16 தமிழகம் கடவுள் வணக்கம் “அரியசடை முடிபோற்றி யருள்பொழிசெம் முகம்போற்றி விரையிதழி மலரணிநூல் விளங்கியமார் பகம்போற்றி மருவுமுயர் பேரழகு வளருதர நிலைபோற்றி திருவளர்செந் தமிழ்ச்சொக்கன் திருவடித்தா மரைபோற்றி” “தவளத் தாமரைத் தாதார் கோயில் அவளைப் போற்றுதும் அருந்தமிழ் குறித்தே” தமிழ்த் தெய்வ வணக்கம் “மறைமுதற் கிளந்த வாயான் மதிமுகிழ் முடித்த வேணி இறைவர்தம் பெயரை நாட்டி இலக்கணஞ் செய்யப் பெற்றே அறைகடல் வரைப்பிற் பாடை யனைத்தும்வென் றாரி யத்தோ டுறழ்தரு தமிழ்த்தெய் வத்தை யுண்ணினைந் தேத்தல் செய்வாம்.” - சீகாளத்திப் புராணம். “பல்லுயிலும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினும்ஓர் எல்லையறு பரம்பொருள்முன் னிருந்தபடி யிருப்பதுபோல் கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமும்துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே யொன்றுபல ஆயிடினும் ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துமே” - மனோன்மணீயம் 1 தமிழ்நாட்டின் தொன்மை நிலை 1. குமரிக்கண்டம் இந்நிலவுலகம் இன்று நமக்கு எப்படிக் காணப்படுகின்றதோ அப்படிப் பல்லாயிர மாண்டுகளுக்குமுன் காணப்பட்டிலது; அப்படியே பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் காணப்படாது. பல்வேறு ஊழிகளிற் றோன்றிய கடற் பெருக்குகளால் நிலப்பரப்பு நீர்ப்பரப்பாகவும், நீர்ப்பரப்பு நிலப்பரப்பாகவும் மாறுதலடைந்ததுண்டு. இம் மண்ணகம் பல்வேறு காலங்களில் அடைந்திருந்த வடிவங்களை நிலநூலார் தமது உய்த்துணர்வு கொண்டு படங்களமைத்துக் காட்டியிருக்கின்றனர். ஸ்காட்எலியட்1 என்பவர் இவ்வுலகில் ஐந்து பெருங்கடற் பெருக்குகள் உண்டாயினவென்றும், அவற்றுள் முதலாவது பதினாயிரம் நூற்றாண்டுகளுக்கு முற்பட்டதென்றும், இரண்டாவது எண்ணூறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென்றும், மூன்றாவது இருநூறாயிரம் ஆண்டு களுக்கு முற்பட்டதென்றும், நாலாவது எண்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென்றும், ஐந்தாவது கி.மு. 9564இல் உண்டானதென்றும் குறிப் பிட்டிருக்கின்றனர். இப்போது அட்லாண்டிக் கடல் அலைகொழிக்கின்ற இடத்தில் முன் ஒரு பூகண்டம் விளங்கியது. அப்பூகண்டம் கடலுள் மூழ்கிப்போக அதில் மிச்சமாக விளங்கிய பொசிடோனிஸ் (posedonis) என்னும் தீவு கி.மு. 9564 ஆம் ஆண்டில் உண்டான வெள்ளத்தால் மறைந்த தெனச் சொல்லப்படுகின்றது. இதற்குச் சான்று இலண்டன் நூதனப் பொருட்காட்சிச் சாலையிலே உள்ளதும் 3500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதுமாகி (Troano Mss.) தொறானோ கையெழுத்துப் படியில் இருப்பதை ஸ்காட் எலியட் என்பவர் எடுத்துக் காட்டியிருக்கின்றனர்.2 அதன் மொழி பெயர்ப்பு வருமாறு: “ஆறாவது கான் ஆண்டில் 11ஆவது மலுக்கில் சாக் என்னும் திங்களில் அங்கு மிகவும் கடுமையான பூகம்பம் உண்டாய்ச் சூன் திங்கள் 13 ஆம் நாள் வரையும் நீடித்தது. இதன் விளைவாகச் சேற்றுமலைகளி லுள்ள நாடுகளும், மூவென்னும் தரையும் மறைந்தன, இப்பகுதிகளின் அடித்தளங்கள் எரிமலை அதிர்ச்சியினால் இடைவிடாது ஆட்டி அலைக் கப்பட்டு இருமுறை மேலே எழுந்து சடுதியில் இராக்காலத்தில் மறைந்து போயின. இக்குழப்பங்கள் இன்னும் நிலைத்தமையால் பல இடங்களில் பல முறைகளில் நிலங்கள் எழுந்தும் மறைந்தும் போயின. இறுதியில் நிலம் வெடித்தமையால் பத்து நாடுகள் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்பட்டன. இந் நடுக்கத்தைப் பொறுக்க முடியாமையால் அந்நாடுகள் 64,00,000 மக்களுடன் இந்நூலெழுதுவதற்கு 8060 ஆண்டுகளின் முன் ஆழ்ந்து போயின” இவ்வுலகில் ஒன்பது கண்டங்களும் ஏழு கடல்களும் ஏழு தீவுகளும் உண்டெனப் புராணங்கள் அறைகின்றன. இஃது ஒருகாலத்து இவ்வுலகம் அடைந்திருந்த வடிவினைக் குறிப்பதாயிருக்கலாம். தயிர்க்கடல் பாற்கடல் எனச் சொல்லப்பட்ட பெயர்கள் இக்காலம் கருங்கடல் (Black sea) செங்கடல் (Red sea) வெண்கடல் (white sea) என வழங்கும் பெயர்களை மானுதல் கூடும். மேலே காட்டியவை இவ்வுலகம் காலத்துக்குக் காலம் பல்வேறு மாறுதல்களடைந்து வருகின்றதென்பதை வலியுறுத்துவன. இந்திய நாடு இன்று காணப்படும் வடிவினை முன் அடைந்திருக்க வில்லை. கன்னியாகுமரிக்குத் தெற்கே காணப்படும் இந்து மாகடல் முன் ஒரு பெரிய நிலப்பரப்பாக விளங்கியது. அது கிழக்கே பர்மா தொடங்கித் தெற்குச் சீனா வரையிலும், மேற்கே ஆப்பிரிக்காவின் கிழக்குத் தெற்குக் கரைகள் வரையிலும், வடக்கே விந்திய வரை வரையிலும் விரிந்திருந்தது. அந் நிலப்பரப்புக்கு ஆங்கில பௌதிக நூலார் லெமூரியா என்னும் பெயர் இட்டனர். தமிழ் முன்னோர் இதனைக் குமரிக்கண்டம் என வழங்கினர். மிக முற்காலத்தில் இந்தியக் குடாநாடு ஒரு பெரிய பூகண்டத்தின் பகுதியாக விருந்தது. அப் பூகண்டம் கிழக்கே பர்மா தென்சீனம் வரையும், மேற்கே தென்னாப்பிரிக்கா வரையும், வடக்கே விந்தியமலை வரையும், தெற்கே ஆத்திரேலியா வரையும் அகன்று கிடந்தது. இவ்வாறு கொள்வ தற்கு நிலநூல் சான்று உள்ளது. ஒருகாலத்துக் கடல், பொங்கியெழுந்து அதன் பல பகுதிகளைத் தன்னகப்படுத்திக்கொண்டது. முன் ஒன்றாயிருந்த ஆத்திரேலியா, சீனா, ஆப்பிரிக்கா, இந்தியா முதலிய நாடுகள் அக்காலத்திலேயே பிளவு பட்டிருத்தல் வேண்டும். ஸ்காட் எலியட் கூறும் ஐந்தாவது கடல் கோட் காலமே அவ் வெள்ளப்பெருக்கின் காலமெனக் கருதப்படுகின்றது.1 குமரிக்கண்டம் அழிவெய்தியபின் தென்னிந்தியாவின் தொடர்ச்சி யாக இலங்கை சுமத்திரா யாவா முதலிய நாடுகளை உள்ளடக்கிய ஒரு பெருந்தீவு விளங்கிற்று. அதன்கண் நாவன் மரங்கள் செழித்தோங்கி வளர்ந்தமையான். அது நாவலந் (சம்புத்) தீவு என்னும் பெயரைப் பெறுவ தாயிற்று. ‘குமரித்தீவு’ ‘குமரி நாடு’ என்றும் அது வழங்கப்பட்டது. குமரி நாட்டின் வடக்கெல்லை விந்திய மலையாகவிருந்தது. இமயமலையும் சிந்து கங்கைச் சமவெளிகளும் அக்காலத்தில் தோன்றவில்லை. ஆகவே குமரி நாடு அல்லது பழைய தமிழகம் ஆசியாக் கண்டத்தின் பகுதியாக இருக்க வில்லை. தெற்கே கிடந்த நிலப்பரப்புகளிற் பெரும் பகுதி கடலுள் மறைந் தது. அப்போது இமயமலையும் சிந்து கங்கைச் சமவெளிகளும் கடலாழத் தினின்றும் மேற்கிளம்பின. இமயமலைச் சாரல்களில் நீர்வாழ் உயிர்களின் என்புக்கூடுகள் காணப்படுகின்றன. அதனால் இமயமலை ஒருகாலத்தில நீரின் மூழ்கிக்கிடந்ததெனத் துணியப்படுகின்றது. இமயமலையும் அதனைச் சார்ந்த நிலங்களும் மேற்கிளம்பிய பின்னும் விந்திய மலைக்கு வடக்கே நிலவிய கடல் முற்றாக மறைந்துவிடவில்லை. அதன் ஒரு சிறு பாகம் வட இந்தியாவைத் தென் இந்தியாவினின்றும் பிரித்தது. நிலநூலார் அதன் ஒரு பகுதிக்குக் கிழக்குக் கடலென்றும், மற்றைப் பகுதிக்கு இராசப் பட்டினக் கடலென்றும் பெயரிட்டனர். குமரி நாட்டின்கண் வடக்கே குமரியாறும் தெற்கே பஃறுளி (பல்+துளி) ஆறும் ஓடிக்கொண்டிருந்தன. பஃறுளியாறு வடிம்பலம்ப நின்ற பாண்டியனுக்கு உரியதாகப் புறம் 9ஆம் பாட்டால் விளங்குகின்றது. குமரியாறு கன்னியாகுமரிக்குத் தெற்கே சிறிது தொலைவில் இருந்திருத்தல் கூடும். முற்காலத்தில் இப்பொழுதைய இராசபுதானத்தின் பெரும் பகுதி தெற்கிலும் கிழக்கிலும் அராவலி மலைவரை கடலால் மூடப்பட்டிருந்தது. நிலநூலார் அக்கடலுக்கு இராசபுத்தானாக் கடலென்று பெயரிட் டுள்ளார்கள். அப்பகுதியே இப்பொழுது காணப்படும் பெரிய இந்திய பாலைநிலமாகும்.1 அதனையடுத்து அதன் பெயரால் ஒரு மலைத்தொடரும் விளங்கியது. பிற்காலத்தோர் அதற்கு மகேந்திரம் எனப் பெயரிட்டனர். இரண்டு ஆறுகளுக்குமிடையே எழுநூறு காவதம் நிலப்பரப்பிருந்தது. ஒரு காவத2 மென்பது எண்ணாயிர முழங்கொண்ட தூரம். எழுநூறு காவதம் நிலப்பரப்பும் நாற்பத்தொன்பது சிறு நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு விளங்கிய பஃறுளி குமரி என்னும் ஆறுகளையும் அவற்றி னிடையே கிடந்த நாற்பத்தொன்பது நாடுகளையும் கடல் கொண்ட மையைப் “பஃறுளியாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக்கோடுங் கொடுங்கடல் கொள்ள” என்று கூறுவதுடன் அமையாது “வடிவேலெறிந்த வான்பகை பொறாது” என்று இக்கடல் கோட்குக் காரணமுங் கூறுவர் ஆசிரியர் இளங்கோவடிகள். சிலப்பதிகாரத்துககு உரைகண்ட அடியார்க்கு நல்லார், ‘நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் என்புழி’ “அக்காலத்து அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி யென்னும் ஆற்றுக்கும் குமரியென்னும் ஆற்றுக்குமிடையே எழுநூற்றுக் காவத ஆறும் அவற்றின் நீர் மலிவானென மலிந்த (1) ஏழ் தெங்கநாடும் (2) ஏழ் மதுரை நாடும் (3) ஏழ் முன்பாலை நாடும் (4) ஏழ் பின்பாலை நாடும் (5) ஏழ் குன்றநாடும் (6) ஏழ் குணகாரை நாடும் (7) ஏழ் குறும்பனை நாடுமென இந் நாற்பத்தொன்பது நாடும், குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும், காடும் நதியும் பதியும் தடநீர்க் குமரி வட பெருங்கோட்டின்காறும் கடல் கொண்டொழிதலால் ” எனக் கூறிய உரையில் கடல்கொண்ட நாடுகளும் பிறவும் இவை இவை என விரித் துரைத்தார். இனிக் குமரியாற்றிற்கும், பஃறுளியாற்றிற்கும் இடையேயுள்ள பெருவள நாட்டரசனாகிய செங்கோனை முதலூழித் தனியூர்ச் சேந்தன் பாடிய ’செங்கோன் தரைச் செலவு’ என்னும் ஒரு சிறு நூல் உளது. இந்நூலினும் உரையினும் உள்ள ஏழ்தெங்க நாட்டு முத்தூரகத்தியன், பேராற்று நெடுந்துறையன் முதலிய புலவர் பெயர்களும் பெருவள நாடு மணிமலை முதலிய இடப்பெயர்களும், அடியார்க்கு நல்லார் உரையிற் கண்ட நாடுகள் கடல்கொள்ளப்படுவதற்கு முன் உள்ளன என்பதை வலியுறுத்துவன.1 2. குமரி நாடு என்னும் பெயர்க் காரணம் மனு என்பவன் ஒரு தமிழ்வேந்தன். இவனுக்கு இளை என்னும் ஒரு பெண் மகவும் இயமன் என்னும் ஓர் ஆண் மகவும் இருந்தனர். மனு தான் ஆண்டுவந்த நாட்டின் தென் பகுதியை இயமனுக்கும் வட பகுதியை இளைக்கும் அளித்தான். இயமன் ஆண்ட தென்னாடு கடல்வாய்ப்பட்டது. இதுபற்றியே இயமனுடைய உலகம் தெற்கில் உள்ளது என்னும் கோட்பாடு இன்றுவரையும் உள்ளது. கூற்றுவனாகிய இயமனும் இவனும் ஒருவனாகப் பிற்காலத்திற் கருதப்பட்டமையினாற் போலும் இறந்தவர்கள் இயமனாட் டில் (தெற்கில்) வாழ்கின்றார்கள் எனக் கருதப்பட்டு அவர் தென்புலத்தார் என வழங்கப்படலாயினர். வடக்கே இருந்த நாடு பெண்ணால் ஆளப்பட்டமையின் குமரிநாடு என்று வழங்கப்பட்டது. தமிழகத்தின் ஒரு பகுதியாகிய மலையாளத்தில் பெண்களுக்கே ஆண்களிலுங் கூடிய அதிகார முண்டு. அரசுரிமையும் சொத்துரிமையும் பெண் வழியையே சாருகின்றன. தமிழ்நாட்டில் பெண்களே நெடுங்காலம் ஆட்சி புரிந்திருக்கிறார்கள். தீர்த்த யாத்திரையிற் சென்ற அருச்சுனன் பாண்டி நாட்டில் பெண்ணரசு செலுத்திக்கொண்டிருந்த சித்திராங்கதை (அல்லி)யை மணந்து பப்புரு வாகனைப் பெற்றான் என்று பாரதம் கூறுகின்றது.1 “திராவிட மக்களின் அரசனாகிய மனு, நாட்டை இரண்டாகப் பிரித்துத், தென்பகுதியை இயமனுக்கும் இராசதானியிருந்த பகுதியை இளை என்னும் புதல்விக்கும் அளித்தான் எனப் புராணங்கள் கூறுகின்றன. கடலுள் மறைந்துபோன தென்தேசம் இன்றுவரையும் இயமன் நாடு என மக்கள் ஞாபகத்திற் கொண்டுவருகின்றனர். இளையின் நாடு பெண்களால் ஆளப்பட்டுவந்தது. தமிழகத்தின் ஒரு பகுதியாகிய தமிழ்நாட்டில் அரசி நாட்டுக்குரியவள்; அவளுக்குப் பதில் ஆளாக அவள் உடன் பிறந்தான் நாட்டை ஆளுகின்றான். அரசுரிமை பெண் வழியாக வருகின்றது. மலை யாளத்தில் பெண்களே சொத்துக்கு உரியோர். அவர்கள் ஆடவரிலும் சிறப்பாகவும் மேலாகவும் மதிக்கவும் நடத்தவும் பட்டு வருகிறார்கள்.2 ஆராய்ச்சியில் இத்தரை (குமரிநாடு) குமரிக்கு நேர் தெற்காகக் காணப்படவில்லை. சற்றுச் சரிந்து தென் கிழக்காகவிருக்கலாம். ஆசியாக் கண்டத்தின் ஒரு படம் எடுத்துப் பார்த்தால் நான் கூறுவது எளிதிற் புலப்படும். குமரிக்கும் இலங்கையின் வடபாலுக்கும் ஒரு வரை கீறி அவ் வரையிலிருந்து தென்கிழக்காகப் போகிறதாயிருந்தால் இலங்கை, மலேயா சாவா, சுமத்திரா, பண்டா, செலிபிசு, போனியோ, புதுக்கினி, நியுசீலந்து முதலான எண்ணிறந்த தீவுகளைக் காணலாம். “தெளிந்த வானத்தில் உடுக் கூட்டங்கள் விளங்குதல் போல் நீருக்கிடையில் இவ்வகையாக ஆங்காங்கு நிலத்துண்டுகள் பல அளவினும் இருப்பதைப் பற்றி எண்ணும்போது, தென்னிந்தியா முதல் நியுசீலந்து வரைக்கும் ஒரு காலத்தில் கடுந்தரையாயிருந்ததாகவும் ஏதோ காரணத்தால் அது பிளப்புண்டு, பலவிடத்திலும் பள்ளம் விழுந்து கடலுடன் தொடர்பு பட்டுக் கடல்நீர் ஏறினதாகவும் கருதவேண்டியிருக்கின்றது. இக்கருத்தை ஐரோப்பிய கலைஞர்களும் சரித்திர ஆசிரியர்களும் உறுதிப்படுத்துகின் றார்கள். கடலின் கண்ணுள்ள, மண் கல் முதலியவற்றை ஆராயும்போது மேற்குறித்த கருத்தை நிலைநாட்டுகின்றார்கள். “இக்கொள்கையை நிலைநிறுத்த வேறு காரணங்களுண்டோவென ஆராய்வோம். மேற்கூறிய யாவாமுதலிய தீவுகளில் நடைபெற்றுவரும் மொழிகள் தமிழ் மொழிக்கு மிக உறவுள்ளனவாகக் காணப்படுகின்றன. “ஐரோப்பியப் பாதிரிமார் தமது கருத்தை நியூசீலந்தில் செலுத்திய காலத்தில் அவர்களுடைய நாட்டம் மேயோரிஸ் (Maoris) என்னும் பண்டுள்ள அத்தேசத்தவரின் மொழியிற் சென்றது. அதை அவர்கள் ஆராய்ந்து பார்த்ததில் அது தமிழுக்கு எவ்வளவோ அடுத்ததாகக் காணப் பட்டது.1 அது குறித்து தேயிலர் (Taylor) என்னும் பாதிரியார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னே வெளியிட்டிருக்கின்றார். “மேற்கூறிய காரணங்களால் தென்னிந்தியாவின் மேற்குக் கரையி லிருந்து நியூசீலந்து வரைக்கும் பண்டு ஒரே மொழி நடைபெற்று வந்ததாகக் காணப்படுகின்றது. இதில் ஆத்திரேலியாவும் உட்பட்டிருக்கலாம்.” - திருவாளர் டி. பொன்னம்பலம் பிள்ளை, M.R.A.S. “மனிதனுடைய அறிவு எட்டிய ஒரு காலத்தில் தென்னிந்தியா ஆசியாவின் பகுதியாக விளங்கவில்லை யென்பதை நிலநூல், உயிர்களின் வரலாறு முதலியன உறுதிப்படுத்துகின்றன. பல காரணங்களால் தென் னிந்தியா தெற்கேயிருந்த பெரிய கண்டத்தில் மிச்சமெனக் கருதப்படு கின்றது. இலங்கைப் புத்தர், புராணகாரர் முதலியோர் எழுதியுள்ள வரலாறுகளும் மேற்குக் கரையில் உள்ளவர்களின் கன்ன பரம்பரையும் இலங்கையும் தென்னிந்தியாவும் சமீபத்தில் பல குழப்பங்களுக்குள்ளாயின வென்பதைக் குறிப்பிடுகின்றன.2 “முதலாம் காலப் பகுதியின் கடைக்கூறில் இந்து சமுத்திரத்தினூடே விளங்கிய ஒரு கண்டம் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆத்திரேலியா முதலிய நாடுகளை இணைத்துக்கொண்டிருந்தது.3 “இந்தியாவின் தென்பகுதி கங்கையாறு பாயும் நிலப்பரப்புக்கும் இமயமலைக்கும் வேறானது. இஃது இப்போது இந்து சமுத்திரம் இருக் கின்ற இடத்தில ஆப்பிரிக்கா வரையில் தொடர்ச்சியாக நீண்டிருந்த பழைய கண்டத்தின் மிச்சமா யிருக்கின்றது. இதிலுள்ள குன்றுகள் உலகத்தி லுள்ள மிகப் பழையவற்றுட் சேர்ந்தன. இவை ஒருகாலத்திலும் நீருள் மூழ்கி யிருந்த குறிகள் இல்லவேயில்லை. இக்குன்றுகளின் பலவிடங்களிற் கருங்கற்பாறை தகடாகப் பரவியிருக்கின்றது. ஆகையால் அஃது உலகில் முற்காலத்தில உயிர்கள் தோன்றும் முன்னர் இருந்தபடியே தெற்கில் இருக்கின்றது. சிந்து கங்கைச் சமவெளி சிந்துநதி தொடங்கிக் கங்கைக் கழிமுகம் வரையில் ஆயிரத்திருநூறு மைல் தொலைவு இடைவெளியின்றி நீண்டிருக்கின்றது. மண்ணுலகு பதப்பட்டுக் கொண்டுடிருக்கும்போது இமயமலை கிளம்பும் முன்னர்க் கங்கை நிலவெளியிருக்கும் இடம் கடலாயிருந்தது. அந்தக் கடலின் தெற்குக் கரையில் தென்னிந்தியா விருக்கிறது. இமயமலை கிளம்பியபோது கடல் மறைந்தது. இமயமலையி லிருந்து ஓடும் ஆறுகள் வாரிக்கொண்டு வந்த மண்ணினால் இப்போதுள்ள வெளி நிலம் உண்டானது.”2 “தென்னிந்தியா ஆப்பிரிக்கா தொடக்கமாக இந்தியா வரையும் அகன்றிருந்த ஒரு பூகண்டத்தின் கிழக்குப் பகுதியாகும். மக்கட் கூட்டத் திற்குப் பிறப்பிடமாகிய அக்கண்டத்தினின்றும் மக்கள் வேற்றிடங் களுக்குச் செல்லத் தொடங்கியபோது தென்னிந்தியா மேற்கே மடகாசி கரோடும் கிழக்கே மலாயத் தீவுகளோடும் இணைக்கப்படாமல் இருக்க வில்லை. மக்கள் தென்னிந்தியாவினின்றும் பெயர்ந்து பிறவிடங்களுக்குச் செல்லத் தொடங்கிய காலத்தில் மாத்திரமின்றி அதற்குப் பின்னும் இந்தியா ஆசியாவின் வடமேற்கு நாடுகளோடு இணைக்கப்பட்டிருக்கவில்லை. அக்காலம் நடு ஆசியாவில் நிலவிய கடல் இந்தியாவில் வடமேற்கெல்லை யாயிருந்தது. முன் பிறநாடுகளிற் குடியேறிய மக்கள் (தமிழர்) வடஇந்தியாவை அடையவில்லை. அக்காலத்து இந்தியாவின் தென்பாகம் வடபாகத்தோடு முற்றாக இணைக்கப்பட்டிருக்கவில்லை. தமிழர் வடக்கேயுள்ள சாதி யாரில் (Tribes of Northern countries) வேறுபட்டவர்களாகக் காணப்படுகின் றனர். அவர்கள் (தமிழர்) தாம் இப்போது வாழ்வதும் தம் முன்னோர் பல தலைமுறைகளாக வாழ்ந்ததுமாகிய தென்னிந்தியாவுக்குத் தொடர்பில்லாத வர்கள் எனக் கூறுதல் பொருந்தாது. ஒருகாலம் வங்காளத்தின் கீழ்ப்பாகம் தமிழர் அதிகாரத்தின்கீழ் இருந்தது. புத்தருடைய காலத்துக்குமுன் தமிழர் அனம் (Annum) என்னும் நாட்டைவென்று அதற்குப் பொங் லொங் (Bong Long) என்னும் பெயரிட்டார்கள். வங்காளத்தில் ‘லக்லம்’உடைய சந்ததியார் கி.மு. ஏழாம் நூற்றாண்டு தொடங்கிக் கி.பி.258 வரை நீண்ட காலம் அரசு புரிந்திருக்கிறார்கள். சரித்திர காலத்தில் இந்தியாவுக்குப் புதிதாக வந்த வர்கள் எனச் சொல்லப்படும் ஆரியர், மக்கள் இனத்தைக் குறித்த ஆராய்ச்சி யால் தமிழரிலிருந்து வேறுபடவில்லை. திராவிடர் முற்காலத்தில் தோற்றத்திலாவது மன வலிமையிலாவது ஆரியருக்குக் குறைந்தவரல்லர். தமிழர் பழமைதொட்டு தென்னிந்தியாவில் வாழ்ந்தார்கள் என்று ஒப்புக் கொண்டால் புதிதாக வேறு சாதியார் கூட்டங் கூட்டமாக வந்தபோது முன்னிருந்த தமிழர் என்ன செய்தார்கள் என்னும் கேள்வி எழுவது இயல்பு. அக்காலத்தில் வட இந்தியாவுக்கும் தென் இந்தியாவுக்கும் இடையே கிடந்த கடல் தரையாக மாற இருநாடுகளும் தொடுக்கப்பட்டன. தெற்கே இருந்தவர்கள் வடக்கே சென்றார்கள். இந்தச் செழிப்பும் செல்வமும் பொருந்திய வடநாட்டை அடைய முடியாதவர்களாயிருந்தால் அவர்கள் (தமிழர்) புதிதாக வந்தவர்களைத் துரத்தியிருப்பார்கள். தெற்கே இருந்த தமிழர் இயற்கைக்கு மாறாக நடந்துகொண்டார்களென்று சொல்வதற்கு இடமில்லை.”1 இந்திய வானநூற்படி இலங்கையில் இராவணனுடைய இராச தானிக்கு ஊடாகச் சென்றதாகச் சொல்லப்படும் நிரட்சரேகை (Meridian) இலங்கைக்கு மேற்கே 400 மைல் தூரத்திலிருக்கும் மாலைத் தீவுக் கூடாகச் செல்கின்றது. “இக்கரைப்பாகத்தில் அமிழ்ந்திப்போய்க் காட்டின் பகுதிகளாகக் கண்டுபிடிக்கப்பட்ட குறிகள் இன்னும் இருக்கின்றன. இப்பகுதி அமிழ்ந்து போன லெமூரியாக் கண்டத்தின் பகுதியோ அல்லது பிந்திய காலத்ததோ என்பது மயங்கக் கிடக்கின்றது ” -கதிர்காமவேலர் -சர்.பி.அருணாசலம் “இலங்கையிலே இருந்த தெய்வங்கள் வெகுண்டு ஒரு கடல்கோளை உண்டுபண்ணின. 400,000 தெருக்களும் 25 அரண்மனைகளும் இராவண னுடைய கோட்டைகளும் இருந்த தூத்துக்குடி முதல் மன்னார் வரையு முள்ள நிலத்தைக் கடல் அடித்துக்கொண்டு போய்விட்டது. இது துவாபார ஊழியில் நிகழ்ந்தது. அப்படியே கழனி இராசாவாகிய திச ராசன் காலத்தில் 100,000 பட்டணங்களையும் 970 மீன்பிடிகாரர் குப்பங்களையும் 400 முத்துக் குளிகாரர் குறிச்சிகளையும் கடல் விழுங்கிவிட்டது. -இராசாவளி “பாஸ்கராசாரியார் எழுதிய வான நூற்குறிப்பில் நடுக்கோடு (Equator) பழைய இலங்கைக் கூடாகச் செல்கின்றது. இதனால் இராவண இலங்கை இப்போதுள்ள சுமத்திராவாக இருக்கலாமெனக் கருதுகின் றனர்.”1 - Ravana of Lanka by N.S.Adhikari “லெமூரிய அல்லது சிலாற்றறின் கொள்கை.” இக்கொள்கையின் படி தமிழர் தோன்றின இடம் இமயமலை உண்டாவதன்முன் இந்து சமுத்திரத்தில் மூழ்கிப்போன லெமூரியாக் கண்டமாகும். இப்பூகண்டம் மேற்கே மடகாசிகர் வரையும் கிழக்கே மலாய்த் தீவுகள் வரையும் பரந்து தென்னிந்தியா ஆஸ்திரேலியா என்னும் நாடுகளையும் தொட்டுக் கொண்டிருந்தது. அப்படியிருந்தால் இந்நிலப் பரப்பு நீருள் மறைவதன் முன் தமிழர் தெற்கினின்றும் இந்தியாவை அடைந்திருத்தல் வேண்டும். - Tamil Studies, P. 21 ‘சாவா’ என்னும் தீவின் வடகரையில் மதுரை நீரிணையென்னும் ஒரு சிறிய நீரிணை உளது. அதற்கு வடக்கே மதுரை யெனும் ஒரு சிறு தீவும் உண்டு. போணியோவின் கிழக்குக்கரையிலும் மேற்படி பெயருடன் ஒரு தீவு இருக்கின்றது. இது முற்றாக அல்லது சிறிதாகக் கடலாற் சூழப்பட்டது. இவ்விடங்களிலொன்று பழைய மதுரையாயிருத்தல் கூடும். ”2 - திருவாளர் T. பொன்னம்பல பிள்ளை M.R.A.S. 3“மூன்றாம் காலப் பகுதியின் பெரும் பகுதியில் இலங்கையும் தென்னிந்தியாவும் வடக்கே கடலை எல்லையாகப் பெற்றிருந்தன. தெற்கேயிருந்த கண்டம் அல்லது பெரிய தீவின் பகுதியாக அவை இருந்திருத்தல் கூடும்” 4“ஒரு காலத்தில் இமயமலைகள் கடல் ஆழத்தினின்றும் மெதுவாக மேலே உயர்த்தப்பட்டவை. ஒருகால் திமிங்கிலங்கள் உலாவிய இடங்களில் இன்று கழுகுகள் வாழ்கின்றன. ஒரு காலத்தில் அத்லாந்திக் கடலின் மத்தியில் திட்டமாக ஒரு பூகண்டமிருந்தது.” 5“தற்கால ஆராய்ச்சி அறிவினால் மலைத்தொடர்களின் உற்பத்தி அமைப்பு முதலியவற்றைக் குறித்த உண்மைகளை அறிந்து கொள்ளுதல் முடியாததன்று. இரண்டாம் காலப் பகுதியில் தென்னிந்தியா கடுந்தரையாக விருந்தது. அது மூன்றாம் காலப் பகுதியில் இந்து சமுத்திரத்துக் கூடாக தென் ஆப்பிரிக்கா வரையில் அகன்றிருந்த கண்டத்தின் பகுதியாகும். அதன் வடக்குக் கரையில் எதே (Tethys) கடல் இருந்தது. அக்கடல் மூன்றாம் காலப் பகுதியின் நடுப்பகுதியிலும் பிற்பகுதியிலும் கிழக்கு மேற்காக ஆசியாவுக்கு ஊடாகப் பரந்திருந்தது. இங்கேதான் இமயமலையின் தளம் இருந்தது” “இரண்டாம் உகத்தின் முற்பகுதி தொடக்கத்திலிருந்து நாலாம் உகத் தொடக்கம்வரை இமயமலை இருக்கும் இடம் கடலாயிருந்தது”1 3. குமரிக்கண்டம் கடல்வாய்ப்பட்டதன் காரணம் “இது (ஆஸ்திரேலியா) விந்தை மிக்க நாடு; இங்குள்ள மரஞ்செடி களிற் பல இயற்கையாய் வேறெந்த நாட்டிலும் வளர்வதில்லை. அவ்வாறே வீணைப்பறவை, சுவர்க்கப்பறவை, ஏமு முதலிய பறவைகளிற் பலவும், கங்காரு முதலிய விலங்குகளிற் சிலவும் உலகில் வெறெங்கும் இயற்கையிற் காணக் கிடைப்பனவல்ல. மக்களும் அவ்வாறே. இவற்றால் கொள்ளக் கிடப்பது யாதெனில், ஆஸ்திரேலியா முதலில் உலகொடு சார்பு பெற்றிராத ஒரு நில உருண்டை என்பதே. உண்மையில் இதுவோர் விண்வீழ்மீன் (Comet). இது விசும்பினின்று யாதோ காரணத்தால் இம் மண்ணுலகின்மீது வீழ்ந்திருக்க வேண்டும். இருவகை இயக்கத்தோடு கூடிய உலகின் மேல் வீழ்ந்தபோதுதான், லெமூரியா கடல்வாய்ப்பட்டது. சிந்து, கங்கைவெளி, இமயமலை, மத்திய ஆசியா முதலிய நிலப்பகுதிகள் வெளிக்கிளம்பின. இவ்வாறு கொள்ளுமிடத்து இப்போது பூகோள நூலாராய்ச்சியில் காரணங்காட்ட முடியாவாறு நம்மை மலைவுறுத்தும் இருபத்து மூன்று இடையூறுகள் விலகிவிடுகின்றன. அத்தடைகட்கெல்லாம் தக்க விடை ஏற்படுகின்றன. இவற்றையெல்லாம் இங்கு விரித்துரைக்க இயலாது. ஒன்றுமட்டும் கூறலாம். விரைவாய்ச் சென்று கொண்டிருக்கும் பம்பரத்தின் மீது ஒரு கல் தாக்குமாயின் அது வளைவாய்ச் சாய்ந்து சுற்றிப் பின்னர் ஓய்ந்து விடும். அதுபோன்றே இவ்வுலகம் பண்டை நாளில் செங்குத்தாய்ச் சுழன்று கொண்டிருக்க வேண்டும். அதுகாலை மேற் குறித்த வண்ணம் ஆஸ்திரேலியா வானத்தினின்றும் தவறிப் பூமியின்மேல் தாக்கியிருக்க வேண்டும். அதனால் மேற்குறித்த நில நீர் மாறுதல்கள் உண்டானதோடு, பூமியும் சாய்ந்து சுழலலாயிற்று. இன்றைக்கு நூறாண்டுகளுக்கு முன்னர் 26 டிக்கிரி சாய்வோடு சுழன்றது. அதற்கு முன்னர் இன்னும் அதிகச் சாய்வுற்றிருந்திருக்க வேண்டும். இப்போதுள்ள சாய்வு 23 டிக்கிரிகளுக்கு மேலில்லை. இவ்வாறு சென்றால் நாளடைவில் இச்சாய்வு அடியொடு மறைந்தொழியலாம். அந்நாளில் இருவகை அயனங்களும் பட்டொழியும்; பருவ வேறுபாடுகளும் சுருங்கிவிடும். உயிர்த்திரள்களின் வாழ்க்கை நிலையும் பெரிய மாறுதலடையும். இன்னும் தொடர்ந்து இது குறித்து நாமிப்போது எண்ணிப்பார்க்க வேண்டியதில்லை. இங்குக் குறிக்கத்தக்க தெல்லாம் ஆஸ்திரேலியா இப்புவியின்மீது வீழ்ந்து தாக்கிய ஒரு விண்மீனா மென்பதே. - திருவாளர் பா.வே.மாணிக்க நாயகரவர்கள் B.E. M.C.I. - செ.செல்வி சிலம்பு 1. பரல் 3. முன் கடலாயிருந்த சகரா வனாந்தரத்திலிருந்த நீர் வற்றத் தொடங்கியதால் அது நிலனாக மாறியதே குமரி நாட்டின் அழிவுக்கு ஏது என்பது பிறிதொரு கொள்கை. “சகரர் வேள்விக் குதிரை நாடித் தொட்ட காலத்துட்பட்டுக் குமரியாறும் பனைநாட்டோடு கெடுவதற்கு முன் ” எனக் குமரியாற்றுக்கும் அதனை அடுத்த நிலத்தின் அழிவுக்கும் காரணங் கூறுவர் பேராசிரியர். சகரகுமாரர் தோண்டியதாற் கடலுண்டானதென இராமாயணங் கூறுகின்றது. இஃது ஒரு காலத்து நேர்ந்த எரிமலைக் குழப்பத்தைக் குறிப்பதாயிருக்கலாம். புராணகாரர் அதனைக் கற்பனைக் கதையால் புனைந்து கூறியிருத்தல் வேண்டும். 4. இந்தியா இந்தியா என்பது சிந்து நதிக்கு இரு பக்கங்களிலுமுள்ள நாடுகள் என்று பொருள்படும். இது பாரசீகரால் (Persians) சிந்துநதிப் பக்கங்களி லுள்ள நாடுகளுக்குக் கொடுக்கப்பட்ட பெயர். இப்பெயர் கெரதோதஸ் (Herodotus) என்னும் வரலாற்றாசிரியராலும் அலெக்சாந்தர் படையெழுச்சிக் காலத்திலிருந்த வரலாற்றாசிரியர்களாலும் கிரேக்க தேசத்துக்குக் கொண்டு போகப்பட்டது. இப்போது இந்தியா என்பது இமயமலைக்கும் கன்னியா குமரிக்கும் இடையிலுள்ள நாட்டைக் குறிக்கின்றது. இது பிறநாட்டார் பரத கண்டத்துக்குக் கொடுத்த பெயராகும். 5. மக்கள் தோற்றம் மக்கட் படைப்பு முதற்றோன்றிய இடம் இப்போது இந்து சமுத்திரத் துள் மூழ்கிக்கிடக்கும் கண்டமாகுமென ஐரோப்பியப் பண்டிதர்கள் பலர் ஆராய்ந்து கூறுகின்றனர். 1“இந்து சமுத்திரம் ஆசியாவின் கரையை ஒட்டிச் சந்தாத் தீவுகள் முதல் ஆப்பிரிக்காவின் கரைவரை நீண்ட ஒரு பூகண்டாமாயிருந்தது. இந்தப் பூகண்டம் ஆதியில் மக்கள் முதலிற்றோன்றினாரென்னுஞ் சிறப் புடையதாயிருக்கின்றது.” (ஹெக்கல்)2 புதிய ஆராய்ச்சிகளால் மக்களினம் முதற்றோன்றியவிடம் இப்போது இந்து சமுத்திரத்தில மூழ்கிக் கிடக்கும் நிலமெனத் தெரிகிறது. (மக்கணூல்) “மக்கள் இனத்தைக் குறித்த ஆராய்ச்சியால் வடக்கேயுள்ள சாதி களும் மத்தியதரைக் கடற்பக்கங்களிலுள்ள சாதிகளும் தென்னிந்தியா வினின்றும் சென்றனவென்று காணப்படுகின்றன. கிழக்குக் கரைகளில் மக்கள் என்பு முதலிய சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவை இவ்வளவு காலத்துக்கு முற்பட்டனவென்று அறிந்து சொல்லமுடியாத பழைமையுடையனவாயிருக்கின்றன. தென்னிந்தியாவிலிருந்த பெரிய சாதியார் தமது அறிவையும் உயர்ந்த குணங்களையும் தமது தோற்றம் வடிவம் (Physical qualities) முதலியனவற்றையும் உலகம் முழுவதிலும் பரப்பியவர்களாகக் காணப்படுகின்றனர்” என டாக்டர் மக்லீன் கூறியுள்ளார்.! “ஆதிமாலமல நாபி கமலத்தய னுதித் தயன் மரீசியெனு மண்ணலை யளித்த பரிசும் காதல் கூர்தருமரீசி மகனாகி வளருங் காசிபன் கதிரருக்கனை யளித்த பரிசும் அவ்வருக்கன் மகனாகி மனுமே தினிபுரந் தரிய காதலனை யாவினது கன்றுநிகரென் றெவ்வருக்கமும் வியப்பமுறை செய்த பரிசும் இக்குவாகுவிவன் மைந்தbன்ன வந்த பரிசும்” என்னும் கலிங்கத்துப்பரணி மக்கட் படைப்புத் தமிழகத்தில் உற்றதாகவே கூறுகின்றது. இங்குக் கூறப்பட்ட இராச பரம்பரையிலுள்ளோர் தமிழ் மக்களாகவே காணப்படுகின்றனர். “வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி, பண்பிற்றலைப்பிரித லின்று” என்னும் திருக்குறள் உரையில் பரிமேலழகர் “பழங்குடி தொன்று தொட்டு வருகின்ற குடி; தொன்றுதொட்டு வருதல் சேர சோழ பாண்டிய ரென்றாற்போலப் படைப்புக் காலந்தொட்டு மேம்பட்டு வருதல்” எனப் பொருள் கூறினர். தமிழர் தென்னிந்தியாவை வென்று குடியேறினார்களோ அல்லது பூர்வமே அங்கு வாழ்ந்து வருகின்றார்களோ என்று அறியக்கூடாத அவ்வளவு பழைமை தொட்டு இந்தியாவில் உறைகின்றார்கள் என்றும், அவர்களுடைய உற்பத்தி மதுரை அல்லது தஞ்சாவூருக்குச் சமீபத்தில் இருக்கலாமென்றும், அவர்கள் பிறநாடுகளிலிருந்து இந்தியாவை அடைந்தார்க ளென்பதற்கு யாதும் வரலாறு காணப்படவில்லையென்றும் டாக்டர் வெர்கூசன் என்பவர் கூறுவர்.1 “விவிலிய நூலின் கூற்றை நம்பி பலஸ்தீன் நாட்டிற்றான் மக்கட் படைப்பு முதற் றோன்றியதென்பது சிலர் கருத்து. யெகோவாவால் ஓர் ஆண் மகனும் பின் அவன் என்புகொண்டு ஒரு பெண்மகளும் திடீரென்று உண்டாக்கப்பட்டமை விவிலிய நூலிற் சொல்லப்படுகிறது. இத்தகைப் படைப்பு வரலாறு உடல் வளர்ச்சி முறை நன்கு ஆராய்ந்து நாட்டப்பட்ட இந்நாளில் அறிஞரால் ஒத்துக்கொள்ளப்பட மாட்டாது. நடுக்கோட்டுப் பகுதியிலேயே முதல் உயிர்கள் தோன்றுவதற்கேற்ற வசதிகள் உண்டு என்பது ஆராய்ச்சியாளர் துணிபு.” ‘புரோடஜா’ (Protozoa) என்னும் (வருணமும் உருவமுமற்ற) நொய்ய நீர் வாழுயிர்களிலிருந்து கடற்பஞ்சைப் போன்ற (Sponges) பிராணிகள் தோன்றுகின்றன. அவைகளிலிருந்து பவளக்கொடியாக்கும் (Coral Builder) பிராணிகள் தோன்றுகின்றன. அவைகளிலிருந்து வெள்ளி மீன்களும் (Star fish) நத்தை நண்டு புழு பூச்சிகளும் தோன்று கின்றன. அவைகளிலிருந்து பறவைகளும் வெளவால் களும், அவைகளிலிருந்து மிருகங்களும். அவைகளிலிருந்து வானரங் களும், அவைகளிலிருந்து வாலில்லாக் குரங்குகளும் தோன்றின. கடைசியில் மக்கள் தோன்றினர் என்றும் குரங்குக்கும் மனிதனுக்குமிடையில் உள்ள ஒருவகைப் பிராணி இருந்திருக்க வேண்டுமென்றும் கருதப்படுகின்றன. இதுவே தொல்லுயிர் நூலார் படைப்புக்கிரமங்களைக் குறித்துக் கூறும் முறையாகும். இச்சாத்திரிகள் கொள்கையோடு விவிலிய நூற் கூற்றுச் சிறிதும் ஒத்துப் போகவில்லை. மக்கட்படைப்பு இவ்வுலகில், பத்து அல்லது இருபது இலட்சம் வருடங்கட்கு முன் தோன்றியிருக்க வேண்டு மெனச் சாத்திரிகள் கருதுகின்றனர், மனுவின் காலத்தில ஒரு வெள்ளப் பெருக்கு உண்டானதென்றும். அவ்வெள்ளப்பெருக்குக்குப் பிழைத்திருந்த மனுவினின்றும் மக்கட் சந்ததி உலகில் பெருகியதென்றும் புராணங்கள் நுவல்கின்றன. சலப்பிரளயத்துக்குப் பின் மக்கட் சந்ததி இந்தியாவிலேயே பல்கியது என சர் வால்டர் ரலி என்னும் மேல் நாட்டறிஞர் கூறுகின்றனர்.1 மனு கிருதமாலை என்னும் ஆற்றங்கரையில் தவஞ் செய்துகொண் டிருந்த ஒரு முனிவர்2 என மச்சபுராணங் கூறுகின்றது. மனு சத்தியவிரத னென்னுமொரு தமிழ் வேந்தனெனப் பாகவத புராணம் புகலும். வையை நதிக்குக் கிருதமாலையென்னும் பெயர் ஆலாசிய மான்மியத்திற் காணப் படுகிறது.3 தமிழ்நாட்டுப் பழைய வேந்தர்களாகிய முசுகுந்தன் சிபி முதலானோர் மனுவழித் தோன்றியவர்களெனச் சொல்லப்படுகின்றனர். பழைய புராண வரலாறுகளிற் சொல்லப்படும் அரசர் முனிவர்களும் தென்னாட்டினராகவே எண்ணப்படுகின்றனர். காசிபர் பழைய இலங்கையை ஆண்ட சூரபன்மாவுக்குப் பிதா. இவர் தக்கன் புதல்வியர் பதின்மூவரை வதுவை அயர்ந்து அவர்கள்பால் அசுரர், அமரர், கருடர், முனிவர், யக்கர். பூதர், நாகர், கந்தருவர், சித்தர் முதலிய பதினெண் கணங்களுட் பலரைப் பிறப்பித்தவராகக் காணப்படுகின்றனர். பதினெண் கணங்களெனப் பகரப்படுவோர் பழந்தமிழருக்குட் காணப்பட்ட பதினெண் குழவினர் எனக் கருத இடமுண்டு. கி.மு. 543 இல் விசயன் இலங்கையை அடைந்தபோது அங்கு வாழ்ந்தோர் இயக்கர் நாகர் என்னும் சாதியினர். இலங்கையைச் சூரன் முதலிய அசுரரும், குபேரன் முதலிய தேவரும், இராவணன் முதலிய இராக்கதரும் ஆண்டார்கள். இந்திரன் வருணன் இயமன் இராமன் கண்ணன் அருச்சுனன் முதலானோர் கார் நிறமுடையவர்களாகக் கூறப்படுகின்றனர். தரும புத்திரனைக் கௌதமனார் என்னும் புலவர் பாடி மகிழ்வித்த பாடலொன்று புறநானூற்றில் காணப்படுகின்றது. அதில் தருமபுத்திரர் அறன்மகனெனக் கூறப்படுகின்றனர். அறன்மகனென்பதே பிற்காலத்தில தருமபுத்திரன் எனச் சமக்கிருதத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருத்தல் கூடும். தருமன் (இயமன்) தருமபுத்திரன் முதலானோருக்குரிய மொழி தமிழென்பது புலனாகின்றது. வருணன் தென்தேசத்தின் ஒரு பகுதிக் கிறை. மாருதி (அனுமந்தன்) பிதா நெய்தல் நிலத்துத் தெய்வத்துக்கும் பெயர் வருணன். இவ்வருணனே வடக்கே உள்ளவர்களின் வழிபாட்டுக்குரியவனாகவும் இருந்தானாதல் கூடும். மால் கரியமேனியன்; முல்லைநிலத் தெய்வம். இந்திரன் தென்னாட்டு அரசன்; அருச்சுனனுக்குப் பிதா. இவன் இராசதானி கிருஷ்ணா நதியின் முகத்துவாரத்திலுள்ள அமராவதியென்ப. சிவபெருமான் வீரஞ்செலுத்திய எட்டு இடங்களும் தென்னாட்டிலுள்ளன. பிரம விட்டுணுக்கள் அடிமுடி தேடியது திருவண்ணாமலையில். புராணங்களில் திரிலோகங்கள் என்று சொல்லப்படுவன தமிழகத்துள்ள சேர சோழ பாண்டிய மண்டலங் களென்று கருதப்படுகின்றன. 1மனுவை மீன்வடிவினதாகிய ஒரு தெய்வம் சலப்பிரளயத்தினின்றும் தப்பவைத்தது என்றும், அம்மனுவின் மரபினின்றும் (‘பண்டையர்’ களாகிய) பாண்டியர் தோன்றினார்களென்றும் பொருள்பட அவர் மீன் வடிவினதாகிய இலச்சினையைத் தமது கொடியிற் பொறித்து வந்தனர். மீன் பிடிக்கும் பரதவர் குலத்திற் தோன்றினபடியால் அவர்கள் மீன் கொடியை யுடையவர்களாயிருக்கின்றனரென்பது சில ஆராய்ச்சியாளர் கருத்து. அது பொருந்துவதாகத் தெரியவில்லை. 1சாலடியர் பாபிலோனியர், எகிப்தியர், கிரேக்கர், அசீரியர் முதலிய எல்லாச் சாதியாரும் ஒரு சலப்பிரளயத்தைக் குறித்த வரலாற்றைக் கூறுகின்றனர். எபிரேயர் நாற்பது நாள் விடாமழை பொழிந்ததாகச் சொல்லும் சலப்பிரளய வரலாறும் மனு சம்பந்தமானதே. மக்கள் வெவ்வேறிடங்களிற் பிரிந்து சென்று தங்கினபோது ஒரு சலப்பிரளய வரலாற்றினையே சிறிது வேறுபடுத்தி வழங்குவாராயினர். “நாங்கள் பூர்வகுடிகள் என்பதில் குறைவான எண்ணம் வைத்திரா விட்டாலும் நாகரிகத்தை எல்லாத் திசைகளிலும் பரப்பியதும் மக்கட் சாதியார் தோன்றிப் பெருகி வேறு நாடுகளிற் செல்வதற்கு ஏதுவாயிருந்தது மாகிய ஒரு கண்டம் கன்னியாகுமரிக்குத் தெற்கே இருந்ததென நம்பினாலும் தமிழர் ஊழிக்காலத்துக்கு முற்பட்டவர்கள் என்பதில் சந்தேகம் தோன்ற மாட்டாது. இப்போதுள்ள நூல்கள் மூன்று முறைகளில் தமிழகத்தின் தென்பகுதியைக் கடல்கொண்டதாகக் கூறுகின்றன. பழைய சாலடியா பாபிலோனியா முதலிய நாடுகளில் பழைய நாகரிகத்தின் அறிகுறிகள் பழைய நூல்களில் காணப்படுவன போலத் தென்னிந்தியாவில் ஏன் காணப் படவில்லை யென்பதற்குச் சமாதானஞ் சொல்ல வேண்டியிருக்கிறது. தமிழர் எழுதுவதற்குப் பயன்படுத்திய பனையோலை காலத்தில் ஒடிந்து அழிந்து போவதற்கேதுவாயிருந்தது என்பதை அதற்கு ஒரு சமாதானமாகக் கூறலாம் ” - பேராசிரியர் சுந்தரம் பிள்ளை. இந்தியர், பாரசீகர், கிரேக்கர், ரோமர், சிலாவியர், கெல்தியர், செர்மனியர் முதலானோர் ஒரு காலத்தில் ஒரே இடத்தில் வாழ்ந்தவர்கள் என மாக்ஸ்முல்லர் என்னும் பண்டிதர் கூறுகின்றனர்.2 6. தமிழர் தொன்மை அகவல் “ஒண்மை யறிவு மோர்வுமிக் கோரே உண்மை கேண்மின்! உண்மைக் கேண்மின்!! மீன்கொடி படைத்த மேன்மை மனுக்கள் ஆன்ற பாண்டிய ரனைவருந் தமிழர் 5 தென்கட் பஃறுளி யாறு சீர்சால் நற்புகழ் வடக்கண் நளிரிமை யார்மலை உரைதமிழ் நாடா வயங்கிய முற்கால் திருவிட மெனும்பே ரதற்குச் சிறந்தது பின்னா ரியர்கள் பிறங்கிந் நாட்டில் 10 உன்னி வந்துகுடி யுறுமுன மிங்குத் தமிழ்மொழி வழக்குந் தகையொண் ணூலும் இமிழிசை யைந்திணை இனமுந் தேவும் போற்றுவர் யார்க்கும் பொதுச்சிவக் கோளும் ஆற்றருந் தளியு மகத்தெண் ணெழுத்தும் 15 நயமிகு மொழுக்கமும் நனிச்சீர் தேற்றமும் உயிர்த்திருந் தனவற முயற்றர சிருந்தது மற்றிவை யாவும் வான்றமிழ்ப் புலவர் சொற்ற மொழிகள் தொகைப்படு வேதம் ஆகமம் புராணம் மவரிதி காசம் 20 வாகய லார்சொல் மருளி லாங்கிலங் கற்றவர் கற்பொறி கவின்பந் தாக்கர் தத்தர் முன்னையர் தம்முரை வழியால் துணியப் பட்டன - தோன்றீ ரினத்தில் இணங்கா நாற்குல மியற்றினர் பின்னோர் 25 என்று மொருதலை விவையுள் மன்னி யுணர்ந்து மயக்கொழி வீரே.” - விருதை.சிவஞான யோகிகள் 7. குமரிநாட்டில் தமிழ் வழங்கிய தென்பது “முன்னிருந்த பாலி மொழியுங்கீர் வாணமும் துன்னுங் கருப்பையிலே தோய்வதற்கு - முன்னரே பண்டைக் காலத்தே பரவைகொண்ட முன்னூழி மண்டலத்தி லேபேர் வளநாட்டின் - மண்டுநீர்ப் பேராற் றருகில் பிறங்கு மணிமலையில் சீராற்றுஞ் செங்கோற் றிறற்செங்கோன் -நேராற்றும் பேரவையி லேநூற் பெருமக்கள் சூழ்ந்தேத்தப் பாரரசு செய்த தமிழ்ப் பைந்தேவி”1 என்னும் தமிழ்விடு தூதினால் பாலி கீர்வாணம் (ஆரியம்) முதலிய மொழிகள் தோன்றுவதற்குமுன் குமரிநாட்டில் சீரும் திருத்தமும் பெற்று விளங்கியது செந்தமிழ் மொழியெனப் புலனாகின்றது. இறையனார் அகப்பொருளுரை, சிலப்பதிகாரத்துக்கு அடியார்க்கு நல்லா ரெழுதிய உரை, குமரிநாடு கடல்வாய்ப்படுவதன்முன் பாடப்பட்ட சில புறநானூற்றுச் செய்யுட்கள் பஃறுளியாற்றிற்கும் குமரியாற்றிற்கும் இடையேயுள்ள பெருவள நாட்டரசனாகிய தனியூர்ச் சேந்தன் பாடிய செங்கோன் தரைச் செலவு, அதன்கண் காணப்படும் பஃறுளியாற்றுத் தலைப்பாய்ச்சல் ஏழ் தெங்க நாட்டு முத்தூர் அகத்தியன் பாட்டு முதலியனவும் குமரி நாட்டகத் துக்குப் பண்டு வழங்கிய மொழி, தமிழ் என்பதை வலியுறுத்துகின்றன. 8. தமிழர் பிறநாடுகளிற் குடியேறுதல் இந்து சமுத்தரத்தினூடே விளங்கிய பெரிய கண்டத்தின் பல பகுதிகள் கடல்வாய்ப்படுதலும் அங்கு வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் பலதிசைகளை நாடிச் செல்வாராயினர். இங்ஙனம் ஓரிடத்தினின்றும் பிரிந்து சென்று ஆசியா ஐரோப்பா ஆப்பிரிக்கா முதலிய நாடுகளிற்றங்கிய ஓரின மக்களே தமிழர் தொடர்பும் கூட்டுறவும் இல்லாமற்போகத் தாமுறைந்த நிலத்தியல்பு, வெப்பநிலை, குளிர், நடை, உடை, ஊண், தொழில் வேற்றுமை முதலியவற்றால் பழக்க வழக்கங்களும் அவை பற்றிய சமயக் கோட்பாடுகளும் மாறித் தம்மை நாளடைவில் வேற்றுமொழியினர் போலவும் வேறு கூட்டத்தினர் போலவுங் கருதினர். தாம் சென்று உறையும் நாடுகளின் வெப்பதட்ப நிலைகளுக்கேற்பக் கறுப்பு நிறமுள்ள சாதியார் வெண்ணிறமாகவும் வெண்ணிறமுள்ள சாதியார் கறுப்பு நிறமாகவும் மாறுதல் கூடும்.1 இவ்வுலகில் ஆங்காங்கு நாகரிக வாழ்க்கையிற் சிறந்து விளங்கிய பண்டை மக்கட் சாதியாரின் சமயம்., பழக்க வழக்கம் முதலியன பெரும் பாலும் ஒத்திருத்தலின், அச் சாதியார்களின் முன்னோர் ஓரிடத்தினின்றுஞ் சென்று வெவ்வேறிடங்களிற் குடியேறினார்களென்பது தெற்றெனத் துணியப்படுகின்றது. எகிப்திய நாட்டில் தெறல்பஃறி (Der-el-Bahri) என்னும் ஊரின்கண் உள்ள அஷ்தாப் (Hastap) அரசியின் கோயிற் சுவரிற் பொறிக்கப்பட்டிருக்கும் ஓவிய எழுத்துக் கல்வெட்டுகளில் இவ் எகிப்தியர் தென் கடலகத்துக் குமரி நாட்டிலிருந்த பாண்டி2 (Punt) தேயத்திலிருந்து சென்று நீலாற்றங்கரைக்கட் குடியேறினர் என விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.1 அமெரிக்கா விலும் தென்னமெரிக்காவிலும் ஏழாயிர மாண்டுகட்குமுன் உயிர் வாழ்ந்த மக்களும் தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்களே என்பதற்கு வேண்டுஞ் சான்றுகள் புலனாய் வருகின்றன.2 (See prof. Konrod Heable's article in Harms worth History of the world) எகிப்தில் முதல் இராச பரம்பரையைத் தாபித்து அரசு செலுத்திய ‘மேன்ஸ்’ என்பவர் கி.மு. 4,400 இல் வாழ்ந்தார். எகிப்து அமெரிக்கா முதலிய நாடுகளிலுள்ள பழைய கோயிற் சுவர்களிற் காணப் படும் சித்திர வேலைப்பாடுகள் இந்தியாவில் கோயிற் சுவர்களிலுள்ள சித்திர வேலைப்பாடுகளுடன் ஒத்திருக்கின்றன. வட அமெரிக்காவிலுள்ள மக்கள் தம் முன்னோர் சூரியன் உதயமாகும் ஒரு தீவினின்றும் வந்தார் களெனக் கூறுகின்றனர். ஞாயிற்றுக்குப் பகலவன் என்னுஞ் சொல்லும் மாந்தர் வாழுமிடத்திற்கு ‘ஊர்’ என்னுஞ் சொல்லும் இவை போன்ற பிறவும் பாபிலோனியர் அசீரியர் 3சாலதியர் என்னும் பண்டைத் தமிழ் மக்களில் ஒரு சாரார் அந்நாடு கடல் கொள்ளப்பட்ட ஞான்று ஆண்டு நின்றும் போய்ப் பாபிலோனியா சாலதியா முதலான நாடுகளில் குடியேறி னார் என்பதூஉம் புலனாகா நிற்கும். அஃதன்றியும் சாலதியர் வழங்கிய மற்றொரு கடவுட் பெயரான முருகன் என்னுஞ் சொல்லும் தமிழ்க் கடவுளான முருகன் என்பதனோடு ஒற்றுமையுடையதாய்க் காணப்படு தலும் உற்றுணர்தற்பாலதாம். அல்லதூஉம் பகலவனை வழிபட்டு வந்த ஏதுவானே அந்நாடு பாபிலோனியா என்னும் பெயர் பெறுதலானும், அது பண்டைத் தமிழர் உறைந்த நாடு என்பதைப் புலப்படுத்தும். “அமெரிக்காவிலே மெக்சிக்கோ யூகாற்றன் என்னுமிடங்களிற் காணப்படும் ஆலயங்களின் அழிபாடுகள் எகிப்திலுள்ள அவ்வகை யழிபாடுகளை ஒத்துள்ளன. அமெரிக்கா, எகிப்து, இந்தியா என்னும் ஆலயக் கட்டிடங்களிற் காணப்படும் அலங்கரிப்பும் கொத்து வேலைப் பாடுகளும் ஒரே வகையின. சுவரில் எழுதப்பட்டுள்ள சித்திரங்கள் சிலவும் ஒரே வகையின. அமெரிக்க மக்களிடையே தம் முன்னோர் சூரியன் உதயமாகும் நாட்டினின்றும் வந்தார்களென்னும் பழைய நம்பிக்கை உண்டு. அயோவா, தக்கோலோ என்னும் தீவு மக்கள், ‘எல்லா அமெரிக்க மக்களும் சூரியன் உதயமாகும் திசையிலுள்ள ஒரு தீவில் ஒருமித்து வாழ்ந்தார்கள் எனக் கூறுவர்’ என மேசர் லிந் என்பவர் கூறுகின்றார்’ அத்லாந்திசின் வரலாறு. 1‘பினீசியரின் பழைய கடவுள் வழிபாடும் தமிழருடைய சிவ வழிபாட்டோடு ஒற்றுமையுற் றிருக்கின்றது. அவர் ஞாயிற்றுக்குச் சாலப் பழைய பெயராக இட்டு வழங்கிய, ‘எல்’ என்னுஞ் சொல் செந்தமிழ்ப் பழஞ் சொல்லாதல் கவனிக்கற்பாலது. அவர் சிவலிங்கம் போன்று நீண்டு தலைகுவிந்த கற்களை மலைமுகடுகளில் வைத்து வழிபட்டு வந்தனர். மகமதியர் தம் கடவுளுக்கு இட்டு வழங்கும் பெயராகிய “அல்லா” என்னும் சொல்லும் ‘எல்’ என்னுந் தமிழ்ச் சொல்லின் திரிபேயாகுமென இதனுண்மையை ஆராய்ந்து கண்டார் கூறுகின்றனர். கிரேக்கர் ஒலிம்பஸ் என்னும் மனைமுகட்டின் மேல் வைத்து வணங்கிய சியஸ் என்னும் தெய்வம் சிவபிரானோடு பெரிதும் ஒத்திருக்கின்றது. சியஸ் என்பது சிவம் என்பதன் திரிபு என்பது ஆராய்ச்சி வல்லோர் கருத்து. சடைமுடியுடைய ராயும் முத்தலை வேல் கையில் ஏந்தியவராகவும் சியஸ் என்னுங் கடவுள் கூறப்படுதல் இவ்வுண்மையை நிறுவும். அவர்கள் அமைத்த கோயில்களின் வடிவமும் இத் தென் தமிழ்நாட்டிலுள்ளகோயில் வடிவத்தைப் பெரி தொத்து நிற்றலும் கருத்தில் பதித்தல் வேண்டும். வரிசை வரிசையாகக் கற்றூண்கள் நிறுத்தி அமைத்த அவர்கடம் கோயிலுள் கிணறு குளங்களும் கோயிலின் வெளியே ஒரு பலிபீடமும் (வேள்வி மேடையும்) உள்ளே திருவுருவங்களினெதிரே ஒரு பலிபீடமு மாக இரண்டு நெற்றிகள் தமிழ்நாட்டுத் திருக்கோயில்களிலுள்ளவாறே அமைத்திருக்கின்றனர். உரோமருடைய சூபிதர் வழிபாடும் தமிழர்களது சிவ வழிபாட்டையே பெரும்பாலும் ஒத்திருக்கின்றது. “ஆங்கிலர் சர்மனியர்” என்னும் இருதிறத்தாருக்கும் முன்னோரான மக்கள் செய்து போந்த தெய்வ வழிபாடும் தமிழ் மக்கள் செய்துபோதரும் வழிபாட்டோடு ஒப்புடைத்தாதலும் ஒரு சிறிது ஆராய்ந்துணர்தல் இன்றியமையாதா கின்றது. ஆங்கிலர் சர்மனியர்களுக்கு முன்னோர் தியுதோனியர் (Teutons). இவர் ‘Woden’ எனப் பெயரிய கடவுளை இறைஞ்சி வந்தனர். . . . . இக்கடவுள் எல்லா கடவுளர்களுக்குந் தாயான ஒரு பெண்தெய்வத்தைத் தமது பக்கத்தே வைத்திருப்பவரென்றும் ஞாயிற்றினைக் கண்ணாகவுடையராயும் உள்ளவ ரென்றும் சொல்லப்படுகின்றது. . . . . . இனித் தெய்வங்களை அவர்கள் காடு களிலும் தோப்புகளிலும் வைத்து வணங்கி வந்தனர். அவ்வாறு வழிபடுங் கால் முழுமுதற் கடவுளின் குறியாக ஒரு பெரிய மரத்தூணைத் திறந்த வெளியிலே நிறுத்தி அதனெதிரிற் பலிபீடமமைத்துத் தீவளர்த்து வழி பாடாற்றி வந்தனரென்பதூஉம் அவர்தம் பழைய வரலாறுகளாற் புலனா கின்றது. இங்ஙனமே நம் முன்னோரும் திறந்த வெளியாகிய அம்பலத்தே இறைவனருட்குறியாகிய தூண்வடிவான ஒரு தறியை நிறுத்தி அதனெதிரே ஒரு பலிபீட மெழுப்பி வழிபட்டுப் போந்தாரென்பதற்கும், நம் முன்னோரும் காடுகளிலும் தோப்புகளிலும் இத்தகையவாம் பல அம்பலங்களில் இறை வனைப் பண்டுதொட்டுத் தொழுது போந்தாரென்பதற்கும் திருமறைக்காடு, திருவாலங்காடு, தில்லைவனம், கடம்பவனம், திருவானைக்கா என்னும் பெயர்களும் உறுசான்றாமென்க. தூண்வடிவு, தறிவடிவு, கற்குழவிவடிவு, குவிந்த புற்றின் வடிவு முதலியன வெல்லாம் சிவலிங்க வடிவமேயாதலு முணரற்பாற்று. “கிறித்துவ மறையின் முதற்புத்தகத்தில் எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளுக்கு, ‘எலோகிம்’ என்னும் பெயரே நனி சிறந்ததாய்ச் சாலப் பழையதாய் எடுத்தாளப்பட்டிருகின்றது. இச்சொல் ‘எல்’ என்னுஞ் சொல்லிலிருந்து வந்ததெனக் கிறித்து வேத ஆராய்ச்சி வல்ல புலவோர் உரை கூறுகின்றனர். . . . . . . . . கிறித்து சமயத்துக்கு முன்னோரும் முதல்வனை ‘எல்’ என்றும் எலோகிம் என்றும் எல்சடை யென்றும் ஒரோவிடங்களில் எல்எலியன் என்றும் வழங்கி வந்தமையினை உற்று நோக்குங்கால் அவருங் கடவுளை ஒளி வடிவினன் என்றே கருதி வழிபட்டமை புலனாகா நிற்கும்....... ஈண்டுக் காட்டிய இவ்வரலாற்றில் ‘எல்சடை’ என்னும் பெயரிற் கண்ட சடையென்னுஞ் சொல்லுஞ் சிவபெருமாற்குச் சிறப்புப் பெயராகத் தமிழ்நாட்டில் வழங்கும் சடையன் என்னுஞ் சொல்லும் ஒன்றாயிருத்தல் பெரிதும் நினைவு கூரற் பாலதாகும்,” “மேலும் யாக்கோப்பு என்னும் அடியவர் இறைவனருளை நேரே பெற்று அவனைத் தொழுகுறியாக ஒரு குவிந்த கல்லினை நிறுத்தி அதன்மேல் எண்ணெயைச் சொரிந்து அதனைப் ‘பீத் தெல்’ அல்லது முதல்வனிருக்குமிடம் (கோயில்) என்று பெயரிட்டு வழிபாடாற்றி வந்தமையும், ஆன் என்னும் ஊரிலிருந்த பகலவன் கோயிலின் கண் ஆன் கன்றினை (நந்தியை) இரசவேல் மரபினர் வழிபட்டமையும், பலிபீடங் களின் மேலே குன்றாத் தீவேட்டு வழிபட்டமையும் இரசவேல் மரபினர் குமாரர் ஒளிவடிவின் அடையாளமான குவிந்த மணிக்கற்களை மார்பிற் கட்டிக் கொண்டு, இருந்தமையும் (சிவலிங்க தாரணம்) ஆராய்ந்து பார்க்கும் நடுநிலையாள ரெல்லாம் கிறித்துவ சமயத்தினர் தம் முன்னோர் செய்து போந்த முதற்கடவுள் வழிபாடும் தமிழ்நாட்டினர் செய்து போதரும் சிவவழிபாடும் ஒன்றேயா மென்பதும் உணராமற் போவரோ?1 “ஒரு காலத்தில் நமது தமிழ்மொழி உரோமாபுரி முதலான தேசங் களிலும் பரவியிருந்தது போன்று சைவ சமயமும் அன்னிய நாடுகளெல் லாம் பரவியிருந்ததாகத் தெரிகின்றது. கீழ்க்காணும் தேசங்களில் சிவா லயங்கள் இன்னுங் காணக்கிடைப்பதால் தகுந்த சாட்சியமாகின்றது. “வட ஆப்பிரிக்காக் கண்டத்து ஈஜிப்ட் தேசத்திலுள்ள மெம்பீஸ் நகரத்தில் நந்திவாகனன் திரிசூலன் சாம்பவாக்ர சர்ப்பாம்பரதாரியான பரமேசுர விக்கிரகமும், பாபிலோன் பட்டணத்தில் 120 அடி உயரமுள்ள சிவலிங்கமும், ஹைட்டோபோலீஸ் என்னும் பட்டணத்தில் 60 அடியுள்ள சிவலிங்கமும் மெக்காவில் ஸகமக்கேஸ்வர நாமமுள்ள ஒரு சிவலிங்கமும் ஸம்ஸம் என்னும் கிணற்றில் ஒரு சிவலிங்கமும் இருக்கின்றன. ப்ரஜில் (பிரேசில்) தேசத்தில் அநேக சிவலிங்கங்களும் விக்னேசுரமூர்த்தங்களும், காரிந்த் பட்டணத்தில பார்வதி தேவியின் ஆலயமும், கிளாஸ்கோவில் சுவர்ண கவசத்தினால் போர்க்கப்பட்ட ஒரு சிவலிங்கமும், பிரிஜியன் தேசத்தில் ஏடன் என்னும் சிவலிங்கமும், வினியா, யகோதி, சிதரால், காபூல் பலக்புகார் முதலான இடங்களில் அநேக சிவலிங்கங்களும் இருக்கின்றன. அங்குள்ள சனங்கள் பஞ்சாட்சர பஞ்சவீர என்னும் பெயரால் அழைத்தும் அர்ச்சித்தும் வருகின்றார்கள் என்று வீர சைவம் என்னும் மாதாந்தப் பத்திரிகை கூறுகின்றது.” (சித்தாந்தம் மலர்-3 இதழ் 3) இங்கிலாந்திலுள்ள கிறித்துவ ஆலயங்களையும் மூலை முடுக்கு களையும் கவனித்து நோக்கும்போது அஃது ஒரு சைவநாடு அன்று என்று கருத இடம் தரவில்லை எனச் சித்தாந்த தீபிகை என்னும் பத்திரிகையில் ஒருவர் எழுதியுள்ளார்.1 லிடியா என்னும் நாட்டில் ஒரு சமாதியின் மேல் ஒன்பதடிக் குறுக்களவுள்ள ஒரு சிவலிங்கம் இருக்கிறது. தமிழ்நாட்டில் சமாதியின் மேல் லிங்கம் தாபிக்கும் வழக்கினையே அந்நாட்டவரும் கைக்கொண் டனர் போலும். பாபிலோனிலே உள்ள கோயில்களில் தமிழ்நாட்டின் ஆலயங் களிலே காணப்படுவதுபோலத் தேவதாசிகள் இருந்தார்கள் என வரலாற் றாசிரியர்கள் கூறுகின்றனர். தமிழகத்தினின்றும் பெயர்ந்து சென்று பாபிலோனிற் குடியேறிய தமிழர் இவ்வழக்கத்தையும் உடன்கொண்டு சென்றார்கள் போலும். வட அமெரிக்காவின் ஒரு பகுதியாகிய மெக்சிகோ நகரத்தில் சந்திர சூரியர்களுக்கு ஆலயங்கள் இருந்தனவென்றும், மொண்டி சூமா அரசன் காலத்திலும் அக்கோயில்களில் ஆராதனை, திருவிழா முதலியன நடந்து வந்தன வென்றும் சரித்திரங்களிற் படிக்கின்றோம். “சுமேரியரின் உடற்கூறு முதலியன அவர்களைச் சூழவிருந்த மக்கட் சாதியாரைவிட வேறுபாடுடையனவாயிருந்தன. அப்படியே அவர் களுடைய மொழியும் செமித்தியர், ஆரியர் அல்லது மற்றவர்களுடைய மொழிகளோடு சம்பந்தமில்லாதிருந்தது. அவர்கள் திட்டமாக இந்தியரின் இனத்தைச் சேர்ந்தவர்கள். பொதுவாகத் தற்கால இந்தியனின் முகவெட்டு இற்றைக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னிருந்த திராவிட சாதி முன்னோரின் வடிவை ஒத்திருக்கின்றது. இன்றும் தக்கணத்தில் திராவிட மொழிகளைப் பேசுகின்ற இந்தியரைச் சுமேரியர் ஒத்திருக்கின்றனர். இந்தியாவினின்றும் தரைமார்க்கமாக அல்லது கடல் மார்க்கமாகச் சென்று பாரசீகத்துக் கூடாக தைகிரஸ் யூபிறாதஸ் என்னும் இரு நதிகளின் பள்ளத் தாக்குகளை அடைந்த மக்களே சுமேரியராவர். இந்தியாவிலேயே அவர் களின் நாகரிகம் வளர்ச்சியுற்றது. அங்கே அவர்கள் எழுதும் முறையை அறிந்திருத்தல் கூடும். முதலில் ஓவிய முறையாகவும் அதிலிருந்து இலகுவாக வும் சுருக்கமாகவும் எழுதும் முறையை அவர்கள் பயின்றனர். அவர்கள் பாபிலோன் நாட்டையடைந்தபோது சதுரமாகிய எழுதுகோலினால் மிருதுவான் களிமண்ணில் எழுதி வந்தார்கள். இதனால் எழுத்துக்கள் கூர்நுதி வடிவினவாகக் காணப்பட்டன. மக்கள் முதலில் நாகரிகம் அடைந்தவிடம் இந்தியா என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. சுமேரியர் இந்தியரினத்தைச் சேர்ந்தவர்களாகக் காணப்படும்போது கிழக்கிலிருந்து மேற்கே நாகரிகப் படுத்துவதற்குச் சென்ற செமித்தியரும். ஆரியரும் அல்லாத சாதியார் இந்திய உற்பத்தியினரேயெனத் தெரிகின்றது. இந்திய நாகரிகம் ஆரியருக்கு முற்பட்டது; ஆகவே இந்திய நாகரிக மென்பது ஆரியருடையதன்று1 என டாக்டர் ஹால் என்னும் பண்டிதர் கூறுகின்றனர். இதனால் பழைய நாகரிக மக்களாகிய சுமேரியரும் தமிழ் நாட்டினின்றும் சென்றவர்களேயென்பது ஐரோப்பிய பண்டிதர்களுக்குக் கருத்தாதல் கருத்திற் கொள்ளற்பாலது. “சாலடியாவில் ‘ரொல்ரோ’ என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சிலைகளின் தலைகள் தமிழர்களின் முகச்சாயலை ஒத்திருக்கின்றன.” பி.தி. சீனிவாச அய்யங்கார் கூறுவது: இந்தியாவிலே புதிய தற்கால நாகரிகம் 20,000 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி எல்லா ஆற்றோரங்களிலும் பரப்பியது. தமிழில் முதற்பருவத்தி லுள்ள சொற்களெல்லாம் ஓரசையின. சர்.சான் மார்சல் என்பவர் ‘அரப்பா’ ‘மொகஞ்சதரோ’ என்னுமிடங்களில் அகழ்ந்து கண்டுபிடிக்கப் பட்ட ஓவிய எழுத்துக்களைக் குறித்து எழுதி இருந்தவாறு இவ்வோரசைச் சொற்களைச் சித்திர எழுத்துக்களாக அமைத்தல் கூடும். இந்தியாவின் புதிய தற்கால நாகரிகம் இந்தியாவினின்றும் கடல்வழியாகச் சென்று சுமேரிய நாகரிகத்துக்கு ஏதுவாக அசீரியாவில் தங்கினது சுமேரியருக்கும் தமிழருக்கும் முகவெட்டு ஒரு வகையாக விருத்தல் தற்செயலாக ஏற்பட்டதன்று.”1 “நாகரிகம் முதற்றோன்றியவிடம் தென்னிந்தியாவென்று சொல்வது ஆதாரமற்ற கட்டுக்கதையன்று. ஹால் (Dr. Hall) என்பவர் சுமேரியரின் உற்பத்தியைக் குறித்துக் கூறியது உண்மையாக விருந்தால் நாகரிகம் முதல் இந்தியாவிற்றோன்றிப் பழந்தமிழர்களுக்கிடையே பழகினதென்பது நாட்டப்படும் பின் அது பாபிலோனின் நாகரிகத்தை உதயமாக்குவதற்குக் கொண்டுபோகப்பட்டது. மக்கள்நூல் வல்லார் ஒருவர் முற்பட்ட மக்கள் இந்து சமுத்திரத்துள் மறைந்த கண்டத்தில் உற்பத்தியானார்கள் எனக் கூறுகின்றனர். சர்.வால்டர் ராலி2 என்னும் பண்டிதர் சலப் பிரளயத்துக்குப் பின் மக்கள் பல்கிய விடம் இந்தியாவென நவில்கின்றனர். சர் சான் எவான்ஸ் (Sir Johan Evans) தென்னிந்தியா ஆதி மனிதனுக்குப் பிறப்பிடமென அறைகின்றனர். (திராவிட இந்தியா. பக்.59-60) சுவாமி விவேகானந்தர் சொல்வது:- 3“மிகவும் புராதன நாகரிகமுடைய தமிழருடைய வாசத்தானமே சென்னை நகரமாகும். தமிழரின் ஒரு பிரிவினர் மிகப் பழைய காலத்தில் யூபிறாட்டிஸ் நதிப் பக்கங்களில் தங்களுடைய நாகரிகத்தைப் பரப்பினர். அவர்களுடைய சோதிடம், சமயம், காதல், நீதி, கிரியை முதலியன அசீரிய பாபிலோனிய நாகரிகத்துக்கு அடிப்படையாயிருந்தன. அவர்களுடைய பழங்கதைகள் விவிலிய நூலுக்கு ஆதாரமாகவிருந்தன. தமிழரில் இன்னொரு பிரிவினர் மலையாளக் கரை வழியாகச் சென்று நூதனமான எகிப்திய நாகரிகத்தைக் கட்டி எழுப்பினார்கள். ஆரியர் இந்தச் சாதி யாருக்குப் பலவகையில் கடமைப்பட்டவர்களாயிருக்கின்றனர். தென் னிந்தியாவிலுள்ள பிரமாண்டமான கோவில்கள் தமிழர்களின் கட்டிட மமைக்கும் கலைத்திறமையைத் தெரிவிக்கின்றன.” இன்னும் சுவாமி விவேகானந்தர் தமது இரண்டாம் மேற்றிசைப் பிரயாணத்தைக் குறித்து எழுதிய ஆங்கில நூல் ஒன்றில் ‘கருநிறமும் நீண்ட மயிரும் நேரிய மூக்கும் சரிவில்லாத கரிய கண்களும் உடைய ஒரு சாதியார் பூர்வ எகிப்திலும் பாபிலோனியத்திலும் வசித்தார்கள். அச்சாதியார் இந்நாள்களில் இந்தியா முழுமையிலும் விசேடமாகத் தெற்குப் பக்கத்திலும் வசித்துவருகிறார்கள். ஐரோப்பாவின் சில பாகங்களிலும் இவர்களைக் காணக்கூடும். இவர்களே திராவிடர் எனப்படுவர்.’ என்று எழுதியிருக்கின்றார். (தமிழ் தொகுதி - 1 பகுதி 3 ப.19) ‘எகிப்தியருடைய நாகரிகம் மிகவும் பூர்வீகமானது. அசுர் என்னும் பட்டணத்தைத் தலைநகரமாகக்கொண்ட அசுரேய நாட்டின் (Assyria) நாகரிகம் எகிப்திய நாகரிகத்துக்கு முந்தியது. இவ்வசுரேய நாகரிகந்தானும் பாபிலோனிய நாகரிகத்தைப் பின்பற்றியது. பாபிலோனிய சீர்திருத்தம் சுமேரிய அக்கேடிய நாகரிகத்தின் வழி வந்தது. இங்குக் கூறியன யாவும் ஆராய்ந்து தாபிக்கப்பட்ட உண்மைகள். சுமேரிய அக்கேடிய நாகரிகத் துக்கும் தமிழ்நாட்டுப் பூர்வீக நாகரிகத்துக்கும் ஒற்றுமை காணப்படு கின்றது. மேற்குறிப்பிட்ட பொருளைப்பற்றிப் பிரபல பண்டிதர்களாகிய ஸர்.எச்.எச். ஜான்ஸ்டன், எச்.ஜீ. உவெல்ஸ், உவில் விறடஸ்காவேன் பிளன்ற், ஹக்ஸ்லி இவர்கள் சொல்வதை மொழிபெயர்த்து எழுதுவாம். முன்னையோர் இருவரும் சொல்வது முன்னைய ஆராய்ச்சி முறையின் முடிபாகக் கண்டது; பிஷப் கால்டுவெல் பண்டிதருடைய கொள்கைக்கு மாறுபட்டது; யுத்திக்கு ஏற்றதாகத் தோன்றுகிறது. அது வருமாறு: - உலகத்தில் முதன்முதற் கட்டிடங்களையும் பட்டணங்களையும் உண்டாக் கியவர்கள் சுமேரியரென்னும் சாதியார். இவர்கள் யூத வகுப்பு ஆரிய வகுப்பைச் சேர்ந்தவர்களல்லர்; எங்கிருந்து வந்தார்களோ தெரியவில்லை., இவர்களுடைய பாஷை பலுச்சிஸ்தானத்தின் சில பாகங்களிலும் காக்கேசிய மலை நாட்டிலும் உள்ள பாஷைகளையும் ஸ்பானியாவில் ஒரு பக்கத்திற் பேசப்படுகிற பாஸ்க் என்னும் பாஷையையும் ஒத்திருக்கின்றது. இப்பாஷைகளெல்லாம் திராவிட மொழிகளோடு நெருங்கிய சம்பந்த முடையன. சுமேரியர் கோபுரத்தோடு கூடிய கோயிலைக் கட்டினார்கள். நிப்பூர் என்னுமிடத்திலே தமது பிரதான தெய்வமாகிய எல்-லில் என்னுஞ் சூரிய தேவனுக்கு ஒரு கோயிலைக் கட்டியிருந்தார்கள். பின்னர் ஹக்ஸ்லி அவர்கள் சொல்வது:- எகிப்தியரும் திராவிடரும் ஒரே குலமுறையில் வந்தவர்களாகவிருத்தல் வேண்டும். முன்னாறுற் கருப்பென்றும் வெள்ளையென்றுஞ் சொல்லக்கூடாத மங்கல் நிறத்தின ராகியவரும் மிகவும் சீர்திருத்தமெய்தியவருமாகிய ஒரு சாதியார் ஐரோப்பா வில் இங்கிலாந்து பிரான்சு ஸ்பானியா என்னுமிவற்றிலும் மத்திய தரைக்கடலின் இருபக்கத்திலும், எகிப்திலும், இந்தியா முழுமையிலும், சீன தேசத்திற் பசுபிக் சமுத்திரக் கரையிலும், அமெரிக்காவிற் பீரு மெக்சிகோ ஆகிய இரண்டு நாட்டிலும் பரவியிருந்தார்கள். இவர்கள் சூரியனையும் சர்ப்பங்களையும் சமயக் கொள்கைகளிற் சம்பந்தப்படுத் தியும் இன்னும் இந்தியாவில் வழங்குகிற சுவஸ்திக் அடையாளத்தையும் அங்ஙனமே சமயக்கொள்கைகளிற் கொண்டும் வந்தவர்கள். இவர்கள் கிறிஸ்தவாப்தத்துக்குப் பதினாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர்கள். அது முதல் கி.மு.ஆயிரம் ஆண்டுவரையும், அஃதாவது பதினாயிரம் வருடத் துக்கு இவர்களுடைய நாகரிகம் நிலைபெற்றிருந்தது: வடக்கிலிருந்து வந்த வெள்ளை நிறமுள்ள ஒரு சாதியார் இவர்களைத் துரத்திவிட்டார்கள். ஐரோப்பாவின் தெற்குப் பாரிசங்களிற் புதிய கற்காலத்தினராகிய இவர்கள் குறைந்தபடி பத்தாயிரம் வருடங்களுக்குத் தமது பாஷையைப் பேசிக் கொண்டு வந்தார்கள். ஆரிய பாஷை வருதலும் இவர்களுடைய மொழி அருகி மறைந்து போயிற்று. சென்ற வருஷத்திற் ‘கிறீற்’ என்னுந் தீவிலகப் பட்ட கற்சாசனங்களை யாராய்ந்த ஸர்.எச்.எச்.ஜான்ஸ்டன் என்னும் பண்டிதர் கிறித்தவாப்தத்துக்கு மூவாயிரம் வருஷத்துக்கு முன்னுள்ள அச் சாசனங்களில் எழுதப்பட்ட மொழியும் திராவிட மொழியோடு தொடர்புடையதென்றார். உற்று நோக்கும் போது எகிப்தின் பிரதான நதியாகிய நீலநதி சுமேரிய தலைநகராகிய நிப்பூர் எல்.வேல் என்னுங் கடவுட் பெயர்கள் தமிழ் மொழியாகவிருக்கின்றன. பின்னும் யவனமொழி எழுத்துக்களின் வடிவம் தமிழ் எழுத்துக்களோடும் கிரந்த லிபியிலுள்ள எழுத்துக்களோடும் தொடர்புடையதாகக் காணப்படுகின்றது. (செந்தமிழ் XX. . . . 10) “பாபிலோனியத்தில் எல்.றாமார்த்துக் என்னும் பெயர்களையுடைய சூரியதேவன் அசுரேயத்தாரால் அசூர் என்னும் பெயரால் துதிக்கப் பட்டான். (அசூர் என்னும் பதத்திற் சூரியன் என்னும் பதத்தின் பிராதிபதிகந் தோற்றுவதும், றா என்னும் பதத்தில் ரவி தொனிப்பதும் எல்லென்னும் மொழி தமிழிற் பரிதியங் கடவுளுக்குரிய பெயராதலும் உற்று நோக்கற் பாலன) இச்சூரியதேவனோடு ஒப்புடைய தேவர் மூவருளர். அவர் அநு, வேல், எயா என்னும் பெயரினர். மேலும், சின், ஷாமஸ், உல் என வேறு திரிமூர்த்திகளும் உளர். சின் மற்றெல்லாத் வேதர்களினுஞ் சிறந்து விளங்கினார். இவர்கட்கு ஊர், போசிப்பா, பாபிலோன், கலா. தூர்சர்க்கினா முதலிய இடங்களிலெல்லாம் பெரிய கோயில்களமைந்திருக்கின்றன. ஆண்டின் மூன்றாம் மாதமாகிய சிவன் என்னும் மாதம் இவருக்கு உரிய தாயிருந்தது. இளம்பிறைச் சந்திரன் இவருடைய இலச்சினை; இவ் வடையாளத்தினால் குறிக்கப்படுவர். அன்றேல் நீண்ட அங்கியணிந்த மானிட வுருவமும் சிரசில் மும்முடியும் முடியின்மீது பிறைச் சந்திரனு முள்ள உருவமும் இவருடைய உருவமாகும். ஆசுரேய பாபிலோனிய காலதேய மனைத்தினும் படைத்தற் கடவுளுக்கு வேல் என்று பெயருண்டு. (செந்தமிழ் XX. . . . 