16 காலக்குறிப்பு அகராதி (Dictionary of Dates and Events) முன்னுரை சரித்திரம் பயிலும் மாணவரும் பிறரும், அரசர், புலவர், புகழ் பெற்றவர்கள், பெரிய நிகழ்ச்சிகள், கண்டுபிடிப் புக்கள் போன்றவற்றின் காலங்களை வேண்டியதுபோது புரட்டிப் பார்த்து அறிந்து கொள்வதற்குத் தமிழில் ஒரு நூல் இது வரை இல்லாதிருப்பது பெருங்குறையே. இந்நூல் அக்குறையைப் போக்கும் பொருட்டு எழுதப்பட்டதொரு சிறு நூலாகும். இந் நூலிற் குறைபாடுகள் காணப்படலாம். அக்குறைபாடுகள் அடுத்த பதிப்புகளில் திருத்திக் கொள் ளப்படும். இந்நூலிற்காணும் குறைகளைப் பொறுத்துக் குணத்தையே கொள்ளுமாறு தமிழ் அறிஞரை பணிவுடன் வேண்டுகின்றேன். ந.சி.கந்தையா விளக்கம் (இ.அ.) - இலங்கை அரசர் (க) - கனகசபைப் பிள்ளை (க.க.) - கலைக் களஞ்சியம் பி. - பிறப்பு ம. - மரணம் ; அடையாளத்தின் பின் குறிக்கப்படும் காலம் இவ்வாறும் வழங்கும் என்பதைக் குறிக்கும். கி.மு. என்று குறிப்பிடப்படாதவை கி.பி. என்பதைக் குறிக்கும். காலக்குறிப்பு அகராதி (Dictionary of Dates and Events) அ அகத்தார்சிடி° (Agatharcides) - அலக்சாந்திரியா நூல் நிலையத் தலைவராயிருந்தவர். கி.மு. 177 அகப்பொருள் விளக்கம் - நாற்கவி ராச நம்பி செய்தது. 12ஆம் நூ. இறுதி. அகல்யாபாய் ஹோல்கார் - மகாராட் டிர இராச்சியங்களுள் ஒன்றான இந்தூரை நிருமாணித்த அரசி. 1735 - 1795 அக°டின் செயின்ட் - 354 - 430. அக°த° - உரோமன் சக்ரவர்த்தி, கி.மு. 63 - கி.பி. 14 அக°த°சீசரிடம் பாண்டியன் தூதரை அனுப்பியது - கி.மு. 27 அகாகான் (Sultan Sir Mohamed Sahib) - 1875 - 1957 அகுணரின் ஆட்சி முடிவு - 550 அகுணர் (Huns) இந்தியாமீது படை யெடுப்பு - கி.பி. 455 - 500. அகோர சிவாசாரியார் - அகோர பத்ததி செய்தவர். 16ஆம் நூ.; 17ஆம் நூ. முற். அகோர சிவாசாரியார் - வடமொழிப் புலவர். 12ஆம் நூ. அக்கம்மாதேவீ - பத்தியிற் சிறந்த கன்னட நாட்டுப் பெண்மணி.1160. அக்டோபர் புரட்சி - போல்சுவிக் புரட்சி; உருசியாவில் நடந்தது. 1917. அக்பர் - 1542 - 1606 அக்பர்நாமா - அக்பரைப் பற்றி அபுல் பசலி எழுதிய நூல் 1602. அக்போ I, அக்கிரபோதி (இ.அ.) - 568 - 601 அக்போ II (இ.அ.) - கந்தளாய்க்குளம் வெட்டியவன். 601 - 611. அக்போ III (இ.அ.) - 626 - அக்போ IV (இ.அ.) - 658 - 674 அக்போ V (இ.அ.) - 711 - 717 அக்போ VI (இ.அ.) - 727 - 766 அக்போ VII (இ.அ.) - 766 - 772 அக்போ VIII (இ.அ.) - 801 - 812 அக்போ IX (இ.அ.) - 828 - 831 அங்கிலோ சாக்சனியர் பிரிட்டன் மீது படை எடுத்தது - கி.பி. 429. அங்கீகரிக்கப்பட்ட பைபிள் ஆங் கில மொழிபெயர்ப்பு வெளி யானது - 1604. அங்கோவாட் (கம்போதியாவில்) கட்டப்பட்டது - கி.பி. 1050. அசந்த சத்துரு, அசாத சத்துரு - காசி அரசன். கி.மு. 493 - 462 அசந்தாக் குகைக் கோயில்களும் ஓவியங்களும் - கி.பி. 100 - 700. அசுர்பானிப்பால் எகிப்தை வென் றது - கி.மு. 674 - 665 அசுவகோசர் - பௌத்த தத்துவ ஞானி; பிராமண குலத்தவர்; கனிஷ்கர் காலத்தவர் - கி.பி. 1ஆம் நூ.; 2ஆம் நூ. அசேலன் (இ.அ.) - கி.மு. 155 - 145 அசேலியன் (Acheulean) - 75,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவன். அசோகர் - கி.மு. 274 - 237; கி.மு. 272 - 232; கி.மு. 264 - 226. அச்சுத தேவராயர் - விசயநகர அரசர். 1529 - 1542 அச்சுதர் களப்பாளர் - மெய்கண்டா ரின் தந்தை - 13ஆம் நூ. அச்செழுத்துக்கள் செய்யக் கண்டு பிடிக்கப்பட்டது - (Gutenburgh) 1450 அடிசன் (Addison Joseph) - ஆங்கிலர்; கட்டுரை ஆசிரியர் 1672 - 1719 அடியார்க்கு நல்லார் - சிலப்பதிகார உரையாசிரியர். 13ஆம் நூ. அடையார் நூல்நிலையம் - தொடக் கம் 1885 அட்சபாதர் - கௌதமர்; வடமொழி நியாய சூத்திரம் (நையாயிக நூல்) செய்தவர். கி.மு. 3ஆம் நூ. அட்டாங்க இருதயம் - வாக்பாதர் செய்தது. 9ஆம் நூ. அட்டாவதானம் கிருட்டிணையங் கார் - இசைப் புலவர், 19ஆம் நூ. அட்டாவதானி - சுப்பிரதீபக் கவி ராயர்; விறலிவிடுதூது ஆசிரியர், 18ஆம் நூ. அட்டிலா (Attila) - ஐரோப்பாவில் ஆட்சி நடத்திய ஹான் (Hun) அரசன். 406 - 453 அணுக்குண்டு கண்டுபிடிக்கப் பட்டது - பிரிட்டிஷ் அமெரிக்க இரசாயன வல்லார். 1945 அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர் - அண்ணாமலைப் பல்கலைக் கழக தாபகர், 1881 - 1948 அண்ணாமலை ரெட்டியார்-காவடிச் சிந்து ஆசிரியர். 1861 - 1890. அதிமதுரகவி - 14ஆம் நூ.; 15ஆம் நூ. அதியமான் - சங்ககாலச் சிற்றரசன், 190 (க.க.) அதிராவடிகள் - சைவ அடியார், 9ஆம் நூ. அதிவீர ராமபாண்டியன் - நைடதஞ் செய்தவர். 1564 - 1604 அதேனிய° (Athenaeus) - தாலமி பிலாடிப° என்னும் எகிப்திய அரச னின் பவனியில் இந்திய வேட்டை நாய்கள், இந்தியப் பசுக்கள், இந்தியப் பெண்கள், ஒட்டகத்தில் சுமத்தப்பட்ட இந்திய வாசனைச் சரக்குகளைக் கண்டதாகக் கூறிய கிரேக்கர். கி.மு. 3ஆம் நூ. அதேன்° நகரம் கட்டப்பட்டது - கி.மு. 478 அத்லாந்திக் கடலுக்கூடாகக் கடல் தந்திக்கம்பி போடப்பட்டது (Field என்னும் அமெரிக்கர்). 1858 அத்லாந்திக் சாசனம் (Atlantic Charter) - 1941 அநதாரி - சுந்தரபாண்டியம் இயற்றிய வர். 16ஆம் நூ. அநந்தபாரதி ஐயங்கார் - இசைப் புலவர், 1786 - 1864 அநவரத விநாயகம் பிள்ளை - சு, எம்.ஏ.எல்.டி. - 1877 - 1940. அந்தகக்கவி வீரராகவர் - தமிழ்ப் புலவர் 17ஆம் நூ. அப°தம்பர் - வடமொழி மிருதி நூலாசிரியர்; தெலுங்கு நாட்டவர். கி.மு. 3ஆம் நூ. அபயநாகன் (இ.அ.) - கி.பி. 291-299 அபயன் (இ.அ.) கி.மு. 414 - 394 அபாயமில்லாத் தீக்குச்சி கண்டு பிடிப்பு - (Safety match Von schro-thner) 1855. அபராசிதன் - பல்லவ அரசன். 879 - 897 அபுசையட் ஹாசன் (Abu zaid Hassan) - அராபிய பிரயாணி. 1416 அபிராமிப்பட்டர் - அபிராமியந்தாதி செய்தவர். 18ஆம் நூ. அபில்டிவா (Abuldefa) - அராபிய நூலாசிரியர். 1273 - 1331 அப்பர் (திருநாவுக்கரசர்) - கி.பி. 570 - 655; 600 - 681 அப்பாவையர் - தாண்டவமாலை என்னும் சோதிட நூலாசிரியர். 19ஆம் நூ. அப்பா° (Abbas) - மகமத் நபியின் மாமனும் பாக்டாட் நகரின் கலிவும். 566 - 652 அப்புக்குட்டி ஐயர் - யாழ்ப்பாணப் புலவர் 18ஆம் நூ. அப்பைய தீட்சிதர் - வடமொழிப் புலவர். 1554 - 1626 அமண்ட்சென் (Amundsen) - நாடு காண்பவர்; தென் துருவத்தை 1911இல் அடைந்த இத்தாலியர். 1872 - 1928. அமரசிம்மன், அமரர் - அமர நிகண்டு செய்தவர். (வடமொழி) 8ஆம் நூ. அமிர்த கவிராயர் - ஒரு துறைக் கோவை செய்தவர். 1637 - 1672. அமிர்த சாகரர் - யாப்பருங்கலக் காரிகை ஆசிரியர். 11ஆம் நூ. அமிர்தம்பிள்ளை - தமிழ் விடுதூது செய்தவர். 1845 - 1899. அமுதனார் - இராமானுச நூற்றந்தாதி பாடியவர். 1017 - அமுரபி (Hammurabi) - பாபிலோனிய அரசன் - கி.மு. 2100 அமெரிக்க மிசன் யாழ்ப்பாணத்தில் தாபிதமானது - 1823 அமெரிக்க° வெ°பூசிய° - கொலம்பசு அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதற்கு 5 ஆண்டுகளின் முன் அந்நாட்டைக் கண்டுபிடித்த இத்தாலியர். 1452 - 1512 அமோக வருஷன் I - இராட்டிரகூட அரசன். 914 - 980 அமோக வருஷன் II - இராட்டிரகூட அரசன். 927 - 930 அமோக வருஷன் III - இராட்டிரகூட அரசன். 935 - 939 அம்பலவாணக் கவிராயர் - அறப் பள்ளீசுரர் சதகம் பாடியவர். 18ஆம் நூ. அம்பலவாண தேசிகர் - திருவாவடு துறை மடத்தலைவராயிருந்தவர். 17ஆம் நூ. அம்பலவாண நாவலர் - யாழ்ப்பாணப் புலவர். 20ஆம் நூ. முற்பகுதி. அம்பலவாண பண்டிதர் - யாழ்ப் பாணப் புலவர். 1814 - 1879 அம்பிகாபதி - கம்பரின் புதல்வர். 12ஆம் நூ. அம்பிகைபாகர் - யாழ்ப்பாணப் புலவர். 1884 - 1904 அம்பீர் (Ampere)- பிரெஞ்சு விஞ் ஞானி. அம்பீர் என்னும் மின்சார ஓட்ட அலகு இவர் பெயரால் வழங்கும். 1775 - 1836 அம்மங்காதேவி - சாளுக்கிய இராச ராச நரேந்திரன் மணந்த சோழ அரசி. 11ஆம் நூ. அம்மா I - சாளுக்கிய அரசன். 921 - 927 அம்மா II - சாளுக்கிய அரசன். 947 - 970 அம்மைப்பால் கட்டு - கண்டுபிடிக் கப்பட்டது (Jenner - ஆங்கிலர்.) 1796 அம்மைச்சி - வருணகுலாதித்தன் மடல் பாடியவர். 17ஆம் நூ. அரங்கநாத முதலியார் எம்.ஏ. இராவ் பகதூர் - 1837 - 1893 அரசகேசரி - இரகு வமிசம் பாடியவர். 17ஆம் நூ. அரதத்தாசிரியர்-சதுர்வேத தாத்பரிய (சங்கிரகம் (வ) செய்தவர். 1146 அரபத்த நாவலர் - பரதசாத்திர இலக்கணம் தமிழில் செய்தவர். 16ஆம் நூ.; 1700 அரவிந்தர் - புதுச்சேரியில் வாழ்ந்த யோகி. 1872 - 1950 அராபியர் இந்தியாமீது படை யெடுத்தது - கி.பி. 636 அராபியர் பாரசீகம் சிரியா எகிப்து நாடுகளைப் பிடித்தது - 624-646 அராபியர் மத்திய ஆசியாவைப் பிடித்தது - 760 அரிகர உபாத்தியாயர், பொய்கைப் பாக்கம் - விவேக சிந்தாமணி என்னும் நூலைத் தொகுத்தவர். 1871 அரிகரன் I - விசயநகர அரசன். 1336 - 1357 அரிகரன் II - இலங்கையை வென்ற விசயநகர அரசன். 1377 - 1404 அரிகேசரி மாறவர்மன் - (அரிகேசரி பராங்குசன்) பாண்டிக்கோவை யின் (இறையனாகப் பொருளு ரையில் மேற்கோள் ஆளப்படும் கோவை) பாட்டுடைத்தலைவன். கி.பி. 670 - 700; 670 - 710. அரிங்கேரியன் (Auringarian) - 25,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந் தவன். அரிசேனா - வாகாட அரசன். 300-340 அரிஞ்சயன் - சோழ அரசன். 871-907 அரிமர்த்தன பாண்டியன்-7ஆம் நூ. அரியன் (Arrian) - Indica என்னும் நூல் எழுதிய கிரேக்கர். கி.மு. 150 அரிவர்மன் - கதம்ப அரசன். 547-47 அரி°டாட்டிள் - கிரேக்க தத்துவ ஞானி. கி.மு. 384 - 322 அரி°டோபேனி° (Aristophanes) - கிரேக்க நாடக ஆசிரியர். கி.மு. 450 - 385 அருஞ்சயன்-சோழ அரசன். 956-957 அருணகிரிநாதர் - திருப்புகழாசிரி யர். 15ஆம் நூ. அருணந்தி சிவாசாரியார்-13ஆம் நூ. அருணாசலக் கவிராயர் - இராம நாடகமியற்றியவர். 1712 - 1779 அருணாசலக் கவிராயர் மு.ரா.- 19 ஆம் நூ. அருணாசல நாவலர் - விரிவு நிகண்டு 20ஆம் நூ. முற். அருணாசலம், பொன்னம்பலம், சேர் - இலங்கை அரசியல்வாதியும் தமிழறிஞரும். 1853 - 1924 அருண்டேல் - அடையார் பிரமஞான சபையைச் சேர்ந்தவர். 1878 - 1945 அருமருந்து தேசிகர் - அரும்பொருள் விளக்க நிகண்டு செய்தவர். 1760. அருளப்பு நாவலர் - திருச்செல்வராசர் காவியம் செய்தவர். 17ஆம் நூ. அருளாள தாசர் - தமிழில் பாகவத மியற்றியவர். 16ஆம் நூ. அருள் மொழிவர்மன் - (இராச ராசன்) பட்ட மெய்தியது. 975 அர்சவர்தானா (ஹர்சவர்தானா) - வடமொழி நாடக நூலாசிரியர். 606 - 648 அர்த்த சாத்திரம் - சாணக்கியர் செய் தது. கி.மு. 4ஆம் நூ; கி.பி. 3ஆம்நூ. அலெக்சாந்தரின் இந்தியப் படை யெடுப்பு - கி.மு. 327 - 325. அலக்சாந்தர், மகா - கி.மு. 356 - 323 அலக்சாந்திரியாவில் நூல் நிலை யம் அமைக்கப்பட்டது-கி.மு. 290 அலக்சாந்திரியாவில் நூல் நிலை யம் எரிந்தது - கி.மு. 47; இரண்டா வதாக 273; மூன்றாவதாக 640. அலாரிக் உரோம் நகரைச் சூறை யாடியது - கி.பி. 410 அலியார் புலவர் - இந்திராயன் படைப்போர் 18ஆம் நூ. அல்பேருனி (Alberuni) - அராபிய பிரயாணி. 973 - 1048 அல்லாவுத்தீன் - முகமதிய அரசன். 1296 - 1315 அல்லாவுத்தீன் சித்தூரைப் பிடித் தது - 1303 அவிநயனார் - கி.பி. 9 அல்லது 10ஆம் நூ. அவிரோதி நாதர் - திருநூற்றந்தாதி செய்த சமணப்புலவர். 14ஆம் நூ. அவுணர் (Huns - அகுணர்) ஐரோப்பா மீது படையெடுத்தது. கி.பி. 374. அவுரங்கசீப் - முகமதிய அரசன். 1658 - 1707 அவுரிச்சாயம் (செயற்கை) - முதல் முதல் வாணிகத்துக்கு வந்தது. 1897. அவ்வையார் - 12ஆம் நூ; சங்ககால அவ்வையார். 190 (க.க.) அழக சுந்தரம் - (பிரான்சி° கிங்° பெரி) 1873 - 1941. அழகிய சிற்றம்பலக் கவிராயர் - துளசிங்க மாலை. 1647 அழகிய சிற்றம்பலத் தம்பிரான் - திரிபதார்த்தம். 17ஆம் நூ. அழகிய சொக்கநாத பிள்ளை - நெல்லைக் காந்திமதி பிள்ளைத் தமிழ். 19ஆம் நூ. அழகியநம்பி - குரு பரம்பரை வரலாறு. 18ஆம் நூ. அழகிய மணவாள சீயர் - திருவாய் மொழி வியாக்கியானம். 12ஆம் நூ. அழுகணிச் சித்தர் - 15ஆம் நூ. அனபாயன் - இரண்டாம் குலோத் துங்க சோழன். அனிருத்தர் - கி.பி. 15ஆம் நூ. அனுராதபுரம் தலைநகரானது - கி.மு. 4ஆம் நூ. அனுலை (இ.அ.) - கி.பி. 12 - 16 அன்டியோச° (Antiochus the great of Syria) - கிரேக்க தளபதி. கி.மு.206. அன்னப்பட்டர் - தர்க்க சங்கிரகம் செய்தவர் - (தெலுங்கு நாட்ட வர்) 17ஆம் நூ. அன்னிபேசண்ட் அம்மையார்-அடையார் பிரமஞான சபையைச் சேர்ந்தவர். 1847 - 1933. அ°குத் (Asquith, Herbert Hentry) - ஆங்கில பிரபு. 1852 - 1928. அ°டின் ஜேன் (Austen Jane) - ஆங் கில நாவலாசிரியை. 1775 - 1817. ஆ ஆகவமல்லன் - சாளுக்கிய அரசன். 1040 - 69 ஆக°த° - உரோமைச் சக்கராதி பத்தியத்துக்குத் தலைவரானது கி.மு. 31 ஆகாய விமானம் முதற் பறக்க விடப்பட்டது (இரைட் சகோ தரர். அமெரிக்கர்) - 1903 ஆக்கிமிடீ° (Archemedes) - கிரேக்க கணித வல்லார். கி.மு. 287 - 212 ஆக்கியோ சோயிக் உகம் (Archeozoic) - உயிர்கள் தோன்றிய மிகப் பழங்கால இரண்டாவது உகம் 1,600,000,000 ஆண்டுகளுக்கு முன். ஆர்க் ரைட் (Ark Wright) - 1767இல் நூல் நூற்கும் எந்திரத்தை (Spinning Frame) கண்டுபிடித்த ஆங்கிலர். 1732 - 1792. ஆங்கிலர் சீக்கியரிடமிருந்து கல்கத் தாவை விலைக்கு வாங்கியது 1690. ஆங்கிலர் முதன் முதல் இந்தியா வில் குடியேறியது - 1624. ஆசாரிய பிப்புல்ல (இ)ரே - இந்திய விஞ்ஞானி. 1861 - 1944. ஆசுரி - சாங்கிய கபிலரின் மாணவர். கி.மு. 7ஆம் நூ. ஆசுவலாயனர் - சௌனகரின் மாண வர், ஆசுவலாயனிய சூத்திரம் செய்தவர். கி.மு. 400 ஆச்சமினியர்- (Achemenians) பாரசீ கத்தை ஆண்ட அரச பரம்பரை யினர். கி.மு. 558 - 330. ஆட்டோ கைரோ விமானம் (Auto-gyro) செய்யப்பட்டது (De la Cierva - அமெரிக்கர்) - 1920. ஆணல் (அருணாசலம் சதாசிவம் பிள்ளை) - பாவலர் சரித்திரதீபக ஆசிரியர். 1820 - 1896 ஆர்ணல்ட் மாதியு (Arnold Mathew) - ஆங்கில கவி. 1822 - 1888 ஆண்டாள் - வைணவ அடியார் 9ஆம் நூ; புராண ஐதீகத்தின்படி. கி.மு. 3005 ஆண்டான் கவிராயர் - 19ஆம் நூ. ஆதன் - சேரன். கி.பி. 40 - 55 (க) ஆதித்த சோழன் I - கி.பி. 871 - 907 ஆதித்தன் II - இவன் கரிகாலன் என வும் அறியப்படுவன். 10ஆம் நூ. ஆதிமூல முதலியார் - கதா சிந்தா மணி என்னும் நூல் செய்தவர். 19ஆம் நூ. பிற். ஆதியப்ப நாவலர் - மாயாவரத் தல புராணம். 16ஆம் நூ. ஆதிராசேந்திரன் - சோழ அரசன். 1067 - 1069. ஆதிவராக கவிராயர் - காதம்பரியைத் தமிழில் மொழி பெயர்த்தவர். 18ஆம் நூ. ஆதிவாயிலார் - 11-13ஆம் நூ. ஆந்திரரின் எழுச்சிக் காலம்-கி.மு.70 ஆபிரகாம் - விவிலிய வேதத்தில் கூறப்படுபவர். கி.மு. 2016 ஆபிரகாரம் இலிங்கன் - (Abraham Lincoln) - அமெரிக்க 16வது குடியரசுத் தலைவர். 1809 - 1865 ஆபிரகாம் பண்டிதர் - கருணாமிர்த சாகரம் 1859 - 1919 ஆபுல்டிவா (Abuldefa) - அராபிய நூலாசிரியர். 1273 - 1331 ஆமாண்ட கமணி (இ.அ.) - 79 - 89 ஆயிரங்கால் மண்டபம் - மதுரை யில் கட்டப்பட்டது. 1560 ஆரிய சமாசம் - தயானந்த சரசுவதி தாபித்தது. 1827 ஆரிய சூரர் - சாதக மாலை என்னும் பௌத்த நூலாசிரியர். கி.பி. 3 அல் லது 4ஆம் நூ; சாதக மாலை கி.பி. 434இல் சீனத்தில் மொழி பெயர்க் கப்பட்டது. ஆரியச் சக்கரவர்த்தி - இவன் குல சேகர பாண்டியனின் மந்திரி. இலங் கைக்கு வந்து சுபகிரிக் (யப்பாகு) கோட்டையைப் பிடித்து புத்த தந் தத்தை எடுத்துச் சென்றவன். கி.பி. 1230 ஆரியப் பட்டர் - இந்திய வான சாத்திரி. 476 - ஆரியப் பட்டீயம் - ஆரியப்பட்டர் எழுதிய வானவியல் நூல். இதை ஆரியப்பட்டர் தமது 23வது வய தில் (499இல்) எழுதினார். ஆரியப்ப புலவர் - பாகவதத் திரட்டு என்னும் நூல் செய்தவர். 18ஆம் நூ. ஆரியர் பரத கண்டத்துக்கு வந்தது கி.மு. 1600; கி.மு. 2000. ஆ(ஹா)ர்சவர்தானா - 605 - 647 ஆலாசிய மான்மியம் - வடமொழிப் புராணம். 14ஆம் நூ. ஆளவந்தார் - யமுனாசாரியார்; இராமனுசருக்கு முன் வாழ்ந்தவர். 11ஆம் நூ. ஆளவந்தார்-(மாதவப்பட்டர் அல்லது வீரை ஆளவந்தார்) ஞான வாசிட் டத்தைத் தமிழில் மொழி பெயர்த் துப் பாடியவர். 18ஆம் நூ. ஆறுமுக சுவாமிகள் - நிட்டானுபூதி. 16ஆம் நூ. ஆறுமுகத் தம்பிரான் - பெரிய புராண உரை. 19ஆம் நூ. ஆறுமுக நயினார் பிள்ளை - சாலிய அந்தணர் புராணம்; மரணம். 1925 ஆறுமுக நாவலர் - யாழ்ப்பாணச் சைவத் தமிழறிஞர். 1822 - 1879 ஆறுமுகம் பிள்ளை - அரிச்சந்திர வெண்பா. 19ஆம் நூ. ஆனந்தக் குமாரசுவாமி, கு. டாக்டர் - 1877 - 1947. ஆனந்தக் கூத்தர் - திருக்காளத்திப் புராணம் 16ஆம் நூ. ஆனந்த தீர்த்தர் - மாதவர். 1198-1275 ஆனந்தரங்கப் பிள்ளை-1709 - 1761 ஆனை ஐயா - இசை வல்லார். 19ஆம் நூ. ஆ°திரேலியாவுக்குக் குற்றவாளி கள் முதன் முதல் அனுப்பப் பட்டது 1787. ஆ°பேஷியா - பழங்கால கிரேக்க இராச தந்திரியாகிய பெரிக்கிளி° என்பவரின் காமக்கிழத்தி. கி.மு. 470 - 410. இ இசிரவேலர் மொசேயின் தலைமை யில் எகிப்திலிருந்து வெளி யேறியது - கி.மு. 1440 இடச்சுக்காரர் கேப் டௌன் நகரைக் கட்டியது - 1652 இடச்சுக்காரர் பட்டேவியா நகரைக் கட்டியது - 1619. இடச்சு மாலுமிகள் ஆ°திரேலி யாக் கரைகளைக் கண்டுபிடித் தது - 1620. இடய° (Diaz) நன்னம்பிக்கை முனையை அடைந்தது - 1486. இடன்லப் (Dunlop) காற்றடைக்கும் இரப்பர் வளையம் செய்யக் கண்டுபிடித்தது - 1885. இடாரிய° - பாரசீகஅரசன். கி.மு. 552 - 486. இடார்வின் - (Darwin, Charles) - ஆங்கில விஞ்ஞானி. 1809 - 1882. இடால்டன் (Dalton, Johnes) - அணுக் கொள்கையை வெளியிட்ட ஆங் கில விஞ்ஞானி. 1766 - 1844. இடிக்கின்° (Dickens, Charles) - ஆங் கில நாவலாசிரியர். 1812 - 1870. இடிபோ - (Defoe, Daniel) - ஆங்கில நாவலாசிரியர். 1661 - 1731 இடிரேக் (Drake, Francis, Sir) - உலகைச் சுற்றிப் பயணஞ் செய்த ஆங்கிலர். 1540 - 1596 இடில்லி (Delhi) நகர் கட்டப்பட்டது - 933 இடில்லியில் மொகலாய ஆட்சி தொடக்கம் - 1526 இடிவாங்கி (Lightning rod) கண்டு பிடிக்கப்பட்டது - பிராங்லின் (Franklin - அமெரிக்கர்). 1752 இடீசெல் (Diesel, Rudolph) - இடீசெல் எந்திரத்தைக் கண்டுபிடித்தவர். 1858 - 1913 இடீசெல் எந்திரம் கண்டுபிடிக்கப் பட்டது - 1893 இடேவி (Davy, Humphry, Sir) - சுரங்க விளக்கைக் கண்டுபிடித்தவர். 1778 - 1829 இடைமிளர் (Daimler) - முதல் மோட் டார் சைக்கிளை 1885லும், கல் லெண்ணெயால் ஓடும் வண்டியை 1887லும் செய்த சேர்மன் பொறி வல்லார். 1834 - 1900. இடை மொ°தினீ° (Demosthenes) - கிரேக்கப் பேச்சாளர். கி.மு. 384 - 322. இடைய டோர° (Diadorus) - முதல் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்த கிரேக்கர். இடைனமைட் (Dynamite) கண்டு பிடிக்கப்பட்டது. (Nobel - சுவிடின் நாட்டவர்). 1866. இதிகாச காலம் - கி.மு. 600 - கி.பி.200. இதோபதேசம் - கி.பி. 1373-க்கு முன் வங்காளத்தில் செய்யப்பட்டது. 1373இல் எழுதப்பட்ட கை எழுத் துப்படி ஒன்று உண்டு. இத்சிங் (I-tsing) சீன பிரயாணி; நாலந் தாவில் தங்கி நின்றது - 675 - 685 இந்திய தேசீய காங்கிர° தொடக் கம் - 1885 இந்தியா இங்கிலாந்தின் முடியாட் சிக்கு உட்பட்டது - 1858 இந்தியாவில் பிரெஞ்சு ஆங்கிலர் போர் - 1756 - 1763 இந்தியா சுதந்திரம் பெற்றது - ஆக°ட் 15, 1947 இந்தியாவில் கிடைத்த உரோமை நாணயங்கள் - ஆக°த° சக்ர வர்த்தி காலம் முதல் சீனோ (Zeno) காலம் வரை. கி.மு. 44 - கி.பி. 491 இந்தியாவில் காப்பி பயிரிடப்பட் டது - 1840 இந்தியாவில் நோபெல் பரிசு பெற் றவர் - (1) கவியரசர் தாகூர். 1913 (2) சர். சி. வி. இராமன். 1930 இந்தியாவில் முதல் அச்சுப் புத்தகம் வெளியானது - வேதோப தேசம் என்னும் கிறித்துவ நூல் 1557இல் வைப்புக் கோட்டையில் வெளி யிடப்பட்டது. இரண்டாவது நூல் கிறித்துவ வணக்கம். 1579இல் கொச்சியில் வெளியிடப்பட்டது. இந்தியாவுக்குச் சிங்கோனா மரம் கொண்டு வரப்பட்டது - 1860. இந்தியாவுக்கு முதலில் கிறித்துவ சமயம் வந்தது - (Francis Xaviar) 1542. இந்திர காளியார்-கி.பி. 11-13ஆம் நூ. இந்திர பட்டாரகன் - கிழக்குச் சாளுக்கிய அரசன். 673 இந்திரன் I - இராட்டிரகூட அரசன். 7ஆம் நூ. இந்திரன் II - 8ஆம் நூ. இந்திரன் III - 915 - 27 இந்திரன் VI - 10ஆம் நூ. இந்து ஐரோப்பியர் பாரசீகத்தில் குடியேறியது - கி.மு. 2000 இபின் செட் (Ibin Said) அராபிய பிரயாணி 1214 - 86 இபின் பதுட்டh - ஆப்பிரிக்க முக மதிய பிரயாணி. 1304 - 1378 இபின் பதுட்டா (Ibin Batuta) - ஆரிய சக்கரவர்த்தியைச் சந்தித்தது. 1344 இப்பாலு° (Hippalus) - பருவக்காற்றை அறிந்த கிரேக்கர். கி.பி. 68. இயற்கைத் தேர்வுக் கொள்கை (தார்வின்) - 1859 இயோ சோயிக் உகம் (Eozoic) - உயிர்கள் தோன்ற ஆரம்பித்த முதலாவது உகம். (Dawn of Life) 2,000,000,000 ஆண்டுகளின் முன். இரகுநாத நாயக்கர் - தஞ்சை அரசர். 1614 - 1639 இரகுநாத ராவ் - மராட்டிய பேஷ்வா பாலாசியின் தம்பி. 1734 - 1784 இரங்க இராமானுசர் - இராமனுசர் கொள்கையைப் பின்பற்றி உப நிடதங்களுக்கு உரை செய்தவர். 18ஆம் நூ. இரங்க நாதமுனி - 824 - 924 இரசை வடமலையப்ப பிள்ளை - மச்ச புராணம். 17ஆம் நூ. இரட்சணிய சேனை - வில்லியம் பூத் என்பவரால் நிறுவப்பட்ட கிறித்தவ சங்கம். 1878 இரட்டையர் - தமிழ்ப் புலவர்கள். 1450 இரத்தினக் கவிராயர், திருமேனி - புலவராற்றுப் படை. 17ஆம் நூ. இரத்தினவேலு முதலியார் ஈக்காடு - 1930 இரமணர் - 1879 - 1950 இரபீந்திரநாத தாகூர் - வங்கக் கவி. 1861 - 1931 இரலி (Raligh, Walter Sir) - ஆங்கில போர்வீரர், கடற்பயணக்காரர், நூலாசிரியர். (1552 - 1618) இரவிவர்மா - ஓவியப் புலவர். 1848 - 1906. இர°கின் (Ruskin, John) - கட்டுரை ஆசிரியர். 1819 - 1900. இராகவ ஐயங்கார், ரா - தமிழறிஞர். 1870 - 1948. இராசஇராச சிங்கன் (இ.அ.) - ஆங்கி லரால் 1815இல் பிடிக்கப்பட்டு வேலூருக்கனுப்பப்பட்டு 1832இல் இறந்தவன்; இலங்கை அரசன். இராச தரங்கிணி (வ) - கல்கணரால் செய்யப்பட்டது; காசுமீர அரச பரம் பரையைக் கூறுவது. 12ஆம் நூ. இராச பவித்திர பல்லவ தரையர்- அவிநயத்துக்கு உரை செய்தவர். 13ஆம் நூ. இராசப்ப கவிராயர் - குற்றாலக் குற வஞ்சி. 18ஆம் நூ. இராசராசன் I - அருள் மொழிச் சோழன். கி.பி. 985 - 1016; 985-1014 இராசராசன் மாலை தீவை (பழந் தீவு பன்னீராயிரத்தை) வென் றது - 1016. இராசராசன் II - சோழன் 1146 - 1173; 1050 - 1173 இராசராச நரேந்திரன் - சாளுக்கிய அரசன். 1019 - 1061 இராச ராசேசுவர நாடகம் -11ஆம் நூ. இராச இராசேச்சுரம் என்னும் தஞ்சைப் பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டது - 1010 இராசராம் மோகன்ராய் - பிரம சமா சத்தைத் தொடங்கியவர். 1772-1832 இராசாதிராசன் - 1018 - 1054. இராசேந்திரன் I - (கங்கை கொண் டான்) கி.பி.1014-1044 இலங்கை முழுவதையும் ஆண்டவன்; இலங்கையை வென்றது 1018இல்; கடாரத்தை வென்றது 1025இல். இராசேந்திரன் II - 1054 - 1064 இராட்டிரகூடர் - 753 இராணா சங்கர் - இராசபுத்தானத் திலுள்ள மோபாவை ஆண்ட அர சருள் ஒருவன். 