16 தமிழர் யார்? முன்னுரை மேல்நாட்டவர்கள் மக்கள் வரலாற்றை ஒரு கலையாகக் கொண்டு அதனை வளர்த்து வருகின்றனர். அவர்கள் மொழிகளில் மக்கள் வரலாற்றைப் பற்றி ஆயிரக்கணக்கான நூல்கள் எழுதப்பட்டுள்ளன. தமிழ்நாட்டினருக்கு வரலாறு என்பது புதிது. மக்கள் வரலாறுகளோடு கடவுளர்களைத் தொடர்பு படுத்திக் கூறும் பழங்கதைகள் போன்றனவே உண்மை வரலாறுகள் என நம்மவர் பெரிதும் நம்பி வருகின்றனர். மக்களின் உள்ளம் இவ்வாறு பழகியிருப்பதினாலேயே பேசும் படக் காட்சிகளுக்கும் இவ் வகைக் கதைகள் தெரிந்து எடுக்கப்படுகின்றன. நம்மவரின் அறிவு, வரலாற்றுத் துறையில் மிகப் பிற்போக்கடைந் திருப்பதினாலேயே, மூடத்தனமான பல பழக்க வழக்கங்கள் நம்மவர்க ளிடையே வழங்குகின்றன. மூடப்பழக்க வழக்கங்களுக்குக் காரணம், அவைகளின் உண்மை அறியப்படாதிருத்தலே யாகும். பயனற்ற அல்லது பொருளற்ற பழக்க வழக்கங்களின் தொடக்கம் அல்லது காரணம் அறியப்படின் மக்கள் அவைகளைக் கைவிடப் பின்னடைய மாட் டார்கள். நமது நாடு, தமிழ் வழங்கும் நிலம். இங்குக் கிராமங்கள் தோறும், வீதிகள் தோறும் ஆலயங்கள் காணப்படுகின்றன. அவ் வாலயங்களில் குருமார் சில சமக்கிருதச் சொற்றொடர்களை உச்சரித்துக் கடவுள் பூசை செய்து வருகின்றனர். அச் சமக்கிருதச் சொற்றொடர்களில் தெய்வீகம் அல்லது கடவுள்தன்மை இருப்பதாகக் கற்றாரும் கல்லாதாரும் நம்பி வருகின்றனர். சமக்கிருதம் என்பது நமது நாட்டு மொழியன்று. இது செர்மன், இலாத்தின், கெல்து முதலிய ஐரோப்பிய மொழிகளுக்கு இனமுடையது. இற்றைக்கு 4000 ஆண்டுகளுக்கு முன் மத்திய ஆசியாவி னின்றும் இந்திய நாட்டை அடைந்த ஆரியர் என்னும் அன்னிய மக்கள் பேசிய மொழியின் திருந்திய அமைப்பு. இதில் கடவுள்தன்மை இருப்ப தாக நம்மவர் நம்பிவருவதை வரலாற்று மாணவன் ஒருவன் நோக்கின், அது அவனுக்கு நகைப்பை உண்டாக்கும். சமக்கிருதத்தில் தெய்வத் தன்மை உண்டு என நினைக்கின்ற தமிழ்மக்கள் எல்லோரும் இவ் வுண்மையை அறிவார்களானால், அவர்களே தமது மூடத்தனத்தை நினைந்து நாணுவார்கள் அல்லவா? வரலாற்றுக் கல்வியினால் இதுவும் இதுபோன்ற பல மூடக் கொள்கைகளும் ஒழியும். வரலாறே மக்களுக்குக் கண். இந் நூல் நாம் எல்லோரும் முதலில் அறிந்துகொள்ள வேண்டிய நம் முன்னோரின் ஆதி வரலாற்றைத் தெரிவிப்பதாகும். இவ் வாராய்ச்சிக்கு ஆதாரம் மேல்நாட் டறிஞரின் ஆராய்ச்சி நூல்களே. சென்னை 12.4.46 ந.சி. கந்தையா தமிழர் யார்? தோற்றுவாய் தமிழர் யார்? அவர்களின் பிறப்பிடம் யாது? அவர்கள் இந்திய நாட்டில் தொன்றுதொட்டு வாழ்ந்து வருகின்றார்களா? அல்லது பிற நாடுகளினின்றும் வந்து புதிதாகக் குடியேறினார்களா? அவர்களின் பழமை எவ்வகையினது? அவர்களின் நாகரிகம் அவர்களிடையே தோன்றி வளர்ச்சியடைந்ததா? அன்றேல் அதனைப் பிறர் அவர்களுக்கு உதவினார்களா? என்பன போன்ற கேள்விகளுக்கு இறுக்கப்படும் விடைகளே தமிழரின் பண்டை வரலாறாக அமையும். முதலில் தன் நாட்டினரையும் தன் இனத்தினரையும் பற்றிய உண்மை வரலாறுகளை அறிந்துகொள்ளாது பயிலப்படும் வரலாற்றுக் கல்வி பயனற்றதாகும். வரலாற்றுக் கல்வியே மக்களின் பகுத்தறிவுக் கண்ணைத் திறக்கவல்லது. தமிழரையும், தமிழையும் பற்றிய பழைய வரலாற்று உண்மைகள் வெளிவராமைக்குப் பல தடைகள் இருந்தன. அவைகளுள் ஒன்று, தமிழ் வடமொழிக்குப் பிற்பட்டது; தமிழ் வடமொழியைப் பார்த்து அமைக் கப்பட்டது; தமிழர் நாகரிகம் ஆரியரால் தமிழருக்கு உதவப்பட்டது என்பன போன்ற தவறான பல கொள்கைகள் ஒரு சாரார் கருத்தில் நன்கு பதிந்திருந்தமையேயாகும்.1 இத் தவறான கொள்கைகளை முதன்முதல் தகர்த்தெறிந்தவர் பேரறிஞர். பி. சுந்தரம் பிள்ளை அவர்களாவர். அப் பெருமகற்கு இத் தமிழுலகு என்றும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டது. அக் காலம் முதல் தமிழரையும், தமிழையும் பற்றிய பழைய வரலாறு களை ஆராயும் ஆர்வம் மக்களிடையே கிளர்வதாயிற்று. அதனால் தமிழ்நாட்டைப் பற்றிய பண்டை வரலாறுகள் சிறிது சிறிதாகப் புலர்வன வாயின. சிந்து வெளியில் மறைந்து கிடந்த அரப்பா, மொகஞ்சதரோ என்னும் பழைய இந்திய மக்களின் நகரங்களைப் பற்றிய விரிந்த புதை பொருள் ஆராய்ச்சி 1931இல் சேர்யோன் மார்சல் என்பவரால் வெளி யிடப்பட்டபோது, ஆராய்ச்சியால் முடிவு காணப் பெறாது ஐயத்துக்கு இடமாயிருந்த தமிழ் மக்களின் பண்டை வரலாறுகள் முடிவு காணப் பெற்று, வெளிச்சம் எய்தின. இன்று தமிழரின் பண்டை வரலாறு இருளில் இருக்கவில்லை. ஆராய்ச்சியில் இவ் வுலக மக்களின் நாகரிகத் துக்கு அடிகோலியவர்கள் தமிழர்களே என்பது தெளிவாகின்றது. ஆராய்ச்சியாற் கிடைத்த முடிவுகளை இந் நூல் நன்கு எடுத்து விளக்கு கின்றது. ஆதி மக்கள் தமிழ் மக்களின் ஆதி வரலாற்றை அறிந்துகொள்வதற்கு, ஆதி மக்களைப் பற்றிய வரலாற்று அறிவு இன்றியமையாதது. இன்றைய பூகோளப் படத்தில் தெற்கே அதிக கடலும், வடக்கே அதிக நிலமும் இருப்பதைக் காண்கின்றோம். மிக மிக முற்காலத்தில் பூகோளப் படம் இதற்கு நேர்மாறாக இருந்தது. ஒரு காலம் தெற்கே கிடந்து நீருள் மறைந்துபோன பெருநிலப் பரப்பைப்பற்றி நிலநூலாரும், புராணக் கதைகளும், கன்ன பரம்பரை வரலாறுகளும் கூறுகின்றன. தெற்கே கிடந்து மறைந்துபோன நிலப்பரப்பை மேல்நாட்டுப் பௌதிக நூலார், லெமூரியா என அறைவர். அங்கு தேவாங்கு போன்ற உயிரினம் வாழ்ந்தது என்னும் கருத்துப் பற்றி லெமூரியா என்னும் பெயர் இடப்பட்டது. லெமூர் என்னும் பெயர் தேவாங்கைக் குறிக்கும். லெமூரியா என்னும் நிலப்பரப்பிலேயே ஆதி மக்கள் தோன்றிப் பெருகினார்கள் என ஹெக்கல் என்னும் ஆசிரியர் கூறி யுள்ளார். இக் கருத்து சிலகாலம் சிற்சிலரால் ஏற்றுக்கொள்ளப்பட வில்லை. ஆனால், இற்றை ஞான்றை ஆராய்ச்சிகளால், இக் கொள்கை வலியுறுகின்றது. எச்.சி.வெல்ஸ் என்னும் இக்காலப் பேரறிஞரும் மத்திய தரைக்கும் தென் சீனத்துக்கும் இடையிலுள்ள நிலப்பரப்பிற் றோன்றிப் பெருகிய மக்களே பல சாதியார்களாக மாறியுள்ளார்கள் எனத் தமது உலக வரலாற்றுக் காட்சிகள் (Outlines of History) என்னும் நூலகத்தே குறிப்பிடுவாராயினர். லெமூரியாக் கண்டம் உயிர்கள் தோன்றாதிருந்த காலத்திலேயே மறைந்துபோயிற்று எனச் சில ஆசிரியர்கள் கொண்ட கருத்து இன்று ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இன்று வடமொழியில் எழுதப்பட்டிருக்கும் பல கற்பனைக் கதை களோடு பின்னிக்கிடக்கும் பழங்கதைகளின் தொகுதிகள் புராணங்கள் எனப் படுகின்றன. வடமொழியாளர் இந்திய நாட்டை அடைந்தபோது, இந்திய நாட்டில் வழங்கிய பழங்கதைகளை எழுதிவைத்தல் இயல்பே யாகும். மெகஸ் தீனஸ் என்னும் கிரேக்கரும், மார்க்கோப்போலோ என் னும் இத்தாலியரும், சீன யாத்திரிகர்களும் இந்திய நாட்டு வரலாறுகள் சிலவற்றை எழுதிவைத்தமையை இதனோடு ஒப்பிடலாகும். இந்திய மக்களின் பழங்கதைகளாகிய புராணங்கள், தெற்கே பெரிய நிலப்பரப் பிருந்ததென்றும், மேரு, பூமிக்கு மத்தியிலுள்ளதென்றும், மேருமலை யின் ஒரு கொடுமுடி இலங்கைத் தீவு என்றும் கூறுகின்றன. தமிழ் நூல் களும், தெற்கே கிடந்து அழிந்துபோன நிலப் பரப்பைப் பற்றிக் கூறு கின்றன. இவை மேல்நாட்டு ஆராய்ச்சியாளர் கூற்றுக்களோடு மிக ஒத் திருக்கின்றன. தெற்கே கிடந்து மறைந்துபோன நிலப்பரப்பைத் தமிழ் மக்கள் நாவலந்தீவு எனப் பெயர் இட்டு வழங்கினர். பூமியின் நடுவரையை அடுத்த நாடுகளிலே, ஆதியில் மக்கள் தோன்றிப் பெருகினார்கள் என விஞ்ஞானிகள் கருதலானார்கள். மிகப் பழைய மனித எலும்பு சாவகத் தீவிற் கிடைத்தது. இது விஞ்ஞானிகள் கொண்டிருந்த கருத்துக்கு மிக இயைபுடையதாகக் காணப்பட்டது. இதனாலும் பிற காரணங்களாலும் சாவகத் தீவிலோ, அதனை அடுத் திருந்த நிலப்பரப்பிலோ, ஆதிமக்கள் தோன்றிப் பெருகியிருத்தல் வேண்டுமென விஞ்ஞானிகள் பலர் கூறுகின்றனர். மக்கள் ஓரிடத்தினின்றும் பல இடங்களுக்கு ஏன் சென்றார்கள்? தொடக்கத்தில் மக்கள் விலங்குகளை ஒப்ப வாழ்ந்தார்கள். அவர்கள் காடுகளிற் கிடைக்கும் காய் கனி கிழங்குகளை உண்டு சுனை நீரைப் பருகி மலைக்குகைகளிலும், மரநிழல்களிலும் தங்கிவாழ்ந்தனர். அவர்கள், பொருள் பண்டங்கள் எவையும் இல்லாதவர்களாய் எங்கும் அலைந்து திரிவாராயினர். இந் நிலைமையில் மக்கட் பெருக்கம் உண்டாயிற்று. அதனால் எல்லாருக்கும் ஓரிடத்தில் உணவு கிடைத்தல் அரிதாயிற்று. ஆகவே உணவின் பொருட்டுப் பலர் தமது நடு இடத்தை விட்டு, உணவு தேடும் பொருட்டுச் சிறிது சிறிதாக அகலச் சென்றனர். இவ்வாறு சென்ற மக்களுக்குத் தாம் முன்னிருந்த இடங்களுக்குத் திரும்பி வரும் கட்டாயம் உண்டாகவில்லை. இவ் வுலகின் பல இடங்களில் 1பழங்கற்கால நாகரிகமுடைய மக்கள் வாழ்ந்து வந்ததற்குரிய சான்றுகள் காணப்படுகின்றன. இதனால் பழங் கற்காலத்திலேயே மக்கள் பிரிந்து உலகின் பல பாகங்களுக்குச் சென்று தங்கிவிட்டார்கள் எனத் தெரி கின்றது. பழங் கற்கால ஆயுதங்களோடு கண்டு எடுக்கப்பட்ட மனித மண்டை ஓடுகள் எல்லாம் ஒரே வகையாகக் காணப்படுகின்றமையின், அக் காலத்தில் இன்று காணப்படுவன போன்று நிறத்தாலும் உடற் கூறுகளாலும் மாறுபட்ட மக்கட் குலங்கள் தோன்றவில்லை எனக் கருதப்படுகிறது. 2புதிய கற்காலக் கல்லாயுதங்களுடன் காணப்பட்ட மனித மண்டை ஓடுகள் வெவ்வேறு வகையாக இருத்தலின் அக் காலத் திலே மக்கட் குலங்கள் தோன்றியிருந்தனவாதல் வேண்டும். ஒரு மக்கட் குலத்தினர் நிறம், உடற்கூறு முதலியவைகளால் மாறுபட்ட இன்னொரு மக்கட் குலத்தினராக மாறுபடுவதற்கு 300 தலைமுறைகள் வரையில் ஆகுமென்பது ஆராய்ச்சிவல்லார் கருத்து. நாவலந் தீவின் அழிவு பூமியின் நடுக்கோட்டை அடுத்த நாடுகளில், பெரிய காற்றுக் குழப்பங்களும், எரிமலைக் குழப்பங்களும் தோன்றுதல் இயல்பு. எரிமலைக் குழப்பங்களால் தரைப் பாகங்கள் கடலுள் மறைந்துபோத லும் கடலுள் தரைகள் எழுதலும் இயல்பு. ஒரு காலத்தில் பெரிய எரிமலைக் குழப்பத்தினால் நாவலந் தீவு சின்னாபின்னமாக்கப்பட்டது. இந்துமாக்கடல், பசிபிக் கடல்களின் இடையிடையே தீவுக் கூட்டங்க ளாக விளங்குவன நாவலந் தீவின் பகுதிகளே. அவை, நாவலந் தீவிலிருந்த பெரிய மலைகளின் சிகரங்கள் ஆகலாம். நாவலந்தீவு சிதறுண்டபோது அங்கு வாழ்ந்த மக்களில் எண்ணில்லாதோர் மாண்டனர். பலர் ஒருவாறு தப்பிப் பிழைத்தனர். உலக மக்கள் எல்லோரிடை யும் பெரிய கடல்கோள் ஒன்றைப் பற்றிய பழங்கதை வழங்குகின்றது. ஒவ்வொரு மக்களிடையும் வழங்கும் அப் பழங்கதைகள் எல்லாம், சிற்சில மாறுதல்களைவிட ஒரேவகையாகக் காணப்படுகின்றன. அவ் வரலாறு மக்கள் எல்லோரும் ஒரு மத்திய இடத்தில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் நேர்ந்த பெரிய வெள்ளப் பெருக்கு ஒன்றின் ஞாபகமே என்று நன்கு அறியக் கிடக்கின் றது. பெரிய வெள்ளப் பெருக்குக்குத் தப்பிப் பிழைத்த சத்திய விரதன் என்னும் தமிழ் மனுவிலிருந்து உலக மக்கள் தோன்றிப் பெருகினார்கள் எனப் புராணங்கள் நவில்கின்றன. கிறித்துவ வேதத்தில் அப் பெரிய வெள்ளப் பெருக்கைப் பற்றிய வரலாறு கூறப்படுகின்றது. அவ் வரலாறு யூதமக்களுக்குச் சாலடிய மக்கள் வாயிலாகக் கிடைத்தது. சாலடியர் சோழ நாட்டினின்றும் சென்று, மேற்கு ஆசியாவிற் குடியேறிய மக்க ளாவர்.3 நாவலந் தீவில் நாகரிகம் வளர்ச்சியுற்றிருந்த தென்பதற்குச் சான்று சிந்துநதிப் பள்ளத்தாக்குகளில் மொகஞ்சதரோ, அரப்பா என்னும் பழந் தமிழரின் இரு புராதன நகரங்கள் அண்மையிற் கண்டு பிடிக்கப்பட்டன. அவைகளின் காலம் இற்றைக்கு ஆறாயிரம் ஆண்டுகள் வரையில். அங்குக் காணப்பட்ட முத்திரைகளில் அக் கால மக்கள் வழங் கிய எழுத்துகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. இவ் வகை எழுத்துக்கள் தென்னிந்தியாவின் சில பகுதிகளிற் கிடைத்த வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட மட்பாண்டங்களிலும் இலங்கையில் கேகாலைப் பகுதியி லுள்ள மலை ஒன்றிலும் காணப்படுகின்றன. கிழக்குத் தீவுகளிலும் பசிபிக் கடற் றீவுகளிலும் இவ் வகை எழுத்துகளே வழங்கின என்பது அவ் விடங் களிற் கிடைத்த எழுத்துப் பொறித்த பழம் பொருள்களால் நன்கு அறியப் படுகின்றது. மக்களிடையே நாகரிகம் முதிர்ந்து, மொழி உண்டாகி அது பேச்சு வழக்கில் நீண்டகாலம் நிலவிய பின்பே எழுத்துகள் தோன்றுவது இயல்பு. நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்திய நாட்டை அடைந்த ஆரியர் எழுத்தெழுத அறிந்திருக்கவில்லை. ஆனால், நாவலந் தீவு மக்கள் எழுத்தெழுத அறிந்திருந்தனர். நாவலந்தீவு மக்கள் பெரிய உலக அழி விற்கு முன்பே நாகரிக முதிர்ச்சியுடையவர்களாய் இருந்தார்கள் என்ப தற்கு அவர்கள் வழங்கிய எழுத்துகளே சான்றாகின்றன. மொகஞ்சத ரோவிற் கிடைத்த ஆயிரத்து எண்ணூறு முத்திரைகளிற் பொறிக்கப் பட்ட முத்திரைகளை ஹெரஸ் பாதிரியார் நன்கு ஆராய்ந்துள்ளார். அவ் வெழுத்துகள் சிலவற்றை அவர் வாசித்திருக்கின்றார். மொகஞ்சத ரோவில் வழங்கிய மொழி, தமிழ் என உறுதிப்பட்டுள்ளது. இதனால் நாவலந் தீவில் வழங்கிய மொழியும் தமிழேயென உறுதிப்படுகின்றது. குமரி நாடு நாவலந் தீவின் வடக்கில் அராவலி மலைகள் வரையும் தரை யிருந்தது. நாவலந் தீவு அழிவுற்ற காலத்தில் இந்தியக் குடாநாட்டைத் தொடர்ந்து தெற்கே பெரிய நிலப்பரப்பிருந்தது. அது கன்னியாகுமரிக் குத் தெற்கே எவ்வளவு தூரம் நீண்டிருந்ததென்று வரையறுத்துக் கூற இயலாது. பழைய தமிழ் நூல்களிற் கூறப்படுவதை நோக்குமிடத்து அந் நிலப்பரப்புப் பெரிய நீளமும் அகலமும் உடையதாய் இருந்ததென மாத்திரம் கூறலாம். குமரி நாடு என்பது குமரித் தெய்வத்தின் வழிபாடு காரணமாகத் தோன்றிய பெயர். பண்டைநாளில் ஆளும் அரசர் அல்லது வழிபடும் கடவுளர்களின் பெயர்கள் தொடர்பாகவே, பெரும்பாலும் நாடுகளுக்குப் பெயர்கள் உண்டாயின. இவ் வுலகில் ஆதியில் தோன்றி யது பெண் ஆட்சி, அக் காலத்தில் ஆடவர் மகளிருக்குக் கீழ்ப்பட்டிருந் தார்கள். சொத்துரிமை பெண்களுக்கே இருந்தது. தாயம் என்னும் சொல்லுக்குச் சொத்துத் தாயிடமிருந்து பிள்ளைகளைச் சேருவது என்று பொருள். இவ் வழக்கைப் பின்பற்றியே “சீதன” வழக்கும் உண்டா யிற்று. ஆடவன் மனைவிக்குக் கீழ்ப்படிந்து நடப்பதற்காகவே இவ் வழக்கம் எழுந்தது. தாயாட்சி உண்டாயிருந்த காலத்தில், மக்கள் தாய்க் கடவுளையே வழிபட்டார்கள். ஒரு காலத்தில் திருமணக் கட்டுப்பாடுகள் இருக்கவில்லை. ஆகவே தாய், திருமணம் பெறாதவள் அல்லது குமரி எனப்பட்டாள். குமரிக் கடவுள் வணக்கத்திற்குரிய நாடாதலின் அது குமரி நாடு என வழங்கிற்று. குமரி நாட்டில் நாற்பத்தொன்பது பிரிவுகள் இருந்தன வென்பது சிலப்பதிகாரத்திற்கு, அடியார்க்கு நல்லார் எழுதிய உரையிற் காணப் படுகின்றது. அங்கு, குமரி, பஃறுளி என்னும் ஆறுகளும், குமரி என்னும் மலையும் இருந்தன வென இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்திற் கூறியுள் ளார். செங்கோன் தரைச்செலவு, என்னும் நூலால் அங்கிருந்த மணிமலை, பேராறு என்னும் சில மலைகள், இடங்களின் பெயர்களும் அறிய வருகின்றன. செங்கோன் தரைச்செலவு என்பது குமரிநாட் டின்கண் இருந்த பெருவள நாட்டரசனாகிய செங்கோன் மீது பாடப் பட்ட தமிழ் நூல். அதன் சில பாடல்களே வெளிவந்துள்ளன. செங் கோன் தரைச் செலவு மிகப் பழைய நூல் எனச் சிலர் கருதுகின்றனர். மொகஞ்சதரோ என்னுமிடத்தில் வழங்கிய தமிழின் போக்கை நோக்கு மிடத்து, அது மொகஞ்சதரோ காலத்துக்குப் பல நூற்றாண்டுகள் பிற்பட்ட நூல் என்பது நன்கு புலப்படும். செங்கோன் தரைச் செலவு என்னும் நூல், உரையாசிரியர்களால் எடுத்தாளப்படாமையின் அது பிற்காலத்தவர் எவரோ கட்டிய போலிநூல் எனச் சிலர் கூறுவர். உரையாசிரியர்கள் ஆட்சிக்குத் தப்பிய பல நூற்பெயர்கள் யாப்பருங்கல விருத்தியுரையிற் காணப்படுகின்றன. குமரிநாட்டின் அழிவும், அங்கு வாழ்ந்த மக்கள் தென்னிந்தியாவிற் குடியேறுதலும் குமரி நாடும் சிறிது சிறிதாகக் கடல்கோளுக் குட்பட்டது. இக் கடல் கோளுக்குப் பிழைத்த மக்கள் வடக்கு நோக்கிச் சென்று தென் னிந்தியாவிற் குடியேறினார்கள். அம் மக்கள் கன்னித் தெய்வத்தின் திருவுருவைத் தெற்கின்கண் வைத்து வழிபடுவாராயினர். தாம் இப்பொ ழுது குடியேறியிருக்கும் நாட்டை மேலும் கடல் கொள்ளாதிருத்தற் பொருட்டு அத் தெய்வத்தின் திருவுருவை அவர்கள் அங்கு வைத்தார்கள் ஆகலாம். இந்தியாவுக்கு வந்து மீண்டு சென்ற உரோமர் கன்னித் தெய்வத் தின் திருவுருவம் அங்கு இருந்தமையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் குறிப்பிட்டிருக்கின்றார்கள். நாவலந் தீவு குமரி நாட்டினின்றும் வந்து குடியேறிய மக்கள், தமது நாட்டுக்குக் கடல்வாய்ப்பட்டு மறைந்த நாவலந் தீவின் பெயரையே இட்டார்கள். அதனிடை இயற்கைக் குழப்பங்கள் யாதும் நிகழவில்லை. மக்கள் அமைதி யடைந்திருந்தனர்; தாம் முன்பு அறிந்திருந்த பல்வகைத் தொழில் களைப் புரிந்தனர்; வேளாண்மை வாணிகம் என்பன தலையெடுத்தன. நாடு நகரங்கள் உண்டாயின. அவர்கள், தம்முள் அறிவும் ஆற்றலும் வீரமுஞ் செறிந்த ஒருவனை அரசனாகத் தெரிந்தெடுத்தார்கள். அவன் வாழ்ந்த நகரம் தென் பாகத்தில் இருந்தது. மக்கள் பெருகி மேலும் வடக்கே சென்று குடியேறினர். வடக்கே பெருந்தொலைவில் மக்கள் நுழைந்து செல்லமுடியாமல் ‘தண்டகம்’ என்னும் நெருங்கிய காடு தடுத்தது. முன்னையிலும் இப்பொழுது மக்கள் அகன்ற இடத்திற் குடியேறி வாழ்ந்தார்கள். அப் பகுதிகளை ஆள்வதற்கு இன்னும் இரண்டு அரசர் தெரிந்தெடுக்கப்படுவாராயினர். இவ்வாறு நாவலந் தீவில் மூவர் ஆட்சி உண்டாயிற்று. தெற்கே உள்ள நாடு, பழைய அரசனுக்கு உரியதாத லின், அது பண்டுநாடு எனப்பட்டது. பழமையை உணர்த்தும் பண்டு என்னும் சொல்லினின்றே பாண்டியன் என்னும் சொல் உண்டாயிற்று. மாபாரதத்திற் சொல்லப்படும் பாண்டு என்பவனின் பெயரிலிருந்து பாண்டியன் என்னுஞ் சொல் உண்டாயிற்று எனச் சிலர் கூறுவர். அது பெரிதும் தவறுடைத்து; பாண்டுவுக்கு முன் பாண்டியர் இருந்தனர். மேற்குக் கடற்கரை, கிழக்குக் கடற்கரை நாடுகளை ஆண்ட அரசர் முறையே சேரர், சோழர் எனப்பட்டார்கள். இவ்வாறு நாவலந் தீவில் மக்கள் பெருகப் பெருகப் பல அரசாட்சிகள் உண்டாயின. நாவலந் தீவினின்றும் சென்று மக்கள் பிற நாடுகளிற் குடியேறுதல் நாவலந் தீவில் மக்கள் பெருகத் தொடங்கினார்கள். ஒரு நாட்டில் மக்கள் அதிகம் பெருகினால் அங்கு வாழ்க்கைக்கு இசைவுகள் குறைவு படும். ஆகவே மக்கள் இசைவுடன் வாழக்கூடிய பிற நாடுகளிற் சென்று குடியேறுவார்கள். தென் தமிழ்நாட்டில் வாழ்ந்த மக்கள் பற்பல கூட்டத் தினராய்க் குடியேற்ற நாடுகளைத் தேடி வெளியே சென்றனர். வடக்கே விந்திய மலை வரையிற் பெருங்காடு இருந்தமையால் அவர்கள் தரை வழியே வடக்கு நோக்கிச் செல்ல முடியவில்லை. தமிழர் திறமையுடைய மாலுமிகளா யிருந்தனர். ஆகவே அவர்கள் கடல் வழியே ஏகினர். சிந்துவெளி மக்கள் இவ்வாறு சென்ற ஒரு கூட்டத்தினர் வடக்கேயுள்ள சிந்து நதி முகத்துவாரத்தை அடைந்தனர். இந் நதி ஓரங்கள் மக்கள் குடியேறி வாழ்வதற் கேற்றனவாய், இருந்தன. அக் கூட்டத்தினர் அவ் வாற்றோரங் களில் தங்கித் தானியங்களை விளைவித்து இனிது வாழ்ந்தனர். மக்கள் பெருகப் பெருக அவர்கள் அவ் வாற்றோரங்களில் குடியேறிப் பரவி னார்கள். அக் கால மக்கள் வியக்கத்தகுந்த நனி நாகரிகம் எய்தியிருந்தனர். அவர்களைப் பற்றி 1921ஆம் ஆண்டு வரையில் யாதும் தெரியவில்லை. அவர்கள் அமைத்து வாழ்ந்த இரு பெரிய நகரங்கள் பழம்பொருள் ஆராய்ச்சியாளராற் கண்டுபிடிக்கப்பட்டன. பிற்காலத்தைய மக்கள், அவைகளுக்கு மொகஞ்சதரோ, அரப்பா எனப் பெயரிட்டு வழங்கி னார்கள். இவ் விரு நகரங்களுக்கும் இடையிலுள்ள தூரம் நானூறு மைல். ஆனால், இவ் விரு நாடுகளிலும் காணப்பட்ட நாகரிகக் குறிகள் ஒரே வகையின. அதனால் அக் காலச் சிந்துவெளி மக்களின் நாகரிகம் மிகப் பரவியிருந்ததென விளங்குகின்றது. அவர்களின் நாகரிகம் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. அக் காலத்தில் அவர்கள் இரும்பைப்பற்றி அறிந்திருக்கவில்லை. அவர் களின் நாகரிகம் கற்கால முடிவுக்கும் உலோக காலத் தொடக்கத்துக்கும் இடைப்பட்டது. இற்றைநாள் தமிழரிலும் பார்க்கச் சிந்துவெளித் தமிழர் நாகரிகத்திற் குறைந்தவர்களல்லர். முற்கால மக்கள் நாகரிகத்தாலும் அறிவாலும் தாழ்ந்தவர்களா யிருந்தார்களென்றும் காலஞ் செல்லச் செல்ல அவர்களின் நாகரிகமும், அறிவும் வளர்ச்சியடைந்தன வென்றும் சிலர் கருதுகின்றனர். சில வகைகளில் அல்லாமல், பல வகைகளில் முன்னைய மக்களே அறிவாற்றலும் மனவலியும் உடல் வலியும் பெற் றிருந்தார்கள் எனப் பழைய வரலாறுகளை நோக்குங்கால் தெளிவாக விளங்கும். நாகரிகம் முன்நோக்கிச் செல்வது போலவே, ஓர் ஒரு கால் பின்நோக்கியும் செல்வதாக அறிஞர் ஆராய்ந்து கூறியுள்ளார்கள். ஆறாயிரம் ஆண்டுகளின் முன் எகிப்தியர் கட்டி எழுப்பிய கூர்நுதிக் கோபுரங்களையும், சீரிய நாட்டினர் அறுபது அல்லது எழுபது அடி உயரமுள்ள தனிக் கற்றூண்களை நிறுத்திக் கட்டி எழுப்பிய “பால்பெக்” ஆலயத்தையும் கண்டு இன்றைய உலகம் வியப்படைகின்றது. ஆகவே காலப்போக்கிற் பின்நோக்கிச் செல்லச் செல்ல, மக்கள் அறியாமை யுடையவர்களா யிருந்தார்கள் என வரலாற்று நூலார் சிலர் கருதுதல் தவறாமென்க. அறிவும், அறியாமையும், நாகரிகமும், அநாகரிகமும் எல்லாக் காலங்களிலும் உண்டு என்பது அறியப்படுதல் வேண்டும். சிந்துவெளியிலே கண்டுபிடிக்கப்பட்ட பழைய நகரங்கள் உயர்ந்த நகர அமைப்பு முறையையும், சுக வாழ்க்கைக் கேற்ற விதிகளையும் தழுவி அமைக்கப்பட்டுள்ளன. அந் நகர்களின் இடையிடையே அகன்ற நெடிய வீதிகள் செல்கின்றன. அவைகளைச் சிறிய பல வீதிகள் குறுக்கே கடந்து செல்கின்றன. வீதிகளின் இரு மருங்குகளிலும் வீடுகள் நிரையாகக் கட்டப்பட்டிருக்கின்றன. அவைகளுக்கு ஒன்று முதல் மூன்று மாடிகள் வரையில் உண்டு. களி மண்ணினால் கல் அறுத்துக் காயவிட்டுச் சூளை வைக்கப்பட்ட செங்கற்கள் வீடுகள் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட் டன. வீடுகளுக்கு உள் முற்றமும், உள் முற்றத்திற் கிணறும் இருந்தன. உள் முற்றத்தில் முளைகள் அடித்து ஆடுமாடுகள் கட்டப்பட்டன. வீடுகளுக் குக் குளிக்கும் அறை இணைக்கப்பட்டிருந்தது. கழிவுநீர் செங்கற் பதித்த வாய்க்கால் வழியே சென்று வீதியிலுள்ள பெரிய வாய்க்காலில் விழுந் தது. வீதியிலுள்ள பெரிய வாய்க்காலும் செங்கல் பதிக்கப்பட்டிருந்தது. வீடுகளுக்குப் பல சாளரங்கள் இருந்தன. மாடியினின்றும் நீர் கீழே செல்வதற்குச் சூளையிட்ட களிமண் குழாய்கள் பொருத்தி வைக்கப்பட் டன. சமைப்பதற்கும் நித்திரை கொள்வதற்கும் தனியறைகள் இருந்தன. மக்கள் பல்வகைக் கைத்தொழில்கள் புரிவதிற் றிறமை யடைந்திருந்தனர். தச்சர், அழகிய கட்டில், நாற்காலி, முக்காலி முதலிய வீட்டுப் புழக்கத்துக் குரிய பொருள்களைச் செய்தார்கள். பொற்கொல்லர் மாதர் விரும்பி அணியும் அழகிய அணிகலன்களைப் பொன், வெள்ளி, வெண்கலம் முதலிய உலோகங்களாற் செய்து அளித்தனர். குயவர் அழகிய பானை, சட்டிகளைத் தண்டு சக்கரங்களைக் கொண்டு செய்தனர். அவர்கள் அம் மட்பாண்டங்கள் சிலவற்றிற்குப் பலவகை நிறங்கள் தீட்டி, அவைமீது பலவகை ஓவியங்களை எழுதினர். முற்கால மட்பாண்டங்களின் வடி வங்கள் இக் காலம் மேல்நாடுகளிலிருந்து வரும் கண்ணாடிப் பொருள்கள் போன்று அழகுடையனவா யிருக்கின்றன. சிறுவர் பலவகை விளை யாட்டுப் பொருள்களை வைத்து விளையாடி னார்கள். அவை ஊதுகுழல், கிலுகிலுப்பை, மண்ணாற் செய்து சூளையிட்ட பறவை, விலங்குகளின் வடிவங்கள் முதலியன. மகளிர் அழகிய அணிகலன்களை அணிந்து, நெற்றியிற் செங் காவிப் பொட்டு இட்டார்கள். முகத்துக்கு ஒரு வகை வெண்பொடி பூசினார்கள். மேனி அலங்கரிப்புக்குரிய பொருள்களை முத்துச்சிப்பியின் ஓடு பதித்துச் செய்யப்பட்ட அழகிய சிமிழ்களில் வைத்திருந்தார்கள். அவர்கள் தமது கூந்தலைப் பலவகையாகக் கோதி முடிந்தனர். அவர்கள் பலவகை வேலைப்பாடுடையனவும் கண்கவரும் நிறம் ஊட்டப்பட்டன வுமாகிய அழகிய ஆடைகளை உடுத்தனர். கடவுள் வழிபாட்டுக்குரிய கோவில்கள் இருந்தன. கோவில் களுக்கு அருகே உள்ள படிக்கட்டுகளுடைய கேணிகளில் கால் கைகளைச் சுத்தஞ் செய்தபின் அல்லது நீராடியபின் வழிபடுவோர் ஆலயங்களுக்குச் சென்றனர். ஆடவர் முகத்தை மழித்துக் கொண்டனர். மழிக்கும் கத்திகள் வெண்கலத்தினாற் செய்யப்பட்டன. இவ்வாறு அக் கால மக்கள், உயர்ந்த நாகரிகமும், உல்லாச வாழ்க்கையும் உடையவர் களாய் விளங்கினார்கள். இது இற்றைக்கு ஆறாயிரம் ஆண்டுகளின் முற்பட்ட தமிழரின் நாகரிக நிலை. எகிப்தியர் தமிழ்நாட்டினின்றும் சென்ற இன்னொரு கூட்டத்தினர் செங் கடல் வழியாக ஆப்பிரிக்காவை அடைந்தனர். அங்கு என்றும் வற்றாத நீர்ப்பெருக்குடைய நைல் என்னும் ஆறு உண்டு. அதன் பக்கங்களிலுள்ள நிலம் தானியங்களை விளைவிப்பதற்கு ஏற்ற செழிப் புடையது. அவ் விடத்தே அவர்கள் தங்கி வாழ்ந்தனர்; மக்கள் பெருகினர்; நாடு நகரங்கள் உண்டாயின. அவர்களா லமைக்கப்பட்ட பெரிய நகரங்கள் மெம்பிஸ், தீப்ஸ் என்பன. அம் மக்களின் பழைய நாகரிகக் குறிகள் இன்றும் அவ் விடங்களிற் காணப்படுகின்றன. பழம்பொருள் ஆராய்ச்சியாளர் அவ் விடங்களிற் கிடைத்த பழம் பொருள்களை ஆராய்ந்துள்ளார்கள். எகிப்தி யரின் பழங்கதைகள், அவர்கள் பண்டு நாட்டினின்றும் சென்றவர்களாகக் கூறுகின்றன. பண்டு நாடு என்பது பாண்டி நாடே என வரலாற்றாசிரி யர்கள் ஆராய்ந்து காட்டியுள்ளார்கள். மக்கட் குல நூலார், தமிழரும் எகிப்தியரும் ஒரே குல முறையில் வந்தோர் எனக் கூறியிருக்கின்றனர். பழைய எகிப்தியருடைய பழக்கவழக்கங்கள் கடவுள் வழிபாட்டு முறை முதலியன தமிழ் மக்களிடையே காணப்படுவன போன்றன. அவர்கள் ஆலயங்களில் இலிங்கங்களை வைத்து வணங்கினர். நைல் ஆற்றுக்கு மேற்கில் சிவன் என்னும் பாலை நிலப் பசுந்தரை ஒன்று உள்ளது. அங்கு அவர்கள் ஞாயிற்றுக் கடவுளை, சிவனென்னும் பெயரிட்டு வழி பட்டனர். எகிப்தியக் குருமார் பகலில் இரு முறையும், இரவில் இரு முறையும் நீராடினார்கள்; தோய்த்துலர்த்திய ஆடையை உடுத்தார்கள்; காலில் மிதியடி தரித்தார்கள். மக்கள் தாம் பருகும் கிண்ணங்களைத் தினமும் காலையில் சுத்தஞ் செய்தார்கள்; ஆண்டில் ஒருமுறை ஆலயங்களிலும் வீடுகளிலும் தீபங்கள் ஏற்றித் தீப விழாக் கொண்டாடினார்கள். எகிப்திற் கிடைத்த பழைய மட்பாண்டங்கள் இந்தியாவிற் கிடைத்த அவ் வகைப் பொருள்களை ஒத்துள்ளன. இறந்த அரசரின் உடல்களை அடக்கஞ் செய்தற்கு அவர்கள் கட்டி எழுப்பிய கூர்நுதிக் கோபுரங்கள் இன்றும் உலக வியப்புகளுள் ஒன்றாக மதிக்கப்படுகின்றன. நீல நதியில் வளரும் நாணற் புல்லை வெட்டிப் பிளந்து ஒட்டிய தாள்களிலே அவர்கள் குச்சியில் மை தொட்டு எழுதினார்கள். அவர்கள் எழுதுவதற்கு ஓவியங் களைப் பயன்படுத்தினர். தமிழரின் பழைய எழுத்துகள் இவ் வகையின என்பது பழைய சான்றுகளால் அறியவருகின்றன. சுமேரியர் தமிழரில் இன்னொரு கூட்டத்தினர் பாரசீகக் குடாக்கடல் வழியே சென்று தைகிரஸ் யூபிரதிஸ் ஆறுகளின் கீழ் ஓரங்களில் குடியேறினார்கள். அவர்கள் ஆற்றினின்றும் நீரைக் கால்வாய்களால் வயல்களுக்குப் பாய்ச்சி வேளாண்மை செய்தனர். அவர்களின் தலைநக ரம் சுசா. சுமேரியாவிலே ஓர் இடத்துக்கும், ஒரு மலைக்கும் எல்லம் என்னும் பெயர் வழங்கிற்று. எல் என்பது ஞாயிற்றைக் குறிக்கும் பழந் தமிழ்ச் சொல். இந்தியாவின் தென் கோடியிலுள்ள இலங்கைத் தீவின் பழைய பெயரும் எல்லம். எல்லம் என்பதே பிற்காலங்களில் ஈழம் எனத் திரிந்து வழங்கிற்று. ஈழம் என்பதன் அடி எல் என மொழிநூலார் ஆராய்ந்து காட்டியுள்ளார்கள். எல்லம் என்னும் இடப்பெயர்களின் ஒற்றுமையால் சுமேரியர் ஒருபோது இலங்கைத் தீவினின்றும் சென்ற மக்கள் ஆவார்களோ? என்பது ஆராயத்தக்கதாகின்றது. முற்காலத்து இலங்கையும், தென்னிந்தியாவும் பிரிந்திருக்கவில்லை; நிலத்தால் இணைக்கப்பட்டிருந்தன. சுமேரியரின் நாகரிகம், எகிப்தியருடையவும் சிந்துவெளித் தமிழர் களுடையவும் நாகரிகங்களை ஒத்த பழமையுடையது. ஓடக்கோன், உவண்ணா என்னும் தலைவர்களின் கீழ் சென்று பாரசீகத்திற் குடியேறிய மக்களே சுமேரியர் என அவர்களிடையே பழைய வரலாறு உண்டு. ஓடக்கோன் என்னும் சொல் ஓடங்களுக்குத் தலைவன் என்னும் பொருள் தரும் தமிழ்ப் பெயர். உவண்ணா என்னும் பெயர், துளுவ மக்களிடையே இன்றும் வழங்குகின்றது. அதற்குப் பூவின் அண்ணன் என்பது பொருள். சுமேரியர், தந்தைக் கடவுளை ஆண் என்றும், தாய்க் கடவுளை அம்மா என்றும் பெயர்கள் இட்டு வழிபட்டனர். சிந்துவெளித் தமிழரின் தந்தைக் கடவுள் ஆண்; தாய்க்கடவுள் அம்மன். சுமேரியாவிலே கிடைத்த முத்திரைகளில் சிலவற்றில் இமில் உள்ள இடபம் பொறிக்கப்பட்டிருக்கின்றன. இமிலுள்ள இடபங்கள் இந்தியாவில் மாத்திரம் காணப்படுவன. மக்கட் குலநூலார் தமிழரும் சுமேரியரும் ஒரே குலமுறையிலுள்ளோர் என ஆராய்ந்து கூறியுள் ளார்கள். வரலாற்று ஆசிரி யர்களிற் பலர், இவர்கள் இந்தியாவினின்றும் சென்று பாரசீகத்திற் குடியேறியவர்களென எழுதியுள்ளார்கள். பாபிலோனியர் சுமேரியாவுக்கு வடக்கே குடியேறி வாழ்ந்த தமிழர் அக்கத்தியர் (Accadians) எனப்பட்டனர். இச் சொல் ஒருபோது அந்தப் பக்கத்தில் குடியேறியுள்ளவர்கள் என்னும் பொருளில் (அப் பக்கத்தார்) வழங்கி யிருக்கலாம். பின்னர் அவ் விடங்களில் சோழநாட்டினின்றும் வெளிப் போந்த ஒரு கூட்டத்தினர் சென்று தங்கி வாழ்ந்தனர். அவர்கள் அந் நாட்டுக்குச் சோழதேசம் எனப் பெயரிட்டனர். சோழதேசம் என்பதே கல்தேயா (Chaldia) எனத் திரிந்து பிற்காலத்து வழங்குவதாயிற்று. கல்தேயாவின் தலைநகர் ஊர். ஒரு காலத்தில் கல்தேயா, சுமேரியா என்னும் இருநாடுகளும், ஒருங்கே இணைக்கப்பட்டுப் பாபிலோனியா என்னும் பெயர் பெற்றன. பாபிலோன் நாடு, இந்திய மக்களால், பவேரு எனப்பட்டது. இந்திய வணிகர் பவேருவுக்குக் கடல்வழியாகச் சென்ற வரலாறுகள் பவேரு சாதகம் (கி.மு. 500) என்னும் புத்த நூலிற் காணப்படு கின்றது. பாபிலோனியர் பெரிய கோயிலமைத்து, அங்கே பகற்கடவுளை வழிபட்டார்கள். பகற் கடவுள் வழிபாட்டின் காரணமாகவே அவர்கள் நகருக்குப் பாபிலோன் என்னும் பெயர் உண்டாயிற்று. அவர்கள் இடப வாகனத்தின் மீது முத்தலை வேலைப் பிடித்து நிற்கும் தந்தைக் கடவுளை யும், சிங்க ஊர்தி மேலிருக்கும் தாய்க் கடவுளையும் வழிபட்டார்கள். கி.மு. ஆறாம் நூற்றாண்டில் பாபிலோனில் கடை வைத்து வாணிகம் பண்ணிய வ.ரா. என்பவரின் கடைக்கணக்குகள் எழுதிய களிமண் ஏடு அங்குக் கண்டுபிடிக்கப்பட்டது. அசீரியர் பாபிலோனுக்கு வடக்கே குடியேறி வாழ்ந்த தமிழர் அசீரியர் எனப்பட்டனர். அசீரியா, சீரியா முதலிய பெயர்கள் ஞாயிற்றுக் கடவுள் வழிபாடு காரணமாக சூரியன் என்னும் சொல்லினின்றும் பிறந்தன என்று வடல் (Waddell) என்னும் ஆசிரியர் கூறுவர். சூரியன் வடசொல் எனப் பலர் கருதுவர். சூரர மகளிர், சூர் மா முதல் எனப் பழந்தமிழ் இலக்கியங்களில் சூர் என்னும் சொல் பயின்று வருதலைக் காணுநர் சூரியன் ஆரியச் சொல் லாகுமோவென ஆராயற்பாலர். அசீரியர் ஞாயிற் றுக் கடவுளை அசுர் என்னும் பெயரால் வழிபட்டனர். அசீரியரின் பழைய கட்டட அமைப்புகள், திராவிட நாட்டுக் கட்டட அமைப்பு களை மிக ஒத்திருக்கின்றமையின், இவ் விரு மக்களும் ஒரு பொது உற்பத்தியைச் சார்ந்தோராவர் எனப் பழஞ் சரித்திர ஆராய்ச்சியாளர் கூறியிருக்கின்றனர். இம் மக்களின் நாகரிகம், கடவுள் கொள்கை முதலியன பெரிதும் பழந்தமிழரிடையே காணப்பட்டன போல்வன. யூதர் யூதர் தமிழ்நாட்டினின்றும் சென்று மத்தியதரைக் கடலின் மேற்குக் கரையோரங்களில் குடியேறி வாழ்ந்த மக்களாவர். கல்தேயாவின் தலைநகராகிய ஊரினின்றும் சென்று பாலத்தீன நாட்டிற் றங்கிய அபிரகாம் என்னும் கல்தேயரின் சந்ததியினரே யூதரும் அரேபியரும் என்னும் கன்ன பரம்பரை வரலாறு உளது. கல்தேயர் தமிழர்களே என்பது முன் கூறப்பட்டுள்ளது. பாலத்தீன மக்களின் பழக்கவழக்கங்கள், பழந்தமிழர் பழக்க வழக்கங்களை மிக ஒத்தன. அவர்கள் மரங்களின்கீழ் சிவலிங்கங்களை வைத்து வழிபட்டனர். ஆன் கன்றும் அவர்களால் வழிபடப்பட்டது. சிவன் என்னும் கடவுளை அவர்கள் சியன் (Cian) என்னும் பெயர் கொடுத்து வழிபட்டார்கள்: இறப்புப் பிறப்பால் உண்டாகும் தீட்டுக் காத்தனர். பூப்படைந்த பெண்கள் ஏழு நாள் வரையும் தனித்து உறைந்தார்கள். இறந்தவர்கள் பொருட்டு அவர்கள் முப்பது நாள் வரையும் துக்கம் கொண்டாடினர். ஒருவர் இறந்தால், அவர் இறந்த இடத்தில் ஏழு நாட்களுக்கு விளக்குக் கொளுத்தி வைத்து உணவு படைத்தார்கள். இறந்தவரின் மரணதினம், ஆண்டில் ஒருமுறை கொண்டாடப்பட்டது. அப்பொழுது விளக்குக் கொளுத்தி வைத்து, உணவு படைத்து விருந்து கொண்டாடப்பட்டது. இன்னும் இவை போன்ற யூதரின் பழைய வழக்கங்கள் இன்றும் தமிழ்நாட்டிற் காணப்படு வன போன்றன. பினீசியர் மத்தியதரைக் கடலின் மேற்குக் கரையிலே பாலத்தீனத்துக்கு மேற் பக்கத்தே குடியேறி வாழ்ந்த தமிழர் பினீசியர் எனப்பட்டார்கள். இவர் கள் குடியேறிய நாட்டில் ஈந்து என்னும் பனைகள் அதிகம். ஆதலினாலே அவர்கள் நாடு, பனைநாடு எனப்பட்ட தென்றும், பனைநாடு என்பதே உச்சரிப்பு வேறுபாட்டால் பினீசியா ஆயிற்றென்றும் வரலாற்று ஆசிரி யர்கள் சிலர் கருதுகின்றனர். பினீசியர் பரதர் எனவும் பட்டார்கள். இவர்கள் மொகஞ்சதரோ காலத்துக்குப் பின், மேற்கு ஆசியாவிற் சென்று குடியேறியவர்கள் ஆகலாம். இவர்கள் வழங்கிய எழுத்துப் பிராமி எழுத்தோடு ஒற்றுமை யுடையது. இவ் விரு எழுத்துகளின் நெருங்கிய ஒற்றுமை காரணமாகப் பினீசிய எழுத்துகளினின்றே பிராமி எழுத்துகள் தோன்றின என்று வரலாற்றாசிரியர்கள் ஒரு காலத்திற் கருதினர். பிராமி எழுத்து, மொகஞ்சதரோ எழுத்தின் திரிபு. இந்திய நாட்டினின்றும் வாணிகத்தின் பொருட்டுச் சென்று மேற்கு ஆசியாவிற் றங்கிய பினீசியர், பிராமி எழுத்துகளையே வழங்கினர். பினீசியரிடமிருந்து கிரேக்கரும், கிரேக்கரிடமிருந்து உரோமரும், உரோமரிடமிருந்து மற்றைய ஐரோப்பிய சாதியினரும் எழுத்தெழுதும் முறையை அறிந்தார்கள். பினீசிய மக்களின் பழக்கவழக்கங்களும், கடவுள் வழிபாட்டு முறைகளும் தமிழ் மக்களிடையே காணப்பட்டன போலல்லாமல் வேறு வகையாக இருத்தல் முடியாது. இவர்கள் பெரிய ஆலயங்கள் அமைத்து அவைகளில் சிவலிங்கங்களை வைத்து வழிபட்டனர். இடபமும் இவர் களின் வழிபாட்டுக்கு உரியதா யிருந்தது. இவர்களின் தலைநகராகிய தையர்ப் பட்டினத்தில் அமைக்கப்பட்டிருந்த பகலவன் கோயிலில் மரகதத்தினாலும், பொன்னினாலும் செய்யப்பட்ட இரண்டு சிவலிங் கங்கள் நிறுத்தி வழிபடப்பட்டன என்று ஹெரதொதசு ஆசிரியர் கூறி யுள்ளார். ஆற்றோரங்களில் தங்கிய மக்களைப் போல இவர்கள் தமது உணவின்பொருட்டு வேளாண்மையிற் றங்கியிருந்தாரல்லர்; உலகின் பல பாகங்களுக்கு மரக்கலங்களிற் சென்று வாணிகம் புரிந்தனர். சீரியர் பினீசியாவுக்கு வடக்கே குடியேறி வாழ்ந்த தமிழர் சீரியர் எனப் பட்டனர். சூரியர் என்பதே சீரியர் என்று மாறிற்றென வடெல் என்னும் ஆசிரியர் கூறியுள்ளார். இம் மக்களின் வாழ்க்கை முறைகளும், கடவுட் கொள்கைகளும் பழந்தமிழரிடையே காணப்பட்டன போன்றன. சீரியாவிலே பால்பெக் என்னும் இடத்தில் அறுபது அல்லது எழுபது அடி உயரமுள்ள தனிக் கற்றூண்களை நிறுத்திக் கட்டப்பட்ட பெரிய பகலவன் கோயிலின் அழிபாடு இன்னும் காணப்படுகின்றது. எகிப்திய சமாதிகளைப் போல, இவ் வாலயமும் வியப்பளிப்பதா யிருக்கின்றது. இம் மக்கள், முத்தலை வேலை ஒரு கையிலும், மழுவை மற்றொரு கையிலும் பிடித்து இடப வாகனத்தின் மீது வீற்றிருக்கும் தந்தைக் கடவுளையும், ஒரு கையிற் கேடகத்தையும் மற்ற கையிற் றண்டையும் ஏந்திச் சிங்க வாகனத்தின் மீதிருக்கும் தாய்க் கடவுளையும் முழுமுதற் கடவுளர்களாகக் கொண்டு வழிபட்டனர். சின்ன ஆசிய மக்கள் தமிழரில் ஒரு கூட்டத்தினர் சின்ன ஆசியாவிற் சென்று குடியேறி னார்கள். அங்குக் கித்தைதி (Hittite) என்னும் ஒரு நாடு உண்டு. அங்கு வாழ்ந்த பழைய மக்களின் மொழி, தமிழுக்கு மிக இனமுடையது. இம் மக்களும் குல முறையில் மத்தியதரை மக்களைச் சார்ந்தவர்களே. இவர்களும் சீரிய மக்களைப் போல, ஞாயிற்றையும், இடப வாகனத்தின் மீது வீற்றிருக்கும் தந்தைக் கடவுளையும், சிங்க ஊர்தி மேல் வீற்றிருக்கும் தாய்க் கடவுளையும் முழுமுதற் கடவுளர்களாகக் கொண்டு வழிபட்ட னர். திராய் (Troy) நகரில் அகழ்ந்து கண்டுபிடிக்கப்பட்ட பழம்பொருள் களின் இடையே சிவலிங்கங்கள் பல காணப்பட்டன. எற்றூஸ்கானியர் பழைய இத்தாலியர் எற்றூஸ்கானியர் எனப்படுவர். அவர்கள் இந்து சமுத்திரப் பக்கங்களிலிருந்து வந்தவர்கள் ஆதல் வேண்டுமென வரலாற் றாசிரியர்கள் கூறியிருக்கின்றனர். திராய்(Troy) நகரினின்றும் வந்து குடியேறியவர்களே அவர்கள் என வடல் என்பார் கூறுவர். அவர்களின் பழக்க வழக்கங்களும், கடவுள் வழிபாட்டு முறைகளும், பழந் தமிழரிடையே காணப்பட்டன போல்வன. அங்குக் கிடைத்த பழைய மட்பாண்டங்கள், வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட தென் னிந்தியச் சமாதிகளிற் கிடைத்த அவ் வகைப் பழம்பொருள்களை மிக ஒத்துள்ளன. அவர்கள் சிவலிங்கங்களை வழிபட்டனர். இத்தாலியி லுள்ள பழைய கிறித்துவ ஆலயங்களில் சிவலிங்கங்கள் வெட்டப்பட் டிருத்தலை வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். கிரேத்தா மக்கள் கிரேத்தா (Crete) மக்கள் தமிழ்நாட்டினின்றும் சென்று குடியே றிய மக்களேயாவர். இவர்கள் தமிழர் என்றே அழைக்கப்பட்டார்கள். என ஹெரதோதசு (Heradotus கி.மு. 480) என்னும் ஆசிரியர் குறிப்பிட் டுள்ளார். இவர்கள் பழக்க வழக்கங்களும், இந்தியக் குடாநாட்டின் மேற்குக் கரையிலுள்ள மலையாளரின் பழக்க வழக்கங்களும் ஒரே வகையின. கிரேத்தாவில் பெண்களுக்கு ஆடவரிலும் பார்க்கக்கூடிய அதிகாரம் இருந்தது. பிள்ளைகள் தாய் வழியால் அறியப்பட்டார்கள். இவர்கள் சியஸ் என்னும் கடவுளை வழிபட்டனர். சியஸ் என்பது சிவன் என்பதன் திரிபு. கிரேத்தாவில் சிவா என்னும் பெயருடைய பழைய இடமும் உண்டு. தமிழரின் சங்க நூல்களிற் கூறப்படும் ஆயரின் ஏறு தழுவுதல் போன்ற ஓவியங்கள், அங்கு அகழ்ந்து கண்டுபிடிக்கப்பட்ட கிரேத்தா அரசரின் பழைய அரண்மனைச் சுவர்களில் எழுதப்பட் டுள்ளன. இங்குக் காணப்பட்ட மட்பாண்டங்களும், இந்தியாவிற் காணப்பட்ட பழைய அவ் வகைப் பொருள்களை ஒத்துள்ளன. இவர்கள் மரங்களின் கீழ் சிவலிங்கங்களை வைத்து வணங்கியதோடு சங்கு, கொம்பு வாத்தியங்களையும் பயன்படுத்தினர். பாஸ்க்கு மக்கள் பழைய ஸ்பெயின் மக்கள் பாஸ்க்குகள் எனப்பட்டனர். இம் மொழி தமிழுக்கு மிக நெருங்கிய உறவுடையது. சேர்யோன் மார்சல் என்பவர், “இரத்தத்தால் தமிழருக்கு மிக உறவுடைய மத்தியதரை மக்கள், தமிழ் மொழியையே ஒரு காலத்தில் வழங்கினார்களாகலாம்” என ஓரிடத்திற் குறிப்பிட்டுள்ளார். ஸ்பெயின் நாட்டில் இன்றும் சங்க நூல்களிற் காணப்படுவது போன்ற மாட்டுச் சண்டைகள் நடைபெறுவ துண்டு. பாஸ்க்குகள் மத்திய தரை மக்களைச் சேர்ந்தோராவர். இவர்கள் சிவலிங்கம் இடபம் முதலியவைகளை வழிபட்டனர். அமெரிக்க வெள்ளிக் காசில் (Dollar) காணப்படும் ஒன்று சிவலிங்கத்தின் அடை யாளம் என்றும், வளைவு எட்டின் பகுதி என்றும் சொல்லப்படுகின்றன. இந் நாணயக் குறியை ஸ்பானியரே ஆரம்பித்தனர். அது ஆதியில் தூண் நாணயம் (Pillar coin) எனப்பட்டது. துருயிதியர் (Druids) பிரான்சிலும் பிரித்தனிலும் குடியேறியிருந்த துருயிதியர் என்னும் மக்கள் திராவிட மரபினரே யாவர். இங்கிலாந்திலே அறிவாளிகள் திராவிட் எனப்பட்டார்கள். அம் மக்கள் சிவலிங்கங்களையும், கல் வட்டங்களையும் வழிபட்டனர். பிரிந்தன் என்பது பாரத வருடம் என்பதன் திரிபு (Waddell) பினீசியரே இங்கிலாந்திற் குடியேறிப் பிரித் தானியர் எனப்படுவாராயினர். அமெரிக்கர் பழைய அமெரிக்கரும் இந்திய நாட்டினின்றும் சென்று குடி யேறிய தமிழர்களே யென்றும், அவர்களின் மொழி, தமிழைப் போலவே ஒட்டுச் சொற்களை உடைய தென்றும், ஒட்டுச் சொற்களுடைய மொழிகள் எல்லாவற்றுக்கும் தொடக்கம் ஒன்று என்றும், அவர்கள் உறவின்முறையினரை அழைக்கும் முறை, தமிழ்நாட்டிற் காணப்படுவது போலவே உள்ளதென்றும், ஆர்தன் (Ortan) என்னும் ஆசிரியர் நன்கு ஆராய்ந்து விளக்கியுள்ளார். இக் கருத்துகள் புதியனவல்ல இக் கருத்துகள் புதியனவல்ல. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் காலத்திலேயே இக் கொள்கைகள் நன்கு ஆராய்ந்து அறியப் பட்டிருந்தன. அக் கருத்துகளைத் திரட்டித் தமிழ் இசையைப் பற்றி நூல் எழுதிய ஆபிரகாம் பண்டிதர், தமது கருணாமிருத சாகரம் என்னும் நூலகத்தும் கூறியுள்ளார். அது வருமாறு: “அதன் முன் தமிழ்நாட்டிலிருந்து மெசொபெதோமியா, பாபி லோன், கல்தேயா, ஆசியா முதலிய விடங்களுக்குப் போய்க் குடியேறி இராச்சியங்களை ஸ்தாபித்துப் பிரபலமாய் ஆண்டு கொண்டிருந்த தமிழர்கள் மிகுந்த நாகரிகமுடையவர்களாய்ப் பல பல கலைகளிற் றேர்ந்தவர்களாய்ப் பற்பல சாதியினராய் அழைக்கப்பட்டார்கள் என்றும் அவர்கள் பேசிய தமிழ்மொழி, எபிரேய, கல்தேய, பாபிலோனிய, அசீரிய, சுமேரிய, பாரசீக, பேர்குயிய, பிராகிருத, சித்திய, ஆங்கிலோ, செர்மனிய, சமக்கிருத பாசைகளில் மிக ஏராளமாகக் கலந்து வருவத னால் தமிழ் மக்களே மிகப் பூர்வ மக்களாய் உள்ள குடிகளென்றும், அவர்கள் பல கலைகளிலும் சங்கீதத்திலும் தேர்ந்திருந்தார்களென்றும், அவர்களிருந்த நாடு கடலால் கொள்ளப்பட்ட காலத்தில் தங்குதற்குச் சமீபத்திலுள்ள ஆசியா, சின்ன ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஒசினியா என்னுங் கண்டங்களின் கரையோரங்களில் தங்கினார்க ளென்றும், தப்பிப் பிழைத்தவர்களின் கலைகளின் தேர்ச்சிக்கேற்ற விதமாய் அங்கங்கே சங்கீதம், சிற்பம், சோதிடம் முதலிய அருங்கலைகள் விருத்தியாகிக் கொண்டு வந்தனவென்றும், நாம் காண்பதற்கு உதவி யாகச் சில சரித்திரக் குறிப்புகளும் சொல்லியிருக்கிறேன். சுருக்கமாகச் சொல்லுமிடத்துச் சரித்திர காலம் ஆரம்பிப்பதற்கு வெகு காலத்திற்கு முன்னதாகவுள்ள லெமூரியா நாடு, தமிழ்நாடாயிருந்த தென்றும் அதில் வசித்து வந்த வர்கள் தமிழர்களா யிருந்தார்களென்றும் லெமூரியாவிற் பேசப்பட்டு வந்த பாசை தமிழாயிருந்ததென்றும் அது இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழாக வகுக்கப்பட்டு இலக்கண வரம்புடன் மிகுந்த தேர்ச்சி யுடையதா யிருந்ததென்றும், அதன்பின் உண்டான பிரளயங்களில் அந் நாடு, கொஞ்சங் கொஞ்சமாகக் கடலால் விழுங்கப் பட்டபின், பல பல கலைகளும் இசைத் தமிழைப் பற்றிச் சொல்லும் அரிய நூல்களும், கொஞ்சங் கொஞ்சமாக மறைந்து, தற்காலம் அனுபவத்திலிருக்கும் சொற்ப முறையே மிஞ்சியிருக்கிற தென்றும் தெளிவாக அறிவோம்.” “உலகத்தவர் எவராலும் இதன்மேல் நுட்பமாய்ச் சொல்லமுடியா தென்று கருதும்படி மிகுந்த தேர்ச்சி பெற்ற சங்கீத நூலைப் போலவே, சிற்பம், சோதிடம், கணிதம், வைத்தியம், வாதம், யோகம், ஞானம் முதலிய அருங் கலைகளும், மற்றும் பாசைகளில் திருப்பப்பட்டு வந்திருக்கின்றன வென்றும் நூலாராய்ச்சி செய்யும் அறிவாளிகள் காண்பார்கள்.” பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்களது கருத்து இவ் வகையிற்று. ஆகையினாலேயே அவர்கள், “சதுமறை ஆரியம் வருமுன் சகமுழுதும் நினதாயின் - முதுமொழி நீயனாதி என மொழிகுவதும் வியப்பாமே” என முழங்குவராயினர். ஆரியர் மத்தியதரை நாடுகளிற் குடியேறியிருந்த மக்களில் ஒரு பிரிவினர், வடக்கே குளிர் மிகுந்த நாடுகளிற் சென்று தங்கி உடல் வெண்ணிறம் ஏறப் பெற்றனர். ஆரியர் என்னும் மக்கட் குழுவினர் வடதுருவ நாடுகளில் வாழ்ந்து கொண்டிருந்தவர்களாவர் எனப் பாலகங்காதர திலகர் நன்கு ஆராய்ந்து காட்டியுள்ளார். அவர்கள் நூல்களில் தேவர் எனக் கூறப்படு வோர் ஆரியரே யாவர். தேவர்களுக்கு இரவு ஆறு திங்கள்; பகல் ஆறு திங்கள் எனப் புராணங்கள் புகலும். துருவ நாடுகளில் ஆறு மாதம் இரவும், ஆறு மாதம் பகலும் உண்டு என்பதைப் பள்ளிச் சிறுவரும் நன்கு அறிவர். அவர்கள் மத்திய ஆசியாவிற் றங்கி மாட்டு மந்தைகளை மேய்த்து அவை தரும் பயன்களைக் கொண்டு வாழ்ந்தனர். ஒரு போது நீண்டகாலம் மழை பொய்த்தமையால், அவர்களின் ஆடு மாடு முதலியன மேய்வதற்குப் புற்கிடைப்பது அருமை ஆயிற்று. ஆகவே அவர்கள் பல திசைகளை நோக்கிக் கூட்டங் கூட்டமாகச் சென்றனர். அவ்வாறு சென்றவர்களுள் ஒரு கூட்டத்தினர் இந்தியாவின் வடமேற்கே உள்ள கைபர் கணவாய் வழியாக இந்தியாவை அடைந்தனர். இது இற்றைக்கு நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய (கி.மு. 2000) நிகழ்ச்சி. ஆரியருக்கும் தமிழர்களுக்கு மிடையிற் போர் ஆரியருக்கும் தமிழர்களுக்கு மிடையில் நீண்ட காலம் போர் நடந்தது. இறுதியில் ஆரியர் பஞ்சாப் மாகாணம் முழுவதையும் கைப்பற் றினர். இதற்கிடையில் ஆரியருக்கும் தமிழருக்குமிடையில் திருமணக் கலப்பு உண்டாயிற்று. இக் கலப்பாற் றோன்றிய மக்கள் தம்மை ஆரியர் எனக் கூறிக் கொண்டனர். அவர்கள் கங்கைச் சமவெளிகள் வரையிற் சென்று தமிழர் இராச்சியங்களைக் கைப்பற்றினர். விந்திய மலைக்கு வடக்கேயுள்ள நாடு, ஆரிய வர்த்தம் எனப்பட்டது. ஆரியர், தமிழரின் கொள்கைகளைப் பின்பற்றுதல் ஆரியர் இந்திய நாட்டை அடைந்தபோது தாழ்ந்த நாகரிக நிலையில் இருந்தனர். உரோமர், கிரேக்கர்களைப் பின்பற்றி நாகரிகத்தில் உயர்ந்தது போல, ஆரிய மக்களும் அரசியல், சமயம் முதலிய கொள்கை களில் தமிழரைப் பின்பற்றி உயர்வடைந்தனர். மக்கட் குலங்கள் இவ் வுலகிலே படைப்பினால் வேறுபட்டவர்களோ என்று ஐயுறும்படியான வெவ்வேறு நிறமும் தோற்றமும் உடைய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதன் காரணம் ஆராயற்பாலது. ஆதியிற் றோன்றி வாழ்ந்த மக்கள், கறுப்பு அல்லது கபில நிறமுடையர். பின்பு அவர்கள் வெவ்வேறு வெப்ப தட்பமுடைய நாடுகளிற் சென்று தங்குவாராயினர். வெப்பதட்ப நிலை மக்களின் நிறத்தை மாற்றத்தக்கது. செய்யும் தொழில், உண்ணும் உணவு முதலியவைகளாலும் உடலில் சிறு மாற்றங்கள் உண்டாகத்தக்கன. குளிர் மிகுந்த துருவ நாடுகளில் வாழ்ந் தோர் வெண்ணிற மடைந்தனர். துருவ நாடுகளுக்குத் தெற்கே நடுக்கோடு வரையிலும் வாழ்ந்த மக்கள், படிப்படியே வெண்மை குறைந்து கருமை மிகுந்து இருந்தனர். நிறத்தினால் வெள்ளை, கறுப்பு, மஞ்சள் என்று பிரித்தறியப்படும் வெவ்வேறு மக்கட் குலங்கள் தோன்றின. ஒரு மக்கட் குலத்தினர், வேறு மக்கட் குலத்தினர்களோடு கலக்கும்போது புதிய குலத்தினர் தோன்றுவது இயல்பு. இதற்கு எடுத்துக்காட்டு, யூரேசிய ராவர். இவ் வுலகில் ஆதியிற் றோன்றிய மக்கட்குலம் ஒன்றே, நாளடை வில் பல மக்கட் குலங்களாகப் பிரிந்தது என்பது மக்கட் குலநூல் ஆராய்ச்சியால் தெளிவுறுகின்றது. ஹெரஸ் பாதிரியார், இந்திய வரலாற்று இதழில் (Indian Historical Review - 1939) எழுதியிருப்பதன் சுருக்கம் பின்வருமாறு: “ஆரியர் இந்திய நாட்டுக்கு வருகின்ற காலத்தில் தமிழர் சிறிதும் நாகரிகமில்லாதவராய்க் காட்டு மக்களைப் போல இருந்தார்கள் எனப் பதினைந்து ஆண்டுகளுக்குமுன் சிலர் கருதுவாராயினர். அதனை வரலாறு தொடர்பான எத்தகைய ஆதாரங்களையுங் கொண்டு நாட்டு தல் முடியாது. திராவிட அரசர் பலரும், திராவிடக் கூட்டத்தினர் சிலரும், காரணமின்றித் தம்மைத் திராவிடர் எனக் கூறிக்கொள்ள நாணி, ஆரியரென்று கூறிக் கொண்டனர். சிந்துவெளியிற் கண்டுபிடிக்கப்பட்ட மொகஞ்சதரோ என்னும் திராவிடரின் பண்டைய நகரம் கண்டு பிடிக் கப்பட்ட பின்பு, ஆர்.டி. பானர்ஜி (R.D. Banerji) என்பார் திராவிடர், இந்தியாவைப் புதிதாக வந்தடைந்த ஆரியரிலும் பார்க்க, மிக உன்னத நாகரிகம் படைத்திருந்தார்கள் எனச் சொல்லி, ஆரிய உணர்ச் சிக்கு எதிராக அறைகூவினார். “சுமேரியரின் ஆதியிருப்பிடம், அவர்களின் கன்ன பரம்பரைக் கதையின்படி கிழக்கில் உள்ளது. கி.மு. முதலாம் நூற்றாண்டில் விளங்கிய பெறொசஸ் (Berosus) என்னும் பாபிலோனியக் குரு சுமேரியாவில் நாகரிகத்தையும் எழுத்தெழுதும் முறையையும் கொண்டுவந்து பரப்பிய பெருமக்கள் இருவர் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார். அவர்களுள் ஒருவரின் பெயர் உவண்ணா. அதற்கு மலரின் அண்ணன் என்று பொருள். உவண்ணா என்பது கிரேக்கரின் உச்சரிப்பு முறையில் ஒஅன்னிஸ் எனத் திரிந்து வழங்கிற்று. உவண்ணா என்னும் பெயர் துளுவ மக்களிடையே இன்றும் காணப்படுகின்றது. மற்ற பெயர் ஓடக் கோன். இது ஓடங் களுக்குத் தலைவன் என்னும் பொருளில் தமிழில் வழங்குகின்றது. கிறித்துவ வேதத்தின் பழைய ஏற்பாடு, நோவாவின் சந்ததியினர் பலரைப்பற்றிக் கூறியபின், ‘கிழக்குத் திசையினின்றும் வந்து அவர்கள் சென்னான் (சுமர்) என்னும் சமவெளியில் வாழ்ந்தார்கள். அவர்களுள் ஒவ்வொருவனும் தனது அயலவனை நோக்கிக் களிமண்ணிற் கல்லரிந்து சூளை இடுவோம் என்று சொன்னான். அவர்கள் கல்லுக்குப் பதில் செங்கல்லையும், களிமண்ணுக்குப் பதில் சுண்ணாம்பையும் பயன்படுத்தி னார்கள்’. விவிலிய வேதத்திற் கூறப்படும் அழகிய கட்டடங்கள் மொகஞ் சதரோக் கட்டடங்கள் போன்றன. சுமேரியருக்கு முற்பட்ட மக்கள் களிமண்ணாற் கட்டி வாழ்ந்த குடிசைகள், செங்கற் கட்டடங்களில் வாழ்ந்த மக்களுக்கு (இந்தியாவினின்றும் வந்த மக்களுக்கு) விரும்பத் தக்கனவா யிருக்கவில்லை. மொகஞ்சதரோ மக்கள் சுமேரியாவோடு மாத்திரம் தொடர்புடையவர்களா யிருந்தார்களல்லர். மொகஞ்சதரோ விற் கிடைத்த முத்திரை ஒன்றில் மாட்டுச் சண்டையைக் காட்டும் படம் காணப்படுகின்றது. இவ் வகை மாட்டுச் சண்டை இப்பொழுது ஸ்பெயின் நாட்டில் நடைபெறுகின்றது. இவ் வகை மாட்டுச் சண்டை களைக் குறிக்கும் ஓவியங்கள் கிரேத்தாவிலுள்ள பழைய அரண்மனைச் சுவர்களில் வரையப்பட்டிருக்கின்றன. கிரேத்தா மக்களும் ஸ்பெயின் மக்களும் மத்தியதரை மக்கட் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனப்படுகின் றனர். இக் கால மக்கட் குலநூலார், திராவிடரும் இக் கூட்டத்தைச் சேர்ந் தவர்கள் எனக் கூறுகின்றனர். இக் கொள்கை இப்பொழுது மொகஞ்சத ரோவில் நடத்தப்பட்ட பழம்பொருள் ஆராய்ச்சியால் வலியுறுகின்றன. பழைய தமிழ் நூல்கள் ஏறு தழுவுதலைப் பற்றிக் கூறு கின்றன. இது முன்பு குறிக்கப்பட்ட மொகஞ்சதரோ முத்திரையோடும், கிரேத்தாவி லுள்ள ஓவியங்களோடும் ஒப்பிட்டு ஆராயத்தக்கது. “இந்தியாவை அடைந்தபோது, ஆரியர் எழுத்தெழுத அறியா திருந்தனர். அவர்கள் தமது பகைவர்களாகிய தாசுக்களின் எழுத்து களையே பயன்படுத்தினர். அவ் வெழுத்து இரு வகையாக வளர்ச்சி யடைந்தது. வட இந்தியாவிலுள்ள ஆரியரும், ஆரியராக்கப்பட்ட திராவிடரும் அதனை ஒரு முறையில் விருத்தி செய்தனர். தென்னிந்தி யாவிலும் இலங்கையிலும் அது இன்னொரு முறையில் வளர்ச்சியுற்றது. “மொகஞ்சதரோவிற் கிடைத்த ஆயிரத் தெண்ணூறு பட்டையங் களைப் படித்த எனக்கு, மத்தியதரை நாடுகளிலிருந்து மக்கள் இந்தி யாவை அடைந்தார்கள் என்னும் கொள்கை நேர்மாறாக வுள்ளதென நன்கு தெளிவாகின்றது. இவ் விரு நாடுகளின் எழுத்து வளர்ச்சி, இரு நாடுகளின் சமயம், அரசரின் பட்டப் பெயர் (சந்திர குலம், சூரிய குலம் போல்வன) இராசிகளின் எண், பெரொசஸ் என்பவரின் பழைய வரலாற்றுக் குறிப்பு, விவிலிய வேதத்தின் ஆதி ஆகமத்தில் (Gen. 11: 1-5) கூறப்படுவது ஆகியன எல்லாம், மக்கள் இந்தியாவிலிருந்து மத்தியதரை நாடுகள் ஆப்பிரிக்கா, சைபிரஸ், கிரிஸ், இத்தாலி, ஸ்பெயின் முதலிய நாடுகளிற் குடியேறி, ஐரோப்பாவிலே பிரிட்டன் தீவுகள் வரையிற் பரவினார்கள் என்பதை வலியுறுத்துகின்றன. இவர்கள் சென்ற பாதை, இலங்கை முதல் அயர்லாந்து வரையில் “தொல்மென்” (Dolmen) என்றும் மூன்று கற்களால் எடுக்கப்பட்ட கட்டடங்களாலும், நிறுத்தப்பட்ட தனிக் கற்றூண்களாலும் தொடர்பாக அடையாளப்படுத்தப்பட்டிருக் கிறது. மத்தியதரைச் சாதியினர் என்று மக்கட் குலநூலாராற் கொள்ளப் படும் ஊக்கமும் நாகரிகமுமுடைய திராவிட மக்கள், காரண மின்றித் தாழ்வாகக் கருதப்படுவாராயினர்.” பார்ப்பனர் யார்? தமிழ்மக்கள் வரலாற்றில், பார்ப்பனர் யார்? என்பது நன்கு ஆராய்ந்து தெளிதற்குரிய பொருளாகும். இஞ்ஞான்று பார்ப்பனர், தம்மை ஆரியர் எனக் கூறி வருகின்றனர். பொதுமக்களும் அவர்களை அவ் வினத்தினர் எனவே கருதி வருகின்றனர். இதனைக் குறித்து வரலாற்று முறையில் ஆராய்வோம். நம் இந்திய நாட்டிலே கன்னியாகுமரி முதல் இமயம் வரையில், ஒருகால் வாழ்ந்தோர் கலப்பற்ற தமிழர்களென்பது வரலாற்று நூலார் எல்லார்க்கும் ஒப்ப முடிந்த முடிவு. இற்றைக்கு நாலாயிரம் ஆண்டு களுக்கு முன் ஆரியர் என்னும் நிறத்தால் வேறுபட்ட புதிய சாதியினர் இந்திய நாட்டை அடைந்தார்கள் என்பது முன் ஓரிடத்திற் கூறப்பட் டுள்ளது. அவர்கள் சில காலம் கலப்பின்றி வாழ்ந்து, பின்பு தமிழ் மக்களோடு கலந்து ஒன்றுபட்டனர். இந்திய நாட்டின் அயலே நின்று வந்த ஆரியரிலும், இந்திய நாட்டில் வாழ்ந்துகொண்டிருந்த தமிழர் எண்ணில் மிகப் பலராவர். தமிழர் பெருந்தொகையினராகவே ஆரியர் தமிழ் வெள்ளத்துள் மறைந்துபோயினர். ஆயினும் கலப்பினாற் றோன்றிய மக்கள் தம்மை ஆரியர் எனக் கூறிக் கொண்டனர். இருவேறு மக்கள் ஒன்றுபட்டுக் கலக்கும்போது மொழி, மதம், பழக்கவழக்கம் ஆகியவை களும் கலப்புற்றுச் சில புதிய மாறுதல்கள் உண்டாவது இயல்பு. ஆரியர் இந்தியாவை அடைந்தபோது, மந்தை மேய்ப்பவர்க ளாகவும் தாழ்ந்த நாகரிகமுடையவர்களாகவும் இருந்தனர். தமிழர் எல்லா வகையிலும் சிறந்து உயர்ந்த நாகரிகம் உடையவர்களாய் விளங்கி னார்கள். நாகரிகத் திற் றாழ்ந்தவர்கள் நாகரிகத்தில் உயர்ந்தவர்களைப் பின்பற்றுதல் எல்லாக் காலங்களிலும் காணப்படும் இயல்பு. ஆரிய மக்களின் மொழி, மதக் கொள்கை முதலியன சிறிதுசிறிதாக மாற்றமடைந்தன. ஆரியர் ஆதியில் வழங்கிய மொழி பிராகிருதம் எனப் படும். இதற்கு இலக்கண வரம்பு இல்லை. இம் மொழி வடக்கே வழங்கிய தமிழோடு கலந்து, பல மொழிகளாகப் பிரியத் தொடங்கியபோது பிராகிருதப் பற்றுடையார் அம் மொழிக்கு இலக்கணஞ் செய்து, அதனைச் சீர்திருத்தஞ் செய்தனர். அவ்வாறு செய்யப்பட்ட மொழி சமக்கிருதம் எனப்பட்டது. சமக்கிருதம் என்பதற்கு நன்றாகச் செய்யப் பட்டது என்பது பொருள். இம் மொழி இக் காலத்திற் போல, இலக்கிய மொழியா யிருந்ததே யன்றி மக்களால் ஒருபோதும் பேசப்படவில்லை. 1சமக்கிருதத் தின் வழி வந்தன என்று கருதப்படும் வடநாட்டு மொழிகள், அமைப்பில் தமிழை ஒத்துள்ளன வென்று மொழியாராய்ச்சியாளர் கூறுகின்றனர். ஒரு மொழியின் இலக்கணத்தை, ஒரு ஆற்றின் இரண்டு அணைகளுக்கும், சொற்களை அவற்றின் இடையே ஓடும் நீருக்கும் ஒப்பிடலாம். சொற்கள், காலத்துக்குக் காலம் மாறுபடலாம். ஆனால் இலக்கணம் மாறுபடாது. ஆகவே, வடக்கே வழங்கிய தமிழ், பிராகிருதச் சொற்கள் பலவற்றையும் அவற்றின் சிதைவுகளையும் ஏற்றுக்கொண்டு, இப்பொழுது வடநாட்டில் வழங்கும் பல மொழிகளாக மாறியுள்ள தென்பது நன்கு தெளிவுறு கின்றது. மொழியில் இவ் வகை மாற்றம் உண்டானது போலவே, ஆரியரின் சமயத்திலும் பல மாற்றங்கள் உண்டாயின. ஆரியர், இந்தியாவுக்கு வெளியே வாழ்ந்த காலத்தில், மந்தை மேய்ப்பவர்களாய் அலைந்து திரிந்தனர். ஆகவே அவர்கள் நிலையான கோயில்கள் அமைத்துக் கடவுளை வழிபட முடியவில்லை. அவர்கள் தாம் சென்ற இடங்களில் கடவுளுக்குப் பலி செலுத்தி வந்தார்கள். இந்தியாவை அடைந்த பின்பும், ஆரியர் இவ் வழக்கைக் கைக்கொண்டு வந்தனர். அவர்களுள் ஒரு காலத்தில் வருணப் பிரிவோ, சாதிப் பிரிவோ இருக்கவில்லை. குடும்பத் தலைவன் கடவுளருக்குப் பலி செலுத்தி வந்தான். அரசர் செய்யும் வேள்விகளில் பலி செலுத்தும் புரோகிதர் சிலர் இருந்தனர். ஆரியர் நாடுகளை வென்று பெரிய அரசர்களானபோது, வேள்விகள் ஆடம் பரங்களுடன் செய்யப்பட்டன. அக் காலத்தில் பிராமணங்கள் என்னும் வேள்விக் கிரியைகளைக் கூறும் நூல்கள் எழுதப்பட்டன. அக் கிரியை முறைகள், இருக்கு வேத காலம் முதல், பிற்காலம் வரையில் தமிழரின் ஆகம முறைகளைப் பின்பற்றிச் சிறிது சிறிதாக வளர்ச்சியடைந்தன வாகும். பிராமணங்களைப் பலர் பயின்றனர். பிராமணங்களில் வல்லுநர் பிராமணர் எனப்பட்டனர். அவர்கள் கோயிற் குருமாரல்லர் என்பது நன்கு கருத்திற் பதித்துக்கொள்ள வேண்டியது. வேள்விச்சாலைகளில் பிராமணருக்குத் தக்க கைம்மாறு கிடைத்தது. அரசன் அவர்களை நன்கு மதித்தான். இவைகளால் தூண்டப்பட்டுப் பலர் பிராமணங்களைப் பயின்றனர். ஒரே தொழில் புரியும் மக்கள், ஒரு இடத்தில் அளவுகடந்து பெருகுவார்களானால், அவர்கள் வெவ்வேறு இடங்களிற் சென்று தமது தொழிலைப் புரிந்து வாழ்வது இயல்பு. பிராமணரில் பலர் தென்னாடு போந்தனர். அவர்களின் வருவாய்க்கு வேள்விகள் இன்றியமையாதன. ஆகவே அவர்கள் தமிழ்நாட்டு அரசரை அணுகி, அவர்களைத் தம் மதத்துக்குத் திருப்ப முயன்று வந்தார்கள். முற்காலங்களில் புதிய சமயங்களைப் பரப்புவோர், முதலில் அரசனையே தமது சமயத்துக்குத் திருப்புவது வழக்கம். இது கூன்பாண்டியன் சைன மதத்தைக் கடைப்பிடித்தது போன்ற வரலாறு களை நோக்கி அறிக. தமிழ்நாட்டு அரசர் சிலர், அவர்கள் மதத்தைத் தழுவி வேள்விகள் புரிந்தனர். பிராமணருக்கு அரசனின் நன்மதிப்பும், செல்வாக்கும் உண்டாயின. தமிழ்மக்கள், ஆலயங்கள் அமைத்து அங்குக் கடவுளை வழிபட்டு வந்தார்கள். ஆலயங்களைக் கண்காணிப்பவர் பார்ப்பார் எனப்பட்டனர். ஆதியிலே அரசனே பார்ப்பானாக விருந்தான். பிற்காலங்களில் உயர்ந்த மரபிலுள்ளோர் பார்ப்பாராக இருந்தனர். பார்ப்பார் ஐயர் எனப்பட்ட னர். ஐயன் என்பது கடவுளைக் குறிக்க வழங்கும் பெயர்களுள் ஒன்று. ஐயனின் பணிவிடைகளைச் செய்தமையால் பார்ப்பார் ஐயர் எனப்பட் டார்கள். ஐயர் என்பதற்கு ஐயனுடைய வேலையாட்கள் என்பது பொருள். ஐயர் என்னும் சொல் மேற்கு ஆசிய நாடுகளிலும் கடவுளைக் குறிக்க வழங்கிற்று. ஐயர்மார் பொது மக்களின் புரோகிதருமாக இருந்து வந்தனர். வடநாட்டினின்றும் வந்த பிராமணருக்குச் செல்வாக்கு உண் டாகவே, அவர்கள் தமிழ்ப் பார்ப்பனர்களிடையே திருமணக் கலப் புடையராயினர். வேள்விகள் புரியும் பிராமணருக்கு நன்மதிப்பும் வருவா யும் உண்டாவதை நோக்கிப் பார்ப்பனரும் பிராமணங்களைப் பயின்று அரசருக்கு வேள்விகள் செய்யும் புரோகிதராயினர். அவர்கள் தம்மை ஆரியர் எனச் சொல்லிக் கொண்டதோடு தமக்குச் சமய முதல் நூல்கள் இருக்கு முதலிய நூல்கள் எனவும், தமக்குரிய மொழி, சமக்கிருத மென்றும் சாற்றுவாராயினர். பார்ப்பார் தமது மொழி ஆரியமெனக் கொண்ட காலத்து, அரசர் ஆணையினால் அது சமயமொழி யாக்கப் பட்டுத் திருக்கோயில்களிலும் நுழைவதாயிற்று. பார்ப்பனரிடையே நிற வேறுபாடு பலவாகக் காணப்படுதல் வடநாட்டு மக்களோடு கலந்த கலப்பின் அளவைக் காட்டுவது. இவர்களின் இயல்பை இந்திய நாட்டு யூரேசியர்களோடு ஒப்பிடலாம். பார்ப்பனரல்லாதாரிடையும் பிராமணர் கலப்புடையர்1. ஆரியரல்லாத மந்திர வித்தைக்காரரும் பிற திராவிடரும் பிராமணரானார்கள். தாழ்ந்த வகுப்பினரிடையே பிராமணர் பெண் களை மணந்து கொண்டார்கள் என்பதற்குப் பல சான்றுகள் உண்டு. வடமொழி தென்மொழிக் கலப்பு பார்ப்பனர் தம்மை ஆரியர் எனக் கொண்டு வடமொழியைப் பயின்று வந்தமையாலும், சமக்கிருதம் சமயமொழி யாயினமையாலும், சைன புத்த மதத்தினர் தத்தம் மதங்களைத் தென்னாட்டில் நுழைக்க முயன்றபோது, அவர்களுடன் எதிர்த்து வாதம் புரியும்பொருட்டுத் தமிழறிஞர் வடமொழியைப் பயின்று அம் மொழியில் எழுதப்பட்டுள்ள புத்த சைன நூல்களைப் பயின்றமையாலும் தென்னாட்டில் வட மொழிப் பயிற்சி அதிகமாயிற்று. இதனால் சமயத் தொடர்பான வட மொழிச் சொற்கள் பல தமிழிற் புகுந்து வழங்கலாயின. தமிழ்ப் புலவர்கள் தாம் இயற்றும் நூல்களில் வடசொற்கள் புகாமல் இயன்றளவு தவிர்த்து வந்தனர். பார்ப்பன வகுப்பினர், இம் முறையைக் கையாள வில்லை. அவர்கள் தமிழுடன் வடமொழிச் சொற்களைப் பெரிதுங் கலந்து வழங்குவாராயினர். அவர்களால் கடவுள் மொழி எனக் கருதப் பட்ட சமக்கிருத மொழிச் சொற்கள் தமிழுடன் கலப்பதனால் தமிழுக் குக் கடவுள் மணம் ஏறும் என அவர்கள் நினைத்தார்கள் போலும்! ஒரு மொழிக்குரிய சொற்களை இன்னொரு மொழியிற் கொண்டு வழங்க வேண்டுமாயின், அவை அம் மொழிக்கேற்ற ஓசைப்படி மாற்றி அமைக் கப்படுதல் வேண்டும்; இல்லையேல் அவைகளை இன்னொரு மொழியிற் சேர்க்காது தவிர்த்தல் வேண்டும். இவ் விதி கருத்திற் கொள்ளப்படாது, வட சொற்கள் வடமொழி உச்சரிப்பு முறையோடு தமிழில் வந்து வழங்கத் தலைப்பட்டமையாற் போலும், தொல்காப்பியனார் வடசொற் கள் தமிழில் வந்து வழங்குங்கால் வடவெழுத்தை நீக்கி வழங்கப்படுதல் வேண்டும், (வடசொற் கிளவி வடவெழுத்தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே) என ஆணை இடுவாராயினார். தமிழ், தமது சொந்த மொழியன் றெனவும், சமக்கிருதம் தமது சொந்த மொழி யெனவும் கருதினமையால், பார்ப்பனர், தமிழைப் பிறமொழிக் கலப்பின்றித் தூய்மையாக வழங்குதற்கு அக்கறை கொள்ள வில்லை! தாம் அபிமானித்த வடமொழிச் சொற்களைப் பெரிதும் தமிழிற் கலந்து வழங்குவா ராயினர். இது எவ்வளவு தூரம் சென்றிருந்த தென்பதைப் பெருந்தேவனார் பாரத வெண்பாவின் இடையிடையே காணப்படும் மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்ட வசன பாகங்களை நோக்கி அறிக. தமிழ்ப் புலவர்கள் இதற்குப் பெரிதும் ஆற்றாராய் வருத்தமுற்றுக், காலிற்றைத்த கொடு முட்களைக் களைவது போலத் தமிழின் இனிய ஓசைக்கு ஏலாத வடமொழிச் சொற்களை நீக்கியும், அங்ஙனம் நீக்கு வதற்கு இயலாது மக்கள் ஆட்சியில் வந்துள்ள சொற்களைத் தமிழ் இயைபுக் கேற்ப மாற்றியும் வந்தனர். பிராமணர் தென்னாட்டுக்கு வந்து செல்வாக்குப் பெற்ற காலம் முதல் தமிழ்நாட்டில் வடமொழிக் கட்சி, தென்மொழிக் கட்சி என இரு கட்சிகள் இருந்து வருகின்றன. வடமொழிக் கட்சியினர், தமிழினும் வடமொழி உயர்ந்த தென்றும், அது கடவுள் மொழி என்றும், அதினின் றுமே தமிழுக்கு எழுத்து முதலியன வந்தன வென்றும் வாதிப்பர். தமிழ்க் கட்சியினர், தமிழ் மிக இனிமை யுடைய தென்றும், அதில் பாடப்பட்ட தெய்வீகப் பாடல்கள் புதுமைகள் பல விளைத்தன வென்றும், தமிழ் வடமொழியிலும் பார்க்க உயர்ந்த தென்றும் கூறுவர். முற்காலத்தில் வரலாற்று ஆராய்ச்சி அறியப்படாததா யிருந்தமையின் அவர்கள் வடமொழி தென்மொழிகளின் உயர்வை நாட்டுதற்கு வரலாறு தொடர் பான ஆதாரங்களை அறிந்திருக்கவில்லை. வரலாற்று ஆராய்ச்சி மிகுந் துள்ள இக் காலத்திலோ தமிழ்மொழியின் போக்கைப் பின்பற்றியே இன்றைய சமக்கிருத மொழி நிலவுகின்றதென்றும், அம் மொழிக்குரிய எழுத்து முதலியன தமிழிலிருந்தே கடன் வாங்கப்பட்டன வென்றும், போதாயனர், கார்த்தியாயனர் சாணக்கியர், இராமானுசர், மாதவர், சங்கரர், நீலகண்டர் போன்ற தமிழர்களே அம் மொழியைப் பயின்று அம் மொழியில் அரிய நூல்களைச் செய்து அதனையும் வளப்படுத்தி னார்களென்றும் எளிதில் அறிந்து கொள்ளுதல் சாலும். சமக்கிருதம் கலப்பற்ற மொழியெனச் சிலர் கருதுகின்றனர். தமிழ், கொண்டு முதலிய மொழிகளிலிருந்து மிகப் பல சொற்களைச் சமக்கிருதம் இரவல் பெற்றிருக்கின்றது. இந்து ஐரோப்பிய ஆரிய மொழி களுக்குப் பொதுவல்லாத மற்றைய சொற்கள் எல்லாம் இந்தியப் பூர்வ மொழிகளின் சொற்களேயாகும் என, மொழி ஆராய்ச்சிவல்லார் நுவல்கின்றனர். நகைச் சுவைக்கு எடுத்துக்காட்டு. “ஆரியர் பேசுந் தமிழ்” எனப் பேராசிரியர் ஓரிடத்தில் எடுத்துக்காட்டியுள்ளார். அதனால் ஆரியர் தமிழ்ச் சொற்களைத் திருத்தமுற உச்சரிக்க அறியாது பிழைபட உச்சரித்தார்கள் என்பது நன்கு விளங்கும். அவர்கள் தமிழைத் திராவிடம் என உச்சரித்தார்கள் என்றால் மற்றைய தமிழ்ச் சொற்களை எவ்வாறு உச்சரித்திருப்பார்கள் என்பதை நாமே ஊகித்தறியலாகும். இவ்வாறு தமிழ்ச் சொற்கள் மிக மாறுபட்டு வடமொழியிற் சென்றேறி யுள்ளன வாதலினாலேயே, நாம் அவைகளை எளிதிற் கண்டுபிடிக்க முடிய வில்லை. சென்னையிலே அம்பட்டன் பாலம் என ஒரு பாலமுள்ளது. இதன் முன்னைய பெயர் “ஹமில்டன் பிரிட்ஜ்” இது சொல்லுவோரது சொற்சோர்வினால் அம்பட்டன் பாலம் எனப்பட்டது. பின்பு அம்பட் டன் பாலம் (“Barber’s bridge”) “பார்பெர்ஸ் பிரிட்ஜ்” என ஆங்கிலப் படுத்தப்பட்டு இன்று பார்போஸ் பிரிட்ஜ் என்றே வழங்குகின்றது. ஹமில்டன், அம்பட்டன் ஆனது போன்ற பல தமிழ்ச் சொற்களும் வடமொழியில் இருத்தல் கூடும். பெரிய வெள்ளப் பெருக்குக்குப் பிற்பட்ட மக்கள் அல்லது 1ஹெமத்திய இந்திய மத்தியதரை மக்கட் குலம் (எச். ஹெரஸ்) யான் பல்லாண்டுகளாகப் பிற்கால இந்திய மக்களின் நாகரிகத் தைக் குறித்து, இந்தியாவிலும், ஸ்பெயின் நாட்டிலும் இருந்து ஆராய லானேன். அவ் வாராய்ச்சி, பெரிய வெள்ளப் பெருக்குக்குப் பிற்பட்ட மக்களின் வரலாற்றையும், அம் மக்கள் பல கிளைகளாகப் பிரிந்து சென்று பற்பல குலத்தினராகப் பெருகிய வகையையும் விளக்குவதாகின் றது. யான் ஆராய்ந்து கண்ட அளவில், பழைய திராவிட மக்கள் தமது நாட்டைவிட்டு உவண்ணா, ஓடக்கோன் என்பவர்களின் தலைமையின் கீழ் சுமேரியாவை அடைந்து அங்குக் குடியேறிப் பெருகினார்கள். இக் கருத்தைப் பழைய பாபிலோனிய வரலாற்றாசிரியராகிய பெரசொஸ் என்பவரும் குறிப்பிட்டுள்ளார். சுமேரியாவிற் குடியேறிய மக்கள் மொகஞ்சதரோவிலுள்ளன போன்ற வீடுகளைக் கட்டினார்கள். விவிலிய மறையின் ஆதி ஆகமம் இந் நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுள்ளது. சுமேரிய வகுப்பைச் சேர்ந்த மக்களே சிரியாவிலும் குடியேறினார்கள். கிதைதி ஆட்சிக்குத் தளம் இட்டவர்கள் இம் மக்களே யாவர். அங்கு நின்றும் பெயர்ந்த சில மக்கள் மத்தியதரைக் கடல் ஓரங்களில் குடியேறி னார்கள். அவர்கள் பினிசியர் எனப்பட்டனர். இது பனையர் (Panis - Palm trees) என்னும் பெயரின் திரிபு. முற்காலத்தில் பெரிய வாணிகத் துணிவு உடையவர்களாயிருந்தவர்கள் இவர்களே. இவ் வினத்தினர் சிலர் கிரேக்க நாட்டிலும், இத்தாலியிலும் குடியேறி முறையே மீனவர், எதிருஸ்கர் என்னும் பெயர்களைப் பெற்றனர். திராவிடர்களிற் சிலர் யேமென் (Yemen) என்னும் இடத்திற் குடியேறி யிருந்தார்கள். அவர்கள் இங்கு யேமெனியிலிருந்து செங்கடல் வழியாகச் சென்று எகிப்தில் குடியேறி வியக்கத்தக்க எகிப்திய நாகரீகத்தைக் கட்டி எழுப்பினார்கள். அவர்கள் ஆப்பிரிக்காவின் வடகரை வழியாகச் சென்று குடியேறி நுமிதியர் பேர்பேரியர் என்னும் பெயர்களைப் பெறுவாராயினர். பின்பு அவர்கள் ஸ்பெயின் நாட்டிற் குடியேறியபோது உரோமர் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு ஐபீரியர் எனப் பெய ரிட்டனர். பின்பு ஐபீரிய மக்களுட் சிலர், வடக்கு நோக்கிச் சென்று மத்திய ஐரோப்பாவிலும், பிரிட்டிஷ் தீவுகளிலும் குடியேறி துரூயிதர் (Druids) எனப் பெயர் பெறுவாராயினர். பிற் காலங்களில் வந்த கெல்திய மக்களாக இவர்களைக் கொண்டு, பிற்காலத்தவர்கள் மயங்குவாராயினர். பழைய நாகரிகங்களைக் கோலிய இச் சாதியினர் மத்தியதரைச் சாதியினர் எனப்படுவர். இச் சாதியாரின் நாகரிகங்கள் எல்லாம் ஒரே வேரினின்றும் முளைத்தன. அவை எல்லா முக்கியப் பகுதிகளிலும் ஒத்திருக்கின்றமையால், அவைகளைப் பிற்கால இந்திய மத்தியதரை நாகரிகம் எனக் கூறலாம். நோவாவின் குமாரனாகிய யபேத்திலிருந்து தோன்றியவர்கள் என்று சொல்லப்படும் ஆரிய மக்களையும் திராவிடரையும் தொடுக்கும் தொடர்புகளும் காணப்படுகின்றன. சமக்கிருத, திராவிட மொழிகளுக் கிடையில் பல ஒருமைப்பாடுகள் காணப்படுகின்றன. திராவிடச் சொற்களை ஒத்த உற்பத்தியை உடைய மிகப் பல சமக்கிருதச் சொற்கள் காணப்படுகின்றன. இவ் வகை ஒருமைப்பாடு திராவிட மொழிகளுக்கும் கிரேக்க, இலத்தின் மொழிகளுக்குமிடையில் காணப்படுகின்றது. இதற்குக் காரணம் சமக்கிருதமும் திராவிடமும் ஒரே மொழியினின்றும் பிரிந்தமையேயாகும். திராவிடம் தனது பழைய ஒட்டுச் சொல் முறை யான இயல்பைக் காப்பாற்றி வந்திருக்கிறது. சமக்கிருதம் இன்னொரு வகையில் வளர்ச்சியடைந்து இக் காலத் தோற்றத்தை அடைந்துள்ளது. 1ஸ்தென்கோநோ (Mr. Sten konow) எற்றூஸ் மொழிக்கும் தமிழுக்கும் பல ஒருமைப்பாடுகள் இருப்பதைக் காட்டியுள்ளார். மனிதன் என்னும் மக்கள் வரலாற்று மாத வெளியீட்டில் (1906) பிளிண்டர் பெற்றி (Flinders Petrie) என்பார் எகிப்தியரின் பழைய நகர மாகிய மெம்பிஸ் அழிபாடுகளில் இந்திய ஆடவர் மகளிரைக் காட்டும் ஓவியங்கள் இருப்பதைப்பற்றி எடுத்துக் கூறியுள்ளார். மொகஞ்சதரோ நாகரிகமும் கீழ்நாட்டு ஆராய்ச்சியாளரும் மேற்றிசை அறிஞர்களே மொகஞ்சதரோ நாகரிகத்தைப்பற்றி நன்கு ஆராய்ந்து கண்டவர்களாவர். ஆரிய வேதங்களைப்பற்றி ஆராய்ந்து உண்மைகளை வெளியிட்டவர்களும் அவர்களே. ஆராய்ச்சித் துறையில் கீழ்நாட்டவர்கள் மேல்நாட்டவரின் காற்சுவடுகளையே பின்பற்றி வருகின்றனர். மேல்நாட்டவர்கள் உண்மை காண்டல் ஒன்றனையே குறிக்கொண்டு ஆராய்ச்சி செய்வர். அவர்களுக்கு ஆரியரை உயர்த்த வேண்டும் என்றோ, திராவிடரை இறக்க வேண்டும் என்றோ குறிக்கோள் சிறிதும் இல்லை. மேல்நாட்டு ஆசிரியர்கள் எல்லோரும் மொகஞ்சதரோ நாகரிகம் ஆரியர் வருகைக்கு முற்பட்டதென்றும், ஆரியர் வருகைக்கு முன் அங்கு வாழ்ந்தோர் திராவிட மக்கள் என்றும் கூறினர். கீழ்நாட்டு ஆராய்ச்சியாளரின் மனப்பான்மைகளுக்கு இது மாறுபட்டது. கீழ்நாட் டார்க்குத் தாம் கொண்டிருக்கும் கருத்துக்கு ஏற்ப ஆராய்ச்சிகள் முடிவு பெறவேண்டும்; இன்றேல் அவர்கள் அவைகளை ஏற்றுக் கொள்ளமாட் டார்கள்; அவர்கள் மேல்நாட்டு ஆராய்ச்சியாளர் கூறியவைகளைப் புரட்ட முயல்வர். மொகஞ்சதரோ நாகரிகம் திராவிட மக்களுடையது என்று கூறப்பட்டதும், ஆரியரே இந்திய நாகரிகத்துக்கு அடிப்படை எனக் கனவு கண்டுகொண்டிருந்த ஒரு சாரார், மொகஞ்சதரோவில் ஆரியரின் நாகரிகத்துக்கு உரிய அடையாளங்கள் சில காணப்படு கின்றன; வேதங்களில் சில சான்றுகள் காணப்படுகின்றன என்று கூறுவாராயினர். இக் கூற்றுகள் ஒருபோதும் மேற்றிசை ஆராய்ச்சியாள ரால் ஒப்புக் கொள்ளப்படவில்லை. மொகஞ்சதரோவில் சிவ வழிபாடு வேதங்களிலும் காணப்படுகின்றது என்றும், ஆதலால் சிவ வழிபாடு திராவிடருக் குரியதன்று என்றும் ஒருவர் கூறினர். இன்னொருவர் அத்துணைப் பழங்காலத்திலேயே மக்கள் யோகத்தைப் பற்றி அறிந் திருக்க மாட்டார்கள் என்றனர். மொகஞ்சதரோ முத்திரையிற் காணப் பட்ட சிவன் வடிவம் யோகத்தில் இருப்பதாக அமைந்திருத்தலாலும், வேதங்கள் யோகத்தைப் பற்றி அறிந்திராமையாலும் அங்குக் காணப் பட்ட சிவன் வழிபாடு திராவிடருடையதே என முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு தமிழரினும் பார்க்க ஆரியரே நாகரிகத்திற் சிறந்தவர்கள், அவர்களே தமிழர்களுக்கு வழிகாட்டிகள் என்ற கருத்துகளை நாட்ட வேண்டும் என்னும் உணர்ச்சி வேகம் ஒரு சாரார் உள்ளத்தில் இருப்பதை நாம் காண்கின்றோம். தமிழர் ஆரியரிலும் சிறந்தவர் எனக் கூறின் உடனே அதனை எதிர்க்க ஒரு கூட்டம் எப்பொழுதும் ஆயத்தமாக இருப்பதை நாம் எல்லோரும் அறிவோம். இவ் வுணர்ச்சியினால் எழும் ஆரவாரங்கள் ஆராய்ச்சி எனப்படா. சாதிப்பற்று என்றே கூறவேண்டும். நாட்டுப்பற்று சாதிப்பற்று என்பன சரித்திர ஆராய்ச்சியாளரை நடுநிலைமையினின்றும் அடி சறுக்கச் செய்து விடுகின்றன என்று மேற்றிசை ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார்கள்.  சிந்துவெளித் தமிழர் முன்னுரை இவ் வுலகில் மூன்று நாகரிக அலைகள் தோன்றிப் பரவின என்றும், அவைகளுள் முற்பட்டது சிந்துவெளி நாகரிகம் என்றும், பேராசிரியர் பிறாங் போட் என்னும் சிறந்த ஆராய்ச்சியாளர் நன்கு ஆராய்ந்து கூறியுள்ளார். சிந்துவெளி நாகரிகம் ஆரியர் இந்திய நாட்டை அடைவதற்குப பல ஆயிரம் ஆண்டுகளின் முன் தோன்றி வளர்ச்சி யடைந்துள்ளது. அங்கு வாழ்ந்த மக்கள் திராவிட இனத்தைச் சேர்ந்த வர்கள் என்பதும், அத் திராவிட மக்களின் நாகரிகத்தை அடிப்படை யாகக் கொண்டதுவே ஆரிய நாகரிகம் என்பதும், மேல்நாட்டறிஞர் ஆராய்ந்து கண்டு வெளியிட்ட உண்மைகளாகும். இவ் வுண்மைகளை ஆரியப் பற்றுடைய இந்திய மக்கள் ஏற்றுக்கொள்ள இணங்காதவர்க ளாய், உண்மைக்கு மாறுபட்ட கருத்துகளை இடையிடையே வெளி யிட்டு வருகின்றனர். அன்னோர் ஆராய்ச்சிகள் பொருளில் கூற்றுகளே யாமெனக் காட்டுதற்கும், சிந்துவெளி மக்கள் தமிழரே என்பதை நாட்டுதற்கும், சிந்துவெளி மக்களின் நேர் தொடர்புள்ளதே திராவிட நாகரிகம் என்பதை விளக்குதற்கும், இச் சிறிய நூல் வெளிவருகின்ற தென்க. வடநாட்டவர்களுக்கும் தென்னாட்டவர்களுக்கும் இன்று ஆரிய திராவிடப் போராட்டம் நடக்கவில்லை; இந்திய சனத்தொகை யில் நூற்றுக்கு நான்கு வீதமுடைய தென்னாட்டின் ஒரு கூட்டத்தாருக் கும் ஏனைய மக்களுக்கு மிடையேதான் இப் போராட்டம் காணப்படு கின்றது. இதற்குக் காரணம் அவர்கள் தாம் ஆரியரென்று கூறிக்கொள்வ தோடு, தாம் மற்றைய மக்களினும் பார்க்கச் சிறந்தவர்களாவதற்குப் பிறப்புரிமை பெற்றவர்கள் எனச் சாதிக்கின்றமையாகும். வரலாற்று முகத்தான் அவர்கள் தன்மதிப்புள்ள திராவிட மக்களால் எவ்வகை மதிப்பும் பெறுதற்குரியவர்களாகார். சிந்துவெளி மக்கள் எங்கிருந்து அவ் விடத்தை (சிந்துவெளியை) அடைந்தார்கள் என்னும் ஆராய்ச்சி ஆவல் விளைவிப்பதாயிருக்கின்றது. மத்தியதரை மக்களும் திராவிட மக்களும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது சிந்துவெளிப் புதைபொருள்கள் கண்டுபிடிக்கப்படுவதன் முன் ஹெரன், ஹக்ஸ்லி போன்ற ஆராய்ச்சியாளர் ஆராய்ந்து கூறியுள்ள தாகும். மத்திய தரை நாடுகளிலிருந்தே மக்கள் இந்திய நாட்டில் வந்து குடியேறினார்கள் என்றும் அவர்களின் ஒரு பிரிவினரே திராவிடர் என்றும், திராவிடரும் சுமேரியரும் மிக நெருங்கிய உறவுடையவர்க ளென்றும் ஆராய்ச்சியாளர் சில காலம் கருதுவாராயினர். இன்று இந்திய மக்களே மத்தியதரை நாடுகளிற் சென்று குடியேறினார்கள் என ஆராய்ச்சியாளர் சாதிக்கின்றனர். திராவிடரின் நாகரிகம் வடக்கினின் றும் தெற்கே பரவியதன்று. தெற்கினின்றே வடக்கு நோக்கிப் பரவியதென மக்லீன், பர்கூசன், ரெகோசின் முதலிய பல ஆராய்ச்சியாளர் நவின்றுள் ளார்கள். சிந்துவெளியிற் கிடைத்த முத்திரைகளிற் காணப்பட்ட எழுத்து களை ஒத்தவை தென்னிந்தியா, இலங்கை முதலிய இடங்களிற் காணப் பட்டன. இவைகளைக் கொண்டும் சிந்து வெளி நாகரிகம் தெற்கினின்று வடக்கே சென்றதென நாம் நன்கு துணிதல் சாலும். ஆகவே ஆதி நாகரிகம் தெற்கினின்றும் வடக்கு நோக்கிச் சென்று சிந்துவெளியை அடைந்து, அங்குநின்றும் பாரசீகத்துக் கூடாக மேற்கு ஆசியாவை அடைந்து, எகிப்தைச் சேர்ந்தது எனக் கூறலாம். இந் நாடுகளின் நாகரிகங்கள் எல்லாம் ஒரே வகையின. இந் நாடுகளின் நாகரிகங்களைப்பற்றிய வரலாற்றை இனி வெளிவரும் நமது நாகரிகம் என்னும் நமது நூலிற் காண்க. சென்னை 1-5-47 ந.சி.கந்தையா சிந்துவெளித் தமிழர் தோற்றுவாய் மக்கள் இவ்வுலகில் பத்து அல்லது இருபது இலட்சம் ஆண்டு களுக்கு முன் தோன்றி வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களின் மிகப் பழைய வரலாறுகள் அவர்களின் மண்டை ஓடுகள், என்புகள், அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் முதலியவைகளைக் கொண்டு அறியப்படு கின்றன; அவை ஏட்டில் எழுதி வைக்கப்படாதவை. மக்கள் உயர்நிலை எய்தி நாகரிகம் பெற்ற காலம் எது என உறுதியாகக் கூறமுடியாது. இற்றைக்கு எண்ணாயிரம் ஆண்டுகளின் முன், மக்கள் நாடு நகரங்களை யும், மாட மாளிகைகளையும் அமைத்துச் செவ்விய ஆட்சி முறையையும் வகுத்து வாழ்ந்தார்கள் என்று அறிதற்குரிய சான்றுகள் கிடைத்துள்ளன. இன்றைய மக்களின் நாகரிகம் என்பது பழைய மக்களின் நாகரிக வளர்ச்சியே. சில இயற்கை செயற்கைக் காரணங்களால் இன்றைய நாகரிகத்துக்கும் பழைய நாகரிகத்துக்கும் சிற்சில வேறுபாடுகள் காணப் படுகின்றன. பழைய நாகரிகத்துக்குரிய சான்றுகள் எகிப்திலும், ஐபிராத்து, யூபிரதீசு, தைகிரசு ஆறுகளை அடுத்த நாடுகளிலும் காணப்படுகின்றன. ஆகவே எகிப்து அல்லது தைகிரஸ் ஆற்றோரங்களே மக்களின் நாகரித் துக்குப் பிறப்பிட மென்று நீண்ட நாள் கருதப்படலாயிற்று. மக்கள் இன ஆராய்ச்சியாளர் பல அடிப்படையான காரணங்களைக் கொண்டு இந்தியா தொடக்கம் மேற்கு ஆசியா எகிப்து வரையில் ஒரு இன மக்களே வாழ்ந்தார்கள் எனக் கருதினார்கள். எகிப்தியர், சுமேரியர், திராவிடர் என்போர் ஒரே முன்னோரினின்றும் தோன்றிப் பிரிந்தவர்கள் என்னும் கருத்து மேற்றிசை அறிஞர் பலரால் வெளியிடப்பட்டுள்ளது. டாக்டர் ஹால் என்பார் அரப்பா, மொகஞ்சதரோப் புதைபொருள் ஆராய்ச்சிகள் வெளிவருவதன் முன் எழுதியிருப்பது வருமாறு. 1“சுமேரிய மக்களின் நாகரிகம் எல்லாவகையாலும் நிறைவடைந் தது போலத் திடீரென நமக்குத் தோன்றுகின்றது; ஆனால் அது வெளி நாடுகளிலிருந்து மெசபெதோமியாவிற்குக் கொண்டு வரப்பட்டது. இது சில அயற் சான்றுகளால் நமக்கு நன்கு வெளிச்சமாகின்றது. அவர்களின் நாகரிகம் வளர்ச்சி பெற்றது பாபிலோன் நாட்டிலன்று; அவ் வளர்ச்சி பாரசீக மலைகளுக்குக் கிழக்கேயுள்ள வேறொரு நாட்டில் உண்டா யிருக்கலாம். சுமேரியரின் உடற்கூறு அவர்களைச் சூழ்ந்து வாழ்ந்த மற்றைய சாதியாரின் உடற்கூற்றுக்கு வேறுபட்டிருந்தது. இது அவர் களின் உருவச் சிலைகளைக் கொண்டு அறிய வருகின்றது. அவர்களின் மொழி, செமித்தியர், ஆரியர் என்போரின் மொழிகளுக்கு வேறுபட்டது. அவர்களின் உடற்றோற்றம் திராவிட மொழிகளைப் பேசிக்கொண்டு தக்கணத்தில் வாழும் இந்தியன் ஒருவனின் தோற்றத்தை ஒத்தது; மொழி அமைப்பு இந்திய மொழிகளைப் போன்றது. இன்றைய இந்தியன் ஒருவனுடைய முக அமைப்புப் பல்லாயிரம் ஆண்டுகளின் முன் வாழ்ந்த அவன் முன்னோருடைய முக அமைப்பை ஒத்துள்ளது. இதிற் சிறிதும் ஐயப்பாடு இல்லை. தரை வழியாக அல்லது கடல் வழியாக இந்தியாவிலிருந்து பாரசீகத்தின் வழியாக யூபிரதீசு, தைகிரசு ஆறுகள் பாய்கின்ற நாட்டிற் சென்று குடியேறிய மக்கள் சுமேரியர் என்று துணிந்து கூறலாம். அவர்களின் நாகரிகம் வளர்ச்சி எய்திய இடம் இந்தியாவே. அவ்விடம் சிந்து ஆற்றை அடுத்த இடங்கள் ஆகலாம்; அவர்கள் எழுத்துகள் இங்குப் படவடிவில் தொடங்கி வளர்ச்சி எய்திய பின்பு, சிறிய சுருக்கெழுத்துகளாக மாறியிருக்க வேண் டும். இவ் வெழுத்துகள் பாபிலோன் நாட்டுக்குக் கொண்டு போகப்பட் டன; அங்கு அவை களிமண் தட்டுகளில் சதுர வடிவுள்ள எழுதுகோ லால் எழுதப்பட்டமையால் கூரிய முனையின் வடிவைப் பெற்றிருத்தல் வேண்டும். ஆதியில் மனித நாகரிகம் தோன்றி வளர்ச்சியடைந்த நாடு களில் இந்தியா ஒன்று என்பதில் ஐயம் இல்லை. சுமேரியர் இந்திய மக்களை ஒத்திருந்தார்கள் என்பதை நாம் கருத்திற் கொள்ளும்போது, கிழக்கிலிருந்து மேற்கு நாடுகளுக்கு நாகரிகத்தைக் கொண்டு சென்ற செமித்தியரும் ஆரியரும் அல்லாத சாதியார், இந்தியர் என்று கூறுதல் இயல்பேயாகும்.’’ அரப்பா மொகஞ்சதரோப் புதைபொருள் ஆராய்ச்சி சம்பந்த மான கருத்துகளை நன்கு ஆய்வு செய்த ஜி.ஆர். ஹண்டர், சர். ஜான் மார்சல், ஆர்.தி. பானர்ஜி, ஹெரஸ் பாதிரியார் போன்ற மேல்நாட்டுக் கீழ்நாட்டு ஆராய்ச்சியாளரின் முடிவுகள் டாக்டர். ஹால் கூறியவை களை வலியுறுத்துகின்றன. இவை போன்ற ஆராய்ச்சிகளால் மேற்கு ஆசியா, எகிப்து பாரசீகம் இந்தியா இந்துமாக்கடல் பசிபிக் கடல்களில் உள்ள தீவுக்கூட் டங்கள் அடங்கிய ஒரு பெரிய வட்டத்தில், ஒரே மொழியும் ஒரேவகை நாகரிகமும் நிலவின என்பன போன்ற உண்மைகள் வெளியாகின்றன.1 இந் நிலைமை யுண்டாயிருந்த காலத்தில் ஆரிய மக்கள் இந்திய நாட்டை அடையவில்லை. இந்திய நாட்டில், ஆரியர் வருகைக்கு முன் பழைய நாகரிகம் ஒன்று இருந்ததென்பது வேத பாடல்களாலும் பிற அயற் சான்றுகளா லும் மொழி ஆராய்ச்சியினாலும் அறியப்பட்டிருந்ததே யன்றி, அதனைக் கண்கூடாக விளக்கும் பழைய சான்றுகள் எவையும் காணப்படவில்லை. மனிதன் தோன்றி நிலத்தில் அடி எடுத்து வைக்கத் தொடங்கிய காலம் முதல், மக்கள் இந்திய நாட்டில் வாழ்ந்து வருகின்றார்கள் என்றும், அவர்கள் அங்குப் படிப்படியே நாகரிகம் அடைந்து வந்ததற்குரிய சான்றுகள், அவர்கள் செய்து பயன்படுத்திய ஆயுதங்களாலும் பிறவற்றா லும் அறியப்படுகின்றன என்றும் ஆராய்ச்சியாளர் கூறுவாராயினர். இந்திய நாட்டில் பல மொழிகள் வழங்குகின்றன. அவை திராவி டம், முண்டா, ஆரியம் எனப் பிரிக்கப்படுகின்றன; வடநாட்டில் வழங்கும் மொழிகள் ஆரிய இனத்தைச் சேர்ந்தன வெனவும், தென்னாட்டில் வழங் கும் மொழிகள் திராவிட மொழிகள் எனவும் படுகின்றன. திராவிட மொழி களில் பல ஆரியச் சொற்கள் காணப்படுகின்றன. திராவிட மக்களின் சமய நூல்கள் எனப்பட்டன சில வடமொழியிற் காணப்படுகின்றன. சமய மொழி சமக்கிருத மாயுமிருக்கின்றது. இவை போன்ற சிலவற்றை நோக்கித் திராவிட மொழிகள் ஆரிய மொழியிலிருந்து தோன்றின; ஆரியர் வருமுன் இந்தியாவில் காட்டு மக்கள் போன்ற நாகரிகமற்றோர் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களை ஆரியர் வென்று தெற்கே துரத்தினார்கள். அவர்களை ஆரியப் பிராமணர் சிறிதுசிறிதாக நாகரிகப் படுத்தினர்; என்பன போன்ற கருத்துகளே இந்திய மக்களின் பழைய புதிய வரலாற்றாசிரியர்களிடம் நீண்ட காலம் இருந்து வந்தது. இக் கருத் துகள் தவறுடையன என்பதை உணர்ந்த பற்பல திராவிட அறிஞர் அவை களை அடிக்கடி கண்டித்து வந்தனர். ஆயினும் அவர்கள் பேச்சு வலியுற வில்லை. வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பது போல் ஆயிற்று. மேல் நாட்டறிஞர் நீண்ட காலம் ஆரியருடைய நாகரிகம் திராவிடருடையதே, வேதபாடல்கள் சிலவற்றைச் செய்தும், அப் பாடல்களை வேதங்களாக வகுத்தும், நீதிநூல்களைச் செய்தும், அவர்கள் மொழிக்கு இலக்கண மமைத்தும் ஆரியரையும் ஆரிய மொழியையும் செம்மையுறச் செய்த வர்கள் திராவிடர்களே என எழுதி வருவாராயினர். அவை போன்றவை, ஆங்கிலத்தி லெழுதப்படுவதாலும், மேல் நாடுகளில் வெளிவரும் பெரு நூல்களில் அடங்கியுள்ளமையாலும் அவைகளைத் தமிழ் மக்கள் படித்து உண்மை காண்டல் அரிதாயிற்று. ஆரியர் மேலானவர்கள், ஆரியம் மேலானது என வரலாறு எழுதப்படுவதால் ஒரு கூட்டத்தினருக்கு ஒரு வாய்ப்பு உண்டாயிருந்தது. அவர்கள் ஆரிய மொழி கடவுள் மொழி; அம் மொழியைப் பயிலும் தாமே திராவிடருக்குக் குருமாராக இருக்கத் தகுந்தவர் எனத் தம் கூற்றுகளை நம்பும்படி மக்களைச் செய்து சமூகங்களில் முதல் இடத்தை அடைந்தனர்.1 அதனால் அவர்கள் மெய்வருத்தமின்றி நல்வாழ்வு நடத்தும் முறையுண்டாயிருந்தது. இவர்களே ஆங்கிலங் கற்று அரசியல் துறைகளிலும், பத்திரிகைத் துறைகளிலும் நிரம்பியுள்ளார்கள். இக் கூட்டத்தினர் சிலரே பெரும்பாலும் இந்திய நாட்டுச் சரித்திரங்களையும் எழுதுவாராயினர். அவர்கள் எழுதியவற்றுள் தமிழருக்குப் பெருமை அளிக்கும் பகுதிகள் விடப்பட்டுள்ளன. ஆரியரிலும் பார்க்கத் தமிழரே சிறந்தவர்; தமிழ், ஆரியத்தினும் முந்தியது; சிறந்தது என்னும் கருத்துகள் வலிபெற்றால், பொய்க் காரணங்களால் உயர்நிலை அடைந்து நல்வாழ்வு பெற்றுவரும் கூட்டத்தினரின் வாழ்வுக்கு இழுக்காகு மன்றோ! இக் கருத்துப் பற்றியே அக் கூட்டத்தினர் எழுதும் ஆராய்ச்சி நூல்களில், தமிழரின் உயர்வுகள் தோன்றவேண்டிய பகுதிகள் வெளிவருவதில்லை யாகும். தென்னிந்திய மக்களின் உண்மை வரலாறுகள் வெளிவரவில்லை எனப் பலர் கூறுவதற்குக் காரணம் இதுவே. 1922-க்கும் 1927-க்கு மிடையில், சிந்து மாகாணத்திலே சிந்து நதிக்கு அண்மையில் காணப்பட்ட மொகஞ்சதரோ என்னும் இடிபாட்டுத் திடரும், சிந்து நதியின் கிளைகளில் ஒன்றாகிய இரவி ஆற்றின் பக்கத்தே யுள்ள அரப்பா என்னும் இடிபாட்டுத் திடரும் பழம்பொருள் ஆராய்ச்சி யாளரால் அகழப்பட்டன. அவ் விரண்டு மேடுகளும் ஆரியர் வருகைக்கு நெடுங் காலத்தின் முன், இந்திய நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களின் பழைய நகரங்களாகக் காணப்பட்டன. அவ் வாராய்ச்சியை நடத்திய சர். ஜான் மார்சல் என்பார் அரப்பா மொகஞ்சதரோ நகரங்களிற் காணப்பட்ட பழம்பொருள்கள், கட்டடங்கள் முதலியவைகளைக் கொண்டு அந் நகரங்களையும், அந் நகரங்களில் வாழ்ந்த மக்களையும் பற்றி மூன்று பகுதிகள் அடங்கிய பெரிய நூல் ஒன்றை 1931இல் வெளி யிட்டார். அதில் அவர் அந் நகரங்களில் வாழ்ந்த மக்களுக்கும் சுமேரிய பாபிலோனிய மக்களுக்குமிடையில் வாணிகப் போக்குவரத்து இருந்த தென்றும், அந் நாடுகளில் வழங்கிய எழுத்துகளுக்கும் சிந்து வெளியில் வழங்கிய எழுத்துகளுக்கும் ஒற்றுமை உண்டு என்றும், அந் நகரங்களில் வாழ்ந்தோர் திராவிட மக்களாயிருத்தல் கூடுமென்றும், அவர்கள் மத்திய தரைச் சாதியினரே என்றும், அந் நகரங்களின் நாகரிகம் ஆரியருடையது அன்று என்றும் கூறியுள்ளார். இவ் வாராய்ச்சி உலகமக்களிடையே பெரிய விழிப்பை உண்டாக் கிற்று. உலக மக்களுக்கு நாகரிகத்தை உதவியவர்கள், இந்திய மக்களாதல் கூடும் எனப் பல மேல் நாட்டாசிரியர்கள் கருதினார்கள். ஜி.ஆர். ஹண்டர் என்னும் பேராசிரியர் அப் பழைய நகரங்களின் நாகரிகம், திராவிட மக்களுடையதாகும் என்பதற்குப் பல காரணங்கள் காட்டியுள் ளார். பேராசிரியர் லாங்டன், பிராமி எழுத்துகள் மொகஞ்சதரோ எழுத்துகளின் திரிபுகள் என்று கண்டுபிடித்தார். ஹெரஸ் பாதிரியார், மொகஞ்சதரோப் முத்திரைகளில் காணப்பட்ட எழுத்துகள் தமிழ் எழுத்துகளின் ஆதி எழுத்துகள் என்பதை, அவைகளை ஒலி முறையாக வாசித்துக் காட்டினார். அத்தோடு சிந்துவெளி மக்கள் திராவிடரே என்று கூறுவதற்கு ஏற்ற பல காரணங்களையும் வெளியிட்டார். இன்று அமெரிக்கா, இங்கிலாந்து, செர்மனி, பிரான்ஸ் முதலிய மேல் நாட்டினர் எல்லோரும் சிந்துவெளி நாகரிகம் திராவிடருடையது என்று நன்கு அறிவர். அவ்வாறே அவர்கள் தமது நூல்களில் எழுதி வருகின்றனர். இந்திய நாட்டினருக்குப் பெரும்பாலும் சிந்துவெளி நாகரித்தைப் பற்றித் தெரியாது. பல்கலைக்கழகங்கள் மூலம்தான் இவ் வகை ஆராய்ச்சிகள் வெளிவர வேண்டுமென்று எதிர்பார்த்தலாகாது. அவர்கள் இவ் வாராய்ச்சியில் இறங்காமைக்குச் சில அடிப்படையான காரணங்களுண்டு. ஆரியர்தான் உலகத்தில் மேலானவர்கள். அவர்களே உலகுக்கு நாகரிகத்தைக் கொடுத்தவர்கள் என்று இதுவரையும் நம்பிவந்த ஒரு கூட்டத்தினருக்கு அரப்பா மொகஞ்சதரோப் புதை பொருளாராய்ச்சி தலையடியாயிருக்கின்றது. அவர்களுக்கு என்ன செய்வது என்று தோன்றவில்லை. ஆயினும் அவருட் சிலர் மொகஞ்சதரோவில் ஆரிய ருடைய நாகரிகத்துக்கு அடையாளங்கள் காணப்படுகின்றன. வேதங் களில் அப்படிக் கூறப்பட்டுள்ளது, இப்படிக் கூறப்பட்டுள்ளது எனச் சில பல கூறுவாராயினர். அவர்களின் நோக்கத்தை மேற்றிசை அறிஞர் நன்கு அறிவர். ஹெரஸ் பாதிரியார், ஜி.ஆர். ஹண்டர் போன்ற பேராசிரியர் கள், அவர்கள் கூற்றுகளின் ஒவ்வாமையை நன்கு கண்டித்துள்ளார்கள். உலகத்துக்கே விழிப்பை யுண்டாக்கிய மொகஞ்சதரோ நாகரிகத் தைப் பற்றிப் பல்கலைக்கழகங்கள் ஆராய்ந்து பரீட்சைகளுக்குரிய நூல்கள் எழுதலாம். அவைகளை வரலாற்றுப் பாடமாக வைக்கலாம். வரலாற்றை எதற்காகப் பயில்வது? மாணவர் தமது பழமையின் செம் மையை உணர்ந்து, தம்மையும், அவ் வழியில் ஆக்கிக்கொள்ள முயலும் பொருட்டன்றோ? மொகஞ்சதரோ நாகரிகம் ஆரியருடையது என்று வந்திருக்குமானால், அதைப்பற்றிப் பல நூல்கள் இதுவரையில் தமிழில் வெளிவந்திருக்கும். அவை பரீட்சைகளுக்குப் பாடமாகவும் வந்திருக்கும். தமிழன் பழங்காலத்தவன். அவன், நீண்ட காலம் எருவிடாமல் பயிரிட்ட நிலம்போல ஓய்ந்துவிட்டான். அவனிடத்தில் உணர்ச்சி குன்றிவிட்டது; தனது மொழியை வளர்க்க வேண்டும்; தனது சாதியை வளர்க்க வேண் டும். சுயமதிப்புப் பெறவேண்டும் என்னும் உணர்ச்சி குன்றிவிட்டது. இன்று அரசியலிலும் அவன் கடையிடத்தைத் தாங்கி நிற்கின்றான். தமிழ் மக்கள் தம் குறைகளை உணர்ந்து முன்னேற வேண்டுமென்பது இந் நூலின் நோக்கம். சிந்துவெளி அழிபாடுகள் சிந்து என்பது இந்தியாவின் வடக்கே உள்ள ஒரு ஆறு. சிந்து என்பதற்குச் சிந்துதல் என்று பொருள். இவ் வாற்றின் பெயரையே, நாவலந் தீவு என்று பெயர்பெற்றிருந்த எமது நாட்டுக்கு மேற்குத் தேசத்த வர்கள், பெயராக வழங்கினர். சிந்து என்பது இந்து எனத் திரிந்து வழங்குகின்றது. சிந்து ஆற்றின் சமவெளிகளில் பல இடிபாடுகள் காணப் படுகின்றன. அவைகளில் மொகஞ்சதரோ அரப்பா என்னும் இடங்களி லுள்ள பெரிய மேடுகள் 1922இல் பழம்பொருள் ஆராய்ச்சியாளரால் அகழப்பட்டன. அம் மேடுகள் பழைய இரண்டு நகரங்களின் அழிபாடு களாகக் காணப்பட்டன; அங்குப் பலவகைப் பழம்பொருள்கள் கிடைத்தன. மொகஞ்சதரோ என்னும் மேடு, சிந்து மாகாணத்தில் உள்ளது. இவ் விடிபாடு ஒரு சதுர மைல் அளவினது. சுற்றுப்புறங்கள் புதைந் திருப்பதால் இது இன்னும் பெரிதாக இருந்திருக்கலாம். மொகஞ்சதரோ காலத்திலும் பார்க்கச் சிந்து ஆற்றின் அடிப்பாகம் இன்று இருபது அடி உயர்ந்துள்ளது. மொகஞ்சதரோ என்பதற்குச் சிந்து மொழியில் இறந்த வர்களின் நகரம் என்று பொருள். இம் மேட்டின் நீளம் 1300 அடி வரையில். அகலம் 600 அடி வரையில். சிந்து ஆறு மொகஞ்சதரோவுக்குக் கிழக்கே மூன்றரை மைல் தூரத்தில் ஓடுகின்றது. முற்காலத்தில் அது அதன் பக்கத்தாற் சென்றிருக்கலாம். மொகஞ்சதரோ நகர் முன்பு ஆற்று மட்டத்திற் கட்டப்பட்டது. சிந்து ஆறு, காலந்தோறும் உயர்ந்து வந்த மையால், மக்கள் நகரத்தை உயர்த்திப் புதிய கட்டடங்களை அமைத்து வந்திருக்கிறார்கள். இவ்வாறு ஒன்றின்மேல் ஒன்றாகக் கட்டப்பட்ட ஏழு நகரங்கள் மொகஞ்சதரோவிற் காணப்படுகின்றன. இதுவரையும் அகழ்ந்து கண்டுபிடிக்கப்பட்டவை மேல் ஆறு படைகளே. மேல் மூன்று படைகள் பிற்காலத்தன. கீழ் நான்கு படைகளும் முற்காலத்தன. இவ் அழிபாடு நாற்பது அடிவரையும் அகழப்பட்டது. அதற்குமேல் நீர் ஊற்று வருகின்றது. அதனால் மேலும் கிண்டுவது இயலாதிருக்கின்றது. அரப்பா பஞ்சாப் மாகாணத்திலே சிந்து ஆற்றின் கிளைகளுள் ஒன்றாகிய இரவி ஆற்றில் உள்ளது. இவ் அழிபாடு மொகஞ்சத ரோவைவிடப் பெரியது. இவ் விரண்டு இடங்களுக்கும் இடையிலுள்ள தூரம் நானூற்றைம்பது மைல் வரையில். மொகஞ்தரோவிற் காணப் பட்டன போன்ற பழம்பொருள்கள் இங்கும் காணப்பட்டன. சிந்துவெளி நாகரிகத்தின் பழமை வாபிரி1 என்பார் பின்வருமாறு கூறியுள்ளார். மொகஞ்சதரோ அழிபாடு அகழப்படவில்லை. ஆனால் சுரண்டிப் பார்க்கப்பட்டது. அகழ்ந்து கண்டுபிடிக்கப்பட்ட நாகரிக காலம் கி.மு. 2700க்கு முற்பட்ட தன்று என்று கருதப்படுகின்றது. இந் நாகரிகம் மிக வளர்ச்சி அடைந் துள்ளதாகக் காணப்படுகின்றது. இவ்வாறு நாகரிகம் வளர்ச்சி யடை வதற்கும் பல ஆயிரம் ஆண்டுகள் சென்றிருக்கலாம் என்று கருதக் கூடியதாயிருக்கின்றது. இது அங்குத் தானே தோன்றி வளர்ச்சி யடைந்த நாகரிகம். மெசபெதோமியா, கிரேத்தா (Crete) முதலிய நாடுகளோடு இந்தியா தொடர்பு வைத்திருந்த தென்று துணிவதற்கேற்ற பல சான்றுகள் காணப்படுகின்றன. இந் நாகரிகத்தின் பழமை கி.மு. 4000 வரையிற் செல்கின்றது. இப் பழைய நாகரிகம் வேறு எங்காவது தொடங்கி இங்கு வந்திருக்க முடியாது. இந்திய நாகரிகம் இந்தியாவி லேயே தொடங்கிற்று எனத் துணியலாம். சிந்துவெளி நகரங்களின் காலம் அரப்பா, மொகஞ்சதரோ என்னும் இடங்களில் வெண்கலம், செம்பு என்னும் உலோகங்களாற் செய்யப்பட்ட பல பொருள்கள் காணப்பட்டன. சில கல் ஆயுதங்களும் காணப்பட்டன. இரும்பு ஆயுதங்கள் காணப்படவில்லை. ஆகவே அக் கால மக்கள் இரும்பைப் பற்றி அறிந்திருக்கவில்லை எனத் தெரிகின்றது. கல்லாயுதங்கள் காணப் பட்டமையின் அக் கால மக்கள் கற்கால இறுதியிலும் உலோகக் கால தொடக்கத்திலும் வாழ்ந்தார்கள் எனக் கூறலாம். அரப்பா மொகஞ் சதரோ முதலிய இடங்களிற் காணப்பட்ட பழம்பொருள்கள் மெசபெத் தோமியாவிற் கண்டு எடுக்கப்பட்ட பழம் பொருள்களை ஒத்துள்ளமை யால் சுமேரியா, பாபிலோனியா முதலிய நாடுகளுக்கும், சிந்து நாட்டுக் கும் தொடர்பிருந்து வந்ததெனத் துணியப்படுகின்றது. அரப்பா மொகஞ் சதரோ நகரங்களின் காலம் கி.மு. 3000 வரையில் என ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார்கள். இவ்வாறு துணிவதற்குப் பல சான்றுகள் கிடைத் துள்ளன. கிரேத்தா (Crete), சுமேரியா, பாபிலோன், சிந்து முதலிய நாடு களின் நாகரிகம் ஒருவகையாக இருப்பதோடு மக்களும் ஒரே குலத்தின ராகக் காணப்படுகின்றனர் என்று குலநூலார் கூறுகின்றனர். நகரும் நகரமைப்பும் அரப்பா, மொகஞ்சதரோ நகரங்கள் சூளையிட்ட களிமண் கற்களால் (செங்கற்கள்) கட்டப்பட்டுள்ளன. மொகஞ்சதரோவின் மேல் படையிலுள்ள நாகரிகம் கி.மு. 2550 வரையில் என்றும் அடிப்படையி லுள்ளது கி.மு. 3000 வரையில் என்றும் கருதப்படுகின்றன. அரப்பா, மொகஞ்சதரோப் பட்டினங்களைக் கட்டியவர்கள் ஆரியர் வருகைக்கு ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்கள் எனத் துணியலாம். இதிற் சிறிதும் ஐயம் இல்லை. மொகஞ்சதரோவிற் காணப்பட்ட பழம்பொருள்கள் பாபிலோனிற் காணப்பட்டவைகளை ஒத்தன. சுமேரி யாவிற் கிடைத்த சில பொருள்களும் சிலவும் அவ் வகையினவே. ஆகவே சுமேரியர், பாபிலோனியர் சிந்துவெளி மக்கள் ஆகியோர் ஒரு பொது உற்பத்தியைச் சேர்ந்தவர்கள் எனக் கருதப்படுகின்றனர். அரப்பா, மொகஞ்சதரோ முதலிய இடங்களில் தொடர்பாக எழுதப்பட்ட நீண்ட பட்டையங்கள் காணப்படவில்லை. ஆகவே அக் கால மக்கள் தோல், மரம், ஓலை என்பவைகளை எழுதப் பயன்படுத்தினார்கள் ஆகலாம். மொகஞ்சதரோ மக்கள் எங்கிருந்து வந்தார்கள் என அறியமுடிய வில்லை என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். அவர்கள் தெற்கிலிருந்து வந்தார்கள். அவர்கள் இந்தியாவில் நீண்ட காலம் இருந்தார்கள் என்று கூறலாம். இது அவர்களின் நன்கு அமைக்கப்பட்ட நகரம், மர வழிபாடு, இலிங்க வழிபாடு முதலிய சின்னங்களைக் கொண்டு அறிதல் கூடும். இவை போன்ற வழிபாடுகள் மேற்கு ஆசியாவிலும் காணப்பட்டன. நகரங்கள் தீயினால் வெந்தும் அழிந்தும் காணப்படாமையால் இந் நகரங்களில் வாழ்ந்த மக்கள் அடிக்கடி போர்களிற் கலந்து கொள்ளாது சமாதானமாக வாழ்ந்தார்கள் எனத் தெரிகின்றது. மொகஞ்சதரோவில் நிலத்துக்குச் சாந்து இடப்பட்டதும், நிரையாக அறைகள் உடையது மாகிய சந்தையும், அரப்பாவில் மிகப் பெரிய தானியக் களஞ்சியமும் காணப்பட்டன. இந் நகரங்களிலுள்ள கட்டடங்கள் சிதைந்த நிலையிற் காணப்படுகின்றன. இவ் வழிந்த நகரங்களுக்கு அயலே வாழும் மக்கள் கட்டடங்கள் அமைப்பதற்கு இவ் விடிபாடுகளிலிருந்தும் செங்கற்களை எடுத்தமையே இதற்குக் காரணமாகும். இந் நகரங்கள் வெள்ளப் பெருக்கி னால் அழிந்தன என்று கூறலாம். வீதிகள் மொகஞ்சதரோக் கட்டடங்கள் அரப்பாக் கட்டடங்களினும் பார்க்க அழியாமல் இருக்கின்றன. வீதிகள் நேராகச் செல்கின்றன. அவைகளின் குறுக்காக வேறு வீதிகள் நேரே செல்கின்றன. இவைகளை நோக்கும்போது அரசினரின் சட்டதிட்டங்களுக்கு அமைய நகர் அமைக்கப்பட்டிருக்கின்ற தெனத் தெரிகின்றது. கட்டடங்கள் தெருப் பக்கம் வெளியே தள்ளியிராமையால், மொகஞ்சதரோவில் கட்டடங் களைப் பற்றிய சட்டங்கள் இருந்திருக்கலாம் என்று கருத இடமுண்டு. காலம் போகப்போக வீதிகள் அகலம் அடைந்திருக்கின்றன. வீதிகள் எல்லாம் கிழக்கிலிருந்து மேற்கும், வடக்கிலிருந்து தெற்குமாகச் செல்கின் றன. மொகஞ்சதரோ நகரின் வீதிகள் முப்பத்து மூன்று அடி அகல முடையன. இதிலும் பார்க்க அகலமுள்ள சில வீதிகளும் காணப்படு கின்றன. சிறிய வீதிகள் பெரும்பாலும் பதினெட்டு அடி அகலமுடையன. பதின்மூன்று அடி முதல் ஒன்பது அடிவரையில் அகலமுள்ள வீதிகளும் காணப்படுகின்றன. தெரு ஓரங்களில் வீட்டை மறைத்துப் பெரிய சுவர் எழுப்பப்பட்டுள்ளது. பெரிய வீதியின் ஓரத்திலுள்ள சுவர் பதினெட்டு அடி உயரமுள்ளது. குறுக்குத் தெருவிலுள்ளவை இருபத்தைந்து அடி உயர முடையன. நகரத்தின் அடித்தளம் இதுவரையிற் கண்டுபிடிக்கப்பட வில்லை. வீடுகள் சில கட்டடங்களின் தளங்கள் (அத்திபாரம்) சூளையிட்டனவும் சூளையிடாதனவுமான களிமண் கற்களால் இடப்பட்டிருக்கின்றன. குளிக்கும் அறைகளுக்கு மினுக்கம் செய்யப்பட்ட செங்கல் பதிக்கப்பட் டுள்ளன. கட்டடங்களுக்குச் சுண்ணாம்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. வீட்டு மாடிகள் வேலைப்பாடுடைய செங்கற்களாலும் மர வேலைகளா லும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அக்காலச் சிறிய வீட்டின் தரை 30 அடி நீளமும் 27 அடி அகலமும் உடையதாயிருந்தது. ஒரு வீட்டுக்கு நாலு அல்லது ஐந்து அறைகள் இருந்தன. பெரிய வீடுகளின் பருமை இதன் இருமடியாக இருந்தது. மொகஞ்சதரோவில் சில வீடுகள் அடுத்த வீட்டுச் சுவரிலிருந்து ஒரு அடி தள்ளி இருக்கின்றன. சுவர்களின் கனத்தைக் கொண்டு வீதிகளுக்கு இரண்டு அல்லது அதிக மாடிகள் இருந்தன என்று கூறலாம். சுவர்களின் உயரத்தில் சதுரமான துவாரங்கள் காணப்படுகின்றன. அவைகளில் உத்திரங்கள் இடப்பட்டிருக்கலாம். உத்திரங்களுக்கு மேலே நாணற்பாய் பரப்பி அதன்மீது களிமண் பரவி மட்டஞ் செய்யப்பட்டது. இதுவே அவ் வீடுகளின் கூரையாகும். பல வீடுகளின் படிக்கட்டுகள் இன்றும் காணப்படுகின்றன. சில வீடுகளுக்குப் படிக்கட்டுகள் காணப்பட வில்லை. ஆகவே சில வீடுகளுக்கு மரத்தினாற் செய்யப்பட்ட படிக்கட் டுகள் இருந்தன என்று தெரிகின்றது. படிக்கட்டுகள் மிக ஒடுக்கமானவை. பல வீடுகளுக்கு தெருப்புறத்தும் படிக்கட்டுகள் இருக்கின்றன. மாடி களில் வாழ்ந்த வெவ்வேறு குடும்பத்தினர் இப் படிக்கட்டுகளைப் பயன்படுத்தியிருக்கலாம். வீட்டின் கூரைகள் தட்டையாக இருந்தன. நாற்புறத்தும் பதிவான சுவர் இருந்தது. கூரையில் விழும் மழைநீர் செங்கற் குழாய்ப் பீலி அல்லது மரப் பீலி வழியே வீதியில் விழுந்தது. வெய்யிற் காலங்களில் மக்கள் கூரைமீது படுத்து நித்திரை கொண்டார் கள். வீட்டின் கதவுகள் பெரும்பாலும் மூன்றடி நாலு அங்குலம் அகல முடையவை. சில கதவுகள் ஏழு அடி பத்து அங்குலம் அகலமுடையன. வட்டமான திரண்ட தூண்கள் காணப்படவில்லை. சதுரமான தூண் களே காணப்படுகின்றன. வறியவர்களின் வீடுகளின் தரை, களிமண் இட்டு மட்டஞ்செய்து சாணியால் மெழுகப்பட்டிருந்தது. சில வீட்டுச் சுவர்களில் அழகிய அறைகள் காணப்படுகின்றன. அவைகளின் மரச் சட்டங்கள் இறுக்கித் தட்டுகளமைக்கப்பட்டன வாகலாம். சமையல் பெரும்பாலும் முற்றத்தில் செய்யப்பட்டது. வீடுக ளில் சமையலறைகளும் காணப்படுகின்றன. அவைகளில் செங்கற்களால் உயர்ந்த மேடை கட்டப்பட்டிருந்தது. அங்கு விறகு வைக்கப்பட்டது. ஒவ்வொரு வீட்டுக்கும் குளிக்கும் அறை இருந்தது. அது தெருப்புறமாக அமைக்கப்பட்டது. தண்ணீர் வெளியே செல்லும் வாய்ப்புக் கருதி அது இவ்வாறு அமைக்கப்படுவதாயிற்று. வீடுகளுக்கு மலக் கூடங்களும் இருந்தன. அவை தெருச் சுவருக்கும் குளிக்கும் அறைக்கும் இடையில் அமைக்கப்பட்டன. தெருவுக்குப் பக்கத்தே அமைக்கப்பட்ட தண்ணீரோ டும் மண் குழாய்கள் பொருத்தித் தெரியாமல் அழுத்தஞ் செய்யப்பட் டிருந்தன. வீட்டு முற்றங்களில் அம்மிகள் காணப்படுகின்றன. முற்றத்தில் ஆடு மாடுகள் கட்டப்பட்டன. வறிய மக்கள் நகரத்தில் இருக்கவில்லை எனத் தெரிகிறது. அவர்கள் நகர்ப்புறத்தே சிறு குடிசைகள் கட்டி வாழ்ந் தார்கள். ஒவ்வொரு வீதியிலும் செங்கற் பதித்த வாய்க்கால்கள் இருந்தன. சிறிய வீதிகளுக்கும் இவ்வாறு இருந்தன. வீடுகளிலிருந்து செல்லும் வாய்க்கால்கள் வீதியிலுள்ள பெரிய கால்வாய் வரையிற் சென்றன. வீதிகளிற் செல்லும் வாய்க்கால்கள் செங்கற்களால் மூடப்பட்டிருந்தன. வீடுகளினின்று செல்லும் அழுக்குநீர் செங்கற் பதித்த ஒரு குழியில் விழுந்து நிரம்பிய பின்பே, வீதியிலுள்ள வாய்க்காலுக்குச் சென்றது. அவ்வாறு நீர், குழியில் விழுவதால் பாரமான பொருள்கள் அதனுள் தங்கிவிடும். கற்பதித்த குழிகளை அமைக்கமாட்டாத வறியவர்கள் பெரிய சாடிகளைப் பயன்படுத்தினர். கிணற்றைச் சுற்றிச் செங்கற் பதிக் கப்பட்டிருந்தது. கிணறுகளின் குறுக்களவு மூன்று அடிமுதல் ஏழு அடி அளவில் உள்ளது. ஹரப்பாவில் தானியக் களஞ்சியம் என்று கருதப்படும் பெரிய கட்டடம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. பல சுவர்கள் ஒன்றுக்கு ஒன்று நேராகச் சமதூரத்தில் ஓடுகின்றன. அவை களின் இடையே இருபத்து மூன்று அடி வெளி இருக்கின்றது. சுவரின் கனம் ஒன்பதடி. மொகஞ்சதரோவில் 242 அடி நீளமும் 112 அடி அகலமும் ஐந்தடிக் கனமுமுள்ள சுவர்களையும், தெற்கிலும் மேற்கிலும் பெரிய பாதை களையு முடையதாகிய ஒரு கட்டடம் காணப்படுகின்றது. அதில் பல அறைகள் இருக்கின்றன. அங்குள்ள பெரிய நீராடும் கேணிக்கு அண்மையி லிருப்பதால், இது ஒருபோது பொதுமக்கள் தங்கும் மடமா யிருக்கலாம். இதற்கு அண்மையில் இன்னொரு கட்டடம் காணப்படு கின்றது. அது ஓர் அரண்மனையா யிருக்கலாம். அவ் வழகிய கட்டடத் துக்கு இரண்டு உள் முற்றங்கள் இருக்கின்றன. அது 220 அடி நீளமும் 115 அடி அகலமுமுடையது. சுவர்கள் ஐந்து அடிக் கனமுடையன. அக் கட்டடத்தில் மூன்று கிணறுகள் காணப்படுகின்றன. நீராடும் கேணி மொகஞ்சதரோவில் நீராடும் கேணி ஒன்று காணப்படுகின்றது. அதன் உட்புறங்களும் கரைகளும் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளன. அதன் நீளம் 39 அடி 3 அங்குலம்; 23 அடி 2 அங்குலம். அக் கேணிக்கு இரண்டு பக்கங்களில் படிக்கட்டுகள் இருக்கின்றன. படிக்கட்டுக்குக் கீழே முடிவு அடையும் இடத்தில் பதினாறு அங்குலம் உயரமும் 39 அங்குலம் அகலமும் உள்ள ஒரு மேடை காணப்படுகின்றது. இது சிறுவர் அபாயமின்றி நின்று நீராடுவதற்காகவாகலாம். வெளியே கேணியின் நாற்புறத்தும் மக்கள் உலாவக்கூடியதும் பதினைந்தடி அகலமுள்ளது மான செங்கற் பதிக்கப்பட்ட நடைபாதை காணப்படுகின்றது. நாற்புறத் தும் ஏழு அடி அகலமுள்ள அறைகள் இருக்கின்றன. கேணியின் நீர் அதன் தெற்கு மூலையில் அடியில் உள்ள துவாரம் வழியாக வெளியே போக்கப்பட்டது. அந் நீர் இரண்டு அடி நாலு அங்குலம் அகலமுள்ள மதகு வழியாகச் சென்றது. அம் மதகு ஒரு மனிதன் நிமிர்ந்து செல்லக் கூடியதாக இருந்தது. அம் மதகு எங்குச் சென்று முடிவடைகின்றது என்று அறிய முடியாமல் இடிபாடுகள் மூடியிருக்கின்றன. குளத்தின் கிழக்கில் உள்ள அறையில் ஒரு கிணறு காணப்படுகின்றது. அதனை வீதியாற் செல்பவர்களும், கேணியிலுள்ளவர்களும் இலகுவில் அடைய லாம். கேணியின் நீர் வெளியே போக்கப்பட்ட போது இக் கிணற்று நீரால் அது நிரப்பப்பட்டிருக்கலாம். கேணியின் உட்பக்கத்தே வைத்துக் கட்டப்பட்ட செங்கற்களின் முன்புறத்தில் கல்நார் தடவப்பட்ட பூச்சு காணப்படுகின்றது. கேணிக்குப் புறத்தில் நீராடுவோர் தங்கியிருக்கும் அறைகள் பல இருக்கின்றன. ஒவ்வொரு அறையின் தளத்துக்கும் கல் பதிக்கப்பட்டிருக்கிறது. அறைகளின் கூரைக்கு ஏறிச்செல்லக் கூடிய தாகப் படிக்கட்டுகள் இருந்தன. இவ் வறைகள் குருமார் இருப்பதற்காக அமைக்கப்பட்டன வாகலாம். தென்மேற்கு மூலையில் நீண்ட வட்ட மான ஒரு கிணறு காணப்படுகின்றது. தண்ணீர் இறைக்கும்போது கயிறு உராய்ந்ததால் உண்டான அடையாளங்கள் கிணற்றுச் சுவர்ப் பக்கங் களிற் காணப்படுகின்றன. இக் கேணி பொதுமக்களும், குருமாரும் நீராடு வதற்காக அமைக்கப்பட்டதாகலாம். இப்பொழுது இதற்கு அண்மையில் புத்த தூபி இருக்கின்ற இடத்தின் கீழ் முன்பு பெரிய கோயில் இருந்திருக்க லாம். இது கடவுளின் மீன் வாழும் கேணியாகவும் இருந்ததாகலாம். சமயம் மொகஞ்சதரோவில் ஒருவகைச் சுண்ணாம்புக் கல்லில் வெட்டிய ஒரு மனித வடிவம் காணப்பட்டது. அது இடது தோளுக்கு மேலாகப் போர்த்து வலப்பக்கம் வரும்படியாக மேலாடை அணிந்திருக்கின்றது. இவ் வகை வடிவங்கள் அரப்பாவிலும் மொகஞ்சதரோவிலும் காணப் பட்டன. அவ் வடிவத்துக்குக் குறுகிய தாடி மயிர் உண்டு. மேல் உதட்டு மயிர் மழிக்கப்பட்டுள்ளது. இவ் வகை வடிவங்கள் சுமேரியாவிலுங் காணப்பட்டன. இவ் வடிவம் ஒரு குருவைக் குறிப்பதாகலாம். இவ் வடிவின் கண்கள் மூடியிருக்கின்றன. இது யோகத்தைக் குறிக்கின்ற தெனச் சிலர் கூறுகின்றனர். இவ் வகை வடிவங்கள் கிஷ், ஊர் (மேற்கு ஆசியா) என்னும் இடங்களிலும் காணப்பட்டன. அங்குக் காணப்பட்ட சூளையிட்ட மண் பாவைகளைக் கொண்டு அக் காலத் தெய்வங்களைப் பற்றி நாம் சிறிது அறியலாம். பல மண்பாவைகள் பெண்தெய்வ வடிவங்க ளாகக் காணப்படுகின்றன. அத் தெய்வங்கள் அரையில் ஒரு ஒடுங்கிய துணியுடையனவாக மாத்திரம் காணப்படுகின்றன. அவை பலவகை அணிகலன்களை அணிந்திருக்கின்றன; விசிறி போன்ற தலை அணியை யும் அணிந்திருக்கின்றன. இரண்டு பக்கங்களிலும் கிண்ணங்கள் போன்ற பொருள்கள் காணப்படுகின்றன. இவைகளில் வழிபடுவோர் மணப் பொருள்களை எரித்திருக்கலாம். மண் பாவைகள், பெண் கடவுளரின் வடிவங்கள் என்று நம்புவதற்குக் காரணமுண்டு. பெயர் அறியப்படாத அவ் வடிவங்கள் ஒவ்வொரு வீட்டிலும் வைத்து வழிபடப்பட்டன. ஆண் கடவுளர் தலைமீது மாட்டுக்கொம்பு அல்லது ஆட்டுக்கொம்பு அணிந்திருக்கின்ற னர். இவ் விரண்டு விலங்குகளும் புனிதமுடையன என்று தெரிகின்றது. முத்திரைகளிற் காணப்படும் வடிவங்கள் கடவுளர் வடிவங்களாகத் தெரி கின்றன. ஆண் தெய்வங்கள் தலைமயிரை நீள வளரவிட்டிருக்கின்றன. ஒரு முத்திரையில் அட்டணைக்காலிட்டு இருக்கும் மூன்று முகமுடைய ஒரு மனித வடிவம் காணப்படுகின்றது. அதனைச் சுற்றி இரண்டு மான்கள், ஒரு காண்டாமிருகம், ஒரு யானை, ஒரு புலி, ஒரு எருமை முதலிய விலங்குகளின் வடிவங்கள் காணப்படுகின்றன. மனித வடிவத்தின் கைகளில் பல வளையங்கள் அணியப்பட்டுள்ளன. சர்.ஜான் மார்சல் என்பார் இவ் வடிவம் பசுபதி என்னும் சிவன் கடவுளைக் குறிக்கின்றதெனத் துணிந்துள்ளார். இக் கடவுளின் வடிவம் பொறித்த மூன்று முத்திரைகள் காணப் பட்டன. இரண்டு முத்திரைகளில், பசுபதிக் கடவுளின் வடிவம் கட்டிலின் மீது இருக்கிறது. மூன்றாவதில் உள்ளது, நிலத்தின்மீது இருக்கின்றது. மொகஞ்சதரோ மக்கள் தாய்க்கடவுளைக் கன்னிக் கடவுளாகவே வணங்கினார்கள். ஓர் அணிகலனில் அரச மரத்தின்கீழ் வீற்றிருக்கும் தாய்க்கடவுளின் வடிவம் காணப்படுகின்றது. இன்று மக்கள் வணங்கும் இலிங்கங்கள் போன்றவை அரப்பா மொகஞ்சதரோ என்னுமிடங்களிற் கண்டுபிடிக்கப்பட்டன. மீனை வாயில் வைத்திருக்கும் முதலையின் வடிவங்கள் அணிகலன்களில் காணப்படுகின்றன. முதலை ஆற்றுத் தெய்வமாகலாம். அரப்பா, மொகஞ்சதரோ என்னும் இரு இடங்களிலும் பாம்புகளின் வடிவங்களும் காணப்பட்டன. நிறம் பூசிய சட்டிப் பானை களிலும் அவைகள் தீட்டப்பட்டுள்ளன. முத்திரைகளில் சுவத்திகமும் காணப்படுகின்றன. வெண்கலத்திற் செய்யப்பட்ட நாட்டியப் பெண் ணின் வடிவம் ஒன்று காணப்பட்டது. அது அக் காலக் கோயில் தேவரடி யாளைக் குறிப்பது ஆகலாம் எனக் கருதப்படுகின்றது. தாய்க்கடவுள், சிவன் கடவுள் வணக்கங்கள், இலிங்க வணக்கம் முதலாயின ஆரியருக்கு முற்பட்ட தமிழ் மக்களுக்கு உரியனவென்று ஆராய்ச்சியினால் நன்கு தெளிவாகின்றன. அவ்வாறாகவும் பழங் கொள்கை யுடைய இந்திய ஆராய்ச்சியாளர் சிலர் அவை வேத கால ஆரியருக்குரியன என்று இடை இடையே வாதிப்பதுண்டு. அவர்கள் கூற்றுகள் இதுவரையில் ஆராய்ச்சி உலகில் இடம்பெறவில்லை. அவ் வழிபாடுகள் ஆரியருக்கு முற்பட்ட மக்களுக்கே உரியன என்பதை விளக்கி, இந்திய வரலாற்று இதழில் 1அறிஞர் ஒருவர் எழுதியிருப்பதின் சுருக்கத்தை ஈண்டுத் தருகின்றோம். “தாய்க்கடவுள் வணக்கம் சிறப்பாக ஆரியருக்கு முற்பட்ட மக்களிடையே பரவியிருந்தது. ஆரிய வேதங்களிற் சொல்லப்படும் தாய்க்கடவுளருக்குப் பெருமை உண்டானது ஆண் கடவுளர் வழியாகவாகும். அவர்கள் தனியே உயர்வு பெறவில்லை. மூன்று முகமுடைய சிவன் வடிவம் பெரிதும் காணப்படுகின்றது. சிவன், மகேசு வரன், சதாசிவன் என்னும் வடிவங்களில், ஒன்று, மூன்று ஐந்து முகங்க ளோடு எழுந்தருளுவர் என ஆகமங்கள் கூறுகின்றன. மூன்று முகத்தோடு காணப்படும் கடவுள் சிவனோடு தொடர்புடையவர் என்ப தில் ஐயம் இல்லை. அவ் வடிவம் யோக நிலையில் இருப்பது இதனை நன்கு வலி யுறுத்துகின்றது. தக்கணாமூர்த்தி வடிவில் கடவுள் காட்டு வாழ்க்கை யினராகச் சித்திரிக்கப்பட்டுள்ளார்.” “சூலம் சிவனின் முற்கால அடையாளமாக இருக்கலாம். இவ் வடையாளத்தையுடைய மனித வடிவங்கள் மொகஞ்சதரோவிற் காணப் படுகின்றன. இவ் வகை வடிவங்கள் சுமர், பாபிலோன் என்னும் இடங் களிலும் காணப்பட்டன.’’ “புத்த, தர்ம, சங்க எனப் புத்த சமயத்தினர் சூலத்தை மூன்றாகக் கொண்டனர். யோக மூர்த்தியின் பாதங்களில் காணப்பட்ட மான்கள் தக்கணா மூர்த்தியின் காட்டு வாழ்க்கையைக் காட்டுகின்றது. தரும சக்கரத்தில் மான்கள் புத்தரின் ஆசனத்தின் கீழ் காணப்படுகின்றன. அவர் தான் புதிதாகக் கண்ட சமயக் கொள்கையைப் போதிக்கின்றார். முத்திரை களில் காணப்பட்ட சிவனின் வடிவைப் பின்பற்றிப் புதிய பிற்கால வடிவங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.” “இந்திய நாகரிகத்தில் ஆரியருக்கு முற்பட்ட மக்களின் அடிப் படை” என இந்திய “குவாட்டர்லி” வரலாற்று இதழில், சூர்2 என்னும் அறிஞர் கூறியிருப்பது வருமாறு: இருக்கு வேத ஆரியர் தாய்க்கடவுளைப் பற்றி அறியார். அவர் களின் மேலான கடவுள் ஆண் கடவுளே. இருக்கு வேதத்தில் காணப்படும் உருத்திரன் சிவனின் பிற்கால வடிவமாகும். சமக்கிருதத்தில் உருத்திரன் என்பதற்குச் சிவப்பு என்று பொருள். இது சிவப்பு என்னும் பொருள் தரும் சிவன் பெயராயிருக்கின்றது. உருத்திரன் இருக்கு வேதத்தில் உயர்ந்த கடவுளாகக் கொள்ளப்படவில்லை. இருக்கு வேதத்தில் உருத் திரன் மீது மூன்று பதிகங்கள் மாத்திரம் உள்ளன. உருத்திரனும் அக்கினியும் ஒருவராகக் கூறப்பட்டுள்ளார்கள். உடையும் அணியும் அரப்பா, மொகஞ்சதரோ என்னும் இடங்களிற் காணப்பட்ட பெண் வடிவங்கள் பலவகை அணிகலன்களை அணிந்திருக்கின்றன. அவை பெரும்பாலும் நிர்வாணமாகக் காணப்படுகின்றன. சிலவற்றின் உடை முழங்காலுக்கு மேல் வரையும் இருக்கின்றது. அரையிற் கட்டி யிருக்கும் ஆடைக்கு மேல் பட்டிகை அணியப்பட்டுள்ளது. அது நூலில் மணிகளைக் கோத்துச் செய்யப்பட்டது போல இருக்கின்றது. ஆண் வடிவங்களும் பெண் வடிவங்களும் விசிறி போன்ற ஒருவகைத் தலை அணியை அணிந்திருக்கின்றன. இது துணியினால் செய்யப்பட்டதாக லாம். அவ் வடிவங்கள் அணிந்திருக்கும் இன்னொரு வகைக் கழுத்தணி பல வகைக் கழுத்தணிகளை ஒன்றின் மேல் ஒன்றாக வைத்துப் பொருத் திச் செய்யப்பட்டது. இது போன்றதை இன்று ஆப்பிரிக்காவின் சில பகுதியிலும் கிழக்கு இந்தியாவிலுமுள்ள மக்கள் அணிகிறார்கள். மாலை, கைவளை முதலியவைகளையும் பெண்கள் அணிந்தார்கள். முழங்காலுக் குக் கீழ்வரையும் ஆடை உடுத்திய ஒரு வடிவம் காணப்பட்டது. இன் னொரு வடிவம் நீண்ட உடை உடுத்தி அரையில் நாடாக் கட்டியிருக் கிறது. சில வடிவங்கள் முடியில் சீப்பு அணிந்திருக்கின்றன. ஒரு ஆடவனின் உடை, அரையில் ஒன்றும் அதன்மேல் பட்டி போல் கட்டும் ஒடுங்கிய இன்னொன்றுமா யுள்ளது. சிலர் வலத்தோளின் மேலாக வந்து இடத் தோளின் கீழ் முடிவடையும்படி போர்வையை அணிந்தார்கள். அவர்கள் குறுகிய தாடியும் கன்ன மீசையும் வளர்த் திருந்தார்கள். உலோகங்களில் செய்த பொருள்கள் செல்வர்களின் அணிகலன்கள் வெள்ளியிலும், தங்கத்திலும், நிறக் கற்கள், தந்தம் முதலியவைகளால் செய்யப்பட்டன. வறியவர்கள் ஓடுகளினால் செய்ததும், களிமண்ணிற் செய்து சூளையிடப்பட்டனவு மாகிய அணிகளை அணிந்தார்கள். பொன், வெள்ளி என்பவைகளை மாத்திரமல்ல; செம்பு, தகரம், ஈயம் முதலிய உலோகங்களையும் சிந்துவெளி மக்கள் அறிந்திருந்தார்கள். செம்பினால் போர்க் கருவிகளும், பிற கருவிகளும், சமைக்கும் ஏனங் களும் செய்யப்பட்டன. இவை எல்லாம் உலோகத்தை சுத்தியால் அடித்துச் செய்யப்பட்டன. மயிர் மழிக்கும் கத்தி, உளி, அரிவாள், கை வளை, ஏனங்கள், மணிகள், பொத்தான் போன்ற பொருள்கள் செய்வ தற்கு உலோகங்கள் பயன்படுத்தப்பட்டன. சிந்துவெளி மக்களின் சிற்பத் திறன் சிந்துவெளி அழிபாடுகளில் ஒருவகைச் சுண்ணாம்புக் கல்லில் வெட்டப்பட்ட பல முத்திரைகள் கிடைத்துள்ளன. அவைகளில் மாடு, எருமை, யானை, ஆடு, காண்டாமிருகம், மான், நாய், அணில், குரங்கு போன்ற விலங்குகளின் வடிவங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ் வடிவங்கள் மிகத் திறமையுடைய கைவேலைப்பாடுகளாகக் காணப்படு கின்றன. மொகஞ்சதரோ மக்கள் பயன்படுத்திய மட்பாண்டங்கள் பல வடிவின. பொதுவான சூளையிட்ட மட்பாண்டங்க ளல்லாமல், நிறங் கொடுக்கப்பட்டதுவும் காணப்படுகின்றன. அவைகள்மீது பலவகை யான கொடிகள், விலங்குகள், பறவைகள், மரஞ்செடிகளின் வடிவங்கள் எழுதப்பட்டுள்ளன. அக் காலம் வழங்கிய கட்டில், முக்காலி போன்ற வீட்டுப்பொருள்களும், பெண்கள் அணிந்த பல வகை அணிகலன்களும், மக்கள் பயன்படுத்திய சமாதான கால, யுத்த கால ஆயுதங்களும், சிறுவரின் விளையாட்டுப் பொருள்களும், மண்பாவைகளும், வீடுகளும், அக்கால மக்களின் கைவேலைத் திறமையை விளக்குவன. சிந்துவெளி மக்கள் அறிந்திருந்த விலங்குகள் அக்கால மக்கள் அறிந்திருந்த விலங்குகள் இமில் உள்ள மாடு, எருமை, யானை, ஒட்டகம், நாய், கழுதை, ஆடு, மலைஆடு, குரங்கு, புலி, காண்டாமிருகம், மான், பன்றி, முதலை முதலியன. கீரி, பாம்பு, அணில், கிளி, கோழி, மயில், முயல் முதலியனவும் அறியப்பட்டிருந்தன. மக்களின் வாழ்க்கையும் பழக்கவழக்கங்களும் மக்கள் நன்கு அமைக்கப்பட்ட நகரில் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வாழ்ந்தார்கள். நகர் வட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு வட்டங்களுக்கும் காவல் காக்கும் இடங்கள் இருந்தன. வணிகர் கூட்டங்கள் பண்டங்களைப் பொதி மாடுகளில் ஏற்றிக் கொண்டு சென்றனர். மொகஞ்சதரோவில் பல நாட்டு வணிகர் தங்கி யிருந்தார்கள். அதனாலேயே அங்குக் காணப்பட்ட மனித மண்டை ஓடுகள் பலவகையாக வுள்ளன. கோதுமையும், வாளியும் அதிகம் விளைவிக்கப்பட்டன. நெல்லும் விளைவிக்கப்பட்டது. தானிய வகைகளையும், மீன், மாடு, பன்றி, ஆடு முதலியவைகளின் இறைச்சிகளையும் மக்கள் உண்டார்கள். முதலை, ஆமை என்பவைகளின் இறைச்சிகளும், மீன் கருவாடும் பயன்படுத்தப் பட்டன. பெண்கள் கண்ணுக்கு மை தீட்டினார்கள். முகத்துக்கு ஒருவகை பொடியைத் தடவினார்கள். தந்தத்தினாற் செய்யப்பட்ட சீப்புகளும், பிற சீப்புகளும் பயன்படுத்தப்பட்டன. போக்குவரத்துக்குப் பெரும்பாலும் மாட்டு வண்டிகள் பயன்படுத்தப்பட்டன. ஓடுகளாற் செய்யப்பட்டவை, களிமண்ணாற் செய்து சூளையிடப்பட்டவை, தந்தத்தாற் செய்யப் பட்டவை போன்ற பலவகை விளையாட்டுப் பொருள்களைச் சிறுவர் வைத்து விளையாடினர். மக்களின் பொழுதுபோக்கு, வேட்டையாடுதல், மாட்டுச் சண்டை, கோழிச் சண்டை போல்வன. பண்டங்களை நிறுப்ப தற்குத் தராசுகள் பயன்படுத்தப்பட்டன. நாட்டியம், இசை முதலிய கலைகளும் மக்களால் விரும்பப்பட்டன. நரம்பு கட்டிய யாழ், மேளம், சல்லரி, கொம்பு போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டன. மொகஞ்சதரோவில் குருமார், அரசர், மந்திரவாதிகள், வணிகர், படகோட்டிகள், மீன்பிடிகாரர், வீட்டு வேலைக்காரர், தண்ணீர் எடுப்போர், சங்கறுப்போர், குயவர், பொன், வெள்ளி, செம்பு முதலிய உலோகங்களில் வேலை செய்யும் கம்மாளர், கொத்தர், செங்கற் சூளை யிடுவோர், முத்திரைகள் வெட்டுவோர் முதலியவர்கள் வாழ்ந்தார்கள். மொழி சிந்துவெளி மக்கள் ஒட்டுச் சொற்கள் உடைய ஒரு வகை மொழியை வழங்கினார்கள். அம் மொழி சுமேரிய மொழிக்கு இனமுடை யது என்று கருதப்பட்டது. மொகஞ்சதரோ அரப்பா முதலிய இடங் களிற் கிடைத்த முத்திரைகளில் காணப்பட்ட எழுத்துகளை ஒத்தவை பசிபிக் கடலில் உள்ள ஈஸ்டர் தீவுகள், பாபிலோன், சுமேரியா, இலிபியா, கிரேத்தா, சின்ன ஆசியா முதலிய இடங்களிலும் காணப்பட்டன. இவ் வெழுத்துகளை நன்கு ஆராய்ந்த சேர் யோன் மார்சல், பேராசிரியர் லாங்டன் என்போர் ஈஸ்டர் தீவுகள் முதல் இந்தியா, சுமேரியா, சின்ன ஆசியா, கிரேத்தா முதலிய நாடுகளில் வழங்கிய எழுத்துகள் எல்லாம் ஒரே பொது உற்பத்திக்குரியன வென்றும், அவை, அவைகளை வழங்கிய மக்களின் கருத்துகளுக்கு அமையச் சிற்சில மாறுபாடுகளை அடைந்துள் ளன என்றும் கூறியுள்ளார்கள். பசிபிக் கடல் முதல், மேற்கு ஆசியா எகிப்து கிரேத்தா முதலிய நாடுகளில் வழங்கிய பழைய எழுத்துகள் ஒரே தொடக்கத்துக் குரியனவாயின், அம் மொழிகளும் ஒரே தொடக்கத்துக் குரியன என்பதில் சிறிதும் ஐயப்பாடு இல்லை. பசிபிக் தீவுகள், சிந்துவெளி, சுமேரியா முதலிய இடங்களில் காணப்பட்ட எழுத்துகள் பல ஒரே வகையாக உள்ளன. இதனால் சிந்து வெளியில் வழங்கிய எழுத்துகளே அவ் விடங்களிலும் வழங்கினவென் றும், சிந்துவெளி எழுத்துகளை ஒலிமுறையாக வாசிக்கவும், அவ் வொலி முறையான உச்சரிப்புகளின் பொருள்களைப் பசிபிக் தீவுகள் முதல் மேற்கு ஆசியா வரையிலுள்ள மக்கள் நன்கு அறிந்திருந்தார்கள் என்றும் ஆராய்ச்சிவல்லார் கருதுகின்றனர். நீண்ட காலம் பிராமி எழுத்துகளின் தொடக்கம் அறியப்படா திருந்தது. பிராமி எழுத்துகளை ஒத்த எழுத்துகளே பினீசியரின் எழுத் துகள். இந்திய மக்கள் எழுத்தெழுதும் முறையை அறியாதிருந்தார்கள் என்றும், பின்பு அவர்கள் பினீசிய வணிகரிடமிருந்து கி.மு. 800 வரையில் எழுத்தெழுதும் முறையை அறிந்து கொண்டார்கள் என்றும் ஆராய்ச்சி யாளர் எழுதுவாராயினர். சிந்துவெளிப் புதைபொருள் ஆராய்ச்சிக்குப் பின், பிராமி எழுத்துகள் சிந்துவெளி எழுத்துகளினின்றுந் தோன்றி யவையென உறுதிப்படுவதாயிற்று. பேராசிரியர் லாங்டன் இக் கருத்தை நாட்டியுள்ளார். பினீசிய எழுத்துகள் பிராமி எழுத்துகளினின்றும் பிறந்தன வென்றும், அவை பினீசிய வணிகரால் இந்திய நாட்டினின்றும் கொண்டுபோகப்பட்டதென்றும் துணியப்படுகின்றன. பினீசிய எழுத்து களினின்றும் கிரேக்க எழுத்துகளும், கிரேக்க எழுத்துகளி லிருந்து உரோமன் எழுத்துகளும், உரோமன் எழுத்துகளிலிருந்து இன்றைய ஐரோப்பிய மொழிகளின் எழுத்துகளும் தோன்றின. சிந்துவெளியில் வழங்கிய எழுத்துகள் இன்று நாம் வழங்கும் எழுத்துகள் போன்றனவல்ல. ஒரு சொல்லையோ கருத்தையோ குறிப்ப தற்கு ஒரு குறியீடு வழங்கிற்று. இவ் வகை எழுத்துகளே சுமேரியாவிலும் வழங்கின. சீனருடைய எழுத்துகள் இவ் வகையினவே. சிந்துவெளி முத்திரைகளில் வெட்டப்பட்டுள்ள எழுத்துகளை ஹெரஸ் பாதிரியார் என்னும் ஸ்பானிய தேசத்தவர் வாசித்துள்ளார். அவ் வாசிப்புகளிற் காணப்படும் சொற்கள் பெரும்பாலும் இன்றைய தமிழிற் காணப்படு வன. இதனால் இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் வழங்கிய தமிழ் இன்றைய தமிழிலிருந்து அதிகம் வேறுபட்டிருந்ததென்று கூற முடியவில்லை. ஈஸ்டர் தீவுகள் முதல் மேற்கு ஆசியா, கிரேத்தாத் தீவுகள் வரையிலுள்ள நாடுகளில் வழங்கிய பழைய எழுத்துகள் ஒரே வகையாகக் காணப்பட்டாலும், மொகஞ்சதரோ எழுத்துக்களின் ஒலி முறையான வாசிப்பு தமிழாயிருந்தாலும், பெறப்படுவது என்ன? முற்காலத்தில் மிக மிக அகன்ற நிலப்பரப்பில் ஒரே மொழியும், ஒரே எழுத்தும், ஒரே கொள்கைகளும் உடைய மக்கள் வாழ்ந்தார்கள் என்பது அன்றோ? பிராமி ஆரியருடைய எழுத்து என்றும், அதைப் பார்த்தே தமிழர் எழுத்துகளை ஆக்கிக்கொண்டார்கள் என்றும் ஆரியக் கட்சியினர் வாதம் புரிந்து வந்தனர். இன்றைய ஆராய்ச்சியில், ஆரியர் எழுத்தெழுதும் முறையை அறியாதிருந்தார்கள்; அவர்களுக்கு எழுத்தெழுதக் கற்பித்த வர்கள் தமிழர்களே என்னும் உண்மைகள் நாட்டப்பட்டுள்ளன. ஆரிய மொழியிற் காணப்படும் சில சிறந்த நூல்களும் அவர்களுக்கு அறிவு கொளுத்தும்படி தமிழ் அறிஞரால் செய்து உதவப்பட்டனவே. பிற்காலத் தில் படையெடுப்பினால் வெற்றியாளராக வந்த அராபியர் எப்படி இந்திய நாட்டுக்கு அந்நியர் எனக் கருதப்பட்டு வந்தார்களோ. அவ்வாறே ஆரியரும் அந்நியரெனவே கருதப்பட்டு வருவாராயினர். பிற்கால நிகண்டு நூல்களிலும் ஆரியருக்குப் பெயராக மிலேச்சர் என்னும் பெயர் வழங்கப்பட்டுள்ளது. இன்றும் ஆரியர் தமிழர் என்னும் கட்சியினருக் கிடையில், இந்து முசுலிம் மனப்பான்மை இருந்து வருதலை நாம் காணலாம். சிந்துவெளி நாகரிகம் தமிழருடையதே அரப்பா மொகஞ்சதரோ நாகரிகம் தமிழருடையதே என்பதை முதற்கண் நாம் அறிந்து கொள்ளுதல் வேண்டும். அதற்குச் சான்றாக ஆராய்ச்சியாளர் கூறியுள்ளவற்றை இங்குத் தருகின்றோம். ஆன்றோர் கூற்றுகளால் அப் பழைய நகரங்களின் நாகரிகம் தமிழருடையதென்று சிறுவர்க்கும் எளிதில் விளங்கும். “சிந்துவெளியில் வாழ்ந்த மக்கள் ஆரியருக்கு முற்பட்டோர். ஆகவே அவர்களுடைய மொழியும் ஆரியருக்கு முற்பட்டதாதல் வேண்டும். மூன்று காரணங்களைக் கொண்டு நாம் இவ்வாறு கருதலாம். (1) ஆரியர் வருகைக்கு முன் வடஇந்தியா முழுமையிலும் திராவிட மக்களே வாழ்ந்தார்கள். இச் சமவெளியின் நாகரிகத்தை ஒத்த ஓர் நாகரிகத்தை அக் காலத்தில் அடைந்திருக்கக் கூடியவர்கள் திராவிடர் களே யாவர். (2) கிர்தார் மலைத்தொடருக்கு அப்புறத்தில், சிந்துவெளிக்கு அண்மையிலே பலுச்சிஸ்தானத்தில் வாழும் பிராகூயர் இன்றுவரையும் திராவிட மொழி தொடர்பான மொழியையே வழங்குகின்றனர். இது ஆரியர் வருகைக்கு முன் அங்குத் திராவிட மொழி வழங்கிய தென்பதற்கு அறிகுறி ஆகலாம். (3) திராவிடம் ஒட்டுச் சொற்களை யுடையதாதலால், அம் மொழியை இணைக்கும் மொழிகள், சிந்துவெளி மக்கள் வழங்கிய மொழியும் மேற்கு ஆசியாவிலே சுமேரிய மக்கள் வழங்கிய மொழியுமா கும் என்று கொள்ளுதல் பிழையாகாது” - சர் ஜான் மார்சல்.1 “திராவிட மொழியை வழங்கும் மக்களே பலுச்சிஸ்தானம், வட இந்தியா, வங்காளம் முதலிய இடங்களில் வாழ்ந்தார்கள் என்பது மறுக் கப்படாத உண்மையாகக் கொள்ளப்படுகின்றது.” - எஸ்.கே. சட்டேர்ஜி2 “திராவிட மக்களைத் தொடர்பாகக் கிரேத்தா (Crete) இலைசியா முதல் சிந்துவெளி தென்னிந்தியா வரையில் நாகரிக வகை அளவிலாது நாம் தொடர்புபடுத்திக் காணலாம். இம் மக்களின் நாகரிகம் உலோக காலத்தொடக்கத்திலும் பசிபிக் தீவுகள் வரையில் பரவியிருந்தது. தென் னமெரிக்காவிலுள்ள பீரு வரையிற் சென்றிருந்ததெனவும் கூறலாம்.” - அர்.தி. பனோசி3 “ஆரியர் தென்னிந்தியாவில் தமது மொழியை நாட்ட முடியா திருந்தது வியப்புக்குரியது. அவர்கள் வட இந்தியாவில் தமது எண் ணத்தை நிறைவேற்றினார்கள். ஆரியர் வருவதன் முன் திராவிட மொழி வட இந்தியாவில் வழங்கியதென்பதில் ஐயம் இன்று. இது, பலுச்சிஸ் தானத்தில் வழங்கும் பிராகூய் மொழியில் பல திராவிடச் சொற்கள் காணப்படுவதைக் கொண்டு நன்கு துணியப்படும். அச் சொற்கள் திராவிடச் சொற்களாயிருப்பது மாத்திரமல்லாமல், அச் சொற்களுக் குரிய கருத்தையும் உடையனவாயிருக்கின்றன. சமக்கிருதத்தில் பல திராவிடச் சொற்கள் காணப்படுகின்றன என்பதையும் ஆராய்ச்சியாளர் ஒப்புக் கொள்கின்றனர். இதனால் கொள்ளப்படும் முடிவு, வடநாட்டில் ஆரியர் வருகைக்கு முன் திராவிட மொழி வழங்கியது என்பதே யாகும். இந்திய நாட்டில் வழங்கும் மற்றைய மொழிகளை ஆராயும்போதும் இம் முடிவே உண்டாகின்றது. ஆகவே, வடஇந்தியாவில் திராவிட மொழி வழங்கிற்று என்பதைக் குறித்துச் சிறிதும் ஐயப்பட வேண்டியதில்லை” - எம்.டி. பண்டார்க்கர்4 “புதிய கற்காலத்தில், விந்திய மலையை அடுத்த இடங்களல்லாத இந்தியா முழுமையிலும் திராவிட மொழியே வழங்கிற்று. சமக்கிருத பிராகிருதச் சொற்களைப் பெற்றமையால் பழைய மொழியே வட இந்தியாவில் பல பெயர்களைப் பெற்று வழங்குகின்றது. வட இந்திய மக்கள் திராவிடத்துக்கு இனமான மொழிகளையே வழங்கி வந்தார்கள் என நான் துணிகின்றேன். மொழிகளைச் சொல்லால் மாத்திரமன்று; அமைப்பினால் அறிய வேண்டும்.” - பி.தி. சீனிவாச ஐயங்கார்1 “இன்று சமக்கிருத இனத்தைச் சேர்ந்தனவென்று கருதப்படும் வட இந்திய மொழிகள், இலக்கண அமைப்பில் திராவிட மொழிகளை ஒத்துள்ளன. வட இந்திய தென்னிந்திய மொழிகளிலுள்ள வசனங்களைச் சொல்லுக்குச் சொல் அமைத்து ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு இலகு வில் மொழி பெயர்க்கலாம். இதனால் தமிழுக்கு இனமான மொழியைப் பேசிய மக்களே இந்தியா முழுமையிலும் வாழ்ந்த மக்களாவர் என விளங்குகின்றது.” - பி.தி. சீனிவாச ஐயங்கார் “ஆரியர் வருகைக்கு முன் திராவிடர் சிந்துவெளியில் வாழ்ந் தார்கள் என்பதற்கு நியாயமான காரணங்கள் புலப்படுகின்றன. பலுச் சிஸ்தானத்தில் பிராகூயர் வழங்கும் மொழி திராவிடத்துக்கு இனமா யிருப்பதால் இது நன்கு அறியப்படும். இது மற்றச் சான்றுகளை விடச் சிறந்தது. ஹைதராபாத்து, சென்னை முதலிய இடங்களில் கிளறிக் கண்டு பிடிக்கப்பட்ட சமாதிகளிற் காணப்பட்ட பொருள்களில் மொகஞ் சதரோ, அரப்பா முதலிய இடங்களில் காணப்பட்டவைகளை ஒத்த எழுத்துகள் காணப்பட்டன. இவ் விடங்கள் திராவிட மொழி வழக்குக் குரிய நாடுகளாகும். திராவிடர் சிந்துவில் கி.மு. 1100க்கு முன் வாழ்ந் தார்கள். அவர்களிடமிருந்தே சிந்து நாகரிகம் ஆரியர்2 கைக்கு மாறிற்று. “ஆரியர் மத்திய ஆசியாவிலே காட்டு வாழ்க்கையினராயிருந்த காலத்தில், இந்திய நாட்டில் வாழ்ந்த திராவிடர் செமித்தியரை ஒத்த நாகரிக முடையவர்களாயிருந்தனர். சாலமன், ஹிரம் என்னும் அரசர் இம் மக்களோடு வியாபாரத் தொடர்பு வைத்திருந்ததோடு, திராவிடச் சொற்களையும் தமது மொழிகளில் சேர்த்து வழங்கினர்” - ஜி.ஆர். ஹன்டர். “சர். ஜான் மார்சல் கூறியதுபோலவே பழம்பொருள் ஆராய்ச்சி யாளரும் முடிவு செய்துள்ளார்கள். ஹெரஸ் பாதிரியார், பம்பாய் செயின்ட் சேவியர் கல்லூரியில் ஆராய்ச்சிப் புலமை நடத்துகின்றார். அவர் சிந்துவெளிப் பழைய நகரங்களிற் கிடைத்த பட்டையங்களை வாசித்துச் சிந்துவெளி நாகரிகம் தமிழருடையது என்று நாட்டியுள்ளார். இவ்வாறு நாட்டிய பெருமை அவருக்கே உரியது. சிந்துவெளியில் மாத்திரமன்று. தெற்கிலும் திராவிடர் வாழ்ந்தனர். வடக்கே திராவிட மக்கள் உன்னத நாகரிகமுடையவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது வால்கா ஆற்றங்கரையை அடுத்த நாடுகளில் வாழ்ந்து கொண் டிருந்த மக்கள், அவர்களைத் தமது மிருக பலத்தால் வென்று அவர் களின் நாகரிக முறைகளைப் பின்பற்றினார்கள் என்றும் அவர் கூறியுள் ளார். பிற்காலங்களில் ஆரியர் நாகரிகம் என ஒன்று எழுந்தது. அது ஆரியர் தமிழர் நாகரிகங்கள் கலந்த அமைப்புடையது.” - சர்க்காரி1 “1931இல் சர். ஜான் மார்சலின் பெரிய நூல் வெளிவந்தது. அதில் மொகஞ்சதரோவில் வாழ்ந்தவர்கள் ஆரியருக்கு முற்பட்டவர்கள் என்றும், பிற்காலங்களில் திராவிடர் எனப்பட்ட மக்கள் இனத்தை அவர்கள் சேர்ந்தவர்கள் என்றும் உறுதியாக நாட்டப்பட்டுள்ளது. இதைப் பற்றிய வாதங்கள் இன்னும் ஒழியவில்லை. இந்தியாவிலுள்ள சிலர் இக் கருத்தை எதிர்த்தார்கள். அவர்கள் மறுத்தமைக்கு முதன்மை யான காரணம், மொகஞ்சதரோ நாகரிகம் போன்ற உன்னதமானது, திராவிடருடையதாயிருக்க முடியாதெனக் கருதியதாகும். ஆகவே அது ஆரியருடையது என்று அவர்கள் சாதித்தார்கள். மொகஞ்சதரோவிற் காணப்பட்ட இலிங்கங்கள், அங்கு வாழ்ந்த மக்கள் திராவிடர் என் பதைக் காட்டவில்லை என்றும், இவ் வணக்கம் இருக்கு வேத காலத்தில் அரும்பியிருந்து மொகஞ்சதரோ காலத்தில் முற்றாக வளர்ச்சியடைந் துள்ளது என்றும், ஆகவே மொகஞ்சதரோவில் வாழ்ந்தவர்கள் ஆரியர் என்றும் மொகஞ்சதரோ மக்கள் ஆரியர் இந்திய நாட்டில் வந்து குடியேறியதற்குப் பல நூற்றாண்டுகளின் பின் வந்தவர்களாவர் என்றும் கூறுவாராயினர். இதுவரையும் மொகஞ்சதரோ எழுத்துகளைப் பற்றி வந்த ஆராய்ச்சிகளுள் முதன்மையுடையது ஜி. ஆர். ஹன்டர் செய் துள்ளதேயாகும். அவர் மொகஞ்சதரோ அரப்பா என்னும் நகரங்கள், திராவிடரால் கட்டப்பட்டவை என்றே கூறியுள்ளார். இதனால் மொகஞ் சதரோ நாகரிக காலத்துக்குப் பல ஆயிரம் ஆண்டுகளின் முன், ஆரியர் இந்தியாவிற் குடியேறியிருந்தார்கள் என்று ஒரு காலத்தில் நாட்டமுடி யுமா யிருப்பினும் அந் நாகரிகம் ஆரியருடையதன்று என்றே உறுதிப் படும். “திராவிடர் தென்னிந்தியாவுக் குரியவர்கள் என்று நாம் நினைத் துப் பழகி விட்டோம். அதனால் அவர்கள் வடஇந்தியாவில் வாழ்ந் தார்கள் என்று கூறி, நாம் நம்பச் செய்தல் கடினமாயுள்ளது. திரா விடர்கள் தாமும், தம் முன்னோர் வட இந்தியாவில் பெருமை பெற்று வாழ்ந்தார்கள் என்று கூறவில்லை. இருக்கு வேதம் ஆரியருக்கும் தாசுக்களுக்கும் நேர்ந்த போர்களைப்பற்றிக் கூறுகின்றது. இதிகாச காலத்தில் பல திராவிடக் கூட்டத்தினர் வட இந்தியாவில் வாழ்ந்தார்கள். காந்தாரர், மச்சர், நாகர், கருடர், மகிஷர், பலிகர் முதலிய சாதியினரைக் கொண்டு வட இந்தியரில் அதிக திராவிட இரத்தம் ஓடிக்கொண் டிருந்தது என்று அறிகின்றோம். வடக்கே வழங்கும் பிராகூய், ஒரியா முதலிய மொழிகள் ஒரு காலத்தில் வட இந்தியா முழுமையும் திராவிடர் வாழ்ந்தார்கள் என்பதைக் காட்டும். திராவிடர் இந்திய நாட்டிலேயே வாழ்ந்தார்கள்.” - ஹெரஸ் பாதிரியார்.1 மொகஞ்சதரோ மக்கள் ஆரியரா? திராவிடரா? (ஹெரஸ் பாதிரியார் - Rev. H. Heras. S.J.) மொகஞ்சதரோ நாகரிகம் திராவிடருடையதன்று என ஆரியப் பற்றுடையார் பலர் இடையிடையே எழுதி வருகின்றனர் என்றும், அவர்களுடைய ஆராய்ச்சிகள் ஆராய்ச்சி அறிஞரால் இதுவரையில் ஒப்புக்கொள்ளப்படவில்லை எனவும் பிறிதோரிடத்திற் காட்டியுள் ளோம். அவ்வாறு எழுதியவர்களுள் டாக்டர் லக்சுமன் சரூப் (Dr. Laxman Sarup) என்பார் ஒருவராவர். அவர் மொகஞ்சதரோ நாகரிகம் ஆரிய ருடையது எனக் கூறியதை மறுத்து ஹெரஸ் பாதிரியார்2 ‘இந்திய வரலாற்று இதழில்’, எழுதி யிருப்பது மிக இன்பம் விளைப்பதா யிருக் கின்றது. அதன் சுருக்கத்தை ஈண்டுத் தருகின்றோம். பேராசிரியர் ஆர்.