12) வடஇந்தியாவுக்கும் தென்னிந்தியாவுக்குமிடையில் கடல் கிடந்த போது இருநாடுகளுக்கும் தொடர்ச்சி ஏற்பட்டிலது. அக்காலத்துத் தென் இந்தியாவினின்றும் மரக்கல வழியாக வட இந்தியாவை அடைந்த வணிகர் அங்கே தங்குவாராயினர். இவர்களிடமிருந்து ஆரியர் மரக்கலம் செய்யும் முறையைக் கற்றுக்கொண்டனர். இருக்கு வேதத்திலே சொல்லப்படும் பாணீஸ் (Panis) என்பவர்கள் தமிழ் வியாபாரிகளே. இவர்கள் தமிழ்ப் பாணர்களென்பது சிலர் கருத்து. வடநாட்டிற்றங்கிய பின் அவர்களாற் றுரத்தப்பட்ட பாணீஸ் சோழமண்டலக் கரையிற்றங்கி அங்கிருந்து மரக்கல வழியாக பினீசியாவில் குடியேறினர். இவர்களே ‘Punic race’ என மேற்றிசைச் சரித்திரக்காரராற் குறிப்பிடப்படுவோர். சோழமண்டலக் கரையினின்றும் சாலடியாவிற்றங்கினோர் சாலடியர்களென்றும். பாண்டிய நாட்டினின்றும் சென்று எகிப்திற்றங்கினோர் எகிப்தியர் களென்றும் சரித்திர வல்லார் மொழிகின்றனர். “ஆரியரின் மிகப் பழைய நூலெனக் கருதப்படும் இருக்கு வேதத்திலும் பாணரைப்பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அவர் கடலிலுங் காலிலுஞ் சென்று வாணிகஞ் செய்பவரென்றும் வகுப்பு வேற்றுமை பாராட்டாதவராயினும் ஆரியர் கொள்கைக்கு உடன் படாதவரென்றும் கூறப்பட்டிருக்கின்றது. அவரைப் 1பாணூஸ் (Panis) என்று இருக்கு வேதங் கூறும். மேல் நாட்டிலக்கியங்கள் அவரைப் புயூனிக் குழுவினர் (Punic race) என்று கூறுகின்றனர். அவர்கள் தாம் சிரியாவின் பக்கத்திற் குடியேறிய பின்னர் பொனீசியர்கள் என்றழைக்கப்பட்டனர். பாணர் காந்தார கபூலிஸ்தான் வழியாக மேலாசியாவிற்கும் போண்டஸ் (Pontus) மாகாணம் பாஸ்போரஸ் நிலவொடுக்கம் (Isthmus of Bosphorous), இவைகளின் வழியாக ஐரோப்பாவிற்கும் பல பிரிவினராகச் சென்றனர். காந்தார கபூலிஸ்தான் வழியாகச் சென்ற பாணர் கீழ் அரேபியாக் கரையை யும் பாபிலோனியாவையுந் தாண்டிச் சிரியாவின் வழியாகச் சென்று நிலைத்த நாட்டுக்குப் பொனீஷியா என்று பெயர்; பாணருடைய நாடு பொனீசியா எனப்பட்டது. போசியன் குடாக்கரையிலிருந்தோர்கள் அவரைக் கடற் கடவுளென்று நினைத்து வணங்கினர். “பின்னும் பாணர் டைகிரிஸ் யூப்ரெட்டிஸ் ஆற்றுப் புறங்களுக் கருகே குடியேறி நாகரிகமாகிய விளக்கை ஏற்றினர். அவ்வாறேற்றப்பட்ட விளக்கிலிருந்து வட ஆசியாவெங்குமொளி பரவிற்று. பாணர் குடியேறு வதற்கு முன் பொனிசியா லெபெனான் (Lebanon) என்ற பெயர் பெற்றிருந்தது. பொனிஷியரென்பவர் கிறித்து பிறப்பதற்கு முற்பட்டவரென்பது சூலியர் அபிரிக்கானசின் முடிவு. ஆகவே, பாண்டியரின் வரலாறு அதற்கு முற்பட்டதென்பது தெரியவரும். “இதற்குள்ளாக நிலத்தினமைப்புச் சிறிது மாறிற்று. பஞ்சாபிற்குத் தெற்கே இருந்த கீழ்கடலும் அரச பட்டணத்தை ஒட்டியிருந்த அரச பட்டணக் கடலும் ‘நாடு கடலாகும்; கடல் நாடாகும்’ என்பதை யொட்டி மேடாயின. மரக்கல மோட்டப் பாணரிடங் கற்றுக் கொண்டும் போதிய மரக்கலமில்லாததால் கடல் கடக்க முடியாதிருந்த ஆரியருக்கு அப் பொழுது தென்னாடு நோக்கிப் போக முடிந்தது. ஆதலால் தமிழரது நாகரிகத்தைக் கற்றுக்கொண்டு மேன்மேலும் பெருகுவதற்கு அவரால் முடிந்தது. சோழமண்டலக் கரையிலிருந்த தமிழர் வடநாடு போந்த கடற் பாணரை ஒத்த நாகரிகத்தினர். அச்சோழர்கள் பாணருடன் சென்று ஒரு நாட்டிற் குடியேறினர். அக் குடியேற்ற நாட்டிற்குச் சோழநாடு அல்லது சாலிதியா (Chaldia) என்பது பெயர்.1 அந்நாட்டையே ஷைனார் நாடென் றும் (Shinar Land) பாபிலோனியா என்றுங் கூறுப. அங்குக் குடியேறிய வருக்குச் சுமேரியர் என்று வேறு பெயருமுண்டு பாபிலோனியாவிலே சுமேரியர் பிறந்தவர் என்று கூறுவதற்கு அந்நாட்டு மண்ணும் நிலமும் இடந்தரா. சாலிதியாவிலுள்ள டெல்லா2 என்ற விடத்திலிருந்து அகப் பட்டுள்ள சில உருவங்களின் தலைகள் தமிழரின் தலைகளை ஒத்திருக் கின்றன. தமிழரது மொழியைப் போன்ற சுமேரியரது மொழியும் ஒட்டுச் சொற்களையுடையது. அச் சுமேரியர்தாம் பாபிலோனியாவிலும் அசீரியா விலும் நாகரிகத்தை வளர்த்தவராவர். இருக்கு வேதத்திலும் சந்தனமரத்தைக் குறித்து யாதொரு குறிப்புங் காணப்படாததாலும், சந்தனமரம் மலையாளக் கரையின் தனிப்பொருளாகையாலும் பாபிலோனியா இலக்கியங்களிற் காணப்படும் சந்தனம் தமிழராகிய சாலிதியராலேதான் கொண்டுபோகப் பட்டதென்று நினைக்க இடமுண்டு. மொழி பற்றிய இலக்கணமும் மண்டையோடு பற்றிய செய்திகளும் தமிழர்களுக்கும் சுமேரியர்க்குமுள்ள தொடர்ச்சியை வலியுறுத்துகின்றன. பாபிலோனியாவிலும் ‘பாம்பைத் ’தெய்வமாகக் கொண்டாடுவதினின்று அத் தொடர்ச்சி பசுமரத்தாணி யாகின்றது. சோழர்கள் சாலிதியர்க்குச் சிற்ப வேலைகளைக் கற்பித்தனர். தென்னிந்தியாவினின்று சென்ற சேத்துக்கள் அல்லது சிரேஷ்டிகள் (Seths or Shrestis) என்போரே சாலிதியாவில் சேட்டுகள் (Saits)3 என்றழைக்கப் பட்டனர். அச்சேட்டுகள் இன்றேல் சாலிதியாவின் கலைப்பெருக் கவ்வளவு மிகுந்திரா தென்பது திண்ணம். மெசப்பொட்டேமியாவி லெழுந்த இந்தச் சாதியாரின் நாகரிகம் பதினோராயிரமாண்டுகளுக்கு முற்பட்டதென்ப. பாண்டியர்கள் பெர்சியா அரேபியா வழியாகச் சென்று எகிப்தில் குடியேறினர். அவர்கள் பண்டு நாட்டிலிருந்து1 வந்தவராக அந்நாட்டு வரலாற்றிலுங் கூறப்பட்டுள்ளது. பண்டு நாடென்பது பாண்டி நாடாகிய தமிழ் நாடே. எகிப்தியருடையவும் தமிழருடையவும் மண்டை யோடுகள் ஒத்திருப்பதே போதிய சான்று. தமிழரைப் போலவே எகிப்தி யரும் ஒவ்வொரு திங்களிலும் மலக்கழிவு மருந்தருந்தினர். பெரியோரை வணங்குதல் இருபாலாரிடத்துமுண்டு. உயிரினழிவிலாத் தன்மையில் இரு பாலார்க்கும் நன்னம்பிக்கையுண்டு. துன்ப காலத்திலும் பிரிவாற்றாமை நிகழ்ந்துழியும் தலைமயிரைக் களையாது வளரவிடும் வழக்கமிருவரிடமும் உண்டு. அம்மை அப்பன் என்ற பகுப்பு எகிப்தியரிடமுமுண்டு. புறவழுக்கு மிகுந்த உயிரென்று பன்றி தமிழராலும் எகிப்தியராலும் பன்னாளாக இகழப்பட்டு வருகிறது. இவையெல்லாம் எகிப்தியருக்கும் தமிழருக்கு முள்ள புணர்ச்சி யுண்மையைக் காட்டுகின்றன. “இவ்வாறு தமிழராகிய பாண்டியரின் தொடர்பால் வந்த எகிப்தியருடைய நாகரிகமே உலகிற் பெரும்பாலும் பரவிற்று. எகிப்தியர் நாகரிகமே முதலிலெழுந்ததென்று சிலரும் பாபிலோனியரின் நாகரிகமே முற்பட்டதென்று சிலரும் கூறி வாதிப்பர். அவ்விருவர் நாகரிகமும் தமிழரான் வந்ததேயன்றி வேறல்லவென்பது பாண்டியர் குடியேறிய நாடே எகிப்தென்றும், சோழர் குடியேறிய நாடே சாலிதியாவென்றும்., சாலிதியர் குடியேறிய மெசப்பொட்டேமியாவாகிய நாடே பாபிலோனியா என்றும் வழங்கப்பட்டன என்றும் முற்கூறிப் போந்தவற்றால் விளங்கா நிற்கும். பாணருடைய நாடே பொனீஷியாவென்றும் மேலே கூறப்பட்டது. இவ் வெகிப்தியரும் பாபிலோனியரும் பொனீஷியருமே கிரேக்கருக்கு நாகரிகங் கற்பித்தவர். கிரேக்கருக்குக் கற்பிக்கப்பட்டதைக் கிரேக்கரிடமிருந்து உரோமர் அறிந்தனர். பின்னர் உரோமர் தாங் கற்றுக் கொண்டவற்றை ஐபீரியர், கெல்த்கள், தியூதர்கள்., சிலேவர்கள்2 முதலானோர்க்குத் தெரிவித் தனர். இவ்வாறே உலகெங்கும் தமிழரிடமிருந்து நாகரிகம் பரவிற்று (செந்தமிழ்ச் செல்வி சிலம்பு -7 பரல் 1) இதுகாறும் கூறியவற்றால் தமிழகத்தினின்றும் சென்ற மக்கள் இப்பூவுருண்டையின் பல பாகங்களிற் சென்று தங்கிப் பற்பல சாதியினர் என்னும் பெயரினைப் பெற்றார்களென்பது தெளிவுற விளங்கும். 9. முதற்கண் தோன்றிய மொழி தமிழ்நாட்டிலேயே மக்கட் படைப்பு முதற்கணுற்றதெனத் தக்க பிரமாணங்களால் மேலே நிறுவப்பட்டது. ஆகவே, மக்கள் முதற் பேசிய மொழி தமிழ் என்பது தானே பெறப்படும். ஒருமொழியின் அடியாகவே உலகில் உள்ள பல மொழிகள் தோன்றியிருக்கின்றன வென்று மொழி ஆராய்ச்சி வல்ல பண்டிதர்கள் துணிகின்றனர். மொழி ஆராய்ச்சி வல்ல வண.நல்லூர் ஞானப்பிரகாசர் தமிழ்ச் சொற்கள் இந்து ஐரோப்பிய மொழிகளில் திரிந்து வழங்கியிருக்கும் வகையினை யாவரும் எளிதிற் கண்டு மகிழுமாறு பத்திரிகைகள் வாயிலாகவும் புத்தக வாயிலாகவும் விளக்கி யிருக்கின்றனர். சுமேரியா மொழிக்கும் தமிழுக்கும் உற்பத்தித்தானம் ஒன்று என்பது அவர் கருத்து.1 ஆரியமும் அம் மொழியிலுள்ள நான்மறைகளும் தோன்றுவதன் முன் உலக முழுமையும் தமிழ் மொழி வழங்கியதென்பது பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் கருத்து. “சதுமறை ஆரியம் வருமுன் சகமுழுது நினதாயின் முதுமொழி நீ யனாதியென மொழிகுவதும் வியப்பாமே ” எனத் தமது கருத்தைப் பிள்ளை அவர்கள் மனோன்மணீயத்தில் விளங்கக் கூறியிருக்கின்றனர். “2சாவகம் முதலிய ஐவகைத் தீவிலுள்ள மொழிகளும் இமயமலைச் சார்பில் ஒருவகைச் சாதியார் பேசுகின்ற மொழியும், விந்திய மலையின் கிழக்கு முனையிலுள்ள சூடிய நாகபுரியில் ஒருவகைச் சாதியார் பேசுகின்ற மொழியும் அம்மலையில் அம்பரமென்னுஞ் சிகரத்தில் (Mt. Abu) வசிப்பவர் தம் மொழியும், திபெத் நாட்டு மொழியும், பெலுச்சித்தான் தேசத்தில் தவுத்புத்திர என்னுஞ் சாதியார் பேசுகின்ற மொழியும், ஐரோப்பாக் கண்டத்துள் ஆஸ்திரியா நாட்டு மொழியும் பிறவும் தமிழின் சிதைவென வரலாற்றாராய்ச்சியில் வல்ல பெரியோர் கூறுவர். “தவுத்புத்திர என்பது திராவிட புத்திர என்பதன் சிதைவு.” “ஆப்கானித்தான் என்னும் மகம்மதிய நாட்டில் ஒரு நகருக்குத் தமிழ் என்னும் பெயர் வழங்குவதோடு அந்நகரில் குடியேறிய மகம்மதியரும். தமது பாஷையோடு தமிழையுங் கலந்து பேசுகின்றார்கள்.” “ஆசியாவில் சைபீரியா நாட்டில் அக்கீன் சாதியார் மொழியும், வட ஐரோப்பாவில் பின் சாதியார் மொழியும், மீட்டியா நாட்டிலுள்ள பிஹிஸ்டன் சாசனங்களில் எழுதியுள்ள மொழியும், திராவிட சம்பந்தம் பெற்றுள்ளன. பால்டிக் கடல் முதல் மலையாளம் வரையில் திராவிட சம்பந்தமாம். திராவிடம் தொன்றுதொட்டுள்ள தொன்று; ஆரியருக்கு முன் நாகரிகமடைந்தவர் திராவிடர்; வடபால் மேல்பாலுள்ள ஆஸ்திரேலியா தேசத்தாரது மொழியுள் நான், நாம், நீ, நீங்கள், அவ னென்னுஞ் சொற்களொத்துள்ளன; மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளுவம், குடகு, தோடம், கோட்டம், காண்டி, ஊரான், முதலிய பாஷைகள் தமிழ்ச் சிதைவு” என்று வரலாற்றுப் புலவர் ஹண்டர் என்பவர் கூறுவர். “இன்னும் வடமொழிக்குத் தமிழ் முற்பட்டது” எனவும், “இத்தாலிய தேசத்திற் பல நூற்றாண்டுகளுக்கு முன்னே தமிழர்களுக்குச் சம்பந்தமான சாதியார்கள் இருந்தார்க”ளெனவும், அறிஞர் கால்டுவெல் கூறுவர். எட்வர்ட் க்ளார்டு1 என்பவர் தாம் எழுதிய யூதருடைய சரித்திரத்தில் மங்கோலியர், பினீஸ் இச்சாதியர்களுக்கு மூலபுருடர்களாக இருந்த வர்கள், ஈழ நாட்டிலிருந்து பாரசீக வளைகுடாவைச் சூழ்ந்து குடியேறி யிருந்தார்கள் எனவும், சுமேரியரென்னும் சாதியாருக்கு முன்னும் எகிப்து தேசத்தார் தலையெடுப்பதற்கு முன்னும் அவர்கள் நகரங்களையும் இராசதானிகளையும் உண்டாக்கினார்களெனவும், அவ்விராசதானிக்கு ஊரெனவும், அவ்வூர் சோமசுந்தரக் கடவுளுக்கு உறையுளெனவும். வெற்றி வேற் குமரன் அவர்தங் கடவுளெனவும் கூறுவர்.” (மொழிநூல் -மா.கா.முதலியார்) “தென்னாட்டுத் திராவிட மொழியிலிருந்து சப்பான் மொழி தோன்றிய” தென்று புங்கி உத்தமர் கூறுகின்றார். (லோகோபகாரி, அக்டோபர் 9,1930) புத்த இந்தியாவின் ஆசிரியராகிய (Prof. Rhys) டேவிட் என்பவர் “வேத பாடல்களில் தமிழ்ச் சொற்கள் கலந்திருக்கின்றன” எனக் கூறுவர். “வேதபாடல்கள் செய்யப்படுகின்ற காலத்தில் ஒலிவேறுபாடுடைய வேறு மொழி ஒன்று இருந்திருக்க வேண்டுமென்றும், அம்மொழியி லுள்ள பல சொற்கள் வேதபாடல்களிற் கலந்திருக்கின்றன” வென்றும் (A.A. Macdonell) மக்டானெல் என்னும் பண்டிதர் கூறுவர். டாக்டர் கால்டுவெல்“அக்கா, அத்தை. அடவி, அம்மா, ஆணி, கடுகு, கலா, குடி, கோட்டை, நீர், பட்டணம், பாகம், பலம், மீன், வள்ளி முதலிய சொற்கள் சமக்கிருதத்திற் கலந்திருக்கின்றன” எனக் கூறுவர். “பஞ்சாப் சிந்து பழைமையை நோக்கியபின் பி.தி. சீனிவாச ஐயங்கார் கொண்டுள்ள உய்த்தறிவு உருசிகரமானது. தனித் தமிழ்ச் சொற்களின் ஆராய்ச்சியால் இந்தியாவின் புதிய தற்கால நாகரிகத்தை நன்கு அறிந்து கொள்ளலாமென்றும், முதற்பருவத்துள்ள தமிழ்ச் சொற்கள் ஓரசையினவா யிருத்தலின், ஜேர்யோன் மார்ஷல் குறிப்பிட்ட ஓவிய எழுத்துக்களை இப் பழந்தமிழ்ச் சொற்களால் எழுதிக் காட்டலாமென்றும், 20,000 ஆண்டு களுக்கு முன் இந்தியாவில் வழங்கிய மொழிகள், தமிழ் சம்பந்தமானவை யென்றும், கோதாவரிக்குக் கீழ்ப்புறத்து வழங்கும் மொழி பழந்தமிழ் சம்பந்தமான தென்றும் அவர் கருதுகின்றனர். தற்காலம் வட இந்தியாவில் வழங்கும் வடமொழி சம்பந்தமாகிய மொழிகள் பழந்தமிழ் வழி வந்தனவும் மிகுதியும் சமக்கிருதப் போக்கைத் தழுவியனவுமாகிய மொழிகளே யென்பது ஐயங்காரவர்கள் கருத்து. (திராவிட இந்தியா - ப. 78, 79) 10. சிந்துவெளித் தமிழர் 1922இல் பஞ்சாப் மாகாணத்திலே சிந்து வெளியில் ‘அரப்பா’ ‘மொகஞ்சொதரோ’ என்னும் இரண்டு புராதன நகரங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. அந்நகரங்களிற் கிடைத்த எழுத்துப் பொறிக்கப்பட்ட முத்திரைகளும் பிற பொருள்களும் பழம்பொருள் ஆராய்ச்சியாளரால் நன்கு ஆராயப்பட்டுள்ளன. வரலாற்றுக்கு முற்பட்ட பழைய இந்திய வரலாறு என்னும் நூலில் பனேசி என்பார் கூறியிருப்பன வருமாறு: “ஆரிய மக்கள் கி.மு. 2000க்கு முன் இந்தியாவுக்கு வரவில்லை. இவர்கள் வருகைக்கு நெடுங்காலம் முன் தொட்டு இந்நாட்டில் உறைந்த தமிழரின் சீர்திருத்தத்துக்கும் இவர்களுக்கும் தொடர்பில்லை. சிந்துநதிப் பள்ளத்தாக்கில் கிடைத்தன போன்ற முத்திரைகள் எல்லாம், சுமேரியா முதலிய இடங்களிற் கிடைத்துள்ளன. மேற்கு ஆசியாவிலே தைகிரஸ் யூபிராதஸ் வெளிகளில் வாழ்ந்த மக்களுக்கும் சிந்துவெளியில் வாழ்ந்த மக்களுக்கும் சீர்திருத்த முறை வாணிகம் என்பவைகளில் தொடர்பிருந்த தென்பதற்கு வேறு பல சான்றுகளும் உள்ளன. பழைய சிந்து வெளிமக்கள் பயிரிடுவோராயிருந்தனர். அவர்களின் வாழ்க்கை ஒழுங்கு, அவர்களின் நன்றாயமைக்கப்பட்ட நகரங்களையும் கட்டிடங்களையும் கொண்டு அறியக் கிடக்கின்றது. கட்டிடங்கள் சூளையில் வெந்த களிமண் கற்களால் (செங்கல்) கட்டப்பட்டுள்ளன. மெசபொதோமியாவிலும், கிரேத்தாவிலும் போல வீடுகளுக்குச் சாளரங் களும், நிலைகளும் இருந்தன. தரைக்குச் சாந்திடப்பட்டிருந்தது. தண்ணீர் செல்வதற்குக் கான்கள் இருந்தன. வீடுகளுடன் குளிக்குமறைகள் இணைக் கப்பட்டிருந்தன. பலவகையான ஏனங்கள் செய்யப்பட்டன. செம்பு, தகரம், ஈயம் முதலியன பயன்படுத்தப்பட்டன. பொன், வெள்ளி, தந்தம், என்பு, நிறக்கற்கள் முதலியவைகளாலும் ஆபரணங்கள் செய்யப்பட்டன. சிந்துநதி நாகரிகம் கற்கால இறுதிக்கும் உலோக கால ஆரம்பத்திற்கும் இடைப்பட்டது. யானை, ஒட்டகம். நாய், இமிலும் குறுகிய கொம்புள்ள மாடுகள், 1ஆடு முதலியன வளர்க்கப்பட்டன. வாளி, கோதுமை, பருத்தி முதலியன பயிரிடப்பட்டன. நூல் நூற்று நெசவு செய்தல் முதலிய தொழில்கள் மிகத் திருத்தமடைந்திருந்தன. அங்குக் காணப்பட்ட மண்ணினாற் செய்யப்பட்ட உருவங்களும்இலிங்கங்களும் சிவ, துர்க்கை வணக்கங்களைப் புலப்படுத்துகின்றன. இவ்வளவு காலமும் எண்ணப் பட்டதிலும் பார்க்க இவ்வணக்கங்கள் மிகவும் பழைமையுடையன என்று புலனாகின்றது. (ஜேர்யோன் மார்ஷல், ஹண்டர் முதலியோரும் பிற ஆராய்ச்சியாளரும் மொகஞ்சொதரோ நாகரிகம் தமிழருடையதென அறுதியிட்டுக் கூறியுள்ளனர். இங்குக் காணப்பட்ட எழுத்துக்கள் சீன எழுத்துக்கள் போன்றன. ஒவ்வொரு சொல்லைக் குறிக்கவும் ஓவ்வொரு குறியீடு வழங்கப்பட்டது. இவ்வெழுத்துக்களின்றும் பினீசிய வட செமத்திய பிராமி எழுத்துக்கள் தோன்றின. பிராமி எழுத்துக்களின் வளர்ச்சியே இன்றைய தமிழ் எழுத்துக்கள்.) “கிரேத்த, உரோட்ஸ் (Rhodes) திராய், பாபிலோன் முதலிய நாட்டினரைப்போலவே தமிழர்களும் இறந்தவர்களின் உடலைத் தாழிகளிலிட்டுப் புதைத்தனர். இறந்தவர்களின் உடல், அல்லது அவர்களின் என்புகள் அடங்கிய தாழிகள் மத்தியதரைக் கடலின் வடக்குக்கரை நாடுகள் மெசபொதோமியா, பாபிலோன், பாரசீகம், பலுச்சித்தானம், சிந்து, தென்னிந்தியா முதலிய இடங்களிற் காணப்பட்டன. தாழிகளுள் ஆடை, இறந்தவரின் ஆபரணங்கள், அவர் ஆயுதங்கள், இன்னும் அவரின் பிரிய மான பொருள்கள் முதலியன வைக்கப்பட்டிருந்தன. “பல கால்களுள்ள ஈமத்தாழிகள் சென்னைப் பிரிவிலுள்ள பெரம்பூரிலும் இன்னும் பல இடங்களிலும் காணப்பட்டன. இவை கிரேத்தா (Crete) வின் பல பாகங்களிற் காணப்பட்ட ஈமத்தாழிகளை ஒத்தன. கெரதோதசு ஆசிரியர், சின்ன ஆசியாவிலுள்ள இலைசியர் பழைய கிரேத்தா மக்களினின்றும் தோன்றியவர்களென்றும், அவர்கள் அங்கு நின்றும் வரும்போதே ‘தெர்மிலே’ என்னும் தங்கள் குலத்துக்குரிய பெயரையும் உடன் கொண்டு வந்தனர் என்றும் கூறியுள்ளார். இலைசியரின் பழைய சாசனங்களால் அவர்கள் கிரிமிலி (Krimmili) என அழைக்கப் பட்டார்களென விளங்குகின்றது. இது கிரேக்கரின் உச்சரிப்பு முறையெனக் கெரதோதசு குறிப்பிட்டுள்ள பெயர். “தாழியில் வைத்துப்பிணங்களைப் புதைத்தல், பெயர்களின் ஒற்றுமை, கிரேத்தா எழுத்துக்களுக்கும் சிந்து வெளியிற் காணப்பட்ட எழுத்துக்களுக்குமுள்ள ஒற்றுமை முதலியவைகளால் பழைய திராவிட மக்கள் கிரேத்தா மக்களின் ஒரு கிளையினராகக் காணப்படுகின்றனர்.  2. மொழி 1. தமிழ் தமிழ் என்னுஞ் சொல் இனிமை என்னும் பண்புணர்த்தும். “தேனுறை தமிழ்”, “தமிழ் தழீஇய சாயல்”, “தமிழெனுமினிய தீஞ்சொற் றையல்” எனப் புலவர்கள் தமிழ் என்னுஞ் சொல்லை1 இனிமை என்னும் பொருளில் ஆண்டிருக்கின்றனர். “இனிமையு நீர்மையுந் தமிழென லாகும்” என்னும் பிங்கலச்சூத்திரமும் தமிழுக்கு இனிமை என்பது பொருளெனக் கூறுகின்றது. தமிழ் என்னும் சொல் பிறமொழி வழியாக வந்ததெனச் சில வரலாற்றாசிரியர்கள் கூறியிருக்கின்றனர். தொல்காப்பியம் முதலிய பழைய செந்தமிழ் நூல்களில் தமிழ் என்னுஞ் சொல் காணப்படுகின்றமையின் அன்னோர் உரைகள் ஏற்றுக் கொள்ளற்பாலனவல்ல. தமிழர் தமது மொழிக் குரிய பெயரைத் தம் மொழியால் வழங்காது பிறமொழிச் சொல்லால் வழங்கினார்கள் என்பது பொது அறிவுக்கு ஏற்றதன்று. தமிழும் சமக்கிருதமும் சகோதர மொழிகளென்றும் அவற்றைச் சிவபெருமான் முறையே அகத்தியருக்கும் பாணினிக்கும் அருளிச் செய்தனர் என்றும் காஞ்சிப் புராணம் திருவிளையாடற் புராணம் முதலிய நூல்கள் கூறுகின்றன. “வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி யதற்கிணையாத் தொடர்புடைய தென்மொழியை யுலகமெலாந் தொழுதேத்தும் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகரெனிற் கடல்வரைப்பி னிதன் பெருமை யாவரே கணித்தறிவார்” என்பது காஞ்சிப் புராணச் செய்யுள். முற்காலத்தில் வடமொழியைப் பாணினிக்கு அருளிச் செய்தது போலப் பிற்காலத்தில் சிவபெருமான் தமிழ் மொழியை அகத்திய முனிவருக்கு அருளிச் செய்தாரென இச்செய்யுள் கூறுகின்றது. பாணினி முனிவர் கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் விளங்கியவர். அகத்தியர் இராமாயண காலத்திலும் அதற்கு முன்னும் இருந்தவர். ஆகவே, சிவபெருமான் பாணினிக்கு முன் வடமொழியை அருளிப், பின் அகத்தியருக்குத் தமிழை அறிவுறுத்தாரென்பது ஏற்றதன்றாம். “விடையுகைத்தவன் பாணினிக் கிலக்கண மேனாள் வடமொழிக்குரைத் தாங்கியன் மலையமா முனிக்குத் திடமுறுத்தியம் மொழிக்கெதி ராக்கிய தென்சொல் மடமகட்கரங் கென்பது வழுதிநா டன்றோ” என்பது திருவிளையாடற் புராணம். காஞ்சிப் புராணம், திருவிளையாடற் புராணம் என்னும் இரு நூல்கள் செய்த ஆசிரியருள் திருவிளையாடற் புராணம் இயற்றியவரே முன் விளங்கியவர். ஆகவே காஞ்சிப் புராணப் பாட்டு திருவிளையாடற் புராணத்தின் எதிரொலியாகவே காணப்படுகின்றது. “ஆதியிற் றமிழ்நூ லகத்தியற் குணர்த்திய மாதொரு பாகன் ” எனச் சேனாவரையர் கூறியிருக்கின்றனர். இவர் காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டு என்று கருதப்படுகின்றது. சேனாவரையர் சிவபெருமான் பாணினிக்கு இலக்கண முபதேசித்ததைக் குறித்துக் கூறவில்லை. பன்னிரு படலப் பாயிரமாகத் தொல்காப்பிய உரையிற் காட்டப் பட்ட பாடலிலாவது புறப்பொருள் வெண்பாப் பாயிரத்திலாவது சிவபெரு மான் அகத்தியர்க்குத் தமிழ் உரைத்த வரலாறு சொல்லப்படவில்லை. கி.பி. ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டளவிற்றான் இவ்வகையான கதைகள் தோன்றியிருக்க வேண்டுமென எம்.சீனிவாச ஐயங்கார் எம்.ஏ அவர்கள் கருதுகின்றனர். தமிழ்ப் பிரயோக விவேக நூலாசிரியர் ‘மயேச்சுரன் பாணினிக் காசிரியன்’ என அந்நூலின் முதற் சூத்திர உரையில் எழுதியிருக்கின்றனர். மயேச்சுரன் என்னும் ஆசிரியனைக் கடவுளாகக் கொண்டு பிற்காலத்தார் சிவபெருமான் வடமொழியைப் பாணினிக்கு அருளிச் செய்தார் எனக் கூறினர் போலும். தமிழிலே உள்ள இறையனாரகப்பொருள் கடவுளால் அருளப்பட்டதென வழங்குகின்றது. அறிஞர்கள் அந்நூல்கள் சங்க காலத் திருந்த இறையனார் என்னும் புலவரால் செய்யப்பட்டதெனக் கருதுகின் றனர். “இறையனார் அகப்பொருள் என்னும் நூலை இயற்றியவர் சிவபெரு மான் கூறாகிய இறையனார் என்னும் புலவர் பெருமான்” என மகா மகோ பாத்தியாய உ.வே.சாமிநாதையரவர்கள் கூறுகின்றனர். முருகக் கடவுள் தமிழ்மொழியை அகத்திய முனிவருக்கு அறிவுறுத்தியதாக அருணந்தி சிவாசாரியர், அருணகிரி நாதர், சிவஞான முனிவர் முதலியோர் கூறியிருக் கின்றனர். பதினோராம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட வீரசோழியத்தின் பாயிரத்தில், “ஆயுங் குணத்தவ யோகிதன் பக்கல் அகத்தியன்கேட் டேயும் புவனிக் கியம்பிய தண்டமி ழீங்குரைக்க நீயு முளையோ வெனிற்கரு டன்சென்ற நீள்விசும்பில் ஈயும் பறக்கு மிதற்கென் கொலோசொல்லு மேந்திழையே” எனக் கூறப்பட்டிருக்கின்றது. 1. திராவிடம் திராவிடமென்பது தமிழுக்குப் பிறிதொரு பெயராக வழங்குகின்றது. தமிழ் ழகரத்தை உச்சரிக்க வறியாத ஆரியர் தமிழ் என்னுஞ் சொல்லைத் திராவிடம் என வழங்கினர். “நகைச்சுவைக்குப் பொருளாவன ஆரியர் கூறுந் தமிழுங் குருடரும் முடவரும் செல்லுஞ் செலவும்... போல்வன” என்னும் பேராசிரியர் உரை ஆரியர் திருத்தமுறத் தமிழ் பேச அறியார் எனப் புலப்படுத்துகின்றது. “திராவிடமென்பது தமிழ் என்பதின் திரிபு, அல்லது சமக்கிருத வடிவமாக்கப்பட்ட சொல்” எனச் சமக்கிருத பண்டிதர்கள் கருதுகின்றனர்1 என்று ‘தமிழ் ஆராய்ச்சி, என்னும் நூலார் கூறுவர். “திசைச்சொல் பன்னா ரென்பது வேறுமொழியில் ழகரம் இன்மையின் தமிழென்னும் பெயரைச் சொல்ல இயலாமைபற்றித் திராவிடம் முதலிய பெயர்களால் தமிழைக் குறிப்பது இதுபற்றிப் போலும்” (தமிழ்விடு தூது-மகா மகோபாத்தியாய உ.வே.சாமிநாதையர் குறிப்பு) தென்னாடு திருக்கோயில்களும் செல்வமும் மலிந்தவிடமாதலின், அது திருவிடமென்னும் பெயரைப் பெற்றதென்றும், பின் திருவிடம் திராவிடமாயிற்றென்றும் கூறுவர். ‘தமிழ் இந்தியா’ என்னும் நூலாசிரியர் திருவாளர் மு.சி.பூரணலிங்கம் பிள்ளை அவர்கள். 2. தென்மொழி இந்தியாவின் வடபாகத்தில் சமக்கிருதமும் தென்பாகத்தில தமிழும் வழங்கின. வடக்கே வழங்கிய மொழி வடமொழி எனப்படவே தெற்கே வழங்கிய மொழிக்குத் தென்மொழி என்னும் பெயர் உண்டாயிற்று. அழகும் இனிமையும் உடைய மொழியாதலின், தமிழ், தென்மொழி என்னும் பெயர் பெற்றது என்பர் திராவிடப் பிரகாசிகைகாரர். 2. தமிழின் வழிமொழிகள் 1. தெலுங்கு கண்ணுவர் என்ற முனிவர் இம்மொழிக்கு முதல் இலக்கண நூலாசிரியரென்று சொல்லப்படுவதுண்டு. இவரைப் பற்றி ஒன்றும் தெளிவாய் அறியக் கூடவில்லை. அவர் இலக்கணமும் மறைந்து போயிற்று. இக்காலங்களில் வழங்கி வரும் தெலுங்கு இலக்கணங்களில் முந்தியது நன்னயப்பட்டரது. அவர் காலம் கி.பி. 12 ஆவது நூற்றாண்டு. தெலுங்குப் பாரதமும் இவரையே நூலாசிரியராகக் கொண்டிருக்கின்றது. பதினான்கா வது நூற்றாண்டுக்குப் பிற்பட்டுத்தான் இம்மொழியில் நூல்கள் பல்கின. ஏறக்குறைய இருநூறாண்டுகளுக்கு முன்னிருந்தவேமன்ன என்ற கவி அநேக நீதிநூல்கள் செய்திருக்கின்றார். தென்னாலிராமன் கதையும் இம்மொழியினின்றே மொழி பெயர்க்கப்பட்டது. “ஆந்திரருடைய சந்ததிகள் வடநாடுகளை விட்டுத் தக்கண தேசத்தில் முதன்முதல் குடியேறிய இடத்திற்குத் திரிலிங்கமென்று பெயர். திரிலிங்கமென்றால் (1)ஸ்ரீசைல பருவதம் (2) காளேசுவரம் (3) பீமேசுவரம் என்னும் மூன்றிடங்களில் சிவபெருமான் மல்லிகார்ச்சுனன், காலநாதன், பீமேசுவரன் என்ற முப்பெயர்களால் மூன்று லிங்கங்களாக வமைந்து, அம்மூவிடங்களுக்கும் ‘திரிலிங்கானம்’ என்று பிரபலமான பெயர் பெற்றுப் பிரகாசிக்கிறபடியால்,அப்படிப் பிரகாசிக்கும் மூன்று நாட்டெல்லைகளுக்குள் வந்து குடியேறிய ஆந்திரர்களுக்குத் திரிலிங்கர் என்ற பெயரிட்டு அழைக்கப்பட்டு வர, அந்தத் திரிலிங்கர் என்னும் வார்த்தையானது, நாளாவட்டத்தில் தெலுங்கரென்று மருவியதனால் அந்தத் தெலுங்கர் வழங்கி வந்த பாஷைக்கும் தெலுகு அல்லது தெனுகு அல்லது தெலுங்கு என்று பிரசித்தியாகிவிட்டது.”-தக்கண இந்தியா சரித்திரம் , பக்.96. தெலுங்கு என்பது தெற்கு என்னும் சொல்லிலிருந்து தென்கு என்று வந்து, பின் தெனுகு தெலுங்கு எனத் திரிந்ததெனவும், திரிலிங்கமென்பது தெலுங்கு என்பதன் திரிபு என்றும், திரிலிங்க மென்பதிலிருந்து தெலுங்கு என்னுஞ் சொல் வந்ததெனக் கூறுதல் பிழையெனவும் ‘இந்து’ப் பத்திரிகையில் ஒருவர் எழுதியுள்ளார். 1தெலுங்கு திராவிட மொழிகளுள் ஒன்று. இப்பெயர் திரிலிங்கம் என்னும் சொல்லினின்று பிறந்திருக்கலாம். திரிலிங்கமென்பது சிவனின் மூன்று இலிங்கங்களைக் குறிக்கும். திரிலிங்கம் என்பது பழைய ஆந்திர நாட்டின் பெயர். அந்நாடு ஐரோப்பியரால் ‘சென்றூ’ என வழங்கப்பட்டது. போர்த்துகேசிய மொழியில் ‘சென்றூ’ என்னும் பதம் மேன்மையுள்ள என்ற பொருளைத் தரும். தெலுங்கு பேசும் மக்கள் ஐதராபாத்து நைசாமின் ஆட்சிக்குக் கீழும் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழும் காணப்படுவர், இவர்களின் நாடு சென்னைக்கு வடக்கில் ஆரம்பித்து பெல்லாரியின் வடமேற்கு வரையும் வடகிழக்கே ஒரிசாவுக்கு அண்மைவரையிலும் செல்கின்றது. பெல்லாரியில் வடமேற்கில் தெலுங்கு கன்னடத்தைச் சந்திக்கின்றது. தெலுங்கர் தமிழரிலும் உயரமுடையவர்களும் நிறத்தில் சிறிது வெளுத்தவர் களாகவும் காணப்படுகின்றனர். இவைகளையன்றி அவர்களிடத்தில் திராவிடக் குலத்தினுக்குரிய குணங் குறிகளெல்லாம் காணப்படுகின்றன. அவர்கள் முயற்சியுடையோர்; நல்ல பயிர்த் தொழிலாளர்; திறமையுடைய கடலோடிகள். 1901இல் எடுக்கப்பட்ட சனத்தொகைக் கணக்கின்படி தெலுங்கு பேசுவோர் இரண்டுகோடி பத்துலட்சம் மக்கள் - கலைப் பேரகராதி. 2. மலையாளம் மலையாளம் சில நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றிய ஒரு மொழி. அம்மொழிக்கு எழுத்துக் கற்பித்தவர் ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்த ‘எழுத்தச்ச’னென்பார். அவர் வமிசத்தினர் இன்னும் அப்பெயரால் அழைக்கப்படுகின்றனர். இம்மொழியிலுள்ள விசேட காவியங்களும் பாடல்களும் இராமாயண பாரத பாகவத கதைகளைப் பற்றியவை. புராண காவியங்களை மிகுதியாகச் செய்தவர் துஞ்சத்த எழுத்தச்சன். கிளிப் பாட்டென்றும், துள்ளல் என்றும் இருவகைப் பாட்டுக்கள் இம்மொழியில் வழங்குகின்றன. இவைகளெல்லாம் புராணக் கதைகள் சம்பந்தமானவை. கிளிப்பாட்டென்பது சாதாரணமாய் யாவரும் பாடவும், துள்ளல் என்பது சில சமயங்களில் குதித்துப் பாடவும் ஏற்பட்டவை. இப்பாட்டுக்களை விசேடமாகச் செய்தவர் குஞ்ச நம்பியார். சென்ற நூற்றாண்டின் கடைசியில் வாழ்ந்த அநந்தசயனம் ராமவர்மா மகாராசாவினால் சில நாடகங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. இம்மொழியில் மணிப்பிரவாள சுலோகம் அதிகம். 1மலையாளம் தென்னிந்தியாவிலே மேற்குக் கரையில் பேசப்படும் திராவிட இனமொழி. இது கி.பி. 9ஆம் நூற்றாண்டு வரையில் தமிழினின்று பிரிந்து வழங்குகின்றதெனக் கருதப்படுகின்றது. இதில் பல இலக்கியங் களுண்டு. அவைகளில் சமக்கிருதச் சொற்கள் அதிகம் காணப்படுகின்றன. 1901இல் மலையாளம் பேசும் மக்களின் எண் அறுபது இலட்சம் - கலைப்பேரகராதி. கொடுந் தமிழும் பிராகிருத சமக்கிருதமும் கலந்து கி.பி. 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மலையாளம் என்னும் பெயர் பெற்றது என்பர் ‘தமிழ் ஆராய்ச்சி’ (Tamil studies) என்னும் நூலாசிரியர் எம்.சீனிவாச ஐயங்கார் அவர்கள். 3. கன்னடம் முதன் முதல் இம்மொழியில் நூல்கள் எழுதத் தொடங்கியவர்கள் சமணர்கள் இவர்கள் சேழாபாலசரித்திரம் முதலிய சரித்திரங்களையும், பிரபோதசந்திரோதயம் முதலிய தத்துவ நூல்களையும், ஜினமுனி தயை முதலிய சமணக் கொள்கைகளை விளக்கும் சில நூல்களையும் எழுதி யிருக்கிறார்கள். சப்தமணிதர்ப்பணம் என்ற இம்மொழியின் பிரதான இலக்கண நூல் இவர்களில் ஒருவரான கேசிராசாவாலியற்றப்பட்டது. பிறகு வீர சைவ மதத்தோரால் வசவபுராணம், பிரபுலிங்க லீலை, இராச சேகர விலாசம் முதலிய பல காவியங்களும் சரித்திரங்களும் இம்மொழியில் எழுதப்பட்டன. இவற்றுள் இராசசேகர விலாசம் என்பது இராசசேகரன் என்ற சோழன் சரித்திரம். இம்மொழியின் கவி சிரேட்டரான ஷடாக்ஷரி தேவரால் இயற்றப்பட்ட பல சைவ வைணவ கிரந்தங்களும் இம்மொழியில் உண்டு. “கன்னடமும் தெலுங்கை யொட்டிப் பெரிதும் இயங்கினமையான் அதுபோலவே பல்லாற்றானும் தன்னைச் சீர்ப்படுத்திக் கொண்டது. இதனாலன்றோ ‘பழங்கன்னடம்’ என்றும் ‘புதுக்கன்னடம்’ என்றும் அஃது இரு வேறு பிரிவினதாகி இயங்குகின்றது. பழங் கன்னடத்தைத் தமிழினின்றும் பிறந்ததெனக் கூறும் கன்னடப் புலவர் இன்று முளர்.” 1கன்னடம் திராவிட இனத்தைச் சேர்ந்த ஒரு மொழி. அது ஒரு கோடி தென்னிந்திய மக்களாற் பேசப்படுகின்றது. அது வழங்குமிடங்கள் சிறப்பாக மைசூர், ஐதராபாத்து, பம்பாய், சென்னை மாகாணங்களைச் சேர்ந்த சில பகுதிகள் என்பன. தெலுங்கு எழுத்துக்களைப் போன்ற ஒரு வகை எழுத்தில் எழுதப்பட்ட இலக்கியங்கள், இம்மொழிக்கு உண்டு. கி.பி.12ஆம் நூற்றாண்டு முதல் கன்னட மக்கள் இலிங்க மதத்தைத் (வீர சைவம்) தழுவியுள்ளனர். இம்மதம் பிராமணமதத்துக்கு எதிராக எழுந்தது. இவர்களிற் பெரும்பாலோர் பயிர்த்தொழிலும் வியாபாரமும் புரிவர். - கலைப் பேரகராதி 2தெலுங்கு கி.பி.7ஆம் நூற்றாண்டுக்குமுன் இலக்கியவளம் பெற வில்லை. அதன் இலக்கியங்கள் சமக்கிருதத்தை முற்றாகப் பின்பற்றியன வாகக் காணப்படுகின்றன. கன்னடத்தில் பழைய இலக்கியங்கள் உண்டு. நீர்பதுங்கு என்பவராற் செய்யப்பட்ட கவிராசமார்க்க என்னும் நூல் தீர்மானமாகக் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிற் செய்யப்பட்டது. மலை யாளம் கிறித்துவ ஆண்டுகளின் முற்பகுதியில் தமிழிலிருந்து பிறந்ததாகக் தோன்றுகின்றது. -பேராசிரியர் எஃச்.கிருஷ்ணசாமி ஐயங்கார் 4. துளு 3துளு அல்லது துளுவம் திராவிட குடும்பத்தைச் சேர்ந்தது. இது சென்னை மாகாணத்தைச் சேர்ந்த தென் கன்னடப் பிரிவில் பெரும்பாலும் வழங்குகின்றது. இதற்கு இலக்கியங்கள் இல்லை. மக்கள் இம்மொழியைப் பெரும்பாலும் வழங்கும் நாட்டில்தானும் இது அரசாங்க சம்பந்தமாகப் பயன்படுத்தப்படுவதில்லை. 1901 இல் துளு மொழி வழங்குவோரின் எண் ஐந்து இலட்சமாயிருந்தது. பதினோராம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட திவாகரத்தில் துளுவம் பதினெண்பாடையில் ஒன்றாகக் கூறப்படுகின்றது. ஆகவே, துளு பதினோ ராம் நூற்றாண்டுக்கு முற்பட்ட மொழியாதல் வேண்டும். 5. மணிப்பிரவாளம் இது சமக்கிருதமும் தமிழும் சரிக்குச்சரி கலந்த நடை. உதாரணம்:- “பும்ஸ்பர்சக்லேச ஸம்பாவனா கந்த விதுரமாய ப்ரத்ய க்ஷாதிரரமாண விலக்ஷணமா யிருந்துள்ள நிகில வேதஜாதகத்துக்கும் வேதோப ப்ரம்மணங்களான ஸ்ம்ருதீதி ஹாஸ புராணங்களுக்கும் க்ருதயம் ஸகல ஸம்சாரி சேதனர்க்கு தத்வஞானத்தை ஜனிப்பிக்கை. (தத்துவ சேகரம்) 6. சிங்களம் இதனைச் சிங்க-எல்லம் எனப் பிரிக்கலாம். சிங்க வமிசத்தவனாகிய கலிங்க அரசன், விசயனென்பான் இலங்கையை ஆளத்தொடங்கியபின், முன் எல்லம் என வழங்கிய இலங்கைத்தீவின் பெயர் சிங்கஎல்ல மாயிற்று. சிங்க எல்லம் பின்பு திரிந்து சிங்களம் ஆயிற்று. பின்பு நாட்டின் பெயரால் மொழியும் அறியப்பட்டது.1 இச்சிங்கள மொழியும் தமிழின் திரிபேயாகும். சிங்களமொழியில் பாலிச் சொற்களும் சமக்கிருதச் சொற்களும் பல கலந்துள்ளன. இம்மொழியின் இலக்கண அமைப்பும், வசனக்கட்டும் பிறவும் தமிழை ஒத்துள்ளன. இம்மொழியில் கி.பி. 10 ஆம் நூற்றாண் டளவில் லீலாவதி என்னும் அரசி காலத்தில் முதன் முதல் சிங்களமொழியில் இலக்கியம் எழுதப்பட்டது. இலங்கையை ஆண்ட அரசர் பெரும்பாலும் தமிழ் மரபிலுள்ளோர். சேர்.பி.அருணாசலம் அவர்கள் சிங்கள அரசரின் அரண்மனைமொழி தமிழ் என ஆராய்ந்து கூறியுள்ளார். 3. தமிழ்நாட்டின் எல்லை முற்காலத்தில் தமிழ்நாட்டின் வடக்குத் தெற்கு எல்லைகள் வேங்கட மலையும் குமரியாறாகவும், கிழக்கும் மேற்கும் கடலாகவும் இருந்தன. “வடவேங்கடந் தென்குமரி யாயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து” எனப் பனம்பாரனாரும், “வேங்கடங் குமரிதீம்புனற் பௌவமென் றின்னான் கெல்லை தமிழது வழக்கே” எனச் சிகண்டியாரும், “குமரி வேங்கடங் குணகுட கடலா மண்டிணி மருங்கினிற் றண்டமிழ் வரைப்பில்” என இளங்கோவடிகளும் தமிழ்நாட்டின் பழைய வெல்லையைக் குறிப்பிட்டிருக்கின்றனர். “பண்டைக் காலத்தில் தமிழ்நாட்டின் வடவெல்லை கிருஷ்ணா நதியெனச் சிற்ப சாத்திரம் கூறுகிறதென்று கேட்டிருக்கின்றேன்” என மகா மகோபாத்தியாய உ.வே.சாமிநாதையரவர்கள் சங்கத்தமிழும் பிற்காலத் தமிழும் என்னும் நூலிற் கூறியிருக்கின்றனர். ஒருபோது விந்தியமலை தமிழ்நாட்டின் வடவெல்லையா யிருந்ததெனத் தெரிகிறது. “தொல்காப்பியஞ் செய்யப்படுகிற காலத்தில் நெல்லூர்ச் சில்லாவின் தென்கோடியும், சித்தூர், வடஆர்க்காடு, செங்கற்பட்டு, தென்ஆர்க்காடு, தஞ்சாவூர், மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, சேலம், கோயமுத்தூர், திருச்சிராப்பள்ளி, மலையாளம், நீலகிரியென்னும் சில்லாக்களும், தென்கன்னடம் சில்லாவின் முக்காற்பங்கும், மைசூர் இராச்சியத்தின் தென்பாதியும், திருவாங்கூர், கொச்சி, புதுக்கோட்டை என்னும் இராச்சி யங்களும், கடலின் வாய்ப்பட்ட குமரியாற்றோடு கூடிய பனை நாடுகளும், தமிழ்வழக்கு நிலங்களாகவே இருந்தன என்பதும், அக்காலத்து இந் நிலங் களில் வேறு மொழிகள் வழங்கியதில்லையென்பதும் நன்கு விளங்கு கின்றன.” சங்க நூல் கா.ர.கோவிந்தராச முதலியார். “வடதிசை மருங்கின் வடுகுவரம் பாகத் தென்றிசை யுள்ளிட்டெஞ்சிய மூன்றும் வரைமருள் புணரி” எனச் சிறுகாக்கைபாடினியார் தமிழ்நாட்டுக் கெல்லை கூறியிருக்கின்றனர். இது, தெற்குக் குமரியன்றிக் கடலெல்லையாகிய காலத்துச் சொல்லப் பட்டதெனப் பேராசிரியர் கூறுகின்றனர். சிறுகாக்கைபாடினியாரை ஒழிந்து பனம்பாரனார் சிகண்டியார் இளங்கோவடிகள் நன்னூலார் முதலாயினோரெல்லாம் வேங்கடத்தையும் குமரியையுமே, வடக்குக்கும் தெற்குக்கும் எல்லையாகக் கூறியிருக்கின்றனர். நன்னூலார் காலத்தில் குமரி ஆறு இருக்கவில்லை. சிலப்பதிகாரத்தில் குமரியம் பெருந்துறை (15-15) என்பதற்கு அடியார்க்கு நல்லார் குமரி ஆறு எனப்பொருள் கூறுமாற் றானும் மணிமேகலையில் “குமரியம் பெருந்துறை” (5-37) “தென்றிசைக் குமரி” (13-7) என வருவனவற்றிற்கு மகாமகோபாத்தியாய உ.வே.சாமிநாதைய ரவர்கள் குமரியாறு எனக் கூறிய உரையாலும், அடியார்க்கு நல்லார் காலத்திற் குமரியாறு கடல்வாய்ப் படவில்லை எனக் கொள்ள வேண்டி யிருக்கின்றது. அக்காலத்துக் குமரியாற்றைக் கடல் கொள்ளவில்லை யாயின், “பஃறுளியாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” எனக் கூறப்பட்டதினுள்ள குமரிக்கோடு என்பது மலையேயாயிருத்தல் வேண்டும். “நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் தமிழ்வரம் பறுத்த தண்புனல் நாடு” என்னும் சிலப்பதிகார அடிகளால் குமரியாறு கடல் கொள்ளப்பட்டதென விளங்குகிறது. ஆகவே, குமரித் தீர்த்தமென்பது குமரிமுனைக்கு அணித்தி லுள்ள கடற்றீர்த்தமா யிருத்தல் வேண்டும். ஆகவே, பழைய நூல்களில் கூறப்படும் குமரி, கடல் அல்லது முனை எனப் பகுத்துணரக்கூடா வகையாயிருக்கின்றது. 1. செந்தமிழ் கொடுந்தமிழ் “செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி” என்னும் தொல்காப்பியச் சூத்திரத்திற்கு உரையாசிரியர்கள் செந்தமிழ்நாடு ஒன்று, அதனைச் சூழ்ந்த கொடுந் தமிழ்நாடு பன்னிரண்டென உரை கூறினர். அப்பன்னிரண்டு கொடுந்தமிழ் நிலங்களாவன: “தென்பாண்டி குட்டங் குடங்கற்கா வேண்பூழி பன்றி யருவா அதன் வடக்கு -நன்றாய சீத மலாடு புனனாடு செந்தமிழ்சேர் ஏதமில் பன்னிருநாட் டெண்.” (யாப்பருங்கலம் பழைய உரைமேற்.நன்.மயிலை 275 மேற்.) நச்சினார்க்கினியர், சேனாவரையர், இளம்பூரணவடிகள் முதலியோர் இவ்வெண்பாவிலுள்ள புனல்நாடு, வேணாடு என்பவற்றுக்குப் பதில், பொதுங்கர்நாடு ஒளிநாடு என்பவற்றைக் கூறியிருக்கின்றனர். தொல்காப்பிய உரையாசிரியர்களும் யாப்பருங்கல உரையாசிரியர் குணசாகரரும் செந்தமிழ் நாட்டின் எல்லையைச் “செந்தமிழ் நிலமாவது வையையாற்றின் வடக்கும் மருதயாற்றின் தெற்கும் கருவூரின் கிழக்கும் மருவூரின் மேற்கு”1 மாமெனக் கூறுவர். “முன்னுறுந்தென் பாண்டி முதற்புனனா டீறான பன்னிரண்டு நாடுமப் பானாடோ அந்நாட்டுள் வையை கடுவைமரு தாறுமரு வூர்நடுவே ஐயநீ வாழு மரண்மனையோ” (தமிழ் விடு தூது) செந்தமிழ் நாடு சோணாடென்பதற்கு, 1“மன்ற வாணன் மலர்திரு வருளாற் றென்றமிழ் மகிமை சிவணிய செய்த அடியவர் கூட்டமு மாதிச் சங்கமும் படியின்மாப் பெருமை பரவுறு சோழனுஞ் சைவமா தவருந் தழைத்தினி திருக்கு மையறு சோழ வளநா டென்ப” என்னும் சூத்திரம் மேற்கோளாகக் காரிகை உரையிற் காட்டப்படுகின்றது. நன்னூல் விருத்தி உரைகாரர், “சந்தன்ப் பொதியச் செந்தமிழ் முனியுஞ் சௌந்தர பாண்டிய னெனுந்தமிழ் நாடனுஞ் சங்கப் புலவருந் தழைத்தினி தோங்கு மங்கலப் பாண்டி வளநா டென்ப” என்று பாண்டி நாட்டையே செந்தமிழ் நாடெனக் கூறுவர். பாண்டி நாடே சேர சோழ நாடுகளிலும் செந்தமிழ் ஆராய்ச்சிக் குரியதெனக் கூறுவர் திராவிடப் பிரகாசிகைகாரர். சமயாசாரியர்களும் தமிழ்ப் புலவர்களும் பாண்டி நாட்டையே செந்தமிழ் நாடெனக் கூறுவர். “சென்னிநாடு குடகொங்கநாடு திறைகொண்டு தென்னனுறை செந்தமிழக் -கன்னிநாடு உறவுடன் புகுந்து” எனக் கூறுவர் வில்லிபுத்தூரர். தொல்காப்பியர் காலத்துச் செந்தமிழ் கொடுந்தமிழ் என்னும் வழக்கு இருந்ததற்குப் பிரமாணமில்லை. “செந்தமிழ் கொடுந்தமி ழென்றிரு பகுதியில்” என்னும் சிலப்பதிகாரத்தால், அக்காலத்து, “ செந்தமிழ் கொடுந்தமிழ்” என்னும் வழக்கு இருந்ததாகத் தெரிகின்றது. “தாயைத் தள்ளை என்ப குட்ட நாட்டார்; நாயை ஞமலியென்ப பூழி நாட்டார்” எனத் தொல்காப்பிய உரையிற் காட்டப்பட்ட உதாரணங் களால் தமிழகத்தின் பல பாகங்களில் அவ்வந்நாடுகளில் மாத்திரம் வழங்கும் சில சொற்கள் திசைச் சொற்கள் எனப்படும் எனத் தெரிகின்றது. குளிர், கரைதல், நுன், ஒள்ளியன், இதா, சிக்க, நீம் முதலிய சொற்களைத் திசைச் சொற்களெனக் காட்டுவர் நச்சினார்க்கினியர். ஆங்கிலமொழியில் Provincialism எனப்படுவதே இத்திசைச் சொல்லுக்கு உதாரணமாகும்.1 இன்று கருதப்படுவது போல மற்றைய பன்னிரண்டு நாடுகளில் வழங்கிய மொழி யிலும் பாண்டிய நாட்டு மொழி உயர்ந்ததென்ற பொருளன்று. அந்நாடு களில் வழங்கிய மொழியும் பாண்டி நாட்டு மொழியை ஒத்த தாழ்வோ உயர்வோ உடையது. ஆனால் பாண்டி நாட்டில் வழங்கும் மொழி வழக்கை ஒட்டியே இலக்கியங்கள் செய்யப்பட்டன. மற்ற நாடுகளிலுள்ளவர்கள் பாடல்கள் செய்யும் போது அந்நாட்டுச் சொற்களையும் சேர்த்தார்கள். அச் சொற்கள் திசைச்சொற்கள் எனப்பட்டன, பாண்டிநாட்டு வழக்குப்படியே தமிழ்நாட்டு இலக்கிய வழக்கு இருத்தல் வேண்டுமென்பது அக்கால மக்கள் கொள்கை. தமிழ்நாட்டைச் சூழ்ந்து பதினேழு பிறநாடுகளும் உண்டு என முன்னோர் கூறியிருக்கின்றனர். இதை, 2“சிங்களஞ் சோனகஞ் சாவகஞ் சீனந் துளுக்குடகங் கொங்கணங் கன்னடங் கொல்லந் தெலுங்கங் கலிங்கம்வங்கம் கங்க மகதங் கடாரங் கவுடங் சடுங்குசலந் தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்புவி தாமிவையே” என்னும் செய்யுள் அறிவிக்கின்றது. அராபியா வங்காளம் பர்மா சீனா யாவா ஒரிசா முதலிய நாடுகளைத் தமிழ் நாட்டைச் சூழ்ந்த நாடுகளாகக் கூறுவது பொருத்தமாகக் காணப்படவில்லை. சோழவந்தான் வித்துவான் அரசஞ் சண்முகனாரவர்கள் கொடுந் தமிழ் என ஒன்று தொல்காப்பியர் காலத்தில் இல்லை யெனவும், “செந் தமிழ் சேர்ந்த பன்னிரு நிலம்” என்றது செந்தமிழ் வழங்கிய பன்னிரண்டு நிலமெனவுங் கூறுவர். அது வருமாறு:- “செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்துந் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி” என்றாராகலிற், “கொடுந்தமிழ் நிலம் பன்னிரண்டுள வெனவு மத்தமிழே திசைச் சொல்லாமெனவும் பெறப்படலானே, தமிழிருவகை யெனலு, மவை யிரண்டிற்கும் பொதுவெல்லை வேங்கடங்குமரி யெனலுஞ், செந்தமி ழெல்லை வேறு கூறுலு மமையுமெனி, னாசிரியர் பன்னிரு நிலமென்ற தன்றிப் பன்னிரு கொடுந்தமிழ் நிலமெனக் கூறாமையானும் பிறாண்டுங் கொடுந்தமிழ் எனல் காணப்படாமையானும், ‘செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நில’ மென்றமையானது செந்தமிழ் வழங்கிய பன்னிரு தமிழ்நாடெனப் பொருள்படுமன்றிச் செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரண்டு கொடுந் தமிழ் நிலமெனப் பொருள் படாமையானுஞ், செந்தமிழினின்றுஞ் சிதைந்து வழங்கு மொழியே கொடுந்தமிழெனி, னஃதிழிந்தோர் வழக் காகலிற் கொள்ளப்படாமையானு, மத்தமிழினின்றும் பிறந்த பிறிதொரு மொழியெனி, னது துளுக் கன்னடந் தெலுங்கு மலையாளம் என்றாற்போல வேறு பெயர் பெறலன்றிக் கொடுந்தமிழெனல் கூடாமையானு, மாண்டுச் செந்தமிழ் நிலமென்றது செந்தமிழியற்கையுந் திரிபுஞ் சேர்ந்த பன்னிரு நாடாகலானு மவ்வுரை பொருந்தாதென்ப,” பண்டு இந்தியநாடு முழுமையும் ஐம்பத்தாறு நாடுகளாகப் பகுக்கப் பட்டிருந்ததெனவும் அங்குப் பதினெண் மொழிகள் வழங்கினவெனவும் முன்னோர் கூறியிருக்கின்றனர். ‘தேசமைம் பத்தாறிற் றிசைச்சொற் பதினேழும்’ (தமிழ் விடு தூது). 2. பாண்டிநாடு இது காவிரிக்குத் தெற்கே மதுரை இராமநாதபுரம் திருநெல்வேலி இந்த மூன்று பற்றுக்களும் (சில்லாக்கள்) அடங்கிய தேசம். இது வெள்ளாற்றிற்குத் தெற்கு, கன்னியாகுமரிக்கு வடக்கு, பெருவெளிக்குக் கிழக்கு, கடற்கரைக்கு மேற்கிலுள்ள நாடு என்று சொல்லப்படுகின்றது. “வெள்ளாறது வடக்கா மேற்குப் பெருவெளியாந் தெள்ளாம் புனற்கன்னி தெற்காகும்-உள்ளார ஆண்ட கடல்கிழக்கா மைம்பத் தறுகாதம் பாண்டிநாட் டெல்லைப் பதி.” இதன் தலைநகரம் மதுரை. தாம்பிரபர்ணி (பொருநை) யின் முகத்து வாரத்தில் துறைமுகப் பட்டினமாகிய கொற்கை நகரம் சிலகாலம் இதன் தலைமைப்பட்டினமா யிருந்தது. 3. சோழநாடு சோழநாடு காவிரிக்கரையிலுள்ளது. அதன் தலைநகரம் திருச்சிராப் பள்ளிச் சில்லாவிலுள்ள 1உறையூர். காவிரியாறு கடலோடு சந்திக்கு மிடத்திலுள்ள காவிரிபூம்பட்டினம் அதன் துறைமுகமாக விருந்தது. கடலிலிருந்து பல கப்பல்கள் காவிரியில் வந்து தங்கினவென்று தெரிவதால் கடலோடு கலக்குமிடத்தில் அக்காலத்தில் ஆறு மிக அகலமாயிருந் திருத்தல் வேண்டும். அதன் பழைய எல்லைகள் வடக்கு திருப்பதி, தெற்கு வெள்ளாறு, கிழக்கு கடல், மேற்கெல்லை, காலத்துக்குக் காலம் மாறிய துண்டு. பெரும்படியாகப் பழனிக்கும் காரூருக்கும் நேராகவும் மேல் வடக்கே மைசூர் பீடபூமியின் கிழக்குப் பாதியை வெட்டும்படியாகவும் ஒருகோடு இழுத்தால் அது அதன் மேற்கெல்லையாகும். “கடல்கிழக்குத் தெற்குக் கரைபொரு வெள்ளாறு குடதிசையிற் கோட்டைக் கரையாம்-வடதிசையில் ஏணாட்டுப் பண்ணை யிருபது நாற்காதஞ் சோணாட்டுக் கெல்லையெனச் சொல்” கோட்டைக்கரைக்குக் கிழக்கு, கடற்கரைக்கு மேற்கு, வெள்ளாற் றிற்கு வடக்கு ஆகிய எல்லைக்குட்பட இருபத்து நான்கு காதம் நிலப்பரப் புள்ள நாடு சோழநா டென இப்பாட லறிவிக்கின்றது. 4. சேரநாடு தற்காலத்துத் திருவனந்தபுரம் கொச்சி மலையாளம் கோயமுத்தூர் என்று வழங்கப்படும் ஊர்களும், சேலத்தினொரு பாகமுஞ் சேர்ந்து திரண்ட பகுதியே அக்காலத்துச் சேரநாடாகும். வடக்கிற் பழனி, கிழக்கில் திருச்செங்கோடு, மேற்கில் கள்ளிக்கோட்டை, தெற்கில் கடலாகிய எல்லைக்குட்பட்ட நிலமாகிய இந்நாட்டுக்கு இராசதானியாக இருந்த நகரம் வஞ்சி யென்றும் திருவஞ்சைக்களமென்றுங் கூறுவர். “வடக்குத் திசைபழனி வான்கீழ்தென் காசி குடக்குத் திசைகோழிக் கோடாம்-கடற்கரையின் ஓரமே தெற்காகு முள்ளெண் பதின்காதம் சேரநாட் டெல்லையெனச் செப்பு. பழனிக்குத் தெற்கு, தென்காசிக்கு மேற்கு, கோழிக்கோட்டிற்குக் கிழக்கு, கடற்கரைக்கு வடக்கு ஆகிய இந்த எல்லைகளுட்பட்ட எண்பது காதம் நிலப்பரப்பு, சேரதேசமென்பது இப்பாட்டால் விளங்குகின்றது. 5. தொண்டைநாடு “ஆ தொண்டைச்சோழன். இவர் தந்தையாகிய மணிகண்ட சோழன் அல்லது குலோத்துங்க சோழன் ஒரு நாள் வேட்டைக்கேகிய வனத்தில், ஒரு ரிஷி கன்னிகையாகிய நாககன்னிகையை ஆதொண்டைப் பூமாலை சாத்தி, காந்தர்வ விவாகஞ் செய்து கொண்டதனால் பிறந்தவர். இவர் தந்தை தனது இராச்சியத்தின் தென்பாகத்தை மகரிஷியான குமாரனுக்குக் கொடுத்தும் வடபாகத்தை ஆதொண்டருக்குக் கொடுத்தும் ஆளச் செய்தாராம். இவர் ஆண்ட பாகத்திற்குத் தொண்டை மண்டல மென்று பெயராகியது. இவர் தமது நாட்டில் வேளாளரைக் குடியேற்றிச் சிறப்பித்தபடியால் அவர்கள் தொண்டை மண்டல வேளாளர் என்னும் பெயர் பெற்றார்கள்.” (தக்கண இந்திய சரித்திரம்). அத் தொண்டைமண்டலத்தின் எல்லையாவன:- “மேற்குப் பவளமலை வேங்கடநேர் வடக்கா மார்க்கு முவரி யணிகிழக்கு-பார்க்குளுயர் தெற்குப் பினாகி திகழிருபதின் காதம் நற்றொண்டை நாடெனவே நாட்டு.” இத் தொண்டை மண்டலத்திற்குக் காஞ்சிபுரம் தலைநகரம். “நாகப்பட்டினத்துச் சோழன் பிலத்துவாரத்தால் நாகலோகத்தே சென்று நாககன்னிகையைப் புணர்ந்த காலத்து அவள் யான் பெற்ற புதல்வனை என் செய்வேனென்றபொழுது தொண்டையை (தொண்டை-கோவைக்கொடி) அடையாளமாகக் கட்டிக் கடலில், விட, அவன் வந்து கரையேறின் அவற்கு யான் அரசுரிமையை எய்துவித்து நாடாட்சி கொடுப்பனென்று அவன் கூற, அவளும் புதல்வனை வரவிடத் திரை தருதலின் திரையனென்று பெயர் பெற்ற கதை கூறினார். (நச்சினார்கினியருரை-பெரும்பாணாற்றுப் படை) 6. கொங்குநாடு “வடக்குத்தலை மலையாம் வையாவூர் தெற்கு குடக்குவெள் ளிப்பொருப்புக் குன்று-கிழக்கு கழித்தண்டலை சூழும் காவிரிநன் னாடாம் குழித்தண் டலையளவுங் கொங்கு.” வடக்கு-தலைமலை (இது மைசூருக்கும் சத்தியமங்கலத்துக்கு மிடையி லுள்ளது. சத்தியமங்கலம் கோயமுத்தூரின் ஒரு பகுதி தாலுகா) தெற்கு -வைகாவூர் (இது பழனிக்கு இன்னொரு பெயர்); மேற்கு-வெள்ளி யங்கிரி மலை. இது மலையாளத்துக்கும் கோயமுத்தூருக்கும் இடை யிலுள்ள மலையின் பெயர் (North Palghat Gap) வடக்கு-காவிரி நீர்பாய்ச்சும் குழித்தலை . அமராவதி காவிரிச் சங்கமம் குழித்தலைக்குச் சில மைல்கள் மேற்கிலுள்ளது. இது கன்னடம் சேர்ந்த கொங்கு நாடு. ஆதியில் கொங்கு நாடு, கோயமுத்தூரும் சேலத்தின் தெற்குப் பாதியுமடங்கிய நாடாகவிருந் தது. அது 24 நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. கன்னடரின் வெற்றிக்குப் பின் இதன் எல்லை இக்கால மைசூர் வரையும் அகற்றப்பட்டது. 7. சிற்றரசர் நாடுகள் சேர சோழ பாண்டியர்களை யன்றிக் குன்றுதோறுங் கோட்டை களை வளைத்துக் கட்டி மூவேந்தருக்குக் கீழ்ப்பட்டும் படாதும் சிற்றரசு புரிந்த பல அரசர்களைக் குறித்துச் செய்திகள் பல, புறநானூற்றிற் காணப் படுகின்றன. அவ்வரசர்க்குரிய நாடுகள் சிற்றரசர் நாடுகளாம். 8. பல்லவர், சாளுக்கியர் பல்லவர்கள் காஞ்சி நகரைத் தலைநகரமாகக் கொண்டு கி.மு.300 முதல் அறுநூறு ஆண்டுகள் வரையில் ஆண்டிருக்கிறார்கள். இவர்கள் காலத்தில் அப்பர் சம்பந்தர் சிறுத்தொண்டர் முதலிய சைவ அடியார்கள் விளங்கினார்கள். “தொண்டைமான் என்பதற்குச் சரியான சமக்கிருத மொழி பெயர்ப்பே பல்லவர்” எனச் வரலாற்றுக்காரர் கூறுகின்றனர். பல்லவர்களை வென்று காஞ்சியைக் கைப்பற்றிச் சிலகாலம் சாளுக்கியர் அரசு செய்தார்கள். மணிபல்லவம் எனப்பட்ட யாழ்ப்பாணத்துப் பண்டை நாகஅரச பரம்பரையிலுள்ளோரே பிற்காலத்துப் பல்லவரெனப்பட்டன ரென்பது ஒரு சாரார் கருத்து. 4. தமிழின் சிறப்பு “கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனை மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ” என்று ஆன்றோர் கூறிய பொருள் சிற்சில மொழிகளை ஒப்பிட்டு நோக்குவார்க்கும் இனிது விளங்கும். பண்டைக் காலந்தொட்டு நூல் வழக்கினும் உலக வழக்கினும் திருத்த மடைந்து மக்களறிவின் முதிர்ச்சிக்குப் பெரிதும் உதவி செய்வனவாய்ப் போதரும் பழைய மொழிகள் சிலவேயாம். இப்பழைய மொழிகளுள் தமிழ்மொழியை ஒழித்து ஒழிந்தவற்றிற் பெரும்பாலன உலகவழக்கின்றி இறந்தொழிந்தன. தீஞ்சுவை விளைக்கும் முப்பழத்தினும் இனிய மெல்லிய ஓசை இன்பம் வாய்ந்த செந்தமிழ் மொழியோ, எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் கழிந்தும் தன் இளமை கெடாது கழிபெரு மகிழ்ச்சியோடு உலவி வருதலை உற்று நோக்குங்கால், அதனை வழங்கிவந்த நன்மக்கள் எவ்வளவு நுண்ணறிவும், எவ்வளவு அமைதியான தன்மையும், எவ்வளவு நாகரிகமும் உடையவர்களாய் இருந்திருக்க வேண்டுமென்பதை அறிகின்றோம். பழைய நாட்களில் வேறு பல மொழிகளைப் பேசி வந்த மக்கள், நுண்ணறிவிலும் அமைந்த குணத்திலும் நாகரிகச் சிறப்புற்றவர்களா யில்லாமையினால், அவர்கள் வழங்கிய மொழிகள் எல்லாம் ஆண்டுகடோறும் மாறுதல்கள் பல எய்தி, இலக்கண வரம்பில் அகப்படாவாய்ப் பயனின்றிக் கழிந்தன. தமிழைச் சூழ இஞ்ஞான்று நடைபெறும் பல மொழிகளை ஆராய்ந்து பார்ப்பவர்க்கு அம்மொழிகள் ஓர் இலக்கண வரம்பில்லாமல் பலபடச் சிதறி ஒழுங்கின்றிக் கிடத்தல் தெள்ளிதிற் புலனாகும். “தமிழ் கிரேக்கமொழியினும் நயமான செய்யுள்நடையுடையது லத்தீன் மொழியினும் பூரணமானது” (வின்ஸ்லோ) “மனிதராற் பேசப்படுகின்ற மிகப் பொலிவும் திருத்தமும் சீருமுடைய மொழிகளுள் தமிழும் ஒன்று.” (டெய்லர்) தமிழின் சிறப்பை உணர்த்தும் செய்யுட்கள் “பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத் திருப்பிலே யிருந்து வைகை யேட்டிலே தவழ்ந்த பேதை நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந்தோ ரேன மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகின்றாள்” (வில்லிபாரதம்) “கடுக்கவின்பெறு கண்டனுந் தென்றிசை நோக்கி அடுக்கவந்துவந் தாடுவா னாடலி னிளைப்பு விடுக்கவாரமென் கால்திரு முகத்திடை வீசி மடுக்கவுந்தமிழ் திருச்செவி மாந்தவு மன்றோ” “தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்தது முதலை உண்டபாலனை யழைத்தது மெலும்பு பெண்ணுருவாக் கண்டதும் மறைக்கதவினைத் திறந்ததுங் கன்னித் தண்டமிழ்ச் சொல்லோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்” (திருவிளையாடற் புராணம்) “தமரநீர்ப் புவன முழுதொருங் கீன்றாள் தடாதகாதேவி யென் றொருபேர் தரிக்கவந் ததுவுந் தனிமுத லொருநீ சவுந்தர மாறனா னதுவுங் குமரவேள் வழுதி யுக்கிரனெப்பேர் கொண்டதுந் தண்டமிழ் மதுரங் கூட்டுண வெழுந்த வேட்கையா லெலிலிக் கொழிதமிழ்ப் பெருமையா ரறிவார்” (மதுரைக் கலம்பகம்) “ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருள்கடியும்-ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரோன் றேனையது தன்னே ரிலாத தமிழ்” (தண்டி-உரை-மேற்கோள்) “வேலையில் வீழ்த்த கல்லு மென்குடம் புகுத்த வென்புஞ் சாலையிற் கொளுவுந் தீயுந் தரங்கநீர் வைகை யாறுஞ் சோலையாண் பனையும் வேதக் கதவமுந் தொழும்பு கொண்ட வாலையாந் தமிழ்ப்பூஞ் செல்வி....” (திருக்குற்றாலத் தலபுராணம்) “நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகுஞ் சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே தெக்கணமும் அதிற்சிறந்த திரவிட நற் றிருநாடும் அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெருந் தமிழணங்கே.” (மனோன்மணீயம்) இவ்வகைப் பாடல்கள் எழுதற்குரிய காரணங்கள் தாசுக்கள், ஆரியர் எனப்படும் மக்களுக்கிடையே நடந்த யுத்தங் களைப்பற்றி வேத பாடல்கள் கூறுகின்றன. தாசுக்கள் எனப்பட்டோர் தமிழர். இவ்வுணர்ச்சியின் வேகம் நீண்டகாலம் இருந்து வந்தது. இதனால் தமிழை ஆரியத்திலும் தாழ்ந்ததாகக் கூறும் கட்சியொன்று தமிழ்நாட்டில் நீண்டகாலம்தொட்டு இருந்து வருவதாயிற்று. சமயகுரவர் காலத்தும் இவ்வகை உணர்ச்சியிருந்தைமையினாலேயே இரு கட்சியினரையும் சந்து செய்தற் பொருட்டுத் தேவாரத்தில் ‘ஆரியன்கண்டாய் தமிழன் கண்டாய்’ எனக் கூறப்பட்டுள்ளது. தமிழை இழிவுபடுத்தும் கொடுமை நாளுக்குநாள் வளர்வதாயிற்று. அதில் பட்டு மயங்கிய மக்கள் தமிழின் உயர்வையும் அதன் இன்றியமை யாமையையும் அறியாது அதனை இகழ்வாராயினர். கல்வியிற் பெரிய கம்பனே ‘தேவபாடையின் இக்கதை செய்தவர்’ எனக் கூறி வடமொழிக்குப் பணிகின்றமை காண்க. பரஞ்சோதி முனிவர், சிவஞான முனிவர், பேரா சிரியர் சுந்தரம் பிள்ளை முதலானோர் அம்மக்களின் அறியாமைக்கு இரங்கி, அவர்கள் மனங்கொண்டு தமிழில் பற்று உண்டாமாறு அதன் பெருமையை உரைத்து வந்தனர். இம்மாறுபட்ட உணர்ச்சி இன்றும் முற்றாக அவிந்துவிடவில்லை. நீறுபூத்த நெருப்புப்போல் அடங்கிக்கிடக் கின்றது எனலாம். தொல்காப்பியப் பொருளதிகார உரையில் (தொல்-பொருள் 490) “ஆரிய நன்று தமிழ்தீ தெனவுரைத்த காரியத்தாற் காலக்கோட் பட்டானைச் -சீரிய அந்தண் பொதியில் அகத்தியனா ராணையால் செந்தமிழே தீர்க்க சுவா” எனக் காட்டியுள்ள உதாரணச் செய்யுளாலும் இவ்வுணர்ச்சி தமிழ்நாட்டில் நீண்டநாள் உள்ளதென்பது நனி விளங்கும். 5. எழுத்து “எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழு முயிர்க்கு.” (குறள்) எழுத்து, சுவடி முதலிய பழந்தமிழ்ச் சொற்கள் தமிழ்மொழிக்கு வரிவடிவில் எழுதப்படும் எழுத்துக்கள் தொன்மையே உண்டு என்பதை விளக்குகின்றன. 1இஞ்ஞான்று தமிழில் விளங்கும் நூல்களுள் தொல் காப்பியம் பழைமையுடையது. இதன்காலம் கி.மு.350க்குப் பிற்பட்டதன் றென்பது வரலாற்றாசிரியர்களின் கருத்து. வேதங்கள் வியாசரால் நான்கு கூறுகளாகச் செய்யப்படுவதன்முன் இயற்றப்பட்டதென்பர் நச்சினார்க் கினியர். அப்படியாயின் தொல்காப்பியர் காலம் ஐயாயிரமாண்டுகளுக்கு முன்னாகும். தொல்காப்பியத்தில் எழுத்ததிகாரமென ஒரு பகுதி உள்ளது. அதன்கண் எழுத்துக்களின் பிறப்பு வடிவு முதலியன கூறப்படுகின்றன. ஆகவே, தொல்காப்பியருக்குப் பன்னெடுங் காலத்துக்கு முன் தமிழில் எழுத்துக்கள் ஏற்பட்டிருத்தல் வேண்டும். இற்றைக்கு ஆயிர வருடங்களுக்கு முன் வழங்கிய எழுத்துக்கள் இன்று வழங்கும் எழுத்துக்களைப் போன்றனவல்ல.கி.பி. பதினாலாம் நூற்றாண்டு வரையில் அவ்வெழுத்துக்கள் திரிபடைந்து வந்தனவாகத் தெரிகின்றன. இதனை “உருவு திரிந்து உயிர்த்தலாவது மேலுங் கீழும் விலங்கு பெற்றும் கோடு பெற்றும் புள்ளி பெற்றும் புள்ளியுங் கோடும் உடன் பெற்றும் உயிர்த்தலாம். கி-கீ முதலியன மேல் விலங்கு பெற்றன. கு-கூ முதலியன கீழ் விலங்கு பெற்றன. கெ,கே முதலியன கோடு பெற்றன. கா,ஙா முதலியன புள்ளி பெற்றன. அருகே பெற்ற புள்ளியை இக்காலத்தார் காலாக எழுதினார். மகரம் உட்பெறு புள்ளியை வளைத்து எழுதினார். கொ, கோ,ஙெh,ஙோ முதலியன புள்ளியுங் கோடும் உடன்பெற்றன என்னும் நச்சினார்க்கினியர் உரையால் அறியலாகும். முற்காலத்துத் தொல்காப்பியம் முதலிய நூல்கள் எழுதப்பட்டது வட்டெழுத்திலேயாம். பழைய வட் டெழுத்து கோலெழுத்து என்னும் பெயருடன் மலையாளத்தில் மிகச் சமீப காலத்தில் வழங்கியுள்ளது. அங்கு இது கி.பி.17ஆம் நூற்றாண்டு வரையி லும் வழங்கிற்று. மலையாளத்தில் மாப்பிளைமார் கோலெழுத்தை இன்றைக்கும் வழங்குகின்றனர் என்ப.1 திருவனந்தபுரத்திலுள்ள நூதனசாலையில் சேகரித்து வைக்கப்பட் டிருக்கும் சில சாசனங்களால் தமிழ் வட்டெழுத்து கி.பி.18ஆம் நூற் றாண்டின் பிற்பகுதி வரையும் வழங்கியதாகத் தெரிகிறது. “அக்காலத்திலே வழங்கிய தமிழ் எழுத்துக்கள் இக்காலம் வழங்கும் எழுத்துக்களைப் போன்றனவல்ல. மதுரைக்கு வடகிழக்கே 9-மைலுக்கப் பால் இரண்டு மைல் தொடர்ச்சியுள்ள ஆனைமலை யென்னும் ஒரு மலைத்தொடருள்ளது. அம்மலையின் மேற்குப்பக்கத்தில் ஒரு குகையிருக் கின்றது. அக்குகையின் சுவரில் பழைய தமிழெழுத்து வெட்டப்பட்ட சாசனமொன்று காணப்படுகின்றது. இதுதான் வட்டெழுத்து அல்லது பழைய தமிழெழுத்து. எழுத்துக்கள் எழுதப்பட்ட வடிவிலிருந்து அவைக்கு வட்டெழுத்து என்னும் பெயர் வழங்கப்பட்டது. “இச் சாசனத்தின் காலம் கி.பி. 