16 நூலகங்கள் முன்னுரை “எண்ணெண்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டுங் கண்ணென்ப வாழும் உயிர்க்கு.” மக்களிடையே கல்வியைப் பரப்புவதற்கு நூலகங்களும், வாசக சாலைகளும் சிறந்தனவாகும். மிகமிக முற்காலம் முதல் மக்கள் கல்வியைப் பரப்புவதற்குப் பெரிதும் முயன்று வந்தார்கள். முற்காலத்தில் புத்தகங்களை ஆயிரக்கணக்கில் ஒரே காலத்தில் அச்சிடக் கூடிய அச்சுப் பொறிகள் அறியப் படாதிருந்தமையால் நூல்கள் கையினால் எழுதப்பட்டன. அக்காலத்தில் நூல்கள் மிக அரிதிற் கிடைப்பனவாயும் அதிக விலையுடையனவாயு மிருந்தன. ஆகவே, செல்வர்களே பெரிதும் நூல்களைக் கூலிகொடுத்துப் படி எடுத்தும் விலை கொடுத்து வாங்கியும் பயன்படுத்தினர். பொது மக்களுக்குக் கல்வி விரிவுரைகள் (பிரசங்கங்கள்) மூலம் அறிவுறுத்தப் பட்டது. இதனாலேயே ‘கற்றலிற் கேட்டல் நன்று’ என்னும் முதுமொழி எழுந்தது. முன்னோர் கல்வியைப் பரப்புவதில் எவ்வளவு கருத்துக் கொண்டிருந்தார்கள் என்பது பலருக்குத் தெரியாது. நமது நாட்டிலும் பிற நாடுகளிலும் காணப்பட்ட பழைய நூலகங்களின் வரலாற்றைப் பயில்வதால் நாம் கல்வி வளர்ச்சிக்கு நூலகங்கள் எவ்வளவு இன்றியமையாதன என்பதைப் பற்றி அறிந்துகொள்ளுதல் கூடும்; இன்றும் பல நூலகங்களை யும் வாசககாலைகளையும் நிறுவ ஊக்கம் கொள்ளுதலும் கூடும். இந் நூலில் அடங்கிய கருத்துக்கள் பெரும்பாலும் ஆங்கில நூல்களிலும், ஆங்கிலத் தில் வெளிவரும் திங்கள் வெளியீடுகளிலு மிருந்து திரட்டப் பெற்றவை. சென்னை, 30.9.1948 ந.சி. கந்தையா நூலகங்கள் தோற்றுவாய் இற்றைக்கு ஆறாயிரம் அல்லது ஏழாயிரம் ஆண்டுகளின் முன் மக்களிடையே நாகரிகம் வளர்ச்சியடைந்திருந்திருந்தது. எகிப்து மேற்கு ஆசியா முதலிய நாடுகளில் ஆறாயிரம் ஆண்டுகளின் முன் மக்கள் எழுத அறிந்திருந்தார்கள். இதனை அந் நாடுகளிற் கிடைத்த பழம் பொருள்களிற் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்களைக் கொண்டு அறிகின்றோம். இந்திய மக்களும் ஐயாயிரம் அல்லது ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுத் தெழுதும் முறையை அறிந்திருந்தார்கள். என்பதைச் சிந்து வெளிப்புதை பொருள் ஆராய்ச்சியிற் கிடைத்த பழம் பொருள்களிற் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்களைக் கொண்டு அறிகின்றோம். எகிப்திலே ஆறாயிரம் ஆண்டு களின் முன் நூலகங்கள் இருந்தன. மேற்கு ஆசியாவில் ஐயாயிரம் ஆண்டு களுக்கு முற்பட்ட நூலகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் அத் துணைப் பழங்காலத்தில் நூல் நிலையங்கள் இருந்தமையைப் பழம் பொருள் ஆராய்ச்சி மூலம் அறியமுடியவில்லை. இந்திய, மேற்கு ஆசிய, எகிப்திய பழைய நாகரிகங்கள் பெரிதும் ஒரேவகையனவாயிருந்தமையா லும் அக் காலத்தில் இந் நாடுகளுக்கிடையே போக்குவரத்து இருந்து வந் தமையாலும் மிகப் பழைய நூல் நிலையங்கள் இந்திய நாட்டிலும் இருந்தன எனக் கொள்ளுதல் தவறுடையதாகத் தோன்றமாட்டாது. வரலாற்றுக் காலத் தில் இந்திய நாட்டில் காணப்பட்ட நூல்நிலையங்களைப் பற்றி ஆராயின், அக் காலத்திலே கல்விநிலை இந்தியாவில் எவ்வளவு ஓங்கியிருந்த தென் பதை நாம் உய்த்து அறிந்துகொள்ளலாம். அக் காலம் வழங்கிய நூல்களிற் பெரும்பாலான மறைந்து போனமைக்குக் காரணத்தையும் விளங்கிக் கொள்ளலாம். இந்திய மக்கள் எழுதப் பயன்படுத்திய பொருள்கள். அலக்சாந்தரின் படை எடுப்புக்காலத்தில் இந்திய மக்கள் பூர்ஜாமரப் பட்டையில் எழுதினார்கள் என்று கேட்டியஸ் என்னும் உரோமன் வரலாற்றாசிரியர் கி.பி.நாலாம் நூற்றாண்டிற் குறிப்பிட்டுள்ளார். அக் காலப் புத்தசமய நூல்களும் பிராமணமத நூல்களும் இதைக் குறித்துப் பல்லிடங் களிற் குறிப்பிட்டுள்ளன. மரப்பட்டைகள் இரண்டரை அடி நீளமும் ஒரு சாண் அகலமும் உடையனவாக நறுக்கப்பட்டு அழுத்தம் உண்டாகும் பொருட்டு எண்ணெய் தடவப்பட்டன. ஏடுகள் நடுவிலே துளை இடப்பட்டு ஒன்றின்மீது ஒன்றாக வைத்துக் கயிற்றில் கோக்கப்பட்டன. காசுமீரத்திலுள்ள பண்டிதர்களின் நூல் நிலையங்களிலும், ஒரிசாவிலும் பிறவிடங்களிலும் இவ்வகை நூல்கள் காணப்படுகின்றன. துணி அரசாங்க ஆவணங்களும், தனிப்பட்டவர்களின் ஆவணங்களும் நன்கு அடித்துத் தயாரிக்கப்பட்ட துணியில் எழுதப்பட்டன என்று ஆந்திர நாட்டுப் பட்டையங்கள் கூறுகின்றன. இன்னும் கணக்கெழுதும் புத்தகங் களைச் செய்கிறார்கள். துணியின் மீது புளியம் விதைப் பசையைத் தடவி அதன் மேல் கரி பூசப்பட்டது. எழுத்துக்கள் சுண்ணாம்புக் குச்சியினால் எழுதப்பட்டன. இவ்வகைக் கையெழுத்துப் படிகள் யெசெல்மீர் (Jesalmir) முதலிய இடங்களிற் காணப்படுகின்றன. மரப்பலகைகள் புத்தகுருமார், மாணாக்கர் பார்த்துப் பயிலும் படி தமது போதனை களை மரப்பலகையில் எழுதினார்கள் என்று விநாயகபிடகம் என்னும் நூல் கூறுகின்றது. நாகபான என்னும் சாக (Saka) அரசன் காலத்தில் கடன் சம்பந்த மான ஆவணங்கள் மரப் பலகைகளில் எழுதப்பட்டன என்று பட்டையங் களிற் காணப்படுகின்றன. வழக்கு முறைபாடுகள் மரப்பலகைகளில் சுண்ணாம்பினால் எழுதப்படுதல் வேண்டுமெனக் கார்த்தியாயனர் (கி.மு.400) கூறியுள்ளார். அரசக் கட்டளைகள் மசிபூசப்பட்ட மரப்பலகையில் எழுதப் பட்டனவென்று தண்டி என்னும் சமக்கிருதப் புலவர் கூறியுள்ளார். இவ்வகை மரப் பலகை ஒன்று அசாமில் கண்டுபிடிக்கப்பட்டது. வடமேற்கு எல்லைப் புறங்களில் வாழும் வறிய மக்கள் சமய சம்பந்தமான நூல்களை மரப் பலகையில் சுண்ணாம்பினால் எழுதுகின்றார்கள். ஓலைகள் எழுதுவதற்குப் பனையோலை பெரிதும் பயன்படுத்தப்பட்டது. இந்தியாவிலும் மத்திய ஆசியாவிலும் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட கையெழுத்துப் படிகளால் கி.பி. நாலாம் நூற்றாண்டில் ஓலை பயன்படுத்தப் பட்டதெனத் தெரிகின்றது. புத்தருக்குப் பின் முதன்முதற் கூடிய புத்தசபை நிகழ்ச்சிகள் பனை ஓலையில் எழுதப்பட்டன என்னும் கன்னபரம்பரைச் செய்தி ஹியன்திசியாங் என்னும் சீன யாத்திரிகன் காலத்தில் வழங்கிற்று. எழுதப் பயன்படுத்தும் ஓலைகள் முதலில் உலரவிடப்பட்டன; பின்பு அவித்துத் தண்ணீரில் ஊற விடப்பட்டன; பிறகு வெளியே எடுத்துக் காய விடப்பட்டபின் கல்லினால் அல்லது சங்கினால் அழுத்தஞ்செய்யப்பட்டன. பின்பு அவை தகுந்த அளவுக்கு நறுக்கப்பட்டன. பெரும்பாலும் ஓலைச் சட்டங்களில் நீளம் ஒரு அடிமுதல் மூன்று அடி வரையும் அகலம் ஒன்றே கால் அங்குலம் முதல் நாலு அங்குலம் வரையும் இருந்தன. இவ்வேடுகளின் மீது மசியினால் அல்லது எழுத்தாணியினால் எழுதப்பட்டது. எழுத்தாணி யினால் எழுதிய எழுத்துக்கள் கரிபூசிக் கருமையாக்கப்பட்டன. இவ்வகைச் சட்டங்கள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி நடுவில் துளையிட்டுக் கயிற்றி னால் கோக்கப்பட்டு மேலும் கீழும் மரச் சட்டங்கள் இடப்பட்டன. தோலும் தந்தமும் பழங்கால மக்கள் எழுதுவதற்குத் தோலைப் பயன்படுத்தினார்கள். மத்திய ஆசியாவில் தோலில் எழுதப்பட்ட புத்தகங்கள் கண்டு பிடிக்கப் பட்டன. அசுத்தமுடையது என்னும் காரணத்தினால் தோல் அதிகம் பயன் படுத்தப்படவில்லை. தந்தம் மிக அரிதாக எழுதப் பயன்படுத்தப்பட்டது. தந்தச் சட்டங்களில் எழுதிய நூல் ஒன்று பர்மாவில் கிடைத்துள்ளது. உலோகத்தகடுகள் உலோகத் தகடுகள் பழங்காலத்தில் எழுதுவதற்குப் பெரிதும் பயன் படுத்தப்பட்டன. வீட்டு நிகழ்ச்சிகளும் அரசினர் நன்கொடைகளும் உலோகத் தகடுகளில் எழுதப்பட்டன என்று சாதகக் கதைகள் கூறுகின்றன. இவ்வகை உலோகத் தகடு ஒன்று தக்க சீலத்திற் கண்டுபிடிக்கப்பட்டது. பட்டிப்புரோலு என்னும் இடத்தில் புத்தகோயில் அழிபாடு ஒன்றை அகழ்ந்த போது வெள்ளி இதழ்களில் எழுதப்பட்ட கையெழுத்துப்படி ஒன்று கண்டு எடுக்கப்பட்டது. இலண்டன் நூதன பொருட் காட்சிச் சாலையில் வெள்ளி முலாம் பூசப்பட்டவும் வெள்ளித்தகடு மேல் இடப்பட்டவும் பனை ஓலை களில் எழுதப்பட்டவுமான நூல்கள் காணப்படுகின்றன. முற்காலத்தில் செப்புத் தகடுகள் எழுதப் பெரிதும் பயன்படுத்தப்பட்டன. மவுரிய அரசர் காலத்தில் செப்புத் தகடுகளில் அரச கட்டளைகள் பொறிக்கப்பட்டன. புத்த சமயக் கொள்கையினராகிய புகழ் பெற்ற கனிஷ்க என்னும் சக்கரவர்த்தி சமயநூல்களைச் செப்பு ஏடுகளில் எழுதிவைக்கும்படி செய்தான் என ஹியன்திசியாங் கூறியுள்ளான். அரிய இலக்கிய நூல்களும் செப்பு ஏடுகளில் எழுதிவைக்கப்பட்டன என்பதற்குச் சான்றுகள் உள்ளன. தாற்றப்பக்கா குடும்பத்தினர் இவ்வாறு பொறிப்பித்த இலக்கிய சம்பந்தமான நூல்கள் திருப்பதி ஆலயத்தில் உள்ளன. இவ்வாறு பர்மாவிலும் இலங்கையிலும் காப்பாற்றப்பட்ட நூல்கள் இலண்டன் நூதன பொருட்காட்சிச் சாலையில் உள்ளன. செப்புத் தகட்டு இதழ்கள் ஒரு பக்கத்தில் துளையிட்டுச் செம்பு வளையத்தில் கோக்கப்பட்டன. எழுத்துக்கள் பழுதடையாமல் இருக்கும்படி இதழ்களின் ஓரங்கள் உயரமாக்கப்பட்டிருந்தன. கருங்கல்லும் செங்கல்லும் கருங்கல், செங்கல் என்பவைகளும் எழுதப் பயன்படுத்தப்பட்டன. இந்திய நாட்டில் பலவகைக் கற்கள் எளிதில் கிடைக்கக் கூடியவை. இவை களில் அறக்கொடைகளும், நன்கொடைகளும் எழுதி வைக்கப்பட்டன. இவ்வகை எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கற்களை இந்தியா முழுமையிலும் நாம் காணலாம். அசோக சக்கரவர்த்தியும் முன்னோர் வழக்கைப் பின் பற்றியே தனது கட்டளைகளை மலைகளிலும் கற்றூண்களிலும் பொறித்தார். இலக்கிய சம்பந்தமான நூல்கள் சிலவும் கற்களிற் பொறிக்கப்பட்டன. இவ்வகை நூல்கள் சில அகப்பட்டுள்ளன. நாலாம் விக்கிரமன் என்னும் அரசனாலும் அவனுடைய அரண்மனைப் புலவர் சோமதேவராலும் செய்யப்பட்ட நாடகமொன்று இவ்வாறு பொறிக்கப்பட்டுள்ளது. அஜ்மீர் (Ajmere) என்னும் இடத்தில் சைன தலபுராணச் சுருக்கங்கள் சிலவும் இவ்வாறு பொறிக்கப்பட்டுள்ளன. அவை இராச புத்தானாவில் காணப்படுகின்றன. புத்தமதத் தொடர்பான சூத்திரங்கள் பொறிக்கப்பட்ட செங்கற்கள் பல வட மேற்கு எல்லைப் புறங்களிற் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலே முற்காலத்தில் காகிதம் மிக அருமையாகப் பயன் படுத்தப்பட்டது. கி.பி. 11ஆம் நூற்றாண்டில் காகிதம் பயன்படுத்தப்பட்ட தென்பதற்கு ஆதாரமுண்டு. 14ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட காகிதக் கையெழுத்துப் படிகள் மாளவம் கூர்ச்சரம் முதலிய இடங்களிற் கிடைத்தன. நூல்கள் எழுத மை பயன்படுத்தப்பட்டது எழுதுவதற்கு மசி பயன்படுத்தப்பட்டது புராணங்களில் மசி பாத்திரா, மசி பாண்டா, மசி கூபா முதலிய சொற்கள் காணப்படுகின்றன. கி.பி.5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நிர்ச்சஸ் (Nearchus) என்பார் இந்திய மக்கள் மரப் பட்டைகளிலும் துணியிலும் மசியால் எழுதுவதைப் பற்றிக் குறிப்பிட் டுள்ளார். இனி நூல் நிலையங்கள் எவ்வாறு அமைக்கப்பட்டன என்பதைப் பற்றிப் படிப்போம். நூலகங்கள் அமைந்த வகை வேத காலத்தில் நூலகங்கள் தேவைப்படவில்லை. அக் காலத்தில் கல்வி, சமயத் தொடர்பாகவும், குருக்கள் வகுப்பினருக்கு மாத்திரம் உரிய தாகவும் இருந்தது. தொழில் தொடர்பான கல்வி பரம்பரை முறையாக வந்தது. அக் காலத்தில் கல்விக்குரியவர்களா யிருந்த குருமார், ஒருவர் சொல்ல மற்றவர் கேட்டு மனப்பாடஞ்செய்தலாகிய முறையினால் கல்வியைப் பரப்பினார்கள். இதற்கிடையில் சாதிக்கட்டுப்பாடு வலுவடைந்தது. படிப்புப் பிராமணரின் தனியுரிமை பெறுவதாயிற்று. மற்ற வகுப்பினர் அவர் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட கல்வியை மாத்திரம் பயின்றனர். இம்முறை நீண்டகாலம் நடைபெற்று வருவதாயிற்று. அப்பொழுது வேத கால இலக்கியங்கள் அதிகப்பட்டன; கலையும் விஞ்ஞானமும் வளர்ச்சி யடைந்தன. முற்காலத்திற்போல எல்லாவகை நூல்களையும் ஒருவனால் பயில்வது முடியாமல் இருந்தது. மற்றவர்களுக்குத் தனது கல்வியை அளிக்க மனமில்லாதிருந்த வித்துவான் இப்பொழுது இருவகைத் துன்பங் களுக்கு உள்ளானான். தன்கால நூல்களைப்படிப்பதற்கு அனுமதிக்கப்படா திருந்த வகுப்பினரும் பயிலும்படி எழுதி வைப்பது ஒன்று; மற்றது தலை முறை தலைமுறையாகக் காப்பாற்றப்பட்டு வந்தவைகளுள் ஒருவனால் மாத்திரம் நினைவில் வைத்துக்கொள்ளமுடியாதவைகளை மறந்து போகும்படி விடுதல். அதிட்டவசமாக எழுதி வைக்கும் முறையே கையாளப் பட்டது. எழுதும் முறை நன்றாக அறியப்பட்டிருந்தது. அவர்கள் தமது கருத்துக்களை நூலாக எழுதினர். படித்தவர்களிடையே பெரிய மாற்றம் உண்டாயிற்று. நூல்களை எழுதி வைப்பது சமயக் கடமையாகக் கொள்ளப் பட்டது. இது காரணமாகவே இந்தியாவில் நூலகங்கள் தோன்றின. நூல்கள் அதிகமாயின. அவைகளைக் காப்பாற்றுவது முக்கியம் எனக் கருதப்பட்டது. புத்தகங்களைக் காப்பாற்றி வைப்பதற்குக் கோவில்கள் சிறந்த இடங்களாகக் கருதப்பட்டன. இவ்வாறு புத்தகங்கள் சேர்த்துவைக்கப்பட்ட இடங்கள் சரசுவதி பண்டாரங்கள் எனப்பட்டன. புத்தர் காலத்தில் நூலகங்கள் பொது வாக எங்கும் காணப்பட்டன. கலைக்கழகங்கள் சிறப்பாகச் சில இடங்களில் மிகப் பல நூல்கள் சேர்த்து வைக்கப்பட் டிருந்தன. அவை கோவில்கள், கல்வி கழகங்கள், மடங்கள், அரண்மனைகள் என்பன. பழைய காலத்தும் மத்திய காலத்தும் புலவர்கள் கல்விக் கழகங்களி லிருந்து ஆயிரக்கணக்கான மாணவருக்குக் கல்வி கற்பித்தார்கள். மக்க ளிடையே தோன்றியிருந்த கல்வி கற்கும் ஆர்வத்தினால் பல நூல்நிலையங் களை அமைக்க வேண்டிய கட்டாயம் உண்டாயிற்று. புத்தசமயம் ஓங்கி யிருந்த காலத்தில் பல துறைகளில் கல்வி பயில வேண்டியிருந்தது. மகாயான சமயந் தோன்றியபோது மிகப் பல இலக்கியங்கள் தோன்றலாயின. ஒப்பிட்டுப் பயிலுதல் காரணமாகப் பிறமதக் கோட்பாடுகளும் கற்பிக்கப் பட்டன. நாலந்தா, விக்கிரமசீலம், ஒடதபுரி முதலிய இடங்களில் அரிய நூல்கள் அடங்கிய நூல் நிலையங்கள் இருந்தன. 12ஆம் 13ஆம் நூற்றாண்டு களில் முகம்மதிய வரலாற்று நூலாசிரியர்கள் எழுதிய குறிப்புக்களில் இந்நூல் நிலையங்களைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. புத்தருக்கு முற்பட்ட காலம் முதல் ஒவ்வொரு கோவிலையுடைய பகுதிகள் தோறும் கல்விக் கழகங்கள் இருந்தன. ஆண்டின் சில காலங்களில் புலவர்கள் அங்குக் கூடினார்கள் என வசிட்டர், கௌதமர், போதாயனர் முதலிய பழைய நீதி நூலாசிரியர்கள் கூறியுள்ளார்கள். அவ்வாறு அவர்கள் கூடியது புதிய சட்டங்களைச் செய்தல், சட்டங்களை மீறுவதால் உண்டாகும் பிணக்குகளைத் தீர்த்து வைத்தல் என்பவைகளுக்காக வாகும். இக் கூட்டங்கள் சிறப்பாகச் சில பட்டினங்களிற் கூடின. இதற்குக் காரணம் அவ் விடங்களில் பெரிய நூல் நிலையங்கள் இருந்தமையே. கோவிற் பகுதிகளி லுள்ள நூலகங்களுக்கு அரசரும் செல்வரும் நன்கொடை அளித்தார்கள். காதிகா(Ghatika) எனப் பெயர் பெற்ற கல்விக் கழகங்கள், கிறித்து வுக்குப் பின் சில நூற்றாண்டுகளில் கல்விக்கு மத்திய இடங்களாக விளங்கின. காதிகா என்னும் கல்விக் கழகங்களில் சமய சம்பந்தமான தர்க்கங்கள் நடைபெற்றன. கோவிலோடு சம்பந்தப்பட்டிருந்த கழகங்களில் பலவகைக் கருமங்கள் ஆராயப்பட்டன. காதிகா என்னும் கழகங்கள் கல்வி சம்பந்தமான கருமம் ஒன்றில் மாத்திரம் கருத்துச் செலுத்தின. கடம்ப அரச பரம்பரையை நாட்டிய மயூரசர்மன், தருக்கத்தில் தேர்ச்சி அடையும் பொருட்டுக் காதிகா என்னும் கல்விக் கழகங்கள் பலவற்றுக்குச் சென்றான். கிழக்குச் சாளுக்கிய பட்டையமொன்று ஆந்திர நாட்டில் அசானுபுரத்தி லிருந்த காதிகாவைப் பற்றிக் கூறுகின்றது. இரண்டாம் நரசிம்ம வாகன் என்னும் பல்லவ அரசன் காஞ்சியில் ஒரு கழகத்தை அமைத்தான். தருக்கத் தில் வெற்றியடைந்தவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. கழகங் களுக்கு நன்கொடைகளும் மானியங்களும் அளிக்கப்பட்டன. காதிகா என்னும் கழகங்களில் நூல் நிலையங்கள் இருந்தன. இது நிசாம் இராச்சியத் தில் நாகை என்னும் இடத்தில் கிடைத்த பழம் பொருள்களால் நன்கு வலியுறுகின்றது. கி.பி. 11ஆம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட சாளுக்கிய அரசரின் பட்டயங்கள் ‘காகித சாலை’ யைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. பட்டையத்திற் குறிப்பிடப்பட்ட வாசகசாலை, ஆறு நூல் நிலைய மேற் பார்வையாளரால் (Librarians) நடத்தப்பட்டது. நூல் நிலையம் இருந்த கட்டடமும் கண்டு பிடித்துப் பாதுகாக்கப்பட்டுள்ளது. தமிழ்ச் சங்கம் காதிகா என்னும் கழகங்கள் பொதுக்கல்வியில் கருத்தைச் செலுத்தின. தென்னிந்திய சங்கம் இலக்கியங்கள் சம்பந்தமான கல்வியை வளர்த்தது. சங்கம் என்பது புலவர்களும் கற்றவர்களும் சேர்ந்த சபை. நல்ல இலக் கியங்கள் அச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மதுரையிலிருந்து ஆட்சி புரிந்த பாண்டிய அரசர் அதைப் பரிபாலித்தார்கள். சங்கம் அரசரின் ஆதர வில் இருந்தமையால் சங்கத்தில் மிகப் பெரிய நூல்நிலையம் நிறுவப்பட் டிருந்தது. முகம்மதியர் ஆட்சிக் காலத்தில் டில்லியிலும் ஆக்ராவிலும் கல்விக் கழகங்கள் பல இருந்தன. ஒவ்வொரு கழகத்திலும் நூல்நிலையமும் இருந்தது. ஆகவே, சங்கத்தில் பெரிய நூல் நிலையம் இருந்ததெனக் கூறுதல் தவறாகாது. இந்நூல் நிலையத்தில் தொகுத்து வைக்கப்பட்டிருந்த பாடல் களின் தொகுப்பே பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்னும் பெயர்களுடன் வழங்கும் சங்க நூல்களாகும். புத்தமடங்கள் முற்கால விகாரைகளும் சங்கிராமங்களும் கல்வி வளர்ச்சி சம்பந்த மான அதிக வேலைகளைச் செய்தன. புத்த தருமங்களைப் பின்பற்றிய வர்கள் பழைய பட்டினங்களில் மடங்கள் பலவற்றை அமைத்தார்கள். அவைகளில் புத்த குருமார் தங்யிருந்து புத்த சமயத்தைப் பரப்பி வந்தார்கள். மேற்கு இந்தியாவிலே வல்லபாய் நாட்டு அரசன் ஒருவன் கி.பி. 6ஆம் நூற் றாண்டில் துத்தாவிலிருந்த புத்த மடத்துக்கு நூல்கள் வாங்கும் பொருட்டு அளித்த நன்கொடையைப் பற்றிய சான்று ஒன்று கிடைத்துள்ளது. இவ்வாறு விலை கொடுத்து வாங்கப்பட்டவை அல்லாதனவும், புத்தகுருமாரால் பார்த்துப் படி எழுதப்பட்டனவுமாகிய கையெழுத்து நூல்களில் மிகப் பல புத்தமட நூல் நிலையங்களில் இருந்தனவாதல் வேண்டும். சைன மடங்கள் புத்த மதத்தினரைப் போலவே சைன மதத்தினரும் சைனத்துறவிகள் தங்கியிருக்கும் உபசிராயா என்னும் மடங்களைக் கட்டினார்கள். புத்த சமயத்தினரின் விகாரை, சங்கிராமங்களைப் போலவே இம் மடங்கள் சமய வளர்ச்சியின் பொருட்டுப் பயன்படுத்தப்பட்டன. பொதுமக்கள் இம் மடங் களுக்கு நன் கொடை அளித்தார்கள். புத்தகங்களைப் படி எழுதும் செலவின் பொருட்டும் பலர் நன்கொடை அளித்திருக்கிறார்கள். மடங்களில் வாழ்ந்த துறவிகள் படி எழுதிய நூல்களோடு கூலி கொடுத்துப் படி எழுதப்பட்ட கையெழுத்து நூல்களும் சேர்ந்து நூலகங்களின் நூல்கள் மிகப் பெருகின. இன்றும் மேற்கு இந்தியாவிலுள்ள உபசிராயாக்களில் நூற்றுக்கணக்கான கையெழுத்து நூல்கள் காணப்படுகின்றன. ஆமதாபாத்தில் மாத்திரம் உள்ள நூலகத்தில் “ஆவாயக சூத்திரம்” என்னும் சைன நூலின் கையெழுத்துப் படிகள் நானூறு காணப்படுகின்றன. கோவில்கள் விகாரை, உபசிராயாக்கள் போலவே இந்தியரின் கோவில்கள் இருந்தன. கோவில்கள் கல்விக்கு மத்திய இடங்களாக விளங்கின. அங்குப் பொதுமக்கள் பயன்படுத்தும் பொருட்டு நூலகங்கள் நிறுவப்பட்டிருந்தன. குப்த அரசர் காலத்தில் கோவில்கள் மிகப் புகழ் ஒங்கி விளங்கின. முகம்மதி யர் வடநாட்டின் மீது படை எடுத்தபோது இந்திய கலைகள் தென்னிந்தியா விலும் தக்காணத்திலும் சென்று ஒதுங்கின. கோவில்கள் அக் கலைகளைக் காப்பாற்றி வைத்துப் பின்பு அவைகளை வேகமாகப் பரவச் செய்தன. கல்வி சம்பந்தமான செய்திகளை விளக்கும் நூற்றுக்கணக்கான பட்டையங்கள் கிடைத்துள்ளன. தென்னிந்திய கோவில் அமைப்பில் பல மண்டபங்கள் உண்டு. நடன மண்டபம், புராண மண்டபம், விரிவுரை (வியாக்கியான) மண்டபம் என்பன அவற்றுட் சில. விரிவுரை மண்டபத்தில் இலக்கணம் கற்பிக்கப்பட்டது. புராண மண்டபத்தில் புராணம் பயிலப்பட்டது. ஒவ்வொரு கோவில்களிலிருந்த ஆசிரியர் மாணவர்களைப் பற்றியும் அவர் களின் கடமைகளைப் பற்றியும் பட்டையங்கள் கூறுகின்றன. திருபுவனத்திற் கிடைத்த பட்டையமொன்று அங்குப் பல ஆசிரியர்களும் 360 மாணவர் களும் இருந்தார்கள் என்று கூறுகின்றது. எண்ணாயிரம், திருமுக்கூடல் முதலிய இடங்களிலும் இவ்வகையான அமைப்புகள் இருந்தன. திருமுக் கூடலில் ஒரு கலாசாலை, ஓர் உணவுச்சாலை, ஒரு மருந்துச்சாலை இருந் தனவென்று பட்டையங்களிற் காணப்படுகின்றது. ஆந்திர தேசத்திலே சிரீசைலம் , திராக்சராம, தந்தரம், திரிபுராந்தகம் முதலிய இடங்களிலும் இவ் வகை அமைப்புக்களிருந்தன. இக் கோவில்களில் பல்வகை நூல்களடங்கிய நூலகங்கள் இருந்தன. நூலகங்களுக்கு நூல்களை உதவுவது செல்வரின் கடமை என்று புராணங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு கோவிலிலும் நூல் நிலை யங்கள் இருந்தன என்று நாம் துணிதற்கு மேற்கூறியவை சான்றுகளாகும். மடங்கள் கோவில்கள் பொது முறையான கல்வியைப் பரப்பின. சங்கரர், இராமனுசர், மத்வர் போன்றவர்கள் சார்பில் தோன்றிய மடங்களில் அந்தந்த மதத்தலைவர்களின் கொள்கை சம்பந்தமான கல்வி கற்பிக்கப்பட்டது. இவைகளோடு பாசவ,சைத்தனிய மதக் கொள்கைகளைப் பரப்பும் மடங்களும் எழுந்தன. சிரிங்கேரி, துவாரகை, பூரி, காசி, காத்தியவார், பாடாரி முதலிய இடங்களில் சங்கரர் மடங்களை அமைத்தார். மேல்கோடு, மன்னார்கோயில் அகோபிலம் முதலிய இடங்களில் இராமனுசர் மடங்கள் உள்ளன. மத்வர் உடுப்பியில் ஏழுமடங்களைத் தொடக்கினார். மாத்வரின் கொள்கையைப் பின்பற்றுவோர் பிற்காலங்களில் பல கிளை மடங்களைக் கட்டினர். பாசவ மதத்தினர் கர்நாடகத்தில் பல மடங்களைத் தோற்றுவித்தனர். 12ஆம் 13ஆம் நூற்றாண்டுகளில் தாகல (Dahala) நாட்டினின்றும் கோலகி (Golagi) மடத்தினர் தெற்கே வந்து சோழ, கேரள அரசருடையவும் ஆந்திர நாட்டுக் காகத்தியருடையவும் ஆதரவைப் பெற்றுக் காளமுகம் என்னும் சிவமதத்தின் ஒரு வகைக் கொள்கையைப் பரப்பினர். இவர்கள் மந்தரம், புட்பகிரி, திரிபுராந்தகம், திருப்பரங்குன்றம், மதுரை, செய்யூர், தேவிகாபுரம் முதலிய இடங்களில் மடங்களை அமைத்தனர். இம் மடங்களில் வேதாந்தக் கொள்கை தொடர்பான கையெழுத்துச் சுவடிகள் காணப்படுகின்றன. பெல்லகம்வி(Balagamvi)யிலுள்ள கோடியா (Kadiyad) மடத்தில் வேதாந்தம், குமாரா, பாணினி, சாகதாயனர் முதலியோரின் இலக்கணங்கள், தரிசனங்கள், யோகம், புராணம், இதிகாசம்,தர்மசாத்திரம் முதலிய பாடங்கள் மாணவ ருக்குக் கற்பிக்கப்பட்டன. பள்ளிக் கூடங்கள் போன்று பயனளித்த மடங் களில் நூல் நிலையங்கள் இருந்தன என்பது உண்மையாகும். திருவாடுதுறை, திருப்பனந்தாள் போன்ற சைவ மடங்களிலும் பழைய நூல்கள் தொகுத்து வைக்கப்பட்டிருந்தன. அரண்மனைகள் முற்கால இந்திய அரசர் கல்வியை ஆதரித்து வந்தார்கள். அது அவர்களின் கடமைகளுள் ஒன்றாக விருந்தது. கனிஷ்க, ஹர்ஷ முதலிய புத்த மதப்பற்றுடைய அரசர்களும் கல்வியை ஆதரித்தார்கள். குப்த அரசர் காலத்தில் கல்வி, சமய விழிப்புகள் உண்டாயின. அப்பொழுது புலவர் களுக்கு அதிக ஆதரவு உண்டாகியிருந்தது. குப்தர் காலப்பட்டையங்கள் பெரும்பாலும் அரசர்களுக்கு வழங்கப்பட்ட கொடைகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. அரசனுடைய பெருமை அவன் செல்வத்தின் அளவுக்கு இருக்கவில்லை; அவன் அரண்மனையை அலங்கரித்த புலவர்களின் எண் அளவுக்கு இருந்தது. மத்திய கால இந்திய வரலாறு புலவர்களின் ஆதரவைப் பற்றிய வரலாறாகவே இருக்கின்றது. வடநாட்டில் முகம்மதியர் படை எடுப்பு இருந்தபோது இந்திய கலைகள் தக்காணம், காசுமீரம், நேபாளம் முதலிய நாடுகளில் தஞ்சம் புகுந்தன. அரசர் பலர் புலவர்களாக விளங்கினார்கள். கல்வியிற் சிறந்த பலர் அரசர் அரண்மனையில் இருந்தார்கள். கி.பி. 1000 முதல் 1500 வரையில் தக்காணம் கல்விக்குப் பொற்காலமாக விளங்கிற்று. போசன் அரண்மனையிலும் சாளுக்கிய அரசர் அரண்மனையிலும் காணப் பட்ட நூலகங்களைக் கொண்டு அரசர் அரண்மனைகளில் நூலகங்கள் இருந் தனவென்று துணியலாம். அரண்மனையிலுள்ள கல்வி மண்டபத்தில் புல வர்கள் பல கருத்துக்களை வாதித்தனர்; வெற்றியாளருக்குச் சன்மானங்கள் வழங்கப்பட்டன. விசயநகர அரண்மனைப் புலவராகிய சிரிநாத என்பவர் பொன்முழுக் காட்டப்பட்டார். கல்வி மண்டபங்களில் வாதங்கள் புரிவதற்கு நூலகங்கள் இன்றியமையாதன. பழைய நூலகங்களைப் பற்றிக் குறிப்பிடும் பட்டையங்கள் சிலவே கிடைத்துள்ளன. முகம்மதிய படை எழுச்சிக் காலங்களில் நேர்ந்த அழிவு வேலைகளால் அவை மறைந்தனவாகலாம். மொகலாய சக்ரவர்த்தி ஒருவன் தான் தினமும் குளிக்கும் வெந்நீரை ஏடு களை எரித்துச் சுடச் செய்தல் வேண்டுமெனக் கட்டளையிட்டான். பாஸ்கர சம்கிதை என்னும் நூல் நூலகங்களில் நூல்கள் எவ்வாறு வைக்கப்பட்ருத்தல் வேண்டுமெனக் கூறுகின்றது. நூலகம் அழகாக அமைக்கப்பட்ட கட்டிடத் தில் இருத்தல் வேண்டும். துணியால் சுற்றிக் கயிற்றினால் கட்டப்பட்டபின் நூல்கள் இரும்புத் தட்டுகள் மீது நீளப் பக்கமாக ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்படுதல் வேண்டும். இவ்வாறு அமைக்கப்பட்ட நூலகங்கள் மேற் பார்வைக்காரனின் கவனிப்பில் இருந்தன. நூல்களைப் பத்திரமாகக் காப்பாற்றுவது மாத்திரமல்லாமல் படிப்பவர்களுக்கு வேண்டிய உதவி அளிப்பதும் அவன் கடமையாக விருந்தது. நூலகத்தை மேற்பார்ப்பவன் பலவகை நூற்கல்வியிலும் தேறியவனாக விருந்தான். இந்து நூலகங்கள் புத்தர் காலத்துக்கு முன் பல நூலகங்களும் கலாசாலைகளும் இருந்தன. தக்கசீலம்: புத்தர் காலத்துக்கு முன் இந்தியாவில் விளங்கிய பெரிய கலாசாலைகளுள் ஒன்று தக்கசீலத்தில் இருந்தது. கௌதமபுத்தர் முதலியோர் இக் கலாசாலையிலேயே கல்வி பயின்றனர். அர்த்த சாத்திரம் செய்த கௌடலியரும் இக் கலாசாலையிலேயே பயின்றார். ஜப்பான், கொரியா, கிரீஸ் முதலிய நாடுகளிலிருந்து வந்த மாணவரும் இக்கலா சாலையிற் கல்வி பயின்றனர். நூல்களைப் படியெழுதும் பொருட்டுப் பெரிதும் பிற நாட்டார் இங்குத் தங்கியிருந்தார்கள். தக்கசீலத்தில் நூலகமும் கலாசாலையும் கி.மு.600 முதல் கி.பி. 40 வரையில் இருந்தன. காசி: தக்க சீலத்துக்கு அடுத்தபடியிலுள்ளது காசி. இது புனித இட மாகக் கொள்ளப் பட்டமையால், இங்குப் பல வித்துவான்களும் மாணவரும் தங்கியிருந்தனர். இன்றும் காசியில் கல்விபயிலும் மாணவர் உயர்வுடையவர் களாகக் கொள்ளப்படுகின்றனர். ஒவ்வொரு பண்டிதரிடத்தும் பலநூல்கள் இருந்தன. மாணவர் அவைகளைப் படி எழுதிப் பயன்படுத்தினர். இவ்வாறு காசியிலிருந்து படி எடுத்துக்கொண்டு வரப்பட்ட கையெழுத்து நூல்கள் பல ஆந்திர நாட்டில் உள்ளன. குறிக்கப்பட்ட ஒரு கலையில் தேர்ச்சி பெறுவ தற்கு ஒரு மாணவனுக்குப் பன்னிரண்டு ஆண்டுகள் சென்றன. காசுமீரம்: காசியைப் போலவே காசுமீரமும் கல்விக்கு இருப்பிடமா யிருந்தது. காசுமீரத்தில் சாரதாபீடம் என்னும் பேர் போன கல்விக்கழகம் ஒன்று இருந்தது. இது தமிழ்ச் சங்கத்தைப் போல நூல்களின் தகுதிகளை நோக்கி அவைகளுக்குத் தமது ஏற்றுக்கொள்ளுதலை அளித்தது. காசுமீரத் தில் இன்றும் சிறந்த கையெழுத்து நூல்கள் உள்ளன. பழைய சாரதாபீடம் பெரிய நூலகமாக விளங்கிற்று. நாட்டிலிருந்த நூலகங்கள்: கல்விச்சாலைகள், தனிப்பட்டவர்களின் வீடுகளல்லாத பட்டினங்கள் கோவில்களிலும் நூல்கள் சேர்த்து வைக்கப் பட்டன. பீசப்பூர் அவ்வகை இடங்களில் ஒன்று. முகம்மதியர் காலத்தின் முன் அது வித்தியாபுரம் என்னும் பெயர் பெற்றுக் கல்வியை வளர்த்து வந்தது. மேற்குச் சாளுக்கிய அரசனாகிய கலியான் இங்கு அழகிய கட்டட மொன்றை அமைத்தான். நூல்கள் சேர்த்துப் பாதுகாத்து வைக்கப்பட்ட கட்டடத்தின் அழிபாடு இன்றும் காணப்படுகின்றது. இவ்வகை அழிபாடு காணப்படும் இன்னொரு இடம் நாகர் கோட்ஸ். பிரோப் தக்லாக் என்னும் சுல்தான் இவ்விடத்தைச் சூறையாடினான். சிவலாமுகியில் மிகப் பல இந்து நூல்கள் இருக்கின்றன வென்று கேள்வியுற்ற சுல்தான் அங்குச் சென்று சிறந்த நூல்களைத் தெரிந்துதெடுத்து அவைகளைப் பாரசீக மொழிப் படுத்துவித்தான். அரசரின் அரண்மனைகள்: அரசர்களின் அரண்மனைகள் கல்வியையும் நூல் நிலையங்களையும் வளர்க்கும் இடங்களாக விருந்தன. கற்றாரை ஆதரிப்பது இந்து அரசரின் கடமையாகவிருந்தது. பழங்காலப் புலவர்கள் வரலாறுகளால் எவ்வாறு புலவர்கள் அரண்மனைகளை அலங் கரித்தார்கள் என்றும், வாதங்களில் வெற்றி பெற்றார் எவ்வாறு சன்மானிக்கப் பட்டார்கள் என்றும் அறிகின்றோம். பல நூல்கள் அரசரின் ஆதரவு பெற்று எழுதப்பட்டன. அரசரிற் பலர் புலவர்களாக விளங்கினர். அவர்கள் தமது காலத்தும், தமக்கு முன்னும் தோன்றிய இலக்கியங்களைத் திரட்டி வைத் திருந்தார்கள். பழைய நூலகங்களைப் பற்றிச் சில சான்றுகளே உள்ளன. இராச்சியங்களோடு நூலகங்களையும் முகம்மதியர் அழித்தமையே இதற்குக் காரணம். மத்திய கால நூல் நிலையங்களுட் சிறந்தது போச ராசனுடையது. இன்று இந்திய அரசர்களின் அரண்மனைகளில் நூலகங்கள் காணப் படுகின்றன. இவை தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வருவன. பிக்கநேர், ஜம்மு, மைசூர், தஞ்சாவூர், செயப்பூர் நேபாளம் முதலிய இடங் களிற் காணப்படும் நூல்நிலையங்களே இதற்கு எடுத்துக்காட்டுக்களாகும். ஜோட்பூர்(Joput) அரண்மனை நூலகத்தில் 1800 கையெழுத்து நூல்களும் பல அச்சிட்ட நூல்களும் உள்ளன. பிக்கநேரில் 2000 கையெழுத்து நூல்கள் உள்ளன. நேபாளத்தில் 5000-க்கு மேற்பட்ட கையெழுத்து நூல்கள் உண்டு. தஞ்சாவூர் நூல் நிலையம் காசுமீர நூல் நிலையத்துக்கு ஒப்பானது. தஞ்சாவூர் நூல் நிலையம் 16ஆம் நூற்றாண்டில் நாயக்க அரசரால் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வரசர் நூறு ஆண்டுகளாகப் பல நூல்களைச் சேர்த்தார். தஞ்சாவூரை வெற்றி கொண்ட அரசரும் பல புதிய நூல்களைச் சேர்த்து வைத்தனர். இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் திரட்டி இங்கே வைக்கப்பட்ட கையெழுத்துப் படிகளின் எண்ணிக்கை 18000. இந் நூலகத்தின் மதிப்பு ஏழரை இலட்சம் என மதிக்கப்பட்டுள்ளது. நிசாம் இராச்சியத்திலும் பிறவிடங்களிலும் தலைமுறை தலைமுறையாக வரும் தனிப்பட்டவர்களின் நூல் நிலையங்கள் காணப்படுகின்றன. புத்தமத நூலகங்கள் புத்தமதம் ஓங்கியிருந்தபோது கல்வி சம்பந்தமான நிலையங்கள் மிக ஆதரவு பெற்றிருந்தன. புத்த சமயக் கொள்கைகள் பிறநாடுகளிற் பரவினமையால் புத்த சமயத்தைத் தழுவிய ஆயிரக்கணக்கான மக்கள் இந்திய நாட்டுக்கு யாத்திரை செய்தார்கள். கற்றவர்கள் மிகக் கௌரவிக்கப் பட்டமையால் உயர்தரக் கல்விக்கு அதிக மதிப்பிருந்தது. இதனால் பல விடங்களில் கலாசாலைகளும் நூல் அகங்களும் தோன்றின. யாத்திரிகர் அக்காலக் கல்வி முறையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள். புத்த துறவிகள் சமயச் சட்டங்களையும் நீதிச்சட்டங்களையும் பலகைகளில் எழுதினார்கள். செல்வர்களின் குடும்பச் செய்திகள் புத்தகங்களில் எழுதப்பட்டுள்ளன. நூலகங்களும் கல்விச்சாலைகளும் உள்ள இடங்களிலேயே புத்தமதம் பரவியிருந்தது. நாலந்தாவில் கல்வி அரசரின் ஆதரவு பெற்றிருந்து, பிற்கால குப்தர் அங்கு மடங்கள் அமைத்து அவைகளுக்கு மானியம் வழங்கினார்கள். ஹியன்திசியாங் என்னும் சீன யாத்திரிகன் காலத்தில் அரசன் நாலந்தாக் கலாசாலைக்கு நூறு கிராமங்களின் வருவாயை மானியமளித்தான். இற்சிங் (Itsingh) என்னும் சீனயாத்திரிகன் நாலந்தாவிலிருந்து பல சமக்கிருத நூல் களைச் சேகரித்தான்; ஹியன்திசாங் 650 கையெழுத்துப் படிகளைக் கொண்டு சென்றான். அழிபாடுகளை வெட்டிச் சோதித்த போது கிடைத்த செப்புப் பட்டையமொன்றில் தேவபாலா என்னும் வங்காள அரசன் புத்த சமயம் சம்பந்தமான நூல்களைப் படி எழுதுவதற்கு அளித்த மானியத்தின் விபரம் காணப்படுகின்றது. ஆயிரக்கணக்கான புத்த துறவிகள் நாலந்தா மடத்தில் இருந்தார்கள். விக்கிரம சீலம்: நாலந்தாக் கலாசாலையில் அன்னிய நாட்டினர் வந்து தங்கிக் கல்வி பயின்றார்கள். விக்கிரம சீலம் அரசரால் அமைக்கப்பட்டது. அங்கு அரசரின் உயர்ந்த கருமக்காரர் புலவருக்குப் பட்டம் வழங்கினார்கள். திபெத்திய வரலாறுகள் இக் கல்விச்சாலையைப் பற்றிய பல செய்திகளை விளக்குகின்றன. இங்குள்ள கல்விச் சாலைக்குத் தருமபாலர் என்னும் அரசன் கி.பி.9ஆம் நூற்றாண்டில் தளமிட்டான். இக் கலாசாலை நானூறு ஆண்டுகள் நடைபெற்றது. இது ஆறுபேர் அடங்கிய சபையால் நடத்தப் பட்டது. இச் சபைக்குத் தலைவர் சமய குருவாகவிருந்தார். அங்கு ஆறுகலா சாலைகள் இருந்தன. ஒவ்வொன்றிலும் 108 ஆசிரியர்கள் இருந்தார்கள். அக் கட்டடம் மதிலாற் சூழப்பட்டு 8000 மக்கள் தங்கக் கூடிய விசாலமுடையதா யிருந்தது. இக் கலாசாலைகளுக்கு அயலே நூல்நிலையமொன்றிருந்தது. நமது நாட்டிலே கையெழுத்துப் படிகள் சேகரித்து நூல் நிலையங் களில் வைக்கப்பட்டிருந்தன. அந்நிலையங்கள் பாரதி பண்டாரம் அல்லது சரசுவதி பண்டாரம் எனப்பட்டன. அவை கோவில்களோடும் அரண்மனை களோடும் இணைக்கப்பட்டிருந்தன. பானா (கிபி.620) தமக்குச் சொந்தமாக ஒரு நூலகத்தை அமைத்திருந்தார். ஹியன்திசியாங் ஏராளமான நூல்களை 20 குதிரைகளில் ஏற்றிக்கொண்டு சென்றான். அவன் கிபி. 