டி. பானர்ஜியும், சர். ஜான் மார்சலும் மற்றும் இந்திய ஐரோப்பிய ஆராய்ச்சியாளரும் காட்டியவைகளுக்கு மாறான கொள்கை ஒன்றை நிறுத்துவது சரூப்புக்கு வில்லங்கமாகும். ஆனால் சரூப்பின் உண்மை யல்லாத கருத்துகள், அவ்வாறு செய்தல் எளிதுபோற் காணப்படலாம். ஆரியர் இந்திய நாட்டை அடைந்தபோது அங்குத் தாசுக்கள் அல்லது தாசர் என்று அழைக்கப்பட்ட ஒரு சாதியார் வாழ்ந்தார்கள் என்றும், மொகஞ்சதரோ நாகரிகம் கிராம நாகரிகமல்லாத நகர நாகரிக மென்றும் சரூப் சொல்லுகின்றார். பிராமண காலத்துக்கு முன் ஆரியரிடையே நகர நாகரிகம் இல்லை எனவும், அவர் புகல்கின்றார். ஆகவே, மொகஞ்சதரோ நாகரிகம் பிற்காலத்த தென்பது அவர் முடிவு. இருக்கு வேத காலத்தில் ஆரியருடைய நாகரிகம் கிராம நாகரிக மாக இருந்ததென்பது உண்மையே. இருக்கு வேத இருடிகள் தாசரின் புரங்களைப் பற்றிக் கூறியுள்ளார்கள். அவை கிராம நாகரிகத்தினிடையே காணப்பட்ட நகர நாகரிகங்களாகும். ஆகவே நாம் இருக்கு வேத காலத் தில் ஆரியரிடையே நகர நாகரிகம் உண்டாகவில்லை எனத் துணிந்து கூறலாம். நகர நாகரிகமுடைய தாசர்களிடமிருந்தே ஆரியரும் நாகரிகத் தைக் கற்று உயர்வடைந்தார்கள். சரூப் கொண்டு வந்த நியாயங்களே சிந்துவெளி நாகரிகம் தாசுக்களுடைய தென்று நன்கு காட்டுகின்றன. வாணிகம் பயிர்ச் செய்கைக்குப் பிற்பட்ட வளர்ச்சி எனச் சரூப்பு கூறியது உண்மையே. இதனால் மொகஞ்சதரோ நாகரிகம் இருக்கு வேத காலத்துக்குப் பிந்தியதெனச் சரூப் கருதுகின்றார். இருக்கு வேத காலத் தில் ஆரியர் பயிரிடுவோராக இருந்தனர். இருக்கு வேதத்தில் வாணிகத் தைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. வணிகராகிய பாணியர் பெருஞ் செல்வத் தைத் தொகுத்து வைத்திருந்தார்கள் என்றும், அவர்கள் ஆரியரின் ஒளியுடைய தேவரை வணங்காதும், இருடிகளுக்குத் தக்கணை கொடாது மிருந்தார்கள் என்றும் இருக்கு வேதம் கூறுகின்றது. பாணியர் (Panis) என்பார் தாசுக்களில் ஒரு பிரிவினரென்று எல்லா ஆராய்ச்சி யாளரும் கூறியுள்ளார்கள். ஆரியர் வருகைக்கு முன் இந்திய வாணிகம் ஓங்கியிருந்ததென்பதை எல்லா ஆராய்ச்சியாளரும் ஒப்புக்கொள்கின்ற னர். ஹேவிட் (G.F. Hewitt) என்னும் ஆசிரியர், ஆரியருக்கு முற்பட்ட திராவிடரின் நாகரிகத்தைப்பற்றி மிக நியாயமான முறையிற் கூறியுள் ளார். அவர் கூறியிருப்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. அது பின்வருமாறு: “அதிக வியாபாரப் பண்டங்களை இந்தியா வெளிநாட்டுக்கு அனுப்பும் படி செய்தவர்கள் ஆரியர் அல்லர் என்பதற்கேற்ற ஆதாரங்கள் பல காணப்படுகின்றன. திராவிடர், ஆரியர் வருகைக்கு முன்னரே உள்நாட்டு வெளிநாட்டு நாகரிகத்தை நாட்டியுள்ளார்கள். இவ் வகை வாணிகத்தை உயர்ந்த நாகரிகமுடைய மக்களே தொடங்கியிருக்க முடியும். மாபாரதத் தில் கூறப்பட்டுள்ளவை போன்ற பல பட்டினங்கள் இருந்தனவாதல் வேண்டும். வணிகர் உலோக வகைகள், காடுபடுபொருள்கள், விளை பொருள்கள் கைத்தொழிற் பண்டங்கள் முதலிய பண்டங்களில் வாணிகம் நடத்தினர். கொத்தரும், தச்சரும் இல்லாது பட்டினங்களைக் கட்டமுடியாது. நுண்ணிய மசிலின் ஆடைகளும், முரடான துணிகளும் அக் காலத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டன. இவைகளை நெய்யும் நெசவாளர் பட்டினங்களில் கூட்டமாக வாழ்ந்திருக்க வேண்டும். இரும்பினால் ஈட்டி, மரந் தறிக்கும் கோடரி, பயிரிடுவதற்குப் பயன்படும் மண் வெட்டி, கொழு, தச்சு வேலைக்குரிய ஆயுதங்கள் முதலியன செய்யப்பட்டன. பலவகை அணிகலன்களைச் செய்யும் பொற்கொல்லரும் நகரில் வாழ்ந்திருக்க வேண்டும். பலவகை அணி கலன்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டன. துணிகளுக்குச் சாய மூட்டுவோரும் அங்கு வாழ்ந்தனர். அவர்கள் தாவரப் பொருள்களி லிருந்து சாயம் பெறும் முறையை அறிந்திருந்தார்கள். பானை, சட்டி முதலிய மட்பாண்டங்களைச் செய்வோரும், பலவகைப் பண்டங்களைக் கொண்டு விற்கும் வணிகரும் இருந்தார்கள். இத் தொழில்களில் ஒன்றை யும் ஆரியர் ஏற்று நடத்தவில்லை. “உலோகங்களை அளிக்கும் சுரங்கங்கள் அயல் நாட்டு வாணி கரின் கவர்ச்சிக் குரியனவாயிருந்தன. உலோகங்களை அரித்தெடுக்கும் சுரங்க வேலை என்பது பூமிக்கு மேல் உள்ள கற்படைகளை மேலால் சுரண்டுவதன்று; நிலத்தைக் குடைந்து ஆழ அகழ்வது. இத் தொழிலுக்கு மிகுந்த திறமையும், அரித்தெடுக்கும் மண்ணோடு கலந்துள்ள உலோகத்தை மண்ணிலிருந்து பிரித்தெடுக்கும் அறிவும் வேண்டும்.” “பயிர்த் தொழில் வளர்ச்சியடையாதிருந்தால் பெருந்தொகை வணிகர், தொழிலாளர், சுரங்க வேலையாளர், காடுபடு பொருள்களைச் சேகரிப்போர் முதலியோர் இருக்க முடியாது. மிளகு, எண்ணெய், நெய் முதலியன வெளி நாடுகளுக்கு அனுப்பப்பட்டன.” “இருக்கு வேத காலத்தில் வீரர் தேர்களில் இருந்து போர் செய் தார்கள். தேர்கள் செய்வதன் முன் வண்டிகள் செய்ய மக்கள் அறிந்திருக்க வேண்டும். மிகப் பழைய சாதகக் கதைகளுள் இரண்டனுள் காசியி லிருந்து ஐந்நூறு வண்டிகள் வியாபாரப் பண்டங்களை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருந்தன என்று கூறப்பட்டுள்ளது. இன்னும் இவை போன்ற பல கதைகள் காணப்படுகின்றன. இக் கதைகள் எழுதுவதன் நீண்ட காலத்துக்கு முன், இவ் வகைப் போக்குவரத்துகள் இருந்தனவாதல் வேண்டும். ஆகவே ஆரியர் வருவதற்கு முன் இந்தியாவில் வாழ்ந்த திராவிடர் வாணிகராக இருந்தார்கள். இதனால் மொகஞ் சதரோ நாகரிகம் ஆரியருக்கு முற்பட்டதென்று துணியப்படுகின்றது. வேத கால ஆரியரின் சந்ததியார் அம் மக்களிடமிருந்து வாணிக முறைகளைப் பயின்றார்கள்.” சமயம் மொகஞ்சதரோச் சமயம் இருக்கு வேத காலத்தினும் பார்க்க வேத காலத்துக்கு அண்மையிலுள்ளது என்று சரூப் கூறுகின்றார். இதனை உறுதிப்படுத்துவதற்கு அவர் சிவனைப்பற்றி எடுத்துக் கொண்டார். சிவனைப்பற்றிய அடையாளங்கள் மொகஞ்சதரோவிற் காணப்படுகின்றன. இருக்கு வேத காலத்தில் சிவன் சிறு தெய்வம் எனக் காட்டிவிட்டு, அத் தெய்வம் எப்படிப் புராண காலம் வரையில் படிப்படி யாக பெரிய தெய்வமாக வளர்ச்சியடைந்துள்ளதெனக் காட்டுகின்றார். இருக்கு வேத காலத்தில் ஆரியர்களிடையே சிவ வழிபாடு இருந்த தென்று இன்றுவரையும் எந்த ஆராய்ச்சியாளராலும் காட்ட முடிய வில்லை. சிவன், ஒரு சிறு தெய்வமாகவும் இருக்கு வேதத்திற் கூறப்பட வில்லை. சிவா என்னும் சொல் உருத்திரனுக்கு அடையாக ஓரிடத்தில் மாத்திரம் வந்துள்ளது. இது உருத்திரனும் சிவனும் ஒன்று என்பதற்குச் சான்றாகாது. உருத்திரன் மங்கலத்தினாலும் அருளினாலும் சிவன் என்றே பொருள்படுகின்றது. இருக்கு வேதத்தின் பத்தாம் மண்டலத்தில் திராவிடரின் ஆண் எனப்பட்ட சிவனே குறிக்கப்பட்டுள்ளது. பிற்காலத் தில் சிவன் மூர்க்க குணமுடையவராகவும் சில வேளைகளில் சாந்த முடையவராகவும் கூறப்பட்டுள்ளார். சிவனுக்குரிய முத்தொழிலும் மகேசுரமூர்த்திக்குரியதாகச் சொல்லப்பட்டுள்ளது. இருக்கு வேதத்தில் இதற்கு இணை காண முடியவில்லை. மொகஞ்சதரோவிற் காணப்பட்ட சின்னங்கள் பிராமண காலத்தனவென்று தோன்றவில்லை. பிராமண காலத்தில் ஆரியச் சார்பான சிவமதம் வளர்ச்சியடைந்திருந்தது. அங்குக் காணப்பட்டவை ஆரியருக்கு முன் அங்கு வாழ்ந்தவர்கள் ஆரியரல்லர் என்பதைக் காட்டுவன. அங்குக் காணப்பட்ட எவையேனும் ஆரியருக்கு உரியனவல்ல. அவைகளுட் சில பிராமண காலத்தனவாயின், அங்குக் காணப்படாத விட்டுணுவின் சங்கு சக்கரம் இந்திரன் என்பவைகளுக்கு விளக்கம் கூறுவதெப்படி? வேத கால இருடிகள் இலிங்க வணக்கத்தைக் கண்டித்திருக்கின்ற னர். இதனால் இருக்கு வேத காலத்தில் இலிங்க வணக்கம் ஆரம்பத்தில் இருந்த தென்று கூறமுடியாது. வேத கால இருடிகள் இலிங்க வணக்கத் தைக் கண்டித்தார்கள். அவர்களைச் சூழ்ந்து இலிங்க வணக்கம் இருந்தது. இல்லாவிடில் அவ்வாறு கண்டிக்க வேண்டியதில்லை. ஆகவே இலிங்க வணக்கம் வளர்ச்சியடைந்திருந்தது என்று காண நாம் பிராமண காலத்துக்குச் செல்ல வேண்டியதில்லை. அது ஆரியரைச் சூழ்ந்து வாழ்ந்த மக்களிடையே நன்கு பரவியிருந்தது. மொகஞ்சதரோ காலத்திய வணக்கத்தைக் கண்டித்தவர்கள் மொகஞ்சதரோ மக்களாயிருக்க முடியாது. ஆகவே மொகஞ்சதரோ மக்கள் ஆரியராக இருக்க முடியாது. அசுவ மேத யாகங்கள் இலிங்க சம்பந்தமானவை என்று கூற முடியாது. அவை இடக்கரானவை. இருக்கு வேத ஆரியர் எழுத்தைப் பற்றி அறியார்கள். ஆகவே மொகஞ்சதரோ நாகரிகம் பிற்காலத்தது என சரூப் கூறுகின்றார். பறவை, மீன், பூ, மனிதர், வீடுகள், கட்டில்கள், மலைகள் போன்றவைகளைக் குறிக்கும் எழுத்துகள் பிராமண காலத்தன என்று கூறமுடியாது. இருக்கு வேத காலத்திலும் எழுத்தெழுத அறிந்தவர்கள் இருந்தார்கள். ஆரியர் கூறும் பாணியர் (Panis) ஆரியரல்லாதவர். அவர்கள் காலத்தில் ‘கிராதியர்’ எனப்பட்டார்கள். ‘கிராதின்’ என்பது எழுத்தைக் குறிக்கும். இவர்கள் வாணிகத் தொடர்பான கணக்கை எழுதி வைத்திருந்தார்கள். மொகஞ்சதரோ கால முத்திரைகளையும் சூமரிற் காணப்பட்ட முத்திரைகளையும் நோக்கும்போது மொகஞ்சதரோ எழுத்துகள் இருக்கு வேதத்துக்கு முற்பட்டவை என நன்கு தோன்றும். தமிழர் வழங்கிய ஒருவகை எழுத்து, பட எழுத்து என, யாப்பருங்கல விருத்தியில் ஓரிடத்திற் காணப்படுகிறது. மொகஞ்சதரோ அரப்பா நாகரிகம் கி.மு. 3000 வரையிலுள்ளது. மித்தனி கிதைதி நாடுகளில் 1500 வரையில் ஆரியத் தெய்வங்கள் காணப் படுகின்றன என்று சரூப் கூறுகின்றார். கலியுகம். கி.மு. 12,100 வரையில் தொடங்குகின்ற தென்றும், அது உதிட்டிரன் இராச்சியம் இழந்தபின் உண்டானதென்றும், இருக்கு வேதம் உதிட்டிரன் இராச்சியம் இழப்ப தற்கு முற்பட்டதென்றும் ஆகவே இருக்கு வேதம் கி.மு. 12,100க்கு முற்பட்ட தென்றும் அவர் கூறியுள்ளார். டாக்டர். கீத் (Dr. Barriedale Keith) என்பார் பல வகையான நியாயங்களையும் வைத்து ஆராய்ச்சி செய்து இருக்கு வேதம் கி.மு. 1300க் கும் கி.மு. 1000க்கும் இடையிற் செய்யப்பட்டதென முடிவு கட்டியுள் ளார். வேத காலம் கி.மு. 2000 எனக் கூறுதல் தவறு என்றும் அவர் குறிப்பிடுகின்றார். இருக்கு வேத காலத்தில் மதில்களால் சூழப்பட்ட நகரங்ளைக் கட்டி வாழ்ந்தவர்கள் திராவிடரே. மயன் என்னும் திராவிடச் சிற்பியால் கட்டப்பட்ட உதிட்டிரனின் அரண்மனையிலேயே உயிர், மரணம் என்பவைகளைப்பற்றி ஆராயும் உபநிடத ஞானங்கள் தோன்றின. மொகஞ்சதரோ முத்திரையில் காணப்படும் சிவன் வடிவம்1 ஆரியரின் உருத்திரன், பிற்காலத்தில் சிவன் வடிவை அடைந் திருந்தார் என்பது தெளிவு. இலக்கிய காலத்தில் சொல்லப்படும் சிவனைப் பற்றிய சிறப்புகள், வேத காலத்தில் அறியப்படாதிருந்தன. உருத்திரன் வேதத்தில் புயற் கடவுளாகக் காணப்படுகின்றார். பிற்காலத் தில் சிவனுக்குக் கூறப்படும் சிறப்புகள் ஒன்றும் உருத்திரனுக்குக் கூறப்பட் டிருக்கவில்லை. சிவனின் ஆதிகால வடிவை நாம் கி.மு. 3000இல் காண்கின்றோம். மொகஞ்சதரோ காலம் கி.மு. 3000 என்பதைச் செற்ரன் லாயிட் என்பார் தெல் அஸ்மார் (Tell asmar) என்னும் இடத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மொகஞ்சதரோ முத்திரையை ஒத்த ஒரு முத்திரையில், இந்திய யானை, காண்டாமிருகம், முதலை முதலியவை பொறிக்கப்பட் டிருந்தமை கொண்டு நன்கு துணிந்துள்ளார். பழைய ஹங்கேரிய எழுத்தும் பிராமியும்2 பழைய துருக்கி ஹங்கேரிய எழுத்துகளுக்கும் பிராமி எழுத்து களுக்கும் தொடர்பு இருக்கலாம் எனக் கருதியமை, இயலாதது போல் தொடக்கத்தில் தோன்றலாம்; ஆனால் தொடர்பு காணுதல் கடினமா யிருக்கவில்லை. பேராசிரியர் நேமெத் (Professor Nemeth) என்பார், துருக்கித்தானம், மத்திய ஆசியா, மங்கோலியா முதலிய இடங்களில் இவ் வெழுத்தொலிகள் காணப்படுகின்றன என்று கூறியுள்ளார். அக் காலத் தில் மத்திய ஆசியாவின் பெரும் பகுதி இந்திய நாகரிகச் சார்பு பெற் றிருந்ததென்றும், துருக்கித்தானம் மத்திய ஆசியா முதலிய இடங்களின் பகுதிகள் புத்த மதத்தைத் தழுவி யிருந்தன வென்றும் நாம் எடுத்துக் காட்டுகின்றோம். அண்மையில் அவ் விடங்களில் கரோஸ்தி, பிராமி எழுத்துகளில் வரையப்பட்ட கையெழுத்துச் சுவடிகள் பல கண்டு பிடிக்கப்பட்டன. அவைகளில் மிகப் பிற்காலத்தில் வழங்கிய பிராமி எழுத்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மத்திய ஆசியாவில் கி.பி. 9ஆம், 10ஆம் நூற்றாண்டு வரையில், பிராமி எழுத்துகள் வழங்கின என்று நாம் தீர்மானமாகக் கூறலாம். ஆசிய நாகரிக ஒற்றுமை மேற்கே, டான்யூப் நதிவரையில் இருந்ததென நம்புவதற்குத் தக்க காரணங்கள் உண்டு. சிவன் ஆரியருக்கு முற்பட்ட கடவுள்3 யோகத்தைப் பற்றிய சாதனையும், கருத்தும் முற்கால பிற்கால வேத மதத்துக்குப் புறம்பானவை. சண்டா (Chanda) என்பார் யோகத் தைப் பற்றிய கருத்துகளைச் சிந்துவெளி மக்கள் அறிந்திருந்தார்க ளென்பதை, அங்குக் கிடைத்த முத்திரையிற் பொறிக்கப்பட்டுள்ள கடவுள் வடிவத்தைக் கொண்டு தெள்ளிதில் அறியலாம் எனக் கூறி யுள்ளார். அக் கால மக்கள் தம் கடவுளுக்கு யோகி ஒருவரின் வடிவைக் கொடுத்ததோடு அவருக்குத் தவத்தையும் உரிமையாக்கினார்கள். கடவுள் படைத்தலாகிய தொழிலைப் பெறுவதற்குத் தவம் செய்யவேண்டுமென அவர்கள் நம்பியிருக்கலாம். மனிதன் தன்னளவில் கடவுளைப் பற்றியும் நினைக்கலானான். கடவுளர் தவஞ் செய்தலால் உயர்நிலை அடைந்தனர் என, அவன் நினைத்தான். இக் கருத்தினாலேயே இந்திய மக்கள் கடவுளை யோகியின் வடிவில் வழிபடலானார்கள். சாங்கியத்துக்கும் யோகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. யோகத்தைப் பற்றிய தத்துவக் கருத்து, கடவுள் கொள்கையோடு, சாங்கியக் கருத்துகளையும் ஏற்றுக் கொள்வதாயுள்ளது. யோகத்தைப்போலச் சாங்கியமும் வேத சம்பந்தமில்லாதது என்று கருதப்படுகின்றது. யோகத்தில், ஆரியரல்லாத மக்களின் கருத்துகள் உள்ளன என்று நெடுங்காலம் சந்தேகிக்கப்பட்டது. ஆரியருடைய கருத்துகள் எல்லாம் மேலானவை; அல்லாதன இழிந் தவை என்னும் தவறான கருத்தினால் இம் மேலான கருத்துகள் ஆரிய ரிடமிருந்தன்றி வரமுடியாது என மக்கள் நம்புவாராயினர்; ஆனால் அக் கருத்துகளில் ஆரியச் சார்பு இருப்பதற்குச் சான்று கிடைக்கவில்லை. மொகஞ்சதரோவில் இலிங்க வணக்கம் இருந்த தென்பதற்குத் தனிப் பட்ட சான்றுகள் உண்டு. அங்கு அகழ்ந்து எடுக்கப்பட்ட பல இலிங்கங் களைக் கொண்டு இருக்கு வேத சம்கிதையில் ‘சிசினதேவர்’ எனக் குறிப் பிட்டுள்ளோர் ஆரியரின் பகைவரையே எனத் தெரிகின்றது. ஈஸ்டர் தீவுகளில் மொகஞ்சதரோ எழுத்துகள்1 பசிபிக் கடலிலுள்ள ஈஸ்டர் தீவுகளில் மொகஞ்சதரோ முத்திரை களிற் காணப்பட்டன போன்ற எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவைகளைக் குறித்த விளக்கம் வருமாறு: ஜி.ஆர். ஹண்டரின், “அரப்பா மொகஞ்சதரோ எழுத்துகளும், அவைகளுக்கும் - மற்றைய எழுத்துகளுக்கும் உள்ள தொடர்பு” என்னும் நூலுக்கு எழுதிய முன்னுரையில் சிந்து, ஈஸ்டர் தீவு எழுத்துகளுக்குள்ள ஒற்றுமைகளைப் பற்றிச் சந்தேகிக்க வேண்டியதில்லை எனப் பேரா சிரியர் இலாங்டன் என்பார் கூறியுள்ளார். எப்படி இவ் விந்திய எழுத்துகள் மிகத் தொலைவிலுள்ள ஈஸ்டர் தீவுக்குச் சென்றனவென்று எவராலும் கூற முடியாது. மரக்கட்டைகளில் பொறிக்கப்பட்டிருக்கின்ற ஈஸ்டர் தீவு எழுத்துகளின் காலம் அறியமுடியவில்லை. சிந்துவெளியிற் காணப்பட்டவைகளை ஒத்த எழுத்துகள் சூமர், சூசா தைகிரஸ் ஆற்றை அடுத்த இடங்கள் என்பவைகளிற் காணப்பட்டன. “பொலினீசிய ஆராய்ச்சிச் சங்கச் சார்பில் வெளிவரும் இதழில் சிந்துவெளி எழுத்துக ளோடு ஒற்றுமையுடையனவாகக் காணப்படும், ஈஸ்டர் தீவு எழுத்துகள் படமமைத்துக் காட்டப்பட்டுள்ளன. அவைகளை முன் பக்கத்திற் காண்க. இந்தியா நாகரிகத்தின் தொட்டில் - டாக்டர் பிறாங்போர்ட் (Dr. Frank fort) கூறுவது கிரேக்கப் பழங்கதைகளுக்கு அடிப்படை மெசபெத்தோமியாவிற் காணப்படுகின்றது. மெசபெத்தோமியாவில் இமிலுள்ள இடபத்தின் வடிவம் காணப்பட்டது. இந்திய இடபம் மெசபெத்தோமியரால் வழிபடப்பட்டது. எகிப்திய நாகரிகம் மெசபெத்தோமிய நாகரிகத்தி லிருந்து தொடங்கிற்று. மெசபொதோமிய நாகரிகம் இன்னொரு இடத்திலிருந்து வந்தது என்று புலப்படும். அது பாரசீக பீடபூமியாக லாம். அவ் விடத்தை நன்கு ஆராய்ந்து சென்றால் நாம் சிந்துவெளியை அடைகின்றோம். இந் நாகரிகத்திலிருந்தே மெசபெத்தேமிய நாகரிகமும், எகிப்திய நாகரிகமும் தோன்றின.2  உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு முன்னுரை கி.பி. ஏழாம் நூற்றாண்டுமுதல் பதினான்காம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் பெரிய மாறுதல்கள் உண்டாயின. அக் காலத்து தமிழர்க ளது சமயமும் மொழியும் பெரிதும் ஆரியச் சார்பு அடைந்தன. இதற்குக் காரணம் தமிழர் கோயில்களை மேற்பார்த்து வந்தவர்களாகிய பார்ப் பார் எனப்பட்ட தமிழ் மக்கள் பிராமண மதத்தைத் தழுவிச் சமக்கிருத மொழியைத் தமது சமயமொழி சாதி மொழியெனக் கொண்டமை யாகும். இது இன்று கிறித்துவ கத்தோலிக்கராக மாறிய தமிழர் இலத்தீன் மொழியைச் சமயமொழியாகக் கொள்வது போல்வது. பிற்காலத்தில் தமிழ் மக்கள் சிறிது சிறிதாக விழிப்படைந்தார்கள். பற்பலர் பொல்லாத ஆரியக் கொள்கைகளை எதிர்த்து வந்தனர். பேராசிரியர் சுந்தரம்பிள்ளை காலம்முதல் தமிழைப் பற்றியும் தமிழ் மொழியைப் பற்றியும் அறிவு நூல் முறையான ஆராய்ச்சி தலையெடுத்தது. அக் காலம்முதல் பல அறிஞர் தமிழர் வரலாற்றுண்மைகளை விளக்கி அரிய கட்டுரைகளை ஆங்கில மொழிகளில் எழுதித் திங்கள் வெளியீடுகளிலும், பிற வெளியீடுகளிலும் வெளியிட்டனர். அவைகளைத் தக்க முறையில் தமிழிற் றிருப்பிப் பொது மக்கள் படிப்பதற்கு எவருமுதவவில்லை. அவ்வாறு மறைந்து கிடக்கும் அறிஞரின் ஆராய்ச்சி உரைகளை யாம் இயன்றவரையில் தமிழ்ப்படுத்தி எமது நூல்கள் மூலம் வெளியிட்டுள்ளோம். உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு என்னும் இச் சிறிய நூல் இலங்கையில் சிறந்த கல்வியாளராயுள்ள திரு. க. பாலசிங்கம் அவர்கள் முப்பது ஆண்டுகளின் முன் ஆசிரியர் கலாசாலை மாணவர் முன்னிலையில் செய்த ஓர் சொற்பொழிவின் சுருக்கமாகும். இக் கட்டுரை இக் கால ஆராய்ச்சி முடிவுகளை மிகத் தழுவியிருத்தல் எவருக்கும் மகிழ்ச்சி அளிக்கத்தக்கது. 1-12-48 சென்னை ந.சி.கந்தையா உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு வரலாற்றின் பழமை இவ் வுலகின் வரலாறு, கிறித்து பிறப்பதற்கு 4004 ஆண்டுகளின் முன் செல்லவில்லை என மேல்நாட்டவர்கள் அண்மை வரையில் கருதினார்கள். வேறு சாதியினர் இப் பூமியின் தோற்றத்துக்கும் மனிதத் தோற்றத்துக்கும் அதிக பழமையைக் கூறினார்கள். எகிப்தியர் தமது பழமை பதின்மூவாயிரம் ஆண்டுகள் முதல் முப்பத்து மூவாயிரம் ஆண்டுகள் வரையில் எனக் கூறினர். மக்கள் ஒரு இலட்சம் ஆண்டுகளின் முன்னும் தாவர உயிர்களும் பிற உயிர்களும் ஒரு கோடி ஆண்டுகளின் முன்னும் இவ் வுலகில் தோன்றியிருக்கலாம் என இக் கால விஞ் ஞானிகள் கருதுகின்றனர். இவ் வுலகின் வயது இவ் வுலகின் பழமை அளவிடற்கரியது. பூமி ஒரு காலத்தில் அனல் வாயுக் கோளமாக இருந்து குளிர்ந்தது என்னும் கொள்கையை ஆதார மாகக் கொண்டு அதன் வயதை அளக்க முயற்சிகள் செய்யப்பட்டன. 1898இல் இரேடியம் (Radium) என்னும் உலோகம் கண்டுபிடிக்கப் பட்டது. அதன்பின் பூமியின் வயதைப்பற்றிக் கூறப்பட்ட முடிவுகளில் பல ஐயங்கள் எழுந்தன. ஒரு ‘கிராம்’ (Gramme) இரேடியம் ஒரு கிராம் தண்ணீரை ஒரு மணி நேரத்தில் கொதிக்கச் செய்யவல்லது. வரலாற்றுக் காலத்திலேயே பல நாடுகள் மழை யில்லாது காய்ந்து உயிர்கள் வாழ்வ தற்கு முடியாதனவாய் மாறியுள்ளன. இப்பொழுது பூமி வெப்பமேறி வருகின்றதா குளிர்ந்து வருகின்றதா என்னும் கேள்விகள் கேட்கப்படு கின்றன. பழைய வரலாறுகளைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது. பழைய நிலப்பரப்புகள் நீருள் மூழ்கிவிட்டன. அவைகளோடு எவ் வகை நாக ரிகங்கள் மறைந்து போயின என்று எவரால் கூறமுடியும்? பழைய நாகரிகங்கள் அமெரிக்க ஆராய்ச்சியாளர் மேற்கு ஆசியாவிலுள்ள நிப்பூரில் புதை பொருள் ஆராய்ச்சி நடத்தினர். அந் நகரின் நாகரிகம் கி.மு. 7,000 முதல் கி.மு. 5,000 அல்லது கி.மு. 6,000 வரையிலுமுள்ளது. எகிப்திய நாகரிகத்தைக் காட்டும் எழுத்து மூலமான சான்றுகள் காணப்படு கின்றன. எகிப்தில் கிடைத்துள்ள மிகப் பழைய புத்தகம் எகிப்திய பிரமிட்டுச் சமாதி கட்டுவதற்கு (கி.மு. 4,000) முற்பட்டது. அக் காலத்தில் தமது நாகரிகத்தின் பொற்காலம் கழிந்து விட்டதென எகிப்தியர் கருதினார்கள். தாம் பெரிய சாதியாராய் விளங்கியிருந்த பழமையை அறிய அவர்கள் தமது பழைமையை நோக்கினார்கள். கி.மு. 9,000க்கு முன் பாபிலோனியரும், கி.மு. 6,000க்கு முன் எகிப்தியரும் பெரிய கட்டிடங் களை எழுப்பித் தமது பெருமையை நாட்டினார்களென்றால் வரலாற் றுக் காலத்தின் தொடக்கத்தை அல்லது பழைய நாகரிகங்களைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? பாபிலோனிய நாகரிகம் இன்று அறியப்படும் நாகரிகங்களுள் பாபிலோனிய நாகரிகம் பழமையுடையது. பழைய பாபிலோனியர் சுமே ரியர் என்றும் அக்கேடியர் என்றும் அறியப்பட்டார்கள். அவர்களைச் சுமேரிய அக்கே டியர் எனக் குறிப்பிடுவோம். அக்கேடியரும் சுமேரியரும் ஒரே மொழியைச் சிறிது வேறுபாட்டுடன் வழங்கினார்கள். இவைகளுள் சுமேரிய முறையான பேச்சே பழமையானது. சுமேரியர் உயர்ந்த கல்வி யாளர். பாபிலோனியச் சக்கரவர்த்திகள் காலத்தில் சுமேரிய மொழி இறந்துவிட்டது; அது இலக்கிய மொழியாகப் பயிலப்பட்டது; அது சமயமொழியாக இருந்தது. சட்டங்களும் அம் மொழியில் எழுதப்பட் டிருந்தன. கால்வாய்கள் அமைத்தல் போன்ற அமைப்பு வேலைகள் சுமேரியரால் செய்யப்பட்டன. பின்பு செமித்திய மக்கள் அராபியாவி னின்றும் வந்து குடியேறினார்கள். கி.மு. 3,800 வரையில் முதலாம் சார்கன் பாபிலோனியச் சிற்றரசுகளை ஒன்றுபடுத்தினான். பாபிலோனைத் தலைநகராகக் கொண்ட அரச பரம்பரை கி.மு. 2,450இல் தொடங்கிற்று. அசீரியா பாபிலோனின் குடியேற்ற நாடாக இருந்தது. அதன் தலைநக ராகிய நினேவா கி.மு. 3,000-க்கு முன் அமைக்கப்பட்டது. கி.மு. 1450இல் அசீரியா விடுதலை பெற்றுத் தனிநாடாகப் பிரிந்து பாபிலோனியா, சிரியா, எகிப்து, யூதேயா முதலிய நாடுகளடங்கிய பேரரசாகத் திகழ்ந்தது. கி.பி. 606இல் அசீரியப் பேரரசு வீழ்ச்சியடைந்தது. அப்பொழுது பாபி லோனியா விடுதலை அடைந்தது. இரண்டாவது பாபிலோனியப் பேரரசு கி.மு. 538இல் முடிவடைந்தது. அப்பொழுது பாபிலோனியா பாரசீகத்தின் ஒருபகுதியாக அடங்கிற்று. அது மறுபடியும் அலக்சாந்த ரால் கி.மு. 324இல் வெற்றி கொள்ளப்பட்டது. பாபிலோனிய மன்னர் அமுரபி என்னும் பாபிலோனிய அரசன் காலத்தில் (கி.மு. 2342) ஆபிரகாம் சாலதியாவின் தலைநகராகிய ஊரை விட்டுக் கானான் தேசம் சென்று குடியேறினார். நபுச்சண்ட்நேசர் கி.மு. 586இல் யூதரை மறியற் படுத்தினான். பாபிலோனிய, அசீரிய நாகரிகங்கள் இணைந்து அசீரியப் பண்பாடாக மாறின. கி.மு. 1,000 வரையில் வாழ்ந்த சாலமன், புத்தகங்கள் எழுதுவதற்கு முடியவில்லை எனக் கூறியுள்ளான். அவன் கூறியது எபிரேய இலக்கியங்களைக் குறிக்குமாயின் அக் கூற்று பொருளற்ற தாகும். அசுர் பானிப்பால் என்னும் அசீரிய அரசனின் நூலகத்தில், ஒழுங்குபடுத்தி இலக்கமிட்டுத் தட்டுகளில், வரிசையாக அடுக்கி வைத்து அரசாங்க மேற்பார்வையாளனால் கவனிக்கப்பட்ட 10,000 நூல்களைப் பற்றி நாம் அறியும்போது அக் கூற்றின் உண்மை விளங்குகின்றது. இந் நூலகம் இலயாட் (Layard) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. பாபிலோனிய நூல்கள் களிமண் தட்டுகளில் எழுதிவைக்கப் பட்டன; பைபிரஸ் என்னும் நாணல் தாள்களும் பயன்படுத்தப்பட்டன. பலவகைப் பொருள்கள், பழங்கதைகள், பாடல்கள் அடங்கிய பல நூல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கில்கமஷ் வரலாறு, படைப்பு வரலாறுகளைக் கூறும் இதிகாசங்கள் கிடைத்தவைகளுள் முக்கியமுடை யன. பாபிலோனியர் அக்கரகணிதம் (Mathematics), வானஆராய்ச்சி, சோதிடம் என்பவைகளில் திறமையடைந்திருந்தனர். அவர்கள் சந்திர சூரிய கிரகணங்கள், வால் வெள்ளி, வெள்ளிக்கிரகம் செல்லும் பாதை, சூரிய மறுக்கள் முதலியவைகளைப் பற்றியும் பொருள்களை பெரிதாகக் காட்டும் ஆடிகளைப் (magnifying lenses) பற்றியும் அறிந்திருந்தார்கள். பாபிலோனியச் சட்டங்கள் சுமேரிய சட்டங்களைப் பார்த்துச் செய்யப் பட்டவை. அமுரபியின் சட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை குற்றம், திருமணம், திருமண நீக்கம், வேலையாட்களின் கூலி முதலியவை போன்ற பல பிரிவுகளைப் பற்றிக் கூறுகின்றன. எல்லம், மத்தியத்தரை நாடுகள், எகிப்து என்னுமிடங்களுக் கிடையில் அவர்கள் போக்குவரத்து அஞ்சல்(தபால்) ஒழுங்குகள் செய்திருந்தார்கள். மேற்கு ஆசிய நாடுகளில் பாபிலோனியப் பண்பாடு பரவியிருந்தமையால் எகிப்திய அரசாங்கக் கருமகாரரும் (Officials) மேற்கு ஆசிய மக்களும் பாபிலோனிய மொழி யைப் பயன்படுத்தினர். எகிப்து நிப்பூரில் புதைபொருள் ஆராய்ச்சி நடத்துவதன் முன் எகிப்தே மிகப் பழைய நாடாகக் கருதப்பட்டது. இப் பொழுது அது பாபிலோனி யாவுக்கு அடுத்த பழமை யுடைய நாடாகக் கொள்ளப்படுகின்றது. எகிப்தியர் ஆசிய சாதியினரதும் வடஆப்பிரிக்க சாதியினரதும் கலப்பினால் தோன்றினார்கள். மேன்ஸ் அரசன் எகிப்திய சிற்றரசர் நாடுகளை எல்லாம் ஒன்றுபடுத்தி கி.மு. 4,000ஆம் முதல் எகிப்திய அரச பரம்பரையைத் தொடங்கினார். கி.மு. 332இல் அலக்சாந்தர் படை எடுக்கின்ற அளவில் எகிப்தில் 31 அரச பரம்பரையினர் ஆட்சி புரிந் தார்கள். முதல் அரச பரம்பரைக்கு முன் பெடோயின் (Bedouin) அராபியர் எகிப்தின் மீது படை எடுத்தார்கள். கி.மு. 2,000-த்திலிருந்து சில நூற்றாண்டுகள் கிசோஸ் (Hysos) என்னும் செமித்திய சாதியினர் எகிப்தை ஆண்டார்கள். கி.மு. எட்டாவது நூற்றாண்டில் எதியோப்பியர் எகிப்தை வெற்றி கொண்டனர். அசீரியர் எதியோப்பியரை வெருட்டி யடித்தனர். கி.மு. 525இல் பாரசீகர் எகிப்தை வெற்றி கொண்டனர். கி.மு. 332இல் அலக்சாந்தர் எகிப்தை வெற்றி கொண்டார். அதன்பின் எகிப்து விடுதலை பெறவில்லை. எகிப்து பாபிலோனியா என்னும் இரு நாடு களின் நாகரிகங்களையும் ஒப்பிட்டுப் பார்த்த பேராசிரியர் சேயி (Professor Sayee) கூறியிருப்பது வருமாறு: “செமித்திய ரல்லாத மக்களின் நாகரிக எழுச்சியினாலேயே பாபிலோனிய நாகரிகம் தோன்றிற்று. ஆசிய நாட்டினின்று படை எடுத்துச் சென்ற மக்களே உயர்ந்த நாகரிகப் பண்புகளை எகிப்துக்குக் கொண்டு சென்றார்கள்.” 1 நாலாவது அரச பரம்பரைக் காலத்திலே (கி.மு. 3233) பெரிய பிரமிட்டுச் சமாதி கட்டப்பட்டது. அது 480 அடி உயரமுடையதாய் 13 ஏக்கர் நிலத்தில் நிற்கின்றது. இலங்கையிலே அனுராதபுரத்தில் வாலகம் வாகு கி.மு. 89இல் கட்டி எழுப்பிய 405 அடி உயரமுள்ள அபயகிரி தாகபா எட்டு ஏக்கர் நிலப்பரப்பில் நிற்கின்றது. இத் தாகபா இலண்டனி லுள்ள சென்போல்ஸ் தேவாலயத்திலும் பார்க்க 50 அடி அதிக உயர முடையது; பிரமிட்டுச் சமாதியிலும் பார்க்க 75 அடி தாழ்வானது. எகிப்தியரிடம் நல்ல இலக்கியங்கள் இருந்தன. கி.மு. 3,000 வரையில் எழுதப்பட்ட பைபிரஸ் நூல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பிரைசி பைபிரஸ் (Prisse Papyrus) என்னும் நூல்கள் மக்கள் நல்ல வகையில் வாழ வேண்டிய விதிகளைக் கூறுகின்றன. சமயம், மருந்து, கணக்கு, வான ஆராய்ச்சிப் பாடல்கள் அடங்கிய பல நூல்களும் கண்டுபிடிக்கப்பட்டன. படங்களோடு கூடிய “இறந்தவர்களின் நூல்” என்னும் புத்தகங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குருமாரும் கற்றோ ரும் தத்துவக் கொள்கையோடு கூடிய சமயத்தைக் கைக் கொண்டார்கள். வடிவம் அறியவொண்ணாததும், எல்லாவற்றையும் படைப்பதும், தன்னை ஒருவரும் படையாததுமாகிய ஒரு கடவுள் உண்டு என்று அவர்கள் சமயம் கூறுகின்றது. மரணத்தின்பின் உயிர் அழியாதிருப்பதை யும், அது பிறவி எடுப்பதையும் அவர்கள் நம்பினார்கள். அவர்களின் வழிபாட்டில் இலிங்கம் சம்பந்தப்பட்டிருந்தது. எகிப்தியர் பல தெய்வங் களை வழிபட்டார்கள். ஒரு கடவுளே பல வடிவுகளில் வழிபடப்படுவ தாகக் கற்றவர்கள் நம்பினார்கள். குருமார் மூன்று நாளுக்கு ஒரு முறை தலையையும் உடல் முழுமையும் மழித்துக்கொண்டார்கள். நாளில் நான்கு முறை நீராடினார்கள். கடவுளுக்கு உணவு, நீர், ஆடை, தைலம் முதலியவற்றைக் கொடுப்பதும் ஆடுவதும் பாடுவதுமே அவர்களுடைய வழிபாடு. எகிப்தில் விலங்குகளும் வழிபடப்பட்டனவாகலாம். இஸ்ரவேலரைக் கொடுமைப்படுத்திய இரண்டாம் இராம்சே நீலநதிக்கும் செங்கடலுக்கும் இடையில் போக்குவரத்து நடத்துவதற்கு சூயஸ் கால்வாயை வெட்டினான். சீனா இப்பொழுது உள்ளவைகளில் சீன இராச்சியமே மிகப் பழமை யுடையது. கி.மு. 2852இல் வாழ்ந்த வு கி. (fu-hi) சீனரின் முதல் அரச னாவன். அவனுக்கு முன் மக்களுக்குத் தமது தாய்மாரையன்றித் தந்தை மாரைத் தெரியாதென்றும் அவர்களுக்கு உணவைச் சமைக்கத் தெரியா தென்றும் கூறப்பட்டுள்ளன. அவன் மக்கள் திருமணம் செய்வதாகிய ஒழுங்கை நாட்டி அவர்களை வேட்டையாட, மீன் பிடிக்க, பயிர் செய்ய, இசைக் கருவிகளைப் பயன்படுத்தப் பழக்கினான். இதனால் எழுதும் முறை வெளியிலிருந்து வந்ததெனத் தெரிகிறது. கடவுள் தன்மையுள்ள பாம்பு, மஞ்சள் ஆற்றினின்றும் தோன்றி, வூகி அரசனுக்கு ஒரு சுருளைக் கொடுத்ததென்றும், அதில் கோடுகள் காணப்பட்டன என்றும், அதன்பின் வூகி சீன எழுத்துகளைச் செய்தா னென்றும் கூறப்பட்டுள்ளன. குஆங்தி (Huang Ti கி.மு. 2697) காலத்தில் மரம் உலோகம் களி மண்ணாலான வீட்டுத் தட்டுமுட்டுகள், மரக்கலங்கள், வண்டிகள் செய்யப்பட்டன. நாணயங்களும் பயன்படுத்தப்பட்டன. குஆங்தி என்பவன் எல்லம் முதல் சீனம் வரையில் பயணம் செய்த ஒரு கூட்டத் தாரின் தலைவனாகிய நக்குந்தி (Nakunte) எனப்படுபவனேயாவன் என்று கூறப்படுகிறது. எல்லம் இப்பொழுது மற்றைய பழைய சாதியார்களைப் பற்றியும் சுருக்க மாக ஆராய்வோம். எல்லம் பாபிலோனுக்குக் கிழக்கே உள்ளது. இது சுமேரிய அக்கேடிய காலம் முதல் பாபிலோனிய விழுகைக் காலம் வரை யில் இருந்தது. இது அடிக்கடி பாபிலோனோடு போரிட்டுக் கொண் டிருந்தது. எல்லம் நாகரிகம் பாபிலோனிய அல்லது அசீரிய நாகரிகத் தைப்போல் உயர்வடைந்திருந்தது. பினீசியர் இன்னொரு பழைய சாதியினர் பினீசியர். இவர்களின் செழிப் புடையவும் வாணிக முதன்மையடையவும் காலம் கி.மு. 13ஆம் நூற்றாண் டளவில் அவர்கள் அக் காலத்து அறியப்பட்ட எல்லா நாடுகளிலும் காணப்பட்டார்கள். அவர்களின் பட்டினங்களாகிய தயர், சிடோன் என்பன அழியாப் புகழ் பெற்றிருந்தன. காதேஜ் என்பது ஆப்பிரிக்காவி லிருந்த பினீசியக் குடியேற்ற நாடு. இங்குதான் அனிபால் (Hannibal) என்னும் மிகப் புகழ்பெற்ற வீரன் தோன்றினான். இவன் உலக அதிகாரத் தைக் கைப்பற்றுவதற்கு முயன்று கொண்டிருந்தான். உரோமர் கடும் போர் செய்து இவனைத் தோற்கடித்தார்கள். எபிரேயர் எபிரேய நாகரிகம் கி.மு. 1,200 முதல் தொடங்குகிறது. இது இஸ்ர வேலர் எகிப்திலிருந்து பயணப்பட்டதற்குச் சிறிது பிந்திய காலம். கி.மு. 8ஆம் நூற்றாண்டில் பாலத்தீனம் அசீரிய மாகாணமாக மாறிற்று. அசீரி யாவின் விழுகைக்குப்பின் அது பாபிலோன் அரசனாகிய நெபுச்சட் நேசருக்கு (கி.மு. 586) உட்பட்டிருந்தது. கிரேக்கர் கிரேக்க நாகரிகம் தோன்றுவதற்கு ஏதுவாயிருந்த மைசீனிய (Myceanean) நாகரிகம் கி.மு. 13ஆம் நூற்றாண்டளவில் தொடங்குகின்றது. கிரேக்க நாடுகளாயிருந்த சின்ன ஆசியாவும் ஐசியன் கடலும் பாரசீகரால் கி.மு. 6ஆம் நூற்றாண்டில் வெற்றி கொள்ளப்பட்டன. அடுத்த ஆண்டில் கிரேக்கர் பாரசீக ஆட்சியைக் கவிழ்த்துவிட்டனர். பாரசீகம், சிரியா, பாபிலோனியா, எகிப்து, இந்தியா முதலிய நாடுகளை அலக்சாந்தர் (கி.மு. 384 - 322) வெற்றி கொண்டார். கிரீசு 146இல் உரோமரின் நாடாக மாறிற்று. கிரீத்தியர் (Cretans) சின்ன ஆசியாவினின்றும் வந்த கிரீத்திய நாகரிகம் எகிப்திய பன்னிரண்டாவது அரச பரம்பரைக் காலத்தில் உயர்நிலை அடைந் திருந்தது. கிரேக்க மக்கள் கட்டிடம் அமைத்தல், களிமண், வெண்கலம் முதலியவைகளில் உருவங்கள் அமைத்தல், ஓவியம் வரைதல் என்பவை களில் திறமை அடைந்திருந்தனர். திராய் (Troy) நகரின் வீழ்ச்சி கி.மு. 1,783 வரையில். ஓமர் தமது காவியங்ளை கி.மு. 850 வரையில் செய்தார். பாரசீகர் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் பாரசீகப் பேரரசு தொடங்கிற்று. சைரஸ் என்னும் பாரசீகப் பேரரசன் லிதியா, அசீரியா, பாபிலோனியா முதலிய நாடுகளையும் சின்ன ஆசியாவிலும் அயலிலுள்ள கிரேக்கப் பட்டினங்களையும் வெற்றி கொண்டான் (கி.மு. 538). இது காரணமாக எகிப்து, மசிடோனியா, திராய் முதலிய நாடுகள் பாரசீக ஆட்சிக்கு உள்ளாயின. இவ் வாட்சி அலக்சாந்தரின் வெற்றியோடு (கி.மு. 331) முடிவடைந்தது. அற்ப ஆயுளுள்ள இவ் விராச்சியத்தைப் பற்றி, அது கிரேக்கரோடு நடத்திய போர்களைக் கொண்டு அறியவருகின்றது. பாரசீகரின் நாகரிகம் பெரிதும் எல்லம் பாபிலோனியச் சார்புடையது. உரோமர் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் உரோம் முதன்மை எய்திற்று. காதேஜ் நகரின் அழிவுக்குப் பின்பே உலகத்தை ஆளுதற்கு உரோமர் திமிறிக் கொண்டிருந்தார்கள். இலங்கையும் இந்தியாவும் இந்தியாவும் இலங்கையும் வரலாற்றுக் காலத்திற்கு முன்தொட்டு ஒன்றோடு ஒன்று தொடர்பு பெற்றிருந்தன. கிறித்துவ ஆண்டு தொடங்கு வதன் முன் இலங்கையின் முக்கிய நிகழ்ச்சி விசயன் 543ஆம் ஆண்டு அங்கு வந்து இறங்கியது. விசயன் வந்து இறங்கிய இடம் இலங்கையின் வடகரை என முதலியார் இராசநாயகமவர்கள் பற்பல ஏதுக்கள் காட்டித் தனது “பூர்வீக யாழ்ப்பாணம்” என்னும் நூலில் எழுதியுள்ளார். விசயன், மதுரையை ஆண்ட பாண்டிய அரசன் புதல்வியை மணந்தான். பாண்டிய குமாரியுடன் 700 உயர் குடும்பப் பெண்களும், 18 அரசாங்க கருமகாரரும், அடிமைகளும் 75 பணியாளரும் வந்தார்கள். இயக்கரும் நாகரும் விசயன் இலங்கைக்கு வந்தபோது இலங்கையில் இயக்கர், நாகர் என்னும் இரு குலத்தினர் வாழ்ந்தார்கள். நாகர் வடக்கிலும் மேற்கிலும் வாழ்ந்தார்கள். அவர்களுக்குத் தனி அரசன் இருந்தான். இயக்கர் இலங்கையின் தென்பகுதியில் வாழ்ந்தார்கள். விசயன் முதலில் இயக்க இராசகுமாரியை மணந்திருந்தான். இயக்கர் என்பது இராக்கதர் என்பதன் மாறுபட்ட உச்சரிப்பு ஆகலாம். இராமாயணம் இராக்கதருக் கும் இராமருக்கும் இடையில் நிகழ்ந்த போரைப்பற்றிக் கூறுகின்றது. இராசவளி என்னும் நூல் இப் போர் கி.மு. 2370இல் நிகழ்ந்ததெனக் கூறுகின்றது. இந்துக்களின் புராணங்கள் கந்தக் கடவுளுக்கும் இலங்கை வேந்தனான சூரனுக்குமிடையில் நேர்ந்த போரைப் பற்றிக் கூறுகின்றன. ஆரியர் இப்பொழுது ஆரியரின் வரலாற்றைப் பற்றி ஒரு சிறிது ஆராய்வோம். இச் சாதியாரின் ஆதி உறைவிடம் மத்திய ஆசியா, லிதுவேனியா, ஸ்காந்தினேவியா, காக்கேசியா அல்லது ஊரல் மலைப் பக்கங்கள் ஆகலாம். இவர்களில் ஒரு கூட்டத்தினர் சிந்துவுக்கும் பாரசீகக் குடாவுக்கு மிடையில் சென்று தங்கினர். வேத ஆரியரும் ஈரானியரும் (பாரசீகர்) இரண்டாகப் பிரிந்த சாதியினர். இப்பொழுது அவர்களின் தொடர்பு வெளிப்படையாகத் தோன்றாதபடி மறைந்துவிட்டது. பாரசீக ரின் பழைய சென்ட் மொழிக்கும் இருக்கு வேதப் பாடல்கள் செய்யப் பட்ட மொழிக்கும் ஒற்றுமையுண்டு. இந்து ஐரோப்பிய மக்களுள் இவ் விரு பிரிவினருமே தம்மை ஆரியர் என வழங்கினர். இப் பெயர் மாக்ஸ் மூலராலும் மற்றைய கீழ்நாட்டு வரலாறுகளை ஆராய்வோராலும் ஏனைய கூட்டத்தினருக்கும் இட்டு வழங்கப்பட்டது. இப்பொழுது இப் பெயர் இந்தியரையும் பாரசீகரையுமே குறிக்கின்றது. இச் சாதியாரின் ஒரு கூட்டத்தினர் பஞ்சாப்பை வடமேற்குக் கணவாய்கள் வழியாக வந்தடைந் தனர். இவர்கள் இந்தியாவை வந்தடைந்தது கி.மு 2000க்கும் கி.மு. 1400க்கு மிடையிலென ஆர்.சி. தத்தர் இந்தியாவின் பழைய நாகரிகம் என்னும் நூலிற் குறிப்பிட்டுள்ளார். ஆரிய மக்கள் இந்தியாவை அடைந்த போது இந்தியா முழுமையும் பரவி வாழ்ந்தோர் திராவிட மக்களேயாவர்.1 ஆரியர் குடியேறிய இடங்கள் பாரதப் போர் கி.மு. 1250 வரையில் நிகழ்ந்ததெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இக் காலக் கணக்குகள் ஏற்றனவாயிருக்கலாம். இக் காலத்தின் முன் வேறு எந்த ஆரிய சாதியினரும் உலகின் வேறெப் பகுதியிலும் உயர்ந்த நாகரிகம் அடைந்திருக்கவில்லை. மித்தானி (Mittani) ஆரியரைப் பற்றி முதன் முதல் பாபிலோனிய இலக்கியங்களில் அறிகின்றோம். கி.மு. 15ஆம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட பாபிலோ னியப் பட்டையங்களில் இவர்களைப் பற்றிக் காணப்படுகின்றது. இந்துக்குஷ் கணவாய்களைக் கடந்து ஆரியர் வந்தபோது அவர்கள் திராவிடரோடு மோதினர். திராவிடர் ஆரியருக்கு மிக்க பயம் விளைவித் தார்கள். அக் காரணத்தினால் அவர்களைப் பேய்கள், தீமை விளைக்கக் கூடிய மந்திரங்களறிந்தவர்கள், ஆகாயத்தில் பறக்கவும், வேண்டிய வடிவங்களை எடுக்கவும் வல்லவர்கள் என்றும் ஆரியர் நினைத்தனர். ஆகவே அவர்கள் தாம் எதிர்க்க நேரிட்ட மக்களைக் குறிக்க இராக்கதர் அசுரர் என்னும் பெயர்களை வழங்கினர். இப் பெயர்களுக்கு அவர்கள் மொழியில் பேய் என்ற பெயருண்டு. ஆரியரின் பழைய புத்தகங்கள் வரலாற்றுப் போக்கில் இருக்கு வேதம் தாவீதின் துதிகள் போன்றவை. திராவிடரை அழிக்கும்படி இந்திரன் கேட்கப்படுகிறான். திராவிடர் ஆட்டு மூக்கும் கறுப்புத் தோலுமுள்ள பைசாசுகள் (தாசர்) என்று கூறப்பட்டுள்ளார்கள். ஆரியர் பெரிய கூட்டமாக இந்தியாவுள் நுழையவில்லை. கி.மு. 1400-க்கு முன் ஆரியர் சட்லெஜ் (Sutlej) ஆற்றைக் கடக்கவில்லை. கி.மு. 1000 வரையில் இவர்களில் சில பிரிவினர் சட்லெஜ் ஆற்றைக் கடந்து கங்கைச் சமவெளி வரையிற் சென்று வாழ்ந்தார்கள். இந்தியரில் மூன்றில் இரண்டு பங்கினர் சமக்கிருதத் தொடர்பான மொழிகளைப் பேசுவதால் அம் மூன்றிலிரண்டு பங்கினரும் ஆரியர் எனக் கருதப்படுகின்றனர். உண்மை அவ்வாறன்று. ஒரு மொழியைப் பேசுவோர் அம் மொழியைத் தோற்றுவித்தவர்களாக மாட்டார்கள். இதற்கு எடுத்துக்காட்டு உரோமரின் வழித்தோன்றல்களல்லரான பல சாதியினர் உரோமன் மொழியைப் பேசுவதாகும். ஆரியரல்லாத பல மக்கள் சமக்கிருதத்தை வழங்குவதைப்பற்றி மனு நூல் குறிப்பிடுகின்றது. விந்திய மலைக்கு வடக்கேயுள்ள ஆரிய வர்த்தம் மாத்திரம் வாழ்வதற்கு ஏற்றதென்றும், பழமையைப் பின்பற்றுகின்ற பிராமணர் பஞ்சாப்புக்கும் இராசபுத்தானாவுக்கும் இடையிலுள்ள பிரம வர்த்தத்தில் வாழவேண்டு மென்றும் அது கூறுகின்றது. இந்திய குலத் தொடர்புகள் இந்திய மக்கள் இன ஆராய்ச்சித் தலைவராயிருந்த சர் அர்பேட் ரைஸ்லி (Sir Herbert Risly) என்பார் கலப்பற்ற ஆரியர் பஞ்சாப், இராச புத்தானா, காசுமீரம் முதலிய இடங்களில் வாழ்கின்றார்கள் என்றும் ஆனால் அவர்களிடை சிறிது அவுண சித்திய (Huns Seythian) இரத்தக் கலப்புக் காணப்படுகின்றதென்றும் கூறியுள்ளார். சுத்தமான திராவிட சாதியினர் கன்னியாகுமரிமுதல் கங்கைக் கரை வரையும், மேற்கே ஆக்ரா வரையும் காணப்படுகின்றனர். இப் பகுதி சென்னை மாவட்டம், ஹைதரா பாத்து, மைசூர், மத்திய மாகாணங்கள், மத்திய இந்தியப் பகுதிகள், சூடிய நாகபுரி, வங்காளத்தின் பெரும்பகுதி என்பவைகளை அடக்கிநிற்கும். கீழ் வங்காளத்திலும் ஒரிசாவிலும் மங்கோலியரும் திராவிடரும் கலந்த கலப்புச் சாதியினர் வாழ்கின்றனர். ஆக்கிரா அவுத் (oudh) பீகார் அடங்கிய ஐக்கிய மாகாணங்களில் திராவிட ஆரியக் கலப்பினால் தோன்றிய மக்கள் வாழ்கின்றனர். இந்தியா முழுமையிலும் பிராமணர் காணப்படு கின்றனர். ஆனால் அவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இப் பிரிப்பு ஏற்றதாயிருக்கலாம் அல்லது ஏலாததாயிருக்கலாம்; ஆனால் இந்திய மக்க ளில் ஐந்தில் நான்கு பகுதியினர் ஆரிய இரத்தக் கலப்பற்றவர்களேயாவர். 1872இல் அரசினர் எடுத்த மக்கள் எண்ணிக்கையின்படி இந்தியா வில் ஒருகோடி அறுபது இலட்சம் ஆரியரும், ஒருகோடி பத்துலட்சம் ஆரியத் திராவிடக் கலப்பு மக்களும் வாழ்ந்தார்கள். மீதி இந்தியர் ஆரியக் கலப்பில்லாதவர்களாவர். இந்தியாவிலுள்ள சாதித் தொடர்புகளைப் பற்றி அறியாவிடின் புராண இதிகாசங்களில் சொல்லப்படும் இந்திய வரலாறு மயக்கத்துக்கு இடமாகும். போர்க்குணமுள்ள திராவிடக் கூட்டத்தினர் ஆரியரைப் போர்க் குணமுள்ள பல கூட்டத்தினர் சூழ்ந்திருந் தார்கள். ஆரியர் தமது அதிகாரத்தை வலிமையால் நாட்ட முடியாதெனக் கண்டார்கள். ஆகவே அவர்கள் கிளைவும் (Clive) வாரன்ஹேஸ்டிங்கும் கையாண்ட முறையையே கையாண்டனர். அவர்கள் உள்நாட்டு அரச ரோடு அரசாங்க ஒப்பந்தங்கள் செய்தார்கள். ஆரியப் பாடகர்களும் குருமாரும் நாகர், அரசர், இராக்கதர்களுடைய நாடுகளுக்குச் சென் றார்கள். செல்லும்போது தம்மோடு அக்கினி சோம வழிபாடுகள், ஆரியப் பேச்சு, ஆரியப் பழக்கவழக்கங்களையும் கொண்டு சென்றார்கள். இருக்கு வேதத்தில் இதற்குப் போதிய சான்றுகளுண்டு. வேத காலத்திய இரண்டு பெரிய இருடிகள் வசிட்டரும் விசுவாமித்திரரும். திரிற்சு எனப் பட்ட தூய ஆரியருக்கு வசிட்டர் குருவானார். பூருவர், பரதர் எனப்பட் டவரும் அதிகாரம் படைத்தோரும், ஆரியரின் பகைவருமாகிய இரு திராவிடக் கூட்டத்தினருக்கு விசுவாமித்திரர் குருவானார்.1 இவ்விரு இருடிகளும் பிற்காலப் பிராமணக் கொள்கைகளுக்கு எடுத்துக்காட் டாவர். வசிட்டரைப் பின்பற்றினோர் ஆரியக் கொள்கைகள் அல்லாத வற்றைச் சிறிதும் ஏற்றுக்கொள்ளவில்லை. விசுவாமித்திரன் வமிசத்தவர் அவ்வா றிருக்கவில்லை. அவர்களின் முயற்சியினால் திராவிடர் ஆரிய மயமாக்கப்பட்டிருக்கலாம். இவர்களின் கொள்கையினால் திராவிடக் கொள்கைகளும் வழக்கங்களும் ஆரிய வணக்கத்துள் நுழைந்தன. நம் காலத்திலும் விசுவாமித்திரரின் கொள்கையை “பாதர் பெஸ்கி” இடத் திற் காண்கின்றோம். இந்தியத் தெய்வமாக அவர் கிறித்துவை நுழைக்க முயன்றார். தனது பெயரையும் வீரமாமுனிவரென மாற்றினார்; இந்து மதத் துறவி போல உடையணிந்தார். சைவக் கோயில்களில் நடைபெறும் கிரியை முறையால் கிறித்துவை வழிபட்டார். தமிழில் பல துதிகளையும் புராணங்களையும் செய்தார். போப்பு இவருக்கு உற்சாகம் அளிக்காமை யால் இவரது முயற்சி பலனளிக்கவில்லை. புராண இதிகாசங்களை இம் முறையில் பயில்வதால் பல உண்மைகள் விளங்கும். பாரத இராமாயணங்கள் பாரதம் இன்றைய நிலையை அடையுமுன் பல மாறுதல்கள் அடைந்திருத்தல் வேண்டும். இது தொடக்கத்தில் 8,000 சுலோகங்கள் உடையதா யிருந்த தென்றும் பின் சேர்க்கப்பட்ட சுலோகங்களோடு 21,000 சுலோகங்களாயின என்றும் அந் நூலே கூறுகின்றது. இப்பொழுது 100,000 சுலோகங்களுக்குமேல் காணப்படுகின்றன. பிற்காலப் பிராமணர் பல இடைச் செருகல்களைப் புகுத்தினார்கள். ஆகவே மாபாரதத்தைக் கொண்டு உண்மை வரலாற்றை அறிய முடியாது. இப்பொழுது நினைக் கப்படுவது போல் இராமாயணம் ஆரியர் தென்னிந்தியாவையும் இலங்கையையும் வெற்றிகொண்ட வரலாறன்று. இராமர் ஒருபோதும் தனது படையோடு இலங்கைக்கு வரவில்லை. இராவணனது தம்பி விபீடணனுடையவும், மைசூருக்கு அண்மையில் ஆட்சிபுரிந்த சுக்ரீவ னுடையவும் உதவியைப் பெற்று அவர் இராவணனை வென்று உடனே சீதையை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார். இராமாயணத்தின்படி இராமர் கறுப்பு நிறத்தினர். ஆகவே அவர் திராவிடராகலாம். தமிழில் இரா என்பது இருளைக் குறிக்கும். சமக் கிருதத்தில் இராமா என்பது கலப்பையைக் குறிக்கும். சீதை என்பது உழவுசாலையைக் குறிக்கும். ஆரியப் பாடகர் திராவிட அரசரின் அரண்மனைகளில் இருந்த ஆரியப் பாடகர் பிற்கால ஆரிய வீரர்களையும் பாடினர். திராவிடரின் உள்நாட்டு இலக் கியம், வரலாறு, பழங்கதைகள் படிப்படியாகச் சமக்கிருத இலக்கியங் களிற் புகுந்தன. இதனாலேயே திராவிடராகிய பாண்டவர் மாபாரதத்தில் ஆரியராகத் தோன்றுகின்றனர். பாண்டவரின் மூத்தவனாகிய உதிட்டிரன் இயமனின் புதல்வன். இயமன் பழைய தமிழ் அரச பரம்பரையை நிறுத்தியவனாவன். அருச்சுனன் இந்திரனின் புதல்வன். இந்திரனுடைய இராச்சியம் கோதாவரிக்கும் கிருட்டிணாவுக்கும் இடையிலுள்ளது. பகன் என்னும் பெரிய அசுரனை வெற்றி கொண்ட வீமன் வாயு புத்திரன். அனுமானும் அம் மரபைச் சேர்ந்தவன். வாயு பரம்பரையினர் மைசூரை ஆண்டவர். நகுல சகாதேவர் மலையாளத்தை ஆண்டவர். இவ் வைவரும் உடன்பிறந்தா ரல்லர்; நண்பர். சமக்கிருத மாபாரதத்திலும் ஐந்து அரசரும் அவரவர் பரம்பரைப் பெயர்களா லறியப்படுவர். மாபாரதப் போரில் பாண்டவரின் படைக்குப் பெருஞ் சோறு அளித்த உதியனைப் பற்றிய பழம் பாடலொன்று புறநானூற்றிற் காணப்படுகின்றது. இராமர் வாழ்ந்த காலம் எனக் கருதப்படுகின்ற அப்பொழுது தென்னிந்தியா இலங்கை என்னும் நாடுகளை ஆரியர் வெற்றி கொண் டார்கள் எனக்கொள்ள ஆராய்ச்சியாளரால் முடியவில்லை. தத்தருக்கு இவ் விடர்ப்பாடு தோன்றிற்று. அவர், மாபாரத்திற் போலவே இராமா யணத்திற் கூறப்படும் பெயர்கள் கற்பனைகள் எனச் சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறியுள்ளார். இருக்கு வேத காலம் முதல் சீதை உழவு சாலாகக் கொள்ளப்பட்டுத் தாய்த்தெய்வமாக வணங்கப்பட்டாள். பயிர்ச் செய்கை தெற்கு நோக்கிப் பரவியபோது சீதை தெற்கே கவர்ந்து செல்லப்பட்டாள் என்னும் பழங்கதையைத் தோற்றுவிப்பது கடின மன்று. சீதையும் இராமரும் திராவிடர் எனவும் அவர் நிகழ்ச்சிகள் ஆரியர் வருகைக்கு முற்பட்ட செயல்களெனவும் கொள்ளின், இராமா யணம் மாபாரதங்களைப் பற்றிய மயக்கங்கள் அகன்று விடும். ஆரியக் கவி ஒருவர் திராவிடக் கதை ஒன்றை எடுத்து இராமாயணக் கதையாகச் செய்திருக்கலாம். கந்தபுராணம் இலங்கையை ஆண்ட அசுர வேந்தனை வெற்றி கொண்ட வீரனின் வரலாறு. தமிழ்நாடு மங்கோலியர் வடகிழக்கு வழியாக இந்தியாவை அடைந்து அசாம், கூச் பீகார், நேபாளம் முதலிய இடங்களிற் குடியேறி கீழ்வங்காள மக்களோடு கலந்தார்கள். தெற்கிலிருந்து தொடங்கினால் திராவிடரின் வரலாற்றை அறிவது எளிது. தெற்கே இருந்த நாடுகள் சேர சோழ பாண்டியர் ஆட்சிக்குட்பட்ட நாடுகளாகும். இவைகளைப் பற்றிப் பழைய இதிகாசமாகிய இராமாயணம் கூறுகின்றது. பாண்டியர் தலைநக ரமாகிய கபாடபுரத்தின் வாயிற் கதவுகள் பொன்னாலும் இரத்தினக் கற்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன என்று இராமாயணம் கூறுகின்றது. பாண்டியநாடு பழைய சங்கங்களுக்கு இருப்பிட மென்று பழைய நூல்கள் கூறுகின்றன. தலைச்சங்கப் புலவர்களின் சில நூற் பெயர்கள் மாத்திரம் நமக்குக் கிடைத்துள்ளன. அச் சங்கம் கடல் கொண்ட மதுரையில் இருந்தது. இரண்டாவது சங்கம் கவாடபுரத்தி லிருந்தது. இவ் விடமும் கடலுள் மறைந்தது. இரண்டாஞ் சங்கத்து நூற்பெயர்கள் சில மாத்திரம் நமக்குக் கிடைத்துள்ளன. முதற் சங்கம் நாற்பத்தொன்பது புலவர் ஆட்சிக் காலத்தில் நடைபெற்றது. இக் கால ஆராய்ச்சி இந்தியாவின் பெரும்பகுதி கடலுள் மறைந்து போனதை வலியுறுத்துகின்றது. இந்தியாவின் நில அமைப்பைப் பற்றி எழுதிய ஒல்லந்து (Holland) என்பார் கூறியிருப்பது வருமாறு: “பம்பாய்த் தீவுக்குக் கீழே சேற்றுள் பன்னிரண்டடி ஆழத்தில் மரங்கள் படிந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. திருநெல்வேலிக் கரைப் பக்கத்திலும் நீருள் மூழ்கிப்போன காடு காணப்படுகின்றது.” பழைய இலக்கியங்கள் கூறுகின்றபடி திருநெல்வேலிக்குத் தெற்கேயே பூமி கடலுள் மறைந்தது; மறைந்துபோன தரையைப் பற்றிப் பழைய நூல்கள் கூறுகின்றன. அத் தரை கன்னியாகுமரிக்கும், பஃறுளிக்கும் மிடையே கிடந்தது. 19ஆம் நூற்றாண்டிலும் இந்தியாவின் தரைப் பரப்பில் பல மாறுதல்கள் உண்டாயின. ஒல்லந்து (Holland) கூறியிருப்பது வருமாறு:- அண்மையில் இந்தியாவின் தரை நீர்மட்டங்களில் பல மாறுதல்கள் உண்டாயின. கச்(cutch)சில் 1819இல் நேர்ந்த பூமி அதிர்ச்சியினால் ரானின் (Rann) ஒரு பகுதி நீருள் மறைந்தது. 1897இல் உண்டான பூமி அதிர்ச்சிக்குப்பின் அளந்து பார்க்கும்போது அசாம் மலைகளின் உயரத்திலும் சரிவாக நோக்கும் தூரத்திலும் பல மாறுதல் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட் டது. இவ் வுலகில் மக்கள் தோன்றி 4004 ஆண்டுகளாகின்றன என்னும் கொள்கை அடிபட்டுப் போகின்றது. ஆகவே பழைய பாடல்களையும், அரசரையும் புலவரையும் பற்றிய பழைய வரலாறுகளையும் நாம் பயனற் றனவென்று கொள்ளுவதற்குக் காரணமில்லை. இமயமலையும் கங்கைச் சமவெளிகளும் பிற்காலத்தில் கடலாழத்தினின்றும் கிளம்பியவை. இமய மலையில் 20,000 அடி வரையில் கடல் சம்பந்தப்பட்ட பொருள்கள் காணப்படுகின்றன. இந்திய நாட்டின் வேறெங்காவது இவ் வகைச் சின்னங்கள் காணப்படவில்லை. அமைப்பில் மிகப் பழமையுடைய தென்னிந்தியாவே மக்களின் ஆதியிடமாயிருத்தல் இயலாததன்று. கக்ச்லியும் வேறு சில மக்களின ஆராய்ச்சியாளரும், ஆஸ்திரேலிய மக்களும் திராவிடரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி னார்கள். மண்டை ஓட்டின் அளவு, மயிரின் தன்மை, முதலிய உடற்கூற்று ஆராய்ச்சிகளால் ஆஸ்திரேலியரும் திராவிடரும் ஒரே இனத்தவர் ஆகமாட்டார் என வில்லியம் டேயிலர் நவின்றுள்ளார். திராவிடர் இமயமலைக்கு அப்பாலிருந்து வந்தவர் என்னும் கொள்கை சிறிதும் பொருத்தமற்றதெனவும் அவ் வாசிரியரே குறிப்பிட்டுள்ளார். சமயம் இந்தியாவில் பழமை தொட்டு வாழ்ந்த மக்களின் நாகரிகம், தொழில், சமயமென்பவைகளை ஆராய்வோம். திராவிடர் சிவனை வணங்கினர். லில்லி (Lille) என்னும் மேல் நாட்டாசிரியர் தமது நூல் ஒன்றில் குறிப்பிட்டிருப்பது வருமாறு: “ஆரிய வணக்கத்துக்கு எதிராக இருந்தது சிவ வணக்கம் என்பதில் ஐயம் இல்லை. இலிங்கக் கடவுளை வழிபடுவோர் எங்கள் கிரியைகளை அணுகாதிருக்கட்டும் என இருக்கு வேதம் கூறுகின்றது. இருக்கு வேதம் பாம்பு வணக்கத்தையும் கண்டிக் கின்றது. இருக்கு வேதத்தில் பாம்பு அகி எனப்பட்டது. சிவனுக்கு இன்னொரு பெயர் பால் (Bal); அது பாலேசுவர என வழங்கும். சிவன் பினீசியரின் பால் என்றும் எகிப்தியரின் பால், சித் அல்லது தைபன் (Typhon) என்றும் கலோனல் தாட் (Colonel Tod) நம்பினார். பாட்டர்சன் (Paterson) எழுதியிருப்பது வருமாறு: “இவ்வுலகில் பெரும்பாலான மக்களிடையே சைவ சமயக் கொள்கைகள் பரவியிருந்தனவென்று தெரிகிறது. அவை மிகப் பழங்கால மக்களிடையே பரவியிருந்தன. அவர்கள் தாம் கைக்கொண்ட கிரியைகளின் பொருளை அறியாதிருந்த னர். இது பற்றியே பழைய கிரேக்கர் உரோமர்களிடையே கடவுட் சிலைகள், பழங்கதைகள் கலப்புக்களும் மாறுபாடுகளும் உண்டாயின. அயல்நாட்டு மக்கள் வெளித்தோற்றத்திலுள்ள கிரியைகளையும் குறி களையுமே பின்பற்ற முடியும். அவர்கள் கோவிலின் வாயிற்படியைக் கடந்து செல்ல விடப்பட மாட்டார்கள். சிவன் சூபிதர், ஒசிரிஸ்1, மூன்று கண்களுடைய சியஸ் (Zeus) ஆக மாறுபட்டார். சிவனின் பாரியாகிய பவானி2 யூனோ, வீனஸ், செபிலி ரோகியா, இரிஸ், செரிங், அன்னா பெரன்னா முதலிய தெய்வங்களாக மாறுத லடைந்தார். தெய்வங்கள் பலவானமைக்குக் காரணம் அயல்நாட்டு மக்கள் தாம் கையாண்ட பழங்கதைகளின் தொடக்கத்தையும் திருவடிவங்களின் கருத்துகளையும் அறிந்திராததினாலேயாகும். அவர்கள் தமது நாட்டுக்கும் பழக்கவழக்கங் களுக்கும் ஏற்றவாறு பழங்கதைகளைச் செய்தார்கள். ஆகவே அவர்கள் பழங்கதைகளில் ஒன்றோடு ஒன்று மாறுபடும் மயக்கங்கள் எழுந்தன.” திராவிட இந்தியாவினின்றும் சென்ற சிவ வழிபாடு பால், பெல் வழிபாடுகளாகப் பரவிற்று என்றும் லில்லி கருதினார். இவ் வழிபாட் டுக்கு எதிராக மொசேயும் யூத தீர்க்கதரிசிகளும் போராடினார்கள். இறுதியில் இவ் வழிபாடு ஐரோப்பாவினின்று பவுல் ஞானியரால் வெருட்டப்பட்டது. தியுதேனியரைப் (Teutons) போல இயற்கைகளை வழிபட்ட இந்திய ஆரியர் திராவிடரின் சமயக் கொள்கைகளைத் தடை செய்ய முடியவில்லை. திராவிடர் சமயக் கொள்கைகள் விசுவாமித்திரர் போன்ற இருடிகள் வழியாக அவர்கள் நூல்களில் புகுந்தன. இவ்வாறு புராண கால இந்துமதம் தொடங்கிற்று. ஆரியர் இந்தியாவை அடைவதன் முன் இந்திய யோகியர் மனிதனுக்கும் அவனைச் சூழ்ந்துள்ள உலகத்துக்குமுள்ள தொடர்பைப் பற்றியும் ஆராய்ந்தனர் என லில்லி என்பார் கூறி அதற்குப் பாரசீக இலக்கியத்தினின்று ஆதாரமுங் கhட்டியுள்ளார். 1இக் கருத்துப் பற்றியே மனத்தை ஒரு வழிப்படுத்துவதால் உயர்நிலை அடைந்த யோகியின் வடிவாக சிவன் வடிவம் கொள்ளப்பட்டது. ஆகவே அவர் பெரிய யோகி எனப்பட்டார். நீறு பூசிய உடலும், பின்னிய சடையும், உடையராய் மரத்தின் கீழிருந்து மனத்தை ஒரு வழிப்படுத்தியிருப்பவராக அவர் கொள்ளப்படுவர். பிற்காலத்திலும் திராவிடச் சூழல்களிலேயே தத்துவ ஆராய்ச்சி வளர்ச்சி யடைந்தது. இந்திய தத்துவ ஆராய்ச்சிகளுள் வளர்ச்சியடைந்த சித்தாந்தக் கொள்கை தெற்கிலேயே வளர்ச்சியடைந்தது. வேதாந்தக் கொள்கை களை விரித்து விளக்கியவர் மலையாளியாகிய சங்கராச்சாரியரே. அதன் தர்க்க முறையான விரிவுரை காஞ்சிபுரத்திலிருந்த மத்வரால் வெளியிடப் பட்டது. துவைதக் கொள்கையை விரித்து விளக்கியவராகிய மத்வர் தென் கன்னடத்தில் விளங்கியவர். கிருட்டினனும் திராவிடக் கடவுளாவர். பகவத் கீதை அவரால் செய்யப்பட்ட தெனப்படுகின்றது. இந்துமத வழிபாட்டுள் புகுந்துள்ள மற்றைய திராவிடக் கடவுளர் பலராமர், முருகன், காளி எனப்படுவர்.2 பத்தாயிரம் ஆண்டுகளின் முன், தமிழ், இலக்கிய மொழியா யிருந்ததென தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. ஆரியர் இந்தியாவை அடைந்த போது தமிழ் திருத்தமடைந்த மொழியாக விருந்தது. விஞ் ஞானம், தத்துவம் சம்பந்தமான பல சொற்களை தமிழ் சமக்கிருதத்திடம் இரவல் பெற்றதென்று சிலர் கருதுகின்றனர்; இது தவறு. அச் சொற்கள் மற்றைய ஆரிய மொழிகளில் எவ் வடிவிலும் காணப்படவில்லை. எனவே இச் செய்திவழி நாம் அறியக் கூடியது இச் சொற்களையும் அறிவிற்குரிய பல செய்திகளையும் ஆரிய மக்கள் இந்தியாவுக்கு வந்தபின் கற்றார்கள் என்பதே. அக்காலத்தில் அதிக பண்பாடடைந்திருந்த திராவிட சாதியா ரிடமிருந்து அச் சொற்களையும் கருத்துகளையும் அவர்கள் கற்றார்கள் எனக் கூறுவது பொருத்தமாகத் தோன்றவில்லையா?1 தமிழரிடத்தில் பழைய பாடங்கள் அடங்கிய நூல்கள் இருந்தபோதும் சமய சம்பந்த மான பழைய நூல்கள் காணப்படவில்லை. இவ் வகைப் பாடல்கள் பாடப்பட்ட காலத்தில் அவர்களிடத்தில் சமயத் தொடர்பான இலக்கி யங்கள் இருக்கவில்லை எனக் கூறுதல் பொருத்தமாகாது. அவ் விலக் கியங்களெல்லாம் இறந்தன. முதலாம், இரண்டாம் சங்கங்கள் இருந்த இடங்கள் கடலுள் மறைந்து போனதில் சந்தேகம் இருப்பினும் அந் நூல்கள் அமிழ்ந்து போயின என்பதில் சந்தேகம் எழுதற் கிடமில்லை. சமீப காலங்களில் தோன்றிய பல நூல்கள் மறைந்து போனமையே அச் சந்தேகத்தைத் தெளிவிப்பதாகும். சீசர் காலத்தில் வாழ்ந்த தயதோரஸ் (Diadoras) எழுதிய நாற்பது நூல்களில் பதினொரு நூல்கள் மாத்திரம் கிடைத்துள்ளன. லிவி (Livy) எழுதிய நூல்களுட் பல மறைந்து போயின. தசிதஸ் (Tacitus), தயேனிசஸ் (Dinoysius), காசியஸ் (Dion Cauuius), பொலிபியஸ் (Polybius) முதலியோரின் நூல்கள், பெரிதும் அழிந்துபோ யின. கிறித்துவ ஆண்டுக்குச் சிறிது முன் எழுதப்பட்ட நூல்களாகிய பெரோசசின் பாபிலோனிய வரலாறு, கிளேசியசால் எழுதப்பட்ட பாரசீக வரலாறு, மெகஸ்தீனசின் இந்திய வரலாறு, மெனிதோயிசின் எகிப்திய வரலாறு முதலியவைகளில் பிற ஆசிரியரால் மேற்கோளாகக் காட்டப்பட்ட சில பகுதிகளையன்றி மற்றவை மறைந்து போயின. ஆரியர் இந்தியாவை அடைந்தபோது, திராவிடர் சிறந்த நாகரிக முடையவர்களா யிருந்தார்களென்று இருக்கு வேதம் கூறுகின்றது1. திராவிடர் அரண் செய்யப்பட்ட நகரங்களில் வாழ்ந்தார்கள்; உலோகங் களில் செய்த அணிகலன்கள், திறமையான ஆயுதங்கள், ஆடு, மாடு முத லான திரண்ட செல்வம் உடையவர்களாகவும் மாயவித்தை யறிந்த வர்களாயு மிருந்தனர். இந்தோ ஆரியர் அலைந்து திரியும் மக்களா யிருந்தனர். முந்திய நாகரிகத்தைப் பற்றிய வரலாறு அவர்களுக்கு இல்லை. “பழங்குடிகளிடமிருந்தே ஆரியர் கல்லினாற் கட்டிடம் அமைக்க அறிந்தார்கள். அவர்கள் மற்றைய இந்து ஐரோப்பியரைப் போல மரத்தினால் அல்லது மரக் கம்புகளினால் கட்டிட மமைக்கவும் குகைகளில் வாழவும் அறிந்திருந்தனர்” எனப் பெரிய வரலாற்றாசிரியர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். பழைய திராவிடர் கடற்பயணம் செய்யும் சாதியினர். மலையாளக் கரைக்கும் பாபிலோனுக்குமிடையில் வாணிகம் நடந்ததென்பதற்கு அரிய சான்றுகள் உண்டு. சாலதியாவிலே கி.மு. 3000இல் அமைத்த கட்டிடமொன்றில் மலையாளத் தேக்க மர உத்திர மொன்று காணப்பட்டது. இந்தியாவிலிருந்து பாபிலோனுக்கு வேட்டை நாய்கள் அனுப்பப்பட்டன; இரத்தினக் கற்கள், துணிக்கு ஊட்டும் சாயங்களும் அனுப்பப்பட்டன. பாபிலோனியர் ஆடையைக் குறிக்க வழங்கிய பெயர் சிந்து. சிந்து என்பது சிந்து ஆறு. சிந்து ஆற்றின் முகத் துவாரத்தில் நாக சாதியாரின் பெரிய இராச்சியம் இருந்தது. நாகர் பாண்டி நாட்டில் வாழ்ந்த நாகர் அதிக மசிலின் துணிகளைப் பிற நாடுகளுக்கு அனுப்பினர். இது பிற்காலத்திலும் நடைபெற்றது. திராவிடர் மேற்கு ஆசியாவொடு வாணிகம் நடத்தியதன் பயனாகத் தமிழ்ச் சொற்கள் பல கிரேக்க எபிரேய மொழிகளில் சென்று வழங்கின. அவை, அரிசி, மிளகு, குரங்கு, மயில், தந்தம், சந்தனக்கட்டை, இஞ்சி, கறுவா முதலியவைகளைக் குறிக்கும் சொற்கள். இயக்கர் நாகர் இராக்கதர் அசுரர் எனக் குறிக்கப்பட்டோர் யார் என்பதைப்பற்றி இப்பொழுது ஆராய்வோம். இவர்கள் பழங்காலத்தில் இந்தியாவையும் இலங்கையையும் ஆண்ட கூட்டத்தினர். புராணங்கள் கூறும் பழைய வரலாற்றின்படி அசுரரின் முக்கிய இடம் இலங்கை. பின்பு இலங்கை இராக்கதரின் இருப்பிடமாயிருந்தது. இராக்கதரும் அசுரரும் வலிமை மிக்கவ ராயினும் நாகர் மிகத் திருந்திய மக்கள். சேர் ஹெர்பாட் ரைஸ்லி (Sir. Herbert Risely) கூறுவது வருமாறு: “தக்காணம் உலகில் மிகப் பழைய நிலஅமைப்புடையது. வரலாற்றுத் தொடக்கத்திலிருந்து அது திராவிடரின் உறைவிடமாக வுள்ளது. திராவிடரே இந்தியக் குலத்தினர் களுள் பழமையுடையோர்” வேர்கூசன் (Ferguson) என்பாரும் இக் கருத்தே யுடையர். திராவிடர் சுமேரியரை ஒத்த சாதியினர் என்பதற்கு ஆதாரமுண்டு. வடமேற்கு இந்தியத் திராவிடருக்கும் பாபிலோனியருக் கும் தொடர் பிருந்ததென்பது ஆச்சரியப்படத் தக்கதன்று. இரு சாதி யினருக்கும் பொதுவான பல தொடர்புகள் இருந்தன; இரு சாதியினரும் ஒரு குலத்தைச் சேர்ந்தவர்களுமாவர். மொழி ஆராய்ச்சி இதனை வலியுறுத்துகின்றது. 1திராவிட மொழிகளைப் போலவே சுமேரிய மொழியும் ஒட்டுச் சொற்களை யுடையது.2 மண்டை ஓடு சம்பந்தமான ஆராய்ச்சியும் இரு சாதியினரும் இனமுடையர் என்பதை வெளியிடு கின்றது. சுமேரியச் சொற்கள் பல தமிழ்ச் சொற்களாகவும் தமிழில் வழங்கும் அதே பொருளுடையனவாயுமுள்ளன. இந்தியாவிலும் இலங்கையிலும் ஊர் என முடியும் இடப்பெயர்கள் பல உண்டு. பாபி லோனியாவிலே நிப்பூர் ஊர் என்னும் இடப்பெயர்கள் இருந்தன. மனா என்பது சுமேரியத்தில் ஊரைக்குறிக்கும். தமிழிலும் அதற்கு அதே பொருள் உண்டு. மன்னன் என்னும் தமிழ்ச் சொல்லுக்குப் பொன்னை யுடையவன் என்பது பொருள். அசீரிய மன்னர் தமக்குப் பால் என்னும் பட்டப்பெயர் இட்டு வழங்கினர். பால் என்பதற்கு அரசன் அல்லது பாதுகாப்பவன் (பாலிப்பவன்) என்று பொருள். பாபிலோனியரின் இடியோடுகூடிய இருண்ட முகிற் கடவுளுக்கு இராமன் என்று பெயர். இது தமிழில் கறுப்பு மனிதன் எனப் பொருள்படும். அசீரியா அசூரின் நாடு. பழைய புராணங்கள் இலங்கை அசுரரின் முக்கிய இருப்பிடம் எனக் கூறுகின்றன. காலா என்பது அசீரிய பட்டினங் களிலொன்று. இலங்கையிலும் காலா என்னும் பட்டினமொன்று இருந்தது. இங்கிருந்து ஆசிய நாட்டுப் பண்டங்கள் பல மேற்கு நாடு களுக்கு ஏற்றுமதியாயின. புராண காலத்தில் இலங்கை இலம் அல்லது ஈழம் எனப்பட்டது. சுமேரிய நாகரிகமுடைய எல்லம் என்னும் நாட்டைப் பாபிலோனியாவின் எல்லையிற் காண்கின்றோம். பாபி லோனியாவில் பயன்படுத்தப்பட்டன போன்ற ஈமத்தாழிகள் தென்னிந்தி யாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் வரலாற்றுக்கு முற்பட்ட பழமை சென்னையில் நடத்திய புதைபொருள் ஆராய்ச்சியில் கிடைத்த பழம்பொருள்களைப் பார்த்தபின் வின்சென்ட் சிமித் என்னும் வரலாற்றாசிரியர் கூறியிருப்பது வருமாறு: “இப் பழம் பொருள்கள் பாபிலோனிலே பாக்தாத்துக்கு அண்மையில் கிடைத்த பொருள்களை ஒத்திருக்கின்றன. இவ் வுண்மை பழைய இந்திய பாபிலோனிய நாகரிகங் களைத் தொடர்புபடுத்துவதற்குக் காட்டப்படும் பல சான்றுகளில் ஒன்றாகும். இது மேற்கு ஆசிய இந்திய மக்களின் குல ஒற்றுமையை வற்புறுத்திக் கூறுவதற்கும் தூண்டுதலாக வுள்ளது.” இறந்தவர்களைத் தாழிகளில் இட்டுப் புதைக்கும் வழக்கம் இரு நாடுகளிலும் இருந்து வந்தது. திருநெல்வேலிப் பகுதியிலுள்ள பழைய இடுகாடு ஒன்று ரே (Rea) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. அது 114 ஏக்கர் நிலப்பரப்புக் கொண்டது. ஒரு ஏக்கரில் 1000 தாழிகள் வரையில் புதைக்கப்பட்டிருக்க லாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இறந்தவர்களை இவ் வகையாகப் புதைக்கும் வழக்கம் மற்றைய மக்களிடையே அறியப்பட்டிருக்கவில்லை. இரு நாட்டு மக்களின் சமயமும் ஒரேவகையாக விருந்தது. இந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்த திராவிடர் பாபிலோனியாவினின்று வந்தார் களா? எல்லா வகையான காரணங்களும் எதிரான முடிவையே தெரிவிக் கின்றன. சுமேரியர் எல்லத்தைத் தமது குலத்தவரின் தொட்டில் எனக் கருதினார்கள். சமக்கிருத புராணங்களின்படி பழைய இந்தியர் இளா (எல்ல) விருதத்தைத் தமது தாயகமாகக் கொண்டனர். விருதம் என்பதற்கு நாடு என்பது பொருள். எல்லம் எங்குள்ளது? எல்லம் பாபிலோனியா வின் அயலே யுள்ள நாடா? எல்லத்தைப்பற்றி விங்கர் (Wenker) எழுதிய வரலாற்றில், “செமித்தியர் (எல்லம் சுமேரியா என்னும்) முழு நாட்டுக்கும் எல்லம் எனப் பெயரிட்டு வழங்கினார்கள் என்றும் அன்ஷான் அல்லது சாம் என்பதே அதன் பெரும்பகுதிக்கு வழங்கிய உள்நாட்டுப் பெயர்” என்றும் காணப்படுகின்றது. செமித்திய காலத்திற்கு முற்பட்ட சுமேரிய காலத்தில் எல்லம் என்னும் பெயர் வழக்கில் இருக்கவில்லை. ஆகவே சுமேரியர் பாபிலோனிய எல்லத்தைத் தமது தாயகமாகக் குறிப்பிட் டிருக்க மாட்டார்கள். அந் நாடு சிறியதாயும் பாபிலோனுக்கு அண்மையி லுள்ளதாயும் இருந்தது. அது பாபிலோனிலிருந்து மலைத் தொடராலா வது கடலாலாவது பிரிக்கப்பட்டிருக்கவில்லை. அதற்குச் சிறிது தொலை வில் வாழ்ந்த சுமேரியர் அதனைப் புறம்பான நாடாகக் கொண்டு அதனைத் தமது தாயகமெனக் கூறினார்கள் என்பது பொருத்தமாகத் தோன்றவில்லை. இந்திய பாபிலோனிய எபிரேய பழங்கதைகள் பழைய வெள்ளப் பெருக்கு ஒன்றைப்பற்றிக் கூறுகின்றன. விவிலிய மறையிற் கூறப்படும் நோவா, பாபிலோனிய ஹாசி சதரா, இந்திய மனு அல்லது சத்தியவிரதன் என்போரும், அவருடன்கூட இருந்த சிலரும் அவ் வெள்ளப் பெருக்கி லிருந்து பிழைத்தனர். யான் படைத்த உயிருள்ளவைகளை எல்லாம் யானே அழிப்பேன் என்று ஜெகோவா நோவாவுக்குச் சொன்னார். இவ் வெள்ளப் பெருக்கு பழைய பெரிய பரந்த இடத்தை அழிவுபடுத்திய தெனக் கூறமுடியாது. இம் மறைவு நிலம் கடலுள் மறைந்தது போல்வ தால் உண்டாயிருக்கலாம். மனிதன் தோன்றிய பின் மேற்கு ஆசியாவின் எப் பகுதியாவது கடலுள் மறைந்துபோனமைக்குச் சான்று இல்லை. இலங்கை இந்தியப் பழங்கதைகள் மறைந்து போன நிலத்தைப்பற்றிக் கூறுகின்றன. மனிதனின் ஞாபகத்துக்கு எட்டாத ஒரு காலத்தில் இலங்கையும் இந்தியாவும் ஒன்று சேர்ந்திருந்தன. வலேஸ் (Wallace) கூறியிருப்பது வருமாறு: “ஐந்தாவது காலக் கூற்றில் (Tertiary Period - மனிதன் இப் பூமியில் தோன்று முன்) இலங்கையும் தென்னிந்தியாவும் வடக்கே பெரிய கடலை எல்லையாகப் பெற்றிருந்தன. இவை (இலங்கை யும் தென்னிந்தியாவும்) தெற்கேயிருந்த பெரிய பூகண்டத்தின் பகுதியாக விருக்கலாம்.” இலங்கை இந்தியாவினின்றும் பிரிந்திருந்த காலத்தும் தென்னிந்தியா பெரிய தீவாகவிருந்தது. இராமாயணத்திலும் மகாவம்சத் திலும் காணப்படும் பழங்கதைகளின்படி இலங்கையின் 11/12 பகுதிகள் கடலுள் மறைந்து போயின. இதனால் சத்தியவிரதன் என்னும் திராவிட மனு கடலுள் மறைந்துபோன நிலப்பரப்பின் ஒரு பகுதியினின்றும் மலை யத்தை அடைந்தான் என்பது ஏற்றதாகத் தெரிகின்றது. இப் பழங்கதை இந்தியர் இளாவிருதத்தினின்றும் வந்தார்கள் என்னும் பழங்கதையை விளக்குகின்றது. சுமேரியர் எல்லத்தினின்றும் சென்றார்கள் என்பதை யும் இது விளக்குகின்றது. இது பாபிலோனிய இந்திய வெள்ளப் பெருக்கைப்பற்றி விளக்குவதுமாகும். பாபிலோனியர் தமது நாகரிகம் கடலுக்கு அப்பால் இருந்து வந்ததென நம்பினார்கள் ஈஆ. சுமேரியரை நாகரிகப்படுத்திய தெய்வம். இக் கடவுளைப்பற்றி டாக்டர் சேஸ் (Dr. Sayce) எழுதியிருப்பது வருமாறு: “ஈஆ என்னும் கடவுள் நாளும் தனது இடமாகிய கடலினின்றும் எழுந்து மனிதனுக்கு விஞ்ஞானக் கலையையும், கைத்தொழிலையும், நாகரிகப் பழக்கங்களையும் கற்றுக்கொள்ள உதவினார். அவரே முதல் முதல் எழுதும் முறையை அறிவித்தார். ஈஆவின் பண்பு மிக்க இடமாகிய எருது நகர் ஒருபோது கடற்கரைப் பட்டினமாக இருந்தது. அது மற்றைய நாடுகளோடு வாணிப உறவு பூண்டிருந்தது. அந் நாடுகள் அதன் நாகரிகத்தை வளம்பெறச் செய்தன.” சுமேரிய பழங் கதைகளின்படி ஈஆ பாரசிகக் குடாக்கடலில் வாழ்ந்து அழகிய மரக்கலத்தில் உலகைச் சுற்றி அடிக்கடி பயணஞ் செய்தார். இப் பழங்கதையினால் சுமேரியரின் நாகரிகம் கடலுக்கு அப்புறத்திலிருந்து வந்ததெனக் கொள்ளக் கிடக்கின் றது. அவர்களின் ஆதியிடம் இலங்கையும் மலையாளமுமாக இருக்க லாம். அராபியரின் பழங்கதைகளின்படி மனிதனின் ஆதி உறைவிடம் இலங்கையாகும். ஏதேன் தோட்டத்தினின்றும் வெளியேற்றப்பட்டபின் ஆதித் தாய் தந்தையர் இலங்கைக்குச் சென்றார்கள். இப் பழங்கதை யினால் மேற்கு ஆசிய மக்கள் மேற்கு ஆசியாவைத் தமது ஆதி இருப்பிட மாகக் கொள்ளவில்லை எனத் தெரிகின்றது. இப்போதைய விஞ்ஞானிகளின் முடிவு எவ்வாறிருக்கின்றது? பேராசிரியர் ஹெக்கல் மறைந்து போன கண்ட பூகண்டமே மனிதரின் தொட்டில் எனக் கருதினார். டாக்டர் மாக்லீன் (Dr. Macleane) கூறுவது, “மக்களின் குல சம்பந்த மான ஆராய்ச்சியினால் வடக்கிலுள்ள மத்தியதரைச் சாதியினர் தென் னிந்தியாவினின்றும் சென்று உலகின் பல பாகங்களில் பரவினார்கள் என்று கூறுவதை மறுப்பதற்குக் காரணமில்லை”1 என்பதாகும். திராவிடக் குலத்தினர் வடக்கினின்றும் வரவில்லை. தெற்கினின் றுமே வந்தார்கள், தெற்கே இருந்த நாடு தென்தீவாகலாம்; இலங்கை அதன் பகுதியாக இருந்ததெனலாம். மூன்று உலகத்தாருக்கும் பயம் விளைவித்த திராவிட மக்களின் உறைவிடம் இலங்கை எனப் புராணங் களும் இதிகாசங்களும் கூறுகின்றன. திராவிடர் இந்தியா முழுமையிலும் பரவிப் பலுச்சிஸ்தானம் வரையில் சென்றார்கள். அங்கு திராவிட மொழியின் சிதைவாகிய திராவிடம் இன்றும் வழங்குகின்றது. இன்று வட இந்தியாவில் வாழும் சிறுசிறு கூட்டத்தினர் இன்றும் திரா விட மொழிகளைப் பேசுகின்றனர். தரை வழியாகவும் கடல் வழியாகவும் திராவிடர் பாபிலோனியா, அசீரியா, எல்லம் முதலிய மேற்கு ஆசிய நாடுகளுக்குச் சென்றார்கள். நிநூஸ் (Ninus) மக்களின் இராணியாகிய செமிரமிஸ் நிநேவாவை கி.மு. 3000-க்கு முன் அமைத்தாள் என்றும், உலகிலுள்ள மக்கள் எல்லாரி லும் பார்க்க இந்தியரே உயர்வுடையவர்களும் செல்வமுடையவர்களும் எனக் கேள்வியுற்ற அவள் அவர்களோடு போர் தொடுத்து முறியடிக் கப்பட்டா ளென்றும் பாபிலோனியப் பழங்கதை கூறுகின்றது. தமது நாகரிகம் ஒசிரிஸ் என்னும் கடவுளால் உண்டானதென எகிப்தியர் கூறு கிறார்கள். ஒசிரிஸ் கடவுள் இந்தியாவில் பல பட்டினங்களைக் கட்டிற்று என அவர்கள் பழங் கதைகள் கூறுகின்றன. அக் கடவுள் தான் வாழ்ந்த அடையாளங்களை அவ் விடங்களில் விட்டமையால் பிற்கால மக்கள் அக் கடவுளின் பிறப்பிடம் இந்தியா என நம்பினார்கள். பாபிலோனிய வரலாற்றின்படி நீரேவாரகா அமைக்கப்பட்ட காலத்தில் உலகிற் பெரிய சாதியினர் இந்தியாவில் வாழ்ந்தார்கள். இந்திய தெய்வமாகிய ஒசிரிஸ் எகிப்திய நாகரிகத்தை உண்டு பண்ணிற்று என இந்தியர் கூறினார்கள் என பழைய எகிப்திய வரலாறுகளிலிருந்து அறிகின்றோம். திராவிடர் வரலாற்று ஆராய்ச்சியினால் இந்தியர் எகிப்தியர் பாபி லோனியர் நாகரிகங்கள் ஒத்த பழமையுடையன எனத் தெரியவருகின்றது. தமிழர் தென்திசைத் தீவினின்று இந்திய நாட்டை அடைந்தவர்க ளாயின் இலங்கையின் நாகரிகம் இன்னும் பழமையுடையதாகும். தென் கண்டத்தினின்றும் சென்ற திராவிடர் வெள்ளப் பெருக்கின் முன்னிருந்த திராவிட அடிப்படையை மேலும் பலமடையச் செய்திருக்கலாம். இலங்கையில் வாழும் மக்கள் சிலர் பழைய மக்களின் வழித்தோன்றல்க ளாவர். 1தென்னிந்தியரின் கடல் ஆதிக்கம் வரலாற்றுக் காலத்துக்கு முன்தொட்டுத் தென்னிந்தியா மேற்குத் தேசங்களோடு வாணிபத் தொடர்பு கொண்டிருந்தது. பஞ்சாப்பிலும் சிந்துவிலும் நடத்திய புதைபொருள் ஆராய்ச்சியில் பழம்பொருள்கள் பல கிடைத்துள்ளன. அவை சூசா, பாபிலோன் முதலிய இடங்களிற் கிடைத்த பழம்பொருள்களை ஒத்தன. அப் பழம்பொருள்களின் காலம் கி.மு. 3000 வரையிலாகும். மண்பாண்டங்கள், கண்ணாடி வளைகள், எழுத்துகள் வெட்டப்பட்ட முத்திரைகள் என்பன அப் பழம் பொருள்கள். சில ஆண்டுகளின் முன் டாக்டர் ஆர்நெல் (Dr. Hornell) சூசா, இலகாஷ் என்னும் இடங்களிற் கிடைத்த கிண்ணங்கள், கை வளைகள் இந்தியப் பொருள்களே எனக் காட்டியுள்ளார். ஆதிச்ச நல்லூர் சமாதிகளிற் கண்டுபிடிக்கப்பட்ட ஈமத்தாழிகளில் கிடைத்த மண்டை ஓடுகள் எகிப்தியரின் மண்டை ஓட்டை ஒத்தன வென்று பேராசிரியர் எலியட் சிமித் தெளிவுபடுத்தியுள்ளார். பேராசிரியர் சிமித், பெரி என்னும் இருவரும் கி.மு. 2,600 முதல் இந்தியாவுக்கும் எகிப்துக்கு மிடையில் தொடர்பு இருந்ததென்பதை ஏற்றுக் கொண்டார்கள். பிளின்டேர்ஸ் பெற்றி (Flinders Petrie) என்பார் எகிப்தில் அரச பரம்பரை தோன்றுவதற்கு முற்பட்ட மக்கள் எல்லத்திலிருந்து சென்றவர்கள் ஆகலாம் என்று மண்டை ஓட்டின் அளவு, வடிவங்களை ஆதாரமாகக் கொண்டு கூறியுள்ளார். பாபிலோனில் வாழ்ந்த சுமேரியர் கடல்வழி யாகவோ தரைவழியாகவோ இந்தியாவினின்றும் சென்ற திராவிடர் ஆகலாம் என டாக்டர் ஹால் கருதியுள்ளார். மினோவருக்கும் திராவிட ருக்கும் உறவு இருந்ததென்பது ஐதரபாத்தில் கிடைத்த வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட மட்பாண்டங்களைக் கொண்டு நன்கு தெளியப் படுகின்றது. பிற்காலத்தில் மேற்குத் தேசங்களுக்கும் இந்தியாவுக்கும் தொடர்பிருந்த தென்பதை விளக்கும் பல சான்றுகள் உள்ளன. அண்மையில் எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பக்குவம் செய்யப்பட் டுள்ள பிணங்கள் (Mummies) இந்திய அவுரி நீலத்தால் சாயமூட்டப்பட்ட துணிகளால் சுற்றப்பட்டிருந்தன. பல்லாவரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஈமத்தாழிகளை ஒத்தவை பாக்தாத்திலும், எற்றூஸ்கா(இத்தாலி)விலும் கண்டுபிடிக்கப்பட்டன. எற்றூஸ்கானிய ஈமத்தாழிகள் தென்னிந்தியத் தாழிகளை எல்லா வகையிலும் ஒத்துள்ளன. தென்னிந்தியாவில் தாழி களில் வைத்துப் பிரேதங்களைப் புதைக்கும் வழக்கு இருந்ததென்பது இராமாயணம், புறநானூறு, மணிமேகலை முதலிய நூல்களால் விளங்கு கின்றது. போசானியஸ் (Pousanias) என்னும் கிரேக்கர் (கி.பி. 200) பதி னொரு முழ நீளமுள்ள இந்திய தாழிகளைப் பற்றிக் கூறியிருக்கின்றார். எபிரேய மொழியில் காணப்படும் துகிம் அகலிம் என்பன தோகை அகில் என்னும் தமிழ்ச் சொற்களே என நீண்ட நாட்களின்முன் கால்டு வெல் காட்டியுள்ளார். கி.மு. 9ஆம் நூற்றாண்டில் அசீரிய அரசனாகிய மூன்றாம் சாலமன் சர் நாட்டிய தூணில் இந்தியக் குரங்குகளும் யானை களும் வெட்டப்பட்டுள்ளன. இந்தியாவினின்றும் வெளிநாடுகளுக்குப் போக்கப்பட்ட துணிகளுக்குப் பலவகைச் சாயங்கள் ஊட்டப்பட்டிருந் தன வென்பது அரிஸ்தோ புலுஸ் (Aristobulus) என்பார் கூற்றுகளால் விளங்குகின்றது. மகாவம்சம் என்னும் சிங்கள நூல் ஐந்து நிறங்கள் ஊட்டப்பட்ட உடைகளைப் பற்றியும், மஞ்சள்நிற ஆடைகளைப் பற்றி யும், நாகர் அணியும் மல்லிகைப் பூப்போன்ற நிறமுடைய உடையைப் பற்றியும் கூறுகின்றது. வாணிகம் பெரும்பாலும் கடல் வழியாக நடந்தது. மிகப் பழங் காலம் முதல் தரைப்பாதை இருந்த தெனவும் கொள்ளப்படுகின்றது. அவ்வாறாயின் இந்தியா பாபிலோன் எகிப்து என்னும் நாடுகளை இணைக்கும் மத்திய இடங்கள் இருந்தனவாகலாம். அரிசி என்னும் தமிழ்ச்சொல் அராபி மொழியில் அல்ராஸ் என்றும் கிரேக்கில் அரிசா என்றும் வழங்கும். அரிசிக்கு வடமொழிப் பெயர் விரீகி, பாரசீகப் பெயர் விரிசினசி. இதனால் கிரேக்கரும் உரோமரும் அராபியர் மூலம் அரிசி யைப் பெற்றார்கள் எனத் தெரிகிறது. பாரசீகர் இந்துத்தானத்தில் நின்றும் அதனைப் பெற்றனர். கிரேக்கர் அரிசியை வட இந்தியாவினின் றும் பெற்றால் அரிசியைக் குறிக்கும் பெயர் அரிசி என்றிராது. விரீகி என்றிருக்கும் அரிசி இந்தியா, பர்மா, சீனா, என்னும் நாடுகளுக்குரியது. கி.மு. 2,800இல் சீனாவில் அரிசி அறியப்பட்டிருந்தது. தென்னிந்தியாவி லும் அரிசி அக்காலத்தில் அறியப்பட்டிருக்கலாம். தென்னிந்தியரிடத்தில் கரை ஓரங்களில் செல்லும் சிறிய மரக் கலங்கள் இருந்தனவென்றும் அவை இலங்கைத் தீவுக்கு அப்பால் செல்லவில்லை என்றும் டாக்டர் கால்டுவெல் கூறியுள்ளார். எகிப்திலே கண்டுபிடிக்கப்பட்ட பழம்பொருள்கள் இக் கொள்கை தவறுடைய தென்பதைக் காட்டிவிட்டன. எகிப்திய ஐந்தாம் அரச பரம்பரைக் கால ஓவியங்களிற் காணப்படும் மரக் கலங்கள் இந்திய மரக்கலங்கள் போலவே உள்ளன. மண்டை ஓடுகளின் ஒற்றுமை, ஞாயிறு பருந்து இடப வழிபாட்டுத் தொடர்புகள் இவ்விரு நாடுகளுக்கிடையில் தொடர் பிருந்த தென்பதை வெளியிடுகின்றன. தென்னிந்தியா மேற்கு உலகோடும் கிழக்கு உலகோடும் தொடர்பு வைத்திருந்ததாயினும் கடற் பயணங்கள் பிறருதவியின்றி இந்திய மக்களாலேயே நடத்தப்பட்டன. இந்திய மரக்கலங்களின் முன்புறத்தில் இரு கண்கள் வைக்கப்பட்டிருத்தலைக் காணலாம். இன்று அவை அழகுக்காக வைக்கப்படுகின்றன. எகிப்தியர் முற்காலத்தில் அவைகளை ஒசிரிஸ் தெய்வத்தின் கண்களாகக் கருதி அமைத்தனர். மரக்கலங்களுக் குக் கண் வைக்கும் வழக்கம் எகிப்தியரிடமிருந்து தமிழர் பெற்றதெனத் தெரிகின்றது. திராவிடரின் படகு செலுத்தும் தண்டு சத்தகம் எனப்பட் டது. இது வட்ட வடிவுடையது. பாய், பாய்மரம் முதலின திராவிடப் பெயர்களே. நங்கூரம் என்பதும் திராவிடச் சொல்லே. ஓடம், ஒதி, தோணி, தெப்பம், கலம், கப்பல், முதலிய சொற்கள் வெவ்வேறு வகை மரக்கலங்களைக் குறிக்கின்றன. “தமிழகத்தில் கரையை அடுத்துச் செல்லும் மரக்கலங்கள் உண்டு. மரங்களைச் சேர்த்துக் கட்டிச் செய்யப் பட்ட மரக்கலங்களுள்ளன. கங்கை ஆற்றில் செல்லும் மரக்கலங்கள் கொளந்தைய எனப்படுகின்றன.” எனப் பிளினி கூறியுள்ளார். முற்காலத் தில் அறியப்பட்ட பலவகை மரக்கலங்களை இன்னும் மலையாளக் கரையில் காணலாம். ஆரிய மக்கள் கடல் வாணிகத்தால் இலாபஞ் சம்பாதிக்க ஆவலுடை யவர்களாயிருந்தார்கள் என்று இருக்குவேதம் கூறுகின்றது. இருக்கு வேதத்தில் பிலவ, நோ முதலிய சொற்கள் மரக்கலத்தைக் குறிக் கின்றன. நாவாய் என்னும் சொல் இருக்கு வேதத்தில் ஓரிடத்தில் மாத்திரம் வருகின்றது. மரத்தில் குடையப்பட்ட மரக்கலத்தைக் குறிக்கும் தாரு என்னும் சொல் இருக்கு வேதத்தின் கடைசி மண்டலத்தில் காணப்படுகின்றது. இருக்கு வேதத்தில் தண்டைக் குறிக்க அரித்திரா என்னும் சொல் வழங்கப்பட்டுள்ளது. பாய்மரம், சுக்கான் என்பவை களைக் குறிக்கச் சரியான சொற்கள் காணப்படவில்லை. ஓடக்காரனைக் குறிக்கும் நாவாயா என்னும் சொல்லும், சுக்கானைக் குறிக்கும் நோமண்ட என்னும் சொல்லும் சதபதப் பிராமணத்தில் காணப்படு கின்றன. ஓடம் செல்லக்கூடிய ஆறுகளுக்கு நாவாய என்னும் பெயர் முதல் மண்டிலத்திற் காணப்படுகின்றது. ஓடக்காரர் சம்பந்தமாக அரித் திரா என்னும் பெயரைவிட வேறு யாதும் எசுர்வேதத்தில் காணப்பட வில்லை. அதர்வ வேதத்தில் சம்பின் என்னும் பெயர் காணப்படுகின்றது. இது இருக்கு வேதத்தில் பொருள் மயக்கமுடைய சம்பா என்னும் சொல்லோடு தொடர்புடையதாகலாம். இச் சொற்களை ஆராய்வதால் ஆரியரின் கடற் பயணங்கள் திராவிட அடிப்படையைப் பெற்றிருந்தன வென்பது விளங்கும். அரித்திரா என்னுஞ் சொல் கப்பல் ஓட்டும் தண்டைக் குறிக்கும் அரிகோலா (Harigola) என்னும் திராவிடச் சொல்லை நினைவுக்குக் கொண்டுவருகின்றது. அரிகோலா என்பது அரிவா, கோல் என்னும் இரண்டு சொற்களாலானது. இது பரிசல் என்னும் சொல்லின் வேறுபாடென்றும் அது பார்ஷாற் எனத் திரிந்து வேதகாலச் சொல்லாக வழங்கிற்றென்றும் கொள்ளலாம். சம்பா என்னுஞ் சொல் சம்பான் என்னும் மலாயச் சொல்லை நினைவூட்டு கின்றது. சம்போசின் தலைநகர் சிந்து ஆற்றின் மேற்குக் கரையில் இருந்ததென அரியன் (Arrian) கூறியுள்ளார். சம்பி என அதர்வவேதத்திற் காணப்படுஞ் சொல் மரக்கல மோட்டிகளையே குறிக்கின்றது. கௌடலியர் மரக்கலம் சம்பந்தமாகக் குறிப்பிடும் பெயர்களுள் வேணு, வேணுகா என்னும் சொற்கள் காணப்படுகின்றன. வேணு என்னும் சொல்லுக்கு நேரான சொல் வேதங்களிற் காணப்படவில்லை. அது ஓடம் என்னும் திராவிடச் சொல்லை ஒத்துள்ளது. அமரகோசம் என்னும் நிகண்டினால் இச் சொற்கள் இரவல் வாங்கப்பட்டன என்று தெரிகின்றது. ஒரே பொருளில் வழங்கும் பிளவ, உடுப, கோல, ஓட, அரிகோல என்பவை போன்றதே வேணு என்பதும். புத்த நூல்களில் சொல்லப்படும் மரக்கலங்கள் கட்டுவதற்கு இரும்பு பயன்படுத்தப் படவில்லை. தந்த குமாரனும் அவனது மனைவியும் தாமிரலிப்தியி லிருந்து இலங்கைக்குப் பயணஞ் செய்த மரக்கலம் பலகைகளைக் கயிற்றினால் பிணைத்துச் செய்யப்பட்டது. பலகைகள் மூங்கில் முளைகள் அறைந்து பொருத்தப்பட்டன. ஓடம், தோணி, தெப்பம் முதலிய பெயர்கள் மரக்கலங்களின் வளர்ச்சியைக் காட்டுவன. காட்டுப் பிரம்புகளைப் பின்னிச் செய்த ஓடங்கள் பிளினி காலம் வரையில் வழங்கின. இதன்பின் தோணி (மரத்தைத் தோண்டிச் செய்யப்படுவது) செய்யப்பட்டது. இதன்பின் மரங்களைக் கயிற்றினாற் பிணைத்துக் கட்டப்படும் தெப்பங்கள் செய்யப்பட்டன. பின்பு மரப் பலகைகளைப் பொருத்திச் செய்யப்படும் பிளாவு செய்யப்பட்டது. இது இன்றும் மலையாளத்திற் காணப்படுவ தும் மரக்கலம் கட்டப் பயன்படுவதுமாகிய அயினிபிளாவு என்னும் ஒருவகைப் பலாவோடு சம்பந்தப்பட்டதாகலாம். இதற்கு அடுத்தபடியி லுள்ளது கலம். அடித்தட்டுக்கு மேலே மேற்கட்டி அல்லது மறைப்பு உடையது கப்பல் எனப்படும். தெலுங்கில் கப்ப என்பதற்கு மறைப்பு என்று பொருள். தோணியைக் குறிக்கும் தாரு என்னும் சொல் ஒரு முறையும், கட்டுமரத்தைக் குறிக்கும் தியுமந, இரண்டு பக்கங்களிலும் சவள் வலிக்கும் பக்கங்களையுடைய சமயானி, நோயான, அரிதிரா முதலிய பெயர்கள் பல விடங்களிலும் வேதங்களில் வந்துள்ளன. சமக் கிருதத்திலுள்ள கர்ப்பாரா என்பது கர்பசாமாத்தியா என்னும் சொல் லின் வேறுபாடு. தியுமந என்னும் சொல் மரக்கலத்திலுள்ள மேடையைக் குறிக்கின்றது. பழைய தமிழ்நூல்களில் கடற் பயணங்களைப் பற்றிய செய்திகள் அறியக்கிடக்கின்றன. மிகப் பழங்காலத்தில் கடற்பயணஞ் செய்வதிற் பேர்போனவர்கள் கொல் (Kols) என்னும் மக்கள். கோலாப்பூர், கொல் லம் முதலிய பெயர்களே அவர்களின் ஞாபகமாகக் காணப்படுகின்றன. கொல் மக்களிடமிருந்து கரைநாடுகளை நாக சாதியினர் கைப்பற்றியிருந்தனர். சமக்கிருத நூல்களிற் காணப்படும் கற்பனையோடு சம்பந்தப்பட்ட வரலாறுகளால் நாகர் தீவுகளில் வாழ்ந்தவர்கள் என்பதும், அவர்கள் கடல் ஆதிக்கம் பெற்றிருந்தார்கள் என்பதும் விளங்கும். அருச்சுனன் உலூபியை மணந்தான் என்பதால் நாகர் என்போர் சரித்திரத் தொடர்புடையவர்களே என விளங்குகின்றது. இராமரின் புதல்வனாகிய குசலன் குமுட்வதி என்னும் நாகப்பெண்ணை மணந்தான். நாகதீவு பாரத வருடத்திலுள்ள ஏழு தீவுகளுள் ஒன்று எனப் புராணங்கள் கூறுகின்றன. சரித்திரக் காலத்திற்கு முன்னரேயே நாகர் இந்துமாக் கடற்றீவுகளிற் குடியேறியிருந்தார்களென்பது நாகப்பட்டி னம், நாகர்கோயில் முதலிய இடப்பெயர்களால் அறியவருகின்றது. வராகமிகிரர் கொல்லகிரி சோழ நாட்டுக்கு அயலிலுள்ளதெனக் கூறி யுள்ளார். கிள்ளி என்னும் சோழன் இலங்கை நாக குலப்பெண்ணை மணந்தான். வீர கூர்ச்சா என்னும் பல்லவ அரசன் நாக கன்னிகையை மணந்தான். சோழ பாண்டிய நாடுகளின் வாணிகம் திரையர் வசம் இருந்தது. பாண்டிய நாட்டு மக்கள் வரலாற்றுக் காலத்திற்குமுன் தொட்டே கடலோடிகளாக இருந்தனர். அவர்களின் தலைநகரம் இராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ளது. இலங்கையை ஆண்ட முதல் அரசன் பாண்டிய இராசகுமாரியை மணந்தான். குமரி, கொற்கை, காயல், பாம்பன் முதலியவை பாண்டியரின் துறைமுகப் பட்டினங்களாக இருந்தன. தொண்டையர், கடாரம் (பர்மா) முதல் சிங்களம் வரையில் வாணிகம் நடத்தினார்கள். உருத்திரங் கண்ணனார் என்னும் புலவர் இளந்திரையனைப் பாடியுள்ளார். வேங்கடத்தைத் தலைநகராக உடைய திரையனைப் பற்றி அகநானூறு (85,340) கூறுகின்றது. இறையனாரகப் பொருளுரை இளந்திரையம் என்னும் நூலையும் திரையன் மாறன் என்னும் அரசனையும் குறிப்பிடுகின்றது. சரித்திர காலத்திற்குமுன் கன்னட நாட்டுக் கடம்பர் பெரிய கடலோடிகளாயிருந்தனர். புறநானூறு (335), தமிழ் வழங்கிய திராவிட ருள் அவர்கள் மிகப் பழமை உடையவர் எனக் கூறுகின்றது. பதிற்றுப் பத்து பெருவாய் என்னும் துறைமுகத்தைப்பற்றிக் கூறுகின்றது. கடம்பர் கிரேக்கரோடு வாணிகம் நடத்தியதைப் பற்றி டாக்டர் ஹல்ச் (Dr. Hulzsch) என்பாரும் சீனரோடு வாணிகம் நடத்தியதைப்பற்றி நரசிம்மாச்சாரி யாரும் காட்டியுள்ளார்கள். கி.பி. 2ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பைபிரஸ் ஏட்டில் கன்னட வாசகங்கள் இருப்பதை ஹல்ச் கண்டார். தாலமி சோதர் கால நாணயமொன்று பங்களூர் சந்தையில் கிடைத்தது. சந்திரவதி என்னும் இடத்தில் நடத்தப்பட்ட புதைபொருள் ஆராய்ச்சியில் அகஸ்தஸ் காலத்து நாணயங்கள் மாத்திரமல்லாமல் கி.மு. 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வாதூ (Wa-to) என்னும் சீனச் சக்கரவர்த்தியின் நாணயங்களும் காணப்பட்டன. குட்டுவன் நன்னனைப் போரில் கொன்று வெற்றிபெற்றது மாத்திர மல்லாமல் கடம்பரையும் அழித்தான். வெல்லப்பட்ட கடம்பரிற் பலர் துடியன், பாணன், பறையன் முதலியவர்களைப்போல் பயிர்த் தொழில் புரிவோராயினர். இவர்களிற் பலர் கிழக்குக்கரைக்குச் சென்று கலிங்கம், பீகார், ஒரிசா நாடுகளில் தமது அதிகாரத்தை நாட்டியவர்க ளாகவும் காணப்படுகின்றனர். கஞ்சப் பிரிவிலுள்ள முகலிங்கத்துக்குச் சலந்திபுரம் என்பது இன்னொரு பெயர். அங்கு மதுகேசுவரருக்கு ஆலயமுண்டு. மதுகேசுவரர் கடம்பரின் கடவுள். கலிங்கத்தின் கிழக்குக் கலிங்கரின் தலைநகராகிய கலிங்க நகரமும், சலந்திபுரமும் ஒன்று என்று கொள்ளப்படுகின்றன. கஞ்சம் விசாகபட்டினம் முதலிய பகுதிகளில் கடம்புகுடா என்பது இடங்களுக்குப் பெயராக வழங்குகின்றது. கடம்ப அரச வழியினர் மகதத்தை ஆண்டார்கள் எனக் கன்னடக் கையெழுத்து நூல் ஒன்று கூறுகின்றது.  தென்னிந்திய குலங்களும் குடிகளும் முன்னுரை மக்களினம் சம்பந்தமான ஆராய்ச்சிக்குப் பயன்படும் இந் நூல் அரை நூற்றாண்டுக்கு முன் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள நூல்களைத் தழுவிச் சுருக்கி எழுதப்பட்டதாகும். தென்னிந்திய மக்கள் எல்லோருக்கும் பொதுவான சில பழக்கவழக் கங்கள் உள்ளன. அவ் வகை வழக்கங்களை விரித்துக் கூறாது ஒவ்வொரு கூட்டத்தினரிடையும் சிறப் பாகக் காணப்படுகின்றவற்றையே விரித்துக் கூறி யுள்ளோம். மேல் நாட்டுக் கல்வி, நாகரிகம் என்ப வற்றின் நுழைவால் விரைந்து மறைந்து கொண்டு வரும் தென்னாட்டு மக்களின் பழைய பழக்கவழக் கங்களை அறிந்து கொள்வதற்கு இந் நூல் வாய்ப் பளிக்கும். அரை நூற்றாண்டுக்குள் இந் நூலிற் கூறப்பட்டுள்ள பழக்கவழக்கங்கள் பல மறைந்து விட்டன; சில மறைந்துகொண்டு வருகின்றன. ந.சி. கந்தையா தென்னிந்திய குலங்களும் குடிகளும் தோற்றுவாய் ஹெக்கல் படைப்பின் வரலாறு (History of Creation) என்னும் நூலில் இப் பூமியின் தரை, நீர்ப்பரப்புக்கள் தொடர்ந்து மாற்றமடைந்து வந்த தன்மைகளை ஆராய்ந்து கூறியுள்ளார். அவர் கூற்று வருமாறு: “இந்துமாக் கடல் முன் ஒரு பூகண்டமாக விருந்தது. அது சந்தாத் தீவுகள் (Sunda Islands) முதல் (ஆசியாவின் தென் கரை வழியாக) ஆப்ரிக்காவின் கிழக்குக் கரை வரையில் பரந்திருந்தது. முற்காலத்தில் மக்களின் பிறப்பிட மாக விளங்கிய இத் தரைக்கு இஸ்கிளாத்தர் (Sclater) இலெமூரியா எனப் பெயரிட்டுள்ளார். இப் பெயர் அங்கு வாழ்ந்து கொண்டிருந்த குரங்கு போன்ற மக்கள் காரணமாக இடப்பட்டது. இலெமூர் என்பதற்கு தேவாங்கு என்பது பொருள். இலெமூரியா, மக்களுக்குப் பிறப்பிடமாக வுள்ளது என்னும் பெருமை யுடையது.” மலாய்த் தீவுக் கூட்டங்கள் முற்காலத்தில் இரு பிரிவுகளாக விருந்தன வென்று வலேசு (Wallace) என்னும் இயற்கை வரலாற்றியலார் ஆராய்ந்து கூறியுள்ளார். மலாய்த் தீவிலும் தென்னிந்தியாவிலும் வாழும் மக்கள் சிலரின் பழக்கவழக்கங்கள் ஒரே வகையாக வுள்ளன. போர்ணியோத் தீவில் வாழும் (இ)டைக்கர் மரமேறும் வகையும் தென்னிந்தியாவில் ஆனை மலையில் வாழும் காடர் மரமேறும் வகையும் ஒரே வகையாகவுள்ளன. காடரும் திருவிதாங்கூர் மலை வேடரும் தமது முன் பற்களை உடைத்து அல்லது அராவிக் கூராக்கிக் கொள்வர். ஆண்கள் பதினெட்டு வயதடை யும் போதும் பெண்கள் பத்து வயதடையும்போதும் இவ்வாறு செய்து கொள்கின்றார்கள். மலாயாவில் யக்குன் என்னும் மக்கள் இவ்வாறு செய்து கொள்கின்றார்கள். மலாய்த் தீவுக்கூட்டங்களில் பெண்கள் பருவமடையுங் காலத்தில் பற்களை அராவிக் கறுப்பு நிறமூட்டுகின்றனர். தென்னிந்திய காடர் முடியில் சீப்பணிந்து கொள்வது போலவே மலாக் காவில் வாழும் நீக்கிரோயிட்டு இனத்தைச் சேர்ந்த மக்களும் சீப்புகளை முடியில் அணிந்து கொள்கின்றனர். கலிங்க நாட்டினின்றும் சென்று மலாயாவிற் குடியேறிய மக்கள் கிளிங்கர் எனப்படுகின்றனர்; இக் காலத் தில் அப் பெயர் தமிழர்களை மாத்திரம் குறிக்க வழங்குகின்றது. பழங் காலத்தில் இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் காணப்பட்ட தாவரங்களும் விலங்குகளும் ஒரே வகையின வென்று ஆல்ட்காம் முடிவு செய்து தென்னிந்தியாவையும் ஆப்பிரிக்காவையும் தொடுத்துத் தரை யிருந்த தெனக் கூறியுள்ளார். தென்னாப்பிரிக்கக் கரையிலுள்ள நெத்தாவிலும் திருச்சிராப்பள்ளி பாறையடுக்குகளிலும் காணப்பட்ட சில உயிர்களின் கற்படி உருவங்கள் (Fossils) ஒரே வகையாகக் காணப் பட்டன. இவையும் இவை போன்ற காரணங்களும் இந்தியாவும் ஆப்பிரிக்காவும் இணைக்கப்பட்டிருந்தன என்னும் கொள்கையை வலியுறுத்துகின்றன. ஆஸ்திரேலியர் பூமராங் என்னும் வளை தடிகளைப் பயன்படுத்துகின்றனர். ஒரு இலக்கின் மீது வளை தடியை எறிந்தால் அது இலக்கில்பட்டு மீண்டு வருகின்றது. வளைதடி தென்னிந்திய மறவரால் பயன்படுத்தப்படுகின்றது. கள்ளரின் திருமணத்தில் மணமகள் இல்லத் தில் விருந்து நடக்கும் போது மணமகன் வீட்டாரும் பெண் வீட்டாரும் வளைதடிகளை மாற்றிக் கொள்வர். ஆஸ்திரேலியரும், பப்புவர், புதுக்கினியர், சந்தா தீவினர், மலாயர், மயோரியர் (நீயூசீலந்து மக்கள்) முதலியோரும் ஒரே இனத்தவர்களாகக் காணப்படுகின்றனர். தென்னிந்திய ஆதிகுடிமக்கள் மக்களினப் பிரிவுப் படி ஆஸ்திரேலிய மக்களாகக் காணப்படுகின்றனர். இவ் வாராய்ச்சி யினால் ஒரு காலத்தில் நியுசீலந்து முதல் மலாய்த் தீவுகள் இந்தியா மாலை தீவுக் கூட்டங்கள் வரையில் ஒரு இன மக்கள் வாழ்ந்தார்கள் என்பதும், அவ் வினத்தைச் சேர்ந்தவர்களே தென்னிந்திய ஆதிக்குடியினரிற் சில ரென்பதும் தெரிய வருகின்றன. முண்டா, சாந்தால் மக்களும் இவ் வினத்தைச் சேர்ந்தவராகக் கொள்ளப்படுவர். இவ்வாறு தர்ஸ்டன் தனது ‘தென்னிந்திய சாதிகளும் இனங்களும்’ என்னும் நூலிற் கூறியுள்ளார். இந்தியாவில் மிகப் பழங்காலத்தில் மூன்று இன மக்கள் வாழ்ந் தார்கள். (1) மத்திய தரை மக்கள். இவர்களே திராவிட இனத்தவர் எனப் படுவோர். (2) நிகிரிட்டோ மக்கள், (3) ஆதி ஆஸ்திரேலோயிட்டு மக்கள். நிகிரிட்டோ வகை தென்னிந்திய மலைச் சாதியினராகிய இருளர், காடர் களிடையே காணப்படுகின்றது. ஆதி ஆஸ்திரேலோயிட்டு வகை முண்டா, சாந்தால், கொல் முதலிய மொழிகளைப் பேசும் மக்களிடையே காணப்படுகின்றது. இம் மக்கள் ஆரியரின் வருகைக்குமுன் வட மேற்குத் திசையினின்று வந்தவர்களாகலா மென்று ஆராய்ச்சியாளர் கூறுவர். இவ் வினத்தினரையே மேல்நாட்டு ஆராய்ச்சியாளர் கொல்லாரி யர் எனக் கூறியுள்ளார்கள். ஆதி ஆஸ்திரலோயிட்டு இனத்தவர்களே மலாய்த் தீவுகள், பர்மா, சயாம் முதலிய நாடுகளின் ஆதி மக்களாவர். இவர்கள் இப்படி இந்தியாவை அடைந்தார்கள் என்று கூற முடியவில்லை. ஆஸ்தி ரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் நில இணைப்பு இருந்த காலத்தில் இவர்கள் இந்தியாவை அடைந்திருக்கலாமெனச் சிலர் கூறுவர். இந்திய மக்கள் (People of Inida) என்னும் நூல் எழுதிய ஹெர் பெட் இரிஸ்லி இந்தியாவில் தொடக்கத்தில் திராவிட மக்கள் வாழ்ந் தார்கள் என்றும், பின்பு பல்வேறு இனத்தவர்கள் இம் மக்களோடு வந்து கலந்தார்கள் என்றும் கொண்டு இந்திய இனத்தவர்களை, சித்திய திராவிடர், ஆரிய திராவிடர், மங்கோலிய திராவிடர், திராவிடர் முதலிய பிரிவுகளாகப் பிரித்தார். திராவிட மக்களுக்கும் ஆஸ்திரலோயிட்டுகளுக்கும் சில ஒற்றுமைகள் காணப்படும். தமிழ் மக்கள் நெளிந்த கூந்தலை அழகாகக் கொள்கின்றனர். இலக்கியங்களிலும் நெளிந்த கூந்தல் அழகாகவே கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் வாழும் ஆதிக் குடிகளின் தொகை இந்திய சனத்தொகையில் 1.3 பகுதி இவர்கள் பெரும்பாலும் வங்காளத்துக்கும் பீகாருக்கும் இடையில் வாழ்கிறார்கள். ‘தென்னிந்திய குலங்களும் குடிகளும்’ என்னும் இந்நூல் இந்திய மக்கட் கூட்டத்தினரின் பழக்கவழக்கங்களை பிற மக்கட் கூட்டத்தின ரின் பழக்க வழக்கங்களோடு ஒப்பிட்டு நோக்கி இன ஒற்றுமை வேற்றுமை காண்பதற்கு உதவியளிக்கும். * * * அகமுடையான்: தமிழ்நாட்டிலே உழவு தொழில் செய்யும் ஒரு கூட்டத்தினர் அகமுடையார் எனப்படுகின்றனர். அவர்கள் வேளாண் மக்கள் பழக்கவழக்கங்களையும் பின்பற்றுவர். இப் பெயர் வேளாளப் பள்ளிகள், குறும்பர்களையும் குறிக்கச் சில மாகாணங்களில் வழங்கும். அகமுடையான் என்பதற்கு வீடு அல்லது நிலமுடையவன் என்பது பொருள். அகமுடையாரின் ஒரு பிரிவினர் அகம்படியார் எனப்படுவர். அகம்படியான் என்பதற்கு உள்ளே இருப்பவன் என்பது பொருள். அவர்கள் அரசரின் அரண்மனைகளில் அல்லது கோயில்களில் வேலை புரிவோர். தஞ்சாவூர் அகமுடையார் தெற்கத்தியார் எனப்படுவர். அகமுடையானின் பட்டப்பெயர் சேர்வைக் காரன். கள்ளர், மறவர், அகம்படியார் என்னும் மூன்று வகுப்பினர்களுக்கிடையில் திருமணக் கலப்பு உண்டு. மறவ அகம்படிய திருமணக் கலப்பினால் தோன்றினோர் அகமுடையார் எனப்படுகின்றனர் என்று சொல்லப்படுகிறது. அகம்படியான்: அகமுடையான் பார்க்க. அக்கினி: ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்து கொள்ளாத குறும்பர் கோலர் (Gollar) என்பார் அக்கினி எனப்படுவர். பள்ளிகள் தம்மை அக்கினி குலத்தவர் எனக் கூறுவர். அச்சன்: இது தந்தை அல்லது பிரபு என்னும் பொருள் தரும் பெயர். பாலைக்காட்டு அரச குடும்பத்தினருக்கு அச்சன் என்னும் பட்டப்பெயர் வழங்கும். கள்ளிக் கோட்டை அரசனின் மந்திரி பாலைக்காட்டு அச்சன் எனப்படுவான். அச்சு வெள்ளாளர்: இது பட்டணவர் (மீன்பிடிகாரர்) சிலருக்கு வழங்கும் சாதிப்பெயர். அடிகள்: இவர்கள் அம்பலக்காரரில் ஒரு பிரிவினர்; இவர்கள் பூணூலணிவதுண்டு. இவர்கள் பதினெட்டு நாள் மரணத் தீட்டுக் காப்பர்; தம் சாதியினரே தமக்குக் குருக்களாக விருப்பர். அடுத்தோன்: இதற்கு அடுக்க நிற்போன் என்பது பொருள். மலையாளத்து அம்பட்டருள் ஒரு பிரிவினராகிய காவுத்தீயர் அடுத் தோன் எனப்படுவர். அம்ப (கிட்ட) ஸ்த (நிற்றல்) என்னும் வட சொற் களின் சிதைவே ‘அம்பட்ட’ என்று கருதப்படுகின்றது. அம்பட்டன்: தமிழ்நாட்டில் அம்பட்டப் பெண்கள் மருத்துவச்சி வேலை பார்ப்பர். செகந்நாத ஆலயத்தில் அம்பட்டர் சமைக்கும் உணவுக்குத் தீட்டு இல்லை. அக்கோயிலில் பூசை செய்யும் பூசாரி அம்பட்டன். அவன் சமைத்துக் கடவுளுக்குப் படைத்த உணவைப் பிராமணரும் அமுது கொள்வர். சேலத்திலே கொங்கு வேளாளரின் திருமணத்தில் அம்பட்டனே புரோகிதனாகவிருந்து மணக்கிரியைகள் புரிந்து தாலி கட்டுவான். தலைப் பூப்பெய்திய அம்பட்டப் பெண் பதினொரு நாட்களுக்குத் தனியாக இருக்க விடப்படுவாள். ஒவ்வொரு நாட் காலையிலும் கோழி முட்டை வெள்ளைக் கருவோடு கலந்த நல்லெண்ணெய் குடிக்கும்படி அவளுக்குக் கொடுக்கப்படும். அம்பட் டன் கொள்ளிக்குடம் உடைத்தற்கு நீர்க் குடத்தைத் தாங்கிக் கொண்டு இறந்தவனின் மகனுடன் சுடலைக்குச் செல்வான். அம்பட்டரின் சாதித் தலைவன் பெரியதனக்காரன் எனப்படுவான். மயிர்வினை செய்தல், வைத்தியம் பார்த்தல், வாத்தியமொலித்தல் என்னும் மூன்று தொழில்கள் அம்பட்டருக்குரியன. பண்டிதன். பரியாரி, குடிமகன், நாசுவன், மயிர் வினைஞன் என்பன அம்பட்டனைக் குறிக்க வழங்கும் பெயர்கள். திருவிதாங்கூரில் இவர்களுக்குப் பிராணோபகாரிகள் என்னும் பெயர் வழங்கும். பல சாதியினருக்குக் கிரியைகள் புரிவதால் இவர்க ளுக்கு இப் பெயர் வழங்குகின்றது. விளக்குத் தலையர் என்னும் அம்பட்டப் பிரிவிலிருந்து அரசருக்கு மயிர்வினை செய்யும் அம்பட்டன் தெரிந்தெடுக்கப்படுவான். திருவிதாங்கூர் அம்பட்டர் சிலர் அரசரால் தமக்குக் கொடுக்கப்பட்ட பணிக்கர், வைத்தியர் முதலிய பட்டங்கள் பொறிக்கப்பட்ட பட்டையங்களை வைத்திருக்கின்றனர். மலையாள அம்பட்டரின் சொத்துரிமை மருமக்கள் தாய முறையானது. அம்பட்டப் பெண்கள் பெரும்பாலும் பச்சை குத்திக்கொள்வர். இவர்களில் ஒருவன் இறந்து போனால் உடல் புதைக்க அல்லது எரிக்கப்பட்டபின் சுற்றத்தவ ரில் இருவர் ஒரு கயிற்றை இழுத்துப் பிடிக்க இறந்தவனின் கிட்டிய உறவினன் கயிற்றை வெட்டி விடுவான். இக் கிரியைக்குப் பந்தமறுப்பு என்று பெயர். இதற்கு இறந்தவனின் உறவு மற்றவர்களிலிருந்து வெட்டப் பட்டது என்பது பொருள். அம்பலக்காரன்: அம்பலக்காரர் கள்ளச் சாதியினருக்கு இன முடைய ஒரு வகுப்பினர். இவர்கள் வேளாண்மை செய்வதோடு கிராமக் காவலும் புரிவர். இவர்களின் சாதிப் பட்டப்பெயர் சேர்வைக்காரன். முத்திரையன், மளவராயன், முத்தரசன், வன்னியன் என்பனவும் இவர்கள் பட்டப்பெயர்களாக வழங்கும். இவர்கள் குலத்தலைவன் காரியக்காரன் எனப்படுவன். இப் பதவி பரம்பரையாகத் தந்தையிலிருந்து மகனுக்கு வருவது. காரியக்காரனின் சேவுகன் குடிப்பிள்ளை எனப்படுவான். வலை யரினின்றும் பிரிந்து வாழும் ஒரு பிரிவினரே அம்பலக்காரர் எனக் கருதப்படுவர். அம்பலவாசி: மலையாளத்துக் கோயிற் பணிவிடைக்காரர் அம்பலவாசிகள் எனப்படுவர். இவர்களுள் பூணூலணிவோர், பூணூ லணியாதோர் என இரு பிரிவினருண்டு. இவர்களின் உரிமை முறை மருமக்கள் தாயம்; மக்கள் தாயமும் உண்டு. அம்பலவாசிப் பெண்கள் பிராமணருடன் அல்லது சொந்தச் சாதியாருடன் சம்பந்தங் கொள்வர். அரவா: இவர்கள் கொல்லா (Golla), வேள்மா என்னும் தெலுங்குச் சாதிகளுள் ஒரு பிரிவினர். தெலுங்கு நாட்டிற் குடியேறிய வேளாளரும் இடையரும் அரவா எனப்படுவர். அரவா என்பது அரைவாய் (அரைப் பேச்சு?) என்பதன் திரிபு எனக் கருதப்படுகின்றது. அறுத்துக்கட்டாத: பறையருள் ஒரு பிரிவினர் அறுத்துக்கட்டாத என்னும் பெயர் பெறுவர். இவர்களுள் விதவைகள் மறுமணம் செய்து கொள்வதில்லை. அறுத்துக் கட்டாத என்பதற்கு வாழ்விழந்த பெண் மகள் மறுமணஞ் செய்து கொள்ளாத என்பது பொருள். ஹடியர்: இவர்கள் தமிழ்ப் பறையர். தெலுங்கு மாலர், மாதிகர் போன்ற தாழ்ந்த ஒரிய வகுப்பினர். ஆசாடியர்; இவர்கள் பெல்லாரி மாகாணத்திற் காணப்படும் ஹோலிய அல்லது மால சாதியினரின் ஒரு பிரிவினர். இவர்களிடையே பெண்கள் நாட்டியமாடுவோரும் ஒழுக்கத் தளர்வுடையோருமாவர். ஆசாரி: ஆசாரி அல்லது ஆச்சாரி என்பது கம்மாளரின் பட்டப் பெயர். மலையாளத்தில் கம்மாளப் பிராமணன் ஆசாரி எனப்படுவான். கம்மாளன் நாயருக்குப் பன்னிரண்டடி தூரத்திலும், பிராமணருக்கு முப்பத்திரண்டடி தூரத்திலும் வரின் இவர்களுக்குத் தீட்டுண்டாகும். கம்மாளன் அளவுகோலைக் கையிற் பிடித்துக்கொண்டு இவர்களை மிக அணுகினாலும் அல்லது இவர்கள் வீடுகளுள் நுழைந்தாலும் தீட்டு உண்டாகமாட்டாது. ஆண்டி: ஆண்டிகள் தமிழ் வகுப்பைச் சேர்ந்த பிச்சைக்காரர். இவர்கள் பண்டாரங்களிலும் தாழ்ந்தோர். கோயில்களிலும் மடங்களி லும் வேலைசெய்வோர் முறையே கோவிலாண்டிகள் மட ஆண்டிகள் எனப்படுவர். திருநெல்வேலி ஆண்டிகளுள் திருமணக் காலத்தில் பெண் ணின் கழுத்தில் தாலி கட்டுகின்றவள் மணமகனின் உடன்பிறந்தாளா வள். ஆண்டிகளுள் கோமண ஆண்டி, இலிங்கதாரி, முடவாண்டி, பஞ்சத்துக் காண்டி எனப் பல பிரிவுகளுண்டு. இப் பிரிவுகள் பஞ்சத்துக் காண்டி, பரம்பரை ஆண்டி என்னும் இரு பிரிவுகளிலடங்கும். ஆதிசைவர்: இவர்கள் வேளாளருள் ஒரு பிரிவினர்; ஓதுவார் வகுப்பைச் சேர்ந்தோர். இலிங்கங்கட்டுவோர் வீரசைவர் எனப்படுவர். வீரசைவ மதத்தினரல்லாத சைவர்களே ஆதி சைவராவர். ஆத்திரேயர்: அத்திரி இருடி கோத்திரத்தினர். ஆரி: இது மராத்தி என்பதன் மறுபெயர். ஆரிகள் தென் கன்ன டம், பெல்லாரி, அனந்தப்பூர் முதலிய இடங்களிற் காணப்படுகின்றனர். ஆரிய என்னும் பெயரே ஆரி எனச் சிதைந்து வழங்குகின்றது. இவர்கள் பூணூலணிந்து கொள்வர்; மராத்தி அல்லது கொங்கணி பேசுவர். இடிகர்: இவர்கள் தெலுங்கு நாட்டில் கள்ளிறக்கும் வகுப்பினர். தமிழ் இடிகர் கத்தியைப் பின்னால் செருகுவர்; தெலுங்கர் வலது தொடையிற் கட்டுவர்; தமிழ் இடிகர் பனையிலும் தென்னையிலும் கள்ளிறக்குவர்; தெலுங்கர் பனையிலும் ஈந்திலும் கள் எடுப்பர். தெலுங் கர் கள்ளின் செல்வியாகிய எல்லம்மா என்னும் தெய்வத்தை வழிபடுவர். இடியர்: திருவிதாங்கூரில் அவலிடிக்கும் சாதியினர் இடியர் எனப்படுவர். இடையன்: ஆடு மாடு மேய்ப்போர் இடையர் எனப்படுவர். இவர் களுள் வைணவர் நாமம் தரித்துக்கொள்வர். தம்மை யாதவர் எனக் கூறிக் கொள்வர். மறவ நாட்டு இடையருள் மணமகளின் உடன் பிறந்தாள் மணமகளுக்குத் தாலி கட்டுவள். இராசபுத்திரர்: வடநாட்டிலுள்ள காணியாளரும் இராணுவ சேவை செய்வோருமாகிய சாதியினர் இராசபுத்திரர் என்னும்பெயர் பெறுவர். இவர்களின் சிறு கூட்டத்தினர் வேலூர், சித்தூர். திருப்பதி முதலிய இடங்களில் காணப்படுகின்றனர். இவர்களின் பெயர் சிங் என்று முடியும். இராசு: இவர்கள் இராணுவத் தொழில் புரியும் காப்பு, கம்மா, வேள்மா முதலிய சாதி வகுப்பினரினின்றும் தோன்றியவர்களாகலாம். திருமணக் காலத்தில் இவர்கள் வாளை வணங்குவர். போர்வீரர் என்று அறிவித்தற்கு வாள் அடையாளமாகும். வட ஆர்க்காடு. கடப்பா முதலிய இடங்களில் இவர்கள் பெரும்பாலும் காணப்படுவர். இவர்கள் பேசும் மொழி தெலுங்கு. பெண்கள் முட்டாக்கிட்டுக் கொள்வர். ஆண்கள் தலையின் எந்தப் பகுதியையும் மழித்துக் கொள்வதில்லை. திருமணக் காலத்தில் காசியாத்திரை போதல் தாலி தரித்தல் போன்ற கிரியைகள் இவர்களுக்கு உண்டு. இராஸ்பு: தென் கன்னடத்திலுள்ள கொங்கணம் பேசும் வணிகரும் வேளாண்மை செய்வோரும் இப் பெயர் பெறுவர். இவர்கள் பூணூலணிவர். பெண்கள் பூப்படையுமுன் திருமணம் செய்துகொள்வர். விதவைகள் மறுமணம் செய்துகொள்வர். இருளர்: இவர்கள் நீலகிரியில் வாழும் மலைச் சாதியினர். இருளர் என்பதற்கு இருண்ட நிறத்தினர் என்பது பொருள். இருளர் தமிழின் சிதைவாகிய மொழியைப் பேசுவர். இவர்களுள் ஆண்களும் பெண்களும் கணவன் மனைவியராக நிலைத்திருந்து வாழ்தல் பெண்களின் விருப் பத்தைப் பொறுத்தது. இறந்தவர்களின் உடல் சப்பாணி கட்டி இருக்கும் நிலையில் வைத்துப் புதைக்கப்படும். ஒவ்வொரு சமாதியின் மீதும் நீருள் இருந்து எடுக்கப்பட்ட கல்கொண்டு வந்து வைக்கப்படும். அக் கற்கள் தேவ கோட்டக் கற்கள் எனப்படுகின்றன. இறகுகளைந்த ஈசல்களை இவர்கள் உண்பர்; நோய்க் காலங்களில் மாரியம்மாவை வழிபடுவர்; ஏழு கன்னிமாரையும் ஏழு மண் விளக்கு வடிவில் வழிபடுவர். இல்லம்: நம்பூதிரிப் பிராமணரின் வீடு இல்லம் எனப்படும். நாயர் வகுப்பினரின் ஒரு பிரிவினரும் இல்லம் எனப்படுவர். தமிழ்நாட்டுப் பணிக்கர் சிலர் தம்மை இல்லம், வெள்ளாளர் எனக் கூறிக்கொள்வர். இளமகன்: மதுரை மாவட்டத்திலே திருப்பத்தூரில் உழவுத் தொழில் செய்வோர் இப் பெயர் பெறுவர். இவர்கள் கள்ளச் சாதி யினரை ஒத்தவர்கள். இவர்களின் தலைமைக்காரன் அம்பலன் எனப் படுவான். இளையது: இவர்கள் மலையாளத்துச் சாதிமான்களுள் ஒரு பிரிவினர். இளையதின் வீடு நம்பூதிரியின் வீட்டைப் போல இல்லம் எனப்படும். ஒவ்வொரு இளையதின் தோட்டத்திலும் நாகக்கா உண்டு. இவர்கள் நாயருக்குக் குருக்களாக விருப்பர். மலையாளத்திலுள்ள நாகக் கோயில்களுக்கும் குருக்கள் இவர்களே. இவர்களின் மூத்த மகன் மாத்திரம் திருமணம் செய்து கொள்ளலாம். மற்றவர்கள் அம்பலவாசி அல்லது நாயர்ப் பெண்களைச் சம்பந்தம் வைத்துக்கொள்வர். கைம் பெண்கள் கூந்தல் களைவதில்லை; அணிந்திருக்கும் ஆபரணங்களைக் களைந்து கணவனின் பிணத்தின்மீது இடுவர். இஃது உடன்கட்டை ஏறும் வழக்கத்துக்குப் பதிலாக விருக்கலாம். மூத்த மகனுக்குப் பாட்ட னின் பெயரும், மூன்றாவது மகனுக்குத் தந்தையின் பெயரும் இடப்படும். இவ்வாறே பெண்களுக்கும் பெண்வழிப் பெயர்கள் இடப்படுகின்றன. பிள்ளைப் பேற்றுக்குப் பின் பெண்கள் தொண்ணூறு நாட்கள் தீட்டுக் காப்பர். ஆண்கள் பூணூலணிவர். பெண்கள் அகத்துளவர் எனப்படுவர். நம்பூதிரிப் பெண்களுக்கும் இப்பெயர் வழங்கும். இறங்காரி: மராட்டி பேசும் சாயத்தொழில் செய்வோரும் தையற் காரரும் இப் பெயர் பெறுவர். இவர்கள் தெலுங்கு மாகாணங்களிலும் காணப்படுகின்றனர். இவர்களின் பட்டப்பெயர் இராவ். இறவுலோ: இவர்கள் ஒரிய கோயில்களில் பணிவிடை செய் வோர். இவர்கள் கோயில்களில் சங்கு ஊதுவர்; பூ விற்பர். இவர்களுள் சிறுபிள்ளைத் திருமணம் கட்டாயம். இப்பொழுது இவர்கள் வண்டி ஓட்டுதல், மண் வேலை செய்தல் முதலிய தொழில்கள் புரிவர். இறையர்: இவர்கள் எசமானின் இறை (வீட்டுக்கூரை) வரையும் செல்லக்கூடிய மலையாளத்துச் செருமான் என்னும் சாதியினர். ஈழவர்: ஈழவர், தீயர் என்போர் மலையாளம் கொச்சி என்னும் இடங்களிற் காணப்படுகின்றனர். மத்திய திருவிதாங்கூரின் தென்புறங் களில் இவர்கள் ஈழவர் என்றும், வட, மத்திய பகுதிகளில் சேரவர் என்றும் அறியப்படுவர். திருவிதாங்கூர் சனத்தொகையில் 17 சதத்தினர் இவர்களாவர். யாழ்ப்பாணம், ஈழம் என்னும் பெயர் பெற்றிருந்ததெனத் தெரிகிறது. ஈழவர் அங்கிருந்து வந்தார்கள் எனக் கருதப்படுகின்றனர். சேரவர் என்பது சேவுகர் என்பதன் திரிபு. மலையாளத்தில் வழங்கும் கப்பற் பாட்டுகளில் சேவுகர் என்னும் பெயர் காணப்படுகின்றது. தென் திருவிதாங்கூரில் வாழும் ஈழவர் முதலியார் எனப்படுவர். புலையர் அவர் களை மூத்த தம்பிரான் என அழைப்பர். அவர்கள் தொடக்கத்தில் தென் னையைப் பயிரிடும் தொழில் செய்து வந்தனர். கி.பி.824இல் அவர் களுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு பட்டையத்தினால் அவர்களுக்குத் தலை யாரி இருந்தானென்றும், அவர்கள் வீட்டு நிலங்களில் தென்னையைப் பயிரிடுதல் அவர்களின் தொழில் என்றும் தெரிகின்றன. தமது வேண்டு கோளுக்கிணங்கி ஈழவர் மேற்குக் கடற்கரையில் சென்று குடியேறினார்க ளென்று சீரிய கிறித்தவர் கூறுவர். மத்திய காலங்களில் இவர்கள் அரசரின் கீழ் போர் வீரராக அமர்ந்திருந்தார்கள். கொல்ல மாண்டு 973இல் மரண மான இராமவன்மன் காலத்திலும் பெருந் தொகை ஈழவர் இராணுவ சேவையில் இருந்தார்கள். ஓண விழாக் காலங் களில் இவர்கள் இரண் டாகப் பிரிந்து நின்று போலிப் போர் செய்வது வழக்கம். ஈழவரின் அடிமைகள் வடுவன்கள் எனப்படுவர். முற்காலங் களில் இவ் வடிமைகள், உடையவனால் விற்கவும்கூடிய முறையாக விருந்தனர். ஈழவரின் குரு வகுப்பினர் சாணார் எனப்பட்டனர். சாணார் என்பது சான்றோர் என்னும் சொல்லின் திரிபு. சாணாருக்கு அடுத்த படியிலுள்ளவன் பணிக்கன். ஒவ்வொரு இல்லத்திலும் பல சிறிய வீடுகள் உண்டு. இவைகளுள் முக்கியமுடையது அறப்புறம். இது நடுவிலிருக்கும். அதன் இடப்புறத்தி லுள்ள வீடு வடக்கெட்டு எனப்படும். இது பெண்கள் தங்கும் பகுதியும் சமையலறையுமடங்கியது. அறப்புறத்தின் முன்னால் முற்றம் இருக்கும். அதனைச் சூழ்ந்து கிழக்குப்புறத்திலிருப்பது கிழக்கெட்டு எனப்படும். வீடுகள் கிழக்கை நோக்கியிருக்கும். பாதை கிழக்கெட்டுக்குக் சிறிது தெற்கே யிருக்கும். சில இல்லங்களில் அறப்புறத்துக்கு இடப்புறத்தில் தெற்கெட்டுக் காணப்படும். அது அக் குடும்பத்தில் இறந்தவர்களின் ஞாபகமாக இடப்பட்டதாகும். அதனுள்ளே ஒரு பீடம், சங்கு, பிரம்பு, சாம்பல் முடிச்சு முதலியன வைக்கப்பட்டிருக்கும். பெண்கள் காதில் நாகபடம், கையில் வெண்கலக்காப்பு, மூக்கில் மூக்குத்தி, நத்து முதலியன அணிவர். நாயர்ப்பெண்கள் இடது கன்னத்தில் கொண்டை முடிவர்; ஈழவப் பெண்கள் நெற்றிக்கு நேரே முடிவர். இவர்களின் குலதெய்வம் பத்திரகாளி. பத்திரகாளிக்கு ஆடு, கோழி முதலியன பலியிடப்படும். இவர்களுக்கிடையில் மக்கள் தாயம், மருமக்கள் தாயம் என்னும் இரு வழக்குகளுமுண்டு. சம்பந்தம் நடைபெறுவதன் முன் பெண்களுக்குத் தாலி கட்டுக் கலியாணம் நடைபெறுவதுண்டு. இவ் வழக்கம் இப்பொ ழுது அருகி வருகின்றது. தாலிகட்டுக் கலியாண மென்பது போலியாக நடத்தப்படும் ஒருவகைக்கலியாணம். தாலி கட்டுச் சடங்கின் விபரம் வருமாறு: கிராமத்திலுள்ள முதியவர்கள் மணமகள் வீட்டில் கூடியிருப் பார்கள். பின்பு வீட்டின் தென் கிழக்கு மூலையில் பலாத் தூண் நடப் படும். அங்கு கூடியிருக்கும் கணிகன் (சோதிடன்) முழுத்தம் என்று கூறியவுடன் அங்கு வந்திருக்கும் தட்டான் பெண்ணின் தந்தையிடம் பொன் மோதிரம் ஒன்றைக் கொடுப்பான். அதை அவன் பெற்று அங்கு வந்திருக்கும் உவாத்தி(குருக்கள்)யிடம் கொடுக்க அவன் அதைத் தூணில் கட்டுவான். தச்சன், கணிகன், தட்டான், தக்கணைகள் பெற்றுச் செல்வர். பந்தல் வீட்டின் தென்புறத்தில் இடப்பட்டிருக்கும். திருமணத்துக்கு முதல்நாள் பெண் முழுகி மண்ணான் (வண்ணான்) கொடுக்கும் கஞ்சி தோய்த்த ஆடையை உடுப்பாள். அதன்பின் கலாதி என்னும் சடங்கு தொடங்கும். அப்பொழுது நூலிற் கோக்கப்பட்ட வெள்ளி மோதிரம் அவள் மணிக்கட்டிற் கட்டப்படுகிறது. கலாதி என்பது கிராமப் பெண்கள் மணமகள் எதிரில் நின்று பலவகை வேடிக்கைப் பாடல் களைப் பாடுவதாகும். இதன்பின் பெண்கள் மரப்பொம்மைகளின் மத்தியில் இருத்திப் பாடுவார்கள். இந் நிகழ்ச்சி காஞ்சிரமாலை எனப் படும். அடுத்த நாள் அவள் தானியக் கதிர்களாலலங்கரித்த கதிர் மண்ட பத்தில் இருத்தப்படுவாள். அப்பொழுது தட்டான் மின்னு என்னும் தாலியைக் குருக்களின் கையிற் கொடுப்பான். அப்பொழுது மணமகனும் மணமகளும் உடுத்துக்கொள்வதற்கு ஆடை கொடுக்கப்படும். அவ் வாடைகளிலிருந்து எடுத்துத் திரித்த நூலில் மின்னுக் கட்டப்படும். அப்பொழுது பெண்ணின் தாய் வாயிலில் காத்து நிற்பாள். மணமகன் வருதலும் அவள் அவன் கழுத்தில் பூமாலையிடுவாள். பின் உவாத்தியும் அவன் மனைவியும் ஆடைகளை மணமகனுக்கும் மணமகளுக்கும் கொடுப்பார்கள். பின்பு கிராமத் தலைவன் தென்னங் குருத்துக்களை மணமகனின் இடுப்பில் செருகுவான். இது ஈழவரின் தொழிலைக் குறிப்பதாகலாம். முற்காலத்தில் தென்னங் குருத்துக்குப் பதில் வாள் செருகப்பட்டது. மணமகன் மணமகள் கழுத்தில் மின்னுவைக் கட்டு வான். வந்திருப்போர் அவர்களுக்குப் பல பரிசுகளை வழங்குவர். பெண்ணின் கையில் காப்பாகக் கட்டப்பட்ட கயிறு நான்காவது நாள் உவாத்தியால் அறுக்கப்படும். இக் கலியாணம் பெண் பூப்பு அடைவதன் முன் நடைபெறுகிறது. பெண் பூப்பு அடைந்தபின் தாலி கட்டியவன் அல்லது வேறு ஒருவன் அவளைச் சம்பந்தம் வைத்துக்கொள்ளலாம். தாலி கட்டியவனே அவளின் கணவனாக இருக்க வேண்டு மென்னுங் கட்டாயமில்லை. வடதிருவிதாங்கூரில் நடக்கும் சம்பந்தத்தின் விபரம் வருமாறு: தாலி கட்டியவனல்லாத ஒரு மணமகன் தனது இன சனத்தாருடன் மணமகளின் வீட்டுக்குச் செல்கின்றான். மணமகனைச் சேர்ந்தவர்கள் பெண்ணின் தாய்க்கு ஒரு தொகை பணம் கொடுப்பார்கள். பின்பு மணமகன் பெண்ணுக்குப் பத்துச் சக்கரங்கள் வைத்து உடை கொடுப் பான். பணம் தாயைச் சேர்கின்றது. அது அம்மாயிப் பணம் எனப்படும். பெண்ணின் தாய் மகளுக்கு பாக்கு வெட்டி, சுண்ணாம்புக் கரண்டகம், அரிசி நிரப்பிய பெட்டி, ஒரு பாய் என்பவற்றைக் கொடுப்பாள். கணவன் பெண்ணுக்குச் சிவப்பு ஆடையால் முட்டாக்கிட்டு அவளைத் தனது வீட்டுக்கு அழைத்துச் செல்வான். இவ் வழக்கம் குடி வைப்பு எனப்படும். பிள்ளைப் பேற்றுக்குப் பின் 3, 5, 9வது நாட்களில் பெண் குளித்து மண்ணாத்தி கொடுக்கும் மாற்றை உடுப்பாள். இருபத்தெட்டாவது நாள் பிள்ளைக்குப் பெயர் இடப்படும். பின்பு பிள்ளைக்கு இரும்புக் காப்புகள் இடப்படும். சோறு ஊட்டும் சடங்கு ஆறாவது மாதம் நடைபெறு கின்றது. அப்பொழுது இரும்புக் காப்புகள் கழற்றப்படுகின்றன. இவற்றுக்குப் பதில் வெள்ளி அல்லது தங்கக் காப்பு இடப்படும். ஏழு ஆண்டுகள் நிறைவதற்கு முன் பிள்ளைக்குக் காது குத்தப்படுகிறது. இறந்த வர்களின் உடல் சுடப்படுகின்றது. சுடலையில் கொள்ளிக் குடம் உடைத் தல் முதலிய கிரியைகள் நடைபெறுகின்றன. இரண்டாவது நாள் பிண்டம் வைக்கப்படும். ஐந்தாவது நாள் சாம்பல் அள்ளப்படுகிறது. இவர்களுக்குப் பதினைந்து நாட்கள் தீட்டு உண்டு. உரோணா: மலைகளில் வாழும் ஒரிய உழவர் தொழில் செய் வோர் இப் பெயர் பெறுவர். இவர்களுள் விதவைகள் மறுமணஞ் செய்து கொள்வர். வாழ்விழந்த பெண்கள் பெரும்பாலும் கணவனின் இளைய சகோதரனை மணப்பர். இவர்களின் சாதித் தலைவன் பாதோ, நாய்க்கோ எனப்படுவான். இக் கூட்டத்தினருள் உண்டாகும் பிணக்குகளைக் சாதித் தலைவன் தீர்த்து வைப்பான். ஆண்கள் பூணூலணிவர். இவர்கள் வழிபடும் கிராம தெய்வங்கள் தகுறாணி எனப்படுகின்றன. இவர்களின் சாதிப் பட்டப் பெயர் நாய்க்கோ. எட்டரை: இவர்கள் தமிழ்நாட்டுத் தட்டாரிலொரு பிரிவினர். எம்பிரான்: இது மலையாளத்திற் குடியேறிய துளுவப் பிராம ணருக்குப் பெயராக வழங்குகின்றது. எரவாளர்: இவர்கள் மலையாளத்திலே காடுகளிலுள்ள பதி என்னுங் கிராமங்களில் காணியாளரின் கீழ் கூலி வேலை செய்யும் மக்கள். இவர்களில் பெண்கள் தலைப்பூப்பு எய்தினால் தனியே இடப்பட்ட கொட்டிலில் ஏழு நாட்கள் விடப்படுவார்கள். ஏழாவது நாள் நீராடிய பின்பே அவர்கள் குடிசைகளுள் நுழைவார்கள். எரவாளர் வெற்றிலை யும் பாக்கும் வைத்து உயர்ந்தவர்களுக்குத் திருமணத்தை அறிவிப்பர். உயர்ந்தோர் அவர்களின் திருமணச் செலவுக்கு வேண்டிய நெல் முதலியன கொடுப்பர். இவர்கள் பேய், பிசாசுகளிருப்பதை நம்புவார்கள். மந்திரவாதி பேய் பிடித்தவர்களிடமிருந்து பேயை ஓட்டுவான். அவர்கள் மந்திரவாதி பனை ஓலையில் எழுதிக் கொடுக்கும் இயந்திரங்களை நூலாற் சுற்றிக் கழுத்தில் அணிவர். இவர்களின் முக்கிய தெய்வங்கள் ஏழு கன்னிப் பெண்களும், கறுப்பனும். எழுத்தச்சன்: எழுத்தச்சன் என்பதற்குப் பண்டிதன் என்பது பொருள். இப் பெயர் மலையாளப் பள்ளிக்கூட ஆசிரியருக்குப் பெயராக வழங்குகின்றது. ஹெக்காடி (Heggadi): கன்னட இடையரும் உழவரும் இப் பெயர் பெறுவர். ஏராடி: இது இடையனைக் குறிக்கும் பெயர். ஏர் நாட்டை ஆண்ட நாயர்ச் சாதியாரின் பெயர். ஏர் நாடு என்பது எருதுநாடு என்பதன் திரிபு. ஏராளன்: இது செறுமான் சாதியின் ஒரு பிரிவு. செறு - வயல். ஏனாதி: இது முதன்மையுடைய அம்பட்டன் அல்லது மந்திரி யைக் குறிக்கும். சாணாருக்கும் இப் பெயர் வழங்கும். ஏனாதி நாயனார் மூலம் தமக்கு இப் பெயர் வந்ததென அவர் கூறுவர். ஒக்கிலியன்: பயிர்த் தொழில் செய்யும் கன்னடத் தொழிலாளர் ஒக்கிலியர் எனப்படுவர். அவர்களின் சாதித் தலைவன் பட்டக்காரன் எனப்படுவான். பருவமடையாத ஒக்கிலியச் சிறுவர் பருவமடைந்த பெண்னை மணக்க நேர்ந்தால் கணவனின் கடமைகளை அவன் தந்தை நிறைவேற்றுவான். வியபிசாரக் குற்றத்துக் குட்பட்டவர்கள் ஒரு கூடை மண்ணைத் தலையில் வைத்துக் கிராமத்தைச் சுற்றி வருதல் வேண்டும். அப்பொழுது சின்னப் பட்டக்காரன் பின்னால் நின்று அவர்களைப் புளியம் மிலாறுகளால் விளாசுவான். பெண்களுக்கு முதற்பிள்ளை பிறந்த பின் சீதனம் கொடுக்கப்படும். இறந்தவரின் பிணத்தை எடுத்துச் செல்லும்போது பழம், காசு, சோறு முதலியன எறியப்படும். இறந்தவ னின் மனைவி சுடலைக்குச் சென்று தனது கைவளைகளை உடைத் தெறிவாள். இவர்களுக்கு மரணத் தீட்டு பதினெட்டு நாட்களுக்குண்டு. ஒட்டியர் அல்லது ஒட்டர்: இவர்கள் கிணறு தோண்டுதல், குளங்களுக்கு அணைகட்டுதல் போன்ற வேலைகள் செய்வர். ஒரிசா மாகாணத்தினின்றும் வந்த காரணத்தினால் இவர்கள் ஒட்டர் எனப் பட்டனர். இவர்களின் திருமணக் கட்டுப்பாடுகள் நுகைவுடையவை. பெண்களும் ஆண்களும் விரும்பினால் மணத் தொடர்பை நீக்கிவிட லாம். இரு பாலினரும் பதினெட்டு முறைக்கு அதிகம் திருமணம் செய்து கொள்ளுதல் கூடாதென்னும் கட்டுப்பாடுண்டு. ஒஸ்டா: திருவிதாங்கூரில் வாழும் மகமதியரின் அம்பட்டர் ஒஸ்டா எனப்படுவர். ஒருநூல்: விதவைகள் மறுமணஞ் செய்யாத மறவர் வகுப்பில் ஒரு பிரிவினர் இப் பெயர் பெறுவர். ஓச்சர்: இவர்கள் பிடாரி கோயிலுக்குப் பூசை செய்யும் குலத்தினர். இவர்களின் கொடி உடுக்கை. செங்கற்பட்டுப் பகுதிகளில் ஓச்சர் தேவடியாட்களை ஆட்டும் நட்டுவத் தொழில் புரிவர். ஓச்சன் என்னும் சொல் ஓசை என்னும்அடியாகப் பிறந்தது. அதற்கு மேளமடித்துத் துதிப் பாடல்கள் பாடுவோன் என்பது பொருள். ஓடட்டு: மலையாளத்தில் கோயில்களுக்கும் பிராமணரின் வீடுகளுக்கும் செங்கல் செய்யும் நாயர் வகுப்பினர் இப் பெயர் பெறுவர். ஓதுவார்: இவர்கள் பண்டாரங்களுள் ஒரு பிரிவினர். இவர்கள் தேவாரம் திருவாசகம் முதலிய பாடல்களைக் கோயில்களில் பண் ணோடு பாடுவர். ஹோலியர்: இப் பெயர் பறையன், புலையன் என்னும் பெயர் களுக்கு நேரானது. இவர்கள் தென் கன்னடத்தில் காணப்படுகின்றார்கள். கங்கேயர்: இவர்கள் திருவிதாங்கூரில் வாழும் இடையரில் ஒரு பிரிவினர். கஞ்சகாரர்: இவர்கள் செம்பு, பித்தளை, வெண்கலம் முதலியவை களில் வேலை செய்வோர். கடசன்: திருநெல்வேலிப் பக்கங்களில் சூளை இடுவோர் இப் பெயர் பெறுவர். இவர்களுள் நாட்டரசன், பட்டங்கட்டி என இரு பிரிவினருண்டு. இவர்கள் வேட்டுவரிலும் பார்க்க உயர்ந்தோர். இவர்கள் கோயில்களுள் நுழைதல் கூடாது. இவர்களுக்குத் தனி அம்பட்டனும் வண்ணானுமுண்டு. கடையர்: பள்ளரில் ஒரு பிரிவினர் கடையர் எனப்படுவர். இவர்கள் இராமேசுவரத்திலே சிப்பி ஓடுகளைச் சூளை வைத்துச் சுண்ணாம்பு செய்கிறார்கள். இக் கூட்டத்தினரிலிருந்து முத்துகுளிப்ப தற்கு ஆட்கள் தெரிந்தெடுக்கப்படுவார்கள். மதுரை திருநெல்வேலிக் கோட்டங்களில் இவர்கள் கிறித்துவ மதத்தைத் தழுவியுள்ளார்கள். பரவரை ஒப்ப இவர்களும் பிரான்சிஸ் சேவியரால் மதமாற்றம் செய்யப் பட்டவர்களாவர். கணக்கன்: இது கணக்கு என்னும் சொல்லடியாகப் பிறந்த பெயர். இவர்கள் அரசரால் கிராமக் கணக்கர்களாக நியமிக்கப்பட்டவர்க ளாவர். கர்ணம் அல்லது கணக்கன் என்னும் பெயர்கள் பட்டையங்களிற் காணப்படுகின்றன. இவர்களுக்குப் பட்டப்பெயர் வேளான். கர்ணங் களுள் கை காட்டிக் கர்ணம் என்னும் ஒரு பிரிவு உண்டு. இவர்களுள் மருமகள் மாமியுடன் (கணவனின் தாய்) பேச அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், கைகாட்டி (சமிக்கையால்) பேசுவர். பெண்ணின் தாய் பெண் ணுக்குத் தாலிகட்டுவள். கணியன்: இப் பெயர் கணி என வழங்குகின்றது. பழைய ஆவணங் களில் கணி என்னும் சொல் காணப்படுகின்றது. கணிகன், கணி என்னும் பெயர்கள் பணிக்கனையும் அரசனையும் குறிக்கும். பணிக்கன் என்னும் சொல் பணி (வேலை) என்னும் அடியாகப் பிறந்தது. பணிக்கனுக்கு இராணுவத் தொழில் பயிற்றும் வேலை உரியது என்று கேரள உற்பத்தி என்னும் நூல் கூறுகின்றது. வடக்கே கணிகன் நம்பிக் குருப்பு எனவும் படுவான். கணியரில் கணியர், தீண்டர் என இரு பிரிவினருண்டு. முதற் பினிவினர் சோதிடம் சொல்வோர். இரண்டாவது வகுப்பினர் குடை செய் வோரும் பேயோட்டுவோரு மாவர். கணியன் முட்டினால் களரிப்பணிக் கனுக்குத் தீட்டு உண்டாகின்றது. களரிப் பணிக்கர் முற்காலத்தில் போர்ப் பயிற்சி அளிக்கும் ஆசிரியராக விருந்தனர். பிடிச்சுகளி, வாட்சிலம்பம், பாரிசாதம் களி, கோலடி முதலிய ஆடல்கள் இன்றும் களரிகளில் நடை பெறுகின்றன. புது வருடப்பிறப்புக்குப் பின் மலையாளத்தில் நடை பெறும் சால் (உழவு) கிரியையில் ஒவ்வொருவரும் அவ்வக் கிராமத்துக் குரிய கணிகனிடம் ஆண்டுப் பலனைக் கேட்டறிந்த பின் அவனுக்குச் சிறிது பொருள் வழங்குவது மரபு. பலன் பனை ஓலையில் எழுதிக்கொடுக் கப்படும். இது விட்டுணுபலன் என்று சொல்லப்படுகின்றது. பாழூரி லிருக்கும் கணி மிகப் புகழ் பெற்றவன். கணிகளுள் பெண் பூப்படையு முன் தாலிகட்டுக் கலியாணமும் பின் சம்பந்தமும் நடைபெறும். அவர்களுட் பலர் பாண்டவரைப்போல ஒரே மனைவி உடையவராக விருப்பர். விதவை மறுமணம் செய்துகொள்வாள். பணிக்கருள்ளும் கணிகருள்ளும் பெண்கள் ஒரே காலத்தில் பல கணவரை மணக்கும் வழக்கம் உண்டு. கிராமத்தின் நாயர்த்தலைவன் களரிமூப்பன் எனப்படுவான். கணிகளில் பொதுவன் அல்லது கணிக குருப்புக்கள் அம்பட்டராவர். இவர்கள் பிணத்தோடு இடுகாட்டுக்குச் செல்வார்கள். பொதுவர் தீண்டாக் கணிகளுக்கு மயிர்வினை செய்யார். கணியர் கோவில்களில் நுழையக் கூடாது. இவர்கள் இருபத்து நான்கடி தூரத்தில் வந்தால் பிராமணருக்குத் தீட்டு உண்டாகிறது. கண்கெட்டு: இவர்கள் மாடாட்டிகள்; தெலுங்கு பேசுவர்; வைணவ மதத்தினர். இவர்களின் குரு வைணவ அடையாளமாகிய சங்கு சக்கரம் முதலியவைகளை இவர்கள் தோள்கள்மீது சுடுவர். பெருமாள் மாட்டுக்காரன் அல்லது பெருமாள் எருதுக்காரன் என்னும் மாடாட் டிகள் செங்கற்பட்டு, வட ஆர்க்காடு முதலிய இடங்களிற் காணப்படு கின்றனர். கத்திரி: பட்டு நெசவு செய்வோர் கத்திரிகளாவர். பட்டில் வேலை செய்வதால் இவர்கள் பட்டுநூற்காரர் எனவும் அறியப்படுவர். இவர்கள் தமது வமிசம் காத்த வீரிய அருச்சுனனிலிருந்து வருவதாக கூறுவர். பெண்கள் மறுமணம் செய்துகொள்வர். இவர்கள் தாய்மாமன் பிள்ளையை மணப்பதில்லை. பெண்கள் பூப்பு அடையுமுன் மணம் முடிக்கப்படுவர். மணமாகும் போது ஆண்கள் பூணூல் தரிப்பர். கபேரர்: இவர்கள் கன்னட மீன் பிடிக்கும் வகுப்பினர். இவர்க ளுள் கௌரி (பார்வதி) மாக்கள், கங்கைமாக்கள் என இரு பிரிவினர் உண்டு. இவ் விரு வகுப்பினரிடையும் திருமணக்கலப்பு நடப்பதில்லை; ஆனால் உண்பனவு, தின்பனவு உண்டு. இவர்களுள் பெண்கள் மறு மணஞ் செய்வதில்லை. திருமணத்தின்போது பிராமணன் பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவான். விதவை மறுமணம் செய்து கொள்ளுவ ளாயின் விதவை ஒருத்தியே பெண்ணுக்கு தாலி கட்டுவள். இவ் வகுப்பின ருள் சில பெண்கள் தேவடியாட்களாகக் கோயிலுக்கு நேர்ந்து விடப்படு கிறார்கள். இறந்தவரின் உடல் புதைக்கப்படுகிறது. கம்பலத்தான்: தொட்டியான் பார்க்க. கம்பன்: இது ஓச்சர் குலத்தின் பெயர். கம்மா: இவர்கள் தமிழரினின்றும் பிரிந்து சென்ற காப்புகள், இரெட்டிகள், வேள்மாக்கள் என்போராவர். இப்பொழுது இவர்கள் இராசு என்று அறியப்படுகின்றனர். மதுரை, திருநெல்வேலி முதலிய இடங்களிற் காணப்படும் காப்புக்களும், கம்மாக்களும் விசயநகரத் தேசாதிபதிகள் காலத்தில் இராணுவ சேவை புரிந்தோராவர். கம்மாப் பெண்களுட் சிலர் முட்டாக் கிடுவர். கம்மாக்களில் மணமகன் பெரும் பாலும் மணமகளிலும் இளையவனாக விருப்பான். 22 வயதுள்ள பெண் தனது குழந்தை மணவாளனை ஒக்கலையில் எடுத்துச் சென்ற குறிப்பு ஒன்று சென்னை ஆட் கணக்கு (Madras Census) என்னும் நூலிற் காணப் படுகின்றது. உருசிய நாட்டிலும் பருவமடைந்த பெண்கள் தமக்குக் கணவராக நிச்சயிக்கப்பட்ட ஆறு அல்லது ஏழு வயதுள்ள கணவன் மாரை கூட்டிக்கொண்டு திரிவது வழக்கம். விதவைகள் பெரும்பாலும் மறுமணம் புரிவதில்லை. கம்மாளர், கம்சாலர்: இவர்கள் தெலுங்குக் கொல்லர். கம்மாளன்: கம்மாளன் கண்ணாளன் எனவும் படுவான். பிராம ணரைப் போலவே கம்மாளரும் விசுவகு, சனகன், அகிமான், யனாதனன், உபேந்திரன் முதலியவர்களைத் தமது கோத்திர முதல்வர்களாகக் கொள்வர். ஒவ்வொரு கூட்டத்துக்கும் நாட்டாண்மைக்காரன் உண்டு. நாட்டாண்மைக்காரனுக்கு மேலே ஐந்து வீட்டு நாட்டாண்மைக்காரன் அல்லது ஐந்து வீட்டுப் பெரிய கைக்காரன் உண்டு. இறந்தவர்களின் உடல் குந்தியிருக்கும் நிலையில் சமாதி வைக்கப்படும். சில சமயங்களில் பிரேதங்கள் எரிக்கப்படுகின்றன. இவர்களின் குலதெய்வங்கள் மீனாட்சி அம்மன், கோச்சடைப் பெரிய ஆண்டவன், பெரிய நயினார் முதலியன. ஏழு கன்னிப்பெண் தெய்வங்களையும் இவர்கள் வழிபடுவர். ஏழு கன்னிப் பெண் தெய்வங்களை வழிபடுவோர் மாதர் வகுப்பு எனப்படுவர். கோச்சடைப் பெரிய ஆண்டவன் என்னும் பெயர் கோச்சடைப் பெரிய பாண்டியன் என்பதன் திரிபு. இவர் விட்டுணு கோச்சடைப் பெரிய நயினார் சிவன் எனவும் படுவர். கம்மாளர் தாம் விசுவ கன்மாவின் வழித்தோன்றல்கள் எனக் கூறுவர். கி.பி. 1013இல் உள்ள ஆதாரங்களால் அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாகக் கொள்ளப்பட்டார்களென்றும் அவர்கள் கிராமத்தின் ஒரு பகுதியில் ஒதுக்கப்பட்டிருந்தார்களென்றும் தெரிகின்றன. சோழ அரசருள் ஒருவன், அவர்களை வீடுகளில் சங்கு ஊதவும், மேளம் அடிக்கவும், மிரிதடிதரிக்கவும், வீட்டுக்குச் சாந்து பூசவும் அனுமதித்தான். இவ் வகையைச் சேர்ந்த கம்மாளருக்கு ஆசாரி என்னும் பட்டப் பெயருண்டு. கம்மாளர் (மலையாளத்துக்): இவர்கள் பூணூலணிவதில்லை. இவர்கள் தம்மைத் தீட்டுச்செய்யும் சாதியினர் என ஏற்றுக்கொள்வர். கோயில்களிலும் பிராமணர் இல்லங்களிலும் இவர்கள் நுழைதல் ஆகாது. இவர்களில் உயர்ந்தோர் ஆசாரிகள் எனப்படுவர். இவர்களில் ஆண்கள் பலர் ஒரு பெண்ணை மனைவியாகக் கொள்வர். நாயர்களைப் போல இவர்களுக்கும் தாலிகட்டுக் கலியாணமுண்டு. தாலி கட்டுக்கலி யாணத்தில் பெண்ணின் சாதகத்துக்கு ஏற்ற கணவன் தெரியப்படுவான். தாலிகட்டு நடந்த பின் கணவன் தனது ஆடையி லிருந்து ஒரு நூலை எடுத்து “கட்டு அறுந்து விட்டது” என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் பாராது போய்விடுவான். இவர்களுக்குத் தனிப்பட்ட நாவிதன் உண்டு. இவர்களின் குலதெய்வங்கள் தீக்குட்டி, பறக்குட்டி, காலபைரவன் முதலியன. இவர்களுள் கல்ஆசாரி, மரஆசாரி, மூசாரி (பித்தளை வேலை செய்பவன்) கொல்லன், தட்டான், தோற்கொல்லன் எனப் பல பிரிவுக ளுண்டு. கல்லாசாரி முதலிய முதல் ஐந்து வகுப்பினருக்கிடையில் பெண் கொடுத்தல் உண்பனவு தின்பனவு உண்டு. தோற்கொல்லன் இவர்களி னும் தாழ்ந்தவனாவன். இவர்களின் உரிமை வழி மருமக்கள் தாயம். இவர்களின் நாவிதனுக்கு குருப்பு என்றும் தச்சர் வில்லாசான் எனவும் அறியப்படுவர். இவர் முற் காலத்தில் திருவிதாங்கூர் அரசினர் படைக்கு வில்லுச் செய்து கொடுத்தனர். கி. பி. 9ஆம் நூற்றாண்டில் கம்மாளர் மலையாளத்தில் இருந்தார்கள் என்பதற்கு சீரிய கிறித்தவர்களின் பட்டையம் ஒன்று சான்று தருகின்றது. கம்மாளரைப் பரசுராமர் கேரளத் துக்குக் கொண்டு வந்தாரென்றும் பெருமாள்களுள் ஒருவர் அவர்களை வண்ணாருள் திருமணம் செய்யும்படி கட்டளையிட்டமையால் அவர்கள் இலங்கைக்குச் சென்றுவிட்டார்க ளென்றும் கன்னபரம் பரைக் கதைக ளுண்டு. கம்மாளனின் வீடு கொட்டில் எனப்படும். அவை ஓலைக்கற்றை களால் வேயப்பட்ட சிறு குடிசைகளாகும். பெண்கள் நாயர்ப்பெண்க ளணியும் அணிகளைப் போன்றவற்றை அணிவர். மூக்குத்தி, நத்து முதலிய மூக்கு அணிகளை அணிவதில்லை. வீடு கட்டி முடிந்ததும் ஆசாரி மார் குடிபுகும் கிரியை செய்வார்கள். அதில் பால் காய்ச்சுவது முதன்மை யான கிரியை. தென் திருவிதாங்கூரில் இவர்கள் ஈழவரிலும் உயர்ந்தவர் களாகக் கருதப்படுவர். பெண்களுக்குத் தாலி கட்டுக் கலியாணம் நடந்தபின் வாழிப்பு என்னும் கிரியை நடத்தப்படு கிறது. இதனால் தாலிகட்டினவனுக்கும் பெண்ணுக்கு முள்ள தொடர்பு நீக்கப்படுகிறது. ஈழவரைப் போலவே பெண்கள் மின்னு என்னும் தாலிதரிப்பர். கரணா: கஞ்சம், ஒரிசா மாகாணங்களில் வாழும் கர்ணம் (கணக்கன்) சாதியினர் கரணா எனப்படுவர். இவர்கள் யயாதிகேசரி என்னும் ஒரிசா நாட்டு அரசனால் (கி.பி. 