770. கிறித்துவுக்குச் சில நூற்றாண்டு களுக்கு முன் தென்னிந்தியாவில் வழங்கிய எழுத்து இதுவேயாகும். கிறித்துவுக்குப்பின் எட்டாம் நூற்றாண்டில் வட்டெழுத்துடன் வேறு வகையான எழுத்துக்களையுங் கலந்து எழுதப்பட்ட சாசனங்கள் காணப்படுகின்றன. சில நூற்றாண்டுகளுள் வட்டெழுத்தின் இடத்தைப் புதிய எழுத்து எடுத்துக் கொண்டது. ஆரியருடைய சமயமும் சாத்திரங் களும் தென்னாட்டில் பரவத் தொடங்கிய ஏதுவினால் சமக்கிருதச் சொற்கள் பல தமிழிற் கலக்க நேர்ந்ததே இதற்குக் காரணம். இப்போதைய வடிவத்தைத் தமிழ் எழுத்துக்கள் பதினாலாம் நூற்றாண்டில் அடைந்தன.” (Dr. Chandler) இப்போது வழங்குகின்ற கிரந்த எழுத்துக்கள் வட்டெழுத்தி னின்றும் தோன்றினவேயாம். போர்முனையில் இறந்த வீரனுக்குக் கல்நட்டு அதில் அவனுடைய பெயரும் பீடும் எழுதுவது பழந்தமிழர் வழக்கு. இதனை “நல்லமர் கடந்த நாணுடை மறவர் பெயரும் பீடும் எழுதி அதர்தோறும் பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்” (அகம்) “பட்டோர் பெயரு மாற்றலு மெழுதி நட்ட கல்லு மூதூர் நத்தமும்” (திருவாரூர் மும்மணிக்கோவை) என வருவனவற்றாலறிக. இவ் வீரக்கல் நிறுத்தும் வழக்கம் பழந்தமிழர்கள் எழுத்தெழுதும் முறையினை அறிந்திருந்தார்கள் என்பதை வலியுறுத்து கின்றது. தமிழ்மொழியில் நெடுங்கணக்கு மிகவும் அழகு பெற அமைந் துள்ளது. ஒரே எழுத்துக்குப் பல ஒலியில்லை. ஓரொலிக்குப் பல எழுத்துக்கள் வேண்டா; கூட்டெழுத்துக்கள் கிடையா. “மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி” என்னுந் தொல்காப்பியச் சூத்திரம் இதனை வலியுறுத்தும். எல்லா எழுத்துக்களும் மொழிக்கு முதலில் வாரா. எல்லா எழுத்துக்களும் மொழிக்கிடையில் மயங்கா. முன் எத்தனை எழுத்துக்களிருந்தனவோ அத்தனையே இன்றுவரையுமுள்ளன. ஆரிய மொழிக்குரிய நெடுங்கணக்கு தமிழர் முறையைப் பார்த்துச் செய்யப்பட்டதென்பது ஆராய்ச்சியாளர் துணிபு. “தாங்கள் செல்லுமிடங் களுக்குத் தக்கபடி புதிய லிபிகள் ஏற்படுத்திக்கொள்ளும் இயல்புடை ஆரியர் தமிழ்நாட்டிற் கேற்றபடி தமிழ்லிபியை ஒட்டிக் ‘கிரந்தம்’ என்னும் புதியதோர் லிபி வகுத்தனர்.” (தமிழ்மொழியின் வரலாறு) தமிழ்மொழியிலுள்ள முதலெழுத்துக்கள் முப்பதுமே குறைபாடில் லாத உறுப்புக்கள் அமைந்த மக்கள், குறைபாடில்லாத முயற்சியால் வாயாற் பிறப்பிக்கும் ஓசைகளாகும். சமக்கிருத மொழிக்கட் காணப்படும் தமிழி லில்லாத சில எழுத்துக்கள் குறைபாடுடைய முயற்சியாற் பிறப்பிக்கப்படும் எழுத்துக்களாம். தமிழுக்குரிய ஆய்த எழுத்தின் உதவியைக்கொண்டு எம்மொழியிலுள்ள எவ்வகை எழுத்தோசைகளையும் பிறப்பித்தல் எளிதில் அமையும். இம்முறையினை விளக்கிக் காட்டினோர் ஆசிரியர் மறைமலை யடிகள், திருவாளர் பா.வே. மாணிக்க நாயக்கர் முதலியோராவர். “அகர முதல் ஒளகார இறுவாயாகக் கிடந்த பன்னீரெழுத்துக் களுமே உயிரெழுத்துக்கள் எனப்படுவதற்கும், இவை தமிழ் மொழியின் ஒன்றாக அடைவுபடுத்து நிறுத்தப்பட்ட முறையே முறையெனப்படு தற்கும் உரிமையுடையனவாம். இஃது இவ்வாறாகவும், வடநூலார் தமிழின் நெடுங்கணக்கைப் பார்த்து உயிரெழுத்து மெய்யெழுத்துக்களை அடைவு படுத்திக்கொண்ட அளவில் அமையாது, தமிழினும் தமக்கு உயிரெழுத் துக்கள் மிகுதியாய் உண்டென்று காட்டுவதற்குப் புகுந்து பொருந்தாப் பேரவாவால் உயிரெழுத்துக்களல்லாத ரு ரூ லூ, அம் அ: என்னும் உயிரெழுத்துக்களையும் அவற்றோடு கலந்து இழுக்கினார். இவ்வாறு எழுத்துக்களிற் கலந்த குற்றியலுகர ஊகாரங்களையும் அகரங்களையும் நீக்கினால் எஞ்சி நிற்பன ம் ர் ல்ஃ என்னும் மெய்யெழுத்துக்களும் ஆய்தமுமேயாகலின் அவர் உயிரெழுத்துக்களைப் பன்னிரண்டின் மேலாகப் படைத்திட்டுக் கொண்டது வெறும் போலியா மென்க.” “பதினெட்டு மெய்யெழுத்துக்கள் மட்டுமே செவ்வையாகப் பொருந்தப்பட்ட உறுப்புகளுடைய மக்கள் குறைபாடில்லாத முயற்சியால் தம் வாயாற் பிறப்பிப்பனவாகும். விந்துவினின்றும் மேலெழுந்த விந்து காரண வொலியைத் தன்னிலையில் நேரே இயங்கவிடாது மக்கள் தமது நிறைந்த முயற்சியால் தலை மிடறு நெஞ்சு என்னும் மூவிடங்களிலும் அதனை நிறுத்திப், பல், நா, மூக்கு, அண்ணம் என்னும் ஐந்துறுப்புகளோடு அதனைப் பல வேறுபடத் திரித்துப் பல ஒலிகளாக வெளியிடுகின்றனர். இவ்விந்து காரணவொலி குறைபாடில்லாத உறுப்புகளாலும் குறைபா டில்லாத முயற்சிகளாலும் இயக்கக் கூடும்வரை இப்பதினெட்டெழுத்தின் மேற்பட்ட ஒலிகள் தோன்றுதற்குச் சிறிதுமிடமேயில்லை, மற்று இவ்வா றன்றிக் குறைபாடுடைய உறுப்புக்களும் குறைபாடுடைய முயற்சிகளு மிருந்தால் விந்துகாரண வொலி செவ்வனே இயங்கப்படாமற் பலவாறாய் இயங்கி அளவுக் கடங்காப் பலதிற வொலிகளையெல்லாம் தோற்று விக்கும். “தமிழில் இல்லாமல் வடமொழி நெடுங்கணக்கில் மட்டும் காணப்படும் சில ஒற்றெழுத்துக்கள் அத்துணையும் தமிழின்கண் நிறைந்த முயற்சியாற் பிறப்பிக்கும் ஒற்றெழுத்துக்கள் சிலவற்றைக் குறைந்த முயற்சியால் ஆய்தவொலியைத் தடைப்படாது செல்லவிடுத்துப் பிறப்பிக்கத் தோற்றுவனவே யாகுமாதலால், உண்மையாக நோக்குங்கால் அவை தனித்தனி மெய்யெழுத்துக்கள் ஆகமாட்டா வென்பது தெற்றெனப் புலப்படும்.” தமிழில் ஒலி எழுத்துக்கள்- ஆசிரியர் மறைமலையடிகள். ஆரியமொழியிற் காணப்படும் எழுத்துக்களும் பிறவும் அம் மொழிக்கினமாகிய இலத்தின், கிரீக், எபிரேயம் முதலிய மொழிகளில் இல்லாமையால் இந்தியாவை அடைந்த ஆரியர் அங்குறைந்த தொல்குடி களாகிய தமிழரின் எழுத்து முறைகளைப் பின்பற்றியதுடன் லிபிகளையும் ஆக்கிக்கொண்டார்களென்பது. . . . . வெள்ளிடை விலங்கல். 1“பேராசிரியர் இராப்சன், தென்னிந்திய மொழிகள் மிகவும் திருத்தம் பெற்றிருந்தனவென்றும், ஆகவே சமக்கிருதத்தில் திராவிடக் கலப்பிருத்தல் ஆச்சரியப்படத்தக்கதன்று என்றும் குறிப்பிட்டுள்ளார். இலத்தின் கிரேக்கு முதலிய ஏனைய ஆரிய மொழிகளிற் காணப்படாது சமக்கிருதத்தில் மாத்திரம் காணப்படும் சிறப்புக்கள் ஆரிய மக்கள் திராவிட மக்களோடு தொடர்பு பெற்றமையால் உண்டாயினவென்று இலகுவில் கொள்ள லாகும்.” (திராவிட இந்தியா, பக்.75) “தமிழ்ச் சொற்களும் வடசொற்கள் போலத் தாதுக்களை யுடையனவாம். தாதுவெனினும் பகுதி யெனினும் ஒன்றே. தமிழ்ச்சொற் பகுதிகள் எல்லாச் சொற்களுக்கும் தெற்றெனக் காண்பதரிது. அதுபற்றியே தொல்காப்பியரும் ‘மொழிப் பொருட் காரணம் விழிப்பத்தோன்றா’ என்றார். ஆயினும் நுண்ணியதாக ஆராயுமிடத்துப் புலப்படாமற் போகாது. சில சொற்கள் வினையடியாகவும் சில சொற்கள் உரியடியாகவும் சில சொற்கள் இடையடியாகவும் ஒரு சில பெயரடியாகவும் பிறந்தன. “அகத்தியர் காலத்திலே வழங்கிய சொற்கள் பல பிற்காலத்திலே வழக்கிறந்தன. அவர் காலத்திலே வழங்காத சொற்கள் பிற்காலத்தில் வழங்குவனவாயின. அவர் காலத்திலும் தொல்காப்பியர் காலத்திலும் சகர அகரத்தை முதலாகவுடைய தமிழ்ச் சொற்கள் வழங்கவில்லை. சட்டி சட்டுவம் சட்டை சந்திரன் சஞ்சலம் சல்லி சலி முதலியன தமிழ்ச் சொற்களல்ல.” (தென்மொழி வரலாறு.) “பெயர் வினை இடை உரி என்னும் நால்வகைச் சொற்களில் இடைச்சொற்களும் உரிச்சொற்களும் முன்னொரு காலத்தில் வினைகளா யிருந்தன. அவைகளனைத்தும் காலக்கிரமத்தில் அத்தன்மையிழந்து இப்போதுள்ள இடையுரிப் பண்புகள் அடைவனவாயின.” (தமிழ்மொழி யின் வரலாறு) தமிழ்மொழியின் முதற் பருவத்தே உள்ள சொற்கள் பெரும்பாலும் ஓரசையின வென்றும், அங்ஙனம் தமிழுக்குள்ள சொற்கள் பெருந்தொகை யின வல்ல வென்றும், ஒவ்வோர் சொல்லடியாகவும் பற்பல சொற்கள் தோன்றிப் பல்கின வென்றும் சொல் ஆராய்ச்சி வல்ல ஞானப்பிரகாச ரவர்கள் தமது ‘தமிழ் மொழி அமைப்புற்ற வரலாறு’ என்னும் நூலில் விளக்கிக் காட்டியுள்ளார். “கதந பமவெனு மாவைந் தெழுத்தும் எல்லா வுயிரொடுஞ் செல்லு மார்முதலே” “சகரக் கிளவியு மவற்றோ ரற்றே அ ஐ ஒள வெனு மூன்றலங் கடையே” என்னும் தொல்காப்பியச் சூத்திரங்களால் அக்காலத்துச் ச, சௌ முதல் மொழிகள் வழங்கவில்லையெனத் தெரிகிறது. “சகரக்கிளவி”என்னும் சூத்திரத்தினிரண்டாமடி, “அவை ஒள வெனு மொன்றலங் கடையே” என்றிருக்க வேண்டும் என்றும், அது எவ்வாறோ “அ ஐ ஒளவெனு மூன்றலங்கடையே” என்று திருத்தப்பட்டதென்றும் திருவாளர் அடைக் கலம்பிள்ளை அவர்கள் மெய்கண்டான் பத்திரிகையில் வெளியிட் டுள்ளார். இது ஆராய்ச்சிக்குரியது. அகராதிகளில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட சகர முதன் மொழிகள் காணப்படுகின்றன. “யாழ்ப்பாணத்திலே எழுதத் தொடங்கிச் சென்னையில் பூர்த்தி யாக்கப்பட்ட வின்ஸ்லோ (Winslow) அகராதி மிகச் சிறந்ததாகும். இது அறுபத்தேழு வருடங்களுக்கு முன் இயற்றப்பட்டது. அவ்வகராதியில் 67,000 சொற்கள் காணப்படுகின்றன. 1913 ஆம் ஆண்டில் புதிய தமிழ்ப் பேரகராதி மதுரையில் தொடங்கப்பட்டது. அது இப்போது சென்னையில் பல்கலைக் கழகத்தாரின் மேற்பார்வையில் இயற்றப்பட்டு வருகின்றது. சென்னை அரசாங்கத்தார் இம்முயற்சிக்கு ஒரு லட்சம் ரூபா உதவியிருக் கின்றனர். இப்புதிய பேரகராதிக்கு வேண்டிய விஷயங்கள் அகராதிகளிலும் வேறு பலவகைகளிலும் சேகரிக்கப்படுகின்றன. வின்ஸ்லோவால் யாழ்ப்பாண வழக்கில் மாத்திரம் உள்ளன வென்று காட்டப்பட்ட 3000 சொற்கள் குமாரசுவாமிப்பிள்ளை, முத்துத்தம்பிப்பிள்ளை ‘ஜாவனா கல்லூரி’ (Jaffna college) புரொபஸர் ஹட்சன் முதலானவர்கள் அடங்கிய ஒரு சபைக்கு ஆராய்ச்சிக்கு விடப்பட்டன. அவற்றுள் நூற்றுக்கு 97 சொற்கள் இன்றும் யாழ்ப்பாணர் வழக்கில் உள்ளனவென்று ஒப்புக் கொண்டனர். புதிய பேரகராதி (lexicon)யில் 83,000 அல்லது 84,000 சொற்கள் வரையில் தான் இருத்தல் கூடும். 6. வழக்கு “தமிழ்மொழி” வழக்கு1 எனவும் செய்யுள் எனவும் இருகூறுபட்டு இயங்குகின்றது. சாத்தா வா, நீ பொருளைத் தேடினாய், அவன் மிகப் பசித்தான், யான் சோறு கொடுத்தேன் என்றாற்போல யாவரும் வழங்கும் சொற்றொடர்கள் வழக்கு எனப்படும். இழிந்தோர் பலவாறு சிதைவுபடக் கூறுவனவும் ஒருவாற்றால் வழக்கேயாயினும் அவை அறிவுடையோரால் மேற்கொள்ளப்படாவாகும். 7. செய்யுள் “நல்லறிவுடையாரால் பலவகைச் சொற்களாலும் அமைதி பெறச் செய்யப்படுவன செய்யுள் எனப்படும். பாட்டுக்களே யன்றிச் சூத்திரம் உரை முதலாயினவும் செய்யுள் என்னும் பெயரால் சூத்திரச் செய்யுள் என்று இங்ஙனம் பண்டு வழங்கின. யாம் இப்பொழுது செய்யுள் என்னும் பெயரைப் பாட்டுக்கே உரித்தாக்கிச் சூத்திரம் அல்லாதவைகளை உரை யெனவும், பாட்டு எனவும் இரு வகைப்படுத்திக் கொள்கின்றோம். உரை யினையும் பல்வகைப்படுத்திக் கூறுகின்றார் தொல்காப்பியனார். செய்யுட் களின் இடையே விரவிவரும் உரை சிலப்பதிகாரத்திற் காணப்படுவது. செய்யும் அல்லது சூத்திரப் பொருளைத் தெளிவுறுத்தும் உரைகள் தமிழில் மிக்குள்ளன. யாதானுமொரு வரலாறு அல்லது உண்மையினைச் செய்யு ளின்றித் தொடர்ச்சியாகக் கூறும் உரைநடையானியன்ற நூல், ‘உரைநூல்’ என்று வழங்கற்குரியது. அத்தகைய நூல் பண்டைச் சான்றோர் செய்ததாக நமக்கு ஒன்றுங் கிடைத்திலது. உரைநடையானது பயில்வாரது அறிவு நுணுகி நின்று ஆராய்தற் கேற்ற திட்பமும் கூறும் பொருளுக்கேற்ற ஓசை யும் உடையதன்று. ஆதலின் பாட்டுக்கள் போல, உணர்வினை எழுப்பி இன்பஞ் செய்வதாகாது. ஓர் வரையறையின்மையின் சிதைவின்றி நிலை பெறுவது மாகாது. எனினும் எளிதிற் பொருள் விளங்குவதாய்ச் சுருங்கிய அறிவினர்க்குப் பயன்றருவது உரைநடையே யாகலின், ஒவ்வொரு மொழிக்கும் உரைநூல்கள் இன்றியமையாதன வென்பதிற் றடையில்லை. அவ்வகையில் தமிழ்மொழி வளர்ச்சியுறா திருந்தது இரங்கத்தக்க தொன்றே.” “தமிழ் மொழியிலுள்ள பாட்டுக்களின் மாட்சி அளவிடற்பாலன வல்ல. பிறமொழிச் செய்யுளை யெல்லாம் தமிழ்ச் செய்யுட்கள் வென்று விட்டன என்னலாம். நம் முன்னையோர் தம் நுண்ணறிவானும், உழைப் பானுங் கண்டறிந்த அரும்பொருள் மணிகளை யெல்லாம் நமக்கு உதவு மாறு தொகுத்து வைத்த களஞ்சியங்கள் பாட்டுக்களேயாகும். பல்லாயிரம் ஆண்டுகளின் முற்பட்ட நம் பெரியோர் என்பு, தோல், நரம்புகளால் யாக்கப்பட்ட உடம்பினை யெடுத்து நமக்கெதிரில் வீற்றிருக்க, நாம் அவர் களோடு, அளவளாவியும், அவர்கள் கூறும் உறுதி மொழிகளைக் கேட்டும், அறிவும் ஆண்மையும் உடையராய் இன்புற்றிருத்தலினும், பெறுதற்கரிய பேறு யாதுளது? எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளின் முன்பு விளங்கி யிருந்து பின் மாறுதலுற்று மறைந்துபோன மலை, நிலன், கடல், யாறு முதலியனவெல்லாம் புலவருடைய பாட்டுக்களில் தம் பண்டைய வுருவுடன் விளங்குதலைக் காணுமிடத்து, நமக்குண்டாகு முணர்ச்சியை யாதென்று கூறலாம்? உலகமென்னும் காட்சி மன்றத்தில் உயர்வற வுயர்ந்த ஒருவனால் காலந்தோறும் அமைத்து வைக்கப்படும் எண்ணில் பேதமான பொருள்களையும் அவற்றின் பண்புகளையும், மொழிகளென்னும் வரைவு கோல் கொண்டு, உள்ள மென்னும் கிழியில் ஒழுங்குறத் தீட்டி வைத்த ஓவியராகும் நல்லிசைப் புலவர்கள், அவ்வோவியக் காட்சியில் உறைத்து நிற்குங்கால் உண்டாய உணர்ச்சியே வடிவாக , அன்னவர் நம் செந்நாவி னின்றெழுந்த பாட்டுக்களினும் நமக்கின்பம் விளைப்பன யாவையுள? ‘உருகிப் பெருகி யுளங் குளிர’ முகந்து கொண்டு, பருகற் கினிய பரங் கருணைத் தடங்கடல் போன்று பருகுந்தோறும் பருகுந்தோறும் வற்றாத பேரூற்றாய்க் கழிபேரினிமை சுரந்தூட்டுவன பாட்டுக்களேயா மென்க.” “இக்காலத்தே பொருட் பொலிவு சிறிது மின்றி, எதுகை, மோனை யமையச் சொற்களைத் தெற்றிவைப்பதே பாட்டென்று கருதிக் கொண் டிருப்பாரும் உளர். மடக்கும் திரிபுமாகக் சொற்களை அடுக்கி வைத்து. இரண்டொரு போலிப்பாட்டியற்றினாரைப் புலவர் வரிசையிற் சேர்த் தெண்ணுவாருமுளர். அந்தோ! இவற்றுக்கெல்லாம் காரணம் பாட்டின் தன்மை இன்னதென்று அறியாமையேயாகும். தொல்காப்பியனார் கூறிய ‘நோக்கு’ முதலிய இன்றியமையாச் செய்யுளுறுப்புக்களை யொழித்து விட்டுப் பிற்காலத்தார் யாப்பிலக்கணம் வகுத்ததும், பாட்டின்றன்மை யறியாது, பிழைநெறியிற் பிறர் செல்லுவதற்கேதுவாயிற்றென்க. இவற்றை யெல்லாம் ஒதுக்கிச், சுருங்கிய சொற்களில் ஆழ்ந்து அகன்ற பொருள்களை யுடையனவாய், இயற்கை நெறி வழாதனவாய், உணர்வினை எழுப்பி, மெய்ப்பாடு தோற்றுவிக்கும் சான்றோர் செய்யுட்களையே அறிவுடை யோர் ‘பாட்டு’ என்று கொள்வாராவர். அத்தகைய பாட்டுக்கள்தாம் எண்ணிறந்தன வுள.” (கபிலர்-பக்.84-87 பண்டிதர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்.) “தமிழ்மொழியிலுள்ள செய்யுளோசை அமைதியே பா வென்று பெயர் பெறுவதாம். ஒருவன் தொலைவிடத்திருந்து ஒரு பாட்டுப்பாட அப்பாட்டின் சொற்பொருள் இன்னவென்று புலப்படாவாயினும், அவ்வோசை வருமாற்றை உய்த்துணர்ந்து காண்பானுக்கு அவன் பாடுஞ் செய்யுள் இன்ன பாவென்று அறியக்கிடக்கும், இங்ஙனம் நுண்ணிய விசும்பின் கண் அலையலையாய் எழும்பி ஓர் ஒழுங்காக வரும் ஓசையே பா வாகுமெனத் தொல்காப்பியச் செய்யுளுரையிலே பேராசிரியரும் நன்கு விளக்கினார். இவ்வாறு தோன்றிப் பரம்புஞ் செய்யுளோசையைத் தமிழாசிரியர் வெண்பா, அகவற்பா, கலிப்பா, வஞ்சிப்பா என நால்வகைப் படுத்தினார். பின்னும் இந்நால்வகைப் பாவி னோசையை நோக்குமிடத்து வெண்பாவிற் கலிப்பாவும் அகவற்பாவில் வஞ்சிப்பாவும் அடங்குவனவாம். இஃது ‘ஆசிரிய நடைத்தே வஞ்சி யேனை-வெண்பா நடைத்தே கலியென மொழிப’(தொல்.செய்-208) என்றும், ‘பாவிரு மருங்கினைப் பண்புறத் தொகுப்பின், ஆசிரியப்பா வென்ப வெண்பா வென்றாங், காயிருபாவி னுளடங்குமென்ப’ (செய்.107) என்றும் ஆசிரியர் தொல்காப்பியனார் கூறுமாற்றான் விளங்கும். (பட்டினப்பாலை ஆராய்ச்சி-ஆசிரியர் மறைமலையடிகள்) செய்யுளாவது “பாட்டுரை நூலே” (செய்-78) என்னும்செய்யுளியற் சூத்திரத்தாற் கூறிய ஏழு நிலமும் அறம் முதலிய மூன்று பொருளும் பயப்ப நிகழ்வது”- நச்சினார்க்கினியர். “வேற்று நாட்டுச் சொற்களும் பொருள்களுமான ஆடை அணிகலன்கள் தன்னை வந்து அணுகப்பெறாமல் தன் தெய்வ வள நாட்டு ஆடை அணிகலன்களையே நமது தண்டமிழ்த்தாய் தன் மேற்கொண்டு பொலிந்தாள். அந்நாளில் அவளது ஆம்பற் செவ்வாயினின்றும் அமிழ்தம் ஒழுகினாற்போல் புறம் போந்த வெண்பா அகவற்பா கலிப்பா என்னும் இயற்கைச் செந்தமிழ்ப் பாக்கள் பாவினங்களின் அரிய பெரிய அமைதி களை யெல்லாம் முற்றவெடுத்து முடியவிளக்கும் அருந்தமிழ் நூல் ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பிய மொன்றுமே யாம்.” “இனி அந்நாட் கழிந்தபின் இடைப்பட்ட காலத்தே விளை பொருள் வளனில்லா வேற்று நாட்டவர் வறுமை கூர்ந்து செந்தமிழ்த் தனி வளநாடு புகுந்தார். புகுதர, எல்லா மக்களிடத்தும் அன்புடையவளான செந்தமிழ்த் தாய் அம்மக்கள் தம்மையும் அகம் கனிந்து முகம் மலர்ந்து ஏற்று அவர் வறுமைதீரத் தன்பாலுள்ளவைகளையெல்லாம் உளங் குழைந்து உதவியூட்டி அவரை மகிழ்வித்தனள்; மகிழ்விக்க அவரும் தமது மிடி தீர்ந்து தாம் தமது வறங்கூர் நாடுகளினின்றுங் கொணர்ந்த பன்மொழிச் சில்பணிகளைத் தமது நன்றிக்கு அறிகுறியாக அன்னை கை கொடுத்தார்; நந்தமிழன்னை அவை இயல்பானும் அளவானும் மிகச் சிறியவாயினும் அன்புறு மக்கள் தந்தனரென்பதனால் உவராது ஏற்றுத் தன் விலை வரம்பற்ற மணிக்கலன்களோடு அவற்றைக் கலந்தணிந்தாள். இம்முறை யால் வடமொழியாளர் கொணர்ந்த சில சொற்களும் யாப்பு வகைகளுமாம் அணிகலன்களும் நம் தமிழன்னையின் புனித மேனியின்கட் காணப் படலாயின. “இன்னும் இவ்விடைப்பட்ட காலத்தே வடமொழி மக்கள் திரள் திரளாகத் தமிழ் வளநாடு புகுந்து செந்தமிழன்னை பாலடைக்கலம் புகவே, நந்தமிழன்னை தன் மக்கள்பால் வைத்த அன்பினும் மிடிபட்டு வந்த அவ்வயற்புதல்வர்பால் அன்பு மிக வைத்து அவரை மகிழ்விப்பான் வேண்டி, அவர் மாற்றித் தந்த விருத்தப் பாக்களாம் அணிகலன்களைத் தனக்கு இசைந்தவாற்றாற் பல வகைப்படத் திரித்துச் சிறக்கச்செய் தணிந்திடுவாளாயினள். இதனாலன்றோ கி.பி.மூன்றாம் நூற்றாண்டில் திகழ்ந்த சைவ சமயாசாரியரான மாணிக்கவாசகர் காலந்தொட்டு இற்றை நாள்வரையும் காவியங்கள், புராணங்கள், இதிகாசங்கள் முதலாயின வெல்லாம் பல திறப்பட்ட விருத்தப் பாக்களினாலேயே யாக்கப்படுவ வாயின. (யாப்பருங்கல விருத்தி முகவுரை.) 1. அணி அணியிலக்கணமென வொன்று தொல்காப்பியத்தில் தனியாகக் கூறப்படவில்லை. தொல்காப்பியத்திற் கூறிய உவமைப் பகுதியே எல்லாப் பகுதிகளையும் தன்னுளடக்கி நிற்குஞ் சிறப்புடையது. தண்டியலங்காரம், வீரசோழியம் முதலிய பிற்றைஞான்றை நூலுடையார் வடநூலார் மதமே பற்றி உவமமொன்றனையே வாளா பல பெயர்களாற் பெருக்கி அவற்றானு மவை யடங்காமை கண்டு இளைப்புற்றார். பேராசிரியர் உவமவிய லுரையில், “இனி இவ்வோத்தினுட் கூறு கின்ற உவமங்களுட் சிலவற்றையும், சொல்லதிகாரத்துள்ளும் செய்யுளிய லுள்ளும் சொல்லுகின்ற சில பொருள்களையும் வாங்கிக்கொண்டு, மற்றவை செய்யுட்கண்ணே அணியாமென இக்காலத்து ஆசிரியர் நூல் செய்தாரு முளர். அவை ஒருதலையாகச் செய்யுட்கு அணி யென்று கூறப்படா. பொருளதிகாரத்துள் (வரும்) பொருட் பகுதியெல்லாம் செய்யுட் கணியாகலான், அவை பாடலுட் பயின்றன என்றதனால், அவற்றைத் தொகுத்து அணி யென்று கூறாது, வேறு சிலவற்றை உரைத்து அணி யென்று கூறுதல் பயனில் கூற்றாம்” என்று பிற்காலத் தணிகளை மறுத்துக் கூறுதல் காண்க. “இப்பொருளணிகளிற் பல உவமமென்ற ஓரணியினடியாகவே தோன்றின ”வென்பது பல்லோர் துணிபு. ஆசிரியர் தொல்காப்பியரும் இத்துணிபினர்போலும். இது, வடமொழி அப்பைய தீக்கதரவர்களுக்கும் உடன்பாடாதல், அவரது சித்திர மீமாஞ்சைக் கூற்றான் விளங்கும். தமிழ் மொழியின் வரலாறு. “உவமை யென்னுந் தவலருங் கூத்தி பல்வகைக் கோலம் பாங்குறப் புனைந்து காப்பிய வரங்கிற் கவினுறத் தோன்றி யாப்பறி புலவ ரிதயம் நீப்பறு மகிழ்ச்சி பூப்ப நடிக்குமே” “ஆயினும் உலகில் வழங்கும் மொழிகளெவற்றிலும் உவமை யொன்றே அடிப்பட்டு நடந்தியல்வது வெள்ளிடை விலங்கலாம். ஏனைய அவ்வொன்றில் நின்றே கிளைப்பன. இதுபற்றி யன்றோ தொல்காப்பிய னாரும் உவமவிய லொன்றே கூறிப் போந்தார்” (தமிழ் செல்வக் கேசவராய முதலியார்) 2. பொருள் பொருட் பகுதியில் அகம் புறம் என்னும் இரண்டொழுக்கங்களின் இலக்கணங்கள் கூறப்படுகின்றன. அக்காலத்து ஆண் பெண் என்னும் இருபான் மக்களின் மண முறைகளையும் அவர் இல்லற வொழுக்கங்களை யும் கூறுவது அகம். அக்காலத்து அரசர் செய்த போர் முறைகளையும் அவர்களது பிற ஒழுக்கங்களையும் கூறுவது புறம். ஆகவே, பொருளதி காரம் பழந்தமிழ் மக்களின் வரலாறாக வமைந்துள்ளது. பொருளிலக் கணத்திற் காணப்படும் பொருள்கள் வடமொழியில் என்றென்றைக்கும் கிடைக்கக் கூடாத தனித் தமிழ்க் கருத்துக்களாகும். “தள்ளாப் பொருளியல்பிற் தண்டமிழாய் வந்திலார் கொள்ளாரிக் குன்று பயன்” (பரிபாடல்) “இலைப்புறங் கண்டகண்ணி யின்றமி ழியற்கையின்பம்” “தேவர் பண்ணிய தீந்தொடை யின்சுவை மேவர் தென்தமிழ் மெய்ப்பொரு ளாதலின்” (சிந்தாமணி) என்ற பரிபாடல் சிந்தாமணி என்னும் பழந்தமிழ்ப் பனுவல்களினின்றும் காட்டப்பட்ட அடிகள் பொருள் இலக்கணம் தமிழ்மொழிக்கே சொந்தம் என்பதை வலியுறுத்தும். 3. எண்வகை மணம் “மறையோர் தேஎத்து மன்ற லெட்டனுள்”(தொல் கள-க) என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தால் அக்காலத்து வடநாட்டில் வழங்கிய மண முறைகள் எட்டு என அறிகின்றோம்1 “அறநிலை யொப்பே பொருள்கோள் தெய்வம் யாழோர் கூட்ட மரும்பொருள் வினையே இராக்கதம் பேய்நிலை யென்றிக் கூறிய மறையோர் மன்ற லெட்டிவை” என்னும் இறையனா ரகப்பொருளுரை மேற்கோளால் அம்மன்றல்கள் எட்டின் பெயர்கள் புலனாகின்றன. இம்மணமுறைகள் உலக மக்கள் எல்லோரிடையும் காணப்பட்டவை. (1) அறநிலை (பிரமம்) யாவது: ஓரிருது கண்ட கன்னியை மற்றை யிருது காணாமே கொளற்பால மரபினோர்க்கு நீர் பெய்து கொடுத்தல். என்னை? “ஒப்பாருக் கொப்பா ரொருபூப் பிரிந்தபின் இன்பான் மதிதோன்றா வெல்லைக்க-ணப்பாற் றருமமே போல்கென்று தக்கார்க்குச் சேர்த்தல் பிரமமாம் போலும் பெயர்” என்றாராகலின், “பிரமமாவது ஒத்த கோத்திரத்தானாய் நாற்பத்தெட்டி யாண்டு பிரமசரியங் காத்தானுக்குப் பூப்பெய்திய பன்னீராட்டைப் பிராயத்தாளை அணிகலனணிந்து முத்தீ முன்னர்க் கொடுப்பது” என உரையாசிரியர்கள் கூறுவர். நாற்பத்தெட்டியாண்டுப் பிராயத்தானுக்குப் பன்னீராட்டைப் பெண்ணை மணமுடிப்பது தகுதியான மணமுறையாகக் காணப்பட வில்லை. இம் மணத்தைப்பற்றிக் கூறும் பழைய பாடல் நாற்பத்தெட்டி யாண்டு பிரமசரியங்காத்தல் முதலியவற்றைப் பற்றி யாதும் கூறாமையால், அப்பொருந்தா மணமுறை ஆரிய நாட்டார் வழக்கேயாகும். இம்முறை யினையே அவர்கள் தமிழ்நாட்டு அறநிலை வழக்கோடு ஒப்பவைத்துப் பிரமம் என்னும் பெயரால் வழங்கினார்கள் போலும். ஒப்பு (விதிமணம் அல்லது பிரசாபத்தியம்) ஆவது, கொடுத்த பரியத்தின் இருமடங்கு மகட் கொடுப்போன் கொடுத்தல். என்னை? “கொடுத்த பொருள் வாங்கிக் கொண்டபேர் மடுப்பர் மடுத்தற் கமைந்தா-லடுப்போ னிரண்டா மடங்குபெய் தீவ ததுவே யிரண்டா மணத்தி னியல்பு” என்றாராகலின். பொருள்கோள் (ஆரிடம்) ஆவது: “ஏறும் ஆவும் கொணர்ந்து நிறீஇ, அவற்றின் முன்னர் கைக்கு நீர் பெய்து கொடுத்தல். என்னை? “இற்குலத்தோ டொப்பானுக் கொப்பா னிமிலேறாப் பொற்குளம்பிற் பொற்கோட்ட வாப்புனைந்து-முற்படுத்து வாரிடம்பே ராமுலையை வாழ்க்கைக்கண் வைப்பதுரை ஆரிடம் பேரா மதற்கு” என்றாராகலின். தெய்வம் ஆவது: வேள்வி ஆசிரியன் ஒருவற்கு மகளை அணிகல னணிந்து அவ்வேள்வித்தீ முன்னர்க் கொடுப்பது, என்னை? “மெய்ப்பாலைப் பெண்டன்மை யெய்தியபின் மெல்லியலை யொப்ப வுணர்ந்த பொழுதுண்ட-லொப்பார்க்கு நெய்தயங்கு தீமுன்னர் நேரிழையை யீவதே தெய்வப்பே ராகுந் தெரிந்து” என்றாராகலின், யாழோர் கூட்டம் (கந்தருவம்) ஆவது: “ஒத்த குலனும், குணனும், அழகும், அறிவும், பருவமும் உடையார், யாருமில் ஒரு சிறைக்கண் அன்பு மீதூரத் தாமே புணர்ந்து ஒழுகும் ஒழுக்கம். என்னை? ‘ஒத்த குலத்தார் தமியரா யோரிடத்துத் தத்தமிற் கண்டதும் மன்பினா-லுய்த்திட வந்தர மின்றிப் புணர்வ ததுவரோ கந்தருவ மென்ற கருத்து’ எனவும், “முற்செய் வினையது முறையா வுண்மையி னொத்த விருவரு முள்ளக நெகிழ்ந்து காட்சி யையந் தெரிதல் தேற்றலென நான்கிறந் தவட்கு நாணு மடனும் அச்சமும் பயிர்ப்பு மவற்கு முயிர்த்தகத் தடக்கிய, அறிவு நிறைவு மோர்ப்புந் தேற்றமும் மறையவர்க்கு மாண்டதோ ரிடத்தின் மெய்யுறு வகையும் முள்ளல்ல துடம்புறப்படாத் தமிழியல் வழக்கமெனத் தன்னன்பு மிகை பெருகிய களவெனப் படுவது கந்தருவ மணமே” என்றார் அவிநயனார். அரும்பொருள் வினை (அகரம்) ஆவது: “இன்னது செய்தார்க்கு இவளுரியள் என்ற இடத்து, அன்னது செய்தெய்துவது, அவை வில்லேற்றுதல், திரிபன்றியெய்தல், கொல்லேறு கோடல் முதலிய.” இராக்கதம் ஆவது: “ஆடைமே லிடுதல், பூமேலிடுதல், கதவடைத் தல் முதலியவற்றால் வலிதிற்கோடல். பேய்நிலை யாவது: “துஞ்சினாரோடும், மயங்கினாரோடும், சரித்தாரோடும், செத்தாரோடும், விலங்கினோடும், இழிதகு மரபில் யாருமில்லா வொருசிறைக்கண் புணர்ந்து ஒழுகு மொழுக்கம்.” தொல்காப்பியர் தென்னாட்டு வழக்குகள் சிலவற்றை வடநாட்டு வழக்குகளோடு ஒப்பிட்டுக் காட்டியுள்ளார். தொல்காப்பியர் குறிப்பிட்ட யாழோர் ‘கந்தருவர்’ என்னும் ஒரு கூட்டத்தினராவர். இவர்கள் இமய மலை அடிவாரங்களில் வாழும் அழகிய தோற்றமுடைய மக்கள் என்றும், இவர்களுள் ஆடவரும் மகளிரும் ஒழுக்கத்தால் சிறிது தளர்ந்தவர்கள் என்றும் வைத்தியா என்னும் ஆசிரியர் கூறியுள்ளார். தொல்காப்பியர் தமிழர்களின் களவு ஒழுக்கம் கந்தருவர் வழக்கத்தை ஒருபுடை ஒக்குமென உணர்த்தினார். தொல்காப்பியத்தில் வரும் அந்தணர், மறை என்னும் சொற்கள், சிலவிடங்களில் ஆரியப் பிராமணரையும் அவர் வேதங்களை யும் சுட்டுகின்றன. வீரமாமுனிவர் கிறித்துவ வேதத்தையும், கிறித்துவ குருமாரையும் குறிக்க வேதம்,வேதியர் என்னும் சொற்களை ஆண்டுள்ளார். தொல்காப்பியத்தில் வரும் மறை, மறையோர், அந்தணர் என்னும் சொற்களுக்கு இடமறிந்து பொருள் கொள்ளுதல் வேண்டும். 4. அகம் “அகமென்பது, தலைவனுந் தலைவியும் தம்முளொத்த அன்பின ராய்க் கூடுங் கூட்டத்தின்கண் பிறந்த இன்பம் அக்கூட்டத்தின்கண் ஆண்டனுபவித்த அக்காலத்தில் இன்பம் எவ்வாறிருந்ததென்றவ்விருவரி லொருவரை யொருவர் கேட்கின், தமக்குப் புலப்படாதாய் உள்ளத் துணர்வே நுகர்வதாய் அகத்தே நிகழ்தலின், அகமெனப் பெயராயிற்று. அகமெனினும் காமப் பகுதி யெனினும் ஒக்கும்.” அகத்தைச் சார்ந்துவரும் பொருளெல்லாம் அகப்பொருளாம். 5. களவு “உருவுந் திருவுங் குலமும் முதலியவற்றால் ஒப்புயர்வற்று விளங்குந் தலைமகனொருவன் வேட்டையாடிக் கொண்டு மலைச்சாரல் ஒன்றன் பக்கத்தே தனியனாய் வந்தானாக, ஆங்குத் தினைப்புனங்காத்துத் தோழியரோடு விளையாடுபவளும் உரு திரு முதலியவற்றால் ஒப்புயர்வற்ற வளுமாகிய மலைவாணர் மகளொருத்தி விளையாட்டு விருப்பாற் றோழியர் தனித் தனி பிரிந்த நிலையில் தானுந் தனியளாய் அத்தலைவன் முன்பு எதிர்ப்பட்டனள். எதிர்ப்பட்ட இருவரும் ஊழ்வயத்தால் உள்ளங் கவர்ந்து அவ்விடத்தே மகிழ்ந்து பின்னர் ஒருவர்க்கொருவர் பிரிவாற்றாது ஒருவாறு ஆற்றுவித்துக்கொண்டு தம்மிடம் நோக்கிக் சென்றனர். இவ்வாறு விதியாற் கூட்டப்பட்டுத் பிரிந்த தலைமகன் தான் காதலுற்ற தலைவியைத் திரும்பக் காணுமவாவினால் தூண்டப்பட்டு, முன்னாட் கூடிய இடத்தை நாடிச் செல்ல, அங்ஙனமே அன்பு தூண்ட ஆங்கு வந்த தலைவியைத் தலைமகன் எதிர்ப்பட்டுக் கண்டு மகிழ்ந்து காதலால் முன்போலக் கலந்தான். இம்முறை மூன்றாம் முறை கூடும் போது தன் பாங்கனால் தலைவி யிருப்பிடமறிந்து சென்று அவளைச் சேர்வன். இனித் தோழியால் எப்பொழுதுஞ் சூழப்பட்டுள்ள தலைவியை இங்ஙனமே பலகாலுந் தனியிடத் தெதிர்ப்பட்டுக் கூடுதல் அருமையாயிருத்தல் பற்றித் தலைவியைத் தடையின்றி அனுபவிக்கக் கருதியவனாய் அதற்குத் தக்க துணையாவாள் அவள் காதற்றோழியே என்பதை யறிந்து கொண்டு அவள்பாற் சென்று குறிப்பாகவும் வெளிப்படையாகவும் தன் குறைகூறி வேண்ட, அவள் பலபடியாக ஆராய்ந்து இருவருக்குங் கூட்டமுண்மை யுணர்ந்து, இனி நாமும் இதற்கு உடன்படலே நலம் என்று அவ்விருவரை யுங் கூட்டுவதற்கு முயல்வள். இங்ஙனம் தோழியால் பலமுறை கூடிவரு மிடையில் தலைவியால் காக்கப்பட்டுவருந் தினைப்புனம் முற்றிக் கதிர் கொய்தலேனும் பிற காரணமேனும் நிகழத் தலைவிக்கு அக்காவல் நீங்கி மனையகத்தே தங்கும்படி நேர்தலும், அக்காலத்து இரவில் தோழி அவ்விருவரையுங் கூட்ட முயல்வள். இங்ஙனம் நிகழும் களவொழுக்கம் சிறுகச் சிலர் பலர்க்குத் தெரியவந்து நாளடைவில் ஊரில் பேரலராய் எழும்ப, அது காரணத்தாற் பெற்றோர் தலைவியை இற்செறித்துத் தக்கபடி காவற் படுத்துவர். அதனால் தலைமகனைக் காணப்பெறாத ஆற்றாமை தலைவி மாட்டுப் பெருகுதல் கண்டு, தோழி, இனிக் கற்பு நெறிப்பட்ட இவள் இறந்து படவுங் கூடுமென்று கருதி, இதற்கு வேறு உபாயமொன்றுங் காணாத நிலையில், அவள் தலைவனையடைந்து ‘இனி நீர் இவளை உடன்கொண்டு சென்று மணந்து கொள்வதே காரியம்’ என்று கூறி ஒருவரும் அறியாவகை தலைவியை வெளியேற்றித் தலைமகன்பாற் சேர்ப்பிக்க, அவன் அவளை உடனழைத்துக்கொண்டு, தன்னூர் நோக்கிச் செல்வான்; செல்லுமிடையில், தலைவியின் சுற்றத்தார் அக்களவறிந்து வந்து தலைவனை மேற்செல்லாவாறு தடுத்தும், அவள் தன் காதல் முழுதும் தலைவன் பாற் சார்த்தி நிற்பது கண்டு ‘இவள் கற்பு நெறிப்பட்டாள்’ என்று அறிந்துகொண்டு அவ்விருவர்க்குந் தீங்கு செய்யாது திரும்பிப் போவர். போகத் தலைவனுடன் மகிழ்ந்து சென்று தலைவி அவனூரடைந்து வாழ் வளென உணர்க.” -தொல்-பொருள். ஆராய்ச்சி . மு. இராகவ ஐயங்கார் இக்கள வொழுக்கம் பற்றிய செய்திகள் கூத்தர் கூத்தியர்களால் வேத்தவையில் அபிநயித்து நடிக்கப் பட்டு வந்தன. “வேத்தியல் அகம் பொதுவியல் புறமென்பாரும் பிறிது கூறுவாரு முளர்’ (அடியார்க்கு நல்லார்). அக்காலத்து நாடக வழக்கையும் உலகியல் வழக்கையும் தழுவிச் செய்யப்பட்டதே தொல்காப்பியத்திற் கூறப்படும் களவியலாகும். “இத்தமிழ் நாடகத் தமிழ் எனப்படும்; கிளவி ஒழுங்குபடக் கோத்துக் கதைபோல வந்து நாடகத்துக் கேற்றலின்” எனக் கூறுவர் தஞ்சைவாணன் கோவை உரைகாரர். 6. கற்பு தலைவியை உடன்கொண்டு போய்த் தலைவன் தன்னூரிலேனும் தலைவியின் சுற்றத்தார் சம்மதித்து வேண்ட, அவளூரிலேனும் அவளை விதிப்படி மணந்துகொண்டு அவ்விருவரும் இல்லிருந்து ஆற்றும் அறவொழுக்கம் கற்பெனப்படும். இங்ஙனம் இல்லிருந்து இல்லறம் நடாத்தி இன்புற்றிருக்கும் நாளில் சில காரணத்தை முன்னிட்டுத் தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து செல்வன். அங்ஙனம் தலைவியை விட்டுப் பிரிதல் அறநூலை ஓதுதற் பொருட்டாவது, நாடுகாத்தற் பொருட்டாவது, மாறுபட்ட இருவேந்தரைச் சந்து செய்தற்பொருட்டாவது, வேந்தர்க்குத் துணையாய்ப் போர் செய்தற்பொருட்டாவது, பொருளீட்டும் பொருட் டாவது, பரத்தையர் பொருட்டாவது நிகழும். “முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை” என்பதால் பெண்மக்களை மரக்கலத்தில் ஏற்றிச் செல்லல் பழைய நாள் மரபன்று. ஓதற் பிரிவு மூன்று ஆண்டுகளும் மற்றப் பிரிவுகளெல்லாம் ஓர் ஆண்டுக்குள்ளும் முற்றுப்பெற வேண்டுமென்ப. தலைமகன் பிரிந்து செல்லுமிடத்துத் தலைமகள் அவன் பிரிவாற் றாது இரங்குவாள். தலைமகனு மிரங்கி அவளைத் தேற்றி இன்ன இருதுவில் இன்ன திங்களில் யான் மீண்டு வருவேன் என்று கூறிச் சில குறிகளுஞ் செய்து விட்டுச் செல்வான். தலைமகளும் தலைவன் சொற்பிழையாது இல்லிருந்து இல்லறமாற்றி வருவாள், அவன் குறித்த பருவம் வந்த விடத்து அவன் பிரிவினை ஆற்றாது வருந்துவாள். தோழி அவள் ஆற்றாமையைக் கண்டு வருந்தித் தலைவன் குறித்த பருவம் அஃதன்றேல் அவன் செய்த குறிகள் வந்தமையான் அவன் வாராநிற்கின்றான் என்றும் பிறவுங் கூறித் தலைவியை ஆற்றுவிப்பாள். தலைவனுந் தான் குறித்துச் சென்ற வினை முடித்துக் குறித்த பருவம் வரவே மீண்டு வருவான். மீளும் வழியில் தான் செய்த குறிகளெல்லாந் தோன்றும்; அது பொருட்டுத் தலைவி ஆற்றா ளென்று பாகற்குக் கூறித் தேரைவிரைவிற் செலுத்தச் செய்து கடுகிவந்து தலைமகளை யெய்தி விருந்தயர்வான். பின்னர் இருவரும் பிரிந்திருந்த விடத்து நிகழ்ந்த செய்திகளையெல்லாம் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டு இன்புறுவர். இங்ஙனம் இல்லறம் நடாத்தித் தலைவனுந் தலைவியும் வெறுக்கு மளவும் காமவின்பந் துய்த்து மக்களைப் பெற்று முதுமை யெய்தியபோது துறவு மேற்கொண்டு மெய்யுணர்ந்து வீடுபெறுதலே இவ்வொழுக்கத்தின் முடிந்த பொருளாம். “காமஞ் சான்ற கடைக்கோட் காலை யேமஞ் சான்ற மக்களோடு துவன்றி யறம்புரி சுற்றமொடு கிழவனுங் கிழத்தியுஞ் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே.” -தொல்.கற்.51 காதல்வழிச் செல்லுமுள்ளமும் இறைவனை நச்சுமுள்ளமும் ஒருபான்மைய வாகலின், அன்பின் மாண்பினை விளக்கும் அகப்பகுதி விழுமிதென அறிஞர் உச்சிமேல் வைத்துப் போற்றுவர். இறைவன் பக்குவம் வாய்ந்த நல்லுயிர்களை ஆட்கொள்ளும் முறையினை மாணிக்கவாசக சுவாமிகள் “காமஞ் சான்ற ஞானப் பனுவ” லாகிய திருச்சிற்றம்பலக் கோவையார் என்னும் அகப்பொருள் நூலால் விளக்கியிருத்தல் கருத்தில் ஊன்றத் தக்கது. 7. புறம் “அகம்போல் ஒத்த அன்புடையார் தாமேயன்றி எல்லாராலும் துய்த்து உணரப்படுதலானும், இவ்வாறிருந்ததெனப் பிறர்க்குக் கூறப்படுத லானும் இது புறமாயிற்று. இதனை வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் ஆகிய ஏழு திணைகளாக வகுத்துக் கூறுவர். பிற்காலத்தவர் கரந்தை நொச்சி முதலிய பல திணைகளையுங் கூட்டி இதனையே பன்னி ரண்டு திணைகளாக விரித்திருக்கின்றனர். இவ்வேழனுள் காஞ்சி பாடாண் டிணையிரண்டினும் உலகின் நிலையின்மையையும், தலைவனைப் புகழ்தல் காரியத்தைப் பற்றியுங் கூறுவர். ஏனைய ஐந்திணைகளும் அக்காலப் போர்த்திறனை விளக்குவனவாம். பண்டைத் தமிழ்மக்கள் போர் செய்தற்கு ஏகுங்கால் செய்யும் சமர் சம்பந்தமான வெவ்வேறு பூக்களைச் சூடிப் பொருதல் வழக்கமாயிருந்தமையின், அவ்வப் பூக்களின் பெயரானே ஒழுக்கத்தையும் கூறினர் தொல்காப்பியர். “இருபெருவேந்தர் தம்முள் பொருவது கருதியக் கால் ஒருவர் மற்றவர் நாட்டிலுள்ள ஆநிரையைக் கவர்தல் குறித்துத் தமது தண்டத் தலைவர், முனைப்புலங்காப்போர் முதலியோரை ஏவுவர். அன்னோர் படைகளைக் கூட்டி நல்வாய்ப்புள் முதலிய நற்சகுன மொழிகளைக் கேட்டு, ஒற்றறிய வல்லாரை முன்னர் ஏவி, அவர் ஏவியவாறே துப்பறிந்து பின் சென்று நிரை நிற்கும் புலங்களுக்கருகே மறைந்தொழுகிப் பின் ஒய்யெனக் கிளம்பி நிரை காத்தோரைக் கொன்று வீழ்த்தி ஆநிரையை மெத்தெனவாய் உடன்கொண்டு தம் நாடு செல்லுவர். செல்லுங்கால் தம்மைத் தொடர்ந்து பொரவந்தாரைப் பின் அணியத்தார் தாமே நின்று பொருது வீழ்த்த முன் சென்றார் ஆநிரையை இன்புடன் நடத்திச் செல்வர். இங்ஙனம் எதிர்த்தவரையெல்லாம் மாய்த்தவழி, ஆநிரையைத் தம் ஊர்ப்புறத்தே கொண்டுவந்து நிறுத்தி, ஊரிலுள்ளோர்க்கும், இரவலர்க்கும் அவற்றைப் பகுத்துக் கொடுத்துத் தாம் கொண்ட வெற்றிக் கறிகுறியாக உண்டாட்டயர்ந்து களிப்பர். நிரை பறிகொடுத்தோரும் இங்ஙனமே பொருது நிரை மீட்டுப் போதலுமுண்டு. இவ்விரண்டும் வெட்சி யென்றார் தொல்காப்பியர். பிற்றை நாட் போந்தோர் நிரை மீட்டலைக் கரந்தை யெனப் பிறிதொரு பெயராற் கூறுவர். “இங்ஙனம் பசுத்திரளைக் கவர்ந்தபின் பெருவேந்தன் நாடு கொள்ளும் உள்ளத்தனாய் நிமித்திகன் நல்ல நாளென்று கூறிய நாளிலே தன் குடை, வாள் முதலியவற்றைப் புறப்படச் செய்து, எள்ளுருண்டை, தினைமா, பொரி, அவரை, துவரை, நிணம், குடர், உதிரம் முதலியன நிறைந்த தாழியைக் கொற்றவையின் பொருட்டு முன் எடுத்துச் செல்லப் பின்னர்த் தன் சேனையோடு புறப்பட்டு மாற்றான் தேசத்தின் மீது படையெடுப்பான். அப்போது வீரமுரசம் அதிரும்; யானைகள் வீறிடும்; சேனைகள் ஆரவாரஞ் செய்யும். அரசன் தன் சேனைகட்கு வேண்டிய ஆயுதங்களைக் கொடுப் பான். மேலும் தன் படை முழுவதுக்கும் ஒருவனைத் தலைவனாக்கித் தன் படைவீரர் யாவரும் அவன் சொற்படியே கேட்டு நடக்குமாறு பணிப்பான். போர் முடிவில், போரில் சிறந்து விளங்கிய வீரர்க்கு ஏனாதி, காவிதி முதலிய சிறப்புப் பட்டங்களைச் சூட்டலுமுண்டு. அரசன் தன் படைவீரரோடு அமர்ந்து உண்டு களித்தலும் வழக்கமாயிருந்தது. அன்னிய நாட்டு அரசன் திறைகொடுக்கச் சம்மதிப்பானாயின், அத்திறையை வாங்கிக்கொண்டு மீண்டுவிடுதலு முண்டு. அன்றேல், தாபதப் பள்ளிகள் அந்தணர் இல்லங்கள் கோவில்கள் நீங்கலாகப் பகைவர் நாட்டூர்களைச் சுட்டெரித் தழித்தலு முண்டு. தமக்குப் புறங்காட்டி ஓடுவோரைப் போர்வீரர் வெட்டாமல் விடுவர். போரில் புண்பட்ட வீரரை அரசனும் உடன்வீரரும் புகழ்ந்து கொண்டாடுவர். முடிவில் அரசன் தன் வீரருட் சிறந்தாருக்கு முத்தாரம் முதலியன கொடுப்பான். சிலருக்குப் பரம்பரை வாழ்க்கையாக மருதநில ஊர்கள் கொடுப்பதுமுண்டு. அக்காலத்தில் நன்றாய் அரண் செய்யப்பட்ட கோட்டைகளு மிருந்தன. பகையரசர் இக் கோட்டைகளை எதிர்த்துப் பொருதலுமுண்டு. கோட்டைகள், மலை, காடு, நீர் முதலியன இல்லாத உள்நாட்டில் கல், செங்கல் முதலியவற்றாலமைக்கப்பட்ட மதிலால் வைக்கப்பட்டிருந்தன. கோட்டைக்கு வெளியே வெகுதூரம் வரை காவற்காடு பரந்திருக்கும். இக் காவற்காடானது வஞ்சனை பல வாய்த்துத் தோட்டி முள் முதலியவற்றால் பதிக்கப்பட்டது. இக் காவற்காட்டை யகன்று சென்றால் மதிலையடுத்து அகன்று ஆழ்ந்த அகழ் உண்டு. இதில் கராங்களும் சுறாக்களும் மிகுந் திருக்கும். இதையடுத்து அமைக்கப்பட்டதே புறமதில். புறமதிலின் மேற் புறம் பல பொறிகள், பதணம், மெய்ப்புழை , ஞாயில் முதலியனவமைந்து எழுவும் சீப்புமுடைய வாயிற் கோபுரமுடைத்து. கோட்டை மதிலில் வேறு பல இயந்திரங்களும் உண்டு. இதற்கு உட்புறத் துள்ளதே உள்மதில். சில கோட்டைகள் மலை அரண், நில அரண் முதலியன சூழ்ந்திருந்தன. மேலிருந்து அம்பு எய்யும் பதுக்கிடங்கள் மதிலகத்தே அமைந்திருக்கும். இவ்வாறு காவல் செய்யப்பட்ட கோட்டையைப் பிடிப்பதற்கு எதிர் அரசன் சேனைகளோடு வருவான். சேனைகளுக்கு முன் அரசனின் கொடி செல்லும். போர் தொடங்கும் போது யானைப்படை முன்னும், தேர் குதிரைப் படைகள் அவற்றின் பின்னும், காலாட்படை கடையிலுமாகச் செல்லும். காலாட்கள் மாட்டுத் தோலாற் செய்யப்பட்ட கேடயத்தை இடக்கரத்திலும் ஈட்டி அல்லது கண்டகோடாலியை வலக்கரத்திலும் தாங்கியிருப்பர். வில்லாளர் இடக்கையில் வில்லையும் முதுகில் அம்பறாத் தூணியையும் வைத்திருப்பர். ஈட்டிப்போர் விற்போர் செய்வோர்கள் ஒருமார் நீளமுள்ளதும் அகன்றதும் அலகுள்ளதுமாகிய வாள் தாங்கி நிற்பர்; குதிரைமறவர் காலாட்களிலும் பார்க்க, இலேசான ஆயுதங் களையும் குறுகிய பரிசைகளையுங் கொண்டு செல்வர். யானைகள் எப்பொழுதும் படையின் பெரும் பகுதியாயிருந்தது. இவ்வகையான மாற்றரசனின் படை கோட்டையை யணுகா முன்னரே கோட்டை மேலிருக்கும் கோட்டைக் காவலர் அம்பு மாரி பொழிவர். அவ்வம்பு மாரியைக் கிடுகுப் படையாரும், கேடகப் படையாரும் தடுத்தும், தாங்கியும் எதிர்நோக்கிச் சென்று கோட்டையைக் கிட்டுவர். மதில் சூழ்ந்த கிடங்கின் இருகரையிலும் நின்று பெரும் போர் புரிவார். பெரும் பலகைகளை நீரில் மிதக்கவிட்டு அவற்றின் மீது ஏணிகளைச் சார்த்திக் கோட்டை மீதேறிப் பொருதலுமுண்டு. கோட்டைக் காவலர் கோட்டையின் புறம்போந்து போர் செய்தலுமுண்டு. புறமதிலைக் கைப்பற்றிய பகையரசன் உள்மதிலை யும் வளைத்து அவ்வாறே பொருது காவலாளரைக் கோட்டைக்குள் துரத்துவான். உள்மதிலும் பகையரசன் கைப்படவே, போர் ஊரின்கண் நிகழும். அப்பொழுது ஊரிலுள்ள கோயிற் புரிசைகளிலும், மதில்களிலும் வீடுகள் மீதும் ஏறி நின்று போர் செய்வார். எதிர்த்து வந்த அரசன் வெற்றி பெறுவனேல் தோற்றவேந்தன் பெயரால் தான் முடிசூடி மங்கல நீராடித் தன் வாளுக்கும் நீராட்டுச் சடங்கு செய்து, பரந்து நின்ற தன் படையாரை யெல்லாம் ஒருங்கு கூட்டி, அவரவர்க்குத் தக்கச் சிறப்புச் செய்தலுமுண்டு. பகைவன் கோட்டையை முழுவதும் அழித்துக் கழுதை ஏரிட்டுழுது, உண்ணாவரகும் வேலும் விதைத்துத் திரும்புவதும், திறைவாங்கித் திரும்புவதும், அன்றேல் தன் ஆணையை அவ்விடத்தும் நிலைநிறுத்து மாறு சில மாதங்தங்கி நாட்டைப் பண்படுத்திச் சீர் செய்துவிட்டுத் திரும்புவதும் வழக்கமாயிருந்தன. தமிழ் அரசர்கள் தோற்றவர்களிடம் இரக்கமில்லாதிருந்தனர். தோற்ற அரசனுக்குரிய செழிப்புள்ள வயல்களும் சோலைகளும் பாழ் நிலங்களாக்கப்பட்டன. அழகிய அரண்மனைகள ஆந்தையும் பேயும் வாழிடங்களாக மாற்றப்பட்டன. அவற்றின் பெரிய தூண்கள் மத யானைகள் கட்டும் தறிகளாயின. விசாலித்த மடைப்பள்ளிகள், ஆந்தை மேலே இருந்தலறத் திருடர் கொள்ளை கொண்ட பொருளைப் பங்கிடும் இடங்களாயின: நாட்டிலுள்ளார் நாலாபக்கங்களிலும் ஓடிப் பிழைத்தனர். அழகிய ஓவியந் தீட்டப்பட்ட சுவர்களையுடைய அரண்மனைகள் தரைமட்ட மாக்கப்பட்டன. மதிலகத்தன்றிச் சமவெளியொன்றில் இடங்குறித்து அங்கே இருபெரு வேந்தர் சேனையும் எதிரூன்றி நின்று போர் செய்யும் வழக்கமு மிருந்தது. தானை, யானை, குதிரை,தேர் முதலிய நால்வகைப் படையும் அணிவகுத்து நின்று சண்டை செய்யும். அரசனும் சேனையுடன் சென்று உடன் நின்றே போர் செய்வது வழக்கமாயிருந்தது. இப்போரில் சேனைத் தலைவர் காட்டும் வீரம் வியக்கத்தக்கது. தன் சேனை முரிந்தோடும் சமயமாயிருப்பின் சேனைத்தலைவன் தானே சேனைக்கு முன்னின்று எதிரி படை முழுவதையும் தானே தாங்கித் தடுத்து நின்று தன் படையாளரை உற்சாகப்படுத்திச் சண்டைக்குத் தூண்டுவான். தன் அரசனை மாற்றான் படைசூழக் காணின், யாண்டிருந்தும் படைத்தலைவர் ஓடோடியும் வந்து அவனை விடுவிப்பார். இருபுறமும் வாட்போரும் மற் போரும் வீரத்துடன் நடைபெறும். இவ்வாறாய சண்டையில் இருதிறத்தாரும் ஒக்க மடிதலு முண்டு. சண்டை செய்யும் இரு வேந்தரும் மடிவரேல் அவர் மனைவியர் தீப்புகுவதும் வழக்கமாயிருந்தது. மாற்றார்மீது போர் தொடங்கும்போது, ஆனனைய அந்தணர் குழந்தை பெண் முதலியோரைப் போர் நிலத்தினின்றும் விலகுமாறு அறிவுறுத்தி, அன்னார் அவணிருந்து விலகிய பின்னர் அம்புமாரி சொரிவது தமிழ் வீரர்களது வழக்காயிருந்தது. இதனை, “ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புல வாழ்நர்க் கருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும் எம்மம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மின்என அறத்தாறு நுவலும் பூட்கை” என வரூஉம் புறப்பாட்டா னறிக. “வெட்சி நிரைகவர்தன் மீட்டல் கரந்தையாம் வட்கார்மேற் செல்வது வஞ்சியா-முட்கா ரெதிரூன்றல் காஞ்சி யெயில்காத்த னொச்சி யதுவளைத்த லாகு முழிஞை-யதிரப் பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர் செருவென் றதுவாகை யாம்” - பிங்கலம் 8. வீரக்கல் போரில் எவரானும் மதிக்கப்படும் வீரனாய் விளங்கி உயிர்விட்ட வனை எக்காலமும் ஞாபகப்படுத்துமாறு அக்காலத்தவர் செய்திருந்த ஏற்பாடுகளும் உள்ளன. வீரர் அக்காலத்து அதிகமாய் மதிக்கப்பட்டு வந்தனர். வீரச் செயல்களில் விளங்கிய வீரரை எக்காலமும் ஞாபகப்படுத் தும் சாதனங்களை ஏற்படுத்துவதும் வழக்கமாயிருந்தது. இறந்த வீரனை நினைவுகூர்தற்காகக் கற்றூணை நிறுத்தி அதில் அவ்வீரனின் பெயரையும் அவன் செய்த வீரச் செயல்களையும் வெட்டி அக்கல்லுக்கு நீராட்டி, எண்ணெயைப் பூசி, அதில் அம்மறவனையே தெய்வமாக நாட்டிச் சிறப்புச் செய்து அவiன்த் தெய்வமாக வணங்கியதோடும் அமையாமல் அக் கல்லுக்குக் கோயிலமைத்து மதில், வாயில் முதலியன கட்டி ஆலயங் களாக்கி அவ்வீரனைப் போற்றியும் வந்தனர். “என்னைமுன் நில்லன்மின் றெவ்விர் பலரென்னை முன்னின்று கன்னின் றவர்” - குறள் இரண்டாயிர மாண்டுகட்கு முன்னரே தம் வீரரை ஞாபகப்படுத்து மாறு இங்ஙனம் கல்நட்டுப் பேர் பொறித்து வைத்த நம் முன்னோர் தன்மை எக்காலத்தும் வியக்கத் தக்கதாகவே யிருக்கின்றது. 9. இயற்றமிழ் “தமிழ் இயல், இசை, நாடகம் என்னும் முத்திறத்தினதாய்த் தொன்று தொட்டு வழங்குகின்றது.” இயற்றமிழென்பது தமிழர் யாவர்மாட்டும் பொதுமையின் உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்னும் இருவகை வழக் கினும் இயங்குகின்ற வசனமுஞ் செய்யுளுமாகிய நூல்களின் தொகுதியாம். இதனுள் இலக்கணங்களும் இலக்கியங்களும் அடங்கும். சங்கச் செய்யுள் களும், உரைகளும், புராணம் முதலிய ஏனைய நூல்களும் இயற்றமிழே யாம். இயற்றமிழ் ஏனை இசைத்தமிழ் நாடகத்தமிழ் ஆகிய இரண்டற்கும் முன்னர்த் தோன்றினமைபற்றி முதற்கண் வைக்கப்பட்டதாகும். ஏனைய இரண்டும் இயற்றமிழின்றி இயங்கும் வண்மையுடையனவல்ல. “இயற்றமிழினுள்ளே எழுத்துச் சொல் பொருள் யாப்பு அணிகளும், இசைத்தமிழினுள்ளே ஏழு சுரங்களும் அவற்றிற் பிறக்கும் பண்களின் வகையும் பிறவும், நாடகத் தமிழினுள்ளே கூத்து விகற்பமும் அபிநய விகற்பமும் கூத்தியரிலக்கணமும் அரங்கிலக்கணமும் பிறவும் விளக்கப் பட்டனவாம்.” -பாலாமிருதம்-சிவப்பிரகாச பண்டிதர். “வழக்கியலும் வழக்கியலாற் செய்யப்பட்ட செய்யுளியலும் பற்றி யெழுந்த இலக்கணம் இயற்றமிழெனப்படும். அச்செய்யுளின் இன்றி யமையாத இசை இசையிலக்கணமெனப் பெயரெய்தி அவ்வியற்றமிழ்ப் பின்னர் வைக்கப்பட்டதெனப்படும்; இவ்விரண்டன்வழி நிகழ்த்துங் கூத்திலக்கணமாகிய நாடகத் தமிழ் அவற்றுட் பின்னர்த்தாமென முறைமை கூறுதலும்.” -பேராசிரியர் உரை. 10. இசைத்தமிழ் “இயற்றமிழ் பண்ணோடு கலந்து தாளத்தோடு நடைபெறின் இசைத்தமிழாம்.” ஒருகால் தமிழகத்து இசைக்கல்வி மிக உயர்நிலை அடைந்திருந்ததென்பதைப் பழைய நூல்கள் உணர்த்துகின்றன. அகத்தியர் இராவணனைக் கந்தருவத்தாற் பிணித்த வரலாறும் இதற்குச் சான்றாகும். இராவணனின் இசைக்கு உவந்து இறைவன் நீண்ட ஆயுளும் வாளும் அளித்தான். “இனி இசைத்தமிழ் நூலாகிய பெருநாரை பெருங்குருவும் பிறவும் தேவவிருடி1 நாரதன் செய்த பஞ்சபாரதீயம் முதலாயுள்ள தொன்னூல்கள் இருந்தன. நாடகத் தமிழ் நூல்களாகிய பரதம், அகத்தியம் முதலாயுள்ள தொன்னூல்களுமிறந்தன. பின்னர் முறுவல், சயந்தம், குணநூல், செயிற் றியம் என்பவற்றுள்ளும் ஒருசார் சூத்திரங்கள் நடக்கின்ற அத்துணை யல்லது முதல் நடு இறுதி காணாமையின் அவையும் இறந்தனபோலும். இறக்கவரும் பெருங்கல முதலிய பிறவுமாம். இவற்றுட் பெருங்கலமாவது பேரியாழ்; அது கோட்டினதளவு பன்னிரு சாணும், வணரளவு சாணும், பத்தரளவு பன்னிருசாணும், இப்பெற்றிக்கேற்ற ஆணிகளும், திவவும், உந்தியும் பெற்று, ஆயிரங்கோல் தொடுத்தியல்வது; என்னை. . . . . . . “தல முதலூழியிற் றானவர் தருக்கப், புலமகளாளர் புரிநாரப் பாயிரம், வலிபெறத் தொடுத்த வாக்கமை பேரியாழ்ச், செலவு முறையெல்லாஞ் செய்கையிற் றெரிந்து, மற்றை யாழுங் கற்று முறை பிழையான்” எனக் கதையினுள்ளுங் கூறினாராகலாற் பேரியாழ் முதலியனவும் இறந்தனவெனக் கொள்க. “இனித் தேவ விருடியாகிய குறுமுனிபாற் கேட்ட மாணாக்கர் பன்னிருவருட் சிகண்டியென்னும் அருந்தவமுனி, இடைச் சங்கத்து அநாகுலனென்னும் தெய்வ பாண்டியன், தேரோடு விசும்பு செல்வோன் திலோத்தமை என்னும் தெய்வ மகளைக் கண்டு தேரிற் கூடினவிடத்துச் சனித்தானைத் தேவரும் முனிவரும் சரியா நிற்கத் தோன்றினமையிற் சார குமரனென, அப்பெயர் பெற்ற குமாரன் இசையறிதற்குச் செய்த இசை நுணுக்கமும், பாரசமுனி வரில் யாமளேந்திரர் செய்த இந்திர காளியமும், அறிவனார் செய்த பஞ்ச மரபும், ஆதிவாயிலார் செய்த பரத சேனாபதீயமும், கடைச்சங்க பாண்டி யருட் கவியரங்கேறிய பாண்டியன் மதிவாணனார் செய்த முதனூல்களி லுள்ள வசைக்கூத்திற்கு மறுதலையாகிய புறக் கூத்தியன்ற மதிவாணனார் நாடகத் தமிழுமென இவ்வைந்தும் இந்நாடகக் காப்பியக் கருத்தறிந்த நூல்களன்றேனும் ஒருபுடை யொப்புமை கொண்டு முடித்தலைக் கருதிற்று இவ்வுரையெனக் கொள்க” என்னும் அடியார்க்கு நல்லார் உரையால் முற்காலத்து விளங்கிய இசை நாடக நூல்கள் சிலவற்றை அறிகின்றோம். தமிழுக்குரிய ஏழிசைகளின் பெயர் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன. இவ்விசைகளின் ஓசைக் குவமை. வண்டு, கிளி, குதிரை, யானை, குயில், தேனு, ஆடு. இவற்றின் எழுத்தாவன: ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள. இசைகளின் சுவைக்குவமை தேன், தயிர், நெய், ஏலம், வாழைக் கனி, மாதுளங்கனி. “பாலை குறிஞ்சி மருதம் செவ்வழி என்னும் பண்களையாவது, அந்தாளி, மருள், குச்சரி, குறண்டி, சாதாரி முதலிய திறன்களையாவது இன்னதென்று பாடுவோர் இக்காலத்து எத்துணையர் உளர்? பண் என்பது பண் பண்ணியமென இரண்டாகவும், திறன் என்பது திறன், திறத்திறன் என இரண்டாகவும் பகுக்கப்பட்டிருந்தன. அவையெல்லாம் இப்பொழுது ராகம் என்னும் பெயரைப் பெற்றுள்ளன. செம்பாலைப் பண்ணென்று முன்னோர் கூறியது இக்காலத்துச் சங்கராபரணப் பெயரோடு வழங்கு கின்றது. சாதாரி என்று அக்காலத்திற் சொல்லப்பட்டது நீலாம்பரி என்று வழங்குகின்றது. இவ்வாறு பழைய பண்ணுந் திறனுந் தம் பெயரையிழந்து ஏழிசையின் பெயர்களாகிய குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்றிருந்தன மாறிச் சட்சம் முதல் நிடாதம் வரையிலுள்ள சமக் கிருதப் பெயர்களைப் பெற்று ச,ரி,க,ம,ப,த,நி என்று வழங்குகின்றன.” -தமிழ் வரலாறு “குறவஞ்சி பள்ளு சிந்து முதலிய பிற்காலப் பிரபந்தங்களும் இசையைச் சேர்ந்தனவே. இசைத்தமிழ் நூல்கள் இவ்வளவு இருந்தன வென்பதனால் அக்காலத்தில் இருந்த இசையமைப்பின் விரி வுணரப்படும். சிலப்பதிகாரம் முதலியவற்றால் இசையைப்பற்றித் தெரிந்தவைகளிற் சில கூறுவேன். 1. இசைவகை இசையில் பண்களென்றும் திறங்களென்றும் இருவகை உண்டு. பண்கள் 7 நரம்புகளுங் கொண்டன. நரம்பு என்பது இங்கே ஸ்வரம். ஏழு ஸ்வரமும் கொண்டமை சம்பூரண ராகம். அதுவே பண்ணாம், வடமொழி யில் மேளகர்த்தா வென்று கூறப்படுவதும் அஃதே. ஏழு ஸ்வரங்கள் வடமொழியில் ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்று கூறப்படும். அவற்றையே, தமிழில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என வழங்குவர். யாவருக்கும் இயல்பான குரல் ஷட்ஜம் ஆகும். அதனைக் குரலென்றே வழங்கிய பெயரமைதி வியக்கற்பாலது. ஏழு ஸ்வரங்களுக்கும் ச,ரி,க,ம,ப,த,நி என்று இப்பொழுது பயிலப்படும் எழுத்துக்களைப் போலவே தமிழ் முறையில் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்ற ஏழு நெடிலையும் ஸ்வரங்களுக்கு எழுத்துக் களாகக் கொண்டு பயின்றனர். இந்த ஏழு நரம்புகளும் நிறைந்த ராகம் பண்ணென்று முன்னரே சொன்னேன். ஜனகராகமென்பதும் அதுவே. அப்பண்களிலிருந்து திறங்கள் பிறக்கும். அவை இப்போது ஜன்யராகங்க ளென்று வழங்கப் படும். ‘நிரைநரம் பிற்றே திறமெனப் படுமே’ என்ற திவாகரச் சூத்திரத்தால் பண்கள், திறங்கள் முதலியவற்றின் இலக்கணம் விளங்கும். பண்களுக்கு இனமாகத் திறங்கள் கூறப்படும். யாப்பிலக்கணத்திற் “பண்ணுந் திறமும் போற் பாவு மினமுமாய், வண்ண விகற்ப வகையமையால்-பண்ணின், திறம் விளரிக் கில்லதுபோற் செப்பலகவ, லிசைமருட்கு மில்லையினம்” என்று காணப்படும் இலக்கணத்தில் இது விளக்கப்பட்டிருத்தல் காண்க. இப்படிப் பிறக்கும் பண்ணுந் திறமுமாம் இசை வகைகள் ஒருவழி யிற் றொகுக்கப்பட்டு 11,991 என்று கூறப்படுகின்றன. பண்கள் பலவகைப் படும். குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் எனப் பெரும்பண்கள் ஐந்து. இவைகளின் வகையாகும் பண்கள் பல.இவைகளுள் பகற்பண்கள் முதலியவையும், அவ்வப்பொழுதிற் கமைந்த பண்களும் யாமங்களுக் குரியனவும், சுவைகட் குரியனவும் வணங்குதற் குரியனவு மெனப் பலவகை உண்டு. புறநீர்மை முதலிய பன்னிரண்டு பண்கள் பகற்பண்களெனப்படும். தக்கராக முதலிய ஒன்பது பண்களும் இராப்பண்களென்பர். செவ்வழி முதல் மூன்றும் பொதுப் பண்களாம். காலைக்குரிய பண் மருதம். மாலைக் குரியது செவ்வழி என்பாருமுளர். இந்தப் பண்களால் இசைவல்லோர்கள் சில குறிப்பினை அறிவிப்பதுண்டு. ஒருவர் தம் நண்பனை மாலையில் வரவேண்டி மாலைப் பண்ணைப் பாடினாரென்று ஓரிடத்தில் தெரிவிக்கப் பட்டிருக்கின்றது. “இரங்கற்பண் விளரி. அதைப் பாடிப் பிறர்பால் இரக்கம் உண்டாக்கினார்கள். பரமசிவனால் கைலையின் கீழ் அமிழ்த்தப்பட்ட இராவணன் அவருக்கு இரக்கமுண்டாக விளரியைப் பாடினான் என்ற பொருள்பட “விராய் மலர்ப் பூங்குழலிபாகன் மகிழ்வினோங்கும் வெள்ளிமலைக் கீழ்க் கிடந்து விளரி பாடும், இராவணனார்” என்று ஒரு கவி பாடியுள்ளார். இச் செய்யுட் பகுதி விளரி இரங்கற்பண் என்பதை நன்கு தெரிவிப்பது காண்க. பாடுங்கால் இவ்விலக்கணங்களோடு பாடவேண்டும் என்ற விஷயங்களை மிக விரிவாக இசை நூல்கள் கூறும். குற்றம் சில வகைப்படும். இக் குற்றங்கள் பாடுவோர் பால் இருத்தல் கூடாவென விலக்கியும் நூல்கள் கூறும். -டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் - மகா மகோபாத்தியாயர் ஆரியப்பிராமணருடைய ஆதிக்கத்தால் தமிழர்க்குரிய பண்கள் நாளேற நாளேறப் பயில்வாரற்று மங்கிப் போகவே வடதிசை யிராகங்கள் வளர்ந்தோங்கி எங்கும் வழங்கத் தலைப்பட்டன. பழைய பண்கள் ஓய்ந்த காலம் இன்னதென்று குறிப்பிடல் அசாத்தியமாயினும், மாணிக்கவாசகர் காலத்தே அவை மங்கியிருக்கத் துவங்கியிருக்கலாமென்றும், திரு விசைப்பா காலமாகிய கிறித்தாப்தம் 10 அல்லது 11 ஆம் நூற்றாண்டில் தேவதா ஸ்தோத்திரங்களுக்கு மாத்திரம் அர்ஹமாக ஒதுங்கியிருக்க வேண்டுமென்றும் எண்ணுதல் பழுதாகாது. அஃது எப்படி ஆயினுமாகுக. இப்போது நம் நாட்டில் பரவும் பூபாளம், மாளவி, பங்காளம், காம்போதி, கல்யாணி, காந்தாரி முதலிய இராகங்கள் தங்கள் பெயராலேயே தங்கள் பிறப்பிடம் உணர்த்துகின்றன. இக் காலத்து வழங்கும் மற்ற இராகங்களும் அப்படியே புறநாட்டு வரமென்று நிரூபித்தல் அரிதன்று. இங்ஙனம் இசைகள் மாறவே, புதிய வடதேசத்து இராகங்களில் அமைந்த சிற்சில பதம் கீர்த்தனை இவற்றுட் கலக்கக் கலக்கப் பழைய ஆட்டம் பாட்டு வடிவாய்த் தமிழ் நாடக நூல்களும் நடப்பவாயின. - நாடகத் தமிழ் ஆராய்ச்சி -இலக்குமி 1இந்தப் பண்களும் கூத்துகளும் எவ்வகையினவென்று ஒருவராலும் இப்பொழுது கூறமுடியாது. அவைகளின் இடத்தை இந்து ஆரிய இராகங்களும் நாட்டியங்களும் எடுத்துக்கொண்டன. -தமிழ் ஆராய்ச்சி 2. இசைக்கருவிகள் இசைக்கருவிகள் ஐந்து. அவை தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, கஞ்சக்கருவி, மிடற்றுக்கருவி என்பன. தோற்கருவிகளாவன பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, சந்திரவளையம், மொந்தை, முரசு, கண்விடு தூம்பு, நிசாளம், துடுமை, சிறுபறை, அடக்கம், தகுணிச்சம், விரலேறு, பாகம், உபாங்கம், நாழிகைப்பறை, துடி பெரும்பறை என்பன. மத்தளம்-மத்து ஓசைப் பெயர்; இசையினாலாகிய கருவிகட் கெல்லாம் தளமாதலால் மத்தளம் என்னும் பெயராயிற்று. சல்லிகை யென்பது சல்லென்ற ஓசையுடைத்தாதலாற் பெற்ற பெயர். ஆவஞ்சி யெனினும், குடக்கை யெனினும், இடக்கை யெனினும் ஒக்கும்; அதற்கு ஆவினுடைய வஞ்சித்தோலைப் போர்த்தலால் வஞ்சியென்று பெய ராயிற்று; குடுக்கையாக வளைத்தலாற் குடுக்கை யென்று பெயராயிற்று; வினைக்கிரியைகள் இடக்கையாற் செய்தலின் இடக்கை யென்று பெயராயிற்று; கரடி கத்தினாற்போலும் ஓசையுடைத்தாதலாற் கரடிகை யென்று பெயராயிற்று. -அடியார்க்கு நல்லார். “தக்கை தண்ணுமை தாளம் வீணை தகுணிச் சங்கிணை சல்லரி கொக்கரை குடமுழ வினோ டிசை கூடிப்பாடிநின் றாடுவீர்.” சுந்தரர்-தே. துளைக்கருவி-குழல். நரம்புக்கருவிகள்-ஆதியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் முதலிய நால்வகை யாழ்களுமாம். இவற்றுள் ஆதியாழுக்கு ஆயிரம் நரம்பும், மகரயாழுக்குப் பத்தொன்பதும், சகோடயாழுக்குப் பதினான்கும், செங்கோட்டி யாழுக்கு ஏழுமாம். வீணை வடதிசையாரியர் தென்னாட்டுக்குக் கொண்டு வந்ததோர் இசைக்கருவி. யாழ்வகையில் ஒன்றேனும் இக்காலத்திற் காணப்படவில்லை. யாழுக்கு வேண்டிய மாட்டு நரம்புகளை நந்தனார் வமிசத்தார் கொடுப்பார் என்று பெரிய புராணத்திற் சொல்லப்படுகின்றது. யாழ் கைவிரல்களினால் தடவி ஒலிக்கப்பெறும். 11. நாடகத்தமிழ் “நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்-பாடல்சான்ற புலனெறி வழக்கம்” என்னும் தொல்காப்பியச் சூத்திரம் அக்காலம் நாடக நூல்கள் மிக்கு வழங்கினவென்பதை விளக்குகின்றது. சிலப்பதிகாரம் அரங்கேற்று காதையானும் அதற்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையானும் பழைய இசை நாடகங்களைக் குறித்த பல அரிய செய்திகள் அறியக்கிடக்கின்றன. நாடகத் தமிழ் அழிநிலை எய்திய இக்காலத்துப் பண்டைய நாடகச் சிறப்பினை முற்ற உணர்த்தும் நூல்கள் கிடைத்தில. “நாடக வழக்காவது, சுவைபட வருவனவெல்லாம் ஓரிடத்து வந்தனவாகத் தொகுத்துக் கூறுதல்; அஃதாவது செல்வத்தானும், குலத் தானும், ஒழுக்கத்தானும், அன்பினானும் ஒத்த இருவராய்த் தமரின் நீங்கித் தனியிடத்து எதிர்ப்பட்டார் எனவும், அவ்வழிக் கொடுப்போரும் அடுப்போருமின்றி வேட்கை மிகுதியாற் புணர்ந்தாரெனவும், பின்னும் அவர்கள் களவொழுக்கம் நடத்தி இலக்கண வகையான் வரைந்தெய்தினார் எனவும் பிறவும் இந் நிகரனவாகிச் சுவைப்பட வருவனவெல்லாம் ஒருங்கு வந்தனவாகக் கூறுதல்.” -இளம்பூரணவடிகள் “தமிழ் நாடகம் முதலிலுண்டானது மத விடயமாகவேயென்பது துணியப்படும். அது கடவுளர் திருவிழாக் காலங்களில் ஆடல் பாடல்க ளிரண்டையுஞ் சேர நிகழ்த்துவதினின்றும் உண்டாயிற்று. சில காலத்தின் பின்னர்க் கதை நடையான மனப்பாடங்களும் உடன் கூடின; அதன்மேல் முதலிற் பாடலாயுள்ள சம்பாஷணைகளும் அவற்றுடன் சேர்க்கப்பட்டன. பிற்பாடு நாடகத் தமிழ் வேத்தியல் பொதுவியல் என்ற பிரிவினதாகி அரசர்களானும் ஏனையோரானும் ஆதரித்து வளர்க்கப்பட்டது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டினாதல் அல்லாக்கால் அதனினுஞ் சற்று முற்காலத்தி னாதல் நாடகத் தமிழ் உயர்நிலை பெற்றிருத்தல் வேண்டும். நாமுணர்ந்துள பழமையான நாடகத் தமிழ்நூல்கள் அனைத்தும் அக்காலத்தே நின்று நிலவினவாதலி னென்க. ஆகவே அது குற்றங் குறைவு இல்லாது உண்டான தொழிலென்றே ஆதியில் மதிக்கப்பட்டது. இனி நாடகத் தமிழ்,உயர்நிலை வீழ்நிலை அழிநிலை என்ற மூன்று வகை நிலையும் அடைந்து உருக்குலைந்து போன பின்னரே யாம் அதனைக் கண்ணுறுகின்றனம்.” -நாடகவியல் “நாடகமெனப் பொதுப்பெயர் கூறத் தகுந்த பொழுது போக்கி லிருந்துதான் பல்வேறு ரூபமான எல்லா ‘நற்கலை’ (Fine arts)களும் பிறப் பனவாயினும், பாட்டும் பண்ணும் ஆட்டமுமாகிய மூன்றும் அதனினின் றும் நேரே உற்பவிக்கின்றன. கால விளம்பனத்தாலும் நாகரிகத் தேர்ச்சி யாலும் பாவனையில் நடத்திக் காட்டும் தொழில்களை நன்கு விளக்கத்தக்க வசனங்களைக் காதுக்கினிமை பெறக் கோத்து மொழிதலும், கண்ணுக் கினிமை பெறக் கரசரணாதி அவயவங்களாலும் முகக்குறிகளாலும் அபி நயித்துக் காட்டலும், வழக்கத்தில் வரவே, பாட்டும் அதனுடன் புணர்ந்த பண்ணும் அவையிரண்டுடன் கலந்த ஆட்டமும் தனித்தனி பிறப்பன வாயின. பாட்டின் சீர், இசை, தளை , அடி முதலியவற்றையும் அப்பாடல் விளங்கும் நவரசங்களையும் மாத்திரம் கவனித்து அபிவிருத்தி பண்ணி னால் அது வித்துவத்சன பூசிதமான காவியம் என்னும் சிறப்புப் பெயர் பெற்று நிற்கும். அப்படியே பண்ணை மாத்திரம் விசேடமாகக் கவனித்துச் சொற்கோத்தல் சங்கீதமெனத் தனித்து வளரும். ஆட்டமும் அவ்வாறே சில சாதியாருள்ளும் தனிப்படத் தழைத்ததேனும் முன்னவையிரண்டுங் கலந்து வழங்கலே பெரும்பான்மை. அங்ஙனங் கலந்து வழங்கும்போது நாடக மென ஒரு சிறப்புப் பெயர் கூறுதல் வழக்கம். “நமது தமிழ்நாட்டிலும் இம்முறையே இம்மூன்று நற்கலைகளும் தொன்றுதொட்டு ஏற்பட்டு வந்தமை பற்றியே தமிழை, இயல்,இசை , நாடகம் என்று மூன்று வகையாக முன்னோர் வகுத்தனர். இம்மூன்றும் நாளேற நாளேற வேறு வேறு உருக்கொண்டு மாறுபாடு அடைந்துள்ளன வென்பது யாவருக்குந் தெரிந்த செய்தி. காவியம் அடைந்திருக்கும் ஒரு சிறு விகற்பம் பத்துப்பாட்டையாவது கலித்தொகையையாவது இப்பொழுது வழங்கும் கம்பர் இராமாயணத்தோடோ பிரபுலிங்க லீலையோடோ ஒப்பிடுங்கால் விளங்காதிராது. அவ்வாறே இப்போது போக்கியமாக வழங்கும் தேவாரப் பண்ணோடு தோடி பைரவி என்னும் இராகங்களில் ஆக்கப்பட்டுள்ள முத்துத் தாண்டவர் கீர்த்தனங்களை ஒப்பிடுங்கால், இசைத்தமிழ் அடைந்திருக்கும் வேற்றுமை தெரியலாகும். முன்னோர் கேட்டு மகிழ்ந்த இசைகளும், அவற்றைத் துத்தி வாத்தியங்களிற் காட்டிய இசைக்கருவிகளும் பெரும்பாலும் மாய்ந்துபோயின வென்றே சொல்ல லாம்.