசொல்லுதல் - விபரஞ் சொல்லுதல். வகைதல் - பிரிவுபடுதல், வகிர்தல், ஆராய்தல். வகைப்படுத்துதல் - வகையாகப் பிரித்தல். வகைமாலை - தளிரும்பூவும் கலந்து தொடுத்த மாலை. வகைமோசம் - நம்பிக்கை மோசம். வகையறா - முதலியன (உருது). வகையறிதல் - கூறுபாடறிதல், முறை அறிதல். வகையுளி - அசை முதலுறுப்புக் களைச் சொல் நோக்காது இசை நோக்கி வண்ணமறுக்கை. வக்கணித்தல் - விரித்துறைத்தல். வக்கணை - கடிதம் முதலியவற்றின் முகப்புவாசகம், உபசார வார்த்தை, வருணனை. வக்கரனை - எல்லா இராகங்களும் குழலின் ஆறு துவாரங்களாலேயே உண்டாகும்படி விரல்களால் சமஞ் செய்து சோதிக்கை. வக்கரித்தல் - வக்கிரித்தல். வக்கா - கொக்குவகை, சிப்பிவகை. வக்காணம் - ஆலாபனம். வக்காளித்தல் - வாதஞ்செய்தல். வக்கிரக்கிரீவம் - ஒட்டகம். வக்கிரம் - வளைவு, வட்டம், சேன்று வழி மீளுகை. வக்கிரன் - ஓர் அசுரன், சனி, செவ்வாய். வக்கிராங்கம் - அன்னப் பறவை. வக்கிரித்தல் - கிரகம் மடங்கித் திரும்புதல், ஆலாபனஞ் செய்தல். வக்கு - வேகுகை, தொட்டி, வழிவகை. வக்குதல் - வதக்குதல். வங்கச்சாதர் - ஒருவகைப் பூவேலை செய்த பட்டு. வங்கடம் - வமிசம். வங்கணம் - நட்பு காதல், கத்தரிச் செடி. வங்கநீர் - கடல். வங்சப்பாவை - மருந்துச் சரக்கு வகை. வங்கம் - ஈயம், துத்தநாகம், வங்காளம், கத்தரிச்செடி, அலை, மரக்கலம், ஒருவகை வண்டி. வங்கன் - சண்டாளன். வங்கா - பறவை வகை. வங்காரம் - பொன், உலோகக் கட்டி. வங்காளம் - வங்க நாடு. வங்கான் - ஆபரண வகை. வங்கி - தோளணிவகை, பாங்கு (Bank). வங்கிசம் - வமிசம். வங்கியம் - இசைக்குழல். வங்கு - கல் முதலியவற்றின் அறை, புற்று, குகை, பொந்து. வங்கூழ் - காற்று. வசதி - வீடு, நல்லிடம், மருத நிலத்து ஊர், சௌகரியம். வசநாபி - நஞ்சு வகை. வசந்தகாலம் - இளவேனில். வசந்ததூதம் - குயில், பாதிரி. வசந்தமண்டபம் - பூஞ்சோலை நடுவிலுள்ள மண்டபம். வசந்தமலர் - இலவங்கம். வசந்தமாலை - தென்றலைச் சிறப்பித்துக் கூறும் பிரபந்த வகை. வசந்தம் - இளவேனில், சித்திரை மாதம் நறுமணம், ஓரிராகம், சல்லாபம், இந்திரன் மாளிகை. வசந்தருது - இளவேனில். வசந்தனடித்தல் - கும்மியடித்தல். வசந்தன் - மன்மதன், ஒரு தேவன், தென்றல். வசந்தி - இருவாட்சி. வசந்திகை - தேமல். வசப்படுதல் - அகப்படுதல். வசம் - உட்பகை, இயலுகை, மூலமாய். வசம்பு - பூடு வகை (Orris). வசலை - பசளைக் கொடி. வசவண்ணணர் - தேவர். வசவதேவர் - வீரசைவ மதத்தாபகர் (12 ஆம் நூற்.). வசவபுராணம் - ஒரு வீரசைவ நூல். வசவன் - பசுவின் ஆண் கன்று, வசவ தேவர். வசவாசி - வசம்பு. வசவி - தேவதாசி. வசவிர்த்திகொள்ளுதல் - தன் விருப்பப் படி வேலை வாங்குதல். வசவு - வசை. வசனநடை - உரை நடை. வசனநிர்வாகர் - வார்த்தையில் சதுரர். வசனம் - சொல், வாசகம், ஆகமப் பிரமாணம். வசனாவி - வச்சநாபி. வசனித்தல் - சொல்லுதல். வசனிப்பு - பேச்சு. வசி - பிளவு, கூர்மை, தழும்பு, வாள், சூலம், வசனம், மழை, நீர், குற்றம். வசிகரம் - கவரும் தன்மை, அழகு. வசிகரித்தல் - வசப்படுத்துதல். வசிட்டன் - சத்த இருடிகளுள் ஒருவர். வசிதை - தடுத்தற்கரிய ஆற்றல் உடைமை. வசித்தல் - தங்குதல், பிளத்தல். வசித்துவம் - எல்லாவற்றையும் தன் வசமாக்கும் சித்தி. வசியம் - வசப்படுத்துகை, காதல். வசியர் - வைசியர். வசிவு - வளைவு, பிளத்தலா லுண்டாகும் வடு. வசீகரணம் - வசப்படுத்துகை. வசீகரித்தல் - தன்வசமாக்குதல். வசீரன் - வீரன். வசு - தேவர்வகை, சுவாலை, தீக்கடவுள், பொன், இரத்தினம், பசுக் கன்று, நீர். வசுகம் - எருக்கு. வசுகரி - மேருமலை. வசுக்கனாள் - அவிட்டம். வசுதேவன் - கண்ணபிரான் பிதா. வசுதை, வசுந்தரை - பூமி. வசுநாள் - அவிட்டம். வசுமதி - சாதிபத்திரி. வசூரி - வைசூரி. வசூல் - சேகரிக்கும் வரி முதலியன (உருது). வசை - பழிப்பு, குற்றம், மலட்டுப் பசு, நிணம். வசைக்கடம் - செம்பொருள் அங்கதம் பற்றிக் சலிப்பாவால் அமைந்த ஒரு பழைய நூல். வசைக்கூத்து - நகைச்சுவை பற்றி வரும் கூத்து. வசைதல் - வளைதல், வசை கூறல். வசையிநர் - வசை கூறுவோர். வசைவு - வசை. வச்சத்தொள்ளாயிரம் - வச்சதே சத்தரசனைப் பற்றி 900 வெண்பாக் களாற் பாடிய ஒரு பழைய நூல். வச்சநாபி - நச்சுப்பூடு வகை. வச்சயம் - கலைமான். வச்சிரக்கோட்டம் - இந்திரனது வச்சிரத் தண்டம் நாட்டியக் கோயில். வச்சிரகாயம் - மருந்து வகை, திடசரீரம். வச்சிரதந்தி - ஒருவகைப் புழு. வச்சிரதரன் - இந்திரன். வச்சிரத்துரு - சதுரக்களி. வச்சிரப்பாணி - இந்திரன். வச்சிரபாதம் - இடியேறு. வச்சிரம் - இருதலைச் சூலமாய் நடுவிற் பிடியுள்ள ஆயுதம், உறுதி, வைர இனத்தினம், மரத்தின் காழ், சதுரக் கள்ளி, ஒரு வகைப்பசை, ஒரு நாடு. வச்சிரயாப்பு - மரங்களை வச்சிரப் பசையினால் சேர்க்கை, வச்சசிரா யுதத்தால் எழுதிய எழுத்து. வச்சிரரேகை - பெண் பெறுவதைக் குறிப்பதாகக் கருதப்படும் உள் ளங்கை இரேகை வகை. வச்சிரலேபம் - ஒன்றாக இணைக்கும் பசை வகை. வச்சிரவண்ணன் - குபேரன். வச்சிரவல்லி - பிரண்டை. வச்சிரவியூகம் - படை வகுப்பு வகை. வச்சிரவிருக்கம் - சதுரக்கள்ளி வகை. வச்சிரன் - இந்திரன். வச்சிராங்கம் - சதுரக்கள்ளி. வச்சிராங்கி - உறுதியான கவசம். வச்சை - உலோபம், விருப்பம், பழிப்பு. வச்சைமாக்கள் - உலோபிகள். வச்சையன் - கலைமான். வஞ்சகம் - கபடம், ஏமாற்றம். வஞ்சணந்திமாலை - வஞ்சணந்தி பேரால் குணவீர பண்டிதர் வெண்பாவிலியற்றிய பாட்டியல். வஞ்சணம் - உருக்கமான அன்பு. வஞ்சம் - கபடம், கொடுமை, பொய், வாள், பழிக்குப்பழி, சிறுமை. வஞ்சனம் - வஞ்சகம். வஞ்சனி - இடாகினி, மாயை என்னும் தேவதை, வஞ்சகி. வஞ்சனை - வஞ்சகம், பொய், தெய்வப் பெண், மாயை. வஞ்சி - வஞ்சிக்கொடி, பெண், காருவூர், கொடுங்கோளுர், அரசன் மண்ண வேட்டுப் பகை நாட்டைக் கொள்ளச் செல்வதைக் கூறும் புறத்துறை, குடை, வஞ்சிப்பா, மருதயாழ்த் திறத்தொன்று. வஞ்சிக்களம் - கரூர், கொடுங் கோளுர். வஞ்சித்தல் - ஏமாற்றுதல். வஞ்சித்தாழிசை - இருசீரடி நான்காய் ஒரு பொருள் மேல் மூன்று செய்யு ளடுக்கி வரும் வஞ்சிப்பாவினம். வஞ்சித்திணை - மண் கொள்ளப் பகைவர் மேற் செல்வதைக் கூறும் புறத்துறை. வஞ்சித்துறை - இரு சீரடி நான்காம் ஒரு பொருண்மேல் ஒரு செய்யுள் வருவதாகிய வஞ்சிப்பா, அரசன் வஞ்சிமலர் சூடிப் பகை அரசர் நாட்டைக் கொள்ளுமாறு செல்லக் கருதியதைக் கூறும் புறத்துறை. வஞ்சித்தூக்கு - பரிபாடலில் வஞ்சி அடிகளால் வரும் பகுதி. வஞ்சிநாடு - சேர நாடு. வஞ்சிநெடும்பாட்டு - பட்டினப் பாலை. வஞ்சிப்பா - நால்வகைப் பாக்களில் ஒன்று. வஞ்சிப்பாட்டு - ஒரு பழைய நாடக நூல். வஞ்சியரவம் - வீர முரசுடனே யானை முழங்கப் பகைவர் மீது சேனை கோபித்துச் செல்வதைக் கூறும் புறத்துறை. வஞ்சியான் - சேர நாட்டான். வஞ்சியுரிச்சீர் - தேமாங்கனி புளிமாங்கனி கூவிளங்கனி கரு விளங்கனி என்று நான்கு வகைப் பட்ட நிரையசை யீற்றவான மூவகைச்சீர். வஞ்சிரம் - மீன் வகை. வஞ்சிவிருத்தம் - முச்சீரடி நான் காய் வரும் வஞ்சிப் பாவினம். வஞ்சிவேந்தன் - பகைவர் மேல் படை எடுத்துச் சென்ற அரசன், சேரன். வஞ்சினக்காஞ்சி - அரசன் தன் பகைவரைத் தாழப் பண்ண வேண்டி இன்னது செய்யலாற் றேனாயின் இன்னவாறாகக் கடவேன் என்று சபதம் செய் தலைக் கூறும் புறத்துறை. வஞ்சினம் - சபதம், சூளுறவு. வஞ்சு - வஞ்சகம். வஞ்சுளம் - அசோகு, வஞ்சிக்கொடி. வஞ்சுளன் - கரிக்குருவி. வஞ்சை - காரூர், கொடுங்கோளுர். வடகம் - மேலாடை, துகில் வகை, கறிச்சமான அரைத்து உலாத்திய உருண்டை. வடகயிலாயம் - பேரூருக்கு அருகிலுள்ள சிவன் கோயில். வடகலை - வடமொழி, ஒரு வைணவப் பிரிவினர். வடகாற்று - வாடை. வடகிரி - மேருமலை. வடகீழ்த்திசைப்பாலன் - ஈசானன். வடகோடு - பிறையின் வடக்கு முனை. வடக்கயிறு - பெருங்கயிறு. வடக்கிருத்தல் - வடக்கு நோக்கி உண்ணா விரதமிருந்து உயிர் விடுதல். வடக்கு நோக்கி - காந்தவூசி. வடக்குவீதிப்பிள்ளை - நம் பிள்ளை உபந்நிய சித்ததைத் திருவாய் மொழிக்கு ஈடு முப்பத் தாறாயிரப்படி என்ற உரையாக எழுதின வைணவாசிரியர். வடசொல் - வடமொழி. வடதமிழ் - கிரந்தமொழி. வடதளம் - ஆலிலை. வடதிசைத்தலைவன் - குபேரன். வடந்தை - வடகாற்று, வடக்கி லுள்ளது. வடந்தைத்தீ - ஊழித் தீ. வடபல்லி - புல்லகமென்னும் ஆபர ணம். வடபால்விதேகம், வடபாலி ரேவதம், வடபாற் பரதம் - நவ கண்டத்துள் ஒன்று. வடபுலம் - உத்தரகுரு, வடதேசம். வடபெருங்கல் - வடமலை. வடமகீரதம் - வடமலை. வடமதுரை - வட இந்தியாவிலுள்ள மதுராபுரி. வடமலை - மகாமேரு, இமய மலை, திருப்பதி மலை. வடமலையப்பப்பிள்ளையன் - நாயக்க அரசரின் பிரதிநிதியாய் திருநெல் வேலிப் பகுதியை ஆண்டவரும் மச்ச புராணம் செய்த வருமான பிரபி 1706. வடமலையான் - திருப்பதித் திருமால். வடமன் - வடநாட்டான். வடமீன் - அருந்ததி. வடமேற்றிசைக்குறி - கழுதை. வடமொழி - சமக்கிருதம். வடமொழியாட்டி - பார்ப்பனி. வடமொழியாளன் - பார்ப்பான். வடம் - கயிறு, ஆலிலை, ஆலமரம். வடலி - இளம்பனை. வடவரை - வடமலை, மந்தர மலை. வடவர் - வடநாட்டார். வடவளம் - வடநாட்டில் விளைந்த பண்டம். வடவனம் - மர வகை. வடவனலம், வடவனல், வடவா முகம் - ஊழித் தீ. வடவாமுகாக்கினி - பெண் குதிரை முகத்தின் வடிவோடு கடலுள் தங்கியிருந்து உகமுடிவில் மேலே எழுந்து உலகத்தை அழிக்கும் தீ. வடவானலம் - ஊழித் தீ. வடவு - மெலிவு. வடவேங்கடம் - திருப்பதி மலை. வடவை - பெண் குதிரை, குதிரைச் சாதிப் பெண், ஊழித்தீ, எருமை, பெண் யானை. வடாது - வடக்கிலுள்ளது, வடக்கு. வடி - தேன், கள், நீளுகை, வடித் தெடுக்கை, கூர்மை, வாரி முடிக்கை, மாம்பிஞ்சு, மாம்பிஞ்சின் பிளவு, காற்று, உருவம். வடிகட்டுதல் - வடித்து எடுத்தல். வடிகயிறு - குதிரையின் வாய்க் கயிறு. வடிகாது - தொங்கும் துளைச்செவி. வடிகால் - நீரை வடியவிடும் கால்வாய். வடிசதுக்கம் - தைலம் முதலியன வடிக்குமிடம். வடிதமிழ் - தெளிந்த தமிழ். வடிதயிர் - கட்டித்தயிர். வடிதல் - ஒழுகுதல், திருந்துதல், தெளிதல், அழகு பெறுதல், நீளுதல். வடிதாள் - வடிகட்டும் தாள் (Filter Paper). வடித்தல் - வடியச் செய்தல், வடிகட்டு தல், திருத்தமாகச் செய்தல், வசமாக்கு தல், பழக்குதல், பயிலுதல், கூராக்கு தல், வாரி முடித்தல், தகடாக்குதல், யாழ் நரம்பை உருவுதல், அலங் கரித்தல், ஆராய்தல், கிள்ளி எடுத்தல். வடிநிலம் - ஆற்றின் கழிமுகம். வடிப்பம் - செப்பம், அழகு. வடிப்போர் - யானை முதலியன பயிற்று வோர். வடிமணி - தெளிந்த ஓசையுள்ள மணி. வடிம்பு - விளிம்பு, பழி, காலின் விளிம்பு. வடிவம் - உருவம், நிறம். வடிவிலாக்கூற்று - அசரீரி வாக்கு. வடிவு - உருவம், உடல், அழகு, நல் நிறம். வடிவெடுத்து - ஒலியின் குறியாக எழுதப்படும் எழுத்து. வடிவேல் - கூரியவேல். வடு - மாம்பிஞ்சு, தழும்பு, குற்றம், பழி, கேடு, கருமணல், செம்பு, வண்டு. வடுகக்கடவுள் - வயிரவக் கடவுள். வடுகநாத தேசிகர் - திருமுல்லைப் புராணஞ் செய்தவர் (17ஆம் நூற்.). வடுகர் - தெலுங்கர். வடுகவாளி - காதணி வகை. வடுகன்றாய், வடுகி - தாளி. வடுகு - தமிழ் நாட்டின் எல்லையி லுள்ள நாடு, தெலுங்கு, மருத யாழ்த்திறத்தொன்று, நாட்டிய வகை, பூணூல் தரிக்கை. வடுக்கொள்ளுதல் - தழும்புபடுதல். வடுத்தல் - வெளிப்படுத்துதல், பிஞ்சு விடுதல். வடை - பாணிகார வகை. வட்கர் - குற்றம், இடைமுறிவு, பகைவர். வட்கல் - வெட்கம், கூச்சம். வட்கார் - பகைவர். வட்கு - நாணம், வெட்கம், கேடு. வட்குதல் - வெட்குதல், கெடுதல், தாழ்தல், ஒளி மழுங்குதல், வளம் பெறுதல். வட்டகை - பிரதேசம், வட்டம், சிறு கிண்ணம், வட்டில். வட்டணம் - பரிசை. வட்டணிப்பு - வட்டமாக இருக்கை. வட்டணை - முகமன், வட்டம், வட்டமான செலவு, தாளக்கருவி, தாளம் போடுகை, கேடகம், வட்ட மான அணை. வட்டத்தோல் - கேடகம். வட்டப்பவழத்திரட்டு - ஆஸ்திரேலியக் கரைகளிற் காணப் படும் பவழப் பாறைத் திட்டுகள் (Atoll). வட்டப்பாலை - இசை வகை. வட்டப்பாறை - சந்தனக்கல். வட்டப்பூ - கால் விரலணி வகை. வட்டம் - மண்டலம், குயவன், திரிகை, சுற்றிடம், அப்பவகை, ஆலவட்டம், தராசுத் தட்டு, கைம்மணி, குளம், நீர்ச்சால், நீரெறி கருவி, வளைவு, வளைதடி, ஆடை, எல்லை, நாணயமாற்றின் வட்டம், இலாபம். வட்டன் - உருண்டு திரண்டவன். வட்டா - வாயகன்ற கலம். வட்டாடுதல் - சூதாடுதல். வட்டாணி - சாமர்த்தியம் வட்டாரம் - வட்டம். வட்டி - கடகப்பெட்டி, கூடை, சோகி, வட்டில், ஒரு முகத்தலளவை, பணத்தின் உபயோகத்துக்காகப் பெறும் ஊதியம், இலாபம். வட்டிகை - சித்திரமெழுதும் கோல், சித்திரம், ஒருவகை விருது, ஓட வகை, கலவைச் சாந்து. வட்டிகைப்பலகை - சித்திர மெழுதும் பலகை. வட்டிகைப்பாவை - சித்திரப்பாவை. வட்டித்தல் - சுழலுதல், சூளுறவு செய்தல், தாளவொற்றுத்தல், தோள் தட்டுதல், சுழற்றுதல், உருட்டுதல், பரிமாறுதல், வளைத்தல். வட்டில் - கிண்ணம், ஆற்றலின் அளவு, அம்புக்கூடு, ஒருவகை விருது. வட்டினி - பந்தயப் பொருள். வட்டு - சூதாடு கருவி, திரட்சி, நீரெறி கருவி வகை. வட்டுடை - முழங்காலளவு உடுக் கும் உடை, ஆடை. வட்டுப்போர் - சூதாட்டம். வட்டுவம் - மருந்துப்பை, வெற் றிலைப் பை. வட்டெழுத்து - பழைய தமிழ் எழுத்து, கோலெழுத்து. வட்டை - வழி, சக்கரத்தின் மேல் வளை மரம், தேர். வணக்கம் - வளைகை, வழிபாடு. வணக்கு - வணக்கம். வணக்குதல் - பணியச் செய்தல். வணங்காமுடியோன் - பிறர்க்குக் கீழ்ப்படியாத அரசன், துரியோ தனன். வணங்குதல் - வளைதல், வழி படுதல், சூழ்ந்து கொள்ளுதல். வணர்தல் - வளைதல், மயிர் சுருண்டிருத்தல். வணிகசூரியர் - வணிகரில் முதன்மை பெற்றோர். வணிகரெண்குணம் - தனிமையாற் றல் முனிவிலனாதல் இடனறிந் தொழுகல் பொழுதொடு புணர்தல் உறுவது தெரிதல் இறுவதஞ்சாமை ஈட்டல் பகுத்தல் என்னும் எட்டுக் குணங்கள். வணிகர் தொழில் - ஓதல் வேட்டல் ஈதல் உழவு நிரையோம்பல் வாணிகம் என்னும் ஆறு தொழில். வணிகன் - வியாபாரி. வணிகு - வணிகன். வணிசை - சோதிடக்கரணம் 11 இல் ஒன்று. வணிதம் - பிரதேசம். வண்களமர் - வேளாளர். வண்கை - கொடைக்கை. வண்சிறை - மதில். வண்டப்புரட்டன் - பெருமோசக் காரன். வண்டயம் - கழல் (தண்டை). வண்டர் - அரசனுக்கு நாழிகை அறிவிக்கும் கடிகையாளர். வண்டலவர் - விளையாட்டு மகளிர். வண்டலாயம் - விளையாடும் தோழியர் கூட்டம். வண்டலிழைத்தல் - வண்டலால் சிற்றில் இழைத்து விளையாடுதல். வண்டல் - மகளிர் விளையாட்டு வகை மகளிர் கூட்டம், விளை யாட்டாக இழைத்த சிற்றில் நீரொ திக்கி விட்ட மண் (Alluvium). வண்டற்பாவை - வண்டலாற் செய்த விளையாட்டுப் பாவை. வண்டனான் - போதனன். வண்டன் - திண்ணியன், தீயோன். வண்டாலம் - குந்தாலி. வண்டாள்குருகு - கொக்கு வகை. வண்டானம் - நாரை வகை. வண்டி - வண்டில், வயிறு. வண்டில் - வண்டி. வண்டு - அறுகாற் சிறு பறவை, அம்பு, குற்றம், கைவளை, சங்கு நூல், பூசம், அபிநய வகை. வண்டுகட்டுதல் - பானையின் வாயைச் சீலையால் மூடிக்கட்டுதல். வண்டுனாமலர்மரம் - சண்பகம், வேங்கை மரம். வண்டுநாணான் - காமதேவன். வண்டெச்சில் - தேன். வண்டோதரி - இராவணனுடைய மனைவி. வண்ணகம் - வருணித்துப் புகழ்கை. வண்ணக்கம்மர் - வர்ணவேலை செய்வோர். வண்ணக்களஞ்சியப்புலவர் - முகைதின் புராணம் செய்தவர் (18ம் நூ.). வண்ணக்களங்சியம் - வண்ணக் கவி பாடுவதில் சமர்த்தன். வண்ணக்கன் - நாணய சோதகன். வண்ணடை - வண்ணான். வண்ணத்திநாரை - நாரை வகை (Indian white necked stork). வண்ணத்துப்பூச்சி - வண்ணாத்திப் பூச்சி. வண்ணநீர் - அரக்கு நீர் (சிவந்த நீர்). வண்ணம் - நிறம், அழகு, குணம், சிறப்பு, வடிவு, சாதி, இனம், பாவின் கண் நிகழும் ஓசை, விகற்பம், இசைப் பாட்டு. வண்ணமகள் - கோலம், செய்பவள். வண்ணவமுதம் - பருப்புச் சோறு. வண்ணவுமம் - நிறம் பற்றிக் கூறும் உவமை. வண்ணவொத்தாழிசை - கலிப்பா வகை. வண்ணாத்தான் - வண்ணான். வண்ணாத்திப்பூச்சி - இறக்கை முளைத்த மயிர்ப்புழு. வண்ணான் - ஆடை வெளுக்கும் சாதியான். வண்ணான்துறை - வண்ணான் ஆடை வெளுக்கும் நீர்த்துறை. வண்ணிகை - மருந்துச் சரக்கு வகை. வண்ணித்தல் - வருணித்தல். வண்புகழ் - கொடையால் வரும் புகழ். வண்மை - ஈகை, குணம், அழகு, வளப்பம், புகழ். வதக்கம் - வாடுகை. வதக்குதல் - வாட்டுதல், வருத்துதல். வதங்கல் - வாடியது. வதந்தி - உலகப்பேச்சு. வதம் - கொலை, விரதம். வதரி - இலந்தை. வதறுதல் - வாயாடுதல், திட்டுதல். வதனம் - முகம். வதி - தங்குமிடம், சேறு, வழி, கால்வாய். வதிட்டன் - வசிட்டன். வதிதல் - தங்குதல், துயிலுதல். வதிரன் - செவிடன். வது - மணமகள். வதுவர் - யானைப்பாகர். வதுவை - மணமகள், திருமணம், மணமாலை, வாசனை. வதுவைக்கலியாணம் - முறைமை யான கலியாணம். வதுவைசூட்டணி - மணமாலை. வ்துவைத்திண்ணை - கலியாண வேதிகை. வதுவைநாற்றம் - புதுநறுமணம். வதுவைமுளை - பாலிகை. வதூவரர் - மணமகளும் மணமகனும். வதை - கொலை, வேதனை, தேன் கூடு. வத்தம் - சோறு, நெல். வத்தவன் - வச்ச நாட்டரசன். வத்தனை - ஆக்கம், சீவனம். வத்தா - சொல்பவன். வத்தாளங்கிழங்கு - சர்க்கரை வள்ளிக் கிழங்கு. வத்தி - ஊதுவர்த்தி, திரி. வத்தித்தல் - விருத்தியடைதல், உள்ளதாதல். வத்தித்திறன் - மெழுகுதிரி வெளிச்ச அளவை (Candle power). வத்திரபங்கி - சிவன் ஐம்முகங் களையும் பூசிக்கை. வத்திரம் - முகம், ஆடை. வத்து - வஸ்து, பொருள். வத்துநிர்த்தேசம் - பொருளியல்பு உரைக்கை. வத்துபரிச்சேதம் - ஒன்று இன்ன பொருளாயிருக்கும் இராது என்று பொருளினால் அளவிடுகை. வந்தரர் - ஒருவகைத் தேவர். வந்தனம் - வணக்கம். வந்தனை - வணக்கம். வந்தி - வணக்கம், மங்கல பாடகன், அரசர் புகழ்கூறும் சூதன், மலடி. வந்திகை - கையில் தோளின்கீழ் அணியப்படும் ஆபரணம், அழகுத் தேமல். வந்தித்தல் - வணங்குதல். வந்தித்துநிற்போர் - பாணர். வந்திபற்றுதல் - வலிந்து அபரித் தல். வந்து - காற்று. வந்தை - மலடி. வபனம் - வயிற்றில் நாபியடியி லிருக்கும் நிணம். வப்பிரம் - சுற்றுமதில், அகழ் வயல். வமனி - அட்டை, பருத்திச்செடி. வமிசம் - குலம், மூங்கில். வமிசாவளி - வமிச பரம்பரையைத் தெரிவிக்கும் அட்டவணை. வமிசவிருத்தி - இனப்பெருக்கம். வம்பக்கோட்டி - பயனில் சொற் களைச் சொல்லும் கூட்டம். வம்பப்பரத்தர் - புதிய நுகர்ச்சியை விரும்பும் காமுகர். வம்பப்பரத்தை - கழி காமத்தை யுடைய கணிக்கை. வம்பமாக்கள் - புதியோர். வம்பமாரி - காலமல்லாத காலத்தில் பெய்யும் மழை. வம்பலன் - புதியோன், வழிப்போக்கன், அயலான். வம்பல் - திசை. வம்பளத்தல் - அவதூறு பேசுதல். வம்பன் - பயனற்றவன், சோர புதல்வன். வம்பு - நிலையின்மை, பயனில்லாமை, பழமொழி, பொய், வஞ்சனை, வாசனை, அரைக்கச்சு, யானைக் கச்சு, முலைக் கச்சு, கையுறை, மிடா. வய - மிகுதி, வலி. வயக்கம், வயக்க - ஒளி. வயங்கல் - கண்ணாடி. வயங்குதல் - ஒளிசெய்தல், தெளிதல். வயசு - பிராயம். வயஞானம் - உண்மை உணர்வு. வயது - வயசு. வயத்தம்பம் - யௌவனநிலை மாறாமல் நிறுத்தும் வித்தை. வயந்தகம் - மகளிர் தலைக் கோலத்தில் தொங்கலுறுப்பு. வயந்தம் - வசந்தகாலம், வசந்த விழா. வயந்தமன்னவன் - மன்மதன். வயந்தமா - புலி, சிங்கம், குதிரை, யானை. வயந்தம் - வசந்தருது, இலைதுளிர் காலம், தென்றல். வயப்படுதல் - வசமாதல். வயப்புலி, வயப்போத்து - சிங்கம். வயமா, வயமான் - சிங்கம், ஆவணி மாதம், புலி, யானை, குதிரை. வயமீன் - உரோகிணி. வயம் - வெற்றி, வலிமை, பூமி, வேட்கை, பறவை, வசம், மூலம், வழியாக, நீர், இரும்பு, ஆடு, கிராம்பு. வயலை - பாலைக்கொடி, வெளி. வயல் - கழனி, மருத நிலம், வெளி. வயல்சூழ்சோலை - இளமரக்கா. வயவன் - வீரன், திண்ணியன், படைத் தலைவன், கணவன், கரிக்குருவி. வயவு - வலிமை விருப்பம், கருப்ப காலத்து உண்டாகும் மயக்கம். வயவை - வழி. வயனம் - வேதம், பழமொழி, வசனம். வயனர் - வடிவினர். வயன் - நிலைமை. வயா, வயாவு - வேட்கைப் பெருக் கம், கருப்ப காலத்துண்டாகும் சோர்வு, கருப்பம், வருத்தம். வயாவுதல் - விரும்புதல். வயாவுயிர்த்தல் - கருவினுதல், நோய் தீருதல். வயானம் - பறவை, சுடுகாடு. வயான் - கரிக்குருவி. வயிச்சிரவணன் - குபேரன். வயிடூரியம் - மாணிக்க வகை. வயிணவம் - திருமால் மதம். வயிணவி - சத்தமாதருள் ஒருத்தி. வயிதேவி - சீதை. வயிந்தவம் - மாயை. வயிரச்சங்கிலி - சரப்பாணி என்னும் கழுத்துச் சங்கிலி. வயிரமுத்து - ஆணிமுத்து. வயிரம் - வச்சிராயுதம், நவமணி களுள் ஒன்று, மரவயிரம், திண்மை, வலிமை, கூர்மை, கிம்புரி, தண்டா யுதம், திருவோணம், கோபம், பகை, மயிர்ப் போர்வை. வயிரவம் - ஓர் அகப்புறச் சமயம். வயிரவராதி - நந்தியாவட்டம். வயிரவன் - சிவமூர்த்தங்களுள் ஒன்று. வயிரவன் வாகனம் - நாய். வயிரவிழா - அறுபதாண்டு நிறைவுக் கொண்டாட்டம். வயிரவூசி - கண்ணாடி வெட்டும் ஊசி. வயிராகம் - மன உறுதி. வயிராகி - வடநாட்டுத் துறவி. வயிரி - சத்துரு, வன்னெஞ் சுடையவன். வயிரியம் - மயிர்ச்சீலை. வயிரியர் - கூத்தர். வயிரோசனன் - மாவலி. வயிர் - கூர்மை, இனம், மூங்கில், ஊது கொம்பு. வயிறழிதல் - கருச்சிதைதல். வயிறு - உதரம், நடுவிடம், உள்ளிடம், மணம். வயிறுகழுவுதல் - பாடுபட்டு உணவு தேடி வாழ்தல். வயிறுதாரி - பெருவயிறன். வயிறுவாய்த்தல் - கருப்பந் தங் குதல், மகப்பெறுதல். வயிறெரிதல் - மனம் வருந்துதல், பொறாமைப்படுதல். வயிற்றுக்கடுப்பு - சீதபேதி. வயிற்றுத் தீ - பெரும்பசி எடுக்கும் வியாதி. வயிற்றுநோவு - பிரசவ வேதனை. வயிற்றுப்பிழைப்பு - சீவனம். வயினதேயன், வயினன் - கருடன். வயினாசயம் - வயிறு. வயின் - இடம், பக்கம் வீடு, வயிறு, பக்குவம், எல்லை ஓரசைச் சொல். வயோதிகம், வயோதிபம் - முதுமை. வர - அசைச்சொல், வரை. வரகதி - மேலானகதி. வரகவி - அருட்கவி. வரகாத்திரம் - தலை. வரகு - தானிய வகை. வரகுணன் - மாணிக்கவாசகர் காலத்துப் பாண்டிய அரசன். வரங்கிடத்தல் - வரம் பெறுமாறு கோயிலில் படுத்திருத்தல். வரடம் - அன்னம். வரணம் - மறைக்கை, மதில். வரணி - மாவிலங்கை. வரண்டகம், வரண்டகை - நாகணவாய்ப்புள். வரதட்சிணை - மணமகனுக்குப் பெண் வீட்டார் கொடுக்கும் பொருள். வரதநூல் - சகுண சாத்திரம். வரதபாண்டியர் - யாழ்ப்பாணப் புலவர்களிலொருவர் (18ம் நூற்.). வரதம் - வரமளிப்பது. வரதராசர் - கச்சித்திருமால், (16 ஆம் நூற். இல் வாழ்ந்து தமிழ்ப் பாகவதம் பாடியவர். வரதராசையங்கார் - பாகவத்தைத் தமிழில் பாடியவர் (16ம் நூற்.). வரதன் - வரமளிப்பவன். வரதுங்காமன் - பிமோத்த காண்டம் செய்த பாண்டியன் (16ம் நூற்.). வரதை - பார்வதி. வரத்து - வருகை, எல்லை. வரநதி - கங்கை. வரந்தருவார் - வில்லித்தூராரின் புதல்வர் (15ம் நூற்.). வரப்பிரசாதம் - அருளாகிய கொடை. வரப்பு - வயல், வரம்பு, எல்லை. வரப்புள் - வயல். வரம் - கடவுளிடத்திற் பெறும் பேறு, வேண்டுகோள். வரம்பிலாமுடியரசு - (Absolute monar-chy). வரம்பு - எல்லை, அணை. வரருசி - பாணினி சூத்திரத்துக்கு உரை செய்த புனிவர் (காத்தியாயனர் கி.மு. 3ஆம் நூற்.). வரர் - சிறத்தோர். வரலாறு - சரித்திரம். வரலாற்றுமை முறைமை - பரம்பரை யாகக் கையாளப்படும் அடிப்பட்ட வழக்கு. வரலாற்றுவஞ்சி - போர்க்களத்துச் செல்லும் படை எழுச்சியைக் கூறும் பிரபந்தம். வரவு - வருகை, வருவாய், வரலாறு, வழி, வணங்குகை. வரவெதிர்தல் - வருகையை எதிர் பார்த்திருத்தல். வரவேற்பு - எதிர்கொண்டு உப சரிக்கை. வரன் - சிறந்தவன், கடவுள், தமையன், மணமகன், கணவன். வரன்முறை - வந்த முறைமை, பெரியோர்க்குச் செய்யுமுபசாரம். வரன்றுதல் - வாருதல். வராககர்ணி - அமுக்கிரா. வராககற்பம் - திருமால் பன்றி அவதாரமெடுத்த காலம். வராகபுடம் - 20 அல்லது 50 எருவிட்டுப் போடப்படும் புடம். வராகமிகிரர் - கணித நூல் வல்லவரும் வான சாத்திர நூல்கள் செய்த வருமான ஓர் கிரேக்க ஆசிரியர் கி.பி. 505 - 587. வராகம் - பன்றி, ஒரு கணித நூல், திருமால் அவதாரத்தொன்று. வராகனெடை - 3½ ரூபா மதிப்புள்ள ஒரு வகைப் பொன் நாணயம். வராகி - சத்தமாதரிலொருவர். வராங்கம் - தலை, இலவங்கம். வராங்கனை - சிறந்த பெண், கூந்தற் பனை. வராங்கி - அழகுள்ளவள். வராசான் - கருப்பூர வகை. வராடகம் - தாமரைக்காய். வராடி - சோகி, பாலை யாழ்த் திறத் தொன்று. வராட்டி - வறட்டி. வராண்டம் - வராடகம். வராலகம் - இலவங்கம். வரால் - மீன்வகை. வராளி - ஓர் இராகம். வராற்பகடு - ஆண்வரால். வராற்போத்து - இளவரால். வரி - கோடு, இரேகை, நிரை, புள்ளி, எழுத்து, வண்டு, கட்டு, பலதெரு கூடுமிடம், இசைப்பாட்டு, வரிக் கூத்து, கடைச்சங்க நூல்களு ளொன்று, நீளம், குடியிறை, அழகு, வடிவு, நெல். வரிக்கடை - வண்டு. வரிக்குதிரை - வரியுள்ள ஒரு இனக் குதிரை. வரிக்கோலம் - தொய்யில் எழுதிய அழகு. வரிசை - ஒழுங்கு, நிரை, அரசர், முதலியோர் பெறும் சிறப்பு, இராச சின்னம், மரியாதை, தகுதி பெண் ணுக்குக் கொடுக்கும் நன்கொடை. வரிசைமகளிர், வரிசைமாதர் - விறலியர். வரிசையாளர் - நிலத்தைப் பயிரிடும் குடிகள். வரிச்சந்தி - பல தெருக்கள் கூடு மிடம். வரிச்சு - கட்டு வரிச்சல். வரிட்டம் - மிகச் சிறந்தது. வரிதகம் - 32 அடியால் வரும் இசைப் பாட்டு. வரிதல் - எழுதுதல், மூடுதல், கட்டுதல். வரித்தல் - எழுதுதல், கட்டுதல், அழகு செய்தல், ஓடுதல், தெரிந்து கொள்ளுதல், நியமித்தல். வரிநிழல் - நெருங்காத நிழல். வரிப்படம் - விளக்கப்படம் (Diagram). வரிப்புறம் - அணில். வரிப்பொத்தகம் - அரசிறைக் கணக்குப் புத்தகம். வரிமணல் - அறலினையுடைய மணல். வரிமணி - பரவ மகளிர் அணியும் கழுத்தணி வகை. வரியான் - சீவன் முத்தன். வரியிடுதல் - வரிப் பொத்தகத்தில் பதியும் பதிவு. வரிவடிவு - ஒலி எழுத்தின் அறிகுறி யான கீற்று வடிவு. வரிவயம் - புலி. வரிவரி - தண்ணீர் விட்டான். வருகக்கோவை - மொழி முதலில் வரும் எழுத்துக்களை அகர முதலாம் எழுத்துமுறையே அமைத்துக் கலித் துறைப் பாட்டாக இயற்றும் பிரபந்த வகை. வருக்கமூலம் - வருக்கத் தொகைக்கு மூலமாயுள்ள எண். வருக்கமோனை - பாடலடிகளில் முதலெழுத்துக்கள் வருக்க எழுத் துக்களால் அமையும் மோனை. வருக்கம் - இனம், தொகுதி, சமமாகிய ஈரெண்ணின் பெருக்கம். வருக்கவெழுத்து - உயிர் அல்லது ஒரு மெய்யின் வருக்கத்தைச் சேர்ந்த எழுத்து. வருக்கை - பலா. வருங்காலம் - எதிர்காலம். வருடப்பாதி - அயனம். வருடம் - ஆண்டு. வருடி (ஷி) த்தல் - பொழிதல். வருடுதல் - தடவுதல். வருடை - மலையாடு, ஆடு, மேடராசி, சரபம், பொறாமை. வருடைமான் - மலையாடு. வருட்டம் - முட்டை. வருட்டுதல் - தேற்றுதல், வசீகரித்தல். வருணசரம் - செம்மணிகளால் செய்த கழுத்தணி. வருணதிரை - மேற்கு. வருணம் - குலம், நீர், நிறம். வருணயர்பாட்டியல் - பாட்டியல் நூல்களுள் ஒன்று. வருணனாள் - சதயம். வருணனை - புனைவுரை. வருணன் - மேற்றிசைப் பாலகன், நெய்தல் நிலத் தெய்வம். வருணாச்சிரமதருமம் - வருணங் களுக்கு ஏற்ற ஒழுக்கம். வருணாலயம் - கடல். வருணி - பிரமசாரி. வருணித்தல் - புனைந்துரைத்தல். வருதி - உத்தரவு. வருத்தம் - துன்பம், முயற்சி, களைப்பு, நோய். வருத்தமானம் - நிகழ்காலம், அபி நய வகை. வருத்தலை - கூத்தில் திரும்புதல் முதலிய செயல். வருத்தித்தல் - உண்டாக்கல், ஓவிய மெழுதுதல். வருத்து - வருத்தம். வருத்துதல் - வருத்தஞ் செய்தல், வருவித்தல். வருத்துலம் - உருண்டை வடிவுள்ள இரத்தினம். வருநர் - வருபவர். வருநாள் - எதிர்காலம். வருந்துதல் - துன்புறுதல், முயலுதல். வருபிறப்பு - மறுபிறப்பு. வருபுனல் - ஆறு, பெருகி வரும் நீர். வருபொருள் - எதிர்கால நிகழ்ச்சி, வருவதன் கருத்து. வரும்படி - வருமானம். வருமன் - சத்திரியர் தரிக்கும் பட்டம். வருமாறு - வரும்விதம். வருமை - மறுபிறப்பு. வருவாய் - வரும்படி, இடம். வரூதம் - வசிக்குமிடம். வரூதினி - படை. வரை - கோடு, இரேகை, மூங்கில், மலைச்சிகரம், கல், நீர்க்கரை, எல்லை, அளவு, காலம், இடம். வரைச்சிலம்பு - மலைச்சாரல். வரைச்சிறகரிந்தோன் - இந்திரன். வரைதல் - எழுதுதல், நிர்ணயித்தல், அளவுபடுத்துதல், அடக்குதல், விலக்குதல், கைவிடுதல், தாரம் தம்மியப் படுத்துதல், தனக்குரிய தாக்குதல், மணஞ்செய்தல். வரைத்தாள் - மலை அடி. வரைநேமி - சக்கரவாளம். வரைபாய்தல் - மலை உச்சியி லிருந்து குதித்தல். வரைபொருட்பிரிதல் - வரைவிடத் துப் பொருள்வயிற் பிரிதலைக் கூறும் அகப்பொருட்பகுதி. வரைப்படம் - கோடுகளால் காட்டும் படம் (Graph). வரைப்பு - எல்லை, மதில், உலகம், குளம், எழுதுகை. வரையமிர்து - மலைபடுதிரவியம். வரையரமகளிர் - மலைவாழ் தெய்வ மகளிர். வரையரையன் - இமயமலை. வரையளவு - வரையறை. வரையறுத்தல் - நிர்ணயித்தல். வரையறுத்தபாட்டியல் - பாட்டியல் பற்றிச் சம்மந்த முனிவரால் இயற்றப்பட்ட ஒரு நூல். வரையறை - எல்லை. வரையாடு - காட்டாடு (Nilgiri wild goat Hemetragus). வரையாநுகர்ச்சி - களவுப்புணர்ச்சி. வரையாவீகை - பெருங்கொடை. வரையாழி - சக்கரவாளம். வரைவில்லி - பொதுமகள். வரைவின்மகளிர் - எழுதுகை, எல்லை, அளவு, திருமணம், நீக்கம். வரைவுகடாதல் - தலைவியை மணம்புரிந்து கொள்ளுமாறு தோழி தலைமகளை வற்புறுத்தும் அகத் துறை. வரைவுடன்படுதல் - தலைவியின் சுற்றத்தார் தலைமகனுக்குத் தலை வியை மணம் புரிவிக்க இசை வதைக் கூறும் புறத்துறை. வரைவுமலிதல் - மணம் நிகழ்வது பற்றி மகிழ்வு கூறுதல். வரோதயன் - வரத்தால் தோன்றி யவன். வர்க்கமூலம் - இருபடிமூலம் (Square root). வர்க்கம் - ஒத்த பொருள்களின் கூட்டம், குறிப்பிட்ட எண்ணை அதே எண்ணால் பெருக்கிவரும் தொகை, பிசாசு, தீ. வர்ச்சனம் - விடுகை. வர்ச்சித்தல் - கைவிடுதல், விலக் குதல். வர்ச்சியம் - விலக்கத்தக்கது. வர்ணமாலை - நெடுங்கணக்கு. வர்ணமொட்டு - பாட்டின் இசை யமைப்பு. வர்ணம் - நிறம் ஓசை, எழுத்து, இராகத்துக்குரிய சுவரத்தின் எழுத் துக்கள், பூச்சுத் திரவியம். வர்ணியம் - உவமேயம். வர்த்தகன் - வியாபாரி. வர்த்தமானம் - நிகழ்காலம், செய்தி, ஆமணக்கு. வர்த்தமானர் - தீர்த்தங்கரருள் ஒருவர். வர்த்தனம் - தாபிக்கை, பெருகுகை. வர்த்தனிகும்பம் - உமையை