447-526) வடநாட்டினின்றும் எழுத்தாளராக கொண்டுவரப் பட்டவர்கள். விதவைகள் மறுமணம் செய்வதில்லை. முட்டாக்கிடும் கரணோப்பெண்கள் கோசா வழக்கத் தைக் கைக்கொள்வர். பருவமடைந்த பெண்கள் சகோதரனுக்கு முன்னால் தானும் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். கலவாந்து : இவர்கள் தென்கன்னடம் தெலுங்கு நாடுகளில் வாழும் பாடல் ஆடல் மாதராவர். கவுண்டர்: சேலம் அரசினர் அறிக்கையில் கவுண்டர் உழு தொழில் செய்வோர் எனக்குறிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தமது பெயரினிறுதியில் கவுண்டன் என்னும் பெயரைச் சேர்த்தெழுதுவர். கழைக்கூத்தாடி: கம்பங்கூத்தாடி. கள்ளமூப்பன்: இவர்கள் மலையாளக் கம்மாளரின் ஒரு பிரிவினர். மலையாளத்தில் கம்மாளர் தீட்டு உண்டாக்கும் வகுப்பினர். கள்ள மூப்பன் கோயிலின் மதிலுக்கு உட்பட்ட வெளிவீதி வரையிற் செல்ல லாம். இவர்களின் விதவைகள் மறுமணம் புரிவதில்லை. இவர்களின் புரோகிதன் அம்பட்டன். அவன் மணமகன் வீட்டிலிருந்து பெண்ணின் வீடுவரையும் சங்கு ஊதிச் செல்வான். கள்ளர்: கள்ளர் என்பதற்குக் கொள்ளையடிப்போர் என்பது பொருள். இவர்கள் பெரும்பாலும் தஞ்சாவூர், புதுக்கோட்டை முதலிய பகுதிகளிற் காணப்படுவர். பெண்களும் ஆண்களும் காதில் துளை செய்து காது தோளில் முட்டும்படியான காதணிகளை அணிவர். இவர் களின் தலைமைக்காரன் அம்பலக்காரன் எனப்படுவான். இவர்களின் தாய் நாடு தொண்டைமண்டலம் அல்லது பல்லவர் நாடாகும். புதுக் கோட்டை அரசர் இன்றும் தொண்டைமான் எனப்படுவர். கள்ளர் குறும்பரில் ஒரு பிரிவினர். படையினின்றும் கலைக்கப்பட்டதும் இவர்கள் கொள்ளையடிக்கும் தொழிலை கைக்கொண்டனர். திருமணத் தில் மணமகனின் சகோதரி பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவாள். கள்ளரில் தெற்கத்தியார் எனப்படுவோர் புதுக்கோட்டையிற் காணப்படு கின்றனர். இவர்கள் தலைமயிரை நீளமாக வளரவிடுவர். ஆண்களும் பெண்களும் காதைத் துளையிட்டு ஓலைச்சுருளைச் செருகித் துளை யைப் பெருக்கச் செய்வர். தஞ்சாவூரில் வாழ்வோருக்குக் கள்ளன், மறவன், அகமுடையான் முதலிய பெயர்கள் வழங்கும். மாயவரம் பகுதி யில் அகமுடையான், வலையன் என்போருக்கும் கள்ளன் என்னும் பெயர் வழங்கும். கள்ளன், மறவன், அகமுடையான் என்போருக்குள் நெருங்கிய உறவுண்டு. கிராமங்கள் கொள்ளையடிக்கப்படாதிருப்பதற்கு ஒவ்வொரு கிராமமும் அவர்களுக்குத் திறைகொடுத்து வந்தது. திறை கொடுக்கப்படாவிடில் மாடுகள் திருட்டுப் போயின. சில சமயங்களில் வீடுகள் தீப்பிடித்து விடும். கள்ளரால் பெரிதும் பாதிக்கப்படுவோர் இடையர் அல்லது கோனாராவர். மாடுதிருட்டுக் கொடுத்தவன் கள்ளன் ஒருவனுக்குத் துப்புக்கூலி கொடுத்தால் அவன் இன்ன கிராமத்தில் இன்ன இடத்தில் மாடுகட்டி நிற்கிறது என்று சொல்வான். மாட்டுக்காரன் அவ் விடத்திற்சென்று தன் மாட்டைப் பெற்றுக் கொள்வான். துப்புக் கூலி மாட்டின் பாதிவிலையளவு ஆகும். மாடு திருட்டுப் போனதைப் பொலீசாருக்குத் தெரிவித்தால் மாடு கிடைக்க மாட்டாது. இவர்கள் வளைதடி என்னும் ஒருவகை எறிதடியைப் பயன்படுத்துவர். இத் தடி இலக்கை நோக்கி எறியப்பட்டால் இலக்கில்பட்டு எறிந்தவனிடம் திரும்பி வரும். இவ் வகை வளைதடி (Boomerang) ஆஸ்திரேலிய பழங் குடிகளாலும் பயன்படுத்தப்படும். வெல்லூர்க் கள்ளரின் பெயர்கள் வினோதமானவை. வேங்கைப்புலி, வெங்காலிப்புலி, செம்புலி, சம்மட் டிகள், திருமான், சாயும் படை தாங்கி போல்வன. இவர்களுள் அண்ணன் தங்கை பிள்ளைகள் மணம் செய்து கொள்ளலாம்; தாய்மாமன் பிள்ளையை மணத்தல் கூடாது. புறமலை நாட்டுக் கள்ளர் சுன்னத்துச் செய்து கொள்வர். சிறு குடிக்கள்ளர் கட்டும் தாலியில் மகமதியரின் நட்சத்திரமும் பிறையுமுண்டு. திருநெல்வேலி யிலும் மதுரையிலும் வாழும் கள்ளப்பெண் மூர்க்கங்கொண்ட எருதின் கொம்பிலே கட்டிய துணியை எடுத்துக்கொண்டு வந்தவனையே கணவ னாகத் தெரிவார்கள். மாட்டின் கொம்புகளில் விலையுயர்ந்த பொருள் களைக் கட்டி மாட்டை அவிழ்த்து விடுவார்கள். சனங்களின் ஆரவாரத் துக்கும் மேளங்களின் ஒலிக்கும் நடுவே அது அங்கும் இங்கும் ஓடும். கள்ளன் மாட்டுக்குப் பின்னால் சென்று அதன் கொம்பிற் கட்டியிருப் பதை அவிழ்த்தெடுப்பான். மேற்கத்திய கள்ளருள் பெரும்பாலும் ஒரு கள்ளப்பெண் பத்து, எட்டு அல்லது இரண்டு கணவருக்கு மனைவியாக விருப்பாள். பிள்ளைகள் எல்லாருக்கும் சொந்த முடையவர்களாவர். மணமகனின் உடன் பிறந்தாள் பெண்வீட்டுக்குச் சென்று 21 பணம் கொடுத்து பெண்ணின் கழுத்தில் குதிரை மயிரைக் கட்டி அவளையும் அவள் இனத்தவர்களையும் மணமகன் வீட்டுக்கு அழைத்துச் செல்வாள். மணமகனும் மணமகளும் வளைதடி மாற்றிக்கொள்வார்கள். கள்ளரின் முதன்மையான கடவுள் அழகர்சாமி. மதுரையில் அழகர் கள்ளசாமி எனப்படுவர். கள்ளர் மாட்டுச்சண்டை நடத்துவதில் விருப்பமுடையர். இது கொழுமாடு எனப்படும். இன்னொரு வகை மாட்டுச் சண்டை பாய்ச்சல் மாடு எனப்படும். கள்ளரின் வழக்கமான பட்டப்பெயர் அம்பலக்காரன், சிலர் அகமுடையான், சேர்வை, தேவன் எனவும் பெயர்பெறுவர். கன்னடியர்: இவர்கள் மைசூரிலிருந்து வந்து தமிழ்நாட்டில் குடியேறினோராவர் காக்காளர்: இவர்கள் மத்திய திருவிதாங்கூரிலுள்ள காக்காக் குறவர். பெண்கள் பச்சை குத்தும் தொழில்புரிவர். காதுகுத்து, கைநோக்கு (இரேகை பார்த்தல்) கொம்பு வைப்பு (நோவுள்ள இடத்தில் கொம்பா லூதுதல்) பாம்பாட்டு, வாய்ப்புக் கூறுதல் (சோசியம் சொல்லுதல்) போன்ற தொழில்களையும் இவர்கள் புரிவர். காக்காளர் காலை ஞாயிற்றை வணங்கி ஞாயிற்று வாரத்தில் பொங்கலிடுவர். ஆடவர் பன்னிரண்டு மனைவியர் வரையில் மணப்பர். இவர்களின் சொத்து தந்தை தாயரிலிருந்து பிள்ளைகளைச் சேர்வது. காடர்: ஆனைமலையில் வாழும் மக்கள் காடர் எனப்படுவார்கள். ஆண்களும் பெண்களும் பற்களின் முனைகளை அராவிக் கூராக்குவர். பெண்கள் கூந்தலில் மூங்கிற் சீப்பு அணிவர். இவர்கள் பேசும் மொழியில் தமிழ் மலையாளச் சிதைவுகள் காணப்படுகின்றன. இவர்கள் ஆளை ஆளி என்பர்; முடி ஆளி - முடியுடையவன்; கத்தி ஆளி - கத்தியுடை யவன்; பூ ஆளி - பூ வுடையவன். இராக் காலங்களில் இவர்கள் தமது குடிசைகளின் முன் விளக்கெரிப்பர். இவ்வாறு இவர்கள் செய்தல் கரடி, யானை, புலி, சிறுத்தை முதலிய விலங்குகள் தமது குடிசைகளை அணுகா மல் இருப்பதற்காகும். தீத்தட்டிக் கற்களால் இவர்கள் தீ உண்டாக்கு கின்றனர். பெண்கள் தமது குழந்தைகளைத் தோளிற் கட்டிய துணியில் இட்டுச் செல்வர். காடர் வாலிபன் திருமணம் செய்ய விரும்பினால் பெண் இருக்கும் கிராமத்துக்குச் சென்று ஓர் ஆண்டு தங்கித் தான் ஈட்டிய பொருளைக் கொடுப்பான். திருமணத்தின் போது ஆண்களும் பெண்களும் பந்தலுக்கு முன்னால் நின்று ஆடுவார்கள். பெண்ணின் தாய் அல்லது உடன் பிறந்தாள் தாலியை அவள் கழுத்தில் கட்டுவாள். பெண்ணின் தந்தை மணமகனின் தலையில் தலைப்பாகை வைப்பான். பூப்புக்காலங்களில் பெண்கள் தனிமையாக ஓரிடத்திலிருப்பர். பூப்படைந்தபின் அவர்கள் தமக்கு வேறு பெயர் இட்டுக் கொள்வார்கள். குழந்தையைப் பெற்ற பெண்ணுக்கு மூன்று மாதங்களுக்குத் தீட்டு உண்டு. ஒரு மாதமானதும் பெண்கள் எல்லோரும் கூடிக் குழந்தைக்குப் பெயரிடுவார்கள். கைம் பெண்கள் மறுமணம் செய்வதில்லை; ஆனால் வைப்பாட்டிகளாக இருக்க அனுமதிக்கப்படுவர். தாய்மார் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வரை குழந்தைக்குப் பாலூட்டி வளர்ப்பர். பல்லை அரத்தினால் அராவிக் கூராக்குதல் அழகு என்று காடர் கருதுவர். சிறுவர் புலிநகம், முதலைப்பல் முதலியவற்றை அணிந்திருப்பர். பெண்கள் காதிலுள்ள துளைகளில் ஓலையைச் சுருட்டிச் செருகுவர். இரும்புக் காப்பு, இரும்பு மோதிரம், மணிகோத்த மாலைகள் என்பவற் றையும் இவர்கள் அணிவர். காடுபட்டன்: இவர்கள் மலையாளத்திலுள்ள நாயர்ச் சாதியினர் போன்றோர். இவர்களின் உரிமை வழி தந்தை தாயரிலிருந்து சொத்து பிள்ளைகளைச் சேர்வது. மணமகளுக்குப் பெண்ணின் சகோதரி தாலி கட்டுவாள். பிணச் சடங்குகளை அம்பட்டன் செய்வான். பெண் ஆண் சந்ததியின்றிக் கைம்மையானால் கணவனிறந்த 12வது நாள் பெற்றோர் வீட்டுக்குச் செல்வாள். ஆண் சந்ததியிருந்தால் கணவன் வீட்டிலிருப் பாள். காட்டு மராத்தி: குருவிக்காரர் என்னும் வகுப்பினருக்குக் காட்டு மராத்தி என்னும் பெயர் வழங்கும். மலையாளத்தில் வாழும் குறும்பர் காட்டு நாய்க்கர் எனப்படுவர். காணிக்காரர்: தென் திருவிதாங்கூரில் மலைகளில் வாழும் மக்கள் இப் பெயர் பெறுவர். காணிக்காரரின் உட்பிரிவினர் இல்லங்கள் எனப் படுவர். இவர்கள் பேசும் மொழி மலையாளம். இவர்களின் உரிமை தந்தையின் சொத்து பிள்ளைகளைச் சேர்வது. அம்மன், பூதநாதன், வெடிக்காட்டுப் பூதம், வடதலைப் பூதம் முதலிய தெய்வங்களை இவர் கள் வழிபடுவர். திருமணத்தின்போது பெண் சிறுமியாயின் மணமகனே தாலி கட்டுவான்; பருவ மடைந்தவளாயின் பெண்ணின் சகோதரி கட்டு வாள். பெண் கருப்பமடைந்து ஏழாவது மாதம் வயிற்றுப் பொங்கல் என்னும் பொங்கல் இடப்படுகிறது. இப் பொங்கல் ஏழு அடுப்பில் ஏழு உலைகளை வைத்துச் செய்யப்படும். காது குத்துக் குறவர்: பல சாதியினருக்கும் காது குத்தும் குறவர் இப் பெயர் பெறுவர். காப்பிலியர்: இவர்கள் குறும்பரில் ஒரு பிரிவினர். பெண்களுக்குத் திருமணத்தின் அடையாளமாக பொட்டு அல்லது தாலி கட்டப்படும். கணவன் வயதில் இளையவனாக விருந்தால் பெண் கிட்டிய உறவின னைச் சேர்ந்து பெறும் பிள்ளை கணவனின் பிள்ளையாகக் கொள்ளப் படும். உடன் பிறந்தாளின் கணவனோடு உறவு பூண்டிருந்தால் அவள் ஒழுக்கத்தில் தவறியவளாகக் கருதப்படமாட்டாள். இவர்களின் தெய்வங்கள் இலக்கம்மா, வீர இலக்கம்மா, தெண்டையா, திம்மப்பன், சிங்காரப் பெருமாள் முதலியவை. காப்பு: இவர்கள் இரெட்டி வகுப்பினர். இவர்கள் தெலுங்கு நாட்டில் உழு தொழில் செய்கின்றனர். இவர்கள் பிராமணருக்கு அடுத்த படியிலுள்ளவர்களாகக் கருதப்படுகின்றனர். கிராமணி: இது சாணார் சிலரின் பட்டப்பெயர். இவர்களின் தலைமைக்காரருக்குக் காத்திரி என்னும் பட்டப்பெயர் வழங்கும். கிருஷ்ணாவைக் காக்கா: இவர்கள் இரணியல், கல்குளம் (திருவிதாங்கூர்) முதலிய இடங்களில் வாழ்வோர். ஆண்களின் பெயர் இறுதியில் ஆயன் என்றும் பெண்களின் பெயரிறுதியில் ஆய்ச்சி யென் றும் முடிவுகள் சேர்ந்து வழங்கும். இவர்கள் வட இந்தியாவிலுள்ள அம்பாதியிலிருந்து வந்து காஞ்சீபுரத்தில் ஆயர்பாடியில் வாழ்ந்தார்கள். மகராசா உடைய மார்த்தாண்டவர்மன் காலத்தில் இவர்கள் கேரளத் துக்குச் சென்றார்கள். மார்த்தாண்டவர்மன் காலம் கொல்லமாண்டு 904-933. இவர்களிடையே மருமக்கள் தாயம், மக்கள் தாயம் என்னும் இருவகை உரிமை வழிகளும் உண்டு. இவர்களின் குரு காணத்தன் அல்லது கசான் எனப்படுவர். குருக்கள்குலப் பெண்கள் மங்கலி அம்மா எனப்படுவர். மருமக்கள் தாயக்காரர் மலையாள மொழி பேசுவர். மக்கள் வழித்தாயக்காரர் கொச்சைத் தமிழ் பேசுவர். மருமக்கள் தாயக்காரருக்கு இளமையில் தாலி கட்டுக் கலியாணமுண்டு. ஒருத்தியின் கணவன் இறந்து போனால் அவள் அவன் தம்பியின் மனைவியாவாள். அவள் அணிந் திருக்கும் ஆபரணங்களைக் களையவேண்டியதில்லை. மருமக்கள் தாயக்காரரின் பெண்கள் தாய் வழியால் அறியப்படுவர். கிலாசி: இவர்கள் தெலுங்கு அம்பட்டர். இவர்களின் உரிமை பெண் வழியாக வருவது. கிழக்கத்தி: வட அல்லது தெற்கு ஆர்க்காட்டுப் பறையர் சென்னையில் கிழக்கத்தி எனப்படுவர். கீரைக்காரன்: கோயம்புத்தூரில் கீரை பயிரிடும் அகம்படியார் சிலருக்கு இப்பெயர் வழங்கும். குகவேளாளர்: சில வேளாளரும் மறவரும் தாம் இராமருக்கு ஓடம் விட்ட குகனிலிருந்து தோன்றியவர்கள் எனக் கொண்டு தம்மைக் குகவேளாளர் என்பர். குசராத்தி: கூர்ச்சரத்தினின்றும் வந்து தென்னாட்டிற் குடியேறி னோர் குசராத்தி எனப்படுவர். குடிகாரர்: ஓவியந் தீட்டுவோர், மரங்களில் உருவங்கள் வெட்டு வோருக்குக் கன்னட நாட்டில் இப் பெயர் வழங்கும். குடி என்பது கோயிலைக் குறிக்கும். குடிக்கார்: திருவிதாங்கூரிலுள்ள தேவதாசிகளுக்கு இப் பெயர் வழங்கும். இவர்களுக்கு வீட்டுக் கூலி இல்லை. குடிமகன்: இது அம்பட்டனுக்கு வழங்கும் தமிழ்ப் பெயர். குடியர் (குடி=மலை) : இவர்கள் தென் கன்னடத்தில் காணப்படு கின்றனர்; கொச்சைத்துளுப் பேசுகின்றனர். மைசூர் எல்லைப் புறங்களில் இவர்கள் காணப்படுகின்றனர். இவர்களின் முக்கிய கடவுளர் பைரவர், காமன் தேவாரு, பஞ்சபாண்டவர் என்போராவர். பெண்ணும் மணமக னும் கையைப் பிடித்து நிற்க மணமகளின் தந்தை நீரை ஊற்றுவதே அவர்களின் மணக் கிரியையாகும். சில சமயங்களில் மணமகனும் மணமகளும் குடித்தலைவனின் முன்னால் நின்று ஒருவருக்கு ஒருவர் பொட்டு இட்டுக் கொள்வர். குடியா: ஒரியாநாட்டு மிட்டாய் விற்போர் இப்பெயர் பெறுவர். குடோ - கருப்புக் கட்டி. குடுபியர்: இவர்களின் சாதிப் பெயர் குளவாடி. இவர்கள் பெரி தும் குண்டப்பூர் மாகாணத்தில் காணப்படுவர். கொங்கணி, மராட்டி முதலியன இவர்களின் மொழிகளாகும். இவர்களுள் வியபிசார நடத்தை யுள்ள ஆணின் தலையையும் முகத்தையும் சிரைத்து அவனைக் குழியில் நிறுத்தி எச்சில் இலையைத் தலை மீது எறிவது வழக்கு. தலைமைக்காரன் பணத் தண்டம் விதிப்பான். பெண் உண்மை கூறாவிடில் இரும்புக் கம்பியுடன் வெயிலில் நிறுத்தப்படுவாள். இவர்கள் தமது குலதெய் வத்தை வீட்டின் ஒரு புறத்தில் வைத்து வழிபடுவர்; குடும்பத்தினருள் ஒருவன் பூசாரியாக விருப்பான். இவர்கள் பூதங்களையும் காலபைரவரை யும் வழிபடுவர். விதவைகள் மறுமணம் செய்து கொள்வர். ஆனால் இறந்த கணவனின் குடும்பத்தில் மணம் முடிக்க மாட்டார்கள்; பெரும் பாலும் காசுக் கட்டி செய்வர். காசுக் கட்டி ஒருவகை மரத்தை வெட்டி அவித்து அதன் சத்திலிருந்து செய்யப்படுகிறது. குடுமி அல்லது குடுமிக்காரர்: இப்பெயர் ஒரே குடும்பம் என்பதன் சிதைவு என்று சொல்லப்படுகிறது. இவர்கள் குடியர் எனவும் படுவர். இப்பொழுது இவர்கள் தாம் செட்டி இனத்தைச் சேர்ந்தவர்க ளெனக் கூறுவர். இவர்களில் மரியாதைக்குரியவரைக் கொச்சி அரசர் மூப்பன் என்று அழைப்பர். கொங்கண மொழியின் சிதைவாகிய ஒரு வகை மொழியை இவர்கள் பேசுவர். பெண்கள் பூப்புக்குப்பின் நான்கு நாட்கள் தீட்டுக் காப்பர். அக் காலத்தில் அவள் மற்றவர்களுக்கு ஏழடி தூரத்தில் நிற்க வேண்டு மென்றும், நிழல் மற்றவர்கள் மீது விழுதல் கூடாதென்றும் விதிகளுண்டு. பெண்களுக்குத் திருமணம் பூப்படையும் முன் நடக்கும். விதவைகள் மறுமணம் முடிப்பர். குடும்பத்தில் மிக முதியவரின் பிணம் மாத்திரம் சுடப்படும். இவர்களுக்கு இறப்பு பிறப்புத் தீட்டுகள் பதினாறு நாட்களுக்குண்டு. இவர்களின் முக்கிய பொழுது போக்கு கோலாட்டம். குடைகட்டி: இவர்கள் பாணரில் ஒரு பிரிவினர். குணி: இவர்கள் ஆடல் பாடல் புரியும் ஒரிய தாசி வகுப்பினர். கும்மாரர்: (கும்பகாரர்-குயவர்) அவர்கள் கன்னட தெலுங்கு குயவரில் ஒரு பிரிவினர். தமிழ்நாட்டுக் குயவரைப்போல இவர்கள் நூல் தரிப்பதில்லை. குயவன்: மட்பாண்டங்கள் செய்வோர் இப்பெயர் பெறுவர். இவர்கள் பூணூலணிவர். பிடாரி கோயில்களில் இவர்கள் பூசாரியாக இருப்பதுண்டு. இவர்களின் பட்டப் பெயர் உடையான், வேளான் என்பன. முற்காலத்தில் இறந்தவர்களை வைத்துப் புதைக்கும் அழகிய தாழிகளை இவர்கள் செய்தார்கள். திருநெல்வேலி, மதுரை, மலையாளம் முதலிய இடங்களில் தாழிகள் கிண்டி எடுக்கப்பட்டன. குயவன் மாமியின் மகளை மணக்கலாம். பெண் பருவமடைவதன் முன் மணம் நடக்கின்றது. மணமகனின் சகோதரி பெண்ணுக்குத் தாலி தரிப்பாள். குருகள்: இவர்கள் மலையாளக் குரு வகுப்பின் ஒரு பிரிவினர். இவர்கள் தமிழர் உற்பத்தியைச் சேர்ந்தவராகலாம். ஆடவர் நயினார் எனவும் மகளிர் நாச்சியார் எனவும் படுவர். இவர்கள் திருவனந்தபுரத்தி லுள்ள பத்மநாப சுவாமிக்கு வழித் தொண்டர். இவர்கள், மடத்தலைவர் களும், தேவார பண்டாரங்களும் சமயக் கிரியைகள் புரியும்போது உதவி செய்பவர்களாவர். கொல்லம் ஆண்டின் எட்டாவது நூற்றாண்டு வரையில் இவர்கள் பத்மநாபசாமி கோவிலின் உள்மண்டபங்களை அலகிடும் வேலை செய்து வந்தனர். இவர்களின் இல்லம் பவனம் அல்லது வீடு எனப்படும். பெண்கள் குருக்கத்திகள் எனப்படுவர். அவர்கள் கழுத்தில் அரசிலைத் தாலியையும், காதில் சூட்டு என்னும் அணியையும், மூக்கில் நத்து அல்லது மூக்குத்தியையும் அணிவர்; கையிலும் நெற்றியிலும் பச்சை குத்திக் கொள்வர். குருகளின் புரோகிதர் உபாத்தியாயர் எனப்படுவர். தாலிகட்டுக் கலியாணம் சம்பந்தம் முதலிய வழக்கங்கள் இவர்களிடையே உண்டு. இவர்களுக்கு மரணத் தீட்டு ஏழு நாள். குருப்பு: இவர்கள் மலையாளத்திற் காணப்படும் கொல்ல வகுப் பில் ஒரு பிரிவினர். இவர்களிற் பல பிரிவுகளுண்டு. காய, பலிச (கேடகம்) தோல் முதலிய பெயர்கள் அவர்கள் பெயர்களுக்கு முன்னால் இட்டு வழங்கப்படும். குருவிக்காரன்: குருவி பிடிப்போரில் மராட்டி பேசுகின்ற கூட்டத்தினர் இப் பெயர் பெறுவர். இவர்கள் காட்டு மராட்டிகள் எனவும் அறியப்படுவர். இவர்கள் தமது பொருள் பண்டங்களையும் குடிசைகளையும் பொதிமாடுகளில் ஏற்றிக்கொண்டு அலைந்து திரிவர். இவர்கள் பிச்சை எடுத்தும், ஊசி, மணி, முதலியன விற்றும் வாழ்க்கை நடத்துவர். இவர்கள் பலரைச் சென்னை நகரில் காணலாம். குருவிக் காரன் வலையைக் கட்டி அதனுள்ளிருந்து நரி போலச் சத்தமிடுவான். நரிகள் அச் சத்தத்தைக் கேட்டு ஓடி வரும். குருவிக்காரன் அவற்றை அடித்துக் கொல்லுவான். கலியாணமான குருவிக்காரி பகல் முழுதும் அலைந்து திரிந்துவிட்டு இரவானதும் கணவனிருக்கு மிடத்துக்கு வரவேண்டும்; அல்லாவிடில் வேகக் காய்ச்சிய இரும்பைப் பிடித்துக் கொண்டு அவள் பதினாறடி செல்லவேண்டும்; அல்லது கொதிக்கக் காய்ச்சிய சாணி நீருள் கைவைத்து அடியில் இருக்கும் காலணாவைத் தடவி எடுக்க வேண்டும். அவள் குற்றமற்றவளானால் உடனே உள்ளங் கையில் நெல்லை வைத்து உரைஞ்சி உமியைப் போக்கக் கூடியவளாவள். ஆண்கள் தமது பெயரினிறுதியில் சிங் என்பதைச் சேர்த்துக் கொள்வர். திருமணத்தின்போது அவர்களின் தலைமைக்காரன் கறுப்புக் கயிற்றை அல்லது மணிகள் கோத்த மாலையை மணமகனின் கையில் கொடுப் பான். அவன் அதை மணமகளின் கழுத்தில் அணிவான். துர்க்கையும் காளியும் அவர்களின் முதன்மையான தெய்வங்கள். குறவர்: இவர்கள் இடம்விட்டு இடம்பெயர்ந்து திரியும் மலைச் சாதியினர். இவர்கள் கொச்சைத் தமிழ் பேசுவர்; கூடைமுடைவர். வாய்ப்புக் (சோசியம்) கூறுவர். திருமணத்தில் மணமகள் மஞ்சள்நூல் தாலி தரிப்பர். குறப் பெண்கள் பச்சை குத்துவார்கள். குறவர் பூனை, கோழி, மீன், பன்றி, கருங்குரங்கு, நரி, எலி, மான் முதலியவற்றி னிறைச்சியை உண்பர். மணமான பெண்கள் கழுத்தில் கறுப்புப் பாசியும் கையில் வளையலுமணிந்திருப்பர். கணவனை இழந்த பெண்கள் அவற்றைக் களைந்துவிடுவர்; “குறத்தி பிள்ளையைப் பெறக் குறவன் காயந்தின்கிறது” என்னும் பழமொழியுண்டு. குறத்தி பிள்ளை பெற்றால் குறவன் மூன்று நாட்களுக்குப் படுக்கையிலிருந்து காயந் தின்பான். குறவர் (திருவிதாங்கூர்): திருவிதாங்கூர்ப் பகுதியில் 50,000-க்கும் மேற்பட்ட குறவர் வாழ்கின்றனர். இவர்கள் குண்டக்குறவர், பூங்குறவர், காக்காக் குறவர் என மூன்று பிரிவினராவர். பாண்டிக் குறவர் தமிழ் பேசுவர். இவர்கள் பெரிதும் நாஞ்சில் நாட்டில் (நாகர் கோயிற் பகுதி) காணப்படுவர். நாஞ்சில் குறவர் என்பது அவர்களின் மறுபெயர். குண்டக்குறவர் தமது முன்னோர் ஓம குண்டத்தினின்றும் பிறந்தவர் எனக் கூறுவர். மூன்று நூற்றாண்டுகளின் முன் நாஞ்சில் நாடு நாஞ்சிற் குறவரால் ஆளப்பட்டது. இவர்கள் இறந்த முன்னோரின் ஆவிகளை வணங்குவர். இவர்களின் மேலான கடவுள் கார்த்திகேய அடிகள். இவர் களின் இறந்துபோன முன்னோர் சாவார் எனப்படுவர். சாவாருக்குச் சிறுகுகைக் கோயில்களுண்டு. சாவாருக்குப் பூசைசெய்யும் பூசாரி பிணியாளி எனப்படுவான். இராரக்காரர் அல்லது விச்சாரக்காரர் என்னும் ஒருவகையினருண்டு. அவர்கள் நோய்களின் காரணங்களை ஆராய்வர். அவர்களின் தெய்வங்கள் சாவார், ஆயிரவல்லி, சாத்தான், பகவதி, மாடன், மூடி, தெய்வம், பகவான், அப்புப்பன், மருதன் முதலியன. இவர்களின் குடித்தலைவன் ஊராளி, பணிக்கன் எனப்படுவான். பெண் களுக்குத் திருமணம் பூப்பாவதன்முன் நடைபெறும். தாலிகட்டுக் கலியாணமுண்டு. சம்பந்தம் கொள்ளும் வழக்கமும் உண்டு. தாலிகட்டுக் கலியாணத்தில் குறத்தி பெண்ணின் கழுத்தில் தாலிகட்டுவான். குறவன் ஒரு பெண்ணை மணக்க விரும்பினால் அவன் பெண்ணின் தந்தைக்குப் பன்னிரண்டு பணம் கொடுக்கவேண்டும். விதவைகள் மறுமணஞ் செய்வர். இவர்களின் உரிமை வழி மருமக்கள் தாயம். இவர்களுக்கு மரணத்தீட்டு பன்னிரண்டு நாள். தாழ்ந்தவர் உயர்ந்த சாதியினருக்கு நாற்பத்தெட்டடி தூரத்தில் நிற்றல் வேண்டும். குறிச்சான்: மலையாளத்தில் வேட்டையாடி வாழும் சாதி யினருக்கு இப் பெயர் வழங்கும். இப் பெயர் குறிச்சி என்னும் அடியாகப் பிறந்திருக்கலாம். மலையாளத்தில் குறிச்சி என்பது மலையைக் குறிக்கும். குறிச்சான்கள் பிராமணரிடத்தில் அதிக வெறுப்புக் காட்டுவர். பிராமண னொருவன் குறிச்சான் வீட்டுக்குச்சென்று திரும்பினால் குறிச்சான் பிராமணன் இருந்த இடத்தைச் சாணியால் மெழுகிச் சுத்தஞ் செய்வான். மருமக்கள் தாயமும், மக்கள் தாயமும் இவர்களிடையே உண்டு. இவர் களின் தெய்வம் மூத்தப்பன் (பாட்டன்). இப்பொழுது இவர்கள் புனம் செய்வர். இவர்கள் பெரும்பாலும் வேணாடு, கள்ளிக்கோடு, மேற்குத் தொடர்ச்சி மலைச்சாரல்களிற் காணப்படுவர். தீயரும், கம்மாளரும் தீண்டினால் இவர்களுக்குத் தீட்டு உண்டு. பூப்பு எய்து முன் பெண்களுக் குத் தாலிகட்டுக் கலியாணம் நடக்கும். விழாக்காலங்களில் இவர்கள்மீது தெய்வம் ஏறி ஆடி வெளிப்புக் கூறும். சில இடங்களில் வாழ்வோர் நல்ல தண்ணீரில் வாழும் மீன்களைக் கைவில்லால் அம்பை எய்து கொல்வர். அம்பு நீண்ட கயிற்றிற் கட்டப்பட்டிருக்கும். கரிம்பில் பகவதி, மலைக் குறத்தி, அதிர் அள்ளன் முதலிய கடவுளரை இவர்கள் வழிபடுவர். குறுமோ: குறுமோ என்பார் இறசல் கொண்டாப் பகுதிகளில் வாழும் பயிர்த்தொழில் புரியும் ஒரிய வகுப்பினர். தெலுங்கர் இவர் களைக் குடுமோ என்பர். இவர்களின் கிராம தெய்வங்கள் தக்குறாணி எனப்படும். பாகதேவி, கும்பேசுவரி, சாதபவூனி முதலியன அவர்கள் குடும்பத் தெய்வங்களாகும். குறும்பர்: ஆட்டைக் குறிக்கும் குறு என்னும் கன்னடச் சொல்லி லிருந்து இப் பெயர் உண்டானதென்று கருத இடமுண்டு. குறு என்பது கொறி (ஆடு) என்னுஞ் சொல்லின் திரிபு. இவர்களின் தலைமைக்காரன் கொடு எனப்படுவான். தலைப் பூப்படைந்த பெண்கள் வீட்டின் ஒரு மூலையில் எட்டு நாட்கள் விடப்படுவார்கள். ஒன்பதாவது நாள் பெண்கள் அவளை முழுக்காட்டிப் பீடத்தின்மீது இருத்தி, மஞ்சள் நீரும் சுண்ணாம்பு நீரும் கலந்த தட்டை அவளுக்கு முன்னால் ஏந்தி அவளின் கால், மடி, தலை மீது அரிசி தூவி உடுக்கப் புதிய ஆடை கொடுப்பார்கள். திருமணத்தின்போது ஐந்து பெண்கள் தாலியைத் தொட்ட பின்பு குருக்கள் பெண்ணின் கழுத்தில் அதனைக் கட்டுவார். பின்னர் மற்றப் பெண்கள் கலியாணத்துக்குத் தெரியப்படுவார்கள். நல்ல சுழிகளிலொன்று பாசிங்கம். இது நெற்றியிற் காணப்படுவது. மிகக் கூடாத சுழிகள் பேய், யானை என்பன. இவை தலையின் பின்புறத்திற் காணப்படுவன. கூடாத சுழியுடைய பெண்கள் கணவனைக்கொன்று விடுவார்கள் என்னும் நம்பிக்கை இவர்களிடையே உண்டு. ஆகவே தீய சுழியுடைய பெண்கள் மனைவியை இழந்த ஆண்களுக்கு மணமுடித்துக் கொடுக்கப்படுவர். மணம் கணவன் வீட்டில் நடைபெறும். பூப்படைந்த பெண்களுக்குப் பூப்புப் கலியாணம் முன்னதாக நடைபெறுகின்றது. பெண்கள் மறு மணம் செய்துகொள்வர். இவர்களுக்கு இன்னொரு விதவை தாலி கட்டு வாள். இறந்து போன தந்தைக்கு மூத்தமகன் கொள்ளிக்குடமுடைப்பான். இறந்தவனின் மனைவி பதினோராவது நாள் கைவளைகளை உடைத்து விடுவாள். வண்ணத்தம்மா, துர்க்கம்மா, முதலிய பெண் தெய்வங்களின் கோயில்களில் பெண் பூசாரிகள் பூசை செய்வர். விழாக் காலங்களில் பூசாரி தெய்வமேறி ஆடி வருங்காரியங் கூறுவான். இவ்வாறு தெய்வ மேறுவது காரணிகம் எனப்படும். வளர்ந்தவர்களின் பிரேதம் எரிக்கப் படும், சிறுவரின் பிரேதம் புதைக்கப்படும். இவர்களுக்கு மரணத் தீட்டு பத்துநாள். மணமாகாத பெண்கள் தனித்தனி விடப்பட்ட குடிசைகளில் படுத்து உறங்குவார்கள். மணமாகாத சிறுவரும் ஆடவரும் தனிக் குடிசை களில் படுத்துறங்குவார்கள். பயிரை மேயவரும் யானைகளின் முகத்துக்கு நேரே இவர்கள் சூளைக்காட்டியும், காட்டுப்பன்றிகளைக் கவணிற் கல்லை வைத்தெறிந்தும் ஓட்டுவார்கள். இவர்களில் தென்குறும்பர் என்னும் ஒரு பிரிவினரும் உண்டு. குறும்பரின் சாதித் தலைவன் முதலி எனப்படுவான். இவர்களிடையே வேட்ட, உறளி என்னும் இரு பிரிவின ரும் உண்டு. நீலகிரிக் குறும்பரில் பல சகோதரர் சேர்ந்து ஒரு பெண்ணை மணப்பர். இறந்தவர்களின் சமாதியில் அவர்கள் நீருள் இருக்கும் கல்லை (தேவ கோட்டக் கல்) எடுத்துக் கொண்டு வந்து நடுவார்கள். இரங்க சாமிக் கோடு, பராலியர் (Baraliar) முதலிய குன்றுகளில் வாழ்வோர் இறந்தவரின் உடலை எரித்து எலும்பின் ஒரு சிறு துண்டையும், சிறு கல்லையும் அவரின் சமாதியில் (சாவுமனை) வைப்பர்; சில பகுதிகளில் இரு பெரிய கற்களை நாட்டி மேலே ஒரு பாவு கல்லை வைப்பர். குன்றுவர்: இவர்கள் பழநி மலையில் வாழும் பயிர்த்தொழில் புரியும் மக்கள். இவர்களின் மொழி தமிழ். இவர்கள் தமது முன்னோர் வேளாளர் எனக் கூறுவர். இவர்கள் தலைவன் மண்ணாடி எனப்படுவன். பெண்கள் வெள்ளை ஆடை உடுப்பார்கள். ஒருவன் மாமியின் மகளை மணக்கலாம். கணவன் இளம் வயதினனாயின் அவள் அச் சாதி ஆடவன் ஒருவனோடு சேர்ந்து வாழ்வாள். அவ்வாறு பிறக்கும் பிள்ளைகள் கணவனின் பிள்ளைகளாகவே கருதப்படும். எட்டு வயதுள்ள ஒருவனுக்கு இரண்டு அல்லது மூன்று பிள்ளைகள் இருக்கக்கூடும். கூடலர்: விசாகப்பட்டினம் கஞ்சம் பகுதிகளில் வாழும் கூடைமுடையும் வகுப்பினர் இப் பெயர் பெறுவர். கூடான்: மலையாளத்திற் காணப்படும் காணியாளரின் அடிமைகள் கூடானெனப்படுவர். இவர்கள் எல்லா உயர்ந்த சாதியினருக் கும் நாற்பத்திரண்டடி தூரத்தில் நிற்றல் வேண்டும். புலையர், நாயாடி, உல்லாடர் முதலியவர்களுக்குப் பக்கத்தில் நின்றால் இவர்களுக்குத் தீட்டுண்டாகும். இவர்களுக்கு அம்பட்டரும், வண்ணாரும் உண்டு. பெண்கள் பூப்பு அடைந்தால் நான்கு அல்லது ஏழு நாட்களுக்குத் தீட்டுக் காப்பார்கள். கூடான் தனது சொந்தச் சாதியில் அல்லது பறையர் வகுப்பில் சம்பந்தம் வைத்துக் கொள்ளலாம். இவர்களுக்கு மருமக்கள் தாயம் உண்டு. இவர்களிடத்தில் சொத்து இருப்பதில்லை. ஒரு ஆடு, ஒரு மாடு அல்லது சில கோழிகளே இவர்களின் சொத்தாகும். கூணா: இவர்கள் வேள்மா வகுப்பினரின் ஒரு பிரிவினர். கூத்தாடி: ஆரியக் கூத்தன், கழைக் கூத்தன் முதலியோர் இப் பெயர் பெறுவர். கூர்மாப்பு: இவர்கள் விசாகப்பட்டினப் பகுதியில் காணப்படும் ஆடல் மகளிராவர். இவர்கள் மணம் முடிப்பதில்லை; வியபிசாரத்தி னால் பொருளீட்டுவர். விருந்துக் காலங்களில் ஆடல் புரிவர். இவர்கள் விசாகப்பட்டினத்திலுள்ள சிறீ கூர்மம் என்னும் கோயிலில் தேவடி யாட்களாக இருந்தவர்களாவர். கைக்கோளர்: தென்னாட்டில் நெசவுத் தொழில் புரியும் பெரும் பிரிவினர் இப் பெயர் பெறுவர். மதுரை நாயக்க அரசர் கைக்கோளர் வேலையில் திருப்தியுறாது வடநாட்டினின்னும் பட்டுநூற்காரரை அழைத்தார்கள் என்று சொல்லப்படுகிறது. இன்று தமிழ் நெசவாளரை விடப் பட்டுநூற்காரரின் எண்ணிக்கை அதிகமாகும். கைக்கோளர் செங்குந்தர் எனவும் படுவர். பறையரும் இவர்களும் தம்மை வீரபாகுவின் வழித்தோன்றல்கள் எனக் கூறுவர். இவர்களுள் சோழியர், இரட்டு சிறுதாலி, பெருந்தாலி, சீர்பாதம், சேவுக விருத்தி என்னும் பிரிவுகளுண்டு. சிறுந்தாலி பெருந்தாலி என்பன சிறிய தாலியையும் பெரிய தாலியையும் அணிவது காரணமாகத் தோன்றிய பெயர்கள். கைக்கோளரிற் பெரும் பாலினர் சைவர். இவர் இலிங்கங் கட்டுவர். சிறு தொகையினர் வைணவ மதத்தினர். இவர்களின் தலைமைக்காரன் பெரியதனக்காரன் அல்லது பட்டக்காரன் எனப்படுவான். பெரிய தனக்காரன் மகா நாட்டான் எனவும் படுவன். இவர்களுள் நட்டுக்கட்டாத நாயன்மார் என்னும் பண்டாரங்களுண்டு. இவர்கள் நாடுகளிற் சென்று தமது குலத்தவர்களுக் கிடையில் தோன்றும் பிணக்குகளைத் தீர்த்து வைப்பர். கைக்கோளருள் பொன்னம்பலத்தார் என்னும் பண்டாரங்களுமுண்டு. ஒட்டக்கூத்தப் புலவர் கைக்கோள வகுப்பைச் சேர்ந்தவராவர். காஞ்சீபுரத்திற் சபை கூடும்போது கைக்கோளத் தலைவன் தலையணையிற் சாய்ந்து கொண்டிருப்பான். ஆகவே அவன் திண்டுக்காரன் எனப்படுவான். கைக்கோளக் குடும்பமொவ்வொன்றிலும் ஆலய சேவைக்குப் பெண்கள் நேர்ந்து விடப்படவேண்டும். கைக்கோளர் தாம் தேவதாசிகளோடு தொடர்பற்றவர் எனக் கூறுகின்றனர். தாசிகளுக்குக் கோயில் விக்கிரகத் துக்கு முன்னிலையில் பிராமணன் தாலி கட்டுகின்றான். தாலி என்பது கறுப்பு மணிகள் கோத்தமாலை (கறுப்புப்பாசி). கைக்கோளருக்கு முதலி, நாயன்மா ரென்ற பட்டப்பெயர்களுண்டு. கொங்கணி: கொங்கணரின் ஆதி இருப்பிடம் சரசுவதி ஆற்றை அடுத்த இடங்கள். அங்கிருந்தும் வந்து தெற்கே குடியேறினோர் கொங்கணிகள் எனப்படுவர். கொங்க வேளாளர்: இரெட்டிமார் இவர்களுடனிருந்து உண்ண மாட்டார்கள். காதில் தொங்கும் வளையங்களையும் மேற்காதில் தொங்கும் முருகுகளையும் கொண்டு இவர்கள் மதிக்கப்படுவார்கள். முறுக்கித் திரிக்கப்படாத நூலில் பெண்கள் தாலி அணிவார்கள். தாயத்து என்னும் அணியை இடதுகையில் அணிவார்கள். ஆண்கள் தாய்மாமன் மகளை மணப்பர். சிறு பையன் வளர்ந்த பெண்ணுக்குக் கலியாணம் முடிக்கப்படு வான். மகன் வளரும் வரையும் அவன் தந்தை அவளுக்குக் கணவனின் கடமைகளைச் செய்து வருவான். திருமணக் காலத்தில் அவர்கள் குரு அருமைக்காரன் என அழைக்கப்படுவான். குருவின் மனைவி அருமைக் காரி எனப்படுவள். அருமைக்காரன் பெண்ணின் கழுத்தில் தாலிகட்டு வான். அப்பொழுது அம்பட்டன் “சந்திரசூரியர் உள்ளளவும் உங்கள் கிளைகள் ஆல்போல் தழைத்துச் சுற்றம் மூங்கில் போல் பெருக” என்று வாழ்த்துவான். இவர்களுட் பிச்சைக்காரர் முடவாண்டிகள் எனப்படுவர். கொடிக்கால்: கொடிக்கால் - வெற்றிலை. வெற்றிலை பயிரிடு வோர்க்கு இப் பெயர் வழங்கும். சாணாரில் ஒரு பிரிவினருக்கும் கொடிக் கால் என்னும் பெயருண்டு. கொடிப்பட்டன்: இவர்கள் மலையாளத்தில் வாழும் தமிழ்ப் பிராமணருள் ஒரு பகுதியினர். இவர்கள் வெற்றிலைக் கொடிகளைப் பயிரிட்டமையால் பிராமணத் தன்மையை இழந்தார்கள். இவர்களின் முக்கிய இருப்பிடம் வாமனபுரி. கொண்டதோரர்: விசாகப்பட்டினத்திற் பயிரிடும் மலைவாசிகள் இப் பெயர் பெறுவர். இவர்கள் பாண்டவரையும், தலுபுல் அம்மாவை யும் வழிபடுவர். இவர்கள் தம்மைப் பாண்டவர் குலத்தினரெனக்கூறிக் கொள்வர். கொண்டர்: இவர்கள் கஞ்சம், விசாகப்பட்டினம், வங்காளம், மத்திய மாகாணங்களில் வாழ்கின்றனர். இவர்கள் தம்மை கூய் என்னும் பெயர் கொடுத்தும் வழங்குவர். இது கோய அல்லது கோயாவுக்குச் சமம். இவர்களில் 58 பிரிவுகளுண்டு. போர் செய்யும்போது இவர்கள் எருமைக் கொம்பும் மயிலிறகு மணிவர். பெண்கள் முகத்தில் பச்சை குத்திக்கொள் வர். முற்காலத்தில் கொண்டர் பூமிக் கடவுளுக்கு நரபலி இட்டனர். நரபலியிடுதற்குப் பயன்படுத் தப்பட்ட மரப் பலிபீடமொன்று சென்னை நூதன பொருட்காட்சிச் சாலையிற் காணப்படுகின்றது. நரபலி ஆங்கில ரால் நிறுத்தப்பட்டது. திருமணக் காலத்தில் மணமகன் மணமகளைத் திருடிக் கொண்டு போவதாகவும் பெண்வீட்டார் பெண்ணை மீட்டுக் கொண்டு போவதாகவும் இரு பகுதியாருக் கிடையிலும் போலிப் போர் நடத்தப்படுவதுண்டு. கொண்டாலிகர்: மராட்டி உற்பத்தியைச் சேர்ந்த பிச்சை எடுக்கும் பண்டாரங்கள் இப் பெயர் பெறுவர். கொல்லர்: இவர்கள் மலையாளக் கம்மாள வகுப்பினர், இவர்களுள் தீக்கொல்லன், பெருங்கொல்லன், கனசிற்கொல்லன், தோற்கொல்லன் எனப் பல பிரிவுகளுண்டு. கோசாக்கள்: இவர்கள் அண்ணகர் (விதையடிக்கப்பட்டவர்). தென்னிந்தியாவில் இவர்களிற் பலர் காணப்படவில்லை. சில சமயங் களில் இந்துக்கள் சிலரும் பிராமணர் சிலரும் அவர்களின் சம்மதத்தின் பேரில் அண்ணகராக்கப்படுகிறார்கள். விரையை எடுத்துவிடும் வேலை அம்பட்ட வகுப்பினராலும் அண்ணகராலும் செய்யப்படுகிறது. இவர்கள் முசல்மான்களின் அந்தப்புரங்களில் வேலை செய்வார்கள். கோஷ்டி அல்லது கோஷ்டா: சூடியநாகபுரியில் நெசவு, பயிர்த் தொழில்கள் புரியும் தெலுங்கு வகுப்பினர் இப்பெயர் பெறுவர். கோடர்: இவர்கள் முன்பு மைசூரிலுள்ள கொல்லி மலையில் வாழ்ந்தார்கள். இப்பொழுது நீலகிரிப் பீடபூமியிலுள்ள ஏழு கிராமங் களில் வாழ்கின்றனர். கன்னடமும் தெலுங்கும் கலந்த மொழி பேசுகின்ற னர். எல்லா வகை இறைச்சிகளையும் உண்பர். கோடருள் கொல்லர், தச்சர், தட்டார்,தோல் மெருகிடுவோர், குயவர், வண்ணார், பயிரிடுவோர் முதலிய பல பிரிவினருளர். இவர்கள் எருமைத் தோலினாற் பின்னிய நீண்ட கயிறுகளால் ஆடு மாடுகளைக் கட்டுவர்; ஆவரசம்பட்டை சுண்ணாம்பு முதலியவைகளைக் கொண்டு தோலைப் பதனிடுவர். இவர்களின் குருமார் பூசாரி, தேவாதி என இருபிரிவினராவர். இவர்கள் மணம் செய்து கொண்டவர்களாயிருத்தல் வேண்டும். மனைவி இறந்தால் இவர்கள் குருமாராக இருக்க முடியாது. காமாடராயன், மங்காளி, வேட்டைக்காரச் சுவாமி, அதிரல், உதிரல் முதலிய தெய்வங்களை இவர்கள் வழிபடுவர்; ஓண நாளைப் பெருநாளாகக் கொண்டாடுவர். வைசூரி நோய் மாரியம்மாவால் உண்டாகின்றதென்று நம்புவர்; மாகாளி யைக் கற்றூண் வடிவில் வழிபடுவர். மனைவி கருப்பமாயிருந்தால் கோடன் தனது தலைமயிரையும் முகமயிரையும் வளரவிடுவான். பெண்கள் பிள்ளையீன்றதனாலுண்டான தீட்டு அடுத்த பிறை காணும் வரையும் உண்டு. பூப்புக் காலத்தில் பெண்களுக்கு மூன்று நாட்கள் தீட்டு உண்டு. கணவனை இழந்த பெண்கள் அணிகலன்களைக் களைந்துவிடு வார்கள். கோட்டைப்பத்து: இவர்கள் அகம்படியாருள் ஒரு பிரிவினர். கோட்டை வேளாளர்: திருநெல்வேலியிலுள்ள சிறீவைகுந்தத் தில் பல கோட்டை வேளாள குடும்பங்கள் வாழ்கின்றன. அவர்கள் இருக்கும் கோட்டைக்குள் பிற ஆடவர் செல்லுதல் கூடாது; பெண்கள் செல்லலாம். மணமான பெண்கள் கணவன், தந்தை, தாய்மாமன், சகோதரன் அல்லாத பிறரின் முகத்தைப் பார்த்தல் கூடாது. இவர்களின் தலைவன் கோட்டைப் பிள்ளை எனப்படுவான். பெண்கள் ஐந்து தலைநாகத்தின் படம் போன்ற ஒரு வகை அணியை அணிவர். கோமட்டி: இவர்கள் சென்னை மாகாணத்தில் வாணிகம் செய்யும் சாதியினர். இவர்கள் மைசூர், பம்பாய், பீரார்(Berar), மத்திய மாகாணம், வட மேற்குப் பரோடா முதலிய இடங்களிற் காணப்படுவர். கோமட்டிச் செட்டிகள் தாய் மாமன் மகளை மணப்பர். 18ஆம் நூற்றாண் டில் கோமட்டிகளின் திருமணத்தில் வயது முதிர்ந்த மாதங்கன் தாலியை ஆசீர்வதிப்பது வழக்கமாக விருந்தது. இதனால் மாதங்கருக்கும் கோமட்டிகளுக்கும் யாதோ தொடர்பு இருக்கிறதெனக் தெரிகிறது. மாதங்கன் கலியாணத்தை விரும்பாவிடில் அவன் கலியாணப் பந்தலிற் கட்டியிருக்கும் வாழை மரங்களை வெட்டி கலியாணத்தை நிறுத்தலாம். இவ்வாறே கம்மாளர் கலியாணங்களை நிறுத்த வெட்டியானுக்கு உரிமையுண்டு. இவ் வழக்கங்களால் கோமட்டிகள், கம்மாளர்களுடைய நிலங்களுக்கு மாதங்கர் வெட்டியான் முதலியோர் அதிபதிகளாயிருந் தார்களெனத் தெரிகிறது. கோமட்டிகள் வெற்றிலையும் பாக்கும் வைத்து மாதங்கரைத் கலியாணத்துக்கு அழைப்பார்கள். கோமட்டிகளின் குலதெய்வம் கன்னிகை அம்மா. இத் தெய்வத்தைக் குறிக்கக் கரகத்தில் தண்ணீர் நிரப்பி வைக்கப்படுகின்றது. மாதங்கர் தமது தெய்வம் கன்னி எனக் கூறி அதனை மாதங்கி என்னும் பெயர் கொடுத்து வழிபடுவர். திருமணத்தில் தாலி குருக்கள் அல்லது மணமகனால் கட்டப்படுகிறது. கோமணாண்டி: ஆண்டிகளுள் ஒரு பிரிவினர். கோமாளி: ஒட்டியருள் ஒரு வகுப்பினர் கோயா: இலாக்கா தீவிலுள்ள தோணிச் சொந்தக்காரராகிய சோனக மாப்பிள்ளைமார், தங்கள் பெயரோடு கோயா என்னும் பெயரைச் சேர்த்துக் கொள்கின்றனர். கோயி: கோயி அல்லது கோயா என்போர் கோதாவரிக்கு வடக்கே யுள்ள மலைகளில் வாழ்வோராவர். இவர்கள் கொண்டர் வகுப்பைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுவர். இவர்கள் நாலு ஆண்டுகள் வரையில் ஓர் இடத்தில் தங்கியிருந்து பயிரிடுவார்கள்; பின் பிறிதொரு இடத்துக்குச் சென்று விடுவர். கோயிச் சாதியினரின் கலியாண வழக்கம் மிக வியப்புடையது. ஒருவனுக்குப் பெண் வேண்டியிருந்தால் அவன் தன் பெற்றோரையும் நண்பரையும் பெண் வீட்டுக்கு அனுப்பி முடிவு செய்கிறான். பெண் விறகு பொறுக்கவோ தண்ணீர் எடுக்கவோ வரும் சமயம் பார்த்துக் கணவன் பகுதியார் பெண்ணைத் தூக்கி மணமகன் வீட்டுக்குக் கொண்டு செல்வார்கள். பெண் வீட்டாருக்கு இச் செய்தியை அறிவித்தபின் மணக்கிரியை நடைபெறுகிறது. கோயர் பெரும்பாலும் பல பெண்களை மணப்பர். தாழ்ந்த வகுப்பானுடன் சேர்க்கை வைத்திருக் கும் பெண்ணின் நாக்கில் பொன் கம்பி காய்ச்சிச் சுடப்படும். பனை ஓலையினால் வில் வடிவாகச் செய்யப்பட்ட ஏழு வில்களுக்கூடாக அவளை நுழையச் செய்த பின் ஓலையைச் சுட்டு அவள் சுத்தஞ் செய்யப்படுவாள். குழந்தை பிறந்து ஏழாவது நாள் அதற்குப் பெயரிடப்படும். பிணங்கள் சுடப்படும். இறந்தவரைச் சுட்ட சாம்பலைப் புதைத்து அவ் விடத்தில் நேரான கல்லை நட்டு அதன் மீது தட்டைக் கல் வைக்கப்படும். அவ் வழியாற் செல்வோர் அதன்மீது சிறிது புகையிலையை வைப்பர். இவர்கள் தாம் வீமசேனனுக்கும் காட்டுச் சாதிப் பெண்ணுக்கும் தோன்றிய சந்ததியினர் எனக் கூறிக் கொள்கின்றனர். இவர்கள் நரபலி யிடுவர். நரபலி இப்பொழுது தடைசெய்யப்பட்டுள்ளது. மனித பலிக்குப் பதில் குரங்கு பலியிடப்படுகிறது. வைசூரி நோயை உண்டாக்கும் தேவதை முடியாள் அம்மா எனப்படும். சாளம்மா, கொம்மாளம்மா முதலிய தெய்வங்களையும் அவர்கள் வணங்குவர். இறந்தவர்களின் ஆவிகளும் வணங்கப்படும். நோய்களைப் பேய்கள் உண்டாக்குகின்றன என்னும் நம்பிக்கை இவர்களிடமுண்டு. கோயிலார்பிள்ளை: இவர்கள் வன்னியரில் ஒரு பிரிவினர்; நூலணிவர். கோயிற்றம்பிரான்: இவர்கள் வட திருவிதாங்கூரிலும் கொச்சியி லும் காணப்படும் சத்திரிய வகுப்பினர். பழைய சாசனங்கள் இவர்களைக் கோயிலதிகாரிகளெனக் குறிப்பிடுகின்றன. இவர்கள் கொல்லமாண்டு 300இல் சேரமான் பெருமாளால் பெபூரி(Beypore)லிருந்து கொண்டு வரப்பட்டார்கள். ஆண்கள் வேணாட்டுச் சிவரூபம் என்று அழைக்கப் படுவர். இவர்கள் அரச குடும்பப் பெண்களை மணந்தார்கள் என்னும் பழங்கதை உள்ளது. இவர்களுக்கு உரிமை பெண் வழி. நம்பூதிரிப் பிராமணர், இவர் பெண்களை மணப்பர். கோலா: தெலுங்கு உழவர் கோலா எனப்படுவர். இவர்கள் எத்தனை மனைவியரை வேண்டுமாயினும் மணக்கலாம். பெண்கள் இறவுக்கை அணிவதில்லை. கணவனை இழந்த பெண்கள் கைவளை களை உடைப்பதில்லை. பிள்ளையைப் பெற்ற கோலாப் பெண் 90 நாள் தீட்டுக் காப்பாள். கோலாயன்: இவர்கள் தென் கன்னடத்திற் காணப்படுவர். வட மலையாளத்தில் இவர்கள் ஊராளி எனப்படுவர். ஆயன், கோல் ஆயன், மாரியன் அல்லது எருமான் (எருமா - எருமை) என இவர்களுட் பல பிரிவுகளுண்டு. கோலாயரின் குரு மூத்தவன் அல்லது பொதுவன் எனப் படுவன். அவன் பெரும்பாலும் அரசரால் தெரியப்படுவன். கோலாயர் பெண்கள் பருவமடைய முன் தாலிகட்டுக் கலியாணம் நடத்துவர். தந்தை தாலிகட்டுவான். பூப்படைந்த பெண் மூன்று நாள் தீட்டுக் காப்பாள். கோலியன்: நெசவு செய்யும் பறைய வகுப்பினர் இப் பெயர் பெறுவர். இவ் வகுப்பினர் பெரும்பாலும் தஞ்சாவூர் மதுரைப் பகுதி களிற் காணப்படுவர். சில பறையருக்குச் சாம்பான் என்னும் பட்டப் பெயருண்டு. ஈசன் என்பதும் அவர்களின் பட்டப்பெயர். திருமணக் காலங்களில் இவர்களின் பட்டப் பெயர் சொல்லப்படுதல் வேண்டும். கணவனின் சகோதரி பெண்ணுக்குத் தாலி கட்டுவாள். கௌடோ: கஞ்சத்தில் காணப்படும் ஒரிய உழவர் இப் பெயர் பெறுவர். இவர்களில் ஆண்கள் தாய்மாமன் மகளைக் கலியாணஞ் செய்து கொள்வர்; சகோதரியின் மகளைக் கலியாணஞ் செய்வதுமுண்டு. ஏழு கணவரை மணந்தவள் பெத்தம்மா என மரியாதை செய்யப்படுவள். சக்கிலியன்: சக்கிலியர் தெலுங்கு கன்னட நாடுகளிலிருந்து வந்தோர்களாவர். இவர்கள் எல்லாச் சாதியினரிலும் பார்க்கத் தாழ்ந்தோ ராவர். ஆவரசஞ் செடியை இவர்கள் பரிசுத்தமுடையதாகக் கொள்வர். திருமணத்தின் முன் தாலியை அச் செடியின் கிளைகள் ஒன்றில் கட்டுவர். இவர்கள் செருப்புத் தைப்பர். பறையர் தாம் சக்கிலியரிலும் உயர்ந்தவ ராகக் கொள்வர். மதுரை வீரன், மாரியம்மன், திரௌபதி, கங்கம்மா முதலிய தெய்வங்களை இவர்கள் வழிபடுவர். இவர்களின் திருமணங் களை வள்ளுவக் குருக்கள் நடத்தி வைப்பர். சத்திரியன் : சத்திரியர் என்னும் பிரிவு திராடவிடருக்குரியதன்று. ஆனால் சத்திரியர் என்னும் தலைப்பின்கீழ் குறிக்கப்பட்டுள்ளோர் திராவிடர்களாவர். வன்னியர், சாணார், பயிர்த் தொழிலாளரி லொரு பிரிவினர், கள்ளிறக்குவோர் முதலினோரும் தம்மைச் சத்திரியர் எனக் கூறுகின்றனர். தென்கன்னடத்தி லுள்ள மராட்டியர் சிலரும் திருநெல் வேலிச் சாணாரும் தம்மை அக்கினி குலச் சத்திரியர் எனக் கூறிக்கொள் வர். மைசூர் ஆட்கணக்கு அறிக்கையில் அரசுக்கள், இராசபுத்திரர், கூர்க்கர், சீக்கியர், ஆகியோர் சத்திரியர் எனக் கொள்ளப்பட்டுள்ளார்கள். அரசுக்கள் என்போர் மைசூரிலுள்ள அரச குடும்பத்தினர். மலையாளத்தி லுள்ள சத்திரியர் நான்கு பிரிவுகளாக்கப்பட்டுள்ளனர். கோயில் பண்டாலா (பண்டாலா- பண்டசாலை) இராசா, தம்பான், திருமுப்பாத் என்பன அப் பிரிவுகளாகும். தம்பானின் பெண்கள் தம்புராட்டிகள் எனப்படுவர். கன்னட பரப்பரைக் கதையின்படி கோயிற்றம் பிரான்மார் சேரமான் பெருமானின் மருமக்களாவர். இவர்களில் இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் பிரிட்டிஷ் மலையாளத்திலுள்ள பேச்பூரில் (Bejpore) வாழ்ந்தார்கள். மலையாளம் ஆண்டு 300 வரையில் இக் குடும்பம் ஒன்றி லிருந்த ஆண்கள் வேணாட் சுபரூபத்தி (திருவனந்தபுர அரச குடும்பம்) னிடையே மணஞ் செய்வதற்கு அழைக்கப்பட்டார்கள். கொல்லமாண்டு 963இல் திப்புச் சுல்தான் மலையாளத்தின் மீது படை யெடுத்தபோது ஆலியம்கோடு கோவிலகத்தைச் சேர்ந்த ஐந்து பெண் களும் மூன்று ஆண்களும் திருவிதாங் கூருக்கு ஓடிச்சென்று தங்கினர். தம்புரான்கள், அரசர்கள் வீடுகள் கொட்டாரம் அல்லது கோவிலகம் எனப்படும். தம்பான் அல்லது திருமால் பாடிகளின் வீடுகள் கோவிலகம், மடம் எனப் படும். சத்திரியப் பெண்களின் செருத்தாலி, எந்திரம், குழல் என்னும் அணி களை பெண்கள் சிறப்பாக அணிவார்கள். தம்பான். திருமால்பாடிகள் அரச குடும்பங்களில் வேலைக்காரராவர். மலையாள சத்திரியரின் வீடுகள் தேவாரபுரம் எனப்படும். கோயில் தம்புரான்மார் விசுவாமித்திர கோத்திரத்தவர். அரசர் பார்க்கவ கோத்திரத்தினர். இவர்கள் தமது கூட்டத்துள் மணம் முடிப்பதில்லை. கோயில் தம்புராட் டிகள், நம்பூதிரி ஆடவர்களை மணஞ் செய்வர். கோயில் தம்புரான்கள் அரசரிடம் பெண் கொள்வர். அரசர் நாயர்ப் பெண்களை மனைவியராக வைத்திருக்கலாம். தம்பான். திருமால் பாடிகளும் இவ்வாறே செய்வர். இராணிகளும் பண் டாலங்களும் நம்பூதிரி ஆண்களை மணப்பர். தம்பான், திருமால்பாடி பெண்கள் எந்தப் பிராமணனுடனும் வாழ்வர். தம்பான், திருமால்பாடி, பண்டாலம் பெண்களுக்கு ஆரியப்பட்டர் தாலி கட்டுவர். விதவைகள் மறுமணம் புரிவர். தம்புராட்டியின் திருமணத்தில் பெண்கள் சேர்ந்து பிராமணியப் பாட்டுப் பாடுவார்கள். கொள்கையள வில் பெண்களே சொத்துக்குரியவராவர். மூத்த சகோதரனே சொத்தை மேற்பார்ப்பன். சொத்துப் பிரிவினை செய்யப்படுதல் கிடையாது. சொத்து இவர்கள் எல்லோரின் வாழ்க்கைக்காக விடப்படும். சமகாரர்: தென்கன்னடத்தில் வாழும் தோலில் வேலை செய் வோர் இவர்களாவர். தோல் பதனிடும் வேலை பெரும்பாலும் இவர் களாற் செய்யப்படுகின்றது. சமய: இவர்கள் வைணவ ஆச்சாரியர்களாவர். திருமணக் கிரியை களையோ சமயக் கிரியைகளையோ இவர்களுக்குத் தக்கணை கொடாது புரிதல் கூடாது. முற்கால அரசர் ஒவ்வொரு பட்டினங்களிலும் சமயாச் சாரியா என்னும் நிலையம் நிறுவியிருந்தார்கள். அவர்களின் வருவாய் பெரும்பாலும் கற்பில் தவறிய பெண்களை விற்பதால் கிடைத்தது. அப் பெண்கள் சக்கார்ப் பெண்கள் என அறியப்பட்டார்கள். பிராமணப் பெண்களும் கோமட்டிப் பெண்களும் விற்கப்பட்டிலர். சாதியிலிருந்து விலக்கப்பட்டார்கள். அவர்களின் கையில் வியபிசாரிகள் என்று சூட்டுக்கோலினால் எழுதப்பட்டது. மற்றச் சாதிப் பெண்கள் விற்கப்பட் டார்கள். பங்களூரில் ஐரோப்பியர் காலம் வரையில் இவ் வகைப் பெண்கள் வாழும் பெரிய கட்டடம் பட்டினத்திலே இருந்தது. 1833இல் இவ் வழக்கம் அரசினரால் ஒழிக்கப்பட்டது. சலங்குக்காரன்: இது மீன்பிடிகாரருக்கும் முத்துக்குளிகாரருக் கும் வழங்கும் பெயர். சவரர்: கஞ்சம் பகுதிகளில் வாழும் மலைச்சாதியினர் இப் பெயர் பெறுவர். இவர்களின் மொழி முண்டா இனத்தைச் சேர்ந்தது எனக் கிரீர்சன் கூறியுள்ளார். ஆண்கள் இரண்டு அல்லது மூன்று மனைவியரை மணப்பர். பெண்தான் விரும்பினால் கணவனை விட்டுப் பிரிந்து விடலாம். அதனைத் தடுக்க முடியாது. சவரரின் விருந்துகளில் ஆண் களும் பெண்களும் சேர்க்கை வைத்துக் கொள்கின்றனர். விதவைகள் கணவனின் சகோதரனை மணப்பர். சவர இளைஞன் ஒருவன் மணஞ் செய்துகொள்ள விரும்பினால் அவன் ஒரு குடத்தில் கள்ளை எடுத்துக் கொண்டு தனது சுற்றத்துடன் பெண்ணின் தந்தை வீட்டுக்குச் செல்வான். பெண்ணின் தந்தை கள்ளை ஏற்றுக் கொண்டால் அது பெண்ணைக் கொடுப்பதற்கு அடையாளமாகும். இவர்கள் பிராமணப் புரோகிதரைக் கொண்டு எதுவும் செய்விப்பதில்லை. இறந்தவரின் உடல் சுடப்படும்; அடுத்தநாள் தண்ணீர் தெளித்து நெருப்பை அணைத்துக் கருகிய எலும்புகளை எடுத்து இரண்டடி ஆழத்திற் புதைத்து அவ் விடத்தில் சிறு குடிசையிடுவர். இறந்தவரைக் குறித்து மரங்களின் கீழ் நேரிய கற்களை நாட்டுவர். கற்கள் பெரும்பாலும் ஒன்றறை அடி முதல் நாலு அடிவரை உயர்ந்திருக்கும். வியபிசாரம் செய்பவர்களுள் பெண்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள்; ஆண்கள் தண்டிக்கப்படுவர். இவர்களுள் சாதித் தலைவன் உண்டு. அவனே வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பளிப்பான். மகுவா (Mahua)என்னும் ஒரு வகைப் பூவிலிருந்து இலுப்பைப் (பூ?) கள்ளுச் செய்வர். சவலைக்காரன்: இது மீன்பிடிகாரருக்கு வழங்கும் பெயர். சவலை என்பது சவள்; ஓடக்கோலை உணர்த்தும் இவர்கள் வன்னியர் , செம்படவர்களை ஒத்தவர். சிலர் பயிர்த் தொழில் செய்வோராகவும் சிலர் நாகசுரம் வாசிப்போராகவும் இருக்கின்றனர். திருநெல்வேலிப் பகுதியில் வாத்தியக்காரர் சவலைக்காரரும் பணிக்கர்களுமாவர். சாக்சியர்: இவர்கள் அம்பலவாசிகளுள் ஒரு பிரிவினர். இவர் களிற் பெண்கள் தமது சாதிக்குள் மணமுடித்துக்கொள்வர் அல்லது நம்பூதிரிகளோடு சம்பந்தம் வைத்துக்கொள்வர். சாக்கியர் நம்பியார் சாதியாருள் சம்பந்தம் வைத்துக்கொள்ளலாம். இவர்களுக்குக் குருமா ருண்டு. இவர்கள் வீடுகளில் பிறப்பு இறப்புத் தீட்டுகளைப் பிராமணக் குருமார் நீக்குவர். வட திருவிதாங்கூரில் விழாக் காலங்களில் சாக்கியர் கூத்து முதன்மையுடையது. இவர்கள் கூத்தாடுவதற்கென அமைக்கப் பட்ட கட்டடம் கூத்தம்பலம் எனப்படும். சாக்கியன் பழங்கால முறையில் உடுத்துக்கொண்டு முக்காலி மீதிருந்து பாடுவான். அவனுக்குப் பின்னால் நம்பியார் முழவுடன் நிற்பார். நங்கையார் என்னும் நம்பியார்ப் பெண் முன்னால் இருந்து சல்லரியால் தாளம் போடுவாள். சாணான்: இவர் தமிழ்நாட்டுக் கள் விற்கும் சாதியினர். கோயில் களுள் இவர்கள் நுழைதல் கூடாது. சாணார் கோயில்களுள் நுழைய வேண்டுமென வாதாடியதால் உள்நாட்டுக் கலகங்கள் பல உண்டாயின. இவர்களை எதிர்த்தோர் மறச்சாதியின ராவர். திருவிதாங்கூரில் கிறித்துவ மதத்தைத் தழுவிய சாணாரப் பெண்கள் மார்பில் துணியணியாமல் இருக்கும் வழக்கை மீறியதால் கலகங்கள் உண்டாயின. சென்னைத் தேசாதிபதி பெண்கள் இறவுக்கை அணியவும் மாறாடி இட்டு மார்பை மறைத்துக்கொள்ளவும் உரிமை வழங்கினார். நாடான், கிராமணி என்பன இவர்களின் பட்டப்பெயர். சாணார் என்னும் பெயர் சாறு என்னும் அடியாகப் பிறந்தது. சாணார் என்பது அவர்கள் மரம் ஏறப் பயன்படுத்தும் சாண் நார் காரணமாக வந்த பெயர் என்பாரு முளர். சாணி அல்லது சாணி வாள்ளு: இவர்கள் தெலுங்குச் சாதிக் குலத்தினர். இவர்கள் கோயிற் பணிவிடை செய்வார்கள். இவர்கள் தெற்கேயுள்ள தாசிகளைப் போலக் கோயிலுக்கு நேர்ந்து விடப்பட்ட வர்களாவர். அகம்படியாரி லொரு பிரிவினரும் சாணி எனப்படுவர். சாதானி: பிச்சைக்காரப் பண்டாரங்களும் மற்றச் சாதிகளி லிருந்து சாதியால் விலக்கப்பட்டோரும் இப் பிரிவில் சேர்வர். வியபிசாரிப் பெண்களும் இவ் வகுப்பில் சேர்வர். பெண்கள் வைணவப் பெண்களைப் போல உடுத்துக்கொள்வர். சாதானியர் இறவுக்கை உற்சவம் என ஒரு விழா நடத்துவர். இப்பொழுது அது கந்தப்பொடி உற்சவம் எனப்படு கிறது. இவ் வுற்சவத்தில் முற்காலத்தில் இடக்கரான கிரியைகள் நடத்தப் பட்டன. இப்பொழுது கடவுள் வணக்கத்துக்குப் பின் சந்தனப் பொடியை ஒருவர் மற்றவர் மீது எறிவர். விழாவுக்குப் பின் அவர்கள் வீட்டுக்குத் திரும்பி வந்து மது வருந்துவார்கள். பெண்கள் தமது இறவுக்கைகளைக் கழற்றி ஒரு ஏனத்துள் இடுவார்கள். அவைகளை ஆண்கள் ஆளுக்கு ஒன்றாக எடுப்பார்கள். எந்த இறவுக்கை எவனுடைய கையிற் கிடைக் கிறதோஅப் பெண் அன்று அவனுடைய மனைவியாவள். சாத்திரி: இது ஸ்மார்த்த பிராமணரின் பட்டப்பெயர். தேவாங்கு வகுப்பினருக்கும் இப் பட்டப்பெயர் வழங்கும். சாமந்தன்: மலையாள அரசரும் பெருமக்களும் இச் சாதியின ராவர். சாமந்தன் என்பதற்கு ஒரு பகுதிக்கு அதிகாரி என்பது பொருள். இவர்கள் பூணூலணிவதில்லை. இவர்களுக்கு மக்கள் தாயமுண்டு. பெண்கள் பிராமணரையும் சத்திரியரையும் சம்பந்தம் கொள்வர். பெண்கள் கோயில் அம்மாமார் எனப்படுவர். அவர்கள் செருத்தாலி, எந்திரம் குழல் என்பவைகளைத் திருமணக் காலத்தில் அணிவர். சாமந்தனின் வீடு கொட்டாரம் (அரண்மனை) எனப்படும். பிராமணரின் வீடு மடம் எனப்படும். சாலியர்: மலையாள நெசவுத் தொழிலாளர் சாலியர் எனப்படு வர். இவர்களுக்குப் பொதுவான் என்னும் அம்பட்டன் உண்டு. பொது வானே சாலியரின் புரோகிதனாவன். இவர்களில் சிலருக்கு மருமக்கள் தாயமும், சிலருக்கு மக்கள் தாயமும் உண்டு. இவர்கள் வீதிகளிலே வாழ் கின்றமையின் தெருவர் எனவும் அறியப்படுவர். இவர்களுக்கு இறப்புப் பிறப்புத் தீட்டு பத்து நாட்களுக்கு உண்டு. பெண் தலைப்பூப்பு அடைந் தால் பெண்கள் அவளைக் குளத்துக்கு அழைத்துச் சென்று இலைகளாற் செய்த ஏனங்களால் நீரை அள்ளி அவளை முழுக்காட்டுவர். பின்பு அவளைத் தென்னங்குருத்தால் செய்த அறையில் இருத்துவர். அவளிருக் கும் பாயைச் சுற்றி அரிசியும் நெல்லும், தென்னம்பூவும் தேங்காய்களும் வைக்கப்படும். மூன்றாம் நாள் மாலை நேரத்தில் பெருவண்ணான் வெளுத்த மாற்றுத் துணி கொண்டுவருவான். அவனுக்குச் சிறிது நெல்லும் அரிசியும் கொடுப்பார்கள். அவன் அவற்றை ஓர் இலையில் வைத்துப் பூசை செய்வான். பின்பு அவன் துணிகளை மரத் தட்டில் வைத்துத் தட்டைத் தனது தலைமீது ஏந்துவான். அவன் சில வாழ்த்துப் பாடல்கள் பாடிய பின் அத் தட்டை நிலத்தில் வைப்பான். பெண்ணின் உறவினராகிய சில பெண்கள் எரியும் விளக்கு, நிறைகுடம், ஒரு படி அரிசி முதலியவை களைக் கொண்டு பலகையை மூன்று முறை சுற்றி வருவார்கள். அடுத்த நாள் பெண்ணை முழுக்காட்டுவார்கள். பாயில் வைக்கப்பட்ட எல்லாப் பொருள்களும் ஆற்றில் வீசப்படும். சாலியருக்குத் தாலிகட்டுச் சடங்கு உண்டு. பந்தல் இடப்படு கின்றது. ஒரு பலாப் பலகையின் மீது கொளுத்திய விளக்கு, வெற்றிலை, பாக்கு, ஒரு படி பச்சையரிசி முதலியன வைக்கப்படும். பெண் தனது வலது கையில் ஒரு போலி அம்மன் பாவையை வைத்துக் கொண்டு ஒரு பலகை மீது இருப்பாள். பொதுவனுக்கு ஒரு பிடி வெற்றிலையும் ஒரு பணமும் கொடுப்பார்கள். அவன் மணவாளனிடம் தாலியை எடுத்துக் கொடுப்பான். அவன் அதைப் பெண்ணின் கழுத்தில் கட்டுவான். கலியாணத்துக்கு முதல்நாள் மணவாளன் தனது ஆண் சுற்றத்தாரோடு மணமகள் வீட்டுக்குச் செல்வான். அங்கு விருந்துக் கொண்டாட்டம் நடைபெறும். பெண் கருப்பமடைந்து ஏழாவது மாதம் புளிக்குடி என்னும் சடங்கு நடத்தப்படுகிறது. பெண்ணின் சகோதரன் புளியங் கிளை ஒன்றைக் கொண்டு வருவான். இலைகளை எல்லாம் உருவிய பின் அது முற்றத்தில் நடப்படும். புளியமிலையிலிருந்து பிழிந்து எடுக்கப் பட்ட சாறு ஏழு தேங்காய்களிலுள்ள இளநீரில் கலக்கப்படும். பின்பு குடும்பத்தில் முதிய பெண் அதில் சிறிதை அக் கருப்பவதி குடிக்கும்படி கொடுப்பாள். இவ்வாறு மூன்று நாட்கள் செய்யப்படுகிறது. இறந்த வர்கள் புதைக்கப்படுவர். இறந்தவனின் மகன் புதுப்பானையில் தண் ணீரைச் சுடலைக்குக் கொண்டு செல்வான். அவன் குடத்தோடு பிணத்தைச் சுற்றி வந்து அதனை எறிந்து விடுவான். பிணத்தைப் புதைத்த இடத்தில் மூன்று கற்கள் வைக்கப்படும். சாலியர்: இவர்கள் தெலுங்கு நெசவாளர். இவர் தம்மைச் சேனாபதியர் என வழங்குவர். இவர்களின் சாதித் தலைவன் சேனாதிபதி எனப்படுவான். பட்டுச் சாலியர், பதும சாலியர் என இவரில் இருவகை யினருண்டு. பட்டுச் சாலியர் பூணூலணிவர். கொரு நாடு, ஐயம்பேட்டை முதலிய இடங்களில் வாழும் நெசவாளரும் சாலியர் எனப்படுவர். இவர்கள் திருநெல்வேலிச் சாலியருடையவும், கைக்கோளருடையவும் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவர். செங்கற்பட்டிலுள்ள சாலியர் பெரிதும் கைக்கோளராவர். இவர்களின் குலதெய்வம் முத்தாட்சி அம்மன். சிவியார்: இவர்கள் பல்லக்குக் காவுஞ் சாதியினர். இடையரில் ஒரு பிரிவினருக்கும் இப் பெயருண்டு. வியபிசாரிகள் தூணிற் கட்டிப் புளியம் மிலாறுகளால் அடிக்கப்படுவர். பருவமடைந்து மணமாகாதவர்கள் மணமானால் பனை ஓலையில் வேண்டிய ஆண் வடிவங்களை வைத்து அவர்களுக்கு மணக்கிரியை நடத்தப்படும். சிறுகுடி: இது கள்ளரின் கிராமம் அல்லது ஊர். சிறுதாலி: இவர்கள் கைக்கோளர் மறவர்களுள் காணப்படும் பிரிவினர். சிற்பர்: இவர்களுள் பஞ்சம்மாளரில் ஒரு பிரிவினர்; கற்களில் வேலை செய்பவர். சீரிய கிறித்தவர்: கி.பி. 52இல் தோமஸ் ஞானியார் கொடுங் கோளூரில் வந்திறங்கினார். அவ்விடம் குசிறி அல்லது முசிறிக்கோடு எனப்படும். அக் காலத்தில் பினீசியரும் ஆப்பிரிக்க வணிகரும் வாணிகத் தின் பொருட்டு அங்கு வந்தார்கள். தோமஸ் ஞானியார் இந்தியாவில் பலரைக் கத்தோலிக்க மதத்தைத் தழுவச் செய்தார். இறுதியில் இவர் பிராமண மதத்தினர் ஒருவரால் ஈட்டியால் எறிந்து கொல்லப்பட்டு மயிலாப்பூரிலுள்ள சாந்தோமில் அடக்கஞ் செய்யப்பட்டார். இவ்வாறு பழங்கதை வழங்குகின்றது. இரண்டாம் தியதோய்ச்சுக் (Theodoisus) காலத்தில் பாலஸ்தீனத்தில் யூதர் ஈவு இரக்கமின்றிக் கொல்லப்பட் டார்கள். அப்பொழுது அவர்களிற் பலர் வந்து இந்தியாவிற் குடியேறி னார்கள். இன்னும் சிலர் கி.பி. 345 வரையில் சீரியாவிலிருந்து வந்தார்கள். வீரராகவச் சக்கரவர்த்தி (774) ஸ்தானுரவி குப்பதன் (824) முதலியோ ரளித்த பட்டயங்களில் சீரிய கிறித்தவர்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. வீரராகவச் சக்கரவர்த்தி அளித்த பட்டையம் சீரிய கிறித்தவர்களிடத்தில் உள்ளது. பட்டையத்தில் சங்குமுத்திரை பொறிக் கப்பட்டுள்ளது. இப் பட்டையத்தால் சேரமான், உலோகப் பெருஞ் சேவடி என்னும் இரவிக் கொற்றனுக்கு மணிமங்கலம் என்னும் பட்ட மளித்துள்ளான். விழாக்கால உடை அணிதல், வணிக உரிமை, பரிவாரம் வைத்துக் கொள்ளுதல், ஐந்து வாத்தியங்கள், சங்கு முதலிய வாத்தியங் களைப் பயன்படுத்துதல், பகலில் பந்தம் பிடித்தல், நில பாவாடை விரித்தல், பல்லக்கு வைத்திருத்தல், அரசனைப் போல உலாவருதல், அலங்கரிக்கப்பட்ட வில் வைத்திருத்தல், வீட்டு வாயிலை வில் வடிவாக அமைத்தல் போன்ற உரிமைகள் அவனுக்கு வழங்கப்பட்டுள்ளன. இப் பட்டையத்தை வரைந்தவன் சேரமான் உலோகப் பெருந் தட்டான் நம்பி சடையன். இரவிக் கொற்றன் சீரிய கிறித்தவருள் ஒருவன். சீரிய கிறித்தவர் 9ஆம் நூற்றாண்டுக்கும் 14ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் பெருமை பெற்று விளங்கினார்கள். இவர்கள் உடையப் பேரூரைத் தலைநகராகக் கொண்ட கிறித்துவ அரசனால் ஆளப்பட்டார்கள் என்னும் செவி வழிச் செய்தி உண்டு. இன்றும் சில சீரிய கிறித்துவர் இந்து ஆலயங்களுக்குக் காணிக்கைக் கொடுப்பர். பிராமணரல்லாத சில இந்துக்களும் சீரிய கிறித்துவ ஆலயங்களுக்குக் காணிக்கை கொடுப்பர். சீரிய கிறித்தவர் தமது குழந்தைகளுக்குச் சாதகமெழுதி வைப்பர். திருமணத்தில் மண மகன் பெண்ணுக்குத் தாலி தரிப்பான். கணவன் மரணமானால் மனைவி தாலியைக் களைந்து விடுவாள். மரணத்துக்குப் பின் பத்து அல்லது பதினைந்து நாட்களுக்குப் புலர் என்னும் தீட்டுக் காப்பார்கள். ஆண்டில் ஒரு முறை இறந்த நாள் கொண்டாடப்படும். சூலி: கன்னடத் தேவதாசிகள் இப் பெயர் பெறுவர். செக்கன்: வன்னியனுக்கு இது மற்றொரு பெயர். செக்கான்: இவர்கள் தென்மலையாளத்தில் வட்டக்காடர் எனவும் வடமலையாளத்தில் வாணியர் எனவும் படுவர். செக்கார் வாணியரிலும் பார்க்க உயர்ந்தவர்களாவர். செக்கார் தீண்டுவதால் நாயருக்குத் தீட்டு உண்டு. இவர்கள் பழக்கவழக்கங்கள் நாயர் சாதியன ருடையவை போல்வன. செட்டி: நெசவுகாரர், செக்கார் முதலியோர் இதனைத் தமக்குப் பட்டப் பெயராகக் கொள்வர். பேரிச்செட்டி, நகரச் செட்டி, காசுக்காரச் செட்டி, நாட்டுக் கோட்டைச் செட்டி முதலியோர் செட்டி வகுப்பிற் சிலராவர். (செட்டிகள் தம்மைத் தனவைசியர் எனக் கூறுவர். தனவைசி யரின் பிரிவுகள் காவிரிப்பூம்பட்டினத்துச் செட்டி, ஏழிலைச் செட்டி, இளையாத்துச் குடிச்செட்டி, சோழபுரத்துச் செட்டி, புளியங்குடிச் செட்டி, பூவள்ளுக் குடிச் செட்டி, திருவாப்பூர்ச் செட்டி, கருப்பூரச் செட்டி, காவேரிச் செட்டி, வளையல் செட்டி, மஞ்சப்பட்டுச் செட்டி எனச் சைமன் காசிச் செட்டியவர்கள் குறிப்பிடுவர்.) செம்படவன்: தமிழ்நாட்டில் மீன் பிடிகாரர் செம்படவராவர். இவர்கள் நாட்டான், கவண்டன், மணியக்காரன், பாகுத்தன், பிள்ளை முதலிய பட்டப்பெயரை வைத்துக்கொள்வர். மலையனூரில் எல்லாச் செம்படவரும் தம்மைப் பூசாரிகள் என வழங்குவர். சிதம்பரத்திலே குறிக்கப்பட்ட ஒரு நாளில் செம்படவர் சுவாமியைச் சுமந்து ஊர்வலம் வருவர். அதற்காக அவர்களுக்குக் கூலியும் பொங்கலும் கொடுக்கப்படும். அம்மன் ஊர்வலம் வரும்போது செம்படவர் அம்மனை நிறுத்தி ஆடை கொடுப்பார்கள். அவர்கள் தலைவன் நாட்டாண்மைக்காரன் எனப்படு வான். அவனுடைய உதவிக்காரன் சங்கதிப் பிள்ளை அல்லது சங்கதிக் காரன் எனப்படுவான். படகு ஓட்டும் செம்படவர் கங்கையை வழிபடுவர். பூப்படைந்த பெண் காவலாகக் கையில் இரும்பை வைத்திருப்பாள். பெண் கருப்பமாகி ஏழாவது மாதம் முதுகுநீர் குத்தல் என்னும் சடங்கு நடத்தப்படும். பெண் குனிந்து நிற்கும்போது உறவினர் வெற்றிலையின் நுனியால் அவள் முதுகின் மீது பால் வார்ப்பார்கள். செம்மான்: இவர்கள் பறையரில் ஒரு பிரிவினர்; தோலில் வேலை செய்வோர். இப்பொழுது இவர்கள் செய்யும் வேலையைச் சக்கிலியர் புரிகின்றனர். செருமான்: இவர்கள் மலையாளத்தில் உழவுத்தொழில் செய்யும் வேலையாளர். வட மலையாளத்தில் இவர்கள் புலையர் எனப்படுவர். இவர்கள் காணியாளரால் அடிமைகளாய் விற்கவும் வாங்கவும் பட்டார்கள். 1862இல் இவ்வாறு விற்று வாங்குதல் சட்ட விரோதமாக் கப்பட்டது. இவர்கள் சாதிமான்களுக்கு 30 அடி தூரத்தில் வந்தால் தீட்டு உண்டாகும். செருமார், பிராமணர் கிராமங்கள், கோயில்களை அணுகுதல் கூடாது. இன்றும் செருமார் சந்தைகளுள் நுழைதல் கூடாது. இவர்கள் பிராமணருக்கும் நாயருக்கும் அறுபத்து நான்கடி தூரத்தில் நிற்றல் வேண்டும். சேணியன்: நெசவு தொழிலாளர் சேணியரெனப்படுவர். காஞ்சீ புரத்தில் சேணியார் இலிங்க மதத்தினராவர். சேனைக்குடையார்: இவர்கள் வெற்றிலை பயிரிடுவர். இவர்கள் இலை எனவும், கொடிக்காற் பிள்ளைகள் எனவும் அறியப்படுவர். மூப்பன், பிள்ளை என்னும் பட்டப் பெயர்களும் இவர்களுள் வழங்கும். இவர்கள் வீடுகளில் பறையர், அம்பட்டர், வண்ணார் உண்ணமாட் டார்கள். சொண்டி: ஓரிய வகுப்பினருள் கள் விற்போர் இவர்களாவர். இவர்கள் அரிசி, பனங்கட்டி, பனங்கள், இருப்பைப் பூ முதலியவற்றி லிருந்து சாராயம் வடிப்பர். தலைப் பூப்பு எய்திய பெண், நான்கு அம்புகளை நட்டுக் கயிற்றாற் றொடுத்துக் கட்டப்பட்ட இடத்தில் விடப்படுவாள். ஏழாவது நாள் அவளுக்கு முழுக்காட்டப்படும். பூப்படையுமுன் பெண்களுக்கு மணமாகும். இறந்தவர்கள் புதைக்கப்படு வார்கள். மரணத்தீட்டுப் பத்து நாட்களுக்குண்டு. பெண்கள் மச்ச மாமிசம் உண்ணார்கள். கஞ்சம் பகுதியில் பெண்கள் பூப்படைந்த பின் மணப்பர். சோலகர்: இவர்கள் கொச்சைக் கன்னட மொழி பேசும் மக்கள். சோழியப்பட்டர்: இது பட்டப் பிராமண வகுப்பினருக்கு மலையாளத்தில் வழங்கும் பெயர். சோனகர்: இவர்கள் இந்துத் தாய் தந்தையர் மரபில் வந்த முசல்மான்களாவர். சோனகன் என்னும் பெயர் அராபியனைக் குறிக்கும். மலையாளத்து மாப்பிள்ளைமார் சோனக மாப்பிள்ளைமார் எனப்படுவர். கிரேக்கரைக் குறிக்கும் யவனரென்னும் சொல்லுக்குப் பதில் சோனகர் என்னும் சொல் வழங்குகின்றது. சோனார்: இவர்கள் மராத்தி மொழியில் ஒரு பிரிவினராகிய கொங்கணம் பேசும் தட்டார். இவர்களின் சாதித் தலைவன் முக்கியஸ் தன் எனப்படுவன்; இவன் வழக்குகளை விளங்கித் தீர்ப்பளிப்பான். ஒரு கோத்திரத்தில் இவர்கள் மணஞ் செய்து கொள்வதில்லை. இவர்களின் பட்டப்பெயர் செட்டி. சென்னையில் 408 பேருக்கு ஒரு தட்டானுண்டு. இங்கிலாந்தில் 1100-க்கு ஒரு தட்டானுண்டு. சௌராட்டிரர்: இவர்கள் பட்டுநூற்காரர் எனப்படுவார்கள். இப் பெயர் இவர்கள் இருந்து வந்த சௌராட்டிர நாடு தொடர்புடைய பெயர். தக்கடோ: இவர்கள் மலைச்சாதியினரும், பிராமணரும் கலந்து உதித்தோர் . இவர்கள் செயப்பூர்ப் பக்கங்களிற் காணப்படுகின்றனர். தங்கர்: மராட்டிய இடையர் இப் பெயர் பெறுவர். தங்கலான்: இவர்கள் பறையரில் ஒரு பிரிவினர். தங்கலான் என்பதற்குக் கிட்ட நிற்கத் தகாதவன் என்பது பொருள். தசாரிகள்: இவர்கள் ஒரு வகை வைணவப் பண்டாரங்கள். இவர்களை ஒரு சாதியினர் என்று கூறமுடியாது. தச்சநாடன் மூப்பன்: இது குறிச்சான்களுக்கும் நீலகிரிக் குறும்பர்களிற் சிலருக்கும் வழங்கும் பெயர். தச்சன்: இவர்கள் மரவேலை செய்வோர். பறையரில் ஒரு பிரிவினரும் இப் பெயர் பெறுவர். தண்டப்புலையர்: இவர்கள் தென் மலையாளத்தில் வாழும் புலையரில் ஒரு பிரிவினர். இவர்கள் தண்டக் கொடியை அறுத்துப் பின்னிய ஆடையை உடுப்பர். இப் புலைக் குடும்பங்கள் இல்லங்களாகக் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு இல்லத்தில் உள்ளவர்கள் அதே குடும்பத்தில் மணம் முடித்தல் ஆகாது. இவர்கள் குடியிருக்குமிடம் மன்றம் எனப் படும். இவர்கள் சூரியனைப் பார்த்து “சூரியனறிய கண் கெட்டுப் போக” என்று சொல்லிச் சத்தியஞ் செய்வர். இவர்கள் ஐஞ்சு தம்புராக்கள் எனப் பாண்டவரை வழிபடுவர்; இறந்தவருக்குக் கொள்ளிக் குடம் உடைப்பர்; பிணத்துக்கு வாய்க்கரிசி போடுவர். இறந்தவரின் ஆவி சாவார் எனப்படும். தண்டர் : மலையாளத்திலும் , வள்ளுவ நாட்டிலும் பாலைக் காட்டிலும் வாழும் ஈழவருக்கு இப் பெயர் வழங்கும். இவர்களிற் பெண்கள் பல கணவரை மணப்பர். ஊராளி என்பது இவர்களின் பட்டப்பெயர். சில இடங்களில் இவர்கள் வேளான் எனவும் படுவர். சாதிமான்களோடு பேசும் போது இவர்கள் தம்மைக் குழியர் (குழியில் வாழ்வோர்) என்பர். ஆண்களும் பெண்களும் நெற்றியில் பிறையும் ஒரு புள்ளியும் பச்சை குத்திக்கொள்வர். இவர்களுள் குருமார் மார்த்தாண்ட குருப்புக்கள் எனப் படுவர். குருப்புக்கள் அம்பட்டரு மாவர். இவர்களின் கடவுள் பத்திர காளி. பெண்கள் ஏழு அல்லது எட்டு வயதாகவிருக்கும் போது தாலிகட்டுக் கலியாணம் நடத்தப்படும். இக் கலியாணம் கழுத்துக் கெட்டி எனப்படும். மணமகன் மச்சாம்பி எனப்படுவான். இறப்பவர்களுள் குடும்பத்தில் வயதின் மூத்தவர் மாத்திரம் இறந்தால் சுடப்படுவர் இவர்களுக்கு மரணத் தீட்டு பத்து நாள் உண்டு. இறந்தவரின் கிரியைகள் கடற்கரையில் நடத்தப் படும். இறந்தவர்களுக்கு எள்ளோடு கலந்த உணவு கொடுக்கப்படும். தண்டான்: இவர்கள் தீயர். கிராமத்தில் தலைமுறையாக வரும் தலையாரிகள். தலையாரி அரசனால் நியமிக்கப்படுவான். தம்பலர்: தெலுங்கு பேசும் கோயிற் குருமார் இப் பெயர் பெறுவர். கோதாவரி, கிருட்டிணா முதலிய இடங்களில் இவர்கள் பிராமணர்க ளாகவும், தெலுங்கு நாட்டில் சூத்திரராகவும் கருதப்படுவர். இவர்கள் பூணூலணிந்து கொள்வர். தம்பி: இது திருவிதாங்கூர் நாயருக்கு வழங்கும் மரியாதைப் பட்டப்பெயர். திருவிதாங்கூர் அரசரின் பிள்ளைகளும் தம்பி எனப் படுவர். தம்பிரான்: திருவாடுதுறை, மயிலம் (தென்ஆர்க்காடு) முதலிய இடங்களிற் கோயிற் கருமங்களைப் பார்க்கும் பண்டாரங்கள் தம்பிரான் எனப்படுவர். தம்புரான்: திருவிதாங்கூரில் வாழும் ஒரு கூட்டத்தினர் தம்புரான் எனப்படுவர். இவர்கள் இருக்கும் இடப்பெயர்களால் வேறுபடுத்தி அறியப்படுவர். இவர்கள் வட மலையாளத்திலுள்ள கோலாட்டு நாட்டி லிருந்து வந்தார்கள். இவர்கள் அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக் குத் தாலிக் கட்டு அல்லது பள்ளிக்கட்டுச் செய்து அவர்களோடு கணவர் போல வாழ்வர். அரச குடும்பத்திலுள்ள ஆடவர் சூத்திரப் பெண்ணைக் கொள்வர். பெண்ணின் கணவன் இறந்துவிட்டால் அல்லது ஏதும் காரணத்தை முன்னிட்டுப் பிரிந்து விட்டால் அவள் இன்னொரு கோயிற்றம்புரானைக் கொள்ளலாம். இவர்களின் குருக்கள் மலையாளப் போற்றிகளாவர். திருவிதாங்கூர் அரச குடும்பத்தில் முதற்பெண்ணுக்கு இலக்குமி என்றும், இரண்டாவது பெண்ணுக்குப் பார்வதி என்றும் பெயரிடப்படும். தருமராசர்: இவர்கள் வட ஆர்க்காட்டிலுள்ள இருளரில் ஒரு பிரிவினர். தலையாரி: இவர்கள் முதன்மையான கிராமக் காவலர். தெலுங்கு நாட்டில் முத்திராசர் கிராமக் காவலர்களாவர். அவர்கள் தலாரி வாலு எனப்படுவர். தலைவர்: இது பரவரின் பட்டப்பெயர். சாதித் தலைவனென்பது திருநெல்வேலி முத்துக்குளிகாரர் தலைவனுக்கு வழங்கும் பெயர். தாசி: நம்பூதிரிப் பெண்களின் பிராமணரல்லாத பணிப்பெண் இப் பெயர் பெறுவாள். இவள் தேவதாசியில் வேறானவள். தாய்: இது வட இந்தியாவினின்றும் வந்த சைனரின் பட்டப் பெயர். இவர்கள் பெரும்பாலும் வணிகராவர். தார்வாட்: இவர்கள் மருமக்கள் தாயக் குடும்பத்தில் ஒரு தாய் வட்டத்தைச் சேர்ந்தோர். தாலிகட்டுக் கலியாணம்: இது நாயர்ப் பெண்கள் பருவமடையு முன் அவர்களுக்கு நடத்தப்படும் கலியாணம். மருமக்கள் தாயமுடைய ஆண்பெண் என்பவர்களின் ஒழுக்கங்கள் தளர்ந்தவை. இக் கலியாணம் தேவதாசிகளுக்குச் செய்யப்படும் கலியாணம் போன்றது. திகம்பரர்: இவர்கள் முழு நிர்வாணம் பரிசுத்தத்துக்கு அடை யாளமெனக் கொள்ளும் சைனர். திராவிட்: தென்னிந்திய பிராமணர் திராவிட் எனப்படுவர். திருமுடி: செங்கல் வேலை செய்வோர் திருமுடியாளர் எனப் படுவர். சேலம், கோயம்புத்தூர் முதலிய இடங்களில் இவர்கள் பெரும் பாலும் காணப்படுகின்றனர். பெண்கள் ஒழுக்கத்தளர்வுடையர். இவர்கள் பெரும்பாலும் வேட்டுவர் அல்லது கைக்கோளராவர். கோயி லுக்கு நேர்ந்து விடப்படும் கைக்கோளப் பெண்கள் கடவுளுக்குக் கலியாணம் செய்யப்பட்டவர்களாகக் கருதப்படுவர். தீபோ: இவர்கள் பொண்டாரி வகுப்பில் ஒரு பிரிவினர். தீயன்: தீயரும் ஈழவரும் மலையாளத்தில் கள்ளிறக்கும் சாதியினர். வடமலையாளத்தில் தீயப் பெண்களுக்கு ஐரோப்பியர் தொடர்பினால் பிள்ளைகள் பிறந்துள்ளன. இவர்களுக்கு மருமக்கள் தாயம் உண்டு. ஆகவே பிள்ளைகள் தாய் வட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். முற்காலத் தில் பெண்கள் ஐரோப்பியருடன் வாழ்தல் இழிவாகக் கருதப்பட வில்லை. கல்வி அறிவு ஏறப்பெற்ற இக் காலத்தில் அது இழிவாகக் கருதப்படுகிறது. ஈழவரும் தீயரும் இலங்கையிலிருந்து சென்றார்கள் என்னும் ஐதீகம் உள்ளது. ஈழத்து மக்கள் சிலர் மலையாளத்தில் வந்து குடியேறினார்களென்றும் அவர்கள் வரும்போது தென்னையை (தெற்கே உண்டாகும் மரம்) கொண்டு வந்தார்களென்றும் அவர்கள் தீவார் எனப்பட்டார்கள் என்றும், தீவார் என்பதே தீயார், தீயர் என்று ஆயிற்றென்றும் கூறப்படுகின்றன. நில சம்பந்தமான ஆவணங்களில் தீயர் ஈழவர் எனக் குறிக்கப்பட்டுள்ளார்கள். தீயர் ஈழவருக்குத் தாழ்ந்தவராகக் கருதப்படுவர். ஒருவன் சாதியிலிருந்து தள்ளப்பட்டால் வண்ணான் அம்பட்டன் முதலியோர் அவனுக்குக் கடமை செய்ய மறுப்பார்கள். வண்ணாரப் பெண்கள் பெரும்பாலும் தீய வகுப்பைச் சேர்ந்தவர்க ளாவர். பூப்பினா லுண்டாகும் தீட்டு, பிள்ளையைப் பெற்ற தீட்டு முதலியன, நீராடியபின் வண்ணாத்தி கொடுக்கும் “மாத்து” (மாற்று) உடுப்பதால் நீங்கும். ஈழவர் மாத்தைப் பற்றி அறியார்கள். தீயன் ஈழவன் சமைத்த உணவை உண்பான். ஈழவன் தீயன் சமைத்த உணவை உண்ண மாட்டான். தீயர் குடியிருப்புத் தரை எனப்படும். ஒவ்வொரு தரைக்கும் ஒவ்வொரு நாயர் அதிகாரியும். தீயத் தண்டனும், சோதிடனும், அம்பட்ட னும் பலவகைத் தொழிலாளருமிருப்பர். மணமகன் வீட்டாரையும் மணமகள் வீட்டாரையும் பொருந்த வைத்து மணம் ஒழுங்கு செய்வோர் சங்கதி எனப்படுவர். தந்தையின் குடும்பம் இல்லம் எனவும், தாயின் குடும்பம் குலம் எனவும் படும். ஒரே இல்லத்தில் மணங்கள் நடப்ப தில்லை. தென் மலையாளத்தில் மணமகன் மற்போருக்குச் செல்கின்ற வனைப் போல அரையில் ஆடையைக் கட்டிக்கொண்டும், கையில் வாள், கேடகம் என்பவற்றைப் பிடித்துக் கொண்டும், இவ்வாறு உடுத்திக் கொண்ட இரண்டு தோழர் பக்கத்தே வரக் கூத்தாடிக் கொண்டும் போவான். ஈழவன் ஒரு போதும் வாள் கொண்டு போவதில்லை. கலியாணத்தில் முக்கிய பகுதி வாயில் துற பாட்டு. வடமலையாளத்தில் இவர்கள் நெற்றியிலும் தோளிலும் திருநீறு பூசிக்கொள்வர்; பொன் கடுக்கன் அணிவர். இடக்கை மோதிர விரலில் வெள்ளி அல்லது பித்தளை மோதிர மணிவர். பலர் தாயத்துக் கட்டிக்கொள்வர். முற்காலத் தில் தென்மலையாளத் தீயர் முழங்காலுக்கு மேல் ஆடை உடுத்தார்கள். எல்லோரும் காது குத்திக்கொண்டனர். காதில் கடுக்கனும் அரையில் தாயத்தும் அணிந்தார்கள். அரைக்குமேல் யாதும் அணியவில்லை. இன்றும் பெண்கள் மார்பை மறைப்பது அரிது. ஈழவப் பெண்கள் நீல ஆடையைப் பெரிதுமுடுப்பர். இப்பொழுது இவர்கள் மார்பை மறைத் தும் ஆடையை அணிகிறார்கள். தீயர்ப் பெண்களில் சிலர் அணியும் தோடு அவர்களுக்குரியதன்று. முற்காலத்தில் பல தீயச் சகோதரர் கூடி ஒரு மனைவியை மணந்து வாழ்வார்கள். இவ் வகை நிகழ்ச்சியைப் பற்றிய சான்றுகள் எழுத்து மூலம் உள்ளன. தென் மலையாளத்தில் இவர்களுக்கு மக்கள் தாயமுண்டு. பூப்பு அடையுமுன் பெண்ணுக்குத் தாலிக் கட்டுக் கலியாணம் நடைபெறும். இறந்தவனின் தலை தெற்கே இருக்கும்படி பிணம் கிடத்தப்படுகிறது. கைப்பெருவிரல் களும் கால்பெருவிரல்களும் சேர்த்துக் கட்டப்படுகின்றன. கால்மாடு தலைமாடுகளில் விளக்குகள் வைக்கப்படுகின்றன. இறந்தவரின் உடல் கொளுத்தப்பட்டால் சாம்பல் கடலில் அல்லது ஆற்றில் கொட்டப்படு கிறது. ஆண்டில் ஒரு முறை இறந்தவரின் நினைவுநாள் கொண்டாடப் படுகின்றது. அப்பொழுது வீட்டின் நடுவே விளக்குக் கொளுத்தி வைத்துப் பக்கத்தே தண்ணீரும் இளநீரும் வைக்கப்படும். இவர்கள் மாட்டு இறைச்சியை உண்பதில்லை. துருவாளர்: இவர்கள் கட்டுக் கொடுக்கிற (கலியாணம் பொருத்தி வைக்கிற) சாதியினர். இவர்களுக்கு வேண்டான் என்பதும் மறுபெயர். துலாபாரம்: இது திருவிதாங்கூர் அரசரால் செய்யப்படும் ஒரு வகைத் தானம். அரசன் தனது நிறையுள்ள பொன்னைப் பிராமணருக்குத் தானஞ் செய்வான். துலுக்கர் (துருக்கியர்) : இப் பெயர் சில சமயங்களில் மகமதியரைக் குறிக்க வழங்கப்படும் தேசிகர்: இவர்கள் பண்டாரங்களுள் ஒரு பிரிவினர். தேசாரி: வட ஆர்க்காட்டில் ஒவ்வொரு இடத்திலுமுள்ள தலையாரி தேசாரி எனப்படுவன். தேவடியாள்: தேவதாசி தேவதாசி: தாசிகளில் ஏழு வகையினர்களுண்டு. (1) தத்தம் - தன்னைக் கோயிலுக்கு ஒப்படைத்தவள். (2) விக்கிரகம் - தன்னைக் கோயிலுக்கு விற்றவள் (3) பிரித்திய - தன் குடும்ப நன்மைக்காக கோயிற் பணிவிடை செய்பவள். (4) பத்தி காரணமாகக் கோயிலை அடைபவள் (5) தானே விரும்பி வந்து சேர்பவள் (6) அலங்காரஞ் செய்து அரசரால் கோயிலுக்குக் கொடுக்கப்பட்டவள். இவர்களின் வேலை விக்கிரங்களுக் குச் சாமரை வீசுதல், கும்ப ஆராத்தி கொண்டு செல்லுதல், கடவுள் உலாவரும் போது ஆடிப்பாடுதல் என்பன. 1004இல் இராசராசன் கட்டிய பெரிய தஞ்சாவூர்க் கோயிலின் நான்கு வீதிகளிலும் நானூறு தழுக்குச் சேரிப்பெண்கள் வாழ்ந்தார்கள். சென்ற நூற்றாண்டின் இறுதி யில் காஞ்சீபுரத்தில் நூறு ஆடல் மாதர் இருந்தார்கள். மதுரை, காஞ்சீ புரம் முதலிய கோயில்களில் இன்னும் பெருந் தொகையினர் காணப்படு கின்றனர். இவர்களுக்குக் கோயில் வருவாயி லிருந்து மானியங் கிடைக்கிறது. அப்தூர் இரசாக் (Abdul Rasak) என்னும் துருக்கிய தூதர் 15ஆம் நூற்றாண்டில் விசயநகரத்திலிருந்தார். இப் பெண்கள் மூலம் கிடைக்கும் வருவாய் நகரக் காவலர் (Police) சம்பளம் முதலியவற்றுக்குச் சென்றதென அவர் கூறியுள்ளார். இப் பெண்களுக்கும் வாளுக்கும் அல்லது கடவுளுக்கும் கோயிலில் கலியாணம் நடத்தப்படுகின்றது. பெண்களின் கழுத்தில் அவர்கள் குலத்திலுள்ள ஆடவர் தாலி கட்டு கின்றனர். தாசி குலத்தவர்களுக்கு ஆண்களைப் போலவே பெண்களுக் கும் சொத்துரிமை உண்டு. தாசி குல ஆடவர் நட்டுவர் எனப்படுவர். அவர்கள் தமது பெயருடன் பிள்ளை என்பதைச் சேர்த்து வழங்குவர். தாசிகளில் வலங்கை, இடங்கை என இரு பிரிவுகளுண்டு. வலங்கையினர் இடங்கைக் கம்மாளர் வீடுகளில் பாடவோ ஆடவோ மாட்டார்கள். மற்றவர்கள் கம்மாளத் தாசிகள் எனப்படுவார்கள். தெலுங்கு நாட்டில் கம்மாளர் போகம் அல்லது சாணி எனப்படுவர். ஒரிய நாட்டுத் தாசிகள் குனி எனப்படுவர். பெல்லாரியின் மேற்குத் தாலுக்காவிலும் அதன் அயலேயுள்ள தார்வர், மைசூர் முதலிய இடங்களிலும் போயர், பினா சூஸ் முதலியவர்களுள் ஆண் குழந்தை இல்லாத குடும்பங்களுள் ஒரு பெண் குழந்தை தாசியாகக் கோயிலுக்கு விடப்பட வேண்டுமென்று சட்டமுண்டு. திருவிதாங்கூர்த் தாசிகள் தேவடியாட்கள், குடிக்காரி (வீட்டுக் குரியவள்) அல்லது பெண்கள் எனப்படுவர். ஆடவர் தேவடி யான் அல்லது நாஞ்சில் நாட்டு வேளாளன் எனப்படுவர். திருவிதாங் கூர்த் தாசிகள் வீடுகளில் சேவிக்கப் போவதில்லை. தேவடியாள் முதுமை யடைந்துவிட்டால் தோடு களையும் சடங்கு நடத்தப்படுகிறது. இது அரசனது அரண்மனையில் நடக்கும். பின்பு அவள் தாய்க்கிழவி ஆகிவிடு வாள். கேரளத்தில் முறக்குடி சிறப்புக்குடி என இருவகைத் தாசிகள் உளர். முறக்குடிப் பெண்கள் முக்கிய காலங்களில் மாத்திரம் சேவிப்பர். திருவிதாங்கூர்த் தாசிகளின் சொத்துரிமை பெண்களைச் சார்கின்றது. தேவர்: புதுச்சேரியில் கண்ணாடிப் பொருள்களில் வாணிகஞ் செய்யும் தெலுங்கர் தேவர் எனப்படுவர். கிராம தேவதைகளுக்குப் பூசை செய்யும் பூசாரிகளும் தேவர் எனப்படுவர். மறவரின் பட்டப்பெயர் தேவன். தென் கன்னடத்திற் கள்ளிறக்குவோர் தேவறுகளு (தேவரின் மக்கள்) எனப்படுவர். இவர்கள் இலங்கையிலிருந்து வந்தவர்களாகக் கருதப்படுவர். தேவாங்கர்: சென்னை மாகாணம் முழுமையிலும் காணப்படும் துளுவும் கன்னடமும் பேசும் நெசவுத் தொழிலாளர் இப் பெயர் பெறுவர். கோயம்புத்தூர்ப் பகுதியில் இவர்கள் செட்டுக்காரன் எனப்படு வார்கள். இவர்கள் சௌவேஸ்வரி என்னும் தெய்வத்தை வழிபடுவர். இவ் வழிபாடு காளி, துர்க்கை வழிபாட்டின் வேறுபாடாகும். இவர்கள் பெரிதும் சைவ மதத்தினர்; இலிங்கங்கட்டிக் கொள்வர். நாட்டுமக்கள் பல எருதுகளை வளர்ப்பர். எருது இறந்துவிட்டால் துக்கம் கொண் டாடிப் பலர் பின்தொடர்ந்து செல்ல அதனை எடுத்துச் சென்று புதைப்பர். தேவாதிக்கர்: இவர்கள் கன்னடத்தில் கோயிற்றொண்டு செய்யும் கன்னடம் பேசும் மக்கள். மயூரவர்மன், பூசை மாத்திரம் பிராமணர் செய்தல் வேண்டுமென்றும், மற்ற வேலைகள் ஸ்தானிகர், தேவாதிக் கர்கள் செய்ய வேண்டுமென்றும் விதித்தான். இப்பொழுது இவர்களிற் பலர் உழவுத்தொழில் செய்கின்றனர். பெண்களின் சொத்துரிமை பெண் களைச் சார்வது. தொண்டமான்: இவர்கள் திருநெல்வேலிப் பகுதியில் வாழும் சுண்ணாம்புக்காரர். இவர்கள் புதுக்கோட்டையிலிருந்து திருநெல்வேலி யிற் சென்று குடியேறிய கள்ளரில் ஒரு பிரிவினர். இவர்களில் தொண்ட மான், தோல்மேஸ்திரி என இரு பிரிவினருண்டு. தொம்மாரர்: இவர்கள் ஓரிடத்தில் தங்காது திரியும் கழைக் கூத்தர். இவர்கள் தெலுங்கு மராட்டியர்; இந்துஸ்தானி பேசுவர். இவர்கள் சாதிப்பறையரிலும் உயர்ந்தவர். ஆரியக் கூத்தாடிகள் என்பதும் இவர்களுக்குப் பெயர். கழைக் கூத்துத் தொடங்குமுன் இவர்கள் சாணியி னால் பிள்ளையார் பிடித்துவைத்து அதனை வழிபடுவர். தோடர்( தோதர்) : இவர்கள் நீலகிரி மலையில் வாழ்வர்; எருமை களை வளர்ப்பர்; தமிழ் பேசுவர். இவர்களுக்குச் சுருண்டு தொங்கும் தடித்த தலைமயிரும் அடர்ந்த தாடியும் உண்டு. பெண்கள் பூப்படைந்த பின் பச்சை குத்திக்கொள்வர். பெண்கள் மாட்டுத் தொழுவத்தில் எரியும் கொள்ளிக் கட்டையைத் தொட்டால் தீட்டு உண்டாகும். தோதரின் தொழுவத்துக்குப் பிராமணன் செல்லுதல் ஆகாது. தோதர் பெரும் பாலும் மோரில் சோறு ஆக்குவர். பெண்கள் பல கணவரை மணப்பர். தோதப்பெண் ஒருத்தி ஒருவனுக்கு மனைவியாகும்போது அவள் அவன் சகோதரர் எல்லாருக்கும் மனைவி என்பது விளங்கிக் கொள்ளத்தக்கது. சில சமயங்களில் கணவர் சகோதரராயிராவிட்டாலும் ஒரே கூட்டத் தைச் சேர்ந்தவராயிருப்பர். இரண்டு அல்லது பல சகோதரர் பல பெண்களைத் தமக்குப் பொதுமனைவியராக வைத்திருப்பர். இறந்த வரின் உடல் சுடப்படும். அப்பொழுது சுடலையில் எருமை பலியிடப் படும். தோட்டி: இவர்கள் சக்கிலியருள் ஒரு பிரிவினர். தஞ்சாவூர்த் தோட்டியான் அல்லது கம்பளத்தான் பன்றிவளர்த்தல் , பாம்பு பிடித்தல், பிச்சையெடுத்தல் முதலிய தொழில்களைச் செய்வான். தோட்டி தந்தை யின் சகோதரி மகளை அல்லது தாய்மாமன் மகளைக் கலியாணம் செய்ய லாம். இக் கட்டுப்பாடு இருப்பதால் சிறுவருக்கு வளர்ந்த பெண்கள் கலியாணம் முடிக்கப்படுவர். அப்பொழுது மணமகனின் தந்தை பெண் ணோடு சேர்ந்து பிள்ளைகளைப் பெறுவான். தோட்டியான் பிராமணன் வீட்டில் உண்ணமாட்டான். இதற்குக் காரணம் புலப்படவில்லை. பெண்கள் குடும்ப வட்டத்துக்குள் புரியும் வியபிசாரம் குற்றமாகக் கருதப்படமாட்டாது. தோட்டிகளின் குடித்தலைவன் ஊர் நாயகன் எனப்படுவான். மணமான பெண்கள் கணவனின் உறவினருக்குத் தமது தயவைக் கொடுத்தல் குற்றமாகக் கருதப்படமாட்டாது. வாயிலில் ஒருவனின் செருப்பு இருப்பதைக் கண்டால் கணவன் உள்ளே செல்ல மாட்டான். இவர்கள் இறந்தவரைக் கல் நட்டு வழிபடுவர். தோணி: தோணி பேழை போன்றது. 70 அடி நீளமும் 20 அடி அகலமும் 11 அடி ஆழமுமுடையது. அடி தட்டையாக விருக்கும். அடிப்பகுதி 7 அடி அகலமுடையது. தென்னிந்தியாவில் அடிக்கப்பட்ட ஈய, செம்பு நாணயங்களில் தோணி பொறிக்கப்பட்டுள்ளது. டோபி(Dhobi): இது வண்ணானுக்கு இந்தியா முழுவதிலும் வழங்கும் பெயர். இது கழுவு என்னும் பொருள் தருவது. தாவ என்னும் சமக்கிருத அடியாகப் பிறந்தது. இவர்கள் ஆதியில் ஒரிசா மாகாணத்தி லிருந்து வந்தார்கள். மணக் காலங்களில் இவர்கள் ஏழு வீடுகளிலிருந்து ஏழு குடத்தில் தண்ணீர் கொண்டுவந்து மணமகனையும் பெண்ணையும் முழுக்காட்டுவார்கள். மணக்கிரியையில் இருவரின் இடக்கையும் சேர்த்துக் கட்டப்படும். பந்தலிலிருப்போர் இருவர் மீதும் மஞ்சளையும் அரிசியையும் எறிவார்கள். தோரியர்: இவர்கள் கோயம்புத்தூர், சேலம் மாவட்டங்களிற் காணப்படுவர். இவர்கள் முற்காலத்தில் மீன் பிடிப்போரும் பல்லக்குச் சுமப்போருமாக இருந்தனர். இப்பொழுது இவர்கள் வெற்றிலை பயிரிடு வர். இவர்களின் சாதித்தலைவன் எசமானன் எனப்படுவன். இவன் இவர்களிடையே உள்ள வழக்குகளை விளங்கித் தீர்ப்பன். நகரத்தார்: இவர்கள் செட்டிகளில் ஒரு பிரிவினர். நகரமென்பது பட்டினம். இவர்கள் முன்பு காஞ்சீபுரத்திலிருந்தார்களென்பது ஐதீகம். இவர்களின் வேலையாள் சாதிப்பிள்ளை எனப்படுவன். விதவைகள் மறுமணஞ் செய்வதில்லை. நங்குடி வேளாளன்: இவர்கள் திருநெல்வேலியிற் பல பாகங் களிலே வாழ்கின்றனர். கோட்டை வேளாளரிருக்கும் சிறீவைகுந்தக் கோட்டைக்கு நங்குடி வேளாளப் பெண்கள் போக அனுமதிக்கப்படுவ தில்லை. இவர்களுள் ஒருவர் இறந்துபோனால் அச் செய்தியை அம்பட்டன் அறிவிப்பான். அக்கினி என்னும் மகாமுனி தவம்செய்து கொண்டிருக்கும் போது தெய்வப் பெண்கள் நீராடவந்தார்களென்றும் முனிவர் அவர்களைக் காதலித்து மூன்று குமாரரைப் பெற்றார் என்றும் அவர்களை வேளாளர்கள் வளர்த்தார்க ளென்றும் அவர்களே சேர, சோழ, பாண்டிய அரசர்கள் என்றும் ஐதீகங்கள் உள்ளன. நம்பிடி: இவர்கள் மலையாளத்தில் காணப்படும் நம்பூதிரிகள் போன்ற ஒரு கூட்டத்தினர். இவர்கள் பூணூலணிவர். இவர்களுக்கு மருமக்கள் தாயமுண்டு. தாலிகட்டுக் கலியாணம் இவர்கள் சொந்தச் சாதியினரால் செய்யப்படும். நம்பூதிரிமாரும், இச் சாதி ஆடவரும் நம்பிடிப் பெண்களைச் சம்பந்தங் கொள்வர். நம்பிடி ஆடவர் நாயர்ப் பெண்களைச் சம்பந்தம் வைக்கலாம். இவர்கள் விருந்துகளில் நம்பூதிரிக ளோடு இருந்து உண்பர். பெண்கள் மனோலபாடு எனப்படுவர். நம்பூதிரி: கேரள உற்பத்தி என்னும் நூல் மலையாள மொழியி லுள்ளது. அது பரசுராமர் கன்னியாகுமரியிலிருந்து வருணனை நோக்கித் தவஞ் செய்து கன்னியாகுமரி முதல் கோகர்ணம் வரையிலுள்ள நிலத்தைப் பெற்றாரென்றும், பரசுராமராற் குடியேற்றப்பட்டவர்களே நம்பூதிரிகள் என்றும் கூறுகின்றது. இவர்களின் உரிமை வழி மருமக்கள் தாயம். நம்பூதிரிப் பெண்கள் வெளியே செல்லும்போது தம்மை வைக்கான் குடையால் மறைத்துக்கொள்வர். விரிசாலி என்னும் நாயர்ப் பெண் அவர்களின் முன்னே செல்வாள். நம்பூதிரிப் பெண்கள் வெளியே செல்லும்போது தம்மைக் கழுத்து முதல் கால்வரையும் துணியால் போர்த்து மறைத்துக்கொள்வர். இவர்கள் நகை அணிதல் கூடாது. இவர்களைப் பரசுராமர் கொண்டு வந்து குடியேற்றினார் என்னும் கதை நம்பத்தக்கதன்று. இவர்கள் கி.பி. 7ஆம் நூற்றாண்டுக்கும் 8ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் மலையாளத்தில் குடியேறினார்களாகலாம். தாலமி, பெரிபுளூஸ் என்போர் பிராமணர் மலையாளத்திற் குடியேறி யிருந்தமையை கி.பி. முதலாம் நூற்றாண்டிற் குறிப்பிட்டுள்ளார்கள். மேற்குச் சாளுக்கிய அரசர் வலிமை பெற்றிருந்த கி.பி. 4ஆம், 5ஆம் நூற்றாண்டுகளில் இங்கு வந்து தங்கிய பிராமணர் நம்பூதிரிகளோடு கலந்து ஒன்றுபட்டிருத்தல் கூடும். சாளுக்கியருக்குப் பன்றிக் கொடி உண்டு. ஆதலின் சாளுக்கியப் பிராமணர் குடியேறிய இடம் பன்னியூர் (பன்றியூர்) எனப்பெயர் பெற்றிருக்கலாம். சேவூர்ப் (சிவனூர்) பிராமணர் சைவ சமயத்தினராவர். இவர்கள் சாளுக்கியருக்குப் பின் வந்த சேர, சோழ, பாண்டிய அரசர்களின் சமயத்தையே பின்பற்றினார்களாகலாம். பெருமாளென்னுமரசர் சேரநாட்டுக்கு அயலே இருந்து வந்தவர்களாக லாம். இவர்கள் தமது சொந்த நாட்டை விட்டுவந்தமையால் இவர்கள் நம்பூதிரிப் பெண்களை மணந்துகொள்ள நம்பூதிரிகள் மற்ற வகுப்புப் பெண்களைச் சம்பந்தங் கொண்டார்களாகலாம். ஆகவே மருமக்கள் தாயம் அவசியமாயிற்று. கேரளத்தின் சில பகுதிகள் அதிகாரிகளால் ஆளப்பட்டது. வள்ளுவ நாடல்லாத மற்றைய இடங்களில் நம்பூதிரிகள் அதிகாரிகளாக விருந்திருக்கின்றனர். நம்பூதிரிமார் கோயிற் பூஜை செய்வர். இவர்கள் அரசரின் தூத ராகவும் செல்வர். மலையாளத்தில் பட்டர்ப் பிராமணர் அங்குமிங்கும் அலைந்து திரிவர். அவர்களுக்கு உணவு நம்பூதிரிகள் இல்லங்களிலும் கோவிலகங்களிலும் கோவில்களிலும் கிடைக்கும். நம்பூதிரிகளுக்கு ஏடு (வேதம்) படித்தலும் படிப்பித்தலும், பிச்சை, ஓது, அடுக்களை கதவு (எல்லாப் பிராமணரும் குளிக்குமிடத்தில் நின்று குளித்தல்) ஆடு (வேள்வி) சந்தி, குருவாயிருந்து கோயிற் கிரியை செய்தல், அரங்கு, பந்தி (எல்லாப் பிராமணரோடு மிருந்து உண்ணுதல்) போன்ற உரிமைகள் உண்டு. இவர்கள் தலைமயிரை நெற்றிக்கு முன்னால் தொங்கும்படி முடிந்துவிடுவர். நல்லநாள் பார்த்து முகத்தையும் தலையையும் மழித்துக் கொள்வர். மனைவி கருப்பவதியானால் நம்பூதிரி மயிரை வளரவிடுவான். இவர்களுக்கு அடர்ந்த மயிருண்டு. இவர்களின் பழக்க வழக்கங்களுட் சில தோதரிடையே காணப்படுவன போல்வன. அதனால் இவர்கள் தோதரில் ஒரு பிரிவினர் என்று கருதப்படுவர். இவர்கள் விரல் நகங்களை நீளமாக வளரவிடுவர். ஆடவரின் உடுக்கும் வகை “தட்டுத் தூக்குக” எனப்படும். நம்பூதிரிகள் மிரிதடி தரிப்பர். பெண்கள் உடுக்கும் வகை “ஒக்கும் கொலுத்தும் வச்சுத் தூக்குக” எனப்படும். ஆடவர் காதில் துளையிட்டுக் குண்டலமணிவர். பெண்கள் சூட்டு என்னும் காதணி செருத்தாலி முதலியவற்றை அணிவர். அவர்கள் மூக்கைத் துளையிட்டு அணியும் அணிகளை அணிவதில்லை; நீராடியபின் நெற்றியில் சந்தனத் தால் மூன்று குறிகள் வைப்பர். அது அம்புலிக் குறி எனப்படும். அவர்கள் ஒரு போதும் குங்கும மணிவதில்லை; மஞ்சள் குளிப்பது மில்லை. ஆடவர் கை விரலில் பவித்திரம் என்னும் ஆழி அணிவார்கள்; பூணூலில் யந்திரத் தகடு அடைத்த கூட்டைத் தொங்கவிடுவார்கள். பன்னிரண்டு வயதுப் பையன் கவரிமான் தோல் வாரை இடது தோளுக்கு மேலால் போட்டிருப்பான். இரண்டு தலைப்புகளும் அத் தோலினாலேயே பொருத்தித் தைக்கப்பட்டிருக்கும். இவர்கள் திருமணத்துக்குப் பின் பூணூலை மாற்றிக் கொள்வதில்லை. தென்னிந்திய பிராமணர் ஓர் ஆண்டுக்கு ஒரு முறை பூணூலை மாற்றுவர். நம்பூதிரி இருக்கும் வளவுக் குப் பெயருண்டு. வீட்டின் வடகிழக்கில் தொழுவம் இருக்கும். அது கோசாலை எனப்படும். இவர்கள் இருப்பதற்குப் பெரும்பாலும் மான் தோலைப் பயன்படுத்துவர். நம்பூதிரியின் மூத்த குமாரன் காரணவன் எனப்படுவன். அவன் உணவை உண்ட பின் எழும்போது இடக்கையால் இலையைத் தொடுவான்; மனைவி வலக்கையால் தொடுவாள். அப்பொ ழுது அது எச்சில் ஆகமாட்டாது. அவள் அவ் விலையில் உணவைப் புசிப்பாள். நம்பூதிரி, பட்டர் சமைத்த உணவை உண்ணலாம். சுரைக்காய், பனம்பழம், பனங்கட்டி முதலியவைகளை நம்பூதிரி உண்பதில்லை. பால் பாயசமாக மாத்திரம் (பிரதமன்) உண்ணப்படும். நம்பூதிரி மந்திர வாதிகள் ஒருவனைக் கொல்லவேண்டுமானால் அவனைப் போன்ற வடிவை உலோகத் தகட்டில் எழுதி அதன் கீழ் யந்திரம் வரைந்து மந்திரம் செபிப்பார்கள். பின்பு அதனை இன்னொரு உலோகத் தகட்டில் வைத்துச் சுருட்டி அதை அவன் குடியிருக்கு மிடத்துக்குக் கிட்டப் புதைப்பார்கள். அவன் அவ் விடத்தில் மிதித்தால் உடனே மந்திரம் பலித மாகும். அவன் இறந்து விடுவான். அல்லது ஏதும் துயரத்துக்கு ஆளா வான். மந்திர வித்தைக்காரர் குட்டிச்சாத்தானை வாலாயம் செய்து கொள்வார்கள் என்று மலையாளத்தில் நம்பப்படுகிறது. ஆண் குழந்தை யில்லாத நம்பூதிரி மனைவியின் மரணத்துக்குப் பின் மயிரை ஓராண்டுக்கு வளரவிடுவான். தாய் அல்லது தந்தைக்குக் கடமை செய்யும் மூத்த மகனும் அவ்வாறே ஓராண்டுக்கு மயிரை நீள வளரவிடுவான். மயிரை வளரவிடும் காலத்தில் முருங்கைக்காய், பால், மிளகாய், துவரை, அவரை, பப்படம் முதலிய உணவுகள் நீக்கப்படும். குளிக்கும்போதெல்லாமல் இவர்கள் கௌபீன மணிவதில்லை. கடைசிப் பெருமாள் அராபியாவுக் குச் சென்ற காலம் முதல் (கி.பி.825) மலையாள ஆண்டு கணக்கிடப்படும். ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ‘அதிக’ என்னும் ஒரு நாள் சேர்க்கப்படும். நாயர் நம்பூதிரிக்கு ஆறு அடிக்குள்ளும், அம்பட்டன் 12 அடிக் குள்ளும், தீயன் 36 அடிக்குள்ளும், மலையன் 64 அடிக்குள்ளும், புலையன் 96 அடிக்குள்ளும் வருதல் கூடாது. உயர்ந்த சாதியான் வீதி வழியே செல்லும் போது தாழ்ந்த சாதியான் விலகிச் செல்லும்படி சத்தமிடு வான். தாழ்ந்த சாதியான் போகும் போதுதான் செல்வதை உயர்ந்த சாதியாருக்கு அறிவித்தற்கும், உயர்ந்த சாதியாரின் சத்தத்தைக் கேட்டுத் தான் விலகி நிற்றற்கும் சத்தமிடுவான். இவர்கள் ஒரே கோத்திரத்தில் மணப்பதில்லை. மணமான பெண் கணவனின் கோத்திரத்தைச் சேர்ந்து விடுகிறாள். மணமாகாது இறந்த பெண்களுக்கு மணக்கிரியை செய்து தாலி கட்டப்படும். தோதர் சாதியினரும் இவ்வாறே செய்வர். மணத்தின் போது பெண்வீட்டார் மணமகன் வீட்டுக்குச் சென்று அவனை அழைத்து வருவார்கள். மணமகன் வைக்கான் குடையின் கீழ்ச் செல்வான். நாயர்ப் பெண்களும் நாயரும் நம்பூதிரிகளும் வாயிலில் நின்று பவனி வருவார்கள். மணமகன் துட்ட தேவதைகள் அணுகாதபடி கையில் கங்கணங் கட்டிக் கொண்டும், பதினாறு கணுவுள்ள மூங்கில், முகம் பார்க்கும் கண்ணாடி, அம்பு, நாலு சேலை, தாலி முதலியவற்றைக் கொண்டும் வருவான். வாயிலில் நம்பூதிரிப் பெண்களைப் போல் உடுத்த நாயர்ப் பெண்கள் பவனி வருபவர்களை எதிர்கொள்வார்கள்; மணமக னின் முகத்துக்கெதிராக ஆலத்தி காட்டுவார்கள். சடங்கின் முன் பகுதி “நந்தி முகம்” (புண்ணிய ஆக வசனம்) எனப்படும். மணமகளை மண வறைக்குக் கொண்டு செல்வ தன் முன் மணமகளின் தந்தை மணமகனின் காலைக் கழுவுவான். நாயர்ப் பெண்கள் ஆயிரந்திரி என்னும் ஆலத் தியைக் காட்டுவர். மணப்பந்தல் தூண்களுக்குச் சிவப்பு ஆடை சுற்றப் பட்டிருக்கும். மணமகனையும் மணமகளையும் மணவறைக்கு அழைத் துச் செல்லும்போது ஒருவரை ஒருவர் பாராதபடி நடுவில் வைக்கான் குடை பிடிக்கப்படும். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்குஞ் சடங்கு முக தரிசனம் எனப்படும். மணமகளும் மணமகனும் மூன்று நாட்கள் பிரிந்து தனியே இருப்பர். நாலாம் நாள் இருவரையும் படுக்கையறைக்குச் கொண்டு சென்று அறையின் கதவைத் தாழிட்டுவிட்டு குருக்கள் வெளியே நின்று சுலோகஞ் சொல்லுவர். ஐந்தாவது நாள் குளத்தில் நீராடியபின் இருவரும் மீன் பிடிப்பார்கள். மீன் பிடிக்கும் கிரியை, முன்பு மீன் பிடிப்பவர்களாகவிருந்தவர்களைப் பரசுராமர் பிராமணராக்கினார் என்னும் ஐதீகத்தைக் குறிக்கின்றதென்பர். நம்பூதிரிகளில் வியபிசார நடத்தையுள்ள பெண்கள் கடுமையாகத் தண் டிக்கப்படுவார்கள். வியபிசாரி என்று சந்தேகிக்கப்பட்டவள் ஐஞ்சாம் புரம் அல்லது பஞ்சோலைப்புரம் என்னும் இடத்தில் விடப்படுவாள். அப்பொழுது அகக்கோயின்மார், புறக்கோயின்மார் என்போர் வந்திருப் பார்கள். அகக்கோயின்மார் ஒழுக்கத்தைப் பாதுகாப்போர். புறக்கோயின் மார் அரசன் சார்பில் வந்திருப்போர். விசாரணைத் தலைவன் ஸ்மார்த் தன் எனப்படுவன். ஸ்மார்த்தனால் செய்யப்படும் விசாரணை ஸ்மார்த்த விசாரணை எனப்படும். குற்றச்சாட்டு உறுதியானால் பெண்ணின் கிட்டிய உறவினன் அவளுக்குச் செய்ய வேண்டிய அந்தியக் கிரியை களைச் செய்வான். சமயசம்பந்தமாகப் பதினெட்டுச் சங்கங்கள் உண்டு. அவற்றின் தலைவன் வாக்கிய விருத்தி எனப்படுவான். அவன் ஓத்து நம்பூதிரியாக விருத்தல் வேண்டும். அவனுக்கு அடுத்தபடியிலுள்ளவன் பாஸ்கரன். இவன் சாஸ்திரிகளுக்கு (அத்திரப் பயிற்சிக்கு)க் குரு. கதைகளி என்பது மலையாளத்து நாடகம். இவர்கள் அசயாகம் என்னும் ஆட்டுக்கடா யாகம் செய்து யாகத்தில் கொன்ற ஆட்டின் இறைச்சியை உண்பர். சிறுவர் பூணூலணிவர். முற்காலப் பெண்களும் பூணூலணிந்தார்கள். பூணூல் கிருஷ்ணமிருகா என்னும் மான் தோலினால் இடப்படும். நரிக்கால்: நரி அங்கம்மாவின் வாகனம். இப் பெயர் நரிக்கொம்பு செய்யும் குருவிக்காரனுக்கும் வழங்கும். நாகர்: கஞ்சம், விசாகப்பட்டினப் பக்கங்களில் வாழும் பலர் தமது குலம் நாக வமிசமென்பர். குர்னியர், தொரியர் என்போர் திருமணக் காலத்தில் பாம்புகளுறையும் எறும்புப் புற்றுகளை வணங்குவர். பள்ளிகளில் ஒரு பிரிவினர் நாகபடம் என்னும் பாம்பின் தலைபோன்ற ஒரு வகை அணியை அணிவர். அவர்கள் நாகர் எனப்படுவர். நாகவாசுலு: விசாகப்பட்டினப் பக்கங்களில் உழவுத்தொழில் செய்யும் மக்கள் இப் பெயர் பெறுவர். விவாகத்தை விரும்பாதிருக்கும் மகளிர் வியபிசாரத்தால் பொருளீட்டுவர்; வீடுகளில் நடனமாடுவர். இவர்கள் நாயுடு சாதிக்குத் தாழ்ந்தோர். நாஞ்சில் நாட்டு வேளாளர்: நாஞ்சில் நாட்டு வேளாளர் என்னும் ஒரு பிரிவினர் திருவிதாங்கூர் முழுமையிலும் அங்குமிங்கும் காணப்படுகின்றனர். இவர்களின் முக்கிய இடம் தோவலா (Tovala). இவர்களின் பழக்கவழக்கங்கள் வேளாளர் பழக்க வழக்கங்களில் வேறானவை. இவர்கள் தங்கள் பெயர்களுடன் கணக்குப்பிள்ளை என்னும் பட்டப் பெயரைச் சேர்த்துக் கொள்வர். கி.பி. 825இல் சீரிய கிறித்தவருக்கு அளிக்கப்பட்ட நன்கொடைப் பட்டையத்தில் ஒரு தச்ச குடும்பமும் நான்கு வேளாளக் குடும்பங்களும் கடற்கரையில் மரங்களை வைத்து உண்டாக்குதற்குப் பொறுப்புடையன என்று கூறப்பட்டுள்ளது. வேளாளர் காராளர் எனப்பட்டுள்ளார்கள். பாண்டிய அரசர் இந் நாட்டின் சில பகுதிகளை ஆண்ட காலத்து இவ் வேளாளர் வந்து குடி யேறியிருத்தல் கூடும். பலர் நாஞ்சில் நாட்டு வேளாளர் என்னும் பெயரை விட்டு நாயர் என்னும் பெயரை வைத்துக்கொண்டனர். இவர்களின் முதன்மையுடைய தெய்வங்கள் மாடன், இசக்கி, இனன் முதலியன. நாஞ்சில் நாட்டு வேளாளரின் கிரியை சம்பந்தமாகப் பாடப்படும் பாட்டு வில்லடிச்சான் பாட்டு எனப்படும். அவர்களின் விழாக்களிற் சிறந்தது அம்மன்கொடை என்பது. சித்திரை மாதத்து அமாவாசியன்று சித்திர புத்திரன் கதை கோயில்களில் படிக்கப்படும். இவர்களிற் பலர் ‘காரியஸ் தன்’ முதல்பிடி (பொக்கிஷக்காரன்) கணக்கன் முதலிய அலுவல்களில் அமர்ந்துள்ளார்கள். பெண்கள் பருவமடைந்தபின் மணப்பர். தாய் மாமன் மகள். சிறியதாய் மகள் சிறந்த மணமகளிராகக் கொள்ளப்படுவர். மணமகனுக்குக் கொடுக்கும் பரிசுகளில் முண்டு, இரும்பு எழுத்தாணி, கத்தி முதலியன அடங்கும். நாஞ்சில் நாட்டு வேளாளர் நாயர்ப் பெண் களிடையே சம்பந்தங் கொள்வர். கணவன் விடுமுறி எழுதிக் கொடுத்துக் கலியாண நீக்கம் செய்து கொள்ளலாம். ஆண் பிள்ளைகளுக்குத் தந்தை தேடிய சொத்தில் நாலிலொன்றும், தந்தை வழி வரும் சொத்தில நாலி லொன்றும் சேரும். அது உகந்துதாமா எனப்படும். கலியாணம் தள்ளப் பட்ட பெண்ணுக்குக் கணவனிடம் சீவிய காலம் வரையும் வாழ்க்கைச் செலவு பெற உரிமையுண்டு. இதற்காக அவள் உரிமை கோரும் சொத்து நங்கு (கை) தாமா எனப்படும். (நங்கு) - பெண். நாடான்: சாணான். நாட்டுக் கோட்டைச் செட்டி: நாட்டுக்கோட்டைச் செட்டிமார் பெரிதும் வட்டிக்குப் பணங் கொடுத்து வாங்குவர். இவ் வகையில் இவர்கள் தென்னிந்திய யூதர்கள் எனப்படுவர். இவர்களின் தத்துப் பிள்ளை மஞ்சள் நீர்ப் பிள்ளை எனப்படுவர். செட்டிகள் தலைமயிரை மழித்துக் கொள்வர். இப்பொழுது இவ் வழக்கம் பெரும்பாலும் நின்று போய்விட்டது. பெண்களும், ஆண்களும் காதைத் துளையிட்டுக்கொள் வர். சிறுமியர் மணிகளும் சிப்பிகளும் கோத்த மாலைகளை அணிவர். இவர்களுக்குக் கோயில் வாயில் மறியல், மடத்துவாயில் மறியல் என இரண்டு பஞ்சாயத்துக்களுண்டு. பிணச்சடங்குக்கு இடும்பந்தல் கொட் டிற் பந்தல் எனப்படும். மணத்துக்கு இடும்பந்தல் கொட்டகை அல்லது காவனம் எனப்படும். நாயக்: நாய்கா - தலைவன். இவர்கள் விசயநகர அரசர் சில பிராமணக் குடும்பங்களுக்கும் இப் பெயருண்டு. முற்காலத்தில் சென்னை நகரில் ‘போலிஸ்’ மேல் அதிகாரி வேலை பெத்த நாயக்கர் களுக்குக் கொடுக்கப்பட்டது. தென் கன்னடத்தில் தேவடியாள் நாய்கனி எனப்படுவாள். நாயர்: நாயர் என்போர் மலையாளத்தில் காணப்படும் ஒரு சாதியினர். முற்கால நாயர் உழவுத்தொழில் செய்பவர்களாகவும், போர் வீரர்களாகவும் இருந்தார்கள். இப்பொழுது வணிகர், கைத்தொழில்கள் புரிவோர், எண்ணெய் வாணிகர், பல்லக்குச் சுமப்போர், அம்பட்டர், வண்ணார் முதலிய பல பிரிவினர் நாயர் வகுப்பிற் காணப்படுகின்றனர். கன்னடம் முதலிய இடங்களிலிருந்து வந்து மலையாளத்திற் குடியேறிய மக்கள் பலர் நாயரின் பழக்க வழக்கங்களைப் பின்பற்றியுள்ளார்கள். சில காலங்களில் அரசர் தாழ்ந்த வகுப்பினர் சிலரை நாயர்களாக்கியுள்ளார் கள். கி.பி. 9ஆம் நூற்றாண்டில் மகமதிய பிரயாணி ஒருவன் எழுதியிருப் பது வருமாறு: அரசன் பட்டத்துக்கு வருமுன் ஒருவகைக் கிரியை செய் யப்படுகின்றது. அரசனுக்கு எதிரில் ஓர் அளவு சோறு படைக்கப்படுகின் றது. நானூறு அல்லது ஐந்நூறு பேர் வந்து அரசனுடைய கையிலிருந்து சிறிது சோறு வாங்கி உண்கிறார்கள். தான் முதலிற் சோற்றை உண்டபின் மற்றவர்களுக்குக் கொடுக்கிறான். அரசன் இறக்கும் போது அல்லது கொல்லப்பட்ட போது தாம் உடன்கட்டை ஏறுவதாக அவர்கள் சத்தியஞ் செய்கிறார்கள். பூர்ச்சாஸ் (Purchas) என்பவன் எழுதியிருப்பது வருமாறு: கொச்சி யரசனிடம் பலர் இருக்கிறார்கள். அவர்கள் அமொச்சி எனப் படுவர். சிலர் நாயர் எனப்படுவர். இவர்கள் தமது அரசனுக்காக உயிரை விட ஆயத்தமாகவிருக்கிறார்கள். மலையாள மொழியில் இவர்கள் சாவார் எனப்படுவார்கள். குலோத்துங்க சோழனின் கல்வெட்டில் (கி.பி. 1083) அவன் குடநாட்டை வென்றபோது நாயரின் முன்னோராகிய வீரர் இறுதி வரையில் போர் செய்து மடிந்தார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. 16ம் நூற்றாண்டில் பார்போசா (Barbosa) என்பவர் எழுதியிருப்பது வருமாறு: இவர்களுக்குப் போர் செய்வதையன்றி வேறு வேலையில்லை. இவர்கள் எப்பொழுதும் வாள், வில், அம்பு, கேடயம், ஈட்டி முதலியவை களைக் கொண்டு செல்வர். இவர்களில் சிலர் அரசருடனும் சிலர் அரசனின் உறவினராகிய பிரபுக்களோடு மிருப்பார்கள். இவர்கள் ஏழு வயதிலேயே ஆயுதப் பயிற்சி பெறுவர். 18ஆம் நூற்றாண்டில் ஹமில்டன் எழுதியிருப்பது வருமாறு: சமரின் என்னும் மலையாள அரசன் 12 ஆண்டுகள் மாத்திரம் ஆட்சி புரிவது பழங்கால முறை. 12வது ஆண்டின் இறுதியில் அரசன் பொது வெளியில் கூடாரமடித்துக் விழாக் கொண் டாடுவான். அப்பொழுது அவனைத் காத்து நிற்கும் நாற்பதாயிரம் அல்லது ஐம்ப தாயிரம் வீரரைக் கடந்து வந்து அவனைக் கொல்பவன் பட்டத்துக்கு வருவான். 1645இல் இவ் வகை விழா ஒன்று நடைபெற்றது. சொனரத் (Sonnerat) என்பவர் எழுதியிருப்பது வருமாறு: நாயர் போர் வீரர் சாதியினர். இவர்களுக்குத் தமது சாதிப்பெண்களை அனுப விக்கும் உரிமையுண்டு. அவர்கள் வீதியிற் செல்லும்போது பறையர் விலகிச் செல்லும்படி சத்தமிட்டுக் கொண்டு செல்கின்றனர். பறையன் ஒருவன் அவர்களைத் தீண்டினால் அவர்கள் அவனைக் கொன்றுவிட லாம். ஆனால் அவர்களைத் தீண்டுவதற்குப் பறையருக்கு ஆண்டிலொரு முறை உரிமையுண்டு. அந் நாளில் அவர்கள் நாயரில் எவனையாவது தொட்டால் அவன் பறையனுக்கு அடிமையாக வேண்டும். ஆகவே அந் நாளில் நாயர்கள் முன்னெச்சரிக்கையாக விருப்பார்கள். நாயர் என்பது நாயன் என்பதிலிருந்து பிறந்த தென்று கருதப்படுகின்றது. அரசனுக்குப் பொருள் கொடுத்து கணக்கு, பிள்ளை முதலிய பட்டங்களும் பெறப்பட் டன. பட்டமளிக்கும் சடங்கு ‘திருமுக மளிக்குக’ எனப்படும். திருவிதாங் கூரில் தம்பி என்னும் ஒரு பட்டமும் உண்டு. இது திருவிதாங்கூர் அரசனின் நாயர்ப் புதல்வனுக்கு வழங்கப்படுவது. தம்பிமார் தலைப் பாகையின்றிப் பல்லக்கில் அரசன் முன் செல்லலாம். இக் குடும்பங்களி லிருந்து அரசனின் மனைவி தெரியப்படு வர். நாயருக்குக் காத்த என்னும் பட்டமும் உண்டு. மத்திய காலத்தில் செம்படகராமன் என்பது பட்டத் துக்கு அடையாளமான பெயராக வழங்கப்பட்டது. கி.பி. 1500இல் பார்போசா (Barbosa) எழுதியிருப்பது வருமாறு: அரசனுக்கு 1000 பரிவாரங்கள் இருக்கின்றனர். அவர்களுக்குச் சம்பளம் உண்டு. அவர்கள் அரண்மனையைப் பெருக்குதல் முதல் எல்லாப் பணிவிடைகளையும் செய்கின்றார்கள். அவர்களின் மனைவி பணப் பிள்ளை அம்மா எனப் படுவாள். கைமால் என்னும் பட்டம் சிலருக்கு வழங்கும். இப் பட்டம் அதிகாரத்தைக் குறிப்பது. உன்னிதன், வலியதன் என்னும் பட்டங்கள் திருவிதாங்கூரிலுள்ள சில குடும்பங்களுக்கு வழங்குகின்றன. மேனன் என்னும் பட்டப்பெயர் மேல் என்னும் அடி யாகப் பிறந்தது. (மேலவன் - மேனவன் - மேனன்) சிலர் பணம் கொடுத்து இப் பட்டத்தைப் பெறுகி றார்கள். மேனன் பட்டம் அளிக்கப்படும் போது பனை யோலைச் சட்டமும் எழுத்தாணியும் அளித்தல் வழக்கம். இன்றும் பிரிட்டிஷ் மலையாளத்தில் ஒவ்வொரு அம்சத்திலும் அல்லது கிராமத்திலும் கணக் கெழுதும் மேனன் உண்டு. மேனோக்கி என்னும் பட்டம் கண்காணிப் பவன் என்னும் பொருள் தருவது. இவர்கள் பெரும்பாலும் கோயிற் கணக்குகளை மேற்பார்த்தார்கள். நாயர்ப் பெண் பூப்படைந்தால் மூன்று நாள் தீட்டுக் காப்பாள். நாயர்ப் பெண்களுக்கு பூப்படையுமுன் தாலிகட்டுக் கலியாணம் நடைபெறும். தாலிக்கட்டுக் கலியாணமென்பது தேவதாசிகளுக்குத் தாலிகட்டுவது போன்றது. அரச குடும்பப் பெண்களுக்கு நெடுங்காடி என்பவன் நல்ல வேளையில் தாலி கட்டுவான். அவனுக்கு அதற்காகக் கிடைக்கும் கூலி உண்டு. மற்ற வகுப்பினருக்கு இருவரின் சாதகப் பொருத்தமும் பார்க்கப்படுகிறது. பொருத்தமுள்ள பையன் மணவாளன் எனப்படுவான். மணவாளன் தனது பரிவாரங்களுடன் தனது வீட்டி னின்றும் புறப்படுவான். பெண் வீட்டினின்றும் துவக்கப் புறப்பாடு நடக்கும். இரு பகுதியினரும் வழியில் சந்தித்து பெண் வீட்டுக்குச் செல்வர். பெண்ணின் சகோதரர் மணவாளனின் கால்களைக் கழுவு வான். பின்னர் அவன் பெண்ணை அழைத்துவந்து மணவாளனின் இடப்புறத்தில் இருத்துவான். மணவாளன் பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவான். மூன்று நாட்களுக்கு ஒருவகைத் தீட்டுக் காக்கப்படும். நாலாவது நாள் இருவரும் ஆற்றில் முழுகுவார்கள். வீட்டுக்குத் திரும்பி வரும் போது கதவுகள் அடைக்கப்பட்டிருக்கும். மணவாளன் கதவைத் தட்டி அதனைத் திறக்கும்படி செய்வான். பின் பெண்ணின் தாயும் மற்றைய பெண்களும் இருவருக்குமிடையிலிருந்து உண்பார்கள். பின் இருவரும் பந்தலுக்குச் செல்வார்கள். பின் ஆடையை இரண்டாகக் கிழித்து ஆளுக்கு ஒரு துண்டு கொடுக்கப்படும். ஆடையைக் கிழிப்பது கலியாணம் தள்ளுவதைக் குறிக்கும். ஒரு மணவாளன் எத்தனை பெண் களுக்கும் தாலி கட்டலாம். பெரும்பாலும் மணவாளன் பிராமணனாக இருப்பான். இவன் தான் செய்யும் கடமைகளுக்குக் கூலி பெற்றுச் செல்வான். பெண் விரும்பினால் நாலாவது நாள் தாலியைக் கழற்றி விடலாம். சில இடங்களில் தாலி கட்டியவனே சம்பந்தத்துக்கு உரிமை யுடையவன் என்று கருதப்படுகின்றது. தாலி கட்டும்போது அம்மாச் சாம் பாட்டு என்னும் ஒருவகைப் பாட்டு பாடப்படும். தாலி மின்னு எனப்படும். தென் மேற்கு மூலையில் கன்னிக்கால் நடப்படும். கலியாணப் பந்தல் நெற்கதிர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அதற்குக் கதிர் மண்டபமென்பது பெயர். அது முல்லைப்பந்தல் எனப்படுவதுண்டு. மணநாளுக்கு முதல் நாள் நடத்தப்படும் விருந்து அயணி ஊன் எனப்படும். பிராமணத்தி பெண்ணின் இடது கையில் காப்புக் கட்டி சுபத்திரை வேலி என்னும் பாட்டுப் பாடுவாள். கலியாணக் காலத்தில் கதைகளி, ஓட்டம் துள்ளல் முதலியன நடைபெறும். பிராயமான பெண்ணைக் கன்னி அழிப்பது தீட்டான செயல் எனக் கருதப்பட்டது. ஆகவே பூப்படைந்த பெண்களைக் கன்னி யழிக்கும்படி பெண்ணின் தாய்மார் இளைஞரை இரந்து வேண்டுவர். கிடக்கிறதென்பது சம்பந்தத்துக்கு மற்றொரு பெயர். பெண்கள் பூப்படைவது திரண்டுகுளி எனப்படும். நாயர்ப் பெண்கள் கருவடைந்து ஏழாவது மாதத்தில் புளிக்குடி என்னும் சடங்கு புரிவர். வீட்டின் வடக்குச் சிறகு வடக்கிணி என்றும் தென்குச் சிறகு தெற்கிணி எனவும் படும். நடுவே உள்ள முற்றம் நடுமுற்றம் எனப்படும். நாட்டுக்கத்தி பீசான் கத்தி எனவும் தூக்கும் விளக்கு தூக்குவிளக்கெனவும் படும். ஆண் குழந்தை பிறந்தால் நிலத்தில் தென்னோலையால் அடிப்பார்கள். இருபத் தேழாவது நாள் குழந்தைக்குப் பால் பருக்கிப் பெயரிடப்படும். சோறூட் டும் சடங்கு சோறூண் எனப்படும். நாழியில் அரிசி நிரப்பி வைத்தல் நிறைச்சுவைப்பு எனப்படும். புரோகிதன் சாந்திக்காரன் எனவும் உபாத்தி யாயன் எனவும் எழுத்தச்சன் எனவும் படுவான். பால் குடிக்குப் பின் தட்டானை அழைத்து வந்து பொன் கம்பியினால் காது குத்தப்படும். அப்பொழுது நில விளக்குக் கொளுத்தி வைக்கப்படும். மலையாள வீடு நாற்புறம் எனப்படும். மத்திய காலத்தில் வாசலில் பதிபுரம் என்னும் காவற் கொட்டில் இருந்தது. இப்பொழுது அவ் விடத்தில் வேயப்பட்ட கொட்டிலுண்டு. நாயர்ப் பெண்கள் மார்பை மறைப்பதில்லை. மார்பை மறைப்பது தாழ்ந்த சாதிக்கு அறிகுறி, 1740இல் மலையாளத்துக்கு வந்த எட்வர்ட் ஈவ்ஸ் என்பவர், “சாதாரண வயல் வேலை செய்பவர்களின் பெண்கள் முதல் அரச குடும்பப் பெண்கள் வரையும் அரைக்குமேல் உடையில்லாதவர்களாக விருக்கின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார். நாயர்ப் பெண்கள் நாக படம் என்னும் ஒரு வகை மாலையையணிவர். மூக்கில் மூக்குத்தி இடுவர். அதில் தூக்கப்படுவது நத்து எனப்படும். அரை யில் பொன் வெள்ளி ஆபரணங்களணிவர். ஒட்டியாணம் கச்சாபுரம் எனப்படும். மணமாகாது இறந்த பெண்களின் மரணம் கழிச்சாவு, கன்னிச் சாவு எனப்படும். பெண்கள் கண்ணுக்கு மை தீட்டுவர். ஊஞ்சல் உழிஞ்சால் எனப்படும். நாயாடி: மலையாளத்தில் மிகத் தாழ்ந்த சாதியினர் நாயாடிக ளாவர். நீர்நாயின் இறைச்சியை உண்பதால் அவர்களுக்கு இப் பெயர் உண்டாயிற்று. முந்நூறு யாருக்குள் நாயாடி வந்தால் பிராமணன் குளித்துப் பூணூல் மாற்றிக் கொள்ளவேண்டும். பெண்கள் நாயடிச்சிகள் எனப்படுவார்கள். சிறுவர் மொலாயர் என்றும் சிறுமியர் மனிச்சியர் எனவும் படுவர். இவர்களுக்கு மக்கள் தாயம் உண்டு. இவர்கள் தேன், மட்டிப்பால் முதலியன எடுப்பர். ஒவ்வொரு நாயாடியும் ஓணப் பெரு நாளுக்கு நம்பூதிரி இல்லத்துக்கு எட்டு யாருள்ள (கெசம்) நாலுகயிறும் நாயர் வீட்டுக்கு இரண்டு கயிறும் கொடுக்க வேண்டும். அவற்றுக்குக் கூலியாக நாயாடி நெல் பெறுவான். கயிறுகள் ஆடு மாடுகள் கட்டவும் தண்ணீர் இறைக்கவும் உதவும். ஆண் குழந்தைக்குத் தந்தையின் தகப்பன் பெயர் இடப்படும். மணப்பெண் தனியாக இடப்பட்ட ஒரு குடிசையுள் இருப்பாள். பருவமடைந்த இளைஞர் குடிசையைச் சுற்றி நின்று கூத் தாடுவர். அவர்கள் எல்லோரும் கையில் வைத்திருக்கும் தடியைக் கூரை வழியாகக் குடிசைக்குள் போடுவர். பெண் எந்தத் தடியை எடுக்கிறாளோ அத் தடிக்குரியவனே அவள் கணவனானவன். இவர்களின் கடவுளர் மல்லர், மலைவன், பறக்குட்டி முதலியோராவர். இவர்களின் சோதிடர் பறைய வகுப்பினராவர். ஒருவனுக்குக் கண் திட்டி அல்லது பேய்க் குறைபாடு இருந்தால் உப்பு, மிளகாய், புளி, எண்ணெய், கடுகு, தேங்காய், காசு என்பவைகளை ஒரு ஏனத்திலிட்டு அவனுடைய தலையை மூன்று முறை சுற்றிய பின் அவை நாயாடிக்குக் கொடுக்கப்படும். சோனகராக மாறிய நாயாடிகள் தொப்பியிட்ட நாயாடி எனப்படுவர். நாலில்லக்காரர்: முக்குவர். நால்கி(Nalke): இவர்கள் கன்னடத்தில் வாழும் கூடைமுடையும் குடை செய்யும் மக்கள். இவர்கள் ஹோலியர் அல்லது பறையர் எனப்படுவர். பேய்க் கூத்தாடுவர். பெண்கள் பூப்படைந்தபின் மண முடிப்பர். இவர்களின் நாட்டாண்மைக்காரன் குறிக்காரன் எனப்படுவன். அவன் புரோகிதனாக விருந்து மணங்களை நடத்துவான். இறந்தவர் களைச் சுட்ட அல்லது புதைத்த இடத்தில் மண்மேடு செய்யப்படு கின்றது. பஞ்சமர்: ஐந்தாவது குலத்தவரும் பறையரும் அவர்கள் போன்ற சாதியினரும் பஞ்சமரெனப்படுவர். படகர் அல்லது வடுகர்: இவர்கள் மைசூரிலிருந்து சென்று நீலகிரியிற் குடியேறியவர்கள். இவர்கள் கன்னடச் சிதைவான மொழி பேசுவர். பட்டணவன்: கிழக்குக் கடற்கரையில் கிருட்டிணா முதல் தஞ்சாவூர் வரையிலுள்ள மீன் பிடிகாரர் இப்பெயர் பெறுவர். கரையார் என்னும் பெயரும் இவர்களுக்கு வழங்கும். சில செம்படவர் ஆரியர், ஐயாயிரத் தலைவர், ஆரிய நாட்டுச் செட்டி, அச்சு வெள்ளாளன், கரைத்துறை வெள்ளாளன், வருணகுல வெள்ளாளன், குருகுலவமிசம் முதலியவற்றைத் தமது குலப் பெயர்களாக வழங்குவர். இவர்கள் பெரும்பாலும் தம்மைப் பிள்ளை என வழங்குகின்றனர். பட்டணவர் செம்படவருக்குக் கீழ்ப் பட்டவரெனக் கருதப்படுவர். இவர்களின் சிறந்த தெய்வங்கள் குட்டி ஆண்டவன், குட்டி ஆண்டவனின் பரிவாரம், செம்பு வீரப்பன், மீனோடும் பிள்ளை என்பன. தஞ்சாவூரில் இவர்கள் கடவுள் பாவாடைராயன். இவர்கள் இக் கடவுளையும் வலையையும் வணங்குவர். மணற்கும்பங்கள் அவர்கள் கடவுளரைக் குறிப்பனவாகும். தலைமைக் காரன் எசமானன் எனப்படுவான். இவனுக்குத் தண்டக்காரன் என்னும் துணைவன் உண்டு. இவர்களின் இழவு சொல்லிச் செல்பவன் சலவாதி எனப்படுவன். பட்டுநூற்காரன்: இவர்கள் பிறநாடுகளிலிருந்து வந்து தமிழ் நாட்டில் தங்கிய நெசவாளர். இவர்களின் ஆதி இடம் குசராத்து. குமராகுப்தாவின் பட்டையத்தில் (கி.பி. 473) இவர்கள் ‘பட்டவாயாக’ எனக் கூறப்பட்டுள்ளார்கள். இது பட்டுநூற்காரர் என்பதன் சமக்கிருத மொழி பெயர்ப்பு. இராணி மங்கம்மாளின் பட்டையத்திலும் இவர்கள் பட்டு நூற்காரர் எனக் குறிக்கப்பட்டுள்ளார்கள். பிற்காலத்தில் இவர்கள் தம்மைச் சௌராட்டிரர் எனக் கூறிக்கொண்டனர். இவர்கள் தம்மைப் பிராமணர் எனவும் கூறிக்கொள்வர். குமாரகுப்தனின் சாசனத்தில் இவர்கள் போர் வீரரும் நெசவாளருமெனக் கூறப்பட்டுள்ளார்கள். பட்டுநூற்காரர் தெலுங்கு மொழியும் பேசுவர். இதனால் இவர்கள் நீண்ட காலம் தெலுங்கு நாட்டிலும் வாழ்ந்தார்கள் எனத் தெரிகிறது. இவர்கள் பிராமணரைப் போல நூலணிவர். பெண்கள் பூப்படையுமுன் மண முடிப்பர். இவர்களின் மணக் கிரியை பெரிதும் பிராமணருடையது போன்றது. பெண்ணின் கழுத்தில் கட்டப்படும் தாலி பொட்டு எனப் படும். நாலாவது நாள் நாகவல்லி என்னும் சடங்கு நடைபெறும். பிறந்து பதினோராவது நாள் பிள்ளைக்குப் பெயரிடப்படும். எட்டாவது பிள்ளை ஆணாக விருந்தால் கிருஷ்ணா என்னும் பெயரிடப்படும். இது கிருஷ்ணன் வசுதேவருக்கு எட்டாவது பிள்ளையாகப் பிறந்தாரென்னும் ஐதீகத்தைப் பற்றியது. இவர்களுக்கு மரணத்தீட்டு பத்துநாள். விதவைகள் தலை மொட்டை யடிப்பதில்லை; பொட்டைக் கழற்றிவிடுவார்கள். பட்டுநூற்காரரிடையே மற்றவர்கள் விளங்கமாட்டாத வியாபார மொழி உண்டு. பணிக்கர்: பணிக்கன் என்னும் பெயர் அம்பட்டன், கம்மாளன், மாறன், நாயர், பாணன், பறையன் முதலியவர்களுக்கிடையில் வழங்கும். மதுரை, திருநெல்வேலிப் பகுதிகளில் பணிக்கர் சிலர் காணப்படுகின் றனர். அவர்களிற் சிலர் அம்பட்டரும் சாணாருமாவர். சிலர் நெசவுத் தொழில் புரிவர். இப்பொழுது பணிக்கர் தம்மை இல்லம் வேளாளர் என்பர். அவர்கள் தமது பெயரைப் பிள்ளை எனத் திருத்தி வழங்கு கின்றனர். பணிசவன்: பணிசவன் என்பது பணி செய்கின்றவன் என்பதன் திரிபு. இவர்கள் இழவு அறிவிப்பவர்களாவர். சாரை அல்லது எக்காளம் ஊதுவர். இவர்களில் வலங்கை, இடங்கை என இருவகைப் பிரிவுக ளுண்டு. பணிசவன் சங்கு ஊதிக்கொண்டு பிணத்துக்குப் பின்னால் செல்வான். இறந்தவர் கண்ணியமுடையவரானால் கொம்பு ஊதுவான். மறவர்களுக்குள் அம்பட்டன் இழவு அறிவிக்கச் செல்வான். தஞ்சாவூரி லும் தென் ஆர்க்காட்டிலும் பணிசவர்களின் வேலையைச் செய்வோர் நோக்கான் எனப்படுவர். திருநெல்வேலிப் பாசவரின் கோயில்களில் நாகசுரம் வாசித்தல், தேவடியாட்களுக்கு நாட்டியம் பழக்குதல் முதலிய வேலைகளையும் இவர்கள் செய்வர். சிலர் அச்சு வேலையும் செய்வர். அச்சு வேலையென்பது நெசவாளர் பாவோடும் அச்சுச் செய்வது. பணியன்: இவர்கள் மலையாளத்திலும் நீலகிரிப் பகுதியிலும் காணப்படுவர். இவர்கள் காணியாளரின் அடிமைகளாவர். இவர்கள் உயர்ந்த இடங்களில் கூளி என்னும் தெய்வத்தை வைத்து வழிபடுவர். அவ் வகைத் திடர் குளித்தரை எனப்படும். இவர்களின் சிறந்த பொழுது போக்கு ஊஞ்சலாடுதல். பணியரிற் சிலர் தமது மணிக்கட்டுகளிலும் கழுத்திலும் மந்திர மோதிய நூலைக் கட்டியிருப்பர். பண்டாரம்: இவர்கள் பிராமணரல்லாத குருமார். திருத்தணி கையில் பண்டாரங்கள் பெரிதுங் காணப்படுவர். சைவ மடங்களின் தலைவரும் பண்டாரங்கள் எனப்படுவர். பண்டாரங்கள் இலிங்கந்தரிப் பர். இவர்களிற் சிலர் கோயில்களில் மாலை கட்டுதல், பண் ஓதுதல், முதலிய பணிகள் செய்வர். அவர்கள் ஓதுவார், மெய்காவல் என்னும் பெயர்களும் பெறுவர். இவர்களில் இல்லறத்தார், துறவிகள் என இரு பிரிவினருண்டு. மடங்களுக்குத் தலைவராயிருக்கும் சன்னதிகள் துறவி வகுப்பினராவர். மலைகளிலும் குகைகளிலும் மரப்பொந்துகளிலும் வாழும் ஒருவகைக் காட்டுச் சாதியினரும் பண்டாரங்கள் எனப்படுவர். அவர்கள் மலையாளத்தை அடுத்த மலைகளிற் காணப்படுகின்றனர். பண்டிதன்: மேற்கோட்டு நியாயாதிபதிக்குத் துணையாகப் பண்டித னிருப்பான். 1862இல் இப் பதவி ஒழிக்கப்பட்டது. பண்டிதன் அம்பட்டனின் பட்டப் பெயருமாகும். தமிழ்நாட்டில் மத்துவப் பிராமணரும் பண்டித ரெனப்படுவர். இவர்களிற் பலர் கோடுகளிற் பண்டிதராக விருந்தனர். ஓரிய சாதியினரின் சோதிடரும் பண்டித ரெனப்படுவர். பதினெட்டான்: இது மலையாளத்தில் தச்சருக்கு வழங்கும் பெயர். பத்திராளு: இவர்கள் தெலுங்கு பேசும் வாத்தியகாரர். இவர்கள் ஆடுவோர் பாடுவோராவர். பரவன்: பரவர் தமது ஆதியிடம் அயோத்தி எனக் கருதுகிறார்கள். இவர்கள் தென்னிந்தியக் கடலோரங்களிலும் இலங்கையிலும் காணப் படுகின்றனர். இவர்களின் முக்கிய இடம் தூத்துக்குடி. தென்கிழக்குக் கரைகளில் வாழும் பரவர் பெரும்பாலும் கிறித்துவ கத்தோலிக்க மதத் தினராவர். இவர்களுக்குப் போர்ச்சுக்கேயரின் பெயர்கள் வழங்கும். இவர்கள் பிரான்சிஸ் சேவியரால் கிறித்துவ மதத்துக்குத் திருப்பப்பட்ட வர்களாவர். இவர்களின் உரிமைவழி மக்கள் தாயம். மத்திய திருவிதாங் கூரில் இவர்கள் மரமேறுவர்; மீன் பிடிப்பர்; கிறித்துவருக்கும் தாழ்த்தப் பட்டோருக்கும் துணி வெளுப்பர். பெண்கள் சிப்பியைச் சுட்டு சுண்ணாம்பு செய்வர். பரிவாரம்: மறவர் அகம்படியாருள் ஒரு பிரிவினர். இவர்களில் சின்ன ஊழியம், பெரிய ஊழியம் என இரு பிரிவுகள் உண்டு. இவர்களுள் கணவனின் உடன்பிறந்தாள் பெண்ணுக்குத் தாலிகட்டுவாள். சொந்தச் சாதியாருடன் அல்லது சமீன்தாருடன் பெண்கள் சேர்க்கை வைத் திருப்பது குற்றமாகக் கருதப்படுவதில்லை. சமீன்தார்களுக்கு அவ்வாறு பிறக்கும் பிள்ளைகளைக் கணவர் ஏற்றுக்கொள்வர். அவ் வகைப் பிள்ளைகள் பெரிய கம்களத்தார் எனப்படுவர். பரதேசி: இவர்கள் ஒருவகைப் பிச்சைக்காரர். இப் பெயர் கொச்சி வெள்ளையூதருக்கும் பெயராக வழங்கும். பலிசக்கொல்லன்: மலையாளத்தில கேடகம் செய்யும் கொல்லர் இப் பெயர் பெறுவர். பலியன் அல்லது பொலியன்: இவர்கள் பழநிமலையில் வாழும் குடிகள். இவர்கள் ஒருவகைத் தமிழ் பேசுவர். பெரிதும் காடுகளிலும் மலைகளிலும் அலைந்து திரிவர். பலர் மூலிகைகளைக் கொண்டு நோய்களை மாற்றுவர். பாம்புவிடத்தைப் போக்குதற்கு நறுவல்லி வேரை வைத்திருப்பர். விலங்குகளைப் பொறிக் கிடங்குகளிலும் அடார்களிலும் அகப்படுத்துவர். கங்கக் கொடி இலையைக் கசக்கித் தண்ணீரில் எறிவார்கள். உடனே மீன்கள் தண்ணீரில் மிதக்கும். இவர்களின் கடவுள் மாயாண்டி. பல்லவராயன்: இது பல்லவர் தலைவனுக்கு வழங்கும் பெயர். ஓச்சரில் ஒரு பிரிவினருக்கும் பல்லவராயன் என்னும் பெயர் வழங்கும். பள்ளன்: இவர்கள் உழவுத் தொழில் புரியும் வேலையாட்கள். இவர்கள் முற்காலத்தில் வெள்ளாளருக்கு அடிமைகளாக இருந்தார்கள். மதுரைப் பள்ளரின் அதிகாரி குடும்பன் எனப்படுவான். கோயமுத்தூரில் பள்ளரின் அதிகாரி பட்டக்காரன் எனப்படுவான். அவனுக்குத் துணை யாக வுள்ளவன் ஓடும் பிள்ளை எனப்படுவான். திருச்சிராப்பள்ளியில் பள்ளரின் அதிகாரி நாட்டுமூப்பன் எனப்படுவன். இவர்களுக்கு வண்ணார் அம்பட்டர்களுண்டு. பள்ளி: தெலுங்கு நாட்டில் மீன் பிடிப்போர், உழுதொழில் செய்வோர் எனப் பள்ளிகளில் இரு பிரிவுகள் உண்டு. மீன் பிடிப்போர் மீன் பள்ளிகள் எனப்படுவர். பள்ளிகள் சில இடங்களில் தம்மை இரெட் டிகள் எனக் கூறுவர். மீன் பிடிப்போர் அக்கா, தேவராலு என்னும் தெய்வங்களை வழிபடுவர். பள்ளி அல்லது வன்னியன்: பள்ளிகள் தாம் வன்னிய குல அரச குலத்தினர் எனக் கூறுவர். திருவிதாங்கூர் அரசருள் ஒருவராகிய குலசேகர ஆழ்வார் தங்கள் சாதியரசன் எனக் கூறுவர். சென்னையில் திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி கோயிற் பட்டையத்தின்படி அது பள்ளரால் கட்டப்பட்டது. அங்கு பள்ளிகள் குலசேகர ஆழ்வாருக்குக் குருபூசை நடத்துவார்கள். மைலாப்பூர்ச் சிவன் கோயிலில் பள்ளிகள் கற்பூரம் கொளுத்திக் காட்டும் உரிமை பெற்றிருந்தார்கள். அவர்கள் கோயில் தமக்கு உரியதாக விருந்ததென்றும் பிற்காலத்தில் தாம் சிறிது சிறிதாக உரிமையை இழந்து விட்டார்கள் என்றும் கூறுகின்றனர். கற்பூரம் கொளுத்தும் உரிமையைப்பற்றி சமீபத்தில் விவாதம் நடந்து விசாரணை மேற்கோட்டுக்கு வந்தது. பள்ளிகள் சார்பாகத் தீர்ப்பளிக்கப் பட்டது. காஞ்சீபுரத்தில் ஏகாம்பரநாதர் கோயிற் கோபுரமொன்று பள்ளி கோபுரமெனப்படும். அங்குள்ள பள்ளிகள் அது தமக்குரிய தென்று கூறி அதனை ஆண்டுதோறும் பழுது பார்ப்பர். சிதம்பர ஆலயத்தைக் கட்டியவன் இரணியவன்மன் (கி. பி. 6ஆம் நூற்றாண்டு). அவனுடைய வழித்தோன்றல்கள்தாம் என்று சிதம்பரத்துக்குக் கிழக்கே நான்கு மைல் தூரத்திலுள்ள ஒரு பள்ளிக் குடும்பத்தினர் உரிமை கொண்டாடுவர். பள்ளிப் பொலிகரிற் சிலர் “அக்கினி குதிரையேறிய ராயராவுத்த மிண்ட நயினார்” (இராசராவுத்தரை வென்று அக்கினிக் குதிரை ஏறிய) என்று பெயர் பெறுவர். தென்னார்க்காட்டில் குமாலம் என்னும் இடத்தில் பள்ளிக்குச் சிறீனிவாச ஆலயமுண்டு. அங்கு பள்ளிகள் கோயிலைச் சுற்றி வாழ்கின்றனர். இவர்கள் கோயிற் பட்டரைப் போல உடுப்பர். பள்ளிப் பெண்களைப் பட்டர்மார் மணப்பர். ஆனால் தமது பெண்களைப் பள்ளிக்குக் கொடுக்கமாட்டார்கள். சேலம் பகுதியில் ஓலைப் பள்ளி, நாகவடம்பள்ளி என இரு பிரிவினருண்டு. இவை அவர்கள் அணியும் ஓலை, நாகவடம் முதலியன பற்றி வந்த பெயர்கள். பள்ளிகளும் பேரிச் செட்டிகளும் மன்னார் சாமியை வணங்குவர். கிராமத் தெய்வங்கள் ஏழுகும்பம் அல்லது கரகங்களாற் குறிக்கப்படும். இவர்களுள் பிச்சைக் காரர் நோக்கான் எனப்படுவர். இவர்களின் தலைமைக்காரன் பெரிய தனக்காரன் அல்லது நாட்டாண்மைக்கார னெனப்படுவான். விதவை களின் மறுமணம் நடுவீட்டுத்தாலி எனப்படும். தலைப்பூப்பு அடைந்த பெண் முழுகிய பின் அவளைப் பலகைமேல் இருத்தி அவள் முன்னால் பிட்டுவைத்து ஆராத்தி காட்டப்படும். பறையன்: 18ஆம் நூற்றாண்டில் சொனரத் (Sonnerat) என்பவர் பறையரைப் பற்றி எழுதியிருப்பது வருமாறு: மற்றவர்களோடு பேசும் போது பறையன் தனது வாயைக் கையினால் பொத்திக்கொள்ள வேண்டும். அவன் வீதியிற் போய்க் கொண்டிருந்தால் அவன் ஒருபக்கம் ஒதுங்கி நின்று மற்றவர்களைச் செல்ல வழிவிட வேண்டும். அவனை எவராவது தீண்டினால் அவர் உடனே குளித்துத் தோய்ந்து தீட்டைப் போக்கிக்கொள்ள வேண்டும். பிராமணர் இவர்களைப் பார்த்தல் கூடாது. இவர்களுள் பல பிரிவுகளுண்டு. கோலியர் நெசவு செய்வர். வள்ளுவர் மந்திர வித்தைக்காரராகவும், குருமாராகவும் வேலை செய்வர், நூலுமணிவர். பறையர் அடிக்கும் பறை உறுமி எனப்படும். இவர்களின் வண்ணான் போதராயன் எனப்படுவான். பேலூரில் (Belur) உள்ள கோயிலுள் மூன்று நாட்களுக்கு உள்ளே செல்ல இவர்களுக்கு உரிமை யுண்டு. மேல் கோட்டையில் மூன்று நாட்களுக்குப் பிராமணருடன் ஆதிமூலத்துக்கு (கருப்பக் கிரகத்துக்குச்) செல்ல இராமானுசரால் இவர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டதென்று சொல்லப்படுகின்றது 1799 முதல் இவர்கள் கொடிமரத்துக்கு அப்பால் செல்லாதபடி தடுக்கப் பட்டார்கள். செங்கற்பட்டிலுள்ள சிறிபெரும்புத்தூரில் திருவாரூரிற் போன்ற உரிமை பறையருக்கு ண்டு. வெட்டியான், தலையாரி, தண்டாசி, தோட்டி முதலிய கிராம உத்தியோகங்கள் பறைச் சாதியினருக்கு உரிய தாகும். காஞ்சீபுரம், கும்பகோணம், சிறீவில்லிபுத்தூர் முதலிய இடங் களில் பறையர் மற்றவர்களோடு வடம் பிடித்துத் தேர் இழுப்பர். கிராம தேவதைகளுக்கு மடை போடும்போது பூசாரி பறையனின் மணிக்கட் டில் மஞ்சள் நூல்கட்டி அவனை எல்லோருக்கும் முன்னால் ஊர்வலத் தில் வரவிடுவது வழக்கம். மழையில்லாத காலத்தில் பறையர் கொடும் பாவி கட்டியிழுப்பர். பிராமணர் வருமுன் வள்ளுவர் அரசர்களுக்குக் குருக்களாக விருந்தார் என்று ஸ்டூவாட் (Stuwart) கூறியுள்ளார். அவர் கி.பி. 9ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட பட்டயமொன்றை இதற்கு ஆதாரமாகக் காட்டுவர். அதில் “சிறீ வள்ளுவன் புவனவனாகிய உவச்சன் தினமும் அறுவரைக் கொண்டு வேலை செய்வித்து ஆலயக் கடமை களைப் பார்க்க வேண்டும” எனப் பொறிக்கப்பட்டுள்ளது. 11ஆம் நூற்றாண்டிற் பொறிக்கப்பட்ட இராசராசனின் கல்வெட்டில் பறையர் உழவு, நெசவு என இரு பிரிவினராகவிருந்தனர் எனக் குறிக்கப்பட்டுள் ளது. திருவாரூரில் நடக்கும் பெரிய விழாவில் பறையன் யானை மீது ஏறி யிருந்து சுவாமிக்குச் சாமரை வீசுவான். சென்னையில் ஜாட்ஸ் டவுனில் நடக்கும் ஏகாட்ட விழாவில் விக்கிரக த்தின் கழுத்தில் பறையன் தாலிகட்டு வது வழக்கம். நிலங்களின் எல்லையைப் பறையன் நன்கு அறிவான். எல்லையைப் பற்றிப் பிணக்கு உண்டானால் தலையில் நீர்க் குடம் வைத்து அவனை எல்லையைச் சுற்றிவரும்படி செய்தல் இன்றும் சில இடங்களில் வழக்காகவுள்ளது. இதனால் மற்றச் சாதியினரிலும் பார்க்கப் பறையன் நெடுங்காலம் நாட்டில் வாழ்ந்து வருகின்றானென்று அறியப்படுகின்றது. பறையரிருக்குமிடம் சேரி எனப்படும். பிராமணன் தொடுவதால் தமக்குத் தீட்டு உண்டாகிறதெனப் பறையர் கருதுவர். பிராமணன் சேரிக்கும் நுழைந்தால் அவனைத் தலையில் சாணித் தண்ணீர் ஊற்றித் துரத்துவர். மைசூர்ப் பிராமணர் ஹோலியரின் சேரிக் கூட்டாகச் சென்றால் தமக்கு அதிட்டம் உண்டாகும் எனக் கருதுவர். பிராமணன் அவ்வாறு சென்றால் ஹோலியர் திரண்டு அவனைச் செருப்பாலடித்து துரத்துவர். முற்காலத்தில் சாகும்படி அடிப்பர். பத்துத் தலைமுறைக்கு முன் பறையர் நெசவுக்காரராகவும், மரியாதைக்குரியவர் களாகவுமிருந்தார்கள். இவர்களிற் கண்ணியமுடையவன் பணக்காரன் எனப்படுவன். தென்னார்க்காட்டுப் பறையருள் பெரிய நாட்டான், சின்ன நாட்டான் என்னும் தலைமைக்காரர் உண்டு. விதவை தாலி தரிப்ப தில்லை. பறையர் பெரும்பாலும் ஏழு கன்னியம்மாவை வணங்குவர். தமிழ் தெலுங்குப் பறையர் எல்லம்மா என்னும் தெய்வத்தை வணங்குவர். இவர்கள் தெய்வத்தைக் குறிக்கும் சிலைமீது எண்ணெய் ஊற்றி மஞ்சள் பூசி குங்குமம் தூவி மாலைகளால் அலங்கரித்து வணங்குவர். பெரிய பாளையத்தில் (சென்னையிலிருந்து பதினாறு மைல்) பவானி அம்மன் கோயிலுண்டு. இங்கு பறையர், பள்ளிகள், சக்கிலியர் முதலானோர் பெரும்பாலும் வழிபடுவோராவர். அங்கு அவர்கள் ஆடுகளைப் பலி யிடுவதோடு நிர்வாணமாக வேப்பிலை உடை உடுத்துக் கொண்டு கோயிலைச் சுற்றி வருவர். வள்ளுவர் மற்றப் பறைய ரோடு திருமணம் செய்து கொள்வதில்லை. திருவிதாங்கூர், கொச்சி முதலிய இடங்களில் திருமணத்துக்குப் பந்தற்கால் நிறுத்துதல் பறைய ரால் செய்யப்படும். பறையன் பிராமணனுக்கு 128 அடி தூரத்தில் நிற்றல் வேண்டும். புலையன் இதற்கு இரட்டித் தூரத்தில் நிற்றல் வேண்டும். பறையன் மனைவியின் பிள்ளைப் பேற்றுக்குப் பின் ஏழு நாட்களுக்குச் சோறு உண்ணாது பழங்களையும், கிழங்குகளையும் உண்பான். நாஞ்சில் நாட்டுப் பறையருக்குச் சொத்து உண்டு. இவர்கள் அரசருக்குப் பணங் கொடுத்துப் பட்டங்கள் பெற்றுள்ளார்கள். பாண்டிப்பறையன் சாம்பு வன் எனப்படுவன். பாணன்: மதுரையிலும் திருநெல்வேலியிலும் இவர்கள் தையல் வேலை செய்வர். அம்பட்டரும் வண்ணாரும் இவர் வீடுகளில் உண் ணார்கள். இவர்கள் கோயில்களுள் நுழையலாம். மலையாளப் பாணர் பேய்க் கூத்தாடுவோராவர். பாணோ: இவர்கள் கஞ்சம் மாகாணத்தில் காணப்படும் நெச வாளர். சூடிய நாகபுரியிலும். ஒரிசாவிலும் நெசவு கூடைமுடைதல் முதலிய வேலைகள் செய்யும் பாண என்னும் ஒரு சாதியினரும் காணப் படுகின்றனர். இவர்கள் மண வீடுகளிலும், பிண வீடுகளிலும் , கோயில் களிலும் வாத்தியம் சேவிப்பர். பாணோ ஒருவன் கொண்டர் வகுப்புப் பெண்ணோடு வியபிசாரம் செய்தால் அவன் பெண்ணின் கணவனுக்கு எருமை, ஆடு, பன்றி, ஒரு கூடை நெல், ஒரு ரூபாய், ஒரு சுமை பானை முதலியவற்றைக் கொடுக்கவேண்டும். கொண்டர்ப் பெண்களைப் போலவே பாணோப் பெண்களும் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தனியிடத்தில் இராக்காலத்தில் நித்திரை கொள்வர். பாண்டியன்: அம்பட்டன், கம்மாளன், ஒச்சன், பள்ளன், வண்ணான், வேளாளன் முதலியவர்களிடையே இது பெயராக வழங்கும். மலையாளத்தில் ஈழவர் பாண்டி எனப்படுவர். பாரத்துவாசர்: இது ஒரு பிராமண கோத்திரத்தின் பெயர். பிசாராடி: இவர்கள் அம்பலவாசிகளில் ஒரு பிரிவினர். இவர்கள் கோயில்களில் பூமாலை கட்டிப் பணிவிடை புரிவர். பெண்களுக்குப் பூப்பு அடையுமுன் தாலி கட்டுக் கலியாணம் நடக்கும். மணமகன், மணமகள் என்பவர்களின் கைளை இணைப்பது மணத்தில் முக்கிய சடங்காகும். பிடாரன்: இவர்கள் அம்பலவாசிகளில் ஒரு பிரிவினர். பத்திர காளியை வணங்குவர். பாம்பு பிடிப்போரும் பிடாரர் எனப்படுவர். பிரமசாக்தா: இவர்கள் பிராமணருள் மத்தியானப் பறையர் எனப்படுவர். இவர்கள் மத்தியானம் முதல் ஒரு மணி வரை வீட்டுக்கு வெளியே நின்று பின் குளித்துத் தீட்டுப் போக்கிக் கொள்வர். பிராமணன்: தென்னிந்தியப் பிராமணரிற் பல பிரிவுகளுண்டு. அவர்களின் மொழிகளும் பழக்கவழக்கங்களும் வேறுபட்டுள்ளன. இவர்கள் தாம் பிரமாவின் முகத்தினின்றும் பிறந்தவர்களென நம்புகின்ற னர். இருக்கு வேதிகள், சாமவேதிகள், யசுர் வேதிகள் என மூன்று பிரிவில் இவர்கள் அடங்குவர். இவை சமயக்கிரியை தொடர்பான பிரிவுகள். தாம் வாழும் இடங்களில் வழங்கும் மொழிகளையே இவர்களும் வழங்கு வர். அத்திரி, பிருகு, வதிஷ்டர், கௌதமர், காசியபர் முதலாயி னோரைத் தமது கோத்திர முதல்வராகக் கொள்வர். சிலர் அகத்தியர், அங்கீரர், அத்திரி, பிருகு, காசியபர், வதிஷ்டர், கௌதமர் எனவும் தமது கோத்திர முதல்வரைக் கொள்வர். பிராமணர் பஞ்சத் திராவிடர், கௌடர் என இரு பெரும் பிரிவினராகப் பிரிக்கப்படுவர். கௌடர் மாமிசமுண்பர். ஒரியா, கொங்கணி மொழிகளைப் பேசுவோரல்லாத தென்னிந்தியப் பிராமணரெல்லோரும் பஞ்சத் திராவிடர்களாவர். இவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராட்டி, குசராத்திப் பிராமணர்க ளெனப் பிரிக்கப் பட்டுள்ளார்கள். தெலுங்கு பேசும் சிவாலிப் பிராமணர் கருநாடகப் பிராமணரில் அடங்குவர். பட்டர், நம்பூதிரிகள், திராவிடப் பிராமணரைச் சேர்ந்தோராவர். சமயத் தொடர்பாகப் பிராமணர் வைணவருமல்லர், சைவருமல்லர். ஸ்மார்த்தர் பிரமமே உயிர்கள் என நம்புவோர். பிராமணச் சிறுவர் எட்டு வயதுக்கு முன் பூணூல் தரித்துக் கொள்ள வேண்டும். பூணூல் தரிக்கும்போது சிறிய மான்தோல் துண்டு ஒன்று நூலிற் கட்டப்படும். ஐம்பது ஆண்டுகளின் முன் வியபிசாரிகள் கழுதை யில் வாற் பக்கத்தைப் பார்க்கும்படி இருத்தி கிராம வீதிகளில் கொண்டு செல்லப்பட்டார்கள். பொது மக்கள் எருக்கம்பூ மாலையை அவள் கழுத்தி லிட்டார்கள். வியபிசாரிகளான உப்பிலியப் பெண்களைத் தலையில் ஒரு கூடை மண்ணைச் சுமந்துகொண்டு மரத்தைச் சுற்றிவரச் செய்வது வழக்கு. இவர்களின் பிணக் கிரியை கருட புராணத்தைத் தழுவியது. பில்லவர்: இவர்கள் துளுப் பேசும், கள்ளிறக்கும் தென் கன்னடர். தமிழர் இலங்கை மீது படைஎடுத்த போது இலங்கை மக்கள் பலர் திருவிதாங்கூரிலும், மேற்குக் கரைப் பகுதிகளிலும் குடியேறினார்கள். அவர்கள் திருவிதாங்கூருக்குச் சென்றபோது தெற்கிலுள்ளது என்னும் பொருள் தரும் தென்னையையும் கொண்டு சென்றார்கள். இவர்கள் தீயர் அல்லது ஈழவர் எனப்பட்டனர். தீவார் என்பது தீயர் எனத் திரிந்து வழங்கிற்று. இவ் வகுப்பினரே பின்பு பில்லவர் எனப்பட்டார்களாக லாம். தெங்கு இலங்கையிலிருந்து வந்ததென்பதற்கு எடுத்துக்காட்டாக பெரிப்புளூஸ், மலையாளத்திலிருந்து மேல் நாடுகளுக்குச் சென்ற பொருள்களுள் தேங்காயைக் குறிப்பிடாதிருப்பதாகும். சீரிய கிறித்த வரின் செப்புப் பட்டையத்தால் தீயர் பயிரிடுவோராயிருந்தனரெனத் தெரிகிறது. பில்லவர்களும் இவர்களைச் சேர்ந்தவர்களாகலாம். இவர் களுக்கு அம்பட்டன் புரோகிதனாகவிருந்து மணக்கிரியைகள் செய் வான். இவர்களுக்குப் பெண் வழி உரிமையுண்டு. பிள்ளை: இது வேளாளரின் பட்டப்பெயர். இது இப்பொழுது அகம்படியான், அம்பலக்காரன். கோவலன், இடையன், நாயர், நோக் கான், பணிசவன், பணிக்கன், பறையன், சாயக்காரன், தேவதாசி வகுப்பின் ஆண்களுக்கும் வழங்கும். ஐரோப்பியரின் சமையற்காரரான ‘பட்லர்’ களும் பிள்ளை என்னும் பெயரை வழங்குவர். வேளாளர் எனச் சொல்லிக் கொள்ளும் குறவரும் இதனை வழங்குகின்றனர். பூலான்: இவர்கள் திருவிதாங்கூரில் குடியேறிய தமிழ் அம்பட்டர். பூழிஆசாரி: பூழி(மண்)யில் வேலை செய்யும் மலையாளக் கம்மாளரில் ஒரு பிரிவினர் இப் பெயர் பெறுவர். புள்ளுவன்: மலையாளத்தில் சோதிடர், மந்திர வித்தைக்காரன், பூசாரி, பாம்புக்காக்களில்(பாம்புக் கோயிலிருக்கும் சோலை) பாடுவோர் இப் பெயர் பெறுவர். இவர்கள் சட்டியின் அடியை உடைத்து வெளிப் பக்கத்தில் தோல் போர்த்த ஒரு வகைப் பறையைத் தட்டுவர். இவர்க ளுக்குத் தாலிகட்டு சம்பந்தம் முதலியன உண்டு. நாகத்தான் காக் கடவுளைச் சேவிக்கும்போது இவர்கள் பாம்பன் துள்ளு என்னும் ஆடல் புரிவார்கள். பைராகி: இவர்கள் வட இந்தியாவினின்றும் வந்த பிச்சை எடுக்கும் மக்கள். பைராகிகள் மதத்தில் வைணவர்; தென்கலை நாமம் இடுவர்; துளசி மாலை அணிவர். பொண்டாரி: இவர்கள் கஞ்சம் பகுதியில் வாழும் ஓரியரின் அம்பட்டர். இவர்கள் தாய் மாமன் பிள்ளையை அல்லது தந்தையின் சகோதரியின் பிள்ளையை மணத்தல் கூடாது. கலியாணத்துக்கு முன் இவர்களுக்கு வில், அம்பு அல்லது சகடை மரத்தோடு போலிமணம் நடத்தப்படும். பொண்டான்: இவர்கள் வட மலையாள அரசனின் பல்லக்குக் காவுவோர். இவர்களிற் சிலர் மாத்திரம் கள்ளிக் கோட்டையிற் காணப்படுகின்றனர். இவர்களின் நடை, உடை, பேச்சு முதலியன தமிழரைப் போன்றவை. சாதாரண தமிழனைத் தொடுவதால் அரசனுக் குத் தீட்டு உண்டாகும். அப்பொழுது இவர்கள் அவனை அரண்மனையி லிருந்து ஆலயத்துக்கும் ஆலயத்திலிருந்து அரண்மனைக்கும் சுமந்து செல்வர். பொதுவான்: கோயிற் காவல் புரியும் அம்பலவாசிகள் இப் பெயர் பெறுவர். திருவிதாங்கூரில் பொதுவர் என்பது மறவரில் ஒரு பிரிவின ருக்குப் பெயர். பெண்கள் தமது சாதியிலுள்ள ஆடவரோடும் பிராமண ரோடும் சம்பந்தம் வைத்துக்கொள்வர். ஆடவர் தமது சாதியிலும் நாயர்ச் சாதியிலும் சம்பந்தம் வைக்கலாம். பெண்கள் பொது விச்சியர் அல்லது பொதுவத்திகள் எனப்படுவர். பொலிகர் : இது பாளயக்காரன் என்பதற்கு இன்னொரு பெயர். பாளயக்காரரின் கீழுள்ளவர்களும் பொலிகர் எனப்படுவர். பொறோசா: இவர்கள் கஞ்சம், விசாகப்பட்டினங்களில் வாழும் உழவர். மங்கலவர்: அம்பட்டர் மங்கலவர் எனப்படுவர். இவர்கள் துளுவர், தமிழர் என இரு பிரிவினராவர். இவர்களுக்குள் திருமணக் கலப்பு இல்லை. திருமணக் காலத்தில் நாகசுரம் ஊதுதலால் இவர்கள் மங்கலவர் எனப்படுவர். கலியாண குலம் என்பதுவும் இவர்களுக்கு மற்றொரு பெயர். மணவாளன்: இவர்கள் நாயரின் ஒரு பிரிவினர். மணியகாரன்: இதற்குக் கண்காணிப்பவன் என்பது பொருள். இது செம்படவன், பரிவாரங்கள் என்போருக்கும் பட்டப்பெயர். இடையரில் ஒரு வகுப்பினரையும் இது குறிக்கும். இப் பெயர் (மாட்டுக் குக் கட்டும்) மணி என்பதிலிருந்து உண்டாயிற்று. இச் சொல் மணிகர் எனத் திரிந்து தமிழ்நாட்டில் கிராமத் தலைமைக்காரனைக் குறிக்கும். மண்டாதான்செட்டி: இவர்கள் சிதைந்த கன்னட மொழி பேசுவர். மக்கள் தாயம் கொள்வர். இவர்கள் வேநாட்டில் வாழ்ந்தார்கள். மந்தாதனன் என்பது மகாவலி நாடு என்பதன் திரிபு. நெல்லக் கோட்டைக் கும் தீப்பக்காட்டுக்குமிடையிலுள்ள பகுதிக்கு இப் பெயர் இன்றும் வழங்கும். பூப்பு அடைந்தபின் பெண்களுக்கு மணமாகும். சில சமயங் களில் மணமகன் பெண்ணைப் பெறுவதற்குப் பெண்ணின் தந்தை வீட்டி லிருந்து ஒரு ஆண்டு முதல் நான்கு ஆண்டுகள் வரை வேலை செய்வான். மணமான பெண்கள் கணவனின் சகோதரரோடு கூடி வாழ்தல் குற்ற மாகாது. இறக்கும் தறுவாயிலுள்ளவர்களுக்குச் சோறும் பொன்னும் இட்ட ஏனத்திலிருந்து சிறிது நீரைக் குடிக்கக் கொடுப் பார்கள். மண்டை: மண்டைக் கறுப்பனை வழிபடும் கள்ளர் சாதியினர் இப் பெயர் பெறுவர். மண்டுவர்: தெலுங்கு நாட்டில் அலைந்து திரியும் மருத்துவர் இப் பெயர் பெறுவர். இவர்களின் மனைவியர் மருத்துவச்சிகளாகத் தொழில் புரிவர். மண்ணாடி: பழநி மலையில் வாழும் குறவருக்கு இப் பெயர் வழங்கும். மண்ணான்: இது திருவிதாங்கூர் மலைச் சாதியினருக்கும் வழங்கும் பெயர். குழந்தை பிறந்து ஒரு ஆண்டுக்குப் பின் குடும்பத்தில் மூத்தவர் மணி கோத்த மாலையைக் குழந்தையின் கழுத்திற்கட்டி அதற்குப் பெயரிடுவார். இறந்தவர் புதைக்கப்படுவர். பிணங்களைப் புதைக்கு முன் அவற்றின் வாயில் அரிசியிடப்படும். ஒரு ஆண்டின் பின் இறந்தவருக்கு உணவு கொடுக்கப்படும். மண்ணார் தமிழ் பேசுவர். இவர்களுக்கு அம்பட்டனும் வண்ணானும் இல்லை. உரிமை தாய் வழி. மண்ணானென்பது வண்ணானுக்கும் பெயராக வழங்கும். மதிகர்: இவர்கள் சக்கிலியருக்குச் சமமான தெலுங்கர். இவர் களின் தேவராட்டி மாதங்கி எனப்படுவாள். மாதங்கி என்றும் கன்னியாக விருப்பாள். ஆனால், அவளுக்குப் பல பிள்ளைகள் இருப்பர். இவ்வா றிருத்தல் குற்றமாகக் கருதப்படமாட்டாது. மாதங்கியின் ஆண்பால் ஆசாதி. இவர்கள் எல்லம்மாவைப் புகழ்ந்து பாடுவர். எல்லம்மா எல்லி எனப்படுவாள். அவள் தீச்சுடர் போல வெளிப்படுவாள். பிராமணர் எல்லம்மாவை இலக்குமி, கௌரம்மா, சரஸ்வதி என வழிபடுவர். கிருட்டிணா மாகாணத்தில் மாதங்கச் சிறுவர் நூல் போன்ற மெல்லிய வாரை இடத்தோள் மீது பூணூலாக அணிவர். மாதங்கர் ஊரம்மா என்னும் தெய்வத்தையும் வழிபடுவர். ஊர்வலத்தில் மாதங்கத் தேவடி யாட்கள் பாடி ஆடுவர். இவர்களின் சடங்குகள் பிரதானம் எனப்படும். பெண்கள் பொட்டுத் தாலி அணிவர். தலைப்பூப்புக் காலத்தில் பெண் ணுக்குப் பத்துநாள் தீட்டு உண்டு. இவர்கள் சாம்பவர் எனப்படுவார்கள். மரக்காயர்: மரக்காயர் பெரும்பாலும் பறங்கிப் பேட்டையிற் காணப்படுவர். இப் பெயர் மரக் கலத்தைக் குறிக்கும் மரக்காபி என்னும் அராபிச் சொல்லின் திரிபு. இவர்கள் இந்தியத் தாய்மாருக்கும் அராபியத் தந்தையருக்கும் உதித்தோர். சோனகம் என்பது அராபியாவுக்கு இன்னொரு பெயர். இந்துக்களாயிருந்து மரக்காயராக மாறியவர்கள் புளுக்கைகள் எனப்படுவர். மரக்காயர் அராபித் தமிழ் பேசுவர். தமிழை அராபி எழுத்துக்காளலெழுதுவர். மராட்டி அல்லது மராசாரி: மராத்தி மொழி பேசுவோர் மராட்டிகள் எனப்படுவர். உண்மையான மராத்திகள் கோவாவிலிருந்து வந்தவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்களின் சிறந்த தெய்வம் மகாதேவி. விதவைகள் மறுமணம் புரிவர். தஞ்சாவூரில் இருந்த கடைசி மராட்டிய அரசன் சிவாசி. இவன் 1855இல் மரணமடைந்தான். மலசர்: இவர்கள் கோயமுத்தூர், கொச்சி முதலிய இடங்களிற் காணப்படுவர். காணியாளருக்கு அடிமைகள் போல வேலைகள் புரிவர். தமிழும் மலையாளமுங் கலந்த மொழி பேசுவர். இவர்களின் குடிசைகள் பதி எனப்படும். காளி, மணக்காடாத்தா, மாரியம்மா முதலியன இவர் களின் தெய்வங்களாகும். இவர்களின் வீதிகள், சாலைகள் எனப்படும். நிலமுடையவன் மண்ணாடி எனப்படுவான். திருமணங்கள் பெண் வீட்டில் நடைபெறும். மணமகன் பெண்ணுக்குத் தாலி கட்டுவான். மூப்பன் இருவரின் கைகளையும் சேர்த்து வைப்பான். இவர்கள் இறந்து போன முன்னோரை வழிபடுவர். அவர்களுக்கு உணவு ஏழு இலைகளில் படைக்கப்படும். தலைப்பூப்பு அடைந்த பெண் தனிக் குடிசையில் ஏழுநாள் தங்குவாள். குடிசையின் முன்னால் நாழியும் விளக்கும் வைக்கப் படும். அவள் அவற்றை வலக்காலை முன்னே வைத்துக் கடந்து செல் வாள். பிணங்கள் முகம் கீழே இருக்கும்படி புதைக்கப்படும்; சில சமயங் களில் இருக்கும் நிலையிலும் புதைக்கப்படும். பெண்கள் இடது கைகளில் மாத்திரம் வளையல்கள் அணிந்திருப் பார்கள். இரண்டு கைகளிலும் அணிந்தால் பறையன் அவற்றை உடைத்து மூப்பனுக்கு அறிவிக்க வேண்டும். மலைக்காரன் : மலையாளத்தில் மலைகளில் வாழும் உழவர் இப் பெயர் பெறுவர். இவர்களின் தலைமைக்காரன் மலைமூத்தான் எனப் படுவன். மலையாளி: மலையாளி என்பதற்கு மலையில் வாழ்பவன் என்பது பொருள். மகமதிய ஆட்சி தொடங்கிய காலத்தில் காஞ்சீபுரத்தி னின்றும் மலையாளத்திற் சென்று வாழ்ந்தோர் மலையாளிகள் எனப்படு கின்றனர் என்னும் கதையுண்டு. இவர்கள் செவரோய் (Sevaroy) மலை களில் வாழ்கின்றனர். செவரோய் மலையில் வாழும் மக்கள் தம்மைக் காஞ்சி மண்டலம் எனக் கூறிக் கொள்வர். இவர்கள் சிவன், விட்டுணு, மாரியம்மன், துரௌபதி முதலிய கடவுளரை வழிபடுவர். சில கோயில் களில் மிகப் பழங்காலக் கல்லாயுதங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவர்கள் கோயில்களில் சத்தியஞ் செய்து வழக்குகளைத் தீர்த்துக் கொள்வார்கள். பொங்கல் விழாவுக்குப் பின் எருது ஆட்டம் என்னும் விழாவை இவர்கள் நடத்துவார்கள். மிக உயர்ந்த குலத்தவன் குரு என ப்படுவான். கிராமத்தி லுள்ள வழக்குகளைத் தீர்க்க வரும்போது இவன் குதிரை மீதேறி வரு வான். மேலே குடை பிடிக்கப்படும். பின்னால் வாத்தியங்கள் ஒலிக்கும். குரு தலைமுறையாக வருபவன். பத்துக் கிராமங் களுக்கு ஒரு தலைமைக் காரனிருப்பான். அவன் பட்டக்காரன் எனப்படுவான். திருமணக் காலத் தில் முதியவர் அறுகம்புல், வெற்றிலைகளில் பாலைத்தொட்டு மணமக்க ளின் தலையைச் சுற்றுவர். மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டுவான். கலியாண நாள் இலக்கினம் எனப்படும். கன்னியின் மணம் கலியாணம் எனப்படும். விதவையின் மணம் ‘கட்டிக் கிறது’ எனப்படும். வியபிசாரக் குற்றத்துக்கு குரு தீர்த்தங் கொடுத்துப் பெண்ணைச் சுத்தஞ் செய்வார். இவர்கள் இறந்தவரைப் புதைப்பர். குட்ட வியாதியாளரது ம், கருப்பிணி களதும் உடல் சுடப்படும். பெண்ணைப் பெறுவதற்கு மணமகன் பெண் ணின் தந்தை வீட்டிலிருந்து ஒரு ஆண்டாவது பணி செய்ய வேண்டும். கொல்லிமலை மலையாளிகள் திருவரங்கத்துக்கு (சீரங்கத்துக்கு) மாடு நேர்ந்து விடுவர். பிணத்தைப் புதைத்த இடத்தில் அலரிச் செடி நடப் படும். கோயில் மாடுகள் பொலி எருதுகள் எனப்படும். இறந்த கோயில் மாடுகளுக்கு மரியாதை செய்யப்படும். வீட்டில் கோட்டான் இருக்காத படி முகட்டில் புற்பிடிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். மழை வேண்டு மாயின் ஒருவர் மற்றவர் மீது சாணி உண்டைகளை எறிவர். சாணியாற் செய்யப்பட்ட பிள்ளை யாரை எருக்கும்பத்துள் புதைப்பர். மழை வந்த வுடன் பிள்ளையாரை எடுப்பர். தலையிடி நோய் கண்டோர் தெய்வத் துக்குச் சிவப்புச் சேவல் நே ர்ந்துவிடுவர். பல் நெருடுகிறவர்கள் கோயிற் பிரசாதத்தை உண்பர். திருச்சினாப்பள்ளி மலையாளிகள் தாயின் சகோ தரியின் பிள்ளையை மணப்பர். இவ் வழக்கினால் சிறுவன் பிராயமடைந்த பெண்ணை மணக்க நேரும். கொல்லிமலைப் பெண்கள் பிற ஆடவரோடு வாழலாம். பெறும் பிள்ளைகள் கணவனுக்குரியனவாகக் கருதப்படும். இரு பாலாரும் பல மணங்கள் செய்வர். மலையாளி என்பது மலை நாட்ட வருக்கும் பெயராகும். மலையான்: இவர்கள் வடமலையாளத்திற் காணப்படும் ஒரு கூட்டத்தினர். இவர்களுக்கு நோய் வந்தால் எந்த மூர்த்தியால் (தெய்வத் தால்) நேர்ந்த நோய் எனச் சோதிடனால் அறிந்து தீர்த்து என்னும் ஒருவகைப் பேய்க் கூத்து ஆடப்படும். உச்ச வெளி என்னும் இன்னொரு கிரியையும் செய்வார்கள். இக் கிரியையில் நோயாளி போலியாக உயிருடன் புதைக்கப்படுவான். மலையாளிகள் பெரியண்ணனையும், பத்திரகாளியையும் வழிபடுவர். அப்பொழுது வெளிப்பாடு கூறப்படும். பேய்க் கூத்துக்களிலொன்று நிணவெளி எனப்படும். இலங்கைச் சிங்களவரும் நோயைப் போக்குவதற்குப் பேயாட்டம் ஆடுவர். மல்பரயன்: இவர்கள் மலைகளில் வாழும் மண்ணானிலும் மேலான சாதியினர். இவர்களுள் மக்கள் தாயமும் உண்டு. இவர்கள் மொழி மலையாளத்தின் சிதைவு. மணமகனும் மணமகளும் ஒரு இலையிலிருந்து உண்டபின் தாலி கட்டப்படும். பிறப்புத் தீட்டு தந்தைக்கு ஒரு மாதமும், தாய்க்கு ஏழு நாளும் உண்டு. இறந்தவர்களை அடக்கஞ் செய்த இடத்தில் இவர்கள் கல் வைப்பர். மளவராயன்: இது அம்பலக்காரரின் பட்டப்பெயர். மறவர்: இவர்கள் மதுரை, திருநெல்வேலி, வடஇராமநாதபுரம் முதலிய இடங்களில் வாழ்கின்றனர். இவர்களும் கள்ளர் வகுப்பினரைப் போலப் பிராமணரின் தொடர்பு சிறிதும் இல்லாதவர். மறவர் என்னும் சொல் மறம் என்னும் அடியாகப் பிறந்தது. கள்ளரின் உட்பிரிவில் மறவரும் காணப்படுகின்றனர். மறவரின் தலைவன் சேதுபதி எனப்படு பவன். மறவர் பெரும்பாலும் அரசரின் கீழ் போர்வீரராக விருந்தனர். இவர்களிற் பெரும்பாலோர் இப்பொழுது உழுதொழில் செய்கின்றனர். முன்பு இவர்களிற் பலர் மாடு திருடுவோராக விருந்தனர். திருமணத்தில் கணவனின் உடன்பிறந்தாள் பெண்ணுக்குத் தாலி கட்டுவாள். அதன்பின் சங்கு ஊதப்படும். பெண்கள் குழவி இடல் என்னும் பாட்டுப் பாடு வார்கள். மணத்துக்கு முன்பு மணமகனின் இளைய சகோதரி பெண் வீட்டுக்கு ச் சென்று அவள் கழுத்தில் தாலி கட்டிப் பெண்ணை வீட்டுக்கு அழைத்துச் செல்வாள். சில மாதங்களின் பின் மணக்கிரியை நடை பெறும். பல பிள்ளைகள் பிறந்தபின் மணக்கிரியை நடப்பதுமுண்டு. பெண்கள் மறுமணஞ் செய்வார்கள். பெண் பூப்படைந்த செய்தியை வண்ணான் உறவினருக்குக் கூறுவான். 