16 ஆரியர் தமிழர் கலப்பு முன்னுரை சாதிச்சண்டை சமயச்சண்டை ஒழிய வேண்டுமென மக்கள் உணரும் இக்காலத்தில் “ஆரியர் தமிழர் கலப்பு” என்பது போன்ற நூல் வெளிவர வேண்டிய அவசியம் யாது எனப் பலர் வினாவலாம். ஒரு காலத்தில் இந்திய நாடு முழுமையும் ஒரு மொழியும் ஒரே சமயமும் நிலவின. ஆரிய மக்கள் புதிதாக இந்திய நாட்டை வந்தடைந்த போது, தமிழ்மக்கள் ஆரியரின் தெய்வங்களை வழிபட மறுத்தனர். இக் காரணத்தினால் ஆரியருக்கும் தமிழருக்கு மிடையில் அடிக்கடி போர்கள் நிகழ்ந்தன. பின்பு இரு மக்களும் ஒன்றுபட்டுக் கலந்தனர்.அப்பொழுது ஆரியரின் சமயக் கொள்கைகள் வடக்கே வலுவடைந்தன. ஆரியமதக் கொள்கைகளுக்கு மாறாகப் புத்த சைன மதங்கள் தோன்றி, அவைகளை எதிர்த்துப் போராடின. புத்த சைன மதங்கள் தமிழரின் பழைய மதக்கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டனவே. யாகங்களைச் செய்யும் (மந்திர வித்தைக்காரர் போன்ற) பிராமணர் தென்னாடு போந்தனர். அவர்கள் தெற்கே தமது மதத்தைப் பார்ப்பன மக்களிடையே பரவச் செய்தனர். தமிழர் ஆலயங்கள் பிராமண மதத்தினர் வசப்பட்டன. தமிழர் மதத்தைக் கைவிட்ட பார்ப்பனர் தம்மை ஆரியரென்றும், தமது சாதிமொழி சமக்கிருதம் என்றும், தமது கோத்திரம் (பரம்பரை) பாரத்துவாச கோத்திரம், கௌசிக கோத்திரம் கௌண்டின்ய கோத்திரம், ஆத்திரேய கோத்திரம் போன்ற ஏதோ வடநாட்டு இருஷி கோத்திரம் என்றும் கூறிக்கொள்வாராயினர். இன்று ஒரு பீற்றரோ அல்லது அல்லாப் பிச்சையோ தமிழ் வைணவன், அல்லது சைவனுக்குக் குருவென வந்தால், அவன் அவர்களை ஏற்றுக் கொள்ள மறுப்பான். பாரத்துவாச கோத்திரத் தானோ கொளண் டின்ய கோத்திரத்தானோ கொள்கையளவில் பீற்றர் அல்லது அல்லாப்பிச்சை போன்றவனே. தமிழுக்கு அன்னியமான ஒரு மொழியைத் தனது சாதிமொழி யென்றும், தமிழரல்லாத பிறரைத் தமது கோத்திர முதல்வர்கள் என்றும் கூறிக் கொள் ளும் ஒரு கூட்டத்தினரைத் தமக்கு மத குருக்களென்றும், மோட்ச வழிகாட்டிகள் என்றும் கொண்டு உழலுகின்ற தமிழ் மக்களின் கண் திறக்கும்படியே இவ்வகை நூல்கள் வெளியிடப்படுகின்றன. இற்றைக்கு நாற்பத்தைந்து ஆண்டுகளின் முன் “தமிழர் ஆரியர் கலப்பு” என்னும் முகப்போடு பண்டிதர் சவரிராயன் அவர்களால் எழுதப் பட்ட கட்டுரை ஒன்று சித்தாந்த தீபிகை என்னும் மாத இதழ்களில் வெளிவந்தது. அக்காலத்தில் அரப்பா மொகஞ்சதரோப் புதைபொருளாராய்ச்சிகள் போன்ற தமிழரின் பழைய வரலாறுகளை விளக்கும் சான்றுகள் கிடைக்கவில்லை. ஆகவே அக்கட்டுரையில் பல பொருட்குறைபாடுகள் காணப்பட்டன. அக் கட்டுரையின் ஏற்ற பொருள்களைக் கொண்டும், ஏலாதவற்றை விடுத்தும், புதியவற்றைச் சேர்த்தும் இந்நூல் எழுதப் படலாயிற்று. பண்டிதர் சவரிராயனவர்கள், தமிழர் ஆக்கத்தின் பொருட்டுப் பெரிதும் உழைத்து வந்தவராவர். இவர் பேராசிரியர் சுந்தரம் பிள்ளைக்கு அடுத்தபடியில் வைத்துப் போற்றத்தக்கவராவர். பண்டிதர் சவரிராயன் மதத்தில் கிறித்துவ கத்தோலிக்கராயினும் மிக நடுநிலைமையோடு தமிழர் பண்டை வரலாறுகளை ஆராய்ந்துள்ளார். ந.சி. கந்தையா ஆரியர் தமிழர் கலப்பு தோற்றுவாய் இந்திய நாடு முழுவதிலும் ஒரு காலத்தில் தமிழர் என்னும் ஒருகுல மக்களே வாழ்ந்தார்கள். நாலாயிரம் ஆண்டுகளின் முன் ஆரியர் மேற்குத் திசையினின்றும் வந்து இந்திய நாட்டை அடைந்தார்கள். அவர்கள் இந்திய நாட்டில் சிறிது சிறிதாகக் குடியேறினார்கள். இடை இடையே தமிழ் மக்களுக் கும் ஆரியருக்கும் இடையில் போர்கள் நடந்தன. காலத்தில் இரு மக்களும் கலந்து ஒன்றுபட்டார்கள். அதனால் வடக்கே புதிய மொழிகளும் புதிய நாக ரிகமும் தோன்றின. இவைகளை எல்லாம் தெளிவுபடுத்திக் கூறும் நூல்கள் தமிழிலோ ஆங்கிலத்திலோ இதுவரையும் வெளிவரவில்லை. அவ்வாறு வெளிவராமைக்குக் காரணம் பலர் இத்துறையில் நுழைந்து ஆராய்ச்சி செய்யாமை ஒன்று; மற்றொன்று மதப்பற்று. “சமக்கிருதம் தமிழிலும் பார்க்க உயர்வுடையது; அது தெய்வமொழி; அதற்கு அதிகாரிகள் என்போர் பூதேவர்; அவர்கள் அன்னிய கோத்திரமும் குலமும் உடையர்” என்னும் கொள்கைகளை ஒரு சாரார் பொதுமக்கள் உள்ளத்தில் பதியும்படி செய்து அவர்களிடையே தலைமை பெற்று வாழ்க்கை வாய்ப்புக்களைப் பெற்றுள்ளார்கள். உண்மையான வரலாற்று ஆராய்ச்சி இக்கொள்கைகளை எல்லாம் கவிழ்த்துவிட வல்லது. இப் புரட்சியை விரும்பாத வகுப்பினரே (பெரும்பாலும்) தமிழர் வரலாற்று ஆராய்ச்சியில் இது வரையும் ஈடுபட்டு இருந்தார்கள்; இருக்கின்றார்கள். உண்மையான தமிழர் வரலாறு வெளி வராமைக்கு மற்றும் ஒரு காரணம் இஃது ஆகும். இப்பொழுது அரப்பா மொகஞ்சதாரோ காலம் வரையிலுள்ள தமிழ் மக்களின் வரலாறு ஓர் அளவில் வெளிச்சமாயிற்று. ஆரியர் வருகைக்கும் புத்தர் காலத்துக்கும் இடையிலுள்ள தமிழரின் வரலாறு இருளாக விருக்கின்றது. அப்பகுதியை விளக்குகின்றது இந்நூல். தமிழர் வரலாற்றில் இப்பகுதியே சிறப்புடையது. வரலாறு என்பது அரசனைப் பற்றியும், அவர் காலத்து நிகழ்ந்த சில சிறப்புச் செயல்களைப்பற்றியும் மாத்திரம் கூறப்படும் நிரல் என்று கருதுதல் தவறு. வரலாறு என்பது மக்களின் வாழ்க்கை முதலியன, காலத்துக்குக் காலம் ஒரு போக்கினின்று இன்னொரு போக்காக மாறுதல், அவைகளுக்குக் காரணம்போன்ற இவைகளை ஒழுங்குபடுத்திக் கூறுதலே யாகும். அரச பரம்பரைகளும் அவைகளின் காலங்களும் அக்காலங்களில் நிகழ்ந்த சிறப்புச் செயல்களுமாகிய இவை வரலாற்றின் பகுதிகளே யாகும். ஆரியர் ஆசிய தேசத்தினின்றும் வந்து அலைந்து திரியும் ஒரு கூட்டத்தினர் இற்றைக்கு நாலாயிரம் ஆண்டுகளின் முன் சிந்து நதிக்கரையிற் குடியேறினர். ஆரியர் என்னும் சொல்லுக்குப் ‘பிரபுத்தனம்’ என்னும் பொருள் பிற்காலத் திற் கொடுக்கப்பட்ட தாயினும் அதற்கு அவர் மொழியில் 1மிலேச்சர் என்பதே பொருள். இப்புது மக்கள் எங்கிருந்து வந்தார்கள்? இப்பாரத பூமியிலுள்ள ஒவ்வொரு உயிருள்ள பிராணியும் இப்பூமிக்கே சொந்தமானது என்று நமது முன்னோர் நம்பினர். மொழி ஆராய்ச்சியால் ஒவ்வொரு மக்கட் கூட்டத்தின ருடையவும் உற்பத்தி இடத்தை அறிந்து கொள்ளுவது இலகுவா யிருக் கின்றது. ஒரு சாதியாரின் சரித்திரத் தொடர்பும், சரித்திரத்துக்குரிய ஆதாரமும் எங்கு நின்று விடுகின்றனவோ அவ்விடத்து, மொழி, சரித்திர காலத்துக்கு முற்பட்ட அவர் வரலாற்றையும், அவர் பிரிவதற்கு முன் வாழ்ந்து வந்த பொது இடத்தையும் அறிவிக்கின்றது. சிந்து நதிக்கரைகளில் புதிதாக வந்து குடியேறிய மக்களின் மொழி ஆராய்ச்சி, அவர்களின் உற்பத்தியைப் பாரத பூமிக்கு அப்பால் காஸ்பியன், ஆரல் கடல்களை அடுத்த நாடுகளுக்கு அப்பால் கொண்டுபோய் விடு கின்றது. ஆரற் கடலோடு ஒரு காலத்து இணைக்கப்பட்டுக் கிடந்த காஸ்பியன் கடலும் தெற்கே கிடந்த வனாந்தரமும் இம்மக்களை நாகரிகத்தில் முதிர்ந்த பாபிலோனியரோடு கலந்து கொள்ளாதபடி தடுத்தன. தமது நாட்டினின்றும் கலந்து கொள்ளாதபடி தடுத்தன. தமது நாட்டினின்றும் கிளம்பிய ஒரு கூட்டத்தினர் நீண்டகாலம் தென்கிழக்காக அலைந்து திரிந்தனர். பின்பு தெற்கு நோக்கிச் சென்று சிந்து நதியின் மேற்குக் கரையில் குடியேறியது கி. மு. 2000 ஆண்டுகள் வரையில் என்பது மேல்நாட்டு ஆசிரியர்களின் துணிபு. பரதரும் பாரத நாடும் ஆரியர் சிந்து நதிக்கரையில் வந்து முதன்முதற் குடியேறும்போது குமரி முதல் இமயம் வரை நாகரிகம் முதிர்ந்த ஒரே இன மக்கள் குடியேறி யிருந்தனர். பரதர் என்னும் பூர்வ சாதியார் குடியேறி யிருந்தமையின் இந்நாடு ‘பாரத வருடம்’ என்னும் பெயர் பெற்றது என்று விட்டுணு புராணங் கூறுகின்றது. இந்தியநாடு முழுமையும் பரதர் வசம் இருந்தது. பரதர் என்னும் சொல் உச்சரிப்பு வேறுபாட்டால் பிற்காலத்துப் பல மாறுதல்கள் அடைந்தது. பரதவர் என்னும் பெயர் மலையைக் குறிக்கும் ‘பார்’ என்னும் அடியாகப் பிறந்ததென்பர் டாக்டர் ஒப்பேட் அவர்கள். பார் என்பதன் ஆதிப்பொருள் மலை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கின்றது. தமிழருடைய ஆதி இடம் மலையாகவே இருந்தது. பழைய தமிழ்நாட்டு அரசனுக்குச் சிறப்பாக ஒரு மலை உரியதாக விருந்தது. இது அவனுடைய முன்னோர், மலையிலுள்ளவர்கள் என்பதை ஞாபகப் படுத்துகின்றது. தமிழ்க் கடவுளாகிய முருகனது இருப்பிடங்கள் மலைகளாகக் காணப்படுகின்றன. அக்கடவுள் மலை உச்சிகளிலேயே பெரிதும் வணங்கப்படுகின்றார். தமிழ் மக்களின் காதல், அரசியல்களைக் கூறும் அகப்பொருள் புறப்பொருள் நூல்கள், அவர்களின் பழைய பழக்க வழக்கங்களை விரித்துக் கூறுகின்றன. தலைவனும் தலைவியும் சந்தித்துக் காதலிக்கும் காட்சி மலையிடமாக விருந்தது. போரின் ஆரம்பமாகிய நிரை கவர்தலும் மலையை அடுத்த நிலங்களில் நிகழ்ந்தது. ஆதலால் தமிழரின் தொடக்கம் யாதோ ஒரு மலை யிடம் எனத் தெரிகின்றது. தமிழர் பெரிய வெள்ளப் பெருக்குத் தொடர்பாக வும் மலையையே கொண்டனர். மனு என்னும் திராவிட அரசனின் பேழை மலையக் குன்றிற் றங்கியதென்றும், அவன் பேழையை விட்டு இறங்கி மலையத்தின் ஓர் இடத்தில் மக்களின் நன்மைக்காகக் கடுந்தவம் செய்தா னென்றும் மச்சபுராணங் கூறுகின்றது. முற்காலத்தவர் பல காரணங்களை முன்னிட்டு மலைகளையும் உயர்ந்த இடங்களையும் வாழும் இடங்களாகக் கொண்டனர். தமிழரின் ஆதி இருப்பிடம் எல்லம்மலை ஆகலாம். 1இது மேருமலையின் ஒரு சிகரம். மேருமலையின் ஒரு கொடுமுடி, இன்றைய இலங்கைத் தீவு எனப்படுகின்றது. இலங்கைத் தீவுக்கு எல்லம் என்பது பழைய பெயர். எல்லத்தினின்றும் சென்று யூபிராத்தஸ், தைகிரஸ் ஆற்றோரங் களில் குடியேறிய மக்கள் அங்குள்ள ஓர் இடத்துக்கும் மலைக்கும் எல்லம் எனப் பெயர் இட்டு வழங்கினர். சிந்து நதியின் மேற்குக் கரையில் ஆதியில் வந்து குடியேறிய ஆரியர், பாரத நாடு சீர்திருத்த மடைந்திருப்பதையும், அது வலிய அரசரால் நன்கு ஆளப்படுவதையும் கண்டனர். இருக்குவேத பாடல்கள் அவர்களுடைய தொண்ணூறு கோட்டைகளையும் ஏழு வலிய அரண்களையும் பற்றிக் கூறுகின்றன. இவை பஞ்சாப்பில் இருந்தனவாகலாம். ஆரியர் வருகைக்கு முற்பட்ட இந்திய அரசர் பரதர் என்ப்பட்டனர். இருபது அரசரையுடைய இப்பரம்பரை, ஐந்து நூற்றாண்டுகளாக ஆட்சிபுரிந்து ஆரியர் வருகைக்கு முன் வீழ்ச்சி யடைந்திருக்க வேண்டும். அவர்களுக்குப் பின் இன்னொரு சந்ததியினர் ஆண்டனர். இவர்களை ஆரியர் அசுரர் என்று அழைத்தனர். அசுரர் அசுரர் என்பதற்கு இறைவன் என்பது பொருள். இது அரசு என்னும் தமிழ்ப் பதத்தின் உச்சரிப்பு வேறுபாடு எனக் கருத இடமுண்டு. இருக்கு வேதத்தில் அசுரர் என்னுஞ்சொல் மேன்மை அல்லது வலிமை என்னும் பண்பைக் குறிக்கின்றது; இருக்கு வேதத்தின் பத்தாம் மண்டிலத்தைத் தவிர, மற்ற இடங்களிலெல்லாம் கடவுளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக் கின்றது. இவ்வுண்மையைத் தத்தர் ‘பழைய இந்தியா’ என்னும் நூலின் 201வது பக்கத்தில் விளக்கியிருக்கின்றார். பிராமணங்களில் அது வேறு பொருளில் வழங்கப்பட்டிருக்கின்றது; அங்கு அது கடவுளின் பகைவரைக் குறிப்பதற்குப் பயன்படுகின்றது. ஆரியர் இந்திய நாட்டிற் குடியேறுதல் சிந்து நதி தீரத்திற் குடியேறினோர் படை எடுத்து வந்தோரல்லர். அவர்கள் ஆடு மாடுகளுடன் புற்றரைகளை நாடி அலைந்து திரிந்த சாந்தமானவர்களே. விருந்தினரை வரவேற்று ஓம்புவது தமிழரின் இயற்கைப் பண்பு. அரசர் புதிய மக்களுக்கு அன்பும் இரக்கமுங் காட்டினர். பயிரிடாது கிடந்த தரிசு நிலங்களைத் திருத்திப் பயிரிடப் புதிய மக்கள் அனுமதிக்கப் பட்டார்கள். இவர்கள் பலம் அடைந்தபோது நாடுகளைத் தமக்குச் சொந்த மாக்க விரும்பினார்கள். அப்பொழுது தமிழருக்கும் ஆரியருக்கும் இடை யில் பெரும்போர்கள் நிகழ்ந்தன. அப்போர்களைப் பற்றி ஆரியரின் பழைய பாடல்களின் தொகுதிகளாகிய வேதங்கள் குறிப்பிடுகின்றன. 1ஆரியர் தாம் இந்தியாவை அடைந்து அறுநூறு ஆண்டுகளுள் பஞ்சாப் தேசம் முழுவதை யும் தம் வசமாக்கினார்கள். அக்காலத்திலேயே (கி.மு. 2000-கி.மு. 1200) வேத பாடல்கள் செய்யப்பட்டன. பிற்காலங்களில் ஆரியர் தமிழர் என்போர்களுக் கிடையில் விவாகக் கலப்பு உண்டாயிற்று; அதனால் இரு சாதியினரும் ஒன்று போற் சேர்ந்து பலமடைந்தனர். ஐந்து ஆறுகள் பாயும் நாட்டிலுள்ளவர்கள், கலப்பில்லாத சாதியார் என வெளி உலகிற் சொல்லப்பட்டாலும், அவர்கள் ஒரே இனத்தைச் சேர்ந்த ஆரியக் குழுவினர் என்று சொல்லமுடியாது. புராண, கன்னபரம்பரை வரலாறுகளால் பஞ்சாப்பின் பழைய மக்கள் எட்டு வெவ்வேறு கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று விளங்குகின்றது. அவர்களில் மூன்றிலொரு பங்கினர் ஒரே இனத்தைச் சேர்ந்த அத்திரி, கண்ணுவர், விசுவாமித்திரர் என்னும் மூன்று மரபினரும், தமிழர் அல்லது பரதராவர். பிராமணர் என்று கருதப்படுவோர் பலர் தமிழ் வகுப்பைச் சார்ந்தவராவர். பழைய காலத்தில் சாதித்தடை இருக்கவில்லை. கலப்பு மணங்கள் நடைபெற்றன. முன் உறைந்த வர்களும் புதிய மக்களும் கலந்தமையால் வலிமை ஏற்பட்டது. அரசாங்கம் பலப்பட்டது. உலக சரித்திரத்தில் இம்முறை புதுமையானதன்று. பாரதப் போர் டெல்லிக்கு அண்மையில் கங்காநதி தீரத்தில் இருந்த அத்தினாபுரி யாகிய தமிழர் இராச்சியம், ஆரியரின் வளர்ச்சியைப் பஞ்சாப்பிற்கு வெளியே செல்லாமல் தடைசெய்தது. பாஞ்சாலம், விதேகம், கோசலம், விஸ்வல, (வட) மதுரை, மகதம், மாளவம் முதலியன தமிழரின் மற்றைய இராச்சியங்களுள் முக்கியமானவை. இந்நாடுகள் இமயமலை, விந்தியமலை, கிழக்கு மேற்குக் கடல் ஆகிய எல்லைகளின் இடையே கிடந்தன. பாரசீகக் கரையிலுள்ள நாடுகள் அத்தினாபுரத் தரசனுக்குத் திறை அளித்தன. இது பாரதப்போர் காலம் வரையில் நடைபெற்றது. அம்பல்லா என்னும் இடத்துக்கு இருபத்தாறாவது மைலிலுள்ள தனேஷ்வா என்னும் இடத்தில் கி.மு. 14ஆம் நூற்றாண்டில் பாரதப்போர் விளைந்தது. குரு, பாண்டவர் என்னும் ஒரே குடும்பத்தினருக் கிடையில் இப்போர் நிகழ்ந்தாலும், பாரத பூமியிலுள்ள அரசர் எல்லோரும் ஒவ்வொரு பக்கத்தைச் சேர்ந்து போர் செய்திருக்கின்றனர். இப்போர் வடக்கே, இருந்த இராச்சியங்களுக்குத் தலை இடியாயிருந்தது. சிறு இராச்சியங்கள் சுயேச்சை பெற்றன. பஞ்சாப்பில் அடைக்கப்பட்டிருந்த ஆரியருக்கு இப்பொழுது வழி திறந்தது. சொகுசான வாழ்க்கை முறையினால் தமிழர் போர் செய்யும் வீரத்தை இழந்தனர். இவ் விவரங்களை இருக்கு வேதத்திற் காணலாம். இருக்குவேதம் பஞ்சாப், கபூல் என்னும் இரு இடங்களைப் பற்றிச் சொல்லுகின்றது. சொல்லப் பட்டவற்றுள் கங்காநதியும், யமுனையும் சில இடங்களில் மாத்திரம் கூறப் பட்டுள்ளன. ஆகவே பஞ்சாப்பிலிருந்த ஆரியர், அவற்றை நன்கு அறிந் திருக்கவில்லை என விளங்குகின்றது. அப்பொழுது ஆரியர், வானம், புயல், இடி, காற்று முதலிய இயற்கைப் பொருள்களை வணங்கினர். மிருகபலி கொடுத்தனர். அவர்கள் சமயச் சடங்குகளும் யாகங்களும் புரியும் இடங்கள் சிந்துநதிக் கரையும் அதன் கிளைகளும் சரஸ்வதி நதியுமாயிருந்தன. அவர்கள் தமிழர்க்குரிய சிவ வணக்கத்தையும் சமயக் கொள்கையையும் அறியாதவர்களாயிருந்தனர். சிவ வணக்கம் பழைய வேத பாடல்களில் சிவனைப்பற்றிச் சொல்லப் படவில்லை என முதல் முதல் கூறியவர் டாக்டர் ஸ்டிபின் ஆவர். உருத்திரன், அக்கினி எனக் கூறப் பட்டாலும் அக்கினியையும் உருத்திரணையும் சிவன் என்று கூறமுடியாது. தக்கன் சிவனை யாகத்துக்கு அழைக்கவில்லை யென்றும், ஆனால் பதினொரு உருத்திரரும் யாகத்துக்குச் சென்றிருந்தனர் என்றும் புராணம் கூறுகின்றது. சிவன் இருவகை வழிபாட்டுக்கு உரியர். ஒன்று கண்ணுக்குப் புலனாகாத தியானவடிவம். ஒன்று கண்ணுக்குப் புலப்படும் இலிங்கவடிவம். பூவும் புகையும் கொண்டு கடவுளை வழிபடுதல் தமிழரின் பழைய முறை. பூ இதயத்தையும், புகை அது இளகுவதையும் குறிக்கும். இலங்கை வேந்தனும் இராவணீயம் என்னும் இசை நூல் செய்தவனுமாகிய இராவணன், பொன் இலிங்கம் ஒன்றைத் தன்னுடன் கொண்டு திரிந்து பூவும் புகையும் கொண்டு வழிபட்டான். இராவணன் மாத்திரமல்லன்; வாணன், வாலி முதலானோரும் 1தமிழ் முனிவர்களும் சிவ வணக்கத்துக்குரியோராயிருந் தனர். அவர்கள் சிவனைத் தியான உருவமாகவும் மூர்த்தி வடிவமாகவும் வழிபட்டனர். பஞ்சாப்பில் வாழ்ந்த ஆரியர் இதுவரையும் தமிழர் மதத்தைப் பின்பற்றாதும் சிவ வழிபாட்டை அறியாதும் இருந்தனர். ஆரியருக்கும் தமிழருக்கும் பகை ஏற்பட்டால் அது சமயத்தைப் பொறுத்ததாயிருந்தது. ஆரியரின் தெய்வங்கள் கீழாக மதிக்கப்படலாயின; ஆரியர் புரியும் யாகங் களும் அழிக்கப்பட்டன. இக்காரணத்தினாலேயே உயர்ந்தோரைக் குறிக்கும் அசுரர் என்னும் சொல், தேவர்களின் எதிரிகள் என்னும் பொருளைக்குறிக்க இருக்குவேதத்தின் பத்தாம் மண்டிலத்திலும், பிராமணங்களிலும் வழங்கப் பட்டுள்ளது. ஆரியரின் இயற்கை வணக்கத்தோடு தமிழருடைய உயர்ந்த வழிபாட்டு முறைகளை ஒப்பிட்டுப் பார்க்குமிடத்துப் பின்னவை மிகச்சிறந் தனவென்று எவர் மனத்திலும் படுதல் இயல்பு. ஆரியர் தமது கடவுளைப் பிரகாரசமுள்ளவன் என்னும் பொருளில் தேவன் என்று அழைத்தனர்; தமிழர் தமது கடவுளை எல்லாவற்றையும் கடந்த பொருள் என்னும் கருத்தில் கடவுள் என வழங்கினர். சிவன் என்னும் சொல், சிவ என்னும் அடியாகப் பிறந்து, நல்லது, இனியது, அழகியது முதலிய பொருள்களைக் கொடுக்கும். ஆரியர் கங்கைக் கரை நாடுகளை அடைதல் ஆரியர் இந்தியாவை அடைந்தபின் பாடிய நூல் இருக்குவேத சங்கிதை என்பதை இந்திய வரலாற்று ஆசிரியர்கள் எல்லாரும் ஒப்புக் கொள்கின்றனர். பஞ்சாப்பில் வாழ்ந்த கலப்புச் சாதியினர் ‘சற் லெஸ்’ என்னும் ஆற்றை இன்னும் தாண்டவில்லையென்றும், அவ்வாற்றுக்கு அப்பால் அவர்கள் வாழ்ந்ததைப்பற்றி அவர்கள் வேதபாடல்கள் கூறவில்லை யென்றும் முன்னோரிடத்திற் குறிப்பிட்டோம். ஆகவே கி.மு. 2000 முதல் கி.மு. 1400 வரையுள்ள 600 ஆண்டுகளி லும் அவர்கள் பஞ்சாப், கபூல், காந்தாரம் முதலிய நாடுகளில் வாழ்ந்தார்கள் என்று தெளிவாகப் புலப்படுகின்றது. ஆரியர் குடியேறி வாழ்ந்த நாட்டுக்கு எதிர்ப்புறத்தில் வாழ்ந்த மக்கள், ஆரியரோடு கலக்கவில்லை என்பதும், அவர்கள் முற்றாக வேறு கூட்டத்தினராயிருந்தார்கள் என்பதுமே, இதனாற் பெறப்படும் முதன்மையான தீர்மானமாகும். அக்கூட்டத்தினர் முன் நாம் கூறிய தமிழர் அல்லது பரதர் ஆவர். பிராமணங்கள், ஆரணியங்கள், உபநிடதங்கள் ஆதியன கி.மு. 1400 முதல் கி.மு. 10ஆம் நூற்றாண்டு வரையிலும் செய்யப்பட்டன. இவ்விரண் டாம் காலப் பகுதியிற் செய்த நூல்கள் மாத்திரம் கங்கை ஆற்று வெளிகளில் வாழ்ந்த குரு, பாஞ்சால, காசி, கோசல, விதேகர்களைப்பற்றிச் சொல்லு கின்றன. பாரதப் போரின் பின் சிறு இராச்சியங்கள் விடுதலை யடைந்தன. அப்பொழுது ஆரியர், பஞ்சாப்பைக் கடந்து கீழே சென்றனர். அவர்கள் கோசலத்தைக் கைப்பற்றியபோது கங்காநதிப் பள்ளத்தாக்கில் இவர்கள் பெரிய சாதியாராக விளங்கினர். தசரதனின் பாட்டனாகிய புகழ்படைத்த இரகுலே கோசலத்திலுள்ள சகேதாவில் ஆரியப் பரம்பரையை முதலில் நாட்டினான். சகேதாவை ஆண்ட அரசருள் தசரதன் மிகப் புகழ் படைத்தவன். இவன் நீண்ட காலம் அரசு புரிந்தான். அக்காலத்தில் கோசல இராச்சியம் உச்சநிலை அடைந்திருந்தது. அதன் இராசதானியாகிய சகேதா அயோத்தி (வெல்லப்படாதது) என்னும் புதிய பெயர்பெற்றது. இராமாயணத்தையும் இதுபோன்ற நூல்களையும் எழுதிய ஆசிரியர்கள் இராமனின் தந்தையாகிய தசரதனை ஆரிய வமிசத்தின் 56-வது அரசனாகக் கூறுகின்றனர். ஆரியப் பரம்பரைக்கு முன் சகோவை ஆண்டு பழைய தமிழ் அரசரோடு சேர்த்து இவர்கள் பிழையான கணக்குச் செய்திருக்கின்றனர். பாரதப் போருக்குமுன் குருகுலத்தவருக்கு இராசதானியாக விருந்த அத்தினாபுரம், மற்ற இராச்சியங்களுக்குத் தலைமையாயிருக்குந் தன்மையை இழந்து விட்டாலும், கங்கை ஆற்றின் கரையிலுள்ள செழிப்பான இடமாகக் கருதப்பட்டது. குரு, பாஞ்சாலம், விதேகம் காசி முதலிய இராச்சியங்கள் ஒன்றோடு ஒன்று நட்புக் கொண் டிருந்தன. போர் முடிந்தபின் பாண்டவர் பழைய நாள் தமிழர் வழக்கப்படி தவஞ்செய்யக் காட்டுக்குச் சென்றனர் 1அருச்சுனனின் பேரனான பரிச்சித்து அத்தினாபுரத்துக்கு அரசனானான். அவனுக்குப் பின் சனமேசயன் பட்டம் எய்தினான். பரிச்சித்துவும், சனமேசயனும் கல்விப்பிரியரா யிருந்தனர். ஆரியர்களுடைய இலக்கியங்களை ஒளி அடையும்படிச் செய்தவர்கள் இவர்களே. பரத வமிசத்தவன் அல்லது தமிழனாகிய சனமேசயன் ஆரியரின் இலக்கியங்களை ஆதரித்தானென்பது வியப்புக்கு இடமாயிருக்கலாம். இவ் வகையான சம்பவங்கள் எவ்வாறு நிகழ்கின்றன என்பதற்குச் சில எடுத்துக் காட்டுகள் தருகின்றோம். திருதராட்டிரன் காந்தார அரசன் புதல்வியாகிய ஆரிய கன்னியை மணந்தபின், அத்தினாபுர அரண்மனை மொழி ஆரிய மாக விருந்தது. இது புதுக்கோட்டை இளவரசரொருவர் திருச்சிராப்பள்ளி யிலுள்ள நாய்க்கர் கன்னியை மணந்ததனால், முன் அரண்மனையில் வழங்கிய தெலுங்குமொழியின் இடத்தைத் தமிழ் ஏற்றுக்கொண்டதுபோல் ஆகும். திருதராட்டிரனின் புதல்வனாகிய துரியோதனனது அரசாட்சி நன்கு அமைக்கப்பட்டிருந்தது. அவனுடைய சபையில் தமிழரும் ஆரியருமாகிய மூதறிஞர் பலரும் இருந்தனர். அவருள் அங்கதேய அரசனாகிய கன்னன் தமிழரது தன்னயமற்ற நடுநிலைமைக்கு எடுத்துக் காட்டாவன். காந்தார இளவரசனாகிய சகுனி தன்னயமுடைய ஆரியரின் குணத்துக்கு உதாரண மாவன். இவ்வகையான கலப்பு மணங்களாலும், அவைகளால் ஏற்பட்ட உற வாலும் முற்கால ஆரியர் தமிழ்நாட்டில் உபசரிக்கப்பட்டனர். குருச்சேத்திரத் தில் வாழ்ந்த ஆரியர்களுக்கு வீடுகள் அளிக்கப்பட்டன. காலச் செலவில், குடியேறிய ஆரியருக்கும் தமிழருக்கும் ஒரேவகை உரிமைகள் வழங்கப் பட்டன. இதனால் இருசாதியினரும் ஒருசாதியினராகக் கலந்துவாழும் வாய்ப்பு உண்டாயிற்று. தாம் வென்று கைப்பற்றிய கோசல நாட்டிற் போலவே, ஆரியர் அத்தினாபுரத்திலும் வாழத் தலைப்பட்டனர். இவ்வாறு சேர்ந்து நடத்தப்பட்ட வாழ்க்கையினால் மொழி, சமயம், பழக்க வழக்கம் ஆகியன வும் கலந்தன. ஆரியர் தமிழரிடமிருந்து கற்றுக்கொண்ட அநேக தமிழ்ச் சொற்கள் ஆரியமொழியிற் காணப்படுகின்றன. இரு பிரிவினரும் கலந்து வாழ்ந்தார்கள் என்பதற்கு இஃது அறிகுறியாகும். ஆரியரின் நூல்கள் ஒளி பெறுதல் குருபாஞ்சாலர், பாண்டவர் ஆகியோர் சிவனை வழிபட்டனர். அவர்களுக்குப் பின் வந்த அரசர் ஆரியரின் ஆதிக்கத்தால் கடவுள் 1பத்தியிற்றளர்ந்தவர்களாயினர். அவர்கள் ஆரியரின் தெய்வங்களைத் தமது கடவுளர்களாகக் கருதியதோடு யாகங்களிலும் நம்பிக்கை கொண்டனர். இக் கொள்கைகள் இவர் முன்னோராற் கடியப்பட்டவை. இதுவரையும் ஆரியர் தமிழரோடு கலப்புற்ற வகையினைக் கூறி னோம். இனிச் சனமேசயன் காலத்தில் ஆரியரின் நூல்கள் ஒளி அடைந்த வகையினைக் கூறுவோம். பஞ்சாப்பில் வாழ்ந்த ஆரியர் புரிந்த யாகங்கள் ஆடம்பரமில்லாமல் இருந்தன. பெரிய விருந்து கொண்டாடுவதற்காக அசுவ யாகங்கள் செய்யப்பட்டன. ஆடம்பரத்தோடு கூடிய யாகங்கள் செய்யப் பட்டன. ஆடம்பரத்தோடு கூடிய யாகங்கள் அரசர் அரண்மனைகளிலும், கங்காநதிப் பள்ளத் தாக்கிலுள்ள நாடுகளிலும் நடைபெற்றன. அசுவமேத யாகம் பாவத்தைப் போக்கி அரச பதவியை அளிக்குமென நம்பப்பட்டது. முன்னோருடையவும் தன்னுடையவும் பாவங்களைப் போக்குதற்குச் சனமேசயன் யாகங்களைச் செய்தான். யாகங்களைப் புரியும் விதிகளைக் கூறும் பெரிய நூல்கள் எழுதப்பட்டன. இவைகள் திரட்டப்பட்டுப் பிராமணங் கள் என்னும் பெயரைப்பெற்றன. பிராமணங்கள் சனமேசயன் காலத்திற் றோன்றினவாகும். மாபாரதமும் இவன் காலத்திற் செய்யப்பட்டது. வைசம் பாயனர் சனமேசயனுக்குப் பாரதப்போர் வரலாற்றினைக் கூறினார். பாரதஞ் செயதவர் கிருட்டிண வியாசர் என்பது நம்பத் தக்கதா யில்லை. வியாசரின் புகழை நிலை நாட்டுதற்கு அவர் மாணாக்கர் சிலர், அவர்பெயரால் வேதங் களைத் தொகுத்தும் மாபாரதத்தை இயற்றியும் போந்தார்கள் என்றும் கருத இடமுண்டு. இவ்வாறு செய்தல் அக்கால மரபு. கிருட்டிண வியாசர் என்னும் பரத வகுப்பினர், வேதங்களைத் திரட்டினவரும் மாபாரதத்தைச் செய்தவரு மாயிருந்தால், அவர் காலம் மாபாரதத்துக்குப் பிந்தியதாயிருத்தல் வேண்டும். மாபாரதம் ஒருவரால் ஒரு காலத்துச் செய்த நூலாகக் காணப்படவில்லை. “பிற் காலப் புலவர்களும் தாம்பாடிய பாடல்களைப் பாரதத்துட் சேர்த்து அதனைப் பெரிதாக்கியிருக்கின்றனர். பிற்காலத்தைய ஒவ்வொரு கொள்கைக்கு உரியோரும் தத்தம் கொள்கைகளை நூலிற் புகுத்தியிருக்கின்றனர். குரு பாண்டவர் யுத்தத்துக்குப் பிற்பட்ட கிருட்டிண வணக்கம் புகுத்தப்பட்டிருக் கின்றது,” எனத் தத்தர் கூறியிருக்கின்றனர்.2 மாபாரதம் எழுதப்பட்டது மாத்திர மல்லாமல் வேதங்களின் தொகுப்பும் சனமேசயன்காலத்தில் நிகழ்ந்திருத்தல் கூடும். இத்தொகுப்புகள், ஆரியர் சிந்துநதி தீரத்திற் குடியேறியது முதல், யாகங்கள் ஆடம்பரத்தோடு செய்யப்பட்டது வரையிலுள்ள காலத்தைக் குறிப்பிடுகின்றன. தமிழர் கடவுட் பூசைகளில் தோத்திரப் பாடல்களைப் பாடுதல் மரபு. ஆகவே ஆரியரின் யாக சாலைகளிலும் துதிபாடும் முறை கொண்டுவரப்பட்டது. இருக்கு வேதத்தி னின்றும் தெரிந்தெடுத்த பாடல்களோடு சில பாடல்களையும் சேர்த்த தொகுதிக்குச் சாமம் என்று பெயர் இடப்பட்டது. இருக்கு வேதத்தினின்றும் எடுக்கப்பட்ட கிரியைகளிற் படிக்கும் மந்திரங்களோடு வேறு சிலவற்றைச் சேர்த்த தொகுப்புக்கு யசுர் என்று பெயரிடப்பட்டது. இவ்விரண்டும் இருக்கு வேதத்தோடு சேர்த்துத் ‘திரயம்’ என்று வழங்கின. சாம வேதத்தின் இசை வகுப்புக்கு, ஆரியர் தமிழ் இராவணனுக்கு மிகவும் கடமைப்பட்டவர் களாவர். அதர்வணம் அல்லது கடைசியாகச் செய்யப்பட்ட வேதம்; பல மந்திரங்களின் தொகுப்பையுடையது. அம்மந்திரங்கள் இந்திய நாட்டின் பல பாகங்களினின்றும் திரட்டி ஆரியமொழியில் எழுதப்பட்டனவாகும். சனமேசயனுடைய தந்தை பரிச்சித்து சர்ப்பந்தீண்டி இறந்தான். சர்ப்பங்களை ஒழிக்கக் கருதிய சனமேசயன், இந்திய நாடு முழுமையிலுமுள்ள மந்திர வித்தைக்காரரை அழைத்து அவர்கள் வாயிலாகச் சர்ப்பயாகஞ் செய்தான். அக்காலத்தில் அதர்வண வேதமென்பது நூலாகச் செய்யப்பட்டது. இத் தொகுப்புநூல், பிற்காலத்தில் ஒரு நூலாகக் கொள்ளப்பட்டு வேதங்கள் நான்கு என்னும் வழக்கு உண்டாயிற்று. இவ்வாறு சனமேசயனுடைய ஆட்சியில் ஆரியர் இலக்கியங்களுக்கு மதிப்பு உண்டாயிற்று. பிராமணர் சனமே சயனுடைய ஆளுகை பாரதப்போருக்கு ஒரு நூற்றாண்டு பிற்பட்டது. ஆரியர் கங்காநதி வெளிகளில் குடியேறிய நூறு ஆண்டுகட்குள் அவர்கள் மிக முன்னேற்றமடைந்தனர். அக்காலத்தில் கட்டுப்பாடான சாதிப் பிரிவினை உண்டாகியிருக்கவில்லை. மனுவின் நீதிநூலும் தோன்றவில்லை. மக்கள் இராசாயனர், வைசியர் என்னும் இருபிரிவினராயிருந்தனர். இராசாயனர் நாட்டை ஆள்பவர்களாயிருந்தனர். அவர்கள் ஒரு காலத்தில் அசுரர் என்று அழைக்கப்பட்டனர். பஞ்சாப்பில் வாழ்ந்த பழைய ஆரியர் மொழியில்அசுரர் என்பதற்குப் பிரபுக்கள் என்பது பொருள். இவர்கள் அல்லாது மற்றவர்கள் வைசியர் என்றழைக்கப்பட்டனர். பஞ்சாப்பில் குடியேறிய எல்லோருக்கும் இது பொதுப்பெயராகவிருந்தது. புதிய காரணங்களால் மக்கள் புதிய கடமைகளைச் செய்யும் கட்டாயம் நேர்ந்தது. ஆகவே ஆரியருக்குள் பல வகுப்புகள் தோன்றின. பிராமணங்களை நன்கு பயின்றோரும், யாகக் கிரியைகளைப்புரியும் திறமையடைந்தோரும், பிராமணர் எனப்பட்டனர். பிராமணர் யாகக் கிரியைகளைச் செய்தனர். அதனால் அவர்கள் நிரம்பப் பொருள் பெற்றனர். அரசர்களும் செல்வரும் தமது செல்வங்கள் எல்லாவற்றையும் யாகம் என்னும் பெயரால் இக் கூட்டத்துக்கு இறைத்தனர். பிராமணங்களின் அறிவைக்கொண்டு அவர்கள் மிகுந்த பொருள்திரட்டியபோதும் பயனற்ற இக்கிரியைகளாற் திருப்தியுறாமற் பலர் ஞானத்தைத் தேடி அதனைப்பெற முயன்றனர். பிராமண வகுப்பினர், தமிழ் அரசரிடம் உண்மை ஞானத்தைக்கேட்டு அறிதல் சனகனுடைய அரண்மனையிலேயே சதபதப் பிராமணம் ஆரம்பிக் கப்பட்டது. தமிழருடைய பழைய கதைகளும், சமயக்கொள்கைகளும் ஞானமும், பெரிய வெள்ளப் பெருக்கோடுதொடர்புடைய மனுவின் வரலாறும், மறு பிறப்புப் பேரின்பம் முதலிய உண்மைகளும் இந்நூலகத்தே காணப்படுகின்றன. இவை எல்லாம் ஆரியர் அறியாத பொருள்கள். இவை முதன் முறையாகச் சதபதப் பிராமணத்திற் காணப்படுகின்றன. சதபதப் பிராமணம் யாக்ஞவல்கியராற் செய்யப் பட்டது. காசி அரசனாகிய அயத சத்துரு, சனகனைப்போலக் கல்வியறி வுடையவனும் கல்வியை ஆதரித்தவனுமாவன் என்று கோசிதகி உபநிடதங் கூறுகின்றது. கிரகபாலகி என்னும் கல்வியறிவுடைய பிராமணன் அயத சத்துருவிடம் வந்து, “நான் உனது மாணாக்கனாக வரட்டுமா” எனக் கேட்டான். அரசன், “இராசாயனனுக்குப் பிராமணன் மாணாக்கனாயிருத்தல் முறையல்ல; வேண்டியவற்றைக் கேள், விளக்குகிறேன்” என்றான். யாக்ஞவல்கியைப்போல் மதிக்கப்பட்ட பிராமணருள் கௌதமர் அல்லது உடலகர் என்பவர் ஒருவர். இம்முனிவர் ஆரிய ஞானிகளுட் சிறந்தவர் எனக் கருதப்பட்டனர். இம்முனிவர் இராசாயனரிடமிருந்து நேர்மையாகவும் உறுதியாகவும் ஞானத்தைக் கற்றாரென்று உபநிடதங்கள் பலவிடங்களில் தெளிவாகக் கூறுகின்றன. உபநிடதங்களின் பகுதிகள் இராசாயனர் அல்லது தமிழர் ஞானமுடைய குரவர்களென்றும், மதிநுட்ப முடையவர்களென்றும் கூறுகின்றன. பிராமணர் இவர்களிடமிருந்தே ஞானத்தைப் பெற்றனர். சாந்தோக்கிய உபநிடதத்தில் காணப்படும் வரலாறு அதனை வலியுறுத்து கின்றது. மேலே கூறப்பட்ட கௌதமர், இராசானுச பிரவாகனனால் வினாவப் பட்ட ஐந்து கேள்விகளுக்கு விடை அறியாது பிரவாகனன் வாயிலாகவே விடைகளைப் பெற்றனர். பிரவாகனன் விடை அளிக்கும்போது, “உனக்குச் சொல்வதன்முன் இந்த ஞானம் பிராமணன் எவனுக்கும் அளிக்கப்பட வில்லை. அதனை உபதேசிக்கும் உரிமை இவ்வுலகில் இராசாயன வகுப் பினருக்கே உரிய குரு நாட்டிலும், வென்று கைப்பற்றிய கோசலநாட்டிலுமே பெரும்பாலும் ஏற்பட்டது” எனக் கூறினான். கங்கைக் கரைகளில் வாழ்ந்த தமிழ் அரசர்களின் அரண்மனைகளில் பிராமணரின் எத்தனங்கள் பயனளிக்கவில்லை. அங்குப் பிராமணர் மதிக்கப் பட்டிலர்; பிராமணங்களும் கவனிக்கப்பட்டில. முற்காலத்தில் ஒவ்வொரு தமிழரசனது அரண்மனையிலும் அறிஞர் அவை ஒன்று இருந்தது. அக்கால இலக்கியங்கள் தமிழரசரின் அரண்மனைகளிலிருந்த அறிஞர் சபைகளைப் பற்றி அடிக்கடி குறிப்பிடுகின்றன. பிரதானமாகக் காசி அரசன் அயாத சத்துரு, பாஞ்சால அரசன் பிரவாகனன், விதேக அரசன் சனகன் முதலியோரின் சபைகள் கூறப்படுகின்றன. இவர்களுள் இராசாயனனாகிய சனகனது அரண் மனையிலிருந்தவர்களே முக்கியமுடையவர்கள். சனகன் சாத்திர ஞான வானும் ஆசாரியனுமாவன். தமிழரின் உண்மையான தத்துவ ஞானங்க ளடங்கிய உபநிடதங்களுக்குப் பெருமை அளித்தவன் இவனாவன். வேறு நாடுகளுக்குப் பெருமை அளித்தவன் இவனாவன். வேறு நாடுகளிருந்தும் பல அறிஞர் இவனது அரண்மனைக்கு உண்மை ஞானத்தை விசாரித்தறியச் சென்றனர். அவருள் யாக்ஞவல்கி என்னும் பிராமணர் ஒருவர் இங்குக் குறிப் பிடத்தக்கவராவார். சனகன் இவருக்கு உண்மையான தத்துவ ஞானத்தைப் போதித்தார். யாக்ஞவல்கி தத்துவ ஞானமில்லாத ஆரிய மதத்திலிருந்து தத்துவ ஞானமுடைய தமிழ் மதத்துக்குத் திருப்பப்பட்டார். யாக்ஞவல்கி இரண்டு பிராமணர்களுடன் சனகனிடஞ் சென்றார். சனகன் அக்கினி கோத்திரம் செய்யும் முறையாதென வினாவினான். யாக்ஞ வல்கியின் விடை ஓரளவு சரியாகவிருந்தது; முற்றும் சரியாக இருக்கவில்லை. மற்ற இருவரும் கூறிய விடைகள் பிழையாக விருந்தன. அதன் மேல் சனகன் அக்கினி கோத்திரத்தைப்பற்றி விளக்கினான்; விளக்குதலும் யாக்ஞவல்கி, தன் குருவாகிய பிருகுவின் உபதேசங்களில் திருப்தி அடையாதவராய் அவரிடம் சுற்றவைகளை எல்லாம் சத்தி எடுத்தார். அவர் சத்தி எடுத்தது கிருட்டிண யசுர் வேதத்தை. பின்பு அவர் தம் குருவை விட்டு நீங்கிச் சூரியனை யடைந்து சுக்கிலயசுர் வேதத்தைக் கற்றார். இவ்வாறு சதபதப் பிராமணங் கூறுகின்றது. சூரியனென்றது தமிழாசிரியனைக் குறிக்கும். இதனால் ஆரியர் பல தெய்வக் கொள்கையைப் பின்பற்றினர் என்று விளங்குகின்றது. கடவுள், உயிர்களின் இயல்புகள், எவ்வெவை என்று எவ்விடங்களிலும் விவாதிக்கப் பட்டன. கடவுள் எங்கும் நிறைந்திருக்கின்றாரென்பது தமிழ் மக்களின் கொள்கை. இறைவன் எல்லாப் பொருள்களினும் செறிந்திருக்கிறாரென்றும், அவருக்குள்ளே தோற்றம் ஒடுக்கம் ஆதியன என்றும் கூறப்பட்ட உண்மை, கடவுள் எல்லாப் பொருளும் ஆகின்றாரென்றும், ஒவ்வொரு பொருளும் கடவுளின் பகுதியென்றும் பிற்காலத்தில் திரிபு பெற்றது. தமிழரின் ஞானத்தை எடுத்துக் கூறும் உபநிடதங்கள் அக்கால ஆரிய நூல்களுள் சிறந்து விளங்கின. உபநிடதங்கள் தோன்றியபின் பிராமணரின் நூல்கள் மங்கத் தொடங்கின. இவ்வாறாதற்கும், ஆரியர் தமிழர் மதத்தைத் தழுவுவதற்கும் காரணரா யிருந்தவர் சனகரே யாவார். அவர் அரசருக் கெல்லாம் அரசராய் விளங்கினார். அதற்கு அவர் உண்மை ஞானமே காரணம். சனகனின் காலம் சனகன் அரசாண்ட காலம் இன்னதென்று நினைவில் வைத்திருத்தல் நன்று. இவர் சகேதாவில் அரச பரம்பரையைத் தொடங்கிய இரகுவின் பேரனாகிய தசரதன் காலத்தவர். சனகன் காலத்தில் பரிச்சித்துவின் பரம்பரை மறைந்துவிட்டது. ஆனால் அவ்வமிசத்தைப் பற்றிய ஞாபகம் மறைந்துவிட வில்லை. யாகங்கள் வாயிலாகப் பரிச்சித்துவின் வமிசத்தவருடைய பாவங்கள் போக்கப்பட்டன. இது சனகன் காலத்தில் ஆச்சரியப்படத்தக்கதும் தர்க்கத்துக் குரியதுமாயிருந்தது. யாக்ஞவல்கியின் எதிர்க்கட்சியினர் ஒருவர் யாக்ஞவல்கியை நோக்கிப், பரிச்சித்துக்கள் சென்றுவிட்டார்களா? என்னும் கேள்வியைக் கேட்டார். அவர்களின் அசுவமேதம் இப்பொழுது எங்கே போய்விட்டது? என்று யாக்ஞவல்கியர் மறுமொழி கூறினார். பரிச்சித்துக்கள் என்றது அவர்கள் காலத்து நூல்களை. இதனால் பிராமணங்களின் காலம் 1உபநிடத காலத்துக்கு முற்பட்டது என விளங்குகின்றது. சனகன், பிராமணரை ஆதரித்த சனமே சயன் காலத்துக்குச் சில ஆண்டுகள் பிற்பட்டவன் எனக் கூறலாம். பாரதப் போருக்குப் பிற்பாடு பரிச்சித்துவுக்குப் பின் வந்தவன் சனமேசயன். ஆகவே, இவன் காலம் 2கி.மு. 14ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும். ஆகவே சனகன் கி.மு. 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவனாவன். சகேதாவை ஆண்ட ஆரிய அரசருள் தசரதன் கீர்த்தி வாய்ந்தவன். கங்காநதி தீரத்தில் ஆட்சி புரிந்தவர்களுள்ளும் இவன் சிறந்தவனாவன். இவன் தமிழ் அரசனாகிய சனகனோடு சம்பந்தப்பட்டவன் என்று அறிகின்றோம். ஆரிய வர்த்தம் தரசதனின் புத்திரன், சனகனின் ஒரே புதல்வியை மணந்ததால், தமிழர் ஆரியர் என்னும் இரண்டு வமிசங்களுக்கும் இடையில் உறவு ஏற்பட்டது. குலகுருவாகிய வசிட்டரின் அனுமதியைப் பெற்ற தசரதன், தனது புதல்வன் இராமனை விசுவாமித்திரர் 1என்னும் முனிவரிடம் ஒப்பித்தான். கோசலம் விதேகம் என்னும் இரண்டு இராச குடும்பங்களின் இணைப்பு, பன்னிரண் டாம் நூற்றாண்டுக்கு முன் ஒன்றுபட்டுவிட்டது. ஆரியர் பஞ்சாப்பிலிருந்து வந்து குடியேறியபின், பஞ்சாப்பிற்குக் கிழக்கு, சோணை ஆற்றுக்குத் தெற்கு, அராவலிமலைக்கு வடக்கு அதன் கிழக்கேயுள்ள ‘பிரியற்றா’, (Pryatra) முதலிய எல்லைகளுக்குட்பட்ட நாடுகளில், இரண்டு சாதிகளுக்கு மிடையில் ஒரு வேற்றுமையும் இல்லாமல் மறைந்துவிட்டது. மேற்குறித்த எல்லைக் குட்பட்ட நாட்டைப் பிற்காலத்தார் ஆரியவர்த்தம் என்று அழைத்தனர். இக் கலப்புச் சாதியார் மிகுந்த சீர்திருத்த மடைந்த பின்பு, ஆரியர் முதன்முதற் குடியேறிய நாடாகிய பஞ்சாப்பை முற்றாக மறந்துவிட்டனர். ஆரியவர்த்தம் என்பதில், பஞ்சாப் சேர்க்கப்படவில்லை. ஆரியர் குடியேற்றத்தின்பின் தோன்றிய இரண்டாவது கால நூல்களாகிய பிராமணங்கள், ஆரணியங்கள், உபநிடதங்கள், ஆரியவர்த்தத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளன. பிராமணர் தென்னாட்டை அடைதல் ஆரியர் இவ்வாறு தமிழ்மயமானபின் அவர்கள், உபநிடதத்திற் கூறும் தத்துவ ஞான ஆராய்ச்சியில் ஆவல் கொண்டவர்களாய், ஞானத்துக்குப் பிறப்பிடமாகிய தென்னிந்தியாவுக்கு யாத்திரை செய்தனர். இவர்கள் தமிழ் அறிஞராலும் அரசராலும் வரவேற்கப்பட்டனர். ஆகவே அவர்கள் தமிழ் அரசரின் அரண்மனையை அலங்கரித்த அந்தண ஆசாரியர்களிடமிருந்து தமிழ் ஞானத்தைக் கற்றனர். ஆரியர் தமிழரோடு இவ்வகையான உறவு வைக்கத் தொடங்கிய பின்னர் 1‘சூத்திர’ இலக்கியங்கள் எழுதப்பட்டன. அவ் விலக்கியங்கள் பலவற்றின் பிறப்பிடம் தென்னிந்தியாவாகும். இதுவரையும் வசன நடையில் எழுதப்பட்ட ஆரியரின் இலக்கியங்கள், இப்பொழுது செய்யுள் நடையில் எழுதப்படலாயின. இம்முறை தமிழரைப் பின்பற்றிச் செய்யப்பட்டதென்பதைச் சூத்திர இலக்கியங்களைப் பார்த்து அறியலாம். 2வடக்கே உள்ளவர்களுக்கும், தெற்கே உள்ளவர்களுக்குமிடையில் கி.மு. 10ஆம் நூற்றாண்டு முதல் இவ்வகையான உறவு ஏற்பட்டதை அறிகின்றோம். தெற்கே வந்த பிராமணரிற் பெரும்பாலோர், தமது நாட்டுக்குத் திரும்ப வில்லை. ஆகவே அவர்கள் தென்னாட்டிற்றங்குவாராயினர். தமிழ் அந்த ணரின் மாணாக்கராகத் தென்னாட்டிற்றங்கிய ஆரியப் பிராமணர் அந்தண வகுப்பினரோடு கலந்தனர். தென்னிந்தியாவிற் காணப்படும் பிராமணரிற் பெரும்பாலோர் தமிழர் என்பதிற் சந்தேகமில்லை. இராமாயணம் தெற்கே முதல் முதல் அடி எடுத்து வைத்த ஆரியன், இராமன் என்று நாங்கள் படிக்கின்றோம். இக்கொள்கை ஐயத்துக்கு இடமானது. இராமன் சனகன் காலத்தவனாயின், இராமாயணம் கி.மு. பதின்மூன்றாம் நூற் றாண்டுக்கும் ஐந்தாம் நூற்றாண்டுக்கும் இடையில் எழுதப்பட்ட நூலென்பதிற் சந்தேகமில்லை. தென்னிந்தியப் பழங்கதை ஒன்றை எடுத்துக்கொண்டு, அதனோடு கோசல தேசத்து இராமனையும் பிணைத்து இராமாயணம் செய்யப்பட்டிருக்கின்றதெனத் தெரிகின்றது. அந்நூலாசிரியர் வடக்கேயிருந்த தசரதனையும், சனகனையும் ஒரே காலத்தவர் ஆதலை வைத்துக்கொண்டு, தென்னாட்டு இராவணன் அகத்தியர் முதலியோர் காலங்களையும் இடங் களையும் கவனியாது நூல் செய்திருக்கின்றார். அகத்தியர், ஆரியர் சிந்துநதி யின் மேற்குக் கரையில் வந்து குடியேறுவதன் முன் வாழ்ந்தவராவர். ஆரியரின் கடவுளர் முதலிற் பஞ்சாப்பில் குடியேறிய ஆரியர், எப்படித் தமிழரோடு கலந்து கொண்டார்கள் என்று சரித்திர சம்பந்தமாக அறிந்துகொண்டோம். இரண்டாவதாக இவர்கள், பல காரணங்களாற் கிழக்குத் திசையாகச் சென்று, கங்கா நதிப் பக்கங்களில் வாழ்ந்த தமிழர் அல்லது பரதரோடு எப்படிக் கலந்தார்களென்று அறிந்தோம். சரித்திர சம்பந்தமான ஆராய்ச்சியை விட்டு இனிச் சமயம், மொழி என்பவற்றை ஆராய்வோம். ஒரு சாதியாரின் பழைய வரலாற்றை அறிந்துகொள்வதற்குச் சமய ஆராய்ச்சியும், மொழி ஆராய்ச்சியும் நம்பிக்கையான ஆதாரங்களாக விருக்கின்றன. இரண்டாவது குடியேற்றக் காலத்தில் கலப்பு ஆரியர், தமிழரின் நியாயமுறையான சமயத்தைத் தழுவினார்கள் என அறிந்தோம். அவர்களின் சமய மாற்றம் சடுதியாக ஏற்பட்டதன்று. அக்கால நிலைமைக்கேற்பச் சிறிது சிறிதாக ஏற்பட்டாலும் உறுதியாக விருந்தது. பஞ்சாப்பில் ஆரியர் குடியேறிய காலம் முதல் வேதபாடல்களில் தமிழ்க்கொள்கைகள் நுழைந்திருக்கின்றன. இருக்குவேதத்தில், பழைய தெய்வங்களும் வருணனும், மித்திரனும் (இரவும் பகலும் அல்லது இருண்டவானமும், ஒளியுடையவானமும்) வழிபடப் பட்டன. ஆரியர் இந்தியாவை அடைவதன்முன் பல மாறுதல்களையும் பல தெய்வங்களையும் வழிபட்டனர். இந்திய நாட்டை அடைந்த ஆரியர், தமிழரின் ஒரு தெய்வ வழிபாட்டைக் கண்டவனர்; கண்டு, இந்திரனை எல்லாத் தெய்வங் களுக்கும் தலைவனாகக் கொண்டனர். இந்திரன் எல்லாத் தெய்வங்களுக்கும் தலைவனாகவும் கொள்ளப்பட்டான். இந்திரன் என்னும் சொல் இறைவன் என்னும் தமிழ்ச் சொல்லின் உச்சரிப்பு வேறுபாடாக விருக்கலாம். ஞாயிற்று வணக்கம் அவர்கள் தாங்கள் புதிதாகப் பழகிய பரதர் அல்லது தமிழரிடமிருந்து சூரிய வணக்கத்தையும் கைக்கொண்டனர். சூரிய வணக்கத்துக்குரிய காயத்திரி பாடல்களைச் செய்தவர்கள் பரதரில் சிறந்தவர்கள் எனப்பட்ட விசுவாமித்திரர்களே. பஞ்சாப்பிலுள்ள மல்தான் (Maltran) என்னும் நகரில் சூரியனுக்குப் பழைய கோயில் ஒன்று இருந்தது என அறிகின்றோம். ஒளரங்கசீப் என்னும் மகமதிய மன்னனின் கட்டளையால், அவ்வாலயத்தில் இருந்த தங்க உருவம் உருக்கிக் கருவூலத்தில் சேர்க்கப்பட்டது. மல்தான் என்னும் இடம், மல்லர் அல்லது மள்ளர் இருப்பிடமாயிருந்தது. இந்தியாவின் மேற்குப் புறத்திலே மள்ளர் முக்கிய சாதியினராவர். தமிழரின் ஒரு பிரிவின ராகிய இவர்கள் மல்தான், மர்வ மல்வ என்னும் எல்லைகளுக்குட்பட்ட நாடுகளிலும் இராசபுத்தனாவிலும் காணப்பட்டனர். பள்ள என்பது மள்ள என்பதன் உச்சரிப்பு வேறுபாடு. சௌராட்டிரத்தில் வாழும் சாதியினருக்கு இப்பெயர் வழங்கும். அங்குச் சூரிய வழிபாடும், அவ்வழிபாட்டுக்குரிய பல ஆலயங்களுமிருந்தன. ஆதிகாலந் தொட்டுத் தமிழருக்கிடையில், சிவ வணக்கத்தைப் போலவே சூரியவணக்கமும் இருந்தது. தத்துவ ஞானத்தை அறிவதன்முன் அவர்கள் சூரியனையே வணங்கினார்கள் எனலாம். எல்லம் என்பது அக் காட்டில் (மேற்கு ஆசியா) உள்ள கட்மீரா (Cadmira) என்னும் இடம். தமிழர் சென்று குடியேறிய நாடு இது. அங்கே பேபெல் (Babel) என்னும் இடம், சூரியன் கோயிலுக்குப் பேர் போனது. பேபெல் என்பதற்குக் கடவுளின் வாயில் என்பது. பொருள். ஆகவே கட்மீரா என்னும் நகரம் பேபெல் என்னும் பெயரைப் பெற்றதோடு, பேபெல் என்னும் கோயிலின் பெயரிலிருந்து எல்லம், பபிலோன் என்னும் பெயரையும் பெற்றது. மேல்நாட்டறிஞர் கட்மீரா என்னும் பெயர் துரானிய உற்பத்திக்கு உரியதென்றும், பேபெல் செமட்டிய உற்பத்திக்குரியதென்றுங் கூறுகின்றனர். ஆனால் பேபெல் என்னும் பொருளே கட்மீரா என்பதற்கும் என்று கூறுகின்றனர் அவர்கள் இரண்டு சொற்களுக்கும் ஒரே பொருள் கொண்டாலும், அவற்றின் உற்பத்தியைக் கூறும் முறையில் பிழைபடுகின்றனர். கட்மீரா என்பது கதிரவம் என்னும் தமிழ்ச் சொல்லின் உச்சரிப்பு வேறுபாடு எனக் கூறலாம். பேபெல் என்பது பகல் என்னும் அடியாகத் தோன்றியது. வாய் என்பது வாயிலை. ஆகவே பகல்வாய் என்பதே சூரியனின் வாயில், உச்சரிப்பு வேறுபாட்டால் பேபெல் எனத் திரிந்தது. சூரிய சந்திர குலங்கள் தமிழர் இரண்டு சாதியாராகப் பிரிவதற்குச் சமயமே காரணமா யிருந்ததெனத் தெரிகின்றது. தென்னிந்தியாவில் வாழ்ந்த தமிழர் சிவ வழிபாட்டினர்; வட இந்தியாவில் வாழ்ந்தோர் சூரிய வழிபாட்டினர். தெற்கே யிருந்து அகத்தியர், காசியில் அல்லது வாரணவாசியில் சைவசமயத்தைப் பரப்பும் வரையும் வடக்கே சூரிய மதமே இருந்தது. ஐரோப்பிய நாடுகளில் நிகழ்ந்ததுபோலவே, இந்தியாவிலும் சமயம் தெற்கிலிருந்து மேலே பரவிற்று, வடக்குப் பிரிவினருள் (வட மதுரை) பாஞ்சாலம், குரு முதலிய நாடுகளில் வாழ்ந்தோர் இவ்வணக்கத்தைக் கைக்கொண்டனர். ஆற்றின் மறுகரையி லிருந்தோர் பழைய கொள்கையுடன் வாழ்ந்தனர். சூரியனை வணங்கினோர் சூரிய வமிசத்தினர் எனப்பட்டனர். சிவனை வணங்கினோர் சந்திரவமிசத் தினர் எனப்பட்டனர். சிவபெருமான் முடியிற் சூடியிருக்கும் பிறை, தமிழரைக் குறிப்பதோடு அதைச் சூடுவதால் அவர் தனது மக்களையும் காக்கின்றார் என்பதையும் விளக்குகின்றது. இவர்கள் இரு பிரிவினராயிருந்தபோதும், அவர்கள் மனுவின் சந்ததியாகிய பொது உற்பத்திக்குரியவர்கள் என்னும் பழைய வரலாற்றை மறந்துவிடவில்லை. கன்ன பரம்பரைக் கதைகள் பலவற்றைத் தொகுத்துக் கூறும் புராணங்கள் மனு என்னும் திராவிட அரசனைப் பற்றிக் கூறுகின்றன. சந்திரவமிசம், பழமை தொட்டுச் சூரிய வமிசத்திலும் பார்க்கப் பெருமைபெற்று விளங்கிற்று. இரு பிரிவினரும் கொள்கையில் மாறுபட்ட போதும் ஒரு கடவுள் வணக்கமுடையவரா யிருந்தனர். ஆரியர் வழிபாட்டு முறையில் தமிழரைப் பின்பற்றுதல். ஆரியரின் ஒரு தெய்வ வழிபாட்டைப் பார்த்து ஆரியர் படைத்த இந்திரனைத், தமிழர் கூறும் எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த கடவுளோடு ஒப்பிட முடியாமலிருந்தமையின் அவர்கள் அதிதி என்னும் பிறிதொரு தெய்வத்தை உண்டு பண்ணினர். இத்தெய்வமும் முதன்மை எய்தியதாக இருக்குவேதம் கூறவில்லை. அதிதி என்பதற்குப் பிரிக்கப்படாதது, முடிவில் லாதது என்னும் பெயர்கள் வேதத்திற் காணப்படுகின்றன. இந்திரன், வருணன், மித்திரன், சூரியன் ஆகியோர் முடிவில்லாத வல்லமையாகிய தாயின் புதல்வர்கள் என்றும், ஆதித்தர்கள் என்றும் சொல்லப்பட்டனர். அதிதியோடு ஒப்பிடத்தக்க கடவுளர், மற்றைய நாட்டில் தோன்றியது என்பதற்கு அறிகுறி யாக, அப்பெயருள் கடவுள் என்னும் சொல்லின் பொருள் தொனிக்கின்றது. கடவுளைத் தாய், அவன், அவள், அது என வழங்கும் முறை தமிழர்களுக்கு மாத்திரம் உரியது ஒன்றாகும். வேதங்களில் இவ்வகையான புதிய வழக்குகள் காணப்படுகின்றன. இது இரண்டு சாதியார் ஒருமித்துக் கலந்தமையால் ஏற்பட்டது. இப்பொருள்பற்றி ஐரோப்பிய நாட்டு ஆசிரியர்கள் வேண்டிய அளவு எழுதியிருக்கின்றனர். கடவுள், படைத்தல் காத்தல் அழித்தலாகிய இறைவனின் முழுமுதற்றன்மை, மறுபிறப்பு, வினைப்பயன் முதலிய கொள்கை களை ஆரியர் அறியாரென்றும், அவற்றையெல்லாம் பிறரிடமிருந்து அறிந் திருக்கிறார்களென்றும் அவ்வாசிரியர்கள் கூறியிருக்கின்றனர். இதை நாம் ஆமோதிக்கின்றோம். ஆரியர் பழங்குடிகளோடு கலந்த பின், தமது பழைய மதத்தையும் நாகரிகத்தையும் கைவிட்டுப் பழங்குடிகட்குரிய கொள்கை களைப் பின்பற்றினார்கள் என்று முன் விளக்கியுள்ளோம். இந்து ஆரியருக் கும், மற்ற ஆரியருக்குமுள்ள சமயத் தொடர்பு அறிய முடியாமலிருப்பது ஆச்சரியப்படத் தக்கதன்று. ஒன்றைக் கொடுத்து ஒன்றை வாங்குவதுபோலக், கடவுளுக்குச் சிலவற்றைக் கொடுத்துப் பதில் உபகாரமாகச் சிலவற்றைக் கேட்பதாகிய வழிபாட்டு முறையையே ஆரியர் அறிந்திருந்தனர். அவர்கள் கடவுள், உயிர் என்பவற்றின் தத்துவங்களை அறியவில்லை. 1தாம் இயற்றிப்போந்த கிரியைகளால் அவர்கள் அவைகளை அறிதல் முடிவதன்று. தமிழரின் ஞானம் உயர்ந்த உண்மைகளை அடிப்படையாகக் கொண்டதாதலின் அது அசைவில்லாதிருந்தது. இராசபுத்தானத்தில் வாழ்ந்த ஆரியர், தமிழ் மதத்தைத் தழுவி அதன் வளர்ச்சிக்கு அதிகம் முயன்றிருக்கின்றனர். கி.மு. 1000-க்கும் கி.மு. 2000-க்கு மிடையிலுள்ள சூத்திர காலத்துப் பலசூத்திர இலக்கியங்களை அவர்கள் செய்தனர். இராச புத்திரரின் அதிகாரத்தின்கீழ் பிராமணர் மிகுந்த ஆதிக்கம் பெற்றனர். புராண மதம். திருத்தம் என்னும் பெயருடன் இவர்கள் பல கேடுகளைச் செய்தனர். பிராமணக் குருமாரின் அதிகாரத்தால் பல நற்கருமங்கள் விலக்கப்பட்டன. புராணமதம் ஆரம்பித்தது. புதிய சத்திரியராகிய இராசபுத்திரர் நிலைநாட்டிய புராணமதம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் ஆரம்பமாயிற்று; முற்காலத்தில் சத்திரியர் பிராமணரிலும் மேலானவர்களாகக் கொள்ளப்பட்டனர். பிராமணர், சத்திரியரின் மேற் பார்வையின்கீழ் பொருளுக்காக யாகங்களை நடத்தினர். இக்கிரியைகளைச் செய்வதற்காக அவர்கள் மந்திரங்களையும் பாடல்களை யும் மனப்பாடஞ் செய்தனர். பலர் அம்மந்திரங்கள், பாடல்களின் பொருளை அறியார். கல்வி சத்திரியனுக்கு உரியதாயிருந்தது. சாமானிய பிராமணனிலும் பார்க்கச் சத்திரியன் கல்வியறிவுடையவனாயிருந்தான். சமய உண்மைகளும் ஞானங்களும் சத்திரியராகிய இராசாயனரால் வெளியிடப்பட்டன. பிராமணர் தமது ஆக்கம் கருதி பழையநூல்களை அழித்தலும், புதிய நூல்களை இயற்றலும். படை எடுத்து வந்தவர்களாகிய இராசபுத்திரர் பிற்காலத்தில் இந்தியாவுக்குத் தலைவராயினர். இவர்களுக்குப் பழைய சரித்திரமாவது, சத்திரியருக்குரிய பெருமையாவது இல்லை. 