‘இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்’ என்ற திருவாசகத் தாலேயே இக்காலத்தில் வழங்கும் வீணையன்று, சிலப்பதிகாரம் முதலிய பழைய நூல்களில் நமது மனத்துக்கு எளிதில் வாராவண்ணம் வருணிக்கப் பட்டிருக்கும் யாழென்பது வெளிப்படையாகும். யாழ், திராவிடர்க்குரிய தும், வீணை, வடதிசை ஆரியர் தென்திசைக்குக் கொண்டுவந்த புதியதோர் இசைக்கருவியுமாம். இங்ஙனம் தமிழ் இசைகளும் மாண்டுபோன வண்ணமே தமிழ் நாடகங்களும் பலவாறு வேற்றுமைப்பட்டு அனாதி வடிவம் இன்னதென்று ஊகித்தல் அருமையாம்படி இறந்துபோயினதாகக் காணப்படுகின்றது. “இப்போது தமிழில் வழங்கிவரும் நாடகங்கள் யாவும் அரு ணாசலக் கவிராயர் இயற்றிய இராம நாடகத்தைப் பின்றொடர்ந்தனவா யிருப்பதினாலும் கீர்த்தனைச் சாயை பழைய நூல்களில் காணாமையாலும் பூர்வீக நாடகமென்று நிச்சயிக்கத்தக்கது யாதொன்றும் இதுவரை வெளிப்படாமையாலும், தமிழ்மொழிக்கே யுரித்தான யாதேனும் நாடகம் இருந்தது தானும் உண்டோ என்று சிலர் ஐயுறல் இயல்பேயாம். ஆனால், அதைப்போலவே சந்தேகிப்பதற்கு முதற் காரணம் நாடகமென்பது வடமொழியிலும் ஆங்கிலத்திலும் நாம் கண்டு பழகும் நாடகத்துக்கே பெயராயிருத்தல் வேண்டுமென்னும் மயக்கமெனத் தோன்றுகின்றது...1 நாடகமென்னும் வடமொழிக்குச் சரியான தென்மொழி கூத்து என்பதே. திவாகரத்தின்படி கூத்தின் மறுபெயர்கள் “நடமே நாடகங் கண்ணு ணட்டம் படிக மாட றாண்டவம் பரத-மாலுத றூங்கள் வாணி குரவை யியல் நிவய நிருத்தம்” முதலியனவாம். ஆதலால் தமிழர் கூத்து நாடக மென்று சிறப்பித்துக் கொண்டவையனைத்தும் ஆடலோடமைந்தவை யாக இருந்திருக்க வேண்டுமென்று கொள்ளுதல் தவறாகாது. மேளதாளங் களுக்கிசையுமாறு யாதேனுமொரு பாவினத்தில கதையை யமைத்து அந்தக் கதையைப் பாடலோடோதி அபிநயித்தலே ஆதிகாலத் தமிழ் நாடக ரீதியென்று பல காரணங்களாலுமெண்ணுதற் கிடமுண்டு. அவ்வித ஆடல் விகற்பங்கள் எண்ணிறந்தன என்பதற்குப் பழைய காவியங்களுட் காணும் மாயோனாடல், சிவனாடல், குமரனாடல், இந்திராணியாடல், துர்க்கை யாடல், சத்தமாதராடல், காமனாடல், வேலனாடல், வெறியாடல், பிசாசுக் கைக்கூத்து, குரவைக்கூத்து என்பன ஆதியான மொழிகளே சான்றாக நிற்கும், ‘மலடி மைந்தனுக்கு மாலைசூட்டல் போல’ இல்லாத நாடகத் துக்கு இத்தனை பெயர் வகித்தல் இயல்பன்று. மேலும் மேற்கூறிய கூத்து வகைகள் பற்பல காரணச் சேர்க்கையால் தமிழ்நாட்டில் மாய்ந்துபோயிருப் பினும் அழிந்தவைகட்கெல்லாம் அபயப் பிரதானங் கொடுத்து ஆதரிக்கும் எல்லைபோல் விளங்குகின்ற மலையாளத்துள் பல கிராமாந்தரங்களில் இன்னும் வழங்குகிற ஐவர்களி, பரிசைகளி, ஓட்டத் துள்ளல் முதலான பலவேறு ஆடற் கதைகளைக் காண்பவர்க்குத் தமிழ்நாடு முழுவதும் பூர்வத்தில் வழங்கி வந்த நாடக விகற்பங்கள் இத்தன்மையனவென்று ஊகித்தல் ஒருவாறு கூடியதாகவேயிருக்கின்றது. ஆட்டக்கதையென்பது மலையாளத்தில் நாடகங்களின் பெயராகவுமிருக்கின்றது. குறத்திப்பாட்டு, உழத்திப்பாட்டு முதலிய பழைய பிரபந்த ரீதியாய்ப் பாடியாடும் பாவிகற்பங்கள் இன்னும் பல தமிழ்நாட்டிலும் வில்லடிப் பாட்டு. உடுக்குப் பாட்டு முதலியன ஆட்டத்தோடு கதை விரித்தலுக்கே உரித்தானவை; நொண்டிச் சிந்து முதலிய பல விகற்பங்களும் பற்பல தாழிசைகளும் ஆடலுக்கு மிக ஏற்றன. ஆதலால் பழைய நாடகங்கள் வில்லுப்பாட்டு துள்ளற்பாட்டு முதலியவைபோல ஒருவர் தனியாயேனும், கும்மிப்பாட்டு பரிசைகளி முதலியனபோலப் பலர்கூடியேனும் ஒரு கதையைத் தாள மேளங்களுடன் பாடி அபிநயித்துக் கூறும் ஒருவகைப் பாட்டாக இருந் திருக்க வேண்டுமென்று நிருணயிக்கவேண்டும். “அப்படியானால் தமிழ்நாடகங்கள் யாதொன்றும் இப்போது காணக் கிடையாமைக்கு விசேட காரணந் தேடவேண்டியதற் கவசிய மில்லை. “படித்தறிந்து வியத்தலையே பயனாகக்கொண்ட பழைய இயற் றமிழ்க் காவியங்களுக்குள் இக்காலம் நமக்கெட்டினவை எத்தனை, இருந்த விடமே தெரியாது இறந்து போனவை எத்தனை எனக் கணக்கிடுவோ மாகில் இப்போது சீவிக்கிற மனிதர்களையும் இறந்தோரையும் ‘எண்ணிக் கொண்டற்று’ எனவன்றோ மதிக்கத்தக்கதாகவிருக்கின்றது. படித்த மாத்திரத்தில் ஒன்பான் சுவை தரத்தக்க இயற்றமிழினது கதி இங்ஙன மாயின், ஆடிக் கண்டாலொழிய இன்பம் பயவாத நாடகப்பாட்டுக்கள் கால விளம்பனத்தில் அழிந்துபோனது ஒரு வியப்பா? மதாபிமானத்தால் ஆழ்வார் அருளிச் செய்த திருவாய் மொழியும் மூவர் தேவாரங்களும் ஒரு வாறு அவற்றின் பண்ணும் பிற்காலத்தார் அறியும்படி நிலைநில்லா விடில் பழைய இசைத் தமிழும் இவ்வாறே உண்டாயிருந்ததோ இல்லையோ என்னும் சந்தேகத்துக்கன்றோ இடந்தருவதாக நிற்கும்? சுத்தவித்தியா விஷயமான அபிமானம் நீங்கிக் கேவலம் சமயச் சச்சரவுகளால் மூடப் பட்ட இடைக்காலத்தில், இயற்றமிழ்க் காவியத் தலைமைபெற்ற சிந்தா மணி சிலப்பதிகாரம் முதலிய நூல்களே தப்பினது தாலிப்பாக்கியமாய் இருக்குமானால், கான விஷயங்களாகிய இசைத்தமிழ நூல்களும், ஆட்டப்பாட்டான நாடக நூல்களும் மண்ணுற மாண்டு போனமை சற்றுமே ஒரு ஆச்சரியமா? இசைத் தமிழும் நாடகத் தமிழும் தம்முள் நெருங்கிய தொடர்புடையனவாக எக்காலமுமிருக்க வேண்டுமென்பது எளிதிற்றுணியத் தக்கதே. “துவக்கத்தில் புதியன சிறுபான்மையும் பழைய சிந்து தாழிசை முதலியன மிகுதியாகவுமிருந்திருக்கவேண்டும். காலஞ் செல்லச் செல்லப் பழையன குறைந்தும் புதிய கீர்த்தனங்கள் மிகுந்தும் வந்தன. அருணாசலக் கவிராயர் இராம நாடகத்திலும் குற்றாலக் குறவஞ்சி முதலிய பழைமை பற்றிய நாடகவியல்களிலும், இவை இரண்டு வகைப்பட்ட ஆட்டப் பாட்டுகள் கலந்து கிடப்பன காணலாகும். அருமை பெருமைகளிற் சிறந்த அருணாசலக் கவிராயர் தமது ஒப்பற்ற நாடகம் அமைத்த பின்னர் அதனையே வாய்ப்பாடமாகக் கொண்டுபிற்காலத்தவர் பற்பல நாடகஞ் செய்தனர்; அவற்றுள்ளும் பழைய சிந்து முதலியவை இராவணப் போரில் விபீஷணன் போல, இன்னும் இறவாமல் ஆங்காங்குத் தலைகாட்டி நிற்றல் புலப்படக்கூடும். இவ்வாறு பழைய நாடகப் பாட்டினியல்பு முற்றும் மாறுதலடைந்து போயினும், ஒரு நிலையில் பழைய தமிழ் நாடகவியல்பு சற்றும் மாறுபடாது நின்று கொண்டது. இக்காலத்து நாடகங்கள் எந்த எந்த வடிவமாக இருந்தபோதிலும், அவற்றுள் ஒன்றேனும் ஆட்டமின்றி நடந்தேறுதல் கூடியதன்று. இவ்வாட்டமே முற்கூறியபடி தமிழ்க்கூத்திற் கும் ஏனைய நாடகங்களுக்கும் உள்ள தலைமையான வேற்றுமை. பண், பா, அரங்கு முதலிய யாவும் வேற்றுமைப்படும். தமிழ்க் கூத்துக்குரிய ஆடல் ஒன்றும் இது வரைக்கும் பேதப்படவில்லை.” -நாடகத் தமிழ் ஆராய்ச்சி. “இவ்வாறு தோன்றி வளர்ந்த நாடகத்தமிழ் வீழ்நிலையடையப் புகுந்தது. அதற்குக் காரணம் யாது? ஒழுக்கநிலை வகுக்கப் புகுந்த ஆரியரும் சைனரும் நாடகக் காட்சியாற் காமமே அறிவினும் மிகப் பெருகுகின்ற தென்னும் போலிக் கொள்கையுடையராய்த் தம் நூல்களிற் கடியப்படுப வற்றுள் நாடகத்தையுஞ் சேர்த்துக் கூறினர்.1 அக்காலத்திருந்த அரசர்க்குத் துர்ப்போதனை செய்து நாடகத் தமிழைத் தலையெழவொட்டாது அடக்கி வந்தனர். ஒளவையாரும் திருவள்ளுவரும் ஒருங்கே புகழ்ந்த இல்லற வாழ்க்கையைத் தீவினையச்சத்தின்பாற்படுத்திக் கூறுஞ் சைனர்கள் நாடகத் தமிழ்நூலைக் கடிந்தது ஓர் ஆச்சரியமன்று. இவ்வளவு கட்டுப்பாட்டுக் கிடையில் நாடகத்தமிழ் எவ்வாறு தலையெடுத்து ஓங்கப் போகின்றது. அதன்மேல் இயற்றமிழ்க் காப்பியங்கள் நாடெங்கும் மலிந்து சிறந்து நாடகத் தமிழை வளரவொட்டாது தடுப்பனவாயின. இவ்வாறு நாடகத் தமிழுக்கு நாற்புறத்தினுந் தடைகளமைக்கப் பட்டமையின் அஃது அழிநிலை எய்தத் தலைப்பட்டது. பண்டிதரானோர் கடிந்து நாடகத் தமிழைக் கைவிடவே அது பாமரர் கையகப்பட்டு இழிவடைந்து தெருக் கூத்தளவிலே நிற்கின்றது.” -தமிழ் மொழியின் வரலாறு. சிந்தாமணி சூளாமணி முதலிய காமச்சுவை மலிந்த சைன காப்பியங் களை நோக்குமிடத்துச் சைனர்கள் நாடகத் தமிழை வளரவொட்டாது தடுத்தார்கள் என்று கூற இடமில்லை. 12. தமிழ் இலக்கணத்தின் சிறப்பியல்பு வடமொழி தமிழ் என்னும் இருமொழிப்புலமையும் ஒருங்கே நிரம்பிய சிவஞான சுவாமிகள் “தமிழ் மொழிப் புணர்ச்சிக்கட்படும் குறியீடுகளும், வினைக்குறிப்பு வினைத்தொகை முதலிய சொல்லிலக்கணங் களும், உயர்திணை அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும், குறிஞ்சி வெட்சி முதலிய திணைப்பாகுபாடுகளும் அவற்றின் பகுதிகளும், வெண்பா முதலிய செய்யுளிலக்கணமும் இன்னோரன்னவும் வடமொழியிற் பெறப் படா” என்றும், “ஈண்டுக் கூறும் பொருட் பாகுபாடுகள் பொதுவாகாது தமிழிற்கே சிறந்து வேறொன்றாற் பெறப்படாமையின் இப்பொருள் பற்றி வரும் பரிபாடல், கலி, அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, நற்றிணை, குறுந்தொகை, ஆற்றுப்படை, பதிற்றுப்பத்து முதலிய செய்யுள் ஆராயப்புகுந்தாற்கு இப்பொருட்பாகுபாடு உணராக்கால் குன்று முட்டிய குரீஇப் போல இடர்ப்படுவர்”என்றும், “சோதிடம் முதலிய பிறகலைகளெல் லாம் ஆரியத்தினும் தமிழினும், ஏனைமொழிகளினும் வேறுபாடின்றி ஒப்ப நிகழ்தலின், அவற்றை வேறு விதிக்க வேண்டாமையானும், இயலிசை நாடகமென்னும் மூன்றும் தமிழ் நிலத்துச் சிறிது வேறுபாடுடைமையின் அவற்றை விதிக்க வேண்டுதலானும் அது பற்றி அகத்தியத்துள் மூன்றுமே யெடுத்தோதினார்” என்றும் தொல்காப்பியச் சூத்திர விருத்தியின்கண் ஆங்காங்கு உரைத்திருக்கின்றனர். “தமிழ் மொழியில் எல்லாப் பொருள்களும் இரண்டு திணைகளாகப் பகுக்கப்பட்டுள. பகுத்தறிவுடைய உயிர்களை உயர்திணையாகப் பகுத்து உயர்திணையில் ஆணுக்கு ஆண்பாலும், பெண்ணுக்குப் பெண்பாலும், பலருக்குப் பலர்பாலும், பகுத்தறிவற்ற விலங்கு, பறவை, நீர்வாழ்வன முதலிய உயிர்களையும், மரம், கொடி, செடி, பறவை நீர்வாழ்வன முதலிய உயிர் களையும் அஃறிணையாகப் பகுத்து, அவற்றுள் ஒன்றுக்கு ஒன்றன்பாலும், பலவற்றுக்குப் பலவின்பாலும் கூறப்படுகின்றன. தமிழில் விலங்கு, பறவை, மீன்களின் ஆண் பெண்களுக்கும் வெவ்வேறு பெயர் கூறப்படினும், அவைகள் பகுத்தறிவற்ற தாழ்ந்த சாதியிற் பட்டன வாதலால் அஃறிணை யாகவே கூறப்பட்டிருக்கின்றன. ஆங்கிலம் முதலிய மொழிகளில் சில அஃறிணை உயிர்களுக்கும், பொருள்களுக்கும் ஆண்பால் பெண்பால் கூறினும் அங்ஙனம் கூறப்பட்ட ஒன்றையே பல பால்களில் கூறுவதும், உயர்திணை ஆண்பாலுக்குப் பெண்பாற் பெயரும், பெண்பாலுக்கு ஆண்பால் ஒன்றன்பால் பெயரும் முறை பிறழ்ந்து கூறுவதும் இல்லை. வடமொழியிலோ பால் வரம்பின்றிப் பலவாறு கூறுவதுண்டு. அவை வருமாறு:- 1. பார்யா - பெண்பால் (ஒருமை) 2. தாரா - ஆண்பால் (என்றும் பன்மை) 3. களத்ரம் - ஒன்றன்பால் 1. கல்லின் பெயர் 1. பாஷாண - ஆண்பால் 2. சிலா - பெண்பால் 3. உபலம் - ஒன்றன்பால் ஆதலால் தமிழ் பால்திணையில் இனிது. “ஒரு மொழியிலுள்ள சொற்களினொலிகளை வரிவடிவிற் காண்பிப்பதற்குக் கருவியாயுள்ளது எழுத்து. அங்ஙனமே தமிழ்மொழியுள் ஒலியும், அதற்குரிய எழுத்தும், ஒற்றுமை பெற்றுள்ளன. வேறு சில மொழிகளைப் போல் அவை ஒன்றுக்கொன்று வேற்றுமையுடையனவல்ல. வடமொழியில் ப்ரஹ்ம என்றெழுதிப் ப்ரம்ஹ என்றொலிக்கின்றனர். சிஹ்ம என்றெழுதிப் சிம்ஹ என்றொலிக்கின்றனர். வஹநி என்றெழுதி வந்ஹி என்றொலிக்கின்றனர். விஜ்ஞானம் என்றெழுதி விக்ஞானம் என்றொலிக்கின்றனர். 2. வினைத் தெளிவு “வினைச்சொல் ஒருவன் ஒருத்தி ஒன்றன் செயல்களைச் குறிக்குஞ் சொல். தமிழ்மொழியில் வினைகள் அவற்றைத் தெளிவுபெறக் குறிக்கின்றன. பிற மொழிகளிலுள்ள வினைச்சொற்கள் ஆண் பெண் ஒன்றன் பால்களின் வேறுபாட்டை விளக்குகின்றில. ஆங்கிலம் வடமொழி செல்கின்றான் (He) goes (ஸ) கச்சதி செல்கின்றான் (She) goes (ஸா) கச்சதி செல்கின்றது (It) goes (தத்) கச்சதி ஆங்கிலம் இலத்தீன் நேசிக்கிறான் (He) loves (llle) amat நேசிக்கிறாள் (She) loves (llla) amat நேசிக்கிறது (It) loves (lllud) amat 3. சொற்றொடரழகு “சொற்றொடர் -வாக்கியம். அது எழுவாய் பயனிலை. செயப்படு பொருள் என்பன கூடி ஒரு கருத்தை விளக்குவது. அவற்றோடு அவற்றின் உரிச்சொற்களும், இடைப்பிற வரலாய் வரும் வாக்கியங்களும் சேர்ந்து குழுச் சொற்றொடராயும் வரும். பெயர் வினைகளின் இயலை உரிச்சொற் களானும், பல பெயர்களை இடைச்சொற்களானும், பலவினைகளை எச்சத்தானும், பெயர்க்கும் வினைக்கும் உள்ள சம்பந்தத்தை வேற்றுமை யுருபானும் புணர்த்தித் தமிழில் விளக்கப்படுகின்றது. ஆங்கிலத்திலும், தமிழ் போலவே சொற்றொட ருளது. “வடமொழி, இலத்தீன், கிரீக்கு முதலிய மொழிகளில் அங்ஙனம் அழகு பெறாது விசேடணங்களுக்கும் அவை தழுவும் பெயர்களின் வேற்றுமை பால்களையேற்றல், இடைச்சொல் இன்றிக் கூறல் முதலிய அழகின்மையுள்ளது. உதாரணம் (1) “கரிய பெரிய குயிலை வஞ்சகமுடைய காக்கையாக எண்ணி னான். க்ருஷ்ணம் ப்ரஹந்தம் வஞ்சகி நம் காகம் பேனோ கரியதை பெரியதை குயிலை வஞ்சகமுடையதைக் காக்கையை எண்ணினான். (2) மதுரையிலிருக்கும் இராமன் மகன் புலவனாகிய சுமுகனான இலக்குமணனால் இது எழுதப்பட்டது. மதுராவாசிநா ராம புத்திரேண பண்டிதேந சுமுகேந லஷ்மணேந இயம் லிக்யதே. மதுரையில் வசிப்பவனால் இராமன் புத்திரனால் சுமுகனால் இலட்சுமணனால் இது எழுதப்பட்டது.’ (மொழிநூல்-மாகறல் கார்த்திகேய முதலியார்) 4. இலக்கண நூல்கள் அகத்தியர், தமிழுக்குச்1 சிற்றகத்தியம் பேரகத்தியம் என்னும் இலக்கண நூல்கள் செய்தாரென்ப. அவற்றுள் ஒன்றேனும் இக்காலத்துக் கிடைக்கவில்லை. சிதறுண்ட சூத்திரங்களெனச் சிலவற்றைத் தொகுத்து, “பேரகத்தியத் திரட்டு” ஒன்று அச்சடித்திருக்கின்றனர். அச்சூத்திரங்களின் சொன்னடையும், பொருணடையும் நோக்கும் இளஞ் சிறாரும் அவை பண்டைத் தமிழன்று என்று துணிந்து கொள்வர். அகத்தியத்துக்கு முன் குமரம் என்னும் ஓர் இலக்கணம் இருந்ததாகக் கூறுப. பேராற்று நெடுந்துறையன் பெருநூல்களும் இடைக்கழிச் செங்கோடன் இயனூல் முதலிய இலக்கணங்களும் இருந்து மறைந்து போனதாகச் செங்கோன் தரைச்செலவு என்னும் நூலால் அறிகின்றோம். தொல்காப்பியத்திற் பலவிடங்களிற் காணப்படும் ‘என்ப’, “என்மனார் புலவர்’, ‘இயல் புணர்ந்தோர் மொழிப’ என்பன போன்ற சொற்றொடர்களால் தொல் காப்பியர் காலத்தும் முன்பும் பல இலக்கண இலக்கியங்கள் இருந்தன வென்பது தெளிவு. யாப்பருங்கல விருத்தி யாப்பருங்கலக்காரிகை (பழைய) உரை முதலியவற்றில் இக்காலத்துக் கிடையாத பல இலக்கண இலக்கியங்கள் மேற்கோள்களாக வந்திருக்கின்றன. இக்காலம் வழங்கும் இலக்கணங்கள், தொல்காப்பியம், வீரசோழி யம், யாப்பருங்கலக்காரிகை, தண்டியலங்காரம், மாறனலங்காரம், இலக்கண விளக்கம், இலக்கணக்கொத்து, நேமிநாதம், நன்னூல் முதலியன. பிற மொழிகளிலுள்ள இலக்கணங்களும் பிறவுமாயுள்ள நூல்கள் முன்னிருந்தவற்றிலிருந்து விரித்து எழுதப் பெறும். தமிழ் நூல்களோ முன்னிருந்தவற்றைச் சுருக்கி எழுதப்படுவனவாகும். உதாரணத்துக்குத் தொல்காப்பியம், நன்னூல், இலக்கணச் சுருக்கம் முதலியவற்றை நோக்குக. 13. சங்கம் “தலைச் சங்கம் இடைச் சங்கம் கடைச் சங்கமென மூவகைப்பட்ட சங்கம் இரீஇயினார் பாண்டியர்கள், அவருள் தலைச்சங்கமிருந்தார் அகத்தியனாரும், திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளுங், குன்ற மெறிந்த குமரவேளும், முரஞ்சியூர் முடிநாகராயரும் நிதியின் கிழவனுமென இத் தொடக்கத்தார் ஐஞ்ஞூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினாரென்ப. அவருள்ளிட்ட நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினா ரென்ப. அவர்களாற் பாடப்பட்டன எத்தனையோ பரிபாடலும், முதுநாரையும், முதுகுருகும், களரியாவிரையு மென இத்தொடக்கத்தன. அவர் நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு சங்கமிருந்தாரென்ப. அவர்களைச் சங்க மிரீஇயினார் காய்சின வழுதி முதலாகக் கடுங்கோ னீறாக எண்பத்தொன்பதின்மரென்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கடல் கொள்ளப்பட்ட மதுரை யென்ப. அவருக்கு நூல் அகத்தியம். “இனி இடைச்சங்கமிருந்தார் அகத்தியனாரும் தொல்காப்பிய னாரும், இருந்தையூர்க் கருங்கோழியும், மோசியும், வெள்ளூர்க் காப்பிய னும், சிறு பாண்டரங்கனும், திரையன் மாறனும், துவரைக் கோனும், கீரந்தையுமென இத் தொடக்கத்தார் ஐம்பத் தொன்பதின்மரென்ப. அவருள்ளிட்ட மூவாயிரத் தெழுநூற்றுவர் பாடினாரென்ப. அவர்களாற் பாடப்பட்டன கலியும், குருகும் வெண்டாளியும் வியாழமாலையகவலு மென இத்தொடக்கத்தன என்ப. அவர்க்கு நூல் அகத்தியமுந் தொல்காப் பியமும், மாபுராணமும், இசை நுணுக்கமும், பூத புராணமுமென இவை யென்ப. அவர் மூவாயிரத்தெழுநூற்றியாண்டு சங்கமிருந்தாரென்ப. அவரைச் சங்கமீரிஇயினார் வெண்டேர்ச்செழியன் முதலாக முடத்திரு மாறனீறாக ஐம்பத்தொன்பதின்ம ரென்ப. அவருட் கவியரங்கேறினார் ஐவர் பாண்டியரென்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கபாடபுரத் தென்ப. அக்காலத்துப் போலும் பாண்டிய நாட்டைக் கடல் கொண்டது. “இனிக் கடைச்சங்க மிருந்து தமிழாராய்ந்தார் சிறு மேதாவியாரும், சேந்தம் பூதனாரும், அறிவுடையரனாரும், பெருங்குன்றூர்க் கிழாரும், இளந்திருமாறனும், மதுரையாசிரியர் நல்லந்துவனாரும், மருதனிய நாகனாரும், கணக்காயனார் மகனார் நக்கீரனாரு மென இத் தொடக்கத்தார் நாற்பத்தொன்பதின்ம ரென்ப. அவருள்ளிட்டு நானூற்று நாற்பத்தொன் பதின்மர் பாடினாரென்ப. அவர்களாற் பாடப்பட்டன நெடுந்தொகை நானூறும், குறுந்தொகை நானூறும், நற்றினை நானூறும், புற நானூறும் ஐங்குறு நூறும், பதிற்றுப்பத்தும், நூற்றைம்பது கலியும், எழுபது பரி பாடலும், கூத்தும், வரியும்,சிற்றிசையும், பேரிசையுமென்று இத்தொடக் கத்தன. அவர்க்கு நூல் அகத்தியமுந் தொல்காப்பியமுமென்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது ஆயிரத்தெண்ணூற்றைம்பதிற்றியாண்டு என்ப. அவர்களைச் சங்கமிரீஇயினார் கடல் கொள்ளப்பட்டுப் போந் திருந்த முடத்திரு மாறன் முதலாக உக்கிரப் பெருவழுதி யீறாக நாற்பத் தொன்பதின்ம ரென்ப. அவருட் கவியரங்கேறினார் மூவர் பாண்டிய ரென்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது உத்தர மதுரை யென்ப.” -இறைய னாரகப்பொருளுரை. களவியலுரையிற் கூறப்பட்ட சங்கப் புலவர்கள் பலர் சங்கநூற் செய்யுட்களை இயற்றிய புலவர்களாகக் காணப்படுகின்றமையின் களவியலுரையிற் காணப்படும் சங்க வரலாறு ஆதாரமற்ற கட்டுக்கதை என்று கருத இடமில்லை. பண்டை நாளிற் சங்கமிருந்து தமிழ் வளர்த்தமையை. “சிறைவான் புனற்றிலைச் சிற்றம்பலத்து மென் சிந்தையுள்ளும் உறைவா னுயர்மதிற் கூடலி னாய்ந்த வொண் டீந்தமிழின் றுறை” - திருக்கோவையார் “ஞான சம்பந்த னுரைசெய் சங்கமலி செந்தமிழ்” - சம் - தே “திருவால வாயில், எம்மைப் பவந்தீர்ப்பவர் சங்கமிருந்து” (பெரியபுராணம்) “சங்கத் தமிழ்மூன்றுந் தா” (நல்வழி) “..............பாண்டியர் பாடு தமிழ் வளர்த்த கூடலின் வடாஅது” (ஆசிரியமாலை) நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி நற்கனகக் கிழிதருமிக் கருளினான் காண்” (திரு.நா.தே.திருப்புத்தூர்) என வரும் தெய்வப்பெற்றியாளர் திருவாக்குகளானோர்க. “மதுரைத் தலபுராணம் குலசேகர பாண்டியன் முதல் மதுரேசுவர பாண்டியனீறாக எழுபத்துநாலு பாண்டியரைப் பற்றிச் சொல்லுகின்றது. இப்போதுள்ள மதுரையில் அரசு புரிந்த பாண்டியர்கள் இவர்கள்தாம். கடைசிப் பாண்டியனுக்கு முதல் ஆண்ட கூன்பாண்டியன் அல்லது நெடுமாறன் ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவனென்பது துணியப்பட்டது. அவனது ஆட்சியில் சங்க மிருந்ததாக ஒரு வரலாறுங் காணப்படவில்லை. கி.பி.நாலாம் நூற்றாண்டு வரையிலிருந்த மாணிக்க வாசக சுவாமிகள் காலத்தில் சங்கத்தைப்பற்றிய செய்தி இறந்தகால நிகழ்ச்சி யாகக் காணப்படுகின்றது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலையென்னும் நூல்களில் சங்கத்தைப்பற்றிய குறிப்புக் காணப்படவில்லை. மூன்றாஞ் சங்கத்தின் கடைசிப் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி யென்பது கன்னபரம்பரைச் செய்தி. இப்பாண்டியன் காலத்திலேயே திருக்குறள் அரங்கேற்றப்பட்டதென்று சொல்லப்படு கின்றது. இப்போது அப்பாண்டியன் தல புராணத்திற் சொல்லப்படும் 47 பாண்டியருள் எவனென்று தீர்மானிக்க முடியவில்லை. புராணமெழுதி யவர் தமிழ்ப்பெயர்களைச் சமக்கிருதத்தில் மொழிபெயர்த்து எழுதியதே இதற்குக் காரணம். அப்படி யிருந்தாலும் இப்பாண்டியனுடைய காலத்தை ஒருவாறு நிச்சயித்தல் கூடும். இவன் கரிகாற்சோழனின் தந்தையாகிய இளஞ்சேட்சென்னியின் காலத்தில் இருந்தவனென்று சொல்லப்படு கின்றான். அவன் காலம் கி.பி.50-90 வரையிலாகும். ஆகவே, சங்கத்தின் இறுதிக்காலம் முதலாம் நூற்றாண்டிலென்று துணிதல் வேண்டும். அதற்குப் பின் சங்கமிருந்ததற்கு உண்மைச் சான்றுகள் கிடைக்கவில்லை. சங்கம் ஒடுங்கியது முதல் நூற்றாண்டின் முற்பகுதியிலாகும். இனிச்சங்கம் தொடங்கிய காலத்தைக் குறித்து ஆராய்வோம். 196 பாண்டியர்கள் 3900 ஆண்டுகளாகச் சங்கம் நடத்தினார்களென்று முன் ஓரிடத்தில் கூறப் பட்டது. ஒர் அரசனுக்குரிய காலம் இருபது என வைத்துக் கணக்கிட்டமை யின் இக்காலக் கணக்கு ஏற்பட்டது. தென் மதுரையிலே நடந்த சங்கம் 86 அரசர் ஆதரவின் கீழ் நடைபெற்றதென்றும் சொல்லப்படுகின்றது. அப்படி யாயிருந்தால் 89 பாண்டியருக்குரிய கால எல்லை 1780 ஆண்டுகளாகின்றன. 1780 ஆண்டுகளை 3900 ஆண்டுகளினின்றும் எடுத்துவிட எஞ்சி நிற்பது 2120 ஆண்டுகளாகும். இதனையே தென்மதுரையைக் கடல்கொண்ட காலமெனக் கொள்ளுதல் வேண்டும். சலப் பிரளயமுண்டான காலம் கி.மு. 2105 என யூதர் குறிப்பிட்டிருக்கின்றனர். இக்காலக் கணக்குத் தென் மதுரையைக் கடல் கொண்டதெனச் சொல்லப்படும் காலத்தோடு ஒத்திருக் கின்றது. கிறித்துவுக்கு முன் 3900 வரையில் சங்கத் தொடங்கியதெனப் பெரும்படியாகக் கூறலாம். பழைய தமிழகம் மிகவும் சீர்திருத்தம் பெற்றிருந்த தென்பதையும், அது பிறநாடுகளுடன் வாணிகம் நடத்திய தென்பதையும் நினைவில் வைத்துக் கொண்டால் தமிழ்ச்சங்கம் அக்காலத்தில் நடை பெற்றிருக்கக் கூடாது என்று ஒருபோதுங் கருத இடம் இருக்கமாட்டாது. ரெகோஜின்1 என்பார் வேத இந்தியா என்னும் நூலில் கூறியிருப்பது வருமாறு:- “ஊர் என்னும் பட்டினத்தில் ஊர் எயா என்னும் வேந்தனால் கி.மு. மூவாயிரம் ஆண்டுகளுக்குமுன் கட்டுவிக்கப்பட்ட பழைய கட்டிடங் களைக் கிளறிப் பார்த்தபோது தமிழகத்தில் மலையாளக் கரைகளில் மாத்திரம் வளருகின்ற தேக்க மரத்துண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. விந்தியத்துக்கு வடக்கே அவ்விதமான தேக்க மரம் காணப்படுவதில்லை. அது ஐயாயிரமாண்டுகளுக்கு முன் தமிழர்கள் எவ்வளவு சீர்திருத்தமடைந் திருந்தார்கள் என்பதை விளக்குகின்றது. ஆகவே உலக முழுமையிலும் பாண்டிய வமிசமே மிகப் பழையதென்றும் தென் மதுரையில் அவர்களால் நிறுவப்பட்ட சங்கமே எல்லாம் சங்கங்களுக்கும்முற்பட்டதென்றும் சொல்வதில் ஆச்சரியத்துக்குரியது ஒன்றுமில்லை. பழைய மதுரையின் அழிவுக்குப் பிற்பாடு பாண்டியருக்குத் தலைநகரமாயிருந்தது கபாடபுர மென்று இராமாயணத்திற் படிக்கின்றோம். இரண்டாவது நடத்திய சங்கம் 59 பாண்டியரின் காலம் 1180 ஆண்டுகளாகும். இது இரண்டாஞ் சங்கத்தின் இறுதிக் காலமும் மூன்றாஞ் சங்கத்தின் தொடக்கமுமாகிய (2120-1180) கி.மு.940க்குக் கொண்டுவந்து விடுகின்றது. இரண்டாவது தலைநகரமாகிய கபாடபுரம் கடற்பெருக்கினால் அழிக்கப்பட்டதென்பதும் அவ்வழி வுக்குப் பிழைத்திருந்த பாண்டியனே மறுபடியும் கூடலில் சங்கம் நிறுவினா னென்பதும் கன்ன பரம்பரை வரலாறுகள். தலபுராணத்தின்படி மூன்றாவது சங்கத்தை நிறுவினவன் உக்கிரபாண்டியனாவன். மாபாரதத்தில் சொல்லப் படும் பப்புரவாகன் இவனே. இவன் மலையத்துவச பாண்டியனின் பேர னென்றும் மலையத்துவசனின் ஒரே குமாரி அருச்சுனனை மணந்தாளென் றும் மாபாரதம் கூறுகின்றது. தலபுராணத்திற் கூறப்படும் ‘சுந்தரன்’ என்னும் பெயர் அருச்சுனனைக் குறிக்கும். மலையத்துவசனை அருச்சுனன் மணலூரிற் சந்தித்ததாக மாபாரதங் கூறுகின்றது. கூடலைத் தலைநகராகக் கொண்ட பாண்டியன் மணலூரிலிருந்து வந்தானென்று பழைய திருவிளை யாடல் புராணம் சொல்லுகின்றது. இதனால் கபாடபுரத்தின் அழிவுக்குப் பிறகும் கூடலைத் தலைநகராகக் கொள்வதற்கு முன்னும் மணலூர் பாண்டியனுடைய தலைநகராயிருந்ததெனச் சொல்லவேண்டும்: அல்லா விடில் மணலூரும் கபாடபுரமும் ஒன்று எனக் கொள்ளல் வேண்டும். இராமாயணம் பாரதம் என்னும் இரண்டு நூல்களிலும் பாண்டியனுடைய தலைநகரமாகச் சொல்லப்படுமிடங்கள் ஒரே இடத்தைக் குறிக்கின்றன. இராமாயணத்தில் வான்மீகி சுக்கீரிவன் வானரவீரருக்குக் கூறிய கூற்றாக வைத்துச் சொல்லுமிடத்து, ‘கபாடம்’ தாம்பிரபரணி கடலோடு சங்கமிக்கு மிடத்தில் இருப்பதாகச் சொலலப்பட்டிருக்கின்றது. அருச்சுனன் தெற்கே தீர்த்த யாத்திரை செய்ததைச் சொல்லுமிடத்து அவன் கலிங்க நாட்டுக்கு ஊடாகச் சென்று கோதாவரியையும் கிழக்குத் தொடர் மலையிலேயுள்ள மகேந்திரத்தையுங் கடந்து காவேரியைப் பின்புறமாக விட்டுக் கிழக்குக் கடலோரத்திலே யிருந்த மணலூரையடைந்தானெனச் சொல்லப்படு கின்றது. மாபாரதத்திற் காணப்படும் மணலூரென்பது ‘மணற்பட்டினம்’ என்னும் பொருள்தரும் தனித் தமிழ்ப்பெயராகும். ‘கபாடம்’என இராமாயணத்திற் காணப்படுவது ‘அலைவாய்’என்னும் தமிழ்ப்பெயரின் சமக்கிருத மொழி பெயர்ப்பாகக் காணப்படுகின்றது. அலைவாய் துறை முகம் என்பன ஒரு பொருட் சொற்கள். பழந்தமிழ்க் கடவுளாகிய முருகன் கோயிலுக்கு இருப்பிடமாகிய செந்தில்மலை அடியோரத்தில் இருந்த துறைமுகப்பட்டினத்துக்கு அலைமுகப்பட்டினமெனப் பெயருளது. அஃது இப்போதுள்ள திருச்செந்தூருக்குப் பக்கத்திலேயிருந்தது. பழைய முருகன்கோயில் கடலுள் மறைந்துள்ளதெனச் சொல்லப்படுகின்றது. கபாடபுரம் அல்லது அலைவாய் அக்காலத்து எல்லாவிடங்களாலும் அறியப்பட்ட பாண்டிய அரசருடைய துறைமுகப் பட்டினமென்றும், அதனருகே அரசனுடைய மாளிகையும் அரசிருக்கையுமிருந்த ஒரு சிறு பட்டினமிருந்ததென்றும் கருத இடமுண்டு. மணலூரிலிருந்த கடைசிப் பாண்டியன் அலைவாயைக் கடல் கொண்டதற்பின் தனது தலைநகரை மதுரைக்கு மாற்றியிருக்க வேண்டும். இம்மாற்றம் பாரதப் போருக்குப் பின்னாதல் வேண்டும். இதற்குப் பின் கூட்டப்பட்ட மூன்றாஞ் சங்கத்தை 49 பாண்டியர்கள் நடத்தியிருக்கிறார்கள். இச்சங்கம் இடையீடின்றி 10 நூற்றாண்டுகளாக உக்கிரப் பெருவழுதி காலம் வரையில் நடைபெற்றிருக் கின்றது. இவனுடைய காலம் கி.பி. 30க்கும் 50க்கும் இடையில் என்று முன்னமே முடிவு செய்யப்பட்டது. கி.பி. 50 சங்கத்தின் இறுதிக்காலமாகும். (சங்க காலத்தைப் பற்றிய குறிப்பு-பண்டிதர் சவரிராயன் - தமிழர் புராதனக் கலைஞன்-பகுதி2 எண்.1)1. 13. அகத்தியர் அகத்தியரைப்பற்றிய செய்திகள் புராணங்களிலும் இதிகாசங்களி லும் மற்றும் நூல்களிலும் மலிந்து காணப்பெறுகின்றன. அப்படியிருந்த போதும் அவரைக் குறித்த உண்மை வரலாறனைத்தும் ஆராய்ந்து கோவைப் படுத்திக் கூறுவது இலகுவன்று. அவருடைய பிறப்பைக் குறித்துப் பலவகை யான கதைகளுண்டு. அவற்றுட் பெரும்பாலன இயற்கைக்கு மாறாகக் காணப்படுதலின் அவை நம்பப்படத்தக்கனவல்ல. தென்னாட்டு முனிவருள் ஒருவர் புலத்தியர். இவருடைய புதல்வருக்கு அகத்தியரென்று பெயர். புலத்தியர் இலங்கை வேந்தனாகிய இராவணனின் பாட்டன். அகத்தியர் கலசத்திற் பிறந்தாரென்பதும், அவர் பெருவிரலி னளவின ரென்பதும், கடலைக் குடித்தாரென்பதும், விந்தியமலையை அடக்கினாரென்பதும் புராணக் கதைகள். அக்கதைகள் நேராகப் பொருள்கொள்ளவியலா. சுவாமி திருக்கலியாணத்துக்கு இருடிகளும் முனிவரும் தேவரும் மேருவில் ஈண்டியபோது வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்த கதைகளுமப் படியே. புராணக்கதைகளைக் கொண்டு ஒரு வகையான முடிபும் கொள்ளு தல் கூடாது. விருத்திரன் மழைமுகிலென்றும் இந்திரன் மழைபெய்தற் கிடமாயுள்ள விண்ணென்றும் தத்துவார்த்தம் பகர்கின்றனர். அஃது உண்மையாயின் அகத்தியர் நகுடனைச் சபித்தது, கடலைக் குடித்தது முதலிய கதைகள் கற்பனையாய் மாறுகின்றன. இப்படியே புராணக் கதை களுக்குத் தத்துவப்பொருள் கூறப் புகுமிடத்து, உண்மையென நம்பப்பட்டு வரும் பல கதைகள் கற்பனையாகத் தோன்றுகின்றன. அகத்தியர் இமய மலையை அடுத்துள்ள நாடுகளினின்றும் பெயர்ந்து தமிழ்நாடு போந்தார் என்பதற்குப் புராணக்கதைகளும் அவற்றைத் தழுவி நச்சினார்க்கினியர் தொல்காப்பியப் பாயிரவுரையில் எழுதிய கதையுமன்றி வேறு பிரமாணங் கள் இல்லை. தமிழ் ஆரியப்போர் உண்டான காலத்து இதைப் போன்ற கதைகள் முளைத்தல் இயல்பு. அகத்தியர் மிகப் பழைய காலந்தொட்டே பொதியின் மலையில் வசித்தாரென்பதற்கு அகத்தியன் என்னும் விண்மீனுக்குப் ‘பொதியின் முனிவன்” என்னும் பெயர் பரிபாடலிற் காணப் படுதலே போதிய சான்று. “தெண்ணீரருவிக் கானார் மலையத் தருந்தவன்” (யாப்பருங்கலக்காரிகை) அகத்தியர் குடமலையிற் றங்கிப் பொதியின் மலைக்கு வந்தமையின் அவர் குடமுனியெனப்பட்டார் என்றும், பின் னுள்ளார் இப்பொருளை மறந்து (குடமுனி) கலசயோனி என்னும் பெயர் களை வழங்கினர் எனவும் கூறுகின்றனர். “இராவணனைக் கந்தருவத்தாற் பிணித்து அவனை ஆண்டு வராமல் விலக்கி” என நச்சினார்க்கினியர் கூறும் மதுரைக் காஞ்சி உரையால் அகத்தியர் இராவணன் காலத்தவரென்று விளங்குகின்றது. இனிக் கடைச் சங்கப் புலவருளொருவராகிய மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் தாமியற்றிய மணிமேகலைக் காப்பியத்தில் காவிரிபூம்பட்டினத்திருந்த ககந்தனென்னும் சோழ மன்னன், பரசுராமன் தன்னோடு போர் குறித்து வரு தலைத் துர்க்கா தேவியாலுணர்ந்து அவளேவற்படி அகத்திய முனிவரைச் சரணடைந்தானென்றும், அவன் வேண்டிக் கொள்ள, அகத்தியர் காவிரியைப் பெருகச் செய்தாரென்றும் கூறுமாற்றால் அகத்தியர் இராமன் காலத்துத் தென்னாட்டில் உறைந்த செய்தி புலனாகின்றது. “ஆராய்ந்து பார்க்குங்கால் அகத்தியர் பரம்பரையொன்று இருந்த தென்றும் அப்பரம்பரையில் வந்தோரனைவரும் அகத்தியர் என்னும் பெயரையே வைத்துக்கொண்டனர் என்பதும், அவருள் ஒருவரே அகத்தியம் என்னும் நூலைச் செய்தவரென்பதும், சில உரைகளில் அகத்தியம் என்று காணப்படும் நூல் இயற்றிய அகத்தியனார் தொல்காப்பியனார்க்குப் பிந்தியவ ரென்பதும். . . . . . .” -கா.நமச்சிவாய முதலியார். அகத்தியரிடத்திற் கல்வி கற்றோர் பன்னிருவரென்றும், அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு படலமாகப் புறப்பொருட் பன்னிருபடல மியற்றினார்களென்றும், அவற்றுள் தொல்காப்பியர் வெட்சிப்படல மியற்றினாரென்றும், தொல்காப்பிய உரை புறப்பொருள் வெண்பாமாலை முதலியவற்றால் விளங்குகின்றன. ஆசிரியர் இளம்பூரணவடிகள் பன்னிரு படலத்துள் அடங்கிய வெட்சிப் படலம் தொல்காப்பியர் செய்ததன் றெனப் பல காரணங்கள் காட்டி மறுப்பர். ஆகவே, இளம்பூரண வடிகள் காலத்தில் பன்னிருபடலத்தை ஆக்கியோர்களைக் குறித்துச் சந்தேகம் இருந்ததென் விளங்குகின்றது. 15. தொல்காப்பியர் தொல்காப்பியர் அகத்தியர் மாணவர் பன்னிருவருள் ஒருவரென்ப. அவர் இயற்பெயர் யாதெனப் புலப்படவில்லை. சமதக்கினி முனிவரின் புதல்வர் தொல்காப்பியரென நச்சினார்க்கினியர் கூறுவர். சமதக்கினியைப் பற்றி எழுந்த புராணப்பகுதிகளில் அங்ஙனம் கூறப்படாமையான், அக்கூற்று வலியுடையதாகாது. தொல்காப்பியர் அகத்தியத்தைப் பின்பற்றி நூல் செய்தாரென்பது பரம்பரைக் கதை. அவர் தமது நூலகத்துத் தாம் அகத்தியத்தைப் பின்பற்றி நூல் செய்தாரென்றாவது அகத்தியர் தம் ஆசிரிய ரென்றாவது குறிப்பிட்டிலர். தொல்காப்பியத்துக்குச் சிறப்புப்பாயிரஞ் செய்த பனம்பாரனாரும் இவ் வரலாறு ஒன்றனையேனும் கூறிற்றிலர். இவை ஆராய்ச்சிக்குரியன. 1. தொல்காப்பியம் தொல்காப்பியம் என்பதற்குப் பழைமையைக் காப்பது என்பது பொருள். தொல் என்பது பழைமை. காப்பு-இயம்; காப்பதாகிய நூல், பழைய நூல்கள் பற்பல காரணச் செறிவால் மாண்டுபோதலும் இறந்தகால நிலைமையைக் காப்பதற்கு நூல் எழுதல் வேண்டியதாயிற்று. தமிழ் நாட்டைக் கொடுங்கடல் கொண்டது. மக்கள் நூலொடு மாண்டனர். எஞ்சியோர் எஞ்சிய உணர்ச்சி கொண்டு நூல்களைப் புதுப்பிக்குங்கால் கொள்கை மாறுகொண்டு கலாய்த்தனர். அவற்றிற்கெல்லாம் தலை கொடுத்து நிலைத்து நின்றது இந்நூல் ஒன்றே யாதலின், இது தொல்காப்பிய மெனத் தகுவ தென்க. தொல்காப்பியர் செய்தமையின் தொல்காப்பியம் என்னும் பெயருண்டாயிற்றோ, அன்றித் தொல்காப்பியஞ் செய்தமையின் தொல்காப்பியர் என்னும் பெயருண்டாயிற்றோவென்பது ஆழ்ந்து கருதி அறுதியிடற்பாலது. தொல்காப்பியம் என்னும் நூற் பெயரிலுள்ள காப்பியம் என்னுஞ் சொல்1 காவியம் என்னும் வடசொல்லின் திரிபா மென்பது பிற்காலத்தார் கற்பனை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் இயற்றப்பட்ட தொல்காப்பியத் துக்கு எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்த இளம்பூரணர் பேராசிரியர் நச்சினார்க்கினியர் முதலியோர் எழுதி உரைகளே காணப்படுகின்றன. பழைய உரைகள் ஒன்றையுங் காணோம். இடையிட்ட ஆயிரமாண்டு களுக்குத் தொல்காப்பியம் உரையின்றியிருத்தல் கூடுமோ? உரைகளிருந் தன. அவைகளெல்லாம் சாதிச் சண்டை சமயச் சண்டைகளால் அழிக் கப்பட்டன என்றே கொள்ளல் வேண்டும். வேறு காரணங் கூற வியலா. உரையாசிரியர்கள் பிற்காலத்து வழக்க ஒழுக்கங்களையும் மிருதிகளையும் பின்பற்றி உரைசெய்திருத்தலின், உரைகள் நூலிலுள்ள உண்மைப் பொருள் களைப் பலவிடங்களில் விளக்காதொழிந்தன. சீவகசிந்தாமணி, பெரிய புராணம், திருமந்திரம், தேவாரம் முதலிய நூல்களில் இடையிடையே இடைச் செருகலாகப் பிற்காலத்துப் புலவர்கள் பல பாடல்களைப் பாடிச் சேர்த்திருக்கின்றனர். சில நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றிய நூல்களுக்கு நேர்ந்த கதி யிதுவாயின் சில ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் தோன்றிய நூலின் கதி எதுவாயிருத்தல் கூடும்? மரபியலுட் பல சூத்திரங்கள் இடைச்செருக லெனத் துணிவதற்குப் பல ஏதுக்கள் உண்டு. சிறப்புப் பாயிரத்திற் கூறப்பட்ட “ஐந்திரம்” தமிழுக் குரியதோ வடமொழிக் குரியதோ வென்று துணிதற் கிடமில்லை. சிலப்பதி காரத்தில் ஓரிடத்தில் “விண்ணவர் கோமான் விழுநூல்” என ஒரு சைன நூல் சுட்டப்படுகின்றது. இதனை ஐந்திர வியாகரணம் என்பர் அடியார்க்கு நல்லார். புத்த சமயத்துக்குப் பின் தோன்றிய சைனமத நூலாகிய ஐந்திரம் தொல்காப்பியப் பாயிரத்திற் குறிக்கப்பட்ட நூலெனக் கொள்ள இட மில்லை. இந்திரன் என்னும் பெயருடன் பல காலங்களில் விளங்கிய பலர் நூல்கள் யாத்திருத்தல் கூடும். தொல்காப்பியம் கி.மு.மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதெனக் கொள்வதற்கு அதனகத்திற்றானே பல சான்றுகள் காணப்பெறுகின்றன. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் சூ. 24.27, 28 களால் அக்காலத்து ஞ்ய, ந்ய, ம்ய, ம்வ என மொழிக்கிடையில் வருஞ் சொற்கள் உண்டு என விளங்கு கின்றது. இக்காலத்துள்ள தமிழ்நூல்கள் ஒன்றிலேனும் அவ்வகையான சொற்கள் காணப்படவில்லை. கி.பி.முதல் நூற்றாண்டில் செய்யப்பட்ட திருக்குறளிலும் அவ்வகையான சொற்கள் ஆளப்படவில்லை. அவ்வகை யான சொற்கள் வழங்கிய காலம் குறைந்த பட்சம் திருக்குறளுக்கு மூன்று நூற்றாண்டு வரையிலிருத்தல் கூடும். தொல்காப்பியம் சொல் சூ.29, 32க்கு மாறாகச் சமைத்து, சலம், சதுக்கம், சந்தி, யூகம், யவனர்,சங்கு, சமம் முதலிய சகர முதற் சொற்களும் பிறவும் கடைச் சங்க நூல்களிற் காணப்படுகின்றன. தொல்காப்பியர் கடைச்சங்க காலத்தில் நூலியற்றியிருப்பாராயின், “சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே அ,ஐ,ஒளவெனும் மூன்றலங் கடையே” “ஆ,எ,ஓ வெனும் மூவுயிர் ஞகாரத்துரிய ஆவோ டல்லது யகர முதலாது” எனச் சூத்திரஞ் செய்திருக்க மாட்டார். ஆகவே, தொல்காப்பியஞ் செய்யப்பட்டு நீண்ட காலத்துக்குப் பின்னரே தவிர்க்கப்பட்ட சகர முதற் சொற்களும் பிறவும் நூல்களில் வழங்கப்பட்டிருத்தல் வேண்டும். “பாணினி முனிவர் குறிப்பிடுகின்ற 64 ஆசியர்களுள் இந்திரன் என்பார் ஒருவராகக் காணப்படுகின்றனர். பாணினிக்குப் பின் பாணினீயமே எவராலும் கைக்கொள்ளப்பட்டு வருகின்றது. தொல்காப்பியர் பாணினிக்குப் பின்னிருந்தவராயின் தொல்காப்பியத்தில் ஐந்திரம் என்பதற்குப் பதில் பாணினீயமே கூறப்பட்டிருக்கும். பாணினி முனிவர் கி.மு. 7 ஆம் நூற்றாண்டில் விளங்கியவர் என்று சிலரும், கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் விளங்கியவரென வேறு சிலரும் கூறுவர். ஆகவே, தொல்காப்பியர் கி.மு. 4 ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தியவரல்லார். (Tamil Stuides) 2. வடசொல் “வடசொல்” என்பதற்கு இளம்பூரணவடிகள் “ஆரியர் சொற் போலுஞ் சொல்” எனப் பொருள் கூறினார். தமிழின் பகுதியாகிய வட சொல் நன்றாகச் செய்யப்பட்டுச் சமக்கிருதம் என்னும் பெயர் பெற்றதென் பது சிலர் கருத்து. யாழ்ப்பாணத்துப் பேரகராதியில் வடசொல் கிரந்தம் என்னுஞ் சொற்களுக்கு வடதமிழ் என்னும் பொருள் காணப்படுகின்றது. வடசொல் வடதமிழாயின் அது தமிழேயென்பது துணிபு.1 ஆரியர் பேசுந் தமிழை நகைச்சுவைக்கு உதாரணமாகப் பேராசிரியர் காட்டுகின்றனர். ஆரியர் திருத்தமில்லாத பேச்சுடையவராதலினாலேயே அவரைத் தமிழர் திருந்தாத மொழியுடையவர் என்னும் பொருள்பட மிலேச்சர் என்னும் பெயராலழைத்தனர். திருவாளர் பா.வே.மாணிக்க நாயக்கரவர்கள் வடசொல்லைக் குறித்துக் கூறுவது வருமாறு: “வடசொல் ஆரியம், சமக்கிருதம் என்பன ஒரு பொருட் கிளவிகளாக அணித்தில் வழங்கிவருவது அறிவேன். ஆனால், தொல்காப்பிய காலத்தில் வடசொல் தவிர மற்ற இரண்டு சொற்களும் உலகில் எங்கேனும் இருந்தனவா? இருப்பின் தமிழ் கூறு நல்லுலகத்தில் வழங்கினவா? வழங்கின் மூன்று சொற்களும் ஒரு பொருளினவாக வழங்கினவா என்பன இன்னும் ஆராய்ந்து தெளிதற்குரியன. “தமிழில் வழங்கும் சொல் வகைகள் நான்கினுள் இயற்சொல் முதன்மையானது; வடசொல் கடைப்படியிலுள்ளது. வடசொல்லென்பது தமிழுக்குரிய சொல்லென்று நேராகவே பொருள் கொள்ள இடங்கொடுப் பது. உய்த்துப் பொருள்கோடல் வேண்டாதது. “அத்தகைய வடசொல் என்னுந் தமிழ்ச்சொல் தான் என்னை? என்கிற ஆராய்ச்சிக்குத் தொல்காப்பியத்தினின்றே ஆரியச் சொல்தான் அல்லது சமக்கிருதந்தான் என்று தெளிவிக்கக்கூடிய கூற்று எனக்கெட்டிய வரையில் கிடைக்கவில்லை. “வடசொல் என்பதை வடக்குத் திசையிலிருந்து வந்தசொல் எனல் எளிதாயினும், அளவைக் கிணங்க நோக்கின் வடசொல்லென்பது திசைச்சொல்லென்பதனுள் ஒரு பகுதியாக அடங்கும். அவ்வாறாகத் திசைச் சொல்லென்பதையுஞ் சொல்லி, வடசொல்லென்பதையுஞ் சொல்லவேண்டியதன் பொருட்டு விளங்கவில்லை. வடசொல்லென் பதைத் திசைப்பொருளில் வழங்கியிருத்தல் பொருந்தாததாகத் தோன்று கிறது. தொல்காப்பிய காலத்தில வடக்கு என்னுஞ் சொல் எவ்வெப்பொரு ளில் வழங்கியதென்பது காட்ட நமக்கு நிகண்டுமில்லை அகராதியுமில்லை. “வடக்கிருத்தல் என்னுஞ் சொற்றொடரொன்று உளது. அத் தொடரிலேனும் வடக்கென்பது திசையைக் குறிக்காது, ஊண் துறந்திருத் தலையே குறிக்கின்றது. அவ்வாறே வடசொல்லென்பதிலும் ‘வட’வென்பது துறவைக் குறிக்குமேல், வடசொல்லென்பது ‘நூலே கரகம் முக்கோல் மணையே’ உரியனவாகக் கொண்டிருந்த தமிழ்நாட்டந்தணர்களாகிய துறவொழுக்கமே மிகுதியாகக் கொண்டவர்கள் வழங்கிய தமிழின் பகுதியாகிய சொல்லாதல் வேண்டும். ஆனால் தீர்க்கமாகச் சொல்லற்கேற்ற சான்றுகள் இதுவரையில் கிட்டவில்லை.” 3. தொல்காப்பியர் கூறும் மறை தொல்காப்பியர் பல்லிடங்களிற் குறிப்பிட்டுள்ள மறை, தமிழ் நூலேயெனக் கருத இடமுண்டு. வியாசர் வேதங்களை நான்கு கூறுபடுத்துவதன்முன் தொல்காப்பியம் இயற்றப்பட்டதென்பது நச்சினார்க்கினியர் கூற்று. அதர்வணம் தலையாய வேதம் அன்று என்றும், பௌடிகம் தலைவராகம் சாமம் என்பன ஏனைய மூன்று வேதங்களின் பெயர்களென்றும் நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். திருவாளர் பா.வே. மாணிக்க நாயக்கரவர்கள் மறையைக் குறித்துச் செய்துள்ள ஆராய்ச்சி வருமாறு: “தொல்காப்பியத்துட் சொன்ன மறை ஆரிய மறையென ஒப்பினுங்கூட, உரையாசிரியர்கள் கொள்கைப்படி, வியாசர் ஆரிய வேதங்களைச் சிக்ககற்றித் தொகுப்பதற்கு நெடுங்காலத்துக்கு முன்னரே தொல்காப்பியம் இயற்றலாயினதென்றலின், வியாசருக்குச் சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் வந்த உரையாசிரியர் காலத்து வழங்கிய, இப்போது வழங்குகிற, வுட்ராப் துரையோ, மாக்ஸ்முல்லரோ பதிப்பித்த நான்கு வேதங்களல்லவென்பது உரையாசிரியர் கூற்றாலேயே வெளிப்படை. வியாசருக்கு முந்திய ஆரிய வேதமும், அவருக்குப் பிந்திய ஆரிய வேதமும் ஒன்றற்கொன்று படியாயின், வேதவியாசரென்னும் பெரும் பெயர் பெற்றார் புரட்டியதுதான் என்னை? வியாசருக்கு முந்திய தொல்காப்பியத்தில் வியாசருக்குப் பிந்தியதும் அவரால் திருத்தப்பட்டதுமான ஆரிய வேதங்களினின்று உய்த்துப் பொருள்கோடல் ஆர்க்கியாலாஜிகல் முறைக்கு ஒவ்வாது. தொல்காப்பியத்திற் சொன்ன மறை இத்தகைய தென்பது தெரிவதற்கு நூலாவது சுருதியாவது இப்போதில்லை. ‘அந்தணர் மறை’யைத் தழுவியே தொல்காப்பியம் எழுதப்பட் டிருக்கிற தென்பதும், தொல்காப்பியத்துட் காணாதது அந்த அந்தணர் மறையிற் காணலாகும்படியும், அவ்வந்தணர் மறையிற் காணாதவை இத் தொல்காப்பியத்திற் காணலாகும்படியும் தொல்காப்பியம் அமைந்திருக்கிற தென்பது எனது நம்பிக்கை. “ஆனால் அந்த அந்தணர் யாவர்? அவர் மறையாது?” என்பனதான் புலப்படாதவற்றுட் சில. வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ் உலகத்து அந்தணர் என்பாரும் சிந்து நாட்டுப் பராமணரென்பாரும் ஒன்றேயா? தமிழ்நாட்டு அந்தணர் மறையும் சிந்து நாட்டுப்பிராமணர் வேதமும் ஒன்றேயா? நான்மறை, சதுர்வேதம், அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்; பிராமண க்ஷத்திரிய வைசிய சூத்திர என்னும் போலி ஒற்றுமைகொண்டு இரண்டும் ஒன்றென்பதா? உட்கிடை வேற்றுமை கண்டு அன்றென்பதா? “தொல்காப்பியஞ் சொன்ன தமிழகத்து அந்தணர் மறை, வியாசருக்குப் பிந்திய ஆரியவேத மன்றென்பதற்குச் சான்று தொல்காப்பிய நூலிற் பல்லிடங்களிற் காணலாம். சிற்சிலவே இம்முடங்கலில் குறிக்க வியலும். தமிழகத் தந்தணர் மறையோ தெய்வம் அஃறிணை யென்பது: மந்திரங்கள் மாந்தர் கிளந்தவையென்பது; அம் மந்திரங்களுக்கு ரிக்குகள் போன்ற அளவு முதலாகிய கடப்பாடிலவென்பது; கொடி, நிலை, கந்தழி, வள்ளி யென்ற சிறப்பின மூன்றும் முதலவென்பது; ழ,ற,ன,எ, ஒவ்வுமன்றி ஆய்தம் முதலிய முச்சார்பு வகை தொகையாகச் சாரவரும் எண்ணிறந்த எல்லா எழுத்துக்களுக்கும் அகத்தெழு வளியிசை நுவல்வது. இத்தகையான பல அடிப்படையான கொள்கையினாலேயே இப்போதைய ஆரிய வேதத்தினின்றும் முற்றும் வேற்றுமைப்பட்டிருத்தல் காணலாம்.” “‘ஆர்ய’ என்னுஞ் சொல் தொல்காப்பிய காலத்திற்குப் பின்னும் திவாகர காலத்துக்கு முன்னும் வந்து நுழைந்திருத்தல் கூடும். அப்போது அதற்கு மிலேச்சன் என்னும் பொருள் இருந்ததும் நமக்குத் தெரியு மல்லவா?1 இன்னும் பிற்காலத்தில் ‘ஆர்ய’ என்பது மிலேச்சன் என்னும் பொருளை இழந்து ஆசான் என்னும் பொருளில் வந்ததும் தெரிந்ததே. ஆதலால் ஆர்யன் ஆசானான சில நூற்றாண்டுகளிற்றான் அந்தஆர்யர் தமிழர்க்கு நெறி கற்பிக்கக் கூடுமேயன்றி, ஆரியன் மிலேச்சனாயிருந்த காலத்தும் ஆரியன் என்பானே உண்டாயிராத தொல்காப்பியக் காலத்தும் அதன் முற்காலத்தும் முந்திய நாளையில் ஆரியன் போய், வியாசருக்குப் பிந்தி ஆர்யவேதத்தை வைத்துக்கொண்டு பண்டைத் தமிழர்களுக்கு நெறி கற்பித்திருப்பானென்பது ஆர்க்கியாலஜிகல் ஆராய்ச்சிக்குப் பொருந்தாது. அவையல் கிளவிகள் அடுக்கடுக்காய்க் கிடக்கும் வேத வேதாங்கங்கள், வியாகரணங்களையுடைய பிற்காலச் சிந்து நாட்டு ஆர்யன் முந்திய தொல் காப்பியக் காலத் தமிழனுக்கு நெறி கற்பிந்திருப்பானேல் அவையல் கிளவிக்கு மறுப்பு தொல்காப்பியத்திற்றோன்றியிராது. ஆரியன் ஆசானான சில நூற்றாண்டுகளில் அவன் நெறியைக் கடைப்பிடித்துத் தமிழரும் அவையல் கிளவிகளைப் பேச்சிலும் எழுத்திலும் வழங்கிவருவது வெட்டவெளியாகத் தெரிகின்றதன்றோ? ஆயினும் அவையல் கிளைவிகளை மாத்திரம் ஆரிய மொழியில்தான் வழங்குவார்கள். 1பழைய திராவிடருக்கும் ஆரியருக்கும் இடையிலிருந்த வெறுப்பு இன்றும் குறிச்சான் என்னும் மலையாள மலைச்சாதியினர்களிடையே காணப்படுகின்றது. இவர்கள் தமிழ்நாட்டுக் குறவரை ஒத்தவர்கள். பிராமணன் ஒருவன் இவர்கள் வீட்டில் நுழைந்தால் இவர்கள் அத் தீட்டைப் போக்குவதற்கு வீட்டைச் சாணியால் மெழுகுகிறார்கள். -தமிழ் ஆராய்ச்சி -பக்.90. 4. மந்திரம் “நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த, மறைமொழி தானே மந்திர மென்ப” என மந்திரப் பண்பு தொல்காப்பியத்துட் கூறப்பட்டது. இதனுரை “சொல்லிய சொல்லின் பொருண்மை யாண்டுங் குறைவின்றிப் பயக்கச் சொல்லும் ஆற்றலுடையார் ஆணையாற் கிளக்கப்பட்டுப் புறத்தார்க்குப் புலனாகாமல் மறைத்துச் சொல்லுஞ் சொற்றொடர்.” இளம்பூரணவடிகள் தமிழ் மந்திரத்துக்கு உதாரணம். “திரி திரி சுவாகா கன்று கொண்டு கறவையும் வத்திக்க சுவாகா” எனக் காட்டியுள்ளார். “வச்சிரம் வாவி நிறைமதி மூக்குடை நெற்றிநேர் வாங்கல் விலங்கறுத்த லுட்சக்கர வடத்துட் புள்ளி யென்பதே புட்கரனார் கண்ட பண்பு.” “இது மந்திர நூலிற் புட்கரனார் கண்ட எழுத்துக் குறிவெண்பா” என்னும் யாப்பருங்கலவிருத்தியால் அக்காலத்து மந்திர நூல்கள் பல விருந்தனவென்று விளங்கும். சமக்கிருத மொழியிற் சொல்லப்படுவன வெல்லாம் மந்திரங்களென ஒரு பிழையான விளக்கம் நம்மவர் பெரும் பாலார் உள்ளத்தில் வேரூன்றி யிருக்கின்றது. இது சமக்கிருத மொழியைச் சமய மொழியாகக் கொண்டதினால் நேர்ந்ததாகும். “மன்னியவித் தமிழ்க்கிளவி மந்திரங்கள் கணித்தடியேன் செந்நெறியின் வழுவாவித் திருக்காஞ்சி நகர்வரைப்பி னுன்னணுக்க னாகியினி துறைந்திடவும் பெறவேண்டு மின்னவர மெனக்கருளா யெம்பெருமா னென்றிரந்தான்.” என அகத்திய முனிவர் சிவபெருமானை வேண்டிக் கொண்டதாகக் காஞ்சிப்புராணங் கூறும். 16. தமிழ் நூல்களின் அழிவு “தமிழுக்குக் காலாந்தரத்தில் இரண்டு பெரும் பூதங்களால் இரண்டு பேரிடையூறுகள் நிகழ்ந்தன. குமரியாறும் அதன் தெற்கேயுள்ள நாடுகளுஞ் சமுத்திரத்தின் வாய்ப்பட்டமிழ்ந்தியபோது, தமிழ்ச் சங்கத்துக்கு ஆலயமாய் சர்வ கிரந்த மண்டபமா யிருந்த கபாடபுரம் அதன் கண்ணிருந்த எண்ணாயிரத் தொருநூற்று நாற்பத்தொன்பது கிரந்தங்களோடு வருண பகவானுக்கு ஆசனமாயிற்று. பாண்டிய நாட்டின் வடபாலில் ஆங்காங்குச் சிதறுண்டு குலாவிய சாதாரண சனவினோதார்த்தமான சில கிரந்தங்களும் பள்ளிக்கூடச் சிறுவர் தங் கல்வித் தேர்ச்சிக் குரியவாய் வழங்கிய சில நூல்களுஞ் சில்லறைவாகடாதிகளுமே பிற்காலத்தார் கைக்கு எட்டுவன வாயின. “ஏரண முருவம் யோக மிசைகணக் கிரதஞ் சாலந் தாரண மறமே சந்தந் தம்பநீர் நிலமு லோகம் மாரணம் பொருளென் றின்ன மான நூல் யாவும் வாரி வாரணங் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரு மாள” எனப் புலம்பிய நம்முன்னோரிடத்திலிருந்து நாமடைந்த பிதிரார்ச்சிதம் வெறும் பெயரினுஞ் சிலவேயாம். “இப்பால் வடமதுரைச் சங்கமேற்பட்டு இடமிடந்தோறும் நடைபெற்றுள்ள சுவடிகளைச் சேகரித்துப் புது நூல்களை அரங்கேற்றி வைத்தது அதன் பின் சமண வித்துவான்கள் தலையெடுத்துப் பல பல நூல்க ளியற்றித் தமிழை வளர்த்தனர். அதன்மேல் இதிகாச புராணாதிகள் சமக்கிருத மொழியினின்று வித்துவான்களால் மொழி பெயர்க்கப்பட்டு மறுபடியும் தமிழ் தலையெடுத்தபோது நாடு மகமதியர் கைப்பட, அவர்கள் கொறானுக்கு மாறாகவும் வீறாவதோ கிரந்தங்கள் மண்மேலென்று மத வைராக்கியங்கொண்டு, அந்தோ, நம் நூற்சாலைகளனைத்தும் நீறாக அக்கினி பகவானுக்குத் தத்தஞ் செய்தனர். இவர்கள் கைக்குத் தப்பிய சின் னூல்களே நமக்குப் பெரிய அரிய நூல்களாயின. அவையும் இக்காலத்து இன்னும் நமக்கு என்ன பேரவதி வருமோவென்று பயந்தாற்போல அங்கு மிங்கு மொளித்துக்கிடந்து படிப்பாரும் எழுதுவாரும் பரிபாலிப்பாரு மின்றிச் செல்லுதுளைத்த புள்ளியன்றி மெய்ப்புள்ளி விரவாத செந்தா ளேட்டிற்-பல் துளைத்து வண்டு மணலுழுத வரி யெழுத்து உடையவாய்ச் செல்லாலரிக்கப்பட்டும் பாணங்களாற் றுளைக்கப் பெற்றும் மூன்றாவது பாணமாகிய மண்ணின் வாய்ப்படுகின்றன. (கலித்தொகைப் பதிப்புரை-சி.வை.தாமோதரம் பிள்ளை) “அறம் பொருள் இன்பம் வீடு பெறுமாறு சொன்ன நூல்களும் அவை சார்பாக வந்த சோதிடமும் சோகினமும் வக்கின கிரந்த மந்திர வாதமும், மருத்துவ நூலும், சாமுத்திரியமும், நிலத்து நூலும், ஆயுத நூலும் பத்துவிச்சையும், ஆடைநூலும், அணிகல நூலும், அருங்கல நூலும் முதலாயவற்றுள்ள மறைப்பொரு ளுபதேசமும்” என்னும் யாப்பருங்கல விருத்தியால் இலக்கண இலக்கியங்களல்லாத பல தொழில்களைக் கற்பிக்கும் பலகருவி நூல்களும் இருந்தன வென்பது புலனாகின்றது. ஒரு நாவிதன் அலங்காரம் என்னும் நாவிதநூல் இயற்றி அரசனிடம் பரிசு பெற்றதாகச் சிந்தாமணியிற் சொல்லப்படுகிறது. வீமனாற் செய்யப்பட்ட மடைநூலொன்று உளதாகச் சிறுபாணாற்றுப்படை கூறுகின்றது. இன்ப சாகரம் முதலிய பல இன்ப நூல்கள் இறந்தன என்ப. காமக்கணிகையர்க்கு அறுபத்துநான்கு கலைகள் உரித்தாக மணிமேகலையிற் சொல்லப்படு கிறது. இன்னும் கந்தர்வநூல் கருடநூல் மந்திரநூல் கணக்குநூல் முதலிய பல நூல்களைப்பற்றி யாப்பருங்கல விருத்தியிற் சொல்லப்படுகின்றது. 1. தமிழில் பிறமொழிக் கலப்பு ஒருமொழி பேசும் மக்கள் இன்னொரு மொழி பேசும் மக்களோடு கலக்க நேர்ந்தால், ஒருவர் பேசும் மொழியில் மற்றவர் மொழிச் சொற்கள் சென்று கலத்தல் இயல்பு. தமிழ்மக்கள் பிறநாடுகளிற் சென்று வாணிகம் நடத்தினமையானும், அரசரின் கீழ்ப் பல தொழில்கள் அமர்ந்தமையானும் பிறமொழிச் சொற்கள் தமிழினும், தமிழ்ச் சொற்கள் ஆரியம் எபிரேயம் கிரீக் முதலிய மொழிகளிலும் புகுந்தன. தமிழ்ச் சொற்கள் பிறமொழிகளில் புகுங்கால் அம்மொழி இயைபுக் கேற்பத் திரித்து வழங்கப்படும். அப்படியே பிறமொழிச் சொற்கள் தமிழிற் புகுங்கால் அவை தமிழின் அமைதிகேற்பத் திரித்து வழங்கப்பட்டன. இம்முறையினால் அவை தமிழ்ச் சொற்களோ அன்றோவெனப் பிரித்தறிவது அரிதாயிருந்தன. பிற்காலங்களில் இம்முறை கவனிக்கப்படாது விடப்பட்டது. ஆரியச் சொற்கள் கணக்கின்றித் தமிழுடன் கலக்கப் புகுந்த பிற்காலத்தில், அவை தம்முருவுடனேயே வழங்கப்படலாயின. அதனால் தமிழின் சுவை பெரிதுங் குறைவுற்றது. ஒரு பொருளைக் குறிப்பதற்குரிய தமிழ்ச் சொல்லிருப்ப, அதனைப் பிறமொழிச் சொற்களால் வழங்கத் தலைப்படுதல் தமிழின் அழிவுக்கு ஏதுவாகும். “அனேக சமக்கிருத பதங்கள் தமிழில் வந்து கலந்தனவாயினும், வண்டு கைக்கொண்ட கிருமிபோலவும், வேரின் வாய்ப்பட்ட எருப் போலவும் சமக்கிருத நிலமுங்குணமுமின்றி, ஆர்த்தபம், மயிடம், பகுதி, விகுதி முதலியன போலச் சுத்த தமிழுருவாகவே திரிந்து வந்தன. அப்பால் முன் எண்ணூறு வருடம் இதிகாச காலம். பற்பல புராண காவியங்களும் கலைஞான நூல்களும் இக்காலத்தில் எழுதப்பட்டனவாயினும். தமிழிற் சிறந்த இதிகாசங்களாகிய நைடதம், பாரதம், இராமாயணம், இரகுவமிச மென்பன தோன்றிய காலமாதலின், இதிகாசகால மென்றாம். வடமொழியி லிருந்து புராண விதிகாசங்கள், சமய சாத்திரங்கள், தலமான்மியங்கள் கணித சோதிடாதிகள் சுத்த சமக்கிருதா காரமாய்த் தமிழில் மொய்க்கத் தலைப்பட்டதும், வடமொழிப் பிரளயத்தைக் கண்டு தமிழ் சகிக்கலாற் றாது மூழ்கியதும் இக்காலத்திலேதான். போகர் முதலிய ஆயுத நூலாரும் பிரமர் முதலிய கணித வல்லாரும் செந்தமிழ் அணங்கின் மேனியெல்லாம் வெந்தணல் கொளுத்தி வெதுப்பிய வாறெனக் கொடுந்தமிழ் மலிந்து கொப்புளித் தெழுந்து புண்படச் செய்த திக்காலமே. . . . . . பின்பு படிப்படி யாகத் தமிழ்க் கல்விக்கு ஆசுபரிபாலனங் குறைந்து, சமக்கிருதம் வல்லாருக்கு மேன்மையுண்டாயிற்று., தமிழ் தனி நில்லாது தத்தளித்து வடமொழி வல்லார் கைப்பட்டு அம்மை வார்த்த உடம்புபோலத் தேக மெல்லாஞ் சமக்கிருதத் தழும்பு ஏறியது. கொப்புளித்த மேனியிற் கொடுமுள்ளு மேறிய தெனத் திசைச் சொற்களும் வந்து மரீஇயின.” (வீரசோழியப் பதிப்புரை) “பட்டினப்பாலையில் உள்ள வடசொற்கள் ஒன்று அல்லது இரண்டு என்றும். நெடுநல்வாடையில் 20 வரையில் என்றும், 782 அடிக ளுடைய மதுரைக் காஞ்சியில் 50க்கு அதிகமில்லையென்றும் சங்க காலத் தில் வடசொற்களைத் தமிழுடன் அதிகம் கலந்து செய்யுளியற்றல் புலமைக் குறைவாகக் கருதப்பட்டதென்றும். ஒரு மொழியோடு இயைபில்லாத பிறமொழிச் சொற்களைக் கலந்து வழங்குதல் முத்துக்களுடன் மிளகு களைக் கலந்து கோத்தல் போலாகுமென இரண்டு கன்னடப் புலவர்கள் கூறியுள்ளார்களென்று பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் குறிப்பிட் டிருக்கின்றனர்.” (தமிழாராய்ச்சி,பக்கம்-174) 2. ஆட்சியாளர் தமிழுக்குக் காட்டும் ஆதரவு அரசாட்சியாளருந் தமது வித்தியாசாலை மாணாக்கர்களுக்கு அவரவர் சொந்தப் பாஷையையும் கற்பிக்கும் விருப்புடையராய்த் தமிழ்ப் பிள்ளைகளுக்கும் அவர்களது சுயபாஷையாகிய தமிழை ஒரு அளவில் ஓதுவிக்கின்றனர். அஃது எவ்விதமென்றால் ஒருவனை நீந்தக் கற்பிக்கும் ஓர் ஆசிரியன் அவனை ஏரி, நதி, கிணறு , குளங்களில் இறங்கவிடாது, குடத்திற் றண்ணீரை மொண்டு சிறுகுழியில் விட்டுக் கால்மறையாத் தண்ணீரில் மாரடிக்கவிட்டாற்போலவாம். கடல் நீரெனில் உடல் கசியும் உப்புப் பூக்கும், குளநீரெனிற் சளிப்பிடிக்கும் தலைநோவுண்டாகும் ‘ஆற்று நீரெனிற் சர்ப்பந் தீண்டும் முதலை பிடிக்கும் என்றவிதமே ஓரோர் நூலுக்கு ஓரோர் குற்றஞ் சாற்றி ஒன்றிலு மிறங்கவிடாது ஒரு நூலில் ஒரு குடமும் இன்னொரு நூலிற் பின்னொரு குடமுமாக அள்ளிவைத்துப் படிப்பிக்கும் அவர்கள் முயற்சியாற் பெரும்பயன் விளைவதேயில்லை. நிகண்டு கற்று இலக்கிய வாராய்ச்சி இல்லாதவர்களுக்குச் சிற்றிலக்கணங்களை மாத்திரங் கற்பித்தலால், அன்னோர் வா வந்தானெனக் கொண்டு கா கந்தானென்றுஞ், சா செத்தானெனக் கொண்டு-தா தெத்தானெனவும் கூறுவார் போலத் தமிழைப் பலவாறு விபரீதப் படுத்துகின்றனர். இதனாற் றமிழுக்கு வருங் கெடுதியைக் குறித்து மிகவும் அஞ்ச வேண்டியிருக்கிறது. (வீ.ப.உரை.)  3. தமிழர் நாகரிகம் 1. நிலப்பாகுபாடும் திணைமக்களும் “தமிழர்கள் மிகவும் பழைய காலத்தில் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்னும் நான்கு நிலங்களில் வசித்து வந்தார்கள். மலையையும் மலைசார்ந்த இடத்தையும் குறிஞ்சி நிலம் என்றும், காட்டையும் காடுசார்ந்த இடத்தையும் முல்லை நிலமென்றும், வயலையும் வயல் சார்ந்த இடத்தையும் ம்ருத நிலமென்றும், கடலையும் கடல் சார்ந்த இடத்தையும் நெய்தல் நிலமென்றும் தமிழர்கள் நிலத்தை நான்கு பகுதிகளாக வகுத்து வழங்கிவந்தார்கள். இவற்றால் பூமிக்கு நானிலம் என்னும் பெயர் தமிழில் வழங்குவதாயிற்று. குறிஞ்சிநிலத்தினும், முல்லை நிலத்தினும் சில பகுதிகள் சூரியனது வெப்ப மிகுதியால் தம்மியல்பிழந்து மணல் வெளியாக மாறுதலு முண்டு; அதனைப் பாலை நில மென்ப. இவர் இவர் இன்ன இன்ன நிலத்தில் உறைபவர் என்பதைக் குறிக்கும் பெயர்களுண்டு. அப்பெயர் ஆடவருக்கும் மகளிருக்கும் வெவ்வேறாக வழங்கின. “குறிஞ்சி நில மக்களுள் கல்வி, கேள்வி, வீரம் முதலியவற்றால் ஒப்புயர்வற்றனாகிய ஆடவன், பொருப்பன். வெற்பன், சிலம்பன் எனப்படுவன். இவனே இந்நிலமக்களின் தலைவன். மற்ற ஆடவர் கானவர் எனப்படுவர். “கல்வி முதலியவற்றால் அங்ஙனஞ் சிறந்த பெண் குறத்தி, கொடிச்சி யெனப்படுவாள்; இவள் இந்நிலத் தலைவன் மனைக்கிழத்தி. மற்றைப் பெண்கள் குறத்தியர் எனப்படுவர். “முல்லைநில மக்களுள் முற்கூறியாங்குச் சிறந்த ஆடவன் குறும்பொறைநாடன் தோன்றல் எனப்படுவன். இவன் இந்நில மக்களின் தலைவன். மற்றை ஆடவர் இடையர், ஆயர் எனப்படுவர். “முற்கூறியாங்குச் சிறந்த பெண் மனைவி, கிழத்தி எனப்படுவாள். இவள் இந்நிலத் தலைவன் மனைவி, மற்றைப் பெண்கள் இடைச்சியர் எனப்படுவார்கள். “மருதநில மக்களுள் அங்ஙனம் உயர்ந்த ஆடவன் ஊரன், மகிழ்நன் எனப்படுவன்; இவன் இந்நிலமக்களின் தலைவன். மற்றை ஆடவர் உழவர், கடையர் எனப்படுவர். “முற்கூறியாங்குச் சிறந்த பெண் கிழத்தி, மனைவி எனப்படுவாள்; இவள் இந்நிலத் தலைவன் இற்கிழத்தி. மற்றைப் பெண்கள் உழத்தியர் கடைசியர் எனப்படுவார்கள். “நெய்தல் நில மக்களுள் முற்கூறியாங்குச் சிறந்த ஆடவன் சேர்ப்பன். புலம்பன் எனப்படுவன்; இவன் இந் நில மக்களின் தலைவன். மற்றை ஆடவர் பரதர், அளவர், நுளையர் எனப்படுவர். “முற்கூறியாங்குச் சிறந்த பெண் பரத்தி, நுளைச்சி எனப்படுவாள்; இவள் இந்நிலத் தலைவன் மனைவி. மற்றைப் பெண்கள் பரத்தியர், அளத்தியர், நுளைச்சியர் எனப்படுவார்கள். “பாலை நில மக்களுள் முற்கூறியாங்குச் சிறந்த ஆடவன் விடலை, காளை, மீளி எனப்படுவன்; இவன் இந்நிலமக்களின் தலைவன். மற்றை ஆடவர் எயினர். மறவர் எனப்படுவர். “முற்கூறியாங்குச் சிறந்த பெண் எயிற்றி எனப்படுவாள்; இவள் இந்நிலத் தலைவன் மனையாள். மற்றைப் பெண்கள் எயிற்றியர், மறத்தியர் எனப்படுவார்கள். “தமிழர்கள் பண்டைக் காலத்தில் இங்ஙனம் நிலம் பற்றிய பகுப்பையே உடையவர்களாயிருந்தார்கள். இவர்களுள் ஒரு நிலத்து ஆடவன் தன்னிலத்துப் பெண்ணை மணந்து கொள்ளினுங் கொள்வான்; வேறு நிலத்துப் பெண்ணை மணந்து கொள்ளினும் கொள்ளுவான். நிலம் பற்றிய இப்பகுப்பு உயர்வு தாழ்வைக் குறித்து வந்ததன்று; இவர் இன்ன நில மக்கள் என்பதை உணர்த்தும் அளவினதேயாகும். இப்பகுப்பு எதுபோன்ற தெனில் இவன் கோவூரான், இவன் குன்றத்தூரான், இவன் காஞ்சிபுரத்தான், இவன் காவேரிப்பாக்கத்தான் என்பன போன்றதாகும்.” 