ஆவாகித்துச் செபித்த நீரையுடைய கும்பம். வர்த்தனை - ஆரோகண அவ ரோகண முறையில் சுரம் பாடுகை, செல்வம், ஒருவன் தசையான ஆண்டை மூன்றாற் பெருக்கிய எண். வர்த்தித்தல் - உள்ளாதல், நிகழ்தல், தங்குதல், பெருகுதல். வர்த்தித்திறன் - மெழுகுதிரி வெளிச்சத்திறன் (Candlepower). வர்மம் - உட்பகை. வலக்காரம் - வெற்றி, தந்திரம், பொய். வலகை - வலதுகை, தமிழ்நாட்டுச் சாதியருள் ஒரு பிரிவினர். வலங்கொள்ளுதல் - வெற்றி யடைதல், வலம் வருதல். வலசாரி - வலமாகச் சுற்றி வருகை. வலசை - வேற்று நாட்டுக்குக் குடியோடுகை, கூட்டம். வலஞ்சுழி - சிவத்தலம், வலமாகச் சுற்றுதல் (Clock wise). வலது - வலது பக்கம், வெற்றி. வலத்தல் - சுற்றுதல், பின்னுதல், தொடுத்தல், பிணித்தல். வலந்தானை - ஆடவர் வட்டமாகச் சுற்றிவந்து கோல் அடித்தாடும் ஆட்ட வகை. வலம் - வலி, வெற்றி, ஆணை, வலப் பக்கம், மேலிடம். வலம்படுதல் - வெற்றியுண்டாதல், இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கஞ் செல்லுதல். வலம்புரி - வலமாகச் சுழித்திருப்பது, வலம்புரிச் சங்கு, தலைக்கோல வகை, நந்தியாவட்டம், அபிநய வகை, செடி வகை. வலயம் - வட்டம், கடல், கை, வளையம், தாமரையின் சுருள் சுற்றிடம், நீர் நிலை, பாத்தி, தோட்டம். வலவன் - வெற்றியாளன், தேர்ப் பாகன், திருமால். வலவாய் - வலப்பக்கம். வலவை - விநாயகன்தேவி, வல்லபம், காளி, இடாகினி, நாண மில்லாதவர், வஞ்சப் பெண். வலவோட்டுநாள் - அசுவினி பரணி கார்த்திகை புனர்பூசம் பூசம் ஆயிலியம் அத்தம் சித்திரை சுவாதி மூலம் பூராடம் உத்தராடம் பூரட்டாதி உத்திரட்டாதி இரேவதி ஆகிய நட்சத்திரங்கள். வலற்காரம் - பொய். வலன் - பெற்றி, வலப்பக்கம், மேலிடம், வலம் ஒர் அசுரன். வலாகம், வலாகு - கொக்கு. வலாரி - இந்திரன். வலார் - வளார். வலாற்காரம் - பலவந்தம். வலி - வன்மை, வலாற்காரம், அகங்காரம், வல்லெழுத்து, பற்றுக் கோடு, பற்றிரும்பு, நோவு, இழுக்கை, வலிப்பு நோய், ஒலி, சபதம், வஞ்சம். வலிக்கட்டு - யாழ் நரம்பின் வலிந்த கட்டு. வலிதல் - திண்ணியதாதல், வல்லெ ழுத்தாதல், தானாக முன்வந்து செய்தல், முயலுதல், பலவந்தப் படுத்துதல், மீறுதல். வலித்தல் - இழுத்தல், பலவந்தப் படுத்துதல், மெல்லெழுத்தை வல் லெழுத்தாக்குதல், துணிதல், வற்றுதல், நோவுண்டாதல், கொழுத் தல், சொல்லுதல், ஆலோசித்தல், கருத்தோடு செய்தல், உடன்படுதல். வலிநோய் - காக்கை வலி. வலிந்துகொள்ளுதல் - பலவந்த மாய்க் கைப்பற்றுதல், இடர்ப்பட்டுப் பொருள் கொள்ளுதல். வலிபடுதல் - மாறுபடுதல், பற்றியிழுக்கப்படுதல். வலிபெருக்கி - வலிமையை அதிகப் படுத்துவது (Amplifier). வலிப்பற்று - பற்றுக்குறடு. வலிப்பு - நிலைபேறு, மெல்லொற்று, வல்லொற்றாகை, நோவு, வருத்தம். வலிப்புறுத்தல் - நிலைபெறுதல். வலிமுன்பு - மிக்க வலிமை. வலிமை - வன்மை. வலிய - வலியுள்ள, தானக. வலியன் - வலிமையுள்ளவன், கரிக் குருவி. வலியாடுதல் - துன்பப்படுத்துதல். வலியான் - வலியன், பருந்து, கரிக் குருவி. வலிவு - வன்மை, உச்ச இசை. வலிநகம் - தாழை. வலிமுகம் - குறங்கு. வலு - பலம், உறுதி. வலுத்தல் - உறுதியாதல், வன்மை யாதல். வலுமை - வலாற்காரம். வலுவன் - பலவான். வலை - உயிர்களை அகப்படுத்தும் கருவி, சூழ்ச்சி, யாகபத்தினி நெற்றியிலணிந்து கொள்ளும் அணி வகை. வலைகொள்ளுதல் - சூழ்தல். வலைச்சி - செம்படவப் பெண். வலைச்சியார் - கலம்பக உறுப்பி னுள் தலைவன் ஒரு வலைச்சி யிடம் காமக் குறிப்புப்படக் கூறும் பகுதி. வலைஞன் - மீன் பிடிப்போன். வலைப்படுதல் - அகப்படுதல், சூழ்ச்சியிற் படுதல். வலையன், வலைவன் - நெய்தல் நிலத்தான். வல் - வலிமை, மேடு, சூதாடு கருவி, விரைவு, மரப்பட்டை. வல்சி - சோறு, அரிசி, நெல். வல்மீகம் - கறையான், பற்று, ஆனைக்கால் நோய். வல்ல - திறமையுள்ள. வல்லகி - தளிர், பூங்கொத்து. வல்லடிவம்பன் - பலாத்காரத்தால் காரியத்தை முடித்துக் கொள் வோன். வல்லடிவழக்கு - நியாயமின்றி பலத் தைப் பயன்படுத்துகை. வல்லணங்கு - காளி. வல்லநாய் - சூதாடு கருவியாகிய நாய். வல்லபடி - வல்லாங்கு. வல்லபம் - வலிமை, கொடுஞ் செயல், அருஞ்செயல். வல்லபன் - கணவன், வலிமை யுள்ளவன், சமர்த்தன். வல்லபி - வல்லபை, பார்வதி. வல்லபை - வல்லவை. வல்லம் - ஆற்றல், ஓர் சிவத்தலம், இரண்டு மஞ்சாடி நிறை. வல்லயம் - ஈட்டி வகை. வல்லரி - பசுங்காய், காய்க்குலை, பூங்கொத்து. வல்லவன் - கணவன், இடையன், சமர்த்தன், வலிமையுள்ளவன், வீமன் கரந்துறைந்த போது தரித்த பெயர். வல்லவாட்டு - பூணூல் போல இடத்தோளில் மேலிருந்து அணியும் ஆடை. வல்லவி - வல்லவை. வல்லவை - மனைவி, வினாயகரின் தேவி. வல்லா - முடியாதவை. வல்லாங்கு - இயன்ற அளவில். வல்லாட்டு - குறும்பு. வல்லாண்மை - பேராற்றல். வல்லாரை - செடிவகை (Penny wort) கேட்டை. வல்லார் - திறமையுள்ளவர், வலிமை யுடையவர். வல்லாவாறு - இளன்ற அளவு. வல்லாளன் - வலிமை மிக்கவன். வல்லாள்முல்லை - ஒருவனது குடியையும் பதியையும் இயல்பு களையும் புகழ்ந்து அவனது ஆண்மை பெருகச் சிறப்பித்துக் கூறும் புறத்துறை. வல்லாறு - இயன்ற மட்டில். வல்லான் - வலிமையுள்ளவன், சமர்த்தன், சூதாடுபவன். வல்லி - வல்லான், கொடி, இளம் பெண், வள்ளியம்மையார், கால் விலங்கு, கொடி, விரைவு, பிரிக்கை. வல்லிகை - குதிரை கழுத்தில் கட்டும் கயிறு. வல்லிக்கயிறு - உடைமேல் தரிக்கும் அரைஞாண். வல்லிசம் - மிளகு. வல்லிசாதம் - கற்பகத்தில் படரும் கொடி. வல்லிசாதி - தெய்வத் தன்மையுள்ள கொடி. வல்லிசை - உச்சவிசை. வல்லிசைவண்ணம் - வல்லெழுத்து மிக்குப் பயின்று வரும் சந்தம். வல்லிதின் - வல்லாங்கு, விரைவாக. வல்லிமண்டபம் - கொடிப் பந்தல். வல்லியம் - புலி, இடைச்சேரி. வல்லியம் பொருப்பு - கொல்லி மலை. வல்லியை - அமுக்கிரா. வல்லிவன்னி - கொடுவேலி. வல்லினம் - வல்லோசை உள்ள எழுத்துக்கள். வல்லீகம் - பெருங்காயம். வல்லிட்டுக்குற்றி - பனை முதலிய வற்றைப் பிளக்கும் குற்றி. வல்லுதல் - செய்ய மாட்டுதல். வல்லுநர் - வல்லார். வல்லுப்பலகை - சூதாடு பலகை. வல்லுவம் - வெற்றிலைப்பை. வல்லுளி - பன்றி. வல்லூகம் - கரடி, ஆண் குரங்கு. வல்லூறு - இராசாளி (Falcon). வல்லூற்று - பாறையினின்று வரும் ஊற்று. வல்லெனல் - வன்மையாதற் குறிப்பு. வல்லே - விரைவாக. வல்லேறு - இடி. வல்லை - வலிமை, பெருங்காடு, மேடு, வட்டம், விரைவாக. வல்லையம் - வல்லயம். வல்லொற்று - வல்லினம். வல்விரைதல் - மிக விரைதல். வல்விலங்கு - யானை. வல்வில் - ஒரே காலத்தில் பல பொருள்களை ஊடுருவிச் செல் லும்படி ஒரு அம்பை எய்யும் திறமை. வல்வினை - தீவினை, வலிய ஊழ், கொடுஞ் செயல். வல்வலிடுதல் - குளிர் மிகுதியால் பற்கள் ஒலியுண்டாக விரைந்து மோதிக் கொள்ளுதல். வல்வால் - ஒருவகைப் பறவை. வவ்வுதல் - கவர்தல், பற்றிக் கொள்ளுதல். வழகு - மேன்கை. வழக்கடிப்பாடு - தொன்றுதொட்டு வரும் பயிற்சி. வழக்கம் - பழக்கம், பொதுவானது. வழக்கர் - நீள்வழி. வழக்கழி - நியாய விரோதம். வழக்கறுதல் - வழக்கத்தினின்று மறைந்து போதல். வழக்கறுத்தல் - போக்கைத் தடுத்தல், வழக்கைத் தீர்த்து விடுதல். வழக்கன் - செலவிடுதற்குரியது. வழக்காடுதல் - வாதாடுதல், ஊடுதல். வழக்காளி - வாதாடுவோன். வழக்காறு - உலக வழக்கு. வழக்கியல் - வழக்காறு. வழக்கு - இயங்குகை, உலக வழக்கு, செய்யுள் வழக்கு, பழக்க ஒழுக்கம், நீதி, வன்மை. வழக்குதல் - போக்குதல். வழங்காத்தேர் - பேய்த்தேர். வழங்காப்பொழுது - உச்சிவேளை. வழங்குதல் - இயங்குதல், உலாவுதல், நடைபெறுதல், கூத்தாடுதல், நிலை பெறுதல், கொண்டாடப்படுதல், கொடுத்தல், செலுத்துதல், சொல்லுதல். வழலை - ஒருவகைப் பாம்பு, புண்ணின்று வடியும் ஊன்நீர். வழவழத்தல் - வழுக்குந் தன்மைய தாதல். வழாஅல் - வழுக்குகை, தவறு. வழாநிலை - சொல்கள் அல்லது தொடர்கள் இலக்கண விதியினின் றும் விலகாது அமைகை. வழாறு - நிறை நீருள்ள ஆறு அல்லது குளம். வழி - பாதை, உபாயம், வழிபாடு, ஒழுக்கம், முறைமை, பின் சந்ததி, மரபு, சுற்றம், சுவடு, இடம், மலைப்பக்கம், வரம், பின்பு, வினையெச்ச விகுதி. வழிகெடுத்தல் - சுவடு தெரியாமல் அழித்தல். வழிக்குவருதல் - இணங்குதல். வழிக்கொள்ளுதல் - பின் பற்றிச் சொல்லுதல், பயணப்படுதல். வழிசீத்தல் - வழியைச் செப் பனிடுதல். வழிச்செலவு - பயணம். வழிஞ்சி - இளமை. வழிதுறை - உபாயம். வழித்திண்ணை - வழிக்குத் துணை போவோன். வழித்தெய்வம் - குலதெய்வம். வழித்தொண்டு - பரம்பரை அடிமை. வழித்தோன்றல் - வமிசத்துப் பிள்ளை. வழிநடை - வழிச் செல்லுகை. வழிநாள் - பின்நாள். வழிநிலை - பின்நின்று ஏவல் செய்கை, பின் நிகழ்வது அலங்கார வகை, இரண்டாவது (Secon dary). வழிநிலைக்காட்சி - இயற்கைப் புணர்ச்சியை அடுத்த இடந் தலைப் பாட்டில் தலைவன் தலைவியைக் காணுங்காட்சி. வழிநிற்றல் - ஏவல் செய்தல். வழிநூல் - முதல்நூல் முடிவைப் பெரிதும் ஒத்துச் சிறுபான்மை மாறுபடும் நூல். வழிபடுகடவுள் - வணங்கும் கடவுள். வழிபடுதல் - பின்பற்றுதல், வணங் குதல். வழிபயத்தல் - பிற்பயத்தல். வழிபறி - வழிப்பறி. வழிபாடு - வணக்கம். வழிபார்த்தல் - எதிர்பார்த்தல், உபாயம் தேடுதல். வழிப்படுதல் - பின்பற்றுதல். வழிப்படுத்தல் - சீர்திருத்தல். வழிப்பறித்தல் - இடை வழியில் கொள்ளையடித்தல். வழிப்புரை - வழிப்போக்கர் இளைத்தால் தங்கும் இடம். வழிப்பெருந்தேவி - பட்டத்தரசிக்கு அடுத்த தேவி. வழிப்போக்கன் - பிரயாணி. வழிமடக்கு - அணிவகை. வழிமுட்டு - சொல்ல முடியாத வழி. வழிமுதல் - குலமுதல்வன், வழிபடு கடவுள். வழிமுரண் - ஒரு செய்யுளில் முரண் தொடை மிகுதியாகப் பயில்வது. வழிமுறை - சந்ததி, கிரமம், பின்பு. வழிமுறைத்தாய் - தந்தையின் இரண்டாம் தாரமாகிய சிறிய தாய். வழிமுறைத்தாரம் - மனைவி இறந்த பின் கொண்ட தாரம். வழிமொழி - ஒருவகைச் சந்தப் பாட்டு. வழிமொழிதல் - வழிபாடு கூறுதல், அனுமதித்தல். வழியசை - கலிப்பாவில் வரும் ஓர் உறுப்பு. வழியடியார் - பரம்பரைத் தொண்டர். வழியடை - இடையூறு, தாயத்தின் பின் உரிமையுடையான். வழியடைத்தல் - வழித்தடை செய்தல். வழியலைத்தல் - வழிபறித்தல். வழியளவை - அனுமானப் பிர மாணம். வழியிரங்குதல் - பின் இரங்குதல். வழியிலார் - சந்ததியினர். வழியுரைத்தல் - தூது செல்லுதல். வழியுரைப்பான் - தூதன். வழியெச்சமறுதல், வழியெஞ்சுதல் - வமிசம் அற்றுப் போதல். வழியெதுகை - செய்யுளில் அடி தோறும் முதல் மூன்று சீர்க் கண்ணும் வரும் எதுகை. வழியொழுகுதல் - பின்செல்லுதல், நேர் வழியில் செல்லுதல், ஏவலின் படி நடத்தல். வழிவகை - உபாயம், இடம் பொருள் ஏவல். வழிவருத்தம் - பயணத்தாலுண்டான சிரமம். வழிவருதல் - பரம்பரையாக வருதல், நற்குடிப்பிறத்தல், பின்பற்றி ஒழுகல். வழிவழி - பரம்பரையாக. வழு - தவறு, கேடு, பழிப்புரை, திணை பால் முதலியன தத்தம் இலக்கண நெறி மயங்கி வருவ தாகிய குற்றம். வழுக்கம் - தவறு, ஒழுக்கத்தவறு. வழுக்கல் - சறுக்குதல், வழுக்கு நிலம். வழுக்காறு - தீயநெறி. வழுக்கு - சறுக்குகை, தவறு, பயன்படாது கழிவது, தீங்கு, கொழுப்பு. வழுக்குதல் - சறுக்குதல், மறத்தல், தவறு செய்தல். வழுக்கை - இளந்தேங்காயின் உள்ளீடு. வழுக்கைத்தலை - வழுக்குத் தலை. வழுங்கல் - அறிவற்றவன். வழுதலை - கத்தரி. வழுதி - பாண்டியன். வழுதிவளநாடு - ஆழ்வார் திரு நகரியைச் சூழ்ந்த நாடு. வழுது - பொய். வழுதுணங்காய், வழுதுணை - கத்திரிக்காய். வழுத்தரல் - இறந்து போதல். வழுத்துதல் - வாழ்த்துதல், துதித்தல், அபிமந்திரித்தல். வழுநிலை - செய்யுள் முதலியன இலக்கணத் தவறாக வருகை. வழுநீர் - கண்பீளை. வழும்பு - குற்றம், தீங்கு, நிணய நிணம் முதலியவற்றின் மீதுள்ள வழுவழுப்பான நீர்ப்பொருள். வழுவமைதி - இலக்கண வழுவாயி னும் அமைக என்று கொள்ளுகை. வழுவழுத்தல் - வழுக்குதல், உறுதி யறுதல். வழுவாய் - தப்பிப் போதல், பாவம். வழுவுடைக்காமம் - பெருந்திணை. வழுவுதல் - தவறுதல், நழுவுதல், சறுக்குதல். வழூஉ - வழு. வழை - சுரபுன்னை, புதுமை, இளமை. வழைச்சு - புதுமை, இளமை. வளகு - நீண்டமர வகை. வளநாடு - செழிப்புள்ள நாடு. வளப்பம் - வளம், வழக்கம். வளப்பாடு - பெருக்கம். வளமை - வளம், பொருள், வழக்கு. வளமையர் - வேளாளர், மாட்சிமை யுள்ளோர். வளம் - செழுமை, மிகுதி, பயன், செல்வம், வருவாய், தகுதி, மாட்சிமை, அழகு, பதவி, நீர், உணவு, வாணிகப் பொருள், வெற்றி. வளர் - வளார், ஓர் உவமச் சொல். வளர்சிதைமாற்றம் - உயிருள்ள ஒன்றின் உடலில் ஏற்படும் பொருள் மாறுதல் (Metabolism). வளர்ச்சி - உயரம், நீட்டம், உறக்கம். வளர்தல் - பெரிதாதல், நீளுதல், மிகுதல், களித்தல், உறங்குதல், தங்குதல். வளர்த்தல் - விருத்தியாக்குதல், பாதுகாத்தல். வளர்த்தி - வளர்ச்சி. வளர்த்துதல் - உறங்கச் செய்தல், நீட்டுதல், வளரச் செய்தல். வளவன் - சோழன், வேளாளன், வளம். வளவி - வீட்டிறப்பு. வளவுதல் - வளர்த்தல். வளா - பரப்பு. வளாகம் - இடம், வளைக்கை, உல கம், பூகண்டம், தேசம், தினைப் புனம். வளார் - இளங்கொம்பு. வளாவுதல் - சூழ்தல், மூடுதல், கலத்தல், அளவளாவுதல். வளி - சூழல் காற்று, உடலிலுள்ள வாதக்கூறு, சிறியகால அளவுவகை. வளிசம் - தூண்டில். வளிச்செல்வன் - வாயுதேவன். வளிநிலை - கும்பகம். வழிமகன் - அனுமான், வீமன். வளிமறை - வீடு, கதவு. வளு - இளமை. வளை - சுற்றிடம், சங்கு, கைவளை, சக்கராயுதம், பற்று. வளைதடி - எறி ஆயுதவகை. வளைதல் - கோணுதல், தோற்றல், வருந்துதல், சூழ்தல், சுற்றி வருதல். வளைத்தல் - சூழ்தல், தடுத்தல், பற்றுதல், எழுதுதல், அணிதல். வளைநீர் - கடல். வளைபோழுநர் - சங்கு அறுப்போர். வளைப்பு - சூழ்கை, முற்றுகை யிடுகை, குடியிருப்பிடம், சிறை, காவல். வளைமணி - அக்குமணி. வளையமாலை - முடியில் வளைத்துச் சூடும் மாலை. வளையம் - வட்டம், சாமரைச் சுருள், வளைய மாலை. வளையல் - மகளிரது கையணி வகை. வளையாபதி - ஒரு பழைய சைன காவியம், பஞ்ச காவியங்களுள் ஒன்று (10ஆம் நூற்.). வளைவணன் - பலராமன். வளைவிற்பொறி - தானே அம்பு எய்யும் பொறி. வள் - வளம், பெருமை, கூர்மை, வாள், வாளுறை, கடிவளம், காது, படுக்கை, வலிமை, வலிப்பற் றிரும்பு. வள்பு - வாள். வள்வு - வார். வள்ளடி - காதடி. வள்ளம் - வட்டில் வகை, மரக்கலம், சிறுதோணி, 2 அல்ல 4படி கொண்ட அளவு. வள்ளலார் - வள்ளலார் சாத்திரம் என்னும் நூல் செய்தவர். வள்ளல் - கொடுப்போன். வள்ளன்மை - கொடுக்கும் குணம். வள்ளி - கொடி, கைவளை, தொய்யிற் கொடி, முருகக் கடவுளின் தேவி, குறிஞ்சி நிலப் பெண், முருகக் கடவுட்கு மகளிர் வெறியாடு தலைக் கூறும் புறத்துறை, சந்திரன். வள்ளிக்கூத்து - குறிஞ்சிநிலப் பெண்கள் கூத்து வகை. வள்ளிசு - நேர்த்தி. வள்ளித்தண்டை - பிரப்பங் கேடகம். வள்ளிநாச்சியார் - வள்ளியம்மை. வள்ளியம் - மரக்கலம், மெழுகு, குழல். வள்ளியம்மை கூட்டம் - குறவர் சாதி. வள்ளியோன் - கொடைத் தன்மை உடையோன். வள்ளுரம் - பசுந்தசை, பசுவின் இறைச்சி. வள்ளுவநாடு - திருவிதாங்கூரைச் சேர்ந்த ஒரு நாடு. வள்ளுவப்பயன் - திருக்குறள். வள்ளுவன் - நிமித்திகன், அரசர்க்கு உள்படு கருமத் தலைவன், திருவள்ளுவர் (கி.மு. 1 ம் நூற்.). வள்ளூரம் - வள்ளுரம். வள்ளை - கொடிவகை, உலக்கைப்பாட்டு. வறக்கடை - வறட்சி. வறங்கூர்தல் - மழை பெய்யாது போதல், பஞ்சம் மிகுதல். வறடு - வறட்சி, ஈனாத பசு முதலியன. வறட்சி - நீர்ப்பசை அறுகை, உடற் காங்கை. வறட்சித்திமிரம் - கண்ணோய் வகை. வறட்டி - தட்டிக் காய்ந்த மாட்டுச் சாணம். வறட்டுப்பசு - பால் கறவாத பசு. வறட்டுப்பால் - காய்ந்து கெட்டியான பால். வறட்புள்தோடம் - குழந்தை நோய் வகை. வறண்டுதல் - பிறாண்டுதல். வறத்தல் - காய்தல், வறங்கூர்தல். வறம் - வற்றுகை, நீரில்லாமை, கோடைக் காலம், பஞ்சம், வறுமை, பூமி. வறல் - உலர்கை, வறண்டநிலம், கள்ளி, நீரில்லாமை, வற்றுகை. வறளுதல் - வற்றுதல். வறள் - வெறுவிதாகை, மணற்பாங்கு. வறற்காலை - நீரில்லாக் காலம். வறனுழத்தல் - நீரின்றி வருந்துதல், வறுமையுறுதல். வறன் - வறம். வறஞன் - தரித்திரன். வறிது - சிறிது, பயனின்மை, அறியாமை, குறைவு, தரித்திரம், உள்ளீடின்மை, இயலாமை. வறியன் - வறிஞன். வறு - குற்றம். வறுகுதல் - பிறாண்டுதல். வறுங்கோட்டி - அறிவிலார் கூட்டம். வறுத்தல் - பொரியச் செய்தல். வறுநிலம் - பாழ் நிலம். வறுநுகர்வு - பொய்யான நுகர்வு. வறுமை - தரித்திரம், திக்கற்ற தன்மை. வறுமொழி - பயனற்ற சொல். வறுவல் - பொரித்த கறி. வறுவிது - கறையாக இருப்பது. வறுவிதை - வறுத்த வித்து. வறுவியோர் - வறியோர். வறை - பொரிக்கறி. வறைநாற்றம் - கெட்ட நாற்றம். வறையல் - வறை. வற்கடம் - வறட்சி, பஞ்சம். வற்கம் - குதிரையின் கடிவாளம். வற்கரி - கரகம். வற்கலை - மரவுரி, காவித்துணி. வற்காலம் - வெள்ளாடு. வற்கிதம் - குதிரைக் கதியுள் ஒன்று. வற்குணம் - கொடுமை. வற்குலிகம் - கரிக்குருவி. வற்கெனல் - வலிதாதற் குறிப்பு. வற்சம் - எருமை பசு முதலியவற்றின் கன்று. வற்சரம் - ஆண்டு. வற்சலம், வற்சலை - ஈன்ற பசு. வற்பம் - வன்மை, வறட்சி. வற்பு - உறுதிப்பாடு. வற்புலம் - மேட்டு நிலம். வற்புறுதல் - திடப்படுதல், ஆறுத லடைதல். வற்புறுத்தல் - உறுதிப்படுத்திச் சொல்லுதல். வற்றல் - உலர்ந்தது, வறளுதல். வற்று - இயலுவது, ஒரு சாரியை. வற்றுதல் - கவறுதல், உலர்தல், வாருதல், மெலிதல், பயனற்றுப் போதல். வனசம் - தாமரை. வனசரம் - காட்டானை, காட்டு விலங்கு. வனசரர் - பாலைநில மக்கள் வேடர். வனசன் - காமன். வனசை - இலக்குமி. வனச்சவை - புகுப்பூனை, புலி. வனதுர்க்கம் - காட்டரண். வனபதி - பூவாது காய்க்கும் மரம். வனப்பகையப்பன் - சுந்தரமூர்த்தி நாயனார். வனப்பிரியம் - குயில். வனப்பு - அழகு, இளமை நிறம், பலவுறுப்பும் திரண்ட வழிப்பெறுவ தோர் செய்யுளழகு, பெருந் தோற்றம். வனப்பு வண்ணம் - இசை வகை. வனமாலி - திருமால், பிரமி. வனமாலை - பலவகை நிறமுள்ள மலரும் தழையும் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை. வனம் - காடு, ஊர் சூழ்ந்த சோலை, அழகு, துளசி, காடுபடு திரவியம். வனருகம் - தாமரை. வனவன் - வேடன். வனவாசம் - காட்டில் வாழுகை. வனாந்தரம் - காட்டின் உட்பகுதி. வனி - கரநோய். வனிதை - பெண். வனைதல் - உரு அமையச் செய்தல், அலங்கரித்தல், சித்திரமெழுதுதல். வனோற்சாகம் - காண்டர் மிருகம். வன்கட்பிணாக்கள் - பாலை நில மகளிர். வன்கணம் - வல்லினம். வன்கணாளன் - கொடியவன், வீரன். வன்கண் - கொடுமை, வீரத்தன்மை. வன்கண்மை - கொடுமை, வீரம். வன்கனத்தம் - தவறு முருங்கை. வன்களி - செங்காய். வன்கை - வலியகை, தோற் கருவி வகை. வன்சிறை - கடுங்காவல், மதில். வன்செலல் - விரைந்து செல்லல். வன்செவி - உணர்ச்சி அற்ற காது. வன்சொல் - கடுஞ்சொல், மிலேச்ச மொழி. வன்பரணர் - பரணருக்குப் பின்வாழ்ந்த சங்க காலப் புலவர். வன்பாடு - வலிய தன்மை, முரட்டுத் தன்மை. வன்பார் - இறுகிய பாறை நிலம். வன்பால் - வன்பார், பாலை நிலம், குறிஞ்சி நிலம். வன்பு - வலிமை, கடினத்தன்மை. வன்புலம் - வலியநிலம், குறிஞ்சி நிலம், முல்லைநிலம். வன்புல் - புறக்காழுள்ள மரம் செடி முதலியன. வன்புறுத்தல் - தலைவியைத் தலைவன் ஆற்றுவித்தல். வன்புறை - தலைவியைத் தலைவன் ஆற்றி வற்புறுத்துகை, தலைவன் பிரிவின்கண் வாயில்கள் தலை வியை ஆற்றுவித்தலைக் கூறும் புறத்துறை, வற்புறுத்திச் சொல்பவன். வன்புறைஎதிரழிதல் - தலைவன் ஆற்றுவித்துப் பிரிந்தபின் தனிமை யால் தலைவி வருந்துதலைக் கூறும் அகத்துறை. வன்பொறை - பெரும்பாரம். வன்மம் - தீராப்பகை, வலிமை, இரகசியம். வன்மரம் - அகக்காழுள்ள மரம். வன்மனம் - கல்நெஞ்சு. வன்மா - குதிரை. வன்மான் - சிங்கம். வன்மிகம் - வன்மீகம். வன்மிகநாதர் - திருவாரூரில் கோயில் கொண்டுள்ள சிவன். வன்மீகம் - கறையான் புற்று. வன்மீகர் - வம்மீக நாதர். வன்மீன், வன்மீழை - முதலை. வன்மை - வலிமை, ஆற்றல், கோபம், கருத்து, வல்லெழுத்து. வன்றி - பன்றி. வன்றொண்டன் - சுந்தரமூர்த்தி நாயனார். வன்னசரம் - இரத்தினங்களாலான கழுத்தணி. வன்னம் - நிறம், எழுத்து. வன்னரூபி - உமை. வன்பார் - இறுகிய பாறைநிலம். வன்பால் - வன்பார், பாலை நிறம், குறுங்சி நிலம். வன்பு - வலிமை, கடினத்தன்மை. வன்புலம் - வலியநிலம், குறிஞ்சி நிலம், முல்லை நிலம். வன்புல் - புறக்காழுள்ள மரம் செடி முதலியன. வன்புறுத்தல் - தலைவியைத் தலைவன் ஆற்றுவித்தல். வன்புறை - தலைவியைத் தலைவன் ஆற்றி வற்புறுத்துகை, தலைவன் பிரிவின்கண் வாயில்கள் தலை வியை ஆற்றுவித்தலைக் கூறும் புறத்துறை, வற்புறுத்திச் சொல் பவன். வன்புறைஎதிரழிதல் - தலைவன் ஆற்றுவித்துப் பிரிந்தபின் தனிமை யால் தலைவி வருந்துதலைக் கூறும் அகத்துறை. வன்பொறை - பெரும்பாரம். வன்மம் - தீராப்பகை, வலிமை, இரகசியம். வன்மரம் - அகக்காழுள்ள மரம். வன்மனம் - கல்நெஞ்சு. வன்மா - குதிரை. வன்மான் - சிங்கம். வன்மிகம் - வன்மீகம். வன்மிகநாதர் - திருவாரூரில் கோயில் கொண்டுள்ள சிவன். வன்மீகம் - கறையான் புற்று. வன்மீகர் - வன்மீக நாதர். வன்மீன், வன்மீழை - முதலை. வன்மை - வலிமை, ஆற்றல், கோபம், கருத்து வல்லெழுத்து. வன்றி - பன்றி. வன்றொண்டன் - சுந்தரமூர்த்தி நாயனார். வன்னசரம் - இரத்தினங்களாலான கழுத்தணி. வன்னம் - நிறம், எழுத்து. வன்னரூபி - உமை. வன்னனை - வருணனை. வன்னி - நெருப்பு, குதிரை, மரவகை, பிரமசாரி, கிளி. வன்னிகை - எழுதுகோல். வன்னி சகாயன் - வாயுதேவன். வன்னிமை - குறும்பர் ஆட்சி. வன்னியராயன் - ஒரு கிராம தேவதை. வன்னியன் - ஒரு சாதி, படைத் தலைவன், சில சாதியாரின் பட்டப் பெயர். வன்னிரேதா - சிவன். வன்னிலம் - பாறை நிலம். வன்னிவகன் - காற்று. வஸ்தி - எனிமா. வா வா - தாவுகை. வாகடம் - வைத்திய நூல். வாகடர் - வைத்தியர். வாகம் - குதிரை, சக்கரவாகப் புள், எருது. வாகனம் - ஊர்தி, சிலை. வாகன் - அழகுள்ளவன். வாகியம் - புறம். வாகினி - படை, படைத்தொகை. வாகீசமுனிவர் - ஞானாமிர்த நூலின் ஆசிரியர் (13ம் நூ.) திருநாவுக்கரசர். வாகு - அழகு, ஒழுங்கு, திறமை, தொட்டால் சுருங்கி, தோள். வாகுசி - கார்போகி. வாகுபுரி - தோள்வளை. வாகுமூலம் - கமுக்கட்டு. வாகுரம் - வெளவால். வாகுலம் - மகிழம்பழம். வாகுவலயம் - தோளணி. வாகுவகதம் - பாம்பு. வாகேசி - உமை. வாகை - மரவகை, அகத்தி, வெற்றி, வெற்றியாளர் அணியும் மாலை, நாற்குலத்தினரும் முனிவரும் பிறவரும் தத்தம் கூறுபாடுகளை மிகுதிப் படுத்தலைக் கூறும் திணை. வாகைமாலை - போர், கல்வி, கேள்வி கொடைகளில் வென்றோர் அணியும் மாலை. வாகையரவம் - வெற்றியாக வெள்ளை மாலை வீரக்கழல் செங்கச்சு முதலியவற்றை வீரர் அணிதலைக் கூறும் புறத்துறை. வாக்கல் - வடிக்கப்பட்ட சோறு. வாக்காள் - நாமகள். வாக்கி - புலமையோர் நால்வரும் அறம் முதலிய நான்கு உறுதிப் பொருள் களையும் பற்றிப் பாடவல்லவன். வாக்கியக்கட்டளை - நன்குயாத்த சொற்றொடர். வாக்கியசேடம் - புறநடைச் சூத்திரம். வாக்கியம் - எழுவாய் பயனிலை நிரம்பிய சொற்றொடர், சூரிய சித்தாந்தத்தினின்றும் வேறுபட்டதும் தென்னிந்தியாவில் நடைபெறுவது மான சோதிட முறை. வாக்கியை - பார்வதி. வாக்கின் செல்வி - நாமகள். வாக்கு - திருத்தம், திருத்திய வடிவு, வளைவு, ஒரு வினையெச்ச விகுதி, பேசற் கருவியாகிய வாய், சொல், வோட் (Vote) அசரீரி, புகழ்ச்சிச் சொல், பக்கம், சூக்குமை பைசந்தி மத்திமை வைகரி என்ற நால்வகைப் பட்ட ஒலி. வாக்குச்சனி - சாதக சக்கரத்தில் இரண்டாமிடத்து அமைந்த வாக்கின் கடுமையைக் குறிப்பிக்கும் சனிக் கிரகம். வாக்குண்டாம் - ஒளவையார் செய்த மூதுரை என்ற நீதி நூல் (12 ம் நூற்.). வாக்குத்தத்தம் - உறுதி கூறுகை. வாக்குத்தானம் - சாதக சக்கரத்தில் வாக்கு கல்வி முதலியவற்றைக் குறிக்கும் இரண்டாமிடம். வாக்குபவம் - பிரமி. வாக்குமாறுதல் - கிழத்தனத்தரல் சொல் தடுமாறுதல். வாக்குரிமை - விருப்பத்தைத் தெரி விக்கும் உரிமை (Franchise). வாக்குவாதம் - பேச்சுச் சண்டை. வாங்கல் - பிறர் கொடுக்க ஏற்கை, வளைவு. வாங்குதல் - வளைதல், நாண், பூட்டு தல், இழுத்தல், மூச்சு உட்கொள்ளு தல், ஏற்றல், விலைக்குக் கொள்ளு தல், பெறுதல், செலுத்துதல், தழுவு தல், முறித்தல். வாசகஞ்செய்தல் - தோத்திரம் செய்தல். வாசகதாட்டி - பேச்சு வன்மை. வாசகம் - வார்த்தை, செய்தி, சொற்றொடர், செய்யுள், செபிக்கை, வாய்ப்பாடு, தோத்திரம். வாசகன் - அரசர் திருமுன் கடிதம் முதலியன படிப்போன். வாசத்தானம் - வசிக்குமிடம். வாசநெய் - புழுகு. வாசந்தி - குரூக்கத்தி, சண்பகம், திப்பிலி. வாசபதி - வியாழன். வாசபேயம் - யாக வகை. வாசம் - வசிக்கை, இருப்பிடம், மணம், பண்டம், உடை, இறகு. வாசல் - வாயில். வாசவம் - பகல் 15 முகூர்த்தங்களுள் 5 ஆவது. வாசவல் - புதிய அவல். வாசவன் - இந்திரன், வாசன், விற்போன். வாசனாமலம் - வாசனை மாத்திரை யாய் மெல்லியதாய் வந்துதாக்கும் பிராரத்தம். வாசனை - நன்மணம், செயற்கைக் குணம், முற்பிறப்பின் அனுப வத்தால் இம்மையிலுண்டாகும் பற்று முதலியன வாசனைப்புல் - காவட்டம் புல். வாசன் - வசிப்பவன். வாசாகயிற்கரியம் - வாயினால் செய்யக்கூடிய பணி, வெறும் பேச்சு. வாசாஞானம் - அனுபவமின்றி வாயால் பேசும் ஞானம். வாசாமகோசரம் - வாக்குக்கு எட்டாதது. வாசாலகம் - பேச்சு வல்லபம். வாசி - வேறுபாடு, இயல்பு, தகுதி, நல்ல நிலைமை, நாணய வட்டம், வட்டி, இசைக்குழல், குதிரை, அசுவதி, திருவாசி, மூச்சு, கற்றல். வாசிகம் - வாக்கால் செய்யப்பட்டது. வாசிகை - சிகைமாலை, மாலை, வைசியர் வசிக்கும்சேரி, திருவாசி. வாசிக்கோவை - குதிரைக் கிங்கணி மாலை. வாசிட்டம் - ஞானவாசிட்டம். வாசிப்பு - கல்வியறிவு. வாசிவாரியன் - குதிரையைப் பழக்கு வதில் வல்லவன். வாசினி - குடியிருப்பவள். வாசினை - படிக்கை, யாழ் முதலியன இசைப்பிக்கை. வாசுகி - பூமியைக் கிழக்குப் புறத்தில் தாங்கும் நாகம். வாசுதேவன் - திருமால், கண்ண பிரான். வாசை - ஆடாதோடை. வாச்சாயனன் - வடமொழியீல் காம சூத்திரம் இயற்றிய புலவன் கி.பி. 400. வாச்சி - ஆடாதோடை. வாச்சியமாராயன் - கோயில் தலைமை வாத்தியக்காரன். வாச்சியம் - வாசகத்தின் பொருள், வெளிப்படையானது, வாத்தியம். வாச்சியார்த்தம் - சொல்லுக்கு நேரே உரியபொருள். வாச்சியீடன் - கண்டிப்பாகப் பேசுபவன். வாஞ்சை - விருப்பம். வாடகை - கூலி, சுற்றுவட்டம். வாடல் - உலர்ந்த பூ. வாடாக்குறிஞ்சி - வாடினும் தன் நிறம் மாறாத பூவகை. வாடாத்தாமரை - பொற்றாமரைப்பூ. வாடாமாலை - துணி கிடை முதலியவற்றால் செய்யப்படும் மாலை. வாடாவஞ்சி - கருவூர். வாடாவள்ளி - ஒருவகைக் கூத்து. வாடி - சாவடி, குடிசை. வாடிக்கை - வழக்கம். வாடு - வாடற்பூ. வாடுதல் - உலர்தல், மெலிதல், தோல்வி அடைதல், குறைதல். வாடை - வடகாற்று, வாசனை, வடவை, தெருச்சிறகு, தெரு, மருந்து. வாடைப்பாசறை - வசிய பாசறைக் கண் வீரர் தம் காதன் மகளிரை நினைந்துத் துயருறும்படி செய்கின்ற வாடைக்காற்றின் மிகுதியைக் கூறும் புறத்துறை. வாடைப்பொடி - வசிய மருந்துப் பொடி. வாட்குடி - மறக்குடி. வாட்கூத்து - வாளைப்பிடித்து ஆடும் கூத்து. வாட்கோரை - ஒருவகைக் கோரை. வாட்டசாட்டம் - தோற்றப் பொலிவு. வாட்டம் - மெலிவு, வருத்தம், அனுகூலம், உலர்ச்சி, வளைவு. வாட்டாறு - மலைநாட்டுத் திருமால் கோயில்களுள் ஒன்று. வாட்டானை - வாட்படை. வாட்டி - தடவை. வாட்டு - பொரியல், வாட்டம். வாட்படையாள் - துர்க்கை. வாணம் - தீ, பொறிவாணம் முதலியன. வாணலிங்கம் - வாணாகரனால் பூசிக்கப்பட்டதும் நருமதையில் அகப்படுவதுமான இலிங்கவகை. வாணன் - வாசிப்பவன், ஓர் அசுரன், கார்த்திகை. வாணாட்கோள் - பகைவனது அரவணைக் கொள்ள நினைத்து வாளைப் புறவீடு விடுவதைக் கூறும் புறத்துறை. வாணாள் - வாழ்நாள், உயிர். வாணி - சொல், கல்வி, சரசுவதி, மிடற்று ஒசை தோன்றுமிடம், கூத்து, வகை, அம்பு. வாணிகச்சங்கம் - வணிகர் சங்கம் (Chamber of Commerce). வாணிச்சாந்து - வாணிகர் திரள். வாணிகம் - வியாபாரம், ஊதியம். வாணிகவென்றி - வாணிகத்தால் சிறப்பெய்திய வணிகன் தனது பொருளில் பற்றிலனாய்ப் பிறர் மிடியை நீக்கும் பெருந்தன்மையை எடுத்துக் கூறும் புறத்துறை. வாணிகன் - வியாபாரி, துலாக்கோல், துலாராசி. வாணிகேள்வன் - பிரமன். வாணிச்சி - வாணிகச்சி. வாணிதம் - கள்ளு. வாணிபம் - வாணிகம். வாணிமன் - பிரமன். வாணியம் - வாணிகம். வாணிலை - பகைமேற் படை எடுத்தலை விரும்பி வேந்தன் வாளைப் புறவீடு விடுவதைக் கூறும் புறத்துறை. வாணுதல் - ஒளி பொருந்திய நெற்றி, பெண். வாண்மங்கலம் - பகை அரசரை வென்ற வேந்தன் தன் வாளினைக் கொற்றவை மேல் நிறுத்தி நீராட்டுதலைக் கூறும் புறத்துறை, வீரனது வாள் வென்றியால் பசிப்பிணி தீர்ந்த பேய்ச் சுற்றம் அவன் வாளினை வாழ்த்துதலைக் கூறும் புறத்துறை. வாண்மண்ணு நிலை - நீராலே முழுக்காட்டிய அரசவாளின் வீரத் தைக் கூறும் புறத்துறை. வாண்முகம் - வாளின் வாய். வாண்முட்டி - வாளின் பிடி. வாதகம் - இடையூறு. வாதகாசம் - கண்நோய் வகை. வாதசெபம் - வாயுவேகம். வாதநாசனம் - ஆமணக்கு. வாதபாடணர் - பிறர் சொல்லாத பழிச் சொற்களைச் சொன்னதாகக் கூறு வோர். வாதமடக்கி - மயிற்கொன்றை. வாதம் - காற்று, வாயு மிகுதலாகிய பிணிக்கூறு, சொல், தருக்கம், இரசவாத வித்தை. வாதநாராயணன் - வியாசமுனிவன் கி.மு. 