1இவர்கள் பிராமணரைத் தமக்கு மேலாகக் கொண்டனர்; தாம் சத்திரியர் என்று அழைக்கப்படும் புகழை விரும்பி இராச்சியங்களைப் பெரிதாக்கினர். பிராமணர் தம்மை மேல் என்று எல்லாவிடங்களிலும் நாட்ட முடியவில்லை. வட இந்தியாவில் தங்கள் முதன்மையை நாட்டுவதிலும், நூல்களைத் தம் எண்ணப்படிக் கையாளு வதிலும் அவர்களுக்கு வில்லங்கம் உண்டாகவில்லை. தென்னிந்தியாவில் இவ்வாறு இருக்கவில்லை. இராச புத்திரர் பழைய இராச்சியங்களை வென்று கைப்பற்றியபோது ஒவ்வொரு சாதியினரும் (Caste) முதன்மைக்காகப் போராடி னர். இராச புத்திரரின் துணையைக்கொண்டு பிராமணர், சமஸ்தானங்களில் குருக்களாக அமர்ந்தனர். இராச்சிய சம்பந்தமான கலகங்களெல்லாம் சமயத்தின்பெயரால் நடந்தன. இக்கலகங்கள் நாட்டின் நன்மைகளைப் பலவகைகளிற் கெடுத்தன. இக்காலத்தில் தமது பெருமையை நாட்டுவதற்குப் புராணங்கள் பிராமணரால் எழுதப்பட்டன. வட இந்தியாவிற் செய்தது போலத் தென்னிந்தியாவிலும் தமக்கு இடையூறு எனக்கண்ட நூல்களை இனி ஒரு போதும் உலவாதபடி அழித்தனர்; மாற்றியும் கூட்டியும் திருத்தியும் எழுதினர்.1 பிராமணரும் பிறரும் முதன்மைக்காகப் பேராடிய காலத்துத் தோன்றிய பாடல்கள் பல தமிழிற் காணப்படுகின்றன. சிவ வாக்கியர், கொங்கணர் முதலானோர் ஒரு தெய்வக் கொள்கையை வற்புறுத்தியும் பிராமணரின் பல தெய்வக் கொள்கையை வற்புறுத்தியும் பிராமணரின் பல தெய்வக் கொள்கையை மறுத்தும் பாடல்கள் செய்தனர். பழைய தமிழர், பிறப்பினால் உயர்வு தாழ்வு கொள்ளவில்லை இவ்வாறு தமிழரின் வலிகுன்றிய காலத்தில் பழைய தமிழ் முனிவர் களால் தீது என ஒதுக்கப்பட்ட சாதிக்கோட்பாடு தலையெடுத்தது. சாதிப் பிரிவினையால் தமிழரின் வளர்ச்சி குன்றிற்று. இது பிராமணரின் ஆதிக்கம் மேற்பட்ட புராண காலத்தில் தொடங்கியது . தமிழ்நாட்டில் ஒழுக்கமும் தொழிலும்பற்றிச் சில பிரிவுகள் தோன்றியிருந்த போதும், எல்லோருக்கிடை யிலும் உண்பனவும் மக்கட் கொடை முதலியனவும் நின்று விடவில்லை. அந்தண மரபினராகிய சுந்தரர், பரவை, சங்கிலியார் என்னும் இரு தாழ்ந்த வகுப்புப் பெண்களை மணந்ததும், வேளாளராகிய அப்பர் அடிகளை அந்தணராகிய அப்பூதி அடிகள் உடன் வைத்து உண்டதும் போதிய சான்று களாம். 10ஆம் நூற்றாண்டு வரையில் இவ்வகை நிகழ்ச்சிகள் நடைபெற் றமைக்குப் போதிய சான்றுகள் உள. 13ஆம் நூற்றாண்டில் அந்தணராகிய அருணந்தி சிவாசாரியார் வேளாளராகிய மெய்கண்ட தேவரிடத்தில் தீட்சைபெற்றார். அந்தணராகிய உமாபதி சிவாசாரியார் வேளாளராகிய மறைஞான சம்பந்தர் என்னும் குருவின் உண்ட சேடத்தைத் தின்றார். அக்காலத்து ஒவ்வொருவனதும் விலை மதிப்புக்குரிய செல்வம், சமயமும் கல்வியுமாக விருந்தது. எல்லா வகுப்பினரும் சாதி வேறுபாடின்றி ஆலயங்களில் வைக்கப்பட்டுள்ள திருவுருவங்களின் அருகே சென்று வணங்கினர். அறுபத்துமூவர் எனச் சைவர்கள் போற்றும் அடியார்கள் பல சாதிகளைச் சேர்ந்தவர்களாகக் காணப்படுகின்றனர். “ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும், கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராகில் - அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே”, என அப்பர் சுவாமிகள் அறைகின்றார். பிராமணரைப் பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை பிற்கால அரசரால் பிராமணருக்குப் பெருமை ஏற்பட்டாலும் மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே அவர்கள் பிராமணரைத் தம்மினின்றும் நீக்கினர். பிராமணர் ஒழிந்த மக்கள் எல்லோரும் விருந்து கொண்டாடி உடனிருந்து உண்டனர். புதிதாகக் கிடைத்த மதிப்பைப் பாதுகாத் தற்காகப் பிராமணரும் மற்றவர்களின் தொடர்பை விட்டனர். இதுவே தென்னாட்டில் முதன் முதற்றோன்றிய சாதிப் பிரிவாகும். தென்னிந்திய பிராமணர் தமிழரென்றே முன்னோரிடத்திற் கூறியிருக்கின்றோம். வட இந்தியப் பிராமணருக்கும் தமிழருக்கும் சில சந்ததிகள் தோன்றியிருக்கலாம். காலகதியில் பகைமை அற்றுப் போனாலும் இப்பொழுதும் மாறான நிலையே இருந்து வருகின்றது. மற்றவர்களுக்கும் இவர்களுக்குமிடையில். தின்பன உண்பன பெண்கோடல் முதலியன இன்றும் நடைபெறுவதில்லை. உணவும் நீரும் கொடுக்க மறுப்பது சாதிப் பிரட்டத்துக்கு அறிகுறியாகும். இவ்வுண்மை மறுக்கப்பட்டு அவை உயர்ந்த சாதிக்குரிய அறிகுறிகள் என்று தவறாகக் கருதப்படுகின்றன. கம்மாளர் பிராமணர் வீடுகளில் உண்பதில்லை. இதனால் அவர்கள் தாம் பிராமணரிலும் பார்க்க, மேல் எனக் கருதுகின்றனர். பிராமணன் வீட்டிலும் வேளாளன் வீட்டிலும் உணவு கொள்ளும் வண்ணான், கம்மாளன் வீட்டில் உணவருந்த மறுக்கிறான்; இவை எல்லாம் அன்னியரின் பார்வைக்கு ஆச்சிரியமாகத் தோன்றும். தமிழ்நாட்டில் ஒவ்வொருவனும் தனது சாதியைப் பெருமை பாராட்டுகின்றான். பறையன் கூடத் தனது குலத்தைப் பெருமை பாராட்டி, “பார்ப்பானுக்கு மூப்பன் பறையன், கேட்பாரின்றிக் கீழ்ச்சாதியானான்” என்னும் முதுமொழியை எடுத்துக் கூறுகின்றான். சாதிப் போராட்டம் மூன்று நூற்றாண்டுகளாக நடந்தது. கொள்கைகள் எப்பொழுதும் ஒரு மாதிரி இருப்பதில்லை. பிராமணரை ஆலயங்களி னின்றும் நீக்கவும் அவர்களின் அதிகாரத்தைக் குறைக்கவும் முடியாமல் போகவே, ஒவ்வொரு வகுப்பினரும் தமது சமயச் சடங்குகளைப் புரிவ தற்குத் தஙகளுக்குள் கல்வியறிவு ஒழுக்கங்களிற் சிறந்த ஒவ்வொருவரைக் குருக்களாகத் தெரிந்தெடுத்தனர்.1 தென்னிந்திய மக்களின் சமயம் தென்னிந்திய சமய நிலையங்கள் ஒவ்வொரு குருவின் கீழ் இருந்தன. அக்குரு பிராமண வகுப்பைச் சேர்ந்தவராயிருப்பது அரிது. தென்னிந்திய மக்களின் சமயக் கொள்கைகளை அறியாத மேல்நாட்டார், புராணமதமும் சங்கராச்சாரியாரின் மாயாவாதமுமே அவர்களுடைய சமயம் என்று எழுது கின்றனர். இந்தியாவைக் குறித்து எழுதிய ஆசிரியர்கள் வடஇந்தியாவி லிருந்தே எழுதி யிருக்கின்றனர்; பிராமணரிடமிருந்தே அவர்கள் நூல் எழுதுவதற்கு ஆதாரங்களைப் பெற்றிருக்கின்றனர். சங்கரர் சமற்கிருதத்தில் எழுதிய சமயக் கோட்பாடுகளை மாத்திரம் படித்து, அவர்கள் தம் கருத்துக் களை வெளியிட்டிருக்கின்றனர். சங்கரர் தென்னிந்தியராயிருந்தபோதும் அவருடைய கொள்கையைத் தென்னிந்தியர் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழரிற் பெரும்பாலோர் சித்தாந்த சைவர். அக்கொள்கையோடு மாறபட்ட சங்கரரும் அவர் கொள்கைகளும் தெற்கே கவனிக்கப்படாமையால் அவர் வடக்கே சென்றார். அங்கு அவருடைய மதத்துக்குப் பெருமை அளிக்கப் பட்டது. இதனால் சங்கரர் செல்வதன்முன் வடக்கே உள்ளவர்கள் சிறந்த மதக்கொள்கை இல்லாமல் இருந்தார்களென விளங்குகின்றது. சங்கரர் மதத்தைப் பற்றி ஆராய்ந்து எழுதிய மேல் நாட்டார், இந்தியாவிற் கவனிக்கக் கூடிய மதக்கொள்கை இது ஒன்று மாத்திரம் எனக் கருதினர். இதனிலும் மேலான மதக்கொள்கை ஒன்று தெற்கே உண்டு என்பதை மேல்நாட்டவர்கள் இப்பொழுது உணர ஆரம்பித்திருக்கின்றனர். தென்னிந்தியரின் சிவமதம் அந்நாட்டுக்கே சொந்தமானது. அதன் கொள்கைகள் தமிழ் மதத்தைப் பின்பற்றியன. சங்கராச்சாரியர் தமது மதக்கொள்கைகளை வடக்கே பரப்புவதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன், அகத்தியர் காசியில் (வாரணவாசி) பரப்பியதும் பழைய முனிவர்களால் ஆதரிக்கப்பட்டதுமாகிய சமயம் இதுவே. இச்சமய உண்மைகள் ஆகமங்கள் என்னும் சைவநூல்களில் பொதிந்து கிடக்கின்றன. சமற்கிருதத்தில் மொழி பெயர்க்கப்படாத ஆகமங்கள் அழிக்கப்பட்டன. சமற்கிருத மொழிபெயர்ப்புகள் மூலத்தைச் சரியாகப் பின்பற்றிச் செய்யப்பட்டனவோ என்பது சந்தேகத்துக்கு இடம். பிற்காலத்தில் புராணம் எழுதியவர்கள் ஆகமம் இருபத்தெட்டு எனக் கூறியிருக்கின்றனர். புராணங்களுக்குத் தலைமையான ஸ்கந்தத்தின் ஒரு பகுதியான சூதசங்கிதை ஆகமங்களின் பெயரை முதலிற் கூறி, அவற்றின் ஆக்கியோன் ஈசுவரன் எனக் கூறுகின்றது. அது, புராணங்களை மனிதர் செய்தனர் என்றும் குறிப்பிடுகின்றது. ஆகமங்கள் சரித்திர காலத்துக்கு முற் பட்ட பழமையுடையன வென்பது உண்மை. அவை இருக்கு வேதத்துக்கும் முற்பட்ட பழமையுடையன ஆரியர் தமிழ் மதத்தைப் பின்பற்றியபோது, எழுதப்பட்ட உப நிடதங்களில் ஆகம உண்மைகள் காணப்படுகின்றன. சிவன் தமிழரது கடவுள் என எல்லோரும் ஒப்புக்கொள்கின்றனர். சிவமதம் அல்லது தமிழ்மதம் தமிழருக்கு உரியது என ஒப்புக்கொண்டால், ஆகமங்கள் தமிழரால் தமது மொழியில் எழுதிய நூல்கள் என்று ஒப்புக் கொள்ள ஏன் பின்னிற்க வேண்டும்? மத சம்பந்தமான எல்லா நூல்களும் ஆகமங்களையே ஆதாரமாகக் கொண்டன. மத இலக்கியங்கள் மாத்திர மல்ல, பரதநாட்டிற் றோன்றிய சமயக்கொள்கைகள் ஒவ்வொன்றுக்கும் ஆதாரம் இத்தமிழ் ஆகமங்களிற்றான் உண்டு. திருமூலர், தமது திருமந்திரம் ஆகம சாரம் எனக் கூறுகின்றார். இவர் கி.பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் இருந்தவர் ஆகலாம். 1இக்காலம் ஸ்கந்தத்திற்கு முற்பட்டது. ஸ்கந்த புராணத் துக்குச் செய்ததுபோலவே பின் வந்தவர்கள், திருமந்திரத்திலும் பலவற்றைச் சேர்த்தும் திருத்தியும் மாற்றியும் இருத்தல் கூடுமென்று நம்ப இடமுண்டு. திரு மந்திரத்தாலும் புராணங்களாலும், புராண காலம் வரையும் ஆகமங்கள் இருந்தன என்று கருத இடமுண்டு. புராண மதத்தில் நம்பிக்கை பரவத் தொடங்குதலும் அக்கொள்கைகளுக்கு மாறாயிருந்த ஆகமங்கள் இறந்தன போலும்! புராண காலம் மேல்நாட்டாசிரியர்கள் ஸ்கந்தம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூலெனக் கூறுகின்றனர். பேராசிரியர் பண்டால் (Prof Bandall) கி.பி. 6ஆம் நூற்றாண்டில் எழுதிய படிஒன்று தனக்கு நேபாளத்திற் கிடைத்த தென அறிவித்திருக்கின்றார். இதனால் புராணங்கள் கி.பி. 6ஆம் நூற்றாண்டில் இருந்தன என்பதிற் சந்தேகமின்று. தென்னிந்திய ஆலயங்களைப்பற்றியும் தென்னிந்திய சமயக் கொள்கைகளைப் பற்றியும் புராணங்கள் கூறுகின்றமை யில், அவை தென்னிந்தியாவில் எழுதப்பட்டனவே. இவை புராணம் என்னும் பெயர்பெற்று வடக்கே செல்ல இருநூறு ஆண்டுகளாவது பிடித்திருக்கும். ஆகவே புராணங்கள் கி.பி. நாலாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல்கள் எனக் கூறுதல் நியாயமாகும். அவை ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டு வரையும் பலரால் எழுதிச் சேர்க்கப்பட்ட பலவற்றைக் கொண்டு பெரிதாக்கப்பட்டன வாகும். நேபாளத்திற் காணப்பட்ட புராணம் சங்கராச்சாரியரால் எழுதப் பட்டதாகுமெனக் கருதுகின்றோம். திலாங் (Mr Telang) என்னும் ஆசிரியர் சங்கராச்சாரியர் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இருந்தாரென்பதற்குப் பல காரணங்கள் காட்டியிருக்கின்றார். கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஹம்சவர்தனா என்னும் நேபாள அரசன் சங்கராச்சாரியரின் மாணாக்கனா னான். இவன் தனது மகனுக்குச் சங்கரவர்தானா என்று பெயரிட்டான். சிவ புராணங்களும் ஸ்கந்த புராணமும் ஆகமங்களைவிட ஸ்மிருதி, பிராமணங் களைப் புகழ்ந்து, ஆரிய வேதங்களுக்கு முதன்மை கொடுக்கின்றன. புராணங்களின் பெயரால் இவ்வாறு கூறும் பகுதிகள், சங்கராச்சாரியரால் அல்லது அவர் மாணாக்கரால் சேர்க்கப்பட்டதாதல் வேண்டும். சங்கராச்சாரி யரும் அவர் மாணவரும் சைவசமயத்தவராயினும், அவர்கள் மாணவரும் ஸ்மிருதிகளைப் பிராமணமாகக் கொண்டனர். அவர்களின் சாதனை ஆகமங் களுக்கு மாறாக விருந்தது. ஆகமங்களைக் கீழ்நிலையில் உள்ளவர்களுக் கும், வேதங்களை மேல்நிலையில் உள்ளவர்களுக்குமாகக் கடவுள் அருளிச் செய்தார் என அவர்கள் நம்பினார்கள். மதப் புரட்டு ஆகமக் கொள்கையாகிய தமிழ் மதத்துக்கும், வேதக் கொள்கை யாகிய ஆரிய மதத்துக்கும் போராட்டம் இருந்ததாகப் புராணங்களைக் கொண்டு அறியலாம். இவ்விரண்டையும் சமப்படுத்தவே புராணங்கள் எழுதப்பட்டன. புராணங்களை எழுதினோர் ஸ்மாத்தராகக் காணப்படு கின்றனர். அவர்கள் ஆகமங்களிற் பற்றில்லாமற் போனதோடு, கடவுளைப் பற்றிய உண்மைகளை வேதங்களில் மாத்திரம் காணலாமென்றும், ஆகமங் களாற் பெறப்படும் ஞானம் பயனற்றது என்றும் துணிவுடன் எழுதியிருக் கின்றனர். இவ்வாறு சூதசங்கிதையிற் சொல்லப்படுகின்றது. இக் கொள்கை மறுக்கப்படாமல் இருக்கப்படவில்லை. “கடவுளைக் கண்டு கொண்டும் வேதங்கள் தேடுகின்றன,” என்று தமிழ் முனிவர் கூறினர். புராணக் கதைகள், புராணங்கள் எழுதப்பட்ட காலத்துச் சம்பவங் களல்ல. புராணம் என்பதற்குப் பழைமையுடையது என்பது பொருள். புராணங்களில் தமிழரின் பழைய கன்ன பரம்பரைக் கதைகள் காணப்படு கின்றன. தமிழருக்கும் அவரின் பிரிவினராகிய அக்கேடிய சலாடியர் களுக்கும் பொருவாயுள்ளவற்றுள் சலப்பிரளயம், உலகப் படைப்பு, யுகம் முதலிய வரலாறுகள் சில. இக் கன்னபரம்பரைக் கதைகளோடு கட்டுக் கதைகளும், பொய்க் ககைளும் சேர்க்கப் பட்டுள்ளன. பிராமணரின் பெருமையை விளக்குவதற்காகவே, புராணங்கள் எழுதப்பட்டன. கடவுள் மணஞ்செய்து மக்களைப் பெறுதல், ஐயனார் பிறத்தல், முருகனின் இயற்கைக்கு மாறான பிறப்பு ஆகியவற்றைக் கூறுதல், புராணம் எழுதியவர்களின் மனோபாவனையைப் பொறுத்ததாகும். புராணம் எழுதியவர்கள், சில சமயங்களிற் கடவுளைப் பசாசுகளுக்கும் கீழான நிலையிற் கொண்டு வந்து விட்டிருக்கின்றனர். ஆரிய வேதங்களைச் சூத்திரராவது, பெண்களாவது தொடுதல் ஆகாது. சூத்திரர் அல்லது எந்த வருணத்தின் பெண்ணாவது வேதங்களை வாசிக்கவும் கேட்கவும் கூடாது. ஆகவே பெண்களும் சூத்திரரும் மோட்சத்துக்கு அருகர் அல்லர். தமிழருடைய சமயம் ஆண் பெண் என்ற வேற்றுமையின்றி எல்லோருக்கும் பொதுவானது. பதில் பலனை விரும்பாத அன்பே தமிழர் சமயம். யாகங்கள் வாயிலாகக் கடவுளரின் பசியையும் தாகத்தையும் தணித்தால் அக் கடவுளர் பதில் உபகாரமாகச் சில நன்மை களைப் புரிவர் என்று ஆரியர் கருதினர். தமிழரின் கடவுள் அன்பே. அன்புஞ் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்புஞ் சிவமும் மொன்றாதல் யாரும் அறிகிலார் அன்புஞ் சிவமும் ஒன்றாதல் யாருமறிந்த பின் அன்புஞ் சிவமாய் யாவரும் அமர்ந் திருந்தாரே எனத் திருமூலர் கூறியிருக்கின்றனர். முற்காலச் சைவத்துக்கும் இக் காலச் சைவத்துக்கும் வெகுதூரம். தமிழர் ஆரியர் கலப்பும், பொய்யும் புளுகும் புனைந்து பிராமணர் கட்டிய புராணங்களுமே இதற்குக் காரணம். முற்காலப் பிராமணர் உண்மை ஞானத்தில் ஆர்வங் கொண்டிருந்தனர். அவர்களின் பிற்சந்ததியார் ஞானமின்றிப் பிறப்புரிமையைத் தமது பெருமைக்கு அடிப்படை எனக் கொண்டாடினர். பிறர், குற்றங்காண்பார்கள் என்னும் பயத்தால், தம் முன்னோர் மறைத்து வைத்திருந்த வேதங்களையும் பிராமணங்களையும், பிற்போக்குடைய இவர்கள் ஆதரிப்பதோடு, தாம் தமிழரிடம் கற்றுக்கொண்ட ஞானங்களும் வேதங்களில் உண்டு எனக் கூறினர். இடியையும், முழக்கத்தையும் உண்டுபண்ணும் பயங்கரமான உருத் திரனை, சாந்தமும் அன்பும் வடிவமாகிய சிவன் என்று கூறினர். பின் விட்டுணு, பிரமா என்னும் இருவரோடும் சிவனைச் சமமாக வைத்து இழிவு படுத்தினர். இவ்வாறு மும்மூர்த்திகள் எனக்கொண்டு சிவனுக்கு அழித்தற்றொழிலை உரிமையாக்கினர். சிவனே 1ஐந்து தொழில்களையும் செய்கின்றார். அவர் மூம் மூர்த்திகளுக்கும் அப்பாற்பட்டவர் என முனிவர்கள் பாடியிருக்கின்றனர். “அரியுமல்ல அரனுமல்ல அயனுமல்ல வப்புறம் கருமை வெண்மை செம்மை கடந்து நின்ற காரணன் பெரிதுமல்ல சிறிதுமல்ல பெண்ணு மாணுமல்லவே துரிதமுங் கடந்து நின்ற தூர தூர தூரமே” எனச் சிவவாக்கியர் கூறுகின்றனர். தமிழர் அன்பைக் கடவுள் என்றனர். அன்பினின்றும் பிரிக்க வொண்ணாத அருளைச் சத்தி, உமை அல்லது அம்மை என்றனர். உருத் திரனைச் சிவனெனக் கூறினதுமல்லாமற் பயங்கரமான துர்க்கை அல்லது காளியைச் சிவனுடைய மனைவியாகவும், புராணகாரர் எழுதிவைத்தனர். துர்க்கை, காளி முதலிய பெயர்கள் அக்கினியின் ஏழு நாக்குகளுக்குப் பெயராக வேதங்களிற் சொல்லப்படுகின்றன. அங்கே சொல்லப்பட்ட உருத் திரன் அக்கினியாவன். அன்பும் அருளுமெனக் கொண்டமுறை புராணங் களுக்கும் பிராமணருக்கும் விநோதமாயிருந்தது. ஆகவே அவர்கள் சத்தி என்பது வேறு பெண் தெய்வம் எனக் கருதினர். சிவனின் மனைவியைப்பற்றி அவர்கள் விநோதமான கதை கற்பித்திருக்கின்றனர். “சதபதப் பிராமணத்தில், பார்வதி யாகஞ் செய்தாள் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் சிவனுடைய மனைவியும் தக்கனுடைய மகளுமாகிய பார்வதி, யாகத்தில் உயிர்விட்டாள் என்று புராணகாரர் சேர்த்து எழுதியிருக்கின்றனர். கேனோ உப நிடதத்தில் உமஹய்மாவதி இந்திரனுக்குப் பிரமனுடைய தன்மையைக் கூறுகின்றனர். இந்த உமஹய்மாவதி இமயமலையிற் பிறந்தாளென்று புராணங்கள் கூறுகின்றன. இவை எல்லாம் புராணக் கற்பனைகள்.1 தமிழர் மதம் பழைய சித்தாந்த முறையாற் கடவுளை விளக்குவதற்கும், பிராமணரது புராணமுறையாற் கடவுளை விளக்குவதற்கும் உள்ள தூரம் மிகப் பெரிது. கடவுள் ‘அம்மை அப்பர்’ என்னும் தன்மையரென்பது சித்தாந் தத்தின் துணிபு. புராண மதத்துக்கு முன் இதுவே தமிழர் கொள்கையாக விருந்தது. தமிழர்களின் மனம் உண்மை நெறியை நாடுவதாயிருந்தது. எல்லா உலகங்களும் கடவுளின் ஆணையால் நடைபெறுகின்றனவென்றும், அவை எல்லாம் அவரிடத்தில் ஒடுக்கம் என்றும், தன்னயமற்றிருத்தலினால் மோட்சம் கைகூடும் என்றும், மற்றவர்களுக்குத் தருமஞ்செய்தல் வேண்டு மென்றும் தமிழர்கள் நம்பினார்கள். ஆரியரின் பிராமணங்கள் அல்லது பிற்காலப் புராணக் கொள்கைகள், தமிழரின் நியாய முறையான கொள்கைகளைத் தமிழ் நாட்டினின்றும் அகற்ற முடியவில்லை. ஆரிய மதக் கலப்பினால் தமிழர் சமயம் நிலைகுலைந்தது. அப்பொழுது புத்த சமயந் தோன்றி அக்காலத்துக் கேற்றவாறு பொய்யான கொள்கைகளை எதிர்த்தது. ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் பிராமணர் அதை நெருப்பாலும், வாளாலும், போராலும் இந்தியாவினின்றும் துரத்தினர். இம்மதத்தை எதிர்த்த மதங்கள் உயிர்பெற்றன. புராண மதந்தான் சரியான இந்துமதமென அயல்நாட்டவர்கள் நினைக்கின்றனர். அதில் தமிழருடைய கொள்கைகள் முற்றாக இருக்கின்றன வென்று கூறமுடியாது. இப்புராண மதத்தை முனிவர்கள் எதிர்த்தார்கள். ஆயினும் அறியாமையுடைய மக்கள் உள்ளத்தில் புராணக் கொள்கைகள் பதிந்துவிட்டன. பிராமண மதத்தினாற் கெடுதியுற்ற போதும், தென்னிந்திய ஞானம் சித்தாந்தம் என்னும் பெயரோடு இன்றும் வழங்குகின்றது. சித்தாந்த சாத்திரம், மெய்கண்ட தேவரால் 13ஆம் நூற்றாண்டிற் செய்யப்பட்டது. அச்சாத்திர ஞானம் ஆகமங்களை ஆதாரமாகக் கொண்டது. இந்தியாவில் எவ்வகையான சமயந் தோன்றினாலும் அதற்கு அடிப்படையா யுள்ளது தமிழ் ஞானத்தைக் கூறும் ஆகமமே. ஆகமங்கள் தமிழ் ஞானத்தையும் தெக்கணா மூர்த்தியாயிருந்து தம்மை அருளிச்செய்த கடவுளைப் பற்றியும் கூறுகின்றன. தெக்கணா மூர்த்தி என்பதற்குத் தென் தேசத்துக் கடவுள் என்பது பொருள். ஆகமங்களைக் கடவுள் மகேந்திர மலையிலிருந்து சொன்னார் என்று ஐதீகம் உண்டு. மகேந்திர மலை, திருநெல்வேலிக்கும் திருவிதாங்கூருக்கும் இடையில் மேற்குக் காற்றாடி மலையிலுள்ள பொதிய மலையிலுள்ளது. மூல ஆகமங்கள் இல்லாமல் இது சம்பந்தமாக அதிகம் கூறமுடியாமல் இருக்கின்றது. இப்பொழுது கிடைத்திருக்கும் விவரங்களால் ஆகமங்கள் பல இருந்தனவென்றும், அவற்றுள் இருபத்தெட்டு பிரதானமானவை என்றும் அறிந்து கொள்ளுதல் ஆகும். இவை எல்லாம் காலத்தின் வாய்ப்பட்டு மடிந்தன. இரண்டொரு சைவ ஆகமங்களைத் தவிர வேறு கிடைக்கவில்லை. அவ்வொன்று இரண்டும் சமற்கிருத மொழிபெயர்ப்பாயுள்ளன. மற்றவை மொழிபெயர்க்கப் படாமலே இறந்தன. பல நூற்றாண்டுகளாகச் சைவத்தை எதிர்த்த மதமே கிடையாது. சரித்திர காலத்துக்கு முன் தொட்டு ஆகம ஞானத்தைத் தழுவிய மதமே இந்தியாவில் இருந்தது. புத்த, சைன மதங்கள் தோன்றித் தெற்கே சென்று சைவசமயத்தை நசுக்கத் தொடங்கினதினாலும், புராண இலக்கியங்களாலும் உண்மையான சைவம் தனது தூயநிலையை இழந்து, கட்டுக் கதையளவில், நிலவத் தொடங்கிற்று. அப்பொழுது தமிழருக்குத் தமது மதக் கொள்கைகளை நாட்டிப் பிற மதங்களைக் களைவது அவசியமாயிற்று. இப்பொழுது ஆகம ஞானங்கள் திரட்டப்பட்டுச் சித்தாந்த நூல்கள் எழுதப்பட்டன. இவற்றின் தொகை பதினான்கு. இவற்றில் பிற்காலத்தைய நூற்களிலே அநேகம் சமற்கிருதச் சொற்கள் காணப்படுகின்றன. புராணகால ஆரம்பத்திலிருந்து சமற்கிருதத்துக்கு மேன்மை ஏற்பட்டது. இம்மேம்பாட்டால் சமற்கிருதம் கடவுள் தன்மை உள்ளதென்னும் மூடக்கொள்கையும் எழுந்தது. அம்மொழியில் எழுதப்பட்ட வேதங்களில் எல்லா வகையான ஞானமும் உண்டென்னும் நம்பிக்கையும் ஏற்பட்டது. இடைக்காலத்தில் இலத்தின் கிரீக் முதலிய மொழிகள் ஐரோப்பாவில் எப்படி மதிக்கப்பட்டனவோ அப்படியே வடமொழி, தமிழிலும் சிறப்புடையதாகக் கொள்ளப்பட்டது. கிரேக்க இலத்தின் மொழிகளைப்போல வடமொழி சமய மொழியாகவும் வந்தது. தமிழ் ஞானத்துக்குச் சித்தாந்தம் என்னும் பெயர் இடப்பட்டது நூதனமன்று. சித்தாந்த சாத்திரத்தில் கடவுள், உயிர், உலகம் என்னும் முப்பொருள்களின் உண்மைகள் கூறப்படுகின்றன. தமிழரின் ஞான முதிர்ச்சியைத் தேவார திருவாசகங்களைக் கொண்டறியலாம். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் விளங்கியவர் என்று கருதப்படும் திருமூலர் இச்சாத்திர உண்மைகளைத் திருமந்திரத்தில் விளக்குகின்றார். திருமூலர் கூறுவதுபோலத் திருமந்திரம் ஆகமங்களின் சுருக்கமாகும். ஆகவே ஆகமங்கள் திருமூலர் திருமந்திர காலத்தும், சித்தாந்த சாத்திரங்கள் செய்தவர்கள் காலத்தும் இருந்தன வென்று தெரிகின்றது. பழைய தமிழர் சமய ஞானத்தைக் கூறும் நூல்களின் தொகைகள் ஆகமங்கள் எனப்படும் அத்தகைய நூல்களை எழுதியவர்களின் பெயர்கள் மறந்து விடப்பட்டன. மனிதர் பிழை செய்யும் இயல்பினர் என்னும் எண்ணத்தினாலேயே முன்னோர் அவை கடவுளால் அருளிச் செய்யப்பட்டன என்று கருதினர். வேத பாடல்களைச் செய்த ஒவ்வொரு முனிவரின் பெயரும் காணப்படுகின்றது. வடக்கே வாழ்ந்த தமிழர் சூரியனை வணங்கினார்களென்றும், தெற்கே உள்ளவர்கள் சிவனை வணங்கினாரென்றும் அகத்தியர் வடக்கே சென்று சைவத்தைப் பரப்பினாரென்றும் முன் ஓரிடத்திற் கூறினோம். ஆகவே சைவத்தைப் போலவே ஆகமங்களும் தெற்கே மகேந்திர மலையில் தோன்றின என்று கருத இடமுண்டு1 வேதம் பசு என்றும், ஆகமம் அதன் பாலென்றும் சிலர் கூறுவதுண்டு. ஆராய்ச்சி முறையில் வேதமும் ஆகமமும் நேர் விரோதமுடையனவாய்க் காணப்படுகின்றன. வேதங்கள் பல தெய்வ, இயற்கைப் பொருள் வணக்கங் களைக் கூறுகின்றன. ஆகமங்கள் ஒரே கடவுளை முழுமுதலாகக் கொண்டு வழிபடும் முறையைக் கூறுகின்றன. ஆகமங்கள் வேதங்களுக்கு விரோத மானவை என்றும், ஆகம ஞானம் வேத அறிவை விட மிக மேலானதென்றும் எம். நாராணசாமி ஐயர் கூறுகின்றனர்.2 புராணங்கள் வேதங்களைப் புகழ்வதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. புராணங்கள் தமிழ்க் கொள்கைகள் சிவவற்றோடு வேதக் கொள்கைகள் சிலவற்றையும் கலந்து எழுதப்பட்ட நூலாகும். புதிய மக்களுக்கு வேதங்கள் ஆதாரமாயின. புராணப் போக்குக்கு ஆகமங்கள் இடங்கொடாமையால் அவர்கள் ஆகமங்களிலும் பார்க்க வேதங்களே பிரமாணமெனக் கூறினர். வேதங்களுக்குமுன் ஆகமங்கள் உண்டென்னும் உண்மை ஆராய்ச்சியால் பெறப்படுதலின், வேதத்தினின்றும் ஆகமம் பிறந்ததென்னும் கொள்கை பொய்யாகின்றது. யாகங்களைக் கூறும் ஆரியர் நூல்கள் இருந்தன. தமிழ் மதத்தைத் தழுவிய ஆரியராலும் ஆகமங்கள் கைக் கொள்ளப்பட்டன. வேத பாடல்களில் ஆலய வழிபாடு கூறப்படவில்லை. ஆலயங் களும், ஆலய வழிபாடும் ஆரியருக்கு உரியனவல்ல. பழைய நாள் முதல், கடவுளின் இருப்பிடமாகிய ஆலயங்களிருந்த தென்னிந்திய, அசீரிய, பாபிலோனிய நாடுகளின் ஆலய அமைப்பு ஒரே வகையாகக் காணப்படு கின்றது. தமிழரின் சரித்திரத்தை அறியாமையால், மேல்நாட்டாசிரியர்கள் தமிழர் கட்டட அமைப்பு முறையை அசீரிய, பாபிலோனியரிடமிருந்து கற்றார்கள் எனக் கூறினர். மாபாரதம் சிவாலயங்களைப்பற்றிக் கூறுகின்றது. அருச்சுனன். சிவபெருமானைக் கைலாயத்தில் சென்று வழிபட்டான். கைலாயமென்பது குருச்சேத்திரத்துக்குப் பக்கத்தில் ஒரு குன்றின் மேலுள்ள ஆலயமாகும். யுத்த காலத்தில் ஓர் இரவில் அருச்சுனன் கிருட்டினனோடு கைலாயத்துக்குப் போய்த்திரும்பி வந்தான் எனச் சொல்லப்படுகிறது. கைலாயம் என்பது கோயில் என்பதன் திரிபு ஆதல் கூடும். தமிழ் குன்றியதற்குக் காரணம் பிராமணர்களின் வெறுப்பு, தமிழ்மொழி குன்றுவதற்கும், தமிழ் நூல்கள் பலவற்றின் அழிவுக்கும் ஏதுவாயிருந்தது. தமிழ்நாட்டின் பல பகுதிகளை வாய்ப்படுத்திக் கொண்ட கடல், பல நூல்களையும் கொண்டது. கி.பி. 10-ம் நூற்றாண்டில் பிராமணராலும், 14-ம் நூற்றாண்டில் மகமதியராலும் அநேக நூல்கள் அழிக்கப்பட்டன. அரசரின் பரிபாலனத்தின் கீழ்த் தோன்றிய நூல்கள் காணப்படவில்லை. அந்நூல்கள் 14-ம் நூற்றாண்டில் மகமதியரால் அழிக்கப்பட்டன என்று வின்ஸ்லோ பாதிரியார் கூறியுள்ளார். பிராமணர் தாம் அழிக்க முடியாத நூல்களைச் சிதைவுபடுத்தினர். வெள்ளத்தாலும் நெருப்பாலும் நேர்ந்த கொள்ளையில் இது மேலானது. தமிழ் நூல்களை எடுத்துச் சமற்கிருதத்தில் மொழிபெயர்த்துப் பல கேடு செய்திருக்கின்றனர். பிழையான வழி காட்டியினும், வழி காட்டியில்லாமல் இருப்பது நன்று எனக் கோவர் (Gover) என்னும் ஆசிரியர் கூறியுள்ளார். மண்டகோப உப நிடதத்தில் “சிவன் என்னும் நாமத்தைக் கூறுகிறவன் புலையனாயினும் அவனோடு உண், இரு” என்று வரும் பகுதி மாக்ஸ்மூலரின் மொழி பெயர்ப்பிற் காணப்படவில்லை என்று காசி வாசி செந்திநாதையர் கூறியிருக்கின்றனர். இவ்வாறே நூல்களில் மாற்றங்களும் இடைச் செருகல்களும் நுழைந்தன. 1மேசர் செனரல் வேர்லாங் என்பவர், ஆரியருக்கு நூல்களை இயற்றி உதவியவர்கள் தமிழரே எனக் கூறுவர் உபநிடதங்கள், தரிசனங்கள், பிராமணங்கள் தத்துவ நூல்கள் முதலியன புத்தர் காலத்துக்கு முன்னேயே உள்ளன. திராவிடரே இந்தியாவில் கி.மு. 3000 முதல் கி.மு. 2000 வரையில் ஆட்சி புரிந்தார்கள் என்பதற்குரிய ஆதாரங்கள் கிடைக்கின்றன. திராவிட பண்டிதர்களே சில பிராமணங்களை யும் உபநிடதங்களையும் இயற்றினார்கள். அவர்கள் கல்வி அறிவில்லாத ஆரியரின் துதிகள், பாடல்கள் முதலியவைகளை ஒட்டி வேத பாடல்கள் சில வற்றையும் செய்தார்களாகலாம். திராவிட பண்டிதராகிய கபிலரின் தத்துவக் கொள்கைகளை நோக்குமிடத்து, வேத பாடங்களைச் செய்தல் அவர்களுக்கு எளிதாக இருந்திருக்கலாம். எந்த ஆரியனாவது வேதங்களை ஒழுங்கு படுத்தித் தொகுக்கவில்லை. வேதபாடல்களை ஒழுங்குபடுத்திய வியாசர் திராவிட வகுப்பினரே. வியாசரின் பிறப்புக்குப் பராசரரைத் தொடர்புபடுத்தி அவர் பாதி ஆரிய வழியையும் பாதி திராவிட வழியையும் சேர்ந்தவரென ஆரியர் கூறுகின்றனர். அக்காலத்தில் ஆரியரில் ஒருவனாவது யமுனைக் கரைகளை அடையவில்லை. கல்வி திராவிடர் இடமே இருந்தது. அவர்கள் உயர்ந்த தத்துவக்கொள்கையுள்ளவர்களாயிருந்தனர். வேதாந்தம் என்பது, புத்தசமயம் வடநாட்டில் வேரூன்றிய காலத்தில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தமதக் கொள்கை. இது, ஆரியரின் இயற்கை வணக்கத்தைச் செப்பஞ் செய்யும்பொருட்டு, திராவிட மக்களாற் கொண்டு வரப்பட்ட புதிய சீர்த்திருத்தம் என்பது நிச்சயமாகும். இது, கபில மதக் கொள்கையினர் சைன, புத்தக் கொள்கைகளையும் புகுத்திச் செய்த சீர் திருத்தமேயாகும். அபஸ்தம்பர் முதல் சங்கராச்சாரியர் வரையில், ஆரிய மக்களுக்கு வழிகாட்டிகளாயிருந்து அவர்களுக்குப் பல நூல்களைச் செய்து அளித்தனர். வேதபாஷ்யம், உபநிடதங்கள் முதலிய நூல்களை மேல் நாட்டறிஞரும் பெரிதும் வியந்து பாராட்டுகின்றனர். சர். சார்லஸ் எலியட் கூறுவது “இந்திய மக்களின் சமயம் இந்திய நாட்டில் வந்து குடியேறிய ஆரிய ரால் வெளியிலிருந்து கொண்டுவரப்பட்டதென்றும், திராவிட நாகரிகத்தோடு சம்பந்தப்பட்டபோது அது சில மாறுதல்களை அடைந்ததென்றும் பலர் தவறாகக் கருதுகின்றனர். ஆரியரின் சமயம் திராவிடருடைய பழைய சமயத் தோடு ஒப்பிடத்தக்கதாயுள்ளது என்று கூற ஆரியரின் பழைய இலக்கியங்கள் இடந்தரவில்லை. இந்திய மக்களின் மதமே யென்றும், அது ஆரியக் கலப்பினால் சில மாற்றங்களை அடைந்ததென்றும், நாம் நடுநிலைமையோடு கூறுகின்றோம். சிவன், கிருட்டிணன், துர்க்கை முதலிய கடவுளர்களும், மறுபிறப்பு, அவதாரம்போன்ற கருத்துக்களும் வேதங்களாற் சிறிதும் அறியப் படாதவை. அது இந்திய மக்களின் சமயப்போக்கை ஒத்த கொள்கைகள், பாரசீகம், கிரீஸ் அல்லது மற்றைய ஆரியநாடுகளிற் காணப்படவில்லை.” முடிவுரை இன்று ஆரியர் நாகரிகம் என்று கருதப்படுவன அனைத்தும் தமிழர் நாகரிகமே. வெளியினின்றும் வந்த ஆரியர் மிகச் சிலரே. அவர்கள் தமிழ் வெள்ளத்துட் புகுந்து மறைந்துவிட்டனர்.இன்று தம்மை ஆரியர் எனக் கூறிக் கொள்வோர் உண்மையில் ஆரியர் அல்லர். அவ்வாறாகவும், ஆரியரே தமிழரிலும் தலை சிறந்தவர்கள் என்றும், அவர்களே தமிழருக்கு ஆசானா யிருக்கத் தகுதியுடையவர்கள் என்றும் தாம் அவ்வாரியரின் வழித்தோன் றல்கள் என்றும் சொல்லிக்கொண்டு ஒரு கூட்டத்தினர் தமிழர் தோள்மீது ஏறிக் குதிரை விடுகின்றனர். தமிழர் தமது மடமையை உணர்ந்து குதிரைவிடு கின்ற அன்னோரை உதறித்தள்ளி விடுதலை அடைதல் வேண்டுமென்பது இந்நூற் கருத்தாகும்.  ஆரியத்தால் விளைந்த கேடு முன்னுரை உடம்பில் நஞ்சு கலந்தால் எவ்வளவு தொல்லை உண்டோ அவ்வளவு தொல்லை ஆரியத்தால் தமிழ் மொழிக்கும் தமிழருக்கு முண்டாயிருக்கின்றது. அப் பொல்லாப்பை ஒழிப்பதற்குத் தமிழ் அறிஞர் பற்பல காலத்தில் முயன்றார்கள். அக் கால அரசர், ஆரியக் கொள்கைகளைத் தழுவியிருந்த புரோகித வகுப்பினர், அரசரின் மந்திரிகள், கருமத்தலைவர், கருமகாரராயிருந் தமையாலும் ஆரியத்துக்கு எதிராகச் செய்யப்பட்ட கிளர்ச்சிகள் பயனளிக்கவில்லை. தமிழர் கோயில்களை மேற்பார்த் தமையிற் பார்ப்பார் எனப்பெயர் பெற்ற கோயிற் பூசாரிகள் பிராமண மதத்தைத் தழுவித் தாம் புரிந்துவந்த பார்ப்பனத் தொழிலையே செய்த காரணத்தினால் ஆரியம் கோயில்களில் நுழைவதாயிற்று. ஆரியம் எனப்படுகின்ற சமற்கிருதமொழி, கிரேக்கு, இலத்தின், எபிரேயம், சுமேரியம் முதலிய மொழிகளைப் போன்று பொதுமக்களாற் பேசப்பட்ட மொழியன்று. இது ஒரு கூட்டத்தாருக்கே உரிய சாதிமொழி. இம் மொழியைத் தமது தாய்மொழி எனக் கூறிக்கொள்ளும் குழாத்தினர் இந்திய சனத் தொகையில் மூன்று சதவீதத்தினராவர். இம் மக்கள் இறந்துபோன இம் மொழியை உயிர்ப்பித்து இந்தியப் பொது மொழியாக்கவும் உலகப் பொதுமொழியாக்கவும் வேண்டுமெனப் பைத்தியக்காரத்தனமாகப் பேசிவருகின்றனர். ஒரு போதும் மக்கள் பேச்சு வழக்கிலிருந்து இறந்துபோன மொழிகளை உயிர்ப்பிக்க முடியவில்லை யானால் பொதுமக்களால் பேசப்படாது மாண்டுபோன ஒரு மொழியை உயிர்ப்பிப்பது எங்ஙனம்? “ஆரியம் தேவபாஷை. அம்மொழியிலுள்ள வேத ஆகம புராணங் களைக் கடவுள் செய்தார்” எனக் கற்பனைக் கதைகளை ஏடுகளில் எழுதிப் பொதுமக்க ளிடையே பரப்பித் தமது மாயத்தால் அவர்களை மயக்கித் தாம் விரும்பியவாறெல் லாம் அவர்களை ஆட்டுவித்துப் புரோகிதர் குழாத்தினர் உழைப்பின்றி உயர்ந்த வாழ்க்கை நடத்தி வருவாராயினர். பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள் காலம் முதல் தமிழ்உலகு விழிப்படைந்து உண்மை உணர்ந்து தமிழையே சமயமொழியாக்க வேண்டுமென்றும், பொல்லாத ஆரியக் கொள்கைகளை ஒழிக்க வேண்டுமென்றும் தமிழை வட மொழிக் கலப்பின்றி எழுத வேண்டுமென்றும் முயன்று வருகின்றனர். ஆரிய மாயையில் சிக்குண்ட பழம் போக்கான சைவர்கள் “சைவ சித்தாந்தச் செந் தமிழ்ச் செந்நெறியை” வளர்ப்பதாக அறைகூவினாலும் ஆரியத்தை ஆலயத்தில் ஒழிப்பதற்கு வகை தேடவில்லை. ஆழ்வார் திருவாய் மொழிகளையே உச்சிமேல் வைத்துப் போற்றும் வைணவர்களும் அவ்வாறு செய்ய முயலவில்லை. தீண்டாமை ஒழிப்பு, குழந்தை மணத்தடுப்பு, தேவடியாள் ஒழிப்பு, தாழ்த்தப்பட்டவர்கள் கோயில் நுழைவுத் தடைஒழிப்பு போன்றதொன்றே ஆரிய ஒழிப்புமாகும். இக்கருத்துக்களை வரலாற்று மூலம் வலியுறுத்துவதே இந்நூலின் இலக்கு. சென்னை, 1-11-1948. ந. சி. கந்தையா ஆரியத்தால் விளைந்த கேடு ஆரியம் ஆரியம் இந்திய நாட்டுக்கு அயலே இருந்து வந்த மொழி என்பதை எவரும் அறிவர். அரபு, ஆங்கிலம், பிரஞ்சு முதலிய மொழிகளும் அவ் வாறே பிற நாடுகளிலிருந்துவந்தன. இம்மொழிகளை அன்னிய மொழிகள் என்று கருதுவதுபோல நம்மவர் ஆரியத்தை அன்னிய மொழியாகக் கொள்வதில்லை. இதற்குக் காரணம் பெரும்பாலும் நம்மவர் ஆரியத்தைப் பற்றிய வரலாற்றை அறியாதிருப்பதே. ஆங்கிலம் அன்னிய மொழியா யிருப்பதால், அதைப் படிப்படியாக நமது நாட்டை விட்டு ஒழிக்கவேண்டும் என்னும் கிளர்ச்சிக்குக் காரணம் அது அன்னிய மொழியாயிருப்பதே. ஆரியம் நமது நாட்டுக்குரிய மொழியன்று; அது, வயிற்றுப் பிழைப்பின் பொருட்டு இந்திய நாட்டுக்கு வந்து, பின் அந்நாட்டின் பகுதிகளை ஆக்கிர மித்துக்கொண்ட ஒரு சாதியாரின் மொழி என்பதை நம்மவர் நன்றாக மனத் தில் கொள்வாராயின் அதனையும் நம் நாட்டைவிட்டு ஒழிக்க வேண்டும் என்னும் கிளர்ச்சி துரிதமாகத் துடித்தெழுதலை நாம் காணலாம். ஆங்கிலம் அரசாங்க மொழியாக மாத்திரம் இருந்துவந்தது. ஆரியம் சமயமொழியாகித் “தேவ பாஷை” யாகித் தமிழனின் சமயத்திலும் நுழைந்து கொண்டது. ஒருவன் கடவுளுக்குத் துதி கூறவேண்டுமாயின் அம்மொழியில் எழுதப்பட்ட துதிகளை மனப்பாடஞ் செய்துள்ள ஒருவனுக்கு, (ஒரு பூசாரிக் குக்) கூலி கொடுத்து அதனை அவன் திருவாயால் சொல்லுவிக்கவேண்டி யிருக்கிறது. நாகரிகம் முற்போக்கு அடைந்துள்ள காலம் எனக்கொள்ளப் படும், இவ் விருபதாம் நூற்றாண்டிலேயே அன்னியர் பார்த்து ‘அநாகரிகம்’ என நகையாடத்தகும் இச் செயல் நமது நாட்டில் நடைபெறுதல் வெட்கத் தின்மேல் வெட்கத்திற்கு இடமாகும். ஆரிய மொழி இந்தியாவில் எவ்வாறு வேரூன்றிற்று? காஸ்பியன் கடலை அடுத்த நாடுகளினின்றும் கிளம்பிய ஆரியக் குழுவிற் சிலர் இந்திய நாட்டை அடைந்தார்கள். இவர்களின் காற்சுவட்டைப் பின்பற்றி மேலும் பற்பல கூட்டத்தினர் இந்தியாவை வந்தடைந்தனர். இவர்கள் எல்லோரும் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆயினும் இவர்கள் பேசிய மொழிகள் வெவ்வேறு வகையாகவிருந்தன. இம்மொழிகள் ஒன்றில் பாடல்கள் செய்யப்பட்டன. அக் காலத்தில் ஆரிய மக்கள் எழுத்தெழுத அறியாதிருந்தமையாலும், அப் பாடல்கள் சமய சம்பந்தம் பெற்றிருந்தமை யாலும், ஒருவர் சொல்ல மற்றவர்கள் கேட்டு மனப் பாடஞ்செய்து அவை களைக் காப்பாற்றிவந்தனர். நாளடைவில் இம் மொழி சமய மொழியாக அவர் களாற் கொள்ளப்படுவதாயிற்று. காலம் செல்லச் செல்ல இம் மொழி உச்சரிப்பு வேறுபட்டும் நாட்டு மொழிச் சொற்களிற் பலவற்றை ஏற்றும் மாறுபடுவ தாயிற்று. அப்பொழுது ஆரிய மொழிப் பற்றுடையார் அதற்கு இலக்கணஞ் செய்து அதனை மேலும் திரிய ஒட்டாமல் பாதுகாத்தனர். பழைய பாடல்கள் செய்யப்பட்ட ஆரிய மொழி பேச்சு வழக்கில்லாததும் இலக்கிய வழக்கில் உள்ளதுமாகிய மொழியாக மாத்திரம் இருந்துவந்தது1. மக்கள் பேச்சு வழக்கில் பயன்படுத்திய மொழிகள் பிராகிருதம் எனப்படும். பிராகிருதம் என்பதைக் கிராமிய மொழி எனக் கூறலாம். உள்நாட்டு மொழிகள் ஆரியர் வரும்போது வடநாட்டில் நாகரிகத்தால் உயர்ந்த தமிழர் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இவர்களின் கோட்டை கொத்தளங்களைப் பற்றியும், செல்வங்களைப்பற்றியும் ஆரியரின் பழைய பாடல்களே நன்கெடுத்துக் கூறுகின்றன. இந்திய நாட்டை அடைந்த ஆரியர் மிகச் சிலரும் அங்கு வாழ்ந்து கொண்டிருந்த தமிழர் மிகப்பலருமாயிருந்தனர்2. ஆரிய மக்களுக்குத் தம் கருத்துக்களை விளக்கும் பொருட்டுத் தமிழ் மக்கள் ஆரியச் சொற்கள் பலவற்றைக் கையாண்டனர். இதே கருத்துடன் ஆரிய மக்களும் பல தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தினர். ஒருவர் மொழிச் சொற்களை இன்னொருவர் உச்சரிக்குமிடத்து அவை சிதைவுபட்டுப்போதல் இயல்பு. இவ்வாறு ஒருவர் மொழியில் மற்றவர் மொழிச் சொற்கள் கலந்து இருவர் மொழிகளும் மாறுதலடையத் தொடங்கின. பின்பு இரு மக்களுக்குமிடையே திருமணக் கலப்பு உண்டாகிப் புதிய சந்ததியினர் தோன்றுவாராயினர். இதனாலும் சாதிக் கலப்பும் மொழிக் கலப்பும் முன்னிலும் அதிகமாயின. இக் காரணங்களினால் வட நாட்டில் மொழிக் குழப்பமுண்டாகிப் பல புதிய மொழி கள் தோன்றின. இம் மொழிகள் பேச்சு வழக்கில் மாத்திரம் நிலவின. இலக்கிய வழக்கிற்கு ஆரியமே பயன்படுத்தப்பட்டு வந்தது. கி. மு. ஆயிரம் வரையில் விந்தமலைக்கு வடக்கே உள்ள நாடுகள் ஆரியாவர்த்தம் எனப்பட்டன. விந்தத்துக்கு வடக்கே உள்ள மக்கள் எல்லோரும் ஆரியர் அல்லராயினும் அவர்கள் ஆரிய மொழியையே தமது இலக்கியப் பொது மொழியாகக் கொண்டமையால் தம்மை ஆரியர் எனக்கூறினர். கி.மு. ஆயிரத்துக்குப்பின் வடநாட்டு முனிவர்கள் சிலர் தமது மதத்தைப் பரப்பும் பொருட்டுத் தென்னாட்டு யாத்திரை செய்தார்கள். 1வட நாட்டு முனிவர் சிற்சிலர் விந்தத்துக்குத் தெற்கே வந்து குடியேறியிருந் தமையை இராமாயணம் கூறுகின்றது. புத்தரும் மகாவீரரும் ஆரிய மதத்துக்கு எதிராகக்கிளம்பினர். வடநாட்டிலே ஆரியருக்கும் தமிழருக்கு மிடையில் நேர்ந்த போர்கள் பெரும்பாலும் மத சம்பந்தமானவை. நாளடைவில் ஆரியரின் மதம் வடநாடு முழுமையும் பரவுவதாயிற்று. ஆரியர் தமது மதத்தைப் பொதுமக்களிடையே திணிக்க முடியவில்லை. அவர்கள் தமது மதத்தில் சில மாற்றங்களை உண்டாக்கினர். தமிழரின் சிவன், அம்மன் முதலிய கடவுளரைத் தமது மதத்துள் சேர்த்துக் கொண்டார்கள். திராவிடக் கோயிற் பூசாரிகள் பிராமண ராக மாறினர். எல்லாக் கூட்டத்தினரின் அரசரும் தம்மைச் சத்திரியர் எனக் கூறினர். இவ்வாறு சில தணிவுகளை உண்டாக்கியபின் அவர்கள் மதம் வட நாடுகளிற் பரவிற்று. அவ்வாறிருந்தபோதும் தமிழரின் பழைய சமயக் கொள்கைகள் ஆங்காங்கு நிலைபெற்றிருந்தன.2 தமிழர் தம் பழைய மதக்கொள்கைகள் நிலை பெற்றிருந்த மகத நாட்டில் மகாவீரரும், புத்தரும் தோன்றினார்கள். இவர்களால் தோற்றுவிக்கப் பட்ட சைனம், புத்தம் என்னும் மதங்கள் ஆரிய மதத்துக்கு மாறுபட்டவை.3 இம்மதங்கள் விரைவில் மக்களிடையே பரவின. இம்மதங்களுக்கு எதிராக ஆரிய மதத்தால் தலை நிமிர்ந்து நிற்க முடியவில்லை. கி. மு. மூன்றாம் நூற் றாண்டுவரையில் பொதுமக்கள் எல்லோரும் இம்மதங்களையே கைக் கொண்டனர். உயர்ந்த வகுப்பினர் என்று சொல்லப்பட்ட ஒரு சில பழங் கொள்கையாளரிடையே மாத்திரம் இந்துமதம் எனப்பட்ட பிராமணமதம் காணப்பட்டது. ஆரியர் மிலேச்சர் எனப்பட்ட காலம் கௌதமபுத்தர், மகாவீரர் காலத்தை அடுத்து ஆரியர் சிலர் தென்னாடு வந்தனர். இவர்கள் தென்னாட்டில் மதிப்புப் பெறவில்லை. தமிழர் அவர்களை மிலேச்சர் என அழைத்தனர். மிலேச்சர் என்பதற்கு அன்னியர் (barbarians) என்பது பொருள். மிலேச்சர் என்னும் சொல் ஆரியருக்குப் பெயராயிருந் தமையை நாம் நிகண்டு நூல்களிற் காணலாம். சங்ககாலத்தில் ஆரியத்துக்கு மதிப்பு உண்டாயிருந்ததாகத்தோன்றவில்லை. ஆரியரைப் போரில் வெல்வதே தமிழரின் சிறந்த வீரச் செயல்எனக்கருதப்பட்டது. ‘ஆரியப் படை வென்ற’ என்பதுபோன்ற பட்டப்பெயர்கள் முற்கால அரசருக்கு இருந் தமையே இதற்குச் சான்று. தமிழ் அரசர் வடவரை வென்று இமயத்தில் தமது அடையாளங்களைப் பொறித்தலும் வீரத்தின் அறிகுறியாகக் கொள்ளப் பட்டது1 ஆரிய மன்னர் தமிழை இகழ்ந்தனர் எனக் கேள்வியுற்ற சேரன் செங்குட்டுவன் ஆரிய நாட்டின்மீது படை எடுத்துச்சென்று ஆரிய மன்னர் முடிமிசை பத்தினிக்கல் எடுப்பித்த வரலாற்றைச் சிலப்பதிகாரம் மிக மிக அழகாகக் கூறுகின்றது. தென்னாட்டில் வேதமதம் தலைஎடுத்தல் ஆரிய மதம் கி. மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே தென்னாட்டை அடைந்ததென்று கூறலாம்2 வைதிக மதம் தென்னாட்டை அடைந்தும் அது தலையெடுக்கவில்லை. முதலில் புத்தமதம் தலையெடுத்திருந்தது. அதன் விழுகைக்குப் பின் சைன மதம் தலையெடுத்தது. அதன் விழுகைக்குப் பின் கி. பி. ஏழாம் நூற்றாண்டளவிலேயே தமிழ்நாட்டுக் கடவுளர்களையும் ஏற்றுக் கொண்டு சில மாறுதல்களுடன் பிராமண மதம் தலையெடுப்பதாயிற்று. புத்த சமயத்தவர்கள் தமது சமய நூல்களைப் பாலி மொழியில் எழுதி வைத்திருந்தார்கள். புத்த சமயத்தினர் தமிழ் நாட்டில் தங்கியிருந்தபோது அவர்கள் தமிழ்நாட்டு மொழியைப் பயின்று தமிழில் மக்களுக்குச் சமயபோதனை செய்து வந்தார்கள். பாலிமொழியில் உள்ள நூல்களைப் பயிலும் பொருட்டுப் பாலிமொழியையும் பயின்று வந்தார்கள். பிற்காலத்தில் பாலியும் சமற்கிருதமும் கலந்தபாஷை என்னும் நடையிலும் இவர்களால் நூல்கள் எழுதப்படலாயின. புத்த சமயம் தலையெடுத்திருந்த காலத்தில் பல வடசொற்கள் தமிழிற்கலந்தன. முற்காலங்களில் மதங்களை எதிர்த்து வாதங்கள் நடந்தன. புத்த மதத்தை எதிர்க்கப் புகுந்தவர்களும் பாலி சமற் கிருதம் முதலியவைகளைப் பயின்று அம் மொழிகளில் எழுதப்பட்டிருந்த புத்த சமய நூல்களைப் பயின்றனர். இவர்களும் தமிழில் பல வடசொற் களைப் புகுத்தினர். வடசொற்கள் தமிழ் மொழியின் ஓசை அமைதிக்கு ஏற்பத் திரித்து வழங்கப்பட்டன. சைன மதம் தலையெடுத்தபோதும் இதே போன்று பல வடசொற்கள் தமிழிற் புகலாயின. பௌத்தரும், சைனரும் தாம் சென்ற நாடுகளிலெல்லாம் தமது சமய நூல்களை அவ்வந் நாட்டு மொழிகளில் மொழி பெயர்த்து மக்கள் பயிலும்படி அளித்தனர். “பிராமணர்களோ அத்தகைய விரிந்த மனப்பான்மை உடையவர்களல்லர். அதற்குமாறாக, தமது மதத்தைத் தாங்கள் மட்டும் அறிய வேண்டும் என்னும் எண்ணமுடையவர்கள். பொது மக்கள் அறியாத சமற் கிருத மொழியில் தங்கள் மதக்கொள்கைகளை எழுதிவைத்துக் கொண்ட தோடு, அந்த நூல்களைப் பிராமணரல்லாதவர் படிக்கவுங்கூடாது, பிறர், படிப்பதைக் காதால் கேட்கவுங்கூடாது, அப்படிச் செய்வாராயின் அவரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று சட்டமும் எழுதி வைத் துள்ளார்கள்.” ஆரியம் ஆலயங்களில் நுழைதல் சைவரும், வைணவரும், (தமது மதத்தைத் தென்னாட்டிற் புகுத்தும் பொருட்டுச் சமயம் பார்த்திருந்த) பிராமணரும் ஒரு முகமாக ஐக்கியப்பட்டு நின்று புத்த, சைன மதங்களை ஒடுக்கினர். அப்பொழுது ஆரியக் கலப் பின்றித் தென்னாட்டில் வழங்கிய சிவ, திருமால் வழிபாடுகளில் சிலமாற்றங் கள் உண்டாயின. சிவன் கோயில்களையும் திருமால் கோயில்களையும் மற்றைய கோயில்களையும் மேற்பார்த்துக் கடவுள்தொண்டு செய்தவர்கள் பார்ப்பார் எனப்பட்டிருந்தனர். இவர்கள் கோயில்களில் தமிழ் பாடினர். இவ்வாறு தமிழ் பாடுவதற்கெனத் தனியாகவும் சிலர் இருந்தனர். அவர்கள் ஓதுவார் எனப்பட்டனர். சைன, புத்த மதங்கள் வீழ்ந்தபோது தென்னாட்டு அரசர் பிராமண மதத்திலும் அவர்கள் கிரியைகளிலும் நம்பிக்கை வைத்தனர்; அவர்கள் புரியும் யாகங்களால் பலனுண்டு என நம்பினர். ‘அரசன் எவ்வழி குடிகளும் அவ்வழி’ என்பதற்கிணங்க அரச வட்டங் களிலுள்ள பெருமக்களும் பிராமண மதத்தில் நம்பிக்கை கொண்டனர்1. தென்னாட்டு அரசர் ஆரியப்பெண்களின் வடிவழகில் மயங்கி அவர்களை மணந்தனர். அம்மனைவியர் மூலம் பிறந்த பிள்ளைகள் தம்மை ஆரிய ரெனக் கூறிக்கொண்டனர். இதனாலும் தென்னாட்டு அரசர் ஆரியர் சமயக் கொள்கைகளைப் பின் பற்றுவாராயினர். கி. பி. 3ஆம் நூற்றாண்டளவில் பல்லவ அரசர் ஆட்சி தமிழ் நாட்டில் நிலை பெற்றது. தமிழ் அறிவில்லாத பல்லவ அரசர் ஆட்சியில் வட மொழிக் கும், பிராமணருக்கும் பெரிதும் ஆதிக்கம் உண்டாயிற்று. பல்லவ அரசர் காலத்தும் பிற்காலத்தும் தமிழ்நாட்டுக் கோயில்களை மேற்பார்ப்பதற்குப் பிராமணர் வட நாட்டினின்றும் அழைக்கப்பட்டனர். அவர்களுக்கு எல்லா வகை மரியாதையும், மானியங்களும் அரசர் மூலம் கிடைத்தன. பல்லவர் காலத்துப் பொறிக்கப்பட்ட கல் வெட்டுக்களில் வடநாட்டினின்று அழைக்கப் பட்ட பிராமணக் கூட்டங்களைப் பற்றியவும், அவர்களுக்கு அளிக்கப்பட்ட நன்கொடைகளைப் பற்றியவும் செய்திகள் நிரம்பக் காணப்படுகின்றன. வடநாட்டுப் பிராமணருக்கு நல்வாழ்வு கிடைத்ததைக் கண்ட தமிழ்ப் பார்ப்பனர் பலர் பிராமணரோடு கலந்து அவர் மதத்தைத் தழுவினர். 2பிற் காலங்களில் பார்ப்பனர் எல்லோரும் தாம் பிராமணரென்றும், தாம் ஆரிய வகுப்பினரென்றும், தமது பரம்பரைமொழி ஆரியமென்றும் கூறுவாராயினர். இவ்வாறு தமிழ்நாட்டில் தமிழுக்கு ஆதரவில்லாது தட்டழிவு உண்டாயிருந்த காலத்திலேயே ஆரியம் தெய்வ மொழியாகத் தமிழர் ஆலயங்களில் நுழைந்தது; அதனைத் தமிழ் அறிஞர் எதிர்த்து வந்தனர். அக்காலத்திலேயே தேவார, திருவாசகம் முதலிய தமிழ்ப் பாடல்கள் எழுந்தன. ஆரியம் தமிழ் என்னும் இரண்டுக்குமிடையே நடந்துவந்த போர்களைச் சந்து செய்யும் பொருட்டே தேவாரத்தில் “ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய்” “செந்தமி ழோடு ஆரியனைச் சீரியானை” என்பவை போன்ற வாக்கியங்கள் கூறப்பட லாயின. அக்காலத்தில் தமிழ் உயர்ந்தது; ஆரியஞ் சிறந்தது என்னும் வாதங்கள் நிகழ்ந்து வந்தன. தொல்காப்பிய உரையில் பேராசிரியர், “ஆரியம் நன்று தமிழ்தீ தெனவுரைத்த காரியத்தாற் காலக்கோட் பட்டானைச்-சீரிய அந்தண் பொதியி லகத்தியனா ராணையினாற் செந்தமிழே தீர்க்கசுவா கா” என, நக்கீரர், ஒருவனைச் சாவப்பாடியதாகக் குறிப்பிட்டுள்ள பாடலால் அக்காலத்தில் ஆரியத்துக்கு எவ்வளவு எதிர்ப்பு இருந்ததென்பதை நாம் நன்கு அறியலாகும். பிற்காலத்திலிருந்தவரெனக் கருதப்படும் இன்னொரு நக்கீரர் பாடிய கோபப் பிரசாரத்தில் ‘ஆரியப் புத்தகப்பேய் கொண்டு புலம்பும் மூர்க்க மாக்களை இன்னேகொண்டு ஏகாக் கூற்றம் தவறு பெரி துடைத்தே தவறு பெரிதுடைத்தே’ எனக் கூறப்பட்டிருப்பதையும் நோக்குக. இவ்வாறு சில காலம் கழிதலும் ஆரியத்தை எதிர்க்கும் தமிழர்வீறு சிறிது சிறிதாகக் குறைந்தது. மொதுமக்கள் அறியாமையினால் ஆரியமொழியே உயர்வுடையதென நம்பத் தலைப்பட்டார்கள். அப்பொழுது தமிழ் ஆரியத் தோடு ஒத்த சிறப்புடையது என்றாவது கொள்ளப்படுதல் வேண்டும் என்னும் உணர்ச்சி நிலவுவதாயிற்று. இதனை, “ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்து இதனின் இது சீரியதென வொன்றைச் செப்பரிதால்-ஆரியம் வேத முடைத்து தமிழ் திருவள்ளுவனார் ஓது குறட்பா வுடைத்து எனவரும் திருவள்ளுவமாலைச் செய்யுளால் அறிகின்றோம். பிராமணரது ஆதிக்கம் உண்டானபின் தமிழரசர் தமிழை ஓம்ப வில்லை; தமிழை வடமொழிக்குத் தாழ்ந்ததாகக் கொண்டனர். பல்லவ அரசர் காலத்தும் அவர்களுக்குப் பிற்பட்ட அரசர் காலத்தும் தமிழ்க் கல்வி வளர்ச்சி யின் பொருட்டு அரசர் மேற்கொண்ட செயல்கள் ஒன்றேனும் பட்டையங் களிற் காணப்படவில்லை. அவ்வரசர் காலங்களில் கல்வி என்றால் வட மொழிக் கல்வி என்ற பொருளே வழங்கிற்று. பிராமணர் வேதங்கள், வேதாந் தங்கள், வியாகரணங்கள், மிருதிகள் கற்பதற்கே கல்விச் சாலைகள் அமைக் கப்பட்டன. அவைகளுக்கு மானியங்கள் விடப்பட்டன. பிராமணருக்கும் வடமொழிக் கல்விக்கும் என்ன என்ன வசதிகள் அளிக்கவேண்டுமோ அவைகளை எல்லாம் அரசர் அளித்துவந்தனர்.சில சமயங்களில் சில கிராமங் களையே அரசர் பிராமணருக்குத் தானமாக அளித்தனர். கடம்ப அரசனாகிய மயூரவர்மன் அசுவமேத யாகம் செய்ததற்குக் கூலியாக ஒரு அக்கிரகாரத் துக்கு 144 கிராமங்களைக் கொடுத்தான். பிராமணர் ஆதிக்கம் அளவு கடந்து பெருகியமையால் அவர்கள் தமிழ் மக்களின் அதிகாரத்திலிருந்த மடங் களையும், சமய நிலையங்களையும் ஒழிக்க அல்லது தாம் கைப்பற்றிக் கொள்ளப் போரிட்டனர். தமிழ் மக்களின் அதிகாரத்தில் இருந்த சைவமடம் ஒன்றுக்குவிடப்பட்டிருந்த மானியத்தை மூன்றாம் குலோத்துங்க சோழன் பிராமணரின் தூண்டுதலினால் பிடுங்கினான். இதைக் குறித்து கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகின்றது.1 இவ்வாறு தமிழர் அதிகாரத்தி லிருந்த மடங்கள் பல பிராமணருக்குக் கைமாறின. கும்பகோணத்தில் முதலியார் மரபினர் தலைமையில் இருந்த மடமொன்று இன்று சங்கராச் சாரியர் மடமாக மாறி யுள்ளதென அறிகின்றோம். இவ்வாறு சாசனங்களில் காணப்படாத பல நிகழ்ச் சிகள் நிகழ்ந்தனவாகலாம். இவ்வாறு தமிழ்நாட்டில் பிராமணர் ஆதிக்கம் உண்டாகித் தமிழ் தத்தளித்துக் கொண்டிருந்த காலத்தில் மனம் தளர்ந்த தமிழ்ப் புலவோர் தமிழ் வடமொழிக்குச் சமமானது என்று கூறிவரு வாராயினர். ஆரியம் தேவபாடையும் தமிழ் மனிதபாடையுமாதல் 2“இரு மொழியும் நிகர் என்று கருதிய இப் பெரியார் காலத்திற்குப் பின், வடமொழி தெய்வமொழி என்னும் கருத்து மெல்ல மெல்லத் தமிழ் நாட்டில் நுழைவதாயிற்று. வடமொழியில் அமைந்த இதிகாசங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டன. வான்மிக முனிவர் வடமொழியில் எழுதிய ஆதி காவியத்தைத் தமிழில் அமைக்கப்போந்த கல்வியிற் பெரிய கம்பர் (கி. பி. 