640இல் வல்லாபி புரத்தை அடைந்தபோது அங்குப் பெரிய நூல் நிலையமிருந்தது. அந் நிலையத்தின் புகழ் சீனாவில் எட்டியிருந்தது. சித்திரமதி, தினமதி என்னும் இரண்டு புத்த துறவிகள் சீனாவுக்கு அழைக்கப்பட்டார்கள். சிரமணபுண் ணியோ பாயா என்பவர் 1500 நூல்களை இந்தியாவிலிருந்து சீனாவுக்கு எடுத்துச் சென்றார். கி.பி. 11ஆம் நூற்றாண்டில் விளங்கிய போசனின் அரண்மனையில் பெரிய நூல் நிலையமிருந்தது. சயசிம்ஹதேவ சித்தராச என்னும் சாளுக்கிய சக்கரவர்த்தி மாளவத்தை கி.பி. 1140இல் வென்றபோது அன்கில்வாட் பட்டினத்துக்கு (Anhilvad patan) அதனை எடுத்துச் சென்றான். குசராத்திய சாளுக்கியர் காலத்தில் பல நூல் நிலையங்கள் இருந்தன. எமசந்திராச்சாரியாரும் அவர் மாணவரும் பல நூல்களைச் சேகரித்துப் படி எடுத்துச் சைன கோவிற் பண்டாரங்களில் வைத்தார்கள். கி.பி. 1200இல் புத்தகம் படி எடுப்பது கலையாக வளர்ச்சியடைந்தது. முகம்மதிய படை எடுப்பாளரின் அழிவு வேலைக்குப் பிற்பாடும் கம்பேயி லுள்ள சைன நூல் நிலையத்தில் 30,000 கையெழுத்து நூல்களும் தஞ்சாவூர் நூல் நிலையத்தில் 12000 நூல்களும் இருக்கப் பூலர் (Buhler) கண்டார். 1186-க்கும் 1400-க்கு மிடையில் இந்தியாவில் பெரிய அழிவு வேலை நடை பெற்றது. அக் காலத்தில் நூற்றுக்கணக்கான நூல் நிலையங்கள் அழிந்து போயின. அவைகளிலிருந்து மறைந்துபோன நூல்கள் இலட்சக் கணக்கில் ஆகலாம். சீனர் அச்சிடும் வகையை கி.மு.202இல் கண்டுபிடித்தார்கள். ஐரோப்பாவின் யோவன் கூதன்பர்க் (Johan Gotenberg) என்பவன் அச்சுப் பொறியைக் கண்டுபிடித்தான். சுருள் வகையில் முதல் அச்சிடப்பட்ட புத்தகம் கி.பி. 868இல் வெளியாயிற்று. இது கூதன்பர்க் பைபிளை அச்சிடு வதற்கு அறுநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட நிகழ்ச்சி. இந்தியாவுக்கு அச்சியந்திரம் 1566ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் போர்த்துக்கேயரால் முதன் முதல் கொண்டுவரப்பட்டது. அது இராக்கோல் (Rockol) என்னுமிடத்திலுள்ள சேயின்போல் கலா சாலையில் அமைக்கப் பட்டது. சிவாசி மகாராசா ஓர் அச்சுப் பொறியை அமைத்தார். அதில் வேலை செய்விக்க முடியாமல் இருந்தமையால் அவர் அதை 1674இல் விற்றார். 1712இல் டானிய பாதிரிமார் ஐரோப்பவிலிருந்து ஒரு அச்சுப் பொறியைக் கொண்டு வந்து தரங்கம்பாடியில் நாட்டினார்கள். அவர்கள் போர்த்துக் கேய மொழியில் பல நூல்களை வெளியிட்டார்கள். அவர்கள் கிறித்துவ மத சம்பந்தமான தமிழ்ப் புத்தகம் ஒன்றைத் தமிழில் வெளியிட் டார்கள். இந்திய மொழியில் அச்சிடப்பட்ட முதற்புத்தகம் இதுவே. இவ்வச்சு நிலையம் 1715இல் பைபிளின் புதிய ஏற்பாட்டை வெளியிட்டது. இக்கால நூலகங்கள் நூலகங்கள் கல்விகற்ற வித்துவான்கள் பயன்படுத்துவதற்கு மாத்திரம் உரியதென ஒரு காலத்தில் கருதப்பட்டது. இப்பொழுது அவை படித்தவர்க் கும் படிக்க விரும்புகின்றவர்க்கும் உரிய இடமாகக் கொள்ளப்படுகின்றது. இலண்டன் மாநகரிலுள்ள நூலகம் ஏனை நூலகங்களை விடச் சிறப்பு வாய்ந்தது. அங்கு 20,00,000 அச்சிட்ட நூல்களும் 56,000 கையெழுத்து நூல்களும் உள்ளன. மற்றைய நூலகங்களிற் காணப்படுவன போன்ற சிறிய நூல்கள் இக் கணக்கில் அடங்குவனவல்ல. அவைகளையும் சேர்ப்பின் நூல்களின் எண் 50,00,000 வரையிலாகும். இங்கிலாந்தில் அச்சிடப்படும் நூல்களில் 3,400 படிகள் ஆண்டுதோறும் சேர்க்கப்பட்டு வருகின்றன. கையெழுத்துப் படிகள் கிறித்துவுக்கு முன் மூன்றாம் நூற்றாண்டு முதல் இன்று வரையும் உள்ளவை. இவைகளுள் பைபிரஸ் தாளில் எழுதப்பட்ட கிரேக்க நூல்கள் சிறப்புடையன. இலண்டன் பொருட்காட்சிச் சாலையிலுள்ள நூலகத்தில் சென்று நூல்களைப் படிப்பதற்கு ஒருவன் 21 வயதுக்கு மேற்பட்டவனாயிருத்தல் வேண்டும்; அவனிடத்தில் அனுமதிச் சீட்டும் இருத்தல் வேண்டும். கல்கத்தாவிலுள்ள சமக்கிருத கலாசாலையில் 1652 சமக்கிருதக் கையெழுத்து நூல்களும் 2769 சமக்கிருத அச்சு நூல்களும் உள்ளன. அங்கு சைன மதக் கொள்கைகள் தொடர்பான கையெழுத்து நூல்களும் உள்ளன. 1781இல் தொடங்கப்பட்ட அராபிய நூல் நிலையத்தில் 731 அச்சிட்ட நூல்களும், 143 (மூலம்) கையெழுத்து நூல்களும் 151 படி எழுதிய நூல்களும் உள்ளன. திப்புச் சுல்தானின் நூலகத்தில் 2000 கையெழுத்து நூல்கள் இருந்தன. அமெரிக்காவில் பல நூல் நிலையங்கள் உண்டு. 1000 பெரிய நூல் களுக்கு மேலுள்ள நூல்நிலையங்கள் 5,383 வரையில் 1900இல் அமெரிக்கா விலிருந்தன. 1910இல் 10000 வரையிலிருந்தன. காங்கிரஸ் நூல் நிலையம் 1800இல் வாஷிங்டனில் ஆரம்பிக்கப்பட் டது. இதை 1814இல் ஆங்கில போர்வீரர் தீ மூட்டி எரித்தார்கள். பின்பு 1851இல் புதிய நூலக மொன்று தொடக்கப்பட்டது. அங்கு 20000 நூல்கள் இருந்தன. அவை தீக்கு இரையாயின. அதன் பின் தொகுக்கப்பட்டவை 26,00,000 நூல்கள். இன்றுள்ள நூல் நிலையக் கட்டடம் 1897இல் அமைக்கப்பட்டது. அதன் பரப்பு மூன்றரை ஏக்கர். அதில் நாற்பதி லட்சம் நூல்களை வைக்க லாம். அதின் விலை நிலம் உட்பட 70,00,000 டாலர். இதுவே உலகம் முழுமையிலும் உள்ள நூலகக் கட்டடங்களிற் பெரியது. கன்னிமரா நூலகம் கன்னிமரா நூலகம் சென்னையில் எழும்பூரில் நூதன பொருட்காட்சிச் சாலைக் கட்டிடத்திலுள்ளது. இங்கு உத்தேசமாக ஒரு இலட்சம் நூல்கள் வரையில் உள்ளன. இங்கு பலதுறை நூல்கள் உண்டு. ஆகவே மாணவரும், ஆசிரியரும், ஆராய்ச்சியாளரும் இந் நூலகத்தைப் பயன்படுத்துவர். இந் நூலகம் பொதுமக்களுக்குத் திறந்து விடப்பட்டிருக்கின்றது. நானூறு முதல் ஐந்நூறு பேர் தினம் இந் நூலகத்துக்குச் செல்கின்றனர். இங்கு நூல்களே யன்றிப் பல நாள். திங்கள், வார வெளியீடுகளும் வரவழைக்கப்படுகின்றன. பழைய படிகள் புத்தக வடிவில் கட்டி வைக்கப்பட்டிருக்கின்றன. இந் நூலகத் துக்கு அங்கத்தவராவதற்கு இருபது ரூபா கட்டணம் செலுத்த வேண்டும். அங்கத்தினின்று விலக விரும்பினால் அப் பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அங்கத்தவர்கள் நூல்களை இரவல் பெற்றுச் செல்லலாம். திருவல்லிக்கேணியில் பல்கலை கழக நூல் நிலையமொன்றுள்ளது. இங்கும் கன்னிமரா நூல் நிலையத்திலுள்ள நூல்கள் அளவு உண்டு. இது பொதுமக்க ளுக்குத் திறந்துவிடப்படவில்லை. பட்டதாரிகள் கலாசாலை மாணவர்களே இந் நூலகத்திற் பயன்கொள்வர். இன்னோர் நூலகம் அடையார் தியாச பிஸிட் சங்கத்தினர் கட்டடத்திலுள்ளது. இங்கும் அரிய பல நூல்கள் உள்ளன. அயல் நாட்டுப் பழைய நூலகங்கள் எகிப்து எகிப்திலே எடிவ் என்னும் இடத்தில் நூலகம் ஒன்று கண்டுபிடிக்கப் பட்டது. அந் நிலையத்தின் அறைகள் ஒன்றில் நூல் நிலையத்திலுள்ள புத்தகங்களின் பெயர்கள் நிரையாக எழுதப்பட்ட பைபிரஸ் சுருள் ஒன்று காணப்பட்டது. இந் நூலகம் கி.மு.4000 வரையில் அமைக்கப்பட்டது. எகிப்திலே வரலாறு எழுதி வைக்கும் வழக்குப் பழமையுடையது. பரோவா என்னும் எகிப்திய அரச பரம்பரைக்கு முற்பட்ட அரசரின் வரலாறுகள் தொடர்பாக எழுதிக் காப்பாற்றப்படலாயின. அரசரின் வரலாறுகளை எழுதும் புலவன் படை எடுப்புக் காலங்களில் அரசரோடு போர்க்களஞ் சென்று வெற்றிகளின் தன்மைகளை எழுதினான். கி.மு.2500 வரையில் வரலாறு எழுவது சிறந்த கலையாகக் கருதப்பட்டது. கி.மு. 2500 முதல் எகிப்திய புலவர்கள் தங்கள் அரசரை வரிசைப்படுத்தி எழுதி அவர்களிருந்த காலத்தையும் குறிப்பிட்டார்கள். நிகழ்ச்சிகள் இன்ன அரசன் காலத்தில் இன்ன ஆண்டு எனக்குறிப்பிடப்பட்டன. சுமேரியா எகிப்திய நூலகத்துக்கு அடுத்த படியில் முதலாம் சார்கன் அக் காட்டில் நிறுவியிருந்த நூலகம் பழமையுடையது. கி.மு.2700இல் சுமேரியாவில் பெரிய நூல் நிலையங்கள் தோன்றியிருந்தன. தெல்லோ என்னும் நகரில் ஒன்றின்மேல் ஒன்றாக ஒழுங்குபடுத்தி அடுக்கப்பட்ட 30,000 களிமண் ஏடுகள் காணப்பட்டன. கி.மு.2000 வரையில் சுமேரிய வரலாற்றாசிரியர்கள் கழிந்தகால வரலாறுகளை எழுதி வைத்தார்கள். இவ் வரலாற்றில் பாபிலோனிய அரச பரம்பரையை விளக்கும் பகுதிகள் வந்துள்ளன. பாபிலோனியா பாபிலோனியாவில் தெல்லோ, இலாகாஷ், நிப்பூர் முதலிய இடங் களில் நூல் நிலையங்கள் இருந்தன. நூல்கள் சாடிகளில் ஒழுங்காக இட்டுத் தட்டுகளில் வைக்கப்பட்டிருந்தன. அந் நூலகங்கள் அழிந்து போயின. போர்சிப்பா என்னும் இடத்திலிருந்த நூல் நிலையம் மிகப் பெரியது. அசீரியா அசுர்பானிப்பால் (கி.மு.673) என்னும் அசீரிய அரசன் பெரியநூல் நிலையமொன்றை நிறுவினான். அந் நிலையத்திலிருந்த நூல்கள் போர்சிப்பா, கூதா, அக்காட், ஊர், எரெக், இலார்சா, நிப்பூர் முதலிய இடங்களி லிருந்த நூல்களைப் பார்த்துப் படி எடுக்கப்பட்டவை. அசுர்பானிப்பாலின் அரண்மனையிற் காணப்பட்ட 30,000 களிமண் ஏடுகள் பாபிலோனிய மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றி அறிவதற்கு ஆதாரமாயுள்ளன. தென் சிரியாவில் களிமண் ஏடுகள் அடங்கிய நூல்நிலையமொன்று கண்டு பிடிக்கப்பட்டது. இதன் காலம் கி.மு.1300 வரையில். அலக்சாந்திரியா நூல்நிலையம் எகிப்துவிலிருந்து பைபிரஸ் தாள்கள் கிடைப்பதன் முன் கிரீசில் புத்தகங்கள் மிகக் குறைவாயிருந்தன. கி.மு.7ஆம் நூற்றாண்டு முதல் பைபிரஸ் தாள்கள் கிரீசுக்கு அனுப்பப்பட்டன. அதற்கு முன் நூல்கள் தோல் களில் அல்லது மரச் சட்டங்களில் எழுதப்பட்டன. அக் காலத்தில் பைபிரஸ் என்னும் நாணல் நைல் ஆற்றங்கரையை அடுத்த சதுப்பு நிலங்களில் மண்டி வளர்ந்தது. கிறித்துவுக்கு மூவாயிரம் ஆண்டுகளின் முன் நாணல் தண்டுகளைப் பிளந்து நீளமாகச் சேர்த்து ஒட்டித் தாள் செய்யப்பட்டது. அத் தாள்கள் சுருட்டி வைக்கப்பட்டன. கிரேக்கர் பைபிரஸ் தாள்களைப் பற்றி அறிவதற்கு நீண்ட காலத்துக்கு முன் தொட்டு எகிப்தில் அவை பயன் படுத்தப்பட்டன. கி.மு.ஏழாம் நூற்றாண்டில் பைபிரஸ் தாள்கள் சுருள் வடிவில் கிரிசுக்கு அனுப்பப்பட்டன. இது அவர்கள் முன் எழுதப் பயன்படுத்திய பொருள்களைவிட வாய்ப்புடையதாயிருந்தமையால் புத்தகங்கள் அதிகப்பட்டன. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் ஹோமரின் நூல்களும் அவர் காலத்திற்குப் பிற்பட்ட நூல்களும் பைபிரஸ் தாள்களில் எழுதப்பட் டிருந்தன. அவை சந்தைகளில் விற்கப்பட்டன. கி.மு.407இல் எழுதாத ஒரு பைபிரஸ் சுருளின் விலை மூன்று ஷிலிங் வரையிலிருந்தது. அப்பொழுது மக்கள் நூல் நிலையங்களை வைத்துக்கொள்ள விரும்பினார்கள். யூரிபிடிஸ் (Euripides) என்பவன் மிகப் பல பைபிரஸ் சுருள் வடிவான நூல்களை வைத்திருந்தான். பிளாட்டோ (lato) நாலாம் நூற்றாண்டில் தத்துவ சாத்திரக் கலாசாலையை நிறுவியபோது அங்கு ஒரு நூல்நிலையத்தையும் அமர்த்தினார். இதனிலும் பெரிய நூல் நிலையம் அரிஸ்டோட்டிலின் பள்ளிக் கூடத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அலக்சாந்தரின் மரணத்தின் பின் (கி.மு.323) அவருடைய தளபதிகளி லொருவனான தாலமி எகிப்துக்கு அரசனானான். இத் தாலமிக்குப் பின் வந்த அரசரும் தாலமி என்னும் பெயரால் அறியப்பட்டனர். பைபிரஸ் தாள்களைச் செய்யும் தொழிற்சாலைகள் அரசாங்கத்திடம் இருந்தன. ஆகவே, கிரேக்கர் எகிப்திய அரசாங்கத்திலிருந்து தமக்கு வேண்டிய பைபிரஸ் தாள்களைப் பெற வேண்டியிருந்தது. அக்காலத்தில் தாலமியே மிகச் செல்வமுடையவனாயிருந்தான். அவன் மத்திய தரைக்கடலை அடுத்த நாடுகளிற் கிடைக்கக் கூடிய நூல்களை எல்லாம் விலை கொடுத்து வாங்கினான். பைபிரஸ் தாள்கள் அதிகம் இருந்தமையால் அவன் பழைய புத்தகங்களைப் படி எடுத்தான்; புதிய புத்தகங்களை மக்களிடையே பரவச் செய்தான். அலக்சாந்திரியாவில் பெரிய நூலகமொன்று நிறுவுதல் வேண்டுமென்னும் விருப்பம் அவனுக்கு உண்டாயிற்று. எண்ணியாவாறே அவன் அங்கு மிகப்பெரிய நூலகமொன்றை நிறுவினான். கிரேக்க அரசர்கள் இந் நூலகத்துக்குப் போட்டியாகத் தாமும் ஒன்றை அமைக்க முயன்றனர். அவர்கள் எகிப்தியரின் தாள் செய்யும் தனியுரிமையைச் சிதைக்க விரும்பி ஒருவகை மெல்லிய தோலைத் தாளாகப் பயன்படுத்தினர். ஆயினும் கிரேக்க உரோமன் உலகத்தில் கிறித்துவ காலம் வரையில் பைபிரஸ் புத்தகங்கள் எழுதப் பயன்படுத்தப்பட்டது. அலக்சாந்திரியாவில் தொடங்கப்பட்ட நூல் நிலையம் மியூசியம் என்னும் கோயிலோடு இணைக்கப்பட்டிருந்தது. மியூசியம் என்னும் சொல் கிரேக்கில் மோசெ அன் (moursaion) எனப்பட்டது. இதற்குப் பாடற் பெண் கடவுளின் கோயிலேன்று பொருள். கிரேக்கரால் நடத்தப்பட்ட எல்லாச் சங்கங்களின் மத்தியிலும் ஒரு தெய்வம் அல்லது பல தெய்வங்கள் இருந்தன. பிதகோரிய விடுதிகளில் அக் கூட்டத்துக்குரிய தெய்வங்களிருந்தன. அதென்சிலிருந்த அரிஸ்டோட்டிலின் பள்ளிக் கூடத்தில் தெய்வங்களுக்குக் கோயிலிருந்தது. தாலமி கிரேக்கக் கல்வி, விஞ்ஞானம் சம்பந்தமான கல்விக் கழகத்தை அமைத்தபோது அவன் அதனைக் கோயிலோடு தொடர்புபடுத்துவது இயல்பேயாகும். அவனுடைய அரண்மனையில் இருந்தவர்களுள் அதிகாரமுடைய ஒருவன் கிரேக்கி னின்றும் தப்பி ஓடிச்சென்றவனும் அரிஸ்டோட்டிலின் மாணவனுமாகிய டெமெற்றியஸ் என்பவன். தாலமியால் தொடக்கப்பட்ட வேலை அவனது மகன் தாலமி பிலாடெல்பஸ்(Ptolemy Philadephus கி.மு.285-247) காலத்தில் முற்றுப் பெற்றது. இவனுக்கு விலங்குநூல், இலக்கியம் என்பவைகளில் மிக்க விருப்பம் இருந்தது. நூலகத்தை மேற் பார்ப்பவன் குருமாருள் தலைவனாயிருந்தான். கிரேக்க நாட்டிலுள்ள தத்துவ சாத்திரிகள் எல்லோரும் இக் கல்விக் கழகத்தின் உறுப்பினராயினர். பிலாடல்பஸ் மரணமானபோது நூலகத்தில் 4,00,000 கலந்த சுருள்களும், 90,000 கலப்பில்லாத சுருள்களுமிருந்தன. ‘கலந்த’ என்பவைகளில் ஒன்றுக்கு அதிகமான நூல்கள் வரையப்பட்டிருந் தன. கி.மு.50இல், நூலகத்திலிருந்த நூல்களின் எண் 7,00,000. அலக்சாந்திரியா வில் இன்னொரு சிறிய நூலகமுமிருந்தது. அதில் 42,800 சுருள்கள் இருந்தன. அலக்சாந்திரியாவிலிருந்த நூல்களுக்கு என்ன விளைந்தது என்று தெரியவில்லை. கி.மு.47இல் சீசர் எகிப்திய கப்பல்களுக்குத் தீ வைத்தபோது அந் நூலகம் எரிந்து போயிற்று என்று நம்பப்படுகின்றது. சிறிய நூலகம் கிறித்துவ மதத்தினரால் கி.பி.391இல் அழிக்கப்பட்டது. கி.பி.642இல் அமரு என்னும் முகம்மதிய தளபதி அலக்சாந்திரியா நூல்நிலையத்துக்குத் தீயிட்டான். உரோம் உரோமில் முதல் நூலகம் கி.மு.168இல் நிறுவப்பட்டது. அது மசெ டோனியா அரசருடைய நூல் நிலையத்திலிருந்து வெற்றிப் பொருளாகக் கொண்டு வரப்பட்ட நூல்களைக் கொண்டு அமைக்கப்பட்டது. ஆகஸ்தஸ் என்பார் பலனதன் அட்டோவியன் என்னும் பெயருடைய இரண்டு நூல் நிலையங்களை அமைத்தார். கான்ஸ்தாந்டைன் பைசாந்தியத்தில் ஒரு நூல் நிலையத்தை அமைத்தார். உரோமில் தனிப்பட்டவர்கள் தமது மாளிகைகளில் நூல் நிலை யங்கள் வைத்திருந்தனர். சிலரிடத்தில் ஆயிரக் கணக்கான நூல்கள் இருந்தன. இளையபிளினி என்பார் எழுதிய நூல்களில் இரு நூற்றுக்கு மேற்பட்ட நூல்கள் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன. அவைகளுள் ஒன்றேனும் இன்று காணப்படவில்லை. சீனா சீனாவில் அரசாங்க நூல் நிலையங்களும் பிற நூல் நிலையங்களு மிருந்தன. சீனச் சக்கரவர்த்தி ஒருவன் வரலாற்றாசிரியர்கள் எழுதிய நூல் களை எல்லாம் தீயிலிட்டுக் கொளுத்தும்படி கட்டளையிட்டான். சாத்திர சம்பந்தமான சில நூல்கள் எரிக்காமல் தடுக்கப்பட்டன. தடை செய்யப்பட்ட நூல்கள் அரசாங்க நூலகத்தில் வைக்கப்பட்டன. அரசினர் அனுமதி பெற்று மாணவர் அவற்றைப் படிக்கக்கூடியதாகவிருந்தது. அக்கால நூல்கள் மூங்கிற் சட்டங்களில் எழுதப்பட்டவை. ஆகவே, அவை மிகவும் பாரமுடை யன. புத்தகங்களை எரிக்காது காப்பாற்றத் துணிந்தவர்கள் பல தொல்லை களுக்குள்ளானார்கள். பல நூல்கள் கைப்பற்றப்பட்டன. 400 பேர் மரண தண்டனை அடைந்தனர். கன்பியூசியஸ் எழுதிய நூல்களைச் சிலர் மனப் பாடஞ் செய்திருந்தார்கள். மற்றவர்கள் கேட்டு மனப்பாடஞ்செய்யும்படி அவர்கள் அவைகளைச் சொன்னார்கள். அவ்வரசன் இறந்தபின் நூல்கள் மறுபடியும் பரவலாயின; ஆனால், அவைகளில் பல தவறுகள் நுழைந்தன. சீனரின் அரசாங்க நூல் நிலையத்தில் 3,123 இலக்கியங்கள், 2,705 தத்துவ சாத்திரங்கள், 1,318 பாடல் நூல்கள், 2,668 கணித நூல்கள், 869 மருந்து நூல்கள் 790 போர் நூல்கள் இருந்தன. 18ஆம் நூற்றாண்டில் புலவர் பாடல் களைத் தொகுக்கும்படி மஞ்சு அரசன் கட்டளையிட்டான். 2,300 புலவர்கள் பாடிய 48,900 பாடல்கள் அடங்கிய முப்பது நூல்கள் தொகுக்கப்பட்டன. அப்பொழுது நூலகத்தில் 54,000 நூல்கள் இருந்தன. பாக்டாட் பள்ளிவாசல்கள் முசிலிம் மக்களின் கலைக் கழகங்களாகவிருந்தன. அங்கு நடக்கும் விரிவுரைகளைக் கேட்க எல்லா இடங்களிலிருந்தும் மாணாக்கர் வந்து கூடினர். சமயம், தத்துவம், ஞானம், மருந்து, கணிதம் போன்ற பொருள்கள் பற்றிய விரிவுரைகள் நடத்தப்பட்டன. அராபி மொழி வழங்கும் நாடுகளில் ஆங்காங்கிருந்த பேர்போன ஆரிசியர்கள் தாமே முன் வந்து விரிவுரைகளை நிகழ்த்தினார்கள். திறமையுடைய ஆசிரியர்களுக்கு விரிவுரையைக் கேட்கும் மக்கள் சிறிய ஊதியமளித்தார்கள். அராபி மொழியிலிருந்து இலத்தினில் மொழிபெயர்க்கப்பட்ட கணிதம் விஞ்ஞானம், வான சாத்திரம், மருந்து, கிரேக்க தத்துவ சாத்திரம் முதலியவைகளையே மத்திய கால ஐரோப்பா அறிந்திருந்தது. அரபு மொழியிலிருந்து இவ்வகை யில் வந்த நூல்கள் பதினாறாம் நூற்றாண்டளவில் பள்ளிக் கூடங்களில் பயிலப்பட்டன. சாத்திர சம்பந்தமான கிரேக்க நூல்கள் பெரும்பாலும் அரபுமொழியில் திருப்பப்பட்டிருந்தன. பாக்டாட்டில் பல நூல் நிலையங்கள் இருந்தன. மனும் (Manum) என்னும் கலிபா பாக்டாட்டில் அமைத்த விஞ்ஞான மண்டபத்தில் பெரிய நூலகமும் வான ஆராய்ச்சி செய்யும் உயர்ந்த கட்டடமும் (observatory) இருந்தன. முற்கால நூல் நிலையங்களின் இலக்கு முற்காலத்தில் நூல்கள் அரிதிற் கிடைப்பனவாயிருந்தமையால் அவை இறந்து படாது நிலை பெறுதற் பொருட்டு ஓரிடத்திற் தொகுத்து வைக்கப்பட்டிருந்தன. அந் நூல்கள் தொகுத்து வைக்கப்பட்டிருந்த நிலையங்கள் இக்கால வாசகசாலைகள் போன்று பயன்அளித்தன என்று கூறுதல் இயலாது. நிலையங்களில் பெரும்பாலும் பழைய நூல்களே இருந்தன. அவைகளிலிருந்து நூல்கள் இரவல் கொடுக்கப்படவில்லை. இக்கால நூல் நிலையங்களின் நோக்கம் முற்றிலும் வேறாகவுள்ளது. பொதுமக்கள் நூல்களைப் பயின்று அறிவு வளர்ச்சியுற வேண்டுமென்பதே இக்கால நூல்களின் நோக்கமாகும். நமது நாட்டின் கல்வி நிலை நமது இந்திய நாட்டில் நாற்பது கோடி மக்கள் வாழ்கின்றனர். இவர் களில் நூற்றுக்குப் பதின்மூன்று பேரே கல்வியறிவுடையவர்களாயிருக் கின்றனர். ஏனைய 87 பேரும் எழுத வாசிக்கத் தெரியாதவர்களாயிருக்கின் றனர். மேற்குத் தேசங்களில் நூற்றுக்கு மூன்று பேரே கல்வியறிவில்லாதவர் களாயிருக்கின்றனர். படித்தவர்களுக்கும் படியாதவர்களுக்குமுள்ள வேறுபாடு மனிதருக்கும் விலங்குகளுக்குமுள்ள வேறுபாடு போல்வது எனத் திருவள்ளுவர் கூறியுள்ளார். “விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல் கற்றாரோ டேனை யவர்” கல்வி யறிவில்லாமையினாலேயே மக்கள் நமது நாட்டில் மாக்க ளாகவும் பிற நாடுகளில் கல்வியறிவுள்ளமையால் மக்களாகவும் வாழ் கின்றனர். கல்வியைப் பரவச் செய்வதற்கேற்ற வழிவகைகள் 1“நகரங்களிலும் கிராமங்களிலும் அங்கங்கேயுள்ள மக்களின் தகுதிக்கும் அளவிற்கும் ஏற்றவாறு பலதிறப்பட்ட நூல்களைத் தொகுத்து வைத்து வேண்டியோர்க்கு வேண்டுஞ் சமயத்து எளிதினுதவி யறிவைப் பரவச் செய்வதே நூல் நிலையப் பிரசாரத்தின் முக்கிய நோக்கம். அறிவு பெருகி வளர்தற்கு நூல்களைக் காட்டிலும் சிறந்த கருவி இல்லை என்றே கூறலாம். ஆசிரியர்கள் பாற் கற்பது ஒரு சிறிதளவாகவே எப்போதும் இருத்தல் கூடும்... கல்வியெனப்படுவது கற்கும் மாணவன் நூல்களைத் தானே சிந்தித்து ஆராய்ந்து துணிவதன் பயனாகவே அமையுமென்பது யாவர்க்கும் ஒப்ப முடிந்ததாம். ஆகவே,பிறருதவி வேண்டாது ஓதியுணர் வதற்குரிய நூல்கள் மக்களிடையே பரவப் பரவ, கல்வியும் பரவி அஞ் ஞானமும் அகன்றொழியு மென்பது கூறவேண்டா”. “பொதுமக்களனைவரது உள்ளத்தையும் கவருமாறு நகரம், ஊர், சிற்றூர் முதலிய பலவிடங்களிலும் நூல் நிலையங்கள் பல அமைக்கப்பெறுதல் வேண்டும். மக்களின் விருப்பத்தையும் சௌகரியத்தையும் தகுதியையும் நோக்கி அவர்களுக்கு ஏற்ற புத்தகங்களைக் கொடுக்கவேண்டும். அவர் களுக்கு நூல்களில் கவர்ச்சி உண்டாதற் பொருட்டு அவற்றின் நயங்களை விவரணப் பத்திரிகைகள் மூலம் வெளியிடுதல் வேண்டும். பரந்துபட்ட அறிவின் பல்வேறு பகுதிகளைப் பற்றிப் புதுப்புது நூல்கள் வெளிவர வெளிவர அவற்றையெல்லாம் பொதுமக்களிடையே பரக்க விதைத்தல் வேண்டும். கல்வியறிவு இன்றியமையாததாகுமென்பதை வற்புறுத்திக் கூறி, அதனையடைதற்குச் சாதனமாகுங் கருவி நூல்களைக் குறித்து உபந் நியாசங்கள் செய்து வரல் வேண்டும். சுருங்கக்கூறின் அரசியலின் நெறிப் பட்ட ஒரு நாட்டிற் பலதிறத்தானும் உத்தம வாழ்வு வாழ்தற்கு வேண்டும். கல்வியறி வனைத்தையும் நூல்கள் மூலம் உதவி வர எல்லா வகையானும் முயற்சி செய்வதே நூல் நிலையங்கள் மேற்கொள்ளுதற்குரிய தனிப்பெருங் கடமையா யுள்ளது.” “இந்நூல் நிலையங்கள் பலதிறத்தனவாயிருத்தலே தக்கதென்பது வெளிப்படை. குழந்தை முதல் முதியோர் வரையிலுமுள்ள அனைவர்க்கும் கல்வியூட்டுதற்கென நூல் நிலையங்கள் ஆயிரக்கணக்காக ஏற்படுத்தப் பெறுதல் மிக அவசியம். இவைகளேயன்றிக் கல்வித் துறைகள் பலவற்றிற்குத் தனித்தனியேயுரிய நூல் நிலையங்களும் மிகப் பலவாக நிறுவப்பெறுதல் இன்றியமையாதது. மேலும், பற்பல கல்வித் துறைகளிலும் ஆராய்ச்சிக் கெனத் தனித் தனியாயமைந்த நூல் நிலையங்கள் பல தாபிக்கப் பெறுதலும் தக்கதேயாகும். பிற்கூறிய இரண்டு வகை நூல் நிலையங்களும் சர்வகலா சங்கங்களாலும் கலாசாலைகளாலும் நிறுவப் பெறுதற்குரியனவென்பது கூறாமலே அமையும்.” “மேலே விவரித்தன போன்ற நூல் நிலையங்கள் நாடெங்கணும் நிரம்புதல் வேண்டும். நமது நாட்டிலே நீடித்துக் குடிகொண்டிருக்கும் அறியாமையைக் கால்தரிக்க வொட்டாது வெட்டுதல் வேண்டும். அறிவுச் சுடரின் பேரொளி நமது நாடெங்கும் பரந்து வீசுதல் வேண்டும். அறிவின் மூலமாய் ஒற்றுமை மிகுதல் வேண்டும். அறிவு சிறந்து ஒற்றுமை மிக்கு நம்ம வர்கள் நல்லின்ப நெறியில் நிற்றல் வேண்டும். இத்தகைய நோக்கங் கொண்டே நூல் நிலையப் பிரசாரம் நிகழ்ந்து வருகின்றது.” ஒரு குறை நமது மொழியில் சில இலக்கண இலக்கியங்களும் சமய நூல்களுமே யுள்ளன. இந் நூல்கள் இலக்கிய முறையில் மிக மிகச் சிறப்புடையன வென்பது உண்மையே. இக் கருத்தினைப் பாரதியாரும், “யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர்போல் இளங்கோ வைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை உண்மை வெறும் புகழ்ச்சி யில்லை ஊமையராய்ச் செவிடர்களாய் குருடர்களாய் வாழ்கின்றோம் ஒருசொற் கேளீர் சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ்முழக்கஞ் செழிக்கச் செய்வீர்” என்னும் பாட்டினால் நன்கு உணர்த்தியுள்ளார். மேல்நாட்டு மொழிகளில் பற்பல அறிவுத்துறைகளில் செவ்விய நூல்கள் வெளி வந்துள்ளன. இவ்வாறு பிற மொழிகளில் வெளிவரும் அரிய நூல்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படுகின்றன. அதனால் ஆங்கில மொழி அறிவு நூல்களின் களஞ்சியமாக விளங்குகின் றது. மக்கள் அறிவுத் துறையில் பயிலவேண்டிய நூல்கள் ஆங்கில மொழியில் இருப்பதால் ஆங்கிலம் பயிலும் கட்டாயம் உண்டாகின்றது. ஆங்கில நன் மக்கள் தம் மொழியில் எவ்வாறு அறிவு நூல்களைப் பெருக்கிக் கொண் டார்களோ அவ்வாறே நாமும் பிறமொழிகளிலுள்ள அறிவு நூற்பொருள் களைத் தமிழில் எழுதி வைத்தல் வேண்டும். “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்1 தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும் இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணங்கச் செய்தல் வேண்டும்.” - பாரதியார் “தமிழர்க்குத் தமிழ்மொழியிற் சுவடிச்சாலை சர்வகலா சாலையைப் போல் எங்கும் வேண்டும் தமிழிலிலாப் பிறமொழிநூல் அனைத்தும் நல்ல தமிழாக்கி வாசிக்கத் தருதல் வேண்டும் அமுதம்போல் செந்தமிழிற் கவிதை நூல்கள் அழகியவாம் உரைநடையில் அமைந்த நூல்கள் சுமைசுமையாய்ச் சேகரித்துப் பல்கலைசேர் துறைதுறையாய்ப் பிரித்தடுக்கி வைத்தல் வேண்டும்.” - பாரதிதாசன்  அறிவுக்கட்டுரைகள் முன்னுரை இந்நூலிற் காணப்படும் கட்டுரைகள் பற்பல ஆங்கில நூல்களிலும் திங்கள் வெளியீடுகளிலும் காணப்பட்ட கருத்துக்களைத் திரட்டித் தமிழி லெழுதப்பட்டவை. இவை பல் பொருளனவாகவும் பொருட் செறிவுடையன வாகவும் காணப்படுகின்றமையின், கட்டுரை வரைவோருக்கும், பாடமாகப் பயில்வோருக்கும் பெரும் பயன்படத் தக்கனவென்பது எமது கருத்து. ந.சி. கந்தையா 1. பேசும் படத்தின் கதை பலர் பேசும் படக்காட்சியைப் பார்த்து மகிழ்கின்றனர். அது இசையும் கூத்தும் அதிகமுள்ளதாக அல்லது தூரதேசக் காட்சிகளைக் காட்டுவதாக அல்லது திடுக்கிடும் நிகழ்ச்சிகளுடையதாகவிருக்கலாம். நாம் சில மணி நேரத்தை மகிழ்ச்சியாகக் கழிப்பதற்குப் பேசும்படக் காட்சி ஏற்றது. நாம் சிறிது நேரம் பார்த்து மகிழ்கின்ற இப் படத்தைப் பிடித்து முடிப்ப தற்கு எவ்வளவு பிரயாசை எடுக்கப்பட்டது என்று அறிவது நமக்கு வியப்பை அளிக்கும். ஒன்றரை மணிநேரம் ஓடிக்கொண்டிருந்த படத்தை ஏறக்குறைய இருபத்துநான்கு நடிகர்களும், மேற்பார்ப்பவர்கள் சிலரும், பன்னிரண்டுக்கு மேற்பட்ட படம்பிடிப்பவர்களும், மற்றும் வேலையாளரும் பதினெட்டு மாதங்களில் அல்லது இரண்டு ஆண்டுகளில் பிடித்து முடித்திருப்பார்கள். பேசும்படம் பிடிப்பதற்கு முதலில் வேண்டியது ஒரு கதை. அது பேர் பெற்ற ஒரு கற்பனைக் கதை அல்லது பேசும்பட நடிப்புக்கு என்று புதிதாக எழுதப்பட்ட ஒரு கதையாகவிருக்கலாம். படம் பிடிப்பதன் முன் எவ்வகைக் காட்சிகள் அமைக்கப்படவேண்டுமென்று தீர்மானிக்கப்படவேண்டும்; இன்னின்ன பகுதியை இன்னவர் நடிப்பது என்றும், அவர்கள் பேச வேண்டி யன நடிக்க வேண்டியன எவை எவை என்றும் எழுதி வைக்கப்படுதல் வேண்டும். பேசும்படம் பிடிப்பதில் முக்கியமுடையவர் படமுதலாளி. அவர் நடிக்கின்றவர்களைச் சம்பளத்துக்கு அமர்த்துகின்றவராவார். படத்துக்கு வேண்டிய கதை ஆயத்தமானவுடன் எவ்வளவு படப்பிடிப்பு நிலையத்தில் (Studio) பிடிப்பது என்றும் எவ்வளவு வெளியிற் பிடிப்பது என்றும் தீர்மான மாகவேண்டும். இவற்றுட் சில காட்சிகள் இமயமலையிலும், சில சகாரா வனாந் தரத்திலும், சில கிரீன்லாந்தில் உறைபனி மூடிய வெளிகளிலுமாக விருக்க லாம். ஆகவே படமுதலாளி இயற்கையான இக் காட்சிகள் அல்லது இயற்கை போலத் தோன்றும் சில காட்சிகளை ஆயத்தஞ் செய்தல் வேண்டும். இலண்டன் அல்லது ஹொலிவூட்டிலிருந்து அதிக சம்பளம் பெறும் நடிகர்களைச் சகாரா, கிரீன்லாந்து முதலிய நாடுகளுக்குக் கொண்டுசென்று படம்பிடித்தல் மிகப் பணச் செலவுடையதாகும். வேலையின்றிப் பயணஞ் செய்யும் நடிகர்களுக்குப் பல வாரங்களுக்குச் சம்பளங் கொடுக்க வேண்டி நேரும். இவ்வாறு செலவு செய்து பிடிக்கப்படும் படங்கள் திரையில் சில நிமிடங்கள் ஓடுவனவே. ஆகவே படமுதலாளி இத்தொல்லைகளை ஓர் உபாயத்தால் வெல்லுகிறான். படமுதலாளி, நடிகர்களைச் சகாரா, கிரீன்லாந்து முதலிய இடங்களுக்குப் போக்குவதற்குப் பதில் படம்பிடிக்கும் சிலரை அவ்விடங்களுக்கு அனுப்புகிறான். நடிகர்களின் நடிப்பைப் படம் பிடிப்பதற்குச் சில மாதங்களின் முன் படம் பிடிப்போர் புறப்பட்டுச் செல்கின்றனர். அவர்கள் அங்குள்ள மலைகள் வனாந்தரங்கள் பனியுறைந்த வெளிகள் போன்று அக்காட்சியில் வரவேண்டியவற்றைப் படம் பிடிக் கிறார்கள். அவற்றைப் படம் பிடித்துக்கொண்டு அவர்கள் தமது இடத்துக்குத் திரும்புகின்றனர். அவர்களின் படங்கள் சரிபார்க்கப்பட்ட பின் அக் காட்சிகளுக்குரிய நடிப்பு வரும்வரையில் அவை ஒதுக்கிவைக்கப் படுகின்றன. படம் பிடிக்கும் நிலையத்தில் பெரிய கண்ணாடித் திரை உண்டு. இக் காட்சிகளில் ஒன்று தோன்ற வேண்டிய பகுதிவரும்போது இவற்றிலொன்று கண்ணாடித் திரைக்குப் பின்பக்கத்திலுள்ள கண்ணாடி விளக்கு வெளிச்சம் மூலம் கண்ணாடித் திரையிற் காட்டப்படும். பேசும் படம் பிடிக்கும் “காமிரா” முன்புறத்தில் இருக்கும். நடிகர் கண்ணாடித் திரைக்கு எதிரே நின்று நடிப்பர். கண்ணாடித்திரைக்குப் பின்னாலிருக்கும் கண்ணாடி விளக்கு மலை, வனாந்தரம் ,உறைபனி,வெளி முதலிய காட்சிகளைக் கண்ணாடித்திரையில் காட்டும். முன்னாலிருந்து நடிப்பைப் பதியவைக்கும் காமிரா கண்ணாடித் திரையில் மாறி மாறித் தோன்றும் காட்சிகளையும், பதிய வைக்கிறது. இவ்வாறு நடிகர் மலைப்பக்கங்கள், குளிர்மிகுந்த உறைபனி வெளிகள், வனாந்தரங் களுக்குப் பக்கத்தில் நிற்பவராகக் காட்சியளிக்கும்படி செய்யப்படுகின்றனர். உண்மையில் அவர்கள் அவ்விடங்களுக்குச் சென்றவர்களல்லர். நாடகத்தைப் படம்பிடிப்பதன் முன் அதிக வேலை செய்யவேண்டி யவர் அழகுக் கலையை மேற்பார்ப்பவர். இவர் படத்தின் அழகுக்கலை சம்பந்தமானவற்றிற் கவனஞ்செலுத்துவர். இடங்களின் காட்சிகளை ஓழுங்கு படுத்துதல், பலவகை அலங்காரங்கள், நாற்காலி முதலிய தளவாடங்கள் , தொங்கவிடும் அலங்காரங்கள் முதலியவற்றுக்குப் பொறுப்பாளி இவரே. இவ் வேலைகளைப் பற்றி இவர் நன்கு அறிந்திருத்தல் வேண்டும். விக்டோரியா இராணி காலத்தைப் பற்றிய நடிப்பில் இரும்பு நாற்காலிகள் இடம் பெறு மானால் அது தவறாகும். உடைகளைப் பற்றி மேற்பார்ப்பவரும் முக்கியமுடையவராவர். இவர் பெரும்பாலும் பெண்ணாகவிருப்பர். இவர் பெரிய முதலுடையவரும் பற்பல இடங்களுக்குரிய பலகால உடைகளைப் பற்றி அறிந்தவருமாயிருத் தல் வேண்டும். தெரியாதவற்றை இவர் அறிந்துகொள்ள வேண்டும். பல வகை நடிகர்கள் அணிந்துகொள்ளும் உடைகளுக்கு இவரே பொறுப் பாளியாவார். பெரிய பட நிலையங்களில் வகைவகையான உடைகளைத் தைப்பதற்குப் பல வேலையாளரிருப்பர். நடிப்பை மேற்பார்ப்பவர் முதன்மையானவருள் ஒருவர். இவர் சமூகமாயிராது எக்காட்சியும் படம் பிடிக்கப்படமாட்டாது. இவர் தனது மனதில் நினைப்பது போலவே நடிகர் அப்பக்கம் அல்லது இப்பக்கம் திரும்புவது, அழுவது, சிரிப்பது போன்றவற்றை நடிக்கின்றனர். நல்ல நடிகர் மேற்பார்ப்பவர் சொல்வதைக் கவனித்து நடிப்பவராவர். படம்பிடிப்பதில் சம்பந்தப்படாத இன்னொருவர் ஒலிப்பதிவு செய்பவராவர். இவரது வேலை படத்தில் வரும் பாட்டு, சங்கீதம். பேச்சுப் போன்றவற்றை எல்லாம் பட ‘பில்”மில் பதியவைப்பது. பொதுவாகக் காட்சிகள் படம் பிடிக்கப்படும்போது ஒலிகளும் பதியப்படுகின்றன. சில சமயங்களில் இவ்வாறுசெய்வது கடினமாகும். அப்பொழுது காட்சிகள் படம் பிடிக்கப்பட்ட பின் ஒலிகள் தனியே பதியப்பட்டு இரண்டும் ஒன்றாக இணைக்கப்படுகின்றன. பேசும்படம் பிடிக்கும் ஒரு படநிலையத்தைப் பார்த்தால் நாம் வியப்படைவோம். அங்கு எல்லா இடங்களும் சொல்லமுடியாத ஒழுங்கீன மாகத் தோன்றும். பெரிய பட நிலையங்களில் ஒரே முறையில் இரண்டு அல்லது மூன்று வெவ்வேறு கதைகள் படம் பிடிக்கப்படும். ஒரு இடத்தில் சாந்தினால் செய்யப்பட்ட கோயில் முகப்பும், இன்னொரு இடத்தில் சாதாரண அடுப்பங்கரைக் காட்சியும் காணப்படலாம். படம் பிடிக்கும் நிலையத்தில் வேலை செய்யும் வேலையாளர், படம்பிடிப்போர்,வெளிச்சம் சம்பந்தமான கருவிகளுக்குப் பொறுப்பாயுள்ளோர், ஒலிப்பதிவு செய்யும் ஒலிபெருக்கி களில் வேலை செய்வோர் உள்ளே செல்வதற்கு ஆயத்தமாயிருக்கும் நடிகர் முதலியோர் காணப்படுவர். இறுதியில் அங்கு விறுவிறுப்பாகப் படம் பிடிக்கப்படும். அங்கு படம் பிடிப்போரிற் சிலர் காமிராக்களோடும், சிலர் அதிக ஒளி கொடுக்கும் விளக்குகளோடும், ஒலிப்பதிவோர் மைகிராபோன் என்னும் ஒலிபெருக்கி களோடும், ஒலிபதியும் கருவிகளோடும் நிற்பர். ஒலிபதிவோர் அவர் களுக்குப் பக்கத்தே நிற்பர். மேற்பார்ப்பவர் (இடைரக்டர்) தனது கையில் மணிக் கூட்டோடு ஒரு நாற்காலியில் இருப்பர். ஒன்று, ஒருவன் தனது காதலியைச் சந்திக்கும் காட்சியாகலாம். இருவரும் சந்தித்து முத்தமிடுகிறார்கள். மேற்பார்ப்பவர் முத்தமிடும் நேரத்தின் அளவைக் கடிகாரத்தில் பார்க்கிறார். முத்தமிடும்வகை மேற் பார்ப்பவரின் விருப்பத்துக்கு ஏற்றதாயிராவிடில் அல்லது ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது மகிழ்ச்சிக்குறி தோன்றாவிடில் அக்காட்சி மறுபடியும் படம் பிடிக்கப்படும். இன்னோரு காட்சி ஒரு பெண் தனது தாயோடு வீட்டு அறை யிலிருந்து தேநீர் பருகிக்கொண்டிருப்பது ஆகலாம். பெண் மிக ஆறுதலாக உண்டு கொண்டிருந்தால் அல்லது வயது போன தாய் மிக நாகரிக முறை யாகத் தேநீர் அருந்தினால் அக்காட்சி மேற்பார்ப்பவர் திருப்திப்படும் வகை யில் தேநீர் பருகும்வரை திரும்பத் திரும்பப் படம் பிடிக்கப்படும். நாம் படத்தில் காணும் காட்சிகள் வரிசையாகப் படம் பிடிக்கப்படு கின்றன என்று நினைத்தல் கூடாது. ஒரு நீண்ட படச்சுருளில் நூற்றுக்கணக் கான துண்டுப் படங்கள் காணப்படும். இவை தனித்தனியே பிடிக்கப்பட்டு இறுதியில் ஒன்று சேர்க்கப்பட்டவை. இத்துண்டுப் படங்கள் படப்பரிசோதக ரால் பார்வையிடப்படும். அச்சிட வேண்டிய பகுதிகளைப் பத்திரிகை ஆசிரியர் ஒருவர் பார்வையிட்டுக் கொண்டிருப்பது போலப் படப் பரிசோத கரும் தினம் எடுக்கப்படும் படங்களைக் கதையோடு ஒத்துப் பார்ப்பார். துண்டுப்படங்கள் கதையோடும், இடங்களின் இயற்கைக் காட்சிகளோடும் நடிப்புக்களோடும் ஒத்திருந்தால் ஏற்றன என்று ஒப்புக்கொள்ளப்படும். படப் பரிசோதகர் ஒப்புக் கொள்ளாத பகுதிகள் மறுபடியும் படம் பிடிப்பதற்கு மேற்பார்ப்பவரிடம் அனுப்பப்படும். படம் பிடிக்கும் நிலையங்களில் நடிகரின் படங்கள் வியப்பான நாடு களின் இயற்கைக் காட்சிகளிடையே நிற்பதாக அவ் வியற்கைக் காட்சி களைக் கண்ணாடித் திரையில் காட்டப்படும் படங்களைக் கொண்டு எடுக் கப்படுகின்றனவென்று முன் கூறினோம். இவ்வாறு கண்ணாடித் திரையில் காட்டப்படும் படங்கள் “பின்புறக் காட்சி” (க்ஷயஉம சீடிதநஉவiடிn) எனப் படும். இம்முறை படம்பிடிக்கும் கும்பனிகளுக்கு மிகப் பயனுடையது. ஒரு பெண்ணும் ஆணும் படகிலிருந்து ஆற்றில் வேகமாகச் செல்லும் பட மொன்று பிடிக்க வேண்டியிருக்கிறதென்று வைத்துக்கொள்ளுவோம். இவ் வாறு படம் பிடிக்க வேண்டியிருந்தால் படம் பிடிக்கும் படகுக்கு முன்னால் இன்னொரு படகு வேகமாகச் செல்ல வேண்டியிருக்கும். அவ்வாறு நிகழின் நடிகனும் நடிகையும் பேசும் பேச்சுக்களைக் கேட்க முடியாதபடி இயந்திரத் தின் இரைச்சல் மறைத்துவிடும். “பின்புறக் காட்சிப் படம்” என்னும் முறையினால் இத்தொல்லையை வெல்லலாம். படம் பிடிப்போர் சிலர் படகில் போவர். போகும் போது அவர் நீரையும் கரைகளையும் அங்கு கேட்கும் ஒலிகளையும் பதிவு செய்துகொண்டு செல்வர். வெளியில் செய்ய வேண்டிய வேலை இவ்வளவே. மற்றைய வேலைகள் படம் பிடிக்கும் நிலையத்திற் செய்யப்படுகின்றன. பின்னும் முன்னும் ஆடக் கூடியதாகச் செய்யப்பட்ட நாற்காலியில் கண்ணாடித் திரைக்கு முன்னால் வள்ளம் வைக் கப்படுகிறது. படகுக்கு முன்னால் நடிகனும் நடிகையும் இருக்கிறார்கள். ஆற்றில் பிடிக்கப்பட்ட படங்கள் பின்புறத்திலிருந்து திரையில் காட்டப்படுகின்றன. முன்னாலிருக்கும் படகு முன்னும் பின்னும் ஆடுகிறது. தம்மைப் பின் தொடர்ந்து வரும் இன்னொரு படகைப் பார்ப்பதுபோல் நடிகை திரும்பிப் பார்க்கிறாள். அவர்கள் ஒருவரோடு ஒருவர் பேசுகின்றனர். அவள் வேகமாகப் படகை ஓட்டும்படி அவனிடம் சொல்லுகிறாள். அப் பொழுது பின்னாலிருக்கும் கண்ணாடித் திரையிலுள்ள படங்கள் வேகமாக ஓடுகின்றன. இவ்வாறு பிடிக்கப்பட்ட படத்தைப் பார்த்தால் உண்மை யாகவே படகு ஆற்றில் செல்வது போலவே தோன்றும். பேசும் படங்களை அமைப்பவர் கையாளும் உபாயங்கள் பல. இரவில் அல்லது இன்னொரு நாட்டில் புகைவண்டி செல்வதாகக் காட்சிகள் காட்டப்படுகின்றன. இவை செயற்கைப் புகைவண்டி ஒன்றையும் சித்தரிக்கப்பட்ட இயற்கைக் காட்சிகளையும் வைத்துப் படம் பிடிக்கும் நிலையத்தில் பிடிக்கப்பட்டனவாகும். கதையில் வரும் ஒருவன் இரும்புக் கம்பியால் தலையில் அடிக்கப் படுவதையோ கண்ணாடிப் புட்டியினால் எறிந்து விழுத்தப்படுவதையோ கண்டு நாம் கலக்கமடையவேண்டியதில்லை. இரும்புக் கம்பி என்பது காகிதக்கூழினாற் செய்யப்பட்டது. எறிந்தவுடன் உடைந்துபோகிற கண்ணாடிப்புட்டி மெழுகினால் செய்யப்பட்டது. சில சமயங்களில் கதையில் வரும் பெண் ஆற்றில் முழுகித் தத்தளிப்பதைக் கண்டும் நாம் குழப்ப மடைய வேண்டியதில்லை. ஆற்றுக் காட்சி கண்ணாடித் திரையில் காட்டப் பட்ட படமாகலாம். பெண் நிற்கும் தண்ணீர் படநிலையத்தில் ஒரு தொட்டி யிலுள்ள நீராகலாம். 