4ம் நூற். வாதவூரர் - மாணிக்கவாசகர். வாதனம் - சீலை. வாதனை - வாசனை, துன்பம். வாதாசனம் - பாம்பு. வாதாடுதல் - தர்க்கம் செய்தல். வாதாயனம் - சாளரம். வாதாரி - வேம்பு, ஆமணக்கு. வாதாவி - மேலுச்சாளுக்கியர்களின் தலைநகர். வாதி - வழக்கிடுபவன், வாதிப்பவன். வாதிகன் - நறுமணப் பண்டம் கூட்டு வோன். வாதித்தல் - வருத்துதல், தடுத்தல், வாதாடுதல். வாதிப்பு - துன்பம். வாது - தருக்கம், சண்டை. வாதுதல் - அறுத்தல். வாதுமை - மரவகை (Almond). வாதுவன் - யானைப்பாகன், குதிரைப் பாகன். வாதுளம் - ஒரு சிவாகமம். வாதுளி - வாதூலகோத்திரத்தான். வாதை - துன்பம். வாத்தி - உவாத்தி. வாத்தியம் - இசைக்கருவி. வாத்து - தாரா. வாத்ஸ்யாயனம் - வாச்சாயனன் இயற்றிய காம சூத்திரம். வாந்தி - வாயாலெடுக்கை. வாமதந்திரம் - சத்தி உபா சணையைக் கூறும் ஓர் ஆகமம். வாமதேவம் - சிவன் ஐம்முகத் தொன்று. வாமதேவன் - சிவபிரான், ஒரு முனிவன். வாமம் - அழகு, ஒளி, இடப்பக்கம், நோமையின்மை, தீமை, சத்தி, மதம், தொடை. வாமலோசனை - இலக்குமி, அழகிய கண் உடையாள். வானமுனிவர் - மேரு மந்தர புராணஞ் செய்த சைனப் புலவர் (14ம் நூற்.) நீலகேசிக்கு உரை எழுதியவர் (16ம் நூற்.). வாமனம் - வாமனாவதாரம், தென் திசை யானை. வாமனன் - குறள் வடிவாக அவதரித்த திருமால். வாமனாசாரியார் - மேரு மந்தர புராணமியற்றிய சைன ஆசிரியர் (14 ஆம் நூற்.). வாமன் - அருகன், புத்தன், சிவன், வாமனன். வாமான் - குதிரை. வாமி - துர்க்கை, வாம ஆசாரப்படி நடப்போன். வாமை - சிவசத்தி, இலக்குமி, சரசுவதி, பெண். வாயசம் - காக்கை. வாயாசி - மெம்மணித் தக்காளி, பெண் காக்கை. வாயடியடித்தல் - வாய்ப்பேச்சால் மருட்டிச் செல்லுதல். வாயடை - உணவு. வாயதம் - காக்கை. வாயவியம் - இரவு 15 ஆவது முகூர்த்தம். வாயாகுதல் - உண்மையாகுதல். வாயாடி - அதிகம் பேசுவோன். வாயார - முழுக்குரலோடு, வாய் நிரம்ப. வாயில் - வாசல், ஐம்புலன், துவாரம், வழி, தூதன், தூது, திறம், கதவு. வாயில்விழைச்சு - உமிழ்நீர். வாயில்வேண்டல் - தலைவனுக்கு முகம் கொடுக்குமாறு தலைவியைப் பாணன் முதலிய தூதுவர் வேண்டிக் கொள்வதைக் கூறும் அகப் பொருள் துறை. வாயிலாளன் - வாயில் காப்பவன். வாயிலிற்கூட்டம் - பாணன் முதலி யோரால் கூடும் தலைவன் தலைவியரின் சேர்க்கை. வாயிலோர் - தூதுவர், வாயில் காப்போர். வாயிற்காட்சி - புலங்களால் அறியும் அறிவு. வாயிற்சிகரி - வாயில் மாடம். வாயினிலை - அரசனிடத்துத்தன் வரவு கூறுமாறு வாயில்காப் போனுக்குப் புலவன் சொல்வதாகக் கூறும் புறத்துறை. வாயின்மறுத்தல் - தூதுவந்த பாணன் முதலியவர்க்குத் தலைவி முகம் கொடுக்க மறுத்தலைக் கூறும் புறத்துறை. வாயின்மாடம் - கோபுரம். வாயு - காற்று, வடமேற்கு மூலைக்கு அதிபதியான தேவன். வாயுசங்கிதை - குலசேகர வரகுண பாண்டியன் செய்த ஒரு சைவப் புராணம். வாயுசன் - தீ. வாயுத்தம்பம் - காற்றை இயங்காமல் நிறுத்தும் வித்தை. வாயுபுத்திரன் - அனுமான், வீமன். வாயுமண்டலம் - காற்று மண்டலம் (At mosphere). வாயுமூலை - வடமேற்றிசை. வாயுலிங்கம் - சீகாளத்தியில் கோயில் கொண்ட சிவலிங்கம் வாயுறுத்தல் - வாக்கினால் மெய் மையை அறிவுறுத்துதல், வாயில் ஊட்டுதல். வாயுறை - உண்கை, கவளம், தாளுருவி என்னும் மகளிர் காதணி. வாயுறைமொழி - கேட்கும்போது வெவ்வியதாயப் பின்னே உறுதி பயக்கும் சொல். வாயுறை வாழ்த்து - தலைவன் வேண்டானாயினும் அவற்கு உறுதி மொழிகளைச் சான்றோர் கூறும் புறத்துறை. வாயூறுதல் - வாய்நீர் சுரத்தல். வாயொலி - பாடல். வாய் - உதடு அல்லது அலகு இவற்றினிடையிலுள்ள உறுப்பு, பாத்திரம் முதலியவற்றின் திறந்த மேற்பாகம், உதடு, விளிம்பு, முனை, மொழி, குரல், மெய்மை, சிறப்பு, வழி, மூலம், இடம், தழும்பு, வாத்தியக்குழல். வாய்கரை - இறங்கும் துறை. வாய்கூப்புதல் - துதித்தல். வாய்க்கட்டை - இலஞ்சம். வாய்க்கயிறு - கடிவாளக் கயிறு. வாய்க்கரிசி - பிரேதத்தின் வாயி லிடும் அரிசி. வாய்க்கருவி - கடிவாளம். வாய்க்கால் - கால்வாய். வாய்க்கிரந்தி - வாய்ப்புண். வாய்க்கிலைகெட்டவன் - தரித் திரன், பயனற்றவன். வாய்க்கேள்வி - அரச கட்டளை, பிறர் சொல்லக் கேட்ட செய்தி. வாய்க்கொழுப்பு - மதியாது பேசுகை. வாய்சேர்தல் - வாய் தடுமாறுதல். வாய்ச்சி - மரம் செதுக்கும் ஆயுதம். வாய்தல் - சித்தித்தல், நிச்சயமாக நிகழ்தல், ஏற்றதாதல், நிறைதல், பெறுதல், மனம் நேர்தல், வாசல். வாய்திறத்தல் - மலர்தல், வெள்ளம் கரையை உடைத்தல், பேசுதல். வாய்தீட்டுதல் - ஆயுதம் முதலிய வற்றின் முனை தீட்டுதல். வாய்த்தலை - வாய்க்காலின் தலைப்பு, மதகு, தொங்குமிடம். வாய்த்தல் - நன்கமைதல், செழித்தல், சேர்தல், திரட்டுதல். வாய்நெகிழ்தல் - மலர்தல். வாய்நேர்தல் - நேர்த்திக்கடனைக் குறிப்பிட்டுச் சொல்லுதல், பேச்சால் உடன்படுதல். வாய்ந்துகொள்ளுதல் - வென்று கைப்பற்றுதல். வாய்பாடு - பெருக்கல் வாய்பாடு முதலியன (Formula) மரபுச்சொல், வழக்கம், சொல்வன்மை. வாய்பாறுதல் - அலம்புதல். வாய்புதைத்தல் - பெரியவர் முன்னிலையில் வலதுகையால் வாயை மூடிக் கொள்ளுதல். வாய்பூசுதல் - வாய் கழுவுதல். வாய்பேசுதல் - இடம்பமாகப் பேசுதல். வாய்ப்பகை - பொய், குறளை, வன் சொல், பயனில்சொல் ஆகியவை. வாய்ப்பக்காட்டுதல் - விளங்க உணர்த்துதல். வாய்ப்பட்சி - காக்கை. வாய்ப்பட்டி - வாய்க்குவந்தபடி பேசு வோர். வாய்ப்படுதல் - வழிப்படுதல். வாய்ப்பந்தல் - ஆடம்பர வார்த்தை. வாய்ப்பலி - வாய்க்கரிசி. வாயப்பறையறைதல் - யாவரும் அறிய வெளியிடுதல். வாய்ப்பியம் - இறந்துபட்ட ஒரு தமிழ் இலக்கண நூல். வாய்ப்பிறப்பு - வாயிலிருந்து வரும் சொல். வாய்ப்பு - அனுகூல நிலைமை, தருணம், பொருத்தம், அழகு, செழிப்பு, ஆதாயம். வாய்ப்புள் - நற்சொல்லாகிய நிமித்தம். வாய்ப்புறம் - உதடு. வாய்ப்பூச்சு - வாயை நீரால் துடைக்கை, ஆசமனம். வாய்ப்பூட்டு - பேசாமல் தடுக்கை. வாய்ப்பெய்தல் - வாயிலிட்டுத் தின்னல். வாய்ப்பை - கடன். வாய்ப்பொன் - கடிவாளத்தில் ஓர் உறுப்பு. வாய்மடுத்தல் - வாயினுள் கொள் ளுதல். வாய்மதம் - வாய்க்கொழுப்பு, மதியாது பேசுகை. வாய்மலர்தல் - பேசுதல். வாய்முத்தம், வாய்முத்து - பல். வாய்மூத்தல் - பேச்சில் முந்துதல். வாய்மூழ்த்தல் - வாய் மூடுதல். வாய்மை - சொல், தப்பாத சொல், உண்மை, வலி. வாய்மொழி - வார்த்தை, வேதம், திரு வாய்மொழி. வாய்மொழிதல் - கூறுதல், மந்திரித் தல். வாய்வடம், வாய்வட்டம் - வாய்க் கயிறு. வாய்வலம் - சொல்வன்மை. வாய்வாளாமை - பேசாதிருக்கை. வாய்வாள் - குறி தப்பாத வாள். வாய்விடு - சபதம், ஆரவாரம். வாய்விடுதல் - பேசுதல், சொல்லுதல், மலர்தல். வாய்விள்ளுதல் - மலர்தல், வாயைத் திறத்தல். வாய்வெருவுதல் - வாய் பிதற்றுதல். வாய்வைத்தல் - புசித்தல், ஊதுதல், தலையிடுதல். வாரகம், வாரக்கம் - பயிர் செய் வோர்க்கு உதவியாகக் கொடுக்கும் முன்பணம். வாரசூலை - சிவனது சூலம் நிற்ப தால் இன்ன திக்கு இன்ன கிழமை யில் பிரயாணத்துக்கு ஆகா தென்று விலக்கப்பட்ட கிழமைக் குற்றம். வாரசூனியம் - சுபகாரியங்களுக்குப் பொருத்தமில்லாது குறித்த நட் சத்திரமும் கிழமையும் சேர்க்கை யாகிய குற்றம். வாரடித்தல் - நீர் நிரவி ஓடுதல். வாரணம் - சங்கு, யானை, பன்றி, தடை, மறைப்பு, கவசம், கோழி, உறையூர், மாவிலிங்கம், கடல், வாரணாசி. வாரணரேகை - மக்களின் நல்வாழ் வைக் காட்டும் உள்ளங்கை வரை. வாரணவாசி - வாரணாசி, காசி. வாரணவாசிப்பதம் - வாரணவாசி யிலுள்ளவர் போலப் பிறர் வருத்தத்தைத் தம் வருத்தமாகக் கொண்டொழுகும் தன்மை. வாரணன் - கணபதி. வாரணாசி - காசி. வாரணாவதம் - அத்தினாபுரத்தை அடுத்துக் கங்கைக் கரையிலுள்ள பழைய ஊர். வாரணை - தடை. வாரப்பாடு - அன்பு. வாரமரக்கலம் - ஒரு வகை வரி. வாரமாதர் - பொதுமகளிர். வாரம் - மலைச்சாரல், பக்கம், இசைப் பாட்டு, கலிப்பா உறுப்புகளி லோன்று, பின்பாட்டு, தெய்வப் பாடல், கிழமை, குடியிறை, வாடகை, பங்கு, பாதி, அன்பு பட்சபாதம், தடவை. வாரம்படுதல் - பட்சபாதமுறுதல். வாரம்பாடுதல் - பின்பாட்டுப் பாடுதல். வாரம்வைத்தல் - பிரியப்படுதல். வாரவோரை - நாளில் முதல் முகூர்த்தம் நேரம். வாராகம் - பன்னியவதாரம், வட மொழியில் வராகமிகிரரால் செய்யப் பட்ட ஒரு சோதிடக் கணித நூல். வாராகரம் - கடல். வாராகன் - வராக அவதாரமெடுத்த திருமால். வாராகி - வராக அவதாரத்தின் சத்தி. வாராக்கதி - மோட்சம். வாராணசி - வாரணாசி. வாராவதி - பாலம். வாராவரவு - அபூர்வமான வருகை. வாராவுலகம் - சுவர்க்கம். வாரானை - பிள்ளைத் தமிழில் ஆண் அல்லது பெண் குழந் தையைத் தன்னிடம் வருக என்று தாய் முதலியோர் அழைப்பதைக் கூறும் பருவம். வாரி - வருவாய், விளைவு, செல்வம், மடை, குப்பை, வாரும் கருவி, தடை, மதிற்சுற்று, செண்டு வெளி, பகுதி, நீர், வெள்ளம், கடல், நீர் நிலை, வீணைவகை, இசைக்குழல், யானையை அகப்படுத்துமிடம், யானைக் கோட்டம் வாயில், வழி, கதவு, முறையில் என்னும் பொரு ளில் வரும் சொல். வாரிகம் - பொன் முகட்டை. வாரிசம் - சங்கு, தாமரை, உப்பு. வாரிசாதம் - தாமரை. வாரிசாமரம் - நீர்ப்பாசி. வாரிசாலயன் - பிரமன். வாரிசாலையன் - வருணன். வாரிச்சி - வரிக்கூத்து வகை. வாரிதம் - மேகம். வாரிதி - கடல். வாரிதித்தண்டு - பவளம். வாரித்தல் - தடுத்தல், ஆணை யிட்டுக் கூறுதல், நடத்தல். வாரித்திரம் - ஓலைக்குடை. வாரியப்பெருமக்கள் - ஊராளும் சபையோர். வாரியம் - மேல்விசாரணை செய்யும் உத்தியோகம். வாரியன் - மேல்விசாரணை செய் வோன், குதிரைப்பாகன். வாரியிறைத்தல் - மிகுதியாகக் கொடுத்தல், வீணாக்குதல். வாரியுளுயர்நிலம் - கோட்டை மதிலின் உள்ளிடமாகச் சுற்றி வருதற்குரிய மேடான ஒடுக்கு வழி. வாரியோட்டு - நீரோடை. வாரிசம் - சிந்தாமணி. வாருகம் - பேய்க் கொம்மட்டி, வெள்ளரி. வாருகோல் - துடைப்பம். வாருணம் - வருணனுக்குரியது, மேற்கு, பகல் முகூர்த்தத்தில் 13 ஆவது, கடல், மாவிலங்கம், கள். வாருணி - வருணன், மகள், ஆட் டாங் கொடி, சதயம். வாருண்டம், வாருண்டகம் - எண்காற்புள். வாரை - மூங்கில், ஆவிரை. வார் - நெடுமை, நேர்மை, உயர்ச்சி, நீர், மேகம், வா என்னும் ஏவல், தோல்வார், தோல், முலைக்கச்சு, துண்டம். வார்க்கட்டு - வாரால் கட்டப்பட்டது, திவ்வு. வார்க்காது - தொங்கும் துளைச்செவி. வார்க்குத்து - நீர்ப்பெருக்கு சுழித்து ஓடுமிடம். வார்சு - ஒருவனுக்குப்பின் அவனது சொத்தை அடைதற்குரியவன். வார்ச்சுற்று - நாடா (Belt). வார்தல் - யாழில் சுட்டு விரலால் செய்யும் தொழில், ஒழுகுதல், உரிதல். வார்த்தகம் - கத்தரி. வார்த்தாமாலை - வைணவ சமயா சாரிகளின் தத்துவக் கருத்து அமைந்த வாக்கியங்கள் பலவும் தொகுத்து அமைக்கப்பட்ட நூல். வார்த்திகம் - சூத்திரக் கருத்தை விளக்கும் ஒருவகை உரை, கிழத்தனம். வார்த்திகன் - தூதன். வார்த்தை - மறுமொழி, செய்தி, உழவு பகக்காவல் வாணிகம் என்ற வைசியர் தொழில். வார்த்தைப்பாடு - திருமணக் காலத்தில் மணமக்கள் ஒருவருக் கொருவர் சொல்லும் உறுதி மொழி (கிறித்துவம்). வார்த்தையாடுதல் - கலந்து பேசுதல். வார்பு - உருக்கி வார்க்கை, ஒழுக் குகை, நீளப் பக்கமாகச் சீவப் படுகை. வார்மை - நேர்மை. வாலகன் - இளைஞன். வாலக்கிரகக்கடி - வாலாகிரகமாகிய பேய். வாலகிலர், வாலகிலியர், வாலகில்யர் - கட்டை விரலளவு வடிவுடைய ஒரு சார் முனிகணத்தார். வாலசரிதை நாடகம் - கண்ணபிரான் இளமைப் பருவத்து நடித்த கூத்து. வாலசிகிச்சை - குழந்தை வைத் தியம் கூறும் நூல். வாலதி - வால். வாலமதி - இளஞ்சத்திரன். வாலமனை - அகப் புறத்தமைந்த சிறு வீடு. வாலமூடிகம் - எலி. வாலம் - வால், வாலிபம், பிண்டி, பாலம். வாலரசம் - சாதி லிங்கத்தினின்றும் வடித்த இரசம். வாலரிக்கொடுங்காய் - வெள்ளரி. வாலரியரி - கிளியுறற் பட்டை. வாலருவி - ஒருவகைத் தியானம். வாலலீலை - இளமை விளையாட்டு. வாலவாய் - மதுரை. வாலவயம், வாலாவாயசம் - வைடூரியம். வாலறிவன் - கடவுள். வாலாட்டிக்குருவி - கருங்குருவி. வாலாட்டு - செருக்கான செயல். வாலாதபம் - காலை வெய்யில். வாலாமை - அசுத்தம், மாதர் சூதகம். வாலாயம் - மிகுபழக்கம், சாதாரணம். வாலி - ஒரு குரங்க அரசன், அமாவாசைக்குபின் அடுத்த நாள், மழைத் தூறல், திருவாலியமுதனார். வாலிது - தூயது, வெண்மையானது, நன்மையானது, வலி. வாலிபம் - இளமை. வாலியன் - தூய்மையுடையவன். வாலியோன் - பலராமன். வாலீசன் - அறிவிலான். வாலுகம் - வெண்மணல், மணற் குவியல். வாலுங்கி, வாலுந்தி - கக்கரி. வாலுருவிவிடுதல் - துன்பம் செய்யத் தூண்டிவிடுதல். வாலுவநூல் - பாக சாத்திரம். வாலுவன் - சமைப்போன். வாலுளுவை - கொடிவகை. வாலேந்திரபோளம் - வெள்ளைப் போளம். வாலேயம் - கழுதை. வாலை - இருதுவாகாத பாலப் பருவப் பெண், சத்திபேதங்களுள் ஒன்று, திராவகம், வடிக்கும் பாண்டம். வாலைரகுபதிகாரம் - சீனக்காரம். வாலைரசம் - இரச கர்ப்பூரம். வால் - இளமை, தூய்மை, வெண்மை, நன்மை, பெருமை, மிகுதி, விலங்கு குருவிகளின் தொங்கும் உறுப்பு, நீளமானது, வாலுளுவை. வால்மிளகு - மிளகு வகை. வால்மீகர் - வடமொழி இராமாயண மியற்றிய புலவர். வால்மீன் - வால்வெள்ளி. வால்முறுக்குதல் - தூண்டிவிடுதல். வால்வரிக்கொடுங்காய் - வெள் ளரிக்காய். வால்வெடித்தல் - கோபத்தினால் வாலைத் தூக்கி அடித்தல். வாவயம் - துளசி. வாவரியுரி - கிளியூறற் பட்டை. வாவல் - தாண்டுகை, வெளவால், வயல். வாவன்ஞாற்று - சித்திரகவி வகை. வாவி - நீர்நிலை, ஆற்றோடை. வாவிப்புள் - அன்னம். வாவுதல் - தாண்டுதல், தாவுதல். வாழி - வாழ்க, ஓர் அசைச்சொல். வாழித்திருநாமம் - ஆசாரியரை வாழ்த்தும் பாடல். வாழிய - வாழி, ஓர் அசைச்சொல். வாழுமோர் - வாழ்பவர். வாழை - கதலி வகை. வாழைமலடி - ஒரே பிள்ளையைப் பெற்றவள். வாழையடிவாழை - இடையறாது தொடர்ந்துவரும் சந்தானம். வாழ் - முறைமை. வாழ்க்கை - சீவிக்கை, வாணாள், ஊர், மருத நிலத்தூர். வாழ்க்கைத்துணை - மனையாள். வாழ்க்கைப்படுதல் - மணமாதல். வாழ்ச்சி - வாழ்க்கை, செல்வம். வாழ்ச்சிப்படுத்துதல் - வாழ வைத்தல். வாழ்த்தணி - இன்னார்க்கு இன்ன நன்மை இயைக என்று முன்னியது விரிக்கும் அலங்கார வகை. வாழ்த்தியல் - தலைவனைப் புலவன் வாழ்த்தும் புறத்துறை. வாழ்த்து - ஆசி, நூலின் முதலில் கூறும் கடவுள்துதி, மங்களம் பாடுகை. வாழ்த்துதல் - ஆசிகூறுதல், துதித்தல். வாழ்த்தெடுத்தல் - துதித்தல். வாழ்நர் - வாழ்வோர். வாழ்முதல் - கடவுள். வாழ்விழத்தல் - கணவனை இழத்தல், மனைவியை இழத்தல். வாழ்வு - நல்வாழ்க்கை, சீவனம் உறைவிடம், ஊர், உயர்ந்த பதவி. வாளகம் - வெட்டிவேர். வாளகிரி - சக்கரவாளம். வாளப்பன் - பழநிமலை வாணர் வணங்கும் தேவதை. வாளமலை - வாள்வீச்சு. வாளம் - வாள், வட்டம், சக்கரவாளம், சக்கரவாகம். வாளரம் - மரம் அறுக்கும் வாள், கூர்மையாக்க உதவும் அரம். வாளரி - சிங்கம். வாளவரை - கொடிவகை. வாளா - மௌனமாய், அலட்சியமாய், பயனின்றி. வாளாங்கு - வாளா. வாளாண், வாளாண்மை - வாள் வீரம். வாளாது - வாளா. வாளாமை - மௌனம். வாளாலவழிதிறந்தான் - பாண்டிய அரசர் சிலரின் பட்டப் பெயர். வாளால்வழிதிறந்தான் குளிகை - பழைய நாணய வகை. வாளி - வாள்வீரன், வட்டமாக ஓடுகை, ஒருவகைக் காதணி நீர் அள்ளும் ஏனம். வாளிகை - காதணி. வாளிபோதல் - வட்டமாக ஓடுதல். வாளியம்பு - அலகம்பு. வாளுழத்தி - கொற்றவை. வாளுழவன் - படைவீரன், படைத்தலைவன். வாளெடுப்பான் - அரசனது வாளை எடுத்துச் செல்பவன். வாளேறு - வாள்வெட்டு, ஒளியேறுகை. வாளை - மீன்வகை. வாள் - ஒளி, விளக்கம், கூர்மை, கொல்லுகை, கொடுமை, ஈர்வாள், காத்திகை. வாள்கைக்கொண்டாள் - துர்க்கை. வாள்செலவு - எதிர்த்துவந்த அரசனது பெரும் படையிடத்து எதிருன்றும் வேந்தன் அரசவாளை முன்னதாக விடுத்தலைக் கூறும் புறத்துறை. வாள்வட்டணை - வாட்போரில் இடசாரி வலசாரியாகச் சுற்றுகை. வாள்வரி - புலி. வாள்வரிக்கொடுங்காய் - வெள்ளரிக்காய். வாள்வலம் - வாள் வீரம். வாள்வீரம் - வல்வம், வாட்போர்த் திறமை. வாறு - விதம், அடையத்தக்க பேறு. வாறோசுசூடன் - கர்ப்பூர வகை. வாற்கோதுமை (வாளி) - கோதுமை வகை. வானகம் - ஆகாசம், விண்ணுலகம். வானதி - கங்கை. வானநாடன் - தேவலோக வாசி. வானநாடி - சுவர்க்கலோகத்தவள், பொன்னாங்காணி. வானபத்தியம் - பூ தோன்றாது காய்க்கும் மரம். வானப்பிரத்தம் - மனைவியுடன் காட்டிற்குச் சென்று தவம் செய்யும் நிலை. வானப்பிரியை - இலுப்பை மரம். வானமாமாலை - நாங்கு நேரியிலுள்ள திருமால் கோயில். வானம் - ஆகாயம், தேவருலகு, மேகம், மழை, உலர்ந்த மரம், மரக்கனி. வானம்பாடி - புள் வகை, சாதக பட்சி. வானம்பார்த்த பூமி - மழையால் விளையும் பூமி. வானரப்பசை - நண்டு. வானரமகள் - வானுலகத்துப் பெண், பெண்குரங்கு. வானரம் - குரங்கு. வானவரம்பன் - சேரன். வானவர்க்கோன் - இந்திரன். வானவூர்தி - ஆகாய விமானம். வானாடு - சுவர்க்கம். வானி - மேற்கட்டி, துகிற்கொடி, ஆன்பொருநை, காற்றாடிப் பட்டம், மின்னற் கொடி, பவானி ஆறு, படை. வானிலை - வெப்ப தட்ப நிலை. வானிழல் - அசரீரி. வானிறை - நீர் நிறைந்த மேகம். வானீரம் - வஞ்சிக்கொடி. வானுலகு - கவர்க்கம். வானேறு - இடியேறு. வானொலி - இரேடியோ (radio). வானோக்குநிலையம் - வானகோளங்கள் முதலியவற்றைக் கவனிக்கும் சோதனா நிலையம். வானோங்கி - ஆல். வானோர் - தேவர். வானோர்கோமான் - இந்திரன். வான் - ஆகாயம், மூலம் பிரகிருதி, மேகம், மழை, தேவருலகு, அமிர்தம், நன்மை, பெருமை, அழகு, வலிமை, நேர்மை. வான்கண் -சூரியன். வான்கழி - பரலோகம். வான்கொடி - மின்னற்கொடி. வான்கோழி - கோழி வகை. வான்பதம் - முத்தி. வான்பயிர் - நன்செய் புன்செய் பயிரல்லாத வெற்றிலை வாழை கரும்பு முதலிய தோட்டப் பயிர். வான்புலம் - உண்மை அறிவு. வான்மகள் - இந்திராணி. வான்மணி - சூரியன். வான்மீகம் - குங்குமப்பூ. வான்மீகி - வால்மீகி. வான்மீகியார் - சங்க காலப் புலவர் (புறம். 358). வான்மீன் - நட்சத்திரம், வால்நட்சத்திரம். வான்மை - தூய்மை, வெண்மை. வாய்மைந்தன் - வாயுதேவன். வான்மொழி - ஆகாயவாணி. வான்வளம் - மழை. வான்றரு - கற்பக மரம். வான்றேர்ப்பாகன் - மன்மதன். வி வி - தொழிற்பெயர், விகுதி, பிறவினை விகுதி, காற்று, அழகு, விசை, பறவை. விகங்கம் - பறவை, அன்னம், காற்றாடி. விகங்கராசன் - கருடன். விகசித்தல் - மலர்தல். விகடகவி - நகைச்சுவை பாடல் செய்வோன். விகடசக்கரன் - விநாயகர். விகடம் - வேறுபாடு, நகைச்சுவை, மிகுதி, அழகு, கரடுமுரடு. விகடன் - செருக்குள்ளவன், பரிகாசம் செய்பவன். விகண்டித்தல் - ஆட்சேபித்தல், வேறு படுதல். விகமம் - பிரிவு. விகருணன் - விகர்ணன். விகர்ணன் - துரியோதனன் தம்பியருள் ஒருவன். விகர்த்தனன் - சூரியன். விகலம் - குறைவு, சிதைவு. விகலிதம் - அறிவின்மை. விகலை - நாழிகை, காலையின் அறு பதிலொரு பாகம் (Second). விகற்பத்தில் முடித்தல் - விளக்கிக் காட்டுதற்குப் பல திறப்பட்ட வாய்ப்பாட்டாற் பொருளை முடித்துக் காட்டும் உத்தி வகை. விறற்பநடை - மிறைக்கவி வகை. விகற்பம் - மலர்ச்சி, பிரகாசம். விகாதம் - இடையூறு, கேடு. விகாரப்புணர்ச்சி - நிலைமொழி வருமொழிகளின் முதல் இடை கடை களில் வரும் தோன்றல் திரிதல் கெடுதலாகிய சந்தி வேறுபாடு. விகாரம் - வேறுபாடு, பௌத்தாலயம். விகாரவுவமை - உவமானத்தின் வேறுபாடே உபமேயமென்று சொல்லும் உவமை அணி வகை. விகாரி - 33 வது ஆண்டு. விகிதசமம் - வீதம் (Proporation). விகிதம் - ஒரே பரிமாணமுள்ள இரண்டு எண்ணின் சம்பந்தம் (Ratio). விகிதமுறாமூலம் - துல்யமான எண்ணாகவோ பின்னமாகவோ வரையறவு செய்யமுடியா மூலம் (Surd). விகிரம் - பறவை. விகிருதம் - ஒரு படித்தல்லாத வேறு பட்ட செயல். விகிருதி - வேறுபாடு, அச்சம், பெயர். விகிர்தன் - கடவுள். விகிர்த்தல் - முரடாதல். விகுணி - கள். விகுதி - பகுபத உறுப்பினுள் இறுதி நிலையான உறுப்பு. விகுருதி - வேறுபாடு. விக்கல் - தொண்டை விக்குகை. விக்கிதம் - குதிரை நடை வகை. விக்கிரகம் - உருவம், பகை, போர். விக்கிரம் - 13 வது ஆண்டு. விக்கிரமசகம், விக்கிரமசகாப்தம் - கி.மு. 57இல் தொடங்குவதும் விக்கிரமாதித்தன் பெயரால் வழங்குவதுமான ஆண்டு மானம். விக்கிரமசோழனுலா - ஒட்டக்கூத்தர் விக்கிரமசோழன் மீது செய்த உலாப் பிரபந்தம். விக்கிரமம் - பராக்கிரமம், மிகுபலம். விக்கிரமன் - வீரன். விக்கிரமார்கன் - உச்சயினியி லிருந்து அரசு செய்வதனும் தன் பெயரால் ஆண்டுமானம் வழங்கப் பெற்றவனுமான ஓர் அரசன். விக்கிரமிதித்தல் - வீரம் காட்டுதல். விக்கினம் - இடையூறு, தீது. விக்கு - விக்கல். விக்குதல் - வெளித்தள்ளுதல், விக்கலெடுத்தல். விக்குள் - விக்கல். விக்ஞாப்பியம் - வேண்டுகோள். விங்களம் - கபடம். விங்குதல் - மிகுதல், துளைத்தல். விசகலி - மல்லிகை. விசகலிதம் - சிதைவு. விசதம் - வெளிப்படையானது, எச்சில். விசயசரிதன் - வெற்றியாளன். விசயத்தம்பம் - வெற்றித்தூண். விசயதசமி - மகாளய அமாவாசைக் குப் பின்வரும் சுக்கிலபட்சத்துத் தசமி. விசயநகரம் - 16ஆம் நூற்றாண்டில் விளங்கிய தென்னிந்திய இராச்சி யத்தின் தலைநகரும் ஹம்பி என்று வழங்குவதுமான நகரம். விசயலக்குமி - வெற்றி இலக்குமி. விசயம் - கருப்பஞ்சாறு, கருப்புக் கட்டி, பாகு, வெற்றி, வருகை, பொருள், பரிவேடம், தருமனுடைய சங்கு. விசயன் - அருச்சுனன், திருமாலின் வாயில் காப்போருளொருவன், கடுக்காய். விசயார்த்தம் - வெள்ளிமலை. விசயாலயன் - 9 ஆம் நூற்றாண்டில் ஆண்ட ஒரு சோழ அரசன். விசயை - துர்க்கை, பார்வதி, வீரலக்குமி. விசர் - பைத்தியம். விசர்க்கம் - ஒன்றன்மேலொன்றாய் இரட்டைப்புள்ளி வடிவாக எழுதப் படும் ஓர் வடமொழி எழுத்து, அபான வாயு, ஒழிகை. விசார்ச்சனம் - வெளிப்போக்குகை. விசலி - சீந்தில். விசலிகை - கொடி மல்லிகை. விசளை - சட்டி. விசாகப்பெருமாளையார் - சரவணப் பெருமாளையரின் சகோதார் (19ம் நூற்.). விசாகம் - 16 ஆம் நட்சத்திரம். விசாகன் - முருகக் கடவுள். விசாணம் - விலங்கின் கொம்பு. விசாயத்ல் - மேலிடுதல். விசாரசருமர் - சண்டேசுர நாயனார். விசாரம் - ஆலோசனை, ஆராய்ச்சி, கவலை. விசாரிதன் - புகழ் மிக்கவன். விசாரித்தல் - வினாவுதல், ஆராய் தல். விசாலம் - இடப்பரப்பு, வெண்கடம்பு, வாழை. விசாலாட்சி - உமை. விசாலித்தல் - விரிவு பெறுகை. விசாலை - உச்சியினி நகரம், மிதிலை நாட்டிலுள்ள ஒரு பட்டினம். விசி - கட்டு, கட்டில், பாறையின் இறுக்கும் வார், தண்டு. விசிகம் - அம்பு, இருப்புலக்கை. விசிகரம் - அலை. விசிகை - முலைக்கச்சு. விசிட்டம் - குணத்தோடு கூடியது, மேன்மை உள்ளது. விசிட்டாத்துனுவைதம் - சித்து அசித்து என்னும் இரண்டும் கடவுளுக்கு உடலாதலால் அவ்விரண்டும் கடவுளும் ஒன்று எனக் கூறும் இராமானுச மதம். விசிதம் - வெண்மை. விசித்தல் - இறுகக்கட்டுதல், விம் முதல். விசிப்பலகை, விசிப்பு - ஊஞ்சற் பலகை. விசியுழி - உண்மையில் நோக்க மின்றி வெற்றியை வேண்டுவோன் செய்யும் வாதவகை. விசிரமித்தல் - இளைப்பாறுதல். விசிறி - காற்றை அசைவிக்க வீசும் கருவி. விசிறுதல் - வீசுதல், சொரிதல், போக்குதல். விசு - மேடதுலா ராசிகளில் சூரியன் பிரவேசிக்கும் காலம், வியாழ வட்டத்தில் 15 ஆவது ஆண்டு. விசுத்தம் - மிகு தூய்மை. விசுத்தி - பதினாறிதழ்த் தாமரை வடி வினதாகக் கருதப்படும் அடிநாத் தானம், ஐயம், ஒப்பு, திருத்தம். விசுமந்தசூரணம் - எலுமிச்சை யிலை நாரத்தையிலை கருவேப் பிலை முதலியன கூட்டிச் செய்யும் சூரண வகை. விசும்பாளர் - தேவர். விசும்பு - ஆகாயம், தேவலோகம், மேகம், திசை, வீம்பு. விசும்புவில் - சோதி வட்டம். விசும்பேறு - இடியேறு. விசுவகருமா - தெய்வலோகத்துத் தச்சன். விசுவகுத்தன் - உலகத்தைக் காப்பவன். விசுவசித்தல் - நம்புதல். விசுவதேவம் - பகல் 15 முகூர்த்தத் துள் ஏழாவது. விசுவதேவர் - தேவசாதி வகை யினர். விசுவநாதசாத்திரியார் - யாழ்ப்பாணப் புலவருளொருவர் (1835). விசுவநாதசெட்டிவெட்டு - பழைய நாள் நாணய வகை. விசுவநாள் - உத்தராடம். விசுவம் - எல்லாம், நெடுமால், சுக்கு. விசுவம்பரன் - கடவுள். விசுவரூபசேவை - கோயிலில் சுவாமி பள்ளி எழுச்சிக் காலத்தில் செய்யும் வணக்கம். விசுவரூபம்-கடவுளின் நிலை, பேருவம். விசுவரூபை - பார்வதி. விசுவன் - சீவான்மா. விசுவாசம் - நம்பிக்கை, உண்மை. விசுவாசி - வேங்கை மரம். விசுவாமித்திரசிருட்டி - நூதன மாகக் கற்பனை செய்யப்பட்டது. விசுவாமித்திரன் - ஓர் இருடி. விசுவாவசு - 60 ஆண்டில் 39 ஆவது. விசுவேசுவரி - பார்வதி. விசூசிகை - வாந்திபேதி நோய். விசேடணம் - அடைமொழி. விசேடதீட்சை - மாணாக்கனைச் சிவ பூஜை செய்தற்கு யோக்கியனாக்கும் இரண்டாவது தீட்சை. விசேடம் - சிறப்பு, அடைமொழி, சிறப் பியல். விசேடியம் - அடையடுத்தது. விசை - வேகம், நீண்டு சுருங்கும் தன்மை, பலம், மர வகை, தடவை. விசைதிறத்தல் - வேகமாக வெளிப் படுதல். விசைத்தல் - வீசுதல், துள்ளுதல், சிதறுதல், கடுமையாதல். விசைமானி - டைனமோ மீட்டர். விசையம் - வெற்றி. விசையன் - விசயன், அருச்சுனன். விச்சாதரர் - விஞ்சையர். விச்சாதரி - வித்தியாதரப் பெண். விச்சாவாதி - விந்தையால் சாமர்த்திய மாக வாதிப்பவன். விச்சிரவசு, விச்சிரவா - இராவணன் தந்தை. விச்சு - விதை. விச்சுவசித்து - பிற நாடுகளை எல்லாம் வென்று அடிப்படுத்திய பின் நடத்தும் யாக வகை. விச்சுவநாதன் - காஞ்சியில் கோயில் கொண்டருளியிருக்கும் சிவன். விச்சுளி - மீன்கொத்திப்புள். விச்சுளிப்பாய்த்தல் - கழைக் கூத் தாடியின் விசேடமான ஆட்ட வகை. விச்சை - கல்வி, மாயவித்தை, மந்திரம், வித்தியாத்துவம், தெரு. விஞ்சம் - விந்திய மலை. விஞ்சனம் - அடையாளம், கறி. விஞ்சுதல் - மிஞ்சுதல், மேலாதல். விஞ்சை - கலை, கடவுளைப் பற்றிய அறிவு, மாயவித்தை, மந்திரம், விஞ்ஞையர் உலகு. விஞ்சையர் - பதினெண் கணத்துள் ஒரு சாரார். விஞ்சையன் - புலவன், வித்தியாதர உலகத்தவன். விஞ்ஞாபனம் - வேண்டுகோள். விஞ்ஞானகலர், விஞ்ஞானாகலர் - ஆணவ மலம் ஒன்றே உடைய ஆன்மாக்கள். விஞ்ஞானமய கோசம் - அறிவு மயமாக உள்ள உடல். விஞ்ஞானம் - உண்மை அறிவு. விஞ்ஞானேசுவரர் - 11 ஆம் நூற் றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த வரும் யாஞ்ஞவல்கியம் என்ற ஸ்மிருதிக்கு மிதாட்சரம் என்ற உரை நூலெழுதியவருமான ஆசிரியர். விஞ்ஞை - விஞ்சை. விடகண்டன் - சிவன். விடகலை - உடம்பில் ஒரு தானம். விடகாரி - விட டைவத்தியன். விடக்கு - இறைச்சி. விடங்கம் - கொடுங்கை, சுவர்ப் புறத்து வெளிவந்துள்ள உத்தரக் கட்டை, வீட்டின் முகடு, இயற்கை யாக அமைந்த இலிங்கம், அழகு, ஆண்மை. விடங்கர் - சிறுவழி, முதலை. விடங்கன் - தானாக உண்டான இலிங்கம், அழகுடையவன், காமு கன். விடங்கு - அழகு, அணிகலன்களின் உறுப்பு, சிருங்கார விலாசம். விடங்கொல்லி - சகோரம். விடணம் - பிசம். விடதரம் - பாம்பு. விடதாரி - விடவைத்தியன். விடதாலி - பூரான் பூச்சி. விடத்தர், விடத்தல் - ஒருவகை முள்மரம். விடத்தேதொடரி, விடத்தேர், விடத்தேரை - முள்ளையுடைய மர வகை. விடந்தீஞ்சான் - கொல்லைப் பல்லி என்னும் பூடு. விடபம் - எருது, இடபராசி, மரக் கொம்பு, பெரும்தூறு, தூண், தளிர். விடபி - மரப் பொது. விடமரம் - எட்டி. விடமன் - குறும்பு செய்பவன். விடமுள் - தேள். விடம் - நஞ்சு, கேடு விளைப்பது, தேள், சுக்கின்தோல், வச்சநாபி, கெட்ட ஒழுக்கம், மரக்கொம்பு. விடம்பம், விடம்பு - உள்ளொன்று புறமொன்றான தன்மை, வேடம் பூணுகை. விடம்பை - பிளப்பு. விடயம் - காரியம், புலனாலறியும் பொருள், காம இன்பம். விடயாசத்தி - புலனால் நுகரப்படு பவற்றில் ஆசை. விடரகம் - மலைக்குகை, மலை. விடரி - மலை. விடருகம் - பூனை, பாம்பு. விடர் - நிலப்பிளப்பு, மலைக்குகை, முனிவரிருப்பிடம், காடு, பெருச்சாளி. விடலி - தூர்த்தப் பெண், 12 வயதுடையவள். விடலிபதி - துர்நடத்தை உள்ள மனைவியோடு வாழும் பார்ப்பான். விடலை - 16 முதல் 30 ஆண்டு வரையிலுள்ளவன், பெருமையிற் சிறந்தோன், வீரன், பாலை நிலைத் தலைவன், மருதநிலைத்தலைவன், இளநீர். விடல் - நீங்குகை. விடவல்லி - கீழாநெல்லி. விடவி - மரம். விடவு - விடலி. விடன் - தூர்த்தன், சோர நாயகன், வீரன். விடாக்கண்டன் - பிடிவாதமாக நின்று ஒன்றை நிறைவேற்றுவோன். விடாணம் - விலங்கின் கொம்பு. விடாதம் - மயக்கம். விடாப்படை - கையினின்றும் விடுபடாத வாள் குந்தம் போன்ற ஆயுதம். விடாப்பிடி - உறுதியாகப்பற்றுகை, பிடிவாதம். விடாய் - தாகம், ஆசை, விடுமுறை நாள். விடாலகம் - பூனை. விடிதல் - உதயமாதல், முடிவு பெறுதல், துன்பம் நீங்குதல். விடிமீன் - விடிவெள்ளி. விடியல் - பொழுது உதயமாகும் வேளை, வெளியிடம். விடியல் வைகறை - விடிதற்கு முற்பட்ட வைகறை. விடியற்பண் - பூபாளம். விடியாவிளக்கு - நந்தாவிளக்கு. விடிவு - காலை, இன்பம், வருகை. விடிவை - விடியல். விடிவோரை - அதிகாலை. விடுகதை - பிதிர் (நொடி). விடுகவி - தனிப்பாட்டு. விடுகாது - தொள்ளைக் காது. விடுகாலி - அலைந்து திரியவிட்ட மாடு. விடுகுதிரை - பகைவர் மேல் விடும் குதிரைப் பொறி. விடுதலம் - நிலா முற்றம். விடுதலை - சுதந்தரம், ஓய்வு. விடுதல் - நீங்குதல், நீக்குதல், அனுப்பு தல், எறிதல், சொரிதல், சொல்லுதல், அவிழ்தல், உண்டா குதல், நிறுத்துதல். விடுதி - தங்குமிடம். விடுதோல் - மேல்தோல். விடுத்தல் - போகவிடுதல், போக் குதல், பிரித்தல், பிரயோகித்தல், வெளிப் படக்கூறல், விடை பெறு தல். விடுநகம் - கிட்டிக்கோல். விடுநிலம் - தரிசு நிலம். விடுபடை - எறியப்படும் படை. விடுபூ - தொடுக்காத பூ விடுப்பு - நீக்கம், துருவி அறியும் தன்மை, விநோதமானது (Curiosity). விடுமலர் - மலர்ந்தபூ, விடுபூ. விடுமுறை - ஓய்வு நாள். விடுவாய் - நிலப்பிளப்பு. விடுவாய் செய்தல் - அரிதல். விடுசி - அம்பு. விடேல்விடுகு - பல்லவ அரசர் சிலரின் சிறப்புப் பெயர். விடை - மறுமொழி, அமைதி, அசைவு, மிகுதி, எருது, இடபராசி, எருமைக் கடா, மரையின் ஆண், ஆட்டுக்கடா, வெருகு, இளம்பாம்பு. விடைஆளி - பருந்து வகை (Fishing eagle). விடஆலா - ஒருவகைப்பருந்து (Grey headed fishing eagle). விடைகொள்ளுதல் - செல்ல உத்தரவு பெறுதல். விடைகோள், விடைதழால் - கோபம் மூட்டிவிடப் பட்ட ஒன்றினைத் தழுவிப் பிடிக்கை. விடைக்கந்தம் - மணித் தக்காளி. விடைத்தல் - தடுத்தல், வருந்துதல், சோர்தல், பெருங்கோபம் கொள் ளுதல், மிகுதல், குற்றப்படுத்துதல். விடைப்பாகன் - சிவன். விடைப்பு - வேறுபடுத்துகை, நீக்குகை. விடைப்பேறு - வரி வகை. விடைமுகன் - நந்தி. விடைமுரிப்பு - எருத்தின் திமில். விடையதிகாரி - விடையிலதிகாரி. விடையுச்சன் - சந்திரன். விட்சேபசத்தி - ஒடுங்கி விரியும் சத்தி. விட்டகுறை - முன்பிறப்பில் பயின்று விட்டதன் குறை. விட்டப்பட்டினி - பல நாளாகத் தொடர்ந்து கிடக்கும் பட்டினி. விட்டபிறப்பு - சென்ற பிறப்பு. விட்டம் - வட்டத்தின் குறுக்களவு, தேகம், அவிட்டம். விட்டரம் - தவத்தோர், பீடம். விட்டலக்கணை - வாசகத்தின் பொருளை இயைபின்மையாற் கை விட்டு அவ்வாசகத்திற்கு வேறு பொருள் கொள்ளுமாறு நிற்பது. விட்டவர் - பகைவர். விட்டவாசல் - சிறப்புக் காலங்களில் அரசர் முதலியோர் சென்று வரும் கோயில் வாயில். விட்டிகை - விட்டில். விட்டிசை - அசையுள் எழுத்து முதலியன பிரிந்திசைக்கை, பாட் டில் வரும் தனிச்சொல். விட்டிருத்தல் - பகைமேற் சென்றோர் பாசறையில் தங்குதல். விட்டில் - சிறுபூச்சி வகை, பிராய். விட்டு - விட்டுணு. விட்டுசித்தர் - பெரியாழ்வார். விட்டுணு - திருமால், வியாபகன், ஆதித்தருள் ஒருவர். விட்டுணுபதி - வைகாசி ஆவணி கார்த்திகை மாசி மாதங்களின் சங்கிரமண காலம். விட்டெறிதல் - தூரவிழும்படி எறிதல். விட்டேறு - வேல், எறிகோல், இகழ்ந்து கூறும் கடுஞ்சொல். விட்டேற்றாளன், விட்டேற்றி - சுற்றத்தினின்று நீங்கிப் பிறரையும் அவ்வாறு செய்விப்போன். விட்டை - விலங்குகளின் மலம். விட்புலம் - விண்ணுலகம். விண் - ஆகாசம், மேலுலகம். விண்கொள்ளி - எரிகொள்ளி (விண் வீழ் மீன்). விண்டலம் - ஆகாசம். விண்டல் - மேலுலகம். விண்டாண்டு - ஊஞ்சல். விண்டார் - பகைவர். விண்டு - திருமால், மேலுலகம், மேகம், மலை, மூங்கில். விண்டுபதம் - ஆகாசம். விண்டுபலி - கருக்கொண்ட மகளிர்க்கு அக்கரு நிலைத்தற் பொருட்டுச் செய்யும் சடங்கு. விண்டுராதன் - பரீட்சித்து. விண்டேர் - கானல். விண்ணகர் - வைக்குந்தம். விண்ணதிர்ப்பு - இடிமுழக்கம். விண்ணப்பம் - பெரியோர் முன் பணிந்து கூறும் அறிவிப்பு. விண்ணமங்கலம் - சாதியினின்று விலக்கப்பட்ட பறையர் இறந்த பின் செல்வதாகக் கருதப்படும் இடம். விண்ணவன் - தேவன், அருகன். விண்ணவினைத்தல் - மிக்க ஒளி யால் கண்தெறித்தல். விண்ணாணம் - சாலாக்கு, நாகரிகம், இடம்பம். விண்ணு - திருமால். விண்ணுலகம் - சுவர்க்கம். விண்ணேறு - இடி. விண்ணோர் - தேவர். விண்மணி - சூரியன். விண்மீன் - நட்சத்திரம். விண்முழுதாளி - இந்திரன். விண்விணைத்தல் - கண் முதலியன தெறித்தல். விண்வீழ்கொள்ளி - எரிவெள்ளி. விதண்டம், விதண்டாவாதம், விதண்டை - பிறர் கூறுவதை மறுத்துத் தன் கொள்கையை நாட்டாது வீணே கூறும் வாதம். விதண்டாவாதி - விதண்டாவாதம் செய்பவன். விதத்தல் - மிகுதல், சிறப்பித்து உரைத்தல். விதப்பு - சிறப்பித்து, எடுத்துச் சொல் லுகை, விதி, விவரம், மதிலுறுப்பு, மிகுதி, விரைவு, நடுக்கம். விதப்புவிதி - சிறப்புவிதி. விதம் - மாதிரி, வகை, உபாயம். விதரணம், விதரணை - கொடை, சமர்த்து, விவேகம், தயாளம். விதர்ப்பம் - பீரார் நாடு. விதலம் - கீழேழுலகத்தொன்று. விதலை - நடுக்கம், பூமி. விதலையாப்பு - செய்யுளின் முதலும் இடையும் கடையும் பொருள் கொள் ளும் முறை. விதவிடுதல் - சிறப்பித்துக் கூறுதல். விதவை - கைம்பெண், சோறு, கூழ், குழம்பு, குழைகை. விதறு - நடுக்கம். விதனம் - களைப்பு, வேட்டம், கடுஞ் சொல், மிகுதண்டம், சூது, பொரு ளீட்டகம், கள், காமம் என்ற எழுவகைக் குற்றங்கள், துன்பம். விதா - பயனின்மை. விதாதா, விதாதிரு - பிரமன். விதாரம் - முள்ளிலவு, விசாரம். விதானம் - மேற்கட்டி, ஏற்பாடு, ஊழ், உபாயம், செய்யுள் வகை. விதானித்தல் - மேற்கட்டி, கட்டுதல். விதி - சட்டம், தீர்ப்பு, கட்டளை, கடமை, ஒழுக்கமுறை, அமைக்கும் முறை நீதி, ஊழ், பிரமன், இயல்பு, செய் தொழில். விதிக்கு - கோணத்திசை. விதிச்சூத்திரம் - இன்னதற்கு இது வரும் என்று முன் இல்லாததை மொழியும் சூத்திரம். விதிதம் - வெளிப்படை. விதித்தல் - கட்டளையிடுதல், உண் டாக்குதல், செய்தல், நிச்சயித்தல். விதிபாதம் - வியதி பாதம். விதிமுறை - நியமம். விதியர் - மந்திரிகள், தந்திரிகள். விதியுளி - யாகம், முறைப்படி. விதிரேகம் - வேற்றுமை அணி, வேறு பாடு. விதிர்தல் - நடுங்குதல். விதிர்த்தல் - நடுங்குதல், தெறித்தல், அசைத்தல், பலவாகப் போக விடுதல், சொரிதல். விதிர்ப்பு - அச்சம், நடுக்கம், மிகுதி. விதிர்விதிர்த்தல் - நடுங்குதல், ஆவற் படுதல். விதிவசம் - ஊழ் வலி. விதிவத்து - முறைப்படி. விதிவாக்கியம் - இதனைச் செய்க என்று விதிக்கும் வாக்கியம். விதிவிலக்கு - விதிக்கு விலக்கைக் கூறும் சூத்திரம். விது - சந்திரன், குபேரன். விதுடி - கற்றறிந்தவன். விதுப்பு - நடுக்கம், விரைவு, பரபரப்பு, வேட்கை. விதும்புதல் - நடுங்குதல், விரைதல், ஆசைப்படுதல். விதுரன் - திருதராட்டிரன் பாண்டு இவர்கட்குத் தம்பி. விதுலம் - ஒப்பின்மை. விதுவிதுத்தல் - மகிழ்ச்சியுறுதல். விதுவிதுப்பு - ஆசை, உடலின் குத்து நோவு, நடுக்கம். விதூடகன் - நகைச்சுவை விளைப் போன். விதூடணம் - பெருநிந்தை. விதூரசம் - வைடூரியம். விதேககைவல்லியம் - பிரமஞானம் தோன்றி அஞ்ஞானமும் அதன் காரியமாகிய உடம்பு முதலா யினவும் உடன் நசிக்கை. விதேகம் - உடலின்மை, பீகார் நாடு. விதேகை - மிதிலை, முத்தி அடைந்த காலத்தில் தன் ஆனந்த அனுபூதியைத் தியானித்திருக்கை. விதேசம் - அன்னிய தேசம். விதேயன் - சொற்படி நடப்பவன். விதை - வித்து, தன்மாத்திரை. விதைஇல்லை - சதை வளர்ச்சி (Carbuncle). விதைத்தல் - வித்துதல், பரபரப்பு செலுத்துதல். விதையம் - விதேகம். வித்தகம் - கல்வி, சின்முத்திரை, சாமர்த்தியம், திருத்தம், வடிவின் செம்மை, கைத்தொழில். வித்தகன் - வல்லவன், கம்மாளன், தூதன், இடையன். வித்தம் - ஞானம், பொன், பழிப்பு, கூட்டம், சூதிற் சிறுதாயம். வித்தரம் - அகலம். வித்தரித்தல் - விரித்தல். வித்தாயம் - சூதின் சிறுதாயம். வித்தாரம் - விரிவு, விரைவாகப் பாடும் பிரபந்தம், புலமை. வித்தியர் - கம்மாளர். வித்தியாகலை - ஆன்மாக்களுக்கு அனுபவஞானத்தைத் தருவதாகிய சிவசத்தி. வித்தியாதரர் - ஒருவகைத் தேவ சாதியார். வித்தியாரணியர் - மாதவர் (13ம் நூற்.). வித்தியார்த்தி - கல்வி கற்போன். வித்தியாலயம் - பாடசாலை. வித்தியாவினோதம் - கல்வியில் பொழுது போக்குகை. வித்தியாணுபோகம் - கல்வி வளர்ச் சிக்காக விடப்படும் மானியம். வித்து - விதை. வித்துதல் - விதைத்தல், பரப்புதல். வித்துத்து - மின்னல். வித்துரு, வித்துருமம் - பவளம். வித்துவசனம் - புலவர் திரள். வித்துவமுத்திரை - வித்துவப் பட்டம். வித்துவான் - அறிஞன். வித்துவேடணை - நட்பான இடத்து விரோதம் செய்விப்பதாகிய வினை. வித்தை - கல்வி, தந்திரம். வித்தைதரர் - விஞ்சையர். விநயசம்பனனதை - குரு முதலாயி னாரை உபசரிப்பதில் ஆசை. விநயம் - வணக்கம், நயமொழி, உபாயம். விநாசம் - அழிவு. விநாயகசதுர்த்தி - ஆவணி மாதத் துச் சதுர்த்தி. விநாயகபுராணம் - கச்சியப்ப முனிவர் செய்த ஒரு புராணம். விநாயகன் - கணபதி, அருகன். விநியோகம் - பிரித்து வழங்குகை. விநோதரசமஞ்சரி - வீராசாமிச் செட்டியார் இயற்றிய ஒரு வசன நூல் (19ம் நூற்.). விந்தம் - விந்தியம், குருவிந்தம், தாமரை, 64 கோடி, காடு, செம் புளிச்சை. விந்தன் - இடையன். விந்தாடவி - விந்தமலைக்காடு. விந்தியம் - ஒரு மலைத்தொடர். விந்து - புள்ளி, துளி, சுக்கிலம், நெல் மூக்கு, வட்டம், சிவதத்துவம், சுத்த மாயை. விந்துதத்துவம் - சத்தி தத்துவம். விந்துநாதம் - வீரியம். விந்தை - துர்க்கை, வீரலக்குமி, இலக்குமி, அழகு, ஆச்சரியம், விந்தியம். விபகவிதம் - கணிதக் கழித்தல். விபக்கம் - அனுமான உறுப்புள் துணி பொருளில்லாத இடம். விபசாரி - சோரம் போனவள். விபசித்து - புத்தருள் ஒருவர். விபஞ்சி, விபஞ்சிகை - வீணை வகை. விபத்தி - வேறுபாடு, ஆபத்து. விபத்து - ஆபத்து. விபரீத ஞானம் - திரிபுணர்ச்சி. விபரீதம் - மாறுபாடு, பிரதிகூலம், அதிசயம். விபரீதவுவமை - தொன்றுதொட்டு வரும் உவமானத்தை உவமேய மாக்கி, உவமேயத்தை உவமான மாக்கிச் சொல்லும் அணிவகை. விபலம் - பயனின்மை. விபவ - 2ஆவது ஆண்டு. விபவம் - பெருமை, செல்வம், வாழ்வு, மோட்சம், திருமாலின் மச்ச வர்ம அவதார நிலை. விபற்சு - அருச்சுனன். விபாகம் - பிரிவு. விபாகரன் - சூரியன். விபாடம் - பிளக்கை. விபாடை - மாறுகோளுரை. விபாண்டகன் - ஒரு முனிவன். விபாவரி - இராத்திரி, பார்வதி. விபாவனை - காரணமின்றியே காரியம் பிறந்ததாகச் சொல்லும் அணி வகை, பார்வதி. விபினம் - காடு. விபீடணன் - இராவணன் தம்பி யருள் ஒருவன். விபு - எங்கும் வியாபகமுள்ளது. விபுதர்கந்தம் - செங்கழுநீர். விபுதன் - அறிஞன், தேவன், சந்திரன். விபுத்தி - சிறந்த புத்தி. விபுத்துவம் - எங்கும் நிறைந்த தன்மை. விபுலம் - விரிவு, அகலம், பெருமை, பூமி. விபுலமதி - மற்றவர் மனத்தை அறியும் ஞானம். விபுலானந்தர் - யாழ் நூலியற்றியவர் (1892 - 1947). விபுலை - பூமி. விபூதி - செல்வம், சாம்பல், திருநீறு. விபூதிக்காணிக்கை - பழைய வரி வகை. விப்பிரகீர்ணம் - அபிநய வகை. விப்பிரநாராயணன் - தொண்டரடிப் பொடி. விப்பிரயோகம் - காதலரின் பிரிவு, வெய்துயிர்த்து இரங்குகை. விப்பிரலம்பம் - வஞ்சகம். விப்பிரன் - பிராமணன். விப்புருதி - புண். விப்ரன் - விப்பிரன். விமரிசம் - ஆராய்ச்சி, மனனம். விமரிசை - ஆடம்பரம். விமலம் - அழுக்கின்மை, தெளிவு. விமலர் - தீர்த்தங்கரருள் ஒருவர். விமலன் - பரிசுத்தமானவன், சிவன், அருகன். விமலி - பார்வதி, குப்பைமேனி. விமலை - சரசுவதி, இலக்குமி, பார்வதி, கங்கை, கோதாவரி. விமானபீடிகை - கோயிற் பலிபீடம். விமானம் - ஆகாய இரதம், சந்திரன் ஊர்தி, கர்ப்பக் கிருதத்தின் மேலுள்ள தூபி, தேவலோகம், உரோகிணி. விமானவாயில் - கோயில்வாயில். விமானிஅறை - Cock - pit. விமோசனம் - நீங்குகை. விம்பசாரகதை - ஒரு தமிழ்ப் பௌத்த நூல். விம்பசாரன் - புத்தரிடம் உபதேசம் பெற்ற மகத அரசன், கி.மு. (6 ஆம் நூ.). விம்பப்பதி விம்பநியாயம் - கண்ணாடியில் ஒன்றன் வடிவம் பல திறப்பட்டுக் காணப்படுதல் போன்ற நியாய நெறி. விம்பப்பிரதி விம்பபாவம் - ஒரு உருவமும் அதன் பிரதி பிம்பமும் போல வேற்றுமைப்பட்டிருந்தும் ஒன்றாக இருக்கும் தன்மை. விம்பம் - வட்டம, விக்கிரகம், பிரதி பிம்பம், உடல், ஒளி, கொவ்வை. விம்மல் - தேம்பி அழுகை, துன்பம், ஏக்கம், வீங்குகை, உள்ளப்பூரிப்பு, ஒலிக்கை. விம்மல் பொருமல் - துக்க மிகுதி. விம்மாத்தல் - விம்முதல். விம்மிதம் - உடல், அதிசயம், உவமை. விம்முதல் - தேம்பி அழுதல், வருந்துதல், பருத்தல், மிகுதல், மலர்தல், ஒலித்தல், ஈனுதல். விம்முயிர்த்தல் - பெருமூச்சு விடுதல். விம்முறவு - வருத்தம். வியங்கியம் - குறிப்புப் பொருள். வியங்கொள்ளுதல் - ஏவலைக் கொள்ளுதல், செலுத்துதல். வியங்கோள் - மரியாதை, ஏவல். வியஞ்சகம் - விளங்கும்படிச் செய்தல், விளங்கும் கருவி. வியஞ்சனம் - அடையாளம், மெய் யெழுத்து. வியட்டி - தனிப்பட்டது. வியதனம் - கள்ளுண்டல், காமம் முதலியவற்றாலுண்டாகும் குற்றம். வியதிரேகம் - வேறுபாடு, வேற் றுமை அணி. வியத்தம் - வெளிப்படை, புலனுக்கு அறிய வருவது. வியத்தல் - அதிசயித்தல், செருக் குறுதல், பாராட்டுதல். வியந்தம் - பண்வகை. வியந்தரம் - பிசாசு. வியந்தரர் - தேவருள் ஒருசாரார். வியபதேசம் - மாட்டேற்று. வியபிசரித்தல் - சாத்தியமில்லாத இடத்து ஏது இருப்பதாகக் தருக்க முறை பிறழக் கூறுதல். வியபிசாரம் - கற்பு நெறி தவறுகை. வியப்ப - ஓர் உவமை வாய்பாடு. வியப்பு - அதிசயம், மேம்பாடு. வியமம் - பாராட்டத்தக்கது. வியம் - ஏவல், உடல், போக்கு, வழி, சமமற்றது, முரட்டுத் தன்மை, ஒற்றைப்பட்ட எண், விரிவு, பறவை. வியய - 20 ஆவது ஆண்டு. வியயம் - பணச்செலவு. வியர் - வியர்வை. வியர்த்தம் - பயனின்மை. வியர்த்தல் - வேர்த்தல், மனம் புழுங்குதல், சினம்கொள்ளுதல். வியர்ப்பு - வியர்வை, சினம். வியர்வை - வியர், சினக்குறிப்பு. வியலகம், வியலிடம், வியலுள் - பூமி, அகலம். வியல் - அகலம், மிகுதி, காடு. வியவகரித்தல் - பேசுதல். வியவன் - ஏவல், செய்வோன், ஏவுவான், வழிச்செல்வோன். வியவு - வேறுபாடு. வியனுலகம் - தேவருலகம். வியன் - ஆகாசம், பெருமை, சிவப்பு, வியப்பு, எண்ணின் ஒற்றை. வியாகம் - விசாகம். வியாகரணம் - வடமொழி இலக் கணம். வியாகாதம் - யோகம் இருபத் தேழனுள். வியாகுலம் - துக்கம். வியாக்கியானம் - உரை. வியாக்கிரதீபம் - கோயில் காட்டும் தீப வகை. வியாக்கிரநகம் - புலிநகம் போன்ற அமைப்புள்ள கையுறை. வியாக்கிரபாதர் - ஓர் முனிவர். வியாக்கிரம் - புலி. வியாசம் - கட்டுரை. வியாசர் - வேதங்களை வகுத்து வரும் பிரமசூத்திரம் செய்தவரு மான ஒரு முனிவர். வியாடிகம் - பறவைக் கதி வகை. வியாதன் - வியாசன், வேடன். வியாதி - நோய். வியாத்தி - எங்கும் இருக்கை, நியதமான உடன் நிகழ்ச்சி. வியாத்திரன் - தொழில் நடத்து வோன். வியாத்துவம் - வியாபகத் தன்மை. வியாபகம் - எங்கும் இருக்கும் தன்மை. வியாபாரித்தல் - சொல்லுதல். வியாபாரத்தால் முறிந்தவன் - Bankrupt. வியாபாரம் - தொழில் வாணிகம். வியாபி - எங்கும் நிறைந்திருப்பது. வியாபிருதி - மறைக்கப்படா திருக்கை. வியாபினி - உடலில் பதினாறு இடங்களுள் ஒன்று. வியாமோகம் - பெருமோகம். வியாயாமம் - தேகப்பயிற்சி. வியாயோகம் - தலைவனது வீரச் செயலைக் கூறும் ஓர் அங்க முடைய நாடகம். வியாவகாரியம் - வழக்கத்தி லிருப்பது. வியாழக்குறிஞ்சி - குறிஞ்சி யாழ்த்திறத் தொன்று. வியாழசக்கரம் - அறுபது ஆண்டு வட்டம். வியாழசிநேகன் - சூரியன். வியாழம் - தேவகுரு, ஒரு கிரகம், வியாழக் கிழமை, பாம்பு. வியாழ மாலையகவல் - இடைச் சங்க நூல்களுள் ஒன்று. வியாழவட்டம் - வான மண்டலத்தில் குரு ஒருமுறை சுற்றிவரும் கால மாகிய பன்னீராண்டு. வியாழன் - வியாழம். வியாளம் - பாம்பு, புலி. வியானன் - இரத்த ஓட்டத்தை உண்டாக்கும் வாயு. வியூகம் - படை வகுப்பு, விலங்கின் கூட்டம். வியோகம் - சாவு. வியோமம் - ஆகாசம். வியோமரூபிணி - 16 கலைகளுள் ஒன்று (உடம்பிலுள்ளது) விரகம் - பிரிவு, காதலர்க்குப் பிரிவா லுண்டாகும் நோய், காமம். விரகறிவாளன் - அறிவுடையோன். விரகன் - சாமர்த்தியமுள்ளவன், சுற்றத்தான். விரகு - உபாயம், சாமர்த்தியம், தந்திரம், விவேகம், உற்சாகம், பணியாரம். விரகுளி - கிரமமாக. விரசம் - வெறுப்பு. விரசுதல் - செறிதல், பொருந்துதல். விரசை - தருப்பை, மாட்டுத் தொழுவம். விரணகாசம் - கருவிழியில் படரும் கண்நோய் வகை. விரணகாரி - புண்ணைச்சுடும் மருந்து, தோலைப் புண்ணாக்கும் மருந்து. விரணகிரந்தி - புற்றுநோய். விரணசன்னி - ஏற்புநோய். விரணப்பரு - கடைக்கண் விளிம் பில் உண்டாகும் சிறு பரு. விரணம் - காயம், புண்கட்டி, பகைமை, புல் வகை. விரணம்போக்கி - ஆடு தின்னாப் பாளை. விரதம் - நோன்பு, தவம், அருவருப்பு, ஒழிகை. விரதி - நோன்பு மேற்கொண்டோன், பிரமசாரி. விரத்தன் - உலகப் பற்று இல்லா தவன். விரத்தி - பற்றின்மை. விரலடிப்பான் - பறவை வகை (Osprey). விரலேறு - ஒருவகைத் தோற்கருவி. விரவலர், விரவார் - பகைவர். விரவியல் - வட எழுத்துக் கலந்து வரும் சொல். விரவு - கலப்பு. விரவுதல் - கலத்தல், அடைதல், ஒத்தல், பொருந்துதல், நட்புக் கொள்ளுதல். விரவுப்பெயர் - உயர்திணை அஃறிணைகளுக்குப் பொதுவான பெயர். விரளம் - செறிவின்மை. விரனல் - நெருக்கம். விரற்கடை, விரற்கிடை - விரலகல முள்ள அளவு. விரற்சாடு - விரலுறை. விரற்செறி - வளைந்த விரல் மோதிரம். விரனெரித்தல் - துக்கத்தால் விரல் களை நெரித்தல். விராகம், விராகு - பற்றின்மை. விராடன் - விராடதேசத்து அரசன். விராட்டு, விராட்புருடன் - பிரபஞ்ச ரூபமான பரப்பிரமம். விராதன் - ஓர் அரசன். விராதனன் - கொலைஞன். விராமம் - ஒற்றெழுத்து. விராய் - விறகு. விரி - விரித்தல், திரை, விரியன், பாம்பு. விரிசிகை - 36 கோவையுள்ள மாதர் இடை அணி. விரிச்சி - வாய்ச்சொல். விரிச்சிகன் - சூரியன், நிமித்தம், கூறுவோன். விரிச்சியோர்தல் - நற்சொல் கேட்க விரும்பி நிற்றல். விரிஞ்சன், விரிஞ்சி - பிரமன். விரிதல் - பரத்தல், வெடித்தல். விரிதூறு - புதர். விரித்தல் - விரியச் செய்தல், விளக்கி உரைத்தல், பரப்புதல். விரிநூல் - ஆகமங்கள். விரியம் - சிறுதுகில். விரிமுட்டு - பழைய கிராம வரிவகை. விரிமுரண் - ஒருவகை இசைப்பா. விரியல் - பரப்பு, ஒளி, மலர்ச்சி, பூமாலை. விரியன் - ஒருவகைப் பாம்பு. விரிவு - அகற்சி. விரிவுரை - விரிவான உரை, சொற் பொழிவு. விரீஇ, விரீகி - நெல். விரீடம் - வெட்கம். விருகம் - செந்நாய், மிருகம், விலங்கு. விருகோதரன் - பீமன். விருக்கம் - மரம். விருக்காதனி - கருவேம்பு. விருசு - வாணவகை. விருச்சிகம் - இராசி மண்டலத்தின் எட்டாவது பகுதி, கார்த்திகை மாதம், நண்டு. விருட்சம் - மரம். விருதல் - வீரர். விருதா - வீண். விருதாவளி - அரசர் முதலியோர் பெறும் பட்ட வரிசை. விருது - பட்டம், கொடி வெற்றிச் சின்னம். விருதுகட்டுதல் - ஒரு காரியத்தை முடிக்கத் திட்டம் கொள்ளுதல். விருத்தகங்கை - கோதாவரி. விருத்தகவிதை - வித்தாரகவி. விருத்தசேதனம் - சுன்னத்துச் சடங்கு. விருத்தம் - வட்டம், சொக்கட்டான் ஆட்டத்தில் விழும் தாயவகை, பா இனத்திலொன்று ஒழுக்கம், மூப்பு, முரண், குற்றம், பொல்லாவொழுக் கம், ஏதுப்போலிகளுள் ஒன்று, கூட்டம். விருத்தன் - முதியவன், மேலோன். விருத்தாசலம் - ஒரு சிவத்தலம். விருத்தாந்தம் - வரலாறு. விருத்தி - ஒழுக்கம், சுபாவம், தொழில், தொண்டு சீவிதமாக விடப்பட்ட நிலம், விரிவுரை, நாடக நூலின் நடை, வளர்ச்சி, இலாபம், செல்வம். விருத்திக்கடன் - வட்டிக்கு வாங்குங் கடன். விருத்தியுரை - விரிவுரை. விருத்திராசுரன் - இந்திரனால் கொலையுண்ட ஓர் அசுரன். விருத்திராரி - இந்திரன். விருத்தை - அதிக வயதானவள், 50 வயது கடந்தவள். விருந்தம் - பூ, பழம், முதலியவற்றின் காம்பு, சுற்றம், மனைவி. விருந்தனை - மனைவி. விருந்தாட்டு - ஆண்டு விழா. விருந்தாரம் - அழகு. விருந்தாவனம் - யமுனைக் கரை யிலுள்ள ஒரு இடம். விருந்தாற்றுதல் - விருந்திடுதல். விருந்தினன் - புதியவன், அதிதி. விருந்து - அதிதி முதலியோருக்கு உணவு இடுகை, அதிதி, புதியவன், புதுமை, நூலுக்குரிய வனப்புகளுள் ஒன்று. விருந்தை - துளசி. விருந்தோம்பல் - புதிதாக வந்த வரை உண்டி கொடுத்து உபசரித்தல். விருப்பம், விருப்பு - ஆசை, அன்பு, பற்று. விரும்புதல் - ஆசைப்படுதல். விருவிருத்தல் - பரபரத்தல். விருளை - பூண். விரூபக்கண்ணன் - சிவபிரான். விரூபம் - விகாரரூபம். விரேசகம் - பேதி மருந்து. விரேசனம் - மலங்கழிக்கை. விரை - வாசனை, நறும்புகை, கலவைச் சாந்து, பூந்தேன், மலர். விரைசொல் - விரைவைக் குறிக்கும் சொல். விரைதல் - வேகமாதல், மனம் கலங்குதல். விரைத்தல் - மனங் கமழ்தல். விரையாக்கலி - சிவனது கட்டளை, சிவன்மேல் சத்தியம். விரைவழித்தல் - வாசம் பூசுதல். விரைவாங்குதல் - விதையடித்தல். விரைவு - வேகம். விரோசனம் - சூரியன். விரோசனி - கடுக்காய். விரோதம் - பகை, மாறுபாடு. விரோதி - 23ஆவது ஆண்டு, பகைவன். விரோதிகிருது - 45 ஆவது ஆண்டு. விரோதித்தல் - பகைத்தல், முரண்படுதல். விலகுதல் - நீங்குதல், பிரிதல். விலங்கம் - விலங்கு. விலங்கரசு - சிங்கம். விலங்கல் - குறுக்காக இருக்கை, கலங்கல் நீர், விரசயம், பண்மாறி நரம்பு இசைக்கை. விலங்கி - வேலி. விலங்கினர் - பகைவர். விலங்கு - குறுக்கானது, மாவும் புள்ளும், மான், மாட்டப்படும் தளை, வேறுபாடு, தடை, உயிர் மெய் யெழுத்துக்களில் இ ஈ உ ஊ முதலிய உயிர்களைக் குறிக்கும் அடையாளமாக மேலுங் கீழு முள்ள வளைவு. விலங்குகதி - விலங்குப் பிறப்பு. விலங்குதல் - குறுக்கிடுதல், மாறு படுதல், விலகுதல், தடுத்தல், களைதல், அழித்தல், எறிதல். விலங்குநர் - விலகியிருப்பவர், தடுப்பவர். விலங்குபாய்தல் - குறுக்குப் பாய்தல். விலங்கூன் - விலங்குகட்கு உண விடும் அறச்செயல். விலட்சணம் - இலட்சணத்தோடு கூடாமை. விலர் - மரவகை. விலவிலத்தல் - மிக நடுங்குதல். விலவு - விலா. விலா - மார்பின் பக்கம். விலாசம் - விளையாட்டு, காமக்குறிப் போடு கூடிய செய்கை, நாடக நூல், முகவரி, அழகு. விலாசனை - மகளிர் விளையாட்டு. விலாசினி - பெண், விலைமகள். விலாசுதல் - அழகுற அணிதல். விலாடம் - ஆபாச விளையாட்டு. விலாப்புடை - விலா. விலாவணை - அழுகை. விலாவலக்கு - விலா எலும்பு. விலாவித்தல் - அழுதல். விலாவொடி - விலா ஒடியும்படி சிரிக்கை. விலாழி - குதிரையின் வாய் நுரை, யானைத் துதிக்கை, உமிழ் நீர். விலாளம் - பூனை. விலை - விற்கை, கிரயத்தொகை, மதிப்பு. விலைகூறுதல் - விலையைக் கூவிச் சொல்லுதல். விலைகொடுத்துயிர்காத்தல் - கொல்ல இருக்கும் பிராணிகளைப் பணம் கொடுத்து உயிர்மீட்கும் அறச் செயல். விலைகோள் - சிப்பி முத்தின் குணங் களுள் ஒன்று, கிரயமதிப்புப் பெறுகை. விலைக்காமர் - விலைமாதர். விலைசிராவணை - ஆவணம். விலைச்சேரி - பல பண்டம் விற்கும் இடம். விலைத்தீட்டு - விற்பனை ஓலை, அவணம். விலைநலப்பெண்டிர் - பரத்தையர். விலைப்பலி - பயன்கருதித் தெய் வங்களுக்கு இடும் பலி. விலைமகள் - பொதுமகள். விலையாட்டி - பண்டம் விற்பவள். விலையாள் - அடிமை. விலையிடுதல் - கிரயத் தொகை விதித்தல். விலைவன் - கூலியின் பொருட்டு ஒன்றைச் செய்பவன். விலோசனம் - கண், உட்கருத்து. விலோதம் - பெண்மயிர், மயிற் குழற்சி, பெருங்கொடி. விலோதனம் - பெரியகொடி, அலங்காரத்துக்காகக் கொண்டு செல்லும் கொடி, கண். விலோமம் - நேர் எதிர்டையான முறை. வில் - எய்தற்குரிய கருவி, வானவில் மூலநாள். வில்யாழ் - வில் பிடிப்பில் இணைந்து செறிந்த விரல். வில்லங்கம் - தடை, துன்பம். வில்லம் - வில்வம். வில்லரணம் - விற்படையாலான காவல். வில்லவன் - சோன், மன்மதன். வில்லார் - வேடர். வில்லாளன் - வில்தொழில் வல்ல வன். வில்லி - வில்லாளன், மன்மதன், அருச்சுனன், வில்லிபுத்தூராழ்வார். வில்லிடுதல் - ஒளி வீசுதல். வில்லிபாரம் - வில்லிபுத்தூர் செய்த பாரதம். வில்லிபுத்தூராழ்வார் - தமிழ்ப்பாரத நூலாசிரியர் பெரியாழ்வார் (14ஆம் நூற்.). வில்லிமை - வில்திறமை. வில்லியர் - இருளர் சாதியார். வில்லியாதன் - திண்டிவனத்து அருகிலுள்ள மாவிலங்கை நகரத் தில் வாழ்ந்த ஒரு தலைவன். வில்லுவம் - வில்வம். வில்லுழுதல் - விற்போர் செய்து வாழ்தல். வில்லூன்றிப்புழு - ஒருவகைப்புழு. வில்லேப்பாடு - அம்புவிழும் எல்லை. வில்லேருழவர் - வீரர், வேடர், பாலை நிலமாக்கள். வில்லை - வில்லாளர். வில்லோர் - வில்லாளர். வில்லோர்நிலை - வில்லில் அம்பைத் தொடுத்து எய்வார்க்குரிய பைசாசம் மண்டிலம் ஆலீடம் பிரத்தியாலீடம் என்னும் நிலை. வில்வட்டம் - வில் தொழில். வில்வம் - மர வகை. வில்வலன் - ஓரகரன். வில்விழா - மலைவேடர் தம் சிறுவர்க்கு வில் தொழில் பயிற்றத் தொடங்கும் சடங்கு. வில்விளக்கு - Are lamp. வில்வீசுதல் - ஒளிவிடுதல். வில்வேதம் - துனுர் வேதம். விவகரித்தல் - விரித்துக் கூறுதல், வழக்காடுதல். விவகாரம் - வழக்கு, தருக்கவாதம், நடத்தை. விவசாயம் - வேளாண்மை. விவஞ்சி - ஒருவகை இசைக்குழல். விவதானம் - மறைப்பு. விவரணம் - விவரக்குறிப்பு. விவரம் - விவரிப்பு, துவாரம், மலைக் குகை, இடைவெளி, விவேகம். விவரித்தல், விவரிப்பு - விரித்துக் கூறுகை. விவா - பெருமை, இரவு. விவாகம் - கலியாணம். விவாதம் - தர்க்கம். விவிதம் - பலவிதம். விவிலியநூல் - கிறித்துவ வேதம் (பைபிள்). விவேகம் - புத்திக்கூர்மை. விழ - விழா. விழலுக்கிறைத்தல் - வீண்பாடு படுதல். விழல் - பயனின்மை, விழுதல், பல் வகை. விழவணி - சுபகாலங்களில் அணி யும் அலங்காரம். விழவர் - விழாக் கொண்டாடுவோர். விழவாற்றப்படுத்தல் - விழாவை முடிவு செய்தல். விழவு - விழா, விளையாட்டு, அவா, மிதுனராசி. விழா - கொண்டாட்டம், உற்சவம். விழாக்கால்கோள் - விழா ஆரம்பம். விழாப்புறம் - விழா நடைபெறுதற்கு விடப்பட்ட இறையிலி நிலம். விழாலரிசி, விழால் - ஒருவகைப் புல்லரிசி. விழாவணி - திருவிழாச் சிறப்பு, வீர னுடைய போர்க்கோலம். விழி - கண், ஞானம். விழஎரிமலை - Active volcano. விழிகண்குருடு - விழியில் மாறுபாடின்றிக் கண் தெரியாமை. விழிக்கோளம் - Eye - ball. விழிச்சி - சாதுக்குள் வெடிக்கும் கட்டி. விழிஞம் - திருவிதாங்கூரிலுள்ள ஒரு துறைமுகப்பட்டினம். விழித்தல் - கண்திறத்தல், நித்திரை தெளிதல், சாக்கிரதையாக இருத்தல், மருண்டு நோக்குதல், தெளிவாதல், உயிர் வாழ்தல். விழித்திரை - கண்விழியின் பின்புறத் திரை (Retina). விழிப்பு - சாக்கிரதை, தூக்கமின்மை. விழு - சிறந்த, துன்பமான. விழுக்காடிடுதல் - கூறிடுதல். விழுக்காடு - வீழ்கை, கீழ் நோக்கான பாய்ச்சல், வீதம், பொருளின்றிக் கூட்டிரைக்கும் சொல், மேல் வருவது. விழுக்கு - கொழுப்பு, எண்ணெய்ப் பிசுக்கு. விழுங்குதல் - மெல்லாது, உட் கொள்ளுதல், வெல்லுதல், கவர்தல், வியாபித்தல். விளக்கப்படம் - Diagram. விளக்குக்காய் - விளக்கில் சுவாலை எரியும் பகுதி (Burner). விழுங்கும்பாம்பு - மதிற்பொறி வகை. விழுசுமை - பெரும்பாரம். விழுச்சிறை - மதிப்புக்குறையாத சிறை வாசம். விழுச்செல்வம் - பெருஞ்செல்வம். விழுது - ஆல் முதலியவற்றின் கிளை களிலிருந்து இறங்கும் வேர், வெண்ணெய், நிணம். விழுத்தண்டு - பெரிய ஊன்று கோல். விழுப்பகை - சீரியபகை, பெரியவரி டத்துப் பகை. விழுப்பம் - நன்மை, சிறப்பு, துன்பம், குலம். விழுப்பதராயன் - கோயிற் சுவாமி திருமுன்பு கணக்கு வாசிக்கும் உரிமையுடைய மரபினன், தமிழ் அரசர்க்குக் கீழ்ப்பட்ட தலைவர், ஓரு சாராரின் பட்டப்பெயர். விழுப்பிணி - தீராத முற்றிய நோய். விழுப்பு - கழிக்கப்பட்டது, நீராடா முன் உள்ள அழுக்கு நிலை, உயர்வு. விழுப்புண் - போரில் முகத்தினும் மார்பினும் பட்டபுண். விழுப்பேரரையர் - தமிழ்த்தலைவரில் ஒரு சாரார் பட்டப்பெயர். விழுப்பொருள் - மேலான பொருள். விழுமம் - இறப்பு, துன்பம். விழுமலை - அகத்தியமலை. விழுமாத்தல் - சிறப்படைதல். விழுமிய - சிறந்த. விழுமியதுபயத்தல் - சீரிய பொருளை உயர்த்தலாகிய நூலழகு. விழுமியோர் - சிறந்தோர். விழுமுதல் - மூலதனம். விழுமுறுதல் - துன்புறுதல். விழைச்சி - சுகானுபவம். விழைச்சு - புணர்ச்சி, இளமை. விழைதல் - விரும்புதல், நன்கு மதித்தல், ஒத்தல். விழைநன் - விழைந்தோன். விழைய - ஓர் உவம வாய்பாடு. விழையார் - பகைவர். விழைவு - விருப்பம். விள - விளாமரம். விளக்கங்காணுதல் - சோதித்து அறிதல். விளக்கணி - தீவக அணி. விளக்கத்தார்கூத்து - வழக்கு வீழ்ந்த ஒரு நாடகத் தமிழ் நூல். விளக்கத்தினார் - பழங்கால நாடகத் தமிழ் நூலாசிரியருளொருவர். விளக்கம் - தெளிபொருள், விளக்கு, மோதிரம், புகழ். விளக்கிசைக்குறி - வாசிக்கையில் மூன்று மாத்திரை நிறுத்துவதற்கு இடுகுறி (;). விளக்கிடுகல்யாணம் - கார்காத்த வேளாளரில் மணம் புரியாத பெண் களுக்கு 7 அல்லது 11 ஆம் ஆண்டில் செய்யப்படும் சடங்கு வகை. விளக்கீடு - திருக்கார்த்திகையன்று விளக்கேற்றுகை. விளக்கு - ஒளிதரும் கருவி, ஒளி பெறச் செய்கை. விளக்குத்தண்டு - விளக்குத்தாள். விளக்குநாச்சினார் - தீபக்கடவுள். விளக்குநிலை - அரசனது கோலோடு விளக்கும் ஒன்றுபட்டு ஓங்குவதைக் கூறும் புறத்துறை, வலமாகத் திரியா நிற்கும் விளக்கு, அரசனது வெற்றியைக் காட்டு வதாகக் கூறும் புறத்துறை, விளக்குத்தண்டு. விளக்குப்புறம் - கோயிலில் விளக் கிடுவதற்கு விடப்பட்ட இறையிலி நிலம். விளக்குமாடம் - தீபம் வைத்தற்கான சுவர்ப்புரை. விளக்குமாறு - துடைப்பம். விளக்குறுத்தல் - ஒளிபெறச்செயல். விளக்கெண்ணெய் - ஆமணக்கு எண்ணெய். விளக்கேற்றுதல் - விளக்குக் கொளுத்துதல். விளங்கவைத்தல் - தெளிவாக் குதல். விளங்கிழை - பெண். விளங்குதல் - விரகாசித்தல், தெளி வாதல், மிகுதல், விளங்குதாரணத் தாகுதல் - மேற் கோள் எளிதாக விளங்குவது. விளங்குபொன் - உலோகத்தால் செய்த கண்ணாடி. விளங்கொளி - அருகன். விளச்சீர் - நிரைநிரை அசையில் முடியும் இயற்சீர். விளப்பு - பிரசித்தமாகை. விளம் - விளா, இயற்சீரின் இறுதி நிரை வாய்பாடு. விளம்பம் - தாமதம், இலய வகை. விளம்பரம் - அறிக்கை. விளம்பனம் - தாமதம், ஆதி காலத்து மக்களின் வழக்க ஒழுக்கம் முதலிய வற்றை ஆடியும் பாடியும் காட்டுகை. விளம்பி - கள், 32வது ஆண்டு. விளம்பிதம் - தாமதம். விளம்பிநாகனார் - நான்மணிக் கடிகை நூலாசிரியர் (5ம் நூற்.). விளம்பு - சொல். விம்புதல் - சொல்லுதல், வெளிப்படக் கூறுதல், பரப்புதல், பரிமாறுதல். விளரி - ஏழிசையுளொன்று நெய்தற் குரிய இரங்கற்பண், இளமை, மிக்க வேட்கை, விளா. விளர்தல் - வெளுத்தல், முதிராது இருத்தல். விளர்த்தல் - வெட்குதல், வெளுத் தல். விளவி - அகில், விளா, நிலம் முதலிய வற்றின் பிளப்பு, இளமை. விளா - மரவகை, உழவில்வரும் சுற்று. விளக்குலைகொள்ளுதல் - வியா பித்தல், உட்கொள்ளுதல். விளாக்கை - உழுதல். விளாக்கொள்ளுதல் - வியாபித்தல். விளாசுதல் - அடித்தல். விளாத்தி - விளா. விளாவுதல் - கலத்தல், தழுவிக் கொள்ளுதல், சுற்றிச் சுற்றி உழுதல், சுற்றுதல். விளி - ஓசை, இசைப்பாட்டு, சொல், கொக்கரிப்பு, எட்டாம் வேற்றுமை, அழை, கூப்பிடு. விளிக்கூத்து - சீழ்க்கைக் கூத்து. விளிதல் - இறத்தல், அழிதல், கழிதல், கோபித்தல், நாணமடைதல், அவமான மடைதல். விளித்தல் - அழைத்தல், சொல் லுதல், பாடுதல், அழித்தல், கொல் லுதல், போராரவாரம் செய்தல். விளிந்தார் - இறந்தவர். விளிப்பு - ஓசை. விளிம்பு - ஓரம், கரை, கண்ணிமை, எயிறு. விளிம்புமாற்றம் - Diffraction. விளிவு - கேடு, இடையறவு, கடுங் கோபம், வீரர் ஆர்ப்பு. விளை - அனுபவம், விளைவு, நகர் சூழ் காவற்காடு, காக்கட்டான் கொடி. விளைச்சல் - விளைவு, முதிர்வு. விளைஞர் - மருதநிலத்து மாக்கள். விளைதல் - தானியம் முதலியன உண்டாதல், பயன் தருதல், முதிர்தல், புரிதல். விளைநிலம் - பயிரிடக்கூடிய நிலம். விளைநீர் - நீர்ப் பாய்ச்சுதலுக்குரிய நீர். விளைபொருள் - நிலத்திலுண் டாகும் பொருள். விளையாட்டம் - விளையாட்டு விளைநிலம். விளையாட்டு - பொழுது போக்குக்கு உரிய மகிழ்ச்சிச் செயல். விளையாநிலம் - களர்நிலம். விளையுள் - விளைச்சல், முதிர்கை. விளைவு - முதிர்ச்சி, விளைய பொருள், பழம், பயன், கைவிடுகை, ஆக்கம், நிகழ்ச்சி, விளையுமிடம் மேகம். விள் - விள்ளுதல், பேசுதல். விள்கை - விட்டு அகலுகை. விள்ளல் - பிரிவு, மலர்கை, ஆலிங் கனம். விள்ளுதல் - மலர்தல், மாறுபடுதல், பிளத்தல், நீங்குதல், சொல்லுதல், வெளிப்படுத்துதல், திறத்தல். விறகாள் - விறகு விற்போன். விறகு - எரிக்கும் கட்டை, சமிதை. விறகுதலையன் - விறகு விற்போன். விறத்தல் - செறிதல், மிகுதல், பயப் படுதல். விறப்ப - ஓர் உவம வாய்பாடு. விறப்பு - செறிவு, வெற்றி, போர். விறலி - உள்ளக்குறிப்பு புறத்துப் புலப்பட ஆடுபவள், பாணப்பெண். விறலியாற்றுபடை - அரசனிடம் பரிசில் பெற்ற ஒரு விறலி பரிசில் பெற விரும்புதல் விறலியை அவன் பால் ஆற்றுப்படுத்தலைக்கூறும் புறத்துறை. விறலிவிடுதூது - சுப்பிரதீபக் கவிராயர் செய்த ஒரு நூல். விற்றுதல் - கோபத்தோடு எதிர்த்துச் செல்லுதல். விறலோன் - திண்ணியன், அருகன். விறல் - வெற்றி, வலிமை, பெருமை, சிறப்பு, உள்ளக் குறிப்புப் பற்றி உடம்பில் தோன்றும் வேறுபாடு. விறல்வென்றி - போர் வீரத்தா லுண்டான வெற்றி. விறாட்டி - வறட்டி. விறாண்டுதல் - வாணவகை. விறுவிறுத்தல் - மேற்புச்சு உலர்தலால் விறுவிறு என்றிருக்கை. விறைத்தல் - மரத்துபோதல். விற்கிடை - நான்கு கொண்ட அளவு. விற்குடி - அட்டவீரட்டத் தொன்றான சிவத்தலம். விற்குன்று - மேருமலை. விற்கொடி - தனுக்கொடி. விற்படை - வில்லாயுதம், அம்பு, வில்லினை உடைய படை. விற்பத்தி - கல்வி வன்மை. விற்பனம் - அறிவு. விற்பனை - விற்றல். விற்பன்னன் - கல்வியில் சிறந்தோன். விறபிடி - வில்லைபிடிக்கும் கையின ளவு, அபிநய வகை. விற்பிடிமாணிக்கம் - சிறந்த மாணிக்கம். விற்புட்டில் - விரல் உறை. விற்பூட்டு - பூட்டுவிற் பொருள் கோள், கத்திரிவகை. விற்பொறி - சேர அரசனின் வில் அடையாளம். விற்றானை - வில் வீரராலான படை. விற்றுமுதல் - விற்றுவந்த பணம். விற்றூண் - விற்று உண்ணுதற்குரிய பண்டங்கள். விற்றொற்றிப்பரிக்கிரயம் - விற்ற லும் ஒற்றிவைத்தலும் பண்டமாற்று தலும். வினதை - கருடனுடையதாய். வினயம் - சூழ்ச்சி, கொடுஞ்செயல், வணக்க ஒடுக்கம், தேவபாணி. வினவுதல் - உசாவுதல், கேட்டல், கேள்விப்படுதல், நினைதல். வினவுநர் - செவியில் ஏற்பவர். வினா - கேள்வி. வினாசம் - கேடு. வினாடி - 23 நொடி கொண்ட நேரம், விநாடிகை (Second). வினாதலிறை - வினாவடிவான மறுமொழி. வினாப்பெயர் - வினா அடியாகப் பிறந்த பெயர்ச்சொல். வினாவழு - வினா அடியாகப் பிறந்த பெயர்ச்சொல். வினாவழு - வினாவைப் பொரு ளியை பில்லாதபடி வழங்குகை. வினாவிசைக்குறி - கேள்விக்குறி (?). வினாவிடை - கேள்வியும் மறு மொழியும். வினாவெண்பா - உமாபதி சிவாசாரி யார் செய்த சித்தாந்த நூல்களுள் ஒன்று. வினாவெதிர்வினாதல் - ஒருவனது வினாவுக்கு எதிர் வினா ரூபமாகக் கூறும் மறுமொழி. வினிதை - அயோத்தி. வினியோகம் - செலவிடுகை, பயன். வினை - தொழில், வினைச்சொல், முயற்சி, வஞ்சகம், தந்திரம், பூர்வ கன்மம். வினைக்கட்டு - கன்மபந்தம். வினைக்களம் - போர்க்களம். வினைக்கீடு - செய்தவினையின் பயன். வினைக்குறிப்பு - குறிப்புவினை. வினைக்கேடு - வீணானது, செயலறுகை. வினைசூழ்தல் - தீங்கிழைக்க எண்ணுதல். வினைசெயல்வகை - வினையைச் செய்யும் திறம். வினைச்செவ்வெண் - வினை யெச்சங்களில் எண்ணிடைச் சொல் தொக்கு வருவது. வினைச்சொல் - பொருளின் புடைப் பெயர்ச்சியைத் தெரிவிக்கும் சொல். வினைஞர் - தொழில் செய்வோர், மருத நிலமாக்கள். வினைதீயார் - தீவினையோர். வினைத்தலை - போர்க்களம். வினைத்திட்பம் - தொழில் செய்வதில் மன உறுதி. வினைத்திரிசொல் - வழக்கிலின்றி அரிதில் பொருளுணர்த்தற்குரிய வினைச்சொல். வினைத்தூய்மை - செய்யப்படும் வினைகள் பொருளே அன்றி அறமும் புகழும் பயந்து நல்ல வாகை. வினைத்தொகை - காலம் கரந்த பெயரெச்சத் தொடர். வினைநர் - வினைஞர். வினைப்பருதி - பகுபதத்தில் வினைச் சொல்லாகிய பகுதி. வினைப்பயன் - பழவினையின் விளைவு. வினைப்பெயர் - தொழிற்பெயர். வினைமாற்று - முன் சொன்ன தொழிலே அன்றிவேறொன்று என்பதைக் காட்டுவதாகிய பொருண்மை. வினைமுதல் - கருத்தா. வினைமுற்று - முற்று விகுதி கொண்ட வினைச்சொல். வினையம் - செய்தொழில் பழவினை உபாயம், வஞ்சகம், நிகழ்ச்சி, வஞ்சக வேலைப்பாடு. விலையன் - தொழில் செய்பவன். விலையாட்டி - தீவினை உடை யவள். வினையாலணையும்பெயர் - வினை முற்று பெயர்த்தன்மைப் பட்டு வருவது. வினையாளன், வினையாள் - ஏவலாள், தொழில் செய்வோன். வினையுரிச்சொல் - வினைக்கு அடை யாக வரும்சொல். வினையுருபு - வினைச்சொல்லின் உறுப் பான பகுதி இடைநிலை விகுதி முதலின. வினையுரைப்போர் - தூதர். வினையுவமம் - தொழில் பற்றி வரும் ஒப்புமை. வினையெச்சக்குறிப்பு - குறிப்பு வினையெச்சம். வினையெச்சம் - வினையைக் கொண்டு முடியும் குறைவினை. வினையெச்சவினைக்குறிப்பு முற்று - குறிப்பு வினைமுற்று வினையெச்சசப் பொருளாக வருவது. வினையெஞ்சுகிளவி - வினை யெச்சம். வினைவயிற்பிரிதல் - தலைவன் தலைவியை நீங்கி அரசன் ஆணை யால் பகைமேற் பிரியும் பிரிவு. வினைவர் - தொழிலினர், சந்து செய்விப்பவர், அமைச்சர். வினைவலம்படுத்தல் - எடுத்துக் கொண்ட செயலை வெற்றி பெறச் செய்தல். வினைவலர் - தொழில் செய்வதில் வல்லமை உடையோர். வினைவலி - அரண்முற்றுதல் அரண்கோடல் முதலிய தொழில் களின் அருமை, ஊழ்வினையின் வலிமை. வினைவாங்குதல் - காரியத்தை வெளிப்படுத்துதல். வினோதக்கூத்து - அரசர் முன்பு நடிக்கும் வெற்றிக் கொண்டாட்டக் கூத்து. வினோதம் - வியப்பு, பொழுது போக்கு. வினோதித்தல் - விளையாடுதல். வினோத்தி - அணி வகை. வின்னப்படுதல் - சிதைதல். வின்யாசம் - வில்லில் அம்பு தொடுக்கை. வீ வீ - பறவை, அழிவு, மரணம், நீக்கம், மலர், மகரந்தம். வீகம் - மோதிரம், விரைவு. வீக்கம் - வீங்குகை, புடைப்பு, கூட்டம், பெருமை, கருவம், கட்டு, இடையூறு, மூடுகை. வீக்கு - பெருமை, மிகுதி. வீக்குதல் - கட்டுதல், அடக்குதல், தடுத்தல், நிறைத்தல், போக்குதல். வீங்கல் - மிகுதி. வீங்கி - ஒன்றன்மீது ஏக்கம் கொண் டிருப்பவர். வீங்குதல் - பருத்தல், பூரித்தல், மிகுதல், நெருங்குதல், விறைப்பாக நிற்றல், செல்லுதல், ஏக்கம், கொள் ளுதல். வீங்குபுள்தோடம் - அந்தி நிசி முதலிய அக் காலங்களில் குழந்தைகளை வீட்டுக்கு வெளியே எடுத்துச் செல் கையில் சில பறவைகளின் நிழல் படுவதால் உண்டாவதாகக் கருதப் படும் நோய். வீசம் - மாகாணி (1/16). வீசவிருக்கநியாயம் - வித்து முந்தியதோ மரம் முந்தியதோ என்று வாதிப்பதுபோல முடிவில்லா மல் செல்லும் வாதம். வீசனம் - விசிறி, சிற்றால வட்டம். வீசி - அலை, அற்பம், வட்டம். வீசிமாலி - கடல். வீசிவில்விடுதல் - தேர் முதலியன எழும்ப மிண்டி போடுதல். வீசுதல் - எரிதல், ஆட்டுதல், விசிறுதல், அடித்தல், வரையாது கொடுத்தல், சிந்துதல், சிதறுதல். வீசேறுதல் - மேலேறுதல். வீசை - 40 பலம் கொண்ட நிறுத்தல் அளவை. வீச்சம் - துர்நாற்றம். வீச்சு - எறிகை, சிறகடிக்கை, ஆட்டுகை, ஆந்தை முதலிய வற்றின் சத்தம், வளைவு, தூரம் (Range). வீடணன் - இராவணன் தம்பி. வீடறுத்தல் - வழக்குத் தீர்த்தல். வீடாரம் - பாசறை. வீடு - விடுகை, விடுதலை, முடிவு, மனை, இராசி, தேற்றா, ஒன்றைக் குறிக்கும் குழூஉக்குறி. வீடுகொள்ளுதல் - மீண்டும் பெறுதல். வீடுசெய்தல் - துறத்தல், விடுதலை செய்தல், அர்ப்பணம் செய்தல். வீடுசேர்தல் - அழிதல். வீடுதல் - கெடுதல், சாதல், ஒழிதல். வீடுநர் - இறப்பவர். வீடுபேறு - முத்திநிலை. வீடுமன் - வீட்டுமன். வீடெடுத்தல் - அத்திவாரமிடுதல். வீட்சணம் - பார்வை. வீட்டன் - தோறும் என்னும் பொருள் தரும் விகுதி. வீட்டிறப்பு - மேற்கூரையின் தாழ்ந்த பக்கம். வீட்டுக்கு விலக்கு - மாதவிடாய். வீட்டுதல் - கொல்லுதல், அழித்தல், தள்ளுதல். வீட்டுலகம் - மேலுலகம். வீணன் - பயனற்றவன். வீணாகானம் - யாழிசை. வீணாதண்டு, வீணாதண்டம் - வீனைக்காம்பு, முதுகெலும்பு. வீணைமீட்டுதல் - யாழ் நரம்பைல யமறிந்து கருதி சேர்த்தல். வீணைவலிக்கட்டு - யாழின் வார்க் கட்டு. வீண் - பயனின்மை. வீதசோகன் - அருகக்கடவுள். வீதம் - பங்கு, விடுகை, விடப்பட்டது, அளவு (Rate). வீதராகம் - பற்றுகை. வீதராகன் - பற்றற்றவன். வீதல் - அழிதல், சாதல், நீங்குதல், மாறுதல், வறுமை. வீதா - பயனின்மை. வீதி - சூரியன் முதலிய கோள்கள் செல்லும் வழி, முறை, நாடக வகை, அகலம், நேரோட்டம், வையாளி வீதி, ஒளி, அச்சம். வீதிகுத்துதல் - ஓடியாடுதல். வீதிகோத்திரன் - சூரியன், அக்கினி, தீ. வீதித்தல் - பங்கிடுதல். வீதிப்போக்கு - இசையின் நேர் செலவு. வீதிவிடங்கன் - திருவாரூரில் கோயில் கொண்ட சிவன். வீத்தல் - அழித்தல். வீபற்சு - அருச்சுனன். வீப்பகழி - காமனது அம்பு. வீமசேனன் - வீமன். வீமதேவன் - உருத்திரருள் ஒருவர். வீமபாகம் - சிறந்த சமையல். வீமம் - அம்சம், பருமம். வீமன் - தமயந்தியின் தந்தை, பாண்டு புத்திரருள் ஒருவன், பச்சைக் கற்பூர வகை. வீமேச்சுரவுள்ளமுடையான் - ஒரு சோதிட நூல். வீம்பு - வீண்புகழ்ச்சி. பிடிவாதம். வீயம் - வித்து, அரிசி. வீரகண்டாமணி - வீரர் அணியும் மணி கட்டிய தண்டை. வீரகத்தி - வீரனைக் கொன்ற பாவம். வீரகம் - அலரி. வீரகவிராயர் - அரிச்சந்திர புராணம் பாடிய புலவர், (16ம் நூற்.). வீரகேசரி - நவ வீரருள் ஒருவர். வீரகேயூரம் - வீரர் அணியும் தோள் வளை. வீரக்கழல் - வீரரணியும் தண்டை. வீரக்கொடி - வெற்றிக்கொடி. வீரக்கொம்பு - படையெழுச்சியில் ஊதும் கொம்பு. வீரசங்கிலி - வீரர் கையிலணியும் பொன், சங்கிலி, மகளிர் கழுத்தணி. வீரசம்பன்குளிகை - 14ஆம் நூற்றாண்டில் வழங்கிய நாணய வகை. வீரசயந்திகை - போர்வீரர் நிகழ்த் தும் கூத்து. வீரசாசனம் - வீரர்க்குக் கொடுக்கும் பூமி முதலியன. வீரசிங்காசனம் - வீரர் இருத்தற்குரிய சிங்காசனம். வீரசிங்காதனபுராணம் - வேலைய தேசிகரும் கோட்டூர் உமாபதி சிவாசாரியாரும் இயற்றிய ஒரு வீர சைவ புராணம் கி.பி. 1719. வீரசின்னம் - வீரர் விருதுகளில் ஒன்றான ஊதுகொம்பு. வீரகவர்க்கம் - வீரர் இறந்தபின் அடையும் பதவி. வீரசூடிகை - வீரர் நெற்றியில் அணியும் அணிவகை. வீரசூரம் - பேராண்மை. வீரசேனன் - நளனது தந்தை. வீரசைவம் - இலிங்கங்கட்டி மதம். வீரசோ - சோணிதபுரம். வீரசோழன் - வீரசோழியத்தைச் செய்வித்த சோழ அரசன் (11ஆம் நூ.). வீரட்டம், வீரட்டனாம் - சிவனது வீரம் விளங்கிய இடம். வீரணம் - இலாமிச்சை. வீரணன் - வீரமுள்ளவன். வீரணி - இலாமிச்சை, மிளகு. வீரணுக்கன் - ஒரு சாதி. வீரதரன் - வீரருள் வீரன். வீரதீரன் - துணிவு மிக்கவன். வீரதுரந்தரன் - பராக்கிரமமுள்ளவன். வீரதை - வீரம். வீரபட்டம் - வீரபட்டிகை, தெய்வ மூர்த்தங்கட்கு அணியும் நெற்றி அணி வகை. வீரபட்டிகை - வீரர் வெற்றிக்குறியாக நெற்றியிலணியும் பொன் தகடு. வீரபத்திரம் - அசுவமேதத்துக்குரிய குதிரை. வீரபத்திரன் - தக்கன் யாகத்தை அழித்த கடவுள். வீரபத்தினி - மறக்கற்புடையவன். வீரபாண்டியன் - பாண்டி அரசருள் ஒருவன், முகத்தில் அளவைக் கருவி வகை. வீரபாண்டியன் - பாண்டி அரசருள் ஒருவன், முகத்தில் அளவைக் கருவி வகை. வீரபாண்டியன் காசு - வீரபாண்டி யன் காலத்து வழங்கிய நாணயம். வீரபானம் - வீரர் குடிக்கும் மது. வீரபுரந்தரன் - நவ வீரருள் ஒருவர். வீரபைரவி - பைரவி வேடதாரியான பெண் துறவி. வீரபோகம் - பழைய வரிவகை. வீரப்பாடு, வீரப்பிரதாபம் - வீரம். வீரமகள், வீரமங்கை - வீர இலக்குமி. வீரமந்திரம் - வேண்டும்போது நிற்கவும் பறந்த செல்லவும் குதிரை யின் காதில் ஓதும் மந்திரம். வீரமயேச்சுரர் - வீரசைவ முனிவர். வீரமாகாளன் - ஐயனார் படைத் தலைவரான கிராம தேவதை. வீரமாகாளி - துர்க்கை. வீரமாகேசம் - வரிக் கூத்து வகை. வீரமாமுனிவர் - ஒரு கத்தோலிக்க இத்தாலிய பாதிரி, 1680, 1747. வீரமார்த்தாண்டன் - பெருவீரன், நவவீரருள் ஒருவன். வீரமாலை - வீரனைப் புகழ்ந்து பாடும் பாடல். வீரமுட்டி - வாள் முதலிய ஆயுதம் தரித்துச் செல்லும் மத வைராக் கியம் மிக்க வீரசைவத் துறவி. வீரமுரசு - வீரத்தின் அறிகுறியாக முழக்கும் முரசம், முருசு நிசாளம் துடுமை திமிலை என்னும் நால் வகைப் போர் முரசு. வீரமொழி - ஆண்மைப் பேச்சு. வீரம் - பராக்கிரம், வீரத்தை விளக்கும் சுவை, மலை, சவ்வீரம், மருந்து வகை. வீரரசம் - வீரச்சுவை. வீரவளை - வீரர் அணியும் காப்பு. வீரவாகு - நவவீரருள் ஒருவர், அரிச் சந்திரனை விலைக்கு வாங்கியவன். வீரவான் - வீரன். வீரவிரதன் - வீரன் கொள்ளும் கொடிய நோன்பு. வீரவுப்பு - கல்லுப்பு. வீரவெண்டையார் - வீரக்கழகம், திரு வாரூர் தியாகராசனது பட்டாக்கத்தி. வீரன் - வீரமுள்ளவன், வீரபத்திரன், அருகன், படைத்தலைவன். வீராகரன் - வீரமிக்கோன். வீராசனம் - யோகாசன வகை. வீராணம் - ஒருவகைப் பெரிய பறை. வீராதிவீரன் - வீரருள் சிறந்த வீரன். வீராந்தகன் - நவ வீரருள் ஒருவர். வீராபிடேகம் - பகைவென்ற அரசருக்குச் செய்யும் நீராட்டு. வீரி - காளி, துர்க்கை. வீரிடுதல் - திடீரெனக் கத்துதல். வீரியபாரமிதை - வீரியம். வீரியம் - வலிமை, வீரம், சுக்கிலம், தற்பெருமை, ஒளி. வீரியன் - வீரன். வீரியாந்தராயம் - தேகவலி மனவலி களைப் பயன்படாமல் தடை செய்யும் ஊழ். வீரெனல் - திடீரெனக் கத்தும் ஒலிக் குறிப்பு. வீரை - கடல், துன்பம், நெல்லி, முந்திரிகை, வட்டத் திருப்பி, மயிர் மாணிக்கம், மர வகை. வீர்தி - வேலி. வீவு - அழிவு, மரணம், கெடுகை, முடிவு, குற்றம், இடை, வீடு. வீழ - ஓர் உவம உருபு. வீழி - விழுதி, திருவீழிமிழலை. வீழிறாழை - தென்னை. வீழ் - விழுது, தாலி நாண். வீழ்க்காடு - வீதம், வீழ்ச்சி. வீழ்தல் - மிக விரும்பல், நீங்குதல். வீழ்த்தல் - விழச் செய்தல் வீணாகக் கழித்தல், தாழ விரும்புதல். வீழ்நாள் - பயனற்ற தினம். வீழ்ந்தாடல் - துடி கடையம் பேடு மரக்கால் பாவை என ஐவகைப் பட்ட கூத்து வகை. வீழ்பு - கள்ளி. வீழ்மின் - விண்வீழ் கொள்ளி. வீளை - சீழ்க்கை, சிள்ளென்ற ஓசை. வீறாப்பு - இறுமாப்பு. வீறு - தனிப்பட்ட சிறப்பு, பொலிவு, பெருமை, மிகுதி, நல்வினை, கருவம். வீறுதல் - மேம்படுதல், மிகுதல், வெட்டுதல். வீற்றாதல் - பிரிவு படுதல். வீற்றிருக்கை - அரசிருக்கை. வீற்றிருத்தல் - சிறப்போடு இருத்தல், இறுமாந்து இருத்தல். வீற்று - வேறுபடுகை, கூறு. வீற்றுத்தெய்வம் - உடலில் அமர்ந்து காட்சியின்பத்தை உண் டாக்கும் தெய்வம். வீற்றும் - மற்றும். வீற்றுவளம் - பிறநாட்டுக்கு இல்லாத செல்வம். வீற்றுவீற்று - வெவ்வேறு. வெ வெஃகல் - மிக விருப்பம். வெஃகா - காஞ்சீபுரத்தருகில் ஓடும் வேகவதி ஆறு, திருமால் கோயில் களுள் ஒன்று. வெஃகாமை - அவாவின்மை, பிறர் பொருளைக் கவரக் கருதாமை. வெஃகுதல் - பிறர் பொருளை இச்சித்தல். வெகிச்சீமை - வெளி எல்லை. வெகிர்முகம் - வெளிமுகம். வெகு - அதிகமான. வெகுட்சி - கோபம். வெகுதானிய - 12ஆவது ஆண்டு. வெகுநாயகம் - பலருடைய ஆட்சி. வெகுபுத்திரி - கீழாநெல்லி. வெகுமானம் - வெகுமதி, உபசரித்தல். வெகுமூலம் - முருங்கை. வெகுவாய் - மிகுதியாக. வெகுவிதம் - நானா வகை. வெகுளி - கோபம், வெறுப்பு. வெகுளுதல் - கோபித்தல். வெக்காயம் - வெப்பம். வெக்காளம் - துயரம், புழுக்கம். வெக்கை - வெப்பம், கடாவிடும் களம். வெங்கணன் - கொடியவன். வெங்கண் - கோபம், கொடுமை. வெங்கதிர் - சூரியன். வெங்கதிர்மலை - கண்ணன். வெங்களம் - போர்க்களம். வெங்கள் - மிக மயக்கும் கள். வெங்கன் - தரித்திரன். வெங்காரம் - மருந்துச் சரக்கு வகை. வெங்கார் நாற்றம் - தலைப்பெயல் மழையால் காய்ந்த மண்ணின்ற எழும் ஆவி நாற்றம். வெங்கார்மண் - வெயிலால் சூடேறிய மண். வெங்கிணாத்தி - மலைப்பாம்பு வகை. வெங்குரு - சீகாழி, யமன். வெங்கை - வெங்கனூர். வெங்கைக்கோவை - வெங்கைச் சிவபிரான் மீது சிவபிரகாசர் இயற்றிய கோவைப் பிரபந்தம் (17 ஆம் நூ.). வெங்கோல் - கொடுங்கோல். வெச்சம் - மாணிக்கக் குற்ற வகை. வெச்செனல் - வெம்மைக் குறிப்பு. வெச்செனவு - சூடு. வெஞ்சமம் - போர், பாலைப்பண் வகை. வெஞ்சினம் - கடுங்கோபம். வெஞ்சுடர் - சூரியன். வெஞ்சொல் - கடுஞ்சொல். வெஞ்சோறு - சுடுசோறு. வெடி - வேட்டு, ஓசை, இடி, வாணம், பிளவு, பகை, அச்சம், நிமிர்ந்து எழுகை, தாவுகை, நறும்புகை, துர்க்கந்தம், கள், கவறாட்டத்தில் வழங்கும் ஒரு குழூஉக்குறி, விடிவெள்ளி, வெளி. வெடிகுரல் - இசைக்கு மாறுபட்ட ஓசை. வெடிகொள்ளுதல் - மேல் எழுதல், வெடித்தல். வெடிசிரிப்பு - பெருஞ்சிரிப்பு. வெடிதல் - விடிதல். வெடித்தல் - பிளவடைதல், மலர்தல், வெளிக்கிளம்புதல், விறைத்து மேலே எழும்புதல். வெடிநாற்றம் - கெட்ட நாற்றம். வெடிபஞ்சு - நைட்ரிக் அமிலம் தோய்த்த பஞ்சு (Gun cotton). வெடிபடுதல் - பேராசை உண்டாதல், சிதறுதல், அச்சமுறுதல். வெடிபாணவுப்பு - வெடி உப்பு. வெடிப்பி - Detonator. வெடிப்பு - பிளப்பு, அழிவு, குற்றமான சொல். வெடியாஉலர்கனி - அகீன் (Achene). வெடியுப்பு - வெடிமருந்துக்கு உதவும் உப்பு (Potash). வெடில் - கெட்ட நாற்றம். வெடிக்கெனல் - விரைவுக்குறிப்பு, கடுகடுப்பாக இருக்கும் குறிப்பு. வெட்கம் - அவமானம், கூச்சம். வெட்கெனல் - வெள் அறி வினானதற்குறிப்பு. வெட்சி - செடி வகை, போர் தொடக்க மாக வெட்சிப்பூ அணிந்து பகைவர் நிரையைக் கவர்தலைக் கூறும் புறத்துறை. வெட்சிமறவர் - பகைவர் நிரையைக் கவரச் செல்லும் மறவர். வெட்சியரவம் - பகைமுனையிடத்து நிரை கவப்போகுங்கால் உண்டாம் ஆரவாரத்தைக் கூறும் புறத்துறை. வெட்ட - தெளிவான. வெட்டவிடி - அதிகாலை. வெட்டவெடித்தல் - அதிக கோபம் கொள்ளுதல். வெட்டவெளி - திறந்தவெளி. வெட்டனவு - கடுமை. வெட்டி - கூலியின்றிச் செய்யும் வேலை, பயனின்மை, வெட் வேர். வெட்டிக்காசு - பழைய வரிவகை. வெட்டித்தல் - கடுகடுப்பாதல். வெட்டிமை - கொடுமை. வெட்டியான் - ஒருவகைக் கிராம ஊழியக்காரன். வெட்டிவேர் - இலாமிச்சை வேர். வெட்டு - துண்டிப்பு, வெட்டுக்காயம். வெட்டுக்காடு - வெட்டி அமைத்த காட்டுநிலம். வெட்டுக்கிளி - மழைக்கிளி (பூச்சி வகை). வெட்டுக்குருத்து - வெட்டப்பட்ட இடத்தில் தோன்றும் குருத்து. வெட்டெனல் - கடுமைக் குறிப்பு. வெட்டெனவு - வன்மையானது. வெட்டை - வெப்பம், காம, இச்சை, நோய் வகை, வெறுமை, வெளி. வெட்புலம் - வெற்றிடம். வெண்கடல் - பாற்கடல். வெண்கடுகு - கடுகு வகை. வெண்கதிர் - சந்திரன். வெண்கலசமுற்றாள் - சரசுவதி. வெண்கலம் - உலோகவகை நாள். வெண்கலயுகம் - வெண்கலக்காலம் (Bronze Age). வெண்கலி, வெண்கலிப்பா - வெண்டளை பெற்று வரும் கலிப்பாக வகை. வெண்களமர் - மருதநில மாக்கள். வெண்களிற்றரசு - ஐவராவதம். வெண்கன்னான் - வெண்கல வேலை செய்யும் கன்னான். வெண்காக்கட்டான் - வெண் காக்கணம். வெண்காந்தள் - செடிவகை. வெண்கால் - யானைத் தந்தத்தால் செய்த கட்டில் முதலியவற்றின் கால். வெண்காவிளை - வெண்காக்கணம். வெண்காழ் - முயலெறியும் தடிவகை. வெண்கிடை - நெட்டி வகை. வெண்கிழமை - வெள்ளிக்கிழமை. வெண்குடை - வெண் கொற்றக் குடை. வெண்குட்டம் - உடலில் வெள்ளை யாகப் படரும் குட்டநோய் வகை. வென்குன்று - சுவாமிமலை. வெண்கூதாளம் - வெண்டாளி. வெண்கை - தொழில் செய்து பழகாத கை, சங்குவளை அணிந்தகை, அபிநயம் செய்யாது தாளத்துக்கு இசைவிடும் கை, வெள்ளிய கைப்பிடி. வெண்கொடி - வெற்றிக்கொடி, சரசுவதி. வெண்கொல் - வெள்ளி. வெண்கொற்றக்குடை - அரசனது வெற்றியைக் குறிக்கும் வெண் குடை. வெண்கோடல் - வெண்காந்தள். வெண்கோட்டம் - செடிவகை, ஒரு நறும் பண்டம். வெண்சாந்து - சுண்ணாம்புச் சாந்து. வெண்சாமரம், வெண்சாமரை - இராச சின்னமாகக் மயிர்க் கற்றை. வெண்சிறுகடுகு - வெண்கடுகு. வெண்சீர் - வெண்பா உரிச்சீர். வெண்சீர் வெண்டளை - வெண்பா உரிச்சீர் சீமன் வந்து ஒன்றும் தளைவகை. வெண்சுடர்விளக்கு - Incandes cent lamp. வெண்சிதைக்குன்று - செங்குன்று வகை. வெண்செந்துறை - இரண்டடிகள் தம் முள் அளவொத்து வரும் செய்யுள் வகை. வெண்சோறு - வெள்ளரிசியால் சமைத்த வெறுஞ்சோறு. வெண்டயம் - வெண்டையம். வெண்டலை - தலை ஓடு. வெண்டளை - வெண்பாவுக்குரிய தளை. வெண்டாது - வெள்ளி, திருநீறு. வெண்டாமரை - வெண்ணிறத் தாமரைப்பூ. வெண்டாமரை மகள் - சரசுவதி. வெண்டாழிசை - மூன்றடியாக வேற்றுத் விரவி ஈற்றடி மூச்சீரான் இறுவதாக வேனும் சிந்தியல் வெண்பா ஒரு பொருள்மேல் முடுக்கின்றி வருவதாக வேணு முள்ள வெண்பாவின் இனம். வெண்டாழி - தாழிவகை. வெண்டாழை - தாழை வகை. வெண்டி - வெண்டை. வெண்டு - உட்டுளை, மரங்களின் உள்ளீட்டைப் போக்கும் நோய் வகை. வெண்டுதல் - வற்றிப்போதல், தளைத்தல். வெண்டுளசி - திருநீற்றுப் பச்சை. வெண்டுறை - மூன்றடிமுதல் ஏழடி யீறாக அடிகளைப் பெற்றுச்சீர் குறைந் தும் மிக்கும் வருதலை உடைய வெண்பாவின் வகை, ஆடற்குரிய பாட்டு. வெண்டேர் - கானல். வெண்டேர்ச்செழியன் - இடைச் சங்கத் தொடக்கத்தில் இருந்த வனாகக் கூறப்படும் பாண்டியன். வெண்டை - செடிவகை (வெண்டி). வெண்டையம் - வீரர் காலணி, குதிரை முதலியவற்றுக்கணியும் சதங்கை. வெண்டொழுநோய் - வெண் குட்டம். வெண்டோடு - பனந்தோடு. வெண்ணகை - வெள்ளிய பல். வெண்ணஞ்சு - ஊன்வகை, நிணம். வெண்ணரி - நரி வகை. வெண்ணங்கு - மர வகை. வெண்ணாந்தை - பெரும் பாம்பு. வெண்ணாரை - நாரை வகை. வெண்ணி - நரி வகை. வெண்ணங்கு - மர வகை. வெண்ணாந்தை - பெரும் பாம்பு. வெண்ணாரை - நாரை வகை. வெண்ணி - சோழநாட்டுப் பழைய ஊர். வெண்ணிலவு - சந்திர ஒளி. வெண்ணீர் - சுக்கிலம். வெண்ணீறு - திருநீறு. வெண்ணெட்டி - வெண்கிடை. வெண்ணெய் - தயிரிலிருந்து கடைந்து எடுக்கப்படும் சத்து. வெண்ணெய்தல் - ஆம்பல் வகை. வெண்ணெய்த்தெழி - மோரைக் கையால் அலைக்கும் ஒசை. வெண்ணெல் - ஒருவகை மலை நெல். வெண்ணை - வெண்ணெய் நல்லூர். வெண்படலிகை - வெள்ளித்தட்டு. வெண்படை - ஆடை நெய்தற்குரிய நூற்பா. வெண்பதம் - இளம்பதம். வெண்பலி - சாம்பல். வெண்பா - நால்வகைப் பாக்களில் ஒன்று. வெண்பாசி - பாசிமணி வகை. வெண்பாட்டம் - கோடை மழை. வெண்பாண்டு - பிறந்தது முதல் தோல் வெண்மையானதற்குக் காரணமான நோய். வெண்பாப்பாட்டில் - குணவீர பண்டிதரால் வெண்பாவினாலியற் றப்பட்ட பாட்டியல் நூல், வச்சணந்தி மாலை. வெண்பாமாலை - புறப்பொருள் வெண்பாமாலை என்ற நூல். வெண்பாவுரிச்சீர் - நேர் நேர் நேர், நிரை நேர் நேர், நேர் நிரை நேர், நிரை நிரை நேர் என வெண்பாவுக் குரியவாய் வரும் நேரிற்று மூவகைச்சீர். வெண்பாவை - நாமகள். வெண்பிறப்பு - மக்கட்பிறப்பு. வெண்பிறை - பிறைச் சந்திரன். வெண்பூம்பட்டு - பட்டாடை வகை. வெண்பொங்கல் - சித்திரான்ன வகை. வெண்பொடி - திருநீறு. வெண்பாத்தி - துகில் வகை. வெண்பொன் - வெள்ளி, சுக்கிரன். வெண்போழ் - தாழை மலர். வெண்மண்டை - பிச்சைக்காரர் கொள்ளும் உண்கல வகை. வெண்மழை - வெண்முகில். வெண்மீன் - சுக்கிரன். வெண்முகில் - மழை பெய்யும் நிலையை அடையாத வெற்று மேகம். வெண்மை - ஒளி, இளமை, புல்லறிவு டைமை. வெதிரி - இலந்தை. வெதிரம் - மூங்கில். வெதிரன் - செவிடன். வெதிரேகம் - மாறுபாடு, பரிணாமம். வெதிர் - நடுக்கம், மூங்கில், விரிமலர், செவிடு. வெதிர்ங்கோல் - மூங்கிற்கோல். வெதிர்ப்பு - கலக்கம். வெதுப்படக்கி - பேய் மருட்டி. வெதுப்புதல் - இளஞ்சூடாதல், வெம்மையாதல், கொதித்தல், சினம் கொள்ளுதல், மனம் கலங்குதல். வெதுவெதுப்பு - இளங்சூடு. வெந் - முதுகு. வெந்தயம் - செடி வகை. வெந்தழல் - சிவந்து எரியும் தீ. வெந்தித்தல் - சினங் கொள்ளுதல். வெந்திப்பு - கொதிப்பு, கட்டு. வெந்திறல், வெந்துப்பு - பெருவலி. வெந்துளி - துக்கக் கண்ணீர். வெந்தை - நீராவிலேயே புழுங் கியது, பிட்டு. வெந்திடுதல் - புறங்காட்டுதல். வெந்நீர் - சுடுநீர். வெந்நீர்ப்பீச்சு - வெந்நீர் கொப் பளிக்கும் ஊற்று (Geyser). வெப்பஇரத்தப்பிராணி - வெப்ப இரத்தமுள்ள விலங்கும் பறவை களும் (Warm blooded animals). வெப்பம் - சூடு, சுரநோய், கோபம், ஆசை, துயர். வெப்பர் - வெப்பம், சூடான உணவு. வெப்பித்தல் - மனக்கொதிப்பு உண்டாக்குதல். வெப்பு - வெப்பம், சுரதேவதை, தாபம், குட்டநோய். வெப்புநோய் - காய்ச்சல், குட்டம். வெப்புள் - வெம்மை. வெம்பல் - மிகுவெப்பம், கோபம், பிஞ்சில் பழுத்தகாய். வெம்பறவை - சரபம். வெம்பா - மூடுபனி. வெம்புதல் - சூடாதல், அகாலத்தில் பழுத்தல், மனம் புழுங்குதல், விரும்புதல், ஒலித்தல். வெம்மணல் - நரக வகை. வெம்மை - வெப்பம், கடுமை விருப்பம், பராக்கிராமம். வெயர், வெயர்வு - வியர்வை நீர். வெய்யிலதிர்ச்சிநோய் - Sun stroke. வெயிலோன் - சூரியன். வெயிற்றுகள் - சூரியக் கதிரில் பறக்கும் அணு. வெயின்மறை - வெயிலை மறைக்கும் கருவி. வெய்து - கொடியது, விரைவு, விருப்பத்தைக் கொடுப்பது, வெப்பமுள்ளது. வெய்துயிர்த்தல் - வெப்பமாக மூச்சு விடுதல். வெய்துறுதல் - மனம் கலங்குதல், துன்புறுதல். வெய்தெனல் - விரைவுக் குறிப்பு. வெய்ய - வெப்பமான, விரும்புதற் குரிய. வெய்யது - சூடானது, தாங்க முடியாதது. வெய்யவன் - அக்கினிக் கடவுள், சூரியன். வெய்யன் - கொடியன், விருப்ப முள்ளோன், சூரியன். வெய்யில் - வெயில். வெரிந் - முதுகு. வெரு - அச்சம். வெருகடி - வெருவிரல் முதலிய மூன்று விரல்களின் நுனியால் எடுக்கும் அளவு. வெருகம் - வாலின் கீழிடம். வெருகிடதர் - பிதிரரில் ஒருவகை யினர். வெருகு - காட்டுப்பூனை, வெண் கிடை, மரநாய். வெருகுவிடை - காட்டுப் பூனையின் ஆண். வெருட்சி - மருட்சி. வெருட்டி - வெருட்டுவது. வெருட்டு - அச்சமுண்டாகச் செய்தல். வெருப்பறை - போர் முரசு. வெருவந்தம் - அச்சம். வெருவருநிலை - பகைவர் அம்பு தன் மார்பைப் பிளக்கவும் பூமியில் விழாமல் நின்ற வீரனது நிலையைக் கூறும் புறத்துறை. வெருவலர் - பகைவர். வெருவு - அச்சம். வெருவெருத்தல் - மருளுதல், அஞ்சுதல். வெருளுதல் - மருளுதல், அஞ்சுதல். வெருளி - வெருட்சி, வெருளச் செய்யும் புல்லால் செய்த உரு முதலியன, செல்வச் செருக்கு. வெருளிப்பிணை - வெண்மான். வெரூஉ, வெரூஉதல் - பயப் படுதல், மருண்டு அஞ்சுதல். வெலவெலத்தல் - களைத்தல், கை கால் உதறுதல். வெலீஇயோன் - வெல்வித்தோன். வெல்புகழ் - வெற்றியாலுண்டாகும் புகழ். வெல்லம் - கருப்பஞ் சாற்றுக்கட்டி. வெல்லல் - வாயு விளங்கம். வெல்லவட்டு - வெல்லத்தைக் காய்ச்சி வட்டமாக ஊற்றிய தட்டு. வெவ்வர் - வெம்மை. வெவ்வினை - கொடிய வினை. வெவ்வுரை - கடுஞ்சொல். வெவ்வெஞ்செல்வன் - வெம்மை உடையதும் விரும்பப்படுவது மாகிய இள ஞாயிறு. வெவ்வேகம் - நஞ்சு. வெவ்வேறு - தனித்தனி. வெளி - மைதானம், புறம், ஆகாயம், இடைவெளி, பகிரங்கம் உபாயம், தூய்மை, வெண்பா. வெளிக்கட்டு - வீட்டின் முன்பக்கம். வெளிசம் - தூண்டில். வெளிச்சப்பாடு - தெய்வமேறிக் கூறுதல் (Oracle). வெளிச்சம் - விளக்கு, ஒளி, பகிரங்கம், பகட்டு. வெளிது - வெள்ளிய ஆடை, வெண்மை யானது. வெளித்தல் - வெளிப்படையாதல் தெளிவாதல். வெளிப்படை உண்மை - Axiom. வெளிப்பாடு - வெளிப்பட்டுத் தோன்றுகை. வெளிமயக்கு - வெளித் தோற்றத்தி லுண்டாகும் மதிமயக்கம். வெளிமான் - சங்க காலத்துத் தலைவர்களுள் ஒருவன். வெளிமுகடு - அண்டத்தின் புற எல்லை. வெளியரங்கம் - பகிரங்கம் வெளியார் - புறம்பானவர், அயலார். வெளியீட - நூல் முதலியவற்றின் பதிப்பு. வெளில் - யானைத்தறி, அணில், கம்பம். வெளிவிரிவு - விரி வளர்ச்சி (Evolution). வெளிவிருத்தம் - மூன்றடி யாலேனும் நான்கடியாலேனும் முற்றுப் பெற்று அடிதோறும் இறுதியில் ஒரு சொல்லையே தனிச் சொல்லாகக் கொண்டு வெண் பாவுக்கு இனமாக வரும் பாவகை. வெளிறன் - கீழ்மகன். வெளிறு - வெண்மை, நிறக்கேடு, வெளிச்சம், பயனின்மை, அறி யாமை, இளமை, திண்மை அற்றது. வெளிறுப்பனை - வயிரமற்ற பனை. வெளிற்றுமரம் - முள்முருக்கு. வெளிற்றுரை - பயனில் சொல். வெளுத்தல் - வெண்மையாதல், நிறங் கொள்ளுதல், வடிதல். வெளுப்பு - வெண்மை. வெளேரெனல் - நிறம் வெளுத்தற் குறிப்பு. வெள் - வெண்மையான ஒளி பொருந்திய, கூர்மை. வெள்குதல் - நாணுதல், கூச்சப்படுதல், அஞ்சுதல், மனம் குலைதல். வெள்யாடு - வெள்ளாடு. வெள்வரி - சோகி, கண்நோய், வெள்ளரி. வெள்ளடை - வெற்றிலை, பரமா காசம், திருக்கருவூரிலுள்ள சிவன் கோயில். வெள்ளணி - தலைவிக்கு மகன் பிறந்த செய்தியைத் தலைமகன் அறிந்து கொள்ளும் பொருட்டுத் தோழி அணிந்து கொள்ளும் வெண்ணிற முள்ள ஆடை முதலியன, அரசன் பிறந்த நாள் உடை, அரசன் பிறந்த நாள் விழா. வெள்ளம் - நீர்ப் பெருக்கு, கடல், கடல் அலை, மிகுதி, ஒரு பேரெண். வெள்ளரி - கொடி வகை. வெள்ளரிசி - அச்சுதம், அறுகு, அரிசி. வெள்ளர் - கபடமற்றவர். வெள்ளல்லி - வெள்ளாம்பல். வெள்ளவிளர்த்தல் - மிக வெண்மை யாதல். வெள்வெளி - பரவெளி. வெள்ளறிவு - அறிவின்மை. வெள்ளறுகு - புல்வகை. வெள்ளாங்குருகு - வெண்ணாரை. வெள்ளாடிச்சி - வெள்ளாள சாதிப்பெண். வெள்ளாடு - ஆடு வகை. வெள்ளாட்டி - பணிப்பெண், வைப்பாட்டி. வெள்ளாண்மரபு - வேளாள சாதி. வெள்ளாத்திபோளம் - வெள்ளைப் போளம். வெள்ளாப்பு - வெள்ளை மேற்கட்டி. வெள்ளாம்பல் - வெள்ளை நெய்தல். வெள்ளாரல் - மீன் வகை. வெள்ளாவா - காஞ்சி தபசி என்னும் பெயருள்ளதும் இந்திய எலம் எனப் படுவதுமாகிய மரம். வெள்ளாவி - வண்ணான் ஆடையை வெளுத்தற்குத் துணிகளை அவிக்கை. வெள்ளாளன் - வேளாண் மரபினன். வெள்ளாறு - புதுக்கோட்டை நாட்டி லுள்ளதும் சோழ பாண்டிய நாடு களுக்கு இடை எல்லையானதுமான ஒரு ஆறு. வெள்ளானை - இந்திரனுடைய யானை, வெள்ளை யானை. வெள்ளான்வகை - வெள்ளார்க் குரிய கிராமப் பங்கு முதலியன. வெள்ளி - வெண்மை, உலோக வரை, சுக்கிரன், வெள்ளிக்கிழமை, அறி வின்மை, விந்து, தருமபுர ஆதினத் தம்பிரான்களுள் ஒருவரும் கம்பரா மாயணம் பெரியபுராணம் முதலிய நூல்களில் தம் கவிகளை இடைச் செருகியவருமாகச் சொல்லப்பட்ட வருமாகிய ஒரு