16ஆம் நாள் அவர்களுக்கு முழுக் காட்டப்படும். இராமநாதபுரத்துச் செம்பு நாட்டு மறவர் அகம்படி யாரைத் தமது வேலைக்காரராகக் கருதுவர். இறந்தவனுக்கு அகம்படி யானே கொள்ளிக் குடத்தைச் சுடலைக்குக் கொண்டு செல்வான். பிணக் குழியை ஆண்டி தோண்டுவான். பிணம் சாமி வைக்கப்படும். மறவ ரிடையே பிணத்தைச் சுடும் வழக்கமும் உண்டு. பிணத்தைச் சுமந்து செல்பவர் நில பாவாடை மீது நடந்து போவர். மூன்றாவது நாள் மண்ணினால் இலிங்கம் பிடித்து வை த்து இலிங்கத்துக்கும், இறந்தவர் களுக்கும், காக்கைகளுக்கும் பலியிடப்படும். 16ஆம் நாள் பிணத்தைப் புதைத்த இடத்தில் நவதானியம் விதைக்கப்படும். சல்லி கட்டுதல் என் னும் விளையாட்டு மறவர்களுக்குள் நடைபெறும். அது இப்பொழுது அரசினரால் தடுக்கப்பட்டுள்ளது. குறிக்கப்பட்ட ஒரு தினத்தில் மூர்க்க முள்ள எருதுகள் களரிக்குக் கொண்டு வரப்படும். அவற்றிலொன்றை அவிழ்த்து விட்டால் அது நிற்கும் கூட்டத்திற் பாய்ந்து ஒருவனைத் துரத்திச் செல்லும். அப்பொழுது அவன் நிலத்தில் விழுந்து படுத்துக் கொள்வான். அப்பொழுது அது இன்னொருவனைத் துரத்திச் செல்லும். மக்கள் ஆரவாரஞ் செய்து கொண்டு ஓடுவார்கள். மறவர் வேட்டை யாடும்போது வளைதடியைப் பயன்படுத்துவர். அது இலக்கிற்பட்டு எறிந்தவனிடத்துக்கு த் திரும்பி வரும். காளி, கறுப்பன், மூத்த கறுப்பன், பெரிய கறுப்பன், மதுரை வீரன், ஐயனார், முனிசாமி முதலியோர் இவர் களின் தெய்வங்களாவர். மறவப் பெண்கள் காதைத் துளையிட்டும் துளையைப் பெரியதாக்குவர். மறவரின் பட்டப்பெயர் தேவன், தலைவன், சேர்வைக்காரன், கரையான், இராசவம்சம் என்பன. மஸ்தான்: இது மகமதிய ஞானிகளுக்கு வழங்கும் பட்டப்பெயர். மாங்கல்யம்: இது மாரான்களின் உட்பிரிவு. இவர்கள் நாயரின் தாலி கட்டுக் கலியாணத்தில் அட்டமங்கலங்களைக் கொண்டு செல்வர். அரிசி, நெல், தென்னங்குறுத்து, அம்பு, முகம் பார்க்கும் கண்ணாடி, வெண்துகில், செப்பு முதலியன அட்டமங்கலத்திலடங்கும். மாதங்கர்: இது மதிங்கருக்கு இன்னொரு பெயர். மதிங்கர் தம்மை மாதங்க மக்கள் எனவுங் கூறுவர். இவர்களின் தெய்வம் மாதங்கி. மாதங்க ரால் மரியாதை செய்யப்படும் தேவடியாட்களுக்கும் மாதங்கர் எனப் பெயருண்டு. மாதவன்: இது நாயரின் உட்பிரிவினராகிய புவிக்காப்பணிக்க ரின் பட்டப்பெயர். மாப்பிள்ளைமார்: இவர்கள் மலையாளத்திலுள்ள கலப்பு மகமதியர். இவர்களின் தந்தையர் அராபியர். தாயர் திராவிடர். இவர்கள் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு முதல் மலையாளத்தில் பெருகத் தொடங்கி னார்கள். பதினைந்தாம் நூற்றாண்டில் வாஸ்கோடகாமா கள்ளிக்கோட் டைக்கு வந்தபோது மாப்பிள்ளைமார் அரசாங்கத்தில் அதிகாரம் பெற்றிருந்தார்கள். திப்புச்சுல்தான் மலையாளத்தை ஆண்ட காலத்தில் பலர் மகமதிய மதத்துக்கு மாற்றப்பட்டார்கள். இதனால் இவர்களின் எண் அதிகப்பட்டது. மதம் மாற்றப்பட்டவர்கள் பெரும்பாலும் முக்கு வர் அல்லது கரையாராவர். மாப்பிள்ளை என்னும் சொல் மருமகன் அல்லது மணமகன் என்னும் பொருள் தரும். இப் பெயர் மலையாளத்திற் குடியேறி மலையாளிகளை மணந்த மகமதியர், கிறித்துவர், யூதர்களைக் குறித்தது. இது இப்பொழுது மகமதியரை மாத்திரம் குறிக்கின்றது. இவர்கள் பெரும்பாலும் மருமக்கள் தாயம் உடையவர்கள். இவர்கள் மகமதிய சட்டத்தின்படி நடப்பர். பெரும் பாலும் பல பெண்களை மணப்பர். இலக்கத் தீவுகளிலும் மாப்பிள்ளை மார் காணப்படுகின்றனர். இவர்கள் அங்கு கோயர், மாலுமி, உருக்காரன், தக்குரு, மிலிக்கன் எனப்படுவர். மாரான் அல்லது மாராயன்: இவர்கள் மலையாளத்தில் மேளமடிப்போர். வடமலையாளத்தில் இவர்கள் ஓச்சர் எனப்படுவர். இவர்கள் உயர்ந்த நாயர் குடும்பத்தினருக்கு அம்பட்டராகச் சேவிப்பர். கோட்டயம், குரும்பிர நாட்டுத் தாலுக்காக்களில் இவர்கள் நாவிதர், மேளகாரர் ஆவர். நாயர் இழவு வீடுகளில் புரோகிதராகச் சேவிப்பர். இவர்கள் பெண்களோடு பிராமணர் சம்பந்தம் வைத்துக்கொள்வர். வடதிருவிதாங்கூரில் இவர்கள் மாங்கலியம் எனவும் படுவர். இவர்களுக் குக் குருப்பு, பணிக்கர் முதலிய பட்டப்பெயர்களுண்டு. இவர்களில் ஒரு நூல், இருநூல் என்னும் இரு பிரிவினருண்டு. ஒரு நூலென்பது வாழ் நாளில் ஒரு கலியாணம் மாத்திரம் செய்துகொள்ளும் பிரிவு. இவர்கள் அசுப்பாணிகள் எனவும் படுவர். உயர்ந்த மறவருக்கு ஆறு உரிமைக ளுண்டு. அவை பாணோ(பண்) , சோணி(பாடை), திருமுற்றம்(கோயில் முற்றம் பெருக்கல்) வெளிச் சோறு(பேய்களுக்கு வெளியே வைக்கப்படும் பலிச்சோறு), புச்சோறு(தெய்வத்துக்கு வைக்கப்படுஞ் சோறு) என்பன. இழவு வீட்டில் எள்போடும் கிரியை அவனால் செய்யப்படுகிறது. மலையாளத்தில் வாத்தியங்கள் மரம் எனப்படும். திமிலை சங்கு, செண் குலம், சென்ட(டு) முதலியவற்றை ஒருங்கே ஒலித்தல் பாணி கொட்டுகு எனப்படும். மார்வாடி: மார்வாடா தேசத்தவர் மார்வாடி அல்லது மார்வாரி எனப்படும். இவர்கள் பெரும்பாலும் சைவமதத்தினர். மாலர்: இவர்கள் தெலுங்கு நாட்டுப் பறையர், மாதங்கர்களைக் குறிக்கும். இவர்களுக்கு அம்பட்டர், வாத்தியகாரர், தேவடியாட்கள் உண்டு. அங்கம்மா, பெத்தம்மா முதலியன இவர்கள் தெய்வங்கள். மாலரின் முக்கிய தொழில் நெசவு. திருமணம் மணமகள் வீட்டில் நிகழும். மாலுமி: இலக்கத் தீவுகளில் மரக்கலமோட்டும் முகமதியர் மாலுமிகளெனப்படுவர். மாலை(மாலி): இவர்கள் தாம் முன் காசியில் வாழ்ந்து பின் செயப்பூர் அரசரைச் சேவிப்பதற்கு வந்தார்கள் எனக் கூறுவர். பூப்படையுமுன் பெண்கள் மணமுடிப்பர். விதவைகள் மறுமணஞ் செய்வர். மாலை என்பதற்கு மாலை கட்டிகள் என்பது பொருள். இவர்கள் கோயில்களில் வேலை புரிவார்கள். ஒரியமொழி பேசுவார்கள். மானிகட்டாள்: இது தேவதாசிக்கு இன்னொரு பெயர். மீதாரக்காரன்: இவர் தெலுங்கு, கன்னட, ஒரிய தமிழ் நாடுகளில் மூங்கிற் கூடை, பாய் முதலியன முடைகின்றவர்களாவர். இவர்கள் வீருல்லு (மணமாகாது இறந்த வாலிபர்), பேராண்டாலு (மணமாகாது இறந்த பெண்கள் அல்லது கணவனுக்கு முன் இறந்தவர்கள்) என்போரை வழிபடுவர். இவர்களுள் சிவவழிபாட்டினர் இறந்தோரைச் சமாதி வைப்பர்; வைணவர் சுடுவர். இவர்கள் இயந்திரங்களை எழுதி வைத்து அடைத்த தாயத்துகளை அணிவர். விதவைகள் தாலியும் காப்பும் அணியமாட்டார்கள். காலின் இரண்டாவது விரலில் அணியும் மெட்டு என்னும் மோதிரமும் அணியார்கள். மீலதேவர்: இவர்கள் தென்கன்னடத்துத் தேவடியாட்களாவர். மீனோன்: இது சமரின் (வடமலையாள அரசன்) தனது எழுத் தாளனுக்குக் கொடுக்கும் பட்டப்பெயர். இப்பொழுது அது நாயரில் ஒரு பிரிவினருக்குப் பெயராக வழங்குகின்றது. மலையாளத்தில் கிராமக் கணக்கன் (கர்ணம்) மீனோன் எனப்படுவான். இப் பட்டம் கொச்சி அரசனால் பலருக்குக் கொடுக்கப்பட்டது. இது தெற்கே வழங்கும் பிள்ளைப்பட்டத்துக்குச் சமம். மீனோன் பட்டம் கொடுத்தபின் அவனுக்கு ஓலையும் எழுத்தாணியும் கொடுக்கப்படுகிறது. இப் பட்டம் பெற்றவர்களின் பெண்வழியார் மாத்திரம் இப் பட்டத்தைப் பயன் படுத்தலாம். மீனோன் என்பது போனஹீத இராவ். இராவ் என்பது மராட்டிப் பட்டப்பெயர். முகதோரர்: இவர்கள் கொண்டதோரரின் ஒரு பிரிவினர். இவர்களின் மொழி தெலுங்கு. அண்ணா, ஐயா, தோரா என்பன இவர் களின் பட்டப்பெயர். இவர்களில் சூரியவமிசம், நாகவமிசம் என இரு பிரிவுகளுண்டு. ஒருவன் தாய்மாமன் மகளை மணக்கலாம். மணமகன், மணமகள் என்னும் இருவரின் விரல்களையும் தாய்மாமன் சேர்த்து வைப்பான். முக்குவன்: முக்குவர் மலையாளக் கடல்களில் மீன் பிடிப்பவர்க ளாவர். தாழ்ந்த வகுப்பினருக்கு இவர்கள் பல்லக்குச் சுமப்பர். ஓடக்கார ராகவும் தொழில் செய்வர். பரம்பரையாக வரும் இவர்களின் தலைவன் அரையன் எனப்படுவன். இவர்களின் முக்கிய தெய்வம் பத்திரகாளி. இவர்கள் குலத்தில் ஒருவன் பூசாரியாக விருப்பான். பிராமணர் கோயில் களில் இவர்கள் நுழைதல் கூடாது. வடமலையாளத்தில் இவர்களுக்கு மருமக்கள் தாயமும், தெற்கில் மக்கள் தாயமும் உண்டு. இவர்களின் முக்கிய தொழில்கள் சுண்ணாம்புச் சூளைவைப்பது, மஞ்சள் சுமப்பது முதலியன. மஞ்சள் என்பது தடியில் கட்டப்பட்ட ஒரு வகை ஊஞ்சல் மீது ஆளை வைத்துச் சுமத்தல். இவர்கள் இலங்கையிலிருந்து சென்றவர்களெனக் கருதப்படுவர். முக்குவர் தீயரிலும் தாழ்ந்தோர். இவர் களிற் பலர் மேல்நிலைக்கு வந்துள்ளனர். இவர்களிற் பொன்னில்லம், செம்பில்லம், காரில்லம், காச்சில்லம் என நான்கு பிரிவுகளுண்டு. இவர் களுள் காவுத்தீயன் அல்லது மணிமகன் என்னும் பிரிவு முண்டு. இவர்கள் மற்றவர்களுக்கு மயிர்வினையும் செய்வர். இவர்களின் சங்கங்கள் இராச்சியம் எனப்படும். பெரியவர்கள் கடவன் எனப்படுவார்கள். தலைவன் அரயன் அல்லது கரணவன் எனப்படுவன். கரணவன் அரச னால் தெரியப்படுவான். இவர்களுக்கு மூட்டப்பட்ட ஓலைக்குடை, தடி, அரைக்குக் கட்டும் சிவப்புத்துணி முதலிய அடையாளங்களுண்டு. வெளிப்பாடு கூறுவோர் ஆயத்தன் அல்லது அத்தன் எனப்படுவர். ஆயத்தன் என்பது ஆயுதத்தன் என்பதன் மரூஉ ஆகலாம். உருக்கொள் பவன் அல்லது தெய்வமேறுபவன் வாளை வைத்திருப்பான். பெண்கள் பூப்படைந்தபின் மணம் முடிக்கப்படுவர். கருப்பவதிக்கு ஏழாவது மாதம் புளிக்குடி அல்லது நெய்க்குடி என்னும் சடங்கு நடத்தப்படும். குழந்தை பிறக்கும் வரையும் கணவன் தாடி வளர்ப்பான். பிள்ளை பிறந்தபின் மூன்றாவது நாள் மயிர்வினை செய்து கொள்வான். தீட்டு ஏழு நாட்களுக் குண்டு. இறந்தவனின் மூத்தமகன் ஆறு மாதங்களுக்கு மயிர்வினை செய்து கொள்ள மாட்டான். முசாத்து: இவர்கள் மலையாளத்திலுள்ள மூத்ததுகளாவர். இவர்கள் அம்பலவாசிகளிலும் உயர்ந்தோர். நம்பி, நம்பியார் என்னும் பட்டங்கள் இவர்களுக்கு உண்டு. இவர்களின் பெண்கள் மண அம்மா மார் எனப்படுவர். இளையதுகளும் மூத்ததுகளும் மலையாளத்தில் நயினாக்கள் எனப்படுவர். மூத்ததுகளின் வீடுகள் மடம், இல்லம் எனப் படும். நம்பூதிரிகளின் வீடுகளுக்கும் இப் பெயர்கள் உண்டு. திருமணத் துக்கு முன் பெண்கள் திருவளையமும், குழலுமணிவர். விழாக்காலங் களில் பலக்கா வளையமணிவர். திருமணத்துக்குப் பின் காதில் சூட்டும், கழுத்தில் தாலியுமணிவர். விதவைகள் சூட்டு மாத்திரமணிவர். மூத்ததுகள் உட்கோயில்களின் படிகளைக் கழுவுவர். விக்கிரகங்களைப் பாதுகாத்துக் கொள்வர். கோயிற் பிரசாதம் முதலியவற்றைக் கொண்டு வாழ்வர். இவர்களின் குடும்பத்தில் மூத்தவன் மாத்திரம் மணம் செய்து கொள்வன். மற்றவர்கள் அம்பலவாசிப் பெண்களைச் சம்பந்தம் வைப்பர். ஆண்கள் நான்கு பெண்கள் வரையில் மணக்கலாம். மூத்த மகனுக்குப் பாட்டனின் பெயரிடப்படும். இரண்டாவது மகனுக்குத் தாய்வழிப்பாட்டனின் பெயரிடப்படும். பூணூலணிதல் ஏழு வயது முதல் பதினொரு வயதுக்கிடையில் நடைபெறும். இவர்களுக்கு மரணத்தீட்டு பத்து நாள். கோயிலுள் இருந்து இவர்கள் உண்ணலாம். மூத்ததுகள் அம்பலவாசிகளிலும் உயர்ந்தோரும், இளையதுகள் பிராமணருக்குத் தாழ்ந்தோருமாவர். முசாத்து மூத்தது என்னும் பெயர்கள் அகப்பொது வல் என்னும் பெயரோடு ஒற்றுமையுடையன. தடம்பு மீது கடவுளின் திருவுருவம் வைத்து வீதிவலம் செய்யப்படும். தடம்பு என்பது கேடகம் போன்று கவிழ்ந்த தட்டு. அடிகள் என்போரும் பிடாரரும் ஒருவரெனத் தெரிகிறது. பிடாரர் பூணூலணியாது கோயிற் பூசை செய்வர். முடவாண்டி: இவர்கள் கொங்கண வேளாளரில் ஒரு பிரிவினர். ஆண்டி என்பதற்குப் பரம்பரைப் பிச்சைக்காரர் என்பது பொருள். முதுவர்: இவர்கள் கோயம்புத்தூர், மதுரை, மலையாளம் பகுதிகளில் காணப்படும் உழவராகிய மலைச்சாதியினர், இவர்கள் மற்றவர்களைத் தகப்பன்மார் என்பர். இவர்களுக்கிடையில் கஞ்சன், கறுப்புக் குஞ்சி, குஞ்சித, கார்மேகம் முதலிய பெயர்கள் பெரிதும் வழங்கும். கறுப்பாயி, கூப்பி, பேய்ச்சி முதலிய பெயர்கள் பெண்களுக்கு வழங்கும். கடைசியாகப் பெறும் ஆண் பிள்ளைகளுக்கு இராமன், இலக்குமணன் என்றும், இரட்டைப் பெண்களுக்கு இலட்சுமி, இராமி என்றும் பெயரிடப்படும். இவர்களின் தலைமைக்காரன் மேல்வாகன் எனவும், உதவி அதிகாரி மூப்பன் எனவும் படுவர். இவர்களுக்கு மருமக்கள் தாயமுண்டு. நிமித்தங்களில் இவர்களுக்கு நம்பிக்கையுண்டு. ஒருவன் மாமன் மகளை மணக்கலாம். மதம் சம்பந்தமான சடங்குகளுக்கு இவர்கள் குருமாரை அழைப்பதில்லை. இறந்தவர்களின் முகம் பார்க்கும் படியாகப் பிணத்தைப் புதைப்பர். தீத்தட்டிக் கற்களாலும், இரும்பாலும் தீ மூட்டுவர். கருங்குரங்கின் இறைச்சியை உண்பர். இருளரும் முதுவரும் மலைப்பக்கங்களில் தொங்கும் தேன் கூடுகளிலிருந்து தேனெடுப்பர். முத்திரையன்: பாளயக்காரர்களுக்கு இப் பெயர் வழங்கும். இது தெலுங்கில் முத்திராசன் என வழங்கும். இத் தெலுங்குச் சாதியினர் கிருட்டிணா, வட ஆர்க்காடு முதலிய இடங்களிற் காணப்படுகின்றனர். இவர்களின் பட்டப் பெயர்கள் தோராவும், நாயுடுவும். இவர்கள் ஈசல் களைப் பிடித்து வற்றலிட்டு பானைகளில் சேமித்து வைத்து அவற்றை உணவாகப் பயன்படுத்துவர். இவர்களுக்குப் பிறப்புத் தீட்டு பத்து நாள். மூதான்: இவர்கள் மலையாளத்திலுள்ள வாணிகம் புரியும் வகுப்பினர். பெண்கள் செட்டிச்சிகள் எனப்படுவர். இவர்கள் நாயரின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவர். பாலக்காடு, வள்ளுவநாடு முதலிய இடங்களில் இவர்கள் பெரும்பாலும் காணப்படுவர். இவர்களிற் சிலர் தமக்கு எழுத்தச்சன் என்னும் பட்டப்பெயரை வைத்து வழங்குவர். இவர்களுக்கு மருமக்கள் தாயமுண்டு. இவர்களின் தீட்டுக் கழிப்பு கொட்டுவன் என்னும் புரோகிதனாற் செய்யப்படும். மெய்காவல்: இது பண்டாரங்களுக்கு ஒரு பெயர். இவர்கள் கடவுளின் மெய்யைக் காப்பவர்கள். மேஸ்திரி: இது போர்ச்சுக்கேய (Meytro) என்னும் சொல். இது இந்திய நாட்டு மொழிகளில் சென்று வழங்குகின்றது. மேஸ்திரி என்ப தற்குத் திறமையான வேலையாள் என்பது பொருள். இது தமிழ்நாட்டில் செம்மாருக்கும் வேறு சில தொழிலாளருக்கும் பெயராக வழங்கும். மேளக்காரன்: இவர்கள் வாத்தியக்காரர். தோரிய மேளக்காரன் பெரிய மேள சேவை மாத்திரம் சேவிப்பன். தமிழ் மேளக்காரர் தேவடி யாட்களோடு சம்பந்தப்பட்ட சின்ன மேள சேவனையும் செய்வர். தேவடியாளின் மகள் தாய் செய்து வந்த தொழிலையே செய்வாள். நட்டுவன் என்போர் தேவடியாட்களுக்கு நடனம் பழக்குவோர். மொண்டி: இலண்டா, கல்லடிச்சித்தன், கல்லடிமங்கன் என்பன ஒரே கூட்டத்தினரைக் குறிக்கும் பெயர்கள். இவர்கள் பிச்சை எடுக்கும் பரம்பரைப் பண்டாரங்கள். பிச்சையிடாவிட்டால் இவர்கள் தமது தொடையை வெட்டுவார்கள்; கல்லில் தலையை உடைப்பார்கள்; வாந்தி எடுப்பார்கள். மொயிலி: இவர்கள் தென்கன்னடத்தில் கோயில்களில் வேலை புரிவோர். பெண்கள் தமது கணவரோடு வாழ விரும்பாவிடிலும், விதவைகள் மறுமணம் செய்ய முடியாமலிருந்தாலும் அவர்கள் கோயிலுக்குச் சென்று கோயிற் பலிச் சோற்றில் சில உண்டைகள் பெற்று உண்பார்கள். பின்பு அவர்கள் அரசினர் உத்தியோகத்தரிடம் கொண்டு போகப்படுவர். அவர்கள் அவ்வாறு செய்யத் துணிந்தமைக்குக் காரணம் விசாரிக்கப்படும். பிராமணப் பெண்களாயின் கோயிலினுள் இருக்க அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்குத் தினம் உணவும் ஆண்டில் ஒரு துணியும் கிடைக்கும். அவர்கள் கோயிலைப் பெருக்கவும் சாமரை வீசவும் வேண்டும். அவர்கள் பெரும்பாலும் பிராமணரின் அல்லது உத்தியாகத்தரின் வைப்பாட்டிகளாக விருப்பார்கள். அவர்கள் பெறும் பிள்ளைகள் மொயிர் எனப்படுவர். அவர்கள் நூலணிந்து கோயிலைப் பெருக்கிக் கோயிற் பணிவிடை செய்வர். அவர்கள் தேவடிகர் எனவும் படுவர். மொராசு: இவர்கள் மைசூரில் காணப்படுவர். மணம் பேசும் பருவம் வந்ததும் பெண்கள் வலக்கையின் மூன்றாம் நாலாம் விரல்களை வெட்டிவிடுவர். இவ் வழக்கு ஆஸ்திரேலிய, பொலிநீசிய, அமெரிக்கப் பழங்குடிகளிடையும் காணப்படுகின்றது. மோகெர்: இவர்கள் துளுப்பேசும் தென் கன்னட மீன்பிடிக்காரர். இவர்களின் குடியிருப்பு பட்டினமெனப்படும். சென்னையிலுள்ள மீன் பிடிக்காரர் பட்டணவர் எனப்படுவர். இவர்களின் தலைமைக்காரன் குறிக்காரன் எனப்படுவான். இப் பதவி தலைமுறையாக வருவது. இவர் களின் உரிமை பெண்வழி. கேவா என்னும் துளு அம்பட்டன் இவர்க ளுக்குச் சிரைக்க மாட்டான்; கொங்கணி அம்பட்டர் சிரைப்பர். குழந்தை பிறந்து ஏழாவது நாள் வண்ணாத்தி குழந்தையின் அரையில் நூல் கட்டிப் பெயரிடுவாள். இப் பெயர் சிலநாட்களின் பின் கைவிடப்படும். பின் வேறு பெயரிடப்படும். இவர்களின் பட்டப்பெயர் மரக்காவேரு. யூதர்: கொச்சித்தீவில் கறுப்பு யூதர், வெள்ளை யூதர் என இரு வகை யூதர்கள் காணப்படுகின்றனர். இவர்கள் நெடுநாட்களுக்கு முன் பலஸ்தீன் நாட்டினின்றும் வந்தோராவர். பாஸ்கர இரவிவர்மன் என்னும் அரசன் முசிறிக் கோட்டில் வாழ்ந்த யூதனொருவனுக்கு அளித்த பட்டைய மொன்று காணப்படுகின்றது. அது அவ் வரசனின் ஆட்சியில் 36வது ஆண்டு யோசேப் இரப்பான் அஞ்சுவண்ணன் என்னும் யூதனுக்கு அளிக்கப்பட்டது. இவனுக்குக் கொடுக்கப்பட்ட உரிமைகள் வருமாறு: அவன் ஐந்து கொடிகளைப் பயன்படுத்தலாம். உலாவச் செல்லும்போது வேலையாட்கள் தீபம் பிடித்துச் செல்லலாம். யானை குதிரைகளில் ஏறிச் செல்லலாம். அரசரைப்போல பவனி வரலாம். பகற்காலத்தில் தீவர்த் தியைப் பயன்படுத்தலாம். பலவகை வாத்தியங்கள், பெரிய மேனம் முதலியவற்றை ஒலிப்பிக்க உரிமையுண்டு. நில பாவாடையிற் செல்ல லாம். அரசரைப்போல் மேற்கட்டியின் கீழ் இருக்கலாம். இரப்பானின் கீழ்உள்ள எழுபத்திரண்டு குடும்பங்களும் அவனுக்குக் கீழ் அடங்கி நடக்க வேண்டும். இச் சாசனம் கலியுகம் 3481இல் (கி.பி.370ல்) எழுதப் பட்டது. யூதர் சாலமன் அரசன் காலம் முதல் (கி.மு. 900) மலையாளக் கரைகளுக்கு வந்து வாணிகம் புரிந்தார்கள். கி.மு. 6ஆம் நூற்றாண்டில் சைரசு (Cyrus) என்னும் பாரசீக அரசனின்கீழ் அடிமைகளாக வாழ விரும்பாத யூதமக்கள் இந்தியாவில் வந்து குடியேறினர். ஹன்டர் (E.W.Hunter) யூதர் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன் இந்தியாவிற் குடியேறியிருந்தார்கள் எனக் கூறியுள்ளார். செங்கடலி லுள்ள மேஓஸ், ஹேமஸிலிருந்து அராபியர் இலங்கை, மலையாளம் முதலிய நாடுகளுக்குச் சென்ற ஓர் உரோமானியர் மலையாளத்தில் ஒரு யூதர் குடியிருப்பைக் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் கண்டார் உவிஷ் (Wish) என்பார். தோமஸ் ஞானியார் கி.பி. 5இல் இந்தியாவை அடைந்தா ரென்றும் யூதர் கி.பி. 69இல் இந்தியாவுக்குச் சென்றனர் என்றும் கூறியுள்ளார். கறுப்பு யூதர், தாம் முன் வந்தவர்களென்றும் வெள்ளை யூதர் பின் வந்தவர்களென்றும் கூறுவர். கறுப்பு யூதர் யூதரல்லரென்றும் அவர்கள் யூத மதத்துக்குத் திருப்பப்பட்ட இந்தியரென்றும் வெள்ளை யூதர் கூறுவர். எருசலேம் அழிக்கப்படுவதற்குப் பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன் அங்கு நின்று துரத்தப்பட்டவர்களே தாம் என்று கறுப்பு யூதர் கூறுவர். அவர் கள்ளிக்கோட்டைக்கு வந்து பின் கரங்கனூரை அடைந் தார்கள். கறுப்பு யூதர் இன்னும் செப்புப் பட்டையத்திற் சொல்லப்பட்ட உரிமைகளை அனுபவிக்கின்றனர். அவர்கள் தமது குழந்தைகளைப் பிறந்தபின் எட்டாம் நாள் கோயிலுக்குக் கொண்டு செல்லும் போது பட்டுக்குடை, தீபம் முதலியவற்றைக் கொண்டு செல்கின்றனர். மணமக்கள் வீதிவலம் வரும்போது நிலபாவாடை விரித்துத் தெருக்கள் தோரணங்களால் அலங்கரிக்கப்படுகின்றன. நாலு தடிகளில் வெள்ளாடை கட்டப்பட்ட மேற்கட்டி அவர்கள் மீது பிடிக்கப்படுகிறது. தீவர்த்தியும் கொண்டு செல்லப்படுகிறது. வெள்ளை யூதர் இவை யொன்றையும் கையாளுவதில்லை. முன் வந்து குடியேறிய யூதர் அடிமைகளை வாங்கினார்கள். அவர்கள் அவர்களுக்கு விருத்த சேதனஞ் செய்து அவர்களை இஸ்ரவேலரைப் போல் நடத்தினார்கள். அவர்களின் சமயக் கிரியைகளால் யூதராக்கப்பட்ட பெண் அல்லது ஆண் அடிமைகள் ஒரு போதும் விற்கப்படவில்லை. யூதர் அவ்வடிமைகளுடன் கலப்பதால் கறுப்பு யூதர் தோன்றினார்களென சிலர் கருதினார்கள். இதனால் கறுப்பு யூதர் முற்றாகக் கலப்பு யூதர் எனக் கூற முடியாது. வெள்ளை யூதர் பரதேசிகள் எனப்படுவர். யூத மணமக்கள் கலியாணம் முடிக்கக் கோயிலுக்குச் செல்வதன் முன் மணமகளின் உடன் பிறந்தாள் மணமகள் கழுத்தில் தாலி கட்டுவாள். யூரேசியர்: இவர்கள் ஐரோப்பியத் தந்தைக்கும் இந்தியத் தாய்மாருக்கும் பிறந்தோர். சட்டைக்காரர் என்பதும் இவர்களுக்கு மற்றொரு பெயர். பறங்கி என்பதும் இவர்களைக் குறிக்க வழங்கும் பெயர். பறங்கி என்பது பிறாங்க் (Frank) என்பதன் திரிபு. பிறாங்க் என்பதற்கு ஐரோப்பியன் என்பது பொருள். இவர்கள் வலண்டிஸ் (Walladez) அல்லது உல்லாண்டி (Oollandy) எனவும் படுவர். இவை ஒல்லாந்திஸ் (Hollandis) என்பதன் திரிபு. இப் பெயர் 17ஆம் , 18ஆம் நூற்றாண்டுகளில் ஒல்லாந்தர் வழியாக வந்தது. யோகி: தெலுங்குப் பிச்சை யெடுக்கும் பண்டாரங்கள் யோகிகள் எனப்படுவர். தமிழ்நாட்டில் இவர் தோட்டியான் எனப்படுவர். வடுகன்: தெலுங்கு நாட்டவர் வடுகர் எனப்படுவர். தமிழ்நாட்டில் தெலுங்கு பேசுகின்றவர்களும் வடுகர் எனப்படுவர். வட்டக்காரன்: இவர்கள் வன்னியர், செக்காருள் ஒரு பிரிவினர். இவர்கள் வட்டக்காட்டார்களாவர். வண்ணத்தான்: இவர்கள் நாயருக்கு வெள்ளை வெளுக்கும் வெளுத்தெடாதாராவர். வண்ணான்: இவர்கள் தாம் வீரபத்திர வமிசத்தவர் எனக் கூறுவர். வண்ணார் அம்பட்டரிலும் தாழ்ந்த வகுப்பினர். பெண்கள் பூப்படைந்த பின் மண முடிப்பர். திருமணத்தில் மணமகனின் உடன்பிறந்தாள் பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவள். இவர்களின் சாதித் தெய்வம் குருநாதன், மலையாள வண்ணான், மண்ணான் எனப்படுவர். மலையாள மலைச்சாதியினருள் ஒரு கூட்டத்தினரும் மண்ணா ரெனப்படுவர். இவர்களை மண்ணான் அல்லது வண்ணான் எனக்கொண்டு மயங்குத லாகாது. மண்ணாருள் பெண்கள் பல கணவரை மணப்பர். மலையாளத் தில் பகவதி கோயில்களில் வண்ணான் பூசாரியாக விருப்பான். வலையர்: இவர்கள் வலையால் மீன்களையும், பறவைகளையும் பிடிப்பர். அம்பலக்காரன். சேர்வைக்காரன், வேடன், சிவியான், குருவிக் காரன் முதலியனவும் இவர்களின் பெயர்களாக வழங்கும். அம்பலக்காரர் தாம் கண்ணப்ப நாயனாரின் வழித்தோன்றல்கள் எனக் கூறுவர். மணமகளின் உடன்பிறந்தாள் பெண்ணுக்குத் தாலி கட்டுவள். மணத் துக்கு முன் பெண்கள் பிள்ளைப் பெறுவது குற்றமாகக் கருதப்பட மாட்டாது. அவ்வாறு பிறக்கும் பிள்ளைகள் வேறுபாடின்றிச் சாதியிற் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். வியபிசாரிப் பெண்கள் எருக்கமாலை சூட்டி சேற்றுக்கூடையைச் சுமந்து கிராமத்தைச் சுற்றிவரச் செய்வார்கள். வலையர் தெய்வங்கள் சிங்கப்பிடாரி(ஐயனார்), பதினெட்டாம்படிக் கறுப்பன் முதலியன. வல்லம்பன்: இவர்கள் தஞ்சாவூர், திருச்சி, மதுரை மாவட்டங் களில் வாழும் உழவரின் ஒரு பிரிவினர். இவர்கள் வேளாளத் தந்தையருக் கும் வலையத் தாய்மாருக்கும் தோன்றியவர்கள் எனக் கருதப்படுவர். இவர்களின் சாதித் தலைவன் சேர்வை எனப்படுவன். இவர்களில் ஆடவர் தாய்மாமன் மகளை அல்லது தந்தையின் உடன்பிறந்தாள் மகளை மணப்பர். சில சமயங்களில் பத்து வயதுப் பையனுக்கு இருபது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுள்ள பெண் கலியாணம் செய்யப்படுவாள். அப் பொழுது அவள் கணவனின் தமையன் அல்லது வளர்ந்த உறவினனைச் சேர்ந்து பிள்ளைகளைப் பெறுவாள். வள்ளுவன்: இவர்கள் பறையர், பள்ளிகளின் புரோகிதராவர். பிராமணருக்கு முன் வள்ளுவர் பல்லவரின் புரோகிதராக விருந்தனர். பன்னிரண்டு வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் நூலணிவர். இவர்களின் ஆண்களும் பெண்களும் சோசியம் சொல்வர். சாதித்தலைவன் கோற் காரன் எனப்படுவன். திருமணக் காலத்தில் மணமகன் பரியம், உறவு முறைக்கட்டு (பெண்ணின் சுற்றத்தாருக்குக் கொடுக்கும் பணம்) பந்தல் வரிசை முதலியவற்றைப் பெண் வீட்டாருக்குக் கொடுப்பான். மணவறை, குடவிளக்கு, அலங்கார விளக்கு, பாலிகை விளக்கு முதலியவைகளால் அலங்கரிக்கப்படும். அதைச் சுற்றிக் குடங்கள் வைக்கப்படும். இவை குடும்பத் தெய்வங்களைக் குறிப்பன. வள்ளுவர் வள்ளுவப் பண்டா ரங்கள் எனப்படுவர். வன்னியன்: இவர்கள் வலையன், அம்பலவர், பள்ளிகளில் ஒரு பிரிவினர். வாலன்: இவர்கள் கொச்சிப் பக்கங்களில் வாழும் மீன் பிடிக்கும் குலத்தினர். இப் பெயர் வலையன் என்பதன் திரிபு. பூப்படையமுன் பெண்களுக்குத் தாலிகட்டுக் கலியாணம் நடத்தப்படும். ஆண்கள் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் மணக்கலாம். விதவைகள் மறுமணம் புரியலாம். தலைப்பூப்பெய்திய பெண் நாலுநாள் தனியறை யில் விடப்படுவாள்; ஐந்தாவதுநாள் அவள் தோய்ந்தபின் விருந்து நடைபெறும். இவர்களின் சாதித்தலைவன் அரயன் எனப்படுவன். அவன் அரசனின் “தீட்டுறத்தினாலை”த் தெரிவிப்பான் (தீட்டு - எழுத்து) இவர்களுக்கு மக்கள் தாயமுண்டு. இறந்தவனின் மகன் ஒரு மாதம் மயிர்வினை செய்துகொள்ள மாட்டான். வன்னியன்: மலையாளச் செக்கான் போன்று எண்ணெயூற்று வோர் வன்னியர் எனப்படுவர். இவர் வீடுகளில் வண்ணார் உண்ப தில்லை. இவர்களின் சாதிப் பட்டப்பெயர் செட்டி. மணமாகாதவர்கள் இறந்தால் எருக்கஞ் செடிக்குப் போலி மணச் சடங்கு நடத்தப்படும். வாரியர்: இவர்கள் அம்பலவாசிகளில் ஒரு பிரிவினர். இவர்கள் பெரும்பாலும் நல்ல வைத்தியரும் சோதிடருமாவர். மணமான பெண்கள் நாயர்ப் பெண்களைப் போலத் தலையின் இடப்பக்கத்தே குடுமி முடிந்திருப்பர். இவர்களின் தாலி மாத்திரா எனப்படும். அது மத்தளம் போன்ற வடிவு உடையது. மற்ற அணிகள் எந்திரமும் குழலும். இவர்கள் நாயர்ப் பெண்களணியும் தோடணிவர்; நெற்றியில் சந்தனத் தால் குறி யிடுவர். இவர்கள் கோயிலிற் செய்யும் வேலை கழகம் எனப்படும். இது ஒருபோது கழுவு என்னும் அடியாகப் பிறந்திருக்கலாம். கோயிலில் வறியதுகள் சொல்லும் வேலையை இவர்கள் செய்தல் வேண்டும். இவர் களுக்கு மருமக்கள் தாயமுண்டு. திருவிதாங்கூரில் ஓணத்துக்காரர் என்னும் வறியதுகளின் சொத்து ஆண், பெண் என்னும் இரு பாலாருக்கும் சம மாகப் பிரிக்கப்படும். பெண்கள் பிராயமடையு முன் தாலிகட்டுச் சடங்கு நடக்கிறது. குடிவைப்பு முறையில் இது செய்யப்படுமாயின் சம்பந்த முறையில் கலியாணம் மறுபடியும் செய்யப் பட வேண்டியதில்லை. பருவ மடைந்த பெண்கள் மணமாகும் வரை கோயிலுள் நுழைதல் கூடாது. இவர்களுக்கு மரணத் தீட்டுப் பன்னிரண்டு நாள். வாலி சுக்கிரீவர்: இலம்பாடிகள் இப் பெயர் பெறுவர். இவர்கள் தாம் வாலி சுக்கிரீவர் வழித்தோன்றல்கள் என்பர். வில்குருப்பு: இவர்கள் மலையாளக் கம்மாளருக்கும் அம்பட்ட ருக்கும் குருக்கள். நாயரின் தாலிகட்டுக் கலியாணத்துக்கு இவர்கள் ஒரு வில்லும் சில அம்புகளும் கொடுக்க வேண்டும். வீரபத்திரர்: இவர்கள் தமிழ்நாட்டு வண்ணார். இவர்கள் தம்மை வீரபத்திரர் வமிசத்தவர் எனக் கூறிக்கொள்வர். வெட்டியான்: இவன் பறைச்சேரியிலுள்ள ஒரு தொட்டியான் அல்லது தோட்டி என்னும் உத்தியோகத்தன். இவன் வயல்களுக்கு நீர் பாயும்படி கால்வாய்களைத் திறந்து விடுவன். பிரசித்தப்படுத்தும் (செய்தி களை அறிவிக்கும்) மேளமடிப்பான். இவன் சுடலைக்குத் தலைவன். பறையரின் மணங்களில் பானைகள் வணங்கப்படும். வெட்டி யான் வகுப்பினர் வலங்கையினர். வேடன்: இவர்கள் வேட்டையாடும் சாதியினர். இவர்களிற் சிலர் போர் வீரர்களாக விருந்தனர். வேட்டுவர் என்னும் சாதியினர் தாம் வேடருக்கும் உயர்ந்தோர் எனக் கூறுகின்றனர். விதவைகள் கணவனின் சகோதரனை மணப்பர். இவர்கள் தமது பரம்பரை கண்ணப்ப நாயனாரி லிருந்து வருகின்ற தெனக் கூறுவர். வேடரின் பட்டப்பெயர் நாயக்கன். சேலம் பகுதியில் வேடன் திருவளர் எனப்படுவன். இவர்கள் கலியாணம் பொருத்துகின்றமையால் கட்டுக்கொடுக்கிற சாதி எனப் படுவர். இவர்கள் மேல் வாயிற் பல்லை அராவிக் கூராக்கி விடுவார்கள். காடரும் இவ்வாறு செய்வர். இவர்களின் கடவுள் சாத்தன். இவர்களும் குரங்கின் இறைச்சியை உண்பர். பூப்புக்காலத்தில் பெண்கள் தனிக் குடிசையில் ஐந்து நாட்களுக்குத் தங்கியிருப்பர். வேட்டுவன்: இவர்கள் சேலம், கோயம்புத்தூர், மதுரைப் பகுதிகளிற் காணப்படும் உழுதொழில் செய்யும் வேட்டையாடும் மக்கள். வேடர் இலங்கை வேடருக்கு இனமுடையவர். இவர்களுக்கு அம்பட்டர் உண்டு. இவர்கள் வேட்டுவ அம்பட்டர் எனப்படுவர். வேட்டுவரிலிரு பிரிவின ருண்டு. ஒரு பிரிவினர் ஆடை உடுப்பர்; மற்றவர் இலைகளை உடுப்பர். வேலக்காட்டாள்வான்: இவர்கள் திருவிதாங்கூர் அம்பட்டரின் தலைமைக்காரர். இவர்கள் அரசனுக்கு மயிர்வினை செய்வர். வடமலை யாளத்தில் இவர்கள் வலிஞ்சியான், நாவிதன், நாசுவன் எனப்படுவர். வடமலையாளத்தில் இவர்களுக்கு மக்கள் தாயமுண்டு. வேல்: இவர்கள் மலையாளப் பறையரில் ஒரு பிரிவினர். மலை யாள மலைச்சாதியினரில் ஒரு பிரிவினரும் வேலன்மார் எனப்படுவர். வேளன்: (வேளன் - குயவன்) திருவிதாங்கூரில் பறையரும் வேளான் எனப்படுவர். மலையாளத்தில் பேய்க் கூத்தாடும் பாணர் போன்ற ஒரு சாதியினர் வேளன் (வேலன்) எனப்படுவர். பெண்கள் வெளுத்தெடாத்தி எனப்படுவர். இவர்கள் பிராமணர் கோயில்களில் நுழைதல் கூடாது. இவர்கள் தளக்கல்லுக்கு வெளியே நிற்றல் வேண்டும். இவர்களுக்குத் தாலிக் கட்டுக் கலியாணமும் சம்பந்தமும் தனித்தனியே நடத்தப்படும். வறிய குடும்பப் பெண் பன்னிரண்டு வயதாகியிருக்கும் போது தாலிகட்டிக் கொள்வாள். இது பகவன் தாலி எனப்படும். இவர்களுக்கு மருமக்கள் தாயமுண்டு. வேளம்பர்: இவர்கள் கயிற்றில் ஏறிக் கூத்தாடும் கூத்தாடிகள்; கழைக் கூத்தர். வைராவி: வைராவிகள் பண்டாரத்தில் ஒரு பிரிவினர். மதுரைப் பகுதியிற் வைராவிகள் மேளகாரரில் ஒரு பிரிவினர். வடஇந்தியக் குலங்களும் குடிகளும் அகர்வாலா(Agarwala) - மேல் (upper) இந்தியாவில் காணப்படும் முக்கிய வணிகர்; நாக கன்னியிலிருந்து தோன்றியவர்; சமணமதத்தினர். அகாரியர்(Agarya) - மத்திய இந்தியாவில் காணப்படும் ஆதிக் குடிகள். இவர்களின் தொழில் இரும்பு மண்ணை உலையிலிட்டு இரும் பெடுத்தல். அகார் (Ahar) - உரொகில் காண்டில் (Rohilkhand) வாழும் இடையர். அகிர் (Akir) - வடக்கு இந்தியா, மத்திய இந்தியாவில் காணப்படும் இடையரும் பயிரிடுவோரும். அகோம் - அசாமிலுள்ள சான் (Shan) கூட்டத்தினர். அகோரிபந்தி - ஒருவகைப் பண்டாரி வகுப்பினர். இவர்களின் மதக் கொள்கைப்படி நரமாமிசத்தையும் மலத்தையுமுண்ணலாம். அங்கமி - அசாம் நாட்டு நாகர். அசாலா(Hasala) - மைசூரிலே கன்னடநாட்டில் காட்டுத் திரவியங் களைச் சேகரிக்குஞ் சாதியார். அபதானி - பிரமபுத்திராவுக்கு வடக்கிலுள்ள அசாம் மலைச் சாதியார். அபோர்(Abor) - அசாம் காட்டுச் சாதியினர். அரட்டா(Aratta) - பழைய பஞ்சாப் சாதியினர். இவர்களுக்குத் தாய்வழி உரிமையுண்டு. அரி - கிழக்கு இந்தியாவில் நகர் சுத்தி செய்யும் சாதியார். அரோரா - பஞ்சாப்பில் வாழும் வணிக கூட்டத்தார். அவான்(Awan) - பஞ்சாப்பில் வேளாண்மைபுரியும் காணியாள முசிலிம்கள். அவோ(Ao) - அசாம் நாகர் (இ)டார்சி (Darzi) - இந்திய தையல்தைக்கும் சாதியார் (இ)டார்ட்(Dard) - தாதிஸ்தானிலுள்ள இமாலயப் பழங்குடிகள் (இ)டால்வா(Dalfa) - பிரமபுத்திராவின் வடகரையிலுள்ள அசாம் சாதியார் (இ) டான்கர்(Dankar) - மேற்கு இந்தியாவில் வாழும் இடைச் சாதியார் (இ) டி ஒரி(Deori) - அசாம் ஆதிக்குடிகளின் மந்திரவாதிகள் (இ)டேட் (Dhed) - மேற்கு இந்தியாவில் வயல்வேலை ஏவல் வேலை செய்யும் வெளிச்சாதியினர். (இ)லப்சா (Lacha) - வங்காளத்திலும் இமயமலையிலுமுள்ள மலைச்சாதியினர். (இ)லால்பெகி(Lalbegi) - மேல் இந்தியாவில் சுத்தம் செய்யும் தொழிலாளர். (உ) லுஷி (Lushci) - ஓர் அசாம் சாதியார் (உ) லோகார் (Lohar) - கோதாவரி வடக்கில் வாழும் கொல்லர் (உ) லோகானா - சிந்து நாட்டில் வாணிகம் செய்யும் சாதியார். (உ) லோடா (Lodha) - வேலை புரிவோரும், பயிரிடுவோரும் ஐக்கியமாகாணங்கள், அக்ரா, அவுட்த் முதலிய இடங்களில் காணப் படுவர். (உ) லோதா (Lhota) - அசாம் நாகசாதியார் (உ)லோய் (Loi) - அசாமில் மணிப்பூர்ப்பகுதியில் வாழும் பழங்குடிகள். (உ) லோரி (Lori) - அலுச்சிஸ்தானத்தில் அலைந்து திரியும் சாதியார். இவர்கள் வாத்தியகாரரும் தகரவேலை செய்வோருமாவர். எருவா (Yeruva) - குறுக்கரில் தாழ்ந்த சாதியினராகிய ஆதிக் குடிகள் ஒ (Ho) - மத்திய கிழக்கு மாகாணத்திலுள்ள கொலாரியர் (முண்டர் சாதியைச் சேர்ந்தவர்.) ஒசுவால் (Oswal) - இராசபுத்தானத்தில் மேவாரிலுள்ள வணிக சாதியினர். ஒரயன் (Oraon) - சொட்டநாகபுரி ஆதிக்குடிகளில் திராவிட மொழி பேசுவோர். கச்சரி (Kachari) =- அசாம் ஆதிக்குடிகள் கச்சி (Kachi) - வடஇந்தியாவில் கசகசா பயிரிடுவோர் கச்சின் (Kachin) - பார்மாவிலும் வட எல்லைப் புறத்தும் வாழும் ஆதிக்குடிகள் கஞ்சர் (Kanjar) - வட இந்தியாவிலும் மத்திய இந்தியாவிலும் பாய்முடைவோரும், குற்றவாளிகளுமாயுள்ள நாடோடிகள். கடபா (Gadaba) - ஒரிசாவில் வாழும் கொலாரியர். கட்டி (Gaddi) - பஞ்சாப்பில் வாழும் இடையர்; பகுதியினர் முசிலிம்கள்; பகுதியினர் இந்துக்கள். கண்டயட் (Khandait) - ஒரிசாவில் பகுதி காணியாளரும், பகுதி பட்டாளச் சேவை புரிவோருமாகிய சாதியார் கண்டியோகி (Handi jogi) - தென்னிந்தியப் பண்டாரங்களில் ஒரு பிரிவினர்; பன்றி வளர்த்தல், சில்லரை வைத்தியம் புரிதல், பாம்பாட்டுதல் முதலியன இவர்கள் தொழில். கத்தரி - பஞ்சாப்பிலும், வடமேற்கு இந்தியாவிலும் வாணிகம் செய்யும் சாதியார். கத்தாரி (Kathari) - பம்பாய்க் காட்டுச் சாதியினர். கபூலி - அப்கான் அல்லது பட்டாணியர். கயஸ்தா(Kayastha) - வங்காளத்தில் எழுத்து வேலை செய்யும் சாதியார். கரன் (Karan) - ஒரிசாவில் எழுத்தாள வகுப்பினர். கலிதா (Kalita) - அசாம் விவசாயிகள். கல்டியா (Haldiya) - அகரவாலர்களிலொரு பிரிவினர். இவர்கள் மஞ்சளை உண்ணமாட்டார். கல்தா - ஒரிசா விவசாயிகள். கல்வாய் (Halwai) - வட இந்தியாவில் மிட்டாய் செய்வோர். கல்வார் (Kalwar) - வட இந்தியாவில் சாராயம் வடிப்போரும் விற்போரும். காசி (Khasi) - அசாமில் வாழும் மொன் கெமர் மொழி பேசும் மக்கள்; இவர்களுக்குப் பெண்வழித் தாயமுண்டு. காசீரா (Kasera) - வடஇந்தியாவில் பித்தளை வேலை செய்வோர். காதி (Khati) - பஞ்சாப்பில் வண்டி செய்யும் தச்சர். காதிக் (Khatik) - வட இந்தியாவில் வேலையாளர். இறைச்சி யடிப்போர், மரக்கறி வியாபாரிகள். காதோணி (Kathoni) - அசாமில் நெசவாளர் காமி (Kami) - நேபாளக் கொல்லர் காயாவால் (Gayawal) - பிராமணப் பண்டாரங்களிலொரு பிரிவினர். இவர்கள் காயாவுக்கு யாத்திரை செல்வோரிடும் தானத்தைப் பெற்று வாழ்வர். காரியா (Kharia) - சொட்ட நாகபுரியிலும், மத்திய இந்தியாவிலும் வாழும் கொலாரிய ஆதிக்குடிகள். காரவா (Kharava) - மேற்கு இந்தியாவில் உப்பு விளைவிப்போர். காரோ (Garo) - தாய்வழி உரிமை பெறும் அசாம் பழங்குடிகள். கார்வாலி (Garwali) - இமயமலைச்சாதியார். காவிர் (Kafir) - இமாலய சாதியார். கான்கர் (Khanger) - மத்திய இந்தியாவிற் காவற்காரச் சாதியார். கான்சி (Ganchi) - மேற்கு இந்தியாவில் செக்காட்டுவோரும் எண்ணெய் விற்போரும். காஹார்(Kahar) - வடஇந்தியாவில் மீன்பிடிகாரர், குயவர், வீட்டு வேலைக்காரர். காஸ் (Khas) - நேபாளப் பழங்குடிகளில் ஒருவர். கிசான் (Kisan) - மேல்(Upper) இந்தியாவில் பயிரிடுவோர். குயார் (Gujar) - பஞ்சாப்பிலும் வடமேற்கு இந்தியாவிலும் காணப் படும் மந்தை மேய்ப்போர். இவர்கள் வெள்ளை அவுணரின் (White Huns) சந்ததியினர். காகி (Kaki) - அசாமிலும் பர்மாவிலும் வாழும் மலைச் சாதியினர். கேவாட் (Kewat) - வடஇந்திய மீன்பிடிக்கும், பயிரிடும் சாதி. கைபர்த்தா (Kaibartha) - வங்காளத்தில் மீன்பிடிக்கும் ஒரு சாதியினர். கொச் (Kochh) - வட வங்காளத்திலும் அசாமிலுமுள்ள ஒரு சாதியினர். கொண்டு (Kond) - ஒரிசாவில் வாழும் மலைச்சாதியினர். கொரகா (Koraga) - தென் கன்னடத்தில் கூடைமுடையும் வெளிச் சாதியினர். கொன்யாக் (Konyak) - அசாம் நாகர். கோ (Kho) - இமயமலைச்சாதியார். கோசா (Kjoja) - மேற்கு இந்தியாவில் வாழும் இரண்டு வணிகப் பிரிவினர். கோடகா (Kodaga) - பட்டாளத்தில் சேரும் கூர்க்கசாதியார். கோதா (Kota) - நீலகிரியில் வாழும் சாதியினர், வாத்தியகாரர். கோபா (Gopa) - வங்காள இடையர். கோரா (Kora) - சொட்ட நாகபுரியில் குயவர்; கொலாரிய உற்பத்தியினர். கோரி(Koiri) - மேல் இந்தியாவில் பயிரிடும், மந்தை மேய்க்கும் சாதியார். கோர்கு(Korku) - மத்திய இந்தியாவில் மலை அல்லது காட்டுச் சாதியினர். கோலா - வடஇந்தியாவில் இடையரும் பால் விற்போரும். கோலி - மேற்கு இந்தியாவில் வேலையாட்கள். கோஷ - பஞ்சாபில் பால் விற்கும் இடையர். சட்கொப் (Sadgop) - வங்காளத்தில் பயிரிடுவோர். சண்டாளர் - இந்து சமூகத்தில் தாழ்ந்த சாதியினர். வங்காளத்தில் பயிரிடுவோர், ஓடமோட்டுவோர், மீன் பிடிப்போர் இச் சாதியினராவர். சத்தர்காய் (Chattarkhai) - ஒரிசாவில் 1886இல் நேர்ந்த பஞ்சத்தில் சத்திரங்களிலுண்டதால் சாதியை இழந்தவர்களிலிருந்து தோன்றியவர் களிலிருந்து தோன்றிய கூட்டத்தினர். சமர்கூர் (Chamargaur) - இராசபுத்திர சாதியினர். இவர்களில் இந்து, முசிலிம் பிரிவுகளுண்டு. சரஸ்வத் (Saraswat) - பஞ்சாப்பிலுள்ள பிராமணரிலொரு பிரிவினர். சராக் (Sarak) - கிழக்கிந்தியாவில் பயிரிடுவோரும் நெசவு செய்வோருமாகிய சாதியர். சவரர் - ஒரிசாவிலுள்ள கொலாரிய வகுப்பினர். சாகா - வங்காளத்தில் சாராயம் வடிப்போர், விற்போர். சாக்மா (Chakma) - கிழக்கு வங்காளத்தில் சட்டால் கொங்கில் வாழும் ஆதிக்குடிகள். சாகிட்பெஷ்ஷா (Shagerdpesha) - ஒரிசா நாட்டில் வீட்டு வேலைக்காரர். சாங் (Chang) - அசாம் நாகர். சாசா (Chasa) - ஒரிசாவில் வாழும் பயிரிடும் சாதியார். சாந்தால் - சொட்ட நாகபுரி, பிகார், வங்காளம் முதலிய நாடுகளில் காணப்படும் கொலாரியக் குழு. சான்சிலா (Sansila) - இராபுத்தானத்திலுள்ள குற்றம் புரியும் சாதி. சிற்பாவன் (Chitpavan) - கொங்கண பிராமணரிலொரு பிரிவினர். சின் (Chin) - அசாமிலும் பர்மாவிலுமுள்ள சாதியினர். சுத் (Sut) - அசாமில் பயிரிடுவோர். சுதார் (Sutar) - தெற்கல்லாத மற்றை இடங்களிற் காணப்படும் தச்சர். சூத்திரதார் - வங்காளத்தச்சர் சேமா - அசாம் நாக வகுப்பினர். சேரோ(Chero) - ஐக்கிய மாகாணங்களிற் காணப்படும் பயிரிடு வோர்; கொலாரிய இனத்தவர். சோத்திரா (Chodra) - பம்பாயில் ஊர் சுற்றும் கூட்டத்தினர். சோனி (Soni) - மேற்கு இந்தியாவில் தட்டார். சௌரர் - பஞ்சாப்பிலும் வடமேற்கு இந்தியாவிலுமுள்ள சுத்தஞ் செய்வோர். தாடோ (Thado) - அசாமிலுள்ள ஒரு சாதி. தாதிரா(Thathera) - பித்தளை வேலை செய்யும் சாதி. தாவைவ் (Tawaif) - முசிலிம் இந்துக்களுள், முசிலிம்களுக்கிடை யிலுள்ள நடனமாடும் வியபிசாரிகள். தாரி (Dhari) - வாத்தியகாரர். தானுக் (Dhanuk) - வட இந்தியாவில் வயல் வேலை செய்வோர். திலி (Tili) - வங்காள எண்ணெய் வாணிகர். துமால் (Dumal) - ஒரிசாவில் பயிரிடும் சாதியார். தூரி (Turi) - சூடிய நாகபுரியில் காணப்படும் விவசாயம், மூங்கில் வேலை, கூடை முடைதல் முதலிய தொழில்கள் புரிவோர். தெய்வேந்திரன் குலவேளாளர் - பள்ளன் சாதிக்கு ஒரு பட்டப் பெயர். தெலகா (Telaga) - தெலுங்கு நாட்டு விவசாயிகள். தேலி (Teli) - கிழக்கு இந்தியாவில் எண்ணெயாட்டுவோரும், எண்ணெய் விற்போரும். தேஷ் ஆஸ்த் (Deshasth) - மராட்டிப் பிராமணரிலொரு பிரிவினர். தொக்ரா (Dogra) - இமயமலைச் சாதியாரில் ஒரு கூட்டத்தினர். தோம் (Dom) - சுத்தஞ் செய்யும் சாதியார். நெவார் (Newar) - குறுக்கருக்கு இனமுடையவர்களாகக் கூறிக் கொள்ளும் நேபாள சாதியார். பதான் - வடமேற்கு எல்லைப்புறத்தில் வாழும் முசிலிம்கள். பலுச்சி - ஆப்கானிஸ்தானத்திலொரு சாதியார். பனியர் (Baniya) - வட்டிக்குப் பணங்கொடுப்போர்; வணிகருக்கு இராசபுத்தானத்திலும் மேற்கு இந்தியாவிலும் வழங்கும் பெயர். பனசிகா (Banajiga) - கன்னட வணிக சாதியார்; தெலுங்கு பலிசா போன்றவர். பன்யரா (Banyara) - திரிந்து வியாபாரஞ் செய்பவர், மந்தை வைத்திருப்பவர்களாகிய நாடோடி மக்களுக்கு வழங்கும் பெயர். பாட் (Bhat) - வட இந்திய பாட்டுப்பாடும் சாதியார். பாட்னி (patni) - வடவங்காள மீன்பிடிகாரரும் கூடை இழைப் போரும். பாசவி - கோயிலுக்குத் தேவடியாளாக விடப்பட்ட கன்னடப் பெண். பாசி (pasi) - வட இந்தியாவில் கள்ளிறக்குவோர். பாப்கன் (Babhan) - வட இந்தியாவில் காணியாளரும் பயிரிடுவோரு மாகிய கூட்டத்தினர். பாய்டியா (Baidya) - வங்காள மருத்துவ சாதி. பாய்தி (Baiti) - சுண்ணாம்பு சூளையிடும் சாதியார், இவர்கள் சுண்ணாறி, டோலி எனவும் படுவர். (டோலி - மேளம்) பாரகியா (parahiya) - ஐக்கிய மாகாண மலைச் சாதியார். பாரூய் (Barui) - ஒரு வங்காளச் சாதியினர். பார் (Bhar) - ஐக்கிய மாகாணத்திலும், பிகாரிலுமுள்ள சாதியார். பார்காய் (Barhai) - வட இந்திய தச்சச்சாதியினர். பார்ஜா (parja) - ஒரிசாவிலொருசாதியினர்; கொலாரிய மொழி பேசுவோர். பார்புஞ்சா - வட இந்திய தானிய வியாபாரிகள். பான்கி (Bhangi) - தென்னிந்தியா அல்லாத இடங்களில் அழுக் கெடுக்கும் சாதியார். பானவார் (panawar) - இராசபுத்திரரில் அக்கினி குலத்தவர். பிராகூய் - பலுச்சிஸ்தானத்தில் வாழும் திராவிட சாதியார். பிராலி (pirali) - வங்காளப் பிராமணரிலொரு பிரிவினர். பிரித்தியல் பணியர் (Brithiyal Banya) - அசாமில் காணப்படும் வெளிச்சாதியினர். பிசோனி (Besoni) - இராஜபுத்தானாவில் காணப்படும் கலப்புச் சாதியார் பிர்கோர் (Birhor) - சோட்ட நாகபுரியிற் காணப்படும் பகுதியில் அலைந்து திரியும் சாதியார். பின்ட் (Bind) - ஐக்கிய மாகாணத்திற் காணப்படும் பயிரிடுவோ ரும், வயல் வேலை செய்வோரும். புருசோ (Burusho) - இந்துக்குஷில் காணப்படும் இமயமலைச் சாதியார். புறொக்பா (Brokpa) - இந்துக்குஷில் காணப்படும் இமயமலை ஆதிக்குடிகள். பூஜா(Bhuja) - சோட்ட நாகபுரியிலும், வங்காளத்திலும் வாழும் கொலாரிய மக்கள். பூயின்மாலி (Bhuinmali) - கிழக்கு வங்காளத்தில பல்லக்குச் சுமப்போரும் ஏவல் வேலை புரிவோரும். பெக்கன்வாலா - பன்றியிறைச்சி விற்போர். வில்லாளர் - வில்லியரும் இராசபுத்திரரும் கலந்த கூட்டத்தினர். மேற்கு இந்தியாவிற் காணப்படுவர். பென் இ இசிரேல் - பம்பாய் யூதர் . பொண்டோபார்சா (Bondoporja) - ஒரிசாவிற் காணப்படும் பிற்போக்கான கூட்டத்தினர். போத்தியா (Bhotiya) - இமாசலத்தின் கீழ்ப் பிரதேசத்திற் காணப்படும் மங்கோலிட்டு மக்கள்; நேபாள உற்பத்தியினர். போக்சா (Bhoksa) - இமயமலை அடிவாரத்திலும் ஐக்கிய மாகாணத்திலும் காணப்படும் கூட்டத்தினர். இராசபுத்திர உற்பத்தி யினர். போரா (Bohra) - மேற்கு இந்தியாவில் காணப்படும் முசிலிம்கள். மாஃலி (Mahli) - மத்திய இந்தியாவிற் காணப்படும் கூலி வேலை செய்வோர், கூடை முடைவோர். மாக் (Magh) - வங்காளத்திலுள்ள பௌத்த வகுப்பினர். மாகரா (Mahara) - அசாமிலுள்ள ஒரு சாதியினர். மாகிடா - தெலுங்கர்; தோல் வேலை செய்வோர்; சக்கிலியரை ஒத்தவர். மாச்வார் (Majhwar) - மத்திய இந்தியக் காட்டுச் சாதியார். மாபார் (Mabar) - சிந்து மாகாணத்திலுள்ள ஒரு சாதியார். மாவர் - வங்காளத்தில், பிகாரிலுள்ள மலைச்சாதி. மாலி - தெற்கிலல்லாத இடத்தில் வீட்டு வேலைக்காரரும் காய்கறித் தோட்டம் செய்வோரும். மாலோ - வங்காளத்தில் மீன்பிடிக்கும், படகோட்டும் சாதியார். மேகார் (Mehar) - வயல் வேலை, கூலி வேலை செய்வோர். யன்னப்பன்ட் - கோணி பின்னும் தெலுங்குச் சாதி. யஸ்வா - இராசபுத்தான வணிகசாதியார். யாட் (Jat) - வேளாண்மை செய்யும் சாதி. யாலியகை பார்தா - வங்காளத்தில் மீன் பிடிக்கும் சாதி. யாலுவா, யாவோ - வங்காளத்திலுள்ள மீன் பிடிக்கும் சாதி. யுவாங் - ஒரிசா மலைகளில் வாழும் ஒரியர். யூகி - அசாமில் பட்டுப்புழு வளர்ப்போரும் பட்டு நெசவு செய்வோரும். வா (Wa) - கிழக்குப் பர்மாவில் காணப்படும் ஆதிக்குடிகள். வில்லியர் (Bhil) - மத்திய இந்தியாவிற் காணப்படும் ஆதிக்குடிகள். வெரங்கி(Fering) - வங்காளத்திலுள்ள பறங்கியர் (போர்ச்சுக்கேய உற்பத்தி). இலங்கைத் தமிழர் (இஃது இற்றைக்கு நூறாண்டுகளின் முன் சைமன் சாசிச் செட்டி அவர்களால் எழுதப்பட்ட “The, Castes, Customs, Manners and Literature of the Tamils ” என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது) பழக்கவழக்கங்கள் கர்ப்பதானம் - இது கர்ப்பக் குறி காணப்பட்டவுடன் செய்யப் படுவது. வீடு முழுவதும் பசுச்சாணியால் மெழுகிச் சுத்தஞ் செய்யப்படு கிறது. தலைவாயிலில் அமைக்கப்பட்ட பீடத்தில் பிள்ளையார் பிடித்து வைக்கப்படுகிறது. புரோகிதர் தேங்காயுடைத்து ஓமம் வளர்த்துப் பூசை செய்தபின் கருப்பிணிக்கு ஆசீர்வாதஞ் செய்வார். இதற்குக் கூலியாக பணம், துணி அல்லது மாடு கொடுக்கப்படுகிறது. பும்சவனம் - இது மூன்றாவது மாதத்தில் செய்யப்படுகிறது. மேற்கூறியது போல் செய்தபின் பெண்கள் கருப்பவதியின் தலையைச் சுற்றி ஆலத்தி எடுப்பார்கள். பெண்ணின் தந்தை ஒரு கோடி காப்பைப் பெண்ணுக்குக் கொடுப்பார். சீமந்தம் - இது ஏழாவது மாதத்தில் செய்யப்படுவது. கருப் பிணியின் சுற்றத்தவர் பந்தலின்கீழ் கூடியிருப்பர். அவர்கள் மூன்று பானையில் சோறு சமைத்துத் தெய்வங்களுக்கு படைப்பார்கள். பெண் கலியாண உடையோடு முன்னால் வைக்கப்பட்டுள்ள உரலில் வளைந்து கைவிரலால் தொட்டுக் கொண்டு நிற்பாள். கணவனின் பகுதியைச் சேர்ந்த பெண்கள் அகப்பையில் சிறிது பாலை எடுத்து ஒவ்வொருவராக அவள் தோளில் வார்ப்பார்கள். சில பகுதிகளில் கோயிலிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தத்தை அவள் உறிஞ்சிக் குடிக்கும்படி கொடுப்பார்கள். பெண் கருப்பமாக விருக்கும்போது பெண்ணின் கணவன் தாடியை வெட்டுவதில்லை. விரதங்களனுட்டிப்பான். குழந்தை பிறப்ப தற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களின் முன் குடியிருக்கும் வீட்டி லிருந்து பெண் இன்னொரு இடத்துக்கு மாற்றப்படுவாள். இது பிள்ளைப் பேற்றால் வீடு தீட்டடையாமலிருப்பதற்காகவாகும். பிள்ளைப்பேற்றின்பின் 16, 21 அல்லது 31 நாட்களின் பின் புரோகிதர் வீட்டுக்குச் சென்று தீட்டுக் கழிப்பார். குழந்தை பிறந்ததும் தந்தை சோதிடரிடம் சென்று சாதக பலனை அறிகிறார். குழந்தை பிறந்து பத்து அல்லது பன்னிரண்டு நாட்களின் பின் பிள்ளைக்குப் பெயரிடப்படு கிறது. பெரும்பாலும் பெயர் தந்தையாலிடப்படுகிறது. 12 அல்லது 16வது நாளில் காது குத்தப்படுகிறது. பெரும்பாலும் இது 6வது அல்லது 8வது மாதத்தில் நடைபெறுகிறது. 6ஆம் அல்லது 8ஆம் மாதத்தில் சோறு தீற்றுச் சடங்கு நடைபெறுகிறது. கிரியை முடிவில் குழந்தைக்குச் சிற்றாடையுடுத்தி குழந்தையைக் கோயிலுக்கு எடுத்துச் சென்று சிற்றாடை கோயிலுக்குக் கொடுக்கப்படுகிறது. முதலாவது அல்லது மூன்றாவது வாரத்தில் முடி இறக்கப்படுகிறது. உச்சியில் அல்லது நெற்றிக்கு மேல் ஒரு பிடி மயிர் விட்டு நாவிதன் தலையை மழித்து விடுவான். சில பகுதிகளில் உறுமால்கட்டு என்னும் விருந்துக் கொண்டாட்டம் நடக்கும் வரையில் இளைஞர் தலையை மழித்துக் கொள்ளமாட்டார்கள். சிறுவர், சிறுமியரைப் பள்ளிக்கு வைத்தல் ஏடு தொடக்குதல் எனப்படுகிறது. பள்ளிக்கூட ஆசிரியர் மூன்று பனை ஓலைச் சட்டங்களில் அரிவரியை எழுதி எழுத்துக்களுக்கு மஞ்சள் பூசித் தூபங் காட்டிக் கொடுப்பது இக் கிரியையாகும். சிறுவர் பள்ளிக்குச் செல்லும் வயது 5. பெண் பருவமடைந்ததும் சாமர்த்தியக் கலியாணம் நடைபெறுகிறது. பூப்பு அடைந்ததும் அவள் வீட்டில் மறைவான ஒரு இடத்தில் ஏழு அல்லது 11 நாட்களுக்கு விடப்படுகிறாள். பின்பு அவளுக்கு முழுக்காட்டப்படுகிறது. அப்பொழுது நண்பரும் சுற்றத்தவரும் அழைக்கப்படுவார்கள். முழுக்காட்டும் போது பெண்கள் ஒருவர் மீதொருவர் மஞ்சள் நீர் தெளித்துக் கொள்வர். பின் பெண்ணுக்கு ஆராத்தி காட்டுவார்கள். சில பகுதிகளில் மூன்றாவது நாள் கலியாண மான பெண்கள் கூடியிருந்து சில கிரியைகளின் பின் பெண்ணைச் சுற்றி நின்று கைதட்டி ஆடுவார்கள். (இவ் வழக்கங்கள் இப்பொழுது பெரும் பாலும் மறைந்துவிட்டன.) திருமணம் திருமணப் பேச்சு மணமகனின் தந்தையால் தொடங்கப்படுகிறது. தொடங்குமுன் அவன் இரு பகுதியாரின் சாதகங்களையும் சோதிடர் மூலம் பார்த்துப் பொருத்தமிருக்கிறதா என்று அறிந்து கொள்வான். கலியாணம் நிச்சயமானதும் மணமகனின் தந்தை, முன்னால் மேளம் அடித்துச் செல்ல சில நண்பர்களுடன் 7 அல்லது 9 வாழைக் குலைக ளுடனும் மஞ்சள் பூசிய தேங்காய்களோடும் பெண்ணின் தந்தை வீட்டுக்குச் சீதனம் நிச்சயிப்பதற்குச் செல்வான். அவர்கள் ஒரு நிபந்தனை அல்லது பட்டோலை எழுதிக்கொண்டு கலியாணத்துக்கு நாள் வைப் பார்கள். இரு பகுதியார் வீட்டு முற்றங்களிலும் பந்தலிடப்படும். எத்தனை பந்தற்கால்கள் நடவேண்டுமென்பதில் சில சமயங்களில் தர்க்கம் எழுவதுண்டு. முதற் பந்தற்கால் வடகிழக்குத் திசையில் நடப் படும். இது ஒதிய மரக்காலாக விருக்கும். நடும்முன் அதற்குச் சந்தனம், மஞ்சள், குங்குமம் முதலியன பூசி மாவிலை, தருப்பைப்புல் முதலியன கட்டப்படும். நடுவதன் முன் பருத்திக்கொட்டை கலந்த பால் வார்த்து தேங்காயுடைக்கப்படும். பந்தல் வெள்ளை கட்டி பாக்குக் குலைகள், தென்னம் பூ, இலைகள், கண்ணாடி விளக்குகள், காகிதப் பூக்கள், வத்தித் தாள்களால் அலங்கரிக்கப்படும். பந்தலின் முன் வில் வடிவாகக் கம்புகள் கட்டித் தோரணம் தூக்கி வாழைகள் நட்டு அலங்கரிக்கப்படும். பந்தலின் மத்தியில் கலியாணக் கால் நாட்டப்பட்டிருக்கும். இஃது அரசாணிக்கால் எனப்படும். அதன் பக்கத்தில் கிண்டப்பட்ட ஓமகுண்டம் சாணியால் மெழுகப்பட்டிருக்கும். இதன் பக்கத்தில் விளக்குகள் கொளுத்தி வைக்கப்பட்டிருக்கும். அவற்றின் பக்கத்தில் களிமண்ணால் செய்த யானையின் முதுகில் மூன்று அல்லது ஏழு, நிறம் பூசிய பானைகள் ஒன்றின் மேலொன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். மேலே இருக்கும் பானையின் வாயில் மஞ்சள் பூசிய தேங்காய் வைக்கப்படும். மணமகன் பகுதியார் மணமகள் வீட்டுக்குத் தாலி கூறைகளுடன் செல்வார்கள். செல்வர் பல்லக்கில் அல்லது குதிரை மேலேறிப் போவர். வண்ணான் வீதியில் நில பாவாடை விரித்துச் செல்வான். வேறு இருவர் சாமரை வீசுவர். நால்வர் மேற்கட்டி (மேலாப்பு) பிடிப்பர். வாத்தியகாரர் வாத்திய மொலிப்பர். இரு நாவிதர் சங்கு ஊதுவர். நாட்டியப்பெண்கள் நாட்டிய மாடிச் செல்வர். பல இளைஞர் தீவட்டி, வெள்ளைக் குடை, கொடி, விருது முதலியன பிடித்துச் செல்வர். மணமகன் வந்ததும் மணமான பெண்கள் ஆராத்தி காட்டுவர். பெண்ணின் தாய் அல்லது சகோதரி ஒரு கிண்ணத்தில் பிசைந்த வாழைப்பழத்தையும். பாலையும் பந்தலிலுள்ள பீடத்தில் வைக்கும்படி கொடுப்பர். வீட்டில் மறைவாக இருந்த பெண் இப்பொழுது பல்லக்கில் கோயிலுக்கு எடுத்துச் சென்றபின் பந்தலுக்கு கொண்டு வரப்படுவாள். இருவரும் கிழக்கு நோக்கியிருக்கும்படி அங்குள்ள பீடத்தில் இருத்தப்படுவார்கள். புரோகிதர் பெண்ணின் இடது கையிலும் மணமகனின் வலது கையிலும் கங்கணங் கட்டியபின் கிரியைகளைப் புரிவர். தாலியை மணமகனின் சகோதரி எடுத்துப் புரோகிதரிடம் கொடுப்பாள். அவர் அதற்குத் தூபங் காட்டியபின் சபையோரிடத்தில் கொடுப்பார். அவர்கள் ஒவ்வொருவராக அதைத் தொடுவார்கள். பின்பு மணமகன் தாலி கட்டுவான். பின்னால் நிற்கும் அவனுடைய சகோதரி அதனை நன்றாகக் கட்டிவிடுவாள். பின்பு அவ் விடத்திற் கூடியிருக்கும் கலியாணமான பெண்கள் நெல்லும் வெற்றிலை யும் வைத்த நாழியால் மணமகன், மணமகள் என்னும் இருவரின் தலையையும் சுற்றுவார்கள். அப்பொழுது புரோகிதர் தேங்கா யுடைப்பார். பின் அருந்ததி காட்டுதல், அம்மி மிதித்தல் முதலிய கிரியைகள் நடைபெறும். மரணம் ஒருவனுக்கு மரணம் அணுகும்போது புரோகிதர் அழைக்கப் படுகிறார். அவர் சிறிது பஞ்ச கௌவியத்தை அவன் வாயினுள் விடுவார். பின்பு நோயாளி பசுமாட்டின் வாலைப் பிடித்துப் புரோகிதருக்கு அதனைத் தானமாகக் கொடுப்பான். மரணமடைந்ததும் தலை வடக்கே கிடக்கும்படி பிரேதம் கிடத்தப்படுகிறது. பக்கத்தில் நிற்பவர்கள் ‘சிவா’ என்று மூன்று முறை பிரேதத்தின் காதில் சொல்லி நெற்றிக்கும், நெஞ்சுக்கும் திருநீறு பூசுவர். மரணச் செய்தி சங்கு ஊதி அயலவர்களுக்கு அறிவிக்கப்படும். பெண்கள் சவத்தைச் சுற்றியிருந்து ஒப்பாரிவைத் தழுவர். முற்றத்தில் நாலு கம்புகள் நட்டு வெள்ளைகட்டிப் பந்தலிடப் படும். அங்கு பிணம் எள்ளெண்ணையும், அரப்பும் தலையில் வைத்து முழுக்காட்டியபின் பந்தலின் மத்தியில் கிடத்தப்படும். பின்பு பிணம், பாடை அல்லது தண்டிகையில் வைத்துத் தலை முன்புறம் நிற்கத் தக்கதாகச் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்படும். செல்லும் வழியில் அரிசிப்பொரி, பருத்திவிதை, அத்தி இலை, காசு என்பன எறியப்படும். பிணத்தை விறகின் மீது கிடத்தியபின் வாய்க்கரிசி போட்டுக் கொள்ளிக் குடமுடைத்துத் தீ மூட்டப்படும். ஈமச் சடங்குக்குச் சமுகமாயிருந்தோர் எல்லோரும் நீராடுவர். இறந்தவனின் மனைவி கைம்பெண் எனப்படுவாள். இவளுடைய தாலி மூன்றாவது நாள் கழற்றப்படும். புத்தளக் கரையார் புத்தளக் கரையார்களிடையில் மூன்று வகைக் கலியாணங்கள் நடைபெறுகின்றன. ஒன்று மாலை மணம். மணமகனின் சகோதரி பெண்ணைப் பூமாலை வாசனைப் பொருள்களாலலங்கரித்த பின் அவள் கழுத்தில் தாலியணிவாள். கலியாணம் செய்துகொண்ட இருவருக்கும் ஒருமித்து வாழப் பிரியமில்லாவிடில் அவர்கள் பிரிந்து கொள்ளலாம். பிரிந்துகொள்ள விரும்பும் பகுதி கிட்ட உள்ள கோயிலுக்கு 25 இறசால் கொடுக்க வேண்டும். இரண்டாவது மணம் சிறுதாலி. இது யாதும் கிரியைகளில்லாமல் முன் கூறியது போலத் தாலி தரித்தல். கலியாண நீக்கம் செய்து கொள்ள விரும்பும் பகுதி 25 இறசால் ஆறுபணம் கோயிலுக்குத் தண்டம் கொடுக்க வேண்டும். மூன்றாவது மஞ்சள் பூசல். இது தாலி கட்டாமல் மணஞ் செய்து கொள்வது. மணமகனின் சகோதரி பெண்ணின் உடையில் அரைத்த மஞ்சளைப் பூசி விடுவாள். கலியாண நீக்கம் செய்து கொள்ளும் பகுதி ஆறு இறசால் மூன்று பணம் தண்டமாகக் கட்டவேண்டும். அணிவகை ஆடவர் அணிபவை ஒட்டு - இரத்தினம் வைக்கப்பட்ட பொன் வளையம். காதில் அணியப்படுவது. கடுக்கன் - காதில் அணியப்படுவது. இதில் பல வகைகளுண்டு. செட்டிக் கடுக்கன் - 10 முதல் 11 அங்குலச் சுற்றளவுள்ளது. பொன் கம்பிகளை முறுக்கிச் செய்யப்படுவது. நடுவில் இரத்தினம் வைக்கப்பட் டிருக்கும். கொழும்புச் செட்டிகள் இதில் ஐந்து அல்லது ஆறு வளையங் களை ஒவ்வொரு காதிலுமணிவர். சூட்டுக் கடுக்கன் - நீண்ட வட்டமான வளையம். அரிப்புச்சாரிக் கடுக்கன் - பொன் பூவரும்புகள் கோக்கப்பட்ட பொன் கம்பி. உருத்திராட்சக் கடுக்கன் - உருத்திராக்கம் நடுவில் வைக்கப்பட்ட கடுக்கன். புலிமுகக் கடுக்கன் - முன்பக்கத்தில் புலிமுகம் பொறிக்கப்பட்ட கடுக்கன். முருகு - காதின் மேற்பகுதியில் அணியப்படுவது; கீழே முத்து அல்லது இரத்தினக்கல் தொங்கவிடப்பட்டிருப்பது. சரப்பள்ளி - பொன் சங்கிலி. பதக்கம் - சங்கிலியில் கோத்துக் கழுத்திலணியப்படுவது. அரைஞான் - பொன் அல்லது வெள்ளியாற் செய்து அரையிலணியப்படுவது. மிஞ்சி - காற்பெருவிரலிலணியும் வெள்ளி மோதிரம். காறை - இது நடுவில் சந்திரனின் வடிவம் தொங்கும்படியாக வெள்ளி அல்லது பொன்னாற் செய்யப்பட்ட மாலை. பெண்களணிகள் குப்பி - கொண்டையில் செருகப்படுவது; கடுக்காயளவு பருமை யுடையதாக இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டது. சுட்டி - மூக்குக்கு நேரே நெற்றியில் தொங்கும்படி தலையில் அணியப்படுவது. சிணுக்கி - சங்கிலி கோத்த தட்டையான பொன் தகடு; காதணியில் மாட்டி கொண்டையில் கொளுவப்படுவது. பிறைபொழுது - பிறையையும் சூரியனையும் போற் செய்யப் பட்ட இரண்டு பொன்னாபரணங்கள்; ஒன்றை ஒன்று பார்க்கும்படி தலையி லணியப்படுவன. பட்டம் - நெற்றியில் கட்டும் பொன் தகடு. மூக்குத்தி - மூக்கின் இடப்பக்கத்தி லணியப்படுவது; முத்துத் தொங்கவிடப்பட்டிருப்பது. நத்து - மூக்கின் இரண்டு துவாரங்களுக்கு நடுவில் அணியப் படுவது; முத்து அல்லது இரத்தினக்கல் தொங்கவிடப்பட்டிருப்பது. தோடு - பூவின் வடிவினதாகக் காதிலணியப்படுவது. துலாக்கு - முத்துத் தொங்கவிடப்பட்ட தோடு. கொப்பு - மேற்காதிலணியப்படும் தங்க வளையம். நாகபடம் - கொப்புக்குக் கீழ் அணியப்படுவது. பாம்பின் தலையைப் போல் தோற்றமளிப்பது. மணி - பல பட்டுக்களில் அணியப்படும் மணி கோத்த மாலை. சவடி - தோளில் பொறுத்து நிற்கும்படி அணியப்படும் மாலை. அட்டிகை - இரத்தினக் கற்கள் பதித்த கழுத்தணி. கழுத்தில் ஒட்டக்கட்டப்படுவது. உள்கட்டு - கல்பதிக்காத அட்டிகை. தாலி - கலியாணத்தின்போது கணவன் பொன் கயிற்றில் அல்லது மஞ்சட் கயிற்றில் கோத்து மனைவி கழுத்தில் அணிவது. நெல்லி - இரண்டு பொன் அல்லது வெள்ளிக் கம்பிகளை முறுக்கிச் செய்தது; முழங்கைக்கு மேல் அணியப்படுவது. கை வளையல்கள் - இதில் காப்பு, கங்கணம், வளையல், சாரி. கடகம் எனப் பல வகைகளுண்டு. இவை வெள்ளி அல்லது பொன்னி னால் செய்யப்பட்டு மணிக்கட்டில் அணியப்படுவன. இவை உள்ளே குழல் உடையனவாய் ஒரு அங்குலக் குறுக்களவுடையனவாகவிருக்கும். ஒட்டியாணம் - பொன் அல்லது வெள்ளியினாற் செய்த அரைப் பட்டிகை. தண்டை - உள்ளே பரலிடப்பட்ட காப்பு; வெள்ளியாற் செய்யப்படுவது. காலிலணியப்படுவது. சதங்கை - இது தண்டைக்குக் கீழ் அணியப்படும் பாதசரம். பாடகம் - குதிரைக் கடிவாளத்தின் மேற்பாகம் போன்ற பெரிய வெள்ளிச் சங்கிலி. இது கணைக்காலுக்கு மேல் அணியப்படுவது. கொலுசு - முன் கூறப்பட்டது போன்றது. கால் மோதிரங்கள் - இவற்றில் பலவகைகளுண்டு. நகமூடி, பீலி, முன்தாங்கி, மயிலடி, மகரமீன். மோதிரம் - இருபாலாரும் இரத்தினக்கற்கள் பதித்த வெள்ளி அல்லது தங்க மோதிரங்கள் பலவற்றைக் கையிலணிவர். கொழும்புச் செட்டிப் பெண்கள் பெனிச்சை என்னும் பொன் கொண்டை ஊசிகளைக் கொண்டையில் குத்திக் கொள்வர். மேற்பக்கம் பொன் பதிக்கப்பட்டு இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட ஓட்டு சீப்பைக் கொண்டையிலணிவர். அவர்கள் மேற்காதில் கப்பு என்னும் அணியை யும் அதற்குக் கீழ் கிராபு என்னும் அணிகளையும், உருக்குமணி என்னும் ஐந்து அல்லது ஆறு வளையங்களையும் அவற்றின் கீழ் சவடிக் கடுக்கன் என்னும் தோள்வரை தொங்கும் மூன்று பெரிய ஆபரணங்களையும் அணிவர். அவர்கள் கழுத்து, கை, பாதம் என்பவற்றில் பல ஆபரணங் களை அணிவர். இலங்கைத் தமிழரிடையே காணப்படும் சாதிகள் அகம்படியார் அரிப்பர் இருளர் இலைவாணியர் (பழ வியாபாரிகள்) உப்பளவர்(உப்பு விளைவிப்போர்) எண்ணெய் வாணியர் ஓச்சர் (கலியாணம், இழவு முதலிய வற்றை அறிவிப்போர்; கோயிற் பூசை செய்வோர்) கடையர் (மீன் பிடிப்போர், சாய வேர் கிண்டுவோர் என இரு வகையினர்) கருமான் (கொல்லன்) கரையார் (பள்ளிகளில் ஒரு வகை யினர்) கர்ணம் (கிராமக் கணக்கன்) கலயர் (வடம் திரிப்போர்) கல்தச்சன் கள்ளர் கன்னான் (1) கொத்துக் கன்னான் (உலோகத்தை அடித்து வேலை செய்வோன்) (2) வார்ப்புக் கன்னான் காவல் (கிராம எல்லையைப் பார்ப் பவன்) காவற்பள்ளி (காவற்காரன்) குயவன் குறும்பர் கைக்கோளர் கொட்டியார் (கீழ்த்தர நெச வாளர்) கோமட்டி கோவியர் (வேளாளரின் அடி மைகள்) சக்கிலியர் சலுப்பர் (மரத்தளவாட வியாபாரி கள்) சாணார் (சாண்டார்) சாலியர் (நெசவாளர்) சிவியார் செம்மார் (செருப்புத் தைப்போர்) செம்படவர் சேணியர் (நெசவாளர்) சேதர் (நெசவாளர்) தச்சர் தட்டார் தனக்காரர் (யானைக்காரர்) தாதர் (பாவைக் கூத்தாட்டுவோர்) திமிலர் தொட்டியர் நத்தம்பாடி நளவர் (மரமேறுவோர்) நாவிதர் பட்டினவர் (மீன் பிடிகாரர்) பரம்பர் பரவர் பரவணியான் (கிராமக் கடை வைத்திருக்கும் செட்டி) பரிக்குலத்தார் (குதிரைக்காரர்) பள்ளர் பள்ளி பள்ளிவில்லி (மீன்பிடிகாரர்) பறிக்காரர் (மீன்பிடிகாரர்) பறையர் பாணர் (தையற்காரர்) பாய் வாணியர் (கடைக்காரர்) பூமாலைக்காரர் (பூ விற்போர்) மருத்துவர் மறவர் முக்குவர் முச்சியர் (வர்ணம் பூசுவோர்) யாழ்ப்பாணர் வண்ணைக்காரர் (வாளுறை செய் வோர்) வண்ணார் (1) வெள் வண்ணார் (உயர்ந்த சாதியாருக்கு வெளுப் பவர்) (2) நீலவண்ணார்(சாயம் தோய்ப் பவர்) (3) சாய வண் ணார் (சாயக்காரர்-சிவப்புச் சாயம் தோய்ப்பவர்) (4) துரும்ப வண்ணார் (கீழ்ச் சாதியாருக்கு வெளுப்போர்) வலம்பர் வலையர் (வலைகட்டி வேட்டை யாடுவோர்) வள்ளுவர்(சோதிடம் சொல் வோர்; பறையரின் புரோகிதர்) வீரக்குடியான் (சங்கு ஊதுவோன்) வெட்டியான் (பிணம் சுடுவோன்) வேடன் மாட்டுக்குறி சுடும் அடையாளங்கள் வணிகர் - தராசு வேளாளர் - பசும்பை(அறுகோண வடிவம்) எண்ணெய் வாணியர் - விளக்கு பரவர் - சவளம் கரையார் - மீன் கம்மாளர் - குறடு கடையர் - குடையுங் கொடியும் நாவிதர் - கத்திரிக்கோல் வண்ணார் - கல்(லு) சாதிகளின் பட்டப்பெயர் பிராமணர் - ஐயர் வணிகர் - செட்டி வேளாளர் - பிள்ளை , முதலி இடையர் - கோன் நத்தம்பாடி - உடையார் பள்ளி - படையாச்சி தொட்டியார் - நாயக்கன் கோமுட்டி - செட்டி எண்ணெய் வாணியர் - செட்டி பரவர் - அடப்பன் பட்டணவர் - செட்டி செம்படவர் - அம்பலவன் வலையர் - மூப்பன் முக்குவர் - போடி கைக்கோளர் - செட்டி, முதலி சேணியர் - செட்டி, முதலி அகம்படியான் - சேர்வைக்காரன் மறவர் - தேவர் கள்ளர் - குடியான் நாவிதர் - பரிகாரி, பிராணோபகாரி ஓச்சர் - பூசாரி சிவியார் - பொகடன் சாணார் - நாடான் வண்ணான் - ஏகாலி நளவர் - தன்னயன் வள்ளுவர் - திருசாம்பான் சக்கிலியர் - பகடை பறையர் - சாம்புவன் பள்ளர் - குடும்பம் 1 2 15 14 1. It is admitted both by Indian and European scholars that the civilization of the Tamil Nation was, in the main, due to the Aryan Colonists in the South-Tamil studies p.233 - M.Srinivasa Iyangar.M.A., (1914). இது பழைய ஆராய்ச்சி. இக் கருத்துடையவர்களே பெரும்பாலும் தமிழர் வரலாற்றினை எழுத முயன்று வந்தார்கள். “When the Aryans entered India they had no script of their own, and their script was the script of their enemies, the Dasus (Dravidians)” - Fr. Heras. From prehistoric times these Dravids have been the most intellectual, civilized, cultured people of India, famed for arts and architecture, piety and religions with elaborate rites and symbolisms. The last they have left to us in magnificent neolithic cave temples, carved out of rocky mountains, and in the most intractable stone beautiful design, elaborate in rich decoration with grandeur and yet delicacy. The artists are quite unsurpassed by any race in the world. The people are deep thinkers powerful rulers and administrators who never permitted any Aryan interference in Central or Southern India, in its government, religion or occupations, though their upper classes affected a good deal of Sanskrit - A short study in the science of comparative religions p. 175 - J.G.R. Forlong. These last (Early Vedic Hymns) are full of faded decayed, and quite unintelligible words, and forms, and in some points nearer Greek then ordinary Sanskrit - (Maxmuller). So that the Aryan tongue first appeared in India, was not intelligibly put into words of forms. This was a work of several centuries later when civilized Dravidian Pandits wrote out for Aryans in their sacred Devanagari or Dravid character. Necessarily they thought the illiterate colonists how to write their language and reform their faith and mythology. The same process was then going on in the west when Greeks were beginning to write their Aryan tongue the Semito Phoenician characters aided by Egyptians and Syrians they too were organizing an Aryan mythology and faith - Ibeid p, 247. இது நடுநிலைமையோடு செய்யப்பட்ட மேற்றிசை அறிஞரின் ஆராய்ச்சிக் கருத்து. 1. பழங்கற்காலம்: மக்கள் முரடான கல்லாயுதங்களைச் செய்து பயன்படுத்திய காலம். 2. புதிய கற்காலம்: மக்கள் அழுத்தமான கல்லாயுதங்களைச் செய்து பயன்படுத்திய காலம். 3. மேற்கு ஆசிய மக்களும் தமிழ் மக்களும் ஒரே மக்கட் குலத்தைச் சேர்ந்தவர்களாகக் காணப்பட்டமையாலும், இரு மக்களின் பண்டை நாகரிகமும் பெரிதும் ஒத்திருந்தமை யாலும், மேற்கு ஆசிய மக்களே இந்திய நாட்டை அடைந்தவர்களாவர், என ஆராய்ச்சி யாளர் கருதுவாராயினர். இன்றைய ஆராய்ச்சியில் மேற்கு ஆசிய மக்களே இந்திய நாட்டினின்றும் மேற்கு ஆசிய நாடுகளிற் சென்று குடியேறியவர்களாவர் எனத் தெளி வுறுகின்றது. சோழ நாட்டினின்றும் சென்று தைகிரஸ், யூபிராதஸ் ஆற்றின் வடபால் குடியேறிய மக்கள் தம் நாட்டுக்குச் சால்தியா எனப் பெயரிட்டார்கள் என்றும், அப் பெயர் சோழதேசம் என்பதன் திரிபாகும் என்றும் ஏ.சி. தாஸ் என்பார் தமது இருக்கு வேத இந்தியா என்னும் நூலில் நன்கு விளக்கிப் போந்தார். “சிந்துப் பிரதேசத்திலிருந்து நமது நாகரிகம் பாபிலோனியா எகிப்து முதலிய தேசங்களுக்குப் பரவியது. அவ்விடங்களிலிருந்து இந்தியாவிற்குப் பரவியது என்ற ஐரோப்பிய ஆராய்ச்சியாளரின் எண்ணம் தவறென்றே கருதவேண்டும். பாபிலோனியா வில் கி.மு. 700இல் ஒரு தமிழ்க் குடித்தனம் இருந்தது. தென்னாட்டிலிருந்து தமிழ் நாகரிகம் உரோமாபுரிக்கும் கிரேக்க நாட்டிற்கும் பரவியது. இன்னும் தக்கிண பீட பூமியைச் சேர்ந்த வேட்டுவர் என்ற குறிஞ்சி நில மக்கள் யவன தேசத்திற்குச் சென்று தங்கள் அரசை நிலைநிறுத்தித் தங்கள் பெயரையும் அந் நாட்டிற்குக் கொடுத்தார்கள். இதுவே கிரீட் (Crete) தேசம். இதன் நாகரிகத்திற்கும் தமிழ் நாகரிகத்திற்கும் ஒப்புமை மிகுதியாயுள்ளது. மணிமலர்த்திரட்டு - திரு.வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர் எம்.ஏ. - வரலாற்று ஆராய்ச்சியாளர் பல்கலைக்கழகம், சென்னை. The Development of Mohenjo-Daro script, the religion of these two countries and that of Egypt, the titles of kings, the number of zodiacal constellations among the Proto-Indian People and the relative position of these constellations, the changing of the Proto-Indian constellation of the Harp (yal) for Turus (the bull) which might have taken place in Sumar, the tradition of the ancient people of Mesopotamia recorded by Berosus, the parallel by Bible account of Gen. 11 : 1 - 5. All point to the same conclusion, that the migration of the Mediterranean race commenced from India and extended through south Mesopotamia and North Africa spread through Crete Cyprus, Greece Italy and Spain and across the Prynees reached central Europe and the British Isles. The route starting from Ceylon to Ireland is marked by uninterupted chain of dolmen and other megaliths that seem to be the relics of the enterprising and highly civilized race which is termed the Mediterranean by the anthropologists and which in India, has been quite unreasonably despised under the name Dravidian - Fr. Heras. 1. பாலி மொழி, இலங்கையில் மக்களாற் பேசப்படவில்லை. ஆனால் அங்கு அது இலக்கிய மொழியாக இருந்துவந்தது. பாலி, சமக்கிருதச் சொற்களை ஏற்றுக்கொண்டு இலங்கை மக்கள் வழங்கிய மொழி சிங்களமாக மாறிற்று. கி.பி. 10ஆம் நூற்றாண்டளவில், முதல் முதல் சிங்களமொழியில் நூல் செய்யப்பட்டது. சிங்கள மொழிஅமைப்புத் தமிழை ஒத்துள்ளது. இது சமக்கிருதச் சொற்கள் தமிழுடன் சேர்ந்து, அதனை வேறுபடுத்திய மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. 1. The non-Aryan magicians and the Dravidians became Brahmans. South Indian tradition records numerous instances of Brahmans as taking wives from the lower castes. In many cases non-Brahmans were admitted into the Brahmana caste, as sufficient Brahmanas were not available when the reformed Indo-Aryan religion obtained referance. Prehistone ancient and Hindu India P. 38 - R.D. Banerji. 1. The Hamitic Indo Mediterranean race - Fr. H. Heras - New Review XIV. 3 4 13 12 5 6 11 10 7 8 9 32 17 18 31 30 19 20 29 28 21 22 1. Kannada Passages in the Oxyrhyncus Papyri No. 413 - Mythic Society quarterly Journal publication. 27 26 23 24 25 48 1. The Ancient History of the near East, - H.R. Hall p 173-174 1. இவ் வட்டத்தில் மாத்திரமன்று; அமெரிக்காவிலும் இவ்வகை நாகரிகம் இருந்த தென்றும் அதற்குக் காரணம் இந் நாடுகள் முன்னொரு காலத்தில் ஒன்றுசேர்ந்திருந் தமை எனக் கூறுவாரும் உளர்! 1. இது பிற்காலத்தில் வந்த கிறித்தவர்கள், கிறித்தவர்களல்லாத மதத்தினரை அஞ்ஞா னிகள் எனக் கூறி அறிவில்லாத மக்களை அவ்வாறு நம்பும்படி செய்தது போலாகும். 1. A Sumereo-Babylonian inscription disciphered at mohenjo-Daro-C L. Fabri. Indian culture vol. 3 (1936 - 1937) 1. Journal of Indian History Vol. XII 1933-p 271 2. Pre Aryan elements in Indian Culture. by Atulk. Sur-Indian Historical quarterly Journal 16. LX - 1934 1. Mohenjo-daro and the Indus Civilization - Sir John Marshall. 2. Origin and development of the Bengali language - p. 28. S.K. Chetterji 3. History of Orissa - p. 108. R.D. Banerji M.A., 4. M.D. Bandarkar, M.A., Professor of Ancient Indian History and Culture, Calcutta University. 1. Stone age in India p-43 A language can adopt and create as many words as it pleases without changing its character, but it cannot alter its grammar, its syntax, without becoming an-other; for grammar represents the innate mode of thought over which the Individual person or nation has no control - On the classification of languages - p.17 - Gustave Oppert. 2. History of the Tamils P.T. Srinivasa Iyengar P 2. 1. The philosophy of the Lingayats 1. New Review Vol IV - 1936. 2. Journal of Indian History Vol xxi - 1942 - Were the Mohenjo Darians Aryans or Dravidians. 1. Identification of Mohenjo Daro figure - B.A. Selatore - New Review vol X July 1939 2. Indian Culture Vol I-1943 - The ancient Hungarian Script and the Brahmi Character - C.L. Fabri. 3. Siva his Pre-aryan origins Amalananda Ghosh-Indian Culture. Vol vii. 1. The Script of Mohenjo Daro and Easter Island - Annals of Bhandarkar Vol. 20 p. 270. 2. Science report - 1936 Geral Heard - p. 188. 33 34 47 46 35 36 45 44 37 38 43 42 39 40 41 64 1. By the Pictorial hieroglyphic inscription found and interpreted on the Walls of the temple of the Queen Haslitop at Derel Bahri, we see that this Punt can be no other than India. For many ages the Egyptians traded with their old homes and the reference here made by them to the names of the princes of Punt and its fauna and flora, especially the nomenclature of various precious woods to be found but in India, leaves us scarcely room for the smallest doubt that the old civilization of Egypt is the direct outcome of that of the older India - The Theosophist - March 1881 p. 123 Quoted in “Hindu Superiority” by Har Baeus Sarda. The ancient Abyssinians as already remarked, were, originally migrators to Africa from the banks of Abuisin a classical name for Indus - Heran’s Historical Researches Vol 2 - p. 310 1. When the hungry swarms of Aryan tribesmen descended upon North-west India, the whole land with the exception of the North East corner was occupied by a long settled Dravidian population, split into many Castes and tribes- The mythic society journal vol IV p 157 - James Hornwell. It will appear that the civilization of the Indus valley was associated with the speakers of the Dravidian languages. Lastly the Brahmi script of later Vedic civilization is itself tracad to Indus valley pictographs It will thus appear that the Dravidian speakers were the latest occupants of India before the Indo-Aryan arrived. - Hindu India - Radha Kumud Mukerji - p. 38 1. சாதிக்கலப்பும் உண்டாயிற்று. There was also inevitably at work a process of fusion between the Aryans and the non-Aryans by inter marriage or by alliance - Hindu Civilization - R.K. Mookerji. The distinction between the Aryan and non-Aryan then grew less sharp while social and political conditions became more complicated. The children of Dasu concubines in the Aryan households and those of Aryan women captured by Dravidian chieftains adopted Aryan customs and religious rites. The fair women of Aryan descent were an irresistible attraction for Dravidian chieftains and racial pride did not prevent Indo-Aryan families from giving a daughter in marriage to a dark skinned neighbour for a sufficient consideration-But as Dravidian society was matriarchal such inter marriages, with or without consent always exerted powerful influence in the Aryanization of India, for in the course of time all the highest Dravidian families both in the north and south claimed Aryan descent on their mothers’ side and adopted Aryan customs and religion - A Short History of India E.B. Havell. - p.p. 1926, 1. Zeus had two eyes placed naturally and the third upon the forehead. They say that Priam had this bust of Zeus from his ancestor laomedon - The third eye of this ancient statue was in the forehead; and it seems that the Hidus have a symbolical figure of the same kind - The symbolical language of ancient art and mythology - p. 73 R.P. Knight 2. Juno, Venue, Cybele, Rhoea the Syrian goddess, the armed Phallus, lris, Ceres and Anna Perenna. 1. ‘That contact between Vedism and the indigenous religion of the Indus valley modified both (a) by making the cult of yoga acceptable to Vedism, which formerly believed only in sacrifice and (b) by the retention of non-vedic elements in popular religion. As to the cult of yoga, its indigeous origin is seen in certain stone statues discovered at Mohenjodaro showing ascetics with eyes half shut in contemplation and fixed on the tip of the nose. These according to Chanda supply the missing links between the prehistoric Indus valley civilization and latter civilization of ‘India’ - Buddhist, Jain or Brahmanical - Memoir No 41 of arch, survey quoted in Hindu India. 2. It is not generally admitted that a great deal of the ancient and medieval myth and legend enshrined in the Sanskrit epics and puranas is of Non-Aryan origin, and that even in vedic mythology certain pre-Aryan elements are present. Puranic myths of the gods and legends of kings, heroes, and sages, in the form in which we find them in the Sanskrit works, represent undoubtedly a considerable amount of modification from other original forms, whether Aryan or non-Aryan. The non-aryan speaking masses of Northern India became Aryanised in language, and their tales and legends were retold as a matter of course in the Aryan language of their adoption. - Bulletin of the school of oriental studies Vol. VIII (1935 - 1937) S.K. Chatterjee. 1. The Dravidian substratum in Sanskrit has been discovered by several scholars, and Kittel in his Kannada Dictionary has given some 450 Sanskrit words with possible Dravidian connections. A few other words in both Sanskrit and Prakrit and the vernaculars have subsequently been suggested as being of Dravidian origin by other scholars. Sylvain Levi and his pupils, Jean przyluski of Paris, and Prabodh Chandra Bagchi of Calcutta and to some extent the present writer suggested a number of words in the Indo aryan as being Austric (Kol or Munda) origin and affinity - Non-Aryan Elements in Indo aryan S.K. Chatterji. - Journal of the Greater India Society Vol. 3 The Dravidian names of things and operations connected with all these arts of peace are native and not foreign (not borrowed from Sanskrit) The question has not yet been investigated, but on enquiry it will most probably turn out that many Sanskrit words connected with these arts were borrowed from Dravidian. - Age of the Mantras P. 15, P.T.S. Iyengar. 1. As regards the material aspects of non-aryan civilization, the Rigveda refers to towns and forts broad and wide, full of kine, of 100 Pillars, built of stone, to autumnal forts as refuge against inundatons and to 100 Cities in a non-Aryan kingdom Even the Vedic God Indra is designated for the occasion as Purandara - sucker of cities - Hindu India - R.K.M. p-30 “Brahmanical legends refer to the strong and wealthy cities on or near the banks of the Indus of which the Aryans took possession after a hard struggle for their adversaries were well armed, possessed horse and chariots, and built castles of stones. Several of the places afterwards celebrated in Indian History, such as Taksha-sela, Mathura and Ujjin were said to have been founded by these non-Aryan people who were probably Dravidian race and perhaps connected with the ancient Sumerians, the people of southern Babylonia whose history has been traced back to the fourth millennium B, C. These Dravidians called by the Aryans Asuras Eaityas, Dasus or Nagas were mostly a maritime and trading people. In the Mahabharata they described as great magicians. They worshipped the sun and the serpent like people of ancient media, with whom, perhaps they had trade connections. The amalgamation was either through military conquest or by peaceful penetration. Aryan and Non-aryan cultures gradually transformed the simple tribal organisatin of Vedic society into powerful political status and finally made ocean instead of the river, the boundary of Aryavartha. - A short History of India p 26 - E.B. Havell. 1. Dravidian place names are sometimes traced to Mesopotamia and Iran, while an ancient language spoken at Mittani reveals striking similarities to modern Dravidian of India - Hindu India p. 38 2. I am however inclined to agree with late Sir Herbert Risely in his view that the Dravidian peoples are autochthons of the Deccan and the South of the Peninsula. Dr Haddon says: The Dravidian may have been always in India as has already been said. H.R. Hail holds the view that the Sumerians came into Western Asia from South India where even their writing may have been invented which in its later developed form in Babylonia was the Cuniform Character in the inscriptions. Bahui only marks a stage in the track of the Dravidians on their way from India to sumer. The Sumerian civilisation is the earliest known in the world and if its Dravidian origin be accepted then a very ancient date for the Dravidian civilization must have to be admitted. The date of Sargon of Akkad, the founder of the dynasty of Akkad has been fixed at 2800 B.C. Now Akkad got her civilization from Sumer allowing for the development of sumerian Civilization. The Dravidian settlement of Sumer may be probably placed at a date not less than 5000 B.C. The bird and serpent Myth - Prof. Kalipada Mitra. - The O.J.O.T. mythic Society Vol XVI. 1. From the recent discovery of the sumerian and Hittite relics in the Indus valley and elsewhere in India it is becoming more and more clear that India never stood isolated from the rest of Asia in the past. but that her Culture and civilization formed not only an integral part of the ancient chaleolithic culture of Asia and Europe but also one of the oldest and the richest treasure house from which all other civilizations derived their largest contributions to which they gave the best of their products in exchange. From the Indus valley one section of people afterwards came to be designated as the Dravidians, marched towards the west both by sea as well as by land, settled down in the province of Sumer in Lower Babylonia under the name of Sumerians and spread Sumero - Dravidian Civilization as far as the Holy land of Palestine and Jerusalem and thence to Europe and Africa. - Quarterly journal of the mythic society Vol. XIX No. 3 1.* இது “The quarterly journal of the mythic society’’ Vol. XVI-ல் வெளிவந்த ஓர் ஆங்கிலக் கட்டுரையின் சுருக்கம். 49 50 63 62 மத்திய தரைக் கடல் பழைய நாகரிகங்கள் ஐசினிய நாகரிகப் பரப்பு கிதைதி மெம்பிஸ் கிரேத்தா எகிப்து கருங்கடல் தையர் சீனாய் தீப்ஸ் சிரியா பினிசியா தைகிரஸ் மெசபதேமியா அக்காட் அசீரியா சுமேரியா எல்லம் பாரசீக குடா 51 52 61 60 53 54 59 58 55 56 1. மொகஞ்சதரோ எழுத்துகள், 2. ஈஸ்டர் தீவு (பசிபிக் கடலில் உள்ளது) எழுத்துகள். 57 80 65 66 79 78 16 தமிழர் யார்? முன்னுரை மேல்நாட்டவர்கள் மக்கள் வரலாற்றை ஒரு கலையாகக் கொண்டு அதனை வளர்த்து வருகின்றனர். அவர்கள் மொழிகளில் மக்கள் வரலாற்றைப் பற்றி ஆயிரக்கணக்கான நூல்கள் எழுதப்பட்டுள்ளன. தமிழ்நாட்டினருக்கு வரலாறு என்பது புதிது. மக்கள் வரலாறுகளோடு கடவுளர்களைத் தொடர்பு படுத்திக் கூறும் பழங்கதைகள் போன்றனவே உண்மை வரலாறுகள் என நம்மவர் பெரிதும் நம்பி வருகின்றனர். மக்களின் உள்ளம் இவ்வாறு பழகியிருப்பதினாலேயே பேசும் படக் காட்சிகளுக்கும் இவ் வகைக் கதைகள் தெரிந்து எடுக்கப்படுகின்றன. நம்மவரின் அறிவு, வரலாற்றுத் துறையில் மிகப் பிற்போக்கடைந் திருப்பதினாலேயே, மூடத்தனமான பல பழக்க வழக்கங்கள் நம்மவர்க ளிடையே வழங்குகின்றன. மூடப்பழக்க வழக்கங்களுக்குக் காரணம், அவைகளின் உண்மை அறியப்படாதிருத்தலே யாகும். பயனற்ற அல்லது பொருளற்ற பழக்க வழக்கங்களின் தொடக்கம் அல்லது காரணம் அறியப்படின் மக்கள் அவைகளைக் கைவிடப் பின்னடைய மாட் டார்கள். நமது நாடு, தமிழ் வழங்கும் நிலம். இங்குக் கிராமங்கள் தோறும், வீதிகள் தோறும் ஆலயங்கள் காணப்படுகின்றன. அவ் வாலயங்களில் குருமார் சில சமக்கிருதச் சொற்றொடர்களை உச்சரித்துக் கடவுள் பூசை செய்து வருகின்றனர். அச் சமக்கிருதச் சொற்றொடர்களில் தெய்வீகம் அல்லது கடவுள்தன்மை இருப்பதாகக் கற்றாரும் கல்லாதாரும் நம்பி வருகின்றனர். சமக்கிருதம் என்பது நமது நாட்டு மொழியன்று. இது செர்மன், இலாத்தின், கெல்து முதலிய ஐரோப்பிய மொழிகளுக்கு இனமுடையது. இற்றைக்கு 4000 ஆண்டுகளுக்கு முன் மத்திய ஆசியாவி னின்றும் இந்திய நாட்டை அடைந்த ஆரியர் என்னும் அன்னிய மக்கள் பேசிய மொழியின் திருந்திய அமைப்பு. இதில் கடவுள்தன்மை இருப்ப தாக நம்மவர் நம்பிவருவதை வரலாற்று மாணவன் ஒருவன் நோக்கின், அது அவனுக்கு நகைப்பை உண்டாக்கும். சமக்கிருதத்தில் தெய்வத் தன்மை உண்டு என நினைக்கின்ற தமிழ்மக்கள் எல்லோரும் இவ் வுண்மையை அறிவார்களானால், அவர்களே தமது மூடத்தனத்தை நினைந்து நாணுவார்கள் அல்லவா? வரலாற்றுக் கல்வியினால் இதுவும் இதுபோன்ற பல மூடக் கொள்கைகளும் ஒழியும். வரலாறே மக்களுக்குக் கண். இந் நூல் நாம் எல்லோரும் முதலில் அறிந்துகொள்ள வேண்டிய நம் முன்னோரின் ஆதி வரலாற்றைத் தெரிவிப்பதாகும். இவ் வாராய்ச்சிக்கு ஆதாரம் மேல்நாட் டறிஞரின் ஆராய்ச்சி நூல்களே. சென்னை 12.4.46 ந.சி. கந்தையா தமிழர் யார்? தோற்றுவாய் தமிழர் யார்? அவர்களின் பிறப்பிடம் யாது? அவர்கள் இந்திய நாட்டில் தொன்றுதொட்டு வாழ்ந்து வருகின்றார்களா? அல்லது பிற நாடுகளினின்றும் வந்து புதிதாகக் குடியேறினார்களா? அவர்களின் பழமை எவ்வகையினது? அவர்களின் நாகரிகம் அவர்களிடையே தோன்றி வளர்ச்சியடைந்ததா? அன்றேல் அதனைப் பிறர் அவர்களுக்கு உதவினார்களா? என்பன போன்ற கேள்விகளுக்கு இறுக்கப்படும் விடைகளே தமிழரின் பண்டை வரலாறாக அமையும். முதலில் தன் நாட்டினரையும் தன் இனத்தினரையும் பற்றிய உண்மை வரலாறுகளை அறிந்துகொள்ளாது பயிலப்படும் வரலாற்றுக் கல்வி பயனற்றதாகும். வரலாற்றுக் கல்வியே மக்களின் பகுத்தறிவுக் கண்ணைத் திறக்கவல்லது. தமிழரையும், தமிழையும் பற்றிய பழைய வரலாற்று உண்மைகள் வெளிவராமைக்குப் பல தடைகள் இருந்தன. அவைகளுள் ஒன்று, தமிழ் வடமொழிக்குப் பிற்பட்டது; தமிழ் வடமொழியைப் பார்த்து அமைக் கப்பட்டது; தமிழர் நாகரிகம் ஆரியரால் தமிழருக்கு உதவப்பட்டது என்பன போன்ற தவறான பல கொள்கைகள் ஒரு சாரார் கருத்தில் நன்கு பதிந்திருந்தமையேயாகும்.1 இத் தவறான கொள்கைகளை முதன்முதல் தகர்த்தெறிந்தவர் பேரறிஞர். பி. சுந்தரம் பிள்ளை அவர்களாவர். அப் பெருமகற்கு இத் தமிழுலகு என்றும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டது. அக் காலம் முதல் தமிழரையும், தமிழையும் பற்றிய பழைய வரலாறு களை ஆராயும் ஆர்வம் மக்களிடையே கிளர்வதாயிற்று. அதனால் தமிழ்நாட்டைப் பற்றிய பண்டை வரலாறுகள் சிறிது சிறிதாகப் புலர்வன வாயின. சிந்து வெளியில் மறைந்து கிடந்த அரப்பா, மொகஞ்சதரோ என்னும் பழைய இந்திய மக்களின் நகரங்களைப் பற்றிய விரிந்த புதை பொருள் ஆராய்ச்சி 1931இல் சேர்யோன் மார்சல் என்பவரால் வெளி யிடப்பட்டபோது, ஆராய்ச்சியால் முடிவு காணப் பெறாது ஐயத்துக்கு இடமாயிருந்த தமிழ் மக்களின் பண்டை வரலாறுகள் முடிவு காணப் பெற்று, வெளிச்சம் எய்தின. இன்று தமிழரின் பண்டை வரலாறு இருளில் இருக்கவில்லை. ஆராய்ச்சியில் இவ் வுலக மக்களின் நாகரிகத் துக்கு அடிகோலியவர்கள் தமிழர்களே என்பது தெளிவாகின்றது. ஆராய்ச்சியாற் கிடைத்த முடிவுகளை இந் நூல் நன்கு எடுத்து விளக்கு கின்றது. ஆதி மக்கள் தமிழ் மக்களின் ஆதி வரலாற்றை அறிந்துகொள்வதற்கு, ஆதி மக்களைப் பற்றிய வரலாற்று அறிவு இன்றியமையாதது. இன்றைய பூகோளப் படத்தில் தெற்கே அதிக கடலும், வடக்கே அதிக நிலமும் இருப்பதைக் காண்கின்றோம். மிக மிக முற்காலத்தில் பூகோளப் படம் இதற்கு நேர்மாறாக இருந்தது. ஒரு காலம் தெற்கே கிடந்து நீருள் மறைந்துபோன பெருநிலப் பரப்பைப்பற்றி நிலநூலாரும், புராணக் கதைகளும், கன்ன பரம்பரை வரலாறுகளும் கூறுகின்றன. தெற்கே கிடந்து மறைந்துபோன நிலப்பரப்பை மேல்நாட்டுப் பௌதிக நூலார், லெமூரியா என அறைவர். அங்கு தேவாங்கு போன்ற உயிரினம் வாழ்ந்தது என்னும் கருத்துப் பற்றி லெமூரியா என்னும் பெயர் இடப்பட்டது. லெமூர் என்னும் பெயர் தேவாங்கைக் குறிக்கும். லெமூரியா என்னும் நிலப்பரப்பிலேயே ஆதி மக்கள் தோன்றிப் பெருகினார்கள் என ஹெக்கல் என்னும் ஆசிரியர் கூறி யுள்ளார். இக் கருத்து சிலகாலம் சிற்சிலரால் ஏற்றுக்கொள்ளப்பட வில்லை. ஆனால், இற்றை ஞான்றை ஆராய்ச்சிகளால், இக் கொள்கை வலியுறுகின்றது. எச்.சி.வெல்ஸ் என்னும் இக்காலப் பேரறிஞரும் மத்திய தரைக்கும் தென் சீனத்துக்கும் இடையிலுள்ள நிலப்பரப்பிற் றோன்றிப் பெருகிய மக்களே பல சாதியார்களாக மாறியுள்ளார்கள் எனத் தமது உலக வரலாற்றுக் காட்சிகள் (Outlines of History) என்னும் நூலகத்தே குறிப்பிடுவாராயினர். லெமூரியாக் கண்டம் உயிர்கள் தோன்றாதிருந்த காலத்திலேயே மறைந்துபோயிற்று எனச் சில ஆசிரியர்கள் கொண்ட கருத்து இன்று ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இன்று வடமொழியில் எழுதப்பட்டிருக்கும் பல கற்பனைக் கதை களோடு பின்னிக்கிடக்கும் பழங்கதைகளின் தொகுதிகள் புராணங்கள் எனப் படுகின்றன. வடமொழியாளர் இந்திய நாட்டை அடைந்தபோது, இந்திய நாட்டில் வழங்கிய பழங்கதைகளை எழுதிவைத்தல் இயல்பே யாகும். மெகஸ் தீனஸ் என்னும் கிரேக்கரும், மார்க்கோப்போலோ என் னும் இத்தாலியரும், சீன யாத்திரிகர்களும் இந்திய நாட்டு வரலாறுகள் சிலவற்றை எழுதிவைத்தமையை இதனோடு ஒப்பிடலாகும். இந்திய மக்களின் பழங்கதைகளாகிய புராணங்கள், தெற்கே பெரிய நிலப்பரப் பிருந்ததென்றும், மேரு, பூமிக்கு மத்தியிலுள்ளதென்றும், மேருமலை யின் ஒரு கொடுமுடி இலங்கைத் தீவு என்றும் கூறுகின்றன. தமிழ் நூல் களும், தெற்கே கிடந்து அழிந்துபோன நிலப் பரப்பைப் பற்றிக் கூறு கின்றன. இவை மேல்நாட்டு ஆராய்ச்சியாளர் கூற்றுக்களோடு மிக ஒத் திருக்கின்றன. தெற்கே கிடந்து மறைந்துபோன நிலப்பரப்பைத் தமிழ் மக்கள் நாவலந்தீவு எனப் பெயர் இட்டு வழங்கினர். பூமியின் நடுவரையை அடுத்த நாடுகளிலே, ஆதியில் மக்கள் தோன்றிப் பெருகினார்கள் என விஞ்ஞானிகள் கருதலானார்கள். மிகப் பழைய மனித எலும்பு சாவகத் தீவிற் கிடைத்தது. இது விஞ்ஞானிகள் கொண்டிருந்த கருத்துக்கு மிக இயைபுடையதாகக் காணப்பட்டது. இதனாலும் பிற காரணங்களாலும் சாவகத் தீவிலோ, அதனை அடுத் திருந்த நிலப்பரப்பிலோ, ஆதிமக்கள் தோன்றிப் பெருகியிருத்தல் வேண்டுமென விஞ்ஞானிகள் பலர் கூறுகின்றனர். மக்கள் ஓரிடத்தினின்றும் பல இடங்களுக்கு ஏன் சென்றார்கள்? தொடக்கத்தில் மக்கள் விலங்குகளை ஒப்ப வாழ்ந்தார்கள். அவர்கள் காடுகளிற் கிடைக்கும் காய் கனி கிழங்குகளை உண்டு சுனை நீரைப் பருகி மலைக்குகைகளிலும், மரநிழல்களிலும் தங்கிவாழ்ந்தனர். அவர்கள், பொருள் பண்டங்கள் எவையும் இல்லாதவர்களாய் எங்கும் அலைந்து திரிவாராயினர். இந் நிலைமையில் மக்கட் பெருக்கம் உண்டாயிற்று. அதனால் எல்லாருக்கும் ஓரிடத்தில் உணவு கிடைத்தல் அரிதாயிற்று. ஆகவே உணவின் பொருட்டுப் பலர் தமது நடு இடத்தை விட்டு, உணவு தேடும் பொருட்டுச் சிறிது சிறிதாக அகலச் சென்றனர். இவ்வாறு சென்ற மக்களுக்குத் தாம் முன்னிருந்த இடங்களுக்குத் திரும்பி வரும் கட்டாயம் உண்டாகவில்லை. இவ் வுலகின் பல இடங்களில் 1பழங்கற்கால நாகரிகமுடைய மக்கள் வாழ்ந்து வந்ததற்குரிய சான்றுகள் காணப்படுகின்றன. இதனால் பழங் கற்காலத்திலேயே மக்கள் பிரிந்து உலகின் பல பாகங்களுக்குச் சென்று தங்கிவிட்டார்கள் எனத் தெரி கின்றது. பழங் கற்கால ஆயுதங்களோடு கண்டு எடுக்கப்பட்ட மனித மண்டை ஓடுகள் எல்லாம் ஒரே வகையாகக் காணப்படுகின்றமையின், அக் காலத்தில் இன்று காணப்படுவன போன்று நிறத்தாலும் உடற் கூறுகளாலும் மாறுபட்ட மக்கட் குலங்கள் தோன்றவில்லை எனக் கருதப்படுகிறது. 2புதிய கற்காலக் கல்லாயுதங்களுடன் காணப்பட்ட மனித மண்டை ஓடுகள் வெவ்வேறு வகையாக இருத்தலின் அக் காலத் திலே மக்கட் குலங்கள் தோன்றியிருந்தனவாதல் வேண்டும். ஒரு மக்கட் குலத்தினர் நிறம், உடற்கூறு முதலியவைகளால் மாறுபட்ட இன்னொரு மக்கட் குலத்தினராக மாறுபடுவதற்கு 300 தலைமுறைகள் வரையில் ஆகுமென்பது ஆராய்ச்சிவல்லார் கருத்து. நாவலந் தீவின் அழிவு பூமியின் நடுக்கோட்டை அடுத்த நாடுகளில், பெரிய காற்றுக் குழப்பங்களும், எரிமலைக் குழப்பங்களும் தோன்றுதல் இயல்பு. எரிமலைக் குழப்பங்களால் தரைப் பாகங்கள் கடலுள் மறைந்துபோத லும் கடலுள் தரைகள் எழுதலும் இயல்பு. ஒரு காலத்தில் பெரிய எரிமலைக் குழப்பத்தினால் நாவலந் தீவு சின்னாபின்னமாக்கப்பட்டது. இந்துமாக்கடல், பசிபிக் கடல்களின் இடையிடையே தீவுக் கூட்டங்க ளாக விளங்குவன நாவலந் தீவின் பகுதிகளே. அவை, நாவலந் தீவிலிருந்த பெரிய மலைகளின் சிகரங்கள் ஆகலாம். நாவலந்தீவு சிதறுண்டபோது அங்கு வாழ்ந்த மக்களில் எண்ணில்லாதோர் மாண்டனர். பலர் ஒருவாறு தப்பிப் பிழைத்தனர். உலக மக்கள் எல்லோரிடை யும் பெரிய கடல்கோள் ஒன்றைப் பற்றிய பழங்கதை வழங்குகின்றது. ஒவ்வொரு மக்களிடையும் வழங்கும் அப் பழங்கதைகள் எல்லாம், சிற்சில மாறுதல்களைவிட ஒரேவகையாகக் காணப்படுகின்றன. அவ் வரலாறு மக்கள் எல்லோரும் ஒரு மத்திய இடத்தில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் நேர்ந்த பெரிய வெள்ளப் பெருக்கு ஒன்றின் ஞாபகமே என்று நன்கு அறியக் கிடக்கின் றது. பெரிய வெள்ளப் பெருக்குக்குத் தப்பிப் பிழைத்த சத்திய விரதன் என்னும் தமிழ் மனுவிலிருந்து உலக மக்கள் தோன்றிப் பெருகினார்கள் எனப் புராணங்கள் நவில்கின்றன. கிறித்துவ வேதத்தில் அப் பெரிய வெள்ளப் பெருக்கைப் பற்றிய வரலாறு கூறப்படுகின்றது. அவ் வரலாறு யூதமக்களுக்குச் சாலடிய மக்கள் வாயிலாகக் கிடைத்தது. சாலடியர் சோழ நாட்டினின்றும் சென்று, மேற்கு ஆசியாவிற் குடியேறிய மக்க ளாவர்.3 நாவலந் தீவில் நாகரிகம் வளர்ச்சியுற்றிருந்த தென்பதற்குச் சான்று சிந்துநதிப் பள்ளத்தாக்குகளில் மொகஞ்சதரோ, அரப்பா என்னும் பழந் தமிழரின் இரு புராதன நகரங்கள் அண்மையிற் கண்டு பிடிக்கப்பட்டன. அவைகளின் காலம் இற்றைக்கு ஆறாயிரம் ஆண்டுகள் வரையில். அங்குக் காணப்பட்ட முத்திரைகளில் அக் கால மக்கள் வழங் கிய எழுத்துகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. இவ் வகை எழுத்துக்கள் தென்னிந்தியாவின் சில பகுதிகளிற் கிடைத்த வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட மட்பாண்டங்களிலும் இலங்கையில் கேகாலைப் பகுதியி லுள்ள மலை ஒன்றிலும் காணப்படுகின்றன. கிழக்குத் தீவுகளிலும் பசிபிக் கடற் றீவுகளிலும் இவ் வகை எழுத்துகளே வழங்கின என்பது அவ் விடங் களிற் கிடைத்த எழுத்துப் பொறித்த பழம் பொருள்களால் நன்கு அறியப் படுகின்றது. மக்களிடையே நாகரிகம் முதிர்ந்து, மொழி உண்டாகி அது பேச்சு வழக்கில் நீண்டகாலம் நிலவிய பின்பே எழுத்துகள் தோன்றுவது இயல்பு. நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்திய நாட்டை அடைந்த ஆரியர் எழுத்தெழுத அறிந்திருக்கவில்லை. ஆனால், நாவலந் தீவு மக்கள் எழுத்தெழுத அறிந்திருந்தனர். நாவலந்தீவு மக்கள் பெரிய உலக அழி விற்கு முன்பே நாகரிக முதிர்ச்சியுடையவர்களாய் இருந்தார்கள் என்ப தற்கு அவர்கள் வழங்கிய எழுத்துகளே சான்றாகின்றன. மொகஞ்சத ரோவிற் கிடைத்த ஆயிரத்து எண்ணூறு முத்திரைகளிற் பொறிக்கப் பட்ட முத்திரைகளை ஹெரஸ் பாதிரியார் நன்கு ஆராய்ந்துள்ளார். அவ் வெழுத்துகள் சிலவற்றை அவர் வாசித்திருக்கின்றார். மொகஞ்சத ரோவில் வழங்கிய மொழி, தமிழ் என உறுதிப்பட்டுள்ளது. இதனால் நாவலந் தீவில் வழங்கிய மொழியும் தமிழேயென உறுதிப்படுகின்றது. குமரி நாடு நாவலந் தீவின் வடக்கில் அராவலி மலைகள் வரையும் தரை யிருந்தது. நாவலந் தீவு அழிவுற்ற காலத்தில் இந்தியக் குடாநாட்டைத் தொடர்ந்து தெற்கே பெரிய நிலப்பரப்பிருந்தது. அது கன்னியாகுமரிக் குத் தெற்கே எவ்வளவு தூரம் நீண்டிருந்ததென்று வரையறுத்துக் கூற இயலாது. பழைய தமிழ் நூல்களிற் கூறப்படுவதை நோக்குமிடத்து அந் நிலப்பரப்புப் பெரிய நீளமும் அகலமும் உடையதாய் இருந்ததென மாத்திரம் கூறலாம். குமரி நாடு என்பது குமரித் தெய்வத்தின் வழிபாடு காரணமாகத் தோன்றிய பெயர். பண்டைநாளில் ஆளும் அரசர் அல்லது வழிபடும் கடவுளர்களின் பெயர்கள் தொடர்பாகவே, பெரும்பாலும் நாடுகளுக்குப் பெயர்கள் உண்டாயின. இவ் வுலகில் ஆதியில் தோன்றி யது பெண் ஆட்சி, அக் காலத்தில் ஆடவர் மகளிருக்குக் கீழ்ப்பட்டிருந் தார்கள். சொத்துரிமை பெண்களுக்கே இருந்தது. தாயம் என்னும் சொல்லுக்குச் சொத்துத் தாயிடமிருந்து பிள்ளைகளைச் சேருவது என்று பொருள். இவ் வழக்கைப் பின்பற்றியே “சீதன” வழக்கும் உண்டா யிற்று. ஆடவன் மனைவிக்குக் கீழ்ப்படிந்து நடப்பதற்காகவே இவ் வழக்கம் எழுந்தது. தாயாட்சி உண்டாயிருந்த காலத்தில், மக்கள் தாய்க் கடவுளையே வழிபட்டார்கள். ஒரு காலத்தில் திருமணக் கட்டுப்பாடுகள் இருக்கவில்லை. ஆகவே தாய், திருமணம் பெறாதவள் அல்லது குமரி எனப்பட்டாள். குமரிக் கடவுள் வணக்கத்திற்குரிய நாடாதலின் அது குமரி நாடு என வழங்கிற்று. குமரி நாட்டில் நாற்பத்தொன்பது பிரிவுகள் இருந்தன வென்பது சிலப்பதிகாரத்திற்கு, அடியார்க்கு நல்லார் எழுதிய உரையிற் காணப் படுகின்றது. அங்கு, குமரி, பஃறுளி என்னும் ஆறுகளும், குமரி என்னும் மலையும் இருந்தன வென இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்திற் கூறியுள் ளார். செங்கோன் தரைச்செலவு, என்னும் நூலால் அங்கிருந்த மணிமலை, பேராறு என்னும் சில மலைகள், இடங்களின் பெயர்களும் அறிய வருகின்றன. செங்கோன் தரைச்செலவு என்பது குமரிநாட் டின்கண் இருந்த பெருவள நாட்டரசனாகிய செங்கோன் மீது பாடப் பட்ட தமிழ் நூல். அதன் சில பாடல்களே வெளிவந்துள்ளன. செங் கோன் தரைச் செலவு மிகப் பழைய நூல் எனச் சிலர் கருதுகின்றனர். மொகஞ்சதரோ என்னுமிடத்தில் வழங்கிய தமிழின் போக்கை நோக்கு மிடத்து, அது மொகஞ்சதரோ காலத்துக்குப் பல நூற்றாண்டுகள் பிற்பட்ட நூல் என்பது நன்கு புலப்படும். செங்கோன் தரைச் செலவு என்னும் நூல், உரையாசிரியர்களால் எடுத்தாளப்படாமையின் அது பிற்காலத்தவர் எவரோ கட்டிய போலிநூல் எனச் சிலர் கூறுவர். உரையாசிரியர்கள் ஆட்சிக்குத் தப்பிய பல நூற்பெயர்கள் யாப்பருங்கல விருத்தியுரையிற் காணப்படுகின்றன. குமரிநாட்டின் அழிவும், அங்கு வாழ்ந்த மக்கள் தென்னிந்தியாவிற் குடியேறுதலும் குமரி நாடும் சிறிது சிறிதாகக் கடல்கோளுக் குட்பட்டது. இக் கடல் கோளுக்குப் பிழைத்த மக்கள் வடக்கு நோக்கிச் சென்று தென் னிந்தியாவிற் குடியேறினார்கள். அம் மக்கள் கன்னித் தெய்வத்தின் திருவுருவைத் தெற்கின்கண் வைத்து வழிபடுவாராயினர். தாம் இப்பொ ழுது குடியேறியிருக்கும் நாட்டை மேலும் கடல் கொள்ளாதிருத்தற் பொருட்டு அத் தெய்வத்தின் திருவுருவை அவர்கள் அங்கு வைத்தார்கள் ஆகலாம். இந்தியாவுக்கு வந்து மீண்டு சென்ற உரோமர் கன்னித் தெய்வத் தின் திருவுருவம் அங்கு இருந்தமையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் குறிப்பிட்டிருக்கின்றார்கள். நாவலந் தீவு குமரி நாட்டினின்றும் வந்து குடியேறிய மக்கள், தமது நாட்டுக்குக் கடல்வாய்ப்பட்டு மறைந்த நாவலந் தீவின் பெயரையே இட்டார்கள். அதனிடை இயற்கைக் குழப்பங்கள் யாதும் நிகழவில்லை. மக்கள் அமைதி யடைந்திருந்தனர்; தாம் முன்பு அறிந்திருந்த பல்வகைத் தொழில் களைப் புரிந்தனர்; வேளாண்மை வாணிகம் என்பன தலையெடுத்தன. நாடு நகரங்கள் உண்டாயின. அவர்கள், தம்முள் அறிவும் ஆற்றலும் வீரமுஞ் செறிந்த ஒருவனை அரசனாகத் தெரிந்தெடுத்தார்கள். அவன் வாழ்ந்த நகரம் தென் பாகத்தில் இருந்தது. மக்கள் பெருகி மேலும் வடக்கே சென்று குடியேறினர். வடக்கே பெருந்தொலைவில் மக்கள் நுழைந்து செல்லமுடியாமல் ‘தண்டகம்’ என்னும் நெருங்கிய காடு தடுத்தது. முன்னையிலும் இப்பொழுது மக்கள் அகன்ற இடத்திற் குடியேறி வாழ்ந்தார்கள். அப் பகுதிகளை ஆள்வதற்கு இன்னும் இரண்டு அரசர் தெரிந்தெடுக்கப்படுவாராயினர். இவ்வாறு நாவலந் தீவில் மூவர் ஆட்சி உண்டாயிற்று. தெற்கே உள்ள நாடு, பழைய அரசனுக்கு உரியதாத லின், அது பண்டுநாடு எனப்பட்டது. பழமையை உணர்த்தும் பண்டு என்னும் சொல்லினின்றே பாண்டியன் என்னும் சொல் உண்டாயிற்று. மாபாரதத்திற் சொல்லப்படும் பாண்டு என்பவனின் பெயரிலிருந்து பாண்டியன் என்னுஞ் சொல் உண்டாயிற்று எனச் சிலர் கூறுவர். அது பெரிதும் தவறுடைத்து; பாண்டுவுக்கு முன் பாண்டியர் இருந்தனர். மேற்குக் கடற்கரை, கிழக்குக் கடற்கரை நாடுகளை ஆண்ட அரசர் முறையே சேரர், சோழர் எனப்பட்டார்கள். இவ்வாறு நாவலந் தீவில் மக்கள் பெருகப் பெருகப் பல அரசாட்சிகள் உண்டாயின. நாவலந் தீவினின்றும் சென்று மக்கள் பிற நாடுகளிற் குடியேறுதல் நாவலந் தீவில் மக்கள் பெருகத் தொடங்கினார்கள். ஒரு நாட்டில் மக்கள் அதிகம் பெருகினால் அங்கு வாழ்க்கைக்கு இசைவுகள் குறைவு படும். ஆகவே மக்கள் இசைவுடன் வாழக்கூடிய பிற நாடுகளிற் சென்று குடியேறுவார்கள். தென் தமிழ்நாட்டில் வாழ்ந்த மக்கள் பற்பல கூட்டத் தினராய்க் குடியேற்ற நாடுகளைத் தேடி வெளியே சென்றனர். வடக்கே விந்திய மலை வரையிற் பெருங்காடு இருந்தமையால் அவர்கள் தரை வழியே வடக்கு நோக்கிச் செல்ல முடியவில்லை. தமிழர் திறமையுடைய மாலுமிகளா யிருந்தனர். ஆகவே அவர்கள் கடல் வழியே ஏகினர். சிந்துவெளி மக்கள் இவ்வாறு சென்ற ஒரு கூட்டத்தினர் வடக்கேயுள்ள சிந்து நதி முகத்துவாரத்தை அடைந்தனர். இந் நதி ஓரங்கள் மக்கள் குடியேறி வாழ்வதற் கேற்றனவாய், இருந்தன. அக் கூட்டத்தினர் அவ் வாற்றோரங் களில் தங்கித் தானியங்களை விளைவித்து இனிது வாழ்ந்தனர். மக்கள் பெருகப் பெருக அவர்கள் அவ் வாற்றோரங்களில் குடியேறிப் பரவி னார்கள். அக் கால மக்கள் வியக்கத்தகுந்த நனி நாகரிகம் எய்தியிருந்தனர். அவர்களைப் பற்றி 1921ஆம் ஆண்டு வரையில் யாதும் தெரியவில்லை. அவர்கள் அமைத்து வாழ்ந்த இரு பெரிய நகரங்கள் பழம்பொருள் ஆராய்ச்சியாளராற் கண்டுபிடிக்கப்பட்டன. பிற்காலத்தைய மக்கள், அவைகளுக்கு மொகஞ்சதரோ, அரப்பா எனப் பெயரிட்டு வழங்கி னார்கள். இவ் விரு நகரங்களுக்கும் இடையிலுள்ள தூரம் நானூறு மைல். ஆனால், இவ் விரு நாடுகளிலும் காணப்பட்ட நாகரிகக் குறிகள் ஒரே வகையின. அதனால் அக் காலச் சிந்துவெளி மக்களின் நாகரிகம் மிகப் பரவியிருந்ததென விளங்குகின்றது. அவர்களின் நாகரிகம் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. அக் காலத்தில் அவர்கள் இரும்பைப்பற்றி அறிந்திருக்கவில்லை. அவர் களின் நாகரிகம் கற்கால முடிவுக்கும் உலோக காலத் தொடக்கத்துக்கும் இடைப்பட்டது. இற்றைநாள் தமிழரிலும் பார்க்கச் சிந்துவெளித் தமிழர் நாகரிகத்திற் குறைந்தவர்களல்லர். முற்கால மக்கள் நாகரிகத்தாலும் அறிவாலும் தாழ்ந்தவர்களா யிருந்தார்களென்றும் காலஞ் செல்லச் செல்ல அவர்களின் நாகரிகமும், அறிவும் வளர்ச்சியடைந்தன வென்றும் சிலர் கருதுகின்றனர். சில வகைகளில் அல்லாமல், பல வகைகளில் முன்னைய மக்களே அறிவாற்றலும் மனவலியும் உடல் வலியும் பெற் றிருந்தார்கள் எனப் பழைய வரலாறுகளை நோக்குங்கால் தெளிவாக விளங்கும். நாகரிகம் முன்நோக்கிச் செல்வது போலவே, ஓர் ஒரு கால் பின்நோக்கியும் செல்வதாக அறிஞர் ஆராய்ந்து கூறியுள்ளார்கள். ஆறாயிரம் ஆண்டுகளின் முன் எகிப்தியர் கட்டி எழுப்பிய கூர்நுதிக் கோபுரங்களையும், சீரிய நாட்டினர் அறுபது அல்லது எழுபது அடி உயரமுள்ள தனிக் கற்றூண்களை நிறுத்திக் கட்டி எழுப்பிய “பால்பெக்” ஆலயத்தையும் கண்டு இன்றைய உலகம் வியப்படைகின்றது. ஆகவே காலப்போக்கிற் பின்நோக்கிச் செல்லச் செல்ல, மக்கள் அறியாமை யுடையவர்களா யிருந்தார்கள் என வரலாற்று நூலார் சிலர் கருதுதல் தவறாமென்க. அறிவும், அறியாமையும், நாகரிகமும், அநாகரிகமும் எல்லாக் காலங்களிலும் உண்டு என்பது அறியப்படுதல் வேண்டும். சிந்துவெளியிலே கண்டுபிடிக்கப்பட்ட பழைய நகரங்கள் உயர்ந்த நகர அமைப்பு முறையையும், சுக வாழ்க்கைக் கேற்ற விதிகளையும் தழுவி அமைக்கப்பட்டுள்ளன. அந் நகர்களின் இடையிடையே அகன்ற நெடிய வீதிகள் செல்கின்றன. அவைகளைச் சிறிய பல வீதிகள் குறுக்கே கடந்து செல்கின்றன. வீதிகளின் இரு மருங்குகளிலும் வீடுகள் நிரையாகக் கட்டப்பட்டிருக்கின்றன. அவைகளுக்கு ஒன்று முதல் மூன்று மாடிகள் வரையில் உண்டு. களி மண்ணினால் கல் அறுத்துக் காயவிட்டுச் சூளை வைக்கப்பட்ட செங்கற்கள் வீடுகள் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட் டன. வீடுகளுக்கு உள் முற்றமும், உள் முற்றத்திற் கிணறும் இருந்தன. உள் முற்றத்தில் முளைகள் அடித்து ஆடுமாடுகள் கட்டப்பட்டன. வீடுகளுக் குக் குளிக்கும் அறை இணைக்கப்பட்டிருந்தது. கழிவுநீர் செங்கற் பதித்த வாய்க்கால் வழியே சென்று வீதியிலுள்ள பெரிய வாய்க்காலில் விழுந் தது. வீதியிலுள்ள பெரிய வாய்க்காலும் செங்கல் பதிக்கப்பட்டிருந்தது. வீடுகளுக்குப் பல சாளரங்கள் இருந்தன. மாடியினின்றும் நீர் கீழே செல்வதற்குச் சூளையிட்ட களிமண் குழாய்கள் பொருத்தி வைக்கப்பட் டன. சமைப்பதற்கும் நித்திரை கொள்வதற்கும் தனியறைகள் இருந்தன. மக்கள் பல்வகைக் கைத்தொழில்கள் புரிவதிற் றிறமை யடைந்திருந்தனர். தச்சர், அழகிய கட்டில், நாற்காலி, முக்காலி முதலிய வீட்டுப் புழக்கத்துக் குரிய பொருள்களைச் செய்தார்கள். பொற்கொல்லர் மாதர் விரும்பி அணியும் அழகிய அணிகலன்களைப் பொன், வெள்ளி, வெண்கலம் முதலிய உலோகங்களாற் செய்து அளித்தனர். குயவர் அழகிய பானை, சட்டிகளைத் தண்டு சக்கரங்களைக் கொண்டு செய்தனர். அவர்கள் அம் மட்பாண்டங்கள் சிலவற்றிற்குப் பலவகை நிறங்கள் தீட்டி, அவைமீது பலவகை ஓவியங்களை எழுதினர். முற்கால மட்பாண்டங்களின் வடி வங்கள் இக் காலம் மேல்நாடுகளிலிருந்து வரும் கண்ணாடிப் பொருள்கள் போன்று அழகுடையனவா யிருக்கின்றன. சிறுவர் பலவகை விளை யாட்டுப் பொருள்களை வைத்து விளையாடி னார்கள். அவை ஊதுகுழல், கிலுகிலுப்பை, மண்ணாற் செய்து சூளையிட்ட பறவை, விலங்குகளின் வடிவங்கள் முதலியன. மகளிர் அழகிய அணிகலன்களை அணிந்து, நெற்றியிற் செங் காவிப் பொட்டு இட்டார்கள். முகத்துக்கு ஒரு வகை வெண்பொடி பூசினார்கள். மேனி அலங்கரிப்புக்குரிய பொருள்களை முத்துச்சிப்பியின் ஓடு பதித்துச் செய்யப்பட்ட அழகிய சிமிழ்களில் வைத்திருந்தார்கள். அவர்கள் தமது கூந்தலைப் பலவகையாகக் கோதி முடிந்தனர். அவர்கள் பலவகை வேலைப்பாடுடையனவும் கண்கவரும் நிறம் ஊட்டப்பட்டன வுமாகிய அழகிய ஆடைகளை உடுத்தனர். கடவுள் வழிபாட்டுக்குரிய கோவில்கள் இருந்தன. கோவில் களுக்கு அருகே உள்ள படிக்கட்டுகளுடைய கேணிகளில் கால் கைகளைச் சுத்தஞ் செய்தபின் அல்லது நீராடியபின் வழிபடுவோர் ஆலயங்களுக்குச் சென்றனர். ஆடவர் முகத்தை மழித்துக் கொண்டனர். மழிக்கும் கத்திகள் வெண்கலத்தினாற் செய்யப்பட்டன. இவ்வாறு அக் கால மக்கள், உயர்ந்த நாகரிகமும், உல்லாச வாழ்க்கையும் உடையவர் களாய் விளங்கினார்கள். இது இற்றைக்கு ஆறாயிரம் ஆண்டுகளின் முற்பட்ட தமிழரின் நாகரிக நிலை. எகிப்தியர் தமிழ்நாட்டினின்றும் சென்ற இன்னொரு கூட்டத்தினர் செங் கடல் வழியாக ஆப்பிரிக்காவை அடைந்தனர். அங்கு என்றும் வற்றாத நீர்ப்பெருக்குடைய நைல் என்னும் ஆறு உண்டு. அதன் பக்கங்களிலுள்ள நிலம் தானியங்களை விளைவிப்பதற்கு ஏற்ற செழிப் புடையது. அவ் விடத்தே அவர்கள் தங்கி வாழ்ந்தனர்; மக்கள் பெருகினர்; நாடு நகரங்கள் உண்டாயின. அவர்களா லமைக்கப்பட்ட பெரிய நகரங்கள் மெம்பிஸ், தீப்ஸ் என்பன. அம் மக்களின் பழைய நாகரிகக் குறிகள் இன்றும் அவ் விடங்களிற் காணப்படுகின்றன. பழம்பொருள் ஆராய்ச்சியாளர் அவ் விடங்களிற் கிடைத்த பழம் பொருள்களை ஆராய்ந்துள்ளார்கள். எகிப்தி யரின் பழங்கதைகள், அவர்கள் பண்டு நாட்டினின்றும் சென்றவர்களாகக் கூறுகின்றன. பண்டு நாடு என்பது பாண்டி நாடே என வரலாற்றாசிரி யர்கள் ஆராய்ந்து காட்டியுள்ளார்கள். மக்கட் குல நூலார், தமிழரும் எகிப்தியரும் ஒரே குல முறையில் வந்தோர் எனக் கூறியிருக்கின்றனர். பழைய எகிப்தியருடைய பழக்கவழக்கங்கள் கடவுள் வழிபாட்டு முறை முதலியன தமிழ் மக்களிடையே காணப்படுவன போன்றன. அவர்கள் ஆலயங்களில் இலிங்கங்களை வைத்து வணங்கினர். நைல் ஆற்றுக்கு மேற்கில் சிவன் என்னும் பாலை நிலப் பசுந்தரை ஒன்று உள்ளது. அங்கு அவர்கள் ஞாயிற்றுக் கடவுளை, சிவனென்னும் பெயரிட்டு வழி பட்டனர். எகிப்தியக் குருமார் பகலில் இரு முறையும், இரவில் இரு முறையும் நீராடினார்கள்; தோய்த்துலர்த்திய ஆடையை உடுத்தார்கள்; காலில் மிதியடி தரித்தார்கள். மக்கள் தாம் பருகும் கிண்ணங்களைத் தினமும் காலையில் சுத்தஞ் செய்தார்கள்; ஆண்டில் ஒருமுறை ஆலயங்களிலும் வீடுகளிலும் தீபங்கள் ஏற்றித் தீப விழாக் கொண்டாடினார்கள். எகிப்திற் கிடைத்த பழைய மட்பாண்டங்கள் இந்தியாவிற் கிடைத்த அவ் வகைப் பொருள்களை ஒத்துள்ளன. இறந்த அரசரின் உடல்களை அடக்கஞ் செய்தற்கு அவர்கள் கட்டி எழுப்பிய கூர்நுதிக் கோபுரங்கள் இன்றும் உலக வியப்புகளுள் ஒன்றாக மதிக்கப்படுகின்றன. நீல நதியில் வளரும் நாணற் புல்லை வெட்டிப் பிளந்து ஒட்டிய தாள்களிலே அவர்கள் குச்சியில் மை தொட்டு எழுதினார்கள். அவர்கள் எழுதுவதற்கு ஓவியங் களைப் பயன்படுத்தினர். தமிழரின் பழைய எழுத்துகள் இவ் வகையின என்பது பழைய சான்றுகளால் அறியவருகின்றன. சுமேரியர் தமிழரில் இன்னொரு கூட்டத்தினர் பாரசீகக் குடாக்கடல் வழியே சென்று தைகிரஸ் யூபிரதிஸ் ஆறுகளின் கீழ் ஓரங்களில் குடியேறினார்கள். அவர்கள் ஆற்றினின்றும் நீரைக் கால்வாய்களால் வயல்களுக்குப் பாய்ச்சி வேளாண்மை செய்தனர். அவர்களின் தலைநக ரம் சுசா. சுமேரியாவிலே ஓர் இடத்துக்கும், ஒரு மலைக்கும் எல்லம் என்னும் பெயர் வழங்கிற்று. எல் என்பது ஞாயிற்றைக் குறிக்கும் பழந் தமிழ்ச் சொல். இந்தியாவின் தென் கோடியிலுள்ள இலங்கைத் தீவின் பழைய பெயரும் எல்லம். எல்லம் என்பதே பிற்காலங்களில் ஈழம் எனத் திரிந்து வழங்கிற்று. ஈழம் என்பதன் அடி எல் என மொழிநூலார் ஆராய்ந்து காட்டியுள்ளார்கள். எல்லம் என்னும் இடப்பெயர்களின் ஒற்றுமையால் சுமேரியர் ஒருபோது இலங்கைத் தீவினின்றும் சென்ற மக்கள் ஆவார்களோ? என்பது ஆராயத்தக்கதாகின்றது. முற்காலத்து இலங்கையும், தென்னிந்தியாவும் பிரிந்திருக்கவில்லை; நிலத்தால் இணைக்கப்பட்டிருந்தன. சுமேரியரின் நாகரிகம், எகிப்தியருடையவும் சிந்துவெளித் தமிழர் களுடையவும் நாகரிகங்களை ஒத்த பழமையுடையது. ஓடக்கோன், உவண்ணா என்னும் தலைவர்களின் கீழ் சென்று பாரசீகத்திற் குடியேறிய மக்களே சுமேரியர் என அவர்களிடையே பழைய வரலாறு உண்டு. ஓடக்கோன் என்னும் சொல் ஓடங்களுக்குத் தலைவன் என்னும் பொருள் தரும் தமிழ்ப் பெயர். உவண்ணா என்னும் பெயர், துளுவ மக்களிடையே இன்றும் வழங்குகின்றது. அதற்குப் பூவின் அண்ணன் என்பது பொருள். சுமேரியர், தந்தைக் கடவுளை ஆண் என்றும், தாய்க் கடவுளை அம்மா என்றும் பெயர்கள் இட்டு வழிபட்டனர். சிந்துவெளித் தமிழரின் தந்தைக் கடவுள் ஆண்; தாய்க்கடவுள் அம்மன். சுமேரியாவிலே கிடைத்த முத்திரைகளில் சிலவற்றில் இமில் உள்ள இடபம் பொறிக்கப்பட்டிருக்கின்றன. இமிலுள்ள இடபங்கள் இந்தியாவில் மாத்திரம் காணப்படுவன. மக்கட் குலநூலார் தமிழரும் சுமேரியரும் ஒரே குலமுறையிலுள்ளோர் என ஆராய்ந்து கூறியுள் ளார்கள். வரலாற்று ஆசிரி யர்களிற் பலர், இவர்கள் இந்தியாவினின்றும் சென்று பாரசீகத்திற் குடியேறியவர்களென எழுதியுள்ளார்கள். பாபிலோனியர் சுமேரியாவுக்கு வடக்கே குடியேறி வாழ்ந்த தமிழர் அக்கத்தியர் (Accadians) எனப்பட்டனர். இச் சொல் ஒருபோது அந்தப் பக்கத்தில் குடியேறியுள்ளவர்கள் என்னும் பொருளில் (அப் பக்கத்தார்) வழங்கி யிருக்கலாம். பின்னர் அவ் விடங்களில் சோழநாட்டினின்றும் வெளிப் போந்த ஒரு கூட்டத்தினர் சென்று தங்கி வாழ்ந்தனர். அவர்கள் அந் நாட்டுக்குச் சோழதேசம் எனப் பெயரிட்டனர். சோழதேசம் என்பதே கல்தேயா (Chaldia) எனத் திரிந்து பிற்காலத்து வழங்குவதாயிற்று. கல்தேயாவின் தலைநகர் ஊர். ஒரு காலத்தில் கல்தேயா, சுமேரியா என்னும் இருநாடுகளும், ஒருங்கே இணைக்கப்பட்டுப் பாபிலோனியா என்னும் பெயர் பெற்றன. பாபிலோன் நாடு, இந்திய மக்களால், பவேரு எனப்பட்டது. இந்திய வணிகர் பவேருவுக்குக் கடல்வழியாகச் சென்ற வரலாறுகள் பவேரு சாதகம் (கி.மு. 500) என்னும் புத்த நூலிற் காணப்படு கின்றது. பாபிலோனியர் பெரிய கோயிலமைத்து, அங்கே பகற்கடவுளை வழிபட்டார்கள். பகற் கடவுள் வழிபாட்டின் காரணமாகவே அவர்கள் நகருக்குப் பாபிலோன் என்னும் பெயர் உண்டாயிற்று. அவர்கள் இடப வாகனத்தின் மீது முத்தலை வேலைப் பிடித்து நிற்கும் தந்தைக் கடவுளை யும், சிங்க ஊர்தி மேலிருக்கும் தாய்க் கடவுளையும் வழிபட்டார்கள். கி.மு. ஆறாம் நூற்றாண்டில் பாபிலோனில் கடை வைத்து வாணிகம் பண்ணிய வ.ரா. என்பவரின் கடைக்கணக்குகள் எழுதிய களிமண் ஏடு அங்குக் கண்டுபிடிக்கப்பட்டது. அசீரியர் பாபிலோனுக்கு வடக்கே குடியேறி வாழ்ந்த தமிழர் அசீரியர் எனப்பட்டனர். அசீரியா, சீரியா முதலிய பெயர்கள் ஞாயிற்றுக் கடவுள் வழிபாடு காரணமாக சூரியன் என்னும் சொல்லினின்றும் பிறந்தன என்று வடல் (Waddell) என்னும் ஆசிரியர் கூறுவர். சூரியன் வடசொல் எனப் பலர் கருதுவர். சூரர மகளிர், சூர் மா முதல் எனப் பழந்தமிழ் இலக்கியங்களில் சூர் என்னும் சொல் பயின்று வருதலைக் காணுநர் சூரியன் ஆரியச் சொல் லாகுமோவென ஆராயற்பாலர். அசீரியர் ஞாயிற் றுக் கடவுளை அசுர் என்னும் பெயரால் வழிபட்டனர். அசீரியரின் பழைய கட்டட அமைப்புகள், திராவிட நாட்டுக் கட்டட அமைப்பு களை மிக ஒத்திருக்கின்றமையின், இவ் விரு மக்களும் ஒரு பொது உற்பத்தியைச் சார்ந்தோராவர் எனப் பழஞ் சரித்திர ஆராய்ச்சியாளர் கூறியிருக்கின்றனர். இம் மக்களின் நாகரிகம், கடவுள் கொள்கை முதலியன பெரிதும் பழந்தமிழரிடையே காணப்பட்டன போல்வன. யூதர் யூதர் தமிழ்நாட்டினின்றும் சென்று மத்தியதரைக் கடலின் மேற்குக் கரையோரங்களில் குடியேறி வாழ்ந்த மக்களாவர். கல்தேயாவின் தலைநகராகிய ஊரினின்றும் சென்று பாலத்தீன நாட்டிற் றங்கிய அபிரகாம் என்னும் கல்தேயரின் சந்ததியினரே யூதரும் அரேபியரும் என்னும் கன்ன பரம்பரை வரலாறு உளது. கல்தேயர் தமிழர்களே என்பது முன் கூறப்பட்டுள்ளது. பாலத்தீன மக்களின் பழக்கவழக்கங்கள், பழந்தமிழர் பழக்க வழக்கங்களை மிக ஒத்தன. அவர்கள் மரங்களின்கீழ் சிவலிங்கங்களை வைத்து வழிபட்டனர். ஆன் கன்றும் அவர்களால் வழிபடப்பட்டது. சிவன் என்னும் கடவுளை அவர்கள் சியன் (Cian) என்னும் பெயர் கொடுத்து வழிபட்டார்கள்: இறப்புப் பிறப்பால் உண்டாகும் தீட்டுக் காத்தனர். பூப்படைந்த பெண்கள் ஏழு நாள் வரையும் தனித்து உறைந்தார்கள். இறந்தவர்கள் பொருட்டு அவர்கள் முப்பது நாள் வரையும் துக்கம் கொண்டாடினர். ஒருவர் இறந்தால், அவர் இறந்த இடத்தில் ஏழு நாட்களுக்கு விளக்குக் கொளுத்தி வைத்து உணவு படைத்தார்கள். இறந்தவரின் மரணதினம், ஆண்டில் ஒருமுறை கொண்டாடப்பட்டது. அப்பொழுது விளக்குக் கொளுத்தி வைத்து, உணவு படைத்து விருந்து கொண்டாடப்பட்டது. இன்னும் இவை போன்ற யூதரின் பழைய வழக்கங்கள் இன்றும் தமிழ்நாட்டிற் காணப்படு வன போன்றன. பினீசியர் மத்தியதரைக் கடலின் மேற்குக் கரையிலே பாலத்தீனத்துக்கு மேற் பக்கத்தே குடியேறி வாழ்ந்த தமிழர் பினீசியர் எனப்பட்டார்கள். இவர் கள் குடியேறிய நாட்டில் ஈந்து என்னும் பனைகள் அதிகம். ஆதலினாலே அவர்கள் நாடு, பனைநாடு எனப்பட்ட தென்றும், பனைநாடு என்பதே உச்சரிப்பு வேறுபாட்டால் பினீசியா ஆயிற்றென்றும் வரலாற்று ஆசிரி யர்கள் சிலர் கருதுகின்றனர். பினீசியர் பரதர் எனவும் பட்டார்கள். இவர்கள் மொகஞ்சதரோ காலத்துக்குப் பின், மேற்கு ஆசியாவிற் சென்று குடியேறியவர்கள் ஆகலாம். இவர்கள் வழங்கிய எழுத்துப் பிராமி எழுத்தோடு ஒற்றுமை யுடையது. இவ் விரு எழுத்துகளின் நெருங்கிய ஒற்றுமை காரணமாகப் பினீசிய எழுத்துகளினின்றே பிராமி எழுத்துகள் தோன்றின என்று வரலாற்றாசிரியர்கள் ஒரு காலத்திற் கருதினர். பிராமி எழுத்து, மொகஞ்சதரோ எழுத்தின் திரிபு. இந்திய நாட்டினின்றும் வாணிகத்தின் பொருட்டுச் சென்று மேற்கு ஆசியாவிற் றங்கிய பினீசியர், பிராமி எழுத்துகளையே வழங்கினர். பினீசியரிடமிருந்து கிரேக்கரும், கிரேக்கரிடமிருந்து உரோமரும், உரோமரிடமிருந்து மற்றைய ஐரோப்பிய சாதியினரும் எழுத்தெழுதும் முறையை அறிந்தார்கள். பினீசிய மக்களின் பழக்கவழக்கங்களும், கடவுள் வழிபாட்டு முறைகளும் தமிழ் மக்களிடையே காணப்பட்டன போலல்லாமல் வேறு வகையாக இருத்தல் முடியாது. இவர்கள் பெரிய ஆலயங்கள் அமைத்து அவைகளில் சிவலிங்கங்களை வைத்து வழிபட்டனர். இடபமும் இவர் களின் வழிபாட்டுக்கு உரியதா யிருந்தது. இவர்களின் தலைநகராகிய தையர்ப் பட்டினத்தில் அமைக்கப்பட்டிருந்த பகலவன் கோயிலில் மரகதத்தினாலும், பொன்னினாலும் செய்யப்பட்ட இரண்டு சிவலிங் கங்கள் நிறுத்தி வழிபடப்பட்டன என்று ஹெரதொதசு ஆசிரியர் கூறி யுள்ளார். ஆற்றோரங்களில் தங்கிய மக்களைப் போல இவர்கள் தமது உணவின்பொருட்டு வேளாண்மையிற் றங்கியிருந்தாரல்லர்; உலகின் பல பாகங்களுக்கு மரக்கலங்களிற் சென்று வாணிகம் புரிந்தனர். சீரியர் பினீசியாவுக்கு வடக்கே குடியேறி வாழ்ந்த தமிழர் சீரியர் எனப் பட்டனர். சூரியர் என்பதே சீரியர் என்று மாறிற்றென வடெல் என்னும் ஆசிரியர் கூறியுள்ளார். இம் மக்களின் வாழ்க்கை முறைகளும், கடவுட் கொள்கைகளும் பழந்தமிழரிடையே காணப்பட்டன போன்றன. சீரியாவிலே பால்பெக் என்னும் இடத்தில் அறுபது அல்லது எழுபது அடி உயரமுள்ள தனிக் கற்றூண்களை நிறுத்திக் கட்டப்பட்ட பெரிய பகலவன் கோயிலின் அழிபாடு இன்னும் காணப்படுகின்றது. எகிப்திய சமாதிகளைப் போல, இவ் வாலயமும் வியப்பளிப்பதா யிருக்கின்றது. இம் மக்கள், முத்தலை வேலை ஒரு கையிலும், மழுவை மற்றொரு கையிலும் பிடித்து இடப வாகனத்தின் மீது வீற்றிருக்கும் தந்தைக் கடவுளையும், ஒரு கையிற் கேடகத்தையும் மற்ற கையிற் றண்டையும் ஏந்திச் சிங்க வாகனத்தின் மீதிருக்கும் தாய்க் கடவுளையும் முழுமுதற் கடவுளர்களாகக் கொண்டு வழிபட்டனர். சின்ன ஆசிய மக்கள் தமிழரில் ஒரு கூட்டத்தினர் சின்ன ஆசியாவிற் சென்று குடியேறி னார்கள். அங்குக் கித்தைதி (Hittite) என்னும் ஒரு நாடு உண்டு. அங்கு வாழ்ந்த பழைய மக்களின் மொழி, தமிழுக்கு மிக இனமுடையது. இம் மக்களும் குல முறையில் மத்தியதரை மக்களைச் சார்ந்தவர்களே. இவர்களும் சீரிய மக்களைப் போல, ஞாயிற்றையும், இடப வாகனத்தின் மீது வீற்றிருக்கும் தந்தைக் கடவுளையும், சிங்க ஊர்தி மேல் வீற்றிருக்கும் தாய்க் கடவுளையும் முழுமுதற் கடவுளர்களாகக் கொண்டு வழிபட்ட னர். திராய் (Troy) நகரில் அகழ்ந்து கண்டுபிடிக்கப்பட்ட பழம்பொருள் களின் இடையே சிவலிங்கங்கள் பல காணப்பட்டன. எற்றூஸ்கானியர் பழைய இத்தாலியர் எற்றூஸ்கானியர் எனப்படுவர். அவர்கள் இந்து சமுத்திரப் பக்கங்களிலிருந்து வந்தவர்கள் ஆதல் வேண்டுமென வரலாற் றாசிரியர்கள் கூறியிருக்கின்றனர். திராய்(Troy) நகரினின்றும் வந்து குடியேறியவர்களே அவர்கள் என வடல் என்பார் கூறுவர். அவர்களின் பழக்க வழக்கங்களும், கடவுள் வழிபாட்டு முறைகளும், பழந் தமிழரிடையே காணப்பட்டன போல்வன. அங்குக் கிடைத்த பழைய மட்பாண்டங்கள், வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட தென் னிந்தியச் சமாதிகளிற் கிடைத்த அவ் வகைப் பழம்பொருள்களை மிக ஒத்துள்ளன. அவர்கள் சிவலிங்கங்களை வழிபட்டனர். இத்தாலியி லுள்ள பழைய கிறித்துவ ஆலயங்களில் சிவலிங்கங்கள் வெட்டப்பட் டிருத்தலை வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். கிரேத்தா மக்கள் கிரேத்தா (Crete) மக்கள் தமிழ்நாட்டினின்றும் சென்று குடியே றிய மக்களேயாவர். இவர்கள் தமிழர் என்றே அழைக்கப்பட்டார்கள். என ஹெரதோதசு (Heradotus கி.மு. 480) என்னும் ஆசிரியர் குறிப்பிட் டுள்ளார். இவர்கள் பழக்க வழக்கங்களும், இந்தியக் குடாநாட்டின் மேற்குக் கரையிலுள்ள மலையாளரின் பழக்க வழக்கங்களும் ஒரே வகையின. கிரேத்தாவில் பெண்களுக்கு ஆடவரிலும் பார்க்கக்கூடிய அதிகாரம் இருந்தது. பிள்ளைகள் தாய் வழியால் அறியப்பட்டார்கள். இவர்கள் சியஸ் என்னும் கடவுளை வழிபட்டனர். சியஸ் என்பது சிவன் என்பதன் திரிபு. கிரேத்தாவில் சிவா என்னும் பெயருடைய பழைய இடமும் உண்டு. தமிழரின் சங்க நூல்களிற் கூறப்படும் ஆயரின் ஏறு தழுவுதல் போன்ற ஓவியங்கள், அங்கு அகழ்ந்து கண்டுபிடிக்கப்பட்ட கிரேத்தா அரசரின் பழைய அரண்மனைச் சுவர்களில் எழுதப்பட் டுள்ளன. இங்குக் காணப்பட்ட மட்பாண்டங்களும், இந்தியாவிற் காணப்பட்ட பழைய அவ் வகைப் பொருள்களை ஒத்துள்ளன. இவர்கள் மரங்களின் கீழ் சிவலிங்கங்களை வைத்து வணங்கியதோடு சங்கு, கொம்பு வாத்தியங்களையும் பயன்படுத்தினர். பாஸ்க்கு மக்கள் பழைய ஸ்பெயின் மக்கள் பாஸ்க்குகள் எனப்பட்டனர். இம் மொழி தமிழுக்கு மிக நெருங்கிய உறவுடையது. சேர்யோன் மார்சல் என்பவர், “இரத்தத்தால் தமிழருக்கு மிக உறவுடைய மத்தியதரை மக்கள், தமிழ் மொழியையே ஒரு காலத்தில் வழங்கினார்களாகலாம்” என ஓரிடத்திற் குறிப்பிட்டுள்ளார். ஸ்பெயின் நாட்டில் இன்றும் சங்க நூல்களிற் காணப்படுவது போன்ற மாட்டுச் சண்டைகள் நடைபெறுவ துண்டு. பாஸ்க்குகள் மத்திய தரை மக்களைச் சேர்ந்தோராவர். இவர்கள் சிவலிங்கம் இடபம் முதலியவைகளை வழிபட்டனர். அமெரிக்க வெள்ளிக் காசில் (Dollar) காணப்படும் ஒன்று சிவலிங்கத்தின் அடை யாளம் என்றும், வளைவு எட்டின் பகுதி என்றும் சொல்லப்படுகின்றன. இந் நாணயக் குறியை ஸ்பானியரே ஆரம்பித்தனர். அது ஆதியில் தூண் நாணயம் (Pillar coin) எனப்பட்டது. துருயிதியர் (Druids) பிரான்சிலும் பிரித்தனிலும் குடியேறியிருந்த துருயிதியர் என்னும் மக்கள் திராவிட மரபினரே யாவர். இங்கிலாந்திலே அறிவாளிகள் திராவிட் எனப்பட்டார்கள். அம் மக்கள் சிவலிங்கங்களையும், கல் வட்டங்களையும் வழிபட்டனர். பிரிந்தன் என்பது பாரத வருடம் என்பதன் திரிபு (Waddell) பினீசியரே இங்கிலாந்திற் குடியேறிப் பிரித் தானியர் எனப்படுவாராயினர். அமெரிக்கர் பழைய அமெரிக்கரும் இந்திய நாட்டினின்றும் சென்று குடி யேறிய தமிழர்களே யென்றும், அவர்களின் மொழி, தமிழைப் போலவே ஒட்டுச் சொற்களை உடைய தென்றும், ஒட்டுச் சொற்களுடைய மொழிகள் எல்லாவற்றுக்கும் தொடக்கம் ஒன்று என்றும், அவர்கள் உறவின்முறையினரை அழைக்கும் முறை, தமிழ்நாட்டிற் காணப்படுவது போலவே உள்ளதென்றும், ஆர்தன் (Ortan) என்னும் ஆசிரியர் நன்கு ஆராய்ந்து விளக்கியுள்ளார். இக் கருத்துகள் புதியனவல்ல இக் கருத்துகள் புதியனவல்ல. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் காலத்திலேயே இக் கொள்கைகள் நன்கு ஆராய்ந்து அறியப் பட்டிருந்தன. அக் கருத்துகளைத் திரட்டித் தமிழ் இசையைப் பற்றி நூல் எழுதிய ஆபிரகாம் பண்டிதர், தமது கருணாமிருத சாகரம் என்னும் நூலகத்தும் கூறியுள்ளார். அது வருமாறு: “அதன் முன் தமிழ்நாட்டிலிருந்து மெசொபெதோமியா, பாபி லோன், கல்தேயா, ஆசியா முதலிய விடங்களுக்குப் போய்க் குடியேறி இராச்சியங்களை ஸ்தாபித்துப் பிரபலமாய் ஆண்டு கொண்டிருந்த தமிழர்கள் மிகுந்த நாகரிகமுடையவர்களாய்ப் பல பல கலைகளிற் றேர்ந்தவர்களாய்ப் பற்பல சாதியினராய் அழைக்கப்பட்டார்கள் என்றும் அவர்கள் பேசிய தமிழ்மொழி, எபிரேய, கல்தேய, பாபிலோனிய, அசீரிய, சுமேரிய, பாரசீக, பேர்குயிய, பிராகிருத, சித்திய, ஆங்கிலோ, செர்மனிய, சமக்கிருத பாசைகளில் மிக ஏராளமாகக் கலந்து வருவத னால் தமிழ் மக்களே மிகப் பூர்வ மக்களாய் உள்ள குடிகளென்றும், அவர்கள் பல கலைகளிலும் சங்கீதத்திலும் தேர்ந்திருந்தார்களென்றும், அவர்களிருந்த நாடு கடலால் கொள்ளப்பட்ட காலத்தில் தங்குதற்குச் சமீபத்திலுள்ள ஆசியா, சின்ன ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஒசினியா என்னுங் கண்டங்களின் கரையோரங்களில் தங்கினார்க ளென்றும், தப்பிப் பிழைத்தவர்களின் கலைகளின் தேர்ச்சிக்கேற்ற விதமாய் அங்கங்கே சங்கீதம், சிற்பம், சோதிடம் முதலிய அருங்கலைகள் விருத்தியாகிக் கொண்டு வந்தனவென்றும், நாம் காண்பதற்கு உதவி யாகச் சில சரித்திரக் குறிப்புகளும் சொல்லியிருக்கிறேன். சுருக்கமாகச் சொல்லுமிடத்துச் சரித்திர காலம் ஆரம்பிப்பதற்கு வெகு காலத்திற்கு முன்னதாகவுள்ள லெமூரியா நாடு, தமிழ்நாடாயிருந்த தென்றும் அதில் வசித்து வந்த வர்கள் தமிழர்களா யிருந்தார்களென்றும் லெமூரியாவிற் பேசப்பட்டு வந்த பாசை தமிழாயிருந்ததென்றும் அது இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழாக வகுக்கப்பட்டு இலக்கண வரம்புடன் மிகுந்த தேர்ச்சி யுடையதா யிருந்ததென்றும், அதன்பின் உண்டான பிரளயங்களில் அந் நாடு, கொஞ்சங் கொஞ்சமாகக் கடலால் விழுங்கப் பட்டபின், பல பல கலைகளும் இசைத் தமிழைப் பற்றிச் சொல்லும் அரிய நூல்களும், கொஞ்சங் கொஞ்சமாக மறைந்து, தற்காலம் அனுபவத்திலிருக்கும் சொற்ப முறையே மிஞ்சியிருக்கிற தென்றும் தெளிவாக அறிவோம்.” “உலகத்தவர் எவராலும் இதன்மேல் நுட்பமாய்ச் சொல்லமுடியா தென்று கருதும்படி மிகுந்த தேர்ச்சி பெற்ற சங்கீத நூலைப் போலவே, சிற்பம், சோதிடம், கணிதம், வைத்தியம், வாதம், யோகம், ஞானம் முதலிய அருங் கலைகளும், மற்றும் பாசைகளில் திருப்பப்பட்டு வந்திருக்கின்றன வென்றும் நூலாராய்ச்சி செய்யும் அறிவாளிகள் காண்பார்கள்.” பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்களது கருத்து இவ் வகையிற்று. ஆகையினாலேயே அவர்கள், “சதுமறை ஆரியம் வருமுன் சகமுழுதும் நினதாயின் - முதுமொழி நீயனாதி என மொழிகுவதும் வியப்பாமே” என முழங்குவராயினர். ஆரியர் மத்தியதரை நாடுகளிற் குடியேறியிருந்த மக்களில் ஒரு பிரிவினர், வடக்கே குளிர் மிகுந்த நாடுகளிற் சென்று தங்கி உடல் வெண்ணிறம் ஏறப் பெற்றனர். ஆரியர் என்னும் மக்கட் குழுவினர் வடதுருவ நாடுகளில் வாழ்ந்து கொண்டிருந்தவர்களாவர் எனப் பாலகங்காதர திலகர் நன்கு ஆராய்ந்து காட்டியுள்ளார். அவர்கள் நூல்களில் தேவர் எனக் கூறப்படு வோர் ஆரியரே யாவர். தேவர்களுக்கு இரவு ஆறு திங்கள்; பகல் ஆறு திங்கள் எனப் புராணங்கள் புகலும். துருவ நாடுகளில் ஆறு மாதம் இரவும், ஆறு மாதம் பகலும் உண்டு என்பதைப் பள்ளிச் சிறுவரும் நன்கு அறிவர். அவர்கள் மத்திய ஆசியாவிற் றங்கி மாட்டு மந்தைகளை மேய்த்து அவை தரும் பயன்களைக் கொண்டு வாழ்ந்தனர். ஒரு போது நீண்டகாலம் மழை பொய்த்தமையால், அவர்களின் ஆடு மாடு முதலியன மேய்வதற்குப் புற்கிடைப்பது அருமை ஆயிற்று. ஆகவே அவர்கள் பல திசைகளை நோக்கிக் கூட்டங் கூட்டமாகச் சென்றனர். அவ்வாறு சென்றவர்களுள் ஒரு கூட்டத்தினர் இந்தியாவின் வடமேற்கே உள்ள கைபர் கணவாய் வழியாக இந்தியாவை அடைந்தனர். இது இற்றைக்கு நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய (கி.மு. 