12ஆம் நூற்றாண்டு) “தேவபாடையின் இக்கதை செய்தவர்” என முதனூல் செய்த புலவரைப் புகழ்ந்துரைத்தார்; “வாங்கிடும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான்-தீங்கவி செவிகளாரத் தேவரும் விரும்பச் செய்தான்” என்று வடமொழிக் கவிஞரை வாயார வழுத்தினார். வடமொழி வானவர் மொழியாதலால் விழுமிய மொழியென்றும், தமிழ் மக்கள் மொழியாதலால் தாழ்ந்த மொழியென்றும் கருதும் வழக்கம் மெல்ல எழுந்தது. வடமொழியி லமைந்த புராணநூல்களைத் தமிழில்மொழி பெயர்க்கப்புகுந்தார் சிலர்; முதல் நூல்களாகத் தமிழில் எழுந்த நூல்களுக்கும் வடமொழியில் நூல் உண் டென்று கூற முற்பட்டார் சிலர். நன்னூல் செய்தபவணந்தியாரும், சின்னூல் செய்த குணவீரனாரும், வீரசோழியமியற்றிய புத்தமித்திரனாரும் வடமொழி இலக்கணப் போக்கைத் தழுவி எழுதுவாராயினர். தமிழ் நாட்டிலமைந்த இடப் பெயர் ஊர்ப் பெயர்களையும் வடமொழியில் பெயர்த்து வழங்கத் தலைப் பட்டார் பலர். இதைக் குறித்துத் தமிழ் நாட்டுச் சாசனங்களை ஆராய்ந்து டாக்டர் பர்னல் என்பார் கூறும் மொழி ஈண்டு கருதத்தக்கனவாம்... சில தமிழ்ப் பெயர்கள் முற்றும் வடமொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன வென்றும், சில தமிழ்ப் பெயர்கள் தவறாக வடமொழியிற் பெயர்க்கப்பட்டுள்ளன வென்றும் மற்றும் சில தமிழ்ப் பெயர்கள் அரை குறையாக வடமொழியில் பெயர்க்கப்பட்டுள்ளன வென்றும் இன்னும் சில தமிழ்ப் பெயர்கள் இயற்பொருள் இழந்து வடநூற்கதைகளையேற்றுத்திரிந்து வழங்குகின்றன வென்றும் டாக்டர் பர்னல் கூறுகின்றார். பழந்தமிழ்நாட்டில் குடமூக்கு என்று வழங்கிய ஊர் கும்பகோணமாயிற்று. மறைக்காடு வேதாரணியமாயிற்று. வெண்காடு சுவேதாரண்யமாயிற்று. ஐயாறு பஞ்சநதமாகவும், அண்ணாமலை அருணாசலமாகவும் அமைந்தன. திராவிடம் தமிழாயிற்றென்னும் அழிம்பு “இவ்வாறாக வடமொழி உயர்ந்ததென்றும் கற்றாரும் கல்லாதாரும் கருதினமையால் தமிழென்னும் சொல்லே வட மொழிச் சிதைவென்னும் கொள்கை வடநாட்டில் பரவுவதாயிற்று. திராவிடம் என்னும் சொல்லே திராமிடம், திராமிளம், திரமிளம், தமிளம், தமிழ் என்று ஆயிற்றென்று இலக்கணநூலோர் எடுத்துரைப்பாராயினர். இன்னும் தமிழ் இலக்கணம் வடமொழி இலக்கணத்தைத் தழுவி எழுந்ததென்று பிரயோக விவேகம் கூறுவதாயிற்று. தமிழ் தனி மொழியன்றென்றும் இலக்கணக் கொத்துரைத்த சாமிநாத தேசிகர் எழுதுவாராயினர். ‘ஐந்தெழுத்தால் ஒரு பாடையும் உண்டென அறையவும் நாணுவர் அறிவுடையோரே வடமொழி தமிழ்மொழியெனு மிருமொழியினும் இலக்கணம் ஒன்றே என்றே எண்ணுக’ என்று தமிழ் மொழியைத் தனிமொழியென்று கருதும் கொள்கையைத் தேசிகர் இழித்துரைத்தார். பிரயோக விவேகமும் இலக்கணக் கொத்தும் பதினாழாம் நூற்றாண்டில் எழுந்தனவாம்.” ஆரியர் தமிழ் நாடுவந்தது முதல் இன்றுவரை ஆரிய, தமிழ்ப் போராட்டங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆரியத்தைக் கடவுள்மொழி எனக் கொண்ட குழுவினர் தமிழை இழிவுபடுத்தும் கொடுமைக்கு ஆற்றாமலே பரஞ்சோதி முனிவர். “தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததுந் தண்டமிழ்ச் சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்” என்பது போன்ற பாடல்களைப பாடுவாராயினர். சிவஞான முனிவர் காலத்தி லும் தமிழை இழிவுபடுத்திக் கூறும் பொல்லாமை இருந்ததென்பது அவர் காஞ்சிப் புராணத்தில் கூறியுள்ள பின்வரும் பாடல்களால் தெளிவாகும். “வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி யதற்கிணையாத் தொடர்புடைய தென்மொழியை யுலக மெலாந்தொழுதேத்துங் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகரெனிற் கடல்வரைப்பி னிதன்பெருமை யாவரே கணித்தறிவார்.” “இரு மொழிக்கும் கண்ணுதலார் முதற் குரவரிகல்வாய்ப்ப இருமொழியும் வழிப் படுத்தார் முனிவேந்த ரிசைபரப்பும் இரு மொழியுமான்றவரே தழீஇயினா ரென்றாலிவ் விரு மொழியு நிகரென்னு மிதற்கைய முளதேயோ.” பேராசிரியர் சுந்தரம்பிள்ளை காலத்தும் தமிழுக்கு எதிராக ஆரிய எதிர்ப்பு மிக்கிருந்தமையை அவர் மனோன்மணீயத்தில் கூறிய தமிழ் வணக்கச் செய்யுட்கள் இனிது காட்டும். அவை பின்வருவன: “பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினும் ஓர் எல்லையறு பரம்பொருள்முன் னிருந்தபடி யிருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே யொன்று பல வாயிடினும் ஆரியம் போலுலக வழக் கழிந்தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே” “சதுமறையா ரியம் வருமுன் சகமுழுது நினதாயின் முதுமொழி நீ யனாதியென மொழிகுவதும் வியப்பாமே” இன்றும் தமிழுக்கு மாறாக இவ் வுணர்ச்சி எவ்வாறிருக்கின்றதென்பதை நாமெல்லோரும் நன்கு அறிவோம். மணிப்பிரவாளம் ஆரியம் தெய்வமொழி; தமிழ் அதற்குத் தாழ்ந்த மனிதமொழி; அதனொடு வடமொழியைக் கலப்பது தமிழுக்குச் சிறப்பளிக்கும் என்னும் பொல்லாத கொள்கையும் மக்களிடையே பரவத் தொடங்கிற்று. அக் காலத் தில் சைன, வைணவ வித்துவான்கள் தமிழொடு சரிக்குச் சரி சமற்கிருதம் கலந்த ஒரு வகை நடையை வழங்குவாராயினர். இந் நடை மணிப்பிரவாளம் எனப் பெயர் பெறும். இந் நடைக்கு உதாரணம் பின் வருவது. “பும்ஸ்பர் சக்வேச ஸம்பாவனா கந்தவிதுரமாய் ப்ரத்யக்ஷிதிப்ரமாண விலக்ஷணமாயிருந்துள்ள நிகில வேத ஜாதத்துக்கும் வேதோப ப்ரமணங்களான ஸ்ம்ரூதிதி ஹாஸ புராணங்களுக்கும் க்ருத்யம் ஸகல ஸம்சாரி சேதனர்க்கும் தத்வ ஞானத்தை ஜனிப்பிக்கை”-தத்துவ செகரம். இந் நடையைத் தமிழ் அறிஞர் வெறுத்தார்கள். அவர்கள் தமிழை இயன்ற அளவில் வடமொழிக் கலப்பின்றி எழுதவே முயன்றுவந்தார்கள். வட மொழிக் கலப்பின்றி எழுதப்படும் தமிழ் சிறப்புடையதெனக் கொள்ளப் பட்டது. மேற்குக் கரையில் வாழ்ந்த மக்கள் மணிப்பிரவாள நடையில் நூல் செய்யும் முறையை அனுமதித்தமையினாலேயே அங்கு வழங்கிய தமிழ் மலையாளமாயிற்று என மொழி வல்ல அறிஞர் கருதுகின்றார்கள்: மணிப் பிரவாள நடை தமிழைப் பிறிதொரு மொழியாக மாற்றிவிடாதபடி முயன்று தடுத்துவந்த தமிழ்ப் புலவர்களின் முயற்சி பெரிதும் போற்றத்தக்கதே. ஆரியன் என்னும் சொல்லுக்கு அறிவுடையவன் என்னும் பொருள் உண்டாதல் ஆரியன் என்பதற்கு மிலேச்சன் என்னும் பொருள் வழங்கிற்று என முன் ஓரிடத்திற் குறிப்பிட்டுள்ளோம். ஆரியத்தின் ஆதிக்கம் தென்னாட்டி லுண்டாகி ஆரியம் சமய மொழியாகி, ஆரியம் பயின்றவர்களே கோயிற் பூசாரிகள், புரோகிதர்களாகிய பின்பு ஆரியன் என்னும் சொல்லுக்குமுன் இருந்த மிலேச்சன் என்னும் பொருள் போய் அறிவுடையவன் ஆசிரியன் என்னும் பொருள்கள் உண்டாயின. தென்னாட்டில் ஆரியர் எனத் தம்மைக் கூறிக்கொண்டோர் ஆரிய மதத்தைக் கைக்கொண்ட தமிழ்ப் பூசாரிகளும் வடநாட்டுப் பிராமணரின் இரத்தக் கலப்பில் தோன்றியவர்களுமே யாவர். தம்மை ஆரியர் எனக்கொள்ளாத பண்டாரங்களும் வடமொழியில் எழுதப் பட்டுள்ள கிரியை முறைகளைப் பயின்று அம் மொழிச் சொற்றொடர்களை உச்சரித்துக் கிரியைகளைப் புரிவாராயினர். அன்னோர் செயல் பெரிதும் கண்டிக்கத்தக்கது. தமிழ் கோயில்களிருந்து வெருட்டப்படுதல் கி. பி. ஏழாவது நூற்றாண்டு வரையில் ஆரியம் தென்னாட்டுக் கோயில்களை ஆக்கிரமித்து ஆலயங்களினின்று தமிழ் வெளியே வெருட்டப்பட்து. தமிழ் முன் இருந்து ஆட்சி புரிந்த இடத்தில் ஆரியர் நுழைந்து கொண்டது. சிங்கமிருந்து ஆண்ட இடத்தில் நரி குந்திக்கொண்டது. ஆரிய மதம் வருவதற்குமுன் கோயில்களை மேற் பார்த்த தமிழ்ப் பூசாரிகள் கோயிலை மேற் பார்த்தமையால் பார்ப்பார் எனப் பெயர் பெற்றிருந்தார்கள். இவர்கள் தமிழ் மொழியிலேயே துதிபாடி வந்தார்கள். இம் மரபுபற்றியே தேவார திருவாசகங்களும், திருவாய் மொழிகளும் பாடப்பட்டன. கோயில் களில் ஆரியம் நுழைந்தமையால் தமிழ்த் துதிபாடும் வழக்கு நின்று போயிற்று அதனைத் தமிழ்மக்கள் வெறுத்தார்கள். அப்பொழுது பண்டா ரங்கள் வெளியே நின்று தமிழ் ஓதலாம் என்னும் விதி ஆகமங்களில் எழுதி வைக்கப்பட்டது. வேத, ஆகமங்கள் கடவுளால் செய்யப்பட்டன என்னும் குருட்டுத்தனமான நம்பிக்கையை மக்களிடையே தோற்றுவித்து மக்க ளிடையே தமிழ் மொழி ஆலயங்களில் நின்று போனதற்காகப் பெரிய கிளர்ச் சிகள் எழாமல் ஆரியப் பூசாரிகள் காப்புத் தேடிக்கொண்டனர். மேல்நாட்டு மக்கள் இந்திய நாடு போந்து வேதங்களை ஆராய்ச்சி செய்து அவைகளைப் பற்றிய உண்மை வரலாறுகளை உலகுக்கு வெளியிடுவதன் முன் வைணவ, சைவ, பிராமணமதத்தினர் எல்லோரும் வேதங்கள் கடவுளால் நேரில் மக்களுக்கு வெளியிடப்பட்டன வென்றே நம்பி வந்தார்கள்; இன்றும் நம்பிவருகிறார்கள். ஆசிரியர் உயர்திரு மறை மலையடிகள் வேதங்கள் மக்கள் வாய் மொழியே என இற்றைக்கு முப்பது ஆண்டுகள் முன் தமது திருவாசக விரிவுரையில் எழுதிய போது, தமிழ் நாட்டிலும் யாழ்ப்பாணத் திலும் பலத்த எதிர்ப்புகள் இருந்தன. ஆரியக்கலப்பினால் தமிழ் கேடடைந்த வகை தமிழ் ஒருகாலத்தில் பிற மொழிக்கலப்பின்றி வழங்கிற்று. சங்ககால நூல்கள் கலப்பற்ற தமிழில் எழுதப்பட்டுள்ளன. அந்நூல்களில் காணப்படும் வடசொற்கள் என்று கருதப்படும் சில சொற்கள் தாமும் வடசொற்களோ என்பது ஐயத்துக்கிடமானவை. வடமொழியிற் காணப்படும் சொற்கள் சில தமிழிற் காணப்பட்டால் அவை வடசொற்களாகிவிடமாட்டா. தமிழ்ச் சொற்கள் பல வட மொழியில் மிகப்பழமையே சென்று ஏறியுள்ளன.1 சங்க காலத்துக்குப்பின் சமய சம்பந்தமாகவே பெரிதும் வடசொற்கள் ஆளப் பட்டுள்ளன. அவையும் தமிழ் ஓசைக்கு அமையத்திரித்து வழங்கப்பட்டுள் ளன. பிற்காலத்தில் வடசொற்களைத் தமிழில் வழங்குவதற்கு வரம்பு இல்லா மல் இருந்தது. வேண்டியவர் வேண்டியவாறு அவற்றைப் பயன்படுத்தினர். தமிழ் மொழியில் பொருள்களையும் செயல்களையும் குறிக்கப் பற்பல சொற்கள் இருந்தபோதும் வடமொழி மோகங் கொண்ட மக்கள் தமிழ்ச் சொற்களுக்குப் பதில் வடசொற்களை ஆளத் தலைப்பட்டனர். இதனால் எத்தனை வடசொற்கள் தமிழில் நுழைந்தனவோ அத்தனைத் தமிழ்ச் சொற்கள் வழக்கு நின்றுபோயின. இன்று தனித்தமிழ் எழுதமுயல்வோர் செய்வது வழக்கு நின்றுபோன பழைய தமிழ்ச் சொற்களை மறுபடியும் வழக்குக்குக் கொண்டு வருவதேயாகும். வெவ்வேறுமொழியைப் பேசும் மக்கள் கலக்க நேருமிடத்து ஒருவர் மொழிச்சொற்கள் சில மற்றவர் மொழி யில் கலத்தல் இயல்பேயாகும். அவ்வாறு கலக்கும் சொற்கள் பெரும்பாலும் அம்மொழிகளில் புதியபொருள்களையோ செயல்களையோ உணர்த்து வதற்கு முன் இல்லாதனவாகவேயிருக்கும். இம் முறையினால் மொழி வளர்ச்சியடையும். சமற்கிருத மொழிக்கலப்பினால் தமிழ் மொழி வளர்வ தற்குப் பதில் நாளும் நாளும் கெட்டு உருக்குலைந்துபோகின்றது. சமக்கிருதத்தில் மோகம் சமற்கிருதம் வடநாட்டில் இலக்கிய மொழியாகவும் சாதிமொழியாக வும் இருந்து வந்ததென முன் கூறினோம். தென்னாட்டில் பிராமண மதம் நுழைந்தபோது சமய நூல்கள் இம்மொழியில் எழுதப்பட்டன. எழுதப்படும் போது என்ன என்ன பிராமணருக்கு வாய்ப்பாக இருக்குமோ அவ்வளவும் சேர்க்கப்பட்டன. இதனைப் பார்கிற்றர் (Pargiter) என்னும் அறிஞர் பழைய இந்தியப் பழங்கதைகள் 1என்னும் நூலில் நன்கு எடுத்து விளக்கி யுள்ளார். வடநாட்டில் எவ்வாறு சமற்கிருதம் இலக்கிய, சமய மொழியாக விருந்ததோ அவ்வாறே அது தெற்கிலும் சமய இலக்கிய மொழியாக ஒருகுழுவின ரிடையே இருந்து வந்தது. இம்மொழியினையே தமது தாய் மொழியாகப் பிராமணர் கொண்டுள்ளார்கள். ஆகவே இம்மொழிக்கு ஆக்கந் தேடுவதி லேயே அவர்கள் முயன்று வருகின்றனர். ஆரியமொழியிலே பல அறிவு நூல்கள் இருக்கின்றன. அவைகளைப் பயிலும் பொருட்டு வடமொழியைக் கற்கவேண்டும்; அதனைக் வைவிடுத லாகாது என ஒரு கூட்டத்தார் கரைகின்றனர். ஒரு கூட்டத்தாரின் வயிற்றுப் பிழைப்புக்குள்ள மொழி அதுவாதலின் அவர்கள் அம்மொழியின் பொருட்டு தமக்கு வேண்டியவற்றையெல்லாம் கூறுவர். அவர்கள் கூற்று வாழ்க்கைப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. “ஆரியம் தேவபாஷை” என்று கருதிய பழங்காலம் மலை ஏறிவிட்டது. அம்மொழியில் எழுதப்பட் டுள்ள நூல்களிற் சிறந்தவை பெரும்பாலும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் பட்டுவிட்டன. வடமொழி நூற் கருத்துக்களை அறிய விரும்புவோர் அம் மொழி பெயர்ப்பு நூல்களையே பயிலுதல் போதுமானது. இதற்காகச் செத்துப் போன அம்மொழியை காலத்தையும், உழைப்பையும் செலவிட்டு ஒருவன் பல ஆண்டுகள் பயில்வது புத்தியற்ற செயலாகும். கிரேக்கு, இலத்தின், செர்மன் முதலிய மொழிகளைத் தனிப்பட்ட ஒருவர் இருவர் பயில்தல்போல அம் மொழியைப் பயிலவிரும்பும் ஒருவர் இருவர் பயில்தல் தீமையாக மாட்டாது. தமிழ்நாட்டில் இந்திப்பிரசரம் செய்பவர்யார்? தமிழ் நாட்டில் இந்திப் பிரசாரம் செய்வோர் மேற்கூறிய குழுவினரே. சமக்கிருதம் இறந்த மொழியாகிவிட்டது. அதை இனி உயிர்ப்பித்தல் கடினம். இந்தி சமற்கிருதத்துக்கு மிக அண்மையிலுள்ளது. அது தனக்கு வேண்டிய புதியசொற்களைச் சமற்கிருதத்திலிருந்து எழுத்துக் கொள்கின்றது. சமற் கிருதத்தை உயிர்ப்பிக்க வகையின்றி இருப்பவர்கள் இதற்கு மிக நெருங்கிய உறவின் முறையிலுள்ள ஒரு மொழியைப் பிரசாரஞ் செய்வதில் ஊக்கம் காட்டுதல் இயல்பேயாகும். இன்று இந்திப் பள்ளிக்கூடங்களில் கட்டாயக் கல்வி என்றவுடன் இருபதினாயிரம் முப்பதினாயிரம் பேர் அளவிற் கூடி இந்தி ஒழிப்புக்கு வழிதேடுகின்றனர். ஏன் நமது ஆலயங்களில் சமற்கிருத ஒழிப்புக்கு மாபெருங் கூட்டங்கள் கூடிச் “சமற்கிருத எதிர்ப்புச்” செய்தல் கூடாது.? தமிழோடு ஆரியத்தைக் கலப்பதால் தமிழ் வளர்ச்சியுறுமென்னும் மடமை ஆரியம் தமிழ் இனத்தைச் சேராத மொழி என்பது மொழி ஆராய்ச்சி வல்லார் கண்டமுடிவு. ஒருமொழியில் ஒரு பொருளையோ செயலையோ குறிக்கும் சொல்லில்லாமையாலோ ஆக்கச் சொற்களைப் பயன்படுத்த முடியாமையினாலோ ஏற்படும் இடர்ப்பாட்டினாலே எல்லா மொழிகளிலும் சிற்சில அயல் மொழிச் சொற்கள் நுழைந்திருப்பது உண்மையே. இன்றியமை யாமை இல்லையாக வடமொழிச் சொற்களைத் தமிழுடன் சேர்ப்பதால் தமிழ் சிதையுமேயன்றித் தமிழ் வளர்ச்சியுறாது. இனிமேல் ஆரியத்தில் நூற்றுக்கு இருபது அல்லது முப்பது தமிழ்ச் சொற்கள் சேர்த்துக்கொள்ளுதல் வேண்டும். அதுதான் ஆரியத்தை வளர்ப்பதற்கு வழி என்று ஒருவர் கூறி னால் அதனை ஆரியக் குழாம் ஏற்றுக்கொள்ளுமா? அரசினர் தமிழ்க் கலைச் சொற்களை ஆக்கித் தொகுத்த காலத்தில் வடசொற்களும் இருத்தல் வேண்டு மென்னும் கிளர்ச்சி யிருந்ததையும், அவ்வுணர்ச்சிக்கு மாறாகக் கூட்டங்கள் கூடியதை யும் நாமறிவோம். தமது தாய் மொழி தமிழன்று எனக் கருதும் ஒரு குழாத் தினர் தமிழ் வளர்ச்சிக்குப் பங்கம் நேரும் செயல்களைப் புரிந்து வருகின் றனர். இன்று தமிழ் அகராதிகளில் பாதிக்குமேல் சமக்கிருதச் சொற்களே சேர்க்கப்பட்டுள்ளன. இச்சொற்கள் வடமொழிப் பித்தேறிய சிற்சிலர் சமீப காலத்தில் புராணங்களிலும், சமய நூல்களிலும், ஒரோரிடத்து வழங்கிய சொற் களேயாகும். அச் சொற்களில் பெரும்பாலான ஓர் ஆசிரியரால் மாத்திரம் ஒரே முறை பயன்படுத்தப்பட்டனவாயிருக்கும். அச்சொற்கள் பயன்படுத்தப் பட்ட நூல்களோ இன்று அவற்றின் பயனற்ற தன்மை நோக்கி பயிலப்படுவ தில்லை. அந்நூல்களில் ஆளப்பட்ட வடசொற்களையெல்லாம் தமிழ் வழக்குச் சொற்கள் என அகராதிகளிற் சேர்த்தல் புத்தியற்ற செயலே யாகும். சைவசமயாசாரியர், ஆழ்வார்கள் வடசொற்களைப் பயன்படுத்தி யமையால் தமிழோடு வடசொற்களைக் கலக்கலாம் என்னும் வாதம் சைவசமயாசாரியரின் காலம் புத்த, சைன மதங்கள் தலை எடுத்திருந்த காலம். அக்காலத்தில் வைணவர்களும் சைவர்களும், பிராமண மதத்தினர் களும் புத்த, சைன மதங்களை அழித்துவிடும் ஒரே நோக்கத்துடன் ஒரு மித்துப் போராடினர். அக்காலத்தில் புத்த, சைன, பிராமண மதத்தினர் கூட்டுற வால் தமிழில் நுழைந்திருந்த வட சொற்கள் பலவற்றை அவர்கள் பயன்படுத் துவாராயினர். அவர்கள் மதப்போராட்டஞ் செய்தார்களேயன்றி மொழிப் போராட்டம் செய்யவில்லை. ஆரியம் பாடுதல், ஆரியச் சொற்களைத் தமிழிற் கலத்தல் போன்றவைகளை அக் காலத் தமிழ் மக்கள் எதிர்க்காமல் இருக்க வில்லை. அக் காலத்தில் ஆரியந் தமிழ் என்னும் வேறு பாட்டை வளர்த்தால் தாம் செய்துவரும் மதப்போருக்கு ஆற்றல் குன்றுமென்பதை உணர்ந்த சமயாசாரியர்கள் ஆரியம், தமிழ் என்னும் இரண்டும் கடவுளுக்கு உகந்தன எனச் சமாதானம் கூறி வடமொழி, தென்மொழிப் போர்களைத் தவிர்த்தனர். சமயகுரவர்கள் காலத்திற்குப் பின்பே வடமொழி, தென்மொழி என்னும் இரு மொழிகளும் சிவ பெருமானிடம் இருந்து பிறந்தன என்னும் கருத்துத் தமிழ் நாட்டில் பரவலாயிற்று. புத்த, சைன மதங்கள் ஒழிக்கப்பட்ட பின் புதுமுறை யான ‘இந்து’ மதம் தென்னாட்டிற் பரவலாயிற்று. தென்னாட்டுக்கோயில் களை மேற்பார்த்த பார்ப்பனர் பிராமணராக மாறினர். தென்னாட்டு மதக் கொள்கைகளைப் பெரிதும் வடநாட்டுப் பிராமணக் கொள்கைகளைச் சிறிதும் உடையதாகிய புதிய இந்து மதம் சமக்கிருதத்தைச் சமயமொழியாகக் கொண் டது. இன்று இந்தி எதிர்ப்பு நடைபெறுவதுபோலவே அன்றுமுதல் இன்று வரையும் வடமொழிக்கு எதிர்ப்புத் தமிழ்நாட்டில் இருந்துவருகின்றது. ஆட்சி யாளருக்கு மந்திரிகளும் ஆலோசனை கூறுவோரும் பெரிதும் புரோகித வகுப்பினராயிருந்தமையின் அவ் வெதிர்ப்புக் கவனிக்கப்படாது அடக்கப்பட்டு வந்துள்ளது. ஒரு காலத்தில் பாதிக்குமேல் வட சொற்கள் கலந்து எழுதப்பட்ட மணிப்பிரவாள நடை தவிர்க்கப்பட்டுவிட்டது. இன்று ஐம்பது ஆண்டு களுக்கு முன் எழுதப்பட்ட தமிழ் நடையிலுள்ள வடசொற்களிலும் பார்க்கப் பத்தாண்டுகளின் முன் எழுதப்பட்ட தமிழ் நடையில் வடசொற்கள் மிகக் குறைவு. பத்தாண்டுகளின் முன் எழுதப்பட்ட நடையிலுள்ள வட சொற் களிலும் பார்க்க இன்றைய தமிழ் நடையில் வட சொற்கள் மிக மிகக் குறை வாகும். பிறமொழிச் சொற்களைத் தவிர்த்துப், பிறமொழிச் சொற்களால் வழக்கு ஒழியும்படிச் செய்யப்பட்ட பழைய தமிழ்ச் சொற்களை உயிர்ப் பித்தால் தமிழ் தூய்மை அடையும் என்னும் உண்மை மறுக்க முடியாததே. இன்று இந்தியில் காணப்படும் பாரசீக, துலுக்கச் சொற்களை நீக்கிவிட்டு அவைக்குப்பதில் சமக்கிருதச் சொற்கள் வைக்கப்படுகின்றன. இது எதற்காகச் செய்யப்படுகின்றது? இது எவ்வுணர்ச்சியின் பொருட்டுச் செய்யப்படுகின்றதோ அதே உணர்ச்சியுடனே, தமிழர்களும் தமிழிலிருந்து வடசொற்களை நீக்கிவிட்டுப் பழைய தமிழ்ச் சொற்களையோ புதிய ஆக்கச் சொற்களையோ பயன்படுத்துவது நியாயமன்றோ? இந்தி பயில்வதால் தமிழ் வளரும் என்னும் குருட்டுக்கொள்கை பல மொழிகளைப் பயில்வதால் தாய் மொழி கெட்டுவிடும் என்பதற்குச் சான்று ஆங்கிலப் பயிற்சி ஒன்றுமே போதும். தமிழ் நாட்டில் வாழும் தமிழர் பேசும் தமிழிலும் பார்க்க, இலங்கையின் வடகோடியில் வாழும் மக்கள் திருந்திய தமிழ் பேசுவர். இதற்குக் காரணம் அவர்கள் பெரும் பாலும் பல மொழிகளைப் பேசும் மக்களோடு கலவாது தனியே விடப்பட் டிருத்தலே யாகும். மொழிகளின் இயல்புகளை நன்குணர்ந்த மக்கள் எல்லோரது துணிவும் பல மொழிகளைப் பயில்வதால் அம்மொழிச் சொற்கள் தாய் மொழியோடு கலந்து அம்மொழியை மாறுபடச் செய்யுமென்பதே. இன்று இந்திய நாட்டில் வழங்கும் இருநூற்றுக்கு மேற்பட்ட மொழிகளும் இவ்வாறு உண்டாயினவே. மொழிகளின் இயல்புகளை ஆராய்ந்து கண்டார் கூறிய முடிவுகளை அறியாதார் சிலர் தம் மனம் போனவாறெல்லாம் கரைந்து வருகின்றனர். பலமொழிகளைப் பயில்தல் ஒரு மொழியில் புலமை அடைவ தற்கே தடையாயுள்ளதென மொழியாராய்ச்சி அறிஞர் புகல்வார்1.  புரோகிதர் ஆட்சி முன்னுரை பொதுமக்களை அழுத்தி அவர்கள் தோள்மீது சவாரி செய்து கொண் டிருக்கும் ஒரு கூட்டத்தார் மிகப் பழங்காலம் முதல் உலக முழுவதும் பரவி வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் புரோகிதர் எனப்படுவர். இவர்கள் மரங்களில் முளைக்கும் புல்லுருவியும், பயிர்களிடையே பெருகி வளரும் களையும், ஆடுமாடுகளின் இரத்தத்தை உறிஞ்சி வாழும் உண்ணியும் போன்றவர்கள் என்பது, நெடு நாட்களாக மக்கள் அறிந்துள்ள உண்மையாகும். மேற்குத் தேசங்களில் கத்தோலிக்க கிருத்துவமதம் தலை எடுத்தபோது, இப்புரோகிதக் குழுவுக்கு மாறாக மார்டின் லூதர் என்னும் செர்மானியர் புரட்சிக் கருத்துக்ளைப் பொதுமக்களிடம் விதைத்தார்; விதை விரைவிலே முளைத்துச் செழித்து வளர்ந்ததுகண்டு வாட்டமுற்ற அந்நாட்டுப் புரோகிதர், அடக்கு முறையால் அழிக்கப் பார்த்தும் பயனிலதாயிற்று. நமது நாட்டிலும் புரோகிதத் தன்மையை எதிர்த்துப் புரட்சி மதங்கள் பல தோன்றின. புத்தம், சைனம், வீர சைவம் ஆகிய கொள்கைகள் புரோகித எதிர்ப்புக் கொள்கைகளாக எழுந்தனவே. அதே காலத்தில் புரோகிதர் ஆட்சியின்முன் வலிகுன்றி மறைந்தன. பழைய உணர்ச்சியைப் பின்பற்றியே இன்று, தன்மான உணர்ச்சிக் கட்சி தோன்றி இப்புரோகிதத் தொல்லையை ஒழிக்க முயன்று வருகின்றது. அவ்வியக்கத்திற்குத் தலைமை தாங்கி நிற்கின்றவரை இவ்விருபதாம் நூற்றாண்டின் மார்டின் லூதர் என்றே கூறலாம். நம் முன்னோர் முயன்று புரோகிதரின் சூழ்ச்சியால் தோல்வி கண்டனராயினும் இன்றைய லூதர் வெற்றி காணவேண்டும் - காண்பார் என்பதே எமது அவா. இச்சிறுநூல் உலக முழுமையிலும் காணப்பட்ட - காணப்படுகின்ற புரோகிதப் புரளியை, பூசாரிக் கொடுமையைச் சரித்திரச் சான்றுகொண்டு விளக்குகின்றது. “The Brahmans had grown to power side by side with kings and chieftains down to the present day. Brahmanism preserves its power through all wreck of ages - possibly as a mere phantom of its shadow” - “A Literary History of India” P. 148. R. W. Frazer. “See the priests in the temples how they try to fleece the poor worshipper, go to the banks of the Ganges, and you will see the pandits refusing to perform some ceremony till the unhappy villager pays up. Whatever happens in the family a birth, marriage or death the priest steps in and payment is required. Glimpses of World Hilstory p. 203-Pandit Nehru ந.சி. கந்தையா புரோகிதர் ஆட்சி தோற்றுவாய் பார்ப்பார் என்னும் சொல் தென்னிந்தியாவில் கோயிற் பூசை புரியும் குலத்தினரைக் குறிக்க வழங்கப்படுகின்றது. பார்ப்பார் என்னும் பெயர் கோயில்களை மேல்பார்த்துத் தெய்வத்துக்குப் பலி செலுத்துகின்ற மக்களைக் குறிக்க வழங்கிய காரணப்பெயர். ஆகவே, முற்காலத்தில் இது ஒரு சாதி யினரைக் குறிக்க வழங்குவதாயிற்று. பார்ப்பார் என்னும் கூட்டத்தினர் ஒரு பொதுத் தொடக்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். கோயில்களை மேற்பார்த்த பல்வேறு வகுப்பினரின் தொகுதியினரே இன்றையப் பார்ப்பனர் என்னும் குலத்தினராவார். தமிழ்நாட்டில் காணப்படுவதுபோலவே உலகில் எல்லாப் பாகங்களி லும் பார்ப்பார் இருந்தனர்; இருக்கின்றனர். அவர்கள் குருமார் எனப்படு கின்றனர். பார்ப்பாருக்குப் பூசாரிகள் என்பதும் இன்னொரு பெயர். இது தெய்வத்துக்குப் பலியிடுதல் காரணமாக உண்டான பெயர். பூசாரி என்பது பூசை என்னும் அடியாகப் பிறந்தது. பூசைக்குமூலம் புசி. பூசாரி என்பதற்குத் தெய்வத்தைப் புசிப்பிப்பவன் என்பது பொருள். பூசை என்பதை வடசொல் எனக் கூறுவர் சிலர். வடமொழியிலுள்ள திராவிடச் சொற்கள் எனக் ‘கிட்டல்’ என்பார் காட்டிய பல சொற்களுள் பூசை என்பதும் ஒன்று. முற்காலத்தில் இத்தாலியினின்றும் வந்த தத்துவ போத சுவாமி (Robert de Nobile), வீரமாமுனிவர் (Constantius Beschi) முதலியோர் தம்மை உரோமாபுரிப் பார்ப்பார் எனக் கூறினர். வீரமாமுனிவரின் சமையற்காரர், பரிசாரகர் முதலினோர் பார்ப்பாராகவே இருந்தனர். இந்நூல் இவ்வுலக முழுமையிலும் பார்ப்பார் எவ்வாறு மக்கட் சமூகத் தாரிடையே முதன்மை பெற்று மக்களை நசுக்கினார்கள் என்பதை ஆராய்ந்து கூறுகின்றது. இரு ஆட்சிகள் இவ்வுலகில் இரண்டு ஆட்சிகள் உண்டு; ஒன்று அரசன் ஆட்சி; மற்றது பார்ப்பார் ஆட்சி. பார்ப்பார் ஆட்சி அரசன் ஆட்சிக்குமுன் தொடங் கியதெனக் கருதப்படுகின்றது. ஒரு காலத்தில் பூசாரியே அரசனுமாக விருந்தான். கிழக்குத் தேசங்களில் அரச சின்னமாக விளங்கிய குடை, முற்கால மழை பெய்விப்பவனாகிய (Rain-Maker) மந்திர வித்தைக்கார அரசனின் சின்னமேயெனக் கருதப்படுகின்றது. பின்பு இவ்விரு அதிகாரங் களும் பிரிந்து தனித்தனித் தமது ஆளுகையை இவ்வுலகில் தொடங்கின. அரசன் தனது புய வலியினாலும், படை வலியினாலும் ஆண்டான். பார்ப்பார் புயவலியையும், படைவலியையும் வேண்டவில்லை. வெளிப்பாடு (Oracle), கடவுள் எண்ணங்களை மக்களுக்கும், மக்கள் எண்ணங்களைக் கடவுளுக்குங் கூறுவதாகிய தரகு, கடவுளரின் சீற்றத்தைப் பலி செலுத்திப் புரியும் தணிப்பு, தம் சொற்களைக் கடப்பவர் மறுமையில் அடையும் துன்பு போன்ற சில கதை களையும் தந்திரங்களையுமே வலிய ஆயுதங்களாகப் பயன்படுத்தினர். வில், வாள், வேல்களுக்கு அஞ்சுவதிலும் பார்க்கப் பொதுமக்கள் இவ்வாயுதங் களுக்குப் பெரிதும் அஞ்சினர். முடி மன்னரே அவர் கால்களில் விழுந்தனர். இவ்வாறு பார்ப்பார் அரசரையும் குடிகளையும் ஆட்டுவிக்கும் வலிமை பெற்றார்கள். பார்ப்பார் ஆட்சியை ஒழிப்பதற்குக் காலத்துக்குக் காலம் பல வாறு முயலப்பட்டது. ஆனால், அம்முயற்சிகள் பலிக்கவில்லை. அவர்கள் எல்லாக் காலங்களிலும் எல்லா நாடுகளிலும் மக்களின் தோள்மீது ஏறிச் சவாரி செய்திருக் கிறார்கள். (“The old man of the church from age to age, from land to land has ridden on the shoulders of humanity, and set at defiance all endeavours and all schemes to dislodge him” - “Popular History of Priest- Craft in ages and nations” p.96 - William Howitt). பார்ப்பார் சமயத்தில் எவ்வாறு இடம் பெற்றனர்? சமயத்தில் பார்ப்பார் எவ்வாறு இடம்பெற்றார்கள் என விளங்கிக் கொள்வதற்குச் சமயத்தோற்றம் எவ்வாறு உண்டாயிற்று என நாம் முதலில் அறிதல் வேண்டும். சமயம் வானத்தினின்றும் வந்து இவ்வுலகில் தோன்றவில்லை. மக்களே அதனைத் தோற்றுவித்தார்கள். மரண பயம், தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் இயற்கை உணர்ச்சி என்னும் இரண்டு காரணங்களால் சமயம் உண்டாயிற்று. முதலில் மக்கள் வியப்பும், அச்சமும் விளைக்கக் கூடிய இயற்கைப் பொருள்களைக் கடவுளெனக் கொண்டு வழி பட்டார்கள். பின்பு அவர்கள் இறந்தவர்களின் உயிர்கள் ஆவியுடலில் வாழ் கின்றனவென்றும், அவை எல்லாத் தீமையையும் செய்யவல்லன என்றும் நம்பத் தலைப்பட்டார்கள். தமது பெற்றார், சுற்றத்தவர்களின் ஆவிகளுக்கு மரியாதை, உணவு, துதி செலுத்தினால் அவை தீமை விளைக்கமாட்டா எனவும் நம்பினார்கள். இதனால், இறந்தவர் (தென்புலத்தார்) வழிபாடு உண்டாயிற்று. மிகக் கோபக் குணமுடைய ஆவிகள் இராக் காலங்களில் சிற்சில இடங்களில் தங்கி நிற்கின்றனவென்றும் அவைகளினின்றும் தப்புவதற்கு, மந்திரங்கள், பலிகள், தாயத்துக்கள் உதவி புரிகின்றனவென்றும் கொள்ளும்நம்பிக்கை இன்றும் இருந்து வருகின்றது. இறந்தவர் வழிபாடு பின்பு மனித வடிவான கடவுள் வழிபாடாயிற்று. முற்காலப் போர் வீரன் கையில், மெலியவன் ஒருவன் அகப்பட்டுக்கொண்டால் அவனிடமிருந்து உயிர் தப்புவதற்கு அவன் அழுவான், குழறுவான், குதிப்பான்; அவனுக்கு வேண்டியவற்றைக் கொடுப்பான். இவ்வாறே முற்காலமக்கள், கடவுளை வழிபட்டார்கள். மனிதன் தன் அறிவுக்கேற்பவே கடவுளையும் கற்பனை செய்தான். மிகமிக முற்காலத்தில் மனிதஊன் உண்ணும் மக்கள் தமது தலைவனைப் போன்ற வடிவில் கடவுளை வழிபட்டார்கள். ஆதலினாலேயே முற்காலக் கடவுளர், பயம் அளிக்கும் தோற்றமும், மனிதப்பலி, இரத்தப் பலிகளை ஏற்கும் இயல்பும் உடையராகவும் காணப்பட்டனர். நாட் கழியக் கழிய மக்களின் அறிவு படிப்படியே பண்பட்டது. அப்பொழுது நரபலிகள் நின்று போயின. நரபலிக்குப் பதில் விலங்குப் பலிகள் இடப்பட்டன. மேலும் மக்களின் அறிவு பண்பட்டது. அவர்கள் விலங்குகளுக்குப் பதில் தானியங் களாற் செய்த உணவையும், பழவகைகளையும், மாவினாற் செய்த விலங்கு களையும் பலியாக இட்டனர். மனிதஊன் உண்ணும் தலைவன் நாகரிக மடைந்து குடிகளை நன்கு காக்கும் அரசனான போது, மக்கள் கடவுளைக் குடிகளிடத்து அன்புள்ள அரசன் ஒருவனைப் போலும் இரக்கமுள்ள தாய் தந்தையரைப் போலும் வழிபட்டார்கள். இவ்வாறு சமயம் மக்களிடையே தோன்றி வளர்ச்சியடைந்தது. மக்கள் கூட்டத்தினரின் தலையில் ஏறி அதிகாரத்தோடு ஒருவன் குந்தியிருக்க விரும்பினால் அவன் சமயத்தைப் பொருட்படுத்தாமல் இருக்க முடியாது. இவ்விருப்புக் கொண்ட பலர் விரைவில் தோன்றினார்கள். அவர்கள் பொதுமக்களினின்று தனியாகப் பிரிந்தனர். மற்றவர்களிலும் பார்க்கத் தமக்குக் கடவுளைப் பற்றி நன்கு தெரியும் எனக் கூறினர். “This cast might be like the indian Brahmans who now tries to maintain without exertion or danger, by means of the Prestige of terrifying legends-” - “Interpretation of History” - p.290 Max Nordan. தாம் கடவுளருக்கு அண்மையிலுள்ளவர்கள் என்றனர்; தமது வேண்டுகோள்களைக் கடவுளர் ஏற்று நடத்துகின்றனர் எனப் புகன்றனர். இதனால், அவர்கள் கடவுளருக்கும், கடவுளரை வழிபடுவோருக்கும் இடையில் நிற்கும் தரகராகிய நிலையை அடைந்தனர். கடவுளருக்குக் கொடுக்கும் காணிக்கைகளும், இடும் பலிகளும், கூறும் துதிகளும் தங்கள் மூலமே செல்லுதல் வேண்டுமெனச் சாற்றினர்; மக்கள் தமக்குப் பயந்து அடங்கி நடக்கும்படி பயம் விளைவிக்கும் கட்டுக்கதைகளைக் கூறினர். “Mexioan priests preached dreadfully in the temples putting men into horrid fright, by which means they moved them to do whatever they dircted-” - “Footprints of the past” p.135 J. M. Wheeler மிக முற்காலப் பழங்கதைகளிற் கூறப்படும் கடவுள், வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட பழைய அதிகாரி ஒருவனைப்பற்றி நினைவுக்குக் கொண்டு வருகின்றது. சமயத் தொடர்பான பலிகள், கிரியைகள், துதிகள், பாடல்களைப் படிக்கும்போது எங்களுக்கு உங்கள் முன்னோருடையவும், அதிகாரிகளுடையவும் வாழ்க்கை எவ்வாறிருந்ததெனக் கண் முன் தோன்றுவது போல வெளிச்சமாகின்றது. மனிதன் கடவுளைத் தனது வடிவில் உண்டாக்கவில்லை; ஒரு தலையாரி அல்லது அரசன் வடிவில் உண்டாக்கி னான். அவனுடைய கடவுளைப்பற்றிய எண்ண வளர்ச்சி அரசாட்சி முறை யில் வளர்ந்தது. மனிதஊன் உண்ணும் பழங்கால மனிதன் நாகரிகமடைந்த ஆட்சித் தலைவனாக மாறினான். அடிமைகளின் தலைகளைத் தன் கைகளால் வெட்டியெறியாமலும், இரத்தத்தில் தோயாமலும் ஆட்சிக்குட் பட்ட எல்லாப் பெண்களையும் தனது மனைவியராக்காமலும், அவன் நியாயமும், அறிவும் உடையவனாய் குடிகளுக்குச் செய்யவேண்டிய கடமை களை அறிந்து, நாட்டில் ஞாயமும் ஒழுங்கும் இருக்கும்படி செய்து மக்களைக் காப்பதில் மகிழ்ச்சியடைந்தான். ஆகவே, மனிதக் கற்பனையில் தோன்றிய கடவுள், கொடுமை, அவா, களிப்பு, கொலை முதலியவை நிறைந்த நிகிரோவ அதிகாரி போலல்லாமல் அறிவும், நீதியும் தயவுமுள்ள ஓர் அரசன்போல மாறினார். அவரை இவ்வுலகை ஆளும் அரசனைப் போலப் பெருமக்கள் சபை, (தேவராகிய) பரிவாரங்கள், அடியார்கள், மெய்க்காப்பாளர் முதலினோர் சூழ்ந்திருந்தனர். மனிதன் தன் வாழ்க்கையில் கொண்ட விருப்பமே சமய உணர்ச்சிக்கு ஏது. தனக்குத் துன்பம் நேர்ந்தபோது அவன் கண்ணுக்குப் புலப்படாத கடவுளின் உதவியை வேண்டினான். அவ்வுதவியைப் பெறுவதற்கு அவன் முயன்ற வகைகளிலிருந்து நூதனமான கிரியைகளும் மந்திர வித்தைகளும் தோன்றின. இதனால், அவர்கள் பொதுமக்களைத் தம் ஆணைக்குட்படுத்தி ஆளும் வல்லமையைப் பெற்றனர். இவ்வாறு தோன்றிய பார்ப்பார், சமயத்தை உண்டாக்கவில்லை. ஆனால், சமயத்தைத் தமக்குப் பலமாகப் பயன்படுத்தினர். அரசன் ஆட்சியும் பார்ப்பார் ஆட்சியும் இணைந்து செல்லுதல் ஆயுதவலியாலும், ஆள்வலியாலும் மக்களை அடக்கி மக்களை ஆளும் திறமையானது கடவுள் தன்மையோடு தொடர்பு படுத்துவதால் மேலும் வலியுறும் என்றும், அதனால் பொருள் செட்டாகும் என்றும் அரசன் கருதினான். மக்கள் கடவுளை அரசன் வடிவில் வழிபட்டமையின் அரசன் கடவுளாதலும் கூடும் என அவன் கண்டான். எகிப்திலும், மேற்கு ஆசியாவி லும், அரசர் கடவுளுக்குரிய வழிபாடுகளைப் பெற்றனர். யூலியஸ் சீசர் காலத் தில் உரோம் நகரிலுள்ள கோயில்களில் அரசனுக்குப் பலிபீடமிருந்தது. அரசன் கடவுளல்லாத போது கடவுளின், திருக்குமாரனாகக் கொள்ளப் பட்டான். பெரிய அலக்சாந்தர் கடவுளின் புதல்வனாகக் கருதப்பட்டார். சர்மன், ஜப்பான், நோர்டிக் அரசர் தமது வழியைக் கடவுளிலிருந்து கூறினர். தம்மைக் கடவுளோடு தொடர்புடுத்திய அரசனின் போர் வீரரும், பரிவாரங்களும் ஆடம்பரமான உடை அணிந்தனர்; பலவகை அடையாளங் களைத் தரித்தனர். இத்தோற்றங்ளைக் கண்ட மக்களின் உள்ளத்தில் வியப்பு, மரியாதை, அச்சம் முதலியன தோன்றின. அரசன் பார்ப்பாரின் உரிமை களைக் காப்பாற்றுவதாக உறுதி கூறினான். அவர்கள் அரசனின் மெய்க் காவலர்களாயினர். அரசன் ஆயுதம் தாங்கிய வீரர்மூலம் வற்புறுத்திய கீழ்ப்படிவைப் பார்ப்பார் கோயில்களினின்று மக்களுக்கு வற்புறுத்தினர். அரசன் தனது படைப் பலத்துக்கு இரண்டாவதாகக் கோயில்களைத் தாக்குவதென்பது அரசனைத் தாக்குவது போலாகும். ஆகவே, அரசனுக்குப் பணிந்து நடப்பது கட்டாயம் என்றும், வரிகளையும், கடமைகளையும் தப்பாமல் செலுத்த வேண்டுமென்றும் அவர்கள் வற்புறுத்தி வந்தார்கள். இவ்வாறு அரசன் ஆட்சியும் பார்ப்பார் ஆட்சியும் ஒன்றுக்கு ஒன்று பக்கபலமாக, இணைந்து நடந்தன; நடக்கின்றன. சில சமயங்களில் பார்ப்பார் ஆட்சி அரசன் ஆட்சியி லும் பார்க்க ஓங்கியிருந்தது. அரசனுடைய செங்கோலைப் பிடுங்கித் தமது கையில் பிடித்து ஆட்சி புரிந்த பார்ப்பாரைப்பற்றி வரலாறுகளிற் படிக்கின் றோம். அரசனை ஆக்கும் வல்லமையும் பார்ப்பார் கையில் இருந்தது. பார்ப்பார் ஆட்சியில் கொடுமை தீய அரசன் ஆட்சியில் மக்கள் அடைந்த துன்பங்களுக்கு அளவே இல்லை. இவ்வாறு மக்கள் அடைந்த துன்பங்களைப் பற்றி எல்லா நாட்டு வரலாறுகளிலும் படிக்கின்றோம். ஓர் அரசன் இறந்துவிட்டால் இன்னோர் அரசன் வருவான். அவன் குடிகளுக்கு நன்மைகளும் புரிவான். பார்ப்பார் ஆட்சியோ என்றும் ஒருவகையாகவே இருந்தது. அரசன் ஆட்சியைப் போல அதற்கு முடிவும், தொடக்கமும் இருக்கவில்லை. அரசன் இறந்து விட்டாலும் கோயில்கள் என்றும் இருப்பனவாகும். பார்ப்பனர் நாள்வீதம் மக்களை அடிமைப்படுத்தி அவர்களின் செல்வத்தை உறிஞ்சி வந்தார்கள். மக்கள் இதனை உணர்ந்தார்கள். அங்குமிங்கும் புரட்சி செய்வதற்குச் சிலர் முயன்றார்கள். அவர்களின் தலைகள் கொய்யப்பட்டன. அவர்கள் உயிரோடு தீயிலிட்டுக் கொளுத்தப்பட்டனர். பூமியைச் சூரியன் சுற்றிவரவில்லை; சூரியனைப் பூமி சுற்றிவருகின்றதெனக் கூறிய கலிலியோ கலிலி சிறை யிலடைக்கப்பட்டார். முற்காலத்தில் சமயத்துக்கு மாறாக ஒருவன் நாவசைத் தால் அவன் நாக்குப் போவதுமல்லாமல் தலையுமே போய்விடும். மதப் புரட்சிகளால் ஆயிரக்கணக்கான மக்களின் தலைகள் வாளினாற் கொய்யப் பட்டு நிலத்தில் உருண்டன; ஆயிரக்கணக்கானோர் உயிரோடு தீயில் வெந்து சாம்பலானார்கள்; ஆயிரக்கணக்கானோர் கழுமரங்களில் உடல் பீறுண்டு நாய் நரிகள் இறைச்சியைப் பிடுங்கித் தின்னும்படிக் கிடந்து மாண்டார்கள். மக்களின் நாகரிகம் மிக விரைவாக முன்னேறியிருக்கும்; அதனை விரைந்து முன்னேறவிடாது தடை செய்தோர் சமய பாரகர்களெனத் தம்மைக் கூறிக் கொண்டவர், பார்ப்பாரேயாவார். சமயத்தினாலேயே மக்களுக்கு எல்லா வகை இன்னல்களும் நேர்ந்தன. “Religion is the chief cause of all the sorrows of humanity; everywhere useless, it has only served to drive men to evil and plunge them in brutal misery...It makes of history...and immense tableau of human follies” - “The interpretation of History” p.213. பார்ப்பார் மிகப்பழைமை தொட்டே மக்களைப் பிடித்து இன்னல் விளைத்து அவர்கள் தோள்மீது ஏறிச் சவாரி செய்வதை மேல்நாட்டு ஆசிரியர் ஒருவர், அராபிக் கதைகளிற் கூறப்படும் சின்பாட் கதையுடன் ஒப்பிடுகின்றனர். சின்பாட் என்பவன் கடற்பயணஞ் செய்தபோது அவன் சென்ற மரக்கலம் புயலிலகப் பட்டுப் பாறையில் மோதி உடைந்து போயிற்று. அவன் கடலில் மிதத்து கொண்டிருந்த பலகை ஒன்றைப் பிடித்துக் கொண்டு ஒரு தீவின் கரையை அடைந்தான். சிறிது நேரத்தில் அவ்விடம் வெறுப்பான தோற்றமுடைய ஒருவன் வந்தான். அவன் யாதும் பேசாது அவனுடைய தோள்களில் ஏறி உட்கார்ந்து கால்களை விலாப்புறங்களில் மாட்டிக்கொண்டு அவனைவிட்டு விலாகாதவனாயிருந்தான். தான் விரும்பியபடி செல்லா விட்டால் அவன் சின்பாட்டைக் கைகளால் குத்தினான்; கால்களால் அடித் தான். அவனை அப்புறப்படுத்த முடியவில்லை. நித்திரையிலும் அவன் சின்பாட்டை விட்டுப் பிரியவில்லை. ஒருநாள் சின்பாட் மலை அடிவாரத்தில் சென்றான். அங்கு முந்திரிகைக் கொடிகளில் பழங்கள் பழுத்துக் தொங்கின. பக்கத்தே நீற்றுப் பூசினிக் கொடிகளில் காய்களும் இருந்தன. அவன் சில காய்களைப் பறித்து அவைகளில் துளை செய்து உள்ளேயிருந்த விதைகளை எல்லாம் வெளிப்படுத்தினான். பின் அவைகளுள் முந்திரிகைப் பழங்களைப் பிழிந்து சாற்றை நிரப்பி வைத்தான். சில நாட்களின் பின் அந்தச் சாற்றை அவன் குடித்தான்; தோள் மீதிருந்த மனிதனுக்கும் கொடுத்தான். அது மிகவும் சுவை கொடுத்தது. அம்மனிதன் மேலும் மேலும் அவ்விரசத்தை வாங்கிக் குடித்தான். அதனால் அவனுக்கு மயக்கம் உண்டாகிவிட்டது. அப்பொழுது சின்பாட் அம்மனிதனின் பிடிகளை விடுவித்து அவனைக் கீழே தள்ளினான். பின்பு அவன் தலையில் பெரிய பாறாங்கல்லை எடுத்துப் போட்டுவிட்டுக் கடற்கரைக்கு ஓடிச் சென்றான். கரையில் ஒரு மரக்கலம் தென்பட்டது. அவன் சத்தமிட்டான். மரக்கலம் கிட்டவந்தது. அவன் அதில் ஏறிக்கொண்டு தனது ஊர் சேர்ந்தான். இது நல்ல உவமையாகவே தோன்றுகிறது. பார்ப்பாரத் தொழில் இழிந்ததே பழக்கத்தால் உயர்ந்ததெனக் கொள்ளப்படுகின்றது பார்ப்பனத் தொழில் என்பது பொருளை உறிஞ்சுவதற்காகச் சூழ்ந்து எழுந்த ஏமாற்றுத் தொழில் என்பது ஆராய்ந்து பார்க்கும்போது எளிதில் புலப்படுகின்றது. ஏமாற்றுத் தொழிலாயினும் அது எப்பொழுதும் அவ்வாறு தோன்றமாட்டாது. பழங்காலம் முதல் தொடர்ந்துவரும் தீய வழக்கங்கள் தீமையுடையனவென்று சடுதியில் தோன்றுவதில்லை. நன்றாக உறுதிப்பட்ட கோயிற்கட்டளைகளும், கிரியையும், அவைகளின் தொடக்கமும் கருத்து முதலியவைகளும் ஆராயப்படுவதில்லை. பார்ப்பார் தாம் படித்திருக்கின்ற வும், படிக்க வேண்டியவும் சமயக்கொள்கைகளை நன்றாக நம்புகிறார்கள். பார்ப்பாரத் தொழில் என்பது அவர்களுக்கு ஒரு மதிப்பு. வருவாய் அளிக்கும் ஏனைய தொழில்களைப் போலவே அதுவும் ஒன்று. அது அவர்களுக்கு ஏற்றதாயும், ஒழுங்கான வருவாய் தருவதாயும், சில வகைகளில் பல வாய்ப்புக்கள் அளிப்பதாயுமுள்ளது. பார்ப்பனத் தொழிலால் அவர்கள் அடையும் இன்பம் எவ்வகையான மாறுபட்ட எண்ணங்களாலும் கலைக்கப் படுவதில்லை. கடவுளை வழிபடும் மக்கள் பக்தி காரணமாகக் கொடுக்கும் பொருளுக்குத் தக்க கைம்மாறு அளிக்கிறார்களோ என்று நினைத்து அவர்கள் சிறிது அயர்தல் கூடும். ஒரு வழக்கம் தீயதாயினும் சமூகத்தாலும் ஆட்சியினராலும் ஒப்புக்கொள்ளப்பட்டால் அது முற்போக்குக்கு உரிய தெனக் கொள்ளப்படுகின்றது. ஆகவே, இன்று பார்ப்பானாகவும், நேர்மை யுடையவனாகவும் இருக்க முடிகிறது. தனது தொழில் மக்களின் அறி யாமையை வாய்ப்பாகக் கொண்டு அவர்கள் பொருளை உண்டு வாழ்வதற்கு உண்டானதென்று அவன் உணரமாட்டான்! (The Interpretation of History p.210) சுமேரியப் பார்ப்பனர் சுமேரியாவில் ஒவ்வொரு நகரமும் ஒவ்வொரு பார்ப்பானால் ஆளப் பட்டது. அவன் பதேசி (Patese) எனப்பட்டான். அரசாங்கச் சட்டம் ஒவ்வொன் றும் சமயத்தினால் கட்டப்பட்டிருந்தது. கோயில்களில் தெய்வங்கள் இருந்தன. இவைகளுக்கு உணவு, மனைவியர், செல்வம் முதலியன அளிக் கப்பட்டன. குடியா என்னும் இடத்தில் சில களிமண் சுவடிகள் கிடைத்தன. அவைகளைக் கொண்டு அக்காலத் தெய்வங்கள் எருது, ஆடு, புறா, கோழி, தாரா, மீன், பேரீந்தின் பழம், அத்திப்பழம், வெள்ளரிக்காய், வெண்ணெய், எண்ணெய், பணியாரம் முதலியவைகளை அதிகம் விரும்பின எனத் தெரி கின்றது. இதனால், அக்காலச் சுமேரியரின் அடுக்களையில் பயன்படுத்தப் பட்ட உணவுப் பண்டங்கள் எவை எனத் தெரிக்கின்றது. தொடக்கத்தில் கடவுளர் மனிதஊனை விரும்பிக் கேட்டனர். மனித ஒழுக்கம் சீர்பட்டபோது மக்கள் மனிதனுக்குப் பதில் விலங்குகளைக் கொடுத்தனர். அங்குக் கிடைத்த களிமண் ஏட்டில் மனிதனுக்குப் பதில் ஆட்டுக்குட்டி கொடுக்கப்பட்டதெனச் சொல்லப்பட்டது. இவ்வகைச் செல்வங்களை நிறையப் பெற்றமையால் நகரங்களில் வாழ்ந்த பார்ப்பார் பெரும் செல்வவான்களாயினர். பெரும்பாலும் நடை முறையில் பார்ப்பாரே ஆளுவோராயிருந்தனர். அரசனுடைய அதிகாரம் எவ்வளவு, பார்ப்பாரின் அதிகாரம் எவ்வளவு என்று அறிய முடியாதபடி அவர்களின் அதிகாரம் ஓங்கியிருந்தது. ‘உருக்கினா’ என்னும் சுமேரிய அரசன் பார்ப்பாருக்கு மாறாகப் பெரிய புரட்சி செய்தான். குடிசனங்களின் செல்வத்தைக் கவர்வதாகவும், கைக்கூலி பெறுவதாகவும் அவன் பார்ப்பாரைக் குற்றஞ்சாட்டினான். கோயில்களில் கொடுக்கப்படும் பொருளைப் பார்ப்பார் பயன் கொள்ளாது காக்கும்படியும் அவன் சட்டம் செய்தான். அவன் இறந்ததும் பழையபடியும் பார்ப்பாரின் ஆட்சி ஓங்கிற்று! (The story of civilization) எகிப்தியப் பார்ப்பார் எகிப்திலே அரசனுடைய அதிகாரத்திலும் மேலான அதிகாரம் படைத்த ஒரு கூட்டத்தினர் விளங்கினார்கள். அவர்கள் பார்ப்பார். எல்லா நாடுகளிலும் போல அரசாங்கத்துக்கும், பார்ப்பாருக்குமிடையில் அதிகாரத் தின் பொருட்டு மல்லுக்கட்டுதல் இருந்து வந்தது. ஒவ்வொரு போரிலும் கிடைக்கும் கொள்ளைப் பொருள்களின் பெரும்பாகம் பார்ப்பாரையும், கோயிலையும் அடைந்தன. மூன்றாம் இராம்சேஸ் அரசன் காலத்தில் எகிப்தியக் கோயில்களில் 1,07,000 அடிமைகள் இருந்தார்கள். இது எகிப்தின் முழுமக்கள் தொகையில் பதின்மூன்றில் ஒன்றாகும். பார்ப்பாரிடம் 7,50,000 ஏக்கர் பயிரிடும் நிலம் இருந்தது. இது எகிப்து முழுமையிலும் பயிரிடும் நிலத்தில் ஏழில் ஒரு பகுதியாகும். அவர்களிடம் 5,00,000 ஆடு மாடுகள் இருந்தன. எகிப்து, சிரியா என்னும் நாடுகளிலுள்ள 169 பட்டினங்களின் வருவாய் அவர்களை அடைந்தன. இராம்சே அரசன், அம்மன் கோயிலின் பார்ப்பாருக்கு 32,000 கிலோ கிராம் பொன்னும், பத்து இலட்சம் கிலோ கிராம் வெள்ளியும், ஆண்டுதோறும் 1,55,000 மூடை தானியங்களும் வழங்கினான். அரசாங்க வேலையாட்களுக்குக் கூலி கொடுக்கும் பொருட்டுக் கரு வூலத்தைப் பார்த்தபோது அங்கு யாதும் காணப்படவில்லை. தெய்வங்கள் அதிகம் அதிகமாக உண்ணும்போது மக்கள் அதிகம் அதிகமாகப் பட்டினி கிடந்தார்கள். காலம் செல்லச் செல்ல அரசர்கள் பார்ப்பாரின் ஏவலாள ரானார்கள். இராமசிட் என்னும் அரசனின் செங்கோலைப் பிடுங்கி அம்மன் கோயிலின் தலைமைப் பார்ப்பான் ஆட்சிபுரிந்தான். பாபிலோனியப் பார்ப்பார் பாபிலோனில் ஞாயத் தீர்ப்பாளர் (நியாயதிபதிகள்) பார்ப்பாரா யிருந்தனர். அரசனின் அதிகாரம் கோயிலால் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. உண்மையில் அரசன் நகரத்திலுள்ள கடவுளின் வேலையாளாக இருந்தான். தெய்வத்தின் பெயரால் வரி தண்டப்பட்டது. பார்ப்பாரின் உடன்பாடு இல்லாத அளவில் அரசன் அரசனாக மதிக்கப்படவில்லை. இதனைப் பின்பற்றியே இன்றைய முடிசூட்டுக்களில் புரோகிதன் பங்கு பெறுகிறான். தலைமுறை தலைமுறைகளில் கோயில்களில் செல்வம் திரண்டு பெருகிற்று. செல்வர் தமது ஊதியங்களின் ஒரு பகுதியைக் கோயிலுக்கு வழங்கினர். அரசர், கடவுளரின் தயவை நாடிக் கோயில்கள் எடுத்தனர். அவைகளுக்குத் தள வாடங்கள், உணவு, அடிமை, நிலம் அரச வருவாயில் ஒரு பகுதி முதலியவை களைக் கொடுத்தனர். போர்களில் வெற்றி கிடைத்தால், போரில் பிடித்து அடிமையாக்கப்பட்டவர்களில் பெரும் பகுதியினர் கோயில்களுக்கு விடப்பட்டனர். போரில் கிடைத்த கொள்ளைப் பொருளின் பெரும் பகுதியும் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டன. சிறப்பாக ஏதும் அதிட்டம் உண்டானால் அரசன் சிறந்த கொடைகளைக் கடவுளுக்கு வழங்கினான். சில நிலங்களி லிருந்து திறையாகப் பேரீந்தின் பழம், தானியம், பழவகைகள் முதலியன கோயிலைச் சேர்ந்தன. அவ்வாறு கொடுக்கத் தவறியபோது நிலங்கள் பார்ப்பாரால் பறிக்கப்பட்டன. இவ்வாறு நிலங்கள் பார்ப்பாரை அடைந்தன. இவ்வுலக நன்மைகளைக் கருதிச் செல்வரும், வறியரும் கோயில்களுக்குப் பொருள் கொடுத்தனர். பொன், வெள்ளி, செம்பு, இரத்தினக்கற்கள் முதலியவை கோயிற் களஞ்சியங்களில் குவிந்து கிடந்தன. பார்ப்பார் இச்செல்வத்தை நேராகப் பயன்படுத்தமாட்டாமையால் ஊதியமளிக்கக் கூடிய பயிர்ச் செய்கை, கைத்தொழில், முதலியவைகளின் பொருட்டுப் பயன்படுத்தினர். அவர்களிடத்தில் அதிக நிலம் மாத்திரமன்று, பல அடிமைகளும் இருந்தார்கள். அவர்கள் அடிமைகளைக் கூலிக்கு வேலை செய்யும்படிப் போக்கி ஊதியம் பெற்றார்கள். வாத்தியம் வாசித்தல் முதல் மதுவடித்தல் வரையிலுள்ள தொழில்களுக்கு அவர்கள் பயன்படுத்தப் பட்டனர். பார்ப்பாரிடத்துப் பலர் பாதுகாப்பின் பொருட்டுப் பணத்தைக் கொடுத்தார்கள். இவர்கள் பொதுவாக வட்டிக்குப் பணம் கொடுப்பவர்களி லும் பார்க்கக் குறைந்த நிபந்தனையில் பணத்தைக் கொடுத்ததார்கள். இவர்கள் கணக்கு எழுதுபவர்களாகவும், ஆவணங்கள் தீட்டுபவர்களாகவும், வழக்குகளை விளங்கித் தீர்ப்பளிப்பவர்களாகவும், அரசாங்க மூல ஆவணங் களைப் பாதுகாப்போராகவும், பதிவு செய்யப்பட்ட வாணிகத்தொழில் புரிவோ ராகவும் இருந்தனர். மிகமிக இன்றியமையாதபோது அரசன் கோயிற் பணத்தைத் தனது தேவைகளுக்குப் பயன்படுத்தினான். இது மிகவும் ஆபத்தானது. கோயிற் பணத்தைத் தீண்டுவோர்மீது பார்ப்பார் பொல்லாத சாபம் இட்டார்கள். இவர்கள் கோயிற் சொத்தில் அணுவளவேனும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அரசனுக்கு மக்களிடத்திலுள்ளதிலும் பார்க்கப் பார்ப்பாருக்கு அவர்களிடத்தி லுள்ள செல்வாக்குப் பெரிதாக இருந்தது. பார்ப்பார் நினைத்தால் பொது மக்களோடு சேர்ந்து அரசனை ஆட்சியினின்று விழுத்தி விடுதல் கூடும். அவர்களின் பதவி எப்பொழுதும் உறுதியானது; அரசன் இறந்துபோனாலும் தெய்வங்கள் இருந்தன. தெரிவு செய்து எடுக்கப்படுதல், போரால் உண்டாகும் கெடுதிகள் போன்றவைகளுக்குத் தப்பி இவர்கள் உறுதியான சமய ஆட்சியைக் கட்டினார்கள். இது இன்றுவரையும் நிலைபெறுகின்றது. இவ் வகையில் பார்ப்பார் ஓங்குவதைத் தடுக்க முடியாமல் இருந்தது. கிறித்து பிறப்ப தற்குத் தொளாயிரம் ஆண்டுகளுக்குமுன் எடுக்கப்பட்ட கணக்கின்படி, அங்கு 65,000 கடவுளர் (கோயில்கள்) இருந்தனர். ஒவ்வொரு பட்டினத்தை யும் தலைமை கொண்டு கிராமங்களிலும், கிராமங்களின் பகுதிகளிலும் சிறு தெய்வங்கள் இருந்தன. இத்தெய்வங்கள் மக்களிலிருந்து தொலைவில் இருக்கவில்லை. அவைகளுக்கு நிலத்தில் கோயில்கள் இருந்தன. அவை அதிக விருப்போடு உணவு உண்டன; பக்தியுள்ள பெண்களிடம் இராக் காலத்தில் சென்று அவர்களுக்குக் கருப்பதானஞ் செய்தன. பாபிலோனிய சமயத்தின் மேலான இலக்குத் தேவர்களுக்குப் பலி செலுத்துவதே; பலி என்பது பழக்கம் வாய்ந்த பார்ப்பானால் சிக்கலான கிரியைகள் மூலம் தேவருக்குக் கொடுக்கும் உணவு ஆகும். அவன் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் செயலும் புனிதமானவை. பாபிலோனியரின் சமய மென்பது நல்ல வாழ்க்கையிலும் பார்க்கச் சரியான கிரியை அளவில் இருந்தது. ஒருவன் உலகில் செய்யும் மேலான கடமை கடவுளுக்குப் பலி செலுத்து வதும், சரியான துதி கூறுவதும் ஆகும். அவன் விழுந்து போன பகைவனின் கண்ணைப் பிடுங்கலாம்; கை கால்களை வெட்டலாம்; அவைகளால் பாவம் நேராது. கடவுளருக்கு முன்னால் நறும்புகையிடுதல், அவர்களை அழகிய அணிகலன்களால் அலங்கரித்தல், தங்கள் குமாரத்திகளின் கன்னிமையை இஸ்ரர் கடவுளின் விழாவில் பலியிடுதல், கடவுளுக்கு முன்னால் உணவும் மதுவும் படைத்தல், பார்ப்பாருக்குத் தயாளமாகக் கொடுத்தல் முதலியன பாபிலோனியரின் உயர்ந்த சமயக் கருத்துக்களாம். அசீரியப் பார்ப்பார் அசீரிய அரசன் தனது படைக்கு அடுத்தபடியில் கோயிலை நம்பினான். வன் பார்ப்பாருக்குத் தயாளமாகப் பொருள் வழங்கினான். இராச்சியம் ‘அசுர்’ என்ற கடவுள் பேரில் இருந்தது. வரி, வருவாய் முதலியன அக்கடவுளின் கருவூலத்தை நிறைக்கும் பொருட்டுத் தண்டப்பட்டன. பகைவரிடமிருந்து கொள்ளையிடும் பொருளையும், புகழையும் அசுர்க் கடவுளுக்குக் கொடுப்பதற்காகப் போர்கள் செய்யப்பட்டன. அரசன், தான் கடவுளின் புதல்வன் எனச் சொல்லிக் கொண்டான். யூதேயாவில் பார்ப்பார் செமித்தியர்களாகிய இவர்கள் நரபலிகள் இட்டு வந்தார்கள்; பின்பு விலங்குப் பலிகள் இட்டார்கள். ஆடு மாடுகளின் தலைக் கன்றுகள், குட்டிகள், பலியிடப்பட்டன. தொடக்கத்தில் பார்ப்பானால் கொன்று ஆசீர்வதித்துக் கடவுளுக்குப் பலியாக வைக்கப்படாத விலங்குகள் உண்ணத் தகுதியற்றவை களாகக் கொள்ளப்பட்டன. விருத்த சேதனம் பலி வகைகளில் ஒன்றாக இருந்தது. பார்ப்பார் மாத்திரம் நன்றாகப் பலியைச் செலுத்தவும், கிரியை களைப் பற்றியும் அவைகளின் பலன்களைப்பற்றியும் கூறவும் முடியும். ‘லெவி’ எனப்பட்ட குலத்தில் தோன்றியவர்களல்லாத மற்றெவரும் பார்ப்பா ராக வர முடியாது. அவர்களுக்கு, வரிகள் எல்லாம் விதித்திருந்தார்கள். கடவுளுக்குக் கொடுக்கப்படும் பொருள்களில் தமக்கு வேண்டியவற்றை அவர்கள் பயன்படுத்தினார்கள். கோயில்களில் பெரும் செல்வம் திரண்டது. எருசேலம் ஆலயத்தில் வாழ்ந்த பார்ப்பார் தீப்ஸ் என்ற பிரிவினர் ஆவர். பாபிலோன் பட்டினங்களில் வாழ்ந்த தம்மினத்தவர்களை ஒப்ப அரசனிலும் பார்க்க அதிகாரமுடையவர்களானார்கள். யூதேய பார்ப்பார் உரோம்நகர்ப் போப்புகளைப் போல அரசன் செய்ய முடியாதவைகளைச் செய்யும் திறமையுடையவர்களானார்கள். ஜப்பானியப் பார்ப்பார் நாட்டில் மற்றத் தொழில்கள் குன்றியபோதும் பார்ப்பனத்தொழில் செழிப்படைந்தது. பார்ப்பாரின் செல்வம் தலைமுறைக்குத் தலைமுறை அதிகப்பட்டது. மக்களின் வறுமை ஒரே வகையாக இருந்து வந்தது. நாற்பது வயது உடைய ஒருவன் நாற்பது கோயில்களுக்கு அவன் பேரால் பூசை செய் வித்தால் அவனுக்குப் பத்து ஆண்டு வாழ்நாள் பெருகும் என்றும், ஐம்பது வயதுக்குடையவன் ஐம்பது கோயில்களுக்கு அவ்வாறு செய்யின் பத்து ஆண்டுகள் பெருகுமென்றும், அறுபது வயதுடையவன் அறுபது கோயில் களுக்கு இவ்வாறு செய்தால் மேலும் பத்து ஆண்டுகள் பெருகுமென்றும் பார்ப்பார் உறுதி கூறினார்கள். இவ்வாறு ஆயுளை விலைக்கு வாங்கும் பொருட்டு மக்கள் பெருந்தொகைப் பணத்தைக் கோயில்களுக்குக் கொடுத்து வந்தார்கள். தொகுகுவாக் கூட்டத்தைச் சேர்ந்த பார்ப்பார், மதுவருந்தி னார்கள்; வைப்பாட்டி வைத்திருந்தார்கள்; பையன்களை விலை கொடுத்து வாங்கினார்கள்; அவர்களின் புருவ மயிரை மழித்தார்கள்; முகத்துக்குப் பொடி பூசினார்கள்; அவர்களைக் கூடாத செயலுக்குப் பயன்படுத்தினார்கள். சீரிய அசீரியப் பார்ப்பார் (இது ‘A popular History of priest- craft in all ages and nations’ என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. இராக்காலத்தில் பலிபீடத்தின் முன்னால் மணலைப் பரப்பி வைத்து அதன்மீது பதிந்திருக்கும் தமது மனைவி மக்களுடைய பாதச் சுவடுகளையும் கடவுளரின் அடிகள் எனக் காலையில் மக்களுக்குக் காட்டினார்கள்.) பினீசிரியரின் மெலோச் என்னும் கடவுள் உலோகத்தினால் செய்யப்பட்ட பெரிய உருவம் ஆகும். அது குந்தி இருக்கும் வடிவில் அமைக்கப்பட்டது. பலியிடும் காலத்தில் அது சிவப்பேறும்படி சூடாக்கப்படுகின்றது. சிறு குழந்தைகள் பலியிடும் பொருட்டுக் கொண்டு வரப்பட்டார்கள். அவர்கள் எரிகின்ற கடவுளின் கையில் வைக்கப்பட்டார்கள். அவர்கள் மிகவும் வேதனையோடு கதறி இறந்தார்கள். அப்பொழுது எழுகின்ற பரிதாபமான கூச்சலை அமுக்கும்படி மேளங்கள், சல்லரிகளை அடித்தும், கொம்பு எக்காளங்களை ஊதியும் பார்ப்பாரும் அவர்களின் பரிவாரங்களும் பெரிய சத்தம் செய்தார்கள். இந்தியாவைப் போலவே இந்நாடுகளிலும் இடபம் (எருது) வழிபடப்பட்டது. குறிக்கப்பட்ட சில காலங்களில் பெரிய தீ வளர்த்து மனிதப் பலிகள் இடப்பட்டன. எரதோதசு (Heradorus) கூறியிருப்பது வருமாறு:- “பாபிலோனில் உள்ள ‘பேலஸ்’ என்னும் கோயிலின் ஓர் அறையில் நன்கு அலங்கரிக்கப்பட்ட கட்டில் ஒன்று வைக்கப்பட்டு உள்ளது. அதன் அருகில் கட்டில் பொன்னால் செய்யப்பட்ட மேசை ஒன்று இடப்பட்டுள்ளது; ஆனால், அங்குக் கடவுள் வடிவம் இருக்கவில்லை. ஆடவன் எவனாவது அங்குப் படுத்து உறங்குதல் ஆகாது. கன்னிப் பெண் ஒருத்தி அக்கட்டில் மீது இரவில் படுத்தாள். தெய்வம், கால்திய மக்கள் எல்லோரிலும் வடிவழகால் சிறந்த ஒரு பெண்ணைத் தெரிந்து எடுத்துக் கொள்ளுகிறதெனச் சால்தியப் பார்ப்பார் கூறினார்கள். தெய்வம் இராக்காலத்தில் அக்கட்டிலில் படுக்கின்ற தெனவும் அவர்கள் உறுதியாகப் புகன்றனர். இவ்வகையாகவே தீப்ஸ் என்னும் எகிப்திய தலைநகரத்துப் பார்ப்பாரும் கூறினார்கள். இப்பெண்கள் ஆடவரோடு தொடர்பு வைத்திருப்பதில்லை என மக்கள் நம்பினார்கள். இலையாசியவிலும் இவ்வகை வழக்கு இருந்தது. இங்கு ஒழுங்காக வெளிப் பாடு கூறப்படவில்லை; கடவுளோடு பேசும் அவசியம் உண்டானபோது அப்பெண், வரும் இரவில் கோயிலில் தங்கியிருக்கக் கடமைப்பட்டிருந்தாள். தமது கூட்டத்தினர் எல்லோருக்காவும் கடவுளுக்கு அழகிய பெண்ணைத் தெரிந்தெடுப்பது என்னும் தலைப்பின் கீழ் பார்ப்பார் கடவுளின் பெயரால் கட்டுக்கடங்காத தமது காம இச்சையைத் தணித்துக் கொண்டனர்.” “யோசெபுஸ்” என்னும் யூத சரித்திராசிரியரால் (கி.