2. கல்லெண்ணெய் மோட்டார் வண்டியிற் பயணஞ்செய்வோர் கல்லெண்ணையின் முக்கியத்தை அறிவர். “பெட்ரோல்” எனப்படும் இவ் வியப்பான எண்ணெய் எங்கிருந்து கிடைக்கிறது? இதைப் பற்றிய வரலாறு இங்கு கூறப்படுகின்றது. கல்லெண்ணெய் என்பது ஒருவகை இயற்கைப் பொருள்; அது உற்பத்தியாக்கப்படுவதில்லை. அது ஓரளவிற் பயன்படுத்தக் கூடிய நிலை யில் இவ்வுலகின் சில பகுதிகளிற் கிடைக்கின்றது. மெக்சிக்கோ எண்ணெய் விளையும் நாடு. உருமேனியாவிலும் இன்னும் உலகிலுள்ள பல இடங்களி லும் நிலத்தின் ஆழத்திலுள்ள பள்ளங்களில் எண்ணில்லாத காலமாக கல்லெண்ணெய் நிறைந்து கிடக்கின்றது. இக்கூற்று வியப்பாகத் தோன்ற லாம். மோட்டார் வண்டியை ஓட்டும் எண்ணெய் இலட்சக்கணக்கான ஆண்டுகள் நிலத்தின் கீழ் மறைந்து கிடந்தது. அண்மையிலேயே மக்கள் நிலத்தின் இவ்வெண்ணெய்த் தேக்கங்களைத் திறந்து எண்ணெயை எடுத்து அதனை எரி பொருளாகப் பயன்படுத்துகின்றனர். வருங்கால எரிபொருள் எண்ணெயாகும். நாளுக்கு நாள் அதிக எண்ணெய் பயன்படுத்தப்படுகின்றது. ஆழ்ந்த கடலிற் செல்லும் பெரிய கப்பல்கள் நிலக்கரி விறகைக் கொண்டு ஓட்டப்பட்டன. இப்பொழுது அவை எண்ணெயால் ஓட்டப்படுகின்றன. ஆகாயப் படையும் போர்க் கப்பல் களும் கல்லெண்ணெயினால் இயங்குகின்றன. எண்ணெய் இல்லாவிடில் இன்று செய்யும் பல காரியங்களை நாம் செய்ய முடியாது. ஆண்டுதோறும் பல கோடிக்கணக்கான கலன் எண்ணெய் தரையின் கீழிருந்து எடுக்கப் பட்டுக் கடல் வழியாக ஆயிரக்கணக்கான மைல்களுக்கப்பால் கொண்டு போகப்படுகிறது. எண்ணெய் எங்கும் காணப்படுமாயின் நிலத்தில் ஒரு கிணற்றைத் தோண்டி அதனை எளிதில் பெற்றுவிடலாம். எண்ணெய் உலகின் சில இடங் களில் மாத்திரம் காணப்படுகின்றது. இவ்வகை இடங்களிலொன்று கிர்கக் (Kirkuk). இங்கு எண்ணெய் எப்படிக் கண்டுபிடிக்கப்பட்ட தென்பதையும், 1,150 மைல் வனாந்தரத்துக் கூடாக அது எப்படிக் கடற்கரைக்குக் கொண்டு வரப்பட்டதென்பதையும் ஆராய்வோம். கிர்கக் என்பது மக்கள் வாழ விரும்பத் தக்க இடமன்று. இது பயிர் பச்சையற்றதும் நிழலில்லாததும் நெல்லிட்டால் நெற்பொரியும் காங்கை யுடையதுமாகிய நாடு. 1927ஆம் ஆண்டின் முன் இது வெளியுலகத்துக்கு அறியப்படாத இடமாக விருந்தது; பயிர் பச்சையற்றிருந்தபோதும் இங்கு எண்ணெய் கிடைக்கின்றது. 1927ஆம் ஆண்டில் இங்கு எண்ணெய்க் கிணறு அகழ்வதற்கு அனுமதி ஈராக் பெட்ரோலியம் கும்பனியாருக்குக் கிடைத்தது. எண்ணெய்க் கிணறு தோண்டுவது என்பது எண்ணெய் ஊற்றில் முட்டும் வரையில் ஒரு குழாயை நிலத்துள் இறுக்குதல். பொறிவல்லார் (எஞ்சினியர்கள்) 3000 அடி ஆழத்துக்கு நிலத்தைத் துளைக்க வேண்டி யிருந்தது. எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட ஒரே நாளில் இவ்வனாந்தரப் பட்டினம் மிக முக்கியமுடையதாக மாறிற்று. ஈராக் பெட்ரோலியம் கும்பனியென்பது பிரான்சிய, ஆங்கில அமெரிக்க சம்பந்தமுடையது. பாலஸ்தீனமும் சிரியாவும் முறையே இங்கிலாந்து பிரான்சு என்னும் இரு நாடுகளின் ஆணைக்குட்பட்டிருந்தன. கிர்கக் அண்மையில் இருக்குமானால் பாலஸ்தீனத்திலுள்ள கெய்பாவும் (Haifa) சிரியாவிலுள்ள திரிபொலியும் எண்ணெய் தேக்கிவைப்பதற்கு ஏற்றவை. கிர்கக் கெய்பாவி லிருந்து 530 மைல் தூரத்திலும் திரிப்பொலி 620 மைல் தூரத்திலும் இருந்தன. இத்தூரத்தின் பெரும்பகுதி மரஞ்செடி யற்றதாகவும் தண்ணீரற்ற தாகவும் நச்சுப் பாம்புகளும் தேள்களும் உறைவதாகவும் பெதோனியர் (Bedonians) என்னும் அலைந்து திரியும் காட்டுச் சாதியினர் வாழ்வதாகவு மிருந்தது. இவ்வாறிருந்தும் எதாவது செய்ய வேண்டியிருந்தது. மிகப் பயனுடைய எண்ணெயை வனாந்தரத்தில் பயனின்றிக் கிடக்கவிட முடியாம லிருந்தது. வனாந்தரத்துக் கூடாக இரண்டு நிரை குழாய்கள் இடுவதாக முடிவு செய்யப்பட்டது ஒரு நிரை கிர்கக்கிலிருந்து கெய்பாவுக்கும் மற்றது கிர்கக்கி லிருந்து திரிப்பொலிக்கும் செல்வன. எண்ணெயை எதிர்பார்த்திருக்கும் தேக்கங்களுக்கு இக்குழாய்கள் வழியாக எண்ணெய் செலுத்தப்பட கூடியதாகவிருந்தது. 1,150 மைல் நீளமுள்ள உருக்குக் குழாய்கள் பதிக்க வேண்டியிருந்தது. இது எவ்வளவு பெரிய வேலை!இவ்வளவு நீண்ட தூரத்துக்கு முன் ஒருபோதும் குழாய்கள் போடப்படவில்லை. இவ் வேலையைத் தொடங்குவதன் முன் குழாய்கள் இடவேண்டிய பாதையைத் தீர்மானித்தற்கு நிலஅளவைக்காரர் பலர் சென்றனர். இவ்வேலை முடிந்ததும் குழாய்களை இடுவோர் சென்றனர். இவர்கள் பாதையின் நீளத்துக்குக் குழாய்களைப் போட்டுக்கொண்டு சென்றனர். அவற்றைப் புதைக்கவோ பொருத்தவோ இல்லை. இவ்வேலைகள் இவர் களின் பின்னால் சென்ற இன்னொரு கூட்டத்தினருக்கு விடப்பட்டன. மிக நீண்ட தூரம் வனாந்தரமாக இருந்தது. உச்சிக்கால வெயில் 120 பாகையில் காயும். அங்கு குளிர்ந்த பானங்கள் கிடையா; தண்ணீர் தங்கத்திலும் பார்க்க அரிதிற் கிடைப்பதாக விருந்தது. சில சமயங்களில் மண்புயல்கள் வீசி வேலையாளரின் கூடாரங்களை மணலால் மூடிவிடுவன போல் பயமுறுத் தின. இக் காற்றுக்கு எதிராகப் பாதுகாப்புகள் இல்லை. சில சமயங்களில் காற்றுப் பல நாட்கள் வீசும். காற்று நின்றதும் கூடாரங்களின் பாதி மண்ணால் மூடுண்டும் உணவும் துணியும் மண்ணில் மறைந்தும் கிடந்தன. இயந்திரங் களுள் மண் புகுந்துவிடுவதால் வேலை தொடங்குமுன் அவற்றைக் கழற்றித்துடைக்க வேண்டியிருந்தது. மண்புயல்களுள் அகப்பட்டவர்களுக்கல்லது இதன் அபாயத்தை அறிய முடியாது. மாரிகாலத்தில் வேலையாளருக்கு வேறுவகையான துன்பங்கள் நேர்ந்தன. எல்லா இடங்களும் வெள்ளக்காடாக இருந்தன. இரவில் பொறுக்கமுடியாத குளிர் வீசிற்று. இவ்வகை வனாந்தரத்தில் நில அளவைக்காரருக்குப் பின்னால் பெரிய மோட்டார் வண்டிகள் நாற்பதடி நீளமுள்ள குழாய்களை ஏற்றிக்கொண்டு சென்றன. அடையாளம் செய்யப் பட்ட பாதை வழியே பள்ளத்திலும் மேட்டிலும் குழாய்கள் இடப்பட்டன. இவ்வகை வேலையில் அவர்கள் தைகிரசு யுபிராதசு என்னும் இரு ஆறுகளையும் கடக்கவேண்டியிருந்தது. இவ்வாறு இடப்பட்ட குழாய்கள் நிலத்தில் புதைக்கப்பட வேண்டியிருந்தன. 1150 மைல் தூரத்துக்கு அகழிகளை கையினால் அகழ்வது முடியாதிருந்தது. ஆகவே அகழிதோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இவ்வியந்திரங்கள் அகன்ற உருக்குச் சக்கரங்களில் சென்றன. இயந்திரங்கள் இரண்டடி அகலமும் ஆறடி ஆழமுமுடைய அகழியைத் தோண்டின. நாளொன்றுக்கு ஒரு மைல் நீளமுள்ள அகழியைத் தோண்ட முடிந்தது. அகழி தோண்டும் இயந்திரங்களில் பின் சென்றோர் நீண்ட குழாய்களைப் பொருத்தி அகழியிலிட்டு மண்ணைப் பரவி மூடினர். குழாய்களின் வரிசை பள்ளத் திலிருந்தபோது எண்ணெய் மேட்டிலிருந்து கீழே செல்லக்கூடியதாக விருந்தது. பல இடங்களில் பாதை மேட்டு நிலங்களுக்கூடாகச் செல்ல வேண்டியிருந்தது. அப்பொழுது என்ன நேர்ந்தது? எண்ணெய் மேட்டுக்குச் செல்ல மாட்டாது. குழாப்பாதை மேட்டுச் சரிவுக்கு வந்த போது அங்கே எண்ணெயை இயந்திரத்தினால் மேலே செலுத்தும் நிலையம் (Phming Station) அமைக்க வேண்டியிருந்தது. இது மேடு அல்லது குன்றின் உச்சிக்கு எண்ணெயைச் செலுத்தி அதனை மறுபக்கத்துக்கு ஓடச் செய்யும். கிர்கக்கிலிருந்து கெய்பாவுக்கும் திரிபொலிக்கு மிடையிலுள்ள குழாப்பாதையில் இயந்திரத்தால் எண்ணெயை உயர ஏற்றும் நிலையங்கள் இருக்கின்றன. அவற்றுட் பல வனாந்தரத்தில் மறைந்திருக்கின்றன. அவற் றுக்கும் நாகரிக உலகத்துக்கு மிடையிலுள்ள தொடர்பு தந்திக் கம்பியும் கம்பியில்லாத் தந்தியுமாகும். ஒவ்வொரு நிலையத்திலும் பொறிவல்லாரும் உதவியாளர்களும் குழாய்ப் பாதையைப் பாதுகாக்க ஆயுதம் தாங்கிய சில காவற் காரருமிருப்பர். ஆயுதந் தாங்கிய காவலாளர் அலங்காரத்துக்காக அங்கு இருக்க வில்லை. பாதை இடப்படுகின்ற காலத்தும் பெதோனியர் என்னும் காட்டுச் சாதியினர் வேலையாட்களைப் பயமுறுத்தினர். இவ்வாறு பெரிய குழாய்ப் பாதை முடிக்கப்பட்டு கிர்கக்லிருந்து திரிபொலிக்கும் கெய்பாவுக்கும் 1150 மைல் வனாந்தரங்களுக் கூடாக எண்ணெய் கொண்டு போகப்பட்டது. இப்பாதையைப் போட்டு முடிக்க 10,000,000 பவுண் செலவாயிற்று. இப் பெரிய வேலையில் 10,000 பேர் ஈடுபட்டிருந்தார்கள். கண்ணுக்குப் புலப்படாமல் வனாந்தர மணலில் கிடக்கும் இக்குழாய்ப்பாதை வழியாக ஆண்டில் 4,000,000 தொன் எடை எண்ணெய் கொண்டு போகப்படுகிறது. இவ்வளவு அதிக எண்ணெய் வெளியேறுவதனால் எண்ணெய்க் கிணறுகள் வற்றிவிடுமென்று சிலர் நினைக்கலாம். அவை வற்றமாட்டா. ஆண்டுதோறும் எண்ணெய் வெள்ளம் கிர்கக்கிலிருந்து தடையின்றிச் சென்றுகொண்டிருக் கிறது. சில சமயங்களில் பெதோனியர் சடுதியாகக் குழாய்களைக் கிளறி உடைத்துவிடுவர். எண்ணெய் வெளியே போவது கிட்டிய நிலையத்துக்குத் தெரிய வந்ததும் அங்கு நின்றும் பொறிவல்லார்களும் ஆயுதம் தாங்கிய காவலாளிகளும் சென்று பழுதைச் சரிப்படுத்துவர். பொறிவல்லார் குழாயி லுண்டான உடைப்பைப் பழுது பார்க்கும்போது ஆயுதந் தாங்கியவர்கள் அவ்விடத்தில் இன்னும் திரிகின்ற காட்டுச் சாதியினரைத் துரத்துவர். இச்சிறிய படை மறுபடியும் தமது நிலையத்துக்குத் திரும்பிவருகின்றது; குழாய்கள் வழியே எண்ணெய் வழக்கம்போல் ஓடத் தொடங்குகிறது. 3. இந்தியாவில் பழங்காலக் கல்வி முறை வேதகாலத்தில் மாணவன் ஆசிரியரிடத்தில் கல்வி பயிலத் தொடங் கினான். உபநயனம் என்னும் கிரியையை நடத்தியபின் அவர் அவனை மாணக்கனாக ஒப்புக்கொண்டார். கிரியை மூன்று நாட்கள் நடைபெற்றது. இதனால் ஆசிரியர் மாணவனுக்கு இரண்டாவது பிறப்புக் கொடுப் பவராகக் கருதப்பட்டது. உபவீதத்துக்குப் பின் மாணவன் பிரமசாரி வாழ்க்கையில் நுழைந்தான். பிரமசாரிக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை முறைகளைப் பின்பற்றி அவன் ஒழுக வேண்டும். அவன் தருப்பைப் புல்லாற் செய்த அரைப்பட்டி யும் கறுப்பு மான் தோலும் அணிந்து நீண்ட தலைமயிர் உடையவனாய் காலைமாலை என்னும் இரு பொழுதுகளிலும் தீ வளர்ப்பதற்குச் சமித்துக் கொண்டு வந்தான். தன்னடக்கம், தவம், பிச்சை ஏற்றல் போன்று விதிக்கப் பட்டுள்ள ஒழுக்கங்களையும் இவன் கைக்கொண்டான். பிரமசாரிகளைப் போல ஆசிரியனிடத்திற் கல்வி பயிலும் பிரமசாரினிகளாகிய பெண்களு மிருந்தனர். சில சமயங்களில் தந்தையே ஆசிரியனாகவிருந்தான். கல்வி கற்கும் காலம் பெரும்பாலும் பன்னிரண்டு ஆண்டுகளாகவிருந்தது. மாணாக்கன் ஆசிரியன் இல்லத்திலேயே அவனோடு தங்கியிருந்தான். பிரமசாரியாகிய மாணவன் ஆசிரியனுக்காகப் பிச்சை ஏற்கச் சென்றான். அவனுடைய மற்றொரு வேலை தீ வளர்த்தல், ஆசிரியனின் வீட்டு வேலைகளைக் கவனிப்பது, ஆடுமாடுகளை மேய்ப்பது என்பனவும் மாணவனுடைய கடமைகளாகவிருந்தன. ஆசிரியனும் மாணவனும் நிலத்தில் இருந்தார்கள். பாடங் கேட்கும்போது மாணவன் பின்புறமாக அல்லது முன் புறமாகச் சாய்ந்து நிற்றல் கூடாது. ஆசிரியரிடத்தில் உயர்ந்த ஒழுக்கமும் ஆன்ம ஞானமும் இருத்தல் வேண்டும். தகுதியான மாணவன் வரும்போது அவர் தனக்குத் தெரிந்த வற்றை மறையாது அவனுக்குக் கற்பித்தல் வேண்டும்; மாணவன் ஏற்கத் தகுதியாகவுள்ள கருத்துக்களை மாத்திரம் அவனுக்குச் சொல்லுதல் வேண் டும்; மற்றவைகளைச் சொல்லுதல் கூடாது. ஆசிரியர் ஒரு பாடத்தைத் தம்மால் கற்பிக்க இயலாது என்று கண்டால் மாணவனை இன்னொரு ஆசிரியரிட மனுப்பலாம். தாம் கல்வி கற்பிக்கக்கூடிய மாணவர் பலரைப் பெறுவது ஆசிரியரின் விருப்பமாகவிருந்தது. தாம் கண்டறிந்த உண்மைகள் தமக்குப் பின்பும் நிலை பெற வேண்டுமென்பது அவர்கள் கருத்து. மாணவர் கல்வி கற்பிக்கக்கூடிய நல்லாசிரியரைத் தேடித் தூர தேசங்களுக்குச் சென்றனர். மாணவர் கேள்வி கேட்க ஆசிரியர் விளங்க வைத்தல் போன்ற முறையில் கல்வி பயிலப்பட்டது. பெண்களுக்குக் கல்வி மறுக்கப்படவில்லை. உப நிடதங்களில் கல்வியிற் சிறந்த பல பெண்களின் பெயர்கள் காணப்படு கின்றன. பிற்காலத்தில் சிறுவருக்கு ஐந்து வயதில் கல்வி தொடக்கப்பட்டது. பின் குடுமி வைத்தலும் அதன்பின் உபநயனந் தரித்தலுமாகிய கிரியை களும் செய்யப்பட்டன. நால் வருணத்தாருக்கும் உபநயனம் உரியது என்று போதாயனர் கூறியுள்ளார். காலையில் ஆசிரியர் எழுமுன்னும் சூரியன் தோன்றுவதன் முன்னும் மாணவன் எழுந்திருத்தல் வேண்டும். எழுந்தபின் குளித்தல் வேண்டும். குளிக்கும் போது நீரில் விளையாடுதல் கூடாது; அசையாமல் நீந்தலாம்; ஒரு நாளில் மூன்று முறை குளித்தல் வேண்டும்; குளித்தபின் நின்ற நிலை யில் கடவுளைத் துதித்தல் வேண்டும்; பூமாலை அணிதல் கூடாது. வாசனைப் பொருள்களைப் பயன்படுத்துதல், உடலில் எண்ணெய் பூசிக்கொள்ளுதல் ,கண்ணுக்கு மை தீட்டுதல், செருப்பு, குடை, வண்டிகளைப் பயன்படுத்துதல் கூடாது; பகலில் நித்திரை கொள்ளுதல் இசைக்கருவிகளைப் பயன்படுத் துதல், பாடுதல், ஆடுதல் ஆகாது. மாணவன் ஆசிரியருக்குக் கீழ்ப்படிதல் வேண்டும்; ஆசிரியரிருப் பதிலும் தாழ்ந்த ஆசனத்தில் இருத்தல் வேண்டும். ஆசிரியர் பாடம் கற்பிக்க வரும்போது அவர் பாதங்களை வணங்க வேண்டும். ஆசிரியர் சொன்ன தும் படிக்க ஆரம்பிக்க வேண்டும். அவருக்கு நேராகக் காலை நீட்டுதல் ஆகாது. படுத்திருந்துகொண்டு ஆசிரியரைக் கூப்பிடுதல் கூடாது. ஆசிரியர் படுத்திருந்தால் மாணவன் இருந்துகொண்டு மறுமொழி சொல்லலாம். ஆசிரியர் நின்றால் இவனும் எழுந்து நின்று மறுமொழி சொல்லுதல் வேண்டும்; செருப்புத் தரித்துக்கொண்டு அல்லது தலையை மூடிக்கொண்டு ஆசிரியரை அணுகுதல் கூடாது; ஆசிரியருக்கு அதிக தூரத்திலும் அதிக கிட்டத்திலும் இருத்தல் கூடாது. ஆசிரியருக்கு முன்னால் தொண்டையை மூடிக்கொள்ளுதல், சுவரில் சாய்தல், காலை நீட்டுதல், துப்புதல், சிரித்தல், கொட்டாவி விடுதல், நெட்டி முறித்தல் கூடாது. பாடம் தொடங்கும்போதும் முடியும்போதும் மாணவன் ஆசிரியரின் பாதங்களில் வணங்குதல் வேண்டும். ஆசிரியர் இரு என்றதும் கிழக்கு அல்லது மேற்கு முகமாக ஆசிரியருக்கு வலப்புறத்தில் இருத்தல் வேண்டும். ஓய்ந்திருக்கும் போது படித்தவற்றில் சந்தேகமானவற்றைச் சிந்தித்தல் வேண்டும். முற்காலத்தில் பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டிருக்கவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக கோஷா , உரோமாசா, உலோபாமுத்திரா, விசுவாமித்திரா முதலிய பெண் இருடிகளின் பெயர்கள் இருக்கு வேதத்திற் காணப்படுகின்றன. பெண்கள் பிரமவாதினி, சத்தியோபாகு என இருவகைப் பட்டார்கள். பிரமவாதினியைச் சேர்ந்தவர் உபநயனம் அக்கினி காரியங்கள், வேதக்கல்வி, பிச்சை ஏற்றல் முதலியவற்றுக்குரியர். சத்தியோபாகுவைச் சேர்ந்தவர் மணஞ்செய்துகொள்வதன் முன் உபநயனம் செய்துகொள்ளுதல் வேண்டும். முற்காலத்தில் பெண்கள் உபநயனம், வேதக்கல்வி, காயத்திரி மந்திரம் ஓதல் முதலியவற்றுக்கு அருகராயிருந்தார்கள் என்று இயமன் கூறியுள்ளார். பிராமண மாணவர் பிராமணரல்லாத ஆசிரியரின் கீழ் கல்வி பயில்வதும் இயல்பாக விருந்தது. சமாவர்த்தனம் என்னும் கிரியையினால் கல்வி முடிவடையப்பெற்றது. அப்பொழுது மாணவன் பிரமசாரிக்கு அடை யாளமாகிய தாடியையும், நீண்ட மயிரையும் மழித்துக்கொண்டு நண்பர் களால் கொடுக்கப்பட்ட வாசனைப் பொருள்களை உடம்பில் பூசிக்கொண்டு, பிரமசாரிக்கு அடையாளமாகவிருந்த தண்டம் போர்வை முதலியவற்றை ஆற்றில் எறிந்தான். நீராடிய பின் அவன் புதிய ஆடை அணிகலன்களை அணிந்துகொண்டு தேரில் அல்லது யானையில் ஏறி அவ்வூரிலுள்ள வித்துவ சபைக்குச் சென்று, தான் ஒரு வித்துவான் என்னும் நிலையில் சமுகமளித்தான். கல்வி, ஆசிரியர் சொல்ல மாணவர் கேட்டுச் சொல்லி மனப்பாடஞ் செய்யும் முறையாக விருந்தது. வேதம், இலக்கணம், நீதி முதலிய பாடங்களைப் படிப்பதற்குத் தனிப்பாடசாலைகள் இருந்தன. ஆசிரியன் மாணவனின் குறைகளை மறைக்கும் குடையைப் போலவிருந்தான். ஆசிரியை, உபாத்தியாயினி உபாத்தியாய ஆச்சாரியா எனப் பட்டாள். வேதங்களில் வல்ல பெண்களுமிருந்தனர். பெண்களுக்கு இராணுவப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. சாக்திகி என்னும் சொல்லுக்கு ஈட்டி பிடித்த பெண் என்பது பொருள். குடுமி வைக்கும் சடங்கு முடிந்ததும், சிறுவருக்கு எழுத்தும் கணக்கும் கற்பிக்கப்படவேண்டுமென்று கௌடலியர் கூறுகின்றார். இராச குமாரனின் கல்வி அவனது 16-வது ஆண்டில் முற்றுப்பெற்றது. பின்பு அவன் மணஞ் செய்து கொள்ளவேண்டும். அவனுடைய கல்விகளுள் ஒன்று தண்டநீதி (ஆட்சி புரியும் கல்வி). மணமான பின்பும் அவன் யானையேற்றம், குதிரையேற்றம் படைப்பயிற்சி முதலிய போர்க்கல்வியைக் கற்றுக் கொள்ளுதல் வேண்டும். முற்காலத்தில் கிராமத்துக்குக் கிராமம் பள்ளிக் கூடங்கள் அமைத்து மாணவருக்குக் கல்வி பயிற்றும் ஒழுங்கு இருக்கவில்லை. திண்ணைப் பள்ளிக் கூடங்கள் இருந்தன. திண்ணைப் பள்ளிக் கூடக் கல்வி முடிந்ததும் உயர்தரக் கல்வியை விரும்பினோர் ஆங்காங்கு புகழ்பெற்று விளங்கிய ஆசிரியர்களிடம் சென்று பாடங் கேட்டனர். பௌத்த, சமண மதங்கள் பரவியபோது பௌத்த விகாரங்களிலும் , சமணப் பள்ளிகளிலும் பௌத்த, சமண குருமாரால் மாணவருக்குக் கல்வி கற்பிக்கப்பட்டது. இம்முறையைப் பின்பற்றிக் கிறித்துவ கோவில்களிலும் கல்விச் சாலைகள் உண்டாயின. இக்கல்வி முறையின் வளர்ச்சியே இன்றைய பள்ளிக் கூடங்களாகும். 4. புகையிலையின் கதை சேர் வால்டர் இரலி என்பவரையும் அவரது புகையிலை புகைக்கும் சுங்கானைப்பற்றியும் எல்லாரும் கேள்விப்பட்டிருக்கலாம். இவர் அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்துக்குத் திரும்பிச் சென்றபின் தமது படிக்கும் அறையிலிருந்து சுங்கானில் புகையிலையை வைத்துப் புகைத்துக் கொண்டிருந்தார். அவர் முன்னொருபோதும் புகைப்பிடிப்பதைக் கண்டிராத வேலைக்காரன் அவரது தலையைச் சூழ்ந்து புகை வருவதைக் கண்டான். புகையிலையைப் பற்றியும் அதனைப் புகைக்கும் சுங்கானைப் பற்றியும் அறியாத அவன் இரலியில் தீப்பிடித்திருப்பதாக நினைத்து ஒரு வாளியில் தண்ணீர் கொண்டுவந்து தனது எசமானின் தலைமீது ஊற்றினான். சேர்வால்டர் இரலியே முதன்முதல் புகையிலையை ஐரோப்பாவுக்குக் கொண்டு சென்றவராவார். புகையிலையைப்பற்றிய வரலாறு அமெரிக்காவி லுள்ள காட்டுச் செவ்விந்தியரிடையே ஆரம்பமாகின்றது. புகையிலை புகைக்கும் பழக்கம் அவர்களிடையே உல்லாசம் என்பது போலிராது வேறு வகையில் இருந்தது. செவ்விந்தியர் புகையிலையை மிகப் புனிதமுள்ள செடியாகக் கருதினர். செவ்விந்தியனுடைய மிக மதிப்புக்குரிய பொருள் அவனுடைய சுங்கான். அவன் தனது வாழ்நாள் முழுமையிலும் அதனை உடன்கொண்டு திரிந்தான். மரணகாலத்தில் அது அவனோடு புதைக்கப் பட்டது. கல்வியறிவுடைய செவ்விந்தியனொருவனைப் புகையிலையின் தொடக்கத்தைப் பற்றிக் கேட்டால் அவன் அறிவு முறையானதும் வியப் பளியாததுமாகிய மறுமொழி கூறுவான். இரலிகாலத்து வீரனொருவன் வேறு வகையான கதை கூறியிருப்பான். மிகப் பழங்காலத்தில் இன்றையிலும் பார்க்க உலகம் மிக நன்றாக விருந்தபோது தேவதை ஒன்று இவ்வுலகைப் பார்க்க வந்த கதையைப் பற்றி அவன் கூறுவான். சிறிதுநேரம் அலைந்து திரிந்த பின் அத் தேவதைக்கு நித்திரை வந்தது. அது காட்டில் நெருப்புக் கொளுத்திவைத்துவிட்டு அதன் பக்கத்தே படுத்து நித்திரை கொண்டது. அப்பொழுது இத் தேவதைக்குப் பகையான இன்னொரு தேவதை அதன் பக்கத்தால் காட்டுவழியே போய்க்கொண்டிருந்தது. அது நெருப்புக்குப் பக்கத்தே நன்கு நித்திரை கொள்ளும் தேவதையைக் கண்டு அதற்குத் தீங்கிழைக்க நினைத்தது. அது எதிரியின் நித்திரையைக் குழப்பாதபடி மெல்லெனத் தவழ்ந்து வந்து அதன் தலை நெருப்புத்தனல் மீது கிடக்கும் படி உருட்டிவிட்டு ஓடிச்சென்றது. நெருப்புச் சுடுதலினாலும் மயிர்கள் எரியும் ஒலியினாலும் விழித்தெழுந்த தேவதை பயத்தினால் காட்டுக்கூடாக ஓடிச் சென்றது. ஓடும்போது காற்று வீசியதால் அதன் எரிகின்ற மயிர் அமெரிக்காவின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் வரையில் விழுந்தது. எங்கு மயிர் விழுந்ததோ அங்கு அது வேர்விட்டுப் புகையிலைச் செடியாக வளர்ந்தது. இவ்வாறு செவ்விந்தியர் புகையிலையைப் பற்றிய கதையைக் கூறுவர். புகையிலையைப் போலவே செவ்விந்தியனின் புகையிலை புகைக்கும் சுங்கானும் புனிதமுடையது. பெரிய தேவதை தொடக்கத்தில் புகையிலை புகைத்தது என்று முற்காலச் செவ்விந்தியர் நம்பினர். பெரிய தேவதை முதன்முதல் சுங்கானில் புகையிலை புகைத்ததாக செவ்விந்தியர் நம்பிவரும் இடத்தை இன்றையப் பிரயாணி ஒருவன் பார்க்கலாம். இவ்விடத்துக்கு “சுங்கானில் புகையிலை புகைத்த பாறை” என்று பெயர். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இது அமெரிக்காவின் மிகப் புனித இடமாக இருந்து வருகின் றது. அமெரிக்க வீரர் தமது வாழ்நாளில் இப்பாறைக்குச் சென்று அதிலிருந்து புனிதமுள்ள சிவந்த கல்லை எடுத்துத் தமது புகையிலை புகைக்கும் சுங்கானைச் செய்தனர். செவ்விந்தியரின் விழாக்களில் சுங்கான் முதன்மையானது. ஒவ்வொரு குலத்தாரிடத்தும் தத்தம் குலத்துக்குரிய சுங்கான் இருந்தது. இக் குலத்தினரின் தலையாரிகள் கூட்டம் இச்சுங்கானின்றி நடைபெறமாட்டாது. கூட்டம் தொடங்குவதன்முன் சுங்கான் ஒருவர் கையிலிருந்து ஒருவர் கைக்கு மாற்றப்பட்டது. ஒவ்வொரு புனிதமுள்ள வீரனும் புகையை ஒரு முறை வாய்நிறைய உறிஞ்சினான். செவ்விந்திய போர் வீரர் தமது தலையைக் கழுகின் இறகுகளால் அலங்கரிப்பர்; கூடாரத்துக்குமுன் எரியும் நெருப்பைச் சூழ்ந்து வட்டமாகவிருப்பர். சுங்கானை ஒருவரிலிருந்து மற்றவருக்கு மாற்றுவர். சமாதான உடன்படிக்கையைப் பற்றி ஆலோசிப்பதற்குக் கூட்டம் கூடுமாயின் எதிரிகளின் தலையாரிகளும் உடனிருந்து சமாதானச் சுங்கானைப் புகைப்பர். எக்காரணம் பற்றிக் கூட்டங்கூடினாலும் பரிசுத்தமான சுங்கான் அங்கிருந்தது. சுங்கானில்லாது எவ்வகைக் கருமமும் முடிவு செய்யப்பட மாட்டாது. சேர் வால்டர் இரலி இங்கிலாந்துக்குப் புகையிலையைக்கொண்டு சென்றபின் புகையிலை செல்வரின் உல்லாசமாக இருந்தது. புகையிலை முதன்முதல் இங்கிலாந்துக்குக் கொண்டு போகப்பட்டபோது ஒரு அவுன்சு புகையிலையின் விலை இருபத்தைந்து சிலினாக விருந்தது. ஆகவே புகையிலைச் செலவைக் செட்டுப் படுத்துவதற்காகச் செவ்விந்தியருள் நடைபெற்றது போன்ற வழக்கமும் அங்கு உண்டாயிற்று. பலர் ஒரு இடத்தில் சந்தித்து ஒரு சுங்கானில் புகையிலையை நிரப்பி நெருப்பு மூட்டினர்; பின்னர் எல்லோரும் சில தடவை புகையை உறிஞ்சும்படி அதனை ஒருவர் கையி லிருந்து மற்றவர் கைக்கு மாற்றினர். அது இன்றைய மக்கள் பார்த்துப் பரிகசிக்கத்தக்கதாகவிருந்திருக்கும். இக்கால ஆடவரும் மகளிரும் புகைக்கும் அதிக புகையிலையை முற்காலத்தவர் பார்த்தால் வியப் படைவர். இன்று அமெரிக்காவில் மாத்திரம் ஒரு ஆண்டில் 110,000,000,000 வெண் சுருட்டுகள் புகைக்கப்படுகின்றன. நாம் எல்லோரும் வேர்சினியாப் புகையிலையைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம். வேர்சினியா வென்பது அமெரிக்காவிலுள்ள ஓரிடம். இது ஒரு காலத்தில் ஆங்கிலரின் குடியேற்ற நாடாக விருந்தது. இங்கிலாந்திற் புகைக்கப்படும் புகையிலை முழுவதும் ஒரு காலத்தில் வேர்சினியாவி லிருந்து சென்றது. முற்காலத்தில் வேர்சினியாவில் புகையிலை பயிரிடு வோர் செல்வராக விருந்தனர். அவர்கள் பெரிய நிலங்களில் கட்டப்பட்ட விசாலமான மாளிகைகளில் வாழ்ந்தார்கள். நூற்றுக்கணக்கான அடிமைகள் அவர்களிடத்திலிருந்து வேலை செய்தார்கள். பதினேழு பதினெட்டாம் நூற் றாண்டுகளில் ஏராளமான புகையிலை இங்கிலாந்தில் இறக்குமதியாயிற்று. மற்ற நாடுகளில் புகையிலைச் செடி பயிரிடப்படுவதன் முன் வேர்சினியாப் புகையிலையிலும் பார்க்கக் குறைந்த விலையிற் கிடைக்கும் பொருட்டு இங்கிலாந்தில் புகையிலைச் செடி பயிரிடப்பட்டது. இவ்வாறு செய்தல் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு அதிக பணம் தீர்வையாகக் கிடைத் தது. எவ்வளவு புகையிலை வெளியிலிருந்து வந்ததோ அவ்வளவுக்கு அது அதிக செல்வமடைந்தது. இதே வகைக் கொள்கை இன்றும் இந்தியாவிலே திருவிதாங்கூர் இராச்சியத்தில் இருந்து வருகின்றது. அங்கு புகையிலைச் செடியைப் பயிரிடுவது சட்டவிரோதமான செயல் எனக் கொள்ளப்படும். இங்கிலாந்தில் பயிரிடப்பட்டுள்ள புகையிலைச் செடிகளை எல்லாம் அழித்து விடுதல் வேண்டும் என்னும் சட்டம் குரொம்வெல் காலத்தில் கொண்டு வரப்பட்டது. புகையிலை பயிரிடுவோர் இச் சட்டத்துக்குக் கீழ்ப் படியவில்லை. ஆகவே தமது சட்டத்தை நடைமுறையிற் கொண்டு வர ஒரு கூட்டம் போர்வீரரை குரொம்வெல் ஏவினார். இது புகையிலை பயிரிடு வோரைக் கோபம் மூட்டிற்று. அவர்கள் அரசினர் படையை எதிர்க்க ஆள் திரட்டினார்கள். உள்நாட்டுக் கலகம் மூளவில்லை. குரொம்வெல் தனது வீரரைத் திருப்பி அழைத்துக்கொண்டார். அவ்வாண்டுப் புகையிலைச் செய் கைக்குப் பின் அவர்கள் அதனை பயிரிடுதல் கூடாது என்று அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அச்சட்டத்துக்கு மக்கள் கீழ்ப்படியவில்லை. பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியளவில் இங்கிலாந்தில் புகையிலைச் செய்கை நின்றது. இக் காலத்தில் மூன்று வகைப் புகையிலை பயிரிடப்படுகிறது. அமெரிக்காவில் வேர்சினியாப் புகையிலையும், ஆசியா, ஆப்பிரிக்காவில் துருக்கிய புகையிலையும், பாரசீகத்தில் காரம் குறைந்த புகையிலையும் பயிரிடப்படுகின்றன. ஒரு அவுன்சு நிறையில் 40,000 புகையிலை விதைகள் வரையில் உண்டு. விதைகளை மேடையிலிட்டு உண்டாக்கிய கன்றுகள் பிடுங்கி நடப்படுகின்றன. புகையிலைச் செடியின் எல்லா இலைகளும் புகை யிலையாக வருவதில்லை. செடிகளில் பூக்கள் தோன்றியதும் பூக்கள் கிள்ளி எறியப்படுகின்றன. பின் தலைப்பு முறிக்கப்படுகின்றது. நல்ல இலைகள் மாத்திரம் செடியிலிருந்து முற்றவிடப்படுகின்றன. எவ்வகைக்குப் புகை யிலையைப் பயன்படுத்த வேண்டுமோ அதற்கு ஏற்ப இலைகள் கூடவும் குறையவும் விடப்படும். சுங்கான் அல்லது வெண்சுருட்டுப் பயனுக்காயின் பன்னிரண்டு இலைகள் வரையில் விடப்படுகின்றன. சுருட்டுப் பயனுக் காயின் இருபது இலைகள் வரையில் விடப்படுகின்றன. தலைப்பு முறித்து ஐந்து அல்லது ஆறு வாரங்களின் பின் இலைகள் முற்றி வெட்டி எடுப்பதற்குப் பதமாக விருக்கும். மிக விலையேறிய புகை யிலைகள் முற்ற முற்ற ஒடித்து எடுக்கப்படுகின்றன. இலைகள் உலர்ந்தபின் தரங்களாகத் தெரியப்பட்டுப் பிடிகளாகக் கட்டப்படுகின்றன. போர்ச்சுக்கேயர் கிழக்கு நாடுகளுக்குப் புகையிலை விதைகளைக் கொண்டு சென்று புகையிலை பயிரிடும் முறையை மக்களுக்கு அறிவித் தார்கள். இந்தியா, இலங்கை, மலாய்த் தீவுகள், பிலிப்பைன் தீவுகளில் புகை யிலை அதிகம் பயிரிடப்படுகிறது. சுருட்டு, பீடி, வெண்சுருட்டு, மூக்குத்தூள் வகைகளில் புகையிலை பயன்படுத்தப்படுகின்றது. இது தாம்பூலத்தோடும் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. சிலர் இதனை வாயிலிட்டுக் கொள்வர். புகையிலையில் நிகோடின் என்னும் ஒருவகை நஞ்சு உண்டு. இதன் உபயோகம் தீமை விளைவிப்பது என மருந்து நூலார் கூறுவர். சுருட்டு, சிகரெட் பிடிப்பது நாகரிக சபைப் பழக்கங்களுள் ஒன்று எனவும், இவற்றைப் பயன்படுத்தும் பழக்கமில்லாதவர் நாகரிகப் பழக்கமில்லாதார் எனவும் கொள்ளும் கருத்துகளும் நிலவுகின்றன. உலகம் முழுமையிலும் ஒரு ஆண்டில் முப்பது இலட்சம் தொன் புகையிலை விளைகிறது. இங்கிலாந்தில் புகையிலை சம்பந்தமான தீர்வையால் ஆண்டு ஒன்றுக்குக் கிடைப்பது 75,000,000 பவுணாகும். இந்தியாவில் சிலர் இதைப் பிரமமூலி எனக் கூறுகின்றனர். தமிழ் நாட்டுப் புலவரொருவர் “புகையிலை விடு தூது” என ஒரு நூலும் செய்துள்ளார். அது மகோ உபாத்தியாயர் உ.வே.சாமிநாத ஐயரவர்களால் அச்சிடப்பட்டுள்ளது. அதில் இப் பிரமமூலி தேவ உலகி லிருந்து பூவுலகுக்கு வந்த வரலாறு கூறப்பட்டுள்ளது. 