2000) நிகழ்ச்சி. ஆரியருக்கும் தமிழர்களுக்கு மிடையிற் போர் ஆரியருக்கும் தமிழர்களுக்கு மிடையில் நீண்ட காலம் போர் நடந்தது. இறுதியில் ஆரியர் பஞ்சாப் மாகாணம் முழுவதையும் கைப்பற் றினர். இதற்கிடையில் ஆரியருக்கும் தமிழருக்குமிடையில் திருமணக் கலப்பு உண்டாயிற்று. இக் கலப்பாற் றோன்றிய மக்கள் தம்மை ஆரியர் எனக் கூறிக் கொண்டனர். அவர்கள் கங்கைச் சமவெளிகள் வரையிற் சென்று தமிழர் இராச்சியங்களைக் கைப்பற்றினர். விந்திய மலைக்கு வடக்கேயுள்ள நாடு, ஆரிய வர்த்தம் எனப்பட்டது. ஆரியர், தமிழரின் கொள்கைகளைப் பின்பற்றுதல் ஆரியர் இந்திய நாட்டை அடைந்தபோது தாழ்ந்த நாகரிக நிலையில் இருந்தனர். உரோமர், கிரேக்கர்களைப் பின்பற்றி நாகரிகத்தில் உயர்ந்தது போல, ஆரிய மக்களும் அரசியல், சமயம் முதலிய கொள்கை களில் தமிழரைப் பின்பற்றி உயர்வடைந்தனர். மக்கட் குலங்கள் இவ் வுலகிலே படைப்பினால் வேறுபட்டவர்களோ என்று ஐயுறும்படியான வெவ்வேறு நிறமும் தோற்றமும் உடைய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதன் காரணம் ஆராயற்பாலது. ஆதியிற் றோன்றி வாழ்ந்த மக்கள், கறுப்பு அல்லது கபில நிறமுடையர். பின்பு அவர்கள் வெவ்வேறு வெப்ப தட்பமுடைய நாடுகளிற் சென்று தங்குவாராயினர். வெப்பதட்ப நிலை மக்களின் நிறத்தை மாற்றத்தக்கது. செய்யும் தொழில், உண்ணும் உணவு முதலியவைகளாலும் உடலில் சிறு மாற்றங்கள் உண்டாகத்தக்கன. குளிர் மிகுந்த துருவ நாடுகளில் வாழ்ந் தோர் வெண்ணிற மடைந்தனர். துருவ நாடுகளுக்குத் தெற்கே நடுக்கோடு வரையிலும் வாழ்ந்த மக்கள், படிப்படியே வெண்மை குறைந்து கருமை மிகுந்து இருந்தனர். நிறத்தினால் வெள்ளை, கறுப்பு, மஞ்சள் என்று பிரித்தறியப்படும் வெவ்வேறு மக்கட் குலங்கள் தோன்றின. ஒரு மக்கட் குலத்தினர், வேறு மக்கட் குலத்தினர்களோடு கலக்கும்போது புதிய குலத்தினர் தோன்றுவது இயல்பு. இதற்கு எடுத்துக்காட்டு, யூரேசிய ராவர். இவ் வுலகில் ஆதியிற் றோன்றிய மக்கட்குலம் ஒன்றே, நாளடை வில் பல மக்கட் குலங்களாகப் பிரிந்தது என்பது மக்கட் குலநூல் ஆராய்ச்சியால் தெளிவுறுகின்றது. ஹெரஸ் பாதிரியார், இந்திய வரலாற்று இதழில் (Indian Historical Review - 1939) எழுதியிருப்பதன் சுருக்கம் பின்வருமாறு: “ஆரியர் இந்திய நாட்டுக்கு வருகின்ற காலத்தில் தமிழர் சிறிதும் நாகரிகமில்லாதவராய்க் காட்டு மக்களைப் போல இருந்தார்கள் எனப் பதினைந்து ஆண்டுகளுக்குமுன் சிலர் கருதுவாராயினர். அதனை வரலாறு தொடர்பான எத்தகைய ஆதாரங்களையுங் கொண்டு நாட்டு தல் முடியாது. திராவிட அரசர் பலரும், திராவிடக் கூட்டத்தினர் சிலரும், காரணமின்றித் தம்மைத் திராவிடர் எனக் கூறிக்கொள்ள நாணி, ஆரியரென்று கூறிக் கொண்டனர். சிந்துவெளியிற் கண்டுபிடிக்கப்பட்ட மொகஞ்சதரோ என்னும் திராவிடரின் பண்டைய நகரம் கண்டு பிடிக் கப்பட்ட பின்பு, ஆர்.டி. பானர்ஜி (R.D. Banerji) என்பார் திராவிடர், இந்தியாவைப் புதிதாக வந்தடைந்த ஆரியரிலும் பார்க்க, மிக உன்னத நாகரிகம் படைத்திருந்தார்கள் எனச் சொல்லி, ஆரிய உணர்ச் சிக்கு எதிராக அறைகூவினார். “சுமேரியரின் ஆதியிருப்பிடம், அவர்களின் கன்ன பரம்பரைக் கதையின்படி கிழக்கில் உள்ளது. கி.மு. முதலாம் நூற்றாண்டில் விளங்கிய பெறொசஸ் (Berosus) என்னும் பாபிலோனியக் குரு சுமேரியாவில் நாகரிகத்தையும் எழுத்தெழுதும் முறையையும் கொண்டுவந்து பரப்பிய பெருமக்கள் இருவர் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார். அவர்களுள் ஒருவரின் பெயர் உவண்ணா. அதற்கு மலரின் அண்ணன் என்று பொருள். உவண்ணா என்பது கிரேக்கரின் உச்சரிப்பு முறையில் ஒஅன்னிஸ் எனத் திரிந்து வழங்கிற்று. உவண்ணா என்னும் பெயர் துளுவ மக்களிடையே இன்றும் காணப்படுகின்றது. மற்ற பெயர் ஓடக் கோன். இது ஓடங் களுக்குத் தலைவன் என்னும் பொருளில் தமிழில் வழங்குகின்றது. கிறித்துவ வேதத்தின் பழைய ஏற்பாடு, நோவாவின் சந்ததியினர் பலரைப்பற்றிக் கூறியபின், ‘கிழக்குத் திசையினின்றும் வந்து அவர்கள் சென்னான் (சுமர்) என்னும் சமவெளியில் வாழ்ந்தார்கள். அவர்களுள் ஒவ்வொருவனும் தனது அயலவனை நோக்கிக் களிமண்ணிற் கல்லரிந்து சூளை இடுவோம் என்று சொன்னான். அவர்கள் கல்லுக்குப் பதில் செங்கல்லையும், களிமண்ணுக்குப் பதில் சுண்ணாம்பையும் பயன்படுத்தி னார்கள்’. விவிலிய வேதத்திற் கூறப்படும் அழகிய கட்டடங்கள் மொகஞ் சதரோக் கட்டடங்கள் போன்றன. சுமேரியருக்கு முற்பட்ட மக்கள் களிமண்ணாற் கட்டி வாழ்ந்த குடிசைகள், செங்கற் கட்டடங்களில் வாழ்ந்த மக்களுக்கு (இந்தியாவினின்றும் வந்த மக்களுக்கு) விரும்பத் தக்கனவா யிருக்கவில்லை. மொகஞ்சதரோ மக்கள் சுமேரியாவோடு மாத்திரம் தொடர்புடையவர்களா யிருந்தார்களல்லர். மொகஞ்சதரோ விற் கிடைத்த முத்திரை ஒன்றில் மாட்டுச் சண்டையைக் காட்டும் படம் காணப்படுகின்றது. இவ் வகை மாட்டுச் சண்டை இப்பொழுது ஸ்பெயின் நாட்டில் நடைபெறுகின்றது. இவ் வகை மாட்டுச் சண்டை களைக் குறிக்கும் ஓவியங்கள் கிரேத்தாவிலுள்ள பழைய அரண்மனைச் சுவர்களில் வரையப்பட்டிருக்கின்றன. கிரேத்தா மக்களும் ஸ்பெயின் மக்களும் மத்தியதரை மக்கட் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனப்படுகின் றனர். இக் கால மக்கட் குலநூலார், திராவிடரும் இக் கூட்டத்தைச் சேர்ந் தவர்கள் எனக் கூறுகின்றனர். இக் கொள்கை இப்பொழுது மொகஞ்சத ரோவில் நடத்தப்பட்ட பழம்பொருள் ஆராய்ச்சியால் வலியுறுகின்றன. பழைய தமிழ் நூல்கள் ஏறு தழுவுதலைப் பற்றிக் கூறு கின்றன. இது முன்பு குறிக்கப்பட்ட மொகஞ்சதரோ முத்திரையோடும், கிரேத்தாவி லுள்ள ஓவியங்களோடும் ஒப்பிட்டு ஆராயத்தக்கது. “இந்தியாவை அடைந்தபோது, ஆரியர் எழுத்தெழுத அறியா திருந்தனர். அவர்கள் தமது பகைவர்களாகிய தாசுக்களின் எழுத்து களையே பயன்படுத்தினர். அவ் வெழுத்து இரு வகையாக வளர்ச்சி யடைந்தது. வட இந்தியாவிலுள்ள ஆரியரும், ஆரியராக்கப்பட்ட திராவிடரும் அதனை ஒரு முறையில் விருத்தி செய்தனர். தென்னிந்தி யாவிலும் இலங்கையிலும் அது இன்னொரு முறையில் வளர்ச்சியுற்றது. “மொகஞ்சதரோவிற் கிடைத்த ஆயிரத் தெண்ணூறு பட்டையங் களைப் படித்த எனக்கு, மத்தியதரை நாடுகளிலிருந்து மக்கள் இந்தி யாவை அடைந்தார்கள் என்னும் கொள்கை நேர்மாறாக வுள்ளதென நன்கு தெளிவாகின்றது. இவ் விரு நாடுகளின் எழுத்து வளர்ச்சி, இரு நாடுகளின் சமயம், அரசரின் பட்டப் பெயர் (சந்திர குலம், சூரிய குலம் போல்வன) இராசிகளின் எண், பெரொசஸ் என்பவரின் பழைய வரலாற்றுக் குறிப்பு, விவிலிய வேதத்தின் ஆதி ஆகமத்தில் (Gen. 11: 1-5) கூறப்படுவது ஆகியன எல்லாம், மக்கள் இந்தியாவிலிருந்து மத்தியதரை நாடுகள் ஆப்பிரிக்கா, சைபிரஸ், கிரிஸ், இத்தாலி, ஸ்பெயின் முதலிய நாடுகளிற் குடியேறி, ஐரோப்பாவிலே பிரிட்டன் தீவுகள் வரையிற் பரவினார்கள் என்பதை வலியுறுத்துகின்றன. இவர்கள் சென்ற பாதை, இலங்கை முதல் அயர்லாந்து வரையில் “தொல்மென்” (Dolmen) என்றும் மூன்று கற்களால் எடுக்கப்பட்ட கட்டடங்களாலும், நிறுத்தப்பட்ட தனிக் கற்றூண்களாலும் தொடர்பாக அடையாளப்படுத்தப்பட்டிருக் கிறது. மத்தியதரைச் சாதியினர் என்று மக்கட் குலநூலாராற் கொள்ளப் படும் ஊக்கமும் நாகரிகமுமுடைய திராவிட மக்கள், காரண மின்றித் தாழ்வாகக் கருதப்படுவாராயினர்.” பார்ப்பனர் யார்? தமிழ்மக்கள் வரலாற்றில், பார்ப்பனர் யார்? என்பது நன்கு ஆராய்ந்து தெளிதற்குரிய பொருளாகும். இஞ்ஞான்று பார்ப்பனர், தம்மை ஆரியர் எனக் கூறி வருகின்றனர். பொதுமக்களும் அவர்களை அவ் வினத்தினர் எனவே கருதி வருகின்றனர். இதனைக் குறித்து வரலாற்று முறையில் ஆராய்வோம். நம் இந்திய நாட்டிலே கன்னியாகுமரி முதல் இமயம் வரையில், ஒருகால் வாழ்ந்தோர் கலப்பற்ற தமிழர்களென்பது வரலாற்று நூலார் எல்லார்க்கும் ஒப்ப முடிந்த முடிவு. இற்றைக்கு நாலாயிரம் ஆண்டு களுக்கு முன் ஆரியர் என்னும் நிறத்தால் வேறுபட்ட புதிய சாதியினர் இந்திய நாட்டை அடைந்தார்கள் என்பது முன் ஓரிடத்திற் கூறப்பட் டுள்ளது. அவர்கள் சில காலம் கலப்பின்றி வாழ்ந்து, பின்பு தமிழ் மக்களோடு கலந்து ஒன்றுபட்டனர். இந்திய நாட்டின் அயலே நின்று வந்த ஆரியரிலும், இந்திய நாட்டில் வாழ்ந்துகொண்டிருந்த தமிழர் எண்ணில் மிகப் பலராவர். தமிழர் பெருந்தொகையினராகவே ஆரியர் தமிழ் வெள்ளத்துள் மறைந்துபோயினர். ஆயினும் கலப்பினாற் றோன்றிய மக்கள் தம்மை ஆரியர் எனக் கூறிக் கொண்டனர். இருவேறு மக்கள் ஒன்றுபட்டுக் கலக்கும்போது மொழி, மதம், பழக்கவழக்கம் ஆகியவை களும் கலப்புற்றுச் சில புதிய மாறுதல்கள் உண்டாவது இயல்பு. ஆரியர் இந்தியாவை அடைந்தபோது, மந்தை மேய்ப்பவர்க ளாகவும் தாழ்ந்த நாகரிகமுடையவர்களாகவும் இருந்தனர். தமிழர் எல்லா வகையிலும் சிறந்து உயர்ந்த நாகரிகம் உடையவர்களாய் விளங்கி னார்கள். நாகரிகத் திற் றாழ்ந்தவர்கள் நாகரிகத்தில் உயர்ந்தவர்களைப் பின்பற்றுதல் எல்லாக் காலங்களிலும் காணப்படும் இயல்பு. ஆரிய மக்களின் மொழி, மதக் கொள்கை முதலியன சிறிதுசிறிதாக மாற்றமடைந்தன. ஆரியர் ஆதியில் வழங்கிய மொழி பிராகிருதம் எனப் படும். இதற்கு இலக்கண வரம்பு இல்லை. இம் மொழி வடக்கே வழங்கிய தமிழோடு கலந்து, பல மொழிகளாகப் பிரியத் தொடங்கியபோது பிராகிருதப் பற்றுடையார் அம் மொழிக்கு இலக்கணஞ் செய்து, அதனைச் சீர்திருத்தஞ் செய்தனர். அவ்வாறு செய்யப்பட்ட மொழி சமக்கிருதம் எனப்பட்டது. சமக்கிருதம் என்பதற்கு நன்றாகச் செய்யப் பட்டது என்பது பொருள். இம் மொழி இக் காலத்திற் போல, இலக்கிய மொழியா யிருந்ததே யன்றி மக்களால் ஒருபோதும் பேசப்படவில்லை. 1சமக்கிருதத் தின் வழி வந்தன என்று கருதப்படும் வடநாட்டு மொழிகள், அமைப்பில் தமிழை ஒத்துள்ளன வென்று மொழியாராய்ச்சியாளர் கூறுகின்றனர். ஒரு மொழியின் இலக்கணத்தை, ஒரு ஆற்றின் இரண்டு அணைகளுக்கும், சொற்களை அவற்றின் இடையே ஓடும் நீருக்கும் ஒப்பிடலாம். சொற்கள், காலத்துக்குக் காலம் மாறுபடலாம். ஆனால் இலக்கணம் மாறுபடாது. ஆகவே, வடக்கே வழங்கிய தமிழ், பிராகிருதச் சொற்கள் பலவற்றையும் அவற்றின் சிதைவுகளையும் ஏற்றுக்கொண்டு, இப்பொழுது வடநாட்டில் வழங்கும் பல மொழிகளாக மாறியுள்ள தென்பது நன்கு தெளிவுறு கின்றது. மொழியில் இவ் வகை மாற்றம் உண்டானது போலவே, ஆரியரின் சமயத்திலும் பல மாற்றங்கள் உண்டாயின. ஆரியர், இந்தியாவுக்கு வெளியே வாழ்ந்த காலத்தில், மந்தை மேய்ப்பவர்களாய் அலைந்து திரிந்தனர். ஆகவே அவர்கள் நிலையான கோயில்கள் அமைத்துக் கடவுளை வழிபட முடியவில்லை. அவர்கள் தாம் சென்ற இடங்களில் கடவுளுக்குப் பலி செலுத்தி வந்தார்கள். இந்தியாவை அடைந்த பின்பும், ஆரியர் இவ் வழக்கைக் கைக்கொண்டு வந்தனர். அவர்களுள் ஒரு காலத்தில் வருணப் பிரிவோ, சாதிப் பிரிவோ இருக்கவில்லை. குடும்பத் தலைவன் கடவுளருக்குப் பலி செலுத்தி வந்தான். அரசர் செய்யும் வேள்விகளில் பலி செலுத்தும் புரோகிதர் சிலர் இருந்தனர். ஆரியர் நாடுகளை வென்று பெரிய அரசர்களானபோது, வேள்விகள் ஆடம் பரங்களுடன் செய்யப்பட்டன. அக் காலத்தில் பிராமணங்கள் என்னும் வேள்விக் கிரியைகளைக் கூறும் நூல்கள் எழுதப்பட்டன. அக் கிரியை முறைகள், இருக்கு வேத காலம் முதல், பிற்காலம் வரையில் தமிழரின் ஆகம முறைகளைப் பின்பற்றிச் சிறிது சிறிதாக வளர்ச்சியடைந்தன வாகும். பிராமணங்களைப் பலர் பயின்றனர். பிராமணங்களில் வல்லுநர் பிராமணர் எனப்பட்டனர். அவர்கள் கோயிற் குருமாரல்லர் என்பது நன்கு கருத்திற் பதித்துக்கொள்ள வேண்டியது. வேள்விச்சாலைகளில் பிராமணருக்குத் தக்க கைம்மாறு கிடைத்தது. அரசன் அவர்களை நன்கு மதித்தான். இவைகளால் தூண்டப்பட்டுப் பலர் பிராமணங்களைப் பயின்றனர். ஒரே தொழில் புரியும் மக்கள், ஒரு இடத்தில் அளவுகடந்து பெருகுவார்களானால், அவர்கள் வெவ்வேறு இடங்களிற் சென்று தமது தொழிலைப் புரிந்து வாழ்வது இயல்பு. பிராமணரில் பலர் தென்னாடு போந்தனர். அவர்களின் வருவாய்க்கு வேள்விகள் இன்றியமையாதன. ஆகவே அவர்கள் தமிழ்நாட்டு அரசரை அணுகி, அவர்களைத் தம் மதத்துக்குத் திருப்ப முயன்று வந்தார்கள். முற்காலங்களில் புதிய சமயங்களைப் பரப்புவோர், முதலில் அரசனையே தமது சமயத்துக்குத் திருப்புவது வழக்கம். இது கூன்பாண்டியன் சைன மதத்தைக் கடைப்பிடித்தது போன்ற வரலாறு களை நோக்கி அறிக. தமிழ்நாட்டு அரசர் சிலர், அவர்கள் மதத்தைத் தழுவி வேள்விகள் புரிந்தனர். பிராமணருக்கு அரசனின் நன்மதிப்பும், செல்வாக்கும் உண்டாயின. தமிழ்மக்கள், ஆலயங்கள் அமைத்து அங்குக் கடவுளை வழிபட்டு வந்தார்கள். ஆலயங்களைக் கண்காணிப்பவர் பார்ப்பார் எனப்பட்டனர். ஆதியிலே அரசனே பார்ப்பானாக விருந்தான். பிற்காலங்களில் உயர்ந்த மரபிலுள்ளோர் பார்ப்பாராக இருந்தனர். பார்ப்பார் ஐயர் எனப்பட்ட னர். ஐயன் என்பது கடவுளைக் குறிக்க வழங்கும் பெயர்களுள் ஒன்று. ஐயனின் பணிவிடைகளைச் செய்தமையால் பார்ப்பார் ஐயர் எனப்பட் டார்கள். ஐயர் என்பதற்கு ஐயனுடைய வேலையாட்கள் என்பது பொருள். ஐயர் என்னும் சொல் மேற்கு ஆசிய நாடுகளிலும் கடவுளைக் குறிக்க வழங்கிற்று. ஐயர்மார் பொது மக்களின் புரோகிதருமாக இருந்து வந்தனர். வடநாட்டினின்றும் வந்த பிராமணருக்குச் செல்வாக்கு உண் டாகவே, அவர்கள் தமிழ்ப் பார்ப்பனர்களிடையே திருமணக் கலப் புடையராயினர். வேள்விகள் புரியும் பிராமணருக்கு நன்மதிப்பும் வருவா யும் உண்டாவதை நோக்கிப் பார்ப்பனரும் பிராமணங்களைப் பயின்று அரசருக்கு வேள்விகள் செய்யும் புரோகிதராயினர். அவர்கள் தம்மை ஆரியர் எனச் சொல்லிக் கொண்டதோடு தமக்குச் சமய முதல் நூல்கள் இருக்கு முதலிய நூல்கள் எனவும், தமக்குரிய மொழி, சமக்கிருத மென்றும் சாற்றுவாராயினர். பார்ப்பார் தமது மொழி ஆரியமெனக் கொண்ட காலத்து, அரசர் ஆணையினால் அது சமயமொழி யாக்கப் பட்டுத் திருக்கோயில்களிலும் நுழைவதாயிற்று. பார்ப்பனரிடையே நிற வேறுபாடு பலவாகக் காணப்படுதல் வடநாட்டு மக்களோடு கலந்த கலப்பின் அளவைக் காட்டுவது. இவர்களின் இயல்பை இந்திய நாட்டு யூரேசியர்களோடு ஒப்பிடலாம். பார்ப்பனரல்லாதாரிடையும் பிராமணர் கலப்புடையர்1. ஆரியரல்லாத மந்திர வித்தைக்காரரும் பிற திராவிடரும் பிராமணரானார்கள். தாழ்ந்த வகுப்பினரிடையே பிராமணர் பெண் களை மணந்து கொண்டார்கள் என்பதற்குப் பல சான்றுகள் உண்டு. வடமொழி தென்மொழிக் கலப்பு பார்ப்பனர் தம்மை ஆரியர் எனக் கொண்டு வடமொழியைப் பயின்று வந்தமையாலும், சமக்கிருதம் சமயமொழி யாயினமையாலும், சைன புத்த மதத்தினர் தத்தம் மதங்களைத் தென்னாட்டில் நுழைக்க முயன்றபோது, அவர்களுடன் எதிர்த்து வாதம் புரியும்பொருட்டுத் தமிழறிஞர் வடமொழியைப் பயின்று அம் மொழியில் எழுதப்பட்டுள்ள புத்த சைன நூல்களைப் பயின்றமையாலும் தென்னாட்டில் வட மொழிப் பயிற்சி அதிகமாயிற்று. இதனால் சமயத் தொடர்பான வட மொழிச் சொற்கள் பல தமிழிற் புகுந்து வழங்கலாயின. தமிழ்ப் புலவர்கள் தாம் இயற்றும் நூல்களில் வடசொற்கள் புகாமல் இயன்றளவு தவிர்த்து வந்தனர். பார்ப்பன வகுப்பினர், இம் முறையைக் கையாள வில்லை. அவர்கள் தமிழுடன் வடமொழிச் சொற்களைப் பெரிதுங் கலந்து வழங்குவாராயினர். அவர்களால் கடவுள் மொழி எனக் கருதப் பட்ட சமக்கிருத மொழிச் சொற்கள் தமிழுடன் கலப்பதனால் தமிழுக் குக் கடவுள் மணம் ஏறும் என அவர்கள் நினைத்தார்கள் போலும்! ஒரு மொழிக்குரிய சொற்களை இன்னொரு மொழியிற் கொண்டு வழங்க வேண்டுமாயின், அவை அம் மொழிக்கேற்ற ஓசைப்படி மாற்றி அமைக் கப்படுதல் வேண்டும்; இல்லையேல் அவைகளை இன்னொரு மொழியிற் சேர்க்காது தவிர்த்தல் வேண்டும். இவ் விதி கருத்திற் கொள்ளப்படாது, வட சொற்கள் வடமொழி உச்சரிப்பு முறையோடு தமிழில் வந்து வழங்கத் தலைப்பட்டமையாற் போலும், தொல்காப்பியனார் வடசொற் கள் தமிழில் வந்து வழங்குங்கால் வடவெழுத்தை நீக்கி வழங்கப்படுதல் வேண்டும், (வடசொற் கிளவி வடவெழுத்தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே) என ஆணை இடுவாராயினார். தமிழ், தமது சொந்த மொழியன் றெனவும், சமக்கிருதம் தமது சொந்த மொழி யெனவும் கருதினமையால், பார்ப்பனர், தமிழைப் பிறமொழிக் கலப்பின்றித் தூய்மையாக வழங்குதற்கு அக்கறை கொள்ள வில்லை! தாம் அபிமானித்த வடமொழிச் சொற்களைப் பெரிதும் தமிழிற் கலந்து வழங்குவா ராயினர். இது எவ்வளவு தூரம் சென்றிருந்த தென்பதைப் பெருந்தேவனார் பாரத வெண்பாவின் இடையிடையே காணப்படும் மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்ட வசன பாகங்களை நோக்கி அறிக. தமிழ்ப் புலவர்கள் இதற்குப் பெரிதும் ஆற்றாராய் வருத்தமுற்றுக், காலிற்றைத்த கொடு முட்களைக் களைவது போலத் தமிழின் இனிய ஓசைக்கு ஏலாத வடமொழிச் சொற்களை நீக்கியும், அங்ஙனம் நீக்கு வதற்கு இயலாது மக்கள் ஆட்சியில் வந்துள்ள சொற்களைத் தமிழ் இயைபுக் கேற்ப மாற்றியும் வந்தனர். பிராமணர் தென்னாட்டுக்கு வந்து செல்வாக்குப் பெற்ற காலம் முதல் தமிழ்நாட்டில் வடமொழிக் கட்சி, தென்மொழிக் கட்சி என இரு கட்சிகள் இருந்து வருகின்றன. வடமொழிக் கட்சியினர், தமிழினும் வடமொழி உயர்ந்த தென்றும், அது கடவுள் மொழி என்றும், அதினின் றுமே தமிழுக்கு எழுத்து முதலியன வந்தன வென்றும் வாதிப்பர். தமிழ்க் கட்சியினர், தமிழ் மிக இனிமை யுடைய தென்றும், அதில் பாடப்பட்ட தெய்வீகப் பாடல்கள் புதுமைகள் பல விளைத்தன வென்றும், தமிழ் வடமொழியிலும் பார்க்க உயர்ந்த தென்றும் கூறுவர். முற்காலத்தில் வரலாற்று ஆராய்ச்சி அறியப்படாததா யிருந்தமையின் அவர்கள் வடமொழி தென்மொழிகளின் உயர்வை நாட்டுதற்கு வரலாறு தொடர் பான ஆதாரங்களை அறிந்திருக்கவில்லை. வரலாற்று ஆராய்ச்சி மிகுந் துள்ள இக் காலத்திலோ தமிழ்மொழியின் போக்கைப் பின்பற்றியே இன்றைய சமக்கிருத மொழி நிலவுகின்றதென்றும், அம் மொழிக்குரிய எழுத்து முதலியன தமிழிலிருந்தே கடன் வாங்கப்பட்டன வென்றும், போதாயனர், கார்த்தியாயனர் சாணக்கியர், இராமானுசர், மாதவர், சங்கரர், நீலகண்டர் போன்ற தமிழர்களே அம் மொழியைப் பயின்று அம் மொழியில் அரிய நூல்களைச் செய்து அதனையும் வளப்படுத்தி னார்களென்றும் எளிதில் அறிந்து கொள்ளுதல் சாலும். சமக்கிருதம் கலப்பற்ற மொழியெனச் சிலர் கருதுகின்றனர். தமிழ், கொண்டு முதலிய மொழிகளிலிருந்து மிகப் பல சொற்களைச் சமக்கிருதம் இரவல் பெற்றிருக்கின்றது. இந்து ஐரோப்பிய ஆரிய மொழி களுக்குப் பொதுவல்லாத மற்றைய சொற்கள் எல்லாம் இந்தியப் பூர்வ மொழிகளின் சொற்களேயாகும் என, மொழி ஆராய்ச்சிவல்லார் நுவல்கின்றனர். நகைச் சுவைக்கு எடுத்துக்காட்டு. “ஆரியர் பேசுந் தமிழ்” எனப் பேராசிரியர் ஓரிடத்தில் எடுத்துக்காட்டியுள்ளார். அதனால் ஆரியர் தமிழ்ச் சொற்களைத் திருத்தமுற உச்சரிக்க அறியாது பிழைபட உச்சரித்தார்கள் என்பது நன்கு விளங்கும். அவர்கள் தமிழைத் திராவிடம் என உச்சரித்தார்கள் என்றால் மற்றைய தமிழ்ச் சொற்களை எவ்வாறு உச்சரித்திருப்பார்கள் என்பதை நாமே ஊகித்தறியலாகும். இவ்வாறு தமிழ்ச் சொற்கள் மிக மாறுபட்டு வடமொழியிற் சென்றேறி யுள்ளன வாதலினாலேயே, நாம் அவைகளை எளிதிற் கண்டுபிடிக்க முடிய வில்லை. சென்னையிலே அம்பட்டன் பாலம் என ஒரு பாலமுள்ளது. இதன் முன்னைய பெயர் “ஹமில்டன் பிரிட்ஜ்” இது சொல்லுவோரது சொற்சோர்வினால் அம்பட்டன் பாலம் எனப்பட்டது. பின்பு அம்பட் டன் பாலம் (“Barber’s bridge”) “பார்பெர்ஸ் பிரிட்ஜ்” என ஆங்கிலப் படுத்தப்பட்டு இன்று பார்போஸ் பிரிட்ஜ் என்றே வழங்குகின்றது. ஹமில்டன், அம்பட்டன் ஆனது போன்ற பல தமிழ்ச் சொற்களும் வடமொழியில் இருத்தல் கூடும். பெரிய வெள்ளப் பெருக்குக்குப் பிற்பட்ட மக்கள் அல்லது 1ஹெமத்திய இந்திய மத்தியதரை மக்கட் குலம் (எச். ஹெரஸ்) யான் பல்லாண்டுகளாகப் பிற்கால இந்திய மக்களின் நாகரிகத் தைக் குறித்து, இந்தியாவிலும், ஸ்பெயின் நாட்டிலும் இருந்து ஆராய லானேன். அவ் வாராய்ச்சி, பெரிய வெள்ளப் பெருக்குக்குப் பிற்பட்ட மக்களின் வரலாற்றையும், அம் மக்கள் பல கிளைகளாகப் பிரிந்து சென்று பற்பல குலத்தினராகப் பெருகிய வகையையும் விளக்குவதாகின் றது. யான் ஆராய்ந்து கண்ட அளவில், பழைய திராவிட மக்கள் தமது நாட்டைவிட்டு உவண்ணா, ஓடக்கோன் என்பவர்களின் தலைமையின் கீழ் சுமேரியாவை அடைந்து அங்குக் குடியேறிப் பெருகினார்கள். இக் கருத்தைப் பழைய பாபிலோனிய வரலாற்றாசிரியராகிய பெரசொஸ் என்பவரும் குறிப்பிட்டுள்ளார். சுமேரியாவிற் குடியேறிய மக்கள் மொகஞ்சதரோவிலுள்ளன போன்ற வீடுகளைக் கட்டினார்கள். விவிலிய மறையின் ஆதி ஆகமம் இந் நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுள்ளது. சுமேரிய வகுப்பைச் சேர்ந்த மக்களே சிரியாவிலும் குடியேறினார்கள். கிதைதி ஆட்சிக்குத் தளம் இட்டவர்கள் இம் மக்களே யாவர். அங்கு நின்றும் பெயர்ந்த சில மக்கள் மத்தியதரைக் கடல் ஓரங்களில் குடியேறி னார்கள். அவர்கள் பினிசியர் எனப்பட்டனர். இது பனையர் (Panis - Palm trees) என்னும் பெயரின் திரிபு. முற்காலத்தில் பெரிய வாணிகத் துணிவு உடையவர்களாயிருந்தவர்கள் இவர்களே. இவ் வினத்தினர் சிலர் கிரேக்க நாட்டிலும், இத்தாலியிலும் குடியேறி முறையே மீனவர், எதிருஸ்கர் என்னும் பெயர்களைப் பெற்றனர். திராவிடர்களிற் சிலர் யேமென் (Yemen) என்னும் இடத்திற் குடியேறி யிருந்தார்கள். அவர்கள் இங்கு யேமெனியிலிருந்து செங்கடல் வழியாகச் சென்று எகிப்தில் குடியேறி வியக்கத்தக்க எகிப்திய நாகரீகத்தைக் கட்டி எழுப்பினார்கள். அவர்கள் ஆப்பிரிக்காவின் வடகரை வழியாகச் சென்று குடியேறி நுமிதியர் பேர்பேரியர் என்னும் பெயர்களைப் பெறுவாராயினர். பின்பு அவர்கள் ஸ்பெயின் நாட்டிற் குடியேறியபோது உரோமர் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு ஐபீரியர் எனப் பெய ரிட்டனர். பின்பு ஐபீரிய மக்களுட் சிலர், வடக்கு நோக்கிச் சென்று மத்திய ஐரோப்பாவிலும், பிரிட்டிஷ் தீவுகளிலும் குடியேறி துரூயிதர் (Druids) எனப் பெயர் பெறுவாராயினர். பிற் காலங்களில் வந்த கெல்திய மக்களாக இவர்களைக் கொண்டு, பிற்காலத்தவர்கள் மயங்குவாராயினர். பழைய நாகரிகங்களைக் கோலிய இச் சாதியினர் மத்தியதரைச் சாதியினர் எனப்படுவர். இச் சாதியாரின் நாகரிகங்கள் எல்லாம் ஒரே வேரினின்றும் முளைத்தன. அவை எல்லா முக்கியப் பகுதிகளிலும் ஒத்திருக்கின்றமையால், அவைகளைப் பிற்கால இந்திய மத்தியதரை நாகரிகம் எனக் கூறலாம். நோவாவின் குமாரனாகிய யபேத்திலிருந்து தோன்றியவர்கள் என்று சொல்லப்படும் ஆரிய மக்களையும் திராவிடரையும் தொடுக்கும் தொடர்புகளும் காணப்படுகின்றன. சமக்கிருத, திராவிட மொழிகளுக் கிடையில் பல ஒருமைப்பாடுகள் காணப்படுகின்றன. திராவிடச் சொற்களை ஒத்த உற்பத்தியை உடைய மிகப் பல சமக்கிருதச் சொற்கள் காணப்படுகின்றன. இவ் வகை ஒருமைப்பாடு திராவிட மொழிகளுக்கும் கிரேக்க, இலத்தின் மொழிகளுக்குமிடையில் காணப்படுகின்றது. இதற்குக் காரணம் சமக்கிருதமும் திராவிடமும் ஒரே மொழியினின்றும் பிரிந்தமையேயாகும். திராவிடம் தனது பழைய ஒட்டுச் சொல் முறை யான இயல்பைக் காப்பாற்றி வந்திருக்கிறது. சமக்கிருதம் இன்னொரு வகையில் வளர்ச்சியடைந்து இக் காலத் தோற்றத்தை அடைந்துள்ளது. 1ஸ்தென்கோநோ (Mr. Sten konow) எற்றூஸ் மொழிக்கும் தமிழுக்கும் பல ஒருமைப்பாடுகள் இருப்பதைக் காட்டியுள்ளார். மனிதன் என்னும் மக்கள் வரலாற்று மாத வெளியீட்டில் (1906) பிளிண்டர் பெற்றி (Flinders Petrie) என்பார் எகிப்தியரின் பழைய நகர மாகிய மெம்பிஸ் அழிபாடுகளில் இந்திய ஆடவர் மகளிரைக் காட்டும் ஓவியங்கள் இருப்பதைப்பற்றி எடுத்துக் கூறியுள்ளார். மொகஞ்சதரோ நாகரிகமும் கீழ்நாட்டு ஆராய்ச்சியாளரும் மேற்றிசை அறிஞர்களே மொகஞ்சதரோ நாகரிகத்தைப்பற்றி நன்கு ஆராய்ந்து கண்டவர்களாவர். ஆரிய வேதங்களைப்பற்றி ஆராய்ந்து உண்மைகளை வெளியிட்டவர்களும் அவர்களே. ஆராய்ச்சித் துறையில் கீழ்நாட்டவர்கள் மேல்நாட்டவரின் காற்சுவடுகளையே பின்பற்றி வருகின்றனர். மேல்நாட்டவர்கள் உண்மை காண்டல் ஒன்றனையே குறிக்கொண்டு ஆராய்ச்சி செய்வர். அவர்களுக்கு ஆரியரை உயர்த்த வேண்டும் என்றோ, திராவிடரை இறக்க வேண்டும் என்றோ குறிக்கோள் சிறிதும் இல்லை. மேல்நாட்டு ஆசிரியர்கள் எல்லோரும் மொகஞ்சதரோ நாகரிகம் ஆரியர் வருகைக்கு முற்பட்டதென்றும், ஆரியர் வருகைக்கு முன் அங்கு வாழ்ந்தோர் திராவிட மக்கள் என்றும் கூறினர். கீழ்நாட்டு ஆராய்ச்சியாளரின் மனப்பான்மைகளுக்கு இது மாறுபட்டது. கீழ்நாட் டார்க்குத் தாம் கொண்டிருக்கும் கருத்துக்கு ஏற்ப ஆராய்ச்சிகள் முடிவு பெறவேண்டும்; இன்றேல் அவர்கள் அவைகளை ஏற்றுக் கொள்ளமாட் டார்கள்; அவர்கள் மேல்நாட்டு ஆராய்ச்சியாளர் கூறியவைகளைப் புரட்ட முயல்வர். மொகஞ்சதரோ நாகரிகம் திராவிட மக்களுடையது என்று கூறப்பட்டதும், ஆரியரே இந்திய நாகரிகத்துக்கு அடிப்படை எனக் கனவு கண்டுகொண்டிருந்த ஒரு சாரார், மொகஞ்சதரோவில் ஆரியரின் நாகரிகத்துக்கு உரிய அடையாளங்கள் சில காணப்படு கின்றன; வேதங்களில் சில சான்றுகள் காணப்படுகின்றன என்று கூறுவாராயினர். இக் கூற்றுகள் ஒருபோதும் மேற்றிசை ஆராய்ச்சியாள ரால் ஒப்புக் கொள்ளப்படவில்லை. மொகஞ்சதரோவில் சிவ வழிபாடு வேதங்களிலும் காணப்படுகின்றது என்றும், ஆதலால் சிவ வழிபாடு திராவிடருக் குரியதன்று என்றும் ஒருவர் கூறினர். இன்னொருவர் அத்துணைப் பழங்காலத்திலேயே மக்கள் யோகத்தைப் பற்றி அறிந் திருக்க மாட்டார்கள் என்றனர். மொகஞ்சதரோ முத்திரையிற் காணப் பட்ட சிவன் வடிவம் யோகத்தில் இருப்பதாக அமைந்திருத்தலாலும், வேதங்கள் யோகத்தைப் பற்றி அறிந்திராமையாலும் அங்குக் காணப் பட்ட சிவன் வழிபாடு திராவிடருடையதே என முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு தமிழரினும் பார்க்க ஆரியரே நாகரிகத்திற் சிறந்தவர்கள், அவர்களே தமிழர்களுக்கு வழிகாட்டிகள் என்ற கருத்துகளை நாட்ட வேண்டும் என்னும் உணர்ச்சி வேகம் ஒரு சாரார் உள்ளத்தில் இருப்பதை நாம் காண்கின்றோம். தமிழர் ஆரியரிலும் சிறந்தவர் எனக் கூறின் உடனே அதனை எதிர்க்க ஒரு கூட்டம் எப்பொழுதும் ஆயத்தமாக இருப்பதை நாம் எல்லோரும் அறிவோம். இவ் வுணர்ச்சியினால் எழும் ஆரவாரங்கள் ஆராய்ச்சி எனப்படா. சாதிப்பற்று என்றே கூறவேண்டும். நாட்டுப்பற்று சாதிப்பற்று என்பன சரித்திர ஆராய்ச்சியாளரை நடுநிலைமையினின்றும் அடி சறுக்கச் செய்து விடுகின்றன என்று மேற்றிசை ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார்கள்.  சிந்துவெளித் தமிழர் முன்னுரை இவ் வுலகில் மூன்று நாகரிக அலைகள் தோன்றிப் பரவின என்றும், அவைகளுள் முற்பட்டது சிந்துவெளி நாகரிகம் என்றும், பேராசிரியர் பிறாங் போட் என்னும் சிறந்த ஆராய்ச்சியாளர் நன்கு ஆராய்ந்து கூறியுள்ளார். சிந்துவெளி நாகரிகம் ஆரியர் இந்திய நாட்டை அடைவதற்குப பல ஆயிரம் ஆண்டுகளின் முன் தோன்றி வளர்ச்சி யடைந்துள்ளது. அங்கு வாழ்ந்த மக்கள் திராவிட இனத்தைச் சேர்ந்த வர்கள் என்பதும், அத் திராவிட மக்களின் நாகரிகத்தை அடிப்படை யாகக் கொண்டதுவே ஆரிய நாகரிகம் என்பதும், மேல்நாட்டறிஞர் ஆராய்ந்து கண்டு வெளியிட்ட உண்மைகளாகும். இவ் வுண்மைகளை ஆரியப் பற்றுடைய இந்திய மக்கள் ஏற்றுக்கொள்ள இணங்காதவர்க ளாய், உண்மைக்கு மாறுபட்ட கருத்துகளை இடையிடையே வெளி யிட்டு வருகின்றனர். அன்னோர் ஆராய்ச்சிகள் பொருளில் கூற்றுகளே யாமெனக் காட்டுதற்கும், சிந்துவெளி மக்கள் தமிழரே என்பதை நாட்டுதற்கும், சிந்துவெளி மக்களின் நேர் தொடர்புள்ளதே திராவிட நாகரிகம் என்பதை விளக்குதற்கும், இச் சிறிய நூல் வெளிவருகின்ற தென்க. வடநாட்டவர்களுக்கும் தென்னாட்டவர்களுக்கும் இன்று ஆரிய திராவிடப் போராட்டம் நடக்கவில்லை; இந்திய சனத்தொகை யில் நூற்றுக்கு நான்கு வீதமுடைய தென்னாட்டின் ஒரு கூட்டத்தாருக் கும் ஏனைய மக்களுக்கு மிடையேதான் இப் போராட்டம் காணப்படு கின்றது. இதற்குக் காரணம் அவர்கள் தாம் ஆரியரென்று கூறிக்கொள்வ தோடு, தாம் மற்றைய மக்களினும் பார்க்கச் சிறந்தவர்களாவதற்குப் பிறப்புரிமை பெற்றவர்கள் எனச் சாதிக்கின்றமையாகும். வரலாற்று முகத்தான் அவர்கள் தன்மதிப்புள்ள திராவிட மக்களால் எவ்வகை மதிப்பும் பெறுதற்குரியவர்களாகார். சிந்துவெளி மக்கள் எங்கிருந்து அவ் விடத்தை (சிந்துவெளியை) அடைந்தார்கள் என்னும் ஆராய்ச்சி ஆவல் விளைவிப்பதாயிருக்கின்றது. மத்தியதரை மக்களும் திராவிட மக்களும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது சிந்துவெளிப் புதைபொருள்கள் கண்டுபிடிக்கப்படுவதன் முன் ஹெரன், ஹக்ஸ்லி போன்ற ஆராய்ச்சியாளர் ஆராய்ந்து கூறியுள்ள தாகும். மத்திய தரை நாடுகளிலிருந்தே மக்கள் இந்திய நாட்டில் வந்து குடியேறினார்கள் என்றும் அவர்களின் ஒரு பிரிவினரே திராவிடர் என்றும், திராவிடரும் சுமேரியரும் மிக நெருங்கிய உறவுடையவர்க ளென்றும் ஆராய்ச்சியாளர் சில காலம் கருதுவாராயினர். இன்று இந்திய மக்களே மத்தியதரை நாடுகளிற் சென்று குடியேறினார்கள் என ஆராய்ச்சியாளர் சாதிக்கின்றனர். திராவிடரின் நாகரிகம் வடக்கினின் றும் தெற்கே பரவியதன்று. தெற்கினின்றே வடக்கு நோக்கிப் பரவியதென மக்லீன், பர்கூசன், ரெகோசின் முதலிய பல ஆராய்ச்சியாளர் நவின்றுள் ளார்கள். சிந்துவெளியிற் கிடைத்த முத்திரைகளிற் காணப்பட்ட எழுத்து களை ஒத்தவை தென்னிந்தியா, இலங்கை முதலிய இடங்களிற் காணப் பட்டன. இவைகளைக் கொண்டும் சிந்து வெளி நாகரிகம் தெற்கினின்று வடக்கே சென்றதென நாம் நன்கு துணிதல் சாலும். ஆகவே ஆதி நாகரிகம் தெற்கினின்றும் வடக்கு நோக்கிச் சென்று சிந்துவெளியை அடைந்து, அங்குநின்றும் பாரசீகத்துக் கூடாக மேற்கு ஆசியாவை அடைந்து, எகிப்தைச் சேர்ந்தது எனக் கூறலாம். இந் நாடுகளின் நாகரிகங்கள் எல்லாம் ஒரே வகையின. இந் நாடுகளின் நாகரிகங்களைப்பற்றிய வரலாற்றை இனி வெளிவரும் நமது நாகரிகம் என்னும் நமது நூலிற் காண்க. சென்னை 1-5-47 ந.சி.கந்தையா சிந்துவெளித் தமிழர் தோற்றுவாய் மக்கள் இவ்வுலகில் பத்து அல்லது இருபது இலட்சம் ஆண்டு களுக்கு முன் தோன்றி வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களின் மிகப் பழைய வரலாறுகள் அவர்களின் மண்டை ஓடுகள், என்புகள், அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் முதலியவைகளைக் கொண்டு அறியப்படு கின்றன; அவை ஏட்டில் எழுதி வைக்கப்படாதவை. மக்கள் உயர்நிலை எய்தி நாகரிகம் பெற்ற காலம் எது என உறுதியாகக் கூறமுடியாது. இற்றைக்கு எண்ணாயிரம் ஆண்டுகளின் முன், மக்கள் நாடு நகரங்களை யும், மாட மாளிகைகளையும் அமைத்துச் செவ்விய ஆட்சி முறையையும் வகுத்து வாழ்ந்தார்கள் என்று அறிதற்குரிய சான்றுகள் கிடைத்துள்ளன. இன்றைய மக்களின் நாகரிகம் என்பது பழைய மக்களின் நாகரிக வளர்ச்சியே. சில இயற்கை செயற்கைக் காரணங்களால் இன்றைய நாகரிகத்துக்கும் பழைய நாகரிகத்துக்கும் சிற்சில வேறுபாடுகள் காணப் படுகின்றன. பழைய நாகரிகத்துக்குரிய சான்றுகள் எகிப்திலும், ஐபிராத்து, யூபிரதீசு, தைகிரசு ஆறுகளை அடுத்த நாடுகளிலும் காணப்படுகின்றன. ஆகவே எகிப்து அல்லது தைகிரஸ் ஆற்றோரங்களே மக்களின் நாகரித் துக்குப் பிறப்பிட மென்று நீண்ட நாள் கருதப்படலாயிற்று. மக்கள் இன ஆராய்ச்சியாளர் பல அடிப்படையான காரணங்களைக் கொண்டு இந்தியா தொடக்கம் மேற்கு ஆசியா எகிப்து வரையில் ஒரு இன மக்களே வாழ்ந்தார்கள் எனக் கருதினார்கள். எகிப்தியர், சுமேரியர், திராவிடர் என்போர் ஒரே முன்னோரினின்றும் தோன்றிப் பிரிந்தவர்கள் என்னும் கருத்து மேற்றிசை அறிஞர் பலரால் வெளியிடப்பட்டுள்ளது. டாக்டர் ஹால் என்பார் அரப்பா, மொகஞ்சதரோப் புதைபொருள் ஆராய்ச்சிகள் வெளிவருவதன் முன் எழுதியிருப்பது வருமாறு. 1“சுமேரிய மக்களின் நாகரிகம் எல்லாவகையாலும் நிறைவடைந் தது போலத் திடீரென நமக்குத் தோன்றுகின்றது; ஆனால் அது வெளி நாடுகளிலிருந்து மெசபெதோமியாவிற்குக் கொண்டு வரப்பட்டது. இது சில அயற் சான்றுகளால் நமக்கு நன்கு வெளிச்சமாகின்றது. அவர்களின் நாகரிகம் வளர்ச்சி பெற்றது பாபிலோன் நாட்டிலன்று; அவ் வளர்ச்சி பாரசீக மலைகளுக்குக் கிழக்கேயுள்ள வேறொரு நாட்டில் உண்டா யிருக்கலாம். சுமேரியரின் உடற்கூறு அவர்களைச் சூழ்ந்து வாழ்ந்த மற்றைய சாதியாரின் உடற்கூற்றுக்கு வேறுபட்டிருந்தது. இது அவர் களின் உருவச் சிலைகளைக் கொண்டு அறிய வருகின்றது. அவர்களின் மொழி, செமித்தியர், ஆரியர் என்போரின் மொழிகளுக்கு வேறுபட்டது. அவர்களின் உடற்றோற்றம் திராவிட மொழிகளைப் பேசிக்கொண்டு தக்கணத்தில் வாழும் இந்தியன் ஒருவனின் தோற்றத்தை ஒத்தது; மொழி அமைப்பு இந்திய மொழிகளைப் போன்றது. இன்றைய இந்தியன் ஒருவனுடைய முக அமைப்புப் பல்லாயிரம் ஆண்டுகளின் முன் வாழ்ந்த அவன் முன்னோருடைய முக அமைப்பை ஒத்துள்ளது. இதிற் சிறிதும் ஐயப்பாடு இல்லை. தரை வழியாக அல்லது கடல் வழியாக இந்தியாவிலிருந்து பாரசீகத்தின் வழியாக யூபிரதீசு, தைகிரசு ஆறுகள் பாய்கின்ற நாட்டிற் சென்று குடியேறிய மக்கள் சுமேரியர் என்று துணிந்து கூறலாம். அவர்களின் நாகரிகம் வளர்ச்சி எய்திய இடம் இந்தியாவே. அவ்விடம் சிந்து ஆற்றை அடுத்த இடங்கள் ஆகலாம்; அவர்கள் எழுத்துகள் இங்குப் படவடிவில் தொடங்கி வளர்ச்சி எய்திய பின்பு, சிறிய சுருக்கெழுத்துகளாக மாறியிருக்க வேண் டும். இவ் வெழுத்துகள் பாபிலோன் நாட்டுக்குக் கொண்டு போகப்பட் டன; அங்கு அவை களிமண் தட்டுகளில் சதுர வடிவுள்ள எழுதுகோ லால் எழுதப்பட்டமையால் கூரிய முனையின் வடிவைப் பெற்றிருத்தல் வேண்டும். ஆதியில் மனித நாகரிகம் தோன்றி வளர்ச்சியடைந்த நாடு களில் இந்தியா ஒன்று என்பதில் ஐயம் இல்லை. சுமேரியர் இந்திய மக்களை ஒத்திருந்தார்கள் என்பதை நாம் கருத்திற் கொள்ளும்போது, கிழக்கிலிருந்து மேற்கு நாடுகளுக்கு நாகரிகத்தைக் கொண்டு சென்ற செமித்தியரும் ஆரியரும் அல்லாத சாதியார், இந்தியர் என்று கூறுதல் இயல்பேயாகும்.’’ அரப்பா மொகஞ்சதரோப் புதைபொருள் ஆராய்ச்சி சம்பந்த மான கருத்துகளை நன்கு ஆய்வு செய்த ஜி.ஆர். ஹண்டர், சர். ஜான் மார்சல், ஆர்.தி. பானர்ஜி, ஹெரஸ் பாதிரியார் போன்ற மேல்நாட்டுக் கீழ்நாட்டு ஆராய்ச்சியாளரின் முடிவுகள் டாக்டர். ஹால் கூறியவை களை வலியுறுத்துகின்றன. இவை போன்ற ஆராய்ச்சிகளால் மேற்கு ஆசியா, எகிப்து பாரசீகம் இந்தியா இந்துமாக்கடல் பசிபிக் கடல்களில் உள்ள தீவுக்கூட் டங்கள் அடங்கிய ஒரு பெரிய வட்டத்தில், ஒரே மொழியும் ஒரேவகை நாகரிகமும் நிலவின என்பன போன்ற உண்மைகள் வெளியாகின்றன.1 இந் நிலைமை யுண்டாயிருந்த காலத்தில் ஆரிய மக்கள் இந்திய நாட்டை அடையவில்லை. இந்திய நாட்டில், ஆரியர் வருகைக்கு முன் பழைய நாகரிகம் ஒன்று இருந்ததென்பது வேத பாடல்களாலும் பிற அயற் சான்றுகளா லும் மொழி ஆராய்ச்சியினாலும் அறியப்பட்டிருந்ததே யன்றி, அதனைக் கண்கூடாக விளக்கும் பழைய சான்றுகள் எவையும் காணப்படவில்லை. மனிதன் தோன்றி நிலத்தில் அடி எடுத்து வைக்கத் தொடங்கிய காலம் முதல், மக்கள் இந்திய நாட்டில் வாழ்ந்து வருகின்றார்கள் என்றும், அவர்கள் அங்குப் படிப்படியே நாகரிகம் அடைந்து வந்ததற்குரிய சான்றுகள், அவர்கள் செய்து பயன்படுத்திய ஆயுதங்களாலும் பிறவற்றா லும் அறியப்படுகின்றன என்றும் ஆராய்ச்சியாளர் கூறுவாராயினர். இந்திய நாட்டில் பல மொழிகள் வழங்குகின்றன. அவை திராவி டம், முண்டா, ஆரியம் எனப் பிரிக்கப்படுகின்றன; வடநாட்டில் வழங்கும் மொழிகள் ஆரிய இனத்தைச் சேர்ந்தன வெனவும், தென்னாட்டில் வழங் கும் மொழிகள் திராவிட மொழிகள் எனவும் படுகின்றன. திராவிட மொழி களில் பல ஆரியச் சொற்கள் காணப்படுகின்றன. திராவிட மக்களின் சமய நூல்கள் எனப்பட்டன சில வடமொழியிற் காணப்படுகின்றன. சமய மொழி சமக்கிருத மாயுமிருக்கின்றது. இவை போன்ற சிலவற்றை நோக்கித் திராவிட மொழிகள் ஆரிய மொழியிலிருந்து தோன்றின; ஆரியர் வருமுன் இந்தியாவில் காட்டு மக்கள் போன்ற நாகரிகமற்றோர் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களை ஆரியர் வென்று தெற்கே துரத்தினார்கள். அவர்களை ஆரியப் பிராமணர் சிறிதுசிறிதாக நாகரிகப் படுத்தினர்; என்பன போன்ற கருத்துகளே இந்திய மக்களின் பழைய புதிய வரலாற்றாசிரியர்களிடம் நீண்ட காலம் இருந்து வந்தது. இக் கருத் துகள் தவறுடையன என்பதை உணர்ந்த பற்பல திராவிட அறிஞர் அவை களை அடிக்கடி கண்டித்து வந்தனர். ஆயினும் அவர்கள் பேச்சு வலியுற வில்லை. வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பது போல் ஆயிற்று. மேல் நாட்டறிஞர் நீண்ட காலம் ஆரியருடைய நாகரிகம் திராவிடருடையதே, வேதபாடல்கள் சிலவற்றைச் செய்தும், அப் பாடல்களை வேதங்களாக வகுத்தும், நீதிநூல்களைச் செய்தும், அவர்கள் மொழிக்கு இலக்கண மமைத்தும் ஆரியரையும் ஆரிய மொழியையும் செம்மையுறச் செய்த வர்கள் திராவிடர்களே என எழுதி வருவாராயினர். அவை போன்றவை, ஆங்கிலத்தி லெழுதப்படுவதாலும், மேல் நாடுகளில் வெளிவரும் பெரு நூல்களில் அடங்கியுள்ளமையாலும் அவைகளைத் தமிழ் மக்கள் படித்து உண்மை காண்டல் அரிதாயிற்று. ஆரியர் மேலானவர்கள், ஆரியம் மேலானது என வரலாறு எழுதப்படுவதால் ஒரு கூட்டத்தினருக்கு ஒரு வாய்ப்பு உண்டாயிருந்தது. அவர்கள் ஆரிய மொழி கடவுள் மொழி; அம் மொழியைப் பயிலும் தாமே திராவிடருக்குக் குருமாராக இருக்கத் தகுந்தவர் எனத் தம் கூற்றுகளை நம்பும்படி மக்களைச் செய்து சமூகங்களில் முதல் இடத்தை அடைந்தனர்.1 அதனால் அவர்கள் மெய்வருத்தமின்றி நல்வாழ்வு நடத்தும் முறையுண்டாயிருந்தது. இவர்களே ஆங்கிலங் கற்று அரசியல் துறைகளிலும், பத்திரிகைத் துறைகளிலும் நிரம்பியுள்ளார்கள். இக் கூட்டத்தினர் சிலரே பெரும்பாலும் இந்திய நாட்டுச் சரித்திரங்களையும் எழுதுவாராயினர். அவர்கள் எழுதியவற்றுள் தமிழருக்குப் பெருமை அளிக்கும் பகுதிகள் விடப்பட்டுள்ளன. ஆரியரிலும் பார்க்கத் தமிழரே சிறந்தவர்; தமிழ், ஆரியத்தினும் முந்தியது; சிறந்தது என்னும் கருத்துகள் வலிபெற்றால், பொய்க் காரணங்களால் உயர்நிலை அடைந்து நல்வாழ்வு பெற்றுவரும் கூட்டத்தினரின் வாழ்வுக்கு இழுக்காகு மன்றோ! இக் கருத்துப் பற்றியே அக் கூட்டத்தினர் எழுதும் ஆராய்ச்சி நூல்களில், தமிழரின் உயர்வுகள் தோன்றவேண்டிய பகுதிகள் வெளிவருவதில்லை யாகும். தென்னிந்திய மக்களின் உண்மை வரலாறுகள் வெளிவரவில்லை எனப் பலர் கூறுவதற்குக் காரணம் இதுவே. 1922-க்கும் 1927-க்கு மிடையில், சிந்து மாகாணத்திலே சிந்து நதிக்கு அண்மையில் காணப்பட்ட மொகஞ்சதரோ என்னும் இடிபாட்டுத் திடரும், சிந்து நதியின் கிளைகளில் ஒன்றாகிய இரவி ஆற்றின் பக்கத்தே யுள்ள அரப்பா என்னும் இடிபாட்டுத் திடரும் பழம்பொருள் ஆராய்ச்சி யாளரால் அகழப்பட்டன. அவ் விரண்டு மேடுகளும் ஆரியர் வருகைக்கு நெடுங் காலத்தின் முன், இந்திய நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களின் பழைய நகரங்களாகக் காணப்பட்டன. அவ் வாராய்ச்சியை நடத்திய சர். ஜான் மார்சல் என்பார் அரப்பா மொகஞ்சதரோ நகரங்களிற் காணப்பட்ட பழம்பொருள்கள், கட்டடங்கள் முதலியவைகளைக் கொண்டு அந் நகரங்களையும், அந் நகரங்களில் வாழ்ந்த மக்களையும் பற்றி மூன்று பகுதிகள் அடங்கிய பெரிய நூல் ஒன்றை 1931இல் வெளி யிட்டார். அதில் அவர் அந் நகரங்களில் வாழ்ந்த மக்களுக்கும் சுமேரிய பாபிலோனிய மக்களுக்குமிடையில் வாணிகப் போக்குவரத்து இருந்த தென்றும், அந் நாடுகளில் வழங்கிய எழுத்துகளுக்கும் சிந்து வெளியில் வழங்கிய எழுத்துகளுக்கும் ஒற்றுமை உண்டு என்றும், அந் நகரங்களில் வாழ்ந்தோர் திராவிட மக்களாயிருத்தல் கூடுமென்றும், அவர்கள் மத்திய தரைச் சாதியினரே என்றும், அந் நகரங்களின் நாகரிகம் ஆரியருடையது அன்று என்றும் கூறியுள்ளார். இவ் வாராய்ச்சி உலகமக்களிடையே பெரிய விழிப்பை உண்டாக் கிற்று. உலக மக்களுக்கு நாகரிகத்தை உதவியவர்கள், இந்திய மக்களாதல் கூடும் எனப் பல மேல் நாட்டாசிரியர்கள் கருதினார்கள். ஜி.ஆர். ஹண்டர் என்னும் பேராசிரியர் அப் பழைய நகரங்களின் நாகரிகம், திராவிட மக்களுடையதாகும் என்பதற்குப் பல காரணங்கள் காட்டியுள் ளார். பேராசிரியர் லாங்டன், பிராமி எழுத்துகள் மொகஞ்சதரோ எழுத்துகளின் திரிபுகள் என்று கண்டுபிடித்தார். ஹெரஸ் பாதிரியார், மொகஞ்சதரோப் முத்திரைகளில் காணப்பட்ட எழுத்துகள் தமிழ் எழுத்துகளின் ஆதி எழுத்துகள் என்பதை, அவைகளை ஒலி முறையாக வாசித்துக் காட்டினார். அத்தோடு சிந்துவெளி மக்கள் திராவிடரே என்று கூறுவதற்கு ஏற்ற பல காரணங்களையும் வெளியிட்டார். இன்று அமெரிக்கா, இங்கிலாந்து, செர்மனி, பிரான்ஸ் முதலிய மேல் நாட்டினர் எல்லோரும் சிந்துவெளி நாகரிகம் திராவிடருடையது என்று நன்கு அறிவர். அவ்வாறே அவர்கள் தமது நூல்களில் எழுதி வருகின்றனர். இந்திய நாட்டினருக்குப் பெரும்பாலும் சிந்துவெளி நாகரித்தைப் பற்றித் தெரியாது. பல்கலைக்கழகங்கள் மூலம்தான் இவ் வகை ஆராய்ச்சிகள் வெளிவர வேண்டுமென்று எதிர்பார்த்தலாகாது. அவர்கள் இவ் வாராய்ச்சியில் இறங்காமைக்குச் சில அடிப்படையான காரணங்களுண்டு. ஆரியர்தான் உலகத்தில் மேலானவர்கள். அவர்களே உலகுக்கு நாகரிகத்தைக் கொடுத்தவர்கள் என்று இதுவரையும் நம்பிவந்த ஒரு கூட்டத்தினருக்கு அரப்பா மொகஞ்சதரோப் புதை பொருளாராய்ச்சி தலையடியாயிருக்கின்றது. அவர்களுக்கு என்ன செய்வது என்று தோன்றவில்லை. ஆயினும் அவருட் சிலர் மொகஞ்சதரோவில் ஆரிய ருடைய நாகரிகத்துக்கு அடையாளங்கள் காணப்படுகின்றன. வேதங் களில் அப்படிக் கூறப்பட்டுள்ளது, இப்படிக் கூறப்பட்டுள்ளது எனச் சில பல கூறுவாராயினர். அவர்களின் நோக்கத்தை மேற்றிசை அறிஞர் நன்கு அறிவர். ஹெரஸ் பாதிரியார், ஜி.ஆர். ஹண்டர் போன்ற பேராசிரியர் கள், அவர்கள் கூற்றுகளின் ஒவ்வாமையை நன்கு கண்டித்துள்ளார்கள். உலகத்துக்கே விழிப்பை யுண்டாக்கிய மொகஞ்சதரோ நாகரிகத் தைப் பற்றிப் பல்கலைக்கழகங்கள் ஆராய்ந்து பரீட்சைகளுக்குரிய நூல்கள் எழுதலாம். அவைகளை வரலாற்றுப் பாடமாக வைக்கலாம். வரலாற்றை எதற்காகப் பயில்வது? மாணவர் தமது பழமையின் செம் மையை உணர்ந்து, தம்மையும், அவ் வழியில் ஆக்கிக்கொள்ள முயலும் பொருட்டன்றோ? மொகஞ்சதரோ நாகரிகம் ஆரியருடையது என்று வந்திருக்குமானால், அதைப்பற்றிப் பல நூல்கள் இதுவரையில் தமிழில் வெளிவந்திருக்கும். அவை பரீட்சைகளுக்குப் பாடமாகவும் வந்திருக்கும். தமிழன் பழங்காலத்தவன். அவன், நீண்ட காலம் எருவிடாமல் பயிரிட்ட நிலம்போல ஓய்ந்துவிட்டான். அவனிடத்தில் உணர்ச்சி குன்றிவிட்டது; தனது மொழியை வளர்க்க வேண்டும்; தனது சாதியை வளர்க்க வேண் டும். சுயமதிப்புப் பெறவேண்டும் என்னும் உணர்ச்சி குன்றிவிட்டது. இன்று அரசியலிலும் அவன் கடையிடத்தைத் தாங்கி நிற்கின்றான். தமிழ் மக்கள் தம் குறைகளை உணர்ந்து முன்னேற வேண்டுமென்பது இந் நூலின் நோக்கம். சிந்துவெளி அழிபாடுகள் சிந்து என்பது இந்தியாவின் வடக்கே உள்ள ஒரு ஆறு. சிந்து என்பதற்குச் சிந்துதல் என்று பொருள். இவ் வாற்றின் பெயரையே, நாவலந் தீவு என்று பெயர்பெற்றிருந்த எமது நாட்டுக்கு மேற்குத் தேசத்த வர்கள், பெயராக வழங்கினர். சிந்து என்பது இந்து எனத் திரிந்து வழங்குகின்றது. சிந்து ஆற்றின் சமவெளிகளில் பல இடிபாடுகள் காணப் படுகின்றன. அவைகளில் மொகஞ்சதரோ அரப்பா என்னும் இடங்களி லுள்ள பெரிய மேடுகள் 1922இல் பழம்பொருள் ஆராய்ச்சியாளரால் அகழப்பட்டன. அம் மேடுகள் பழைய இரண்டு நகரங்களின் அழிபாடு களாகக் காணப்பட்டன; அங்குப் பலவகைப் பழம்பொருள்கள் கிடைத்தன. மொகஞ்சதரோ என்னும் மேடு, சிந்து மாகாணத்தில் உள்ளது. இவ் விடிபாடு ஒரு சதுர மைல் அளவினது. சுற்றுப்புறங்கள் புதைந் திருப்பதால் இது இன்னும் பெரிதாக இருந்திருக்கலாம். மொகஞ்சதரோ காலத்திலும் பார்க்கச் சிந்து ஆற்றின் அடிப்பாகம் இன்று இருபது அடி உயர்ந்துள்ளது. மொகஞ்சதரோ என்பதற்குச் சிந்து மொழியில் இறந்த வர்களின் நகரம் என்று பொருள். இம் மேட்டின் நீளம் 1300 அடி வரையில். அகலம் 600 அடி வரையில். சிந்து ஆறு மொகஞ்சதரோவுக்குக் கிழக்கே மூன்றரை மைல் தூரத்தில் ஓடுகின்றது. முற்காலத்தில் அது அதன் பக்கத்தாற் சென்றிருக்கலாம். மொகஞ்சதரோ நகர் முன்பு ஆற்று மட்டத்திற் கட்டப்பட்டது. சிந்து ஆறு, காலந்தோறும் உயர்ந்து வந்த மையால், மக்கள் நகரத்தை உயர்த்திப் புதிய கட்டடங்களை அமைத்து வந்திருக்கிறார்கள். இவ்வாறு ஒன்றின்மேல் ஒன்றாகக் கட்டப்பட்ட ஏழு நகரங்கள் மொகஞ்சதரோவிற் காணப்படுகின்றன. இதுவரையும் அகழ்ந்து கண்டுபிடிக்கப்பட்டவை மேல் ஆறு படைகளே. மேல் மூன்று படைகள் பிற்காலத்தன. கீழ் நான்கு படைகளும் முற்காலத்தன. இவ் அழிபாடு நாற்பது அடிவரையும் அகழப்பட்டது. அதற்குமேல் நீர் ஊற்று வருகின்றது. அதனால் மேலும் கிண்டுவது இயலாதிருக்கின்றது. அரப்பா பஞ்சாப் மாகாணத்திலே சிந்து ஆற்றின் கிளைகளுள் ஒன்றாகிய இரவி ஆற்றில் உள்ளது. இவ் அழிபாடு மொகஞ்சத ரோவைவிடப் பெரியது. இவ் விரண்டு இடங்களுக்கும் இடையிலுள்ள தூரம் நானூற்றைம்பது மைல் வரையில். மொகஞ்தரோவிற் காணப் பட்டன போன்ற பழம்பொருள்கள் இங்கும் காணப்பட்டன. சிந்துவெளி நாகரிகத்தின் பழமை வாபிரி1 என்பார் பின்வருமாறு கூறியுள்ளார். மொகஞ்சதரோ அழிபாடு அகழப்படவில்லை. ஆனால் சுரண்டிப் பார்க்கப்பட்டது. அகழ்ந்து கண்டுபிடிக்கப்பட்ட நாகரிக காலம் கி.மு. 2700க்கு முற்பட்ட தன்று என்று கருதப்படுகின்றது. இந் நாகரிகம் மிக வளர்ச்சி அடைந் துள்ளதாகக் காணப்படுகின்றது. இவ்வாறு நாகரிகம் வளர்ச்சி யடை வதற்கும் பல ஆயிரம் ஆண்டுகள் சென்றிருக்கலாம் என்று கருதக் கூடியதாயிருக்கின்றது. இது அங்குத் தானே தோன்றி வளர்ச்சி யடைந்த நாகரிகம். மெசபெதோமியா, கிரேத்தா (Crete) முதலிய நாடுகளோடு இந்தியா தொடர்பு வைத்திருந்த தென்று துணிவதற்கேற்ற பல சான்றுகள் காணப்படுகின்றன. இந் நாகரிகத்தின் பழமை கி.மு. 4000 வரையிற் செல்கின்றது. இப் பழைய நாகரிகம் வேறு எங்காவது தொடங்கி இங்கு வந்திருக்க முடியாது. இந்திய நாகரிகம் இந்தியாவி லேயே தொடங்கிற்று எனத் துணியலாம். சிந்துவெளி நகரங்களின் காலம் அரப்பா, மொகஞ்சதரோ என்னும் இடங்களில் வெண்கலம், செம்பு என்னும் உலோகங்களாற் செய்யப்பட்ட பல பொருள்கள் காணப்பட்டன. சில கல் ஆயுதங்களும் காணப்பட்டன. இரும்பு ஆயுதங்கள் காணப்படவில்லை. ஆகவே அக் கால மக்கள் இரும்பைப் பற்றி அறிந்திருக்கவில்லை எனத் தெரிகின்றது. கல்லாயுதங்கள் காணப் பட்டமையின் அக் கால மக்கள் கற்கால இறுதியிலும் உலோகக் கால தொடக்கத்திலும் வாழ்ந்தார்கள் எனக் கூறலாம். அரப்பா மொகஞ் சதரோ முதலிய இடங்களிற் காணப்பட்ட பழம்பொருள்கள் மெசபெத் தோமியாவிற் கண்டு எடுக்கப்பட்ட பழம் பொருள்களை ஒத்துள்ளமை யால் சுமேரியா, பாபிலோனியா முதலிய நாடுகளுக்கும், சிந்து நாட்டுக் கும் தொடர்பிருந்து வந்ததெனத் துணியப்படுகின்றது. அரப்பா மொகஞ் சதரோ நகரங்களின் காலம் கி.மு. 3000 வரையில் என ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார்கள். இவ்வாறு துணிவதற்குப் பல சான்றுகள் கிடைத் துள்ளன. கிரேத்தா (Crete), சுமேரியா, பாபிலோன், சிந்து முதலிய நாடு களின் நாகரிகம் ஒருவகையாக இருப்பதோடு மக்களும் ஒரே குலத்தின ராகக் காணப்படுகின்றனர் என்று குலநூலார் கூறுகின்றனர். நகரும் நகரமைப்பும் அரப்பா, மொகஞ்சதரோ நகரங்கள் சூளையிட்ட களிமண் கற்களால் (செங்கற்கள்) கட்டப்பட்டுள்ளன. மொகஞ்சதரோவின் மேல் படையிலுள்ள நாகரிகம் கி.மு. 2550 வரையில் என்றும் அடிப்படையி லுள்ளது கி.மு. 3000 வரையில் என்றும் கருதப்படுகின்றன. அரப்பா, மொகஞ்சதரோப் பட்டினங்களைக் கட்டியவர்கள் ஆரியர் வருகைக்கு ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்கள் எனத் துணியலாம். இதிற் சிறிதும் ஐயம் இல்லை. மொகஞ்சதரோவிற் காணப்பட்ட பழம்பொருள்கள் பாபிலோனிற் காணப்பட்டவைகளை ஒத்தன. சுமேரி யாவிற் கிடைத்த சில பொருள்களும் சிலவும் அவ் வகையினவே. ஆகவே சுமேரியர், பாபிலோனியர் சிந்துவெளி மக்கள் ஆகியோர் ஒரு பொது உற்பத்தியைச் சேர்ந்தவர்கள் எனக் கருதப்படுகின்றனர். அரப்பா, மொகஞ்சதரோ முதலிய இடங்களில் தொடர்பாக எழுதப்பட்ட நீண்ட பட்டையங்கள் காணப்படவில்லை. ஆகவே அக் கால மக்கள் தோல், மரம், ஓலை என்பவைகளை எழுதப் பயன்படுத்தினார்கள் ஆகலாம். மொகஞ்சதரோ மக்கள் எங்கிருந்து வந்தார்கள் என அறியமுடிய வில்லை என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். அவர்கள் தெற்கிலிருந்து வந்தார்கள். அவர்கள் இந்தியாவில் நீண்ட காலம் இருந்தார்கள் என்று கூறலாம். இது அவர்களின் நன்கு அமைக்கப்பட்ட நகரம், மர வழிபாடு, இலிங்க வழிபாடு முதலிய சின்னங்களைக் கொண்டு அறிதல் கூடும். இவை போன்ற வழிபாடுகள் மேற்கு ஆசியாவிலும் காணப்பட்டன. நகரங்கள் தீயினால் வெந்தும் அழிந்தும் காணப்படாமையால் இந் நகரங்களில் வாழ்ந்த மக்கள் அடிக்கடி போர்களிற் கலந்து கொள்ளாது சமாதானமாக வாழ்ந்தார்கள் எனத் தெரிகின்றது. மொகஞ்சதரோவில் நிலத்துக்குச் சாந்து இடப்பட்டதும், நிரையாக அறைகள் உடையது மாகிய சந்தையும், அரப்பாவில் மிகப் பெரிய தானியக் களஞ்சியமும் காணப்பட்டன. இந் நகரங்களிலுள்ள கட்டடங்கள் சிதைந்த நிலையிற் காணப்படுகின்றன. இவ் வழிந்த நகரங்களுக்கு அயலே வாழும் மக்கள் கட்டடங்கள் அமைப்பதற்கு இவ் விடிபாடுகளிலிருந்தும் செங்கற்களை எடுத்தமையே இதற்குக் காரணமாகும். இந் நகரங்கள் வெள்ளப் பெருக்கி னால் அழிந்தன என்று கூறலாம். வீதிகள் மொகஞ்சதரோக் கட்டடங்கள் அரப்பாக் கட்டடங்களினும் பார்க்க அழியாமல் இருக்கின்றன. வீதிகள் நேராகச் செல்கின்றன. அவைகளின் குறுக்காக வேறு வீதிகள் நேரே செல்கின்றன. இவைகளை நோக்கும்போது அரசினரின் சட்டதிட்டங்களுக்கு அமைய நகர் அமைக்கப்பட்டிருக்கின்ற தெனத் தெரிகின்றது. கட்டடங்கள் தெருப் பக்கம் வெளியே தள்ளியிராமையால், மொகஞ்சதரோவில் கட்டடங் களைப் பற்றிய சட்டங்கள் இருந்திருக்கலாம் என்று கருத இடமுண்டு. காலம் போகப்போக வீதிகள் அகலம் அடைந்திருக்கின்றன. வீதிகள் எல்லாம் கிழக்கிலிருந்து மேற்கும், வடக்கிலிருந்து தெற்குமாகச் செல்கின் றன. மொகஞ்சதரோ நகரின் வீதிகள் முப்பத்து மூன்று அடி அகல முடையன. இதிலும் பார்க்க அகலமுள்ள சில வீதிகளும் காணப்படு கின்றன. சிறிய வீதிகள் பெரும்பாலும் பதினெட்டு அடி அகலமுடையன. பதின்மூன்று அடி முதல் ஒன்பது அடிவரையில் அகலமுள்ள வீதிகளும் காணப்படுகின்றன. தெரு ஓரங்களில் வீட்டை மறைத்துப் பெரிய சுவர் எழுப்பப்பட்டுள்ளது. பெரிய வீதியின் ஓரத்திலுள்ள சுவர் பதினெட்டு அடி உயரமுள்ளது. குறுக்குத் தெருவிலுள்ளவை இருபத்தைந்து அடி உயர முடையன. நகரத்தின் அடித்தளம் இதுவரையிற் கண்டுபிடிக்கப்பட வில்லை. வீடுகள் சில கட்டடங்களின் தளங்கள் (அத்திபாரம்) சூளையிட்டனவும் சூளையிடாதனவுமான களிமண் கற்களால் இடப்பட்டிருக்கின்றன. குளிக்கும் அறைகளுக்கு மினுக்கம் செய்யப்பட்ட செங்கல் பதிக்கப்பட் டுள்ளன. கட்டடங்களுக்குச் சுண்ணாம்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. வீட்டு மாடிகள் வேலைப்பாடுடைய செங்கற்களாலும் மர வேலைகளா லும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அக்காலச் சிறிய வீட்டின் தரை 30 அடி நீளமும் 27 அடி அகலமும் உடையதாயிருந்தது. ஒரு வீட்டுக்கு நாலு அல்லது ஐந்து அறைகள் இருந்தன. பெரிய வீடுகளின் பருமை இதன் இருமடியாக இருந்தது. மொகஞ்சதரோவில் சில வீடுகள் அடுத்த வீட்டுச் சுவரிலிருந்து ஒரு அடி தள்ளி இருக்கின்றன. சுவர்களின் கனத்தைக் கொண்டு வீதிகளுக்கு இரண்டு அல்லது அதிக மாடிகள் இருந்தன என்று கூறலாம். சுவர்களின் உயரத்தில் சதுரமான துவாரங்கள் காணப்படுகின்றன. அவைகளில் உத்திரங்கள் இடப்பட்டிருக்கலாம். உத்திரங்களுக்கு மேலே நாணற்பாய் பரப்பி அதன்மீது களிமண் பரவி மட்டஞ் செய்யப்பட்டது. இதுவே அவ் வீடுகளின் கூரையாகும். பல வீடுகளின் படிக்கட்டுகள் இன்றும் காணப்படுகின்றன. சில வீடுகளுக்குப் படிக்கட்டுகள் காணப்பட வில்லை. ஆகவே சில வீடுகளுக்கு மரத்தினாற் செய்யப்பட்ட படிக்கட் டுகள் இருந்தன என்று தெரிகின்றது. படிக்கட்டுகள் மிக ஒடுக்கமானவை. பல வீடுகளுக்கு தெருப்புறத்தும் படிக்கட்டுகள் இருக்கின்றன. மாடி களில் வாழ்ந்த வெவ்வேறு குடும்பத்தினர் இப் படிக்கட்டுகளைப் பயன்படுத்தியிருக்கலாம். வீட்டின் கூரைகள் தட்டையாக இருந்தன. நாற்புறத்தும் பதிவான சுவர் இருந்தது. கூரையில் விழும் மழைநீர் செங்கற் குழாய்ப் பீலி அல்லது மரப் பீலி வழியே வீதியில் விழுந்தது. வெய்யிற் காலங்களில் மக்கள் கூரைமீது படுத்து நித்திரை கொண்டார் கள். வீட்டின் கதவுகள் பெரும்பாலும் மூன்றடி நாலு அங்குலம் அகல முடையவை. சில கதவுகள் ஏழு அடி பத்து அங்குலம் அகலமுடையன. வட்டமான திரண்ட தூண்கள் காணப்படவில்லை. சதுரமான தூண் களே காணப்படுகின்றன. வறியவர்களின் வீடுகளின் தரை, களிமண் இட்டு மட்டஞ்செய்து சாணியால் மெழுகப்பட்டிருந்தது. சில வீட்டுச் சுவர்களில் அழகிய அறைகள் காணப்படுகின்றன. அவைகளின் மரச் சட்டங்கள் இறுக்கித் தட்டுகளமைக்கப்பட்டன வாகலாம். சமையல் பெரும்பாலும் முற்றத்தில் செய்யப்பட்டது. வீடுக ளில் சமையலறைகளும் காணப்படுகின்றன. அவைகளில் செங்கற்களால் உயர்ந்த மேடை கட்டப்பட்டிருந்தது. அங்கு விறகு வைக்கப்பட்டது. ஒவ்வொரு வீட்டுக்கும் குளிக்கும் அறை இருந்தது. அது தெருப்புறமாக அமைக்கப்பட்டது. தண்ணீர் வெளியே செல்லும் வாய்ப்புக் கருதி அது இவ்வாறு அமைக்கப்படுவதாயிற்று. வீடுகளுக்கு மலக் கூடங்களும் இருந்தன. அவை தெருச் சுவருக்கும் குளிக்கும் அறைக்கும் இடையில் அமைக்கப்பட்டன. தெருவுக்குப் பக்கத்தே அமைக்கப்பட்ட தண்ணீரோ டும் மண் குழாய்கள் பொருத்தித் தெரியாமல் அழுத்தஞ் செய்யப்பட் டிருந்தன. வீட்டு முற்றங்களில் அம்மிகள் காணப்படுகின்றன. முற்றத்தில் ஆடு மாடுகள் கட்டப்பட்டன. வறிய மக்கள் நகரத்தில் இருக்கவில்லை எனத் தெரிகிறது. அவர்கள் நகர்ப்புறத்தே சிறு குடிசைகள் கட்டி வாழ்ந் தார்கள். ஒவ்வொரு வீதியிலும் செங்கற் பதித்த வாய்க்கால்கள் இருந்தன. சிறிய வீதிகளுக்கும் இவ்வாறு இருந்தன. வீடுகளிலிருந்து செல்லும் வாய்க்கால்கள் வீதியிலுள்ள பெரிய கால்வாய் வரையிற் சென்றன. வீதிகளிற் செல்லும் வாய்க்கால்கள் செங்கற்களால் மூடப்பட்டிருந்தன. வீடுகளினின்று செல்லும் அழுக்குநீர் செங்கற் பதித்த ஒரு குழியில் விழுந்து நிரம்பிய பின்பே, வீதியிலுள்ள வாய்க்காலுக்குச் சென்றது. அவ்வாறு நீர், குழியில் விழுவதால் பாரமான பொருள்கள் அதனுள் தங்கிவிடும். கற்பதித்த குழிகளை அமைக்கமாட்டாத வறியவர்கள் பெரிய சாடிகளைப் பயன்படுத்தினர். கிணற்றைச் சுற்றிச் செங்கற் பதிக் கப்பட்டிருந்தது. கிணறுகளின் குறுக்களவு மூன்று அடிமுதல் ஏழு அடி அளவில் உள்ளது. ஹரப்பாவில் தானியக் களஞ்சியம் என்று கருதப்படும் பெரிய கட்டடம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. பல சுவர்கள் ஒன்றுக்கு ஒன்று நேராகச் சமதூரத்தில் ஓடுகின்றன. அவை களின் இடையே இருபத்து மூன்று அடி வெளி இருக்கின்றது. சுவரின் கனம் ஒன்பதடி. மொகஞ்சதரோவில் 242 அடி நீளமும் 112 அடி அகலமும் ஐந்தடிக் கனமுமுள்ள சுவர்களையும், தெற்கிலும் மேற்கிலும் பெரிய பாதை களையு முடையதாகிய ஒரு கட்டடம் காணப்படுகின்றது. அதில் பல அறைகள் இருக்கின்றன. அங்குள்ள பெரிய நீராடும் கேணிக்கு அண்மையி லிருப்பதால், இது ஒருபோது பொதுமக்கள் தங்கும் மடமா யிருக்கலாம். இதற்கு அண்மையில் இன்னொரு கட்டடம் காணப்படு கின்றது. அது ஓர் அரண்மனையா யிருக்கலாம். அவ் வழகிய கட்டடத் துக்கு இரண்டு உள் முற்றங்கள் இருக்கின்றன. அது 220 அடி நீளமும் 115 அடி அகலமுமுடையது. சுவர்கள் ஐந்து அடிக் கனமுடையன. அக் கட்டடத்தில் மூன்று கிணறுகள் காணப்படுகின்றன. நீராடும் கேணி மொகஞ்சதரோவில் நீராடும் கேணி ஒன்று காணப்படுகின்றது. அதன் உட்புறங்களும் கரைகளும் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளன. அதன் நீளம் 39 அடி 3 அங்குலம்; 23 அடி 2 அங்குலம். அக் கேணிக்கு இரண்டு பக்கங்களில் படிக்கட்டுகள் இருக்கின்றன. படிக்கட்டுக்குக் கீழே முடிவு அடையும் இடத்தில் பதினாறு அங்குலம் உயரமும் 39 அங்குலம் அகலமும் உள்ள ஒரு மேடை காணப்படுகின்றது. இது சிறுவர் அபாயமின்றி நின்று நீராடுவதற்காகவாகலாம். வெளியே கேணியின் நாற்புறத்தும் மக்கள் உலாவக்கூடியதும் பதினைந்தடி அகலமுள்ளது மான செங்கற் பதிக்கப்பட்ட நடைபாதை காணப்படுகின்றது. நாற்புறத் தும் ஏழு அடி அகலமுள்ள அறைகள் இருக்கின்றன. கேணியின் நீர் அதன் தெற்கு மூலையில் அடியில் உள்ள துவாரம் வழியாக வெளியே போக்கப்பட்டது. அந் நீர் இரண்டு அடி நாலு அங்குலம் அகலமுள்ள மதகு வழியாகச் சென்றது. அம் மதகு ஒரு மனிதன் நிமிர்ந்து செல்லக் கூடியதாக இருந்தது. அம் மதகு எங்குச் சென்று முடிவடைகின்றது என்று அறிய முடியாமல் இடிபாடுகள் மூடியிருக்கின்றன. குளத்தின் கிழக்கில் உள்ள அறையில் ஒரு கிணறு காணப்படுகின்றது. அதனை வீதியாற் செல்பவர்களும், கேணியிலுள்ளவர்களும் இலகுவில் அடைய லாம். கேணியின் நீர் வெளியே போக்கப்பட்ட போது இக் கிணற்று நீரால் அது நிரப்பப்பட்டிருக்கலாம். கேணியின் உட்பக்கத்தே வைத்துக் கட்டப்பட்ட செங்கற்களின் முன்புறத்தில் கல்நார் தடவப்பட்ட பூச்சு காணப்படுகின்றது. கேணிக்குப் புறத்தில் நீராடுவோர் தங்கியிருக்கும் அறைகள் பல இருக்கின்றன. ஒவ்வொரு அறையின் தளத்துக்கும் கல் பதிக்கப்பட்டிருக்கிறது. அறைகளின் கூரைக்கு ஏறிச்செல்லக் கூடிய தாகப் படிக்கட்டுகள் இருந்தன. இவ் வறைகள் குருமார் இருப்பதற்காக அமைக்கப்பட்டன வாகலாம். தென்மேற்கு மூலையில் நீண்ட வட்ட மான ஒரு கிணறு காணப்படுகின்றது. தண்ணீர் இறைக்கும்போது கயிறு உராய்ந்ததால் உண்டான அடையாளங்கள் கிணற்றுச் சுவர்ப் பக்கங் களிற் காணப்படுகின்றன. இக் கேணி பொதுமக்களும், குருமாரும் நீராடு வதற்காக அமைக்கப்பட்டதாகலாம். இப்பொழுது இதற்கு அண்மையில் புத்த தூபி இருக்கின்ற இடத்தின் கீழ் முன்பு பெரிய கோயில் இருந்திருக்க லாம். இது கடவுளின் மீன் வாழும் கேணியாகவும் இருந்ததாகலாம். சமயம் மொகஞ்சதரோவில் ஒருவகைச் சுண்ணாம்புக் கல்லில் வெட்டிய ஒரு மனித வடிவம் காணப்பட்டது. அது இடது தோளுக்கு மேலாகப் போர்த்து வலப்பக்கம் வரும்படியாக மேலாடை அணிந்திருக்கின்றது. இவ் வகை வடிவங்கள் அரப்பாவிலும் மொகஞ்சதரோவிலும் காணப் பட்டன. அவ் வடிவத்துக்குக் குறுகிய தாடி மயிர் உண்டு. மேல் உதட்டு மயிர் மழிக்கப்பட்டுள்ளது. இவ் வகை வடிவங்கள் சுமேரியாவிலுங் காணப்பட்டன. இவ் வடிவம் ஒரு குருவைக் குறிப்பதாகலாம். இவ் வடிவின் கண்கள் மூடியிருக்கின்றன. இது யோகத்தைக் குறிக்கின்ற தெனச் சிலர் கூறுகின்றனர். இவ் வகை வடிவங்கள் கிஷ், ஊர் (மேற்கு ஆசியா) என்னும் இடங்களிலும் காணப்பட்டன. அங்குக் காணப்பட்ட சூளையிட்ட மண் பாவைகளைக் கொண்டு அக் காலத் தெய்வங்களைப் பற்றி நாம் சிறிது அறியலாம். பல மண்பாவைகள் பெண்தெய்வ வடிவங்க ளாகக் காணப்படுகின்றன. அத் தெய்வங்கள் அரையில் ஒரு ஒடுங்கிய துணியுடையனவாக மாத்திரம் காணப்படுகின்றன. அவை பலவகை அணிகலன்களை அணிந்திருக்கின்றன; விசிறி போன்ற தலை அணியை யும் அணிந்திருக்கின்றன. இரண்டு பக்கங்களிலும் கிண்ணங்கள் போன்ற பொருள்கள் காணப்படுகின்றன. இவைகளில் வழிபடுவோர் மணப் பொருள்களை எரித்திருக்கலாம். மண் பாவைகள், பெண் கடவுளரின் வடிவங்கள் என்று நம்புவதற்குக் காரணமுண்டு. பெயர் அறியப்படாத அவ் வடிவங்கள் ஒவ்வொரு வீட்டிலும் வைத்து வழிபடப்பட்டன. ஆண் கடவுளர் தலைமீது மாட்டுக்கொம்பு அல்லது ஆட்டுக்கொம்பு அணிந்திருக்கின்ற னர். இவ் விரண்டு விலங்குகளும் புனிதமுடையன என்று தெரிகின்றது. முத்திரைகளிற் காணப்படும் வடிவங்கள் கடவுளர் வடிவங்களாகத் தெரி கின்றன. ஆண் தெய்வங்கள் தலைமயிரை நீள வளரவிட்டிருக்கின்றன. ஒரு முத்திரையில் அட்டணைக்காலிட்டு இருக்கும் மூன்று முகமுடைய ஒரு மனித வடிவம் காணப்படுகின்றது. அதனைச் சுற்றி இரண்டு மான்கள், ஒரு காண்டாமிருகம், ஒரு யானை, ஒரு புலி, ஒரு எருமை முதலிய விலங்குகளின் வடிவங்கள் காணப்படுகின்றன. மனித வடிவத்தின் கைகளில் பல வளையங்கள் அணியப்பட்டுள்ளன. சர்.ஜான் மார்சல் என்பார் இவ் வடிவம் பசுபதி என்னும் சிவன் கடவுளைக் குறிக்கின்றதெனத் துணிந்துள்ளார். இக் கடவுளின் வடிவம் பொறித்த மூன்று முத்திரைகள் காணப் பட்டன. இரண்டு முத்திரைகளில், பசுபதிக் கடவுளின் வடிவம் கட்டிலின் மீது இருக்கிறது. மூன்றாவதில் உள்ளது, நிலத்தின்மீது இருக்கின்றது. மொகஞ்சதரோ மக்கள் தாய்க்கடவுளைக் கன்னிக் கடவுளாகவே வணங்கினார்கள். ஓர் அணிகலனில் அரச மரத்தின்கீழ் வீற்றிருக்கும் தாய்க்கடவுளின் வடிவம் காணப்படுகின்றது. இன்று மக்கள் வணங்கும் இலிங்கங்கள் போன்றவை அரப்பா மொகஞ்சதரோ என்னுமிடங்களிற் கண்டுபிடிக்கப்பட்டன. மீனை வாயில் வைத்திருக்கும் முதலையின் வடிவங்கள் அணிகலன்களில் காணப்படுகின்றன. முதலை ஆற்றுத் தெய்வமாகலாம். அரப்பா, மொகஞ்சதரோ என்னும் இரு இடங்களிலும் பாம்புகளின் வடிவங்களும் காணப்பட்டன. நிறம் பூசிய சட்டிப் பானை களிலும் அவைகள் தீட்டப்பட்டுள்ளன. முத்திரைகளில் சுவத்திகமும் காணப்படுகின்றன. வெண்கலத்திற் செய்யப்பட்ட நாட்டியப் பெண் ணின் வடிவம் ஒன்று காணப்பட்டது. அது அக் காலக் கோயில் தேவரடி யாளைக் குறிப்பது ஆகலாம் எனக் கருதப்படுகின்றது. தாய்க்கடவுள், சிவன் கடவுள் வணக்கங்கள், இலிங்க வணக்கம் முதலாயின ஆரியருக்கு முற்பட்ட தமிழ் மக்களுக்கு உரியனவென்று ஆராய்ச்சியினால் நன்கு தெளிவாகின்றன. அவ்வாறாகவும் பழங் கொள்கை யுடைய இந்திய ஆராய்ச்சியாளர் சிலர் அவை வேத கால ஆரியருக்குரியன என்று இடை இடையே வாதிப்பதுண்டு. அவர்கள் கூற்றுகள் இதுவரையில் ஆராய்ச்சி உலகில் இடம்பெறவில்லை. அவ் வழிபாடுகள் ஆரியருக்கு முற்பட்ட மக்களுக்கே உரியன என்பதை விளக்கி, இந்திய வரலாற்று இதழில் 1அறிஞர் ஒருவர் எழுதியிருப்பதின் சுருக்கத்தை ஈண்டுத் தருகின்றோம். “தாய்க்கடவுள் வணக்கம் சிறப்பாக ஆரியருக்கு முற்பட்ட மக்களிடையே பரவியிருந்தது. ஆரிய வேதங்களிற் சொல்லப்படும் தாய்க்கடவுளருக்குப் பெருமை உண்டானது ஆண் கடவுளர் வழியாகவாகும். அவர்கள் தனியே உயர்வு பெறவில்லை. மூன்று முகமுடைய சிவன் வடிவம் பெரிதும் காணப்படுகின்றது. சிவன், மகேசு வரன், சதாசிவன் என்னும் வடிவங்களில், ஒன்று, மூன்று ஐந்து முகங்க ளோடு எழுந்தருளுவர் என ஆகமங்கள் கூறுகின்றன. மூன்று முகத்தோடு காணப்படும் கடவுள் சிவனோடு தொடர்புடையவர் என்ப தில் ஐயம் இல்லை. அவ் வடிவம் யோக நிலையில் இருப்பது இதனை நன்கு வலி யுறுத்துகின்றது. தக்கணாமூர்த்தி வடிவில் கடவுள் காட்டு வாழ்க்கை யினராகச் சித்திரிக்கப்பட்டுள்ளார்.” “சூலம் சிவனின் முற்கால அடையாளமாக இருக்கலாம். இவ் வடையாளத்தையுடைய மனித வடிவங்கள் மொகஞ்சதரோவிற் காணப் படுகின்றன. இவ் வகை வடிவங்கள் சுமர், பாபிலோன் என்னும் இடங் களிலும் காணப்பட்டன.’’ “புத்த, தர்ம, சங்க எனப் புத்த சமயத்தினர் சூலத்தை மூன்றாகக் கொண்டனர். யோக மூர்த்தியின் பாதங்களில் காணப்பட்ட மான்கள் தக்கணா மூர்த்தியின் காட்டு வாழ்க்கையைக் காட்டுகின்றது. தரும சக்கரத்தில் மான்கள் புத்தரின் ஆசனத்தின் கீழ் காணப்படுகின்றன. அவர் தான் புதிதாகக் கண்ட சமயக் கொள்கையைப் போதிக்கின்றார். முத்திரை களில் காணப்பட்ட சிவனின் வடிவைப் பின்பற்றிப் புதிய பிற்கால வடிவங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.” “இந்திய நாகரிகத்தில் ஆரியருக்கு முற்பட்ட மக்களின் அடிப் படை” என இந்திய “குவாட்டர்லி” வரலாற்று இதழில், சூர்2 என்னும் அறிஞர் கூறியிருப்பது வருமாறு: இருக்கு வேத ஆரியர் தாய்க்கடவுளைப் பற்றி அறியார். அவர் களின் மேலான கடவுள் ஆண் கடவுளே. இருக்கு வேதத்தில் காணப்படும் உருத்திரன் சிவனின் பிற்கால வடிவமாகும். சமக்கிருதத்தில் உருத்திரன் என்பதற்குச் சிவப்பு என்று பொருள். இது சிவப்பு என்னும் பொருள் தரும் சிவன் பெயராயிருக்கின்றது. உருத்திரன் இருக்கு வேதத்தில் உயர்ந்த கடவுளாகக் கொள்ளப்படவில்லை. இருக்கு வேதத்தில் உருத் திரன் மீது மூன்று பதிகங்கள் மாத்திரம் உள்ளன. உருத்திரனும் அக்கினியும் ஒருவராகக் கூறப்பட்டுள்ளார்கள். உடையும் அணியும் அரப்பா, மொகஞ்சதரோ என்னும் இடங்களிற் காணப்பட்ட பெண் வடிவங்கள் பலவகை அணிகலன்களை அணிந்திருக்கின்றன. அவை பெரும்பாலும் நிர்வாணமாகக் காணப்படுகின்றன. சிலவற்றின் உடை முழங்காலுக்கு மேல் வரையும் இருக்கின்றது. அரையிற் கட்டி யிருக்கும் ஆடைக்கு மேல் பட்டிகை அணியப்பட்டுள்ளது. அது நூலில் மணிகளைக் கோத்துச் செய்யப்பட்டது போல இருக்கின்றது. ஆண் வடிவங்களும் பெண் வடிவங்களும் விசிறி போன்ற ஒருவகைத் தலை அணியை அணிந்திருக்கின்றன. இது துணியினால் செய்யப்பட்டதாக லாம். அவ் வடிவங்கள் அணிந்திருக்கும் இன்னொரு வகைக் கழுத்தணி பல வகைக் கழுத்தணிகளை ஒன்றின் மேல் ஒன்றாக வைத்துப் பொருத் திச் செய்யப்பட்டது. இது போன்றதை இன்று ஆப்பிரிக்காவின் சில பகுதியிலும் கிழக்கு இந்தியாவிலுமுள்ள மக்கள் அணிகிறார்கள். மாலை, கைவளை முதலியவைகளையும் பெண்கள் அணிந்தார்கள். முழங்காலுக் குக் கீழ்வரையும் ஆடை உடுத்திய ஒரு வடிவம் காணப்பட்டது. இன் னொரு வடிவம் நீண்ட உடை உடுத்தி அரையில் நாடாக் கட்டியிருக் கிறது. சில வடிவங்கள் முடியில் சீப்பு அணிந்திருக்கின்றன. ஒரு ஆடவனின் உடை, அரையில் ஒன்றும் அதன்மேல் பட்டி போல் கட்டும் ஒடுங்கிய இன்னொன்றுமா யுள்ளது. சிலர் வலத்தோளின் மேலாக வந்து இடத் தோளின் கீழ் முடிவடையும்படி போர்வையை அணிந்தார்கள். அவர்கள் குறுகிய தாடியும் கன்ன மீசையும் வளர்த் திருந்தார்கள். உலோகங்களில் செய்த பொருள்கள் செல்வர்களின் அணிகலன்கள் வெள்ளியிலும், தங்கத்திலும், நிறக் கற்கள், தந்தம் முதலியவைகளால் செய்யப்பட்டன. வறியவர்கள் ஓடுகளினால் செய்ததும், களிமண்ணிற் செய்து சூளையிடப்பட்டனவு மாகிய அணிகளை அணிந்தார்கள். பொன், வெள்ளி என்பவைகளை மாத்திரமல்ல; செம்பு, தகரம், ஈயம் முதலிய உலோகங்களையும் சிந்துவெளி மக்கள் அறிந்திருந்தார்கள். செம்பினால் போர்க் கருவிகளும், பிற கருவிகளும், சமைக்கும் ஏனங் களும் செய்யப்பட்டன. இவை எல்லாம் உலோகத்தை சுத்தியால் அடித்துச் செய்யப்பட்டன. மயிர் மழிக்கும் கத்தி, உளி, அரிவாள், கை வளை, ஏனங்கள், மணிகள், பொத்தான் போன்ற பொருள்கள் செய்வ தற்கு உலோகங்கள் பயன்படுத்தப்பட்டன. சிந்துவெளி மக்களின் சிற்பத் திறன் சிந்துவெளி அழிபாடுகளில் ஒருவகைச் சுண்ணாம்புக் கல்லில் வெட்டப்பட்ட பல முத்திரைகள் கிடைத்துள்ளன. அவைகளில் மாடு, எருமை, யானை, ஆடு, காண்டாமிருகம், மான், நாய், அணில், குரங்கு போன்ற விலங்குகளின் வடிவங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ் வடிவங்கள் மிகத் திறமையுடைய கைவேலைப்பாடுகளாகக் காணப்படு கின்றன. மொகஞ்சதரோ மக்கள் பயன்படுத்திய மட்பாண்டங்கள் பல வடிவின. பொதுவான சூளையிட்ட மட்பாண்டங்க ளல்லாமல், நிறங் கொடுக்கப்பட்டதுவும் காணப்படுகின்றன. அவைகள்மீது பலவகை யான கொடிகள், விலங்குகள், பறவைகள், மரஞ்செடிகளின் வடிவங்கள் எழுதப்பட்டுள்ளன. அக் காலம் வழங்கிய கட்டில், முக்காலி போன்ற வீட்டுப்பொருள்களும், பெண்கள் அணிந்த பல வகை அணிகலன்களும், மக்கள் பயன்படுத்திய சமாதான கால, யுத்த கால ஆயுதங்களும், சிறுவரின் விளையாட்டுப் பொருள்களும், மண்பாவைகளும், வீடுகளும், அக்கால மக்களின் கைவேலைத் திறமையை விளக்குவன. சிந்துவெளி மக்கள் அறிந்திருந்த விலங்குகள் அக்கால மக்கள் அறிந்திருந்த விலங்குகள் இமில் உள்ள மாடு, எருமை, யானை, ஒட்டகம், நாய், கழுதை, ஆடு, மலைஆடு, குரங்கு, புலி, காண்டாமிருகம், மான், பன்றி, முதலை முதலியன. கீரி, பாம்பு, அணில், கிளி, கோழி, மயில், முயல் முதலியனவும் அறியப்பட்டிருந்தன. மக்களின் வாழ்க்கையும் பழக்கவழக்கங்களும் மக்கள் நன்கு அமைக்கப்பட்ட நகரில் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வாழ்ந்தார்கள். நகர் வட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு வட்டங்களுக்கும் காவல் காக்கும் இடங்கள் இருந்தன. வணிகர் கூட்டங்கள் பண்டங்களைப் பொதி மாடுகளில் ஏற்றிக் கொண்டு சென்றனர். மொகஞ்சதரோவில் பல நாட்டு வணிகர் தங்கி யிருந்தார்கள். அதனாலேயே அங்குக் காணப்பட்ட மனித மண்டை ஓடுகள் பலவகையாக வுள்ளன. கோதுமையும், வாளியும் அதிகம் விளைவிக்கப்பட்டன. நெல்லும் விளைவிக்கப்பட்டது. தானிய வகைகளையும், மீன், மாடு, பன்றி, ஆடு முதலியவைகளின் இறைச்சிகளையும் மக்கள் உண்டார்கள். முதலை, ஆமை என்பவைகளின் இறைச்சிகளும், மீன் கருவாடும் பயன்படுத்தப் பட்டன. பெண்கள் கண்ணுக்கு மை தீட்டினார்கள். முகத்துக்கு ஒருவகை பொடியைத் தடவினார்கள். தந்தத்தினாற் செய்யப்பட்ட சீப்புகளும், பிற சீப்புகளும் பயன்படுத்தப்பட்டன. போக்குவரத்துக்குப் பெரும்பாலும் மாட்டு வண்டிகள் பயன்படுத்தப்பட்டன. ஓடுகளாற் செய்யப்பட்டவை, களிமண்ணாற் செய்து சூளையிடப்பட்டவை, தந்தத்தாற் செய்யப் பட்டவை போன்ற பலவகை விளையாட்டுப் பொருள்களைச் சிறுவர் வைத்து விளையாடினர். மக்களின் பொழுதுபோக்கு, வேட்டையாடுதல், மாட்டுச் சண்டை, கோழிச் சண்டை போல்வன. பண்டங்களை நிறுப்ப தற்குத் தராசுகள் பயன்படுத்தப்பட்டன. நாட்டியம், இசை முதலிய கலைகளும் மக்களால் விரும்பப்பட்டன. நரம்பு கட்டிய யாழ், மேளம், சல்லரி, கொம்பு போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டன. மொகஞ்சதரோவில் குருமார், அரசர், மந்திரவாதிகள், வணிகர், படகோட்டிகள், மீன்பிடிகாரர், வீட்டு வேலைக்காரர், தண்ணீர் எடுப்போர், சங்கறுப்போர், குயவர், பொன், வெள்ளி, செம்பு முதலிய உலோகங்களில் வேலை செய்யும் கம்மாளர், கொத்தர், செங்கற் சூளை யிடுவோர், முத்திரைகள் வெட்டுவோர் முதலியவர்கள் வாழ்ந்தார்கள். மொழி சிந்துவெளி மக்கள் ஒட்டுச் சொற்கள் உடைய ஒரு வகை மொழியை வழங்கினார்கள். அம் மொழி சுமேரிய மொழிக்கு இனமுடை யது என்று கருதப்பட்டது. மொகஞ்சதரோ அரப்பா முதலிய இடங் களிற் கிடைத்த முத்திரைகளில் காணப்பட்ட எழுத்துகளை ஒத்தவை பசிபிக் கடலில் உள்ள ஈஸ்டர் தீவுகள், பாபிலோன், சுமேரியா, இலிபியா, கிரேத்தா, சின்ன ஆசியா முதலிய இடங்களிலும் காணப்பட்டன. இவ் வெழுத்துகளை நன்கு ஆராய்ந்த சேர் யோன் மார்சல், பேராசிரியர் லாங்டன் என்போர் ஈஸ்டர் தீவுகள் முதல் இந்தியா, சுமேரியா, சின்ன ஆசியா, கிரேத்தா முதலிய நாடுகளில் வழங்கிய எழுத்துகள் எல்லாம் ஒரே பொது உற்பத்திக்குரியன வென்றும், அவை, அவைகளை வழங்கிய மக்களின் கருத்துகளுக்கு அமையச் சிற்சில மாறுபாடுகளை அடைந்துள் ளன என்றும் கூறியுள்ளார்கள். பசிபிக் கடல் முதல், மேற்கு ஆசியா எகிப்து கிரேத்தா முதலிய நாடுகளில் வழங்கிய பழைய எழுத்துகள் ஒரே தொடக்கத்துக் குரியனவாயின், அம் மொழிகளும் ஒரே தொடக்கத்துக் குரியன என்பதில் சிறிதும் ஐயப்பாடு இல்லை. பசிபிக் தீவுகள், சிந்துவெளி, சுமேரியா முதலிய இடங்களில் காணப்பட்ட எழுத்துகள் பல ஒரே வகையாக உள்ளன. இதனால் சிந்து வெளியில் வழங்கிய எழுத்துகளே அவ் விடங்களிலும் வழங்கினவென் றும், சிந்துவெளி எழுத்துகளை ஒலிமுறையாக வாசிக்கவும், அவ் வொலி முறையான உச்சரிப்புகளின் பொருள்களைப் பசிபிக் தீவுகள் முதல் மேற்கு ஆசியா வரையிலுள்ள மக்கள் நன்கு அறிந்திருந்தார்கள் என்றும் ஆராய்ச்சிவல்லார் கருதுகின்றனர். நீண்ட காலம் பிராமி எழுத்துகளின் தொடக்கம் அறியப்படா திருந்தது. பிராமி எழுத்துகளை ஒத்த எழுத்துகளே பினீசியரின் எழுத் துகள். இந்திய மக்கள் எழுத்தெழுதும் முறையை அறியாதிருந்தார்கள் என்றும், பின்பு அவர்கள் பினீசிய வணிகரிடமிருந்து கி.மு. 800 வரையில் எழுத்தெழுதும் முறையை அறிந்து கொண்டார்கள் என்றும் ஆராய்ச்சி யாளர் எழுதுவாராயினர். சிந்துவெளிப் புதைபொருள் ஆராய்ச்சிக்குப் பின், பிராமி எழுத்துகள் சிந்துவெளி எழுத்துகளினின்றுந் தோன்றி யவையென உறுதிப்படுவதாயிற்று. பேராசிரியர் லாங்டன் இக் கருத்தை நாட்டியுள்ளார். பினீசிய எழுத்துகள் பிராமி எழுத்துகளினின்றும் பிறந்தன வென்றும், அவை பினீசிய வணிகரால் இந்திய நாட்டினின்றும் கொண்டுபோகப்பட்டதென்றும் துணியப்படுகின்றன. பினீசிய எழுத்து களினின்றும் கிரேக்க எழுத்துகளும், கிரேக்க எழுத்துகளி லிருந்து உரோமன் எழுத்துகளும், உரோமன் எழுத்துகளிலிருந்து இன்றைய ஐரோப்பிய மொழிகளின் எழுத்துகளும் தோன்றின. சிந்துவெளியில் வழங்கிய எழுத்துகள் இன்று நாம் வழங்கும் எழுத்துகள் போன்றனவல்ல. ஒரு சொல்லையோ கருத்தையோ குறிப்ப தற்கு ஒரு குறியீடு வழங்கிற்று. இவ் வகை எழுத்துகளே சுமேரியாவிலும் வழங்கின. சீனருடைய எழுத்துகள் இவ் வகையினவே. சிந்துவெளி முத்திரைகளில் வெட்டப்பட்டுள்ள எழுத்துகளை ஹெரஸ் பாதிரியார் என்னும் ஸ்பானிய தேசத்தவர் வாசித்துள்ளார். அவ் வாசிப்புகளிற் காணப்படும் சொற்கள் பெரும்பாலும் இன்றைய தமிழிற் காணப்படு வன. இதனால் இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் வழங்கிய தமிழ் இன்றைய தமிழிலிருந்து அதிகம் வேறுபட்டிருந்ததென்று கூற முடியவில்லை. ஈஸ்டர் தீவுகள் முதல் மேற்கு ஆசியா, கிரேத்தாத் தீவுகள் வரையிலுள்ள நாடுகளில் வழங்கிய பழைய எழுத்துகள் ஒரே வகையாகக் காணப்பட்டாலும், மொகஞ்சதரோ எழுத்துக்களின் ஒலி முறையான வாசிப்பு தமிழாயிருந்தாலும், பெறப்படுவது என்ன? முற்காலத்தில் மிக மிக அகன்ற நிலப்பரப்பில் ஒரே மொழியும், ஒரே எழுத்தும், ஒரே கொள்கைகளும் உடைய மக்கள் வாழ்ந்தார்கள் என்பது அன்றோ? பிராமி ஆரியருடைய எழுத்து என்றும், அதைப் பார்த்தே தமிழர் எழுத்துகளை ஆக்கிக்கொண்டார்கள் என்றும் ஆரியக் கட்சியினர் வாதம் புரிந்து வந்தனர். இன்றைய ஆராய்ச்சியில், ஆரியர் எழுத்தெழுதும் முறையை அறியாதிருந்தார்கள்; அவர்களுக்கு எழுத்தெழுதக் கற்பித்த வர்கள் தமிழர்களே என்னும் உண்மைகள் நாட்டப்பட்டுள்ளன. ஆரிய மொழியிற் காணப்படும் சில சிறந்த நூல்களும் அவர்களுக்கு அறிவு கொளுத்தும்படி தமிழ் அறிஞரால் செய்து உதவப்பட்டனவே. பிற்காலத் தில் படையெடுப்பினால் வெற்றியாளராக வந்த அராபியர் எப்படி இந்திய நாட்டுக்கு அந்நியர் எனக் கருதப்பட்டு வந்தார்களோ. அவ்வாறே ஆரியரும் அந்நியரெனவே கருதப்பட்டு வருவாராயினர். பிற்கால நிகண்டு நூல்களிலும் ஆரியருக்குப் பெயராக மிலேச்சர் என்னும் பெயர் வழங்கப்பட்டுள்ளது. இன்றும் ஆரியர் தமிழர் என்னும் கட்சியினருக் கிடையில், இந்து முசுலிம் மனப்பான்மை இருந்து வருதலை நாம் காணலாம். சிந்துவெளி நாகரிகம் தமிழருடையதே அரப்பா மொகஞ்சதரோ நாகரிகம் தமிழருடையதே என்பதை முதற்கண் நாம் அறிந்து கொள்ளுதல் வேண்டும். அதற்குச் சான்றாக ஆராய்ச்சியாளர் கூறியுள்ளவற்றை இங்குத் தருகின்றோம். ஆன்றோர் கூற்றுகளால் அப் பழைய நகரங்களின் நாகரிகம் தமிழருடையதென்று சிறுவர்க்கும் எளிதில் விளங்கும். “சிந்துவெளியில் வாழ்ந்த மக்கள் ஆரியருக்கு முற்பட்டோர். ஆகவே அவர்களுடைய மொழியும் ஆரியருக்கு முற்பட்டதாதல் வேண்டும். மூன்று காரணங்களைக் கொண்டு நாம் இவ்வாறு கருதலாம். (1) ஆரியர் வருகைக்கு முன் வடஇந்தியா முழுமையிலும் திராவிட மக்களே வாழ்ந்தார்கள். இச் சமவெளியின் நாகரிகத்தை ஒத்த ஓர் நாகரிகத்தை அக் காலத்தில் அடைந்திருக்கக் கூடியவர்கள் திராவிடர் களே யாவர். (2) கிர்தார் மலைத்தொடருக்கு அப்புறத்தில், சிந்துவெளிக்கு அண்மையிலே பலுச்சிஸ்தானத்தில் வாழும் பிராகூயர் இன்றுவரையும் திராவிட மொழி தொடர்பான மொழியையே வழங்குகின்றனர். இது ஆரியர் வருகைக்கு முன் அங்குத் திராவிட மொழி வழங்கிய தென்பதற்கு அறிகுறி ஆகலாம். (3) திராவிடம் ஒட்டுச் சொற்களை யுடையதாதலால், அம் மொழியை இணைக்கும் மொழிகள், சிந்துவெளி மக்கள் வழங்கிய மொழியும் மேற்கு ஆசியாவிலே சுமேரிய மக்கள் வழங்கிய மொழியுமா கும் என்று கொள்ளுதல் பிழையாகாது” - சர் ஜான் மார்சல்.1 “திராவிட மொழியை வழங்கும் மக்களே பலுச்சிஸ்தானம், வட இந்தியா, வங்காளம் முதலிய இடங்களில் வாழ்ந்தார்கள் என்பது மறுக் கப்படாத உண்மையாகக் கொள்ளப்படுகின்றது.” - எஸ்.கே. சட்டேர்ஜி2 “திராவிட மக்களைத் தொடர்பாகக் கிரேத்தா (Crete) இலைசியா முதல் சிந்துவெளி தென்னிந்தியா வரையில் நாகரிக வகை அளவிலாது நாம் தொடர்புபடுத்திக் காணலாம். இம் மக்களின் நாகரிகம் உலோக காலத்தொடக்கத்திலும் பசிபிக் தீவுகள் வரையில் பரவியிருந்தது. தென் னமெரிக்காவிலுள்ள பீரு வரையிற் சென்றிருந்ததெனவும் கூறலாம்.” - அர்.தி. பனோசி3 “ஆரியர் தென்னிந்தியாவில் தமது மொழியை நாட்ட முடியா திருந்தது வியப்புக்குரியது. அவர்கள் வட இந்தியாவில் தமது எண் ணத்தை நிறைவேற்றினார்கள். ஆரியர் வருவதன் முன் திராவிட மொழி வட இந்தியாவில் வழங்கியதென்பதில் ஐயம் இன்று. இது, பலுச்சிஸ் தானத்தில் வழங்கும் பிராகூய் மொழியில் பல திராவிடச் சொற்கள் காணப்படுவதைக் கொண்டு நன்கு துணியப்படும். அச் சொற்கள் திராவிடச் சொற்களாயிருப்பது மாத்திரமல்லாமல், அச் சொற்களுக் குரிய கருத்தையும் உடையனவாயிருக்கின்றன. சமக்கிருதத்தில் பல திராவிடச் சொற்கள் காணப்படுகின்றன என்பதையும் ஆராய்ச்சியாளர் ஒப்புக் கொள்கின்றனர். இதனால் கொள்ளப்படும் முடிவு, வடநாட்டில் ஆரியர் வருகைக்கு முன் திராவிட மொழி வழங்கியது என்பதே யாகும். இந்திய நாட்டில் வழங்கும் மற்றைய மொழிகளை ஆராயும்போதும் இம் முடிவே உண்டாகின்றது. ஆகவே, வடஇந்தியாவில் திராவிட மொழி வழங்கிற்று என்பதைக் குறித்துச் சிறிதும் ஐயப்பட வேண்டியதில்லை” - எம்.டி. பண்டார்க்கர்4 “புதிய கற்காலத்தில், விந்திய மலையை அடுத்த இடங்களல்லாத இந்தியா முழுமையிலும் திராவிட மொழியே வழங்கிற்று. சமக்கிருத பிராகிருதச் சொற்களைப் பெற்றமையால் பழைய மொழியே வட இந்தியாவில் பல பெயர்களைப் பெற்று வழங்குகின்றது. வட இந்திய மக்கள் திராவிடத்துக்கு இனமான மொழிகளையே வழங்கி வந்தார்கள் என நான் துணிகின்றேன். மொழிகளைச் சொல்லால் மாத்திரமன்று; அமைப்பினால் அறிய வேண்டும்.” - பி.தி. சீனிவாச ஐயங்கார்1 “இன்று சமக்கிருத இனத்தைச் சேர்ந்தனவென்று கருதப்படும் வட இந்திய மொழிகள், இலக்கண அமைப்பில் திராவிட மொழிகளை ஒத்துள்ளன. வட இந்திய தென்னிந்திய மொழிகளிலுள்ள வசனங்களைச் சொல்லுக்குச் சொல் அமைத்து ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு இலகு வில் மொழி பெயர்க்கலாம். இதனால் தமிழுக்கு இனமான மொழியைப் பேசிய மக்களே இந்தியா முழுமையிலும் வாழ்ந்த மக்களாவர் என விளங்குகின்றது.” - பி.தி. சீனிவாச ஐயங்கார் “ஆரியர் வருகைக்கு முன் திராவிடர் சிந்துவெளியில் வாழ்ந் தார்கள் என்பதற்கு நியாயமான காரணங்கள் புலப்படுகின்றன. பலுச் சிஸ்தானத்தில் பிராகூயர் வழங்கும் மொழி திராவிடத்துக்கு இனமா யிருப்பதால் இது நன்கு அறியப்படும். இது மற்றச் சான்றுகளை விடச் சிறந்தது. ஹைதராபாத்து, சென்னை முதலிய இடங்களில் கிளறிக் கண்டு பிடிக்கப்பட்ட சமாதிகளிற் காணப்பட்ட பொருள்களில் மொகஞ் சதரோ, அரப்பா முதலிய இடங்களில் காணப்பட்டவைகளை ஒத்த எழுத்துகள் காணப்பட்டன. இவ் விடங்கள் திராவிட மொழி வழக்குக் குரிய நாடுகளாகும். திராவிடர் சிந்துவில் கி.மு. 1100க்கு முன் வாழ்ந் தார்கள். அவர்களிடமிருந்தே சிந்து நாகரிகம் ஆரியர்2 கைக்கு மாறிற்று. “ஆரியர் மத்திய ஆசியாவிலே காட்டு வாழ்க்கையினராயிருந்த காலத்தில், இந்திய நாட்டில் வாழ்ந்த திராவிடர் செமித்தியரை ஒத்த நாகரிக முடையவர்களாயிருந்தனர். சாலமன், ஹிரம் என்னும் அரசர் இம் மக்களோடு வியாபாரத் தொடர்பு வைத்திருந்ததோடு, திராவிடச் சொற்களையும் தமது மொழிகளில் சேர்த்து வழங்கினர்” - ஜி.ஆர். ஹன்டர். “சர். ஜான் மார்சல் கூறியதுபோலவே பழம்பொருள் ஆராய்ச்சி யாளரும் முடிவு செய்துள்ளார்கள். ஹெரஸ் பாதிரியார், பம்பாய் செயின்ட் சேவியர் கல்லூரியில் ஆராய்ச்சிப் புலமை நடத்துகின்றார். அவர் சிந்துவெளிப் பழைய நகரங்களிற் கிடைத்த பட்டையங்களை வாசித்துச் சிந்துவெளி நாகரிகம் தமிழருடையது என்று நாட்டியுள்ளார். இவ்வாறு நாட்டிய பெருமை அவருக்கே உரியது. சிந்துவெளியில் மாத்திரமன்று. தெற்கிலும் திராவிடர் வாழ்ந்தனர். வடக்கே திராவிட மக்கள் உன்னத நாகரிகமுடையவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது வால்கா ஆற்றங்கரையை அடுத்த நாடுகளில் வாழ்ந்து கொண் டிருந்த மக்கள், அவர்களைத் தமது மிருக பலத்தால் வென்று அவர் களின் நாகரிக முறைகளைப் பின்பற்றினார்கள் என்றும் அவர் கூறியுள் ளார். பிற்காலங்களில் ஆரியர் நாகரிகம் என ஒன்று எழுந்தது. அது ஆரியர் தமிழர் நாகரிகங்கள் கலந்த அமைப்புடையது.” - சர்க்காரி1 “1931இல் சர். ஜான் மார்சலின் பெரிய நூல் வெளிவந்தது. அதில் மொகஞ்சதரோவில் வாழ்ந்தவர்கள் ஆரியருக்கு முற்பட்டவர்கள் என்றும், பிற்காலங்களில் திராவிடர் எனப்பட்ட மக்கள் இனத்தை அவர்கள் சேர்ந்தவர்கள் என்றும் உறுதியாக நாட்டப்பட்டுள்ளது. இதைப் பற்றிய வாதங்கள் இன்னும் ஒழியவில்லை. இந்தியாவிலுள்ள சிலர் இக் கருத்தை எதிர்த்தார்கள். அவர்கள் மறுத்தமைக்கு முதன்மை யான காரணம், மொகஞ்சதரோ நாகரிகம் போன்ற உன்னதமானது, திராவிடருடையதாயிருக்க முடியாதெனக் கருதியதாகும். ஆகவே அது ஆரியருடையது என்று அவர்கள் சாதித்தார்கள். மொகஞ்சதரோவிற் காணப்பட்ட இலிங்கங்கள், அங்கு வாழ்ந்த மக்கள் திராவிடர் என் பதைக் காட்டவில்லை என்றும், இவ் வணக்கம் இருக்கு வேத காலத்தில் அரும்பியிருந்து மொகஞ்சதரோ காலத்தில் முற்றாக வளர்ச்சியடைந் துள்ளது என்றும், ஆகவே மொகஞ்சதரோவில் வாழ்ந்தவர்கள் ஆரியர் என்றும் மொகஞ்சதரோ மக்கள் ஆரியர் இந்திய நாட்டில் வந்து குடியேறியதற்குப் பல நூற்றாண்டுகளின் பின் வந்தவர்களாவர் என்றும் கூறுவாராயினர். இதுவரையும் மொகஞ்சதரோ எழுத்துகளைப் பற்றி வந்த ஆராய்ச்சிகளுள் முதன்மையுடையது ஜி. ஆர். ஹன்டர் செய் துள்ளதேயாகும். அவர் மொகஞ்சதரோ அரப்பா என்னும் நகரங்கள், திராவிடரால் கட்டப்பட்டவை என்றே கூறியுள்ளார். இதனால் மொகஞ் சதரோ நாகரிக காலத்துக்குப் பல ஆயிரம் ஆண்டுகளின் முன், ஆரியர் இந்தியாவிற் குடியேறியிருந்தார்கள் என்று ஒரு காலத்தில் நாட்டமுடி யுமா யிருப்பினும் அந் நாகரிகம் ஆரியருடையதன்று என்றே உறுதிப் படும். “திராவிடர் தென்னிந்தியாவுக் குரியவர்கள் என்று நாம் நினைத் துப் பழகி விட்டோம். அதனால் அவர்கள் வடஇந்தியாவில் வாழ்ந் தார்கள் என்று கூறி, நாம் நம்பச் செய்தல் கடினமாயுள்ளது. திரா விடர்கள் தாமும், தம் முன்னோர் வட இந்தியாவில் பெருமை பெற்று வாழ்ந்தார்கள் என்று கூறவில்லை. இருக்கு வேதம் ஆரியருக்கும் தாசுக்களுக்கும் நேர்ந்த போர்களைப்பற்றிக் கூறுகின்றது. இதிகாச காலத்தில் பல திராவிடக் கூட்டத்தினர் வட இந்தியாவில் வாழ்ந்தார்கள். காந்தாரர், மச்சர், நாகர், கருடர், மகிஷர், பலிகர் முதலிய சாதியினரைக் கொண்டு வட இந்தியரில் அதிக திராவிட இரத்தம் ஓடிக்கொண் டிருந்தது என்று அறிகின்றோம். வடக்கே வழங்கும் பிராகூய், ஒரியா முதலிய மொழிகள் ஒரு காலத்தில் வட இந்தியா முழுமையும் திராவிடர் வாழ்ந்தார்கள் என்பதைக் காட்டும். திராவிடர் இந்திய நாட்டிலேயே வாழ்ந்தார்கள்.” - ஹெரஸ் பாதிரியார்.1 மொகஞ்சதரோ மக்கள் ஆரியரா? திராவிடரா? (ஹெரஸ் பாதிரியார் - Rev. H. Heras. S.J.) மொகஞ்சதரோ நாகரிகம் திராவிடருடையதன்று என ஆரியப் பற்றுடையார் பலர் இடையிடையே எழுதி வருகின்றனர் என்றும், அவர்களுடைய ஆராய்ச்சிகள் ஆராய்ச்சி அறிஞரால் இதுவரையில் ஒப்புக்கொள்ளப்படவில்லை எனவும் பிறிதோரிடத்திற் காட்டியுள் ளோம். அவ்வாறு எழுதியவர்களுள் டாக்டர் லக்சுமன் சரூப் (Dr. Laxman Sarup) என்பார் ஒருவராவர். அவர் மொகஞ்சதரோ நாகரிகம் ஆரிய ருடையது எனக் கூறியதை மறுத்து ஹெரஸ் பாதிரியார்2 ‘இந்திய வரலாற்று இதழில்’, எழுதி யிருப்பது மிக இன்பம் விளைப்பதா யிருக் கின்றது. அதன் சுருக்கத்தை ஈண்டுத் தருகின்றோம். பேராசிரியர் ஆர்.டி. பானர்ஜியும், சர். ஜான் மார்சலும் மற்றும் இந்திய ஐரோப்பிய ஆராய்ச்சியாளரும் காட்டியவைகளுக்கு மாறான கொள்கை ஒன்றை நிறுத்துவது சரூப்புக்கு வில்லங்கமாகும். ஆனால் சரூப்பின் உண்மை யல்லாத கருத்துகள், அவ்வாறு செய்தல் எளிதுபோற் காணப்படலாம். ஆரியர் இந்திய நாட்டை அடைந்தபோது அங்குத் தாசுக்கள் அல்லது தாசர் என்று அழைக்கப்பட்ட ஒரு சாதியார் வாழ்ந்தார்கள் என்றும், மொகஞ்சதரோ நாகரிகம் கிராம நாகரிகமல்லாத நகர நாகரிக மென்றும் சரூப் சொல்லுகின்றார். பிராமண காலத்துக்கு முன் ஆரியரிடையே நகர நாகரிகம் இல்லை எனவும், அவர் புகல்கின்றார். ஆகவே, மொகஞ்சதரோ நாகரிகம் பிற்காலத்த தென்பது அவர் முடிவு. இருக்கு வேத காலத்தில் ஆரியருடைய நாகரிகம் கிராம நாகரிக மாக இருந்ததென்பது உண்மையே. இருக்கு வேத இருடிகள் தாசரின் புரங்களைப் பற்றிக் கூறியுள்ளார்கள். அவை கிராம நாகரிகத்தினிடையே காணப்பட்ட நகர நாகரிகங்களாகும். ஆகவே நாம் இருக்கு வேத காலத் தில் ஆரியரிடையே நகர நாகரிகம் உண்டாகவில்லை எனத் துணிந்து கூறலாம். நகர நாகரிகமுடைய தாசர்களிடமிருந்தே ஆரியரும் நாகரிகத் தைக் கற்று உயர்வடைந்தார்கள். சரூப் கொண்டு வந்த நியாயங்களே சிந்துவெளி நாகரிகம் தாசுக்களுடைய தென்று நன்கு காட்டுகின்றன. வாணிகம் பயிர்ச் செய்கைக்குப் பிற்பட்ட வளர்ச்சி எனச் சரூப்பு கூறியது உண்மையே. இதனால் மொகஞ்சதரோ நாகரிகம் இருக்கு வேத காலத்துக்குப் பிந்தியதெனச் சரூப் கருதுகின்றார். இருக்கு வேத காலத் தில் ஆரியர் பயிரிடுவோராக இருந்தனர். இருக்கு வேதத்தில் வாணிகத் தைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. வணிகராகிய பாணியர் பெருஞ் செல்வத் தைத் தொகுத்து வைத்திருந்தார்கள் என்றும், அவர்கள் ஆரியரின் ஒளியுடைய தேவரை வணங்காதும், இருடிகளுக்குத் தக்கணை கொடாது மிருந்தார்கள் என்றும் இருக்கு வேதம் கூறுகின்றது. பாணியர் (Panis) என்பார் தாசுக்களில் ஒரு பிரிவினரென்று எல்லா ஆராய்ச்சி யாளரும் கூறியுள்ளார்கள். ஆரியர் வருகைக்கு முன் இந்திய வாணிகம் ஓங்கியிருந்ததென்பதை எல்லா ஆராய்ச்சியாளரும் ஒப்புக்கொள்கின்ற னர். ஹேவிட் (G.F. Hewitt) என்னும் ஆசிரியர், ஆரியருக்கு முற்பட்ட திராவிடரின் நாகரிகத்தைப்பற்றி மிக நியாயமான முறையிற் கூறியுள் ளார். அவர் கூறியிருப்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. அது பின்வருமாறு: “அதிக வியாபாரப் பண்டங்களை இந்தியா வெளிநாட்டுக்கு அனுப்பும் படி செய்தவர்கள் ஆரியர் அல்லர் என்பதற்கேற்ற ஆதாரங்கள் பல காணப்படுகின்றன. திராவிடர், ஆரியர் வருகைக்கு முன்னரே உள்நாட்டு வெளிநாட்டு நாகரிகத்தை நாட்டியுள்ளார்கள். இவ் வகை வாணிகத்தை உயர்ந்த நாகரிகமுடைய மக்களே தொடங்கியிருக்க முடியும். மாபாரதத் தில் கூறப்பட்டுள்ளவை போன்ற பல பட்டினங்கள் இருந்தனவாதல் வேண்டும். வணிகர் உலோக வகைகள், காடுபடுபொருள்கள், விளை பொருள்கள் கைத்தொழிற் பண்டங்கள் முதலிய பண்டங்களில் வாணிகம் நடத்தினர். கொத்தரும், தச்சரும் இல்லாது பட்டினங்களைக் கட்டமுடியாது. நுண்ணிய மசிலின் ஆடைகளும், முரடான துணிகளும் அக் காலத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டன. இவைகளை நெய்யும் நெசவாளர் பட்டினங்களில் கூட்டமாக வாழ்ந்திருக்க வேண்டும். இரும்பினால் ஈட்டி, மரந் தறிக்கும் கோடரி, பயிரிடுவதற்குப் பயன்படும் மண் வெட்டி, கொழு, தச்சு வேலைக்குரிய ஆயுதங்கள் முதலியன செய்யப்பட்டன. பலவகை அணிகலன்களைச் செய்யும் பொற்கொல்லரும் நகரில் வாழ்ந்திருக்க வேண்டும். பலவகை அணி கலன்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டன. துணிகளுக்குச் சாய மூட்டுவோரும் அங்கு வாழ்ந்தனர். அவர்கள் தாவரப் பொருள்களி லிருந்து சாயம் பெறும் முறையை அறிந்திருந்தார்கள். பானை, சட்டி முதலிய மட்பாண்டங்களைச் செய்வோரும், பலவகைப் பண்டங்களைக் கொண்டு விற்கும் வணிகரும் இருந்தார்கள். இத் தொழில்களில் ஒன்றை யும் ஆரியர் ஏற்று நடத்தவில்லை. “உலோகங்களை அளிக்கும் சுரங்கங்கள் அயல் நாட்டு வாணி கரின் கவர்ச்சிக் குரியனவாயிருந்தன. உலோகங்களை அரித்தெடுக்கும் சுரங்க வேலை என்பது பூமிக்கு மேல் உள்ள கற்படைகளை மேலால் சுரண்டுவதன்று; நிலத்தைக் குடைந்து ஆழ அகழ்வது. இத் தொழிலுக்கு மிகுந்த திறமையும், அரித்தெடுக்கும் மண்ணோடு கலந்துள்ள உலோகத்தை மண்ணிலிருந்து பிரித்தெடுக்கும் அறிவும் வேண்டும்.” “பயிர்த் தொழில் வளர்ச்சியடையாதிருந்தால் பெருந்தொகை வணிகர், தொழிலாளர், சுரங்க வேலையாளர், காடுபடு பொருள்களைச் சேகரிப்போர் முதலியோர் இருக்க முடியாது. மிளகு, எண்ணெய், நெய் முதலியன வெளி நாடுகளுக்கு அனுப்பப்பட்டன.” “இருக்கு வேத காலத்தில் வீரர் தேர்களில் இருந்து போர் செய் தார்கள். தேர்கள் செய்வதன் முன் வண்டிகள் செய்ய மக்கள் அறிந்திருக்க வேண்டும். மிகப் பழைய சாதகக் கதைகளுள் இரண்டனுள் காசியி லிருந்து ஐந்நூறு வண்டிகள் வியாபாரப் பண்டங்களை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருந்தன என்று கூறப்பட்டுள்ளது. இன்னும் இவை போன்ற பல கதைகள் காணப்படுகின்றன. இக் கதைகள் எழுதுவதன் நீண்ட காலத்துக்கு முன், இவ் வகைப் போக்குவரத்துகள் இருந்தனவாதல் வேண்டும். ஆகவே ஆரியர் வருவதற்கு முன் இந்தியாவில் வாழ்ந்த திராவிடர் வாணிகராக இருந்தார்கள். இதனால் மொகஞ் சதரோ நாகரிகம் ஆரியருக்கு முற்பட்டதென்று துணியப்படுகின்றது. வேத கால ஆரியரின் சந்ததியார் அம் மக்களிடமிருந்து வாணிக முறைகளைப் பயின்றார்கள்.” சமயம் மொகஞ்சதரோச் சமயம் இருக்கு வேத காலத்தினும் பார்க்க வேத காலத்துக்கு அண்மையிலுள்ளது என்று சரூப் கூறுகின்றார். இதனை உறுதிப்படுத்துவதற்கு அவர் சிவனைப்பற்றி எடுத்துக் கொண்டார். சிவனைப்பற்றிய அடையாளங்கள் மொகஞ்சதரோவிற் காணப்படுகின்றன. இருக்கு வேத காலத்தில் சிவன் சிறு தெய்வம் எனக் காட்டிவிட்டு, அத் தெய்வம் எப்படிப் புராண காலம் வரையில் படிப்படி யாக பெரிய தெய்வமாக வளர்ச்சியடைந்துள்ளதெனக் காட்டுகின்றார். இருக்கு வேத காலத்தில் ஆரியர்களிடையே சிவ வழிபாடு இருந்த தென்று இன்றுவரையும் எந்த ஆராய்ச்சியாளராலும் காட்ட முடிய வில்லை. சிவன், ஒரு சிறு தெய்வமாகவும் இருக்கு வேதத்திற் கூறப்பட வில்லை. சிவா என்னும் சொல் உருத்திரனுக்கு அடையாக ஓரிடத்தில் மாத்திரம் வந்துள்ளது. இது உருத்திரனும் சிவனும் ஒன்று என்பதற்குச் சான்றாகாது. உருத்திரன் மங்கலத்தினாலும் அருளினாலும் சிவன் என்றே பொருள்படுகின்றது. இருக்கு வேதத்தின் பத்தாம் மண்டலத்தில் திராவிடரின் ஆண் எனப்பட்ட சிவனே குறிக்கப்பட்டுள்ளது. பிற்காலத் தில் சிவன் மூர்க்க குணமுடையவராகவும் சில வேளைகளில் சாந்த முடையவராகவும் கூறப்பட்டுள்ளார். சிவனுக்குரிய முத்தொழிலும் மகேசுரமூர்த்திக்குரியதாகச் சொல்லப்பட்டுள்ளது. இருக்கு வேதத்தில் இதற்கு இணை காண முடியவில்லை. மொகஞ்சதரோவிற் காணப்பட்ட சின்னங்கள் பிராமண காலத்தனவென்று தோன்றவில்லை. பிராமண காலத்தில் ஆரியச் சார்பான சிவமதம் வளர்ச்சியடைந்திருந்தது. அங்குக் காணப்பட்டவை ஆரியருக்கு முன் அங்கு வாழ்ந்தவர்கள் ஆரியரல்லர் என்பதைக் காட்டுவன. அங்குக் காணப்பட்ட எவையேனும் ஆரியருக்கு உரியனவல்ல. அவைகளுட் சில பிராமண காலத்தனவாயின், அங்குக் காணப்படாத விட்டுணுவின் சங்கு சக்கரம் இந்திரன் என்பவைகளுக்கு விளக்கம் கூறுவதெப்படி? வேத கால இருடிகள் இலிங்க வணக்கத்தைக் கண்டித்திருக்கின்ற னர். இதனால் இருக்கு வேத காலத்தில் இலிங்க வணக்கம் ஆரம்பத்தில் இருந்த தென்று கூறமுடியாது. வேத கால இருடிகள் இலிங்க வணக்கத் தைக் கண்டித்தார்கள். அவர்களைச் சூழ்ந்து இலிங்க வணக்கம் இருந்தது. இல்லாவிடில் அவ்வாறு கண்டிக்க வேண்டியதில்லை. ஆகவே இலிங்க வணக்கம் வளர்ச்சியடைந்திருந்தது என்று காண நாம் பிராமண காலத்துக்குச் செல்ல வேண்டியதில்லை. அது ஆரியரைச் சூழ்ந்து வாழ்ந்த மக்களிடையே நன்கு பரவியிருந்தது. மொகஞ்சதரோ காலத்திய வணக்கத்தைக் கண்டித்தவர்கள் மொகஞ்சதரோ மக்களாயிருக்க முடியாது. ஆகவே மொகஞ்சதரோ மக்கள் ஆரியராக இருக்க முடியாது. அசுவ மேத யாகங்கள் இலிங்க சம்பந்தமானவை என்று கூற முடியாது. அவை இடக்கரானவை. இருக்கு வேத ஆரியர் எழுத்தைப் பற்றி அறியார்கள். ஆகவே மொகஞ்சதரோ நாகரிகம் பிற்காலத்தது என சரூப் கூறுகின்றார். பறவை, மீன், பூ, மனிதர், வீடுகள், கட்டில்கள், மலைகள் போன்றவைகளைக் குறிக்கும் எழுத்துகள் பிராமண காலத்தன என்று கூறமுடியாது. இருக்கு வேத காலத்திலும் எழுத்தெழுத அறிந்தவர்கள் இருந்தார்கள். ஆரியர் கூறும் பாணியர் (Panis) ஆரியரல்லாதவர். அவர்கள் காலத்தில் ‘கிராதியர்’ எனப்பட்டார்கள். ‘கிராதின்’ என்பது எழுத்தைக் குறிக்கும். இவர்கள் வாணிகத் தொடர்பான கணக்கை எழுதி வைத்திருந்தார்கள். மொகஞ்சதரோ கால முத்திரைகளையும் சூமரிற் காணப்பட்ட முத்திரைகளையும் நோக்கும்போது மொகஞ்சதரோ எழுத்துகள் இருக்கு வேதத்துக்கு முற்பட்டவை என நன்கு தோன்றும். தமிழர் வழங்கிய ஒருவகை எழுத்து, பட எழுத்து என, யாப்பருங்கல விருத்தியில் ஓரிடத்திற் காணப்படுகிறது. மொகஞ்சதரோ அரப்பா நாகரிகம் கி.மு. 3000 வரையிலுள்ளது. மித்தனி கிதைதி நாடுகளில் 1500 வரையில் ஆரியத் தெய்வங்கள் காணப் படுகின்றன என்று சரூப் கூறுகின்றார். கலியுகம். கி.மு. 12,100 வரையில் தொடங்குகின்ற தென்றும், அது உதிட்டிரன் இராச்சியம் இழந்தபின் உண்டானதென்றும், இருக்கு வேதம் உதிட்டிரன் இராச்சியம் இழப்ப தற்கு முற்பட்டதென்றும் ஆகவே இருக்கு வேதம் கி.மு. 12,100க்கு முற்பட்ட தென்றும் அவர் கூறியுள்ளார். டாக்டர். கீத் (Dr. Barriedale Keith) என்பார் பல வகையான நியாயங்களையும் வைத்து ஆராய்ச்சி செய்து இருக்கு வேதம் கி.மு. 1300க் கும் கி.மு. 1000க்கும் இடையிற் செய்யப்பட்டதென முடிவு கட்டியுள் ளார். வேத காலம் கி.மு. 2000 எனக் கூறுதல் தவறு என்றும் அவர் குறிப்பிடுகின்றார். இருக்கு வேத காலத்தில் மதில்களால் சூழப்பட்ட நகரங்ளைக் கட்டி வாழ்ந்தவர்கள் திராவிடரே. மயன் என்னும் திராவிடச் சிற்பியால் கட்டப்பட்ட உதிட்டிரனின் அரண்மனையிலேயே உயிர், மரணம் என்பவைகளைப்பற்றி ஆராயும் உபநிடத ஞானங்கள் தோன்றின. மொகஞ்சதரோ முத்திரையில் காணப்படும் சிவன் வடிவம்1 ஆரியரின் உருத்திரன், பிற்காலத்தில் சிவன் வடிவை அடைந் திருந்தார் என்பது தெளிவு. இலக்கிய காலத்தில் சொல்லப்படும் சிவனைப் பற்றிய சிறப்புகள், வேத காலத்தில் அறியப்படாதிருந்தன. உருத்திரன் வேதத்தில் புயற் கடவுளாகக் காணப்படுகின்றார். பிற்காலத் தில் சிவனுக்குக் கூறப்படும் சிறப்புகள் ஒன்றும் உருத்திரனுக்குக் கூறப்பட் டிருக்கவில்லை. சிவனின் ஆதிகால வடிவை நாம் கி.மு. 3000இல் காண்கின்றோம். மொகஞ்சதரோ காலம் கி.மு. 3000 என்பதைச் செற்ரன் லாயிட் என்பார் தெல் அஸ்மார் (Tell asmar) என்னும் இடத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மொகஞ்சதரோ முத்திரையை ஒத்த ஒரு முத்திரையில், இந்திய யானை, காண்டாமிருகம், முதலை முதலியவை பொறிக்கப்பட் டிருந்தமை கொண்டு நன்கு துணிந்துள்ளார். பழைய ஹங்கேரிய எழுத்தும் பிராமியும்2 பழைய துருக்கி ஹங்கேரிய எழுத்துகளுக்கும் பிராமி எழுத்து களுக்கும் தொடர்பு இருக்கலாம் எனக் கருதியமை, இயலாதது போல் தொடக்கத்தில் தோன்றலாம்; ஆனால் தொடர்பு காணுதல் கடினமா யிருக்கவில்லை. பேராசிரியர் நேமெத் (Professor Nemeth) என்பார், துருக்கித்தானம், மத்திய ஆசியா, மங்கோலியா முதலிய இடங்களில் இவ் வெழுத்தொலிகள் காணப்படுகின்றன என்று கூறியுள்ளார். அக் காலத் தில் மத்திய ஆசியாவின் பெரும் பகுதி இந்திய நாகரிகச் சார்பு பெற் றிருந்ததென்றும், துருக்கித்தானம் மத்திய ஆசியா முதலிய இடங்களின் பகுதிகள் புத்த மதத்தைத் தழுவி யிருந்தன வென்றும் நாம் எடுத்துக் காட்டுகின்றோம். அண்மையில் அவ் விடங்களில் கரோஸ்தி, பிராமி எழுத்துகளில் வரையப்பட்ட கையெழுத்துச் சுவடிகள் பல கண்டு பிடிக்கப்பட்டன. அவைகளில் மிகப் பிற்காலத்தில் வழங்கிய பிராமி எழுத்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மத்திய ஆசியாவில் கி.பி. 9ஆம், 10ஆம் நூற்றாண்டு வரையில், பிராமி எழுத்துகள் வழங்கின என்று நாம் தீர்மானமாகக் கூறலாம். ஆசிய நாகரிக ஒற்றுமை மேற்கே, டான்யூப் நதிவரையில் இருந்ததென நம்புவதற்குத் தக்க காரணங்கள் உண்டு. சிவன் ஆரியருக்கு முற்பட்ட கடவுள்3 யோகத்தைப் பற்றிய சாதனையும், கருத்தும் முற்கால பிற்கால வேத மதத்துக்குப் புறம்பானவை. சண்டா (Chanda) என்பார் யோகத் தைப் பற்றிய கருத்துகளைச் சிந்துவெளி மக்கள் அறிந்திருந்தார்க ளென்பதை, அங்குக் கிடைத்த முத்திரையிற் பொறிக்கப்பட்டுள்ள கடவுள் வடிவத்தைக் கொண்டு தெள்ளிதில் அறியலாம் எனக் கூறி யுள்ளார். அக் கால மக்கள் தம் கடவுளுக்கு யோகி ஒருவரின் வடிவைக் கொடுத்ததோடு அவருக்குத் தவத்தையும் உரிமையாக்கினார்கள். கடவுள் படைத்தலாகிய தொழிலைப் பெறுவதற்குத் தவம் செய்யவேண்டுமென அவர்கள் நம்பியிருக்கலாம். மனிதன் தன்னளவில் கடவுளைப் பற்றியும் நினைக்கலானான். கடவுளர் தவஞ் செய்தலால் உயர்நிலை அடைந்தனர் என, அவன் நினைத்தான். இக் கருத்தினாலேயே இந்திய மக்கள் கடவுளை யோகியின் வடிவில் வழிபடலானார்கள். சாங்கியத்துக்கும் யோகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. யோகத்தைப் பற்றிய தத்துவக் கருத்து, கடவுள் கொள்கையோடு, சாங்கியக் கருத்துகளையும் ஏற்றுக் கொள்வதாயுள்ளது. யோகத்தைப்போலச் சாங்கியமும் வேத சம்பந்தமில்லாதது என்று கருதப்படுகின்றது. யோகத்தில், ஆரியரல்லாத மக்களின் கருத்துகள் உள்ளன என்று நெடுங்காலம் சந்தேகிக்கப்பட்டது. ஆரியருடைய கருத்துகள் எல்லாம் மேலானவை; அல்லாதன இழிந் தவை என்னும் தவறான கருத்தினால் இம் மேலான கருத்துகள் ஆரிய ரிடமிருந்தன்றி வரமுடியாது என மக்கள் நம்புவாராயினர்; ஆனால் அக் கருத்துகளில் ஆரியச் சார்பு இருப்பதற்குச் சான்று கிடைக்கவில்லை. மொகஞ்சதரோவில் இலிங்க வணக்கம் இருந்த தென்பதற்குத் தனிப் பட்ட சான்றுகள் உண்டு. அங்கு அகழ்ந்து எடுக்கப்பட்ட பல இலிங்கங் களைக் கொண்டு இருக்கு வேத சம்கிதையில் ‘சிசினதேவர்’ எனக் குறிப் பிட்டுள்ளோர் ஆரியரின் பகைவரையே எனத் தெரிகின்றது. ஈஸ்டர் தீவுகளில் மொகஞ்சதரோ எழுத்துகள்1 பசிபிக் கடலிலுள்ள ஈஸ்டர் தீவுகளில் மொகஞ்சதரோ முத்திரை களிற் காணப்பட்டன போன்ற எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவைகளைக் குறித்த விளக்கம் வருமாறு: ஜி.ஆர். ஹண்டரின், “அரப்பா மொகஞ்சதரோ எழுத்துகளும், அவைகளுக்கும் - மற்றைய எழுத்துகளுக்கும் உள்ள தொடர்பு” என்னும் நூலுக்கு எழுதிய முன்னுரையில் சிந்து, ஈஸ்டர் தீவு எழுத்துகளுக்குள்ள ஒற்றுமைகளைப் பற்றிச் சந்தேகிக்க வேண்டியதில்லை எனப் பேரா சிரியர் இலாங்டன் என்பார் கூறியுள்ளார். எப்படி இவ் விந்திய எழுத்துகள் மிகத் தொலைவிலுள்ள ஈஸ்டர் தீவுக்குச் சென்றனவென்று எவராலும் கூற முடியாது. மரக்கட்டைகளில் பொறிக்கப்பட்டிருக்கின்ற ஈஸ்டர் தீவு எழுத்துகளின் காலம் அறியமுடியவில்லை. சிந்துவெளியிற் காணப்பட்டவைகளை ஒத்த எழுத்துகள் சூமர், சூசா தைகிரஸ் ஆற்றை அடுத்த இடங்கள் என்பவைகளிற் காணப்பட்டன. “பொலினீசிய ஆராய்ச்சிச் சங்கச் சார்பில் வெளிவரும் இதழில் சிந்துவெளி எழுத்துக ளோடு ஒற்றுமையுடையனவாகக் காணப்படும், ஈஸ்டர் தீவு எழுத்துகள் படமமைத்துக் காட்டப்பட்டுள்ளன. அவைகளை முன் பக்கத்திற் காண்க. இந்தியா நாகரிகத்தின் தொட்டில் - டாக்டர் பிறாங்போர்ட் (Dr. Frank fort) கூறுவது கிரேக்கப் பழங்கதைகளுக்கு அடிப்படை மெசபெத்தோமியாவிற் காணப்படுகின்றது. மெசபெத்தோமியாவில் இமிலுள்ள இடபத்தின் வடிவம் காணப்பட்டது. இந்திய இடபம் மெசபெத்தோமியரால் வழிபடப்பட்டது. எகிப்திய நாகரிகம் மெசபெத்தோமிய நாகரிகத்தி லிருந்து தொடங்கிற்று. மெசபொதோமிய நாகரிகம் இன்னொரு இடத்திலிருந்து வந்தது என்று புலப்படும். அது பாரசீக பீடபூமியாக லாம். அவ் விடத்தை நன்கு ஆராய்ந்து சென்றால் நாம் சிந்துவெளியை அடைகின்றோம். இந் நாகரிகத்திலிருந்தே மெசபெத்தேமிய நாகரிகமும், எகிப்திய நாகரிகமும் தோன்றின.2  உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு முன்னுரை கி.பி. ஏழாம் நூற்றாண்டுமுதல் பதினான்காம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் பெரிய மாறுதல்கள் உண்டாயின. அக் காலத்து தமிழர்க ளது சமயமும் மொழியும் பெரிதும் ஆரியச் சார்பு அடைந்தன. இதற்குக் காரணம் தமிழர் கோயில்களை மேற்பார்த்து வந்தவர்களாகிய பார்ப் பார் எனப்பட்ட தமிழ் மக்கள் பிராமண மதத்தைத் தழுவிச் சமக்கிருத மொழியைத் தமது சமயமொழி சாதி மொழியெனக் கொண்டமை யாகும். இது இன்று கிறித்துவ கத்தோலிக்கராக மாறிய தமிழர் இலத்தீன் மொழியைச் சமயமொழியாகக் கொள்வது போல்வது. பிற்காலத்தில் தமிழ் மக்கள் சிறிது சிறிதாக விழிப்படைந்தார்கள். பற்பலர் பொல்லாத ஆரியக் கொள்கைகளை எதிர்த்து வந்தனர். பேராசிரியர் சுந்தரம்பிள்ளை காலம்முதல் தமிழைப் பற்றியும் தமிழ் மொழியைப் பற்றியும் அறிவு நூல் முறையான ஆராய்ச்சி தலையெடுத்தது. அக் காலம்முதல் பல அறிஞர் தமிழர் வரலாற்றுண்மைகளை விளக்கி அரிய கட்டுரைகளை ஆங்கில மொழிகளில் எழுதித் திங்கள் வெளியீடுகளிலும், பிற வெளியீடுகளிலும் வெளியிட்டனர். அவைகளைத் தக்க முறையில் தமிழிற் றிருப்பிப் பொது மக்கள் படிப்பதற்கு எவருமுதவவில்லை. அவ்வாறு மறைந்து கிடக்கும் அறிஞரின் ஆராய்ச்சி உரைகளை யாம் இயன்றவரையில் தமிழ்ப்படுத்தி எமது நூல்கள் மூலம் வெளியிட்டுள்ளோம். உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு என்னும் இச் சிறிய நூல் இலங்கையில் சிறந்த கல்வியாளராயுள்ள திரு. க. பாலசிங்கம் அவர்கள் முப்பது ஆண்டுகளின் முன் ஆசிரியர் கலாசாலை மாணவர் முன்னிலையில் செய்த ஓர் சொற்பொழிவின் சுருக்கமாகும். இக் கட்டுரை இக் கால ஆராய்ச்சி முடிவுகளை மிகத் தழுவியிருத்தல் எவருக்கும் மகிழ்ச்சி அளிக்கத்தக்கது. 1-12-48 சென்னை ந.சி.கந்தையா உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு வரலாற்றின் பழமை இவ் வுலகின் வரலாறு, கிறித்து பிறப்பதற்கு 4004 ஆண்டுகளின் முன் செல்லவில்லை என மேல்நாட்டவர்கள் அண்மை வரையில் கருதினார்கள். வேறு சாதியினர் இப் பூமியின் தோற்றத்துக்கும் மனிதத் தோற்றத்துக்கும் அதிக பழமையைக் கூறினார்கள். எகிப்தியர் தமது பழமை பதின்மூவாயிரம் ஆண்டுகள் முதல் முப்பத்து மூவாயிரம் ஆண்டுகள் வரையில் எனக் கூறினர். மக்கள் ஒரு இலட்சம் ஆண்டுகளின் முன்னும் தாவர உயிர்களும் பிற உயிர்களும் ஒரு கோடி ஆண்டுகளின் முன்னும் இவ் வுலகில் தோன்றியிருக்கலாம் என இக் கால விஞ் ஞானிகள் கருதுகின்றனர். இவ் வுலகின் வயது இவ் வுலகின் பழமை அளவிடற்கரியது. பூமி ஒரு காலத்தில் அனல் வாயுக் கோளமாக இருந்து குளிர்ந்தது என்னும் கொள்கையை ஆதார மாகக் கொண்டு அதன் வயதை அளக்க முயற்சிகள் செய்யப்பட்டன. 1898இல் இரேடியம் (Radium) என்னும் உலோகம் கண்டுபிடிக்கப் பட்டது. அதன்பின் பூமியின் வயதைப்பற்றிக் கூறப்பட்ட முடிவுகளில் பல ஐயங்கள் எழுந்தன. ஒரு ‘கிராம்’ (Gramme) இரேடியம் ஒரு கிராம் தண்ணீரை ஒரு மணி நேரத்தில் கொதிக்கச் செய்யவல்லது. வரலாற்றுக் காலத்திலேயே பல நாடுகள் மழை யில்லாது காய்ந்து உயிர்கள் வாழ்வ தற்கு முடியாதனவாய் மாறியுள்ளன. இப்பொழுது பூமி வெப்பமேறி வருகின்றதா குளிர்ந்து வருகின்றதா என்னும் கேள்விகள் கேட்கப்படு கின்றன. பழைய வரலாறுகளைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது. பழைய நிலப்பரப்புகள் நீருள் மூழ்கிவிட்டன. அவைகளோடு எவ் வகை நாக ரிகங்கள் மறைந்து போயின என்று எவரால் கூறமுடியும்? பழைய நாகரிகங்கள் அமெரிக்க ஆராய்ச்சியாளர் மேற்கு ஆசியாவிலுள்ள நிப்பூரில் புதை பொருள் ஆராய்ச்சி நடத்தினர். அந் நகரின் நாகரிகம் கி.மு. 7,000 முதல் கி.மு. 5,000 அல்லது கி.மு. 6,000 வரையிலுமுள்ளது. எகிப்திய நாகரிகத்தைக் காட்டும் எழுத்து மூலமான சான்றுகள் காணப்படு கின்றன. எகிப்தில் கிடைத்துள்ள மிகப் பழைய புத்தகம் எகிப்திய பிரமிட்டுச் சமாதி கட்டுவதற்கு (கி.மு. 4,000) முற்பட்டது. அக் காலத்தில் தமது நாகரிகத்தின் பொற்காலம் கழிந்து விட்டதென எகிப்தியர் கருதினார்கள். தாம் பெரிய சாதியாராய் விளங்கியிருந்த பழமையை அறிய அவர்கள் தமது பழைமையை நோக்கினார்கள். கி.மு. 9,000க்கு முன் பாபிலோனியரும், கி.மு. 6,000க்கு முன் எகிப்தியரும் பெரிய கட்டிடங் களை எழுப்பித் தமது பெருமையை நாட்டினார்களென்றால் வரலாற் றுக் காலத்தின் தொடக்கத்தை அல்லது பழைய நாகரிகங்களைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? பாபிலோனிய நாகரிகம் இன்று அறியப்படும் நாகரிகங்களுள் பாபிலோனிய நாகரிகம் பழமையுடையது. பழைய பாபிலோனியர் சுமே ரியர் என்றும் அக்கேடியர் என்றும் அறியப்பட்டார்கள். அவர்களைச் சுமேரிய அக்கே டியர் எனக் குறிப்பிடுவோம். அக்கேடியரும் சுமேரியரும் ஒரே மொழியைச் சிறிது வேறுபாட்டுடன் வழங்கினார்கள். இவைகளுள் சுமேரிய முறையான பேச்சே பழமையானது. சுமேரியர் உயர்ந்த கல்வி யாளர். பாபிலோனியச் சக்கரவர்த்திகள் காலத்தில் சுமேரிய மொழி இறந்துவிட்டது; அது இலக்கிய மொழியாகப் பயிலப்பட்டது; அது சமயமொழியாக இருந்தது. சட்டங்களும் அம் மொழியில் எழுதப்பட் டிருந்தன. கால்வாய்கள் அமைத்தல் போன்ற அமைப்பு வேலைகள் சுமேரியரால் செய்யப்பட்டன. பின்பு செமித்திய மக்கள் அராபியாவி னின்றும் வந்து குடியேறினார்கள். கி.மு. 3,800 வரையில் முதலாம் சார்கன் பாபிலோனியச் சிற்றரசுகளை ஒன்றுபடுத்தினான். பாபிலோனைத் தலைநகராகக் கொண்ட அரச பரம்பரை கி.மு. 2,450இல் தொடங்கிற்று. அசீரியா பாபிலோனின் குடியேற்ற நாடாக இருந்தது. அதன் தலைநக ராகிய நினேவா கி.மு. 3,000-க்கு முன் அமைக்கப்பட்டது. கி.மு. 1450இல் அசீரியா விடுதலை பெற்றுத் தனிநாடாகப் பிரிந்து பாபிலோனியா, சிரியா, எகிப்து, யூதேயா முதலிய நாடுகளடங்கிய பேரரசாகத் திகழ்ந்தது. கி.பி. 606இல் அசீரியப் பேரரசு வீழ்ச்சியடைந்தது. அப்பொழுது பாபி லோனியா விடுதலை அடைந்தது. இரண்டாவது பாபிலோனியப் பேரரசு கி.மு. 538இல் முடிவடைந்தது. அப்பொழுது பாபிலோனியா பாரசீகத்தின் ஒருபகுதியாக அடங்கிற்று. அது மறுபடியும் அலக்சாந்த ரால் கி.மு. 324இல் வெற்றி கொள்ளப்பட்டது. பாபிலோனிய மன்னர் அமுரபி என்னும் பாபிலோனிய அரசன் காலத்தில் (கி.மு. 2342) ஆபிரகாம் சாலதியாவின் தலைநகராகிய ஊரை விட்டுக் கானான் தேசம் சென்று குடியேறினார். நபுச்சண்ட்நேசர் கி.மு. 586இல் யூதரை மறியற் படுத்தினான். பாபிலோனிய, அசீரிய நாகரிகங்கள் இணைந்து அசீரியப் பண்பாடாக மாறின. கி.மு. 1,000 வரையில் வாழ்ந்த சாலமன், புத்தகங்கள் எழுதுவதற்கு முடியவில்லை எனக் கூறியுள்ளான். அவன் கூறியது எபிரேய இலக்கியங்களைக் குறிக்குமாயின் அக் கூற்று பொருளற்ற தாகும். அசுர் பானிப்பால் என்னும் அசீரிய அரசனின் நூலகத்தில், ஒழுங்குபடுத்தி இலக்கமிட்டுத் தட்டுகளில், வரிசையாக அடுக்கி வைத்து அரசாங்க மேற்பார்வையாளனால் கவனிக்கப்பட்ட 10,000 நூல்களைப் பற்றி நாம் அறியும்போது அக் கூற்றின் உண்மை விளங்குகின்றது. இந் நூலகம் இலயாட் (Layard) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. பாபிலோனிய நூல்கள் களிமண் தட்டுகளில் எழுதிவைக்கப் பட்டன; பைபிரஸ் என்னும் நாணல் தாள்களும் பயன்படுத்தப்பட்டன. பலவகைப் பொருள்கள், பழங்கதைகள், பாடல்கள் அடங்கிய பல நூல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கில்கமஷ் வரலாறு, படைப்பு வரலாறுகளைக் கூறும் இதிகாசங்கள் கிடைத்தவைகளுள் முக்கியமுடை யன. பாபிலோனியர் அக்கரகணிதம் (Mathematics), வானஆராய்ச்சி, சோதிடம் என்பவைகளில் திறமையடைந்திருந்தனர். அவர்கள் சந்திர சூரிய கிரகணங்கள், வால் வெள்ளி, வெள்ளிக்கிரகம் செல்லும் பாதை, சூரிய மறுக்கள் முதலியவைகளைப் பற்றியும் பொருள்களை பெரிதாகக் காட்டும் ஆடிகளைப் (magnifying lenses) பற்றியும் அறிந்திருந்தார்கள். பாபிலோனியச் சட்டங்கள் சுமேரிய சட்டங்களைப் பார்த்துச் செய்யப் பட்டவை. அமுரபியின் சட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை குற்றம், திருமணம், திருமண நீக்கம், வேலையாட்களின் கூலி முதலியவை போன்ற பல பிரிவுகளைப் பற்றிக் கூறுகின்றன. எல்லம், மத்தியத்தரை நாடுகள், எகிப்து என்னுமிடங்களுக் கிடையில் அவர்கள் போக்குவரத்து அஞ்சல்(தபால்) ஒழுங்குகள் செய்திருந்தார்கள். மேற்கு ஆசிய நாடுகளில் பாபிலோனியப் பண்பாடு பரவியிருந்தமையால் எகிப்திய அரசாங்கக் கருமகாரரும் (Officials) மேற்கு ஆசிய மக்களும் பாபிலோனிய மொழி யைப் பயன்படுத்தினர். எகிப்து நிப்பூரில் புதைபொருள் ஆராய்ச்சி நடத்துவதன் முன் எகிப்தே மிகப் பழைய நாடாகக் கருதப்பட்டது. இப் பொழுது அது பாபிலோனி யாவுக்கு அடுத்த பழமை யுடைய நாடாகக் கொள்ளப்படுகின்றது. எகிப்தியர் ஆசிய சாதியினரதும் வடஆப்பிரிக்க சாதியினரதும் கலப்பினால் தோன்றினார்கள். மேன்ஸ் அரசன் எகிப்திய சிற்றரசர் நாடுகளை எல்லாம் ஒன்றுபடுத்தி கி.மு. 4,000ஆம் முதல் எகிப்திய அரச பரம்பரையைத் தொடங்கினார். கி.மு. 332இல் அலக்சாந்தர் படை எடுக்கின்ற அளவில் எகிப்தில் 31 அரச பரம்பரையினர் ஆட்சி புரிந் தார்கள். முதல் அரச பரம்பரைக்கு முன் பெடோயின் (Bedouin) அராபியர் எகிப்தின் மீது படை எடுத்தார்கள். கி.மு. 2,000-த்திலிருந்து சில நூற்றாண்டுகள் கிசோஸ் (Hysos) என்னும் செமித்திய சாதியினர் எகிப்தை ஆண்டார்கள். கி.மு. எட்டாவது நூற்றாண்டில் எதியோப்பியர் எகிப்தை வெற்றி கொண்டனர். அசீரியர் எதியோப்பியரை வெருட்டி யடித்தனர். கி.மு. 525இல் பாரசீகர் எகிப்தை வெற்றி கொண்டனர். கி.மு. 332இல் அலக்சாந்தர் எகிப்தை வெற்றி கொண்டார். அதன்பின் எகிப்து விடுதலை பெறவில்லை. எகிப்து பாபிலோனியா என்னும் இரு நாடு களின் நாகரிகங்களையும் ஒப்பிட்டுப் பார்த்த பேராசிரியர் சேயி (Professor Sayee) கூறியிருப்பது வருமாறு: “செமித்திய ரல்லாத மக்களின் நாகரிக எழுச்சியினாலேயே பாபிலோனிய நாகரிகம் தோன்றிற்று. ஆசிய நாட்டினின்று படை எடுத்துச் சென்ற மக்களே உயர்ந்த நாகரிகப் பண்புகளை எகிப்துக்குக் கொண்டு சென்றார்கள்.” 1 நாலாவது அரச பரம்பரைக் காலத்திலே (கி.மு. 3233) பெரிய பிரமிட்டுச் சமாதி கட்டப்பட்டது. அது 480 அடி உயரமுடையதாய் 13 ஏக்கர் நிலத்தில் நிற்கின்றது. இலங்கையிலே அனுராதபுரத்தில் வாலகம் வாகு கி.மு. 89இல் கட்டி எழுப்பிய 405 அடி உயரமுள்ள அபயகிரி தாகபா எட்டு ஏக்கர் நிலப்பரப்பில் நிற்கின்றது. இத் தாகபா இலண்டனி லுள்ள சென்போல்ஸ் தேவாலயத்திலும் பார்க்க 50 அடி அதிக உயர முடையது; பிரமிட்டுச் சமாதியிலும் பார்க்க 75 அடி தாழ்வானது. எகிப்தியரிடம் நல்ல இலக்கியங்கள் இருந்தன. கி.மு. 3,000 வரையில் எழுதப்பட்ட பைபிரஸ் நூல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பிரைசி பைபிரஸ் (Prisse Papyrus) என்னும் நூல்கள் மக்கள் நல்ல வகையில் வாழ வேண்டிய விதிகளைக் கூறுகின்றன. சமயம், மருந்து, கணக்கு, வான ஆராய்ச்சிப் பாடல்கள் அடங்கிய பல நூல்களும் கண்டுபிடிக்கப்பட்டன. படங்களோடு கூடிய “இறந்தவர்களின் நூல்” என்னும் புத்தகங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குருமாரும் கற்றோ ரும் தத்துவக் கொள்கையோடு கூடிய சமயத்தைக் கைக் கொண்டார்கள். வடிவம் அறியவொண்ணாததும், எல்லாவற்றையும் படைப்பதும், தன்னை ஒருவரும் படையாததுமாகிய ஒரு கடவுள் உண்டு என்று அவர்கள் சமயம் கூறுகின்றது. மரணத்தின்பின் உயிர் அழியாதிருப்பதை யும், அது பிறவி எடுப்பதையும் அவர்கள் நம்பினார்கள். அவர்களின் வழிபாட்டில் இலிங்கம் சம்பந்தப்பட்டிருந்தது. எகிப்தியர் பல தெய்வங் களை வழிபட்டார்கள். ஒரு கடவுளே பல வடிவுகளில் வழிபடப்படுவ தாகக் கற்றவர்கள் நம்பினார்கள். குருமார் மூன்று நாளுக்கு ஒரு முறை தலையையும் உடல் முழுமையும் மழித்துக்கொண்டார்கள். நாளில் நான்கு முறை நீராடினார்கள். கடவுளுக்கு உணவு, நீர், ஆடை, தைலம் முதலியவற்றைக் கொடுப்பதும் ஆடுவதும் பாடுவதுமே அவர்களுடைய வழிபாடு. எகிப்தில் விலங்குகளும் வழிபடப்பட்டனவாகலாம். இஸ்ரவேலரைக் கொடுமைப்படுத்திய இரண்டாம் இராம்சே நீலநதிக்கும் செங்கடலுக்கும் இடையில் போக்குவரத்து நடத்துவதற்கு சூயஸ் கால்வாயை வெட்டினான். சீனா இப்பொழுது உள்ளவைகளில் சீன இராச்சியமே மிகப் பழமை யுடையது. கி.மு. 2852இல் வாழ்ந்த வு கி. (fu-hi) சீனரின் முதல் அரச னாவன். அவனுக்கு முன் மக்களுக்குத் தமது தாய்மாரையன்றித் தந்தை மாரைத் தெரியாதென்றும் அவர்களுக்கு உணவைச் சமைக்கத் தெரியா தென்றும் கூறப்பட்டுள்ளன. அவன் மக்கள் திருமணம் செய்வதாகிய ஒழுங்கை நாட்டி அவர்களை வேட்டையாட, மீன் பிடிக்க, பயிர் செய்ய, இசைக் கருவிகளைப் பயன்படுத்தப் பழக்கினான். இதனால் எழுதும் முறை வெளியிலிருந்து வந்ததெனத் தெரிகிறது. கடவுள் தன்மையுள்ள பாம்பு, மஞ்சள் ஆற்றினின்றும் தோன்றி, வூகி அரசனுக்கு ஒரு சுருளைக் கொடுத்ததென்றும், அதில் கோடுகள் காணப்பட்டன என்றும், அதன்பின் வூகி சீன எழுத்துகளைச் செய்தா னென்றும் கூறப்பட்டுள்ளன. குஆங்தி (Huang Ti கி.மு. 2697) காலத்தில் மரம் உலோகம் களி மண்ணாலான வீட்டுத் தட்டுமுட்டுகள், மரக்கலங்கள், வண்டிகள் செய்யப்பட்டன. நாணயங்களும் பயன்படுத்தப்பட்டன. குஆங்தி என்பவன் எல்லம் முதல் சீனம் வரையில் பயணம் செய்த ஒரு கூட்டத் தாரின் தலைவனாகிய நக்குந்தி (Nakunte) எனப்படுபவனேயாவன் என்று கூறப்படுகிறது. எல்லம் இப்பொழுது மற்றைய பழைய சாதியார்களைப் பற்றியும் சுருக்க மாக ஆராய்வோம். எல்லம் பாபிலோனுக்குக் கிழக்கே உள்ளது. இது சுமேரிய அக்கேடிய காலம் முதல் பாபிலோனிய விழுகைக் காலம் வரை யில் இருந்தது. இது அடிக்கடி பாபிலோனோடு போரிட்டுக் கொண் டிருந்தது. எல்லம் நாகரிகம் பாபிலோனிய அல்லது அசீரிய நாகரிகத் தைப்போல் உயர்வடைந்திருந்தது. பினீசியர் இன்னொரு பழைய சாதியினர் பினீசியர். இவர்களின் செழிப் புடையவும் வாணிக முதன்மையடையவும் காலம் கி.மு. 13ஆம் நூற்றாண் டளவில் அவர்கள் அக் காலத்து அறியப்பட்ட எல்லா நாடுகளிலும் காணப்பட்டார்கள். அவர்களின் பட்டினங்களாகிய தயர், சிடோன் என்பன அழியாப் புகழ் பெற்றிருந்தன. காதேஜ் என்பது ஆப்பிரிக்காவி லிருந்த பினீசியக் குடியேற்ற நாடு. இங்குதான் அனிபால் (Hannibal) என்னும் மிகப் புகழ்பெற்ற வீரன் தோன்றினான். இவன் உலக அதிகாரத் தைக் கைப்பற்றுவதற்கு முயன்று கொண்டிருந்தான். உரோமர் கடும் போர் செய்து இவனைத் தோற்கடித்தார்கள். எபிரேயர் எபிரேய நாகரிகம் கி.மு. 1,200 முதல் தொடங்குகிறது. இது இஸ்ர வேலர் எகிப்திலிருந்து பயணப்பட்டதற்குச் சிறிது பிந்திய காலம். கி.மு. 8ஆம் நூற்றாண்டில் பாலத்தீனம் அசீரிய மாகாணமாக மாறிற்று. அசீரி யாவின் விழுகைக்குப்பின் அது பாபிலோன் அரசனாகிய நெபுச்சட் நேசருக்கு (கி.மு. 586) உட்பட்டிருந்தது. கிரேக்கர் கிரேக்க நாகரிகம் தோன்றுவதற்கு ஏதுவாயிருந்த மைசீனிய (Myceanean) நாகரிகம் கி.மு. 13ஆம் நூற்றாண்டளவில் தொடங்குகின்றது. கிரேக்க நாடுகளாயிருந்த சின்ன ஆசியாவும் ஐசியன் கடலும் பாரசீகரால் கி.மு. 6ஆம் நூற்றாண்டில் வெற்றி கொள்ளப்பட்டன. அடுத்த ஆண்டில் கிரேக்கர் பாரசீக ஆட்சியைக் கவிழ்த்துவிட்டனர். பாரசீகம், சிரியா, பாபிலோனியா, எகிப்து, இந்தியா முதலிய நாடுகளை அலக்சாந்தர் (கி.மு. 384 - 322) வெற்றி கொண்டார். கிரீசு 146இல் உரோமரின் நாடாக மாறிற்று. கிரீத்தியர் (Cretans) சின்ன ஆசியாவினின்றும் வந்த கிரீத்திய நாகரிகம் எகிப்திய பன்னிரண்டாவது அரச பரம்பரைக் காலத்தில் உயர்நிலை அடைந் திருந்தது. கிரேக்க மக்கள் கட்டிடம் அமைத்தல், களிமண், வெண்கலம் முதலியவைகளில் உருவங்கள் அமைத்தல், ஓவியம் வரைதல் என்பவை களில் திறமை அடைந்திருந்தனர். திராய் (Troy) நகரின் வீழ்ச்சி கி.மு. 1,783 வரையில். ஓமர் தமது காவியங்ளை கி.மு. 850 வரையில் செய்தார். பாரசீகர் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் பாரசீகப் பேரரசு தொடங்கிற்று. சைரஸ் என்னும் பாரசீகப் பேரரசன் லிதியா, அசீரியா, பாபிலோனியா முதலிய நாடுகளையும் சின்ன ஆசியாவிலும் அயலிலுள்ள கிரேக்கப் பட்டினங்களையும் வெற்றி கொண்டான் (கி.மு. 538). இது காரணமாக எகிப்து, மசிடோனியா, திராய் முதலிய நாடுகள் பாரசீக ஆட்சிக்கு உள்ளாயின. இவ் வாட்சி அலக்சாந்தரின் வெற்றியோடு (கி.மு. 331) முடிவடைந்தது. அற்ப ஆயுளுள்ள இவ் விராச்சியத்தைப் பற்றி, அது கிரேக்கரோடு நடத்திய போர்களைக் கொண்டு அறியவருகின்றது. பாரசீகரின் நாகரிகம் பெரிதும் எல்லம் பாபிலோனியச் சார்புடையது. உரோமர் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் உரோம் முதன்மை எய்திற்று. காதேஜ் நகரின் அழிவுக்குப் பின்பே உலகத்தை ஆளுதற்கு உரோமர் திமிறிக் கொண்டிருந்தார்கள். இலங்கையும் இந்தியாவும் இந்தியாவும் இலங்கையும் வரலாற்றுக் காலத்திற்கு முன்தொட்டு ஒன்றோடு ஒன்று தொடர்பு பெற்றிருந்தன. கிறித்துவ ஆண்டு தொடங்கு வதன் முன் இலங்கையின் முக்கிய நிகழ்ச்சி விசயன் 543ஆம் ஆண்டு அங்கு வந்து இறங்கியது. விசயன் வந்து இறங்கிய இடம் இலங்கையின் வடகரை என முதலியார் இராசநாயகமவர்கள் பற்பல ஏதுக்கள் காட்டித் தனது “பூர்வீக யாழ்ப்பாணம்” என்னும் நூலில் எழுதியுள்ளார். விசயன், மதுரையை ஆண்ட பாண்டிய அரசன் புதல்வியை மணந்தான். பாண்டிய குமாரியுடன் 700 உயர் குடும்பப் பெண்களும், 18 அரசாங்க கருமகாரரும், அடிமைகளும் 75 பணியாளரும் வந்தார்கள். இயக்கரும் நாகரும் விசயன் இலங்கைக்கு வந்தபோது இலங்கையில் இயக்கர், நாகர் என்னும் இரு குலத்தினர் வாழ்ந்தார்கள். நாகர் வடக்கிலும் மேற்கிலும் வாழ்ந்தார்கள். அவர்களுக்குத் தனி அரசன் இருந்தான். இயக்கர் இலங்கையின் தென்பகுதியில் வாழ்ந்தார்கள். விசயன் முதலில் இயக்க இராசகுமாரியை மணந்திருந்தான். இயக்கர் என்பது இராக்கதர் என்பதன் மாறுபட்ட உச்சரிப்பு ஆகலாம். இராமாயணம் இராக்கதருக் கும் இராமருக்கும் இடையில் நிகழ்ந்த போரைப்பற்றிக் கூறுகின்றது. இராசவளி என்னும் நூல் இப் போர் கி.மு. 2370இல் நிகழ்ந்ததெனக் கூறுகின்றது. இந்துக்களின் புராணங்கள் கந்தக் கடவுளுக்கும் இலங்கை வேந்தனான சூரனுக்குமிடையில் நேர்ந்த போரைப் பற்றிக் கூறுகின்றன. ஆரியர் இப்பொழுது ஆரியரின் வரலாற்றைப் பற்றி ஒரு சிறிது ஆராய்வோம். இச் சாதியாரின் ஆதி உறைவிடம் மத்திய ஆசியா, லிதுவேனியா, ஸ்காந்தினேவியா, காக்கேசியா அல்லது ஊரல் மலைப் பக்கங்கள் ஆகலாம். இவர்களில் ஒரு கூட்டத்தினர் சிந்துவுக்கும் பாரசீகக் குடாவுக்கு மிடையில் சென்று தங்கினர். வேத ஆரியரும் ஈரானியரும் (பாரசீகர்) இரண்டாகப் பிரிந்த சாதியினர். இப்பொழுது அவர்களின் தொடர்பு வெளிப்படையாகத் தோன்றாதபடி மறைந்துவிட்டது. பாரசீக ரின் பழைய சென்ட் மொழிக்கும் இருக்கு வேதப் பாடல்கள் செய்யப் பட்ட மொழிக்கும் ஒற்றுமையுண்டு. இந்து ஐரோப்பிய மக்களுள் இவ் விரு பிரிவினருமே தம்மை ஆரியர் என வழங்கினர். இப் பெயர் மாக்ஸ் மூலராலும் மற்றைய கீழ்நாட்டு வரலாறுகளை ஆராய்வோராலும் ஏனைய கூட்டத்தினருக்கும் இட்டு வழங்கப்பட்டது. இப்பொழுது இப் பெயர் இந்தியரையும் பாரசீகரையுமே குறிக்கின்றது. இச் சாதியாரின் ஒரு கூட்டத்தினர் பஞ்சாப்பை வடமேற்குக் கணவாய்கள் வழியாக வந்தடைந் தனர். இவர்கள் இந்தியாவை வந்தடைந்தது கி.மு 2000க்கும் கி.மு. 1400க்கு மிடையிலென ஆர்.சி. தத்தர் இந்தியாவின் பழைய நாகரிகம் என்னும் நூலிற் குறிப்பிட்டுள்ளார். ஆரிய மக்கள் இந்தியாவை அடைந்த போது இந்தியா முழுமையும் பரவி வாழ்ந்தோர் திராவிட மக்களேயாவர்.1 ஆரியர் குடியேறிய இடங்கள் பாரதப் போர் கி.மு. 1250 வரையில் நிகழ்ந்ததெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இக் காலக் கணக்குகள் ஏற்றனவாயிருக்கலாம். இக் காலத்தின் முன் வேறு எந்த ஆரிய சாதியினரும் உலகின் வேறெப் பகுதியிலும் உயர்ந்த நாகரிகம் அடைந்திருக்கவில்லை. மித்தானி (Mittani) ஆரியரைப் பற்றி முதன் முதல் பாபிலோனிய இலக்கியங்களில் அறிகின்றோம். கி.மு. 15ஆம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட பாபிலோ னியப் பட்டையங்களில் இவர்களைப் பற்றிக் காணப்படுகின்றது. இந்துக்குஷ் கணவாய்களைக் கடந்து ஆரியர் வந்தபோது அவர்கள் திராவிடரோடு மோதினர். திராவிடர் ஆரியருக்கு மிக்க பயம் விளைவித் தார்கள். அக் காரணத்தினால் அவர்களைப் பேய்கள், தீமை விளைக்கக் கூடிய மந்திரங்களறிந்தவர்கள், ஆகாயத்தில் பறக்கவும், வேண்டிய வடிவங்களை எடுக்கவும் வல்லவர்கள் என்றும் ஆரியர் நினைத்தனர். ஆகவே அவர்கள் தாம் எதிர்க்க நேரிட்ட மக்களைக் குறிக்க இராக்கதர் அசுரர் என்னும் பெயர்களை வழங்கினர். இப் பெயர்களுக்கு அவர்கள் மொழியில் பேய் என்ற பெயருண்டு. ஆரியரின் பழைய புத்தகங்கள் வரலாற்றுப் போக்கில் இருக்கு வேதம் தாவீதின் துதிகள் போன்றவை. திராவிடரை அழிக்கும்படி இந்திரன் கேட்கப்படுகிறான். திராவிடர் ஆட்டு மூக்கும் கறுப்புத் தோலுமுள்ள பைசாசுகள் (தாசர்) என்று கூறப்பட்டுள்ளார்கள். ஆரியர் பெரிய கூட்டமாக இந்தியாவுள் நுழையவில்லை. கி.மு. 1400-க்கு முன் ஆரியர் சட்லெஜ் (Sutlej) ஆற்றைக் கடக்கவில்லை. கி.மு. 1000 வரையில் இவர்களில் சில பிரிவினர் சட்லெஜ் ஆற்றைக் கடந்து கங்கைச் சமவெளி வரையிற் சென்று வாழ்ந்தார்கள். இந்தியரில் மூன்றில் இரண்டு பங்கினர் சமக்கிருதத் தொடர்பான மொழிகளைப் பேசுவதால் அம் மூன்றிலிரண்டு பங்கினரும் ஆரியர் எனக் கருதப்படுகின்றனர். உண்மை அவ்வாறன்று. ஒரு மொழியைப் பேசுவோர் அம் மொழியைத் தோற்றுவித்தவர்களாக மாட்டார்கள். இதற்கு எடுத்துக்காட்டு உரோமரின் வழித்தோன்றல்களல்லரான பல சாதியினர் உரோமன் மொழியைப் பேசுவதாகும். ஆரியரல்லாத பல மக்கள் சமக்கிருதத்தை வழங்குவதைப்பற்றி மனு நூல் குறிப்பிடுகின்றது. விந்திய மலைக்கு வடக்கேயுள்ள ஆரிய வர்த்தம் மாத்திரம் வாழ்வதற்கு ஏற்றதென்றும், பழமையைப் பின்பற்றுகின்ற பிராமணர் பஞ்சாப்புக்கும் இராசபுத்தானாவுக்கும் இடையிலுள்ள பிரம வர்த்தத்தில் வாழவேண்டு மென்றும் அது கூறுகின்றது. இந்திய குலத் தொடர்புகள் இந்திய மக்கள் இன ஆராய்ச்சித் தலைவராயிருந்த சர் அர்பேட் ரைஸ்லி (Sir Herbert Risly) என்பார் கலப்பற்ற ஆரியர் பஞ்சாப், இராச புத்தானா, காசுமீரம் முதலிய இடங்களில் வாழ்கின்றார்கள் என்றும் ஆனால் அவர்களிடை சிறிது அவுண சித்திய (Huns Seythian) இரத்தக் கலப்புக் காணப்படுகின்றதென்றும் கூறியுள்ளார். சுத்தமான திராவிட சாதியினர் கன்னியாகுமரிமுதல் கங்கைக் கரை வரையும், மேற்கே ஆக்ரா வரையும் காணப்படுகின்றனர். இப் பகுதி சென்னை மாவட்டம், ஹைதரா பாத்து, மைசூர், மத்திய மாகாணங்கள், மத்திய இந்தியப் பகுதிகள், சூடிய நாகபுரி, வங்காளத்தின் பெரும்பகுதி என்பவைகளை அடக்கிநிற்கும். கீழ் வங்காளத்திலும் ஒரிசாவிலும் மங்கோலியரும் திராவிடரும் கலந்த கலப்புச் சாதியினர் வாழ்கின்றனர். ஆக்கிரா அவுத் (oudh) பீகார் அடங்கிய ஐக்கிய மாகாணங்களில் திராவிட ஆரியக் கலப்பினால் தோன்றிய மக்கள் வாழ்கின்றனர். இந்தியா முழுமையிலும் பிராமணர் காணப்படு கின்றனர். ஆனால் அவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இப் பிரிப்பு ஏற்றதாயிருக்கலாம் அல்லது ஏலாததாயிருக்கலாம்; ஆனால் இந்திய மக்க ளில் ஐந்தில் நான்கு பகுதியினர் ஆரிய இரத்தக் கலப்பற்றவர்களேயாவர். 1872இல் அரசினர் எடுத்த மக்கள் எண்ணிக்கையின்படி இந்தியா வில் ஒருகோடி அறுபது இலட்சம் ஆரியரும், ஒருகோடி பத்துலட்சம் ஆரியத் திராவிடக் கலப்பு மக்களும் வாழ்ந்தார்கள். மீதி இந்தியர் ஆரியக் கலப்பில்லாதவர்களாவர். இந்தியாவிலுள்ள சாதித் தொடர்புகளைப் பற்றி அறியாவிடின் புராண இதிகாசங்களில் சொல்லப்படும் இந்திய வரலாறு மயக்கத்துக்கு இடமாகும். போர்க்குணமுள்ள திராவிடக் கூட்டத்தினர் ஆரியரைப் போர்க் குணமுள்ள பல கூட்டத்தினர் சூழ்ந்திருந் தார்கள். ஆரியர் தமது அதிகாரத்தை வலிமையால் நாட்ட முடியாதெனக் கண்டார்கள். ஆகவே அவர்கள் கிளைவும் (Clive) வாரன்ஹேஸ்டிங்கும் கையாண்ட முறையையே கையாண்டனர். அவர்கள் உள்நாட்டு அரச ரோடு அரசாங்க ஒப்பந்தங்கள் செய்தார்கள். ஆரியப் பாடகர்களும் குருமாரும் நாகர், அரசர், இராக்கதர்களுடைய நாடுகளுக்குச் சென் றார்கள். செல்லும்போது தம்மோடு அக்கினி சோம வழிபாடுகள், ஆரியப் பேச்சு, ஆரியப் பழக்கவழக்கங்களையும் கொண்டு சென்றார்கள். இருக்கு வேதத்தில் இதற்குப் போதிய சான்றுகளுண்டு. வேத காலத்திய இரண்டு பெரிய இருடிகள் வசிட்டரும் விசுவாமித்திரரும். திரிற்சு எனப் பட்ட தூய ஆரியருக்கு வசிட்டர் குருவானார். பூருவர், பரதர் எனப்பட் டவரும் அதிகாரம் படைத்தோரும், ஆரியரின் பகைவருமாகிய இரு திராவிடக் கூட்டத்தினருக்கு விசுவாமித்திரர் குருவானார்.1 இவ்விரு இருடிகளும் பிற்காலப் பிராமணக் கொள்கைகளுக்கு எடுத்துக்காட் டாவர். வசிட்டரைப் பின்பற்றினோர் ஆரியக் கொள்கைகள் அல்லாத வற்றைச் சிறிதும் ஏற்றுக்கொள்ளவில்லை. விசுவாமித்திரன் வமிசத்தவர் அவ்வா றிருக்கவில்லை. அவர்களின் முயற்சியினால் திராவிடர் ஆரிய மயமாக்கப்பட்டிருக்கலாம். இவர்களின் கொள்கையினால் திராவிடக் கொள்கைகளும் வழக்கங்களும் ஆரிய வணக்கத்துள் நுழைந்தன. நம் காலத்திலும் விசுவாமித்திரரின் கொள்கையை “பாதர் பெஸ்கி” இடத் திற் காண்கின்றோம். இந்தியத் தெய்வமாக அவர் கிறித்துவை நுழைக்க முயன்றார். தனது பெயரையும் வீரமாமுனிவரென மாற்றினார்; இந்து மதத் துறவி போல உடையணிந்தார். சைவக் கோயில்களில் நடைபெறும் கிரியை முறையால் கிறித்துவை வழிபட்டார். தமிழில் பல துதிகளையும் புராணங்களையும் செய்தார். போப்பு இவருக்கு உற்சாகம் அளிக்காமை யால் இவரது முயற்சி பலனளிக்கவில்லை. புராண இதிகாசங்களை இம் முறையில் பயில்வதால் பல உண்மைகள் விளங்கும். பாரத இராமாயணங்கள் பாரதம் இன்றைய நிலையை அடையுமுன் பல மாறுதல்கள் அடைந்திருத்தல் வேண்டும். இது தொடக்கத்தில் 8,000 சுலோகங்கள் உடையதா யிருந்த தென்றும் பின் சேர்க்கப்பட்ட சுலோகங்களோடு 21,000 சுலோகங்களாயின என்றும் அந் நூலே கூறுகின்றது. இப்பொழுது 100,000 சுலோகங்களுக்குமேல் காணப்படுகின்றன. பிற்காலப் பிராமணர் பல இடைச் செருகல்களைப் புகுத்தினார்கள். ஆகவே மாபாரதத்தைக் கொண்டு உண்மை வரலாற்றை அறிய முடியாது. இப்பொழுது நினைக் கப்படுவது போல் இராமாயணம் ஆரியர் தென்னிந்தியாவையும் இலங்கையையும் வெற்றிகொண்ட வரலாறன்று. இராமர் ஒருபோதும் தனது படையோடு இலங்கைக்கு வரவில்லை. இராவணனது தம்பி விபீடணனுடையவும், மைசூருக்கு அண்மையில் ஆட்சிபுரிந்த சுக்ரீவ னுடையவும் உதவியைப் பெற்று அவர் இராவணனை வென்று உடனே சீதையை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார். இராமாயணத்தின்படி இராமர் கறுப்பு நிறத்தினர். ஆகவே அவர் திராவிடராகலாம். தமிழில் இரா என்பது இருளைக் குறிக்கும். சமக் கிருதத்தில் இராமா என்பது கலப்பையைக் குறிக்கும். சீதை என்பது உழவுசாலையைக் குறிக்கும். ஆரியப் பாடகர் திராவிட அரசரின் அரண்மனைகளில் இருந்த ஆரியப் பாடகர் பிற்கால ஆரிய வீரர்களையும் பாடினர். திராவிடரின் உள்நாட்டு இலக் கியம், வரலாறு, பழங்கதைகள் படிப்படியாகச் சமக்கிருத இலக்கியங் களிற் புகுந்தன. இதனாலேயே திராவிடராகிய பாண்டவர் மாபாரதத்தில் ஆரியராகத் தோன்றுகின்றனர். பாண்டவரின் மூத்தவனாகிய உதிட்டிரன் இயமனின் புதல்வன். இயமன் பழைய தமிழ் அரச பரம்பரையை நிறுத்தியவனாவன். அருச்சுனன் இந்திரனின் புதல்வன். இந்திரனுடைய இராச்சியம் கோதாவரிக்கும் கிருட்டிணாவுக்கும் இடையிலுள்ளது. பகன் என்னும் பெரிய அசுரனை வெற்றி கொண்ட வீமன் வாயு புத்திரன். அனுமானும் அம் மரபைச் சேர்ந்தவன். வாயு பரம்பரையினர் மைசூரை ஆண்டவர். நகுல சகாதேவர் மலையாளத்தை ஆண்டவர். இவ் வைவரும் உடன்பிறந்தா ரல்லர்; நண்பர். சமக்கிருத மாபாரதத்திலும் ஐந்து அரசரும் அவரவர் பரம்பரைப் பெயர்களா லறியப்படுவர். மாபாரதப் போரில் பாண்டவரின் படைக்குப் பெருஞ் சோறு அளித்த உதியனைப் பற்றிய பழம் பாடலொன்று புறநானூற்றிற் காணப்படுகின்றது. இராமர் வாழ்ந்த காலம் எனக் கருதப்படுகின்ற அப்பொழுது தென்னிந்தியா இலங்கை என்னும் நாடுகளை ஆரியர் வெற்றி கொண் டார்கள் எனக்கொள்ள ஆராய்ச்சியாளரால் முடியவில்லை. தத்தருக்கு இவ் விடர்ப்பாடு தோன்றிற்று. அவர், மாபாரத்திற் போலவே இராமா யணத்திற் கூறப்படும் பெயர்கள் கற்பனைகள் எனச் சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறியுள்ளார். இருக்கு வேத காலம் முதல் சீதை உழவு சாலாகக் கொள்ளப்பட்டுத் தாய்த்தெய்வமாக வணங்கப்பட்டாள். பயிர்ச் செய்கை தெற்கு நோக்கிப் பரவியபோது சீதை தெற்கே கவர்ந்து செல்லப்பட்டாள் என்னும் பழங்கதையைத் தோற்றுவிப்பது கடின மன்று. சீதையும் இராமரும் திராவிடர் எனவும் அவர் நிகழ்ச்சிகள் ஆரியர் வருகைக்கு முற்பட்ட செயல்களெனவும் கொள்ளின், இராமா யணம் மாபாரதங்களைப் பற்றிய மயக்கங்கள் அகன்று விடும். ஆரியக் கவி ஒருவர் திராவிடக் கதை ஒன்றை எடுத்து இராமாயணக் கதையாகச் செய்திருக்கலாம். கந்தபுராணம் இலங்கையை ஆண்ட அசுர வேந்தனை வெற்றி கொண்ட வீரனின் வரலாறு. தமிழ்நாடு மங்கோலியர் வடகிழக்கு வழியாக இந்தியாவை அடைந்து அசாம், கூச் பீகார், நேபாளம் முதலிய இடங்களிற் குடியேறி கீழ்வங்காள மக்களோடு கலந்தார்கள். தெற்கிலிருந்து தொடங்கினால் திராவிடரின் வரலாற்றை அறிவது எளிது. தெற்கே இருந்த நாடுகள் சேர சோழ பாண்டியர் ஆட்சிக்குட்பட்ட நாடுகளாகும். இவைகளைப் பற்றிப் பழைய இதிகாசமாகிய இராமாயணம் கூறுகின்றது. பாண்டியர் தலைநக ரமாகிய கபாடபுரத்தின் வாயிற் கதவுகள் பொன்னாலும் இரத்தினக் கற்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன என்று இராமாயணம் கூறுகின்றது. பாண்டியநாடு பழைய சங்கங்களுக்கு இருப்பிட மென்று பழைய நூல்கள் கூறுகின்றன. தலைச்சங்கப் புலவர்களின் சில நூற் பெயர்கள் மாத்திரம் நமக்குக் கிடைத்துள்ளன. அச் சங்கம் கடல் கொண்ட மதுரையில் இருந்தது. இரண்டாவது சங்கம் கவாடபுரத்தி லிருந்தது. இவ் விடமும் கடலுள் மறைந்தது. இரண்டாஞ் சங்கத்து நூற்பெயர்கள் சில மாத்திரம் நமக்குக் கிடைத்துள்ளன. முதற் சங்கம் நாற்பத்தொன்பது புலவர் ஆட்சிக் காலத்தில் நடைபெற்றது. இக் கால ஆராய்ச்சி இந்தியாவின் பெரும்பகுதி கடலுள் மறைந்து போனதை வலியுறுத்துகின்றது. இந்தியாவின் நில அமைப்பைப் பற்றி எழுதிய ஒல்லந்து (Holland) என்பார் கூறியிருப்பது வருமாறு: “பம்பாய்த் தீவுக்குக் கீழே சேற்றுள் பன்னிரண்டடி ஆழத்தில் மரங்கள் படிந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. திருநெல்வேலிக் கரைப் பக்கத்திலும் நீருள் மூழ்கிப்போன காடு காணப்படுகின்றது.” பழைய இலக்கியங்கள் கூறுகின்றபடி திருநெல்வேலிக்குத் தெற்கேயே பூமி கடலுள் மறைந்தது; மறைந்துபோன தரையைப் பற்றிப் பழைய நூல்கள் கூறுகின்றன. அத் தரை கன்னியாகுமரிக்கும், பஃறுளிக்கும் மிடையே கிடந்தது. 