பி. 37) கிரீசில் வழக்கமாக நடைபெற்ற இவ்வகை நிகழ்ச்சி ஒன்று கூறப்பட்டுள்ளது. அது மிக வியப்பானது. உயர் குலத்தவன் ஒருவன் தான் முன்பு தொடர்பு வைத் திருந்த மணமான பெண் ஒருத்தியைக், கடவுள் விரும்புவதாகக் கூறிக் கோயி லுக்கு அழைக்கும்படிப் பார்ப்பாரைத் தூண்டினான். அவ்வாறு கோயிலுக்குக் கொண்டு வந்த பெண்ணைப் பார்ப்பாரும் இவ்வுயர் குலத்தவனும் மாத்திர மல்லாமல் அதிகாரத்திலுள்ளவர்கள் எல்லாரும் அனுபவித்தார்கள். இது எப்பொழுதும் பார்ப்பாரின் வழக்கமாகும். அசீரியா பாபிலோனிய ஆட்சியுள் அடங்கியிருந்த காலத்தில், மிலித்தியா என்னும் பாபிலோனியப் பெண் தெய்வத்தின் கோயிலில் நடந்த ஆண் - பெண் சேர்க்கை சம்பந்தமான இடக்கரான செயல் அளவு கடந்திருந்தது. மணமான அல்லது மணமாகாத எல்லாப் பெண்களும் தமது வாழ்நாளில் ஒருமுறை மிலித்தியாவின் கோயிலில் சென்று தாம் முதல் எதிர்ப்படுகின்ற ஒருவனுக்குத் தமது மானத்தை விற்று அதனால் கிடைக்கும் பணத்தைப் பார்ப்பாரின் வருமானம் மிகும்படி கோயில் உண்டியில் போடவேண்டியிருந்தது. இவ்வழக்கத்தைக் குறித்து எரதோதசு மாத்திரமல்லர், வேறு பலரும் கூறியுள்ளார்கள். தெய்வங்கள் இராக்காலத்தில் வந்து உணவுகளை உண்கின்றன எனப் பார்ப்பார் கூறினார். இராக்காலத்தில் பார்ப்பார் தமது மனைவி மக்களோடு தெய்வத்துக்குப் படைக்கப்பட்ட நேர்த்தியான உணவுகளை எல்லாம் வயிறாரப் புசித்தார்கள். ஐரோப்பிய நாடுகளின் பார்ப்பார் துருயித்தியர் (Druids) என்னும் பார்ப்பார் பிரான்சிலும், இங்கிலாந்தி லும் வாழ்ந்தார்கள். இவர்கள் ஒருபோதும் போரில் சேவை புரிவதில்லை. இவர்கள் வரிகள் எதுவும் கொடுப்பதும் இல்லை. இவர்கள் சுள்ளிகளைக் குவித்துப் பெரிய தீ வளர்த்தார்கள். அதில் மனிதரை உயிரோடு பலியாக இட்டார்கள். கொள்ளை, களவு முதலிய குற்றங்களுக்காகத் தண்டிக்கப் பட்டவர்களே இவ்வாறு பயன்படுத்தப்பட்டனர். இவ்வகையினரின் பலிகளைத்தான் தேவர்கள் விரும்புவார்கள் என அவர்கள் நினைத்தார்கள். அவ்வகையினர் கிடைக்காதபோது குற்றம் அறியாத மக்கள் பலியிடப் பட்டார்கள். ஸ்காந்தினேவியாவில் ‘விரிக்கா’ என்னும் பெண் தெய்வத்தை இராச குமாரிகள் சேவித்தார்கள். இவர்கள் வெளிப்பாடு கூறினார்கள். கன்னிமையக் காப்பாற்றினர்கள். தூய தீயை அணையாதபடிக் காத்தார்கள். பார்ப்பார் கடவுளின் எண்ணங்களைத் தாம் கூறுவதாக நடித்தனர். சில காலங்களில் கடவுளின் பெயரால் அரசனுடைய இரத்தத்தையும் கேட்டுப் பெற்றார்கள். இவ்வாறு தெய்வத்துக்கு இடப்பட்ட மனிதப் பலிகளின் உடல்கள் எரிக்கப் பட்டன; அல்லது கோயிலுக்குப் பக்கத்தேயுள்ள தூய சோலையிலுள்ள மரங்களில் கட்டித் தொங்கவிடப்பட்டன. இரத்தத்தின் ஒரு பகுதியைப் பார்ப்பார் மக்கள்மீதும், சோலையிலும், கோயிற் சுவர், மனைகள்மீதும் தெளித்தனர். ‘உன்வெல்’ என்னும் ஆலயத்தில் ‘தொர்’ கடவுளின் விழாவில் ஆண் - பெண் தொடர்பான தடைகள் நீக்கப்பட்டிருந்தன. அதனால், அது காம விழாவாகக் காட்சியளித்தது. அங்கு விரும்பத்தகாத ஆட்டங்களும், செயல்களும், நடிப்புகளும் நடைபெற்றன. கிரீசில் மனிதப் பலிகள் இடப்பட்டன. சனித் தெய்வத்துக்கு ஆண்டு தோறும் குழந்தைகள் பலியிடப்பட்டன. ஏகேஸ் (Augurs) என்னும் பார்ப்பார், தாம் கடவுளின் நினைவுகளைக் கூற முடியுமெனப் புகன்றனர். பறவைகள் பறப்பதையும் பலியிடப்பட்ட விலங்குகளின் குடல்களையும் பார்த்து அவர்கள் அவ்வாறு கூறினார்கள். கோயில்களில் விரும்பத்தகாத ஆண் - பெண் சேர்க்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. (Bacchanal, frantic with midnight intemperance polluted the secret sancutuary, and prostitutions are throned upon the very altars of the gods - lbid p.66) அமெரிக்கப் பார்ப்பார் மெக்சிக்கோவில் கோயில்களில் மனிதப் பலிகள் இடப்பட்டன. கோயில்களில் கன்னிப் பெண்கள் இருந்தார்கள். போரில் பிடிக்கப்பட்ட வர்கள் கோயில்களில் பலியிடப்பட்டார்கள். ஓர் ஆண்டில் இருபதினாயிரம் நரபலிகள் வரை இடப்பட்டன. உரோமாபுரிப் பார்ப்பார் உரோமாபுரிப் பார்ப்பாரின் அதிகாரம் உலக முழுமையிலுமுள்ள பார்ப்பாரின் அதிகாரம் எல்லாம் திரண்டுருண்டு வடிவு கொண்டதை ஒத்தது. உரோமாபுரித் தலைமைப் பார்ப்பாரின் அதிகாரம் அரசனின் அதிகாரத்தை யும் தன்னுள் அடக்கிற்று. பார்ப்பானுடைய எண்ணத்துக்கு மாறாக அரசனின் ஆணை செல்ல முடியாமல் இருந்தது. அரசனை ஆக்கவோ அழிக்கவோ பார்பானால் முடியும். பாப்பு எனப்பட்ட பார்ப்பானின் கட்டளைக்குக் கீழ்ப் படியாதவர்களும், அவன் சமயத்தை நம்பாதவர்களும் தீயிலிட்டுக் கொளுத் தப்பட்டார்கள், இருட்டறையில் அடைக்கப்பட்டார்கள். இவ்வாறு கல்வியாற் சிறந்த பலர் தீக்கு இரையானார்கள். சூரியன் பூமியைச் சுற்றி வரவில்லை. பூமியே சூரியனைச் சுற்றி வருகிறதெனக் கூறிய கலிலியோவை (1564-1642) ஏழாம் ஏர்பன் என்னும் உரோமாபுரிப் பார்ப்பான் சிறையிலடைத்ததோடு கலிலியோவின் நூலையும் எவரும் படித்தல் கூடாதெனச் சட்டம் செய்தான். சுவர்க்க, நரகக் கதவுகளின் தாழ்க்கோல் தம்மிடம் இருப்பதாகப் பார்ப்பான் கூறினான். மக்கள் செய்யும் பாவங்களைப் பணத்தைப் பெற்றுக்கொண்டு மன்னிக்கும் ஆற்றல் தனக்கு உண்டெனக் கூறினான். இவ்வுலகில் மாத்திர மன்று மறு உலகிலும் தனது ஆணை நடக்கின்றதெனப் புகன்றான். (The priest had not only power to hear sins, but also to parden them. He could shut up in hell, or let out; he was not content with enslaving his followers of this world - he carried his influence to the next and even invented a world from the torture of which no man can escape without his permission - lbid p. 109) “திருமணம், உரிமை, ஒழுக்க சம்பந்தம், சமயத்தில் நம்பிக்கை யின்மை, சமயத்தில் கொள்கை மாறுபடுதல், மந்திரவித்தை, கோயில்களில் ஒழுக்கக்கேடு போன்ற பல வகையான குற்றங்களுக்கு உரோமன் கத்தோலிக்கக் கோயில்கள் விலங்குத் தண்டனை விதித்தன. சமயத்தை நம்பாதவர்கள் வழக்கமாகத் தீயிலிட்டுக் கொளுத்தப்பட்டார்கள்.” (The new age encyclopaedia Vol IV-p- 132) ‘யான் அவ் ஆக்’ (ஜோன் ஆஃப் ஆர்க்) என்னும் பெரிய வீரப்பெண் மந்திர வித்தைக்காரி என்று குற்றம் சாட்டப்பட்டுப் பார்ப்பாரால் எரிக்கப்பட்டாள். இவளை ஒப்ப, ‘சியர்தானோ போனோ’, ‘மிக்சல் சேர் வாஸ்’ முதலிய பெரிய அறிவாளிகள் தீயிலிட்டு எரிக்கப்பட்டனர். (Religion has employed every means for the destruction of its critics, from the poisoned cup forced on Socrates for trumped up reasons of state that were really reasons of religion is the stake at which Giordano Bruno and Michael Servetus were burnt - The interpretation of History - p215) இப்பார்ப்பார் மதத்தை, மார்டின் லூதர் என்னும் செர்மானியர் (கி.பி. 1483-1546) எதிர்த்தார். பாவ மன்னிப்பு விற்பனை, மறுமையில் நல்லிடங்கள் பெறும் சீட்டு விற்பனை போன்றவைகளை எதிர்த்து இவர் மக்களுக்குப் போதனை செய்தார். கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் பார்ப்பார் திருமணம் செய்து கொள்ளுதல் கூடாதென்னும் சட்டம் உண்டாயிற்று. அதனால் நாடெங்கும் ஒழுக்கக் கேடுகள் பரவின. கற்புக்காக விரதமிருக்கும் பெண் களில் ஒருத்தியைக் கோயிற் பார்ப்பான் தனது படுக்கையில் வைத்திருப்பது அக் காலச் சாதாரண நிகழ்ச்சி. இது கட்டில் நின்ற எருதுகளை அவிழ்த்துப் பசுக் கூட்டத்தில் விட்டதுபோலாயிற்று. இந்தியப் பார்ப்பார் இந்தியப் பார்ப்பாரைப் பற்றி நாம் எல்லோரும் அறிவோம். ஒரு நூற்றாண்டுக்கு முன் இந்தியப் பார்ப்பாரைக் குறித்து மேல் நாட்டவர்கள் எவ்வாறு விளக்கியிருந்தார்கள் என்பதை அறிவது மிக இன்பமளிப்பதாகும். ‘ஹேவிட்’ என்பார் நூறு ஆண்டுகளுக்குமுன் “உலகம் முழுமையிலும் பார்ப்பாரத் தொழில்” என்னும் நூலில் எழுதியிருப்பதன் சுருக்கத்தை ஈண்டுத் தருகின்றோம். “எல்லா நாடுகளிலும் பார்ப்பனத் தொழில் பார்ப்பாரை அதிகாரமும் கவுரவமும் உடையவர்களாக்கிற்று. இந்தியாவிலே விதவைகளைத் தீயிலிட்டுக் கொளுத்துவதையும், சோமநாதத்திற் பலர் தற்கொலை புரிந்துகொள்வதையும், குழந்தைகளைப் பலியிடுவதையும் அறியாதார் யார்? சோமநாதத்தில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் தற்கொலை புரிகின்றார்கள். சமீபகாலம் வரையில் அங்குக் கோயில்களிற் பார்ப்பார் கடவுளுக்கென்று மிகவும் அழகான பெண்களைத் தேர்ந்தெடுத்தார்கள். இவர்கள் பார்ப்பாரின் காம இச்சைக்குப் பலியானார்கள். ஒவ்வொரு கோயிலி லும் இவ்வகைப் பெண்கள் கூட்டமாக இருக்கிறார்கள். இவர்கள் விலை மாதர்த் தொழிலால் ஈட்டும் பொருள் கோயிலின் உண்டியை நிரப்புகின்றது. இப்பெண்கள் மரியாதையிற் குறைந்தவர்களாகக் கருதப்படுவர். கடவுளுக்குச் செய்யப்படும் மரியாதையின் பகுதியை இவர்களும் பெறுகின்றனர். இவர்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள். கலியாணமின்றி இவர்கள் வயிற்றில் பிறக்கும் குழந்தைகள் கடவுளுடைய குழந்தைகளாகக் கொள்ளப்படும்; ஆண்கள் வாத்தியம் வாசிக்கப் பயிற்றப்படுவர்; சிறுமியர் தாயின் தொழிலுக்குப் பயிற்றப்படுவர். சமய வளர்ச்சிக்காகப் பார்ப்பார் செய்யும் சிறப்பான செயல் இதுவாகும். பார்ப்பாரே வியபிசாரத்துக்குத் தலைவராவார்; கோயில்கள் வியபிசார விடுதிகளாகும். “கோயில்களில் பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்பட்ட கடவுள் உருவங்கள் காணப்படுகின்றன. கோயிலில் தட்டு முட்டுகள் எல்லாம் பொன் தகடுகளால் செய்யப்பட்டவை. சுருங்கக் கூறுமிடத்தில் கோயில்களில் செல்வம் நிறைந்திருந்தது. அராபியர் ஆற்றோட்டம்போல இந்தியாவுள் நுழைந்தார்கள். அவர்கள் இச் செல்வங்களைக் கொள்ளை அடித்தார்கள். ” “மகமத்கசினி, சோமாநாத ஆலயத்தில் உள்ள செல்வத்தைப்பற்றிக் கேள்விப்பட்டான். அதன் சபை பொன் ஓடுகளால் வேயப்பட்டிருந்தது. கசினி அக்கோயிலை அடைந்தபோது மிக வியப்படைந்தான். அவன் கோயிலில் குவிந்து கிடந்த பொன்னும் வெள்ளியுமாகிய செல்வங்களைக் கொள்ளை கொண்டான். அவன் கடவுள் சிலையை அடித்து உடைக்கச் சென்ற போது பார்ப்பார் பெரும் தொகைப்பணம் கொடுப்பதாகக் கூறி அதனை உடைக்காதிருக்கும்படி வேண்டினர். அவன் அவர்கள் வார்த்தையைச் செவிக்கொள்ளாது விக்கிரகத்தை அடித்து உடைத்தபோது அதன் வயிற்றில் விலை ஏறப்பெற்ற முத்தும், நவமணிகளும் கலீர் என்று வெளியே சிந்தின. சோமநாதத்தில் கொள்ளையிடப்பட்ட செல்வத்தின் மதிப்புக் கணக்கிட்டுக் கூற முடியாத அளவினதாகும். எல்லாச் சாதியினரிடையும் பார்ப்பார் அரசனைத் தம் ஆணைக் குட்படுத்தியிருந்தார்கள் எனக் காட்டியுள்ளோம். இந்தியாவிலோ அவர்கள் ஒருபடி அதிகம் சென்றிருந்தார்கள். அவர்கள் மனு நூல் என்னும் ஒரு புத்தகத்தை எழுதினார்கள். அதில் சொல்லப்படும் சட்டங்களைக் கடந்தவர் களிடம் முடிவு நரகம் எனக் கூறினார்கள். ஒரு சாதி இன்னொரு சாதியோடு கலத்தல் கூடாது; மகன் தந்தையின் தொழிலையே செய்தல்வேண்டும்; பார்ப்பான் அவனுக்கு வரி விதிக்கலாம்; அவனிடம் வேலை வாங்கலாம். பார்ப்பார், பிரமாவின் முகத்தில் பிறந்தவர்கள். பார்ப்பாருக்குத் தானங் கொடுப்பதால் மக்கள் பாவங்களைப் போக்கலாம். இறந்தவர்களை மறுமை யில் இன்பமான இடங்களில் வாழும்படிச் செய்யலாம் என மக்கள் நம்பி னார்கள். ஆகவே, மக்கள் தமதும், தமது முன்னோருடையவும் மறுமையை நினைத்துத்தாம் அரிதில் முயன்று பெற்ற பொருள்களைப் பார்ப்பாருக்கும், கோயில்களுக்கும் கொடுத்தனர். எகிப்திய நாட்டில் எவ்வாறு பார்ப்பார் உயர்ந்த வாழ்க்கை நடத்தி னார்களோ அதற்கும் மேலாக இந்தியப் பார்ப்பார் வாழ்க்கை நடத்தினர். மலையாள தேசத்தில் மற்றைய நாடுகளிலும் பார்க்கப் பார்ப்பனர் அதிகாரம் படைத்திருந்தனர். அரசன் தொலைவில் நின்று தனது நிறை அளவு பொன்னை நிறுத்துப் பார்ப்பாருக்குத் தானஞ் செய்தான். இது மாத்திரமன்று. ஆயிரக்கணக்கான பார்ப்பாருக்கு உணவும், கையுறையும் வழங்கினான். மணமான பெண்ணை முதன் முதல் பார்ப்பானே அனுபவிக்கவேண்டுமென் னும் வழக்கு உண்டாவதானால் பார்ப்பாருடைய அதிகாரம் எவ்வளவு உச்சநிலை அடைந்திருந்ததென்பதை நாமே உய்த்தறியலாம். வடநாட்டுப் பார்ப்பார் தென்னாட்டுப் பார்ப்பார் கோயில்கள் வாயிலாக அதிகாரம் பெற்றனர். வடநாட்டுப் பார்ப்பார், பிராமணர் எனப்பட்டனர். இவர்கள் சில கிரியை முறைகளை எழுதிவைத்துக்கொண்டு அம்முறைப்படி யாகங்கள் செய்தால் பெரிய நன்மைகள் உண்டாகும்; மறுமையிலும் சுகமுண்டு எனக் கூறினர். யாகம் செய்வது அரசர் போன்ற செல்வருக்கன்றிப் பொதுமக்களுக்கு எளிதன்று. ஆகவே, அரசன் பிராமணரின் வார்த்தைகளை மெய்யெனநம்பிப் பெரும் பொருட் செலவில் பெரிய பெரிய யாகங்களைச் செய்தான். யாகங் களினால் அரசனின் கருவூலம் வறிதாயிற்று. செல்வங்களை எல்லாம் பார்ப்பார் தானமாகப் பெற்றனர். அவர்கள் செய்தயாகங்கள் அசுவமேதம், புருஷமேதம், சோமம், கோமேதம் போன்ற கொடிய யாகங்களாகும். இவ் வியாகங்களிற் கொல்லப்பட்ட விலங்குகள் மிடாக்களில் சமைக்கப்பட்டுப் பார்ப்பாரால் உண்ணப்பட்டன. இவைகளை உண்டதனால் அதிகத் தீமை உண்டாகவில்லை. அதிக இடக்கரான கிரியைகளைச் செய்யும்படி அரச பத்தினிகளைத் தூண்டினர். புத்திரகாமேஷ்டி யாகங்கள் என்பவை யாவை? அஸ்வமேதயாகம், புருடமேத யாகங்கள் மிக இடக்கரானவை. கொல்லப் பட்ட குதிரையோடும், மனிதனோடும் அரச பத்தினிகள் சேர்ந்தார்கள்; சேர உடன்பட்டார்கள்! இவ்வாறு செய்யும்படிப் பார்ப்பார் கட்டளையிட்டார்கள். அவ்வாறு செய்வதற்கு மந்திரங்களும், கிரியைகளும் எழுதி வைத்தார்கள் என்றால் மனிதனின் தோள்மீது ஏறிச் சவாரி செய்த இவர்களைப்போல வேறு எவரையும் காண்டல் அரிது. (Indian Historical Review, Vol 16-1940-p.86.) “இப்பொழுது அரசனின் முதல் தேவி, பிரகஸ்பதி எனக் கருதப்படும் யாகத்தில் கொல்லப்பட்ட குதிரை யின் அண்மையிற் சென்று அதன் விதையைப் பெறுவதற்கு ஆவல் அடை கிறாள். பின்பு அவள் குதிரையின் பக்கத்தே படுக்கிறாள். மந்திரங்கள் சொல்லப்படும்போது அவள் குதிரையைச் சேருவதற்குப் பலவாறு முயல்கின் றாள். இடக்கான இந்நிகழ்ச்சி நடைபெறும்போது அத்வாரு என்னும் வேள்வி புரியும் தலைமைப் பார்ப்பான் குதிரையையும், அரசபத்தினியையும் போர்வை யால் மூடிவிடுகிறான். இடக்கரான அச்செயலைப் புரிவதற்கு அவள் மூன்று முறை மறுக்கிறாள். மூன்று முறை மற்றவர்கள் அவளுக்குச் சமாதானஞ் சொல்லி அவளை இணங்க வைக்கிறார்கள். எல்லா வகையான மோசமான, ஒழுக்கக்கேடான செயலும், பேச்சும் ஒருமித்து நிகழ்கின்றன. இவையெல் லாம் கருத்தரிக்கும் பொருட்டு ஆணும்,பெண்ணும் சேர்வது தொடர்பான கிரியைகளும், மந்திரங்களுமாகும். பார்ப்பார், அரசி, தோழிகளுக்கிடையில் இடக்கரான சல்லாபம் நடைபெறுகிறது. இச்சல்லாபத்தின் இறுதியில் அரசி யின் தோழிகளாலேயே அவள் இடக்கரான செயலுக்கு உடன்படுத்தப்படு கின்றாள். புருடமேத யாகத்திலும் அரசி கொல்லப்பட்ட ஆடவனுடன் படுக் கிறாள். இது அவள் அசுவமேத யாகத்தில் செய்துகொள்வது போன்ற செய லாகும். இருவரையும் போர்வையால் மூடியபின் அரசி இடக்கரான செயலைப் புரியும்படி விடப்படுகின்றாள். அசுவமேத யாகத்தில் நடந்தது போன்ற சல்லாபம் இப்பொழுது நடைபெறுகின்றது. இச்செயல் முடிந்ததும் ஹோதாவும் மற்றவர்களும் அவளைத் தூக்கி நிறுத்திவிடுகின்றார்கள்.” இவ்வகையான கிரியைகளைச் சொல்லும் நூல்கள் மிகப் புனித முடையனவென ஒரு கூட்டத்தார் சொல்ல, அதனை உண்மையெனப் பொது மக்கள் நம்புவார்களானால் அவர்களின் அறியாமை எவ்வளவு உச்சநிலை யில் இருந்திருக்கின்றதென்பதை நாம் உய்த்தறியலாகும். சில குறிப்புகள் கிறித்து காலத்தவரான ‘ஸ்ராபோ’ (Strado) என்னும் பூமி சரித்திர ஆசிரியர் கூறியிருப்பது வருமாறு:- கொரிந்துக்குச் செல்லும் எல்லா மனிதரும் பயன் அடைவதில்லை; பட்டினத்தின் ஒவ்வொரு ஒடுங்கிய வீதியிலும் காதல் வேட்கை நிறைந்த பெண் பூசாரிகள் நெருங்கியிருந்தார்கள். வீதிகளின் இரண்டு பக்கங்களிலும் வியபிசார விடுதிகள் இருந்தன. வீனஸ் கோயிலில் ஆயிரம் “கோயில் பெண்கள்” இருந்தார்கள். இவர்கள் கப்பற்காரன் முதல் ஞானிக்கும், வணிகருக்கும், எழுத்தாளருக்கும் தங்கள் போகத்தை அளிக்க, எப்பொழு தும் ஆயத்தமாய் இருந்தார்கள்.’ (The life and faith - Rom Landau p.215) கொல்லத்தில் பாதி எருதும் பாதி மனிதனுமாகிய வடிவுடைய ஒரு தெய்வத்தையும் மக்கள் வணங்குகிறார்கள். அக்கடவுள் தனது விருப்பத்தை வாயினால் தெரிவிக்கிறது. சில சமயங்களில் அது நாற்பது கன்னிப் பெண்களின் இரத்தத்தைக் கேட்கின்றது. சில காணிக்கைகள் கொடுக்கச் சிலர் நேர்வதுபோல அங்குப் பெற்றோர் தமது சிறுவரையும், சிறுமியரையும் தெய்வத்துக்கு நேர்ந்துவிடுகிறார்கள். (Friar Oddoric 1321 A.D.). இவ்வாறு இந்தியாவை 14-ஆம் நூற்றாண்டில் (Footprint of the Past p.85 J.M. Wheeler) தரிசித்த பிரயர் ஓதோக் என்பவன் கூறியுள்ளான். சோமநாதத்தில் தேர்விழாவுக்கு மிகப்பலர் வந்து கூடுகிறார்கள். பலர் தமது கழுத்தை உருண்டுவரும் தேர்ச் சக்கரத்தின்கீழ் கொடுத்து மடிகின்றனர். எந்த ஆண்டிலாவது ஐந்தாறு பேருக்கும் குறைவானவர்கள் மடிவதில்லை. யூதருடைய ஆலயங்களில் பரிசுத்த வியபிசாரங்கள் நடந்தன. எரதோதசு, ஸ்ராபோ, லூசியன் என்போர் இவ்வழக்கம் பாபிலோனிலும் சிரியாவிலும் இருந்தமையைக் குறிப்பிட்டுள்ளார்கள். பார்ப்பான் என்போன் வியப்புக்களை உண்டாக்கக்கூடிய மந்திர வித்தைக்காரன். தெய்வத்துக்கு மனிதப் பலிவேண்டுமென அவன் கூறினால் அவ்வாறே செய்யப்பட்டது. (Outline of knowledge VolI p. 181 - Fredrick H. Martain) மூன்று கண்டங்களிலும் ஞாயிற்றுக்கடவுளின் பலி பீடங்களில் இரத்த வெள்ளம் ஆறாக ஓடிற்று. பார்ப்பானாகிய தெய்வம் கட்டளையிட்டபோது ஆடவர், மகளிர், குழந்தைகளின் கழுத்துகள் பலியிடும் கத்தியின்கீழ்ச் சென்றன. இருண்ட உள்ளமுடைய பார்ப்பான் தான் சரியான கருமத்தைச் செய்ததாக நினைத்தான்! (lbid-p. 182) கிழக்குத் தேசங்களில் பரத்தைத் தொழில் உடையவள் கோயில் பரத்தையாயிருந்தாலன்றி மதிப்பு அடையவில்லை. அவள் தனது தொழிலைச் சமய சம்பந்தமாகப் பயன்படுத்தினாள். எகிப்து, அசீரியா, பாபி லோனியா, பாரசீகம் முதலிய நாடுகளில் கோயில்கள் ஒழுக்கக் கேடுகளின் நிலையங்களாகவிருந்தன. ஆலயங்களில் ஆண் - பெண் சேர்க்கை புரிவது சமயக் கடமையாகக் கருதப்பட்டது. கிரீசில் இது சமய சம்பந்தத்திலும் பார்க்கப் பொருளீட்டும் தொழிலாகக் கருதப்பட்டது. கொரிந்தில் அபிரடோயிற் கோயிலில் கப்பற்காரனின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மிகுதியான விலைமாதர் இருந்தனர். சின்ன ஆசியாவிலுள்ள கிரேக்க நகரங்களில் கோயில் விலை மாதர் இருந்தனர். கிரீசில் அவர்கள் கீழாக மதிக்கப்பட்டனர். கிரேக்கில் விலை மாதர் அமைப்பு அரசாங்கத்துக்கு மாத்திரம் தனி உரிமையுடையதாயிருந்தது. அவ்வமைப்பினால் வரும் பொருள் தீட்டுப்பணம் எனப்பட்டது. ‘மிலிறஸ்’ என்னும் பட்டினம் விலை மாதருக்குப் பேர் போனது. (lbid. p. 27) பார்ப்பாரின் கொடுமையை ஒழிப்பதற்கே புத்த மதம் எழுந்தது. பார்ப்பாராகிய பிராமணர் பிற்காலத்தில் மிக அகங்காரங் கொண்டிருந்தார்கள். கல்வி, இம்மனித தெய்வங்களிடமிருந்தது; மற்ற மூன்று சாதியினரும் மூடத்தனத்தில் இருப்பதே இவர்கள் வலிமையாகவிருந்தது. (Literary achievement of Indian women- Mrs. Hansa Metha - B.A.J.P.) “பிராமணச் சட்டங்கள் பிராமண, சத்திரிய சாதிகளை அமைப்பதில் வெற்றியடைந்தன. வேத பாடங்களைச் செய்தவர்களுடைய சந்ததியினரும் அவர்களின் உறவினரும் பிராமணர் என்னும் சாதியாராயினர். பிராமணன் பிராம்மாவின் மிகவும் உயர்ந்த பகுதியினின்று பிறந்தமையாலும், அவனிடத் தில் வேதம் இருப்பதாலும், அவன் உலகப் படைப்புக்கள் எல்லாவற்றுக்கும் தலைவனாக இருக்கின்றான் என மனு கூறுகின்றார். இப்பொழுது வட இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட சமயத் தலைவன் இல்லை. சாத்திரங்களில் சொல்லப்பட்ட முக்கியமான விதிகளை ஒருவன் மீறினால் அவனுக்கு என்ன தண்டனை செய்யலாம் என்று பண்டிதர்களுடன் ஆலோசனை செய்யப்படுகின்றது. அவர்கள் தண்டனை விதிப்பதற்கு அவ்வளவு அதிகாரமுடையவர்களல்லர். அவர்கள் விரும்பினால் குற்றஞ் செய்தவன் கொடுக்கும் காரணங்களை ஏற்காமலும், அவன் வீட்டில் நடக்கும் கிரியைகளுக்குப் போகாமலும் விடலாம். தென்னிந்திய வைணவரல்லாத பிராமணர் சங்கராச்சாரியார் மடத்தின் அதிகாரத்துக்குட்பட்டவர்கள். இதன் தலைமையாயுள்ள சிருங்ககிரிமடம் மைசூரிலுள்ள துங்கபத்திராவில் உள்ளது. இம்மடத்தலைவர், ஐரோப்பியாவி லுள்ள கத்தோலிக்க மதத்தினருக்குப் போப்பாண்டவர் எவ்வாறு அதிகாரத் தோடு இருக்கின்றாரோ, அவ்வாறு இருக்கின்றார். பிராமணனல்லாத இன்னொருவனுக்குப் பிராமணன் குனிந்து வணக்கஞ் செய்யமாட்டான். மற்ற வகுப்பிலுள்ள இன்னொருவன் வணக்கஞ் செய்தால் பிராமணன் “வெற்றி உனக்காகுக” என்று மாத்திரம் சொல்லுவான். வணக்கஞ் செய்தவன் அரசன் அல்லது பிரபுவானால் அவன் தனது வலது கையை நேராக நீட்டித் தனது மகிழ்ச்சியைத் தெரிவிப்பான். மற்ற வகுப்பினர் தமது மரியாதையைப் பிராமணருக்குப் பலவாறு தெரிவிக்கின்றனர். சிலர் அவன் பாதத்தில் விழுந்து வணங்குகின்றனர். பின்பு அவர்கள் அவன் பாதங் களைக் கைகளால் தொட்டு விரல்களைத் தமது வாயிலும், நெற்றியிலும் ஒற்றிக் கொள்கின்றனர். சூத்திர வகுப்பினர் பிராமணனுடைய நிழலைத் தாண்டவும் மாட்டார்கள். இவர்கள் பிராமணனின் பெருவிரல் வைத்துக் கழுவப்பட்ட நீரைக் குடியாமல் காலையில் உண்ணமாட்டார்கள். பிராமண னல்லாதார் வீட்டில் வைத்துப் பிராமணக் குருமாரால் வழிபடும் கடவுளரை அவர்கள் கும்பிடமாட்டார்கள். சில காலங்களில் அவ்வாச்சாரியினரும் பிராமணர் எல்லோருக்கும் விருந்தும் தானங்களும் கொடுக்கவேண்டுமென்று அவர்களின் சாத்திரங்கள் மாத்திரம் பிராமணன் உணவையும், தானத்தையும் தடையில்லாமல் ஏற்கலாம். அவன் சூத்திரனிடத்தில் தானம் வாங்கினாலும், அவன் சமைத்த உணவை உண்டாலும் அவன் பிராமணத் தன்மையை இழந்துவிடுகின்றான். சூத்திரனுடைய வீட்டில் பிராமணன் சமைக்கப்படாத உணவை அல்லது பிராமணனால் சமைக்கப்பட்ட உணவை உண்ணலாம். இக்காரணங்களால் பிராமணனிடத்தில் தானம் பெறுகின்றவன் தானம் கொடுக்கின்றவனுக்குப் பெரிய கடமைப்பாடு செய்கின்றவனாகக் கருதப்படுகின்றான். பிராமணன் சூத்திரன் ஒருவனைத் தான் உண்டு மிஞ்சிய எச்சிலாகிய பிரசாதத்தை உண்ணும்படி அழைப்பான். சிலர் இலையிலுள்ளதைச் சிறிது கிள்ளி எடுத்து உண்பர். சிலர் இலையில் உள்ள உண்ட மிச்சத்தை உண்பர். சூத்திரன் பிராமணனுக்குத் திருமுகம் எழுதவேண்டுமானால் தான் அவனுடைய பாத தாமரைகளுக்குக் கோடி வணக்கம் செய்வதாகத் தொடங்கி எழுதவேண்டும். பிராமணன் மற்றவர்களுக்கு எழுதவேண்டு மாயின் அவனுக்கு இனிமேல் பல நன்மைகள் கிடைக்கத் தான் ஆசீர்வதிப்ப தாகத் தொடங்கி எழுதுவான். அவர்கள் தமது பெண்களுடைய பெயரின் இறுதியில் தேவி என்பதைச் சேர்த்து வழங்குவர்; சூத்திரப் பெண்களுக்கு அவர்கள் தாசி என்னும் பெயரை இறுதியில் இட்டு வழங்குவர். பிராமண பண்டிதர்களுக்கு ஒரு காலத்தில் மதிப்பிருந்தது. இந்து அரசர் காலத்தில் ஆட்சி அவர்கள் கையிலேயே இருந்ததென மக்கள் நம்பி னார்கள். ஆங்கிலர் ஆட்சியில் அவர் பெயரே காணப்படவில்லை. கல்வி யில்லாத மக்களிடையே அவர்களின் செல்வாக்கு இன்றும் இருந்து வரு கின்றது. அவர்களுடைய தொழிலின் மதிப்புப் போய்விட்டது. மேலான ஆங்கிலக் கல்வியின் வளர்ச்சியினால் அக்கூட்டத்தினரின் செல்வாக்கும் குறைந்து வருகிறது. இந்துக்களின் கருத்துப்படிப் பூசாரித் தொழில் தாழ்வுடையது. வாழ்க்கைக்கு வேறு வழியில்லாதவன் இத்தொழிலைப் புரியலாம். பூசாரித் தொழில் புரிபவர்கள் பெரும்பாலும் அறியாமையுடையவர்கள். அவர்கள் தமது கடமைக்கு வேண்டிய சில கிரியைகளை மாத்திரம் அறிந்தவர்களாவர். குரு அல்லது ஆச்சாரியர் என்னும் பெயர்கள் தொடக்கத்தில் வேதங் களைப் படிப்பிக்கின்றவனைக் குறிக்க வழங்கின. வேதங்களைப் படியாதவர் களையும் இப்பெயர்கள் குறிக்கும்படிப் பிராமணர் ஒரு சூழ்ச்சி செய்தனர். வேதங்களைப் பெண்களும் சூத்திரரும் படித்தல் ஆகாது. இருந்த வரையில் படிக்கக் கூடிய சில சொற்களை அவர்கள் மந்திரங்கள் எனக் கூறினர். மந்திரங் களைச் சூத்திரரும் பெண்களும் பயிலலாம். சிறிது கடவுள் பத்தியும், கெட்டித் தனமுமுள்ள பிராமணனைச் சுற்றிப் பல மாணாக்கர் சேர்ந்தார்கள். அவர்கள் பிராமணனைத் தெய்வமெனக் கொண்டு அவனை வணங்கி அவனுக்குப் பொருள் கொடுத்ததல்லாமல் அவனுடைய சந்ததியினருக்கும் ஆண்டு தோறும் வரி கொடுத்து வந்தனர். குரு மாணாக்கரைத் தமது சொத்துக்களாகக் கருதினார். குருவின் பிள்ளைகள் இச்சொத்துக்களைத் தமக்கிடையே பங்கு போட்டுக் கொண்டார்கள். இம்மந்திரங்கள் ஊங், றீங், கிலீங் போல்வன.குரு இம்மந்திரங்களை மாணாக்கரின் காதில் உபதேசித்து இவைகளால் அதிகம் நன்மை உண்டாகும் எனக் கூறினார். அவைகளின் தன்மைகளை அவர் யாருக்கும் சொல்லவில்லை. ஆகவே, இச்செயல் வெளியே கண்டிக்கத்தக்க நிலைக்கு வரவில்லை. குரு இவைமிகவும் இரகசியமாக இருக்கவேண்டுமென வற்புறுத்தினார். வைணவர் இம்மந்திரங்களுக்குப் பதில் அரி என்னும் பேரைச் சொன்னால் போதுமானதென்றனர். மந்திரங்களுக்குப் பதில் கடவுளின் பெயரைக் குறிப்பிட்ட தடவை சொன்னால் அவனுக்குக் குரு தேவையில்லை எனவும் நம்பினர்! நம்பூதிரிப் பிராமணனை நாயர் தொடுதல் கூடாது. தீயன், நம்பூதிரிக்கு முப்பத்தாறு அடி தூரத்தில் நிற்றல்வேண்டும்; மாலன் நாற்பது அடி தூரத்தி லும், புலையன் 96 அடி தூரத்திலும் நிற்கவேண்டும். பிராமணனைப் புலை யன் தீண்டினால் அவன் உடனே முழுகித் தனது உடையை மாற்றிக் கொள்ள வேண்டும். குரு அல்லது பூசாரித் தொழிலினால் அதிக மரியாதை, அதிகாரம், செல்வம் முதலியன உண்டாகும் என்று கருதப்படுகின்றது. குருமார் தொடக் கத்தில் தம்மை மக்கள் மரியாதை செய்ய வேண்டுமென விரும்புகின்றார்கள். பின்பு அவர்கள் பொருளில் வாஞ்சையுடையர்களாகின்றனர். அவர்களின் அதிகாரம் வேரூன்றியதும் அரசனுக்கும் இல்லாத உல்லாச வாழ்க்கையை விரும்புகின்றனர். அரசர் தமது குடிகளின் வருவாயில் ஒரு பகுதியைப் பெற்று நிறைவடைவர். குருமாரோ தம்மிடம் அகப்பட்டவர்களை அழிப் பதால் பொருள் கிடைக்குமெனக் கண்டால் அதனைச் செய்துவிடுவார்கள். நியாயவாதிகளுக்காவது (வக்கீல்) கூலியின் அளவு உண்டு. குருமார் கேட்பதற்கு அளவு இல்லை. தம்மை அண்டியவர்களைச் செல்வராக்கும் வல்லமை தம்மிடம் உண்டென அவர்கள் கூறுவார்கள். ஆனால், அவர்கள் மற்றவரை வறுமை அடையச் செய்வதே முடிவு. குரு, தனது கிரியைகளும், மந்திரங்களும் பயனளிக்கவில்லையானால், குற்றத்தைத் தீய கிரகத்தின் மீதும், கிரியை புரிவித்தவனின் நம்பிக்கைக் குறையின்மீதும் சுமத்துவர். குருட்டுத்தனமாகப் பெரிய கூட்டம் தம்மைப் பின் தொடர்கின்றது என்று கண்டதும் அவர்கள் தமது எல்லாத் தந்திரங்களையும் பயன்படுத்துவர். ஒருவன் காய்ச்சல் நோய் கொண்டானாயின், அவன் குயினாமருந்தில் வைக்கும் நம்பிக்கையிலும் பார்க்க, குருமாரின் மந்திரங்களில் நம்பிக்கை மிகுதியாக வைக்கிறான். இடியின் கோபம் தாக்காதபடி ஒவ்வொரு இந்தியனும் வீட்டுக் கதவின் முன்புறத்தில் சமக்கிருத வசனங்கள் எழுதிய அட்டையை ஒட்டியிருந்த காலம் ஒன்று இருந்தது. மின்சாரம் சம்பந்தமான இக்காலக் கல்வி, இடியைத் தடுக்கும் ஐந்து கடவுளரை நம்புவதிலும் பார்க்க மின்கவரும் கம்பியை நம்பும்படிச் செய்துள்ளது. மரக் கலங்களுக்கு உடைவு அல்லது தீயினால் அபாயம் உண்டாகாமல் இருக்கும் பொருட்டு இன்றும் இந்திய வணிகர் பலர் பிரமா, கங்கை, வல்லபாச்சாரி முதலிய தெய்வங் களுக்குப் பெரும் பொருட்செலவு செய்து பூசை இடுகின்றனர். இன்று நெருப்பினால் அபாயமுண்டாகாமல் இருப்பதற்குச் செங்கற்களால் வீடுகள் கட்டப்படுகின்றன; கப்பல் உடைவுகளால் நேரும் நட்டத்துக்கு மக்கள் பிரமபூசை, கங்கா பூசைகளிலும் பார்க்க “இன்சூரன்ஸ் கம்பெனிகளை” நம்பி வருகின்றனர். காலம் தோறும் குருமாரின் வேலைகள் சுருங்கி வருகின்றன. குருமாரின் ஆட்சி, சக்கரவர்த்திகளின் ஆட்சிபோல அமைக்கப்பட்டிருந்த தென்பதை நாம் சரித்திர முகமாக அறிகின்றோம். அரசனுடைய ஆணைக்குக் கீழ் உள்ள மக்கள் அவனுடைய ஆசீர்வாதத்தை விரும்பினார்கள். அவ் வாறே சமய ஆட்சிக்குட்பட்ட மக்கள் சமய குருவின் ஆசீர்வாதத்தை விரும் பினார்கள். வேட்டையாடியும் மீன் பிடித்தும் வாழுகின்ற நாகரிகமற்ற மனிதனை இரக்கமில்லாத குணங்களினால்தான் குரு அடைய முடியும். அநாகரிக மனித னுக்குச் செல்வத்தைச் சேர்த்து வைப்பதில் விருப்பு இல்லை; அவனுக்கு மறுமையிலுண்டாகும் சுகதுக்கங்களைக் கூறுவதினாலும் பயனில்லை. நோய்களும், மரணங்களும் இரத்த விருப்புள்ள மூர்க்கமான தெய்வங்களால் உண்டாகின்றனவென்றும் ஆடு, பன்றி, மாடு, எருமை முதலியவைகளைப் பலியிடுவதனால் அவைகளின் கோபம் தணியும் என்றும் கூறுவதே குருமார் போதிப்பதற்கு ஏற்ற பாடமாகும். இதனால் பூத வணக்கங்களும் மிருக பலிகளும் தோன்றின. பின்பு மக்கள் பயிரிடுவோராக மாறினர். இப்பொழுது உடம்பு உழன்று உழைப்பதில் சோம்பல் கொண்டோரும், பிறர் தொழிலில் தங்கி வாழ்பவர் களுமாகிய இக்கூட்டத்தினர், மழை ஒரு தெய்வத்தினால் உண்டாகின்றது எனக் கூறினர். இந்நம்பிக்கை வலுவடைந்தவுடன் குருமார் இவ்வழிபாட்டுக்கு ஒரு அட்டவணை கோலினார்கள். இது நெருப்பை வளர்த்து அதில் வெண்ணெயை ஊற்றிச் சாம்பிராணி எரித்தல் ஆகும். குருமாரினால் பயிரிடும் மக்கள் அடைந்த பெரிய பலன் இதுவாகும். குருமாரின் சடங்குகளால் வீணே பண்டங்கள் செலவாயின. இது தடுக்க முடியாமல் எப்பொழுதும் வளர்ந்தது. முற்காலக் குரு, பயிரிடுவோருக்கு மழையையும், நோயுள்ளோர்க்குத் தேக நலத்தையும், பிள்ளையில்லாத பெண்களுக்குப் பிள்ளையையும் இவை போன்ற பலவற்றையும் கொடுப்பதாகக் கூறவேண்டியிருந்தது. அவர்களுக்கு மோட்சம், வீடு என்பவைகளைப்பற்றித் தெரியாது. இயற்கையில் மழை பெய்ய வேண்டிய காலத்தில் மழை பெய்யும்; நோயானது மருந்தினால் அல்லது இயற்கையினால் குணமடையும்; மலடியும் இயற்கை சம்பந்தமாகப் பிள்ளையைப் பெறுவாள். இவை நிகழ்ந்தால் குரு இவைகள் தன்னால் நேர்ந்தனவென்று கூறக் கற்றுக்கொண்டான். இவை நிகழவில்லையாயின் அவன் கிரகங்கள்மீதும் அவர்களின் நம்பிக்கை இன்மை மீதும் பழியைப் போட்டான். மக்களை எவ்வளவுக்கு ஏமாற்றலாம் எனக் குரு அறிகிறானோ அவ்வளவுக்கு அவன் அதிக தெய்வங்களை உண்டாக்குகிறான். மக்களின் நம்பிக்கையைப் பெறும் பொருட்டு மிகவும் சிக்கலானவும், கவர்ச்சி அளிப்பனவுமாகிய கிரியைகளை வகுக்கின்றான். இக்கிரியைகளால் தெய்வங்கள், இறந்தவரின் ஆவிகள், ஆறுகள், வெந்நீர் ஊற்றுக்கள், மரங்கள், பறவைகள், விலங்குகள், பாம்புகள் எல்லாம் இக்கிரியைகளுக்கு அடங்கி நடக்கும். இப்பொழுது பக்தன் நெய், இறைச்சி, ஆடு, மது முதலியவைகள் மாத்திரல்ல குருவின் வேலைகளுக்குத் தக்க கூலியும் கொடுக்கும்படிக் கேட்கப்பட்டான். சில நாடுகளில் குருமார் தமது சக்கராதிபத்தியத்தை நீண்ட காலம் நடத்தி வந்தார்கள்; வருகின்றார்கள். அவர்களை எப்பொழுதும் சமாதானமாக ஆட்சி நடத்த விடுவது முடியாது. அதிகாரம் அளவு கடந்துவிட்டால் அதன் தீய பயன்பாட்டைத் தடுத்தல் அரிது என நாம் பழக்கத்தில் காண்கிறோம். இது குருமார் சம்பந்தப்பட்ட அளவில் ஒரு புற நடை ஆகமாட்டாது. தீ வணக்கத்திலும் பார்க்க உருவ வணக்கம் குருமாருக்கு மிக வாய்ப்பு அளிப்பது. உருவ வணக்கத்தினால் கோயில்களுக்கு அரசாங்கத்துக்கு இருப் பதிலும் பார்க்க அதிகப்பட்ட சொத்துச் சேரும்; கோயில்களின் ஆதரவில் மடங்களும் தோன்றும். பொதுமக்கள் கொடுக்கும் சிறு தருமங்களையும் கோயில்கள் இழுத்துக் கொள்ளும். உலக மக்களைப் போலவே குருமார் மனித சமூகத்தினருக்கு நன்மை செய்தலுக்குப் பதில் தம்மைச் செழுமைப்படுத்த ஆவல் கொண்டவர்களா யிருப்பர். மக்களின் ஒழுக்கத்தை வளர்ப்பதற்கு அவர்கள் முயலுவதில்லை. சில சமயங்களில் அவர்களே ஒழுக்கக் கேடுகளை வளர்ப்பர். இது சில சமயங் களில் அவர்களின் காம இச்சையைத் தணிக்கும் வகையில் இருக்கலாம். அல்லது தம்மைப் பின்பற்றுவோரைத் திரட்டும் வகையில் ஆகலாம். அவர்கள் மறுமையில் நன்மையளிப்பதாகக் கூறுவர். மக்களின் இருண்ட துன்ப நிலையில் அவர்கள் ஒரு நம்பிக்கைஒளி தானும் அளிப்பதில்லை. சுருங்கக் கூறுமிடத்து அவர்கள் கொடுமையிலேயே மகிழ்ச்சி உறுகின்றனர்; நமது துன்பத்தைப் போக்குவதற்குப் பதில் துன்பங்களை அதிகப்படுத்து கின்றனர். இவர்களுடைய சமயத்துக்கும், கடவுளை அறிவதற்கும் யாதும் தொடர்புகிடையாது. நாகரிகமடைந்த உலகுக்குத் தகுதியான ஒழுக்க முறை களில் உயர்ந்த சமயம் உலகில் ஒன்றாவது இல்லையென்றே கூறலாம். மற்றவர்களைச் சமூகத்தால் தள்ளும்படிக் குருமாரின் நீதியில் சொல்லும் குற்றச்சாட்டுக்கள் அத்தனையும் அவர்களிடத்திலேயே காணப்படுகின்றன. ஒருவன் சமூகத்திலிருந்து விலக்கப்பட்டால், மரியாதையின்றியும், துக்கங் கொண்டாடப்படாமலும், இறந்தவிடம் தெரியாமலும் மறைந்து விடவேண்டும். உலக சரித்திர முழுமையிலும் இரத்தவெறி கொண்டு நீதிகளை அழிவு செய்த ஒருவனைக் குருமார் சமூகத்தினின்றும் விலக்கியதாகத் தெரியவில்லை. குருத்தொழிலைத் தாக்கக்கூடிய செயல்கள் உண்டானபோது மாத்திரம் குருமார் விழிப்படைந்து இவ்வாறு செய்துள்ளார்கள். பிற்காலத்தில் இந்திய சமய போதகர்கள் பிச்சை எடுத்து மக்கள் தமது ஒழுக்கத்தைத் தாழ்த்திக் கொள்ள அனுமதி அளித்தார்கள். இதனால், திட காந்திரமுள்ளவர்கள் தமது வாழ்க்கைக் கடமைகளை உதறிவிட்டுப் பொதுமக்களின் தருமத்தில் வாழ்கின்றனர். இவர்கள் திருடர், கொலையாளி களைப் போன்று அளவிடக் கூடிய கூட்டத்தவர்களல்லர். இத்தொழில் தலைமுறை தலைமுறையாக அதிகப்பட்டு வருகின்றது. பாக்கர் குஞ்சி என்னும் நாட்டைப் பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஆண்ட சிற்றரசனின் வீட்டுக் கூரையில் பருந்து ஒன்று விழுந்து இறந்தது. அதனால் நேர்ந்த தீமையைப் போக்குவதற்கும் கன்னோஜியிலிருந்து வைதீகப் பிராமணர் ஒருவர் அழைக்கப்பட்டார். பெருந்தொகைப் பொருட் செலவில் கிரியை செய்யப்பட்டது. வைதீகர் தமது கூலியாக ஒரு ஜமீனைப் பெற்றார். அது இன்றும் அவர்களின் சந்ததியாரிடம் இருந்து வருகிறது.  இராமாயணம் நடந்த கதையா? முன்னுரை இராமாயணத்தைப்பற்றிய ஆராய்ச்சி மிகச் சிக்கலானது. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை காலம் முதல் இராமாயணத்தைப்பற்றிய பற்பல ஆராய்ச்சிகள் வெளிவந்துள்ளன. சில சமயங்களில் உண்மை வரலாறுகள் மறைந்துபோகின்றன; உண்மையல்லாத வரலாறுகள் வழங்குகின்றன. சீதையின் தந்தை எனப்படுகின்ற சனகன் பாரத காலத்துக்குப் பின் இருந்த வன். இராமாயண நிகழ்ச்சி பாரத நிகழ்ச்சிக்கு முன் நடந்ததெனச் சொல்லப் படுகின்றது. இக் கருத்து ஏற்றுக்கொள்ளத் தக்கதாயில்லாமையால் எஸ். கிருஷ்ணசாமி ஐயங்காரவர்கள் இராமாயண நிகழ்ச்சி பாரத நிகழ்ச்சிக்குப் பிற்பட்டதெனக் கூறுவாராயினர். இராமாயணம் ஆராய்ச்சியாளருக்கே பெரிய திகைப்பை உண்டாக்குகின்றது. அதுபற்றியே இராமாயணம் நடந்த கதையா என நாம் ஆராய்ந்து முடிவுகட்ட வேண்டியிருக்கிறது. ந. சி. கந்தையா இராமாயணம் நடந்த கதையா? தோற்றுவாய் இராமாயணம் நடந்த கதையா - என்னும் கேள்வி பலருக்கு வியப்புத் தரலாம். நாம் நெடு நாட்களாக நம்பிவந்த புராணக்கதைகள் பல கற்பனைக் கதைகளே என்று அறிகின்றோம். இராமாயணம் உண்மையில் நிகழ்ந்த கதை எனப் பலர் நம்பிவருகின்றனர். பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, பண்டிதர் சவரி ராயபிள்ளை, ஆர். சி. தத்தர் போன்ற ஆராய்ச்சியாளர் இவ்வரலாறு நீண்ட கற்பனைகளுள் மறைந்து கிடக்கும் ஒரு சிறு நிகழ்ச்சியென்றோ முற்றும் கற்பனை என்றோ கருதினார்கள். ஆராய்ச்சி அறிஞர் தமது நுண்ணிய மதி கொண்டு ஆய்ந்து வெளியிடும் ஆய்வுரைகள் பெரும்பாலும் பொது மக்களுக்கும் பிறருக்கும் கிடைப்பதில்லை. ஆராய்ச்சியாளர் தக்க காரண மின்றி உண்மையைத்திரித்துக் கூறமாட்டார்கள். அவர்கள் கூறியுள்ளவை களை எல்லாம் இச்சிறிய நூலில் திரட்டித் தருகின்றோம். வால்மீகி இராமாயணம் வால்மீகர் இராமாயணத்தை வடமொழியிற் செய்தார். இன்று வடமொழியிற் காணப்படும் இராமாயணம் வால்மீகியாற் செய்யப்பட்டதன்று என்பது ஆராய்ச்சி அறிஞர் கருத்து. முன் இருந்த இராமாயணம் பல கூட்டல், கழித்தல், திருத்தல்களோடு புதிதாக அமைக்கப்பட்டிருக்கின்றதென்பதை எவரும் ஒப்புக்கொள்ளாமல் இருக்கமுடியாதென வைத்தியா கூறியுள்ளார்.1 அவர் மேலும் கூறுவது, “பழைய இராமாயணமாகிய கருவைச்சுற்றி மிகப் பெரிய புதிய கற்பனைகள் திரண்டுள்ளனவென்பதை எளிதில் அறிந்து கொள்ளலாம். இது இந்திய வரலாற்றின் பழங்காலத்தைச் சேர்ந்தது. அக் காலத்தில் வேள்வியே ஆரியரின் சிறந்த வணக்கமாக விருந்தது. அப் பொழுது புத்த மதம் தோன்றவில்லை. அக்காலத்தில் விக்கிரக வணக்கமும் எழவில்லை. பிராமணரும் சத்தியரும் அக்காலத்தில் தாராளமாக ஊன் உண்டார்கள். பெண்கள் வேதங்களைப் பயின்று வேதக்கிரியைகளைச் செய் தார்கள். அக்காலத்தில் சத்திரியர் பிராமணரோடு கல்வியில் போட்டி யிட்டனர்; பிராமணர் சத்திரியரோடு வில்வித்தையில் போட்டியிட்டனர். இலக்குமணன் புதிதாக அமைத்த குடிசையில் பலி செலுத்துதற்கு இராமன் வேட்டையாடிக் கொண்டு வந்த மானை இலக்குமணன் முழுதாக நெருப்பில் வாட்டுகிறான். தாவர உணவையே கொள்ளும் எங்களுக்கு இது மிக வியப்பை அளிக்கலாம். “இராமருடைய காலத்தில் பெண்கள் பலியிட்டார்கள். கோசலை வேள்விக் குதிரையை வாளினால் மூன்று வெட்டில் வெட்டிக் கொன்றாள்.” ஆரியர் இந்திய நாட்டை கி. மு. 2000 வரையில் அடைந்தார்கள் என்று சிலரும், கி. மு. 1500 வரையில் என்று சிலரும் கூறுகின்றனர். கி. மு. 1000-க்கு முன் ஆரியர் விந்திய மலைக்குக் கீழ் வரவில்லை என்பதும், அவர்கள் விந்தியத்துக்குத் தெற்கிலுள்ள நாடுகளைப்பற்றி அறியாரென்பதும் வரலாற்றாசிரியர்கள் கொண்டுள்ள முடிவுகளாகும். கி. மு. 1000 வரையில் இராமாயணக் கதை வழங்கியிருக்குமானால் அது வடநாடு தொடர்பான கதையாயிருக்குமேயன்றித் தென்னாடு தொடர்பான கதையாயிருக்க முடியாது. இராமாயணத்தில் தென்னாடு சம்பந்தமாகக் கூறப்பட்டுள்ள நிகழ்ச்சிகளுக்குச் சமாதானம் காணமாட்டாத வடநாட்டு வரலாற்றாசிரியர்கள் இலங்கை என்பது இலங்கைத்தீவு அன்று; அது தண்டகாருணியத்தை அடுத்திருந்த ஓர் இடம் எனக் கூற ஆரம்பித் திருக்கின்றனர். தசரத சாதகம் கௌதம புத்தர் கி. மு. ஆறாம் நூற்றாண்டில் விளங்கினார். அவர் காலத்தோ அதற்குச் சிறிது பின்போ, புத்தரின் பழம் பிறப்புகளைக் கூறும் சாதகக் கதைகள் எழுந்தன. அக் கதைகளுள் ஒன்றாகிய தசரத சாதகத்தில் இராம கதை பின் வருமாறு கூறப்பட்டுள்ளது: முன்னொரு காலத்திலே வாரணவாசியில் தசரதன் என்னும் அரசன் வாழ்ந்தான். அவனுக்கு அறுபதினாயிரம் மனைவியர் இருந்தனர். அவர் களுள் பட்டத்துத்தேவி இரு குமாரரையும் ஒரு குமாரத்தியையும் பெற்றாள். மூத்த குமாரன் இராமன், இரண்டாம் குமாரன் இலக்குமணன்; புதல்வி சீதை, பின்பு அரசி இறந்து போனாள். அவள் இறந்துபோதலும் அரசன் இன் னொருத்தியை மணந்தான். அவன் அவளிடத்தில் மிக மயங்கியிருந்தான். அவள் வயிற்றில்ஒரு மகன் பிறந்தான். அவனுக்குப் பரதன் என்று பெயர். மகன்மீது கொண்ட பற்றினால் அரசன் பட்டத்துத்தேவியை ஒருவரம் கேட்கும் படி சொன்னான். அவள் தான் வேண்டும்போது வரத்தைக் கேட்டுக்கொள்வ தாகச் சொன்னாள். பரதனுக்கு எட்டு வயதாயிற்று அப்பொழுது அவள் அரசனிடம் சென்றாள். முன் கொடுப்பதாகச் சொன்ன வரத்தின்படி இராச் சியத்தை மகனுக்குக் கொடுக்கும்படி கேட்டாள். அரசன் கையை உதறி, “நாயே எனது அழகிய இரண்டு மக்களையும் கொன்றுவிட்டு இராச்சியத்தை உன் மகனுக்குக் கொடுக்கும்படி கேட்கிறாயா?” என்றான். அவள் அரசனின் கோபமான சொற்களைக்கேட்டுப் பேசாது அறையினுள் சென்றாள். அவள் தினமும் அரசனை அடைந்து நாட்டை மகனுக்குக் கொடுக்கும்படி கேட்டு வந்தாள். அவன், “பெண்கள் தீயவர்கள்; இவள் பொய்யான கடிதம் எழுதி அல்லது எவருக்காவது கைக்கூலி கொடுத்து என் புதல்வரைக் கொன்று விடுவாள்,” என்று தனக்குள்ளே நினைத்தான். அவன் தனது இரு புதல்வரை யும் அழைத்து, “நீங்கள் இங்கிருந்தால் உங்களுக்குப் பல துன்பங்கள் நேரும்; நீங்கள் அடுத்த இராச்சியத்துக்கு அல்லது காட்டுக்குச் செல்லுங்கள்; எனது மரணக்கிரியை நடக்கும்போது வந்து எனது இராச்சியத்தைக் கைப்பற்றிக் கொள்ளுங்கள்” என்று சொன்னான். அவன் சோதிடரை அழைத்தான்; தனக்கு இன்னும் எவ்வளவு கால வாழ்நாள் இருக்கின்றதென்று பார்க்கும்படி சொன்னான். அவர்கள் இன்னும் பன்னிரண்டு ஆண்டுகள் இருக்கின்றன என்று சொன்னார்கள். பன்னிரண்டு ஆண்டுகள் கழித்துவரும்படி அரசன் தனது இரு புதல்வருக்கும் சொன்னான். “நானும் எனது சகோதரர்களுடன் செல்லப் போகின்றேன்” என்று சீதை சொன்னாள். பலர் பின் தொடர மூவரும் நாட்டுக்கு வெளியே சென்றார்கள். அவர்கள் உடன் வந்தவர்களைப் போகும்படிச் செல்லிவிட்டு ஹமவந்தா என்னும் காட்டை அடைந்தார்கள்; அங்கே இலைகளால் வேய்ந்த குடிசை ஒன்றை அமைத்தார்கள். இராமனைக் குடிசையில் இருக்கும்படிச் சொல்லிவிட்டு இலக்குமணனும் சீதையும் பழங்கள் கொண்டுவர வெளியே சென்றார்கள். அன்று முதல் இராமன் குடிசையில் இருந்தான்; மற்ற இருவர் பழங்களைக் கொண்டுவந்தார்கள். இவர்கள் இவ்வாறு இருக்கும்போது தசரதன் மக்களைப் பிரிந்த கவலையினால் ஒன்பதாவது ஆண்டு மரணமானான். ஈமக்கிரியை முடிந்தது. “எனது குமாரனுக்கு முடிசூட்டுங்கள்” என்று அரசி மந்திரிமாரிடம் சொன் னாள். அவர்கள் அதற்கு இணங்க வில்லை. பரதன் இராமனைக் காட்டி னின்றும் அழைத்துவருவதாகச் சொல்லி நால்வகைச் சேனைகளோடும் புறப் பட்டான். அவன் சேனையைத் தூரத்தில் நிறுத்திவிட்டுச் சென்றான். அப் பொழுது இலக்குமணனும் சீதையும் பழம் பறிக்க வெளியே சென்றிருந்தார்கள் பரதன் இராமனைக் கண்டான்; அவன் பாதங்களில் விழுந்து வணங்கித் தன்தையின் மரணத்தைக் கூறினான். இராமன் கவலை கொள்ளவும் இல்லை, அழவும் இல்லை; பரதன் அழுதுகொண்டிருந்தான். அப்பொழுது மற்று இருவரும் பழங்கள் கொண்டுவந்தனர். தந்தையின் மரணத்தைக்கேட்டதும் அவர்கள் மயக்கமடைந்தார்கள். அறிவு தெளிந்தபின் அவர்கள் எல்லாரும் அழுதுகொண்டிருந்தார்கள்; இராமன் அழவில்லை. பரதன் இராமனை நோக்கி “நீர் அழாமல் உறுதியாக இருப்பதற்குக் காரணம் என்ன” என்று கேட்டான். “மனிதனால் ஆகாத ஒன்றிற்காகப் புலம்புவதால் பயனில்லை. பழுத்தபழம் எப்பொழுதாவது நிலத்தில் விழுந்துவிடும். பிறந்தவர் எல்லாரும் ஒரு நாளைக்கு இறந்துவிடுவர்” என்று இராமன் சொன்னான். இதைக் கேட்டு மற்றவர்கள் ஆறுதலைடைந்தார்கள். பரதன் வணங்கி வாரணவாசியை ஆளும்படி இராமனைக் கேட்டான். “இலக்குமணனையும் சீதையையும் அழைத்துச்சென்று நீயே ஆட்சி செய். எனது தந்தை பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து வரும்படிக் கட்டளையிட்டார். இப்பொழுது வந்தால் நான் தந்தையின் கட்டளையைக் கடந்தவனாவேன். நான் இன்னும் மூன்று ஆண்டுகளின் பின் வருவேன்” என்றான். அவ்வளவு காலமும் யார் ஆட்சி புரிவார்” என்று பரதன் கேட்டான். இராமன் “எனது மிதியடிகள் ஆட்சி புரியும்” என்று சொல்லித் தனது புல்லால் முடைந்த மிரிதடிகளை அவனிடம் கொடுத்தான். மூவரும் மிதியடிகளை எடுத்துக் கொண்டு வாரணவாசி சென்றார்கள். மந்திரிமார் சிங்காசனத்தின் மீது மிதியடிகளை வைத்து ஆட்சி புரிந்தார்கள். ஆகாத யோசனைகளை அவர்கள் செய்ய நேர்ந்ததால் மிதி யடிகள் ஒன்றை ஒன்று முட்டிக்கொண்டன. மூன்று ஆண்டுகள் கழிந்தன. இராமன் காட்டினின்றும் வந்தான் அவன் பதினாறாயிரம் ஆண்டுகள் நீதி ஆட்சி புரிந்து வானுலகடைந்தான்.” இவ்வரலாற்றில் இராவணன் சீதையைக் கவர்ந்ததைப் பற்றியோ இராம இராவணப்போர்களைப் பற்றியோ யாதும் கூறப்படவில்லை. தசரத சாதகக்கதை எழுதப்படுகின்ற காலத்தில் இராம இராவணப்போர்களைப் பற்றிய வரலாறு வழங்கவில்லை என நன்கு புலப்படுகின்றது. தொடக்கத்தில் தசரதசாதகத்தில் சொல்லப்பட்டதுபோல வழங்கிய கதையே பிற்காலத்தில் இன்றைய இராமாயணமாக வளர்ச்சியடைந்தது. இவ்வாறு இராமாயணம் மேலும் மேலும் வளர்தற்குள்ள காரணம் இராமர் வீட்டுணுவின் அவதார மெனப் பிற்காலத்திலெழுந்த தவறான கருத்தேயாகும். இப்பொழுது உள்ள வடமொழி இராமாயணம் கி. மு. 