2. சாதி பழைய தமிழர்கள் பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிக்கவில்லை. எல்லா நாடுகளிலும் எப்படி அந்தணர் (Priests), அரசர் (Rulers), வணிகர் (Merchants), வேளாளர் (agriculturists), கைத்தொழிலாளர் (labourers) கீழோர் (Menials) காணப்படுகின்றனரோ அப்படியே தமிழ் நாட்டிலுமிருந்தனர். ஒவ்வொருவரும் தம் சீவனத்தின் பொருட்டு மேற்கொண்ட தொழில்கள் பற்றியே சாதி ஏற்படுவதாயிற்று. தகப்பனாயுள்ள ஒருவன் தான் பிழைப்புக் காகச் செய்துவந்த தொழிலையே தன் மகனும் பின்பற்ற வேண்டுமென விரும்புவதியல்பு. இவ்விருப்பமே தொடக்கத்தில் தனித்தனி சாதி தோன்று வதற்குக் காரணமாயிருந்தது. இப்போது ஒவ்வொரு சாதியினரைக் குறிக்கும் பெயரும் அவ்வவர் மேற்கொண்டிருக்கும் தொழிலைப் பற்றிய தாகவே காணப்படுகின்றது. பிற்காலத்து ஒவ்வொரு குலமும் பிறப்பினாலே உண்டானதென்னும் நம்பிக்கை உண்டாயது. “பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்” என்னும் குறளும், “நல்ல குலமென்றுந் தீய குலமென்றுஞ் சொல்லள வல்லாற் பொருளில்லை-தொல்சிறப்பி னொண்பொரு ளொன்றோ தவங்கல்வி யாள்வினை யென்றிவற்றா னாகுங் குலம்” என்னும் நாலடியாரும் பிறப்பினால் குலமுண்டு என்பதை மறுக்க எழுந்தனவாகும். ஆரிய நாட்டவர்க்குரிய சாதிக் கட்டுப்பாடு, சமயம், பழக்க வழக்கம் முதலாயின தமிழரினின்றும் புறம்பானவை. முதற்கண் அவர்கள் சாதிப் பிரிவு நிறம்பற்றி ஏற்பட்டது. “வருணம்” என்னும் பெயரே அதனைப் புலப் படுத்துகின்றது. பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் எனத் தங் குழவினைப் பிரித்துக் கொண்டு, தாம் வென்று அடிப்படுத்திய மக்களைச் சூத்திரர் என்னும் நான்காம் பிரிவாகக் கொண்டனர். இவர்களுக்கு அடிமைத் தொழில் மாத்திரம் உரித்து. இவற்றின் பிரிவு அவர்கள் நீதிநூல்களாகிய மிருதிகளில் பரக்கக் காணலாம். மேற் காட்டப்பட்ட வெவ்வேறு வருணத்துப் பெண்கள் ஆண்கள் சோரமாகவோ சோரமில்லாமலோ ஒருவரை ஒருவர் மருவப்பிறந்த சந்ததியாருக்கு ஒவ்வொரு தொழில் உரிமை யாக்கப்பட்டது. உதாரணம்:- பிராமணனுக்கு வைசிய நங்கையிடத்திற் பிறந்தவன் அம்பஷ்டன். இவனுக்குத் தொழில் இரண வைத்தியஞ் செய்தல். க்ஷத்திரியனுக்குப் பிராமணப் பெண்ணிடத்துப் பிறந்தவன் சூதன். இவனுக்குத் தொழில் தேரோட்டுதல். ஆரிய மக்கள் தென்னாடடைந்து தமிழருடன் கலந்துறைந்த ஞான்று ஆரியக் கொள்கைகள் பல தமிழகத்திற் சுவறின.1 அதனால், பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் வடநாட்டாருக்குரிய பெயர்கள் தமிழ்நாட்டு அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் பெயர்களோடு ஒன்றாக வைத்துக் கருதப்படலாயின. இக்கருத்தைத் தழுவியே பிற்காலத்து விளங்கிய இளம்பூரண வடிகள், நச்சினார்க்கினியர், பேராசிரியர் முதலாயினோர் நூல்களுக்குகுரை வகுத்தனர். “ஒரு பொரு ளுக்குப் பல பெயர்களைத் தேடிக் கூட்டிக் கூறுதலையே நோக்கமாகக் கொண்ட நிகண்டாசிரியர்களும், பிற்காலத்து இலக்கியஞ் செய்த சில ஆசிரியர்களும், தொல்காப்பியர் முதலிய தொல்லாசிரியர்களின் கருத் தினைக் கருதாது, வேளாளர்க்குச் சூத்திரர் என்னும் பெயரினையுங் கூட்டிக் கூறிவிட்டார்கள். அது பெரும் பிழையாம். கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பநாடர் தொல்லாசிரியர்களின் கருத்தை நன்குணர்ந்தவராதலின் வேளாளரைச் சூத்திரரென எங்குங் கூறாராயினார். பிராமணர் க்ஷத்திரியர் வைசியர் சூத்திரர் என மக்களை நான்கு குலங்களாகப் பிரிக்கும் முறை முற்றும் தென்னாட்டவர்க்குப் புதிது. பிராமணர்களுடைய கருத்துக்களும் கொள்கைகளும் எல்லாப் பகுதிகளி லும் பரவியிருந்த போதும் அவை முற்றாக வெற்றி பெறவில்லை. திராவிட மொழிகள் வழங்கும் நாடுகளில் மக்களிடையே பழைய காலத்தைய ஆரியரல்லாதாரின் வழிபாடுகளும் பழக்க வழக்கங்களுமே, காணப்படு கின்றன. பிராமணரின் பரம்பரையான வழக்கங்களும் சாதிப்பிரிவுகளும் கவனிக்கப்படுகின்றனவாகத் தெரியவில்லை. திராவிடரின் நாகரிகம் இந்து ஆரியரின் நாகரிகத்துக்கு முற்பட்டதாயிருத்தல் கூடும். தெற்கில் ஆரியக்கொள்கைகளுக்கு எப்பொழுதும் எதிர்ப்பு இருந்து வந்தது. 1. அந்தணர் திருக்குறள் நீத்தார் பெருமை என்னும் அதிகாரத்துள், “அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான்” என அந்தணரென்னும் பெயர் நீத்தாருக்குரித்தாகத் திருவள்ளுவநாயனார் கூறியிருக்கின்றனர். இதற்குப் பரிமேலழகர் விசேடவுரையில், “அந்தண ரென்பது அழகிய தட்பத்தினையுடையாரென ஏதுப் பெயராகலின், அஃது அவ்வருளுடையார் மேலன்றிச் செல்லாதென்பது கருத்து” என்று கூறினார். “நூலே கரகம் முக்கோன் மணையே ஆயுங் காலை யந்தணர்க் குரிய” என்னும் தொல்காப்பிய மரபியற் சூத்திரத்தானும் அந்தணரென்போர் துறவிகளே யென்பது இனிது புலனாகின்றது. ‘அந்தத்தை அணவுவோர் அந்தணர் என்றது வேதாந்தத்தையே பொருளெனக் கொண்டு பார்ப்பார்’ என்றும், ‘அந்தணர் காஷாயம் போர்த்த குழாங்கள்’ என்றும் நச்சினார்க்கினியர் உரைப்பர். “அந்தண்மை பூண்ட வருமுறை யந்தத்துச் சிந்தைசெய் யந்தணர்” என்னும் திருமந்திரமும் வேதாந்தத்தை அணவுவோர் அந்தணர் என்பதை உணர்த்திற்று. வேதாந்தத்தையே பொருளெனப் பார்த்தலின், பார்ப்பா னென்னும் பெயரும் அந்தணர்க்குரியதாயிற்று. அந்தணர் தமிழ்மக்க ளல்லாத பிறரெனச் சிலர் கருதுவது பிழையான கோட்பாடாகும். “எறித்தரு கதிர் தாங்கி யேந்திய குடைநீழ லுறித்தாழ்ந்த கரகமு முரைசான்ற முக்கோலு நெறிப்படச் சுவலசைஇ வேறோரா நெஞ்சத்துக் குறிப்பேவல் செய்மாலைக் கொளைநடை யந்தணீர்.” (கலி-பாலை.9.) “கிழிந்த சிதாஅ ருடுத்து மிழிந்தார்போல் ஏற்றிரந் துண்டும் பெருக்கத்து நூற்றிதழ்த் தாமரை யன்ன சிறப்பினர் தாமுண்ணின் தீயூட்டி யுண்ணும் படிவத்தர் தீயவை ஆற்றுழி யாற்றிக் கழுவுபு தோற்றம் அவிர்முருக்கந் தோலுரித்த கோலர் துவர்மன்னும் ஆடையர் பாடினரு மறையர் நீடின் உருவந் தமக்குத் தாமாய இருபிறப் பாளர்க் கொரூஉகமா தீதே” -தகடூர்யாத்திரை. புறத்திரட்டு பார்ப்பான் அகப்பொருட் டுறையில் வாயில்களில் ஒருவராகச் சொல்லப்படும் பார்ப்பான் வேறு, அந்தணன் வேறு என்பது, “தோழி தாயே பார்ப்பான் பாங்கன் பாணன் பாடினி யிளையர் விருந்தினர் கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்: யாத்த சிறப்பின் வாயில்க ளென்ப” “காமநிலை யுரைத்தலும் தேர்நிலை யுரைத்தலும் கிழவோன் குறிப்பினை யெடுத்தனர் மொழிதலும் ஆவொடு பட்ட நிமித்தங் கூறலும் செலவுறு கிளவியும் செலவழுங்கு கிளவியும் அன்னவை பிறவும் பார்ப்பார்க் குரிய” என்னும் தொல்காப்பியச் சூத்திரங்களால் புலனாகும். பார்ப்பான் என்ப தற்கு நன்றும் தீதும் ஆராயந்துரைப்போன் எனப் பொருள் கூறுவர் பேராசிரியர். 2. அறிவர் இவர்கள் இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் மூன்று காலத்தையும் அறிந்த பெரியோர். “யோகிகளாய் உபாயங்களால் முக்காலமு முணர்ந்த மாமூலர் முதலியோர் இவ் வறிவரில் ஒருசாரார்” என்று கூறுவர் நச்சினார்க்கினியர். “மறுவில் செய்தி மூவகைக் காலமு நெறியி னாற்றிய வறிவன் றேயமும்” என்பது தொல்காப்பியம். “மூவகைக்காலமும் நெறியில் ஆற்றலாவது பகலுமிரவும் இடை விடாமல் ஆகாயத்தைப் பார்த்து ஆண்டு நிகழும் வில்லும், மின்னும், ஊர்கோளும், தூமமும், மின்வீழ்வும், கோணிலையும், மழை நிலையும், பிறவும் பார்த்துக் கூறுதல்” என்பர் இளம்பூரணவடிகள். இவர்கள் கணி (சோதிடர்) எனவும் படுவர். 3. தாபதர் இவர் தவவேடம் பூண்டு விரதவொழுக்கம் மேற்கொண்ட பெரியோர். “தவஞ்செய்வோர்க்குரியன ஊனசையின்மை, நீர் நசையின்மை, வெப்பம் பொறுத்தல், தட்பம் பொறுத்தல், இடம் வரையறுத்தல், வாய்வாளாமை என எட்டும்; இவற்றிற்கு உணவினும் நீரினுஞ் சென்ற மனத்தைத் தடுத்தலும், ஐந்தீநாப்பணும் நீர் நிலையினும் நிற்றலுங், கடலுங் காடும் மலையும் முதலியவற்றால் நிற்றலும், தாமரையும் ஆம்பலும் யாமையும் முதலிய ஆசனத்திருத்தலும், உண்டற்காலை உரையாடாமை யும். துறந்த நாட்டொட்டும் வாய் வாளாமையும் பொருளென்றுணர்க. “ இனி யோகஞ் செய்வார்க்குரியன, 1‘இமயம். நியமம், வளிநிலை, தொகை நிலை, பொறை நிலை, நினைதல், சமாதி என எட்டும். “பொய் கொலை களவே காமம் பொருணசை யிவ்வகை யைந்து மடக்கிய தியமம்” “பெற்றதற் குவத்தல் பிழம்புநனி வெறுத்தல் கற்பன கற்றல் கழிகடுந் தூய்மை” “பூசனைப் பெரும்பெய மாசாற் களித்தலொடு நயனுடைய மரபி னியம மைந்தே” “நிற்ற லிருத்தல் கிடத்தல் நடத்தலென் றொத்த நான்கி னொல்கா நிலைமையோ டின்பம் பயக்குஞ் சமய முதலிய வந்தமில் சிறப்பி னாசன மாகும்” “உந்தியொடு புணர்ந்த விருவகை வளியுந் தந்த மியக்கந் தடுப்பது வளிநிலை” “பொறியுணர் வெல்லாம் புலத்தின் வழாம லொருவழிப் படுப்பது தொகைநிலை யாமே” “மனத்தினை யொருவழி நிறுப்பது பொறைநிலை” “நிறுத்திய வம்மன நிலைதிரி யாமற் குறித்த பொருளொடு கொளுத்த னினைவே” “அங்ஙனங் குறித்த வாய்முதற் பொருளொடு தான்பிற னாகாத் தகையது சமாதி.” (ந. உரை. மேற்கோள்) தவத்தி னியல்பு “நீஇ ராட னிலக்கிடை கோட றோஒ லுடுத்த றொல்லெரி யோம்ப லூரடை யாமை யுறுசடை புனைதல் காட்டி லுணவு கடவுட் பூசை யேற்ற தவத்தி னியல்பென மொழிப.” “மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்த தொழித்து விடின்” என்னும் குறளால் சடைபுனைதலும் மழித்தலும் தாபதருக்கு இயல்பு என விளங்குகின்றது. மழித்தல் புத்த சமய வழக்குப் போலும். 3. தமிழர் சமயம் தமிழ்மக்கள் தொன்மை தொட்டுக் கைக்கொண்டு வரும் சமயம் சைவமேயாம். புத்த சமயம் தலையெடுப்பதன்முன் சைவ மதமே இந்தியா இலங்கை முழுமையும் பரவியிருந்தது. கி.மு. 543 இல் வட தேயத்தினின்றும் இலங்கையை அடைந்த விசயனின் மதம் சைவம் என இலங்கைச் சரித்திரத்திற் படிக்கின்றோம். விசயனுக்குப் பின் இராச்சியம் எய்திய மன்னர்கள் தம்பெயரோடு சிவன் என்னும் பெயரையும் வைத்துச் சிறப்பித்தனர். விசயனுடைய வருகைக்குப் பன்னெடுங் காலத்துக்கு முன் நிகழ்ந்த பாரதம் இராமாயணத்திற் சொல்லப்படும் அருச்சுனன், அசுவத்தாமன், இராமன் முதலிய வீரர்கள் சிறந்த சிவபக்தர்கள் என அறிகின்றோம். “ஏர்தருமே ழுலகேத்த வெவ்வுருவுந் தன்னுருவா யார்கலிசூழ் தென்னிலங்கை யழகமர்வண் டோதரிக்குப் பேரரு ளின்பமளித்த பெருந்துறை மேயபிரானைச் சீரியவா யாற்குயிலே தென்பாண்டிநா டனைக்கூவாய்” என மாணிக்கவாசக சுவாமிகள் திருவாசகத்திற் கூறியிருக்கின்றார். இராமாயண காலத்துக்கு முற்பட்ட சிங்கன், சூரன், தாரகன், காசிபன் முதலானோரும் சிவ மதத்தவர்களே. “தென்னாடுடைய சிவனே போற்றி” “பாண்டி நாடே பழம்பதி யாகவும்” பத்திசெய் யடியரைப் பரம்பரத் துய்ப்பவன்” “தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானை” என மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச் செய்திருக்குமாற்றான் தென்னாட்டிற் றொன்மையே தமிழ் மொழியும் சிவநெறியும் உண்டென விளங்கும். கலித்தொகை, அகநானூறு, புறநானூறு முதலிய சங்க இலக்கியங் களிற் காணப்படும் கடவுள் வாழ்த்துக்களால் சிவ வழிபாடு தென்னாட்டில் வியாபித்திருந்த தென்பது வெளிச்சமாகின்றது. முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் பாலை என்னும் நிலங்களில் வாழ்ந்தோர் முறையே மாயோன் முருகன் வேந்தன் வருணன் காடுகிழாள் முதலிய கடவுளரை வழிபட்டனர். முருக வழிபாட்டைக் குறித்துத் திருமுருகாற்றுப்படை விரிவாகக் கூறுகின்றது. “முல்லை நிலத்துக் கோவலர் பல்லா பயன்தருதற்கு மாயோன் ஆகுதி பயக்கும் ஆபல காக்கவெனக் குரவை பல தழீஇ மடை கொடுத்தலின் ஆண்டு அவன் வெளிப்படு” மென்றார். “குறிஞ்சி நிலத்துக் குறவர் முதலியோர் குழீஇ வெறியயர்தற்கு வேண்டும் பொருள் கொண்டு வெறியயர்பவாகலின், ஆண்டு முருகன் வெளிப்படு” மென்றார்.நெய்தல் நிலத்தில் நுளையர்க்கு வலைவளந்த தப்பின், அம்மகளிர் கிளையுடன் குழீஇச் சுறவுக்கோடு நட்டு ஆண்டு பரவுக்கடன் கொடுத்தலின் ஆண்டு வருணன் வெளிப்படும்.” *(நச்-உரை) இருக்கு முதலிய வேதங்களிற் சொல்லப்படும் விஷ்ணு இந்திரன் முதலியோரும் தமிழ்நாட்டு மாயோன் வேந்தன் முதலானோரும் ஒருவ ரல்லர். வருணன் தமிழ்நாட்டுக் கடவுள். இக்கடவுளைப் பிற்காலத்தில் ஆரியர் தம் கடவுளரில் ஒருவராகக் கொண்டனர்.1 “கொடிநிலை கந்தழி வள்ளி யென்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே” என்னும் தொல்காப்பியச் சூத்திரம் தமிழ்மக்கள் கடவுளைச் சந்திரன் சூரியன் முதலிய ஒளியுடைப் பொருள்கள் வாயிலாக வழிப்பட்டார்கள் என்பதைப் புலப்படுத்துகின்றது. கொடிநிலை-சூரியன்; கந்தழி- ஒரு பற்றுக்கோடுமின்றித் தானேயாய்த் தத்துவங்கடந்த பொருள். வள்ளி-சந்திரன். கந்தழி என்பது பற்றுக்கோட்டை அழிப்பது என்னும் பொருளில் அங்கியைக் குறிக்கும் என அறிஞர் சிலர் கூறுகின்றனர். கடவுளைக் குறிக்கும் தமிழ் பெயர்களாகிய இறைவன், இயவுள், கடவுள் முதலிய சொற்கள் தமிழ்மக்கள் கடவுளைக் குறித்து எவ்வகை யான விளக்கம் உடையவர்களாய் இருந்தார்களென்பதை வெளியிடு கின்றன. முருகக் கடவுள், ஆலமர் கடவுளுக்கும் (சிவன்) கொற்றவைக்கும் புதல்வன் என இலக்கியங்கள் அறைகின்றன. கொற்றவையே உமையாம். முற்காலத்தில் மக்கள் இறைவனின் அடையாளமாகத் தறிகளை மரங்களின் கீழ் நிறுத்தி வழிபட்டு வந்தனரென்றும், அவ்விடங்களிலேயே பின் பெரிய கோயில்களெடுக்கப்பட்டன வென்றும், அதற்குச் சான்று, மூங்கிலடியில் கடவுள் வீற்றிருந்தமையால், திருநெல்வேலி வேணுபுரமென் றும், குறுகிய ஆலமரத்தடியிலும் குறுகிய பலா மரத்தடியிலும் இருந்தமை யால் திருக்குற்றாலமென்றும் குறும்பலாவென்றும், முற்காலம் மதுரையில் கடம்பவனத்தடியில் இருந்தமையால் கடவுள் கடம்பவனேசு வரர் என்றும், நாவல் மரத்தடியில் இருந்தமையால் திருவானைக்கா சம்புகேசுவர மென்றும், தில்லை வனத்தில் இருந்தமையால் சிதம்பரம் தில்லையென்றும் அழைக்கப்பட்டது மன்றி அதுபோன்ற மகிழடி முதலான மரத்தடிகள் கடவுள் இருப்பிட மாயிற்றென்றுஞ் சொல்லப்படுகிறது. திருமந்திரம், தேவாரம், திருவாசகம், சித்தாந்த சாத்திரம் பதினான்கு முதலியவற்றுடன் காணப்படுகின்ற கோட்பாடுகளே தமிழர் சமயக் கொள்கைகளாகும். தேவாரம் திருவாசகம் பாடியவர்கள் காலத்து விளங்கிய சிவாலயங்களின் பெருக்கமே சைவமதம் தென்னாடுகளிற் பழைமையே நிலைபெற்றிருந்த தென்பதற்குச்சான்றாகும். தமிழ் இலக்கணத்திற் சொல்லப்படும், உயிர், மெய், உயிர்மெய், வேற்றுமை முதலிய சொற்களே தமிழ் மக்களின் உயரிய சமய உணர்ச்சிக்கு உறு சான்று. “பழந்தமிழர்களது சமயம் ஆரியர் சம்பந்தம் பெற்றிருக்கவில்லை. காலகதியில் தமிழர்களுடைய சமயம் ஆரியர் சமயக் கோட்பாடுகளுடன் கலப்புற்றுத் தற்கால நிலைமையை அடைந்திருக்கின்றது. தென்னிந்திய ருடைய சமயநூல்கள் சமக்கிருத மணம் பெற்றிருந்தாலும், தமிழ் நாட்டுக்கே சொந்தமான கொள்கைகள் உடையனவாயிருக்கின்றனவென்று மாக்ஸ்முல்லர், போப்பையர் முதலியோர் கூறுகின்றனர். ஆகமங்கள் தமிழ ருடைய பழக்கவழக்கம் சமயம் முதலியவற்றைத் தழுவிச் செய்யப்பட்டன வென்று ஆசிரியர் சேஷகிரி சாத்திரியார் கூறுவர். ஆரியர் சமயக் கொள்கை தமிழ்நாட்டிற் பரவுவதன்முன் அந்நாட்டுக்குச் சொந்தமான சமயக் கொள்கைகள் இருந்தனவென்பது உண்மையே. “சரித்திர காலத்துக்குமுன் கொற்றவை, முருகன், வருணன் முதலிய கடவுளர்களைத் தமிழ் மக்கள் வழிபட்டு வந்தனர். ஆனால் அவர்கள் ஒரே முழுமுதற் கடவுள் உண்டென்னும் நம்பிக்கை இல்லாதவர்களாயிருந் தார்களல்லர். சிவ வழிபாடு ஆதியில் தமிழருக்குள் இருந்தது என ரகோசென் (Ragozen) என்னும் பண்டிதர் கூறுவர். சிவ வழிபாடு வடநாட்டிற் பார்க்கிலும் தென்னாட்டுக்கே உரிமை பூண்டது என பெர்கூசன் (Fergusson) என்னும் அறிஞர் ‘மரமும் சர்ப்ப வணக்கமும்’ என்னும் நூலில் கூறுகின்றனர். சிவபெருமான் தமிழ்க் கடவுளென்றும், அவர் தியானப் பொருளாகவும், புலனுக்ககப்படாததைக் கட்புலன் கதுவும் இலிங்க வடி வாகவும் பாவிக்கப்பட்டாரெனவும் ஸ்டிவென்சன் (Dr. Stevnson) என்னும் அறிஞர் கூறுவர். பூவும் புகையும் கொண்டு கடவுளை வழிபடுதலே பழந் தமிழர் மரபு. பூ இதயத்தையும் புகை அது உருகுவதையும் குறிப்பிடுவன. தென்னாட்டவனாகிய இராவணன் சிவலிங்க பூசை புரிபவனென்றும் அவன் செல்லும் இடங்களுக்கெல்லாம் பொன் லிங்கத்தை எடுத்துச் சென்று பூவும் புகையும் கொண்டு வழிபட்டானென்றும் சொல்லப்படு கின்றது. சுவாமி விவேகானந்தர் சொல்வது போல இலிங்கம் ஆண்குறி சம்பந்தமானதன்று. ஆநந்தக் குமாரசுவாமி அது மக்கள் சம்பந்தமானதன்று எனப் புகன்றதே பொருத்தமுடையது. தென்குமரி முதல் வடபெருங்கல் ஈறாக இலிங்க வழிபாடு காணப்பெறுகின்றது. இவ்வழிபாடுதான் மிகவும் பழைமையானது. சிவலிங்க வழிபாடு மாபாரதத்திற் கூறப்படுகின்றது. அசுவத்தாமா அருச்சுனனுக்குத் தோற்றான். அருச்சுனன் வெற்றிக்குக் காரணம் அவன் கடவுளை இலிங்க வடிவில் பூசித்ததும். அசுவத்தாமா மூர்த்தி வடிவில் வழிபட்டதுமேயா மென வியாசமுனிவர் கூறுகின்றார். வேதங்களும் உபநிடதங்களும் இவ்வழிபாட்டைக் குறிப்பிடுகின்றன. தென்னிந்தியாவில் கற்கால லிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டன. வேதகாலத் துக்கு முற்பட்ட இலிங்கவடிவில் சிவ வழிபாடு இருந்ததெனக் கூறும் பி.தி. சீனிவாச ஐயங்கார் கூற்றுக்கு இது சிறந்த சான்றாகும். (திராவிட இந்தியா) ஆரியர் தமிழர்களோடு கலக்க நேர்ந்த ஞான்று ஆரியர் தமிழகத்தில் பரவியிருந்த சிறந்த பல கொள்கைகளைப் பின்பற்றித் தமது சமயத்தைச் சீர்திருத்தஞ் செய்து கொண்டனர். 1வேதகால நாகரிகம், ஹோமர் காலத்தைய கிரேக்கரது அல்லது கிறித்துவ ஆண்டின் தொடக்கத்தைய கெல்திய ஐரிஷ் மக்களது கிறித்துவ மதத்துக்கு முற்பட்ட தியுதேனியர் அல்லது சிலாவியரது நாகரிகத்தை ஒத்தது. வேதகால நாகரிகம் திராவிட மக்களின் சேர்க்கையால் மாற்ற மடைந்து இந்து நாகரிகமாக இதிகாசங்களில் காணப்படுகின்றது. மிகவும் முற்பட்ட காலத்தில ஆரியரின் வணக்கம் ஆகாயம் அல்லது ஒளியுடைய இயற்கைப் பொருள்களுக்கு மாமிசத்தை அல்லது கொழுப்பைப் பலியிடுவதாயிருந்தது. பலகாரங்களும் மதுவும் பலியாக வைக்கப்பட்டன. பிற்காலத்தில் ஓமம் அல்லது பலியினிடத்தைப் பூசை ஏற்றது. திராவிட மக்களின் விக்கிரக வணக்கம் ஆரியரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மாமிசம் புசியாமையும் அகிம்சையும் வளர்ச்சியடைந்தன. வேதக் கொள்கைகளுக்கு மேலாக ஆகமக் கொள்கை தலையெடுத்தது. இன்று இந்துக் கொள்கை என்பது வேத ஆகமக் கொள்கைகளின் கலப்பே. திராவிடரும் ஆரியரும் அருகிலே இருக்கவில்லை. 2உயர்ந்த சீர்திருத்தமுள்ள திராவிடரின் சேர்க்கையால் வேதமதம் கடவுட் கொள்கையுள்ள மதமாக மாறிற்று. எப்பொழுதும் ஆரியக் கொள்கைகள்தாம் மேலாக விருந்தன வென்று கருதவேண்டாம். ஆரியரல்லாதவர்களுக்கு ஆரியர் பணிந்த இடங்களுமுண்டு. வேதகாலக் கடவுளரில் தலைவரான இந்திரனுக்கும் கிருஷ்ணனுக்கும் நடந்த போராட்டமொன்று, சிவமதத்தன் எழுச்சி இன்னொன்று. (வேதக் கடவுளாகிய பிரமனின் சிரத்தைச் சிவன் கிள்ளி னான். பரமனை மதித்திடாப் பங்கயாசனன் ஒருதலை கிள்ளி!”) (சர். இராதாகிருஷ்ணன்) 4. நான்மறை தமிழர் சமயத்துக்குப் பிரமாண நூல்கள் நான்மறை. “நான்மறை முற்றிய வதங்கோட்டாசான்” என்னும் தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தால் பண்டை மறைகள் நான்கு இருந்தனவென்பது புலனாகும். இன்னும் சங்க நூல்கள் நான்மறையைக் குறித்துப் பல்லிடங்களிற் கூறின. “அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே” (தொல்-எ.102) என்பதால் அம்மறை இசையுடன் பயிலப்படுவது என்பது விளங்குகின்றது. அந்தணர் மறை என்றதனால் அம்மறைகள் அறவொழுக்கத்தின்பால் நின்றோராகிய அந்தணரால் பயிலப்பட்டனவென்பதும் அறியக் கிடக்கின்றது. துறவி களாகிய மறையவர்கள் வாக்கினின்றும் போந்த நிறைமொழிகளே மந்திரமெனப்படும். “வினையி னீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதனூ லாகும்” என முதனூலுக் கிலக்கணம் தொல்காப்பியத்திற் கூறப்பட்டுள்ளது. ‘ஆறறி அந்தணர்க் கருமறை பலபகர்ந்து” (கலி.கடவுள்) கல்லாலந் தண்ணிழற்கீழ்க் கலித்துறை பயந்த காமர்காட்சி நல்லானை நல்லா யொருபாக மாகிய ஞானத்தானை யெல்லாரு மேத்தத் தகுவானை யெஞ்ஞான்றுஞ் சொல்லாடாருக் கெல்லாந் துயரல்ல தில்லை தொழுமின் கண்டீர் (தொ.செ.மேற்கோள்) இன்னும் தேவார திருவாசகங்களில் பல்லிடங்களில் இறைவன் ஆலநீழலில் அமர்ந்து பக்குவம் வாய்ந்த நான்கு தவத்தர்களுக்கு மறைகளை அருளிச்செய்த வரலாறு கூறப்படுகின்றது. 1சங்க நூல்களில் ஆலமர் செல்வன் என்னும் பெயர் இறைவனுக்குப் பெயராக வந்திருக்கின்றது. தொல்காப்பியர் “செந்தமிழியற்கை சிவணிய நிலத்து” வழக்குக் கூறப்புகுந் தாராதலின், அவர் கூறிய மறைகள் சிந்துநாட்டாருக்குரியதன்றென்பது தானே பெறப்படும். “சதாசிவந் தத்துவம் முத்தமிழ் வேதம்” “தங்கி மிகாமைவைத் தான் தமிழ்ச் சாத்திரம்” “ஈறான கன்னி குமரியே காவிரி வேறா நவதீர்த்த மிக்குள்ள வெற்பேழுள் பேறான வேதா கமமே பிறத்தலான் மாறான தென்றிசை வையகஞ் சுத்தமே” “தமிழ்மண் டலமைந்துந் தாவிய ஞான முமிழ்வது போல வுலகந் திரிவர்” “அவிழு மணமுமெம் மாதி யறிவுந் தமிழ்மண் டலமைந்துந் தத்துவ மாமே” “செந்தமி ழாதி தெளிந்து வழிபடு நந்தி யிதனை நவமுரைத் தானே” (திருமந்திரம்) என வருவனவற்றால் தமிழருக்குரிய முதனூல்களாகிய மறைகள் தமிழில் இருந்தன வென்பது புலனாகும். வேதாகமங்கள் சதாசிவமூர்த்தி வாயிலாக வெளிவந்தன என்னும் ஐதிகமும், “சதாசிவந் தத்துவம் முத்தமிழ் வேதம்” என்னும் திருமந்திரமும், “மற்றவை தம்மை மகேந்திரத் திருந்து உற்றவைம் முகங்க ளாற்பணித் தருளியும்” என்னும் திருவாசகமும், “சதாக்கிய மென்னுந் தத்துவத்தில் வீற்றிருந்து சதாசிவ னமலன்றாள்” “நயந்தா ருயிரெல்லா நண்ணவற மாதி யியம்பினா னாகமநா லேழு” என்னும் சைவ சமயநெறியும், தென்னாட்டுச் சிவப் பிராமணர்கள் தங் கோத்திர முதல்வர்கள் சதாசிவமூர்த்தியின் முகங்களினின்றும் தோன்றி னார்களெனக் கூறுகின்றமையும் ஒத்த கருத்துடையனவாகக் காணப்பெறு கின்றன. தமிழ்மொழியிற் காணப்பட்ட மறைகளும் ஆகமங்களும் அங்கங் களும் இறந்துபட்டன. திருமந்திரம் ஞானாமிர்தம், சித்தாந்த சாத்திரங்கள் முதலியன பழைய தமிழர் மறைப்பொருள்களை அடிப் படையாகக் கொண்டெழுந்தனவேயாம். இப்பொழுது ஆரிய மொழியிற் காணப்படும் மறைகளும் அங்கங்களும் பிறவும் பழந்தமிழர் கைக்கொண்ட நூல்களாகமாட்டா. இருக்கு முதலிய நூல்கள் ஆரியர் இந்தியாவை அடைந்த பின்னர் அவர் களாற் பாடிச் சேர்க்கப்பட்ட பாடற்றொகைகளாகக் காணப்பெறு கின்றன. அவ்வேதங்கள் சிவபெருமானை முழுமுதலாக ஒப்புக்கொள்ள வில்லை. வேதங்கள், அக்னி, வாயு, சூரியன் முதலியவர்களால் வெளியிடப் பட்டன வென்று மனுப்பிரசாபதி கூறுகின்றார். யாகங்கள் நிறைவேறும் பொருட்டு இருக்கு, எசுர், சாமம் என்னும் பெயர்களையுடைய அநாதியான வேதத்தை அக்னி, வாயு, சூரியன் இவர்கள் மூவரிடத்தினின்றும் வெளிப்படுத்தினர் (பிரம்மா) (மனு. அத். 1-23) வேதங்கள் மூன்றென்னும் பொருளில் “வேதம் த்ரயீ” என்று நெடுகலும் வழங்கப்பட்டது; இருக்கு வேத பாடல்கள் : இவ் வேதத்தில் தொகுக்கப்பட்டுள்ள பாடல்களின் எண்.1028. இவை பல நூற்றாண்டுகளிற் பாடப்பட்டன. வேதகால வரலாற்றை அறிவதற்கு இப்பாடல்களே ஆதாரமாக வுள்ளன. நான்கு எனப்படும் வேதங்களும் வளர்ந்த முறைவருமாறு: பழைய வழக்கப்படி சில பாடல்கள் பலிகளிற் பாடப்பட்டன. ஆகவே. இப் பாடல்கள் வேததத்தினின்றும் பிரித்தெடுத்து ஒரு தொகுதியாக்கப்பட்டுச் சாமவேத மெனப்பட்டன. விசேடமான யாகம் செய்வதற்குரிய பிரமாணங் களும் அவைகளிற் பாடப்படும் பிரமாணங்களும் பிரித்தெடுத்துத் தொகுக்கப்பட்டு யசுர்வேத மெனப்பட்டன. பிற்காலப் பாடல்களும் பில்லி சூனியம் முதலிய கூறும் பகுதிகளின் திரட்டும் அதர்வணவேதமெனப் பட்டது. -இந்தியநாகரிகம்-உரோமஸ் சந்திரதத்தர். அமர சிம்ஹமும் மூன்றெனக் கூறுகின்றது.1 ஆரிய வேதங்களும் அங்கங்களும் பிறவும் மக்களாற் செய்யப்பட்டன வென்பது சிவத்தியா னானந்த மகரிஷி என்னும் அறிஞரால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட வேத பாடல்களைக் கொண்டும் இனிதறியலாகும். ஆரிய மறைகள் கொலை வேள்வியை வற்புறுத்திக் கூறும். வேதமார்க்கத்தைக் கைக் கொண்டு உஞற்றப்பட்ட கொலை வேள்விளைக் கண்டிப்பதற்கெழுந்ததே புத்தமதம்.“தக்கன் வேள்வித் தகர்தின்று நஞ்சமஞ்சி” (திருவாசகம்) என்பதால் யாகங்களிற் கொல்லப்படும் மிருகங்களின் ஊனை வேள்வி யாசிரியரும் பிறரும் பாதீடு செய்வது வழக்காறெனத் தெரிகின்றது. நீதி நூல்களும் சைவ நூல்களும் கொலை பாவமென விள்ளுகின்றன. ஆரிய மதம் தென்னாட்டில் வேரூன்றிய பிற்காலத்தில் சிறந்த அறிவாளிகளும் சிரார்த்தம் மகம் முதலியவற்றிற் செய்யப்படும் கொலை பாவமாகாதென நம்பத் தலைப்பட்டனர். இந்நம்பிக்கைக்குக் காரணம் கொலை வேள்வி களை வகுத்துள்ள வேதங்கள் கடவுள்வாய்ப் பிறந்தன என அன்னோர் விசுவாசித்தமையேயாம். “சமிதையெறும் பீக்குப் பிராயச்சித் தத்தை யவையடைவே செய்யென் றறைந்தாய்-இமையோர் சிசுக் கவரு நஞ்சுண்ட யாகத்திற் பசுக்கொலையேன் சொன்னாய் பகர்” (சிற்றம்பல நாடிகள்) “பூசுரர்க் கிழிவிலை யாகத்துயிர்கொன் றருந்தலின் விண்புகுதா நிற்பர் கோச மெடுத்துரை நவிற்றாசிரியர் சிறார்க்கி தமதுமுன் கொடுப்பான் முன்னர் ஆசுமிகு துயர்விளைத்தும் இதம்அதுவாப் பொருள்பெறலின் அரிய வேத ஓசைமிகு மமருலகை அவர்வதைத்த சீவனும்பெற் றுய்த லாலே” (கொலைமறுத்தல்) “குழைமுகந் தூங்குஞ் செம்மணிப் பசும்பொற் குண்டல வேதியர் நாளும் அழன்முகத் தாற்றும் அருமகத் தன்றிச் செந்தசை அருந்தின ரில்லை” (காசி காண்டம்) “அருமகத் தன்றியூன் சுவைத்துடல் வீக்குவோன்” (மேற்படி) “மருந்தில் திதியின் உயிருய்யும் வாயின் மகமதனில் அருந்தற் கியல்பதத் தெனினும்” (அருட்பிரகாசம்) மேற்காட்டியன முன் யாம் கூறியவற்றிற்கு எடுத்துக் காட்டுகளாகும். அப்பைய தீட்சிதர் தாம் வேள்வி ஆசிரியனாயிருந்து இயற்றிய மகத்தில் வெட்டிக் குவிக்கப்பட்டிருந்த மிருகங்களைப் பார்த்து, “ஓ வேதமே! உன்னை நம்பினேன்” எனக் கதறி ஓலமிட்டனராம்.1 8. உபநிடதம் உபநிடதங்கள் என்னும் நூல்கள் கி.மு.1000க்கும் கி.மு.300க்கு மிடையில் எழுந்தன. அக்காலத்தில் ஆரியப் பிராமணர்கள் உண்மை ஞானந் தேடிப் பலவிடங்களுக்கும் அலைந்து திரிந்தார்கள். இவ்வாறு திரிந்தவர்களுள் யாக்ஞவல்கி என்பவரும் ஒருவர். இவருடன் கூடிச் சென்றோர் சுவேதகேது, ஆருணேயர், சோமசுமசத்தியஞ்ஞர் என்போர். இவர்கள் திரும்பும் மார்க்கத்தில் கல்வியிற் சிறந்த சனகன் என்னும் விதேகநாட்டு அரசனை எதிர்ப்பட்டார்கள் . சனகன் அப் பிராமணர்களை நோக்கி நீவிர் அக்கினி கோத்திரத்தை எவ்வாறு செய்கிறீர் என்று வினவினான். அதற்கு யாக்ஞவல்கி சிறிது பொருத்தமாகவும் ஏனையோர் சிறிதும் பொருந்தாமலும் விடைகூறினார்கள். அதனைக் கேட்ட சனகன் இவ்வளவுதானோ என்று எள்ளித் தேர்மீதேறிச் சென்றான். யாக்ஞவல் கியை ஒழிந்த மூவரும் இராசன்னிய (அரச) வகுப்பைச்சேர்ந்த இவன் நம்மை இகழ்ந்தான் என நின்றுவிட்டார்கள். யாக்ஞவல்கி மாத்திரம் பின் தொடர்ந்து தேரோடு சென்று அதன் உண்மைப் பொருளைச் செவி மடுத்துத் தெளிந்தார். இது சதபதப் பிரமாணம் பதினோராவது புத்தகத்திற் கூறப்படுகின்றது. 1அக்காலத்தில் உபநிடத ஞானங்கள் அரசருக்கு மாத்திரம் தெரிந்தனவும் பிராமணர்கள் அறியாதனவுமாயிருந்தன. உபநிடதங்களிற் கூறப்படும் மறுப்பிறப்புக்கொள்கை வேதங்களும் பிராமணரும் அறியா தது, ஆரியருடைய நீதிநூல்கள் பிராமணன் மாத்திரம் குருவாயிருந்து வேதங்களை மூன்று வருணத்தாருக்கும் கற்பிக்கலாமெனக் கூறுகின்றன. ஆனால் பிராமணர் அரசர்களிடத்தில் மாணாக்கராக விருந்து உபநிடத உண்மைகளைப் பயின்றார்கள். பெண்களும் அரசவகுப்பினரல்லாதாரும் உபநிடதஞானம் நிறைந்தவர்களாக விளங்கினர். யாக்ஞவல்கியுடன் எதிர்வாதம் புரிந்தவர்களுள் வச்சக்னு என்பவரின் புதல்வியாகிய கார்கி என்னும் பெண் ஒருத்தி. ஆகவே உபநிடதம் பிராமணருக்கோ ஆரியருக்கோ உரியன வல்ல என்பது நனி விளங்குகின்றது. உபநிடதம் என்பதற்குக் கிட்ட இருத்தல் என்பது பொருள். மாணாக்கன் ஆசிரியனுக்குக் கிட்ட இருந்து உயர்ந்த ஞான இரகசியங் களைப் பெறுதல் என்னும் பொருளில் உபநிடதம் என்னும் பெயர் ஆளப் பட்டு வந்தது. இஃது இரகசியம் எனவும் வழங்கப்பட்டது. உபநிடதம், புத்தக வடிவாக எழுதப்படாது குரு மாணாக்கனுக்கு விளக்கும் சில உண்மை இரகசியமாக இருந்த வந்தது. இஃது இறைவன் தக்கணாமூர்த்தி யாகக் கல்லாலின் கீழிருந்து சனகாதி நால்வர்க்கு ஞான மருளியது; தாயுமானவருக்கு மோனகுரு ஞானோபதேசஞ் செய்தது; மெய்கண் டாருக்குப் பரஞ்சோதி முனிவர் ஞானமருளியது போன்றது. ஆகவே உபநிடத ஞானங்கள் மறை வேதம் எனப்பட்டன. வேதம் என்பது ‘வே’ என்னும் அடியாகப் பிறந்து மறைக்கப்பட்டுள்ளது என்னும் பொருள் தருவது. உபநிடத உண்மைகளைப் பக்குவருக்கன்றி ஏனையோருக்கு உபதேசித்தல் கூடாதென உபநிடதங்கள் வற்புறுத்துகின்றன. ஆரிய மொழியில் உள்ள வேதங்கள் இவ்வாறு மறைபொருளுடையனவும் மறைத்துக் கூறப்படுவனவுமல்ல. ஆகவே, அவை பிற்காலத்தில் தமிழ் மக்கள் வழங்கிய வேதம் என்னும் பெயரையே தமது சமயப் பாடல் களுக்கும் இட்டாராதல் வேண்டும். தீக்கை முதலிய சமய சம்பிரதாயங்கள் இவ்வுபநிடத வழக்குகளைப் பின்பற்றியனவே. இவை பழைமைதொட்டுத் தமிழர்களிடையே காணப்படுவனவாகும். 6. வாணிகம் தமிழ்மக்கள் காலிற் பிரிவதோடு கலத்திற் பிரிந்துங் கடல்கடந்தும் வியாபாரஞ் செய்துவந்தார்கள். ‘காலிற் பிரிதல்’1 ‘கலத்திற் பிரிதல்’ என வரூஉம் பழந்தமிழ் நூல்களின் வழக்கும், “திரைகட லோடியுந் திரவியம் தேடு” என்னும் பழமொழியும் தமிழர் கடல் கடந்து செய்த வாணிகப் பெருக்கத்தை உணர்த்தும். “முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை” என்னும் தொல்காப்பியச் சூத்திரமும் தமிழ்மக்கள் பொருளீட்டுவதற்குக் கடல்கடந்து தூர தேசங்களுக்குச் சென்றார்க ளென்பதை நன்கு காட்டும். சாலமன் அரசனுடைய காலத்திற் பினீசிய நாட்டுக் கரசனாகத் தையர் என்னும் பட்டினத்தில் இருந்தோன் ஹிராம். பினீசியர் மாலுமித் தொழிலிற் சிறந்தவர்கள் இவர்களைத் துணைக்கொண்டு சாலமன் அரசனுடைய கப்பல்கள் கிழக்குத் தேசங்களுக்குச் சென்று ஓபீர் (உவரி) என்னுந் துறைமுகத்திற்றங்கிப் பொன், வெள்ளி, யானைத்தந்தம், மயில், குரங்கு, நவமணி முதலியவற்றை ஏற்றிக்கொண்டு திரும்பின. எபிரேய அரசனான சாலமன் கி.மு.1000 வரையிற் சீவித்தவன். தமிழ்நாட்டினின்றும் சென்ற ஒவ்வொரு பண்டங்களும் எபிரேய நாட்டில் தமிழ்ப் பெயர் களாலேயே அறியப்பட்டன. தமிழ் அகில், எபிரேயமொழி அஹல்; தமிழ் தோகை (மயில்) எபிரேய மொழி துகிம்; தமிழ் கவி (குரங்கு), எபிரேயமொழி கொல். கிரேக்கமொழியில் ஒரிசா என்பது அரிசி என்னும் தமிழ்ச்சொல் லின் திரிபு. பெப்பரி என்பது திப்பிலி என்பதன் திரிபு. கிரேக்கரும் தமிழ் நாட்டிலிருந்து அரிசி மிளகு முதலிய பொருள்களை வாங்கிச் சென்றனர். கி.பி.முதல் நூற்றாண்டில் விளங்கிய பிளினி என்னும் உரோம ஆசிரியர் இந்தியாவிலிருந்து உரோம ராச்சியத்துக்கு ஏற்றுமதியாகுஞ் சரக்குகள் ஆண்டொன்றிற்கு 55,000,000 செஸ்டேர்ஷிகள் (987,000 தங்க நாணயம்) பெறுமதியானவை என்று கணக்கிட்டிருக்கின்றார். இன்னும் அகஸ்துசீசர் முதல் சேனோ ஈறாகவுள்ள ஒவ்வொரு உரோம அரசரின் நாணயங்களும் தென்னிந்தியாவிற் பலவிடங்களிற் கண்டெடுக்கப்பட் டிருப்பதனால் உரோம நாட்டாருக்கும் தமிழ் நாட்டாருக்கும் கி.பி.5ஆம் நூற்றாண்டுவரையும் இடைவிடாத தொடர்பிருந்தமை ஒரு தலையாகும். அரேபிய நாட்டுக் குதிரைகளும் தமிழ் நாட்டுத் துறைமுகங்களில் இறக்குமதியாயின. இக்குதிரை வியாபாரங் காரணமாகவும்., பின்னர்க் கப்பல் மீகாமன் தொழில் காரணமாமகவும், அரேபியர் தென்னிந்தியா இலங்கைக் கரையோரங்களில் சில பாகங்களைத் தங்குமிடமாக்கி நாளடைவில் அங்குக் குடிபதிகளாய் விட்டனர். பாபிலோனில் சுமேரிய அரசரின் தலைநகரமாகிய ‘ஊரின்’ இடிபாடுகளில் மலையாளக் கரைகளில் மாத்திரம் வளருகின்ற தேக்கமரத் துண்டொன்று கண்டெடுக்கப்பட்டது. இதனால் 5000 ஆண்டுகளுக்கு முன் சுமேரியர் தமிழகத்தோடு வியாபாரப் போக்குவரத்துடையவர்களா யிருந்தார்களெனப் புலனாகின்றது. கி.மு.1462இல் பதினெட்டாவது தலைமுறையாக முடிவெய்திய எகிப்திய அரசரின் “மம்மீஸ்” என்னும் பிரேதங்கள் இந்திய மசிலின் துணி களால் மூடப்பட்டிருந்தன. எகிப்தியர் இந்தியாவில் கிடைக்கும் அவுரியி லிருந்து எடுக்கப்படும் நீலத்தினால் ஆடைகளுக்குச் சாயமூட்டினார்கள். இந்தியாவினின்றும் பிறநாடுகளுக்குச் சென்ற வியாபாரப் பொருள்களுள் பட்டு, மசிலின் முதலியன சிறந்தவை. தமிழர் சுமத்திரா, சாவா, மலாயா முதலிய நாடுகளோடும் வியாபாரம் நடத்தி வந்தார்கள். இதற்குச்சான்று மணிமேகலையிலுள்ளது. அக்காலத்துக் காலினுங் கலத்தினும் வந்திறங்கிய பண்டங்கள் வருமாறு: “நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் தென்கடன் முத்தும் குணகடற் றுகிரும் கங்கை வாரியும் காவிரிப் பயனும் ஈழத் துணவும் காழகத் தாக்கமும் அரியவும் பெரியவும் நெளிய வீண்டி” (பட்டினப்பாலை) வியாபாரிகள் தாம் கொடுக்கல் வாங்கல் செய்யும் பண்டப் பொதிகளில், அவற்றின் நிறை, அளவு, எண், இவற்றை எழுதிச் சாலைகளில் அடுக்கி வைத்துப் பின்பு எடுத்துச் செல்வர். இவ்வுண்மை, “வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி கடைமுக வாயிலும் கருந்தாழ்க் காவலும்” என்னும் சிலப்பதிகார வடிகளால் விளங்கும். வட இந்திய வியாபாரத்திலும் தென்னிந்திய வியாபாரம் முக்கிய முடையதெனக் கௌட்லியர் கருதினார்.1 தெற்கிலிருந்து மிக அரிய பண்டங்கள் கிடைத்தன. வட நாடு கம்பளி, தோல், குதிரை என்பவைகளை மாத்திரம் அளித்தது. பொன், வயிரம், முத்து மற்றை இரத்தினக் கற்கள் சங்கு முதலியன தெற்கிலிருந்து கிடைப்பனவாகக் குறிப்பிட்டுள்ளன. -ஆக்ஸ் போர்ட் இந்திய வரலாறு பக்கம் 68,69 7. கைத்தொழில் தமிழ்நாட்டின் வளனும் தொழின் முறைகளும் இந்நாட்டார் பண்டை நாளில் பிற நாட்டாரோடு செய்து வந்த வாணிகப் பெருக்கை நோக்குழி நன்கு புலனாகும். பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்-கட்டும் நுண்வினை கண்டவர்கள் நம் மக்கள். அக்காலத்தில் வழங்கி வந்த பட்டாடைகளின் பெயர் சிலப்பதிகாரத்திற் சொல்லப்படுகின்றன. அவற்றின் பெயர்கள் கேட்பதற்கு இன்பம் பயப்பனவாம். அவை வருமாறு:- “கோசிகம், பீதகம், பஞ்சு, பச்சிலை, அரத்தம், நுண்டுகில், சுண்ணம், வடகம், இரட்டு, பாடகம், கோங்கலா, கோபம், சித்திரக்கம்மி, குருதி, கரியல், பேடகம், பரியட்டக்காசு, வேதங்கம், புங்கர்க்காழகம், சில்லிகை, தூரியம், பங்கம், தத்தியம், வண்ணடை, கவற்றுமடி, நூல்யாப்பு, திருக்கு, தேவாங்கு , பொன்னெழுத்து, குஞ்சரி, தேவகிரி, கத்தூலம், இறஞ்சி, வெண்பொத்தி, செம்பொத்தி, பணிப்பொத்தி.” “நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்து அரவுரி யன்ன யறுவை நல்கி” (பொருநராற்றுப்படை) (உரை) கண்ணிற்பார்வை, இஃது இழைபோன வழியென்று குறித்துப் பார்க்க வராத நுண்மை உடையவாய்ப் பூத் தொழில் முற்றுப் பெற்றமையால் பாம்பின் தோலையொத்த துகிலைக் கொடுத்து, “காம்பு சொலித்தன்ன அறுவை” (உரை) மூங்கிலாடையை உரித்தாலொத்த மாசில்லாத உடை. “ஆவி யன்ன அவிர் நூற் கலிங்கம்” (பெரும்பாண்) “புகைவிரித் தன்ன பொங்குதுகி லுடீஇ” (புறம்) தமிழகத்தில் ஆடை நெய்யப்பட்டுப் பிறநாடுகளுக்கனுப்பப் பட்டது. முற்காலத்து வீடுகளி லிருந்து கொண்டே அருமையான ஆடை வகைகள் நெய்தற்குரிய நுண்ணிய நூலிழைகள் முழுதும் வீட்டுப் பெண்களால் நூற்கப்பட்டன. இதற்குச் சான்று. “பருத்திப் பெண்டின் பனுவ லன்ன” (உரை. பருத்தி நூற்கும் பெண்டாட்டியது சுகிர்ந்த பஞ்சுபோல) என்னும் புறப்பாட்டாகும். “பஞ்சிதன் சொல்லாப் பனுவ லிழையாகச் செஞ்சொற் புலவனே சேயிழையா-எஞ்சாத கையேவா யாகக் கதிரே மதியாக மையிலா நூன்முடியு மாறு” (நன்னூல்) மரம், இரும்பு, வெண்கலம், வெள்ளி, பொன் முதலிய வற்றில் நுட்பம் வாய்ந்த தொழில் புரியும் கம்மியரும் பிற தொழிலாளரும் அக் காலத்து இருந்தார்கள் என்பது சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய நூல் களால் அறியப்படும். 8. ஓவியம் தமிழ்மக்கள் ஓவியப் பெற்றியை விரித்துக் கூற வேண்டியதில்லை. பழைய சோழர் கட்டிடங்களும், பழைய கோயில்களும், அமராவதி, மாவலிபுரம் முதலியவிடங்களிலுள்ள சிற்ப நுட்பங்களும், பழந்தமிழ் மக்கள் அணிகலன்களும் அவர்கள் பாட்டுக்களும் தமிழோவியத்தின் உயர்விற்கு நிலைக்களங்களாயிருக்கின்றன. தாகூர் முதலிய கவிவாணரும் தமிழர் ஓவியத்தைப் போற்றியிருத்தல் கவனிக்கத்தக்கது, “நெடுநிலை மாடத் திடைநிலத் திருந்துழி’ என்றும், ‘வேயா மாடமும்’ என்றும், ‘மான்கட் காலதர் மாளிகையிடங்களும்’ என்றும் இளங்கோவடிகள் தமிழ் நாட்டுக் கட்டிடங்களைச் சிறப்பித்திருத்தல் காண்க. “சுடும ணோங்கிய நெடுநிலை மனைதொறு மையறு படிவத்து வானவர் முனிவர் எவ்வகை யுயிர்களும் உவமங் காட்டி வெண்சுதை விளக்கத்து வித்தக ரியற்றிய கண்கவ ரோவியங் கண்டுநிற் குநரும்” (மணிமேகலை) மனிதர், மிருகங்கள், கடவுளர் முதலியோர் வடிவங்கள் பலவகை நிற மைகளினால் வீடுகள், அரண்மனைகள், கோயில்கள் முதலியவற்றின் சுவர்களில் தீட்டப்பட்டிருந்தன. “இந்திரன் பூசை யிவளக லிகையிவள் சென்ற கதவுமன் சினனுறக் கல்லுரு வொன்றிய படியிதென் றுரைசெய் வோரும் இன்னம் பலபல வெழுத்துநிலை மண்டபம்” (பரிபாடல்) 9. சிற்பம் “கல்லு முலோகமும் செங்கலு மரமும் மண்ணுஞ் சுதையுந் தந்தமும் வண்ணமும் கண்டசர்க் கரையு மெழுகு மென்றிவை பத்தே சிற்பத் தொழிற்குறுப் பாவன” என்னும் திவாகரச் சூத்திரமே தமிழர் சிற்பத் திறமைக்குச் சான்று. 10. வான ஆராய்ச்சி தமிழ்மக்கள் வான ஆராய்ச்சியில் வல்லுநராயிருந்த ரென்பது, “செஞ் ஞாயிற்றுச் செலவு மஞ்ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் வளிதிரிதரு திசையும் வறிது நிலைஇய காயமு மென்றிவை சென்றளந் தறிந்தோர் போல வென்று மினைத்தென் போரு முளரே” என வரும் புறப்பாட்டால் அறியப்படும். நிகண்டு நூல்களில் நாள் கோள் ஓரை முதலியவற்றைக் குறிக்கக் கூறப்படும் பல பெயர்களை ஆராய்ச்சி செய்வதால் தமிழர் வானாராய்ச்சியில் சிறந்து விளங்கினார்கள் என்பது புலனாகும். 11. சோதிடம் “மறைந்த ஒழுக்கத் தோரையு நாளுந், துறந்த வொழுக்கங் கிழவோற் கில்லை,” “குடையும் வாளும் நாள் கோள்” என்னும் தொல்காப்பியச் சூத்திரங்கள், “கேடில் விழுப்புகழ் நாடலை வந்தென” திங்கள் சகடம் வேண்டிய துகடீர் கூட்டத்து” என வரூஉம் அகப்பாட்டுக்கள் முதலியன தமிழரின் சோதிட உணர்ச்சியை விளக்கும். “டாக்டர் தீபா தக்கணத்தில் தமிழ்ப்பாஷை வழங்குமிடத்தில் சௌர அல்லது வாக்கிய சித்தாந்தமே உபயோகப் படுத்தப்படுகின்றதென உவாரன் ஆசிரியர் கூறியுள்ளாரென்றும், அது பிழையற்ற தென்றும் குறித்துள்ளார். மேலும் வேதாங்க சோதிடத்திற் கண்ட சாந்திரமான கணிதம் பிழைபட்ட தெனத் திவான் பகதூர் திரு.சாமிக்கண்ணு பிள்ளை அவர்களது 1916 ஆம் வருடத்துச் சர்வ கலா சங்க சோதிடச் சொற்பொழிவுகளை ஊன்றி நோக்கப் புலனாம். தென்னாட்டில் தொன்று தொட்டு வழங்கிவந்தது புலீசனால் இயற்றப்பட்ட வாக்கிய கணன முறை” (செந்தமிழ் ++No.5) 12. போர்க் கருவிகள் முதலியன “அரசனுக்கு நால்வகைச் சேனைகளுமிருந்தன. பல படைவீரர் பழகுவதற்காகத் தேரேறுமிடங்களும் குதிரை யேறுமிடங்களும் (செண்டுவெளி) வாட்தொழில் செய்யுமிடங்களும், விற்போர் செய்யு மிடங்களுமிருந்தன. வில்லும் வேலும் வாளுமே இவருடைய முந்திய ஆயுதங்கள். குந்தம், சக்கரம் முதலிய ஆயுதங்களுமிருந்தன. தம்முடைய மெய், வாய் முதலிய படைகளால் ஊறுபடாமலிருத்தற்குக் கேடய மென்னும் மெய்காப்புக் கருவியும் உபயோகித்தனர். இக்கருவி கரடித் தோலாற் செய்யப்பட்டதென்பது தெரிகிறது. புலித்தோலாற் செய்த கவசத்தை வீரர்களணிந்து கொள்வது வழக்கம். வாகனங்களிலேறாத வீரர் கவசம் பூணுதல் மரபன்று. விளையாட்டுகளுள்ளே யானைச்செண்டு குதிரைச் செண்டு என இருவகையுண்டு. இவை யாடும் முற்றவெளியைச் செண்டுவெளி யென்ப. யானைப் போர் அக்காலத்து மிகச் சிறந்தது போலும். யானைகள் நெருங்கி வந்து போர் செய்யாமலிருத்தற்கு இரும்பால் யானை நெருஞ்சி முள்ளாகச் செய்யப்பட்ட கப்பணமென்னுங் கருவியைச் சிதறுவார்கள். யானை மருப்பையறுத்துக் கூர்மையிட்டு அது வலிகொள்ளும்படி கிம்புரியென்னும் பூணிடுவார்கள். நகரின் மதிலைச் சாரயானைக் கூட்டங்களிருந்தன. மதிலுக்கு உள்ளேயும் புறத்தேயும் ஆழமான அகழிகள் இருந்தன. புறத்தே அகழியினின்றும் கோயில் அகழிக்கு நீர் வருவதற்காகக் கால்வாய்கள் செய்யப்பட்டிருந்தன. வீதியிற் செல்லும் யானைகள் அதனுள் விழாதிருத்தற் பொருட்டு இது மேலே மூடப்பட்டிருக்கும். இக் கரந்த கற்படை கரந்துபடையெனவும் கரந்துறை யெனவும் வழங்கும். இம்மதிலிலே பலவகைப் பொறிகளிருந்தன வென் பதும் அவை யவனரால் இயந்திரிக்கப்பட்டனவென்பதும் கூறப்பட்டுள. யுத்தத்துக்குச் செல்வோர் பலவகை மாலை சூடிக்கொள்வது வழக்க மென்பதுமறிகிறோம்.” (செந்தமிழ்ச் செல்வி) 1. அரண் “அது வஞ்சனை பலவும் வாய்த்துத், தோட்டி முள் முதலியன பதித்துக் காவற்காடு புறஞ்சூழ்ந்ததனுள்ளே இடங்கர் முதலியன உள்ளுடைத்தாகிய கிடங்கு புறஞ்சூழ்ந்து யவனரியற்றிய பல பொறிகளும் ஏனைய பொறிகளும் பதணமும் மெய்புழை ஞாயிலும், ஏனைய பிறவு மமைந்து. எழுவுஞ் சீப்பு முதலியவற்றால் வழுவின்றமைந்த வாயிற் கோபுரமும் பிற வெந்திரங்களும் பொருந்த இயற்றப்பட்டதாம். “இனி மலையரணும் நிலவரணும் சென்று சூழ்ந்து நேர்தலில்லா ஆரதர் அமைந்தனவும் இடத்தியற்றிய மதில்போல வடிச்சிலம்பின் அரண மைந்தனவும் மீதிருந்து கணை சொரியும் இடமும் பிற வெந்திரங்கள் அமைந்தனவும் அன்றிக் காட்டரணும் அவ்வாறே வேண்டுவன அமைந்தனவாம். (நச்சினார்க்கினியர்) “மறனுடை மறவர்க் கேறவிட னின்றி நெய்யோ டையவி யப்பியெவ் வாயு மெந்திரப் பறவை யியற்றின நிறீஇக் கல்லுங் கவணுங் கடுவிசைப் பொறியும் வில்லுங் கணையும் பலபடப் பரப்பிப் பந்தும் பாவையும் பசுவரிப் புட்டிலு மென்றிவை பலவுஞ் சென்றுசென் றெறியு முந்தை மகளிரை யியற்றிப் பின்றை யெய்பெரும் பகழி வாயிற் றூக்கிச் சுட்டல் போயின் றாயினும் வட்டத் தீப்பாய் மகளிர் திகழ்ந லம்பேர நோக்குநர் நோக்குநர் நொந்துகை விதிர்க்குந் தாக்கருந் தானை யிரும்பொறை பூக்கோட் டண்ணுமை கேட்டொறுங் கலுழ்ந்தே” (பொன்முடியார்) அரண்மனை வாயிலில் பந்து பாவை முதலியன தூக்கப்பட் டிருந்தன. “வரிப்புனை, பந்தொடு பாவை தூங்க” (முருகு) பகை அரசரைப் பெண்களாகப் பாவித்து அவர்கள் விளையாடுதற்கென்றே அவை கட்டப்பட்டன. 2. மதிற் பொறிகள் முதலியன வளைவிற் பொறி (இது வளைந்து தானே எய்து), கருவிரலூகம் (இது குரங்குபோலிருந்து சேர்ந்தாரைக் கொல்வது) கல்லுமிழ் கவண், கல்லிடு கூடை (இடங்கணி யென்னும் பொறிக்குக் கல்லிட்டு வைக்குங் கூடை) தூண்டில் (இது தூண்டில் வடிவாகச் செய்து, அகழியிலிட்டு மதிலேறுவார் அதிற் சிக்கியபின் இழுத்துக்கொள்வது), தொடக்கு (கழுத்திற் பூட்டி யிழுக்கும் சங்கிலி), ஆண்டலை யடுப்பு (சேவல் வடிவாகச் செய்யப்பட்டுப் பறக்கவிட உச்சியைக் கடித்து மூளையை எடுப்பது) , கவை (இது மதிலேறின் மறியத்தள்ளும் ஆயுதம், கழு, புதை (அம்புக்கட்டு), ஐயவித் துலாம் (இது கதவை யணுகாதபடி அம்புகள் வைத்தெய்யும் யந்திரம்), கைபெயர் ஊசி (மதிற் றலையைப் பற்றுவாரைக் கையைப் பொதிர்க்கு மூசி), எறி சிரல் (இது சிச்சிலி வடிவாய்க் கண்ணைக் கொத்து மாயுதம்), பன்றி (இது மதிற் றலையில் ஏறினாருடலைக் கோட்டாற் கிழிக்க இரும்பாற் செய்தது), பனை (மூங்கில் வடிவாகச் செய்து அடித்தற் கமைத்த பொறி), எழு, சீப்பு, கணையம், கோல், குந்தம், வேல், சதக்னி, தள்ளி வெட்டி, களிற்றுப் பொறி, தகர்ப் பொறி, விழுங்கும் பாம்பு, கழுகுப் பொறி, அரிநூற் பொறி, ஞாயில் (குருவித்தலை) பிண்டி, பாலம், எழு, மழு, வாள், கவசம், தோமரம், கதை, தண்டம், நாராசம், இரும்பு முள், கழுமுள், கூன்வாள், சிறுவாள், கொடு வாள், அரிவாள், சுழல் படை, ஈர்வாள், உடை வாள்,கைவாள், கணையம், கோடாலி, தோட்டி,வேல், வச்சிரம், குறுந்தடி, ஈட்டி, கவண், சிறுசவளம், பெருஞ் சவளம், சக்கரம், கன்னம், உளி, பாசம், தாமணி, சாலம், ஊசி, முசுண்டி, முசலம், இடங்கணி, அள்பலகை முதலியன. கடலோட்டுக்கதை ஆயுதங்கள் தொண்ணூற்று நாலு என்று சொல்கின்றது. 13. வீரத்தாயர் நமக்கு வெறுங் கட்டுக்கதைகள் போலத் தோன்றும் வீரச்செயல் களைப் பண்டைத் தமிழப் பெண்களிடத்திற் காண்கின்றோம். தமிழ்த் தாய்மாரே தம் புதல்வரை வீரச் செயல்களில் ஊக்கிவிட்டார்களென விளங்குகின்றது. பொன்முடியாரென்னும் பெண்புலர் தாய் தந்தை அரசன் மகன் முதலியவர்க்குப் கடமைகள் இன்ன வென்பதை அடியில் வருமாறு கூறுகின்றார்: ஈன்று புறந்தருதல் என்றலைக் கடனே சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே வேல்வடித்துக கொடுத்தல் கொல்லற்குக் கடனே ஒளிறுவா ளருஞ்சம முருக்கிக் களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே (புறம்) இப்பாட்டால் அக்காலத்து வீரத்தாயரது மனநிலை இத்தகையதென்பது வெளிப்படும். மற்றொரு வீரத்தாயைப் பற்றி பூங்கணுத்திரை என்னும் பெண்புலவர் பின்வருமாறு கூறுகின்றார்: மீனுண் கொக்கின் றூவி யன்ன வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன் களிறெறிந்து பட்டன னென்னு முவகை ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர் நோன்கழை யலம்வரும் வெதிரத்து வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே. (புறம். 177) (இ-ள்) கொக்கின் இறகுபோல நரைத்த கூந்தலையுடைய முதியவள் தன் புதல்வன் போரிலே யானையை வீழ்த்திக் கொன்று தானும் மடிந்தானென்னுஞ் செய்தி கேட்டுத் தான் அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியினும் அதிக மகிழ்ச்சியடைந்தாளென்பது. அதனால் அக்காலத்தே வீரத்தாயாரான பெண்டிர், தாம் புதல்வரைப் பெறுவது ஓர் அற்ப வீரச்செயலையேனும் அவரிடங் கண்டு மகிழ்தற்கே என்று கருதின ரென்பதும், அவர் வீரச்செயலில் அப் பெண்டிர்க்கு மனமகிழ்ச்சியே யன்றித் துக்கமில்லையென்பதும் நன்கு விளங்கும். வீரத்தாய் ஒருத்தி தன் ஒரே மகனைப் போருக்கு அனுப்புகின்ற மாட்சியை ஒக்கூர் மாசாத்தியார் என்னும் பெண்புலவர் வியந்தும் இரங்கியும் அடியில் வருவாறு கூறு கின்றார். “கெடுக சிந்தை கடிதிவள் துணிவே மூதில் மகளி ராதல் தகுமே மேனாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை யானை எறிந்து களத்துஒழிந் தனனே நெருநல் உற்ற செருவிற் கிவள்கொழுநன் பெருநிரை விலங்கி ஆண்டுப் பட்டனனே இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித் துடீஇப் பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி ஒருமக னல்லது இல்லோள் செருமுக நோக்கிச் செல்கென விடுமே” (புறம்: 274) (இ-ள்) (ஒருதாய்) முன்பு அவள் தகப்பன் யுத்த களத்தில் யானையை எறிந்து இறந்து போயிருப்பவும், சமீபத்தில் நடந்த போரில் தன் கணவன் பகைவரைக் கொன்று தானும் மடிந்து போயிருப்பவும், இவற்றிற்காக மனந்தளர்வின்றிப் பகைவரின் போர்ப்பறை ஒலிப்பதைக் கேட்டு மகிழ்ச்சி மிகுந்து, தன் சிறுவனுக்கு ஆடை அணிவித்து, அவன் குடுமியை எண்ணெ யிட்டுச் சீவிமுடித்து, தான் ஒரே மகனையுடையவளாயிருந்தும், சிறிதும் கலங்காது போர்க்களம் நோக்கிச் செல்க என்று அவனை அனுப்புகின் றாள், இச் செய்கையைக் கண்ட என் மனம் கெடுவதாக: இவள் துணிவு அஞ்சத்தக்கதாம்; பழைய வீரக்குடியிற் பிறந்தவளென்பது இவட்குத் தகுமென்பது; இதுபோலவே புறப்பொருள் வெண்பாமாலையுடையாரும் கூறியதாவது: “கன்னின்றா னெந்தை கணவன் களப்பட்டான் முன்னின்று மொய்யவிந்தா ரென்னையர்-பின்னின்று கைபோய்க் கணையுதைப்பக் காவலன் பின்னோடி எய்போற் கிடந்தானென் ஏறு.” அஃதாவது:- கல்லிலே பொருந்தி நின்றான் என் தகப்பன்; என் கணவன் போர்க்களத்திலே பட்டான்; பகைவர் முன்னின்று எதிர்த்து யுத்தத்திலே விழுந்தார் என் தமையன்மார்; தன் சேனை அழியவுந் தான் அழியாமல் பின்னே நின்று, தன் கைசென்று அம்பைச் செலுத்தப் பகை யரசன் மேலே பாய்ந்து, பின் முள்ளம்பன்றி போலப் பட்டுக்கிடந்தான் என்னுடைய தலைவன். இதிலும் அதிசயமான வீரத்தன்மையைப் புறம் 278 ஆம் பாட்டில் காண்கிறோம். அதன் தாற்பரியம் யாதெனில், வயதுமுதிர்ந்த ஒருதாய் தன் சிறுவன் யுத்தத்தில் வலியழிந்து புறங்கொடுத் தோடினனென்று பலர் சொல்லக்கேட்டு, அவ்வாறு அவன் புறங்கொடுத்தோடினனாயின், அவன் பாலுண்டு வளர்தற்குக் காரணமாயிருந்த உறுப்புக்களை யறுத்திடுவே னென்று வாளைக் கையிற்கொண்டு போர்க்களம் புகுந்து, வீழ்ந்து கிடக்கும் பிணங்களைப் புரட்டித் தேடி வருபவள், இருதுண்டாய்க் கிடந்த தன் மகன் உடலைக் கண்டு, அவனைப் பெற்றபோதடைந்த மகிழ்ச்சியினும் அதிக மகிழ்ச்சியடைந்தாளென்பதாம். இவ்வீரம் அணைகடந்து வீராவேசமாய் வெளிப்பட்டதுமுண்டு. தமிழ்ப்பெண்கள் தம் வீரமக்கள் போர்க்குச் சென்று அங்கே சிறிது மானத் தாழ்வான செயலைச் செய்துவரின் அம்மக்களைச் சினந்து வெறுப்பர். ஒரு தாய் தன் மகன் பகைக்களிற்றின் மேலே வேலை யெறிந்து, அவ்வேலைத் திரும்பப் பெறும் ஆற்றலில்லாத வெறுங் கையனாய்ப் புறங் கொடுத்தது கண்டு, “வாதுவல் வயிறே வாதுவல் வயிறே நோகேன் அகத்தை நின்னீன் றனனே பொருந்தா மன்னர் அருஞ்சம முருக்கி அக்களத் தொழிதல் செல்லாய் மிக்க புகர்முகக் குஞ்சரம் எறிந்த எஃகம் அதன்முகத் தொழிப நீபோந் தனையே அதனால், எம்மில் செய்யாப் பெரும்பழிசெய்த கல்லாக் காளையை ஈன்ற வயிறே” (தகடூர் யாத்திரை) என்று கூறி மிகவும் வெறுத்தனள். இவ்வாறு தமிழகம் முன்னாளில் அறிவாற்றல் மிகுந்த வீரத் தாயர்களை உடையதாகி, அருமை பெருமை கொண்ட செயல்களுக்கு உரிய நிலைக்களமாயிருந்தது. 14. காவல் மரம் காவல்மரமென்பது பண்டைக்காலத்துத் தமிழரசர் ஒவ்வொரு வரும் தங்கள் வெற்றிக்கறிகுறியாக ஒவ்வோர் மரத்தைத் தமதூர்ப் புறத்துச் சோலைகளில் வைத்து வளர்த்து அதனைக் குறிக்கொண்டு காப்பார்கள். படையெடுத்துவரும் பகைவேந்தர்கள் அக் கடிமரத்தையே முதற்கண் தடிய முற்படுவார்கள்; அங்ஙனம் அவர்கள் அதனைத் தடிந்துவிடுவார்களானால், அம் மரத்துக்குரிய அரசருக்குப் பெருந்தோல்வியும், பேரவமானமும் எய்தியதாகக்கருதப்படும். பகைவேந்தர்கள் அம்மரத்தில் தம் யானை களைக் கட்டுதலும், அதனை வெட்டிக்கொண்டு போய்த் தங்கள் யானை கட்குக் கட்டுத்தறியாக நட்டு வைத்தலும், அம்மரத்தால் தங்களுக்கு வீர முரசஞ் செய்தலும் மரபு. 15. தமிழ் வேந்தரின் போர் ஒழுக்கம் முதலியன தமிழ் மூவேந்தரும் சிற்றரசரும் நெடுகலும் போர் தொடுத்துக் கொண்டிருந்தனர். ஒருமுறை உறையூருக்கணித்தில் ஒன்பது சோழ இளவரசர்கள் சேரன் செங்குட்டுவனால் தோற்கடிக்கப்பட்டனர். சேர நாட்டின் ஒரு பகுதியாகிய பூழிநாடு சேரனாலும் பாண்டியனாலும் வென்று தோற்கடிக்கப்பட்டது. கோட்டையைச் சூழ்ந்து அகழும், அகழைச் சூழ்ந்து காவற்காடும் இருந்தன. அவற்றுள் ஒரு மரம் அரசனால் மிகவும் பரிசுத்தமாகக் கருதப்பட்டது. அதற்குக் காவல்மரமென்பது பெயர். போரில் பகை வேந்தனின் முதல் வேலை காவல் மரத்தை வெட்டி அதனால் முரசு இணக்குவதாகும். வீடுகளுக்கு எரியிடுதல், ஆடு மாடு முதலிய வற்றைச் சூறையாடுதல், அகழிகளை யானையால் தூர்க்கச்செய்தல் முதலியன அவ்வரசர்களின் வேலைகளாம். பகை அரசானல் கோட்டை முற்றுகை செய்யப்பட்டதாயின், கோட்டைக்குள்ளிருக்கும் வீரர் பல நாட்களுக்கு உணவில்லாமல் போர் செய்வர். அங்ஙனம் சென்ற நாட்களை மதிலின் சுவர்களிற் குறித்து வைப்பர். தோற்ற வீரனின் தலையில் நெய்பெய்து இருகரங்களையும் பின்புறம் நின்று பற்றியிழுப்பர். வென்ற வேந்தனும் வீரரும் உயர்த்திய வாளுடன் போர்க் களத்தில் துணங்கையாடுவர். இறந்த வீரரின் உடல்களும் சிரங்களும் உருண்டு கிடப்ப அரசன் பெருவிருந்திடுவான். இதற்குக் களவேள்வி யென்று பெயர். போரில் வாள் வேல் முதலியவற்றால் போழப்பட்ட காயங்களை நெடு வெள்ளூசியினாற்றைப்பர். அவர் தங்களுக்குச் சொந்த மான யுத்தப் பிரமாணங்களை ஏற்படுத்தியிருந்தனர். மாரிக்காலத்தையே பெரும்பாலும் அவர் போர் செய்வதற்கு ஏற்றதாகக் கொண்டனர். 16. பத்தினிப் பெண்டிர் தமிழ்ப் பெண்கள் கற்புக்கணிகலமாய் விளங்கினார்கள். அவர் களைக் குறித்து 1இலக்கியங்கள் பலவாறு வியந்து கூறுகின்றன. பெண்கள் கற்பினாலேயே மழை பெய்கின்றதென்றும், அது கோடின் மழை வளந் தப்புகின்றதென்றும் முன்னோர் கருதினர். பத்தினிப் பெண்கள் சிலரின் வரலாறு சிலப்பதிகாரத்திற் கூறப்பட்டுளது. அக்காலத்துக் கணவரை இழந்தோர் ‘உடன் கட்டை ஏறுவோர், உடனுயிர் நீங்குவோர், விதவை நோன்பினர்’ என மூவகைப்பட்டனர். உடன்கட்டை யேறுவோர், தம் கணவரிறந்ததும் தாமும் அவருடன் தீயிற் புகுந்து உயிர் துறப்போராவர். உடனுயிர் துறப்போர், தம் கணவர் இறந்தமை கேட்டபொழுதே தம்முயிர் நீங்கும் உத்தமிகள். இன்னோரையே “காதலரிறப்பிற் கனையெரி பொத்தி-ஊதுலைக் குருகினுயிர்த்தகத் தடங்காது-இன்னுயி ரீவர்” என்று சாத்தனார் ஓதியது. கணவன் இறந்தால் கொல்லன் உலைத்துருத்தி போலப் பெருமூச்சு விடாமல் தன்னடைவே உயிர் நீங்குவர் என்பது இதன் கருத்து. இவ்வரிய பெரிய செயல் தொல்காப்பியத்தில் மூதானந்தம் என்று கூறப்பட்டது. (மூது. . . . பெரிய, ஆனந்தம் = சாக்காடு) பேரன்பு பற்றி நிகழும் மரணமென்பது பொருள். நாயகனும் நாயகியும் ஓருயிரும் ஈருடலுமாயிந்தாலன்றி இவ்வாறு ஒருங்கு உயிர் நீங்குத்தன்மை நிகழாது, இவ்வாறு கணவனிறந்தபொழுதே உயிர் துறந்த உத்தம பத்தினி ஒருத்தி சிலப்பதிகாரத்துட் காணப்படுகின்றாள். ஆரியப் படை சுடந்த நெடுஞ்செழியன் என்னும் பாண்டியன், கோவலன் என்ற வணிகனைத் திருடனென்று கருதி அநியாயமாகக் கொலை செய்வித்த போது, கண்ணகி பாண்டியன் முன் சென்று வழக்காடி, அப்பாண்டியனது கொடுங்கோன்மையை அவனுக்குத் தன் சிலம்பைக் கொண்டு மெய்ப் பித்தனள். தான் செய்தது தவறென்றுணர்ந்த பாண்டியன் சிங்காசனத்தி லிருந்தபடியே சோர்ந்து உயிர்விட்டான். அப்போது அவன் தேவியான பெருங்கோப்பெண்டு ஒரு கலக்கமுமின்றித் தானும் உயிர் துறந்தாள். சூரபதுமன் போரில் அழிவுற்ற செய்திகேட்டவுடன் அவன் தேவி பதும கோமளை உயிர் துறந்தனள் எனக் கந்தபுராணத்துள் கச்சியப்பர் கூறுவர். விதவை நோன்பினர், கணவனிறந்தபின் உயிர் தாங்கி நின்று, மறுபிறவியில் தம் நாயகருடன் வாழ்தற்கு நோற்றுப்பட்டினி முதலியவற்றால் உடம்பை வருத்துவோராவர். இதனை ‘நளியெரி புகாஅ ராயின் அன்பரொடு-உடனுறை வாழ்க்கைக்கு நோற்று உடம்பு அடுவர்’ என்பதனால் அறிக. இவர்கள் இலை கிடந்த நீர்ச்சோற்றையும் எள்ளரைத்த விழுதையும் புளி கூட்டிச் சமைக்கப்பட்ட வேளையிலையையும் உணவாகக்கொண்டு கல்லழுந்தும்படி தரையிற் பாயின்றிப் படுத்து, உலக இன்பங்களை ஒழித்தவர். கைம்மையுற்றோர் கூந்தல் களைதலும் அக்கால வழக்காகத் தெரிகிறது.1 17. மதுபானம் அந்தணர், வேளாண்மக்கள் என்னும் இரு பகுப்பினரை ஒழிந்த ஆண்களேயன்றிப் பெண்களும் மதுவருந்தினர். பனை தென்னைகளி லிருந்து இறக்கப்படும் கள்ளு, வறியோர், தொழிலாளர், போர்மறவர், பாணர் முதலியோரால் பானஞ் செய்யப்பட்டது. பழச்சாறு, அரிசி, தா தகிமலர் முதலியவற்றிலிருந்து இறக்கப்பட்ட வாசனையோடு கூடிய மதுவர்க்கங்களைச் செல்வர் அருந்தினர். யவன தேசத்தினின்றும் கப்பல் மார்க்கமாகக் கொண்டு வரப்பட்ட உயர்ந்த மதுவினை அரசர் பருகி னார்கள். காரம் ஏறுதற்பொருட்டுக் கள்ளினை மிடாக்களிற் பெய்து, நிலத்துட் புதைத்துவைப்பது முன்னுள்ளோர் மரபு. மதுபானஞ்செய்தல் இழிதகவாக முன்னுள்ளோர் மதித்திலர். “தேட்கடுப் பன்ன நாட்படு தேறல்” என்றும், “அரவு வெகுண் டன்ன தேறல்” என்றும் காரமேறிய கள்ளின் தன்மை புறநானூற்றிற் சொல்லப்பட்டது. “பொற்றொடி மடந்தையர் புதுமணம் புணர்ந்து செம்பொன் வள்ளத்துச் சிலதிய ரேந்திய அந்தீந் தேறல் மாந்தினர் மயங்கி” (சிலப்பதிகாரம்) “யவனர், நன்கலந் தந்த தண்கமழ் தேறல் பொன்செய் புனைகலத் தேந்தி நாளும் ஒண்டொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந் தாங்கினி தொழுகுமதி யோங்குவாள் மாற” (புறம்) ‘யவனரால் நல்ல குப்பியிற் கொண்டுவரப்பட்ட குளிர்ந்த நறு நாற்றத்தையுடைய தேறலைப் பொன்னாற் செய்யப்பட்ட புனைந்த கலத்தின்கண்ணே யேந்தி நாடோறும் ஒள்ளிய வளையையுடைய மகளி ரூட்ட மகிழ்ச்சி மிக்கு இனிதாக நடப்பாயாக” என்பது இதன் உரை. “சிறியகட் பெறினே எமக்கீயு மன்னே பெரியகட் பெறினே யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே” என ஒளவையார் அதியமானைப் பாடுகின்றமையின் அரசர் மாத்திரமல்லர், புலவர்களும் கள்ளருந்துவதில் மிக்க விருப்புடையவர்கள் போல விளங்குகின்றது. கள் என்பதிலிருந்தே களிப்பு என்னும் சொல் எழுந்தது. 