19ஆம் நூற்றாண்டிலும் இந்தியாவின் தரைப் பரப்பில் பல மாறுதல்கள் உண்டாயின. ஒல்லந்து (Holland) கூறியிருப்பது வருமாறு:- அண்மையில் இந்தியாவின் தரை நீர்மட்டங்களில் பல மாறுதல்கள் உண்டாயின. கச்(cutch)சில் 1819இல் நேர்ந்த பூமி அதிர்ச்சியினால் ரானின் (Rann) ஒரு பகுதி நீருள் மறைந்தது. 1897இல் உண்டான பூமி அதிர்ச்சிக்குப்பின் அளந்து பார்க்கும்போது அசாம் மலைகளின் உயரத்திலும் சரிவாக நோக்கும் தூரத்திலும் பல மாறுதல் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட் டது. இவ் வுலகில் மக்கள் தோன்றி 4004 ஆண்டுகளாகின்றன என்னும் கொள்கை அடிபட்டுப் போகின்றது. ஆகவே பழைய பாடல்களையும், அரசரையும் புலவரையும் பற்றிய பழைய வரலாறுகளையும் நாம் பயனற் றனவென்று கொள்ளுவதற்குக் காரணமில்லை. இமயமலையும் கங்கைச் சமவெளிகளும் பிற்காலத்தில் கடலாழத்தினின்றும் கிளம்பியவை. இமய மலையில் 20,000 அடி வரையில் கடல் சம்பந்தப்பட்ட பொருள்கள் காணப்படுகின்றன. இந்திய நாட்டின் வேறெங்காவது இவ் வகைச் சின்னங்கள் காணப்படவில்லை. அமைப்பில் மிகப் பழமையுடைய தென்னிந்தியாவே மக்களின் ஆதியிடமாயிருத்தல் இயலாததன்று. கக்ச்லியும் வேறு சில மக்களின ஆராய்ச்சியாளரும், ஆஸ்திரேலிய மக்களும் திராவிடரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி னார்கள். மண்டை ஓட்டின் அளவு, மயிரின் தன்மை, முதலிய உடற்கூற்று ஆராய்ச்சிகளால் ஆஸ்திரேலியரும் திராவிடரும் ஒரே இனத்தவர் ஆகமாட்டார் என வில்லியம் டேயிலர் நவின்றுள்ளார். திராவிடர் இமயமலைக்கு அப்பாலிருந்து வந்தவர் என்னும் கொள்கை சிறிதும் பொருத்தமற்றதெனவும் அவ் வாசிரியரே குறிப்பிட்டுள்ளார். சமயம் இந்தியாவில் பழமை தொட்டு வாழ்ந்த மக்களின் நாகரிகம், தொழில், சமயமென்பவைகளை ஆராய்வோம். திராவிடர் சிவனை வணங்கினர். லில்லி (Lille) என்னும் மேல் நாட்டாசிரியர் தமது நூல் ஒன்றில் குறிப்பிட்டிருப்பது வருமாறு: “ஆரிய வணக்கத்துக்கு எதிராக இருந்தது சிவ வணக்கம் என்பதில் ஐயம் இல்லை. இலிங்கக் கடவுளை வழிபடுவோர் எங்கள் கிரியைகளை அணுகாதிருக்கட்டும் என இருக்கு வேதம் கூறுகின்றது. இருக்கு வேதம் பாம்பு வணக்கத்தையும் கண்டிக் கின்றது. இருக்கு வேதத்தில் பாம்பு அகி எனப்பட்டது. சிவனுக்கு இன்னொரு பெயர் பால் (Bal); அது பாலேசுவர என வழங்கும். சிவன் பினீசியரின் பால் என்றும் எகிப்தியரின் பால், சித் அல்லது தைபன் (Typhon) என்றும் கலோனல் தாட் (Colonel Tod) நம்பினார். பாட்டர்சன் (Paterson) எழுதியிருப்பது வருமாறு: “இவ்வுலகில் பெரும்பாலான மக்களிடையே சைவ சமயக் கொள்கைகள் பரவியிருந்தனவென்று தெரிகிறது. அவை மிகப் பழங்கால மக்களிடையே பரவியிருந்தன. அவர்கள் தாம் கைக்கொண்ட கிரியைகளின் பொருளை அறியாதிருந்த னர். இது பற்றியே பழைய கிரேக்கர் உரோமர்களிடையே கடவுட் சிலைகள், பழங்கதைகள் கலப்புக்களும் மாறுபாடுகளும் உண்டாயின. அயல்நாட்டு மக்கள் வெளித்தோற்றத்திலுள்ள கிரியைகளையும் குறி களையுமே பின்பற்ற முடியும். அவர்கள் கோவிலின் வாயிற்படியைக் கடந்து செல்ல விடப்பட மாட்டார்கள். சிவன் சூபிதர், ஒசிரிஸ்1, மூன்று கண்களுடைய சியஸ் (Zeus) ஆக மாறுபட்டார். சிவனின் பாரியாகிய பவானி2 யூனோ, வீனஸ், செபிலி ரோகியா, இரிஸ், செரிங், அன்னா பெரன்னா முதலிய தெய்வங்களாக மாறுத லடைந்தார். தெய்வங்கள் பலவானமைக்குக் காரணம் அயல்நாட்டு மக்கள் தாம் கையாண்ட பழங்கதைகளின் தொடக்கத்தையும் திருவடிவங்களின் கருத்துகளையும் அறிந்திராததினாலேயாகும். அவர்கள் தமது நாட்டுக்கும் பழக்கவழக்கங் களுக்கும் ஏற்றவாறு பழங்கதைகளைச் செய்தார்கள். ஆகவே அவர்கள் பழங்கதைகளில் ஒன்றோடு ஒன்று மாறுபடும் மயக்கங்கள் எழுந்தன.” திராவிட இந்தியாவினின்றும் சென்ற சிவ வழிபாடு பால், பெல் வழிபாடுகளாகப் பரவிற்று என்றும் லில்லி கருதினார். இவ் வழிபாட் டுக்கு எதிராக மொசேயும் யூத தீர்க்கதரிசிகளும் போராடினார்கள். இறுதியில் இவ் வழிபாடு ஐரோப்பாவினின்று பவுல் ஞானியரால் வெருட்டப்பட்டது. தியுதேனியரைப் (Teutons) போல இயற்கைகளை வழிபட்ட இந்திய ஆரியர் திராவிடரின் சமயக் கொள்கைகளைத் தடை செய்ய முடியவில்லை. திராவிடர் சமயக் கொள்கைகள் விசுவாமித்திரர் போன்ற இருடிகள் வழியாக அவர்கள் நூல்களில் புகுந்தன. இவ்வாறு புராண கால இந்துமதம் தொடங்கிற்று. ஆரியர் இந்தியாவை அடைவதன் முன் இந்திய யோகியர் மனிதனுக்கும் அவனைச் சூழ்ந்துள்ள உலகத்துக்குமுள்ள தொடர்பைப் பற்றியும் ஆராய்ந்தனர் என லில்லி என்பார் கூறி அதற்குப் பாரசீக இலக்கியத்தினின்று ஆதாரமுங் கhட்டியுள்ளார். 1இக் கருத்துப் பற்றியே மனத்தை ஒரு வழிப்படுத்துவதால் உயர்நிலை அடைந்த யோகியின் வடிவாக சிவன் வடிவம் கொள்ளப்பட்டது. ஆகவே அவர் பெரிய யோகி எனப்பட்டார். நீறு பூசிய உடலும், பின்னிய சடையும், உடையராய் மரத்தின் கீழிருந்து மனத்தை ஒரு வழிப்படுத்தியிருப்பவராக அவர் கொள்ளப்படுவர். பிற்காலத்திலும் திராவிடச் சூழல்களிலேயே தத்துவ ஆராய்ச்சி வளர்ச்சி யடைந்தது. இந்திய தத்துவ ஆராய்ச்சிகளுள் வளர்ச்சியடைந்த சித்தாந்தக் கொள்கை தெற்கிலேயே வளர்ச்சியடைந்தது. வேதாந்தக் கொள்கை களை விரித்து விளக்கியவர் மலையாளியாகிய சங்கராச்சாரியரே. அதன் தர்க்க முறையான விரிவுரை காஞ்சிபுரத்திலிருந்த மத்வரால் வெளியிடப் பட்டது. துவைதக் கொள்கையை விரித்து விளக்கியவராகிய மத்வர் தென் கன்னடத்தில் விளங்கியவர். கிருட்டினனும் திராவிடக் கடவுளாவர். பகவத் கீதை அவரால் செய்யப்பட்ட தெனப்படுகின்றது. இந்துமத வழிபாட்டுள் புகுந்துள்ள மற்றைய திராவிடக் கடவுளர் பலராமர், முருகன், காளி எனப்படுவர்.2 பத்தாயிரம் ஆண்டுகளின் முன், தமிழ், இலக்கிய மொழியா யிருந்ததென தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. ஆரியர் இந்தியாவை அடைந்த போது தமிழ் திருத்தமடைந்த மொழியாக விருந்தது. விஞ் ஞானம், தத்துவம் சம்பந்தமான பல சொற்களை தமிழ் சமக்கிருதத்திடம் இரவல் பெற்றதென்று சிலர் கருதுகின்றனர்; இது தவறு. அச் சொற்கள் மற்றைய ஆரிய மொழிகளில் எவ் வடிவிலும் காணப்படவில்லை. எனவே இச் செய்திவழி நாம் அறியக் கூடியது இச் சொற்களையும் அறிவிற்குரிய பல செய்திகளையும் ஆரிய மக்கள் இந்தியாவுக்கு வந்தபின் கற்றார்கள் என்பதே. அக்காலத்தில் அதிக பண்பாடடைந்திருந்த திராவிட சாதியா ரிடமிருந்து அச் சொற்களையும் கருத்துகளையும் அவர்கள் கற்றார்கள் எனக் கூறுவது பொருத்தமாகத் தோன்றவில்லையா?1 தமிழரிடத்தில் பழைய பாடங்கள் அடங்கிய நூல்கள் இருந்தபோதும் சமய சம்பந்த மான பழைய நூல்கள் காணப்படவில்லை. இவ் வகைப் பாடல்கள் பாடப்பட்ட காலத்தில் அவர்களிடத்தில் சமயத் தொடர்பான இலக்கி யங்கள் இருக்கவில்லை எனக் கூறுதல் பொருத்தமாகாது. அவ் விலக் கியங்களெல்லாம் இறந்தன. முதலாம், இரண்டாம் சங்கங்கள் இருந்த இடங்கள் கடலுள் மறைந்து போனதில் சந்தேகம் இருப்பினும் அந் நூல்கள் அமிழ்ந்து போயின என்பதில் சந்தேகம் எழுதற் கிடமில்லை. சமீப காலங்களில் தோன்றிய பல நூல்கள் மறைந்து போனமையே அச் சந்தேகத்தைத் தெளிவிப்பதாகும். சீசர் காலத்தில் வாழ்ந்த தயதோரஸ் (Diadoras) எழுதிய நாற்பது நூல்களில் பதினொரு நூல்கள் மாத்திரம் கிடைத்துள்ளன. லிவி (Livy) எழுதிய நூல்களுட் பல மறைந்து போயின. தசிதஸ் (Tacitus), தயேனிசஸ் (Dinoysius), காசியஸ் (Dion Cauuius), பொலிபியஸ் (Polybius) முதலியோரின் நூல்கள், பெரிதும் அழிந்துபோ யின. கிறித்துவ ஆண்டுக்குச் சிறிது முன் எழுதப்பட்ட நூல்களாகிய பெரோசசின் பாபிலோனிய வரலாறு, கிளேசியசால் எழுதப்பட்ட பாரசீக வரலாறு, மெகஸ்தீனசின் இந்திய வரலாறு, மெனிதோயிசின் எகிப்திய வரலாறு முதலியவைகளில் பிற ஆசிரியரால் மேற்கோளாகக் காட்டப்பட்ட சில பகுதிகளையன்றி மற்றவை மறைந்து போயின. ஆரியர் இந்தியாவை அடைந்தபோது, திராவிடர் சிறந்த நாகரிக முடையவர்களா யிருந்தார்களென்று இருக்கு வேதம் கூறுகின்றது1. திராவிடர் அரண் செய்யப்பட்ட நகரங்களில் வாழ்ந்தார்கள்; உலோகங் களில் செய்த அணிகலன்கள், திறமையான ஆயுதங்கள், ஆடு, மாடு முத லான திரண்ட செல்வம் உடையவர்களாகவும் மாயவித்தை யறிந்த வர்களாயு மிருந்தனர். இந்தோ ஆரியர் அலைந்து திரியும் மக்களா யிருந்தனர். முந்திய நாகரிகத்தைப் பற்றிய வரலாறு அவர்களுக்கு இல்லை. “பழங்குடிகளிடமிருந்தே ஆரியர் கல்லினாற் கட்டிடம் அமைக்க அறிந்தார்கள். அவர்கள் மற்றைய இந்து ஐரோப்பியரைப் போல மரத்தினால் அல்லது மரக் கம்புகளினால் கட்டிட மமைக்கவும் குகைகளில் வாழவும் அறிந்திருந்தனர்” எனப் பெரிய வரலாற்றாசிரியர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். பழைய திராவிடர் கடற்பயணம் செய்யும் சாதியினர். மலையாளக் கரைக்கும் பாபிலோனுக்குமிடையில் வாணிகம் நடந்ததென்பதற்கு அரிய சான்றுகள் உண்டு. சாலதியாவிலே கி.மு. 3000இல் அமைத்த கட்டிடமொன்றில் மலையாளத் தேக்க மர உத்திர மொன்று காணப்பட்டது. இந்தியாவிலிருந்து பாபிலோனுக்கு வேட்டை நாய்கள் அனுப்பப்பட்டன; இரத்தினக் கற்கள், துணிக்கு ஊட்டும் சாயங்களும் அனுப்பப்பட்டன. பாபிலோனியர் ஆடையைக் குறிக்க வழங்கிய பெயர் சிந்து. சிந்து என்பது சிந்து ஆறு. சிந்து ஆற்றின் முகத் துவாரத்தில் நாக சாதியாரின் பெரிய இராச்சியம் இருந்தது. நாகர் பாண்டி நாட்டில் வாழ்ந்த நாகர் அதிக மசிலின் துணிகளைப் பிற நாடுகளுக்கு அனுப்பினர். இது பிற்காலத்திலும் நடைபெற்றது. திராவிடர் மேற்கு ஆசியாவொடு வாணிகம் நடத்தியதன் பயனாகத் தமிழ்ச் சொற்கள் பல கிரேக்க எபிரேய மொழிகளில் சென்று வழங்கின. அவை, அரிசி, மிளகு, குரங்கு, மயில், தந்தம், சந்தனக்கட்டை, இஞ்சி, கறுவா முதலியவைகளைக் குறிக்கும் சொற்கள். இயக்கர் நாகர் இராக்கதர் அசுரர் எனக் குறிக்கப்பட்டோர் யார் என்பதைப்பற்றி இப்பொழுது ஆராய்வோம். இவர்கள் பழங்காலத்தில் இந்தியாவையும் இலங்கையையும் ஆண்ட கூட்டத்தினர். புராணங்கள் கூறும் பழைய வரலாற்றின்படி அசுரரின் முக்கிய இடம் இலங்கை. பின்பு இலங்கை இராக்கதரின் இருப்பிடமாயிருந்தது. இராக்கதரும் அசுரரும் வலிமை மிக்கவ ராயினும் நாகர் மிகத் திருந்திய மக்கள். சேர் ஹெர்பாட் ரைஸ்லி (Sir. Herbert Risely) கூறுவது வருமாறு: “தக்காணம் உலகில் மிகப் பழைய நிலஅமைப்புடையது. வரலாற்றுத் தொடக்கத்திலிருந்து அது திராவிடரின் உறைவிடமாக வுள்ளது. திராவிடரே இந்தியக் குலத்தினர் களுள் பழமையுடையோர்” வேர்கூசன் (Ferguson) என்பாரும் இக் கருத்தே யுடையர். திராவிடர் சுமேரியரை ஒத்த சாதியினர் என்பதற்கு ஆதாரமுண்டு. வடமேற்கு இந்தியத் திராவிடருக்கும் பாபிலோனியருக் கும் தொடர் பிருந்ததென்பது ஆச்சரியப்படத் தக்கதன்று. இரு சாதி யினருக்கும் பொதுவான பல தொடர்புகள் இருந்தன; இரு சாதியினரும் ஒரு குலத்தைச் சேர்ந்தவர்களுமாவர். மொழி ஆராய்ச்சி இதனை வலியுறுத்துகின்றது. 1திராவிட மொழிகளைப் போலவே சுமேரிய மொழியும் ஒட்டுச் சொற்களை யுடையது.2 மண்டை ஓடு சம்பந்தமான ஆராய்ச்சியும் இரு சாதியினரும் இனமுடையர் என்பதை வெளியிடு கின்றது. சுமேரியச் சொற்கள் பல தமிழ்ச் சொற்களாகவும் தமிழில் வழங்கும் அதே பொருளுடையனவாயுமுள்ளன. இந்தியாவிலும் இலங்கையிலும் ஊர் என முடியும் இடப்பெயர்கள் பல உண்டு. பாபி லோனியாவிலே நிப்பூர் ஊர் என்னும் இடப்பெயர்கள் இருந்தன. மனா என்பது சுமேரியத்தில் ஊரைக்குறிக்கும். தமிழிலும் அதற்கு அதே பொருள் உண்டு. மன்னன் என்னும் தமிழ்ச் சொல்லுக்குப் பொன்னை யுடையவன் என்பது பொருள். அசீரிய மன்னர் தமக்குப் பால் என்னும் பட்டப்பெயர் இட்டு வழங்கினர். பால் என்பதற்கு அரசன் அல்லது பாதுகாப்பவன் (பாலிப்பவன்) என்று பொருள். பாபிலோனியரின் இடியோடுகூடிய இருண்ட முகிற் கடவுளுக்கு இராமன் என்று பெயர். இது தமிழில் கறுப்பு மனிதன் எனப் பொருள்படும். அசீரியா அசூரின் நாடு. பழைய புராணங்கள் இலங்கை அசுரரின் முக்கிய இருப்பிடம் எனக் கூறுகின்றன. காலா என்பது அசீரிய பட்டினங் களிலொன்று. இலங்கையிலும் காலா என்னும் பட்டினமொன்று இருந்தது. இங்கிருந்து ஆசிய நாட்டுப் பண்டங்கள் பல மேற்கு நாடு களுக்கு ஏற்றுமதியாயின. புராண காலத்தில் இலங்கை இலம் அல்லது ஈழம் எனப்பட்டது. சுமேரிய நாகரிகமுடைய எல்லம் என்னும் நாட்டைப் பாபிலோனியாவின் எல்லையிற் காண்கின்றோம். பாபி லோனியாவில் பயன்படுத்தப்பட்டன போன்ற ஈமத்தாழிகள் தென்னிந்தி யாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் வரலாற்றுக்கு முற்பட்ட பழமை சென்னையில் நடத்திய புதைபொருள் ஆராய்ச்சியில் கிடைத்த பழம்பொருள்களைப் பார்த்தபின் வின்சென்ட் சிமித் என்னும் வரலாற்றாசிரியர் கூறியிருப்பது வருமாறு: “இப் பழம் பொருள்கள் பாபிலோனிலே பாக்தாத்துக்கு அண்மையில் கிடைத்த பொருள்களை ஒத்திருக்கின்றன. இவ் வுண்மை பழைய இந்திய பாபிலோனிய நாகரிகங் களைத் தொடர்புபடுத்துவதற்குக் காட்டப்படும் பல சான்றுகளில் ஒன்றாகும். இது மேற்கு ஆசிய இந்திய மக்களின் குல ஒற்றுமையை வற்புறுத்திக் கூறுவதற்கும் தூண்டுதலாக வுள்ளது.” இறந்தவர்களைத் தாழிகளில் இட்டுப் புதைக்கும் வழக்கம் இரு நாடுகளிலும் இருந்து வந்தது. திருநெல்வேலிப் பகுதியிலுள்ள பழைய இடுகாடு ஒன்று ரே (Rea) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. அது 114 ஏக்கர் நிலப்பரப்புக் கொண்டது. ஒரு ஏக்கரில் 1000 தாழிகள் வரையில் புதைக்கப்பட்டிருக்க லாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இறந்தவர்களை இவ் வகையாகப் புதைக்கும் வழக்கம் மற்றைய மக்களிடையே அறியப்பட்டிருக்கவில்லை. இரு நாட்டு மக்களின் சமயமும் ஒரேவகையாக விருந்தது. இந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்த திராவிடர் பாபிலோனியாவினின்று வந்தார் களா? எல்லா வகையான காரணங்களும் எதிரான முடிவையே தெரிவிக் கின்றன. சுமேரியர் எல்லத்தைத் தமது குலத்தவரின் தொட்டில் எனக் கருதினார்கள். சமக்கிருத புராணங்களின்படி பழைய இந்தியர் இளா (எல்ல) விருதத்தைத் தமது தாயகமாகக் கொண்டனர். விருதம் என்பதற்கு நாடு என்பது பொருள். எல்லம் எங்குள்ளது? எல்லம் பாபிலோனியா வின் அயலே யுள்ள நாடா? எல்லத்தைப்பற்றி விங்கர் (Wenker) எழுதிய வரலாற்றில், “செமித்தியர் (எல்லம் சுமேரியா என்னும்) முழு நாட்டுக்கும் எல்லம் எனப் பெயரிட்டு வழங்கினார்கள் என்றும் அன்ஷான் அல்லது சாம் என்பதே அதன் பெரும்பகுதிக்கு வழங்கிய உள்நாட்டுப் பெயர்” என்றும் காணப்படுகின்றது. செமித்திய காலத்திற்கு முற்பட்ட சுமேரிய காலத்தில் எல்லம் என்னும் பெயர் வழக்கில் இருக்கவில்லை. ஆகவே சுமேரியர் பாபிலோனிய எல்லத்தைத் தமது தாயகமாகக் குறிப்பிட் டிருக்க மாட்டார்கள். அந் நாடு சிறியதாயும் பாபிலோனுக்கு அண்மையி லுள்ளதாயும் இருந்தது. அது பாபிலோனிலிருந்து மலைத் தொடராலா வது கடலாலாவது பிரிக்கப்பட்டிருக்கவில்லை. அதற்குச் சிறிது தொலை வில் வாழ்ந்த சுமேரியர் அதனைப் புறம்பான நாடாகக் கொண்டு அதனைத் தமது தாயகமெனக் கூறினார்கள் என்பது பொருத்தமாகத் தோன்றவில்லை. இந்திய பாபிலோனிய எபிரேய பழங்கதைகள் பழைய வெள்ளப் பெருக்கு ஒன்றைப்பற்றிக் கூறுகின்றன. விவிலிய மறையிற் கூறப்படும் நோவா, பாபிலோனிய ஹாசி சதரா, இந்திய மனு அல்லது சத்தியவிரதன் என்போரும், அவருடன்கூட இருந்த சிலரும் அவ் வெள்ளப் பெருக்கி லிருந்து பிழைத்தனர். யான் படைத்த உயிருள்ளவைகளை எல்லாம் யானே அழிப்பேன் என்று ஜெகோவா நோவாவுக்குச் சொன்னார். இவ் வெள்ளப் பெருக்கு பழைய பெரிய பரந்த இடத்தை அழிவுபடுத்திய தெனக் கூறமுடியாது. இம் மறைவு நிலம் கடலுள் மறைந்தது போல்வ தால் உண்டாயிருக்கலாம். மனிதன் தோன்றிய பின் மேற்கு ஆசியாவின் எப் பகுதியாவது கடலுள் மறைந்துபோனமைக்குச் சான்று இல்லை. இலங்கை இந்தியப் பழங்கதைகள் மறைந்து போன நிலத்தைப்பற்றிக் கூறுகின்றன. மனிதனின் ஞாபகத்துக்கு எட்டாத ஒரு காலத்தில் இலங்கையும் இந்தியாவும் ஒன்று சேர்ந்திருந்தன. வலேஸ் (Wallace) கூறியிருப்பது வருமாறு: “ஐந்தாவது காலக் கூற்றில் (Tertiary Period - மனிதன் இப் பூமியில் தோன்று முன்) இலங்கையும் தென்னிந்தியாவும் வடக்கே பெரிய கடலை எல்லையாகப் பெற்றிருந்தன. இவை (இலங்கை யும் தென்னிந்தியாவும்) தெற்கேயிருந்த பெரிய பூகண்டத்தின் பகுதியாக விருக்கலாம்.” இலங்கை இந்தியாவினின்றும் பிரிந்திருந்த காலத்தும் தென்னிந்தியா பெரிய தீவாகவிருந்தது. இராமாயணத்திலும் மகாவம்சத் திலும் காணப்படும் பழங்கதைகளின்படி இலங்கையின் 11/12 பகுதிகள் கடலுள் மறைந்து போயின. இதனால் சத்தியவிரதன் என்னும் திராவிட மனு கடலுள் மறைந்துபோன நிலப்பரப்பின் ஒரு பகுதியினின்றும் மலை யத்தை அடைந்தான் என்பது ஏற்றதாகத் தெரிகின்றது. இப் பழங்கதை இந்தியர் இளாவிருதத்தினின்றும் வந்தார்கள் என்னும் பழங்கதையை விளக்குகின்றது. சுமேரியர் எல்லத்தினின்றும் சென்றார்கள் என்பதை யும் இது விளக்குகின்றது. இது பாபிலோனிய இந்திய வெள்ளப் பெருக்கைப்பற்றி விளக்குவதுமாகும். பாபிலோனியர் தமது நாகரிகம் கடலுக்கு அப்பால் இருந்து வந்ததென நம்பினார்கள் ஈஆ. சுமேரியரை நாகரிகப்படுத்திய தெய்வம். இக் கடவுளைப்பற்றி டாக்டர் சேஸ் (Dr. Sayce) எழுதியிருப்பது வருமாறு: “ஈஆ என்னும் கடவுள் நாளும் தனது இடமாகிய கடலினின்றும் எழுந்து மனிதனுக்கு விஞ்ஞானக் கலையையும், கைத்தொழிலையும், நாகரிகப் பழக்கங்களையும் கற்றுக்கொள்ள உதவினார். அவரே முதல் முதல் எழுதும் முறையை அறிவித்தார். ஈஆவின் பண்பு மிக்க இடமாகிய எருது நகர் ஒருபோது கடற்கரைப் பட்டினமாக இருந்தது. அது மற்றைய நாடுகளோடு வாணிப உறவு பூண்டிருந்தது. அந் நாடுகள் அதன் நாகரிகத்தை வளம்பெறச் செய்தன.” சுமேரிய பழங் கதைகளின்படி ஈஆ பாரசிகக் குடாக்கடலில் வாழ்ந்து அழகிய மரக்கலத்தில் உலகைச் சுற்றி அடிக்கடி பயணஞ் செய்தார். இப் பழங்கதையினால் சுமேரியரின் நாகரிகம் கடலுக்கு அப்புறத்திலிருந்து வந்ததெனக் கொள்ளக் கிடக்கின் றது. அவர்களின் ஆதியிடம் இலங்கையும் மலையாளமுமாக இருக்க லாம். அராபியரின் பழங்கதைகளின்படி மனிதனின் ஆதி உறைவிடம் இலங்கையாகும். ஏதேன் தோட்டத்தினின்றும் வெளியேற்றப்பட்டபின் ஆதித் தாய் தந்தையர் இலங்கைக்குச் சென்றார்கள். இப் பழங்கதை யினால் மேற்கு ஆசிய மக்கள் மேற்கு ஆசியாவைத் தமது ஆதி இருப்பிட மாகக் கொள்ளவில்லை எனத் தெரிகின்றது. இப்போதைய விஞ்ஞானிகளின் முடிவு எவ்வாறிருக்கின்றது? பேராசிரியர் ஹெக்கல் மறைந்து போன கண்ட பூகண்டமே மனிதரின் தொட்டில் எனக் கருதினார். டாக்டர் மாக்லீன் (Dr. Macleane) கூறுவது, “மக்களின் குல சம்பந்த மான ஆராய்ச்சியினால் வடக்கிலுள்ள மத்தியதரைச் சாதியினர் தென் னிந்தியாவினின்றும் சென்று உலகின் பல பாகங்களில் பரவினார்கள் என்று கூறுவதை மறுப்பதற்குக் காரணமில்லை”1 என்பதாகும். திராவிடக் குலத்தினர் வடக்கினின்றும் வரவில்லை. தெற்கினின் றுமே வந்தார்கள், தெற்கே இருந்த நாடு தென்தீவாகலாம்; இலங்கை அதன் பகுதியாக இருந்ததெனலாம். மூன்று உலகத்தாருக்கும் பயம் விளைவித்த திராவிட மக்களின் உறைவிடம் இலங்கை எனப் புராணங் களும் இதிகாசங்களும் கூறுகின்றன. திராவிடர் இந்தியா முழுமையிலும் பரவிப் பலுச்சிஸ்தானம் வரையில் சென்றார்கள். அங்கு திராவிட மொழியின் சிதைவாகிய திராவிடம் இன்றும் வழங்குகின்றது. இன்று வட இந்தியாவில் வாழும் சிறுசிறு கூட்டத்தினர் இன்றும் திரா விட மொழிகளைப் பேசுகின்றனர். தரை வழியாகவும் கடல் வழியாகவும் திராவிடர் பாபிலோனியா, அசீரியா, எல்லம் முதலிய மேற்கு ஆசிய நாடுகளுக்குச் சென்றார்கள். நிநூஸ் (Ninus) மக்களின் இராணியாகிய செமிரமிஸ் நிநேவாவை கி.மு. 3000-க்கு முன் அமைத்தாள் என்றும், உலகிலுள்ள மக்கள் எல்லாரி லும் பார்க்க இந்தியரே உயர்வுடையவர்களும் செல்வமுடையவர்களும் எனக் கேள்வியுற்ற அவள் அவர்களோடு போர் தொடுத்து முறியடிக் கப்பட்டா ளென்றும் பாபிலோனியப் பழங்கதை கூறுகின்றது. தமது நாகரிகம் ஒசிரிஸ் என்னும் கடவுளால் உண்டானதென எகிப்தியர் கூறு கிறார்கள். ஒசிரிஸ் கடவுள் இந்தியாவில் பல பட்டினங்களைக் கட்டிற்று என அவர்கள் பழங் கதைகள் கூறுகின்றன. அக் கடவுள் தான் வாழ்ந்த அடையாளங்களை அவ் விடங்களில் விட்டமையால் பிற்கால மக்கள் அக் கடவுளின் பிறப்பிடம் இந்தியா என நம்பினார்கள். பாபிலோனிய வரலாற்றின்படி நீரேவாரகா அமைக்கப்பட்ட காலத்தில் உலகிற் பெரிய சாதியினர் இந்தியாவில் வாழ்ந்தார்கள். இந்திய தெய்வமாகிய ஒசிரிஸ் எகிப்திய நாகரிகத்தை உண்டு பண்ணிற்று என இந்தியர் கூறினார்கள் என பழைய எகிப்திய வரலாறுகளிலிருந்து அறிகின்றோம். திராவிடர் வரலாற்று ஆராய்ச்சியினால் இந்தியர் எகிப்தியர் பாபி லோனியர் நாகரிகங்கள் ஒத்த பழமையுடையன எனத் தெரியவருகின்றது. தமிழர் தென்திசைத் தீவினின்று இந்திய நாட்டை அடைந்தவர்க ளாயின் இலங்கையின் நாகரிகம் இன்னும் பழமையுடையதாகும். தென் கண்டத்தினின்றும் சென்ற திராவிடர் வெள்ளப் பெருக்கின் முன்னிருந்த திராவிட அடிப்படையை மேலும் பலமடையச் செய்திருக்கலாம். இலங்கையில் வாழும் மக்கள் சிலர் பழைய மக்களின் வழித்தோன்றல்க ளாவர். 1தென்னிந்தியரின் கடல் ஆதிக்கம் வரலாற்றுக் காலத்துக்கு முன்தொட்டுத் தென்னிந்தியா மேற்குத் தேசங்களோடு வாணிபத் தொடர்பு கொண்டிருந்தது. பஞ்சாப்பிலும் சிந்துவிலும் நடத்திய புதைபொருள் ஆராய்ச்சியில் பழம்பொருள்கள் பல கிடைத்துள்ளன. அவை சூசா, பாபிலோன் முதலிய இடங்களிற் கிடைத்த பழம்பொருள்களை ஒத்தன. அப் பழம்பொருள்களின் காலம் கி.மு. 3000 வரையிலாகும். மண்பாண்டங்கள், கண்ணாடி வளைகள், எழுத்துகள் வெட்டப்பட்ட முத்திரைகள் என்பன அப் பழம் பொருள்கள். சில ஆண்டுகளின் முன் டாக்டர் ஆர்நெல் (Dr. Hornell) சூசா, இலகாஷ் என்னும் இடங்களிற் கிடைத்த கிண்ணங்கள், கை வளைகள் இந்தியப் பொருள்களே எனக் காட்டியுள்ளார். ஆதிச்ச நல்லூர் சமாதிகளிற் கண்டுபிடிக்கப்பட்ட ஈமத்தாழிகளில் கிடைத்த மண்டை ஓடுகள் எகிப்தியரின் மண்டை ஓட்டை ஒத்தன வென்று பேராசிரியர் எலியட் சிமித் தெளிவுபடுத்தியுள்ளார். பேராசிரியர் சிமித், பெரி என்னும் இருவரும் கி.மு. 2,600 முதல் இந்தியாவுக்கும் எகிப்துக்கு மிடையில் தொடர்பு இருந்ததென்பதை ஏற்றுக் கொண்டார்கள். பிளின்டேர்ஸ் பெற்றி (Flinders Petrie) என்பார் எகிப்தில் அரச பரம்பரை தோன்றுவதற்கு முற்பட்ட மக்கள் எல்லத்திலிருந்து சென்றவர்கள் ஆகலாம் என்று மண்டை ஓட்டின் அளவு, வடிவங்களை ஆதாரமாகக் கொண்டு கூறியுள்ளார். பாபிலோனில் வாழ்ந்த சுமேரியர் கடல்வழி யாகவோ தரைவழியாகவோ இந்தியாவினின்றும் சென்ற திராவிடர் ஆகலாம் என டாக்டர் ஹால் கருதியுள்ளார். மினோவருக்கும் திராவிட ருக்கும் உறவு இருந்ததென்பது ஐதரபாத்தில் கிடைத்த வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட மட்பாண்டங்களைக் கொண்டு நன்கு தெளியப் படுகின்றது. பிற்காலத்தில் மேற்குத் தேசங்களுக்கும் இந்தியாவுக்கும் தொடர்பிருந்த தென்பதை விளக்கும் பல சான்றுகள் உள்ளன. அண்மையில் எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பக்குவம் செய்யப்பட் டுள்ள பிணங்கள் (Mummies) இந்திய அவுரி நீலத்தால் சாயமூட்டப்பட்ட துணிகளால் சுற்றப்பட்டிருந்தன. பல்லாவரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஈமத்தாழிகளை ஒத்தவை பாக்தாத்திலும், எற்றூஸ்கா(இத்தாலி)விலும் கண்டுபிடிக்கப்பட்டன. எற்றூஸ்கானிய ஈமத்தாழிகள் தென்னிந்தியத் தாழிகளை எல்லா வகையிலும் ஒத்துள்ளன. தென்னிந்தியாவில் தாழி களில் வைத்துப் பிரேதங்களைப் புதைக்கும் வழக்கு இருந்ததென்பது இராமாயணம், புறநானூறு, மணிமேகலை முதலிய நூல்களால் விளங்கு கின்றது. போசானியஸ் (Pousanias) என்னும் கிரேக்கர் (கி.பி. 200) பதி னொரு முழ நீளமுள்ள இந்திய தாழிகளைப் பற்றிக் கூறியிருக்கின்றார். எபிரேய மொழியில் காணப்படும் துகிம் அகலிம் என்பன தோகை அகில் என்னும் தமிழ்ச் சொற்களே என நீண்ட நாட்களின்முன் கால்டு வெல் காட்டியுள்ளார். கி.மு. 9ஆம் நூற்றாண்டில் அசீரிய அரசனாகிய மூன்றாம் சாலமன் சர் நாட்டிய தூணில் இந்தியக் குரங்குகளும் யானை களும் வெட்டப்பட்டுள்ளன. இந்தியாவினின்றும் வெளிநாடுகளுக்குப் போக்கப்பட்ட துணிகளுக்குப் பலவகைச் சாயங்கள் ஊட்டப்பட்டிருந் தன வென்பது அரிஸ்தோ புலுஸ் (Aristobulus) என்பார் கூற்றுகளால் விளங்குகின்றது. மகாவம்சம் என்னும் சிங்கள நூல் ஐந்து நிறங்கள் ஊட்டப்பட்ட உடைகளைப் பற்றியும், மஞ்சள்நிற ஆடைகளைப் பற்றி யும், நாகர் அணியும் மல்லிகைப் பூப்போன்ற நிறமுடைய உடையைப் பற்றியும் கூறுகின்றது. வாணிகம் பெரும்பாலும் கடல் வழியாக நடந்தது. மிகப் பழங் காலம் முதல் தரைப்பாதை இருந்த தெனவும் கொள்ளப்படுகின்றது. அவ்வாறாயின் இந்தியா பாபிலோன் எகிப்து என்னும் நாடுகளை இணைக்கும் மத்திய இடங்கள் இருந்தனவாகலாம். அரிசி என்னும் தமிழ்ச்சொல் அராபி மொழியில் அல்ராஸ் என்றும் கிரேக்கில் அரிசா என்றும் வழங்கும். அரிசிக்கு வடமொழிப் பெயர் விரீகி, பாரசீகப் பெயர் விரிசினசி. இதனால் கிரேக்கரும் உரோமரும் அராபியர் மூலம் அரிசி யைப் பெற்றார்கள் எனத் தெரிகிறது. பாரசீகர் இந்துத்தானத்தில் நின்றும் அதனைப் பெற்றனர். கிரேக்கர் அரிசியை வட இந்தியாவினின் றும் பெற்றால் அரிசியைக் குறிக்கும் பெயர் அரிசி என்றிராது. விரீகி என்றிருக்கும் அரிசி இந்தியா, பர்மா, சீனா, என்னும் நாடுகளுக்குரியது. கி.மு. 2,800இல் சீனாவில் அரிசி அறியப்பட்டிருந்தது. தென்னிந்தியாவி லும் அரிசி அக்காலத்தில் அறியப்பட்டிருக்கலாம். தென்னிந்தியரிடத்தில் கரை ஓரங்களில் செல்லும் சிறிய மரக் கலங்கள் இருந்தனவென்றும் அவை இலங்கைத் தீவுக்கு அப்பால் செல்லவில்லை என்றும் டாக்டர் கால்டுவெல் கூறியுள்ளார். எகிப்திலே கண்டுபிடிக்கப்பட்ட பழம்பொருள்கள் இக் கொள்கை தவறுடைய தென்பதைக் காட்டிவிட்டன. எகிப்திய ஐந்தாம் அரச பரம்பரைக் கால ஓவியங்களிற் காணப்படும் மரக் கலங்கள் இந்திய மரக்கலங்கள் போலவே உள்ளன. மண்டை ஓடுகளின் ஒற்றுமை, ஞாயிறு பருந்து இடப வழிபாட்டுத் தொடர்புகள் இவ்விரு நாடுகளுக்கிடையில் தொடர் பிருந்த தென்பதை வெளியிடுகின்றன. தென்னிந்தியா மேற்கு உலகோடும் கிழக்கு உலகோடும் தொடர்பு வைத்திருந்ததாயினும் கடற் பயணங்கள் பிறருதவியின்றி இந்திய மக்களாலேயே நடத்தப்பட்டன. இந்திய மரக்கலங்களின் முன்புறத்தில் இரு கண்கள் வைக்கப்பட்டிருத்தலைக் காணலாம். இன்று அவை அழகுக்காக வைக்கப்படுகின்றன. எகிப்தியர் முற்காலத்தில் அவைகளை ஒசிரிஸ் தெய்வத்தின் கண்களாகக் கருதி அமைத்தனர். மரக்கலங்களுக் குக் கண் வைக்கும் வழக்கம் எகிப்தியரிடமிருந்து தமிழர் பெற்றதெனத் தெரிகின்றது. திராவிடரின் படகு செலுத்தும் தண்டு சத்தகம் எனப்பட் டது. இது வட்ட வடிவுடையது. பாய், பாய்மரம் முதலின திராவிடப் பெயர்களே. நங்கூரம் என்பதும் திராவிடச் சொல்லே. ஓடம், ஒதி, தோணி, தெப்பம், கலம், கப்பல், முதலிய சொற்கள் வெவ்வேறு வகை மரக்கலங்களைக் குறிக்கின்றன. “தமிழகத்தில் கரையை அடுத்துச் செல்லும் மரக்கலங்கள் உண்டு. மரங்களைச் சேர்த்துக் கட்டிச் செய்யப் பட்ட மரக்கலங்களுள்ளன. கங்கை ஆற்றில் செல்லும் மரக்கலங்கள் கொளந்தைய எனப்படுகின்றன.” எனப் பிளினி கூறியுள்ளார். முற்காலத் தில் அறியப்பட்ட பலவகை மரக்கலங்களை இன்னும் மலையாளக் கரையில் காணலாம். ஆரிய மக்கள் கடல் வாணிகத்தால் இலாபஞ் சம்பாதிக்க ஆவலுடை யவர்களாயிருந்தார்கள் என்று இருக்குவேதம் கூறுகின்றது. இருக்கு வேதத்தில் பிலவ, நோ முதலிய சொற்கள் மரக்கலத்தைக் குறிக் கின்றன. நாவாய் என்னும் சொல் இருக்கு வேதத்தில் ஓரிடத்தில் மாத்திரம் வருகின்றது. மரத்தில் குடையப்பட்ட மரக்கலத்தைக் குறிக்கும் தாரு என்னும் சொல் இருக்கு வேதத்தின் கடைசி மண்டலத்தில் காணப்படுகின்றது. இருக்கு வேதத்தில் தண்டைக் குறிக்க அரித்திரா என்னும் சொல் வழங்கப்பட்டுள்ளது. பாய்மரம், சுக்கான் என்பவை களைக் குறிக்கச் சரியான சொற்கள் காணப்படவில்லை. ஓடக்காரனைக் குறிக்கும் நாவாயா என்னும் சொல்லும், சுக்கானைக் குறிக்கும் நோமண்ட என்னும் சொல்லும் சதபதப் பிராமணத்தில் காணப்படு கின்றன. ஓடம் செல்லக்கூடிய ஆறுகளுக்கு நாவாய என்னும் பெயர் முதல் மண்டிலத்திற் காணப்படுகின்றது. ஓடக்காரர் சம்பந்தமாக அரித் திரா என்னும் பெயரைவிட வேறு யாதும் எசுர்வேதத்தில் காணப்பட வில்லை. அதர்வ வேதத்தில் சம்பின் என்னும் பெயர் காணப்படுகின்றது. இது இருக்கு வேதத்தில் பொருள் மயக்கமுடைய சம்பா என்னும் சொல்லோடு தொடர்புடையதாகலாம். இச் சொற்களை ஆராய்வதால் ஆரியரின் கடற் பயணங்கள் திராவிட அடிப்படையைப் பெற்றிருந்தன வென்பது விளங்கும். அரித்திரா என்னுஞ் சொல் கப்பல் ஓட்டும் தண்டைக் குறிக்கும் அரிகோலா (Harigola) என்னும் திராவிடச் சொல்லை நினைவுக்குக் கொண்டுவருகின்றது. அரிகோலா என்பது அரிவா, கோல் என்னும் இரண்டு சொற்களாலானது. இது பரிசல் என்னும் சொல்லின் வேறுபாடென்றும் அது பார்ஷாற் எனத் திரிந்து வேதகாலச் சொல்லாக வழங்கிற்றென்றும் கொள்ளலாம். சம்பா என்னுஞ் சொல் சம்பான் என்னும் மலாயச் சொல்லை நினைவூட்டு கின்றது. சம்போசின் தலைநகர் சிந்து ஆற்றின் மேற்குக் கரையில் இருந்ததென அரியன் (Arrian) கூறியுள்ளார். சம்பி என அதர்வவேதத்திற் காணப்படுஞ் சொல் மரக்கல மோட்டிகளையே குறிக்கின்றது. கௌடலியர் மரக்கலம் சம்பந்தமாகக் குறிப்பிடும் பெயர்களுள் வேணு, வேணுகா என்னும் சொற்கள் காணப்படுகின்றன. வேணு என்னும் சொல்லுக்கு நேரான சொல் வேதங்களிற் காணப்படவில்லை. அது ஓடம் என்னும் திராவிடச் சொல்லை ஒத்துள்ளது. அமரகோசம் என்னும் நிகண்டினால் இச் சொற்கள் இரவல் வாங்கப்பட்டன என்று தெரிகின்றது. ஒரே பொருளில் வழங்கும் பிளவ, உடுப, கோல, ஓட, அரிகோல என்பவை போன்றதே வேணு என்பதும். புத்த நூல்களில் சொல்லப்படும் மரக்கலங்கள் கட்டுவதற்கு இரும்பு பயன்படுத்தப் படவில்லை. தந்த குமாரனும் அவனது மனைவியும் தாமிரலிப்தியி லிருந்து இலங்கைக்குப் பயணஞ் செய்த மரக்கலம் பலகைகளைக் கயிற்றினால் பிணைத்துச் செய்யப்பட்டது. பலகைகள் மூங்கில் முளைகள் அறைந்து பொருத்தப்பட்டன. ஓடம், தோணி, தெப்பம் முதலிய பெயர்கள் மரக்கலங்களின் வளர்ச்சியைக் காட்டுவன. காட்டுப் பிரம்புகளைப் பின்னிச் செய்த ஓடங்கள் பிளினி காலம் வரையில் வழங்கின. இதன்பின் தோணி (மரத்தைத் தோண்டிச் செய்யப்படுவது) செய்யப்பட்டது. இதன்பின் மரங்களைக் கயிற்றினாற் பிணைத்துக் கட்டப்படும் தெப்பங்கள் செய்யப்பட்டன. பின்பு மரப் பலகைகளைப் பொருத்திச் செய்யப்படும் பிளாவு செய்யப்பட்டது. இது இன்றும் மலையாளத்திற் காணப்படுவ தும் மரக்கலம் கட்டப் பயன்படுவதுமாகிய அயினிபிளாவு என்னும் ஒருவகைப் பலாவோடு சம்பந்தப்பட்டதாகலாம். இதற்கு அடுத்தபடியி லுள்ளது கலம். அடித்தட்டுக்கு மேலே மேற்கட்டி அல்லது மறைப்பு உடையது கப்பல் எனப்படும். தெலுங்கில் கப்ப என்பதற்கு மறைப்பு என்று பொருள். தோணியைக் குறிக்கும் தாரு என்னும் சொல் ஒரு முறையும், கட்டுமரத்தைக் குறிக்கும் தியுமந, இரண்டு பக்கங்களிலும் சவள் வலிக்கும் பக்கங்களையுடைய சமயானி, நோயான, அரிதிரா முதலிய பெயர்கள் பல விடங்களிலும் வேதங்களில் வந்துள்ளன. சமக் கிருதத்திலுள்ள கர்ப்பாரா என்பது கர்பசாமாத்தியா என்னும் சொல் லின் வேறுபாடு. தியுமந என்னும் சொல் மரக்கலத்திலுள்ள மேடையைக் குறிக்கின்றது. பழைய தமிழ்நூல்களில் கடற் பயணங்களைப் பற்றிய செய்திகள் அறியக்கிடக்கின்றன. மிகப் பழங்காலத்தில் கடற்பயணஞ் செய்வதிற் பேர்போனவர்கள் கொல் (Kols) என்னும் மக்கள். கோலாப்பூர், கொல் லம் முதலிய பெயர்களே அவர்களின் ஞாபகமாகக் காணப்படுகின்றன. கொல் மக்களிடமிருந்து கரைநாடுகளை நாக சாதியினர் கைப்பற்றியிருந்தனர். சமக்கிருத நூல்களிற் காணப்படும் கற்பனையோடு சம்பந்தப்பட்ட வரலாறுகளால் நாகர் தீவுகளில் வாழ்ந்தவர்கள் என்பதும், அவர்கள் கடல் ஆதிக்கம் பெற்றிருந்தார்கள் என்பதும் விளங்கும். அருச்சுனன் உலூபியை மணந்தான் என்பதால் நாகர் என்போர் சரித்திரத் தொடர்புடையவர்களே என விளங்குகின்றது. இராமரின் புதல்வனாகிய குசலன் குமுட்வதி என்னும் நாகப்பெண்ணை மணந்தான். நாகதீவு பாரத வருடத்திலுள்ள ஏழு தீவுகளுள் ஒன்று எனப் புராணங்கள் கூறுகின்றன. சரித்திரக் காலத்திற்கு முன்னரேயே நாகர் இந்துமாக் கடற்றீவுகளிற் குடியேறியிருந்தார்களென்பது நாகப்பட்டி னம், நாகர்கோயில் முதலிய இடப்பெயர்களால் அறியவருகின்றது. வராகமிகிரர் கொல்லகிரி சோழ நாட்டுக்கு அயலிலுள்ளதெனக் கூறி யுள்ளார். கிள்ளி என்னும் சோழன் இலங்கை நாக குலப்பெண்ணை மணந்தான். வீர கூர்ச்சா என்னும் பல்லவ அரசன் நாக கன்னிகையை மணந்தான். சோழ பாண்டிய நாடுகளின் வாணிகம் திரையர் வசம் இருந்தது. பாண்டிய நாட்டு மக்கள் வரலாற்றுக் காலத்திற்குமுன் தொட்டே கடலோடிகளாக இருந்தனர். அவர்களின் தலைநகரம் இராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ளது. இலங்கையை ஆண்ட முதல் அரசன் பாண்டிய இராசகுமாரியை மணந்தான். குமரி, கொற்கை, காயல், பாம்பன் முதலியவை பாண்டியரின் துறைமுகப் பட்டினங்களாக இருந்தன. தொண்டையர், கடாரம் (பர்மா) முதல் சிங்களம் வரையில் வாணிகம் நடத்தினார்கள். உருத்திரங் கண்ணனார் என்னும் புலவர் இளந்திரையனைப் பாடியுள்ளார். வேங்கடத்தைத் தலைநகராக உடைய திரையனைப் பற்றி அகநானூறு (85,340) கூறுகின்றது. இறையனாரகப் பொருளுரை இளந்திரையம் என்னும் நூலையும் திரையன் மாறன் என்னும் அரசனையும் குறிப்பிடுகின்றது. சரித்திர காலத்திற்குமுன் கன்னட நாட்டுக் கடம்பர் பெரிய கடலோடிகளாயிருந்தனர். புறநானூறு (335), தமிழ் வழங்கிய திராவிட ருள் அவர்கள் மிகப் பழமை உடையவர் எனக் கூறுகின்றது. பதிற்றுப் பத்து பெருவாய் என்னும் துறைமுகத்தைப்பற்றிக் கூறுகின்றது. கடம்பர் கிரேக்கரோடு வாணிகம் நடத்தியதைப் பற்றி டாக்டர் ஹல்ச் (Dr. Hulzsch) என்பாரும் சீனரோடு வாணிகம் நடத்தியதைப்பற்றி நரசிம்மாச்சாரி யாரும் காட்டியுள்ளார்கள். கி.பி. 2ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பைபிரஸ் ஏட்டில் கன்னட வாசகங்கள் இருப்பதை ஹல்ச் கண்டார். தாலமி சோதர் கால நாணயமொன்று பங்களூர் சந்தையில் கிடைத்தது. சந்திரவதி என்னும் இடத்தில் நடத்தப்பட்ட புதைபொருள் ஆராய்ச்சியில் அகஸ்தஸ் காலத்து நாணயங்கள் மாத்திரமல்லாமல் கி.மு. 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வாதூ (Wa-to) என்னும் சீனச் சக்கரவர்த்தியின் நாணயங்களும் காணப்பட்டன. குட்டுவன் நன்னனைப் போரில் கொன்று வெற்றிபெற்றது மாத்திர மல்லாமல் கடம்பரையும் அழித்தான். வெல்லப்பட்ட கடம்பரிற் பலர் துடியன், பாணன், பறையன் முதலியவர்களைப்போல் பயிர்த் தொழில் புரிவோராயினர். இவர்களிற் பலர் கிழக்குக்கரைக்குச் சென்று கலிங்கம், பீகார், ஒரிசா நாடுகளில் தமது அதிகாரத்தை நாட்டியவர்க ளாகவும் காணப்படுகின்றனர். கஞ்சப் பிரிவிலுள்ள முகலிங்கத்துக்குச் சலந்திபுரம் என்பது இன்னொரு பெயர். அங்கு மதுகேசுவரருக்கு ஆலயமுண்டு. மதுகேசுவரர் கடம்பரின் கடவுள். கலிங்கத்தின் கிழக்குக் கலிங்கரின் தலைநகராகிய கலிங்க நகரமும், சலந்திபுரமும் ஒன்று என்று கொள்ளப்படுகின்றன. கஞ்சம் விசாகபட்டினம் முதலிய பகுதிகளில் கடம்புகுடா என்பது இடங்களுக்குப் பெயராக வழங்குகின்றது. கடம்ப அரச வழியினர் மகதத்தை ஆண்டார்கள் எனக் கன்னடக் கையெழுத்து நூல் ஒன்று கூறுகின்றது.  தென்னிந்திய குலங்களும் குடிகளும் முன்னுரை மக்களினம் சம்பந்தமான ஆராய்ச்சிக்குப் பயன்படும் இந் நூல் அரை நூற்றாண்டுக்கு முன் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள நூல்களைத் தழுவிச் சுருக்கி எழுதப்பட்டதாகும். தென்னிந்திய மக்கள் எல்லோருக்கும் பொதுவான சில பழக்கவழக் கங்கள் உள்ளன. அவ் வகை வழக்கங்களை விரித்துக் கூறாது ஒவ்வொரு கூட்டத்தினரிடையும் சிறப் பாகக் காணப்படுகின்றவற்றையே விரித்துக் கூறி யுள்ளோம். மேல் நாட்டுக் கல்வி, நாகரிகம் என்ப வற்றின் நுழைவால் விரைந்து மறைந்து கொண்டு வரும் தென்னாட்டு மக்களின் பழைய பழக்கவழக் கங்களை அறிந்து கொள்வதற்கு இந் நூல் வாய்ப் பளிக்கும். அரை நூற்றாண்டுக்குள் இந் நூலிற் கூறப்பட்டுள்ள பழக்கவழக்கங்கள் பல மறைந்து விட்டன; சில மறைந்துகொண்டு வருகின்றன. ந.சி. கந்தையா தென்னிந்திய குலங்களும் குடிகளும் தோற்றுவாய் ஹெக்கல் படைப்பின் வரலாறு (History of Creation) என்னும் நூலில் இப் பூமியின் தரை, நீர்ப்பரப்புக்கள் தொடர்ந்து மாற்றமடைந்து வந்த தன்மைகளை ஆராய்ந்து கூறியுள்ளார். அவர் கூற்று வருமாறு: “இந்துமாக் கடல் முன் ஒரு பூகண்டமாக விருந்தது. அது சந்தாத் தீவுகள் (Sunda Islands) முதல் (ஆசியாவின் தென் கரை வழியாக) ஆப்ரிக்காவின் கிழக்குக் கரை வரையில் பரந்திருந்தது. முற்காலத்தில் மக்களின் பிறப்பிட மாக விளங்கிய இத் தரைக்கு இஸ்கிளாத்தர் (Sclater) இலெமூரியா எனப் பெயரிட்டுள்ளார். இப் பெயர் அங்கு வாழ்ந்து கொண்டிருந்த குரங்கு போன்ற மக்கள் காரணமாக இடப்பட்டது. இலெமூர் என்பதற்கு தேவாங்கு என்பது பொருள். இலெமூரியா, மக்களுக்குப் பிறப்பிடமாக வுள்ளது என்னும் பெருமை யுடையது.” மலாய்த் தீவுக் கூட்டங்கள் முற்காலத்தில் இரு பிரிவுகளாக விருந்தன வென்று வலேசு (Wallace) என்னும் இயற்கை வரலாற்றியலார் ஆராய்ந்து கூறியுள்ளார். மலாய்த் தீவிலும் தென்னிந்தியாவிலும் வாழும் மக்கள் சிலரின் பழக்கவழக்கங்கள் ஒரே வகையாக வுள்ளன. போர்ணியோத் தீவில் வாழும் (இ)டைக்கர் மரமேறும் வகையும் தென்னிந்தியாவில் ஆனை மலையில் வாழும் காடர் மரமேறும் வகையும் ஒரே வகையாகவுள்ளன. காடரும் திருவிதாங்கூர் மலை வேடரும் தமது முன் பற்களை உடைத்து அல்லது அராவிக் கூராக்கிக் கொள்வர். ஆண்கள் பதினெட்டு வயதடை யும் போதும் பெண்கள் பத்து வயதடையும்போதும் இவ்வாறு செய்து கொள்கின்றார்கள். மலாயாவில் யக்குன் என்னும் மக்கள் இவ்வாறு செய்து கொள்கின்றார்கள். மலாய்த் தீவுக்கூட்டங்களில் பெண்கள் பருவமடையுங் காலத்தில் பற்களை அராவிக் கறுப்பு நிறமூட்டுகின்றனர். தென்னிந்திய காடர் முடியில் சீப்பணிந்து கொள்வது போலவே மலாக் காவில் வாழும் நீக்கிரோயிட்டு இனத்தைச் சேர்ந்த மக்களும் சீப்புகளை முடியில் அணிந்து கொள்கின்றனர். கலிங்க நாட்டினின்றும் சென்று மலாயாவிற் குடியேறிய மக்கள் கிளிங்கர் எனப்படுகின்றனர்; இக் காலத் தில் அப் பெயர் தமிழர்களை மாத்திரம் குறிக்க வழங்குகின்றது. பழங் காலத்தில் இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் காணப்பட்ட தாவரங்களும் விலங்குகளும் ஒரே வகையின வென்று ஆல்ட்காம் முடிவு செய்து தென்னிந்தியாவையும் ஆப்பிரிக்காவையும் தொடுத்துத் தரை யிருந்த தெனக் கூறியுள்ளார். தென்னாப்பிரிக்கக் கரையிலுள்ள நெத்தாவிலும் திருச்சிராப்பள்ளி பாறையடுக்குகளிலும் காணப்பட்ட சில உயிர்களின் கற்படி உருவங்கள் (Fossils) ஒரே வகையாகக் காணப் பட்டன. இவையும் இவை போன்ற காரணங்களும் இந்தியாவும் ஆப்பிரிக்காவும் இணைக்கப்பட்டிருந்தன என்னும் கொள்கையை வலியுறுத்துகின்றன. ஆஸ்திரேலியர் பூமராங் என்னும் வளை தடிகளைப் பயன்படுத்துகின்றனர். ஒரு இலக்கின் மீது வளை தடியை எறிந்தால் அது இலக்கில்பட்டு மீண்டு வருகின்றது. வளைதடி தென்னிந்திய மறவரால் பயன்படுத்தப்படுகின்றது. கள்ளரின் திருமணத்தில் மணமகள் இல்லத் தில் விருந்து நடக்கும் போது மணமகன் வீட்டாரும் பெண் வீட்டாரும் வளைதடிகளை மாற்றிக் கொள்வர். ஆஸ்திரேலியரும், பப்புவர், புதுக்கினியர், சந்தா தீவினர், மலாயர், மயோரியர் (நீயூசீலந்து மக்கள்) முதலியோரும் ஒரே இனத்தவர்களாகக் காணப்படுகின்றனர். தென்னிந்திய ஆதிகுடிமக்கள் மக்களினப் பிரிவுப் படி ஆஸ்திரேலிய மக்களாகக் காணப்படுகின்றனர். இவ் வாராய்ச்சி யினால் ஒரு காலத்தில் நியுசீலந்து முதல் மலாய்த் தீவுகள் இந்தியா மாலை தீவுக் கூட்டங்கள் வரையில் ஒரு இன மக்கள் வாழ்ந்தார்கள் என்பதும், அவ் வினத்தைச் சேர்ந்தவர்களே தென்னிந்திய ஆதிக்குடியினரிற் சில ரென்பதும் தெரிய வருகின்றன. முண்டா, சாந்தால் மக்களும் இவ் வினத்தைச் சேர்ந்தவராகக் கொள்ளப்படுவர். இவ்வாறு தர்ஸ்டன் தனது ‘தென்னிந்திய சாதிகளும் இனங்களும்’ என்னும் நூலிற் கூறியுள்ளார். இந்தியாவில் மிகப் பழங்காலத்தில் மூன்று இன மக்கள் வாழ்ந் தார்கள். (1) மத்திய தரை மக்கள். இவர்களே திராவிட இனத்தவர் எனப் படுவோர். (2) நிகிரிட்டோ மக்கள், (3) ஆதி ஆஸ்திரேலோயிட்டு மக்கள். நிகிரிட்டோ வகை தென்னிந்திய மலைச் சாதியினராகிய இருளர், காடர் களிடையே காணப்படுகின்றது. ஆதி ஆஸ்திரேலோயிட்டு வகை முண்டா, சாந்தால், கொல் முதலிய மொழிகளைப் பேசும் மக்களிடையே காணப்படுகின்றது. இம் மக்கள் ஆரியரின் வருகைக்குமுன் வட மேற்குத் திசையினின்று வந்தவர்களாகலா மென்று ஆராய்ச்சியாளர் கூறுவர். இவ் வினத்தினரையே மேல்நாட்டு ஆராய்ச்சியாளர் கொல்லாரி யர் எனக் கூறியுள்ளார்கள். ஆதி ஆஸ்திரலோயிட்டு இனத்தவர்களே மலாய்த் தீவுகள், பர்மா, சயாம் முதலிய நாடுகளின் ஆதி மக்களாவர். இவர்கள் இப்படி இந்தியாவை அடைந்தார்கள் என்று கூற முடியவில்லை. ஆஸ்தி ரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் நில இணைப்பு இருந்த காலத்தில் இவர்கள் இந்தியாவை அடைந்திருக்கலாமெனச் சிலர் கூறுவர். இந்திய மக்கள் (People of Inida) என்னும் நூல் எழுதிய ஹெர் பெட் இரிஸ்லி இந்தியாவில் தொடக்கத்தில் திராவிட மக்கள் வாழ்ந் தார்கள் என்றும், பின்பு பல்வேறு இனத்தவர்கள் இம் மக்களோடு வந்து கலந்தார்கள் என்றும் கொண்டு இந்திய இனத்தவர்களை, சித்திய திராவிடர், ஆரிய திராவிடர், மங்கோலிய திராவிடர், திராவிடர் முதலிய பிரிவுகளாகப் பிரித்தார். திராவிட மக்களுக்கும் ஆஸ்திரலோயிட்டுகளுக்கும் சில ஒற்றுமைகள் காணப்படும். தமிழ் மக்கள் நெளிந்த கூந்தலை அழகாகக் கொள்கின்றனர். இலக்கியங்களிலும் நெளிந்த கூந்தல் அழகாகவே கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் வாழும் ஆதிக் குடிகளின் தொகை இந்திய சனத்தொகையில் 1.3 பகுதி இவர்கள் பெரும்பாலும் வங்காளத்துக்கும் பீகாருக்கும் இடையில் வாழ்கிறார்கள். ‘தென்னிந்திய குலங்களும் குடிகளும்’ என்னும் இந்நூல் இந்திய மக்கட் கூட்டத்தினரின் பழக்கவழக்கங்களை பிற மக்கட் கூட்டத்தின ரின் பழக்க வழக்கங்களோடு ஒப்பிட்டு நோக்கி இன ஒற்றுமை வேற்றுமை காண்பதற்கு உதவியளிக்கும். * * * அகமுடையான்: தமிழ்நாட்டிலே உழவு தொழில் செய்யும் ஒரு கூட்டத்தினர் அகமுடையார் எனப்படுகின்றனர். அவர்கள் வேளாண் மக்கள் பழக்கவழக்கங்களையும் பின்பற்றுவர். இப் பெயர் வேளாளப் பள்ளிகள், குறும்பர்களையும் குறிக்கச் சில மாகாணங்களில் வழங்கும். அகமுடையான் என்பதற்கு வீடு அல்லது நிலமுடையவன் என்பது பொருள். அகமுடையாரின் ஒரு பிரிவினர் அகம்படியார் எனப்படுவர். அகம்படியான் என்பதற்கு உள்ளே இருப்பவன் என்பது பொருள். அவர்கள் அரசரின் அரண்மனைகளில் அல்லது கோயில்களில் வேலை புரிவோர். தஞ்சாவூர் அகமுடையார் தெற்கத்தியார் எனப்படுவர். அகமுடையானின் பட்டப்பெயர் சேர்வைக் காரன். கள்ளர், மறவர், அகம்படியார் என்னும் மூன்று வகுப்பினர்களுக்கிடையில் திருமணக் கலப்பு உண்டு. மறவ அகம்படிய திருமணக் கலப்பினால் தோன்றினோர் அகமுடையார் எனப்படுகின்றனர் என்று சொல்லப்படுகிறது. அகம்படியான்: அகமுடையான் பார்க்க. அக்கினி: ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்து கொள்ளாத குறும்பர் கோலர் (Gollar) என்பார் அக்கினி எனப்படுவர். பள்ளிகள் தம்மை அக்கினி குலத்தவர் எனக் கூறுவர். அச்சன்: இது தந்தை அல்லது பிரபு என்னும் பொருள் தரும் பெயர். பாலைக்காட்டு அரச குடும்பத்தினருக்கு அச்சன் என்னும் பட்டப்பெயர் வழங்கும். கள்ளிக் கோட்டை அரசனின் மந்திரி பாலைக்காட்டு அச்சன் எனப்படுவான். அச்சு வெள்ளாளர்: இது பட்டணவர் (மீன்பிடிகாரர்) சிலருக்கு வழங்கும் சாதிப்பெயர். அடிகள்: இவர்கள் அம்பலக்காரரில் ஒரு பிரிவினர்; இவர்கள் பூணூலணிவதுண்டு. இவர்கள் பதினெட்டு நாள் மரணத் தீட்டுக் காப்பர்; தம் சாதியினரே தமக்குக் குருக்களாக விருப்பர். அடுத்தோன்: இதற்கு அடுக்க நிற்போன் என்பது பொருள். மலையாளத்து அம்பட்டருள் ஒரு பிரிவினராகிய காவுத்தீயர் அடுத் தோன் எனப்படுவர். அம்ப (கிட்ட) ஸ்த (நிற்றல்) என்னும் வட சொற் களின் சிதைவே ‘அம்பட்ட’ என்று கருதப்படுகின்றது. அம்பட்டன்: தமிழ்நாட்டில் அம்பட்டப் பெண்கள் மருத்துவச்சி வேலை பார்ப்பர். செகந்நாத ஆலயத்தில் அம்பட்டர் சமைக்கும் உணவுக்குத் தீட்டு இல்லை. அக்கோயிலில் பூசை செய்யும் பூசாரி அம்பட்டன். அவன் சமைத்துக் கடவுளுக்குப் படைத்த உணவைப் பிராமணரும் அமுது கொள்வர். சேலத்திலே கொங்கு வேளாளரின் திருமணத்தில் அம்பட்டனே புரோகிதனாகவிருந்து மணக்கிரியைகள் புரிந்து தாலி கட்டுவான். தலைப் பூப்பெய்திய அம்பட்டப் பெண் பதினொரு நாட்களுக்குத் தனியாக இருக்க விடப்படுவாள். ஒவ்வொரு நாட் காலையிலும் கோழி முட்டை வெள்ளைக் கருவோடு கலந்த நல்லெண்ணெய் குடிக்கும்படி அவளுக்குக் கொடுக்கப்படும். அம்பட் டன் கொள்ளிக்குடம் உடைத்தற்கு நீர்க் குடத்தைத் தாங்கிக் கொண்டு இறந்தவனின் மகனுடன் சுடலைக்குச் செல்வான். அம்பட்டரின் சாதித் தலைவன் பெரியதனக்காரன் எனப்படுவான். மயிர்வினை செய்தல், வைத்தியம் பார்த்தல், வாத்தியமொலித்தல் என்னும் மூன்று தொழில்கள் அம்பட்டருக்குரியன. பண்டிதன். பரியாரி, குடிமகன், நாசுவன், மயிர் வினைஞன் என்பன அம்பட்டனைக் குறிக்க வழங்கும் பெயர்கள். திருவிதாங்கூரில் இவர்களுக்குப் பிராணோபகாரிகள் என்னும் பெயர் வழங்கும். பல சாதியினருக்குக் கிரியைகள் புரிவதால் இவர்க ளுக்கு இப் பெயர் வழங்குகின்றது. விளக்குத் தலையர் என்னும் அம்பட்டப் பிரிவிலிருந்து அரசருக்கு மயிர்வினை செய்யும் அம்பட்டன் தெரிந்தெடுக்கப்படுவான். திருவிதாங்கூர் அம்பட்டர் சிலர் அரசரால் தமக்குக் கொடுக்கப்பட்ட பணிக்கர், வைத்தியர் முதலிய பட்டங்கள் பொறிக்கப்பட்ட பட்டையங்களை வைத்திருக்கின்றனர். மலையாள அம்பட்டரின் சொத்துரிமை மருமக்கள் தாய முறையானது. அம்பட்டப் பெண்கள் பெரும்பாலும் பச்சை குத்திக்கொள்வர். இவர்களில் ஒருவன் இறந்து போனால் உடல் புதைக்க அல்லது எரிக்கப்பட்டபின் சுற்றத்தவ ரில் இருவர் ஒரு கயிற்றை இழுத்துப் பிடிக்க இறந்தவனின் கிட்டிய உறவினன் கயிற்றை வெட்டி விடுவான். இக் கிரியைக்குப் பந்தமறுப்பு என்று பெயர். இதற்கு இறந்தவனின் உறவு மற்றவர்களிலிருந்து வெட்டப் பட்டது என்பது பொருள். அம்பலக்காரன்: அம்பலக்காரர் கள்ளச் சாதியினருக்கு இன முடைய ஒரு வகுப்பினர். இவர்கள் வேளாண்மை செய்வதோடு கிராமக் காவலும் புரிவர். இவர்களின் சாதிப் பட்டப்பெயர் சேர்வைக்காரன். முத்திரையன், மளவராயன், முத்தரசன், வன்னியன் என்பனவும் இவர்கள் பட்டப்பெயர்களாக வழங்கும். இவர்கள் குலத்தலைவன் காரியக்காரன் எனப்படுவன். இப் பதவி பரம்பரையாகத் தந்தையிலிருந்து மகனுக்கு வருவது. காரியக்காரனின் சேவுகன் குடிப்பிள்ளை எனப்படுவான். வலை யரினின்றும் பிரிந்து வாழும் ஒரு பிரிவினரே அம்பலக்காரர் எனக் கருதப்படுவர். அம்பலவாசி: மலையாளத்துக் கோயிற் பணிவிடைக்காரர் அம்பலவாசிகள் எனப்படுவர். இவர்களுள் பூணூலணிவோர், பூணூ லணியாதோர் என இரு பிரிவினருண்டு. இவர்களின் உரிமை முறை மருமக்கள் தாயம்; மக்கள் தாயமும் உண்டு. அம்பலவாசிப் பெண்கள் பிராமணருடன் அல்லது சொந்தச் சாதியாருடன் சம்பந்தங் கொள்வர். அரவா: இவர்கள் கொல்லா (Golla), வேள்மா என்னும் தெலுங்குச் சாதிகளுள் ஒரு பிரிவினர். தெலுங்கு நாட்டிற் குடியேறிய வேளாளரும் இடையரும் அரவா எனப்படுவர். அரவா என்பது அரைவாய் (அரைப் பேச்சு?) என்பதன் திரிபு எனக் கருதப்படுகின்றது. அறுத்துக்கட்டாத: பறையருள் ஒரு பிரிவினர் அறுத்துக்கட்டாத என்னும் பெயர் பெறுவர். இவர்களுள் விதவைகள் மறுமணம் செய்து கொள்வதில்லை. அறுத்துக் கட்டாத என்பதற்கு வாழ்விழந்த பெண் மகள் மறுமணஞ் செய்து கொள்ளாத என்பது பொருள். ஹடியர்: இவர்கள் தமிழ்ப் பறையர். தெலுங்கு மாலர், மாதிகர் போன்ற தாழ்ந்த ஒரிய வகுப்பினர். ஆசாடியர்; இவர்கள் பெல்லாரி மாகாணத்திற் காணப்படும் ஹோலிய அல்லது மால சாதியினரின் ஒரு பிரிவினர். இவர்களிடையே பெண்கள் நாட்டியமாடுவோரும் ஒழுக்கத் தளர்வுடையோருமாவர். ஆசாரி: ஆசாரி அல்லது ஆச்சாரி என்பது கம்மாளரின் பட்டப் பெயர். மலையாளத்தில் கம்மாளப் பிராமணன் ஆசாரி எனப்படுவான். கம்மாளன் நாயருக்குப் பன்னிரண்டடி தூரத்திலும், பிராமணருக்கு முப்பத்திரண்டடி தூரத்திலும் வரின் இவர்களுக்குத் தீட்டுண்டாகும். கம்மாளன் அளவுகோலைக் கையிற் பிடித்துக்கொண்டு இவர்களை மிக அணுகினாலும் அல்லது இவர்கள் வீடுகளுள் நுழைந்தாலும் தீட்டு உண்டாகமாட்டாது. ஆண்டி: ஆண்டிகள் தமிழ் வகுப்பைச் சேர்ந்த பிச்சைக்காரர். இவர்கள் பண்டாரங்களிலும் தாழ்ந்தோர். கோயில்களிலும் மடங்களி லும் வேலைசெய்வோர் முறையே கோவிலாண்டிகள் மட ஆண்டிகள் எனப்படுவர். திருநெல்வேலி ஆண்டிகளுள் திருமணக் காலத்தில் பெண் ணின் கழுத்தில் தாலி கட்டுகின்றவள் மணமகனின் உடன்பிறந்தாளா வள். ஆண்டிகளுள் கோமண ஆண்டி, இலிங்கதாரி, முடவாண்டி, பஞ்சத்துக் காண்டி எனப் பல பிரிவுகளுண்டு. இப் பிரிவுகள் பஞ்சத்துக் காண்டி, பரம்பரை ஆண்டி என்னும் இரு பிரிவுகளிலடங்கும். ஆதிசைவர்: இவர்கள் வேளாளருள் ஒரு பிரிவினர்; ஓதுவார் வகுப்பைச் சேர்ந்தோர். இலிங்கங்கட்டுவோர் வீரசைவர் எனப்படுவர். வீரசைவ மதத்தினரல்லாத சைவர்களே ஆதி சைவராவர். ஆத்திரேயர்: அத்திரி இருடி கோத்திரத்தினர். ஆரி: இது மராத்தி என்பதன் மறுபெயர். ஆரிகள் தென் கன்ன டம், பெல்லாரி, அனந்தப்பூர் முதலிய இடங்களிற் காணப்படுகின்றனர். ஆரிய என்னும் பெயரே ஆரி எனச் சிதைந்து வழங்குகின்றது. இவர்கள் பூணூலணிந்து கொள்வர்; மராத்தி அல்லது கொங்கணி பேசுவர். இடிகர்: இவர்கள் தெலுங்கு நாட்டில் கள்ளிறக்கும் வகுப்பினர். தமிழ் இடிகர் கத்தியைப் பின்னால் செருகுவர்; தெலுங்கர் வலது தொடையிற் கட்டுவர்; தமிழ் இடிகர் பனையிலும் தென்னையிலும் கள்ளிறக்குவர்; தெலுங்கர் பனையிலும் ஈந்திலும் கள் எடுப்பர். தெலுங் கர் கள்ளின் செல்வியாகிய எல்லம்மா என்னும் தெய்வத்தை வழிபடுவர். இடியர்: திருவிதாங்கூரில் அவலிடிக்கும் சாதியினர் இடியர் எனப்படுவர். இடையன்: ஆடு மாடு மேய்ப்போர் இடையர் எனப்படுவர். இவர் களுள் வைணவர் நாமம் தரித்துக்கொள்வர். தம்மை யாதவர் எனக் கூறிக் கொள்வர். மறவ நாட்டு இடையருள் மணமகளின் உடன் பிறந்தாள் மணமகளுக்குத் தாலி கட்டுவள். இராசபுத்திரர்: வடநாட்டிலுள்ள காணியாளரும் இராணுவ சேவை செய்வோருமாகிய சாதியினர் இராசபுத்திரர் என்னும்பெயர் பெறுவர். இவர்களின் சிறு கூட்டத்தினர் வேலூர், சித்தூர். திருப்பதி முதலிய இடங்களில் காணப்படுகின்றனர். இவர்களின் பெயர் சிங் என்று முடியும். இராசு: இவர்கள் இராணுவத் தொழில் புரியும் காப்பு, கம்மா, வேள்மா முதலிய சாதி வகுப்பினரினின்றும் தோன்றியவர்களாகலாம். திருமணக் காலத்தில் இவர்கள் வாளை வணங்குவர். போர்வீரர் என்று அறிவித்தற்கு வாள் அடையாளமாகும். வட ஆர்க்காடு. கடப்பா முதலிய இடங்களில் இவர்கள் பெரும்பாலும் காணப்படுவர். இவர்கள் பேசும் மொழி தெலுங்கு. பெண்கள் முட்டாக்கிட்டுக் கொள்வர். ஆண்கள் தலையின் எந்தப் பகுதியையும் மழித்துக் கொள்வதில்லை. திருமணக் காலத்தில் காசியாத்திரை போதல் தாலி தரித்தல் போன்ற கிரியைகள் இவர்களுக்கு உண்டு. இராஸ்பு: தென் கன்னடத்திலுள்ள கொங்கணம் பேசும் வணிகரும் வேளாண்மை செய்வோரும் இப் பெயர் பெறுவர். இவர்கள் பூணூலணிவர். பெண்கள் பூப்படையுமுன் திருமணம் செய்துகொள்வர். விதவைகள் மறுமணம் செய்துகொள்வர். இருளர்: இவர்கள் நீலகிரியில் வாழும் மலைச் சாதியினர். இருளர் என்பதற்கு இருண்ட நிறத்தினர் என்பது பொருள். இருளர் தமிழின் சிதைவாகிய மொழியைப் பேசுவர். இவர்களுள் ஆண்களும் பெண்களும் கணவன் மனைவியராக நிலைத்திருந்து வாழ்தல் பெண்களின் விருப் பத்தைப் பொறுத்தது. இறந்தவர்களின் உடல் சப்பாணி கட்டி இருக்கும் நிலையில் வைத்துப் புதைக்கப்படும். ஒவ்வொரு சமாதியின் மீதும் நீருள் இருந்து எடுக்கப்பட்ட கல்கொண்டு வந்து வைக்கப்படும். அக் கற்கள் தேவ கோட்டக் கற்கள் எனப்படுகின்றன. இறகுகளைந்த ஈசல்களை இவர்கள் உண்பர்; நோய்க் காலங்களில் மாரியம்மாவை வழிபடுவர்; ஏழு கன்னிமாரையும் ஏழு மண் விளக்கு வடிவில் வழிபடுவர். இல்லம்: நம்பூதிரிப் பிராமணரின் வீடு இல்லம் எனப்படும். நாயர் வகுப்பினரின் ஒரு பிரிவினரும் இல்லம் எனப்படுவர். தமிழ்நாட்டுப் பணிக்கர் சிலர் தம்மை இல்லம், வெள்ளாளர் எனக் கூறிக்கொள்வர். இளமகன்: மதுரை மாவட்டத்திலே திருப்பத்தூரில் உழவுத் தொழில் செய்வோர் இப் பெயர் பெறுவர். இவர்கள் கள்ளச் சாதி யினரை ஒத்தவர்கள். இவர்களின் தலைமைக்காரன் அம்பலன் எனப் படுவான். இளையது: இவர்கள் மலையாளத்துச் சாதிமான்களுள் ஒரு பிரிவினர். இளையதின் வீடு நம்பூதிரியின் வீட்டைப் போல இல்லம் எனப்படும். ஒவ்வொரு இளையதின் தோட்டத்திலும் நாகக்கா உண்டு. இவர்கள் நாயருக்குக் குருக்களாக விருப்பர். மலையாளத்திலுள்ள நாகக் கோயில்களுக்கும் குருக்கள் இவர்களே. இவர்களின் மூத்த மகன் மாத்திரம் திருமணம் செய்து கொள்ளலாம். மற்றவர்கள் அம்பலவாசி அல்லது நாயர்ப் பெண்களைச் சம்பந்தம் வைத்துக்கொள்வர். கைம் பெண்கள் கூந்தல் களைவதில்லை; அணிந்திருக்கும் ஆபரணங்களைக் களைந்து கணவனின் பிணத்தின்மீது இடுவர். இஃது உடன்கட்டை ஏறும் வழக்கத்துக்குப் பதிலாக விருக்கலாம். மூத்த மகனுக்குப் பாட்ட னின் பெயரும், மூன்றாவது மகனுக்குத் தந்தையின் பெயரும் இடப்படும். இவ்வாறே பெண்களுக்கும் பெண்வழிப் பெயர்கள் இடப்படுகின்றன. பிள்ளைப் பேற்றுக்குப் பின் பெண்கள் தொண்ணூறு நாட்கள் தீட்டுக் காப்பர். ஆண்கள் பூணூலணிவர். பெண்கள் அகத்துளவர் எனப்படுவர். நம்பூதிரிப் பெண்களுக்கும் இப்பெயர் வழங்கும். இறங்காரி: மராட்டி பேசும் சாயத்தொழில் செய்வோரும் தையற் காரரும் இப் பெயர் பெறுவர். இவர்கள் தெலுங்கு மாகாணங்களிலும் காணப்படுகின்றனர். இவர்களின் பட்டப்பெயர் இராவ். இறவுலோ: இவர்கள் ஒரிய கோயில்களில் பணிவிடை செய் வோர். இவர்கள் கோயில்களில் சங்கு ஊதுவர்; பூ விற்பர். இவர்களுள் சிறுபிள்ளைத் திருமணம் கட்டாயம். இப்பொழுது இவர்கள் வண்டி ஓட்டுதல், மண் வேலை செய்தல் முதலிய தொழில்கள் புரிவர். இறையர்: இவர்கள் எசமானின் இறை (வீட்டுக்கூரை) வரையும் செல்லக்கூடிய மலையாளத்துச் செருமான் என்னும் சாதியினர். ஈழவர்: ஈழவர், தீயர் என்போர் மலையாளம் கொச்சி என்னும் இடங்களிற் காணப்படுகின்றனர். மத்திய திருவிதாங்கூரின் தென்புறங் களில் இவர்கள் ஈழவர் என்றும், வட, மத்திய பகுதிகளில் சேரவர் என்றும் அறியப்படுவர். திருவிதாங்கூர் சனத்தொகையில் 17 சதத்தினர் இவர்களாவர். யாழ்ப்பாணம், ஈழம் என்னும் பெயர் பெற்றிருந்ததெனத் தெரிகிறது. ஈழவர் அங்கிருந்து வந்தார்கள் எனக் கருதப்படுகின்றனர். சேரவர் என்பது சேவுகர் என்பதன் திரிபு. மலையாளத்தில் வழங்கும் கப்பற் பாட்டுகளில் சேவுகர் என்னும் பெயர் காணப்படுகின்றது. தென் திருவிதாங்கூரில் வாழும் ஈழவர் முதலியார் எனப்படுவர். புலையர் அவர் களை மூத்த தம்பிரான் என அழைப்பர். அவர்கள் தொடக்கத்தில் தென் னையைப் பயிரிடும் தொழில் செய்து வந்தனர். கி.பி.824இல் அவர் களுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு பட்டையத்தினால் அவர்களுக்குத் தலை யாரி இருந்தானென்றும், அவர்கள் வீட்டு நிலங்களில் தென்னையைப் பயிரிடுதல் அவர்களின் தொழில் என்றும் தெரிகின்றன. தமது வேண்டு கோளுக்கிணங்கி ஈழவர் மேற்குக் கடற்கரையில் சென்று குடியேறினார்க ளென்று சீரிய கிறித்தவர் கூறுவர். மத்திய காலங்களில் இவர்கள் அரசரின் கீழ் போர் வீரராக அமர்ந்திருந்தார்கள். கொல்ல மாண்டு 973இல் மரண மான இராமவன்மன் காலத்திலும் பெருந் தொகை ஈழவர் இராணுவ சேவையில் இருந்தார்கள். ஓண விழாக் காலங் களில் இவர்கள் இரண் டாகப் பிரிந்து நின்று போலிப் போர் செய்வது வழக்கம். ஈழவரின் அடிமைகள் வடுவன்கள் எனப்படுவர். முற்காலங் களில் இவ் வடிமைகள், உடையவனால் விற்கவும்கூடிய முறையாக விருந்தனர். ஈழவரின் குரு வகுப்பினர் சாணார் எனப்பட்டனர். சாணார் என்பது சான்றோர் என்னும் சொல்லின் திரிபு. சாணாருக்கு அடுத்த படியிலுள்ளவன் பணிக்கன். ஒவ்வொரு இல்லத்திலும் பல சிறிய வீடுகள் உண்டு. இவைகளுள் முக்கியமுடையது அறப்புறம். இது நடுவிலிருக்கும். அதன் இடப்புறத்தி லுள்ள வீடு வடக்கெட்டு எனப்படும். இது பெண்கள் தங்கும் பகுதியும் சமையலறையுமடங்கியது. அறப்புறத்தின் முன்னால் முற்றம் இருக்கும். அதனைச் சூழ்ந்து கிழக்குப்புறத்திலிருப்பது கிழக்கெட்டு எனப்படும். வீடுகள் கிழக்கை நோக்கியிருக்கும். பாதை கிழக்கெட்டுக்குக் சிறிது தெற்கே யிருக்கும். சில இல்லங்களில் அறப்புறத்துக்கு இடப்புறத்தில் தெற்கெட்டுக் காணப்படும். அது அக் குடும்பத்தில் இறந்தவர்களின் ஞாபகமாக இடப்பட்டதாகும். அதனுள்ளே ஒரு பீடம், சங்கு, பிரம்பு, சாம்பல் முடிச்சு முதலியன வைக்கப்பட்டிருக்கும். பெண்கள் காதில் நாகபடம், கையில் வெண்கலக்காப்பு, மூக்கில் மூக்குத்தி, நத்து முதலியன அணிவர். நாயர்ப்பெண்கள் இடது கன்னத்தில் கொண்டை முடிவர்; ஈழவப் பெண்கள் நெற்றிக்கு நேரே முடிவர். இவர்களின் குலதெய்வம் பத்திரகாளி. பத்திரகாளிக்கு ஆடு, கோழி முதலியன பலியிடப்படும். இவர்களுக்கிடையில் மக்கள் தாயம், மருமக்கள் தாயம் என்னும் இரு வழக்குகளுமுண்டு. சம்பந்தம் நடைபெறுவதன் முன் பெண்களுக்குத் தாலி கட்டுக் கலியாணம் நடைபெறுவதுண்டு. இவ் வழக்கம் இப்பொ ழுது அருகி வருகின்றது. தாலிகட்டுக் கலியாண மென்பது போலியாக நடத்தப்படும் ஒருவகைக்கலியாணம். தாலி கட்டுச் சடங்கின் விபரம் வருமாறு: கிராமத்திலுள்ள முதியவர்கள் மணமகள் வீட்டில் கூடியிருப் பார்கள். பின்பு வீட்டின் தென் கிழக்கு மூலையில் பலாத் தூண் நடப் படும். அங்கு கூடியிருக்கும் கணிகன் (சோதிடன்) முழுத்தம் என்று கூறியவுடன் அங்கு வந்திருக்கும் தட்டான் பெண்ணின் தந்தையிடம் பொன் மோதிரம் ஒன்றைக் கொடுப்பான். அதை அவன் பெற்று அங்கு வந்திருக்கும் உவாத்தி(குருக்கள்)யிடம் கொடுக்க அவன் அதைத் தூணில் கட்டுவான். தச்சன், கணிகன், தட்டான், தக்கணைகள் பெற்றுச் செல்வர். பந்தல் வீட்டின் தென்புறத்தில் இடப்பட்டிருக்கும். திருமணத்துக்கு முதல்நாள் பெண் முழுகி மண்ணான் (வண்ணான்) கொடுக்கும் கஞ்சி தோய்த்த ஆடையை உடுப்பாள். அதன்பின் கலாதி என்னும் சடங்கு தொடங்கும். அப்பொழுது நூலிற் கோக்கப்பட்ட வெள்ளி மோதிரம் அவள் மணிக்கட்டிற் கட்டப்படுகிறது. கலாதி என்பது கிராமப் பெண்கள் மணமகள் எதிரில் நின்று பலவகை வேடிக்கைப் பாடல் களைப் பாடுவதாகும். இதன்பின் பெண்கள் மரப்பொம்மைகளின் மத்தியில் இருத்திப் பாடுவார்கள். இந் நிகழ்ச்சி காஞ்சிரமாலை எனப் படும். அடுத்த நாள் அவள் தானியக் கதிர்களாலலங்கரித்த கதிர் மண்ட பத்தில் இருத்தப்படுவாள். அப்பொழுது தட்டான் மின்னு என்னும் தாலியைக் குருக்களின் கையிற் கொடுப்பான். அப்பொழுது மணமகனும் மணமகளும் உடுத்துக்கொள்வதற்கு ஆடை கொடுக்கப்படும். அவ் வாடைகளிலிருந்து எடுத்துத் திரித்த நூலில் மின்னுக் கட்டப்படும். அப்பொழுது பெண்ணின் தாய் வாயிலில் காத்து நிற்பாள். மணமகன் வருதலும் அவள் அவன் கழுத்தில் பூமாலையிடுவாள். பின் உவாத்தியும் அவன் மனைவியும் ஆடைகளை மணமகனுக்கும் மணமகளுக்கும் கொடுப்பார்கள். பின்பு கிராமத் தலைவன் தென்னங் குருத்துக்களை மணமகனின் இடுப்பில் செருகுவான். இது ஈழவரின் தொழிலைக் குறிப்பதாகலாம். முற்காலத்தில் தென்னங் குருத்துக்குப் பதில் வாள் செருகப்பட்டது. மணமகன் மணமகள் கழுத்தில் மின்னுவைக் கட்டு வான். வந்திருப்போர் அவர்களுக்குப் பல பரிசுகளை வழங்குவர். பெண்ணின் கையில் காப்பாகக் கட்டப்பட்ட கயிறு நான்காவது நாள் உவாத்தியால் அறுக்கப்படும். இக் கலியாணம் பெண் பூப்பு அடைவதன் முன் நடைபெறுகிறது. பெண் பூப்பு அடைந்தபின் தாலி கட்டியவன் அல்லது வேறு ஒருவன் அவளைச் சம்பந்தம் வைத்துக்கொள்ளலாம். தாலி கட்டியவனே அவளின் கணவனாக இருக்க வேண்டு மென்னுங் கட்டாயமில்லை. வடதிருவிதாங்கூரில் நடக்கும் சம்பந்தத்தின் விபரம் வருமாறு: தாலி கட்டியவனல்லாத ஒரு மணமகன் தனது இன சனத்தாருடன் மணமகளின் வீட்டுக்குச் செல்கின்றான். மணமகனைச் சேர்ந்தவர்கள் பெண்ணின் தாய்க்கு ஒரு தொகை பணம் கொடுப்பார்கள். பின்பு மணமகன் பெண்ணுக்குப் பத்துச் சக்கரங்கள் வைத்து உடை கொடுப் பான். பணம் தாயைச் சேர்கின்றது. அது அம்மாயிப் பணம் எனப்படும். பெண்ணின் தாய் மகளுக்கு பாக்கு வெட்டி, சுண்ணாம்புக் கரண்டகம், அரிசி நிரப்பிய பெட்டி, ஒரு பாய் என்பவற்றைக் கொடுப்பாள். கணவன் பெண்ணுக்குச் சிவப்பு ஆடையால் முட்டாக்கிட்டு அவளைத் தனது வீட்டுக்கு அழைத்துச் செல்வான். இவ் வழக்கம் குடி வைப்பு எனப்படும். பிள்ளைப் பேற்றுக்குப் பின் 3, 5, 9வது நாட்களில் பெண் குளித்து மண்ணாத்தி கொடுக்கும் மாற்றை உடுப்பாள். இருபத்தெட்டாவது நாள் பிள்ளைக்குப் பெயர் இடப்படும். பின்பு பிள்ளைக்கு இரும்புக் காப்புகள் இடப்படும். சோறு ஊட்டும் சடங்கு ஆறாவது மாதம் நடைபெறு கின்றது. அப்பொழுது இரும்புக் காப்புகள் கழற்றப்படுகின்றன. இவற்றுக்குப் பதில் வெள்ளி அல்லது தங்கக் காப்பு இடப்படும். ஏழு ஆண்டுகள் நிறைவதற்கு முன் பிள்ளைக்குக் காது குத்தப்படுகிறது. இறந்த வர்களின் உடல் சுடப்படுகின்றது. சுடலையில் கொள்ளிக் குடம் உடைத் தல் முதலிய கிரியைகள் நடைபெறுகின்றன. இரண்டாவது நாள் பிண்டம் வைக்கப்படும். ஐந்தாவது நாள் சாம்பல் அள்ளப்படுகிறது. இவர்களுக்குப் பதினைந்து நாட்கள் தீட்டு உண்டு. உரோணா: மலைகளில் வாழும் ஒரிய உழவர் தொழில் செய் வோர் இப் பெயர் பெறுவர். இவர்களுள் விதவைகள் மறுமணஞ் செய்து கொள்வர். வாழ்விழந்த பெண்கள் பெரும்பாலும் கணவனின் இளைய சகோதரனை மணப்பர். இவர்களின் சாதித் தலைவன் பாதோ, நாய்க்கோ எனப்படுவான். இக் கூட்டத்தினருள் உண்டாகும் பிணக்குகளைக் சாதித் தலைவன் தீர்த்து வைப்பான். ஆண்கள் பூணூலணிவர். இவர்கள் வழிபடும் கிராம தெய்வங்கள் தகுறாணி எனப்படுகின்றன. இவர்களின் சாதிப் பட்டப் பெயர் நாய்க்கோ. எட்டரை: இவர்கள் தமிழ்நாட்டுத் தட்டாரிலொரு பிரிவினர். எம்பிரான்: இது மலையாளத்திற் குடியேறிய துளுவப் பிராம ணருக்குப் பெயராக வழங்குகின்றது. எரவாளர்: இவர்கள் மலையாளத்திலே காடுகளிலுள்ள பதி என்னுங் கிராமங்களில் காணியாளரின் கீழ் கூலி வேலை செய்யும் மக்கள். இவர்களில் பெண்கள் தலைப்பூப்பு எய்தினால் தனியே இடப்பட்ட கொட்டிலில் ஏழு நாட்கள் விடப்படுவார்கள். ஏழாவது நாள் நீராடிய பின்பே அவர்கள் குடிசைகளுள் நுழைவார்கள். எரவாளர் வெற்றிலை யும் பாக்கும் வைத்து உயர்ந்தவர்களுக்குத் திருமணத்தை அறிவிப்பர். உயர்ந்தோர் அவர்களின் திருமணச் செலவுக்கு வேண்டிய நெல் முதலியன கொடுப்பர். இவர்கள் பேய், பிசாசுகளிருப்பதை நம்புவார்கள். மந்திரவாதி பேய் பிடித்தவர்களிடமிருந்து பேயை ஓட்டுவான். அவர்கள் மந்திரவாதி பனை ஓலையில் எழுதிக் கொடுக்கும் இயந்திரங்களை நூலாற் சுற்றிக் கழுத்தில் அணிவர். இவர்களின் முக்கிய தெய்வங்கள் ஏழு கன்னிப் பெண்களும், கறுப்பனும். எழுத்தச்சன்: எழுத்தச்சன் என்பதற்குப் பண்டிதன் என்பது பொருள். இப் பெயர் மலையாளப் பள்ளிக்கூட ஆசிரியருக்குப் பெயராக வழங்குகின்றது. ஹெக்காடி (Heggadi): கன்னட இடையரும் உழவரும் இப் பெயர் பெறுவர். ஏராடி: இது இடையனைக் குறிக்கும் பெயர். ஏர் நாட்டை ஆண்ட நாயர்ச் சாதியாரின் பெயர். ஏர் நாடு என்பது எருதுநாடு என்பதன் திரிபு. ஏராளன்: இது செறுமான் சாதியின் ஒரு பிரிவு. செறு - வயல். ஏனாதி: இது முதன்மையுடைய அம்பட்டன் அல்லது மந்திரி யைக் குறிக்கும். சாணாருக்கும் இப் பெயர் வழங்கும். ஏனாதி நாயனார் மூலம் தமக்கு இப் பெயர் வந்ததென அவர் கூறுவர். ஒக்கிலியன்: பயிர்த் தொழில் செய்யும் கன்னடத் தொழிலாளர் ஒக்கிலியர் எனப்படுவர். அவர்களின் சாதித் தலைவன் பட்டக்காரன் எனப்படுவான். பருவமடையாத ஒக்கிலியச் சிறுவர் பருவமடைந்த பெண்னை மணக்க நேர்ந்தால் கணவனின் கடமைகளை அவன் தந்தை நிறைவேற்றுவான். வியபிசாரக் குற்றத்துக் குட்பட்டவர்கள் ஒரு கூடை மண்ணைத் தலையில் வைத்துக் கிராமத்தைச் சுற்றி வருதல் வேண்டும். அப்பொழுது சின்னப் பட்டக்காரன் பின்னால் நின்று அவர்களைப் புளியம் மிலாறுகளால் விளாசுவான். பெண்களுக்கு முதற்பிள்ளை பிறந்த பின் சீதனம் கொடுக்கப்படும். இறந்தவரின் பிணத்தை எடுத்துச் செல்லும்போது பழம், காசு, சோறு முதலியன எறியப்படும். இறந்தவ னின் மனைவி சுடலைக்குச் சென்று தனது கைவளைகளை உடைத் தெறிவாள். இவர்களுக்கு மரணத் தீட்டு பதினெட்டு நாட்களுக்குண்டு. ஒட்டியர் அல்லது ஒட்டர்: இவர்கள் கிணறு தோண்டுதல், குளங்களுக்கு அணைகட்டுதல் போன்ற வேலைகள் செய்வர். ஒரிசா மாகாணத்தினின்றும் வந்த காரணத்தினால் இவர்கள் ஒட்டர் எனப் பட்டனர். இவர்களின் திருமணக் கட்டுப்பாடுகள் நுகைவுடையவை. பெண்களும் ஆண்களும் விரும்பினால் மணத் தொடர்பை நீக்கிவிட லாம். இரு பாலினரும் பதினெட்டு முறைக்கு அதிகம் திருமணம் செய்து கொள்ளுதல் கூடாதென்னும் கட்டுப்பாடுண்டு. ஒஸ்டா: திருவிதாங்கூரில் வாழும் மகமதியரின் அம்பட்டர் ஒஸ்டா எனப்படுவர். ஒருநூல்: விதவைகள் மறுமணஞ் செய்யாத மறவர் வகுப்பில் ஒரு பிரிவினர் இப் பெயர் பெறுவர். ஓச்சர்: இவர்கள் பிடாரி கோயிலுக்குப் பூசை செய்யும் குலத்தினர். இவர்களின் கொடி உடுக்கை. செங்கற்பட்டுப் பகுதிகளில் ஓச்சர் தேவடியாட்களை ஆட்டும் நட்டுவத் தொழில் புரிவர். ஓச்சன் என்னும் சொல் ஓசை என்னும்அடியாகப் பிறந்தது. அதற்கு மேளமடித்துத் துதிப் பாடல்கள் பாடுவோன் என்பது பொருள். ஓடட்டு: மலையாளத்தில் கோயில்களுக்கும் பிராமணரின் வீடுகளுக்கும் செங்கல் செய்யும் நாயர் வகுப்பினர் இப் பெயர் பெறுவர். ஓதுவார்: இவர்கள் பண்டாரங்களுள் ஒரு பிரிவினர். இவர்கள் தேவாரம் திருவாசகம் முதலிய பாடல்களைக் கோயில்களில் பண் ணோடு பாடுவர். ஹோலியர்: இப் பெயர் பறையன், புலையன் என்னும் பெயர் களுக்கு நேரானது. இவர்கள் தென் கன்னடத்தில் காணப்படுகின்றார்கள். கங்கேயர்: இவர்கள் திருவிதாங்கூரில் வாழும் இடையரில் ஒரு பிரிவினர். கஞ்சகாரர்: இவர்கள் செம்பு, பித்தளை, வெண்கலம் முதலியவை களில் வேலை செய்வோர். கடசன்: திருநெல்வேலிப் பக்கங்களில் சூளை இடுவோர் இப் பெயர் பெறுவர். இவர்களுள் நாட்டரசன், பட்டங்கட்டி என இரு பிரிவினருண்டு. இவர்கள் வேட்டுவரிலும் பார்க்க உயர்ந்தோர். இவர்கள் கோயில்களுள் நுழைதல் கூடாது. இவர்களுக்குத் தனி அம்பட்டனும் வண்ணானுமுண்டு. கடையர்: பள்ளரில் ஒரு பிரிவினர் கடையர் எனப்படுவர். இவர்கள் இராமேசுவரத்திலே சிப்பி ஓடுகளைச் சூளை வைத்துச் சுண்ணாம்பு செய்கிறார்கள். இக் கூட்டத்தினரிலிருந்து முத்துகுளிப்ப தற்கு ஆட்கள் தெரிந்தெடுக்கப்படுவார்கள். மதுரை திருநெல்வேலிக் கோட்டங்களில் இவர்கள் கிறித்துவ மதத்தைத் தழுவியுள்ளார்கள். பரவரை ஒப்ப இவர்களும் பிரான்சிஸ் சேவியரால் மதமாற்றம் செய்யப் பட்டவர்களாவர். கணக்கன்: இது கணக்கு என்னும் சொல்லடியாகப் பிறந்த பெயர். இவர்கள் அரசரால் கிராமக் கணக்கர்களாக நியமிக்கப்பட்டவர்க ளாவர். கர்ணம் அல்லது கணக்கன் என்னும் பெயர்கள் பட்டையங்களிற் காணப்படுகின்றன. இவர்களுக்குப் பட்டப்பெயர் வேளான். கர்ணங் களுள் கை காட்டிக் கர்ணம் என்னும் ஒரு பிரிவு உண்டு. இவர்களுள் மருமகள் மாமியுடன் (கணவனின் தாய்) பேச அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், கைகாட்டி (சமிக்கையால்) பேசுவர். பெண்ணின் தாய் பெண் ணுக்குத் தாலிகட்டுவள். கணியன்: இப் பெயர் கணி என வழங்குகின்றது. பழைய ஆவணங் களில் கணி என்னும் சொல் காணப்படுகின்றது. கணிகன், கணி என்னும் பெயர்கள் பணிக்கனையும் அரசனையும் குறிக்கும். பணிக்கன் என்னும் சொல் பணி (வேலை) என்னும் அடியாகப் பிறந்தது. பணிக்கனுக்கு இராணுவத் தொழில் பயிற்றும் வேலை உரியது என்று கேரள உற்பத்தி என்னும் நூல் கூறுகின்றது. வடக்கே கணிகன் நம்பிக் குருப்பு எனவும் படுவான். கணியரில் கணியர், தீண்டர் என இரு பிரிவினருண்டு. முதற் பினிவினர் சோதிடம் சொல்வோர். இரண்டாவது வகுப்பினர் குடை செய் வோரும் பேயோட்டுவோரு மாவர். கணியன் முட்டினால் களரிப்பணிக் கனுக்குத் தீட்டு உண்டாகின்றது. களரிப் பணிக்கர் முற்காலத்தில் போர்ப் பயிற்சி அளிக்கும் ஆசிரியராக விருந்தனர். பிடிச்சுகளி, வாட்சிலம்பம், பாரிசாதம் களி, கோலடி முதலிய ஆடல்கள் இன்றும் களரிகளில் நடை பெறுகின்றன. புது வருடப்பிறப்புக்குப் பின் மலையாளத்தில் நடை பெறும் சால் (உழவு) கிரியையில் ஒவ்வொருவரும் அவ்வக் கிராமத்துக் குரிய கணிகனிடம் ஆண்டுப் பலனைக் கேட்டறிந்த பின் அவனுக்குச் சிறிது பொருள் வழங்குவது மரபு. பலன் பனை ஓலையில் எழுதிக்கொடுக் கப்படும். இது விட்டுணுபலன் என்று சொல்லப்படுகின்றது. பாழூரி லிருக்கும் கணி மிகப் புகழ் பெற்றவன். கணிகளுள் பெண் பூப்படையு முன் தாலிகட்டுக் கலியாணமும் பின் சம்பந்தமும் நடைபெறும். அவர்களுட் பலர் பாண்டவரைப்போல ஒரே மனைவி உடையவராக விருப்பர். விதவை மறுமணம் செய்துகொள்வாள். பணிக்கருள்ளும் கணிகருள்ளும் பெண்கள் ஒரே காலத்தில் பல கணவரை மணக்கும் வழக்கம் உண்டு. கிராமத்தின் நாயர்த்தலைவன் களரிமூப்பன் எனப்படுவான். கணிகளில் பொதுவன் அல்லது கணிக குருப்புக்கள் அம்பட்டராவர். இவர்கள் பிணத்தோடு இடுகாட்டுக்குச் செல்வார்கள். பொதுவர் தீண்டாக் கணிகளுக்கு மயிர்வினை செய்யார். கணியர் கோவில்களில் நுழையக் கூடாது. இவர்கள் இருபத்து நான்கடி தூரத்தில் வந்தால் பிராமணருக்குத் தீட்டு உண்டாகிறது. கண்கெட்டு: இவர்கள் மாடாட்டிகள்; தெலுங்கு பேசுவர்; வைணவ மதத்தினர். இவர்களின் குரு வைணவ அடையாளமாகிய சங்கு சக்கரம் முதலியவைகளை இவர்கள் தோள்கள்மீது சுடுவர். பெருமாள் மாட்டுக்காரன் அல்லது பெருமாள் எருதுக்காரன் என்னும் மாடாட் டிகள் செங்கற்பட்டு, வட ஆர்க்காடு முதலிய இடங்களிற் காணப்படு கின்றனர். கத்திரி: பட்டு நெசவு செய்வோர் கத்திரிகளாவர். பட்டில் வேலை செய்வதால் இவர்கள் பட்டுநூற்காரர் எனவும் அறியப்படுவர். இவர்கள் தமது வமிசம் காத்த வீரிய அருச்சுனனிலிருந்து வருவதாக கூறுவர். பெண்கள் மறுமணம் செய்துகொள்வர். இவர்கள் தாய்மாமன் பிள்ளையை மணப்பதில்லை. பெண்கள் பூப்பு அடையுமுன் மணம் முடிக்கப்படுவர். மணமாகும் போது ஆண்கள் பூணூல் தரிப்பர். கபேரர்: இவர்கள் கன்னட மீன் பிடிக்கும் வகுப்பினர். இவர்க ளுள் கௌரி (பார்வதி) மாக்கள், கங்கைமாக்கள் என இரு பிரிவினர் உண்டு. இவ் விரு வகுப்பினரிடையும் திருமணக்கலப்பு நடப்பதில்லை; ஆனால் உண்பனவு, தின்பனவு உண்டு. இவர்களுள் பெண்கள் மறு மணஞ் செய்வதில்லை. திருமணத்தின்போது பிராமணன் பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவான். விதவை மறுமணம் செய்து கொள்ளுவ ளாயின் விதவை ஒருத்தியே பெண்ணுக்கு தாலி கட்டுவள். இவ் வகுப்பின ருள் சில பெண்கள் தேவடியாட்களாகக் கோயிலுக்கு நேர்ந்து விடப்படு கிறார்கள். இறந்தவரின் உடல் புதைக்கப்படுகிறது. கம்பலத்தான்: தொட்டியான் பார்க்க. கம்பன்: இது ஓச்சர் குலத்தின் பெயர். கம்மா: இவர்கள் தமிழரினின்றும் பிரிந்து சென்ற காப்புகள், இரெட்டிகள், வேள்மாக்கள் என்போராவர். இப்பொழுது இவர்கள் இராசு என்று அறியப்படுகின்றனர். மதுரை, திருநெல்வேலி முதலிய இடங்களிற் காணப்படும் காப்புக்களும், கம்மாக்களும் விசயநகரத் தேசாதிபதிகள் காலத்தில் இராணுவ சேவை புரிந்தோராவர். கம்மாப் பெண்களுட் சிலர் முட்டாக் கிடுவர். கம்மாக்களில் மணமகன் பெரும் பாலும் மணமகளிலும் இளையவனாக விருப்பான். 22 வயதுள்ள பெண் தனது குழந்தை மணவாளனை ஒக்கலையில் எடுத்துச் சென்ற குறிப்பு ஒன்று சென்னை ஆட் கணக்கு (Madras Census) என்னும் நூலிற் காணப் படுகின்றது. உருசிய நாட்டிலும் பருவமடைந்த பெண்கள் தமக்குக் கணவராக நிச்சயிக்கப்பட்ட ஆறு அல்லது ஏழு வயதுள்ள கணவன் மாரை கூட்டிக்கொண்டு திரிவது வழக்கம். விதவைகள் பெரும்பாலும் மறுமணம் புரிவதில்லை. கம்மாளர், கம்சாலர்: இவர்கள் தெலுங்குக் கொல்லர். கம்மாளன்: கம்மாளன் கண்ணாளன் எனவும் படுவான். பிராம ணரைப் போலவே கம்மாளரும் விசுவகு, சனகன், அகிமான், யனாதனன், உபேந்திரன் முதலியவர்களைத் தமது கோத்திர முதல்வர்களாகக் கொள்வர். ஒவ்வொரு கூட்டத்துக்கும் நாட்டாண்மைக்காரன் உண்டு. நாட்டாண்மைக்காரனுக்கு மேலே ஐந்து வீட்டு நாட்டாண்மைக்காரன் அல்லது ஐந்து வீட்டுப் பெரிய கைக்காரன் உண்டு. இறந்தவர்களின் உடல் குந்தியிருக்கும் நிலையில் சமாதி வைக்கப்படும். சில சமயங்களில் பிரேதங்கள் எரிக்கப்படுகின்றன. இவர்களின் குலதெய்வங்கள் மீனாட்சி அம்மன், கோச்சடைப் பெரிய ஆண்டவன், பெரிய நயினார் முதலியன. ஏழு கன்னிப்பெண் தெய்வங்களையும் இவர்கள் வழிபடுவர். ஏழு கன்னிப் பெண் தெய்வங்களை வழிபடுவோர் மாதர் வகுப்பு எனப்படுவர். கோச்சடைப் பெரிய ஆண்டவன் என்னும் பெயர் கோச்சடைப் பெரிய பாண்டியன் என்பதன் திரிபு. இவர் விட்டுணு கோச்சடைப் பெரிய நயினார் சிவன் எனவும் படுவர். கம்மாளர் தாம் விசுவ கன்மாவின் வழித்தோன்றல்கள் எனக் கூறுவர். கி.பி. 1013இல் உள்ள ஆதாரங்களால் அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாகக் கொள்ளப்பட்டார்களென்றும் அவர்கள் கிராமத்தின் ஒரு பகுதியில் ஒதுக்கப்பட்டிருந்தார்களென்றும் தெரிகின்றன. சோழ அரசருள் ஒருவன், அவர்களை வீடுகளில் சங்கு ஊதவும், மேளம் அடிக்கவும், மிரிதடிதரிக்கவும், வீட்டுக்குச் சாந்து பூசவும் அனுமதித்தான். இவ் வகையைச் சேர்ந்த கம்மாளருக்கு ஆசாரி என்னும் பட்டப் பெயருண்டு. கம்மாளர் (மலையாளத்துக்): இவர்கள் பூணூலணிவதில்லை. இவர்கள் தம்மைத் தீட்டுச்செய்யும் சாதியினர் என ஏற்றுக்கொள்வர். கோயில்களிலும் பிராமணர் இல்லங்களிலும் இவர்கள் நுழைதல் ஆகாது. இவர்களில் உயர்ந்தோர் ஆசாரிகள் எனப்படுவர். இவர்களில் ஆண்கள் பலர் ஒரு பெண்ணை மனைவியாகக் கொள்வர். நாயர்களைப் போல இவர்களுக்கும் தாலிகட்டுக் கலியாணமுண்டு. தாலி கட்டுக்கலி யாணத்தில் பெண்ணின் சாதகத்துக்கு ஏற்ற கணவன் தெரியப்படுவான். தாலிகட்டு நடந்த பின் கணவன் தனது ஆடையி லிருந்து ஒரு நூலை எடுத்து “கட்டு அறுந்து விட்டது” என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் பாராது போய்விடுவான். இவர்களுக்குத் தனிப்பட்ட நாவிதன் உண்டு. இவர்களின் குலதெய்வங்கள் தீக்குட்டி, பறக்குட்டி, காலபைரவன் முதலியன. இவர்களுள் கல்ஆசாரி, மரஆசாரி, மூசாரி (பித்தளை வேலை செய்பவன்) கொல்லன், தட்டான், தோற்கொல்லன் எனப் பல பிரிவுக ளுண்டு. கல்லாசாரி முதலிய முதல் ஐந்து வகுப்பினருக்கிடையில் பெண் கொடுத்தல் உண்பனவு தின்பனவு உண்டு. தோற்கொல்லன் இவர்களி னும் தாழ்ந்தவனாவன். இவர்களின் உரிமை வழி மருமக்கள் தாயம். இவர்களின் நாவிதனுக்கு குருப்பு என்றும் தச்சர் வில்லாசான் எனவும் அறியப்படுவர். இவர் முற் காலத்தில் திருவிதாங்கூர் அரசினர் படைக்கு வில்லுச் செய்து கொடுத்தனர். கி. பி. 9ஆம் நூற்றாண்டில் கம்மாளர் மலையாளத்தில் இருந்தார்கள் என்பதற்கு சீரிய கிறித்தவர்களின் பட்டையம் ஒன்று சான்று தருகின்றது. கம்மாளரைப் பரசுராமர் கேரளத் துக்குக் கொண்டு வந்தாரென்றும் பெருமாள்களுள் ஒருவர் அவர்களை வண்ணாருள் திருமணம் செய்யும்படி கட்டளையிட்டமையால் அவர்கள் இலங்கைக்குச் சென்றுவிட்டார்க ளென்றும் கன்னபரம் பரைக் கதைக ளுண்டு. கம்மாளனின் வீடு கொட்டில் எனப்படும். அவை ஓலைக்கற்றை களால் வேயப்பட்ட சிறு குடிசைகளாகும். பெண்கள் நாயர்ப்பெண்க ளணியும் அணிகளைப் போன்றவற்றை அணிவர். மூக்குத்தி, நத்து முதலிய மூக்கு அணிகளை அணிவதில்லை. வீடு கட்டி முடிந்ததும் ஆசாரி மார் குடிபுகும் கிரியை செய்வார்கள். அதில் பால் காய்ச்சுவது முதன்மை யான கிரியை. தென் திருவிதாங்கூரில் இவர்கள் ஈழவரிலும் உயர்ந்தவர் களாகக் கருதப்படுவர். பெண்களுக்குத் தாலி கட்டுக் கலியாணம் நடந்தபின் வாழிப்பு என்னும் கிரியை நடத்தப்படு கிறது. இதனால் தாலிகட்டினவனுக்கும் பெண்ணுக்கு முள்ள தொடர்பு நீக்கப்படுகிறது. ஈழவரைப் போலவே பெண்கள் மின்னு என்னும் தாலிதரிப்பர். கரணா: கஞ்சம், ஒரிசா மாகாணங்களில் வாழும் கர்ணம் (கணக்கன்) சாதியினர் கரணா எனப்படுவர். இவர்கள் யயாதிகேசரி என்னும் ஒரிசா நாட்டு அரசனால் (கி.பி. 447-526) வடநாட்டினின்றும் எழுத்தாளராக கொண்டுவரப் பட்டவர்கள். விதவைகள் மறுமணம் செய்வதில்லை. முட்டாக்கிடும் கரணோப்பெண்கள் கோசா வழக்கத் தைக் கைக்கொள்வர். பருவமடைந்த பெண்கள் சகோதரனுக்கு முன்னால் தானும் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். கலவாந்து : இவர்கள் தென்கன்னடம் தெலுங்கு நாடுகளில் வாழும் பாடல் ஆடல் மாதராவர். கவுண்டர்: சேலம் அரசினர் அறிக்கையில் கவுண்டர் உழு தொழில் செய்வோர் எனக்குறிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தமது பெயரினிறுதியில் கவுண்டன் என்னும் பெயரைச் சேர்த்தெழுதுவர். கழைக்கூத்தாடி: கம்பங்கூத்தாடி. கள்ளமூப்பன்: இவர்கள் மலையாளக் கம்மாளரின் ஒரு பிரிவினர். மலையாளத்தில் கம்மாளர் தீட்டு உண்டாக்கும் வகுப்பினர். கள்ள மூப்பன் கோயிலின் மதிலுக்கு உட்பட்ட வெளிவீதி வரையிற் செல்ல லாம். இவர்களின் விதவைகள் மறுமணம் புரிவதில்லை. இவர்களின் புரோகிதன் அம்பட்டன். அவன் மணமகன் வீட்டிலிருந்து பெண்ணின் வீடுவரையும் சங்கு ஊதிச் செல்வான். கள்ளர்: கள்ளர் என்பதற்குக் கொள்ளையடிப்போர் என்பது பொருள். இவர்கள் பெரும்பாலும் தஞ்சாவூர், புதுக்கோட்டை முதலிய பகுதிகளிற் காணப்படுவர். பெண்களும் ஆண்களும் காதில் துளை செய்து காது தோளில் முட்டும்படியான காதணிகளை அணிவர். இவர் களின் தலைமைக்காரன் அம்பலக்காரன் எனப்படுவான். இவர்களின் தாய் நாடு தொண்டைமண்டலம் அல்லது பல்லவர் நாடாகும். புதுக் கோட்டை அரசர் இன்றும் தொண்டைமான் எனப்படுவர். கள்ளர் குறும்பரில் ஒரு பிரிவினர். படையினின்றும் கலைக்கப்பட்டதும் இவர்கள் கொள்ளையடிக்கும் தொழிலை கைக்கொண்டனர். திருமணத் தில் மணமகனின் சகோதரி பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவாள். கள்ளரில் தெற்கத்தியார் எனப்படுவோர் புதுக்கோட்டையிற் காணப்படு கின்றனர். இவர்கள் தலைமயிரை நீளமாக வளரவிடுவர். ஆண்களும் பெண்களும் காதைத் துளையிட்டு ஓலைச்சுருளைச் செருகித் துளை யைப் பெருக்கச் செய்வர். தஞ்சாவூரில் வாழ்வோருக்குக் கள்ளன், மறவன், அகமுடையான் முதலிய பெயர்கள் வழங்கும். மாயவரம் பகுதி யில் அகமுடையான், வலையன் என்போருக்கும் கள்ளன் என்னும் பெயர் வழங்கும். கள்ளன், மறவன், அகமுடையான் என்போருக்குள் நெருங்கிய உறவுண்டு. கிராமங்கள் கொள்ளையடிக்கப்படாதிருப்பதற்கு ஒவ்வொரு கிராமமும் அவர்களுக்குத் திறைகொடுத்து வந்தது. திறை கொடுக்கப்படாவிடில் மாடுகள் திருட்டுப் போயின. சில சமயங்களில் வீடுகள் தீப்பிடித்து விடும். கள்ளரால் பெரிதும் பாதிக்கப்படுவோர் இடையர் அல்லது கோனாராவர். மாடுதிருட்டுக் கொடுத்தவன் கள்ளன் ஒருவனுக்குத் துப்புக்கூலி கொடுத்தால் அவன் இன்ன கிராமத்தில் இன்ன இடத்தில் மாடுகட்டி நிற்கிறது என்று சொல்வான். மாட்டுக்காரன் அவ் விடத்திற்சென்று தன் மாட்டைப் பெற்றுக் கொள்வான். துப்புக் கூலி மாட்டின் பாதிவிலையளவு ஆகும். மாடு திருட்டுப் போனதைப் பொலீசாருக்குத் தெரிவித்தால் மாடு கிடைக்க மாட்டாது. இவர்கள் வளைதடி என்னும் ஒருவகை எறிதடியைப் பயன்படுத்துவர். இத் தடி இலக்கை நோக்கி எறியப்பட்டால் இலக்கில்பட்டு எறிந்தவனிடம் திரும்பி வரும். இவ் வகை வளைதடி (Boomerang) ஆஸ்திரேலிய பழங் குடிகளாலும் பயன்படுத்தப்படும். வெல்லூர்க் கள்ளரின் பெயர்கள் வினோதமானவை. வேங்கைப்புலி, வெங்காலிப்புலி, செம்புலி, சம்மட் டிகள், திருமான், சாயும் படை தாங்கி போல்வன. இவர்களுள் அண்ணன் தங்கை பிள்ளைகள் மணம் செய்து கொள்ளலாம்; தாய்மாமன் பிள்ளையை மணத்தல் கூடாது. புறமலை நாட்டுக் கள்ளர் சுன்னத்துச் செய்து கொள்வர். சிறு குடிக்கள்ளர் கட்டும் தாலியில் மகமதியரின் நட்சத்திரமும் பிறையுமுண்டு. திருநெல்வேலி யிலும் மதுரையிலும் வாழும் கள்ளப்பெண் மூர்க்கங்கொண்ட எருதின் கொம்பிலே கட்டிய துணியை எடுத்துக்கொண்டு வந்தவனையே கணவ னாகத் தெரிவார்கள். மாட்டின் கொம்புகளில் விலையுயர்ந்த பொருள் களைக் கட்டி மாட்டை அவிழ்த்து விடுவார்கள். சனங்களின் ஆரவாரத் துக்கும் மேளங்களின் ஒலிக்கும் நடுவே அது அங்கும் இங்கும் ஓடும். கள்ளன் மாட்டுக்குப் பின்னால் சென்று அதன் கொம்பிற் கட்டியிருப் பதை அவிழ்த்தெடுப்பான். மேற்கத்திய கள்ளருள் பெரும்பாலும் ஒரு கள்ளப்பெண் பத்து, எட்டு அல்லது இரண்டு கணவருக்கு மனைவியாக விருப்பாள். பிள்ளைகள் எல்லாருக்கும் சொந்த முடையவர்களாவர். மணமகனின் உடன் பிறந்தாள் பெண்வீட்டுக்குச் சென்று 21 பணம் கொடுத்து பெண்ணின் கழுத்தில் குதிரை மயிரைக் கட்டி அவளையும் அவள் இனத்தவர்களையும் மணமகன் வீட்டுக்கு அழைத்துச் செல்வாள். மணமகனும் மணமகளும் வளைதடி மாற்றிக்கொள்வார்கள். கள்ளரின் முதன்மையான கடவுள் அழகர்சாமி. மதுரையில் அழகர் கள்ளசாமி எனப்படுவர். கள்ளர் மாட்டுச்சண்டை நடத்துவதில் விருப்பமுடையர். இது கொழுமாடு எனப்படும். இன்னொரு வகை மாட்டுச் சண்டை பாய்ச்சல் மாடு எனப்படும். கள்ளரின் வழக்கமான பட்டப்பெயர் அம்பலக்காரன், சிலர் அகமுடையான், சேர்வை, தேவன் எனவும் பெயர்பெறுவர். கன்னடியர்: இவர்கள் மைசூரிலிருந்து வந்து தமிழ்நாட்டில் குடியேறினோராவர் காக்காளர்: இவர்கள் மத்திய திருவிதாங்கூரிலுள்ள காக்காக் குறவர். பெண்கள் பச்சை குத்தும் தொழில்புரிவர். காதுகுத்து, கைநோக்கு (இரேகை பார்த்தல்) கொம்பு வைப்பு (நோவுள்ள இடத்தில் கொம்பா லூதுதல்) பாம்பாட்டு, வாய்ப்புக் கூறுதல் (சோசியம் சொல்லுதல்) போன்ற தொழில்களையும் இவர்கள் புரிவர். காக்காளர் காலை ஞாயிற்றை வணங்கி ஞாயிற்று வாரத்தில் பொங்கலிடுவர். ஆடவர் பன்னிரண்டு மனைவியர் வரையில் மணப்பர். இவர்களின் சொத்து தந்தை தாயரிலிருந்து பிள்ளைகளைச் சேர்வது. காடர்: ஆனைமலையில் வாழும் மக்கள் காடர் எனப்படுவார்கள். ஆண்களும் பெண்களும் பற்களின் முனைகளை அராவிக் கூராக்குவர். பெண்கள் கூந்தலில் மூங்கிற் சீப்பு அணிவர். இவர்கள் பேசும் மொழியில் தமிழ் மலையாளச் சிதைவுகள் காணப்படுகின்றன. இவர்கள் ஆளை ஆளி என்பர்; முடி ஆளி - முடியுடையவன்; கத்தி ஆளி - கத்தியுடை யவன்; பூ ஆளி - பூ வுடையவன். இராக் காலங்களில் இவர்கள் தமது குடிசைகளின் முன் விளக்கெரிப்பர். இவ்வாறு இவர்கள் செய்தல் கரடி, யானை, புலி, சிறுத்தை முதலிய விலங்குகள் தமது குடிசைகளை அணுகா மல் இருப்பதற்காகும். தீத்தட்டிக் கற்களால் இவர்கள் தீ உண்டாக்கு கின்றனர். பெண்கள் தமது குழந்தைகளைத் தோளிற் கட்டிய துணியில் இட்டுச் செல்வர். காடர் வாலிபன் திருமணம் செய்ய விரும்பினால் பெண் இருக்கும் கிராமத்துக்குச் சென்று ஓர் ஆண்டு தங்கித் தான் ஈட்டிய பொருளைக் கொடுப்பான். திருமணத்தின் போது ஆண்களும் பெண்களும் பந்தலுக்கு முன்னால் நின்று ஆடுவார்கள். பெண்ணின் தாய் அல்லது உடன் பிறந்தாள் தாலியை அவள் கழுத்தில் கட்டுவாள். பெண்ணின் தந்தை மணமகனின் தலையில் தலைப்பாகை வைப்பான். பூப்புக்காலங்களில் பெண்கள் தனிமையாக ஓரிடத்திலிருப்பர். பூப்படைந்தபின் அவர்கள் தமக்கு வேறு பெயர் இட்டுக் கொள்வார்கள். குழந்தையைப் பெற்ற பெண்ணுக்கு மூன்று மாதங்களுக்குத் தீட்டு உண்டு. ஒரு மாதமானதும் பெண்கள் எல்லோரும் கூடிக் குழந்தைக்குப் பெயரிடுவார்கள். கைம் பெண்கள் மறுமணம் செய்வதில்லை; ஆனால் வைப்பாட்டிகளாக இருக்க அனுமதிக்கப்படுவர். தாய்மார் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வரை குழந்தைக்குப் பாலூட்டி வளர்ப்பர். பல்லை அரத்தினால் அராவிக் கூராக்குதல் அழகு என்று காடர் கருதுவர். சிறுவர் புலிநகம், முதலைப்பல் முதலியவற்றை அணிந்திருப்பர். பெண்கள் காதிலுள்ள துளைகளில் ஓலையைச் சுருட்டிச் செருகுவர். இரும்புக் காப்பு, இரும்பு மோதிரம், மணிகோத்த மாலைகள் என்பவற் றையும் இவர்கள் அணிவர். காடுபட்டன்: இவர்கள் மலையாளத்திலுள்ள நாயர்ச் சாதியினர் போன்றோர். இவர்களின் உரிமை வழி தந்தை தாயரிலிருந்து சொத்து பிள்ளைகளைச் சேர்வது. மணமகளுக்குப் பெண்ணின் சகோதரி தாலி கட்டுவாள். பிணச் சடங்குகளை அம்பட்டன் செய்வான். பெண் ஆண் சந்ததியின்றிக் கைம்மையானால் கணவனிறந்த 12வது நாள் பெற்றோர் வீட்டுக்குச் செல்வாள். ஆண் சந்ததியிருந்தால் கணவன் வீட்டிலிருப் பாள். காட்டு மராத்தி: குருவிக்காரர் என்னும் வகுப்பினருக்குக் காட்டு மராத்தி என்னும் பெயர் வழங்கும். மலையாளத்தில் வாழும் குறும்பர் காட்டு நாய்க்கர் எனப்படுவர். காணிக்காரர்: தென் திருவிதாங்கூரில் மலைகளில் வாழும் மக்கள் இப் பெயர் பெறுவர். காணிக்காரரின் உட்பிரிவினர் இல்லங்கள் எனப் படுவர். இவர்கள் பேசும் மொழி மலையாளம். இவர்களின் உரிமை தந்தையின் சொத்து பிள்ளைகளைச் சேர்வது. அம்மன், பூதநாதன், வெடிக்காட்டுப் பூதம், வடதலைப் பூதம் முதலிய தெய்வங்களை இவர் கள் வழிபடுவர். திருமணத்தின்போது பெண் சிறுமியாயின் மணமகனே தாலி கட்டுவான்; பருவ மடைந்தவளாயின் பெண்ணின் சகோதரி கட்டு வாள். பெண் கருப்பமடைந்து ஏழாவது மாதம் வயிற்றுப் பொங்கல் என்னும் பொங்கல் இடப்படுகிறது. இப் பொங்கல் ஏழு அடுப்பில் ஏழு உலைகளை வைத்துச் செய்யப்படும். காது குத்துக் குறவர்: பல சாதியினருக்கும் காது குத்தும் குறவர் இப் பெயர் பெறுவர். காப்பிலியர்: இவர்கள் குறும்பரில் ஒரு பிரிவினர். பெண்களுக்குத் திருமணத்தின் அடையாளமாக பொட்டு அல்லது தாலி கட்டப்படும். கணவன் வயதில் இளையவனாக விருந்தால் பெண் கிட்டிய உறவின னைச் சேர்ந்து பெறும் பிள்ளை கணவனின் பிள்ளையாகக் கொள்ளப் படும். உடன் பிறந்தாளின் கணவனோடு உறவு பூண்டிருந்தால் அவள் ஒழுக்கத்தில் தவறியவளாகக் கருதப்படமாட்டாள். இவர்களின் தெய்வங்கள் இலக்கம்மா, வீர இலக்கம்மா, தெண்டையா, திம்மப்பன், சிங்காரப் பெருமாள் முதலியவை. காப்பு: இவர்கள் இரெட்டி வகுப்பினர். இவர்கள் தெலுங்கு நாட்டில் உழு தொழில் செய்கின்றனர். இவர்கள் பிராமணருக்கு அடுத்த படியிலுள்ளவர்களாகக் கருதப்படுகின்றனர். கிராமணி: இது சாணார் சிலரின் பட்டப்பெயர். இவர்களின் தலைமைக்காரருக்குக் காத்திரி என்னும் பட்டப்பெயர் வழங்கும். கிருஷ்ணாவைக் காக்கா: இவர்கள் இரணியல், கல்குளம் (திருவிதாங்கூர்) முதலிய இடங்களில் வாழ்வோர். ஆண்களின் பெயர் இறுதியில் ஆயன் என்றும் பெண்களின் பெயரிறுதியில் ஆய்ச்சி யென் றும் முடிவுகள் சேர்ந்து வழங்கும். இவர்கள் வட இந்தியாவிலுள்ள அம்பாதியிலிருந்து வந்து காஞ்சீபுரத்தில் ஆயர்பாடியில் வாழ்ந்தார்கள். மகராசா உடைய மார்த்தாண்டவர்மன் காலத்தில் இவர்கள் கேரளத் துக்குச் சென்றார்கள். மார்த்தாண்டவர்மன் காலம் கொல்லமாண்டு 904-933. இவர்களிடையே மருமக்கள் தாயம், மக்கள் தாயம் என்னும் இருவகை உரிமை வழிகளும் உண்டு. இவர்களின் குரு காணத்தன் அல்லது கசான் எனப்படுவர். குருக்கள்குலப் பெண்கள் மங்கலி அம்மா எனப்படுவர். மருமக்கள் தாயக்காரர் மலையாள மொழி பேசுவர். மக்கள் வழித்தாயக்காரர் கொச்சைத் தமிழ் பேசுவர். மருமக்கள் தாயக்காரருக்கு இளமையில் தாலி கட்டுக் கலியாணமுண்டு. ஒருத்தியின் கணவன் இறந்து போனால் அவள் அவன் தம்பியின் மனைவியாவாள். அவள் அணிந் திருக்கும் ஆபரணங்களைக் களையவேண்டியதில்லை. மருமக்கள் தாயக்காரரின் பெண்கள் தாய் வழியால் அறியப்படுவர். கிலாசி: இவர்கள் தெலுங்கு அம்பட்டர். இவர்களின் உரிமை பெண் வழியாக வருவது. கிழக்கத்தி: வட அல்லது தெற்கு ஆர்க்காட்டுப் பறையர் சென்னையில் கிழக்கத்தி எனப்படுவர். கீரைக்காரன்: கோயம்புத்தூரில் கீரை பயிரிடும் அகம்படியார் சிலருக்கு இப்பெயர் வழங்கும். குகவேளாளர்: சில வேளாளரும் மறவரும் தாம் இராமருக்கு ஓடம் விட்ட குகனிலிருந்து தோன்றியவர்கள் எனக் கொண்டு தம்மைக் குகவேளாளர் என்பர். குசராத்தி: கூர்ச்சரத்தினின்றும் வந்து தென்னாட்டிற் குடியேறி னோர் குசராத்தி எனப்படுவர். குடிகாரர்: ஓவியந் தீட்டுவோர், மரங்களில் உருவங்கள் வெட்டு வோருக்குக் கன்னட நாட்டில் இப் பெயர் வழங்கும். குடி என்பது கோயிலைக் குறிக்கும். குடிக்கார்: திருவிதாங்கூரிலுள்ள தேவதாசிகளுக்கு இப் பெயர் வழங்கும். இவர்களுக்கு வீட்டுக் கூலி இல்லை. குடிமகன்: இது அம்பட்டனுக்கு வழங்கும் தமிழ்ப் பெயர். குடியர் (குடி=மலை) : இவர்கள் தென் கன்னடத்தில் காணப்படு கின்றனர்; கொச்சைத்துளுப் பேசுகின்றனர். மைசூர் எல்லைப் புறங்களில் இவர்கள் காணப்படுகின்றனர். இவர்களின் முக்கிய கடவுளர் பைரவர், காமன் தேவாரு, பஞ்சபாண்டவர் என்போராவர். பெண்ணும் மணமக னும் கையைப் பிடித்து நிற்க மணமகளின் தந்தை நீரை ஊற்றுவதே அவர்களின் மணக் கிரியையாகும். சில சமயங்களில் மணமகனும் மணமகளும் குடித்தலைவனின் முன்னால் நின்று ஒருவருக்கு ஒருவர் பொட்டு இட்டுக் கொள்வர். குடியா: ஒரியாநாட்டு மிட்டாய் விற்போர் இப்பெயர் பெறுவர். குடோ - கருப்புக் கட்டி. குடுபியர்: இவர்களின் சாதிப் பெயர் குளவாடி. இவர்கள் பெரி தும் குண்டப்பூர் மாகாணத்தில் காணப்படுவர். கொங்கணி, மராட்டி முதலியன இவர்களின் மொழிகளாகும். இவர்களுள் வியபிசார நடத்தை யுள்ள ஆணின் தலையையும் முகத்தையும் சிரைத்து அவனைக் குழியில் நிறுத்தி எச்சில் இலையைத் தலை மீது எறிவது வழக்கு. தலைமைக்காரன் பணத் தண்டம் விதிப்பான். பெண் உண்மை கூறாவிடில் இரும்புக் கம்பியுடன் வெயிலில் நிறுத்தப்படுவாள். இவர்கள் தமது குலதெய் வத்தை வீட்டின் ஒரு புறத்தில் வைத்து வழிபடுவர்; குடும்பத்தினருள் ஒருவன் பூசாரியாக விருப்பான். இவர்கள் பூதங்களையும் காலபைரவரை யும் வழிபடுவர். விதவைகள் மறுமணம் செய்து கொள்வர். ஆனால் இறந்த கணவனின் குடும்பத்தில் மணம் முடிக்க மாட்டார்கள்; பெரும் பாலும் காசுக் கட்டி செய்வர். காசுக் கட்டி ஒருவகை மரத்தை வெட்டி அவித்து அதன் சத்திலிருந்து செய்யப்படுகிறது. குடுமி அல்லது குடுமிக்காரர்: இப்பெயர் ஒரே குடும்பம் என்பதன் சிதைவு என்று சொல்லப்படுகிறது. இவர்கள் குடியர் எனவும் படுவர். இப்பொழுது இவர்கள் தாம் செட்டி இனத்தைச் சேர்ந்தவர்க ளெனக் கூறுவர். இவர்களில் மரியாதைக்குரியவரைக் கொச்சி அரசர் மூப்பன் என்று அழைப்பர். கொங்கண மொழியின் சிதைவாகிய ஒரு வகை மொழியை இவர்கள் பேசுவர். பெண்கள் பூப்புக்குப்பின் நான்கு நாட்கள் தீட்டுக் காப்பர். அக் காலத்தில் அவள் மற்றவர்களுக்கு ஏழடி தூரத்தில் நிற்க வேண்டு மென்றும், நிழல் மற்றவர்கள் மீது விழுதல் கூடாதென்றும் விதிகளுண்டு. பெண்களுக்குத் திருமணம் பூப்படையும் முன் நடக்கும். விதவைகள் மறுமணம் முடிப்பர். குடும்பத்தில் மிக முதியவரின் பிணம் மாத்திரம் சுடப்படும். இவர்களுக்கு இறப்பு பிறப்புத் தீட்டுகள் பதினாறு நாட்களுக்குண்டு. இவர்களின் முக்கிய பொழுது போக்கு கோலாட்டம். குடைகட்டி: இவர்கள் பாணரில் ஒரு பிரிவினர். குணி: இவர்கள் ஆடல் பாடல் புரியும் ஒரிய தாசி வகுப்பினர். கும்மாரர்: (கும்பகாரர்-குயவர்) அவர்கள் கன்னட தெலுங்கு குயவரில் ஒரு பிரிவினர். தமிழ்நாட்டுக் குயவரைப்போல இவர்கள் நூல் தரிப்பதில்லை. குயவன்: மட்பாண்டங்கள் செய்வோர் இப்பெயர் பெறுவர். இவர்கள் பூணூலணிவர். பிடாரி கோயில்களில் இவர்கள் பூசாரியாக இருப்பதுண்டு. இவர்களின் பட்டப் பெயர் உடையான், வேளான் என்பன. முற்காலத்தில் இறந்தவர்களை வைத்துப் புதைக்கும் அழகிய தாழிகளை இவர்கள் செய்தார்கள். திருநெல்வேலி, மதுரை, மலையாளம் முதலிய இடங்களில் தாழிகள் கிண்டி எடுக்கப்பட்டன. குயவன் மாமியின் மகளை மணக்கலாம். பெண் பருவமடைவதன் முன் மணம் நடக்கின்றது. மணமகனின் சகோதரி பெண்ணுக்குத் தாலி தரிப்பாள். குருகள்: இவர்கள் மலையாளக் குரு வகுப்பின் ஒரு பிரிவினர். இவர்கள் தமிழர் உற்பத்தியைச் சேர்ந்தவராகலாம். ஆடவர் நயினார் எனவும் மகளிர் நாச்சியார் எனவும் படுவர். இவர்கள் திருவனந்தபுரத்தி லுள்ள பத்மநாப சுவாமிக்கு வழித் தொண்டர். இவர்கள், மடத்தலைவர் களும், தேவார பண்டாரங்களும் சமயக் கிரியைகள் புரியும்போது உதவி செய்பவர்களாவர். கொல்லம் ஆண்டின் எட்டாவது நூற்றாண்டு வரையில் இவர்கள் பத்மநாபசாமி கோவிலின் உள்மண்டபங்களை அலகிடும் வேலை செய்து வந்தனர். இவர்களின் இல்லம் பவனம் அல்லது வீடு எனப்படும். பெண்கள் குருக்கத்திகள் எனப்படுவர். அவர்கள் கழுத்தில் அரசிலைத் தாலியையும், காதில் சூட்டு என்னும் அணியையும், மூக்கில் நத்து அல்லது மூக்குத்தியையும் அணிவர்; கையிலும் நெற்றியிலும் பச்சை குத்திக் கொள்வர். குருகளின் புரோகிதர் உபாத்தியாயர் எனப்படுவர். தாலிகட்டுக் கலியாணம் சம்பந்தம் முதலிய வழக்கங்கள் இவர்களிடையே உண்டு. இவர்களுக்கு மரணத் தீட்டு ஏழு நாள். குருப்பு: இவர்கள் மலையாளத்திற் காணப்படும் கொல்ல வகுப் பில் ஒரு பிரிவினர். இவர்களிற் பல பிரிவுகளுண்டு. காய, பலிச (கேடகம்) தோல் முதலிய பெயர்கள் அவர்கள் பெயர்களுக்கு முன்னால் இட்டு வழங்கப்படும். குருவிக்காரன்: குருவி பிடிப்போரில் மராட்டி பேசுகின்ற கூட்டத்தினர் இப் பெயர் பெறுவர். இவர்கள் காட்டு மராட்டிகள் எனவும் அறியப்படுவர். இவர்கள் தமது பொருள் பண்டங்களையும் குடிசைகளையும் பொதிமாடுகளில் ஏற்றிக்கொண்டு அலைந்து திரிவர். இவர்கள் பிச்சை எடுத்தும், ஊசி, மணி, முதலியன விற்றும் வாழ்க்கை நடத்துவர். இவர்கள் பலரைச் சென்னை நகரில் காணலாம். குருவிக் காரன் வலையைக் கட்டி அதனுள்ளிருந்து நரி போலச் சத்தமிடுவான். நரிகள் அச் சத்தத்தைக் கேட்டு ஓடி வரும். குருவிக்காரன் அவற்றை அடித்துக் கொல்லுவான். கலியாணமான குருவிக்காரி பகல் முழுதும் அலைந்து திரிந்துவிட்டு இரவானதும் கணவனிருக்கு மிடத்துக்கு வரவேண்டும்; அல்லாவிடில் வேகக் காய்ச்சிய இரும்பைப் பிடித்துக் கொண்டு அவள் பதினாறடி செல்லவேண்டும்; அல்லது கொதிக்கக் காய்ச்சிய சாணி நீருள் கைவைத்து அடியில் இருக்கும் காலணாவைத் தடவி எடுக்க வேண்டும். அவள் குற்றமற்றவளானால் உடனே உள்ளங் கையில் நெல்லை வைத்து உரைஞ்சி உமியைப் போக்கக் கூடியவளாவள். ஆண்கள் தமது பெயரினிறுதியில் சிங் என்பதைச் சேர்த்துக் கொள்வர். திருமணத்தின்போது அவர்களின் தலைமைக்காரன் கறுப்புக் கயிற்றை அல்லது மணிகள் கோத்த மாலையை மணமகனின் கையில் கொடுப் பான். அவன் அதை மணமகளின் கழுத்தில் அணிவான். துர்க்கையும் காளியும் அவர்களின் முதன்மையான தெய்வங்கள். குறவர்: இவர்கள் இடம்விட்டு இடம்பெயர்ந்து திரியும் மலைச் சாதியினர். இவர்கள் கொச்சைத் தமிழ் பேசுவர்; கூடைமுடைவர். வாய்ப்புக் (சோசியம்) கூறுவர். திருமணத்தில் மணமகள் மஞ்சள்நூல் தாலி தரிப்பர். குறப் பெண்கள் பச்சை குத்துவார்கள். குறவர் பூனை, கோழி, மீன், பன்றி, கருங்குரங்கு, நரி, எலி, மான் முதலியவற்றி னிறைச்சியை உண்பர். மணமான பெண்கள் கழுத்தில் கறுப்புப் பாசியும் கையில் வளையலுமணிந்திருப்பர். கணவனை இழந்த பெண்கள் அவற்றைக் களைந்துவிடுவர்; “குறத்தி பிள்ளையைப் பெறக் குறவன் காயந்தின்கிறது” என்னும் பழமொழியுண்டு. குறத்தி பிள்ளை பெற்றால் குறவன் மூன்று நாட்களுக்குப் படுக்கையிலிருந்து காயந் தின்பான். குறவர் (திருவிதாங்கூர்): திருவிதாங்கூர்ப் பகுதியில் 50,000-க்கும் மேற்பட்ட குறவர் வாழ்கின்றனர். இவர்கள் குண்டக்குறவர், பூங்குறவர், காக்காக் குறவர் என மூன்று பிரிவினராவர். பாண்டிக் குறவர் தமிழ் பேசுவர். இவர்கள் பெரிதும் நாஞ்சில் நாட்டில் (நாகர் கோயிற் பகுதி) காணப்படுவர். நாஞ்சில் குறவர் என்பது அவர்களின் மறுபெயர். குண்டக்குறவர் தமது முன்னோர் ஓம குண்டத்தினின்றும் பிறந்தவர் எனக் கூறுவர். மூன்று நூற்றாண்டுகளின் முன் நாஞ்சில் நாடு நாஞ்சிற் குறவரால் ஆளப்பட்டது. இவர்கள் இறந்த முன்னோரின் ஆவிகளை வணங்குவர். இவர்களின் மேலான கடவுள் கார்த்திகேய அடிகள். இவர் களின் இறந்துபோன முன்னோர் சாவார் எனப்படுவர். சாவாருக்குச் சிறுகுகைக் கோயில்களுண்டு. சாவாருக்குப் பூசைசெய்யும் பூசாரி பிணியாளி எனப்படுவான். இராரக்காரர் அல்லது விச்சாரக்காரர் என்னும் ஒருவகையினருண்டு. அவர்கள் நோய்களின் காரணங்களை ஆராய்வர். அவர்களின் தெய்வங்கள் சாவார், ஆயிரவல்லி, சாத்தான், பகவதி, மாடன், மூடி, தெய்வம், பகவான், அப்புப்பன், மருதன் முதலியன. இவர்களின் குடித்தலைவன் ஊராளி, பணிக்கன் எனப்படுவான். பெண் களுக்குத் திருமணம் பூப்பாவதன்முன் நடைபெறும். தாலிகட்டுக் கலியாணமுண்டு. சம்பந்தம் கொள்ளும் வழக்கமும் உண்டு. தாலிகட்டுக் கலியாணத்தில் குறத்தி பெண்ணின் கழுத்தில் தாலிகட்டுவான். குறவன் ஒரு பெண்ணை மணக்க விரும்பினால் அவன் பெண்ணின் தந்தைக்குப் பன்னிரண்டு பணம் கொடுக்கவேண்டும். விதவைகள் மறுமணஞ் செய்வர். இவர்களின் உரிமை வழி மருமக்கள் தாயம். இவர்களுக்கு மரணத்தீட்டு பன்னிரண்டு நாள். தாழ்ந்தவர் உயர்ந்த சாதியினருக்கு நாற்பத்தெட்டடி தூரத்தில் நிற்றல் வேண்டும். குறிச்சான்: மலையாளத்தில் வேட்டையாடி வாழும் சாதி யினருக்கு இப் பெயர் வழங்கும். இப் பெயர் குறிச்சி என்னும் அடியாகப் பிறந்திருக்கலாம். மலையாளத்தில் குறிச்சி என்பது மலையைக் குறிக்கும். குறிச்சான்கள் பிராமணரிடத்தில் அதிக வெறுப்புக் காட்டுவர். பிராமண னொருவன் குறிச்சான் வீட்டுக்குச்சென்று திரும்பினால் குறிச்சான் பிராமணன் இருந்த இடத்தைச் சாணியால் மெழுகிச் சுத்தஞ் செய்வான். மருமக்கள் தாயமும், மக்கள் தாயமும் இவர்களிடையே உண்டு. இவர் களின் தெய்வம் மூத்தப்பன் (பாட்டன்). இப்பொழுது இவர்கள் புனம் செய்வர். இவர்கள் பெரும்பாலும் வேணாடு, கள்ளிக்கோடு, மேற்குத் தொடர்ச்சி மலைச்சாரல்களிற் காணப்படுவர். தீயரும், கம்மாளரும் தீண்டினால் இவர்களுக்குத் தீட்டு உண்டு. பூப்பு எய்து முன் பெண்களுக் குத் தாலிகட்டுக் கலியாணம் நடக்கும். விழாக்காலங்களில் இவர்கள்மீது தெய்வம் ஏறி ஆடி வெளிப்புக் கூறும். சில இடங்களில் வாழ்வோர் நல்ல தண்ணீரில் வாழும் மீன்களைக் கைவில்லால் அம்பை எய்து கொல்வர். அம்பு நீண்ட கயிற்றிற் கட்டப்பட்டிருக்கும். கரிம்பில் பகவதி, மலைக் குறத்தி, அதிர் அள்ளன் முதலிய கடவுளரை இவர்கள் வழிபடுவர். குறுமோ: குறுமோ என்பார் இறசல் கொண்டாப் பகுதிகளில் வாழும் பயிர்த்தொழில் புரியும் ஒரிய வகுப்பினர். தெலுங்கர் இவர் களைக் குடுமோ என்பர். இவர்களின் கிராம தெய்வங்கள் தக்குறாணி எனப்படும். பாகதேவி, கும்பேசுவரி, சாதபவூனி முதலியன அவர்கள் குடும்பத் தெய்வங்களாகும். குறும்பர்: ஆட்டைக் குறிக்கும் குறு என்னும் கன்னடச் சொல்லி லிருந்து இப் பெயர் உண்டானதென்று கருத இடமுண்டு. குறு என்பது கொறி (ஆடு) என்னுஞ் சொல்லின் திரிபு. இவர்களின் தலைமைக்காரன் கொடு எனப்படுவான். தலைப் பூப்படைந்த பெண்கள் வீட்டின் ஒரு மூலையில் எட்டு நாட்கள் விடப்படுவார்கள். ஒன்பதாவது நாள் பெண்கள் அவளை முழுக்காட்டிப் பீடத்தின்மீது இருத்தி, மஞ்சள் நீரும் சுண்ணாம்பு நீரும் கலந்த தட்டை அவளுக்கு முன்னால் ஏந்தி அவளின் கால், மடி, தலை மீது அரிசி தூவி உடுக்கப் புதிய ஆடை கொடுப்பார்கள். திருமணத்தின்போது ஐந்து பெண்கள் தாலியைத் தொட்ட பின்பு குருக்கள் பெண்ணின் கழுத்தில் அதனைக் கட்டுவார். பின்னர் மற்றப் பெண்கள் கலியாணத்துக்குத் தெரியப்படுவார்கள். நல்ல சுழிகளிலொன்று பாசிங்கம். இது நெற்றியிற் காணப்படுவது. மிகக் கூடாத சுழிகள் பேய், யானை என்பன. இவை தலையின் பின்புறத்திற் காணப்படுவன. கூடாத சுழியுடைய பெண்கள் கணவனைக்கொன்று விடுவார்கள் என்னும் நம்பிக்கை இவர்களிடையே உண்டு. ஆகவே தீய சுழியுடைய பெண்கள் மனைவியை இழந்த ஆண்களுக்கு மணமுடித்துக் கொடுக்கப்படுவர். மணம் கணவன் வீட்டில் நடைபெறும். பூப்படைந்த பெண்களுக்குப் பூப்புப் கலியாணம் முன்னதாக நடைபெறுகின்றது. பெண்கள் மறு மணம் செய்துகொள்வர். இவர்களுக்கு இன்னொரு விதவை தாலி கட்டு வாள். இறந்து போன தந்தைக்கு மூத்தமகன் கொள்ளிக்குடமுடைப்பான். இறந்தவனின் மனைவி பதினோராவது நாள் கைவளைகளை உடைத்து விடுவாள். வண்ணத்தம்மா, துர்க்கம்மா, முதலிய பெண் தெய்வங்களின் கோயில்களில் பெண் பூசாரிகள் பூசை செய்வர். விழாக் காலங்களில் பூசாரி தெய்வமேறி ஆடி வருங்காரியங் கூறுவான். இவ்வாறு தெய்வ மேறுவது காரணிகம் எனப்படும். வளர்ந்தவர்களின் பிரேதம் எரிக்கப் படும், சிறுவரின் பிரேதம் புதைக்கப்படும். இவர்களுக்கு மரணத் தீட்டு பத்துநாள். மணமாகாத பெண்கள் தனித்தனி விடப்பட்ட குடிசைகளில் படுத்து உறங்குவார்கள். மணமாகாத சிறுவரும் ஆடவரும் தனிக் குடிசை களில் படுத்துறங்குவார்கள். பயிரை மேயவரும் யானைகளின் முகத்துக்கு நேரே இவர்கள் சூளைக்காட்டியும், காட்டுப்பன்றிகளைக் கவணிற் கல்லை வைத்தெறிந்தும் ஓட்டுவார்கள். இவர்களில் தென்குறும்பர் என்னும் ஒரு பிரிவினரும் உண்டு. குறும்பரின் சாதித் தலைவன் முதலி எனப்படுவான். இவர்களிடையே வேட்ட, உறளி என்னும் இரு பிரிவின ரும் உண்டு. நீலகிரிக் குறும்பரில் பல சகோதரர் சேர்ந்து ஒரு பெண்ணை மணப்பர். இறந்தவர்களின் சமாதியில் அவர்கள் நீருள் இருக்கும் கல்லை (தேவ கோட்டக் கல்) எடுத்துக் கொண்டு வந்து நடுவார்கள். இரங்க சாமிக் கோடு, பராலியர் (Baraliar) முதலிய குன்றுகளில் வாழ்வோர் இறந்தவரின் உடலை எரித்து எலும்பின் ஒரு சிறு துண்டையும், சிறு கல்லையும் அவரின் சமாதியில் (சாவுமனை) வைப்பர்; சில பகுதிகளில் இரு பெரிய கற்களை நாட்டி மேலே ஒரு பாவு கல்லை வைப்பர். குன்றுவர்: இவர்கள் பழநி மலையில் வாழும் பயிர்த்தொழில் புரியும் மக்கள். இவர்களின் மொழி தமிழ். இவர்கள் தமது முன்னோர் வேளாளர் எனக் கூறுவர். இவர்கள் தலைவன் மண்ணாடி எனப்படுவன். பெண்கள் வெள்ளை ஆடை உடுப்பார்கள். ஒருவன் மாமியின் மகளை மணக்கலாம். கணவன் இளம் வயதினனாயின் அவள் அச் சாதி ஆடவன் ஒருவனோடு சேர்ந்து வாழ்வாள். அவ்வாறு பிறக்கும் பிள்ளைகள் கணவனின் பிள்ளைகளாகவே கருதப்படும். எட்டு வயதுள்ள ஒருவனுக்கு இரண்டு அல்லது மூன்று பிள்ளைகள் இருக்கக்கூடும். கூடலர்: விசாகப்பட்டினம் கஞ்சம் பகுதிகளில் வாழும் கூடைமுடையும் வகுப்பினர் இப் பெயர் பெறுவர். கூடான்: மலையாளத்திற் காணப்படும் காணியாளரின் அடிமைகள் கூடானெனப்படுவர். இவர்கள் எல்லா உயர்ந்த சாதியினருக் கும் நாற்பத்திரண்டடி தூரத்தில் நிற்றல் வேண்டும். புலையர், நாயாடி, உல்லாடர் முதலியவர்களுக்குப் பக்கத்தில் நின்றால் இவர்களுக்குத் தீட்டுண்டாகும். இவர்களுக்கு அம்பட்டரும், வண்ணாரும் உண்டு. பெண்கள் பூப்பு அடைந்தால் நான்கு அல்லது ஏழு நாட்களுக்குத் தீட்டுக் காப்பார்கள். கூடான் தனது சொந்தச் சாதியில் அல்லது பறையர் வகுப்பில் சம்பந்தம் வைத்துக் கொள்ளலாம். இவர்களுக்கு மருமக்கள் தாயம் உண்டு. இவர்களிடத்தில் சொத்து இருப்பதில்லை. ஒரு ஆடு, ஒரு மாடு அல்லது சில கோழிகளே இவர்களின் சொத்தாகும். கூணா: இவர்கள் வேள்மா வகுப்பினரின் ஒரு பிரிவினர். கூத்தாடி: ஆரியக் கூத்தன், கழைக் கூத்தன் முதலியோர் இப் பெயர் பெறுவர். கூர்மாப்பு: இவர்கள் விசாகப்பட்டினப் பகுதியில் காணப்படும் ஆடல் மகளிராவர். இவர்கள் மணம் முடிப்பதில்லை; வியபிசாரத்தி னால் பொருளீட்டுவர். விருந்துக் காலங்களில் ஆடல் புரிவர். இவர்கள் விசாகப்பட்டினத்திலுள்ள சிறீ கூர்மம் என்னும் கோயிலில் தேவடி யாட்களாக இருந்தவர்களாவர். கைக்கோளர்: தென்னாட்டில் நெசவுத் தொழில் புரியும் பெரும் பிரிவினர் இப் பெயர் பெறுவர். மதுரை நாயக்க அரசர் கைக்கோளர் வேலையில் திருப்தியுறாது வடநாட்டினின்னும் பட்டுநூற்காரரை அழைத்தார்கள் என்று சொல்லப்படுகிறது. இன்று தமிழ் நெசவாளரை விடப் பட்டுநூற்காரரின் எண்ணிக்கை அதிகமாகும். கைக்கோளர் செங்குந்தர் எனவும் படுவர். பறையரும் இவர்களும் தம்மை வீரபாகுவின் வழித்தோன்றல்கள் எனக் கூறுவர். இவர்களுள் சோழியர், இரட்டு சிறுதாலி, பெருந்தாலி, சீர்பாதம், சேவுக விருத்தி என்னும் பிரிவுகளுண்டு. சிறுந்தாலி பெருந்தாலி என்பன சிறிய தாலியையும் பெரிய தாலியையும் அணிவது காரணமாகத் தோன்றிய பெயர்கள். கைக்கோளரிற் பெரும் பாலினர் சைவர். இவர் இலிங்கங் கட்டுவர். சிறு தொகையினர் வைணவ மதத்தினர். இவர்களின் தலைமைக்காரன் பெரியதனக்காரன் அல்லது பட்டக்காரன் எனப்படுவான். பெரிய தனக்காரன் மகா நாட்டான் எனவும் படுவன். இவர்களுள் நட்டுக்கட்டாத நாயன்மார் என்னும் பண்டாரங்களுண்டு. இவர்கள் நாடுகளிற் சென்று தமது குலத்தவர்களுக் கிடையில் தோன்றும் பிணக்குகளைத் தீர்த்து வைப்பர். கைக்கோளருள் பொன்னம்பலத்தார் என்னும் பண்டாரங்களுமுண்டு. ஒட்டக்கூத்தப் புலவர் கைக்கோள வகுப்பைச் சேர்ந்தவராவர். காஞ்சீபுரத்திற் சபை கூடும்போது கைக்கோளத் தலைவன் தலையணையிற் சாய்ந்து கொண்டிருப்பான். ஆகவே அவன் திண்டுக்காரன் எனப்படுவான். கைக்கோளக் குடும்பமொவ்வொன்றிலும் ஆலய சேவைக்குப் பெண்கள் நேர்ந்து விடப்படவேண்டும். கைக்கோளர் தாம் தேவதாசிகளோடு தொடர்பற்றவர் எனக் கூறுகின்றனர். தாசிகளுக்குக் கோயில் விக்கிரகத் துக்கு முன்னிலையில் பிராமணன் தாலி கட்டுகின்றான். தாலி என்பது கறுப்பு மணிகள் கோத்தமாலை (கறுப்புப்பாசி). கைக்கோளருக்கு முதலி, நாயன்மா ரென்ற பட்டப்பெயர்களுண்டு. கொங்கணி: கொங்கணரின் ஆதி இருப்பிடம் சரசுவதி ஆற்றை அடுத்த இடங்கள். அங்கிருந்தும் வந்து தெற்கே குடியேறினோர் கொங்கணிகள் எனப்படுவர். கொங்க வேளாளர்: இரெட்டிமார் இவர்களுடனிருந்து உண்ண மாட்டார்கள். காதில் தொங்கும் வளையங்களையும் மேற்காதில் தொங்கும் முருகுகளையும் கொண்டு இவர்கள் மதிக்கப்படுவார்கள். முறுக்கித் திரிக்கப்படாத நூலில் பெண்கள் தாலி அணிவார்கள். தாயத்து என்னும் அணியை இடதுகையில் அணிவார்கள். ஆண்கள் தாய்மாமன் மகளை மணப்பர். சிறு பையன் வளர்ந்த பெண்ணுக்குக் கலியாணம் முடிக்கப்படு வான். மகன் வளரும் வரையும் அவன் தந்தை அவளுக்குக் கணவனின் கடமைகளைச் செய்து வருவான். திருமணக் காலத்தில் அவர்கள் குரு அருமைக்காரன் என அழைக்கப்படுவான். குருவின் மனைவி அருமைக் காரி எனப்படுவள். அருமைக்காரன் பெண்ணின் கழுத்தில் தாலிகட்டு வான். அப்பொழுது அம்பட்டன் “சந்திரசூரியர் உள்ளளவும் உங்கள் கிளைகள் ஆல்போல் தழைத்துச் சுற்றம் மூங்கில் போல் பெருக” என்று வாழ்த்துவான். இவர்களுட் பிச்சைக்காரர் முடவாண்டிகள் எனப்படுவர். கொடிக்கால்: கொடிக்கால் - வெற்றிலை. வெற்றிலை பயிரிடு வோர்க்கு இப் பெயர் வழங்கும். சாணாரில் ஒரு பிரிவினருக்கும் கொடிக் கால் என்னும் பெயருண்டு. கொடிப்பட்டன்: இவர்கள் மலையாளத்தில் வாழும் தமிழ்ப் பிராமணருள் ஒரு பகுதியினர். இவர்கள் வெற்றிலைக் கொடிகளைப் பயிரிட்டமையால் பிராமணத் தன்மையை இழந்தார்கள். இவர்களின் முக்கிய இருப்பிடம் வாமனபுரி. கொண்டதோரர்: விசாகப்பட்டினத்திற் பயிரிடும் மலைவாசிகள் இப் பெயர் பெறுவர். இவர்கள் பாண்டவரையும், தலுபுல் அம்மாவை யும் வழிபடுவர். இவர்கள் தம்மைப் பாண்டவர் குலத்தினரெனக்கூறிக் கொள்வர். கொண்டர்: இவர்கள் கஞ்சம், விசாகப்பட்டினம், வங்காளம், மத்திய மாகாணங்களில் வாழ்கின்றனர். இவர்கள் தம்மை கூய் என்னும் பெயர் கொடுத்தும் வழங்குவர். இது கோய அல்லது கோயாவுக்குச் சமம். இவர்களில் 58 பிரிவுகளுண்டு. போர் செய்யும்போது இவர்கள் எருமைக் கொம்பும் மயிலிறகு மணிவர். பெண்கள் முகத்தில் பச்சை குத்திக்கொள் வர். முற்காலத்தில் கொண்டர் பூமிக் கடவுளுக்கு நரபலி இட்டனர். நரபலியிடுதற்குப் பயன்படுத் தப்பட்ட மரப் பலிபீடமொன்று சென்னை நூதன பொருட்காட்சிச் சாலையிற் காணப்படுகின்றது. நரபலி ஆங்கில ரால் நிறுத்தப்பட்டது. திருமணக் காலத்தில் மணமகன் மணமகளைத் திருடிக் கொண்டு போவதாகவும் பெண்வீட்டார் பெண்ணை மீட்டுக் கொண்டு போவதாகவும் இரு பகுதியாருக் கிடையிலும் போலிப் போர் நடத்தப்படுவதுண்டு. கொண்டாலிகர்: மராட்டி உற்பத்தியைச் சேர்ந்த பிச்சை எடுக்கும் பண்டாரங்கள் இப் பெயர் பெறுவர். கொல்லர்: இவர்கள் மலையாளக் கம்மாள வகுப்பினர், இவர்களுள் தீக்கொல்லன், பெருங்கொல்லன், கனசிற்கொல்லன், தோற்கொல்லன் எனப் பல பிரிவுகளுண்டு. கோசாக்கள்: இவர்கள் அண்ணகர் (விதையடிக்கப்பட்டவர்). தென்னிந்தியாவில் இவர்களிற் பலர் காணப்படவில்லை. சில சமயங் களில் இந்துக்கள் சிலரும் பிராமணர் சிலரும் அவர்களின் சம்மதத்தின் பேரில் அண்ணகராக்கப்படுகிறார்கள். விரையை எடுத்துவிடும் வேலை அம்பட்ட வகுப்பினராலும் அண்ணகராலும் செய்யப்படுகிறது. இவர்கள் முசல்மான்களின் அந்தப்புரங்களில் வேலை செய்வார்கள். கோஷ்டி அல்லது கோஷ்டா: சூடியநாகபுரியில் நெசவு, பயிர்த் தொழில்கள் புரியும் தெலுங்கு வகுப்பினர் இப்பெயர் பெறுவர். கோடர்: இவர்கள் முன்பு மைசூரிலுள்ள கொல்லி மலையில் வாழ்ந்தார்கள். இப்பொழுது நீலகிரிப் பீடபூமியிலுள்ள ஏழு கிராமங் களில் வாழ்கின்றனர். கன்னடமும் தெலுங்கும் கலந்த மொழி பேசுகின்ற னர். எல்லா வகை இறைச்சிகளையும் உண்பர். கோடருள் கொல்லர், தச்சர், தட்டார்,தோல் மெருகிடுவோர், குயவர், வண்ணார், பயிரிடுவோர் முதலிய பல பிரிவினருளர். இவர்கள் எருமைத் தோலினாற் பின்னிய நீண்ட கயிறுகளால் ஆடு மாடுகளைக் கட்டுவர்; ஆவரசம்பட்டை சுண்ணாம்பு முதலியவைகளைக் கொண்டு தோலைப் பதனிடுவர். இவர்களின் குருமார் பூசாரி, தேவாதி என இருபிரிவினராவர். இவர்கள் மணம் செய்து கொண்டவர்களாயிருத்தல் வேண்டும். மனைவி இறந்தால் இவர்கள் குருமாராக இருக்க முடியாது. காமாடராயன், மங்காளி, வேட்டைக்காரச் சுவாமி, அதிரல், உதிரல் முதலிய தெய்வங்களை இவர்கள் வழிபடுவர்; ஓண நாளைப் பெருநாளாகக் கொண்டாடுவர். வைசூரி நோய் மாரியம்மாவால் உண்டாகின்றதென்று நம்புவர்; மாகாளி யைக் கற்றூண் வடிவில் வழிபடுவர். மனைவி கருப்பமாயிருந்தால் கோடன் தனது தலைமயிரையும் முகமயிரையும் வளரவிடுவான். பெண்கள் பிள்ளையீன்றதனாலுண்டான தீட்டு அடுத்த பிறை காணும் வரையும் உண்டு. பூப்புக் காலத்தில் பெண்களுக்கு மூன்று நாட்கள் தீட்டு உண்டு. கணவனை இழந்த பெண்கள் அணிகலன்களைக் களைந்துவிடு வார்கள். கோட்டைப்பத்து: இவர்கள் அகம்படியாருள் ஒரு பிரிவினர். கோட்டை வேளாளர்: திருநெல்வேலியிலுள்ள சிறீவைகுந்தத் தில் பல கோட்டை வேளாள குடும்பங்கள் வாழ்கின்றன. அவர்கள் இருக்கும் கோட்டைக்குள் பிற ஆடவர் செல்லுதல் கூடாது; பெண்கள் செல்லலாம். மணமான பெண்கள் கணவன், தந்தை, தாய்மாமன், சகோதரன் அல்லாத பிறரின் முகத்தைப் பார்த்தல் கூடாது. இவர்களின் தலைவன் கோட்டைப் பிள்ளை எனப்படுவான். பெண்கள் ஐந்து தலைநாகத்தின் படம் போன்ற ஒரு வகை அணியை அணிவர். கோமட்டி: இவர்கள் சென்னை மாகாணத்தில் வாணிகம் செய்யும் சாதியினர். இவர்கள் மைசூர், பம்பாய், பீரார்(Berar), மத்திய மாகாணம், வட மேற்குப் பரோடா முதலிய இடங்களிற் காணப்படுவர். கோமட்டிச் செட்டிகள் தாய் மாமன் மகளை மணப்பர். 18ஆம் நூற்றாண் டில் கோமட்டிகளின் திருமணத்தில் வயது முதிர்ந்த மாதங்கன் தாலியை ஆசீர்வதிப்பது வழக்கமாக விருந்தது. இதனால் மாதங்கருக்கும் கோமட்டிகளுக்கும் யாதோ தொடர்பு இருக்கிறதெனக் தெரிகிறது. மாதங்கன் கலியாணத்தை விரும்பாவிடில் அவன் கலியாணப் பந்தலிற் கட்டியிருக்கும் வாழை மரங்களை வெட்டி கலியாணத்தை நிறுத்தலாம். இவ்வாறே கம்மாளர் கலியாணங்களை நிறுத்த வெட்டியானுக்கு உரிமையுண்டு. இவ் வழக்கங்களால் கோமட்டிகள், கம்மாளர்களுடைய நிலங்களுக்கு மாதங்கர் வெட்டியான் முதலியோர் அதிபதிகளாயிருந் தார்களெனத் தெரிகிறது. கோமட்டிகள் வெற்றிலையும் பாக்கும் வைத்து மாதங்கரைத் கலியாணத்துக்கு அழைப்பார்கள். கோமட்டிகளின் குலதெய்வம் கன்னிகை அம்மா. இத் தெய்வத்தைக் குறிக்கக் கரகத்தில் தண்ணீர் நிரப்பி வைக்கப்படுகின்றது. மாதங்கர் தமது தெய்வம் கன்னி எனக் கூறி அதனை மாதங்கி என்னும் பெயர் கொடுத்து வழிபடுவர். திருமணத்தில் தாலி குருக்கள் அல்லது மணமகனால் கட்டப்படுகிறது. கோமணாண்டி: ஆண்டிகளுள் ஒரு பிரிவினர். கோமாளி: ஒட்டியருள் ஒரு வகுப்பினர் கோயா: இலாக்கா தீவிலுள்ள தோணிச் சொந்தக்காரராகிய சோனக மாப்பிள்ளைமார், தங்கள் பெயரோடு கோயா என்னும் பெயரைச் சேர்த்துக் கொள்கின்றனர். கோயி: கோயி அல்லது கோயா என்போர் கோதாவரிக்கு வடக்கே யுள்ள மலைகளில் வாழ்வோராவர். இவர்கள் கொண்டர் வகுப்பைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுவர். இவர்கள் நாலு ஆண்டுகள் வரையில் ஓர் இடத்தில் தங்கியிருந்து பயிரிடுவார்கள்; பின் பிறிதொரு இடத்துக்குச் சென்று விடுவர். கோயிச் சாதியினரின் கலியாண வழக்கம் மிக வியப்புடையது. ஒருவனுக்குப் பெண் வேண்டியிருந்தால் அவன் தன் பெற்றோரையும் நண்பரையும் பெண் வீட்டுக்கு அனுப்பி முடிவு செய்கிறான். பெண் விறகு பொறுக்கவோ தண்ணீர் எடுக்கவோ வரும் சமயம் பார்த்துக் கணவன் பகுதியார் பெண்ணைத் தூக்கி மணமகன் வீட்டுக்குக் கொண்டு செல்வார்கள். பெண் வீட்டாருக்கு இச் செய்தியை அறிவித்தபின் மணக்கிரியை நடைபெறுகிறது. கோயர் பெரும்பாலும் பல பெண்களை மணப்பர். தாழ்ந்த வகுப்பானுடன் சேர்க்கை வைத்திருக் கும் பெண்ணின் நாக்கில் பொன் கம்பி காய்ச்சிச் சுடப்படும். பனை ஓலையினால் வில் வடிவாகச் செய்யப்பட்ட ஏழு வில்களுக்கூடாக அவளை நுழையச் செய்த பின் ஓலையைச் சுட்டு அவள் சுத்தஞ் செய்யப்படுவாள். குழந்தை பிறந்து ஏழாவது நாள் அதற்குப் பெயரிடப்படும். பிணங்கள் சுடப்படும். இறந்தவரைச் சுட்ட சாம்பலைப் புதைத்து அவ் விடத்தில் நேரான கல்லை நட்டு அதன் மீது தட்டைக் கல் வைக்கப்படும். அவ் வழியாற் செல்வோர் அதன்மீது சிறிது புகையிலையை வைப்பர். இவர்கள் தாம் வீமசேனனுக்கும் காட்டுச் சாதிப் பெண்ணுக்கும் தோன்றிய சந்ததியினர் எனக் கூறிக் கொள்கின்றனர். இவர்கள் நரபலி யிடுவர். நரபலி இப்பொழுது தடைசெய்யப்பட்டுள்ளது. மனித பலிக்குப் பதில் குரங்கு பலியிடப்படுகிறது. வைசூரி நோயை உண்டாக்கும் தேவதை முடியாள் அம்மா எனப்படும். சாளம்மா, கொம்மாளம்மா முதலிய தெய்வங்களையும் அவர்கள் வணங்குவர். இறந்தவர்களின் ஆவிகளும் வணங்கப்படும். நோய்களைப் பேய்கள் உண்டாக்குகின்றன என்னும் நம்பிக்கை இவர்களிடமுண்டு. கோயிலார்பிள்ளை: இவர்கள் வன்னியரில் ஒரு பிரிவினர்; நூலணிவர். கோயிற்றம்பிரான்: இவர்கள் வட திருவிதாங்கூரிலும் கொச்சியி லும் காணப்படும் சத்திரிய வகுப்பினர். பழைய சாசனங்கள் இவர்களைக் கோயிலதிகாரிகளெனக் குறிப்பிடுகின்றன. இவர்கள் கொல்லமாண்டு 300இல் சேரமான் பெருமாளால் பெபூரி(Beypore)லிருந்து கொண்டு வரப்பட்டார்கள். ஆண்கள் வேணாட்டுச் சிவரூபம் என்று அழைக்கப் படுவர். இவர்கள் அரச குடும்பப் பெண்களை மணந்தார்கள் என்னும் பழங்கதை உள்ளது. இவர்களுக்கு உரிமை பெண் வழி. நம்பூதிரிப் பிராமணர், இவர் பெண்களை மணப்பர். கோலா: தெலுங்கு உழவர் கோலா எனப்படுவர். இவர்கள் எத்தனை மனைவியரை வேண்டுமாயினும் மணக்கலாம். பெண்கள் இறவுக்கை அணிவதில்லை. கணவனை இழந்த பெண்கள் கைவளை களை உடைப்பதில்லை. பிள்ளையைப் பெற்ற கோலாப் பெண் 90 நாள் தீட்டுக் காப்பாள். கோலாயன்: இவர்கள் தென் கன்னடத்திற் காணப்படுவர். வட மலையாளத்தில் இவர்கள் ஊராளி எனப்படுவர். ஆயன், கோல் ஆயன், மாரியன் அல்லது எருமான் (எருமா - எருமை) என இவர்களுட் பல பிரிவுகளுண்டு. கோலாயரின் குரு மூத்தவன் அல்லது பொதுவன் எனப் படுவன். அவன் பெரும்பாலும் அரசரால் தெரியப்படுவன். கோலாயர் பெண்கள் பருவமடைய முன் தாலிகட்டுக் கலியாணம் நடத்துவர். தந்தை தாலிகட்டுவான். பூப்படைந்த பெண் மூன்று நாள் தீட்டுக் காப்பாள். கோலியன்: நெசவு செய்யும் பறைய வகுப்பினர் இப் பெயர் பெறுவர். இவ் வகுப்பினர் பெரும்பாலும் தஞ்சாவூர் மதுரைப் பகுதி களிற் காணப்படுவர். சில பறையருக்குச் சாம்பான் என்னும் பட்டப் பெயருண்டு. ஈசன் என்பதும் அவர்களின் பட்டப்பெயர். திருமணக் காலங்களில் இவர்களின் பட்டப் பெயர் சொல்லப்படுதல் வேண்டும். கணவனின் சகோதரி பெண்ணுக்குத் தாலி கட்டுவாள். கௌடோ: கஞ்சத்தில் காணப்படும் ஒரிய உழவர் இப் பெயர் பெறுவர். இவர்களில் ஆண்கள் தாய்மாமன் மகளைக் கலியாணஞ் செய்து கொள்வர்; சகோதரியின் மகளைக் கலியாணஞ் செய்வதுமுண்டு. ஏழு கணவரை மணந்தவள் பெத்தம்மா என மரியாதை செய்யப்படுவள். சக்கிலியன்: சக்கிலியர் தெலுங்கு கன்னட நாடுகளிலிருந்து வந்தோர்களாவர். இவர்கள் எல்லாச் சாதியினரிலும் பார்க்கத் தாழ்ந்தோ ராவர். ஆவரசஞ் செடியை இவர்கள் பரிசுத்தமுடையதாகக் கொள்வர். திருமணத்தின் முன் தாலியை அச் செடியின் கிளைகள் ஒன்றில் கட்டுவர். இவர்கள் செருப்புத் தைப்பர். பறையர் தாம் சக்கிலியரிலும் உயர்ந்தவ ராகக் கொள்வர். மதுரை வீரன், மாரியம்மன், திரௌபதி, கங்கம்மா முதலிய தெய்வங்களை இவர்கள் வழிபடுவர். இவர்களின் திருமணங் களை வள்ளுவக் குருக்கள் நடத்தி வைப்பர். சத்திரியன் : சத்திரியர் என்னும் பிரிவு திராடவிடருக்குரியதன்று. ஆனால் சத்திரியர் என்னும் தலைப்பின்கீழ் குறிக்கப்பட்டுள்ளோர் திராவிடர்களாவர். வன்னியர், சாணார், பயிர்த் தொழிலாளரி லொரு பிரிவினர், கள்ளிறக்குவோர் முதலினோரும் தம்மைச் சத்திரியர் எனக் கூறுகின்றனர். தென்கன்னடத்தி லுள்ள மராட்டியர் சிலரும் திருநெல் வேலிச் சாணாரும் தம்மை அக்கினி குலச் சத்திரியர் எனக் கூறிக்கொள் வர். மைசூர் ஆட்கணக்கு அறிக்கையில் அரசுக்கள், இராசபுத்திரர், கூர்க்கர், சீக்கியர், ஆகியோர் சத்திரியர் எனக் கொள்ளப்பட்டுள்ளார்கள். அரசுக்கள் என்போர் மைசூரிலுள்ள அரச குடும்பத்தினர். மலையாளத்தி லுள்ள சத்திரியர் நான்கு பிரிவுகளாக்கப்பட்டுள்ளனர். கோயில் பண்டாலா (பண்டாலா- பண்டசாலை) இராசா, தம்பான், திருமுப்பாத் என்பன அப் பிரிவுகளாகும். தம்பானின் பெண்கள் தம்புராட்டிகள் எனப்படுவர். கன்னட பரப்பரைக் கதையின்படி கோயிற்றம் பிரான்மார் சேரமான் பெருமானின் மருமக்களாவர். இவர்களில் இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் பிரிட்டிஷ் மலையாளத்திலுள்ள பேச்பூரில் (Bejpore) வாழ்ந்தார்கள். மலையாளம் ஆண்டு 300 வரையில் இக் குடும்பம் ஒன்றி லிருந்த ஆண்கள் வேணாட் சுபரூபத்தி (திருவனந்தபுர அரச குடும்பம்) னிடையே மணஞ் செய்வதற்கு அழைக்கப்பட்டார்கள். கொல்லமாண்டு 963இல் திப்புச் சுல்தான் மலையாளத்தின் மீது படை யெடுத்தபோது ஆலியம்கோடு கோவிலகத்தைச் சேர்ந்த ஐந்து பெண் களும் மூன்று ஆண்களும் திருவிதாங் கூருக்கு ஓடிச்சென்று தங்கினர். தம்புரான்கள், அரசர்கள் வீடுகள் கொட்டாரம் அல்லது கோவிலகம் எனப்படும். தம்பான் அல்லது திருமால் பாடிகளின் வீடுகள் கோவிலகம், மடம் எனப் படும். சத்திரியப் பெண்களின் செருத்தாலி, எந்திரம், குழல் என்னும் அணி களை பெண்கள் சிறப்பாக அணிவார்கள். தம்பான். திருமால்பாடிகள் அரச குடும்பங்களில் வேலைக்காரராவர். மலையாள சத்திரியரின் வீடுகள் தேவாரபுரம் எனப்படும். கோயில் தம்புரான்மார் விசுவாமித்திர கோத்திரத்தவர். அரசர் பார்க்கவ கோத்திரத்தினர். இவர்கள் தமது கூட்டத்துள் மணம் முடிப்பதில்லை. கோயில் தம்புராட் டிகள், நம்பூதிரி ஆடவர்களை மணஞ் செய்வர். கோயில் தம்புரான்கள் அரசரிடம் பெண் கொள்வர். அரசர் நாயர்ப் பெண்களை மனைவியராக வைத்திருக்கலாம். தம்பான். திருமால் பாடிகளும் இவ்வாறே செய்வர். இராணிகளும் பண் டாலங்களும் நம்பூதிரி ஆண்களை மணப்பர். தம்பான், திருமால்பாடி பெண்கள் எந்தப் பிராமணனுடனும் வாழ்வர். தம்பான், திருமால்பாடி, பண்டாலம் பெண்களுக்கு ஆரியப்பட்டர் தாலி கட்டுவர். விதவைகள் மறுமணம் புரிவர். தம்புராட்டியின் திருமணத்தில் பெண்கள் சேர்ந்து பிராமணியப் பாட்டுப் பாடுவார்கள். கொள்கையள வில் பெண்களே சொத்துக்குரியவராவர். மூத்த சகோதரனே சொத்தை மேற்பார்ப்பன். சொத்துப் பிரிவினை செய்யப்படுதல் கிடையாது. சொத்து இவர்கள் எல்லோரின் வாழ்க்கைக்காக விடப்படும். சமகாரர்: தென்கன்னடத்தில் வாழும் தோலில் வேலை செய் வோர் இவர்களாவர். தோல் பதனிடும் வேலை பெரும்பாலும் இவர் களாற் செய்யப்படுகின்றது. சமய: இவர்கள் வைணவ ஆச்சாரியர்களாவர். திருமணக் கிரியை களையோ சமயக் கிரியைகளையோ இவர்களுக்குத் தக்கணை கொடாது புரிதல் கூடாது. முற்கால அரசர் ஒவ்வொரு பட்டினங்களிலும் சமயாச் சாரியா என்னும் நிலையம் நிறுவியிருந்தார்கள். அவர்களின் வருவாய் பெரும்பாலும் கற்பில் தவறிய பெண்களை விற்பதால் கிடைத்தது. அப் பெண்கள் சக்கார்ப் பெண்கள் என அறியப்பட்டார்கள். பிராமணப் பெண்களும் கோமட்டிப் பெண்களும் விற்கப்பட்டிலர். சாதியிலிருந்து விலக்கப்பட்டார்கள். அவர்களின் கையில் வியபிசாரிகள் என்று சூட்டுக்கோலினால் எழுதப்பட்டது. மற்றச் சாதிப் பெண்கள் விற்கப்பட் டார்கள். பங்களூரில் ஐரோப்பியர் காலம் வரையில் இவ் வகைப் பெண்கள் வாழும் பெரிய கட்டடம் பட்டினத்திலே இருந்தது. 1833இல் இவ் வழக்கம் அரசினரால் ஒழிக்கப்பட்டது. சலங்குக்காரன்: இது மீன்பிடிகாரருக்கும் முத்துக்குளிகாரருக் கும் வழங்கும் பெயர். சவரர்: கஞ்சம் பகுதிகளில் வாழும் மலைச்சாதியினர் இப் பெயர் பெறுவர். இவர்களின் மொழி முண்டா இனத்தைச் சேர்ந்தது எனக் கிரீர்சன் கூறியுள்ளார். ஆண்கள் இரண்டு அல்லது மூன்று மனைவியரை மணப்பர். பெண்தான் விரும்பினால் கணவனை விட்டுப் பிரிந்து விடலாம். அதனைத் தடுக்க முடியாது. சவரரின் விருந்துகளில் ஆண் களும் பெண்களும் சேர்க்கை வைத்துக் கொள்கின்றனர். விதவைகள் கணவனின் சகோதரனை மணப்பர். சவர இளைஞன் ஒருவன் மணஞ் செய்துகொள்ள விரும்பினால் அவன் ஒரு குடத்தில் கள்ளை எடுத்துக் கொண்டு தனது சுற்றத்துடன் பெண்ணின் தந்தை வீட்டுக்குச் செல்வான். பெண்ணின் தந்தை கள்ளை ஏற்றுக் கொண்டால் அது பெண்ணைக் கொடுப்பதற்கு அடையாளமாகும். இவர்கள் பிராமணப் புரோகிதரைக் கொண்டு எதுவும் செய்விப்பதில்லை. இறந்தவரின் உடல் சுடப்படும்; அடுத்தநாள் தண்ணீர் தெளித்து நெருப்பை அணைத்துக் கருகிய எலும்புகளை எடுத்து இரண்டடி ஆழத்திற் புதைத்து அவ் விடத்தில் சிறு குடிசையிடுவர். இறந்தவரைக் குறித்து மரங்களின் கீழ் நேரிய கற்களை நாட்டுவர். கற்கள் பெரும்பாலும் ஒன்றறை அடி முதல் நாலு அடிவரை உயர்ந்திருக்கும். வியபிசாரம் செய்பவர்களுள் பெண்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள்; ஆண்கள் தண்டிக்கப்படுவர். இவர்களுள் சாதித் தலைவன் உண்டு. அவனே வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பளிப்பான். மகுவா (Mahua)என்னும் ஒரு வகைப் பூவிலிருந்து இலுப்பைப் (பூ?) கள்ளுச் செய்வர். சவலைக்காரன்: இது மீன்பிடிகாரருக்கு வழங்கும் பெயர். சவலை என்பது சவள்; ஓடக்கோலை உணர்த்தும் இவர்கள் வன்னியர் , செம்படவர்களை ஒத்தவர். சிலர் பயிர்த் தொழில் செய்வோராகவும் சிலர் நாகசுரம் வாசிப்போராகவும் இருக்கின்றனர். திருநெல்வேலிப் பகுதியில் வாத்தியக்காரர் சவலைக்காரரும் பணிக்கர்களுமாவர். சாக்சியர்: இவர்கள் அம்பலவாசிகளுள் ஒரு பிரிவினர். இவர் களிற் பெண்கள் தமது சாதிக்குள் மணமுடித்துக்கொள்வர் அல்லது நம்பூதிரிகளோடு சம்பந்தம் வைத்துக்கொள்வர். சாக்கியர் நம்பியார் சாதியாருள் சம்பந்தம் வைத்துக்கொள்ளலாம். இவர்களுக்குக் குருமா ருண்டு. இவர்கள் வீடுகளில் பிறப்பு இறப்புத் தீட்டுகளைப் பிராமணக் குருமார் நீக்குவர். வட திருவிதாங்கூரில் விழாக் காலங்களில் சாக்கியர் கூத்து முதன்மையுடையது. இவர்கள் கூத்தாடுவதற்கென அமைக்கப் பட்ட கட்டடம் கூத்தம்பலம் எனப்படும். சாக்கியன் பழங்கால முறையில் உடுத்துக்கொண்டு முக்காலி மீதிருந்து பாடுவான். அவனுக்குப் பின்னால் நம்பியார் முழவுடன் நிற்பார். நங்கையார் என்னும் நம்பியார்ப் பெண் முன்னால் இருந்து சல்லரியால் தாளம் போடுவாள். சாணான்: இவர் தமிழ்நாட்டுக் கள் விற்கும் சாதியினர். கோயில் களுள் இவர்கள் நுழைதல் கூடாது. சாணார் கோயில்களுள் நுழைய வேண்டுமென வாதாடியதால் உள்நாட்டுக் கலகங்கள் பல உண்டாயின. இவர்களை எதிர்த்தோர் மறச்சாதியின ராவர். திருவிதாங்கூரில் கிறித்துவ மதத்தைத் தழுவிய சாணாரப் பெண்கள் மார்பில் துணியணியாமல் இருக்கும் வழக்கை மீறியதால் கலகங்கள் உண்டாயின. சென்னைத் தேசாதிபதி பெண்கள் இறவுக்கை அணியவும் மாறாடி இட்டு மார்பை மறைத்துக்கொள்ளவும் உரிமை வழங்கினார். நாடான், கிராமணி என்பன இவர்களின் பட்டப்பெயர். சாணார் என்னும் பெயர் சாறு என்னும் அடியாகப் பிறந்தது. சாணார் என்பது அவர்கள் மரம் ஏறப் பயன்படுத்தும் சாண் நார் காரணமாக வந்த பெயர் என்பாரு முளர். சாணி அல்லது சாணி வாள்ளு: இவர்கள் தெலுங்குச் சாதிக் குலத்தினர். இவர்கள் கோயிற் பணிவிடை செய்வார்கள். இவர்கள் தெற்கேயுள்ள தாசிகளைப் போலக் கோயிலுக்கு நேர்ந்து விடப்பட்ட வர்களாவர். அகம்படியாரி லொரு பிரிவினரும் சாணி எனப்படுவர். சாதானி: பிச்சைக்காரப் பண்டாரங்களும் மற்றச் சாதிகளி லிருந்து சாதியால் விலக்கப்பட்டோரும் இப் பிரிவில் சேர்வர். வியபிசாரிப் பெண்களும் இவ் வகுப்பில் சேர்வர். பெண்கள் வைணவப் பெண்களைப் போல உடுத்துக்கொள்வர். சாதானியர் இறவுக்கை உற்சவம் என ஒரு விழா நடத்துவர். இப்பொழுது அது கந்தப்பொடி உற்சவம் எனப்படு கிறது. இவ் வுற்சவத்தில் முற்காலத்தில் இடக்கரான கிரியைகள் நடத்தப் பட்டன. இப்பொழுது கடவுள் வணக்கத்துக்குப் பின் சந்தனப் பொடியை ஒருவர் மற்றவர் மீது எறிவர். விழாவுக்குப் பின் அவர்கள் வீட்டுக்குத் திரும்பி வந்து மது வருந்துவார்கள். பெண்கள் தமது இறவுக்கைகளைக் கழற்றி ஒரு ஏனத்துள் இடுவார்கள். அவைகளை ஆண்கள் ஆளுக்கு ஒன்றாக எடுப்பார்கள். எந்த இறவுக்கை எவனுடைய கையிற் கிடைக் கிறதோஅப் பெண் அன்று அவனுடைய மனைவியாவள். சாத்திரி: இது ஸ்மார்த்த பிராமணரின் பட்டப்பெயர். தேவாங்கு வகுப்பினருக்கும் இப் பட்டப்பெயர் வழங்கும். சாமந்தன்: மலையாள அரசரும் பெருமக்களும் இச் சாதியின ராவர். சாமந்தன் என்பதற்கு ஒரு பகுதிக்கு அதிகாரி என்பது பொருள். இவர்கள் பூணூலணிவதில்லை. இவர்களுக்கு மக்கள் தாயமுண்டு. பெண்கள் பிராமணரையும் சத்திரியரையும் சம்பந்தம் கொள்வர். பெண்கள் கோயில் அம்மாமார் எனப்படுவர். அவர்கள் செருத்தாலி, எந்திரம் குழல் என்பவைகளைத் திருமணக் காலத்தில் அணிவர். சாமந்தனின் வீடு கொட்டாரம் (அரண்மனை) எனப்படும். பிராமணரின் வீடு மடம் எனப்படும். சாலியர்: மலையாள நெசவுத் தொழிலாளர் சாலியர் எனப்படு வர். இவர்களுக்குப் பொதுவான் என்னும் அம்பட்டன் உண்டு. பொது வானே சாலியரின் புரோகிதனாவன். இவர்களில் சிலருக்கு மருமக்கள் தாயமும், சிலருக்கு மக்கள் தாயமும் உண்டு. இவர்கள் வீதிகளிலே வாழ் கின்றமையின் தெருவர் எனவும் அறியப்படுவர். இவர்களுக்கு இறப்புப் பிறப்புத் தீட்டு பத்து நாட்களுக்கு உண்டு. பெண் தலைப்பூப்பு அடைந் தால் பெண்கள் அவளைக் குளத்துக்கு அழைத்துச் சென்று இலைகளாற் செய்த ஏனங்களால் நீரை அள்ளி அவளை முழுக்காட்டுவர். பின்பு அவளைத் தென்னங்குருத்தால் செய்த அறையில் இருத்துவர். அவளிருக் கும் பாயைச் சுற்றி அரிசியும் நெல்லும், தென்னம்பூவும் தேங்காய்களும் வைக்கப்படும். மூன்றாம் நாள் மாலை நேரத்தில் பெருவண்ணான் வெளுத்த மாற்றுத் துணி கொண்டுவருவான். அவனுக்குச் சிறிது நெல்லும் அரிசியும் கொடுப்பார்கள். அவன் அவற்றை ஓர் இலையில் வைத்துப் பூசை செய்வான். பின்பு அவன் துணிகளை மரத் தட்டில் வைத்துத் தட்டைத் தனது தலைமீது ஏந்துவான். அவன் சில வாழ்த்துப் பாடல்கள் பாடிய பின் அத் தட்டை நிலத்தில் வைப்பான். பெண்ணின் உறவினராகிய சில பெண்கள் எரியும் விளக்கு, நிறைகுடம், ஒரு படி அரிசி முதலியவை களைக் கொண்டு பலகையை மூன்று முறை சுற்றி வருவார்கள். அடுத்த நாள் பெண்ணை முழுக்காட்டுவார்கள். பாயில் வைக்கப்பட்ட எல்லாப் பொருள்களும் ஆற்றில் வீசப்படும். சாலியருக்குத் தாலிகட்டுச் சடங்கு உண்டு. பந்தல் இடப்படு கின்றது. ஒரு பலாப் பலகையின் மீது கொளுத்திய விளக்கு, வெற்றிலை, பாக்கு, ஒரு படி பச்சையரிசி முதலியன வைக்கப்படும். பெண் தனது வலது கையில் ஒரு போலி அம்மன் பாவையை வைத்துக் கொண்டு ஒரு பலகை மீது இருப்பாள். பொதுவனுக்கு ஒரு பிடி வெற்றிலையும் ஒரு பணமும் கொடுப்பார்கள். அவன் மணவாளனிடம் தாலியை எடுத்துக் கொடுப்பான். அவன் அதைப் பெண்ணின் கழுத்தில் கட்டுவான். கலியாணத்துக்கு முதல்நாள் மணவாளன் தனது ஆண் சுற்றத்தாரோடு மணமகள் வீட்டுக்குச் செல்வான். அங்கு விருந்துக் கொண்டாட்டம் நடைபெறும். பெண் கருப்பமடைந்து ஏழாவது மாதம் புளிக்குடி என்னும் சடங்கு நடத்தப்படுகிறது. பெண்ணின் சகோதரன் புளியங் கிளை ஒன்றைக் கொண்டு வருவான். இலைகளை எல்லாம் உருவிய பின் அது முற்றத்தில் நடப்படும். புளியமிலையிலிருந்து பிழிந்து எடுக்கப் பட்ட சாறு ஏழு தேங்காய்களிலுள்ள இளநீரில் கலக்கப்படும். பின்பு குடும்பத்தில் முதிய பெண் அதில் சிறிதை அக் கருப்பவதி குடிக்கும்படி கொடுப்பாள். இவ்வாறு மூன்று நாட்கள் செய்யப்படுகிறது. இறந்த வர்கள் புதைக்கப்படுவர். இறந்தவனின் மகன் புதுப்பானையில் தண் ணீரைச் சுடலைக்குக் கொண்டு செல்வான். அவன் குடத்தோடு பிணத்தைச் சுற்றி வந்து அதனை எறிந்து விடுவான். பிணத்தைப் புதைத்த இடத்தில் மூன்று கற்கள் வைக்கப்படும். சாலியர்: இவர்கள் தெலுங்கு நெசவாளர். இவர் தம்மைச் சேனாபதியர் என வழங்குவர். இவர்களின் சாதித் தலைவன் சேனாதிபதி எனப்படுவான். பட்டுச் சாலியர், பதும சாலியர் என இவரில் இருவகை யினருண்டு. பட்டுச் சாலியர் பூணூலணிவர். கொரு நாடு, ஐயம்பேட்டை முதலிய இடங்களில் வாழும் நெசவாளரும் சாலியர் எனப்படுவர். இவர்கள் திருநெல்வேலிச் சாலியருடையவும், கைக்கோளருடையவும் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவர். செங்கற்பட்டிலுள்ள சாலியர் பெரிதும் கைக்கோளராவர். இவர்களின் குலதெய்வம் முத்தாட்சி அம்மன். சிவியார்: இவர்கள் பல்லக்குக் காவுஞ் சாதியினர். இடையரில் ஒரு பிரிவினருக்கும் இப் பெயருண்டு. வியபிசாரிகள் தூணிற் கட்டிப் புளியம் மிலாறுகளால் அடிக்கப்படுவர். பருவமடைந்து மணமாகாதவர்கள் மணமானால் பனை ஓலையில் வேண்டிய ஆண் வடிவங்களை வைத்து அவர்களுக்கு மணக்கிரியை நடத்தப்படும். சிறுகுடி: இது கள்ளரின் கிராமம் அல்லது ஊர். சிறுதாலி: இவர்கள் கைக்கோளர் மறவர்களுள் காணப்படும் பிரிவினர். சிற்பர்: இவர்களுள் பஞ்சம்மாளரில் ஒரு பிரிவினர்; கற்களில் வேலை செய்பவர். சீரிய கிறித்தவர்: கி.