200இல் தொகுக்கப்பட்டது சாதகக் கதைகளில் கூறப்பட்ட வகையில் வழங்கிய இராமாயணக் கதை பல நூற்றாண்டுகளாக வளர்ச்சியடைந்து வந்தது. கி. மு. இரண்டாம் நூற்றாண்டில் இக்கதை தொடர்பான பாடல்கள் திரட்டப்பட்டன; திரட்டப் பட்ட பின்பும் இராமாயணம் வளர்ந்துகொண்டு செல்வது நின்றுவிடவில்லை. அது இன்றுவரையும் வளர்ந்து கொண்டே வருகின்றது. வைத்தியா கூறுவது வருமாறு; “இன்றுவரையும் இராமாயணத்தின் பின் சேர்ப்பு அல்லது இடைச் செருகல் வளர்ந்துவருகின்றன என்பதைப்பற்றிய ஆராய்ச்சி வேண்டிய தில்லை. பேர்போன இராமாயண உரையாசிரியரான காதக என்பவர் இடைச் செருகல் என்று குறிப்பிட்ட நீண்ட சருக்கங்கள் மாத்திரமல்ல; அவர் காலத்தி லில்லாத பல சருக்கங்களுமே இன்றைய இராமாயணத்திற் காணப்படு கின்றன. “இன்றைய இராமாயணத்தின்படி இராமருக்குப் பல மனைவிய ரிருந்தனர். காளிதாசரும் அவருக்குப் பின் வந்த புலவர்களும் அவருக்கு ஒரு மனைவி மாத்திரம் இருந்தார் எனக் கூறுகின்றனர். பரதனுக்கும் பல மனைவியர் இருந்தனர். இக்கால இராமாயணம் தசரதருக்கு 350 மனைவியர் இருந்தனர் என்று கூறுகின்றது. தமதுமுறைமையான மனைவியரைத்தவிர தசரதன், இரமன், பரதன் முதலானோர் பல மனைவியருடையராயிருந்தனர் எனத்தெரிகின்றது. “கௌதம புத்தர் காலத்திற்குப்பின்பே இராமாயணம் தொகுக்கப்பட்ட தென்பதில் ஐயம் சிறிதும் இல்லை. இராமாயணத்தில் புத்தரைப் பற்றித் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அது புத்தரைக் கடுமையாகக் கண்டித்திருக்கின்றது. “இராமாயணம் கிறித்துவுக்குமுன் தொடங்கி இரண்டாம் நூற்றாண்டு வரையில் தொகுக்கப்பட்டதென்பதை ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும். மகாபாரதம் தொகுக்கப்பட்ட பின்னரே இராமாயணம் தொகுக்கப்பட்டுள்ளது. மகாபாரதத் தொகுப்புக் காலம் அலக்சாந்தரின் படை எடுப்புக்காலத்துக்குப் பிற்பட்ட தென்று காட்டியுள்ளோம். பாரதத்தில் கிரேக்கவீரர் பெயர் குறிப் பிட்டுப் புகழப்பட்டுள்ளார்கள். ஆதிபருவத்திலுள்ள சுலோகங்களால் அலக் சாந்தரின் படையெடுப்பு நிகழ்ச்சி மகாபாரதம் தொகுத்தவரின் உள்ளத்தில் மறக்கப் படாமல் இருந்ததென நன்கு விளங்குகின்றது. மகாபாரத்துக்குப்பின் இராமாயணம் தொகுத்தவர் சபாபருவம் ஐந்தாம் சருக்கத்திலுள்ளவைகளை அப்படியே அயோத்தியா காண்டத்தில் படி எடுத்து எழுதியிருக்கின்றார். இப்போதைய இராமாயணத்தில் வாசுதேவன் மிகவணக்கத்தோடு இருமுறை குறிப்பிடப்பட்டுள்ளார். “இராமாயணத்தைக் தொகுத்தவரின் திறமைக் குறைவினால் வால்மீகியின் ஆதி இராமாயணத்தில் வைணவக் கொள்கைகள் தொடர்பான எதுவும் இருக்கவில்லை என நன்கு அறியவருகின்றது.” அவதாரங்கள் பிற்காலக் கற்பனைகள் “வாசுதேவனுக்கு முற்பட்ட வீரர் விட்டுணுவின் அவதாரங்களாகக் குறிக்கப்பட்டுள்ளனர். இது பௌத்தர் முன் பலமுறைகளில் புத்தர் அவதாரஞ் செய்தார் என்று சொல்லும் கொள்கையைப் பின்பற்றி எழுதப்பட்டதாகும். மாபாரதத்தில் கூறப்படும் இராமன் விட்டுணுவின் அவதாரம் என்று கூறப்படுகின்றான். இராமோபாக்கியானத்தில் இவ்வாறு சொல்லப்பட் டிருத்தலே வால்மீகியின் இராமாயணத்தை மாற்றி எழுதவேண்டி வந்த மைக்குக் காரணம். இராமன் விட்டுணுவின் அவதாரம் எனக்கொள்ளும்படி புதிய செய்திகள் சேர்த்து வால்மீகி இராமாயணத்தில் எழுதப்படலாயின. 1 “நாரதர் இராமரை அவதாரமாகக் கொள்ளவில்லை; இராமர் உயர்ந்த வாழ்க்கையை நடத்தி மரணத்தின் பின் பிரம உலகத்தை அடைந்தவராகக் கூறியிருக்கிறார்.” “பத்து அவதாரங்களைப்பற்றிய படைப்புப் புராணங்களாற் கொண்டு வரப்பட்டது; மாபாரதம் இதைப்பற்றிக் கூறவில்லை; இராமாயணத்திலும் இதைப்பற்றி யாதும் காணப்படவில்லை. இராமர் காலத்தில் வராக அவதாரம் விட்டுணுவின் அவதாரமாகக் கொள்ளப்படவில்லை.” “மேற்கூறியவை பத்து அவதாரங்களைப் பற்றிய எண்ணங்கள் இராமாயணத்தில் இல்லை என்று விளக்கும். இன்றைய இராமாயணம் தொகுக்கப்படும் காலத்தில் அவதாரம் என்பதைப்பற்றிய கருத்துக் கருவி லிருந்து பிற்காலத்தில் மெல்ல மெல்லப் புராணகாலத்தில் வளர்ந்துள்ள தெனத் தெரிகின்றது. “இராமாயணத்தில் கூறப்படுவது போல, இராமன் விட்டுணுவின் அரை அம்சமாகவும், பரதன் கால் அம்சமாகவும், பரதரும் சத்துருக்கரும் எஞ்சியுள்ளகால் அம்சமாகவும் பிறந்தார்கள் எனக் காளிதாசர் கூறியுள்ளார். ஆனால் புராணங்களில் இராமர் விட்டுணுவின் அரை அம்சமளவில் இருப்பதை விரும்பவில்லை. இதற்குச் சான்று பத்ம புராணத்தில் காணப் படுகின்றது. அது இராமரை விட்டுணுவின் முழு அவதாரமாகவும், பரதன் பாஞ்ச சன்னியத்தின் அம்சமாகவும், இலக்குவன் விட்டுணுபள்ளி கொள் ளும் பாம்பின் அம்சமாகவும், சத்துருக்கன் சக்கரத்தின் அம்சமாகவும் பிறந்த னர் எனக் கூறுகின்றது. “சீதை முற்பிறப்பில் இலக்குமி அல்லது வேதவதி என்னும் பிராமணப்பெண் எனக்கொள்ளப்படுதலால், விட்டுணுவின் மனைவி இலக்குமி என்னும் கொள்கை அக்காலத்தில் உண்டாகவில்லை. பத்ம புராணம் சீதை இலக்குமி என ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்தது. புராணங்கள் காளிதாசனுடைய காலத்துக்குப் பின் 7வது அல்லது 8வது நூற்றாண்டில் எழுதப்பட்டவை.” பலவகையால் ஆராய்ச்சி செய்யுமிடத்து வால்மீகியின் இராமாயணம் இராமனைச் சாதாரண வாழ்க்கை நடத்திய ஒரு மனிதனாகவே குறிப்பிட்டது என்றும், இராமர் விட்டுணுவின் அவதாரம் என்னும் கொள்கை மகாபாரதத்தி னின்றும் எடுக்கப்பட்டதென்றும் நன்கு விளங்கும். புத்தர் காலத்துக்குமுன் வால்மீகியால் செய்யப்பட்ட சுருக்கமான இராமாயணமாகிய ஒரு கரு இருந்ததென்பதையும், அது அலக்சாந்தர் படை எடுக்குப்பின் தொகுக்கப்பட்டு (கி. மு. 1ஆம் நூற்றாண்டு) நீண்ட காலத்தில் நீண்ட வளர்ச்சியை அடைந்துள்ளது என்பதையும் மறுக்க முடியாது. “இராமாயணத்தில் சொல்லப்படுகின்ற பல செய்திகள் மிக வியப்பானவை. இராமன் பதினோராயிரம் ஆண்டுகள் வாழந்தான், தசரதன் அறுபதினாயிரம் ஆண்டுகள் ஆண்டான் என்று கூறப்படுகின்றன. ஒருவ னுடைய வாழ்நாள் நூறு ஆண்டுகள் என்பதைத் தசரதனே ஒப்புக்கொண் டிருக்கிறான். உத்தரகாண்டத்தில் சொல்லப்படும் இன்னொருகதை இவை களைவிட வியப்பானது. ஒரு பிராமணனுடைய மகன் பருவம் அடையாது இறந்துபோனான். இறக்கும்போது அவனுக்கு வயது 5000, அப்பொழுது அவன் விளையாடும் வாலிபப் பருவத்தையும் அடையவில்லை” ஆர். சி. தத்தர் இராமாயணத்தைக் குறித்து வெளியிட்டுள்ள கருத்து வருமாறு: மாபாரதத்தைப் போலவே இராமாயணமும் வரலாற்று முறையான ஆராய்ச்சிக்குப் பயனற்றதாகும். மகாபாரதத்திற்போலவே இராமாயணத்தில் வரும் கதை தொடர்பானவர்களின் பெயர்கள் கற்பனைகள் போலத் தெரிகின்றன.1 வேதகாலம் முதல் சீதை என்னும் பெயர் உழவுசாலைக் குறிக்க வழங்கிவருவதாயிற்று. உழவுசால் சீதை என்னும் உழவுசால் பெண் தெய்வ மாக வழிபடவும் பட்டது. பயிர்ச்செய்கை தென் திசை நோக்கிப் பரவியபோது சீதை தெற்கே உள்ளவர்களால் கவர்ந்து செல்லப்பட்டாள் என்னும் கற்பனைக் கதை எழுவது புதுமை அன்று. சீதை தெய்வமானபோது அவள் கல்வியிற் சிறந்த சனகன் என்னும் விதேகநாட்டு அரசனின் புதல்வியாக்கப்பட்டாள். சீதையின் கணவனாகச் சொல்லப்படும் இராமன் யார்? புராணங்கள் இராமன் விட்டுணுவின் அவதாரம் எனக் கூறுகின்றன. நாங்கள் இப்பொழுது பேசுகின்ற காலத்தில் விட்டுணு வணக்கம் முதன்மை அடையவில்லை. இதிகாச காலத்தில் இந்திரனே முக்கிய கடவுள். பிரஸ்கார கிரியை சூத்திரம் (11, 17, 97) சீதை இந்திரனின் மனைவி எனக் கூறுகின்றது. முகில்களோடு போரிடும் இந்திரனே இராமன் எனப்பட்டான் என்று நாம் அனுமானிக்கலாம். இந்திரனுடைய வரலாறே இராமன் தெற்கே உள்ள நாடுகளை வெற்றி கொண்ட வரலாறாக வடிவெடுத்தது. இலாசன் (Lassen) என்பார் கூறியிருப்பது வருமாறு: இராமாயணம் ஆரியர் தென்னாட்டை வெற்றிகொள்ளச்செய்த முயற்சியைப்பற்றி எழுந்தகற்பனைக்கதை. இராமன் தக்காணத்தில் எங்காவது தனது ஆணையை நிலைநிறுத்தியவனாக இதிகாசங்களிலோ வேறெங்கோ சொல்லப்படவில்லை. வெபர் (Weber) என்பாரும் இக்கருத்தையே இன்னொரு வகையில் விளக்கியுள்ளார். இராமாயணம் ஆரியக்கொள்கைகள் தெற்கிலும் இலங்கையிலும் பரவியவரலாற்றைக் குறிக்க எழுந்த கற்பனைக் கதை என்று அவர் கூறியுள்ளார். இதிகாசங்கள் கூறுகின்றபடி இராமர் தெற்கு நோக்கிப்படை எடுத்தார் என்று கொள்ளினும் பொருந்தவில்லை. இராமனின் படை எடுப்பினால் தெற்கே அங்குமிங்கும் பிராமணரின் வாசங்கள் இருந்தன என்பதைப் பற்றி அல்லாது இராமாயணம் பாடியவருக்கு வேறு ஒன்றும் தெரியாது. இராவணனுடைய மகன் இந்திரசித்து எனப்படுகின்றான். இந்திரசித்து என்பதற்கு இந்திரனின் பகைவன் அல்லது இந்திரனை வென்றவன் என்பது பொருள். இந்திரனின் பகைவன் விருத்திரன் என்று இருக்குவேதம் கூறு கின்றது. இராமாயணத்தின் இராம இராக்கதப்போர்கள் இந்திர விருத்திரர் களைப் பற்றிய பழங்கதை தொடர்பானவை. இராவணனுடைய மிகத்தீரமான செயல் சீதையைக்கவர்ந்தது. இது திருடிச் செல்லப்பட்ட பசுக்களை இந்திரன் மீட்டகதையைப் போலக்காணப்படுகின்றது. அனுமார் சீதையைத்தேடி வானத்தைத் தாவிச்சென்றார் என்று சொல்லப்படுகின்றது. இது இந்திரர் களுடைய போரில் இந்திரன் மருத்துக்களுடைய நட்பைப்பெற்ற கதையை ஒத்திருக்கின்றது. 1பண்டிதர் சவரிராயன் அவர்கள் இராக்கதர் என்னும் தலைப்பின்கீழ் எழுதிய குறிப்பு: (1) ஆரியர் வெண்ணிற மக்களென்று எங்களுக்குத்தெரியும். ஆகவே இராக்கதர் கறுப்பு நிறத்தவராகக் குறிக்கப்பட்டுள்ளார்கள். இராமாயண வீரனாகிய இராமன் கறுப்புநிறத்தவனாகக் கூறப்படுவதன் காரணம் யாதுஎன்னும் கேள்வி எழலாம். இது ஒரு விதிவிலக்கு. இராமாயணம் செய்த புலவர் தமிழ்நாட்டுப் பழைய வரலாறு ஒன்றைவைத்துக் கொண்டு அதனைக் கோசலநாட்டு இராமன் கதையோடுபின்னி இராமாயணத்தை முடித்திருக்க லாம்2 என்று நான் பிறிதோரிடத்தில் கூறியுள்ளேன். இராமன் என்னும் சொல்லின் வேர் இருளைக்குறிக்கும் தமிழ்ச் சொல். இவ்வேர்ச்சொல் இன்று மறக்கப்பட்டிருந்தாலும் அது அடியாகப்பிறந்த இரா, இருள், இருந்தை, இரும்பு முதலிய சொற்கள் இன்றும் வழங்குகின்றன. இராமன் என்பதற்குக் கரியவன் என்று பொருள். இராமனின் பெண்பாற் பெயர் இராமாயி. இப்பெயர் தாழ்ந்த வகுப்பினரிடையே இன்றும் வழங்குகின்றது. கிழக்குத் தேச மக்கள் கறுப்பை அழகாகக் கொண்டார்கள். ஆகவே காரிகை என்பதுபோல இராமன் என்னும் பெயர் அழகுடையவன் என்னும் பொருளில் வழங்கிற்று. (2) இராக்கதர் மிகத்திருந்திய மக்களென்று நாம் இராமாயணம் மூலம் அறிகின்றோம். அவர்கள் ஆரியரின் தொடர்பின்றி உயர்ந்த நாகரிகம் பெற் றிருந்தார்கள்; அவர்கள் ஆரியரிலும் பார்க்க உயர்ந்த பண்பாடுடையவர். இராக்கதர் பெண்களுக்குக் கொடுத்த மதிப்பிலும் பார்க்க ஆரியர் பெண் களுக்குக் கொடுத்த மதிப்புத் தாழ்வு. முற்காலத் திராவிடப் பெண்வீட்டுக் கரசியும் சொத்து உடையவளுமாயிருந்தாள். கணவனைத் தெரிந்தெடுக்கும் உரிமை அவளுக்கே இருந்தது. மிகப் பழைய காலம் முதல் ஆரியரின் மணமுறை கன்னிகாதானமாகும். கன்னிகாதானம் என்பது பெண்ணைக் கணவனுக்குக் கொடுத்துவிடுதல். அவர்களின் உரிமை தந்தை வழியானது. இராவணனுக்கு அரசுரிமை தாய் வழியில் வந்தது என்று உத்தரகாண்டம் கூறுகின்றது. (3) இரு குலத்தினருக்குமுள்ள வழிபாட்டு முறைகளிலும் வேறுபாடு உண்டு. ஆரியர் பல தெய்வங்களையும் விண் மீன்களையும் வழிபட்டனர். இராக்கதர் ஆரியர் தெய்வங்களுட் சேராத சிவன் என்னும் முழுமுதற் கடவுளை வழிபட்டனர். ஆரியர் யாகங்களைச் செய்தனர்; அவர்களின் எதிரி களாகிய இராக்கதர் இரத்த வேள்விகளை அழித்தனர். இவ் வேள்விகள் உலக வாழ்க்கை தொடர்பான நன்மைகளின் பொருட்டுச் செய்யப்பட்டன. இயற்கைத் தோற்றங்களை வழிபடும் ஆரியரின் வழிபாடு உண்மை அறிவு மிக்க தமிழருக்குப் பயனற்றவையாகத் தோன்றின. தமிழ்ச் சாதியாரின் முன்னோரான. இராக்கதரும் அசுரரும் சிவனை இலிங்க வடிவில் பூவும் புகையும்கொடுத்து வழிபட்டனர். அவர்கள் வழிபாட்டின் இலக்கு வீட்டுப்பேறு அடைதல். இவ்விரண்டு எதிரிடையான குலத்தினருக்கு மிடையிலுள்ள வெளிப் படையான வேறுபாடுகள் இவைகளே. இராவணன் அவன் பக்கத்தினரும் அசுர அல்லது தமிழ்க் குலத்தினராவர். “இராமர் போரிட்ட மக்கள் வேறு குலத்தினரும் வணக்கமும் உடையராவர்” என்று கிரிபித் (Griffith) கூறியது மிகவும் ஏற்றதே. பிற்காலத்தில் இராக்கதர் என்னும் பெயர் பயம் விளைக்கக் கூடியதாயிருந்தபோதும் அது காவலர் அல்லது புரவலர் என்னும் பொருளில் ஆதியில் வழங்கிற்று. இராக்கதர் என்பதற்கு நாட்டைக் காப்பவர் என்று பொருள். இதிகாசங்களிலுள்ள இராவணன், விபீஷணன், கும்பகர்ணன் முதலிய பெயர்கள் வடமொழியாக்கப்பட்டவை. ஆரியர் வாழாத பிறநாட்டில் வாழ்ந்த மக்களுக்கு ஆரியப் பெயர்கள் வழங்கின என்று நாம் துணிதல் முடியாது. சுக்கிரீவன், அனுமான், சடாயு முதலிய பெயர்களும் வடமொழி யாக்கப்பெயர்களே. கிரிபித் கூறுவது 1இந்தியருடைய நம்பிக்கையின்படி இராக்கதர் என்போர் பல வடிவங்களுடைய பயங்கரமானவர்; யாகங்களை அழிப்பவர்; பிராமணரின் சமயக்கிரியைகளை குழப்புகின்றவர். 2இராமாயணம் செய்தவர் இவ்விழி வான பெயரைப் பகைவர்களாகிய மக்களுக்கு இட்டு வழங்கினார் எனத்தெரி கின்றது. இது வரலாறு சம்பந்தமான பெயரன்று. இராமாயணத்தில் சொல்லப் படும் நிகழ்ச்சிகள் சரித்திர சம்பந்தமானவை என்று ஆன்ற கல்வியுடையோர் கொள்வதில்லை. இராமாயணத்தில் சொல்லப்படும் மக்கள் பெயர்கள் பெரும் பாலும் சில நிகழ்ச்சிகள் செயல்களின் உருவகங்கள் என்று வெப்பர் கருதுவர். இருக்கு வேதத்திலும் கிரியா சூத்திரத்திலும் சீதை என்னும் பெயர் உழவுசாலை யும் குறிக்கின்றது. சீதை உழவுசாலையும் இராமன் உழவனையும் குறிக்கும். இராமாயணத்தில் மக்களுக்குப் பற்றுண்டாகக் காரணம் புராணகாலத்தில் இராமன் விட்டுணுவின் அவதாரம் என்னும் கொள்கை சிறிது சிறிதாக வேரூன்றிவிட்டது. இப் பொய்யான கொள்கை இன்று வரையும் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்துவருகின்றது. இராமருடைய பெயரை வைணவர் மந்திரமாகக் கொள்கின்றனர். இது பற்றியே இராமாயணத்துக்கு எதிராகச் சொல்லப்படும் கருத்துகள் கைப்பாகப் பலருக்கு இருக்கின்றன. கம்பராமாயணமும் சமய வெறியினாலேயே பாடப்பட்டது. இராமருக்கு எவ்வளவு கடவுள் தன்மை கொடுக்க முடியுமோ அவ்வளவும் கொடுத்து இராமருக்குப் பகைவர் என்று கொள்ளப்பட்டவர் களை எவ்வளவு இறக்கமுடியுமோ அவ்வளவு இறக்கிக் கம்பன் பாடி யுள்ளான். இராமாயணம் திராவிட மக்களை இழிவுப்படுத்திக் கூறும் நூல் என்னும் கொள்கை பரவுகின்ற இக்காலத்தில் இராமாயணம் போன்றதோர் நூல் தமிழரால் பயிலப்படுவதை மக்கள் விரும்பவில்லை. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்களே இராமாயணம் தமிழரை இழித்து எழுதிய நூலென்றும் அக் கருத்துக்கள் தமிழ் மக்களுக்கு உடன்பாடல்ல என்றும் கருதியுள்ளார்கள்.1 இராமாயணத்தில் வரும் குரங்குகள் இராமாயணத்தில் வரும் குரங்குத் தலைவர்கள் குரங்கு வீரர் என்போர் குரங்கைக் கோத்திரக்குறி (totem) ஆகவுள்ள திராவிட மக்களே யென வரலாற்றாசிரியர்கள் கூறியுள்ளார்கள். வடநாட்டோடு மாத்திரம் சம்பந்தப்பட்டிருந்த ஆதிஇராமாயணத்தோடு இராம இராவணப் போர் களைக் கற்பித்து எழுதிய பிற்கால வடமொழிப் புலவோர் குரங்குக் கோத்திரக் குறியுடையராய்க் குன்றுகளில் வாழ்ந்த திராவிட மக்களைக் குரங்கர் எனக் குறிப்பிட்டிருத்தல் கூடும். 2குரங்கர் மக்களேயாக அவர்களுக்கு வால் கொடுத்துக் குரங்குகளாகக் கொள்வது மிக்க அறியாமையேயாகும். இராவணன் திராவிடப் பேரறிஞன் “இராமன் பிராமணருக்குப்பயம் விளைப்பவனாயிருந்தான் இராவணபாட் என்னும் வேதம் சம்பந்தப்பட்ட ஒரு நூல் இராக்கதனால் செய் யப்பட்டதென்று சொல்லப்படுகின்றது. இராவணன் சிறந்த கல்விமானென் றும் அவன் தெலுங்கு மொழி இலக்கண நூலின் ஆசிரியரென்றும் பயபத்தி யுள்ள பண்டிதர்கள் இன்றும் கருதுகின்றனர். இராமாயணத்தில் இராக்கதர் தோற்றத்தாலும் ஒழுக்கத்தாலும் பயம் விளைப்பவர் எனக் கூறப்பட்டுள்ளது. இரக்கதாயிருக்கும் தன்மை ஒருவன் செய்யும் பாவத்தினாலோ அல்லது அவனது முன்னோர் செய்த பாவத்தினாலோ உண்டாகின்றதெனத் தெரிகின்றது. இராக்கதரைப் பற்றிச் சொல்லப்படும் வடிவம் முதலியன கற்பனையினாலும் பகை காரணமாகவும் உண்டானவை. இலங்கையின் அழகு, கட்டிடங்களின் சிறப்பு மக்களின் ஒழுக்கம் முதலியவை நன்கு இராமாயணத்தில் கூறப்பட் டுள்ளன. வீதிகளில் கிடந்த விலைமதிப்பிற்குரிய பொருளைத் திருடர் தீண்ட அஞ்சினார்கள். இராமருடைய பகைவர் என்று சொல்லப்படுவோர் நாகரிக மற்றவர்களாயும் முரடர்களாயும் ஒருபோதும் இருந்திருக்க முடியாது.”3 இராம இராவணப்போர் கிரேக்கர் வருகைக்குப்பின் சேர்க்கப்பட்டதா? சேரன் செங்குட்டுவன் வடநாட்டின்மீது படை எடுத்துச் சென்று ஆரிய மன்னரைப் பணிவித்தான் என்னும் செய்தியை இந்தியவரலாற்று ஆராய்ச்சித் துறையில் உழைக்கும் ஒரு சாரார் நம்பப் பின்னடைகிறார்கள். அதற்குக்காரணம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் தமிழ் அரசர் அத்துணைதூரம் படைஎடுத்துச் செல்லமுடியாதெனவும் தமிழர் ஆரியரைப் பணியவைக்க முடியாதெனவும் அவர்கள் நம்புவதேயாகும். இராமன் இலக்குமணர்களாகிய இரண்டு மனிதர் தெற்கே தன்னந்தனியே வெகுதூரஞ் சென்று இராவணன் போன்ற பேரரசன் ஒருவனை வென்றார்கள் என்பதை மேற்படி வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றார்கள் என்னே! அவர்கள் ஆராய்ச்சித்திறமை. தசரத சாதகத்திற் கூறப்பட்ட அளவே வான்மீகி இராமாயணம் உள்ளது என்று நம்புதற்கு ஏதுக்கள் உள்ளன. வான்மீகர் விந்தத்துக்குத் தெற்கே உள்ளநாடுகளைப்பற்றி அறிந்திருந்தார் என்பது1 நம்பமுடியாதது. கிரேக்கர் படயெடுப்புக்குப்பின் அவர்கள் மூலம் இல்லியாட் என்னும் இவர்கள் பழங்கதையை அறிந்த மக்கள் சிலரே வான்மீகி இராமாயணத் தோடு இராவணன் சம்பந்தமான கதையையும் சேர்த்து எழுதினார்கள் எனக்கூறலாம்.2 வைத்தியர் சொல்வது: It is in short difficult to deny that the Ramayana as it exists today consists of an old nucleus written by Valmiki before the rise of Buddhism buried in substantial addition made long after the invation of Alexander about the 1st century B C” “புத்தர்காலத்துக்குமுன் வான்மீகி செய்தசிறிய இராமகதை ஒன்று இருந்ததென்பதையும், அது அலக்சாந்தர் படையெடுப்புக்கு நீண்ட காலத் திற்குப்பின் எழுதிச் சேர்க்கப்பட்ட மிகப்பெரிய இடைச்செருகல்களுள் மறைந்து கிடக்கின்றதென்பதையும் யாவராலும் மறுக்க முடியாது” யாகம் என்றால் என்ன? “மண்டபத்தின் வெளியான இடத்தில் தருப்பைப்புல் பரப்பப்பட்டது; பலி இடும் விலங்குகளைக் கட்டிவைக்கும் தூண்கள் (யூபங்கள்) நடப்பட்டன; பயத்தினால் நடுங்கிக் கொண்டிருக்கும் விலங்குகள் கிட்ட இழுத்துக் கொண்டு வரப்பட்டன, யாகத்தீ எரிந்துகொண்டிருந்தது. ஆட்டுக்கடா பூட்டிய வண்டியில் சோமப்பூண்டு ஏற்றப்பட்டிருந்தது. யாகக் கிரியை செய்யும் புரோகிதன் தேவர்களோடு கலந்து பேசினான். அவர்கள் யாகத்தில் ஊனும் கள்ளும் உண்ணும்படி அழைக்கப்பட்டார்கள். பலியிடுகிறவனுக்கும் யாகம் நடத்தும் புரோகிதனுக்கும் சமைத்த ஊன் உணவுகள் கொடுக்கப்பட்டன. பலியிட்ட விலங்குகளின் இறைச்சி புரோகிதனுக்கும் பலியிடுகின்றவனுக்கும் அவனுடைய மனைவிக்குமாக முப்பத்தாறுபங்குகளாகப் பிரிக்கப்பட்ட தென ஐதரேயப் பிராமணங் கூறுகின்றது.”1 புத்தர் காலத்தும், பின்பும் பிராமணர்களால் செய்யப்பட்ட இவ்வகை யாகங்கள் ஒழிக்கப்பட்டன. பிராமணர் படையெடுப்பு என்பது ஆயுதங்க ளாலும் ஆட்பலத்தினாலும் நடத்தப்பட்டதன்று. தமது யாகங்களை மக்களிடையே பரப்பி அவர்களிடம் வருவாய் பெறும்பொருட்டு அவர்கள் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தமையே யாகும்.  ஆரிய வேதங்கள் முன்னுரை ஆரியர் தமிழரின் சமயம், ஆரியர் தமிழர், ஆரியம் தமிழ் என்பவைகளின் ஆராய்ச்சி, ஒரு கூட்டத்தவரின் வாழ்வைப் பாதிக்கின்றது. வேதங்கள் கடவுளாற் சொல்லப்பட்டவை; பிராமணர் பிரமாவின் முகத்திலிருந்து தோன்றினோர்; சமக்கிருதம் தேவர்கள் பேசும் மொழி; அம்மொழியில் சொல்லாதவைகளைத் தேவர் அறிந்து கொள்ள மாட்டார்கள்; ஆகவே மக்களின் எண்ணங்களைக் கடவுளருக்கு அவர் விளங்கக்கூடிய மொழியில் கூறுதல் வேண்டும். அவ்வாறு கடவுளர் எண்ணங்களைப் பொது மக்களுக்கும், பொதுமக்களின் எண்ணங்களைக் கடவுளுக்கும், உணர்த்து வோராகிய தாம் பூதேவர் என்பன போன்ற பொய்யான பொல்லாத கருத்துக் களை மக்களிடையே பரவச் செய்து, அவர்களின் அறியாமை மூலம் உலகில் மதிப்பும் நல்வாழ்வும் பெற்று வாழும் ஒரு கூட்டத்தினர், மேற்படி கருத்துக் களுக்கு மாறான ஆராய்ச்சிகளை வெளியிட விரும்ப மாட்டார்களல்லவா? ஆகவே அவர்களால் எழுதப்பட்ட, எழுதப்படும் நூல்களில் தமிழரின் உயர்வுகளைக் கூற வேண்டிய பகுதிகள் காணப்படுவதில்லை. அவர்களைப் பற்றிக் கூறவேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டால், அவர்கள் அரக்கர், இராக்கதர், பேய்கள், பைசாசுகள் எனக் கூறப்படுவர். இதனால் தென்னிந்திய மக்களைப் பற்றிய உண்மை வரலாறுகள் வெளிவராதிருந்தன.1 மேல்நாட்டவர்கள் தென்னிந்திய மக்களின் மேலான நாகரிகத்தை விளக்கிப் பல ஆராய்ச்சிகள் செய்துள்ளார்கள். மொகஞ்சதாரோ அரப்பா முதலிய தமிழரின் பழைய நகரங்களின் நாகரிகத்தைப் பற்றி மேல்நாட்டு வெளியீடுகளில் பல ஆராய்ச்சிகள் வெளிவந்துள்ளன. அவைகள் போன்றவை தமிழ்நாட்டில் வெளிவருவதில்லை. இதற்குக் காரணம், தமிழர் நாகரிகம் ஆரிய நாகரித்திற்கு முற்பட்டதென்றும், அந்நாகரிகத்தை அடிப் படையாகக் கொண்டே ஆரிய நாகரிகம் கட்டப்பட்டுள்ளது என்றும், பொது மக்கள் அறியின், அது ஒரு கூட்டத்தினரின் வாழ்வுக்குப் பங்கமாகு மென்பது பற்றி ஆகலாம். நாம், உண்மையான தமிழர். ஆரியர் வரலாறுகளைப் படிக்க வேண்டுமாயின் மேல்நாட்டறிஞரால் எழுதப்பட்டவைகளையே படித்தல் வேண்டும். மேல்நாட்டறிஞரால் எழுதப்படும் உண்மை ஆராய்ச்சிக்கும், பிராமண வகுப்பினரால் எழுதப்படும் ஆராய்ச்சிகளுக்கும் வேறு பாட்டைக் காணலாம். பின்னவரிடத்தில் தமிழரிலும் பார்க்க ஆரியர் நாகரிகத்திற் சிறந்தவர்கள்; அவர்களே தமிழருக்கு நாகரிகத்தைக் கற்பித்தவர்கள் எனக் கூறும் குறிக்கோள் இருப்பதை நாம் காணலாம்.1 ஆரிய வேதங்கள் என்னும் இச் சிறிய நூல், மேற்புல அறிஞர் பலர் வெளியிட்டுள்ள சிறந்த கருத்து களைத் துணைக்கொண்டு எழுதப்பட்ட தாகும். சிறுகுழந்தையும் ஒவ் வொன்றும் நியாயம் கேட்டு ஆராய்கின்ற காலம் இது; ஆகவே பொய்க் கதைகளை அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கைகள் இனி நெருப்பின் முன்வைத்த வெண்ணெய் போலாகி விடுமென்பதில் சந்தேகமில்லை. பிராமண ஆசிரியர்கள், இந்திய மக்கள் ஆராய்ச்சித்துறையில் இருப்பது எப்படி இருக்கிறதென்றால், தமிழருடைய உண்மை வரலாறு வெளி யில் வராதபடி, அவைகளை வடிகட்டி மறித்து ஆரியர் வரலாறுகளையே வெளியில் விடுவதற்கு இருப்பதுபோல வென்க. சென்னை 1.1.1947 ந..சி. கந்தையா ஆரிய வேதங்கள் தோற்றுவாய் நாம் தமிழர்; தமிழராகிய நாம் ஆரிய வேதங்களைப் பற்றியறிய வேண்டிய முக்கியம் யாது? எனப் பலர் வினாவலாம். நம்மவர் பலர் ஆரிய வேதங்களைப் பற்றி அறியார்; அவை கடவுளாற் செய்யப்பட்டவை என நம்பி வருகின்றனர். இன்று ஆலயங்களில் சொல்லப்படுவன கடவுள் வாக்காகிய வேதங்கள் என நம்பப்படுகின்றமையினாலேயே, வடமொழி சமய மொழியாகவும் தமிழ் நாட்டில் இடம்பெற்றுள்ளது. இது நம்மவர் அறியாமையின் விளைவாகும். சில ஆண்டுகளின்முன் திரு. கா. சுப்பிரமணியபிள்ளை அவர்கள், திருநான்மறை விளக்கம் என்னும் கட்டுரைவாயிலாக ஆரிய வேதங்கள் காலந்தோறும் மக்கள் பாடிய பாடல்களின் தொகுதிகள் என எடுத்து விளக்கு வாராயினர். அப்பொழுது நம்மவருள் ஒருவரே, வேதங்கள் கடவுளாற் செய்யப்பட்டவை எனக் கூறி முந்நூறு பக்கங்களுக்கு மேல் விரிந்த ஒரு புத்தகத்தை வெளியிடுவாராயினர். அதற்குப் பார்ப்பன வகுப்பினரின் ஒருவர் மதிப்புரையும் வழங்கியிருந்தார். வேதங்கள் கடவுளாற் செய்யப் பட்டன என்று நாட்டுவதற்கு அவ்வேத பாடல்களுள் ஒன்றேனும் அந்நூலில் எடுத்து ஆளப்படாதிருந்தமை இங்குக் குறிப்பிடத் தக்கது. இலங்கையில் வாழ்பவரும் பி.எஸ்ஸி. பட்டதாரியுமான, தமிழ்ப் பண்டிதருமாயுள்ள ஒரு வரும், வேதங்கள் கடவுளாற் சொல்லப்பட்டனவே என்று சில திங்கள் வெளி யீடுகளில் எழுதுவாராயினர். வட இலங்கையில் வாழ்பவரும் பி.ஏ. பட்டதாரி யும் தர்க்க நூல் வல்லாருமாகிய இன்னொருவர் வேதங்கள் கடவுளாற் செய்யப்பட்டன என்று முழங்கிய அளவில் நின்றுவிட்டது. யாகத்தில் வெட்டப்பட்ட விலங்குகள் உயிர்பெற் றெழுந்தன என்று கூறி கந்த புராணத் தினின்றும் ஒரு பிரமாணமும் எடுத்துக்காட்டியுள்ளார். ஆங்கிலமுந் தமிழும் ஒருங்கு பயின்ற பட்டதாரிகளே இவ்வாறு கூறுவார்களாயின் பொதுமக்க ளின் நிலைமை என்னாகும்? வேதம் கடவுளாற் செய்யப்பட்டது எனக் கூறுதல் நம்மவர் பலருக்குப் பழக்கமாக அமைந்துள்ளது. இப் பழக்கத்தை மாற்றுவது கடினமாயிருக்கின்றது. “பழக்கங் கொடிதுகாண்” என்றார் ஒழிவிலொடுக்க நூலுடை யாரும். ஆரிய வேதங்களிலுள்ள பாடல்களைச் செய்த புலவர்களின் (இருடிகள்) பெயர்கள் எல்லாம் காணப்படுகின்றன. புலவர்கள் பாடிய பாடல்கள், பாட்டின்நடை, பாடலில் துதிக்கப்பட்ட தெய்வம் முதலிய விவரங்கள் அடங்கிய நூல் வடமொழியில் உண்டு. அதற்கு அனுக்கிரமணி என்று பெயர்.1 ஆரிய வேதங்கள் ஒரு கூட்டத்தினருக்கு மாத்திரமே தெரிந் திருந்தன. மற்றவர்கள் அவைகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை. மற்ற வர்கள் அவைகளை ஓதவோ, கேட்கவோ கூடாது என அவர்கள் சட்டம் செய்திருந்தார்கள். அதற்குக் காரணம் அவை கடவுளாற் செய்யப்பட்டிருத் தலும், அவை தேவர்கள் வழங்கும் தெய்வ மொழியில் உள்ளன வாதலும் என அக் கூட்டத்தினர் கூறுவாராயினர். அக்பர் காலத்திற்கூடப் பிராமணர் ஓதிவரும் வேதம் எவ்வகையினது என்று அறிய அவ்வரசன் முயன்று வந்தா னென்றும், அவனுக்கு அது கைகூடவில்லை என்றும் அறிகின்றோம். மேல்நாட்டவர் இந்திய நாட்டுக்கு வரத் தொடங்கினார்கள். இந்திய நாட்டின் பல பகுதிகள் ஆங்கிலர் ஆட்சிக்கு உட்பட்டன. அப்பொழுது வழக்கு களை விளங்கித் தீர்ப்பளிப்பதற்கு இந்திய நாட்டில் வழங்கும் சட்டங் களையும் தேச வழக்குகளையும் அறியும் கட்டாயம் ஆங்கில நீதிபதிகளுக்கு ஏற்பட்டது. 1773இல் வாரன் ஹேஸ்டிங்ஸ் என்பவர், வங்காளத்துக்குக் கவர்னர் bஜனரல் ஆக்கப்பட்டார். இந்தியாவிலுள்ள மற்றைய ஆங்கிலர் இராச்சியங் களுக்கும் அவரே தலைவராயிருந்தார். அவர், நியாயப்பிரமாணங்கள் எல்லா வற்றையும் அறிந்த பிராமணரை அழைத்துச் சட்ட நூல் செய்யும்படி பணித் தார். அவர்கள் `விவதன்வசேது’ என்னும் சட்ட நூல் செய்தார்கள். அதில் குடும்பச் சட்டங்களும், சொத் துரிமை பற்றிய காரியங்களும், இவைபோன்ற வையும் அடங்கியுள்ளன. அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கக் கூடியவர்கள் ஒருவரும் இன்மை யால், அது பாரசீகத்துக்குத் திருப்பப்பட்டு பின், பாரசீகத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. அது (‘A Code of Gentoo’) மேன் மக்களின் சட்டம் என்னும் பெயருடன் 1785-ல் அச்சிடப்பட்டது. இதுவே “இந்து லா” (Hindu Law) எனப்படுகின்றது. 1830 வரையில் வேதங்களைப் பற்றி மேல்நாட்டவர்கள் அறியவில்லை. வேதங்களின் ஒரு பகுதி 1838இல் இலண்டனில் வெளிவந்தது. 1849-க்கும் 1875-க்கும் இடையில் மாக்ஸ்மூலர் இருக்குவேத பாடல்களைச் சாயணர் உரையோடு அச்சிற் பதித்தார். 1851-க்கும் 1863-க்குமிடையில் இருக்கு வேதமூலம் முழுமையும் அச்சிடப் பட்டது. வேத மொழி செர்மன் மொழிக்கு (German language) இனமாயிருந்தமையின், மொழி ஆராய்ச்சியின் பொருட்டு மேல்நாட்டவர்கள் சமக்கிருதத்தைப் பயின்றார்கள். இலத்தின், செர்மன், பிரென்சு, ஆங்கிலம் முதலிய மொழிகளில் வேதங்கள் பலரால் மொழி பெயர்த்து அச்சிடப்பட்டன. இந்திய நாட்டிலுள்ள பிராமணரிலும் பார்க்க மேல்நாட்டவர்களே வேதங்களைப் பற்றி நன்கு அறிவார்கள். இன்று சரித்திர ஆராய்ச்சித் துறையில் வேலை செய்யும் பிராமண வகுப்பினரும், பிராமண வகுப்பினரல்லாதாரும் வேதங்களின் ஆங்கில மொழி பெயர்ப்புகளையே எடுத்து ஆளுகின்றனர். மேல்நாட்டு நன்மக்களின் குன்றாத உழைப்புக், காரணமாக ஆரிய வேதங்களும் அவைகளைப் பற்றிய உண்மைகளும் முற்றாக வெளிவந்துள்ளன. அவைகளைப் பிராமணரல்லாதாரும், இன்று நன்கு கற்றறியலாம். ஆகவே இன்று அவை மறைக்கப் பட்டிருக்கவில்லை. ஆரிய வேதங்களைப் படித்துப் பார்த்தால், அவை சாதாரண மக்களால் பாடப்பட்டவை என்று எளிதிற் புலப்படுத்தலுமல்லாமல், அவை அறிவுடைய மக்களின் சமய நூலாக இருக்கத்தகாதன என்றும் தெள்ளிதிற் புலப்படும். தமிழ் மக்களுக்கும் ஆரிய வேதங்களுக்கும் யாதும் உறவு இல்லை. ஆரியரை எதிர்த்துப் போராடியவர்களும், தாசுக்கள் என்று அவர்களால் இழித்துக் கூறப்பட்டவர்களுமாகிய தமிழர், அழிந்து போக வேண்டுமென்று திட்டிப்பாடிய பாடல்கள் பல வேதங்களில் காணப்படு கின்றன. இவ்வுண்மைகளை எல்லாம் நம்மவர்கள் நன்கு அறிந்து உண்மை கடைப்பிடிக்குமாnற இந்நூல் வெளிவருகின்றது. ஆரியர் வேதங்களைப் பற்றி அறிந்து கொள்வதன்முன், நாம் ஆரியர் யார்? என்று அறிந்துகொள்ளுதல் வேண்டும். இரசியா நாட்டின் தென்கோடியில் ஒருவகை வெண்ணிற மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.1 அவர்கள் எப்பெயரால் அறியப்பட்டார்கள் என்று ஒருவராலும் அறிய முடிய வில்லை. அம்மக்கள் பாரசீகம், இந்தியா, ஐரோப்பாவின் பல பகுதிகளில் சென்று வாழ்ந்து, பற்பல பெயர்களைப் பெற்றனர். பெயர் அறியப்படாத அம்மக் களின் ஒரு கூட்டத்தினர் `ஆரிய’ எனப் பாரசீக, ஆரிய வேதங்களிற் கூறப் பட்டுள்ளார்கள். இக் கூட்டத்தினருக்கு வழங்கிய `ஆரிய’ என்னும் பெயரே அவர் இனத்தவர்களாகிய எல்லாக் கூட்டத்தினருக்கும் பெயராக வழங்குவ தாயிற்று. இந்தியா, பாரசீகம் ஐரோப்பாவின் பல பகுதிகளிற் சென்று வாழ்ந்து ஆரிய மக்களின் மொழிகளிலுள்ள பல சொற்கள், ஒரே வகையாக விருக் கின்றன. ஒரே வகையான அச்சொற்கள் பழைய ஆரியச் சொற்கள் எனத் துணியப்படுகின்றன. அவ்வகை ஆரியச் சொற்களைக் கொண்டு பழைய ஆரியர் வாழ்ந்த இடம், அவர்களின் நாகரிகம், அவர்கள் அறிந்திருந்த தொழில்கள், அவர் நாட்டிற் காணப்பட்ட பறவை, விலங்குகள், மரஞ்செடிகள், போன்றவை அறியப்படுகின்றன. அவ்வகை ஆராய்ச்சியினால் பழைய ஆரியர் இரசிய நாட்டின் தென்கோடியில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்பது உறுதிப்படுகின்றது. கலப்பற்ற ஆரியர் உளரா? ஆரியர் என்னும் மக்கள், சென்ற சென்ற இடங்களில் வாழ்ந்த மக்களோடு தாராளமாகக் கலந்து கொண்டார்கள். இன்று இவ்வுலகத்திலேயே கலப்பற்ற ஆரியர் இலராவர். இந்திய நாட்டிலே, காசுமீரத்தில் அதிகக் கலப்பற்ற ஆரியர் வாழ்கின்றார்கள் என்று கருதப்படுகின்றது. இன்று, மக்கள் தம்மை ஆரியர் எனக் கூறிக்கொள்வது நகைப்புக் கிடமானது. அதிலும் தென்னிந்திய பிராமணர் அவ்வாறு தம்மை அபிமானித்து வருவதுதான் வியப்புக்களுள் மிக வியப்புடையதாகும்.1 வேத பாடல்களின் தொடக்கம் இரசிய நாட்டினின்றும் வந்து, இந்திய நாட்டிற் குடியேறிய மக்கள் வழி பட்ட கடவுளர், தமிழர் வழிபட்ட கடவுளரிலும் வேறானோர். அலைந்து திரியும் மக்களாக இருந்தமையின், அவர்கள் கோயில்களை அமைத்துக் கடவுளரை வழிபடவில்லை. கடவுளரைக் குறித்துப் பலியிடுதலே அவர்களின் சமயமும் சமயச் சடங்குமாயிருந்தது. பலியிடும் போது, தெய்வங்கள், தாம் விரும்பிய இவ்வுலக சுகங்களைக் கொடுக்கும் பொருட்டுச் சிலர் அவர்கள் மீது பாடல் களைப் பாடினர். அப் பாடல்களின் தொகை வேதம் எனப்பட்டது. ஆரியர் கி.மு. 2000 வரையில் இந்திய நாட்டை அடைந்தார்கள். வேதபாடல்கள் வியாச முனிவரால் நான்காக வகுக்கப்பட்டன என்று சொல்லப்படுகின்றது. வியாசர் பாரத காலத்தவர். பாரதம் கி.மு. 13ஆம் நூற்றாண்டு வரையில் நிகழ்ந்ததெனப் படுகின்றது. ஆகவே கி.மு. 2000க்கும் கி.மு. 1300க்கும் உட்பட்ட காலங்களிற் செய்யப்பட்ட பாடல்கள், வேதங்களில் அடங்கியுள்ளன என்று விளங்கு கின்றது. நான்கு வேதங்கள் ஆதியில் வேதம் ஒன்றாக இருந்தது. அதற்கு இருக்கு என்று பெயர். இருக்கு வேதத்தில் 1028 பதிகங்கள் உண்டு. பதிகங்கள் என்பன பத்துப் பாடல்கள் கொண்டவை. வேதத்தில் உள்ள பதிகத்தில் பத்துக்குக் கூடியும் குறைந்தும் பாடல்கள் காணப்படுகின்றன. விளங்கும் இலகு நோக்கிப் பதிகம் என்னும் சொல் இங்குப் பயன்படுத்தப்படுகின்றது. இவைகளில் பதினொரு பதிகங்கள் வாலகில்லியராற் பாடப்பட்டனவென்றும், அவை பிற்காலத்தன வென்றும் கருதப்படுகின்றன. அவைகளை நீக்கிப் பார்த்தால் இருக்கு வேதத் திலுள்ளவை 1017 பதிகங்களே. 1017 பதிகங்களிலும் 10,600 பாடல்கள் உள்ளன. ஒரு பக்கத்தில் 33 வரிகள் அச்சிட்டால், இருக்கு வேத பாடல்கள் முழுமை யும் 600 பக்கங்களில் அடங்கும். இது கிரேக்க கவியாகிய ஹோமரின் இல்லியாட் என்னும் நூல் அளவு ஆகும். இருக்குவேதம் பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மண்டலமல்லாமல் அட்டகம் என்னும் இன்னொரு பிரிப்பும் உண்டு. முதல் மண்டலத்திலுள்ள பாடல்கள் பல இருடிகளாற் பாடப்பட்டவை. இரண்டு முதல் எட்டுவரையில் உள்ள பதிகங்கள் ஒவ்வோர் இருடி குடும்பத்தினராற் பாடப்பட்டவை. ஒன்பதாம் மண்டலப் பாடல்கள், பல இருடிகளாற் பாடப்பட்டவை அப்பாடல்கள் முழுமையும் சோம இரசத்தைக் கடவுளாகத் துதிக்கின்றன. ஒன்பதாம் மண்டலத்துக்கும் பத்தாம் மண்டலத்துக்கும் இடையில், வாலகில்லியரின் பாடல்களாகிய பதினொரு பதிகங்கள் காணப் படுகின்றன. பத்தாம் மண்டலப் பாடல்கள் பத்து இருடிகளால் செய்யப் பட்டவை. இப்பாடல்களின் நடை, பொருள்களைக் கொண்டு இவை பிற் காலத்தன என வேத ஆராய்ச்சியாளர் கூறியிருக்கின்றனர். இருக்குவேதத்தினின்றும் பல பாடல்களை எடுத்தும், அவைகளோடு பிற பாடல்களைச் சேர்த்தும் பின்னும் இரு வேதங்கள் செய்யப் பட்டன. அவை யசுர், சாமம் எனப்படும். யாகக் கிரியைகளிற் படிக்கும் பாடல்கள் அடங்கிய தொகுதி யசுர் எனப்பட்டது. யசுர் வேதத்திற் காணப்படும் பாடல்களில் பாதிவரையில் இருக்குவேதத்தில் உள்ளன. சாமவேதத்தில் 1550 பதிகங்கள் வரையில் உள்ளன. இவைகளுட் பெரும்பாலான இருக்குவேதத்தின் ஒன்பதாவது பத்தாவது மண்டலங் களிலிருந்து எடுக்கப்பட்டவை. சாமவேதம் யாகங்களில் இசையோடு பாடப்படும் பாடல்கள் அடங்கிய பகுதி. பாடல்களுக்கு நாலு அடிகள் உண்டு; சில சமயங்களில் மூன்று அல்லது ஐந்து அடிகளும் காணப்படுகின்றன. ஒவ்வொரு அடிக்கும் எட்டு, பதினொன்று அல்லது பன்னிரண்டு அசைகள் உண்டு. அடிகள் பெரும் பாலும் ஒரே வகையாகவுள்ளன; சில சமயங்களில் நீளமாகவும் காணப்படு கின்றன. இருக்குவேத பாடல்கள் செய்யப்பட்ட மொழி, மிகப் பழமை யுடையது. அம்மொழியின் வளர்ச்சியாகிய பிற்கால இலக்கிய மொழிக்குப் பாணினி முனிவர் கி.மு. 4ஆம் நூற்றாண்டில் இலக்கணஞ் செய்தார். அதர்வண வேதம் நாலாவதாக உள்ளது. இதில் பில்லி சூனியம் போன்ற மந்திர வித்தைகள் கூறப்படுகின்றன. இதை வேதங்களுட் சேர்க்கலாமா, விடலாமா என்னும் கருத்து நீண்டகாலம் இருந்து வந்தது. ஆகவே சில இடங்களில் நான்கு வேதங்கள் என்றும் சில இடங்களில் மூன்று வேதங்கள் என்றும் கூறப்பட்டிருத்தலைக் காணலாம். மனுஸ் மிருதி மூன்று வேதங்களைப் பற்றிக் கூறுகின்றது. வேதங்களிற் கூறப்படும் கடவுளர் இருக்கு வேதத்திற் சொல்லப்படும் கடவுளர், இயற்கையின் உருவகங்களாவர். இறந்தவர் வணக்கமே இயற்கை வணக்கமாக மாறி யுள்ளதென்பது பல்லோர் கருத்து1. இராமாயணத்தின் சிக்கல்கள் (Riddles in Ramayana) என்னும் நூலில், ஆரியரின் தெய்வங்கள் அவர்களின் இறந்த முன்னோர்கள் என வைத்தியா என்னும் அறிஞர் கூறியுள்ளார். வேத பாடல்கள், சோமச்சாறு, நெய், மாமிசம் முதலியவைகளை நெருப்பில் பலியாக இட்டு யாகஞ் செய்யும்போது படித்தற்குரியன. வேதங்களிற் கூறப்படும் தேவர்கள், தயஸ், வருணன், மித்திரன், ஆதித்தர், சூரியன், சாவித்தர், பூசன், விஷ்ணு, அஸ்வினிகள், உசாக்கள், இரதி, இந்திரன், உருத்திரன், மருத்துவர், வாயு, அல்லது வாதா, பிருதுவி, அக்கினி, பிரகஸ்பதி, சோமன், சிந்து ஆறு, விபாஸ் ஆறு, சுதுட்ரி (Sutlej) ஆறு, சரஸ்வதி (ஆறு) முதலியோராவர். தேவுக்களும் முன்பு இறப்பவர்களா யிருந்தார்கள். சோம இரசத்தைப் பருகி அவர்கள் இறப்பை ஒழித்தார்கள். தெய்வங்கள், வடிவில் மனிதனைப் போன்றனவே. தீக்கடவுளின் நாக்கும் உறுப்புக்களும் நெருப்பின் சுவாலைகள். சிலர் போர்க்கடவுளர். இந்திரன், இவ்வகையினன். கடவுளர், குதிரை அல்லது வேறு விலங்குகள் பூட்டிய தேரில் வானத்தில் சவாரி செய்கிறார்கள். அவர்களுடைய உணவு, பால், நெய், இறைச்சி, தானியம் முதலியன. அவர்களுக்கு அவ்வுணவு பலிகள் மூலம் கிடைக்கின்றன. அக்கினி அவர்களுக்கு அவைகளைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறான். சில சமயங் களில் அவர்கள் தமது தேர்களில் வந்து பலிகளை ஏற்கின்றனர். அவர்களின் இருப்பிடம் வானத்திலுள்ள சுவர்க்கம். அவர்களுக்கு ஆற்றல் மிக உண்டு. அவர்களை மகிழ்விப்பதால் அவர்கள் மக்களுக்கு நேரும் இடையூறு களைப் போக்குகின்றனர். உலகிலுள்ள எல்லா உயிர்களின் மீதும் அவர்கள் அதிகாரம் செலுத்துகின்றனர். வேதம் என்னும் பெயர் ஆரிய மக்கள் தம்முன்னோர் கடவுளரைத் துதித்துப் பாடிய பாடல் களுக்கு வேதம் எனப் பெயரிட்டார்கள். வேதபாடல்கள் அறிவு வளர்ச்சிக் காகப் பாடப்பட்டனவல்ல. கடவுளின் மறைவான பெயர்களைக் கூறும் மந்திரங்களாகச் செய்யப்பட்டன. மந்திரம் என்பதற்கு மறைத்துச் சொல்லப் படுவது என்று பொருள். வேதம் என்பதற்கு அடி, `வித்’ எனப்படுகின்றது அது பொருந்துமாறில்லை. ஆரிய மக்கள் வருமுன்னரே இந்திய நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களுக்கு மறையிருந்தது. மறை இருவகை; கடவுளின் இரகசியமான பெயரைச் சொல்வதாகிய மந்திரம் ஒன்று; மற்றது குரு மாணாக்கர் முறையில் உபதேசிக்கப்படும் உண்மை ஞானங்கள். தமிழர் தமது தத்துவ ஞானங்களையும் சமயக் கருத்துக்களையும் நூலாகச் செய்யும் வழக் கில்லை. இதனை, “அந்நிலை மருங்கின் அறமுதலாகிய மும்முதற்பொருட்கும் உரிய என்ப” (தொல்.செய். 106) என்னும் தொல்காப்பியச் சூத்திரம் விளக்கு கின்றது. இதனால் தமிழரின் சமய சம்பந்தமான கருத்துக்கள் மறை, வேதம் எனப்பட்டன. வேதம் என்பதற்கும் மறை என்னும் பொருளேயாகும். வேதம் என்னும் சொல், மற்றைய ஆரிய மக்களின் மொழிகளிற் காணப்படாமையால், அது தமிழ்ச்சொல் என்பது நன்கு துணியப்படும். வேதம் என்னும் சொல்லுக்கு உண்மையான அடியைக் காணமாட்டாத ஆரிய மக்கள், அதற்கு அடி, `வித்’ எனக் கூறலாயினர். தமிழிலிருந்து வேதங்களிற் சென்று ஏறியுள்ள பல தமிழ்ச்சொற்கள் உள்ளன என்பதைக் கால்டுவெல், கிற்றெல் முதலிய ஆராய்ச்சி வல்லார் காட்டியுள்ளார்கள். “தமிழ்ச் சொற் பிறப்பு ஒப்பியல் அகராதி” என, நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் வெளியிட்டு வரும் நூலில், தமிழிலிருந்து வடமொழியில் சென்று வழங்கும் பல தமிழ்ச் சொற்களுக்குத் தப்பாக வடமொழி மூலங்கள் கூறப்பட்டிருத்தல் எடுத்துக்காட்டப்பட் டுள்ளது. இன்று தமிழில் வழக்கொழிந்த அரிய தமிழ்ச்சொற்கள் பலவற்றை மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளு முதலிய மொழிகள் காப்பாற்றி வைத்திருக்கின்றன அவ்வாறே ஆரிய மொழியும் வழக்கிறந்த பல தமிழ்ச் சொற்களைக் காப்பாற்றி வைத்திருக்கின்றது என நாம் துணிதல் கூடும். ஒரே பொருளைக் குறிக்கும் சொற்கள், அப்பொருளின் வெவ்வேறு இயல்புகளைக் குறிக்கும் சொல் மூலங்கள் வாயிலாகப் பிறந்து வழங்கின. அவற்றுட் சில தமிழில் வழக்கிறந்துபோக, மற்றவை சில வடமொழியிற் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பாய் என்னும் அடியாகப் பரி என்னும் சொல்லும், அசை என்னும் அடியாக அசுவம் என்னும் சொல்லும் பிறந்தன. அசுவம் என்னும் சொல் தமிழில் வழக்கிறந்தது. அது இன்று வடமொழியிற் காணப்படுதலின், அது வடமொழிச் சொல் என்று கருதப்படுகின்றது. இவ்வாறே வேதம் என்பது மறை என்னும் பொருளில் வழங்கிய தமிழ்ச் சொல் என்பது திண்ணம். இப் பெயரையே ஆரியர் தமது பாடல்களுக்கு இட்டு வழங்கினர். வேதங்களில் மறைத்தற்குரியது யாதும் இன்மையால், அப்பெயர் இடுகுறிப்பெயராக அவைகளுக்கு இடப்படலாயிற்று. தமிழர் தமது சமயத் தொடர்பாக வழங்கிய பெயர்களை, ஆரிய மக்களும் ஆண்டமையின் பிற்காலங்களில் பெரும் மயக்கம் உண்டாவதாயிற்று. மந்திரங்கள் மறை ஆதல் வரலாறு தொடர்பான உண்மை ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டு மாயின், நாம் உலகமக்களின் வரலாற்றை அறிய வேண்டும். எண்ணங்களே மொழியாக மாறுகின்றனவென்று நாம் எல்லோரும் அறிவோம். எண்ணங்களுக்கு ஆற்றல் உண்டு. ஒருவன் தும்மினால் அவனைப் பற்றி யாரோ நினைக்கிறார்கள் என்ற நம்பிக்கை, உலகமக்கள் எல்லோரிடையும் காணப்படுகின்றது. “வழுத்தினாள் தும்மினேனாக வழித்தழுதாள்-யாருள்ளித் தும்மினிரென்று” எனத் திருவள்ளுவனாரும் கூறுதல் காண்க. ஆப்பிரிக்காவிற் சில மக்கள் தமது உண்மைப் பெயரைப் பிறருக்கு வெளியிடுவதில்லை. உண்மைப்பெயரை உச்சரித்துப் பிறர் தமக்குத் தீங்கிழைக்க முடியுமென அவர்கள் நம்புகின்றார்கள். ஆகவே அவர்களின் உண்மையான பெயர், அவர்களின் கிட்டிய உறவினருக்கு மாத்திரம் தெரியும். தமக்குத் தீங்கு இழைக்கக்கூடிய விலங்கின் பெயரை அவர்கள் சொல்லார்கள். சொன்னால் அது வந்து உடனே தம்மைக் கொன்றுவிடும் என அவர்கள் நம்புகின்றார்கள். அவ்வாறு சொன்னமையால் அவ்விலங்கு வந்து அவர்களில் சிலரைக் கொன்று விட்டதென்னும் பழங்கதைகள் அவர்களிடையே உள்ளன. இராக்காலத்தில் `பாம்பு’ என்று சொல்லுதல் ஆகாது என, முதியவர்கள் குழந்தைகளுக்குக் கூறியதை நாம் கேட்டுள்ளோம். இறந்தவனின் பெயரைச் சொல்லுதல் ஆகாது என்னும் நம்பிக்கை சில மக்களிடையே இருந்து வருகின்றது; பெயரைச் சொன்னால் இறந்தவரின் ஆவி வந்து, தமக்குத் தொந்தரவு கொடுக்குமென்பது அவர்களின் நம்பிக்கை. இவ்வாறே தெய்வத்தின் உண்மையான பெயரைச் சொன்னால் தெய்வம் வந்துவிடும் என்னும் நம்பிக்கை மக்களிடையே இருந்து வந்தது. தெய்வங்களின் உண்மையான பெயர் சிலருக்கு மாத்திரம் தெரியும். யேகோவின் பெயரை கடவுளே மோசேய்க்குச் சொன்னார். அப் பெயர் மந்திரமாகப் பயன்பட்டது. அப்பெயரை யாரும் வெளிப்படையாகச் சொல்லுதல் கூடாதென்றும் சட்டம் இருந்தது. அவ்வாறு சொல்பவருக்குக் கடுந்தண்டனை விதிக்கப்பட்டது. எழுதுங்கால் அப்பெயர் வேறு வகையாக எழுதப் பட்டது. இன்று மூல மந்திரங்கள் என வழங்குவன, கடவுளர்களின் பெயர்களே. கடவுளரின் மறைவான பெயர்களும், அப் பெயர்கள் அடங்கிய பாடல்களும், மந்திரங்கள் அல்லது மறைகள் எனப் பட்டன. அவை குரு மாணாக்க முறையில் சொல்லிக் கொடுக்கப்பட்டு வந்தன. மறை, மந்திரம், வேதங்கள் என்னும் பெயர்கள் தோன்றுவதற்குக் காரணம் இங்கு விளக்கப் பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியில் இன்னபாடலுக்கு இன்ன ஆற்றல் உண்டு என்பதுபோன்ற கருத்துக்கள் உண்டாயிருந்தன. ஒருவன் யாது நிகழ வேண்டுமென விரும்பாமலே அவ்வகைப்பாடல் ஒன்றைச் சொன்னால், அது அப்பாடலுக்குரிய பயனைத் தப்பாமற் பயந்துவிடுமென்னும் கருத்து உண்டாயிருந்தது. “நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த-மறைமொழி தானே மந்திர மென்ப” (தொல்-செய்-178) என்பது தொல்காப்பியம். “சொல்லிய சொல்லின் பொருண்மை யாண்டும் பயக்கச் சொல்லும் ஆற்றல் உடையாராவார், ஆணையாற் கிளக்கப்பட்டுப் புறத்தார்க்குப் புலனாகாமற் சொல்லும் சொற்றொடர்கள் எல்லாம் மந்திரம் என்ப” என அதற்குப் பேராசிரி யர் உரை கூறியுள்ளார். இவ்வகைக் கருத்தே உலகின் மற்றைய இடங்களிலும் இருந்து வந்தது. நச்சுச்சொல், மங்கலச் சொல், அமுத எழுத்து, நச்செழுத்து, அறம்பாடுதல் போன்றவை முற்கால மந்திரங்களைப் பற்றிய கருத்துக்களின் நிழல்களேயாகும். தெய்வங்களை அழைப்பதற்காகச் சொல்லப்பட்ட பாடல்கள், மந்திரங்களாகக் கருதப்பட்டன. அப்பாடல்கள் தெய்வங்களைத் துதிக்கும் நோக்கமாகப் பாடப்பட்டனவல்ல. அவைகளை வரும்படி கட்டாயப்படுத் தும் பொருட்டே பாடப்பட்டன. இன்று வழங்கும் தோத்திரங்கள் தெய்வங் களை அழைக்கும் மந்திரங்களைப் பின்பற்றிச் செய்யப்பட்டவையாகும். இக்கருத்துப் பற்றியே ஆரிய வேதங்களிற் காணப்படும் பாடல்கள் `மந்திரம்‘ என்னும் பெயரைப் பெறலாயின. வேதங்கள் கடவுளாற் சொல்லப்பட்டன என்ற மயக்கம் ஆரியரின் சமயம், யாகம் செய்வது ஒன்றனையே குறிக்கோளாகக் கொண்டது. ஊன், தானியம், நெய், சோமச்சாறு முதலிய உணவுகளை யாகங்கள் வாயிலாகத் தேவர்களுக்குக் கொடுப்பதால், இம்மையில் தாம் விரும்பியவற்றைப் பெறுவார்கள் என்றும், மறுமையில் செம்மையுற் றிருப்பார்கள் என்றும் அவர்கள் நம்பினார்கள். இந் நம்பிக்கையினால் அரசரும் செல்வரும் யாகங்களைச் செய்தனர். பிராமணர் புரோகிதராக விருந்து யாகங்களை நடத்தி வைத்தனர். அதற்காக அவர்கள் மிக்க பொருளைத் தக்கணையாகப் பெற்றனர். தமக்கு மெய்வருத்தமின்றி எத்தொழிலினால் மதிப்பும் செல்வமும் கிடைக்கின்றனவோ, அத் தொழிலை நிலைப்படுத்தும் பொருட்டு அவர்கள் தாம் பயின்றுள்ள மந்திரங்கள் கடவுளாற் சொல்லப்பட்டன வென்றும், அம்மந்திரங்கள் செய்யப்பட்டுள்ள மொழி கடவுள் மொழி என்றும், அம்மொழியில் சொல்லப்படாதவைகளைக் கடவுளர் அறிந்து கொள்ளமாட்டார் என்றும் கூறி அரசர், பெருமக்கள், பொது மக்கள் எல்லோரையும் நம்பும் படி செய்தனர். முற்கால மக்கள் பொய்களி லிருந்து மெய்யைப் பிரித்து அறியும் ஆற்றல் இல்லாமல் இருந்தார்கள்; அது பற்றியே ஒருபோதும் நிகழமுடியாத புராணக் கதைகளை மெய்யென நம்பி வந்தார்கள். இராமர் பதினோராயிரம் ஆண்டு அரசு புரிந்தார். தசரதன் அறுபதினாயிரம் ஆண்டு உயிர் வாழ்ந்தார் என்னும் கதைகளை மக்கள் நம்பி வந்திருக்கிறார்கள். மெகஸ்தீனஸ், ஹெரதோதஸ் (Heradotus) போன்ற ஆசிரியர்களும் நம்பத் தகாதவற்றை உண்மையென நம்பினார்கள். இந்தியாவில் சிலருக்குக் காது நீளமாக இருக்கிறது. அவர்கள் காதைப் பாயாக விரித்துக்கொண்டு அதன்மீது படுத்து நித்திரை கொள்ளுகிறார்கள். சிலர் மூக்கினால் உணவு கொள்ளுகிறார்கள் என்பனபோன்ற கதைகளை மெகஸ்தீனஸ் எழுதியுள்ளார். வரலாற்றாசிரியர்கள், முற்கால மக்களின் மனப்பான்மை இவ்வாறிருந்ததென்றும், ஆகவே பழங்கதைகளில் உள்ள உண்மைகளைப் பொய்களிலிருந்து பிரித்தறிதல் வேண்டுமென்றும், அது மிக வில்லங்கமான செயலென்றும் கூறியுள்ளார்கள்.1 தேவார திருவாசகங்கள் சொல்வதால் வேதங்கள் கடவுள் வாக்காகுமா? தேவார திருவாசகம், திருவாய்மொழி முதலியவைகளிலும் பிற தமிழ் நூல்களிலும், வேதங்கள் கடவுளாலருளப்பட்டன என்று கூறப்படுதலின், அவை கடவுளாற் சொல்லப்பட்டனவாகு மெனப் பலர் வழக்கிடுகின்றனர். சமய குரவர்களும் பிறரும் சரித்திர ஆராய்ச்சியில் சென்றவர்க ளல்லர். வேள்விபுரியும் பிராமணர் தமக்கு மதிப்பை யுண்டாக்கி, அதனால் மிக்க பொருளைத் தானமாகப் பெற நினைந்து சூழ்ந்து கட்டிய கட்டுக் கதைகள் மக்களால் நம்பப்படலாயின. இவை மாத்திரமல்ல; புராணங்களிற் காணப்படுவன போன்ற பல கற்பனைக் கதைகளும் மக்களால் மெய்போல நம்பப்பட்டு வந்தன. கடவுளின் பெருமையைப் பாடியவர்கள், கடவுளின் பெருமையை விளக்கும் பொருட்டு வழங்கிய கற்பனைக் கதைகள் பலவற் றையுமே எடுத்து ஆண்டுள்ளார்கள். இதனை ஒப்பவே, அவர்கள் வேதங்கள் கடவுள் வாக்கென ஓரோரிடத்துக் கூறியமை வியப்பன்று. சிவன் தக்கணா மூர்த்தி வடிவில் இருந்து சனகாதி நால்வர்க்கு நான்மறையின் உட்பொருள் ஓதினார் எனத் தமிழ் நூல்கள் கூறுகின்றன. வடமொழி வேதங்கள், பற்பல முனிவர்களால் பற்பல காலங்கனில் பல சிறு தெய்வங்களைத் துதித்துப் பாடிய பாடல்களாகக் காணப்படுகின்றன. வேதங்கள் கடவுளாற் செய்யப் பட்டன என்று நாட்டமுயன்று வருவோர், அவ்வேத பாடல்களைக் கொண்டே அதனை நாட்டுதல் வேண்டும். ஒருவன் முயலுக்கு மூன்று கால்கள் எனக் கூறினால், அவனுக்கு ஒரு முயலை நேரில் காண்பித்து அதற்கு நான்கு கால்கள் என மெய்ப்பிப்பதே தகுந்த முறை. சாத்தன் முயலுக்கு மூன்றுகால் என்றான்; ஆதலால் முயல்களுக்கெல்லாம் கால்கள் மூன்றே எனச் சாதிப்பாரு முண்டோ? ஒவ்வொரு சமயத்தவரும், தத்தம் சமய நூல்கள் கடவுள் சம்பந்தமாக வெளிவந்தன வெனவே கூறுகின்றனர். சமய நூல்கள் மாத்திரமல்ல; மொழி களும் அம்மொழிகளுக்குரிய எழுத்துக்களும் கடவுளால் அருளிச் செய்யப் பட்டன என்று நம்பப்பட்டு வந்தன. தமிழ்நாட்டில் இருக்கு முதலிய வேதங்களல்லாத பிற வேதங்கள், செவிவழக்கில் இருந்தனவென்பது பின்வருபவைகளால் அறியக் கிடக்கின்றது. “நான்கு கூறாய் மறைந்த பொருளுடைமையான் நான்மறை யென்றார்; அவை தைத்திரியமும், பௌடிகமும், தலவராகமும், சாம வேதமுமாம். இனி இருக்கும், எசுவும், சாமமும் அதர்வணமும் என்பாரு முளர். அது பொருந்தாது” - நச்சினார்க்கினியர் “இருக்கு முதல் வேதம் பௌடிகம் எனப்படும்” “இரண்டாம் வேதம் தைத்திரிய மென்ப” “மூன்றாவது சாமம் கீதநடை சாரும்” “நான்காம் வேதம் அதர்வண மென்ப” - திவாகரம் “சாந்தோகா பௌழியா தைத்தியா சாமவேதியனே” (நாலாயிரப் பிரபந்தம் பெரிய திருமொழி). மொகஞ்சதரோப் புதைபொருள் ஆராய்ச்சி யினால் ஆரியருக்கு முற்பட்ட தமிழர்களுக்கிடையில் ஆலமரத்தைச் சிவன் கடவுளின் புனித மரமாகக்கொள்ளும் சமயக் கொள்கையுள்ளதெனக் தெரிகின்றது. ஆரியருக்கு முற்பட்ட காலந்தொட்டு வரும் சில சமயக் கருத்துக்களையே தமிழர் இறைவன் கல்லாலின் கீழ் இருந்து அருளிச் செய்த நான்மறை என நம்பிவந்தார்கள் ஆகலாம். தமிழர் முறையைப் பின்பற்றியே ஆரியர் தமது வேதங்களையும் நான்காக்கினர் எனக் கூறுதல் பிழையாகாது. ஆரியருக்கு வேதங்களை நான்காக வகுத்துக் கொடுத்து அவைகளுக்குப் பெயரிட்டவர் பரதர் (தமிழ்) வகுப்பினராகிய வியாசரே யாவர். மனு, திராவிட அரசன் எனப் புராணங்கள் கூறுகின்றன. கி.