5. நல்லபெரிய பழக்கங்களைப் பெறவகை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளின் முன் இவ்வுலகம் முழுமையிலும் காடு இருந்தது. அங்கு காட்டு மனிதர் வாழ்ந்தனர். காட்டு விலங்குகள், காட்டு மரங்கள், காட்டுப் பூக்கள், காட்டுப் பழங்கள் முதலியனவும் அங்கு காணப்பட்டன. மனிதனால் பயிரிட்டு வளர்க்கப்படும் தாவரங்கள் ஒன்றும் இருக்கவில்லை. அக் கால மனிதரின் உடலை மயிர் மூடியிருந்தது. அம் மூர்க்கமான மனிதர் தாம் கொன்ற விலங்குகளின் இறைச்சியையுங், காட்டுத் தேனையும் உண்டு வந்தனர். மக்கள் சிறிது சிறிதாக நாகரிகமடைந்தபோது தமக்குக் கிடைத்த பழங்களை உண்டும், தாம்கொன்ற விலங்குகளின் இறைச்சியைப் புசித்தும் வாழும் வாழ்க்கையை விரும்பவில்லை. காட்டுப் பழங்கள் அதிகம் கிடைத்தபோதும் வேட்டைக்காரருக்கு வேட்டை விலங்கு கிடைத்தபோதும் அவர்கள் திருப்தியடைந்து வந்தார்கள். பழங்கள் கிடையாதபோதும் வேட்டைக்காரருக்கு விலங்குகள் கிடையாதபோதும் அவர்கள் பட்டினி யிருந்து பசியால் இறந்து போக வேண்டியிருந்தது. நமது முன்னோரில் புத்திசாலிகள் சிலர் கூடியிருந்து தமக்கு உணவுகள் எப்பொழுதும் கிடைக்கக் கூடிய பல வழி வகைகளை ஆலோசித்தார்கள்; அவர்கள் சில காட்டு விலங்குகளைப் பிடித்து வளர்த்தார்கள்; காட்டிலுள்ள தாவரங்கள் சிலவற்றையும் நட்டு வளர்த்தார்கள். அவர்கள் முதல் முதல் நட்டு வளர்த்த தாவர வகை காட்டுப்புற்கள். சில புற்களின் விதைகள் கற்களினிடையே வைத்து அரைத்து மாவாக்கப்பட்டபோது உண்பதற்கு ஏற்றனவாக விருப்பதை அவர்கள் அறிந்தார்கள். பின்னர் அவர்கள் காட்டுத் தானியங்கள் சிலவற்றை விதைத்து அறுவடை செய்தார்கள். இக் கதை உண்மையில்லாத கற்பனைக் கதைபோலத் தோன்றலாம். தானியம் இவ்வாறு பயிரிடப்பட்டிருக்கலாம். தானியங்களின் தொடக்கம் காட்டுப்புற்களுக்குச் செல்கின்றது. இவ்வாறே நாமுண்ணும் காய்கறிகள் பழங்கள் முதலியவற்றின் தொடக்கமும் ஒரு காலத்தில் வளர்ந்த மரஞ்செடிகளுக்கு அல்லது பழங்களுக்குச் செல்கின்றது. காட்டில் வளர்ந்த ஒரு செடி பயிரிடப்பட்டபோது அது பல இனங்களாக மாறிற்று என்று அறிவது மிக வியப்பாகும். ஒரே இனத் தாவரம் வெவ்வேறு வெப்பநிலையுடைய இடங்களிலும், செழுமையுடையவும் செழுமையற்றவுமான இடங்களிலும் பயிரிடப்படும்போது வெவ்வேறு இனங்களாகப் பெருகுகின்றன. இன்று நாம் உண்ணும் ஆப்பிள் பழங் களைக் கொடுக்கும் மரங்கள் புளிப்புப் பழம் காய்க்கும் ஒருவகை ஆப்பிள் மரத்திலிருந்து வந்தவை. காட்டில் வளரும் மரஞ்செடிகளுக்கும் பயிரிடப் படும் மரஞ்செடிகளுக்கு மிடையில் அதிக வேறுபாடு உண்டு. மனிதனுடைய உதவியின்றி இயற்கை இவ்வேறுபாட்டைச் செய்ய முடியாது. முற்காலத்தில் மனிதன் இவ்வேறுபாட்டைச் செய்ய முயன்று வந்த முறை “தெரிவு” எனப்படும். முற்காலத்தில் வாழ்ந்த பயிரிடுவோனொருவன் ஒரு செடியின் பழத்திலும் பார்க்க நல்ல சுவை அளித்த இன்னொரு அதே இனச்செடியை விரும்பியிருக்கலாம். “தெரிவு” எனப்படுவது இம்முறையே யாகும். பயிரிடுவோன் ஒரே இனச்செடிகள் பலவற்றை நோக்குவான். அவற்றுள் ஒன்று யாதோ காரணத்தினால் மற்றச் செடிகளிலும் பார்க்க நல்ல பழங்கள் கொடுப்பதை அவன் காண்பான். அவன் நல்ல கனிகளைக் கொடாத செடிகளை அழித்து விட்டு நல்ல கனிகள் கொடுக்கும் செடிகளை உண்டாக்குவான். இவ்வகையான தெரிவு இன்னுமொருமுறை தொடங்கும். எப்பொழுதும் நல்ல செடிகளை அழித்துவிடுதலால் பயிரிடுவோன் ஒரு காலத்தில் பருமையும் சுவையுமுள்ள கனிகளைக் கொடுக்கும் செடிகளை உண்டாக்கிவிடுவான். இக் காலம் தாவரங்களை உயர்ந்த குணம் அடையச் செய்யும் முறை, தெரிவோடு கலப்புக் கருக்கொள்ளச் செய்தல் ஆகும். (Cross fertilization). இம் முறையாக நல்ல இயல்புகளை உண்டாக்கும்போது பயிரிடுவோன் ஒரே தாவர வகையில் பல இனங்களைக் கண்டறிவான். அவற்றுள் எல்லாவற்றி லும் பார்க்கச் சிறப்பான கனிகளை உதவும் இரண்டு செடிகளைத் தெரிவான். ஒரு செடி சுவையில்லாத பெரிய பழத்தைக் கொடுப்பதாயிருக்கலாம். இரண்டாவதன் கனி மற்றைய கனிகளிலும் பார்க்கச் சுவையுடையதாய் பருமையிற் சிறிதாயிருக்கலாம். இப்பொழுது செடிகளை உண்டாக்குவோன் இவ்விருகனிகளின் குணங்களுடைய ஒரு செடியை உண்டாக்க விரும்பு கின்றான். இவ்வாறு உண்டாக்குவதற்கு அவன் செடிகளைக் கலப்புக் கருக்கொள்ளச்செய்தல் வேண்டும். கலப்புக்கரு என்பது என்ன என்று நீவிர் அறிய விரும்பலாம். ஒவ்வொரு தாவரமும் ஆண் பூ, பெண் பூ என்னும் இருவகைப் பூக்களைப் பூக்கின்றது. ஆண் பூவிலுள்ள மகரந்தம் பெண் பூவிற்படாவிடில் செடி ஒரு போதும் காய்க்க மாட்டாது. இவ்வேலையைத் தேனீக்களும் பறக்கும் பூச்சிகளும் செய்கின்றன. இரு செடிகளின் பண்புகளும் ஒரே செடியில் அமையும்படி புதிய செடியை உண்டாக்க விரும்புகின்றவன் ஒட்டக மயிர்க் குச்சியினால் ஒரு செடியின் ஆண் பூ மகரந்தத்தை மற்றச் செடியின் பெண் பூவுள் தடவிவிடுகின்றான். இதுவே கலப்புக்கரு உண்டாக்குதல் எனப்படும். இவ்வாறு கலப்புக் கருக்கொண்டு காய்த்த பழத்தின் விதைகளிலிருந்து முளைக்கும் செடிகள் இரண்டு செடிகளின் குணமுமுடையனவாக விருக்கும். தாவரங்களைப் பயிரிடுபவன் இவ்விரண்டு செடிகளளவில் திருப்தி யடையமாட்டான். அவனிடத்தில் காய்காய்க்கும் நான்கு ஒரே இனமரங்கள் நிற்கலாம். அவன் அந் நான்கு செடிகளிலும் காய்க்கும் பழங்களின் குணமுடைய ஒரு செடியை உண்டாக்க நினைக்கலாம். ஆகவே அவன் கலப்புக்கரு உண்டாக்க முயலலாம். அவன் முதலில் இவ்விரண்டாகக் கலப்புக்கரு உண்டாகச் செய்து நான்கு செடிகளின் குணமுடைய இரண்டு செடிகளை உண்டாக்குவான். பின்பு இவ்விரண்டிலிருந்து ஒரு செடியை உண்டாக்குவான். மேல் நாடுகளில் சுவையும் பருமையுமுடைய நல்ல பழங்களைக்கொடுக்கும் செடிகளும், பெரிய கதிர்களை ஈனும் தானிய வகைகளும் இம் முறையினாலேயே பெறப்படுகின்றன. 6. பட்டுப்புழு வளர்த்தல் பட்டு ஒரு வகைக் கம்பளிப் புழுவிலிருந்து கிடைக்கிறது. சிறுவர் பெண்கள் ஆண்கள் அணிகின்ற அழகிய பட்டாடைகள் எல்லாம் கம்பளிப் புழு தன்னைச் சுற்றிப் பின்னும் கூட்டிலிருந்து குலைத்து எடுக்கப்படும் நூலிலிருந்து செய்யப்படுகின்றன. தொடக்கத்தில் பட்டுப்புழுக்கள் சீனாவில் வளர்க்கப்பட்டன. ஆயிரக் கணக்கான ஆண்டுகளின் முன் வெளியுலகிலுள்ளோர் பட்டு என்ன என்றும் அது எப்படிக் கிடைக்கிறதென்றும் அறியாதிருந்தனர். சீனா மிகப் பழைய நாடு. சீனமக்கள் மிகப் பழங்காலத்திலேயே நாகரிகமடைந்திருந்தார்கள். மக்கள் ஐரோப்பிய நாடுகளில் விலங்குகளின் தோலை உடுத்திய காலத்தில் சீனப் பெண்கள் விலையுயர்ந்த பட்டாடைகளை அணிந்தார்கள். அக் காலத்தும் பல நூறாண்டுகளின் பின்னும் பட்டுப் புழுக்களை வளர்க்கும் முறை இரகசியமாக இருந்து வந்தது. பட்டுப்புழு வளர்ப்பு சீன நாட்டின் அரிய செல்வமாக இருந்து வந்தது. பட்டுப்புழு வளர்த்தலில் சக்கரவர்த்திகளும், சக்கரவர்த்தினிகளும் கருத்துக் கொண்டிருந்தார்கள். 4500 ஆண்டுகளின் முன் வாழ்ந்த சீலிங் என்னும் சீனச் சக்கரவர்த்தினி தனது நேரத்தின் பகுதியைப் பட்டுப்புழு வளர்ப்பதில் எவ்வாறு செலவிட் டாளெனப் பழைய சீன நூல்கள் கூறுகின்றன. பல நூறாண்டுகளாகப் பட்டுப்புழுக்களை வளர்க்கும்முறை மறை வாக இருந்து வந்தது. ஐரோப்பா படிப்படியே நாகரிகமடைந்தது; ஐரோப்பா வுக்கும் கிழக்கு நாடுகளுக்குமிடையில் வாணிகம் நடைப்பெற்றது. சீனாவிலிருந்து வாங்கப்படும் பட்டுநூலிலிருந்து உரோமை நாட்டுப் பெண்கள் அணியும் அழகிய ஆடைகள் நெய்யப்பட்டன. ஆனால் சீனாவை அல்லாத மற்றைய நாடுகளுக்குப் பட்டுப்புழுக்களைப் பற்றி ஒன்றும் தெரியாமலிருந்தது. பலர் இவ்விரகசியத்தை அறியமுயன்று வந்தார்கள்; அவர்களால் அறியமுடியவில்லை. கி.பி. 550-ல் ஐரோப்பியர் பட்டு என்பது என்ன என்று அறிந்தனர். பின்னர் இருபாரசீக துறவிகள் இவ்விரகசியத்தைச் சீனாவிலிருந்து அறிந்து சென்றார்கள். இத் துறவிகள் சீனாவில் வாழ்ந்தபோது பட்டுப் புழுக்களையும் அவற்றை வளர்க்கும் முறைகளையும் பற்றி எவ்வகையிலோ அறிந்தார்கள். இவர்கள் பட்டுப்பூச்சியின் முட்டைகளை வைத்திருப்பதை சீன மக்கள் அறிந்திருந்தால் இவர்கள் ஒருபோதும் வெளியேறி யிருக்கமாட்டார்கள். இவர்கள் சீனாவைவிட்டுக் கொன்ஸ்ந்தாந்தினோப்பிளுக்குச் சென்றபோது சில பட்டுப்புழு முட்டைகளைத் தமது ஊன்று கோல்களுக்குள் மறைத்து வைத்துக்கொண்டு சென்றார்கள். இவ்வாறு 1400 ஆண்டுகளின் முன் கொண்டு செல்லப்பட்ட முட்டைகளினின்றும் பெருகியவையே இன்று மேற்கு நாடுகளில் பட்டு உற்பத்திக்காக வளர்க்கப்படும் கோடிக்கணக்கான பட்டுப் புழுக்களாகும். ஐரோப்பாவில் பட்டு உற்பத்தி எவ்வாறு தொடங்கிற்று? பட்டுப்புழுக் களை வளர்ப்போர் சீனர் செய்தது போலவே இம்முறையைப் பல நூறாண்டுகள் இரகசியமாகக் காப்பாற்றி வந்தனர். இப்பொழுது பட்டுப் புழு வளர்க்கும் முறை இரகசியமன்று. இன்று பட்டுப்புழு வளர்க்க விரும்பும் எவரும் அவற்றை வளர்த்துப் பட்டு உற்பத்தி செய்துகொள்ளலாம். பட்டுப்பூச்சியின் முட்டைகள் சிலவற்றை வாங்கினால் நாமே எவ்வாறு அம்முயற்சியைத் தொடங்கவேண்டுமெனப் பார்ப்போம். முட்டை களை வாங்குமுன் அறியவேண்டிய இரண்டொரு கருமங்களுண்டு. பட்டுப் புழுக்களுக்கு மற்றைய இலைகளிலும் பார்க்க முசுக்கட்டைச் செடி இலை களில் விருப்பமதிகம். பட்டுப்புழுக்களை வளர்க்கத் தொடங்குமுன் வேண்டிய போது இலைகள் கிடைக்கக்கூடிய முசுக்கட்டைச் செடியைக் கண்டுபிடிக்க வேண்டும். பட்டுப்பூச்சிகளின் முட்டைகள் மிகப் பாரங் குறைந்தவை. ஒரு தானிய எடையில் 100 முட்டைகள் வரையிலுண்டு. ஒரு இறாத்தலில் 700,000 வரையிலிருக்கும். ஆகவே நீ ஒரு தானிய எடை அல்லது இரண்டு தானிய எடை முட்டைகளை வாங்கினாற் போதும். இனி வேண்டப்படுவது முட்டைகள் பொரிப்பதற்கு வேண்டிய பெட்டி. உடுப்பு வைக்கும் கடுதாசி அட்டைப்பெட்டி போதுமானது. முட்டை களை பெட்டியின் அடியில் பரப்பி வைத்து அவை பொரிப்பதை எதிர்பார்த் திருத்தல் வேண்டும். முட்டைகள் பொரிப்பதற்கு அதிக வெப்பமில்லாத இடம் ஏற்றது. முட்டை பொரிக்கும் நாள் வந்தவுடன் முசுக்கட்டைச் செடி நிற்கும் இடத்துக்குச் சென்று பச்சை இலைகளைப் பறித்து வரவேண்டும். முட்டைகள் எட்டு அல்லது ஒன்பது நாட்களில் பொரிக்கும். இப்பொழுது இன்னும் சில பெட்டிகள் வேண்டியிருக்கும். பொரித் ததும் பட்டுப்புழுக்கள் மிக விரைவில் வளரும். ஒரு பெட்டியில் நூறு புழுக் களை விட்டு வளர்ப்பது கடினம். இளம் பட்டுப்புழுக்கள் உண்ணும்படி பெட்டிகளின் அடியில் முசுக்கட்டை இலைகளைப் பரப்பி வைக்கவேண் டும். முட்டைகள் பொரிக்க வைக்கப்பட்டுள்ள பெட்டிகளினளவுள்ள தடித்த காகிதத்தாள்கள் இனி வேண்டப்படும். இதில் மிகச் சிறிய துளைகள் இடவேண்டும். இது எதற்கு என்று அறிதல் வேண்டும். பொரித்ததும் புழுக்களில் சிறிய ஓடுகள் ஒட்டிக்கொண்டிருக்கும். இத்துளையிட்ட காகிதம் அவற்றைப் போக்கிக்கொள்ள உதவுகின்றது. முட்டைகள் பொரிக்கத் தொடங்கியதும் காகிதத்தை முட்டைக்குமேல் சிறிது இடைவெளி நிற்கும்படியும் வெளிச்சம் மேலிந்து துவாரங்கள் வழியாகக் கீழே செல்லும் படியும் வைத்தல் வேண்டும். சிறிய பட்டுப்புழுக்கள் முட்டையிலிருந்து வெளியே வந்ததும் மேலேயுள்ள வெளிச்சத்தால் கவரப்படுகின்றன. உடனே அவை மெல்லிய துவாரங்கள் வழியாக மேலே நகர்ந்து செல்கின்றன. அப்பொழுது துவாரங் களிலுள்ள விளிம்புகள் அவற்றில் ஒட்டியிருக்கும் ஓடுகளை உரைஞ்சிப் போக்கிவிடுகின்றன. துவாரங்கள் வழியாகச் சிறிய புழுக்கள் காணப்பட்ட தும் அவற்றைப் பச்சை முசுக்கட்டை இலை பரப்பியுள்ள புதிய பெட்டி களில் விட வேண்டும். இப்புழுக்கள் தின்னும் அளவையும் சுறுசுறுப்பையும் கண்டு நாம் வியப்படைவோம். பட்டுப்புழுக்கள் ஆரோக்கியத்தோடு இருந்து நல்ல பட்டைத் தர வேண்டுமென விரும்பினால் நாம் மூன்று காரியங்களை முதன்மையாகக் கவனித்தல் வேண்டும். இளம்புழுக்களுக்கு அதிக இடவசதி அளிக்கவேண் டும். அவை இருக்கும் பெட்டிகளைச் சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும். பட்டுப்புழுக்கள் வளரும் விரைவைக் கண்டு நாம் வியப்படைவோம். பொரித்தபோது அவை காலங்குலப் பருமையுடையனவாயிருந்தன. இப்பொழுது அவை முதலாவது தோல் உரியக் கூடிய அளவுக்குப் பருத்துப் புதிய நரை நிறத்தோலுடையனவாகக் காணப்படும். அடுத்த இருவாரங் களில் அவை இன்னும் மூன்று முறை தோல் கழற்றிப் புதிய தோல் உடை யனவாய் இரண்டங்குலமளவு வளர்ந்திருக்கும். இவ்வளவு விரைவில் வளர்வதற்குப் பட்டுப்புழுக்களுக்கு அதிக உணவு வேண்டு மென்பதில் வியப்பு ஒன்றும் இல்லை. பட்டுப்புழு கம்பளிப் புழுவாக மாறும் போது குறுகியிருக்கும். கம்பளிப் புழுக்கள் இறுதியில் அந்துப்பூச்சிகளாக மாறுகின்றன. கம்பளிப்பூச்சி நிலைக்கும் அந்துப் பூச்சி நிலைக்கு மிடையில் கூண்டுப்புழு நிலை ஒன்றுண்டு. கம்பளிப் பூச்சி நிலையிலிருந்து அந்துப் பூச்சி நிலையை அடைவதற்கு ஒவ்வொன்றுக்கும் தனித்தனி வீடு வேண்டும். ஆகவே அவை அகன்ற பட்டுக் கூடுகளைப் பின்னத்தொடங்கும். பட்டுக்கூடு என்பது தாம் கம்பளிப் பூச்சி நிலையி லிருந்து அந்து பூச்சி நிலையை அடைவதற்குப் பட்டுப் புழுக்கள் தம்மை மூடிக்கட்டிய வீடாகும். இக் கூடுகளிலிருந்து பட்டுக் கிடைக்கிறது. பட்டுப்புழு பட்டை இழைக்கும் வகை மிக வியப்பானது. ஒவ்வொரு பட்டுப் புழுவின் கீழ் உதட்டிலும் இரண்டு சிறிய துளைகளுண்டு. புழுவின் உடலுள் ஒரு வகைப் பச்சைப் பொருள் நிறைந்த இரண்டு பைகளுண்டு நீளமான அப் பசைப்பொருள் மஞ்சள் நிறமுடையதாகவும் கண்ணாடிபோல் வெளிச்சத்தைப் புகவிடக்கூடியதாகவுமிருக்கும். கூடு இழைக்கும் காலம் நெருங்கியதும் பட்டுப்புழு உண்பதை நிறுத்திவிடுகிறது. அது பசையைத் துவாரங்கள் வழியாகச் செலுத்துகிறது. இப்பொழுது மஞ்சட் பசையில் வியப்பான மாற்றமுண்டாகின்றது. பட்டுப்புழுவினுள் இருக்கும்போது அது ஒட்டுந் தன்மையுள்ள நீர்ப்பொருளாக விருந்தது; காற்றோடு சம்பந்தப்படும் போது அது மஞ்சள் நிறப் பட்டு நூலாக மாறுகிறது. பட்டுப்புழு இவ்விரண் டையும் ஒன்றாகத் திரித்து வயிரமடையச் செய்கிறது. இவ்வகை நூலினால் அது தனது வீட்டைக் கட்டத் தொடங்குகிறது; நூலால் தனது உடலைச் சுற்றுகிறது. நான்கு நாட்களில் பட்டுக் கூடு முடிவடைகிறது. ஒரு பட்டுக் கூட்டிலுள்ள நூலைக் குலைத்தால் அது அரைமைல் நீள முடையதாகும். இப்பொழுது நாம் சுறுசுறுப்பாக இருக்க வேண்டிய காலம் வருகின் றது. கூடுகளிலுள்ள நூலைக் குலைக்க வேண்டுமென விரும்புவோம். பட்டுப்புழுக்கள் கூடுகளை இழைத்து முடித்ததும் அவற்றை எடுத்து வெந்நீரில் போடவேண்டும். இச் செயலால் கூட்டுப்புழுக்கள் இறந்துவிடும் மயக்க நிலையிலிருப்பதால் அவை நோவை உணரமாட்டா. அவற்றுக்கு நோவுண்டாகுமென்று நாம் அஞ்ச வேண்டியதில்லை. நூலைக் குலைப்பது அடுத்த வேலையாகும். எதிரில் வாயகன்ற பாத்திரத்தில் கொதிக்கும் நீரை வைத்துக்கொள்ளுதல் வேண்டும். அதற்குள் ஆறு கூறுகளைப் போடவேண்டும். பட்டு நூலைக் குலைக்கக் கூடியதாகச் சூடு பசையை இளகச் செய்யும். நூல்களின் அந்தங்களைக் கண்டுபிடித்து இவ்விரண்டாக முறுக்க வேண்டும். இப்பொழுது ஆறுநூல்களுக்குப் பதில் மூன்று நூல்களிருக்கும். இம்மூன்று நூல்களையும் ஒரு நூலாகும்படி திரித்து ஒரு கட்டையிற் சுற்ற வேண்டும். கட்டையில் சுற்றும் வரையில் கூடுகள் வெந்நீரில் இருத்தல் வேண்டும். நூலைக் குலைப்பது இலகுவானவேலையன்று. ஒரு வெறும் நூற் கட்டை, துளையிட்ட ஒரு தடி என்பவற்றைக் கொண்டு முறுக்கவும் சுற்றவும் கூடிய இயந்திரத்தை நாம் அமைத்துக்கொள்ளலாம். நாம் இன்னுமொருமுறை பட்டுப்புழுக்களை வளர்க்க விரும்பினால் நாம் இரண்டு தானிய எடைய முட்டைகளை வாங்கலாம்; அல்லது பட்டுப் பூச்சிகளிலிருந்து முட்டைகளைப் பெறலாம். பட்டுப் பூச்சிகளிலிருந்து முட்டைகளைப் பெறும் முறை மிக வியப்பானது. முட்டைகளைப் பெற விரும்பினால் நாம் பட்டுக் கூடுகள் சிலவற்றை வைத்திருத்தல் வேண்டும். அவற்றை வெப்பமுள்ள இருட்டறையுள் வைக்க வேண்டும். இரண்டு வாரத் துள் கூடுகளிலிருந்து அந்துப் பூச்சிகள் வெளியேவரும். வெளிவந்ததும் அவற்றை முசுக்கட்டை இலையோடு பெட்டியில் விடவேண்டும். அவை பறந்து விடுமென்று பயப்படவேண்டியதில்லை. அவை பறக்கமாட்டா. சிலநாட்களுள் பெண் பூச்சிகள் நானூறு முதல் ஐந்நூறு முட்டைகள் வரையில் இடும். இப்பொழுது நமக்கு வேண்டிய முட்டைகள் கிடைக்கும். இவற்றுட் சிலவற்றை நாம் நண்பருக்குக் கொடுக்கலாம். இதன் இரகசியத்தை அவர்களுக்குப் படிப்பிப்பது நமக்குப் பொழுது போக்காக விருக்கும். பட்டின் வரலாறு இது. பட்டுக் கூடுகளிலிருந்து சிறிதளவு நூல் எடுப்பது போலவே நமது பட்டு உடைகளைச் செய்யும் நூல் எடுக்கப் படுகின்றது. பட்டு எடுக்கும் முறை மிகப் பழைய காலத்தில் இருந்தது போலவே இன்றும் இருந்து வருகிறது. 7. இரப்பரின் கதை கிறிஸ்தோபர் கொலம்பசைப் பற்றி எல்லோரும் கேள்விப்பட்டிருக்கி றோம். இவர்புதிய உலகு என வழங்கும் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். இவர் அங்குள்ள சிறார் வியப்பான உருண்டைக் கறுப்புப் பந்துகளை வைத்து விளையாடுவதைக் கண்டார்; சிறுவர் அவற்றை எறிந்து ஏந்திக் கொண்டிருந்தனர். பிடிக்கத் தவறிய பந்து நிலத்தில் விழுந்து உயிருள்ள பொருள் போல மேலெ எழுவதை அவர் பார்த்தார். உயிருள்ள பொருள் என நினைத்து அதனைப் பிடித்துப் பார்த்தபோது அது தோல்போன்று வயிர மான ஒரு வகைப்பொருளால் செய்யப்பட்டிருப்பதை அறிந்தார். அது என்னவாயிருக்கலாம் என அறிய விரும்பிய கொலம்பசு கை யினால் சைகை செய்து அது என்னவென்று அவர்களைக் கேட்டபின் அது மரப்பாலினால் செய்யப்பட்ட பொருளெனவறிந்தார். தனது நாட்டுக்குத் திரும்பிச் சென்றதும் அவர் இதைப் பற்றி மறந்துவிட்டார். கொலம்பசு இதன் பயன்களைப்பற்றி அறிந்திருந்தாராயின் அவர் இரப்பரைக் கண்டுபிடித்தவ ராகப் புகழ் பெற்றிருப்பார். எதிர்காலத்தில் இரப்பரின் பயன் எவ்வாறிருக்கும் என்பதைப் பற்றிக் கொலம்பசு அறிந்திருக்கவில்லை. இன்று உலகம் முழுமையிலும் ஒரு ஆண்டில் 800,000 தொன் இரப்பர் பயன்படுத்தப்படுகின்றது. கொலம்பசு இரப்பர்ப் பந்தைக் கண்டதற்கு முந்நூறு ஆண்டுகளின் பின் இரப்பர் ஐரோப்பாவுக்குக் கொண்டுபோகப்பட்டது. தவறாக எழுதிய ஒரு சொல்லை அல்லது ஒரு கோட்டை அழிப்ப தற்கு நாம் இரப்பரைப் பயன்படுத்துகின்றோம். ஐரோப்பாவுக்கு இரப்பர் கொண்டு செல்லப்பட்டபோது முதலில் இதே செயலுக்காக அது பயன் படுத்தப்பட்டது. இன்று இரப்பர் பல கருமங்களுக்குப் பயன் படுத்தப்படுகின்றது. சப்பாத்துகள், தாள்கள், சட்டைகள், வெந்நீர்ப் புட்டிகள், மோட்டார் வண்டி பைசிக்கிள் வண்டிச் சக்கரங்களுக்கு மாட்டும் வளையங்கள், தண்ணீர்க் குழாய்கள் போன்ற பல பொருள்கள் இரப்பரால் செய்யப்படுகின்றன. இரப்ப ரால் செய்யப்படும் பொருள்களைப் பற்றி சிந்தித்துப் பார்த்தால் அது வாணிகத்தோடு தொடர்புள்ள பொருள்களைச் செய்வதில் எவ்வளவு முதன்மையுடையதென்று நமக்குத் தோன்றும். இரப்பர் என்பது ஒரு வகை மரத்தின் பால் என்று அமெரிக்க மக்கள் கொலம்பசிடம் கூறினார்கள். இரப்பர்ப்பாலைக் கொடுக்கின்ற பல இன மரங்கள் உண்டு. இப்பால் பார்வைக்குப் பசுவின் பாலைப்போன்று நீர்த் தன்மை யுடையதாகக் காணப்படும். காயவிடும்போது இது இழுபடக்கூடிய இறுகிய பொருளாக மாறுகின்றது. இரப்பர் செய்வதென்றால் இரப்பர் மரத்தைக் காயப்படுத்திப் பாலை எடுத்துக் காயவிடுதல் என்று நாம் நினைத்தல் கூடாது. ஒரு காலத்தில் பயன்படுத்தப்பட்ட இரப்பர் முழுமையும் காட்டில் வளரும் இரப்பர் மரங்களிலிருந்து எடுக்கப்பட்ட பாலிலிருந்து செய்யப்பட்டது. ஆப்பிரிக்கா, அமெரிக்கா முதலிய நாடுகளின் வெப்ப மண்டலங்களில் வாழும் மக்கள் இப்பாலை எடுத்து வெள்ளையருக்கு விற்றார்கள். இப்பொழுது அவ்வகையில் பெறப்படுவது தேவைக்குப் போதியதன்று. மோட்டார்ச் சக்கரங்களுக்கு மாட்டும் வளையங்கள், சப்பாத்துகள் முதலிய ஆயிரக்கணக்கான பொருள்களைச் செய்வதற்கு வேண்டிய இரப்பர், பயிரிடப்படும் மரங்களிலிருந்து எடுக்கப்படுகிறது. பல்வகை மரங்கள் இரப்பர்ப் பாலைக் கொடுக்கின்றன வாயினும் அவற்றுள் ஒருவகை மரத்தின் பால் மற்ற எல்லா மரப்பால்களைவிடக் குணத்தினால் சிறந்தது. இம்மரத்திலிருந்து முதல் தரமான இரப்பர் எடுக்கப்படுகிறது. இம்மரத்துக்கு ஹேவியா(Hevea) என்பது பெயர். இது பாரா(Para) இரப்பர் மரம் என்றும் அறியப்படும். இது தென்னமெரிக்காவி லுள்ள பிரேசில் காடுகளில் வளர்கிறது. காட்டில் வளரும் போது இது அதிக பால் கொடுக்கமாட்டாது. இம் மரத்திலிருந்து கிடைக்கும் இரப்பர் அதிக குணமுடையதாயிருந்தமையின் இம் மரத்தின் விதைகளைக் கடலுக்கப்பால் கொண்டு சென்று பிரிட்டிஷாருக்குச் சொந்தமான கிழக்குத் தேசங்களில் பயிரிட வேண்டியிருந்தது. அவ்விடங்களில் இவை நன்கு வளரத்தக்கன. அவற்றை அத் தேசங்களுக்குக் கொண்டு செல்வதில் ஒரு தடை ஏற்பட்டது. இவ்விதைகள் பிரேசில் நாட்டிலிருந்து இலங்கை, மலாயா முதலிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டன. இந் நாடுகளை அடைந்ததும் விதைகள் முளைக்கமாட்டாது இறந்துவிட்டன. இவ்விதைகள் சிறிது காலத்தின்பின் முளைக்கமாட்டா. பிரேசில் நாட்டினின்றும் கிழக்குத் தேசங்களுக்குக் கொண்டுபோக ஆகும் கால எல்லைக்கு முன் அவை இறந்துபோயின. அவ்வாறாயினும் இம் மரங்களைக் கிழக்குத் தேசங்களில் உண்டாக்கும் திட்டம் கைவிடப்படவில்லை. சில விதைகளை அல்லது கன்றுகளை இலங்கை அல்லது மலாயாவுக்கு உயிருடன் கொண்டு சென்றால் அவை அவ்விடங்களில் நன்கு வளரும். கியு(Kew) என்னும் தாவரத் தோட்டத்தி லுள்ள அனுபவசாலிகள் இச் சிக்கலான வேலையில் முயன்றார்கள். இம் மரத்தின் விதைகள் விரைவில் இங்கிலாந்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு நாற்றிடப்பட்டன. விதைகள் முளைத்து வளர்ந்தன. இக் கன்றுகளை உயிருடன் கடலுக்கூடாகக் கிழக்குத் தேசங்களுக்குக் கொணடு சென்றால் அங்கு புதிய கைத்தொழில் ஏற்படக்கூடியதாக விருந்தது. கன்றுகள் கொண்டு போகப்பட்டன. அவற்றுட் சில பிழைத்தன. இக் கன்றுகளின் விதைகளினின்று பெருகிய மரங்களே இலங்கை மலாயா முதலிய நாடுகளில் இன்றும் காணப்படுகின்றன. இரப்பர் மரங்கள் உண்டாக்கப்பட்டபின் கிழக்கு நாடுகளில் நூற்றுக்கணக்கான மைல்கள் விசாலமுள்ள இரப்பர்த் தோட்டங்கள் தோன்றின. மரங்கள் ஆறு வயதடையும்போது பால் வெட்டப்படுகிறது. பால் வெட்டுவதென்பது பால்வடியும்படி இரப்பர் மரத்தின் பட்டைமீது ஒரு வரை செய்வது. அவ்வாறு பால் வெட்டுதற்குத் திறமையும் அனுபவமும் வேண்டும். சாதாரண ஒருவனால் பால் வெட்ட முடியாது. அவன் வெட்டி னால் வெட்டு அதிக ஆழமில்லாமல் அல்லது அதிக ஆழமுடையதாக விருக்கும். வெட்டு கணக்கான ஆழமுடையதாயிருத்தல் வேண்டும். வெட்டு ஆழமில்லாதிருந்தால் அதிக பால் வடியாது. அதிக ஆழமாக வெட்டினால் மரத்தில் காயமுண்டாகும். அக் காயம் ஒருபோதும் முற்றாக ஆறாது. இரப்பர் மரத்தில் வெட்டுவதென்பது ஒடுங்கிய வரை வழியே பால் வடியும்படி அதன் பட்டையில் சரிவாக வெட்டுவது. இவ்வொடுங்கிய வரை மரத்தினடியிலிருந்து நிலத்தை நோக்கிச் செல்கின்றது. வேறு வரைகளை வெட்டும்போது அவை நிலத்தை நோக்கிச் சென்று பால் ஒழுகும் பெரிய வரையை ஏறக்குறை 45 பாதை சரிவில் சந்திக்கும். பால், பக்கவரைகளால் நிலத்தை நோக்கிச் செல்லும் நேர்வரைக்குச் சென்று அங்கு வைத்திருக்கும் கிண்ணத்தில் விழுகிறது. மரத்தில் வெட்டப்படுகிற வரை மீது பட்டை வளர்கிறது; வெட்டுகள் மேவுண்ணுகின்றன. மறுபடியும் மறுபடியும் வரைகள் வெட்டப்படுகின்றன. மேலும் மேலும் பால் வடிகிறது. பால்வெட்டுவதைப் பற்றி விளங்கிக்கொள்வதற்கு நாம் இரப்பர் மரத்தைப் பற்றிப் பொதுவாக அறிந்திருக்கவேண்டும். மரத்தின் வெளிப்புறத்தையும். பட்டையையும் பற்றி எல்லாருக்கும் தெரியும். பட்டை மரத்துக்குப் பாதுகாப்பான உறை. மரத்துக்குக் காயமுண்டாகாமல் தடுப்பதற்கு மரத்துக்கும் பட்டைக்குமிடையில் சவ்வு போன்ற மெல்லிய பட்டையுண்டு. இது ஒரு காகிதத் தடிப்பளவினது. இச்சவ்வு போன்ற பட்டை யின் உட்பக்கத்தில் மரம் வளர்கிறது; மேற்பக்கத்தில் பட்டை வளர்கிறது. ஆகவே, பால்வெட்டுகிறவன் வெளிப் பட்டையின் அடிப்பாகம் வரையில் வெட்டவேண்டும். அதற்குக் கீழ் வெட்டினால் பட்டை வளர்கின்ற உள்தோல் வெட்டுப்படும்;காயம் ஒருபோதும் ஆறாது. இதுபற்றியே பால்வெட்டுவது நுட்பமான வேலையென்றும் அது கவனத்தோடு செய்யப்படவேண்டுமென்றும் கொள்ளப்படும். வழக்கமாகக் காலையில் பால் வெட்டப்படுகிறது. மற்ற நேரங்களிலும் பார்க்க அப்பொழுது பால் நன்றாக வடியும். பால் கிண்ணங்களில் விழுந்தவுடன் அது வாளிகளில் திரட்டப்பட்டுத் தோட்டத்திலுள்ள தொட்டிகளுக்குக் கொண்டு போகப் படுகிறது. நீர்த் தண்மையுள்ள இப்பால் தொட்டிக்குள் ஊற்றப்பட்டபின் ஒருவகைக் காடிவிட்டுக் கலக்கப்படுகிறது. சிறிதுநேரத்தில் அது வெண்மை யான கட்டிபோல் உறைகின்றது. அது துண்டுகளாக வெட்டப்பட்டுக் கழுவப்பட்டபின் உருளைகளில் இட்டு அரைக்கப்படுகிறது. உருளைகள் அதனை மெல்லிய கீலங்களாகச் செய்கின்றன. இக் கீலங்கள் காய்ந்தபின் சிப்பங்களாகக் கட்டப்படுகின்றன. பின்னர் இவை, செய்யப்படும் கைத்தொழிற் பொருள்களுக்கேற்பப் பக்குவஞ் செய்யப்பட்டு ஆயிரக் கணக்கான பொருள்களாகச் செய்யப்பட்டுச் சந்தைகளிற்சென்று விலையாகின்றன. 8. மிகச் சிறிய பறவைகள் உலகில் மிகச் சிறிய பறவையின் எடை இரண்டு கிராமும், நீளம் இரண்டு அங்குலமும் ஆகும். ஒரு கிராம் என்பது 15 1/2 தானிய எடை கொண்ட நிறை. இப் பறவை ஊங்காரப்பறவை (Humming bird) இனத்தைச் சேர்ந்தது. இவ்வினத்தில் மிகப்பெரிய பறவையின் நீளம் 81/2 அங்குலம். ஊங்காரப் பறவைகளில் ஏறக்குறைய 750 இனங்கள் உண்டு. இவ்வினங்கள் அமெரிக்காவிலே வடக்கே அலஸ்கா முதல் தெற்கே பத்தகோனியா வரையில் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் அதிக பூக்களும் அதிக வெயிலுமுள்ள இடங்களில் வாழ்கின்றன. இப் பறவைகளுக்கு வானவில்லின் நிறங்களுண்டு. உலகிலுள்ள எப் பறவையும் ஊங்காரப் பறவையின் அழகை எளிதில் தாண்டமாட்டாது. ஊங்காரப் பறவை பூக்களிடையே பறந்து செல்லும்போது இரத்தினக் கற்கள் போலவும் எரிவெள்ளிகள் போலவும் தோன்றும். இவற்றின் இறக்கைகள் அசைவதைப் பார்க்க முடியாது. இவை நாள் முழுவதும் வானத்தில் பறந்து பூச்சிகளைப் பிடித்துக்கொண்டும் பூக்களில் தேனைக் குடித்துக்கொண்டும் திரியும். அவற்றுக்கு நீண்ட மூக்கும் நீண்ட நாக்குமுண்டு. இப் பறவைகளால் பின்புறமாகப் பறந்து செல்லவும் இயலும். இவ்வாறு மற்றப் பறவைகள் செய்யமாட்டா. இவை பறந்துகொண்டே பூவினுள் தலையை விட்டு நாக்கி னால் தேனை உறிஞ்சும். இப் பறவையின் கூடு அழகானது. இது இலைகளைச் சிலந்திவலை களால் பொருத்திக் கூடுகட்டி அதனைப் பாசியினால் மூடுகின்றது. கூடு கிண்ணம் போன்ற வடிவுடையதாய் மரக்கிளைகளின் கவர்களிடையே காணப்படும். சில பறவைகள் கூடுகளைக் கொடிகளின் தண்டுகளில் நிற்கும் படியாகக் கட்டுகின்றன. அவை பயற்றின் பருமையுடைய இரண்டு முட்டைகளை இடும். வெப்ப நாடுகளில் வாழும் ஊங்காரப்பறவை பாடும். பாடும்போது அதற்கு உற்சாகமும் களிப்பும் தோன்றும். அவற்றுட் பெரிய இனங்கள் பாட மாட்டா; கீச்சிட்டு ஓசை செய்யும். ஊங்காரப்பறவை தனது கூட்டுக் அருகே வரும் பெரிய பறவைகளையும் பயமின்றித் தாக்கும். இதனால் பருந்தையும் தாக்கமுடியும். இது தோட்டங்களில் பறந்து செல்ல விரும்புகின்றது. வீட்டிலிருக்கும் ஒருவர் கையில் பூக்களை வைத்திருந்தாலும் வாயின் இதழ்களிடையே சர்க்கரையை வைத்திருந்தாலும் இது பயமின்றிச் சென்று பூக்களிலுள்ள தேனையும் இதழ்களிடையே உள்ள சர்க்கரையையும் உண்ணும். ஒருவகை ஊங்காரப்பறவைக்கு வாள் போன்ற மூக்கு உண்டு. பறவையின் நீளம் நான்கு அங்குலம். அதன் மூக்கும் இதே நீளமுடையது. சேவலின் மூக்கு இதனினும் இருமடங்கு நீளமுடையதாக விருக்கும். இப் பறவைகளின் மூக்குக்கு எட்டாமல் ஒரு பூவிலும் தேன் இருக்க மாட்டாது. வேறு இனங்களுக்கு இதனிலும் சிறிய மூக்கு உண்டு. சில இனத்தின் மூக்கு மேல்நோக்கியும் சில இனத்தின் மூக்குக் கீழ் நோக்கியும் வளைந்திருக்கும். ஊங்காரப்பறவைகளில் பெரியது எட்டு அங்குல நீள முடையது. இறக்கைகளின் குறுக்கு நீளம் ஐந்து அல்லது ஆறு அங்குல அளவினது. அது பூவிலிருந்து தேனை உறிஞ்சும்போது அதன் வால் விசிறிபோல் விரிந்து ஒடுங்குவதைக் காணலாம். யமேக்க(Jamaican) ஊங்காரப் பறவைக்கு வாலிலும் பார்க்க நீளமுள்ள இரண்டு இறகுகள் வாற்பக்கமாக வளர்ந்திருக்கும். அவை அதன் உடலினும் பார்க்க அதிக நீளமானவை. சிலவற்றுக்குக் காலில் செருப்புப் போல் வளர்ந்த வெள்ளை இறகுகள் உண்டு; சிலவற்றுக்குக் காலைச்சுற்றி இறகுகள் உண்டு. சில பறவைகளின் தலையில் தொப்பிபோல வெண்ணிற இறகுகள் காணப்படும். சிலவற்றின் தொண்டையில் குஞ்சம்போல் இறகுகள் வளர்ந்திருக்கும். சிலவற்றின் தலையில் அலங்காரமான நிறங்கள் தோன்றும். இந்தியா, எதியோப்பியா, ஆஸ்திரேலியா முதலிய நாடுகளில் ஊங்காரப்பறவை என்று வழங்கும் சிறு பறவைகள் உண்டு. இவை ஊங்காரப் பறவையினத்தைச் சேர்ந்தனவல்ல. இவற்றின் உண்மையான பெயர் தேன்சிட்டு(Sunbird oir honey sucker) இதன் ஆடம்பரமான நிறம் மெரிக்க சிறு பறவைகளின் நிறத்தை ஒத்தது. இது பூவிலிருந்து குழாய் போன்ற நாக்கை நீட்டித் தேனை எடுக்கும். ஊங்காரப்பறவை செய்வது போலவே இதுவும் இலைச் சருகுகளையும் பாசியையும் கொண்டு கூடுகட்டுகிறது; சிலந்தி நூல்களைக் கொண்டும் மயிர்க்குட்டிப் புழு உண்டாக்கும் நூலைக் கொண்டும் இலைகளைப் பொருத்துகிறது; இலைகளின் முனைகளை மரத் தொடு பிணைத்துக் கூட்டைத் தொங்கவிடுகிறது. கூட்டின் வாயில் முன்புறத் தில் இருக்கும். இந்தியாவில் காணப்படும் இன்னொரு சிறிய பறவை தையற்குருவி(Tailor bird) அது இலைகளைத் தைத்துக் கூடுசெய்வதால் அதற்கு இப்பெயர் வழங்குகின்றது. அது மரத்தில் தொங்கும் இலைகளை மூக்கினாற்றுளைத்து மயிர்க்குட்டிப்புழுக் கூட்டிலிருந்து எடுக்கும்நூலினால் தைத்து நூல் கழன்று விடாதபடி அதன் தலையில் ஒரு முடிச்சு இடுகின்றது. தான் உள்ளே போகவும் வரவும் கூடியதாக வெளிவிட்டு இலைகளைத் தைக்கிறது. உள்ளே குதிரைவால் மயிர், தும்பு போன்றவற்றை அடுக்கி வைக்கிறது. ஆசியாவிலுள்ள மிகச் சிறிய பறவை பூக்கொத்தி. (Flower pecker). இதன்எடை ஏழு அல்லது எட்டு கிராம் வரையிலுள்ளது. இது தேன் சிட்டைப் போலப் பஞ்சு, சிலந்திவலை முதலியவற்றால் கூடுகட்டுகிறது; மரத்தின் மிக உயரமான கிளைகளில் கூட்டைத் தொங்கவிடுகிறது. ஆகவே அதனைக் காண்பதரிது. பலாக்கொட்டைக்குருவி என அறியப்படும் இன்னொரு பறவை இந்தியா இலங்கை முதலிய இடங்களில் காணப்படுகிறது. இதன் பருமை பலாக்கொட்டை யளவினதாதலால் இது இப்பெயரால் அறியப் படுகிறது. 9. தேனீக்கள் குளவிகளின் வியப்புமிக்க வாழ்க்கை மக்கள் மிகப் பழங்காலம் முதல் தேனீக்களின் பயனை அறிந்து அவை சேர்த்து வைக்கும் தேனை எடுத்து வருகிறார்கள். எகிப்தியரின் பழங் காலச் சிற்பங்களில் தேனீக்கள் காணப்படுகின்றன. கிரேக்கர் தேனீக்களுக்கு மெலிசா என்னும் பெயரிட்டு வழங்கினர். கிரேக்க நூலாசிரியர்கள் பலர் தேனீக்களைப் பற்றி எழுதியிருக்கின்றார்கள். தேனீக்களைப் பற்றி நன்கு அறிந்துகொள்ள முடியாதபடியால் அவர்கள் அவற்றைப் பற்றிக் கற்பனைக் கதைகள் பலவற்றைப் புனைந்து கூறினார்கள். கொன்று புதைக்கப்பட்ட எருத்து மாட்டிலிருந்து அவை தோன்று கின்றன என்று சிலரும், இறந்த சிங்கத்தினுடலிலிருந்து பிறக்கின்றனவென்று வேறு சிலரும் எழுதியுள்ளனர். 