பி. 52இல் தோமஸ் ஞானியார் கொடுங் கோளூரில் வந்திறங்கினார். அவ்விடம் குசிறி அல்லது முசிறிக்கோடு எனப்படும். அக் காலத்தில் பினீசியரும் ஆப்பிரிக்க வணிகரும் வாணிகத் தின் பொருட்டு அங்கு வந்தார்கள். தோமஸ் ஞானியார் இந்தியாவில் பலரைக் கத்தோலிக்க மதத்தைத் தழுவச் செய்தார். இறுதியில் இவர் பிராமண மதத்தினர் ஒருவரால் ஈட்டியால் எறிந்து கொல்லப்பட்டு மயிலாப்பூரிலுள்ள சாந்தோமில் அடக்கஞ் செய்யப்பட்டார். இவ்வாறு பழங்கதை வழங்குகின்றது. இரண்டாம் தியதோய்ச்சுக் (Theodoisus) காலத்தில் பாலஸ்தீனத்தில் யூதர் ஈவு இரக்கமின்றிக் கொல்லப்பட் டார்கள். அப்பொழுது அவர்களிற் பலர் வந்து இந்தியாவிற் குடியேறி னார்கள். இன்னும் சிலர் கி.பி. 345 வரையில் சீரியாவிலிருந்து வந்தார்கள். வீரராகவச் சக்கரவர்த்தி (774) ஸ்தானுரவி குப்பதன் (824) முதலியோ ரளித்த பட்டயங்களில் சீரிய கிறித்தவர்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. வீரராகவச் சக்கரவர்த்தி அளித்த பட்டையம் சீரிய கிறித்தவர்களிடத்தில் உள்ளது. பட்டையத்தில் சங்குமுத்திரை பொறிக் கப்பட்டுள்ளது. இப் பட்டையத்தால் சேரமான், உலோகப் பெருஞ் சேவடி என்னும் இரவிக் கொற்றனுக்கு மணிமங்கலம் என்னும் பட்ட மளித்துள்ளான். விழாக்கால உடை அணிதல், வணிக உரிமை, பரிவாரம் வைத்துக் கொள்ளுதல், ஐந்து வாத்தியங்கள், சங்கு முதலிய வாத்தியங் களைப் பயன்படுத்துதல், பகலில் பந்தம் பிடித்தல், நில பாவாடை விரித்தல், பல்லக்கு வைத்திருத்தல், அரசனைப் போல உலாவருதல், அலங்கரிக்கப்பட்ட வில் வைத்திருத்தல், வீட்டு வாயிலை வில் வடிவாக அமைத்தல் போன்ற உரிமைகள் அவனுக்கு வழங்கப்பட்டுள்ளன. இப் பட்டையத்தை வரைந்தவன் சேரமான் உலோகப் பெருந் தட்டான் நம்பி சடையன். இரவிக் கொற்றன் சீரிய கிறித்தவருள் ஒருவன். சீரிய கிறித்தவர் 9ஆம் நூற்றாண்டுக்கும் 14ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் பெருமை பெற்று விளங்கினார்கள். இவர்கள் உடையப் பேரூரைத் தலைநகராகக் கொண்ட கிறித்துவ அரசனால் ஆளப்பட்டார்கள் என்னும் செவி வழிச் செய்தி உண்டு. இன்றும் சில சீரிய கிறித்துவர் இந்து ஆலயங்களுக்குக் காணிக்கைக் கொடுப்பர். பிராமணரல்லாத சில இந்துக்களும் சீரிய கிறித்துவ ஆலயங்களுக்குக் காணிக்கை கொடுப்பர். சீரிய கிறித்தவர் தமது குழந்தைகளுக்குச் சாதகமெழுதி வைப்பர். திருமணத்தில் மண மகன் பெண்ணுக்குத் தாலி தரிப்பான். கணவன் மரணமானால் மனைவி தாலியைக் களைந்து விடுவாள். மரணத்துக்குப் பின் பத்து அல்லது பதினைந்து நாட்களுக்குப் புலர் என்னும் தீட்டுக் காப்பார்கள். ஆண்டில் ஒரு முறை இறந்த நாள் கொண்டாடப்படும். சூலி: கன்னடத் தேவதாசிகள் இப் பெயர் பெறுவர். செக்கன்: வன்னியனுக்கு இது மற்றொரு பெயர். செக்கான்: இவர்கள் தென்மலையாளத்தில் வட்டக்காடர் எனவும் வடமலையாளத்தில் வாணியர் எனவும் படுவர். செக்கார் வாணியரிலும் பார்க்க உயர்ந்தவர்களாவர். செக்கார் தீண்டுவதால் நாயருக்குத் தீட்டு உண்டு. இவர்கள் பழக்கவழக்கங்கள் நாயர் சாதியன ருடையவை போல்வன. செட்டி: நெசவுகாரர், செக்கார் முதலியோர் இதனைத் தமக்குப் பட்டப் பெயராகக் கொள்வர். பேரிச்செட்டி, நகரச் செட்டி, காசுக்காரச் செட்டி, நாட்டுக் கோட்டைச் செட்டி முதலியோர் செட்டி வகுப்பிற் சிலராவர். (செட்டிகள் தம்மைத் தனவைசியர் எனக் கூறுவர். தனவைசி யரின் பிரிவுகள் காவிரிப்பூம்பட்டினத்துச் செட்டி, ஏழிலைச் செட்டி, இளையாத்துச் குடிச்செட்டி, சோழபுரத்துச் செட்டி, புளியங்குடிச் செட்டி, பூவள்ளுக் குடிச் செட்டி, திருவாப்பூர்ச் செட்டி, கருப்பூரச் செட்டி, காவேரிச் செட்டி, வளையல் செட்டி, மஞ்சப்பட்டுச் செட்டி எனச் சைமன் காசிச் செட்டியவர்கள் குறிப்பிடுவர்.) செம்படவன்: தமிழ்நாட்டில் மீன் பிடிகாரர் செம்படவராவர். இவர்கள் நாட்டான், கவண்டன், மணியக்காரன், பாகுத்தன், பிள்ளை முதலிய பட்டப்பெயரை வைத்துக்கொள்வர். மலையனூரில் எல்லாச் செம்படவரும் தம்மைப் பூசாரிகள் என வழங்குவர். சிதம்பரத்திலே குறிக்கப்பட்ட ஒரு நாளில் செம்படவர் சுவாமியைச் சுமந்து ஊர்வலம் வருவர். அதற்காக அவர்களுக்குக் கூலியும் பொங்கலும் கொடுக்கப்படும். அம்மன் ஊர்வலம் வரும்போது செம்படவர் அம்மனை நிறுத்தி ஆடை கொடுப்பார்கள். அவர்கள் தலைவன் நாட்டாண்மைக்காரன் எனப்படு வான். அவனுடைய உதவிக்காரன் சங்கதிப் பிள்ளை அல்லது சங்கதிக் காரன் எனப்படுவான். படகு ஓட்டும் செம்படவர் கங்கையை வழிபடுவர். பூப்படைந்த பெண் காவலாகக் கையில் இரும்பை வைத்திருப்பாள். பெண் கருப்பமாகி ஏழாவது மாதம் முதுகுநீர் குத்தல் என்னும் சடங்கு நடத்தப்படும். பெண் குனிந்து நிற்கும்போது உறவினர் வெற்றிலையின் நுனியால் அவள் முதுகின் மீது பால் வார்ப்பார்கள். செம்மான்: இவர்கள் பறையரில் ஒரு பிரிவினர்; தோலில் வேலை செய்வோர். இப்பொழுது இவர்கள் செய்யும் வேலையைச் சக்கிலியர் புரிகின்றனர். செருமான்: இவர்கள் மலையாளத்தில் உழவுத்தொழில் செய்யும் வேலையாளர். வட மலையாளத்தில் இவர்கள் புலையர் எனப்படுவர். இவர்கள் காணியாளரால் அடிமைகளாய் விற்கவும் வாங்கவும் பட்டார்கள். 1862இல் இவ்வாறு விற்று வாங்குதல் சட்ட விரோதமாக் கப்பட்டது. இவர்கள் சாதிமான்களுக்கு 30 அடி தூரத்தில் வந்தால் தீட்டு உண்டாகும். செருமார், பிராமணர் கிராமங்கள், கோயில்களை அணுகுதல் கூடாது. இன்றும் செருமார் சந்தைகளுள் நுழைதல் கூடாது. இவர்கள் பிராமணருக்கும் நாயருக்கும் அறுபத்து நான்கடி தூரத்தில் நிற்றல் வேண்டும். சேணியன்: நெசவு தொழிலாளர் சேணியரெனப்படுவர். காஞ்சீ புரத்தில் சேணியார் இலிங்க மதத்தினராவர். சேனைக்குடையார்: இவர்கள் வெற்றிலை பயிரிடுவர். இவர்கள் இலை எனவும், கொடிக்காற் பிள்ளைகள் எனவும் அறியப்படுவர். மூப்பன், பிள்ளை என்னும் பட்டப் பெயர்களும் இவர்களுள் வழங்கும். இவர்கள் வீடுகளில் பறையர், அம்பட்டர், வண்ணார் உண்ணமாட் டார்கள். சொண்டி: ஓரிய வகுப்பினருள் கள் விற்போர் இவர்களாவர். இவர்கள் அரிசி, பனங்கட்டி, பனங்கள், இருப்பைப் பூ முதலியவற்றி லிருந்து சாராயம் வடிப்பர். தலைப் பூப்பு எய்திய பெண், நான்கு அம்புகளை நட்டுக் கயிற்றாற் றொடுத்துக் கட்டப்பட்ட இடத்தில் விடப்படுவாள். ஏழாவது நாள் அவளுக்கு முழுக்காட்டப்படும். பூப்படையுமுன் பெண்களுக்கு மணமாகும். இறந்தவர்கள் புதைக்கப்படு வார்கள். மரணத்தீட்டுப் பத்து நாட்களுக்குண்டு. பெண்கள் மச்ச மாமிசம் உண்ணார்கள். கஞ்சம் பகுதியில் பெண்கள் பூப்படைந்த பின் மணப்பர். சோலகர்: இவர்கள் கொச்சைக் கன்னட மொழி பேசும் மக்கள். சோழியப்பட்டர்: இது பட்டப் பிராமண வகுப்பினருக்கு மலையாளத்தில் வழங்கும் பெயர். சோனகர்: இவர்கள் இந்துத் தாய் தந்தையர் மரபில் வந்த முசல்மான்களாவர். சோனகன் என்னும் பெயர் அராபியனைக் குறிக்கும். மலையாளத்து மாப்பிள்ளைமார் சோனக மாப்பிள்ளைமார் எனப்படுவர். கிரேக்கரைக் குறிக்கும் யவனரென்னும் சொல்லுக்குப் பதில் சோனகர் என்னும் சொல் வழங்குகின்றது. சோனார்: இவர்கள் மராத்தி மொழியில் ஒரு பிரிவினராகிய கொங்கணம் பேசும் தட்டார். இவர்களின் சாதித் தலைவன் முக்கியஸ் தன் எனப்படுவன்; இவன் வழக்குகளை விளங்கித் தீர்ப்பளிப்பான். ஒரு கோத்திரத்தில் இவர்கள் மணஞ் செய்து கொள்வதில்லை. இவர்களின் பட்டப்பெயர் செட்டி. சென்னையில் 408 பேருக்கு ஒரு தட்டானுண்டு. இங்கிலாந்தில் 1100-க்கு ஒரு தட்டானுண்டு. சௌராட்டிரர்: இவர்கள் பட்டுநூற்காரர் எனப்படுவார்கள். இப் பெயர் இவர்கள் இருந்து வந்த சௌராட்டிர நாடு தொடர்புடைய பெயர். தக்கடோ: இவர்கள் மலைச்சாதியினரும், பிராமணரும் கலந்து உதித்தோர் . இவர்கள் செயப்பூர்ப் பக்கங்களிற் காணப்படுகின்றனர். தங்கர்: மராட்டிய இடையர் இப் பெயர் பெறுவர். தங்கலான்: இவர்கள் பறையரில் ஒரு பிரிவினர். தங்கலான் என்பதற்குக் கிட்ட நிற்கத் தகாதவன் என்பது பொருள். தசாரிகள்: இவர்கள் ஒரு வகை வைணவப் பண்டாரங்கள். இவர்களை ஒரு சாதியினர் என்று கூறமுடியாது. தச்சநாடன் மூப்பன்: இது குறிச்சான்களுக்கும் நீலகிரிக் குறும்பர்களிற் சிலருக்கும் வழங்கும் பெயர். தச்சன்: இவர்கள் மரவேலை செய்வோர். பறையரில் ஒரு பிரிவினரும் இப் பெயர் பெறுவர். தண்டப்புலையர்: இவர்கள் தென் மலையாளத்தில் வாழும் புலையரில் ஒரு பிரிவினர். இவர்கள் தண்டக் கொடியை அறுத்துப் பின்னிய ஆடையை உடுப்பர். இப் புலைக் குடும்பங்கள் இல்லங்களாகக் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு இல்லத்தில் உள்ளவர்கள் அதே குடும்பத்தில் மணம் முடித்தல் ஆகாது. இவர்கள் குடியிருக்குமிடம் மன்றம் எனப் படும். இவர்கள் சூரியனைப் பார்த்து “சூரியனறிய கண் கெட்டுப் போக” என்று சொல்லிச் சத்தியஞ் செய்வர். இவர்கள் ஐஞ்சு தம்புராக்கள் எனப் பாண்டவரை வழிபடுவர்; இறந்தவருக்குக் கொள்ளிக் குடம் உடைப்பர்; பிணத்துக்கு வாய்க்கரிசி போடுவர். இறந்தவரின் ஆவி சாவார் எனப்படும். தண்டர் : மலையாளத்திலும் , வள்ளுவ நாட்டிலும் பாலைக் காட்டிலும் வாழும் ஈழவருக்கு இப் பெயர் வழங்கும். இவர்களிற் பெண்கள் பல கணவரை மணப்பர். ஊராளி என்பது இவர்களின் பட்டப்பெயர். சில இடங்களில் இவர்கள் வேளான் எனவும் படுவர். சாதிமான்களோடு பேசும் போது இவர்கள் தம்மைக் குழியர் (குழியில் வாழ்வோர்) என்பர். ஆண்களும் பெண்களும் நெற்றியில் பிறையும் ஒரு புள்ளியும் பச்சை குத்திக்கொள்வர். இவர்களுள் குருமார் மார்த்தாண்ட குருப்புக்கள் எனப் படுவர். குருப்புக்கள் அம்பட்டரு மாவர். இவர்களின் கடவுள் பத்திர காளி. பெண்கள் ஏழு அல்லது எட்டு வயதாகவிருக்கும் போது தாலிகட்டுக் கலியாணம் நடத்தப்படும். இக் கலியாணம் கழுத்துக் கெட்டி எனப்படும். மணமகன் மச்சாம்பி எனப்படுவான். இறப்பவர்களுள் குடும்பத்தில் வயதின் மூத்தவர் மாத்திரம் இறந்தால் சுடப்படுவர் இவர்களுக்கு மரணத் தீட்டு பத்து நாள் உண்டு. இறந்தவரின் கிரியைகள் கடற்கரையில் நடத்தப் படும். இறந்தவர்களுக்கு எள்ளோடு கலந்த உணவு கொடுக்கப்படும். தண்டான்: இவர்கள் தீயர். கிராமத்தில் தலைமுறையாக வரும் தலையாரிகள். தலையாரி அரசனால் நியமிக்கப்படுவான். தம்பலர்: தெலுங்கு பேசும் கோயிற் குருமார் இப் பெயர் பெறுவர். கோதாவரி, கிருட்டிணா முதலிய இடங்களில் இவர்கள் பிராமணர்க ளாகவும், தெலுங்கு நாட்டில் சூத்திரராகவும் கருதப்படுவர். இவர்கள் பூணூலணிந்து கொள்வர். தம்பி: இது திருவிதாங்கூர் நாயருக்கு வழங்கும் மரியாதைப் பட்டப்பெயர். திருவிதாங்கூர் அரசரின் பிள்ளைகளும் தம்பி எனப் படுவர். தம்பிரான்: திருவாடுதுறை, மயிலம் (தென்ஆர்க்காடு) முதலிய இடங்களிற் கோயிற் கருமங்களைப் பார்க்கும் பண்டாரங்கள் தம்பிரான் எனப்படுவர். தம்புரான்: திருவிதாங்கூரில் வாழும் ஒரு கூட்டத்தினர் தம்புரான் எனப்படுவர். இவர்கள் இருக்கும் இடப்பெயர்களால் வேறுபடுத்தி அறியப்படுவர். இவர்கள் வட மலையாளத்திலுள்ள கோலாட்டு நாட்டி லிருந்து வந்தார்கள். இவர்கள் அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக் குத் தாலிக் கட்டு அல்லது பள்ளிக்கட்டுச் செய்து அவர்களோடு கணவர் போல வாழ்வர். அரச குடும்பத்திலுள்ள ஆடவர் சூத்திரப் பெண்ணைக் கொள்வர். பெண்ணின் கணவன் இறந்துவிட்டால் அல்லது ஏதும் காரணத்தை முன்னிட்டுப் பிரிந்து விட்டால் அவள் இன்னொரு கோயிற்றம்புரானைக் கொள்ளலாம். இவர்களின் குருக்கள் மலையாளப் போற்றிகளாவர். திருவிதாங்கூர் அரச குடும்பத்தில் முதற்பெண்ணுக்கு இலக்குமி என்றும், இரண்டாவது பெண்ணுக்குப் பார்வதி என்றும் பெயரிடப்படும். தருமராசர்: இவர்கள் வட ஆர்க்காட்டிலுள்ள இருளரில் ஒரு பிரிவினர். தலையாரி: இவர்கள் முதன்மையான கிராமக் காவலர். தெலுங்கு நாட்டில் முத்திராசர் கிராமக் காவலர்களாவர். அவர்கள் தலாரி வாலு எனப்படுவர். தலைவர்: இது பரவரின் பட்டப்பெயர். சாதித் தலைவனென்பது திருநெல்வேலி முத்துக்குளிகாரர் தலைவனுக்கு வழங்கும் பெயர். தாசி: நம்பூதிரிப் பெண்களின் பிராமணரல்லாத பணிப்பெண் இப் பெயர் பெறுவாள். இவள் தேவதாசியில் வேறானவள். தாய்: இது வட இந்தியாவினின்றும் வந்த சைனரின் பட்டப் பெயர். இவர்கள் பெரும்பாலும் வணிகராவர். தார்வாட்: இவர்கள் மருமக்கள் தாயக் குடும்பத்தில் ஒரு தாய் வட்டத்தைச் சேர்ந்தோர். தாலிகட்டுக் கலியாணம்: இது நாயர்ப் பெண்கள் பருவமடையு முன் அவர்களுக்கு நடத்தப்படும் கலியாணம். மருமக்கள் தாயமுடைய ஆண்பெண் என்பவர்களின் ஒழுக்கங்கள் தளர்ந்தவை. இக் கலியாணம் தேவதாசிகளுக்குச் செய்யப்படும் கலியாணம் போன்றது. திகம்பரர்: இவர்கள் முழு நிர்வாணம் பரிசுத்தத்துக்கு அடை யாளமெனக் கொள்ளும் சைனர். திராவிட்: தென்னிந்திய பிராமணர் திராவிட் எனப்படுவர். திருமுடி: செங்கல் வேலை செய்வோர் திருமுடியாளர் எனப் படுவர். சேலம், கோயம்புத்தூர் முதலிய இடங்களில் இவர்கள் பெரும் பாலும் காணப்படுகின்றனர். பெண்கள் ஒழுக்கத்தளர்வுடையர். இவர்கள் பெரும்பாலும் வேட்டுவர் அல்லது கைக்கோளராவர். கோயி லுக்கு நேர்ந்து விடப்படும் கைக்கோளப் பெண்கள் கடவுளுக்குக் கலியாணம் செய்யப்பட்டவர்களாகக் கருதப்படுவர். தீபோ: இவர்கள் பொண்டாரி வகுப்பில் ஒரு பிரிவினர். தீயன்: தீயரும் ஈழவரும் மலையாளத்தில் கள்ளிறக்கும் சாதியினர். வடமலையாளத்தில் தீயப் பெண்களுக்கு ஐரோப்பியர் தொடர்பினால் பிள்ளைகள் பிறந்துள்ளன. இவர்களுக்கு மருமக்கள் தாயம் உண்டு. ஆகவே பிள்ளைகள் தாய் வட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். முற்காலத் தில் பெண்கள் ஐரோப்பியருடன் வாழ்தல் இழிவாகக் கருதப்பட வில்லை. கல்வி அறிவு ஏறப்பெற்ற இக் காலத்தில் அது இழிவாகக் கருதப்படுகிறது. ஈழவரும் தீயரும் இலங்கையிலிருந்து சென்றார்கள் என்னும் ஐதீகம் உள்ளது. ஈழத்து மக்கள் சிலர் மலையாளத்தில் வந்து குடியேறினார்களென்றும் அவர்கள் வரும்போது தென்னையை (தெற்கே உண்டாகும் மரம்) கொண்டு வந்தார்களென்றும் அவர்கள் தீவார் எனப்பட்டார்கள் என்றும், தீவார் என்பதே தீயார், தீயர் என்று ஆயிற்றென்றும் கூறப்படுகின்றன. நில சம்பந்தமான ஆவணங்களில் தீயர் ஈழவர் எனக் குறிக்கப்பட்டுள்ளார்கள். தீயர் ஈழவருக்குத் தாழ்ந்தவராகக் கருதப்படுவர். ஒருவன் சாதியிலிருந்து தள்ளப்பட்டால் வண்ணான் அம்பட்டன் முதலியோர் அவனுக்குக் கடமை செய்ய மறுப்பார்கள். வண்ணாரப் பெண்கள் பெரும்பாலும் தீய வகுப்பைச் சேர்ந்தவர்க ளாவர். பூப்பினா லுண்டாகும் தீட்டு, பிள்ளையைப் பெற்ற தீட்டு முதலியன, நீராடியபின் வண்ணாத்தி கொடுக்கும் “மாத்து” (மாற்று) உடுப்பதால் நீங்கும். ஈழவர் மாத்தைப் பற்றி அறியார்கள். தீயன் ஈழவன் சமைத்த உணவை உண்பான். ஈழவன் தீயன் சமைத்த உணவை உண்ண மாட்டான். தீயர் குடியிருப்புத் தரை எனப்படும். ஒவ்வொரு தரைக்கும் ஒவ்வொரு நாயர் அதிகாரியும். தீயத் தண்டனும், சோதிடனும், அம்பட்ட னும் பலவகைத் தொழிலாளருமிருப்பர். மணமகன் வீட்டாரையும் மணமகள் வீட்டாரையும் பொருந்த வைத்து மணம் ஒழுங்கு செய்வோர் சங்கதி எனப்படுவர். தந்தையின் குடும்பம் இல்லம் எனவும், தாயின் குடும்பம் குலம் எனவும் படும். ஒரே இல்லத்தில் மணங்கள் நடப்ப தில்லை. தென் மலையாளத்தில் மணமகன் மற்போருக்குச் செல்கின்ற வனைப் போல அரையில் ஆடையைக் கட்டிக்கொண்டும், கையில் வாள், கேடகம் என்பவற்றைப் பிடித்துக் கொண்டும், இவ்வாறு உடுத்திக் கொண்ட இரண்டு தோழர் பக்கத்தே வரக் கூத்தாடிக் கொண்டும் போவான். ஈழவன் ஒரு போதும் வாள் கொண்டு போவதில்லை. கலியாணத்தில் முக்கிய பகுதி வாயில் துற பாட்டு. வடமலையாளத்தில் இவர்கள் நெற்றியிலும் தோளிலும் திருநீறு பூசிக்கொள்வர்; பொன் கடுக்கன் அணிவர். இடக்கை மோதிர விரலில் வெள்ளி அல்லது பித்தளை மோதிர மணிவர். பலர் தாயத்துக் கட்டிக்கொள்வர். முற்காலத் தில் தென்மலையாளத் தீயர் முழங்காலுக்கு மேல் ஆடை உடுத்தார்கள். எல்லோரும் காது குத்திக்கொண்டனர். காதில் கடுக்கனும் அரையில் தாயத்தும் அணிந்தார்கள். அரைக்குமேல் யாதும் அணியவில்லை. இன்றும் பெண்கள் மார்பை மறைப்பது அரிது. ஈழவப் பெண்கள் நீல ஆடையைப் பெரிதுமுடுப்பர். இப்பொழுது இவர்கள் மார்பை மறைத் தும் ஆடையை அணிகிறார்கள். தீயர்ப் பெண்களில் சிலர் அணியும் தோடு அவர்களுக்குரியதன்று. முற்காலத்தில் பல தீயச் சகோதரர் கூடி ஒரு மனைவியை மணந்து வாழ்வார்கள். இவ் வகை நிகழ்ச்சியைப் பற்றிய சான்றுகள் எழுத்து மூலம் உள்ளன. தென் மலையாளத்தில் இவர்களுக்கு மக்கள் தாயமுண்டு. பூப்பு அடையுமுன் பெண்ணுக்குத் தாலிக் கட்டுக் கலியாணம் நடைபெறும். இறந்தவனின் தலை தெற்கே இருக்கும்படி பிணம் கிடத்தப்படுகிறது. கைப்பெருவிரல் களும் கால்பெருவிரல்களும் சேர்த்துக் கட்டப்படுகின்றன. கால்மாடு தலைமாடுகளில் விளக்குகள் வைக்கப்படுகின்றன. இறந்தவரின் உடல் கொளுத்தப்பட்டால் சாம்பல் கடலில் அல்லது ஆற்றில் கொட்டப்படு கிறது. ஆண்டில் ஒரு முறை இறந்தவரின் நினைவுநாள் கொண்டாடப் படுகின்றது. அப்பொழுது வீட்டின் நடுவே விளக்குக் கொளுத்தி வைத்துப் பக்கத்தே தண்ணீரும் இளநீரும் வைக்கப்படும். இவர்கள் மாட்டு இறைச்சியை உண்பதில்லை. துருவாளர்: இவர்கள் கட்டுக் கொடுக்கிற (கலியாணம் பொருத்தி வைக்கிற) சாதியினர். இவர்களுக்கு வேண்டான் என்பதும் மறுபெயர். துலாபாரம்: இது திருவிதாங்கூர் அரசரால் செய்யப்படும் ஒரு வகைத் தானம். அரசன் தனது நிறையுள்ள பொன்னைப் பிராமணருக்குத் தானஞ் செய்வான். துலுக்கர் (துருக்கியர்) : இப் பெயர் சில சமயங்களில் மகமதியரைக் குறிக்க வழங்கப்படும் தேசிகர்: இவர்கள் பண்டாரங்களுள் ஒரு பிரிவினர். தேசாரி: வட ஆர்க்காட்டில் ஒவ்வொரு இடத்திலுமுள்ள தலையாரி தேசாரி எனப்படுவன். தேவடியாள்: தேவதாசி தேவதாசி: தாசிகளில் ஏழு வகையினர்களுண்டு. (1) தத்தம் - தன்னைக் கோயிலுக்கு ஒப்படைத்தவள். (2) விக்கிரகம் - தன்னைக் கோயிலுக்கு விற்றவள் (3) பிரித்திய - தன் குடும்ப நன்மைக்காக கோயிற் பணிவிடை செய்பவள். (4) பத்தி காரணமாகக் கோயிலை அடைபவள் (5) தானே விரும்பி வந்து சேர்பவள் (6) அலங்காரஞ் செய்து அரசரால் கோயிலுக்குக் கொடுக்கப்பட்டவள். இவர்களின் வேலை விக்கிரங்களுக் குச் சாமரை வீசுதல், கும்ப ஆராத்தி கொண்டு செல்லுதல், கடவுள் உலாவரும் போது ஆடிப்பாடுதல் என்பன. 1004இல் இராசராசன் கட்டிய பெரிய தஞ்சாவூர்க் கோயிலின் நான்கு வீதிகளிலும் நானூறு தழுக்குச் சேரிப்பெண்கள் வாழ்ந்தார்கள். சென்ற நூற்றாண்டின் இறுதி யில் காஞ்சீபுரத்தில் நூறு ஆடல் மாதர் இருந்தார்கள். மதுரை, காஞ்சீ புரம் முதலிய கோயில்களில் இன்னும் பெருந் தொகையினர் காணப்படு கின்றனர். இவர்களுக்குக் கோயில் வருவாயி லிருந்து மானியங் கிடைக்கிறது. அப்தூர் இரசாக் (Abdul Rasak) என்னும் துருக்கிய தூதர் 15ஆம் நூற்றாண்டில் விசயநகரத்திலிருந்தார். இப் பெண்கள் மூலம் கிடைக்கும் வருவாய் நகரக் காவலர் (Police) சம்பளம் முதலியவற்றுக்குச் சென்றதென அவர் கூறியுள்ளார். இப் பெண்களுக்கும் வாளுக்கும் அல்லது கடவுளுக்கும் கோயிலில் கலியாணம் நடத்தப்படுகின்றது. பெண்களின் கழுத்தில் அவர்கள் குலத்திலுள்ள ஆடவர் தாலி கட்டு கின்றனர். தாசி குலத்தவர்களுக்கு ஆண்களைப் போலவே பெண்களுக் கும் சொத்துரிமை உண்டு. தாசி குல ஆடவர் நட்டுவர் எனப்படுவர். அவர்கள் தமது பெயருடன் பிள்ளை என்பதைச் சேர்த்து வழங்குவர். தாசிகளில் வலங்கை, இடங்கை என இரு பிரிவுகளுண்டு. வலங்கையினர் இடங்கைக் கம்மாளர் வீடுகளில் பாடவோ ஆடவோ மாட்டார்கள். மற்றவர்கள் கம்மாளத் தாசிகள் எனப்படுவார்கள். தெலுங்கு நாட்டில் கம்மாளர் போகம் அல்லது சாணி எனப்படுவர். ஒரிய நாட்டுத் தாசிகள் குனி எனப்படுவர். பெல்லாரியின் மேற்குத் தாலுக்காவிலும் அதன் அயலேயுள்ள தார்வர், மைசூர் முதலிய இடங்களிலும் போயர், பினா சூஸ் முதலியவர்களுள் ஆண் குழந்தை இல்லாத குடும்பங்களுள் ஒரு பெண் குழந்தை தாசியாகக் கோயிலுக்கு விடப்பட வேண்டுமென்று சட்டமுண்டு. திருவிதாங்கூர்த் தாசிகள் தேவடியாட்கள், குடிக்காரி (வீட்டுக் குரியவள்) அல்லது பெண்கள் எனப்படுவர். ஆடவர் தேவடி யான் அல்லது நாஞ்சில் நாட்டு வேளாளன் எனப்படுவர். திருவிதாங் கூர்த் தாசிகள் வீடுகளில் சேவிக்கப் போவதில்லை. தேவடியாள் முதுமை யடைந்துவிட்டால் தோடு களையும் சடங்கு நடத்தப்படுகிறது. இது அரசனது அரண்மனையில் நடக்கும். பின்பு அவள் தாய்க்கிழவி ஆகிவிடு வாள். கேரளத்தில் முறக்குடி சிறப்புக்குடி என இருவகைத் தாசிகள் உளர். முறக்குடிப் பெண்கள் முக்கிய காலங்களில் மாத்திரம் சேவிப்பர். திருவிதாங்கூர்த் தாசிகளின் சொத்துரிமை பெண்களைச் சார்கின்றது. தேவர்: புதுச்சேரியில் கண்ணாடிப் பொருள்களில் வாணிகஞ் செய்யும் தெலுங்கர் தேவர் எனப்படுவர். கிராம தேவதைகளுக்குப் பூசை செய்யும் பூசாரிகளும் தேவர் எனப்படுவர். மறவரின் பட்டப்பெயர் தேவன். தென் கன்னடத்திற் கள்ளிறக்குவோர் தேவறுகளு (தேவரின் மக்கள்) எனப்படுவர். இவர்கள் இலங்கையிலிருந்து வந்தவர்களாகக் கருதப்படுவர். தேவாங்கர்: சென்னை மாகாணம் முழுமையிலும் காணப்படும் துளுவும் கன்னடமும் பேசும் நெசவுத் தொழிலாளர் இப் பெயர் பெறுவர். கோயம்புத்தூர்ப் பகுதியில் இவர்கள் செட்டுக்காரன் எனப்படு வார்கள். இவர்கள் சௌவேஸ்வரி என்னும் தெய்வத்தை வழிபடுவர். இவ் வழிபாடு காளி, துர்க்கை வழிபாட்டின் வேறுபாடாகும். இவர்கள் பெரிதும் சைவ மதத்தினர்; இலிங்கங்கட்டிக் கொள்வர். நாட்டுமக்கள் பல எருதுகளை வளர்ப்பர். எருது இறந்துவிட்டால் துக்கம் கொண் டாடிப் பலர் பின்தொடர்ந்து செல்ல அதனை எடுத்துச் சென்று புதைப்பர். தேவாதிக்கர்: இவர்கள் கன்னடத்தில் கோயிற்றொண்டு செய்யும் கன்னடம் பேசும் மக்கள். மயூரவர்மன், பூசை மாத்திரம் பிராமணர் செய்தல் வேண்டுமென்றும், மற்ற வேலைகள் ஸ்தானிகர், தேவாதிக் கர்கள் செய்ய வேண்டுமென்றும் விதித்தான். இப்பொழுது இவர்களிற் பலர் உழவுத்தொழில் செய்கின்றனர். பெண்களின் சொத்துரிமை பெண் களைச் சார்வது. தொண்டமான்: இவர்கள் திருநெல்வேலிப் பகுதியில் வாழும் சுண்ணாம்புக்காரர். இவர்கள் புதுக்கோட்டையிலிருந்து திருநெல்வேலி யிற் சென்று குடியேறிய கள்ளரில் ஒரு பிரிவினர். இவர்களில் தொண்ட மான், தோல்மேஸ்திரி என இரு பிரிவினருண்டு. தொம்மாரர்: இவர்கள் ஓரிடத்தில் தங்காது திரியும் கழைக் கூத்தர். இவர்கள் தெலுங்கு மராட்டியர்; இந்துஸ்தானி பேசுவர். இவர்கள் சாதிப்பறையரிலும் உயர்ந்தவர். ஆரியக் கூத்தாடிகள் என்பதும் இவர்களுக்குப் பெயர். கழைக் கூத்துத் தொடங்குமுன் இவர்கள் சாணியி னால் பிள்ளையார் பிடித்துவைத்து அதனை வழிபடுவர். தோடர்( தோதர்) : இவர்கள் நீலகிரி மலையில் வாழ்வர்; எருமை களை வளர்ப்பர்; தமிழ் பேசுவர். இவர்களுக்குச் சுருண்டு தொங்கும் தடித்த தலைமயிரும் அடர்ந்த தாடியும் உண்டு. பெண்கள் பூப்படைந்த பின் பச்சை குத்திக்கொள்வர். பெண்கள் மாட்டுத் தொழுவத்தில் எரியும் கொள்ளிக் கட்டையைத் தொட்டால் தீட்டு உண்டாகும். தோதரின் தொழுவத்துக்குப் பிராமணன் செல்லுதல் ஆகாது. தோதர் பெரும் பாலும் மோரில் சோறு ஆக்குவர். பெண்கள் பல கணவரை மணப்பர். தோதப்பெண் ஒருத்தி ஒருவனுக்கு மனைவியாகும்போது அவள் அவன் சகோதரர் எல்லாருக்கும் மனைவி என்பது விளங்கிக் கொள்ளத்தக்கது. சில சமயங்களில் கணவர் சகோதரராயிராவிட்டாலும் ஒரே கூட்டத் தைச் சேர்ந்தவராயிருப்பர். இரண்டு அல்லது பல சகோதரர் பல பெண்களைத் தமக்குப் பொதுமனைவியராக வைத்திருப்பர். இறந்த வரின் உடல் சுடப்படும். அப்பொழுது சுடலையில் எருமை பலியிடப் படும். தோட்டி: இவர்கள் சக்கிலியருள் ஒரு பிரிவினர். தஞ்சாவூர்த் தோட்டியான் அல்லது கம்பளத்தான் பன்றிவளர்த்தல் , பாம்பு பிடித்தல், பிச்சையெடுத்தல் முதலிய தொழில்களைச் செய்வான். தோட்டி தந்தை யின் சகோதரி மகளை அல்லது தாய்மாமன் மகளைக் கலியாணம் செய்ய லாம். இக் கட்டுப்பாடு இருப்பதால் சிறுவருக்கு வளர்ந்த பெண்கள் கலியாணம் முடிக்கப்படுவர். அப்பொழுது மணமகனின் தந்தை பெண் ணோடு சேர்ந்து பிள்ளைகளைப் பெறுவான். தோட்டியான் பிராமணன் வீட்டில் உண்ணமாட்டான். இதற்குக் காரணம் புலப்படவில்லை. பெண்கள் குடும்ப வட்டத்துக்குள் புரியும் வியபிசாரம் குற்றமாகக் கருதப்படமாட்டாது. தோட்டிகளின் குடித்தலைவன் ஊர் நாயகன் எனப்படுவான். மணமான பெண்கள் கணவனின் உறவினருக்குத் தமது தயவைக் கொடுத்தல் குற்றமாகக் கருதப்படமாட்டாது. வாயிலில் ஒருவனின் செருப்பு இருப்பதைக் கண்டால் கணவன் உள்ளே செல்ல மாட்டான். இவர்கள் இறந்தவரைக் கல் நட்டு வழிபடுவர். தோணி: தோணி பேழை போன்றது. 70 அடி நீளமும் 20 அடி அகலமும் 11 அடி ஆழமுமுடையது. அடி தட்டையாக விருக்கும். அடிப்பகுதி 7 அடி அகலமுடையது. தென்னிந்தியாவில் அடிக்கப்பட்ட ஈய, செம்பு நாணயங்களில் தோணி பொறிக்கப்பட்டுள்ளது. டோபி(Dhobi): இது வண்ணானுக்கு இந்தியா முழுவதிலும் வழங்கும் பெயர். இது கழுவு என்னும் பொருள் தருவது. தாவ என்னும் சமக்கிருத அடியாகப் பிறந்தது. இவர்கள் ஆதியில் ஒரிசா மாகாணத்தி லிருந்து வந்தார்கள். மணக் காலங்களில் இவர்கள் ஏழு வீடுகளிலிருந்து ஏழு குடத்தில் தண்ணீர் கொண்டுவந்து மணமகனையும் பெண்ணையும் முழுக்காட்டுவார்கள். மணக்கிரியையில் இருவரின் இடக்கையும் சேர்த்துக் கட்டப்படும். பந்தலிலிருப்போர் இருவர் மீதும் மஞ்சளையும் அரிசியையும் எறிவார்கள். தோரியர்: இவர்கள் கோயம்புத்தூர், சேலம் மாவட்டங்களிற் காணப்படுவர். இவர்கள் முற்காலத்தில் மீன் பிடிப்போரும் பல்லக்குச் சுமப்போருமாக இருந்தனர். இப்பொழுது இவர்கள் வெற்றிலை பயிரிடு வர். இவர்களின் சாதித்தலைவன் எசமானன் எனப்படுவன். இவன் இவர்களிடையே உள்ள வழக்குகளை விளங்கித் தீர்ப்பன். நகரத்தார்: இவர்கள் செட்டிகளில் ஒரு பிரிவினர். நகரமென்பது பட்டினம். இவர்கள் முன்பு காஞ்சீபுரத்திலிருந்தார்களென்பது ஐதீகம். இவர்களின் வேலையாள் சாதிப்பிள்ளை எனப்படுவன். விதவைகள் மறுமணஞ் செய்வதில்லை. நங்குடி வேளாளன்: இவர்கள் திருநெல்வேலியிற் பல பாகங் களிலே வாழ்கின்றனர். கோட்டை வேளாளரிருக்கும் சிறீவைகுந்தக் கோட்டைக்கு நங்குடி வேளாளப் பெண்கள் போக அனுமதிக்கப்படுவ தில்லை. இவர்களுள் ஒருவர் இறந்துபோனால் அச் செய்தியை அம்பட்டன் அறிவிப்பான். அக்கினி என்னும் மகாமுனி தவம்செய்து கொண்டிருக்கும் போது தெய்வப் பெண்கள் நீராடவந்தார்களென்றும் முனிவர் அவர்களைக் காதலித்து மூன்று குமாரரைப் பெற்றார் என்றும் அவர்களை வேளாளர்கள் வளர்த்தார்க ளென்றும் அவர்களே சேர, சோழ, பாண்டிய அரசர்கள் என்றும் ஐதீகங்கள் உள்ளன. நம்பிடி: இவர்கள் மலையாளத்தில் காணப்படும் நம்பூதிரிகள் போன்ற ஒரு கூட்டத்தினர். இவர்கள் பூணூலணிவர். இவர்களுக்கு மருமக்கள் தாயமுண்டு. தாலிகட்டுக் கலியாணம் இவர்கள் சொந்தச் சாதியினரால் செய்யப்படும். நம்பூதிரிமாரும், இச் சாதி ஆடவரும் நம்பிடிப் பெண்களைச் சம்பந்தங் கொள்வர். நம்பிடி ஆடவர் நாயர்ப் பெண்களைச் சம்பந்தம் வைக்கலாம். இவர்கள் விருந்துகளில் நம்பூதிரிக ளோடு இருந்து உண்பர். பெண்கள் மனோலபாடு எனப்படுவர். நம்பூதிரி: கேரள உற்பத்தி என்னும் நூல் மலையாள மொழியி லுள்ளது. அது பரசுராமர் கன்னியாகுமரியிலிருந்து வருணனை நோக்கித் தவஞ் செய்து கன்னியாகுமரி முதல் கோகர்ணம் வரையிலுள்ள நிலத்தைப் பெற்றாரென்றும், பரசுராமராற் குடியேற்றப்பட்டவர்களே நம்பூதிரிகள் என்றும் கூறுகின்றது. இவர்களின் உரிமை வழி மருமக்கள் தாயம். நம்பூதிரிப் பெண்கள் வெளியே செல்லும்போது தம்மை வைக்கான் குடையால் மறைத்துக்கொள்வர். விரிசாலி என்னும் நாயர்ப் பெண் அவர்களின் முன்னே செல்வாள். நம்பூதிரிப் பெண்கள் வெளியே செல்லும்போது தம்மைக் கழுத்து முதல் கால்வரையும் துணியால் போர்த்து மறைத்துக்கொள்வர். இவர்கள் நகை அணிதல் கூடாது. இவர்களைப் பரசுராமர் கொண்டு வந்து குடியேற்றினார் என்னும் கதை நம்பத்தக்கதன்று. இவர்கள் கி.பி. 7ஆம் நூற்றாண்டுக்கும் 8ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் மலையாளத்தில் குடியேறினார்களாகலாம். தாலமி, பெரிபுளூஸ் என்போர் பிராமணர் மலையாளத்திற் குடியேறி யிருந்தமையை கி.பி. முதலாம் நூற்றாண்டிற் குறிப்பிட்டுள்ளார்கள். மேற்குச் சாளுக்கிய அரசர் வலிமை பெற்றிருந்த கி.பி. 4ஆம், 5ஆம் நூற்றாண்டுகளில் இங்கு வந்து தங்கிய பிராமணர் நம்பூதிரிகளோடு கலந்து ஒன்றுபட்டிருத்தல் கூடும். சாளுக்கியருக்குப் பன்றிக் கொடி உண்டு. ஆதலின் சாளுக்கியப் பிராமணர் குடியேறிய இடம் பன்னியூர் (பன்றியூர்) எனப்பெயர் பெற்றிருக்கலாம். சேவூர்ப் (சிவனூர்) பிராமணர் சைவ சமயத்தினராவர். இவர்கள் சாளுக்கியருக்குப் பின் வந்த சேர, சோழ, பாண்டிய அரசர்களின் சமயத்தையே பின்பற்றினார்களாகலாம். பெருமாளென்னுமரசர் சேரநாட்டுக்கு அயலே இருந்து வந்தவர்களாக லாம். இவர்கள் தமது சொந்த நாட்டை விட்டுவந்தமையால் இவர்கள் நம்பூதிரிப் பெண்களை மணந்துகொள்ள நம்பூதிரிகள் மற்ற வகுப்புப் பெண்களைச் சம்பந்தங் கொண்டார்களாகலாம். ஆகவே மருமக்கள் தாயம் அவசியமாயிற்று. கேரளத்தின் சில பகுதிகள் அதிகாரிகளால் ஆளப்பட்டது. வள்ளுவ நாடல்லாத மற்றைய இடங்களில் நம்பூதிரிகள் அதிகாரிகளாக விருந்திருக்கின்றனர். நம்பூதிரிமார் கோயிற் பூஜை செய்வர். இவர்கள் அரசரின் தூத ராகவும் செல்வர். மலையாளத்தில் பட்டர்ப் பிராமணர் அங்குமிங்கும் அலைந்து திரிவர். அவர்களுக்கு உணவு நம்பூதிரிகள் இல்லங்களிலும் கோவிலகங்களிலும் கோவில்களிலும் கிடைக்கும். நம்பூதிரிகளுக்கு ஏடு (வேதம்) படித்தலும் படிப்பித்தலும், பிச்சை, ஓது, அடுக்களை கதவு (எல்லாப் பிராமணரும் குளிக்குமிடத்தில் நின்று குளித்தல்) ஆடு (வேள்வி) சந்தி, குருவாயிருந்து கோயிற் கிரியை செய்தல், அரங்கு, பந்தி (எல்லாப் பிராமணரோடு மிருந்து உண்ணுதல்) போன்ற உரிமைகள் உண்டு. இவர்கள் தலைமயிரை நெற்றிக்கு முன்னால் தொங்கும்படி முடிந்துவிடுவர். நல்லநாள் பார்த்து முகத்தையும் தலையையும் மழித்துக் கொள்வர். மனைவி கருப்பவதியானால் நம்பூதிரி மயிரை வளரவிடுவான். இவர்களுக்கு அடர்ந்த மயிருண்டு. இவர்களின் பழக்க வழக்கங்களுட் சில தோதரிடையே காணப்படுவன போல்வன. அதனால் இவர்கள் தோதரில் ஒரு பிரிவினர் என்று கருதப்படுவர். இவர்கள் விரல் நகங்களை நீளமாக வளரவிடுவர். ஆடவரின் உடுக்கும் வகை “தட்டுத் தூக்குக” எனப்படும். நம்பூதிரிகள் மிரிதடி தரிப்பர். பெண்கள் உடுக்கும் வகை “ஒக்கும் கொலுத்தும் வச்சுத் தூக்குக” எனப்படும். ஆடவர் காதில் துளையிட்டுக் குண்டலமணிவர். பெண்கள் சூட்டு என்னும் காதணி செருத்தாலி முதலியவற்றை அணிவர். அவர்கள் மூக்கைத் துளையிட்டு அணியும் அணிகளை அணிவதில்லை; நீராடியபின் நெற்றியில் சந்தனத் தால் மூன்று குறிகள் வைப்பர். அது அம்புலிக் குறி எனப்படும். அவர்கள் ஒரு போதும் குங்கும மணிவதில்லை; மஞ்சள் குளிப்பது மில்லை. ஆடவர் கை விரலில் பவித்திரம் என்னும் ஆழி அணிவார்கள்; பூணூலில் யந்திரத் தகடு அடைத்த கூட்டைத் தொங்கவிடுவார்கள். பன்னிரண்டு வயதுப் பையன் கவரிமான் தோல் வாரை இடது தோளுக்கு மேலால் போட்டிருப்பான். இரண்டு தலைப்புகளும் அத் தோலினாலேயே பொருத்தித் தைக்கப்பட்டிருக்கும். இவர்கள் திருமணத்துக்குப் பின் பூணூலை மாற்றிக் கொள்வதில்லை. தென்னிந்திய பிராமணர் ஓர் ஆண்டுக்கு ஒரு முறை பூணூலை மாற்றுவர். நம்பூதிரி இருக்கும் வளவுக் குப் பெயருண்டு. வீட்டின் வடகிழக்கில் தொழுவம் இருக்கும். அது கோசாலை எனப்படும். இவர்கள் இருப்பதற்குப் பெரும்பாலும் மான் தோலைப் பயன்படுத்துவர். நம்பூதிரியின் மூத்த குமாரன் காரணவன் எனப்படுவன். அவன் உணவை உண்ட பின் எழும்போது இடக்கையால் இலையைத் தொடுவான்; மனைவி வலக்கையால் தொடுவாள். அப்பொ ழுது அது எச்சில் ஆகமாட்டாது. அவள் அவ் விலையில் உணவைப் புசிப்பாள். நம்பூதிரி, பட்டர் சமைத்த உணவை உண்ணலாம். சுரைக்காய், பனம்பழம், பனங்கட்டி முதலியவைகளை நம்பூதிரி உண்பதில்லை. பால் பாயசமாக மாத்திரம் (பிரதமன்) உண்ணப்படும். நம்பூதிரி மந்திர வாதிகள் ஒருவனைக் கொல்லவேண்டுமானால் அவனைப் போன்ற வடிவை உலோகத் தகட்டில் எழுதி அதன் கீழ் யந்திரம் வரைந்து மந்திரம் செபிப்பார்கள். பின்பு அதனை இன்னொரு உலோகத் தகட்டில் வைத்துச் சுருட்டி அதை அவன் குடியிருக்கு மிடத்துக்குக் கிட்டப் புதைப்பார்கள். அவன் அவ் விடத்தில் மிதித்தால் உடனே மந்திரம் பலித மாகும். அவன் இறந்து விடுவான். அல்லது ஏதும் துயரத்துக்கு ஆளா வான். மந்திர வித்தைக்காரர் குட்டிச்சாத்தானை வாலாயம் செய்து கொள்வார்கள் என்று மலையாளத்தில் நம்பப்படுகிறது. ஆண் குழந்தை யில்லாத நம்பூதிரி மனைவியின் மரணத்துக்குப் பின் மயிரை ஓராண்டுக்கு வளரவிடுவான். தாய் அல்லது தந்தைக்குக் கடமை செய்யும் மூத்த மகனும் அவ்வாறே ஓராண்டுக்கு மயிரை நீள வளரவிடுவான். மயிரை வளரவிடும் காலத்தில் முருங்கைக்காய், பால், மிளகாய், துவரை, அவரை, பப்படம் முதலிய உணவுகள் நீக்கப்படும். குளிக்கும்போதெல்லாமல் இவர்கள் கௌபீன மணிவதில்லை. கடைசிப் பெருமாள் அராபியாவுக் குச் சென்ற காலம் முதல் (கி.பி.825) மலையாள ஆண்டு கணக்கிடப்படும். ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ‘அதிக’ என்னும் ஒரு நாள் சேர்க்கப்படும். நாயர் நம்பூதிரிக்கு ஆறு அடிக்குள்ளும், அம்பட்டன் 12 அடிக் குள்ளும், தீயன் 36 அடிக்குள்ளும், மலையன் 64 அடிக்குள்ளும், புலையன் 96 அடிக்குள்ளும் வருதல் கூடாது. உயர்ந்த சாதியான் வீதி வழியே செல்லும் போது தாழ்ந்த சாதியான் விலகிச் செல்லும்படி சத்தமிடு வான். தாழ்ந்த சாதியான் போகும் போதுதான் செல்வதை உயர்ந்த சாதியாருக்கு அறிவித்தற்கும், உயர்ந்த சாதியாரின் சத்தத்தைக் கேட்டுத் தான் விலகி நிற்றற்கும் சத்தமிடுவான். இவர்கள் ஒரே கோத்திரத்தில் மணப்பதில்லை. மணமான பெண் கணவனின் கோத்திரத்தைச் சேர்ந்து விடுகிறாள். மணமாகாது இறந்த பெண்களுக்கு மணக்கிரியை செய்து தாலி கட்டப்படும். தோதர் சாதியினரும் இவ்வாறே செய்வர். மணத்தின் போது பெண்வீட்டார் மணமகன் வீட்டுக்குச் சென்று அவனை அழைத்து வருவார்கள். மணமகன் வைக்கான் குடையின் கீழ்ச் செல்வான். நாயர்ப் பெண்களும் நாயரும் நம்பூதிரிகளும் வாயிலில் நின்று பவனி வருவார்கள். மணமகன் துட்ட தேவதைகள் அணுகாதபடி கையில் கங்கணங் கட்டிக் கொண்டும், பதினாறு கணுவுள்ள மூங்கில், முகம் பார்க்கும் கண்ணாடி, அம்பு, நாலு சேலை, தாலி முதலியவற்றைக் கொண்டும் வருவான். வாயிலில் நம்பூதிரிப் பெண்களைப் போல் உடுத்த நாயர்ப் பெண்கள் பவனி வருபவர்களை எதிர்கொள்வார்கள்; மணமக னின் முகத்துக்கெதிராக ஆலத்தி காட்டுவார்கள். சடங்கின் முன் பகுதி “நந்தி முகம்” (புண்ணிய ஆக வசனம்) எனப்படும். மணமகளை மண வறைக்குக் கொண்டு செல்வ தன் முன் மணமகளின் தந்தை மணமகனின் காலைக் கழுவுவான். நாயர்ப் பெண்கள் ஆயிரந்திரி என்னும் ஆலத் தியைக் காட்டுவர். மணப்பந்தல் தூண்களுக்குச் சிவப்பு ஆடை சுற்றப் பட்டிருக்கும். மணமகனையும் மணமகளையும் மணவறைக்கு அழைத் துச் செல்லும்போது ஒருவரை ஒருவர் பாராதபடி நடுவில் வைக்கான் குடை பிடிக்கப்படும். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்குஞ் சடங்கு முக தரிசனம் எனப்படும். மணமகளும் மணமகனும் மூன்று நாட்கள் பிரிந்து தனியே இருப்பர். நாலாம் நாள் இருவரையும் படுக்கையறைக்குச் கொண்டு சென்று அறையின் கதவைத் தாழிட்டுவிட்டு குருக்கள் வெளியே நின்று சுலோகஞ் சொல்லுவர். ஐந்தாவது நாள் குளத்தில் நீராடியபின் இருவரும் மீன் பிடிப்பார்கள். மீன் பிடிக்கும் கிரியை, முன்பு மீன் பிடிப்பவர்களாகவிருந்தவர்களைப் பரசுராமர் பிராமணராக்கினார் என்னும் ஐதீகத்தைக் குறிக்கின்றதென்பர். நம்பூதிரிகளில் வியபிசார நடத்தையுள்ள பெண்கள் கடுமையாகத் தண் டிக்கப்படுவார்கள். வியபிசாரி என்று சந்தேகிக்கப்பட்டவள் ஐஞ்சாம் புரம் அல்லது பஞ்சோலைப்புரம் என்னும் இடத்தில் விடப்படுவாள். அப்பொழுது அகக்கோயின்மார், புறக்கோயின்மார் என்போர் வந்திருப் பார்கள். அகக்கோயின்மார் ஒழுக்கத்தைப் பாதுகாப்போர். புறக்கோயின் மார் அரசன் சார்பில் வந்திருப்போர். விசாரணைத் தலைவன் ஸ்மார்த் தன் எனப்படுவன். ஸ்மார்த்தனால் செய்யப்படும் விசாரணை ஸ்மார்த்த விசாரணை எனப்படும். குற்றச்சாட்டு உறுதியானால் பெண்ணின் கிட்டிய உறவினன் அவளுக்குச் செய்ய வேண்டிய அந்தியக் கிரியை களைச் செய்வான். சமயசம்பந்தமாகப் பதினெட்டுச் சங்கங்கள் உண்டு. அவற்றின் தலைவன் வாக்கிய விருத்தி எனப்படுவான். அவன் ஓத்து நம்பூதிரியாக விருத்தல் வேண்டும். அவனுக்கு அடுத்தபடியிலுள்ளவன் பாஸ்கரன். இவன் சாஸ்திரிகளுக்கு (அத்திரப் பயிற்சிக்கு)க் குரு. கதைகளி என்பது மலையாளத்து நாடகம். இவர்கள் அசயாகம் என்னும் ஆட்டுக்கடா யாகம் செய்து யாகத்தில் கொன்ற ஆட்டின் இறைச்சியை உண்பர். சிறுவர் பூணூலணிவர். முற்காலப் பெண்களும் பூணூலணிந்தார்கள். பூணூல் கிருஷ்ணமிருகா என்னும் மான் தோலினால் இடப்படும். நரிக்கால்: நரி அங்கம்மாவின் வாகனம். இப் பெயர் நரிக்கொம்பு செய்யும் குருவிக்காரனுக்கும் வழங்கும். நாகர்: கஞ்சம், விசாகப்பட்டினப் பக்கங்களில் வாழும் பலர் தமது குலம் நாக வமிசமென்பர். குர்னியர், தொரியர் என்போர் திருமணக் காலத்தில் பாம்புகளுறையும் எறும்புப் புற்றுகளை வணங்குவர். பள்ளிகளில் ஒரு பிரிவினர் நாகபடம் என்னும் பாம்பின் தலைபோன்ற ஒரு வகை அணியை அணிவர். அவர்கள் நாகர் எனப்படுவர். நாகவாசுலு: விசாகப்பட்டினப் பக்கங்களில் உழவுத்தொழில் செய்யும் மக்கள் இப் பெயர் பெறுவர். விவாகத்தை விரும்பாதிருக்கும் மகளிர் வியபிசாரத்தால் பொருளீட்டுவர்; வீடுகளில் நடனமாடுவர். இவர்கள் நாயுடு சாதிக்குத் தாழ்ந்தோர். நாஞ்சில் நாட்டு வேளாளர்: நாஞ்சில் நாட்டு வேளாளர் என்னும் ஒரு பிரிவினர் திருவிதாங்கூர் முழுமையிலும் அங்குமிங்கும் காணப்படுகின்றனர். இவர்களின் முக்கிய இடம் தோவலா (Tovala). இவர்களின் பழக்கவழக்கங்கள் வேளாளர் பழக்க வழக்கங்களில் வேறானவை. இவர்கள் தங்கள் பெயர்களுடன் கணக்குப்பிள்ளை என்னும் பட்டப் பெயரைச் சேர்த்துக் கொள்வர். கி.பி. 825இல் சீரிய கிறித்தவருக்கு அளிக்கப்பட்ட நன்கொடைப் பட்டையத்தில் ஒரு தச்ச குடும்பமும் நான்கு வேளாளக் குடும்பங்களும் கடற்கரையில் மரங்களை வைத்து உண்டாக்குதற்குப் பொறுப்புடையன என்று கூறப்பட்டுள்ளது. வேளாளர் காராளர் எனப்பட்டுள்ளார்கள். பாண்டிய அரசர் இந் நாட்டின் சில பகுதிகளை ஆண்ட காலத்து இவ் வேளாளர் வந்து குடி யேறியிருத்தல் கூடும். பலர் நாஞ்சில் நாட்டு வேளாளர் என்னும் பெயரை விட்டு நாயர் என்னும் பெயரை வைத்துக்கொண்டனர். இவர்களின் முதன்மையுடைய தெய்வங்கள் மாடன், இசக்கி, இனன் முதலியன. நாஞ்சில் நாட்டு வேளாளரின் கிரியை சம்பந்தமாகப் பாடப்படும் பாட்டு வில்லடிச்சான் பாட்டு எனப்படும். அவர்களின் விழாக்களிற் சிறந்தது அம்மன்கொடை என்பது. சித்திரை மாதத்து அமாவாசியன்று சித்திர புத்திரன் கதை கோயில்களில் படிக்கப்படும். இவர்களிற் பலர் ‘காரியஸ் தன்’ முதல்பிடி (பொக்கிஷக்காரன்) கணக்கன் முதலிய அலுவல்களில் அமர்ந்துள்ளார்கள். பெண்கள் பருவமடைந்தபின் மணப்பர். தாய் மாமன் மகள். சிறியதாய் மகள் சிறந்த மணமகளிராகக் கொள்ளப்படுவர். மணமகனுக்குக் கொடுக்கும் பரிசுகளில் முண்டு, இரும்பு எழுத்தாணி, கத்தி முதலியன அடங்கும். நாஞ்சில் நாட்டு வேளாளர் நாயர்ப் பெண் களிடையே சம்பந்தங் கொள்வர். கணவன் விடுமுறி எழுதிக் கொடுத்துக் கலியாண நீக்கம் செய்து கொள்ளலாம். ஆண் பிள்ளைகளுக்குத் தந்தை தேடிய சொத்தில் நாலிலொன்றும், தந்தை வழி வரும் சொத்தில நாலி லொன்றும் சேரும். அது உகந்துதாமா எனப்படும். கலியாணம் தள்ளப் பட்ட பெண்ணுக்குக் கணவனிடம் சீவிய காலம் வரையும் வாழ்க்கைச் செலவு பெற உரிமையுண்டு. இதற்காக அவள் உரிமை கோரும் சொத்து நங்கு (கை) தாமா எனப்படும். (நங்கு) - பெண். நாடான்: சாணான். நாட்டுக் கோட்டைச் செட்டி: நாட்டுக்கோட்டைச் செட்டிமார் பெரிதும் வட்டிக்குப் பணங் கொடுத்து வாங்குவர். இவ் வகையில் இவர்கள் தென்னிந்திய யூதர்கள் எனப்படுவர். இவர்களின் தத்துப் பிள்ளை மஞ்சள் நீர்ப் பிள்ளை எனப்படுவர். செட்டிகள் தலைமயிரை மழித்துக் கொள்வர். இப்பொழுது இவ் வழக்கம் பெரும்பாலும் நின்று போய்விட்டது. பெண்களும், ஆண்களும் காதைத் துளையிட்டுக்கொள் வர். சிறுமியர் மணிகளும் சிப்பிகளும் கோத்த மாலைகளை அணிவர். இவர்களுக்குக் கோயில் வாயில் மறியல், மடத்துவாயில் மறியல் என இரண்டு பஞ்சாயத்துக்களுண்டு. பிணச்சடங்குக்கு இடும்பந்தல் கொட் டிற் பந்தல் எனப்படும். மணத்துக்கு இடும்பந்தல் கொட்டகை அல்லது காவனம் எனப்படும். நாயக்: நாய்கா - தலைவன். இவர்கள் விசயநகர அரசர் சில பிராமணக் குடும்பங்களுக்கும் இப் பெயருண்டு. முற்காலத்தில் சென்னை நகரில் ‘போலிஸ்’ மேல் அதிகாரி வேலை பெத்த நாயக்கர் களுக்குக் கொடுக்கப்பட்டது. தென் கன்னடத்தில் தேவடியாள் நாய்கனி எனப்படுவாள். நாயர்: நாயர் என்போர் மலையாளத்தில் காணப்படும் ஒரு சாதியினர். முற்கால நாயர் உழவுத்தொழில் செய்பவர்களாகவும், போர் வீரர்களாகவும் இருந்தார்கள். இப்பொழுது வணிகர், கைத்தொழில்கள் புரிவோர், எண்ணெய் வாணிகர், பல்லக்குச் சுமப்போர், அம்பட்டர், வண்ணார் முதலிய பல பிரிவினர் நாயர் வகுப்பிற் காணப்படுகின்றனர். கன்னடம் முதலிய இடங்களிலிருந்து வந்து மலையாளத்திற் குடியேறிய மக்கள் பலர் நாயரின் பழக்க வழக்கங்களைப் பின்பற்றியுள்ளார்கள். சில காலங்களில் அரசர் தாழ்ந்த வகுப்பினர் சிலரை நாயர்களாக்கியுள்ளார் கள். கி.பி. 9ஆம் நூற்றாண்டில் மகமதிய பிரயாணி ஒருவன் எழுதியிருப் பது வருமாறு: அரசன் பட்டத்துக்கு வருமுன் ஒருவகைக் கிரியை செய் யப்படுகின்றது. அரசனுக்கு எதிரில் ஓர் அளவு சோறு படைக்கப்படுகின் றது. நானூறு அல்லது ஐந்நூறு பேர் வந்து அரசனுடைய கையிலிருந்து சிறிது சோறு வாங்கி உண்கிறார்கள். தான் முதலிற் சோற்றை உண்டபின் மற்றவர்களுக்குக் கொடுக்கிறான். அரசன் இறக்கும் போது அல்லது கொல்லப்பட்ட போது தாம் உடன்கட்டை ஏறுவதாக அவர்கள் சத்தியஞ் செய்கிறார்கள். பூர்ச்சாஸ் (Purchas) என்பவன் எழுதியிருப்பது வருமாறு: கொச்சி யரசனிடம் பலர் இருக்கிறார்கள். அவர்கள் அமொச்சி எனப் படுவர். சிலர் நாயர் எனப்படுவர். இவர்கள் தமது அரசனுக்காக உயிரை விட ஆயத்தமாகவிருக்கிறார்கள். மலையாள மொழியில் இவர்கள் சாவார் எனப்படுவார்கள். குலோத்துங்க சோழனின் கல்வெட்டில் (கி.பி. 1083) அவன் குடநாட்டை வென்றபோது நாயரின் முன்னோராகிய வீரர் இறுதி வரையில் போர் செய்து மடிந்தார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. 16ம் நூற்றாண்டில் பார்போசா (Barbosa) என்பவர் எழுதியிருப்பது வருமாறு: இவர்களுக்குப் போர் செய்வதையன்றி வேறு வேலையில்லை. இவர்கள் எப்பொழுதும் வாள், வில், அம்பு, கேடயம், ஈட்டி முதலியவை களைக் கொண்டு செல்வர். இவர்களில் சிலர் அரசருடனும் சிலர் அரசனின் உறவினராகிய பிரபுக்களோடு மிருப்பார்கள். இவர்கள் ஏழு வயதிலேயே ஆயுதப் பயிற்சி பெறுவர். 18ஆம் நூற்றாண்டில் ஹமில்டன் எழுதியிருப்பது வருமாறு: சமரின் என்னும் மலையாள அரசன் 12 ஆண்டுகள் மாத்திரம் ஆட்சி புரிவது பழங்கால முறை. 12வது ஆண்டின் இறுதியில் அரசன் பொது வெளியில் கூடாரமடித்துக் விழாக் கொண் டாடுவான். அப்பொழுது அவனைத் காத்து நிற்கும் நாற்பதாயிரம் அல்லது ஐம்ப தாயிரம் வீரரைக் கடந்து வந்து அவனைக் கொல்பவன் பட்டத்துக்கு வருவான். 1645இல் இவ் வகை விழா ஒன்று நடைபெற்றது. சொனரத் (Sonnerat) என்பவர் எழுதியிருப்பது வருமாறு: நாயர் போர் வீரர் சாதியினர். இவர்களுக்குத் தமது சாதிப்பெண்களை அனுப விக்கும் உரிமையுண்டு. அவர்கள் வீதியிற் செல்லும்போது பறையர் விலகிச் செல்லும்படி சத்தமிட்டுக் கொண்டு செல்கின்றனர். பறையன் ஒருவன் அவர்களைத் தீண்டினால் அவர்கள் அவனைக் கொன்றுவிட லாம். ஆனால் அவர்களைத் தீண்டுவதற்குப் பறையருக்கு ஆண்டிலொரு முறை உரிமையுண்டு. அந் நாளில் அவர்கள் நாயரில் எவனையாவது தொட்டால் அவன் பறையனுக்கு அடிமையாக வேண்டும். ஆகவே அந் நாளில் நாயர்கள் முன்னெச்சரிக்கையாக விருப்பார்கள். நாயர் என்பது நாயன் என்பதிலிருந்து பிறந்த தென்று கருதப்படுகின்றது. அரசனுக்குப் பொருள் கொடுத்து கணக்கு, பிள்ளை முதலிய பட்டங்களும் பெறப்பட் டன. பட்டமளிக்கும் சடங்கு ‘திருமுக மளிக்குக’ எனப்படும். திருவிதாங் கூரில் தம்பி என்னும் ஒரு பட்டமும் உண்டு. இது திருவிதாங்கூர் அரசனின் நாயர்ப் புதல்வனுக்கு வழங்கப்படுவது. தம்பிமார் தலைப் பாகையின்றிப் பல்லக்கில் அரசன் முன் செல்லலாம். இக் குடும்பங்களி லிருந்து அரசனின் மனைவி தெரியப்படு வர். நாயருக்குக் காத்த என்னும் பட்டமும் உண்டு. மத்திய காலத்தில் செம்படகராமன் என்பது பட்டத் துக்கு அடையாளமான பெயராக வழங்கப்பட்டது. கி.பி. 1500இல் பார்போசா (Barbosa) எழுதியிருப்பது வருமாறு: அரசனுக்கு 1000 பரிவாரங்கள் இருக்கின்றனர். அவர்களுக்குச் சம்பளம் உண்டு. அவர்கள் அரண்மனையைப் பெருக்குதல் முதல் எல்லாப் பணிவிடைகளையும் செய்கின்றார்கள். அவர்களின் மனைவி பணப் பிள்ளை அம்மா எனப் படுவாள். கைமால் என்னும் பட்டம் சிலருக்கு வழங்கும். இப் பட்டம் அதிகாரத்தைக் குறிப்பது. உன்னிதன், வலியதன் என்னும் பட்டங்கள் திருவிதாங்கூரிலுள்ள சில குடும்பங்களுக்கு வழங்குகின்றன. மேனன் என்னும் பட்டப்பெயர் மேல் என்னும் அடி யாகப் பிறந்தது. (மேலவன் - மேனவன் - மேனன்) சிலர் பணம் கொடுத்து இப் பட்டத்தைப் பெறுகி றார்கள். மேனன் பட்டம் அளிக்கப்படும் போது பனை யோலைச் சட்டமும் எழுத்தாணியும் அளித்தல் வழக்கம். இன்றும் பிரிட்டிஷ் மலையாளத்தில் ஒவ்வொரு அம்சத்திலும் அல்லது கிராமத்திலும் கணக் கெழுதும் மேனன் உண்டு. மேனோக்கி என்னும் பட்டம் கண்காணிப் பவன் என்னும் பொருள் தருவது. இவர்கள் பெரும்பாலும் கோயிற் கணக்குகளை மேற்பார்த்தார்கள். நாயர்ப் பெண் பூப்படைந்தால் மூன்று நாள் தீட்டுக் காப்பாள். நாயர்ப் பெண்களுக்கு பூப்படையுமுன் தாலிகட்டுக் கலியாணம் நடைபெறும். தாலிக்கட்டுக் கலியாணமென்பது தேவதாசிகளுக்குத் தாலிகட்டுவது போன்றது. அரச குடும்பப் பெண்களுக்கு நெடுங்காடி என்பவன் நல்ல வேளையில் தாலி கட்டுவான். அவனுக்கு அதற்காகக் கிடைக்கும் கூலி உண்டு. மற்ற வகுப்பினருக்கு இருவரின் சாதகப் பொருத்தமும் பார்க்கப்படுகிறது. பொருத்தமுள்ள பையன் மணவாளன் எனப்படுவான். மணவாளன் தனது பரிவாரங்களுடன் தனது வீட்டி னின்றும் புறப்படுவான். பெண் வீட்டினின்றும் துவக்கப் புறப்பாடு நடக்கும். இரு பகுதியினரும் வழியில் சந்தித்து பெண் வீட்டுக்குச் செல்வர். பெண்ணின் சகோதரர் மணவாளனின் கால்களைக் கழுவு வான். பின்னர் அவன் பெண்ணை அழைத்துவந்து மணவாளனின் இடப்புறத்தில் இருத்துவான். மணவாளன் பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவான். மூன்று நாட்களுக்கு ஒருவகைத் தீட்டுக் காக்கப்படும். நாலாவது நாள் இருவரும் ஆற்றில் முழுகுவார்கள். வீட்டுக்குத் திரும்பி வரும் போது கதவுகள் அடைக்கப்பட்டிருக்கும். மணவாளன் கதவைத் தட்டி அதனைத் திறக்கும்படி செய்வான். பின் பெண்ணின் தாயும் மற்றைய பெண்களும் இருவருக்குமிடையிலிருந்து உண்பார்கள். பின் இருவரும் பந்தலுக்குச் செல்வார்கள். பின் ஆடையை இரண்டாகக் கிழித்து ஆளுக்கு ஒரு துண்டு கொடுக்கப்படும். ஆடையைக் கிழிப்பது கலியாணம் தள்ளுவதைக் குறிக்கும். ஒரு மணவாளன் எத்தனை பெண் களுக்கும் தாலி கட்டலாம். பெரும்பாலும் மணவாளன் பிராமணனாக இருப்பான். இவன் தான் செய்யும் கடமைகளுக்குக் கூலி பெற்றுச் செல்வான். பெண் விரும்பினால் நாலாவது நாள் தாலியைக் கழற்றி விடலாம். சில இடங்களில் தாலி கட்டியவனே சம்பந்தத்துக்கு உரிமை யுடையவன் என்று கருதப்படுகின்றது. தாலி கட்டும்போது அம்மாச் சாம் பாட்டு என்னும் ஒருவகைப் பாட்டு பாடப்படும். தாலி மின்னு எனப்படும். தென் மேற்கு மூலையில் கன்னிக்கால் நடப்படும். கலியாணப் பந்தல் நெற்கதிர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அதற்குக் கதிர் மண்டபமென்பது பெயர். அது முல்லைப்பந்தல் எனப்படுவதுண்டு. மணநாளுக்கு முதல் நாள் நடத்தப்படும் விருந்து அயணி ஊன் எனப்படும். பிராமணத்தி பெண்ணின் இடது கையில் காப்புக் கட்டி சுபத்திரை வேலி என்னும் பாட்டுப் பாடுவாள். கலியாணக் காலத்தில் கதைகளி, ஓட்டம் துள்ளல் முதலியன நடைபெறும். பிராயமான பெண்ணைக் கன்னி அழிப்பது தீட்டான செயல் எனக் கருதப்பட்டது. ஆகவே பூப்படைந்த பெண்களைக் கன்னி யழிக்கும்படி பெண்ணின் தாய்மார் இளைஞரை இரந்து வேண்டுவர். கிடக்கிறதென்பது சம்பந்தத்துக்கு மற்றொரு பெயர். பெண்கள் பூப்படைவது திரண்டுகுளி எனப்படும். நாயர்ப் பெண்கள் கருவடைந்து ஏழாவது மாதத்தில் புளிக்குடி என்னும் சடங்கு புரிவர். வீட்டின் வடக்குச் சிறகு வடக்கிணி என்றும் தென்குச் சிறகு தெற்கிணி எனவும் படும். நடுவே உள்ள முற்றம் நடுமுற்றம் எனப்படும். நாட்டுக்கத்தி பீசான் கத்தி எனவும் தூக்கும் விளக்கு தூக்குவிளக்கெனவும் படும். ஆண் குழந்தை பிறந்தால் நிலத்தில் தென்னோலையால் அடிப்பார்கள். இருபத் தேழாவது நாள் குழந்தைக்குப் பால் பருக்கிப் பெயரிடப்படும். சோறூட் டும் சடங்கு சோறூண் எனப்படும். நாழியில் அரிசி நிரப்பி வைத்தல் நிறைச்சுவைப்பு எனப்படும். புரோகிதன் சாந்திக்காரன் எனவும் உபாத்தி யாயன் எனவும் எழுத்தச்சன் எனவும் படுவான். பால் குடிக்குப் பின் தட்டானை அழைத்து வந்து பொன் கம்பியினால் காது குத்தப்படும். அப்பொழுது நில விளக்குக் கொளுத்தி வைக்கப்படும். மலையாள வீடு நாற்புறம் எனப்படும். மத்திய காலத்தில் வாசலில் பதிபுரம் என்னும் காவற் கொட்டில் இருந்தது. இப்பொழுது அவ் விடத்தில் வேயப்பட்ட கொட்டிலுண்டு. நாயர்ப் பெண்கள் மார்பை மறைப்பதில்லை. மார்பை மறைப்பது தாழ்ந்த சாதிக்கு அறிகுறி, 1740இல் மலையாளத்துக்கு வந்த எட்வர்ட் ஈவ்ஸ் என்பவர், “சாதாரண வயல் வேலை செய்பவர்களின் பெண்கள் முதல் அரச குடும்பப் பெண்கள் வரையும் அரைக்குமேல் உடையில்லாதவர்களாக விருக்கின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார். நாயர்ப் பெண்கள் நாக படம் என்னும் ஒரு வகை மாலையையணிவர். மூக்கில் மூக்குத்தி இடுவர். அதில் தூக்கப்படுவது நத்து எனப்படும். அரை யில் பொன் வெள்ளி ஆபரணங்களணிவர். ஒட்டியாணம் கச்சாபுரம் எனப்படும். மணமாகாது இறந்த பெண்களின் மரணம் கழிச்சாவு, கன்னிச் சாவு எனப்படும். பெண்கள் கண்ணுக்கு மை தீட்டுவர். ஊஞ்சல் உழிஞ்சால் எனப்படும். நாயாடி: மலையாளத்தில் மிகத் தாழ்ந்த சாதியினர் நாயாடிக ளாவர். நீர்நாயின் இறைச்சியை உண்பதால் அவர்களுக்கு இப் பெயர் உண்டாயிற்று. முந்நூறு யாருக்குள் நாயாடி வந்தால் பிராமணன் குளித்துப் பூணூல் மாற்றிக் கொள்ளவேண்டும். பெண்கள் நாயடிச்சிகள் எனப்படுவார்கள். சிறுவர் மொலாயர் என்றும் சிறுமியர் மனிச்சியர் எனவும் படுவர். இவர்களுக்கு மக்கள் தாயம் உண்டு. இவர்கள் தேன், மட்டிப்பால் முதலியன எடுப்பர். ஒவ்வொரு நாயாடியும் ஓணப் பெரு நாளுக்கு நம்பூதிரி இல்லத்துக்கு எட்டு யாருள்ள (கெசம்) நாலுகயிறும் நாயர் வீட்டுக்கு இரண்டு கயிறும் கொடுக்க வேண்டும். அவற்றுக்குக் கூலியாக நாயாடி நெல் பெறுவான். கயிறுகள் ஆடு மாடுகள் கட்டவும் தண்ணீர் இறைக்கவும் உதவும். ஆண் குழந்தைக்குத் தந்தையின் தகப்பன் பெயர் இடப்படும். மணப்பெண் தனியாக இடப்பட்ட ஒரு குடிசையுள் இருப்பாள். பருவமடைந்த இளைஞர் குடிசையைச் சுற்றி நின்று கூத் தாடுவர். அவர்கள் எல்லோரும் கையில் வைத்திருக்கும் தடியைக் கூரை வழியாகக் குடிசைக்குள் போடுவர். பெண் எந்தத் தடியை எடுக்கிறாளோ அத் தடிக்குரியவனே அவள் கணவனானவன். இவர்களின் கடவுளர் மல்லர், மலைவன், பறக்குட்டி முதலியோராவர். இவர்களின் சோதிடர் பறைய வகுப்பினராவர். ஒருவனுக்குக் கண் திட்டி அல்லது பேய்க் குறைபாடு இருந்தால் உப்பு, மிளகாய், புளி, எண்ணெய், கடுகு, தேங்காய், காசு என்பவைகளை ஒரு ஏனத்திலிட்டு அவனுடைய தலையை மூன்று முறை சுற்றிய பின் அவை நாயாடிக்குக் கொடுக்கப்படும். சோனகராக மாறிய நாயாடிகள் தொப்பியிட்ட நாயாடி எனப்படுவர். நாலில்லக்காரர்: முக்குவர். நால்கி(Nalke): இவர்கள் கன்னடத்தில் வாழும் கூடைமுடையும் குடை செய்யும் மக்கள். இவர்கள் ஹோலியர் அல்லது பறையர் எனப்படுவர். பேய்க் கூத்தாடுவர். பெண்கள் பூப்படைந்தபின் மண முடிப்பர். இவர்களின் நாட்டாண்மைக்காரன் குறிக்காரன் எனப்படுவன். அவன் புரோகிதனாக விருந்து மணங்களை நடத்துவான். இறந்தவர் களைச் சுட்ட அல்லது புதைத்த இடத்தில் மண்மேடு செய்யப்படு கின்றது. பஞ்சமர்: ஐந்தாவது குலத்தவரும் பறையரும் அவர்கள் போன்ற சாதியினரும் பஞ்சமரெனப்படுவர். படகர் அல்லது வடுகர்: இவர்கள் மைசூரிலிருந்து சென்று நீலகிரியிற் குடியேறியவர்கள். இவர்கள் கன்னடச் சிதைவான மொழி பேசுவர். பட்டணவன்: கிழக்குக் கடற்கரையில் கிருட்டிணா முதல் தஞ்சாவூர் வரையிலுள்ள மீன் பிடிகாரர் இப்பெயர் பெறுவர். கரையார் என்னும் பெயரும் இவர்களுக்கு வழங்கும். சில செம்படவர் ஆரியர், ஐயாயிரத் தலைவர், ஆரிய நாட்டுச் செட்டி, அச்சு வெள்ளாளன், கரைத்துறை வெள்ளாளன், வருணகுல வெள்ளாளன், குருகுலவமிசம் முதலியவற்றைத் தமது குலப் பெயர்களாக வழங்குவர். இவர்கள் பெரும்பாலும் தம்மைப் பிள்ளை என வழங்குகின்றனர். பட்டணவர் செம்படவருக்குக் கீழ்ப் பட்டவரெனக் கருதப்படுவர். இவர்களின் சிறந்த தெய்வங்கள் குட்டி ஆண்டவன், குட்டி ஆண்டவனின் பரிவாரம், செம்பு வீரப்பன், மீனோடும் பிள்ளை என்பன. தஞ்சாவூரில் இவர்கள் கடவுள் பாவாடைராயன். இவர்கள் இக் கடவுளையும் வலையையும் வணங்குவர். மணற்கும்பங்கள் அவர்கள் கடவுளரைக் குறிப்பனவாகும். தலைமைக் காரன் எசமானன் எனப்படுவான். இவனுக்குத் தண்டக்காரன் என்னும் துணைவன் உண்டு. இவர்களின் இழவு சொல்லிச் செல்பவன் சலவாதி எனப்படுவன். பட்டுநூற்காரன்: இவர்கள் பிறநாடுகளிலிருந்து வந்து தமிழ் நாட்டில் தங்கிய நெசவாளர். இவர்களின் ஆதி இடம் குசராத்து. குமராகுப்தாவின் பட்டையத்தில் (கி.பி. 473) இவர்கள் ‘பட்டவாயாக’ எனக் கூறப்பட்டுள்ளார்கள். இது பட்டுநூற்காரர் என்பதன் சமக்கிருத மொழி பெயர்ப்பு. இராணி மங்கம்மாளின் பட்டையத்திலும் இவர்கள் பட்டு நூற்காரர் எனக் குறிக்கப்பட்டுள்ளார்கள். பிற்காலத்தில் இவர்கள் தம்மைச் சௌராட்டிரர் எனக் கூறிக்கொண்டனர். இவர்கள் தம்மைப் பிராமணர் எனவும் கூறிக்கொள்வர். குமாரகுப்தனின் சாசனத்தில் இவர்கள் போர் வீரரும் நெசவாளருமெனக் கூறப்பட்டுள்ளார்கள். பட்டுநூற்காரர் தெலுங்கு மொழியும் பேசுவர். இதனால் இவர்கள் நீண்ட காலம் தெலுங்கு நாட்டிலும் வாழ்ந்தார்கள் எனத் தெரிகிறது. இவர்கள் பிராமணரைப் போல நூலணிவர். பெண்கள் பூப்படையுமுன் மண முடிப்பர். இவர்களின் மணக் கிரியை பெரிதும் பிராமணருடையது போன்றது. பெண்ணின் கழுத்தில் கட்டப்படும் தாலி பொட்டு எனப் படும். நாலாவது நாள் நாகவல்லி என்னும் சடங்கு நடைபெறும். பிறந்து பதினோராவது நாள் பிள்ளைக்குப் பெயரிடப்படும். எட்டாவது பிள்ளை ஆணாக விருந்தால் கிருஷ்ணா என்னும் பெயரிடப்படும். இது கிருஷ்ணன் வசுதேவருக்கு எட்டாவது பிள்ளையாகப் பிறந்தாரென்னும் ஐதீகத்தைப் பற்றியது. இவர்களுக்கு மரணத்தீட்டு பத்துநாள். விதவைகள் தலை மொட்டை யடிப்பதில்லை; பொட்டைக் கழற்றிவிடுவார்கள். பட்டுநூற்காரரிடையே மற்றவர்கள் விளங்கமாட்டாத வியாபார மொழி உண்டு. பணிக்கர்: பணிக்கன் என்னும் பெயர் அம்பட்டன், கம்மாளன், மாறன், நாயர், பாணன், பறையன் முதலியவர்களுக்கிடையில் வழங்கும். மதுரை, திருநெல்வேலிப் பகுதிகளில் பணிக்கர் சிலர் காணப்படுகின் றனர். அவர்களிற் சிலர் அம்பட்டரும் சாணாருமாவர். சிலர் நெசவுத் தொழில் புரிவர். இப்பொழுது பணிக்கர் தம்மை இல்லம் வேளாளர் என்பர். அவர்கள் தமது பெயரைப் பிள்ளை எனத் திருத்தி வழங்கு கின்றனர். பணிசவன்: பணிசவன் என்பது பணி செய்கின்றவன் என்பதன் திரிபு. இவர்கள் இழவு அறிவிப்பவர்களாவர். சாரை அல்லது எக்காளம் ஊதுவர். இவர்களில் வலங்கை, இடங்கை என இருவகைப் பிரிவுக ளுண்டு. பணிசவன் சங்கு ஊதிக்கொண்டு பிணத்துக்குப் பின்னால் செல்வான். இறந்தவர் கண்ணியமுடையவரானால் கொம்பு ஊதுவான். மறவர்களுக்குள் அம்பட்டன் இழவு அறிவிக்கச் செல்வான். தஞ்சாவூரி லும் தென் ஆர்க்காட்டிலும் பணிசவர்களின் வேலையைச் செய்வோர் நோக்கான் எனப்படுவர். திருநெல்வேலிப் பாசவரின் கோயில்களில் நாகசுரம் வாசித்தல், தேவடியாட்களுக்கு நாட்டியம் பழக்குதல் முதலிய வேலைகளையும் இவர்கள் செய்வர். சிலர் அச்சு வேலையும் செய்வர். அச்சு வேலையென்பது நெசவாளர் பாவோடும் அச்சுச் செய்வது. பணியன்: இவர்கள் மலையாளத்திலும் நீலகிரிப் பகுதியிலும் காணப்படுவர். இவர்கள் காணியாளரின் அடிமைகளாவர். இவர்கள் உயர்ந்த இடங்களில் கூளி என்னும் தெய்வத்தை வைத்து வழிபடுவர். அவ் வகைத் திடர் குளித்தரை எனப்படும். இவர்களின் சிறந்த பொழுது போக்கு ஊஞ்சலாடுதல். பணியரிற் சிலர் தமது மணிக்கட்டுகளிலும் கழுத்திலும் மந்திர மோதிய நூலைக் கட்டியிருப்பர். பண்டாரம்: இவர்கள் பிராமணரல்லாத குருமார். திருத்தணி கையில் பண்டாரங்கள் பெரிதுங் காணப்படுவர். சைவ மடங்களின் தலைவரும் பண்டாரங்கள் எனப்படுவர். பண்டாரங்கள் இலிங்கந்தரிப் பர். இவர்களிற் சிலர் கோயில்களில் மாலை கட்டுதல், பண் ஓதுதல், முதலிய பணிகள் செய்வர். அவர்கள் ஓதுவார், மெய்காவல் என்னும் பெயர்களும் பெறுவர். இவர்களில் இல்லறத்தார், துறவிகள் என இரு பிரிவினருண்டு. மடங்களுக்குத் தலைவராயிருக்கும் சன்னதிகள் துறவி வகுப்பினராவர். மலைகளிலும் குகைகளிலும் மரப்பொந்துகளிலும் வாழும் ஒருவகைக் காட்டுச் சாதியினரும் பண்டாரங்கள் எனப்படுவர். அவர்கள் மலையாளத்தை அடுத்த மலைகளிற் காணப்படுகின்றனர். பண்டிதன்: மேற்கோட்டு நியாயாதிபதிக்குத் துணையாகப் பண்டித னிருப்பான். 1862இல் இப் பதவி ஒழிக்கப்பட்டது. பண்டிதன் அம்பட்டனின் பட்டப் பெயருமாகும். தமிழ்நாட்டில் மத்துவப் பிராமணரும் பண்டித ரெனப்படுவர். இவர்களிற் பலர் கோடுகளிற் பண்டிதராக விருந்தனர். ஓரிய சாதியினரின் சோதிடரும் பண்டித ரெனப்படுவர். பதினெட்டான்: இது மலையாளத்தில் தச்சருக்கு வழங்கும் பெயர். பத்திராளு: இவர்கள் தெலுங்கு பேசும் வாத்தியகாரர். இவர்கள் ஆடுவோர் பாடுவோராவர். பரவன்: பரவர் தமது ஆதியிடம் அயோத்தி எனக் கருதுகிறார்கள். இவர்கள் தென்னிந்தியக் கடலோரங்களிலும் இலங்கையிலும் காணப் படுகின்றனர். இவர்களின் முக்கிய இடம் தூத்துக்குடி. தென்கிழக்குக் கரைகளில் வாழும் பரவர் பெரும்பாலும் கிறித்துவ கத்தோலிக்க மதத் தினராவர். இவர்களுக்குப் போர்ச்சுக்கேயரின் பெயர்கள் வழங்கும். இவர்கள் பிரான்சிஸ் சேவியரால் கிறித்துவ மதத்துக்குத் திருப்பப்பட்ட வர்களாவர். இவர்களின் உரிமைவழி மக்கள் தாயம். மத்திய திருவிதாங் கூரில் இவர்கள் மரமேறுவர்; மீன் பிடிப்பர்; கிறித்துவருக்கும் தாழ்த்தப் பட்டோருக்கும் துணி வெளுப்பர். பெண்கள் சிப்பியைச் சுட்டு சுண்ணாம்பு செய்வர். பரிவாரம்: மறவர் அகம்படியாருள் ஒரு பிரிவினர். இவர்களில் சின்ன ஊழியம், பெரிய ஊழியம் என இரு பிரிவுகள் உண்டு. இவர்களுள் கணவனின் உடன்பிறந்தாள் பெண்ணுக்குத் தாலிகட்டுவாள். சொந்தச் சாதியாருடன் அல்லது சமீன்தாருடன் பெண்கள் சேர்க்கை வைத் திருப்பது குற்றமாகக் கருதப்படுவதில்லை. சமீன்தார்களுக்கு அவ்வாறு பிறக்கும் பிள்ளைகளைக் கணவர் ஏற்றுக்கொள்வர். அவ் வகைப் பிள்ளைகள் பெரிய கம்களத்தார் எனப்படுவர். பரதேசி: இவர்கள் ஒருவகைப் பிச்சைக்காரர். இப் பெயர் கொச்சி வெள்ளையூதருக்கும் பெயராக வழங்கும். பலிசக்கொல்லன்: மலையாளத்தில கேடகம் செய்யும் கொல்லர் இப் பெயர் பெறுவர். பலியன் அல்லது பொலியன்: இவர்கள் பழநிமலையில் வாழும் குடிகள். இவர்கள் ஒருவகைத் தமிழ் பேசுவர். பெரிதும் காடுகளிலும் மலைகளிலும் அலைந்து திரிவர். பலர் மூலிகைகளைக் கொண்டு நோய்களை மாற்றுவர். பாம்புவிடத்தைப் போக்குதற்கு நறுவல்லி வேரை வைத்திருப்பர். விலங்குகளைப் பொறிக் கிடங்குகளிலும் அடார்களிலும் அகப்படுத்துவர். கங்கக் கொடி இலையைக் கசக்கித் தண்ணீரில் எறிவார்கள். உடனே மீன்கள் தண்ணீரில் மிதக்கும். இவர்களின் கடவுள் மாயாண்டி. பல்லவராயன்: இது பல்லவர் தலைவனுக்கு வழங்கும் பெயர். ஓச்சரில் ஒரு பிரிவினருக்கும் பல்லவராயன் என்னும் பெயர் வழங்கும். பள்ளன்: இவர்கள் உழவுத் தொழில் புரியும் வேலையாட்கள். இவர்கள் முற்காலத்தில் வெள்ளாளருக்கு அடிமைகளாக இருந்தார்கள். மதுரைப் பள்ளரின் அதிகாரி குடும்பன் எனப்படுவான். கோயமுத்தூரில் பள்ளரின் அதிகாரி பட்டக்காரன் எனப்படுவான். அவனுக்குத் துணை யாக வுள்ளவன் ஓடும் பிள்ளை எனப்படுவான். திருச்சிராப்பள்ளியில் பள்ளரின் அதிகாரி நாட்டுமூப்பன் எனப்படுவன். இவர்களுக்கு வண்ணார் அம்பட்டர்களுண்டு. பள்ளி: தெலுங்கு நாட்டில் மீன் பிடிப்போர், உழுதொழில் செய்வோர் எனப் பள்ளிகளில் இரு பிரிவுகள் உண்டு. மீன் பிடிப்போர் மீன் பள்ளிகள் எனப்படுவர். பள்ளிகள் சில இடங்களில் தம்மை இரெட் டிகள் எனக் கூறுவர். மீன் பிடிப்போர் அக்கா, தேவராலு என்னும் தெய்வங்களை வழிபடுவர். பள்ளி அல்லது வன்னியன்: பள்ளிகள் தாம் வன்னிய குல அரச குலத்தினர் எனக் கூறுவர். திருவிதாங்கூர் அரசருள் ஒருவராகிய குலசேகர ஆழ்வார் தங்கள் சாதியரசன் எனக் கூறுவர். சென்னையில் திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி கோயிற் பட்டையத்தின்படி அது பள்ளரால் கட்டப்பட்டது. அங்கு பள்ளிகள் குலசேகர ஆழ்வாருக்குக் குருபூசை நடத்துவார்கள். மைலாப்பூர்ச் சிவன் கோயிலில் பள்ளிகள் கற்பூரம் கொளுத்திக் காட்டும் உரிமை பெற்றிருந்தார்கள். அவர்கள் கோயில் தமக்கு உரியதாக விருந்ததென்றும் பிற்காலத்தில் தாம் சிறிது சிறிதாக உரிமையை இழந்து விட்டார்கள் என்றும் கூறுகின்றனர். கற்பூரம் கொளுத்தும் உரிமையைப்பற்றி சமீபத்தில் விவாதம் நடந்து விசாரணை மேற்கோட்டுக்கு வந்தது. பள்ளிகள் சார்பாகத் தீர்ப்பளிக்கப் பட்டது. காஞ்சீபுரத்தில் ஏகாம்பரநாதர் கோயிற் கோபுரமொன்று பள்ளி கோபுரமெனப்படும். அங்குள்ள பள்ளிகள் அது தமக்குரிய தென்று கூறி அதனை ஆண்டுதோறும் பழுது பார்ப்பர். சிதம்பர ஆலயத்தைக் கட்டியவன் இரணியவன்மன் (கி. பி. 6ஆம் நூற்றாண்டு). அவனுடைய வழித்தோன்றல்கள்தாம் என்று சிதம்பரத்துக்குக் கிழக்கே நான்கு மைல் தூரத்திலுள்ள ஒரு பள்ளிக் குடும்பத்தினர் உரிமை கொண்டாடுவர். பள்ளிப் பொலிகரிற் சிலர் “அக்கினி குதிரையேறிய ராயராவுத்த மிண்ட நயினார்” (இராசராவுத்தரை வென்று அக்கினிக் குதிரை ஏறிய) என்று பெயர் பெறுவர். தென்னார்க்காட்டில் குமாலம் என்னும் இடத்தில் பள்ளிக்குச் சிறீனிவாச ஆலயமுண்டு. அங்கு பள்ளிகள் கோயிலைச் சுற்றி வாழ்கின்றனர். இவர்கள் கோயிற் பட்டரைப் போல உடுப்பர். பள்ளிப் பெண்களைப் பட்டர்மார் மணப்பர். ஆனால் தமது பெண்களைப் பள்ளிக்குக் கொடுக்கமாட்டார்கள். சேலம் பகுதியில் ஓலைப் பள்ளி, நாகவடம்பள்ளி என இரு பிரிவினருண்டு. இவை அவர்கள் அணியும் ஓலை, நாகவடம் முதலியன பற்றி வந்த பெயர்கள். பள்ளிகளும் பேரிச் செட்டிகளும் மன்னார் சாமியை வணங்குவர். கிராமத் தெய்வங்கள் ஏழுகும்பம் அல்லது கரகங்களாற் குறிக்கப்படும். இவர்களுள் பிச்சைக் காரர் நோக்கான் எனப்படுவர். இவர்களின் தலைமைக்காரன் பெரிய தனக்காரன் அல்லது நாட்டாண்மைக்கார னெனப்படுவான். விதவை களின் மறுமணம் நடுவீட்டுத்தாலி எனப்படும். தலைப்பூப்பு அடைந்த பெண் முழுகிய பின் அவளைப் பலகைமேல் இருத்தி அவள் முன்னால் பிட்டுவைத்து ஆராத்தி காட்டப்படும். பறையன்: 18ஆம் நூற்றாண்டில் சொனரத் (Sonnerat) என்பவர் பறையரைப் பற்றி எழுதியிருப்பது வருமாறு: மற்றவர்களோடு பேசும் போது பறையன் தனது வாயைக் கையினால் பொத்திக்கொள்ள வேண்டும். அவன் வீதியிற் போய்க் கொண்டிருந்தால் அவன் ஒருபக்கம் ஒதுங்கி நின்று மற்றவர்களைச் செல்ல வழிவிட வேண்டும். அவனை எவராவது தீண்டினால் அவர் உடனே குளித்துத் தோய்ந்து தீட்டைப் போக்கிக்கொள்ள வேண்டும். பிராமணர் இவர்களைப் பார்த்தல் கூடாது. இவர்களுள் பல பிரிவுகளுண்டு. கோலியர் நெசவு செய்வர். வள்ளுவர் மந்திர வித்தைக்காரராகவும், குருமாராகவும் வேலை செய்வர், நூலுமணிவர். பறையர் அடிக்கும் பறை உறுமி எனப்படும். இவர்களின் வண்ணான் போதராயன் எனப்படுவான். பேலூரில் (Belur) உள்ள கோயிலுள் மூன்று நாட்களுக்கு உள்ளே செல்ல இவர்களுக்கு உரிமை யுண்டு. மேல் கோட்டையில் மூன்று நாட்களுக்குப் பிராமணருடன் ஆதிமூலத்துக்கு (கருப்பக் கிரகத்துக்குச்) செல்ல இராமானுசரால் இவர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டதென்று சொல்லப்படுகின்றது 1799 முதல் இவர்கள் கொடிமரத்துக்கு அப்பால் செல்லாதபடி தடுக்கப் பட்டார்கள். செங்கற்பட்டிலுள்ள சிறிபெரும்புத்தூரில் திருவாரூரிற் போன்ற உரிமை பறையருக்கு ண்டு. வெட்டியான், தலையாரி, தண்டாசி, தோட்டி முதலிய கிராம உத்தியோகங்கள் பறைச் சாதியினருக்கு உரிய தாகும். காஞ்சீபுரம், கும்பகோணம், சிறீவில்லிபுத்தூர் முதலிய இடங் களில் பறையர் மற்றவர்களோடு வடம் பிடித்துத் தேர் இழுப்பர். கிராம தேவதைகளுக்கு மடை போடும்போது பூசாரி பறையனின் மணிக்கட் டில் மஞ்சள் நூல்கட்டி அவனை எல்லோருக்கும் முன்னால் ஊர்வலத் தில் வரவிடுவது வழக்கம். மழையில்லாத காலத்தில் பறையர் கொடும் பாவி கட்டியிழுப்பர். பிராமணர் வருமுன் வள்ளுவர் அரசர்களுக்குக் குருக்களாக விருந்தார் என்று ஸ்டூவாட் (Stuwart) கூறியுள்ளார். அவர் கி.பி. 9ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட பட்டயமொன்றை இதற்கு ஆதாரமாகக் காட்டுவர். அதில் “சிறீ வள்ளுவன் புவனவனாகிய உவச்சன் தினமும் அறுவரைக் கொண்டு வேலை செய்வித்து ஆலயக் கடமை களைப் பார்க்க வேண்டும” எனப் பொறிக்கப்பட்டுள்ளது. 11ஆம் நூற்றாண்டிற் பொறிக்கப்பட்ட இராசராசனின் கல்வெட்டில் பறையர் உழவு, நெசவு என இரு பிரிவினராகவிருந்தனர் எனக் குறிக்கப்பட்டுள் ளது. திருவாரூரில் நடக்கும் பெரிய விழாவில் பறையன் யானை மீது ஏறி யிருந்து சுவாமிக்குச் சாமரை வீசுவான். சென்னையில் ஜாட்ஸ் டவுனில் நடக்கும் ஏகாட்ட விழாவில் விக்கிரக த்தின் கழுத்தில் பறையன் தாலிகட்டு வது வழக்கம். நிலங்களின் எல்லையைப் பறையன் நன்கு அறிவான். எல்லையைப் பற்றிப் பிணக்கு உண்டானால் தலையில் நீர்க் குடம் வைத்து அவனை எல்லையைச் சுற்றிவரும்படி செய்தல் இன்றும் சில இடங்களில் வழக்காகவுள்ளது. இதனால் மற்றச் சாதியினரிலும் பார்க்கப் பறையன் நெடுங்காலம் நாட்டில் வாழ்ந்து வருகின்றானென்று அறியப்படுகின்றது. பறையரிருக்குமிடம் சேரி எனப்படும். பிராமணன் தொடுவதால் தமக்குத் தீட்டு உண்டாகிறதெனப் பறையர் கருதுவர். பிராமணன் சேரிக்கும் நுழைந்தால் அவனைத் தலையில் சாணித் தண்ணீர் ஊற்றித் துரத்துவர். மைசூர்ப் பிராமணர் ஹோலியரின் சேரிக் கூட்டாகச் சென்றால் தமக்கு அதிட்டம் உண்டாகும் எனக் கருதுவர். பிராமணன் அவ்வாறு சென்றால் ஹோலியர் திரண்டு அவனைச் செருப்பாலடித்து துரத்துவர். முற்காலத்தில் சாகும்படி அடிப்பர். பத்துத் தலைமுறைக்கு முன் பறையர் நெசவுக்காரராகவும், மரியாதைக்குரியவர் களாகவுமிருந்தார்கள். இவர்களிற் கண்ணியமுடையவன் பணக்காரன் எனப்படுவன். தென்னார்க்காட்டுப் பறையருள் பெரிய நாட்டான், சின்ன நாட்டான் என்னும் தலைமைக்காரர் உண்டு. விதவை தாலி தரிப்ப தில்லை. பறையர் பெரும்பாலும் ஏழு கன்னியம்மாவை வணங்குவர். தமிழ் தெலுங்குப் பறையர் எல்லம்மா என்னும் தெய்வத்தை வணங்குவர். இவர்கள் தெய்வத்தைக் குறிக்கும் சிலைமீது எண்ணெய் ஊற்றி மஞ்சள் பூசி குங்குமம் தூவி மாலைகளால் அலங்கரித்து வணங்குவர். பெரிய பாளையத்தில் (சென்னையிலிருந்து பதினாறு மைல்) பவானி அம்மன் கோயிலுண்டு. இங்கு பறையர், பள்ளிகள், சக்கிலியர் முதலானோர் பெரும்பாலும் வழிபடுவோராவர். அங்கு அவர்கள் ஆடுகளைப் பலி யிடுவதோடு நிர்வாணமாக வேப்பிலை உடை உடுத்துக் கொண்டு கோயிலைச் சுற்றி வருவர். வள்ளுவர் மற்றப் பறைய ரோடு திருமணம் செய்து கொள்வதில்லை. திருவிதாங்கூர், கொச்சி முதலிய இடங்களில் திருமணத்துக்குப் பந்தற்கால் நிறுத்துதல் பறைய ரால் செய்யப்படும். பறையன் பிராமணனுக்கு 128 அடி தூரத்தில் நிற்றல் வேண்டும். புலையன் இதற்கு இரட்டித் தூரத்தில் நிற்றல் வேண்டும். பறையன் மனைவியின் பிள்ளைப் பேற்றுக்குப் பின் ஏழு நாட்களுக்குச் சோறு உண்ணாது பழங்களையும், கிழங்குகளையும் உண்பான். நாஞ்சில் நாட்டுப் பறையருக்குச் சொத்து உண்டு. இவர்கள் அரசருக்குப் பணங் கொடுத்துப் பட்டங்கள் பெற்றுள்ளார்கள். பாண்டிப்பறையன் சாம்பு வன் எனப்படுவன். பாணன்: மதுரையிலும் திருநெல்வேலியிலும் இவர்கள் தையல் வேலை செய்வர். அம்பட்டரும் வண்ணாரும் இவர் வீடுகளில் உண் ணார்கள். இவர்கள் கோயில்களுள் நுழையலாம். மலையாளப் பாணர் பேய்க் கூத்தாடுவோராவர். பாணோ: இவர்கள் கஞ்சம் மாகாணத்தில் காணப்படும் நெச வாளர். சூடிய நாகபுரியிலும். ஒரிசாவிலும் நெசவு கூடைமுடைதல் முதலிய வேலைகள் செய்யும் பாண என்னும் ஒரு சாதியினரும் காணப் படுகின்றனர். இவர்கள் மண வீடுகளிலும், பிண வீடுகளிலும் , கோயில் களிலும் வாத்தியம் சேவிப்பர். பாணோ ஒருவன் கொண்டர் வகுப்புப் பெண்ணோடு வியபிசாரம் செய்தால் அவன் பெண்ணின் கணவனுக்கு எருமை, ஆடு, பன்றி, ஒரு கூடை நெல், ஒரு ரூபாய், ஒரு சுமை பானை முதலியவற்றைக் கொடுக்கவேண்டும். கொண்டர்ப் பெண்களைப் போலவே பாணோப் பெண்களும் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தனியிடத்தில் இராக்காலத்தில் நித்திரை கொள்வர். பாண்டியன்: அம்பட்டன், கம்மாளன், ஒச்சன், பள்ளன், வண்ணான், வேளாளன் முதலியவர்களிடையே இது பெயராக வழங்கும். மலையாளத்தில் ஈழவர் பாண்டி எனப்படுவர். பாரத்துவாசர்: இது ஒரு பிராமண கோத்திரத்தின் பெயர். பிசாராடி: இவர்கள் அம்பலவாசிகளில் ஒரு பிரிவினர். இவர்கள் கோயில்களில் பூமாலை கட்டிப் பணிவிடை புரிவர். பெண்களுக்குப் பூப்பு அடையுமுன் தாலி கட்டுக் கலியாணம் நடக்கும். மணமகன், மணமகள் என்பவர்களின் கைளை இணைப்பது மணத்தில் முக்கிய சடங்காகும். பிடாரன்: இவர்கள் அம்பலவாசிகளில் ஒரு பிரிவினர். பத்திர காளியை வணங்குவர். பாம்பு பிடிப்போரும் பிடாரர் எனப்படுவர். பிரமசாக்தா: இவர்கள் பிராமணருள் மத்தியானப் பறையர் எனப்படுவர். இவர்கள் மத்தியானம் முதல் ஒரு மணி வரை வீட்டுக்கு வெளியே நின்று பின் குளித்துத் தீட்டுப் போக்கிக் கொள்வர். பிராமணன்: தென்னிந்தியப் பிராமணரிற் பல பிரிவுகளுண்டு. அவர்களின் மொழிகளும் பழக்கவழக்கங்களும் வேறுபட்டுள்ளன. இவர்கள் தாம் பிரமாவின் முகத்தினின்றும் பிறந்தவர்களென நம்புகின்ற னர். இருக்கு வேதிகள், சாமவேதிகள், யசுர் வேதிகள் என மூன்று பிரிவில் இவர்கள் அடங்குவர். இவை சமயக்கிரியை தொடர்பான பிரிவுகள். தாம் வாழும் இடங்களில் வழங்கும் மொழிகளையே இவர்களும் வழங்கு வர். அத்திரி, பிருகு, வதிஷ்டர், கௌதமர், காசியபர் முதலாயி னோரைத் தமது கோத்திர முதல்வராகக் கொள்வர். சிலர் அகத்தியர், அங்கீரர், அத்திரி, பிருகு, காசியபர், வதிஷ்டர், கௌதமர் எனவும் தமது கோத்திர முதல்வரைக் கொள்வர். பிராமணர் பஞ்சத் திராவிடர், கௌடர் என இரு பெரும் பிரிவினராகப் பிரிக்கப்படுவர். கௌடர் மாமிசமுண்பர். ஒரியா, கொங்கணி மொழிகளைப் பேசுவோரல்லாத தென்னிந்தியப் பிராமணரெல்லோரும் பஞ்சத் திராவிடர்களாவர். இவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராட்டி, குசராத்திப் பிராமணர்க ளெனப் பிரிக்கப் பட்டுள்ளார்கள். தெலுங்கு பேசும் சிவாலிப் பிராமணர் கருநாடகப் பிராமணரில் அடங்குவர். பட்டர், நம்பூதிரிகள், திராவிடப் பிராமணரைச் சேர்ந்தோராவர். சமயத் தொடர்பாகப் பிராமணர் வைணவருமல்லர், சைவருமல்லர். ஸ்மார்த்தர் பிரமமே உயிர்கள் என நம்புவோர். பிராமணச் சிறுவர் எட்டு வயதுக்கு முன் பூணூல் தரித்துக் கொள்ள வேண்டும். பூணூல் தரிக்கும்போது சிறிய மான்தோல் துண்டு ஒன்று நூலிற் கட்டப்படும். ஐம்பது ஆண்டுகளின் முன் வியபிசாரிகள் கழுதை யில் வாற் பக்கத்தைப் பார்க்கும்படி இருத்தி கிராம வீதிகளில் கொண்டு செல்லப்பட்டார்கள். பொது மக்கள் எருக்கம்பூ மாலையை அவள் கழுத்தி லிட்டார்கள். வியபிசாரிகளான உப்பிலியப் பெண்களைத் தலையில் ஒரு கூடை மண்ணைச் சுமந்துகொண்டு மரத்தைச் சுற்றிவரச் செய்வது வழக்கு. இவர்களின் பிணக் கிரியை கருட புராணத்தைத் தழுவியது. பில்லவர்: இவர்கள் துளுப் பேசும், கள்ளிறக்கும் தென் கன்னடர். தமிழர் இலங்கை மீது படைஎடுத்த போது இலங்கை மக்கள் பலர் திருவிதாங்கூரிலும், மேற்குக் கரைப் பகுதிகளிலும் குடியேறினார்கள். அவர்கள் திருவிதாங்கூருக்குச் சென்றபோது தெற்கிலுள்ளது என்னும் பொருள் தரும் தென்னையையும் கொண்டு சென்றார்கள். இவர்கள் தீயர் அல்லது ஈழவர் எனப்பட்டனர். தீவார் என்பது தீயர் எனத் திரிந்து வழங்கிற்று. இவ் வகுப்பினரே பின்பு பில்லவர் எனப்பட்டார்களாக லாம். தெங்கு இலங்கையிலிருந்து வந்ததென்பதற்கு எடுத்துக்காட்டாக பெரிப்புளூஸ், மலையாளத்திலிருந்து மேல் நாடுகளுக்குச் சென்ற பொருள்களுள் தேங்காயைக் குறிப்பிடாதிருப்பதாகும். சீரிய கிறித்த வரின் செப்புப் பட்டையத்தால் தீயர் பயிரிடுவோராயிருந்தனரெனத் தெரிகிறது. பில்லவர்களும் இவர்களைச் சேர்ந்தவர்களாகலாம். இவர் களுக்கு அம்பட்டன் புரோகிதனாகவிருந்து மணக்கிரியைகள் செய் வான். இவர்களுக்குப் பெண் வழி உரிமையுண்டு. பிள்ளை: இது வேளாளரின் பட்டப்பெயர். இது இப்பொழுது அகம்படியான், அம்பலக்காரன். கோவலன், இடையன், நாயர், நோக் கான், பணிசவன், பணிக்கன், பறையன், சாயக்காரன், தேவதாசி வகுப்பின் ஆண்களுக்கும் வழங்கும். ஐரோப்பியரின் சமையற்காரரான ‘பட்லர்’ களும் பிள்ளை என்னும் பெயரை வழங்குவர். வேளாளர் எனச் சொல்லிக் கொள்ளும் குறவரும் இதனை வழங்குகின்றனர். பூலான்: இவர்கள் திருவிதாங்கூரில் குடியேறிய தமிழ் அம்பட்டர். பூழிஆசாரி: பூழி(மண்)யில் வேலை செய்யும் மலையாளக் கம்மாளரில் ஒரு பிரிவினர் இப் பெயர் பெறுவர். புள்ளுவன்: மலையாளத்தில் சோதிடர், மந்திர வித்தைக்காரன், பூசாரி, பாம்புக்காக்களில்(பாம்புக் கோயிலிருக்கும் சோலை) பாடுவோர் இப் பெயர் பெறுவர். இவர்கள் சட்டியின் அடியை உடைத்து வெளிப் பக்கத்தில் தோல் போர்த்த ஒரு வகைப் பறையைத் தட்டுவர். இவர்க ளுக்குத் தாலிகட்டு சம்பந்தம் முதலியன உண்டு. நாகத்தான் காக் கடவுளைச் சேவிக்கும்போது இவர்கள் பாம்பன் துள்ளு என்னும் ஆடல் புரிவார்கள். பைராகி: இவர்கள் வட இந்தியாவினின்றும் வந்த பிச்சை எடுக்கும் மக்கள். பைராகிகள் மதத்தில் வைணவர்; தென்கலை நாமம் இடுவர்; துளசி மாலை அணிவர். பொண்டாரி: இவர்கள் கஞ்சம் பகுதியில் வாழும் ஓரியரின் அம்பட்டர். இவர்கள் தாய் மாமன் பிள்ளையை அல்லது தந்தையின் சகோதரியின் பிள்ளையை மணத்தல் கூடாது. கலியாணத்துக்கு முன் இவர்களுக்கு வில், அம்பு அல்லது சகடை மரத்தோடு போலிமணம் நடத்தப்படும். பொண்டான்: இவர்கள் வட மலையாள அரசனின் பல்லக்குக் காவுவோர். இவர்களிற் சிலர் மாத்திரம் கள்ளிக் கோட்டையிற் காணப்படுகின்றனர். இவர்களின் நடை, உடை, பேச்சு முதலியன தமிழரைப் போன்றவை. சாதாரண தமிழனைத் தொடுவதால் அரசனுக் குத் தீட்டு உண்டாகும். அப்பொழுது இவர்கள் அவனை அரண்மனையி லிருந்து ஆலயத்துக்கும் ஆலயத்திலிருந்து அரண்மனைக்கும் சுமந்து செல்வர். பொதுவான்: கோயிற் காவல் புரியும் அம்பலவாசிகள் இப் பெயர் பெறுவர். திருவிதாங்கூரில் பொதுவர் என்பது மறவரில் ஒரு பிரிவின ருக்குப் பெயர். பெண்கள் தமது சாதியிலுள்ள ஆடவரோடும் பிராமண ரோடும் சம்பந்தம் வைத்துக்கொள்வர். ஆடவர் தமது சாதியிலும் நாயர்ச் சாதியிலும் சம்பந்தம் வைக்கலாம். பெண்கள் பொது விச்சியர் அல்லது பொதுவத்திகள் எனப்படுவர். பொலிகர் : இது பாளயக்காரன் என்பதற்கு இன்னொரு பெயர். பாளயக்காரரின் கீழுள்ளவர்களும் பொலிகர் எனப்படுவர். பொறோசா: இவர்கள் கஞ்சம், விசாகப்பட்டினங்களில் வாழும் உழவர். மங்கலவர்: அம்பட்டர் மங்கலவர் எனப்படுவர். இவர்கள் துளுவர், தமிழர் என இரு பிரிவினராவர். இவர்களுக்குள் திருமணக் கலப்பு இல்லை. திருமணக் காலத்தில் நாகசுரம் ஊதுதலால் இவர்கள் மங்கலவர் எனப்படுவர். கலியாண குலம் என்பதுவும் இவர்களுக்கு மற்றொரு பெயர். மணவாளன்: இவர்கள் நாயரின் ஒரு பிரிவினர். மணியகாரன்: இதற்குக் கண்காணிப்பவன் என்பது பொருள். இது செம்படவன், பரிவாரங்கள் என்போருக்கும் பட்டப்பெயர். இடையரில் ஒரு வகுப்பினரையும் இது குறிக்கும். இப் பெயர் (மாட்டுக் குக் கட்டும்) மணி என்பதிலிருந்து உண்டாயிற்று. இச் சொல் மணிகர் எனத் திரிந்து தமிழ்நாட்டில் கிராமத் தலைமைக்காரனைக் குறிக்கும். மண்டாதான்செட்டி: இவர்கள் சிதைந்த கன்னட மொழி பேசுவர். மக்கள் தாயம் கொள்வர். இவர்கள் வேநாட்டில் வாழ்ந்தார்கள். மந்தாதனன் என்பது மகாவலி நாடு என்பதன் திரிபு. நெல்லக் கோட்டைக் கும் தீப்பக்காட்டுக்குமிடையிலுள்ள பகுதிக்கு இப் பெயர் இன்றும் வழங்கும். பூப்பு அடைந்தபின் பெண்களுக்கு மணமாகும். சில சமயங் களில் மணமகன் பெண்ணைப் பெறுவதற்குப் பெண்ணின் தந்தை வீட்டி லிருந்து ஒரு ஆண்டு முதல் நான்கு ஆண்டுகள் வரை வேலை செய்வான். மணமான பெண்கள் கணவனின் சகோதரரோடு கூடி வாழ்தல் குற்ற மாகாது. இறக்கும் தறுவாயிலுள்ளவர்களுக்குச் சோறும் பொன்னும் இட்ட ஏனத்திலிருந்து சிறிது நீரைக் குடிக்கக் கொடுப் பார்கள். மண்டை: மண்டைக் கறுப்பனை வழிபடும் கள்ளர் சாதியினர் இப் பெயர் பெறுவர். மண்டுவர்: தெலுங்கு நாட்டில் அலைந்து திரியும் மருத்துவர் இப் பெயர் பெறுவர். இவர்களின் மனைவியர் மருத்துவச்சிகளாகத் தொழில் புரிவர். மண்ணாடி: பழநி மலையில் வாழும் குறவருக்கு இப் பெயர் வழங்கும். மண்ணான்: இது திருவிதாங்கூர் மலைச் சாதியினருக்கும் வழங்கும் பெயர். குழந்தை பிறந்து ஒரு ஆண்டுக்குப் பின் குடும்பத்தில் மூத்தவர் மணி கோத்த மாலையைக் குழந்தையின் கழுத்திற்கட்டி அதற்குப் பெயரிடுவார். இறந்தவர் புதைக்கப்படுவர். பிணங்களைப் புதைக்கு முன் அவற்றின் வாயில் அரிசியிடப்படும். ஒரு ஆண்டின் பின் இறந்தவருக்கு உணவு கொடுக்கப்படும். மண்ணார் தமிழ் பேசுவர். இவர்களுக்கு அம்பட்டனும் வண்ணானும் இல்லை. உரிமை தாய் வழி. மண்ணானென்பது வண்ணானுக்கும் பெயராக வழங்கும். மதிகர்: இவர்கள் சக்கிலியருக்குச் சமமான தெலுங்கர். இவர் களின் தேவராட்டி மாதங்கி எனப்படுவாள். மாதங்கி என்றும் கன்னியாக விருப்பாள். ஆனால், அவளுக்குப் பல பிள்ளைகள் இருப்பர். இவ்வா றிருத்தல் குற்றமாகக் கருதப்படமாட்டாது. மாதங்கியின் ஆண்பால் ஆசாதி. இவர்கள் எல்லம்மாவைப் புகழ்ந்து பாடுவர். எல்லம்மா எல்லி எனப்படுவாள். அவள் தீச்சுடர் போல வெளிப்படுவாள். பிராமணர் எல்லம்மாவை இலக்குமி, கௌரம்மா, சரஸ்வதி என வழிபடுவர். கிருட்டிணா மாகாணத்தில் மாதங்கச் சிறுவர் நூல் போன்ற மெல்லிய வாரை இடத்தோள் மீது பூணூலாக அணிவர். மாதங்கர் ஊரம்மா என்னும் தெய்வத்தையும் வழிபடுவர். ஊர்வலத்தில் மாதங்கத் தேவடி யாட்கள் பாடி ஆடுவர். இவர்களின் சடங்குகள் பிரதானம் எனப்படும். பெண்கள் பொட்டுத் தாலி அணிவர். தலைப்பூப்புக் காலத்தில் பெண் ணுக்குப் பத்துநாள் தீட்டு உண்டு. இவர்கள் சாம்பவர் எனப்படுவார்கள். மரக்காயர்: மரக்காயர் பெரும்பாலும் பறங்கிப் பேட்டையிற் காணப்படுவர். இப் பெயர் மரக் கலத்தைக் குறிக்கும் மரக்காபி என்னும் அராபிச் சொல்லின் திரிபு. இவர்கள் இந்தியத் தாய்மாருக்கும் அராபியத் தந்தையருக்கும் உதித்தோர். சோனகம் என்பது அராபியாவுக்கு இன்னொரு பெயர். இந்துக்களாயிருந்து மரக்காயராக மாறியவர்கள் புளுக்கைகள் எனப்படுவர். மரக்காயர் அராபித் தமிழ் பேசுவர். தமிழை அராபி எழுத்துக்காளலெழுதுவர். மராட்டி அல்லது மராசாரி: மராத்தி மொழி பேசுவோர் மராட்டிகள் எனப்படுவர். உண்மையான மராத்திகள் கோவாவிலிருந்து வந்தவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்களின் சிறந்த தெய்வம் மகாதேவி. விதவைகள் மறுமணம் புரிவர். தஞ்சாவூரில் இருந்த கடைசி மராட்டிய அரசன் சிவாசி. இவன் 1855இல் மரணமடைந்தான். மலசர்: இவர்கள் கோயமுத்தூர், கொச்சி முதலிய இடங்களிற் காணப்படுவர். காணியாளருக்கு அடிமைகள் போல வேலைகள் புரிவர். தமிழும் மலையாளமுங் கலந்த மொழி பேசுவர். இவர்களின் குடிசைகள் பதி எனப்படும். காளி, மணக்காடாத்தா, மாரியம்மா முதலியன இவர் களின் தெய்வங்களாகும். இவர்களின் வீதிகள், சாலைகள் எனப்படும். நிலமுடையவன் மண்ணாடி எனப்படுவான். திருமணங்கள் பெண் வீட்டில் நடைபெறும். மணமகன் பெண்ணுக்குத் தாலி கட்டுவான். மூப்பன் இருவரின் கைகளையும் சேர்த்து வைப்பான். இவர்கள் இறந்து போன முன்னோரை வழிபடுவர். அவர்களுக்கு உணவு ஏழு இலைகளில் படைக்கப்படும். தலைப்பூப்பு அடைந்த பெண் தனிக் குடிசையில் ஏழுநாள் தங்குவாள். குடிசையின் முன்னால் நாழியும் விளக்கும் வைக்கப் படும். அவள் அவற்றை வலக்காலை முன்னே வைத்துக் கடந்து செல் வாள். பிணங்கள் முகம் கீழே இருக்கும்படி புதைக்கப்படும்; சில சமயங் களில் இருக்கும் நிலையிலும் புதைக்கப்படும். பெண்கள் இடது கைகளில் மாத்திரம் வளையல்கள் அணிந்திருப் பார்கள். இரண்டு கைகளிலும் அணிந்தால் பறையன் அவற்றை உடைத்து மூப்பனுக்கு அறிவிக்க வேண்டும். மலைக்காரன் : மலையாளத்தில் மலைகளில் வாழும் உழவர் இப் பெயர் பெறுவர். இவர்களின் தலைமைக்காரன் மலைமூத்தான் எனப் படுவன். மலையாளி: மலையாளி என்பதற்கு மலையில் வாழ்பவன் என்பது பொருள். மகமதிய ஆட்சி தொடங்கிய காலத்தில் காஞ்சீபுரத்தி னின்றும் மலையாளத்திற் சென்று வாழ்ந்தோர் மலையாளிகள் எனப்படு கின்றனர் என்னும் கதையுண்டு. இவர்கள் செவரோய் (Sevaroy) மலை களில் வாழ்கின்றனர். செவரோய் மலையில் வாழும் மக்கள் தம்மைக் காஞ்சி மண்டலம் எனக் கூறிக் கொள்வர். இவர்கள் சிவன், விட்டுணு, மாரியம்மன், துரௌபதி முதலிய கடவுளரை வழிபடுவர். சில கோயில் களில் மிகப் பழங்காலக் கல்லாயுதங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவர்கள் கோயில்களில் சத்தியஞ் செய்து வழக்குகளைத் தீர்த்துக் கொள்வார்கள். பொங்கல் விழாவுக்குப் பின் எருது ஆட்டம் என்னும் விழாவை இவர்கள் நடத்துவார்கள். மிக உயர்ந்த குலத்தவன் குரு என ப்படுவான். கிராமத்தி லுள்ள வழக்குகளைத் தீர்க்க வரும்போது இவன் குதிரை மீதேறி வரு வான். மேலே குடை பிடிக்கப்படும். பின்னால் வாத்தியங்கள் ஒலிக்கும். குரு தலைமுறையாக வருபவன். பத்துக் கிராமங் களுக்கு ஒரு தலைமைக் காரனிருப்பான். அவன் பட்டக்காரன் எனப்படுவான். திருமணக் காலத் தில் முதியவர் அறுகம்புல், வெற்றிலைகளில் பாலைத்தொட்டு மணமக்க ளின் தலையைச் சுற்றுவர். மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டுவான். கலியாண நாள் இலக்கினம் எனப்படும். கன்னியின் மணம் கலியாணம் எனப்படும். விதவையின் மணம் ‘கட்டிக் கிறது’ எனப்படும். வியபிசாரக் குற்றத்துக்கு குரு தீர்த்தங் கொடுத்துப் பெண்ணைச் சுத்தஞ் செய்வார். இவர்கள் இறந்தவரைப் புதைப்பர். குட்ட வியாதியாளரது ம், கருப்பிணி களதும் உடல் சுடப்படும். பெண்ணைப் பெறுவதற்கு மணமகன் பெண் ணின் தந்தை வீட்டிலிருந்து ஒரு ஆண்டாவது பணி செய்ய வேண்டும். கொல்லிமலை மலையாளிகள் திருவரங்கத்துக்கு (சீரங்கத்துக்கு) மாடு நேர்ந்து விடுவர். பிணத்தைப் புதைத்த இடத்தில் அலரிச் செடி நடப் படும். கோயில் மாடுகள் பொலி எருதுகள் எனப்படும். இறந்த கோயில் மாடுகளுக்கு மரியாதை செய்யப்படும். வீட்டில் கோட்டான் இருக்காத படி முகட்டில் புற்பிடிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். மழை வேண்டு மாயின் ஒருவர் மற்றவர் மீது சாணி உண்டைகளை எறிவர். சாணியாற் செய்யப்பட்ட பிள்ளை யாரை எருக்கும்பத்துள் புதைப்பர். மழை வந்த வுடன் பிள்ளையாரை எடுப்பர். தலையிடி நோய் கண்டோர் தெய்வத் துக்குச் சிவப்புச் சேவல் நே ர்ந்துவிடுவர். பல் நெருடுகிறவர்கள் கோயிற் பிரசாதத்தை உண்பர். திருச்சினாப்பள்ளி மலையாளிகள் தாயின் சகோ தரியின் பிள்ளையை மணப்பர். இவ் வழக்கினால் சிறுவன் பிராயமடைந்த பெண்ணை மணக்க நேரும். கொல்லிமலைப் பெண்கள் பிற ஆடவரோடு வாழலாம். பெறும் பிள்ளைகள் கணவனுக்குரியனவாகக் கருதப்படும். இரு பாலாரும் பல மணங்கள் செய்வர். மலையாளி என்பது மலை நாட்ட வருக்கும் பெயராகும். மலையான்: இவர்கள் வடமலையாளத்திற் காணப்படும் ஒரு கூட்டத்தினர். இவர்களுக்கு நோய் வந்தால் எந்த மூர்த்தியால் (தெய்வத் தால்) நேர்ந்த நோய் எனச் சோதிடனால் அறிந்து தீர்த்து என்னும் ஒருவகைப் பேய்க் கூத்து ஆடப்படும். உச்ச வெளி என்னும் இன்னொரு கிரியையும் செய்வார்கள். இக் கிரியையில் நோயாளி போலியாக உயிருடன் புதைக்கப்படுவான். மலையாளிகள் பெரியண்ணனையும், பத்திரகாளியையும் வழிபடுவர். அப்பொழுது வெளிப்பாடு கூறப்படும். பேய்க் கூத்துக்களிலொன்று நிணவெளி எனப்படும். இலங்கைச் சிங்களவரும் நோயைப் போக்குவதற்குப் பேயாட்டம் ஆடுவர். மல்பரயன்: இவர்கள் மலைகளில் வாழும் மண்ணானிலும் மேலான சாதியினர். இவர்களுள் மக்கள் தாயமும் உண்டு. இவர்கள் மொழி மலையாளத்தின் சிதைவு. மணமகனும் மணமகளும் ஒரு இலையிலிருந்து உண்டபின் தாலி கட்டப்படும். பிறப்புத் தீட்டு தந்தைக்கு ஒரு மாதமும், தாய்க்கு ஏழு நாளும் உண்டு. இறந்தவர்களை அடக்கஞ் செய்த இடத்தில் இவர்கள் கல் வைப்பர். மளவராயன்: இது அம்பலக்காரரின் பட்டப்பெயர். மறவர்: இவர்கள் மதுரை, திருநெல்வேலி, வடஇராமநாதபுரம் முதலிய இடங்களில் வாழ்கின்றனர். இவர்களும் கள்ளர் வகுப்பினரைப் போலப் பிராமணரின் தொடர்பு சிறிதும் இல்லாதவர். மறவர் என்னும் சொல் மறம் என்னும் அடியாகப் பிறந்தது. கள்ளரின் உட்பிரிவில் மறவரும் காணப்படுகின்றனர். மறவரின் தலைவன் சேதுபதி எனப்படு பவன். மறவர் பெரும்பாலும் அரசரின் கீழ் போர்வீரராக விருந்தனர். இவர்களிற் பெரும்பாலோர் இப்பொழுது உழுதொழில் செய்கின்றனர். முன்பு இவர்களிற் பலர் மாடு திருடுவோராக விருந்தனர். திருமணத்தில் கணவனின் உடன்பிறந்தாள் பெண்ணுக்குத் தாலி கட்டுவாள். அதன்பின் சங்கு ஊதப்படும். பெண்கள் குழவி இடல் என்னும் பாட்டுப் பாடு வார்கள். மணத்துக்கு முன்பு மணமகனின் இளைய சகோதரி பெண் வீட்டுக்கு ச் சென்று அவள் கழுத்தில் தாலி கட்டிப் பெண்ணை வீட்டுக்கு அழைத்துச் செல்வாள். சில மாதங்களின் பின் மணக்கிரியை நடை பெறும். பல பிள்ளைகள் பிறந்தபின் மணக்கிரியை நடப்பதுமுண்டு. பெண்கள் மறுமணஞ் செய்வார்கள். பெண் பூப்படைந்த செய்தியை வண்ணான் உறவினருக்குக் கூறுவான். 16ஆம் நாள் அவர்களுக்கு முழுக் காட்டப்படும். இராமநாதபுரத்துச் செம்பு நாட்டு மறவர் அகம்படி யாரைத் தமது வேலைக்காரராகக் கருதுவர். இறந்தவனுக்கு அகம்படி யானே கொள்ளிக் குடத்தைச் சுடலைக்குக் கொண்டு செல்வான். பிணக் குழியை ஆண்டி தோண்டுவான். பிணம் சாமி வைக்கப்படும். மறவ ரிடையே பிணத்தைச் சுடும் வழக்கமும் உண்டு. பிணத்தைச் சுமந்து செல்பவர் நில பாவாடை மீது நடந்து போவர். மூன்றாவது நாள் மண்ணினால் இலிங்கம் பிடித்து வை த்து இலிங்கத்துக்கும், இறந்தவர் களுக்கும், காக்கைகளுக்கும் பலியிடப்படும். 16ஆம் நாள் பிணத்தைப் புதைத்த இடத்தில் நவதானியம் விதைக்கப்படும். சல்லி கட்டுதல் என் னும் விளையாட்டு மறவர்களுக்குள் நடைபெறும். அது இப்பொழுது அரசினரால் தடுக்கப்பட்டுள்ளது. குறிக்கப்பட்ட ஒரு தினத்தில் மூர்க்க முள்ள எருதுகள் களரிக்குக் கொண்டு வரப்படும். அவற்றிலொன்றை அவிழ்த்து விட்டால் அது நிற்கும் கூட்டத்திற் பாய்ந்து ஒருவனைத் துரத்திச் செல்லும். அப்பொழுது அவன் நிலத்தில் விழுந்து படுத்துக் கொள்வான். அப்பொழுது அது இன்னொருவனைத் துரத்திச் செல்லும். மக்கள் ஆரவாரஞ் செய்து கொண்டு ஓடுவார்கள். மறவர் வேட்டை யாடும்போது வளைதடியைப் பயன்படுத்துவர். அது இலக்கிற்பட்டு எறிந்தவனிடத்துக்கு த் திரும்பி வரும். காளி, கறுப்பன், மூத்த கறுப்பன், பெரிய கறுப்பன், மதுரை வீரன், ஐயனார், முனிசாமி முதலியோர் இவர் களின் தெய்வங்களாவர். மறவப் பெண்கள் காதைத் துளையிட்டும் துளையைப் பெரியதாக்குவர். மறவரின் பட்டப்பெயர் தேவன், தலைவன், சேர்வைக்காரன், கரையான், இராசவம்சம் என்பன. மஸ்தான்: இது மகமதிய ஞானிகளுக்கு வழங்கும் பட்டப்பெயர். மாங்கல்யம்: இது மாரான்களின் உட்பிரிவு. இவர்கள் நாயரின் தாலி கட்டுக் கலியாணத்தில் அட்டமங்கலங்களைக் கொண்டு செல்வர். அரிசி, நெல், தென்னங்குறுத்து, அம்பு, முகம் பார்க்கும் கண்ணாடி, வெண்துகில், செப்பு முதலியன அட்டமங்கலத்திலடங்கும். மாதங்கர்: இது மதிங்கருக்கு இன்னொரு பெயர். மதிங்கர் தம்மை மாதங்க மக்கள் எனவுங் கூறுவர். இவர்களின் தெய்வம் மாதங்கி. மாதங்க ரால் மரியாதை செய்யப்படும் தேவடியாட்களுக்கும் மாதங்கர் எனப் பெயருண்டு. மாதவன்: இது நாயரின் உட்பிரிவினராகிய புவிக்காப்பணிக்க ரின் பட்டப்பெயர். மாப்பிள்ளைமார்: இவர்கள் மலையாளத்திலுள்ள கலப்பு மகமதியர். இவர்களின் தந்தையர் அராபியர். தாயர் திராவிடர். இவர்கள் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு முதல் மலையாளத்தில் பெருகத் தொடங்கி னார்கள். பதினைந்தாம் நூற்றாண்டில் வாஸ்கோடகாமா கள்ளிக்கோட் டைக்கு வந்தபோது மாப்பிள்ளைமார் அரசாங்கத்தில் அதிகாரம் பெற்றிருந்தார்கள். திப்புச்சுல்தான் மலையாளத்தை ஆண்ட காலத்தில் பலர் மகமதிய மதத்துக்கு மாற்றப்பட்டார்கள். இதனால் இவர்களின் எண் அதிகப்பட்டது. மதம் மாற்றப்பட்டவர்கள் பெரும்பாலும் முக்கு வர் அல்லது கரையாராவர். மாப்பிள்ளை என்னும் சொல் மருமகன் அல்லது மணமகன் என்னும் பொருள் தரும். இப் பெயர் மலையாளத்திற் குடியேறி மலையாளிகளை மணந்த மகமதியர், கிறித்துவர், யூதர்களைக் குறித்தது. இது இப்பொழுது மகமதியரை மாத்திரம் குறிக்கின்றது. இவர்கள் பெரும்பாலும் மருமக்கள் தாயம் உடையவர்கள். இவர்கள் மகமதிய சட்டத்தின்படி நடப்பர். பெரும் பாலும் பல பெண்களை மணப்பர். இலக்கத் தீவுகளிலும் மாப்பிள்ளை மார் காணப்படுகின்றனர். இவர்கள் அங்கு கோயர், மாலுமி, உருக்காரன், தக்குரு, மிலிக்கன் எனப்படுவர். மாரான் அல்லது மாராயன்: இவர்கள் மலையாளத்தில் மேளமடிப்போர். வடமலையாளத்தில் இவர்கள் ஓச்சர் எனப்படுவர். இவர்கள் உயர்ந்த நாயர் குடும்பத்தினருக்கு அம்பட்டராகச் சேவிப்பர். கோட்டயம், குரும்பிர நாட்டுத் தாலுக்காக்களில் இவர்கள் நாவிதர், மேளகாரர் ஆவர். நாயர் இழவு வீடுகளில் புரோகிதராகச் சேவிப்பர். இவர்கள் பெண்களோடு பிராமணர் சம்பந்தம் வைத்துக்கொள்வர். வடதிருவிதாங்கூரில் இவர்கள் மாங்கலியம் எனவும் படுவர். இவர்களுக் குக் குருப்பு, பணிக்கர் முதலிய பட்டப்பெயர்களுண்டு. இவர்களில் ஒரு நூல், இருநூல் என்னும் இரு பிரிவினருண்டு. ஒரு நூலென்பது வாழ் நாளில் ஒரு கலியாணம் மாத்திரம் செய்துகொள்ளும் பிரிவு. இவர்கள் அசுப்பாணிகள் எனவும் படுவர். உயர்ந்த மறவருக்கு ஆறு உரிமைக ளுண்டு. அவை பாணோ(பண்) , சோணி(பாடை), திருமுற்றம்(கோயில் முற்றம் பெருக்கல்) வெளிச் சோறு(பேய்களுக்கு வெளியே வைக்கப்படும் பலிச்சோறு), புச்சோறு(தெய்வத்துக்கு வைக்கப்படுஞ் சோறு) என்பன. இழவு வீட்டில் எள்போடும் கிரியை அவனால் செய்யப்படுகிறது. மலையாளத்தில் வாத்தியங்கள் மரம் எனப்படும். திமிலை சங்கு, செண் குலம், சென்ட(டு) முதலியவற்றை ஒருங்கே ஒலித்தல் பாணி கொட்டுகு எனப்படும். மார்வாடி: மார்வாடா தேசத்தவர் மார்வாடி அல்லது மார்வாரி எனப்படும். இவர்கள் பெரும்பாலும் சைவமதத்தினர். மாலர்: இவர்கள் தெலுங்கு நாட்டுப் பறையர், மாதங்கர்களைக் குறிக்கும். இவர்களுக்கு அம்பட்டர், வாத்தியகாரர், தேவடியாட்கள் உண்டு. அங்கம்மா, பெத்தம்மா முதலியன இவர்கள் தெய்வங்கள். மாலரின் முக்கிய தொழில் நெசவு. திருமணம் மணமகள் வீட்டில் நிகழும். மாலுமி: இலக்கத் தீவுகளில் மரக்கலமோட்டும் முகமதியர் மாலுமிகளெனப்படுவர். மாலை(மாலி): இவர்கள் தாம் முன் காசியில் வாழ்ந்து பின் செயப்பூர் அரசரைச் சேவிப்பதற்கு வந்தார்கள் எனக் கூறுவர். பூப்படையுமுன் பெண்கள் மணமுடிப்பர். விதவைகள் மறுமணஞ் செய்வர். மாலை என்பதற்கு மாலை கட்டிகள் என்பது பொருள். இவர்கள் கோயில்களில் வேலை புரிவார்கள். ஒரியமொழி பேசுவார்கள். மானிகட்டாள்: இது தேவதாசிக்கு இன்னொரு பெயர். மீதாரக்காரன்: இவர் தெலுங்கு, கன்னட, ஒரிய தமிழ் நாடுகளில் மூங்கிற் கூடை, பாய் முதலியன முடைகின்றவர்களாவர். இவர்கள் வீருல்லு (மணமாகாது இறந்த வாலிபர்), பேராண்டாலு (மணமாகாது இறந்த பெண்கள் அல்லது கணவனுக்கு முன் இறந்தவர்கள்) என்போரை வழிபடுவர். இவர்களுள் சிவவழிபாட்டினர் இறந்தோரைச் சமாதி வைப்பர்; வைணவர் சுடுவர். இவர்கள் இயந்திரங்களை எழுதி வைத்து அடைத்த தாயத்துகளை அணிவர். விதவைகள் தாலியும் காப்பும் அணியமாட்டார்கள். காலின் இரண்டாவது விரலில் அணியும் மெட்டு என்னும் மோதிரமும் அணியார்கள். மீலதேவர்: இவர்கள் தென்கன்னடத்துத் தேவடியாட்களாவர். மீனோன்: இது சமரின் (வடமலையாள அரசன்) தனது எழுத் தாளனுக்குக் கொடுக்கும் பட்டப்பெயர். இப்பொழுது அது நாயரில் ஒரு பிரிவினருக்குப் பெயராக வழங்குகின்றது. மலையாளத்தில் கிராமக் கணக்கன் (கர்ணம்) மீனோன் எனப்படுவான். இப் பட்டம் கொச்சி அரசனால் பலருக்குக் கொடுக்கப்பட்டது. இது தெற்கே வழங்கும் பிள்ளைப்பட்டத்துக்குச் சமம். மீனோன் பட்டம் கொடுத்தபின் அவனுக்கு ஓலையும் எழுத்தாணியும் கொடுக்கப்படுகிறது. இப் பட்டம் பெற்றவர்களின் பெண்வழியார் மாத்திரம் இப் பட்டத்தைப் பயன் படுத்தலாம். மீனோன் என்பது போனஹீத இராவ். இராவ் என்பது மராட்டிப் பட்டப்பெயர். முகதோரர்: இவர்கள் கொண்டதோரரின் ஒரு பிரிவினர். இவர்களின் மொழி தெலுங்கு. அண்ணா, ஐயா, தோரா என்பன இவர் களின் பட்டப்பெயர். இவர்களில் சூரியவமிசம், நாகவமிசம் என இரு பிரிவுகளுண்டு. ஒருவன் தாய்மாமன் மகளை மணக்கலாம். மணமகன், மணமகள் என்னும் இருவரின் விரல்களையும் தாய்மாமன் சேர்த்து வைப்பான். முக்குவன்: முக்குவர் மலையாளக் கடல்களில் மீன் பிடிப்பவர்க ளாவர். தாழ்ந்த வகுப்பினருக்கு இவர்கள் பல்லக்குச் சுமப்பர். ஓடக்கார ராகவும் தொழில் செய்வர். பரம்பரையாக வரும் இவர்களின் தலைவன் அரையன் எனப்படுவன். இவர்களின் முக்கிய தெய்வம் பத்திரகாளி. இவர்கள் குலத்தில் ஒருவன் பூசாரியாக விருப்பான். பிராமணர் கோயில் களில் இவர்கள் நுழைதல் கூடாது. வடமலையாளத்தில் இவர்களுக்கு மருமக்கள் தாயமும், தெற்கில் மக்கள் தாயமும் உண்டு. இவர்களின் முக்கிய தொழில்கள் சுண்ணாம்புச் சூளைவைப்பது, மஞ்சள் சுமப்பது முதலியன. மஞ்சள் என்பது தடியில் கட்டப்பட்ட ஒரு வகை ஊஞ்சல் மீது ஆளை வைத்துச் சுமத்தல். இவர்கள் இலங்கையிலிருந்து சென்றவர்களெனக் கருதப்படுவர். முக்குவர் தீயரிலும் தாழ்ந்தோர். இவர் களிற் பலர் மேல்நிலைக்கு வந்துள்ளனர். இவர்களிற் பொன்னில்லம், செம்பில்லம், காரில்லம், காச்சில்லம் என நான்கு பிரிவுகளுண்டு. இவர் களுள் காவுத்தீயன் அல்லது மணிமகன் என்னும் பிரிவு முண்டு. இவர்கள் மற்றவர்களுக்கு மயிர்வினையும் செய்வர். இவர்களின் சங்கங்கள் இராச்சியம் எனப்படும். பெரியவர்கள் கடவன் எனப்படுவார்கள். தலைவன் அரயன் அல்லது கரணவன் எனப்படுவன். கரணவன் அரச னால் தெரியப்படுவான். இவர்களுக்கு மூட்டப்பட்ட ஓலைக்குடை, தடி, அரைக்குக் கட்டும் சிவப்புத்துணி முதலிய அடையாளங்களுண்டு. வெளிப்பாடு கூறுவோர் ஆயத்தன் அல்லது அத்தன் எனப்படுவர். ஆயத்தன் என்பது ஆயுதத்தன் என்பதன் மரூஉ ஆகலாம். உருக்கொள் பவன் அல்லது தெய்வமேறுபவன் வாளை வைத்திருப்பான். பெண்கள் பூப்படைந்தபின் மணம் முடிக்கப்படுவர். கருப்பவதிக்கு ஏழாவது மாதம் புளிக்குடி அல்லது நெய்க்குடி என்னும் சடங்கு நடத்தப்படும். குழந்தை பிறக்கும் வரையும் கணவன் தாடி வளர்ப்பான். பிள்ளை பிறந்தபின் மூன்றாவது நாள் மயிர்வினை செய்து கொள்வான். தீட்டு ஏழு நாட்களுக் குண்டு. இறந்தவனின் மூத்தமகன் ஆறு மாதங்களுக்கு மயிர்வினை செய்து கொள்ள மாட்டான். முசாத்து: இவர்கள் மலையாளத்திலுள்ள மூத்ததுகளாவர். இவர்கள் அம்பலவாசிகளிலும் உயர்ந்தோர். நம்பி, நம்பியார் என்னும் பட்டங்கள் இவர்களுக்கு உண்டு. இவர்களின் பெண்கள் மண அம்மா மார் எனப்படுவர். இளையதுகளும் மூத்ததுகளும் மலையாளத்தில் நயினாக்கள் எனப்படுவர். மூத்ததுகளின் வீடுகள் மடம், இல்லம் எனப் படும். நம்பூதிரிகளின் வீடுகளுக்கும் இப் பெயர்கள் உண்டு. திருமணத் துக்கு முன் பெண்கள் திருவளையமும், குழலுமணிவர். விழாக்காலங் களில் பலக்கா வளையமணிவர். திருமணத்துக்குப் பின் காதில் சூட்டும், கழுத்தில் தாலியுமணிவர். விதவைகள் சூட்டு மாத்திரமணிவர். மூத்ததுகள் உட்கோயில்களின் படிகளைக் கழுவுவர். விக்கிரகங்களைப் பாதுகாத்துக் கொள்வர். கோயிற் பிரசாதம் முதலியவற்றைக் கொண்டு வாழ்வர். இவர்களின் குடும்பத்தில் மூத்தவன் மாத்திரம் மணம் செய்து கொள்வன். மற்றவர்கள் அம்பலவாசிப் பெண்களைச் சம்பந்தம் வைப்பர். ஆண்கள் நான்கு பெண்கள் வரையில் மணக்கலாம். மூத்த மகனுக்குப் பாட்டனின் பெயரிடப்படும். இரண்டாவது மகனுக்குத் தாய்வழிப்பாட்டனின் பெயரிடப்படும். பூணூலணிதல் ஏழு வயது முதல் பதினொரு வயதுக்கிடையில் நடைபெறும். இவர்களுக்கு மரணத்தீட்டு பத்து நாள். கோயிலுள் இருந்து இவர்கள் உண்ணலாம். மூத்ததுகள் அம்பலவாசிகளிலும் உயர்ந்தோரும், இளையதுகள் பிராமணருக்குத் தாழ்ந்தோருமாவர். முசாத்து மூத்தது என்னும் பெயர்கள் அகப்பொது வல் என்னும் பெயரோடு ஒற்றுமையுடையன. தடம்பு மீது கடவுளின் திருவுருவம் வைத்து வீதிவலம் செய்யப்படும். தடம்பு என்பது கேடகம் போன்று கவிழ்ந்த தட்டு. அடிகள் என்போரும் பிடாரரும் ஒருவரெனத் தெரிகிறது. பிடாரர் பூணூலணியாது கோயிற் பூசை செய்வர். முடவாண்டி: இவர்கள் கொங்கண வேளாளரில் ஒரு பிரிவினர். ஆண்டி என்பதற்குப் பரம்பரைப் பிச்சைக்காரர் என்பது பொருள். முதுவர்: இவர்கள் கோயம்புத்தூர், மதுரை, மலையாளம் பகுதிகளில் காணப்படும் உழவராகிய மலைச்சாதியினர், இவர்கள் மற்றவர்களைத் தகப்பன்மார் என்பர். இவர்களுக்கிடையில் கஞ்சன், கறுப்புக் குஞ்சி, குஞ்சித, கார்மேகம் முதலிய பெயர்கள் பெரிதும் வழங்கும். கறுப்பாயி, கூப்பி, பேய்ச்சி முதலிய பெயர்கள் பெண்களுக்கு வழங்கும். கடைசியாகப் பெறும் ஆண் பிள்ளைகளுக்கு இராமன், இலக்குமணன் என்றும், இரட்டைப் பெண்களுக்கு இலட்சுமி, இராமி என்றும் பெயரிடப்படும். இவர்களின் தலைமைக்காரன் மேல்வாகன் எனவும், உதவி அதிகாரி மூப்பன் எனவும் படுவர். இவர்களுக்கு மருமக்கள் தாயமுண்டு. நிமித்தங்களில் இவர்களுக்கு நம்பிக்கையுண்டு. ஒருவன் மாமன் மகளை மணக்கலாம். மதம் சம்பந்தமான சடங்குகளுக்கு இவர்கள் குருமாரை அழைப்பதில்லை. இறந்தவர்களின் முகம் பார்க்கும் படியாகப் பிணத்தைப் புதைப்பர். தீத்தட்டிக் கற்களாலும், இரும்பாலும் தீ மூட்டுவர். கருங்குரங்கின் இறைச்சியை உண்பர். இருளரும் முதுவரும் மலைப்பக்கங்களில் தொங்கும் தேன் கூடுகளிலிருந்து தேனெடுப்பர். முத்திரையன்: பாளயக்காரர்களுக்கு இப் பெயர் வழங்கும். இது தெலுங்கில் முத்திராசன் என வழங்கும். இத் தெலுங்குச் சாதியினர் கிருட்டிணா, வட ஆர்க்காடு முதலிய இடங்களிற் காணப்படுகின்றனர். இவர்களின் பட்டப் பெயர்கள் தோராவும், நாயுடுவும். இவர்கள் ஈசல் களைப் பிடித்து வற்றலிட்டு பானைகளில் சேமித்து வைத்து அவற்றை உணவாகப் பயன்படுத்துவர். இவர்களுக்குப் பிறப்புத் தீட்டு பத்து நாள். மூதான்: இவர்கள் மலையாளத்திலுள்ள வாணிகம் புரியும் வகுப்பினர். பெண்கள் செட்டிச்சிகள் எனப்படுவர். இவர்கள் நாயரின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவர். பாலக்காடு, வள்ளுவநாடு முதலிய இடங்களில் இவர்கள் பெரும்பாலும் காணப்படுவர். இவர்களிற் சிலர் தமக்கு எழுத்தச்சன் என்னும் பட்டப்பெயரை வைத்து வழங்குவர். இவர்களுக்கு மருமக்கள் தாயமுண்டு. இவர்களின் தீட்டுக் கழிப்பு கொட்டுவன் என்னும் புரோகிதனாற் செய்யப்படும். மெய்காவல்: இது பண்டாரங்களுக்கு ஒரு பெயர். இவர்கள் கடவுளின் மெய்யைக் காப்பவர்கள். மேஸ்திரி: இது போர்ச்சுக்கேய (Meytro) என்னும் சொல். இது இந்திய நாட்டு மொழிகளில் சென்று வழங்குகின்றது. மேஸ்திரி என்ப தற்குத் திறமையான வேலையாள் என்பது பொருள். இது தமிழ்நாட்டில் செம்மாருக்கும் வேறு சில தொழிலாளருக்கும் பெயராக வழங்கும். மேளக்காரன்: இவர்கள் வாத்தியக்காரர். தோரிய மேளக்காரன் பெரிய மேள சேவை மாத்திரம் சேவிப்பன். தமிழ் மேளக்காரர் தேவடி யாட்களோடு சம்பந்தப்பட்ட சின்ன மேள சேவனையும் செய்வர். தேவடியாளின் மகள் தாய் செய்து வந்த தொழிலையே செய்வாள். நட்டுவன் என்போர் தேவடியாட்களுக்கு நடனம் பழக்குவோர். மொண்டி: இலண்டா, கல்லடிச்சித்தன், கல்லடிமங்கன் என்பன ஒரே கூட்டத்தினரைக் குறிக்கும் பெயர்கள். இவர்கள் பிச்சை எடுக்கும் பரம்பரைப் பண்டாரங்கள். பிச்சையிடாவிட்டால் இவர்கள் தமது தொடையை வெட்டுவார்கள்; கல்லில் தலையை உடைப்பார்கள்; வாந்தி எடுப்பார்கள். மொயிலி: இவர்கள் தென்கன்னடத்தில் கோயில்களில் வேலை புரிவோர். பெண்கள் தமது கணவரோடு வாழ விரும்பாவிடிலும், விதவைகள் மறுமணம் செய்ய முடியாமலிருந்தாலும் அவர்கள் கோயிலுக்குச் சென்று கோயிற் பலிச் சோற்றில் சில உண்டைகள் பெற்று உண்பார்கள். பின்பு அவர்கள் அரசினர் உத்தியோகத்தரிடம் கொண்டு போகப்படுவர். அவர்கள் அவ்வாறு செய்யத் துணிந்தமைக்குக் காரணம் விசாரிக்கப்படும். பிராமணப் பெண்களாயின் கோயிலினுள் இருக்க அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்குத் தினம் உணவும் ஆண்டில் ஒரு துணியும் கிடைக்கும். அவர்கள் கோயிலைப் பெருக்கவும் சாமரை வீசவும் வேண்டும். அவர்கள் பெரும்பாலும் பிராமணரின் அல்லது உத்தியாகத்தரின் வைப்பாட்டிகளாக விருப்பார்கள். அவர்கள் பெறும் பிள்ளைகள் மொயிர் எனப்படுவர். அவர்கள் நூலணிந்து கோயிலைப் பெருக்கிக் கோயிற் பணிவிடை செய்வர். அவர்கள் தேவடிகர் எனவும் படுவர். மொராசு: இவர்கள் மைசூரில் காணப்படுவர். மணம் பேசும் பருவம் வந்ததும் பெண்கள் வலக்கையின் மூன்றாம் நாலாம் விரல்களை வெட்டிவிடுவர். இவ் வழக்கு ஆஸ்திரேலிய, பொலிநீசிய, அமெரிக்கப் பழங்குடிகளிடையும் காணப்படுகின்றது. மோகெர்: இவர்கள் துளுப்பேசும் தென் கன்னட மீன்பிடிக்காரர். இவர்களின் குடியிருப்பு பட்டினமெனப்படும். சென்னையிலுள்ள மீன் பிடிக்காரர் பட்டணவர் எனப்படுவர். இவர்களின் தலைமைக்காரன் குறிக்காரன் எனப்படுவான். இப் பதவி தலைமுறையாக வருவது. இவர் களின் உரிமை பெண்வழி. கேவா என்னும் துளு அம்பட்டன் இவர்க ளுக்குச் சிரைக்க மாட்டான்; கொங்கணி அம்பட்டர் சிரைப்பர். குழந்தை பிறந்து ஏழாவது நாள் வண்ணாத்தி குழந்தையின் அரையில் நூல் கட்டிப் பெயரிடுவாள். இப் பெயர் சிலநாட்களின் பின் கைவிடப்படும். பின் வேறு பெயரிடப்படும். இவர்களின் பட்டப்பெயர் மரக்காவேரு. யூதர்: கொச்சித்தீவில் கறுப்பு யூதர், வெள்ளை யூதர் என இரு வகை யூதர்கள் காணப்படுகின்றனர். இவர்கள் நெடுநாட்களுக்கு முன் பலஸ்தீன் நாட்டினின்றும் வந்தோராவர். பாஸ்கர இரவிவர்மன் என்னும் அரசன் முசிறிக் கோட்டில் வாழ்ந்த யூதனொருவனுக்கு அளித்த பட்டைய மொன்று காணப்படுகின்றது. அது அவ் வரசனின் ஆட்சியில் 36வது ஆண்டு யோசேப் இரப்பான் அஞ்சுவண்ணன் என்னும் யூதனுக்கு அளிக்கப்பட்டது. இவனுக்குக் கொடுக்கப்பட்ட உரிமைகள் வருமாறு: அவன் ஐந்து கொடிகளைப் பயன்படுத்தலாம். உலாவச் செல்லும்போது வேலையாட்கள் தீபம் பிடித்துச் செல்லலாம். யானை குதிரைகளில் ஏறிச் செல்லலாம். அரசரைப்போல பவனி வரலாம். பகற்காலத்தில் தீவர்த் தியைப் பயன்படுத்தலாம். பலவகை வாத்தியங்கள், பெரிய மேனம் முதலியவற்றை ஒலிப்பிக்க உரிமையுண்டு. நில பாவாடையிற் செல்ல லாம். அரசரைப்போல் மேற்கட்டியின் கீழ் இருக்கலாம். இரப்பானின் கீழ்உள்ள எழுபத்திரண்டு குடும்பங்களும் அவனுக்குக் கீழ் அடங்கி நடக்க வேண்டும். இச் சாசனம் கலியுகம் 3481இல் (கி.பி.370ல்) எழுதப் பட்டது. யூதர் சாலமன் அரசன் காலம் முதல் (கி.மு. 900) மலையாளக் கரைகளுக்கு வந்து வாணிகம் புரிந்தார்கள். கி.மு. 6ஆம் நூற்றாண்டில் சைரசு (Cyrus) என்னும் பாரசீக அரசனின்கீழ் அடிமைகளாக வாழ விரும்பாத யூதமக்கள் இந்தியாவில் வந்து குடியேறினர். ஹன்டர் (E.W.Hunter) யூதர் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன் இந்தியாவிற் குடியேறியிருந்தார்கள் எனக் கூறியுள்ளார். செங்கடலி லுள்ள மேஓஸ், ஹேமஸிலிருந்து அராபியர் இலங்கை, மலையாளம் முதலிய நாடுகளுக்குச் சென்ற ஓர் உரோமானியர் மலையாளத்தில் ஒரு யூதர் குடியிருப்பைக் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் கண்டார் உவிஷ் (Wish) என்பார். தோமஸ் ஞானியார் கி.பி. 5இல் இந்தியாவை அடைந்தா ரென்றும் யூதர் கி.பி. 69இல் இந்தியாவுக்குச் சென்றனர் என்றும் கூறியுள்ளார். கறுப்பு யூதர், தாம் முன் வந்தவர்களென்றும் வெள்ளை யூதர் பின் வந்தவர்களென்றும் கூறுவர். கறுப்பு யூதர் யூதரல்லரென்றும் அவர்கள் யூத மதத்துக்குத் திருப்பப்பட்ட இந்தியரென்றும் வெள்ளை யூதர் கூறுவர். எருசலேம் அழிக்கப்படுவதற்குப் பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன் அங்கு நின்று துரத்தப்பட்டவர்களே தாம் என்று கறுப்பு யூதர் கூறுவர். அவர் கள்ளிக்கோட்டைக்கு வந்து பின் கரங்கனூரை அடைந் தார்கள். கறுப்பு யூதர் இன்னும் செப்புப் பட்டையத்திற் சொல்லப்பட்ட உரிமைகளை அனுபவிக்கின்றனர். அவர்கள் தமது குழந்தைகளைப் பிறந்தபின் எட்டாம் நாள் கோயிலுக்குக் கொண்டு செல்லும் போது பட்டுக்குடை, தீபம் முதலியவற்றைக் கொண்டு செல்கின்றனர். மணமக்கள் வீதிவலம் வரும்போது நிலபாவாடை விரித்துத் தெருக்கள் தோரணங்களால் அலங்கரிக்கப்படுகின்றன. நாலு தடிகளில் வெள்ளாடை கட்டப்பட்ட மேற்கட்டி அவர்கள் மீது பிடிக்கப்படுகிறது. தீவர்த்தியும் கொண்டு செல்லப்படுகிறது. வெள்ளை யூதர் இவை யொன்றையும் கையாளுவதில்லை. முன் வந்து குடியேறிய யூதர் அடிமைகளை வாங்கினார்கள். அவர்கள் அவர்களுக்கு விருத்த சேதனஞ் செய்து அவர்களை இஸ்ரவேலரைப் போல் நடத்தினார்கள். அவர்களின் சமயக் கிரியைகளால் யூதராக்கப்பட்ட பெண் அல்லது ஆண் அடிமைகள் ஒரு போதும் விற்கப்படவில்லை. யூதர் அவ்வடிமைகளுடன் கலப்பதால் கறுப்பு யூதர் தோன்றினார்களென சிலர் கருதினார்கள். இதனால் கறுப்பு யூதர் முற்றாகக் கலப்பு யூதர் எனக் கூற முடியாது. வெள்ளை யூதர் பரதேசிகள் எனப்படுவர். யூத மணமக்கள் கலியாணம் முடிக்கக் கோயிலுக்குச் செல்வதன் முன் மணமகளின் உடன் பிறந்தாள் மணமகள் கழுத்தில் தாலி கட்டுவாள். யூரேசியர்: இவர்கள் ஐரோப்பியத் தந்தைக்கும் இந்தியத் தாய்மாருக்கும் பிறந்தோர். சட்டைக்காரர் என்பதும் இவர்களுக்கு மற்றொரு பெயர். பறங்கி என்பதும் இவர்களைக் குறிக்க வழங்கும் பெயர். பறங்கி என்பது பிறாங்க் (Frank) என்பதன் திரிபு. பிறாங்க் என்பதற்கு ஐரோப்பியன் என்பது பொருள். இவர்கள் வலண்டிஸ் (Walladez) அல்லது உல்லாண்டி (Oollandy) எனவும் படுவர். இவை ஒல்லாந்திஸ் (Hollandis) என்பதன் திரிபு. இப் பெயர் 17ஆம் , 18ஆம் நூற்றாண்டுகளில் ஒல்லாந்தர் வழியாக வந்தது. யோகி: தெலுங்குப் பிச்சை யெடுக்கும் பண்டாரங்கள் யோகிகள் எனப்படுவர். தமிழ்நாட்டில் இவர் தோட்டியான் எனப்படுவர். வடுகன்: தெலுங்கு நாட்டவர் வடுகர் எனப்படுவர். தமிழ்நாட்டில் தெலுங்கு பேசுகின்றவர்களும் வடுகர் எனப்படுவர். வட்டக்காரன்: இவர்கள் வன்னியர், செக்காருள் ஒரு பிரிவினர். இவர்கள் வட்டக்காட்டார்களாவர். வண்ணத்தான்: இவர்கள் நாயருக்கு வெள்ளை வெளுக்கும் வெளுத்தெடாதாராவர். வண்ணான்: இவர்கள் தாம் வீரபத்திர வமிசத்தவர் எனக் கூறுவர். வண்ணார் அம்பட்டரிலும் தாழ்ந்த வகுப்பினர். பெண்கள் பூப்படைந்த பின் மண முடிப்பர். திருமணத்தில் மணமகனின் உடன்பிறந்தாள் பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவள். இவர்களின் சாதித் தெய்வம் குருநாதன், மலையாள வண்ணான், மண்ணான் எனப்படுவர். மலையாள மலைச்சாதியினருள் ஒரு கூட்டத்தினரும் மண்ணா ரெனப்படுவர். இவர்களை மண்ணான் அல்லது வண்ணான் எனக்கொண்டு மயங்குத லாகாது. மண்ணாருள் பெண்கள் பல கணவரை மணப்பர். மலையாளத் தில் பகவதி கோயில்களில் வண்ணான் பூசாரியாக விருப்பான். வலையர்: இவர்கள் வலையால் மீன்களையும், பறவைகளையும் பிடிப்பர். அம்பலக்காரன். சேர்வைக்காரன், வேடன், சிவியான், குருவிக் காரன் முதலியனவும் இவர்களின் பெயர்களாக வழங்கும். அம்பலக்காரர் தாம் கண்ணப்ப நாயனாரின் வழித்தோன்றல்கள் எனக் கூறுவர். மணமகளின் உடன்பிறந்தாள் பெண்ணுக்குத் தாலி கட்டுவள். மணத் துக்கு முன் பெண்கள் பிள்ளைப் பெறுவது குற்றமாகக் கருதப்பட மாட்டாது. அவ்வாறு பிறக்கும் பிள்ளைகள் வேறுபாடின்றிச் சாதியிற் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். வியபிசாரிப் பெண்கள் எருக்கமாலை சூட்டி சேற்றுக்கூடையைச் சுமந்து கிராமத்தைச் சுற்றிவரச் செய்வார்கள். வலையர் தெய்வங்கள் சிங்கப்பிடாரி(ஐயனார்), பதினெட்டாம்படிக் கறுப்பன் முதலியன. வல்லம்பன்: இவர்கள் தஞ்சாவூர், திருச்சி, மதுரை மாவட்டங் களில் வாழும் உழவரின் ஒரு பிரிவினர். இவர்கள் வேளாளத் தந்தையருக் கும் வலையத் தாய்மாருக்கும் தோன்றியவர்கள் எனக் கருதப்படுவர். இவர்களின் சாதித் தலைவன் சேர்வை எனப்படுவன். இவர்களில் ஆடவர் தாய்மாமன் மகளை அல்லது தந்தையின் உடன்பிறந்தாள் மகளை மணப்பர். சில சமயங்களில் பத்து வயதுப் பையனுக்கு இருபது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுள்ள பெண் கலியாணம் செய்யப்படுவாள். அப் பொழுது அவள் கணவனின் தமையன் அல்லது வளர்ந்த உறவினனைச் சேர்ந்து பிள்ளைகளைப் பெறுவாள். வள்ளுவன்: இவர்கள் பறையர், பள்ளிகளின் புரோகிதராவர். பிராமணருக்கு முன் வள்ளுவர் பல்லவரின் புரோகிதராக விருந்தனர். பன்னிரண்டு வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் நூலணிவர். இவர்களின் ஆண்களும் பெண்களும் சோசியம் சொல்வர். சாதித்தலைவன் கோற் காரன் எனப்படுவன். திருமணக் காலத்தில் மணமகன் பரியம், உறவு முறைக்கட்டு (பெண்ணின் சுற்றத்தாருக்குக் கொடுக்கும் பணம்) பந்தல் வரிசை முதலியவற்றைப் பெண் வீட்டாருக்குக் கொடுப்பான். மணவறை, குடவிளக்கு, அலங்கார விளக்கு, பாலிகை விளக்கு முதலியவைகளால் அலங்கரிக்கப்படும். அதைச் சுற்றிக் குடங்கள் வைக்கப்படும். இவை குடும்பத் தெய்வங்களைக் குறிப்பன. வள்ளுவர் வள்ளுவப் பண்டா ரங்கள் எனப்படுவர். வன்னியன்: இவர்கள் வலையன், அம்பலவர், பள்ளிகளில் ஒரு பிரிவினர். வாலன்: இவர்கள் கொச்சிப் பக்கங்களில் வாழும் மீன் பிடிக்கும் குலத்தினர். இப் பெயர் வலையன் என்பதன் திரிபு. பூப்படையமுன் பெண்களுக்குத் தாலிகட்டுக் கலியாணம் நடத்தப்படும். ஆண்கள் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் மணக்கலாம். விதவைகள் மறுமணம் புரியலாம். தலைப்பூப்பெய்திய பெண் நாலுநாள் தனியறை யில் விடப்படுவாள்; ஐந்தாவதுநாள் அவள் தோய்ந்தபின் விருந்து நடைபெறும். இவர்களின் சாதித்தலைவன் அரயன் எனப்படுவன். அவன் அரசனின் “தீட்டுறத்தினாலை”த் தெரிவிப்பான் (தீட்டு - எழுத்து) இவர்களுக்கு மக்கள் தாயமுண்டு. இறந்தவனின் மகன் ஒரு மாதம் மயிர்வினை செய்துகொள்ள மாட்டான். வன்னியன்: மலையாளச் செக்கான் போன்று எண்ணெயூற்று வோர் வன்னியர் எனப்படுவர். இவர் வீடுகளில் வண்ணார் உண்ப தில்லை. இவர்களின் சாதிப் பட்டப்பெயர் செட்டி. மணமாகாதவர்கள் இறந்தால் எருக்கஞ் செடிக்குப் போலி மணச் சடங்கு நடத்தப்படும். வாரியர்: இவர்கள் அம்பலவாசிகளில் ஒரு பிரிவினர். இவர்கள் பெரும்பாலும் நல்ல வைத்தியரும் சோதிடருமாவர். மணமான பெண்கள் நாயர்ப் பெண்களைப் போலத் தலையின் இடப்பக்கத்தே குடுமி முடிந்திருப்பர். இவர்களின் தாலி மாத்திரா எனப்படும். அது மத்தளம் போன்ற வடிவு உடையது. மற்ற அணிகள் எந்திரமும் குழலும். இவர்கள் நாயர்ப் பெண்களணியும் தோடணிவர்; நெற்றியில் சந்தனத் தால் குறி யிடுவர். இவர்கள் கோயிலிற் செய்யும் வேலை கழகம் எனப்படும். இது ஒருபோது கழுவு என்னும் அடியாகப் பிறந்திருக்கலாம். கோயிலில் வறியதுகள் சொல்லும் வேலையை இவர்கள் செய்தல் வேண்டும். இவர் களுக்கு மருமக்கள் தாயமுண்டு. திருவிதாங்கூரில் ஓணத்துக்காரர் என்னும் வறியதுகளின் சொத்து ஆண், பெண் என்னும் இரு பாலாருக்கும் சம மாகப் பிரிக்கப்படும். பெண்கள் பிராயமடையு முன் தாலிகட்டுச் சடங்கு நடக்கிறது. குடிவைப்பு முறையில் இது செய்யப்படுமாயின் சம்பந்த முறையில் கலியாணம் மறுபடியும் செய்யப் பட வேண்டியதில்லை. பருவ மடைந்த பெண்கள் மணமாகும் வரை கோயிலுள் நுழைதல் கூடாது. இவர்களுக்கு மரணத் தீட்டுப் பன்னிரண்டு நாள். வாலி சுக்கிரீவர்: இலம்பாடிகள் இப் பெயர் பெறுவர். இவர்கள் தாம் வாலி சுக்கிரீவர் வழித்தோன்றல்கள் என்பர். வில்குருப்பு: இவர்கள் மலையாளக் கம்மாளருக்கும் அம்பட்ட ருக்கும் குருக்கள். நாயரின் தாலிகட்டுக் கலியாணத்துக்கு இவர்கள் ஒரு வில்லும் சில அம்புகளும் கொடுக்க வேண்டும். வீரபத்திரர்: இவர்கள் தமிழ்நாட்டு வண்ணார். இவர்கள் தம்மை வீரபத்திரர் வமிசத்தவர் எனக் கூறிக்கொள்வர். வெட்டியான்: இவன் பறைச்சேரியிலுள்ள ஒரு தொட்டியான் அல்லது தோட்டி என்னும் உத்தியோகத்தன். இவன் வயல்களுக்கு நீர் பாயும்படி கால்வாய்களைத் திறந்து விடுவன். பிரசித்தப்படுத்தும் (செய்தி களை அறிவிக்கும்) மேளமடிப்பான். இவன் சுடலைக்குத் தலைவன். பறையரின் மணங்களில் பானைகள் வணங்கப்படும். வெட்டி யான் வகுப்பினர் வலங்கையினர். வேடன்: இவர்கள் வேட்டையாடும் சாதியினர். இவர்களிற் சிலர் போர் வீரர்களாக விருந்தனர். வேட்டுவர் என்னும் சாதியினர் தாம் வேடருக்கும் உயர்ந்தோர் எனக் கூறுகின்றனர். விதவைகள் கணவனின் சகோதரனை மணப்பர். இவர்கள் தமது பரம்பரை கண்ணப்ப நாயனாரி லிருந்து வருகின்ற தெனக் கூறுவர். வேடரின் பட்டப்பெயர் நாயக்கன். சேலம் பகுதியில் வேடன் திருவளர் எனப்படுவன். இவர்கள் கலியாணம் பொருத்துகின்றமையால் கட்டுக்கொடுக்கிற சாதி எனப் படுவர். இவர்கள் மேல் வாயிற் பல்லை அராவிக் கூராக்கி விடுவார்கள். காடரும் இவ்வாறு செய்வர். இவர்களின் கடவுள் சாத்தன். இவர்களும் குரங்கின் இறைச்சியை உண்பர். பூப்புக்காலத்தில் பெண்கள் தனிக் குடிசையில் ஐந்து நாட்களுக்குத் தங்கியிருப்பர். வேட்டுவன்: இவர்கள் சேலம், கோயம்புத்தூர், மதுரைப் பகுதிகளிற் காணப்படும் உழுதொழில் செய்யும் வேட்டையாடும் மக்கள். வேடர் இலங்கை வேடருக்கு இனமுடையவர். இவர்களுக்கு அம்பட்டர் உண்டு. இவர்கள் வேட்டுவ அம்பட்டர் எனப்படுவர். வேட்டுவரிலிரு பிரிவின ருண்டு. ஒரு பிரிவினர் ஆடை உடுப்பர்; மற்றவர் இலைகளை உடுப்பர். வேலக்காட்டாள்வான்: இவர்கள் திருவிதாங்கூர் அம்பட்டரின் தலைமைக்காரர். இவர்கள் அரசனுக்கு மயிர்வினை செய்வர். வடமலை யாளத்தில் இவர்கள் வலிஞ்சியான், நாவிதன், நாசுவன் எனப்படுவர். வடமலையாளத்தில் இவர்களுக்கு மக்கள் தாயமுண்டு. வேல்: இவர்கள் மலையாளப் பறையரில் ஒரு பிரிவினர். மலை யாள மலைச்சாதியினரில் ஒரு பிரிவினரும் வேலன்மார் எனப்படுவர். வேளன்: (வேளன் - குயவன்) திருவிதாங்கூரில் பறையரும் வேளான் எனப்படுவர். மலையாளத்தில் பேய்க் கூத்தாடும் பாணர் போன்ற ஒரு சாதியினர் வேளன் (வேலன்) எனப்படுவர். பெண்கள் வெளுத்தெடாத்தி எனப்படுவர். இவர்கள் பிராமணர் கோயில்களில் நுழைதல் கூடாது. இவர்கள் தளக்கல்லுக்கு வெளியே நிற்றல் வேண்டும். இவர்களுக்குத் தாலிக் கட்டுக் கலியாணமும் சம்பந்தமும் தனித்தனியே நடத்தப்படும். வறிய குடும்பப் பெண் பன்னிரண்டு வயதாகியிருக்கும் போது தாலிகட்டிக் கொள்வாள். இது பகவன் தாலி எனப்படும். இவர்களுக்கு மருமக்கள் தாயமுண்டு. வேளம்பர்: இவர்கள் கயிற்றில் ஏறிக் கூத்தாடும் கூத்தாடிகள்; கழைக் கூத்தர். வைராவி: வைராவிகள் பண்டாரத்தில் ஒரு பிரிவினர். மதுரைப் பகுதியிற் வைராவிகள் மேளகாரரில் ஒரு பிரிவினர். வடஇந்தியக் குலங்களும் குடிகளும் அகர்வாலா(Agarwala) - மேல் (upper) இந்தியாவில் காணப்படும் முக்கிய வணிகர்; நாக கன்னியிலிருந்து தோன்றியவர்; சமணமதத்தினர். அகாரியர்(Agarya) - மத்திய இந்தியாவில் காணப்படும் ஆதிக் குடிகள். இவர்களின் தொழில் இரும்பு மண்ணை உலையிலிட்டு இரும் பெடுத்தல். அகார் (Ahar) - உரொகில் காண்டில் (Rohilkhand) வாழும் இடையர். அகிர் (Akir) - வடக்கு இந்தியா, மத்திய இந்தியாவில் காணப்படும் இடையரும் பயிரிடுவோரும். அகோம் - அசாமிலுள்ள சான் (Shan) கூட்டத்தினர். அகோரிபந்தி - ஒருவகைப் பண்டாரி வகுப்பினர். இவர்களின் மதக் கொள்கைப்படி நரமாமிசத்தையும் மலத்தையுமுண்ணலாம். அங்கமி - அசாம் நாட்டு நாகர். அசாலா(Hasala) - மைசூரிலே கன்னடநாட்டில் காட்டுத் திரவியங் களைச் சேகரிக்குஞ் சாதியார். அபதானி - பிரமபுத்திராவுக்கு வடக்கிலுள்ள அசாம் மலைச் சாதியார். அபோர்(Abor) - அசாம் காட்டுச் சாதியினர். அரட்டா(Aratta) - பழைய பஞ்சாப் சாதியினர். இவர்களுக்குத் தாய்வழி உரிமையுண்டு. அரி - கிழக்கு இந்தியாவில் நகர் சுத்தி செய்யும் சாதியார். அரோரா - பஞ்சாப்பில் வாழும் வணிக கூட்டத்தார். அவான்(Awan) - பஞ்சாப்பில் வேளாண்மைபுரியும் காணியாள முசிலிம்கள். அவோ(Ao) - அசாம் நாகர் (இ)டார்சி (Darzi) - இந்திய தையல்தைக்கும் சாதியார் (இ)டார்ட்(Dard) - தாதிஸ்தானிலுள்ள இமாலயப் பழங்குடிகள் (இ)டால்வா(Dalfa) - பிரமபுத்திராவின் வடகரையிலுள்ள அசாம் சாதியார் (இ) டான்கர்(Dankar) - மேற்கு இந்தியாவில் வாழும் இடைச் சாதியார் (இ) டி ஒரி(Deori) - அசாம் ஆதிக்குடிகளின் மந்திரவாதிகள் (இ)டேட் (Dhed) - மேற்கு இந்தியாவில் வயல்வேலை ஏவல் வேலை செய்யும் வெளிச்சாதியினர். (இ)லப்சா (Lacha) - வங்காளத்திலும் இமயமலையிலுமுள்ள மலைச்சாதியினர். (இ)லால்பெகி(Lalbegi) - மேல் இந்தியாவில் சுத்தம் செய்யும் தொழிலாளர். (உ) லுஷி (Lushci) - ஓர் அசாம் சாதியார் (உ) லோகார் (Lohar) - கோதாவரி வடக்கில் வாழும் கொல்லர் (உ) லோகானா - சிந்து நாட்டில் வாணிகம் செய்யும் சாதியார். (உ) லோடா (Lodha) - வேலை புரிவோரும், பயிரிடுவோரும் ஐக்கியமாகாணங்கள், அக்ரா, அவுட்த் முதலிய இடங்களில் காணப் படுவர். (உ) லோதா (Lhota) - அசாம் நாகசாதியார் (உ)லோய் (Loi) - அசாமில் மணிப்பூர்ப்பகுதியில் வாழும் பழங்குடிகள். (உ) லோரி (Lori) - அலுச்சிஸ்தானத்தில் அலைந்து திரியும் சாதியார். இவர்கள் வாத்தியகாரரும் தகரவேலை செய்வோருமாவர். எருவா (Yeruva) - குறுக்கரில் தாழ்ந்த சாதியினராகிய ஆதிக் குடிகள் ஒ (Ho) - மத்திய கிழக்கு மாகாணத்திலுள்ள கொலாரியர் (முண்டர் சாதியைச் சேர்ந்தவர்.) ஒசுவால் (Oswal) - இராசபுத்தானத்தில் மேவாரிலுள்ள வணிக சாதியினர். ஒரயன் (Oraon) - சொட்டநாகபுரி ஆதிக்குடிகளில் திராவிட மொழி பேசுவோர். கச்சரி (Kachari) =- அசாம் ஆதிக்குடிகள் கச்சி (Kachi) - வடஇந்தியாவில் கசகசா பயிரிடுவோர் கச்சின் (Kachin) - பார்மாவிலும் வட எல்லைப் புறத்தும் வாழும் ஆதிக்குடிகள் கஞ்சர் (Kanjar) - வட இந்தியாவிலும் மத்திய இந்தியாவிலும் பாய்முடைவோரும், குற்றவாளிகளுமாயுள்ள நாடோடிகள். கடபா (Gadaba) - ஒரிசாவில் வாழும் கொலாரியர். கட்டி (Gaddi) - பஞ்சாப்பில் வாழும் இடையர்; பகுதியினர் முசிலிம்கள்; பகுதியினர் இந்துக்கள். கண்டயட் (Khandait) - ஒரிசாவில் பகுதி காணியாளரும், பகுதி பட்டாளச் சேவை புரிவோருமாகிய சாதியார் கண்டியோகி (Handi jogi) - தென்னிந்தியப் பண்டாரங்களில் ஒரு பிரிவினர்; பன்றி வளர்த்தல், சில்லரை வைத்தியம் புரிதல், பாம்பாட்டுதல் முதலியன இவர்கள் தொழில். கத்தரி - பஞ்சாப்பிலும், வடமேற்கு இந்தியாவிலும் வாணிகம் செய்யும் சாதியார். கத்தாரி (Kathari) - பம்பாய்க் காட்டுச் சாதியினர். கபூலி - அப்கான் அல்லது பட்டாணியர். கயஸ்தா(Kayastha) - வங்காளத்தில் எழுத்து வேலை செய்யும் சாதியார். கரன் (Karan) - ஒரிசாவில் எழுத்தாள வகுப்பினர். கலிதா (Kalita) - அசாம் விவசாயிகள். கல்டியா (Haldiya) - அகரவாலர்களிலொரு பிரிவினர். இவர்கள் மஞ்சளை உண்ணமாட்டார். கல்தா - ஒரிசா விவசாயிகள். கல்வாய் (Halwai) - வட இந்தியாவில் மிட்டாய் செய்வோர். கல்வார் (Kalwar) - வட இந்தியாவில் சாராயம் வடிப்போரும் விற்போரும். காசி (Khasi) - அசாமில் வாழும் மொன் கெமர் மொழி பேசும் மக்கள்; இவர்களுக்குப் பெண்வழித் தாயமுண்டு. காசீரா (Kasera) - வடஇந்தியாவில் பித்தளை வேலை செய்வோர். காதி (Khati) - பஞ்சாப்பில் வண்டி செய்யும் தச்சர். காதிக் (Khatik) - வட இந்தியாவில் வேலையாளர். இறைச்சி யடிப்போர், மரக்கறி வியாபாரிகள். காதோணி (Kathoni) - அசாமில் நெசவாளர் காமி (Kami) - நேபாளக் கொல்லர் காயாவால் (Gayawal) - பிராமணப் பண்டாரங்களிலொரு பிரிவினர். இவர்கள் காயாவுக்கு யாத்திரை செல்வோரிடும் தானத்தைப் பெற்று வாழ்வர். காரியா (Kharia) - சொட்ட நாகபுரியிலும், மத்திய இந்தியாவிலும் வாழும் கொலாரிய ஆதிக்குடிகள். காரவா (Kharava) - மேற்கு இந்தியாவில் உப்பு விளைவிப்போர். காரோ (Garo) - தாய்வழி உரிமை பெறும் அசாம் பழங்குடிகள். கார்வாலி (Garwali) - இமயமலைச்சாதியார். காவிர் (Kafir) - இமாலய சாதியார். கான்கர் (Khanger) - மத்திய இந்தியாவிற் காவற்காரச் சாதியார். கான்சி (Ganchi) - மேற்கு இந்தியாவில் செக்காட்டுவோரும் எண்ணெய் விற்போரும். காஹார்(Kahar) - வடஇந்தியாவில் மீன்பிடிகாரர், குயவர், வீட்டு வேலைக்காரர். காஸ் (Khas) - நேபாளப் பழங்குடிகளில் ஒருவர். கிசான் (Kisan) - மேல்(Upper) இந்தியாவில் பயிரிடுவோர். குயார் (Gujar) - பஞ்சாப்பிலும் வடமேற்கு இந்தியாவிலும் காணப் படும் மந்தை மேய்ப்போர். இவர்கள் வெள்ளை அவுணரின் (White Huns) சந்ததியினர். காகி (Kaki) - அசாமிலும் பர்மாவிலும் வாழும் மலைச் சாதியினர். கேவாட் (Kewat) - வடஇந்திய மீன்பிடிக்கும், பயிரிடும் சாதி. கைபர்த்தா (Kaibartha) - வங்காளத்தில் மீன்பிடிக்கும் ஒரு சாதியினர். கொச் (Kochh) - வட வங்காளத்திலும் அசாமிலுமுள்ள ஒரு சாதியினர். கொண்டு (Kond) - ஒரிசாவில் வாழும் மலைச்சாதியினர். கொரகா (Koraga) - தென் கன்னடத்தில் கூடைமுடையும் வெளிச் சாதியினர். கொன்யாக் (Konyak) - அசாம் நாகர். கோ (Kho) - இமயமலைச்சாதியார். கோசா (Kjoja) - மேற்கு இந்தியாவில் வாழும் இரண்டு வணிகப் பிரிவினர். கோடகா (Kodaga) - பட்டாளத்தில் சேரும் கூர்க்கசாதியார். கோதா (Kota) - நீலகிரியில் வாழும் சாதியினர், வாத்தியகாரர். கோபா (Gopa) - வங்காள இடையர். கோரா (Kora) - சொட்ட நாகபுரியில் குயவர்; கொலாரிய உற்பத்தியினர். கோரி(Koiri) - மேல் இந்தியாவில் பயிரிடும், மந்தை மேய்க்கும் சாதியார். கோர்கு(Korku) - மத்திய இந்தியாவில் மலை அல்லது காட்டுச் சாதியினர். கோலா - வடஇந்தியாவில் இடையரும் பால் விற்போரும். கோலி - மேற்கு இந்தியாவில் வேலையாட்கள். கோஷ - பஞ்சாபில் பால் விற்கும் இடையர். சட்கொப் (Sadgop) - வங்காளத்தில் பயிரிடுவோர். சண்டாளர் - இந்து சமூகத்தில் தாழ்ந்த சாதியினர். வங்காளத்தில் பயிரிடுவோர், ஓடமோட்டுவோர், மீன் பிடிப்போர் இச் சாதியினராவர். சத்தர்காய் (Chattarkhai) - ஒரிசாவில் 1886இல் நேர்ந்த பஞ்சத்தில் சத்திரங்களிலுண்டதால் சாதியை இழந்தவர்களிலிருந்து தோன்றியவர் களிலிருந்து தோன்றிய கூட்டத்தினர். சமர்கூர் (Chamargaur) - இராசபுத்திர சாதியினர். இவர்களில் இந்து, முசிலிம் பிரிவுகளுண்டு. சரஸ்வத் (Saraswat) - பஞ்சாப்பிலுள்ள பிராமணரிலொரு பிரிவினர். சராக் (Sarak) - கிழக்கிந்தியாவில் பயிரிடுவோரும் நெசவு செய்வோருமாகிய சாதியர். சவரர் - ஒரிசாவிலுள்ள கொலாரிய வகுப்பினர். சாகா - வங்காளத்தில் சாராயம் வடிப்போர், விற்போர். சாக்மா (Chakma) - கிழக்கு வங்காளத்தில் சட்டால் கொங்கில் வாழும் ஆதிக்குடிகள். சாகிட்பெஷ்ஷா (Shagerdpesha) - ஒரிசா நாட்டில் வீட்டு வேலைக்காரர். சாங் (Chang) - அசாம் நாகர். சாசா (Chasa) - ஒரிசாவில் வாழும் பயிரிடும் சாதியார். சாந்தால் - சொட்ட நாகபுரி, பிகார், வங்காளம் முதலிய நாடுகளில் காணப்படும் கொலாரியக் குழு. சான்சிலா (Sansila) - இராபுத்தானத்திலுள்ள குற்றம் புரியும் சாதி. சிற்பாவன் (Chitpavan) - கொங்கண பிராமணரிலொரு பிரிவினர். சின் (Chin) - அசாமிலும் பர்மாவிலுமுள்ள சாதியினர். சுத் (Sut) - அசாமில் பயிரிடுவோர். சுதார் (Sutar) - தெற்கல்லாத மற்றை இடங்களிற் காணப்படும் தச்சர். சூத்திரதார் - வங்காளத்தச்சர் சேமா - அசாம் நாக வகுப்பினர். சேரோ(Chero) - ஐக்கிய மாகாணங்களிற் காணப்படும் பயிரிடு வோர்; கொலாரிய இனத்தவர். சோத்திரா (Chodra) - பம்பாயில் ஊர் சுற்றும் கூட்டத்தினர். சோனி (Soni) - மேற்கு இந்தியாவில் தட்டார். சௌரர் - பஞ்சாப்பிலும் வடமேற்கு இந்தியாவிலுமுள்ள சுத்தஞ் செய்வோர். தாடோ (Thado) - அசாமிலுள்ள ஒரு சாதி. தாதிரா(Thathera) - பித்தளை வேலை செய்யும் சாதி. தாவைவ் (Tawaif) - முசிலிம் இந்துக்களுள், முசிலிம்களுக்கிடை யிலுள்ள நடனமாடும் வியபிசாரிகள். தாரி (Dhari) - வாத்தியகாரர். தானுக் (Dhanuk) - வட இந்தியாவில் வயல் வேலை செய்வோர். திலி (Tili) - வங்காள எண்ணெய் வாணிகர். துமால் (Dumal) - ஒரிசாவில் பயிரிடும் சாதியார். தூரி (Turi) - சூடிய நாகபுரியில் காணப்படும் விவசாயம், மூங்கில் வேலை, கூடை முடைதல் முதலிய தொழில்கள் புரிவோர். தெய்வேந்திரன் குலவேளாளர் - பள்ளன் சாதிக்கு ஒரு பட்டப் பெயர். தெலகா (Telaga) - தெலுங்கு நாட்டு விவசாயிகள். தேலி (Teli) - கிழக்கு இந்தியாவில் எண்ணெயாட்டுவோரும், எண்ணெய் விற்போரும். தேஷ் ஆஸ்த் (Deshasth) - மராட்டிப் பிராமணரிலொரு பிரிவினர். தொக்ரா (Dogra) - இமயமலைச் சாதியாரில் ஒரு கூட்டத்தினர். தோம் (Dom) - சுத்தஞ் செய்யும் சாதியார். நெவார் (Newar) - குறுக்கருக்கு இனமுடையவர்களாகக் கூறிக் கொள்ளும் நேபாள சாதியார். பதான் - வடமேற்கு எல்லைப்புறத்தில் வாழும் முசிலிம்கள். பலுச்சி - ஆப்கானிஸ்தானத்திலொரு சாதியார். பனியர் (Baniya) - வட்டிக்குப் பணங்கொடுப்போர்; வணிகருக்கு இராசபுத்தானத்திலும் மேற்கு இந்தியாவிலும் வழங்கும் பெயர். பனசிகா (Banajiga) - கன்னட வணிக சாதியார்; தெலுங்கு பலிசா போன்றவர். பன்யரா (Banyara) - திரிந்து வியாபாரஞ் செய்பவர், மந்தை வைத்திருப்பவர்களாகிய நாடோடி மக்களுக்கு வழங்கும் பெயர். பாட் (Bhat) - வட இந்திய பாட்டுப்பாடும் சாதியார். பாட்னி (patni) - வடவங்காள மீன்பிடிகாரரும் கூடை இழைப் போரும். பாசவி - கோயிலுக்குத் தேவடியாளாக விடப்பட்ட கன்னடப் பெண். பாசி (pasi) - வட இந்தியாவில் கள்ளிறக்குவோர். பாப்கன் (Babhan) - வட இந்தியாவில் காணியாளரும் பயிரிடுவோரு மாகிய கூட்டத்தினர். பாய்டியா (Baidya) - வங்காள மருத்துவ சாதி. பாய்தி (Baiti) - சுண்ணாம்பு சூளையிடும் சாதியார், இவர்கள் சுண்ணாறி, டோலி எனவும் படுவர். (டோலி - மேளம்) பாரகியா (parahiya) - ஐக்கிய மாகாண மலைச் சாதியார். பாரூய் (Barui) - ஒரு வங்காளச் சாதியினர். பார் (Bhar) - ஐக்கிய மாகாணத்திலும், பிகாரிலுமுள்ள சாதியார். பார்காய் (Barhai) - வட இந்திய தச்சச்சாதியினர். பார்ஜா (parja) - ஒரிசாவிலொருசாதியினர்; கொலாரிய மொழி பேசுவோர். பார்புஞ்சா - வட இந்திய தானிய வியாபாரிகள். பான்கி (Bhangi) - தென்னிந்தியா அல்லாத இடங்களில் அழுக் கெடுக்கும் சாதியார். பானவார் (panawar) - இராசபுத்திரரில் அக்கினி குலத்தவர். பிராகூய் - பலுச்சிஸ்தானத்தில் வாழும் திராவிட சாதியார். பிராலி (pirali) - வங்காளப் பிராமணரிலொரு பிரிவினர். பிரித்தியல் பணியர் (Brithiyal Banya) - அசாமில் காணப்படும் வெளிச்சாதியினர். பிசோனி (Besoni) - இராஜபுத்தானாவில் காணப்படும் கலப்புச் சாதியார் பிர்கோர் (Birhor) - சோட்ட நாகபுரியிற் காணப்படும் பகுதியில் அலைந்து திரியும் சாதியார். பின்ட் (Bind) - ஐக்கிய மாகாணத்திற் காணப்படும் பயிரிடுவோ ரும், வயல் வேலை செய்வோரும். புருசோ (Burusho) - இந்துக்குஷில் காணப்படும் இமயமலைச் சாதியார். புறொக்பா (Brokpa) - இந்துக்குஷில் காணப்படும் இமயமலை ஆதிக்குடிகள். பூஜா(Bhuja) - சோட்ட நாகபுரியிலும், வங்காளத்திலும் வாழும் கொலாரிய மக்கள். பூயின்மாலி (Bhuinmali) - கிழக்கு வங்காளத்தில பல்லக்குச் சுமப்போரும் ஏவல் வேலை புரிவோரும். பெக்கன்வாலா - பன்றியிறைச்சி விற்போர். வில்லாளர் - வில்லியரும் இராசபுத்திரரும் கலந்த கூட்டத்தினர். மேற்கு இந்தியாவிற் காணப்படுவர். பென் இ இசிரேல் - பம்பாய் யூதர் . பொண்டோபார்சா (Bondoporja) - ஒரிசாவிற் காணப்படும் பிற்போக்கான கூட்டத்தினர். போத்தியா (Bhotiya) - இமாசலத்தின் கீழ்ப் பிரதேசத்திற் காணப்படும் மங்கோலிட்டு மக்கள்; நேபாள உற்பத்தியினர். போக்சா (Bhoksa) - இமயமலை அடிவாரத்திலும் ஐக்கிய மாகாணத்திலும் காணப்படும் கூட்டத்தினர். இராசபுத்திர உற்பத்தி யினர். போரா (Bohra) - மேற்கு இந்தியாவில் காணப்படும் முசிலிம்கள். மாஃலி (Mahli) - மத்திய இந்தியாவிற் காணப்படும் கூலி வேலை செய்வோர், கூடை முடைவோர். மாக் (Magh) - வங்காளத்திலுள்ள பௌத்த வகுப்பினர். மாகரா (Mahara) - அசாமிலுள்ள ஒரு சாதியினர். மாகிடா - தெலுங்கர்; தோல் வேலை செய்வோர்; சக்கிலியரை ஒத்தவர். மாச்வார் (Majhwar) - மத்திய இந்தியக் காட்டுச் சாதியார். மாபார் (Mabar) - சிந்து மாகாணத்திலுள்ள ஒரு சாதியார். மாவர் - வங்காளத்தில், பிகாரிலுள்ள மலைச்சாதி. மாலி - தெற்கிலல்லாத இடத்தில் வீட்டு வேலைக்காரரும் காய்கறித் தோட்டம் செய்வோரும். மாலோ - வங்காளத்தில் மீன்பிடிக்கும், படகோட்டும் சாதியார். மேகார் (Mehar) - வயல் வேலை, கூலி வேலை செய்வோர். யன்னப்பன்ட் - கோணி பின்னும் தெலுங்குச் சாதி. யஸ்வா - இராசபுத்தான வணிகசாதியார். யாட் (Jat) - வேளாண்மை செய்யும் சாதி. யாலியகை பார்தா - வங்காளத்தில் மீன் பிடிக்கும் சாதி. யாலுவா, யாவோ - வங்காளத்திலுள்ள மீன் பிடிக்கும் சாதி. யுவாங் - ஒரிசா மலைகளில் வாழும் ஒரியர். யூகி - அசாமில் பட்டுப்புழு வளர்ப்போரும் பட்டு நெசவு செய்வோரும். வா (Wa) - கிழக்குப் பர்மாவில் காணப்படும் ஆதிக்குடிகள். வில்லியர் (Bhil) - மத்திய இந்தியாவிற் காணப்படும் ஆதிக்குடிகள். வெரங்கி(Fering) - வங்காளத்திலுள்ள பறங்கியர் (போர்ச்சுக்கேய உற்பத்தி). இலங்கைத் தமிழர் (இஃது இற்றைக்கு நூறாண்டுகளின் முன் சைமன் சாசிச் செட்டி அவர்களால் எழுதப்பட்ட “The, Castes, Customs, Manners and Literature of the Tamils ” என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது) பழக்கவழக்கங்கள் கர்ப்பதானம் - இது கர்ப்பக் குறி காணப்பட்டவுடன் செய்யப் படுவது. வீடு முழுவதும் பசுச்சாணியால் மெழுகிச் சுத்தஞ் செய்யப்படு கிறது. தலைவாயிலில் அமைக்கப்பட்ட பீடத்தில் பிள்ளையார் பிடித்து வைக்கப்படுகிறது. புரோகிதர் தேங்காயுடைத்து ஓமம் வளர்த்துப் பூசை செய்தபின் கருப்பிணிக்கு ஆசீர்வாதஞ் செய்வார். இதற்குக் கூலியாக பணம், துணி அல்லது மாடு கொடுக்கப்படுகிறது. பும்சவனம் - இது மூன்றாவது மாதத்தில் செய்யப்படுகிறது. மேற்கூறியது போல் செய்தபின் பெண்கள் கருப்பவதியின் தலையைச் சுற்றி ஆலத்தி எடுப்பார்கள். பெண்ணின் தந்தை ஒரு கோடி காப்பைப் பெண்ணுக்குக் கொடுப்பார். சீமந்தம் - இது ஏழாவது மாதத்தில் செய்யப்படுவது. கருப் பிணியின் சுற்றத்தவர் பந்தலின்கீழ் கூடியிருப்பர். அவர்கள் மூன்று பானையில் சோறு சமைத்துத் தெய்வங்களுக்கு படைப்பார்கள். பெண் கலியாண உடையோடு முன்னால் வைக்கப்பட்டுள்ள உரலில் வளைந்து கைவிரலால் தொட்டுக் கொண்டு நிற்பாள். கணவனின் பகுதியைச் சேர்ந்த பெண்கள் அகப்பையில் சிறிது பாலை எடுத்து ஒவ்வொருவராக அவள் தோளில் வார்ப்பார்கள். சில பகுதிகளில் கோயிலிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தத்தை அவள் உறிஞ்சிக் குடிக்கும்படி கொடுப்பார்கள். பெண் கருப்பமாக விருக்கும்போது பெண்ணின் கணவன் தாடியை வெட்டுவதில்லை. விரதங்களனுட்டிப்பான். குழந்தை பிறப்ப தற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களின் முன் குடியிருக்கும் வீட்டி லிருந்து பெண் இன்னொரு இடத்துக்கு மாற்றப்படுவாள். இது பிள்ளைப் பேற்றால் வீடு தீட்டடையாமலிருப்பதற்காகவாகும். பிள்ளைப்பேற்றின்பின் 16, 21 அல்லது 31 நாட்களின் பின் புரோகிதர் வீட்டுக்குச் சென்று தீட்டுக் கழிப்பார். குழந்தை பிறந்ததும் தந்தை சோதிடரிடம் சென்று சாதக பலனை அறிகிறார். குழந்தை பிறந்து பத்து அல்லது பன்னிரண்டு நாட்களின் பின் பிள்ளைக்குப் பெயரிடப்படு கிறது. பெரும்பாலும் பெயர் தந்தையாலிடப்படுகிறது. 