1509 - 1528 இராணி மங்கம்மாள் - மதுரையை ஆண்ட நாயக்க வமிச அரசி. 1689 - 1706 இராணுவ தாங்கி (Military Tank) - (Swinton - ஆங்கிலர்.) 1914 இராதாகிருஷ்ணன் ச. டாக்டர் - இந்தியாவின் குடியரசுத்தலை வராய் இருந்தவர். தத்துவ ஞானக் கலைப் பேராசிரியர். 1888 - இராம கவிராயர் - திருவாய்பாடிப் புராணம். 18ஆம் நூ. இராமகிருஷ்ண சங்கம் - சுவாமி விவேகானந்தர் நிறுவியது. 1897. இராமகிருஷ்ண பரமம்சர் - சுவாமி விவேகானந்தரின் குரு. 1836 - 1866. இராமசாமி தீட்சிதர் - 1735 - 1817 இராமசாமி ஐயர் - அல்லி நாடகம் யாழ்ப்பாணப் புலவர். 19ஆம் நூ. முற். இராமசுவாமி சிவன் - பெரிய புராண கீர்த்தனை, கந்தபுராண கீர்த்தனை பாடியவர். 19ஆம் நூ. இராமதாசர் - மகாராட்டிரர்; சிவாசி யின் குரு. 1608 - 1681 இராமதா° - 4வது சீக்கிய குரு. 1574 - 81 இராமநாதன் - ஹோய்சலன். 1254 - 1295 இராமநாதன் பொன்னம்பலம் - இலங்கைத் தமிழறிஞரும், அரசியல் வாதியும். 1851 - 1930 இராமபாரதி - ஆத்திசூடி வெண்பா. 19ஆம் நூ. இராமயோகி - பிரபோத சந்திரோதய வசனம். 20ஆம் நூ. முற். இராமராசபூஷணகவி - தெலுங்குப் புலவர். 1750 இராமர் காலம் - கி.மு. 2300 - கி.மு. 1950 என்பது ஐதீகம். இது பாரத நிகழ்ச்சிக்குப் பிற்பட்டதென வரலாற்றியலார் கருதுவர். இராமலிங்க சுவாமிகள்-1823 - 1874 இராமலிங்க முதலியார், உபாத்தி யாயர் - பெரிய ஞானக் கோவை தொகுத்தவர் 19ஆம் நூ. பிற். இராமலிங்கையர், யாழ்ப்பாணம் - சோதிட கணிதர். 19ஆம் நூ. இராமன் சி.வி. - இந்திய விஞ்ஞானி. 1888 - இராமன் பிள்ளை சி.வி. - மலை யாள எழுத்தாளர். 1858 - 1922 இராமாயணம் (வால்மீகி)- கி.மு. 3ஆம் நூற்றாண்டில் தொடங்கி கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரை வளர்ச்சி யடைந்தது. இராமானந்தர் - கபீரின் மாணவர், 1400 -1470. இராமானுச கவிராயர் - 1853 இராமானுசர் - வேதாந்த சூத்திரத் துக்கு விசிட்டாத்துவைத உரை எழுதியவர். 1017 - 1137. இராமையர் பீ.ஆர். - கமலாம்பாள் சரித்திரம் என்னும் நாவல் எழுதிய வர். 1872 - 1878. இராய ரகுநாதராயர் - புதுக் கோட்டைச் சிற்றரசர். 1769- 89. இருக்குவேத லத்தின் மொழி பெயர்ப்பு - பிரடரிக்ரோசின் சென் (Frederic Rosen Jane) இருக்கு வேதத்தை இலத்தின் மொழி பெயர்ப்போடு 1838இல் வெளி யிட்டவர். இருபாலைச் செட்டியார் - வாகட நூல்கள் செய்தவர். (வைத்திய விளக்கம்) 19ஆம் நூ. இரும்புக் காலம் தொடக்கம் - கிழக் கில் கி.மு. 1800; ஐரோப்பாவில் கி.மு. 1000 இரும்புக் குதிரை இலாடம் முதல் பயன்படுத்தப்பட்டது. - கி.மு. 530. இரும்பொறை - சேரன். 210 (க) இரேவண சித்தர் - அகராதி நிகண்டு. 16ஆம் நூ. இரைட் சகோதரர் (Wright Brothers) முதல் விமானத்தில் பறந்தது. - 1903. இரை° டேவிட்° (Rhys Davids) - பாலிமொழி, பௌத்த மதம் என்ப வற்றிற் பாண்டித்திய மடைந்த ஆங்கிலர். 1843 - 1922 இர்வின் பிரபு - இந்திய வைசிராய் பதவிக்காலம். 1926 - 1931. இர்விங் லாங்மூர் - செயற்கை மழையைக் கொண்டுவரக் கண்டு பிடித்தவர். 1881 - 1957 இர்விங் வாஷிங்டன் - அமெரிக்க எழுத்தாளர் 1783 - 1939 இலக்கணம் சிதம்பரநாத முனிவர் - திருப்பாதிரிப்புலியூர்ப் புராணம். 18ஆம் நூ. இலங்கைப் பல்கலைக்கழகம்- 1870ல் நிறுவப்பட்ட மருத்துவக் கல்லூரியும், 1921இல் நிறுவப்பட்ட பல்கலைக் கல்லூரியும் சேர்ந்து 1942இல் பல்கலைக்கழகமாக மாறியது. இலண்டன் தீவிபத்து - 1666 இலமாக் (Lamarck) - பிரான்சிய இயற்கை சாத்திரி. 1744 - 1829 (இ)லயோதிசி (Lao-Tze) - சீன தத்துவஞானி. கி.மு. 604 இலவோசியர் (Lavoisier) - பிரெஞ்சு விஞ்ஞானி; எரியும்போது நெருப்பு காற்றிலுள்ள ஆக்சிசனைப் பயன் படுத்துகிறதெனக் கண்டுபிடித்த வர். 1743 - 1794 இலாசர° (Rev. Lazarus) - தமிழ் சம் பந்தமாகப் பல கட்டுரைகள் எழுதிய கிறித்துவ பாதிரியார்; பழமொழி அகராதி தொகுத்தவர். 1925. இலாஞ்சதிசன் (இ.அ.)- கி.மு. 59-50 இலாம்ப் (Lamb Charles) - ஆங்கிலக் கட்டுரை ஆசிரியர். 1775 - 1834 இலால லசபதிராய் - பாஞ்சால சிங்கம், தேசத்தொண்டர். 1865 - 1928 இலிங்க புராணம் - 8அல்லது 9ஆம் நூ. இலிங்கன் (Lincoln, Abraham) - ஐக்கிய அமெரிக்காவின் 16வது குடியரசுத் தலைவர். 1809 - 1865 இலிலதிலகம் - மலையாள இலக் கணம். 14ஆம் நூ. இலிவி (Livy) - இலத்தின் சரித்தி ராசிரியர். கி.மு. 59 - கி.பி. 17 இலி°டர் (Lister) - பார்க்க இலி°தர். இலிவிங்°டன் (Livingstone, David) - ஆப்பிரிக்காவில் விக்டோரியா நீர்வீழ்ச்சியைக் கண்டுபிடித்த கிறித்துவ பாதிரி. (இ°காத்தியர்) 1813 - 1873. இலின்னேய° (Linnaeus) - சுவிடிஷ் இயற்கை சாத்திரி; தாவரங்களை யும், பிராணிகளையும் வகைப் படுத்தி அவற்றுக்கு விஞ்ஞானப் பெயரிட்டவர். 1701 - 1778 இலி°தர் (Lister) - கிருமி கொல்லியை (antiseptics) கண்டுபிடித்து இரசா யன முறையாகக் காயங்களையும், சத்திர சிகிச்சை ஆயுதங்களையும். கிருமி நீக்கம் செய்தவர். 1827-1912 இலீலாவதி (இ.அ.) - முதலாம் பராக்கிரம பாகுவின் மனைவி- 1097-1121 இலெசெப்° (Lesseps) - கெய்ரோவி லிருந்த பிரெஞ்சுத் தூதர்; சூய° கால்வாயை 1869இல் வெட்டி முடித்தவர்; பனாமாக் கால் வாயை வெட்ட 1881இல் தொடக்கியவர். 1805 - 1894. இலெனின் (Lenin) - உருசிய குடி யரசுத் தலைவர். 1870 - 1924. இளங்கோவடிகள் - சிலப்பதிகார ஆசிரியர். கி.பி 180 இளநாகன் (இ.அ) - 93 - 102 இளந்திரையன் - தொண்டைமான். 110 - 115; 190 (க.க.) இளம்பூரணர் - உரையாசிரியர். 12ஆம் நூ. இன்பகவி - கத்தோலிக்க புலவர், 1835. இ°கந்த குப்தன் - கி.பி. 455 - 467. இ°கந்த புராணம் - கி.பி. 9ஆம் நூ; 6ஆம் நூ. இ°கைலாக்° (Skylax of Carianda) - சிந்து ஆற்றைக் காண்பதற்கு (explore) தாரியங் அரசனால் அனுப் பப்பட்ட போர்வீரன். கி.மு. 517. இ°காட் (Robert Talcon, Scott) - தென் துருவத்தை 1912இல் முதன் முதல் அடைந்த ஆங்கிலர். 1868 - 1912. இ°காட் (Scott, Sir Walter) - ஆங்கில கட்டுரையாசிரியரும் நாவலாசிரிய ரும். 1771 - 1832. இ°டாலின் (Stalin) - உருசிய குடி யரசுத் தலைவர். 1879 - 1953 இ°டிபின்சன் (Steptensan) - ஆங்கில பொறிவல்லார். 1781 - 1848 இ°டிபின்சனின் றொக்கெட் - (நீராவி எந்திரம்) 1829 இ°தானுரவி - சேர அரசன்; ஆதித்த சோழன் காலத்தவன். 9ஆம் நூ. இ°பானியர் பிலிப்பைன் தீவைப் பிடித்தது - 1565 இ°பேயினில் முகமதியர் ஆட்சி - கி.பி. 750 ஈ ஈசான தேசிகர் - சுவாமிநாத தேசிகர். 1665 ஈசான முனிவர் - வேம்பத்தூரர் சங் கத்தைச் சேர்ந்தவர். 16ஆம் நூ. ஈசுர பாரதியார் - பல்பொருட் சூடா மணி நிகண்டு. 17ஆம் நூ. ஈசுவரகிஷ்ணர் - சாங்கிய சூத்திரம், கி.பி. 3ஆம் நூ. ஈசுவர சந்திர வித்தியாசாகர் - வங்காள உரைநடை ஆசிரியர். கி.பி. 1820 - 1891 ஈசுவரதத்தரின் நாணயங்கள் - கி.பி. 188 - 190 ஈசுவர தீட்சிதர் - இராமாயணத் துக்கு இரண்டு உரை செய்த வட மொழிப் புலவர். 1517 ஈசையா - எபிரேய தீர்க்கதரிசி. கி.மு. 760 - 600 ஈசோப் (Aesop) - ஆசியா மைனரில் இலைசியாவில் வாழ்ந்த அடிமை; ஈசோப் கதை செய்தவர். கி.மு. 570. ஈடு -திருவாய்மொழி உரை. 13ஆம் நூ. உ உக்கிரப் பெருவழுதி - சங்கல கால அரசன். 128 - 140 உடலி - ஐதரேய வரதராசர். 12ஆம் நூ. உடன்கட்டை ஏறுவது நிறுத்தப்பட் டது - சட்டமியற்றப்பட்டது. 1829 உடையான் III (இ.அ.) - இவன் காலத் தில் பராந்தகனின் இலங்கைப் படை எடுப்பு. 945 - 953. உடோயில் (Doyle, Arthur Canon) - 1859 - 1930 உதய மார்த்தாண்டவர்மர் - சேர மன்னர். 12ஆம் நூ. இறுதி. உதியஞ்சேரல் - பெருஞ்சோற்று உதியஞ் சேரல். கி.பி. 130 (க.க.) உதீசித்தேவர் - திருக்கலம்பகம். 14ஆம் நூ. உத்தியன் (இ.அ) - கி.மு. 207 - 199. உத்படர் - சடாபீட மகாராசன் என் னும் காசுமீர அரசன் காலத்தவர்; சமக்கிருத கவி. (779 - 813) உபநிடதங்கள் - கி.மு. 6ஆம் நூ. - கி.மு. 1000; கி.மு. 800 - கி.மு. 500; கி.மு. 800 - 400. உபநிடதங்கள் (சங்கரர் உரையெழு தியவை) - கி.மு. 400 அல்லது கி.மு. 300 உபநிடதங்கள் பாரசீகத்தில் மொழி பெயர்க்கப்பட்டது - 1657; பார சீகத்திலிருந்து பிரெஞ்சு மொழி யில் 1755இல் மொழி பெயர்க்கப் பட்டன. இவற்றில் பன்னிரண்டை மாக° மூலர் கிழக்கு நாடுகளின் சமய நூல்கள் என்னும் தொகுப்பில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துச் சேர்த்துள்ளார். உபேந்திராசிரியர் - சிநேந்திரமாலை. 18ஆம் நூ. உப்புச் சத்தியாக்கிரகம் - 1929 - 32 உமர் கையாம் - பாரசீக நாட்டுத் தத்துவ ஞானியும் கவியும். 1050 - 1132 உமறுப்புலவர் - சீறாப் புராணம். 1665 உமாபதிசிவம் - தமிழ்ப்புலவர்; உமா பதி சிவாச்சாரியரில் வேறானவர். (க.க.) 940 - 1012 உமாபதி சிவாசாரியார் - சந்தானா சாரியருளொருவர். 14ஆம் நூ. உமாமகேசுவரம் பிள்ளை த.வே. - கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவரா யிருந்தவர். 1883 - 1941 உருத்திரசேனர் II - வாகாட அரசன் 390 - 395 உருசியப் புரட்சி - 1917 உருசிய ஜப்பானிய போர் - 1904 - 1905 உருத்திராம்பா - காகதீய அரசி. 1262 - 1296 உரூயிட்டர் (Reuter) - செய்தித்தாப னத்தைத் தொடங்கிய ஆங்கிலர். 1816 - 1899 உரூ°வெல்ட் (Roosevelt) - இரண் டாம் உலகப் போரின்போது அமெ ரிக்க குடியரசுத் தலைவராகவிருந் தவர். 1882 - 1945 உரொக்பெல்லர் - (Rockfeller, John Davison) அமெரிக்க இலட்சாதிபதி யும் கொடை வள்ளலும். 1839-1937 உரொசெட்டாக் கல் - (Rosetta Stone) கண்டுபிடிக்கப்பட்டது. 1799 உரொபெர்ட் கிளைவ் - கிழக்கிந்திய கம்பெனி கவர்னர். 1765-1767 உரொன்ட்சென் (Rontgen) - எக்° ஒளிக்கதிரைக் கண்டுபிடித்த (1895) சர்மானியர். 1845 - 1932. உரோபேட் டி நொபிலி இந்தியா வை அடைந்தது - 1606 உரோமன் சட்டங்கள் தொகுக்கப் பட்டது - கி.பி. 527 உரோம சகாப்தத் தொடக்கம் - கி.மு. 753 உரோம் தலைநகர் பைசாந்தி யத்துக்கு மாறியது - கி.பி. 330 உரோம் நகரில் பெருந்தீ - இது எட்டு நாட்களாக எரிந்தது. கி.பி. 64 உரோ° (Ross, James) - வடக்குத் தெற்குக் காந்த துருவங்களைக் கண்டுபிடித்த ஆங்கிலர். 1800 - 1862. உலகநாத பிள்ளை, தஞ்சை - 20ஆம் நூ. முற்பகுதி. உலகநாதன் - உலகநீதி. 18ஆம் நூ. பிற். உலகப்போர் I - 1914 - 1917 உலகப்போர் II - 1939 - 1945 உலூகர் - கணாதரர்; வைசேடிக சூத்திரஞ் செய்தவர். கி.மு. 3ஆம் நூ; கி.மு. 2ஆம் நூ. உலூசியன் - (Lucian) சீரிய கிரேக்க வரலாற்றாசிரியர். 125 - 200 உலூதர் (Luther, Martin) - புரத்த° தாந்து கிறி°துவ மதத்தைத் தோற் றுவித்த சர்மானியர். 1483 - 1546 உலோகேசுவரன் (இ.அ.) - 1049 - 1053 உலோங்பெல்லோ (Long Fellow)- அமெரிக்க கவி. 1807 - 1882 உவின்சுலோ - உவின்சுலோ அக ராதியைத் தொகுத்த அமெரிக்க கிறித்துவ பாதிரி. 19ஆம் நூ. பிற். உவொர்ட்°வொர்த் (Words Worth) - ஆங்கிலக் கவி. 1770 - 1850. ஊ ஊமைத்துரை - கட்டைப்பொம்ம நாயக்கரின் சகோதரர். ம. 1801 ஊரும் பிராணிகளின் காலம் (Age of reptles) - 200,000,000 - 100,000,000 ஊர்ப்பட்டினங் கட்டப்பட்டது - (சால்தியாவில்) கி.மு. 3500 ஊற்றுப் பேனா செய்யப்பட்டது - (Waterman அமெரிக்கர்.) 1884 எ எகிப்திய இராசதானி மெம்பிசி லிருந்து தீப்சுக்கு மாறியது - கி.மு. 2400 எகிப்தில் அமென்கொதெப் தூதன் காபன்காலம் - கி.மு. 1375 - கி. மு. 1350 எகிப்தில் எழுத்து மூலம் சரித்திரம் அறியப்படுவது - கி.மு. 4241 முதல். எக்கேல் (Haeckel, Ernest Heinrich) - சர்மன் இயற்கை சாத்திரப் பேரறி ஞர். 1834 - 1919 எசாக்கியேல் (Hezekial) - கி.மு. 720 எடிசன் (Edison, Thomos Alva) - போனோகிராபைக் கண்டுபிடித்த அமெரிக்கர். 1847 - 1931 எட்வார்ட் பத்திமான் (Edward the Confessor) - 1004 - 1066 எதர் (Ether) உணர்ச்சி நீக்கி (Anaesthetic) என அறியப்பட்டது (Long Amedson) 1842 எபிகுர° (Epicurus) - கிரேக்க தத்துவ ஞானி, கி.மு. 342 - 270. எபிரேயரை நபுச்சண்நேசர் பாபி லோனில் மறியற்படுத்தியது கி.மு. 587 எமசந்திரர் (Hemachandra) - சமண முனிவர், 1088 - 1172. எமேர்சன் (Emerson, Relph Waldo) - அமெரிக்கக் கட்டுரை ஆசிரியர். 1803 - 1882. எரடோத° (Heradotus) - கிரேக்க வரலாற்றாசிரியர். கி.மு. 490 - 425. எயுடாக்ச° (Eudoxus) - இருமுறை இந்தியாவுக்குப் பயணஞ்செய்த உரோம நாட்டு நாடு காண்பவர். கி.மு. 2ஆம் நூ. எருசலேம் உரோமரால் அழிக்கப் பட்டது - கி.பி. 70. எருசலேம் யூத நகரமாகத் தோன்றி யது - கி.மு. 1913 எருசலோமில் சாலமன் கோயில் கட்டியது - கி.மு 1012 எலிசபெத் I (Elezabeth I) - 1533 - 1603 எலிசபெத் II - 1927; பட்டமெய்தியது. 1952 எல்லாளன் (இ.அ.) - கி.மு. 145. - கி.மு. 101 எல்லப்ப பூபதி - அருணாசல புராணம். 1572 எல்லப்ப நாவலர் - 17ஆம் நூ. எல்லோராக் குகைச் சிற்பம் - 4 முதல் 10ஆம் நூ. எவரெ°ட் மலையை ஏறியது - 29141 அடி உயரமுள்ள இச்சிக ரத்தை எட்மண்ட ஹில்லாரியும் (Sir Edmund Hillary) தென்சிங்கும் நார்கேயும் Tensing Norgay) - மே. 29 - 1953 எழுத்தச்சன் - மலையாள கவி. 16ஆம் நூ. எற்றியங்க - இராட்டிர கூட அரசன். 1063 - 1100 என்சைகிளோபீடியா பிரித்தா னிக்கா முதலில் அச்சிடப்பட் டது - 1768 என்னைனாப் புலவர் - முக்கூடற் பள்ளு. 17ஆம் நூ. என்°டீன் (Albert Ensteen) கணித வல்லார். 1879. ஏ ஏகநாதர் - மராட்டிய கவி. 1608 ஏசு சிலுவையிலறையப்பட்டது- கி.பி. 30 ஏசுநாதர் - கி.மு. 5 - கி.பி. 30 ஏரம்பையர் - யாழ்ப்பாணப் புலவர். 1847 - 1914. ஐ ஐசின்கோவர் (Eisenhower) - அமெ ரிக்க சனாதிபதி. பி. 1890. ஐதர் அலி - முகமதிய அரசன். ம. 1846 ஐயடிகள் காடவர்கோன் - 9ஆம் நூ. ஐயனாரிதனார் - புறப்பொருள் வெண்பா மாலை. 9ஆம் நூ. ஒ ஒக்°போர்ட் பல்கலைக்கழகம் தொடக்கம் - 1200 ஒட்டக்கூத்தர் - 12ஆம் நூ. ஒப்பிலாமணிப் புலவர் - 18ஆம் நூ. முற்பகுதி ஒப்பெர்ட் (Oppert) - பிரெஞ்சு யூதர், சமக்கிருத வல்லார்; பாரிசில் சமக் கிருதப் பேராசிரியராக இருந்தவர். 1825 - 1905. ஒய்சிங்டன் (Rev. H. Hoisington) - சிவஞானபோதம், சிவப்பிரகாசம், தத்துவக் கட்டளை முதலிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து 1854இல் அச்சிட்ட அமெரிக்க கிறித்துவ பாதிரி. ஒலிம்பிக் ஆட்டங்கள் - தொடக்கம் கி.மு. 776 ஓ ஓமர் (Homer) காவியத்தில் வரும் - வீரர் கி.மு. 1250 - கி.மு. 1183 ஓமர்காயம் - பாரசீக ஞானி. 1050 - 1153 ஓமர் பாடல்கள் - கி.மு. 700 ஓம்.ஜி.எ°. - சர்மன் விஞ்ஞானி. 1787 - 1854 ஒள ஒளவையார் - அவ்வையார் பார்க்க. க கக்°லி (Huxely, Thomas Henry) - இயற்கை சாத்திரி. 1825 - 1895 கக்ஸ்லி (Huxely, Prof. Julian) - கி. பி. 1887 கங்க விசயாதித்தன் III - கீழ் சாளுக் கிய அரசன். 849 - 92 கங்கைகொண்ட சோழன் - முதலாம் இராசேந்திரனின் சிறப்புப் பெயர். 1014 - 1044 கசனி, முகமட் - ஆப்கானிய அரசன். 692 - 1116 கச்சி ஞானப்பிரகாசர் - 16ஆம் நூ. கச்சியப்ப சிவாசாரியார் - கந்தப் புராணம் பாடியவர். 11ஆம் நூ. கச்சியப்ப முனிவர் - சிவஞான முனிவரின் மாணவர். 18ஆம் நூ. கடதார் சர்தேசி - இராமகிருஷ்ண பரம அம்சர் பார்க்க. கடவுள் முனிவர் - திருவாதவூரர் புராணம் பாடியவர். நூ. கடிகை முத்துப் புலவர் - 1665 கடுங்கோன் - பாண்டிய அரசன். 590 - 620 கடைசி தா°மானியன் (Tasmanian) இறந்தது - 1876 கட்சன் (Hudson, Henry) - கட்சன் குடாக் கடலைக் கண்டுபிடித்த ஆங்கில மாலுமி. 1550 - 1611 கட்டைப்பொம்ம நாயக்கர், பாஞ் சாலக் குறிச்சி - ம. 1799 கட்பிசி° I (Kadphisis I) - வடஇந்திய அரசன். கி.பி. 21 - 50 கணபதி - காகதீய அரசன். 1198 - 1262 கணபதி ஐயர் - வாளபிமன் நாடகம். 19ஆம் நூ. கணபதிதாசர் - நெஞ்சறி விளக்கம். 18ஆம் நூ. கணாதர் - (கணாதரர்) வைசேடிக நூல். கி.மு. 3ஆம் நூ. கணிராசனுதிசன் (இ.அ.) - கி.பி. 89- 93 கணேசையர். ச - யாழ்ப்பாணப் புலவர். 1878 - 1958 கணேச பண்டிதர் - இளைசைப் புராணம் - 1843 - 1881. கணேசர் - தத்துவசிந்தாமணி. (வட மொழி) 12ஆம் நூ. கண்டராதித்தன் I - சிவபத்தனாகிய சோழன். இவன் மனைவி செம் பியன் மாதேவி. 949 - 957 கண்டராதித்தர் II - உத்தம சோழர் புதல்வர். 985 - 1014. கண்ணுவர் - கி.மு. 73 - 48 கதம்ப அரசு ஆரம்பம் - 450 கதந்திரம் - சாதவாகன அரசனின் மந்திரியாக விருந்த சர்வவர்ம னாற் செய்யப்பட்ட இலக்கணம். (வ) 1ஆம் நூ. கதரின் (Catherine II) - புகழ்பெற்ற உருசியச் சக்கரவர்த்தினி. 1729 - 1796 கதிரேசச் செட்டியார், பண்டிதமணி. மு - 1881 - 1953 கதிரைவேற் பிள்ளை, கு - தமிழ்ச் சொல்லகராதி. 1829 - 1904. கதிரைவேற் பிள்ளை, நா - யாழ்ப் பாணப் புலவர், 1844 - 1907. கந்தசாமிக் கவிராயர் - தனிச் செய்யுட் சிந்தாமணி. 19ஆம் நூ. கந்தசாமிப் புலவர் - திருப்பூவணப் புராணம். 17ஆம் நூ. கந்தப்பிள்ளை - ஆறுமுக நாவல ரின் தந்தை ம. 1766 கந்தியார் - தமிழ் நூல்களில் இடைச் செருகல் செய்தவர். 12ஆம் நூ. கபிலர்- சாங்கிய நூல். கி.மு. 7ஆம் நூ; கி.மு. 500. கபிலர்- சங்ககாலப் புலவர் 150-190 (க) கபீர் - வைணவ அடியார். 1440 - 1518 கப்டின்குக் - நாடு காண்பவர். 1728 - 1779 கப்டின் குக் ஆ°திரேலிய கரையை அடைந்தது - 1770 கமலா நேரு - சவஹர்லால் நேருவின் பாரியார். 1899 - 1936 கமலை ஞானப் பிரகாசர் - 16ஆம் நூ. கம்பர் - 12ஆம் நூ. கம்போதியாவின் பொற்காலம் - கி.பி. 800 - 1300 கயவாகு (இ.அ.) - 174 - 196 கயாதரர் - கயாதர நிகண்டு செய்தவர். கி.பி. 1450 கரகல்லா (Caracalla) - உரோமைச் சக்கரவர்த்தி. 217 கரவேலன் - கலிங்க அரசன் கி.மு. 150 கரிகாற் சோழன் - கி.பி. 190; 120 - 150 (க) கருட புராணம் - கி.பி. 200 கருணாகரத் தொண்டைமான் - சோழ அரசனின் படைத்தலைவன் 12ஆம் நூ. கருணைப் பிரகாசர் - சிவப்பிரகாச ரின் தம்பி. 17ஆம் நூ. கருவூர்த் தேவர் - 11ஆம் நூ. கர்ணதேவன் திரிலோகமல்லன் - சாளுக்கிய அரசன். 1064 - 94. கலாசேத்திரம் - இது அடையாற்றில் 1936இல் நிறுவப்பட்து. கலிங்கத்துப்பரணி - 12ஆம் நூ. கலிங்கப் போர் - அநந்தவர்மனுக்கு எதிராக நடந்த போர்; கலிங்கத்துப் பரணி கூறுவது. 1110 (குலோத் துங்க சோழன் காலம் 1070 - 1118) கலியாணசுந்தர முதலியார், திரு.வி. - 1883 - 1953 கலியாணசுந்தர முதலியார், பூவை - சைவ சித்தாந்தப் புலவர், 1854 - 1918 கலியாணிச் சாளுக்கியர் - 973. கலியுகம் - இது 432,000 ஆண்டுகள் கொண்டது; தொடக்கம். கி.மு. 3102. பெப், 17 கலிலியோ - இத்தாலிய வானசாத்திரி. 1564 - 1642 கல்கத்தா இருட்டறையில் ஆங்கி லர் அடைக்கப்பட்டது - 1756 சூன் 20 கல்கத்தா பல்கலைக் கழகம் - தொடக்கம் 1857 கல்கத்தாவில் ஆங்கிலர் வேரூன்றி யது - 1690 கல்ஹணர் - இவர் இராச தரங்கிணி என்னும் நூலை (வ) 1150இல் எழுதினார். கல்பம் - 4,320,000,000 ஆண்டுகள் கொண்ட காலம். கல்லாட தேவ நாயனார் - 9ஆம் நூ. கல்லாடர் - கல்லாடம். 9 அல்லது 10ஆம் நூ. கல்லாதநாகன் (இ.அ.) - கி.மு. 50-43. கல்வானி (Galvani, Luige) - இத்தாலிய விஞ்ஞானி; செயற்கையாக மின் சாரத்தை உண்டாக்கலாமெனக் கண்டுபிடித்தவர். 1737 - 1798. கல்வின் (Calvin, John) - புரொத்த° தாந்து மத சீர்திருத்தகாரர் பிரான்சி யர். 1509 - 1564 கல்ஹணர் - இராச தரங்கணி என் னும் வரலாற்று நூலெழுதிய காசு மீரப் புலவர். 1150 கவிக் களஞ்சியப் புலவர் - உமறுப் புலவரின் புதல்வர். 18ஆம் நூ. கவிக் குஞ்சர பாரதி - பல கீர்த்த னங்கள் பாடியவர்; அந்தண மரபி னர். 1810 - 1896 கவிப்பெருமாள் - திருக்குறளுரை யாசிரியர். 13ஆம் நூ. கவிராசர் பண்டிதர் - சௌந்தரிய லகரி. 16ஆம் நூ. கவிராசர் - கோணசர் கல்வெட்டு. 18ஆம் நூ. கவென்டிஷ் (Cavendish) - தண்ணீர், காற்று என்பவற்றின் கூட்டுப் பொருள்களைத் தீர்மானித்த ஆங்கிலர். 1731 - 1810 களந்தைக்குமரன் - திருவாஞ்சிப் புராணம். 17ஆம் நூ. களப்பிரர் காலம் - கி.பி. 300 - 600; இவர்கள் சாதவாகனராட்சியின் பின் வடக்கினின்றும் வெளி யேறிய கள்வர் (கள்ளர்) எனக் கருதப்படுவர். இவர்களை ஒழித்த வன் பாண்டியன் கடுங்கோன். (590 - 620) களவழி நாற்பது - 450 - 500 கற்காலப் பண்பாடு - மைசூரில் கி.மு. 4000 (W.d.) கற்ப சூத்திரங்கள் - கி.மு. 500 - கி.மு. 200 கனகசபைப்பிள்ளை, கூடலூர் - வருணசிந்தாமணி. 19ஆம் நூ. பிற். கனகசபைப்பிள்ளை வி. - 1800 ஆண்டுகளுக்கு முந்திய தமிழர். 1855 - 1906. கனகசபைப் புலவர் - யாழ்ப்பாணப் புலவர். 1829 - 1873 கனக சுந்தரம்பிள்ளை, த. - தமி ழறிஞர். 1863 - 1922 கனிபால் (Hannibal) - காதேசிய தளபதி. கி.மு.247 - 183. கனித்ததிசன் (இ.அ.) - 227 - 245. கனுஷ்கசகம் - தொடக்கம். 144 கனிஷ்கர் - குசான் அரசன். கி.பி. 78 - 103; கன்னிமரா நூல் நிலையம் (சென்னை) - ஆரம்பம். 1896 கன்யூட் (Canute) - டென்மாக் அரசன் 955 - 1035. க°தூரிபாய் காந்தி - 1869 - 1944 கா காக்கை பாடினியார் - காக்கை பாடினியம். கி.பி. 10ஆம் நூ. காக்ச்டன் (Caxton, William) - இங்கி லாந்தில் முதலில் அச்சு எந்திரம் நிறுவியவர். 1422 - 1491. காங்கேயர் - உரிச்சொல் நிகண்டு. 17ஆம் நூ. காசி இந்துப் பல்கலைக்கழகம் - மதன் மோகன் மாளவியாவின் முயற்சியால் நிறுவப்பட்டது. 1915 காசிநாதப் புலவர் - தால புராணம். 18ஆம் நூ. காசியப்ப மதங்கர் சீனாவில் பௌத்த மதத்தைப் பரப்பியது கி. பி. 61 - 67. காசியப்பன் (இ.அ) - சிகிரியாக் குன்றை கோட்டையாக்கியவன். 478 - 496. காசிராம் - இராமாயணத்தை வங்காளி யில் மொழிபெயர்த்தவர். 15ஆம் நூ. காசிவாசி தில்லைநாயக சுவாமி கள் - திருப்பனந்தாள் காசி மடத் தலைவர்; மடத்தைத் தொடக்கிய வர். 1720 - 1756 காஞ்சி ஞானப் பிரகாசர் - 16ஆம் நூ. கார்ட்ரைட் (Cartwright Edmand) - எந்திரத் தறியைக் (Power Loom) கண்டுபிடித்த ஆங்கிலர். 1743 - 1823 காதேச் நகர் கட்டப்பட்டது - பினீ சிய குடியேற்ற நாட்டில். கி.மு. 826 காத்தியாயன மிருதி - கி.பி. 3-6 ஆம் நூ. காத்தியாயனர் - பாணினீயத்துக்குப் பாடியஞ் செய்தவர். கி.மு. 4ஆம் நூ; கி.மு. 8ஆம் நூ. காந்தி இர்வின் ஒப்பந்தம் - 1931 காந்தி மகாத்துமா - பெரிய தேசத் தொண்டர். 1869 - 1948 காப்புத் தீக்குச்சி (Safety match - Gustave e. Pasch) சுவிடன் நாட்டு விஞ்ஞானி. 1844 காம சூத்திரம் - வற்சயாயனர் செய்தது. 320 காமந்தகன் - நீதிசாரம் என்னும் நூல் செய்தவர்; குப்த அரசர் காலம். 4ஆம் நூ. காமா (Gama, Vasco-da) - போர்ச்சுக் கீசிய மாலுமி. 1469 - 1524 காம்பிசெ° - பாரசீக அரசன். கி.மு. 530 - 522 காயல் பட்டினத்தில் மார்க்கோ போலோ - 1288 காரணை விழுப்பரையர் - காரணை விழுப்பரயன் மடல். 13ஆம் நூ. காராபுரி (எலிபெண்டா) குகைக் கோயில்கள் - கி.பி. 7 அல்லது 8ஆம் நூ. காரி இரத்தினக் கவிராயர் - பரிமே லழகருரை, நுண்பொருள் மாலை. 17ஆம் நூ. காரியாசான் - சிறு பஞ்ச மூலம். கி.பி. 5ஆம் நூ. காரியார் - கணக்கதிகாரம். 15ஆம் நூ. கார்நாற்பது - 650 - 750. கார்வே (Harvey) - இரத்தச் சுற்றோட் டத்தைக் கண்டுபிடித்த ஆங்கிலர். (1628) 1578 - 1657 கார்லைல் (Carlile, Thomas) - வரலாற் றாசிரியரும் கட்டுரை ஆசிரியரும், 1795 - 1881. கார்த்திகேய முதலியார், மாகறல் - மொழி நூல். ம. 1907. காலசூரி அல்லது சேதி ஆண்டு ஆரம்பம் - கி.