புலவர். வெள்ளிகலியாணம் - தம்பதிகள் மணந்து 25 ஆண்டு முடிந்த அன்று நிகழ்த்தும் கொண்டாட்டம், துலாக் கோல்வகை. வெள்ளிடம் - இடைவெளி. வெள்ளிடி - கோடையில் இடிக்கும் இடி. வெள்ளிடை - ஆகாயம், வெளி யிடம், இடைவெளி. வெள்ளிமடைமலை - யாவரும் அறியும் படி தெளிவாக இருப்பது. வெள்ளிது - வெளிப்படையானது. வெள்ளித்தடி - பெரியோர் முன் எடுத்துச் செல்லும் விருதுகளுள் ஒன்றான வெள்ளி கட்டிய தடி. வெள்ளிநிலை - துயர்தீரச் சுக்கிரன் மழை பெய்வித்தலைப் புகழ்ந்து கூறும் புறத்துறை. வெள்ளிமலை - கைலைமலை. வெள்ளிமாடம் - அரண்மனை வகை. வெள்ளிமீன் - சுக்கிரன். வெள்ளிமூலாம் - வெள்ளிப்பூச்சு. வெள்ளியம்பலம் - மதுரைக் கோயிலில் நடராசமூர்த்திக்குரிய மன்றம். வெள்ளியார் - வெண்ணிறமுடைய வர், தூய மனமுள்ளவர், சுக்கிரன், சிவன். வெள்ளியுயிர் - மக்கட்பிறப்பு. வெள்ளிலங்காடு - சுடுகாடு. வெள்ளிலை - வெற்றிலை, ஆயுதங்களின் அலகு. வெள்ளில் - விளா, விளாம்பழம். வெள்ளிவள்ளி - பெண்களணியும் வெள்ளித்தோள் வளை. வெள்ளிழுது - வெண்ணெய். வெள்ளுயிர் - சுத்த ஆன்மா. வெள்ளுவரி - நல்லநீர். வெள்ளுவா - வெள்ளை யானை. வெள்ளுள்ளி - வெள்ளைப் பூண்டு. வெள்ளுறி - சைனத் துறவிகள் கைக் கொண்ட உறிவகை. வெள்ளெலும்பு - தசைகழிந்த எலும்பு. வெள்ளெழுத்து - பார்வைக்குறைவு (Long sight). வெள்ளென - அதிகாலையில். வெள்ளெனல் - வெண்மைக் குறிப்பு, தெளிவாதற் குறிப்பு. வெள்ளெடு - எழுதப்படாத ஏடு. வெள்ளை - வெண்மை, சங்கு, வெளுப்பு, வெள்ளாடு, வெண்பா, அற்பம், இசையிலுண்டாம் வெளிற்றோசை. வெள்ளைக்கவி - பன்மொழியாற் கவி பாடுவோன். வெள்ளைக்குசுமரோகம் - மேக நோய் வகை. வெள்ளைக்கொக்கு - கொக்கு வகை (Small egret). வெள்ளைக்கோட்டம் - பயனில பேசும் அறிவிலார் கூட்டம். வெள்ளைநறுந்தாளி - வெண் டாளி. வெள்ளைநாகர் - பலதேவர். வெள்ளைநிறத்தாள் - சரசுவதி. வெள்ளைநோக்கு - கள்ளமற்ற பார்வை. வெள்ளைப்பூண்டு - உள்ளி. வெள்ளைப்போளம் - சிறுமரவகை. வெள்ளைமகன் - மூடன். வெள்ளைமழை - அற்ப மழை. வெள்ளைமேனியாள் - சரசுவதி. வெள்ளைமை - அறிவின்மை. வெள்ளையானை - ஐராவதம், வெண்நிறமுள்ள யானை. வெள்ளையானையூர்தி - ஐயனார். வெள்ளையாரணன் - இந்திரன் வெள்ளையாள் - கடவுளைத் தியானிக்கை. வெள்ளைவிருத்தம் - வெளி விருத்தம். வெள்ளொக்கலர் - குற்றமற்ற மரபினர். வெள்ளொத்தாழிசை - வெண் டாழிசை. வெள்ளொத்தாழிசை -வண்டா ழிசை. வெள்ளொளிப்பருவம் - வெள்ளெழுத்துண்டாகும் பருவம். வெள்ளோசை - பெருங்குரல், வெண்பாவுக்குரிய ஓசை. வெள்ளோட்டம் - சோதனை பார்க்குமாறு புதுமரக்கலம் தேர் முதலியவற்றை முதன் முதலாக ஓட்டுகை. வெள்ளோத்திரம் - மர வகை. வெள்ளோலை - எழுதப்படாத ஓலை. வெறி - ஒழுங்கு, கள், கலக்கம், மதம், விரைவு, வாசனை, வெறியாட்டு, வெறிப்பாட்டு, பேய், தெய்வம், ஆடு, பேதைமை, அச்சம், நோய். வெறிகோள் - வெறியாட்டு. வெறிக்களம் - வெறியாட்டயரும் களம். வெறிக்கூத்து - வெறியாட்டு. வெறிச்சு - ஆளின்றி வெறுமை யாகை. வெறிது - ஒன்றுமில்லாமை, பயனில் லாமை. வெறிநாற்றம் - புணர்ச்சிக்குப் பின் பிறர்க்கு நாற்றம். வெறிப்பாட்டு - வெறியாட்டில் நிகழும் பாடல். வெறிப்பு - கண் கூச்சம். வெறிமலர் - தெய்வத்திற்குரிய பூ, வாசனையுள்ள பூ. வெறியயர்தல் - வெறியாடல். வெறியன் - குடிவெறியன், யாதும் அற்றவன். வெறியாட்டானன் - வெறியாடல் புரியும் வேலன். வெறியாட்டு - வேலனாடல், களி யாட்டம். வெறியாள் - வெறியாட்டாளன். வெறியெடுத்தல் - வெறியாட்டு நிகழ்த்துதல். வெறியோடுதல் - ஒளி மிகுதியால் கண் வெறித்துப் போதல். வெறிவிலக்கு - தலைவிக்குக் காதலால் உண்டான நோயை வேறு காரணத்தாலுண்டானதாகக் கொண்டு அந்நோயைத் தணிக்க வேண்டிச் செய்யும் வெறி யாட்டைத் தடுத்து நிற்றலைக் கூறும் அகத்துறை. வெறுக்கை - அருவருப்பு, வெறுப்பு, மிகுதி, செல்வம், பொன், வாழ்வின் ஆதாரமாயுள்ளது, கையுறை. வெறுக்கைக்கிழவன் - குபேரன். வெறுங்கை - ஒன்றுமில்லாத கை, வறுமை. வெறுத்தகுதல் - செறிதல். வெறுத்தல் - அருவருத்தல், கோபித்தல், பற்றுவிடுதல், மிகுதல், துன்புறுதல். வெறுத்தார் - பற்றற்றவர். வெறுத்திசைப்பு - யாப்பின் ஓசைக் குற்ற வகை. வெறுநரையோர் - முழுநரை உள்ள முதியோர். வெறுநுகம் - சோதி நாள். வெறுப்பு - அருவருப்பு, கோபம், கலக்கம், அச்சம். வெறுமனே - வீணாக. வெறுமன் - வீண். வெறுமை - ஒன்றுமின்மை, அறி வின்மை. வெறுமொருவன் - தனித்தஒருவன். வெறும்புறம் - ஒன்றுமில்லாத நிலை. வெறுவாய்க்கிலைகெட்டவன் - ஒன்றுமில்லாத தரித்திரன். வெறுவயர் - பயனற்றவர். வெறுவலி - ஒன்றுமில்லாதவன். வெற்பிரதம் - கற்பூர சிலாசத்து. வெற்பு - மலை, பக்கமலை. வெற்றம் - வெற்றி, வீரம். வெற்றர் - ஏழைகள், பயனற்றார். வெற்றல் - வெற்றி. வெற்றிவெறிது - பயன் சிறிது மின்மை. வெற்றி - சமயம். வெற்றிடம் - வெறுமையான இடம் (Vacuum). வெற்றிமை - கொடிவகை. வெற்றிலைப்படலிகை - வெற்றிலை வைக்கும் கூடை. வெற்றிலைப்படிக்கம் - தம்பலம் துப்பும் கலம். வெற்றிவேற்கை - அதிவீரராம பாண்டியன் செய்த ஒரு நூல். வெற்றுடல் - பிணம். வெற்றுரை - பொருளற்ற சொல். வெற்றெனத்தொடுத்தல் - பயனில் சொற்றொடர் படக் கூறுவது. வெற்றையர் - சமணர். வென்,வென்றி - வெற்றி. வென்றிக்கூத்து - மாற்றான் ஒடுக்க மும் மன்னன் உயர்ச்சியும் காட்டும் கூத்து. வென்றிமாலைக்கவிராயர் - திருச் செந்தூர்ப் புராணம் செய்த புலவர் (17ம் நூற்.). வென்றியன் - வென்றோன். வென்றோன் - அருகக்கடவுள். வே வேகடம் - மணியின் மாசு நீங்குகை. வேகநிரோதம் - மல மூத்திரங்களை அடக்குகை. வேகப்புள் - கருடன். வேகம் - விரைவு, விசை, வலிமை, மனக் கலக்கம், நஞ்சு. வேகரம் - கடுமை. வேகர் - தூதுவர். வேகவதி - வைகை, காஞ்சீபுரத்துக்கு அருகிலோடும் கம்பா நநி. வேகாரி - பழைய வரிவகை. வேகி - வேகமுடையவர், வஞ்சக முடையவர். வேகித்தல் - விரைதல், கோபித்தல். வேக்காடு - எரிகை, வேகுகை. வேக்காளம் - அழற்சி. வேங்கடம் - திருப்பதி மலை. வேங்கடாசலபதி - திருவேங்கடத் திருமால். வேங்கை - புலி, மர வகை, ஒரு மலை, ஒரு நாடு. வேங்கை நாடு - கோதாவரி கிருட்டிணா வட்டத்தைச் சேர்ந்த தும் பத்துப் பதினோராம் நூற்றாண்டு களில் சோழ அரசரால் ஆட்சி செய்யப்பட்டு வந்ததுமான ஒரு நாடு. வேசகம் - யானை வாலின் நுனி, குதிரையின் பிடரி மயிர். வேசரம் - தெலுங்குமொழி, சிற்ப வகை. வேசரி - கோவேறு கழுதை. வேசறவு - மனச்சோர்வு. வேசனைநாற்றாம் - வெயில் வெப்பத்தால் குளம் முதலிய வற்றின் நீரினின்றெழும் நாற்றம். வேசா - வேசி. வேசாறல் - துக்கம். வேசி, வேசை - பரத்தை. வேடதாரி - மாறுவேடம் பூண்டவர். வேடம் - வேற்று வடிவம், உடை, விருப்பம். வேடன் - வேட்டுவன், வேடதாரி. வேடிக்கை - வினோதம், அலங் கரிப்பு. வேடிச்சி - வேடச்சி. வேடு - வேடர் தொழில், வேடசாதி, வேடன், பாத்திரத்தின் வாயை மூடிக் கட்டும் ஆடை, வடிகட்டு சீலை. வேடுபறி - வழிப்பறி, திருமங்கை மன்னன் திருமாலை வழிப்பறிக்க முயன்றதைக் கொண்டாடும் விழா. வேடுவன் - வேடன். வேடை - வேட்கை, காமநோய், தாகம், வெப்பம், மழையில்லாக் காலம். வேட்கை - விருப்பம், காம விருப்பம். வேட்கை நோய் - வயா, காம நோய். வேட்கைமுந்துறுதல் - தலைவி தன் விருப்பத்தைத் தலைவன் முன் கூறும் புறத்துறை. வேட்கைமை - வேட்கை. வேட்கோ, வேட்கோவன் - குயவன். வேட்சி - வேட்கை. வேட்டகம் - மனைவியின் பிறந்த வீடு. வேட்டக்குடி - வேட்டுவர் வீடு. வேட்டம் - வேட்டை, விருப்பம், விரும்பிய பொருள். வேட்டல் - யாகம் பண்ணுகை, திருமணம், விரும்புகை. வேட்டனம் - அபிநய வகை. வேட்டி - ஆடை. வேட்டு - வேட்டையாடும் தொழில், வெடி. வேட்டுப்பறிதல் - வெடிவெடித்தல், அபான வாயு விடுதல். வேட்டுவன் - வேடன், வேட் டைக்குச் செல்வோன், குறிஞ்சி நிலத்தான், குளவி, மகம். வேட்டுவித்தி - குறிஞ்சி நிலப்பெண். வேட்டுவேளான் - வேட்டுவான். வேட்டை - வேட்டம், வேட்டையில் கிடைக்கும் பொருள். வேட்டைப்பல் - பல்வகை. வேட்டைவாளி - குளவி வகை. வேட்பித்தல் - வேள்வி செய் வித்தல். வேண - வேண்டிய. வேணகை - சுற்று மதில். வேணது - மனத்துத் தோன்றியது. வேணவா - வேட்கைப் பெருக்கம். வேணாடர் - வேணாட்டடிகள். வேணாடு - திருவிதாங்கூர் நாட்டின் பகுதி. வேணாட்டடிகள் - வேணாட்டு அரசன், திருவிசைப்பா பாடிய வருள் ஒருவர். வேணாவியோர் - ஞாயிற்றின் வெப் பத்தால் உலகம் துன்புறாமல் அதனைத் தம்மேல் தாங்கி அஞ் ஞாயிற்றோடு செல்லும் ஒருசார் முனிவர் கணம். வேணி - பின்னியசடை, வசம்பு, நீர்ப் பெருக்கு, தெரு, ஆகாசம். வேணியளம் - மத்தள வகை. வேணினர் - விரும்புபவர். வேணீர் - தாக வேட்கை. வேணு - மூங்கில், குழல், வில், தனுராசி. வேணுகம் - யானைத் தோட்டி. வேணுகானம் - புல்லாங்குழலிசை. வேணுபுரம் - சீகாழி. வேணும் - வேண்டும். வேணூல் - காமநூல். வேண்டலன் - பகைவன். வேண்டல் - விரும்புகை. வேண்டற்பாடு - விருப்பம், தேவை, பெருமை, கருவம், வேண்டுதல். வேண்டாமை - வெறுப்பு, அவா இன்மை. வேண்டாம் - வேண்டத் தக்கதன்று. வேண்டார் - பகைவர். வேண்டிய - தேவையான, மிகுதியான. வேண்டுகோள் - பிரார்த்தனை. வேண்டுதல் - விரும்புதல், இரந்து கேட்கை, வாங்குதல், இன்றியமை யாததாதல். வேண்டுநர் - விரும்புவோர். வேண்மாள் - வேளிர் குலப்பெண். வேண்மான் - வேளிர் குலமகன். வேதகப்பொன் - புடமிட்ட பொன். வேதகம் - வேறுபடுத்துகை, அறி விப்பவன். வேதகிரி - திருக்கழுக்குன்றம். வேதகீதன் - கடவுள். வேதக்கொடியோன் - துரோணன். வேதங்கம் - ஒருவகைத் துகில். வேதசங்கிதை - தொடர்ச்சியாக ஓதப்படும் வேதப்பகுதி. வேதசம் - பிரம்பு வகை. வேதசிரசு - உபநிடதம். வேதஞ்ஞன் - வேதமறிந்தவன். வேதண்டம் - மலை, கைலாசம், யானை. வேதத்தன் - பரமன். வேதநாதம் - வேத ஒலி. வேதநாயகன் - கடவுள். வேதநாயகி - பார்வதி, இலக்குமி. வேதநாவர் - பிராணமர். வேதநியம் - இன்பதுன்பங்களை நுகர்விக்கும் கருமம். வேதநெறி - வேதத்தில் சொல்லப் பட்ட முறை. வேதபாரகன் - பிராமணன், வேதத்தை விளக்குபவன். வேதபீசம் - பிரணவ மந்திரம். வேதமாதா - பார்ப்பனர். வேதமார்க்கம் -வேதத்தில் சொல்லப் பட்ட மதம். வேதமுதல்வன் - கடவுள். வேதமுனி - வேதவியாசன். வேதம் - சமயநூல், மறை. வேதரஞ்சகன் - பிரமன். வேதல் - எதிரில், வெப்பமாதல், சின முறுதல். வேதவனம் - வேதாரணியம். வேதவித்து - வேதங்களை நன்கு அறிந்தவன், கடவுள். வேதவியாசன், வேதவியாதன் - வியாசமுனிவர். வேதவிருத்தி - வேதமோதற்காக விடப்படும் இறையிலி நிலம். வேதவீணை - ஒருவகை வீணை. வேதவேதாந்தன் - கடவுள். வேதவேத்தன், வேதவேத்தியன் - கடவுள். வேதனம் - கூலி, அறிவு, உணர்ச்சி. வேதனி - உள்சருமம் (Demic). வேதனீயம் - கன்ம வகை. வேதனை - வருத்தம், நோவு. வேதன், வேதா - பிரமன், கடவுள். வேதாக்கினி - காருகபத்தியம், ஆக வனீயம், தட்சிணாக்கினி என்னும் மூவகை அக்கினி. வேதாகமம் - வேதமும் ஆகமமும். வேதாங்கம் - சிட்சை, வியாகரணம், சந்தசு, நிருத்தம், சோதிடம், கற்பம் என்னும் வேதப் பொருள்களை உணர்த்தற்குரிய கருவி. வேதாதி - பிரணவம். வேதாந்தசூத்திரம் - வியாசமுனிவர் (வரதராயணர் - கி.மு. 300) செய்த உத்தர மீமாம்சை சூத்திரம். வேதாந்தசூளாமணி - சிவப்பிர காசர் இயற்றிய வேதாந்தநூல். வேதாந்ததேசிகர் - வைணவருள் வடகலையாரால் தலைமையாகப் போற்றப்படுபவரான ஆசிரியர் (14 ஆம் நூற்.). வேதாந்தம் - உபநிடதம், வேதாந்த சூத்திரத்தில் கூறப்படும் உத்தரமீ மாசை மதம். வேதாந்தன் - கடவுள், அருகன். வேதாரணியம் - மறைக்காடு. வேதாளம் - பேய். வேதாளி - காளி. வேதாளிகர் - புகழ்வோர். வேதி - அறிந்தவன், பிரமன், பண்டிதன், மணம் முதலிய சடங்கு நிகழ்த்தும் மேடை, மதில், ஓமகுண்டம், கேட்டை, நட்சத்திரம். வேதிகை - திண்ணை, மணமேடை, பலிபீடம், தெரு, வேறுபடுத்துகை, கேடகம், அம்பு. வேதித்தல் - வேறுபடுத்துதல், தாழ்ந்த வற்றை உயர்பொருளாக மாற்றுதல், நீற்றுதல். வேதித்தார் - பகைவர். வேதிநூல் - இரசாயன நூல். வேதியன் - பிரமன், பார்ப்பான், கடவுள். வேதினம் - ஈர்வாள். வேது - வெம்மை, சூடான ஒற்றடம், வேறுபாடு, வேதனை. வேதுகொள்ளுதல், வேதுசெய்தல் - வேது பிடித்தல். வேதை - துன்பம், ஒருநாளில் திதி நட்சத்திரங்களுக்கு முன்னைய திரி நட்சத்திரங்களோடு உள்ள சேர்க்கை. வேதைக்கயிறு - வேதைப் பொருத் தம் பார்க்கக் கீறிய கீற்று. வேத்தகன் - அறியத்தக்கவன். வேத்தவை - இராசசபை. வேத்தன் - வேந்தன். வேத்தியம் - அறியப்படுவது. வேத்தியல் - அரசனது, தன்மை, அரசர் முன் ஆடும் கூத்து வகை. வேத்தியன்மண்டபம் - ஒலக்க மண்டபம். வேத்தியன்மலிவு - மறமன்னனது மேம்பாட்டினை வீரர் சொல்லு தலைக் கூறும் புறத்துறை. வேத்திரகியம் - பாண்டவர் மறைந்துறைந்த ஓர் இடம். வேத்திரச்சாய் - பிரப்பங்கோரை. வேத்திரத்தாள் - பிரப்பங் கிழங்கு. வேத்திரம் - பிரம்பு. வேந்தன் - இந்திரன், அரசன், சந்திரன், வியாழன். வேந்து - அரசபதவி, இராச்சியம், அரசன். வேபம் - சலனம். வேபாக்கு - வேகுகை. வேபித்தல் - நடுங்குதல். வேப்பநெய் - வேப்பெண்ணெய். வேமம், வேமா - நெய்வோர் தறி. வேமானியர் - தேவர். வேம்பன் - பாண்டியன். வேம்பாதல் - கைப்பாதல். வேம்பு - மரவகை, வெறுப்பு. வேயரிசி - மூங்கிலரிசி. வேயர் - ஒற்றர். வேயல் - சிறு மூங்கில். வேயாமாடம் - நிலா முற்றம். வேயுள் - மூடுகை, மலர்கை, வேய்ந்த மாடம், மேன்மாடி. வேய் - மூங்கில், புனர்புசம், வேய்கை, ஒற்றர் அறிந்து வந்து சொல்லும் சொல், ஒற்றன், ஒற்றினைத் தெரிந்து கொண்ட கூறுபாட்டினைக் கூறும் புறத்துறை. வேய்ங்குழல் - புல்லாங்குழல். வேய்தல் - மூடுதல், ஒற்றுதல். வேய்த்தல் - ஒற்றரால் செயலறிதல். வேய்ந்துணி - ஊதுகுழல். வேய்வனம் - திருநெல்வேலித் தலம். வேய்வை - யாழ் நரம்புக்குற்ற வகை. வேரச்சுக்கொடி - சந்தனவகை. வேரடம் - இலங்கை. வேரம் - வெகுளி, செய்குன்று, கோபுரம். வேரல் - மூங்கில், மூங்கிலரிசி. வேரறுத்தல் - நிர்மூலமாக்குதல். வேரி - தேன், கள், இலாமிச்சை, வாசனைச்சரக்கு வகை. வேர் - தாவரங்களின் வேர், அடிப்படை, காரணம், வேர்வை. வேர்க்கடலை - மணிலாக்கொட்டை. வேர்க்குரு - வேர்வையா லுண்டாகும் சிறு பரு. வேர்க்கொம்பு - சுக்கு. வேர்பொடித்தல் - வேர்கை நீர் அரும்புதல். வேர்வாசம் - இலாமிச்சை. வேர்வு - வேர்வை. வேலப்பதேசிகர் - திருப்பறியலூர்ப் புராணம் பாடியர், (17ஆம் நூற்.). வேலனாடல் - முருகக்கடவுள் ஆவேசிப்ப முருகபூசை செய்வான் ஆடும் கூத்து. வேலன் - முருகன், முருகபூசை செய்பவன். வேலாயுதம் - வேல். வேலாயுதன் - முருகன். வேலாவலையம் - பூமி, கடல். வேலாழி - கடல். வேலி - முள் கழி முதலியவற்றால் ஆன அரண், மதில், காவல், நிலம், வயல், ஒரு நில அளவு, முள்ளிலவு, பசுக் கொட்டில். வேலிக்காசு - பழைய வரிவகை. வேலிப்பயிர் - தோட்டங்களில் விளையும் பயிர். வேலிப்பருத்தி - கொடி வகை. வேலிமான் - Black buck. வேலிறை - மேலாயுதன். வேவேறு - வேல் தைத்த புண். வேலை - தொழில், வேலைப்பாடு, காலம், கடற்கரை, கடல், அலை, கானல். வேலைக்காரன் - ஊழியன். வேலைக்காரி - பணிப்பெண். வேலைநிலையம் - வேலைதேடிக் கொடுக்குமிடம் (Employment Bureau). வேலையாள் - கூலிக்கு வேலை செய்பவன். வேல் - ஆயுதவகை திரிசூலம், ஆயுதப் பொது, வெள்வேல் (Acacia), உடை. வேவல் - பழைய நாண வகை. வேவாள் - ஒற்றாள். வேவு - ஒற்று. வேவை - வெந்தது. வேழக்கரும்பு - பேய்க்கரும்பு. வேழக்கோது - சாறு நீக்கிய கரும்புச் சக்கை. வேழக்கோல் - பேய்க்கருப்பந்தடி. வேழம் - கரும்பு, பேய்க்கரும்பு, மூங்கில், இசை, மேடராசி, பரணி நட்சத்திரம், விளாம்பழத்துக்கு வருவதொரு நோய், ஒரு வகைப் பூச்சி. வேழம்பம் - வஞ்சகம் ஏளனம். வேழம்பர் - கம்பங்கூத்தர், நகை விளைப் போர், கேலி செய்வோர். வேளம் - சோழரால் பிடிக்கப்பட்ட உயர் குலத்துமகளிர் அடிமையாக வாழும் படி அமைத்த அரணிடம். வேளமேற்றுதல் - சிறைபிடித்த மகளிரை வேளத்தில் அமர்த்துதல். வேளா - வாளா. வேளாட்டி - வெள்ளாட்டி. வேளாண்மாந்தரியல்பு - ஆணை வழி நிற்றல் அழிந்தோரை நிறுத்துதல் கைக்கடனாற்றல் கசிவகத் துண்மை ஒக்கல் போற்றல் ஓவா முயற்சி மன் னிறைதருதல் ஒற்றுமை கோடல் விருந்துபுறந்தருதல் திருந்திய ஒழுக்கம் எனப் பத்துவகை. வேளாண்மை - உபகாரம், கொடை பயிர் செய்யும் தொழில், வாய்மை, சத்தியம். வேளாண்வகை - வேளாளன் செய்தற் குரிய கடமைகளை நிறை வேற் றலைக் கூறும் புறத்துறை. வேளாண்வாயில் - இரக்கை. வேளாண்வேதம் - நாலடியார். வேளாப்பார்ப்பான் - இலௌகிகப் பார்ப்பன். வேளாவளி - ஓர் இராகம, பண்வகை. வேளாவேளை - சிற்சில சமயத்தில். வேளாளன் - உபகாரி, ஒரு சாதி. வேளான் - குயவன். வேளிர் - தமிழ் நாடாண்ட அரசர் குலத்தார், குறுநில மன்னர், சளுக்கு வேந்தர். வேளூர் - தஞ்சாவூர் வட்டத்திலுள்ள வைத்தீசுவரன் கோயில். வேளை - காலம், தைவேளை பூண்டு. வேளைக்காரர் - அரசருக்கு நேரப் படி உரிய பணியைத் தாம் செய்ய இயலாதபோது தம் உயிரை மாய்த் துக்கொள்வதாக விரதம்பூண்ட பணியாளர். வேர் - கலியாணம், மன்மதன், முருகக் கடவுள், வேளிர்குலத்தான், சளுக்கு வேந்தன், சிற்றரசன், முற்காலத்தில் தமிழரசரால் வேளாளர் பெற்ற ஒரு சிறப்புரிமைப் பெயர், மண். வேள்புலம் - சளுக்கியர்க்குரிய நாடு. வேள்வி - ஐவகைவேள்வி, ஓம குண்டம், பூசனை, கலியாணம், கொடை, புண்ணியம், களவேள்வி. வேள்விக்கபிலை - வேள்விக்குரிய பால் முதலிய உதவும் பசு. வேள்வித்தறி - யூபம். வேள்வித்தூணம் - யாக பலிக்குரிய பலி விலங்கைக் கட்டி வைக்கும் தூண். வேள்விநாயகன் - இந்திரன். வேள்விநிலை - அரசன் யாகம் செய்த நிலையைப் புகழ்ந்து கூறும் புறத்துறை, தலைவன் சிவந்த பசுவை விடியற்காலையிற் கொடுக் கும் சிறப்பினைக் கூறும் புறத்துறை. வேள்விமுதல்வன் - யாகத் தலைவன். வேள்வியின்பதி - திருமால். வேள்வு - மணத்தில் மணமகள் வீட்டார் வரிசையாக எடுக்கும் உணவுப் பண்டம். வேறல் - வெல்லுதல். வேறாதல் - பிரிதல், மாறுபடுதல், சிறப்புடையதாதல், தனியாதல். வேறு - பிறிது, கூறுபாடு, பகைமை, தீங்கு, புதிது. வேறுகொள்ளுதல் - தனிமையான இடத்தைச் சேரவிடுதல், சிறப்பு டையதாக மதித்தல். வேறுபடுத்தல் - பிரித்தல். வேறுபாடு - வேற்றுமை. வேற்கோட்டம் - முருகக்கடவுள் கோயில். வேற்றலம் - காற்று. வேற்றவன் - அயலான், பகைவன். வேற்றாள் - அன்னியமானவர். வேற்றானை - வேற்படை தாங்கிய சேனை. வேற்றிசைப்பா - சருக்கம் அல்லது இலம்பகத்தின் முடிவில் வேறு பாடான இசைபெற்று வரும் பா வகை. வேற்றுநர் - மாறுவடிவம் கொண்டவர். வேற்றுநிலைமயக்கம் - க் ச் த் ப் ஒழிந்த பதினான்கு ஒற்றுக்களும் தம்முடன் பிற மெய்கள் வந்து மயங்குகை. வேற்றுப்புலம் - பகையிடம். வேற்றுப்பொருள்வைப்பு - சிறப்புப் பொருளைச் சாதிப்பதற்குப் பொதுப் பொருளையும் பொதுப் பொருளைச் சாதிப்பதற்குச் சிறப்புப் பொருளையும் அமைத்துக் கூறும் அணி. வேற்றுமுனை - பகைப் படை. வேற்றுமை - வேறுபாடு, பெயர்ப் பொருளை வேறுபடுத்துவது. வேற்றுமைத்துணை - படை பொருள் முதலிய புறப்பொருள் களால் அரசருக்கு அமையும் துணை. வேற்றுமைத்தொகை - வேற்றுமை யுருபு தொக்குவரும் தொடர். வேற்றுமைநயம் - வேற்றுமைப் படுத்திப் பார்க்கும் முறை. வேற்றுமைப்புணர்ச்சி - வேற்றுமை உருபுகள் இடையில் விரிந்தும் தொக்கும் வரச் சொற்கள் புணர் வது. வேற்றுமைமயக்கம் - ஒரு வேற்றுமை உருபு வேறொரு வேற்றுமைப் பொருளில் வருவது. வேற்றுமையுருபு - இரண்டு முதல் ஏழு வரையிலுள்ள ஆறு வேற்றுமை களை உணர்த்தும் உருபுச் சொல். வேற்றுரு - மாற்று உருவம். வேற்றுவன் - அயலான். வேற்றொலிவெண்டுறை - முன்பில் சில அடிகள் ஓரோசை யாகவும் பின் பிற்சில அடிகள் மற்றோரோசை யாகவும் வரும் வெண்டுறை வகை. வேற்றோன் - அயலான். வேனல் - வெப்பம், வேனிற்காலம், சினம். வேனிலவன், வேனிலாளி, வேனிலான் - மன்மதன். வேனில் - வேனிற்காலம், இள வேனில், வெப்பம், காலை. வேனிற்பள்ளி - நிலா முற்றம். வேனிற்பாசறை - அரசன் வேனிற் காலத்துத் தங்கும் பாசறை. வேனின்மாலை - முதுவேனில் இளவேனில் என இரு பருவங் களையும் சிறப்பித்துக் கூறும் நூல். வேன்மகன் - வெறியாடுவோன். வை வே - கூர்மை, வைக்கோல், புல், தொழிற் பெயர் விகுதியுள் ஒன்று. வைகரி - தெளிவாகக் காதுக்குக் கேட்கும் எழுத்து வடிவான ஒலி. வைகலும் - நாள்தோறும். வைகல் - தங்குகை, வைகறை, நாள், கழிந்தநாள், வேளை. வைகறை - விடியல். வைகறைப்பாணி - அதிகாலையில் கொட்டும் வாச்சிய ஒலி. வைகறையாமம் - விடியுமுன் உள்ள யாமம். வைகாசி - 2ஆம் மாதம், விசாகம். வைகானசன் - ஆகம விதிப்படி ஒழுகுபவன். வைகுசுடர் - விடியுமளவும் எரியும் விளக்கு. வைகுண்டம் - திருமால் உலகம். வைகுண்டவேகாதசி - மார்கழி மாதத்துச் சுக்கிலபட்சத்து ஏகாதசி அன்று திருமாலின் பொருட்டுக் கொண்டாடப்படும் திருநாள். வைகுதல் - தங்குதல், வற்றுதல், விடிதல், புணர்தல். வைகுந்தம் - வைகுண்டம். வைகுபுலர்விடியல் - வைகுறு விடியல். வைகுறு - வைகறை யாமம். வைகுறுமீன் - விடிவெள்ளி. வைகுறுவிடியல் - ஞாயிறு உதய காலம். வைகை - வையை. வைகைத்துறையன் - பாண்டியன். வைக்கோல் - நெற்பயிரின் உலர்ந்த தாள். வைசகி - வைகாசி. வைசசம் - தன் குழந்தைகளைக் கொல்லும் பெற்றோரை வருத்தும் நரகவி சேடம். வைசம்பாயனன் - ஒரு முனிவன். வைசயந்தி - திருமாலணியும் மாலை, பெருங்கொடி கட்டப்பெற்றதும் மாளிகையின் முனபுறத்ததுமான கட்டிடம், தழுதாழை, வனவாசி, (கதம்பர் தலைநகர்). வைசாகநிலை - கூத்து நிலைவகை. வைசாகம் - சாந்திரமாதத்துள் இரண்டாவது. வைசித்திரி - புதுமை. வைசியன் - வணிகன். வைசிரவண்ணன் - வைச்சிர வணன். வைசூரி - பெரிய அம்மை நோய். வைசேடிகம் - கணாதரரால் தாபிக்கப்பட்ட மதம். வைச்சிரவணன் - குபேரன், இராவணன். வைச்சுவதேவி - மாக மாசத்துக் கிருட்டிண பக்கத்து அட்டமி. வைடூரியம் - நவமணியிலொன்று. வைட்டமின் - உணவில் இருக்கும் ஒருவகைச் சத்து (Vitamin). வைணவம் - திருமால் மதம். வைதரணி - எமலோகத்துக்குச் செல்லுமுன் கடக்க வேண்டிய ஆறு. வைதருப்பநெறி - செறிவு தெளிவு முதலிய பத்துக்குணங்களும் அமையப்படும் நெறி. வைதல் - நிந்தித்தல், சபித்தல், வஞ்சித்தல். வைதவியம் - கைம்மை. வைதன்மியதிட்டாந்தம் - சாத்திய மெய்தாவிடத்தில் ஏதுவின் மையைக் குறிக்கும் திட்டாந்தம். வைதன்மியம் - ஒப்பின்மை. வைதாளி - புகழ்ந்து பாடும் பாட்டு. வைதாளிகர் - அரசரைப் புகழ்ந்து பாடுவோர். வைதிகசைவம் - வேதநெறிப்பட்ட சைவம். வைதிகச்சொல் - வேத வழக்கான சொல். வைதிகம் - வேத நெறிப்பட்டது. வைதிகன் - வேதநெறிப்பட்ட ஆசார அனுட்டானமுள்ளவன். வைதிருதி - 27 யோகங்களுள் ஒன்று. வைதூரியம் - வைடூரியம். வைதேகி - சீதாதேவி, திப்பலி. வைத்தல் - இடுதல், அளித்தல், அமர்த்துதல், ஒதுக்குதல், பாது காத்தல், வரையறுத்தல், மனத்திற் கொள்ளுதல், னித்தல். வைத்தூறு - வைக்கோற்போர். வைபவம் - மகிமை, வரலாறு. வைபாடிகம் - பௌத்தமதப் பிரிவு நான்கனுள் ஒன்று. வைபோகம் - சிறப்பு, மகிமை. வைப்பன் - சேமநிதி போன்றவன். வைப்பாட்டி - கூத்தியாள். வைப்பிருக்கை - பண்டசாலை. வைப்பு - வைக்கை, சேமநிதி, புதையல், நிலப்பகுதி, உலகம், செயற்கைச் சரக்கு, வைப்பாட்டி. வைப்புச்சரக்கு - செயற்கை மருந்து. வைப்புழி - சரக்கு முதலியன சேமித்து வைக்குமிடம். வைமனிகர் - தேவர். வையகம் - பூமி. வையஞ்சேர்தல் - இறத்தல். வையம் - பூமி, கூடாரம், வண்டி, எருது, உரோகிணி. வையகரணன் - இலக்கணம் வல்லவன். வையாபுரி - பழநி. வையாபுரிப்பிள்ளை - சென்னை அரசாங்கத்தார் வெளியிட்ட தமிழ்ப் பேரகராதிப் பதிப்பாசிரியராயிருந் தவர் (1888 - 1956.) வையாளி, வையாளி வீதி - குதிரை செல்வழி. வையை - வைகை. வையைத்துறைவன் - பாண்டியன். வைரசு - விடக்கிருமி (Virus). வைரம் - மரக்காழ், வயிரக்கல், பகை, வீரம், வாச்சியப் பொது. வைரவம் - பைரவம். வைரவன் - பைரவன். வைரவனூர்தி - நாய். வைராக்கியசதகம் - சாந்தலிங்க சுவாமிகள் இயற்றிய ஒரு நூல். வைராக்கியஞ்சொல்லுதல் - தான் துறவு பூணத் துணிந்துள்ளதை ஆசிரியர் முன் தெரிவித்துக் கொள்ளுதல். வைராகி - வடநாட்டிலிருந்து பிச்சை யெடுத்துத் தேச சஞ்சாரம் செய்யும் கூட்டத்தைச் சேர்ந்தவன். வைராக்கியம் - உலகப் பற்றின்மை, விடாப்பிடி. வைவு - சாபம். வைவச்சுதபுரம் - யமனுடைய நகரம். வைனதேயன், வைனன் - கருடன். வைனாசிகம், வைனாசியம் - 88 ஆவது பாதத்தைக் கொண்டதும் சன்ம நட்சத்திரத்திற்கு இருபத்து முன்றாவதுமான நட்சத்திரம். வெள வெளவால் - வவ்வால். வெளவானத்தி - மண்டபத்தின் ஒரு வகை மேல் முகடு. வெளவுதல் - கைப்பற்றுதல், ஆற லைத்தல், திருடுதல், கவர்தல். தாவரங்கள் - விஞ்ஞானப் பெயர்கள் அகத்தி - Sesbania grandiflora. அகில் - Aquilaria agallocha. அசோகு - Saraca Indica. அடம்பு, குதிரைக்குளம்பு - Ipo moea biloba. அடுக்குநந்தியா, வட்டை - Tabernae montana coronaria. அதிவிடயம் - Aconitum hetero phyllum. அத்தி - Ficus glomerata. அந்தரத்தாமரை - Limnanthemum cristatum. அந்தி மந்தாரை - Marablis jalaha. அமுக்கிரா, அசுவகந்தி - Withania somnifera. அரசு - Fucus religiosa. அரிசி - Oryza sativa. அருநெல்லி - Phyllanthus distichus.(Star gooseberry). அலங்கை - Ipomoea bonanox. அலரி - Nerium ordorum. அலவாங்குப் புல் - Erigeron sumatrensis. அலிங்சி - Rhododendron arboreun. அல்லி, (ஆம்பல், நீலோற்பலம்) - Nymphaea pubescens. அவரை - Dolichos lablab. அவுரி - Indigofera Indica. அறுகு - Cynodon dactylon. அறைக்கீரை - Amaranthus gangeticus. அன்னாசு - Ananas sativus. ஆகாசத்தாமரை - Pistia satiotes. ஆசினிப்பலா, ஈரப்பலா - Artocar-pusnobilis. ஆச்சா - Hardwikia binata. ஆடாதோடை - Adhatoda vasica. ஆடாதோடைக் குடும்பம் - Acanthacea. ஆடு தின்னாப்பாளை கருடக் கொடி - Aristolechia indica. ஆதொண்டை - Capparis zeylanica. ஆத்தி (மந்தாரை) - Bauhinia racemosa. ஆப்பிள் - Pyrus; apple. ஆமணக்கு - Recinus communis. ஆம்பல் - Nymphae nouchali. ஆரஞ்சு - தோடை பார்க்க ஆல் - Ficus begalensis. ஆவிரை - Cassia auriculata. ஆளி - Linum usitatissimum. ஆற்றலறி - Polygonum glabrum. ஆற்றுநெட்டி - Aeschyno meneaspera. ஆனைக் கற்றாழை - Agavevera cruz (americana). ஆனைக்குன்று மணி (மஞ்சாடி) - Adenan theria pavonia. ஆனைச்சுவடி - Elephantopus scaber. ஆனை நெரஞ்சி - Pedalium murex. இஞ்சி - zingiber officinale. இயங்கு - Azima teracantha. இரணகள்ளி (இலை முளைச்சி) - Bryophllum pinnatum (Caly cinum). இரப்பர் - Hevea braziliensis. இரயில் கற்றாழை, ஆனைக் கற்றாழை இராமசீதா - Anona reticulata. இராமதுளசி திருநீற்றுப்பச்சை - Ocimum Basilicum (sweet basil). இராவணன்புல், இராவணப்புல் - Spinifix Squarosus. இருப்பை - Madhuca (bassia) lonifolia. இருள் - Xyba dolabriformis. இலந்தை -zizypus jujuba. இலவு - Eriodendron. இலவு (முள்) - Gossaminus (bombax) Malabaricum (cotton tree). இறம்புத்தான் - Nehelium apaceum. இறாணை - Alseedabhne semecarifolia. ஈஞ்சு -Poenix dactylifera. ஈருள்ளி, ஈரவெங்காயம் - Allium cepa. உடலை, உடளை, காட்டலரி, கடல்மா - Cerbera Manghas (odollum). உடைவேல் கல் உடை - Acacia eburnea. உணா - நுணா. உதிரவேங்கை - வேங்கை. உருளைக்கிழங்கு - Solanum tuberosum. உவா - Dillenia indica. உழுந்து - Phasolus maxima. உள்ளிப்பூடு - Allium sativum. உன்னி - Lantana indica. ஊமத்தை - Datura alba. எட்டி - Strychnos nuxvomica. எருக்கு, எருக்கலை - Calotrophis gigantea. எலிச்செவி - Atriplex repens. எலுமிச்சை - Citrus acida. எள்ளு - Sesanum indicum. ஏலக்காய் - Elettaria cardamo mum. ஏழிலைப்பாலை - Alstonia scholaris. ஒட்டுப் புல் - Bides Chinensis (pilosa) (Spanish needle). ஓமம் - Carum copticum. கக்கரி - Cucumis. கஞ்சா - Cannabis sativa (Indian hemp). கடலை (கொண்டை) - Cicer arietinum (Bengal gram). கடல் தேங்காய் - Lodoicea seychellarum. கடுகு - Brassica juncea. கடுக்கன் பூ - Antigonan leptopus. கண்டல் - Avicennia Officinalis. கத்தரி - Solanum melangena. கமுகு - Areca catechu. கம்பிராணி மாவகம் - prkia biglandulosa. கம்பு - Pennisetum spicatum (typhoideum). கம்புக் கள்ளி - Euphorbia tirucalli. கராம்பு - Eugenia caryophyllata. கரிசலாங்கண்ணி - Eclipta alba. கருக்குப் பீர்க்கு - Laffa acitangula. கருங்காலி - Diosphyrosebenum. கருங்கோட்டாமரம் - Samadera indiaca. கருநெச்சி வாதங்கொல்லி - Justicia gendarussa. கருந்தும்பை - Anisomeles malabarica. கரும்பு - Saccharum officinarum. கருவேல் - Acacia arabica. கலப்பைக் கிழங்கு நாபிக் கொடி காந்தள் - Gloriosa Superba. கவுறை வாழை - Allo indica. கழற்சி - Caesalpinia bonducella. கழா (சிறு) - Carissa spinarum. கழுதை முள்ளி - Acanthus illicifolius. கள்ளி - Cactus. கள்ளி மந்தாரை - Plumeria acutigfolia. கறிச் சாறணை - Boerhaavia diffusa. கறுத்தைப் பூ, சங்கு புட்பம், கறுவிலி, காக்காத்தான் கொடி - Clitoria ternatea. கறுவா - Cinnamomum zeylanicum. காக்காய் கொல்லிவிரை - Anamirta cocculus. காசித்தும்பை - Impatiens parviflora. காட்டாமணக்கு - Vitex pinnata (altissima). காட்டுக் கஸ்தூரி - Hibiscus abelmoschus. காட்டுக் கரும்பு, நீர்க் கரும்பு - Jussiaea suffruticosa. காட்டுக் கொடி - Similax zeylanica. காட்டுக் கொழுஞ்சி - Tephrosia purpurea. காட்டுச் சீரகம் - Vemonia anthelmintica. காட்டுத் தெங்கு - Sterculia anthelmintica. காட்டுமா - Spondias mangifera. காட்டு மிளகு - Toddalia aculeata. காயா - Engenia