12 அல்லது 16வது நாளில் காது குத்தப்படுகிறது. பெரும்பாலும் இது 6வது அல்லது 8வது மாதத்தில் நடைபெறுகிறது. 6ஆம் அல்லது 8ஆம் மாதத்தில் சோறு தீற்றுச் சடங்கு நடைபெறுகிறது. கிரியை முடிவில் குழந்தைக்குச் சிற்றாடையுடுத்தி குழந்தையைக் கோயிலுக்கு எடுத்துச் சென்று சிற்றாடை கோயிலுக்குக் கொடுக்கப்படுகிறது. முதலாவது அல்லது மூன்றாவது வாரத்தில் முடி இறக்கப்படுகிறது. உச்சியில் அல்லது நெற்றிக்கு மேல் ஒரு பிடி மயிர் விட்டு நாவிதன் தலையை மழித்து விடுவான். சில பகுதிகளில் உறுமால்கட்டு என்னும் விருந்துக் கொண்டாட்டம் நடக்கும் வரையில் இளைஞர் தலையை மழித்துக் கொள்ளமாட்டார்கள். சிறுவர், சிறுமியரைப் பள்ளிக்கு வைத்தல் ஏடு தொடக்குதல் எனப்படுகிறது. பள்ளிக்கூட ஆசிரியர் மூன்று பனை ஓலைச் சட்டங்களில் அரிவரியை எழுதி எழுத்துக்களுக்கு மஞ்சள் பூசித் தூபங் காட்டிக் கொடுப்பது இக் கிரியையாகும். சிறுவர் பள்ளிக்குச் செல்லும் வயது 5. பெண் பருவமடைந்ததும் சாமர்த்தியக் கலியாணம் நடைபெறுகிறது. பூப்பு அடைந்ததும் அவள் வீட்டில் மறைவான ஒரு இடத்தில் ஏழு அல்லது 11 நாட்களுக்கு விடப்படுகிறாள். பின்பு அவளுக்கு முழுக்காட்டப்படுகிறது. அப்பொழுது நண்பரும் சுற்றத்தவரும் அழைக்கப்படுவார்கள். முழுக்காட்டும் போது பெண்கள் ஒருவர் மீதொருவர் மஞ்சள் நீர் தெளித்துக் கொள்வர். பின் பெண்ணுக்கு ஆராத்தி காட்டுவார்கள். சில பகுதிகளில் மூன்றாவது நாள் கலியாண மான பெண்கள் கூடியிருந்து சில கிரியைகளின் பின் பெண்ணைச் சுற்றி நின்று கைதட்டி ஆடுவார்கள். (இவ் வழக்கங்கள் இப்பொழுது பெரும் பாலும் மறைந்துவிட்டன.) திருமணம் திருமணப் பேச்சு மணமகனின் தந்தையால் தொடங்கப்படுகிறது. தொடங்குமுன் அவன் இரு பகுதியாரின் சாதகங்களையும் சோதிடர் மூலம் பார்த்துப் பொருத்தமிருக்கிறதா என்று அறிந்து கொள்வான். கலியாணம் நிச்சயமானதும் மணமகனின் தந்தை, முன்னால் மேளம் அடித்துச் செல்ல சில நண்பர்களுடன் 7 அல்லது 9 வாழைக் குலைக ளுடனும் மஞ்சள் பூசிய தேங்காய்களோடும் பெண்ணின் தந்தை வீட்டுக்குச் சீதனம் நிச்சயிப்பதற்குச் செல்வான். அவர்கள் ஒரு நிபந்தனை அல்லது பட்டோலை எழுதிக்கொண்டு கலியாணத்துக்கு நாள் வைப் பார்கள். இரு பகுதியார் வீட்டு முற்றங்களிலும் பந்தலிடப்படும். எத்தனை பந்தற்கால்கள் நடவேண்டுமென்பதில் சில சமயங்களில் தர்க்கம் எழுவதுண்டு. முதற் பந்தற்கால் வடகிழக்குத் திசையில் நடப் படும். இது ஒதிய மரக்காலாக விருக்கும். நடும்முன் அதற்குச் சந்தனம், மஞ்சள், குங்குமம் முதலியன பூசி மாவிலை, தருப்பைப்புல் முதலியன கட்டப்படும். நடுவதன் முன் பருத்திக்கொட்டை கலந்த பால் வார்த்து தேங்காயுடைக்கப்படும். பந்தல் வெள்ளை கட்டி பாக்குக் குலைகள், தென்னம் பூ, இலைகள், கண்ணாடி விளக்குகள், காகிதப் பூக்கள், வத்தித் தாள்களால் அலங்கரிக்கப்படும். பந்தலின் முன் வில் வடிவாகக் கம்புகள் கட்டித் தோரணம் தூக்கி வாழைகள் நட்டு அலங்கரிக்கப்படும். பந்தலின் மத்தியில் கலியாணக் கால் நாட்டப்பட்டிருக்கும். இஃது அரசாணிக்கால் எனப்படும். அதன் பக்கத்தில் கிண்டப்பட்ட ஓமகுண்டம் சாணியால் மெழுகப்பட்டிருக்கும். இதன் பக்கத்தில் விளக்குகள் கொளுத்தி வைக்கப்பட்டிருக்கும். அவற்றின் பக்கத்தில் களிமண்ணால் செய்த யானையின் முதுகில் மூன்று அல்லது ஏழு, நிறம் பூசிய பானைகள் ஒன்றின் மேலொன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். மேலே இருக்கும் பானையின் வாயில் மஞ்சள் பூசிய தேங்காய் வைக்கப்படும். மணமகன் பகுதியார் மணமகள் வீட்டுக்குத் தாலி கூறைகளுடன் செல்வார்கள். செல்வர் பல்லக்கில் அல்லது குதிரை மேலேறிப் போவர். வண்ணான் வீதியில் நில பாவாடை விரித்துச் செல்வான். வேறு இருவர் சாமரை வீசுவர். நால்வர் மேற்கட்டி (மேலாப்பு) பிடிப்பர். வாத்தியகாரர் வாத்திய மொலிப்பர். இரு நாவிதர் சங்கு ஊதுவர். நாட்டியப்பெண்கள் நாட்டிய மாடிச் செல்வர். பல இளைஞர் தீவட்டி, வெள்ளைக் குடை, கொடி, விருது முதலியன பிடித்துச் செல்வர். மணமகன் வந்ததும் மணமான பெண்கள் ஆராத்தி காட்டுவர். பெண்ணின் தாய் அல்லது சகோதரி ஒரு கிண்ணத்தில் பிசைந்த வாழைப்பழத்தையும். பாலையும் பந்தலிலுள்ள பீடத்தில் வைக்கும்படி கொடுப்பர். வீட்டில் மறைவாக இருந்த பெண் இப்பொழுது பல்லக்கில் கோயிலுக்கு எடுத்துச் சென்றபின் பந்தலுக்கு கொண்டு வரப்படுவாள். இருவரும் கிழக்கு நோக்கியிருக்கும்படி அங்குள்ள பீடத்தில் இருத்தப்படுவார்கள். புரோகிதர் பெண்ணின் இடது கையிலும் மணமகனின் வலது கையிலும் கங்கணங் கட்டியபின் கிரியைகளைப் புரிவர். தாலியை மணமகனின் சகோதரி எடுத்துப் புரோகிதரிடம் கொடுப்பாள். அவர் அதற்குத் தூபங் காட்டியபின் சபையோரிடத்தில் கொடுப்பார். அவர்கள் ஒவ்வொருவராக அதைத் தொடுவார்கள். பின்பு மணமகன் தாலி கட்டுவான். பின்னால் நிற்கும் அவனுடைய சகோதரி அதனை நன்றாகக் கட்டிவிடுவாள். பின்பு அவ் விடத்திற் கூடியிருக்கும் கலியாணமான பெண்கள் நெல்லும் வெற்றிலை யும் வைத்த நாழியால் மணமகன், மணமகள் என்னும் இருவரின் தலையையும் சுற்றுவார்கள். அப்பொழுது புரோகிதர் தேங்கா யுடைப்பார். பின் அருந்ததி காட்டுதல், அம்மி மிதித்தல் முதலிய கிரியைகள் நடைபெறும். மரணம் ஒருவனுக்கு மரணம் அணுகும்போது புரோகிதர் அழைக்கப் படுகிறார். அவர் சிறிது பஞ்ச கௌவியத்தை அவன் வாயினுள் விடுவார். பின்பு நோயாளி பசுமாட்டின் வாலைப் பிடித்துப் புரோகிதருக்கு அதனைத் தானமாகக் கொடுப்பான். மரணமடைந்ததும் தலை வடக்கே கிடக்கும்படி பிரேதம் கிடத்தப்படுகிறது. பக்கத்தில் நிற்பவர்கள் ‘சிவா’ என்று மூன்று முறை பிரேதத்தின் காதில் சொல்லி நெற்றிக்கும், நெஞ்சுக்கும் திருநீறு பூசுவர். மரணச் செய்தி சங்கு ஊதி அயலவர்களுக்கு அறிவிக்கப்படும். பெண்கள் சவத்தைச் சுற்றியிருந்து ஒப்பாரிவைத் தழுவர். முற்றத்தில் நாலு கம்புகள் நட்டு வெள்ளைகட்டிப் பந்தலிடப் படும். அங்கு பிணம் எள்ளெண்ணையும், அரப்பும் தலையில் வைத்து முழுக்காட்டியபின் பந்தலின் மத்தியில் கிடத்தப்படும். பின்பு பிணம், பாடை அல்லது தண்டிகையில் வைத்துத் தலை முன்புறம் நிற்கத் தக்கதாகச் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்படும். செல்லும் வழியில் அரிசிப்பொரி, பருத்திவிதை, அத்தி இலை, காசு என்பன எறியப்படும். பிணத்தை விறகின் மீது கிடத்தியபின் வாய்க்கரிசி போட்டுக் கொள்ளிக் குடமுடைத்துத் தீ மூட்டப்படும். ஈமச் சடங்குக்குச் சமுகமாயிருந்தோர் எல்லோரும் நீராடுவர். இறந்தவனின் மனைவி கைம்பெண் எனப்படுவாள். இவளுடைய தாலி மூன்றாவது நாள் கழற்றப்படும். புத்தளக் கரையார் புத்தளக் கரையார்களிடையில் மூன்று வகைக் கலியாணங்கள் நடைபெறுகின்றன. ஒன்று மாலை மணம். மணமகனின் சகோதரி பெண்ணைப் பூமாலை வாசனைப் பொருள்களாலலங்கரித்த பின் அவள் கழுத்தில் தாலியணிவாள். கலியாணம் செய்துகொண்ட இருவருக்கும் ஒருமித்து வாழப் பிரியமில்லாவிடில் அவர்கள் பிரிந்து கொள்ளலாம். பிரிந்துகொள்ள விரும்பும் பகுதி கிட்ட உள்ள கோயிலுக்கு 25 இறசால் கொடுக்க வேண்டும். இரண்டாவது மணம் சிறுதாலி. இது யாதும் கிரியைகளில்லாமல் முன் கூறியது போலத் தாலி தரித்தல். கலியாண நீக்கம் செய்து கொள்ள விரும்பும் பகுதி 25 இறசால் ஆறுபணம் கோயிலுக்குத் தண்டம் கொடுக்க வேண்டும். மூன்றாவது மஞ்சள் பூசல். இது தாலி கட்டாமல் மணஞ் செய்து கொள்வது. மணமகனின் சகோதரி பெண்ணின் உடையில் அரைத்த மஞ்சளைப் பூசி விடுவாள். கலியாண நீக்கம் செய்து கொள்ளும் பகுதி ஆறு இறசால் மூன்று பணம் தண்டமாகக் கட்டவேண்டும். அணிவகை ஆடவர் அணிபவை ஒட்டு - இரத்தினம் வைக்கப்பட்ட பொன் வளையம். காதில் அணியப்படுவது. கடுக்கன் - காதில் அணியப்படுவது. இதில் பல வகைகளுண்டு. செட்டிக் கடுக்கன் - 10 முதல் 11 அங்குலச் சுற்றளவுள்ளது. பொன் கம்பிகளை முறுக்கிச் செய்யப்படுவது. நடுவில் இரத்தினம் வைக்கப்பட் டிருக்கும். கொழும்புச் செட்டிகள் இதில் ஐந்து அல்லது ஆறு வளையங் களை ஒவ்வொரு காதிலுமணிவர். சூட்டுக் கடுக்கன் - நீண்ட வட்டமான வளையம். அரிப்புச்சாரிக் கடுக்கன் - பொன் பூவரும்புகள் கோக்கப்பட்ட பொன் கம்பி. உருத்திராட்சக் கடுக்கன் - உருத்திராக்கம் நடுவில் வைக்கப்பட்ட கடுக்கன். புலிமுகக் கடுக்கன் - முன்பக்கத்தில் புலிமுகம் பொறிக்கப்பட்ட கடுக்கன். முருகு - காதின் மேற்பகுதியில் அணியப்படுவது; கீழே முத்து அல்லது இரத்தினக்கல் தொங்கவிடப்பட்டிருப்பது. சரப்பள்ளி - பொன் சங்கிலி. பதக்கம் - சங்கிலியில் கோத்துக் கழுத்திலணியப்படுவது. அரைஞான் - பொன் அல்லது வெள்ளியாற் செய்து அரையிலணியப்படுவது. மிஞ்சி - காற்பெருவிரலிலணியும் வெள்ளி மோதிரம். காறை - இது நடுவில் சந்திரனின் வடிவம் தொங்கும்படியாக வெள்ளி அல்லது பொன்னாற் செய்யப்பட்ட மாலை. பெண்களணிகள் குப்பி - கொண்டையில் செருகப்படுவது; கடுக்காயளவு பருமை யுடையதாக இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டது. சுட்டி - மூக்குக்கு நேரே நெற்றியில் தொங்கும்படி தலையில் அணியப்படுவது. சிணுக்கி - சங்கிலி கோத்த தட்டையான பொன் தகடு; காதணியில் மாட்டி கொண்டையில் கொளுவப்படுவது. பிறைபொழுது - பிறையையும் சூரியனையும் போற் செய்யப் பட்ட இரண்டு பொன்னாபரணங்கள்; ஒன்றை ஒன்று பார்க்கும்படி தலையி லணியப்படுவன. பட்டம் - நெற்றியில் கட்டும் பொன் தகடு. மூக்குத்தி - மூக்கின் இடப்பக்கத்தி லணியப்படுவது; முத்துத் தொங்கவிடப்பட்டிருப்பது. நத்து - மூக்கின் இரண்டு துவாரங்களுக்கு நடுவில் அணியப் படுவது; முத்து அல்லது இரத்தினக்கல் தொங்கவிடப்பட்டிருப்பது. தோடு - பூவின் வடிவினதாகக் காதிலணியப்படுவது. துலாக்கு - முத்துத் தொங்கவிடப்பட்ட தோடு. கொப்பு - மேற்காதிலணியப்படும் தங்க வளையம். நாகபடம் - கொப்புக்குக் கீழ் அணியப்படுவது. பாம்பின் தலையைப் போல் தோற்றமளிப்பது. மணி - பல பட்டுக்களில் அணியப்படும் மணி கோத்த மாலை. சவடி - தோளில் பொறுத்து நிற்கும்படி அணியப்படும் மாலை. அட்டிகை - இரத்தினக் கற்கள் பதித்த கழுத்தணி. கழுத்தில் ஒட்டக்கட்டப்படுவது. உள்கட்டு - கல்பதிக்காத அட்டிகை. தாலி - கலியாணத்தின்போது கணவன் பொன் கயிற்றில் அல்லது மஞ்சட் கயிற்றில் கோத்து மனைவி கழுத்தில் அணிவது. நெல்லி - இரண்டு பொன் அல்லது வெள்ளிக் கம்பிகளை முறுக்கிச் செய்தது; முழங்கைக்கு மேல் அணியப்படுவது. கை வளையல்கள் - இதில் காப்பு, கங்கணம், வளையல், சாரி. கடகம் எனப் பல வகைகளுண்டு. இவை வெள்ளி அல்லது பொன்னி னால் செய்யப்பட்டு மணிக்கட்டில் அணியப்படுவன. இவை உள்ளே குழல் உடையனவாய் ஒரு அங்குலக் குறுக்களவுடையனவாகவிருக்கும். ஒட்டியாணம் - பொன் அல்லது வெள்ளியினாற் செய்த அரைப் பட்டிகை. தண்டை - உள்ளே பரலிடப்பட்ட காப்பு; வெள்ளியாற் செய்யப்படுவது. காலிலணியப்படுவது. சதங்கை - இது தண்டைக்குக் கீழ் அணியப்படும் பாதசரம். பாடகம் - குதிரைக் கடிவாளத்தின் மேற்பாகம் போன்ற பெரிய வெள்ளிச் சங்கிலி. இது கணைக்காலுக்கு மேல் அணியப்படுவது. கொலுசு - முன் கூறப்பட்டது போன்றது. கால் மோதிரங்கள் - இவற்றில் பலவகைகளுண்டு. நகமூடி, பீலி, முன்தாங்கி, மயிலடி, மகரமீன். மோதிரம் - இருபாலாரும் இரத்தினக்கற்கள் பதித்த வெள்ளி அல்லது தங்க மோதிரங்கள் பலவற்றைக் கையிலணிவர். கொழும்புச் செட்டிப் பெண்கள் பெனிச்சை என்னும் பொன் கொண்டை ஊசிகளைக் கொண்டையில் குத்திக் கொள்வர். மேற்பக்கம் பொன் பதிக்கப்பட்டு இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட ஓட்டு சீப்பைக் கொண்டையிலணிவர். அவர்கள் மேற்காதில் கப்பு என்னும் அணியை யும் அதற்குக் கீழ் கிராபு என்னும் அணிகளையும், உருக்குமணி என்னும் ஐந்து அல்லது ஆறு வளையங்களையும் அவற்றின் கீழ் சவடிக் கடுக்கன் என்னும் தோள்வரை தொங்கும் மூன்று பெரிய ஆபரணங்களையும் அணிவர். அவர்கள் கழுத்து, கை, பாதம் என்பவற்றில் பல ஆபரணங் களை அணிவர். இலங்கைத் தமிழரிடையே காணப்படும் சாதிகள் அகம்படியார் அரிப்பர் இருளர் இலைவாணியர் (பழ வியாபாரிகள்) உப்பளவர்(உப்பு விளைவிப்போர்) எண்ணெய் வாணியர் ஓச்சர் (கலியாணம், இழவு முதலிய வற்றை அறிவிப்போர்; கோயிற் பூசை செய்வோர்) கடையர் (மீன் பிடிப்போர், சாய வேர் கிண்டுவோர் என இரு வகையினர்) கருமான் (கொல்லன்) கரையார் (பள்ளிகளில் ஒரு வகை யினர்) கர்ணம் (கிராமக் கணக்கன்) கலயர் (வடம் திரிப்போர்) கல்தச்சன் கள்ளர் கன்னான் (1) கொத்துக் கன்னான் (உலோகத்தை அடித்து வேலை செய்வோன்) (2) வார்ப்புக் கன்னான் காவல் (கிராம எல்லையைப் பார்ப் பவன்) காவற்பள்ளி (காவற்காரன்) குயவன் குறும்பர் கைக்கோளர் கொட்டியார் (கீழ்த்தர நெச வாளர்) கோமட்டி கோவியர் (வேளாளரின் அடி மைகள்) சக்கிலியர் சலுப்பர் (மரத்தளவாட வியாபாரி கள்) சாணார் (சாண்டார்) சாலியர் (நெசவாளர்) சிவியார் செம்மார் (செருப்புத் தைப்போர்) செம்படவர் சேணியர் (நெசவாளர்) சேதர் (நெசவாளர்) தச்சர் தட்டார் தனக்காரர் (யானைக்காரர்) தாதர் (பாவைக் கூத்தாட்டுவோர்) திமிலர் தொட்டியர் நத்தம்பாடி நளவர் (மரமேறுவோர்) நாவிதர் பட்டினவர் (மீன் பிடிகாரர்) பரம்பர் பரவர் பரவணியான் (கிராமக் கடை வைத்திருக்கும் செட்டி) பரிக்குலத்தார் (குதிரைக்காரர்) பள்ளர் பள்ளி பள்ளிவில்லி (மீன்பிடிகாரர்) பறிக்காரர் (மீன்பிடிகாரர்) பறையர் பாணர் (தையற்காரர்) பாய் வாணியர் (கடைக்காரர்) பூமாலைக்காரர் (பூ விற்போர்) மருத்துவர் மறவர் முக்குவர் முச்சியர் (வர்ணம் பூசுவோர்) யாழ்ப்பாணர் வண்ணைக்காரர் (வாளுறை செய் வோர்) வண்ணார் (1) வெள் வண்ணார் (உயர்ந்த சாதியாருக்கு வெளுப் பவர்) (2) நீலவண்ணார்(சாயம் தோய்ப் பவர்) (3) சாய வண் ணார் (சாயக்காரர்-சிவப்புச் சாயம் தோய்ப்பவர்) (4) துரும்ப வண்ணார் (கீழ்ச் சாதியாருக்கு வெளுப்போர்) வலம்பர் வலையர் (வலைகட்டி வேட்டை யாடுவோர்) வள்ளுவர்(சோதிடம் சொல் வோர்; பறையரின் புரோகிதர்) வீரக்குடியான் (சங்கு ஊதுவோன்) வெட்டியான் (பிணம் சுடுவோன்) வேடன் மாட்டுக்குறி சுடும் அடையாளங்கள் வணிகர் - தராசு வேளாளர் - பசும்பை(அறுகோண வடிவம்) எண்ணெய் வாணியர் - விளக்கு பரவர் - சவளம் கரையார் - மீன் கம்மாளர் - குறடு கடையர் - குடையுங் கொடியும் நாவிதர் - கத்திரிக்கோல் வண்ணார் - கல்(லு) சாதிகளின் பட்டப்பெயர் பிராமணர் - ஐயர் வணிகர் - செட்டி வேளாளர் - பிள்ளை , முதலி இடையர் - கோன் நத்தம்பாடி - உடையார் பள்ளி - படையாச்சி தொட்டியார் - நாயக்கன் கோமுட்டி - செட்டி எண்ணெய் வாணியர் - செட்டி பரவர் - அடப்பன் பட்டணவர் - செட்டி செம்படவர் - அம்பலவன் வலையர் - மூப்பன் முக்குவர் - போடி கைக்கோளர் - செட்டி, முதலி சேணியர் - செட்டி, முதலி அகம்படியான் - சேர்வைக்காரன் மறவர் - தேவர் கள்ளர் - குடியான் நாவிதர் - பரிகாரி, பிராணோபகாரி ஓச்சர் - பூசாரி சிவியார் - பொகடன் சாணார் - நாடான் வண்ணான் - ஏகாலி நளவர் - தன்னயன் வள்ளுவர் - திருசாம்பான் சக்கிலியர் - பகடை பறையர் - சாம்புவன் பள்ளர் - குடும்பம் 1 2 15 14 1. It is admitted both by Indian and European scholars that the civilization of the Tamil Nation was, in the main, due to the Aryan Colonists in the South-Tamil studies p.233 - M.Srinivasa Iyangar.M.A., (1914). இது பழைய ஆராய்ச்சி. இக் கருத்துடையவர்களே பெரும்பாலும் தமிழர் வரலாற்றினை எழுத முயன்று வந்தார்கள். “When the Aryans entered India they had no script of their own, and their script was the script of their enemies, the Dasus (Dravidians)” - Fr. Heras. From prehistoric times these Dravids have been the most intellectual, civilized, cultured people of India, famed for arts and architecture, piety and religions with elaborate rites and symbolisms. The last they have left to us in magnificent neolithic cave temples, carved out of rocky mountains, and in the most intractable stone beautiful design, elaborate in rich decoration with grandeur and yet delicacy. The artists are quite unsurpassed by any race in the world. The people are deep thinkers powerful rulers and administrators who never permitted any Aryan interference in Central or Southern India, in its government, religion or occupations, though their upper classes affected a good deal of Sanskrit - A short study in the science of comparative religions p. 175 - J.G.R. Forlong. These last (Early Vedic Hymns) are full of faded decayed, and quite unintelligible words, and forms, and in some points nearer Greek then ordinary Sanskrit - (Maxmuller). So that the Aryan tongue first appeared in India, was not intelligibly put into words of forms. This was a work of several centuries later when civilized Dravidian Pandits wrote out for Aryans in their sacred Devanagari or Dravid character. Necessarily they thought the illiterate colonists how to write their language and reform their faith and mythology. The same process was then going on in the west when Greeks were beginning to write their Aryan tongue the Semito Phoenician characters aided by Egyptians and Syrians they too were organizing an Aryan mythology and faith - Ibeid p, 247. இது நடுநிலைமையோடு செய்யப்பட்ட மேற்றிசை அறிஞரின் ஆராய்ச்சிக் கருத்து. 1. பழங்கற்காலம்: மக்கள் முரடான கல்லாயுதங்களைச் செய்து பயன்படுத்திய காலம். 2. புதிய கற்காலம்: மக்கள் அழுத்தமான கல்லாயுதங்களைச் செய்து பயன்படுத்திய காலம். 3. மேற்கு ஆசிய மக்களும் தமிழ் மக்களும் ஒரே மக்கட் குலத்தைச் சேர்ந்தவர்களாகக் காணப்பட்டமையாலும், இரு மக்களின் பண்டை நாகரிகமும் பெரிதும் ஒத்திருந்தமை யாலும், மேற்கு ஆசிய மக்களே இந்திய நாட்டை அடைந்தவர்களாவர், என ஆராய்ச்சி யாளர் கருதுவாராயினர். இன்றைய ஆராய்ச்சியில் மேற்கு ஆசிய மக்களே இந்திய நாட்டினின்றும் மேற்கு ஆசிய நாடுகளிற் சென்று குடியேறியவர்களாவர் எனத் தெளி வுறுகின்றது. சோழ நாட்டினின்றும் சென்று தைகிரஸ், யூபிராதஸ் ஆற்றின் வடபால் குடியேறிய மக்கள் தம் நாட்டுக்குச் சால்தியா எனப் பெயரிட்டார்கள் என்றும், அப் பெயர் சோழதேசம் என்பதன் திரிபாகும் என்றும் ஏ.சி. தாஸ் என்பார் தமது இருக்கு வேத இந்தியா என்னும் நூலில் நன்கு விளக்கிப் போந்தார். “சிந்துப் பிரதேசத்திலிருந்து நமது நாகரிகம் பாபிலோனியா எகிப்து முதலிய தேசங்களுக்குப் பரவியது. அவ்விடங்களிலிருந்து இந்தியாவிற்குப் பரவியது என்ற ஐரோப்பிய ஆராய்ச்சியாளரின் எண்ணம் தவறென்றே கருதவேண்டும். பாபிலோனியா வில் கி.மு. 700இல் ஒரு தமிழ்க் குடித்தனம் இருந்தது. தென்னாட்டிலிருந்து தமிழ் நாகரிகம் உரோமாபுரிக்கும் கிரேக்க நாட்டிற்கும் பரவியது. இன்னும் தக்கிண பீட பூமியைச் சேர்ந்த வேட்டுவர் என்ற குறிஞ்சி நில மக்கள் யவன தேசத்திற்குச் சென்று தங்கள் அரசை நிலைநிறுத்தித் தங்கள் பெயரையும் அந் நாட்டிற்குக் கொடுத்தார்கள். இதுவே கிரீட் (Crete) தேசம். இதன் நாகரிகத்திற்கும் தமிழ் நாகரிகத்திற்கும் ஒப்புமை மிகுதியாயுள்ளது. மணிமலர்த்திரட்டு - திரு.வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர் எம்.ஏ. - வரலாற்று ஆராய்ச்சியாளர் பல்கலைக்கழகம், சென்னை. The Development of Mohenjo-Daro script, the religion of these two countries and that of Egypt, the titles of kings, the number of zodiacal constellations among the Proto-Indian People and the relative position of these constellations, the changing of the Proto-Indian constellation of the Harp (yal) for Turus (the bull) which might have taken place in Sumar, the tradition of the ancient people of Mesopotamia recorded by Berosus, the parallel by Bible account of Gen. 11 : 1 - 5. All point to the same conclusion, that the migration of the Mediterranean race commenced from India and extended through south Mesopotamia and North Africa spread through Crete Cyprus, Greece Italy and Spain and across the Prynees reached central Europe and the British Isles. The route starting from Ceylon to Ireland is marked by uninterupted chain of dolmen and other megaliths that seem to be the relics of the enterprising and highly civilized race which is termed the Mediterranean by the anthropologists and which in India, has been quite unreasonably despised under the name Dravidian - Fr. Heras. 1. பாலி மொழி, இலங்கையில் மக்களாற் பேசப்படவில்லை. ஆனால் அங்கு அது இலக்கிய மொழியாக இருந்துவந்தது. பாலி, சமக்கிருதச் சொற்களை ஏற்றுக்கொண்டு இலங்கை மக்கள் வழங்கிய மொழி சிங்களமாக மாறிற்று. கி.பி. 10ஆம் நூற்றாண்டளவில், முதல் முதல் சிங்களமொழியில் நூல் செய்யப்பட்டது. சிங்கள மொழிஅமைப்புத் தமிழை ஒத்துள்ளது. இது சமக்கிருதச் சொற்கள் தமிழுடன் சேர்ந்து, அதனை வேறுபடுத்திய மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. 1. The non-Aryan magicians and the Dravidians became Brahmans. South Indian tradition records numerous instances of Brahmans as taking wives from the lower castes. In many cases non-Brahmans were admitted into the Brahmana caste, as sufficient Brahmanas were not available when the reformed Indo-Aryan religion obtained referance. Prehistone ancient and Hindu India P. 38 - R.D. Banerji. 1. The Hamitic Indo Mediterranean race - Fr. H. Heras - New Review XIV. 3 4 13 12 5 6 11 10 7 8 9 32 17 18 31 30 19 20 29 28 21 22 1. Kannada Passages in the Oxyrhyncus Papyri No. 413 - Mythic Society quarterly Journal publication. 27 26 23 24 25 48 1. The Ancient History of the near East, - H.R. Hall p 173-174 1. இவ் வட்டத்தில் மாத்திரமன்று; அமெரிக்காவிலும் இவ்வகை நாகரிகம் இருந்த தென்றும் அதற்குக் காரணம் இந் நாடுகள் முன்னொரு காலத்தில் ஒன்றுசேர்ந்திருந் தமை எனக் கூறுவாரும் உளர்! 1. இது பிற்காலத்தில் வந்த கிறித்தவர்கள், கிறித்தவர்களல்லாத மதத்தினரை அஞ்ஞா னிகள் எனக் கூறி அறிவில்லாத மக்களை அவ்வாறு நம்பும்படி செய்தது போலாகும். 1. A Sumereo-Babylonian inscription disciphered at mohenjo-Daro-C L. Fabri. Indian culture vol. 3 (1936 - 1937) 1. Journal of Indian History Vol. XII 1933-p 271 2. Pre Aryan elements in Indian Culture. by Atulk. Sur-Indian Historical quarterly Journal 16. LX - 1934 1. Mohenjo-daro and the Indus Civilization - Sir John Marshall. 2. Origin and development of the Bengali language - p. 28. S.K. Chetterji 3. History of Orissa - p. 108. R.D. Banerji M.A., 4. M.D. Bandarkar, M.A., Professor of Ancient Indian History and Culture, Calcutta University. 1. Stone age in India p-43 A language can adopt and create as many words as it pleases without changing its character, but it cannot alter its grammar, its syntax, without becoming an-other; for grammar represents the innate mode of thought over which the Individual person or nation has no control - On the classification of languages - p.17 - Gustave Oppert. 2. History of the Tamils P.T. Srinivasa Iyengar P 2. 1. The philosophy of the Lingayats 1. New Review Vol IV - 1936. 2. Journal of Indian History Vol xxi - 1942 - Were the Mohenjo Darians Aryans or Dravidians. 1. Identification of Mohenjo Daro figure - B.A. Selatore - New Review vol X July 1939 2. Indian Culture Vol I-1943 - The ancient Hungarian Script and the Brahmi Character - C.L. Fabri. 3. Siva his Pre-aryan origins Amalananda Ghosh-Indian Culture. Vol vii. 1. The Script of Mohenjo Daro and Easter Island - Annals of Bhandarkar Vol. 20 p. 270. 2. Science report - 1936 Geral Heard - p. 188. 33 34 47 46 35 36 45 44 37 38 43 42 39 40 41 64 1. By the Pictorial hieroglyphic inscription found and interpreted on the Walls of the temple of the Queen Haslitop at Derel Bahri, we see that this Punt can be no other than India. For many ages the Egyptians traded with their old homes and the reference here made by them to the names of the princes of Punt and its fauna and flora, especially the nomenclature of various precious woods to be found but in India, leaves us scarcely room for the smallest doubt that the old civilization of Egypt is the direct outcome of that of the older India - The Theosophist - March 1881 p. 123 Quoted in “Hindu Superiority” by Har Baeus Sarda. The ancient Abyssinians as already remarked, were, originally migrators to Africa from the banks of Abuisin a classical name for Indus - Heran’s Historical Researches Vol 2 - p. 310 1. When the hungry swarms of Aryan tribesmen descended upon North-west India, the whole land with the exception of the North East corner was occupied by a long settled Dravidian population, split into many Castes and tribes- The mythic society journal vol IV p 157 - James Hornwell. It will appear that the civilization of the Indus valley was associated with the speakers of the Dravidian languages. Lastly the Brahmi script of later Vedic civilization is itself tracad to Indus valley pictographs It will thus appear that the Dravidian speakers were the latest occupants of India before the Indo-Aryan arrived. - Hindu India - Radha Kumud Mukerji - p. 38 1. சாதிக்கலப்பும் உண்டாயிற்று. There was also inevitably at work a process of fusion between the Aryans and the non-Aryans by inter marriage or by alliance - Hindu Civilization - R.K. Mookerji. The distinction between the Aryan and non-Aryan then grew less sharp while social and political conditions became more complicated. The children of Dasu concubines in the Aryan households and those of Aryan women captured by Dravidian chieftains adopted Aryan customs and religious rites. The fair women of Aryan descent were an irresistible attraction for Dravidian chieftains and racial pride did not prevent Indo-Aryan families from giving a daughter in marriage to a dark skinned neighbour for a sufficient consideration-But as Dravidian society was matriarchal such inter marriages, with or without consent always exerted powerful influence in the Aryanization of India, for in the course of time all the highest Dravidian families both in the north and south claimed Aryan descent on their mothers’ side and adopted Aryan customs and religion - A Short History of India E.B. Havell. - p.p. 1926, 1. Zeus had two eyes placed naturally and the third upon the forehead. They say that Priam had this bust of Zeus from his ancestor laomedon - The third eye of this ancient statue was in the forehead; and it seems that the Hidus have a symbolical figure of the same kind - The symbolical language of ancient art and mythology - p. 73 R.P. Knight 2. Juno, Venue, Cybele, Rhoea the Syrian goddess, the armed Phallus, lris, Ceres and Anna Perenna. 1. ‘That contact between Vedism and the indigenous religion of the Indus valley modified both (a) by making the cult of yoga acceptable to Vedism, which formerly believed only in sacrifice and (b) by the retention of non-vedic elements in popular religion. As to the cult of yoga, its indigeous origin is seen in certain stone statues discovered at Mohenjodaro showing ascetics with eyes half shut in contemplation and fixed on the tip of the nose. These according to Chanda supply the missing links between the prehistoric Indus valley civilization and latter civilization of ‘India’ - Buddhist, Jain or Brahmanical - Memoir No 41 of arch, survey quoted in Hindu India. 2. It is not generally admitted that a great deal of the ancient and medieval myth and legend enshrined in the Sanskrit epics and puranas is of Non-Aryan origin, and that even in vedic mythology certain pre-Aryan elements are present. Puranic myths of the gods and legends of kings, heroes, and sages, in the form in which we find them in the Sanskrit works, represent undoubtedly a considerable amount of modification from other original forms, whether Aryan or non-Aryan. The non-aryan speaking masses of Northern India became Aryanised in language, and their tales and legends were retold as a matter of course in the Aryan language of their adoption. - Bulletin of the school of oriental studies Vol. VIII (1935 - 1937) S.K. Chatterjee. 1. The Dravidian substratum in Sanskrit has been discovered by several scholars, and Kittel in his Kannada Dictionary has given some 450 Sanskrit words with possible Dravidian connections. A few other words in both Sanskrit and Prakrit and the vernaculars have subsequently been suggested as being of Dravidian origin by other scholars. Sylvain Levi and his pupils, Jean przyluski of Paris, and Prabodh Chandra Bagchi of Calcutta and to some extent the present writer suggested a number of words in the Indo aryan as being Austric (Kol or Munda) origin and affinity - Non-Aryan Elements in Indo aryan S.K. Chatterji. - Journal of the Greater India Society Vol. 3 The Dravidian names of things and operations connected with all these arts of peace are native and not foreign (not borrowed from Sanskrit) The question has not yet been investigated, but on enquiry it will most probably turn out that many Sanskrit words connected with these arts were borrowed from Dravidian. - Age of the Mantras P. 15, P.T.S. Iyengar. 1. As regards the material aspects of non-aryan civilization, the Rigveda refers to towns and forts broad and wide, full of kine, of 100 Pillars, built of stone, to autumnal forts as refuge against inundatons and to 100 Cities in a non-Aryan kingdom Even the Vedic God Indra is designated for the occasion as Purandara - sucker of cities - Hindu India - R.K.M. p-30 “Brahmanical legends refer to the strong and wealthy cities on or near the banks of the Indus of which the Aryans took possession after a hard struggle for their adversaries were well armed, possessed horse and chariots, and built castles of stones. Several of the places afterwards celebrated in Indian History, such as Taksha-sela, Mathura and Ujjin were said to have been founded by these non-Aryan people who were probably Dravidian race and perhaps connected with the ancient Sumerians, the people of southern Babylonia whose history has been traced back to the fourth millennium B, C. These Dravidians called by the Aryans Asuras Eaityas, Dasus or Nagas were mostly a maritime and trading people. In the Mahabharata they described as great magicians. They worshipped the sun and the serpent like people of ancient media, with whom, perhaps they had trade connections. The amalgamation was either through military conquest or by peaceful penetration. Aryan and Non-aryan cultures gradually transformed the simple tribal organisatin of Vedic society into powerful political status and finally made ocean instead of the river, the boundary of Aryavartha. - A short History of India p 26 - E.B. Havell. 1. Dravidian place names are sometimes traced to Mesopotamia and Iran, while an ancient language spoken at Mittani reveals striking similarities to modern Dravidian of India - Hindu India p. 38 2. I am however inclined to agree with late Sir Herbert Risely in his view that the Dravidian peoples are autochthons of the Deccan and the South of the Peninsula. Dr Haddon says: The Dravidian may have been always in India as has already been said. H.R. Hail holds the view that the Sumerians came into Western Asia from South India where even their writing may have been invented which in its later developed form in Babylonia was the Cuniform Character in the inscriptions. Bahui only marks a stage in the track of the Dravidians on their way from India to sumer. The Sumerian civilisation is the earliest known in the world and if its Dravidian origin be accepted then a very ancient date for the Dravidian civilization must have to be admitted. The date of Sargon of Akkad, the founder of the dynasty of Akkad has been fixed at 2800 B.C. Now Akkad got her civilization from Sumer allowing for the development of sumerian Civilization. The Dravidian settlement of Sumer may be probably placed at a date not less than 5000 B.C. The bird and serpent Myth - Prof. Kalipada Mitra. - The O.J.O.T. mythic Society Vol XVI. 1. From the recent discovery of the sumerian and Hittite relics in the Indus valley and elsewhere in India it is becoming more and more clear that India never stood isolated from the rest of Asia in the past. but that her Culture and civilization formed not only an integral part of the ancient chaleolithic culture of Asia and Europe but also one of the oldest and the richest treasure house from which all other civilizations derived their largest contributions to which they gave the best of their products in exchange. From the Indus valley one section of people afterwards came to be designated as the Dravidians, marched towards the west both by sea as well as by land, settled down in the province of Sumer in Lower Babylonia under the name of Sumerians and spread Sumero - Dravidian Civilization as far as the Holy land of Palestine and Jerusalem and thence to Europe and Africa. - Quarterly journal of the mythic society Vol. XIX No. 3 1.* இது “The quarterly journal of the mythic society’’ Vol. XVI-ல் வெளிவந்த ஓர் ஆங்கிலக் கட்டுரையின் சுருக்கம். 49 50 63 62 மத்திய தரைக் கடல் பழைய நாகரிகங்கள் ஐசினிய நாகரிகப் பரப்பு கிதைதி மெம்பிஸ் கிரேத்தா எகிப்து கருங்கடல் தையர் சீனாய் தீப்ஸ் சிரியா பினிசியா தைகிரஸ் மெசபதேமியா அக்காட் அசீரியா சுமேரியா எல்லம் பாரசீக குடா 51 52 61 60 53 54 59 58 55 56 1. மொகஞ்சதரோ எழுத்துகள், 2. ஈஸ்டர் தீவு (பசிபிக் கடலில் உள்ளது) எழுத்துகள். 57 80 65 66 79 78 67 68 77 76 69 70 75 74 71 72 73 96 81 82 95 94 83 84 93 92 85 86 91 90 87 88 89 112 97 98 111 110 99 100 109 108 101 102 107 106 103 104 105 128 113 114 127 126 115 116 125 124 117 118 123 122 119 120 121 144 129 130 143 142 131 132 141 140 133 134 139 138 135 136 137 160 145 146 159 158 147 148 157 156 149 150 155 154 151 152 153 176 161 162 175 174 163 164 173 172 165 166 171 170 167 168 169 188 இணைப்பு 1 க. 1) தமிழின் தொன்மை, முன்மை, தென்மை ஆகியவற்றையும் மாந்த இனவரலாற்றில் தொல் தமிழர் பெறும் முக்கியமான இடத்தையும் நிறுவும் ஆய்வு நூல்கள். Arasendiran, K. - Ulakam paraviya Tamilin Ver - Kal. Vol I: 1997; North Wembley, Middlesex; Ratnam Foundation. Vols 2-4; 2002; Onriya Tamilar Tholamai; Australia Aruli, P (1985) Moliyiyal Uraikal; ( 5 vols);; Arivan Pathippagam; Tamilur Puducherry. ” (1989) Petrorai Patri; Pondicherry ” (1992) Ya (Yaa); Pondicherry Burrow T. and M.B. Emeneau (1984); A Dravidian Etymological Dictionary; Second Edition; Oxford; O.U.P. Caldwell, Rev. Robert, (1875); A comparative grammer of the Dravidian or South Indian Family of languages; II Edn; London (I Edn: 1856) Carstairs McCarthy, Andrew (1997): Review of Ruhlen, 1994: in Language, 73. 611-3 Cavalli-Sf or za, L. Lucas; Paolo Menozzi and Alberto piazzo (1994): The history and geopraphy of Human genes; Princcton, New Jersey; Priccton University Press. Devaneya Pavanar, G. (1940) Oppiyan Moli Nul - Tamil ” ” (1943) Cuttu Vilakkam ” ” (1944) Tiravitattai ” ” (1949) Collarayccik Katturaikal ” ” (1953) Mudhal Thai Moli ” ” (1966) The Primary Classical Language of the worl ” ” (1967) Tamil Varalaru ” ” (1968) Vannanai Moli Nulin Valuvial ” ” (1967) Vata Moli Varalaru ” ” (1972) Tamilar Varalaru ” (1964 Dec - 1977 Aug): Articles in Centamil Celvi on 54 basic toots in Tamil whose secondery, tertiary etc derivatives have been traced by him in many language families other than Dravidian (VER-C-COL Katturaikal) ” (1977 Sep to 1980 Sep); Articles in Centamil Celvi on how thousands of words ultimately traceable to 22+2 Basic Tamil words/groups of words have spread to many other language families including Indo-European. (reprinted as Talaymay Tamil in 2001) ” (1985); Posthumous; Centamil Corpirappiyal Perakara mutali (words from a to acaimukam) Dixon, R.M.W. (1980); The Languages of Australia; Cambridge; Cambridge University press. ” (1997); The rise and fall of languages; Cambridge; Cambridge University press. Dolgopolsky, Aharon, 1998; The Nostratic Macro family and linguistic Palaentology; Cambridge; The Madonald institute for Archaeological Reseach Gnanaprakasa, Nallur S (2938-48): An etymological and comparative lexicon of the Tamil language: Jaffna ” (1953): Linguistic evidence for the common origin of the Dravidians and Indo-Europeans: TAMIL CULTURE; Tuticorin II-I; PP 88-112. Greenberg Joseph R.(2000/2001) Indo-European and its closest relatives- The Eurasiatic language family: Vol I Grammer; II: Lexicon Standford University Press; Standford; California; pp 326, Hakola, H.P.A (200): 1000 DURALJAN etyma: An extended study in the lexical similarities in the major agglutinative Languages; Kuopio; Finland ” and Hajat Assadian (2003): SUMERIAN and Proto-Duraljan; Kuopio; Finland Hegdeus, Iren; etal (1997): Indo-European, Nostratic and beyond (Fest-Schrift for Vitaly V.Shvoroshkin) Washington: Institute for the study of man. Heras, Rev H.(1953): Studies in proto-Indo-Mediterranean culture: Bombay Hulbert, Homer B (1905): A comparative grammar of the Korean Language and the Dravidian Languages of India; Scoul: The Methodist Publishing House. Jones, Steve; et al (1992): The Cambridge Encyclopaedia of Human Evolution; Cambridge University Press Kaye, Alan S. (1963): Dravidian origins and the West; Madras; Orient Longmans Levitt, Stephan Hillyer(1998): Is there a genetic relationship between Indo-European and Dravidian? The Journal of Indo-European Studies 26; PP. 131-159 Levitt, (2000) Some more possible relationships between Indo European and Dravidian; The Journal of I-E.S; 28 pp 407-438 Madhivanan, R (1995) Indus Script-Dravidian; Madras; Tamil Canror Peravai ” (1995) Indus script among Dravidian speakers; Madras Meillet (1930): Apercu d une historie d la langue Grecque; (7th Edn.) (quoted by James Barr in Transactions of Philological society; 1983) Pope, G.U. (1855): A handbook of Tamil language Prichard, James Cowies (1847): Researches into the physical history of mankind, world civilisation, races, tribes and cultures; Vol IV Oceania and America; London; Sherwood, Gilbert and Piper Ramanathan P (1969): Irunkovel and Kottai Vellarar - the possible origins of a closed community” :BSOAS London; 1969 Part II ” (1984): Australiap palankudi makkal molikalum Tamilum; Centamil Celvi, Madras May 1984 ” (1991): Diravidar Uravumurai: Tamil Polil: Thanjavur; May-June 1991 ” (1998): A new Account of the History and culture of the Tamils; SISSW Publishing Society சிந்துவெளித் தொல் தமிழ நாகரிகம் ” (2002) “ Direction of movement of Dravidian speakers in prehistoric times; : Descent from north OR ascent from south? Certain implications of current Nostratic Studies etc. (Paper read on 13-11-2002 at 30th All India Conference or Dravidian Linguistics at Karnatak University, Dharwad. (Published in Dravidian Studies (Journal of Dravidian University ; Kuppam Vol I-3 (April-June 2003) Renfrew, Colin (1987): Archacology and Language: the puzzle of Indo-European Origins; London; Jonathan Cape ” (1989): Models of change in language and Archacology; Transactions of Philological Society; 87:pp 103-55 and 172-178 ” (1994): World Linguistic Diversity; Scientific American Jan,1994; pp. 116-123 ” (1997): World linguistic diversity and farming dispersals in Blench, R and M. Spriggs: Archealogy and language 1 Theretical and methological Orientations; London; Routledge. Rublen,Merritt (1994a) The origin of Language - Tracing the evolution of the mother tongue; New York; John Wiley ” (1994b) On the origin of languages - Studies in Linguistic Taxonomy; Stanford University Press. Sims - Williams, Patrick (1998): Genetics, Linguistics and Prehistory: thinking big and thinking Straight; ANTIQUITTY; 72: PP 505-27 Steever, Sanford B (1998): The Dravidian languages; London; Routledge Swadesh,, Morris (1971): The origin and diversification of language; Chigago; Aldine Press Thani Nayagam, Dr Xavier Z (1953) Nature in ancient Tamil poetry; Trask, R.L. (1996) Historical Linguistics; London; Arnold Trautmann, Thomas R (1981) Dravidian Kinship; Cambridge University Press Upadhaya, U.P. (1976): Dravidian and Negro - African; IJDL 5(1) pp 32-64 Vacek: The Dravido - Altaic relationship; Archiv Orientalni; 55 (1987) PP 134-149 zVELEBIL, K.V. (1972): The descent of the Dravidians: IJDL 2 pp 57-63 (1990): Dravidian Linguistics, an introduction; Pondicherry Institute of Linguistics and Culture (1991): Dravidian and Japanese once again; Archiv Orientalni; Praha; 59: pp 73-77 உ. 2) சிந்துவெளி நாகரிகமும் இந்திய நாகரிகத்தில் அதன் இடமும் Hewitt, J.F.1888 Notes on the early history of Northern India JOURNAL OF R.A.S. London XX - p 321 - 363 Hall, H.R. 1913 The Ancient History of the Nearest East; 7th revised edition 1927 London Methuen Pargiter, F.E. 1922: The Ancient History of the Nearest East: OUP London Sesha Iyengar, T.R. 1925: The Ancient Dravidians : Madras Srinivasa Iyenger, P.T. 1925: LIFE IN ANCIENT INDIA IN THE AGE OF THE MANTRAS; Madras 1929: HISTORY OF THE TAMILS FROM THE EARLIEST TIMES TO 600 A.D.; Madras Marshall, Sir John; 1931; MOHENJODARO AND THE INDUS CIVILISATION; London. Ramachandra Dikshitar, V.R. 1947: ORIGIN AND SPREAD OF THE TAMILS; Madras Heras, Rev H. 1953: STUDIES IN PROTO INTOO MEDITERRANEAN CULTURE; Vol I; Burrow, T. 1963: On the significance of the term arma-armaka in Early Sanskrit literature; JOURNAL OF INDIAN HISTORY; XLI; pp159-168 1973: THE SANSKRIT LANGUAGE; II Edition; Faber, London. 1973: The proto Indo-Aryans; Journal of R.A.S.; London 1973-2 pp 123-140 Kosambi D.D. 1964: THE CULTURE AND CIVILISATION OF ANCIENT INDIA IN HISTORICAL OUTLINE Wheeler, Sir M 1968: THE INDUS CIVILISATION; Cambridge University Press Fairservis, Walter A.1971 THE ROOTS OF ANCIENT INDIA; II Edn; London Kumar G.D.(1973): The ethnic components of the builders of the Indus Valley civilisation and the advent of the Indo-Aryans; JOURNAL OF INDO-EUROPEAN STUDIES; Vol I pp 66-80 Basham, A.L.; 1975: A CULTURAL HISTORY OF INDIA; Oxford Shendge, Malati J: 1977: THE CIVILIZED DEMONS- THE HARAPPANS IN RG VEDA; Abhinav; New Delhi Possehl, Gregory; 1979: ANCIENT CITIES OF THE INDUS; Vikas; N.Delhi 1982: HARAPPAN CIVILSATION, A CONTEMPORARY PERSPECTIVE New Delhi; Oxford and IBH;II Edn: 1993 1999: INDUS AGE-THE BEGINNING; Oxford and IBH; pp 1063 2000-1: The early harappan phase; AND The mature Harappan phase; BULLETIN of THE DECCAN COLLEGE, Pune 2003: THE INDUS CIVILISATION- A CONTEMPORARY PERSPECTIVE; Venkatachalam, K.1983: A study of the weights and measures of the Indus Valleyoivilisation; Tamil University Seminar paper Dandekar, R.N, 1987: HARAPPAN BIBILIOGRAPHY; Bhandarkar ORI; Poona pp 495 Parpola, Asko; 1988: The coming of the Aryans to Iran and India and the cultural and ethnic identity of Dasas; STUDIA ORENTALIA VOL 64; Helsinki; pp 165-265 Ratnagar, Shireen; 1991: ENQUIRIES INTO THE POLITICAL ORGANIZATION OF HARAPPAN SOCIETY Pune- Ravish Sundar Raj, M; 1992: IS THE VEDA DIVINE REVELATION? INDUS VALLEY AND THE VEDA; Affiliated East-West Press; Madras Velu, Kuruvikkarambai; 1992: TAMIL KINGDOM AT HARAPPA: Valavan Patippakam; Madras; 2001: HARAPPAVIL TAMILAR NAKARIKAM; Sivasakthi Pathippakam , Nagapattinam Samy, P.L.1994, Jan: Harappavin Tamil Peyar; CENTAMIL CELVI Nov: Karcciraiyum Harappavum; Chakrabarti, Dilip K: THE ARCHAEOLOGY OF ANCIENT INDIAN CITIES; OUP 1995 1999:INDIA AN ARCHAEOLOGICAL HISTORY; PALAEOLITHIC BEGINNINGS TO EARLY HISTORIC FOUNDATIONS; OUP Allchin, Bridget and Raymond 1998 THE BIRTH OF CIVILISATION IN INDIA AND PAKISTAN: Cambridge Allchin F.R. 1995: THE ARCHAEOLOGY OF EARLY HISTORIC SOUTH ASIA; Cambridge Lall, B.B. 1998: Rig Vedic Aryans: the debate must go on; EAST AND WEST (Rome); 48: 3-4 Sharma, Ram Sharan 1999: Identity of the Indus culture: EAST AND WEST; (Vol.49) Ramanathan P. 1999: CINTU VELI-t-TOL TAMILA NAKARIKAM; SISSW; Chennai Edwards, Mike, 2000: Indus Civilization-clues to an ancient people ; NATIONAL GEOGRAPHIC; June 2000; pp 108-129 Lahiri, Nayanjot;2000: THE DECLINE AND FALL OF THE INDUS VALLEY CIVILISATION: Permanent Black; New Delhi Kochchar, Rajesh, 2000: THE VEDIC PEOPLE-THEIR HISTORY AND GEOGRAPHY; Delhi; Sangam Books; pp 259 Dhanda, R.C. 2001: HARAPPAN ORIGIN OF HINDUISM ; Hyderabad; Book Links Sen, Aloka Parasher, 2002: The Sanskrit word “Mleccha”-a possible proto-Dravidian etymology; DRAVIDIAN STUDIES ; Kuppam Vol I-1 2) சிந்துவெளி எழுத்துக்கள் Marshall. Sir John: Mohenjodaro and the Indus Civilisation: 1931; (ch XXII and XXIII of volume II contain “Sign list of early Indus script” by G.S. Gadd; “Mechanical nature of early Indian writting” by Sidney Smithy; and “The Indus script” by S.Langdon.) Hunter. G.R.: The Script of Harappa and Mohenjodaro and its connection with other scripts: 1934; Kegan Paul, London: pp 210 Heras, Rev H: Studies in Proto-Indo-Mediterranean culture - Vol I 1953; This book and numerous articles listed in the book set out Heras’ decipherment of Indus Script as logographic. “The Dravidians of Iran”, INDICA - The IHRI Silver jobliee commemoration volume Bombay 1953 see pp 166-9 Journal of Tamil Studies: Vol II-Part I: Special number on decipherment of Indus Script; pp 291 (Contains articles by Knorozou Parpola etc; besides views of T.Burrow and others on the decipherment claims. Also I, Mahadevan’s article: “ Dravidian parallets in proto - Indian Script” pp 157-276) Kinnier Wilson J.V.- Indo-Sumerian; A new approach to the problems of the Indus Script. Oxford 1974 Mahadevan, I: The Indus script: Texts, Concordance and tables; 1977; ASI: New Delhi “What do we know about the Indus script neti neti” Journal of the Institute of Asian Studes, Madras VII - 1Sep 1989; pp 1-36 (Paper read at 49th session of IHC Dharwar 1988) see also his address on 28-12-2001 at 62nd session of IHC at Bhopal. The cult object on Unicorn seals: A sacred filter, 435-445 of “SOUTH ASIAN ARCH AEOLOGY; 1993” - Helsinki, 1994) “Murukan in the Indus script” JIAS, Madras XVI-2; 1999 pp 22-39 The Indus -like symbols on megalithic pottery: new evidence; STUDIA ORIENTALIA (FINLAND) 94:2001 pp 379-386 Fairservisjr. Walter A: The script of the Indus Valley Civilisation; SCIENTIFIC AMERCIAN; March 1983 Fairservice, W.A. & P.C. Southworth: “Linguistic archaeology and the Indus Valley culture: at pp 133-141 of Kenoyer J.M: Old Problems and Perspectives Archaeology of South Asia, 1989; Wiscon sin Archaelogical Report: vol.2 Parpola, ASKO, and Joshi J.P.: Corpus of Indus Seals and Inscriptions:: Vol I Collections in India; 1987, Helsinki (3900 Photos of 1537) objects. ” and S.G.M. Shah; Corpus of Indus Seals and Inscriptions : Vol II Collections in Pakistan: 1991; Hel Sinki; (5453 Photos of 2138 objects; out of them photos of 500 objects published for first time) pp xxxii; 448 (Vol 3 will cover objects outside India and Pakistan) ” Deciphering the Indus script; 1994; Cambridge; ppxxii. 374 (The best overall introduction to the subject) ” “Dravidian and the Indus script; on the interpretation of some pivotal signs” Studia orientalia; University of Helsinkh; Vol 82; 1997 pp 167-191 Zvelbil, Kamil V: Dravidian Linguistics, an introduction; 1990; PILC Pondicherry; see Ch VI: “Dravidian and Harappan” pp 84-98 Poornachandra Jeeva: CINTU VELIYIL TAMIL MOLI; PUTHIYA AYVUKAL Thaiyal Patippakam; Pa Matarpakkam; 1990; pp 87 Winters, Clyde Ahmed: Ancient Dravidians: an introductory grammar of Harappan with vocabularies; JOURNAL OF TAMIL STUDIES; Madras; 41,42,43 and 44 (June 92: Dec 92 and June-Dec 1993) Possehl, Gregory: Indus Age, The Writing System; OUP India: 1996 Madhivanan Dr.R: Indus Script Dravidian; 1995; Tamilchanror Peravai Adyar Madras p.p. 286. Indus scriptamong Dravidian Speakers; 1995. International Society for the investigation of ancient civilisations; Guindy; Madras; 1995 pp 115 Szalek, Dr.: Benon Zbigniew: The Narmini Report; 1999 (Chair of Heuristics; Faculty of Arts ; University of Szezecin; Poland; pp 1016. He has read the Indus Valley script and the Easter Island script as both related and both Dravidian Gurumurthy, Dr.S: Deciphering the Indus script (from graffiti on ancient Indian Pottery) 1999 University of Madras pp 341 Wells B.(1999) An introduction to Indus writing 2nd edn (Early sites research society (West) Monograph series 2) Independance; M.O.; USA FRONTLINE (Chennai) 13-10-2000 and 24-11-2000 issues. contain articles by Michael Witzl, Asko Parpola and I.Mahadevan pointing out the unacceptablity of the decipherment (of Indus script as Vedic Sanskrit) made by N.Jha and N.S.Rajaram in their THE DECIPHERED INDUS SCRIPT (Delhi,2000) Robinson, Andrew (2002): Deciphering History; HISTORY TODAY (London) August 2002; pp 35-41 தொல் திராவிட /தமிழ் மொழியாக சிந்துவெளி எழுத்துக்களைப் படித்துளள அறிஞர் சிலரின் முயற்சிகளிலிருந்து மாதிரிகள் FATHER HERAS ஆண் அது மீன் குட வாழ்க்கை நண்ட் ஆண் “The Lord of the Water-jar and the Fish is the Weakeing and strengthening of the Lord” கடவுள் எட் ஓரிட் மீன் பேர் தளி அது This is the (eight) formed God one of whose sides (forms) (is) the sprinkled great fish. ASKO PARPOLA (பசுவின் தலை): ஆ - அது (இன்னாருடையது) எனக் குறிப்பது அறுமீன் கண்காணி காவடி - கா - காதலன் காதலோன் (மகன்) ஆள்/ஆண் WALTER FAIRSERVIS picture of mutalai (crocodile) = mutali (chief) = nor@ukku/nu##r@u (powder) picture of nel (rice) = nela (nila moon) ஆன் படுகாரு ஆரபிரிகை ஆ அம்பர படா சூர் “Patukaran powerful (noble) chief of the surrounding settlements” CLYDE AHMED WINTERS த செய் உ-இ மின்-இ லு அண்ணல் Much righteoumess, let it shine, bring here vitue. PURNA CHANDRA JEEVA ஆ னி ப ழ் மூ = மூழ்பனிஆ Dr.R.Madhivanan Kannannan Kan pannan BENON ZBIGNIEW SZALAK li maa we munnu wuri ka (kaa uuri mun wel maal) = protection end of the world before white great man) Y a m i i m i i Y i r u Ai mil mil Iru = Iru mii mii ai great heavenly heavenly king ங. தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் (i) GENERAL AND ENCYCLOPAEDIC WORKS Dubois, Abbe J.A. 1897: Hindu Manners, Customs and Ceremonies Thurston, Edgar. 1909: Castes and Tribes of Southern India; 7 Vols This magisterial work has been reprinted by many recently Risley, Sir Herbert. 1915: THE PEOPLE OF INDIA (Ed by W.Crooke) pp 472 + pl; Asian Reprint - 1999 Aiyappan, A 1948: Report on the Socio-economic conditions of the Aboriginal tribes of the Province of Madras; pp 187 Dumong, Louis. 1970: Homo Hierarchicus; London; pp 381 (Translation of French edition of 1966) Oliver, Georges, 1961: Anthropology des Tamouls du sud l’inde. Paris; pp 328 Pillai, K.K. 1979: The caste system in Tamil Nadu; pp 125 Trautmann, Thomas R.1981 DRAVIDIAN KINSHIP,Cambridge University press pp 472 Bayly, Susan. 1999: Caste, Society and Politics in India from the 18th century to the modern age; Cambridge ; pp421 (ii) CENSUS REPORTS 1961 Census:TAMILNADU REPORTS Part V- B,C,D and E: Ethnographic notes on Scheduled Tribes; Todas, Scheduled castes and Denotified tribes Part VI - Village Survey Monographs ( on each of following 40 villages) contain much ethnographic description as in 1961, relating to almost all castes in Tamilnadu:- Ayyangarkulam, Sunnambukulam - Chingleput Dt. Lakkinayayakanpatti, Thadagam, Arkavadi - S.Arcot Dt. Hasanampettai, Paravakkal - N.Arcot Dt Arkasanahalli, Kanagagiri, Pappanaickenpatti, Aladipatti, Iswara moorthi palayam, Kumbalam - Salem Dt. Nellithorai - Coimbatore Dt. Hallimoyar, Kinnakorai - The Nilgiri Dt. Vilpatti, Sirumalai, Periyur, Thiruvalavayanallur: - Madurai Dt Thenbaranadu, Thiruvellarai, Ariyur - Tiruchi Dt. Kadambangudi, Vilangulam, Kunnalur, Kodiakarai - Thanjavur Dt. Golwarpattil, Visavanoor, Athangarai - Ramanathapuram Dt. Ravanasamudra, Pudukulam, Alwarkarkulam, Kilakottai, Odaimarichan, Kuvalaikanni - Tirunelveli Dt. Koottumangalam, Kadathucheri, Kottuthazhamkulam, Kadukkara -Kanyakumari Dt. 1971 Census: Tamilnadu Reports Part VB: Ethnographic notes on Scheduled Castes ( 2 Vols) pp 392 + 503 Part VB1: Ethnographic notes on Scheduled Tribes; pp 268 (iii) WORKS ON PARTICULAR CASTES Dumont, Louis, 1957: Une sous - caste de l’Inde du sud, organisation sociale et religiouse des Pramalai Kallar (Eng translation: 1986: A SOUTH INDIAN SUB CASTE; OUP ; pp 501 Hardgrave, Dennis. 1996: THE VADAM of Tamilnadu : California; pp 314 Templeman, Dennis. 1996: THE NORTHERN NADARS of Tamil Nadu; OUP; Beck, Brenda, E.F. 1972: Peasant Society in Konku - A study of Right and Left Sub-castes in South India. University of British Columbia Hanumanthan, K.R. 1974: Untouchability in Tamilaham; Uty of Madurai Ph.D. thesis Subramaniam, K. 1974: The Brahmin priest of Tamilnadu; New Delhi pp 184 Hockings, Paul. 1980: Ancient Hindu Refugees - Badaga Social History 1550-1975; New Delhi; pp 285 Walker, Antony R. 1986: THE TODA OF SOUTH INDIA; New Delhi; pp 371 Zvelebil, K.V.; 1988: IRULAS OF BLUE MOUNTAINS; Syracuse University New York; pp 186 Setty, E.D.: 1990: THE VALAYARS OF SOUTH INDIA; 3 Vols; New Delhi Bharathi, Bhaktavatsala. 1999: COROMONDEL FISHERMEN - An ethnography of Pattanavar sub - caste; PILC, Pondicherry; pp 277  177 178 187 186 179 180 185 184 181 182 183 xvi தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967) தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே. ‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’ என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர். ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:- தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார். ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார். தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின. ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும். தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம். அகராதிப் பணி தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை. ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார். இலக்கியப் பணி புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள். பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர். தமிழ்மொழி - தமிழினம் தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை. திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும் தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:- திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார். பிற மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார். “ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.” வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்! தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன். அன்பன் கோ. தேவராசன் நூலறிமுகவுரை திரு. ந.சி. கந்தையா பிள்ளை 1930-40களில் தமிழ், தமிழிலக்கியம், தமிழ்மொழி, தமிழர் வரலாறு, திராவிட வரலாறு, தமிழ்நாட்டுக் குடிகள் போன்ற பல விடயங்கள் பற்றி அக்காலத்துச் சாதாரண தமிழ் வாசகர் நிலையில் பெரிதும் வாசிக்கப்பட்ட நூல்களை எழுதினார். பண்டைய இலக்கியங்களான அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற வற்றினை உரைநடையில் எழுதி மக்களிடையே சங்க இலக்கியம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தினார். திருக்குறளுக்கான ஒரு சொல்லடைவைத் திருக்குறள் அகராதி என்னும் பெயரில் வெளியிட்டவர். இவை யாவற்றுக்கும் மேலாக உலக வரலாற்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காலவரிசைப்படுத்தித் தந்தார். செந்தமிழ் அகராதி என்றவோர் அகர முதலியையும் தொகுத்தார். இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1940-50களில் இளைஞர் களாக இருந்த பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றிய தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாசிப்பு விடயங்களை அளித்தவர். இவருடைய பெரும்பாலான படைப்புக்கள் அக்காலத்திற் பிரசுரிக்கப் பட்ட ஒற்றுமை என்னும் இதழின் அலுவலகத்தாலேயே வெளியிடப் பெற்றன. இவர் வெளியிட்டனவற்றுள் பல ஒற்றுமை இதழில் வெளிவந் திருத்தல் வேண்டும். ஆனால், அதனை இப்பொழுது நிச்சயமாக என்னாற் சொல்ல முடியவில்லை. ஒற்றுமை அலுவலகம் இவற்றைப் பிரசுரித்தது என்பதை அறிவேன். ஏனெனில் இலங்கையில் தமிழாசிரியராக இருந்த எனது தகப்பனாரிடத்து இந்நூல்களிற் பெரும்பாலானவை இருந்தன. திரு ந.சி. கந்தையா பிள்ளையின் பெயர் தமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் காரணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப் பெற்றன. இந் நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளன. ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிற்கூட இவரது பெயர் முக்கியப் படுத்தப் பெறாது போயுள்ளது. மிகுந்த சிரமத்தின் பின்னர் அவரைப் பற்றிக் கிடைத்துள்ள தகவல்கள் பின்வருமாறு: சுவாமி ஞானப் பிரகாசர், ந.சி. கந்தையா பிள்ளை போன்ற அறிஞர்களின் தமிழ்ப் பங்களிப்புக்கள் தமிழகத்தில் போற்றப்படுகின்றமை ஈழத்தவர்க்குப் பெருமை தருகின்றது. இவர் எழுதிய நூல்களின் பெயரை நோக்கும்பொழுது தமிழ் வாசகர்களுக்கு உலக நிலைப்பட்ட, தமிழ்நிலைப் பட்ட தரவுகளைத் தொகுத்துத் தருவதே இவரது பெருஞ்சிரத்தையாக இருந்தது என்பது புலனாகின்றது. இப்பதிப்பகத்தின் பணியினை ஊக்குவிக்க வேண்டியது தமிழ்சார்ந்த நிறுவனங்களினதும் தமிழ்ப் பெரியோர்களினதும் கடமையாகும். உண்மையில் இதனை ஒரு அறிவுப்பசிப் பிணித் தீர்வாகவே நான் காண்கிறேன். 2/7, றாம்ஸ்கேட், அன்புடன் 58, 37ஆவது ஒழுங்கை, கார்த்திகேசு சிவத்தம்பி வெள்ளவத்தை, தகைசார் ஓய்வுநிலை பேராசிரியர் கொழும்பு - 6 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம். கருவிநூல் தந்த ந.சி. கந்தையா தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூலவர்களில் யாழ்ப்பாணம் தந்த பேரறிஞர் ந.சி. கந்தையாவும் ஒருவர். உண்மையான அறிஞர்களைக் காலங்கடந்து அடையாளம் காண்பதும் அவர்தம் படைப்புக்களைத் தேடிப் பிடித்துப் புரப்பதும் தமிழினத்தின் பழக்கங்களில் ஒன்று. தமிழின், தமிழரின் தொல்பழங்கால வரலாறு தொடர்பாகத் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. ஓர் ஆயிரம் நூல்களாவது தமிழின் தமிழரின் தொல்பழங்கால வரலாறுபற்றி வெளிவரவேண்டும். விரிவாக எழுதப்பட வேண்டிய தமிழ், தமிழர் வரலாற்று வரைவு முயற்சிக்கு வழிகாட்டும் கருவி நூல்களை வரைந்திருப்பவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார். உலகம் முழுவதும் உற்றுக் கவனிக்க வேண்டிய வரலாற்றிற்கு உரியவர்கள் தமிழர்கள். அவர்களே உலக மொழிகளை ஈன்ற மூலமொழிக்குச் சொந்தக்காரர்கள். அவர்களே உலக நாகரிகங்களின் பிறப்பிற்குக் காரணமான உலக முதல் நாகரிகத்தைப் படைத்தவர்கள். இந்த உண்மைகளைத் தமிழர்களும் அறியவில்லை உலகமும் அறியவில்லை. தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந் தமிழர், தமிழர் யார், உலக நாகரிகத்தில் தமிழர்பங்கு, சிந்துவெளித் தமிழர், தமிழ் இந்தியா, தமிழகம், மறைந்த நாகரிகங்கள் ஆகியன ந.சி. கந்தையாவின் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும். உலக முதல் நாகரிகம் என இன்று உலகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடிய நீல ஆற்றங்கரை நாகரிகம் (Nile Civilisation) தமிழ் நாகரிகத்தின் அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் வழிப்பட்ட நாகரிகமே என்பதை ஏராளமான சான்றுகளால் விளக்குபவை மேலைய நூல்கள். மொழிநிலையில் தமிழின் உலக முதன்மையைப் பாவாணர் நிலைநாட்டினார் என்றால் இன நிலையில் தமிழின உலக முதன்மையை ந.சி. கந்தையா நிலைநாட்டினார் என்று உரைக்கலாம். நீல ஆற்றங்கரை நாகரிக முடிவின்பின் நண்ணிலக் கடற் பகுதியில் உருவான பிறிதொரு வழிநாகரிகமே கிரேக்க நாகரிகம். கிரேக்க நாகரிகத் தின் உடைவில் தெறிப்பில் பிறகு மலர்ந்தவையே இன்றைய மேலை நாகரிகம். உலகின் எல்லா நாகரிகங்களையும் தாங்கிநிற்கும் தாய் நாகரிகமே தமிழ் நாகரிகம். தமிழ் நாகரிகத் தொன்மையைச் சங்க நூல்களுக்கு அப்பால் சிந்துவெளி அகழ்வாய்வும் உலக வரலாற்றாசிரியர்கள் உலக முதல் நாகரிகம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் நமக்கு மேலும் விளக்கும் பகுதிகளாகத் திகழ்கின்றன. இங்கெல்லாம் சென்று நுண்மாண் நுழைபுல முயற்சியால் தமிழின வரலாறு எழுதியவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார். ந.சி. கந்தையா பெருமகனார் நூல்களைத் தமிழரின் தொல்பழங்கால வரலாற்றைக் கற்கும் முயற்சியில் நான் ஈடுபடத்தொடங்கியபோது தேடிக் கற்றேன். பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் சென்ற ஆண்டு இயற்கையெய்திய வரலாற்றுப் பேரறிஞர் கோ. நிலவழகனார் ந.சி. கந்தையா அவர்களைச் சென்னையில் அவர் வாழ்ந்த நாளில் சந்தித்தது பற்றியும் அவரின் பன்னூற்புலமை பற்றியும் எம்மிடம் மகிழ்ந்து கூறுவார். ந.சி. கந்தையா அவர்களின் நூல்கள் பலவற்றையும் அவர் வைத்திருந்தார். அருகிய பழைய நூல்களைப் பேணுவாரிடத்திலும் நூலகங்கள் சிலவற்றிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்த ந.சி. கந்தையா நூல்களை மீண்டும் அச்சில் வெளியிடுவார் இலரே என்று கவலையுற்றேன். அமிழ்தம் பதிப்பகம் இவரின் நூல்களை வெளியிடுகின்றது. உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் இந் நூல்களை உச்சிமோந்து வாரியணைத்துப் புகழ்ந்து கற்றுப் பயனடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு. பேரா. கு. அரசேந்திரன் அணிந்துரை ந.சி. கந்தையா அவர்களுடைய இச் சிறந்த நூல்களுக்கு அணிந்துரை தேவையில்லை. அந் நூல்கள் எழுதப்பட்ட காலக் கட்டத்தில் ஆய்வுலகம் கொண்டிருந்த முடிவுகளை அவை செவ்வனே தருகின்றன. எனினும் அக் காலக் கட்டத்திற்குப் பின் வெளிவந்துள்ள சில முதன்மையான ஆய்வு முடிவுகள் கீழே தரப்படுகின்றன. தமிழர் யார்? அவர்கள் மாந்த இனத்தின் மூத்த குடியினர்; அவர்கள் மொழியாகிய தமிழ், மாந்தனின் முதல் தாய் மொழிக்கு மிக நெருங்கியது. இம் முடிவை 1946 வரை வெளிவந்திருந்த ஆய்வுகளின்படி ந.சி. கந்தையா தனது நூலில் நிறுவியுள்ளார். அதற்குப் பின்னர் கடந்த 57 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ள புதிய ஆய்வுகளும் இம் முடிவை மேலும் திண்ணமாக நிறுவுகின்றன என்பதைக் காண்போம். 2. தமிழ் என்னும் சொல்லின் திரிபே திராவிடம் (தமிழ், தமிள, த்ரமிள, த்ரமிட, த்ராவிட). திராவிட மொழிக் குடும்பம் என அழைப்பது தமிழிய மொழிக் குடும்பத்தையே. தொல் திராவிடம் (Proto - Dravidian) என்று வண்ணனை மொழி நூலாய்வாளர் மீட்டுருவாக்கம் செய்வனவற் றுள் பல பிழையாய் முடிகின்றன என்பதும் பழந்தமிழே இதற்குக் கட்டளைக் கல் ஆகக் கொள்ளப்பட வேண்டும் என்பதும் பாவாணர் கொள்கை. தமிழின் திரிபுகளே பிற திராவிட மொழிகள். பழந்தமிழின் வேறுபட்ட “தொல் திராவிடம்” என்பது கற்பனையே என்பர் பாவாணர். ஆகவே இக் கட்டுரையில் திராவிடம், தொல் திராவிடம் எனக் குறி யிடப்படுவனவெல்லாம் உண்மையில் பழந்தமிழையே குறிப்பதாகக் கொள்க. 3. தமிழர்கள் உலகில் இன்றுள்ள மற்ற எந்த மொழி, பண்பாட்டை யும் விட அதிகத் தொன்மையானதும் இடையீடு இல்லாததும் ஆன மொழி - பண்பாட்டின் வாரிசுகள் ஆவர். மாந்த இன நாகரிக வளர்ச்சியின் மிகச் சிறந்த இயல்களில் ஒன்று தமிழர் மரபுச் செல்வம் ஆகும். இன்றுள்ள மொழிகளில் மாந்தன் தொன்மொழிக்கு மிக நெருங்கியது தமிழ் மட்டுமே. “முதல் தாய்மொழி” ஆய்வில் ஈடுபட்டுள்ள அறிஞர்களுக்கு ஒளி தர வல்லதும் தமிழே. ஒரு சிறு நிலப்பரப்பின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றைச் சரியாகப் புரிந்து கொள்ள இப்படி மாந்த இனத்தின் ஒட்டுமொத்த இன, மொழி வரலாறுகளுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டிய நிலையில் உள்ள (தமிழகம் போன்ற) பகுதிகள் உலகில் சிலவே; தமிழ் தனித் தன்மை வாய்ந்தது. எஸ்.ஏ. டைலர் கூறியுள்ளது போல் இந்திய நாகரிகத்தின் அடித்தளம் திராவிட (தமிழ்) மொழி - பண்பாடு ஆகியவையே. (S.A. Tyler: “India, an Anthropological perspective (1973) “All of Inidan civilization is built on an underlying base of Dravidian language and culture”) ஆகவே இந்தியாவைப் பற்றிய ஆய்வுகளுக்கும் தமிழ் சார்ந்த ஆய்வுகள் மிக முக்கியமானவை. 4. இப்பொழுது பல நாடுகளிலுமுள்ள பல்துறை அறிஞர்களும் பொதுவாக ஏற்றுக் கைக் கொண்டுள்ள கருதுகோளின்படி தொல்திராவிட மொழி பேசுநர் தாயகம் வடகிழக்கு ஈரான் பகுதியாகும். அங்கிருந்து சுமார் கி.மு. 3000ஐ ஒட்டி அவர்கள் இந்தியா, தென்னிந்தியா, இலங்கையை நோக்கி அதாவது தெற்கு நோக்கி இடம் பெயர்ந்து சென்றனர். செல்லும் வழியில், பேருந்து வரும்பொழுது ஆங்காங்கு சிலர் இறக்கி விடப்படுவதுபோல, திராவிட மொழிபேசும் குழுக்கள் சில ஆங்காங்கு விட்டு வரப்பட்டன. (கே.வி. சுவலெபில் (1972): “திராவிடர்கள் இறக்கம்”-The descent of the Dravidians; திராவிட மொழியியல் பற்றிய பன்னாட்டு ஆய்விதழ் (IJDL) தொகுதி 2; பக். 57-63. பிரித்தானியக் கலைக் களஞ்சியத்தில் திராவிட மொழிகள் பற்றி அவர் எழுதியுள்ள கட்டுரையிலும் அவர் இக் கருத்தையே கூறுகிறார். தமது தென்னிந்திய வரலாறு (IVம் பதிப்பு, 1976) நூலில் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியும் இது “நடந்திருக்கக் கூடாதது அல்ல” (not unlikly) என்கிறார்.) 5. இதற்கு நேர்மாறான கொள்கை திராவிட மொழி பேசுநர் வடக்கு நோக்கிப் பரவினர் என்னும் “திராவிடர் ஏற்ற”க் கொள்கையாகும்: Dravidian ascent (from south). இப்பொழுது அது பழைய மோஸ்தர் கொள்கையாகக் கருதப்படினும் அதனை வலியுறுத்தியுள்ள அறிஞர்களுள் ஹெச். ஆர். ஹால்; ஹீராஸ் பாதிரியார், பி.தி. சீநிவாச ஐயங்கார், வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர், மறைமலை அடிகள், யு.ஆர். எஹ்ரென் பெல்ஸ், சேவியர். எஸ். தனிநாயகம் அடிகளார், ஞா. தேவநேயப் பாவாணர், கே.கே. பிள்ளை ஆகியோரும் அடங்குவர். 6. அண்மைக் காலத்தில் மாந்தன் முதன்மொழி பற்றிய ஆய்வுகள் மேல்நாடுகளில் மிக முன்னேறியுள்ளன. ஞால முதன் மொழிக்கு அடுத்த நிலையில் (தற்போதைய மொழிக் குடும்பங்கள் பலவற்றின் தாய்நிலையில் உள்ள) நாஸ்திராடிக் (Nostratic) மொழி இனம் பற்றிய ஆய்வுகள் பல வந்துள்ளன. அண்மையில் இறந்துபோன ஜே.எச். கிரீன்பெர்க் குறிப்பிடும் யூரேசியாடிக் மொழி இனத்துக்கும், அதிக வேறுபாடு இல்லை. இந்த நாஸ்டிராடிக்/யூரேசியாடிக் ஆய்வுகளில் அண்மையில் வெளிவந்துள்ள உண்மைகள் “திராவிடர் ஏற்ற”கொள்கையையே ஆதரிக்கின்றன. 7. இன்று உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் ஹோமோ சேப்பியன்ஸ் சேப்பியன்ஸ் (Homo Sapiens Sapiens) என்னும் ஒரே இனத்தைச் சார்ந்தவர்கள். இவ்வினத்தின் தோற்றம் பற்றி மாந்த இனவியல், தொல். பொருளியல், மாந்தர் மரபணுக்கூற்று இயல் போன்ற துறை வல்லுநர்களின் இன்றைய கருத்து என்ன? இவ்வினம் ஆப்பிரிக்காவில் உருவானது; சுமார் 1,50,000 ஆண்டுகளுக்கும் 1,00,000 ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட ஒரு காலக் காட்டத்தில் உருவானது; பின்வருமாறு மாந்தர் உலகின் பல பகுதிகளுக்கும் பரவினர். அதாவது. சைபீரியாவுக்கு இன்றைக்கு 30,000 ஆண்டுகளுக்கு முன்னரும் ஐரோப்பாவுக்கு ” 40,000 ” ” வட/தென் அமெரிக்காவுக்கு” 30,000 - 12,000 ” ” ஆஸ்திரேலியாவுக்கு ” 50,000 ” ” ஜப்பானுக்கு ” 30,000 ” ” நியூகினி தீவுக்கு ” 32,000 ” ” பசிபிக் தீவுகளுக்கு ” 4,000-1000 ” ” (மைக்ரோனீசியா, பாலினீசியா) பரவினர் என்பது வல்லுநர்கள் கருத்து. இன்று உலகில் உள்ள மொழிகள் அனைத்தும் ஒரே முதன்மொழியிலிருந்து தோன்றியிருக்க வாய்ப்புண்டு என்ற கொள்கை 19ஆம் நூற்றாண்டில் மாக்ஸ் முல்லருக்கும் இசைவானதே. 20ஆம் நூற்றாண்டில் ஞால முதன்மொழி ஆய்வில் ஈடுபட்ட மேனாட்டறிஞர்கள் பெடர்சன், திராம்பெட்டி, சுவாதெசு, கிரீன்பெர்க், மெரிட்-ரூலன், இல்லிச் சுவிதிச், டால்கோபால்ஸ்கி செவரோஸ்கின், ஸ்தாரோஸ்தின், பாம்ஹார்டு மற்றும் கெர்ன்ஸ் போன்ற பலராவர். பல்வேறு மொழிக் குடும்பங்களையும் பின்வருமாறு ஒருசில பெருங்குடும்பங்களாக (Super-families) வகைப்படுத்தலாம் என்பது அவர்கள் கண்டுள்ள உண்மையாகும்:- i. நாஸ்டிராடிக் (இந்தோ-ஐரோப்பியன், திராவிட மொழிகள், உராலிக், அல்தாய்க், கார்த்வெல்லியன், ஆப்ரோ - ஏசியாடிக் - அதாவது செமித்திய ஹாமித்தியக் குடும்பம், ஆகிய மொழிக் குடும்பங்கள் இதில் அடங்கும்) கிரீன்பெர்க் வகுத்துளள யூரேசியாடிக் பெருங்குடும்பத்துக்கும் இதற்கும் அதிக வேறுபாடு இல்லை. யூரேசியாடிக் - கில் அடங்கியவை எத்ருஸ்கன், இந்தோ - ஐரோப்பியன், உராலிக் - யூகாகீர், அல்தாய்க், கொரியன் - சப்பானியம் - ஐனு, கில்யாக், சுகோதியன், எஸ்கிமோ - அல்யூத் ஆகிய மொழிக்குடும்பங்களாகும்) 2000 அக்டோபரில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பத்ரி ராஜு கிருஷ்ணமூர்த்தியை கிரீன்பெர்கு சந்தித்த பொழுது “திராவிட மொழி யூரேசியாடிக் பெருங்குடும்பத்தின் சகோதரியாக இருக்கலாம், மகளாக இருக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார் (B. Krishnamurthi. The Dravidian Languages; 2003, பக். 46). ii. சீன - காகேசியன் iii. ஆஸ்திரிக் (முண்டா போன்றவை) iv. அமெரிக்க இந்திய மொழிகள் v. இந்தோ - பசிபிக் vi. கோய்சான் vii. சாங்கோ - சகாரா மொழிக்குடும்பங்களை இணைத்து அவற்றுக்கு முந்திய மொழிப் பெருங்குடும்பங்களை நிர்ணயிக்கும் ஆய்வாளர்களுள் சிலர் அதற்கும் மேலேபோய் ஞால முதன்மொழி (மாந்தன் முதல் தாய்மொழி) ஆய்வுக்கும் சென்றுள்ளனர். மெரிட் ரூலன் தனது மொழிகளின் தோற்றம் - மொழிகளின் கொடிவழி ஆய்வு (ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம், 1994) நூலின் பக்கம் 277 இல் கூறுவது வருமாறு: “பெரும்பாலான மொழியியலறிஞர்கள் ஒத்துக் கொள்ளாவிடினும் அல்லது ஐயப்பாட்டுடன் கருதினும் இன்றுள்ள மொழிகள் அனைத்தும் (இன்று இறந்துவிட்ட ஆனால் முன்னர் நிலவியதற்குச் சான்றுகள் கிட்டியுள்ள மொழிகள் உட்பட) ஒரே ஞால முதன்மொழியிலிருந்து தான் தோன்றின என்பதற்கு வலுவான ஆதாரம் உள்ளது.” 8. இராபர்ட் கால்டுவெல் பாதிரியார் 1856இல் தனது திராவிட அதாவது தென் இந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் மாபெரும் நூலை வெளியிட்டார். திருந்திய விரிவான இரண்டாம் பதிப்பு 1875இல் வெளியானது. ஒருபுறம் திராவிட மொழிகளுக்கும் மறுபுறம், இந்தோ - ஐரோப்பிய மொழிகள் செமித்திய மொழிகள் எலாமைட் மொழி சித்திய (இப்பொழுது “உரால் - அல்டாய்க்”) மொழிகள் சப்பானிய மொழி ஆஸ்திரேலியப் பழங்குடிகள் மொழிகள் ஆகியவற்றுக்கும் இடையே காணும் இலக்கண ஒப்புமைகள் சொல் ஒப்புமைகள் ஆகியவற்றைப் பற்றி ஏராளமான தகவல்களை அவர் தந்தார். இம்மொழிக் குடும்பங்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிரியுமுன்னர் இருந்த (மாந்தன் தொன்மொழியின்) நிலையை விளக்குவதற்கான ஒளியைத் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்த மொழிகளிலிருந்துதான் பெற்றாக வேண்டும் என்பதை அத் தகவல்கள் வலுவாக நிறுவின. இவ்வகையில் திராவிட (தமிழிய) மொழிகளின் முக்கியத்துவத்தைக் கால்டுவெல்லுக்கு முன்னர்க் கண்டுபிடித்து வெளியிட்டவர் எவரும் இலர். 1855இல் வெளியிட்ட தனது “தமிழ்மொழிக் கையேடு” நூலில் ஜி.யூ.போப் தெரிவித்துள்ள பின்வரும் கருத்தும் நினைவிற் கொள்ளத்தக்கது: “(தமிழிய, அதாவது திராவிட மொழிகள்) சமஸ்கிருதம் தோன்றிய காலத்தில் தோன்றியதும், சமஸ்கிருதம் எந்த முன்மொழியிலிருந்து தோன்றியதோ அதே முன்மொழியிலிருந்தே தோன்றியதும் ஆன ஒரு மொழியிலிருந்து உருவாகிப் பின் பிரிந்தவை ஆகும். அந்தத் தமிழிய மொழிகளுக்கும் (இந்தோ ஆரிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்த) கிரீக், கோதிக், பாரசீகம் முதலிய மொழிகளுக்கும் இடையே ஒப்புமை இருந்ததைக் காட்டும் பல சான்றுகள் உள்ளன. சம்ஸ்கிருதத்துக்கும் தமிழிய மொழிகளுக்கும் ஒப்புமை இல்லாத நேர்வுகளிலும் கூட அத்தகைய ஒப்புமைகள் உள்ளன” கால்டுவெல் கோடிட்டுக் காட்டியதை மேலும் நுணுகி ஆராய்ந்து “மாந்த இன முதன் மொழி ஒன்றாகத்தான் இருந்திருக்க வேண்டும்; மிகு தொன்மை வாய்ந்த தமிழே அனைத்து மொழிக் குடும்பங்களுக்கும் (இந்தோ - ஆரிய மொழிகள் உட்பட) மூலமான மொழியாகக் கருதப்படவேண்டும்” என்ற கோட்பாட்டை, மாகறல் கார்த்திகேய முதலியார் 1913லும் கா. சுப்பிரமணிய பிள்ளை 1920களிலும் மேலும் விரிவாக, ஆழமாக நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் 1930, 1940களிலும் ஞா. தேவநேயப் பாவாணர் 1940 - 1980 காலக் கட்டத்திலும் நிறுவியுள்ளனர். இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்ப மொழிகளின் (ஏன், பிறமொழிக் குடும்ப மொழிகளுக்கும்தான்) அடிப்படைச் சொற்கள் பலவற்றுக்கு ஞானப்பிரகாசரும் பாவாணரும் நூற்றுக்கணக்கான பொருத்தமான தொல்-திராவிட வேர்ச்சொற்களை இனம் காட்டியுள்ளனர். 1953 இல் ஞானப்பிரகாசர் தெரிவித்த கருத்து வருமாறு: “இந்தோ ஐரோப்பிய மொழிகளில் ‘வேர்கள் என உன்னிக்கப்படுபவை பொருள் தொடர்பற்ற வெறும் குறியீடுகள்தாம். திராவிட மொழி வேர்களோவெனில் ஐயத்திற்கிடமின்றிப் பொருளையும் காரணத்தையும் காட்டுபவையாக உயிரோட்டமுள்ள முளைக் கரு போலத் தோன்றும்; எந்தக் கருத்தோட்டத்தில் பல்வேறு சொற்கள் உருவாயின என்பதைத் தெற்றென அவை காட்டும் வகையில் அமைந்துள்ளன. இத்தன்மை அவற்றுக்கு இல்லாததால் இந்தோ ஐரோப்பிய “வேர்கள்” இருள் மண்டிய பொருளற்ற வெறும் ஒலிக்குவியல்களாகவே தோன்றும். அவற்றுக்கும் தெளிவு தந்து ஒளிகாட்டி உயிரூட்டம் தரத்கூடியவை திராவிட மொழி வேர்கள்தாம்.” பிறமொழி வேர்களுக்கும் இக் கருத்து பெரும் அளவுக்குப் பொருந்துவதாகும். 9. இந்தோ ஆரியமொழியின் ரிக்வேத நிலையிலேயே நுழைந்துள்ள திராவிடச் சொற்களாக சுமார் நாற்பது - ஐம்பது சொற்களை பரோ, எமெனோ போன்றவர்கள் ஏற்கெனவே அடையாளம் கண்டுள்ளனர். தனது திராவிட மொழியியல் - ஓர் அறிமுகம் (1990) நூலில் இதைக் குறிப்பிடும் சுவெலபில், ரிக்வேதக் காலத்திலிருந்தே இந்தோ ஆரிய மொழி கடன் பெற்றுள்ள சுமார் 10 மொழியியற் கூறுகளைப் பட்டியலிட்டுள்ளார்: இவையெல்லாம் வேத/சம்ஸ்கிருத மொழியில் திராவிட மொழியின் தாக்கம் என்ற அளவில்தான் இவர்கள் ஆய்வுகள் உள்ளன. ஆனால் ஞானப்பிரகாசரும் பாவாணரும் கண்ட முடிவுகள் இவற்றைவிட மிக விஞ்சியவை. அவ் விருவர் கருத்து இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் அடிப்படை வேர்ச் சொற்கள் பலவும் தொல் - திராவிட மொழியிலிருந்து பெற்றவையே என்பதாகும். இந்த உண்மையை உணராமல் இந்தோ-ஐரோப்பிய மொழியியல் ஆய்வாளர் உன்னித்து உருவாக்கும் “தொல்-இந்தோ ஐரோப்பிய வேர்கள்” பலவும் ஏற்கத்தக்கவையல்ல என்பதும் அவ் விருவர் கருத்து ஆகும். தேவநேயப் பாவாணர் தமது ஆய்வு நூல்களில் கண்டு நிறுவியுள்ள தமிழ்-இந்தோ ஐரோப்பிய/ஆரிய ஒப்புமைச் சொற்களில் நூற்றுக்கணக்கானவை ஏற்கத்தக்கவை (reasonable and perceptive) என்று டாக்டர் ஸ்டெபான் ஹில்யர் லெவிட் அண்மையில் இந்தோ ஐரோப்பிய (மொழியியல்) ஆய்விதழில் (மடலம் 28:3-4; 2000 சூன் - திசம்பர் பக்கம் 407-438 இல்) வெளியிட்ட தம் கட்டுரையில் ஏற்றுள்ளார். மேலும் 2000 இல் வெளியான “இந்தோ ஐரோப்பிய மொழிகளும் அவற்றோடு நெருங்கிய உறவுடையவையும்: யூரேசியாடிக் மொழிப் பெருங்குடும்பம்: மடலம்I: இலக்கணம்” என்னும் நூலில் கிரீன்பெர்க் யூரேசியாடிக் பெருங்குடும்பத்தின் முக்கியமான இலக்கண ஒப்புமைகள் 72-ஐக் குறிப்பிட்டுள்ளார். அந்த 72 இனங்களில் 20-க்கு மேற்பட்டவற்றுக்குத் திராவிட மொழிகளின் இலக்கணக் கூறுகளும் பொருந்திவருகின்றன. மாந்தஇன முதன்மொழி ஆய்வுகள் மேலும் தெளிவு பெறும்பொழுது திராவிடமொழி நாஸ்திராடிக்/யூரேசியாடிக் மொழிப் பெருங்குடும்பத்தின் மகளாயினும் ஆகுக, உடன்பிறப்பு ஆகினும் ஆகுக - திராவிட (தமிழ்) மொழிசார் தரவுகள் பயன்படுத்தப்பட்டால் இத்தகைய ஆய்வுகள் வன்மையும் எழிலும் பெறும் என்பதில் ஐயமில்லை. 10. திராவிட மொழிகளுக்கும் பிற மொழிக் குடும்பங்களுக்கும் இடையேயுள்ள உறவுகள் குறித்து இதுவரை பின்வரும் ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. நாஸ்திராடிக்/யூரேசியாடிக் பெருங்குடும்பம் 1. திராவிடமும் உரால்-அல்- பரோ, மெங்கெஸ், டைலர், அந்திரனாவ், டாய்க்மொழிக்குடும்பமும் வாசக், ஹெச்.பி.ஏ. ஹகோலா. 2. திராவிடமும் எலாமைட் மொழியும் மக்-ஆல்பின். 3. திராவிடமும் சப்பானியமும் சுசுமு ஓனோ; பொன். கோதண்ட ராமன்; ஹெச்.பி.ஏ. ஹகோலா. (சுவெலபில் 1990 நூல் பக்கம் 99-122 இல் மேலே (1)-(3) பற்றிய செய்திச் சுருக்கம் காண்க) மொழிப் பெருங்குடும்பங்களில் ஏனையவை 4. திராவிடமும் சுமேரிய மொழியும் ஹீராஸ், ஏ. சதாசிவன், ஜே.வி. கின்னியர் வில்சன்; ஹெச். பி. ஏ. ஹகோலா 5. திராவிடமும் மைதன்னியும் ஜி. டபுள்யு. பிரவுன். 6. திராவிடமும் கொரியமும் ஹுல்பர்ட், பவுன்துரை. 7. திராவிடமும் பாஸ்கு ஹீராஸ், லாகோவாரி; பெனான் ஸ்பிக்னூ மொழியும் (ஸ்பெயின்) சாலெக் 8. திராவிடமும்ஆஸ்தி ரேலியப் பழங்குடி மக்கள் நாரிஸ், பிரிச்சார்டு, ஆர்.எம்.டபுள்யூ. மொழிகளும் டிக்சன், பி. இராமநாதன். 9. திராவிடமும் கொஷுவா மொழியும் (பெருநாடு) ஹெச்.பி.ஏ. ஹகோலா (இப் பத்தியின் விரிவை கோ. இராமச்சந்திரன் : உலகமொழிகளில் தமிழ்ச் சொற்கள் (2002) நூலில் காண்க) 11. திராவிடமொழி பேசுநர் கி.மு. 3000-ஐ ஒட்டி இந்தியாவுக்குள் நுழைந்தனர் என்ற சுவெலபில் கோட்பாடு மேலே 6-10 பத்திகளிற் சொன்னவற்றோடு பொருந்தி வருகிறதா? மொழிப்பெருங் குடும்பங்களுக்கிடையேயுள்ள வரலாற்றுக் காலத்துக்கு முந்திய உறவுகளைப் பற்றி ஆய்வுசெய்யும் அறிஞர் பலர் இத் தவறான கோட்பாட்டினை ஒட்பம் இன்றிப் பின்பற்றிவருகின்றனர். எடுத்துக்காட்டாக ஆர். பிளெஞ்ச் & எம். ஸ்பிரிக்ஸ் 1997 இல் தொகுத்து வெளியிட்ட தொல்லியலும் மொழியும்: (1) கோட்பாட்டு - ஆய்வுநெறிக் கருத்தோட்டங்கள் என்னும் நூலில் ரென்புரூ பின்வரும் முடிவைக் கூறுகிறார்:- “(மத்திய கிழக்குப் பகுதிகளில் இருந்து வேளாண்மைத் தொழில் மக்கள் பண்டு பரவத்தொடங்கியது பற்றிய) தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் தொல் இந்தோ ஐரோப்பியன், தொல் ஆப்ரோ-ஏசியாடிக், தொல் எலாமைட்-திராவிடம், தொல் அல்டாய் மொழிகள் ஆகிய மொழிகளைப் பேசியோர் அனைவரும் மிகச் சுருங்கிய மையக் கிழக்கு நிலப்பகுதியில் (சுமேரியா, எலாம், இன்றைய துருக்கி) உடன் உறைந்து இருக்க வேண்டும். இம் மொழிகள் எல்லாம் (நாஸ்திராடிக் மொழியியலாளர் கூறுவதுபோல்) தொடர்புடையவையாக இருப்பது உண்மையானால் அவர்களெல்லாம் அப் பகுதியை விட்டுப் பிரிந்து விலகிய கி.மு. 8000-6000 காலக்கட்டத்துக்கு முன்னர் ஒருசில ஆயிரம் ஆண்டுகள் இம் மொழிகள் அனைத்திற்கும் மூலமான நாஸ்திராடிக் மொழி அந் நிலப்பகுதியில் பேசப்பட்டிருக்க வேண்டும் என்பது தொல்லியல் கண்டுபிடிப்புக்களுக்கும் ஒத்து வரும் வாதமாகும்” இவ்வாறு தொல்-நாஸ்திராடிக் பேசியவர்கள் அனைவரும் 10000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருங்கே மையக் கிழக்குப் பகுதியில் வாழ்ந்திருந்தார்கள் என்ற இந்தக் கோட்பாட்டையும் (அதன் தொடர்பாடான “இந்தியாவுக்குள் அங்கிருந்து திராவிடர்கள் இறங்கியது சுமார் கி.மு. 3000-ஐ ஒட்டித்தான்” என்ற கோட்பாட்டையும்) பொய்ப்பிப்பது திராவிட மொழிகளுக்கும் ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் மொழிகளுக்கும் இடையே உள்ள நெருங்கிய பிணைப்பு ஆகும் இனி தொல்-திராவிட-ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் மொழிபற்றிய செய்திகளைக் காண்போம். 12. ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் எண்ணிக்கை 1770 இல் சுமார் 3 லட்சத்திற்கும் 10 லட்சத்திற்கும் இடைப்பட்டதாக இருந்தது எனக் கருதப்படுகிறது. 1960-க்குள் அவர்கள் எண்ணிக்கை 50,000 அளவுக்குக் குறைந்தது. இப்பொழுது ஒரு லட்சம் அளவுக்கு உள்ளனர். அவர்கள் எந்த இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதுபற்றி ஆய்வாளர்கள் கருத்துக்கள் பொதுவாக பின்வருவன போன்றவையேயாகும்: எல்கின்(1938): “கிடைத்துள்ள சான்றுகளின்படி (ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள்) தென்னிந்தியாவிலிருந்து குடிபெயர்ந்து வந்ததாகவே தெரிகிறது. லாக்வுட்(1963): “இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் சுமார் 15000 ஆண்டுகளுக்கு முன்னர் புலம் பெயர்ந்து சென்றவர்களின் வழித்தோன்றல்களே ஆஸ்திரேலியப் பழங்குடிமக்கள்”. (அண்மைக்கால ஆய்வுகளின்படி 15000 ஆண்டுகள் என்பதற்குப் பதிலாக 40000 ஆண்டுகளுக்கு முன்னர் என்று கொள்ளவேண்டும்.) ஆஸ்திரேலியப் பழங்குடிமக்கள் அக் கண்டத்தில் 40000 ஆண்டுகளுக்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே வசித்து வருகின்றனர். அன்று அவர்கள் தம்முடன் கொணர்ந்த தொன்மொழி இன்று 200 மொழிகளாக பிரிந்துள்ளது. எனினும் அவை அனைத்தும் மூலமொழியின் அடிப்படைக் கூறுகளைப் பெருமளவுக்கு இன்றும் கொண்டுள்ளன என்கின்றனர் ஆர்.எம். டபிள்யூ டிக்சன் போன்ற அறிஞர்கள் (ஆஸ்திரேலிய மொழிகள்; கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், 1980). தொல் ஆஸ்திரேலிய மொழியானது மிகப் பழைய மொழி; எடுத்துக் காட்டாக “தொல் இந்தோ ஐரோப்பிய மொழி” உருவாவதற்கு மிக முற்பட்ட காலத்திலேயே அது பேசப்பட்டுவந்தது என்று சுட்டிக் காட்டுகிறார் டிக்சன். தொல் ஆஸ்திரேலிய மொழியை வேறு எம் மொழிக் குடும்பத்தோடு தொடர்பு படுத்தலாம் என்று கருதுங்கால் திராவிட மொழித் தொடர்பு ஒன்றே எண்ணத்தக்கது என்கிறார் டிக்சன். நாரிஸ், பிரிச்சார்டு, கால்டுவெல் ஆகியோர் ஆய்வுகளைப் பின்பற்றி 1885-லேயே சி.டி. மக்ளீன் ஆஸ்திரேலிய மொழிகள்-திராவிட மொழித் தொடர்பு பற்றிப் பின்வருமாறு எழுதியுள்ளார்:- “திராவிட மொழிக்கும் (தெற்கு, மேற்கு) ஆஸ்திரேலியப் பழங்குடிமக்களின் மொழிகளுக்கும் இடையிலே நெருங்கிய இலக்கண ஒற்றுமை உள்ளது. பிரதிப் பெயர்கள் (Pronouns) வருமாறு: திராவிடம் ஆஸ்திரேலியன் தன்மை நான், யான், நா என் ஞா, ஞாய், ஞாட்ஸ, ஞான்ய முன்னிலை (thou) நீன், நின் நின்ன, ஞின்னே, ஞிண்டு, ஞிண்டே (you) நீன், நீம், நீர், நும், நீவு நிமிடு, நுரெ, நுவ, ஞ&ர்லே தமிழ் “என்னை”யுடன் ஆஸ்திரேலிய “எம்மோ”வை ஒப்பிடுக. பின்வரும் இனங்களில் இவ்விரு குடும்ப மொழிகளுக்கும் இடையே பொதுவான இலக்கண ஒற்றுமை உள்ளது; முன்னொட்டுக்களுக்குப் பதிலாக பின்னொட்டுக்கள் பயன்பாடு; தன்மைப் பன்மையில் உளப்பாட்டுப் பன்மை உள்ள நிலை; வேர்ச்சொல்லோடு சில ஒட்டுக்களைச் சேர்த்து (அடி - அடிப்பி, செய் - செய்வி போல) செயப்பாட்டு வினை, பிற வினை போன்றவற்றை உருவாக்கிக் கொள்ளுதல்; ஒட்டு நிலைமொழிச் சொற்றொடரமைப்பு; வாக்கிய அமைப்பு போன்றவை அவ்வொப்புமைகள். டிக்சன் தமது 1980 நூலில் பின்வரும் கூடுதல் ஒப்புமைகளையும் சுட்டுகிறார்:- 1. ஒலியன்களில் வியத்தகு ஒற்றுமை 2. ட,ற,ர,ல,ள போன்ற ஒலியன்கள் சொல் முதலில் ஒருபொழுதும் வரமாட்டா 3. நான்காம் வேற்றுமை உருபு தமிழில் உள்ளது போல் கு (GU) தான். 4. சொல் முதலில் ஒரு மெய்மட்டுமே வர இயலும். சொல் வடிவிலும் பொருளிலும் தமிழுக்கும் ஆஸ்திரேலிய மொழிகளுக்கும் இடையே உள்ள வியத்தகு ஒற்றுமையைக் காட்டும் பட்டியலை இராமநாதன் (2002)-ல் காண்க. 13. 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் அக் கண்டத்திற்குள் நுழைந்தபொழுது கடல் மட்டம் இப்பொழுதுள்ளதைவிட 400அடி - 600 அடி குறைவாக இருந்தது. தற்பொழுது கடல் நீரால் மூடப்பட்டுள்ள கண்டத்திட்டு (Continental shelf) அப்பொழுது நிலப் பரப்பாக இருந்தமையால் எல்லாக் கண்டங்களின் பரப்பளவுமே அதிகம். ஆஸ்திரேலியா, நியூகினி, டாஸ்மேனியா அனைத்துமே இணைந்து ஒரே கண்டமாக இருந்தன. மொத்தப் பரப்பு இப்பொழுதுள்ளதைவிட 1/7 பங்கு அதிகம். டிமோர் தீவுக்கும் தொல் ஆஸ்திரேலியாக் கண்டத்துக்கும் இடையே கடல் ஒரு சில மைல்கள் தான் இருந்திருக்கும். இப்பொழுது உள்ள ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் முன்னோர்கள் அனைவரும் டிமோர் மற்றும் இந்தோனேசியத் தீவுகளிலிருந்து கட்டுமரம் போன்றவற்றில் சில மணிநேரத்தில் கடலைத் தாண்டிச் சென்று ஆஸ்திரேலியாவுக்குள் நுழைந்திருக்க வேண்டும். நுழைந்த பின்னர் சுமார் 500 ஆண்டுகளுக்குள் அவர்கள் ஆஸ்திரேலியா - டாஸ்மேனியா முழுமையும் பரவிவிட்டனர் என்று தொல்லியல் சான்றுகள் நிறுவுகின்றன. கி.மு. 15000 அளவில் கடல் மட்டம் 200 அடி உயர்ந்தது. அதன்பின்னர் மேலும் உயர்ந்து கி.மு. 6000ஐ ஒட்டித் தற்போதைய நிலையை அடைந்தது. ஆக, கடந்த 8000 ஆண்டுகளுக்கு மேலாக ஆஸ்திரேலியா தனிமைப்படுத்தப்பட்ட ஒரு கண்டமாக இருந்துவந்துள்ளது. அக் கண்டம் வாழ் பழங்குடிகள் கடந்த 8000 ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் பிறபகுதிகளில் வாழும் எந்த மக்களுடனும் யாதொரு தொடர்பும் இல்லாது வாழ்ந்து வருகின்றனர் (கி.பி. 18ம் நூற்றாண்டில் ஐரோப்பியர் அக் கண்டத்தைக் கண்டுபிடிக்கும் வரையில் அதுதான் நிலைமை). “திராவிடர் இறக்கம்” கொள்கைப்படி மத்தியக் கிழக்கு நாடுகளைவிட்டுக் கி.மு. 3000இல் நீங்கித் தொல்-திராவிடர் தெற்கு நோக்கிப் புலம் பெயர்ந்து பரவி கி.மு. 1000இல் தமிழ்நாடு அடைந்தனர் என்று கொண்டால் தமிழுக்கும், கடந்த 8000 ஆண்டுகளுக்கு மேலாக எந்த மக்களுடனும் யாதொரு தொடர்பும் இல்லாமல் வாழும் ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் மொழிகளுக்கும் எப்படி அவ்வளவு வியத்தகு ஒப்புமைகள் இருக்க முடியும்? 14. தன்னுடைய “திராவிடர் உறவுமுறை” என்னும் நூலில் தாமஸ் டிராட்மன் உறவு முறையில் (மச்சான் - மச்சினி மண முறை உட்பட) திராவிடர்களுக்கும் ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களுக்கும் இடையே உள்ள நெருங்கிய ஒற்றுமை புதிராக இருக்கிறது என்கிறார். இராமநாதன் தமிழ்ப்பொழில் (மே-சூன் 1991) கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போல் “திராவிடர் இறக்கம்” என்ற கொள்கையை விட்டுத் “திராவிடர் ஏற்றம்” கொள்கையைக் கடைப்பிடித்தால் இப்புதிர்விடுபடும். 15. மாந்த இனப் பரவல் பற்றிய மேலே 7ஆம் பத்தியிற் குறித்த கால வரையறையைக் குறிப்பிடும் ஸ்டீவ் ஜோன்ஸ் (1992) நவீன மாந்த இனம் ஆஸ்திரேலியாவில் 50,000 ஆண்டுகளுக்கு முனனரே குடியேறிவிட்டது; எனினும் ஐரோப்பாவுக்கு 40,000 ஆண்டுகளுக்கு முன்னரும், சீனாவுக்கு 35000 ஆண்டுகளுக்கு முன்னரும், பிற பகுதிகளுக்கு அதற்குப் பின்னரும் பரவியதாகத் தெரிகிறது என்பதைச் சுட்டிக்காட்டிப் பின்வருமாறு பகர்கிறார்: “ஆப்பிரிக்கா, மையக் கிழக்கு நாடுகள் ஆகியவை தவிர உலகின் பிற பகுதிகளில் நவீன மாந்த இனம் முதன் முதலில் குடியேறிய சான்றுகள் ஆஸ்திரேலியாவில் தான் உள்ளன. நவீன மாந்த இனம் ஆப்பிரிக்காவிலிருந்து முதலில் வடக்கே வந்து நண்ணிலக் கரை நாடுகள், மையக் கிழக்கு நாடுகள் ஆகியவற்றுக்கு முதலில் பரவி பின்னரே பிற இடங்களுக்குச் சென்றது என்ற கோட்பாட்டுடன் இந்த மெய்ம்மையைக் கருதும்பொழுது, மேலும் யோசிக்க வேண்டும் போலத் தோன்றுகிறது.” அடுத்த பத்தியில் விளக்கியுள்ளது போல் நாற்பதாயிரம் - ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியா வழியாக ஆப்பிரிக்காவிலிருந்து தொல்-திராவிட-ஆஸ்திரேலிய மொழி பேசுநர் பரவினர் என்ற கோட்பாட்டை மேற்கொண்டால் ஸ்டீவ் ஜோன்ஸ் சுட்டிக் காட்டியுள்ள புதிரும் நீங்கிவிடும். 16. தென்னிந்தியாவிலிருந்து வடக்கே செல்லச் செல்ல திராவிட மொழிகள் தமிழிடத்துக் கொண்டுள்ள நெருக்கம் குறைகிறது. இந்தோ ஆரிய மொழிகளிலிருந்து கடன் பெற்ற சொற்களால் மட்டும் அல்ல, மூலத் திராவிடச் சொற்களை அவை சிதைத்தும் உருமாற்றியும் வழங்குவதாலும் இந் நிலை ஏற்படுகிறது. எனினும் அவற்றில் உள்ள திராவிடச் சொற்களுக்கும் பொருத்தமான வேர்ச் சொற்களைப் பழந்தமிழில் தான் காண வேண்டியிருக்கிறது (அவ் வேர்களில் சில தற்காலத் தமிழில் புழக்கத்தில் இல்லாதவையாகவும் இருக்கலாம்). மேலும் தனிநாயக அடிகள் (1953) கூறுவதுபோல் (கி.மு. 300 - கி.பி. 200 காலத்தைச் சார்ந்த) சங்கத் தமிழ் நூல்களில் தமிழக மண்ணிலேயே அவை தொல் வரவாகத் தோன்றியவை என்பதைக் காட்டும் அனைத்து அடையாளங்களும் உள்ளன. வேறு எந்த நாட்டிலிருந்தோ தமது மொழியுடனும் இலக்கியத்துடனும் தமிழர் தமிழகத்துக்கு வந்து குடியேறியதாக யாதொரு ஆதாரமும் அந் நூல்களில் இல்லை என்பதையும் இதிலிருந்து உணரலாம்.” இந்துமாக் கடலில் இந்தியாவுக்குத் தெற்கிலிருந்த தென்னாட்டுப் பகுதிகள் பண்டு கடல்கொள்ளப்பட்டுத் தமிழகப் பரப்பு சுருங்கியதாகப் பழந்தமிழ் இலக்கியங்களும் மரபுச் செய்திகளும் கூறுவது ஏறத்தாழ கி.மு. 8000ஐ ஒட்டியும் பின்னரும் உலகெங்கும் கண்டத்திட்டுப் பகுதிகள் (Continental shelf) கடலுள் மூழ்கியதையே குறிப்பிடுவதாகக் கொள்ள வேண்டும் என்று இராமநாதன் (1998 நூலில்) விரிவாக விளக்கியுள்ளார். அவ்வாறு கடல் மட்டம் உயர்ந்து கண்டத்திட்டுப் பகுதிகள் மூழ்குவதற்கு முன்னர் ஆப்பிரிக்காவையும் தென் இந்தியாவையும் இணைத்த நிலப்பகுதிகள் இருந்திருக்கலாம் என்பதை வால்டர் ஏ. போசர்வீஸ் (பண்டைய இந்திய (நாகரிகத்தின்) வேர்கள்; 1971) நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “இந்துமாக் கடலில் அண்மையில் நடந்த ஆய்வுகளின் படி, அக் கடலில் பண்டு ஒரு கண்டம் அளவுக்குப் பெருநிலப்பரப்பு இருந்து பின்னர் மூழ்கியதற்கு வாய்ப்புக்கள் இல்லையெனினும் அவ்வப்பொழுது (அந்தக் காலக் கட்டத்தில்) தீவு நிலப்பகுதிகள் கடல் மட்டத்துக்கு மேல் உயர்ந்து நிலப் பாலங்களாக இருந்திருக்கலாம் எனக் கூற ஆதாரம் உள்ளது.” ஏறத்தாழ ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தற்கால மாந்த இனம் (Homo Sapiens Sapiens) ஆப்பிரிக்காவில் தோன்றிய பின்னர்ப் பல பத்தாயிரம் ஆண்டுகளாக அவ்வினம் தென்னிந்தியா வழியாகவே உலகின் பல பகுதிகளுக்கும் பரவினர் என்க. இவ்வாறு வடக்கு வடகிழக்கு நோக்கிய மாந்த இனப் பரவலில் திராவிட மொழி பேசுநருக்கு மையமான பங்கு இருந்திருக்க வேண்டும். திராவிடர் ஏற்றம், Dravidian ascent பற்றிய இந்தக் கோட்பாட்டை “ஞானப்பிரகாசர் - தேவநேயன் கோட்பாடு” என அழைக்கலாம். திராவிட மொழிகளோடு ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் மொழிகளுடன் உள்ள நெருங்கிய தொடர்பையும் (ஏன் மொழிக்குடும்பங்கள் பிறவற்றுடன் உள்ள நெருங்கிய தொடர்பையும்) விளக்க வல்லது இக் கோட்பாடேயாகும். தென்னிந்தியாவிலிருந்து வடக்கே சென்ற திராவிட மொழி பேசுநர் உருவாக்கியதே சிந்துவெளி நாகரிகமாகும் (மதிவாணன் 1995; இராமநாதன் 1999); அவர்களுக்கு எலாமைட் முதலிய நாகரிகங்கள் உருவாக்கியதிலும் பங்கு இருந்திருக்க வேண்டும். தமது 1990 நூலில் சுவெலபில் “சுமார் கி.மு. 10000க்கு முன்னர் திராவிடம், உரால் - அல்டாய்க், சப்பானியம் மொழி பேசுநர்களிடையே நெருங்கிய தொடர்பு இருந்திருக்க வேண்டும்” என்று கருதியுள்ளார். அத்தகைய தொடர்பையும் “திராவிடர் ஏற்றக் கோட்பாடு” விளக்கவல்லது. ஞானப் பிரகாசர் - தேவநேயன் கோட்பாட்டின்படி கி.மு. 10000க்கு முன்னரே தொல் இந்தோ - ஐரோப்பியம் பேசுநர் தொல் - திராவிடம் பேசுநரிடமிருந்து பிரிந்து விட்டனர்; மைய ஆசிய ஸ்டெப்பீஸ் புல்வெளிகளில் சில ஆண்டுகள் வாழ்ந்தனர்; அவர்களில் சில குழுவினர் கி.மு. 4000-3000 அளவில் மேற்கு நோக்கி ஐரோப்பாவுக்குச் சென்றனர் (அவர்களிடம் பின்னர் உருவானவையே கிரீக், லத்தீன், கெல்டிக், ஜெர்மானிக், ஸ்லாவிய மொழிக் குடும்பங்களாகும்); வேறு சில குழுக்கள் கிழக்கு - தென்கிழக்கு நோக்கி இடம் பெயர்ந்த காலம் கி.மு. 2500ஐ ஒட்டி ஆகும்; அவ்வாறு கிழக்கே வந்த குழுவினர் மொழிகளில் அதாவது இந்தோ ஆரிய, இரானிய மொழிகளில் கி.மு. 10000க்கு முன்னர் தொல்திராவிட மொழியினரிடமிருந்து பிரிந்த காலத்தில் உடன் கொண்டு சென்ற திராவிட மொழிக் கூறுகளோடு சேர்த்து வடமேற்கு இந்தியாவிலும் அப்பாலும் வாழ்ந்து வந்த திராவிடர் மொழி பேசுநர்களிடம் இருந்து (இரண்டாவது கட்டமாக) புதிதாக மேலும் பல திராவிட மொழிக் கூறுகள் சேர்க்கப்படலாயின. அதாவது தொல் தமிழ் மொழி பேசுநர் ஏற்றம் (Dravidian ascent) பற்றிய இக்கோட்பாடு ஏற்கத்தக்கதாகவே தோன்றுகிறது; அது தொல்மாந்தர் மொழியியல் முடிவுகளை மேலும் சீர்மை பெறச் செய்ய வல்லது; நாளடைவில் மாந்த இன (Homo sapiens sapiens) தோற்றமும் பரவலும்; மொழிப் பெருங்குடும்பங்கள் உருவாக்கமும் பரவலும்; வரலாற்றுக்கு முந்திய தொல்லியல் ஆகிய மூன்று துறைகளிலும் அனைத்தையும் விளக்கத்தக்க ஒருங்கிணைந்த ஒரு பெருங் கோட்பாடு (Grand synthesis) உருவாக்க வழி வகுக்கவும் வல்லது. 17. தமிழின் தொன்மை, முன்மை, தென்மை ஆகியவற்றையும் மாந்த இன வரலாற்றில் தொல் தமிழர் பெறும் முக்கியமான இடத்தையும் நிறுவத்தக்க சிறந்த ஆய்வு நூல்கள், கட்டுரைகளின் பட்டியலை நூல் இறுதியில் காணலாம். சிந்துவெளித்தமிழர் அறிஞர் ந.சி. கந்தையா 1947ல் வெளியிட்ட “சிந்துவெளித் தமிழர்” என்னும் நூல் அளவில் சிறியதாயினும் அதுவரை வெளிவந்த ஆய்வுகளின் அடிப்படையில் சிந்து வெளிநாகரிகம் தமிழருடையதே என்பதைச் சீரிய முறையில் நிறுவுகிறது. அதற்குப் பின்னர் கடந்த 56 ஆண்டுகளில் வெளிவந்துள்ள பல்வேறு ஆய்வுகளுள் தலை சிறந்தவையும் நடுநிலை தவறாதவையும் ஆனவையெல்லாம் அம் முடிவையே வலியுறுத்துகின்றன. அந் நூல்களிலும் கட்டுரைகளிலும் முக்கியமானவற்றின் பட்டியல் இந் நூல் இறுதியில் தரப்பட்டுள்ளது. 2. சிந்துவெளி நாகரிகம் 1947க்கு முந்திய (இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம் சேர்ந்த) இந்தியாவின் பரப்பளவில் கால் பகுதிக்கு மேல் பரப்பளவு கொண்ட பெரு நிலப் பகுதியில் வடமேற்கு இந்தியாவில் பரவி இருந்தது. அதாவது சுமார் 5லட்சம் சதுரமைல் பரப்பளவில் வழங்கியது. பண்டைய மெசபொடேமிய, எகிப்திய நாகரிகங்களின் பரப்பைவிட அதிகமான பரப்பில் சிந்துவெளி நாகரிகம் வழங்கியது. அந் நாகரிகம் வழங்கிய பகுதியில் கி.மு. 2000 வாக்கில் மொத்தம் ஐந்திலிருந்து பத்து லட்சம் மக்கள் வாழ்ந்திருக்கலாம் என்பது பொஸெல், பர்போலா போன்றவர்கள் கருத்து ஆகும். சிந்துவெளி நாகரிகச் சின்னங்கள் 1500க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளன. அவற்றில் சுமார் 20 இடங்களில் மட்டுமே - மொகெஞ்சோதரோ, ஹரப்பா உட்பட - அகழ்வாய்வுகள் நடந்துள்ளன. சிந்துவெளி நாகரிகத் தொடக்கம் கி.மு. 7000லிருந்து என்பதை மெஹர்கார் அகழ்வாய்வு நிறுவியுள்ளது. அந் நாகரிகத்தின் சிறப்புற்ற நிலை கி.மு. 3200 - 1800 கால அளவைச் சார்ந்தது. மொகெஞ்சோதரோ மக்கள் தொகை 40,000 என்றும் ஹரப்பா மக்கள் தொகை 25000 என்றும் மதிப்பிடப்பட்டுள்ளன. 3. கி.மு. 1700 - 1500 காலக் கட்டத்தில் இந்தியாவிற்குள் வடமேற்கிலிருந்து நுழைந்தவர்கள் வேதமொழி (Vedic Language) பேசிய இந்தோ ஆரியர்கள். இவர்கள் சிந்துவெளி நாகரிக மக்களோடு ஒப்பிடும்பொழுது சிறு எண்ணிக்கையினராகவே இருந்திருக்க வேண்டும். இந்தோ ஐரோப்பிய மொழிப் பெருங் குடும்பத்தில் அடங்கியவை இந்தோ ஆரியமொழியாகிய வேதமொழி தவிர, இரானியன் (அவெஸ்தன்), அனடோலியன் (ஹிட்டைட்), அர்மீனியன், டோக்காரியன், அல்பேனியன், கிரீக்கு, இத்தாலிக் (லத்தீன் முதலியவை) கெல்டிக் (ஐரிஷ், வெல்ஷ் உட்பட), ஜெர்மானிக் (இங்கிலிஷ் உட்பட) பால்டிக் (லட்வியன், லித்துவேனியன்), ஸ்லாவ் (ரஷ்யன் முதலியவை) ஆகியவையாகும். இந்தப் பல்வேறு இந்தோ ஐரோப்பிய மொழி பேசுநரும் ஒருங்கு சேர்ந்து கி.மு. 4000-3000 கால அளவில் கருங்கடல் - காஸ்பியன் கடல்பகுதிக்கு வடக்கில் மத்திய ஆசிய - ஐரோப்பிய ஸ்டெப்பி புல்வெளிகளில் வசித்து வந்த நாடோடிகள் (nomads) ஆவர். அக்காலக் கட்டத்தில் அவர்கள் இந்தோ ஐரோப்பிய தொன் மொழியைப் பேசிவந்தனர். கி.மு. 3000-2000 கால அளவில் இவர்களில் சில குழுக்கள் மேற்காகவும், சில குழுக்கள் கிழக்கு - தென்கிழக்காவும் நகரலாயினர். மேற்கில் சென்ற நாடோடிக் குழுவினருள் ஒன்றான கிரீக்கு மொழி பேசுநர் நுழைந்த பகுதியில் (திராவிடச் சார்பான) அவர்களுடன் கலந்து கிரீக்கு மொழி பேசுநர் உடனடியாக நாகரிகம் பெற்றனர். கிழக்கு - தென்கிழக்காகப் பெயர்ந்த நாடோடிக் குழுவினருள் இந்தோ ஆரிய மொழி பேசும் குழுவும் ஒன்று. கி.மு. 1700-1500 இல் அவர்கள் இந்தியாவுக்குள் இரானிலிருந்து நுழைந்தபொழுது அவர்களும் சிந்துவெளித் தொல் தமிழ நாகரிகத்தினரிடமிருந்து விரைவில் நாகரிகம் பெற்றனர். முதற்கண் இந்தோ ஆரிய மொழி பேசுநருக்கும் சிந்துவெளி நாகரிகத் தமிழருக்கும் (திராவிடருக்கும்) இடையே வன்முறை ஏற்பட்ட போதிலும் விரைவில் இருவகையாரும் கலந்துவிட்டனர். ஆரியரால் நகரங்கள் தாக்கப்பட்டிருக்கலாம். இந்திரனின் பெயரே புரந்தரன் (நகரங்களை அழிப்பவன்) தானே! நகரங்களின் வீழ்ச்சிக்கு கி.மு. 1700ஐ ஒட்டி நிகழ்ந்த இயற்கை, சுற்றுப்புறச் சூழ்நிலைக் காரணங்களும் ஓரளவு காரணமாயிருந்திருக்கலாம் என்று ஆல்சின் (1995) கூறுகிறார். ஆனால் சிந்துவெளி நாகரிகம் பரவியிருந்த கிராமப் புறப் பரப்பளவில் (சிறு எண்ணிக்கையில் நுழைந்த) ஆரியரால் பெருந்தாக்கம் ஏற்படுத்தியிருக்க முடியாது. ஆகவே தான் சுநீதி குமார் சாட்டர்ஜி, வால்டர் பேர்சர்வீஸ், எஸ்.ஏ. டைலர் போன்றோர் கூறுவது போல இன்றைய இந்திய நாகரிகம், பண்பாடு, இந்துமதம் ஆகியவற்றின் அடித்தளம் (ரூபாய்க்கு 12 அணா அளவுக்கு என்பார் சாட்டர்ஜி) திராவிட (தமிழ்) மொழி-பண்பாடு ஆகியவையே என்பதை இந் நூலில் 1947லேயே ந.சி. கந்தையா விளக்கியுள்ளது இன்று மேலும் வலுவடைந்துள்ளது. 4. சிந்துவெளி நாகரிகம் தமிழருடையது என்று கந்தையா 1947இல் நிறுவியுள்ளதை (அவர் காலத்தில் வெளிவந்தவையும் பின்னர் இன்று வரை வெளிவந்துள்ளவையுமான ஆய்வுகளின் அடிப்படையில்) பின்வருவனவற்றால் மெய்ப்பிக்கலாம். 1. இந்தோ ஆரிய மொழி பேசுநர் பரவல் பற்றிய வரலாற்றிலிருந்தே அவர்கள் கி.மு. 1700க்கு முந்திய சிந்துவெளி நாகரிகத்தை உருவாக்கியிருக்க இயலாது என்பது தெரியும். சிந்துவெளி நாகரிகச் சின்னங்களில் குதிரை கிடையாது. ரிக் வேதத்திலேயே திராவிட மொழிச் சொற்கள், எழுத்துக்கள், இலக்கணம் ஆகியவற்றின் தாக்கம் உள்ளது. சிந்துவெளித் திராவிட அறிஞர்கள் (அவர்கள் சிலபலர் ரிஷிகளாகவும் ஏற்கப்பட்டனர்) படைப்புக்களும் நேரடியாகவோ மொழி பெயர்க்கப்பட்டோ ரிக் வேதத்தில ஏறியுள்ளன. (வேத மொழியாகிய இந்தோ ஐரோப்பிய மொழி இந்தியாவில் உருவாகியிருக்கலாம் என்று வேத சம்ஸ்கிருதப்பற்றாளர் கூறுவது அபத்தம்) 2. மொகெஞ்சோதரோ - ஹரப்பா இடிபாடுகளில் திராவிட கட்டுமானக் கலையைக் காணலாம். வீடுகளில் பயன்பட்ட பொருள்கள் ஆபரணங்கள், பருத்தி ஆடைகள் போன்ற அனைத்தும் திராவிடச் சார்புடையவை. 3. தமிழரின் சிற்றிலக்க முறையையே சிந்துவெளி நாகரிக எடை அளவுகளில் காண்கிறோம் என்பதைச் செங்கம் கு. வேங்கடாசலம் நிறுவியுள்ளார். 4. இன்றைய இந்துமதத்தின் முதன்மைக் கூறுகள் அனைத்தும் திராவிட-தமிழ்-சிந்துவெளி நாகரிகக் கூறுகளே ஆகும். சமண, பௌத்த மதங்களின் தோற்றத்திற்கும் சிந்துவெளி மற்றும் வடநாட்டில் பண்டு இருந்த திராவிட - தமிழ் ஞானிகளே காரணமாவர். 5. இன்றைய இசைக்கலை ஆரியர் தமிழரிடமிருந்து கற்றதே (ஓ. கோஸ்வாமி “இந்திய இசைவரலாறு”, 1957) 6. சிந்துவெளி முத்திரை எழுத்துக்கள் பழந்தமிழே என்பதை நேர்மையான அறிஞர்கள் அனைவரும் ஏற்கின்றனர் (அஸ்கோ பர்போலா, ஐ. மகாதேவன், கமில் சுவெலபில், பொஸெல்). அறிஞர் மதிவாணன் தமது Indus Script-Dravidian (1995) நூலில் சிந்துவெளி முத்திரை வாசகங்களைத் தொல் தமிழ்ப் பெயர்களாகப் படித்துள்ளர். சிந்துவெளி முத்திரை எழுத்துக்களைத் தொல் தமிழ் (தொல் திராவிடம்) ஆகப் படித்துளள அறிஞர்கள் வாசித்துள்ள மாதிரிகள் இந் நூல் இறுதியில் தரப்பட்டுள்ளன. இவ்வறிஞர்கள் பல்வேறு வகையாக வாசித்துள்ளனர். எனினும் இம் முத்திரை எழுத்துக்கள், திராவிட மொழியைச் சார்ந்ததாகத்தான் இருக்க வேண்டும் என்பது பற்றி ஒருமித்த கருத்து உள்ளது:- ஸ்டான்லி வால்பர்ட்: “இந்தியாவுக்கு ஓர் அறிமுகம்” “பல வகையான ஆதாரங்களிலிருந்தும் நாம் கருதுவது அவர்கள் தொல் திராவிடர்கள் என்பதும், தமிழுக்குப் பாட்டன் முறையாகக் கூடிய ஒரு மொழி அவர்கள் மொழியாக இருந்திருக்கலாம் என்பதும் ஆகும்.” “We assume from various shreds of evidence that they were proto-Dravidian possibly using a language that was a grandfather of modern Tamil” (Stanley Wolpert: An Introduction to India, University of California Press 1991) nஜ.எம். ராபர்ட்ஸ்: பெங்குயின் உலக வரலாறு தென்னிந்தியாவில் இன்றும் வழங்கிவரும் திராவிட மொழிகளோடு இயைபுடைய ஒரு மொழியைச் சார்ந்தவையாக (சிந்துவெளி முத்திரைச் சொற்கள்) இருக்கலாமெனத் தோன்றுகிறது. It now seems atleast likely that they are part of a language akin to the Dravididan tongues still used in southern India (J.M. Roberts History of the World, Pelican 1992) கமில் சுவெலபில்: திராவிட மொழியியல் - ஓர் அறிமுகம் “சிந்துவெளி எழுத்துக்களின் மொழி என்ன என்று இறுதியாக நிறுவப்படும் பொழுது அது திராவிட மொழி சார்ந்ததாக அமைவதற்கே வாய்ப்பு மிக அதிகம்” “The most probable candidate is and remains some form of Dravidian” (“Dravidian Liguistics - An Introduction” PILC; Pondicherry 1990; Chap VI: Dravidian and Harappam) உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த திராவிடர் என்று தன்னை அழைத்துக் கொண்ட எஸ். ஹீராஸ் பாதிரியார் (11.9.1888 - 14.12.1955) “தொன்மை இந்தோ - நண்ணிலக்கரை நாகரிக ஆய்வு” (Studies in Proto - India Mediterranean Culture; 1953) என்னும் நூலில் சிந்துவெளி (அரப்பா/மொகஞ்சதரோ) நாகரிகம் திராவிடருடையது; அவர்கள் மொழி திராவிட மொழி என்பதை நிறுவினார். மிகப் பழங்காலத்தில் (கி.மு. 5000க்கும் நெடுங்காலத்துக்கு முன்னர்) முதற்கண் காவிரிக் கரையில் உருவாகிய அரப்பா நாகரிகம் இந்திய மேற்குக் கரை வழியாகத் தமிழர்களால் சிந்துவெளி, சுமேரியா, எகிப்து, நண்ணிலக்கரை நாடுகள் வரை கொண்டு செல்லப்பட்டது என்பது ஹீராஸ் கொள்கை. என். லாகோவாரி 1963இல் வெளியிட்ட “திராவிடர் தோற்றமும் மேலை நாடுகளும்” (Dravidian Origins and the West) என்னும் நூல் சிறந்த மொழியியல் மெய்மைகளை உணர்த்துவதாகும். “திராவிடர் நண்ணிலக்கரை நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து வந்து இந்தியாவில் சிந்துவெளியில் முதற்கண் குடியேறிப் பின்னர் குமரி வரைப் பரவினர்” என்ற அபத்தக் கொள்கையைக் கொண்ட சு.கு. சட்டர்ஜி, க.அ. நீலகண்ட சாஸ்திரி ஆகியோர் கருத்தை விவரம் புரியாமல் அவர் பின்பற்றிய போதிலும் அவர் நிறுவிய பின்வரும் மெய்மைகள் முக்கியமானவை:- i. 6000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து அட்லாண்டிக் கடல் வரை ஒரே மாதிரியான பல சொல் பிணிப்பு ஒட்டு நிலை (Polysynthetic Suffixal) மொழிகள் இடையீடு இன்றிப் பரவியிருந்தன. அவற்றின் சொற் களஞ்சியங்கள் ஓரளவுக்கு ஒன்றுபோல் இருந்தன. பொதுச்சொல் விழுக்காடு மொழிக்கு மொழி மாறுபட்டு இருந்திருக்கலாம். திராவிட மொழிகள், எலாமைட், சுமேரியன், ஹர்ரி, காகேசியன், ஹல்டி, ஹட்டி போன்றவை ஒரே மொழியமைப்புக் கொண்டு ஒன்றுக் கொன்று உறவுடையவையாகச் சங்கிலித் தொடர்போல அமைந்திருந்தன. ii. இந்தோ ஐரோப்பிய மொழி பேசுவோர் (கி.மு. 2000ஐ ஒட்டி) ஐரோப்பாவுக்குள் கிழக்கிலிருந்து நுழையுமுன்னர் அங்குப் பேசப்பட்டு வந்த மொழிகளில் ஒன்றான பாஸ்கு (யூஸ்கரா) இன்றும் பிரான்சுக்கும் ஸ்பெயினுக்கும் இடைப்பட்ட பிரெனீஸ் மலைப்பகுதியில் பேசப்பட்டு வருகிறது. தொல் திராவிட மொழி இந்த பாஸ்கு மொழியுடன் மட்டுமின்றி இந்தோ ஐரோப்பிய மொழிகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் பேசப்பட்ட மற்ற மொழிகளுடனும் உறவுடையது. iii. இம்மொழிகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புள்ளவை; ஒரே பொதுவான தாய்மொழியின் வட்டார வழக்குகள் என்றே கூறலாம். 2. i. எலாமைட் மொழி திராவிட அதாவது (தொல் தமிழ்) மொழியோடு நெருங்கிய தொடர்புடையது என்பதை டேவிட் மக் ஆல்பின் நிறுவியுள்ளார் (Proto - Elamo - Dravidian and its implications; 1981; philadelphia) ii. சுமேரிய மொழியும் திராவிட மொழி என்பதை ஹீராஸ் பாதிரியார், அ. சதாசிவன், கின்னியர் வில்லியம்ஸ் ஆகியோர் நிறுவியுள்ளனர். அண்மையில் (2003) பின்லாந்து அறிஞர்கள் ஹெச்.பி.ஏ. ஹகோலாவும் ஹாஜத் அசாதியனும் சேர்ந்து எழுதியுள்ள Sumerian and Proto Duraljan - a lexical comparison concerning the suduraljan hypothesis என்னும் நூலில் சுமேரியன், திராவிட மொழிகள், உராலிக் மொழிகள், அல்டாய்க் மொழிகள், ஜப்பானிய - கொரிய மொழிகள் (தென் அமெரிக்காவில் ஆண்டீஸ் மலைப் பகுதியில் பெருநாட்டில் பேசப்படும்) கொஷுவா மொழி ஆகியவற்றிடையே 472 ஒப்புமைச் சொற்களைக் கண்டுவெளியிட்டுள்ளனர். iii. மைதன்னி மொழிக்கும் திராவிட மொழிகளுக்கும் உள்ள ஒப்புமைகளை ஜார்ஜ் வில்லியம் பிரவுன் 1930லேயே கண்டு தெரிவித்துள்ளார் (Journal of American Oriental Society தொகுதி 50 (1930) பக். 273-305) iv எத்துருஸ்கன் மொழிச் சொற்கள் பலவும் தமிழ்ச் சொற்களே என்று நிறுவும் இரா. மதிவாணன் கட்டுரையைச் செந்தமிழ்ச் செல்வி 76: 3-4 (2001 நவ-டிச) இதழ்களில் காண்க. v. பாஸ்கு மொழிக்கும் திராவிட மொழிகளுக்கும் இடையே உள்ள நெருக்கத்தை 1998 இல் போலந்து அறிஞர் பெனான் ஜ்பிக்னியூ சாலக் சுட்டிக் காட்டியுள்ளார். (Jornal of Oriental Institute of Baroda (Xlvii 3-4; March-Jume 1998 pp 173-188) vi. தென் அமெரிக்கப் பெருநாட்டு கொஷ&வா மொழி, வட அமெரிக்க மெக்சிகோ நாட்டு நகுவாதில் மொழி, மயாமொழி போன்றவற்றுக்கும் தமிழுக்கும் ஒப்புமை உண்டு. 3. வாணிகத்திலும் குறிப்பாகக் கடல் வாணிகத்தில் தமிழர் பண்டு சிறந்து விளங்கினர். ரிக் வேதத்தில் “பாணி”கள் எனக் குறிக்கப்படுவோர் தமிழ வணிகரே. எகிப்து, நண்ணிலக்கரை நாடுகளுக்கெல்லாம் தமிழ வணிகர் சென்றுள்ளனர். தமிழ வணிகர் தென்கிழக்கு ஆசிய நாடுகளெங்கும் தமிழ்ப்பண்பாட்டைப் பரப்பிய விரிவான வரலாற்றைக் க.த. திருநாவுக்கரசு எழுதியுள்ளார் (தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழ்ப் பண்பாடு 1987). 4. உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு ஆகக் குறிப்பிடத்தக்க ஏனைய பிறவற்றில் முக்கியமானவை நீர்ப் பாசனத்திறன்; கொல்லாமையை வலியுறுத்தும் சமண பௌத்த சமயங்கள் (பண்டைய வட இந்தியத் தமிழர் உருவாக்கியவை); உலக இலக்கியத்தில் தனிச்சிறப்பிடம் பெறத்தக்க சங்க இலக்கியமும் திருக்குறளும்; சமஸ்கிருதம் போன்ற மொழிகள் தமிழிடம் இருந்து கடன் பெற்றுப் பயன்படுத்திய நெடுங்கணக்கு; சிந்துவெளித் தமிழர் காலத்திலேயே உருவாகி யிருந்த சிற்றிலக்க முறையும் சிறந்த கணித அறிவும்; உலகின் அனைத்து மொழி எழுத்து வரிவடிவங்களுக்கும் முன்னோடியாக இருக்கலாம் என ஹீராஸ் உன்னித்த சிந்துவெளி எழுத்துக்கள், இந்திய இசை, நடனக் கலைகளுக்கெல்லாம் ஆதாரமாக இருந்த தமிழர் இசையும் நடனமும் எனப் பலவாம். தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் உலகில் மாந்தரினம் எப்படித் தோன்றியது என்னும் வினாவுக்கு டார்வினின் படிமுறை வளர்ச்சிக் கொள்கை (Theory of evolution) விடை தருகிறது. மாந்தக் குரங்கினத்துக்கும் மனிதனுக்கும் பொதுவான வேறொரு உயிரினம் முதலில் இருந்திருக்க வேண்டும். அத்தகைய பொது மூதாதை (Common ancestor) இற்றைக்கு முன்னர் 60லட்சம் - 40லட்சம் ஆண்டுக்கால அளவில் ஆப்பிரிக்காவில் இருந்திருக்க வேண்டும் என்பது அறிவியல் முடிவு. அம் மூதாதையின் பாசில் படிவுகள் எவையும் இன்னும் கிடைக்கவில்லை (Time: 17.1.2000). ஆக, கடந்த 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே கொரில்லா, சிம்பன்சி போன்றவை உருவான மாந்தக் குரங்கு இனமும் மனிதன் உருவான ‘முன் மாந்த’ இனமும் பிரிந்துவிட்டன. இன்றைய மனிதனிடம் உள்ளவை 23 x 2 குரோமோசோம்கள். அவற்றில் அடங்கிய மரபணுக்கள் (Genomes) எண்ணிக்கை 30000. நமது மரபணுக்களுக்கும் சிம்பன்சி மரபணுக்களுக்கும் 98.50 விழுக்காடு ஒற்றுமை உண்டு. 1.50 விழுக்காடே மரபணு நிலையில் சிம்பன்சியிலிருந்து மனிதன் வேறுபட்டவன் (அவ்வளவு சிறிய வேறுபாடுதான் என்றாலும் மனிதன் எவ்வளவு மாபெரும் கொடூரமான உயிரியாக மாறிவிட்டான்!) 2. மாந்தக் குரங்கு இனமும் முன் மாந்த இனமும் 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே பிரிந்துவிட்டன எனினும் இன்று உலகெங்கும் பரவியுள்ள ஹோமோ சேபியன்ஸ் சேபியன்ஸ் என்னும் மனித இனம் (சுமார் ஒன்றரை லட்சம் ஆண்டுகட்கு முன்னர்) உருவாவதற்கு முன்னர் 48 லட்சம் ஆண்டுகளில் பல்வேறு முன் மாந்த (Hominid) இனங்கள் தோன்றிச் சில பல லட்சம் ஆண்டுகள் வாழ்ந்து பின்னர் முற்றிலும் அழிந்தொழிந்துவிட்டன. பாசில் எச்சங்கள் அடிப்படையில் அவற்றைப் பின்வருமாறு வகைப்படுத்தியுள்ளனர்:- முன் மாந்த (Hominid) இனம் கால அளவு... ஆண்டுகட்கு முன்னர் Arsdipithecus Ramidus (எத்தியோப்பியா) 45 லட்சம் Australopithecus Anamensis (கென்யா) 42-39 லட்சம் Australopithecus Afarensis (டான் சானியா) 36-29 லட்சம் Australopithecus Eethiopicus (எத்தியோப்பியா) 28-23 லட்சம் Australopithecus Garhi (எத்தியோப்பியா) 25 லட்சம் Australopithecus Boisei (டான் சானியா ஆல்டுவாய் பள்ளத்தாக்கு) 23-14 லட்சம் Australopithecus Robustus (தென் ஆப்பிரிக்கா) 19-15 லட்சம் Homo Rudolfensis (கென்யா) 24-18 லட்சம் Homo Habilis (டான்சானியா ஆல்டுவாய் பள்ளத்தாக்கு) 19-16 லட்சம் Homo Ergaster (கென்யா) 17-15 லட்சம் Homo Erectus (ஆப்பிரிக்கா, இந்தோனேசியா) 17-21/2 லட்சம் (இவ்வினம் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி ஆசியா, ஐரோப்பாக் கண்டங்களுக்குப் பரவினாலும் பின்னர் முற்றிலும் அழிந்துவிட்டது) Homo Neanderthalensis (நியாண்டர் பள்ளத்தாக்கு, ஜெர்மனி) 2 லட்சம் - 30000 3. மேற்சொன்ன முன்மாந்த (Hominid) இனங்கள் எல்லாம் முற்றிலும் அழிந்துவிட்டன. ஆகையால் இன்று உலகில் உள்ள மனிதர்கள் அனைவருமே ஹோமோ சேப்பியன்ஸ் சேப்பியன்ஸ் (Homo Sapiens Sapiens) என்னும் ஒரே இனத்தைச் சார்ந்தவர்கள். இவ்வினத்தின் தோற்றம் பரவல் பற்றி மாந்த இனவியல், தொல் பொருளியல், மாந்தர் மரபணுக் கூற்று இயல் போன்ற துறை வல்லுநர்களின் இன்றைய கருத்தை மேலே கண்டோம். 4. இன்று உலக மக்கள் தொகை 600 கோடி. இந்தியாவில் மட்டும் 100 கோடி. பழங்காலத்தில் மக்கள் தொகை மிகக் குறைவு என்பதை நினைவிற் கொள்வது நல்லது. “சையன்டிபிக் அமெரிக்கன்” 1960 செப்டெம்பர் இதழில் உலகில் அவ்வப் பொழுது இருந்த மாந்த தொகையைப் பின்வருமாறு ஈ.எஸ்.டீ.வி (இளையவர்) கணக்கிட்டார். இற்றைக்கு எத்தனை ஆண்டு மொத்த உலக களுக்கு முன்னர் என்பது மக்கள் தொகை 10 இலட்சம் 1.25 இலட்சம் 3 இலட்சம் 10 இலட்சம் 25,000 33 இலட்சம் (ஏறத்தாழ இன்றைய சென்னை நகர மக்கள் தொகை) 10,000 53 இலட்சம் 6,000 6.65 கோடி கி.பி. 1 13.30 கோடி கி.பி. 1900 161 கோடி கி.பி. 1970 350 கோடி (இந்தியர் 55 கோடிஉட்பட; அந்த 55 கோடியில் தமிழகம் 4 கோடி) (கி.பி. 1 இல் மொத்த இந்திய மக்கள் தொகை 1.80 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய தமிழ்நாட்டுப் பகுதியில் வாழ்ந்தோர் 13 இலட்சம் அத் தொகையில் அடக்கம். அக் காலத்தில் வேங்கடத்துக்குத் தென்பகுதியில் முழுமையுமே தமிழகம் ஆகையால் கி.பி. 1 இல் அன்றைய தமிழக மக்கள் தொகை 20 இலட்சம் என்க.) 1970 முடிய வாழ்ந்து மடிந்த மக்கள் தொகை 11,000 கோடி இருக்கும் என டீ.வி கணக்கிட்டார். இவ்வுலகம் தோன்றி 450 கோடி ஆண்டு ஆகிறது. அதை 24 மணி எனக் கொண்டால் நவீன மாந்த இனம் இதுவரை கண்டுள்ள ஒன்றரை இலட்சம் ஆண்டுகள் ஒரு நொடிக்குச் சமமாகும். 5. இன்று உலகில் உள்ள எல்லா மாந்தருமே ஒருதாய் மக்கள் என்று இன்றைய அறிவியல் நிரூபித்துள்ளதை மேலே கண்டோம். திராவிடர், இந்தோ-ஐரோப்பியர், மங்கோலியர், நீகிரோவர், செமித்தியர், அமெரிக்க இந்தியர் ஆகிய பேரினங்கள் அனைத்துமே ஒரு தாய் மக்கள் என்று நிரூபிக்கப்பட்டு விட்ட நிலையில் குலங்கள் - குடிகள் (Castes and tribes) அடிப்படையில் நம் நாட்டில் வேற்றுமை பாராட்டுதல் முழு மூடத்தனம் என்க. 6. எனினும் ஏறத்தாழ கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தியச் சமுதாயம் சாதிகள் அடிப்படையில் அமைந்து வந்துள்ளதால் அவற்றைப் பற்றி மாந்தவியல் - இனக்குழுவியல் (Anthropology and Ethnology) சார்ந்த விவரங்களைத் தெரிந்து கொள்வது இந்திய வரலாறு, பண்பாடு, சமூகம், கலாசாரம் ஆகியவற்றை நன்கறிய உதவும். எனவே 1958இல் ந.சி. கந்தையா வெளியிட்ட “தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்” என்னும் நூல் இத் துறையில் தமிழில் வெளிவந்துள்ள ஒரு சிறந்த நூலாகும். அது பெரும்பாலும் எட்கார் தர்ஸ்டன் 1909 இல் வெளியிட்ட ஏழு மடலங்கள் கொண்ட Castes and tribes of Southern India என்னும் பெரு நூலிலிருந்து தொகுக்கப்பட்டது. செய்திகளை ந.சி. கந்தையா சிறந்த முறையில் தொகுத்துச் சுருக்கித் தந்துள்ளார். இந்தியச் சாதிமுறை தனித்தன்மை வாய்ந்தது. அதுபற்றி வெளிவந்துள்ள நூல்கள் பல்லாயிரம். முதன்மை வாய்ந்த சிலவற்றின் (தமிழ்நாடு சார்ந்தவை) பட்டியலை நூலின் இறுதியில் காண்க. முடிவுரை 7. தமிழ், தமிழரின் வரலாற்றுச் சிறப்பைத் திட்ப நுட்பத்துடன் தெரிவிக்கும் அறிஞர் ந.சி. கந்தையா அவர்களுடைய மேற்சொன்ன நான்கு நூல்களை மீண்டும் தமிழுலகத்தின் முன் வைத்துள்ள தமிழ்மதி பதிப்பகத்தார் அனைவரின் நன்றிக்கும் உரியவராவர். வெல்க அவர்கள் தமிழ்த் தொண்டு. இங்ஙனம் பி. இராமநாதன் பதிப்புரை வளம் சேர்க்கும் பணி “குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம். இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன. ந.சி. கந்தையா இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது. தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர். தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது. தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர். நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள் 1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன. வாழும் மொழி தமிழ் தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம். ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா? தமிழர்களின் கடன் இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன். மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள். எழுச்சிக்கு வித்திட... உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது. இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதிப்பகத்தார் சிந்துவெளித் தமிழர் ஆசிரியர் ந.சி. கந்தையா தொகுப்பாளர் புலவர் கோ. தேவராசன் எம்.ஏ.,பி.எட்., பதிப்பாளர் இ. இனியன் அமிழ்தம் பதிப்பகம் 328/10 திவான்சாகிப் தோட்டம் இராயப்பேட்டை, சென்னை - 14. நூற்குறிப்பு நூற்பெயர் : சிந்துவெளித் தமிழர் ஆசிரியர் : ந.சி. கந்தையா பதிப்பாளர் : இ. இனியன் முதல் பதிப்பு : 2003 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 36 + 188 = 224 படிகள் : 1000 விலை : உரு. 100 நூலாக்கம் : பாவாணர் கணினி 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : பிரேம் அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் 20 அஜீஸ் முல்க் 5வது தெரு ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 கட்டமைப்பு : இயல்பு வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம் 328/10 திவான்சாகிப் தோட்டம், டி.டி.கே. சாலை, இராயப்பேட்டை, சென்னை - 600 014. i ii xv xiv iii iv xiii xii v vi xi x vii viii ix xxxii xvii xviii xxxi xxx xix xx xxix xxviii xxi xxii xvii xvi xxiii xxiv xxv xxxvi உள்ளடக்கம் ந.சி. கந்தையாப் பிள்ளை வாழ்வும் தொண்டும். . . . iii நூலறிமுகவுரை . . . vii கருவிநூல் தந்த ந.சி. கந்தையா . . . ix அணிந்துரை . . . xi பதிப்புரை . . . xxxi நூல் 1. தமிழர் யார்? . . . 1 2. சிந்துவெளித் தமிழர் . . . 29 3. உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு . . . 59 4. தென்னிந்திய குலங்களும் குடிகளும் . . . 87 xxxiii xxxiv xxxv