பி. 248 - 249 காலசூரி (ஹாய் ஹய) ஆட்சி - தொடக்கம் - 880. கால்ட்வேலின் திராவிட மொழிகள் ஒப்பிலக்கணம் - 1ஆம் பதிப்பு 1856; 2ஆம் பதிப்பு; 1875; 3ஆம் பதிப்பு. 1913 கால்ட் வெல் ஐயர் (Rev Robert Caldwell) - 1814 - 1891 காளமேகப் புலவர் - 14ஆம் நூ. பிற்பகுதி - 15ஆம் நூ. முற்பகுதி. காளிங்கர் - திருக்குறள் உரையாசிரி யர் 13ஆம் நூ. காளிதாசர் - கி.பி. 400; 5ஆம் நூ. காளிமுத்துப் புலவர் - 1422 - 1482 காற்று அழுத்தமானி (Barometer) கண்டுபிடிக்கப்பட்டது (Torricelli இத்தாலியர்) - 1043. காற்று பிறேக் (Air brake) கண்டு பிடிக்கப்பட்டது - (Westinghouse) 1869 கான்யூட் இங்கிலாந்து டென்மார்க் நார்வே நாடுகளின் அரசனா னது - கி.பி. 1016. கி கிச்சினர் (Kitchner) - 1914இல் இங்கி லாந்தில் யுத்த மந்திரியாயிருந்தவர். 1850 - 1916 கிட்டலின் (Kittel) கன்னட அகராதி - 1856 கிட்லர் (Hitler) - சர்மன் சர்வாதிகாரி. 1889 - 1945. கிதிசிய° (Ctesius) - பாரசீக அரச னின் அரண்மனையிலிருந்த கிரேக்க மருத்துவர். கி.மு. 418 - 398 கிப்பாலு° பருவக்காற்றைக் கண்டுபிடித்தது - கி.பி. 45 கிப்போகிறிட்ட° - (Hippocrates) கிரேக்க மருத்துவர். கி.மு. 460 கியன்திசாங் (Hiuen Tsang) - சீனப் பிரயாணி. 600 - 664. கியன் திசாங்கின் பயணங்கள் - சீனப் பிரயாணி. இவர் தனது 29வது வயதில் 629இல் பிரயாணத்தை ஆரம்பித்தார். 600 - 629 கியூபாத் தீவு கண்டுபிடிக்கப்பட் டது - கொலம்ப° 1492; இது 1898 வரை இ°பானியர் ஆட்சியி லிருந்து 1902ல் விடுதலை பெற்றது. கிரந்த எழுத்து - வழங்க ஆரம் பித்தது. கி.பி. 7ஆம் நூ. கிராம்வெல் ஓலிவர் - இங்கிலாந்தின் இராச தந்திரி. 1599 - 1658. கிரீசில் மிசீனியர் (Mycenaean) காலம் கி.மு. 1500 - கி.மு. 1200 கிரீத் (Crete) நாகரிகம் - கி.மு. 1600 - கி.மு. 1500 கிரீனிச் வானாராய்ச்சி நிலையம் - அமைக்கப்பட்டது. 1675. கிருட்டிண பிள்ளை - இரட்சணிய யாத்திரிகம். 1895 - 1938 கிருட்டிணன் I - இராட்டிரகூட அ. 755 -756 கிருட்டிணன் II - 880 - 915 கிருட்டிணன் III - 939 - 966 கிருட்டிணசாமி ஐயங்கார் சர், அல்லாடி - அட்வகேட் செனரல். 1883 - 1959. கிருட்டிணசாமி ஐயங்கார், டாக்டர் - வரலாற்றாசிரியர். 1871 - 1947. கிருபாலினி ஆசாரிய - இந்திய அரசியல்வாதி. பி. 1888 கிருமியன் போர் - 1853-1856 கிருஷ்ண தேவராயர் - விசயநகர அரசர். 1509 - 1529 கிருஷ்ணமீனன் V.K. - இந்திய அரசியல்வாதி. பி. 1898. கிருஷ்ணமூர்த்தி(கல்கி)-1899- 1954. கிருஷ்ண விட்டுணு மதங்களின் இணைப்பு - கி.மு. 300 கிரேக்கர் கிரேக்க குடா நாட்டில் குடியேறுதல் - கி.மு. 900. கிரேதயுகம் - இதில் 1,728,000 ஆண்டுகள். கில்ஜி அரசர் (Khilji dynastry) - 1290 - 1414 கிளியபத்திரா (Cleopatra) எகிப்திய ராணி. கி.மு. 69 - 30. கிளைவ் (Clive, Robert) - இந்தியாவில் ஆங்கிலர் ஆட்சிக்கு அடிகோலி யவர். 1725 - 1774 கிழக்கிந்தியக் கம்பெனி (ஆங்கிலர்) 1600 - 1740 கிழக்கிந்தியக் கம்பெனி (இடா னிஷ்) - இவர்கள் தரங்கம்பாடி யில் 1616இல் ஒரு தொழிற்சாலை அமைத்தார்கள். இது ஆங்கில ருக்கு 1845இல் விற்கப்பட்டது. கிழக்கிந்தியத் தீவுகளில் இடச்சுக் காரர் குடியேற்றம் - 1595 கிழக்குக் கங்கர்சகம் - கி.பி. 498. கிழக்குச் சாளுக்கிய அரசபரம்பரை தொடக்கம் - கி.பி. 264. கிளாக் மாக்ச் வெல் (Clerk Maxwell) - கதிரியக்கம் கண்டுபிடிக்கப்படு முன் அதைப்பற்றிக் கூறிய °காட் டிஷ் விஞ்ஞானி. 1831 - 1879 கிளிமெண்ட் அவ் அலக்சாந்திரியா - (Clement of Alexandria) - 150 -218. கிறித்துவ வாலிப மாதர் சங்கம் Y.W.C.A. - ஆரம்பம். 1885. கீ கீர்த்தி இராசசிங்கன் (இ.அ) - 1739 - 1747 கீர்த்திசிறீ மேகவண்ணன் (இ.அ) - 302 - 330 கீர்த்தி நிசங்கமல்லன் (இ.அ.) - 1187 - 1196 கீர்த்தி வர்மன் - 1ஆம் புலிகேசி யின் மகன். கி.பி. 56 - 59. கீர்த்தி வர்மன் I - சாளுக்கிய அ. 744 - 755 கீர்த்தி வர்மன் II - 744 - 755 கீற்° (Keats John) - ஆங்கிலகவி. 1795 - 1827 கு குகை நமச்சிவாயர் - அருணகிரி அந்தாதி. 16ஆம் நூ. குக் (Cook, James) - நாடு கண்டவர். 1728 - 1779. குந்தேட்டின் (Rev. H. Gundert) - மலையாள ஆங்கில அகராதி - 1872. குப்புசாமி சாத்திரி, சே - சமக்கிருதப் புலவர், 1880 - 1943. குமாரசுவாமி தேசிகர் - குமார சுவாமீயம். 18ஆம் நூ. முற். குமாரசுவாமிப் புலவர், அ. - யாழ்ப் பாணப் புலவர், 1850 - 1922. குமாரதேவர் - மகாராசாதுறவு, 18ஆம் நூ. குமாரவியாசர் - கன்னட பாரத மியற்றியவர். 15ஆம் நூ. குமாரிலர் - தத்துவஞான நூல்கள் செய்தவர் (வ) 590 - 650. குருகைப் பெருமாள் கவிராயர் - மாறனலங்காரம். 16ஆம் நூ. குருகோவிந்தசிங் - சீக்கிய மதகுரு மாரில் இறுதியானவர். 1666 - 1708. குருநமச்சிவாயர் - அண்ணாமலை வெண்பா. 16ஆம் நூ. குருநானக் - சீக்கிய மத தாபகர். 1469 - 1538 குருபாததாசர் - குமரேச சதகம். 18ஆம் நூ. முற். குலசேகர ஆழ்வார் - 9ஆம் நூ; புராண ஐதீகத்தின்படி கி.மு. 3075. குலசேகரவரதுங்க பாண்டியன் - வாயு சங்கிதை. 16ஆம் நூ. குலவம்சம் - இலங்கைப் பௌத்த நூல்; மகாவம்சத்தின் 2-வது பகுதி. 13ஆம் நூ. குலோத்துங்க சோழன் I - 1070 - 1118 குலோத்துங்க சோழன் II - 1133 - 1150 குலோத்துங்கன் I - கிழக்குச் சாளுக் கிய அரசன். 1070 - 1122 குலோத்துங்கன் II - 1135 - 1150; 1182 - 1218 குலோத்துங்கன் III - 1178 - 1218 குழந்தைக் கவிராயர் - 18ஆம் நூ. குளக்கோட்டன் - கி.பி. 436 குளோடிய° - கி.பி. 41 - 54 குணசாகரர் - யாப்பருங் கலக்காரிகை உரை. 12ஆம் நூ. குசான் அரசர் - உரோமைச் சக்கர வர்த்தியிடம் தூதனுப்பியது. 336; 361; 530 (மூன்று தடவை) குஞ்சன் நம்பியார் - மலையாள கவி. 1705 - 1770. குணபத்திரர் - சமணப்புலவர்; உத்தர புராணஞ் செய்தவர். கி.பி. 900 குணவர்மன் - காசுமீர அரசகுமாரன்; யாவா மக்களைப் பௌத்த மதத் துக்குத் திருப்பியவர்; சீனாவி லுள்ள நான்கின் நகரில் 431இல் மரணமடைந்தவர். குணவீரபண்டிதர் - நேமிநாதம். 12ஆம் நூ. குணாட்டியர் - கி.பி. 1ஆம் நூ; கி.பி. 5ஆம். நூ. குண்டலகேசி - பௌத்த நூல் 7ஆம் நூ. குதுப்பள்ளி வாசல் - (Qutib mosque) 5 மாடிகளுடையது. 1195இல் கட்டப்பட்டது. குப்த அரச பரம்பரை - கி.பி. 320 - 530 குப்தசகாப்தம் ஆரம்பம் - கி.பி. 320 பெப். 26 குப்பிளாய்க்கான் - மார்க்கோப்போலோ காலத்துச் சீன அரசன். 1259 - 1292; 1216 - 1294 குப்பிளாய்க்கான் - புத்தரின் தந்தம் முதலிய சேடங்களைப் பெறத் தூதரை இலங்கைக்கு அனுப்பி யது. 1284. குமரகுருதாச சுவாமிகள், பாம்பன் - 1850 - 1929. குமரகுருபர சுவாமிகள் - சைவ அடிகள். 17ஆம் நூ. குமாரகுப்தர் I - நாலந்தாக் கலா சாலையைத் தொடக்கியவர். கி.பி. 414 - 455. குமார குலசிங்க முதலியார் - பதிவிரதை விலாசம். 1826 - 1884. குமாரசரசுவதி - தனிப்பாடல். 16ஆம் நூ. குமாரசிங்க முதலியார் - யாழ்ப் பாணப் புலவர். 19ஆம் நூ. முற். குமார சுவாமி அவதானி - தெய்வச் சிலையார் விறலிவிடுதூது. 16ஆம் நூ. குறூக்° (Crookes William, Sir) - இரேடியோ மீட்டரைக் கண்டு பிடித்தவர். 1832 - 1919 குறொம்டன் (Crompton, Samuel) - நூல் நூற்கும் எயந்திரம் கண்டு பிடித்தவர். 1653 - 1827 குறொம்வெல் (Cromwell, Oliver) - ஆங்கில இராசதந்திரி, 1599 - 1658. கூ கூழங்கைத் தம்பிரான் - யோசேப்புப் புராணஞ் செய்தவர். ம. 1795. கூரி (Curie, Pierre) - இவரும் இவ ருடைய மனைவி மேரியும் (1867- 1934) இரேடியத்தைக் கண்டுபிடித் தனர். 1859 - 1906. கெ கெதிசிய° (Ctesias) - கதசிய° பார்க்க. கெப்லர் (Kepler) - கிரகங்களின் இயக்கத்தைக் கண்டுபிடித்தது. 1609. கெமல் அலதுர்க் (Kemal Alaturk) - துருக்கியின் முதல் குடியரசுத் தலைவர். 1881 - 1938. கெல்வின் (Kelvin, Williamson Thompson) - ஆங்கில விஞ்ஞானி, 1824 - 1907. கெனசோயிக் (Cenozoic) உகம் - உயிர்கள் தோன்றிய அண்மைக் காலமாகிய 6வது உகம் (Recent Time) 60,000,000. கென்றி போட் - (Henry Ford) மோட் டார் வண்டி செய்யத் தொடங்கியது - 1893. கே கேசி - வாதாபியைத் தலைநகராக்கிய சாளுக்கிய அரசன். 543. கேதானர் - தெலுங்கு இலக்கண ஆசிரியர். 13ஆம் நூ. கேயிலிசிலாசி - (Haile Selassie I) அபிசீனிய சக்கரவர்த்தி. பி. 1891. கே°டிங்° - (Hastings Warren) 1732 - 1818 கை கைக்காமராவிற் படம் பிடிக்கும் பிலிம் சுருள் செய்யக் கண்டு பிடிக்கப்பட்டது - (Eastman and Walker) அமெரிக்கா. 1540இல் கொ கொக்கிள்ளி - கீழ் சாளுக்கிய அ. 719 கொங்குவேள் - பெருங்கதை செய்த வர். 7ஆம் நூ. கொப்பர்நிக்க° (Copernicus) - வான சாத்திர முறையை கண்டுபிடித்த வர். 1473 - 1543 கொரான் வேதம் - ஏறக்குறைய 606இல் செய்யப்பட்டது. கொலம்ப° (Colombus, Christoper) - 1446 - 1506 கொலம்ப° - அமெரிக்காவைக் கண்டது. 1492. கொல்லமாண்டுத் தொடக்கம் - 824 - 825 கொல்ட் (Colt Samuel) - சுழல் துப் பாக்கி செய்யக் கண்டுபிடித்தவர். 1814 - 1862 கொழும்புத் திட்டம் வகுக்கப் பட்டது - ஜனவரி 1950 கொன்பியூச° - சீன மதத்தாபகர். கி.மு. 551 - 479 கொன்°தாந்தின் (Constantine) - உரோமின் முதல் கிறித்துவ சக்கர வர்த்தி. 288 - 337 கொ°மொ° (Cosmos) - எகிப்திய சன்னியாசி. பூமி சாத்திரம் சமயம் என்பவைகளைப் பற்றி நூல் செய்தவர். 6ஆம் நூ. கோ கோகலே, கோபாலகிருஷ்ண - தேசபக்தர். 1866 - 1915 கோச்சடையன் இரணதீரன் - பாண்டிய அரசன். 700 - 730. கோச்செங்கட் சோழன் - கி.பி. 7ஆம் நூ; கி.பி. 3ஆம் நூ. கோதிகன் - இராட்டிரகூட அ. 967 - 972 கோப்பப்போர் - 1053 கோல்°தக்கர் (Zeodore Goldstrucker) - பிரசியாவில் பிறந்த யூதர்; இலண்டனில் சமக்கிருதப் பேரா சிரியராகவிருந்தவர். 1820-1872 கோதபயன் (இ.அ.) - 309 - 322 கோதி (Ho-ti) - சீன சக்கரவர்த்தி கி.பி. 89 -105 கோபாலகிருஷ்ண பாரதியார் - நந்தன் கீர்த்தனம் பாடியவர். 19ஆம் நூ. கோபாலசாமி ஐயங்கார் என். - பிரபல அரசியல்வாதி. 1382 - 1953 கோப்பெருஞ்சிங்கன் - பல்லவ அர சன் சிதம்பர ஆலயத்தின் கிழக்குக் கோபுரத்தைக் கட்டியவன். 1227 - 1278 கோய்சல (Hoyshala) - அரசு பரம்பரை. 1110 - 1327 கோரி Mohammad Ghori - முகமதிய அரசன். 1186 - 1206. கோல்ட் சிமித் - (Goldsmith, Oliver) ஆங்கில கவியும் நாவலாசிரிய ரும். 1728 - 1824 கோல்புரூக், ஹென்றி தாம° - ஆங்கில சமக்கிருத அறிஞர். 1765 - 1837 கோவிந்தராச முதலியார், கா. ர. - தமிழ்ப் புலவர். 1874 - 1952. கோவிந்தன் II - இராட்டிரகூட அ. 775 - 780 கோவிந்தன் III - 792 - 814 கோவிந்தன் IV - 930 - 934 கௌ கௌடபாதர் - வேதாந்த தத்துவ ஞானி. கி.பி. 8ஆம் நூ. கௌதம புத்தர் - கி.மு. 599 - 488 கௌதம புத்தரின் போதனைகள் எழுதி வைக்கப்பட்டது - கி.மு. 80இல்; இதற்கு முன் குரு மாணாக் கர் முறையில் சொல்லப்பட்டு வந்தன. கௌதமர் - நியாய சூத்திரம். கி.மு. 3ஆம் நூ. கௌபர் (Cowper, William) - ஆங்கிலக் கவி. 1731 - 1800. ச சக அரசரின் முடிவு - கி.பி. 388 சக சகாப்த ஆரம்பம் - கி.பி. 78 சகதீ° சந்திரபோ° - தாவரங் களுக்கும் மனிதருக்கும் இருப்பது போல உணர்ச்சி இருக்கிறதென் பதை நிரூபித்த இந்தியர். 1858 - 1937. சகதெமல்லன் III - சாளுக்கிய (கலியாணி) அரசன். 1163 - 83. சகர் (குசான்) படையெடுப்பு - கி.மு. 150; கி.மு. 90. சகவருடம் - சாலிவாகன சகம் கி.பி. 78. சகாங்கீர் - முகம்மதிய அரசன். 1606 - 1627 சக்திவர்மன் - கிழக்குச் சாளுக்கிய அரசன். 1000 - 1011 சங்க காலத்தினிறுதி - 4ஆம் நூற் றாண்டின் முற். (க.க.) சங்க காலம் - கி.மு. 5ஆம் நூ. தொடக்கம்; முடிவு கி.பி. 3ஆம் நூ. சங்கரதா° சுவாமிகள் - 1867 - 1922 சங்கர நமச்சிவாயர் - நன்னூல் விருத்தி. 17ஆம் நூ. சங்கர பண்டிதர் - யாழ்ப்பாணப் புலவர். 1829 - 1891 சங்கரர் - வேதாந்த சூத்திரத்துக்கு அத்வைத உரை செய்தவர். 788 - 820. சங்கரன் நாயர் சர், செட்டூர் - 1857 - 1934 சங்காய் சேக் - தேசீய சீனத் தலைவர். பி. 1887 - சங்கிலி - யாழ்ப்பாணக் கடைசி அரசன்; நாடு கடத்தப்பட்டது. 1619 சசிவர்ணர் - சசிவர்ணபோதம். 15ஆம் நூ. சசெக்° மனிதன் - (பில்டௌன் மனிதன்) 125,000 ஆண்டுகளின் முன். சடகோபதாசர், கீழையூர் - அரிசமய தீபம். 18ஆம் நூ. சடகோப ராமானுசாரியார் - தமிழ் நூல்களுக்கு உரை எழுதியவர். 1871 - 1910 சடில பராந்தக நெடுஞ்சடையன் - பாண்டிய அரசன். 756 - 815. சட்டைநாத வள்ளல் - சதாசிவ ரூபம். 18ஆம் நூ. சண்டிதா° - வங்காளி வைணவ அடியார். 1420. சண்முகஞ் செட்டியார் டாக்டர் ஆர்.கே. - 1892 - 1953 சண்முகம் பிள்ளை, அரசன் - தமிழ் வித்துவான். 1868 - 1915 சண்முகம் பிள்ளை, வா. சு. - தமிழ் அறிஞர். 1880 - 1941 சதபத பிராமணம் - கி.மு. 1000 - கி.மு. 800. சதாசிவச் செட்டியார், கயப்பாக்கம் - 1872 - 1929. சதாசிவன் - விசயநகர அரசன். 1542 - 76. சதாதிசன் (இ.அ.) - கி.மு. 77 - 59. சதி ஒழிப்புச்சட்டம் செய்யப்பட் டது - 1829. சதுர அகராதி - வீரமா முனிவர் செய்தது. 1732. சத்திமுற்றப் புலவர் - 13ஆம் நூ. சத்தியமூர்த்தி எ° - அரசியல்வாதி. 1887 - 1943. சத்தியாசிரிய இரிவபெடங்கன் - சாளுக்கிய அரசன். 997 - 1008 சந்திரமுக சிவன் (இ.அ.) - 103 - 112 சந்திரகுப்த சகம் - கி.பி. 320 சந்திரகுப்த மௌரியன் - கி.மு. 322 - 296; கி.மு. 324 - கி.மு. 300 சந்திரகுப்தன் I - கி.பி. 330 - 380; கி.பி. 320 - 330 சந்திரகுப்தன் II - விக்கிரமாதித்தியன். கி.பி. 378 - 414; 380 - 413 சந்திரகோமி - சந்திர வியாகரணம் என்னும் வியாகரண மெழுதியவர்; குப்த அரசர் காலம். சந்திரசேகர கவிராயர் - வருடாதி நூல். 19ஆம் நூ. பிற். சந்திரசேகர பண்டிதர் - யாழ்ப்பாண அகராதி வெளியிட்டது. 1878. சபரர் - கி.மு. 1ஆம் நூ. சபாபதி நாவலர் - திராவிடப் பிரகா சிகை. 1843 - 1903. சபாபதி முதலியார், காஞ்சீபுரம் - மகா வித்துவான், 19ஆம் நூ. பிற். சபாரத்தின முதலியார், குல - யாழ்ப் பாணம், 1858 - 1922 சமகதிசன் (இ.அ.) - 303 - 307 சமணம் சுவேதாம்பரம் திகம்பரம் என இரண்டாகப் பிரிந்தது கி.பி. 78 சமய திவாகர வாமன முனிவர் - நீலகேசி உரை. 16ஆம் நூ. சமுத்திரகுப்தன் - 340 - 380; 330 - 375 சம்பந்த சரணாலயர்- கந்தபுராணச் சுருக்கம். 16ஆம் நூ. சம்பந்த முனிவர் - திருவாரூர்ப் புராணம். 16 ஆம் நூ. சம்பந்தர் - திருஞான சம்பந்தர். 7ஆம் நூ.; 644 - 660. சயங்கொண்டார் - கலிங்கத்துப்பரணி. 12ஆம் நூ. சயசிம்மன் I - கீழ் சாளுக்கிய அரசன். 641 - 73 சயசிம்மன் II - 706 - 718 சயசிம்மன் III - 1015 - 42 சயவர்மன் - கம்போதிய அரசன். 802 - 869 சயவர்மன் சுந்தரபாண்டியன் - 1253 - 1270 சயவர்மன் வீரபாண்டியன் - கோணா மலையில் மீன்கொடி பொறித்தவன். 13ஆம் நூ. சயவாகு II (இ.அ.) - 1467 - 1473 சரத்சந்திர சட்டர்சி - வங்காள கதை ஆசிரியர். 1876 - 1938 சரவண தேசிகர் - தேவிகாலோத் தரம். 19ஆம் நூ. சரவணப் பெருமாள் கவிராயர் - பணம் விடுதூது. 19ஆம் நூ. சரவணப் பெருமாளையர் - 19ஆம் நூ. சரவண முத்துப் புலவர் - ஆத்ம போதப் பிரகாசிகை. 1851. சரோசனிதேவி - இந்தியாவின் கவி யரசி. 1879 - 1950. சர்க்கரைப் புலவர் - மிழலைச் சதகம். 17ஆம் நூ. சர்க்கரைப் புலவர் - திருச்செந்தூர்க் கோவை. 1645 - 70 சர்க்கரைப் புலவர் - மெதீனந்தாதி. 18ஆம் நூ. சர்வானந்தர் - அமரகோசத்துக்கு உரை செய்தவர். 1859. சலப் பிரளயம் (பைபிளில் காணப் பட்ட) - கி.மு. 4000. சவரிராய பிள்ளை, பண்டிதர் - தமிழ் வரலாற்றாராய்ச்சி அறிஞர். 1859 - 1923 சவ்வாதுப் புலவர் - முகமதிய தமிழ்ப் புலவருளொருவர். 17ஆம் நூ. சனகன் - சீதா பிராட்டியின் தந்தை ; விதேக நாட்டரசன், யாக்ஞ வல்கியர் காலத்தில் இருந்தவர். கி.மு. 1300. சா சா (Shaw, George Bernard) - ஆங்கில நாடக ஆசிரியர். 1856 - 1950. சாகிரடி° - கிரேக்க தத்துவஞானி. கி.மு. 469 - 399. சாகுந்தலம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது - சர் வில்லியம் சோன்° (Sir William Jones) என்பவரால். 1789இல். சாக்சன் மக்கள் பிரிட்டனில் முதல் குடியேறியது - 477. சாசர் (Chaucer Geoffrey) - ஆங்கிலக் கவி. 1340 - 1400. சாசஹான் (முகமதிய அரசன்) - 1627 - 1658. சாஞ்சித் தூபிகள் - கி.மு. 2ஆம் நூ; கி.பி. 1ஆம் நூ. சாதகக் கதைகள் - கி.மு. 5ஆம் நூ. சாதவாகனர் - கி.மு. 200 - கி.பி. 300 சாந்த கவிராயர் - இரங்கேச வெண்பா. 18ஆம் நூ. சாந்தலிங்க கவிராயர் - தண்டலை யார் சதகம். 18ஆம் நூ. சாந்தலிங்க சுவாமிகள் - வைராக் கிய சதகம். 17ஆம் நூ. சாந்துப் புலவர் - மயூர கிரிக்கோவை. 18ஆம் நூ. சாமிக்கண்ணுப்பிள்ளை, லூடா - வானவியல், அரசியல் அறிஞர். 1865 - 1925 சாமிநாத கவிராயர் - சிவ சைலப் பள்ளு, 18ஆம் நூ. சாமிநாதையர் உ.வே. - டாக்டர். 1855 - 1942 சாமிநாத பண்டிதர் - 20ஆம் நூ. சாமிநாத முதலியார் - தருமபுத்திர நாடகம். 18ஆம் நூ. சாயணர் - வித்தியராணியரின் தம்பி. ம. 1387 சாய்ந்த கோபுரம் கட்டப்பட்டது - 1174 - 1350 சாரக சம்கிதை - மருத்துவ நூல். கி.பி. 2ஆம் நூ. சாரகர் - சாரக சம்கிதை செய்தவர். 120 சாரங்கதரர் - மருத்துவர் 13ஆம் நூ. சாரங்க தேவர் - வடநாட்டில் தௌல தாபாத் வேதகிரி இராச்சியத்தில் சிம்மண்ணா சபையில் சம°தான வித்துவான்; சங்கீத இரத்தினாகரம என்னும் நூல் செய்தவர். 1016 சாலமன் - யூத அரசன் கி.மு. 974 - 937; கி.மு. 1016 - 976. சாவக மக்கள் சகம் - ஆரம்பம். கி.பி. 75 சாளுக்கிய அரச பரம்பரை (தக்கா ணம்) - கி.பி. 550 - 1190. சாளுக்கிய அரச பரம்பரை - 973 - 1198 சாளுக்கிய திருமலைராயன் - 15ஆம் நூ. சாளுக்கிய பீமா I - 921 சாளுக்கிய பீமா II - 935 - 940 சி சிகிரியா ஓவியங்கள் - கி.பி. 5ஆம் நூ. சிகிரியாக் குன்று ஓவியங்களை மேயர் போர்ப்° (Mayor Forbes) கண்டுபிடித்தது - 1831 சிகிரியா தலைநகரானது - கி.பி. 5ஆம் நூ. சிங்காரவேலு முதலியார், ஆ - அபி தான சிந்தாமணி, 1855 - 1931 சிசரோ (Cicero) - சிறந்த உரோமன் பேச்சாளர். கி.மு. 103 - 43 சிசு நாக அரச பரம்பரை தொடக்கம் - கி.மு. 600 சிசுநாதன் (இ.அ.) - கி.மு. 430 - 364 சிதம்பர சுவாமிகள் - திருப்போரூர் சந்நிதி முறை. 17ஆம் நூ. சிதம்பரத்தைப் பொன்னால் வேய்ந்தவன் - சடாவர்மன் சுந்தர பாண்டியன். 1251 - 1268 சிதம்பரநாத முதலியார், டி.கே. - தமிழறிஞர். 1882 - 1954 சிதம்பரநாத முனிவர் - திருப்பாதிரி யூர் புராணம் பாடியவர். 18ஆம். நூ. சிதம்பரப் பிள்ளை (வில்லியம் நெவின்°) - 19ஆம் நூ. இறுதி. சிதம்பரம் பிள்ளை வ.உ. - தேசத் தொண்டர். 1872 - 1936 சிதம்பரனார், துடிசை கிழார் - தமிழறிஞர். - 1954 சித்தர் சிவப்பிரகாசர் - 17ஆம் நூ. சித்தாந்த சாத்திரங்கள் : 1148 - 1313 திருவுந்தியார் 1148 திருக்களிற்றுப்படி 1188 சிவஞானபோதம் 1221 சிவஞான சித்தியார் 1253 இருபா இருபஃது 1254 உண்மை விளக்கம் 1255 சிவப்பிரகாசம் 1306 திருவருட்பயன் 1307 வினாவெண்பா 1308 போற்றிப் பஃறொடை 1309 கொடிக்கவி 1310 நெஞ்சுவிடுதூது 1311 உண்மை நெறிவிளக்கம் 1312 சங்கற்ப நிராகரணம் 1313 சிந்துவெளி நாகரிகம் (மொகஞ் சதரோ) - கி.மு. 3500 - கி.மு. 2000 சிந்து நாட்டில் இ°லாம் பரவுதல் - 711 சிந்துவின் கழிமுகப் பிரதேசத்தை தாரிய° I வென்றது - கி.மு. 518 சிப்பாய்க் கலகம் - 1857 சிம்ம விஷ்ணு - பல்லவ அரசன். 575 - 600 சியாமாள பட்டர் - 1700 - 1760 சியாமா சாத்திரிகள் - இசைப்புலவர். 1762 - 1827 சிலுவைப் போர்கள் - 1095 - 1254 சிவகுருநாத பிள்ளை - ந. சைவ சித்தாந்தப் புலவர். 1873 - 1953 சிவக்கொழுந்து தேசிகர் - கொட்டை யூர், 19ஆம் நூ. சிவசங்கர நாராயண பிள்ளை - இந்திய கணித அறிஞர். 1901 - 1950 சிவசம்புப் புலவர் - யாழ்ப்பாணப் புலவர். 1852 - 1910 சிவசிறி சதகரணி - 159 - 166 சிவசுப்பிரமணிய கவிராயர் - நாம தீப நிகண்டு செய்தவர். 19ஆம் நூ. முற். சிவஞான சித்தியார் - சித்தாந்த நூல் களிலொன்று. 13ஆம் நூ. சிவஞான பாலசுவாமிகள் - 17ஆம் நூ. முற். சிவஞான முனிவர் - சிவஞான போதம் பாடியஞ் செய்தவர். 1785 சிவஞானம் பிள்ளை, சே. - தமி ழறிஞர். 1871 - 1931 சிவஞான யோகிகள், விருதை - மருத்துவரும் தமிழறிஞரும். 1840 - 1924 சிவஞான வள்ளல் - வள்ளலார் சாத்திரம். 18ஆம் நூ. பிற். சிவப்பிரகாச சுவாமிகள், கரபாத்திரம் - 1874 - 1918 சிவப்பிரகாச சுவாமிகள், துறைமங்க லம் - 17ஆம் நூ. சிவப்பிரகாசர், துறையூர் - அத்வைத வெண்பா செய்தவர். 17ஆம் நூ. சிவப்பிரகாச பண்டிதர் - யாழ்ப் பாணப் புலவர். 1864 - 1916 சிவ°கந்த சதகரணி - 167 - 174 சிவாக்கிர யோகிகள் - சிவக்கொ ழுந்து தேசிகர்; சித்தியார் உரை செய்தவர். - 1564. சிவாசி - தஞ்சையை ஆண்ட மராட் டிய அரசன். 1674 - 1680 சிவாலி (இ.அ.) - 93 சிவானந்தையர் - யாழ்ப்பாணப் புலவர். 1873 - 1916 சிறிகண்டர் - இராமனுசர் காலத்தில் சிவாத்துவைதம் என்னும் சைவ மதக் கொள்கையைப் பரப்பியவர். (பார்க்க சீகண்டர்) சிறீசங்கபோதி (இ.அ.) - 307 - 309 சிறீநாகன் I (இ.அ.) - 249 - 268 சிறீநாகன் II (இ.அ) - 302 சிறீரங்க I - விசயநகர அரசன். 1572- 85 சிறீரங்க II - 1642 - 9 சிறீமாற சிறீவல்லபன் I - பாண்டிய அரசன். 756 - 815 சிறீமாற சிறீவல்லபன் II - பாண்டிய அரசன். 815 - 860 சிறீவிசய இராச சிங்கன் (இ.அ) - 1707 - 1739 சிறீவீர பராக்கிரம நரேந்திர சிங்கன் (குண்டசாலை) (இ.அ) - 1687 - 1707 சிறுத்தொண்டர் வாதாபியை வென்றது - 670 - 674 சிறுபஞ்சமூலம் - 650 - 750 சிற்றம்பலநாடிகள் - துகளறு போதம். 15ஆம் நூ. சின்னக்குட்டிப் புலவர் - கனகராயன் பள்ளு. 19ஆம் நூ. சின்னத்தம்பிப் புலவர் - மறசை யந்தாதி. 1716 - 1780 சின்னமன்னூர்ச் சாசனம் - மாறவர் மன் இராசசிம்ம பாண்டியனால் பொறிக்கப்பட்டது. 900 - 920. சீ சீகண்டர் - நீலகண்ட சிவாசாரியார் 14ஆம் நூ. நீலகண்ட சிவாசாரியார் பார்க்க. சீசர் - கி.மு. 100 - 44 சீசர் சர்வாதிகாரியானது - கி.மு. 50 சீபட்டர் - பகவத் கீதையைத் தமிழிற் பாடியவர். 13ஆம் நூ. சீயகங்கன் - பவணந்தி முனிவரை ஆதரித்த சிற்றரசன்; மூன்றாம் குலோத்துங்கன் காலத்தவர். (1178 - 1216) சீனப்பெருஞ் சுவர் கட்டப்பட்டது - கி.மு. 214 சீனர் முதன் முதல் காகிதம் செய் தது - கி.பி. 105 சீனிப் புலவர் - மிழலைச் சதகம். 18ஆம் நூ. சீனிவாச பிள்ளை K.S. - தமிழ் வரலாறு. 1842 - 1929 சீனாவிலிருந்து பட்டு முதலில் ஐரோப்பாவுக்குச் சென்றது கி.பி. 121 சீனாவில் ஹன் (Han) அரச பரம் பரை முடிவு - கி.பி. 220 சு சுக்கிர நீதி - 10ஆம். நூ. சுக்கூர் அணை - 1923 - 1932 சுங்க அரசர் - கி.மு. 184 - கி.பி. 75; கி.மு. 184 - கி.பி. 72 சுதந்திரச்சிலை (அமெரிக்க) - நிறுத் தப்பட்டது. 1886 சுந்தர பாண்டியன் I - 1217 - 1238 சுந்தரம் பிள்ளை எம்.ஏ. - மனோன் மணீயம். 1855 - 1897. சுந்தரர் - (V.C. நாராயண ஐயர்) 710 - 735 சுபா° சந்திரபோ° - தேசத் தொண்டர். 