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் மரால்டி (Maraldi) என்பார் கண்ணாடியினால் ஒரு தேன்கூடு செய்தார். அக் காலம் முதல் தேனீக்கள் வியப்புமிக்க வாழ்க்கை வரலாறு அறியப்பட்டு வருகின்றது. தேனீக்களும் குளவிகளும் கூட்டமாக வாழும் இயல்பின. நாம் தை மாதத்தில் ஒரு தேன் கூட்டைப் பார்த்தால் தேனீக்கள் அதிக சுறுசுறுப்புடைய னவாகக் காணப்படமாட்டா. குளிர்காலத்தில் அவை அரை நித்திரையிற் கிடக்கும். வேலை செய்யும் தேனீக்கள் இலையுதிர் காலத்தில் மாரிகாலத் துக்கு வேண்டிய ஆயத்தங்கள் புரிகின்றன. உணவைச் சேர்த்து வைத்தபின் அவை தமது கூட்டைக் குளிரினின்று காப்பதற்கு வேலை செய்யத் தொடங்குகின்றன. அவை பூக்களிலிருந்து ஒருவகை ஒட்டுந்தன்மையுள்ள பொருளை எடுத்துச் சிறு உருண்டைகளாகச் செய்து கூட்டிலுள்ள வெளி களை அடைக்கின்றன. ஒட்டும் பொருள் இறுகித் தண்ணீரை உள்ளே விட மாட்டாது. தேனீக்கள் நீரை வெறுக்கின்றன. இவ்வொட்டும்பொருள் இன்னொரு வகையிலும் பயன்படுத்தப்படு கின்றது. சில சமயங்களில் நத்தை, குளவி, சுண்டெலி போன்றவை கூட்டி னுள் புகுந்துவிடுகின்றன. சுண்டெலி போன்றவற்றின் உடலை அப்புறப் படுத்துவதற்கு அவற்றுக்கு வலிமை பற்றாது. அவ்வுடலை அழுகும்படி விட்டால் தேன்கூட்டின் சுகாதாரத்துக்குப் பழுதுண்டாகும். ஆகவே அவை சுண்டெலியைப் பசையினால் மூடுகின்றன. குளவி போன்ற சிறிய உயிர் களின் உடலை அவை அப்புறப்படுத்திவிடுகின்றன. தேனீக்கள் வண்டுகளை அல்லது குளவிகளைப் போல் உறங்கிக் கொண்டிருக்க மாட்டா. ஒன்றை ஒன்று பிடித்துக்கொண்டு கிடக்கும். தேனீக்கள் வெப்பநிலை அதிகப்படும் போது கூட்டின் எல்லாப்பகுதி களுக்கும் பறந்து செல்லும். இறந்துபோன தேனீக்களின் உடல்கள் அப்புறப் படுத்தப்படுகின்றன. வெப்பநிலை ஏற்றதாயிருப்பின் பெருந்தொகை ஈக்கள் சிறிது தூரம் பறந்துசெல்லும். தேனீக்கள் மிகச் சுத்தமானவை. உடல் நல மின்றி இருக்கும்போதும் அவை கூட்டை அழுக்குப்படுத்தமாட்டா. மாரி காலத்தில் சிறிது தூரம் பறப்பதால் உடம்பில் தங்கியிருக்கும் கழிவுப் பொருள்கள் வெளியேறிவிடுகின்றன. பனித்துளி பூக்களின் முறுக்கை அவிழ்க்கும் காலத்தில் அவை சுறுசுறுப்படைகின்றன. வேலை செய்யும் ஈக்கள் கூட்டின் அழுக்கைச் சுத்தஞ்செய்தபின் பூக்களுக்குப் பறந்து செல்கின்றன;வெயில் நாட்களில் தூரச் செல்ல முயல்கின்றன; சடுதியில் பெய்யும் மழையும். வீசும் காற்றும் அவை பறப்பதற்கு இடையூறு விளைக்கின்றன. தேனீக்கள், குளவிகளின் இறக்கைகள் சிறியவை. இவை பெரிய இறக்கைகளுடைய வண்ணாத்திப் பூச்சிகளிலும் அந்துப் பூச்சிகளிலும் பார்க்க உறுதியாகவும் வேகமாகவும் பறக்கின்றன. தேனீக்களுக்கு நான்கு இறக்கைகளுண்டு. இறக்கைகளின் நடுவில் நரம்புபோன்று மெல்லிய சட்டங்கள் உண்டு. பறக்கும்போது காற்று நிரம்பி அவை இழுத்துக் கட்டிய மேளத்தின் வார்க்கட்டுப் போன்றிருக்கும். மேலிறக்கைளிரண்டும் கீழிறக்கைளோடு சேர்ந்திருக்கும். குளவிகளும் தேனீக்களும் இறக்கைகளை வேகமாக அடித்தலால் விரைந்து பறக்கின்றன; பூந்தாதையும் தேனையும் எடுத்துக்கொண்டு பாரத்தோடு காற்றுக்கெதிரே எளிதிற் பறந்து செல்கின்றன. அவை கூட்டுக்குள் காற்றுச் செல்லும்படி வெயிற் காலத்தில் தமது இறக்கைகளை அடித்துக்கொண்டிருக்கும். நாம் தேன்கூட்டுக்குப் பக்கத்தே நின்றால் ஒரு வகை இரையும் ஓசையைக் கேட்கலாம். ஒரு நிரை தேனீக்கள் தேன் கூட்டின் வாயிலில் உட்பக்கம் திரும்பியிருந்துகொண்டு வேகமாக இறக்கைகளை அடித்து வெப்பமான கூட்டுக்குள் குளிர்காற்றைச் செலுத்துவதால் இவ்வோசை உண்டாகின்றது. கூட்டுக்குள் யாது நிகழ்கின்றது? கூட்டினுள் இராணி ஈயும், வேலை செய்யும் ஈக்களும், ஆண் ஈக்களும் இருக்கின்றன. ஆண்டின் பெரும்பகுதி யில் இராணி ஈயும், வேலை செய்யும் ஈக்களும் அங்கு காணப்படும். கோடை காலத்தில் ஆண் ஈக்களும் காணப்படும். இராணி ஈ கூட்டை ஆட்சி புரிவதில்லை. அது முட்டையிடும் இயந்திரம் போல வேலை செய்கின்றது. அது நாளொன்றுக்கு இருநூறு முட்டை வீதம் இரண்டு மாதங்களில் 12000 முட்டைகளிடும். வேலை செய்யும் ஈக்கள் தேனையும் பூத்தாதையும் சேர்ப்பதல்லாமல் கூட்டிலும் வேலை செய்கின்றன. தேனீக்கள் புதிய இடங்களுக்குச் செல்லும்போது வியப்பான தேன் கூட்டைக் கட்டுகின்றன. சில ஈக்கள் மற்ற ஈக்கள் உண்பதற்காகத் தேன் சேர்க்கின்றன. இருபத்து நான்கு மணி நேரத்தில் அவை தேனை மெழுகாக மாற்றிவிடுகின்றன. ஒரு இறாத்தல் மெழுகை உண்டாக்குவதற்குப் பதினாறு முதல் இருபது இறாத்தல் தேன் வேண்டும். தேனீ வளர்ப்போர் கூட்டுக்குள் மெழுகை வைக்கின்றனர். இதனால் தேனீக்கள் கூட்டில் அதிக தேனைவிட முடிகிறது. பல ஈக்களே முறை முறையாக வேலைசெய்து அறைகளைக் கட்டிமுடிக்கும். அறைகள் கட்டி முடிய முடிய ஒவ்வொரு அறையும் பயன் படுத்தபடும். சேகரிக்கப்பட்ட தேனொடு வேலை செய்யும் ஈக்கள் கூட்டி னுள் செல்லும். தேன் நிரப்பப்பட்டதும் கூடுகள் அடைக்கப்படும். மாரிகால உணவுக்காகத் தேன் சேகரித்து வைக்கப்படுகிறது. சில அறைகளில் மகரந்தப் பொடி சேகரித்து வைக்கப்படும். இது இளம் புழுக்களுக்குரிய உணவில் ஒரு பகுதியாகும். கீழ் அறைகள் குஞ்சு பொரிக்கும் அறைகள் எனப்படும். அவை இருவகையின. சில வேலை செய்யும் ஈக்களுக்குரியவை; சிறிது பெரிய அறைகள் ஆண் ஈக்களுக்குரியன. இராணி ஈ ஒவ்வொரு அறையிலும் ஒவ் வொரு முட்டையிடுகிறது. மூன்று நாட்களின் பின் அவற்றினின்று சிறிய புழுக்கள் வெளிவருகின்றன. அவற்றை இளம் ஈக்கள் எடுத்துச் செல்கின் றன. புழுக்கள் வளர்வதால் ஐந்து நாட்களில் அறைகள் நிரம்பிவிடுகின்றன. அவற்றை மேற்பார்க்கும் ஈக்கள் சிறிது மெழுகாலும் பூந்தாதாலும் அறையை அடைத்துவிடுகின்றன. இவ்வடைப்புத் தேனறைகளை அடைக்கும் அடைப்புப் போலல்லாது உள் இருக்கும் புழுக்களுக்குக் காற்றுப் படக் கூடியதாக விருக்கும். புழுக்கள் இரண்டுவாரம் அறையுள் கிடக்கும். அக்காலத்தில் வியப் பான மாற்றமுண்டாகிறது. முதலில் உதவியற்ற நிலையில் கிடந்த புழுக்கள் தம்மைச் சுற்றியிருக்கும் கூட்டிலிருந்து இறக்கை முளைத்த பூச்சிகளாக வெளிவருகின்றன. புதிய ஈக்கள் புழுக்களைக் கவனிக்கும் ஈக்களாகி அவற்றைப் பாதுகாக்கின்றன; பின் வேலை செய்யும் ஈக்கள் புரியும் வேலைகளைப் புரி கின்றன. ஈக்கள் இறக்கைகளுடன் வெளிவந்ததும் வேலை செய்யும் ஈக்கள் அவ்வறைகளைச் சுத்தஞ்செய்கின்றன. இராணி ஈ அவற்றுள் ஒவ்வொரு முட்டையிடுகிறது. தேனீக்கள் எல்லாம் ஒரு கூட்டில் இருக்கமுடியாதபடி அதிகப்படும் காலம் ஒன்று வருகிறது. சில சமயங்களில் போதிய முட்டைகள் இடமுடியாத படி இராணி ஈ கிழம் அடைகிறது. அப்பொழுது வேலை செய்யும் ஈக்கள், பொதுவாக முட்டைகள் பொரிக்கும் அறைகள் போலல்லாது பெரிய சில அறைகளைக் கட்டுகின்றன. அவை இராணி ஈக்களின் அறைகள் எனப் படும். இவற்றுள் பொரிக்கும் புழுக்கள் சாதாரண தேனீக்களாக மாறும் புழுக் களிலும் பார்க்க வேறானவையல்ல. இவற்றை வளர்க்கும் ஈக்கள் இவைக்குத் தேனும் பூந்தாதும் கலந்த ஒருவகை உணவைக் கொடுக்கின்றன. இராணி ஈ அறைகள் கட்டிமுடிவதன் முன் பழைய இராணி ஈயைக் கூட்டினின்றும் எடுத்துவிட்டால் வேலை செய்யும் ஈக்கள் சாதாரண ஈ பிறக்கும் முட்டையிலிருந்து ஒரு இராணி ஈயை உண்டாக்கிக்கொள்ள முடியும். அம் முட்டையிலிருந்து உண்டாகும் புழுக்களுக்குச் சிறப்பான முறையில் உணவளித்தலால் இவ்வாறு உண்டாகின்றது. கூட்டில் பழைய இராணி ஈ ஒன்று இருக்குமாயின் அது கோபங்கொண்டு இளம் இராணி ஈயைக் கொல்லமுயலும். வேலைபுரியும் ஈக்கள் அவ்வாறு செய்வதைத் தடுத்துவிடும். அப்பொழுது அது சில ஈக்களுடன் கூட்டைவிட்டுப் புதிய ஒரு கூட்டைக் கட்டச் செல்கிறது. ஒரு நாளிலே பகல் நேரத்தில் இளம் இராணி ஈ ஆகாயத்திற் பறந்து செல்கின்றது. அதனைத் தொடர்ந்து ஆணீக் கூட்டமும் பறக்கின்றது. அங்கு இராணி ஈ அவற்றில் ஒன்றைச் சேர்கிறது. பின்னர் அது கூட்டுக்குத் திரும்பி வந்து முட்டையிடத் தொடங்குகிறது. வண்டுகளும் குளவிகளும் தேனீக்களைப் போலல்லாது ஒவ்வொரு ஆண்டிலும் புதிய கூடுகட்டிப் பெருகுகின்றன. குளவிக்கூடு தேன் கூட்டைப் போன்றதன்று. அது மரத்தைச் சப்பிக் காகிதம்போற்செய்த மரக்களியினாற் கட்டப்படுவது. தேனீக்கள் கூட்டின் பக்கவழியாகக் கூட்டுக்குள் செல்கின் றன. குளவிக்கூட்டின் வாயில் கீழ்ப்பக்கத்திலுள்ளது. மேற்பக்கம் தட்டை யாக இருக்கும். நாம் தினமும் படிக்கும் செய்தித்தாள்கள் மரக்களியினாற் செய்யப்பட்டவை. 10. காகிதத்தின் கதை மக்கள் எல்லோரும் தமது நினைவுகளை எழுதி வைக்க விரும்பினார்கள். நாகரிகமடையாத மிகப் பழங்காலத்தில் அவர்கள் தாமறிந்தவும், வேட்டையாடியவும் விலங்குகளின் வடிவங்களைத் தாம் வாழ்ந்த குகை களின் சுவர்களில் எழுதினார்கள். அவற்றை நாம் இன்றும் காணலாம். ஆயிரம் ஆண்டுகளின் பின்னர் அவர்களின் பின்னோர் ஓரளவு நாகரிகமடைந்தனர். இப்பொழுது அவர்கள் எழுத்து எழுதும் முறையை அறிந்து படங்களுக்குப் பதில் எழுத்துக்களை கற்களில் வெட்டினார்கள். இவ்வாறு வெட்டப்பட்ட பழங்காலக் குறிப்புகள் அரசர்கள் புரிந்த செயல் களைப் பற்றியவை. அக் காலத்தில் அரசரே கவனிக்கப்படத் தக்கவராக விருந்தனர். இவ்வாறு கல்லில் வெட்டப்பட்ட எழுத்துக்களைக் கொண்டே நாம் பழங்கால வரலாறுகளை அறிகின்றோம். கல் நிலைக்கக் கூடிய பொருளாயினும் எழுதுவதற்கு வாய்ப்பான பொருளன்று. ஆகவே பாபிலோனிய மக்கள் கல்லைவிட்டுக் களிமண்ணைப் பயன்படுத்தினர். அவர்கள் களிமண்ணால் தட்டுகளையும் உருளைகளை யும் செய்து அவற்றின் மீது எழுத்தாணியால் எழுதினார்கள். களிமண் மிருதுவாயிருந்தமையின் கல்லிலும் பார்க்க இதில் விரைவாகவும், இலகு வாகவும், மலிவாகவும் எழுத்து வேலை செய்யப்பட்டது. எழுத்தெழுதப் பட்ட களிமண் தட்டுகளும் உருளைகளும் அடுப்பில் அல்லது வெயிலில் வைத்து உலர்த்தப்பட்டன. கல்லிலெழுதுவதிலும் பார்க்க இது திருந்திய முறையாகவிருந்தது. இவ்வகை ஆயிரக்கணக்கான தட்டுகளும் உருளைகளும் இன்று வரையும் அழியாது நிலைபெற்றுள்ளன. இவற்றுட் சில ஒருவர் இன்னொருவருக்கு எழுதிய கடிதங்கள், சில நாட்குறிப்புக் கணக்குகள், பல புத்தகங்கள், பாபிலோன் நாட்டுக்குத் தலைநகராயிருந்த பாபிலோன் நகரில் களிமண் தட்டுகளில் எழுதப்பட்ட புத்தகங்களை மக்கள் இரவல் பெற்றுப்படிக்கக் கூடிய பெரிய புத்தகநிலையம் இருந்ததென அறிஞர் கூறுகின்றனர். மற்றைய நாட்டினர் வேறு வகையில் தமது குறிப்புகளை வைத்திருந் தனர். பழைய எகிப்தியர் கல்லில் எழுத்துக்களை வெட்டியதோடு பப்பிலசு என்னும் தாளிலும் எழுதினர். பப்பிலசு என்பது நீல ஆற்றங்கரையில் வளரும் நாணல் தண்டைப் பிளந்து செய்யப்பட்டது. மெழுகினாற் செய்யப் பட்ட தகடும் எழுதப்பயன்படுத்தப்பட்டது.பழைய உரோமிலும் பப்பிலசு பயன்படுத்தப்பட்டது. மரப்பலகைகள் மீது மெழுகைத் தடவி அழுத்தஞ் செய்து அதன்மீதும் எழுத்தாணியால் எழுதப்பட்டது. பப்பிலசுத் தாளைவிட எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்ட மற்றைய பொருள்கள் அழகில்லாம லிருந்தன. மெழுகில் எழுதப்படும் எழுத்துகள் விரைவில் அழிந்து போயின. பின் படிப்படியே தோல் எழுதப் பயன்படுத்தப்படுவதாயிற்று. தோல் இன்றும் முக்கிய ஆவணங்கள் எழுதுவதற்கு மேற்கு நாடுகளிற் பயன்படுத்தப்படுகின்றது. பல நூறு ஆண்டுகளாக இது எழுதுவதற்கேற்ற முதன்மையான பொருளாக இருந்து வந்தது. சில நூல்கள் “பார்ச் மெண்ட்” எனப்பட்ட இவ்வகைத் தோலில் எழுதப்பட்டுள்ளன. எழுதுவதற்கு இப்பொருள்களைப் பயன்படுத்தியவர்கள் திருப்தி யடையவில்லை. இவ்வற்றிலும் பார்க்க நல்ல எழுதும் பொருள் கண்டுபிடிக் கப்படாவிட்டால் சென்ற சில நூற்றாண்டுகளில் அச்சிடப்பட்ட கோடிக் கணக்கான நூல்கள் வெளிவந்திருக்கமாட்டா. அச்சிடுதற்கு ஏற்ற தாள் அதிகம் கிடையாவிட்டால் இந் நூல்களில் சிறுபகுதி மாத்திரம் வெளிவந் திருக்கும். தோல் ஒன்று மாத்திரம் எழுதும், அச்சிடும் பொருளாகவிருந்தால் சில நூல்கள் மாத்திரம் வெளிவந்திருக்கும்; புதினத்தாள்கள் தோன்றியிருக்க மாட்டா. உலகில் நடத்தப்படும் செய்தித்தாள்கள் எல்லாம் தோலில் அச்சிடப் படுகின்றன என்று வைத்துக்கொண்டால் இன்று ஒரு ஆடும் உயிரோடு வாழமுடியாது. இதனால் காகிதம் மிக முக்கியமுடைய பொருள் என விளங்குகின் றது. காகிதம் கண்டுபிடிக்கப்படாவிட்டால் உலகம் இன்றிருக்கும் நிலையை விட வேறுவகையாக விருக்கும். காகிதமும் காகிதத்தால் செய்யப்பட்ட புத்தகங்களும் அறிஞர் கண்டறிந்த அறிவுகளையும்,கண்டுபிடித்த புதியவைகளையும் காப்பாற்றும் கருவிகளாகவுள்ளன. உலகில் உள்ள அறிவுகள் எல்லாம் காகிதத்தில் குறிக்கப்பட்டுள்ளன என்று ஒருவன் கூறலாம். இக் குறிப்புகள் இல்லாவிடில் மக்களின் புதிய கருத்துக்களும் கண்டுபிடிப்புகளும் மறைந்துவிடும். காகிதத்தை முதலில் யார் கண்டு பிடித்தார் எனப் பார்ப்போம். காகிதத்தைச் செய்யக் கண்டுபிடித்த புகழ் சீனாவுக்குரியது. சீனர் செய்யக் கண்டுபிடித்த பொருள்கள் பிற்காலத்தில் மறு நாடுகளில் பொது உபயோகத்துக்குப் பயன்பட்டன. சீனரே முதல் முதல் பட்டுப்புழு வளர்த்துப் பட்டு உற்பத்தி செய்தனர்; தேயிலையைப் பயிரிட்டனர். புத்தகங்களை அச்சிட்டனர். கிறிஸ்து பிறப்பதற்கு இரு நூறாண்டுகளின் முன் காகிதம் செய்யக் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வித்தை தொளாயிரமாண்டுகளாக மிக இரகசிய மாகக் காப்பாற்றப்பட்டுவந்தது. சமர்கந்து(Samarkand) என்னும் நாட்டை வென்று கைப்பற்றிய அராபியர் மீது சீனர் 751ஆம் ஆண்டு படையெடுத் தனர்; படையெடுப்பில் சீனர் தோல்வியுற்றனர். சிறைபிடிக்கப்பட்ட சீனரிட மிருந்து அராபியர் காகிதம் செய்யும் முறையைக் கற்றனர். இவ்வித்தை அராபியரிடமிருந்து ஐரோப்பிய நாடுகளிற் பரவிற்று. சணல், பஞ்சு, தும்பு போன்ற தாவரவகைகளிலிருந்து காகிதம் உண்டாக்கப்பட்டது. கந்தைத் துணிகளும் பயன்படுத்தப்பட்டன. அண்மையிலேயே மரக்கூழிலிருந்து காகிதம் செய்யப்படுகின்றது. மரக்கூழ் செய்வதற்கு இலட்சக்கணக்கான மரங்கள் தறித்து விழுத்தப்படுகின்றன. ஒரு பெரிய செய்தித்தாள் நிலையத்தில் பன்னிரண்டு மாதங்களுக்குச் செய்தித்தாள் அச்சிடுவதற்குக் காகிதம் கொடுக்க ஆண்டில் 31,300 ஏக்கர் காடு வெட்டப்பட வேண்டுமென்று கணக்கிடப்பட்டுள்ளது. சில நாடுகளில் அழிக்கப்படும் காடுகளில் புதிய மரங்கள் நடப்படு கின்றன. சில நாடுகளில் காடுகள் அதிகம். எத்தனை மரங்களை வெட்டி அழித்தாலும் காடு முன்னிருந்தது போலவே இருக்கின்றது. இவ்வகை நாடுகளுள் ஒன்று கனடா. அங்கு காட்டுப் பாதை வழியாகப் பயணம் செய்தால் பலவாரங்களுக்கு மக்களைக் காணமுடியாது. காகிதம் செய்வதற்குப் பயன்படுவது இஸ்புறூசு (Spruce) என்னும் மரம். பெரிய ஆறுகளின் அயலிலுள்ள மரங்கள் பெரும்பாலும் தறிக்கப் படுகின்றன. இலை துளிர்காலம் வரையில் மரங்கள் அங்கே கிடக்கும். ஆறு பனிக்கட்டியின்றி இருக்கும் காலத்தில் அவை ஆற்றின் வழியே ஆலைக்குக் கொண்டுபோகப்படும். மரத்தைக் கூழாக அரைக்கும் ஆலையில் முதலில் மரங்கள் நாலடி நீளமுள்ள துண்டுகளாக வெட்டப்படுகின்றன. பின்னர்அவை பிறிதோர் இயந்திரத்தில் இடப்படுகின்றன. இயந்திரம் மரங்களின் பட்டையை உரைஞ்சி எடுத்துவிடுகிறது. பின்னர் அவை கும்பமாக அடுக்கி வைக்கப் படுகின்றன. மரக்கூழ் இரண்டு வகையாகச் செய்யப்படுகின்றது. மரங்களைத் துண்டு துண்டுகளாக உடைத்துத் துண்டுகளை ஒருவகை இரசாயனப் பொருளோடு கலந்து கூழாகும் வரையில் அடுப்பில் வைத்து எரிப்பது ஒரு முறை. இது இரசாயன முறையெனப்படும். மரக்கட்டைகளைப் பெரிய கற்சக்கரங்களுக்கிடையிலிட்டு எட்டிலொரு அங்குலப் பருமனுள்ள சிறு சிம்புகளாகும்படி அரைதும் வேறு பல முறைகளாலும் கூழாக்குவது இன்னொரு முறை. இந்நிலைமையில் மரக்கூழ் காகிதம் செய்யும் படி உலகம் முழுமைக்கும் அனுப்பப்படுகிறது. பின்பு இது பல இயந்திரங்கள் வழியாகச் சென்று காகிதமாக மாறுகின்றது. நாம் காலையில் அதிக ஆவலோடு படிக் கும் செய்தித் தாள்கள் இவ்வகையில் கிடைத்தவையென அறியும்போது நாம் மிக வியப்பு எய்துவோம். 11. சீனப்பெருஞ்சுவர் சீனாவிலுள்ள பெருஞ் சுவரைப் பத்தாயிரம் மைல நீளமுள்ள சுவர் என்று சீனர் கூறுவர். இச்சுவர் மனிதனால் செய்யப்பட்ட வியப்புமிக்க வேலைகளுள் ஒன்று. இதுபோன்ற பெரிய சுவர் உலகம் முழுமையிலும் இல்லை. இச்சுவர் உண்மையில் பதினாயிரம் மைல் நீளமுடையதன்று. இதன் நீளம் ஏறக் குறைய 1500 மைல். இச்சுவர் ஏன் கட்டப்பட்டது? சீனப்பேரரசன் ஒருவன் வடபுறத்தில் தாத்தாரியரின் படையெடுப்பைத் தடுப்பதற்காக ஒரு நிரை கோட்டைகளைக் கட்டி அவற்றில் போர்வீரரை நிறுத்த நினைத்தான். எல்லாக்கோட்டை களிலும் வீரரை நிறுத்தாதபடியால் தாத்தாரியப் படையயெடுப்பைத் தடுக்கச் சீனரால் முடியவில்லை. சிஹ்-வாங்தி என்னும் பேரரசன் கி.மு. 221இல் சிம்மாசனமேறினான். இது கிறித்து நாதர் பிறப்பதற்கு இரு நூறு ஆண்டுகளின் முன். இச்சீனப் பேரரசன் மிகப் புகழ் பெற்றவன். இவனுடைய அரண்மனை மண்டபம் பத்தாயிரம் பேர் இருக்கக்கூடிய விசாலமுடையதாக விருந்தது. பத்தாயிரம் மக்கள் இருக்கக்கூடிய மண்டபமென்பது அவனுக்குச் சிறு காரியமாக விருந்தது. அவன் கி.மு.214இல் வடக்குச் சினாவிலிருந்து திபெத்து எல்லை வரையில் செல்லும் சுவரைக் கட்ட நினைத்தான். இச்சுவரைக் கட்டுவதற்குச் சீனா முழுமையிலும் வாழ்ந்த ஆண்டு களில் மூன்றிலொரு பகுதியினர் வேலையாட்களாகப் பிடிக்கப்பட்டனர். தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளும் சுவர் கட்டுவதற்கு அனுப்பப் பட்டார்கள். அரசன் புத்தகங்களை வெறுத்தான். எல்லாப்புத்தகசாலைகளும் தீக்கிரையாக்கப்பட வேண்டுமென்றும், அவற்றை வைத்திருப்போர் சுவர் கட்டுதற்கு அனுப்பப்படுதல் வேண்டுமென்றும் அவன் கட்டளையிட்டான். அக் காலத்தில் பெரிய நாட்டை ஆள்வதற்கு சிஹ்-வாங்தி போன்ற பலவான் வேண்டப்பட்டான். சுவர் கட்டுவோரில் கடமை செய்ய முடியாத வர்களும் பலமற்றவர்களுமிருக்கவில்லை. வேலையாட்களின் முதுகில் சவுக்குப் பயன்படுத்தப்பட்டது. கண்காணிகள் அவர்கள் மீது தமது பார்வை யைச் செலுத்தினார்கள். சுமையை இழுக்க அல்லது சுமக்கமாட்டாதவன் கொன்று அத்திபாரத்தில் போடப்பட்டான். இவ்வாறு கொல்லப்பட்ட எத்தனை ஆயிரம் பேர் சுவரின் கீழ் கிடக்கிறார்களென்பது எவருக்கும் தெரியாது. இன்றும் இச்சுவர் உலகிலுள்ள பெரிய பிரேதக்குழி என்று சொல்லப்படுகின்றது. இரண்டாயிரமாண்டுகளின் முன் கட்டப்பட்ட இச்சுவர் இன்றும் உலக வியப்புக்களில் ஒன்றாக விளங்குகின்றது. சுவர் கட்ட வேண்டிய பல இடங் களில் ஒரே முறையில் வேலை தொடங்கப்பட்டது. சுவரின் பெரும்பகுதி கருங்கற்பாளங்களினாற் கட்டப்பட்டுள்ளது. அதன்மேல் களிமண் கற்கள் வரிசையாக 15அடி முதல் 30 அடி உயரத்துக்கு அடுக்கப்பட்டுள்ளன. சுவரின் அடிப்பபகுதி 25 அடிக் கனமுடையது. மேலே செல்லச் செல்ல சிறிது சிறிதாகக் கனங்குறைந்து செல்லும் அதன் தலை 15 அடி கனமுடையது. அபாயமான இடங்களில் ஒவ்வொரு முந்நூறு அடிக்கு ஒன்றும் மறு இடங் களில் 600 அடிக்கு ஒன்றுமாகச் சிறுகோட்டைகளும் காவற்கோபுரங்களும் கட்டப்பட்டுள்ளன. மதிலின் ஒரு புறத்திலிருந்து மறுபுறம் வரையில் 40,000 கோட்டைகளும் கோபுரங்களுமுள்ளன. அவற்றின் உயரம் 40 அடி முதல் 50 அடி வரையில். ஆபத்துக் காலங்களில் போர்வீரர் சுவர்கள் மீது நின்று போரிட்டு எதிரிகளைத் துரத்தினார்கள். இம்மதிலைக் கட்டி முடிப்பதற்கு எவ்வளவு மண்ணும் கல்லும் கருங்கற்பாளங்களும் பயன்படுத்தப்பட்டிருத்தல் வேண்டுமென நினைத்து ஒருவர் வியப்படையலாம். சீனர் முதலில் கோபுரங்களைக் கட்டிப் பின் அவற்றை மதில்களால் இணைத்தார்கள் என்று சிலர் கூறுகின்றனர். வனாந்தரங்கள், மலைகள், பள்ளத்தாக்குகள், ஆறுகள், என்பவற்றின் மேலாக இச்சுவரைக் கட்டவேண்டியிருந்தது. கட்டட வேலையாளர் சமாளிக்க வேண்டிய பல தொல்லைகள் இருந்தன. வனாந்தரங்களுக் கூடாகச் சுவர் செல்லும்போது மணல் மிக்க தொல்லை விளைத்தது. அவ் விடங்களில் காற்றோடு வந்த மணல் குவிந்தது. ஆகவே சுவர் மறைந்து போகாதிருக் கும்படி சில இடங்களில் ஒன்றின்பின் ஒன்றாக மூன்று சுவர்கள் கட்டப்பட் டன. நில அளவைக்காரர் கிட்டிய வழியைக் காண்பதற்குப் பிரயாசப்பட வில்லை. வழியில் ஒரு மலைநின்றால் மலைக்கு மேலால் சுவர் சென்றது. பாறைகளில் முப்பதடி அகலத்துக்கு அகழ்கள் வெட்டி அவற்றி னிடையே சுவர் எழுப்பப்பட்டது. இவ்வாறு கட்டப்பட்ட சில இடங்கள் கடல் மட்டத்துக்கு மேல் 4000 அடியிலுள்ளன. சில இடங்களில் மலைப் பக்கங்களிலிருந்து இருண்ட பள்ளத்தாக்கு வழியாக மதில் செல்கின்றது. பகைவர் ஒருபோதும் வர முடியாத இவ்வகைப் பள்ளத்தாக்குகளில் ஏன் சுவர் கட்டப்பட்டதென்று நினைத்து ஒருவர் வியப் படையலாம். சீன இராச்சியத்தின் வடவெல்லை மதிலால் காக்கப் பட வேண்டுமென அரசன் கட்டளையிட்டான். அறக்கட்டளை எவ்வகையிலும் நிறைவேற்றப்படவேண்டியிருந்தது. அக் காலத்தில் வேலையாட்கள் மிகப் பலர் இருந்தனர். ஒருவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கட்ட ளைக்குப் பணிந்து மதில் கட்டச் சென்றான். அவன் இறந்துபோகும் வரை யில் அவனுக்கு வேலை யிருந்தது. இம் மதில் சிஹ்-வாங்தியால் கி.மு.214இல் தொடக்கப்பட்டது. சுவர் கட்டி முடிவதற்கு நீண்டகாலத்தின் முன் இவ்வரசன் இறந்தான். இவனுக்குப் பின் வந்த அரசர் அதனைக் கட்டி முடித்தனர். கட்டிமுடிக்கப்பட்ட பின் இம்மதில் பெரிய வேலைப்பாடாகக் கருதப்பட்டிருத்தல் வேண்டும். சுவரின் உச்சியில் போர் வீரர் பவனி சென்றனர். ஆபத்துக் காலங்களில் கோபுரங்கள் மீது நெருப்பு எரித்து அபாயம் அறிவிக்கப்பட்டது. இப்பொழுது இம்மதில்களுக்கூடாகப் புகைவண்டிப் பாதைகளும் வீதிகளும் செல்கின்றன. இப்பொழுது அது அரணாகப் பயன்படவில்லை; பலவிடங்கள் அழிந்து கிடக்கின்றன. 12. காந்தத்தின் வியப்பு பல நூறு ஆண்டுகளின் முன் விஞ்ஞானி ஒருவர் ஆசியா மைனரிலே மாக்நேசியா என்னுமிடத்தில் பாரமான கறுப்புக்கல் ஒன்றைக் கண்டெடுத் தார். அது சிறிய இரும்புத் துண்டுகளை இழுக்கும் தன்மையுடையதாக விருந்தது. இக் கல்லைக் கண்டுபிடித்தவர் யார் என்று ஒருவரும் அறியார். உரோமரும் கிரேக்கரும் இக் கல்லைப் பற்றி நன்கு அறிந்திருந்தார்கள். இது மாக்நேசியன் கல் அல்லது மாக்நேஸ் எனப்பட்டது. இப் பெயர்களின்றே மாக்நெட் என்னும் பெயர் வந்தது. ஆங்கிலம் பேசப்படும் நாடுகளில் இக் கல் இப்பெயரால் அறியப்படும். காந்தக்கல் என்பது உண்மையிற் கல்லன்று; ஒருவகை இரும்புமண் தாது(Iron ore) அது இப்பொழுது உலகின் பல பாகங்களிற் கிடைக்கிறது. சுவீடின் நாட்டில் கிடைக்கும் காந்தக் கல்லில் கவரும் ஆற்றல் அதிகமுண்டு. இது கடலிற் செல்லும் கப்பல்களிலுள்ள திசையறி கருவியின் ஊசியை அசையச் செய்கின்றது. காந்தக்கல்லுக்கு இன்னொரு பெயர் ‘உலோட் ஸ்டோன்” (Lodestone) வழிகாட்டும் கல் என்பது இதன் பொருள். உலகி லுள்ள இயற்கைக் காந்தக் கற்கள் எல்லாம் இவ்வுலோகத்தாலனவை. காந்தக்கல்லின் கவருமாற்றல் அதன் இரண்டு முனைகளிலுமுள்ளது. காந்தக் கல் ஒன்றை இரும்புத் தூளுக்குள் வைத்து எடுத்தால் அதன் இரு முனைகளிலும் தூள் ஒட்டிக்கொண்டிருப்பதையும் நடுவில் இரும்புத் தூள் இல்லாதிருப்பதையும் காணலாம். தூள் ஒட்டாதிருக்கும் வெளி கல்லின் அச்சு எனவும் தூள் ஒட்டியிருக்கும் முனைகள் துருவங்கள் எனவும் பெயர் பெறும். காந்தமென்பது ஒரு துண்டு காந்தக் கல் அல்லது செயற்கை முறையில் காந்தமூட்டப்பட்ட நேரிய உருக்குத் துண்டு. செயற்கை முறை யில் காந்தமூட்டப்பட்ட உருக்குத் துண்டின் இரு முனைகளும் கவருமாற்ற லுடையன. காந்தத்துண்டு ஒன்றை ஒரு நூலிற் கட்டி அந்தரத்தில் தொங்க விட்டால் அதன் முனைகள் வடக்கையும் தெற்கையும் நோக்கி நிற்கும். வடக்குநோக்கி நிற்கும் முனை வடதுருவம் என்றும், தெற்கு நோக்கி நிற்கும் முனை தென்துருவம் எனவும் பெயர்பெறும். முனைகளில் ஒன்று வடக்கிலும் ஒன்று தெற்கிலும் திரும்பி நிற்கும் காந்தத் துண்டைத் திசையறி கருவி என்று நாம் கூறுகின்றோம். அது உண்மையே. திசையறிகருவி என்பது சாய்த்துவைத்தால் ஊசி எல்லாத் திசைகளுக்கும் திரும்பக் கூடியதாக அமைக்கப்பட்ட ஒரு கருவி. எவ்வாறு ஆட்டி அசைத்தாலும் ஊசியின் ஒரு முனை எப்பொழுதும் வடக்கு நோக்கியும் மற்ற முனை தெற்கு நோக்கியும் நிற்கும். காந்தத்தின் இவ்வியல்பு மக்களுக்கு அளவுகடந்த பயனளிக்கின்றது. அது கப்பலோட்டுகிறவனுக்குக் கடலுக்கூடாக வழியைக் காட்ட உதவு கின்றது. திசையறி கருவியை வைத்துக்கொண்டு ஒருவன் வனாந்தரங்களி னூடாக அல்லது நீர் உறைந்து கிடக்கும் தென் துருவப் பகுதிகளினூடாக அல்லது பெருங்கடலினூடாகச் சென்றால் அவனால் தான் நினைத்த இடத்துக்குச் சென்று திரும்ப முடியும். காந்தத்தின் இயல்பு இவ்வாறிருப்பதற்குக் காரணத்தை எவரும் அறியார் செயற்கைக் காந்தம் எனக் கூறினோம். செயற்கைக் காந்தத்தை இரண்டு வகையிற் செய்யலாம். மின் ஓட்டத்தைப் (Electric current) பாய்ச்சிச் செய்வது ஒரு வகை. உருக்குத்துண்டு ஒன்றை எடுத்துக் காந்தக்கல்லோடு உரைஞ்சுதலாலும் காந்தமுண்டாகும். உருக்குத்துண்டைக் காந்தமாக்குதற்குக் காந்தக்கல்லில் உருக்குத் துண்டை வைத்து ஒரே திசையை நோக்கிப் பலமுறை அழுத்தி இழுத்தல் வேண்டும்; முன்னும் பின்னுமாக இழுத்தல் கூடாது. இதனால் உருக்கு எப்படிக் காந்தமாகின்றது? இரும்பு உருக்கு, மரம், உரொட்டி போன்ற எல்லாப் பொருள்களும் சிறிய அணுக்களின் சேர்க்கையினாலானவை. பொருள்களின் தன்மைகளுக்கேற்ப அவை ஒன்றை ஒன்று இறுக்கமாகவும் தளர்வாகவும் பிடித்துக்கொண்டிருக்கின்றன. சாதாரண காலங்களில் இச்சிறிய அணுக்களின் முனைகள் ஒரே பக்கமாகத் திரும்பியிராது அங்குமிங்கு மாகத் திரும்பிக் குழப்பமாகக் கிடக்கின்றன. உருக்கில் அணுக்கள் இவ்வாறு இருத்தலால் அதில் காந்தமில்லாதிருக்கின்றது. காந்தக்கல்லின் மீது ஒரு திசையை நோக்கி உருக்கை உரைஞ்சும்போது அணுக்களின் முனைகள் எல்லாம் ஒரே முகமாகத் திரும்பி விடுகின்றன. உருக்கின் ஒவ்வொரு அணு வும் சிறிய காந்தமாகும். அணுக்களின் வடதுருவம் வடக்கிலும் தென் துருவம் தெற்கிலுமாகத் திரும்பியவுடன் உருக்குக் காந்தமாக மாறுகின்றது. இவ்வாறு செய்யப்படும் காந்தம் திசையறிகருவி வகையில் அல்லது மறுவகைகளில் பயன்படுவதில்லை. மின் ஓட்டத்தின் மூலம் செய்யப்படும் காந்தம் அறியப்படுவதன் முன் காந்தத்தின் முழுப்பயனையும் மக்கள் பெற வில்லை. மின் ஓட்டத்தினால் செய்யப்படும் காந்தம் பெரிய கண்டுபிடிப் பாகும். இது பொதுவான காந்தத்தை விட மிகப் பயனுடையது. வீட்டில் எரியும் விளக்கை எரியவும் தணியவும் செய்வதுபோல நாம் அதனை வேண்டாத போது நிறுத்திவிடலாம். இவ்வகைக் காந்தம் மின் (Electrictiy) ஆற்றலைக் கொண்டு இயங்குகிறது. இவ்வாற்றல் செப்புக் கம்பியினால் சுற்றப்பட்ட இரும்பிலிருந்து வருகின்றது. இக் கம்பி வழியாக மின்ஓட்டம் செல்கின்றது. மின்ஓட்டம் செல்லும்போது இரும்பு காந்தமாக மாறுகின்றது. மின்ஓட்டத்தை நிறுத்தியதும் அது காந்தத் தன்மையை இழந்துவிடுகின்றது; காந்த ஆற்றலைப் பெற்று அது பிடித்திருந்த இரும்பும் நிலத்தில் விழுந்து விடுகிறது. மின் காந்தத்தின் எண்ணில்லாத பயன்களை விரித்துக் கூறின் அது மிகப் பெருகும். இதனுதவியினால் பலவகை இயந்திரங்கள் செய்யக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நாம் பேசும் படக் காட்சிக்குசென்று மின்கருவி (Electroorgan) யிலிருந்து வரும் தொனியைக் கேட்கிறோம். மின்காந்தம் இல்லாவிடின் இரேடியோக் கருவி, தெலிபோன். காந்தசக்தியினால் இயங்கும் இயந்திரங்கள் முதலியன செய்யப்பட்டிருக்கமாட்டா. மின்காந்தம் எப்படி வேலைசெய்கின்ற தென்ற றிவதற்கு இக்கால இரும்புத் தொழிற்சாலை ஒன்றுக்கு நாம் போகவேண்டும். அங்கு நாம் கடையில் வாங்கக்கூடிய குதிரை இலாடம் வடிவான சிறிய காந்தங்கள் காணப்படும் என்று நாம் நினைத்தல் கூடாது. நாம் ஒரு மின்காந்தத்தைக் காட்டும்படி கேட்டால் ஏறக்குறைய ஆறடி குறுக்களவுள்ள பெரிய வட்ட இரும்பு ஒன்று காட்டப்படும். இது கீழே தாழ்த்தவும் உயர்த்தவும் கூடியதாகப் பாரந்தூக்கி (Crane) ஒன்றில் மாட்டப்பட்டிருக்கும். இவ்வகைக் காந்தங்கள் பல தேவைகளின் பொருட்டுப் பயன் படுத்தப்படுகின்றன. தொழிற்சாலைகளின் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் பெரிய இரும்புத் தகடுகளைக் கொண்டு போக வேண்டியிருக் கும். நாம் பார்த்துக் கொண்டு நிற்கும்போதே தூக்கவேண்டிய தகட்டை முட்டும்வரையில் பெரிய காந்தம் இறக்கப்படும். காந்தத்தைச் சுற்றியிருக்கும் கம்பிகளில் இதுவரையும் காந்தம் செலுத்தப்படவில்லை. இரும்பு காந்த மில்லாமலிருக்கின்றது. வேலைசெய்பவன் ஒரு முளையை (சுவிச்சை) இழுக் கிறான். மின்ஓட்டம் கம்பிகள் வழியே செல்கின்றது. உடனே பெரிய இரும்பு காந்தசக்தி அடைகின்றது. பாரந்தூக்கியில் வேலை செய்பவன் காந்தத்தை மேலே உயர்த்தும்போது பெரிய தகடும் அதோடு மேலே எழுகின்றது. இவ்வாறு இரும்புத் தகடுகள் ஒரு இடத்திலிருந்து மறு இடத்துக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. மின் ஓட்டத்தை நிறுத்தியதும் பெரிய இரும்பு மின் சக்தியை இழந்து விடுகிறது. பின்னர் மறு சுமையைத் தூக்குவதற்கு அது கொண்டு செல்லப்படுகிறது. பழைய பாயிலர்களையும் இயந்திரங்களையும் உடைப்பதற்கும் காந்தம் பயன்படுத்தப்படுகின்றது. இவற்றை உடைக்கும் இடங்களுக்குச் சென்றால் பயங்கரமான பெரிய சத்தத்தினால் நமது காது அடைத்துவிடும். இவற்றை உடைப்பது ஏறக்குறைய ஆறுதொன் பாரமுள்ள பெரிய உருக்குக் குண்டாகும். பழைய இரும்பை உடைப்பதற்கும் இக்குண்டு பயன்படுத்தப் படுகிறது. இரும்பை ஒரு கும்பமாகச் சேர்த்து வைத்து வலுவுள்ள மின் காந்தத்தினால் குண்டை உயரத்தூக்கி அதனைச் சடுதியில் விழவிடுவதால் இரும்புகள் உடைந்துபோகின்றன. பழைய முறையில் இரும்பை உடைப்பதிலும் பார்க்க இது இலகுவான முறையாகும். மின்காந்தம் தூக்கக்கூடிய பாரத்தோடு ஆறுதொன் குண்டின் பாரத்தை ஒப்பிடின் அது சிறியதாகும். ஆறடிக் குறுக்களவுள்ள மின்காந்தம் முப்பது தொன் பாரமுள்ள இரும்பை ஒரே முறையில் கொளுவி சங்கிலி கயிறு போன்ற உதவிகளின்றித் தூக்கும். காந்தம் என்னும் கண்ணுக்குப் புலப்படாத இதன் ஆற்றல் இவ்வகையினது. கண்ணில் ஏறிய இரும்புத் துண்டுகளை எடுப்பதற்குக் கண் வைத்திய சாலைகளிலும் மின்காந்தம் பயன்படுத்தப்படுகின்றது. முற்காலத் தில் இவ்வகை இரும்புத் துண்டுகள் கண்ணிலிருந்து பிடுங்கி எடுக்கப்பட் டன. இப்பொழுது இவ்வாறு கண்ணில் இரும்புத் துண்டு ஏறிய ஒருவன் முதலுதவி பெறவரும்போது அவன் மின்காந்தத்துக்கு முன்னால் நாற்காலி யில் இருத்தப்படுகிறான். காந்தத்தின் முனை காயம்பட்ட கண்ணுக்கு நேராகப் பிடிக்கப்பட்டபின் அதற்கு மின் பாய்ச்சப்படுகின்றது. காந்தம் உலோகத் துண்டை இழுத்துவிடுகிறது. 13. பறவைக் குஞ்சுகளின் பள்ளிக்கூடம் பறவைக் குஞ்சுகளின் வாழ்க்கை மிக வியப்புடையது. அவை முட்டையிலிருந்து வெளியே வந்தது முதல் தாம் தம்மைப் பாதுகாக்கத்தக்க நிலையடைந்து தமது தாய் தந்தைகளை விடும்வரை அவற்றின் வாழ்க்கை யில் வியப்பான செயல்கள் நிகழ்கின்றன. மனிதக் குழந்தைகளைப் போலவே அவை பயிலவேண்டிய முக்கிய பாடங்களுண்டு. அப் பாடங்களுட் சில தாய் தந்தைகளால் கற்பிக்கப்படுகின்றன. சிலவற்றை அவை தமது தின வாழ்க்கை நிகழ்ச்சிகளைக்கொண்டு அறிந்துகொள்ளுகின்றன. அவை விளையாடும் நேரமும் வேலைசெய்யும் நேரமும் உண்டு. அவை காடுகளில் தப்பிப் பிழைத்து உயிர்வாழும் வாழ்க்கைக்கு ஆயத்தம் செய்யவேண்டும். அவற்றுக்கு விளையாடிக் களிப்பதற்கு ஏற்ற நேரங்களும் உண்டு. முதல்முதல் பறவைக்குஞ்சுகள் படிக்கவேண்டியது தமது தாய் தந்தைகள் செய்யும் வெவ்வேறு ஓசைகளின் பொருளை விளக்கிக்கொள்ள வேண்டியது. அவை செய்யும் அபாயச் சத்தத்தைக் கேட்டவுடன் அதற்குக் கீழ்ப்படியவேண்டியது முதன்மையானது. பறக்கமாட்டாது கூட்டிலிருக்கும் குஞ்சுகள் அபாயம் விலகும் வரையில் பதுங்கிக்கொண்டு அசையாதும் அமைதியாகவும் இருத்தல் வேண்டும். பொரித்தவுடன் நிலத்தில் ஓடக்கூடிய சிறிய பறவைகள் அபா யத்தைக் குறித்து அதிக கவனம் செலுத்தவேண்டும். ஒரு கூட்டம் கவுதாரிக் குஞ்சுகள் தாயின் பின்னால் சென்று கொண்டிருக்கும்போது தாய் தனது ஓர் இறக்கை முறிந்துவிட்டதுபோல் நிலத்தில் அரையும் படி அதனைத் தொங்க விட்டுக்கொண்டு தள்ளாடி நடந்து செல்கிறது. உடனே குஞ்சுகள் இவ்வபாய அறிவிப்புக்குக் கீழ்ப்படி வேண்டுமென்று இயல்பூக்கத்தினால் உணர்ந்து அயn லயுள்ள புதரில் ஓடிப்பதுங்குகின்றன. அங்கு அவை அசைவின்றியும் அமைதியுடனும் கிடக்கின்றன. அவற்றின் நிறம் சூழ்நிலையோடு சேர்ந்ததா யிருப்பதால் அவை காணமுடியாதன வாயிருக்கின்றன. தனது குஞ்சுகள் பாதுகாப்பாக இருக்கின்றன என்று அறிந்து மகிழ்ச்சி அடைந்த தாய்க் கவுதாரி எளிதில் அகப்பட்டுவிடக்கூடும் என்னும் வகையில் தனது எதிரிக்கு எதிரே செட்டையை அடித்துக்கொண்டு ஓடுகின்றது. இவ்வாறு அது தனது எதிரியைக் குஞ்சுகளிருக்குமிடத்திலிருந்து தூரத்துக்குக் கொண்டு போய் விடுகிறது; தன்னைத் தொடர்ந்து வரும் எதிரியை வேண்டியளவுதூரம் கொண்டுவந்துவிட்டதாக நினைக்கும்போது அது ஆகாயத்தில் பறந்து செல்கிறது. தன்னைப் பின்தொடர்ந்த எதிரி துரத்துவதை நிறுத்திவிட்டதும் அது மறுபடியும் குஞ்சுகளிடம் பறந்து சென்று ஆபத்து நீங்கிவிட்டதாக அவற்றுக்கு அறிவிக்கின்றது. நீர்ப்பறவைகள் குஞ்சுகள் பொரித்ததும் அவற்றை நீர்நிலைக்குக் கொண்டு செல்கின்றன. அவற்றுக்கு நீந்துவது இயற்கைக் குணம். அவை விரைவில் களைத்துவிடுகின்றன. அப்பொழுது அவை தாயின் முதுகில் ஏறி இருக்கின்றன. தாய் அவற்றைக் கரைக்குக் கொண்டுவருகின்றது. நீர்க்கோழி கள் இவ்வாறே தமது குஞ்சுகளை நீருள் கொண்டுசெல்கின்றன. இந்திய நீர்க் கோழிக் குஞ்சுகள் தமது தாய்க்குக் கீழ் இருப்பதற்குப் பதில் முதுகின் மேல் படுத்து நித்திரை கொள்கின்றன. தாரா தனது குஞ்சுகளை நீரில் பயமில்லா மல் இருக்கும்படி திறமையாகப் பயிற்றுகிறது; நாம் விளங்கமுடியாத ஒரு ஒலிக்குறியினால் குஞ்சுகளை அழைத்து அவற்றை முதுகின் மேல் ஏற்றிக்கொண்டு நீரில் செல்கின்றது. அது கரையில் ஆழமில்லாத நீரில் சிறிதுநேரம் நீந்திவிட்டுப் பிறகு ஆழமுள்ள இடத்துக்குச் செல்கின்றன. நடக்கப்போவது என்ன என்று அறியும் முன் தாரா நீருள் சடுதியில் மூழ்கிச் செல்கிறது. குஞ்சுகள் எல்லாம் நீரில் விடப்படுகின்றன. அவை அபாயத்தில் அகப்பட்டதாக நினைத்துத் திடுக்கிட்டபோதும் நீந்தத் தொடங்குகின்றன. சிறிதுநேரத்தில் அவற்றின் தாய் சிறிது தூரத்திலிருந்து வருகின்றது. தாம் நீந்த அறிந்திருப்பதைப் பற்றிப் பெருமைப் பட்டுக்கொள்வதுபோல அவை உடனே தாயின் முதுகில் ஏறுகின்றன. மீன்கொத்திகள் தாம் நீருள் மூழ்கிப் பிடித்த மீன்களை உண்டு வாழ் கின்றன. பறப்பது எப்படி முக்கியமோ அப்படியே நீருள் மூழ்குவதும் அவற்றுக்கு முக்கியம். ஆனால் நீரில் மூழ்குவது பழகிக்கொள்ள வேண்டி யது. மீன்கொத்திக் குஞ்சுகுள் தமது தாய் ஆறு, குளம் முதலியவற்றில் மீன் பிடிப்பதைப் பலமுறை பார்த்துக்கொண்டிருக்கும். கூட்டைவிட்டு வெளியே வரக்கூடியளவு வளர்ந்ததும் அவை மீன்கொத்திகள் உண்ணமுடியாது விட்ட மீன்முட்கும்பத்தில் வந்து இருக்கும். இதற்கு அடுத்தபடியில் அவை ஆறு அல்லது வாய்க்காலுக்குப் பக்கத்திலுள்ள மரக்கிளையில் பறந்து சென்று இருப்பது. பாடுவது தானும் படித்துப் பயில வேண்டியது. எல்லாப்பறவைகளும் பாடுகின்றன என்பது உண்மையே. ஒரு பறவைக்குஞ்சு வயதுமுதிர்ந்த பறவைகள் பாடுவதைக் கேட்டாலன்றிச் சரியாகப் பாடமாட்டாது. மற்றப் பறவைகளினின்றும் பிரித்துக் கொண்டுவந்து தனியே வளர்க்கப்படும் காட்டுப்பறவைகள் தெளிவாகப் பாடுவதில்லை. அவை பாடும் வேறுபறவை களின் ஓசையைப் பின்பற்றிப் பாடுகின்றன. வியப்பான பறவைகளுள் ஒன்று கானான்கோழி என்னும் நீர்க்கோழி. எங்கு சிறிய நீர்நிலையும் மறைவுக்கேற்ற நாணல்களும் காணப்படுகின் றனவோ அங்கு இக் கோழிக் குடும்பங்களை பார்க்கலாம். இக் கோழிகள் ஒரு ஆண்டில் பலமுறை குஞ்சு பொரிக்கின்றன. முதல்வைப்புக் குஞ்சுகள் நன்றாய் வளருமுன் இரண்டாவது