18. உணவு அக்காலத்து அந்தணர், வேளாண்மக்கள் என்னும் இருபிரிவினரை நீக்கி ஏனோர் ஊனைப் பெரிதும் விரும்பிப் புசித்தார்களெனத் தெரிகின் றது. பெரும்பாணாற்றுப் படையில், “பார்ப்பாருடைய இல்லங்களைக் காண்பீர்கள். பசுக்கள் பசும்புற்றரைகளைத் தேடி மேயச்செல்ல, அவற்றின் செழிய கன்றுகள் பந்தர்க்கால்களிற் கட்டப்பட்டு நிற்கும். கோழி, நாய் முதலியன அவ்வில்லங்களைச் சேரமாட்டா. வீடுகள் சாணியினால் மெழுகப்பட்டிருக்கும். வழிபடு தெய்வங்களின் உருவங்கள் அங்கே காணப் பெறும். கிளிகள் வேதம் படிக்கும். அருந்ததியைப் போன்ற சிறந்த நல் லொழுக்கமும் வளையணிந்த கைகளுமுடைய பார்ப்பனப் பெண்கள் நல்ல சுவையுள்ள உணவுகளைச் சமைப்பார்கள். அவ்வீடுகளை அடைந்தால் இராசான்ன மென்னும் சோற்றினையும், மாதுளங் காய்களைப் பில்லை களாக அரிந்து மிளகுதூள் பெய்து கருவேப்பிலை கூட்டி நெய்யில் வெதுப்பிய பொரியல்களையும், மாங்காய் ஊறுகாய் முதலியவற்றையும் உண்ணும்படி பெறுகுவிர்” (பெரும்பாண் 293-310) எனக் கூறப்படுவதால் அந்தணர் ஊன் புசிப்பவர்களெனப் புலப்படவில்லை. ‘உப்புக்கண்டம் பறிகொடுத்த பார்ப்பனி’ ‘நோய்கொண்டாற் பார்ப்பாரும் தின்பாருடும்பு’ என்னும் முதுமொழிகளும் பார்ப்பார் ஊன் மிசையாதவர்கள் என்பதையே புலப்படுத்துகின்றன. “மீன்திரளும் விலங்கின்திரளும் செருக்கி வலையாற் பிடிப்பாரை யும், கொன்று இறைச்சி விற்பாரையும் தமக்குப் பகையாய்க் கருதி யஞ்சாதே வலைஞர் முற்றத்தே அம்மீன் பிறழ்ந்து திரியும் படியாகவும், வலைஞர் குடிலிலே அவ்விலங்குகள் கிடக்கும்படியாகவும், முற்படக் கொலைத் தொழிலை அவர்களிடத்தினின்றும் போக்கியும், பின்னர்க் களவுகாண்பாரிடத்துக் களவைப் போக்கியும், தேவர்களை வழிபட்டும் யாகங்களைப் பண்ணி, அவற்றான் ஆவுதிகளை அவர் நுகரப் பண்ணியும், நல்ல பசுக்களோடு எருதுகளைப் பரிகரித்தும், அந்தணர்க்குண்டாம் புகழ்களைத் தாங்கள் அவர்க்கு நிலைபெறுத்தியும், பெரிதாகிய புண்ணியங் களைத் தாங்கள் பண்ணி அவற்றைச் செய்யமாட்டாதார்க்குத் தானம் பண்ணியும். . . . . . . வளைந்த மேழியால் உழவுத் தொழிலை நச்சுதலுடைய உழவர்” (பட்டினப்பாலை-நச் உரை.196-206) என்னும் பட்டினப்பாலை யால் வேளாண்மாக்கள் ஊன் உணவு அருந்துபவரல்லர் என்பது வெளிப்படை. அந்தணராகிய கபிலர், “புலவு நாற்றத்த பைந்தடி பூநாற்றத்த புகை கொளீஇ யூன்றுவை கறிசோ றுண்டு வருந்துதொழி லல்லது பிறிதுதொழி லறியா வாகலி னன்று மெல்லிய பெரும” (புறம்) “மட்டுவாய் திறப்பவு மைவிடை வீழ்ப்பவு மட்டான் றானாக் கொழுந்துவை யூன்சோறு பெட்டாங் கீயும்” (புறம்) எனப் பாடியிருத்தல் கொண்டு தமிழ்நாட்டந்தணர் புலாலுண்ணும் இயல்பினர் எனச் சிலர் கூறுவர். “புலவர் முதலியோர் தங்களை அரசர்களாற் பெரிதும் விரும்பப் படும் பாணர் கூத்தர்போல் வைத்துச் செய்யுட் செய்தல் அக்காலத்து மர பாகலின். . . . . . இங்ஙனமே சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பண்ணனைப் பாடிய 173 ஆம் புறப்பாட்டில் தன்னைப் பாணனாகக் கூறிக் கொள்ளுதலையும், கபிலர் முதலிய புலவர் பெருமக்களும் புறத்தில் தத்தம் பாடலுள் இங்ஙனமே கூறியிருத்தலையும் ஈண்டைக்கு நோக்கிக் கொள்க.” (நல்லிசைப் புலவர் பக்.60) “இவராற் சுட்டப்பட்டுள்ள கள்ளுண்டல், ஊனுண்டல் முதலிய வழக்குகள் இவர் காலத்துப் பெரிதுந் தீதென ஒதுக்கப்பட்டவை யல்ல வெனினும், அவற்றைப் பேரருட் புலமைவாய்ந்த இவரது ஒழுக்கமெனக் கொள்ளற்க” (மேற்படி பக். 175) கபிலர் ஒளவையார் முதலாயினோர் தம்மைப் பாணர் வரிசையில் வைத்து அரசரைப் பாடினமையின் பாண்குலத்துக்குரிய ஒழுக்கங்களைத் தமக்குரியனவாக வைத்துப் பாடினரே யன்றி. அவர் உண்மையில் கள்ளும் ஊனும் புசிப்பவர்களல்லரெனவும் கருதற் பாற்று. 19. உடை தமிழ்மக்கள் பழையநாளில் அணிந்திருந்த உடைகளைப் பற்றிச் சங்க நூல்கள் தெரிவிக்கின்றன. உடை அவ்வவ் வகுப்பாரின் செல்வத் துக்கும் தொழிலாகியவற்றுக்கும் பொருந்தப் பலவகைத்தா யிருந்தது. செல்வரும் வறிஞருமல்லாத நடுவகுப்பைச் சேர்ந்த ஆடவர்கள் தலையி லொன்றும் இடுப்பிலொன்றுமாக இரண்டு உடைகளை அணிந்து கொள்வர். மயிரை வெட்டாது வளர்த்து உச்சியிலோ கன்னத்திலோ கொண்டையாக முடிந்து கொள்வர். செல்வர் நீலச் சங்கு மணிகள் கோத்த பட்டிழையால் கொண்டையை அவிழாது பிணித்துவிடுவர். இவ்விழை களின் இருதலைப்புகளும் குஞ்சங்கள் போலவுந் தொங்கும். போர்வீரர் பெரும்பாலும் இவ்வாறு கட்டுவர். கொண்டையில் மயிலிறகுகளைச் செருகுகின்ற வழக்கமும் இருந்தது. சிங்களவர் பழைய தமிழரிடமிருந்து தான் கொண்டை முடியும் முறையைக் கற்றுக்கொண்டார்க ளென்பதற்கு அவர்களுள்ளும் குடுமிக்குக் ‘கொண்டை’ என்னும் தமிழ்ச் சொல்லே வழங்கி வருகின்றமை போதிய சான்று. மதுரைக் காஞ்சியில் செல்வரைப் பற்றிக் கூறுமிடத்து, “சிவந்து நுண்ணிதாகும் வடிவாலே கண்களை மருட்டி, சிந்திவிழுமாறு போன்ற ஒள்ளிய பூத்தொழிலையுடைய சேலை களை, பொன்னிட்ட உறைவாளோடே அழகு பெறக் கட்டி, தோளிலே உத்தரியம் கிடந்தசைய” எனக் கூறப்பட்டிருக்கின்றது. சட்டை தரித்தல் அரசரிடத்தில் சேவகஞ் செய்யும் தாழ்ந்தவருக்குரியதா யிருந்தது. அவர்கள் கஞ்சுகமாக்கள் எனப்பட்டனர். பெண்கள் பெரும்பாலும் அரைக்குமேல் உடை இல்லாதிருந்தனர். “கடாஅக் களிற்றின்மேற் கட்படா மாதர், படாஅ முலைமேற் றுகில்” என்னும் குறளால் முதல் வகுப்பினர் முலைக்கச்சு அணிந்தார்கள் என விளங்குகின்றது. அக்காலத்து முலைக்கச்சு இக்காலத்து இரவிக்கை போல்வதன்று. தனங்களை மாத்திரம் இறுகக் கட்டும் நீண்ட கச்சுக்களேயாம். குங்குமம் சந்தனம் முதலிய பூச்சுக்களால் தமது மார்பை மறைத்தல் அக்காலத்துப் பெண்களுக்கியல்பு. கடைத்தரமானோர் மார்பில் சங்குமணி யணிந்திருந்தனர். அமராவதிச் சித்திரங்களும் பழைய கோபுரங்களிற் காணப்படுகின்ற உருவங்களும் அக்காலத்துப் பெண்கள் அரைக்குமேல் ஆடை அணியும் வழக்கமில்லை என்பதையே தெரிவிக் கின்றன. மலையாள தேசத்தில் இன்றும் இவ்வழக்கம் காணப்பெறுகின் றது. “சீர்நாடு மாதர்தனக் குடந்தேடித் திரிவாற்கு-வார்நாடுந் தடைதீர்ந்த மலைநாடு வாய்ந்ததுவே” என்னும் திரிகூடராசப்பக் கவிராயர் பாட லாலும் இதனுண்மை ஓர்க. பெண்கள் ஒருவகைக் குழம்பினால் முலையில் தொய்யிலும் தோளில் கரும்பும் எழுதுவர். “தோண்மேற்-கரும்பெழுது தொய்யிற்குச் செல்வ லீங்காக” (கவி 116) “தொய்யில் பொறித்த வனமுலையாய்” (கலி) “இந்துக்கள் கோவிற் சுவர்களிலும் மாடங்களிலும் கோபுரங்களி லும் மத சம்பந்தமான விக்கிரகங்கள் காணப்படுகின்றன. அவ்விக்கிரகங் களைப் பரிசோதித்தால் அக்கால மாந்தரது மனநிலை, ஒழுக்கம், நாகரிகம் முதலியவற்றை நாம் அறிந்து கொள்ளலாம். உதாரணமாக மாமல்ல புரத்திலுள்ள விக்கிரகங்கள் அக்கால மாந்தர் ஆண் பெண் யாவரும் இடுப்பிற்குக் கீழே மட்டுந்தானே உடை உடுத்தாரென்பதையும் அவ்வுடை யும் நாபிக்கு மூன்று அங்குலத்திற்குக் கீழேதான் உடுத்தார்க ளென்பதையும் விளக்கும். (செந்தமிழ் - 5-Dr. G. Jouvean Dubriel) 20. அணிவகை 1. பெண்கள் அணிவகை கால்விரலணி-மகரவாய் மோதிரம், பீலி, கால் மோதிரம் முதலியன. காலணி-பாதசாலம், சிலம்பு, தண்டை, கிங்கிணி, தொடையணி, குறங்குசெறி, தோளணி-மாணிக்கவளை, முத்துவளை, கையணி-சூடகம், பொன்வளை, நவரத்தினவளை, சங்கவளை, பவழவளை முதலியன. கைவிர லணி-வாளைப்பகுவாய் மோதிரம் (முடக்கு மோதிரம்) இரத்தினங்கட்டின அடுக்காழி. கழுத்தணி-வீரசங்கிலி, நேர் சங்கிலி, நுழைவினை நுண்ஞாண் சவடி, சரப்பளி, முத்தாரம் பிடர் அணி-கொக்குலாய் (முத்தாரமாகச் செய்ததில் நவரத்தினங்களைக் கோத்து முதுகு நிறைய விடும் பின்தாலி) காதணி - நீலக்குதம்பை, மகரக்குழை, தாளுருவி, வல்லிகை, தோடு தலையணி-சீதேவியார், வலம்புரிச் சங்கு, பூரம்பாளை, தென்பல்லி, வடபல்லி, புல்லகம், பொன்னரிமாலை, மகரப்பகுவாய், முஞ்சகம். அரையணி-மேகலை, காஞ்சி விரிசிகை, கலாபம், பருமம். குறிஞ்சிநிலப் பெண்கள் இலைகுழைகளையே ஆடை ஆபரணங் களாகப் பூண்டனர். இது மக்கள் சீர்திருத்தமுறாத காலத்தேயாகும். அக்காலத்து மரம் செடி கொடிகளிற் பறித்து அணிந்த அரசிலை, குழைஓலை, கொந்திளவோலை, சீர்திருத்தகாலத்து ஆபரணங்களாக மாறிவந்தனவென்பது கவனிக்கத்தக்கது. பழைய தமிழரின் பூவாபரணம், சாந்துப் பூச்சு என்பனவற்றின் ஞாபகம் இந்து சமயக் கோவில்களிலே ‘பூவங்கிக் கோலம்’ ‘சந்தனக் காப்பு’‘குங்குமார்ச்சனை’ என்னுங் கருமங் களிலே இந்நாள்வரையுங் காக்கப்பட்டு வருகின்றது. பெண்கள் தலை மயிர்க்குப் பரிமள மூட்டுவர். மயிரை ஐந்து பிரிவாக வகுத்துப் பின்னி ஒன்றாக முடிந்து தொங்கவிடும் வழக்கம் அவர்களுக்குள் இருந்தது. இரு பாலாரும் பரிமள வர்க்கங்களையும் தேகத்திற் பூசுவோராயிருந்தனர். பெண்கள் கண்ணுக்கு மை யெழுதுவர். 2. ஆடவர் அணிகல வகை தலையணி-முடி, தோளணி-பதக்கம், வாகுவலயம். காதணி-குண்டலம். கையணி-கங்கணம், வீரவளை. அரையணி-அரைஞாண். கையணி-வீரக்கழல், வீரகண்டை. விரலணி-மோதிரம். கலித்தொகை 85 ஆம் பாட்டில் ஓர் தலைவனின் மகன் அணிந்திருந்த ஆபரணங்களைப் பற்றிக் கூறப்படுகின்றது. அவை காலிற் பொன்னாலாய வாய்பிளந்த சதங்கையும், அரையிற் பொன்மணிகளையுடைய வடமும் அதன்மேல் பவழவடமும் அவற்றின்மேல் ஐதாய் கழல்கின்ற ஒரு பூந்துகிலும், கையில் ஞெண்டின் கண் போல அரும்பு வேலை செய்த கோற்றொழி லவிர்கின்ற தொடியும், இடையில் வெட்டாத வாளும் மழுவும் தொங்க விடப்பட்ட இடத்தையுடைய பூணும், மார்பில் கருமுத்தும் மணியும் சேர்ந்த முத்து வடமும், அதன்மேலே நீல மணியாற் பண்ணின, கண்டார் மருளும் மாலையும் எனுமிவ்வாபரணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. 21. அரசன் அரசன் வலிமையுள்ளவனாயிருந்தான். அவன் கையிலே வீரவாளை யும் காலிலே வீரக்கழலையுமணிந்திருந்தான். அவனது சிங்காசனம் யானைத் தந்தத்தினாலும் பொன்னினாலும் நவமணிகள் குயிற்றிச் செய்யப் பட்டு ஒரு செய்கைச் சிங்கத்தின் தலையால் தாங்கப்பட்டது. அதன்மேல் வெண்கொற்றக்குடை விளங்கியது. அவன் யவன மெய்க்காப்பாளராலும் பரிசனங்களாலும் சூழப்பட்டுக் காட்சிக்கெளியனாயிருந்தான். சிறப்புக் காலங்களில் மாத்திரம் அரசி அரசனுடன் இடம் பெறுவாள். ஆனால் அவள் ஒருபோதும் முடிசூடுவதில்லை. அரண்மனையின் அந்தப்புரத்து, உயர்குடும்பப் பெண்கள், கூன், குறள், ஊமர் முதலியோர்க்கு மாத்திரம் இட முண்டு. ஆண்கள் அங்கு நுழைதல் கூடாது. புலவர்களிடத்தில் அரசன் மிக அன்பாக விருந்தான். அரண்மனைப் புலவன் அவன்பக்கலில் எப்போதும் இருப்பான். நியாயம், வீரம், கொடை என்னும் மூன்றும் அரசனுக்குப் பெருமையளித்தன. இம்மூன்றினையும் குறிப்பிட மூன்று வகைப்பட்ட முரசுகளிருந்தன. அரசனைச் சூழ்ந்து 1எண்பேராயமும் ஐம்பெருங் குழுவு மிருந்தன. அமைச்சர், புரோகிதர், சேனாதிபர் , தூதுவர், சாரணர் என்னும் ஐவரும் ஐம்பெருங் குழுவிலடங்குவர். இவர்களன்றிக் கரும வினைஞர், கணக்கியல் வினைஞர், தரும வினைஞர், தந்திர வினைஞர், பெருங்கணி என அரசியல் வசிக்குந் தலைவருமிருந்தனர். கரும வினைஞரென்போர் தேசத்தின் ஆட்சியை நடத்துவோரென்றும், கணக்கியல் வினைஞரென் போர் தேசத்தின் வரிவருவாய்களைக் கவனிக்குமறிஞரென்றும், தரும வினைஞர் நாட்டி னறங்களைப் பாதுகாப்போரென்றும், தந்திர வினைஞ ராவார் படைகள் சம்பந்தமாகத் தலைமை வகிப்போரென்றும், பெருங் கணி அரசனது காரியங்கட்குரிய காலங்களையும் நிமித்தங்களையும் கணித்துரைப்போர் என்றும் அறியப்படுகின்றனர். கரணத்தியலவர் (கணக்கர்), கரும விதிகள் (ஆணை நிறைவேற்றுமதிகாரிகள்), கனகச் சுற்றம் (பண்டாரம் வகிப்போர்), கடைகாப்பாளர் (அரண்மனைக் காவலர்), நகரமாந்தர் (நகரத்திலேயுள்ள பெரியார்), படைத்தலைவர், யானை வீரர், குதிரைவீரர் என்போர் எண்பேராயத்துள் அடங்குவர். 22. புறநானூற்றிற் காணப்படும் சில பழக்க வழக்கங்கள் “அஞ்ஞான்றினர் மிகவும் நெடிய ஆயுளுடையவர்கள். வயதால் முதிர்ந்தும், உடல் தளர்ந்தும், நடமாடச் சக்தியற்றும் உயிர்துறவாம லிருக்கும் கிழவரை மட்பாண்டங்களில் வைத்து வழிபட்டு வருவார்கள். அப் பாண்டங்களை முதுமக்கட்டாழியென்பர். எளியவராயினும் இழிகுலத்தோராயினும் கற்றவரை மிகவும் போற்றி மரியாதை செய்வர். கற்றவர்கள் யாண்டும் முதன்மை பெற்றுச் சபையேறுவதற்குச் சாதி வேற்றுமை முதலிய குறைகள் தடை செய்வனவல்ல. யுத்த முனையிலே புற முதுகிட்டுப் பின்வாங்காமல் போர் புரிந் திறப்பவர்கள் சுவர்க்கம் புகுவார்க ளென்ற நம்பிக்கையிருந்தமையால், அரசர்கள் அதிபதிகளானோரில் யாவரொருவராயினும் அவ்வாறு மடியாமல் பிணி மூப்பு முதலியவற்றா லிறந்தால் அவரின் உடலைத் தருப்பைமேற் கிடத்தி நெஞ்சை வாள் கொண்டு பிளப்பர். அங்ஙனஞ் செய்வதால் உயிர் சுவர்க்கம் புகுமென்பதே அவர்கள் கருத்து. மற்றவர் உடல்களைத் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் வழங்கப்பட்ட பாண்டத்திலிட்டுத் தகனஞ் செய்வர். தலைவர்கள் துஞ்சுங் கால் அவரோடு தீமூழ்கி உயிர்விடல் மனைவியர்க்கியல்பாயிருந்தது. நிரை கவர்தலும், போர்புரிந்து அவற்றை மீட்டலும் அடிக்கடி நிகழும். யுத்தத்திற் கைவந்த வீரர்களை யாண்டுங் கனஞ்செய்து போற்றி வழிபடுவர். அன்னவரிலொருவர் மடியுங்கால் அவர் பொருட்டு ஒரு கற்சிலையை நட்டு அவரின் பெயரையும் கீர்த்திச் சிறப்புக்களையும் அதன்கண் தீட்டிப் பந்தரிட்டுக் கொடி விதானித்துப் பூமாலைகளையும் மயிலிறகுகளையுந் தூக்கிப் பலி முதலியன செலுத்தி வழிபடுவார்கள். ஆயுதங்களுக்கு நெய்பூசிப் பூமாலை சாத்திப் பூசனை புரிவர். மாற்றவரின் அரண்களை யுடைத்துத் தகர்த்துத் தரைமட்டமாக்கிக் கழுதைபூட்டி ஏர்கொண்டுழுது காட்டுவித்துக்களை விதைப்பார்கள். அரசர்கள் துயில்நீத்தெழும்புமாறு சங்கம் முழக்கி எக்காளமூதுவர். மலைசார்ந்த குறிஞ்சி நிலத்தார் நட்ட பயிருக்கிசைய மழை கூடவும் குறையவும் வேண்டிப் பலி செலுத்தித் தெய்வதம் பரவுவார்கள். வினைப்பயனே பிறவிக்குக் காரணமென்றும், வேதாகமப் பொருள்கள் மெய்ப் பொருள்களென்றும் கடவுளொருவருள ரென்றும், நம்பி ஒப்புக் கொள்ளாதவர்களை மிகவும் இகழ்ந்து அருவருத்து யாண்டும் புறக்கணிப்பர். செல்வழிகளில் சிவாலயங்கள் கண்ணெதிர்ப் படின், அரசர் தாமும் வாகனமிழிந்து தங்கள் வெண்கொற்றக் குடைகளைச் சாய்த்து வணங்கிச் செல்வார்கள். அரசர்கள் தம்பொருட்டு மாத்திரமன்றித் தம் குடிமக்களின் நலங்களைக் குறித்தும் அடிக்கடி பற்பல வேள்விகளை யும் யாகங்களையுஞ் செய்வார்கள். அங்ஙனஞ் செய்துழி அந்தணர் பாவலர்கள் முதலோரும் பல திசை மன்னர்களுங் கூடிக் குழுமிக் களிப் பெய்துவர். ஈகையே தருமங்களெல்லாவற்றினும் மிகச் சிறந்ததென்று யாண்டும் பாவலர் வியந்து கூறுவர். செய்குன்றியற்றிக் கழங்காடிப் போதுகொய்து புனல் விளையாடிப் பொழுது போக்குவர். ஆடவரைப் போற் பெண்களுங் கள்ளருந்திக் களிகூர்வர். கள்ளில் காரமேறும்படி அதனை வேய்ங்குழல் முதலியவற்றிலடைத்தும் மட்பாண்டங்களிற் பெய்தடக்கியும் வைப்பார்கள்.” (தமிழ் வரலாறு பக்.83-84) 23. பொழுது போக்கு 1.பெண்கள் பொழுதுபோக்கு பெண்களுக்கு வீட்டில் கிளிப் பிள்ளைகளைப் பேசப் பழக்குதல், வள்ளை அம்மானை என்னும் பாட்டுகளைப் பாடுதல், கழங்கு அன்றேல் பந்து விளையாடுதல் முதலியன சிறந்த பொழுது போக்குகளாகும். “கந்தாடு மாலியானைக் கார்வண்ணன் பாவை கருமேகக் குழன்மடவார் கைசோர்ந்து நிற்பக் கொந்தாடும் பூங்குழலுங் கோதைகளு மாடக் கொய்பொலந் துகிலசைத்த கொய்சகந்தாழ்ந் தாட வந்தாடுந் தேனுமுரல் வரிவண்டு மாட மணிவடமும் பொன்ஞாணும் வார்முலைமே லாடப் பந்தாடு மாடேதன் படைநெடுங்க ணாடப் பணைமென்றோ ணின்றாடப் பந்தாடு கின்றாள்.” (சூளாமணி-சுயம்வரம்) மாலைக் காலத்தில் செல்வர்கள் குதிரைகள் பூட்டப்பட்ட தேர் களை வீதிவழியே செலுத்திச் செல்வர். உப்பரிகைகளினின்று வெளியே நோக்கும் அவர் மகளிரிடத்திருந்தும் வரும் நறுமணம் வீதிகளில் வீசும். அழகாக உடுத்திய வாலிபர் அழகிய ஆபரணங்களையும் பூந்தாரையும் அணிந்த பரத்தையருடன் வீதிவழியே உலாவப் போவர். ஆடவர் பரத்தை யருடன் நட்புக் கோடல் இழிவாகக் கருதப்படவில்லை. ‘பரத்தையிற் பிரிதல் எல்லார்க்கு முரித்தே’ என்பர் தொல்காப்பியர். சேவல் கவுதாரி ஆட்டுக்கிடாய் முதலியவற்றைப் போர்க்கு விடுதலும் அக்காலப் பொழுது போக்குகளாகும். 2. சிறுவரின் பொழுதுபோக்கு சிறார், தச்சராற் செய்யப்பட்டுச் சிறிய குதிரைகளாலிழுக்கப்படும் தேர்களிற் செல்லும் இன்பத்தை எய்தாராயினும் தம் கைகளினால் விளையாட்டுத்தேரை இழுத்து இன்புறுவர். “தச்சன் செய்த சிறுமா வைய மூர்ந்தின் புறாஅ ராயினுங் கையி னீர்த்தின் புறூஉ மிளையோர்” (குறுந்-61) சிறிய பெண்கள் கடலிலே நீராடும்போது மணலிலே சிறு வீடுகள் இழைத்து விளையாடுவர். (குறுந். 326) வயிர உலக்கையினால் அவலிடிக்கும் பெண்கள் உலக்கையை எறிந்துவிட்டு வண்டலில் விளையாடுவார்கள். (குறுந். 238) ஊஞ்சல் (உஞ்சால்) ஆடுவதும் சிறுவர்களின் பொழுது போக்காகும். “பெருங்கயிறு நாலு மிரும்பனம் பிணையற் பூங்க ணாய மூக்க.” (நற்-90) பள்ளிக்குப் போகாத சிறார், வேப்ப நீழலில் கோடுகள் கீறி நெல்லிக்காய்கொண்டு கழங்காடுவார்கள். “வேம்பின் புள்ளி நீழற் கட்டளை யன்ன வட்டரங் கிழைத்துக் கல்லாச் சிறாஅர் நெல்லி வட் டாடும்.” (நற்-3) பெண்கள் வீட்டின் முற்றத்திலுள்ள மணலில் கழங்காடுவார்கள் (நற்-79) சிறார் குளங்களில் குதித்து ஆழ்ந்து கல் மண் முதலியவற்றை எடுத்து விளையாடுவார்கள். தாயம் ஆடுதல் பெரும்பாலார் பொழுது போக்காகும். “ஈரைந்து பெற்றான் உள்ளம் போல்” (கலி) 24. பெண்கள் கல்வி தமிழ் இலக்கியங்களில் பல பாடல்களைச் செய்தவர்கள் பெண் புலவர்களாகக் காணப்படுகின்றனர். ஆடவரைப் போலப் பெண்களும் கல்வியிற் சிறந்து விளங்கினார்கள். போர்க்கோலங்கொண்டு செல்லும் படைகளிலும், ‘விறலியர்’ என்னும் பெண்கள் இருந்தாரெனில் பெண்கள் கல்வி நிலை மிக ஏற்றம் பெற்றிருந்ததென்றே சொல்ல வேண்டியிருக் கின்றது. காவற் பெண்டு, பேய்மகள் இளவெயினி, மாசாத்தியார், பூங்கணுத் திரையார், பொன்முடியார், ஒளவையார் முதலியோர் புறநானூற்றில் சில பாக்களைச் செய்தவர்களாவர். 25. தமிழரின் பழக்கவழக்கங்கள் 1. தாலி தரித்தல் பழைய நாளிற் குறிஞ்சி நிலத்து இளைஞர் புலியை எய்துகொன்று தமது வீரச்செயலைக் காண்பித்து மலைவாணர் மகளிரை வதுவை செய்வர். புலியைக்கொன்ற ஆடவன் தனது வீரத்துக்கு அடையாளமாகப் புலியின் பற்களை நாணிற் கோத்துப் பெண்ணின் கழுத்தில் அணிவான். இவ்வழக்கமே நாளடைவில் தாலி தரிக்கும் வழக்கமாக வந்தது. இது தமிழ்நாட்டுக்கே உரியது. 2. மனைகள் வறியவர் வீடுகள் மண்ணினால் எடுக்கப்பட்ட சுவர்களுடையன; புல்லினால் அல்லது தென்னங் கீற்றுகளினால் வேயப்பட்டன. வீட்டின் முன்புறத்தில் பந்தர் இருக்கும். அதனைத் தலைவாயில் என்று வழங்குவர். சுவர்கள் சிவந்த மண்ணினால் மெழுகப்பட்டிருந்தன. பட்டினங்களில் வீடுகள் செங்கல்லினாற் கட்டப்பட்டு ஓட்டினால் வேயப்பட்டன. அவற்றின் மானின் கண்போன்ற சாளரங்கள் வெளிச்சம் புகுவதற்காக அமைக்கப்பட்டன. சில கோட்டை கொத்தளங்கள் செங்கல்லினாலும் சுண்ணாம்பினாலும் எடுக்கப்பட்டன. “புல்வேய் குரம்பை’ “சில்காற்றிசைக்கும் பல்புகை நல்இல்” “இலை வேய் குரம்பை” எனப் பத்துப் பாட்டில் சொல்லப்படுவதை நோக்குக. 3. பொறிகள் எந்திரச் செய்கைகளால் மாட்சிமைப்பட்ட ஊர்திகளும் பிறவும் இருந்தன. கார் நாற்பது 21 ஆம் பாட்டில் ‘பொறிமாண் புனைதிண்டேர்’ எனக் கூறப்படுதல் காண்க. இதனால் குதிரை முதலியவற்றால் இழுக்கப் படாது இயந்திரத்தினால் இழுக்கப்படும் தேர் இருந்ததென விளங்குகிறது. பொறிகளால் நீர் வற்றவும் நிறையவும் செய்யப்படும் கிணறுகளும் வாவிகளுமிருந்தன. அவை, ஏந்திரக் கிணறு’ ‘ஏந்திரவாவி’ என்னும் பெயர்களால் அறியப்பட்டன. பெருங்கதையில் பல பொறிகளின் விவரம் காணப்படுகின்றது. அவைகளாவன: “காளைகளின்றி விரைந்து செல்லும் ஏந்திரவண்டியும் பல வீரர்களை ஆயுதங்களுடன் தன்னுள்ளடக்கிக் கொண்டு உயிருள்ளது போல் நடந்து சென்று மயக்கும் யானைப்பொறியும், ஏற விரும்பியவர்களைத் தன்னுள் ஏற்றிக்கொண்டு பார்க்க வேண்டிய இடங்களை அவர்கள் பார்க்கும்படி ஆகாய வழியே செல்லும் விமானமும் காலத்தைக் காட்டும் எந்திரமும், கடிகையாரமும் (கடிகாரமென இக்காலம் வழங்கும்), கழுத்தில் மாலையாயணிதலின் ஆரமெனப்பட்டது. - (கடிகை-ஆரம்)நாண்மீன் முதலியவற்றின் தோற்றத்தையும் அத்தமித்தலையும் புலப்படுத்தும் பொறிமண்டிலத்தை உள்ளே பெற்று அரசமங்கையர் ஏறுதற்குரித்தாயிருந்த வண்டியும் பிடிகையும் (இப்போதுள்ள ஈருருளி Bicycle போன்றது) இன்னும் இவை போன்ற பல விசித்திரப் பொருட் களுமாம்” 4. படுக்கை “சிங்கக் கான்மேல் தைத்த தூங்கு கட்டிலின் இலங்கும் மாட்சிமை விளங்கும் அன்னத்தூவியாற் செய்த மெல்லிய படுக்கை” எனக் கலித் தொகை 13 இல் ஒரு தலைவனின் படுக்கையின் விபரங் காணப்படுகின்றது. நெடுநல்வாடையில் யானைக் கொம்பினாற் செய்யப்பட்டதும், நாடா வினாற் பின்னப்பட்டதும் பல்வேறு மெத்தைகள் போட்டுப் பூக்களினிதழ் பரப்பித் துகிலின் தூமடி விரிக்கப்பட்டதுமாகிய கட்டில் என்றும், கட்டி லின் மேல் விதானத்தில் திங்களும் உரோகிணியும் எழுதப்பட்டிருந்தன வென்றும் கூறப்படுகின்றது. “புலி வடிவமைந்த காலையுடைய கட்டிலில் எலிமயிராற் செய்யப் பட்ட பூத்தொழிலையுடைய போர்வையை விரித்துக் கப்பலிலே வந்த பலவகையான படுக்கைகளில் ஆராய்ந்து படுத்து” எனப் பெருங்கதையில் கூறப்படுகின்றது. இவை செல்வர்களுக்குரிய படுக்கைகளாகும்; ஆயர் தடிகளினால் வரிந்து கட்டப்பட்ட கட்டிலில் ஆட்டுத் தோலைப் பாயாகக் கொண்டு உறங்குவார்களென்றும், எயிற்றியர் மான்றோலைப் படுக்கையாகக் கொள்வார்களென்றும் இலக்கியத்திற் சொல்லப்படுகின்றன. 5. விளக்குகள் வறிறோர் மண்ணினால் செய்யப்பட்ட விளக்குகளைப் பயன்படுத் தினர். ஏனையோர் இரும்பு செம்பு வெண்கலம் முதலியவற்றாற் செய்யப் பட்ட விளக்குககைள் பயன்படுத்தினர். யவனர்களாற் கொண்டுவரப்பட்ட அன்ன விளக்கு, பாவை விளக்கு முதலியனவும் உபயோகிக்கப்பட்டன. “யவன ரோதிம விளக்கு” (பெரும்பாண்) “பாவை விளக்கிற் பரூஉச்சுடர் அழல” (முல்லைப்பாட்டு) “யவனப் பாவை அணி விளக்கு” (பெருங்கதை) 6. பட்டங்கள் இக்காலம் அரசரால் அளிக்கப்படும் பட்டங்களைப் போல் தமிழ் அரசர் போர் வீரருக்கும் பிறருக்கும் பல பட்டங்களை அளித்தனர். எட்டிப்பட்டம்-இது எட்டிப் பூவைப்போல் பொன்னால் செய்து வணிகருக்குக் கொடுக்கும் பட்டம். ஏனாதிப் பட்டம்-சேனாபதியர் முதலாயினோர்க்கு அரசனால் அளிக்கப்படும் பட்டம். காவிதிப் பட்டம்-உழுவித்துண்போர்களிற் சிறந்தோர் அரசனாற் பெறும் பட்டம். ஏனாதிப் பட்டத்துக்கு மோதிரமளித்தல் வழக்கு. “ஏனாதி மோதிரஞ் செறிக்குந் திருவுடையானொருவன்” என்பது இறையனாரகப் பொருளுரை. 7. வெள்ளணி நாள் அரசர் தாம் பிறந்த நாளில் வெள்ளணி அணிந்து கொண்டாடுவர். அவர் முடிசூட்டும் நாளையும் பெருநாளாகக் கொண்டாடுதல் மரபு. இந்நாளில் அரசன் சிறைக்கோட்டத்துள்ளோரை விடுதலை செய்வான். 8. சில பழக்க வழக்கங்கள் பாண்டியநாடு முத்துக்குப்பேர்போனது. ‘மார்கோ போலோ’ என்பவர் முத்துக் குளிப்பைப் பற்றிக் கூறியவரலாறு உண்மையாயிருக்கிறது. “சுந்தரபாண்டி தேவருடைய நாட்டில் முதற்றரமான பெரிய முத்துக்கள் காணப்படுகின்றன. அவை எப்படி எடுக்கப்படுகின்றன என்பதைப் பற்றிச் சொல்லுகிறேன். முத்துக்குளிப்போர் பெரிதும் சிறிதுமாகிய மரக்கலங் களைக் கொண்டு இலங்கைத் தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலுள்ள குடாவுக்குச் செல்கிறார்கள். அவர்கள் முதலில் பெத்திலார் (Bettlar) என்னும் ஓர் இடத்தை அடைகிறார்கள். பின்பு குடாவுக்குள் அறுபது மைல் தூரம் செல்கின்றனர். இங்கே அவர்கள் தோணிகளை நங்கூரமிட்டுச் சிறிய வள்ளங்களில் ஏறிக்கொள்கின்றனர். அங்கே வணிகர்கள் பல கூட்டங் களாகப் பிரிந்து செல்கின்றனர். அவர்கள் முத்துக் குளிப்பவர்களைச் சித்திரை மாதந் தொடங்கி வைகாசி மாதம் வரைக்கும் சம்பளத்துக்கு அமர்த்திக்கொள்கின்றனர். அங்குக் கிடைக்கும் முத்துக்களில் பத்தி லொன்றை அரசனுடைய கடமையாகக் கொடுத்துவிடல் வேண்டும்: முத்துக் குளிப்போரைப் பெரிய மீன்கள் துன்பஞ் செய்யாதிருத்தற் பொருட்டு அவற்றை மந்திரத்தால் கட்டுகின்றவர்களுக்கு இருபதில் ஒன்று கொடுக்க வேண்டும். மச்சங்களை மந்திரங்களாற் கட்டுபவர்கள் பிராமணர்களாவர். அவர்களுடைய மந்திர வலி பகல் நேரத்தில் மாத்திரம் பலிக்கும். இரவிலே மச்சங்கள் தங்கள் எண்ணப்படி திரியும் பொருட்டு மந்திரத்தை அவிழ்த்து விடுகிறார்கள். முத்துக்குளிப்போர் சிறிய வள்ளங்களில் ஏறியவுடன் நாலு முதல் பன்னிரண்டு பாகத் தண்ணீருள் குதித்துச் சுழியோடி அடியிற் சென்று மூச்சடக்கக்கூடிய வரையில் தங்குகிறார்கள். கீழே காணப்படும் முத்துச் சிப்பிகளைப் பொறுக்கி அரையிலே கட்டியிருக்கும் வலை போன்ற ஒரு பைக்குட்போட்டுக்கொண்டு மேலே வந்து மறுபடியும் கீழே செல்கின்றார்கள். இவ்வகையாகப் பெருந்தொகையான சிப்பிகள் எடுக்கப் படுகின்றன.1 இச்சிப்பிகளிலிருந்து உலகம் முழுமைக்கும் செல்கின்ற முத்துக்கள் எடுக்கப்படுகின்றன. முத்துக்குளிப்பினால் அரசன் பெருந் தொகையான வருவாயடைகிறான். அரை சாக்கியோ (Saggio) நிறைக்கு மேற்பட்ட முத்துக்களை ஒருவராவது அவரது தேசத்துக்கப்பால் கொண்டு போதல் கூடாது. அவ்வகையான முத்துக்களைத் தான் பெற விரும்பியே அரசன் அவ்வகையான சட்டத்தை உண்டாக்கியிருக்கிறான். அவனிடத்தி லுள்ள முத்துக்கள் எண்ணிக்கையில்லாதன. பெரிய முத்துக்கள் அல்லது இரத்தினங்கள் வைத்திருப்பவர்கள் அவற்றைத் தன்னிடம் கொண்டு வந்தால் அது பெறும் விலையில் இரு மடங்குதான் கொடுப்பதாக ஆண்டுக் கொருமுறை நாடு முழுமையும் அறிவிக்கிறான். அவ்வகையான முத்துக்கள் இரத்தினங்கள் வைத்திருப்போர் அவற்றை அரசனிடத்தில் கொடுத்து விலையைப் பெற்றுக்கொள்கின்றனர். முத்துக்களைத் தவிர வேறு விலையுயர்ந்த பொருள்களையும் அரசன் வைத்திருக்கிறான். அவன் பலவகை இரத்தினங்கள் பதித்த ஆரங் களைக் கழுத்தில் அணிந்திருக்கிறான். 104 பெரிய முத்துக்களும் இரத்தினங் களும் சேர்க்கப்பட்ட ஒரு பட்டுநூல் அவன் மார்பிலே தொங்குகின்றது. அவன் காலையிலும் மாலையிலும் 104 துதிகளைக் கடவுளுக்குச் சொல்ல வேண்டியிருப்பதால் இங்ஙனம் அணிந்திருக்கிறானென்று சொல்லப்படு கின்றது. இவ்வகையாகவே இவன் முன்னோரும் செய்து வந்தார்கள். முன்னோர் வைத்திருந்த ஆரத்தையே இவன் பெற்றான். முத்துக்கள் அழுத்திச் செய்யப்பட்ட மூன்று பொன் வளையல்களை அரசன் தோளிலே பூண்டிருக்கிறான். அவை போன்ற வளையல்களைக் காலிலும் அணிந்திருக்கின்றான். கால்விரலில் அவை போன்ற மோதிரங் களையுமணிந்திருக்கின்றான். இங்ஙனம் அரசன் அணிந்திருக்கும் அணிகளின் விலை ஒரு நாட்டின் வருவாயிலும் அதிகமாகும். இவ்வகையான பொருள்கள் அவனிடத்திற் பல உண்டு. அவனிறக்கும்போது அவனுடைய பிள்ளைகள் களஞ்சியத்தைத் தீண்டமாட்டார்கள். ‘எங்கள் தந்தை எவ்வளவு சேமித்து வைத்திருக் கிறாரோ அவ்வளவு நாங்களும் தேடி வைத்தருக்க வேண்டு’ மெனச் சொல்லுகிறார்கள். வாசிவ் (Wassif) என்னும் மகமதிய சரிதாசிரியர் கூறுவதி லிருந்து மார்க்கோ போலோ பாண்டியர்கள் திரட்டி வைத்திருந்த பொருள் நிலையைச் சரியாக அறிந்திருந்தானென்பது விளங்குகின்றது. “குலசேகர னது கருவூலம் விலைமதிப்புள்ள பொருள் நிறைந்தது. அவனது கருவூலம் 12,000 கோடி உள்ளதாயிருந்தது. இதைவிட முத்து பவழம் இரத்தினம் முதலிய பல பொருள்கள் இருந்தன. அவனுடைய செல்வத்தை அளவிட்டுக் கூற மொழி இடங்கொடாது” என அவன் கூறியுள்ளார். மார்க்கோபோலோ, அரசனையும் அவனது சபையையுங்குறித்துக் கேட்பதற்கின்பமாகிய செய்திகள் கூறுகின்றான். “இந்த அரசன் ஐஞ்ஞூறு மனைவியரை உடையவ னாயிருக்கிறான். அவனுக்குப் பல பிள்ளைகளுண்டு. அரசனைச் சூழ்ந்து பல பிரபுக்கள் இருக்கிறார்கள். அவர்கள் அவனுடன்கூடச் சவாரிசெய்கி றார்கள். அவர்கள் எப்பொழுதும் அரசனுக்குப் பக்கத்தில் இருக்கிறார்கள். அரசாங்கத்தில் அவர்களுக்குப் பெரிய அதிகாரமுண்டு. அவர்கள் ‘ஆபத் துக்கு உதவிகள்’ என்று அழைக்கப்படுவார்கள். அரசன் இறந்து எரியில் கொளுத்தப்படும்போது அவ் வாபத்துக்குதவிகளும் பிரேதத்தைச் சூழ்ந்து தீயில் விழுந்து இறந்து போகின்றார்கள். இம்மையில் அரசனுக்குதவியா யிருந்த தாம் மறுமையிலும் அவனுக்கு உதவியாயிருக்க வேண்டுமென்று அவர்கள் சொல்லிக் கொள்கின்றனர். மார்க்கோபோலோ பொதுமக்களின் வாழ்க்கையைக் குறித்துக் கூறியிருக்கின்றார். “அவர்களுடைய நடை உடை முதலியன அவனை ஆச்சரியமுறச் செய்தன. ‘மாபார்’1 என்னும் மாகாணத்திலுள்ளவர்கள் அரைக்கு மேல் நிருவாணிகளாகவேயிருந்தனர். அதனால் அங்கே தையற்காரர்கள் காணப்படவில்லை. அரசன் முதல் வறியவர்கள் ஈறாக எல்லோரும் அரையில் ஓர் ஆடைமாத்திரம் தரித்துக்கொள்வர்.” அக்காலத்தில் (சதி) உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்ததென்றும் கொலைக்குத் தீர்க்கப்பட்ட குற்றவாளிகள் தமது விருப்பத்தின்படி யாதேனுமொரு கோயிலுக்குத் தம்மைப் பலியாகக் கொடுத்துவிடலா மென்ற பிரமாணமிருந்ததென்றும், சனங்கள் பசுக்களை வணங்கினார்க ளென்றும், மாட்டு மாமிசம் அக்காலத்திற் புசிக்கப்படவில்லையென்றும் மார்க்கோபோலோ கூறுகின்றான். இந்நாட்டிலே உள்ளவர்கள் வீடுகளைச் சாணியால் மெழுகு வார்கள். பெரியவர்களும் சிறியவர்களுமாகிய எல்லோரும் தரையிலேயே இருப்பார்கள். இந்நாட்டவர் உடம்பை மறைத்துக் கொள்ளாது சண்டைக்குச் செல்கின்றனர். அவர்கள் ஈட்டியும் கேடயமும் வைத்திருப்பார்கள். ஆண்களும் பெண்களும் நாளும் இருமுறை குளிப்பார்கள். அப்படிச் செய்யாதவர்கள் தாழ்ந்தவர்களாகக் கருதப்பட்டார்கள். அவர்கள் வலக்கையால் உணவை எடுத்து உண்பதேயன்றி, இடக்கையால் தீண்டமாட்டார்கள். இவ்வாறே நீர் பருகுகிறார்கள். ஒவ்வொருவரும் தனித்தனி ஒவ்வொரு பாத்திரம் வைத்திருக்கின்றனர். அவர்கள் நீர் அருந்தும்போது பாத்திரம் உதட்டில் முட்டுவதில்லை. எக்காரணத்தினா லாவது அவர்கள் நீர்அருந்தும் பாத்திரத்தை உதட்டில் முட்டவிட மாட்டார்கள். அன்னியனொருவன் நீரருந்தப் பாத்திரம் வைத்திரா விட்டால் அவன் உண்ணும்படி நீரைக் கையில் ஊற்றுவார்கள். அவர்கள் குற்றவாளிகளுக்குத் தண்டனை இறுப்பதில் மிகவும் கவனம் செலுத்தினார்கள். அவர்கள் மது உண்பதில்லை. மதுபானஞ் செய்பவர்கள் நம்பிக்கை நாணயம் உடையவராகக் கருதப்படமாட் டார்கள் என்று சட்டஞ் செய்திருந்தார்கள். கடன் கொடுத்தவன் கடன் காரனைப் பலமுறையும் பணத்தைக் கேட்க. அவன் கொடாவிட்டால், அல்லது பல கெடுக்கள் சொன்னால் அவன் ஒரு வட்டங் கீறிக் கடன் காரனை அதற்குள் நிறுத்தலாம். கடன் பட்டவன் கடன் கொடுத்தவனைத் திருப்திப் படுத்தியபின் அல்லது அவனுக்குத் தகுந்த பொறுப்புச் செய்த பின்தான் அவ்வட்டத்தினின்றும் விலகலாம். அவன் இவ்வாறு செய்யாது வட்டத்தின் வெளியே செல்வானாயின், அவனுக்குக் கொலைத் தண்டனை விதிக்கப்படுகின்றது. அவர்களின் சாமுத்திரிக்கா இலட்சணம் அறிந்தவர்கள் பலர் உளர். சகுனம் பார்ப்பதில் அவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை. பிள்ளை பிறந்தவுடன் அது பிறந்த மாதம் தேதி நாழிகை முதலியவற்றை எழுதிவைக்கிறார்கள். அவர்கள் செய்யும் கருமம் ஒவ்வொன்றும் சோதிட சம்பந்தமா யிருப்பதாலேயே இங்ஙனம் செய்கிறார்கள். “இந்த நகரத்திலுள்ள சனங்களும் இந்தியாவின் மறு இடங்களி லுள்ளவர்களும் ‘தாம்பூலம்’ என்னும் ஒரு வகை இலையை எப்பொழுதும் வாய்க்குள் வைத்து மெல்லுகின்றார்கள். அவர்கள் அவ்விலையை மென்று உமிழ் நீரை வெளியே துப்பிவிடுகின்றனர். அரசர்களும் செல்வர்களும் கருப்பூரம் முதலியன கலந்த வாசனைப் பொருள்களுடன் அதனைப் பயன்படுத்துகிறார்கள். இவ்வழக்கம் நலத்துக்கும் மிகவும் நல்லதெனச் சொல்லப்படுகிறது. இங்குக் குதிரைகள் கிடைப்பதில்லை. இதனால் பிற நாடுகளிலிருந்து குதிரைகள் வாங்குவதில் இந்நாடு பெருந்தொகைப் பணத்தைச் செல விட்டது. கிஸ் (Kis), ஹோம்ஸ் (Hormes), டோவர் (Dofar), சோஏர் (Soer), எடின் (Aden) முதலிய நாட்டவர்கள் இந்த நாட்டு அரசனுக்கும் அவ னுடைய நாலு சகோதரருக்கும் விற்கும்படி குதிரைகள் கொண்டு வரு வார்கள். ஒரு குதிரையின் விலை 500 சக்கி (Saggi) பொன்னாகும். அது 100 வெள்ளி மார்க்ஸ் (Marks)க்குச் சரி. ‘வாசிவ்’பின் வருமாறு கூறுகிறார்: குதிரைகள் இங்கு வந்ததும் பச்சைவாளி கொடுப்பதற்குப் பதில் வறுத்த வாளியையும், தானியங்களையும் நெய்யுடன் கலந்து கொடுக் கிறார்கள். குடிப்பதற்குக் காய்ச்சிய பசுவின் பாலைக் கொடுக்கிறார்கள். அவர்கள் 40 நாட்களுக்கு அவைகளைக் கயிறுகளால் பந்தியிற் கட்டிக் கொழுக்கும்படி விடுகிறார்கள். இந்தியப் போர்வீரர் அவற்றின்மீது துட்ட தேவதைகளைப் போல ஏறிச் சவாரி செய்கிறார்கள். சிறிது காலத்துக்குப் பின் வேகமுள்ள குதிரைகள் பலமற்றனவாய் உபயோகமற்றுப் போகின்றன. இதனால் ஆண்டுதோறும் புதிய குதிரைகள் வாங்க நேர்கின்றது. மார்க்கோபோலோ கி.பி. 1254 முதல் 1324 வரையில் வாழ்ந்தவன். பெரும்பாணாற்றுப்படை (இதில் பழந்தமிழரின் பழக்க வழக்கங்கள் நன்கு கூறப்பட்டிருக் கின்றன) இளந்திரையன்பாற் சென்று பரிசில் பெற்றானொருவன். பரிசில் பெறுதற்கு விரும்பிய பெரும்பாணனொருவனை எதிர்ப்பட்டு அவ்வரசன் பால் ஏகுமாறு அவனை ஆற்றுப்படுத்தி இளந்திரையனின் இராசதானி யாகிய காஞ்சிபுரத்திற்குச் செல்லும் மார்க்கத்தினைக் கூறுகின்றான். “அவனுடைய நகரில் வழிப்போக்கர் அலறும்படி வெட்டி அவர் பொருள்களைக் கொள்ளை கொள்ளும் தீயோரில்லை. அவனுடைய காட்டில் இடியேறும் இடியாது; பாம்புகளும் தீண்டா; புலி முதலிய விலங்குகளும் தீங்கிழையா, அவ்வகையான காட்டகத்தே நீ பயமின்றி இளைப்பாறிச் செல்லலாம். அக்காட்டில் கவர்பட்ட பல வழிகள் உண்டு. அவ்வழிகளில் உமணர் உப்பேற்றிய வண்டிகளை ஓட்டிச் செல்வர். வண்டியின் அச்சு மத்தளம் போன்றது. அதன் இருமுனைகளிலும் சில்லுகள் மாட்டப் பெற்றிருக்கும். அச்சின் ஊடே ஏணிக்கால்கள் போன்ற இரண்டு மரங்கள் மாட்டப்பெற்றிருக்கும். அம்மரங்களில் நாட்டப்பட்ட தடிகளின் மேல் குடில்போல் பாயினால் வேயப்பட்டிருக்கும். வண்டிகளின் முன்புறத்தே கோழிக்கூடுகள் வைக்கப்பட்டிருக்கும். உரல் போன்ற உறிகள் வண்டிகளின் முன் புறத்தே உயரக் கட்டப்பட்டு அவை மீது நெல்லிக்காய், புளியங்காய் முதலியன ஊறவிட்ட பானைகள் வைக்கப்பட்டிருக்கும். உமணப்பெண் கையிலே வேப்பிலையையும் பிள்ளையையும் உடையவளாய் வண்டியின் முன்புறத்தேயிருந்து எருதை முதுகிலே அடித் தோட்டுவாள். தழையினாற் கட்டிய மாலையை அணிந்த உமணர், பல சிறு துளைகளையுடைய நுகத்திலே கட்டப்பட்ட எருதுகள் வண்டியைத் திருகாமலும் அச்சு முறியாமலும் பக்கத்தே காத்துக் கொண்டும் களைத்தாற் பூட்டுவதற்குப் பல எருதுகளை ஓட்டிக்கொண்டும் உப்பின் விலையைக் கூறிக்கொண்டும் கவர்பட்ட வழிகளாற் செல்வர். பிறநாடுகளினின்றும் வந்த வணிகர் மாணிக்கம், முத்து, சந்தனம் முதலியவற்றை எங்கும் திரிந்து விற்பார்கள். அவர்களுடைய மார்புகள் அம்புகளாற் கிழிக்கப்பட்டு ஆறிய தழும்புகளுடையன. தம்மை எதிர்ப்போரைத் தாக்குவதற்குக் கையிலே வேல் பிடித்திருப்பர்; யானைத் தந்தத்தால் கடைந்தெடுத்த உறையிலே இட்டவாளை வரிகளையுடைய சீலையிலே கோத்துத் தோளின் ஒரு பக்கத்தே தொங்கவிட்டுச் சட்டை யிட்டுச் செருப்புத்தொட்டு ஒத்த கனமாகச் சேர்ந்த மிளகுப் பொதிகளைக் கவர்பட்ட வழிகளில் சுமந்து செல்லும் கழுதைகளின் பின் செல்வார்கள். இவ்வாறு சகடங்களும், கழுதைகளும் செல்கின்ற கவர்பட்ட வழிகள் சந்திக்கின்ற இடத்தில் அரசனால் நியமிக்கப்பட்ட சுங்கங் கொள்வோர் விற்படையுடன் காத்திருப்பார்கள். அக்காட்டிலே எயினர்களுடைய சிறு குடிசைகள் காணப்படு கின்றன. அவை அணிலும் எலியும் நுழையாதபடி ஈந்தின் ஓலையினால் வேயப்பட்டு முட்பன்றியின் முதுகுபோன்ற புறத்தினையுடையனவா யிருக்கும். பிள்ளையைப் பெற்ற எயிற்றியர் அக்குடிசைகளின் ஒருபுறத்தே மான்றோல்களில் முடங்கிக் கிடக்க, மற்றவர்கள் பாரையினால் கரம்பை நிலத்தைக் கிளறி, எறும்பு சேர்த்து வைத்த புல்லரிசியை எடுத்துவந்து 1பார்வைமான் கட்டப்பட்ட விளவின் நிழலையுடைய முற்றத்திலே தோண்டப்பட்ட நில உரலிலே பெய்து வயிர உலக்கையினால் குற்றி, ஆழ்ந்த கிணற்றில் உவர் நீரை மொண்டு வந்து, பழைய ஒறுவாய்ப் போன பானையிலே உலையை வார்த்து, முறிந்த அடுப்பிலே வைத்து ஆக்கு வார்கள். அவர் குடிசைகளை அடைந்தால் இவ்வாறு சமைக்கப்பட்ட சோற்றை உப்புக் கண்டத்துடனே தேக்கிலையில் இட்டு உண்ணும் படி கொடுப்பார்கள். இக்குடிசைகளைக் கடந்து சென்றால் எயினர் அரணைக் காண லாம். அங்கு மதில்களையுடையனவும் ஊகம்புல்லினால் வேயப்பட்டனவு மாகிய வீடுகள் உண்டு. அவற்றுள் பகைவரைக் குத்தியதால் கூர் மழுங்கிய வேல்கள் மணிகட்டின பரிசைகளோடு விற்களிற் சாத்தப்பெற்றிருக்கும் தலைவாயிலின் திரண்ட கால்களில் அம்புக் கட்டுகளும் துடியும் தூங்கும். சங்கிலியிலே கட்டப்பட்ட நாய்கள் வீட்டைக் காவல்காத்து நிற்கும். வீட்டைச் சுற்றி முள்வேலியும் அதனைச் சூழ்ந்து காவற்காடும் காணப் படும். வாயிலின் உட்கதவுகள் திரண்ட மரங்களால் தாள் போடப்பட் டிருக்கும். இவ்வகையான எயினர் அரண்களில் தங்கினால், நாய்கள் கடித்துக் கொண்டுவந்த சங்குமணி போன்ற முட்டைகளையுடைய உடும்பின் பொரியலாலே மறைக்கப்பட்ட சோற்றை வீடுகடோறும் பெறுவாய். அப்பாற் சென்றால் குறிஞ்சி நிலத்தை அடைவாய். அங்கே வாட்டொழிலைச் செய்யும் குடியிற் பிறந்த புலியின் மீசையைப் போன்ற தாடியையுடைய குறவர் தலைவன். கொடிய வில்லையுடைய காவல ருடனே காவலையுடைய பகைவரது முல்லைநிலத்தை அடைவான். விடியற் காலையிலே அவர்கள் பசுக்களை ஓட்டிக்கொண்டுபோய்க் கள்ளுக்கு விலையாகக் கொடுப்பான். பின் தனது வீட்டிலே நெல்லாற் செய்த கள்ளை உண்டு, ஆட்டுக் கிடாயை முற்றத்தில் அறுத்து உண்டு, மத்தளங் கொட்ட நடுவே நின்று, இடத்தோளை வலப்பக்கத்தே வளைத்துக் கொண்டு பகற்பொழுதிலே மகிழ்ந்து ஆடுவான். இவ்வகையினதாகிய குறிஞ்சி நிலத்தைக் கடந்தபின்பு முல்லை நிலத்தை அடைவீர்கள். அங்கே வீடுகள் குறுகிய கால்களிற் கட்டப்பட்டன. அக்குறுகிய கால்களில் ஆட்டுமந்தைகள் தின்பதற்குத் தழைகள் கட்டப்பட்டிருக்கும். வீட்டின் வாயில்களில் சிறிய பற்றைகள் உண்டு. கதவுகள் கயிற்றினால் வரியப்பட்டன. கயிற்றினால் வரியப்பட்டு வரகு வைக்கோல் பரப்பப்பட்ட படுக்கையில் கிடாயின் தோலைப் படுக்கையாகவுடைய முதியோன் காவலாகத் துயிலும் பல குடிசைகள் அங்குக் காணப்படும். முற்றத்திலே அறையப்பட்டிருக்கின்ற முளைகளில் தாமணிகளையுடைய கயிறுகள் கட்டப்பட்டிருக்கும். சீழ்க்கை அடிக்கையினாலே இடையர் மடித்த வாயையுடையவர்களாயிருப்பார்கள். விடியற்காலத்திலே மாமை நிறத்தையும் தாளுருவி அசைகின்ற காதினையுமுடைய ஆய்மகள் மத்து ஆரவாரிக்கும்படி தயிரைக் கடைந்து வெண்ணெயை எடுப்பாள். பின்பு புள்ளியாகத் தயிர்தெறித்த மோர்ப் பானையைப் பூவாற் செய்த சும்மாட்டின்மேல் வைத்து மோரை விற்பாள்; விற்றதினாற் கிடைத்த நெல் முதலியவற்றைக் கொண்டுபோய்த் தன் சுற்றத்தாரை உண்ணப்பண்ணுவாள்; அவள் தான் நெய்யை விற்ற விலைக்குக் கட்டியாகிய பசும்பொன்னை வாங்காளாய்ப் பாலெருமையை யும், நல்ல பசுவினையும், எருமைநாகினையும் கொள்ளுவாள்; இவ் வகை யினதாகிய ஆயர்குடியிருப்புகளில் தங்குவாயாயின், தினையரிசியாலட்ட சிலுத்த சோற்றைப் பாலுடனே பெறுவாய். அப்பால் முல்லை நிலத்து ஊர்களை அடைவீர்கள். அங்கு வீடு களின் முற்றத்தில் வரகு முதலியன போட்டு வைக்கும் கூடுகள் (குதிர்) காணப்படும். வரகு திரிகைகள் தலைவாயிலில் நடப்பட்டிருக்கும். கொட்டில் வீடுகள் வரகு வைக்கோலினால் வேயப்பட்டிருக்கும். அவ் வீடுகளின் ஒரு புறம் அடுப்பெரித்ததினால் புகை சூழ்ந்திருக்கும். வீடுகளின் சுவர்களில் வண்டிச் சக்கரங்களும் கலப்பைகளும் சார்த்தி வைக்கப்பட் டிருக்கும். அங்கே தங்கினால் வரகு சோற்றைப் பெறுவாய். முல்லை நிலத்தைச் சார்ந்த மருதத்தில் வீடு நிறைந்த உணவினை யுடைய உழவர் வயல்களை விதைப்பார்கள். அறுக்கும் பருவத்தில் அதன் கண் தங்கும் குறும்பூழ் (காடை) பறக்கலாற்றாத இளைய பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு முல்லை நிலத்தே செல்லும். வயல்களிலுள்ள தேனாறு கின்ற பூவை மாலையாகக் கட்டிச் சூடி, அதனை வெறுத்த தொழில் செய் வாருடைய பிள்ளைகள் முள்ளியின் கரிய பூவைப் பறித்துக் கோரையைப் பல்லாலே மென்று கிழித்த நாராற் கட்டிய மாலையை ஈருடைய தலையிலே யணிந்து கடம்பின் தாதை மார்பிலே அப்புவார்கள். அவர்கள் பழஞ்சோற்றை வெறுத்துப் பன்றி முதலிய காத்தற்கு வரம்பிலே கட்டப் பட்ட புதிய வைக்கோலால் வேய்ந்த சிறிய குடிலின் முற்றத்தே அவலிடிப் பார்கள். அவலிடிக்கும் உலக்கையினோசை கிள்ளைகளை வெருவச் செய்யும். வளைந்த கதிரினையுடைய வயலினிடத்து விளைந்த நெல்லை யறுப்போர் சிலந்தியினது நூல்கள் பக்கத்தே சூழ்ந்த போர்களின் அடியை எடுத்து விரிப்பார்கள். பின் ஏர் கடாவிடுவார்கள். வைக்கோலையும் கூளத்தையும் அதனினின்றும் நீக்கி மேற்காற்றிலே தூவித் தூற்றியன பொலி மலைபோலத் தோன்றும். இவ்வகையான மருதநிலஞ் சேர்ந்த குடியிருப்புக்களில் வீட்டின் பக்கத்தே தறிகளில் நெடிய கயிறுகளால் கன்றுகள் கட்டப்பட்டு நிற்கும். ஏணி எட்டாத உயரத்தையுடையதும் தலை திறந்து உள்ளே சொரியப்பட்ட பழைய நெல்லினையுடையதுமாகிய தானியக் கூடுகள் வீடுகளில் உண்டு. தச்சச்சிறார் செய்த சிறு தேர்களைப் பிள்ளைகள் உருட்டிச் சென்ற களைப்பாலே செவிலித்தாயருடைய பாலை நிறைய உண்டு படுக்கையிலே துயில்வார்கள். இவ்வகையான வறுமை தெரியாத குடியிருப்பினையுடைய ஊரிலே நல்ல நெற்சோற்றினைக் கோழிச் சேவலின் சமைத்த பொரியலோடே பெறுவாய். அங்கே புகை சூழ்ந்த கொட்டில்களில் கருப்பஞ்சாற்றைக் காய்ச்சுவார்கள். அக் கொட்டில்களை அடைந்தால் முன் கருப்பஞ் சாற்றைக் கொடுத்துப் பின்கட்டியை உண்ணும்படி தருவார்கள். அப்பாற் சென்றால், வலைஞர் குடியிருப்பை அடைவீர்கள். அவர்கள் வீடுகள் காஞ்சி வஞ்சி முதலிய மரங்களின் கொம்புகளைக் கைகளுக்கு நடுவே தூணாக நட்டு, மூங்கில் தடிகளை வரிச்சாக நிறைத்துத் தாழை நாராற் கட்டித் தருப்பைப் புல்லால் வேய்ந்த தாழ்ந்த இறப்பை யுடையனவாகும். மீன்களை வாரி எடுக்கும் வலைகள் முற்றத்திலே காணப்படும். தலைவாயிலின் கூரையிற் படர்ந்துள்ள சுரைக்கொடியில் காய்கள் தொங்கும். இளையவர்களும் முதியவர்களும் தலைவாயிலிடத்தில் கூடியிருந்து, பின் இறாலும் கயலும் பிறழும் ஆழ்ந்த குளங்களில் பிள்ளைகளோடே உலாவி மீன்களைப் பிடிப்பார்கள். அவர்கள் குடியிருப் பில் தங்கினால், குற்றாத கொழியலரிசியைக் களியாகத் துழாவியட்ட கூழை, அகன்ற வாயையுடைய தட்டுப்பிழாவிலே உலரவாற்றிப் பாம்பு கிடக்கின்ற புற்றாம் பழஞ்சோற்றினையொக்கும் புறத்தினையுடைய முளையினை யிடித்துச் சேர அதிலே கலந்து சாடியின்கண்ணே முற்றிய தும், விரலாலே அலைத்து அரிக்குந் தன்மையையுடையதுமாகிய வெவ்விய கள்ளை மீன்சூட்டுடன் பெறுவாய். நீர்த்துறையிலே விளையாடி மகளிர் போகட்டுப்போன குழையினை நீலநிறமுள்ள சிச்சிலிப்பறவை தனக்கு இரையென எடுத்துக்கொண்டு பட்சிகள் நிறைந்திருக்கும் பனையிற் போகாது அந்தணர் யாகசாலையில் நட்ட யூபத்தின்மேலிருக்கும். அது சோனகர் பாய்மரத்தின் மேலேற்றிய அன்னவிளக்கைப் போலவும் விடிவெள்ளி போலவும் ஒளி விட்டுத் தோன்றும். கடற்கரை, மேற்றிசைக்கண்ணுள்ள குதிரைகளையும் வடதிசைக் கண்ணுள்ள பொருள்களையும் கொண்டு வந்து தரும் மரக்கலங்கள் சூழப்பெற்றது. மணல் மிகுந்த தெருக்களில் தொழிலாளராற் காக்கப்படும் பண்டகசாலைகளும் பரதவர் வாழும் வானளாவிய மாளிகைகளும் உண்டு. வீடுகளில் விளைபொருள்கள் தேங்கிக் கிடக்கும். உழுகின்ற எருது களுடன் பசுக்கள் நெருங்காதபடி ஆட்டுக்கிடாய்களும் நாய்களும் சுழன்று திரியும். உயர்ந்த மாடத்துறையும் பேரணிகலன்களையுடைய மகளிர் பசிய மணிகள் கோத்த வடங்களையுடைய அல்குலினிடத்தே கிடக்கின்ற மெல்லிய துகிலசைய, மலையிலே ஆரவாரிக்கின்ற தோகைமயில் போல் உலாவுவார்கள்; காலிடத்தேயுள்ள பொற்சிலம்புகள் ஒலிக்க, நூலினால் வரிந்து செய்யப்பட்ட பந்தினை அடித்து விளையாடுவார்கள். முத்தை யொத்த வார்ந்த மணலில் மெத்தெனக் கையிற்றரித்த வளைகள் அசையும் படியாகப் பொற்கழங்கு கொண்டு விளையாடுவார்கள். கள்ளுண்பார் பலரும் புகுகின்ற வாயிலில் பசிய கொடிகள் அசையும் படி கட்டப்பட்டுள்ளன. முற்றத்திலே தெய்வத்துக்குத் தூவின சிவந்த பூவாடல்கள் கிடக்கும். அங்கே கள்ளைச் சமைக்கின்ற மகளிர் வட்டில் கழுவிய நீர் வடிதலின் நிலஞ் சேறாயிருக்கும். அச்சேற்றில் புரளுகின்ற பெண் பன்றியுடனே புணர்ச்சிக் கருத்தால போகாமல் குழியிலே நிறுத்தி, நெல்லை இடித்த மாவாகிய உணவினால் ஆண் பன்றி வளர்க்கப்படுகிறது. இவ்வகையான பட்டினத்தில் தங்குவாயாயின் அப்பன்றியின் தசையோடு கள்ளை உண்ணும்படி பெறுவாய். துறைமுகத்தின் கண்ணே ஆகாயத்தை முட்டும்படி உயர்ந்ததும் கற்றை முதலியவற்றால் வேயாததுமாகிய கலங் கரை விளக்கம் உண்டு. இது மரக்கலங்கள் தாம் சேரும் இடத்தை யறிந்து செல்லும்படி நிறுவப்பட்டது. இதனைக் கடந்து சென்றால் தென்னங்கீற்று களால் வேய்ந்த வீடுகள் காணப்படும். இவ்வகையான வீடுகளிலே தங்கினால் பலாப்பழத்தையும், இளநீரையும் வாழைப்பழத்தையும் பனை யினது நுங்கோடே வேறு பண்டங்களையும் முற்றின வள்ளி முதலிய கிழங்குகளையும் உண்ணும்படி பெறுவாய். அப்பால் சென்றால் காந்தள் வளருகின்ற மலையில் யானை படிந் தாற்போல, திருவெஃகாவில் பாம்பிலே துயில் கொள்ளும் திருமாலைக் காண்பாய். திருவெஃகாவைக் கடந்து சென்றால் காஞ்சி நகரை அடைவாய். அங்கே சோலைகளுள் பரிக்கோலைக் கையிலே உடைய யானைப் பாகர் சோர்ந்திருக்கும்போது யானைகளுக்கு நெய்யுடன் கலந்து வைக்கப்பட்ட அரிசியைச் சூலுடைய மந்தி திருடிக் கொண்டு சென்று உண்ணும். தேரோடுதலினால் தெருக்கள் தாழ்ந்திருக்கின்றன. கடவுள் உறைவதும் சீதேவி வாழ்வதுமாகிய அவ்வரசனின் வியனகரையடைந்து, அவனைப் பல நன்மொழிகளாற் புகழ்ந்து யாழ் வாசிப்பின், அவன் அதனைக் கேட்டு மகிழ்ந்து உன்னுடைய அரையிற் கிடந்த கொட்டைப் பாசியின் வேரையொத்த கிழிந்த சீலையைப் போக்கிப், பாலாவியை யொத்த, விளங்குகின்ற நூலாற் செய்த துகில்களை உன் கரிய பெரிய சுற்றத்தாரோடே உடுக்கப் பண்ணி, வளைந்த அரிவாளைக் கொண்ட கையினையுடைய மடையன் ஆக்கின இறைச்சியிற், கொழுவிய தசைகளையும், செந்நெல் அரிசியாலாக்கிய சோற்றையும், இனிய சுவை யுடைய கண்ட சருக்கரை முதலியவற்றுடனே ஊட்டிச் சிறியவும் பெரியவு மாகிய வெள்ளிக் கலங்களை உங்கள் பிள்ளைகளுக்கிடையே பரப்பி, தான் ஆசையுடனே அவர்களை உண்ணப்பண்ணி, பொற்றாமரையை நீண்ட மயிரிடத்தே அழகுபெறச் சொருகி, நான்கு குதிரைகள் பூட்டிய தேரையும் பசிய பொன்னாற் செய்த சேணத்தையும் பரிசிலாகத் தருவான். 26. சில முக்கிய காலக் குறிப்புக்கள் 1. தமிழ்நாட்டுத் தொடர்புடையவை. கி.மு. 450 ..வடிம்பலம்ப நின்ற பாண்டியன் கி.மு. 350 ..நிலந்தரு திருவிற் பாண்டியன் கி.மு. 232-கி.மு. 184 ..தமிழ்நாட்டில் மோரியர் (மயூரர்) கி.மு. 25 .. பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி (அகஸ்டஸ் சீசருக்குத் தூதனுப்பிய பாண்டியன் இவனாகலாம்.) கி.பி. 17 .. பரிபாடல் (சோதிடக்குறிப்பின்படி) கி.மு. 300-கி.பி. 100 .. திருக்குறள், பத்துப்பாட்டு, எட்டுத் தொகையிற் பெரும்பாலன கி.பி.125(கி.பி.50 வரையில் எனக் கொள்வாருமுளர்) .. உக்கிரப்பெருவழுதி கி.பி. 150 .. நெடுஞ்செழியன் கி.பி. 175 ..வெற்றிவேல் இளஞ்செழியன் கி.பி. 171-200 .. சிலப்பதிகாரம், மணிமேகலை கி.பி. 3 ஆம் நூற்றாண்டு .. மாணிக்கவாசகர் (இவர் சுந்தரருக்குப் பின் 9ம் நூற்றாண்டில் அல்லது 10ம் நூற் றாண்டில் விளங்கியவரெனக் கூறுவாரு முளர். தேவாரம் பாடியவர்கள் சிற்சில இடங்களில் மாணிக்க வாசகர் பொருட்டு இறைவன் நிகழ்த்திய திருவிளையாடலைக் குறிப்பிடுகின்றமையின் அவர் தேவாரம் பாடியவர்களுக்குப் பிந்தியவரல்லர். இதுவே ஆறுமுக நாவலரவர்கள் கருத்து மாகும்.) மறைமலையடிகள், டாக்டர் சாமிநாதையர், பேராசிரியர் நீலகண்ட சாத்திரியார், இராமச்சந்திர தீட்சிதர் முதலியோரும் இவர் தேவாரம் பாடியவர் களுக்கு முற்பட்டவர் என்னுங் கருத் துடையர். கி.பி. 200-575 .. களப்பிரர்காலம் கி.பி. 250 .. சேரன் செங்குட்டுவன் கி.பி. 250-500 .. பழந்தமிழ்ப்பாக்கள் தொகுத்து முடிந்தது கி.பி. 470 .. வச்சிரநந்தி (தமிழ்ச்சங்கம்) கி.பி. 615-900 .. நாலாயிரப் பிரபந்தம் கி.பி. 7ஆம் நூற்றாண்டு .. புறப்பொருள் வெண்பாமாலை கி.பி. 7ஆம் நூற்றாண்டு .. சங்கராச்சாரியர் கி.பி. 735ஆம் நூற்றாண்டு .. அரிகேசரி பராங்குசன் கி.பி. 7ஆம் நூற்றாண்டு ..சம்பந்தர் கி.பி. 7ஆம் நூற்றாண்டு .. திருநாவுக்கரசர் கி.பி. 7ஆம் நூற்றாண்டு .. காளிதாசன் கி.பி. 750 .. நாலடியார் கி.பி. 825 - 850 .. சேரமான் பெருமாணாயனார் கி.பி. 8-9ஆம் நூற்றாண்டு .. ஆழ்வார் கி.பி. 825-850 .. நந்திக் கலம்பகம் கி.பி. 906 .. பராந்தகசோழன் கி.பி. 9ஆம் நூற்றாண்டு .. திருத்தக்கதேவர் (சிந்தாமணி) கி.பி. 9ஆம் நூற்றாண்டு .. தோலாமொழித் தேவர் (சூளாமணி) கி.பி. 9ஆம் நூற்றாண்டு .. சுந்தரர் கி.பி. 9ஆம் நூற்றாண்டு .. பாரத வெண்பா கி.பி. 830-850 .. கொங்குவேள் (பெருங்கதை) கி.பி. 995-1013 .. இராசராசன் 1 கி.பி. 10 அல்லது 11 .. வட்டெழுத்து இக்கால எழுத்தாக மாறியது கி.பி. 10 ஆம் நூற்றாண்டு .. பட்டினத்தடிகள் கி.பி. 1100-1141 .. அடியார்க்கு நல்லார் கி.பி. 1110 -1118 .. கலிங்கத்துப்பரணி கி.பி. 1118-1143 .. ஒட்டக்கூத்தர் கி.பி. 1145-1205 .. கம்பர் கி.பி. 12ஆம் நூற்றாண்டு .. பொய்யாமொழிப்புலவர் (தஞ்சைவாணன் கோவை) கி.பி. 12ஆம் நூற்றாண்டு .. நேமிநாதர் கி.பி. 12ஆம் நூற்றாண்டு .. ஒளவையார் கி.பி. 12ஆம் நூற்றாண்டு .. மெய்கண்டார் கி.பி. 12ஆம் நூற்றாண்டு .. சத்திமுற்றப்புலவர் கி.பி. 1134 .. இராமானுசாசாரியார் கி.பி. 1135 .. சேக்கிழார் கி.பி. 1025 .. நம்பியாண்டார் நம்பி கி.பி. 1075 .. வீரசோழியம் கி.பி. 11ஆம் நூற்றாண்டு .. கந்தபுராணம் கி.பி. 12ஆம் நூற்றாண்டு .. இளம்பூரணவடிகள் கி.பி. 13ஆம் நூற்றாண்டு .. பவணந்தி கி.பி. 12ஆம் நூற்றாண்டு .. நாற்கவிராசநம்பி கி.பி. 12ஆம் நூற்றாண்டு .. அமுதசாகரர் கி.பி.15ஆம் நூற்றாண்டு .. அதிவீரராமபாண்டியன் கி.பி. 12-1400 .. உரையாசிரியர்கள், சித்தாந்த சாத்தி ரங்கள் கி.பி. 1453 .. காளமேகப் புலவர் கி.பி. 13ஆம் நூற்றாண்டு .. புகழேந்தி கி.பி. 15ஆம் நூற்றாண்டு .. அருணகிரிநாதர் கி.பி. 15ஆம் நூற்றாண்டு .. வில்லிபுத்தூரர் கி.பி.16ஆம் நூற்றாண்டு .. சூடாமணி நிகண்டு கி.பி. 16ஆம் நூற்றாண்டு .. பரஞ்சோதி திருவிளையாடல் கி.பி. 17ஆம் நூற்றாண்டு .. குமரகுருபரர் கி.பி. 1680-1746 .. வீரமாமுனிவர் கி.பி. 1608-1644 .. தாயுமானசுவாமிகள் கி.பி. 1785(தெய்வீகம்) .. சிவஞானமுனிவர் கி.பி. 1836-1884 .. மாம்பழக் கவிச்சிங்கநாவலர் கி.மு. 57 .. விக்கிரமாதித்த ஆண்டு ஆரம்பம் கி.பி. 78 .. சாலிவாகன ஆண்டின் ஆரம்பம் கி.பி. 173-195 .. கயவாகு கி.பி.- .. செங்குட்டுவன் கி.பி. 171 .. மதுரை எரியுண்டது கி.பி. 553 .. வராகமிகிரர் கி.பி. 10ஆம் நூற்றாண்டு .. கல்லாடம் கி.பி. 12ஆம் நூற்றாண்டு .. நேமிநாதம் கி.பி. 12ஆம் நூற்றாண்டு .. நம்பி திருவிளையாடல் கி.பி. 1200-1400 .. சித்தாந்த சாத்திரங்கள் 2. வடநாட்டுத் தொடர்புடையவை கி.மு. 3500 .. மகன்யோதரோ காலம் கி.மு. 2000 .. ஆரியர் வருகை கி.மு. 1400 .. வேதகாலம் கி.மு. 1300 .. பாரதப்போர் கி.மு. 1200 .. பிராமணகாலம் கி.மு. 1100 .. சனகன் கி.மு. 1000-300 கி.மு. ..உபநிடதகாலம் கி.மு. 600 .. வான்மீகர் கி.மு. 600 .. கபிலர்(சாங்கிய நூல்) கி.மு. 527 .. மகாவீரர்(மரணம்) கி.மு. 563 .. பவேருசாகரம் கி.மு. 483 .. புத்தர் மரணம் கி.மு. 500 .. போதாயனர் கி.மு. 500 .. யாஸ்கஸ் கி.மு. 500 .. அபஸ்தம்பர் கி.மு. 400 .. பாணினி கி.மு. 400 ..நந்தர் கி.மு. 327-296 .. சந்திரகுப்தன் கி.மு. 327-296 .. சாணக்கியர் கி.மு. 268-226 .. அசோகர் கி.மு. 150 .. பதஞ்சலி கி.மு. 150 ..கார்த்தியாயனர் கி.மு. 1ஆம் நூற்றாண்டு .. சாதவாகனன் கி.மு. 1ஆம் நூற்றாண்டு .. குணாட்டியர் 3. பிறநாட்டுத் தொடர்புற்றவை கி.மு. 962-930 .. சாலமன் கி.மு. 700 .. கோமர் கி.மு. 570 .. பதகோரஸ்1 கி.மு. 487 .. கெரதோதஸ் (பிறப்பு) கி.மு. 463 .. இப்போகிற்றஸ் கி.மு. 416 .. கெசியஸஸ் கி.மு. 328 .. பிளாற்றோ கி.மு. 327 .. அலக்சாந்தர் கி.மு. 305 .. மெகஸ்தீனஸ் கி.மு. 26 .. அகஸ்தஸ் சீசர் கி.மு. 49 கி.மு. 14 .. தயதோரஸ் கி.பி. 20 .. பிளினி கி.பி. 70 .. ஸராபோ கி.பி. 80 .. பெரிபுளூஸ் கி.பி. 130 .. தாலமி கி.பி. 150 .. அரியன் கி.பி. 222 .. பெதுங்கேரிய ரட்டவணை கி.பி. 400 .. பாகியான் (சீன யாத்திரிகன்) கி.பி. 671 .. தியான சியாங் கி.பி. 695 .. வராகமிகிரர்  4. ஒழிபியல் 1. நால்வகை எழுத்து “ சீன பாஷையில் ஒவ்வொர் எழுத்தும் ஒவ்வொர் கருத்தைக் குறிப்ப தாய் இன்றளவும் பல்லாயிரம் எழுத்துக்களை உடைய பாஷையாயிருக் கிறது. தமிழ்மொழி எழுத்துக்களின் ஆதி சரிதமும், அவ்வாறே. அவ்வா றெனக் காட்டு முறைகள் பல தமிழ்ப் பூர்வ இலக்கணங்களுட் காணலாம். யாப்பருங்கல விருத்தியில் ‘தேர்பத முதலிய நால்வகை யெழுத்து, உக்கிர வெழுத்து, முத்திறவெழுத்து, கதியெழுத்து, யோனியெழுத்து, சங்கேத வெழுத்து முதலியனவாய்ப் பலவித எழுத்துக்களின் பெயர்கள் கூறப்பட் டுள்ளன. திவாகரம் பிங்கலந்தை முதலிய நூல்களில்:- ‘பெயரெழுத்து முடிவெழுத்து வடிவெழுத்துத் தன்மை எழுத்தென வெழுத்தின் பெயரியம் பினரே’ (திவாகரம்) “வடிவு பெயர் தண்மையுண் முடிவு நான்கா நடைபெறு நாவலர் நாடிய வெழுத்தே” (இலக். கொத்) “உருவே யுணர்வே யொலியே தன்மை எனவீ ரெழுத்து மீரிரு பகுதிய....” (இலக். கொத்) இவற்றுள் ‘வடிவெழுத்தென்றது சித்திரக்குறிகளையாம். மனிதனை மனிதனின் உருவத்தையேனும் அவனின் பாகமாகிய தலையையேனும் சித்திரித்துக்காட்டல் பெயரெழுத்தென்றது சங்கேதக்குறி. போரைக் குறிக்க மனிதனின் புயங்களைக் காட்டுவது. தன்மை யெழுத்தென்றது குணம், சத்தி முதலியவற்றைக் காட்ட வரையும் அடையாளங்கள் விவேகத்துக்குக் கண், வெற்றிக்குக் கருடன் முதலியன வரைதல். முடிவெழுத்தென்றது வினை நிகழ்ச்சியை உணர்த்தும் வாக்கியங்களைக் குறிக்க வழங்கிய வாக்கியங்கள்’ என்றார் செந்தமிழ்ப் பத்திராசிரியராகிய திரு.மு.இராகவ ஐயங்காரவர்கள். தமிழில் ஆராய்ச்சி மிக்குடையராய்த் ‘திராவிட விவகாரத்தில் தெளிந்த சில விஷயங்கள்’ என்னும் வியாசமெழுதிய எப் ஜெ. ரிச்சர்ட்ஸ் பண்டிதர், ‘ஆதித்தமிழ் எழுத்து சித்திர வுருவமாகவே உண்டாயிருக்க வேண்டும்’ எனக் கூறி, அதற்குச் சார்பாகப் பல்லாரியில் மயில் மலையில் பொறித் திருக்கும் சில சித்திரங்களையும் படம் பிடித்து அச்சேற்றி வெளியிட்டனர். (தமிழ் இலக்கியம் ப. 18-19) 2. மடலேறல் “மடலேறலாவது, ஒருவன் ஒவ்வாக் காமத்தால் பனங்கருக்காற் குதிரையும், பனந்தருவி னுள்ளனவற்றால் வண்டில் முதலானவுஞ் செய்து அக் குதிரையின் மேலேறுவது. மடலேறுவான் திகம்பரனாய் உடலெங்கும் நீறுபூசிக் கிழி ஓவியர் கைப்படாது தானே தீட்டிக் கிழியின் தலைப்புறத்தில் அவன் பெயரை வரைந்து கைப்பிடித்து, ஊர் நடுவே நாற்சந்தியில் ஆகார நித்திரையின்றி, அக்கிழிமேற் பார்வையுஞ் சிந்தையு மிருத்தி, வேட்கை வயத்தனாய் வேறுணர்வின்றி, ஆவூரினும், அழல் மேற்படினும் அறித லின்றி, மழை வெயில் காற்றான் மயங்காதிருப்புழி, அவ்வூரினுள்ளார் பலருங் கூடிவந்து நீ மடலேறுதியோ? அவளைத் தருதும், சோதனை தருதியோ? என்றவழி, இயைந்தானாயின், அரசனுக்கறிவித்து, அவனே வலால் அவன் இனைந்து நையத்தந்து மடலேறென்றவழி, ஏறு முறைமை - பூளை யெலும்பு எருக்கு இவைகளாற் கட்டிய மாலையணிந்துகொண்டு அம்மாவிலேற, அவ்வடத்தை வீதியிலீர்த்தலும், அவ்வுருளை யுருண் டோடும்பொழுது, பனங்கருக்கு அறுத்த இடமெல்லாம் இரத்தந் தோன்றாது வீரியந்தோன்றின், அப்பொழுது அவளை அலங்கரித்துக் கொடுப்பது, இரத்தங் கண்டுழி, அவனைக் கொலை செய்துவிடுவது. இவை புலவரால் நாட்டிய வழக்கென்றுணர்க.” (தஞ். கோவை-உரை) “மாவென மடலு மூர்ப பூவெனக் குவிமுகி ழெருக்கங் கண்ணியுஞ் சூடுப மறுகி னார்க்கவும் படுப பிறிது மாகுப காமங்காழ்க் கொளினே” (குறுந்-17) “விழுத்தலைப் பெண்ணை விளையன் மாமடன் மணியணி பெருந்தார் மார்பிற் பூட்டி வெள்ளென் பணிந்துபிற ரெள்ளத் தோன்றி யொருநாண் மருங்கிற் பெருநா ணீக்கித் தெருவி னியலவுந் தருவது கொல்லோ கலிங்கவி ரசைநடைப் பேதை மெலிந்தில ணாம்விடற் கமைந்த தூதே” (குறுந்-182) “சிறுமணி தொடர்ந்து பெருங்கச்சு நிறீஇக் குறுமுகி ழெருக்கங் கண்ணி சூடி யுண்ணா நன்மாப் பண்ணி யெம்முடன் மறுகுடன் திரிதருஞ் சிறுகுறு மாக்கள்” (நற்றினை-220) கிராம பரிபாலனம் “செங்கற்பட்டுச் சில்லாவில், உத்தரமல்லூரில், வைகுண்ட பெருமாள் ஆலயத்தில் கி.பி. பத்தாவது நூற்றாண்டின் தொடக்கத்தில் பரகேசரிவர்மன் என்ற சோழன் ஏற்படுத்திய ஒரு சிலாசாசனத்தில், உத்தர மல்லூரைச் சேர்ந்த கிராம பரிபாலன விதிகளைச் சீர்திருத்திய விபரம் கண்டிருக்கிறது. அதில் சபையாரை நியமித்தலான ஒழுங்கு விளக்கியிருக் கிறது. பெரியரும் சிறியருமான கிராமவாசிகள் ஓரிடத்தில் கூட்டங் கூட வேண்டும். ஆலயங்களின் அர்ச்சகர்கள் யாவரும் கூட்டத்தில் வந்திருக்க வேண்டும். சபையாக நியமிக்கத்தக்கவர்கள் பெயர்களை ஒவ்வொரு ஓலைநறுக்கில் எழுதி அந்தந்த நத்தம் வாரியாகத் தனித்தனிக் கட்டுகளாகக் கட்டி வைக்க வேண்டும். அர்ச்சகர்களில் வயது முதிர்ந்தோர் வெறுங் குடமொன்றைக் கையிலெடுத்துக் கொண்டு கூட்டத்தின் மத்தியில் நிற்க வேண்டும். ஓலைக் கட்டுகளை ஒவ்வொன்றாகக் குடத்தைக் குலுக்கி ஒன்று மறியாத ஒரு சிறுவனை அழைத்துக் குடத்தில் கையிட்டு ஒரு நறுக்கை எடுக்கச் செய்து, அதை மத்தியத்தர் கையிற் கொடுக்க வேண்டும். அந்த நறுக்கிலுள்ள பெயரை மத்தியத்தர் வாசித்த பிறகு மற்ற அர்ச்சகர்கள் ஒவ்வொருவரும் வாசித்துக் காட்ட வேண்டும். அதன் மேல் அந்தந்தப் பெயர் எல்லாருக்கும் அங்கீரகாரமாகும். இங்ஙனம் நத்தத்துக் கொவ் வொருவராகக் கிராம பரிபாலன மகாசபை ஏற்படுத்துவதென்று மேற்படி சாசனத்தில் கண்டிருக்கிறது.” (செல்வகேசவராய முதலியார்) 1ஒரு பொன் எனப்பட்ட தங்க நாணயம் இரண்டரை வெள்ளி நாணயம் (ரூபா) பெறுமதியுள்ளது . -தமிழாராய்ச்சி (ப.260) 3. சங்க நூல்கள் பத்துப்பாட்டு எட்டுத்தொகை பதினெண்கீழ்க் கணக்கு முதலியன சங்க நூல்களென வழங்கப்படுகின்றன. பதினெண்கீழ்க் கணக்கிலுள்ள நூல்களுட் பெரும்பாலன சங்ககாலத்துக்குப் பிற்பட்டன. “முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை பெருகு வளமதுரைக் காஞ்சி-மருவினிய கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப் பாலை கடாத்தொடும் பத்து” திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற் றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்பன பத்துப்பாட்டில் அடங்கிய நூல்களாம்: எட்டுத்தொகையில் அடங்கிய நூல்கள்: “நற்றிணை நல்ல குறுந்தொகை யைங்குறுநூ றொத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல் கற்றறிந்தார் போற்றுங் கலியோ டகம்புறமென் றித்திறத்த வெட்டுத் தொகை.” புறநானூறு, பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு, கலித்தொகை, பரிபாடல், அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை என்பனவாம். 1. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ‘நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப் பால்கடுகங் கோவை பழமொழி-மாமூல மெய்ந்நிலைய காஞ்சியோ டேலாதி யென்பவே கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு.” நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி, சிறு பஞ்சமூலம், முதுமொழிக்காஞ்சி, ஏலாதி, ஐந்திணை ஐம்பது, திணை மொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, திருக்குறள் என்பனவாம். கடைசியிற் கூறப்பட்ட ஆறுநூல்களைப் பற்றிப் பல்வேறு அபிப்பராயங்கள் உள்ளன. “கடைச்சங்க நூல்களில் பெயர் வழங்கும் புலவர் கிட்டத்தட்ட ஐந்நூற்றுவர் எனக் கூறப்பட்டது. இவருள் பெரும்பாலார் இன்னாரென அறிதற்கிடமில்லை. ஒருவாறு இன்னாரென அறியக் கிடந்தவர் இருநூறு புலவரே. இவருள் வேளாளர் ஐம்பத்தொருவர், பெண்பாலார் முப்பத் தறுவர், அந்தணர் இருபத்தொன்பதின்மர், நாகர் பதினெழுவர்; எயினர் பதின்மூவர், கம்மாளர் எழுவர், வணிகர் எழுவர், மன்னர் ஐவர்; ஆயர் மூவர்; குயவர் ஒருவர், பரதவர் ஒருவர், வள்ளுவர் ஒருவர், பாண்டிய மன்னர் பதின்மூவர், சேரமன்னர் எழுவர், சோழமன்னர் ஒருவர், தொண்டைமான் ஒருவர். (தமிழ்.இலக்.ப.66) 2. ஐம்பெருங் காப்பியங்கள் சிலப்பதிகாரம், சிந்தாமணி, மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி. 3. ஐஞ்சிறு காப்பியங்கள் சூளாமணி, உதயணன் கதை, நீலகேசி, யசோதர காவியம். நாககுமார காவியம். 4. திருக்குறள் திருக்குறள் உக்கிரப்பெருவழுதி காலத்தில் தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றப்பட்டதென்பது கன்ன பரம்பரைக் கதை. இலங்கையை யாண்ட ஏல்லாளன் (ஏலேலசிங்கன்) காலத்தவர் இவர் எனச் சிலர் கூறுவர். அப்படியாயின் அவர் காலம் கி.மு.204 ஆகும். திருவள்ளுவர் செய்துள்ள நூல் எல்லாச் சமயத்தாராலும் எச்சாதியாராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. திருவள்ளுவர் தமது நூலிற் கூறியுள்ள சமயமே தமிழர்கள் சமயம் என்று பலர் அபிப்பபிராயப்படுகின்றனர். திருவள்ளுவர் மனு நூலிலோ சாணக்கியர் செய்த அர்த்தசாத்திரத்திலோ விருந்து தமது நூலுக்கு வேண்டிய ஆதாரங்களைப் பெற்றார் என்று ஒரு சிலரும், அற்றன்று, மேற்படி நூல்களிலுள்ள பலவற்றையே மொழி பெயர்த் துள்ளார் என்று வேறு சிலருங்கூறுவர். சந்திரகுப்தனுக்கு மந்திரியாயிருந்த சாணக்கியர் (கௌடலியர்) அருத்தசாத்திரம், காமசாத்திரம், தரும சாத்திரம். மோட்ச சாத்திரம் முதலிய பல நூல்களை வட மொழியில் செய் துள்ளார் என்றும், அவர் தமிழ்நாட்டினர் என்றும் அறிகின்றோம். சாணக்கியர் தமிழ்நாட்டில் அறியப்பட்டதும் வடநாட்டில் அறியப்படாத துமாகிய பொருள்களைப் பற்றிய நூல்களை இயற்றினமையால் அந் நூல்கள் வடநாட்டில் மிகவும் புகழ் பெற்று விளங்க ஏதுவாயின. சாணக் கியர் செய்துள்ள நூல்களுக்கு ஆதாரம் தமிழகத்தில் நூல் வழக்கிலோ செவி வழக்கிலோ உள்ள பொருள்களை ஆதாரமாகக் கொண்டு நூல் இயற்றிய சாணக்கியர் திருவள்ளுவர் என்னும் இருவர் நூல்களிலும் ஓரோரிடங்களில் ஒருமைப்பாடு காணப்படுதல் இயல்பே. ஆகவே, வள்ளுவர் சாணக்கியர் நூலிலிருந்து சிலவற்றை எடுத்து மொழிபெயர்த்துக் கொண்டார் எனக் கூறுதல் இயைபுடையதாகாது. மனு நூலுக்கும் திருக்குறளுக்கும் உள்ள வித்தியாசம் அணுவுக்கும் மாமேருவுக்கும் உள்ள தாகும். இதன் வேற்றுமையை ஆசிரியர் சுந்தரம் பிள்ளையவர்கள், “வள்ளுவர் செய் திருக்குறளை வழுவற நன் குணர்ந்தோhகள் - உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொருநீதி” என்று நனி விளக்கியுள்ளார். விளை யாட்டுச் சிறாரால் மணலிற் கீறப்பட்ட கோடுகளிலும், நத்தை ஓட்டிலுள்ள கீறுகளிலும் ஓரோவிடத்து அகர வடிவம் காணப்படுவது போல மனுநூலி லுள்ள ஏதோ ஒரு வாக்கியம் திருக்குறளிலுள்ள யாதானுமொரு பொரு ளோடு ஒற்றுமைப்படுமாயின், முன்னதின் மொழிபெயர்ப்பே பின்னது என்று வாதாடுதல் அபிமானம் பற்றியதாகும். 5. திருவள்ளுவமாலை திருவள்ளுவரையும் அவர் நூலையும் சிறப்பித்துப் பாடப்பட்ட வெண்பாக்கள் திருவள்ளுவமாலை என வழங்கும். இப்பாடல்கள் கி.பி.எட்டாம் நூற்றாண்டு வரையில் யாரோ ஒரு புலவரால் பாடப் பட்டதெனச் சில அறிஞர் அபிப்பிராயப்படுகின்றனர். “திருவள்ளுவமாலை செய்தது குறள் அரங்கேற்றிய காலத்தென்றா வது, அல்லது நாமகள் இறையனார் முதலியவர்கள் பாடியனவாகக் காணப்படும் செய்யுள்கள், மெய்ம்மையாக அவர்களாற் பாடப்பட்டன வென்றாவது கொள்ளற்கிடமின்மையால்,மேற்கூறிய மாமூலனார் பாட் டென்பது வள்ளுவரை இழிகுலத்தானென்பதற்குத் தக்க ஆதாரமாகாது. திருவள்ளுவமாலை செய்தது குறள் அரங்கேற்றிய காலத்தன்றென்பதற்குக் காரணம் என்ன என்பீராயின், அசரீரியும், நாமகளும் பாட்டுப் பாடுவது அனுபவ விரோதமும் அசம்பாவிதமுமேயாம். மற்றையோர்களாற் பாடப் பட்டனவாகக் காணப்படும் பாட்டுக்களுட் பெரும்பாலன மெய்யாக அவர்களாற் பாடப்பட்டனவல்ல. எங்ஙனமெனின், ஒரு நூலுக்குப் பாயிரஞ் சொல்லவோ அன்றி அதனை எடுத்துப் புகழவோ பாயிரஞ் சொல்லவோ அன்றி அதனைப் எடுத்துப் புகழவோ புக்கார் அந்நூன் முழுவதையும் பற்றிப் பேசுவரேயன்றி, அதன் ஒரு பாகத்தை மாத்திரம் பேசார். திருவள்ளுவமாலையிலோ அறத்துப் பாலைப்பற்றி, —“பாயிர நான்கில் லறமிருபான் பன்மூன்றே தூய துறவற மொன் றூழாக-ஆய அறத்துப்பால் நால்வகையா யாய்ந்துரைத்தார் நூலின் திறத்துப்பால் வள்ளுவனார் தேர்ந்து.” என்று எறிச்சலூர் மலாடனாரும், பொருட்பாலைப்பற்றி, “அரசிய லையைந் தமைச்சிய லீரைந் துருவல் லரணிரண்டொன் றொண்கூழ்- இருவியல் திண்படை நட்புப் பதினேழ் குடிபதின்மூன் றென்பொரு ளேழா மிவை” என்று போக்கியாரும், காமத்துப் பாலைப்பற்றி, “ஆண்பாலே ழாறிரண்டு பெண்பா லடுத்தன்பு பூண்பா லிருபாலோ ராறாக-மாண்பாய காமத்தின் பக்கமொரு மூன்றாகக் கட்டுரைத்தார் நாமத்தின் வள்ளுவனார் நன்கு” என்று மோசிகீரனாரும் கூறினதாக வருகின்றது. இம்மூன்று பாடலும் குறளிலுள்ள ஒவ்வோரியலின் தொகையையும் அதிகாரத்தின் தொகையை யும் கூறுகின்றன வன்றிக் குறளின் சிறப்பை அல்லது அதன் அருமை பெருமைகளை எடுத்துரைக்கவில்லை. அன்றிச் செய்யுளழகு வாய்ந்தன வாயுமில்லை.இவைகளை இயற்றுவதற்கு மூன்று சங்கப் புலவர்கள் வேண்டியதில்லை; காரிகை கற்றுக் கவிபாடும் ஒருவர் போதும். இங்ஙனமே இவை மூன்றும் குறளின் இயலும் அதிகாரமும் இத்தனையென்று கணக் கிட விரும்பிய ஒருவராலேயே இயற்றப்பட்டனவாதல் வேண்டும். திருவள்ளுவமாலை குறள் அரங்கேற்றப்பட்ட காலத்துச் செய்யப் படவில்லை என்பதற்கு மற்றொரு நியாயமும் கூறுதும். அம் மாலையில் உக்கிரப்பெருவழுதியார் பாடினதாக வரும் செய்யுளில் ‘நான் மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன் தான் மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த நூல்’ என்றும், காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பெயர் கொண்ட செய்யுளில், ‘ஐயாறு நூறு மதிகார மூன்றுமா, மெய்யாய வேதப் பொருள் விளங்கப்-பொய்யாது, தந்தா னுலகுக்குத் தான்வள்ளுவனாகி, அந்தா மரைமே லயன்’ என்றும் வள்ளுவரைப் பிரமதேவனின் அவதாரமாகக் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு வள்ளுவரைப் பிரமதேவனின் அவதாரமாகக் கூறவந்தது அவர் உயிரோ டிருந்தபோதன்று. உயிரோடிருக்கும்போதே ஒருவரைக் கடவுளின் அவதாரமாகக் கொண்டாடுவது எங்குமில்லை. ஒருவர் இறந்தபின் பல வருடங்கள் சென்று காலம் நீடிக்க நீடிக்கத்தான் அவருடைய பெருமை வளர்ச்சியுற்றுத் தெய்வத் தன்மையடையும். அப்போதுதான் அவர் கடவுளின் அவதாரமாகக் கருதப்படுவார். அங்ஙனமே வள்ளுவரின் அறிவின் பெருமையைக் கண்டு அவரை ஒரு கடவுளின் அவதாரமாகக் கொண்டாட வந்தது அவர் குறளியற்றிப் பல வருடங்கள் சென்றபின்பே யாம். அப்படிச் சிறிது காலஞ் சென்று வள்ளுவர் பிரமதேவனுடைய அவதாரமென்ற கொள்கை வேரூன்றியதன் பின்னரே இந்தப் பாட்டுக்கள் பாடப்பட்டிருத்தல் வேண்டும். இங்ஙனம் இப்பாடல்கள் பாடப்பட்டது குறள் இயற்றிய வெகு காலத்துக்குப் பின்பானால், அவற்றை அடக்கியுள்ள திருவள்ளுவமாலை குறளரங்கேற்றப்பட்ட காலத்து இயற்றப்பட்ட தாகாது. இனி இறையனார் களவியலுரையில் கடைச் சங்கப் புலவர் எண்மர் பெயர்கள் கூறப்பட்டிருக்கின்றன. இவ்வெண்மருள் திருவள்ளுவமாலை யில் மூவர் பெயர் மாத்திரம் காணப்படுகின்றன; ஐவர் பெயரில்லை. அன்றியும் சிலப்பதிகாரத்தில மகா மகோபாத்தியாயர் சாமிநாத ஐயரவர் களால் எடுத்துக் காட்டப்பட்ட பழைய அகவலொன்று கடைச்சங்கப் புலவரில் இருபத்தெழுவர் பெயர் கூறுகின்றது. அவற்றில் பதினேழு பெயர் திருவள்ளுவமாலையில் இல்லை. இதனால் திருவள்ளுவமாலை பாடினவர் கடைச்சங்கப் புலவர்கள் என்று சொல்வதற்கிடமின்றாகின்றது. மேற்கூறியவற்றால் திருவள்ளுவமாலை கடைச்சங்ககாலத்து நூலன்றென்பதும், அதிலுள்ள பாட்டொன்றேனும் அங்கே கூறப்பட்ட புலவராலேயே இயற்றப்பட்டதென்பதற்குத் தக்க ஆதாரம் இல்லை என்பதும் நன்கு போதரும். ஆயின் திருவள்ளுவமாலை எக்காலத்து யாரால் இயற்றப்பட்டதெனின், காலந்தோறும் திருக்குறளைப் பற்றிப் பாட்டுக்கள் பல புலவராலியற்றப்பட்டனவாக, பிற்காலத்து வந்த புலவரொருவர் அவற்றையெல்லாம், அன்றேல், அவற்றுட் சிறந்தவற்றை மாத்திரம் ஒருங்கு சேர்த்து ஒழுங்குபடுத்தி ஒரு நூலாக்கியிருத்தல் வேண்டும். அவர் தாமும் சில பாட்டுக்கள் பாடிச் சேர்த்திருக்கலாம். அல்லது நூன் முழுவதையும் ஒரு புலவரே செய்துமிருக்கலாம். வள்ளுவமாலையில் வரும் பாட்டுக்கள் ஏறக்குறைய ஒரே விதமான நேரிசை வெண்பாக்களாக விருந்தாலும், அசரீரி சொன்னதாக வரும் பாட்டு அசரீரியே நேரே சொன்ன தாயில்லாமல், “திருத்தகு தெய்வத் திருவள் ளுவரோ டுருத்தகு நற்பலகை யொக்க-இருக்க உருத்திர சன்ம ரெனவுரைத்து வானில் ஒருக்கவோ வென்றதோர் சொல்” என, அசரீரி சொன்னதாக மற்றொருவரால் பாடப்பட்டிருத்தலும் இந்தக் கொள்கைக்குத் தகுந்த துணையாகும். இன்னும் இந்தப் பாட்டு மதுரையில் தெய்வத்தன்மை பொருந்திய சங்கப்பலகை ஒன்றிருந்ததென்பதைக் குறித்தலினாலும், அந்தப் பலகையில் திருவள்ளுவரோ டொக்கவிருத்தற்கு உருத்திரசன்மரே ஏற்றவரென்பத னால், குறளரங்கேற்றிய காலத்தில் சங்கப்புலவர் நாற்பத்தெண்மரும் திருவள்ளுவரோ டொக்கவிருக்கத் தகுதியற்றவராய்ப் பொற்றாமரை வாவியுள் வீழ்ந்து மூழ்கினரென்னுங் கதைக்குத் தோற்றுமிடமா யிருத்தலி னாலும், இது குறள் தோன்றி வெகு காலத்துக்குப் பின் இயற்றப்பட்டிருக்க வேண்டுமென்பது தேற்றம். சங்கப் பலகையிலேற்றிய இந்தக் கதை கட்டுக்கதை. இது போன்றதொரு கதை சடகோபரியற்றிய திருவாய் மொழியைப்பற்றியும் வழங்குகின்றது.” (திருக்கோணமலை வித்துவ சிரோமணி த.கனகசுந்தரம் பிள்ளை. பி.ஏ.) 1திருவள்ளுவமாலை என்னும் நூல் சந்தேகத்துக்குரிய கதைகளும் கற்பனைகளும் நிறைந்த பாடல்கள் அடங்கியது. இப்பாடல்கள் கி.பி. 9ஆம் நூற்றாண்டளவில் திருவள்ளுவர் நூலைச் சிறப்பிக்க யாரோ ஒரு தமிழ்ப்புலவரால் பாடப்பட்டிருத்தல் வேண்டும். - தமிழாராய்ச்சி ப.247 4. மகளிரைச் சிறைப்பிடித்தல் முன்னாளில் ஓர் அரசன் பிறனோர் அரசனோடு பொருதுவென் றால், அவன் நாட்டிலுள்ள மகளிரைச் சிறைப்பிடித்து வந்த அவரைக் கற்பழித்தும் மானபங்கஞ் செய்தும் வருத்தாமல் பாதுகாத்துக் கோயில் களில் கடவுளைத் தொழுதுகொண்டு அங்குக் கடவுட்டிருப்பணி செய்யும்படி இருத்துவான். 5. கடற்போர் சேரலாதன் கடலிடத்தே தீவொன்றில் வசித்த தன் பகைவர்மேற் கப்பற்படையுடன் சென்று, அவரது காவன் மரமான கடம்பை வெட்டி யெறிந்து, அவனைப் போர் தொலைத்தான். இவ்வரலாறு பதிற்றுப்பத்தில் கூறப்படுகின்றது. 6. தமிழரசர் மாலைகள் பாண்டியன்-வேம்பு, சேரன்-பனை, சோழன்-ஆத்தி. “போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந்தானையர்”(தொல்) 7. படைகளின் அணிவகுப்பு முதலியன அணி, உண்டை, ஓட்டு, ஆக்கம், கொடிப்படை, தார், தூசி, நிறை, கூழை. 8. அகழிகள் சில அகழிகள் 40 அடித் தாழ்வு இருந்தன. கி.பி. 781 இலும் 977 இலும் எழுதப்பட்ட சில சிலாசாசனங்கள் இதைக் குறிப்பிடுகின்றன. - (Studies in Tamil Literature and History p.23) 9. போர்முரசு செங்குட்டுவன் கனகவிசயருடன் யுத்தத்துக்குப் புறப்பட்டபோது கொடும்பறை, நெடுவயிர், முரசம், பாண்டில், மயிர்க்கண் முரசம் முதலியன ஒலிக்கப்பட்டன என்று சிலப்பதிகாரத்திற் கூறப்பட்டுள்ளது. 10. இலவந்திகைப்பள்ளி அரசன் அரண்மனையில் வாசஞ்செய்வது மாத்திரமல்லாமல் சோலைகளின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள குளிர்ச்சி பொருந்திய மாளிகையிலும் கோடைக்காலங்களில் வசித்தான். அம்மாளிகை இலவந்திகைப்பள்ளி என்று வழங்கப்பட்டது. அதன்கண் காற்று வசதியும் நீர் வசதியும் பொருந்த அமைக்கப்பட்டுள்ள மண்டபம் ‘நீராழி மண்டபம்’ எனப்பட்டது. 11. அரசனைத் தெரிவு செய்யும் நூதன முறை ஓர் அரசனின் மரணத்துக்குப்பின் இராச்சியபாரம் ஏற்பவர் இல்லாதபொழுதும், இராச்சியத்தின் உரிமைக்குப் பலர் வாதாடும் பொழுதும் பட்டத்துயானை வாயிலாக அரசனைத் தெரிவு செய்தலும் முன்னாள் வழக்கு என்பது, “கழுமலத் தியாத்த களிறும் கருவூர் விழுமியோன் மேற்சென் றதனால்-விழுமிய வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால தீண்டா விடுதல் அரிது” (பழமொழி-26) என்னும் பழமொழி வெண்பாவால் அறியக் கிடக்கின்றது. 12. அரச தண்டனைகள் களவு, வியபிசாரம், இராசத்துரோகம் முதலியவற்றுக்குத் தகுந்த தண்டனை ஏற்படுத்தப்பட்டிருந்தது. உறுப்புக்களை வெட்டுதல், சிறையில் அடைத்தல், கொலை செய்தல் எனத் தண்டம் மூன்று வகைப்பட்டது. இராசத் துரோகத்துக்குக் கொலையும், வியபிசாரத்திற்குக் கால் குறைத்த லும் முறையாகவிருந்தன. “காணிற் குடிப்பழியாங் கையுறிற் கால் குறையும்” (நாலடி. 34) “கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர்” (குறள். 550) 13. கிராமச் சங்கம் கிராம காரியங்களை வயதின் முதியவர்கள் ஊர் நடுவிலுள்ள மரங்களின் கீழ்க் கூடி முடிவு செய்தார்கள். அங்ஙனம் கூடும் சங்கம் மன்றம் அல்லது பொதியில் என்று அறியப்பட்டது. இம்மன்றங்கள் பெரும் பாலும், ஆல், விளா, பலா, வேம்பு முதலிய மரங்களின்கீழ்க் கூடின. மரத்தைச் சூழ்ந்து நாற்புறமும் திண்ணை அமைக்கப்பட்டிருந்தது. 14. துறவிகள் தோற்றம் மரவுரியை உடையாகச் செய்த உடையினர். அழகாலும் வடிவாலும் நிறத்தாலும் வலம்புரிச் சங்கையொக்கும் நரை முடியினர். எக்காலத்தும் நீராடுதலின் அழுக்கில்லாமல் விளங்கும் மேனியர். அடிக்கடி விரதமிருந்து பட்டினி கிடப்பதால் தசையில்லாத மார்பின் எலும்புகளின் கோவை வெளிப்படத் தோன்றி உலவும் உடம்பினையுடையவர். எப்பொருளும் நுகர்வதற்கு நன்றாகிய பகற்பொழுதுகள் பல சேரக்கழிந்த வுணவினை யுடையார். நெடுங்காலம் மனத்தில் தங்கக்கூடிய கோபத்தைப் போக்கிய மனத்தினர். பலவற்றையும் கற்ற பெரும் கல்விமான்களும் சிறிதும் அறிய மாட்டாத இயல்பான அறிவுடையவர். பலவற்றையும் கற்றோர்க்குத் தாம் எல்லையாகிய தலைமையையுடையவர். ஆசையோடே கூடிய சினத்தை யும் போக்கின அறிவினையுடையவர். தவத்தால் உடலுக்கு வருத்தம் இருப்பது உண்மையெனினும் தங்கள் மனத்தினால் வருத்தம் சிறிது மறியப்படாத இயல்பினையுடையவர். (திருமுருகாற்றுப்படை) 15. மகளிர் அழகு ஒரு பாடினியின் அழகின் விபரம் பொருநராற்றுப்படையில் கூறப்படுகின்றது. அது வருமாறு: கூந்தல் வார்ந்த ஆற்றின் கருமணல் போன்றது. நெற்றி பிறை போன்றது. புருவம் விற்போன்றது, குளிர்ச்சி பொருந்திய கண் அழகிய கடையையுடையது, வாய் இலவிதழ் போன்றது, பற்கள் வெள்ளிய முத்துக்கள் போன்றன, காதுகள் கத்திரிகை போன்றன. அவை மகரக்குழை அணியப்பெற்று அசையுந் தன்மையுடையன, தோள்கள் மூங்கில்போற் பெருமையுடையன, முன்கைகள் ஐதாகிய மயிரினையுடையன, விரல்கள் காந்தள்மலர் போன்றன, நகங்கள் கிளியினது வாய் போன்றன, முலைகள் ஈர்க்கிடை போகாது பணைத்தன, கொப்பூழ் நீர்ச்சுழி போன்றது, இடை சிறுமையையுடையது. அல்குல் பலமணி கோத்த மேகலை அணியப்பட்டது, குறங்கு பிடியினது கை போன்றது. அடிகள் ஓடி இளைத்த நாயினது நாக்குப் போன்றன, கொண்டை வாழைப்பூப் போன்றது. 16. தமிழர் வாணிபம் 1பழைய தமிழ் இலக்கியங்களும் கிரேக்க உரோமன் நூலாசிரியர் களும் கிறித்து முன்னிரண்டு நூற்றாண்டுகளிலும் சோழ இராச்சியத்தைச் சேர்ந்த கிழக்குக்கரை கிழக்குத் தேசங்களோடும் மேற்குத் தேசங்களோடும் பெரிய வாணிபம் நடத்துவதற்கிடனாயிருந்தது. சோழ தேசக் கட லோடிகள் கரையோரங்களில் மாத்திரம் பிரயாணஞ்செய்தாரல்லர். அவர்கள் வங்காளக் குடாக்கடலைக் கடந்து கங்காநதி ஐராவதி முகத்து வாரங்களுக்குச் சென்றார்கள்; இந்து சமுத்திரத்தைக் கடந்து மலாய்த் தீவுக் கூட்டங்களை அடைந்தார்கள். (வின்சென்ட் சிமித்) 17. நகர் காவலர் இவர் புலிபோலுநர். துயிர்கொள்ளாத கண்ணர். அஞ்சாநெஞ்சர். களவுதொழில் தந்திரங்களைக் கண்டறியும் நுண்ணிய அறிவினர். குறிதப்பா அம்பினர். தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்தோடும் காரிருள் கவிந்த யாமங்களிலும் இவர் இளைப்பின்றி ஊர் சுற்றி வருவார். கறுத்த உடலின ராய்க் கருஞ்சேலை யுடுத்து வாள் கைக்கொண்டு மென்னூலேணி அரையிற் சுற்றி விழித்த கண் இமைக்கு முன் மறைந்தோடும் வலியுடைய கள்வரையும் கடிதிற் பிடித்துக்கொணரும் ஆற்றலுடையவர். (மதுரைக் காஞ்சி) 18. இன்ன புலவர் இன்ன பாவில் திறமையுடையாரென்பது. “வெண்பாவிற் புகழேந்தி பரணிக்கோர் சயங்கொண்டான் விருத்த மென்னும் ஒண்பாவி லுயர்கம்பன் கோவையுலா அந்தாதிக் கொட்டக் கூத்தன் கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள் வசைபாடக் காள மேகம் பண்பாய பகர்சந்தம் படிக்காச லாதொருவர் பகரொ ணாதே.” 19. தமிழ் ஆராய்ச்சி1 நூலிற் காணும் சில குறிப்புக்கள் 2ஆரியர் வருகைக்கு முன்னமேயே எழுத்துச் சுவடி முதலிய தமிழ்ச் சொற்கள் உண்மையால் அகத்தியர் வடக்கிலிருந்து எழுத்தைக் கொண்டு வந்தார் என்பது உண்மையன்று. -தமிழாராய்ச்சி பக்கம் 122. பயிர்த்தொழில், அங்கநூல், சிற்பக்கலை, கட்டடக் கலை, வானநூல், வாணிகம், வீட்டுப்பொருள்கள், உறவின் முறைகள், விலங்குகள். பறவைகள். தாவரங்கள், மொழி, இலக்கியம் மருந்து, உலோகங்கள், அரசியல், சமயம், யுத்தம், நிறை , அளவு முதலியவைகளும் பிறவுமாகிய வற்றைப் புலப்படுத்தும் பழைய தமிழ்ச் சொற்களுண்டு. 20. ஏறு தழுவுதல் ஏறு தழுவுதல் ஆயருக்கே உரியதாயிருந்தது. பிறை போன்ற கோட்டினையுடைய ஏற்றின் வலியை அடக்கிய சிறுவருக்கு ஆயர் தம் மகளிரை வதுவை சூட்டினர். ஏறு தழுவுங்கால் அவ்வேறுகள் தங் கூர்ங்கோடுகளால் சிறுவர்களின் வயிற்றைப் பிளந்து அவரைக் கொல்வது முண்டு. இதன் விபரம் முல்லைக் கலியில் நன்கு கூறப்பட்டுள்ளது. “அவ்விடத்து ஏறுகளைத் தழுவிப்போக்கும்படியை உட்கொண்டு வந்து திரண்டு மழை முழக்கென்ன இடியென்ன நடுவானிலத்தின் முன்னே ஆரவாரமெழப் புகையோடு புகையெழ ஏறு தழுவினார்க்குக் கொடுத்தற்கு நல்ல மகளிர் திரண்டு நிற்ப, நீர்த் துறையிலும் ஆலமரத்தின் கீழும் வலியினையுடைய மராமரத்தின் கீழும் உறையுந் தெய்வங்கட்குச் செய்யும் முறைமைகளைப் பரவித் தொழுவிலே பாய்ந்தார். “எருதினது நோக்கை அஞ்சானாய் அதன்மேல் பாய்ந்த இடை யனைச் சாவக் குத்திக் கொம்பிடத்தே எடுத்துக்கொண்டு உடலைக் குலைக் கின்ற தோற்றரவைக் காணாய்; அழகிய தலைமயிரினையுடைய மனமசைந்த இயல்பினை யுடையளாகிய துரோபதையது துய்ய கூந்தலிலே கையை நீட்டிய துச்சாதனனுடைய நெஞ்சைப்பிளந்து போகட்டுப் பகைவர் நடுவே தான் சொன்ன வஞ்சினத்தை வாய்க்கச் செய்த வீமசேனனைப் போலும்” (கலி. 101) “ஏறாகிய எருமையை யேறுகின்ற கூற்றுவனுடைய நெஞ்சை வடிம்பாலே பிளந்து போகட்டுச் சினத்தோடே அரிய உயிரை வாங்கின அஞ்ஞான்றை யிறைவன் இத்தன்மையை உடையவன்கொ லென்று கூறும்படியாகக் காற்றின் விசைபோல ஓடி வந்து விரைந்து ஏறாகிய காரியதனைப் பலரும் வந்து சேர்தலையுடைய களத்தே வலியடங்கத் தழுவி வருத்தி அதன்மேலே தோன்றி நின்ற பொதுவனது அழகைப் பாராய்; அதனைக் கண்டு என் நெஞ்சு உட்கிற்றுக்கா ணென்றாள்.” (கலி. 103) 21. பழைய மணமுறை சோறு நெய்யுடன் முதியோருக்கு அளிக்கப்பட்டது. பட்சிகள் நன்னிமித்தங் காட்டின. பெரிய வானம் களங்கமின்றி யிருந்தது. சந்திரன் குற்றமில்லாது ரோகிணியுடன் பொருந்தியிருந்தான். மணப்பந்தல் அலங்கரிக்கப்பட்டது. தெய்வத்தை வழிபட்டார்கள். பெரிய முழவு ஒலித்தது. நீராட்டி அலங்கரிக்கப்பட்ட மணப்பொண்ணை ஏனைய பெண்கள் இமைகொட்டாது நோக்கினார்கள். கழுவப்பட்ட பூவிதழ் களாற் செய்யப்பட்ட வணங்குதற்குரிய தெய்வவடிவம் வாகைப்பூவின் மேலும் அறுகம்புல்லின் மேலும் வைக்கப்பட்டது. அது பூ மொட்டு களாலும் வெண்ணூலாலும் அலங்கரிக்கப்பட்டுப் புனிதமாகிய உடை தரிக்கப்பட்டது. மழைத்துளிகள் போன்ற மணல் சிந்தப்பட்ட பந்தலின் கீழ்த் தலைவி வீற்றிருந்தாள். ஆபரணப் பொறையினால் சோர்வடைந்த மணப்பெண்ணின் வியர்வை காயும்படி சுற்றத்தாh விசிறியினால் வீசி அவளைத் தலைவனுக்கு அளித்தார்கள். (அகம். 136) பலர் உண்டபின்னும் உழுந்துடன் சமைக்கப்பட்ட சோற்றுக் குவியல் இருந்தது. நிரைத்த கால்களின்மேற்கட்டப்பட்ட பந்தலின்கீழ்ப் புதிய மணலைப் பரப்பினார்கள். வீட்டில் விளக்குகள் ஏற்றப்பட்டன. தலைவனும் தலைவியும் பூமாலைகளால் அலங்கரிக்கப்பட்டார்கள். நட்சத்திரங்கள் தீய பலனைக் கொடாத நல்ல வளர்பிறைப் பக்கத்தே விடியற்காலையில் சில பெண்கள் குடங்களைத் தாங்கவும், மற்றவர்கள் புதிய அகன்ற குடங்களை ஒவ்வொருவராக மாறவும், வயதின் முதிர்ந்த பெண்கள் பெரும் ஆரவாரஞ் செய்தார்கள். புதல்வரைப் பயந்த அழகிய ஆபரணங்களையணிந்த பெண்கள் பூவிதழும் நெல்லும் இடப்பட்ட நீரை மணப்பெண்ணின் கரிய கூந்தல் பிரகாசிக்கும்படி பெய்து, ‘கற்பு நெறியில் நின்று கணவனுக்குத் துணையாய் வாழ்வாயாக’ என்று வாழ்த்தினர். மணச்சடங்கு நிறைவேறிய இராக்காலத்திலே அயலிலே உள்ள பெண்கள் கூடி மணமகளைப் புதிய ஆடை முதலியவற்றால் அலங்கரித்துத் தலைவ னிடத்துய்க்க அவள் நாணத்தினாலொடுங்கினாள். (அகம். 86) 22. பேய்மகள் காய்ந்த மயிரினையும், நிரை ஒவ்வாத பல்லினையும், பெரிய வாயினையும், கோபத்தாற் சுழலுகின்ற கண்ணினையும் கொடிய பார்வையினையும், பிதுங்கிய கண்ணையுமுடைய கூகையோடே கடிய பாம்பு தூங்குகையினாலே பெரிய முலையை வருத்துகின்ற காதினையும், குறைபாடுடைய உடலினையும் கண்டார் அஞ்சும் நடையினையுமுடைய வெருவருந் தோற்றத்தையுடைய பேய்மகள் உதிரத்தை யளைந்த கூரிய உகிரினையுடைய கொடிய விரலாலே கண்களைத் தோண்டி, உண்ணப் பட்ட மிக்க முடைநாற்றத்தையுடைய கரிய தலையை ஒளி பொருந்திய வளையலணிந்த கையிலே எடுத்து வெற்றிக் களத்தைப் பாடித். தோளை யசைத்து, நிணத்தைத் தின்கின்ற வாய்களாய்த் துணங்கைக் கூத்தாடுவாள். 23. சில நம்பிக்கைகள் காகங் கரைவது விருந்தினர் வருவதற்கறிகுறியெனக் கருதப்பட்டது. புட்கரைதல் அல்லது அவை பறக்குந் திசைகள் தாம் உன்னிச் செல்லும் கருமங்களுக்கு அநுகூலம் அல்லது பிரதிகூலம் ஏற்படுவதை உணர்த்தும் என நம்பப் பட்டது. தக்க பரிசில் பெறாவிடத்துப் புலவர்கள் புள்ளையும் பொழுதையும் பழிப்பார்கள் (புறம்-204), பேய்கள் மரங்களிலும் இடுகாடு சுடுகாடுகளிலும் உறையும். பேய்மகளிர் போர்க்களங்களிற் சென்று இறந்தவர்களின் காயங்களில் விரல்களை அளைந்து அவற்றால் தங்கள் தலையினைக் கோதிச் செந்நிறமாய் விளங்கினார்கள். அவர்கள் பிணங் களைத் தழுவிப் புலாலினைப் புசித்தார்கள். பேய்களை ஓட்டுவதற்கு வெண் கடுகைப் புகைப்பித்தல் முன்னுள்ளோர் வழக்கு. பேய் மகளிர் மனித நிணத் திலும் இரத்தத்திலும் விருப்புள்ளோராவர். ஆகவே, அவை புண்பட்ட போர்வீரரைச் சூழ்ந்து திரியும். அவை புண்ணைத் தீண்டினால் புண் ஆறாது. புண்பட்டோன் இறந்து விடுவான். தன் கணவனின் புண்ணைப் பேய் தீண்டாதபடி அவனுடைய மனைவி வேப்பிலை இரவம் இலைகளை வீட்டின் இறப்பில் செருகி, யாழ் முதலிய இசைக்கருவிகளை ஒலிப்பித்து வெண்கடுகு சிதறி, காஞ்சிபாடி, வாசனைப் பொருள்களைப் புகைப் பிப்பாள். “தீங்கனி யிரவமொடு வேம்புமனைச் செரீஇ வாங்குமருப் பியாழொடு பல்லியங் கறங்கக் கைபயப் பெயர்த்து மையிழு திழுகி யையவி சிதறி யாம்ப லூதி யிசைமணி யெறிந்து காஞ்சி பாடி நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇ” (புறம்-281) 24. தலைக்கோல் பொன் உறையிட்டு, முத்துக்களும் நவமணிகளும் அழுத்தி அலங்கரிக்கப்பட்ட மூங்கிற்கோல் ஒன்று அரங்கின் மத்தியில் வைக்கப் பட்டிருந்தது. இம் மூங்கிற்கோல் பெரும்பாலும் பகை அரசனின் வெண் கொற்றக் குடையின் காம்பாக விருக்கும். அஃது அரண்மனையின் ஓர் அறையில் வணக்கத்துக்குரியதாக வைக்கப்படும். கூத்து நிகழும் நாளில் அது பொற்குடங்களில் நிறைக்கப்பட்ட நீரால் முழுக்காட்டியபின் பூமாலையாலும் முத்துமாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டுப், பட்டத்து யானையில் ஏற்றி, ஊர்வலஞ் செய்யப்பட்டு. அரங்கின் மத்தியில் நாட்டப் படும். ஆட்டந் தொடங்குமுன் கூத்தியர் தலைக்கோலை வணங்குதல் மரபு. தலைக்கோல் கூத்தியர்க்கு அளிக்கப்படும் பட்டமுமாம். 25. பரத்தையர் பட்டினங்களில் பரத்தையர் சேரிகள் இருந்தன. கலித்தொகையில் ஏனாதிப்பாடி என ஓரிடத்திற் கூறப்படுகின்றது. இஃது ஏனாதிப்பட்டம் பெற்றா னொருவன் ஏற்படுத்திய பரத்தையர் சேரியென அதனுரையால் விளங்குகின்றது. பரத்தையர் ஆடல்பாடல்களிற் சிறந்து கண்ணுக்கு மையெழுதிக் கண்டார் மயங்கும்படி தம்மை அலங்கரித்து விளங்கு வார்கள். அவர்கள் ஆடவரைத் தம்முடன் ஏரிகளிலும் பொய்கைகளிலும் ஆடும்படிதூண்டுவார்கள். குறுந்தொகையில் ஒரு பரத்தையின் கூற்றாகக் கூறப்படுவது வருமாறு: நாங்கள் ஆம்பலின் தழையைச் சூடி நீராடச் செல்வோம். அவள் (மனைவி) எங்களிடத்தில் அச்சங்கொள்வாளாயின் தானும் தனது சுற்றத் தாரும் எழினியின் படையைப் போல், அவனைக் காத்துக்கொள்ளட்டும், (குறுந்-80) விழாக்காலங்களில் அவர்கள் ஆடவரை மயக்குவதற்குக் கூடினார்கள். “ஆம்பல் இலையினால் அல்குலை அழகு பெற அலங்கரித்து விழாவுக்குச் செல்வேன். இந்தச் செழுமை மிக்க நாட்டின் தலைவன் காண்பானாயின், என்னை வரிக்காமல் விடுதல் அரிதாகும்.” (நற்-390) மனைவியர் தங் கணவரைப் பரத்தையர் மயக்கிக் கொண்டு செல்லாதபடி காத்தார்கள். “மடக்கண் தகரக் கூந்தற் பணைத்தோள் வார்ந்த வாலெயிற்றுச் சேர்ந்துசெறி குறங்கிற் பிணைய லந்தழைத் தைஇத் துணையிலள் விழவுக்களம் பொலிய வந்துநின் றனளே எழுமினோ வெழுமினெங் கொழுநற் காக்கம்” (நற்-170) “அப் போதரவு பார்த்திருந்த பரத்தையர் குழலூதி யாழெழீஇத் தண்ணுமை யியக்கி முழவியம்பித் தலைமகனை இங்குக் கூத்துண் டென்பது அறிவிப்ப.” என்னை? ‘குழலெழீஇ யாழெழீஇத் தண்ணுமைப் பின்னர் முழவியம்ப லாமந் திரிகை’ என்று கூத்துநூ லுடையாருஞ் சொன்னா ரென்பது. அவ்வகை அறிவிக் கப்பட்ட தலைமகன் நாம் இதனை ஒரு கால் நோக்கிப் போதுமென்று செல்லும். சென்றக்கால் அவர்கள் தங்கண் தாழ்விப்ப ரென்பது. (இறை-அகப்பொருளுரை) 26. சங்க நூல்களால் அறியும் தமிழர் நாகரிகம் 1. பத்துப்பாட்டால் அறியப்படுவன: அறுகம்புல்லால் திரித்த பழுதையைத்தின்ற செம்மறிக்கிடாயினது இறைச்சி, இரும்புக் கம்பியில் கோத்துச் சுட்ட இறைச்சி, பகலு மிரவும் இறைச்சியைத் தின்று பற்கள் முனை மழுங்குதல், நாலு குதிரை பூட்டிய தேர், ஏழடிபின் செல்லல், தேனாகிய நெய்யோடே கிழங்கையும் விற்றவர்கள், மீனினது நெய்யோடே நறவையும் கொண்டுபோதல், வாழைப்பூவெனப் பொலிந்த வோதி, உமணரோடு வந்த மந்தி சிறு பிள்ளைகளோடு கிலுகிலு விளையாடுதல், அமிழ்துவிளை தீங்கனி ஒளவைக்கீந்த அதிகன், அரவு வெகுண்டன்ன நறவு நல்கல், ஆய்பாம்பு கொடுத்த நீலப்பட்டாடையை ஆலமர் செல்வர்க்குக் கொடுத்தது, கற்றோற்த்துடுத்த படிவப்பார்ப்பான், பாவை விளக்கு, பெரிய கொடி பாய்மரத்திலே யாடுகின்ற மரக்கலம், புலி கூட்டிலே அடைக்கப்பட்டிருத்தல், மாறுபாட்டையேற்றுக் கோறற் றொழிலையுடைய ஏற்றினது செவ்வித்தோலை மயிர் சீவாமற் போர்த்த முரசம் ஒலித்தல், இலங்கு இழை மகளிர் பொலம்கலத்து ஏந்திய மணங் கமழ் தேறல் மடுப்ப மகிழ்ந்துண்டல், இரும்புசெய்விளக்கு, கஞ்சிதோய்த்த துகில், நடுநிசியில் வேப்பிலையைத் தலையிலே கட்டின வேலையுடைய வேந்தன் பாசறையிற் புண்பட்டோரைப் பரிகரித்தல், காரி உண்டிக் கடவுள். 2. அகநானூற்றாலறியப்படுவன: நடுகல் வழிபாடு, புலி, தான் கொன்ற யானை இடப்பக்கம் வீழ்ந்தால் மானத்தினால் அதனை உண்ணாமை, மகளிர் குறிஞ்சிப் பாட்டைக் கேட்டுத் தினை மேய வந்த யானை உறங்குவது, வேங்கைமலர் கொய்யும் மகளிர் புலி புலி என்ற ஒலியைக் கேட்டுப் புலியை ஓட்டுவதற்கு ஆடவர் வில்லுங் கொம்பும் எடுத்துக்கொண்டு வந்து புலியைக் காணாமல் வெள்கிப் போதல், தலைவன் பரத்தையொடு காவிரியில் நீர் விளையாடுதல், கணவர் வரவைக் கருதிச் சுவரிற் கோடிட்டு நாள் எண்ணுதல், பெண் ஆமையீன்ற முட்டையை ஆண் ஆமை பாதுகாத்தல். 3. குறந்தொகையாலறியப்படுவன: ஆவின் கழுத்தில் மணி யணிதல், மகளிர் வண்டலயர்தல், குறச்சிறார் குறி சொல்லுதல், சிறு பிள்ளைகள் சிறுதேருருட்டி விளையாடுதல், புலிப்பற்றாலி சிறார்க் கணிதல், பெண்கள் துணங்கைக்கூத்தாடுதல், வண்ணாத்தி கஞ்சிப்பசை போடுதல், விளையாட்டு மகளிர் மணல் வீடுகட்டுதல், நுளைச்சியர் நெல் பெற்று உப்புத் தருதல், பரதவர் கட்டு மரத்திலிருந்து மீன் பிடித்தல், அலவன் தனது பெடையை நீராட்டுதல், அன்றில் பனைமடலிற் கூடுகட்டுதல், குயில் மூங்கிலிற் றங்குதல், சூல்மகளிர் புளிப்பை விரும்புதல், வாளை மீனுக்குக் கொம்பிருத்தல், கிளி வேப்பம் பழத்தைக் கவ்வுதல், யானை தனக்குச் செய்த தீங்கை மறவாமை, யானை வாழைத்தண்டால் மதமழிதல், துயரால் வருங் கண்ணீர்வெப்பமாதல். 4. நற்றிணையாலறியப்படுவன: காதலி சுவரிலே கோடிட்டுப் பிரிந்த தலைமகன் வருநாள் எண்ணு தல், காலாற் பந்து விளையாடுதல், காதலன் வரவைப் பல்லி கூறுதல், இரும்பு காய்ச்சிய உலையிலே கொல்லன் பனைமடலிலுள்ள நீர் தெளித்து நெருப்பை அணைத்தல், எருமை மேய்ப்பான் அதன்மேல் ஏறிச்செல்லல். 5. கலித்தொகையிற் காணப்படும் செய்திகள்: முக்கண்ணான் மூவெயிலை எரித்தது (பாலை-2), ‘எறித்தரு கதிர் தாங்கியேந்திய குடைநீழ, லுறித்தாழ்ந்த கரகமு முரைசான்ற முக்கோலு, நெறிப்படச் சுவலசைஇவேறோரா நெஞ்சத்துக், குறிப்பேவல் செயன் மாலைக் கொளைநடையந்தணர்’ (பாலை-9) பல்கலைச் சில்பூங் கலிங்கத்தள் (குறி-56) தையில் நீராடிய தவம் (குறி-59) ஓத்துடை யந்தணன் எரிவலஞ் செய்வான் போல் (மரு-66) ‘கிளர்மணியார்ப்பார்ப்பச் சாஅய்ச் சாய்அய்ச் செல்லுந் தளர்நடைச் சிறார்’(மரு-80), ஆலமர் செல்வன் அணிசால் பெருவிறல் (81) ஆலமர் செல்வனணிசால் மகன் விழா(83) சுறாவே றெழுதின மோதிரம் (மரு-84), தேரைவாய்க் கிண்கிணி (மரு-86) முகம் குதிரை முகமும் உடல் மக்களுடலுமாகிய இரண்டு அழகுக்குப் பொருந்திய சூரபன்மாவைக்கொன்ற சிவந்த வேலையுடைய முருகன்(93), குறும்பூழ்ப் போர் (95), தொய்யில் பொறித்த வனமுலை (மரு-97), மீன்பூத் தவிர்வரு மந்திவான் விசும்புபோல்-வான்பொறி பரந்த புள்ளி வெள்ளை யுங்-கொலைவன் சூடிய குழவித்திங்கள் போல்-வளைபுமலிந்த கோடணி சேய் (103), பெரும் பெயர்க் கணிச்சியோன் மணிமிடற்றணி போல் (105), நெருப்புக்கை தொட்டவர் போல விதிர்த்திட்டு (115), தம்புகழ் கேட்டார் போற் றலைசாய்த்து (119), முக்கோல்கொ ளந்தணர் முதுமொழி நினைவார் போல் (126), உண்கடன் வழிமொழிந் திரக்குங்கான் முகனுந்தாங்-கொண்டது கொடுக்குங்கான் முகனும்வே றாகுதல்-பண்டு மிவ்வுலகத் தியற்கை (22), இராவணன் மலையை எடுத்தல்(38), நூற்றுவர் தலைவனைக் குறங்கறுத்தல் (52), மல்லரை மறஞ்சாய்த்த மால் (134) குங்கிலிய மெழுதின ஒளிவிரிந்த தொழில்களை யுடையவாகிய வாய்களையுடைய மரத்தாற் செய்த சிறுபாவையாலும் பானையாலும் சிறுபெண்கள் விளையாடுதல் (59), கொக்குரித்தாற் போன்ற மடுப்பையுடையவன் (94), மரங்களிற்றெய்வ முறைதல்(101), துச்சாதனனை வீமன் கொன்றது (101) சிகண்டி துரோணனைக் கொல்லல் (101), ஆய்ச்சியர் தங் கணவர் கைகளைக் கோத்துக் குரவை யாடுதல் (106) சுறாவினது மருப்பாற் செய்த பலகையைக் கோத்துப் புறவிதழொடிந்த நெய்தற் பூவை நெடிய நாரிலே தொடுத்து அழகு பெறக் கட்டிக் கையாலே வாசித்தலையுடைய யாழ்(131). 6. சிந்தாமணியிற் காணப்படும் பழைய செய்திகள்: அருந்ததி காட்டல் (2669), ஆவியன்ன துகில் (67), எலிமயிர்ப் போர்வை (2680), ஏனாதி மோதிரஞ் செறித்த சேனாதிபதி (2167), கல்லூரி (395), குதிரைகளின் துடைகளில் அவை பிறந்த இடப்பெயரை எழுதுதல் (2215), யானையரசின் வலமருப் பீர்ந்து செய்த சீப்பு (2436), முழந்தாளள வாக வீரருடுக்கு முடை (468), வலம்புரி வடிவச் செப்பு (2475), பொன் செய்நாணிற் குஞ்சியைக் கட்டுதல் (2288). 7. பரிபாடலில் காணப்படுஞ் செய்திகள்: இந்திரன் சாபமேற்றது (19) இம்மையின் பங் குறித்துக் கன்னியர் தைந்நீராடல் (11), இராகுகேதுகள் காணப்படுவன வல்ல வென்பது (12), இளைய மகளிருடைய அழுகை தீர்த்தற்குத் தாயர் புலி புலி யென்று அச்சுறுத்தல் (14), நகத்திலும் கன்னத்திலும் செம்பஞ்சு எழுதுதல் (6), பழந்தேனாற் செய்த தேறல்(16), புண்ணிய நதியில் நீராடுவோர் பொன் முதலியவற்றால் செய்வித்த மீன் முதலியவற்றை அதில் செல்லவிடுதல்(16), பொன்னாற் செய்த நண்டு இறவு வாளைகளை ஆற்றில் விடுதல் (10), மகளிர் தேரை மகளிர் ஓட்டுதல் (11), மகளிர் பிடியை ஊர்தல் (10), பரத்தையர் மாவும் பிடியும் ஊர்தல் (10). 8. பெருங்கதையில் காணப்படும் செய்திகள்: பசு வழிபாடு (1-34-16), பிரச்சோதனனுக்குத் தேவியர் பதினாறா யிரவர் (1-34-77), சீதேவி யென்னும் தலைக்கோலம் (1-34-121), பொன்னா லாகிய சிறுபாத்திரம் (1-34-160), தலைக்கோர் பெண்டிர் (1-35-72), பாலாவி போன்ற நுண்ணிய ஆடை (1-36-64), விபூதி (1-36-225), பொற்பூண் கட்டிய பிரம்பு (1-37-9), பேய் பிடித்தாடுவோரின் பின் பறைக்கொட்டிச் செல்லல் (1-37-246), கடிகையாரம் (1-38-123), பொறியொற்று (முத்திரை) (1-38-286) மான்கண் போன்ற சாளரம் (1-40-9), எட்டிப்பட்டம் பெற்ற அரசகுமரன் (1-40-116), கொடிவடிவ மெழுதின மார்பு (1-40-143), முலைக்கச்சு (1-40-144), பஞ்சகௌவியம்(1-40-266), அரசனுக்குப் பிழைசெய்தோர் தம்முடைய அளவுள்ள பொற்பாவையொன்றைச் செய்வித்து அவன் சினத்தைப் போக்குதல் (1-40-371,4) நெற்கதிரை மகளிர் சூடுதல் (1-42-68), காவிதிப் பட்டத்துக் கறிகுறி யாகக் கொடுக்கப்படும் பொற்பட்டம் (1-42-174), கயல் வடிவாகச் செய்த வெற்றிலைப்பை (1-44-229), புலிவடிவம் அமைந்த காலையுடைய கட்டில் (1-47-175) எலிமயிராற் செய்யப்பட்ட பூத்தொழிலை யுடைய போர்வை (1-47-179) தென்னங்கள்ளும் தேனாற் சமைத்த கள்ளின் தெளிவும் (2-2-177), அரசன் சிங்காசனத்தில் வீற்றிருந்து முடிபுனையு மிடத்துப் பட்டத்துத் தேவியும் உடனிருத்தல் (2-4-24), அரசிலை போல் பொற்றகட்டாற் செய்யப்பட்ட ஆபரணம் (2-7-73), மணிகள் இழைத்த மோதிரம் (2-12-74), தன்பெயரெழுதின மோதிரம் (3-9-70), பவழத்தாற் செய்த குமிழையுடைய பொன்னாலாகிய மிதியடி (3-22-202), சித்திரங்கள் எழுதப்பட்ட உயர்ந்த மாடங்கள் (4-3-35), கணவனைப் பிரிந்துறையும் மகளிர் கூந்தல் புனையாமை (4-7-103), யானைத்தந்தத்தாற் செய்த வெண்பூக்கோவைகள் (4-14-64), புலிமுக மாடம் (4-15-108). 9. ஐங்குறுநூற்றலறியப்படுவன: இடையர் கரும்பு குணிலாக் கனியுகுத்தல், இளமகளிர் தும்பை மாலையணிதல், பொய்ம்மைப்புலி காவலுக்கு வைக்கப்படுதல், குரங்கு மூங்கிலிலேறி விளையாடுதல், சுரஞ்செல்வோர் பலவின் கனியை அருந்திச் செல்லல், பரத்தையைத் தேரேற்றி வருதல், பரத்தையரோடு தலைமகன் புனலாடல், மகளிர் இடையில் பொற்காசணிதல், மகளிர் பந்தாடுதல், மகளிர் எரி புகுதல், முதலை தன் பிள்ளையைத் தின்னுதல். 10. சிலப்பதிகாரத்திலறியப்படுவன: அந்தியில் மகளிர் மலரையும் அறுகையும் நெல்லையும் மங்கலமாகச் சிந்துதல், ஆனைமேற் பறையறைதல், இரண்டாஞ் சாமத்திற கண்ட கனா எட்டுமாதத்திற் பலிக்குமென்பது, தேவாசுரயுத்தம் பதினெட்டாண்டிலும், இராம இராவண யுத்தம் பதினெட்டு மாதத்திலும் முடிந்ததென்பது. இறந்தவர்களை உத்தேசித்துத் தானஞ் செய்தல், இறைவன் சூடிய பிறை இரண்டு கலைத்து என்பது, உயிர்ப்பலியுண்ணும் மயிர்க்கண் முரசு, எண்ணெண்கலையோர் (வேசையர்), எழுநிலை மாடம் கடையில் இன்ன சரக்கு ஈண்டுள்ளதென்று அறிவிக்கக் கொடிகளெடுத்தல், கலங்கரை விளக்கம், கற்புடைய மகளிர் இருக்கும் நாட்டில் மழை பெய்யுமென்பது, சஞ்சீவி நான்கு வகை -சல்லிய கரணி, சந்தான கரணி, சமனிய கரணி, மிருத சஞ்சீவி; சந்திரன் கோயில், சூரியன் கோயில், களவு நூல், தெய்வத்தைப் பூவும் புகையும் சாந்தும் கண்ணியும் கொண்டு வழிபடுதல், நூலேணி, புலிப்பல்லைத் தாலியாகக் கட்டுதல், பொதிகளின் மேல் அளவு, எண், நிறை பொறிக்கப்பட்டிருத்தல், யானைப் பிடரியில் மகளிரை யேற்றி நகர்க்கு மணத்தையறிவித்தல். 27. மதுரை (2000 வருடங்களுக்கு முன்) “திரு வழுதிநாடென்னுஞ் சிறப்புப் பெயர் பெற்ற பாண்டி மண்டலம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பெரியோரால் வரையறுக்கப்பட்ட ஐவகை நிலங்களும் பொருந்தி இனிது விளங்கும். குறிஞ்சி நிலத்திலே இஞ்சியும் மஞ்சளும் மிளகும் வெண்சிறுகடுகும் தோரை நெல்லும் ஐவன நெல்லும் வெகுவாய்ப் பல்கியிருக்கும். குறத்தியர் தினைக்கிளி கடியும் ஓசையும் கானவர் அவரை மேயும் ஆமாவைக் கடிகின்ற பூசலும், பூக்கொய்யும் மகளிர் புலி, புலி யென்று கூறுமொலியும் மாறிமாறி ஒலியா நிற்கும். முல்லையின்கண் எள்ளிளங்காயும் வரகின் கதிரும் ஒருபால் முற்றியிருக்கும். ஒருபால் சிறுதினை கொய்வர். அங்கு மிங்குமாழ்ந்த குழிகளில் இரத்தினங்கள் கிடந்து விளங்கும். பசிய பயிர்களின் இடங்கடோறும் முசுண்டைப்பூவும் முல்லைப்பூவும் உதிர்ந்து கிடக்கும். மருதநிலத்தில் கனிகடோறும் யானை நின்றால் மறையும் படியாக நெற்பயிர் பச்சைப்பசேலென வளர்ந்திருக்கும். தடாகங்களில் தாமரையும் நீலோற்பலமும் சேதாம்பலும் மலர்ந்து நறுமணம் வீசும். கழனிகளிலும் குளங்களிலும் மடுக்களிலும் வலைஞர் மீன்களைப் பிடித்து அவைகளைக் கொன்று குவிக்கும் ஆரவாரமும், கரும்பிற்கிட்ட ஆலை யிடத்தோசையும், களை பறிப்பிடத்தோசையும், நெல்லரிகின்ற கிணை யின் ஒலியும், ஆண்களும் பெண்களும் நீராடுகின்ற இரைச்சலும் ஆகாயத்தே சென்று முழங்கும். நெய்தலாகிய கானலினிடத்தே முத்தும் வளையும் பரதர் தந்த பல்வகைப் பண்டங்களும் விலை செய்யப்படும். யவன முதலிய தேயத்தினர் குதிரை முதலியவற்றைக் கொணர்ந்து கொடுத்து, வெள்ளுப்பும் தீம்புளியும், கொழுத்த மீன்களைத் துணித்து உப்பிட்டுலர்த்திய கருவாடுகளும் என்றிவை போன்றவற்றைக் கொண்டு போவர். குறிஞ்சிக்கும் முல்லைக்கும் இடையிலேயுள்ள பாலை நிலத்தில், ஆறலை கள்வர் வழிப்போவாரை வருத்தா வண்ணம் அரசனால் ஏவப்பட்ட வீரர், இலை வேய்ந்த குடிலில் மான்றோலாகிய படுக்கை யுடையராய்ப் பொருந்தியிருப்பர். “இவ்வைந்திணைப் பாங்கும் அழகுறப்பெற்றுப் பாடல்கள் சான்ற நன்னாட்டு நடுவில், திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர் என்னும் நான்மாடக் கூடல் எனப் பெயர் பெற்ற மதுரைமா நகரமானது பூமாதின் அழகிய முகம்போல் பொலிவுற்றிருக்கும். இந்நகரைச் சூழ்ந் திருக்கும் மதில் கற்படைகள் பலவுளவாய் விண்ணுற ஓங்க, அதனைச் சூழ்ந்த அகழியானது நீலமணி போலும் நீரையுடைத்தாய் மண்ணுற ஆழ்ந்திருக்கும். நெடிய நிலையினையும் திண்ணிய கதவினையுமுடைய வாயிலின் மீதமர்ந்த மாடமானது மேகமுலாவும் மலைபோல் ஓங்கி யிருக்கும். மாந்தரும் மாவும் இடையறாமல் வழங்குதலால் வாயிலானது இடைவிடாதோடுகின்ற வையையாற்றினைப் போன்றிருக்கும். வாயிலைக் கடந்த மாத்திரத்தில், அகன்ற தெருக்களும் அவற்றின் இருபுறத்திலும் சாளரங்கள் பலவமைந்தனவாய் உயர்ந்து தோன்றும் வீடுகளும், ஆறும் அதன் இருகரையும் போல விளங்கும். “அங்காடித் தெருவிலே, கோயில்களுக்கு விழாக்களை நடத்திக் கட்டின அழகிய கொடிகளும், தண்டத்தலைவர் பெற்ற வெற்றியின் பொருட்டு எடுத்த சமயக்கொடிகளும் கட்கடைகளில் கள்ளின் களிப்பு மிகுதியைச் சாற்றுகின்ற கொடிகளும் இன்னும் பலவாய் வேறுபட்ட கொடிகளும் பெரிய மலையிடத்து அருவிக்ள அசையுமாறுபோல அசையா நிற்கும் யானையுந் தேரும் புரவியும் வீரரும் ஆகிய நாற்பெரும் படைகள் பல்காலும் வருவனவாய் மீள்கையினாலே, பூ விற்பாரும் பூமாலை விற்பாரும் சுண்ணம் விற்பாரும் வெற்றிலையும் பாக்கும் சுண்ணாம்புடனே விற்கின்றவர்களும் தம் இன்னுயிரஞ்சி ஏங்கியிருந்து, அந்நாற்படையும் அகன்ற பின்னர் வருத்த நீங்கி., மாடமாளிகை கூட கோபுரங்களின் குளிர் நிழலிலே இருந்து இளைப்பாறுவார்கள். கிழப் பெண்டிர் பண்ணியங்களை நறும்பூவுடனே ஏந்திச் சென்று மனைக டோறும் மனைகடோறும் உலாவி விற்பர். “மாலைப் பொழுதில் விழாக் காணச் செல்வர்கள், பட்டுடுத்து உடைவாள் தரித்து மாலை தாங்கித் தேர்களின் மீதேறிக் காலாட்கள் புடை சூழ்ந்துவரக் குதிரைகளைச் செலுத்திச் செல்வர். அத் திருவிழாக்களைப் பெண்கள் அரமியத்தலத்தினின்றுங் காண்பர். அங்கே கட்டிய கொடி களின் மீது மந்தமாருதம் வீசுதலால் அம்மகளிர் முகங்களானவை மேகத் திலே மறையுஞ் சந்திரனைப் போல ஒருகாற்றோன்றி ஒருகால் மறையும். “புத்த மதத்தினராகிய பேரிளம்பெண்டிர் சிறுபிள்ளைகளை எடுத்துக்கொண்டு, தங்கணவரோடு பூசைக்கு வேண்டும் பூவினையும் தூபங்களையும் கைகளில் ஏந்திச் சென்று வணங்கும் பௌத்தப் பள்ளிகள் ஓரிடத்துக் காணப்படும். சிறந்த வேதங்களை ஓதி, யாகாதி கருமங்களைச் செய்து, பிரமந் தாங்களேயாய், வீட்டின் பத்தை இவ்வுலகிலே தானே அடைகின்ற பிரமவித்துக்களிருப்பிடம் ஒருபால் புலப்படும். ஒருபால், முக்கால ஒழுக்கமும் மூவுலகின் செய்தியும் முழுதுணரும் சமண முனிவர்கள் உறைகின்ற அமணப் பள்ளிகள் கட்புலனாம். அப்பால் அறங் கூறவையமும், அமைச்சரிருக்கையும் அழகுற விளங்கும். “சங்குவளை கடைவாரும், மணிகளைத் துளையிடுவாரும், பொற் கொல்லரும்; பொன்வாணிகரும், ஆடைவிற்பாரும், சித்திரக்காரரும் பிறருங் கூடி அந்திக்கடையில் நெருங்கி நிற்பர். அறக்கூழ்ச்சாலையில் பலாப்பழம் வாழைப்பழம் முந்திரிகைப்பழம் முதலிய பழங்களையும், பாகற்காய் வாழைக்காய் வழுதுணங்காய் முதலான காய்களையும், இலை கறிகளையும், கண்ட சருக்கரைத் தேற்றையும், இறைச்சிகளையுடைய சோற்றையும் கிழங்குகளுடனே பாற்சோறு பால் முதலியனவற்றையும் கொண்டுவந்து பசி தாகங்களினால் வருந்துவோர்க்கும் தரித்திரர்க்கும் இடுவார்கள். இக்கூறிய பலவிடங்களிலும் எழுகின்ற ஓசையானது அந்திக்காலத்தில் பல்வேறு பறவைகள் கூடிய இடத்து எழுகின்ற ஓசையின் தன்மையதாகும். “பொழுது சாய்ந்தபின் ஆடல்பாடல் முதலிய பல்வகைத் துறை களில் அவ்வவர் பொழுதைக் கழிப்பர். முதல் யாமஞ் சென்றபின் கடை விற்பார் கடைகளையடைத்தும், பண்ணியம் விற்பார் அவற்றின் பாங்கரும் படுத்துறங்கத். திருநாளின்கண்ணே கூத்தாடுங் கூத்தர் அஃதொழிந்து துயில் கொள்ள, ஒலி நிறைந்தடங்கின கடலையொக்கப் படுக்கையிலே துயில் கொள்வோர் இனிதாகக் கண்வளர்வர்.. பின்பு வைகறையாமத்தில், அந்தணர் வேதம் ஓதுவர். யாழோர் நரம்பை இனிதாகத் தெறித்து மருதத்தை வாசிப்பர். பண்டம் விற்பார் தம் கடைகளை மெழுகுதலைச் செய்வர். கற்புடைய மகளிர் துயிலுணர்ந்தெழுந்து, “காட்டுக் களைந்து கலங்கழீஇ யில்லத்தை யாப்பிநீ ரெங்குந் தெளித்துச் சிறுகாலை நீர்ச்சால் கரக நிறைய மலரணிந்து இல்லம்பொலிய வடுப்பினுள் தீப்பெய்க” என்றபடி அக்காலத்து இல்லத்திற் செய்யத் தகுவனவற்றைச் செய்யாநிற்பர். கோழிச் சேவல்கள் விடியற்காலத்தை அறிந்து கூவா நிற்கும். சேவற் பறவைகள் தத்தம் பேடைகளை அழையா நின்று தீங்குரல் செய்யும். கூட்டிலே உறைகின்ற கரடி புலி முதலிய வலிய விலங்குகள் முழங்காநிற்கும். முதுகு காட்டிப் போந்த வீரரும் வெட்டுண்ட வீரரும் விடுத்தயானைகளும் குதிரைகளும் ஆனிரைகளும், தோல்வி யடைந்த அரசர்கள் திறமையாகக் கொணர்ந்த கலங்களும், அவை போன்றன பிறவும் அரண்மனையை நோக்கிச் செல்லும். இங்ஙனம் கங்கையாறு கடலிற் கலந்தாற் போல, உலகிற் பொருள்களெல்லாம் மதுரையை அடையும். “இம் மாநகரின் கோயில்கொண்டு செங்கோல் செலுத்தும் பாண்டியன் ‘வைகறையாமந் துயிலெழுந்து காலைக் கடனைக் கழித்துச் சந்தனம் பூசி, மார்பிலே மாலைதாங்கிக் கையிலே வீரவளையுடன் கணையாழியைச் செறித்துக், கஞ்சியிட்ட துகிலையுடுத்து, அதன்மே லணியும் அணிகலன்களை அழகுறவணிந்து, கொலுமண்டபத்திலே வீற்றிருப்பான். இருந்த வளவிலே, ஏனாதிப்பட்ட முதலிய சிறப்புப் பெற்ற படைத்தலைவர் அவனது வெற்றித் திறத்தை வாழ்த்துவர். பின்னர் அரசன் தான் நாடுநகர் பெறும்படியாகவும், தன் வெற்றி சிறக்கும்படியாகவும் உதவிய வீரரையெல்லாமழைத்துப் பாவலருடனே பாணர் பாட்டி யரையும் அழைத்து யானை தேர் என்பன போன்ற பரிசளிப்பான். அங்ஙனம் பல பல பொருள்களைக் கொணர்ந்து கொடுத்தலால் அந் நாட்டில் வாழுங்குடிமக்கள் செல்வம் பெருகியிருப்பர்.”(மதுரைக்காஞ்சி) “1800 வருடங்களுக்கு முற்பட்ட தமிழர்” என்னும் நூலிற் காணப்படும் கவனித்தற்குரிய சில பொருள்கள். கழாத் தலையார் கி.பி. 30-60 முடத்தாமக் கண்ணியார் கி.பி. 60-90 கபிலர் கி.பி. 90-130 நக்கீரர் கி.பி 100-130 மாமூலனார் கி.பி. 100-130 கல்லாடர் கி.பி. 100-130 மாங்குடி மருதனார் கி.பி. 90-130 திருவள்ளுவர் கி.பி. 100-130 கோவூர் கிழார் கி.பி. 100-130 இறையனார் கி.பி. 100-130 பரணர் கி.பி. 100-130 பெருங்கோசிகனார் கி.பி. 100-130 ஒளவையார் கி.பி. 100-130 இடைக்காடனார் கி.பி. 100-130 சீத்தலைச் சாத்தனார் கி.பி. 110-140 இளங்கோவடிகள் கி.பி. 110-140 அரிசில் கிழார் கி.பி. 110-140 பொன்முடியார் கி.பி. 110-140 பெருங்குன்றூர் கிழார் கி.பி. 120-150 கி.பி. 50-க்கும் 150-க்கு மிடையில் செய்யப்பட்ட நூல்களும் அவற்றில் அடங்கிய அடிகளும் அடிகள் குறள் .. 2,660 மணிமேகலை .. 4,857 சிலப்பதிகாரம் .. 4,957 கலித்தொகை .. 4,304 இன்னா நாற்பது .. 160 குறிஞ்சி .. 261 குறிஞ்சி (கபிலர் ஐங்குறு நூறு) .. 400 திருமுருகாற்றுப்படை .. 317 நெடுநல்வாடை .. 188 பொருநர் ஆற்றுப்படை .. 248 பெரும்பாணாற்றுப்படை .. 500 பட்டினப்பாலை .. 301 மதுரைக்காஞ்சி .. 782 மலைபடுகடாம் .. 583 “ரோமர் கி.பி.226 இலும் முசிறியில் 840 முதல் 1200 வீரரையுடைய படை ஒன்று வைத்திருந்தார்களென்றும், அவ்விடத்தில் ஆகஸ்டசுக்கு ஒரு கோவில் கட்டப்பட்டிருந்ததாகவும் ‘Malabar Manual ’ என்னும் நூல் கூறுவ தாகக் கனகசபைப் பிள்ளை அவர்கள் “1800 வருடங்களுக்கு முற்பட்ட தமிழர்” என்னும் நூலில் காட்டியுள்ளார். (ப. 38) நாகரிடமிருந்தே ஆரியர் எழுத்தெழுதும் முறையைக் கற்றார்கள். ஆகவே, அவர்களின் எழுத்துத் தேவநாகரி எனப்படுகின்றது.-1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர், (தேவநாகரி (தேவர் நகரிற் பேசப்படுவது) என்பதே தேவநாகரி யாயிற்று எனக் கூறப்படுகின்றது.) சுமத்திராவிலே லபுதோவா என்னுமிடத்தில் ஒரு சாசனம் கிடைத்தது. அதில் சக வருடம் 1010 குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அது குறித்த ஆண்டு 1088க்குச் சரி. அச்சாசனம் ஆயிரத்தைவர் என்னும் கூட்டத் தினர் கொடுத்த நன்கொடையைப்பற்றிக் கூறுகின்றது. இச் சாசனத்தால் சுமத்திராவில் கி.பி. 11ஆம் நூற்றாண்டில் பொதுமக்களின் சாசனங்களில் தமிழ் வழங்கிற்று என்பது வெளியாகின்றது. நாம் நம்பக் கூடாத அவ்வளவு தூரத்தில் தமிழதும் தமிழரதுமான செல்வாக்கு இருந்திருக்கின்றது.1 ராய்பகதூர். வெங்கையா எம்.ஏ,. அரசினர் சாசனப் பரிசோதகர். 2. பாண்டிய மன்னர் பெருவழுதி மாறன் வழுதி நெடுஞ்செழியன் (கி.பி.75-90) (ஆரியப்படை வென்றவன், சிங்காசனத்திற் றுஞ்சியவன்) வெற்றிவேற்செழியன் (கி.பி.75-90) நெடுஞ்செழியன் II (கி.பி.90-128) (தலையாலங்கானத்துச் செருவென்றவன்; யானைக்கட்சேயைச் சிறைபிடித்தவன்; வெள்ளியம்பலத்திற் றுஞ்சியவன்) கீரன் சாத்தன் (குளமுற்றத்துத் துஞ்சியவன்) உக்கிரப்பெருவழுதி (கி.பி.128-140) (கானப்பேரெயிலை முற்றுகை யிட்டவன், பெருநற்கிள்ளியின் ராசசூயத்துக்குச் சமூக மளித்தவன்) நன்மாறன் (கி.பி.140-150) இலவந்திப்பள்ளித் துஞ்சியவன் (கி.பி. 7ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை) 1. கடுங்கோன் பாண்டியாதி ராசா 2. ஆதிராசா மாறவர்மன் 3. செழியன் சேந்தன் 4. மாறவர்மன் அரிகேசரி ஆசமாசமன் 5. கோச்சடையன் ரணாதிராசா 6. அரிகேசரி பராங்குசன் மாறவர்மன் தேர்மாறன் 7. யாதில நெடுஞ்சடையன் பராந்தகன் (வேள்விக்குடிச் சாசனம் அளித்தவன்) (கி.பி.769-70) 8. ராசசிம்மா II 9. வரகுண மகாராசா 10. சிறீமாற சிறீவல்லப ஏகவீரன் பராசக்கிர கோலாகல பல்லபபான்சன் 11. வரகுணவர்மன் (மாறன் சடையன் கி.பி.862-863க்கு மிடையில் அரசாட்சி எய்தியவன். 12. பராந்தக வீரநாராயணன் 13. ராசசிம்மா III (கி.பி.13ஆம் நூற்றாண்டுக்கும் 17ஆம் நூற்றாண்டுக்கு மிடையில்) 1. யாதவர்மன் குலசேகரன் 1190-1214 2. மாறவர்மன் சுந்தரன் பாண்டியன் I 1216-1235 3. மாறவர்மன் சுந்தரன் பாண்டியன் II 1238-1251 4. யாதவர்மன் சுந்தரன் பாண்டியன் 1251-1261 5. வீரபாண்டியன் 1252-1267 6. மாறவர்மன் குலசேகரன் 1268-1308 7. சடாவர்மன் சுந்தரன் 1275-1290 8. மாறவர்மன் குலசேகரன் 1314-1321 9. மாறவர்மன் பராக்கிரம பாண்டியன் 1334-1352 10. சடாவர்மன் பராக்கிரம பாண்டியன் 1357-1372 11. பராக்கிரம-பாண்டியதேவன் 1365 12. பராக்கிரம பாண்டியன் 1384 13. யாதவர்மன் குலசேகரன் 1395 14. அரிகேசரி பராக்கிரம பாண்டியன் 15. மாறவர்மன் வீரபாண்டியன் } 1422 16. 1அழகன் பெருமாள் குலசேகரன் 1430 17. வீரபாண்டியன் 1437 18. வீரபாண்டியன் 1475 19. பராக்கிரம பாண்டியன் குலசேகர தேவன் 1479 20. பராக்கிரம பாண்டியன் 1516 21. யதில வர்மன் சிறீவல்லப அல்லது அபிராமபராக்கிமா 22. மாறவர்மன் சுந்தர பாண்டியன் } 1533 23. குலசேகரன் அல்லது பெருமாள் 24. வீரபாண்டியன் } 1543 25. கோன் ஏறின்மை கொண்டான் குலசேகர தர்ம பெருமாள் 1550 26. சிறீவல்லப ஆதிவீரராமன் 1562 27. குலசேகர பராக்கிரம அழகன் சொக்கன் 1572 28. அபிராம வரதுங்கராம 29. வீரபாண்டியன் 1586 30. சிவாலமாறன் 1615 3. நாயக்கர் அரசு விசுவநாதன் 1559 குமர கிருஷ்ணப்பன் 1563 கிருஷ்ணப்பன்(மறுபெயர்) பெரிய வீரப்ப விஸ்வநாதன் II 1573 லிங்கையன் (மறு) குமரகிருஷ்ணப்பன் (மறு) விஸ்வநாத் - III 1595 முத்து கிருஷ்ணப்பன் 1602 முத்து வீரப்பன் 1609 திருமலை 1623 முத்து அழகதிரி அல்லது முத்து வீரப்பன் 1659 சொக்கநாத அல்லது சொக்கலிங்கன் 1662 ரங்ககிருஷ்ண முத்து வீரப்பன் 1682 மங்கம்மாள் 1689 விசயரங்க சொக்கநாதன் 1704 மீனாட்சி 1731-1736 4. சேரமன்னர் உதியஞ்சேரலாதன் = வேள்மாள் நல்லினி நெடுங்சேரலாதன் பல்யானைச் செல்கெழுகுட்டுவன் இமயவரம்பன்(கி.பி.40-55) ஆட்சிபுரிந்த காலம் 28 ஆண்டு வேள்மான் அவைக் கோவின் மகள் பதுமன் தேவியை மணந்து 58 வருடம் அரசு புரிந்தான். முடிச்சேரலாதன்-II ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் (கி.பி.55-90) 38 ஆண்டு அரசு புரிந்தான் (மறு நாமங்கள் வானவரம்பன்: செல்வக்கடுங்கோ) மணக் கிள்ளியை மணந்து 25 ஆண்டு அரசு வீற்றிருந்தான். செங்குட்டுவன்(கி.பி.90-125) இளங்கோவடிகள் (இராசசூயம் வேட்டவன்: ஆரிய மன்னரைச் சிறைபிடித்தவன்) செல்வக்கடுங்கோ (யானைக்கட்சேய்) செல்வக்கடுங்கோ (யானைக்கட்சேய்) (கி.பி.125-135) பெருஞ்சேரல் இரும்பொறை (கி.பி.135-150) (அதிகமான் எழினியைக் கொன்று தகடூரைக் கைப்பற்றியவன்) குடக்கோச் சேரலிரும்பொறை (பெருங்குன்றூர் கிழார் இவர் அரண்மனைப் புலவர்) 16 - வருடம் அரசு புரிந்தவன் சேரமான் மாவெண்கோ (பாண்டியன் உக்கிரப்பெருவழுதி ராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி முதலானோர் இவர் காலத்தவர்) “மலைமேன் மரங்கொணர்ந்து மாண்புடைத்தாய்ச் செய்த நிலையொத்த வீதி நெடுமாடக் கூடல் விலைத்தயிர் கொள்ளீரோ வெண்பாண் முலையிரண்டுஞ் சோழ னுறந்தைக் குரும்பையோ தொண்டைமான் வேழஞ்சேர் வேங்கடத்துக் கோங்கரும்போ ஈழத்துத் தச்சன் கடைந்த இணைச் செப்போ அச்சுற்றுள் அன்னமோ ஆய்மயிலோ ஆரஞர்நோய் செய்தாளை யின்னந் தெரிகிற் றிலம்” (யாப்-விருத்தி-மேற்கோள்) மேற்காட்டிய செய்யுளால் ஈழத்துத் தச்சர் கைவினை சிறந்தவர்கள் எனப் புலப்படுத்துகின்றது. இராவணன் மயன் புதல்வியாகிய மண்டோதரியை மன்றல் புரிந்த வரலாறும் உற்று நோக்கற்பாலது. 5. அரசாட்சி “திருக்கொண்டு பெருக்க மெய்திவீற் றிருந்து குற்றங் கெடுத்து விசும்பு தைவரக் கொற்றக் குடையெழுப் பித்து நிலநெளிய படைபரப்பி யாங்காங்குக் களிறி யாத்து நாடுவளம் பெருகக் கிளைகுடி யோம்பி நற்றாய்போல வுற்றது பரிந்து நுகத்துக்குப் பகலாணி போலவும் மக்கட்குக் கொப்பூழ் போலவும் உலகத்துக்கு மந்தரமே போலவும் நடுவு நின்று செங்கோ லோச்சி யாறில்வழி யாறு தோற்று வித்துக் குளனில் வழிக் குளந்தொடு வித்து முயல் பாய்வழிக் கயல்பாயப் பண்ணியும் களிறு பிளிற்றும்வழி பெற்றம் பிளிற்றக்கண்டும் களிறூர் பலகாற் சென்று தேன்றோயவும் தண்புனற் படைப்பைத் தாகியும் குழைகொண்டு கோழி யெறிந்து இழைகொண் டான்றட்டும் இலக்கங்கொண்டு செங்கானாரை யெறிந்தும் உலக்கை கொண்டு வாளை யோச்சியும் தங்குறை நீக்கியும் பிறர்குறை தீர்த்தும் நாடாள்வதே யரசாட்சி” (யாப்பருங்கல விருத்தி-மேற்கோள்) 6. பைசாச மொழி பைசாச மொழி என்பது பழைய தெலுங்கு மொழி என்பர் ‘தமிழ் ஆராய்ச்சி’ என்னும் நூலார். 7. சதி சதி அல்லது விதவைகளைக் கணவருடன் தீயிலிட்டுக் கொளுத்தும் வழக்கம் குற்றச்சாட்டாகக் கி.பி.1829இல் சட்டம் உண்டாக்கப்பட்டது. கி.பி.1862இல் அச்சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. இக்காலம் உயிருடன் எரிக்கப்படாது இருக்கும் கைம்மைகள் பிரிட்டிஷ் அரசாங்கத்தாருக்கு வாழ்த்துக் கூறுவார்களாக. “வாழ்க நம்மன்னவன் வாழ்க வையகம் ஆழ்கநம் அரும்பகை யலர்க நல்லறம் வீழ்கதண் புனல்பயிர் விளைக மாநிலந் தாழ்கமற் றருந்துயர் சாற்றக் கேண்மினே.” எஎஎஎ 1. W.Scott Elliot 2. "In the year 6 Kan, on the 11th Muluc in the month Zac there occurred terrible earthquakes which continued without interruption until the 13th Chuen. The country of the hills of mud, the land of Mu, was sacrificed; being twice upheaved it suddenly disappeared during the night, the basin being continually shaken by volcanic forces. Being confined, these caused the land to sink and to rise several times and in various places. At last the surface gave way and ten countries were torn asunder and scattered. Unable to stand the force of the convulsions, they sank with their 64,000,000 of inhabitants 8060 years before the writing of this book. 1. "There is Geological evidence to prove that in very early time South India formed part of a huge continent which extended from Burma and South China in the east, South Africa on the West, Vindya hills on the North and Australia on the South"-Rig Vedic India - P.91 1. "The result of geological investigation shows that in a remote age a sea actually covered a large portion of Modern Rajaputana extending as far as South and East as Aravalli Mountain which Geologists have designated by the name of Rajaputana sea"-Rig Vedic India-P.7. 2. வீரற் பன்னிரண்டு கொண்டது சாணாம். சாண் இரண்டு கொண்டது முழமாம். முழம் நாலு கொண்டது கோலாம். கோல் 500 கொண்டது கூப்பீடாம். கூப்பீடு நான்கு கொண்டது காவதமாம் (யாப்பருங்கல விருத்தி, ப,473) 1. ‘செங்கோன் தரைச் செலவு அண்மையில் எவராலோ புதிதாகப் பாடப்பட்டதெனச் சிலர் ஐயுறுவர். இது மதுரைச் சுந்தரபாண்டியன் ஓதுவார் என்பவரால் பழைய ஏட்டுப்பிரதிகளிற் காணப்பட்டதென்று கூறி 1902ஆம் ஆண்டிற் பதிக்கப்பட்டது. இதில் அடங்கிய பாடல்கள் ஏழு. துடிசைகிழார் சிதம்பரனார் அவர்கள் தமக்குக் கிடைத்த திருக்குறட்பரிதி உரை, இறையனாரகப்பொருள் மூலம் முதலிய பழைய ஏடுகளுடன் செங்கோன் தரைச் செலவின் 20-பாடல்கள் (உரையின்றிக்) கிடைத்தனவென்று கூறுகின்றனர். அந்நூற் பாடல்கள் வெவ்வேறு இடங்களில் பழைய ஏடுகளிடையே காணப்பட்டமையின், அந்நூலின் பழைமையைக் குறித்து ஐயுறுதல் வேண்டா. இந்நூல் சூரியநாராயண சாத்திரியார், மறைமலையடிகள் முதலிய தமிழறிவு சான்றவர்களால் தம்முடைய நூல்களில் எடுத்தாளப்பட்டுள்ளது. 1. பாரத யுத்தகாலம் கி.மு.1300 2. "The puranas relate that Manu, the Lord of the Dravidas divided the country into two halves giving southern portion to his son Yama and the northern where his capital was situated to his beloved daughter Ela. To this day the southern land now submerged under the sea is known to the masses as the dominion ofYama, the Lord of the South. The land of Ela was Kumari nadu ruled and presided by queens. Even today in Malabar, a portion of the Tamilagam, the queen is the owner of the kingdom and the brother who governs the people is her representative. The succession descends in the female line; and women in Malabar are heiresses and owners of property and are treated with greater regard and consideration than men.- Tamilian Antiquary No.1. 1. This list of words by itself is sufficient to prove the primalidentity of the Maori and Egyptian languages. - Book of the beginnings.-P.17. Gerald Massey. இதனால் தமிழுக்கும் மயோரி எகிப்திய மொழிகளுக்கும் தொடர்பிருப்பதும் விளங்குகின்றது. 