1897 - 1945 சுப்பராம தீட்சிதர் - இசைப்புலவர். 1839 - 1906 சுப்பராசா (இ.அ) - 120 - 126 சுப்பிர தீபக் கவிராயர் - அட்டாவ தானி. 18ஆம் நூ. முற். சுப்பிரமணிய ஐயர் வ.வே. - 1869 சுப்பிரமணிய சிவன் - தேச பத்தர். 1884 - 1925 சுப்பிரமணிய தீட்சிதர் - பிரயோக விவேகம். 17ஆம் நூ. சுப்பிரமணிய பண்டிதர் - சீவ ரட்சாமிர்தம். 19ஆம் நூ. பிற். சுப்பிரமணிய பாரதியார் சி. - தேசீயப் பாடல்கள். 1882 - 1921. சுப்பிரமணிய பாரதியார், மழவை - 19ஆம் நூ. சுப்பிரமணிய பிள்ளை கா. எம்.ஏ., எம்.எல். - 1889 - 1945 சுப்பிரமணிய முனிவர் - கலைசைச் சிலேடை வெண்பா. 18ஆம் நூ. சுப்பிரராம தீட்சிதர் - இசைப் புலவர். 1839 - 1906. சுப்பிரராமையர் வைத்தீசுவரன் கோவில் - இசைப்புலவர், 19ஆம் நூ. பிற். சுப்புமால் குமராய - இவன் கய பாகுவைக் கொன்று புவனேகபாகு என முடி சூடியவன். 1473 சுபா° சந்திரபோ° (நேதாஜி) - இந்திய தேசத்தொண்டர். 1898-1945 சுமத்திராவில் பௌத்த மதம் அழிந்து இ°லாம் பரவுதல் - கி.மு. 1500 சுமேரியரின் நகராட்சிகள் - கி.மு. 4000 - கி.மு. 2900. சுய° கால்வாய் நாசரால் தேசியமய மாக்கப்பட்டது - சூலை 1956 சுரங்க விளக்கு கண்டு பிடிக்கப் பட்டது - (Davy - ஆங்கிலர்.) 1815 சுரேந்திரநாத் பனேஜி - இந்திய தேசத் தொண்டர். 1848 - 1925. சுவாமிக் கண்ணுப்பிள்ளை லூ. ட. - வானவியல் அரசியல் அறிஞர். 1865 - 1925 சுவாமிநாத கவிராயர் - பொதிகை நிகண்டு. 19ஆம் நூ. முற். சுவாமிநாத தேசிகர் - ஈசான தேசிகர். 17ஆம் நூ. சுவாமி வேதாசலம் - மறைமலை அடிகள். 1876 - 1950 சுவான் (Swan) - ஆங்கில விஞ்ஞானி நிழற் படம் (Photography) பிடிக் கும் முறையில் திருத்தங்கள் செய்தவர். 1828 - 1914 சுவிப்ட் (Swift, Jonathan) - ஆங்கில நாவலாசிரியர். 1667 - 1745 சு°ருத சம்கிதை - மருந்து நூல் கி.மு. 5ஆம் நூ. சூ சூரத்தில் ஆங்கிலர் தொழிற்சாலை நிறுவியது - 1608 சூரியநாராயண சாத்திரியார் வி.கோ. - 1870 - 1903 செ செகராசசேகரன் - இலங்கை அரசன். 17ஆம் நூ. செங்குட்டுவன் - சேர அரசன். கி.பி. 180 (க.க.) செந்தில் நாயக அடிகள் - வண்ணச் சரபம் தண்டபாணி அடிகளின் புதல்வர். 1884 - 1942. செப்பலின் (Zeppelin) - ஆகாயக் கப்பலைச் செய்த சர்மானியர். 1838 - 1917 செம்பியன் மாதேவி - கண்டராதித் தரின் மனைவி. 949 - 959 செயற்கைப் பட்டு கண்டுபிடிக்கப் பட்டது (De Chardonnet, பிரான்சியர்) - 1889 செய்குத்தம்பி புலவர் - நாஞ்சில் நாட்டுப் புலவர். 1872 - 1950 செல்லி (Shelley, Percy Bysshe) - ஆங்கிலக் கவி - 1792 - 1822 செல்லியன் (Chellian) - மனிதன் - 100,000 ஆண்டுகளின் முன். செல்வக் கேசவராய முதலியார், தி. - தமிழ் அறிஞர். 1864 - 1921 செவேர° (Severous) - உரோமைச் சக்கரவர்த்தி. 217 செவ்வைச் சூடுவார் - 16ஆம் நூ. சென்ன செரீப் - அசீரிய அரசன். கி.மு. 795 - 681 சென்ன மல்லையர் - 18ஆம் நூ. சென்னைக் கலங்கரை விளக்கம்-1-6-1894 முதல் வேலை செய்கிறது. சே சேக்கிழார்-பெரியபுராணம் 11ஆம் நூ. சேக்°பியர் (Shakespeare, William) - ஆங்கில நாடக ஆசிரியர். 1566 - 1616. சேர்ச்சில் (Churchill, Winston) - கி.பி. 1874 சேந்தனார்- திருவிசைப்பா. 10 அல்லது 11 ஆம் நூ. சேம்பர்லின் சோசப் (Chamberlin Joseph) - ஆங்கில அரசியல்வாதி. 1836 - 1914. சேரமான் பெருமாள் - பொன் வண்ணத் தந்தாதி. 9ஆம் நூ.; 742 - 826 சேர்செஸ் I (Xerxes) - பாரசீக அரசன். கி.மு. 486 - 465 சேர்செஸ் II - கி.மு. 424 சேர்யோன் மார்சல் - சிந்துவெளிப் புதை பொருளாராய்ச்சி நடத்தியவர். 1876 - 1958. சேவியர் (Xavier) - இ°பானிய கத்தோலிக்க பாதிரி; இவருடல் கோவாவில் வைக்கப்பட்டுள்ளது. 1506 - 1552 சேறைக் கவிராச பிள்ளை - காளத்திநாதருலா. 16ஆம் நூ. சேன அரச (பரம்பரை) வங்காளம் - 1119 - 1199 சேனன் (இ.அ.) - கி.மு. 177 - 155 சேனன் I (இ.அ.) - கி.பி. 831 - 851 சேனாதிராச முதலியார் - நல்லை வெண்பா. 1750 - 1840 சேனாவரையர் - தொல்காப்பியச் சொல்லதிகார உரை. 13ஆம் நூ. சை சைதன்னியர் - ஒரிசா வங்காளத்தில் வழங்கும் வைணவ மதத்தாபகர். 1845 சைமன் காசிச்செட்டி - தமிழ் புலுதாக். 1807 - 1861 சைமினி - வியாசரின் மாணவர். கி.மு. 13ஆம் நூ. சைரசின் புதல்வன் காம்பிசி° எகிப்தைப் பிடித்தது - கி.மு. 525 சைர° - பாரசீக அரசன். கி.மு. 558 - 530 சைர° பாபிலோனைப் பிடித்தது - கி.மு. 539 சைவம் பௌத்தத்தை வீழ்த்திக் காசு மீரத்தில் பரவியது - கி.பி. 800 சொ சொகிரட்டி° - கிரேக்க தத்துவ ஞானி. கி.மு. 469 - 399. சொக்கநாதப் புலவர் - தனிப் பாடல்கள். 17ஆம் நூ. சொக்கப்ப நாவலர் - தஞ்சைவாணன் கோவை உரை. 18ஆம் நூ. முற். சொரா°தர் - பாரசீக மதத் தலைவர். கி.மு. 600; கி.மு. 800. சொரூபானந்தர் - தத்துவராயரின் குரு. 15ஆம் நூ. சோ சோமசுந்தர தேசிகர் ச. - தமிழ்ப் புலவர் வரலாறு முதலிய நூல்க ளெழுதியவர். 1897 - 1941 சோமசுந்தர பாரதியார் ச, நாவலர் - 1878 - 1959 சோமசுந்தரப் புலவர், க. - யாழ்ப் பாணம் நவாலியூரினர். 1880 - 1953. சோமசுந்தர நாயகர் - சித்தாந்த சரபம். 1846 - 1901. சோமதேவசூரி (வ) - சமணப் புலவர். 950 சோமேசுவரன் I - சாளுக்கிய அரசன். (கலியாணி) 1042 - 1068. சோமேசுவரன் II - 1068 - 76 சோமேசுவரன் III - 1126 - 38 சோமேசுவரன் IV - 1184 - 1200 சோர நாகன் (இ.அ) - கி.மு. 3 - கி.பி. 9 சோழ அரச பரம்பரை (பிற்காலம்) - 907 - 1310 சோழர் ஆட்சியின் எழுச்சி (பிற் காலம்) - கி.பி. 9ஆம் நூ. சோழர் இலங்கையை வென்றது - கி.பி. 993 சோழர் இலங்கை முழுவதையும் வென்றது - 1017 சோழர் சீனாவுக்குத் தூதனுப்பியது - 1079 சௌ சௌ-என்-லாய் (Chow-en-lai) - சீனப் பொதுவுடைமைக் குடியரசுத் தலைவர். கி.பி. 1874 - சௌ அரச வமிசம் (Chow Dynasty in China) - கி.மு. 1100 - கி.மு. 722 சௌயுகுவா (Chow Jukua) - சீனயாத்திரிகன். 1225 ஞா ஞானக் கூத்தர் - திருவையாற்றுப் புராணம். 16ஆம் நூ. ஞானக் கூத்தர்- விருத்தாசல புராணம் 17 அல்லது 18ஆம். நூ. ஞானசம்பந்த தேசிகர் - சிவபோக சாரம் 16ஆம் நூ. ஞானசம்பந்தர் - திருவாரூர்ப் புராணம் 16ஆம் நூ. ஞானப்பிரகாச தேசிகர், - யாழ்ப் பாணம் 17ஆம் நூ. பிற். ஞானப்பிரகாசர், நல்லூர் - கத் தோலிக்க சுவாமியார். 1875-1947. ஞானவரோதய பண்டாரம் - 16Mம் நூ. ஞானவல்கியர் - மிருதி நூலாசிரியர். கி.மு. 1300 ஞானியாரடிகள் - மடாதிபதி. 1872 - 1942 ஞானேசுவரர் - மகாராட்டிர கவி. 1120 - 1141 த தக்கயாகப் பரணி உரை ஆசிரியர் - 15ஆம் நூ. தட்டச்சு (Type-writer) - கண்டு பிடிக்கப்பட்டது - (Soles - அமெ ரிக்கர்). 1868 தண்டி (வடமொழி) - 635-க்கும் 700-க்குமிடையில். தண்டி தமிழ் - தண்டி அலங்காரம். 12ஆம் நூ. தத்தர் இராமே° சந்திரர் - இந்திய நாகரிகம் முதலிய நூல்கள் எழுதி யவர்; வங்காள நாட்டினர் 1848 - 1909 தத்துவ போதசுவாமி (Rebert De Nobili) - ஐரோப்பிய கத்தோலிக்க மதகுரு 16ஆம் நூ. தத்துவப் பிரகாசர் - தத்துவப் பிரகாசம். 16ஆம் நூ. தத்துவப் பிரகாசர் - சிவஞான சித்தி உரை. 16ஆம் நூ. தத்துவராயர் - பாடுதுறை 16ஆம் நூ. தந்திக் குறியீடுகள் கண்டுபிடிக்கப் பட்டது - (Morse - அமெரிக்கர்.) 1837 தந்திவர்மன் - பல்லவ அரசன் 795-845 தமிழாகர முனிவர்-நீதி சாரம் 17ஆம் நூ. தப்புளு (இ.அ) - 923 - 929 தயதோர° (Diodorus) - கிரேக்க வர லாற்றாசிரியர். கி.பி. 1ஆம் நூ. நடு. தயானந்த சரசுவதி - ஆரிய சமாச தாபகர். (1852); கத்தியவார் பிராமணத் துறவி. 1823 - 1883 தயிலன் - சாளுக்கிய அரசன் (கலி யாணி). 973 - 976. தயிலப்ப III - சாளுக்கிய அரசன் (கலி). 1126 - 38 தயோகிரிதோ°தம் (Dio Chry stotum) - உரோமைச் சரித்திராசிரி யர்; இந்தியர் அலெக்சாந்திரியாவிற் குடியேறி யிருந்ததைப் பற்றிக் கூறியவர். கி.பி. 117 தயோனிச° (Dionysus) - தாலமி பிலாடிப° என்னும் எகிப்திய அரச னால் மௌரிய சந்திர குப்தனிடம் தூதராக அனுப்பப்பட்ட கிரேக்கர். கி.மு. 4ஆம் நூ. தரங்கம்பாடிக்குச் சர்மனியிலிருந்து அச்சுயந்திரம் கொண்டு வரப் பட்டது - 1713 தருமர் - திருக்குறளுரை 13ஆம் நூ. தர்க்ககுடாரி தாலுதாரி - அரிகரதார தம்மியம். 19ஆம் நூ. தர்மராயர் - விசயநகர அரசன். 1491 - 1505 தலாய்லாமா பிக்குவும் அரசனு மாதல் (திபெத்) - 1642 தலைமலை கண்ட தேவர்-18ஆம் நூ. தலைக்கோட்டைப்போர்- முகம்மதியச் சுல்தான்களுக்கும் விசயநகர இந்து அரசருக்குமிடையில் நடந்த போர். 1565 தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் - 210 (க.க.) தவேனியர் (Tavernier) - பிரென்சு ஆபரண வணிகர் இந்தியாவுக்கு வந்தது. 1666 தன்வந்திரி - விக்கிரமாதித்தர் அவை -யிலிருந்த மருத்துவர். 500 தா°மன் (Tasman) - த°மேனியாவை 1642இல் கண்டுபிடித்த இடச்சுக் காரர். 1603 - 1659 தா தாண்டவராய சுவாமிகள் - கைவல்லிய நவநீதம் 17ஆம் நூ. தாண்டவராய முதலியார் - 1824இல் பஞ்சதந்திரத்தை மராட்டி மொழியி லிருந்து தமிழில் மொழி பெயர்த்த வர். 19ஆம் நூ. தாதபாய் நெரோசி - 1825 - 1916 தாதவம்சா - இலங்கைப் பௌத்த நூல்; இராசகுரு தரும கீர்த்தி எழுதி யது. 12ஆம் நூ. தாது சேனன் (இ.அ) - 460 - 478 தாமத்தர்- திருக்குறளுரை 13ஆம் நூ. தாமோதரம் பிள்ளை சி.வை. - 1832 - 1901 தாம்சன் (Sir Joseph John Thomson) - ஆங்கில விஞ்ஞானி. காற்றின் மூலம் மின்சாரம் செல்லக் கூடுமென்பதைக் கண்டுபிடித்த வர். 1856 - 1940 தாயுமான சுவாமிகள் - 1706 - 1744 தாயுவான் (Ta-yuan) - சீன பிரயாணி. 1330 - 1349 தாரிய° I (Darius) - பாரசீக அரசன். கி.மு. 522 - 486 தாரிய° II-பாரசீக அரசன். கி.மு. 424- 404 தாரிய° III - கி.மு. 337 - 330 தாலமி (Ptolemy) - 2ஆம் நூ. தாலமியின் பூமிசாத்திரம் - கி.பி.140. தால்மி பிலாடிபு° - அசோகர் காலத் தவர். கி.மு. 285 - 247 தால்°தாய் (Tolstoy) - உருசிய நாவலாசிரியர். 1828 - 1910 தாவீது (David) - சாலமனின் தந்தை. கி.மு. 1000 தானியல் மலான் (Danial Malan) - தென்னாப்பிரிக்க குடியரசுத் தலைவர். 1874 - 1959 தானார்னவன் - கீழ்சாளுக்கிய அரசன். 970 - 73 தா° சித்தரஞ்சன் - புகழ்பெற்ற அரசியல் தலைவர்களுளொருவர்; கல்கத்தாவில் பிறந்தவர். 1810-1925 தாஜ்மகால் கட்டப்பட்டது - 1632 - 1653 தி திசன் (இ.அ) - 9-12 திமூர் (Timur) டில்லியைச் சூறை யாடியது - 1398 திம்ம (திருமலை) - விசயநகர அரசன். 1491 தியாகராசச் செட்டியார், சி. - மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவர். 1826-1888 தியாகராயர் (தியாகையர்) - தெலுங்குக் கீர்த்தனம் பாடியவர். 1767 - 1847 திராய் (Troy) நகரில் முதற் குடி யேற்றம் அறியப்படுவது - கி.மு. 2870 திராய் (Troy) நகரின் முற்றுகை - கி.மு. 1192 - 1183 திராசன் (Trajan) - உரோமச் சக்கர வர்த்தி. 98 - 117 திராவிட நாகரிகம் - கி.மு. 4000 திரிபிடகம் இலங்கையில் எழுதப் பட்டது - வட்டகமினி காலத்தில். கி.மு. 29 கி.மு. 17. திருக்கடவூர் உய்ய வந்த தேவ நாயனார் - திருக்களிற்றுப்படி யார். 12ஆம் நூ. திருக்குருகூர்ச் சிறிய இரத்தினக் கவிராயர் - புலவராற்றுப் படை. 17ஆம் நூ. முற். திருக்குருகைப் பிரான் பிள்ளான் - ஆறாயிரப்படி உரை. 13ஆம் நூ. திருக்குறுங்குடி நம்பி-18ஆம் நூ. முற். திருக்கோட்டி நம்பி - உள்ள முடையான். 12ஆம் நூ. திருச்சிற்றம்பல தேசிகர் - கம்ப ராமாயண வசனம். 19ஆம் நூ. பிற். திருச்சிற்றம்பல நாவலர், மாம் பாக்கம் - அண்ணாமலைச் சதகம். 19ஆம் நூ. திருத்தக்கதேவர் - சீவக சிந்தாமணி. 10ஆம் நூ. திருத்தோணியப்பர் - 16ஆம் நூ. திருப்பாணாழ்வார் - 8ஆம் நூ.; புராண ஐதீகத்தின்படி. கி.மு. 2760. திருபுவன பல்லவ பேடா II - காகதீய அரசன். 1075 - 1110 திருமங்கை ஆழ்வார் - 9ஆம் நூ.; புராண ஐதீகத்தின்படி கி.மு. 2706 திருமலை நாதர் - 16ஆம் நூ. முற் திருமலை நாயக்கரின் அரண் மனைக் கட்டப்பட்டது - 1645 திருமலை நாயக்கர் - மதுரை நாயக்க அரசர். 1623 திருமலை - விசயநகர அரசன் 1570- 1 திருமலையர் - திருக்குறளுரை 13ஆம் நூ. திருமழிசை ஆழ்வார் - 8ஆம் நூ.; புராண ஐதீகத்தின்படி கி.மு. 4203 திருமாளிகைத் தேவர்-திருவிசைப்பா. 11ஆம் நூ. திருமுறைகண்ட சோழன் - முதலாம் இராசராசன் 985 - 1014; இரண்டாம் குலோத்துங்க சோழன் எனவும் கூறுவர். திருமூலர் - திருமந்திரம். கி.பி. 5ஆம் நூ. திருவரங்கத்தமுதனார் - 13ஆம் நூ. திருவரங்கம் பிள்ளை, வ. - சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக தாபகர். 1890 - 1944 திருவள்ளுவர் - கி.மு. 1ஆம் நூ; கி.பி. 1ஆம் நூ. திருவாலியமுதனார் - திருவிசைப் பா. 11ஆம் நூ. திருவியலூர் உய்ய வந்த தேவ நாயனார்-திருவுந்தியார். 12ஆம் நூ. திருவேங்கடையர்-உவமான சங்கிரகம். 14ஆம் நூ. திருவேங்கடநாதையர் - பிரபோத சந்திரோதயம். 17ஆம் நூ. திருவொற்றியூர் ஞானப்பிரகாசர் - திருவொற்றியூர்ப் புராணம். 16Mம் நூ. திலகர், பால கங்காதர - பிராமண வகுப்பினர்; தேசத் தொண்டர். 1856 - 1920 தில்லை நாயக ஜோதிடர் - சாதக சிந்தாமணி. 19ஆம் நூ. திவாகரர் - திவாகரம். 10ஆம் நூ. திவ்வியகவி நாராயண பாரதி வெண்மணி - திருவேங்கட சதகம் 18ஆம் நூ. தீ தீபவம்சம் - சிங்களப் பௌத்த நூல். கி.பி. 4ஆம் நூ. தீனபந்துமித்திரர் - வங்காள நாட்டு நாடக நூலாசிரியர். 1827 - 1873 து துக்காராம் - மராட்டிய வைணவ அடியார். 1608 - 1649 துசிடிடீ° (Thucydides) - கிரேக்க வரலாற்றாசிரியர். கி.மு. 464 - 407 துட்டகமுணு (இ.அ) - கி.மு. 101 - 77 துருக்கர் இந்தியா மீது படை யெடுத்தது - 1186 துருவன் - இராட்டிரகூட அரசன். 780 - 792 துவாபர உகம் - இதில் 1,296,000 ஆண்டுகள் துளசிதாசர் - 1532 - 1545; 1532 - 1623 தூ தூலதானன் (இ.அ) - கி.மு. 59 தெ தெக்கணாமூர்த்தி தேசிகர் - தசகாரியம் 16ஆம் நூ. தெய்வச்சிலையார் - தொல்காப்பியச் சொல்லதிகார உரை 12Mம் நூ. தெள்ளாறுப்போர் - பாண்டிய ருக்கும் பல்லவருக்குமிடையில். 844 - 866 தெனாலிராமன் - ஆந்திரகவி. 1462 - தெனிசன் (Tennyson, Alfred) - ஆங்கிலக் கவி. 1809 - 1892 தெ°மி°ரோகிள்° (Thesmisrocles) - அதென்° அரசியல்வாதியும் போர் வீரனும். கி.மு. 514 - 414 தே தேசிக விநாயகம் பிள்ளை - நாஞ்சில் நாட்டுக் கவி. 1876 - 1954 தேசிங்கு ராசன் - செஞ்சிக்கோட்டை சிற்றரசன். 18ஆம் நூ. தேயிலை முதன் முதல் இங்கிலாந் துக்குக் கொண்டு போகப் பட்டது - 1650 தேரையர் - மருத்துவர் 11ஆம் நூ. தேவசூரி - 12ஆம் நூ. தேவநம்பியதிசன் (இ.அ)- கி.மு. 247- 207 தேவராசபிள்ளை வல்லூர் - குசேலோபாக்கியானம். 19ஆம் நூ. தேவராயசாமி - கந்த சட்டிக் கவசம். 19ஆம் நூ. பிற். தேவராயர் I - 1406 - 22 தேவராயர் II - 1421 - 1448; வட இலங்கையைப் பிடித்தது. 1438 தை தையல் எந்திரம் - (Howe) அமெ ரிக்கர். 1846 தொ தொண்டரடிப் பொடி ஆழ்வார் - 9ஆம் நூ; புராண ஐதீகத்தின்படி, கி.மு. 2814 தொம்பிவிப்பு - யாழ்ப்பாணப் புலவர்; ஞானானந்த புராணம். 19Mம் நூ. தொலைநோக்கி (Telescope) - கண்டு பிடிக்கப்பட்டது (Lippershy இடச்சுக்காரர்). 1608 தொலைபேசி (Telephone) - கண்டுபிடிப்பு (Alexandar Graham Bell) அமெரிக்கர் 1877 தொலைக்காட்சி (Television) - கண்டுபிடிப்பு (J.L. Biard இ°கொத்லாந்தியர்). 1925 தொல்காப்பியதேவர்- திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம் 14ஆம் நூ. தொல்காப்பியர் - ஏறக்குறைய கி.மு. 350 தோ தோடர்மால் ராசா - அக்பரின் அதிகாரி. 16ஆம் நூ. தோம° ஞானியார் இந்தியாவுக்கு வந்தது-இவர் மலையாளக் கரை யில் கரங்கனூரில் வந்திறங்கினா ரென்னும் ஐதீகமுள்ளது. கி.பி. 52. தோலாமொழித்தேவர் - சூளாமணி. 10ஆம் நூ. ந நக்கீரர் - 160 - 190 (க) 210 (க.க) நச்சர் - திருக்குறளுரை. 13ஆம் நூ. நச்சினார்க்கினியர் - 14ஆம் நூ. நஞ்சீயர்-திருவாய்மொழியுரை. 13ஆம் நூ. நடிர் ஷா டில்லியைச் சூறையாடி யது - 1739 நந்த அரசர் - கி.மு. 364 கி.மு. 325 நந்திவர்மன் II - பல்லவன். 731 - 795 நந்திவர்மன் III - பல்லவ அரசன். 844 - 866 நந்திவர்மன் பல்லவ மல்லன் - பல்லவ அரசன். 733 - 796 நந்நயப் பட்டர் - தெலுங்குப் புலவர். 11ஆம் நூ. நமச்சிவாய முதலியார் கா. - 1876 - 1937 நம்பிகாளி - 12ஆம் நூ. நம்பியாண்டார் நம்பி - திருத் தொண்டர் திருவந்தாதி. 10ஆம் நூ நம்பிள்ளை - திருவாய் மொழி உரை. 14ஆம் நூ. நம்மாழ்வார் - 8ஆம் நூ; புராண ஐதீகத்தின்படி. கி.மு. 3102. நயினாமகமதுப் புலவர் - முகைதீன் மாலை 18ஆம் நூ. பிற். நரச நாயக்கர் - விசய நகர அரசர். 1541- 1503. நரசிம்மவர்மன் I - மாமல்லபுரத்தைக் கட்டிய மாமல்லன். 630 - 668. நரசிம்மவர்மன் II - காஞ்சிக் கைலாச நாதர் ஆலயத்தைக் கட்டியவன். 680 - 720. நரசிம்மா- I ஹோய்சல அரசன். 1152-1173. நரசிம்மா - II - 1220 -1238 நரசிம்மா - III - 1254 - 1292. நரேந்திரநாத்தத்தர் - சுவாமி விவேகானந்தர். 1862 - 1902. நர்சவர்தான (பல்லவன்) - 606 - 647. நல்லசாமிப் பிள்ளை, யே. எம். - 1866 - 1920. நல்லவீரப்ப பிள்ளை - குளத்தூர்ப் பள்ளு. 19ஆம் நூ. நல்லாதனார் - திரிகடுகம் 5ஆம் நூ. நல்லாப்பிள்ளை - பாரதம் 18 ஆம் நூ. நல்லியக்கோடன் - 130 - 150 (க) 275 - 300 (க.க) நவநீதன்-நவநீதப் பாட்டியல். 14 ஆம் நூ. நவாப் சுல்தான்ஜகான் - போபல் இராச்சியத்தையாண்ட கடைசி இராணி. 1858 - 1930. நன்னிசோடர் - ஆந்திரகவி - 12ஆம் நூ. நாகநாத பண்டிதர் - மேகதூதம் மொழி பெயர்ப்பு. 1824 - 1884. நாகராசன் - தினகரவெண்பா. 16ஆம் நூ. நாகவர்மா - கன்னட இலக்கண ஆசிரியர். 12ஆம் நூ. நாகார்ச்சுனர் - சூனியவாதம். 3ஆம் நூ. நாகார்ச்சுனகொண்டா சிற்ப வேலை - கி.பி. 3ஆம் நூ. நாட்டிய சாத்திரம் - கி.பி. 2ஆம் நூ. நாதமுனி - 10ஆம் நூ. பிற். 11ஆம் நூ. முற்; மரணம் 920. நாநாக் - சீக்கியமத தாபகர் 1469 - 1538. நாரதமிருதி - 500; 400. நாமதேவர் - மராட்டிய வைணவ அடியார் மரணம். 1350. நாராயணசாமி ஐயர் - பின்னத்தூர். 1862 - 1914. நாராயணதீர்த்தர் - கிருஷ்ண லீலா தரங்கணி என்னும் இசை நாடகம் செய்தவர். 17ஆம் நூ. நாலந்தா இ°லாமியரால் அழிக்கப் பட்டது - 1197 நாற்கவிராச நம்பி - அகப்பொருள் விளக்கம். 12ஆம் நூ. நி நிக்கல் கண்டுபிடிக்கப்பட்டது - கிரா°டெட் (A.F. Cranstedt-சுவிடின் நாட்டு விஞ்ஞானி). 1751. நிசகுணயோகி - விவேக சிந்தாமணி. (வேதாந்த நூல்). 19ஆம் நூ. முற். நிம்பார்கர் - தெலுங்கு வைணவ சன்னியாசி. 1017 - 1137. நியாய சங்கிரகம் - புத்தர் வரலாறு கூறும் சிங்கள நூல். 14ஆம் நூ. நியாய சூசி (வடமொழி) - 840 நியாயசூத்திரம்-கௌதமர். கி.மு. 3ஆம் நூ. நியூட்டன் (Newton) - ஆங்கில விஞ்ஞானி. 1642 - 1727 நிரம்பவழகிய தேசிகர் - சேது புராணம். 16ஆம் நூ. நிரிடகரன் - ஹோய்சல அரசன். 1022-1047 நிருபதுங்கவர்மன் - பல்லவன். 855- 896. நினேவே அசிரிய தலைநகராக அசுர் பானிப்பாலால் கட்டப் பட்டது - கி.மு. 2245 நினேவே சால்தியராலும் மீதிய ராலும் அழிக்கப்பட்டது - கி.மு. 612 நிற ஒளிப்படம் (Colour Photography) - (Ives அமெரிக்கர்) 1892 நீ நீராவி எந்திரப்படகு - (Fulton அமெரிக்கர்) - 1807 நீராவி எந்திரம் - (James Watt - இ°கொத்தியர்). 1765 நீரோ (Nero) - சக்கரவர்த்தியாக விருந்தது. 54 - 68. நீர்புகாத் தீக்குச்சி - இதனை இராய் மொண்ட் டேவி° கடி (Raymond Davis Cady) என்னும் அமெரிக்கர் செய்யக் கண்டுபிடித்தார் 1943. நீர் மூழ்கிக் கப்பல் - (Holland - அமெரிக்கர்) 1900. நீலகேசி - சமண காவியம் 7ஆம் நூ. நீலகண்ட சிவாசாரியர் - வேதாந்த சூத்திரத்துக்குச் சிவபரமாகவும் துவைதமாகவும் உரை செய்தவர். 14ஆம் நூ. இவரே சீகண்டர் என அறியவும்படுவர். வடநாட்டினின் றும் யாத்திரையாக வந்த இவரை விக்கிரம சோழன் குருவாகக் கொண்டான் என்று சொல்லப்படு கிறது. நீலகண்ட தீட்சிதர் - அப்பைய தீட்சிதரின் (1520 - 92) மருமகன். இவர் மதுரைத் திருமலை நாயக் கருக்கு மந்திரியாக இருந்தவர். இவர் நீலகண்ட சிவாச்சாரியாரில் வேறானவர். 16ஆம் நூ. நீவார்சகம் - (நேபாள ஆண்டு) ஆரம்பம். 879. நூ நூல் நூற்கும் எந்திரம் (Cotton gin) - Whitney - அமெரிக்கர். 1793. நெ நெடுஞ்சடையன் - சடிலவர்மன், மாறன் சடையன், பராந்தகன், வர குணன் I என்னும் மறுபெயர்கள் பூண்டவன். 765 - 815. நெடுஞ்செழியன் - 150 - 190 (க) நெண்டேர்தல் மனிதன் - 50,000 ஆண்டுகளின் முன்; இவ்வின மக்கள் 200,000 ஆண்டுகள் தொடக்கம் இருந்தார்கள். நெபுச்சட் நேசர் சாலமன் கட்டிய எருசலேம் கோயிலை அழித்தது - கி.மு. 587. நெபுச்சட்நசர் (Nebuchadneshar) - பாபிலோனிய அரசன். கி.மு. 604 - 561. நெப்போலியன் பொனபாட்-1769- 1821. நெல்சன் - 1758 - 1805. நெல்லைநாத முதலியார் - யாழ்ப் பாணப் புலவர். 19ஆம் நூ. நெல்லைநாதர் - சிவராத்திரி புரா ணம். 18ஆம் நூ. நெல்லையப்ப பிள்ளை - திருநெல் வேலிப் புராணம். 19ஆம் நூ. நே நேமிச்சந்திரர் - கன்னட கவி . 1148. நேமிநாதர்-குணவீர பண்டிதர் 12ஆம் நூ. நை நைட்டிங்கேல் (Florence Nightingale) - மருத்துவத்தாதிமார் முறையைச் சீர்திருத்தியவர். 1820 - 1910. நைலான் (Nylon) கண்டு பிடிக்கப் பட்டது - (Carothers அமெரிக்கர்) 1937. நோபெல் (Nobel) - சுவிடிஷ் விஞ் ஞானி. 1833 - 1896. ப பகழிக்கூத்தர் - திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ். 18ஆம் நூ. பக்கா I - விசயநகர அரசன். 1344 - 1377. பக்கா II - 1404 - 6 பசவண்ணர் (பசவர்) - 1125 - 1165. பசவப்ப சாத்திரி-கன்னட கவி 1843-1891. பச்சையப்ப முதலியார் - 1754 - 1794. பஞ்சதந்திரம் - கி.பி. 200 அல்லது குப்த அரசர் காலம். படிக்காசுப் புலவர் - தொண்டை மண்டல சதகம். 1686 - 1723. பட்டினத்தடிகள் -10ஆம் நூ. பண்டாக்கர், சா. இராமகிஷ்ண கோபால -1837-1925. பண்டிதராசர் - கோணேசர் புரணம். 18ஆம் நூ. பத்திரகிரியார் - 10- ஆம் நூ. பத்திரபாகு - சமண முனிவர். கி.மு. 327. பத்திரிசு ஞானியார் (St.Patrick)-அயர் லாந்து மக்களைக் கத்தோலிக்க மதத்துக்குத் திருப்பியது. கி.பி. 460 பம்பகவி - கன்னடப் புலவர். 944. பம்பாய்த் தமிழ்ச் சங்கம் - தொடக்கம். 1940 பயாட் (Baird, John Logie) - தொலைக்காட்சி (Television) சம் பந்தமான கண்டுபிடிப்புகள். 1858 - 1946. பரஞ்சோதி முனிவர் - திருவிளை யாடற் புராணம். 16ஆம் நூ. பரஞ்சோதியார் - சிதம்பரப் பாட்டி யல் 16ஆம் நூ. பரணதேவ நாயனார் - 10ஆம் நூ. பரதர் - நாட்டிய சாத்திரம். பரத நாட்டிய சாத்திரத்தின் காலம் கி.மு. 1ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 2ஆம் நூற்றாண்டுக்குமிடையில். மந்திரி குப்தர் இதற்கு 4ஆம் நூற் றாண்டில் உரை செய்தார். பரமேசுவரப் புலவர்- 16ஆம் நூ. பரமேசுரவரவர்மன் I - பல்லவன். 670 - 680 பரமேசுரவரவர்மன் II - பல்லவ அரசன். 720 - 733 பரராசசேகரன் - 1478 - 1519 பராக்கிரமபாகு II (இ.அ) - பண்டித பராக்கிரமபாகு. 1236 - 1271 பராக்கிரமபாகு III (இ.அ) - 1302 - 1310 பராக்கிரமபாகு V (இ.அ) - 1344 - 1354 பராக்கிரம பாகு VI (இ.