மு. முதல் நூற்றாண்டு வரையில், பிராமணர் ஒரு சட்ட நூலைச் செய்து அதற்கு மனு தரும சாத்திரம் எனப் பெயரிட்டனர். இவ்வாறு பொய்ப் பெயர்கள் புனைந்து நூல்களைக் கட்டினமையினாலேயே, தமிழ்நாட்டில் பெரு மயக்கம் நேர்ந்தது. தமிழருக்கு ஆரிய வேதங்கள் முதல் நூல்களாகுமா? இன்று, கிறிந்தவர்கள், மகமதியர் அல்லாத சிறுவர்களுக்குப் பள்ளிக் கூடங்களில் சைவ, வைணவர்களுக்குச் சமய முதல்நூல்கள் நான்கு வேதங்கள் என்றும், அவை இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கு வேதங்களென்றும், ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்கின்றனர். இருசாராரும் அவைகளைப் பெயரளவிலறிவார்களேயன்றி நூலளவில் அறியார்கள். ஆறுமுக நாவலரும் தமது சைவ வினாவிடையில், சைவ சமயத்தவர்களுக்கு முதல்நூல்கள் இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கு வேதங்கள் என்று கூறியுள்ளார். “வேதம் நித்தியனாகிய பரமசிவனாற் கூறப்பட்டமையினாலும், இறுதிக்காலத்துப் பரமசிவத்திலொடுங்கிப் படைப்புக்காலத்திற் றோன்றுமா தலானும் நித்தியமென உபசரித்துக் கூறப்பட்டது” - சிவஞானபாடியம் தமிழர், ஆரிய மக்களை மிலேச்சர் என்றே வழங்கினர். அவர்கள், ஆரியரையும் அவர்கள் நூல்களையும் ஏற்றுக்கொள்ளவில்லை. திவாகரத் தில் ஆரியருக்குப் பெயராக மிலேச்சர் என்னும் சொல் காணப்படுகின்றது. சமயகுரவர் காலங்களில் ஆரியர் தமிழர் போராட்டங்கள் நடந்துகொண் டிருந்தன. இவ்விரண்டு மக்களையும் சந்து செய்யும் பொருட்டே, சமயகுரவர். “ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்” “செந்தமிழோடு ஆரியனைச் சீரியானை” “ஆரியந் தமிழோடிசை யானவன்” என்பன போன்ற வாக்கியங்களைக் கூறுவராயினர். “ஆரியப் புத்தகப் பேய் கொண்டு புலம்பிற்று” என நக்கீரர் கோபப்பிரசாதத்தில் கூறியிருத்தலும் காண்க. இவை போன்ற பல காரணங்களால் தென்னாட்டவர், நான்மறை எனக் கொண்டவை வடமொழி வேதங்களல்ல எனவும் கருதப்படுகின்றன. பெய ரொற்றுமைகளால் யாதும் துணிய முடியாது. பழைய பெயர்களுடன் புதிதாக ஊர் பேர் அறியாதவர்களால் எழுதப்பட்ட நூல்கள் பல வெளி வந்துள்ளன. பேரிசைக் சூத்திரம், பரத சேனாபதீயம் போன்றன சில எடுத்துக்காட்டுக்களாகும். “மறைகள் ஈசன் சொல்” - அருணந்தி சிவம் “சாத்திரமாவது வேதமன்றோ வதுதான் சுயம்பு” - நீலகேசி வேதங்கள் கடவுளாற் செய்யப்பட்டன என்று நம்பி வந்தமை யினால் அவர்கள் அவ்வாறு கூறுவாராயினர். வேதங்களை அவர்கள் பார்த்திருப் பின் அவ்வாறு ஒருபோதும் கூற உடன்பட்டிருக்க மாட்டார்கள். வேதங்கள் சைவ வைணவ சமயங்களுக்கு மாறானவை. சைவ வைணவ சமயங்கள் ஆகமங்களைப் பிரமாணமாகக்கொள்ளுகின்றன. வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேற்றுமை வடக்குக்கும் தெற்குக்கும் உள்ளது போன்றது என்று ஆராய்ச்சியாளர் நன்கு ஆராய்ந்து கூறியுள்ளார்கள்.1 வேத பாடல்கள் சில வேத பாடல்கள் சிலவற்றின் மொழிபெயர்ப்பை இங்குத் தருகின் றோம். அவைகளை நோக்கினால் தமிழர் சமயத்துக்கும் வேதங்களுக்கும் யாதும் தொடர்பில்லையென்று நன்கு விளங்கும். (1) சோம இரசமே! இந்திரன் அருந்துதற் பொருட்டுப் பிழிந்தெடுக்கப் பட்ட நீ, மிக இன்சுவையோடு கூடியதும், மிகக் களிப்பைக் கொடுப்பதுமாகிய துளிகளாய் ஒழுகி நிறைவாயாக. - சாமவேதம் பவமானகாண்டம் (2) இந்திரனே! சோம இரசம் பிழிந்த எனது நண்பர்களாகிய அம்மனிதர்கள் மிகப்பற்றுடையவர்களாய்ப் பசுவைப்போல உன்னையே சிறப்பாகப் பார்க்கிறார்கள். (3) இந்திரன் கத்துருவ இருடியாற் பிழியப்பட்ட சோம இரசத்தைப் பருகினான்; பருகிய பின்னர் கத்திரவாகு என்னும் அரசனைக் கொன்றான். அதனால் இந்திரனுடைய வீரத்தன்மை புலப்பட்டது. (4) சோம இரசமே! மிகுந்த இன்சுவையோடு கூடிய நீ, ஆராதிக்கின்ற வேள்வியாகிய இடத்தைப் பற்றி விளங்குவதாய், மருத்துக்களோடு கூடிய இந்திரன் பொருட்டுக் காலத்தில் நிறைவாயாக. - சாமவேதம் - ஐந்திரகாண்டம் வேதபாடல்கள் என்பன இவ்வாறே இந்திரன், வருணன், சோமன், மருத்துவர் போன்ற பல தெய்வங்களைத் துதிக்கின்றன. இவ்வகைப் பாடல்களைக் கடவுள் செய்தார் எனக் கூறுதல் கடவுளை இழித்து உரைப்ப தாக முடியுமன்றோ? வேதபாடல்கள் எவ்வாறு பயன்படத்தக்கன எகிப்திலே பல பழைய சமாதிகளும் கட்டடங்களும் அழிந்துகிடக் கின்றன. மொகஞ்சதரோ அரப்பா என்னும் இடங்களில் பண்டைக் காலத்தியப் பழம்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவைகளைக் கொண்டு அக்கால மக்களின் வாழ்க்கை, நாகரிகம் ஆகியன அறியப்படுகின்றன. அவைகளை ஒப்ப, வேதங்களும், பழைய பொருள் ஆராய்ச்சிக்குப் பயன்படுமேயன்றிச் சமய நூலாகக் கொள்வதற்குச் சிறிதும் பயன்படாவென்க. அவைகளைச் சமய நூலாகக் கொள்வது எவ்வாறிருக்குமெனில், இன்று உருக்கினால் செய்து பயன்படுத்தப்படும் செவ்விய கூறிய ஆயுதங்களைக் கைவிட்டுப், பிடி இறுக்காதனவும், கரடுமுரடான கற்களாற் செய்யப்பட்டனவுமாகிய, பழைய கற்கால மக்கள் பயன்படுத்திய ஆயுதங்களைப் பயன்படுத்த முயன்றது போலவும், இன்று வழங்கும் சில்லுள்ள வண்டிகளையும், நீராவி, மின்சாரங் களால் இயக்கப்படும் வண்டிகளையும் கைவிட்டுச், சில்லில்லாத சறுக்கி வண்டிகளைப் பயன்படுத்த எண்ணியது போலவும் ஆகும். இவ்வுண்மையை அறிந்துகொள்ளமாட்டாத ஒருசிலர், வேதங் களே தமக்கு முதல் நூலெனக் கொள்வதாலும், தாம் அவ்வேத பாடல்களைச் செய்தவரின் மரபிலுள்ளவர்கள் எனக் கூறிக்கொள்வதாலும் தமக்கு உயர்வுண்டாகின்றது எனக் கருதிவருகின்றனர். இவ்வாறு கொள்ளும் ஒரு கூட்டத்தினருக்குப் பெருமை கொடுத்து அவர்களே சமயத்தைத் தாங்கி வருகிறார்கள் என நம்பியவரும் நம்மவர் செயல் மிக வியப்பு உடையதே! வேதங்களில் கூறப்படும் பொருள்கள் எவை என்பதை இனிச் சிறிது ஆராய்வோம். யாகங்கள் யாகம் என்பது தெய்வங்களுக்கு உணவு கொடுத்தல். உணவு நெருப்பில் இடப்பட்டது. நெருப்பு அக்கினி என்னும் தெய்வமாகக் கொள்ளப்பட்டது. அது தன்னிடத்தில் இடப்பட்ட உணவுகளை ஏற்றுத், தேவர்களிடம் சேர்ப்பிக்கிறது என ஆரிய மக்கள் நம்பிவந்தார்கள். அக்கினியைத் துதித்துப் பாடப்பட்ட பல பாடல்கள், வேதங்களில் காணப்படு கின்றன. யாகத்தில் மந்திரங்களை ஓதித் தேவதையே அழைப்பவர் ஹோதா என்றும், பாட்டுக்களைப் பாடிக்கொண்டு சோமரசத்தைப் பலிசெலுத்துகின்ற வர் உத்காதா என்றும், யாகக்கிரியைகளைச் செய்பவர் அத்வார்யு என்றும், பெயர் பெறுவர். தலைமைப் புரோகிதராகிய பிரமா, யாகத்துக்கு இடையூறு நேராமல் தென்திசையில் இருந்து காவல் செய்வார். தெற்குத் திசை இயமனின் திசையாதலின், அங்கு நின்றும் துட்ட தேவதைகள் தோன்றி மக்களுக்குப் பயம் உண்டாக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. யாகங்களிற் பலவகை உண்டு. சோமயாகம், நரமேதம் (நரபலி) குதிரையாகம், பசுயாகம், ஆட்டுக்கடா யாகம் என்பன அவற்றுட் சில. தக்கனுடைய வேள்வியில் ஆட்டுக்கடாக்கள் வெட்டப் பட்டன என்று புராணங்கள் கூறும். “தக்கன் வேள்வித் தகர் தின்று” எனத் திருவாசகத்தில் வருதல் காண்க. யாகங்கள் வாயிலாகத் தேவர்களுக்கு அவர்கள் விரும்பும் உணவுகளையும், மதுவகைகளையும் கொடுத்தால், அவர்கள் அவ்வாறு செய்கின்றவர்களுக்குச் செல்வங்களையும், பிற இம்மைப்பயன்களையும் கொடுப்பார்கள் என அக்கால ஆரிய மக்கள் நம்பி யிருந்தார்கள். யாகஞ் செய்வதே அக்கால மதத்தின் முடிவான கொள்கை. இதற்குமேல் மனிதன் இம்மையில் சமய சம்பந்தமாகச் செய்யக்கூடியது எதுவும் இருக்கவில்லை. யாகங்களில் கள்ளும் ஊனும் புசிக்கப்பட்டன. இதனைக் கைவல்லிய நவநீதமுடையாரும் “கள்ளுமூனும் விரும்பினால், நீ மகங்கள்செய்” என வேதங்கள் விதித்திருக்கின்றன எனக் கூறியுள்ளார். சோமயாகம் 1சோமம் என்பது ஒருவகைக் கொடி. அது இந்தியாவிலும் பாரசீகத்திலும் பெரும்பாலும் மலைகளில் படர்வது. சோமக்கொடிகளை இரு கற்களினிடையே வைத்து நசுக்கிப் பிழிந்த சாற்றைப் பாலிற் கலந்து புளிக்கவைத்தபோது, அது மிகவும் வெறியைக் கொடுக்கக்கூடியதா யிருந்தது. சோமச்சாற்றைக் குடித்த கடவுளர் அதன் வேகத்தால் செயற்கரும் செயல்களைச் செய்யும் ஆற்றலைப் பெற்றார்கள் என்று பழைய ஆரிய மக்கள் நம்பி வந்தார்கள். அவர்கள் சோமச்சாற்றைத் தெய்வமாகவும் வணங்குவாராயினர். இருக்கு வேதத்தின் ஒரு மண்டலத்திலுள்ள பாடல்கள் முழுமையும், சோமச்சாற்றை வழுத்திப் பாடப்பட்டுள்ளன. இன்னும் வேதத்தின் மற்றைய இடங்களிலும், இச்சோமச்சாறு துதிக்கப்படுகின்றது. இது மிகவும் சிறுபிள்ளைத் தனமான செயல் என்பதை உணர்ந்த பிற்காலத்தார் அவை “சோமன்” எனப்பட்ட சந்திரனைக் குறித்துப் பாடப்பட்டனவெனக் கூறுவாராயினர். இது சிறிதும் பொருத்த மற்றதென வேத பண்டிதர்கள் கூறி யுள்ளார்கள். இன்று கள்ளை ஒழிக்க வேண்டு மென மக்கள் உணருகின்றார்கள். அதோடு கள் குடித்தல் கீழ் மக்களின் செயலென்றும் கருதப்படுகின்றது. அவ்வகையான சோமக் கள்ளைத் துதிக்கும் பாடல்களைக் கடவுள் செய்தார் எனக் கூற எவரும் உடன்படுவார்களா? அப்பாடல்கள்தான் தமது சமயத் துக்கு அடிப்படை எனக் கூறும் ஒரு கூட்டத்தினரைத் தமது சமயக் குருமார் எனக் கொள்ளும் மக்கள், பைத்தியக்காரர் போன்றவர்களாவர். இவ்வகை யான பாடல்களைச் செய்தவர்களே தமது கோத்திர முதல்வர் என அன்னோர் கூறுகின்றனரன்றோ? என்ன அறியாமை! “உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரா லெண்ணப் படவேண்டா தார்” - திருக்குறள் நரமேதம் நரமேதம் என்பது மனிதரைக் கொன்று செய்யப்படும் யாகம். இவ்வகையான யாகங்களைச் செய்யும் கிரியை முறைகளும், அப்போது பாடப்படும் பாடல்களும், சொல்லப்படும் மந்திரங்களும் வேதங்களிற் காணப்படுகின்றன. இது பிற்கால மக்களுக்கு மிகவும் காட்டு மிராண்டித் தனமாகத் தோன்றினமையால், அவர்கள் நரமேத யாகங்களில் மனிதன், யூபத்தில் (பலிமிருகத்தைக் கட்டிவைக்கும் தூண்) கட்டி வைக்கப்பட்டா னல்லாமல் கொல்லப்பட்டானல்லன் என்று பலவாறு எழுதுவாராயினர். இது சோமன் என்றால், சோமக்கள் அன்று; சந்திரன் எனக் கூறியவர்களின் கூற்றை ஒத்தது. மனிதனாயிருந்தாலென்ன, விலங்காயிருந்தாலென்ன, கொல்லப்பட்ட பலிகளின் இறைச்சி புரோகிதருக்குப் பகிர்ந்து அளிக்கப் பட்டது. ஆரியர் மாமிச உணவை விலக்கியிருந்த வரல்லர். மனுஸ்மிருதி ஆட்டுக்கடாக்களின் இறைச்சியைக் கொண்டு இறந்தவரின் “சிரார்த்தம்” செய்யும்படிக் கூறுகின்றது. தைத்திரியப் பிராமணத்தில், பிராமண சாதித் தெய்வத்துக்குப் பிராமணனையும், சத்திரிய சாதித் தெய்வத்துக்குச் சத்திரியனையும், மருத்துக்களுக்கு வைசியனையும், தவங்களுக்குத் தலைமையாயுள்ள தெய்வத்துக்குச் சூத்திரனையும், இருள் தெய்வத்துக்குத் திருடனையும், நரகத் தெய்வத்துக்கு வாத்தியக்காரனையும் பலியிட வேண்டுமெனக் கூறுகின்றது. இவ்வாறு நூற்றெழுபத்தெட்டுத் தெய்வங்களுக்கும் பலியிட வேண்டிய 178 வகை நர பலிகளைப் பற்றி அந்நூல் கூறியுள்ளது.1 “காளிக புராணம் என்னும் நூலில்,” விதி முறைப்படி செய்யப்படும் நரபலியினால் தேவி ஆயிரம் ஆண்டுகள் நிறைவு அடைகின்றாள். மனிதத் தசைப் பலியினால் வயிரவர் மூவாயிரம் ஆண்டுகள் உவந்து நிறைவு அடைகின்றார். நைவேத்தியம் செய்யப்பட்ட மனித இரத்தம் உடனே அமுதமாக மாறு கின்றது. ஆகவே தேவியை வணங்கும்போது தலையும் இறைச்சியும் நைவேத்தியம் செய்யப் படவேண்டும்”2 எனக் கூறப்பட்டுள்ளன. இந்தியாவிற்1 கற்காலம் என்னும் நூலில் கூறப்படுவது பின்வருமாறு “வேதகாலத்தில் நரபலி சர்வசாதாரணமானது. இதைக் குறித்த கிரியை முறைகள், யசுர் வேத சங்கிதைகள், யசுர்வேதப் பிராமணங்கள், சாங்காயன வைதான சூத்திரங்களிற் கூறப்பட்டுள்ளன. யாகஞ் செய்பவனின் மனைவி பலியிடப்பட்டவனை (சவத்தைச்) சேர்தல் (அணைத்தல்) ஆகிய இடக்கரான கிரியையும் நடத்தப்பட்டது. அப்பொழுது மந்திரங்கள் தொடர்பாகக் கூறப் பட்டன. சில சமயங்களில் இவ்விடக்கரான கிரியைக்கு அனுமதிக்கப் படுவதைப் பற்றி அரசனின் மனைவியருக்கிடையில் போட்டியிருந்ததென்று சொல்லப்படுகின்றது.” மக்கள் அறிவு வளர்ச்சிபெற்ற காலத்தில் மனிதனைப் பலியிடுவதற்குப் பதில் அவன், யூபத்தோடு கட்டிவைத்துப் பின் அவிழ்த்து விடப்பட்டான். நரபலி இடப்பட்ட காலத்தில் நரமாமிசம் புரோகிதரால் உண்ணப்பட்டதெனத் தெரிகின்றது. அசுவமேத யாகம் குதிரையைக் கொன்று செய்யும் யாகம் அசுவயாகம் எனப்பட்டது. மனிதனுக்குப் பதில் குதிரை பலியிடப்பட்டதாகத் தெரிகின்றது. யாகத்தில் மாத்திரமன்று, சாதாரணமாகக் குதிரை இறைச்சி ஆரிய மக்களால் உண்ணப்பட்டது. குதிரை யாகத்திலும் நர மேத யாகத்தில் செய்யப் பட்டது போன்ற இடக்கரான கிரியை செய்யப்பட்டது. விதவா விவாகத்தில் சொல்லப் படும் `உதிர்ஷ்வ ஆரி (Udershava ari) என்னும் மந்திரம் பிணச் சடங்குகளிற் சொல்லப்படுகின்றது. அது இடக்கரான கிரியையின் பின்பு, குதிரையோடு படுத்திருக்கும் அரசியை, அவளுக்காகக் காத்து நிற்கும் அரசனை அடையும்படிச் சொல்லப்படும் மந்திரமாகப் பயன் படுத்தப்பட்டது.2 மனிதனுக்குப் பதில் குதிரையும் குதிரைக்குப் பதில், எருமை அல்லது பசுவும், பசுவுக்குப் பதில் ஆடும், பின்பு விலங்குகளுக்குப் பதில் பலகாரங் களும் பலியாகக் கொடுக்கப்படலாயின. வேதம் என்பது இவ்வகையான யாகங்களுக்காக மாத்திரம் எழுந்த நூலேயாகும். வேத கால மக்கள் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம் சில பிராமணர், புரோகிதர், குருமார்களுக்கு அதிக நிலங்கள் இருந் தன. இருடிகள் பாடல்களைச் செய்தார்கள். அவர்கள் அதற்குக் கைம்மாறாகப் பொன்னாற் செய்த பூக்கள், கழுதைகள், கம்பளி ஆடு, எருது, மூங்கில், பதனிடப்பட்ட தோல்கள், அடிமைப்பெண்கள், முத்தினால் அலங்கரிக்கப் பட்ட குதிரைகள், தேர்கள், வீடுகள் முதலியவற்றைப் பெற்றார்கள். போர் செய்யும் வகுப்பினரால் யுத்தம் செய்யப்பட்டது; இருடிகளும், பிராமணரும் படைகளின் பின் போர்க்களத்திற்குச் சென்று போரில் பங்கு பற்றினார்கள். போர்க்கடவுளாகிய இந்திரனை வணங்குவோர் வெற்றியை வேண்டி, அவனுக்குச் சோமக்கள்ளையும், எருமை மாட்டு இறைச்சியை யும் படைத்தார்கள். போரில் தோற்றவர்களுக்குக் கொடிய தண்டனை விதிக்கப்பட்டது. இந்திரன் விருத்திரனைத் தோற்கடித்து அவனுடைய விதையை அறுத்து விட்டான். அவர்கள் தருணம் வாய்த்தபோது பகைவருடைய விதைகளை அறுத்துவிட்டார்கள். மக்கள் சாதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தார்கள். மணத்தைப் பற்றிய கட்டுப்பாடுகள் இருக்கவில்லை. ஒரு பெண் பிராமணரல்லாத பத்துக் கணவரை முன்வைத்திருந்தபோதிலும், ஒரு பிராமணன் அவள் கையைப் பிடிப்பானாயின், அவள் அவனுடைய மனைவியாவாள். பிராமணப் பெண்கள் மற்றவர்களோடு இருந்தபோதும், குற்றமடைந்தவர்களாகக் கருதப் படமாட்டார்கள். அவர்கள் மறுபடியும் அவர்களின் கணவரிடம் சேர்க்கப்பட லாம். பிராமணரின் மனைவியரை வீட்டுக்குள் பூட்டி வைத்திருந்தவர்கள் மீது திட்டிக்கூறும் மொழிகள் கூறப்பட்டன. பிராமணர், தாம் மனித தெய்வங்கள் எனக் கூறினார்கள். அவர் களுக்குத் தீங்கிழைத்தவர்கள் மேலேயிருக்கும் கடவுளரால் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். தங்களை மதியாதவர்களைப் பிராமணர் தண்டிக்கலாம். அப்பொழுது அவர்களுடைய நா, வில்லின் நாணாகின்றது; சத்தம் அம்பாகின்றது. அவர்கள் மந்திர வித்தையில் வல்லவர்களாயிருந் தார்கள். பிராமணனின் பசுவைப் பிராமணரல்லாதார் உண்ணுதல் ஆகாது. அப்படிச் செய்தால் பொல்லாத பாவம் சூழும். அவன் மீது உமிழ்ந்தவன் இரத்த ஆற்றில் இருந்து மயிரைத் தின்பான். அரசர் திரவியங்களைப் பிராமணருக்குத் தானமாகக் கொடுத்தார்கள். இரட்டைக் கன்றுகள் ஈன்ற பசு, பிராமணனுக்குக் கொடுக்கப்பட வேண்டும். மக்களின் மது வகைகள் சோமமும், சுராவும், சோமக் கொடி, கற்களால் நசுக்கி அரைக்கப்பட்டுக் கம்பளி ஆடையிலிட்டுப் பிழிந்து பாலிற் கரைத்துக் குடிக்கப்பட்டது. சோமம் இனிப்பானதென்றும், உண்டவர்களை நன்றாகப் பேசச் செய்யும் எனவும்படுகின்றது. வால் கோதுமை அல்லது அரிசியி லிருந்து இறக்கப்பட்ட சுரா, வாலையினால் வடிக்கப்பட்டது. விதவைகளை மறுமணஞ் செய்தார்கள். விதவைகள் கணவனின் சகோதரனைச் சேருதல் குற்றமாகக் கருதப்படவில்லை. யுத்தத்தில் பெண்கள் வெற்றிப் பொருளாகக் கருதப்பட்டார்கள். பெண்களின் மனம் புலியின் மனத்துக்குச் சமமானது. ஆண்கள் பெண்களோடு போர் செய்தல் தகுதி யில்லாத செயலென்று இருடிகள் கருதவில்லை. குருமார் தலையில் ஒருபிடி மயிர்விட்டுத் தலையைச் சிரைத்தார்கள். முனிவர்கள் தலைமயிரை வளரவிட்டிருந்தார்கள். அவர்கள் அழுக்கு நிறமான ஆடையை உடுத்தி அலைந்து திரிந்தார்கள். அவர்கள் கடவுளாகக் கருதப்பட்டார்கள். இல்லறத்தானுடைய தினசரி வாழ்க்கை மந்திர வித்தைகள் பலவற்றோடு தொடர்புடையதாயிருந்தது. ஒவ்வொரு வியாதியும் ஒவ்வொரு வகைக் கெட்ட தேவதையால் உண்டாகின்றது; அல்லது பகைவரின் சூனிய வித்தையால் உண்டாகின்றதென்று கருதப்பட்டது. இந்திரன் ஒரு தாயத்து அணிந்திருந்தான். வருணனும் அவ்வாறு ஒன்று அணிந்திருந்தான். மந்திரங்களினால் அரசன் சிங்கத்தின் தன்மை அடைந்து மக்களை விழுங்கத்தக்கவர்களாகின்றான். சோமயாகத்தில் விலங்குகள் கொல்லப்பட்டன. விலங்கு கட்டி வைத்துக் கொல்லப்பட்டது. அதன் வெளியீரல் தெய்வங்களுக்குக் கொடுக் கப்பட்டது. பலி கொடுக்கும்போது தெய்வங்களின் இரகசியமான பெயர் உச்சரிக்கப்பட்டது. அல்லாவிடில் பலி அவர்களை அடையாது. மந்திரகால இறுதிக்குமுன் கிரியைகள் முற்றாக வளர்ச்சியடைந் திருந்தன. சிறந்த பெரிய கிரியை சோம யாகமாகும். சோமப்பூண்டு சோம அரசன் எனப்பட்டது. அப்பூண்டு யாகசாலைக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கே அதற்குப் பல துதிகள் பாடப்பட்டன. ஏழு புரோகிதர்கள் தண்ணீர் தெளித்தார்கள். மாட்டுத் தோலின் மீது வைக்கப்பட்ட இரண்டு கற்களி னிடையே வைத்து அது நசுக்கப்பட்டது; அல்லது உரலில் இட்டு உலக்கை யால் இடிக்கப்பட்டது. பின்பு ஒரு தட்டில் வைத்துப் பிழிந்து சாறு எடுக்கப் பட்டது. சாறு கம்பளி ஆடையால் வடிக்கப் பட்டது. அதர்வண புரோகிதன் அதன் மீது பாலை ஊற்றி பத்து விரல் களால் கலக்கி ஆற்றினான். அது மரச் சாடிகளுக்குள் விட்டுப் பலி பீடத்தில் வைக்கப்பட்டது. கடவுளுக்கு வைத்த பின், அது புரோகிதருக்குக் குடிக்கக் கொடுக்கப்பட்டது. சோமச்சாறு ஒரு நாளில் மூன்றுமுறை கொடுக்கப் பட்டது. அதனோடு மாவினாற்செய்த பலகாரமும் வைக்கப்பட்டது. சில சமயங்களில் சோமச் சாறு உணவோடு சேர்த்துச் சமைத்துப் படைக்கப்பட்டது. இந்திரன் அளவில்லாத சோமச் சாற்றைப் பருகிய பெரிய கடவுளாவன். பிறந்த தினத்திலேயே இந்திரனுக்கு அவன் தாய் அதனைப் பருகக் கொடுத்தாள். அவன் முப்பது மிடாக்கள் நிறைந்த இரசத்தை ஒரே தடவையில் பருகினான். சோமன் இருடிகளுக்குப் பாடல்களைப் பாடும் ஆற்றலைக் கொடுத்தான். சோம யாகத்தில் நடப்படும் யூபம் வன அரசன் எனப்பட்டது. அது தருப்பைப் புல்லின் மீது வைக்கப் பட்டது. அதற்கு ஆபரணங்களும் மாலைகளும் சூட்டப்பட்டன. பலவகை நிறங்களாலும் அது அலங்கரிக்கப்பட்டது. அது யாகத்தீக்குக் கிழக்கே நடப்பட்டது. பலி விலங்கு அதில் கயிற்றாற் கட்டப்பட்டது. விலங்கின் தலை, அரை, கால்கள் என்பன கட்டப்பட்டன. அதன் ஒன்பது வாயில்களையும் அடைத்துப் பிடித்து, அது சாகும்வரை இரகசிய உறுப்பின் மீது அடிக்கப் பட்டது. மிருகம், பட்டடையின்மீது வைத்துப் பக்குவமாக வெட்டப்பட்டது. வெட்டும்பொழுது ஒவ்வொரு உறுப்பின் பெயரும் சொல்லித் துதிக்கப் பட்டது. உறுப்புக்களின் மூட்டுக்கள் திறமையோடு பிரிக்கப்பட்டன. இறைச்சி சமைத்துத் தெய்வங்களுக்குப் படைக்கப்பட்டது; பின்பு வழிபடுவோர் அதனை உண்டார்கள். பிற்கால அசுவ மேத யாகங்கள் போலல்லாது, முற்காலக் குதிரையாகம் மிகவும் சாதாரணமாக இருந்தது. குதிரைக்கு முன்னால் புள்ளி யுள்ள ஆடு விடப்பட்டது. குதிரையும் பலிப் பொருள்களும் விலையுயர்ந்த போர்வையால் மூடப்பட்டன. ஆடும் குதிரையும் மூன்று முறை குண்டத்தைச் சுற்றிக்கொண்டு வரப்பட்டன. குருமார் யூபத்தையும் சமைக்கும் பாத்திரங் களையும் கொண்டு பின்னே சென்றார்கள், குதிரையைப் பலியிடும் இடத்தில் விட்டு அதற்குப் புல் கொடுக்கப்பட்டது. குதிரை கம்பத்தோடு கட்டிக்கொன்று, மற்ற மிருகங்களைப் போல உண்ணப்பட்டது. பலியிடப்பட்ட விலங்கு இறக்கவில்லை, கடவுளரிடம் சென்றது என்று கருதப்பட்டது. இந்திரன் பெரிய கடவுளாயிருந்தபோதிலும் விலிஸ்தெங்கா என்னும் ஓர் அசுரப்பெண், அவனைக் கடவுளர்களின் இடத்திலிருந்து தன்னிடத் துக்கு மந்திரத்தால் இழுத்தாள். பின்பு அவன் பெண்களினிடையில் பெண் வடிவிலும், ஆண்கள் இடையில் ஆண் வடிவிலும் இருந்தான். மற்றக் கடவுளர்களைப் போல, இந்திரன் குணங்களில் மாத்திர மல்லாமல், வடிவிலும் மனிதனைப் போலவே இருந்தான். சௌத்திராமணி என்னும் கிரியையில் அவன் வடிவம் செய்து வைக்கப்படுகின்றது. உருத்திரன் ஆரியருடைய புயற்கடவுள், பிற்காலத்தில் உருத்திரன் என்னும் பெயரைப் பெற்றது. உருத்திரன் பிற்காலத்தில் சிவனைக் குறிப்பதாகக் கொள்ளப்பட்டு, உருத்திர சிவன் என்னும் பெயரைப் பெறுவதாயிற்று. ஆரியர், இந்திய நாட்டை அடைந்தபின் பழங்குடிகள் வழிபட்ட தெய்வங்கள் பலவற்றைத் தமது கடவுளர்களோடு சேர்த்துக் கொள்வாராயினர். பழைய ஆரியக் கூட்டத்தினின்றும் பிரிந்து சென்று ஆங்காங்கு குடியேறியுள்ள மற்றைய ஆரிய மக்களுக்கு அறியப்படாதிருந்தனவும் இந்திய ஆரியரால் வழிபட்டனவுமாகிய கடவுளரை அவர்கள் இந்திய நாட்டினின்றும் பெற்றார்க ளாதலால் துணியப்படுகின்றது. அவ்வாறு பெற்ற கடவுளரில் சிவன் கடவுள் ஒருவர். சிவன் என்பதற்குச் சிவந்தவன் என்பது பொருள். சிவன் என்பதே சிவந்தவன் என மொழி பெயர்க்கப்பட்டு ஆரிய வேதங்களில் வழங்கப்படுவதாயிற்று. சிவனை ஒத்த கடவுளை மற்றைய ஆரிய மக்கள் அறியாதிருந்தனர். சிவன் என்பதற்கு இந்து ஐரோப்பிய ஆரிய மொழிகளில் உற்பத்தி காண முடியவில்லை. உருத்திரன் ஆரியரின் கடவுளல்லர் என, மேல் நாட்டுக் கீழ்நாட்டு ஆராய்ச்சி வல்லார் ஆராய்ந்து கூறியுள்ளார்கள். “வருணன், உருத்திரன், துவஷ்டா, அதிதி முதலிய கடவுளரைத் திராவிட மொழி வழங்கும் மக்களிடமிருந்து ஆரிய மக்கள் பெற்றுக் கொண்டனர். திராவிட மொழி, வேத மொழியைப் பெரிதும் மாற்ற மடையச் செய்ததெனக் காட்டியுள்ளோம். இதனை ஒப்பதேவ ஆதிக்குடிகள் வழிபட்ட கடவுளரின் பெயர்கள், ஆரியச்சொல் வடிவங்களை அடைந்து வேதகாலத் தெய்வங்களோடு இடம் பெற்றன. அக் கடவுளரின் பெயர்களுக்கு நேரானவை இந்து செர்மனிய மொழிகளில் காணப்படவில்லை; அவ்வகையான பெயர்கள் இந்தியப் பெயர்கள் என்றே கொள்ளுதல் தகுதியுடையது.” இவ்வாறு மந்திரகாலம் என்னும் நூலிற் காணப்படுகின்றது.1 மேற்கண்ட நூலில் உருத்திரனைக் குறித்துக் கூறியிருப்பது வருமாறு. “உருத்திரன் திராவிட மொழி வழங்கும் மக்களின் இன்னொரு கடவுளாகத் தெரிகின்றது. அவர் மலைத் தெய்வமாகக் காணப்படுகிறார். அவருக்குப் பின்னிய சடை உண்டு; நிறம் கபிலம் (மங்கிய சிவப்பு); உடை தோல்;..... இவ்வகையான கடவுள் இமயமலை, அல்லது விந்தியமலை இடங்களில் வாழ்ந்த மக்கள் இடையேதான், தோன்றி வளர்ச்சியடைந் திருத்தல் கூடும்; சமவெளிகளில் வாழ்ந்த இருடிகளிடமன்று. உருத்திரன் என்பதற்குச் சிவந்தவன் என்பது பொருள். இது சிவன் என்னும் தமிழ்ப் பெயரின் மொழி பெயர்ப்பாகக் காணப்படுகின்றது. துவஷ்டா கைத் தொழிலாளரின் கடவுள். இக் கடவுளின் இடத்தை இந்திரன் எடுத்துள் ளான். அதிதி என்னும் சொல்லின் உற்பத்தி முற்காலத் தற்கால ஆராய்ச்சியாளருக்கு மயக்கத்தை உண்டு பண்ணிற்று. அப் பெயரின் மூலம், கண்டு பிடிக்கப்பட வில்லை. விஷ்ணு என்னும் பெயர் விண் என்னும் தமிழ் அடியாகப் பிறந்த தாகலாம். சிவன், விஷ்ணு, அம்மன், என்போர் இன்று இந்திய மக்களின் சிறந்த கடவுளராவர். இருடிகளுக்கு இவர்கள் சிறு தெய்வங்களாகக் காணப் பட்டனர்; இருடிகள் விருப்பக் குறைவோடு இவர்களைத் தமது தெய்வங் களோடு சேர்த்தார்கள்; ஆனால் மக்கள் அக்கடவுளரை வணங்கினர்; அதனால் அவை பெரிய தெய்வங்களாயின. ஆரியரின் வருணன் என்னும் கடவுட்பெயர், விரி என்னும் அடி யாகப் பிறந்ததெனக் கூறுவர் கோவின் என்னும் ஆசிரியர்.1 பசு இறைச்சி குதிரை இறைச்சிகள் ஆரியருக்கு விலக்கு இல்லை வேதகால ஆரியர் இறைச்சி வகைகளைத் தாராளமாகப் புசித் தார்கள். அவர்களின் உணவில் இறைச்சி வகையே முதன்மையாயிருந்த தென்பதைப் பற்றி ஒருவரும் ஆச்சரியமுற வேண்டியதில்லை. வெள்ளாடு, செம்மறியாடு, பசுக்கள், எருமைகள் யாகங்களிற் கொல்லப்பட்டன. அக்கினி, பசுக்களைப் புசிப்பவன் என்று வேதம் கூறுகின்றது. பாரத்துவாசர் தமக்கு உணவு வேண்டு மென்று இந்திரனைத் துதித்தார். அவன் உணவில் பசு முதன்மையுடையது. முக்கியமான விருந்து வந்தால், பெரிய மாடு அல்லது பெரிய ஆட்டைக் கொல்லும்படி சதபதப் பிரமாணங் கூறுகின்றது. அரசன் அல்லது பெருமகன் ஒருவன் விருந்தாக வந்தால், பெரிய எருதை அல்லது மலட்டுப் பசுவைக் கொல்லவேண்டுமெனவும் அந்நூல் கூறியுள்ளது. இந்திரனுக்கு எருதுகள் பலியிடப்பட்டன. சமைக்கப்பட்ட மாட்டு இறைச்சியில் இந்திரனுக்கு மகிழ்ச்சி உண்டு. எருமைகளும் அவனுக்குப் பலியிடப்பட்டன. அவைகளின் இறைச்சியைச் சமைத்து இந்திரனுக்குப் படைத்தபின், வழிபடுவோர் அதனை உண்டனர். சில சமயங்களில் முந்நூறு எருமைகளுக்குமேல் பலியிடப்பட்டன. ஒருவர் இறந்தால் உடலைக் கொளுத்துவதன் முன் பசுவைக் கொன்று அதன் இறைச்சியால் அது மூடப் பட்டது. குதிரைகளும் யாகத்திற்குக் கொல்லப்பட்டன. அதன் இறைச்சியை வறுத்தும் அவித்தும் கடவுளுக்குப் படைத்தபின், அடியவர் அதனை உண்டு சோம இரசத்தையும் பருகினர். இறைச்சியை விற்பனை செய்யும் கடைகளும் இருந்தன. பாரதம், நாளொன்றுக்கு 2000 பசுக்களைக் கொன்று பலருக்கு விருந்து அளித்து வந்த இரந்தி தேவரைப் பற்றிக் கூறுகின்றது! புத்தர் தோன்றித் கொல்லாமையைக் கடியும் வரையில் ஊன் உணவு கொள்ளும் வழக்கு, வடநாட்டவர் எல்லோரிடையும் இருந்து வந்தது. வேதகால ஆரியர், மாட்டு மாமிசம் உண்ணுதல் இழிவு என்று கருதவில்லை. இருக்கு வேத காலத் தின் கடைப்பகுதியில் பசு, எருதுகளைப் பலியிடுவதைப் பற்றி வெறுப்பு உண்டாயிருந்தது. ஆரியர் இவ்வாறு செய்யும் யாகங்களுக்கு அசுரர் எதிராக இருந்து வந்தனர். அவர்கள் அவ்வகை யாகங்களை வலிமையால் தடை செய்ய முயன்று வந்தார்கள். யூபத்தில் மிருகங்கள் கட்டப்பட்டதும், அசுரர் அதனை நோக்கி வந்தார்கள். ஆரியர் யாகச்சாலையைச் சுற்றி ஒன்றன்பின் ஒன்றாக மதில்போல நெருப்பை வளர்த்து, அசுரரை அணுக முடியாமற் செய்தனர். இராவணனாதியோரும், ஆரிய முனிவர்கள் செய்யும் யாகங்களை அழித்து வந்தார்கள் என இராமாயணத்திற் படிக்கிறோம். கிருட்டிணர்கள் வேத காலத்தில் இந்திரனுக்குப் பகைவராகிய கிருட்டிணர்கள் இருந்தார்கள். கிருட்டிணர் என்பது ஒரு மக்கட் கூட்டத்தினருக்குப் பெயராக விருந்தது. இக் கூட்டத்தினரிடையே தேவகியின் புதல்வனான கண்ணன் தோன்றியிருத்தல் கூடும். கிருட்டிணர்களுக்குத் தலைவனான கிருட்டிணன் அம்சுமதி (யமுனை) ஆற்றங்கரையில் பத்தாயிரம் வீரருடன் இருந்தான் என்று இருக்கு வேதம் கூறுகின்றது. ஆரியருக்காக, இந்திரன் கிருட்டிண ராகிய பகைவரை அழித்தான். இந்திரன் 50,000 கிருட்டிணரைக் கொன்றான் என்று வேதம் கூறுகின்றது. கிருட்டிண இந்திரரின் போர்கள், வேதகாலத்தில் தமிழருக்கும் ஆரியருக்கும் நிகழ்ந்த போர்களைக் குறிப்பிடுகின்றன. தாசுக்கள் தாசுக்கள் ஆரியரின் விரோதிகள் என்றும், அவர்களுக்கும் ஆரியருக்கும் போர்கள் நிகழ்ந்தன வென்றும் வேதங்களைக் கொண்டு அறிகின்றோம். தாசுக்கள் கறுப்பு நிறத்தினர் எனப்படுகின்றனர். இவர்கள் ஆரியரின் கடவுளரை வழிபட்டிலர். தாசுக்கள் என ஆரியராற் கூறப்பட் டோர் இந்தியப் பூர்வ மக்களே என ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார்கள். தாசுக் கள் பட்டினங்களில் வாழ்ந்தார்கள். அவர்களுள் பல அரசர்கள் இருந்தார்கள். அவர்களிடத்தில் திரண்ட செல்வம் இருந்தது. பசுக்கள், குதிரைகள், தேர்கள் முதலியவை அவர்களின் செல்வங்கள். நூறு கதவுகளுள்ள நகர்களுள் வைத்துக் காக்கப்பட்டன. இந்திரன் அவைகளைக் கவர்ந்து, தன்னை வழிபடு வோராகிய ஆரியருக்குக் கொடுத்தான். தாசுக்கள் மிகவும் செல்வம் உடைய வர்களாகவும் சமவெளிகளிலும், மலைகளிலும் நிலம் உடையவர்களாகவும் இருந்தனர். அவர்கள் பொன் அணிகளை அணிந்தனர். அவர்களுக்குப் பல கோட்டைகள் இருந்தன. தாசுக்கள் பொன் வெள்ளி இரும்பு முதலியவை களாலமைத்த கோட்டைகளில் வாழ்ந்தார்கள். இந்திரன் தேவதாசர்களாகிய ஆரியருக்காகத் தாசுக்களின் நூறு கற்கோட்டைகளை அழித்தான். அக்கினி அவனுக்குத் துணையாகத் தாசுக்களின் பட்டினங்களை எரித்தான். ஆரியரிடமிருந்து கவர்ந்த மாடுகளை வைத்திருந்த மறியற் கூடங்களைப் பிரகஸ்பதி உடைத்தெறிந்தார். தாசுக்கள் போரில் தேர்களைப் பயன்படுத்தி னர். தாசுக்கள் ஆரியர் யாகங்களை அழித்து, ஆரியரின் தெய்வங்களுக்காக வைக்கப்பட்டிருந்த மதுவைப் பருகினார்கள். பாணியர் (Panis) பாணியர் என்னும் ஒரு வகுப்பினரைப் பற்றியும் வேதங்கள் கூறுகின் றன. பாணியர் என்போர் வணிகராகிய திராவிட மக்கள் எனப் படுகின்றனர். தாசுக்களை ஒப்ப, இவர்களும் ஆரியரின் பகைவராயிருந்தனர். பாணியர் எனப்பட்ட மக்களே மத்தியதரைக் கடலின் மேற்குக் கரை ஓரங்களிற் குடி யேறிப் பினீசியர் என்னும் பெயர் பெற்றனர் எனச் சில வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். பினீசியரின் எழுத்து மொகஞ்சதரோ எழுத்துக்களின் திரிபாகிய பிராமி எழுத்துக்களினின்றும் பிறந்தது என்று ஆராய்ச்சியாளர் கண்டுள்ளார்கள். பிராமணங்கள் வேதங்களிலுள்ள பாடல்கள் மந்திரங்கள் எனப்படும், மந்திரங் களாகிய பாடல்கள் செய்யப்பட்டதன் பின்பு, கிரியைகள் வளர்ந்தன. ஆகவே மந்திரங்கள் கிரியைகளுக்கு ஏற்ற முறையில் பல தொகுப்புகளாகத் தொடுக் கப்பட்டன. அத்தொகுப்புகளுக்குச் சங்கிதை என்று பெயர். பிராமணங்கள் என்பன கிரியை முறைகளை விளக்கி எழுதப்பட்ட வசன பாகங்கள். இவை களும் வேதங்களுட் சேர்க்கப்பட்டுள்ளன. ஆகவே வேதங்களில் மந்திரம் பிராமணம் என இரு பகுதிகள் உள்ளன. ஐரோப்பிய நாடுகளிற் சென்று குடியேறிய ஆரியர்களுக்கு வேதங்களும், மந்திரங்களும், பிராமணங்களும் இல்லை. இந்திய நாட்டுக்கு வந்த ஆரியருக்கு இவைகள் இருக்க வேண்டிய காரணம், அவர்கள் இந்தியாவில் வாழ்ந்த பூர்வ மக்களிடத்திற் காணப் பட்டன போன்றவற்றைத் தாமும் பின்பற்றிச் செய்து கொண்டமையினாலே யாகும். “நிலத்தியல்பா னீர்திரிந் தற்றாகும் மாந்தர்க் கினத்தியல்ப தாகு மறிவு (குறள். 452) பிராமணக்கிரியை முறைகள், திராவிட மக்களின் ஆகமக்கிரியை களைப் பின்பற்றிச் செய்யப்பட்டனவென்பது ஆராய்ச்சி வல்லார் கருத்து.1 1“ஆரியர் சுற்லெச் என்னும் ஆற்றைக் கடப்பதன் முன் அவர்களின் சமயம் பூர்வமகள் கொள்கைகளோடு கலக்கவில்லை என்பது உண்மையே. பிற்காலச் சம்கிதைகளையும் பிராமணங்களையும் குறித்து. அவ்வாறு கூற முடியாது.” ஜி.ஆர். ஹன்ரர். பிராமணங்களைப் பயின்ற சிலர், அரசருக்கும் செல்வருக்கும் புரோகிதராயிருந்து யாகங்களை நடத்தினர். வேதபாடல்களை நோக்கும் போது அவை யாகங்களுக்காகவே செய்யப்பட்டனவாகத் தெரிகின்றது. யாகங்களைப் புரோகிதராக இருந்து செய்யும் மக்களே வேதங்களைப் பயின் றனர்; பின்பு அத்தொழில் பரம்பரைத் தொழிலாக மாறியதால், அவர்கள் ஒரு சாதியாராகப் பெருகினர். அவர்களே பிராமணராவார். அவர்கள் மறு பிறப்பைப்பற்றி அறிந்திருக்கவில்லை. ஆகவே அதனை அடிப்படையாகக் கொண்ட தத்துவ அறிவும் அவருக்குத் தெரியாதிருந்தது.1 ஆரணியங்கள் பிராமணங்கள் தோன்றியபின் ஆரணியங்கள் தோன்றின. ஆரணி யங்கள் என்பவை, பிராமணர் காட்டில் வாசம் செய்யும்போது படிக்க வேண்டி யவை. பிராமணங்களில் காணப்படும் கிரியைகளும் இன்னொருவகையான கருத்துக் கொடுக்கும் பொருட்டு இவை தொடக்கத்தில் எழுந்தவையாகத் தெரிகின்றன. பிரிண்ட ஆரணியத்தில் காணப்படும் ஒன்றை இங்கு எடுத்துக் காட்டாகத் தருகின்றோம்.2 ஓம், விடியற்காலம் யாகக் குதிரையின் தலை; சூரியன் அதன் கண்; வாயு அதன் மூச்சு; அதன் வாய் எங்கும் நிறைந்த நெருப்பு; ஆண்டுகள் அதன் உடல்; வானம் முதுகு; வெளி வயிறு; பூமி பாதங்கள்; துருவங்கள் இடுப்புக்கள்; அதன் இடையேயுள்ளவை விலாக்கள்; பருவகாலங்கள் உள்-உறுப்புகள்; மாதமும் அதன் பக்கங்களும் மூட்டுக்கள்; இரவும் பகலும் கால்கள்; நட்சத்திரங்கள் எலும்புகள்; முகில்கள், தசை; பாலைவனங்கள் உணவு; ஆறுகள், குடர்; மலைகள், பித்தப்பையும் மூச்சுப்பையும்; பூண்டு களும் மரங்களும், மயிர்கள்; உதயமாகும் ஞாயிறு முன்பக்கம்; படும் ஞாயிறு பின்பக்கம்; அதன் கொட்டாவி மின்னல்; கனைப்பு இடி; மூத்திரம் மழை; சத்தம் பேச்சு; பகல் யாகப் பாத்திரம்போல் எழுந்து முன்னே நிற்கின்றது, அதன் பிறப்பிடம் கீழ்க்கடல்; இரா யாகபாத்திரம்; அதன் பிறப்பிடம் மேல் கடல்; இராப்பகல் என்னும் யாகப்பாத்திரங்கள் குதிரையைச் சூழ்ந்துள்ளன; பந்தயக் குதிரையைப் போல அது தேவரைக் கொண்டு செல்கின்றது; போர்க் குதிரையைப் போலக் கந்தருவரைக் கொண்டு போகிறது; வேகமான குதிரையைப் போல இராக்கதரைக் கொண்டு போகின்றது. சாதாரண குதிரையைப் போன்று மனிதரைக் கொண்டு செல்கின்றது. கடல் அதன் நண்பன். அது அதற்குப் பிறப்பிடம். பிராமணங்களில் கூறப்படும் கிரியைகளால் பயனில்லை எனக் கண்ட பிராமணர், ஆரணியங்கள் மூலம் பிராமணக் கிரியைகளுக்கு வேறு பொருள் கற்பிப்பாராயினர். இதனால் அவை பிராமணங்களுக்கு மாறுபட்டனவா யிருந்தன.1 ஆரணியங்கள் தோன்றிய பின்பு உபநிடதங்கள் எழுந்தன. இருக்கு வேத காலத்தில் காட்டில் சென்று தவஞ் செய்தலாகிய வழக்கு ஆரியருக்கிடையில் காணப்படவில்லையெனத் தத்தர் கூறுகின்றார். இவ் வழக்கம் ஆதிக்குடிகளிடத்திற் காணப்பட்டிருக்கலாம் அதனைப் பின் பற்றியே ஆரியப் பிராமணரும் முதுமைக் காலத்தில் காட்டில் சென்று தவஞ் செய்தாராகலாம். முதுமையில் தனிமையிலிருந்து தவஞ் செய்தல் தமிழர் வழக்கு எனத் தொல்காப்பியங் கூறுகின்றது. ஆரிய இருடிகள் காட்டிலிருந்து ஏதோ மந்திர வித்தை போன்றவைகளைப் புரிந்து அரசரையும் பொது மக்களையும் தமக்கு அஞ்சும்படி செய்தனர். இருடி, முனிவரைப் கண்டால் அரசரும் பிறரும் சாபங்களுக்கு அஞ்சி அவர்கள் வேண்டுவன புரிந்தார்கள் எனப் புராணங்கள் கூறுதல் காண்க. தென்னாட்டு முனிவர் வடநாட்டு முனிவர் போன்றவர்களல்லர் என்றும், அவர்கள் யாருக்கும் அஞ்சுவதில்லை என்றும், அவர்களைக் கண்டு எவருமஞ்சுவதுமில்லை என்றும், விண்டர் நிற்ச் (Winternitz) என்னும் செர்மன் ஆசிரியர் கூறுவர். உபநிடதங்கள் உபநிடதங்களே தமிழர்களின் மறை. உபநிடதங்களிற் கூறப்படும் ஞானங்கள் ஏட்டில் எழுதப்பட்டிருக்கவில்லை. அவை குரு-மாணாக்கர் முறையில் தலைமுறையாக வந்தது. உபநிடதப் பொருள்களைப் பிராமணர் அறிந்திருக்கவில்லை. உண்மை ஞானத்தைத் தேடி அலைந்து திரிந்த பிராமணர் அரச வகுப்பினர் பாதங்களில் மாணாக்கராக இருந்து உபநிடத ஞானங்களைக் கற்றனர்.2 தாம் கற்றறிந்த பொருள்களை அவர்கள் நூல் களாகச் செய்து அவைகளுக்கு உபநிடதம் எனப் பெயரிட்டனர். உப நிடதம் என்பதற்குக் கிட்ட இருந்து கேட்கப்படுவது என்று பொருள். இரகசியம் எனவும் அது வழங்கும். உபநிடதங்கள், உயிர், உலகம், கடவுள் என்னும் முப்பொருள்களைப் பற்றி ஆராயும் நூல்கள். உபநிடதங்கள் பிராமணங்கள் ஆரணியங்களை ஒப்ப வேதங்களோடு சேர்க்கப்பட்டது. உபநிடதங்களுக்கு வேத முடிவு என்பது பொருள். வேதங்களைப் பிராமணன் ஆசானாயிருந்து மற்ற உயர்ந்த வருணத்தவர்களுக்குக் கற்பிக்கலாம். பெண்களும் சூத்திரரும் வேதங்களைப் படிக்கவும் கேட்கவும் ஆகாது. உபநிடத ஞானங்களின் அரச வகுப்பினரும், பிறரும், பெண்களும் திறமையுடையவர்களாயிருந்தனர். ஆராய்ச்சியாளர் உபநிடதங்கள் தமிழருடையதே என முடிவு செய்துள் ளார்கள். உபநிடத ஞானமே புத்த, சைன மதங்களுக்கும் சாங்கியம் முதலிய வைகளுக்கும் அடிப்படை. அக்பர் காலத்தில் ‘அல்லா உபநிடதம்’ என ஒரு உபநிடதமும் செய்யப்பட்டது. காலந்தோறும் பல உபநிடதங்கள் எழுதப் பட்டன. புராணங்கள் புராணங்கள் என்பன கோயிற் பூசகராலும், பிராமணராலும் பொது மக்களின் அறிவை மழுக்கித் தாம் நல்வாழ்வு அடையும்படி எழுதி வைக்கப்பட்ட பொல்லாத பொய் நூல்கள். இதனைப் பற்றி அதிகம் கூற வில்லை. எடுத்துக்காட்டாக இங்கு ஒன்று தருகின்றோம். இது மச்சபுராணத் தில் சிவன் கூறியதாகச் சொல்லப்படுகின்றது. “இராக்கதர், அசுரர், தைத்தியர் தானவர் ஒரு புறமும், தேவர் ஒருபுறமு மாக நின்று பொருதபோரில் ஆயிரக்கணக்கான தானவர் அசுரர் முதலியோர் மாண்டனர். இந்திரன், தானவர் ஆகியோரின் மனைவியரை நோக்கிப் பின்வருமாறு கூறுகின்றான். நீங்கள் அரசரையும் உங்கள் எசமானரையும் சூத்திரரையும் ஒரே வகையாகக் கருதி ஒழுகவேண்டும். அப்பொழுதுதான் உங்களுக்குச் செல்வம் உண்டாகும். வறிய ஆடவராயினும் போதுமான பொருள் கொண்டுவந்தால் அவர்களுடன் கூடிக் குலாவவேண்டும்; கெம்பீர மாக வருபவர்களுக்குப் போகம் கொடுத்தல் ஆகாது, நீங்கள் பிதிர்களையும் தேவர்களையும் வழிபடும்போது பொன், தானியம், பசு, நிலம் முதலியவை களைப் பிராமணருக்குத் தானமாகக் கொடுக்கவேண்டும். பிராமணர் சொல்வது போல எல்லோரும் கேட் டொழுக வேண்டும். நீங்கள் கடைத்தேற வேண்டுமாயின், கட்டாயமாக ஒழுகவேண்டிய சில விதிகளைக் கூறுகின் றேன். நீங்கள் வாழ்க்கையின் துன்பக் கடலைத் தாண்டுவதற்கு வேதங்களைக் கற்றறிந்தவர் வகுத்துள்ள சட்டம் வருமாறு: பெண்களாகிய நீவிர் ஞாயிற்று வாரத்தில் இலை குழை அவித்த நீரில் நீராடவேண்டும். பின்பு வேதாந்தம் அறிந்த கட்டழகனாகிய பிராமணனைச் சந்தனம், பூ, வாசப்புகை என்பவை களை வைத்து வழிபட வேண்டும். பின்பு சில பிராமணருக்குப் பச்சை அரிசி யும், முட்டி நிறைந்த வெண்ணெயும் கொடுக்க வேண்டும். முன் கூறிய வேதாந்தமறிந்த பிராமணனுக்கு நல்ல விருந்து இட்டு, அவனைக் காமனாகக் கருதி வழிபடவேண்டும். அப்பிராமணனுக்குப் போகத்தில் எப்படி இச்சையோ, அப்படியெல்லாம் புன்முறுவலோடு அவனைத் திருப்தி பண்ண வேண்டும். இவ்விரதம் பிடிப்பவள் பதின்மூன்று மாதம் பிராமணருக்குப் பச்சையரிசியும், முட்டிநிறைந்த வெண்ணெயும் கொடுத்து வரவேண்டும். அக்கால முடிவில் அவனுக்கு மெத்தை தலையணை, படுக்கைக்கு விரிக்கும் துப்பட்டி, விளக்கு, மிதியடி, செருப்பு, இருப்பதற்குப் பாய் முதலியவை களைத் தானமாக வழங்க வேண்டும். பின்பு பிராமணனையும் அவன் மனைவியையும் அழைத்துப் பொன்நூல், மோதிரம், பட்டாடை, பொன் வளை, பூமாலை, சந்தனம் முதலிய வைகளைக் கொடுத்து அவர்களைக் கனம்பண்ணி வழிபட வேண்டும். பின்பு தங்கத்தினால் கண்வைத்த காமன், இரதி என்னும் பாவைகளைத் தட்டத்தில் வைத்து, இனிப்புப் பண்டங்கள், பால் மாடு, வெண்கலப் பாத்திரம், கருப்பங் கழி, என்பவைகளை வைத்துக் கொடுக்க வேண்டும். அப்போது விட்டுணு மகிழ்ந்து வேண்டியவைகளைக் கொடுப்பார். பின்பு அவனைச் சுற்றி வந்து கும்பிட்டு அவனை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். படுக்கை முதலியவைகளை அவன் வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதுமுதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் கூடிச் சுகம் அனுபவிக்க வரும் பிராமணனை மரியாதை செய்து கனம் பண்ண வேண்டும். இப்படிப் பதின் மூன்று மாதங்களுக்கு அவனை திருப்தி பண்ணவேண்டும். அந்தப் பிராமணனுடைய விருப்பத்தின்பேரில் இன்னொருவன் வந்தால் ஐம்பத் தெட்டு லீலைகளாலும் அவனை மகிழ்விக்க வேண்டும். வியபிசாரிகளுக்குப் பாவம் உண்டாக மாட்டாத அரிய விரதத்தைப் பற்றி உங்களுக்குச் சொன்னேன். இதனை இந்திரன் தானவர்களின் மனைவி யருக்குச் சொன்னான் (என்று சிவன் சொன்னார்). ஒ அழகிய பெண்களே! இவ்விரதம் பாவங்களை ஒட்டிப் பல நன்மைகளைத் தரவல்லது. நீங்கள் நான் சொன்ன வண்ணம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். அமாவாசையின் பின் ஆறாவது நாள் பிடிக்கும் விரதத்தில் பிராமணரைப் பக்தியோடு வழிபட வேண்டும், வழிபடுகிறவன் படுக்கைக்குப் போகுமுன் பசு மூத்திரங் குடிக்க வேண்டும். காலையில் எழுந்து குளித்துத் தோய்ந்தபின் பிராமணருக்கு விருந்திட வேண்டும். பின்பு அவர்களுக்குப் பொன்னாற் செய்த தாமரைப் பூ கொடுக்க வேண்டும். அதோடு ஒரு சிவப்புப் பட்டாடையும் தானம் பண்ண வேண்டும்.1 - மச்ச புராணம். இவ்வகையான விரதத்தை எவர் முன்னிலையிலாவது ஒருவர் இன்று சொன்னால், அவர் தண்டனையடையாமல் தப்பி வருவது அரிது. இவ் வகை நீதியையும் விரதத்தையும் கடவுள் சொன்னார் எனக் கூறும் நூலைப் பற்றி நாம் கூறுவதற்கு ஒன்றுமில்லை. கணவனிறந்த பெண்களை உயிரோடு கொளுத்தும்படி கூறும் வேத மதம் இறந்தவர்களோடு அவர்கள் பயன்படுத்திய பொருள்கள், அடிமைகள், நாய்கள், குதிரைகளையும் உடன் வைத்துப் புதைத்தல் அல்லது கொளுத்த லாகிய வழக்கு இவ்வுலக மக்கள் பலரிடையில் காணப்பட்டது. இதற்குக் காரணம், அக்கால மக்கள் இறந்தவர்களின் மறு உலகத்துணைக்கு அப் பொருள்களும், பிறவும் பயன்படும் என்று கருதினமையாகும். மக்கள் அறிவு வளர்ச்சியடைத்த காலத்தில், பெண்கள் சிலர் கணவர் இறந்தபோது தீயில் பாய்ந்து தற்கொலை புரிந்து கொண்டார்கள். அவர்கள் தற்கொலை செய்ய வேண்டும் என்னும் கட்டாயம் இருக்கவில்லை. கிரியைகளையே தமது வாழ்க்கைப் பிழைப்பாகக் கொண்டிருந்த பிராமணர், கணவர் இறந்தபோது பெண்கள் சிலர் தற்கொலை புரியவதை வாய்ப்பாகக் கொண்டு, அவ்வாறு செய்வதற்குச் சில கிரியைகளை வகுத்துத் தமது சமய நூல்களிலும் அதனை வற்புறுத்தி எழுதிவைப்பாராயினர். அதனால் காலத்தில், கணவனை இழந்த பெண்கள், தற்கொலை புரிய வேண்டும் என்னும் கட்டாயம் உண்டாயிற்று. பெண்கள் தமது உயிருக்கஞ்சியும், தீயில் உயிரோடு வேகப்போகும் துன்பத் துக்குப் பயந்தும், கதறித் துடிக்கத் துடிக்க அவர்கள், வலிதில் பிடித்து இழுத்துக் கணவனின் பிரேதத்தோடு கிடத்தித் தீமூட்டிக் கொளுத்தப்பட் டார்கள். ஒருவனைக் கொலை செய்தால் இன்று ஆங்கில ஆட்சியில் என்ன தண்டனை விதிக்கப்படுகின்றதென எல்லோரும் அறிந்ததே. இக்கொடிய செயல்களை நேரில் பார்த்த மேல்நாட்டவர்கள் மிகவும் மனவேதனையோடு, பெண்களைப் பிராமணர் தீயிலிட்டுக் கொளுத்தும் கொடுமையைப் பற்றி எழுதியுள்ளார்கள். முதற்கண் ஆரிய நூல்களில் பெண்களைக் கொளுத்து வதற்கு அனுமதிக்கும் சட்டங்கள் சிலவற்றை இங்குத் தருகின்றோம். 