bracteata. காரை - Randia dumetorum. காறல்சேனை - Phaseolus adenanthus. காறுங்கருனை - Typhonium trilobatum. கான வளையல் - Commelina. கானாவாழை - Canna indica. கிலுகிலுப்பை - Crotolaria verucossa. கீழ்காய் நெல்லி - Phyllanthus niruri. கீரை - Amaranthus. குங்குலியம் - Shorea robusta. குங்குமப்பூ - Crocus sativus (saffron). குதிரைக் குளம்பு - Ipomoea pescaprae (biloba). குதிரை வாலி - Alyssicarpus bupleurifolius. குப்பிளாய் - Vernonia zeylanica. குப்பை மேனி - A calypha indica. குப்பை வேளை பிள்ளையார் பூ பட்டிப் பூ துள்ளு காசி மல்லி - நித்திய கல்யாணி பார்க்க குருவிச்சை - புல்லுருவி பார்க்க குரோட்டன் - Cardiaeum variegatum. குள வாழை - பதும ராகப் பூ பார்க்க குன்றி - Albrus precatorious. கூழா - Eleusine coracana. கூந்தற் பனை இத்துல் - Caryota urens (malabar sago plant). கூவை அரோ ரூட்டு - Curcuma angustifolia (arrow root). கேழ் வரகு - Eleusine coracana. கொங்கு - Hopea wightina. கொடி அத்தி - Ficus pumila. கொடிப் புளியாரை - Oxalis coniculata. கொடுக்காய்ப் புளி - Pithcolo biumn dulce. கொட்டி - Aponogeton natans. கொத்த மல்லி - Coriandrum sativum. கொயினா சிங்கோனா - Chinchona officinalis. கொய்யா - Psidium groyava. கொவ்வை - Cephalandra indica. கொழிஞ்சி - Tephrosia purpurea. கொள்ளு - Dolichos biflorus. கொற்றான் ஆகாசவல்லி - Cassytha filiformis. கொன்றல் - Cassia. கோப்பி, காப்பி - Coffea arabica. கோரை - Cyperus rotundua. கோவொதி - Psoralea crylifolia. கோழியவரை - Canavalia ensiformis. (sword bean). சணல் - Crotolaria juncea (sunn hemp). சண்பகம் - Michelia champaka. சதுரங்கள்ளி - Euphorbia antiquorum. சமுத்திரப் புளியன் யானைப் புளியன் இரிக்கி - Entadas candens. சரக்கொன்றை திருக்கொன்றை கவணை - Cassia firtula. சர்க்கரை வள்ளி - Ipomea batatas. சல்லாத்துக் கீரை - Latuca (லெட்டிஸ்). சவுக்கு - Equisetifolia. சவுக்கு மரம் - Casuarina equisetifolia. சாமந்தி செவ்வந்தி - Chrysanthem indicum. சாதிக்காய் - Myristica fragrans (nutmeg). சாத்தாவாரி - தண்ணீர்விட்டான் பார்க்க. சாமி - Panichum miliare. சாம்பற் பூசனி - Cucurbita pepo. சாயவேர் - Hedyotis puberula. சிகைக்காய் - Acacia concinna. சிங்காரக்கொட்டை - Trapa bispinosa (water chestnur). சித்தப பாலாவி - Euphorbia hirta. சித்தமட்டி குறுந்தொட்டி - Sida rhomobifolia. சிமிக்கிப் பூ - Passiflora edulis. சிவனார் வேம்பு - Indigofera aspalathoides. சிறி பூனைக்காலி பாசன் கொடி- சிமிக்கிப் பூ சிற்றகத்தி - Sesbania aegyptiaca. சிற்றாமுட்டி - Pavania zeylanica (sida rhombifolia). சீதா - Squamosa. சீதேவியார் - Vernonia cinerrea. சீமை அத்தி - Ficus earica. சீமை அலரி - மஞ்சளலரி. காட்டுச் சோம்பு - Caladium. சீமைத் தக்காளி - Lycopersicum esculentum. சீமை நாய் விருஞ்சி - Stachytar pheta indica. கண்டை - Solanum indicum. கரை - Lagenaria leucantha. செங்கொட்டை - Semecarpus anacardium (marking nut). செஞ்சந்தனம் - Pterocarpus santalinus. செப்பு நெருஞ்சி - Indigofera enneaphylla. செம்பரத்தை - Hibiscuarosasi nensis. செம் பருத்தி - Gossypium arboreum. செம்முள்ளி காட்டுக் கனகாம்பரம் - Barleria prionitis. சேம்பு - Colocasia antiquorum. சோளம் - Sorgam vulgare. தகரை - Cassia tora. தக்காளி - Lycopersicum escule ntum. தணங்கு - Gyrocarpus jacquini. தண்டுக் கீரைப் புலி - Gynuracrepidiodes. தாமரை - Nelumbium speciosum. தாழை - Pandanu ordoratissimus (screw pine). தாளி - Ipomoea hederacea. தாளிப்பனை தளப்பத்து கூந்தற் பளை - Coryhaumbraculifera (talipot palm). திப்பிலி - Piper longum. திப்பிலிப் பனை (கித்துல்) - Caryota urens. திராட்சை - Vitis vinifera. திருகு கள்ளி, காம்புக் கள்ளி - Euphorbia tirucallia. திரு நீற்றுப்பச்சை - Ocimum bacilicum. திருவாத்தி - Bauhinia tomentosa. துண்டம் பாலை - Wrightia. துத்தி பெருந் துத்தி - Abutilon indicum. தும்பை - Leucas aspera. துளசி - Ocimum sanctum. துவரை - Cajanus indicus. தெத்தி - Ixora coccinea. தென்னை - Cocos nucifera. தேக்கு - Tectona grandis. தேங்காய்ப்பூக் கீரை பூளை - Aerua lanata. தேள்கொடுக்கி - Heliotropium. தேற்றாங்கொட்டை - Sapindus trifoliatus. தொட்டால் சிணுங்கி - Mimosa pudica. தோடை (ஆரஞ்சு) - Citrus aurantium (orange). தோதகத்தி ஈட்டி - Dalbergia latifolia. நத்தைச் சூரி - Spermacoce hispida. நந்தி - Indigofera oblongifolia (paucifolia). நரிப் பயறு - Phaseolus trilobus. நரி வெங்காயம் - Scilla. நற்பாலை - Asclepias. நாக சண்பகம் - Tecoma stans. நாகதாளி, நாககள்ளி - Opuntia dillenia. நாகநல்லறுகு - Vanda wightiana. நாகம் - Mesua ferrea (ceylon iron wood). நாட்டுத் தக்காளி, சிறுதக்காளி - Physalis indica. நாட்டு வாதுமை - Terminalia captapa. நாயுருவி - Achyranthes asspera. நாயுரைஞ்சி - Stachytarpheta indica. நாய்க் கடுகு நாய் வேளை - Cleome viscosa. நாய்த் துளசி - Ocimum canum. நாரத்தை - Citrus medica. நாவல் - Eugenia Jabolana. நித்திய கல்யாணி குப்பைவேளை - Vinca rosea. நிலக்கடலை - Arachis hypogaea. நிலப்பனை - Curculigo orchi oides. நீர்க் கடம்பு - Mitragyna arvifolia. நீர் நாவல் - Syzygium gardneri. நீர் நொச்சி வாத மடக்கி - Clerodendron indicum. நீர்முள்ளி - Hygrophylla spinosa. நீலோற்பலம் - Nymphaea stelata. நூறை - Nephelium longan. நெட்டிலிங்கம் அசோகு - Polyalthia longifolia. நெருஞ்சி - Tribulus terrestris. நெல்லி - Phyllantes emblica. நொச்சி - Vitex negundo. பச்சைப் பயறு - Phaseolus mungo. பட்டாணி - Pisum sativum. பதுமராகப் பூ குள வாழை - Water hyacinti. பப்படகப் புல் - Hedyotis corymbosa. பப்பாளி - Carcia papaya. பருத்தி - Gossypium herbbaceum. பலா - Jack artocarpus. பலாசு - Butea frondosa. பவளமல்லி, பாரிசாதம் - Nycitanthes. பனிச்சாமி - Panichum miliaceum. பனை - Borassus flabellifer. பன்றித் தகரை - Cassia tora. பாகல், கத்தரி - Momordica charantia Bignonia chelonoides. பார்லி வாற்கோதுமை - Hordeum Vulgare. பாலாவி - Euphorbia hirta. பாலைமரம் - Manilkara (mimusops) hex - andra. பாவட்டை - Pavetta indica. பிரண்டை - Cissus quadran gularis. பிரமதண்டம் - Argemone mexicana. பிரம்பு - Calamus rotang. பிளவையம் - Mundulea suberosa. பீ நாறி - Sterculia foetida. பீர்க்கு - Laffa aegyptiaca. புகையிலை - Nicotiana tabacum. புதினா - Mentha piperita. புரசு - Choloroxylon swietenia (satin wood). புல்லுருவி குருவிச்சை - Loranthusfalcatu. புளி - Tamarindus indi. புளிக்கீரை - Portulaca oleracea. புளிச்சக்கீரை - Hibiscua sabdariffa. புளியறாரை - Oxalis arbicutaia. புறா முட்டி - Trumfettarhom bifollia. புன்க மரம் - Pongaamia glabra. புன்னை - Callophyllum. பூசனி சர்க்கரைப் பூசனி - Cucurbita maxima. பூ மருது - Lagesta emiar flosregina. பூம்புல் - Ageratum conyzoides. பூளை - தெங்காய்ப்பூக் கீரை. பூவரசு - Thespesia populanea (tuli tree). பூனைக் கீரை - Ipmomea pesdi gridis. பெரிய புளியாரை - Oxalis corymbosa. பெருங்களா - Carissa carandas. பொருங்காய் - Ferula foetida (asafoetida). பெருங் குரும்பை - Clematis. பெருமயிற் கொன்றை - Poinciana regia. பெரு மூங்கில் - Bambusa arundinacea. பேரமட்டி - Hibiscus inicrabthus. பேரீஞ்சு - Phoenix sylvestris. பொடுதலை - Lipia nodiflora. பொன்னாங்காணி - Alterna thera sessilis. பொன்ன விரை சீமை ஆவிரை - Cassia siamea. மகிழ மரம் - Mimusopa eengil. மஞ்சவண்ணா நுணா - Morianda tintoria. மஞ்சளலரி - Thevetianerifolia. மஞ்சள் - Curcuma longa (tumeric). மஞ்சாடி, ஆனைக்குன்றுமணி - Adenan thera pavonia. மணலி - Gisekia pharbaceoides. மணித்துத்தி - Hibiscus vitifollius. மயிர் மாணிக்கம் - Ipomoea Quamoclit. மயில் கொன்றை - Caesalina pulcherrima. மர மல்லிகை - Millinggtonia hortrnsis. மரி மாங்காய் - Spondidas pinnata. மருது - Terminalia arjuna. மருதோன்றி - Lawsonia alba. மருளுமத்தை - Xanthium strumarium. மலைப் பருத்தி - Firmina colorota. மலையாமணக்கு - Talopha multifida. மலை வாகை - Pithecolobium subscoriaceum. மலை வேம்பு - Melai composita. மல்லிகை - Jasminum. மனோரஞ்சிதம் - Artobotrys odoratissimus. மா - Mangifera indica. மிளகாய் - Caspicum annuum. மிளகு - Pepper nigrum. முகட்டை - Rivea ornata. முடக்கொற்றான், உழிஞை - Cardios permum halicacabun. முடி தும்பை - Leucas zeylanica. முடித் தக்காளி - Cascuta. முட்டைக்கோசு - Brassica oleracea. முந்திரி - Anarcardium occidentale (caschew nut). முருங்கை - Moringa oleifera. முள்சீதா - Anona muricata. முள்முருங்கை - Erythrinaindica. முள் வேங்கை - Bridelia retusa. முள்ளங்கி - Raphanus sativus. முள்ளிலவு - Bombax mala baricum. மொச்சைக் கொட்டை - Dolichos lablab. யானைப்புள்ளியன் சமுத்திரப் புளியன் இரிக்கி - Entadas candens. யானையடி - Elephantepus scaber. யூகாலிப்டஸ் - Eucalyptus alba. வட்டத்துத்துத்தி - Abutilon hirtum. வண்டுகொல்லி - Cassia alata. வத்தகை - Citrillua vulgaris. வரகு - Paspalum, scrobiculatum. வல்லாரை - Hydrocoty! asiatica. வற்றாளை - சர்க்கரை வள்ளி. வாகை - Cassia magninate, albizzia lebbek. வாடா மல்லிகை - Gomphrena globosa. வாதநாராயணம் - பெருமயிற் கொன்றை. வாலுளுவை - Dalberrgia lanceo laria. வாழை - Musa Paradisica. விடத்தல் - Dichrostachys cinerea. விடமூங்கில் - Crinum assiaticum. விட்டுணு கிராந்தி - Evolvu lusw alsinoides. விளா - Feronia elephantum. வெண் கடம்பு - Anthoce phalus cadamba. வெண் கண்டல் - Avicennia marina. வெண்டை - Hibiscus esculentus. வெள்வேல் - Acacia leucophloea. வெள்ளரி - Cucumis sativus. வெள்ளைக் கடம்பு - Anthoce phalus cadamba. வெள்ளறுகு - Enicostema verticillatum. வெள்ளிலை - Massaenda fondosa. வேங்கை - Pterocarpus mar supium. வேம்பாடம் - Ventilago. வேம்பு - Margosa, melia azadiracta indica. வேர்க்கடலை - Arachis hypogea. வேலம்பாசி - Hydrilla. வேலிப் பருத்தி நீர்ப் பருத்தி - Hibiscus tilaceus. வெற்றிலை - Piper bitel. வேளை - Gynandropsis pentaphyllia. புல் பெயர்கள் அசட்டுப்புல் - Soporobolus diander (Drop seed grass). அறுகம்புல் - Cynodon daetylon (Doub grass). இஞ்சிப்புல் - Panicum repens (Couch grass). இலைக்காம்பு செம்புல் - Ischae mum timorrnse (Stalkedred grass). உண்ணிப்புல் - Alloteropsis cimicina (Bugseed grass). (உ) ரொட்சிப்புல் - Chloris gayana (Rhodes grass). ஊசிப்புல் - Aristida depressa (Arrow grass). ஏலம் சாணிப்புல் - Brachiaria reptans (Eary signal - gress). ஒட்டுப்புல் - Chrysopogon aciculatus (Love grass). ஓரொட்டி - Eragrostis curvula (Weeping leve grass). கவைப்புல் - Dactyloetenium aegyptium (Crow foot grass). கறுங்காணிப்புல் - Eriochloa procera (cup grass). காட்டுப்புல் - Ischaemum imbricatum (Talon red grass). கிக்கியுப்புல் - Pannisetum clamdestinum (Kikuyu grass). கினியாப்புல் - Panicum maximum (Guinra grass). கீரைப்புல் - Degitaraia adscedens (Crab grass). குருவிப்புல் - Chrysopogon montanus (Kuruvi). கொடி அரங்கு - Digitaria Longiflora (creeping grass). கொழுக்கட்டைப்புல் - Cenchrus ciliaris (Fox - tail grass; buffle grass). கோழிக் காற்புல் - Dacy tylisglomerata (cocksfoot). கௌதமாலா பல் - Tripsaum laxum (Guate - mala grass). சாப்புப்புல் - Axonapus com pressus (Broad leaf carpet grass). சிறகு பனிப்புல் - Eragrstis viscose (Vicid feather grass). சின்ன கோழிச்சூடன் - Echinochloa colonum (Wild millet). சின்னசாப்புப் புல் - Axono pusaffinis (Narrow - leaf carpet grass). சின்ன சாணிப்புல் - Brachiaria distachya (Small signal grass). செம்புல் - Ischaemum aristatum (Red - grass). தண்ணீர்ப்புல் - Brachiaria purpuraseens (Water grass). தர்ப்பைப்புல் - Imperaria cylindrica (Illuk). திப்புராகி - Eleusine indica (Gosse grass). திருப்புல் - Cymbopogon poly neuros (Delft grass). துடைப்பபுல் - Cymbopogon polyneuros (Delft grass). தேன்புல் - Melinis minutiflora (Molasses grass). நத்தார்ப்புல் - Rhynchelytrum repens (Natal grass). நீட்டப்புல் - Paspalumurvillei (Upright paspalum). நீலகினியாப்புல் - Panicum antidotale (Blue panic). நீலப்புல் - Digitarias didactyla (Australian blue grass). நேபியர்புல் - Pannisetum purpureum (Napier grass). பள்ளந்துறைப்புல் - Lolium prenne (Perennial ryegrass). பனிப்புல் - Heteropogon contortus (Spear grass). பனிப்புல் - Themeda gremula (Dewdrop grass). பஸ்பலும்புல் - Paspalum dilatum (paspalum). பஸ்பலும் புளிம்பல் - Paspalum conjugatum (Sour grass). பிரிசாந்தப் புல் - Brachiaria brizantha (Palisade signal grass). பெரிய கோழிச் சூடன் - Frumen taces (Japanese millet). பெரிய சாணிப் புல் - Brachiaria miliformis (Large signal grass). மயிற்புல் - Chloris inflata (Purple top grass). மார்க்காபுல் - (Pannisetum purpureum (Marker’s grass). மானா - Cymbopogon conferti florus (Mana). பறவைகள் அடைக்கலாங் குருவி, ஊர்க் குருவி - Indian house sparrow. அண்டங்காகம் - Jungle crow. ஆட்காட்டி - Indian courser : lapwing. ஆந்தை - Bay owl. ஆலா - Fishing eagle; White bellied sea - eagle. ஆறுமணக் குருவி தோட்டக் கள்ளன் - Indian pitta. ஆற்றுக்குருவி - Tern. இரட்டைச் சொண்டுக்குருவி இரு வாய்க்குருவி - Hornbill. இராசதாரா - Quacking duck; Cotton teal. இராசாளி, கழுகு - Hawk eagle. ஈப்பிடிப்பான் - கட்டலான் குருவி உண்ணிக்கொக்கு, குருட்டுக் கொக்கு - Cattle egret; Heron or paddy bird. உப்புக்கொத்தி - Little ringed plover. உமிப்புறா - சாம்பற்புறா, உழவாரக்குருவி - Palm swift. உள்ளான்குருவி - Snipe. ஊதியக்காரக்குருவி (குயில்) - Common hawk Cuckoo. ஊமத்தங்கூவை - Browb fish owl. ஊர்க்குருவி - ஆடைக்கலாங் குருவி. எருத்துவால் குருவி, கொண்கை கரிச்சான் - Drongo. கடல் ஆலா - White - billed sea eagle. கடல் குருவி - Tem; Gull. கட்டலான் குருவி - பஞ்சாங்கம். பிராமணக் குருவி - Blue tailed bee eater. கரிக்குருவி - Ceylon black bird. கருங்குருவி - Indian robin. கருநாரை - Open bill. கல்லுக் குருவி - Pied bush chat. கல்லுப் பொறுக்கி - Stint. கவுதாரி - Patridge. கழுகு - Eagle; Vulture. கறுப்பு இராசாளி - Indian black eagle. கறுப்புக் கொண்டைக் குருவி - South Indian black bulbul. கறுப்புக் கோட்டான் - Glassyibis. கற்கவுதாரி - Common sand grouse. கன்னிக்கிளி - Ceylon loriquet. காகம் - House crow. காடை - Quail. காட்டுக்கோழி - Jungle fowl. காட்டுப்புலுனி - Southern rufousbacked shrike. காரிக்குருவி - வண்ணாத்திக் குருவி. கானான் கோழி - Crake; blue breasted banded rail; Indian morr hen. கிளி - Paroquet. கீச்சாங் குருவி - Shrike. குக்குளுப்பான், (மீன் கொத்தி) - Stork billed kingfisher. குக்குறுவான் - Barbet. குங்குமப் பூச்சிட்டு - Scarlet minivet. குடுமியான் பருந்து - Ceylong crested serpent eagle. குதிரை மலைக் கோட்டான் - Esatern curiew; Whimbrel. குயில் - Asiatic Cuckoo Indian koel. குருட்டுக் கொக்கு - Chestnut bittern குளுப்பை - Little grebe. கூளி - Jawny eagle. கூளைக்கடா - Spotted billed pelican. கொண்டலாத்தி, கொண்டைக் குலாத்தி - Hoopoe. கொட்டைப்பாக்கன் - Indian tailor bird. கொண்டைக் கரிச்சான் - Rocket tailed drongo. கொண்டைப் புறா - Crowned pigeon. கொண்டைக் குயில் - Crested cuckoo. கொண்டைக் குருவி - Madras redvented bulbul. கொண்டையன் - Crested haw keagle. கோட்டான் - Turnstone; Eastern gray Plover. கோட்டன் - Sandier; Plover. சங்கு வெள்ளை நாரை - Painted stork. சாப்பைக் சொண்டன் - Indian spoon bill. சாம்பற் புறா - Indian ring dove. சாவல் குருவி - Ceylon hoopoe. சாவுக் குருவி - Indian barn owl. சில்லித்தாரா - Whistling teal. சிற்றுள்ளான் - Snippets. சின்ன ஆந்தை - Malabar jungle cwlet; Ceylon brown hawk-owl. சின்னக் குக்குறுவான் - Small barbet. சின்னக் கோட்டான் - Little ringed plover. சின்ன மாம்பழம் குருவி - Ceylon iora. சின்ன வல்லூறு - Besra sparrow hawk. கரகுருவி (மைனா) - Rose coloured starling. செந்நாரை - Night heron, Eastern purple heron. செம்பகம் - Crow Pheasant. செம்பக தாரா - Whistling teal. செம்பருந்து - Brahminy kite. தச்சன் குருவி, மரங்கொத்தி - Wood pecker. தண்ணீர்க் கோழி - Water fowl. தலையில்லாக் குருவி தாம்பாடி அடைக்கலாங்குருவி - Eastern swallow. தாரா - Duck, teal. தினைக்குருவி - Warbler Wren. தூக்கணங் குருவி, மஞ்சள் குருவி - Baya; striated weaver fitch. தேன்குடி, குடியான் - Loten’s sunbird. தேன் பருந்து - Indian honey crested bazzard. தோசிக் கொக்கு - Indian green bittern. தோணிக் கொக்கு - Grey pelican. நத்து - Ceylon scoys owl. நத்தை பொறுக்கி - Oyster catcher. நாக்கணம் பாச்சி - Brahminy mynah. நாரைக் கொக்கு - Eastern purple heron. நீர்க் காகம் - Cormorant. நுளிமடையான் - Indian pond heron. நெடுங்கிளாத்தி, நெடுங்கழுத்தள் - Indian darter or snake bird. நெத்தைக் காலி - Pipit. நெல்லுக்குருவி - Munia. பச்சைப் புறா - Green pigeon. பஞ்சவர்ணக்கிளி - Macaw. பவளக் காலி - Black winged stilt. பறைப் பருந்து - Common parish kite. பனங்காகம் கொட்டுக் கிளி - South Indian roller. பாட்டுக்காரிக் குருவி - Ceylon magpie robin. பாதிகைக் குருவி - Nightjar. பாதிகைப் புறா - Brown wing pigeon. பாம்புக் குருவி - Snake bird or Indian darter. பிராந்து குடும்பியன் - Ceylon crested ser pent eagle; Desert buzzard; Black winged kite. பூக்குடிச்சான், தேன் குடி - Purple sunbird. தேன் பருந்து - Indian creasted honey buzzard. பூநாரை - Flamingo. பூனைப் பருந்து - Harriar. பெரிய ஆந்தை - Eagle owl. பெரிய கிளி - Large Ceylonese paroquet. பெரிய கோட்டான் - Green Shank. பெரிய நாரை - Blach necked stork. பெரிய வெள்ளைக் கொக்கு - Large egret. மணல் நாரை - Yellow bittern. மணல் புறா - Pheasant tailed jacana. மணிப்புறா - Ceylong sotted dove. மருட்டன் புறா - Ceylon green imperial pigeon. மலைக்கோட்டான் - Red shank. மலை நாக்கணம் பாச்சி - Southern grackle. மாடப் புறா - Indian bule rock pigein. மாம்பழக் குருவி மாங்குயில் - Orange miniver, Indian black headed oriole. மீவா - மணல் புறா. முக்குளுவான் - Indian little grebe. முயல் கிணாண்டி - Indian stone plover. மூக்கன் தாரா - Comb duck. மேலாக் கொக்கு - Smaller adjutant. வண்ணாத்திக் குருவி, காரிக் குருவி - Black backed indian robin. வண்ணத்தி நாரை - Indian white becked stork. வல்லூறு - Falcon; Ceylon shikra. வழி மருட்டன் - White bowed fantail fly catcher. வாத்து - Goose. வாயலான் - Fan tailed wabler. வாலாட்டி - Wagtail. வானம்பாடி, புள்ளு - Skylark. விரலடிப்பான் - Osprey. வெடிவாற் குருவி - Indian paradise fly Catcher. வெள்ளைக் கொக்கு - Indian smaller egret. வேலைக்காரக்குருவி, புலுனி - Ceylon babbler. இராகு முதலிய காலங்கள் இராகு காலம் குளிகை காலம் எம கண்டம் வாரம் மணி மணி மணி மணி மணி மணி முதல் வரை முதல் வரை முதல் வரை ஞாயிறு 4½ 6 3 4½ 12 1½ திங்கள் 7½ 9 1½ 3 10½ 12 செவ்வாய் 3 4½ 12 1½ 9 10½ புதன் 12 1½ 10½ 12 7½ 9 வியாழன் 1½ 3 9 10½ 6 7½ வெள்ளி 10½ 12 7½ 9 3 4½ சனி 9 10½ 6 7½ 1½ 3 கிரகங்களின் பெயர் 1. சூரியன் சூ. 4. புதன் பு. 7. சனி சனி. 2. சந்திரன் ச. 5. வியாழன் குரு. 8. இராகு. ராகு. 3. செவ்வாய் செ. 6. சுக்கிரன் சுக். 9. கேது கே. நக்ஷத்திரங்களின் பெயர் 1. அசுவனி அசு. 10 மகம் ம. 19. மூலம் மூ. 2. பரணி ப 11. பூரம் பூ. 20 பூராடம் பூரா. 3. கார்த்திகை கா. 12. உத்திரம் உ. 21 உத்திராடம் உத். 4. ரோகனி ரோ. 13. அஸ்தம் அஸ். 22. திருவோணம் திரு. 5. மிருகசீரிடம் மி. 14. சித்திரை சி. 23. அவிட்டம் அவி. 6. திருவாதிரை திருவா. 15. சுவாதி க. 24. சதயம் சத. 7. புனர்பூசம் புன. 16. விசாகம் வி. 25. பூரட்டாதி பூரட். 8. பூசம் பூச. 17. அனுஷம் அனு. 26. உத்திரட்டாதி உட். 9. ஆயிலியம் ஆ. 28 கேட்டை கே. 27. ரேவதி ரே. லக்கினங்களின் பெயர் 1. மேஷம் மே. 5. சிம்மம் சிம். 9. தனுசு தனு. 2. ரிஷபம் ரிஷ. 6. கன்னி கன். 10. மகரம் மகர. 3. மிதுனம் மிது. 7. துலாம் துலா. 11. கும்பம் கும். 4. கடகம் கட. 8. விருச்சிகம் விரு. 12 மீனம் மீன. திதிகளின் பெயர் 1. பிரதமை பி. 6. சஷ்டி சஷ். 11. ஏகாதசி ஏ. 2. துவிதியை து. 7. சப்தம் சப். 12. துவாதசி து. 3. திதிதியை தி. 8. அஷ்டமி அஷ். 13. திரயோதசி திர. 4. சதுர்த்தி ந. 9. நவமி ந. 14. சதுர்த்தி சது. 5. பஞ்சமி ப. 10. தசமி த. 15. அமாவாசியை அல்லது பௌர்ணமி. திதி என்பது ஆகாயத்தில் சந்திரனுக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம். யோகங்களின் பெயர் 1. விஷ்கம்பம விஷ். 10. கண்டம் கண். 19. பரிகம் பரி. 2. பிரீதி பிரீ. 11. விருத்தி விரு. 20. சிவம் சிவ. 3. ஆயுஸ்மான் ஆயு. 12. துருவம் துரு. 21. சித்தம் சித். 4. சௌபாக்கியம் சௌ. 13. வியாகாதம் வியா. 22. சாத்தியம் சாத். 5. சோபனம் சோ. 14. அரிஷணம் அரி. 23. சுபம் சுப. 6. அதிகண்டம் அதி. 15 வச்சிரம் வச். 24. சுப்பிரம் சுப். 7. சுகர்மம் சுக. 16. சித்தி சித். 25. பிரமம் பிர. 8. திருதி திரு. 17. விதிபாதம் விதி. 26. ஐந்திரம் ஐந். 9. சூலம் சூல. 18. வரியான் வரி. 27. வைதிருதி வை. யோகம் என்பது ஆகாயத்தில் ஒரு குறித்த இடத்திலிருந்து சூரியனுஞ் சந்திரனுஞ் செல்லுகிற மொத்த தூரம். கரணங்களின் பெயர் 1. பவம் பவ. 5. கரசை கர. 9. சதுர்ப்பாதம் சது. 2. பாலவம் பால. 6. வனசை வன. 10. நாகவம் நாக. 3. கௌலவம் கௌ. 7. பத்திரை பத். 11. சிமிஸ்துக்கினம் கிமி. 4. தைதுலை தை. 8. சகுனி சகு. கரணம் என்பது திதியில் பாதி மூன்றாம் பிறை பங்குனியும், சித்திரையும் - தென்கோடுயர வேண்டும்; வைகாசி முதல் மார்கழி வரை வடகோயர வேண்டும்; தையும், மாசியும் - சமமாக இருக்க வேண்டும். மேற்கண்டபடி மூன்றாம் பிறை இராவிடில் அவ்வருஷம் கலகம், பஞ்சம், அரசர்கள் மரணம் நேரிடும். இராசிகளின் பெயர் 1. மேடம் மே. 5. சிங்கம் சிங். 9. தனுசு தனு. 2. இடபம் இட. 5. கன்னி கன். 10 மகரம் மக. 3. மிதுனம் மிது. 7. துலாம் துலா. 11. கும்பம் கும். 4. கர்க்கடகம் கட. 8. விருச்சிகம் விரு. 12. மீனம் மீன. பக்ஷங்களின் பெயர் 1. அமரபக்ஷம் அல்லது கிருஞ்ணபக்ஷம் (தேய் பிறை). 2. பூர்பக்ஷம் அல்லது சுக்கிலபக்ஷம் (வளர் பிறை). பஞ்சபட்சிகளின் பெயர் பஞ்சபட்சிகளின் தொழில் 1. ஆந்தை 4. மயில் 1. அரசு 4. துயில் 2. காகம் 5. வல்லூரு 2. ஊண் 5. சாவு. 3. கோழி 3. நடை வாரசூலை, சூலைபரிகாரம் வாரம் வாரசூலை நாழிகை சூலை பரிகாரம் ஞாயிறு மேற்கு, வடமேற்கு 12 வெல்லம் மேற் குறித்த நாழிகை திங்கள் கிழக்கு, தென்மேற்கு 8 தயிர் வரையும் சூலதோஷ செவ்வாய் வடக்கு, வடமேற்கு 12 பால் மாம். அவசியமாய்ப் புதன் வடக்கு, வடகிழக்கு 16 பால் பிரயாணஞ் செய்ய வியாழன் தெற்கு, தென்கிழக்கு 20 தைலம் வேண்டுமானால் வெள்ளி மேற்கு, தென்மேற்கு 12 வெல்லம் மேற்கண்ட நாழிகைக்கு சனி கிழக்கு, தென்கிழக்கு 8 தயிர் மேல் பிரயாணஞ் செய்யலாம். கிரகணங்கள் -2 1. சூரியக்கிரகணம் 2. சந்திரக்கிரகணம். இந்துக்களின் முக்கிய பண்டிகைகள் வருஷப் பிறப்பு ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி வைகுண்ட ஏகாதசி ஸ்ரீராம நவமி விநாயக சதுர்த்தி ஆருத்திர தரிசனம் போதாயன சூத்திர மாளய அமாவாசை போகி பண்டிகை சர்வ உபாகர்மம் ஆயுத பூஜை பொங்கல் ருக்பிரதம உபாகர்மம் விஜயதசமி மாட்டுப் பொங்கல் வரலட்சுமி விரதம் தீபாவளி ரகசப்தமி ஆவணி அவிட்டம் கேதாரி விரதம் தைப்பூசம் காயத்திரி bஜபம் கந்தர் சஷ்டி மஹா சிவராத்திரி கோகுலாஷ்டமி கார்த்திகை தீபம் யுகாதி பண்டிகை மகம்மதியர்களின் பண்டிகைகள், உருஸுகள் மகம்மது வருஷப்பிறப்பு ஷாபேமீராஜ் யோமே ஆஷுரா ஷாவேபராத் ஷஹாதத் ஷோஹோதா சயித்க்ஷா மூசாகாதரீ உருஸு பீர்பைல்வான் உருஸு சயித்ஷா முர்த்துஜாபாக்ஷகாதரீ உருஸு தேராதேஜி சயித்ஷா க்ஷர்புத்தீன் பூஆலி கலந்தர் ஆக்ரிஷரர்ஷம்பா உருஸு பாரா - வபாத் (ஈதுல் மீலாதேஸரீப்) நத்தட் அவுலியாபாக்ஷா உருஸு யாஸ்தும் ஷெரீப் க்ஷபேகதர். ஹமீத் அவுரயாபாக்ஷா உருஸு ஜும்மதுவ்விதா பரீட்உட்டீன்சயித் உருஸு ரம்ஜான் குத்பா பண்டிகை. புத்துசயீத் உருஸு டிப்பு அவுலியாபாக்ஷா உருஸு பத்தாக்ஷா உருஸு காஜாபந்தே நவாஸ்கேசூதாஸ் உருஸு சயித்க்ஷா அமிதுத்தீன்காதர் அவுலியா (குல்பர்க்கா) பாக்ஷா கஞ்nஜசவாயி அர்ப்பா (மெக்காவுக்கு யாத்திரை நாள்) பப்புமஸ்மதான் சாயபு உருஸு பக்ரீத் பண்டிகை. சயித்காஜா மஹம்மத்நயிம்ழுத்தீன் தாதேஷா உருஸு சிஷ்டிகாதரீ தமீம் ஏ அன்சாரீ பாக்ஷா அன்சாரீபாக்ஷா உருஸு. கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகள், திருநாட்கள் விருத்தசேதனத் திருநாள் கர்த்தர் பரலோகத்துக்கு எழுந்தருளின மூன்று அரசர்கள் திருநாள் திருநாள் தேவமாதாவின் சுத்திகரத் திருநாள் ஸ்பீரித்து சாந்துவின் திருநாள் அர்ச். லூர்து. மாதாக் காட்சி திவ்விய நற்கருணைத் திருநாள். விபூதித் திருநாள் சேசுநாதரது இருதயத்தின் திருநாள். அர்ச். சூசையப்பர் திருநாள் அர்ச். தேவமாதா மோக்ஷத்துக்கு அர்ச். மரியாயிக்கு மங்கள எழுந்தருளின் திருநாள் வார்த்தைத் திருநாள் தேவமாதா பிறந்த நாள். குருத்து ஞாயிறு சகல அர்ச்சிய சிஷ்டவர்களின் திருநாள் பெரிய வியாழன் உத்தரிக்கிற ஆத்துமாக்களின் திருநாள் பாஸ்கு ஞாயிறு ஆகமன காலம். அர்ச். சூசையப்பரின் அடைக்கலத் கர்த்தர் பிறந்த நாள் திருநாள் மாசிலாக் குழந்தைகளின் திருநாள். இங்கிலிஷ் நாணயம் 4. பார்திங் 1. பென்னி. 2. ஷிலிங் 1. பிளாரின் 12 பென்ஸ் 1 ஷிலிங் 4. ஷிலிங் 1 கிரௌன் 20 ஷிலிங் 1 பவுன் 21 ஷிலிங் 1 கினி அல்லது ஸாவரன் 27 ஷிலிங் 1 மாய்டோர். இந்திய இம்பீரியல் நிறை இது உப்பு நீறுக்கிறதற்காகவும், இருப்புப்பாதை மார்க்கமாய் அனுப்பப்படும் சாமான்கள் நிறுக்கிறதற்காகவும் உபயோகப்படுகிறது. ஒரு ரூ. எடை அல்லது 180 க்ரெய்ன் 1 தோலா. 80 தோலா 1 சேர் 40 சேர் 1 மணங்கு. இந்திய நீட்டலளவை 3. வாற்கோதுமையளவு 1. அங்குலம். 3. அங்குலம் 1. விரற்கடை. 9 அங்குலம் 1 சாண். 12 அங்குலம் 1 அடி. 3 அடி 1 கெஜம் 1½ அடி 1 முழம் 5 அடி 1 நடை அல்லது போக்கு. சென்னை முகத்தலளவை 8 ஆழாக்கு 1 படி. 80 பறை 1 கரிசை 8 படி 1 மரக்கால் 12 மரக்கால் 1 கலம் 5 மரக்கால் 1 பறை. 21 மரக்கால் 1 கோட்டை ஒரு மரக்கால் 1 குறுணியென்றும், 2 மரக்காலைப் பதக்கு என்றும் சொல்லு வார்கள். ஒரு படி 100 கன அங்குலம் அளவுள்ளது. இந்திய கால அளவை 60 வினாடி 1 நாழிகை 1 நாழிகை 24 நிமிஷம். 7½ நாழிகை 1 ஜாமம் 2½ நாழிகை 1 மணி. 8 ஜாமம் 1 நாள். இங்கிலிஷ்கால அளவை 60 செகன்ட் 1 மினி. அல்லது 24 மணி 1 நாள். நிமிஷம் 7 நாள் 1 வாரம் 60 நிமிஷம் 1 மணி. சாதாரணமாக ஒரு வருஷத்திற்கு 52 வாரம் என்று கணக்கிடுவார்கள். 365 நாள் ஒரு சாதாரண வருஷம். 366 நாள் ஒரு லீப் வருஷம். 31 நாள் உள்ள மாதங்கள் 30 நாள் உள்ள மாதங்கள் ஜனுவரி, மார்ச், மே, ஜுலை, ஆகஸ்ட் ஏப்ரல், ஜுன், செப்டம்பர், நவம்பர் அக்டோபர், டிசம்பர். லீப் வருஷத்தை அறிவதற்குக் குறிப்பு ஒரு வருஷத்தைக் குறிக்கும் எண்ணை 4 ஆல் வகுக்கும்போது மிச்ச மில்லையென்றால் அது லீப் வருஷமென்று அறிக. உதாரணமாக: 1884, 1888, 1892, 1896 ஆகிய வருஷங்கள் லீப் வருஷங்களாம். இங்கிலிஷ் நீட்டலளவை 12 அங்குலம் 1 அடி 8 பர்லாங் (1,760 கெஜம்) 1 மைல் 3 அடி 1 கெஜம் 5½ கெஜம் 1 போல் 220 கெஜம் 1 பர்லாங். 40 போல் 1 பர்லாங் நில அளவையில் 100 லிங்க்ஸ் 1 சங்கிலி 22 கெஜம். 10 சங்கிலி 1 பர்லாங் 3 மைல் 1 லீக். இங்கிலிஷ் நிறுத்தலளவை 16 ட்ராம் 1 அவுன்ஸ் (அவு.) 4 குவாட்டர் 1 அந்தர் (அந்.) 16 அவுன்ஸ் 1 பௌன்ட் (பௌ.) 20 அந்தர் 1 டன் 28 பௌன்ட் 1 குவாட்டர் (கு.) 14 பௌன்ட் நிறைகொண்டது 1 ஸ்டோன். இங்கிலிஷ் முகத்தலளவை இது தண்ணீர், திராட்சரசம் முதலியவை அளக்கிறதற்கு. 