அ) - (கோட்டை தலைநகர்) 1412 - 1467 பராக்கிரம பாகு VII (இ.அ)-1480- 1484 பராக்கிரம பாகு VIII(இ.அ)-1484- 1509 பராசர பட்டர் - 1137 பராந்தகவீர நாராயணன் - பாண்டியன். 880 - 900 பராந்தகன் I - சோழன் 907 - 953; 907 - 955 பராந்தகன் II - கி.பி. 959-ல் இலங்கையை வென்றவன். 953 - 973; 956 - 973 பரிச்சித் - கி.மு. 1400 பரிதியார்-திருக்குறளுரை. 13ஆம் நூ. பரிமேலழகர் - திருக்குறளுரை. 13ஆம் நூ. பரிபாடல் 17ஆம் பாடல் - வானியற் குறிப்பின்படி. 27 சூலை 171. பரோ (Borrow, George) - 36 மொழிகள் தெரிந்த ஆங்கில எழுத்தாளர் 1803- 1881 பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் - தனிப்பாடல்கள். 18ஆம் நூ. முற். பல்கலைக் கழகங்கள் - கல்கத்தா, பம்பாய், சென்னை - 1857. பல்லவ அரச பரம்பரை - 6 முதல் 10ஆம் நூ. பல்லவ கிரந்த எழுத்து - தொண்டை மண்டலத்தில் வழக்குக்கு வந்தது. கி.பி. 4ஆம் நூ. பல்லவ ராச்சியத்தின் முடிவு - ஆதித்த சோழன் காலம். 870 பல்லாலன் I-ஹோய்சலன் 1100-1110 பல்லாலன் II - 1173 - 1220 பல்லாலன் III - 1291 - 1304 பவணந்தி முனிவர் - நன்னூல் 13ஆம் நூ. பவபூதி - சமக்கிருத கவி 7ஆம் நூ.; 8ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி. பன்னிரு பாட்டியல் - 12ஆம் நூ. பா பாகவத புராணம் - கி.பி. 6ஆம் நூ.; 900; 10ஆம் நூ.; 13ஆம் நூ. பாகியனின் பயணங்கள் - 399-414. பாணர் - காதம்பரி செய்த வட மொழிக் கவி. 7ஆம் நூ. பானிப்பட்டுப் போர் - 1526 பாணினி - கி.மு.4ஆம் நூ; கி.மு. 5 - 4 - ஆம் நூ. பாண்டித்துரைத் தேவர் - 1867 - 1911. பாண்டித்துரைத்தேவர் தமிழ்ச் சங்கம் தொடங்கியது - 1901 பாண்டிப் பெருமாள் - சிவஞான போத உரை. 17ஆம் நூ. பாண்டிய அரசன் ஆக°த° சீச ருக்குத் தூதனுப்பியது-கி.மு. 20. பாமகர் - காவியாலங்காரம் (வ) 700 பாமானி (Bahmani) - அரசபரம்பரை. 1347 பாரதப் போர் - கி.மு. 1400; கி.மு. 1500 பார்சன்° (Sir Charles Parsons) - உரூபைன் (Tubine) எந்திரத்தைக் கண்டு பிடித்தவர். 1854 - 1931 பால அரசபரம்பரை (வங்காளம்) - 730 -1197 பாலகாப்பியர் - யானை மருத்துவ நூலை வடமொழியிற் செய்தவர் குப்தர்காலம். பாலியில் பௌத்த வேதம் எழுதப் பட்டது - கி.மு. 1ஆம் நூ. பா°கர இரவிவர்மன் - சேர அரசன். 1047 - 1106. பா°கரர் I - கணித வல்லார். 1150; 1154 பா°கரர் II - வேதாந்த சூத்திரத்துக் குப் பா°கர பாடியஞ் செய்த சைவர் 900. பா°ரூர் (Louis Pasteur) - ஊசிமூலம் மருந்து குத்தி நோய் தடுக்கும் முறையைக் கண்டுபிடித்தவர். 1822 - 1895. பி பிக்காட் (Piccard) - இரும்புக் கூட்டில் கடலில் 2 மைல் ஆழத்துக்குச் சென்ற அமெரிக்கர். 1884. பிசாரோ (Pizarro) - பேரு நாட்டைப் பிடித்த இ°பானிய போர்வீரன். (1478 - 1541). பிட் (Pitt, William) - ஆங்கில அரசியல்வாதி. 1759 - 1806. பிதகோர° (Pythagoras) - கி.மு. 572 - 497. பிந்துசாரன் - கி.மு. 300 - 273 பிம்பசாரன் - கி.மு. 544 - 493 பிரக°பதிமிருதி - 6 அல்லது 7ஆம் நூ; 2ஆம் நூ. பிரதாபருத்திரன் - காகதீய அரசன். 1258 - 1295 பிரதாபருத்திரன் II - 1295 - 1326 பிரமகுப்தர் - வான சாத்திரி. 598 - 640 பிரமசமாசம் தொடங்கியது - இராசாராம் மோகன்ராய். 1830 பிரமஞான சங்கம் (Theosapist Society) - 1875 பிரமபுராணம் - பிரமா சொன்ன புராணம். 13 அல்லது 14ஆம் நூ. பிரமாண்ட புராணம் - கி.பி. 3 முதல் 5ஆம் நூ. பிரமிட்டுச் சமாதிகள் (எகிப்தில்) - கி.மு. 3000 - கி.மு. 1800. பிரதாப முதலியார் சரித்திரம் - தமிழ் நாட்டில் தோன்றிய முதல் நாவல். 1876 பிரயர் ஓடொரிக் (Friar Odoric) - ஐரோப்பிய பிரயாணி. 1321 பிரயால்ச் (Priaulx) - பழைய உரோ மன் சரித்திராசிரியர். பிராங்லின் (Franklin, Benjamin) - குடா நீரோட்டத்தைக் கண்டுபிடித்த அமெரிக்க இராசதந்திரியும் விஞ் ஞானியும். 1706 - 1790. பிரான்சுக்காரர் புதுச்சேரியைப் பிடித்தது - 1674 பிரிகதாரணிய உபநிடதம் - கி.மு. 1000 கி.மு. 800 பிரிகத்சம்கிதை - 500. பிரிட்டிஷ் சக்கராதிபத்தியம் - 1858. பிரீ°ட்லி (Priestly) - பிராண வாயு வைக் கண்டுபிடித்த ஆங்கில விஞ்ஞானி. 1733 - 1804 பிருதுவிரா° - 1082. பிரேசர் (Frazsir James George) - மானிட நூல் வல்லார், கோல்டின் பௌ என்னும் நூலாசிரியர். 1854 - 1941. பிரௌதராயர் - விசயநகர அரசர். 1485. பிரௌனிங் (Browning, Robert) - ஆங்கிலக் கவி. 1812 - 1889. பிலெரியட் (Bleriot Louis) - இங்கி லிஷ் கால்வாயை விமான மூலம் முதலிற் கடந்த பிரான்சியர். 1872 - 1936 பிளாக்கி (Blackie, William) - ஆங்கில புலவரும் ஓவிய வல்லுநரும். 1757 - 1827 பிளாக்கெட் (Blacket) - பிரிட்டிஷ் விஞ் ஞானி பௌதிகத்துக்கு நோபெல் பரிசு பெற்றவர். 1897 - 1948. பிளாசிப் போர் - 23-6-1757. பிளாட்டோ (Plato) - கிரேக்க தத்துவ ஞானி. கி.மு. 427 - 347 பிளினி இயற்கை சாத்திரமெழுதி யது - கி.பி. 77 பிளெமிங் (Sir Alexander Flemming) - பெனிசிலின் மருந்தைக் கண்டு பிடித்தவர். 1881. பிள்ளை லோகாசாரியார் - 1213 பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் - 17ஆம் நூ. பி°மாக் (Bismark) - சேர்மன் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். 1815-1898. பிற்காலப் புராணங்கள் குப்தர் காலம் - கி.பி. 4ஆம் நூ.; கி.பி. 2ஆம் நூ.; புராணங்கள் குப்த அரசர் காலத்தில் இக்காலவடிவில் திருப்பி எழுதப் பட்டன. பீ பீக்கிங் மனிதன் - 1,000,000 பீட்டர் (Peter The Great) - உருசிய சக்கரவர்த்தி. 1672 - 1725 பீமகவி - தெலுங்கு வசவ புராணத் தைக் கன்னடத்தில் மொழி பெயர்த் தவர். 1369 பீமா - கிழக்கு சாளுக்கிய அரசன். 928 பீற்றோடெல்லா வல்லி (Pietrodella Valle) - இத்தாலிய பிரயாணி. 1623 பு புகழேந்திப் புலவர் - 13ஆம் நூ. புதிய கற்காலம் - கி.மு. 12,000. புத்தகோசர் - காஞ்சிபுரத்துப் பௌத்த பிராமணர். 400 புத்தமித்திரன் - வீரசோழியம். 11ஆம் நூ. புத்தர் - கி.மு. 563 - 483; கி.மு. 558 - 478 புத்தா நிர்வாணமடைந்தது - கி.மு. 543. புயூரசர்மன் - கலிம்ப அரசன். 345. புரந்தரதாசர் - இசை வல்லார். 1484 - 1564. புராணங்கள் - கி.மு. 5ஆம் நூ. புருடோத்தம நம்பி - 11ஆம் நூ. புரூ° (Bruce, Robert) - இங்கிலாந்தின் வீரர். 1274 - 1329. புரோவா I - காகதீய அரசன். 1030 - 1075 புரோவா II - 1110 - 1158. புலிகேசி I - பாதாமிச்சாளுக்கிய இராச்சியத்தைத் தாபித்தவன். 543 - 567 புலிகேசி II - 660 - 642 புலமையாயாளர் காலம் (வட மொழி) - கி.பி. 200 முதல். புலுதாக் (Plutarch) - கிரேக்க எழுத் தாளர். 46-120. புல்வெட்டும் எந்திரம் கண்டுபிடிக் கப்பட்டது - (Hills அமெரிக்கர்). 1868 புவனேகவாகு I (இ.அ) - யப்பாகு விலும் தம்பதேனியாவிலிருந்து ஆட்சி புரிந்தவன். 1273 - 1284 புவனேகவாகு II (இ.அ)-குருணாக் கலைத் தலைநகராக்கியவன் 1273- 1284 புவனேகவாகு IV(இ.அ) - கம் பளையைத் தலைநகராக்கியவன். 1344 - 1354. புறூக் (Bruke Edmund) - அயர்லாந்தில் பிறந்த பேச்சாளரும் எழுத்தா ளரும். 1729 - 1797 புனியன் (Bunyan, John) - ஆங்கில எழுத்தாளர். 1628 - 1688. புஷ்யமித்திரன் - வடஇந்திய அரசன். கி.மு. 187 - 151 பூ பூங்கோயில் நம்பி - 11ஆம் நூ. பூசாவலி-சிங்கள பௌத்த நூல். 13ஆம் நூ. பூதத்தாழ்வார் - 8ஆம் நூ.; புராண ஐதீகத்தின்படி கி.மு. 4203. பூந்துருத்திநம்பி காடவர் நம்பி - 11ஆம் நூ. பூபாலபிள்ளை - தமிழ்வரலாறு செய்தவர். 1860 - 1920. பூமியின் வயது - 2000,000,000. பூரணலிங்கம் பிள்ளை மு.சி. - தமிழ் இந்தியா. 1866 - 1947. பூலோகசிங்க முதலியார் - திருச்-செல்வராயர் புராணம். 19ஆம் நூ. பெ பெகி°தன் சாசனம் (Behistun Inscription of Darius) - கி.மு. 518 பெசிடோனிய° (Prseidnius) - இ°ராபோ குறிப்பிடும் கிரேக்க சரித்திராசிரியர். பெரிகிளி° - அதீனிய அரசியல்வாதி யும் பேச்சாளரும். கி.மு. 41- 429. பெரிபுளு° (Periplus of the Erythrean sea) - எகிப்தியர் கி.பி. 70-80; 81-96. பெரியாழ்வார் - 9ஆம் நூ.; புராண ஐதீகத்தின்படி கி.மு. 3056 பெருஞ்சேரலிரும்பொறை - 190; 135 - 150 (க) பெருந்தேவனார் பாரதம் - 815-870 பெரும்பற்றப்புலியூர்நம்பி-12ஆம் நூ. பெருவாயின் முள்ளியார் - ஆசாரக் கோவை. 5ஆம் நூ. பெர்மசகதெக்மல்லன் - சாளுக்கிய அரசன். 1138 - 55 பெலோபொனீச° (Peloponnesus) என்னுமிடத்தில் டோரிய அச்சிய (Achaean) கிரேக்கர் குடியேறுதல் - கி.மு. 1500 பெல் (Alexander Graham Bell) - தெலிபோனைக் கண்டுபிடித்தவர். 1847 - 1922. பெ°மர் (Sir Hentry Bessmer) - உருக்குச் செய்யக் கண்டுபிடித்த ஆங்கிலர். 1813 - 1898. பே பேக்கன் (Bacon, Francis) - ஆங்கில அரசியல்வாதியும் கட்டுரை வல்லுநரும். 1561 - 1626. பேக்கன் (Bacon, Roger) - ஆங்கில தத்துவ ஞானியும் விஞ்ஞானியும். 1214 - 1294. பேக்லைட் கண்டுபிடிக்கப்பட்டது-(Bakeland) பெல்சிய அமெரிக்கர். 1907. பெடாவிசாயதித்தன் - கிழக்குச் சாளுக்கிய அரசன். 927. பேணாட்ஷா (Bernard Shaw) - ஐரிஷ் நாடக ஆசிரியர். 1856 - 1950. பேபர் - 1526 - 1671 பேயாழ்வார் - 8ஆம் நூ.; புராண ஐதீகத்தின்படி கி.மு. 4203. பேரம்பலப் புலவர் - வண்ணச்சிலேடை வெண்பா. 1859 - 1935. பேராசிரியர் - தொல்காப்பிய உரை - 12ஆம் நூ. பேர்சிவல் (Percival) - ஐரோப்பிய பாதிரி. 19ஆம் நூ.பிற். பை பைரன் (Byron, Lord) - ஆங்கிலக் கவி. 1788 - 1824 பொ பொடிக்கா (Boadicca) - உரோமன் வீரரை எதிர்த்துப் போர் செய்த இங்கிலாந்து இராணி. கி.பி. 62. பொய்கையார் - இன்னிலை நூலா சிரியர். 8ஆம் நூ. பொய்கையாழ்வார் - 8ஆம் நூ; புராண ஐதீகத்தின்படி கி.மு. 4203 பொய்யாமொழிப்புலவர் - தஞ்சை வாணன் கோவை ஆசிரியர். 13ஆம் நூ. பொலனறுவை தலைநகராக விருந்தது - 1017 - 1235 பொன்னம்பல பிள்ளை நல்லூர் - நாவலரின் மருகர். 1836 - 1902 பொன்னவன் - கனாநூல். 14ஆம் நூ. பொன்னன் - கன்னடப் புலவர்; சாந்தி புராணஞ் செய்தவர் 10ஆம் நூ. பொன்னுச்சாமித் தேவர் - இராச மன்னார் தல புராணம். 1890. போ போசன் - 1018 - 1060 போதரா திபெத்தில் கட்டப்பட்து- 1643 போட் (Bode, Johahh) - சூரியனி லிருந்து கிரகங்களின் தூரத்தைக் கணக்கிட்ட சேர்மன் வானசாத்திரி. 1747 - 1826 போப் (Pope, Alexander) ஆங்கில கவி - 1688 - 1744. போப்பையர் - தமிழ்கற்ற ஐரோப்பிய கிறித்துவ பாதிரி. 1820 - 1907 போயர் (Boer) போர் - தென்னாப்பிரிக் காவில் நடந்த போர். 1899 - 1900 போயில் (Robert Boyle) - ஐரி° விஞ்ஞானி. 1627 - 1691 போர° (பௌரவன்) அலெக்சாந்த ரால் தோல்வியுற்றது-கி.மு . 326 போர் (Bohr) - அணுவினமைப்பைப் பற்றி ஆராய்ச்சி செய்த டென்மாக் வாசி; நோபெல் பரிசு பெற்றவர். 1885 போர்ச்சுகீசியர் இலங்கைக்கு வந்தது - 1505 போர்ச்சுகீசியர் கள்ளிக் கோட்டை யை அடைந்தது - 1498 போர்ச்சுகீசியர் கோவாவைப் பிடித் தது - 1510 பௌ பௌத்த நூல்கள் எழுதப்பட்டது - கி.பி. 88 பௌத்த பிக்குகள் சீனாவுக்குச் சென்றது - கி.மு. 217 பௌத்தம் அனம் நாட்டில் பரவு தல் - கி.பி. 200 பௌத்தம் இலங்கைக்குச் சென் றது - கி.மு. 256 பௌத்தம் கொரியாவில் பரவுதல் - கி.பி. 372 பௌத்தம் சீயத்தில் அரசாங்க மதமானது - கி.பி. 1340 பௌத்தம் சுமத்திராவில் பரவுதல் - கி.பி. 600 பௌத்தம் திபெத்தில் பரவுதல் - 642 பௌத்தம் பர்மா சுமத்திரா நாடு களில் பரவுதல் - 438 - 452. பௌத்தம் ஜப்பானில் பரவுதல் - 552 ம மகமத்கசனி - 971 - 1030 மகமத்கசனி சோமநாதர் கோயிi லக் கொள்ளையிட்டது - 1025 மகமத்கசனி மரணம் - 1030 மகாசாசனம் (Magnacharta) - 1215 மகாசிவன் (இ.அ) - கி.மு. 197 - 187 மகாசூலி (இ.அ) - கி.மு. 17 - கி.பி. 3 மகாசேனன் (இ.அ) - 334 - 361 மகாதாதிக மகாநாகன் (இ.அ) - 67 - 79 மகாதேவ - காகதீய அரசன். 1195 - 1198 மகாநாகன் (இ.அ) - 556 - 568 மகாநாமன் (இ.அ) - 409 - 431 மகாபாரதம் - கி.மு. 5ஆம் நூ.; இது கி.மு. 5 முதல் கி.பி. 6ஆம் நூற்றாண்டு வரையில் வளர்ச்சி யடைந்தது. மகாபோதி சபை தொடங்கியது - 1891 மகாபோதி வம்சம் - சிங்களப் பௌத்த நூல் 9ஆம் நூ. மகாயுகம் (கிரேத, திரேத, துவாபர, கலியுகங்களடங்கிய காலம் - 4320,000 ஆண்டுகள்) மகாலநாகண் (இ.அ) - 196 - 202 மகாலிங்கையர் மழவை - 19ஆம் நூ. மகாவம்ச காலம் - கி.மு. 500 - கி.பி. 300 மகாவம்சதிக்கா - மகாவம்ச உரை 8 அல்லது 9ஆம் நூ. மகாவம்சம் - மகாநாமன் என்னும் தேரர் எழுதியது. 5ஆம் நூ. இதன் இரண்டாம் பாகம் கி.பி. 13ஆம் நூற்றாண்டில் கீர்த்தி சிறி என்னும் தேரர் எழுதியது. மகாவீரர் - வர்த்தமானர் கி.மு. 599 - 527; கி.மு. 540 - 468 மகிந்தா இலங்கைக்கு வந்தது - கி.மு. 247 மகிந்து IV (இ.அ.) - சோழரை எதிர்க் கும்படி பாண்டியருக்கு உதவி செய்தவன். 956 - 965 மகெலன் (Magellan) - போர்ச்சுக்கீசிய மாலுமி உலகைச் சுற்றி முதலிற் பயணஞ் செய்தவர். 1480 - 1521 மகேந்திரவர்மன் I - பல்லவன். 600 - 630 மகேந்திரவர்மன் II - 668 - 705 மக்காடம் (Macadam) - கற்களை அடுக்கி வீதியிடக் கண்டுபிடித்த °காத்தியர். 1750 - 1836 மக்கலே (Maculay) - ஆங்கில சரித்திராசியர். 1800 - 1859 மங்கைபாக கவிராயர் - கொடுங் குன்ற புராணம். 19ஆம் நூ. மங்கிய யுவராசா - கீழ்ச் சாளுக்கிய அரசன். 682 - 706 மச்சபுராணம்-கி.பி. 6 முதல் 7ஆம் நூ. மச்சுச் செட்டியார் - 14ஆம் நூ. மணக்குடவர்-திருக்குறளுரை 13ஆம் நூ. மணவாளமுனி-தென்கலை அடியா ருள் தலைமை பெற்றவர். 1370 மண்டல புருடன் -சூடாமணி நிகண்டு. 16ஆம் நூ. மதுரகவி ஆழ்வார் - 8ஆம் நூ.; புராண ஐதீகத்தின்படி கி.மு. 3102. மதுரகவிராயர் - தனிப்பாடல்கள். 18ஆம் நூ. மதுராந்தக உத்தம சோழன் - 970 - 985. மதுரை மாரியம்மன் கோயில் தெப் பக் குளம் - திருமலை நாயக்கர் வெட்டியது. 1645 மத்தான் சாயிபு - 19-ம் நூ. முற் மத்திய ஆசியாவில் இசிலாம் பௌத்த மதத்தை ஒழித்தது - 900. மந்தனமிசிரர் - குமாரிலரின் மாணவர் 7ஆம் நூ. மயில்வாகனப் புலவர் - யாழ்ப்பாண வைபவம் - 1779 - 1816 மயூரசர்மன் - கதம்ப ராச்சியத்தை ஆரம்பித்தவர். 4ஆம் நூ. நடு மயேசுரர் - 11-13 நூ. மரதன் போர் - கி.மு. 490 மராட்டியர் எழுச்சி - 1674 - 1680 மருது சகோதரர் - திருநெல்வேலிப் பாளையக்காரர். 1801 மலாக்கா ஆங்கிலருக்குக் கை மாறியது - 1795. மலாக்கா இடச்சுக்காரர் வசமானது - 1611 மலான் (Malan, Daniel) - தென்னாப் பிரிக்க குடியரசுத் தலைவர். 1874 - 1959. மலிக்காபூர் (Malik Kabur) - மதுரை மேல் படையெடுத்தது; மதுரைக் கோயிலை அழித்தது. 1130 மலிக்காபூர் மதுரையைப் பிடித்தது - 1311; இவர் இராமேசுவரக் கோயிலையும் சூறையாடினான். மல்லிகார்ச்சுனர் - விசயநகர அரசன். 1448 - 65 மல்லிகார்ச்சுனர் - கன்னடக் கவி 1245 - மல்லிசேணர் - மேருமந்தர புராணம் 14ஆம் நூ. மறைஞான சம்பந்தர் - அருணந்தி சிவாசாரியாரின் ஆசிரியர். 13ஆம் நூ. மறைஞான சம்பந்தர் - சிவதரு மோத்தரம். 16ஆம் நூ. மறைஞான தேசிகர் - சிவஞான சித்தி உரை. 16ஆம் நூ. மறைமலையடிகள் - 1876 - 1950 மனவாசகங் கடந்தார் - உண்மை விளக்கம். 13ஆம் நூ. மனுமிருதி - கி.மு 20 - கி.பி. 200 மா மாகன் (இ.அ.) - கலிங்கன் 1214 - 1235. மாக்° (Karl Marx) - 1818 - 83 மாக்° முல்லர் (Max Muller) - மொழியியல் வல்ல சேர்மனியர் வேதங்களை அச்சிட்டவர். (1860 - 64) (1823 - 1900) மாங்குடி மருதனார் - 210 (க.க.) மாணிக்கவாசகர் காலம் - இரண்டாம் வரகுண பாண்டியன் (862 - 80) காலம்; கி.பி. மூன்று முதல் ஆறாம் நூற்றாண்டு வரையில் எனவும் கூறப்படும். மாதவர் - வாசுதேவர் மாதவர் - (மத்துவர்) வித்தியாரணியர் சிருங்கேரி மடாதிபதியாகவிருந்து காலமானவர். சாயணரின் சகோ தரர். 14Mம் நூ. பிற். மாதவர் ஆனந்த தீர்த்தர் - (1197 - 1276) மாப்பாண முதலியார் - சோமகேசரி நாடகம் - 1827 மாப்பிளைமார் (Moplahs) கலகம் - 1921 மாரிமுத்துப்பிள்ளை-கீர்த்தனம் பாடியவர். 19ஆம் நூ. மார்க்கண்டேய புராணம் - 3 முதல் 5ஆம் நூ. மார்க்கோபோலோ இந்தியாவில் - 1288 - 1293 மார்க்கோனி (Guzliemo, Marconi) - கம்பியில்லாத் தந்தியைக் கண்டு பிடித்த இத்தாலிய விஞ்ஞானி 1874- 1937. மார்க்கோனி அத்லாந்திக் கடலுக் கூடாக வானொலிச் செய்தி யனுப்பியது - 1900 மார்பு சோதனி (Stethoscope) கண்டு பிடிக்கப்பட்டது. (Laennec பிரான்சியர்) 1819. மாறவர்மன் - பாண்டியன் 670 - 710 மாறவர்மன் அவனி சூளாமணி - பாண்டிய அரசன் 620 - 645 மாறவர்மன் இராசசிங்கன் - இலங் கைக்கு ஓடிச்சென்ற பாண்டியன். 880 மாறவர்மன் இராச சிம்மன் II- 900 - 920 மாறவர்மன் குலசேகரன் ஆரியச் சக்கரவர்த்தியை இலங்கைக்கு அனுப்பியது - 1284 மாறவர்மன் கோச்சடையன் - 730 - 763 மாறன் பொறையனார் - ஐந்திணை ஐம்பது கி.பி. 5ஆம் நூ. மி மில்டன் (Milton, John) ஆங்கிலக் கவி - 1608 - 1674 மின்சார செனனி (Dynamo Electric) - (Faraday ஆங்கிலர்) 1831 மின்சார மோட்டார் (Electric Motor) - (Fesla அமெரிக்கர்) 1887 மின்சார விளக்கு - (Edisen) 1879 மீ மீராபாய் - சித்தூர் அரசனின் மனைவி; வைணவ அடியார். 1420. மீனாட்சி அம்மன் கோயில் (மதுரை) தளம் இடப்பட்டது - விசுவநாத நாயக்கரால் 1560 - இல் இடப்பட்டது. இக்கோயில் 120 ஆண்டுகளாகக் கட்டப்பட்டது. மீனாட்சி சுந்தரம்பிள்ளை, திரிசிர புரம் - 1815 - 1875. மு முகமதிய சகாப்த ஆரம்பம் - 622. முகமதியர் இ°பேயின் மீதும் ஆபிரிக்கா மீதும் படையெடுத் தது - 711. முகமதியர் டில்லியையும் வங்கா ளத்தையும் பிடித்தது - 1199 - 1200. முகமது நபி - 570 - 632. முகமத் கசனி - 997 - 1030; 1008 - 1027. முகமத் துக்லக் (Tughluk) - 1320 - 1325. முகமத் ஷா - 1482 - 1518. முசோலினி - இத்தாலிய சர்வாதிகாரி. 1883 - 1945. முதல் இரும்பு நீராவிக் கப்பல் கட்டப்பட்டது - 1822. முத்தமிழ்க்கவி வீரராகவ முத லியார் - 19ஆம் நூ. முத்திராசர்-கைலாய மாலை. 18ஆம் நூ. முத்துக் குமார கவிராயர் - ஞானக் கும்மி. 1780 - 1851. முத்துக் குமார சுவாமிக் குருக்கள் - 1853 - 1936. முத்துக் குமாரர் - கஞ்சன் காவியம். 18ஆம் நூ. முத்துத் தம்பிப்பிள்ளை ஆ. - அபிதான கோசம். 1848 - 1917. முத்துத் தாண்டவர் - கீர்த்தனம். 18ஆம் நூ. முத்து ராமலிங்க சேதுபதி - 18ஆம் நூ. முத்து வீரபாண்டியன் - 19ஆம் நூ. பிற். மும்முடிச் சோழன் - 1135 - 1180. முராரி (வ) - நாடக நூலாசிரியர் 800. முருகதாச சுவாமிகள் - புலவர் புராணம் - 1840 - 90. முருகேச பண்டிதர் - மயிலணிச் சிலேடை வெண்பா. 1830 - 1900. முன்றுரையரையனார் - பழமொழி. கி.பி. 5ஆம் நூ. மூ மூத்தசிவன் (இ.அ.) - கி.மு. 307 - 274. மூவாதியார்- ஐந்திணை எழுபது .5ஆம் நூ. மூன்றாவது உறைபனி இடைக் காலம் (Inter Glacial Period) - 100,000 - 50,000. மெ மெக°தீன° - பாடலிபுரத்திலிருந்த கிரேக்க தூதர். கி.மு. 320 - 298. மெசசோயிக் (Mesozoic) உகம் - உயிர் கள் தோன்றிய நடுக்கால மாகிய ஐந்தாவது உகம் 200,000,000 ஆண்டுகளின்முன். மெய்கண்டதேவர் - சிவஞான போதம். 13ஆம் நூ. மே மேகவண்ணனென்னும் இலங்கை அரசன் சமுத்திரகுப்தனின் அனுமதி பெற்று புத்தகயையில் பௌத்த சத்திரம் கட்டியது - கி.பி. 352 - 379. மேபிளவரும் யாத்திரைப் பெரியா ரும் - 1620. மேற்குச் சாளுக்கிய அரசு ஆரம்பம்- 500. மொ மொகஞ்சதாரோ நாகரிகம் - கி.மு. 3300 - 2900. மொசாட் (Mozart) - ஆ°திரிய இசை வல்லார். 1756 - 1791. மொன்°ரேரியன் மனிதன் - 40,000 ஆண்டுகளின் முன். மொன்ட் கொல்பியர் (Joseph Montgolfier) - பலூனைப் பறக்க விட்டவர். 1740- 1810. மோ மோகல் அரச பரம்பரை (இந்தியா வில்) - 1526 - 1671. மோர்° (Morse) - தந்திக் குறியீடு களை (Code) கண்டுபிடித்த அமெ ரிக்கர். 1791 - 1892. மௌ மௌரிய அரச பரம்பரை தொடக் கம் - கி.மு. 4ஆம் நூ. மௌரிய அரச பரம்பரை முடிவு - கி.மு. 187. ய யசோதர காவியம் - 11ஆம் நூ. யப்பானிய இராச்சியத்தை யிம்முதின்னோ (Jimmu-Tinno) ஆரம்பித்தது - கி.மு. 66. யமினி (சைமினி) - கி.மு. 4ஆம் நூ. யமுனாச்சரியர் - ஆளவந்தார். 11ஆம் நூ. யய தேவர் - தத்துவ சிந்தாமணி உரை வ. 13ஆம் நூ. யவனாசிரியர் - வான நூலாசிரியர் 169; வராகமிகிரருக்குப் பின் இப் பெயருடைய ஒருவர் இருந்த தாகவும் தெரிகிறது. ய°ரியன் (Justian) - உரோமன் சட்டத்தைத் தொகுத்த உரோமன் சக்கரவர்த்தி. 482 - 565 யா யாகலாலகதிசன் (இ.அ.) - 112 - 120. யாக்ஞசதகர்ணி - 167 - 174. யாக்ஞவல்கியமிருதி - 4ஆம் நூ.; 2ஆம் நூ. யாக்ஞவல்கியர் - கி.மு. 1300. யாதவப்பிரகாசர் - இராமானுசரின் குரு. 11ஆம் நூ. யாமளேந்திரர் - இந்திரகாளீயம் 11-13 நூ. யாவா மனிதன் (Pithecanthropus erectus) - 250,000; 475,000. யாவா மொழியில் இராமாயணம் பாடப் பட்டது - யோகீசுவரர். 1094. யாழ்ப்பாண அகராதி - (மானிப்பாய கராதி) சந்திரசேகர பண்டிதர் செய்தது. 1842 யானைக்கட்சேய் மாந்தரஞ் சேர லிரும் பொறை - 125 - 135 (க) யா°கர் - நிருத்த நூல் செய்தவர்; பாணினி காலத்தவர். கி.மு. 4ஆம் நூ. யி யின் அரசபரம்பரை (Yin Kingdom in China) - கி.மு. 1500 - கி.மு. 1200. யு யுகிளிட் (Euclid) - கிரேக்க கணித வல்லார். கி.மு. 300. யு சி (Yueh Chi) - சீனத் துருக்கித் தானத்திலிருந்து தோற்கடித்துத் துரத்தப்பட்டது. கி.மு. 44. யுரிபிரிடி° (Euripides) - கிரேக்க கவி. கி.மு. 480 - 406. யுவான் சுவாங் (Yuan Chwang) - இந்தியாவில் யாத்திரை செய்தது. 629 - 645. யுவான் தி (Yuan-ti) - சீனச் சக்கர வர்த்தி கி.மு. 48 - 33. யூ யூதாஸ் கரியட் - கி.பி. 30 யூலியர் சீசர் - கி.மு. 102 - 44 யூலியன் சகம் (Julian Period) - கி.மு. 290 மார்ச். யெ யெத்ததிசன் (இ.அ) - 323 - 333. யென்னர் (Edward Jenner) - அம்மைப் பால் குத்துவதைக் கண்டுபிடித்த வர். 1749 - 1823. யே யேம்°வாட்டின் (James Watt) - நீராவி எந்திரம் - 1776. யோ யோகசூத்திரம் - பதஞ்சலி முனிவர். கி.மு. 140. யோநாதன் சுவிவ்ட் - 1667 - 1745. யோன் ஓவ் ஆக் - 1412 - 1431. யோன்சன் (Johnson, Samuel) - ஆங்கில எழுத்தாளர். 1709 - 1784. வ வக்கடகர் (வாகாடர்) ஆட்சி - 580. வங்கநாசிகதிசன் (இ.அ.) - கி.பி. 171 - 174. வசபன் (இ.அ.) - கி.பி. 127 - 171. வசவர் - வீரசைவ மதத்தலைவர் பிறப்பு. 1125. வஞ்சணநதி - குணவீரபண்டிதரின் ஆசிரியர். 12ஆம் நூ. வடகலை தென்கலை வைணவம் வலிவு பெற்றது - 13ஆம் நூ. வடக்கு வீதிப்பிள்ளை - முப்பத் தாறாயிரப்படி உரை. 15ஆம் நூ. வடுகநாத தேசிகர் - திருமுல்லைப் புராணம். 17ஆம் நூ. வட்டகமினி (இ.அ.) - வாலகம்வாகு. கி.மு. 43 - கி.மு. 17. வண்ணக் களஞ்சியப் புலவர் - முகைதீன் புராணம் 18-ம் வரகுணவர்மன் - பாண்டிய அரசன். 862- 880. வரகுணன் I - பாண்டிய மன்னர் 765 - 815. வரதராச ஐயங்கார் - பாகவதம் 16ஆம் நூ. வரத பண்டிதர் - சிவராத்திரி புராணம். 18ஆம் நூ. வரதுங்கராம பாண்டியன் - கொக்கோகம் 16ஆம் நூ. வராக மிகிரர் - கி.பி. 505 - 587 வல்கன° (Vulcanized) செய்த இரப்பர் - (Good Year அமெரிக்கர்) 1844 வல்லபர் - தென் இந்தியாவினின்றும் வடஇந்தியாவுக்குச் சென்று வைணவ மதத்தைப் பரப்பிய பிராமணர். கி.