வைப்புக் குஞ்சுகள் பொரிக்கின்றன. முதலாவது குடும்பம் இரவில் தங்குவதற்கு ஏற்ற கூட்டை ஆண்பறவை கட்டுகின்றது. இக் குடும்பம் இரண்டாவது பொரித்த குஞ்சுகளை மிகக் கருத் தாகப் பாதுகாக்கின்றது. முதல் வைப்புக் குஞ்சுகள் உணவு தேடிக்கொண்டு வந்து அவற்றின் தாய்தந்தைகளைப் போல அவற்றுக்குக் கொடுக்கின்றன. அவற்றை நீந்துவதற்கு அழைத்துச் சென்று நீந்தும்போது அவற்றின் தாய் தந்தைகளைப் போலக் கவனிக்கின்றன. பறவைக் குஞ்சுகள் விளையாடுவதைக் கவனித்திருக்கிறாயா? அவை விநோதமாகத் தோன்றும். கானான் கோழிக் குஞ்சுகள் சிறிய குஞ்சு களுக்கு உதவி யளித்தல் விளையாட்டுப் போன்றதாகும். மரங்கொத்தியும் வேறு பறவைகளும் மரங்களுள் ஒளித்து விளையாடுகின்றன. எல்லாப் பறவைகளிலும் பார்க்கக் குயில் மிக வினோதமுள்ளது. குயிற்குஞ்சு இன்னொரு பறவையின் கூட்டில் பொரித்து வெளியேறுவது அதன் தவறன்று. பிழைத்திருக்க வேண்டுமானால் அது மற்றக் குஞ்சுகளைக் கூட்டுக்கு வெளியே தள்ளிவிடவேண்டும். அதற்கு அதிக இடமும் அதிக உணவும் தேவை. பொரித்துச் சில வாரங்களின் பின் அது தனிமையாக அல்லது வேறு குயில்களோடு சேர்ந்து கடலைக் கடந்து ஆப்பிரிக்கா முதலிய நாடுகளுக்குச் செல்கின்றது. வேறு வளர்ந்த பறவைகள் வழிகாட்டா விடினும் இயற்கை இயல்பூக்கத்தினால் அவை தொலைவிடங்களுக்குச் செல்கின்றன. 14. பழங்கால இந்திய நாணயங்கள் ஆரம்ப நாகரிக காலத்தில் இன்று போல நாணயங்களும் நாணயங் களின் விலைமதிப்பும் வேண்டப்படவில்லை. மக்கள் கூட்டங்கள், அல்லது குடும்பங்களாக வாழ்ந்தார்கள். வேட்டையாடும் அல்லது மந்தை மேய்க்கும் நிலையில் அவர்களுக்கு வேண்டிய பொருள்கள் அவர்களிடமே இருந்தன. பண்டமாற்று என்பது ஒரு கூட்டத்தாருக்கும் இன்னொரு கூட்டத் தாருக்குமிடையில் நடைபெறுவதாகவிருந்தது. இரு கூட்டத்தினர் நட்பு முறையில் ஒருவரோடு ஒருவர் கலக்கும்போது இரு கூட்டத்தினரும் தத்தமக்கு அனுகூலமளிக்கும் பொருள்களைப் பண்டமாற்றுச் செய்து கொள்வர். அலைந்து திரியும் கூட்டத்தினர் ஓரிடத்தில் தங்கி வேளாண்மை செய்யத் தொடங்கியபோது தொழிற்பிரிவின் கட்டாயம் உண்டாயிற்று. அப் பொழுது ஒவ்வொருவரும் தத்தமக்கு வேண்டிய பொருள்களைப் பண்ட மாற்று முறையில் பெற வேண்டிய நெருக்கடி உண்டாயிற்று. இம்முறை நாளடைவில் எங்கும் பரவிற்று. மற்றெல்லா நாடுகளிலும் போலவே இந்தியாவிலும் பழைய மக்க ளிடையே பண்டமாற்று முறை இருந்து வந்தது. அசைவுள்ள பொருள்கள் பண்டமாற்றுச் செய்யப்பட்டு வந்தமைபற்றி இருக்கு வேதம் கூறுகின்றது. நாணயங்கள் வழங்கத்தொடங்கியபின்னும் இம்முறை கைவிடப்பட வில்லை. கௌடலியரின் அர்த்த சாத்திரம், சாதகக் கதைகள் என்பனவும் பண்டமாற்றைப் பற்றிக் கூறுகின்றன. இன்றும் இந்திய நாட்டின் சில பாகங்களில் ஆசிரியரின் வேதனம், படகுக்கூலி, பண்ணைவேலையாளர் கூலி முதலியன தானிய வகையில் கொடுக்கப்படுகின்றன. பண்டமாற்றுக் காலத்திலும் பொருள்களின் விலைமதிப்பு உண்டாயிருந்தது. வேட்டை யாடும் நிலையில் ஆயுதங்களும் விலங்கின் தோல்களும் விலைமதிப்புப் பெற்றிருந்தன. மந்தை மேய்க்கும் நிலையில் விலை மதிப்பு ஆடுமாடு குதிரை என்னும் வகையில் இருந்தது. வேளாண்மை செய்யும் காலத்தில் தானியம், வீடு, உலோகங்கள் விலைமதிப்புப் பெற்றிருந்தன. இருக்கு வேதத் தில் இந்திரக் கடவுட் சிலையின் விலைக்குப் பத்துப் பசுக்கள் போதாமல் இருந்தன என்று சொல்லப்பட்டுள்ளது. சோமப்பூண்டின் விலை பசுக்கள் வகையில் விலை மதிக்கப்பட்டது. ஐதிரேயப் பிராமணத்தில் ஒருவனுடைய செல்வம் பசுக்களின் எண்ணால் அளவிட்டுக் கூறப்படுகின்றது. வேளாண்மை செய்யும் காலத்தில், தானிய மதிப்பை அடிப்படையாகக் கொண்டு பொருள்கள் விலை மதிக்கப்பட்டன. கிரீசு நாட்டில் பொருள்களுக்கு விலையாகத் தங்கம் கொடுக்கப்பட்டதாயினும் விலைமதிப்பு எருது என்றே குறிக்கப்பட்டது. ஒரு எருது என்பதற்கு இன்ன நிறையுள்ள தங்கம் என்பது பொருள். நாணயங்கள் வழக்கத்திலிருந்த காலத்தும் பிராமணர் புரியும் கிரியைகளுக்குக் கூலியாக இத்தனை பசுக்கள் கொடுக்கப்படவேண்டு மென்னும் விதிகள் இருந்தன. நிஷ்க என்னும் சொல்லுக்கு மூன்று பொருள்கள் உண்டு. முதலாவது பொருள் கழுத்தணி; இரண்டாவது பொருள் நாணயம்; மூன்றாவது பொருள் நிறை. இது நாணய வளர்ச்சி எவ்வாறு உண்டானது என்பதற்கு எடுத்துக் காட்டாகும். கழுத்தணியாக வழங்கிய நிஷ்க பிற்காலத்தில் நாணயமாக மாறிற்று. முற்கால மக்களிடையே கழுத்தணி பணம்போல மாற்றக்கூடிய தாகவிருந்தது. கழுத்தணியின் நிறையுள்ள பொண் நாணயமாக மாறிற்று. எல்லா நாடுகளிலும் வழங்கும் நிறை தாவர விதைகளிலிருந்து தொடங்கிற்று. மேற்கு நாடுகளில் கரட்1 என்னும் தாவரத்தின் விதையைக் கொண்டு நிறை கணிக்கப்பட்டது. இது ஒரு அவுன்சு திராய்2 நிறையின் 1/24 பகுதி. இந்தியாவில் குன்றிமணி மஞ்சாடி கழஞ்சு என்னும் வகையில் நிறை நிறுக்கப்பட்டது. குறிக்கப்பட்ட நிறைகளுள்ள உலோகத் துண்டுகள் முற் காலத்தில் நாணயங்களாக வழங்கின. இந்தியாவில் பாணினிக்குமுன் (கி.மு.400) நாணயம் இருந்தது. இந்திய நாணயங்கள் வியப்பான வடிவும் நிறையும் உடையனவாயிருந்தன. அவை துளையிடப்பட்டிருந்தன. செம்பு வெள்ளி தங்கம் என்பவற்றில் நாணயங்கள் அடிக்கப்பட்டன. முற்காலத்தில் அரசரின் ஆணையைப் பெற்றுத் தனிப்பட்டவர்கள் நாணயமடித்தார்கள். பிற்காலத்தில் நாணயம் அடித்தல் அரசாங்கத்தின் தனி உரிமையாக்கப்பட்டது. நாட்டுத் தங்கமும் கிடைக்கக்கூடியதாக விருந்தது. 19ஆம் நூற் றாண்டின் முற்பகுதி வரையும் தங்க நாணயங்கள் வழங்கின. 1835இல் ஆங்கிலேயர் கொண்டு வந்த சட்டத்தின்படி இந்தியா முழுமைக்கும் ஒரே வகை ரூபாய் நாணயம் கொண்டுவரப்பட்டது. கிழக்கிந்திய கும்பனியாரின் ஆட்சிக்குட்பட்ட நாட்டில் தங்க நாணயம் வழங்குவது சட்டவிரோதம் எனப்பட்டது. சோகிகள் நாணயங் களாக மிகப் பழங்காலம் முதல் வழங்கின. சாதகக் கதைகளில் சோகிகள், சிப்பிக்கானி என்று கூறப்பட்டுள்ளன. சோகி, நாணயமாகப் பயன்படுத்தப் பட்டமையால் சோகி என்னும் பெயர் நாணயத்தைக் குறிப்பதாகவிருந்தது. துணித்துண்டுகளும் நாணயங்களாகப் பயன்படுத்தப்பட்டன. பாணினி இவற்றை வசனா எனக் குறிப்பிடுகின்றார். சாமரையும் நாணய மாகப் பயன்படுத்தப்பட்டது. கி.பி. 5ஆம் நூற்றாண்டில் விளங்கியவரும் விநாயபிடகத்தின் பேர்பெற்ற உரையாசிரியருமான புத்தகோசர், மாசகி என்னும் மூன்று வகை நாணயங்களைப் பற்றிக் கூறியிருக்கின்றார். அர்த்த சாத்திரத்தில் கூறப்பட்டிருக்கும் மாசகி என்பது ஒரு வெள்ளிப் பணத்தின் 1/16 பெறுமதிப்புள்ள செம்பு நாணயமெனத் தெரிகிறது. மாசகி நாணயம் பொதுவாகச் செம்பாயிருந்ததென்றும் இரும்பு அல்லது வேறு உலோகங் களில் அடிக்கப்பட்ட மாசகி நாணயங்களும் வழங்கின என்றும் புத்தகோசர் கூறியுள்ளார். மூங்கிலின் வெளிப்பட்டையால் அல்லது பனை ஓலையினால் செய்து மேலே முத்திரை இடப்பட்ட ஒரு வகை மாசகி நாணயங்களும் வழங்கின. மெழுகு அல்லது பிசின் துண்டில் முத்திரை இடப்பட்டது இன்னொரு வகை. எலும்பு, தோல், மரங்களின் விதைகளும் நாணயங் களாகப் பயன்படுத்தப்பட்டன என்று புத்த கோசர் கூறியுள்ளார். 15. வைட்டமினும் அது இல்லாமையால் தோன்றும் நோய்களும் நமது உடல்வளர்ச்சி, தொடர்பான தொழிற் பாட்டுக்கு ஏனைய வளர்ச்சி அளிக்கும் உணவுச் சத்துக்களோடு வைட்டமின் என்னும் ஒரு வகைச் சீவ சத்தும் வேண்டியிருக்கின்றது. வைட்டமின் குறைவினால் உண் டாகும் நோயைப் பற்றி மக்கள் மத்திய காலம் முதல் அறிந்துள்ளார்கள். உணவு வகையில் வெவ்வேறு சிறந்த சத்துக்கள் இருப்பது சென்ற இருபத்தைந்து ஆண்டுகளாக விஞ்ஞானமுறையில் பரிசோதித்து அறியப் பட்டு வருகின்றது. முற்காலக் கடலோடிகள் முரசால் இரத்தம் வடிதல், முரசு வீங்குத லாகிய சொறிகரப்பான்(Scurvy) என்னும் நோயைப் பற்றி நன்கு அறிந் திருந்தார்கள். கரையை அடைந்து புதிய பழங்களையும் புதிய காய்கறி களையும் உண்டால் இந் நோய் குணமடையுமென்பதும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. வியாதிக்கும் உணவுக்கும் என்ன தொடர்பு உண்டு என்பதை அவர்கள் அறியவில்லை. தவிடு போக்கிய அரிசியை உணவாகக்கொள்ளும் மக்களிடையே பெரிபெரி என்னும் நோய் பெரிதும் காணப்படுகின்றது. சென்ற நூற்றாண் டில் யப்பானிய போர்வீரரில் மூன்றிலொரு பகுதியினர் இந் நோயினால் பீடிக்கப்பட்டிருந்தனர். 1900இல் இடச்சுக்காரரின் இராணுவத்திலிருந்த மருத்துவரொருவர் இந்நோய் உணவிலுள்ள சத்துக் குறைவினால் உண்டா கின்றதென்பதைக் கண்டுபிடித்தார். அதன் பின் இந் நோயைத் தடுக்கும் முறை உலகம் முழுவதிலும் அறியப்பட்டது. பலவகை உணவுகளிலும் வைட்டமின்கள் என்னும் ஒருவகைச் சீவசத்துக்கள் இருக்கின்றன. நாம் உண்ணும் உணவில் இவை குறைவதால் ஒவ்வொரு வகை நோய் உண்டாகின்றது. நமது உடலை நோயின்றிக் காப்பாற்றுவதற்கு இவை வேண்டும். 1912இல் கசிமீர் வங்க் (Dr.Casimir Funk) என்னும் மருத்துவர் உணவு களிலுள்ள இச்சீவ சத்துக்களில் அமைன்கள் (Amiunes) என்னும் நைட்ரோசின் சம்பந்தமான இரசாயனப் பொருள்கள் அடங்கியுள்ளன எனக் கருதினார். இவை உடலுக்கு அவசியம் வேண்டப்படுவன என்று கருதப்பட்டமையால் அமைன்கள் என்பதன் முன் வைட் (Vit) என்னும் சொல் சேர்க்கப்பட்டது. இவ்வுயிர்ச்சத்துப் பொருள்கள் அமைன்கள் அல்ல என்று கண்டுபிடிக்கப் பட்டபின் அப்பெயர் வைட்டமின் (Vitamin) என மாற்றப்பட்டது. வைட்ட மின்கள் என்பன உடம்பிற் சுவறி உடல் தொடர்பான சில இரசாயன மாற்றங் களைச் செய்யும் ஒரு வகைச் சத்துக்கள். இவையின்றி அம்மாற்றங்கள் உண்டாகமாட்டா. இவ்வுயிர்ச் சத்துக்களெல்லாம் இரசாயன சம்பந்தமாக ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டவையல்ல. இவை (1) அமைன் பொருள்கள் (2) கொழுப்புள்ள மதுச்சாரங்கள் (Fatty Alchols) (3) சர்க்கரைப் வகைகள் (4) கரட்டின் பொருள்களிலிருந்து பெறப்படுவன என்று பிரிக்கப்பட்டுள்ளன. உடல் நலத்துக்கு வேண்டிய இச்சத்துக்கள் ஏ,பி,சி,டி, இ,எப், எச், கே,பி (A B C D E F H K) எனப் பெயரிடப்பட்டுள்ளன. இச் சத்துக்கள் மனிதனுக்கு உண்டாகும் நோய்கள் எல்லாவற்றுக்கும் மருந்தாக மாட்டா. இவை மனிதன் உடல் நலத்தோடு வாழ்வதற்கு உதவிபுரி கின்றன. ஒவ்வொரு வைட்டமின் சத்தும் வெவ்வேறு குணம் செய்கின்றமை யின் வைட்டமின் சத்துக்களைத் தனித்தனி அளவாக (Doses) உட்கொள் வதில் பயனில்லை. வெவ்வேறு உணவு வகைகளில் எவ்வாறு இவ்வுயிர்ச் சத்துக்கள் இருக்கின்றனவென்று அறிந்து அவற்றை உட்கொள்வது பயனளிப்பதாகும். ஏ வைட்டமின் (A) சிறுவரின் உடல் வளர்ச்சிக்கு வேண்டப்படுவது. இது நுரையீரல், சிறுநீரகம் தொடர்பான தொற்று நோய்களை எதிர்த்து உணவில் விருப்பத்தையும் அளவான சீரணிப்பையும் உண்டாக்குகின்றது. இவ்வுயிர்ச் சத்து சிறிதுமில்லாவிடில் கண்ணில் அபாயம் விளைக்கும் நோயுண்டாகிறது. கண் சம்பந்தமான தசைநார்கள் பழுதடைகின்றன; அவற்றுக்குப் பதில் போலியான கண்ணறை (Cells) உள்ள தசை (Abnormal Cellular Growth) வளர்கின்றது. முதலாம் உலகப் போரின்போது வெண்ணெயும் பாலுமின்றி வளர்ந்த இடென்மார்க் நாட்டுச் சிறுவருக்கு இந்நோய் காணப்பட்டது. உண வுடன் புதிய வெண்ணெய் சேர்க்கப்பட்டதும் இந்நோய் மறைந்துவிட்டது. ஏ உயிர்ச்சத்துச் சிறிது குறைவதினால் உடற்பலவீனம், சிறுநீரகம், ஈரலிற் கல் உண்டாதல். மாலைக்கண், மலடு முதலிய நோய்கள் உண்டாகும். இச் சத்து சரட் எனப்படும் மஞ்சள் முள்ளங்கிச் கிழங்கில் மஞ்சள் நிறத்தை உண் டாக்கும் கரட்டின் (Carotene) என்னும் இரசாயனப் பொருளோடு சம்பந்தப் பட்டது. பலவகைப் பச்சைக் காய்கறிகள், அபிரிகொட். தளிர்வகைகள். முட்டை வெண்ணெய், பால் பாலாடைக் கட்டி (Cheese) மாட்டீரல். சிறுநீரகங் களில் உண்டு. பி வைட்டமின் (B) இதில் பல சத்துக்கள் அடங்கியுள்ளன. பி வைட் டமின் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு ஐந்து, ஆறு என ஆறுவகைப்படும். வைட்டமின் பி: 1. தசைநார்கள் தொழிற்படுவதற்கு வேண்டியது. இது உடல் வளர்ச்சியை அதிகப்படுத்துகின்றது. உணவைச் சீரணிக்கச் செய்வ தற்கும், உணவில் விருப்பம் உண்டாக்குவதற்கும் உதவி புரிகின்றது; தொற்று நோய்களைத் தடுக்கின்றது. இது சிறிதும் இல்லாவிடில் பெரிபெரி என்னும் மரணத்தை விளைக்கும் நோய் உண்டாகின்றது. இந் நோய் கால் கைகளில் சோர்வாதத்தையும் இருதயக் கோளாறுகளையும் நரம்புத் தளர்ச்சியையும் குடலில் நீர்க்கொள்ளுதலாகிய துரொப்சி (Dropsy) என்னும் நோயையும் உண்டாக்குகிறது. தவிடு போக்கிய அரிசி உணவாகக் கொள்ளும் மக்க ளிடையே பரவும் இந்நோய் தவிடு போக்காத அரிசி உணவைக் கொடுப்ப தால் தடுக்கப்படுகின்றது. இந்நோய் பெரிதும் பரவியிருந்த பிலிப்பைன் தீவுகளில் பெரிபெரி வைத்திய சாலைகள் இப்பொழுது மூடப்பட்டுவிட்டன. பி.1 வைட்டமின் சத்து விதைகள், முழுத் தானியவகைகள், பயறு, முந்திரிகைப் பழம், கீரை, ஈரல் முட்டை ஆகிய உணவுகளில் உண்டு. பி.2 இது உடல் வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது. இது இல்லாமை யால் கழுத்தில் வெடிப்பு உண்டாவதாகிய பிளவை நோய் (Pellagra) உண்டாகிறது; சிறுவர் மெதுவாக வளர்கின்றனர். அவர்களின் தசைநார்கள் நன்கு தொழிற் படமாட்டா. இவ்வுயிர்ச்சத்து இலைவகைகள். ஈரல் , சிறுநீரகம், முட்டை, இறைச்சி முதலிய உணவுகளில் உண்டு. மற்றைய பி வைட்ட மின்கள் நன்றாக ஆராயப்படவில்லை. இவற்றுள் ஒன்று சிவப்பு இரத்தத்தி லுள்ள செங்கூடுகளை ஒழுங்காக உண்டாக்குவதிலும். உடல்வெளிறும் சோகை நோயைத் (Anaemia) தடுப்பதிலும் உதவி புரிகின்றது. வைட்டமின் சி (C) எலும்புகளையும் பற்களையும் உறுதிப் படுத்திக் காக்கின்றது; இரத்த ஆசயங்களின் சுகத்தைக் காப்பாற்றுகின்றது; நோய்க்கிருமிகள் தொடர்பான தொற்றுநோய்களைத் தடுக்கிறது. இது குறை வதால் பொதுவான பலவீனம், தலையிடி, காயங்கள் மெதுவாக ஆறுதல், சந்துநோய் அல்லது உளைவு உண்டாதல் முதலியன நிகழும். இது முற்று மில்லாவிடில் சொறிகரப்பன் (Scurvy) நோய் உண்டாகிறது. இந்நோய் இரத்தத் திரட்சி. பலவீனம். வெளுவெளுப்பு, மனச்சோர்வு. மயக்கம் முதலியவற்றைக் கொடுக்கும் வைட்டமின் சி என்னும் உயிர்ச்சத்து தோடம்பழம் (ஆரேஞ்சுப் பழம்) எலுமிச்சம்பழம் கீரை முதலியவற்றிலுண்டு; தாவர வற்றல்களில் இது காணப்படமாட்டாது. வைட்டமின் டி(D) சில சமயங்களில் இது வெயில் வைட்டமின் என்றும் சொல்லப்படும். இது உடலிலே சூரிய ஒளியினாலுண்டாகும் ஒரு வகைக் கொழுப்புப் பொருள். உயிருள்ள சடப்பொருள்களில் வெளி ஊதா (Ultraviolet) ஒளிக்கதிர்கள் படுதலால் டி வைட்டமின் உண்டாகின்றது. இவ் வுயிர்ச்சத்து இல்லாமையால் மலட்டுத் தன்மையும், ஆண்களுக்கு ஆண் தன்மை இல்லாமையும், பெண்களுக்குப் பெண் தன்மை இல்லாமையும் உண்டாகிறது. சல்லாத்துக் கீரை (Lettuce) இஸ்பைனாக் (Sinach) கீரை வேர்க்கடலை பால், முட்டை, இறைச்சி முதலியவற்றில் இச்சத்து உண்டு. ஈ வைட்டமின் (E) ஆண் பெண் என்னும் இரு பாலாருக்கும் சந்ததி விருத்திக்கு வேண்டியது. இலைகள் பருப்புகளுள் இருக்கும் முளை, கோதுமை முளை, எண்ணெய் முதலியவற்றில் இது உண்டு. மக்களுள் மலடு காணப்படுவதற்கு முக்கிய காரணம் ஈ வைட்டமின் இல்லாமையாகும். வைட்டமின் கே (K) தாவர இலைகளிற் காணப்படுகிறது. இது இல்லா மையால் குழந்தைகளுக்கு இரத்தக்குழாய் சம்பந்தமான நோய் உண்டா கிறது; வளர்ந்தவர்களுக்கு மயிர் உதிர்தல் போன்ற தோல் சம்பந்தமான நோய் உண்டாகிறது. வைட்டமின் பி (P) இல்லாமையால் சொறிகரப்பன், தோல், முரசுகளில் இரத்தம் வடிதல், கைவிரல் நகங்கள் வெடித்தல் முதலிய நோய்கள் உண்டாகிறது. 16. உயிர்களின் வியப்புமிக்க தற்காப்பு முறைகள் ஆதியில் உயிர்கள் பெருகிப் பருமையடைந்த காலத்தில் தமது மெதுவான உடலை அபாயமின்றி எப்படிக் காப்பதென்றும். அதற்குப் போதுமான பாதுகாப்பளிப்பது எப்படியென்றும் அவை அறியாதிருந்தன. முதற்றோன்றிய உயிர்களுக்கு வயிரமான பகுதிகள் ஒன்றேனுமில்லாதிருந் திருக்கலாம். எல்லா உயிர்களும் தாவர உணவளவில் திருப்தியடைந்த காலத்தில் அவற்றுக்கு உடலில் வயிரமான பகுதிகள் வேண்டப்படவில்லை. காலம் செல்லச் செல்ல அவற்றுட் சில ஊன் உணவை விரும்பின அப்பொழுது அவை கவசம் தாங்கத் தொடங்கின. அக் காலம் முதல் கவசம் தாங்கும் போட்டி நடைபெறுகின்றது. பாறைகளில் பழங்கால உயிர்களின் கற்படி உருவங்கள் காணப்படுகின்றன. நூறுகோடி அல்லது அதிகப்பட்ட ஆண்டுகளின் முன் பல உயிர்கள் சுண்ணாம்பையும் மணலையும் கடல் நீரிலிருந்து இழுத்து அவற்றால் தமது பாதுகாப்புக்கு வேண்டிய ஓடுகளை ஆக்கிக் கொண்டன. இவ்வாறு செய்யும் வழக்கம் வியப்பான பெறுபேற்றை அளித்தது. அவை தம்மைப் பாதுகாக்கும் கவசங்களை அமைத்துக்கொண்டதோடு பிற் காலத்தில் பொருத்துள்ள எலும்புகளையும் உண்டாக்கிக்கொண்டன. இவ் வகை அமைப்பு இல்லாவிடில் நிலத்தில் அல்லது ஆகாயத்தில் விரைவில் இயங்குவது முடியாது. தாவரங்களின் எலும்புபோன்ற பகுதி பலத்தையும் எதிர்த்து நிற்கும் ஆற்றலையும் கொடுக்கின்றது. அவற்றுக்குப் பொருத் துக்கள் இல்லை. மிகச் சிறிய உயிர்களே நீரிலசைந்து திரிந்து உணவைப் பெற வேண்டியிருக்கின்றது. புல்வகைகளுட் பல தம்மைப் பலப்படுத்துவதற்குத் தண்டுகளில் மணலைச் சேர்த்து வைக்கின்றன. நன்றாக வளர்ந்த ஒரு கோதுமை வைக்கோலைப் பொட்டாசு உப்போடு கலந்து உருக்கினால் அதில் ஒரு கண்ணாடிக் குமிழ் உண்டாகக் கூடிய மணல் உண்டு. மரங்கள், செடிகளின் உட்பகுதிகளில் செலுலோசு என்னும் பொருள் காணப்படுகின்றது. இப்பொருளைத் தாவரங்களே உண்டாக்கிக்கொள்கின்றன. உடல் முழுவதையும் ஓட்டினால் மூடிக்கொள்ளும் உபாயம் தென் னமெரிக்காவில் வாழ்ந்து மறைந்துபோன ஆர்மடிலோ என்னும் அழுங் கினால் கையாளப்பட்டதெனத் தெரிகின்றது. அதன் ஓடுகள் செதில்கள் போலத் தோலின் மீதிருந்தன. அபாயத்தை அறிந்ததும் அது கவசமிட்ட பந்துபோலச் சுருண்டு கிடந்தது. முற்காலத்தில் அவ்வழுங்கில் மிகப்பெரிய பல இனங்கள் வாழ்ந்தன. கிளிப்தோடன் (Glyptodon) என்னும் விலங்கின் நீளம் பன்னிரண்டடி. இதற்கு இனமுள்ள சிலமிடோதிரே (Chlamydothere) இதனிலும் பருமையுடைய தாயும் இக்காலக் காண்டாமிருக மளவினதாயுமிருந்தது. இது தனது முதுகில் முகடுபோன்ற பெரிய ஓடுகளைக் கொண்டு திரிந்தது. அவ்வாறிருந்தும் அது மிக முற்காலத்தில் மறைந்து போயிற்று. அது மறைந்து போனமைக்குக் காரணம் யாதென அறியமுடியவில்லை. அது சுமந்துகொண்டு திரிய வேண்டி யிருந்த பளுவுள்ள ஓடுகளின் பாரத்தினால் சிறிது சிறிதாகப் பலம் குன்றி யிருக்கலாம். இறுதியில் வாழ்ந்தது நோயினால் சடுதியில் மாண்டிருக்கலாம். அழுங்குகளையும் அவற்றின் முன்னதுகளையும் விடக் கடலாமை யும் நில ஆமையும் கவசம் தாங்கிய உயிர்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு களாகும். அவற்றின் ஓடுகளிற் சில பகுதிகள் முதுகெலும்பு விலா எலும்பு களின் வளர்ச்சியாகும்; சில தோலிலிருந்து வளர்வனவாகும். ஓட்டின் வெளிப்பாகம் கொம்புபோன்ற பொருளாலமைந்தது. அதன் ஓரங்களிலுள்ள பகுதிகள் எலும்பிலிருந்து தொடங்கிவரும் ஓடு போன்றதல்ல, ஆமைகளுக்கு எலும்பிலிருந்து வளர்ந்துவரும் ஓடு, வெளித் தோலிலிருந்து வரும் ஓடு என இரண்டு உண்டு. கடலாமைகளும் முதலைகளும் பழைய ஒரே முன்னதிலிருந்து தோன்றின என்று தெரிகிறது. இவற்றின் பழுதடையக் கூடிய உறுப்புகளின் மேல் கொம்புபோன்று வயிரமான முளைகளுள்ள தோலும் அதன்கீழ் நன்கு வளர்ச்சியடைந்த எலும்புப்படையும் காணப்படுகின்றன. கடலாமை அங்குமிங்குமாகச் சிதறியிருந்த ஓட்டை வளரச் செய்து பெட்டிபோன்ற கவசத்தைச் செய்துகொண்டு தலையையும் வெளியுறுப்புகளையும் உள்ளே இழுத்துக்கொண்டு எதிரிக்கு அகப்படாமல் கிடக்கின்றது. வியப்பான அழுங்குகளுக்கு மேலே மூடிக்கொள்ளும் செதில்கள் போன்ற கவசமுண்டு. கைவிரலின் நகம் போன்ற செதில்கள் வீடுவேயும் ஓடுகள் போல ஒழுங்குபட்டுக் கிடக்கின்றன. நண்டினங்களும் கவசமணிந் துள்ளன. நண்டுகள் பெட்டிபோன்ற கவசத்தைத் தமது பாதுகாப்புக்கு நம்பி யிருக்கின்றன. ஓய்ந்திருக்கும் போது தமது கால்களை உடலின் கீழ் மடித்து வைத்துக்கொள்கின்றன. அப்பொழுது அவற்றின் தோற்றம் தண்ணீரரித்த கூழாங்கற்கள் போன்றது. ‘கொட்” போன்ற சில பெரிய மீன்கள் நண்டை முழுமையாக விழுங்குகின்றன. அவ்வகை எதிரிகளினின்று தப்புவதற்கு கூழாங்கல் போன்ற கவசம் பாதுகாப்பளியாது; கல்போன்ற தோற்றம் பாது காப்பளிக்கும். நத்தைகள் போன்ற உயிர்களும் பெட்டிகள் போன்ற கவசத்தைத் தமது பாதுகாப்புக்குப் பயன்படுத்துகின்றன. பெட்டிபோன்ற கவசத்துக்குச் சிப்பி எடுத்துக்காட்டாகும். அதன் இரண்டு ஓடுகளும் தசைநாரினால் பிணிக்கப்பட்டுள்ளன. விரிந்து கிடக்கும் அவ்விரண்டு ஓடுகளினிடையே ஒருவர் காலை வைக்க நேர்ந்தால் கடற்பெருக்கு வந்து அவரை மூழ்கச் செய்யும் வரையில் அவை இறுகப்பிடிக்கின்றன என்னும் கற்பனைக் கதைகள் வழங்குகின்றன. இக்கதைகள் உண்மையை அடிப்படையாக உடையனவோ என்பது ஐயத்துக்குரியது. பெரிய சிப்பிகள் இவ்வகைச் செயலைப் புரியக் கூடிய வலிமையுடையன என்பது உண்மையே. இரண்டு ஓடுகளுடைய பெரிய சிப்பிகள் உள்ளன. இவற்றுள் மிகப்பெரியது மூன்றடி நீளமும் 500 இறாத்தல் எடையுமுடையதாகக் காணப்பட்டது. ஓர் ஓடுள்ள சிப்பிகளின் ஓடுகளில் முள்போன்ற கூரிய முனைகள் காணப்படுகின்றன. இதனைக் கடல் முள்ளெலி என்று கூறலாம். நத்தைகள் தமது பின்புறத்தில் வட்டமுள்ள ஒரு வயிரப் பொருளைக்கொண்டு திரிகின்றன. இது ஓட்டின் வாயை மூடக்கூடிய அளவினது. எதையேனும் கண்டு பயப்படும்போது நத்தை ஓட்டினுள் சுருங்கிக்கொள்கிறது. ஓட்டின் துவாரம் தானே அடைபட்டு விடுகிறது. மூடியைத் திறக்க எவ்வளவு முயலப் படுகின்றதோ அவ்வளவுக்கு அது உள்ளுக்கு இழுக்கப்படுகிறது. ஒரு நத்தையை உண்ணவேண்டுமாயின் அதன் ஓட்டை உடைக்கவேண்டும் அல்லது அதனை முழுமையாக விழுங்கவேண்டும். மிகப்பெரிய மீன்களும் அதனை விழுங்கத் தயங்கும். சிப்பிகளிடம் தம்மைப் பாதுகாக்கும் இன்னொரு உபாயமுண்டு. அது பாறையைப் பிடித்திருக்கும் பிடியை விடுவித்தல் முடியாது. பறித்தெடுக்கில் சிப்பியைக் காயப்படுத்த வேண்டும். அதன் பிடியின் வலு அறுபத்திரண்டு றாத்தல் எடையளவு என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது ஒரு சிப்பியின் எடையிலும் பார்க்க 1984 மடங்கு அதிகம். சிப்பி ஓரிடத்தில் தங்கியிருக்கின்றது என்று நினைத்தல் கூடாது. அது உணவைத் தேடிப் பாறைகளில் ஊர்ந்து திரிகின்றது. அதனுணவு பலவகைத் தாவரங்களாகும். கடலில் வற்று உண்டாகும்போது வளர்க்கும் புறா தனது கூட்டை அடைவது போல் அதுதான் இருப்பதற்குத் தெரிந்துள்ள இடத்துக்குச் செல் கின்றது. அது நீண்டகாலம் ஓரிடத்திலிருப்பதால் பாறையில் சிறிய பள்ள முண்டாகின்றது. இப் பள்ளத்துக்குள் அது ஊர்ந்து சென்று பாறையைப் பற்றிக்கொண்டு கிடக்கிறது. பாறைகளையும் மரங்களையும் துளைக்கும் நத்தைவகைகளுமுண்டு. பாறைகளைத் துளைக்கும் நத்தை வெண்ணிறமுடையது. இது இளமை முதல் பாறையைச் சிறிது சிறிதாகத் துளைத்து உள்ளே செல்கின்றது. தனது பாதம் போன்ற பகுதியை இடைவிடாதழுத்தியும், ஓட்டைத் துவாரத்தின் பக்கங்களில் உரைஞ்சியும் அது துளைக்கிறது. சிறிது சிறிதாக வளர்ச்சி யடைந்து கொண்டிருக்கும் காலத்தில் நத்தை பாறைக்குள் சென்று விடு கிறது. அது வளர்ந்ததும் துளையின் மேற்பாகத்தின் வெளி கீழ்ப்பாகத்தை விடச் சிறிதாகவிருப்பதால் அது அவ்வறையிலேயே மறியற் படுத்தப்படு கின்றது. அதனால் அது எதிரிகளுக்கு இரையாகாமற் பிழைக்கிறது. இதற்கு இனமுள்ள இன்னொரு நத்தை உண்டு. இது கப்பற்புழு (Shipworm) எனப்படும். இது நீருள் அமிழ்ந்திக்கிடக்கும் மரத்தைத் துளைக் கின்றது. இரும்புக் கப்பல்கள் செய்யப்படுவதன் முன் உலகில் எல்லாக் கப்பல் களும் இந் நத்தைகளுக்கு அஞ்சின. அது கனத்த கருவாலி மரத்துண்டு களையும் சிறிது நேரத்தில் துளைத்துவிடும் ஆற்றல் வாய்ந்தது. மரக்கலங் களின் கீழ்ப்புறத்தே செம்புத் தகடுகள் இடப்பட்டபோது இதனால் அவற் றுக்குக் கெடுதி செய்யமுடியவில்லை. ஒல்லாந்து நாட்டில் அணைக்கட்டுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள மரங்களை அது துளைத்து விடுதலால் பலமுறை களில் வெள்ளம் உள்ளே பெருகுவதுண்டு. மண்ணைத் துளைத்துக்கொண்டு உள்ளே இருக்கும் மண்புழுக் களைப் பற்றிச் சில கூறுவோம். புற்றுகளின் வாய்களிற் காணப்படும் சிறு கும்பம் மண்ணைக்கொண்டு அங்கு மண்புழு இருக்கிறதென அறியலாம். புற்றுகளைப் பாரையால் கிண்டினாலல்லது புழுக்களைக் காண்பதரிது. புற்றுள் வால் கிடக்கும்படி அவை நிலத்தில் நிமிர்ந்து கிடப்பதை நாம் இராக் காலத்திற் காணலாம். அவை புற்றைத் தோண்டும்போது மண்ணை இடை விடாது விழுங்கி மறுபுறத்தால் அதனை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும். அவ்வாறு செய்யும்போது அவை அதிலுள்ள உணவுச் சத்தை வாங்கிகொள் கின்றன. அவை அழுகும் இலைகளைப் புற்றினுள் இழுத்துச்சென்று உணவாகச் சேமித்து வைக்கின்றன. அவை கீழே இருக்கும் மண்ணை மேலே கொண்டுவந்து காற்றுப் படும்படி செய்து நிலத்தைச் செழிப்படையச் செய்யும் பயனுடைய வேலை புரிகின்றன. மண் புழுக்களால் பயிர்ச்சி செய்கைக்கு உண்டாகும் வாய்ப்பு களைப் பற்றி இடார்வின் எடுத்துக் காட்டியுள்ளார். ஒரு ஏக்கர் நிலத்தில் சராசரி 50,000 மண்புழுக்கள் வாழ்கின்றனவென்றும். அவை ஒரு ஆண்டில் மேலே கொண்டு வரும் மண் 28 தொன் அளவினதென்றும் அவர் கணக்கிட்டுக் கூறியுள்ளார். ஒவ்வொரு புழுவும் தனித்தனி இருபது அவுன்சு எடை மண்ணை வெளியே கொண்டுவருகிறது. ஆஸ்திரேலியாவில் கிப்ஸ்லாந்து என்னுமிடத்தில் எட்டடி நீள முள்ள மண் புழுக்கள் காணப்படுகின்றன. கோடை காலத்தில் அவை பூமியைத் துளைத்துக்கொண்டு ஆழச் செல்கின்றன. மாரி காலத்தில் அவை நிலத்தை ஆழத் துளைத்துக்கொண்டு கீழே செல்கின்றன. மாரிகாலத்தில் அவை தரை மட்டத்துக்கு அண்மையிலிருக்கின்றன. இங்கிலாந்திலே திறசு (Thrush) என்னும் பறவை கண்ணுக்குப் புலப்படாமல் நிலத்துள்ளிருக்கும் மண்புழு எப்பொழுது வெளியே வருமென்று ஓசையினாலறியும். அவ்வொசை நமது காதுக்குக் கேட்கமாட்டாது. மண்புழுக்களுக்கு இன்னொரு பகை ஒரு வகை எலி. இது மண்ணை அதிக விரைவில் துளைத்துக்கொண்டு செல்லும். அகழான் குறிக்கப்பட்ட நேரத்தில் வேலை செய்து குறிக்கப்பட்ட நேரத்தில் ஓய்ந்திருக்கின்றதென பிராணிகளைப் பற்றி ஆராயும் அறிஞர் கூறுவர். நிலத்தைத் துளைக்கும் எலி காலை 7 மணி, 11 மணி, மாலை 3 மணி என்னும் நேரங்களில் சுறுசுறுப் பாக வேலை செய்கின்றது. அது ஆண்டின் பெரும்பகுதிக் காலத்தில் நிலப் புழுக்களையும் பூச்சிகளையும் தேடி நிலத்தை அங்குமிங்கும் துளைத்துக் கொண்டு செல்கின்றது. மரங்களின் உட்பகுதி வளையங்களாக வளர்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பட்டைக்குக் கீழ் அடிமரத்தின் ஒவ்வொரு வளையம் வளர்கிறது. மரத்தைத் தறித்தால் இவ்வரைகளைக்கொண்டு மரத்தின் வயதை அறியலாம். கலிபோர்னியாவில் தறிக்கப்பட்ட சில மரங்களின் வயது 3000 வரையில் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அங்கு 5000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வயதுடைய மரங்களும் காணப்படுகின்றன. 17. ஓடும் உயிர் ஆறு மனித இரத்தத்தில் பலவகை அணு உயிர்கள் இருக்கின்றன. இவை நமது உடலுக்கு நன்மைபயக்கும் தொழில்கள் புரிந்துவருகின்றன. இவையின்றி நாம் உயிர்வாழ முடியாது. ஒரு கன அங்குல மனித இரத்தித்தில் 82,000,000,000 செங்கூடுகளும், 16,400,000,000 வெண்கூடுகளும், 13,000,000 தகட்டு வடிவான கூடுகளும் வேறு சில பொருள்களுமுள்ளன. நமது உடல் நலம் பெற்றிருப்பதற்கு இவையெல்லாம் இன்றியமையாதன. இவை வியப்பளிப்பனவாயினும் மிக மறைவாகயிருக்கின்றன. கோடிக்கணக்கான இவ்வணு உயிர்களெல்லாம் யாது செய்கின்றன என்றும் இவை உடலை எவ்வாறு பல மடையச் செய்கின்றனவென்றும் நீவிர் சிந்தித்ததுண்டா? தொடக்கத்தில் இரத்தத்தில் நீர்ப்பகுதி உள்ளது. நாம் நினைப்பது போல அதன் நிறம் சிவப்பு அன்று; அது நிறமில்லாத ஒரு பொருள். இரத்தம் சிவப்பாகத் தோன்றுவது அதில் சிவப்புக் கூடுகள் இருப்பதனாலாகும். நமது உடலில் கோடிக்கணக்கான செங்கூடுகள் இருக்கின்றனவென்று கூறினோம். அவை மிருதுவாகவும், வளையக்கூடியனவாகவும் இருக்கும். அவற்றின் குறுக்களவு மூவாயிரத்திலொரு அங்குலம். தடிப்பு ஒன்பதினாயிரத்திலொரு அங்குலம். இம் மிகச் சிறிய கூடுகள் இல்லாவிடில் நாம் உயிர் வாழ முடியாது. நமது சுகவாழ்வுக்குப் பிராண வாயு எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அறிவோம். பிராணவாயு இன்றி நாம் உயிர் வாழமுடியாது. சுவாசிக்கும் போது நாம் காற்றை நுரையீரலுக்குள் இழுக்கிறோம். உயிர் கொடுக்கும் இவ்வாயு நமது நுரையீரல் ஒன்றுக்கு மாத்திரம் வேண்டியதன்று. நாம் உடல் நலத்தோடு வாழவேண்டுமாயின் நமது உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் பிராண வாயு செல்லுதல் வேண்டும். நுரையீரலிலிருந்து பிராணவாயு மறு பகுதிகளுக்குச் செல்வது எப்படி? அது இச் செங்கூடுகள் வழியாகச் செல்கின்றது. இவ்வணு உயிர்கள் நமது நுரையீரலுக்கூடாகச் செல்லும்போது ஒவ்வொன்றும் சிறிது பிராணவாயுவை உறிஞ்சுகின்றது. நாம் உள்ளே இழுக்கும் பிராணவாயு இவ்வாறு செங்கூடுகள் வழியாக நமது உடல் முழுமைக்கும் செல்கின்றது. இச் செங்கூடுகளின் விரைந்து பெருகக் கூடிய தன்மை மிக வியப்புக் குரியது. உடலில் வழக்கமாகவுள்ள 12,000,000,000,000 செங்கூடுகளிருக்கும் போது ஒருவன் மலை மீது ஏறுகிறான் என வைத்துக்கொள்வோம். அவன் மலைஉச்சியை அடையும்போது அவனது இரத்தத்தில் 18,000,000,000,000 செங்கூடுகள் இருக்கலாம். இப்பொழுது முன்னிருந்த எண்ணில் ஒரு பாதி அதிகரித்துள்ளது. மலை உயரமாகவிருந்தால் அவன் சென்று கொண்டிருப் பதற்கு இவை தேவைப்படும். ஏன்? அவன் எவ்வளவு தூரம் கடல் மட்டத் துக்குமேல் ஏறுகிறானோ அவ்வளவுக்குக் காற்றிலுள்ள பிராணவாயு குறை கிறது. ஆகவே அவன் சென்று கொண்டிருக்க வேண்டுமானால் அவன் உள்ளே இழுத்துச் சுவாசிக்கும் எல்லாக் காற்றும் பயன்படுத்தப்படுதல் வேண்டும். அதற்கேற்ப அவன் மேலே செல்லச்செல்ல இச்செங்கூடுகளும் பெருகிப் பிராணவாயுவில் எவ்வளவும் பயனின்றிக் கழியாதபடி அதனை பயன்படுத்துகின்றன. இச் செங்கூடுகள் எலும்பினுள் இருக்கும் நிணத்திலிருந்து உண்டா கின்றன என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஒவ்வொரு செங்கூடும் சிவப்பு நிறப்பொருள்கலந்த புரதத்தினால் ஆனது. கூடுகளின் சிவப்புநிறமூட்டும் பொருளே பிராணவாயுவை உறிஞ்சி உடல் முழுமைக்கும் கொண்டு செல்கின்றது. செங்கூடுகள் எப்படி நமது உயிர்வாழ்க்கைக்கு வேண்டப்படு கின்றனவோ அவ்வளவுக்கு வெண்கூடுகளும் வேண்டப்படுகின்றன. இரத் தத்தில் வெண்கூடுகளும் காணப்படுகின்றன. இவை செங்கூடுகளிலும் பார்க் கப்பெரியவை; ஒரு அங்குலத்தில் 2500இல் ஒரு பகுதி குறுக்களவுடை யவை; குறிக்கப்பட்ட ஒரே வடிவினவல்ல; இவை இல்லாவிடின் நாம் நோய் வாய்ப்பட்டு இறந்துவிடுவோம். வெண்கூடுகள் நமது உடலில் புகும் அழுக்கை அகற்றுவனவும், நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போர்புரிவனவும் ஆகும். நமக்குத் தொற்று நோய் கண்டு நோய்க்கிருமிகள் இரத்தத்துள் புகுந்தால் வெண்கூடுகள் உடனே பாய்ந்து அவற்றை உண்டுவிடும். நாம் நகத்தைத் துருவேறிய இரும்பினால் கிழித்துக்கொண்டால் நஞ்சு உள்ளே செல்கின்றது. அப்பொழுது இரத்தத்தி லுள்ள வெண்கூடுகள் நம்மைக் காக்கும். அவை உடனே காயம் பட்ட இடத் துக்கு விரைந்து வந்து நச்சுக் கிருமிகளை விழுங்கிப் பழுதடைந்த தசை நார்களையும் உண்டுவிடும். காயம் மாறிக் குணமடையும் வரையிலும். நச்சுக் கிருமிகள் எல்லாம் நாசமடையும் வரையிலும் அவை தமது எதிர்ப்பை நிறுத்த மாட்டா. இவ் வெண்கூடுகள் கடிய நோயை எதிர்க்கும் பொருட்டுச் செங்கூடு களைப் போன்று அதிகம் பெருகுதலும் கூடும். நமது இரத்தத்திலுள்ள இவ் வெண்கூடுகளே தமது போராட்டங்களில் வழக்கமாக வெற்றியடைகின்றன. சில சமயங்களில் படை எடுத்துவரும் நோய்க்கிருமிகள் வெற்றியடைவது முண்டு. அப்பொழுது நாம் நோய்வாய்ப்படுகின்றோம். மூன்றாவதாக உள்ள வியப்பு இரத்தத்திலுள்ள தகடுபோன்ற பொருள்கள். அவை மிகச் சிறிய உருவின. ஆகவே அவற்றைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை. அவை தட்டை அல்லது வளைந்த வடிவின. அவை நமது இரத்த ஆசயங்களின் நலத்தைப் பேணுகின்றன. இரத்த ஆசயத்தின் சுவர் காயப்பட்டால் இச் சிறுதட்டை வடிவங்கள் உடனே காயமடைந்த இடத்தில் குவிகின்றன. அவை அவ்விடத்தில் கட்டியாகத் திரண்டு காயத்தை அடைத்து இரத்தாசயங்களிலிருந்து இரத்தம் வெளியே பெருகி நாம் இறந்து போகாதபடி காக்கின்றன. இவை நமது இரத்த ஆசயங்களுக்கு என்ன நன்மை செய்கின் றனவோ அவ்வாறே உறையுந் தன்மையுள்ள இன்னொரு பொருள் நமது மேற்புறத் தசைக்கும் செல்கின்றது. இப்பொருள் இல்லாவிடில் நாம் உடலில் வெட்டும்போது இரத்தமெல்லாம் வெளியே பெருகி ஓடிவிடநாம் இறந்து போவோம். நாம் உடலில் வெட்டிக்கொண்டால் அல்லது சுரண்டிக்கொண்டால் முதலில் காயத்திலிருந்து இரத்தம் வடிகிறது; பின்னர் நின்று விடுகிறது. காயத்தின் மீது கறுப்புநிறக் கட்டி ஒன்று மூடி மேலும் இரத்தம் வடியாமல் தடுக்கின்றது. நாம் அக் கட்டியைத் தட்டிவிட்டால் காயத்திலிருந்து மறுபடி யும் இரத்தம் வடிகிறது. மறுபடியும் ஒரு கட்டி தோன்றி இரத்தத்தைத் தடை செய்கின்றது. நமது உடல் காயப்பட்டால் செங்கூடு, வெண்கூடு, இரத்தத்தை உறையச் செய்யும் பொருள் என்பன வெல்லாம் இரத்தத்தோடு வெளியே செல்கின்றன. இரத்தத்தை உறையச் செய்யும் பொருள் காற்றோடு சம்பந்தப் படும்போது நுண்ணிய தும்புகள் போன்று மாறுதலடைகின்றது. இவை ஒன் றோடு ஒன்று சேர்ந்து ஒட்டிக்கொண்டு வெண்கூடுகளையும் செங்கூடுகளை யும் வெளியே செல்லவிடாதபடி தடைசெய்து காயம் முழுமையிலும் பரவி நின்று இரத்தத்தை வெளியே செல்லாமல் தடுக்கின்றன. இயற்கை எவ்வாறு நம்மைப் பாதுகாத்து வருகின்றது என்று இப்பொழுது நமக்கு விளங்குகிற தல்லவா? 