1சுருதி சங்கிரகம், என்பது பிராமணரின் சாத்திரங்களிலிருந்து திரட்டப் பட்ட சட்டங்கள். அந்நூலிலிருந்து 1799இல் விதவைகளைக் கணவனோடு உடன் கட்டை ஏற்றுவதற்கு அனுமதிக்கும் சட்டங்கள் தொகுக்கப்பட் டுள்ளன. அவற்றுட் சில பின் வருவன: கணவன் இறந்த பின்பு அவனோடு நெருப்பில் எரிந்து இறக்கின்ற வள் சுவர்க்கத்தை அடைகின்றாள். கணவன் இறக்கும்போது அவள் ஒருநாள் வழிப்பயணத்துக்கு அப்பால் இருந்தால் பிரேதத்தை எரிக்காமல் ஒரு நாள் பொறுத்திருக்கலாம் - அங்கீரர். மனைவி கணவனோடு உடன்கட்டை ஏறினால், அல்லது தற்கொலை செய்துகொண்டால், அவளுடைய சுற்றத்தினர் மூன்று நாள் தீட்டுக் காக்க வேண்டும். அதன் பின்பு சிரார்த்தம் செய்ய வேண்டும். அவள் உடனே கணவனின் மரணத்தைப்பற்றி அறியாவிட்டாலும், உடன்கட்டை ஏறா விட்டாலும், தீட்டுக்குரிய நாள்கள் கழிந்த பின் நெருப்பில் விழுந்து இறந்து போகவேண்டும். அவள் அவ்வாறு தனியே இறந்தால் மூன்று நாட்கழித்து சிரார்த்த பிண்டம் போடவேண்டும் - இருக்கு வேதம். ஒருவன் வறியவனாக அல்லது பாவியாக இருந்த போதிலும் மனைவி உடன்கட்டை ஏறினால், அவளுடைய பாவங்கள் உடனே பறந்து போகும். மனைவி கருப்பமாக இருந்தாலும், குழந்தையுடைவளாயிருந்தாலும் அவள் கணவனுடன் இறக்கவேண்டியதில்லை. குழந்தையைப் பாதுகாப்பதற்கு வேறு யாரேனும் இருந்தால், அவள் உடனே உடன்கட்டை ஏறலாம். ஒருத்தி பிரேதத்தைக் கொளுத்தும் விறகின் மேல் ஏறிச் சாவுக்குப் பயந்து தப்பி ஓடினால், அவள் பிரசாபதியா என்னும் கடிய விரதம் பிடிக்க வேண்டும் - விட்டுணு புராணம். மனித உடலில் 35,000,000 மயிர்கள் உள்ளன. மனைவி கணவனோடு உடன்கட்டை ஏறினால், உடலில் எத்தனை மயிர் உள்ளனவோ, அவ்வளவு காலம் அவள் மோட்சத்தில் இருப்பாள். பாம்புப் பிடாரன் எப்படிப் பாம்பைப் புற்றிலிருந்து இழுத்தெடுக்கிறானோ, அப்படியே உடன்கட்டை ஏறிய பெண் கணவனை நரகத்திலிருந்து இழுத்தெடுக்கிறாள். அவள் தனது கணவ னுடைய குடும்பத்தினர், தாய், தந்தை முதலியவர்களைப் புனிதமடையும்படி செய்கிறாள். உத்தம பெண்ணுக்குக் கணவனோடு இறப்பதைவிடச் செய்யத் தக்க வேறு நல்ல செயல் யாதும் இல்லை. எல்லாப் பிறவிகளிலும் கணவ னோடு இறப்பவள் பெண் விலங்காகப் பிறக்கமாட்டாள் - அங்கீரர். கணவன் இன்னொரு தேசத்தில் இறந்தானானால் மனைவி, அவ னுடைய செருப்பை எடுத்து மார்போடு வைத்துக் கட்டிக்கொண்டு நெருப்பில் விழக்கடவள் - பிரம புராணம் ஒருத்தி கணவனோடு உடன்கட்டை ஏறினால் அவள் மூன்றரைக் கோடி ஆண்டுகள் சுவர்க்கத்தில் இருப்பாள். அப்படி அவள் சாகா விட்டால் அவள் தனது கற்பைக் காக்க வேண்டும். அல்லாவிடில் அவள் நரகத்துக்குப் போவாள் - ஆரிய நீதி சாத்திர பண்டிதர். வில்லியம் யேம்ஸ் என்பவர் “விதவைகளைத் தீயிலிடுதல்” என்னும் நூலில் எழுதியிருப்பது வருமாறு: “சில இடங்களில் கருப்பவதிகளும், பருவம் அடையாத பெண்களும் எரிக்கப்பட்டார்கள். அவர்கள் மயக்க மருந்து கொடுத்தபின், மயக்கத்தி லிருக்கும் போதே கட்டையில் வைத்துக் கொளுத்தப்பட்டார்கள். உடன் கட்டை ஏற்றும்போது அவள் எழுந்து ஓடிவிடாதபடி, பிராமணர் அவள் அரையிற் கயிறுமாட்டிக் கட்டி விடுகிறார்கள். தீக்கொளுத்தும்படி கூறினதும், உடனே பிராமணர் தீக்கொளுத்தி விடுகிறார்கள். பக்கத்தே நிற்பவர்கள் எல்லோரும் நெய்யை நெருப்பில் சொரிவார்கள். எரிந்து முடிந்தவுடன் பிராமணர் சாம்பலைக் கிளறிப் பெண் அணிந்திருந்த நகைகளைப் பொறுக்கி எடுத்துக் கொள்ளுவார்கள். அவை அவர்களுக்கே உரியது.” 1924-ல் மார்வாரில் இராசா அசிற்சிங் இறந்தபோது அறுபத்து நான்கு பெண்கள் கட்டையில் ஏறினார்கள். இராசா பட்சிங் நீரில் அமிழ்ந்தியபோது 84 பெண்கள் கட்டையில் ஏறினார்கள். 1611ஆம் 1620ஆம் மதுரை நாயக்கர் இறந்தபோது முறையே 400, 700 பெண்கள் கட்டை ஏறினார்கள். கட்டை கிடங்குக்குள் அடுக்கப்பட்டது. இவ்வாறு செய்வது உடன்கட்டை ஏற்றப் படும் பெண்கள் தப்பி ஓடாமல் இருப்பதற்காகும். கூர்ச்சரத்தில் 12 அடி சதுரமான கொட்டிலில், பிணம் கொளுத்தப்பட்டது. உடன்கட்டை ஏறும் பெண் கொட்டிற்கால் ஒன்றோடு கட்டப்பட்டாள். வங்காளத்தில் பெண்கள் தரையில் முளை அடித்துக் கட்டப்பட்டார்கள். சில சமயங்களில் உடன் கட்டை ஏற வரும் பெண்கள் முதுகு காட்டி ஓட்டம் எடுப்பதுமுண்டு அவ் வகையினர் தீண்டாதவர்களாகக் கருதப்பட்டனர். அவர்கள் குடும்பத்தில் மறுபடியும் அனுமதிக்கப்படமாட்டார்கள். இவ்வாறு ஓடும் பெண்களைக் bகாண்டு போவதற்குப் புலையர் கூட்டமாக வந்து நிற்பதுண்டு. சில ஐரோப்பிய வணிகர் அவ்வாறு ஓடுகின்றவரைக் காப்பாற்றி மணஞ்செய்து கொள்வ துண்டு. வில்லியம் பென்ரிக் என்பவர் இவ்வழக்கத்தைத் தடுக்கும் சட்டத்தை 1829-ல் வெளியிட்டார். 800 பிராமணர் இது சமயத்துக்கு மாறானது என்று சொல்லிக் கையெழுத்திட்டுப் பிரிவிக் கவுஞ்சிலுக்கு அப்பீல் செய்தார்கள். அவ்வப்பீல் 1832-ல் தள்ளப்பட்டது. பிராமணர் இவ்வழக்கத்தை வற்புறுத் தியது கணவனை இழந்த பிராமணப் பெண்களின் ஒழுக்கத்தைக் காப்பாற்ற முடியாமையால் ஆகும். 1கேட்டால் திடுக்கிடும் பல நிகழ்ச்சிகள் கூறப்பட் டுள்ளன. அவைகள் இச் சிறு நூலில் எழுத இடம்பெறா. இராசா ராம் மோகன் ராய் என்னும் அறிவாளி இப் பைத்தியக்காரத்தனத்தை ஒழிக்கப் பெரிது முயன்று வெற்றி பெற்றார். ஆங்கில அரசாங்கம் உடன்கட்டை ஏறுவதோ, ஏற்றுவதோ சட்டத்துக்கு மாறு என்று விளம்பரஞ் செய்தது. பிராமணர் தமது சமயம் கெட்டுவிட்டது என்று துடித்துக் கதறினார்கள். ஆங்கில அரசாங்கம் செவிகொடுத்திலது. இன்று கைம்பெண்கள் உடன் கட்டை ஏறாமையால் ஒன்றும் முழுகிப்போகவில்லை. அரசாங்கத்தை எதிர்க்க வலியற்ற பிராமணக் குழாம் உடன்கட்டைக்குப் பதில் தலையை மொட்டை தட்ட வேண்டும் எனச் சட்டம் செய்தது. இக்கொடிய சட்டத்தையும் “கிரிமினல் குற்றாமாக”க் கொள்ளாமல் அரசினர் இருப்பது வியப்புக்குரியதே. மனித சமூகத்தைக் கெடுக்கும் செயல்கள் எல்லாம் “கிரிமினல்” குற்றங்களாகக் கொள்ளப்படுதல் தகுதியுடையதாகும். “வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக் கொரு நீதி” - மனோன்மணியம்.  தமிழ்க் கடவுளுக்கு ஆரியப் பாடலா? முன்னுரை இன்று பலவகைக் கிரியைகளோடும் ஆடம்பரங்களோடும் சமயம் என்னும் தலைப்பின் கீழ் நடைபெற்று வருவன சமயத் தொடர்பற்றன. அவை ஆதிகாலம் முதல் பழைய மந்திர வித்தைக்காரர், பூசாரிமார்களால் கையாளப் பட்ட சில பழக்க வழக்கங்களின் நிழல்கள். உண்மையான சமயம் என்பது உலகம், கடவுள், உயிர் என்னும் முப்பொருள்களின் இயல்புகளை ஆராய்ந்து அறிவால் உயர் வெய்துவது. இன்று சைவ சித்தாந்தம் என்று வழங்கும் சமயக் கருத்துக்களே வரலாற்றுக் காலத்துக்கு முன்தொட்டுவரும் தமிழரின் மதக் கொள்கைகளாகும் என டாக்டர் போப்பையர் தனது திருவாசக மொழிபெயர்ப்பில் ஓரிடத்திற் கூறியுள்ளார். தமிழரின் உண்மையான சமயக்கொள்கை “ஞானத்தினால் வீடு” என்பதேயாகும். இன்று மக்கள் “மூடத்தனத்தினால் வீடு” என்று சொல்லும் படியாக உழன்று வருகின்றனர். கிரியைகள் புரிவதாலும், பொங்கல், படையல். பலிகள் இடுவதினாலும், குடைகள், ஆபரணங்கள், வாகனங்கள் முதலியவை களைக் காணிக்கையாகக் கொடுப்பதினாலும், கொட்டு முழக்கு, ஆடல் பாடல் முதலிய ஆரவாரங்களோடு விழாக்கள் எடுப்பதினாலும் கடவுளை ஏமாற்றிவிட முடியாது. இவைகள் எல்லாம் மக்களை மேலும் மேலும் அறியாமையில் ஆழ்த்துவன. இவ்வியல்புகளை மக்கள் அறியா திருக்கும்படி புரோகிதரும், பூசாரிகளும் விழிப்பாயிருந்து, அவர்களுக்கு நாளுக்கு நாள் அறியாமையை வளர்த்து வருகின்றனர். இவ்வறியாமை ஒழியும் பொருட்டும், சமயம் என்றால் என்ன என்பதை மக்கள் அறியும் பொருட்டும், இச் சிறு நூல் வெளியாகின்றது. சென்னை 23.1.1947 ந.சி.கந்தையா. தமிழ்க் கடவுளுக்கு ஆரியப் பாடலா? தோற்றுவாய் தமிழை வளர்க்க வேண்டும். தமிழில் பலவகை நூல்கள் வெளிவர வேண்டும். தமிழ் வளர்ச்சிக்குத் தடையாயிருப்பவைகளைத் தகர்க்க வேண்டும் என்பவை போன்ற உணர்ச்சி தமிழ்நாடு எங்கும் சுடர்விட்டெரி கின்றது. ஒருவனுக்கு நோய் கண்டால் அந் நோயின் காரணத்தை அறிந்து தக்க மருந்து அளித்தாலன்றி நோய் குணமடையாது. அதுபோலவே தமிழ் வளர்ச்சி தடைப்படுவதற்குக் காரணம் எதுவென அறிந்து அக் காரணத்தைக் களைந்தாலன்றி, தமிழ் செவ்வனே வளர்ச்சி யுறமாட்டாது. ஒரு வயலுள் கோரை, நாணல் முதலியவை வளருமாயின், அவை நெற்பயிர் செவ்வனே வளர்ந்து நல்ல கதிர்களை ஈனுவதற்குத் தடையாகும். நெற்பயிர் பயன் அளிக்க வேண்டுமாயின், அதனூடே வளரும் களைகளைக் களைதல் வேண்டும்; வேறு எவ்வித உபாயங்களைக் கையாளினும் பயனற்றதாகும். சமயம் மக்களுக்கு உயிர்நாடி போன்றது. மன்னாதி மன்னரும் வீராதி வீரரும் சமயம் என்னும் பெயரைக் கேட்டவுடன் தலை வணங்குகின்றார்கள். சமயத்துக்கு இருப்பிடம் கோயில். தமிழ்மக்கள் வழிபடும் கடவுளர் தமிழ்க் கடவுளரே. தமிழ்க்கடவுளர் கோயில் கொண்டருளியிருக்கும் ஆலயங்களில் ஆரியம், நுழைந்து கொண்டு தமிழை வெளியே துரத்திவிட்டது. ஆலயங்களில் பணி செய்யும் பூசாரி, தான் ஆரியன் என்கின்றான்; ஆரியம் பாடுகின்றான்; அவன் தமிழ் பாடுவதில்லை. தேசிகர், ஓதுவார், பண்டாரங்கள் முதலிய தமிழ் பாடுவோர் ஆரியம் பாடும் பூசாரியினும் பார்க்கத் தாழ்ந்தவர்கள் என மதிக்கப் படுகிறார்கள். அவர்கள் வெளியே நின்று தமிழ் பாடுகிறார்கள். இதனால் தமிழ் ஆரியத்தினும் பார்க்கத் தாழ்ந்ததென்பதும், ஆரியம் பாடும் பூசாரிகள் தமிழ்பாடும் ஓதுவார் தேசிகர்களினும் உயர்ந்த வரென்பதுமாகிய கருத்துக்கள் ஆலயங்களில் தோன்றி வலி பெற்றுள்ளன. இக் கருத்துக்களை ஆலயங்களில் நடைபெறும் பல செயல்களைக் கொண்டு நாம் நாளும் அறியலாகும். இவைகளைக் காணும் உண்மைத் தமிழனின் இரத்தம் கொதிக்காமல் இருக்க முடியாது. மக்களிடையே தோன்றி எழும் தமிழ் உணர்ச்சி ஆலயங்களில் நசுக்கப்படுகின்றது. இந் நிலையில் தமிழ் உணர்ச்சி தலை எடுப்பது எவ்வாறு? தமிழ்க் கடவுளருக்கு ஆரியம் பாடுதல் அறி வுடையார் செயலாகத் தோன்ற மாட்டாது. ஆலயங்கள் முற்காலத்தில் பல்வகைக் கலைகளுக்கும் இருப்பிட மாயிருந்தன. இவ் வாலயங்களில் ஆரியத்தை ஓட்டித் தமிழ் முழங்கும்படி செய்யின், தமிழ் எளிதில் வளர்ச்சியுறும் என்பதில் சந்தேகம் இல்லை. இக் கருத்துக்கு அடிப்படையா யுள்ள பல காரணங்களை ஆராய்ந்து முறையே கூறுகின்றது இச் சிறிய நூலென்க. மொழிக்கும் சமயத்துக்கும் உள்ள உறவு மொழிக்கும் சமயத்துக்கும் நெருங்கிய உறவு உண்டு. ஒவ்வொரு மதத் தினரும் தமது சமய நூல்கள் எம் மொழியில் உள்ளனவோ, அம் மொழியைக் கடவுள் மொழியாகக் கொண்டு அதனைத் தம் தாய் மொழியினும் மேலாகக் கருதி வருகின்றனர். ஒரு நாட்டில் தோன்றிய மதம், இன்னொரு நாட்டில் பரவும்போது, அந் நாட்டினர் அம் மத நூல்களில் எழுதப்பட்டிருக்கும் மொழியைப் பயில்கின்றனர். இதனால் அவர்களது மொழியில் பிறமொழிச் சொற்கள் சிறிது சிறிதாக வந்து நுழைந்து அம் மொழியை மாற்றமடையச் செய்கின்றன. கிறித்துவ வேதத்தின் பழைய ஏற்பாடு எபிரேய மொழியில் உள்ளது. அதனால் கிறித்துவர் எபிரேய மொழியைத் தெய்வமொழி எனக் கொண்ட தோடு அம் மொழியினின்றே உலகிலுள்ள மொழிகள் எல்லாம் தோன்றின என்றும் நம்பி வந்தார்கள். புத்தர் பாலிமொழியில் தனது போதனைகளைச் செய்தார். புத்தரின் போதனைகள் அடங்கிய புத்தவேதம் பாலிமொழியில் எழுதப்பட்டுள்ளது. அதனால் புத்த மதத்தினர் பாலிமொழியைச் சமய மொழி யாகவும், கடவுள் தன்மை யுடையதாகவும் கொள்கின்றனர். இலங்கைத்தீவில் வழங்கிய எலு என்னும் பழைய மொழி, பாலிச் சொற்களையும் அதன் சிதைவுகளையும் ஏற்றுக்கொண்டு சிங்களமாக மாறிற்று, முகமது மதத்தினர் அரபி மொழியைத் தமது சமய மொழியாகக் கொள்கின்றனர். முகமது நபியின் போதனைகள் அடங்கிய முகமதியர் வேதம், அரபி மொழியில் எழுதப்பட்டிருப்பதே இதற்குக் காரணம், கான்பியூசஸ், சீன மக்களுக்குச் சமய போதனை செய்த சீனமொழி, கடவுள் தன்மை யுடையதெனச் சீனர் கூறுவர். பழைய எகிப்தியர், பாபிலோனியர் முதலியோரும் தமது மொழிகள் கடவுள் தொடர்பும் கடவுள் தன்மையும் உடையனவென்று நம்பி வந்தார்கள். கிறித்துவ கத்தோலிக்க மதத்தினர் இலத்தின் மொழியைத் தமது சமய மொழியாகக் கொள்வர். ஆகவே, அவர்கள் அதனைக் கடவுள் தன்மையும் புனிதமும் உடையதாகக் கொள்வர். இவ்வாறு பற்பல மொழிகளைச் சமய மொழிகளாகக் கொண்ட மதங்கள் பிறநாடுகளில் பரவும்போது மொழிக் கலப்புச் சமயக் கலப்புக்கள் உண்டாவது இயல்பாகின்றது. ஆரியம் தென்னாட்டிற் சமயமொழியானது எவ்வாறு? ஆரியம் பிறநாடுகளினின்றும் வந்து இந்திய நாட்டை அடைந்ததென அறிகின்றோம். வடநாட்டை அடைந்த ஆரிய மக்களின் சமயமொழி ஆரிய மாக இருந்தது. அம் மொழியில் அவர்கள் சமய நூல்கள் எழுதப்பட்டுள்ளன. கிறித்துவ, முகமதிய, புத்த, சைவ மதங்களைப் போலவே, ஆரிய மதமும் தென்னாட்டை அடைந்தது. முற்கால அரசர், மந்திர வித்தைகளால் போரில் வெற்றி, செல்வம், அதிகாரம் என்பவைகளைப் பெறலாம் என நம்பினார்கள்.1 வடக்கினின்றும் வந்த ஆரியப் பிராமணர், யாகங்களினால் போர்களில் வெற்றியையும், பெருஞ்செல்வத்தையும் பெறலாம் எனக் கூறியதைத் தமிழ் அரசர் நம்பினர்; அவர்கள் மூலம் யாகங்கள் பலவற்றைச் செய்தனர். இதனால் பிராமணருக்கு அரச வட்டங்களில் மதிப்பு உண்டாயிற்று.2 பொதுமக்கள் அவர்களை மதிக்கவில்லை. பிராமணர் மற்றைய மதத்தவர்களைப் போலத் தனித்து நின்று தமது மதத்தைப் பரப்பமுடியவில்லை. அவர்கள் தமிழ்நாட்டுக் கோயிற் பூசகர்களாகிய பார்ப்பனரிடையே திருமணக் கலப்புக் கொண்டனர்; தமிழ்க் கடவுளரையும் வழிபட்டனர்; பார்ப்பனருடைய ஒழுக்கங்கள் சில வற்றையும் பின்பற்றினர்.3 இதனால் பார்ப்பனர் ஆரியச் சார்பு அடைந்தனர். அவர் தம்மை ஆரியர் எனக் கூறினர்; ஆரியத்தை ஆலயங்களில் நுழைக்க முயன்று வந்தனர். பொதுமக்கள் இதனை எதிர்த்துப் போராடினார்கள்.4 பிராமணர் அரசருக்கு மந்திரிகளாகவும், ஆசிரியராகவும் இடம் பெற்று அமர்ந்தார்கள். அவர்கள் அரசரைத் தம் வசப்படுத்திக் கொண்டு, பொது மக்கள் எதிர்த்து நின்ற பல செயல்களில் வெற்றியடைந்தார்கள்.1 பல்லவ சோழ அரசர்கள் பிராமணரைப் பெரிதும் ஆதரித்தனர். பிற்காலச் சோழ அரசர், தம்மை ஆரியர் எனவும் கூறுவாராயினர். இலங்கையின் வட பகுதியை ஆண்ட சோழ அரசமரபினர் தம்மை ஆரியச் சக்கரவர்த்திகள் எனக் கூறுவாராயினர். பிராமணரால் தம் வயம் ஆக்கப்பட்ட அரசர் காலங்களில் அரச கட்டளை யினால் ஆரியம் தென்னாட்டு ஆலயங்களில் இடம் பெறுவதாயிற்று. ஆயினும் தமிழை முற்றாக எடுத்துவிட முடியவில்லை. தமிழ்ப் பண்கள் பாடப்படவேண்டும் என்னும் விதியும் கிரியை முறைகளில் இடம் பெறுவதாயிற்று. இன்று ஓதுவார், தேசிகர் என்போர் தூரத்தில் நின்று தமிழ் பாடுகின்றனர். ஆலயங்களில் பூசாரிகளாக அமர்ந்துள்ள பிராமணப் பூசாரிகள், சித்தாந்த சாத்திரங்களிலோ, பண்முறையோடு தேவார திருவாச கங்கள் பாடுவதிலோ, தேர்ந்தவர்களல்லர். அவர்கள், தாம் தமிழர் அல்லர் எனவும் தமிழ் தமது மொழியன்று எனவும் கருதுபவர்களாவர், தமிழ்க் கடவுளல்லாதாரும், தமிழர் வழிபாட்டுக் குரியரல்லாதாருமாகிய ஆரியத் தெய்வங்கள் மீது, துதி கூறும் வடமொழி வேதங்களைத் தமக்குச் சமய நூல் களெனக் கூறுவோராவர். மொழி மக்கள் சமூகத்தை ஒன்று சேர்க்கின்றது ஐக்கிய அமெரிக்கா முழுமையையும் ஒன்றுபடுத்தி இணைத்து வைப்பது ஆங்கிலமொழி. ஐக்கிய அமெரிக்காவையும் இங்கிலாந்து கனடா தேசங்களையும் இணைத்து வைப்பதும் ஆங்கில மொழியே ஆகும். மொழிப்பற்று எல்லா மக்களிடையும் மிகப் பதிந்துள்ளது. ஒருவன் எம் மொழியைத் தாய்மொழியாகக் கொள்கின்றானோ, அவன் அம் மொழியைத் தனது உயிர்போலக் கருதுகின்றான். இந்தி தமிழ்நாட்டில் கட்டாயக் கல்வியாக வேண்டும் என்னும் சட்டம் உண்டான போது, அதனால் தமிழருக்குத் தீமை நேருமென உணர்ந்த தமிழ்ப் பற்றுடைய பலர், இந்தி எதிர்ப்புச் செய்து சிறை செல்ல ஆயத்தமானார்கள். நாட்டை மொழிவாரியாகப் பிரிக்க வேண்டும் என்னும் கிளர்ச்சி உண்டாகின்றபோது, தமிழர் எல்லோரும் ஒன்று சேர்கின் றனர்; தெலுங்கர், மலையாளர் முதலிய மக்களும் தனித்தனி ஒன்று சேர்ந்து விழிப்படைகின்றனர். மொழிப்பற்று என்பது மனிதனுக்குத் தெரியாமல் உள்ளத்தில் உறைந்து கிடக்கும் ஒருவகை உணர்ச்சி. அது, தாய் தாலாட்டிப் பாலூட்டி வளர்க்கும்போதே மனிதனின் இரத்தத்தோடு கலந்து சுவறியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பனர் பிறந்த நாள் முதல் தமிழையே வழங்கு கின்றார்கள் ஆயினும், அவர்கள் தாம் தமிழர் அல்லர் என்றும், தமக்குத் தாய்மொழி தமிழன்று என்றும், தாம் ஆரியர் என்றும், தமது தாய்மொழி ஆரியம் என்றும் உணர்கிறார்கள். ஆகவே அவர்களிடத்தில் தமிழனிடத்தில் எழுவது போன்ற தமிழ்மொழிப்பற்றை நாம் காணுதல் முடியாது. இவ்வுணர்ச்சி குன்றிய கூட்டத்தினரே இந்திப் பிரசார சபைகளையும், வட மொழியைத் தமிழோடு கலந்து எழுதும்1 உரைநடைகளையும் தோற்றுவிக் கின்றனர்; இன்றும் புதிதாகச் செய்யப்படும் கலைச்சொற்களில் பல சமக்கிருதச் சொற்களைச் சேர்க்கவேண்டுமென வாதாடுகின்றனர். தமிழ்நாட்டில் பிராமண வகுப் பினருக்கும், அவர் அல்லாதாருக்கு மிடையில் அமைதி நிலவாமைக்குக் காரணம், இருவருக்கும் தாய்மொழி வெவ்வேறாக இருப்பதினாலேயாகும். தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட மக்கள் தோற்றுவித்த அற நிலையங்களுக்கு, வட மொழியைத் தாய்மொழி யெனக்கொண்டுள்ள மக்கள் தலைமை வகிப்பதன் ஒவ்வாமையைத் தமிழ் மக்கள் உணர்ந்து கண் விழித்துள்ளார்கள். தமிழனுக்குத் தமிழ் இசை பிடிக்காது; கருநாடக இசையும், இந்தி, தெலுங்குப் பாடல்களுமே பிடிக்கும் எனக் கூறி ஒரு கூட்டத்தினர் தமிழனை ஏமாற்றிய காலம் மலை ஏறிவிட்டது. மக்கள் மொழி ஒன்றும், சமயமொழி இன்னொன்றுமானபோது, தமிழ் சிறிது சிறிதாகக் குன்றுவதாயிற்று. சமயமும் மொழியும் நகமும் சதையும் போல் ஒன்றை விட்டு ஒன்று பிரிக்கப்படாமல் இருந்து வருவதை நாம் முன்பு விளக்கியுள்ளோம். தமிழர் வழிபடும் தமிழ்க் கடவுளருக்குத் தமிழ் மொழியில் துதி பாடுதலே தக்கது. அவ் வழக்கே இருந்துவந்தது. பிற்காலத்தில் மொழியும் சமயமும் பிரிக்கப்பட்டன. தமிழின் இடத்தை வடமொழி ஏற்றது. அப்பொழுது மொழி, நகம் போன விரல்போல் ஆயிற்று. நகம் போன விரலுக்குத் துன்பம் உண்டாவது போலச் சமயத்தினின்றும் பிரிக்கப்பட்ட தமிழுக்குப் பல இடையூறுகள் நேர்ந்தன. வடமொழியைக் கடவுள் மொழியாகக் கொண்ட கோயிற் பூசகர், “ஆரியம் நன்று; தமிழ் தீது” எனக் கூறுவாராயினர். இதனால் ஆரியம்-தமிழ் என்னும் இரு கட்சிகளுக்குகிடையில் பூசல்கள் நேர்ந்தன. நாள் ஏற ஏறப் பொது மக்கள் அறியாமை காரணமாக ஆரியம் கடவுள் மொழியென நம்பத் தலைப்பட்டனர். தமிழைப் புனிதமுடையதெனக் கருதாமையால், வடமொழிப் பற்றுடையார் வடமொழிச் சொற்கள் பலவற்றைத் தமிழோடு கலக்கலாயினர். தமிழ் கற்றோர்க்கு மதிப்பின்மையும், வடமொழி கற்றார்க்கு மதிப்பும் நாளடைவில் உண்டாயிற்று. இவ்வாறு வடமொழி சமயமொழியான காலம் முதல், தமிழ் சிறிது சிறிதாகத் தன் வலி இழந்து குன்றி வருகின்றது. முற்காலத் தமிழ் இலக்கியங்களைப் பின் நோக்கி ஆராய்ந்து செல்லச் செல்ல, அவைகளில் பிறமொழிச் சொற்கள் கலவாதிருத்தலையும், மொழியின் வளம் பெரிதாயிருத் தலையும் நாம் காணலாம். தமிழ்க் கடவுளருக்கு ஆரியப் பூசாரிகள் ஆரியம் பாடுவது நகைப்புக்கிடமானது. தமிழ் நாட்டில் வழிபடப்படும் கடவுளர் ஒருவரேனும் வடநாட்டுக் குரியவரல்லர். இத் தமிழ்க் கடவுளருக்கு ஆரியர் பூசாரிகளாக இருந்து ஆரியம் பாடுதல் நகைப்புக்கு இடமானதாகும். அதனைக் கண்டு வாளா விருக்கும் தமிழ் மக்களின் செயல் மிக இரங்கத்தக்க தொன்றாகும். நந்தனார் நெருப்பில் முழுகிச் சிதம்பர ஆலயத்துள் நுழைந்தார் என்பன போன்ற கதைகள் இன்று வலிபெறவில்லை. ஒரு நந்தனாருக்குப் பதில் பல நந்தனார்கள் இன்று தமிழர் கோயில்களுள் நுழைந்து வருகிறார்கள். இவர்களைக் கண்டு கோயில்களிலுள்ள தெய்வங்கள் ஓட்டம் பிடிக்கவில்லை. கடவுளுக்கு ஆரியம் பாடினால் விளங்கும்; தமிழ்பாடினால் விளங்காது என்னும் மூடக் கொள்கை நீங்கும் காலம் தொலைவில் இல்லை. ஒரு மொழியை விளங்க மாட்டாத இன்னொரு மொழிக்காரனுக்கு இரு மொழிகளை அறிந்த ஒருவன் மொழிபெயர்ப்பாளனாக இருப்பதுபோல், தமிழ் மக்களின் எண்ணங்களைக் கடவுளர்களுக்கு ஆரிய மொழியில் கூறுகின்றோம் எனச் சொல்லி, இருபகுதி யினருக்கும் இடையில் தரகராக நின்று, நடிப்பது ஒரு சூழ்ச்சிக் கூத்தேயாகும். இந்த நடிப்புச் சூழ்ச்சியை அறிந்து, அவர்களை ஆலயங்களினின்றும் இவ் விருபதாம் நூற்றாண்டிலும் மக்கள் அகற்றா மலிருப்பது வியப்பினும் வியப்பே! ஆலயங்கள் எவருக்கும் பொது; அங்கு கட்டணங்களும் கட்டுப்பாடுகளும் ஆகா. ஆலயங்கள் எவருக்கும் பொது. அவைகளில் கட்டணங்களோ, கட்டுப்பாடுகளோ கூடா. வேண்டியவர் வேண்டியபடி கடவுள் வழிபாடு செய்யும் உரிமை வேண்டும். இன்னது செய்ய இன்ன கட்டணம் என்னும் விதிகள் உடனே அகற்றப்படவேண்டும். வழிபடுவோரிடம் கட்டணம் தண்டும்படி எந்த ஆகமமும் கூறவில்லை. கோயிலில் வரி தண்டுவது “கிரிமினல்” குற்றச் சாட்டுக்களுள் ஒன்றாகக் கொள்ளும் சட்டம் உடனே தோன்ற வேண்டும். ஆலயங்களை அரசாங்கமோ, ஊர்ச் சபைகளோ நடத்த வேண்டும். கோயிலை மேற்பார்க்கும் “பார்ப்பார்” அல்லது பூசாரிகள், குலங் கோத்திர வேறு பாடுகளின்றி மக்களால் தெரிந்தெடுக்கப்பட வேண்டும். பூசாரியாயிருக்கும் உரிமை தலைமுறை தலைமுறையாக வருதல் கூடாது. உலகம் விரைவாக மாறுதல் அடைந்து வருகின்றது. இன்றைக்கு ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய வழக்கங்கள் இன்று பயனளியா. முற்காலத்தில் சமயத்தின் பெயரால் சிறந்த அறங்கள் என மக்கள் கருதிச் செய்யப்பட்டவை. இன்று மக்களைச் சிறைச்சாலைகளுக்கும் தூக்கு மரங்களுக்கும் போக்கும் கொடுங் குற்றங்களாக மாறியுள்ளன. தமிழ்த் தெய்வங்களுக்கு ஏன் ஆரியம் பாடவேண்டும் என்னும் கேள்வி ஏன் எழக் கூடாது? “தீண்டாதார்” ஆலயத்தில் புகலாம் எனச் சட்டம் பிறந்தது போல, இனித் தமிழர் ஆலயங்களில் ஆரியம் பாடுதல் ஆகாது; தமிழ்தான் பாடுதல் வேண்டும் என்னும் சட்டம் ஏன் பிறத்தல் ஆகாது? தமிழ்க் கடவுளுக்கு ஆரியன் ஏன் பூசாரியாக அமர்தல் வேண்டும்; தமிழன் ஏன் அமர்தல் ஆகாது? பூசாரி என்பவன் யார்? இவ்விடத்தில், பூசாரி என்பவன் யார்? அவன் எப்படித் தோன்றி னான்? அவன் ஏனையோரினும் எவ்வகையிலாவது உயர்ந்தவனா? அவன் தன்னை உயர்ந்தவனாகக் கருதுவதில் பொருள் உண்டா? என்பன போன்ற கருத்துக்களை விளக்க வேண்டி இருக்கின்றது. இறந்து போன பொது மக்கள், பெருமக்கள் சமாதிகளில் கோயில்கள் எடுக்கப்பட்டன.1 இறந்தவர்களின் ஆவிகளுக்குப் பலி செலுத்தும்பொருட்டு அடிமைகள் அல்லது வேலைக் காரர் நிறுத்தப்பட்டார்கள். இவர்கள் கால்வழி கால்வழியாகக் கோயில் களுக்குப் பலி செலுத்திவந்து பூசாரிகள் ஆயினர். இனிச் சமாதிகளல்லாது முழுமுதற் கடவுளின் அருட்குறியாக நிறுத்தப்பட்ட வடிவங்களுக்கும், மக்கள், பெருமக்களுக்குச் செய்வதுபோல் பலி செலுத்தியும் வந்தார்கள். அவ்வாறு பலி செலுத்துவதற்கு நியமிக்கப்பட்டவர்களும் கால்வழி கால் வழியாக அப் பணியைச் செய்து பெருகிப் பூசாரிக் குலத்தினராயினர். இவர்கள் மந்திரவித்தைக்காரராகவும் இருந்தனர். மந்திரவித்தை என்பது மனிதன் துதிகளாலும் மந்திரங்களாலும் தெய்வங்களை இயற்கை விதிகளுக்கு மாறாகவும், தனது விருப்பங்களுக்குச் சார்பாகவும் சிலவற்றைச் செய்யும்படி பணித்தல். தோத்திரங்கள் எனப்படுபவைகள் இவ்வகையினவே.2 ஆரியப் பூசாரிகள் மந்திரவித்தைக்காரர்களே கடவுளர்களுக்கு, யாகங்களிலும், வேள்விகளிலும், கிரியைகளிலும் உணவு அளித்துத் துதி கூறுவதால், அவர்கள் மனிதனின் எண்ணங்களுக்கு வசப்பட்டு, அவர்கள் விரும்பியவைகளை எல்லாம் செய்துவிடுவார்கள் என்னும் நம்பிக்கையினாலேயே பலி செலுத்தும் யாகம் புரிதல் போன்ற கிரியைகள் தோன்றின. இவற்றின் விரிவை எம்மால் எழுதப்பட்ட ‘ஆரிய வேதங்கள்’ என்ற நூலில் காண்க. ஆரிய வேதங்களில் காணப்படும் துதிகள் இவ்வகையினவே. ஆரிய வேதங்களை அடிப்படையாகக் கொண்டு மந்திர வித்தைகளால் கடவுளர்களைத் தாம் விரும்பிய வண்ணம் ஏவித் தாம் விரும்பியவற்றைப் பெறலாம் என்னும் கொள்கையை முடிவாக உள்ளதே பிராமண மதம். இப் பிராமண மதக் கொள்கைகளையுடையவர்களே இன்று ஆலயப் பூசகர்களாயிருந்து வருகின்றனர். ஆலயங்களில் “ஆன்மார்த்த” மல்லாதனவும், உலகார்த்தமான வழிபாடுகளும் செயல்களுமே நடைபெறு தலை நாம் காண்கின்றோம். இதற்குப் பொறுப்பு ஆலயப் பூசகர்கள் அல்லரோ? ஆன்மார்த்தத்துக்குக் கட்டணங்களும் வரிகளும், தக்கணை களும் உண்டோ? மனிதன் மனவளர்ச்சியுறாது கிரியைகளாலும் மந்திர வித்தை களாலும் உயர்நிலை அடைய நினைத்தல், கையில்லாத ஊமன் கொம்பு விரும்பியது போலாகும். ஆரியச் சொற்களைத் தமிழில் நுழைப்பதால், தமிழ் வளர்ச்சியுறும் என்னும் தவறான கருத்து. தமிழிலே சமக்கிருதச் சொற்களை நுழைத்தலால் தமிழ் வளம் பெறும் என ஒரு சாரார் கருதுகின்றனர்; கருதுவதல்லாமல் அக் கருத்தினை எதிர்ப் போர் தமிழ் வளர்ச்சியைத் தடுக்கின்றனர் எனக் கூறி வாதங்களும் புரிகின்ற னர். ஒவ்வொரு மொழிக்கும் சிறப்பான ஒலிகள் உண்டு. ஒரு மொழிக்குரிய வர்கள் இன்னொரு மொழிக்குரிய மக்களோடு கலக்கும்போது, ஒருவர் நாட்டில் காணப்படாத புதிய பொருள்கள் செயல்களைக் குறிக்கும் சொற்கள், மற்றவர் மொழியில் புகுதல் இயல்பு. அவ்வாறு புகுமிடத்து அவை மொழி பெயர்ப்பாக அல்லது மொழிக்கேற்ற உச்சரிப்பு முறையாகத் திருத்தி வழங்கப் படும். இவ்வாறே கீழ்நாட்டுச் சொற்கள் பல ஆங்கில மொழியிற் புகுந் துள்ளன. முற்காலத்தில் எகிப்திய, எபிரேய, கிரேக்க, உரோம மொழிகளில் புகுந்த தமிழ்ச்சொற்களும் அவ்வம் மொழிகளுக் கேற்ற ஒலிமுறையில் திரித்து வழங்கப்பட்டன. இதனால் அவை பிற மொழிச் சொற்களோ என ஐயப்படத் தக்கனவாயிருந்தன. புதிய பொருள்களையும் செயல்களையும் குறிக்கும் பழைய தமிழ்ச்சொல் இல்லாவிடின் மேற்கண்ட முறைப்படி சொற் களை ஆக்கித் தமிழில் சேர்க்கலாம். அப் பொருள்களையும் செயல்களையும் குறிக்கத் தமிழ்ச் சொற்கள் இருக்கும்போது, அவைகளுக்கப் பதில் பிற மொழிச்சொற்களை ஆளின், பழைய சொற்கள் வழக்கொழிவதால், நாளடைவில் மொழிவளர்ச்சி குன்றிவிடும். இன்று சில குழுவினர் பிற மொழிச் சொற்களை அம் மொழி உச்சரிப்புக்களோடு தமிழிற் புகுத்தி வருகின்றனர். இதனால் தமிழ் பெரிதும் சீர்கெட்டு வருகின்றது. தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளும் மக்கள் இவ்வாறு புரிய ஒருபோதும் இணங்கமாட்டார்கள். தோற்றத்தில் சமக்கிருதம்போல் தோன்றும் சொற்கள் எல்லாம் சமக்கிருதச் சொற்களா? வடமொழியில் காணப்படும் சொற்கள் தமிழில் காணப்பட்டால், அவை வடமொழிச் சொற்கள் என வடமொழிப் பண்டிதர்கள் ஆராய்ச்சி யின்றிக் கூறி வருகின்றனர். வடமொழி, கடவுள் மொழி யாதலின், அது பிற மொழிகளினின்றும் சொற்களை இரவல் பெற மாட்டாது; கடவுள் மொழிக ளல்லாத பிற மொழிகளே சமக்கிருதத்தினின்றும் சொற்களை இரவல் பெறக் கூடியன என்பது அவர்கள் கருத்தாகும். இருமொழிக் குரியவர்கள் கலக்கும் போது, ஒருவர் மொழிச் சொற்களில் சில, மற்றவர் மொழியில் சென்று ஏறுதல் இயல்பேயாகும். முத்து, மிளகு, ஏலம் முதலியவைகளைக் குறிக்கும் பெயர்கள், தமிழிலிருந்து சமக்கிருதத்தால் இரவல் வாங்கப்பட்டுள்ளன. வட மொழியிற் காணப்படும் மிரிசா (மிரியல்-மிளகு) முத்தா, ஏலா முதலிய சொற்கள் தமிழிலிருந்து இரவல் பெற்றனவாகும். இவையல்லாமல் நீரம், மீனம் போன்ற பல சொற்களும் தமிழினின்று வட மொழியிற் சென்றுள்ளன. இவைகளை வட சொற்களென்றே சாதிக்கும் வடமொழிப் பண்டிதர்களுமுளர். ஆரியர் வருகைக்கு முன், நீர், மீன் என்பவைகளின் பெயர்களை அறியாது தமிழர் நீரைக் குடித்தார்கள்; மீனை உண்டார்கள்; பின்பு அவர்கள் ஆரிய ரிடமிருந்து அவைகளுக்குப் பெயர்களைக் கேட்டு அறிந்து கொண்டார்கள் எனக் கொள்ளலாகுமா? இவ்வாறு ஆரியப் போர்வையில் வடமொழியிற் சென்றுள்ள பல தமிழ்ச்சொற்களை நாம் தமிழுக்கு மீட்டுக்கொள்ளலாம். சங்க நூல்களில் காணப்படும் சில சொற்கள் வடமொழிச் சொற்களோ அல்லவோ எனச் சந்தேகிக்கப்படுகின்றன. தமிழினின்று இரவல் பெற்ற பல சொற்களைப் போலவே அவைகள் வடமொழியிற் சென்றிருக்கலாம்.1 இருமொழிகளிலும் அச் சொற்கள் காணப்படுதல் பற்றி வடமொழிப் பண்டிதர்கள் அவைகள் வடமொழிச் சொற்கள் எனக்கருதலாயினர். வடமொழிச் சொற்கள் எனக் கருதப்பட்ட பல சொற்கள் தமிழ் மொழிக்கே சொந்தமாதலை ஆராய்ச்சி அறிஞர் பலர் ஆராய்ந்து காட்டியுள்ளார்கள். சங்க நூல்களில் காணப்படும் வட மொழிச் சொற்கள் எனக் கருதப்படுவன இருமொழிகளுக்கும் பொதுவாகிய சொற்களாகலாம் என மக்லீன் என்பார் கருதுவாராயினர்.1 கன்னடம், தெலுங்கு, மலையாளம் முதலிய மொழிகளினின்றும் ஆரியச் சொற்களை நீக்கிவிட்டால் மீந்திருப்பன தமிழ்ச் சொற்களும், இன்று தமிழில் வழக்கு ஒழிந்துபோன பழஞ் சொற்களுமே ஆகும். இவ்வாறு சமக்கிருத மொழியி னின்று இந்து ஐரோப்பிய ஆரிய மொழிகளுக்குப் பொதுவாயுள்ள சொற்களை நீக்கி விட்டால், மீந்திருப்பன திராவிட மொழிச் சொற்களேயாகும். அவற்றுள் பல இன்று தமிழில் வழக்கொழிந்து கன்னடம், தெலுங்கு முதலிய மொழிகளில் மாத்திரம் காணப்படும் பழந்தமிழ்ச் சொற்களை ஒத்தனவாகும். வின்ஸ்லோ அகராதியின் முன்னுரையில் வில்லியம் டெயிலர் (William Taylor) கூறியிருப்பது வருமாறு: ஆதியில் இமயமலை முதல் கன்னியாகுமரி வரையில் வாழ்ந்த ஆதிக்குடிகளிடையே ஒரே மொழி பேசப்பட்டு, அம் மொழி சீர்திருத்தம் அடைந்து, வடகோடியில் பாலியாகவும், தென்கோடியில் தமிழாகவும் வழங் கிற்று. பழைய பாலி மொழியோடு சாத்திரத் தொடர்பான பல கல்தேய சொற் களையும், பொது வழக்கிலுள்ள பல சொற்களையும் சேர்த்துச் சமக்கிருத மொழி உண்டாக்கப்பட்டது. இம் மொழிகளின் பெயர்களைக் கவனிக்கையில் பாலிமொழி சமக்கிருதத்துக்கு முந்தினதென்றும் தெரிகின்றது. பாலி என்றால் மூலம் அல்லது முந்தினது என்று பொருள். சமக்கிருத மென்றால் திருத்தம் பெற்றது அல்லது செம்மையாக்கப்பட்டது என்பது பொருள். மிகப் பழைய பட்டையங்கள் பிராகிருதத்திலும் பாலியிலும் எழுதப்பட்டுள்ளன. இவை சமக்கிருதத்தில் எழுதப்பட்ட சாசனங்களுக்கு முற்பட்டவை. இதனைக் கர்னல் சைக்ஸ் (Colonel Sykes) என்பார் ஆராய்ந்து கூறியுள்ளார். சமக்கிருதம் கடவுள்மொழி யென நம்புவது முழு அறியாமை மேல் நாடுகளினின்றும் இந்திய நாட்டை அடைந்துள்ள ஆங்கிலம், பிரெஞ்சு முதலிய மொழிகளைப் போலவே, ஆரியமும் இந்திய நாட்டுக்கு அன்னியமொழியாக உள்ளது. இம் மொழி இந்திய நாட்டை அடைந்த போது, இலக்கண வரம்பு இல்லாதும் பல குறைபாடுகள் உடையதாயும் இருந்தது. ஆரியர் இந்திய நாட்டை அடைந்து கிராம வாழ்க்கையினராயிருந்தபோது, தமிழர் நகர வாழ்க்கையினராய் வாழ்ந்தார்கள். ஆரியர் சிறிது சிறிதாகத் தமிழர்களோடு பழகிக் கலக்க நேர்ந்தபோது அவர்கள் ஆரியரின் மொழிக்கு இலக்கண வரம்பு செய்தார்கள்; எழுத எழுத்துக்களை உதவினார்கள்; அவர் களுக்குப் பல நூல்களை எழுதினார்கள். ஆரியரின் மிகப் பழைய நூல் எனப் படும் இருக்கு வேதமும் தமிழரின் கூட்டுறவு இன்றிச் செய்யப் பட்டதெனக் கூறுதல் அமையாது. வேதமொழியில் பல தமிழ்ச் சொற்கள் காணப்படு வதையும், வேதபாடல்கள் செய்தவர்களில் பலர் திராவிட வகுப்பைச் சேர்ந்தவர்களாயிருத்தலையும் கீழ்நாட்டு மேல்நாட்டு அறிஞர்கள் ஆராய்ந்து கூறியுள்ளார்கள். சமக்கிருதம் ஒரு கூட்டத்தினரின் சாதி மொழியும், சமய மொழியுமாக இருந்து வந்தது. அம் மொழி, இலக்கியமொழி அளவில் பயன் அளித்தது. அம் மொழியில் எழுதப்பட்ட கிரியை நூல்களாகிய பிராமணங் களைப் பயின்று, கிரியை புரியும் பிராமணக் குழுவினர்களுக்குள் மாத்திரம் அம் மொழி வழங்கிற்று. அது ஒருபோதும் பேச்சு மொழியாக வழங்க வில்லை. கிறித்துவம், புத்தம், முகமதியம் போன்று பிராமணமதம் இந்தியநாடு, மலாய்த் தீவுகள், கம்போடியா முதலிய நாடுகளில் பரவியபோது, அம் மதத்தோடு சமக்கிருதமும் கூடச் சென்றது. மத சம்பந்தமாக மக்கள் புத்திசாலித்தனமாக நடந்துகொண்டார்கள் எனக் கூற முடியாது. குருமார் (பூசாரிகள்) நினைத்தபடி யெல்லாம் மக்கள் ஆடினார்கள். சமயத்தின் பேரால் அரசனைக் கொலை செய்தார்கள், பெண்களையும், ஆண்களையும் பலியிட்டார்கள், 1பாம்பை வணங்கினார்கள், குதிரைகளைப் பலியிட்டு அதன் மாமிசத்தை உண்டார்கள், சொல்லத்தகாத இடக்கரான கருமங்களைச் செய்தார்கள். சிலைகளுக்குக் கன்னிப் பெண்களை மனம் முடித்துவைத்து அவர்களின் போகத்தைக் குருமார்கள் கடவுளின் பிரதிநிதிகளாகவிருந்து அனுபவித்தார்கள்; அனுபவிக்கிறார்கள். இவ்வாறு மக்கள் பூசாரிகள் ஆட்டிய ஆட்டங்களுக்கு ஆடியவைகளுள், சமக்கிருதத்தைக் கடவுள் மொழியெனக் கொண்டதும் ஒன்றாகும். கடவுள் மொழியென ஒன்று இல்லையெனப் பட்டப்பகல்போல இன்று எல்லோருக்கும் விளங்குகின்றது. இவ்வாறிருக்கவும், பொதுமக்களின் அறியாமையையே தமது பிழைப்புக்கு வலிமையாகக் கொண்டுள்ள ஒரு கூட்டத்தினர், உலகை ஏமாற்றி வருதலைத் தமிழன்பர்களும், தமிழ்த் தொண்டர்களும் பார்த்துச் சும்மா இருக்கலாமா? இம் முழு மூடத்தனத்தை ஒழித்தலன்றோ தன்னரசு அடைவதிலும் மேலான குறிக்கோளாகும். 1சமக்கிருதத்தைக் கடவுள் பேசும் மொழியென நினைப்பது குற்றியை மகனென்றும், கயிற்றைப் பாம்பென்றும் நினைப்பது போன்ற அறியாமையென விளங்குகின்றது. அவ்வாறாகவும் விளக்கைப் பிடித்துக் கொண்டு கிணற்றுள் விழுபவர்போல், மக்கள் தமது சொந்த மொழியைவிட்டு அயலவன் மொழியைக் கடவுள் மொழி என நம்பி வருகின்றார்கள். இதுவே இவ்விருபதாம் நூற்றாண்டு வியப்புகளுள் வியக்கத்தக்க தொன்றாகும். ¯¯¯ 1. தமிழர் நெடுங்காலம் ஆரியரை மிலேச்சர் என வழங்கினர். நிகண்டு நூல்களில் ஆரியரின் பெயர்களுள் ஒன்றாக மிலேச்சர் என்னும் சொல் காணப்படுகின்றது. மேற்குத் தேசங்களில் அன்னிய சாதியார் “பார் பேரியர்” (Barbarians) எனக் கூறப் பட்டார்கள். பார் பேரியர் என்பதற்கு அன்னியர் என்பது பொருள். மிலேச்சர் என்பதும் அவ்வகைப் பொருளுடையதாகலாம். 1. Hence we shall not be far wrong if we infer that South India gave a refuge to the Survivors of the deluge, that the culture developed in Lemurai was carried in South India after this submergence and South India after its submergence was probably the cradle of the post deluvian human race-Indian Antiquary - 1911 - P 118. Making use of the sea route between India and the Euphrates valley by which the Sumerians the ancient Dravidian inhabitants of the sea - land to the south of Babylon must have come from India-The history of Aryan rule in India-P. 5. E. B. HAVELL. 1. வேதபாடல் செய்யப்படுகின்ற காலத்திலேயே ஆரியர் தமிழர் கலப்பு உண்டாயிருந்தது. வேதபாடல்களைச் செய்தவர்களிற் சிலர் தமிழரே, சிலர் ஆரியர் தமிழர் கலப்பினால் தோன்றியவார்களாவர். அதனாலேயே வேத பாடல்களில் தமிழ்ச்சொற்கள் காணப்படு கின்றன. வேதபாடல்களைச் செய்தவர்கள், சிலரைப்பற்றிச் சொல்லப்பட்ட நிறம் முதலியவற்றால் அவர்கள் ஆரியரல்லர் எனத் தெரிகிறது. “Many Vedic kings and Rishis came to have Asura Blood in them as is indicated by the colour. Sages like Vasishta, Agastya and Visvamitra were given the same father Mitre Varna. God Varna was himself an Asura. Banerji believes that the Asuras wre different from Dasus but identical with Dravidans. The Dasus he points out were black, while the Asuras were brown or golden-Pre -musalman India. PP 172, 174, 177. -V. Rangacharya, M.A. 1. வடநாட்டு முனிவருக்கும் தென்னாட்டு முனிவருக்கும் தம்முள் மிக வேறு பாடுண்டு. வடநாட்டு முனிவர் மந்திரவாதிகள். காட்டில் சென்று ஏதோ மந்திர வித்தை புரிபவர். எப்பொழுதும் கோபங்கொதித்தெழும் இயல்பினர். அவர்களைக் கண்டு மக்களும் அரசரும் அஞ்சினர். அவர்கள் தத்துவ ஞானிகளல்லர்; மந்திர வித்தைக் காரரே. தமிழ்நாட்டு முனிவர் தத்துவ ஞானியர். அவர்களைக்கண்டு யாரும் அஞ்சுவதில்லை. அவர்கள் யாருக்கும் அஞ்சுவதும் இல்லை. அவர்கள் அருள் ஒழுகும் நெஞ்சினர். எவ் வுயிரிடத்தும் அன்பாயிருக்கும் இயல்பினர். வடநாட்டு முனிவர்களைப்போலச் சாபம் இடுபவரல்லர். இவ் வியல்பினை வின்டர் நிற்ஸ் (Wintenitz) என்பார் நன்கு எடுத்து விளக்கியுள்ளார்-History of Indian Literature-Vol. 2. 1. இருக்கு வேத பாடல்களிற் காட்டிற் சென்று தவஞ் செய்யும் வழக்கைப்பற்றிக் காணப் படவில்லை எனத் தத்தர் கூறியிருக்கின்றார். Krishna represented in the Maha - Bharata as Black and so is Arjuna - so also is Vyasa who has related the story. And so is Draupathi the wife of the Pandavas. “Hers is then Draupathi approaching with eyes like a a lotus petal and with a lusterous dark complexion resembling the colour of the black lotus. By her side is Subathirai who is fair as gold. Here is another wife of Arjuna being the daughter of Naga king fair as pure as gold. Here is also Chitrangada aughter of the Pandava King whose complexion is like the colour of a madhuka flower. Here is the cheif wife of Bhima with complexion as dark as a cgarland of blue lotus. By her side is the wife of tagula dark as a blue lotus” (Asramavasi Parava)-Eapic India - C. V. Vaidya, M.A. LL. B. 1. பத்தி என்பதற்கு மூலம், பதி (பதிதல்) ஆகவே பத்தி என்பதைப் பக்தி என்று எழுதுதல் தவறுடைத்து. பழைய நூல்களில் பத்தி என்னும் வழக்கே உண்டு சக்தி, பக்தி என்பன வடமொழியை அபிமானிப்பார் சிலரால் கொண்டு வரப்பட்ட புதிய வழக்கு. சத்தி என்ப தற்கு மூலம் சத்து. சத்தியைச் சக்தி எனின், பொருளின்றாம். கழுதை மயிர் பிடுங்கித் தீர்த்தமாடிய கதைபோல் குருட்டுத்தனமாகப் பழைய சொற்களின் உச்சரிப்புக்களை மாற்றுதல் தகுதியற்ற செயலாகும். 2. Ancient India P-120. 1. உபநிடதம் என்பதற்குக் கிட்ட இருந்து கேட்கப்படுவது (குருமாணாக்க முறையில் உபதேசிக்கப்படுவது) என்பது பொருள். இது நூல்களாக எழுதப்படாமல் குரு மாணாக்க முறையில் தமிழ் மக்களிடையே வழங்கிற்று. இது ஆரியர் வேதங்களைப் போலப் பெண்களுக்கும் சூத்திரருக்கும் மறைக்கப்படுவது அன்று. பெண்களும், அரச வகுப்பினரல்லாத பிறரும் உபநிடத ஞானங்களிற் சிறந்து விளங்கினார்கள். இதனாலும் இவை தமிழருக்கே உரியன எனபது வெளிப்படை. 2. மாபாரதம் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நிகழ்ச்சி எனப்படுகின்றது. இது கி.மு. 14ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்ததென்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இது கிட்டத் தட்டச் சரி என்று சொல்வதற்குரிய ஆதாரங்கள் சில உள. மகதநாட்டு அரசனாகிய பம்பசாகரன், புத்தர் காலத்தவன். அவன் பாரதப் போரில் கலந்து கொண்ட யுரசந்தா வுக்குப் பின் 52வது அரசனாவன். புத்தர் காலம் கி.மு. 5ஆம் நூற்றாண்டு. 51-அரசரின் ஆட்சிக் காவத்துக்கும் ஓர் அரசனுக்கு 20 ஆண்டு ஆட்சிக்காலம் என வைத்துக் கணக்கிட அது பாரதப் போரைக் கி.மு. 15ஆம் நூற்றாண்டிற் கொண்டுபோய் விடு கின்றது. எவ்வகையிலாவது பாரதப்போர் கி.மு. 14ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட தன்று எனச் சாதிக்கலாம். 1. விசுவாமித்திரர் வசிட்ட குடும்பங்களுக் கிடையில் நீண்ட பகையிருந்த தென்பதற்குப் பல கதைகளுள. விசுவாமித்திர குடும்பத்தினர், ‘பரதரின் புதல்வர்’ என்றும், ‘பரதரில் சிறப்புடையர்’ என்றும் வேதங்கள் கூறுகின்றன. விசுவாமித்திர குடும்பத்தினர் விரித்த சடையுடையவர்கள் என்றும், வசிட்ட குடும்பத்தினர் வலப்பக்கத்தே முடிந்த கொண்டை யுடையரென்றுஞ் சொல்லப்படுகின்றனர். வசிட்டர் “ரிற்றஸ்” என்னும் ஆரிய வகுப்பின ராயினும் அவர்கள் சூத்திரரென்று சொல்லப்படுகின்றனர். வசிட்ட குடும்பத்தின் முன்னோராகிய ‘ரிற்றஸ்’ வகுப்பினர் ஆரியரில் உயர்ந்தவர்களாயிருந்தபோதும் வசிட்ட குடும்பத்தினர் சூத்திரர் என்னும்படியான கீழ்நிலை அடைந்தனர். பிற்காலப் புராணங்கள் விசுவாமித்திரரைச் சத்திரியரென்றும் வசிட்டரைப் பிராமணரென்றும் கூறுகின்றன. சத்தியன் பிராமணன் என்னும் பதங்கள் முறையே தமிழரையும் ஆரியரையும் குறிக்கின்றன. வசிட்டர் பிராமணரின் நட்பைப் பெற்று அவர்களாற் பாரட்டப்பட்டார்; அவர்கள் வணக்கம் கூறி அவருக்குப் பல பெருமைகளைக் கொடுத்த னர். அவர்களிடத்தில் தரும சிந்தை கிடையாது. அவர்கள் விசுவாமித்தரர் மீது பல பழி களைச் சுமத்தினர். விசுவாமித்தரர் அவர்களின் சத்துருவாக விருந்தார். விசுவாமித்திர வமிசத்தவர்கள் பிறப்பிற் றமிழர் அல்லது பரதர். வசிட்ட குடும்பத்தினர் ‘ரிற்றஸ்’ வகுப் பினர். அக்காலத்தில் தமிழரசர் மேலான அதிகார முடையர்களா யிருந்தனர். ஆகவே பிறப்பினாலும் படிப்பினாலும் விசுவாமித்திர வமிசத்தினர், ஆரியர் இல்லங்களிலும் வணக்கத்தோடு போற்றப்பட்டனர். இது வசிட்ட குடும்பத்தினருக்கப் பொறாமையை மூட்டிற்று. இப்பொறாமை காரணமாக, ஒருவர்மீது ஒருவர் பழிகளைச் சுமத்தினது மல்லாமல் சண்டையிட்டும் கொண்டனர். கல்வியினாலும் உடல் வலியினாலும் விசுவா மித்திர குடும்பத்தினர் வசிட்ட குடும்பத்தினரிலும் பார்க்க அதிக வலிமையைப் பெற் றிருந்தனர். ஆகவே தசரதனது அரண்மனையில் விசுவாமித்திரர்கள் மிக்க செல் வாக்குப் பெற்றிருந்தனர். 1. சூத்திரப்பாவினாலாக்கப்பட்ட நூல்கள். 2. ஆரியப் பிராமணருக்கு ஞானம் போதித்த இராசானுசர், பகவத்கீதையின் ஆசிரிய ராகிய கண்ணன், கீழ்த்திசையில் ஞானத்தை உதிப்பித்த புத்தர் ஆதியோர் தமிழ் மரபினரே. உபநிடதங்கள் எழுதப்படுகின்ற காலத்தில், தத்துவஞானங்களை விசாரித் தறிவதற்கப் பிராமணர் தெற்கே வந்தார்கள். அதன் விளைவாக உபநிடதங்களுக்குப் பின் எழுதப்பட்ட சூத்திரங்களுக்கு உரை எழுதிய போதாயனரும், அபத்தம்பரும் முறையே கி.மு. 5ஆம், 6ஆம் நூற்றாண்டுகளில் இடையே யுள்ள ஆந்திரதேசக் கலை ஞானக் கொள்கைகளைப் பின்பற்றிய தமிழர். இவ்வாறு தமிழரே பெரிதும் வடமொழி நூல்களின் ஆசிரியர்களாவார். 1. The doctrine of Transmigration is entirely absent from the Vdedas and early Brahmanas. It seems probable that the Indian Aryans borrowed the idea from the aborigines - Cambridge History of India’ VOL.I.P. 108-Macdonald. No trace of the doctrine of transmigration is found in the Rig Veda and yet no dictrine is so peculiarly Indian.-Origin and Development of Bangali Language Vol. 1. P. 42. S.K. Chatterji. Peculiarly no trace of it (Rebirth) are to be found in the Vedas or in the poems of Homer. The Vedic hero goerolike the Homeric hero goes to dwell in the Elysium of Yama, the proto-man and returns no more to earth-India and the Western world. - H. G. Rawlinson. 1. இராச புத்திரர் திராவிட வகுப்பினராவர். இவர்கள் பிராமண மதத்தைத் தழுவித் தாம் ஆரியர் எனத் தமக்கு ஆரிய உற்பத்தியைக் கற்பித்துக் கொள்ளுவாராயினர்; “Later when these non-Aryans from India assimilated Brabmanic culture, their princes claimed connection with the ancient royal house of Aryan of upper India (a thing which was repeated in the case of the new Rajput clans at a later period)-The Developmenst of Bengali Language. P. 41. S. K. Chatterji. 1. The puranas naturally lent themselves augmentations and the Puranic Brahmans used their opportunities to the full, partly with further genuine traditions, but mostly with additions of Brahmanical stories and fables and doctrine and ritual matter. Brahmanic tradition speak from the Brahmanical stand point, describes events and expresses, feelings as they would appear to Brahmans, illustrates Brahmanical ideas, maintains and incaulcates the dignity, sanctity, supremacy and even superhuman character of Brahmans, enunciates Brahmanical doctrines........It often introduces kings because kings were their patrons, yet even so the Brahmans’ dignity is never forgotten-Ancient Indian Historical traditions pp. 37, 39, F. E. Pargiter. ‘In the 4th century A.D. Buddhism declined and there was a Brahmanical revival; and the Brahmans re-edited some of the books of the religious and the civil laws and gave a new and popular shape to them. The old Puranas were also recasted about the period and a good many new ones written-Collicted works of R.G. Bhandarkar Vol. II. P. 444. 1. பார்ப்பனர் (ஆலயங்களைப் பார்த்துக் கடவுள் ஊழியம் புரிகின்ற தமிழரே) தமிழ் மக்களின் சடங்குகளை முன்னின்று நடத்துவோரா யிருந்தனர். பார்ப்பனர் பிராமண மதத்தைக் கைக்கொண்டு மதம் மாறியபோது, தமிழர் தம் சடங்குகளை இயற்று வதற்குத் தமக்குள்ளேயே சிலரைத் தெரிந்தெடுத்தனர். தமிழ் நாட்டினின்றும் பிரிந்து வாழ்கின்றவர்களாகிய இலங்கையின் வடகோடியிலுள்ள தமிழர் சிலருக்குச் சடங்குகளை இயற்றுவோர் ‘சைவக்குருக்கள்மார்” எனப்படும் வேளாண் மக்களே. அந் நாடுகள் எங்கும் இவ்வழக்கே நிலவியது. சிறிது சிறிதாகப் பிராமணர் அவர் இடத்தை நிரப்பி வருகின்றனர். 1. ‘Apart from the back ground of Dravidian religion and philosophy, Tantrikism and Tantric rites which form the germ of nucleus of the primitive Dravidian religion of the Agamas, the Tantrikism and Tantric rites came from hoary antiquity and from a common feature of the antiuated religions of all the primitive peoples of the world, Dravidians included-Philosophy of the Lingayats P. 279-Sakari, M.A. But when the subjuct matter and the contents of the Agamas and the Vedas are closely examined and studied it will be found that the Agamas and the Vedas stand altogether apart as poles asunder-Ibid. P. 269. 1. Indian antiquary Vol x 881 P 95. 1. படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல். 1. Ancient India P 652-658-R.C.Dutt. 1. திருவாசகத்திற் பலவிடங்களில் ஆகமங்கள் மகேந்திரத்திற்றோன்றின என்று சொல்லப் படுகின்றது. “மன்னுமாமலை மகேந்திரவெற்பன்” “தென்பாண்டி நாட்டான்” மகேந்திர மலை மந்திரமலை எனப்படும். அதற்குக் ‘குருவாய்’ இங்குக் குமரன் கோட்டம் இருக் கிறது. செந்தில், திருந்செந்தில், திருச்செந்தூரென்பது அதற்கு மாறு பெயர்கள். குரு வாய் சிவனுக்கு இடமென்று கருத இடமுண்டு. இதனையே சமற்கிருத புராணக்காரர், இமயமலைச் சிகரம் ஒன்றெனக் கொண்டனர். மனுவின் பேழை தங்கியதாகச் சதபத பிராமணம் கூறும் வடமலை பொதியில் அல்லது சீ பருவமென அறிய முடியாமல் இருக் கின்றது. தென்னாட்டுக் கதைகளை வடநாட்டார் பார்த்தெழுதுமிடத்துத் தென் னிந்தியாவில் நிகழ்ந்தவற்றை எல்லாம் வடநாட்டில் நிகழந்தனவாக எழுயிருக்கின்றனர். 2. From the little I have seen of them they (the - Agamas) seem to be opposed to Vedas almost asire to arrogate to themselves position much superior. 