பி. 1401 - 1479. வல்லபி இராச்சியம் - 490 வல்லபாசாரியர் - சைதன்னியர் காலத்துத் தெலுங்கு வைணவப் பிராமணர். 1475 - 1539 வளையாபதி - 10ஆம் நூ. வற்சயாயனர் - காமசூத்திரஞ் செய்தவர். தமிழர், தெலுங்கர் கி.பி. 4ஆம் நூ. வனவாசி கதம்பர் தலைநகரானது - கி.பி. 345 வா வாக்பாதர் - அட்டாங்க சங்கிரகம் என்னும் வடமொழி மருந்து நூல் செய்தவர். குப்தர் காலம் 9ஆம் நூ. வாச°பதி - கி.பி. 9ஆம் நூ. வாச°பதி மிசிரர் - தத்துவ கௌ முதி என்னும் வடநூல் செய்தவர். கி.பி. 825 வாசுகுப்தர் - சிவசூத்திரமெனும் காசுமீர சைவநூல் செய்தவர். கி.பி. 8ஆம் நூ. வாசுதேவ சமயம் - கி.மு. 4ஆம் நூ. வாசுதேவர் - வடமொழிக் கவி. 9ஆம் நூ. வாசுதேவன் - கனுஷ்க அரசின் விரோதியானவன். 245. வாசுபந்து - கி.பி. 400. வாட் (James Watt) - இ°கொத்திய பொறிவல்லார். 1736 - 1810. வாதராயணர் - வாதராயணர் வேதாந்த சூத்திரஞ் செய்தவர். கி.மு. 500-க்கும் கி.பி. 200-க்குமிடையில் வாதிராசர் - சமணப் புலவர். (வ) வாத்°யாயனர் - பட்சிலசாமி நியாய சூத்திரத்துக்கு உரை செய்தவர். 4ஆம் நூ. வாமன முனிவர் - மேருமந்தர புராணம். 14ஆம் நூ. வாமன முனிவர் - நீலகேசி உரை. 16ஆம் நூ. வாமனர் - காசுமீர கயாபீட அரசனின் மந்திரி; காவியலங்கார சூத்திரஞ் செய்தவர். அரசன் காலம். 779-813. வாயு புராணம் - 2ஆம் நூ. வாயு புராணம் - கி.பி. 3-முதல் 5ஆம் நூ. வரை. வார்த மானர் - மகாவீரர். வால கோகிலம் - 16ஆம் நூ. வாவிகளில் வாழ்ந்தோர் (Lake dwellers in Europe) - கி.மு. 10,000. வா°கோடிகாமா இந்தியாவை அடைந்தது - கி.பி. 1498. வி விக்கிரம சகம் - கி.மு. 58. விக்கிரம சோழன் - கி.பி. 1120 - 1135. விக்கிரம பாகு III (இ.அ.) - யாழ்ப்பாண அரசருக்குத் திறை கட்டிய சிங்கள அரசன். 1360 - 1374. விக்கிரமாதித்தன் - கி.பி. 380 - 413. விக்கிரமாதித்தன் I - பாதாமிச் சாளுக் கிய அரசன். கி.பி. 665 - 668; 654 - 681. விக்கிரமாதித்தன் II - பாதாமிச் சாளுக்கிய அரசன். கி.பி. 733-746. விக்கிரமாதித்தன் I கலியாணி யிலிருந்து ஆண்ட சாளுக்கியவன் 1008 - 1014. விக்கிரமாதித்தன் II - கலியாணியி லிருந்து ஆண்ட சாளுக்கிய வேந்தன். கி.பி. 1076 - 1126. விக்கிரமாதித்தன் III - கீழ் சாளுக் கிய அ. 927 - 8. விக்கிரமாதித்தன் V-சாளு. (கலி யாணி) 1008 - 15. விக்கிரமாதித்தன்VI-சாளு. (கலி யாணி) 1076 - 1126. விசயபாகு I (இ.அ.)-கி.பி. 1070 - 1114. விசயபாகு II (இ.அ.)-கி.பி. 1232- 1236. விசயபாகு III (இ.அ.) - தம்ப தேனியா தலைநகர். கி.பி. 1232 -1236. விசயபாகு V (இ.அ.) - 1333-1344 விசயராகவ நாயக்கர் - தஞ்சை நாயக்கர். 1633 - 1673. விசயன் (இ.அ.) - கி.மு. 483 - 445. விசயநகர் இராச்சியம் தொடக்கம் - கி.பி. 1336 விசயரகுநாதராயர் - புதுக்கோட்டை அரசர். 1730 - 1760. விசயரகுநாதர் - புதுக்கோட்டை அரசர். 1789 - 1807. விசயராயர் - விசய நகர அரசன். 1422 - 26. விசயராயர் II - 1446 - 7. விசயாலன் - 850 - 871. விசயாதித்தன் IV - கீழ் சாளு. 921. விசயாதித்தன் VII - கீழ் சாளு. 1062. விசயாதித்தன் II- கீ. சாளுவ. 808-820. விசாகப் பெருமாளையர்- 19ஆம் நூ. விசுவநாத சா°திரியார் - நகுல மலைக் குறவஞ்சி. 1835. விசுவநாதன் - ஓய்சல அரசன் - 1295 - 1300. விசுவநாதன் - மதுரையை ஆண்ட நாயக்க அரசன். 1859 - 1. விஞ்ஞானபிட்சு - சாங்கிய நூல்க ளுக்கு உரையெழுதியவர். கி.பி. 1550. விட்டிள் (Whittle) - ஜெட் விமான எந்திரம் கண்டுபிடித்தது - (1941 - 1907) விட்டுணுகோபன் - பல்லவ அரசன். கி.பி. 325 - 350. விட்டுணு மிருதி - கி.பி. 3ஆம் நூ. விட்டுணு வர்தானா - கீழ் சாளு. 673 - 683. விட்டுணு வர்தானா III - சாளுவ. 719 - 755. விட்டுணு வர்தானா IV - 772 - 808. விட்டுணு வர்தானா - ஓய்சல அரசன். 1110 - 1152. வித்தியாபதி - வங்காள வைணவ அடியார். 1420. வித்தியாரணியர் - மாதவர். இவர் வேதாந்த சூத்திரத்துக்கு உரை செய்த வைணவ ஆச்சாரியரில் வேறானவர். 14ஆம் நூ. வித்தியா சக்தி - வாகாட இராச் சியத்தை அமைத்த பார்ப்பனர். 2Mம் நூ. பிற். விநாய ஆதித்தன் - ஓய்சல அரசன். 1047 - 1098. விநாயாதித்தன்-சாளு. (பாதாமி) 681- 696. விபுலானந்தர் - சுவாமி. 1892 - 1947. விமலாதித்தன் - கி. சாளுவ. 1011 - 1018. வியாசர் - யோகசூத்திர உரையாசி ரியர். கி.பி. 4ஆம் நூ. வியாசர் - பாரதப்போர் காலத்தவர். கி.மு. 14ஆம் நூ. விருபாக்சன் I - விசயநகர அரசன். 1404 - 5 விருபாக்சன் II - 1465 - 85. விருஷபர் - இலிங்கமத தாபகர். வில்கணர் - வடமொழிக் கவி. 11ஆம் நூ. வில்கின்சன் (Wilkinson) - முதல் இரும்புக் கப்பல் செய்தது. 1787. வில்லிபுத்தூரர் - பாரதம் பாடியவர். 15ஆம் நூ. வில்லியம் இங்கிலாந்தைப் பிடித்தது - கி.பி. 1066. வில்லியன் சிமிங்டனின் (Syming ton) நீராவிக் கப்பல் - 1788. விவேகானந்தர், சுவாமி - நரேந்திர நாத் தத்தர். 1862 - 1902 விளம்பி நாகனார் - நான்மணிக் கடிகை செய்தவர். 5ஆம் நூ? விளாஞ்சோலைப் பிள்ளை - வைணவ ஆசிரியர். 15ஆம் நூ. வின்சுலோ அகராதி - பதிக்கப் பட்டது. 1862இல். விஷ்ணு புராணம் - கி.பி. முதல் நூ. - 4ஆம் நூ. இதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். (Wilson Horace Hayman) 1841ïல். அக்கினி புராணத்தை 1860இல். வீ வீர சோழன் - 1118 - 1135. வீர நரசிம்மன் - விசய நகர அரசன். 1505 - 9. வீர மார்த்தண்ட தேவர் - பஞ்ச தந்திர விருத்தம் செய்தவர். 19ஆம் நூ. வீர ராசேந்திரன் - சோழ அரசர் கி.பி. 1064 - 1070. வீர ராnஜந்திர சோழன் - 1063 - 1069 வீராசாமிச் செட்டியார் - விநோதரச மஞ்சரி. 19ஆம் நூ. வீராமாமுனிவர் - இத்தாலிய கத்தோ லிக்க பாதிரி. 1680 - 1746. வீரை அம்பிகாபதி - கவிராச பண்டி தரின் புதல்வர். 16ஆம் நூ. வெ வெங்கடரமண ஐயங்கார் - சாதக அலங்காரமியற்றியவர். 20ஆம் நூ. வெண்கல காலம் (ஆசியாவில்) - கி.மு. 4000-கி.மு. 1800 ஐரோப்பா -வில் கி.மு.2000 - கி.மு. 1000. வெபர் (Weber Albecht Fredrich) - பிரசியர்; சம°கிருதப் போராசிரி யராகப் பேர்லினில் இருந்தவர். சுக்கில எசுர் வேதத்தைப் பதித்த வர். (1849 - 59) வெல்° (Wells Herbert George) - பெரிய ஆங்கில எழுத்தாளர் - 1866 - 1946. வெள்ளப் பெருக்கு பைபிளில் குறிப்பிடப்பட்டது - கி.மு. 4000. வெள்ளியம்பலத் தம்பிரான் - துறை மங்கலம் சிவப்பிரகாச சுவாமி களின் ஆசிரியர். 17ஆம் நூ. வென்றிமாலை கவிராயர் - திருசெந் தூர்ப் புராணம் பாடியவர். 1565. வே வேங்கட I -விசய நகர அரசன். 1586 - 1614. வேங்கட III - 1610 - 1642. வேங்கடசாமி நாடார் - கி.மு. 1884 - 1945. வேங்கட மாதவர் - சம°கிருத கவி. 15ஆம் நூ. வேங்கடமகி - அச்சுதப்ப நாயக்க ரிடத்து அமைச்சராகவிருந்த கோவிந்த தீட்சிதர் குமாரர் சதுர்த் தண்டிப் பிராசிகை என்னும் நூலை 1660இல் செய்தவர். வேணாட்டடிகள் - திருவிசைப் பாடியவர் 10ஆம் நூ. வேதகாலம் - கி.மு. 1500 - கி.மு. 500. வேதகிரி முதலியார் - தமிழ்ப் புலவர் 1795 - 1852. வேதங்கள் தொகுக்கப்பட்டது - கி.மு. 8ஆம் நூ. வேதாசலம் சுவாமி - பார்க்க சுவாமி வேதாசலம். வேதாந்த தேசிகர் - பிறப்பு 1268. வேத நாயகம் பிள்ளை, மாயவரம் - 1824 - 1889. வேதாந்த தேசிகர் - 1269 - 1371. வேள்விக்குடிச் சாசனம் - மாறன் சடையன் ஆட்சியில் (765 - 815) மூன்றாவது ஆண்டு. வை வைசேடிக சூத்திரம் - கி.மு. 3ஆம் நூ. வைத்திய நாதையர் - இசைப் புலவர். 1844 - 1893. வையாபுரிப் பிள்ளை - தமிழ்ப் பேராசிரியர். 1888 - 1956. வோ வோல்டா (Volta) - 1745 - 1827.  பகுதி இரண்டு இந்திய அரச பரம்பரைகள் இக்கேரி நாயக்கர் (மைசூரின் பகுதியும் கன்னடத்தின் பகுதியும் சேர்ந்த இராச்சியம்) 1. சௌடப்பா 1513 2. சதாசிவ நாயக்கர் 1513 - 1560 3. பத்திரப்ப நாயக்கர் 1560 - 4. தொட்ட சங்கண்ண நாயக்கர். 5. வேங்கடப்ப நாயக்கர் 1582 - 1629 6. வீரபத்திரர் 1630 - 1645 7. சிவப்ப நாயக்கர் 1645 - 1660 8. வேங்கடப்ப நாயக்கர் II 9. பத்திரப்ப நாயக்கர் III 10. சோமசேகரர் I 1663 - 1671 11. சோமசேகரர் மனைவி சென்னம்மாசி 1671 - 1697 12. பசப்பர் 1697 - 1714 (ஐதர் அலி 1763இல் இந்நாட்டை வென்று இவ்வமிசத் தையும் ஆட்சியையும் அழித்தான்.) இந்திய கவர்னர் ஜனரல்களும் வை°ராய்களும் 1. கானிங் பிரபு (Lord Canning) 1858 - 1862 2. எல்சின் பிரபு (Lord Elgin) 1862 - 1863 3. யான் லோரன்° (Sir John Lowrence) 1864 - 1869 4. மாயோ பிரபு (Lord Mayo) 1869 - 1872 5. நாத்புரூக் பிரபு (Lord Northbrook) 1872 - 1876 6. இலித்தன் பிரபு (Lord Lytton) 1876 - 1880 7. இரிப்பன் பிரபு (Lord Ripon) 1880 - 1884 8. இடபெரின் பிரபு (Lord Dufferin) 1884 - 1888 9. இலான்டௌன் பிரபு (Lord Lansdowne) 1888 - 1894 10. எல்சின் பிரபு (Lord Elgin) 1894 - 1899 11. கேர்சன் பிரபு (Lord Curzon) 1899 - 1905 12. மின்டோ பிரபு (Lord Minto II) 1905 - 1910 13. காடின்ச் பிரபு (Lord Hardinge II) 1910 - 1916 14. செம்°போர்ட் பிரபு (Lord Chelmsford) 1916 - 1921 15. இரீடிங் பிரபு (Lord Reading) 1921 - 1926 16. இர்வின் பிரபு (Lord Irwin) 1926 - 1931 17. வெலிங்டன் பிரபு (Lord Wellington) 1931 - 1936 18. இலின் லித்கோ பிரபு (Lord Linlithgow) 1936 - 1943 19. வேவெல் பிரபு (Lord Wavell) 1943 - 1947 20. மவுண்ட்பாட்டன் பிரபு (Lord Mountbatten) 1947 - **** 21. இராசகோபாலாசாரியார் C. 1948 - 1950 இந்து சித்தியர் 1. மோவ° (Maues) கி.மு. 72 2. எசெ° கி.மு. 57 3. அசிலிசெ° 4. அசெ° II இராட்டிரகூடர் (இவர்கள் சாளுக்கிய அரசரின் கீழ் பிரபுக்களாக விருந்தவர்கள் எனக் கருதப்படுவர். இவர்களின் மொழி கன்னடம்.) 1. இந்திரன் I 2. இந்திரன் II 3. தண்டிதுர்க்கா 750 - 768 4. கிருஷ்ணா I 768 - 773 5. கோவிந்தன் II 773 - 780 6. துருவன் 780 - 793 7. கோவிந்தன் III 793 - 814 8. அமோகவர்ஷன் I 814 - 878 9. கிருஷ்ணா II 878 - 914 10. இந்திரா III 914 - 922 11. அமோகவர்ஷன் II 922 - 923 12. கோவிந்தன் IV 923 - 936 13. அமோகவர்ஷன் III 936 - 939 14. கிருஷ்ணன் III 939 - 967 15. கொத்திகா 967 - 972 16. கரிக்கா 972 - 974 17. இந்திரா IV 974 - 975 கங்கர் (மேல்) 1. கொங்கணிவர்மன் 400 - 425 2. மாதவன் I 425 - 450 3. ஆரியவர்மன் (சயவர்மன்) 450 - 470 4. கிருஷ்ணவர்மன் (2ஆம் மாதவன்) 470 - 530 5. அவநீதன் 530 - 600 6. துர்விநீதன் 600 - 655 7. முஷ்கரன் 655 - 660 8. சிறீவிக்கிரமன் 660 - 665 9. பூவிக்கிரமன் 665 - 679 10. சிவராமன் 679 - 725 11. சிறீபுருடன் 725 - 778 12. சிவமாறன் II 778 - 817 13. இராசமல்லன் I 817 - 837 14. இரணவிக்கிரமன் (நீதிமார்க்கன்) 837 - 870 15. இராசமல்லன் II 870 - 907 16. நீதிமார்க்கன் II 907 - 935 17. இராசமல்லன் III 935 - 938 18. பூதுகன் 938 - 960 19. மாறசிம்மன் 961 - 975 20. இராசமல்லன் IV 975 - 984 21. இராச கங்கன் 22. சிவமாறன் 23. பிருதிவிபதி 24. மாறசிம்மன் II 25. பிருதிவிபதி II 26. பூதுகன் II கங்கர் (கீழ்) 1. இந்திரவர்மன் I 496 - 535 2. அ°திவர்மன் 535-583 3. இந்திரவர்மன் II 583-624 4. இந்திரவர்மன் III 624- 5. தான இராணன் 6. இந்திரவர்மன் IV 650 - 7. குணாரணவர்மன் 679 - 691 8. தெய்வேந்திரவர்மன் 699 - 700 9. ஆனந்தவர்மன் 717 - 747 10. தெய்வேந்திரவர்மன் 747 - 750 11. இராசேந்திரவர்மன் 750 - 752 12. அனந்தவர்மன் II 780 - 800 13. தெய்வேந்திரவர்மன் III 804 - 806 14. இராசேந்திரவர்மன் II 809 - 812 15. சத்தியவர்மன் III 16. பூபேந்திரவர்மன் 17. தெய்வேந்திரவர்மன் ****- 1000 18. பதுமார்கணவன் 1019 - 1038 19. வக்கிரக°தன் 1038 - 1068 20. இராசராச கங்கன் 1068 - 1078 21. அனந்தவர்மன் 1078 - 1148 கங்கர் (பெரிய) Greater Gangas 1. குணமார்ணவன் 2. வச்சிரதன் 3. குண்டம் 4. காமர்ணவ 5. வினாயாதித்தன் 6. வச்சிரஹா°தா 7. காமர்ணவன் 8. குண்டமன் 9. மதுக்காரணவன் கசபதி 1. கபிலேசுவரன் 1434 - 1470 2. புருடோத்தமன் 1470 - 1497 3. பிரதாபருத்திரன் 1497 - 1541 4. கோவிந்த வித்தியாதரன் 1542 - 1549 கண்டி 1. விமலதர்ம சூரிய 1591 - 1604 2. செனரத் 1604 - 1635 3. இராசசிங்கா II 1629 - 1687 4. விமலதர்ம சூரியன் II 1687 - 1707 5. நரேந்திர சிங்கன் 1707 - 1747 6. விசய இராச சிங்கன் 1739 - 1747 7. கீர்த்திசிறீ 1747 - 1782 8. இராசாதிராச சிங்கன் 1772 - 1798 9. சிறீவிக்கிரமராச சிங்கன் 1798 - 1815 கதம்பர் 1. மயூரசர்மன் 340 - 370 2. கங்கவர்மன் (இ°கந்தவர்மன்) 370 - 395 3. பகீரதன் 395 - 420 4. இரகு 420 - 430 5. காகுத்தவர்மன் 430 - 450 6. சாந்திவர்மன் 450 - 475 7. மிருகேந்திரவர்மன் 475 - 490 8. மண்டாத்திரிவர்மன் 490 - 497 9. இரவிவர்மன் I 497 - 537 10. இரவிவர்மன் II 537 - 547 கதம்பர் (இளையகிளை) 1. கிருஷ்ணவர்மன் I 475 - 485 2. விஷ்ணுவர்மன் 485 - 497 3. சிம்மவர்மன் 497 - 540 4. கிருஷ்ணவர்மன் II 540 - 565 5. அரிவர்மன் 606 - 610 குசான் 1. கூசலகர கட்பிசி° I 15 - 64 2. வேமோ கட்பிசி° II 65 - 75 3. கனிஷ்க I 78 - 101 4. வஜிஷ்கன் 106 - 138 5. குவிஷ்க, கனிஷ்க II 119 - .... 6. வாசுதேவ I 152 - 176 7. கனிஷ்க III 176 - 210 8. வாசுதேவ II 210 - 230 (குசான் மக்கள் மத்திய ஆசியாவினின்றும் வெளியேறிச் சகர்களுக்குபின் இந்தியாவுள் நுழைந்தவர்கள்.) குப்தர் 1. சிறீகுப்தன் 2. கடோற்கசகுப்தன் 3. சந்திரகுப்தன் I 320 - . 4. சமுத்திரகுப்தன் 380 5. சந்திரகுப்தன் II (விக்கிரமாதித்தன்) 380 - 413 6. குமாரகுப்தன் (மகேந்திர ஆதித்தன்) 414 - 455 7. இ°கந்த குப்த விக்கிரமாதித்தன் 455 - 467 8. பூருகுப்தன் 477 9. புத்தகுப்தன் 500 10. நரசிம்ம குப்தன் (பாலாதித்தன்) 500 - 550 11. குமாரகுப்தன் III 12. விஷ்ணுகுப்தன் *** - 570 .... குப்தர் (பிற்காலம்) 1. கிருஷ்ணகுப்தன் 2. ஹர்ஷகுப்தன் 3. சீவிதகுப்தன் 4. குமாரகுப்தன் 5. தாமோதரகுப்தன் 6. மகாசேனகுப்தன் 7. மகாதேவகுப்தன் 8. ஆதித்தசேனன் 672 - .. 9. தேவகுப்தன் 10. விஷ்ணுகுப்தன் 11. சீவிதகுப்தன் - 775 சம்பா (இந்துச்சீனம்) (பாண்டுரங்க பரம்பரை) 1. பிரிதிவி இந்திரவர்மன் 757 - 774 2. சத்தியவர்மன் 774 - .... 3. இந்திரவர்மன் 4. அரிவர்மன் 801 - 817 5. விக்கிராந்தவர்மன் II 820 - 860 சம்பா (பிருகுவமிசம்) 1. இந்திரவர்மன் II 2. யயசிம்மவர்மன் 3. யயசக்திவர்மன் 4. பாத்ரவர்மன் III 5. இரதிரவர்மன் III 6. பரமேசுவரவர்மன் 7. இந்திரவர்மன் IV 8. லுகிதொங் (அன்னம் அரசன்) 9. விசய சிறீ அரிவர்மன் II 10. சயாபுகு விசயசிறீ சாதவாகனர் (சாலிவாகனர்) ஆந்திரர் (மச்ச புராணத்திற் கண்டபடி) 1. சீமுக கி.மு. 30 - 07 2. கிருஷ்ணா கி.மு. 7 - கி.பி.03 3. சதகர்ணி I 3 - 13 4. பூரணோத்சங்க 13 - 31 5. இ°கந்தஸதாம்பி 31 - 49 6. சதகர்ணி II 49 - 105 7. இலம்போதரன் 105 - 123 8. அபிலக 123 - 135 9. மேக°வதி 135 - 153 10. இ°வாதி 153 - 171 11. இ°காந்தவாதி 171 - 178 12. மேகேந்திர°வாதகர்ண 178 - 181 13. குந்தள இ°வாதிகர்ணா 181 - 189 14. இ°வாதிகர்ணா 189 - 190 15. புலோமாவி 190 - 226 16. அரிஷ்டகர்ணா 226 - 251 17. ஹாலா 251 - 256 18. மந்தலக (பத்தலக) 256 - 261 19. பிரிகசேனா 261 - 282 20. சுந்தரசதகர்ணி 258 - 283 21. சாகொரசதகர்ணி 283 - 283 22. சிவ°வதி 283 - 311 23. கௌதமிபுத்திரா 311 - 332 24. புலோமா 332 - 360 25. சிவசிறீபுலோமா 360 - 367 26. சிவ°கந்தசதகர்ணி 367 - 370 27. யாஞ்ஞசிறீசதகர்ணி 370 - 399 28. விசய 399 - 405 29. சந்திரசிறீசதகர்ணி 405 - 415 30. புலோமவி 415 - 422 சாளுக்கியர் (பாதாமி) 1. யயசிம்மன் 2. இரணராகன் 3. புலிகேசன் I 4. கீர்த்திவர்மன் I 566 - 597 5. மங்களேசன் 597 - 608 6. புலிகேசன் II 609 - 642 7. விக்கிரமாதித்தன் I 655 - 680 8. வினயாதித்தன் 680 - 696 9. விசயாதித்தன் 696 - 733 10. விக்கிரமாதித்தன் II 733 - 746 11. கீர்த்திவர்மன் II 746 - 757 கீழ்ச்சாளுக்கியர் (வேங்கி) (கீழ்ச்சாளுக்கியர்) கி.பி. 1. குப்சாவிஷ்ணு வர்தானா 615 - 633 2. யயசிம்மன் I 633 - 663 3. இந்திரவர்மன் 663 - 4. விஷ்ணுவர்தானா II 663 - 672 5. மஞ்சி யுவராசர் I 672 - 696 6. யயசிம்மன் II 696 - 709 7. கோகுலி விக்கிரமாதித்தன் 709 - 8. விஷ்ணுவர்தானா III 709 - 746 9. விசயாதித்தன் I 746 - 764 10. விசயதித்தன் I - 764 ..... 11. விஷ்ணுவர்தானா IV 764 - 799 12. விசயதித்தன் II 799 - 847 13. விஷ்ணுவர்தானா 847 - 848 14. விசயதித்த III 848 - 892 15. சாளுக்கிய வீமன் 892 - 922 16. விசயாதித்தன் IV 922 - 922 17. அம்மா I 922 - 929 18. விசயாதித்தன் V 929 - 929 19. தாலா 929 - 929 20. விக்கிரமாதித்தன் II 929 - 21. வீமாII 929 - 930 22. மல்லன் 930 - 936 23. சாளுக்கிய வீமன் II 936 - 946 24. அம்மா II 946 - 956 25. பாடப்பா 956 - 26. தாலா II 27. அம்மா II **** - 970 .... 28. தானவாணவா 973 - 29. யதசோடவீன் **** - 999 30. சக்திவர்மன் 999 - சாளுக்கியர் (கலியாணி) (மேற்குச் சாளுக்கியர்) 1. தலிப்பன் 973 - 997 2. சத்தியாச்ராயன் 997 - 1008 3. விக்கிரமாதித்தன் I 1008 - 1014 4. ஐயானன் II 1014 - 1015 5. யயசிம்மன் 1015 - 1042 6. சோமதேவன் I 1042 - 1068 7. சோமதேவன் II 1068 - 1076 8. விக்கிரமாதித்தன் II 1076 - 1127 9. சோமதேவன் III 1127 - 1138 10. யகதேகமல்லன் 1138 - 1151 11. தைலப்பன் III 1151 - 1156 12. சோமதேவன் IV 1184 - 1200 சுங்கர் கி. மு. 1. புஷ்யமித்திரன் 187 - 151 2. அக்கினிமித்திரன் 151 - 143 3. சுயேஷதா 143 - 136 4. வாசுமித்திரன் 136 - 126 5. அந்திரகன் 126 - 124 6. புலிந்தகன் 124 - 121 7. கோஷ 121 - 118 8. வச்சிரபித்திரன் 118 - 109 9. பாகவதன் 109 - 77 10. தேவபூமி 77 - 75 (இப்பரம்பரை மௌரிய ஆட்சிக்குப் பின் தோன்றியது.) சேரர் கி.மு. 1. உதியஞ்சேரலாதன் (பதிற்றுப் பத்து 1 - ஆம் பத்து.) 350 - 2. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் (2 - ஆம் பத்து) 328 - 270 3. பல்யானைச் செங்குட்டுவன் (3 - ஆம் பத்து) 270 - 245 4. களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் (4 - ஆம் பத்து) 245 - 220 5. பெருஞ்சேரலாதன் 220 - 200 6. குடக்கோ நெடுஞ்சேரலாதன் 200 - 180 7. கடல்பிறங்கோட்டிய வேல்கெழுகுட்டுவன் 180 - 125 8. ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் (6 - ஆம் பத்து) 125 - 87 9. செல்வக்கடுங்கோவாழியாதன் (7 - ஆம் பத்து) 87 - 62 10. பெருஞ்சேரலிரும்பொறை (9 - ஆம் பத்து) 25 - 11. கருவூரேறிய ஒள்வாட் பெருஞ்சேரல் (10 - ஆம் பத்து) 9 - (தொண்டியிலாண்ட சேரர்) கி.மு. 1. அந்துவஞ்சேரலிரும்பொறை 125 - 87 2. மாந்தரஞ்சேரலிரும்பொறை 87 - 62 3. யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை 64 - 42 4. சேரமான் மாரிவெண்கோ 42 கி.பி. 1. கணைக்காலிரும்பொறை 24 2. கோக்கோதைமார்பன் 100 3. சேரன் செங்குட்டுவன் 150 - 180 (குறிப்பு: இது கா. சுப்பிரமணியப் பிள்ளையின் இலக்கிய வரலாற்றில் கண்டபடி.) கலைக்களஞ்சியத்தில் காணப்படுவது வருமாறு கி.பி. 1. உதியஞ் சேரலாதன் 130 2. செங்குட்டுவன் 180 3. செல்வக்கடுங்கோவாழியாதன் 190 4. பெருஞ்சேரலிரும்பொறை 190 5. யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை 210 சேர அரசர் (Chera Kings - K.S. Sesha Aiyer) கி.பி. 1. கருவூர் ஏறிய பெருஞ்சேரல் இரும்பொறை 90 - 100 2. அந்துவன் சேரல் இரும்பொறை 100 - 120 6ஆம் ப. 3. ஆடுகோட்பாட்டு சேரலாதன் 120 - 158 7ஆம் ப. 4. செல்வக்கடுங்கோ வாழியாதன் 158 - 183 8ஆம் ப. 5. பெருஞ்சேரல் இரும்பொறை 183 - 200 9ஆம் ப. 6. இளஞ்சேரல் இரும்பொறை 200 - 216 7. ஆதன் அவினி 216 - 236 8. யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இளம்பொறை 236 - 266 9. கோக்கோதை மார்பன் 266 - 286 10. கணைக்கால் இரும்பொறை 286 - 306 வஞ்சி கி.மு. 1ஆம் ப. 1. ஊதியஞ்சேரல் 8 கி.பி. 2ஆம் ப. 2. இமயவரம்பன் (நெடுஞ் சேரலாதன்) 17 - 75 3ஆம் ப. 3. பல்யானை செல்கெழு குட்டுவன் 75 - 100 4ஆம் ப. 4. நார்முடிச்சேரன் 100 - 125 5ஆம் ப. 5. செங்குட்டுவன் 125 - 180 6. குட்டுவன் கோதை 180 - 205 7. இளங்குட்டுவன் 205 - 230 8. பாலைபாடிய பெருங்கடுங்கோ 230 - 255 9. மாரிவெண்கோ 255 - 280 10. வஞ்சன் 280 - 305 சோழ - சாளுக்கியர் 1. குலோத்துங்கன் I 1070 - 1122 2. இராசராசன் I 1246 - 1279 சோழர் (சங்க காலம்) கி.மு. 1. பெரும்பூட்சென்னி 245 2. இளம்பூட்சென்னி - 245 3. நெய்தனங்காலன் இளஞ்சேட்சென்னி 245 - 230 4. உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி 230 - 220 5. கரிகால்வளவன் 220 - 200 6. வெற்றிவேற் பஃறடக்கை பெருநற் கிள்ளி 200 - 180 7. போர்வைங்கோ பெருநற்கிள்ளி 180 - 125 8. முடித்தலைக்கோ பெருநற்கிள்ளி 125 - 87 9. இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளி 62 - 42 10. கோப்பெருஞ்சோழன் 25 - 9 11. நெடுங்கிள்ளி 9 - 1 கி.பி. 12. நலங்கிள்ளி 1 -*** 13. மாளவத்தான் (நலங்கிள்ளியின் தம்பி) 14. குளமுற்றத்துஞ்சிய கிள்ளிவளவன் 1 - 20 15. குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திருமாவளவன் 21 - 42 16. செங்கண்ணான் 42 - *** 17. சோழன் நல்லுருத்திரன் 18. மாவண்கிள்ளி 120 - 144 கி.மு. 1. தொண்டைமான் இளந்திரையன் 220 - 200 2. ஓய் மாநாட்டு நல்லியக்கோடன் 62 (குறிப்பு: - இது கா. சுப்பிரமணிய பிள்ளையின் இலக்கிய வரலாற்றில் காணப்படுவது.) கலைக்களஞ்சியம் கரிகாலனின் காலம் கி.பி. 190 எனக் கூறுகின்றது. கி.பி. 1. விசாலயன் 846 - 871 2. ஆதித்தன் I 871 - 907 3. பராந்தகன் I 907 - 953 4. இராசாதித்தன் I 947 - 949 5. கண்டராதித்தன் 949 - 957 6. அரிஞ்சயன் 956 - 957 7. பராந்தகன் II (சுந்தரசோழன்) 956 - 973 8. ஆதித்தியன் II (உத்தமசோழன்) 950 - 969 9. மதுராந்தக உத்தமன் 969 - 985 10. இராசராசன் I (அருள்மொழி) 985 - 1016 11. இராசேந்திரன் I 1016 - 1044 12. இராசாதிராசன் I 1044 - 1052 13. இராசேந்திரன் II (முதற் குலோத்துங்கன்) 1052 - 1064 14. இராசமகேந்திரன் 1064 - 1063 15. வீரராசேந்திரன் 1064 - 1070 16. ஆதிராசேந்திரன் 1067 - 1070 17. இராசராச மும்முடிச் சோழன் 1076 - 1078 18. வீரசோழன் 1078 - 1084 19. சோழகங்கன் 1084 - 1089 20. வீரசோழன் 1089 - 1092 21. விக்கிரமசோழன் 1092 - 1118 22. விக்கிரமசோழன் III 1118 - 1133 23. குலோத்துங்கன் II 1133 - 1150 24. இராசராசன் II 1146 - 1173 25. இராசேந்திரன் II 1163 - 1179 26. குலோத்துங்கன் III 1178 - 1216 27. இராசராசன் III 1216 - 1246 28. இராசேந்திரன் III 1246 - 1279 நந்தர் கி.மு. 