2. "Geology and Natural History make it alike certain at a time within the bounds of human knowledge, Southern India did not form part of Asia. A large continent of which this country once formed part has ever been assumed as necessary to account for the different circumstances. The Ceylon Buddhists and the Puranic writers and the local tradition of the west coast all indicate a great disturbance on the point of the Peninsula and Ceylon within recent times." - Topinard 3. India, South Africa and Australia were connected by an Indo oceanic continent in the Permian Epoch." -H.F.Blanford 2. "Peninsular India or the Deccan (literally, the country to the South) is geologically distinct from the Indo-Gangetic Plain and the Himalaya. It is the remains of a former continent which stretched continuously to Africa in the space now, occupied by the Indian Ocean. The rocks of which it is formed are among the Oldest in the world and show no traces of having ever been submerged. In many parts they are overlaid by a sheet of black 'trap' rock or basalt, which flowed over them as molten lava. In the Deccan we are therefore, in the first days of the world. we see land substantially as it existed before the beginning of life. The Indo Gangetic plain stretches without a break from Indus on the west to the Delta of the Ganges on the east, a distance of twleve hundred miles. When the world was still in the making and before the elevation of the Himalaya, the space now occupied by this plain was a sea, the southern shore of this sea was what is peninsular India. With the rise of the Himalaya the sea disappeared and the rivers draining the Himalaya flowed, into the depression bringing with them the silt which is now the soil of the plain. -People and Problems of India P.23,24- Sir.T.W. Holderness, G.C.B. 1. B.C. Mazumdar. The Madras Review, July 1922 1. இவர் கி.பி.1114இல் பிறந்து 1150 சித்தாந்த சிரோமணி என்னும் நூல் இயற்றியவர். 2. "Madura-(Dutch Madorea) an island of the Dutch East Indies separated by the shallow strait of Madura from the N.E.Coast of Java"- Encycolpaedia Britannica. 3. -Alfred Russel Wallace 4. "At one time the Himalaya mountains were at the bottom of the sea and were slowly lifted out of it, "once with the whales now with the eagle skies" " and at one time there was almost certainly a great continent in the middle of the Atlantic Ocean."- Book of knowledge, Page 518. 5. "In the light thrown by recent researches on the structure and the origin of mountain chains the explanation of these facts is no longer difficult. From early 'Palaeozoic' times the peninsula of India has been dry land, a part; indeed of a great continent which in mesozoic times extended towards the Indian ocean towards South Africa. Its northern shores were washed by the sea of Tethys, which at least Jurassic and cretaceous times, stretched across the old world from west to east, and in this sea were laid down the marine deposits of the Himalaya. "In the Himalaya the geological sequence, from the ordovician to the Eocine, is most entirely marine. -Encyclopaedia Britannica. 1. நில நூலார் பூமியின் வயசை + ஐந்து காலப் பகுதிகளாகவும் பின் ஒவ்வொரு காலப் பகுதியையும் பல கூறுகளாகவும் பிரித்திருக்கின்றனர். Eras: உகம் Epochs: உட்பிரிவு 1. முதல் உகம் Archaen or Eozoic உயிர்கள் தோன்றாத காலம் Fundamental Genesis 2. இரண்டாவது உகம் Cambrian silurian or ordovician Primary or palaeozoic Devonian and old sand stond பழைய உயிர்கள் தோன்றிய காலம் Carboniferous permian 3. மூன்றாவது உகம் Secondary or Mesozoic நடுக்கால உயிர்கள் தோன்றிய உலகம் Triassic Jurassic Cretacious 4. நான்காவது உகம் Eocene Oligocene Tertiary or Canozoic Miocene அண்மைக்கால உயிர்கள் தோன்றிய காலம் Pliocene 5. ஐந்தாவது உகம் Pleistocene (Glacial) Post tertiary or quarteriary Last glacial Recent மனிதன் தோன்றிய காலம் (Post glacial) 1. "The Indian Ocean formed a continent which extended from Sunda Islands along the coast of Asia to the east coast of Africa. This large continent is of great importance from being the possible cradle of the human race." "There are a number of circumstances (Specially chronological facts) which suggest that the primeval home of man was a continent now sunk below the surface of the Indian Ocean which extended along the South of Asia as it is at present (and probably in direct connection with it) towards the east as far as further India and the Sunda Islands, towards the west as far as the Madagascar and the south shores of Africa. "This large continent of former times Sclatter, an English man has called Lemuria from the monkey like animals which inhabited it and it is at the same time of great importance from being the probable cradle of the human race which in all likelihood here first developed out of anthropoid apes."-Prof. Ernest Haeckel. "The locality of the origin of the earliest race from recent researches appears to have been on lands now submerged beneath the Indian Ocean-Science of man Australia, Dec.1900." 2. "Investigations in relation to race show it is by no means impossible that Southern India was once the passage ground by which the ancient progenitors of northern and mediterranean races proceeded to the parts of the globe which they now inhabit. Human remains and traces have been found on the east coast of an age which is indeterminate but quite beyond the ordinary calculation of history. Antiquarian research is only now beginning to find means of supplementing the deficiency caused by the absence of materials constructed or collected by usual historical methods. These results are specially to be regarded as without doubt, the people who have for many ages occupied this portion of the peninsula are a people influencing the whole world not perhaps be moral and intellectual attributes to a great extent by superior physical qualities." - Dr. E. Maclean. 1. Their (The Dravidians) settlements in India extent to such prehistoric times that we cannot even feel sure that we regard them as immigrants or, at least, as either conquerors or colonists on a large scale but rather as aboriginal in the sence in which that term is usually understood. The hypothesis, that would represent what we know of their history most correctly, would place their original seat in the extreme south, somewhere probably not far from Madura or Tanjore and thence spreading fan like towards the north. They have no traditions which point to any seat of race out of India, or of their having migrated from any country whose inhabitants they can claim any kindred so far as they know they are indigenous and aboriginal.-Dr.Fergusson quoted in Tamilian Antiquary No.1 1. According to Sir Walter Raleigh, India was the first planted and peopled country after the flood. -Dravidian India 2. "Manu is spoken of in Bhagavada-Purana as the Lord of Dravida. 3. "In the XII Chapter of the Alasya Mahatmya portion of the Skandha purana where Suta-muni addressing Rishis says as follows:- I have described to you the origin of the river vaigai. This river is also named as Siva-Gangai, Vegavathi Siva Gnanam Vilambiti and Kritamalai' - Tamilian Antiquary No.1 1. “வடமதுரை ஏறுமுன்னே வந்த வடிவென்றது திருமாலின் மச்சாவதாரத்தை, சத்திய விரதன் என்னும் பாண்டியன் வையை நதியில் அர்க்கியங் கொடுத்தற்காக நீரைக் கையில் எடுத்தலும் திருமால் அந்நீரில் மீன் வடிவோடு அவதரித்து வளர்ந்தனர். இவ்வரலாறு பாகவதம் 8ஆம் கந்தம் மச்சாவதாரமுரைத்த அத்தியாயத்தால் நன்கு விளங்கும். பாண்டியர்க்ளுக்கு மீன்கொடி அமைந்தது இது பற்றிப் போலும்.” - (தமிழ் விடு தூது -பக். 24. குறிப்புரை) 1. The marvellous uniformity of the flood legends of all parts of the globe, alone remains to be dealt with. Whether these are some varctic version of the story of the lost Atlantis and the submergence or whether they are echoes of a great cosmic parable once taught and held in reverence in some common centre whence they have reverberated throughout the world, does not immediately concern us. Sufficient for our purpose it is to show the universal acceptation of these legends. "It would be needless waste of time and space to go over these flood stories one by one, suffice to say, that in India, Chaldea, Babylon Media, Greece, Scandinavia, China among the Jews and the Keltic tribes of Britain the legend is absolutely identical in all essentials. Now turn to the west and what do we find? The same story presented in its every detail-presented among the Mexicans (each tribe having in its version) the people of Guatemala, Honduras, Peru and amongst every tribe of North American Indians; It is puerile to suggest that mere coincidence can account for this fundamental identity - The story of Atlantis - W.Scott Elliot p.16. 2. "When the ancestors of the Indians, the Persians, the Greeks, the Romans, the Slaves, the Celts and the Germans were living together within the same enclosures may under the same roof"- Lectures on the science of language delivered in 1861, Maxmuller. 1. மொழி நூல்-மாகறல் கார்த்திகேய முதலியார். 1. It is believed that under certain circumstances fair races may become dark, and dark races bright, the ventricle however being effected, sooner than the hair or the iris of the eyes"- Origin of the Arians- Taylor. 2. This part of India could have been no other than the Malabar Coast peopled by the Pandias which was probably called the land of the Pandias afterwards corrupted in Egypt into the land of punt. It would be interesting to note here that mong the earlier students of the subject of the origin of the Egyptians Heeran was prominent in pointing out an alleged analogy between the form of the skull of the Egyptians and that of Indian races, he believed in the Indian origin of the Egyptians-Rig vedic India. 1. ஞானசாகரம் 2. The vast remains of cities and temples in Mexico Yucaton also strangely resemble those of Egypt. The very carving and decoration of the temples of America, Egypt and India have much in common; which some of the mural decorations are absolutely identical. Amongst the Indians of North America there is very general legend that their fore-fathers came from a land 'toward the sunrise', Iowa and Dacola Indians according to Major J.Lind believed that all the tribes of Indians were formerly one and dwelt together on an island toward the sunrise. - The story of Atlantis. 3. அலெக்சாந்தர், ஆசியாவுக்குச் சென்றபோது சாலதிய குருக்கண்மார் தங்கள் நாகரிகம் 4,70,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதெனக் கூறினர் என தயதோர்ஸ் (Diadors B.C.49-14 A.D.) கூறியுள்ளார். அலக்சாந்தரின் காலம் கி.மு.350. 1. கி.பி.மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் விளங்கிய “யூலியஸ் அபிரிகானுஸ்” (Julius Africanus) என்னும் சரிதாசிரியர் “பினீசியரின் 30,000 ஆண்டுகளின் சரித்திரத்துக்கு ஆதாரமாகிய நூல்களிருந்தன” வென்று கூறியிருக்கின்றனர். 1. சிவஞானபோத ஆராய்ச்சி - ஆசிரியர் மறைமலை அடிகள். 1. Passing through the Churches and Cathedrals of London and meditating on the many semblances and traces of Saivism that present before me in every nook and corner of England, it is impossible to think of England as anything else except a Saivite country". - Siddanta Depika. 1. The enthnic type of Sumerians, so strongly masked in their statures and reliefs, was so different from those of the races which surrounded them, as was their language from those of the Semitics, Aryans or others. The face type of the average Indian of today is no doubt much the same as that of his Dravidian race ancestors thousands of years ago. Among the modern Indians, as amongst the modern Greeks or Italians the ancient pre-Aryan type of the land has (as the primitive of the land always does) survived, while that of the Aryan conqueror died out long ago and it is to this Dravidian ethinic type of India that the Sumerians bear most resemblance, so far as we can judge from his monuments. He was very like a southern Hindu of the Dekkan (who still speaks Dravidian languages) and it is by no means impossible that the Sumerians were an Indian race which passed certainly by land, perhaps also by sea through Persia to the valley of the two rivers. It was in the Indian Home (perhaps the Indus Valley that their writing may have been invented and progressed from a purely pictorial to a simplified and abbreviated from which after wards in Babylonia took on it peculiar uniform appearance owing to its being written within a square ended stilus on soft clay. On the way they left the seeds of culture in Elam.. there is little doubt that India must have been one of the earliest centres of civilization and it seems natural to suppose that the strange unsemitic, un-Aryan people who came from the east to civilise the west were of Indian origin, specially when we see with our eyes how very Indian the sumerians were in type. "F.N." The civilization was not Aryan. The culture of India is pre-Aryan in origin as in Greece the conquered civilized the conquerors. The Aryan in India owed his civilization and his degeneration to the Dravidians as the Aryan Greek did to Mycenaeans - Dr.Hall. "The resemblances between the several heads of the statues discovered at Telloh or Tell-loh in Chaldea and the facial type of the Dravidians resemble.-Rig Vedic India p.207. 1. Dravidian India pp.58,69. 2. Sir Walter Raleigh 3. The Madras Presidency is the habitant of a Tamil Race whose civilization was the most ancient. A branch of Tamil Race spread a vast civilization on the Euphrates in very ancient times whose Astrology, Religion, Love, Morals and Rites etc., furnished the foundation of the Ariya and Babylonian civilization and whose mythology was the source of the Christian Bible. Another branch of them spread from the Malabar coast and gave rise to a wounderful Egyptian civilization and the Aryans are indebted to the race in many aspects. The colossal temples in South India proclaim the Engineering Art of the Tamil Race-Quoted in Prabuddha Bharatha. Sep.1921. 1. பாணீஸ் என்பது வணிகர் என்னும் தமிழின் திரிபு. பனை நாடென்பது பொனீசியா ஆயிற்றென்பது சில ஆராய்ச்சியாளர் கருத்து. 1. As the Cholas probably went there with their gods and priests called their colony 'Chola-deca' which word through corrupted pronunciation came to be known as Chaldia. i.e. the land of Cholas. This land was the Shinar land of Semites and the Babylonia of the Greeks.-Rig Vedia India p.20. சோழநாட்டு மக்கள், தமது கடவுளரோடும் குருமாரோடும் தாம் சென்று குடியேறிய நாட்டுக்குச் சோழ தேசமெனப் பெயரிட்டிருக்கலாம். இச்சொல் உச்சரிப்பு வேறுபாட்டால் சால்தியா என மாறியிருத்தல் கூடும். சால்தியா என்பது சோழதேசம் என்பதன் சிதைவு. இந் நிலத்தைச் செமித்தியர் சின்னார் என்னும் கிரேக்கர் பாபிலோனியா என்றும் வழங்கினர். - இருக்குவேத இந்தியா (பக்கம்.20) 2. Telloh 3. சேட்டுகள் என்போர் வியாபாரிகள் என்று சொல்லப்படுகின்றனர். ஆகவே, செட்டிகள் என்னும் தமிழ்ச்சொல் சேட்டுகள் எனத் திரிந்திருத்தல் கூடும். செட்டு-சேட்டு. 1. Land of Punt 2. Iberaians, Celts, Teutons and the Slavs. 1. "That the roots of a large majority of Indo-European words are to be found in ancient Tamil is not a mere theory but a fact ascertained by extensive induction. It is not from the similarity of sounds and meanings alone that the radical identity of words in the so-called Dravidian any Aryan languages was deduced."- Pedigree of words. Rev. S.Gnanaprakasam. (இந்திய ஐரோப்பிய மொழிச் சொற்களின் மூலங்கள் பல பழந்தமிழிற் காணப்படு கின்றனவென்பது) அனுமான அளவில் உள்ளதன்று: உண்மையே. இவ்வுண்மை பரந்த ஆராய்ச்சியினாற் கண்டுபிடிக்கப்பட்டது.- உச்சரிப்பு ஒற்றுமை பொருள் ஒன்றுமைகளால் மாத்திரமன்று. இச்சொற்களின் ஒற்றுமை அறியப்படுவது.-வண.ஞானப்பிரகாசர். These first words of Tamil are also the long forgotten roots of most words in all the Indo-European languages. Tamil first words or roots take us back, thus to the remotest period of human history when only a few scores, or perhaps a few hundreds, of monosyllabic words without inflection, formed the sole language of what are known as the Aryan and Dravidian races. - Tamil Roots in Other Languages Rev.S.G. தமிழில் காணப்படும் மூலச்சொற்கள் இந்து ஐரோப்பிய மொழியில் நீண்ட காலத்துக்கு முன் மறக்கப்பட்ட சொன் மூலங்களாகும். தமிழின் ஆதிச் சொற்கள் அல்லது மூலச்சொற்கள் நம்மை மக்கள் வரலாற்றின் பழங்காலத்துக்குக் கொண்டு போய் விடுகின்றன. அக்காலத்தில் சில நூறு ஓரசைச் சொற்கள் மாத்திரம் ஒன்றோடு ஒன்று சேராது தனித்து வழங்கின. இச்சொற்களே ஆரிய திராவிட மொழிகளாயிருந்தன. "The primary monosyllabic words of Tamil carry us back to the very roots of language. The Sumerian speech otld as it is, appears comparatively young when viewed in the light of the earliest word forms which Tamil displays and of which Sumerian forms are a later development." "An unbiassed study however, will bear out the contention that both (Tamil and Sumerian) streams are from the same fountain head.-Sumerian and Tamil Rev.S.G. (ஓரசையுடைய ஆதித் தமிழ்ச் சொற்கள், மொழியின் ஆரம்பத்துக்கு நம்மைக்கொண்டு செல்கின்றன. சுமேரிய மொழி பழமையுடையதாயிருந்தபோதும், தமிழின் பழைய சொற்களோடு சுமேரியச் சொற்களை ஒப்பிட்டு நோக்கும்போது சுமேரியம் தமிழுக்குப் பிந்திய மொழி எனத் தோன்றும். சுமேரியமும் தமிழும் ஓர் ஊற்றினின்றும் பிரிந்த இரு கிளைகள் என ஆராய்ச்சியாற் புலனாகும். -மேற்படி) 2. Java is rightly famous for its Hindu temple. Great care is bestowed on the decoration on the walls and agani sculptures of heroes and half Gods, men- tioned in the ancient Hindu poems the Ramayana and Mahabharatha are to be found. Most of them (People of Bali) are worshippers of Shive. - Slayters Monthly. Aug. 1921. (யாவா இந்து ஆலயங்களுக்குப் பேர்போனது. கோயிற் சுவர்களில் பாரதம் இராமாயணத்திற் சொல்லப்படும் மக்கள் வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாலி தேச மக்கள் சிவனை வணங்குகிறார்கள். - சிலாற்றரின் மாத வெளியீடு-ஆகஸ்ட் 1921.) The language spoken now at Kamschatka the north eastern corner of Asia, is considered to be dialect of Tamil (Sir T.W.Hunter) "The language spoken by the Maories in ra off New Zealand which denotes the utmost southern limits of the 700 kathams of the Tamil land from Cape Comorin, and the language spoken in the numerous groups of islands between these two boundaries are allied to Tamil (Indian Antiquary Vol.X) ' The language spoken in Tascany in Italy i a dialect of Tamil' (J.R.A.S.) 'It is said that the Chinese has some affinity to it' (T.P.P. 1913 ). 'The three classic languages of the world viz. Sanskrit, Hebrew and Greek contain Tamil words in the Vocabulary'-Rhys.Davids': Tamil India. p. 38 1. Edward claurd. 1. Prehistoric ancient Hindu India -R.D.Banerji 1. தமிழினொழுகு நறுஞ்சுவையே (மீ.பி. தமிழ்) 1. "Sanskrit Pandits however think Dravida as a corruption or sanscritised form of Tamil" - Tamil Studies. P.6 1. 'Telugu is one of the great Dravidian languages. The word is probably derived from Trilinga (the threelingas of Siva) a name for the old Kingdom of Andhra. It was at one time called by Europeans 'Gentoo' from a Portuguese word meaning gentle. The Telugu-speaking people are partly subjects of Nizam of Hyderabad and partly under British rule beginning north of Madras city, extending north-west to Bellary where Telugu meets Kanarese and north-east to near Orissa. They are taller and fairer than Tamils, otherwise they are of typical Dravidian features. They are of an enterprising people, good farmers and skillful seamen...In 1901 the number of speakers in Telugu in India was nearly 21millions. - Encyclopaedea Britannica. 1. Malayalam a language of Dravidian family spoken on the west coast of Southern India. It is believed to have developed out of Tamil as recently as the 9th century. It possesses a large literature in which words borrowed from Sanskrit are conspicuous. In 1901 the total number of speakers of Malayalam in all India was just about six millions.- Encyclopedia Britannica. 1. "Kanarese, language of Dravidian family spoken by about ten millions of people in South India chiefly in Mysore, Hyderabad and the adjoining districts of Madras and Bombay. It has an ancient literature written in an alphabet closely resembling that employed for Telugu. Since the 12th Century the Canarese speaking people have largely adopted the Lingayat form of faith which may be described as an anti-Brahmanical sect of Siva worshippers; most of them are agriculturists but they also engage actively in trade.-Encyclopaedea Britannica. 2. "Telugu does not take its available literature much anterior to the eleventh centuryA.D. and this literature seems to be modelled upon Sanskrit entirely. Kanarese has certainly a more ancient literature. A work of the 9th century undoubtedly is the Kaviraja Marga of Nirpatungu. Malayalam seems to have grown out of Tamil in the early centuries of the Christian era." - Prof. S.Krishnaswami Aiyangar. 3. Tulu or Tuluva, a language of the Dravidian family,found chiefly in the South Kanara District of Madras. It has no literature, nor it has been adopted for official use even where it is spoken by the majority of the population. In 1901 the total number of speakers of Tulu exceeded half a million."-Encyclopaedea Britannica. 1. Singhalese is essentially, Dravidian language. Its evolution too seems to have been on a Tamil basis and so we seem safe in saying that, while in regard to its word development. Singhalese is the child of Pali and Sanskrit: it is with regard to its physical features and structure essentially the daugthter of Tamil. with regard to the laws governing the relation of words in a sentence, viz. the laws of syntax, including idioms we find great many laws which cannot be explained except in the principle of Tamil grammar. - Mudaliar W.F.Gunawardhana 1. செந்தமிழ் நிலமாவது...... மருவூரின் மேற்குமாகிய “சோணாடு” என்று காரிகை உரையில் மாத்திரம் காணப்படுகின்றது. 2. இப்பாடல் யாப்பருங்கல உரை பதிப்பித்தவரால் பாடுவித்துச் சேர்க்கப்பட்டதெனச் ‘சங்கத்தமிழும் பிற்காலத் தமிழும்’ எனும் நூலிற் கூறப்படுகின்றது. காரிகை உரை முதற் பதிப்பில் “அமுதசாகரரென்னும் ஆசிரியராற் செய்யப்பட்ட யாப்பருங்கலக் காரிகை மூலமும் அதற்குக் குணசாகரரால் செய்யப்பட்ட உரையும் திருவாவடுதுறை யாதீன வித்துவான் தாண்டவராய சுவாமிகள், இயற்றமிழாசிரியராகிய திருத்தணிகை விசாகப் பெருமாளையரவர்கள், அட்டாவதான வீராசாமிச் செட்டியாரவர்கள் இவர்கள் முன்னிலை யில் தில்லையம்பூர் சந்திரசேகர கவிராச பண்டிதரால் பிழையறப் பரிசோதிக்கப்பட்டு முத்தமிழ் விளக்க அச்சுக் கூடத்தில் பதிப்பிக்கப்பட்டன” என்று காணப்படுகின்றது. பின் 1908ஆம் ஆண்டில் அம்மூலமும் உரையும் தமிழ்ப்பண்டிதர் கா.ர.கோவிந்தராச முதலியாரால் பரிசோதிக்கப்பெற்று வெளிவந்தது. இவ்விரு பதிப்புக்களிலும் ‘மன்றாவணன் மலர் திருவருளால்’ என்னும் பாட்டுக் காணப்படுகின்றது. 1. “This does not mean that the dialect of the Pandya country is superior to the dialect of the other twelve districts as it is usually understood to mean for one dialect is just as good or as bad as another, but that the literary dialect was first fashioned in the Pandya country and when this dialect was adopted for poetry in other tracts they allowed local words to find a place therein. " - History of the Tamils. P.151 2. “அங்கம் வங்கம் கலிங்கம் கௌசிகம், சிந்து சோனகம் திராவிடஞ் சிங்களம், மகதங் கோசலம் மராடங் கொங்கணம், துளுவஞ் சாவகம் சீனங் காம்போசம், பருணம்பப் பரமெனப் பதினென் பாடை” எனப் பதினென் பாடைகளின் பெயர்கள் திவாகரத்திற் காணப்படுகின்றன. பிற நிகண்டுகள் வேறுபடவும் கூறுகின்றன. 1. புகார் பழைய தலைநகர். 1. தமிழ் எழுத்துக்கள் பினீசியரால் இந்திய மக்களுக்கு உதவப்பட்டதென்றும் பிறவாறும் ஆராய்ச்சியாளர் கருதலாயினர். மொகஞ்சதொரோ ஆராய்ச்சிக்குப் பின் பிராமி எழுத்துக்கள் மொகஞ்சதொரோ எழுத்துக்களாகிய பழைய தமிழ் எழுத்துக்களின் வேறுபாடென்றும், பிராமி எழுத்துக்களினின்றும் பினீசிய கிரேக்க உரோமன் எழுத்துக்கள் தோன்றினவென்றும், இன்றைய தமிழ் எழுத்துக்கள் பிராமி எழுத்துக்களினின்றும் படிப்படி வளர்ச்சியடைந்துள்ளன என்றும் துணியப்பட்டுள்ளன. 1. Tamil Studies H.P. 120 1. Prof. Rapson bears testimony to the fact that the aboriginal languages in the South of India were associated with a high degree of Culture, and hence it is not surprising to note the presence of the Dravidian element in Sanskrit. It can be easily maintained that much, that is not found in Latin and Greek but peculiar to Sanskrit alone is due to the contact of the Aryans with the Dravidians.- Dravidian India p.75 1. வழக்கெனினும் உரை யெனினும், நடையெனினும் ஒக்கும். தமிழ் மொழியார் உரை மாத்திரையே உலகில் வழக்கென்பர். (திராவிடப் பிரகாசிகை.) Dr. J. S. Sandler, M.A. 1. மறையோர் என்பது ஈண்டு வடநாட்டுப் பிராமணரைக் குறிக்கின்றது. 1. நாரத கீதக் கேள்வி நுனித்து (பெருங்கதை). 1. "No one can now say what these pans and dances were like. Their places were gradually taken up by the Indo-Aryan Ragams and Natyams."(Tamil Studies.) 1. நாடகம் என்னும் சொல் வடமொழியென்பதற்கு ஆதாரம் இல்லை. தொல்காப்பியம் முதலிய பழைய நூல்களில் நாடகம் என்னும் சொல் பயின்று வந்திருக்கின்றது. நட, நடி முதலிய தமிழ் மூலங்களை நோக்குவார் நாடகம் வடசொல் எனக் கூற ஒருப்படார். 1. கூத்தும் விழவும் மணமுங் கொலைக்களமு கூர்த்த முனையுள்ளும் வேறிடத்து-மோத்தும் ஒழுக்கு முடையவர் செல்லாரே செல்லின் இழுக்கு மிழவுந் தரும். (ஏலாதி-63) 1. முந்து நூல் அகத்தியமும் மாபுராணமும் இசை நுணுக்கமும், அவற்றுட் கூறிய இலக் கணங்களாவன, எழுத்துச் சொற்பொருள் யாப்பும் சந்தமும் வழக்கியலும் அரசியலும் பார்ப்பனவியலும் சோதிடமும் காந்தருவமுங் கூத்தும் பிறவுமாம். - நச்சினார்க்கினியர். 1. Regozin 1. (Notes on Sangam Age by Pandit Savarirayan-Tamilian Antiquary, Vol.2, No.1) 1. காப்பியம் காவியமாயின், ஒருவர் புதிதாக ஒரு நூலைச் செய்து அதற்குப் பழைய நூல் என்னும் பொருளில் தொல்காப்பியம் எனப் பெயரிட்டார் எனக் கொள்ள வேண்டும். இது பொருத்தமற்றது. 1. “Dialects of the same family of languages were spoken throughout India, except in the Vindhyan regions in the Neolithic Age: and that is what has been called the Dravidian family. The distinction between the spoken dialects of North India, to which the name Gaudian has been given by modren scholars and which have been held to be degenerations of Sanskrit or of Prakrit, and those of Southern India, to which the name Dravidian has been given, is I hold , a distinction without a difference, except that the North Indian dialects have been very much more profoundly affected by Sanskrit than those of South India. The Neolithians of North India spoke languages of their own which, I hold, were structurally allied to the so called Dravidian family of languages and not to Sanskrit or Prakrit" (Stone age in India, p.43.) 1. “மிலேச்சராரியர்” (பிங்கலம் திவாகரம்) “மிலைச்சரேயாரியர்க்காம் மிலேச்சரும் விதித்த பெயரே” (சூடாமணி நிகண்டு) 1. "The hatred which existed between the early Dravidians and the Aryans is best preserved in the Kurichchans, a hill tribe in malabar, (corresponding to the Kuravas of the Tamil Country) custom of plastering their huts with cowdung to remove the pollution caused by the entrance of a Brahmin." - Tamil Studies p.90 1. "The Hindu theory that mankind is divided into four Varnas, or groups of castes-Brahmana, Kshatriya , Vaisya and Sudra was wholly foreign to the southerners" "Dravidian culture"- The Brahamanical ideas and institution although universally diffused in every province have not been wholly victorious. Prehistoric forms of worship and many utterly un-Aryan social practices survive specially in the peninsula among that people speaking Dravidian languages. We see there the strange spectacle of any exaggerated regard for caste coexisting with sorts of weird notions and customs allied to Brahman traditions. Where it is praobable that the Dravidian civilization is even older than the Indo-Aryan Brahmanical culture of the north which was long regarded in the south as an unwelcome intruder to be resisted strenuously." "The amount of Aryan blood in the people to the south of Narbada is extremely small in fact negligible." (Oxford History of India-Vincent Smith. C.I.E.) 1. இயமம்: கொல்லாவிரதம், மெய்ம்மை கூறல், கள்ளாமை, பிறர்பொருட் காதலின்மை, இவ் வயினிந்தியம் அடக்கலும். இயமம் (திவாகரம்) நியமம்: தவமொடு தூய்மை, தத்துவநூ லோதல், மனமுவந் திருத்தல், தெய்வம் வழிபடல், நினையுங்காலை நியமமாகும். (திவாகரம்) 1. வேதத்தில் வருணன் அசுரன் எனக் கூறப்படுகிறான். அசுரர் தமிழரே யென்பது வரலாற்று நூலார் கண்ட முடிபு. 1. The vedic culture which resembles that of the Homeric Greeks or the Celtic Irish at the beginning of the Christian era, or that of the pre-Christian Teutons and slaves becomes transformed in the epics into the Hindu culture through the influence of Dravidians. The Aryan idea of worship during the earliest period was to call on the farther sky or some other shining one to look from on high on the sacrificer, and receive from him the offerings of fat or flesh: cakes and drink. But soon Puja or worship takes the place of Homa or sacrifice. Image worship which was a striking feature of the Dravidian faith was accepted by the Aryans. The ideals of vegetarianism and non violence (Ahimsa) also developed. The Vedic tradition has dominated by the Agamic and today Hindu culture shows the influence of the Agama as much as that of the Vedas. The Aryan and the Dravidian do not exist side by side in Hinduism " Contact with the highly civilized Dravidians led to the transformation of Vedism into a theistic religion." (Sir Radhakrishnan) 2. "It need not be thought that the Aryan was always the superior force. There are occasions when the Aryan yielded to the non Aryan and rightly too the epic relates the manner in which the different non-Aryan ones Krishna's struggle with Indra, the prince of the Vedic gods is one instance. The rise of the cult of Siva is another." (Sir Radhakrishnan) 1. “ஆல்கெழு கடவுட் புதல்வ” (முருகு) “நீல நாக நல்கிய கலிங்கம் ஆலமர் செல்வர்க் கமர்ந்தனன் கொடுத்த” (சிறுபாண்) “ஆலமர் செல்வ னணிசால் பெருவிறல்” (கலி) “ஆலமர் செல்வன் மகன்” (மணிமே) 1. The Hymns of Rig Veda- The hymns which are collected in this work are 1028 in number and were composed during several centuries. They are only the mate-rials we have for the history of this early period, which is called the Vedic Age. “The people of India recognised four Vedas, and this is how they have grown up, some of the hymns by an ancient custom chanted at sacrifices instead of being recited and a separate collection was made of these chanted hymns and called Sama Veda. Special sacrificial formulas and rules also existed from ancient times for the performance of rites, and these formulas and rules were collected under the form of Yajur Veda and a collection of the latter hymns often consisting of charms and incantations against evil influences grew up under the name of Atharva Veda." - The civilization of India by Romesh C.Dutt, C.I.E. 1. The great Appaya Dikshithar horrified at the sight of the slaughtered animals at a vedic sacrifice he performed is said to have cried out,"Oh Ye Vedas! I believe you." (Tamilian Antiquary No.2) "But there is evidence of its (bulls) having been killed in sacrifices and its cocked flesh offered to the Gods, specially to Indra who seemed to have developed a keen taste and inordinate desire for it." (Rig Vedic, India.) 1. In the Upanishads however we find not only kings but also women and even people of dubious descent taking active part in the literary and philosophical aspirations and often possessors of the highest knowledge...... In the law books it is again and again emphasised that only the Brahman may teach the Vedah and only a member of the three higher classes may be instructed in the Veda. In the Upanishads we are repeatedly told that kings or warriors are in possession of the highest knowledge and the Brahman go to them for instuction... the king impart the doctrine to him and it is the doctrine of transmigration which here, for the first time it appears clearly and distinctly proves to be a doctrine which enacted from warrior class and was originally foreign to the Brahman Theology - History of Indian Literature , P. 220-M.Winternitz. Ph.D. 1. பகடு, பஃறி, அம்பி, ஓடம், திமில், தோணி, பட்டிகை, யாகம், படுவை, தொள்ளம், புணை, மிதவை, தெப்பம், வங்கம், பாதை, தங்கு, மதலை, சதா, பாரதி, நவ்வு, போகம், நாவாய் முதலியன மரக்கலத்தின் பெயர்களிற் சில. 1. "Kautalya was opinion that the commerce with the south was of great importance than that with the north because the more precious commodities come from the peninsula while the Northern Regions supplied only blankets, skins and horses. Gold, diamond, pearls, other gems and conch shells are specified, as products of the south" (Oxford History of India, pp.68, 69) Chanakya (Kautalya ) the great minister of 'Chandragupta' Maurya was a native of Dravida, that is Kanchi- (History of the Tamils, P.325) 1. ஏனைய பெண்டி ரெரிமூழ்கக் கண்டுதன் தானையாற் கைபுதைத்தான் தார்வழுதி (முத்தொள்) 1. தொல்லை ஞான்றைச் செருவி லிவன்கை வேல்வாய் வீழ்ந்தோர் பெண்டிர் கைம்மையின் அறுத்த கூந்தற் பிறக்கஞ் சகடம் பொறுத்தல் செல்லா பலமுரிந் தனவே. (தகடூர்யா) 1. “அமாத்தியர் புரோகிதர், சேனாபதியர், தவாத் தொழிற் றூதர், சாரணரென்றிவை அரசர்க் காகும் ஐம்பெருங் குழுவே; காரணக் கிளைஞரும் கருமவிதி காரரும் கனகச் சுற்றமும் கடைகாப் பாளரும் நகர மாக்களும் நளிபடைத் தலைவரும் இவுளி மறவரும் யானை வீரரும் அரசர்க் கெண்டுணை யாகு மென்ப; அடுத்தநட் பாளரும் அந்த ணாளரும் மடைத்தொழி லாளரும் மருத்துவக் கலைஞரும் நிமித்த காரரும் நீணில வேந்தர்க் குரைத்த வெம்பெயர் உறுதிச் சுற்றம்; இங்ஙனம் உரைத்தமுப் பாலும் உயர்குடைவேந்தர்க்குப் பகுத்த பதினெண் கிளைப்பா லோரோ” 1. பெரிப்புளூஸ் என்னும் நூல் கொலைத் தண்டனை விதிக்கப்பட்ட மறியற்காரர் முத்துக் குளிக்கின்றனர் என்று கூறியுள்ளது. 1. Between Quilon and Nellore. 1. வேட்டையாடுவோர் மிருகங்களையோ பறவைகளையோ தங்கள் தொழிற்கிசைந்து நடக்குமாறு பழக்கி வலை முதலியன கட்டுமிடத்தில் விடுவார்கள். இவற்றால் நம்பிக்கை கொண்டு இவற்றின் இனங்கள் வந்து கண்ணியில் மாட்டிக்கொள்ளும். இவற்றுள் பட்சியைப் பார்வைப் பட்சியென்றும், மிருகத்தைப் பார்வை மிருகமென்றுங் கூறுதல் மரபு. 1. இவர் இந்தியாவுக்கு வந்து கபிலரின் சாங்கிய நூற்கொள்கைகளைக் கற்று அவைகளைக் கிரேக்க நாட்டிற்கு பரவச் செய்தார் எனப்படுகின்றனர். 1. Pon, a gold coin valued at Rs.2.50 each (Tamil Studies P.260) 1. "Thiruvalluvamalai or the garland of Thiruvalluvar like every other account relating to this famous moralist is a strange mixture of doubtful traditions and absurd fictions written by some later Dravidian author of the 9th century to popularize the celebrated work to Thiruvalluvar." (Tamil Studies .p. 247) 1. "Ancient Tamil literature and the Greek and Roman authors prove that in the first two centuries of the Christain era the ports of the Coromandal or Chola Coast enjoyed the benefits of active commerce with both the West and the East. The Chola fleets did not confine themselves to coasting Voyages. but boldly crossed to Bay of Bengal to the mouths of the Ganges and Irrawaddy and the Indian ocean to the Islands of Malay Archipelago." (Vincent Smith) 1. Tamil Studies 2. The existence of pure Tamil words like எழுத்து, சுவடி etc., before they (Aryans) came to south disproves the theory Agastya brought the alphebet with him from Upper India. (P.122) "They had and still have their own terms pertaining to agriculture, anatomy architecture, astronomy, commerce, domestic economy , family relations , fauna and flora, language and literature, medicine, minerals, politics, religion, war, weight and measures, etc, all of course in their primitive stage. நாறு,செய், ஞாயிறு, திங்கள், கை, கால், மாறுகோள், நெல், பால், முற்றம், மச்சு, தாய், அப்பன், தெற்கு, தாழை, வலி, பூசை, எழுத்து, சொல், பா, திணை, நோ, வலி, வெள்ளி, பொன், இறை, ஊர், கடவுள், அம்பு, வில், மா, கழஞ்சு are all pure Tamil words. "நாடு கூற்றம், கோட்டம் as administrative divisions of a country, நெல்லாயம், கார்த்திகைப் பச்சை, கின்மை, தறியிறை, செக்கிறை, மகன்மை etc,. as names of public taxes அமாத்தியம், வாரியம், காவிதிமை, சம்பிரிதி etc, as official terms, குறுணி, பதக்கு, தூணி, முந்திரி, காணி, கழஞ்சு and other words of native weight and measures... காசு, பணம், துட்டு, வராகன் and other enominations of old coinage. 1. "It was from the Nagas that the Aryas first learnt the art of writing; and hence Sanskrit characters are to this day known as Deva-nagari. (Tamils 1800 year ago. p.45) "At Laboe Toewa, Paros, Sumatra has been found a Tamil inscription dated in the Saka year 1010-A.D. 1088. It records a gift by a body of persons who are styled the one-thousand five hundred. This epigraph proves that the Tamil language was used in public documents on the Island of Sumatra in the 11th Century A.D. accordingly, the influence which the Tamils and their language exercised is much greater than the traditional boundaries would warrant us to believe. - Rai Bahadur V.Venkayya, M.A., - Epigraphist to the Government of India. 1. 14 ஆவதின் இளைய சகோதரன் 1 2 15 14 3 4 13 12 5 6 11 10 7 8 9 32 17 18 31 30 19 20 29 28 21 22 27 26 23 24 25 48 33 34 47 46 35 36 45 44 37 38 43 42 39 40 41 64 49 50 63 62 51 52 61 60 53 54 59 58 55 56 57 80 65 66 79 78 67 68 77 76 69 70 75 74 71 72 73 96 81 82 95 94 83 84 93 92 85 86 91 90 87 88 89 112 97 98 111 110 99 100 109 108 101 102 107 106 103 104 105 128 113 114 127 126 115 116 125 124 117 118 123 122 119 120 121 144 129 130 143 142 131 132 141 140 133 134 139 138 135 136 137 160 145 146 159 158 147 148 157 156 149 150 155 154 151 152 153 172 161 162 171 170 163 164 169 168 165 166 7. அரச மரபுகள் 1. சோழர் மன்னர் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி (நெடுஞ்சேரலாதனோடு பொருது துஞ்சியவன்) (அழுந்தூர் வேளின் மகளை மணந்தவன்) கரிகாற்சோழன் (கி.பி.50-95) மறுபெயர் திருமாவளவன்; நாங்கூர்வேளின் மகளை மணந்தவன்; இவன் மகள் சோணை (மணக்கிள்ளி) சேரன் செங்குட்டுவனின் தாய். (1)சேரலாதன்=சோணை (சேட்சென்னி நலங்கிள்ளி) மாவளத்தான் நெடுங்கிள்ளி (வானவர்மன்) (கி.பி.95-105) (காரியாற்றிற் றுஞ்சியவன்) செங்குட்டுவன் இளங்கோவடிகள் (மறுபெயர், (சிலப்பதிகார ஆசிரியர்) இமயவரம்பன் கிள்ளி வளவன் (கி.பி.105-120) பெருநற்கிள்ளி (கி.மு.120-150) பீலிவளையை மணந்தவன்; குளமுற்றத்துத் துஞ்சியவன், (இராச சூயம் வேட்டவன்) 167 xvi தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967) தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே. ‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’ என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர். ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:- தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார். ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார். தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின. ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும். தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம். அகராதிப் பணி தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை. ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார். இலக்கியப் பணி புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள். பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர். தமிழ்மொழி - தமிழினம் தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை. திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும் தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:- திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார். பிற மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார். “ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.” வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்! தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன். அன்பன் கோ. தேவராசன் அகம் நுதலுதல் உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம். உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது. தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது. தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம். எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள். இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது. எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை. வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது. அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன. உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும். இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது. சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி. அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம். உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது. நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம். அன்பன் புலவர் த. ஆறுமுகன் நூலறிமுகவுரை திரு. ந.சி. கந்தையா பிள்ளை 1930-40களில் தமிழ், தமிழிலக்கியம், தமிழ்மொழி, தமிழர் வரலாறு, திராவிட வரலாறு, தமிழ்நாட்டுக் குடிகள் போன்ற பல விடயங்கள் பற்றி அக்காலத்துச் சாதாரண தமிழ் வாசகர் நிலையில் பெரிதும் வாசிக்கப்பட்ட நூல்களை எழுதினார். பண்டைய இலக்கியங்களான அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற வற்றினை உரைநடையில் எழுதி மக்களிடையே சங்க இலக்கியம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தினார். திருக்குறளுக்கான ஒரு சொல்லடைவைத் திருக்குறள் அகராதி என்னும் பெயரில் வெளியிட்டவர். இவை யாவற்றுக்கும் மேலாக உலக வரலாற்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காலவரிசைப்படுத்தித் தந்தார். செந்தமிழ் அகராதி என்றவோர் அகர முதலியையும் தொகுத்தார். இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1940-50களில் இளைஞர் களாக இருந்த பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றிய தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாசிப்பு விடயங்களை அளித்தவர். இவருடைய பெரும்பாலான படைப்புக்கள் அக்காலத்திற் பிரசுரிக்கப் பட்ட ஒற்றுமை என்னும் இதழின் அலுவலகத்தாலேயே வெளியிடப் பெற்றன. இவர் வெளியிட்டனவற்றுள் பல ஒற்றுமை இதழில் வெளிவந் திருத்தல் வேண்டும். ஆனால், அதனை இப்பொழுது நிச்சயமாக என்னாற் சொல்ல முடியவில்லை. ஒற்றுமை அலுவலகம் இவற்றைப் பிரசுரித்தது என்பதை அறிவேன். ஏனெனில் இலங்கையில் தமிழாசிரியராக இருந்த எனது தகப்பனாரிடத்து இந்நூல்களிற் பெரும்பாலானவை இருந்தன. திரு ந.சி. கந்தையா பிள்ளையின் பெயர் தமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் காரணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப் பெற்றன. இந் நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளன. ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிற்கூட இவரது பெயர் முக்கியப் படுத்தப் பெறாது போயுள்ளது. மிகுந்த சிரமத்தின் பின்னர் அவரைப் பற்றிக் கிடைத்துள்ள தகவல்கள் பின்வருமாறு: சுவாமி ஞானப் பிரகாசர், ந.சி. கந்தையா பிள்ளை போன்ற அறிஞர்களின் தமிழ்ப் பங்களிப்புக்கள் தமிழகத்தில் போற்றப்படுகின்றமை ஈழத்தவர்க்குப் பெருமை தருகின்றது. இவர் எழுதிய நூல்களின் பெயரை நோக்கும்பொழுது தமிழ் வாசகர்களுக்கு உலக நிலைப்பட்ட, தமிழ்நிலைப் பட்ட தரவுகளைத் தொகுத்துத் தருவதே இவரது பெருஞ்சிரத்தையாக இருந்தது என்பது புலனாகின்றது. இப்பதிப்பகத்தின் பணியினை ஊக்குவிக்க வேண்டியது தமிழ்சார்ந்த நிறுவனங்களினதும் தமிழ்ப் பெரியோர்களினதும் கடமையாகும். உண்மையில் இதனை ஒரு அறிவுப்பசிப் பிணித் தீர்வாகவே நான் காண்கிறேன். 2/7, றாம்ஸ்கேட், அன்புடன் 58, 37ஆவது ஒழுங்கை, கார்த்திகேசு சிவத்தம்பி வெள்ளவத்தை, தகைசார் ஓய்வுநிலை பேராசிரியர் கொழும்பு - 6 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம். கருவிநூல் தந்த ந.சி. கந்தையா தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூலவர்களில் யாழ்ப்பாணம் தந்த பேரறிஞர் ந.சி. கந்தையாவும் ஒருவர். உண்மையான அறிஞர்களைக் காலங்கடந்து அடையாளம் காண்பதும் அவர்தம் படைப்புக்களைத் தேடிப் பிடித்துப் புரப்பதும் தமிழினத்தின் பழக்கங்களில் ஒன்று. தமிழின், தமிழரின் தொல்பழங்கால வரலாறு தொடர்பாகத் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. ஓர் ஆயிரம் நூல்களாவது தமிழின் தமிழரின் தொல்பழங்கால வரலாறுபற்றி வெளிவரவேண்டும். விரிவாக எழுதப்பட வேண்டிய தமிழ், தமிழர் வரலாற்று வரைவு முயற்சிக்கு வழிகாட்டும் கருவி நூல்களை வரைந்திருப்பவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார். உலகம் முழுவதும் உற்றுக் கவனிக்க வேண்டிய வரலாற்றிற்கு உரியவர்கள் தமிழர்கள். அவர்களே உலக மொழிகளை ஈன்ற மூலமொழிக்குச் சொந்தக்காரர்கள். அவர்களே உலக நாகரிகங்களின் பிறப்பிற்குக் காரணமான உலக முதல் நாகரிகத்தைப் படைத்தவர்கள். இந்த உண்மைகளைத் தமிழர்களும் அறியவில்லை உலகமும் அறியவில்லை. தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந் தமிழர், தமிழர் யார், உலக நாகரிகத்தில் தமிழர்பங்கு, சிந்துவெளித் தமிழர், தமிழ் இந்தியா, தமிழகம், மறைந்த நாகரிகங்கள் ஆகியன ந.சி. கந்தையாவின் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும். உலக முதல் நாகரிகம் என இன்று உலகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடிய நீல ஆற்றங்கரை நாகரிகம் (Nile Civilisation) தமிழ் நாகரிகத்தின் அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் வழிப்பட்ட நாகரிகமே என்பதை ஏராளமான சான்றுகளால் விளக்குபவை மேலைய நூல்கள். மொழிநிலையில் தமிழின் உலக முதன்மையைப் பாவாணர் நிலைநாட்டினார் என்றால் இன நிலையில் தமிழின உலக முதன்மையை ந.சி. கந்தையா நிலைநாட்டினார் என்று உரைக்கலாம். நீல ஆற்றங்கரை நாகரிக முடிவின்பின் நண்ணிலக் கடற் பகுதியில் உருவான பிறிதொரு வழிநாகரிகமே கிரேக்க நாகரிகம். கிரேக்க நாகரிகத் தின் உடைவில் தெறிப்பில் பிறகு மலர்ந்தவையே இன்றைய மேலை நாகரிகம். உலகின் எல்லா நாகரிகங்களையும் தாங்கிநிற்கும் தாய் நாகரிகமே தமிழ் நாகரிகம். தமிழ் நாகரிகத் தொன்மையைச் சங்க நூல்களுக்கு அப்பால் சிந்துவெளி அகழ்வாய்வும் உலக வரலாற்றாசிரியர்கள் உலக முதல் நாகரிகம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் நமக்கு மேலும் விளக்கும் பகுதிகளாகத் திகழ்கின்றன. இங்கெல்லாம் சென்று நுண்மாண் நுழைபுல முயற்சியால் தமிழின வரலாறு எழுதியவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார். ந.சி. கந்தையா பெருமகனார் நூல்களைத் தமிழரின் தொல்பழங்கால வரலாற்றைக் கற்கும் முயற்சியில் நான் ஈடுபடத்தொடங்கியபோது தேடிக் கற்றேன். பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் சென்ற ஆண்டு இயற்கையெய்திய வரலாற்றுப் பேரறிஞர் கோ. நிலவழகனார் ந.சி. கந்தையா அவர்களைச் சென்னையில் அவர் வாழ்ந்த நாளில் சந்தித்தது பற்றியும் அவரின் பன்னூற்புலமை பற்றியும் எம்மிடம் மகிழ்ந்து கூறுவார். ந.சி. கந்தையா அவர்களின் நூல்கள் பலவற்றையும் அவர் வைத்திருந்தார். அருகிய பழைய நூல்களைப் பேணுவாரிடத்திலும் நூலகங்கள் சிலவற்றிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்த ந.சி. கந்தையா நூல்களை மீண்டும் அச்சில் வெளியிடுவார் இலரே என்று கவலையுற்றேன். அமிழ்தம் பதிப்பகம் இவரின் நூல்களை வெளியிடுகின்றது. உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் இந் நூல்களை உச்சிமோந்து வாரியணைத்துப் புகழ்ந்து கற்றுப் பயனடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு. பேரா. கு. அரசேந்திரன் பதிப்புரை வளம் சேர்க்கும் பணி “குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம். இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன. ந.சி. கந்தையா இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது. தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர். தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது. தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர். நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள் 1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன. வாழும் மொழி தமிழ் தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம். ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா? தமிழர்களின் கடன் இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன். மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள். எழுச்சிக்கு வித்திட... உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது. இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதிப்பகத்தார் தமிழகம் ஆசிரியர் ந.சி. கந்தையா தொகுப்பாளர் புலவர் கோ. தேவராசன். எம்.ஏ.,பி.எட்., பதிப்பாளர் இ. இனியன் அமிழ்தம் பதிப்பகம் 328/10 திவான்சாகிப் தோட்டம் இராயப்பேட்டை, சென்னை - 14. நூற்குறிப்பு நூற்பெயர் : தமிழகம் ஆசிரியர் : ந.சி. கந்தையா பதிப்பாளர் : இ. இனியன் முதல் பதிப்பு : 2003 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 20 + 172 = 192 படிகள் : 1000 விலை : உரு. 85 நூலாக்கம் : பாவாணர் கணினி 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : பிரேம் அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் 20 அஜீஸ் முல்க் 5வது தெரு ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 கட்டமைப்பு : இயல்பு வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம் 328/10 திவான்சாகிப் தோட்டம், டி.டி.கே. சாலை, இராயப்பேட்டை, சென்னை - 600 014. i ii xv xiv iii iv xiii xii v vi xi x vii viii ix xx உள்ளடக்கம் ந.சி. கந்தையாப் பிள்ளை வாழ்வும் தொண்டும். . . . iii அகம் நுதலுதல் . . . vii நூலறிமுகவுரை . . . xi கருவிநூல் தந்த ந.சி. கந்தையா . . . xiii பதிப்புரை . . . xv நூல் 1. தமிழகம் . . . 1 2. மொழி . . . 37 3. தமிழர் நாகரிகம் . . . 97 4. ஒழிபியல் . . . 145 xvii xviii xix