18. தங்கத்தின்கதை ஆபரணங்கள் அலங்காரங்கள் வகைகளில்லாது நாம் தங்கத்தைப் பாராமல் இருக்கலாம். இவையல்லாத தங்கம் எல்லாம் நிலவறைகளில் மறைத்து வைத்துப் போர்வீரரால் காவல் காக்கப்படுகின்றது. இவ்வாறு மறைந்து கிடந்து பகல் வெளிச்சத்தைக் காணாமல் இருக்கின்ற தங்கம் உலக சாதிகளின் உயிராக இருக்கின்றது. அது இல்லாவிடில் வாணிகம் அழிந்து போகும். உயிரில்லாத கெட்டியான ஓர் உலோகம் எப்படி மக்களிடையே மிகப் பெரிய அதிகாரத்தைச் செலுத்துகின்றது என்ற கேள்வி எழலாம். ஒருவரும் இதைப் பற்றி அறியாமல் இருக்கலாம். ஒரு பணக்காரன் அல்லது வங்கி நடத்துகின்றவன் இதற்கு மறுமொழி கூறலாம். அவனுடைய மறுமொழி பெரும்பாலும் தவறுடையதாக விருக்கும். பணப்புழக்கஞ் செய்வோரும் வங்கி முதலாளிகளும். வாழ்நாள் முழுவதும் தங்கத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர்களும் தங்கம் உலகில் ஏன் இவ்வளவு ஆட்சி செலுத்துகிறது என்னும் கேள்விக்கு விடை அளிக்கமாட்டாது தடுமாறுகின்றனர். தங்கம் ஒரு அரிய உலோகம். கண்டுபிடிக்கப்பட்ட காலம் முதல் அதனை மனிதன் விரும்புகிறான். எண்ணில்லாத காலம் அது மனிதனுடைய மனோகற்பனை யில் கவர்ச்சி அளித்தமையால் அவன் அதனை இல்லாது வாழ முடியாது என நாம் கூறலாம். தங்கத்தைப் பற்றிய வரலாற்றை எழுதுவதானால் அது ஒரு புத்தக மாக விரியும். தங்கம் அளவில்லாத மகிழ்ச்சியைத் தருவது. அது அளவில் லாத துன்பத்தையும் உலகுக்குக் கொடுக்கின்றது. மக்கள் துன்பத்தைப் பற்றி நினைப்பதில்லை; அது கொடுக்கும் மகிழ்ச்சியையும் அதிகாரத்தையும் பற்றியே நினைக்கிறார்கள். புதிய ஓரிடத்தில் தங்கம் கிடைக்குமானால் தாமும் தங்கத்தைப் பெறும் நம்பிக்கையோடு ஆயிரக்கணக்கான மக்கள் அவ்விடத்துக்குச் செல்கின்றனர். அவ்வாறு தங்கத்தைப் பெற மக்கள் விரைந்து செல்லும் செலவு தங்க ஓட்டம் (Gold rush) எனப்படும். இவ்வகை ஓட்டங்கள் சென்ற நூற்றாண்டில் நிகழ்ந்தன. அமெரிக்காவிலே கலிபோர்னியாவில் 1849ஆம் ஆண்டில் தங்க வயல் கண்டுபிடிக்கப்பட்டது. உலகில் எல்லாப் பகுதிகளிலிருந்தும் மக்கள் கலிபோர்னியாவுக்குச் சென்றனர். இங்கிலாந்து, ஐரோப்பா, ஆஸ்திரேலியா. சீனா முதலிய நாடுகளிலிருந்து பலர் சென்றனர். அமெரிக்காவில் ஆயிரக் கணக்கான ஆண்களும் பெண்களும் தமது சொத்துக்களை விற்றுவிட்டுக் கோவேறு கழுதைகளையும் கூடார வண்டிகளையும் பயன்படுத்திக்கொண்டு சென்றார்கள். பெண்கள். குழந்தைகள் சிறுவர் முதலிய எல்லோரும் வெயி லையும், குளிரையும் பெரிய மலைகள் ஆறுகள் மூர்க்கமான செவ்விந்தியர் முதலிய ஆபத்துக்களையும் பொருட்படுத்தாது தங்கத்தைப் பெறும் நோக்கத்தையே இலக்காகக் கொண்டு சென்றனர். இவ்வாறு சென்றவர்களில் எத்தனைபேர் தமது அபாயங்களுக்கும் துன்பங்களுக்கும் கைம்மாறாகத் தங்கத்தைப் பெற்றனர். இவ்வாறு சென்ற வருட் சிலருக்கே தங்கம் கிடைத்தது. இன்றும் கலிபோர்னியாவில் தங்கம் கிடைக்கின்றது. தங்கம் பெற்றுச் செல்வமடைந்தோர் சிறு தொகையினராவர். தங்கம் பெற்றுச் செல்வமடைந்த ஒவ்வொருவனுக்கும் நூற்றுக்கணக்கானோர் வாழ்க்கைக்குப் பற்றும் பற்றாது என்னும் அளவினதாகிய தங்கத்தையே பெற்றனர். அக் காலத்தில் ஆற்றின் கீழ்ப் படைகளிலும் சிறிது அகழப்பட்ட குழி களிலும் தங்கம் கிடைத்தது. நீரூற்றுக்களில் பருக்கைக் கற்களினிடையே தங்கப்பொடி கிடைத்தது. ஆகவே தங்கம் அரித்தெடுப்போர் முழங்கால் மறையும் நீரில் நின்று தினமும் பருக்கைக்கற்களை அலசினர். நாள் ஒன்றுக்கு இரண்டு வெள்ளி (டாலர்) பெறுமதியுள்ள தங்கம் ஈட்டியவன் அதிட்டசாலியாகக் கருதப்பட்டான். இதற்குப் பின் ஆஸ்திரேலியாவில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்த ஆண்டில் பலர் தங்கம் எடுப்பதற்கு அங்கு ஒடினர். இங்கும் அதிட்டம் பெற்றவர் மிகச் சிலரேயாவர்; அதிட்டம் பெறாதவர் பலர். அதிட்டம் பெற்றவர்களைப் பற்றிக் கேள்விப்படும்போது பொறமை அடையாது இருத்தல் முடியாது. ஒருவன் 2,280 அவுன்சு எடையுள்ள தங்கக் கட்டியை எடுத்தான். இன்னொருவனுக்கு 2217 அவுன்சு நிறையுள்ள தங்கக்கட்டி கிடைத்தது. ஒரு பாறையைத் தற்செயலாக உடைத்த போது அதனுள் 112 இறாத்தல் தங்கம் காணப்பட்டது. தங்கம் அரிக்கப்பட்ட முற் காலத்தில் இவை போன்ற வியப்பான பல தங்கக்கட்டிகள் எடுக்கப்பட்டன. பலாட் (Ballart) என்னும் சிறிய தங்க வயலில் ஆழமில்லாத குழி ஒன்றில் 1800 தங்க நாணயம் பெறுமதியான தங்கம் கிடைத்தது. இதே தங்கவயலில் பத்துப்பேர் சேர்ந்து செய்த ஒரு வார வேலை 10000 தங்க நாணயம் பெறுமதியுள்ள தங்கத்தை ஒருவாரத்தில் அளித்தது. இதற்குமுன் இங்கு வேறுசிலர் 12800 தங்க நாணயம் பெறுமதியுள்ள தங்கம் எடுத்தனர். இதற்குப்பின் இவ் வயல் இன்னொருவருக்குப் பெருந்தொகைக்கு விற்கப் பட்டது. அவருக்கு முறையே 14,400; 9,000; 5,000 தங்கநாணயம் பெறுமதி யான தங்கம் கிடைத்தது. இவ்வாறு சிலருக்கு அதிட்டம் கிட்டயமையின் இலட்சக்கணக்கானோர் தமக்கும் அதிட்டம் கிட்டுமென நம்பியது வியப்பன்று. இப்பொழுது இவ்வளவு வியக்கத்தக்க அளவில் தங்கம் கிடைப்ப தில்லை. இப்பொழுது உலகிலுள்ள எல்லாத் தங்க வயல்களிலும் கூட்டு வாணிக சங்கங்களால் தங்கம் அரிக்கும் தொழில் நடத்தப்படுகின்றது. இவ் வணிக சங்கத்தினர் தங்கம் அரிக்கும் சுரங்கங்கள் மிக ஆழச் செல்கின்றன. ஆண்டு ஒன்றில் 30,000,000 அவுன்சு தங்கம் எடுக்கப்படுகின்றது. இதன் விலை 200,000,000 தங்க நாணயம். இத் தங்கம் எல்லாம் என்ன ஆகின்றது? இது முழுவதும் நாணயங்களாக அடிக்கப்படுவதில்லை. இதில் ஒரு சிறு பகுதி ஆபரணஞ் செய்வோருக்கு விற்கப்படுகின்றது. ஆண்டுதோறும் எடுக் கப்படும் தங்கத்தின் பெரும்பகுதி பாளங்காளக்கப்பட்டுப் பல நாடுகளி லுள்ள 1வங்கிகளுக்கு விற்கப்படுகின்றது. அங்கே அப்பாளங்கள் காப்பும் உறுதியுமுள்ள அறைகளில் மறைத்து வைக்கப்படுகின்றன. அவற்றை மறுபடியும் மக்கள் காண்பது அரிது. இது ஒரு வியப்பான வாணிகமாகத் தோன்றுகின்றது. இன்று உலகில் மிகச் செழிப்புள்ள தங்கச் சுரங்கங்கங்கள் தென்னாப் பிரிக்காவிலே திரான்சுவாலில் உள்ளன. இங்கு தங்கம் 1885ல் கண்டுபிடிக்கப் பட்டது. தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது முதல் அங்கு 1,000,000,000 தங்க நாணயம் விலையுள்ள தங்கம் எடுக்கப்பட்டது. அங்கு இனித் தங்கம் இருக்க முடியாது என்று சிலர் நினைக்கலாம். இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழிந்தாலும் அங்கு முன்போல் தங்கம் கிடைக்கும். அங்கு ஆண்டுதோறும் 10,500,000 அவுன்சு அல்லது உலகத்தில் கிடைக்கும் தங்கத்தில் மூன்றில் ஒரு பகுதி தங்கம் கிடைக்கிறது. 1855இல் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து தங்கம் அரிக்கும் முறையில் மாறுதல் உண்டாயிற்று. முற்காலத்தில் சுரங்கவேலை செய்வோர் அகழ்ந்து நிலத்தின் கீழ் சென்று பொன் கலந்த மண்ணை அல்லது பாறைகளைக் குந்தாலியால் உடைத்து, கிணற்றிலிருந்து நீரள்ளுவதுபோல அவற்றைக் கூடையிலிட்டு மேலே எடுத்தனர். இவ்வாறு செய்யும் பொது வான முறை போதாதெனத் தெரிந்து பொறிவல்லார் (எஞ்சினியர்கள்) இயந் திரங்களினுதவியால் இரும்புக் கம்பிகளைக் செலுத்தி ஆழத் துளைத்துப் பொன்பாறைகள் கிடக்குமிடங்களை அறிந்து அவ்விடங்களில் சுரங்கம் தோண்டிப் பாறைகளை நொறுக்கி அவற்றை வெளியே எடுத்தனர். இன்று பொன் கிடைக்கும் பாறைகள் வெடிமருந்தினுதவியால் உடைக்கப்படுகின்றன. சுரங்கம் அகழ்வோர் துரப்பணத்தால் பாறைகளைத் துளையிட்டுத் துளைகளில் “டைனமைட்” என்னும் வெடிமருந்தை நிரப்புவர். அவர்கள் எட்டத்தில் சென்றபின் மருந்துக்கு நெருப்பு மூட்டப்படும். இவ்வாறு உடைக்கப்பட்ட பாறைத் துண்டுகள் வெளியே எடுக்கப்படு கின்றன. தங்கம் அளிக்கும் பாறை ஒரு அங்குலம் முதல் இருபதடிவரை கனமுடையதாக விருக்கும். ஒரு பாறையை உடைத்தபின் அதன் கீழுள்ள பாறையை உடைப்பதற்கு நிலத்தை அகழ வேண்டும். இவ்வாறு அகழப் பட்ட சுரங்கம் ஒன்றின் ஆழம் 7640 அடி.அல்லது ஒன்றரை மைல். தங்கம் அரித்தெடுப்பதில் பல முறைகள் கையாளப்படுகின்றன. பொன் தூள் உள்ள முதலியவற்றை வாயகன்ற இரும்பு மிடாக்களில் இட்டு மண் கழுவுண்டு போகும் வகையில் அரிப்பது ஒரு முறை. திரான்சுவால் சுரங்கங்களில் உடைக்கப்படும் தங்கப் பாறைகள் சிறு சிறு துண்டுகளாக்கப்பட்டு ஒருவகை இரசாயனப் பொருள் நிரப்பிய தேக்கங்களில் இடப்படுகின்றன. இரசாயனப் பொருள் தங்கத்தைக் கரைத் தெடுத்துவிடுகிறது. இத் தங்கம் பலவாறு சுத்தி செய்யப்பட்டபின் கட்டிகளாக அடிக்கப்படுகின்றது. தங்கம் மிகப் பாரமுள்ளதும் இலகுவில் வேலை செய்யக் கூடியதுமாகும். பொன்முலாம் பூசப் பயன்படுத்தப்படும் மிக மெல் லிய பொன்தாள்கள் சுத்தத் தங்கத்திலிருந்து கையினாலடித்துச் செய்யப் படுகின்றன. இரும்பும் உருக்கும் வயிரமுடையன வாயினும் அவை துரு ஏறி அழிந்துபோகும் இயல்பின. தங்கம் தேய்வின்றி எப்பொழுதும் ஒரே வகையாக விருக்கும். 19. தேயிலையின் கதை எல்லோரும் தேநீரை ஏன் குடிக்கிறார்கள்? எது எல்லாப்பானங் களிலும் மலிவானது? முந்நூறு ஆண்டுகளின் முன் இங்கிலாந்தில் ஒரு இறாத்தல் தேயிலையின் விலை பத்துத் தங்க நாணயமாக விருந்தது. தேயிலையின் வரலாறு இதற்கு 4,300 ஆண்டுகளின் முன் தொடங்குகின்றது. கி.மு. 2,737இல் சென்னக் என்னும் சீனச்சக்கரவர்த்தி வாழ்ந்தான். குடிக்கும் நீர் சூடாக்கப்படவேண்டுமென்றும். அல்லாவிடில் நோயுண்டாகு மென்றும் அவன் நம்பினான். பெரும்பாலும் அவனே நீரைக் கொதிக்க வைத்தான். நீரைக் கொதிக்க வைப்பதற்குக் காட்டுச்செடிகளின் சுள்ளிகளை வேலையாள் கொண்டு வந்தான். அச் சுள்ளிகளிலிருந்த சில இலைகள் கொதிக்க வைக்கப்பட்டிருந்த நீரில் விழுந்தன. இதனைச் சக்கரவர்த்தி அறிய வில்லை. அவன் சுடவைத்த நீரைக் குனிந்து மணந்து பார்த்தான். அதிலிருந்து இன்பகரமான ஒரு மணம் வந்தது. அவன் ஒரு கிண்ணத்தில் அந்நீரை எடுத்து அதனைக் குடிக்கும்படி வேலையாளிடம் கொடுத்தான். அதனைக் குடித்த வேலையாள் அந்நீர் மிக்க சுவையுடையதாயிருப்பதைச் சக்கர வர்த்தியிடம் கூறினான். இவ்வாறு சென்னக் என்னும் சீனச் சக்கரவர்த்தி தேயிலைப் பானத்தை முதலிற் கண்டறிந்தான் எனச் சீனருடைய பழங் கதைகள் கூறுகின்றன. தேயிலையை யார் முதலிற் கண்டறிந்தார்கள் என்பதைப் பற்றிப் பல நாடுகளில் பலவகைக் கதைகள் வழங்குகின்றன. இடிசர்மா என்னும் பௌத்த முனிவர் தேயிலையைக் கண்டறிந்தார் என இந்தியப் பழங்கதை கூறுகின்றது. அவர் தாம் மேலும் அதிக துறவித் தன்மையை அடைவ தற்குக் தாம் ஏழு ஆண்டுகள் நித்திரையின்றிப் புத்தசிலையை உற்றுப் பார்த்துக்கொண்டிருக்க விரதம் பூண்டார். நான்கு ஆண்டுகளாக அவர் அப்படியே செய்தார். பின்பு அவருக்கு நித்திரை வரத் தொடங்கிற்று. விழித் திருப்பதற்கு அவர் மிகப் பாடுபட்டார். பின்னர் அவர் பக்கத்தே வளர்ந்த காட்டுச் செடிகளின் இலைகளைப் பறித்து மென்றார். உடனே நித்திரை நீங்கி விட்டது. ஆகவே அவர் தனது விரதத்தை நித்திரையின்றி நிறைவேற்றினார். இந்திய பழங்கதையின்படி தேயிலை கண்டு அறியப்பட்டவகை இதுவாகும். தேயிலைக்கு நித்திரையை முறிக்கும் குணம் இருப்பதை எல்லாருமறிவர். தேநீர் முதன்முதல் சீனாவில் குடிக்கப்பட்டது. மேற்கு நாட்டவர் தேயிலையைப் பற்றி அறிவதற்குப் பல நூறுஆண்டுகளின் முன் அது கிழக்கு நாடுகளில் பயன்படுத்தப்பட்டது. 1579இல் கிரிஸ்தோபர் (Christopher Bourough) என்னும் பிரயாணி தேயிலையை முதல்முதல் ஐரோப்பாவுக்குக் கொண்டு சென்றான். அக் காலத்தில் தேயிலை பானவகையில்லலாமல் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது. அது எல்லா நோய்களுக்கும் மருந்தாகக் கொள்ளப்பட்டது. 1662இல் பெப்பிஸ் (Mr.Pepys) என்பார் எழுதிவைத்த நாட் குறிப்பில் வைத்தியர் ஒருவர் சொன்னபடி தனது மனைவி தடிமனுக்கு நல்ல மருந்தென்று தேயிலையை அவித்தாள் என்று எழுதப்பட்டுள்ளது. தேநீர் விரைவில் உல்லாசப் பானமாக மாறிற்று. தேயிலை அதிகம் கிடைத்தபோது ஒரு இறாத்தல் தேயிலையின் விலை பன்னிரண்டு சிலினாக விருந்தது. இன்று நாம் தேநீர் பருகுவது போல அது மாலையில் பருகப்பட வில்லை; இராச் சாப்பாட்டின்பின் குடிக்கப்பட்டது. இரவில் தேயிலை குடிப்பது மிக முக்கிய கருமமாகக் கருதப்பட்டது. செல்வர் தேயிலை ஊறிய நீரை ஊற்றிக் கொடுப்பதை மேற்பார்ப்பதற்குத் தேநீர் ஊறவிடும் சிற்றாள் களை வேலைக்கமர்த்தியிருந்தனர். தேயிலை, நோயைக் குணப்படுத்தும் என மக்கள் நம்பியிருந்ததுபோலவே அது நோயை விளைக்குமெனவும் பலர் கருதினர்.தேயிலையை உயர்ந்த வகுப்பினரல்லா தார் பயன் படுத்துதல் கூடாது என அரசாங்க சபையில் சட்டங்கொண்டு வரப் பிரபு ஒருவர் இங்கி லாந்தில் முயன்றார். அதற்கு அவர் கூறிய காரணம் சுறுசுறுப்புள்ள தொழி லாளிகளை அது சோம்பேறிகள் ஆக்கிவிடு மென்பதாகும். இன்று அளவாகவும் அதிகம் சாயம் இல்லாமலும் பருகப்படும் தேநீர் தீமை விளைக்குமெனக் கூறுதல் நகைப்புக்கிடமாகும். அது எல்லா நோய்களுக்கும் மருந்து அல்லது எல்லா நோய்களுக்கும் காரணம் என்று நினைப்பது அறிவின்மையாகும். இங்கிலாந்திலே ஒரு இறாத்தல் தேயிலை பன்னிரண்டு சிலினாக இருந்த காலத்தில் வறியவர் எப்படித் தேநீர் குடித்திருப்பர் என்று நினைப்பது நமக்கு வியப்பளிக்கும். அக் காலத்தில் அவர்கள் தேயிலை வாங்கவில்லை. பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வறியவர் முதல் எல்லார் வீடு களிலும் தேயிலை இருந்தது. வறியவர் அதிக விலை கொடுத்துத் தேயிலை வாங்க முடியவில்லையானால் அவர்களிடம் எப்படித் தேயிலை யிருந்தது என்னும் கேள்வி எழலாம். பலர் திருட்டுத்தனமாகத் தேயிலையை நாட்டுக் குள் கொண்டு வந்தமையால் தேயிலை கிடைத்தது. தேயிலை, புகையிலை, பட்டு, குடிவகை முதலிய பொருள்களை நாட்டுக்குள் கொண்டு வரும் பெண் களும். ஆண்களும் இருக்கின்றனர். துறைமுகங்களுக்கூடாக இவ்வகைப் பொருள்கள் கொண்டு வரப்பட்டால் தீர்வைப் பணம் செலுத்த வேண்டும். தீர்வையில்லாமல் உள்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டால் அவை மலிவாக விற்கப்படலாம். பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வாழ்ந்த மக்கள் இவ்வாறு தேயிலையைப் பெற்றார்கள். தேயிலையில் இரண்டு வகை உண்டு. ஒன்று சீனத் தேயிலை; மற்றது இந்தியத் தேயிலை. சீனா, இந்தியா, இலங்கை முதலியன தேயிலை பயிரிடப்படும் நாடுகள். நட்டு உண்டாக்கி மூன்று ஆண்டுகளின் பின் தேயிலைச் செடிகளின் இலைகள் கிள்ளி எடுக்கப்படுகின்றன. சீனாவில் ஆண்டில் மூன்று முறை தேயிலை கிள்ளி எடுக்கப்படும். இந்தியாவிலும், இலங்கையிலும் பதினைந்து நாட்களுக்கொருமுறை கிள்ளி எடுக்கப்படும். தேயிலைச் செடியிலிருந்து எல்லா இலைகளும் கிள்ளி எடுக்கப்படுகின்றன வென்று நினைத்தல் கூடாது. குருத்து இலைகள் மாத்திரம் கிள்ளி எடுக்கப் படுகின்றன. இவை பெரிய கொட்டில்களில் மரத்தட்டுகள் மீது காற்றில் உலர விடப்படுகின்றன. பின்னர் இவை உருளைகளினிடையில் இட்டு நசுக்கப் படுகின்றன. அப்பொழுது அவை சிறு சிறு துண்டுகளாக வெட்டப்படு கின்றன. இப்பொழுது உலராதிருந்த சிறிது ஈரமும் உலர்ந்து விடுகின்றது. பின்பு எல்லா இலைகளும் ஒன்றாகக் குவிக்கப்பட்டு அவியும் படி விடப் படுகின்றன. இப்பொழுது அவை கபில நிறமடைகின்றன. மறுபடியும் அவை உருளைக்களுக்கிடையில் இட்டு நெரிக்கப்பட்டு மரக்கரி நெருப் புக்கு மேல் இட்டுக் காய்ச்சப்படுகின்றன. இப்பொழுது தேயிலை அறைகளுள் கொட்டப்படுகிறது. பெண்கள் அவற்றைக் கிளறிச் சுத்தஞ் செய்து பல தரங்களாகப் பிரிக்கின்றனர். இன்னு மொருமுறை சூடு காட்டியபின் அவை கூடுகளிலிட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. 20. அசந்தாக் குகை ஓவியங்கள் அசந்தாக் குகை ஹைதராபாத்திலே இந்தியாரி மலைத் தொடரி லுள்ள குன்றுகளில் மறைவான பகுதியிலுள்ளது. அசந்தாக் குகைகள் மலையில் குடையப்பட்ட கோவில்களுக்கும் சுதை ஓவியங்களுக்கும் பேர் பெற்றவை. இங்கு இருபத்தெட்டுக் குகைகள் உள்ளன. இவற்றுட் சில மடங்கள் சில விகாரைகள் சில சைத்தியங்கள். குன்று களில் குடையப்பட்ட இவை குதிரை இலாடம் போன்று வளைவாக மலை ஓரமாகச் செல்கின்றன. இவை குடையப்பட்டு ஓவியம் தீட்டப்பட்ட காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரையிலாகும். இவை வெளியுலகத்துக்குத் தெரியாமல் பன்னிரண்டு நூற்றாண்டுகள் மறைந்து கிடந்தன; ஏறக்குறைய நூறு ஆண்டுகளின் முன் மறுபடியும் இக் கால உலகம் அறியும் படி இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அசந்தாக் குகை ஓவியங்கள் முதல் முதல் 1மேஜர் ஜில் என்பவரால் பிரதி செய்யப்பட்டு இலண்டன் பொருட்காட்சி ஒன்றுக்கு அனுப்பப்பட்டன. அவை அங்கு தற்செயலாக எரிந்துபோயின. பின்பு அரசாங்கம் குகை ஓவியங்களை மறுபடியும் பிரதிசெய்யும்படி பம்பாய் ஓவியக்கலைக் கலாசாலைத் தலைவராயிருந்த 2கிரிபித்ஸ் என்பவரைக் கேட்டுக்கொண்டது. பிரதிசெய்யப்பட்ட ஓவியங்களிற் பல மறுபடியும் இலண்டனில் எரிந்து போயின. கிரிபித்ஸ் மறுபடி அப் படங்களை வரைந்து பெரிய நூலாக அச் சிட்டு வெளியிட்டார். அசந்தாக்குகை ஓவியங்கள் வெளிவந்ததைப் பற்றிய செய்தி இதுவாகும். இனி அதன் பிற தன்மைகளைக் கூறுவோம். கிறித்து பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளின் முன் தக்கணமும் அதன் அயல் மாகாணங்களும் ஆந்திரர் ஆட்சியின் கீழிருந்தன. தெலிங்கானா மாகாணத்திலும், நிசாம் ஆட்சிக்குட்பட்டிருந்த நாட்டிலும், கோதாவரிக்கும் கிருட்டிணா ஆற்றிடைக்குறைக்குமிடையேயுள்ள சென்னை மாகாணத்தின் வடகிழக்குப் பகுதிகளிலும் வாழும் மக்கள் ஆந்திரர் வழியில் வந்தவர்க ளாவர். “ஆந்திரர், 100,000 காலாட்கள், 2.000 குதிரைகள், 100 யானைகள் அடங்கிய படை வகுப்புடையவும் கோட்டைகளாற் காக்கப்படுகின்றனவு மாகிய 30 பட்டினங்களை ஆள்கின்றனர்” என்று பிளினி கூறியுள்ளார். பௌத்த மதத்தைத் தழுவிய அயல் நாடுகளில் ஆந்திரநாடும் ஒன்று என்பது அசோக பட்டையங்களில் பொறிக்கப்பட்டுள்ளது. குலமுறையில் ஆந்திரர் ஆரியரல்லாத மக்களாவர். அவர்கள், இந்திய ஆதிக் குடிகளும் இரும்புக் காலத்தில் தக்கணத்தையும் தென்பகுதிகளையும் அடைந்த 1சித்திய மக்களும் கலந்தமையால் தோன்றியவர்களாவர் என்பது சில வரலாற்றாசியர் கருத்தாகும். பெரிய தனிக்கல் நிறுத்தி எடுக்கப்பட்ட பழைய சமாதிகளில் இரும்பு ஆயுதங்கள் காணப்படுகின்றன. அவர்கள் இரும்பைக் கறைபோக்கிப் பயன்படுத்தும் முறையை அறிந்திருந்தார்களென்பது தக்க ணத்தில் பல இடங்களிற் கண்டுபிடிக்கப்பட்ட பழைய இரும்புத் தொழிற் சாலைகளைக் கொண்டு நன்கு அறியலாகும். ஹைதராபாத்தில் மாஸ்கி, ஹத்தி, வண்டாலி முதலிய இடங்களில் பொன் அரிக்கப்பட்ட பழைய இடங்கள் காணப்படுகின்றன. பழைய சுரங்கமொன்று 600 அடி ஆழமுடையதாயிருந்த தென்று அறியப்படுகின்றது. இக்கால இயந்திர உதவிகளின்றி அக்கால மக்கள் இவ்வளவு ஆழத்திற்சென்று பொன்னரித்தார்களென்பது வியக்கத் தக்கதாக விருக்கின்றது. அவர்கள் உலோகங்களை அரித்துச் சுத்தஞ்செய்து அவற்றில் வேலை செய்தலில் மாத்திரமல்லாமல் உருவம் செதுக்குவதிலும் ஓவியந் தீட்டுவதிலும் திறமை அடைந்திருந்தார்கள் என்பது விளங்குகின்றது. அசந்தாவில் 10வது குகை ஓவியம் அரசன் ஒருவன் பரிசனங்களுடன் அரசமரத்தை வணங்கச் செல்வதைப்பற்றியது. கொடிகளால் அலங்கரிக்கப் பட்ட அரசமரம் புத்தரைக் குறிக்கின்றது. அதில் கூறப்பட்ட கருத்து சாதகக் கதை ஒன்றிலுள்ளது. அரசனின் முடிக்குமேல் எழுதப்பட்டுள்ள பட்டையம் பகவன்லால் இந்திரசியால் வாசிக்கப்பட்டுள்ளது. டாக்டர் 2உலூடேர்ஸ் கீழ் வருமாறு எழுதியுள்ளார்:- “10வது அசந்தாக் குகையில் எழுதப்பட்ட பட்டையத்தைச் சோதனை செய்தபின்பு அது கி.மு. இரண்டாம் நூற்றாண் டின் நடுப்பகுதியில் எழுதப்பட்டது என்னும் முடிவுக்கு வந்துள்ளேன்.” இவ்வெழுத்துப் பட்டையம் தக்கணத்தில் ஓவியக் கலையின் தொடக்க வளர்ச்சிகளை நாம் நிருணயிப்பதற்கு உதவிபுரிகின்றது. இப் பட்டையம் கி.மு. 2ஆம் நூற்றாண்டில் வரையப்பட்டதென உலூடேர்ஸ் கூறுவது உண்மையாயின் அக் காலத்தில் ஓவியம் தீட்டும் கலை மிக வளர்ச்சியுற்றிருந்ததெனக் கூறலாம். அரசனின் வடிவம் பல இடங்களில் வரையப்பட்டுள்ளது. ஓரிடத்தில் அரசனுடைய பரிவாரங்களாகிய கூட்டத் தினர் தண்டு, ஈட்டி, வாள் முதலியவற்றை வைத்திருக்கின்றனர். இடப்பக்கத் தில் அலங்கார உடை அணிந்து நிற்கும் வடிவம் ஒன்று பல இடங்களில் காணப்படுகின்றது. இவ் வடிவம் அரசனின் மெய்காப்பாளன் அல்லது கொடி பிடிப்பவனாகவிருக்கலாம். இன்னொரு இடத்தில் அரசன் ஒரு கூட்டம் பெண்களோடு அரசமரத்தின் முன் காணப்படுகின்றான். ஓவியத்தின் கலைத்திறமையை அறிவதற்கு இவ்வோவியம் துணைபுரிகின்றது. அரசன் அரசமரத்தைப் பார்த்துக்கொண்டு நின்று ஏதோ துதி சொல்லுகிறான். அவனுக்கு இடப்பக்கத்தே உள்ள ஐந்து பெண்கள் அரசனின் முகத்தைப் பயபத்தியோடு பார்த்துகொண்டு நிற்கிறார்கள். அரசமரத்துக்குக் கிட்ட ஒரு குழந்தையும் காணப்படுகின்றது. இக் குழந்தை சம்பந்தமான ஒரு நேர்த்திக் கடனை நிறைவேற்ற அரசன் இங்கு வந்திருக்கலாம். அரசனுக்குப் பின்னே நிற்கும் ஐந்து பெண்களும் அவனுடைய பரிவாரங்களாகலாம். அவர்களுள் ஒருத்தி குடைபிடிக்கிறாள். அவர்கள் பல திசைகளை நோக்கிப் பார்க்கி றார்கள். இப் பெண்களின் பார்வைகள் எல்லாம் ஒரே வகையினவல்ல. அவர்களின் தலையலங்காரம் அணிகலன்கள் முதலியன பலவகையாகக் காணப்படுகின்றன. அசந்தாக் குகைகளில் தீட்டப்பட்டுள்ள நிறங்கள் நிறமண்களாகும். நீலம் வடமேற்கு இந்தியாவினின்று கொண்டு வரப்பட்ட நிறமண் மூலம் கிடைத்தது. ஓவியங்கள் சமய சம்பந்தம் பெற்றனவாதலின் ஓவியர் தமது முழுத்திறமையையும் இவ்வோவியங்களிற் காட்டியிருக்கின்றனர். இவ்வோவியங்களைத் தீட்டினோர் பௌத்தபிக்குகள் என்னும் கருத்தும் நிலவுகின்றது. இவ் வோவியங்கள் மூலம் இரண்டாயிரமாண்டுகளின் முன் வாழ்ந்த இந்திய மக்களின் உடை, அணிகலன்கள் பொழுது போக்குகள், வாழ்க்கை முறைகள், வீடு வாயிலமைப்புகள் போன்ற பலவற்றை நாம் நன்கு அறிந்து கொள்ள முடிகின்றது. இவ்வோவியங்களை ஆண்டுதோறும் பல்லாயிரம் மக்கள் பார்வை யிட்டு வருகின்றனர். அசந்தாக் குகைச் சுதை ஓவியங்களுள் ஓரிடத்தில் நங்கையர் பலர் அரசமரத்தைச் சூழ்ந்து நிற்கின்றனர்; இருவர் நடனமாடுகின்றனர்; மற்றவர்கள் இசைக் கருவிகளை வாசிக்கிறார்கள்; சிலர் கை தட்டுகிறார்கள். இன்றும் கிழக்குத் தேசங்களில் கூத்தாடும் போது காலத்தை அளப்பதற்குக் கைதட்டப்படுகின்றது. நடனமாடுகின்றவர்களின் அசைவுகளை உடலின் மேற்பாகங்கள் காட்டுகின்றன. இவ்வகை நிலைகளும் அசைவுகளும் இந்திய நடனங்களில் பொதுவாக இன்றும் காணப்படுகின்றன. சுதை ஓவியங்களைத் தீட்டினோர் இவ்வகை ஆட்டங்களை மிகத் திறமையாகக் காட்டியுள்ளனர். குழல் வாத்தியம், மரக்கொம்பு அல்லது உலோகத்தினால் செய்யப்பட்ட எக்காளம் போல அடி அகன்றிருக்கின்றது அசந்தாக்குகை ஓவியங்களில் மேளங்கள். தாளங்கள். வீணைகள் முதலிய னவும் காணப்படுகின்றன. 1வில்லினால் இயங்கும் வீணை காணப்படாத ஓவியங்கள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை. மகளிர் நாற்காலிகளில் அல்லது பின்னிய பீடங்களில் இருப்பது கவனிக்கத்தக்கது. இவ்வகை வீட்டுத் தளபாடங்கள் தக்கணத்துப் பெண்களால் பிற்காலத்திற் பயன்படுத்தப்படவில்லை; அவை இன்று ஆடவரால் பயன்படுத்தப்படு கின்றன. பெண்கள் பெரும்பாலும் பதிந்த மமணைகளில் அல்லது நிலத்தில் இருக்கிறார்கள். அசந்தாக்குகை ஓவியங்களில் கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரையில் பிரம்பால் பின்னிய தளபாடங்கள் காணப்படுகின்றன. இச்சுவர் ஓவியங்கள் மூலம் பெண்கள் சமயசம்பந்தமான கிரியைகளில் அக் காலத்தில் பங்கு பற்றினார்கள் என்று அறிய இயலுகிறது. போதி மரத்துக்குப் பின்னால் வேறு இரண்டு மரங்களும் காணப்படு கின்றன. வலப்புறத்தே கடைசியில் இருப்பது மாமரம்; மற்றது ஆல். இம் மூன்றுவகை மரங்களும் பௌத்த மதத்தினரால் புனிதமுடையனவாகக் கொள்ளப்பட்டன. இவ்விரண்டு காட்சிகளின் போக்கைக் கவனித்தால் இவ் வகை ஓவியம் தீட்டும் திறமை பெறுவதற்கு பல நூற்றாண்டுகளாகும் என விளங்கும். கி.மு. 1000 வரையில் தக்கணத்தில் ஓவியக்கலை வளர்ந்திருந்த தென முடிவு செய்யலாம். கி.மு. 200 முதல் கி.பி. 300 வரை ஓவியக்கலை மெதுவாக ஆனால் நன்றாக வளர்ச்சியடைந்தது. பத்தாவது குகையில் ஒரு பட்டையம் காணப்படுகின்றது. இது கி.பி. 300இல் வரையப்பட்டது. அக்கால ஓவியங்களில் கருத்துக்கள் வளர்ச்சியடைந்துள்ளன. எழுதும் திறமை காணப்படவில்லை. சாதந்த சாதகத்தில் சொல்லப்படும் ஆறு தந்தங்களையும் இரண்டு மனைவிகளையுமுடையதாகிய யானையின் கதையை இங்கு காட்டுகின் றோம். முதற் காட்சியில் இராணி துயருற்றிருக்கிறாள். தனது முற்பிறப்பில் கணவனாயிருந்ததும் இன்னொரு மனைவியைக் காதலித்துத் தன்னைக் கொடுமைப்படுத்தியதுமாகிய யானையைப் பழிவாங்கும் பொருட்டு அதன் தந்தங்களைக் கொண்டு வரும் படி அவள் அரசனைக் கேட்கிறாள். இக் கதையின் முற்பகுதி படுக்கையறையில் காட்டப்பட்டுள்ளது. இரண்டாவது காட்சி அரசு வீற்றிருக்கும் மண்டபத்திற் காட்டப்பட்டுள்ளது. அங்கு அரசன் அலங்கரிக்கப்பட்ட நாற்காலியில் வலப்பக்கத்தில் இராணியுடன் இருந்து அவள் கோபத்தைத் தணிக்கும் பொருட்டு யானையின் கொம்புகளைக் கொண்டுவரும்படி வேடரிடம் கூறுகிறான். வேடரின் உடையும் அவர் அடங்கி ஒடுங்கி நிற்கும் நிலையும் கவனிக்கத்தக்கன. இரண்டாவது ஓவியம் வேடர் யானையின் தந்தங்களைக் கொண்டு வந்ததும் அவற்றைக்கொண்டு இராணி மயக்கமடைவதைக் காட்டுகிறது. அரசனுக்குப் பின்னால் நிற்கும் இராணிகளில் ஒருத்தி அவளை விசிறி கொண்டு வீசுகிறாள்; இன்னொருத்தி அவள் உள்ளங்கால்களை வருடுகிறாள்; வேறொருத்தி அவள் முகத்தின் மீது தெளிப்பதற்கு நீர் கொண்டு வந்திருக் கின்றாள்; இன்னொருத்தி தனது துக்கத்தை அடக்கிக்கொண்டு தனது கைவிரலைக் கடிக்கின்றாள். இந்நாடகக் காட்சிக்குப் புறம்பாக உடனே ஒரு கருத்துத் தோன்றுகின்றது. தொடக்கத்தில் பொறாமையினால் எழுந்த பழி வாங்கும் குணம் புலப்படுகின்றது. பின்பு முற்பிறப்பில் தன் கணவனாக விருந்த யானையின் தந்தங்களைக் கண்டவுடன் அன்பு பெருகுவது புலப்படுகின்றது. இவை போன்ற உள்ளக் கிளர்ச்சிகள் அசந்தாக்குகை ஓவியங்கள் எல்லாவற்றிலும் காணப்படுகின்றன. புத்தர் இவ்வுலக வாழ்க்கை நடத்தியதைப் பற்றிய காட்சிகளிலும் அவர் ஞானமடைய முயன்றுகொண்டிருந்த காட்சிகளிலும் அவர் பிறர்க்கு இரக்கங்காட்டும் காட்சிகளிலும் அவர் மனிதனாகவே காட்டப்பட்டுள்ளார். அவர் நிர்வாணமடையும் காட்சியும் துக்கமய மில்லாத மகிழ்ச்சிக்குரிய தாகவே காட்டப்பட்டுள்ளது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் ஆந்திர அரசரின் வரலாறு மறைவடை கின்றது. தக்கணத்திலே சாதவாகனரின் ஆட்சி மறைவடைவதன் முன் ஆந்திர அரசரின் கிளையினர் தக்கணத்தின் பல பகுதிகளில் தமது ஆட்சியைத் தொடங்கியிருத்தல் கூடும். கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 6ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை ஓவியம் தீட்டும் கலை மிக ஓங்கி விளக்கமடைந்திருந்தது. இதற்குக் காரணம் வடஇந்திய (ஆரிய ) திராவிடக் கலைகள் கலப்படைந்தமையாகும். இங்கே காட்டப்படும் சில எடுத்துக் காட்டுகளால் உயர்ந்த கருத்துகளும் செழித்த சிந்தனைகளும் ஓவியங்களில் இருப்பதைக் காணலாம். பௌத்த மதக் கருத்துகளே மேலாகக் காணப் படுகின்றன. பிராமணமத ஆதிக்கம் ஓங்கியிருந்த மத்திய காலத்திய சிற்பங் களிலும் கட்டட அமைப்புகளிலும் இக் கருத்துகள் காணப்படவில்லை. முதலாவது குகையில் காணப்படும் ஓவியங்கள் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குரியவை. இக்குகையில் தீட்டப்பட்ட ஓவியங்களின் வரலாறு மகாசனக சாதகத்திலுள்ளது. இது புத்தரின் முற்பிறப்பு வரலாறு. அவர் உலகைத் துறந்தபின் தமது வீட்டு வாயிலுக்கே பிச்சை யெடுக்கச் சென்றுள்ளார். அவருடைய மனைவியாகிய இராணி அவர் குரலைக் கேட்டதும் ஒரு தட்டில் உணவு அனுப்புகிறாள். புத்தருடைய வடிவம் மிகத் திறமையாக வரையப்பட்டுள்ளது. அவருடைய முகத்தில் கடவுள் தன்மையான தோற்றம் காணப்படுகின்றது. ஓவியம் வரையப் பட்டுள்ள நிறமும் நன்றாகவிருக்கின்றது. பின்புறம் வெளிறிய நீல நிறம் ஊட்டப்பட்டுள்ளது. அதனுள்ளே மரத்தினாலமைக்கப்பட்ட மாளிகையும் அங்குள்ளவர்களின் வடிவங்களும் வரையப்பட்டுள்ளன. இராணி பல அணிகலன்கள் அணிந்தவளாகவும் அழகிய தலை அணிகள் தரித்தவளாக வும் காட்சியளிக்கும்படி சித்தரிப்பதில் ஓவியன் மிகக் கருத்துக் கொண் டிருந்தான். புத்தர், இராணி என்பவர்களின் தோற்றங்களுக்கு மாறாக வாயிற் காரன் முரடான முகத்தோற்றமுடையவனாகவும் தொங்குகின்ற மீசை யுடையவனாகவும் வாயிலின் நடுவே இருப்பவனாகவும் வரையப்பட் டுள்ளான். உணர்ச்சியை வெளிப்படுத்தும் இன்னொரு ஓவியம் மகாசனகன் துறவியின் உபதேசத்தைக் கேட்டபின் தான் உலகைத் துறக்க விரும்பி யிருப்பதை மனைவியிடம் கூறத் தீர்மானித்திருத்தல். மகாசனகன் மகிழ்ச்சி யற்ற இவ்வெண்ணத்தைத் தனது அரண்மனையின் மத்திய அறையி லிருந்து சொல்வதாக ஓவியம் வரையப்பட்டுள்ளது. மனைவி அவன் சொல் வதை உற்றுக் கேட்கிறாள். அரசியின் பக்கத்தே நிற்கும் தோழிகளின் முகத் தில் தோன்றியிருக்கும் கவலை மிகத் தெளிவாகக் காணப்படுகிறது. ஒருத்தி மிகத் தளர்ச்சியடைந்தமையால் அவள் கையிற் பிடித்திருந்த வெண் தாமரைப்பூ நழுவி விழுகின்றது. அக் கூட்டத்தில் நிற்கும் பெண்கள் சிலரின் வடிவங்கள் மிகத் திறமையாகத் தீட்டப்பட்டுள்ளன. அரசனுக்கும் இராணிக் கும் பின்புறத்தில் நிற்பவள் நீலநிற இரவிக்கை அணிந்திருக்கிறாள். சித்தார்த்தரின் உடல் நன்கு வளர்ச்சியடைந்திருக்கிறது. அவர் அமைதிக்குணம் உடையவராகக் காணப்படுகின்றார். அவர் மனத்தின் இயல்பு முகத்திற் காட்டப்பட்டுள்ளது. இராசகுமாரன் நிற்கும் நிலை மிக அழகாக அமைந்துள்ளது. இவ்வுருவத்தைத் தெளிவாகக் காண்பிக்கும் பொருட்டு ஓவியன் இதனைச் சுற்றி இருண்ட பச்சைப் பின்புறத்தை அமைத்துள்ளான். முடியும் தலையும் தெளிவாகத் தோன்றுகின்றன. கமுகின் பசிய ஓலை களோடும். மயிலிறகின் நீல நிறத்தோடும் சிவப்பு வரிகள் நன்றாக அழகு பெற்று விளங்குகின்றன. அரசகுமாரி இருண்ட நிறமுடையவளாகக் காணப் படுகின்றாள். சில மகளிர் பொன்னிறமுடையவர்களாகவும் கணவர் இருண்ட நிறமுடையவர்களாகவும் காணப்படுகின்றனர் சில சமயங்களில் மாறாகவும் காணப்படுகின்றனர். பொதுவாக அசந்தாவில் வரையப்பட்ட மனித வடி வங்கள் இருண்ட கபில நிறமுடையன. இதுவே இந்திய மக்களின் நிறம். காட்டில் வாழும் மக்கள் வெயில் படுதலால் நிறம் மாறுபட்டவர்கள் என்பதை உணர்த்தச் சிவப்பு நிறமும் பச்சை நிறமும் பயன்படுத்தப்பட் டுள்ளன. இராசகுமாரியின் வடிவம் தாய்போன்ற தோற்றமளிக்கின்றது. தனது கணவன் பிரிய நினைத்திருப்பதை எண்ணி அவள் கவலை கொண் டிருக்கிறாள். ஓவியம் மிகப் பெரியதாகவும் பல உருவங்கள் அடங்கியதாகவும் அமைந்துள்ளது. சித்தார்த்தரின் உருவம் எட்டடி உயரமுடையது. பதினைந் தாம் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலிய ஓவியர்கள், பார்ப்பவரின் கண்களை உடனே கவரக்கூடிய வகையில் முக்கியமுடையவர்களைப் பெரிய வடிவங்களாக வரைந்தார்கள். இவ்வோவியத்தில் தேவ உலகப் பெண்கள் அல்லது தேவ உலக வாத்தியகாரர் அரசகுமாரனின் தீர்மானத்தை அறிந்து அதற்காக மகிழ்ச்சி தெரிவிக்க வரவில்லை. குரங்குகள் மலைகளில் பாய்ந்து திரிகின்றன. மயில்கள் மகிழ்ச்சியால் அகவுகின்றன. காட்டு மக்க ளின் உதடுகளில் மகிழ்ச்சியால் புன்னகை உண்டாகின்றது. எல்லோரும் அரசகுமாரனின் எண்ணம் நடக்கவிருப்பதை உணர்ந்து மகிழ்ச்சி கொள் கின்றனர். இக் காலச் சாரங்கி போன்ற யாழில் ஒரு தெய்வப் பெண் பாடு கிறாள். இவ்வாறு அசந்தாக் குகை ஓவியங்கள் காண்பார் உள்ளத்தையும் கண்களையும் கவருமாறு செவ்வனே வரையப்பட்டுள்ளன. குகைகளுள் ஒன்பதாவது குகை காலத்தால் முற்பட்டது. இதன் காலம் கி.