1. மகாபத்மன் 364 -*** 2. மகாபத்மனின் எட்டுக் குமாரர்கள் 12 ஆண்டு 324 -*** பல்லவர் (நெல்லூர் குண்டூர்) கி.பி. 1. வீரக்கூர்ச்சவர்மன் 375 - *** 2. குமாரவிஷ்ணு 3. இ°கந்தவர்மன் 4. வீரவர்மன் 5. இ°கந்தவர்மன் II 6. விஷ்ணுகோபவர்மன் I 7. சிவவர்மன் 8. விஷ்ணுகோபவர்மன் II 585 - *** பல்லவர் (தமிழ்நாடு) 1. சிவவர்மன் 550 - 575 2. சிம்மவிஷ்ணு 575 - 600 3. மகேந்திரவர்மன் 600 - 630 4. நரசிம்மவர்மன் 630 - 668 5. மகேந்திரவர்மன் 668 - 670 6. பரமேசுவரவர்மன் 670 - 695 7. நரசிம்மவர்மன் 695 - 722 8. பரமேசுவரவர்மன் II 722 - 730 9. நந்திவர்மன் II (பல்லவமல்லன்) 730 - 796 பல்லவர் (பிற்காலம்) 1. நந்திவர்மன் 804 - 855 2. நந்திவர்மன் III (தெள்ளாறெறிந்த) 855 - 879 3. நிருபதுங்கவர்மன் - 910 4. அபரஞ்சிதன் பாணர் 1. விக்கிரமாதித்தன் I 869 - 890 2. விசயாதித்தன் 3. விக்கிரமாதித்தன் II 4. விக்கிரமாதித்தன் III 950 - ....... பாண்டியர் (சங்க காலம்) கி.மு. 1. முதுகுடுமிப் பெருவழுதி 350 - *** 2. கருங்கை ஒள்வாட் பெரும்போர்வழுதி 230 - *** 3. பசும்பூட் பாண்டியன் 180 - 125 4. நம்பி நெடுஞ்செழியன் 5. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் 87 - 62 6. கானப் பேரெயிலெறிந்த உக்கிரப் பெருவழுதி 63 - *** 7. பண்டியன் அறிவுடை நம்பி 8. பழையன் மாறன் 25 - 9 கி.பி. 9. வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி 21 - 42 10. இலவந்திகைரன் மாறன் 43 - 100 11. சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் 101 - 120 12. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் 121 - 144 13. வெற்றிவேற் செழியன் 14. பன்னாடுதந்த மாறன்வழுதி 15. உக்கிரப் பெருவழுதி 225 - *** 16. பூரிக்கோ குறிப்பு: (இது தமிழ் இலக்கிய வரலாற்றில் காணப்படும் உத்தேசமான கணிப்பு.) 1. கடுங்கோன் 590 - 620 2. மாறவர்மன் அவனி சூளாமணி 620 - 645 3. சேந்தன் 4. அரிகேசரி பராங்குச மாறவர்மன் 670 - 710 5. கோச்சடையன் இரணதீரன் 700 - 730 6. மாறவர்மன் இராசசிம்மன் 730 - 730 7. சடிலவர்மன் (நெடுஞ்சடையன் பராந்தகன், மாறன் சடையன்) 765 - 815 8. சிறீமாற சீறீவல்லபன் 815 - 862 9. வரகுணன் II 862 - 880 10. மாறவர்மன் இராசசிம்மன் 900 - 920 11. வீரபாண்டியன் 920 - 959 12. பராக்கிரம பாண்டியன் 1150 - **** 13. குலசேகரன் 1167 - 1171 14. குலோத்துங்க வீரபாண்டியன் 1182 - 1189 15. விக்கிரம பாண்டியன் 1182 - 1190 16. மாறவர்மன் சுந்தர பாண்டியன் I 1216 - 1238 17. ஜடாவர்மன் குலசேகரன் 1190 - 1214 18. மாறவர்மன் சுந்தர பாண்டியன் I 1216 - 1235 மாறவர்மன் சுந்தர பாண்டியன் II 1238 - 1251 19. ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் 1251 - 1261 20. வீரபாண்டியன் 1252 - 1267 21. மாறவர்மன் குலசேகரன் 1268 - 1308 22. சடாவர்மன் சுந்தரன் 1275 - 1290 23. மாறவர்மன் குலசேகரன் 1314 - 1321 24. மாறவர்மன் பராக்கிரம பாண்டியன் 1334 - 1352 25. சடாவர்மன் பராக்கிரம பாண்டியன் 1357 - 1372 26. பராக்கிரம பாண்டிய தேவன் 1365 27. பராக்கிரம பாண்டியன் 1384 **** 28. ஜடாவர்மன் குலசேகரன் 1395 **** 29. அரிகேசரி பராக்கிரம பாண்டியன் 1422 **** 30. மாறவர்மன் வீரபாண்டியன் 1422 **** 31. அழகன் பெருமாள் குலசேகரன் 1430 **** 32. வீரபாண்டியன் 1437 **** 34. வீரபாண்டியன் 1475 **** 35. பராக்கிரம பாண்டியன் குலசேகர தேவன் 1479 **** 36. பராக்கிரம பாண்டியன் 1516 **** 37. ஜதிலவர்மன் சிறீவல்ல அல்லது அபிராம பராக்கிரம 1533 **** 38. மாறவர்மன் சுந்தர பாண்டியன் 1533 **** 39. குலசேகரன் அல்லது பெருமாள் 1543 **** 40. வீரபாண்டியன் 1543 **** 41. கோன்ஏறின்மை கொண்டான் குலசேகர தர்ம பெருமாள் 1550 **** 42. சிறீவல்லப அதிவீரராமன் 1562 **** 43. குலசேகர பராக்கிரம அழகன் சொக்கன் 1572 **** 44. அபிராம வரதுங்க ராமன் 1586 **** 45. வீரபாண்டியன் 1586 **** 46. சிவால மாறன் 1615 **** மதுரை நாயக்க அரசர் கி.பி.ய 1. விசுவநாதன் 1559** 2. குமரகிருஷ்ணப்பன் 1563** 3. கிஷ்ணப்பன் (மறுபெயர்) பெரிய வீரப்ப விசுவநாதன் II 1373** 4. இலிங்கையன் (மறு) குமர கிருட்டிணப்பன் (மறு) விசுவநாதன் III 1595** 5. முத்துகிருஷ்ணப்பன் 1602** 6. முத்துவீரப்பன் 1609** 7. திருமலை 1623** 8. முத்து அழகதிரி அல்லது முத்து வீரப்பன் 1659** 9. சொக்கநாதன் அல்லது சொக்கலிங்கன் 1662** 10. இரங்க கிருஷ்ண வீரப்பன் 1682** 11. மங்கம்மாள் 1689** 12. விசயரங்க சொக்கநாதன் 1704** 13. மீனாட்சி 1731 - 1736 மௌரிய வமிசம் கி.மு. 1. சந்திரகுப்த மௌரியன் 324 - 300 2. பிந்துசாரன் 300 - 273 3. அசோகர் 273 - 236 4. தசரதன் 5. பிரிந்தரதன் (இது நந்தராட்சிக்குப்பின் தோன்றியது) மகதம் கி.மு. 1. பிம்பசாகரன் 543 - 491 2 அசாதசத்துரு 491 - 462 3. உதாயி 427 - 394 4. நந்திவர்தானா 394 - 352 5. மகாநதி 352 - 309 6. மகாபத்மன்; அவனுடைய ஏழு குமாரர்கள். 309 - 209 யாழ்ப்பாண அரசர் கி.பி. 1. சிங்கை ஆரியன் 1210 - 1246 2. குலசேகர சிங்கை ஆரியன் 1246 - 1256 3. குலோத்துங்க சிங்கராச சேகரன் 1256 - 1276 4. விக்கிரம பரராச சேகரன் 1279 - 1302 5. வரோதய பரராச சேகரன் 1302 - 1325 6. மார்த்தாண்ட பரராச சேகரன் 1325 - 1348 7. குணபூசண பரராச சேகரன் 1348 - 1371 8. வரோதய பரராச சேகரன் 1371 - 1380 9. சயவீர செகராச சேகரன் 1380 - 1410 10. குணவீர சிங்கை ஆரியன் 1410 - 1440 11. கனக சூரிய சிங்கை ஆரியன் 1440 - 1467 12. பரராச சேகரன் 1478 - 1519 13. பரராச சேகரன் (சங்கிலி) 1519 - 1561 14. புவிராச பண்டாரம் பரராச சேகரன் 1561 - 1565 15. பெரியபிள்ளை செகராச சேகரன் 1565 - 1570 16. புவிராச பண்டாரம் செகராச சேகரன் 1570 - 1582 17. எதிர்மன்ன சிங்க பரராச சேகரன் 1582 - 1591 18. அருசத்சாரி 1591 - 1615 19. சங்கிலி குமாரன் 1617 - 1620 வாகாடர் (தக்கணம்) 1. விந்தியசக்தி 2. பிரவரசேனன் 3. உருத்திரசேனன் 4. பிருதுவிசேனன் I 375 5. உருத்திரசேனன் II 400 6. திவகாரசேனன் 7. தாமோதரசேனன் 8. பிரவரசேனன் II 9. நரேந்திரசேனன் 10. பிரிதிவிசேனன் விசயநகர் (சங்கம பரம்பரை) கி.பி.... 1. சங்கமன் 2. பக்கன் 3. அரிகரன் II 1379 - 1406 4. தேவராயர் I 1406 - 1422 5. வீரவிசயன் 1422 - ........ன 6. தேவராயர் II 1422 - 1446 7. மல்லிகார்சுனர் 1446 - 1465 8. விருபாக்ஷ II 1465 - 1486 விசயநகர் (துளுவ) 1. நரசன் 2. வீரநரசிம்மன் 1506 - 1509 3. கிருஷ்ணதேவராயர் 1509 - 1530 4. அச்சுயுதன் 1530 - 1542 5. சதாசிவன் 1542 - 1570 விசயநகர் (அரவிடு) 1. இரங்கன் I 2. திருமலை 1570 - **** 3. இரங்கன் II 4. வெங்கட 1586 - 1614 5. இரங்கன் III 1614 - 1672  பகுதி மூன்று இந்தியா சம்பந்தப்பட்ட காலக் குறிப்புகள் (காலக் கிரமப்படி) கி.மு. 4000 - மைசூரில் திராவிட நாகரிகம் 3500-2500 - சிந்து நாகரிகம் 2500 - இந்து இரானியரின் பிரிவு 2000-1500 - ஆரியர் படையெடுப்பு 2000-1400 - வேதகாலம் (தத்தர்) 1500 - இருக்கு வேதம் 1400-800 - இதிகாச காலம் (தத்தர்) 800 - பிராமணங்கள் 800-500 - உபநிடதங்கள் 600 - சிசுநாகர் பரம்பரை 600 - கபிலரும் சாங்பியமும் 599-527 - மகாவீரர் 563-483 - புத்தர் 522 - பௌத்த மதம் ஆரம்பம் (தத்தர்) 516 - பஞ்சாப்பில் தாரிய° 500-200 - வேத சூத்திரங்கள், தொடக்கத்திலுள்ள இதிகாசப் பகுதிகள், பௌத்த சமய நூல்கள், பகவத் கீதை, பாணினி முனிவர். 500 - புராணங்கள் 327-325 - அலக்சாந்தரின் படையெடுப்பு 322-184 - மயூர பரம்பரை; அர்த்த சாத்திரம் கி.மு. 315-800 கி.பி. - பௌத்த மத எழுச்சிக் காலம்(தத்தர்) 302-298 - மெக°தீன° பாடலிபுரத்திற் 274-237 - அசோகர் 250-60 கி.பி. - இந்து கிரேக்க இந்து பட்டாணிய ஆட்சி (பஞ்சாப்பில்) 250-236 கி.பி. - ஆந்திர அரச பரம்பரை; அமராபதி தூபி, சாஞ்சி கல் வேலியும் தோரணங்களும் கி.மு. 1-ம் நூ. 184-72 - சுங்கம பரம்பரை 150 - சகர் குசான் படையெடுப்பு 72-27 - கண்ணுவ அரச பரம்பரை 58 - விக்கிரமாதித்த சகம் 65-225 கி.பி. - குசான் அரச பரம்பரை கி.பி. 78-120 - கனிஷ்கர் 78 - சக வருடம்; சமண மதம் இரண்டாகப் பிரிந்தது. 88 - பௌத்த நூல்கள் எழுதி வைக்கப்பட்டது. 100-700 - அஜந்தாக் குகைகளும் ஓவியங்களும் 399-413 - பாகியனின் பயணங்கள் 400 - காளிதாசர் 248 அல்லது 249 - கால சூரி அல்லது சேதி ஆண்டு (சகாப்தம்) 320-650 - குப்த அரசு (கால சூரி அரசர் மத்திய இந்தியாவை ஆண்டனர்) 320-330 - சந்திரகுப்தன் I 320 - குப்த சகம் (இது பிற்காலத்தில் வலாபி சகம் எனப்பட்டது) 330-380 - சமுத்திர குப்தன் 380-413 - சந்திரகுப்தன் II (விக்கிரமாதித்தன்) 399-414 - பாகியன் இந்தியாவில் 414 - குமார குப்தன் I 455 - °கந்த குப்தன் 455-500 - அகுணர் (Hun) படையெடுப்பு 499 - ஆரியப்பட்டர் (கணித வல்லார்) 505-587 - வராக மிகிரர் (வானநூல் வல்லார்) 506-648 - ஹர்சவர்த்தானா (அரசன்) 6 முதல் 10-ம் நூ. - தெற்கே பல்லவர். அரச பரம்பரை. 598 - 660 - பிரம குப்தர் (வானநூல் வல்லார்) 550-1190 - சாளுக்கிய பரம்பரை (தக்காணம்) 600 - மகேந்திரவர்மன் 625 - நரசிம்மவர்மன் 608 - புலிகேசி II 606-647 - கர்சவர்த்தனன் 622 - முகமதிய சகம் 629-645 - யுவான் சுவான் (ஹியன்திசாங்) இந்தியாவில் 700 - இராசபுத்திரரின் எழுச்சி 712 - அராபியர் சிந்துவை வென்றது 730-1197 - பால (Pala) அரச பரம்பரை (வங்காளம்) 750-780 - ஜாவாவில் பரபொதூர் கட்டப் பட்டது. 788-820 - சங்கரர். 800-1200 - இராசபுத்திரர் எழுச்சி 802-869 - ஜயவர்மன் (கம்போதியா) 800-1300 - கம்போதியாவிற் பொற்காலம் 825 - கொல்லம் ஆண்டு 879 - நேபாள ஆண்டு 900 - நேபாள ஆட்சியின் எழுச்சி 907-1310 - பிற்காலச் சோழ பரம்பரை 973-1048 - அல்பேருனி 973-1198 - சாளுக்கிய அரச பரம்பரை 993 - டில்லி நகர் கட்டப்பட்டது. 997-1030 - முகமத் கஜனி 1008 - முகமதியர் இந்தியாமீது படையெடுத்தது. 1018-1060 - போசராசன் 1082 - பிருதிவிராஜ் 1089-1173 - எமிசந்திரர் 1110-1327 - ஹோய்சல அரச பரம்பரை 1119-1199 - சேன அரச பரம்பரை 1119-1198 - மாதவர் 1150 - பா°கரர் (கணித வல்லார்) 1150 - அங்கோவாட் (கம்போதியாவில்) கட்டப்பட்டது. 1199-1200 - முகமதியர் இந்தியாமீது படை யெடுத்தது. 1206 - டில்லியில் அடிமை அரசர் 1206-1526 - ஆப்கான் ஆட்சி இந்தியாவில் 1288-1293 - மார்க்கோபோலோ இந்தியாவில் 1290-1318 - கில்ஜி அரச பரம்பரை (Khilji) 1296-1315 - அல்லாவுத்தீன் 1303 - அல்லாவுத்தீன் சித்தூரைப் பிடித்தது. 1336-1346 - விசய நகர இராச்சியம் தலைமை எய்தியது. 1398 - திமூர் டில்லியைச் சூறையாடியது. 1398 - குருநானாக் சீக்கிய மத குரு 1347 - பாமினி அரச பரம்பரை 1450-1526 - உலோடி அரச பரம்பரை 1479 - வல்லபர் 1490-1673 - அடில் ஷாய் (பிஜhப்பூர் அரச பரம்பரை) 1440-1518 - கபீர் 1469-1538 - பாபாநானக் 1485-1533 - சைதன்னியர் 1498-1537 - வா°கோடி காமா இந்தியாவை அடைந்தது. 1532-1623 - துளசிதாசர் 1509-1529 - கிருஷ்ணதேவராயர் 1526-1671 - பேபர் 1510- - போர்ச்சுக்கீசியர் கோவாவைப் பிடித்தது. 1526-1707 - மொகலாயர் ஆட்சி 1532-1545 - துளசிதாசர் 1560-1605 - அக்பர் 1565 - கிழக்கிந்தியக் கம்பெனி 1605-1627 - ஜெகங்கீர் 1632-1653 - தாஜ்மகால் 1658-1707 - அவுரங்கசீப் 1674 - பிரான்சுக்காரர் புதுச்சேரியைப் பிடித்தது. 1674-1680 - சிவாஜி 1690 - கல்கத்தாவில் ஆங்கிலர் வேரூன்றியது. 1718-1818 - மராட்டிய ஆட்சியின் எழுச்சி 1756-1764 - இந்தியாவில் பிரெஞ்சு ஆங்கிலப் போர் 1757 - பிளாசாப் போர் 1765-1767 - உரொபேட் கிளைவ் வங்காள கவர்னர் 1772-1774 - வான்ஹே°டிங்° வங்காள கவர்னர் 1828 - மோகன்ராய் பிரம சமாசத்தைத் தாபித்தது 1829 - உடன்கட்டை ஏறுவது சட்ட விரோதமாக்கப்பட்டது 1836-1886 - இராமகிருஷ்ண பரமாம்சர் 1857 - சிப்பாய்க் கலகம் 1858 - இந்தியா ஆங்கில முடியாட்சிக்குட்பட்டது. 1861-1941 - இரபிந்திரநாத்தாகூர் 1863-1902 - விவேகானந்தர் 1875 - தயானந்த சரசுவதி பிரம சமாசம் ஆரம்பித்தது. 1875 - இந்திய நேஷனல் காங்கிர°  உலக வரலாறு தொடர்பான முக்கியக் காலக் குறிப்பு (கால ஒழுங்குப்படி) கி.மு. 5000 - பழைய எகிப்திய நாகரிகம் 4241 - எகிப்திய பஞ்சாங்கம் தொடக்கம் 4000 - பைபிளில் கூறப்படும் சலப்பிரளயம் 4000-2900 - சுமேரியரின் நகர இராச்சியங்கள் 2870 - திராய் (Troy) நகரில் (ஆசியா மைனர்) மக்கள் குடியேற்றத்தைப் பற்றி அறியப்படுவது 2800 - மினோவ (கிரீத் Crete தீவு) நாகரிகம் 2500 - எகிப்தில் பிரமிட்டுச் சமாதிகள் கட்டப்பட்டது. 2400 - எகிப்திய தலைநகர் மெம்பிசிலிருந்து தீப்சுக்கு மாற்றப் பட்டது. 2345 - நினேவாவை அசீரியாவின் தலைநகராக அசூர் நிருமாணித்தது. 2100 - பாபிலோனில் அமுரபியின் காலம் 2016 - ஆபிரகாம் 2000 - பாபிலோனியா ஹிதைதி நாட்டைப் பிடித்தது. இந்து-ஐரோப்பியர் ஈரானில் குடியேறியது. 1913 - எருசலேம் எபிரேய நாடாக வெளிக் கிளம்பியது. 1900 - கிரேக்கர் கிரேக்க குடா நாட்டில் குடியேறியது. 1800 - ஐக்கொ° (Hyksos) என்னும் இடைய அரசர் எகிப்தை வெற்றி கொண்டது. 1582 - அதேன்° நகர் கட்டப்பட்டது. 1500-1200 - கிரீசில் மைசினேயன் (Mycenaean) காலம்; சீனாவில் சாங் (Shang) அல்லது யின் (Yin) இராச்சியம் 1500 - பெலிபொனீச° (Peloponnesus) தோரியர் (Doriain) அச்சீயன் (Achaean) கிரேக்கரால் குடியேற்றப்பட்டது. 1400 - மொசேயின் தலைமையில் இசிரவேலர் எகிப்தி லிருந்து வெளியேறியது. 1375-1350 - எகிப்தில் அமென்ததெப், தூதன் காபன் என்னும் அரசர். 1313 - கட்ம° (Cadmus) அரசன் தீப்° நகரை அமைத்தது. 1250-1183 - ஓமர் (Homer) காவியத்தில் சொல்லப்படும் வீரர். 1192-1183 - திராய் நகரின் முற்றுகை 1100-722 - சீனாவில் சௌ அரச பரம்பரை 1012 - எருசலேமில் சாலமனால் கோயில் கட்டப்பட்டது. 1000 - வேத இலக்கியம். எபிரேயர் பல°தீன இராச்சியத்தை ஆரம்பித்தது. 826 - ஆப்பிரிக்காவில் காதேச் நகர் கட்டப்பட்டது. 674-665 - அசுர்பானிப்பாவின் தலைமையில் அசீரியர் எகிப்தைப் பிடித்தது. 660 - யிம்மு தென்னோவால் ஜப்பானிய பேரரசு (சக்கராதி பத்தியம்) தொடக்கப்பட்டது. 612 - சால்தியரும் மீதியரும் நினேவாவைப் பிடித்து அழித்தது 587 - நெபுச் சண்ட் நேசர் சாலமனின் கோயிலை அழித்து எபிரேயரை மறியற்படுத்தி பாபிலோனுக்குக் கொண்டு போனது. 563 - பௌத்த சமய கர்த்தாவான சித்தார்த்தர் பிறந்தது 557 - கொன்பூசிய° மதத்தலைவரான கொன்பூசிய° சீனாவில் பிறந்தது. 539 - சைர° பாபிலோனைப் பிடித்துத் தனது சக்கராதி பத்தியத்தை நாட்டியது. 525 - எகிப்தை சைரசின் புதல்வன் காம்பிசெ° பிடித்தது. 500 - மெக்சிக்கோவிலும் மத்திய அமெரிக்காவிலும் மாயா நாகரிகம் தொடங்கியது. 336-323 - மசிடோன் நாட்டு அரசனாகிய அலக்சாந்தர் பார சீகரை வென்று, எகிப்தைப் பிடித்து, ஆசியாவுக்குச் சென்று இந்தியாவில் பாரசீக கவர்னர்களை (Sataraps) நியமித்தது. 323 - இந்தியா மசிடோனிய ஆட்சிக்கு மாறாகப் புரட்சி செய்தது. சந்திரகுப்தன் மௌரிய ஆட்சியைத் தொடங்கியது. 264-227 - அசோகரின் ஆட்சி 214 - சீனப் பெருஞ் சுவர் கட்டி முடிக்கப்பட்டது. கிரீசும் உரோமும் கி.மு. 776 - ஒலிம்பிக் ஆண்டு கிரீஸில் ஆரம்பம் 753 - உரோமுலுசால் உரோம் கட்டப்பட்டது. 700 - ஒமரின் பாடல்கள் எழுதி வைக்கப்பட்டது. 630 - இ°பாட்டர்வில் இலைகூர்குசின் (Lycurgus) சட்டங்கள் 594 - அதேன்சில் சோலனின் சட்டங்கள் 490 - மரதன் போர் 480 - பாரசிகர் கிரீஸை நோக்கி முன்னேறுவதை தேர்மோ பைலே தடுத்தது. சலாமி° போர். 461-431 - பெரிகில்°, பிடிய°. (Phidias) சோபொகிளி° (Sophocles) என்பவர்களின் பொற்காலம் 431-401 - பெல்லோ பொன்னேசியன் போர் 399 - சாக்கிரட்டிசின் விசாரணையும் மரணமும் 399-347 - பிளாட்டோ, அரி°டாட்டிளின் காலம் 387 - கால்கள் (Gauls) உரோமைச் சூறையாடியது 334-323 - கிரேக்க நாகரிகம் முன்னேறுதல் 309-307 - உரோமருக்கும் எற்றூ°கருக்கும் போர் 264-241 - முதல் பூனிக் போர் 218-201 - இரண்டாம் பூனிக் போர். அனிபல் ஆல்ப்° மலையைக் கடந்தது. 149-146 - மூன்றாம் பூனிக் போர் 146 - கதேசும் கொரிந்தும் அழிக்கப்பட்டது. 60 - யூலிய° சீசர், பொம்பே, காசிய° என்னும் மூவர் 48 - யூலிய° சீஸர் பிரிட்டன் கோல் நாடுகளின் மீது படையெடுப்பு 48 - யூலிய° சீஸர் பொப்பேயை பார்சலோசில் தோற்கடித்தது. 45-19 - வேர்சில் ஒரெ° (Horace) என்பவர்களின் காலம் 44 - யூலிய° சீஸர் கொல்லப்பட்டது. 31 - அக்டவ°சீசர் கிளியப் பத்திரா ராணியைத் தோற்கடித்து எகிப்தை உரோம் இராச்சியத்தின் பகுதியாக்கியது. 4 - கிறித்துநாதர் பிறந்ததாகக் கொள்ளப்படும் ஆண்டு. கிறித்துவ சகாப்தம்; உரோமின் வீழ்ச்சி, முகமத மதத்தின் எழுச்சி கி.பி. 30 - யேசுநாதர் சிலுவையிலறையப் பட்டது. 61 - போடிசியா என்னும் இராணி உரோமின் பட்டா ளத்தை (பிரிட்டனில்) படுகொலை செய்தது. 64 - உரோம் எரிக்கப்பட்டது; நீரோ கிறித்தவரைத் தண்டித்தது. 68 - நீரோ தற்கொலை புரிந்து கொண்டது. 69 - வெ°பாசியன் (Vespasean) அரச பரம்பரை 70 - தித° (Titus) எருசலேமை அழித்தது 70 - விசூவிய° மலை வெடித்து பொப்பையையும் எர்குலானியத்தையும் அழித்தது. 117 - ஆட்ரியன் (Hardrean) உரோமன் சக்ரவர்த்தியானது 161-180 - மார்கு° அர்லியசின் (Marcus Aurelius) ஆட்சி 220 - ஹான் (Han) அரச பரம்பரையின் முடிவு சீனாவில் 284 - இடையேகிளிதன் (Diocletian) உரோமன் சக்கரவர்த்தி யாக வந்து கிறித்துவரைத் துன்புறுத்தியது. 306 - கொன்°தாந்தின் உரோமன் சக்ரவர்த்தியாக வந்து கிறித்துவ மதத்தைத் தழுவியது. 330 - உரோம் தலைநகரம் பைசாந்தியத்துக்கு மாற்றப்பட்டு கொன்°தாந்தினொப்பிளென வழங்கப்பட்டது. 337 - தியோடோசிய° கிழக்கிலும் மேற்கிலும் சக்கரவர்த்தி யாக வந்து கிறி°துவமத மொழிந்த சமயங்களை நசுக்குதல் 406 - கோல்மீது அன்னியர் படை எடுத்தது. 410 - அல்லாரிக் என்னும் கொத்திய தளபதி உரோமைக் கொள்ளையிட்டது. 429 - வண்டல் (Vandals) தென் °பேயினில் குடியேறியது. அங்கிளோசாக்சனியர் பிரிட்டன்மீது படை எடுத்தது. 451 - அவுணரின் (Huns) அரசனாகிய அட்டிலா கோலை (பிரான்°) தாக்கியதும் அவன் உரோமராலும் பிராங்குகளாலும் தோற்கடிக்கப்பட்டதும். 455 - வண்டால்கள் உரோமைச் சூறையாடியது. 460 - பத்திரிசு ஞானியர் அயர்லாந்து மக்களை உரோமன் கத்தோலிக்க மதத்துக்குத் திருப்பியது. 476 - மேற்கத்திய சக்கராதிபத்தியத்தின் முடிவு 493 - தியடோரிக் இத்தாலியில் அரசனானது. 527-565 - ய°தினியன் பைசாந்திய சக்கரவர்த்தியானது 558 - உலொம்பாட் வட இத்தாலியை வெற்றிகொண்டது. 570 - மகமது நபி மெக்காவில் பிறந்தது 618 - சீனாவில் தாங் (Tang) அரச பரம்பரை 622 - மகமதிய சகம்; மகமது நபி மெதினாவுக்கு ஓடிச் சென்றது. 624-646 - அராபிய மகமதியர் பாரசீகத்தையும் எகிப்தையும் வென்றது. 711 - மகமதிய பட்டாளம் ஆப்பிரிக்காவிலிருந்து இ°பே யினை வென்றது. 732 - மகமதியர் பிராங்குகளால் தோற்கடிக்கப்பட்டது. 750 - மகமதிய படையெடுப்பாளர் இ°பேயினில் மூர் இராச்சியத்தை நாட்டியது. 786-809 - ஹரவுன் அல் இராயசிட் பாக்டாட்டில் கலிபாக விருந்து ஆட்சி. 800 - சாள்மாக்னி மூன்றாம் போப்லியோவால் உரோமில் முடிசூட்டப்பட்டது. 1016 - இங்கிலாந்து, டென்மாக், நர்வே முதலிய நாடுகளுக்கு கன்யூட் அரசனானது. 1095 - முதலாம் சிலுவைப் போர் பாப்பு 2-ம் ஏர்பனால் தொடக்கப்பட்டது. 1147-49 - இரண்டாம் சிலுவைப் போர் 1189-92 - மூன்றாம் சிலுவைப் போர் 1200 - பாரிசிலும் ஆக்°போர்ட்டிலும் பல்கலைக் கழகம் தாபிக்கப்பட்டது. 1202-1204 - நான்காம் சிலுவைப் போர் 1204 - சிலுவைப் போர்காரர் கொன்°தாந்தினோப்பிளைப் பிடித்தது. 1212 - சிறுவர் சிலுவைப் போர் 1215 - மாக்னா காட்டா (மகாசாசனம்) 1228-29 - ஐந்தாம் சிலுவைப் போர் 1233 - IX பாப்பு கிரிகரி இ°பேயினில் இன்குயிசிசன் (Inquisition) ஆரம்பித்தது. 1248-54 - ஆறாம் சிலுவைப் போர் 1259-92 - சீனாவில் குப்பிளாய்கானின் ஆட்சி 1271 - மார்க்கோபோலோ வெனிஸிலிருந்து பயணமானது. 1280 - குப்பிளாய்கான் யூவான் அரச பரம்பரையைத் தொடக்கியது. 1385 - சாசர் காலம் 1429 - யான் அவ் ஆக் ஆர்ளியன்சுக்குப் பிரெஞ்சுப் படையை நடத்திச் சென்று ஆங்கிலப் படையைத் துரத்தியது. 1431 - யான் அவ் ஆக் 19ஆம் வயதில் (Rouen) என்னு மிடத்தில் தூணோடு கட்டி உயிருடன் எரிக்கப்பட்டது. மறுமலர்ச்சியும் சீர்திருத்தமும் 1445 - போர்ச்சுக்கீசியர் ஆப்பிரிக்காவின் மிக மேற்கிலுள்ள வேடி (Verde) முனையைக் கண்டுபிடித்தது. 1446 - முதல் அச்சுப் புத்தகங்கள் 1447 - பாப்பு நான்காம் நிக்கலசால் வத்திக்கான் வாசிகசாலை தாபிக்கப்பட்டது. 1453 - துருக்கர் கொன்°தாந்தினோப்பிளைப் பிடித்து ஒட்டமன் (Ottoman) சக்கராதிபத்தியத்தின் தலை நகராக்கியது 1455-85 - இங்கிலாந்தில் உரோச° (Roses) போர் 1481 - போர்ச்சுக்கீசியர் ஆப்பிரிக்க அடிமை வாணிகத்தை ஆரம்பித்தது. 1486 - பதலமியுடைய° நன்னம்பிக்கை முனைக்குச் சென்று திரும்பியது. 1492 - கிரி°தோபர் கொலம்ப° அத்லாந்திக் கடலைக் கடந்து அமெரிக்காவைக் கண்டுபிடித்தது. 1493-1543 - கொப்பர் நிகசின் காலமும் புதியவான ஆராய்ச்சியும் 1497 - அமெரிக்கன் வெ°பூசிய° (American Vespucius) என்னும் இத்தாலியர் அமெரிக்காவுக்குப் பிரயாண மானது. இவருக்குப் பின் அமெரிக்காவுக்கு இப் போதைய பெயர் வழங்குகின்றது. 1498 - வ°கோடகாமா நன்னம்பிக்கை முனையைக் கடந்து இந்தியாவுக்குச் சென்றது. 1499 - சுவிட்சர்லாந்து குடியரசானது. 1508 - இ°பேயினிலிருந்து மூர்கள் துரத்தப்பட்டது. 1513 - பல்போவோ (Balboa) பசிபிக் கடலைக் கண்டு பிடித்தது. 1513 - மார்ட்டின் லூதர் தமது 95 கொள்கைகளை விட்டன் பேக்கில் (Wittenbergh) வெளியிட்டது. 1519 - பேர்ணாண்டோ மாகெலன் (Magellan) உலகைச் சுற்றிக் கடற் பயணஞ் செய்தது. 1519-21 - கோட்டி° மெக்சிக்கோவைப் பிடித்தது. 1521 - உலூதர் திருச்சபையால் நீக்கப்பட்டது. 1530 - பிசாரோ பேரு நகர்மீது படையெடுத்தது. 1530 - 80 - இத்தாலிய ஓவியக் கலையின் பொற்காலம். 1534 - லூதர் சேர்மன் மொழியில் பைபிளை மொழி பெயர்த்தது. 1535 - முதல் ஆங்கில பைபிள் மொழி பெயர்த்தது (Mules Goverdale)-ஆல் வெளியிடப்பட்டது. 1542 - ஹேர்னாண்டோ டிசோடோ மிசூரிமிசுப்பி ஆற்றைக் கண்டுபிடித்தது. 1553-58 - இங்கிலாந்தில் மேரியின் ஆட்சி; 277 பேர் தூணோடு கட்டிக் கொளுத்தப்பட்டது. 1572 - பாரிசில் பதலமீயூ°டைய° நாளில் புரத்த°தாந்து மதத்தினர் கொலை. 1587 - மேரி (Mary Queen of Scots) கொலைத் தண்டனை பெற்றது. 1590-1616 - ஆங்கில நாடகங்களின் பொற்காலம் (சேக்°பீயர்) (Marlowe Beaumont and Fletcher) 1600 - முதல் பிரிட்டிஷ் இந்தியா கொம்பனி 1603 - இங்கிலாந்து, °காத்லந்து ஆட்சிகள் இணைக்கப்பட்டது. 