2 பைன்ட் 1 குவாட் 36 காலன் 1 பாரல் 4 குவாட் 1 காலன் தானிய தவஸம் அளக்கிறதற்கு 2 காலன் 1 பெக் 8 புஷல் 1 குவாட்டர் 4 பெக் 1 புஷல் 5 குவாட்டர் 1 லோட். எண் வாய்ப்பாடு 12 உருப்படி 1 டஜன் 24 காதிதத்தாள் 1 குயர் 12 டஜன் 1 க்ரோஸ் 20 குயர் 1 ரீம் 20 உருப்படி 1 ஸ்கோர் 10 ரீம் 10 பேல் அல்லது கட்டு. இங்கிலிஷ் நிறுத்தலளவை இது பொன் வெள்ளியை நிறுக்க உபயோகப்படுகிறது 4 கிரெயின் 1 காரெட் 12 அவுன்ஸ் 1 பவுன்ட் 24 கிரெயின் 1 பென்னிவெயிட் 5,760 கிரெய்ன்ஸ் 1 பவுன்ட் 20 பென். வெயி 1 அவுன்ஸ் இங்கிலிஷ் நிறுத்தலளவை இது அப்பாத்தகிரிகள் மருந்தை நிறுப்பதற்கு உபயோகிப்பது. 20 க்ரெயின் 1 ஸ்குரூப்ல் 8 டிராம் 1 அவுன்ஸ் 3 ஸ்குரூப்ல் 1 டிராம் 12 அவுன்ஸ் 1 பவுன்ட் இங்கிலிஷ் நீட்டலளவை இது அப்பாத்தகிரிகள் ஒரு பொருளை அளப்பதற்கு உபயோகிப்பது. 1 பிலுய்ட்மினம் .0045 கியுபிக் அங்குலம் 8 டிராம் 1 பிலுயட் அவுன்ஸ் 10 மினிம்ஸ் 1 பிலுயட் டிராம் 20 அவுன்ஸ் 1 பிண்ட். ப்ரிட்டிஷ் ஸ்கொயர் மெஷர் 144 (122) சதுர அங். கொண்டது 1 சதுர அடி. 9 (32) சது.அடி. 1 சது. கெஜம் 484 (222) சது. கெ. 1 சது. சங்கிலி. 10 ச. சங் 1 ஏகர். 30¼ (5½2 )ச.கெ. 1 ச. போல் 16 (42) ச.போ. 1 ச. சங்கிலி. 6400 (802) ச. சங்கிலி 1 சது. மைல். பின்வருவனவும் வழங்குகின்றன 40 ச.போல் கொண்டது 1 ரூட் 4 ரூட் (4840 ச.கெ.) 1 ஏகர். 1002 (10,000 ச. லிங்க்ஸ்) 1 ச. சங்கிலி 10 ச. சங்கிலி 1 ஏகர். 640 ஏகர் (17602) ச.கெ. 1 சதுர மைல். சென்னை சதுர அளவு மட்ராஸ் ஸ்கொயர் மெஷர் 2,400 சதுர அடி 1 மனை. 160 ஏக்கர் 121 காணி. 24 மனை 1 காணி. 100 ஸெண்டு 1 ஏகர். 1 காணி 6,400 சது.கெ. வாக்கியங்களும், கவிகளும் தெளிவாய் அர்த்தமாவதற்கு இடும் அடையாளங்கள் , கால் புள்ளி (கமா) - கீறல் (டாஷ்) ; அரைப்புள்ளி (ஸெமிக்கோலன்) -சிறுகீறல், இனை மொழிக்குறி : முக்கால் புள்ளி (காலன்) (ஜபன்) . முற்றுப்புள்ளி (புல்ஸ்டாப்) * நக்ஷத்திரப்புள்ளி, உடுக்குறி “ மேற்கோள் ஆரம்பக்குறி (ஸ்டார் மார்க்) (கொடேஷன்) † சிலுவைக் குறி “ மேற்கோள் முடிவுகுறி (கொடெஷன் ரிவெர்ஸ்) ! வியப்பு அல்லது இரக்கக்குறி ( ) விளக்கக்குறி, இடைப்பிறவரற் குறி, (பிராக்கெட்) ? வினாக்குறி. கூhந ணடினயைஉ ராசிகள் கூயஅடை ஐனேயை ஊடிசசநளயீடினேiபே நுபேடiளா ளுலஅbடிட அடிவோ சூயஅந நுபேடiளா ஆடிவோள சூயஅந சித்திரை மேஷம் Apr. - May Aries Ram வைகாசி விருஷபம் May - June Taurus Bull ஆனி மிதுனம் June - July Gemini The Pair ஆடி கடகம் July - Aug. Cancer Crab ஆவணி சிம்மம் Aug. Sep. Leo Lion புரட்டாசி கன்னி Sep. - Oct. Virgo Maiden ஐப்பசி துலாம் Oct. - Nov. Libra Scales. கார்த்திகை விருச்சிகம் Nov. - Dec. Scorpio Scorpion மார்கழி தனுசு Dec. Jan. Sagittarius Bow தை மகரம் Jan - Feb. Capricorn Seamonster மாசி கும்பம் Feb. - Mar. Aquarius Waterpot பங்குனி மீனம் Mar. - Apr. Pisces The Fishes ஞடயநேவள கிரகங்கள் Indian Name English Equivalent Names of days English Tamil 1. சூரியன் Sun Sunday ஞாயிற்றுக்கிழமை 2. சந்திரன் Moon Monday திங்கட்கிழமை 3. அங்காரகன் Mars Tuesday செவ்வாய்க்கிழமை (செவ்வாய்) 4. புதன் Mercury Wednesday புதன்கிழமை 5. குரு Jupiter Thursday வியாழக்கிழமை 6. சுக்கிரன் Venus Friday வெள்ளிக்கிழமை 7. சனி Saturn Saturday சனிக்கிழமை 8. ராகு The Moon’s Ascending Node 9. கேது கூhந னுசயபடிn’ள னுநளஉநனேiபே சூடினந. Seasons - பருவங்கள் In India Tamil Months In England Months 1. வசந்த ருது சித்திரை Spring April - May (இளவேனிற்காலம்) வைகாசி } 2. க்ரீஷ்ம ருது ஆனி ளுரஅஅநச துரநே - ஹரபரளவ (முதுவேனிற்காலம்) ஆடி } 3. வர்ஷ ருது ஆவணி Autumn Sep - Nov. (கார்காலம்) புரட்டாசி 4. சரத் ருது ஐப்பசி (கூதிர்காலம்) கார்த்திகை } 5. ஹேமந்து ருது மார்கழி றுiவேநச சூடிஎ. னுநஉ. (முன்பனிக்காலம்) தை } 6. சசிர ருது மாசி Spring March - May (பின்பனிக் காலம்) பங்குனி } ஒத்த பழமொழிகள் Parallel Proverbs அகத்தின் அழகு முகத்திலே தெரியும் The face is the index of the mind அடி உதவுவது போல அண்ணன் Spare the சடின யனே ளயீடிடை வாந உhடைன உதவுவார்களா? அமாவாசைச் சோறு என்றைக்கும் ஊhசளைவஅயள உடிஅநள ரெவ டிnஉந ய அகப்படுமா? year. அரசன் அன்றே கொல்லும்; தெய்வம் The mills of God grind ளடடிற ரெவ நின்று கொல்லும். sure. அலை மோதும் போதே தலைமுழுகு; Strike while the iron is hot. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் Make hay while the sun shines. அழுதாலும் பிள்ளை அவள் தானே நுஎநசல bசைன அரளவ hயவஉh வைள டிறn பெற வேண்டும். eggs. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் Too much of anything is படிடின (விஷம்) நஞ்சாகும். for nothing. கிடைக்கப் போகும் பலாக்காயினும் ஹ bசைன in வாந hயனே ளை றடிசவா வறடி கிடைக்கும் களாக்காய் மேல். in the bush. ஆபத்துக்குப் பாபம் இல்லை. சூநஉநளளவைல மnடிறள nடி டயற. ஹடட ளை fair in love and war. ஆழமறியாமல் காலை விடாதே Look before you leap. ஆனைக்கும் அடி சறுக்கும் Good homer sometimes nods. ஆனைக்கும் பானைக்கும் சரி Tif for tat. ஆனை வரும் பின்ன, மணயோசை Coming events cast their வரும் முன்னே; கேடுவரும் பின்னே, ளாயனடிற, நெகடிசந மதிகெட்டு வரும் முன்னே. இக்கரைக்கு அக்கரை பச்சை Distance lends enchantment to the view. இனம் இனத்தைச் சேரும் Birds of வாந ளயஅந கநயவாநச கடடிஉமள வடிபநவாநச. எத்தால் வாழலாம். ஒத்தால் வாழலாம் Union is strength. எரிகிற கொள்ளியில் எண்ணெய் Add கரநட வடி வாந கசைந (குடயஅநள). ஊற்றினாற் போல். எரிகிற வீட்டில் பிடுங்கின மட்டும் Make the best of ய யென தடிb. இலாபம். எருமை வாங்கும்முன் நெய் விலை ஊடிரவே nடிவ லடிரச உhiஉமநளே நெகடிசந பேசாதே; பிள்ளை பெறுமுன் பெயர் they யசந hயவஉhநன. வைக்காதே. எலி வளையானாலும் தனி வளை East or றநளவ, hடிஅந ளை நௌவ. வேண்டும். ஏற்றம் உண்டானால் இறக்கமும் உண்டு Every tide has its ebb. கடுகு போன இடம் ஆராய்வார்; Penny - wise and pound - பூசனிக்காய் போன இடம் தெரியாது. foolish. கடை தேங்காயை எடுத்து வழிப் னுடி nடிவ சடிb யீநவநச வடி யீயல யீயரட. பிள்ளையார்க்கு உடையக்காதே. கல்வி கரையில், கற்பவர் நாள் சில. Art is long and life is short. கழுதை அறியுமா கற்பூர வாசனை? Casting pearls before swine. கைக்கு எட்டினது வாய்க்கு எட்ட ஆயலே ய நெவறiஒவ வாந உரயீ யனே வாந வில்லை lip. சர்க்கரை என்றால் தித்திக்குமா? Fair words butter no parsnips. தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் Do not look a gift horse in the பிடித்துப் பார்க்காதே month. தான் ஆடாவிட்டாலும் தன் சதை Blood is thicker வாயn றயவநச. ஆடும். தான் ஒன்று நினைக்கத் தெய்வம் Man யீசடியீடிளநள, படின னளையீடிளநள. ஒன்று நினைக்கும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் Health is Wealth. பட்ட காலிலே படும். கெட்ட குடியே ஆளைகடிசவரநேள நேஎநச உடிஅந ளiபேடந. கெடும். பதறிய காரியம் சிதறிப்போம். Haste makes waste. பல மரங்கண்ட தச்சன் ஒரு மரமும் Jack of all trades is master டிக வெட்டான். none. பழகப்பழகப் பாலும் புளிக்கும்; கிட்ட குயஅடையைசவைல செநநனள உடிவேநஅயீவ. இருந்தால் முட்டப்பகை பார்த்தால் பூனை; பாய்ந்தால் புலி. Lamp at home and a lion at வாந உhயளந. புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடை Calm நெகடிசந வாந ளவடிசஅ. யாளம். பொறுத்தார் பூமி ஆள்வார் Blessed are வாந அநநம; கடிச வாநல ளாயடட inhநசவை வாந நயசவா. மன்னுயிரைத் தன்னுயிர்போல் நினை. Do unto others as you would றiளா வடி நெ னடிநே லெ டிவாநசள. மாரியல்லது காரியமில்லை No rains, no grains. மின்னுவதெல்லாம் பொன்னல்ல All that glitters is not gold. முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப் First deserve, வாநn னநளசைந. படலாமா? வெளுத்ததெல்லாம் பாலாமா, கறுத்த All யசந nடிவ ளயiவேள வாயவ படி வடி தெல்லாம் தண்ணீராமா? church. வெள்ளம் வருமுன்னே அணைகோல் ஞசநஎநவேiடிn ளை நெவவநச வாயn உரசந, வேண்டும். வெறுங்கை முழம் போடுமா? Bare words by no barley. வேண்டாப் பெண்டாட்டி கைப்பட்டால் குயரடவள யசந வாiஉம றாநn டடிஎந ளை குற்றம், கால்பட்டால் குற்றம் வாin. வேலியே பயிரை மேய்ந்தால், கூhந டுயற- அயமநச ளாடிரடன nடிவ நெ விளைவதெப்படி? ய டயற செநயமநச. எஎஎஎ திட்டிவாசல் தலையீண்டுதல் 305 306 தலையீற்று திட்டி 319 318 தானக்கோல் தளசிங்கம் 307 308 தளதளத்தல் தாற்றுதல் 317 316 தார்த்தரட்டி தனத்தோர் 309 310 தனந்தயன் தார்ட்டியம் 315 314 தாமம் தாங்குகட்டை 311 312 தாங்குதல் தாமப்பல் கண்ணனார் 313 336 தீர்வு தியானம் 321 322 திரக்குதல் தீர்மை 335 334 தீக்கோழி திரித்தல் 323 324 திரிபங்கி தீக்கை 333 332 திரைத்தல் திருக்கைலாயஞானவுலா 325 326 திருக்கைவழக்கம் திரைதல் 331 330 திருவரங்கத்தமுதனார் திருப்பள்ளியறை 327 328 திருப்பள்ளியெழுச்சி திருவம்பலம் 329 352 தெற்றல் துணரி 337 338 துணர் தெற்கு 351 350 தெய்வாதனம் துயல்வருதல் 339 340 துயவு தெய்வவுத்தி 349 348 தூர்வைசெய்தல் துலாதானம் 341 342 துலாந்து தூர்வை 347 346 தூக்குமூக்குத்தி துளசிமாடம் 343 344 துளபம் தூக்குமரம் 345 368 நட்டாமுட்டி தேமாங்கனி 353 354 தேமாங்காய் நட்டவர் 367 366 நஞ்சு தேவயுகம் 355 356 தேவரகண்டன் நஞ்சீயர் 365 364 தோற்றம் தொகைப்பொருள் 357 358 தொகையுருவம் தோற்றநிலைப் பொருள் 363 362 தென்னூல் விளக்கம் தொத்துவியாதி 359 360 தொத்துளிப்பாய் தொன்னூல் 361 384 நிகுத்தை நம்பியாண்டார் நம்பி 369 370 நம்பியாரூரர் நிகுஞ்சனம் 383 382 நாவி நலிதல் 371 372 நலிபு நாவாள் 381 380 நாமதீபநிகண்டு நவராத்திரி 373 374 நவலோகம் நாமடந்தை 379 378 நாடகவழக்கு நன்பால் 375 376 நன்பு நாடகம் 377 400 நெய்த்தல் நியாயமலைவு 385 386 நியாயமுரசு நெய்தை 399 398 நெஞ்சாறல் நிர்விகற்பம் 387 388 நிலக்கடலை நெஞ்சார 397 396 நும்முன் நிறுத்துதல் 389 390 நிறுபூசல் நும்பி 395 394 நீலம் நீந்து 391 392 நீந்துதல் நீலமேகன் 393 416 பட்டி நேரம் 401 402 நேரலன் பட்டாளம் 415 414 படிறு நொதுமல் 403 404 நொந்தன்னம் படிறி 413 412 பஞ்சாயத்தார் பகல்வினையாளன் 405 406 பகல்வெண்யோன் பஞ்சாமிலம் 411 410 பஞ்சகோலம் பங்குணன் 407 408 பங்குனி பஞ்சகிருதயம் 409 432 பவளக்கொடி பண்டிதன் 417 418 பண்டியுளிரும்பு பவழவாய் 431 430 பர்லாங் பதிவிரதமுல்லை 419 420 பதிவிரதை பர்த்தா 429 428 பரிபக்குவம் பந்தம் 421 422 பந்தயம் பரிந்துபேசுதல் 427 426 பராசக்தி பரணதேவர் 423 424 பரணர் பராங்குசன் 425 448 பாவரசம் பறம்பர் 433 434 பறம்பி பாவமூர்த்தி 447 446 பாரை பன்னிருபாட்டியல் 435 436 பன்னீர் பார்காப்பான் 445 444 பாயசம் பாசிநிலை 437 438 பாசிநீக்கம் பாயக்கட்டு 443 442 பாதசேவை பாட்டநிலம் 439 440 பாட்டம் பாதசுத்தி 441 464 பின்னதல் பாஸ்கரன் 449 450 பி பின்னிவருதல் 463 462 பிறக்கடி பிணர் 451 452 பிணவல் பிறகுவாளி 461 460 பிருங்கி பிரசன்னம் 453 454 பிரசாட்சயம் பிருங்கலாதன் 459 458 பிரவர்த்தனம் பிரமசூலம் 455 456 பிரமகூர்ச்சம் பிரவர்த்தகம் 457 480 புனருத்தி புகழ்ச்சிமாலை 465 466 புகழ்பொருள் புனருத்தாரணம் 479 478 புறத்தி புட்பகேசி 467 468 புட்பகை புறணி 477 476 புவனம் புதுநிறை 469 470 புதுநீராட்டு புவனநாயகன் 475 474 புலவரை புராணிகன் 471 472 புராணை புலவராற்றுவழக்கம் 473 496 பைசந்தி பூசைமணி 481 482 பூச்சக்கரவாளக்குடை பைசந்தி 495 494 பேதாபேதம் பூதனை 483 484 பூதன் பேதறுத்தல் 493 492 பெரும்பணி பூர்வமாய் 485 486 பூர்வமீமாம்சை பெரும்படை 491 490 பெருங்குருகு பெந்தைகயிறு 487 488 பெந்தைவழி பெருங்குயம் 489 512 மக்கட்டு பொதிர்தல் 497 498 பொதிர்த்தல் மக்கட்கதி 511 510 மகாசிவராத்திரி பொருளகம் 499 500 பொருகு மகாசாமந்தன் 509 508 மகடூஉ பொல்லம் 501 502 பொல்லம்பொத்துதல் மகச்சோறு 507 506 போதனார் பொன்மாளிகை 503 504 பொன்முடியார் போதருதல் 505 528 மருமராஞ்சம் மஞ்சட்குளித்தல் 513 514 மஞ்சட்டேறு மருமம் 527 526 மரபியல் மட்டஞ்செய்தல் 515 516 மட்டத்தாரை மரநாய் 525 524 மயற்கை மண்டலபுருடர் 517 518 மண்டலமாக்கன் மயல் 523 522 மத்தரி மதலைவாழ்த்து 519 520 மதவலி மத்தம் 521 544 மிதுனன் மலையின்முனிவன் 529 530 மலைவளம் மிதுனவீதி 543 542 மானமா மறம் 531 532 மறலி மானபரன் 541 540 மார்ச்சனி மனுமுறைகண்ட... 533 534 மனுவந்தரம் மார்ச்சனம் 539 538 மாத்திரைக்கோல் மாகேந்திரி 535 536 மாக்கடு மாத்திரை 537 560 முற்கொழுங்கால் மீமிசைச்சொல் 545 546 மீமிசையண்டம் முற்கூறு 559 558 முழுத்த முகை 547 548 முக்கட்செல்வன் முழுதோன் 557 556 முரசவாகை முடிதும்பை 549 550 முடிதுளக்குதல் முரசம் 555 554 முத்தூர்க்கூற்றம் முதற்றிருவந்தாதி 551 552 முதனடை முத்துப்புரி 553 576 யாக்கை முன்முறை 561 562 முன்மொழிந்துகோடல் யாக்கியவற்கியம் 575 574 மோதிரப்பாட்டு மூதில் 563 564 மூதிற்பெண்டிர் மோதவம் 573 572 மைம்முகன் மூன்றாந்திருவந்தாதி 565 566 மூன்றுநூல் மைம்மீன் 571 570 மேலெழுந்து மெல்லியல் 567 568 மெல்லிலை மேலுலகம் 569 592 வலக்காரம் யுதிட்டிரன் 577 578 புத்தசன்னத்தன் வர்மம் 591 590 வரியிடுதல் வக்கிரம் 579 580 வக்கிரன் வரியான் 589 588 வயிரவூசி வஞ்சி 581 582 வஞ்சிக்களம் வயிரவிழா 587 586 வண்ணான்துறை வடுகர் 583 584 வடுகவாளி வண்ணான் 585 608 வார்க்கட்டு வல்லி 593 594 வல்லிகை வார் 607 606 வாய்ப்பக்காட்டுதல் வழியளவை 595 596 வழியிரங்குதல் வாய்ப்பகை 605 604 வாதிப்பு வள்ளை 597 598 வறக்கடை வாதித்தல் 603 602 வாசனாமலம் வன்றொண்டன் 599 600 வன்னசரம் வாசவன் 601 624 விலங்கல் வாளால்வழிதிறந்தான் 609 610 வாளி விலங்கரசு 623 622 விரணகாசம் விகுணி 611 612 விகுதி விரசை 621 620 விமலர் விசைமணி 613 614 விசையம் விமலம் 619 618 விதிவாக்கியம் விடேல்விடுகு 615 616 விடை விதிவத்து 617 640 வெள்ளர் விழி 625 626 விழஎரிமலை வெள்ளரிசி 639 638 வெப்பஇரத்தப்பிராணி விளிக்கூத்து 627 628 விளிதல் வெந்நீர்ப்பீச்சு 637 636 வெண்கிழமை வினைப்பெயர் 629 630 வினைமாற்று வெண்கிடை 635 634 வீறு வீமம் 631 632 வீமன் வீறாப்பு 633 656 பூசனி வெறியோடுதல் 641 642 வெறிவிலக்கு புன்னை 655 654 சாமந்தி செவ்வந்தி வேணாட்டடிகன் 643 644 வேணாவியோர் சவுக்கு மரம் 653 652 இராமதுளசி வேமானியர் 645 646 வேம்பன் இரயில்கற்றாழை 651 650  வைப்பிருக்கை வேறுபடுத்தல் 647 648 வேறுபாடு வைப்பாட்டி 649 672 இக்கரைக்கு... வேளை  657 658 அசட்டுப்புல் ஆனைவரும்... 671 670 மேற்கோள் மானா 659 660 அடைக்கலாங்குருவி சிலுவைக்குறி 669 668 31 நாள்... பாம்புக்குருவி 661 662  பிராந்து குடும்பியன் லீப் வருஷம் 667 666 மகம்மதியர்களின்... மீனம் 663 664 திதிகளின்பெயர் யுகாதி பண்டிகை 665 676 தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையா நூல் திரட்டு நூல் திரட்டு 1 பத்துப்பாட்டு பதிற்றுப்பத்து 75.00 நூல் திரட்டு 2 கலித்தொகை பரிபாடல் 110.00 நூல் திரட்டு 3 அகநானூறு 105.00 நூல் திரட்டு 4 புறப்பொருள் விளக்கம் கலிங்கத்துப்பரணி விறலிவிடுதூது 80.00 நூல் திரட்டு 5 பெண்கள் உலகம் பெண்கள் சமூகம் அன்றும் இன்றும் பெண்கள் புரட்சி 75.00 நூல் திரட்டு 6 பொது அறிவு பொது அறிவு வினா விடை உலக அறிவியல் நூல் உங்களுக்குத் தெரியுமா? 215.00 நூல் திரட்டு 7 அறிவுக் கட்டுரைகள் நூலகங்கள் அறிவுரை மாலை அறிவுரைக் கோவை 110.00 நூல் திரட்டு 8 தமிழர் சமயம் எது? சைவ சமய வரலாறு சிவன் இந்து சமய வரலாறு தமிழர் பண்பாடு 140.00 நூல் திரட்டு 9 நமது தாய்மொழி நமதுமொழி நமதுநாடு திராவிட மொழிகளும் இந்தியும் தமிழ்ப் பழமையும் புதுமையும் முச்சங்கம் 115.00 நூல் திரட்டு 10 தமிழ்க் கடவுளுக்கு ஆரியப் பாடலா? ஆரியர் தமிழர் கலப்பு ஆரியத்தால் விளைந்த கேடு புரோகிதர் ஆட்சி இராமாயணம் நடந்த கதையா? ஆரியர் வேதங்கள் 75.00 நூல் திரட்டு 11 திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா திராவிட நாகரிகம் மறைந்த நாகரிகம் 80.00 நூல் திரட்டு 12 ஆதி மனிதன் ஆதி உயிர்கள் மனிதன் எப்படித் தோன்றினான்? மரணத்தின் பின் பாம்பு வணக்கம் 80.00 நூல் திரட்டு 13 தமிழர் யார்? உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு சிந்துவெளித் தமிழர் தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் 100.00 நூல் திரட்டு 14 தமிழர் சரித்திரம் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர் நூல் திரட்டு 15 திருவள்ளுவர் திருக்குறள் 175.00 நூல் திரட்டு 16 தமிழகம் 85.00 நூல் திரட்டு 17 தமிழ் இந்தியா 90.00 நூல் திரட்டு 18 திருக்குறள் அகராதி 65.00 நூல் திரட்டு 19 தமிழ்ப் புலவர் அகராதி 100.00 நூல் திரட்டு 20 தமிழ் இலக்கிய அகராதி 90.00 நூல் திரட்டு 21 காலக் குறிப்பு அகராதி 50.00 நூல் திரட்டு 22 செந்தமிழ் அகராதி 300.00 நூல் திரட்டு 23 கலிவர் யாத்திரை இராபின்சன் குரூசோ அகத்தியர் 45.00 நூல் திரட்டு 24 தமிழ் ஆராய்ச்சி தமிழ் விளக்கம் நீதிநெறி விளக்கம் 55.00 வேலியே பயிரை... 673 674 675 xvi தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967) தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே. ‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’ என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர். ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:- தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார். ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார். தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின. ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும். தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம். அகராதிப் பணி தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை. ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார். இலக்கியப் பணி புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள். பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர். தமிழ்மொழி - தமிழினம் தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை. திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும் தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:- திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார். பிற மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார். “ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.” வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்! தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன். அன்பன் கோ. தேவராசன் அகம் நுதலுதல் உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம். உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது. தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது. தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம். எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள். இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது. எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை. வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது. அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன. உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும். இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது. சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி. அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம். உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது. நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம். அன்பன் புலவர் த. ஆறுமுகன் நூலறிமுகவுரை திரு. ந.சி. கந்தையா பிள்ளை 1930-40களில் தமிழ், தமிழிலக்கியம், தமிழ்மொழி, தமிழர் வரலாறு, திராவிட வரலாறு, தமிழ்நாட்டுக் குடிகள் போன்ற பல விடயங்கள் பற்றி அக்காலத்துச் சாதாரண தமிழ் வாசகர் நிலையில் பெரிதும் வாசிக்கப்பட்ட நூல்களை எழுதினார். பண்டைய இலக்கியங்களான அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற வற்றினை உரைநடையில் எழுதி மக்களிடையே சங்க இலக்கியம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தினார். திருக்குறளுக்கான ஒரு சொல்லடைவைத் திருக்குறள் அகராதி என்னும் பெயரில் வெளியிட்டவர். இவை யாவற்றுக்கும் மேலாக உலக வரலாற்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காலவரிசைப்படுத்தித் தந்தார். செந்தமிழ் அகராதி என்றவோர் அகர முதலியையும் தொகுத்தார். இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1940-50களில் இளைஞர் களாக இருந்த பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றிய தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாசிப்பு விடயங்களை அளித்தவர். இவருடைய பெரும்பாலான படைப்புக்கள் அக்காலத்திற் பிரசுரிக்கப் பட்ட ஒற்றுமை என்னும் இதழின் அலுவலகத்தாலேயே வெளியிடப் பெற்றன. இவர் வெளியிட்டனவற்றுள் பல ஒற்றுமை இதழில் வெளிவந் திருத்தல் வேண்டும். ஆனால், அதனை இப்பொழுது நிச்சயமாக என்னாற் சொல்ல முடியவில்லை. ஒற்றுமை அலுவலகம் இவற்றைப் பிரசுரித்தது என்பதை அறிவேன். ஏனெனில் இலங்கையில் தமிழாசிரியராக இருந்த எனது தகப்பனாரிடத்து இந்நூல்களிற் பெரும்பாலானவை இருந்தன. திரு ந.சி. கந்தையா பிள்ளையின் பெயர் தமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் காரணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப் பெற்றன. இந் நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளன. ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிற்கூட இவரது பெயர் முக்கியப் படுத்தப் பெறாது போயுள்ளது. மிகுந்த சிரமத்தின் பின்னர் அவரைப் பற்றிக் கிடைத்துள்ள தகவல்கள் பின்வருமாறு: சுவாமி ஞானப் பிரகாசர், ந.சி. கந்தையா பிள்ளை போன்ற அறிஞர்களின் தமிழ்ப் பங்களிப்புக்கள் தமிழகத்தில் போற்றப்படுகின்றமை ஈழத்தவர்க்குப் பெருமை தருகின்றது. இவர் எழுதிய நூல்களின் பெயரை நோக்கும்பொழுது தமிழ் வாசகர்களுக்கு உலக நிலைப்பட்ட, தமிழ்நிலைப் பட்ட தரவுகளைத் தொகுத்துத் தருவதே இவரது பெருஞ்சிரத்தையாக இருந்தது என்பது புலனாகின்றது. இப்பதிப்பகத்தின் பணியினை ஊக்குவிக்க வேண்டியது தமிழ்சார்ந்த நிறுவனங்களினதும் தமிழ்ப் பெரியோர்களினதும் கடமையாகும். உண்மையில் இதனை ஒரு அறிவுப்பசிப் பிணித் தீர்வாகவே நான் காண்கிறேன். 2/7, றாம்ஸ்கேட், அன்புடன் 58, 37ஆவது ஒழுங்கை, கார்த்திகேசு சிவத்தம்பி வெள்ளவத்தை, தகைசார் ஓய்வுநிலை பேராசிரியர் கொழும்பு - 6 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம். கருவிநூல் தந்த ந.சி. கந்தையா தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூலவர்களில் யாழ்ப்பாணம் தந்த பேரறிஞர் ந.சி. கந்தையாவும் ஒருவர். உண்மையான அறிஞர்களைக் காலங்கடந்து அடையாளம் காண்பதும் அவர்தம் படைப்புக்களைத் தேடிப் பிடித்துப் புரப்பதும் தமிழினத்தின் பழக்கங்களில் ஒன்று. தமிழின், தமிழரின் தொல்பழங்கால வரலாறு தொடர்பாகத் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. ஓர் ஆயிரம் நூல்களாவது தமிழின் தமிழரின் தொல்பழங்கால வரலாறுபற்றி வெளிவரவேண்டும். விரிவாக எழுதப்பட வேண்டிய தமிழ், தமிழர் வரலாற்று வரைவு முயற்சிக்கு வழிகாட்டும் கருவி நூல்களை வரைந்திருப்பவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார். உலகம் முழுவதும் உற்றுக் கவனிக்க வேண்டிய வரலாற்றிற்கு உரியவர்கள் தமிழர்கள். அவர்களே உலக மொழிகளை ஈன்ற மூலமொழிக்குச் சொந்தக்காரர்கள். அவர்களே உலக நாகரிகங்களின் பிறப்பிற்குக் காரணமான உலக முதல் நாகரிகத்தைப் படைத்தவர்கள். இந்த உண்மைகளைத் தமிழர்களும் அறியவில்லை உலகமும் அறியவில்லை. தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந் தமிழர், தமிழர் யார், உலக நாகரிகத்தில் தமிழர்பங்கு, சிந்துவெளித் தமிழர், தமிழ் இந்தியா, தமிழகம், மறைந்த நாகரிகங்கள் ஆகியன ந.சி. கந்தையாவின் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும். உலக முதல் நாகரிகம் என இன்று உலகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடிய நீல ஆற்றங்கரை நாகரிகம் (Nile Civilisation) தமிழ் நாகரிகத்தின் அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் வழிப்பட்ட நாகரிகமே என்பதை ஏராளமான சான்றுகளால் விளக்குபவை மேலைய நூல்கள். மொழிநிலையில் தமிழின் உலக முதன்மையைப் பாவாணர் நிலைநாட்டினார் என்றால் இன நிலையில் தமிழின உலக முதன்மையை ந.சி. கந்தையா நிலைநாட்டினார் என்று உரைக்கலாம். நீல ஆற்றங்கரை நாகரிக முடிவின்பின் நண்ணிலக் கடற் பகுதியில் உருவான பிறிதொரு வழிநாகரிகமே கிரேக்க நாகரிகம். கிரேக்க நாகரிகத் தின் உடைவில் தெறிப்பில் பிறகு மலர்ந்தவையே இன்றைய மேலை நாகரிகம். உலகின் எல்லா நாகரிகங்களையும் தாங்கிநிற்கும் தாய் நாகரிகமே தமிழ் நாகரிகம். தமிழ் நாகரிகத் தொன்மையைச் சங்க நூல்களுக்கு அப்பால் சிந்துவெளி அகழ்வாய்வும் உலக வரலாற்றாசிரியர்கள் உலக முதல் நாகரிகம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் நமக்கு மேலும் விளக்கும் பகுதிகளாகத் திகழ்கின்றன. இங்கெல்லாம் சென்று நுண்மாண் நுழைபுல முயற்சியால் தமிழின வரலாறு எழுதியவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார். ந.சி. கந்தையா பெருமகனார் நூல்களைத் தமிழரின் தொல்பழங்கால வரலாற்றைக் கற்கும் முயற்சியில் நான் ஈடுபடத்தொடங்கியபோது தேடிக் கற்றேன். பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் சென்ற ஆண்டு இயற்கையெய்திய வரலாற்றுப் பேரறிஞர் கோ. நிலவழகனார் ந.சி. கந்தையா அவர்களைச் சென்னையில் அவர் வாழ்ந்த நாளில் சந்தித்தது பற்றியும் அவரின் பன்னூற்புலமை பற்றியும் எம்மிடம் மகிழ்ந்து கூறுவார். ந.சி. கந்தையா அவர்களின் நூல்கள் பலவற்றையும் அவர் வைத்திருந்தார். அருகிய பழைய நூல்களைப் பேணுவாரிடத்திலும் நூலகங்கள் சிலவற்றிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்த ந.சி. கந்தையா நூல்களை மீண்டும் அச்சில் வெளியிடுவார் இலரே என்று கவலையுற்றேன். அமிழ்தம் பதிப்பகம் இவரின் நூல்களை வெளியிடுகின்றது. உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் இந் நூல்களை உச்சிமோந்து வாரியணைத்துப் புகழ்ந்து கற்றுப் பயனடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு. பேரா. கு. அரசேந்திரன் பதிப்புரை வளம் சேர்க்கும் பணி “குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம். இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன. ந.சி. கந்தையா இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது. தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர். தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது. தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர். நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள் 1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன. வாழும் மொழி தமிழ் தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம். ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா? தமிழர்களின் கடன் இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன். மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள். எழுச்சிக்கு வித்திட... உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது. இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதிப்பகத்தார் செந்தமிழ் அகராதி ஆசிரியர் ந.சி. கந்தையா தொகுப்பாளர் புலவர் கோ. தேவராசன் எம்.ஏ.,பி.எட்., பதிப்பாளர் இ. இனியன் அமிழ்தம் பதிப்பகம் 328/10 திவான்சாகிப் தோட்டம் இராயப்பேட்டை, சென்னை - 14. நூற்குறிப்பு நூற்பெயர் : செந்தமிழ் அகராதி ஆசிரியர் : ந.சி. கந்தையா பதிப்பாளர் : இ. இனியன் முதல் பதிப்பு : 2003 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 20 + 676 = 696 படிகள் : 1000 விலை : உரு. 300/- நூலாக்கம் : பாவாணர் கணினி 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : பிரேம் அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் 20 அஜீஸ் முல்க் 5வது தெரு ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 கட்டமைப்பு : இயல்பு வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம் 328/10 திவான்சாகிப் தோட்டம், டி.டி.கே. சாலை, இராயப்பேட்டை, சென்னை - 600 014. i ii xv xiv iii iv xiii xii v vi xi x vii viii ix xx உள்ளடக்கம் ந.சி. கந்தையாப் பிள்ளை வாழ்வும் தொண்டும். . . . iii அகம் நுதலுதல் . . . vii நூலறிமுகவுரை . . . xi கருவிநூல் தந்த ந.சி.க. . . . xiii பதிப்புரை . . . xv நூல் 1. செந்தமிழ் அகராதி . . . 1 xvii xviii xix