1. Short Studies of Comprative Religions-Major-reneral J. G. R Forlong PP-250, 251, 253, 265. 1 2 15 14 3 4 13 12 5 6 11 10 7 8 9 32 17 18 31 30 19 20 29 28 21 22 27 26 23 24 25 48 1. ஐரோப்பாவில் மத்திய காலத்தில் இலாத்தீன் எவ்வாறு இலக்கிய மொழியாக வழங் கிற்றோ அவ்வாறே சமற்கிருதமும் இலக்கிய மொழியாயிருந்ததேயன்றிப் பேச்சுமொழி யாக விருக்கவில்லை. “It became the vehicle of literature used by the educated as a second and cultured language.........much as Latin continued to be used for literary pruposes contemporaneously with the spoken dialect......In this capacity it has remained the literary language of the Hindus, like Lathin throughout the middle ages in Europe-India’s Past-P. 197 A.A. Macdonell. 2. It is regarded as certain that Dravidian speakers were at one time spread over the whole of Northern India as well from Baluchistan, to Bengal-Origin and Development of Bengali Language. P. 28. S. K. Chatterjee. When the Aryans passsed the Afghan passed, India was inhabited by a dark and short structured but civilized race called the Dravidians-Outline of Economic History of India. P. 8. M.P. Lohana. 1. The most important of these dark skinned tribes were the Yadus and Turvasas. Even the Rishis or chief order the priests of the Indo-Aryan tribes had to admit into their order the priests of these dark-skinned Aryans. The Vedic literature contains descriptions of white-skinned and golden-haired Rishis and dark-skinned Rishis. After this admixure the Indo-Aryans became powerful enough to push on towards the east and the south, they conquered the Dravidian kingdoms of the United Provinces and Northern Rajaputana, but did not succeed in penetrating further South or East. The Dravidian remained independent in Bihar, Bengal, Orissa, and Central prouinces, Gujarat and Sindh; while the country to the south of the Vindhysas remained entirely unaffected by the invation of the Indo-aryans. Junior-History of India-R.D. Banerji. M.A. 2. Many of these Buddhist and Jain dogmas appear to have been based on the religious tenet of the older Dravidians-ibid. P. 12. 3. With Buddhism dawned a new era in the history of India. Buddhism rose as a revolt against the tyranny of the priests who were Brahmanas. Brahmanism in its later stages had assumed very arrogant aer. Learning became the monopoly of these human gods, for in the ignorance of the other three Indian women-Mrs’ Hansa Metha B.A.J.P. 1. “இப்பா லிமயத் திருத்திய வாள் வேங்கை”-சிலப்பதிகாரம்; ஆரிய ரலறத் தாக்கிப் பேரிசைத்-தொன்றுமுதிர் வடவரை வணங்குவிற் பொறித்து-வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன்- அகம். 396. 2. “அமைவர லருவி யிமையம் விற்பொறி-திமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கப்-பேரிசை மரபினாரியர் வணக்கி”-பதிற்றுப்பத்து. 2ஆம் பதிகம். “இந்த நான்கு மதங்களும் (புத்தம், சைனம், ஆசீவகம், வைதீகம்) கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் வடநாட்டுக்கு வந்தன.....வடநாட்டு மதங்களின் தொடர்பற்ற புராதன மதமாயிருந்தது அக் காலத்துத் தமிழர் மதம்”-பௌத்தமும் தமிழும்-பக் 13-மயிலை சீனி வேங்கடசாமி. 1. The fair women of Aryan descent were an irresistible attraction for Dravidian chieftains and racial áide did not prevent Indo - Aryan families from giving a daughter in marriage to a dark skinned neighbour for a sufficient consideration... But as Dravidian society was matriarchal such intermarriage... always exerted powerful influence in the Aryanization of India, for in the course of time all the highest Dravidian families in the north and south claimed Aryan descent on their mothre’s side and adopted Aryan descent on their mother’s side and adopted Aryan customs and religion-A short history of Inida P. 26. E.B. Havell. 2. Gradually the Dravidians adopted Aryan manners; customs and religion. The Dravidian priests become Brahmanas, and the kings of all tribes claimed to be Kshatriyas-Junior History of Inida P. 17. R. D. Banerji. 1. No. 471 of 1912 records the gift of such a monastery for a Saiva saint by a village, which also provided for the feeding of all strangers who might visit it. The property of theis monastery was confiscated in the twenty second year of Kulothunga Chola III when there was a general crusade against the non-Local Gobvernment in ancient India P. 273. R. K. Mookerji. 2. ஐரோப்பிய அறிஞரும் தமிழ் மொழியும் - திரு. ஆர்.பி. சேதுப்பிள்ளை, B.A.,B.L., 1 தமிழ் நாட்டில், பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேல்நாட்டின் ஒளி வீசுவதாயிற்று. கால்டுவெல் என்னும் அறிஞர் உலக வழக்கினும் நூல் வழக்கினும் அமைந்த அருந் தமிழ் மொழியை ஆர்வமுறப் பயின்றார். அவ்வாறு கால்டுவெல் தமிழ் மொழியைக் கற்று வருங்காலத்து மலையாள மொழியை குந்தார்த்தர் என்னும் மேலை நாட்டறிஞர் மொழி நூல் முறையில் ஆராயத் தலைப்பட்டார். கருநாடக நாட்டில் வழங்கிய கன்னட மொழியைக் கிட்டல் என்னும் கலைவாணர் கற்கத் தொடங்கினார். ஆந்திர மொழியை ஆர்டன் முதலிய மேலைநாட்டறிஞர் ஆராய முற்பட்டார். இவ்வாராயச்சிகளின் பயனாக, கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் தமிழ் மொழியோடு நெருங்கிய தொடர்புடைய மொழிகள் என்பது வெள்ளிடை மலைபோல் விளங்குவதாயிற்று. இந் நான்கு சிறந்த மொழிகளும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளேயாயினும், அவற்றுள் மிகத் தொன்மையும் செம்மையும் வாய்ந்த மொழி தமிழே என்பது ஆசிரியர் கால்டுவெல் உள்ளத்தில் தெள்ளிதில் விளங்கிற்று. பாரத நாட்டு வடமொழியும் தென் மொழியும் நெடுங்காலமாக நெருங்கிப் பழகிவந்த பான்மையால் வடமொழியினின்றும் பல சொற்கள் தென்றமிழில் இடம் பெற்றமை இயல்பேயாகும் என்று அவர் எடுத்துரைத்தார். அவ்வாறே தென்மொழியினின்றும் பல சொற்கள் வடமொழியில் வழங்கும் தன்மையை விளக்கிக்காட்டினார். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் விழுமிய நூலின் வாயிலாக ஆசிரியர் கால்டுவெல் இவ்வரிய உண்மைகளை வெளியிட்ட காலத்தில் மேற்கூறிய டாக்டர் குந்தார்த்தர் என்பவர் வடமொழியில் காணப்படும் திராவிட அம்சங்கள் என்று ஒரு சிறந்த கட்டுரை வரைந்து வெளிப்படுத்தினார். டாக்டர் கிட்டல் என்னும் அறிஞரும் வடமொழி ‘நிகண்டுகளிற் காணப்படும் திராவிட அம்சம்’ என்று சிறந்த கட்டுரை எழுதிப் போந்தார் வடமொழி அகராதியிற் காணப்படும் சொற்கள் அனைத்தும் ஆரியச் சொற்களேயாம் என்று கொள்ளுதல் மொழி நூல் முறைக்கு மாறுபட்டதாகும் என்று கொள்ளுதல் மொழி நூல் முறைக்கு மாறுபட்டதாகும் என்று இம் மூவரும் திண்ணமாய் எடுத்து மொழிந்தார்கள். ஆரியக் குடும்பத்தைச் சேர்ந்த ஐரோப்பிய மொழியிற் காணப்படுமேயாயின், அச் சொற்களும் கூறுகளும் இந் நாட்டு மொழிகளினின்றும் வடமொழியிற் சென்று சேர்ந்திருக்க வேண்டும் என்று கால்டுவெல் ஆசிரியர் எடுத்துரைத்த காரணம் கற்றறிந்த மாந்தர் மனத்திற் பதிந்தது. ஒப்பிலக்கணமென்னும் நூலின் அனுபந்தத்தில் தென் மொழியினின்றும் வடமொழியிற் சென்று சேர்ந்தன வாகக் கருதக்கூடிய முப்பத்திரண்டு சொற்களை ஆசிரியர் கால்வெல் மொழி நூல் முறையில் ஆராய்ந்து எழுதியுள்ளார். இனி டாக்டர் குந்தார்த்த ரென்னும் ஆசிரியரும் பல திராவிடச் சொற்கள் வடமொழி யில் இடம் பெற்றிருத்தலை மொழிநூல் முறையில்ஆராய்ந்து எழுதியுள்ளார். கால்டு வெல் காலத்திற்குப் பின்னர் கன்னட ஆங்கில அகராதி எழுதி வெளிப்படுத்திய கிட்டல் என்னும் ஆரிசியர் அதன் முகவுரையில் வடமொழியிற் கலந்திருப்பனவாகக் கருதக் கூடிய நானூற்றிருபது திராவிடச் சொற்களைக் குறித்துள்ளார். - உயர்திரு ஆர்.பி. சேதுப்பிள்ளை பி.ஏ., பி.எல். 1. Ancient Indian Historical Tradition. So that almost everything that has passed into written form has been cast in an Aryan mould. For real history the Brahmanic writers never cared anything. So early events and family origins invariably assume a mythic guise, and everything about non Aryan race is either omitted or only noticed the conquest of the twice born over the ‘demons’ and barbarians-The Indian Village community P. 91-B.H. Baden-Powell M.A. CI.E. பிராமணர் வரலாறுகளை மாறுபட எழுதிவைத்ததுமல்லாமல் திராவிடநாட்டு மொழிகளில் எழுதப்பட்ட நூல்களையும் அழித்தார்கள். “The ruthless manner in which Buddhist and Jain literature, in Sanskrit as well as the vernaculars was suppressed and destroyed through the Brahmanical reaction is the greatest tragedy in the Indian culture. - The History of Telugu literature - P. Chenchiah. 1. First of all the child in question hardly learns either of the two languages as per-fectly as he would have done if he had limited himself to one. Has any bilingual child ever developed into a great artist in speech, a poet or orator? The worst of the systems is, that instead of learning things necessary to us we must spend our time and energy in learning to express the same thought in two or three lan-guages at the same time - Language - its Development and Origin. P.148 otto Jesperzen. 33 34 சில முக்கிய குறிப்புகள் Dravidian Characteristics have traced alike in Vedic and Classical Sanskrit, in the Prakrits or early popular dialects and in the modern vernaculars derived from them. The Presence of the second series of dental letters, the so called cerebrals in the language of the Rig Veda, and their absence from any other Indo – European language is ascribed to Dravidian influence; - Kalipada. M.A. B.L. - The quarterly journal of the mythic society Vol. XVI The Vedic theory is found in the Aitareya Brahmana. It asserts that the Devas i.e. the worshippers, the Hindus, originally had no king. In their struggle against the Asuras when the Devas found that they were repeatedly defeated they came the to the conclusion that it was because the Asuras had a king to lead them they were successful. Therefore the decided to try the same experiment and they agreed to elect a King. It has a historical reference. It would refer to the tribal stage of the Aryan in India and it would suggest that the institution of Kingship was barrowed form the Dravidians. - A Hindu Polity – A Constitutional history of India in Hindu times p 5. A variety of caused, partly political and partly literary has tended to the belittlement of peninsular India’s contribution to the history both of India and of the whole world at large. The time is ripe for South-India to Champion her own cause and assert her claims to recognition – Sidelights on the Dravidian Problem – F.R. Richards I.C.S., M.A. MR. AS F.R.A.I.T.Q.J. O.T. Mythic Society. Vol VI. 47 46 35 36 45 44 37 38 43 42 39 40 41 64 49 50 63 62 51 52 61 60 53 54 59 58 55 56 57 80 65 66 79 78 67 68 77 76 69 70 75 74 71 72 73 96 1. At any rate we may be on our guard against looking at everything through Aryan or Brahmanical Specatacles.......that almost everything has passed into written form has been cast in an Aryan mould. For real history the Brahmanic writers never cared anything..... everything about non-Aryan race is either omitted or only noticed the conquest of the ‘twice born’ over the ‘demons’ and barbarians. - Village Community. p. 91 - B.H. Barden Powell M.A.C.I.E. 1. History and philosophy of the Lingayat Religion - p. 10 - M.R. Sakbare. M.A.T.D. 1. Of the writings called Anukramani in which the metre, the deity and the authour of each song are given in their proper order - The History of Indian literature-P. 61 - A. WEBER 1. The original common name of the so called Aryan race is still unknown. One thing is certain that they were not called Aryans. For many other Aryan tribes had other names - Archaens, Celts, Italics, Tocharians, Phrygians etc. - The cradle of the Aryans - H. Heras - New Review VOL 5 P. 353 1. It is error to suppose that the pure Aryan race exists any where. The aryans from very early time were extensively eclectic, and this eclecticism was the secret of their cultural success. They freely mix with other races. This happened in Europe as well as in India - ibid 1. The theory is that religion arose from the worship of deceased ancestors. This is usually held to be more convincing than the theory of nature worship, in that it gives a reason why man as a fact came to believe in divine or super human beings - Vedic Hymns - P. 15-Edward T. Thomas. 1. Historians especially in writing of early ages, have copied down the traditions of real events so mixed up with myths that it is one of the hardest tasks of the student to judge what to believe and what to reject-Anthropology. E.B. Tylor. 1. When the subject matter and the contents of the Agamas and the Vedas are closely examined and studied it will be found that the Agamas and the Vedas stand altogether apart as poles as under - Philosophy of the Lingayats P. 279 Sakari. 1. The transference of the same Soma to the moon which appears in the latter history of this Indian religion, is hither to obscure; the Vedas hardly know it. Neither do they seem to prepare the way for it-Oriental and linguistic studies P.10-William Dwight Whitney 1. Indo-Aryans VOL 2 P.80 Rajendralala Mitra. 2. Ibid P. 106. Stone Age in India - P.21 P.T.S. Iyengar. 1. The rite includes such repulsive incidents as the introduction of the sepas of the medha into the yoni of the yajamana’s chief wife, accompanied by the recitation of long strings of mantras - Ibid. 2. The people ate both animal and vegetable food: horses (A.V.VI. 71. 1) bulls (R.V. i. 164. 4) buffaloes (R.V.V.29.7) rams (R.V. x 27. 17) and goats (R.V.I. 162. 3) were killed on slaughter benches (suna) (R.V.X. 86.16) cooked in cold. Rons (R.V. iii 53.22) and eaten - Life in Ancient India P.49 P.T.S. Iyengar. The famous mantra beginning with udishva ari, now used in funeral ceremonees and hence interpreted to refer to widow remarriage, has really no such implication, because the proper use is in connection with the horse or the human sacrifice, where the queen was called upon by means of the mantra to rise from the side of the sacrificial victim, after the above-described rite was over, and rejoin her living husband who was waiting for her-Stone age in India P.21. 1. The gods of the second group (i.e. Varuna, Rudra Tvushta and Adite) seems to have been taken over from the Dravidian speaking tribe of India. It has been already pointed out that the Dravidian languages profoundly affected the Vedic language. Similarly the gods worshipped by the tribes that gradually accepted this language must have been `Aryanized’ and adopted into the Vedic pantheon. Those vedic gods the etymology of whose names is not patent and who have no analogue in other Indo-germanic dialects must have been Indian gods to whom such treatment was accorded - The Age of the Mantras. P.123 - P.T.S. Iyengar. 1. Ibid - P. 125 & 126 Civa is a god unknown to the vedas; his name is a word of not frenquent occurrence in the hymns, indeed, but means simply `prosperous’; not even in the Atharvan it is the epithet of a particular divinity, of distinguished by the useage, from any other adjectives. The precise relation between Civa and Rudra is not yet satisfactorily traced out - - Oriental and Llinguistic Studies P.30 - William Dwlight Whitney - A History of Indian literature - P. 52 - Herbert H. Goven 1. The living Hindu religions of today from Cape Comorin to the remote corners of Tibet is essentially Tantric. Even the genuine Vedic rites that are preserved and are supposed to be derived straight from the Vedas e.g Samdya have been modifed by the addition of the Tantric practices - Outline of Philosophy - P. 130, P.T.S. Iyengar. 1. Riddle of Mohanjo Daro - New Review VOL. III The Rig-veda contains no traces of the beyond; a couple of passages in the last book which speak of the soul of the dead man as going to the waters on plants. It seems hardly likely that so far reaching a theory should have been developed from the stray fancies of one or two later Vedic poets. It seems more probable that Aryan settlers received the first impulse in the direction from the original inhabitants of India-Sanskrit Literature P. 387. Prof Macdonell. 2. The System of the Vedanta - P. 8 or Paul Deussen 1. Wisdom of the East - P.13 - L.D. Barnett. 2. Indications intimate that the real guardians of these thoughts were not originally the priestly caste, absorbed in the ceremonial, but rather the caste of the Kshatriyas. Again and again in the upanishads we meet the situation that the Brahman begs the Kshatrya for instruction which the latter after several representations of the unseemliness of such a proceeding imparts to him - The system of vedanta - Dr. Paul Deussen. 1. Matsya purana chaper LXXI pp 213,213,222 - Sacred books of the East edited by Basu. 1. The Burning of Widows - William Johns - 1816 1. The position of women in Hindu civilization - Dr. A.S. Altekar. The reasons for Brahman legislators gradually giving religious sanction to this horrible custom are that porobably they found it more diffcult to prevent moral lapses in widowed women. The introduction. 1. The present Ramayana even as it is approved and adopted by the searching and all respected commetator Katara, is not the Ramayana originally written by Valmiki, not even the most orthodox thinker will be desposed to doubt. Who ever cursorily reads the poem cannot but be struck by the inconsistencies the sereneness of connections, juxtapositions of new and old ideas which abound so greatly in the present Ramayana. Wheather we take the Bengal or Bombay text of it, and one connot but come to the conclusion that the Ramayana of Valmilki was substantially reconstructed some sabseqient date - The Riddle of Ramayana P.7-C V. Vaidya. M.A.L.L.B. 1. Narada therefore, appears to treat Rama not as an Avatara of vishnu, but only a so great person who having lived a meritorious life goes to Bramaloka after his death. The theory of ten Avataras of Vishnu is a creation of the Puranas and not of Mahabharata nor the Ramayana as is abundantly clear from the Ramayana itself. The Varaha Avatara seems not to have been locked upon as an Avatara of Vishnu in the days of Ramayana-The foregoing will efficiently prove that the modern ideas of ten Avataras did not form part of the original Ramayanar. The idea was only in the process of formation at the time of the compilation of the present Ramayana and developed itself more fully subsequently during Puranic times - Ibid p. 29. 1. இராவணன்-ஊளையிடுகிறவன். தசமுகன்-பத்துத்தலையுடையவன். விபூஷணன்-பயங்கரமானவன். மேகநாதன்-இடிக்குரலுடையவன். கரன்-கழுதை, துஷசணன்-கெட்டவன். திரிசிரன்-மூன்று தலையுடையவன். இப்பெயர்கள் பஞ்சதந்திரத்தில் வரும் பெயர்களை நினைவுக்குக் கொண்டுவருகின்றன. 1. The Tamilian Antiquary-No. 7. 2. It is now generally admitted that a great deal of the ancient medieval myths and legends enshrined in the Sanskrics and puranas are of non-Aryan origin, and that even in vedic mythology certain pre-Aryan elements are present. Puranic myth of the gods and legends of kings, heroes and sages in the form of which we find them in the Sanskrit works, represents undoubtedly a censiderable amount of modifications from other original forms whethser Aryan or non-Aryan. The non-Aryan speaking marses of northen India became Aryanized in language, and that their tales and legends were retold as a matter of course in the Aryan language of their adoption-Purana legends and the Prakrit tradition in new Indo-Aryan - Bulletin of the school of Oriental studies Vol. VIII - S. K. Chatterji. 1. Ramayana of Valmiki-Ralph Griffith. 2. Regarding the non-Aryan or the aboriginal peoples of India, the Rigveda shows condiderable acquaintance. It calls the non-Aryan as Dasa or Asura and in one passage refers to ruddy Pisachas and Rakshasas ultering fearful noise and yells in battle.-Hindu civilization p. 30-Radha Kumud Mookerji. 1. It must be stated, at the outset, that the learned Professor Sundaram Pillai had no faith in the authenticity of the story of Ramayana. He was of opinion that it was meant to proclaim the prowess of the Argans and represent their rivals and enemies, the Dravidians who had attained a high degree of civilization at that period in the worst possible colour -The Morality of Ramayana-P. Ponnampala-Pillai-The Tamilian Antiquary No. 7. 2. The reason seems to be that monkey was the tribal totem of the leading section of leading hill men who formed Ramachandra’s aboriginal army Even to this day there are monkey totems among the Oraons of the Haluman (baboon) gotra(totemic sept) and the gari (common monkey) gotra nad who have each a species of the monkey for Cha’a Nagpur-Sarat chandra Roy M.A. 3. While Ravana is regarded with horror by the Brahmans. Ravanabhat a vedic work on phonetics is ascribed to this Rakshas. His memory is still cherished by the Jains. It is also curious that Ravana is esteemed and acknowledged by pious Pandits as a learned man, and is supposed to have been the author of a Telugu Grammar. Though the Rakshasas are described in the Ramayana and morally, it appears that the condition of being a Rakshasa depended more upon the sins committed by an individual or by his progenitors than the accident of birth. If this be admitted, the physical monstrosities ascribed to the Rakshasas must be regarded as the exaggerrated creations of a morbid and hostile imagination. Even the Ramayana extols the beauty and grandour of Lanka, its architectural splendour, and efficiency of its administration. This latter was as excellent that no thief dared to pick up any valuable thing on its streets. The enemies of Rama could hardly therefore have been so rude and uncivilised as they are generally represented-Original Inhabitants of India-pp. 587, 88-Dr. G. Oppert. 1. The Mahabharata however shows a greater knowledge of the southen region than even the Ramayana-A Lilterary History of India-R.W. Frazer. 2. The Ramayana describing the wanderings and adventures of a prince banished from the country, has so far something in common with Odessy. Ramayana, like Mahabharatha is a growth of centuries-Ramayana by R. C. Dutt. 1. “The succeeding history of India as preserved in its literature is one unenduring struggle of the Brahman power to assert its supremacy, and to promulgate far and wide the ordinances it laid claim to formulate under divine sanction.”2 A Literary History of India pp. 32, 86 - 2. ibid. 81 82 95 94 83 84 93 92 85 86 91 90 87 88 89 112 97 98 111 110 99 100 109 108 101 102 107 106 103 104 105 128 113 114 127 126 115 116 125 124 117 118 123 122 119 120 121 144 அறிஞர் ந.சி. கந்தையா எழுதிய நூல்கள் நூல் பெயர் ஆண்டு 1. பத்துப்பாட்டு 1949 2. பதிற்றுப்பத்து 1937 3. கலித்தொகை 1941 4. பரிபாடல் 1938 5. அகநானூறு 1938 6. புறப்பொருள் விளக்கம் 1936 7. கலிங்கத்துப்பரணி 1938 8. விறலிவிடுதூது 1940 9. பெண்கள் உலகம் --- 10. பெண்கள் சமூகம் அன்றும் இன்றும் 1948 11. பெண்கள் புரட்சி 1946 12. பொது அறிவு 1957 13. பொது அறிவு வினா விடை 1961 14. உலக அறிவியல் நூல் --- 15. உங்களுக்குத் தெரியுமா? 1954 16. அறிவுக் கட்டுரைகள் 1950 17. நூலகங்கள் 1948 18. அறிவுரை மாலை 1950 19. அறிவுரைக் கோவை 1950 20. தமிழர் சமயம் எது? 1947 21. சைவ சமய வரலாறு 1958 22. சிவன் 1947 23. இந்து சமய வரலாறு 1954 24. தமிழர் பண்பாடு 1966 25. நமது தாய்மொழி 1948 26. நமது மொழி 1946 27 நமது நாடு 1945 28. திராவிட மொழிகளும் இந்தியும் 1948 29. தமிழ்ப் பழமையும் புதுமையும் 1946 30. முச்சங்கம் 1947 31. தமிழ்க் கடவுளுக்கு ஆரியப் பாடலா? 1947 32. ஆரியர் தமிழர் கலப்பு 1946 33. ஆரியத்தால் விளைந்த கேடு 1948 34. புரோகிதர் ஆட்சி 1949 35. இராமாயணம் நடந்த கதையா? 1947 36. ஆரியர் வேதங்கள் 1947 37. திராவிடம் என்றால் என்ன? 1948 38. திராவிட இந்தியா 1949 39. திராவிட நாகரிகம் 1947 40. மறைந்த நாகரிகம் 1948 41. ஆதி மனிதன் 1948 42. ஆதி உயிர்கள் 1949 43. மனிதன் எப்படித் தோன்றினான்? 1947 44. மரணத்தின் பின் 1950 45. பாம்பு வணக்கம் 1947 46. தமிழர் யார்? 1946 47. உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு 1948 48. சிந்துவெளித் தமிழர் 1947 49. தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் 1958 50. தமிழர் சரித்திரம் 1940 51. வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர் 1943 52. திருவள்ளுவர் 1948 53. திருக்குறள் 1949 54. தமிழகம் 1934 55. தமிழ் இந்தியா 1945 56. திருக்குறள் அகராதி 1961 57. தமிழ்ப் புலவர் அகராதி 1953 58. தமிழ் இலக்கிய அகராதி 1953 59. காலக் குறிப்பு அகராதி 1960 60. செந்தமிழ் அகராதி 1950 61. கலிவர் யாத்திரை 1959 62. இராபின்சன் குரூசோ 1949 63. அகத்தியர் 1948 64. தமிழ் ஆராய்ச்சி 1947 65. தமிழ் விளக்கம் --- 66. நீதிநெறி விளக்கம் 1949 129 130 143 142 1. Early conquerors were believed to owe their success to magical skill, powerful guardians, or charms and talismans which potected and assited them. The Irish Druids are represented as maintaining that it is owing to them the sun rises each morning and sets each night - Footprints of the Past - p.131 J.M. Wheeler. 2. When the Brahmans settled in Southern India and the ancient Tamil Rajahs desiring to secure the benefit of the yagas, accorded to the priests, a supreme position to the society, the Brahmanas naturally tried to introduce their socio-religious organization into Tamil society. Pre-Aryan Tamil culture. p. 20 P.T.S. Aiyangar. 3. Even Brahmans used to eat meat when they took part in vedic sacrifices. Things began to change - gradually, and in the 9th century the cultural gulf bet ween different castes became too wide. - The position of women in Hindu civilization p.91 - Dr.A.S.Altekar. 4. It only led to the confusion of caste and the prevalence of scoial jealousies that have characterized the life of South India for a thousand five hundred years for, we learn from the Thevaram of Thirunavukkarasu Nayanar that there was in his day, as there is to-day a consciousness of revalry, if not jealousy, between the Brahmans and the non-Brahmans or as they were called Aryan and Tamilian. - Pre-aryan Tamil culture p.20 - P.T.S. Aiyangar. 1. In all nations the priests placed themselves at the head, and even controlled the king. But in India, the Brahmans went as I remarked still further ... the Maharaja was educated in their hands. By then he was moulded to their wishes, they were appointed, by these divine institutes, his guardians, and perpetual, inalienable cousellors. Having thus firmly seized and secured the whole political power had only to rule and enrich themselves out of a nation of slaves at their pleasure; Popular History of priest-craft in all ages and nations - p.85 William Howitt. 1. Of the loan words from Sanskrit some have been borrowed wantonly i.e. when there are many Tamil words to express the ideas; this is partly due to the Brahmanas whose familiarity with Sanskrit made them to import such words in their Tamil speech and writing. Pre-aryan Tamil culture p.15. 1. Temples were built at tombs or shrines and dedicated to dead saints worship is first offered to the actual Ghost of the person buried. The spirits of the dead are the Gods and originally undifferentiated in thought Ghosts are fed, propitiated, receive worship and the fittest Ghosts survive and become Gods - FootPrints of the Past p.20. T.M.Wheeler. 2. Prayer books are a collection of good spells against evil as well as petitions for blessings, fine weather, suceess in war, and other desired objects - I bid p.114. 1. ஆராய்ச்சியாளர் ஒருவர் மயில், பலம், பீழை, சிகழிகை, கழகம் முதலிய சொற்கள் வடமொழியினின்றும் தமிழ் இரவல் பெற்றுக்கொண்டவை எனக் கூறுகின்றார். மயில், பழம், பீழை, சிகழிகை, கழகம் முதலிய தமிழ்ச் சொற்களே வடமொழியில் மயூரம், பலம், பீடா, சீர்ஷக, என்பன போன்ற சொற்களாக மாறுவேடத்தில் காணப்படுகின்றன எனக் கூறுலாகாதா? வடமொழியில் வழங்கும் பலம், மயூரம் முதலிய சொற்கள், திராவிடச் சொற்கள் எனக் கிற்றல் என்பார் கூறியுளார். அவர் கூற்றினை எஸ்.கே.சட்டேர்ஜி, பந்தர்க்கர் போன்ற பேராசிரியர்கள் எடுத்து ஆண்டுள்ளார்கள். கலை என்னும் சொல் வடமொழிக்கு உரியதெனத் துணியக் கூடாமையைக் காலின்ஸ் என்னும் ஆசிரியர் “திராவிட ஆராய்ச்சி” என்னும் நூலில் எடுத்து விளக்கியுள்ளார். சமக்கிருதத்தில் மூலம் எழுதப்பட்டுள்ள சொற்கள் எல்லாம் வடமொழிக்குச் சொந்தமானவை என்று கருதல், கருதி விடுதல் ஆகாது. அம் மொழியைக் கையாண்டு சொன் மூலங்கள் எழுதியவர்கள் அது தெய்வ மொழியென்றும், அது பிற மொழிகளிலிருந்து குனிந்து இரவல் வாங்கமாட்டாதென்னும் மூட இறுமாப்புடையவர்களாவர். வடமொழிச் சொற்கள் பலவற்றுக்கு எழுதப்பட்டுள்ள சொன் மூலங்கள் தப்பாயிருத்தலையும், அவைகளுட் பல, தமிழ் அடிகளாகத் தோன்றுதலையும் காலஞ்சென்ற நல்லூர் சாமி ஞானப்பிரகாசர் தனது தமிழ்ச்சொற் பிறப்பு ஒப்பியலகராதியில் ஆங்காங்கு நன்கு எடுத்துத் தெளிவுபடுத்தி உள்ளார். 1. Sanskrit words are said to have been introduced even before the arrival of the Jains, but it is doubtful whether these are ancient words commen to both Aryan and Dravidian languages - Manual of administration of the Madras Presidency - Vol.1.p.41. 1. எம்மால் எழுதப்பட்ட “பாம்பு வணக்கம்” என்ற நூலில் விவரங்களைப் பார்க்கலாம். 1. It was for many years universally believed that Sanskrit was the mother tongue, to which all languages could be traced. The theory was not by far absurd as that which had been set to some time previously by certain. 131 132 141 140 133 134 139 138 135 136 137 xvi தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967) தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே. ‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’ என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர். ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:- தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார். ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார். தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின. ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும். தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம். அகராதிப் பணி தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை. ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார். இலக்கியப் பணி புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள். பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர். தமிழ்மொழி - தமிழினம் தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை. திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும் தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:- திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார். பிற மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார். “ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.” வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்! தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன். அன்பன் கோ. தேவராசன் அகம் நுதலுதல் உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம். உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது. தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது. தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம். எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள். இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது. எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை. வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது. அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன. உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும். இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது. சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி. அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம். உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது. நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம். அன்பன் புலவர் த. ஆறுமுகன் நூலறிமுகவுரை திரு. ந.சி. கந்தையா பிள்ளை 1930-40களில் தமிழ், தமிழிலக்கியம், தமிழ்மொழி, தமிழர் வரலாறு, திராவிட வரலாறு, தமிழ்நாட்டுக் குடிகள் போன்ற பல விடயங்கள் பற்றி அக்காலத்துச் சாதாரண தமிழ் வாசகர் நிலையில் பெரிதும் வாசிக்கப்பட்ட நூல்களை எழுதினார். பண்டைய இலக்கியங்களான அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற வற்றினை உரைநடையில் எழுதி மக்களிடையே சங்க இலக்கியம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தினார். திருக்குறளுக்கான ஒரு சொல்லடைவைத் திருக்குறள் அகராதி என்னும் பெயரில் வெளியிட்டவர். இவை யாவற்றுக்கும் மேலாக உலக வரலாற்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காலவரிசைப்படுத்தித் தந்தார். செந்தமிழ் அகராதி என்றவோர் அகர முதலியையும் தொகுத்தார். இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1940-50களில் இளைஞர் களாக இருந்த பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றிய தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாசிப்பு விடயங்களை அளித்தவர். இவருடைய பெரும்பாலான படைப்புக்கள் அக்காலத்திற் பிரசுரிக்கப் பட்ட ஒற்றுமை என்னும் இதழின் அலுவலகத்தாலேயே வெளியிடப் பெற்றன. இவர் வெளியிட்டனவற்றுள் பல ஒற்றுமை இதழில் வெளிவந் திருத்தல் வேண்டும். ஆனால், அதனை இப்பொழுது நிச்சயமாக என்னாற் சொல்ல முடியவில்லை. ஒற்றுமை அலுவலகம் இவற்றைப் பிரசுரித்தது என்பதை அறிவேன். ஏனெனில் இலங்கையில் தமிழாசிரியராக இருந்த எனது தகப்பனாரிடத்து இந்நூல்களிற் பெரும்பாலானவை இருந்தன. திரு ந.சி. கந்தையா பிள்ளையின் பெயர் தமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் காரணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப் பெற்றன. இந் நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளன. ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிற்கூட இவரது பெயர் முக்கியப் படுத்தப் பெறாது போயுள்ளது. மிகுந்த சிரமத்தின் பின்னர் அவரைப் பற்றிக் கிடைத்துள்ள தகவல்கள் பின்வருமாறு: சுவாமி ஞானப் பிரகாசர், ந.சி. கந்தையா பிள்ளை போன்ற அறிஞர்களின் தமிழ்ப் பங்களிப்புக்கள் தமிழகத்தில் போற்றப்படுகின்றமை ஈழத்தவர்க்குப் பெருமை தருகின்றது. இவர் எழுதிய நூல்களின் பெயரை நோக்கும்பொழுது தமிழ் வாசகர்களுக்கு உலக நிலைப்பட்ட, தமிழ்நிலைப் பட்ட தரவுகளைத் தொகுத்துத் தருவதே இவரது பெருஞ்சிரத்தையாக இருந்தது என்பது புலனாகின்றது. இப்பதிப்பகத்தின் பணியினை ஊக்குவிக்க வேண்டியது தமிழ்சார்ந்த நிறுவனங்களினதும் தமிழ்ப் பெரியோர்களினதும் கடமையாகும். உண்மையில் இதனை ஒரு அறிவுப்பசிப் பிணித் தீர்வாகவே நான் காண்கிறேன். 2/7, றாம்ஸ்கேட், அன்புடன் 58, 37ஆவது ஒழுங்கை, கார்த்திகேசு சிவத்தம்பி வெள்ளவத்தை, தகைசார் ஓய்வுநிலை பேராசிரியர் கொழும்பு - 6 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம். கருவிநூல் தந்த ந.சி. கந்தையா தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூலவர்களில் யாழ்ப்பாணம் தந்த பேரறிஞர் ந.சி. கந்தையாவும் ஒருவர். உண்மையான அறிஞர்களைக் காலங்கடந்து அடையாளம் காண்பதும் அவர்தம் படைப்புக்களைத் தேடிப் பிடித்துப் புரப்பதும் தமிழினத்தின் பழக்கங்களில் ஒன்று. தமிழின், தமிழரின் தொல்பழங்கால வரலாறு தொடர்பாகத் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. ஓர் ஆயிரம் நூல்களாவது தமிழின் தமிழரின் தொல்பழங்கால வரலாறுபற்றி வெளிவரவேண்டும். விரிவாக எழுதப்பட வேண்டிய தமிழ், தமிழர் வரலாற்று வரைவு முயற்சிக்கு வழிகாட்டும் கருவி நூல்களை வரைந்திருப்பவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார். உலகம் முழுவதும் உற்றுக் கவனிக்க வேண்டிய வரலாற்றிற்கு உரியவர்கள் தமிழர்கள். அவர்களே உலக மொழிகளை ஈன்ற மூலமொழிக்குச் சொந்தக்காரர்கள். அவர்களே உலக நாகரிகங்களின் பிறப்பிற்குக் காரணமான உலக முதல் நாகரிகத்தைப் படைத்தவர்கள். இந்த உண்மைகளைத் தமிழர்களும் அறியவில்லை உலகமும் அறியவில்லை. தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந் தமிழர், தமிழர் யார், உலக நாகரிகத்தில் தமிழர்பங்கு, சிந்துவெளித் தமிழர், தமிழ் இந்தியா, தமிழகம், மறைந்த நாகரிகங்கள் ஆகியன ந.சி. கந்தையாவின் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும். உலக முதல் நாகரிகம் என இன்று உலகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடிய நீல ஆற்றங்கரை நாகரிகம் (Nile Civilisation) தமிழ் நாகரிகத்தின் அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் வழிப்பட்ட நாகரிகமே என்பதை ஏராளமான சான்றுகளால் விளக்குபவை மேலைய நூல்கள். மொழிநிலையில் தமிழின் உலக முதன்மையைப் பாவாணர் நிலைநாட்டினார் என்றால் இன நிலையில் தமிழின உலக முதன்மையை ந.சி. கந்தையா நிலைநாட்டினார் என்று உரைக்கலாம். நீல ஆற்றங்கரை நாகரிக முடிவின்பின் நண்ணிலக் கடற் பகுதியில் உருவான பிறிதொரு வழிநாகரிகமே கிரேக்க நாகரிகம். கிரேக்க நாகரிகத் தின் உடைவில் தெறிப்பில் பிறகு மலர்ந்தவையே இன்றைய மேலை நாகரிகம். உலகின் எல்லா நாகரிகங்களையும் தாங்கிநிற்கும் தாய் நாகரிகமே தமிழ் நாகரிகம். தமிழ் நாகரிகத் தொன்மையைச் சங்க நூல்களுக்கு அப்பால் சிந்துவெளி அகழ்வாய்வும் உலக வரலாற்றாசிரியர்கள் உலக முதல் நாகரிகம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் நமக்கு மேலும் விளக்கும் பகுதிகளாகத் திகழ்கின்றன. இங்கெல்லாம் சென்று நுண்மாண் நுழைபுல முயற்சியால் தமிழின வரலாறு எழுதியவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார். ந.சி. கந்தையா பெருமகனார் நூல்களைத் தமிழரின் தொல்பழங்கால வரலாற்றைக் கற்கும் முயற்சியில் நான் ஈடுபடத்தொடங்கியபோது தேடிக் கற்றேன். பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் சென்ற ஆண்டு இயற்கையெய்திய வரலாற்றுப் பேரறிஞர் கோ. நிலவழகனார் ந.சி. கந்தையா அவர்களைச் சென்னையில் அவர் வாழ்ந்த நாளில் சந்தித்தது பற்றியும் அவரின் பன்னூற்புலமை பற்றியும் எம்மிடம் மகிழ்ந்து கூறுவார். ந.சி. கந்தையா அவர்களின் நூல்கள் பலவற்றையும் அவர் வைத்திருந்தார். அருகிய பழைய நூல்களைப் பேணுவாரிடத்திலும் நூலகங்கள் சிலவற்றிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்த ந.சி. கந்தையா நூல்களை மீண்டும் அச்சில் வெளியிடுவார் இலரே என்று கவலையுற்றேன். அமிழ்தம் பதிப்பகம் இவரின் நூல்களை வெளியிடுகின்றது. உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் இந் நூல்களை உச்சிமோந்து வாரியணைத்துப் புகழ்ந்து கற்றுப் பயனடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு. பேரா. கு. அரசேந்திரன் பதிப்புரை வளம் சேர்க்கும் பணி “குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம். இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன. ந.சி. கந்தையா இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது. தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர். தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது. தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர். நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள் 1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன. வாழும் மொழி தமிழ் தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம். ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா? தமிழர்களின் கடன் இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன். மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள். எழுச்சிக்கு வித்திட... உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது. இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதிப்பகத்தார் நமதுமொழி நமதுநாடு ஆசிரியர் ந.சி. கந்தையா தொகுப்பாளர் புலவர் கோ. தேவராசன் எம்.ஏ.,பி.எட்., பதிப்பாளர் இ. இனியன் அமிழ்தம் பதிப்பகம் 328/10 திவான்சாகிப் தோட்டம் இராயப்பேட்டை, சென்னை - 14. நூற்குறிப்பு நூற்பெயர் : நமதுமொழி நமதுநாடு ஆசிரியர் : ந.சி. கந்தையா பதிப்பாளர் : இ. இனியன் முதல் பதிப்பு : 2003 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 20 + 236 = 256 படிகள் : 1000 விலை : உரு. 115 நூலாக்கம் : பாவாணர் கணினி 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : பிரேம் அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் 20 அஜீஸ் முல்க் 5வது தெரு ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 கட்டமைப்பு : இயல்பு வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம் 328/10 திவான்சாகிப் தோட்டம், டி.டி.கே. சாலை, இராயப்பேட்டை, சென்னை - 600 014. i ii xv xiv iii iv xiii xii v vi xi x vii viii ix xx உள்ளடக்கம் ந.சி. கந்தையாப் பிள்ளை வாழ்வும் தொண்டும். . . . iii அகம் நுதலுதல் . . . vii நூலறிமுகவுரை . . . xi கருவிநூல் தந்த ந.சி.க. . . . xiii பதிப்புரை . . . xv நூல் 1. தமிழ்ப் பழமையும் புதுமையும் . . . 1 2. முச்சங்கம் . . . 31 3. நமது தாய்மொழி . . . 63 4. திராவிடமொழிகளும் இந்தியும் . . . 87 5. நமது மொழி . . . 107 6. நமது நாடு . . . 169 xvii xviii xix