1605 - வெடிமருந்துச் சதி (Gun Powder Plot) 1606-07 - டச்சுப் போச்சுக்கேசியரை மலாக்காவிலும் சிபிரால்டரி லும் தோற்கடித்தது. 1619 - அடிமைகள் டச்சுக் கப்பல்களில் அமெரிக்க குடியேற்ற நாடுகளுக்குக் கொண்டு போகப்பட்டது. 1620 - மேபிளவரில் யாத்திரைப் பெரியார் சென்று பிளிமொதில் இறங்கியது. 1644 - மஞ்சுக்கள் சீனாவில் மிங் வமிசத்தை ஒழித்தது. 1649 - முதலாம் சார்ல° சிரச் சேதம் செய்யப்பட்டது. 1649-53 - ஓலிவர் குரொம் வெல் இங்கிலாந்தில் காமன்வெல்தைக் கொண்டு வந்தது. 1660 - இங்கிலாந்தில் முடியாட்சி மறுபடி கொண்டு வரப்பட்டது; சார்ள்° 1665 - இலண்டனில் கொள்ளை நோய்; பெரிய தீ லண்டனில், 13,200 வீடுகளும் 89 கோயில்களும் எரிந்தன. 1673 - மார்குவட் யூலியட் (Marquette and Joliet) என்போர் மிசிசிப்பியைக் கண்டுபிடித்தது. 1691 - அமெரிக்காவில் முதல் போ°டாபீ° 1696-1725 - உருசியாவில் பெரிய பீட்டரின் ஆட்சி 1704 - °பானியரிடமிருந்து ஆங்கிலர் சிபிரால்டரைப் பிடித்தது. 1712 - நியுயார்க்கில் அடிமைகள் கலகமும், அதனை அடக்குதலும். 1741 - நியுயார்க்கில் 2-வது கலகமும், அதனை அடக்குதலும் 1752 - பெஞ்சமின் பிராங்லின் (Banjamin Franklin) காற்றாடியின் பரிசோதனை மூலம் மின்சாரத்தைக் கண்டு பிடித்தது. 1752 - சாமுவேல் யோன்சன் ஆங்கில அகராதியை வெளியிட்டது. 1756 - கல்கத்தா இருட்டறை 1756-73 - பிரிட்டனும் பிரான்சும் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் தலைமை வகிக்கப் போராட்டம். 1765 - ஆர்கிரீவஸ் (Hargreaves) நூல் நூற்கும் தறி (Spinning Jenny); வாட்டின் நீராவி எந்திரம் 1767 - ஆக்ரைட்டின் (Ark Wright) நூல் நூற்கும் தறி (Spinning Frame) பாவிப்புக்குக் கொண்டு வரப்பட்டது. 1779 - குறம்டன் (Crompton) நூல் நூற்கும் எந்திரத்தை (Spinning Mule) கண்டுபிடித்தது. 1785 - கார்ட்ரைட் (Carts right) விசைத் தறியை செய்து முடித்தது. 1793 - எலிவிட்நி (Eli Whitney) பஞ்சு ஆட்டும் எந்திரத்தை (Cotton gin) கண்டுபிடித்தது 1770 - பொ°டானில் பிரிட்டிசார் அமெரிக்கரைப் படுகொலை செய்தது. 1772 - உருசியா போலந்து, பிரசியா ஆ°திரியா என்னும் பிரிவுகளாகியது 1773 - பொ°டன் துறைமுகத்தில் தேயிலை கொட்டி அழிக்கப்பட்டது; அமெரிக்க சுதந்திரப் போர் 1775 - அமெரிக்காவில் சுதந்திரப் போர் 1776 - அமெரிக்க சுதந்திர உடன்படிக்கை 1784 - முதல் தினசரி அமெரிக்காவில் 1788 - வாரன் கே°டிங்° (இந்திய கவர்னர் செனரல்) இலண்டனில் விசாரணை செய்யப்பட்டது. 1791 - நெப்போலியன் பிரெஞ்சு ஆட்சித் தலைவன் 1793 - XVI லூயியும் மேரி அந்தோனெட்டும் (பிரான்°) சிரச்சேதம் செய்யப்பட்டது. 1796 - பால்கட்டுதலை யென்னர் (Jenner) கண்டு பிடித்தது. 1798 - நெப்போலியன் எகிப்துக்குப் போனது; நீலநதிப் போர் 1804 - நெப்போலியன் சக்கரவர்த்தி 1805 - திரவல்கார் போர்; நெல்சனின் மரணம் 1806 - பரிசுத்த உரோம சக்கராதிபத்தியத்தின் குலைவு 1807 - உரொபேட் பல்டனின் (Fulton) நீராவிப் படகு ஓட்டத்துக்கு விடப்பட்டது. 1810-25 - பைரன், செல்லி, கீட்° (Keats) என்பவர்களின் காலம் 1812 - நெப்போலியன் மொ°கோவிலிருந்து பின் காட்டியது. 1815 - நெப்போலியன் எல்பாவிலிருந்து வந்து வாட்டலோப் போரில் தோற்றது; அவன் செண் ஏலினாவுக்கு நாடு கடத்தப்பட்டது. 1819 - முதல் ஒல்லாந்த படகு சாவன்னா அத்லாந்திக் கடலைக் கடந்தது. 1821 - கிரேக்கர் துருக்கி ஆட்சியை எதிர்த்துக் கலகஞ் செய்தது. 1822 - போர்ச்சுக்கலில் புரட்சி 1827 - அமெரிக்காவில் அடிமை ஒழிவு 1829 - கிரீ° விடுதலை பெற்றது 1830 - முதல் ஆங்கிலர் புகை வண்டிப்பாதை லிவர்பூலுக்கும் மான்செ°டருக்குமிடையில் திறக்கப்பட்டது. 1833 - பிரிட்டிஷ் பார்லிமெண்டில் பிரிட்டிஷ் சக்கராதிபத்தியத் தில் அடிமையை ஒழிக்கச் சட்டங் கொண்டு வந்தது. 1837 - விக்டோரியா இராணியின் ஆட்சி 1839 - பெல்சியம் நெதர்லண்டு இராச்சியம் பிரிந்தது. 1839 - அமெரிக்காவில் முதல் தந்தி “லைன்” போடப் பட்டது. 1845 - அமெரிக்க இலக்கியத்தின் பொற்காலம் - எமெர்சன் (Thorean, Hawthorne, Longfellow, Lowell, Hoe) 1846-48 - ஐக்கிய அமெரிக்காவுக்கும் மெக்சிக்கோவுக்கிமிடை யில் போர். 1848 - காள்மாக்°, பிரடெரிக் என்செல° (Frederic Engels) பொது உடைமை அறிக்கை வெளியீடு 1850 - உருசிய பெரிய எழுத்தாளர் (Turgner, Dostoersky Tolstoy) 1855 - உருசியாவுக் கெதிராக பிரான்சும் இங்கிலாந்தும் கிருமியப் போர்; நியுபௌண்லந்துக்கும் ஐயர்லந்துக்குமிடையில் கடற் தந்திக் கம்பி. 1857 - சிப்பாய் கலகம் 1858 - கிழக்கிந்திய கம்பனி குலைக்கப்பட்டது; இந்தியா இங்கிலாந்தின் முடியாட்சிக்குட்படுத்தப்பட்டது. 1859 - முதல் மண்ணெண்ணெய் கிணறு தித்துஸவிலாவில் (Titasvilla) திறக்கப்பட்டது. 1865 - அமெரிக்காவில் அடிமை ஒழிவு 1867 - அல°கா உருசியாவிடமிருந்து வாங்கப்பட்டது. 1869 - கண்டம் விட்டுக் கண்டஞ் செல்லும் அமெரிக்க புகை வண்டிப் பாதை திறக்கப்பட்டது; சுய° கால்வாய் திறக்கப் பட்டது. 1871 - சிக்காகோவில் பெரிய தீ; 18,000 கட்டடங்களின் அழிவு. 1877 - உருசியா துருக்கிப் போர்; விக்டோரியா இந்திய சக்கரவர்த்தினி 1822 - பனாமாக் கால்வாய் பிரெஞ்சுக்காரரால் ஆரம்பிக்கப் பட்டது. 1883 - பிரிட்டன் எகிப்தைப் பிடித்தது. 1883 - நியுயோக்கிய சுதந்திரச் சிலை திரை நீக்கஞ் செய்யப் பட்டது. 1895 - எக்°கதிர் உரோண்டஜன் கண்டுபிடித்தது; எடிசன் போனோகிராவ் கண்டுபிடித்தது. 1897 - துருக்கி-கிரேக்க போர் 1898 - பயரிகூரி, மேரிகூரி இரேடியத்தைக் கண்டுபிடித்தது. 1899 - போயருக்கும் ஆங்கிலருக்குமிடையில் தென்னாப் பிரிக்காவில் போர். 1901 - மார்க்கொனி அத்லாந்திக் கடலுக்கூடாக கம்பி யில்லாத் தந்தி மூலம் செய்தி அனுப்பியது. 1902 - பிலி (Mt. Pelee) வெடித்தது 30,000 மக்கள் இறந்தது. 1902 - முதல் உலகக்கோடு ஏக்கில் (Hague) திறக்கப்பட்டது. 1903 - ரைட் சகோதரர் முதல் ஆகாய விமானத்தில் பறந்தது. 1904 - உருசிய ஜப்பானிய போர்; ஐக்கிய அமெரிக்க பனாமாக் கால்வாயைப் பிடித்தது. 1909 - (Robert E. Peary) வடதுருவத்தைக் கண்டு பிடித்தது; ஹென்றி போட் பெரிய அளவில் மோட்டார் வாகனங் களைச் செய்ய ஆரம்பித்தது. 1912 - சீனா குடியரசானது; சௌத்ஹம்படனிலிருந்து நியுயார்க்குக்குப் பயணமான (Titanic) என்னும் நீராவிக் கப்பல் கன்னிப் பயணத்தில் பனிக்கட்டிப் பாறையில் மோதி மூழ்கியது; 1517 பேர் மாண்டார்கள். 1914 - கப்பல் பனாமாக் கால்வாய்க்கூடாக முதல் முறை சென்றது; முதல் உலகப் போர் 1918 - முதல் உலகப் போர் முடிவு; கேய்சர் வில்லியம் II முடிதுறந்து ஒல்லாந்துக்கு ஓடிப்போனது 1919 - வேர்சேயில்° ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது; இத்தாலியில் பாசி°த் கிளர்ச்சி தொடக்கம்; அமிர்சாரில் (Amiritzar) படுகொலை. 1920 - முதல் சர்வதேச சங்கக் (லீக் ஆவ் நேசன்°) கூட்டம் ஜெனிவாவில் நடைபெற்றது; அமெரிக்காவில் பெண் களுக்கு வாக்குரிமை. 1922 - அயர்லாந்தில் உள்நாட்டுக் கலகம்; தென் அயர்லாந்து பிரிட்டனி லிருந்து பிரிந்தது. 1923 - துருக்கி குடியரசாகப் பிரகடனம். 1924 - இலெனின் மரணம்; யோசப் °டாலின் உருசிய குடியரசுத் தலைவர். 1928 - நியுயார்க் நகரில் பேசும் படம் முதலிற் காட்டப் பட்டது. 1929 - வத்திக்கான் என்னும் பெயரில் பாப்பு இராச்சியம் அமைக்கப்பட்டது; பையிட் (Byrd) தென் துருவத்தைக் கண்டுபிடித்தது. 1930-31 - யப்பானியர் மஞ்சூரியாவைப் பிடித்தது. 1931 - இ°பேயின் குடியரசானது. 1932 - உரூ°வெல்ட் குடியரசுத் தலைவராகத் தெரிவு செய்யப் பட்டது. 1933 - கிட்லர் சேர்மனியின் சான்சலரானது. 1935 - இத்தாலி எதியோப்பியாமீது படையெடுத்தது. 1936 - ஹெய்லிஇலாசி சக்கரவர்த்தி அடிசபாபாவிலிருந்து ஓடியது; இ°பேயினில் உள்நாட்டுக் கலகம்; 5ஆம் ஜோட்° மரணம்; 8ஆம் எட்வார்ட் பட்டத்துக்கு வந்தது; முடி துறந்தது; ஆறாம் ஜார்ஜ் அரசனானது; உருசியா “Union of Soviet Socialist Republic” (U.S.S.R.) என ஆட்சி முறைக்குப் பெயரிடப்பட்டது. 1937 - ஜப்பானுக்கும் சீனாவுக்கும் போர்; சாம்பர்லின் இங்கிலாந்தின் பிரதம மந்திரி 1938 - இரண்டாவது உலகப் போர் 1939 - இ°பானிய உள்நாட்டுக் கலகம் முடிவு 1945 - 2-வது உலகப்போர் முடிவு; நாகசாகி, ஹிரசோமாவில் அமெரிக்கர் அணுக்குண்டு வீசியது. 1946 - பிலிப்பைன் தீவுகள் சுதந்திரம் பெற்றது. 1947 - இந்தியா சுதந்திரம் அடைந்தது. 1948 - பர்மா சுதந்திரம் பெற்றது; மகாத்துமா காந்தி கொலை யுண்டது. 1948 - இஸிரேயில் இராச்சியம் அமைக்கப்பட்டது (மே. 14) பர்மா சுதந்திரம் பெற்றது (ஜனவரி 4) இலங்கை சுதந்திரம் பெற்றது (ஏப்ரல் 4) 1949 - வட அத்லாந்திக் ஒப்பந்தம் (ஏப்ரல் 4) அயர் குடியரசானது இந்தோனேசீயா சுதந்திரம் பெற்றது (டிசம். 27) 1950 - வட கொரியா தென் கொரியாமீது போர் தொடுத்தது (சூன் 25) 1952 - ஜாட்ஜ் VI மரணம் ஐசின்கோவர் ஐக்கிய அமெரிக்க சனாதிபதியானது. 1953 - இ°டாலின் (உருசிய குடியரசுத் தலைவர்) மரணம். இமயமலைச் சிகரம் எட்டப்பட்டது. (மே.29) 1954 - இந்துச் சீனப் போர் முடிவு 1956 - துனீசியாவும் மொராக்கோவும் சுதந்திரம் பெற்றது; நாசர் சுய° கால்வாயைத் தேசியமாக்கியது 1957 - கானா (கோல்ட் கோ°ட்) விடுதலை பெற்றது (மார்ச் 6) மலாயா சுதந்திரம் பெற்றது. உருசியா °புட்நிக் I த°புட்நிக் II வானவெளிக்கு அனுப்பப்பட்டது . பெரிய கண்டுபிடிப்புகள் (கால முறையில்) 1450 - உலோக அச்செழுத்து குதென்பேக் (Gutenbergh) - சேர்மன் 1608 - தொலை நோக்கி - இலிப்பெர்ஷி (Lippershey) டச்சுக்காரர் 1643 - காற்றுப் பாரமானி (பரோமீட்டர்) தொரிசெலி (Torricelli) இத்தாலியர். 1743 - இடிவாங்கி - பிராங்லின் (Firanklin) அமெரிக்கர். 1765 - நீராவி எந்திரம் - ஜேம்ஸ்வாட் (James Watt) இ°கொத்தியர். 1786 - எந்திரத்தில் வெட்டும் ஆணி - இரீட் (Reed) அமெரிக்கர். 1793 - பஞ்சுகடையும் எந்திரம் - விட்னி (Whitney) அமெரிக்கர். 1807 - நீராவிப் படகு - பல்டன் (Fulton) அமெரிக்கர். 1815 - சுரங்கப் பாதுகாப்பு விளக்கு - (Davy) ஆங்கிலர் 1819 - மார்பு சோதினி (Stethoscope °டெதொ°கோப்) இலின்னெக் (Laennec) பிரெஞ்சு 1827 - உரைஞ்சித் தீமூட்டும் தீக்குச்சு வாக்கர் (Walker) ஆங்கிலர் 1829 - நீராவி வண்டி - இ°டிபின்சன் (Stephenson) ஆங்கிலர் 1831 - மின்சாரசனனி (Dyanamo electric machine) பராடே (Faraday) ஆங்கிலர் 1837 - தந்தி மோர்° (Morse) அமெரிக்கர் 1841 - சுங்குப்புரி முன்தள்ளி (Screw Propeller) எரிசன் (Ericsson) சுவிடிஷ். 1842 - எதர் (Ether) உணர்ச்சி நீக்கி என்பதை - உலோங் (Long) அமெரிக்கர். 1844 - இரப்பரை உருக்கி ஒட்டுதல் - (Valcanized rubber) குட்இயர் (Goodyear) அமெரிக்கர் 1846 - தையல் எந்திரம் - ஹோ (Howe) அமெரிக்கர் 1851 - தூண்டு சுருள் (Induction Coil) உரும் கோவ் (Ruhm Korff) சேர்மன் 1852 - மின்சார உயர்த்தி (Power elevator) ஒட்டி° (Otis) அமெரிக்கர். 1856 - உருக்கு பெ°மர் (Bessemer), ஆங்கிலர் 1858 - அத்லாந்திக் கடலுக்கூடாகக் கடல் தந்திக் கம்பி - பீல்ட் (Field) அமெரிக்கர் 1866 - இடைனமிட் - நோபெல் (Nobel) சுவிடிஷ் 1868 - புல்வெட்டும் எந்திரம் (Lawn mower) ஹில்° (Hills) அமெரிக்கர். 1868 - தட்டச்சு (Typewriter) சோல்° (Sholes) அமெரிக்கர். 1869 - காற்று முட்டுக்கட்டை (Air brake) வெ°டிங்ஹொ° (Westinhouse) அமெரிக்கர். 1876 - தொலைபேசி (தெலிபோன்) பெல் (Bell) அமெரிக்கர். 1877 - ஒலிபெருக்கி (Microphone) பேர்லினர் (Berliner) அமெரிக்கர். 1877 - போனோ கிராவ் எடிசன் (Edison) அமெரிக்கர். 1879 - மின் விளக்கு எடிசன் 1879 - கணக்குப் பதிவு (Cash register) இரிட்டி (Ritty) அமெரிக்கர். 1884 - பவுண்டின் பேனா - வாட்டர்மன் (Waterman) அமெரிக்கர். 1885 - இலைனோடைப் - மேர்கென்தலர் (Mergenthaler) அமெரிக்கர். 1887 - மின்சார மோட்டார் - டெ°லா (Tesla) அமெரிக்கர் 1888 - சுருள் பில்ம் பயன்படுத்தும் கைக்கமரா ஈ°ட்மனும் வாக்கரும் (Eastman and Walker) அமெரிக்கர். 1889 - இராயன் செயற்கைப்பட்டு டி-சார்டோன்ட் (De Chardon-net) பிரெஞ்சு. 1892 - நிற ஒளிப் படம் (Colour Photography) - ஐவி° (Ives) அமெரிக்கர். 1893 - இடீசல் எந்திரம் (Diesel Engine) டீசெல் - சர்மன். 1895 - Photo electric cell - எலச்டரும் கெய்தலும் (Elster and Geitel) சர்மன். 1900 - நீர்மூழ்கி - ஒல்லாந்து (Holland) அமெரிக்கர். 1903 - ஆகாய விமானம் இரைட் சகோதரர்கள் (Wright brothers) அமெரிக்கர். 1905 - Groscope stabilizer இ°பெரி (Sperry) அமெரிக்கர். 1907 - இரேடியோ வெற்றிடக் குழாய் (Radio Vacuum tube) De Forest அமெரிக்கர். 1907 - பேக்லைட், பேக்லண்ட் (Bakeland) பெல்சிய - அமெரிக்கர். 1914 - யுத்தத் தாங்கி சுவிண்டன் (Swinton) ஆங்கிலர் 1920 - ஒட்டோ கிரையோ (சிறிய விமானம்) (De la Cierva) அமெரிக்கர். 1925 - தெலிவிசன் பயாட் (J.L. Baird) °காத்தியர். 1937 - நைலன், கரேதோர்° (Carothers) அமெரிக்கர். 1945 - அணுக்குண்டு - அமெரிக்க ஆங்கில விஞ்ஞானிகள். பெரிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் (காலமுறைப்படி) 1540 - வான சாத்திர முறை - கொபர்நிக° (Copernicus) போலந்தியர். 1609 - கிரகங்களின் இயக்கம் - கெல்பர் (Kelper) - சர்மன் 1623 - இரத்தச் சுற்றோட்டம் - ஹார்வே (Harvey) - ஆங்கிலர். 1665 - கவர்ச்சிகளைப் பற்றிய விதி நியூட்டன் (Newton) - ஆங்கிலர். 1774 - உயிர் வாயு (Oxygen) பிரீ°ட்லி (Priestley) - ஆங்கிலர். 1790 - (Quantitative Chemistry) - இலவோசியர் (Lavoisier) பிரான்சியர். 1796 - அம்மைப் பால் குத்துதல் யென்னர் (Jenner) - ஆங்கிலர். 1810 - அணுக் கொள்கை - டால்டன் (Dalton) - ஆங்கிலர். 1823 - வாயுக்களைத் திரவகமாக்கல் - பாரடே (Faraday) ஆங்கிலர். 1851 - (Dynamic Theory of heat) கெல்வின் (Kelvin) - ஆங்கிலர். 1859 - உயிர்களின் உருவ வேறுபாடு (Origin of Species) இடார்வின் (Darwin) ஆங்கிலர். 1865 - கிருமி நீக்கம் செய்து சத்திர சிகிச்சை (Antiseptic Surgery) இலி°டர் (Lister) - ஆங்கிலர் 1866 - பரம்பரை பற்றிய விதி - மென்டல் (Mendel) - ஆ°திரியர். 1876 - கிருமிகள் பற்றிய கொள்கை பா°ருவர் (Pasteur) - பிரெஞ்சு. 1880 - நெருப்புக் காய்ச்சல் கிருமி - கொச் (Koch) சர்மன். 1882 - வெறி நாய் கடியாலுண்டாகும் ஹைடிரோ போலியா நோய்க் கிருமி - பா°ருவர் (Pasteur) பிரெஞ்சு. 1882 - காசநோய் கிருமி - கொச் (Koch) சர்மன் 1883 - கண்டக்கரப்பன் (டிப்திரியா) கிருமி கிளெப்° (Klebs) சர்மன். 1892 - இருதிசை மின் ஓட்டம் (Alternating Current) விதிகள் - இ°டின்மேற்° (Steinmetz) - அமெரிக்கர். 1895 - X கதிர் உரொன்ட்சென் (Roentgen) - சர்மன் 1897 - பெரிபெரி நோய்க்குக் காரணம் (Eijkman). 1898 - இரேடியம் கூரி (Curie) - பிரெஞ்சு. 1913 - மின் அணு, (எலக்ரன்) கொள்கை போன் (Bohn) இடென்மாக்கியர். 1934 - பாரமான நீர் - யூரே (Urey) அமெரிக்கர். 1939 - அணுக்களின் Nucleus ஐ உடைத்தல் - (Hahn, Meitner, Frisch, Strassman) - சர்மன். 1941 - அணுக் குண்டு செய்யக் கண்டு பிடித்தது - (Otto Hahn) சர்மன். 1946 - தொகுப்புப் பெனிசிலின் - (Du Vigneaud) - பிரெஞ்சு. 1953 - சிறுபிள்ளை வாதத்தடை மருந்து (antipolio Vaccine by Dr. Jonas E. Salk) 1956 - கடல் ஆழத்தில் படம் பிடித்தல் (Under-sea Photography Edgerton). 1958 - தென் துருவத்தைத் தரை மார்க்கமாக அடைந்தது. (Edmund Hillary)  உமாமகேசுவரம்... 1 2 15 உமாபதி சிவாசாரியார் 14 இலாஞ்சதிசன் 3 4 அசுர்பானிப்பால்... 13 இலாசரஸ் 12 இராசராசன் 5 அம்பீர் 6 அம்மங்காதேவி 11 இராசப்ப கவிராயர் 10 இடாரியஸ் 7 அஸ்டின் ஜேன் 8 ஆகவமல்லன் இடன்லப்... 9 32 சிறீரங்க 17 என்ஸ்டீன்... 18 ஏசுநாதர் 31 சிறீநாகன்... 30 சாந்தலிங்க... 19 கரகல்லா 20 கரவேலன் 29 சாந்தலிங்க... 28 சங்கிலி 21 காத்தியாயனர் 22 காந்தி... சங்காய் சேக் 27 26 கெல்வின் 23 கிளாக் மாக்ச் வெல் 24 கிளிமெண்ட்... 25 கெமல் அலதுர்க் 48 பொன்னவன் 33 செயற்கைப் பட்டு... 34 செய்குத்தம்பி... பொன்னம்பல... 47 46 பீமா 35 தட்டச்சு 36 தண்டி... 45 பீமகவி 44 பல்லாலன்... 37 திருக்குருகைப்... 38 திருக்குறுங்... 43 பல்லவ ராச்சியத்தின்... 42 நீலகண்ட... 39 தொல்காப்பியதேவர் 40 தோடர்மால்... 41 நீலகண்ட... 64 இந்திய அரச பரம்பரைகள் 49 மராட்டியர்... 50 மருது சகோதரர் 63 இந்திய அரச பரம்பரைகள் 62 இந்திய அரச பரம்பரைகள் 51 முராரி (வ) 52 முருகதாச... 61 இந்திய அரச பரம்பரைகள் 60 இந்திய அரச பரம்பரைகள் 53 வக்கடகர் 54 வங்கநாசிகதிசன் 59 இந்திய அரச பரம்பரைகள் 58 இந்திய அரச பரம்பரைகள் 55 விசுவநாதன் 56 விஞ்ஞானபிட்சு 57 வோல்டா 80 இந்தியா சம்பந்தப்பட்ட... 65 இந்திய அரச பரம்பரைகள் 66 இந்திய அரச பரம்பரைகள் 79 இந்தியா சம்பந்தப்பட்ட... 78 இந்தியா சம்பந்தப்பட்ட... 67 இந்திய அரச பரம்பரைகள் 68 கலைக்களஞ்சியத்தில்... 77 76 கலைக்களஞ்சியத்தில்... 69 கலைக்களஞ்சியத்தில்... 70 கலைக்களஞ்சியத்தில்... 75 கலைக்களஞ்சியத்தில்... 74 கலைக்களஞ்சியத்தில்... கலைக்களஞ்சியத்தில்... 71 72 கலைக்களஞ்சியத்தில்... 73 கலைக்களஞ்சியத்தில்... 96 உலக வரலாறு... 81 82 உலக வரலாறு... 95 உலக வரலாறு... 94 உலக வரலாறு... 83 உலக வரலாறு... 84 உலக வரலாறு... உலக வரலாறு... 93 92 உலக வரலாறு... 85 உலக வரலாறு... 86 உலக வரலாறு... 91 உலக வரலாறு... 90 உலக வரலாறு... 87 உலக வரலாறு... 88 உலக வரலாறு... 89 உலக வரலாறு... xvi தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967) தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே. ‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’ என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர். ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:- தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார். ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார். தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின. ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும். தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம். அகராதிப் பணி தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை. ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார். இலக்கியப் பணி புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள். பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர். தமிழ்மொழி - தமிழினம் தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை. திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும் தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:- திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார். பிற மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார். “ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.” வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்! தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன். அன்பன் கோ. தேவராசன் அகம் நுதலுதல் உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம். உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது. தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது. தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம். எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள். இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது. எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை. வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது. அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன. உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும். இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது. சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி. அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம். உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது. நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம். அன்பன் புலவர் த. ஆறுமுகன் பதிப்புரை வளம் சேர்க்கும் பணி “குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம். இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன. ந.சி. கந்தையா இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது. தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர். தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது. தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர். நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள் 1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன. வாழும் மொழி தமிழ் தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம். ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா? தமிழர்களின் கடன் இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன். மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள். எழுச்சிக்கு வித்திட... உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது. இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதிப்பகத்தார் உள்ளடக்கம் ந.சி. கந்தையாப் பிள்ளை வாழ்வும் தொண்டும். . . . iii அகம் நுதலுதல் . . . vii பதிப்புரை . . . xi நூல் 1. காலக்குறிப்பு அகராதி . . . 1 காலக்குறிப்பு அகராதி ஆசிரியர் ந.சி. கந்தையா தொகுப்பாளர் புலவர் கோ. தேவராசன் எம்.ஏ.,பி.எட்., பதிப்பாளர் இ. இனியன் அமிழ்தம் பதிப்பகம் 328/10 திவான்சாகிப் தோட்டம் இராயப்பேட்டை, சென்னை - 14. நூற்குறிப்பு நூற்பெயர் : காலக்குறிப்பு அகராதி ஆசிரியர் : ந.சி. கந்தையா பதிப்பாளர் : இ. இனியன் முதற் பதிப்பு : 2003 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16 + 96 = 112 படிகள் : 1000 விலை : உரு. 50 நூலாக்கம் : பாவாணர் கணினி 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : பிரேம் அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் 20 அஜீஸ் முல்க் 5வது தெரு ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 கட்டமைப்பு : இயல்பு வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம் 328/10 திவான்சாகிப் தோட்டம், டி.டி.கே. சாலை, இராயப்பேட்டை, சென்னை - 600 014. i ii xv xiv iii iv xiii xii v vi xi x vii viii ix