மு. 300. ஹினாயான என்னும் பழைய பௌத்தமதக் கொள்கைகள் பரவியிருந்த காலத்தில் இது குடையப்பட்டது. ஆறாம் ஏழாம் நூற்றாண்டுகளிற் குடையப்பட்டவை மகாயான என்னும் பௌத்த மதக் கொள்கைகள் பரவியிருந்த காலத்தவை. 21. ஒரு பழைய காடு நாம் படிக்கப்போகின்ற காடு 13,000,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இங்கு கூறப்படுவது போன்ற காடுகள் உலகம் முழுமையிலும் இருந்தன. ஒரு கோடி முப்பது இலட்சம் ஆண்டுகளின் முன் இப்பூமி இன்றையை விட வேறு வகையிலிருந்தது. இப் பூமியின் வரலாற்றில் ஒரு பகுதியாகிய அக் காலத்தை விஞ்ஞானிகள் நிலக்கரி தோன்றிய காலம் என்பர். அக் காலத் தில் மனிதப் படைப்புத் தோன்றவில்லை; பலவகை உயிர்கள் வாழ்ந்தன. அவை அதிக திறமை இல்லாதனவாகவும் இன்று வாழும் உயிர்களை விட வேறு வகையினமாகவுமிருந்தன. மனிதனாவது பெரிய விலங்குகளிலெவையாவது அப்பொழுது தோன்றவில்லை. சிங்கம், புலி, கரடி, யானை, பறவைகள்,சிலந்திகள், அட்டைகள், தேள்கள் முதலியனவும் பிற பூச்சிகளும் தரையில் வாழ வில்லை. நீரில் பெரிய மீன்களும் தரையிலும் நிலத்திலும் வாழக்கூடிய முதலை போன்ற மிகப்பெரிய உயிர்களும் காணப்பட்டன. முன் கூறிய பழைய காடு நாம் பார்க்கும் காடுகள் போன்றதன்று. அங்கு இன்று காணப்படுவன போன்ற மரங்கள் நிற்கவில்லை; பேரணி களும் (ferns) செடிகளும் காணப்பட்டன. அவை வளர்ந்து இன்று சில இடங்களிற் பெரிய மரங்களாக நிலைபெறுகின்றன. இவ்வகை மிகப்பெரிய பனைகளும் குதிரைவால் போன்ற இலையுடைய மரங்களும் நெருங்கி நின்று மிக வெப்பமான பல நூற்றாண்டுகள் வளர்ந்தன. வெயில் மிக முக்கியமானது. நாம் இப்பொழுது ஒரு கோடி முப்பதி லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அக்காலத்தைப் பற்றி நினைப்போம். முற்காலக் காடுகள் எங்கே? அவை மீது காய்ந்த வெயிலெங்கே? வெயில் மிகப் பழங்காலத்திலேயே மறைந்துபோயிற்று என்று நீவிர் கூறலாம். இதைக் குறித்துப் பின்பு ஆராய்வோம். காடு எங்கே? இவ்வாறு வளர்ந்த இராக்கதச் செடிகள் பூமியின் கீழ் நூற்றுக்கணக்கான அடி ஆழத்தில் கிடக்கின்றன. இம்மரங்கள் நிலத்தின் கீழ் புதைந்து கிடந்த எண்ணில்லாத காலத்தில் கற்பாறைபோன்ற ஒரு மாற்றத்தை அடைந்துள்ளன. அவ்வாறு மாற்ற மடைந்துள்ளவற்றை நாம் நிலக்கரி என்கின்றோம். எரிக்கும் போது நிலக்கரி கொடுக்கின்ற வெப்பம் 130,000 நூற்றாண்டுகளாக நிலத்துள் புதைந்து கிடந்தாலுண்டான வெப்பமாகும். இங்கிலாந்திலும் பிற இடங்களிலும் ஏன் நிலக்கரி கிடைக்கிறதென்று இப்பொழுது நமக்குத் தெரிகிறது. பழைய காடு இப்பொழுது நிலக்கரிச் சுரங்கங்களாக மாறியுள்ளது. சுரங்கங்களில் வேலை செய்வோர் கரியை எப்படி மேலே கொண்டுவருகிறார்கள் என்று பார்ப்போம். நாம் சுரங்கத்துக்குச் சென்றால் அதன் வாயிலிலுள்ள பெரிய சுற்றும் சக்கரத்தைக் காணலாம். அச்சக்கரத்தைச் சுழலச் செய்து கயிற்றின் வழியே கீழே உள்ள பொருள்களை மேலே எடுக்கவும். மேலேயுள்ள பொருள் களைக் கீழே விடவும் முடியும். சுரங்கத்தில் வேலை செய்வோர் இதன் மூலம் கீழே சென்று திரும்ப வெளியே வருகிறார்கள். எல்லாச் சுரங்கங்களுக்கும் இரண்டு வாயில்கள் உண்டு. ஒன்று வேலை செய்யும் வாயில். மற்றது நச்சு வாயுவை வெளியே போக்கி நல்ல காற்றை உள்ளே நுழைய விடும் வாயில். நாம் கீழே செல்ல விரும்பினால் கீழே செல்லவிருக்கும் கூட்டுக்குள் நிற்றல் வேண்டும். சில வினாடியில் நாம் கீழே போய்க்கொண்டிருப்போம். அங்கு மின்சார விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும். முற்காலத்தில் அங்கு இரட்சை விளக்கு என்னும் விளக்குகள் வைக்கப்பட்டிருந்தன. கூடு நின்றதும் கூரையில் மின்சார விளக்குகள் எரியும் பாதையில் நிற்போம். இப்பொழுது நாம் நிலக்கரிச் சுரங்கத்துக்கு வந்துவிட்டோம். இவ்விடம் ஒரு கோடி முப்பது இலட்சம் ஆண்டுகளின் முன் பச்சை மரங்கள் வளரும் காடாக விருந்தது. அங்கு நிலக்கரி ஏற்றிய சில தள்ளுவண்டிகள் கூட்டுக்குள் தள்ளப்படுவதற்கு ஆயத்தமாகக் காத்துக்கொண்டு நிற்கும். நம்மைச் சுற்றி நிலக்கரி அரிப்பு நடைபெறமாட்டாது. உள்ளே வேலை செய்யுமிடங்களிலிருந்து கரி கொண்டு வரப்படுகிறது. நம்மைச் சுற்றி நாம் பார்க்கும்போது ஒரு இரையும் ஓசை கேட்கும். ஒரு குதிரை நிலக்கரி ஏற்றிய நாலு பெட்டைகளை இரும்புப்பாதை வழியாக இழுத்துக்கொண்டு வருவதை நாம் காணலாம். நிலக்கரிச் சுரங்கங்கள் பலவற்றில் குதிரைகள் வேலை செய்கின்றன. முற்காலத்தில் பெண்களும் ஆண்களும் கரியேற்றிய வண்டிகளைச் சுரங்கத்தின் வாயிலுக்குத் தள்ளிக்கொண்டு வந்தார்கள். இப்பொழுது இவ்வேலை மின்சார மோட்டார்களால் அல்லது குதிரைகளாற் செய்யப்படுகின்றது. குதிரைகள் தினமும் மேலே கொண்டு வரப்படுவ தில்லை; அவை சுரங்கத்துக்குள்ளே நிற்கின்றன. குதிரை நிற்குமிடம் தரை மட்டத்திலிருந்து நூற்றுக்கணக்கான அடிகள் கீழே உள்ளது. குதிரைகள் சுரங்கத்துள் அரை வெளிச்சத்தில் நின்று வேலை செய்து உண்டு உறங்கு கின்றன. அரிதில் அவை வெளியே கொண்டு வரப்படுகின்றன. நாம் பாதை வழியே மேலும் சென்றால் மேலும் பல குதிரைகள் வண்டி களை இழுத்துக்கொண்டு சுரங்க வாயிலுக்கு வருவதைக் காணலாம். வேறு சில, வெறும் வண்டிகளை இழுத்துக்கொண்டு நிலக்கரி ஏற்றச்செல்லும். சுரங்க வேலை செய்வோர் சிலர் நேரான தூண்களை வண்டியில் வைத்துத் தள்ளிக் கொண்டு செல்வர். இவை சுரங்க முட்டுக் கால்கள் எனப்படுகின்றன. சுரங்கத் தின் முகடுகளுக்கு இத்தூண்கள் முண்டு கொடுக்கப்படுகின்றன. சில இடங் களில் சுரங்கம் விழாதபடி நிலக்கரி தூணாக விடப்படுகின்றது. இவ்வாறு அங்கு மிங்கும் திரிந்தபின் நாம் ஒரு புதிய பாதை வழியே சென்றால் தூரத் தில் ஓசை கேட்கும். போகப்போக ஓசை பலமாக விருக்கும். அங்கு சில சுரங்க வேலையாளர் கரியில் துறப்பணம் வைத்துத் துளைத்துக்கொண்டிருப் பார்கள். அத் துறப்பணம் ‘கான்கிரீட்’ தெருக்களை உடைப்பதற்கு வேலை யாட்கள் பயன்படுத்தும் கருவியைப் போன்றது. மேலே செல்வதற்கு நேரம் வந்துவிட்டது. மேலே செல்லும் கூடு ஒன்றனுள் நாம் நிற்கிறோம். கூட்டுக்குள் சில வண்டிகளில் நிலக்கரி காணப் படுகிறது. இக்கரி என்ன செய்யப்படுகின்றதென நாம் அறிய விரும்புவோம். நில மட்டத்துக்கு வந்ததும் நாம் இறங்கிக் கரி கொட்டப்படும் மேட்டுக்குச் செல்கின்றோம். அங்கு நாம் ஒரு பெரிய கொட்டிலைக் காண்போம். அதன் ஒரு பக்கத்தில் பல இரும்புப் பாதைகள் இருக்கின்றன. கரியேற்றிய வண்டிகளை இழுத்துச் செல்லும் ‘எஞ்சின்’களும் அங்கு நிற்கின்றன. இவை வண்டிகளி லேற்றப்பட்ட கரியை இழுத்துக்கொண்டு நானா திசைகளிலும் செல்லும். 22. நெருப்பில் நடத்தல் உனது கைவிரலில் சுடும் வரையும் நீ எப்போதாவது எரியும் தீக் குச்சியைப் பிடித்திருக்கிறாயா? அப்படிப் பிடித்திருந்தால் சூடு எவ்வாறிருந் திருக்குமென்றும், சுடும் தீக்குச்சியை எவ்வளவு விரைவில் எறிந்திருப்பா யென்றும் உனக்கு ஞாபகமிருக்கலாம். இவ்வகைச் சூடு மிகச்சிறியது; அதனை நீ அப்பொழுதே மறந்திருப்பாய். முப்பதடி நீளமுள்ள ஒரு குழி யில் கிடக்கும் நெருப்பின் மீது நடக்க நீ விரும்புவாயா? இவ்வாறு நடத்தல் முடியாத காரியமென்றும், அவ்வாறு செய்ய முயலும் புத்தியற்றவன் எரிந்து இறந்து விடுவானென்றும் நீ கூறுவாய். மேல் நாட்டவர் இவ்வாறு நினைப்பர். கிழக்கு நாடுகளில் ஆண்களும் பெண்களும் இவ்வாறு நடக்கின்றனர். தீயில் நடப்பது விளையாட்டு அல்லது வேடிக்கைச் செயலன்று. அது ஒரு சமயக்கிரியை. அதன்தொடக்கம் எவ்வகையினது என்று அறியப்பட வில்லை. தீ மிதித்தல் அல்லது தீயின் மீது நடத்தல் பியூசித் தீவுகள் முதலிய கிழக்குத் தீவுகளிலும், இந்தியா, யாவா, ஜப்பான் முதலிய நாடுகளிலும் தொலைவிலுள்ள பசுபிக்கடல் தீவுகளிலும் இன்றும் நடைபெறுகின்றது. தீயில் நடக்கும் முறைகளில் சிலமாற்றங்கள் காணப்படலாம். மற்ற வகைகள் எல்லா இடங்களிலும் ஒரே வகையாக நடைபெறுகின்றன. நெருப்பில் நடக்கும் பெண்களும் ஆண்களும் சில நாட்கள் முன்தொட்டு விரதமிருந்து கடவுள் வழிபாடு செய்வர்; பின்னர் குறிப்பிட்ட ஒரு நாளில் வேகும் கற்கள் அல்லது சாம்பல் நிறைந்த குழியினூடாகக் காலுக்கு யாதும் அபாயமின்றி நடந்து செல்வர். பசுபிக்கடல் தீவுகள் ஒன்றில் நெருப்பில் நடத்தலை நீ பார்க்கிறாய் என்று நினைத்துக்கொள்வோம். நெருப்பில் நடப்பதற்குச் செய்யும் ஆயத்தம் மிக நீண்டது. முதலில் ஒரு குழி வெட்டப்படுகின்றது. அது நாற்ப தடி நீளமும். பதினைந்தடி அகலமும், மூன்று அல்லது நான்கு அடி ஆழமு முள்ளது. குழியிலிருந்து எடுக்கப்பட்ட மண் குழியைச் சுற்றி வரம்புபோல் சரிவாகக் குவிக்கப்படுகிறது. இதனால் குழி முன்னிலும் பார்க்க இரண்டடி ஆழத்திலிருக்கும். இப்பெரிய குழியில் விறகு போடப்படும். குழியின் அடியில் எளிதில் தீ பிடிக்கக்கூடிய சருகைப் பரப்பி மேலே குழி நிறையும் வரை விறகு கட்டைகள் ஒன்றின் மேலொன்றாக அடுக்கப்படும். அதற்கு மேல் உதை பந்து அளவினவாகிய கற்கள் அடுக்கப்படும். இவை நில மட்டத்துக்கு மேல் சில அடி உயரத்திலிருக்கும். விறகுக்குக் தீ மூட்டுவது மிக முதன்மையான கருமம். அத் தீவி லுள்ளவர்களும் அயல் தீவிலுள்ளவர்களும் இக் காட்சியைக் காண்பதற்குக் கூடுகிறார்கள். குறிக்கப்பட்டுள்ள நேரத்தில் விறகுக்குத் தீ மூட்டும் குருக்கள் வருகிறார். அவர் ஒரு தீப்பெட்டியை அல்லது நெருப்பு எரியும் சூளைக் கொண்டு வரலாம். இம் முறையாக இப்புனிதத் தீயை மூட்டுதலாகாது. பல நூறாண்டுகளுக்கு முன் தீக்கொளுத்தியது போலவே இன்றும் கொளுத்துதல் வேண்டும். குருக்கள் வரும்போது கையில் இரண்டு தடிகளைக் கொண்டு வருகிறார். குழியைஅடைந்ததும் அவர் அதனைச் சுற்றி வருகிறார். சூழநிற் போர் கடவுளைத் துதித்துப் பாடுகின்றனர். குருக்கள் விறகின் முன் முழங் கால்களில் நின்றுகொண்டு தடிகளை உரைஞ்சுகிறார். அவர் இவ்வேலையில் கைதேர்ந்தவர். முதலில் நீலநிறப் புகை எழுகின்றது. பின்னர் சுவாலை உண்டாகின்றது. காய்ந்த ஓலையில் மூட்டப்பட்ட தீயினால் விறகுக்குத் தீ மூட்டப்படுகின்றது. சிறிது நேரத்தில் நெருப்பு மூண்டு மண்டி எரிகிறது. இப்பொழுது வேடிக்கை பார்ப்போர் கூடுகின்றனர். சடுதியில் அமைதி உண்டாகின்றது. குருக்கள் ஒரு குடிசையிலிருந்து வருகிறார். கடவுள் வழிபாடு செய்து கொண்டிருப்போர் அவரைப் பின்தொடர்ந்து வரு கின்றனர். அவர்கள் கடவுள் மீது துதிபாடிக்கொண்டு குழியைச் சுற்றி வருகி றார்கள். பின்னர் எல்லோரும் நிரையில் நின்று தலையை நிமிர்த்திக்கொண்டு குழியின் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்துக்குச் சென்று திரும்புகின்றனர். அவர்கள், கால் சுடுதலினால் அலறிச் சத்தமிடுவதில்லை; சதை எரிவதனால் நாற்றம் வீசுவதும் இல்லை; பாதங்களில் கொப்புளமோ காயமோ காணப்படு வதுமில்லை. இதில் யாதோ தந்திரம் இருக்கலாமெனச் சிலர் நினைக்கின்ற னர். நம்பிக்கையினாலும் மனோதிடத்தினாலும் அவர்கள் யாதும் இடையூறின்றி தீயில் நடக்கிறார்கள் என்பது உண்மையாகும். 23. சப்பாத்தின் கதை இங்கிலாந்து தேசத்தில் சப்பாத்து அல்லது செருப்பு அதிட்டத்தைக் கொண்டு வருவது என்பது நீண்டகாலமாக நம்பப்பட்டு வருகின்றது. இன்றும் தெருவில் ஒரு பழைய குதிரை இலாடம் கிடக்கக் கண்டால் அதனைக் கண்டவர் எடுத்துச்சென்று தமது வீட்டுக்கதவில் அடித்து வைப்பது வழக்கமாக இருக்கின்றது. அதனால் வீட்டிலிருப்பவர்களுக்கு அதிட்ட முண்டாகுமென்பது அவர்களின் நம்பிக்கை. கலியாணக் கொண்டாட்டங்களில் செருப்பு, குதிரை இலாடம் வடிவாக வெட்டப்பட்ட வெள்ளி வத்தித் துண்டுகள் முதலியவற்றை மணமக்கள் மீது நண்பர்கள் எறிவதையும், பின்புறத்தில் பழஞ்சப்பாத்துக் கட்டப்பட்ட மோட்டார் வண்டியில் தம்பதிகள் சவாரி போவதையும் காண லாம். சப்பாத்து அதிட்டமளிக்கும் என்னும் நம்பிக்கை பல ஆயிர மாண்டுகளாக இருந்து வருகின்றது. பைபிளின் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் சப்பாத்து அல்லது செருப்பு ஒருவனது உரிமையைக் குறிப்பதாக இருந்தது. ஒருவன் தனது நிலத்தை மற்றொருவனுக்கு விற்றால் அவன் தனது செருப்பிலொன்றைக் கழற்றி வாங்கியவனது கையிற் கொடுத்தான். இதனாலேயே செருப்புடன் நடந்த நிலம் மற்றவனுடைய கைக்கு மாறி விட்டது என்பது பொருளாக இருந்தது. செருப்பைப் பெற்றவன். நிலம் தனது கைக்கு மாறிவிட்டது என்னு மடையாளமாக அதனைத் தான் வாங்கிய நிலத்தில் எறிந்தான். இச்செயல் மணமக்களுக்கு எப்படி அதிட்டத்தைக் கொண்டு வருமெனச் சிலர் கேட்கலாம். முற்காலத்தில் பெண்மக்கள் ஆண்மக்களின் சொத்தாக இருந் தார்கள். கலியாணமானதும் பெண் தந்தையின் உரிமையிலிருந்து கணவ னின் உரிமையாக மாறிவிடுகிறாள். தான் நீண்ட காலம் தேடிக்கொண்டிருந்த ஒரு பொருள் கிடைக்கப்பெற்றவன் அதிட்டசாலியெனக் கொள்ளப்பட் டான். ஆகவே சொத்துடைமையின் அடையாளமாகிய சப்பாத்து இன்று நல்ல அதிட்டமாகக் கருதப்படலாம். நீண்டகாலமாகச் சப்பாத்து முக்கியமுடையதாக இருந்து வந்தது. முற்காலத்தில் எகிப்திய அரசர் செருப்புத் தரித்தனர். அவர்களுக்குக் கீழ்ப் பட்ட அரசர் அவர்களின் முன் செல்ல நேர்ந்தபொழுது செருப்பின்றிச் சென் றார்கள். பரிசுத்த இடங்களில் செல்லும் போது இன்றும் முஸ்லிம்களும், இந்துக்களும் செருப்பின்றிச் செல்கின்றனர். செருப்பு அல்லது சப்பாத்துச் செய்யும் முறை பல ஆயிரம் ஆண்டு களின் முன் அறியப்பட்டிருந்தது. பைபிளின் பழைய ஏற்பாட்டில் சப்பாத்துக் கட்டும் தொழில் மிகத் திருத்தமடைந்திருந்ததெனச் சொல்லப் படுகிறது. செல்வமகளிர் பொன்னாலும் மணியாலும் அலங்கரிக்கப்பட்ட செருப்புகளை அணிந்தார்கள். அவற்றில் பறவைகள் விலங்குகளின் வடிவங்கள் எழுதப்பட்டிருந்தன. ஆடவரும் நன்கு அலங்கரிக்கப்பட்ட செருப்புகளைத் தரித்தார்கள். முற்காலத்தவர் தாம் தமது எதிரிகளைக் காலால் உழக்குவதாகப் பாவனை செய்தார்கள். ஆகவே சிலர் தமது எதிரியின் வடிவைச் செருப்பின் கீழ்ப் புறத்தில் எழுதியிருந்தனர்; நடக்கும்போது தாம் எதிரியின் முகத்தை உழக்கிக் கொண்டு செல்வதை நினைத்து மகிழ்ச்சி கொண்டனர். மனைவியின் பெயரைச் செருப்பின் கீழ்ப்புறத்தில் வெட்டுதல் பழைய கிரேக்கரின் வழக்கம். இதனால் நடக்கும்போது ஒருவனது அன்புக்குரிய மனைவியின் பெயர் நிலத்தில் அழுத்தப்பட்டிருக்கும். இவ் வழக்கங்களை நினைக்கும் போது நமக்குச் சிரிப்புண்டாகிறது. 14ஆம் நூற்றாண்டில் நாகரிகரான ஆங்கில ஆடவர் இரண்டடி நீளச் சப்பாத்தைத் தரித்தார்கள். இவ்வாறு செல்லும் நாகரிகர் நடக்கும்போது மற்றவர்களை இடறிவிழுத்த நேர்ந்தமையால் அவ்வகைச் சப்பாத்தை அணிதல் கூடாதென அரசாங்க சபையில் சட்டமியற்றப் பட்டது. இதன்பின் இன்னொருவகைச் சப்பாத்து வழக்கத்துக்கு வந்தது இது முன்னைய சப்பாத்தளவு நீளமுடையது. ஆனால் அதன் முன்புறம் வளைந் திருந்தது. வளைவில் வெள்ளிச் சங்கிலியும் நாடாவும் தொடுத்து முழங் காலுக்குக் கீழ் கட்டப்பட்டது. முந்திய சப்பாத்திலும் பார்க்க இச்சப்பாத்து நடப்பதற்கு இலகுவாக விருந்திருக்கலாம். இக்காலத்தில் இன்னொரு வகைச் சப்பாத்தும் வழக்கிலிருந்தது. முன்னாலுள்ள வளைவின் முனையில் சலங்கை கட்டப்பட்டிருந்தது. நடக்கும் போது சலங்கை கிணுகிணு என்று ஓசை செய்தது. இரண்டடி நீளமுள்ள சப்பாத்தைத் தரித்தவர்களுக்கு நடப்பது இலகுவாக இருந்திருக்க மாட்டாது. அவ்வாறு தரிப்பது நாகரிகம் என்னும் காரணத்தினால் ஏழு அல்லது எட்டு அங்குலம் அகலமுள்ள சப்பாத்துகளணியப்பட்டன. இஸ்டுவாட் காலத்தில் நாகரிகர் ஏழு அல்லது எட்டு அங்குலம் முன்புற அகலமுடைய உயர்ந்த சப்பாத்துகளைத் தரித்தனர். இவற்றைத் தரித்துக்கொண்டு நடப்பது மிகக் கடினமாக விருந் தாலும் இவற்றை அணிந்துகொள்வது அக்கால நாகரிக முறை எனக் கருதப் பட்டது. எலிசபெத்து இராணி காலத்தில் ஒரு அடி உயரமுள்ள மரத்தில் இறுக்கிய உயர்ந்த சப்பாத்துத் தரிக்கப்பட்டது. இது முன்னைய சப்பாத்துக் களிலும் பார்க்க அதிக தொல்லை விளைவித்திருக்கும். இவ்வகைச் சப்பாத்துத்தரித்துக்கொண்டு செல்லும்பெண் தனியே நடந்து செல்ல முடியாமலிருந்தது. அவள் வெளியே செல்லும் போது பக்கத்துக்கொரு வராக இரு வேலைக்காரப் பெண்கள் அவளைப் பிடித்துத் தாங்கிச் சென் றார்கள். பரிகசிக்கத்தக்க இவ்வகையினவல்லாத சப்பாத்துக்களை இன்றைய மக்கள் அணிகிறார்கள்.  அறிவுரை மாலை முன்னுரை பள்ளிக் கூடங்களில் பாட புத்தகங்களாக வைப்பதற்கு உரிய நூல்கள் மாணவர்க்கு நானா வகையிலும் அறிவு புகட்டத்தக்கனவாக இருத்தல் வேண்டுமென்பது கல்விப் பகுதியாரின் கருத்தாகும். ஒருமுறை ஒரு நூலகத்துப் பயின்ற கருத்துக்களையே மேலும் பயிலுதல் மாணவர்க்கு இன்பம் அளிக்க மாட்டாது. பிற பாட புத்தகங்களில் வராத புதிய பொரு ளுரைகளைத் தேடித் தொகுத்து இந்நூல் ஆக்கப்பட் டுள்ளது. இந்நூல் இலங்கை எ°.எ°.ஸி பரீட்சைக்கு நான்கு ஆண்டுகள் பாடமாக இருந்திருக்கின்றது. இது புதிய திருத்தங்களோடு நான்காவது பதிப்பாக வெளி வருகின்றது. தமிழ் உலகம் இதனை ஏற்று யாம் புரிந்து வரும் பணிக்கு ஊக்கம் அளிக்கும் என எதிர்பார்க் கின்றோம். சென்னை 1-11-1950 ந.சி. கந்தையா 1. 1இருமலையும் நிகரேயாம் வேனிற்காலத் தென்றல் இனிமையாக வீசுகின்றது. மேகம் திரண்டு தென்மலையில் தவழ்கின்றது. குன்றாத வளமுடைய குற்றால மலையி னின்றும் ஒரு குறவஞ்சி புறப்பட்டாள். பொன்றாத வளமுடைய பொதிய மலையினின்றும் மற்றொரு குற மாது புறப்பட்டாள். இரு வஞ்சியரும் இடை நிலத்தில் ஒருவரை ஒருவர் எதிர்ப்பட்டார்கள். தன் மலையைப் புகழுந் தன்மைவாய்ந்த குற்றாலக் குறவஞ்சி, திரிகூட மலையின் பெருமையை விரிவாகக் கூறத் தொடங்கினாள். “தவமுனிவர் கூட்டுறவும் அவரிருக்கும் குகையும் சஞ்சீவி முதலான விஞ்சை மூலிகையும் கவனசித்தர் ஆதியரும் மவுன யோகியரும் கத்திருக்கும் கைலாயம் ஒத்திருக்கும் அம்மே” என்று குற்றால மலையின் பெருமையைக் குறவஞ்சி ஒருவாறு கூறினாள். “அம்மே! எனது மலை ஈசன் வாழும் கைலை மலையை ஒப்பதாகும். அங்கு தவமுனிவர் குழாம் குழாமாய் தங்கி வாழ்கின்றார்கள். யோகியரும் சிந்தையை ஒடுக்கிச் சீரிய தவஞ் செய்கின்றார்கள். சஞ்சீவி முதலான விஞ்சை மூலிகைகள் எங்கும் செழித்து வளர்கின்றன. மாதவத்தோர் தவம் புரியும் மலைக் குகைகள், எம்மருங்கும் மாண்புற விளங்குகின்றன. என் மலையை ஒப்பது கைலை மலை ஒன்றே” என்று தன் மலைப் பெருமையை மலைமாது கூறினாள். இதைக் கேட்ட பொதியமலைக் குறவஞ்சி மனத்தில் புதியதோர் ஊக்கம் பிறந்தது. குற்றால மலையிலும் தன் மலை சிறந்ததென்று குறவஞ்சியிடம் கூறத் துணிந்தாள்; குற்றாலக் குறமாதை நோக்கி, “வஞ்சியே! என் மலையின் பெருமையை மறைத்து வஞ்சமாகப் பேசுகின்றாயோ! “திங்கள்முடி சூடுமலை தென்றல் விளையாடும் மலை தங்கும் முயல் சூழுமலை தமிழ் முனிவன் வாழுமலை அங்கயற்கண் அம்மை திரு அருள் சுரந்து பொழிவதென பொங்கருவி தூங்கும் மலை பொதியமலை என் மலையே” என்று பொதிய மலையைப் புகழ்ந்துரைத்தாள். “வஞ்சி! எனது மலையின் திருமுடியில் வெண்மதி விளங்கும். மலை எங்கும் மந்தமாருதம் இருந்து விளையாடும். தமிழை வளர்க்கும் தவமுனிவன் அங்கு தங்கி வாழ்வான். அங்கயற்கண் அம்மையின் அருள்போல அருவி நீர் பொழியும். இதனினும் சிறந்தமலை இவ்வுலகில் உண்டோ?” என்று குற்றாலக் குறவஞ்சியைக் குமைக்க முயன்றாள். இவ்வாறு பொதிய மலை மாது பொதிந்துரைத்த சொற் கேட்ட குற்றாலக் குறவஞ்சி தன் மலையிலமைந்த அருவியின் பெருமையையும், பூக்களின் பண்பையும், மலர்களின் மாண்பையும் மிக ஏற்றமாய் எடுத் துரைக்க எண்ணினாள். “முழங்கு திரைப்புனல் அருவி கழங்கென முத்தாடும் கிழங்கு கிள்ளித் தேனெடுத்து வளம்பாடி நடிப்போம் கிம்புரியின் கொம்பொடித்து வெம்புதினை இடிப்போம் செழுங்குரங்கு தேமாவின் பழங்களைப் பந்தடிக்கும் தேனலர் சண்பகவாசம் வானுலகில் வெடிக்கும் வழங்குகொடை மகராசர் குறும்பலவி லீசர் வளம்பெருகும் திரிகூட மலையெங்கள் மலையே” “அம்மே! எனது குற்றால அருவி உன் மலை அருவியிலுங் குறைந்ததோ? கண்டோர் வியக்கும் அவ்வருவி வெண் முத்தைக் கழங்காக விளையாடும். அவ்வருவி நீர் பெருகி எங்கள் சிறுமியர் சிறு வீட்டை அடித்துக் கொண்டோடும். இன்னும் எனது மலைவளம் கூறுகின்றேன் கேள். அம்மலையில் விளையும் இனிய கிழங்குகளை நாங்கள் அகழ்ந்து எடுப்போம். தேனுந் தினைமாவும் உண்டு திளைத்திடுவோம். இன்னும் அம்மலையில் இலங்கும் மாங்கனிகளை வானரங்கள் மாந்தி மகிழ்ந்து பந்தடித்து விளையாடக் கண்டு களிப்போம். வானுற ஓங்கிய மரங்களின் மலர்கள் விண்ணுலகில் வெடித்து மணம் வீசும். இத்தகைய மலைக்கு உன்மலை இணையாகுமோ?” என்று இறுமாந்து கூறினாள். இவ்வாறு குற்றால மாது குளிர்ந்து உரைத்த மாற்றம், பொதியமலை மாதின் மனத்தை வெதுப்பியது; வண்ணமாய சொற்களால் தன் மலைவளம் கூறத் தொடங்கி னாள். “கொழுங் கொடியின் விழுந்தவள்ளிக் கிழங்கு கல்லி எடுப்போம் குறிஞ்சிமலர் தெரிந்துமுல்லைக் கொடியில்வைத்துத் தொடுப்போம் பழம்பிழிந்து கொழுஞ்சாறும் தேறுலும்வாய் மடுப்போம் பசுந்தழையும் மரவுரியும் இசைந்திடவே உடுப்போம் செழுந்தினையு நறுந்தேனும் விருந்தருந்தக் கொடுப்போம் சினவேங்கைப் புலித்தோலின் பாயலிற்கண் படுப்போம் எழுந்துகயற் கணிகாலில் விழுந்துவினை கெடுப்போம் எங்கள் குறக் குடிக்கடுத்த வியல்பிதுகா ணம்மே.” “ஏ, வஞ்சி! மலையின் வளத்திலும் மலர்களின் மணத்திலும் என்மலை உன் மலைக்கு இளைத்ததென்றெண்ணாதே. எனது மலையில் கொழுங் கொடியில் செழுங் கிழங்கு வீழும். அக் கிழங்கை அகழ்ந்தெடுத்து நாங்கள் மகிழ்வோம். குன்றில் நிறைந்த குறிஞ்சி மலர் கொய்து, குழைத்த முல்லைக் கொடியில் வைத்துத் தொடுப்போம். பழம் பிழிந்து சாறெடுத்து அதனைத் தேனொடு கலந்து தினமும் உண்போம். செழுந் தினையும் நறும் தேனும் விருந்தினருக்குக் கொடுப்போம். பதனிட்ட புலித்தோலைப் பாயலாக விரிப்போம். காலையிலெழுந்து கருணை வடிவாய அம்மையைத் தொழுவோம். இத்தகைய மலையிலும் செம்மை வாய்ந்த மலை எங்குமே யில்லை” என்று செம்மாந்து எடுத்துரைத்தாள். இவ்வாறு அருவியிலும் இருமலையும் நிகரெனவே குற்றால மாதின் மனத்தில் தோன்றியது. ஆகவே, வேறு வகையால் பொதியமலை மாதை வெல்லக் கருதினாள். புதுப் பெருமையற்றோர் பழம் பெருமைகூறும் பான்மைபோலக் குற்றாலக் குறவஞ்சி தனது நாட்டின் தொன்மை கூறத் தொடங்கினாள். “எனது நாடு நன் நாட்டின் முன்னாட்டும் நாடாகும்; விண்ணோரும் விரும்பும் விழுமிய நாடாகும். நீங்காத வல்வினையும் நீங்கிய நல் நாடாகும். முக்கண்ணான் ஆடிய முதுமை பெறு நாடாகும். இத்தகைய பழம் பெருமை உனது நாட்டுக்கு உண்டோ?” என்று கூறி அளவிறந்த மகிழ்ச்சி யால் ஆடிப்பாடினாள். குற்றாலமாது கூறிய நாட்டின் பெருமையை நன்றாகக்கேட்ட பொதியமலை மாது, புன்முறுவல் பூத்துத் தன் மலையின் பழம் பெருமையைக் கூறத்தொடங்கினாள். இறையவரும் மறையவரும், வடகலையும், தென்கலையும், நவமணியும் குருமணியும் போற்றி யுறையும் பொதிய மலையின் பெருமையைக் குறமாது நிறை மொழிகளாற் கூறுகின்றாள். “மந்தமாருதம் வளரு மலையெங்கள் மலையே வடகலை தென்கலைபயிலு மலையெங்கள் மலையே கந்தவேள் விளையாடு மலையெங்கள் மலையே கனகநவ மணிவிளையும் மலையெங்கள் மலையே இந்தமாநிலம் புரக்கு மங்கயற்கள் அம்மை இன்பமுறும் தென்பொதிய மலையெங்கண் மலையே.” “அம்மே! மந்தமாருதம் வளரும் மலை எங்கள் மலையேயாகும். வடகலையும் தென்கலையும் வளர்ந்தோங்குமலை எங்கள் மலையேயாகும். கந்தவேள் விளையாடும் மலை எங்கள் மலையேயாகும். பொன்னும் நவமணியும் பொருந்திய மலை எங்கள் மலையேயாகும். அங்கயற்கண் அம்மை அருள் சுரந்து அமரும் மலை எங்கள் மலையேயாகும். இவ்வாறு இமையோரும் மறையோரும் விரும்பி உறையும் இணையற்ற நாடு எங்கள் நாடேயாகும்” என்று பொதிய நாட்டின் பழம் பெருமை கூறக்கேட்ட குறவஞ்சி சிறிது குனிந்தாள். நாட்டின் பெருமை கூறிய பொதிய மலைக் குறத்தியை வெல்ல இயலாதென்றறிந்து குற்றாலக் குறமாது, ஆற்றின் பெருமையால் அம்மாதை வெல்லக் கருதினாள். ஞானிகளும் அறியாத சித்திர நதியின் பிறப்பையும் குறவஞ்சி கூறத் தொடங்கினாள். திரிகூடமலையில் தேனருவி திரையாய் எழும்பிச் சிவகங்கை ஆறாய்ப் பாய்ந்து, செண்பக அடவியின் வழியாய்ச் சென்று பொங்குமா கடலில் வீழ்ந்து சித்திர நதியாகப் பாயும் சிற்றாற்றின் பெருமையை நிறைந்த சொற்களாற் போற்றிப் புகழ்ந்தாள். அப்பால் அந்நதி பெருகிவரும் பெருமையையும் அவ்வாற்றில் உகளும் மீன்களின் வகைகளையும் குறவஞ்சி கூறத் தொடங்கினாள். குற்றால மலையினின்று பெருகியோடும் சித்திர நதியில் பசவையும், குசவையும், வாளையும், கோளையும், தேனீயும், உளுவையும், மயிந்தியும், பயிந்தியும், அசரையும், மசரையும், அராலும், விராலும் அங்கு மிங்கும் பாய்ந்து விளையாடும் பெருமையைக் குறவஞ்சி விளக்கமாகக் கூறினாள். இதனைக் கேட்ட பொதிய மலைக் குறமாது தனது மலையில் தோன்றும் பெரியாறென்னும் பொருநையாற்றின் பெருமையையும், அவ்வாற்றில் அமைந்த மீன்களின் வகையையும் அழகுற எடுத்துரைத்தாள். குறு முனிவன் வாழும் மலை விடத்தே தோன்றி, வானருவியாய் விழுந்து, கல்யாணி தீர்த்தமாய் இழிந்து, பொருநையாய்ப் பெருகிவரும் பொதியமலை ஆற்றின் பெருமையைக் குறமாது கனிந்த சொற்களால் மொழிந்தாள். அவள் பொருநையாற்றின் பெருமையை வியந்து கூறக் கேட்ட குறவஞ்சி பொதிய மலையின் பெருமையை அறிந்து, இருமலையும் நிகரென்றும் இதற்கு ஐயமிலதேயாம் என்னும் சமரச அறிவோடு சாந்தமாய்ப் பிரிந்து சென்றாள். 2. நச்சினார்க்கினியர் 1“பச்சைமா லனைய மேகம் பௌவநீர் பருகிக் கான்ற வெச்சினாற் றிசையு முண்ணு மமிழ்தென வெழுநா வெச்சின் மெச்சிநா ணாளும் விண்ணோர் மிசைகுவர் வேத போத னச்சினார்க்கினிய னெச்சி னறுந்தமிழ் நுகர்வர் நல்லார்” புலவர் உச்சிமேற் கொள்ளும் நச்சினார்க்கினியர் பாண்டிவள நாட்டிலே மதுராபுரியில் பிறந்தவர்; அந்தண மரபினர்; பாரத்துவாச கோத்திரத்தினர்; சைவ மதத்தினர். இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர், ஆளவந்த பிள்ளை முதலிய உரையாசிரியர்கள் இவர் உரையில் எடுத்துக் கூறப்படுகின்றமை யின், இவர், அவர்கள் காலத்தவர் அல்லது பிற்பட்டவர் ஆதல் வேண்டும். பரிமேலழகரும் இவரும் ஒரே காலத்தவரென்றும் கருதப்படுவர். பரிமே லழகர் கொள்கையை இவர் திருமுருகாற்றுப்படை உரையில் மறுத்திருக் கின்றார். திருமுருகாற்றுப்படை பதினோராந் திருமுறையின் ஒரு பகுதியாக உள்ளது. திருமுறை நம்பியாண்டார் நம்பியாரால் வகுக்கப்பெற்றது. நம்பி யாண்டார் நம்பியின் காலம் பதினோராம் நூற்றாண்டென்பர். திருமுரு காற்றுப்படை பதினோராந் திருமுறையிற் சேர்க்கப்பட்டுள்ளதை நச்சினார்க் கினியர் கூறிற்றிலர். ஆகவே நச்சினார்க்கினியர், திருமுறை வகுப்பதற்கு முன்னிருந்தவராதல் வேண்டும். இன்றேல் திருமுருகாற்றுப்படை, திருமுறை யுள் பிற்காலத்துச் சேர்க்கப்பட்டதாதல் வேண்டும். உரை ஆசிரியர்களின் காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கும் பதினான்காம் நூற்றாண்டுக்கும் இடையிலென இக்கால ஆராய்ச்சியாளர் கூறுவர். பத்துப்பாட்டு, தொல்காப்பியம், கலித்தொகை சீவகசிந்தாமணி, முதலிய நூல்களுக்கும், குறுந்தொகையிற் பேராசிரியர் பொருளெழுதா தொழிந்த இருபது செய்யுளுக்கும் இவர் உரை செய்தனர். இதனை, “பாரத்தொல் காப்பியமும் பத்துப்பாட் டுங்கலியு மாரக் குறுந்தொகையு ளைஞ்ஞான்குஞ் - சாரத் திருத்தகு மாமுனிசெய் சிந்தா மணியும் விருத்திநச்சி னார்க்கினிய மே,” என்னும் வெண்பா விளக்குகின்றது. இவர், சீவகசிந்தாமணிக்கு முதன் முறை ஓர் உரை எழுதினார். அக் காலத்துப் புகழ்பெற்றிருந்த சைன வித்துவான்கள் அவ்வுரையை அங்கீகரித்திலர். அதுகண்டு இவர் அருகத நூல்கள் பலவற்றையும் நலமுற ஆராய்ந்து இரண்டாவது ஓர் உரை எழுதி அவர்களுக்குக் காட்ட, அவர்கள் உற்று நோக்கி வியந்து அவ்வுரையை அங்கீகரித்துக் கொண்டனர் என்று சைனர் கூறுவர். இவர் தொல்காப்பிய உரை முதலியவற்றில் வேதம், வேதாங்கம் முதலிய நூல்களிலிருந்தும், பல உரைகளிலிருந்தும் பற்பல பொருள்களை எடுத்து ஆங்காங்கு நன்கு காட்டிப் போகின்றனர். அதனால் இவர், வட மொழியிலும் மிக்க பயிற்சி யுடையவரென்று சொல்வதுடன் பலவகையான கலைகளிலும் வல்லவரென்று சொல்லவுமிடமுண்டு. இவர் காலத்தில் பரிமேலழகர் உடனிருந்தாரெனக் கூறுவோர், “குடம்பை தனித்தொழியப் புட்பறந்தற்றே - உடம்பொ டுயிரிடை நட்பு” என்னும் குறளில் `குடம்பை’ என்பதற்கு நச்சினார்க்கினியர் கூண்டு எனவும், பரிமேலழகர் முட்டை எனவும், பொருள் கூறினர் எனவும், நச்சினார்க்கினியர், பரிமேலழகர் உரையைப் புகழ்ந்தனரெனவுங் கூறுவர். 1பாற்கடல்போற் பரந்த நல்ல நூல்களின் உயர்ந்த பொருள்களை நுண்ணிதாகக் கற்றுணர்ந்த குற்றந்தீர்ந்த கேள்வியுடைய புலவோர் அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருள் பொதிந்த நூல்களாகச் செய்தனர். நச்சினார்க்கினியர் அந்நூல்களையெல்லாம் துறைபோகக் கற்றறிந்த சிந்தையுடையர். எழுத்தும் சொல்லும் பொருளுமாகிய மூன்றும் இழுக்கின்றி அமைந்த திருந்திய பழைய புகழுடைய தொல்காப்பியம் என்னும் ஆழ்ந்த கடற்பரப்பை நாவாய்கொண்டு கடந்து பெரிய கரையை அடைதலரிது. அதனைக் கற்றுக் கரைகாணமாட்டாத கல்லா மாந்தர் கற்றுக் கரையேறுதல் வேண்டியும், நல்ல அறிஞர் விரும்புதல் வேண்டியும், மறுவுங் குறையு மின்றிக் கதிருடைய கலை நிறைந்த முழுமதிபோல், இவர் காண்டிகை உரை செய்தார்; பண்டையோர் புகழ்ந்த நூல்களை ஆராய்ந்து, சான்றோர் பாடிய தண்ணிய தமிழின் சுவையைக் கற்போர்க்கு விளங்குமாறு பத்துப்பட்டுக்குத் தெள்ளிய உரை எழுதினார். கடல் சூழ்ந்த உலகில் அறிவுடையோர் பயிலுங் கலித்தொகைக் கருத்தினை விளக்கியும், உள்ளுறை உவமம், ஏனை உவமம், உரிப்பொருள், மெய்ப்பாடு, வினைமுடிவு முதலியவற்றைக் காட்டியும் யாவரும் போற்ற இனிய உரை எழுதினார். இவர், உலகம் புகழ்ந்து கொண்டாடும் சிந்தாமணிக்குத் திருத்தக்க தேவரின் கருத்து இது என் நுண்ணுரை செய்த புலமையுடைய ஆசிரியர்; பேராசிரியர் உரை எழுதாதொழிந்த குறுந்தொகையின் இருபது பாடல் களுக்கும் உரை செய்த புகழமைந்த மறையோன்; எட்டுத்திசைகளிலும் புகழ் விளங்க, வண்டு ஒலிக்கும் சோலையுடைய மதுராபுரியிற்றோன்றிய ஆசிரியன்; பாரத்துவாசிகோத்திரத்திற்றோன்றியவரும், நான் மறை துணிந்துகூறும் நற் பொருளாகியஞானம் நிறைந்தவருமாகிய சிவச்சுடர்; தனக்குத் தானே ஒப்பாகிய தன்மையும் மெய்மையுமுடைய நச்சினார்க் கினியன் என்னும் பெயரோன்; இருவினைகளையும் போக்கும் அருவி யுடைய பொதிய மலையிலிருக்கும் குறுமுனிவர் ஆராய்ந்த தமிழ் விளங்க, அவன் புகழ் இவ்வுலகில் ஊழிகாலம் விளங்குவதாக. “எவனால வாயிடைவந் தமுதவா யுடையனென வியம்பப் பெற்றோன் எவன் பண்டைப் பனுவல்பல இறவாது நிலவவுரை யெழுதி யீந்தோன் எவன் பரம உபகாரி யெவ னச்சினார்க்கினிய னெனும்பேராளன் அவன்பாத விருபோது மெப்போது மலர்கவென தகத்து மன்னோ” (இ-ள்) எவன் மதுரையிற் பிறந்து அமுதாவயன் என்று சொல்லப்பெற்றோன்? எவன் பழைய நூல்கள் இறந்துபோகாது நிலவ உரையெழுதி அளித்தோன்? எவன் பெரிய உபகாரி? எவன் நச்சினார்க் கினியன் எனும் பெயருடையோன்? அவனது பாதங்களாகிய இருமலர் களும் என்னகத்து எப்போதும் மலர்வனவாக. 3. சரித்திரம் கழிந்த நிகழ்ச்சிகளை உள்ளவாறு மொழிதல் சரித்திரம் எனப்படுகின் றது. கட்டுக் கதைகள் சரித்திரமாகா. சரித்திரத்தையும் கட்டுக் கதைகள் போன்ற பரம்பரைக் கதைகளையும் பிரித்து அறிவது எளிது அன்று. எழுத்துப் பிரமாணங்கள், முற்றாகக் கொள்ளத் தக்கனவல்ல. சில செவிவழிக் கதைகளும் சரித்திரங்களோடு கலந்திருத்தல் கூடும். செவிவழிக் கதைகள் மிக ஐயத்துக்கு இடமானவையாகவும், சிலவேளை கட்டுக்கதைகளாகவும் மறந்து விடத் தக்கனவாகவும் இருக்கும். மனிதன் செவிவழிக் கதைகளை வைத்துக்கொண்டு, பல கற்பனைக் கதைகளை உண்டாக்கி யிருக்கிறான். இதனால் உண்மைக் கதைகளையும் கட்டுக் கதைகளையும் பிரித்தறிய முடியாமல் இருக்கின்றது. சரித்திரம் எழுதுவதற்கு உண்மையான ஆதாரங்கள் மட்டும் போது மானவையல்ல. பல உண்மைச் சரித்திரங்களும், காலக் குறிப்புகளும் எகிப்து, ஆசீரியா, சீனம் முதலிய நாடுகளைப் பற்றிக் காணப்படுகின்றன. உண்மைச் சரித்திரங்களாயினும் அவை அந் நாடுகளின் சரித்திரம் எழுது வதற்குப் போதுமானவையல்ல. ஒரு காலத்தில் இருந்த அரசன் அடுத்த நாட்டு அரசனோடு போராடி வென்றான், அல்லது தோற்றான் என்பன போன்ற குறிப்புகள் கால சம்பந்தமான பயனுள்ளன. ஆனால் அவை சரித்திரம் ஆகமாட்டா. காலக் குறிப்புகள் மாத்திரமல்ல, சமூக நிகழ்ச்சிகள், அவற்றின் படிப்படியான முன்னேற்றம், அவற்றின் வளர்ச்சிக் காலத்தில் மாற்றமடைந்த நிகழ்ச்சிகள், அவை ஒரு போக்கிலிருந்து இன்னொரு போக் கில் மாறுதலடைதல் முதலியவற்றை எல்லாம் விளக்கிக் கூறுவதே சரித்திரமாகும். பரந்த பூமியின் மேற்பரப்பில் மனிதர் வாழ்ந்து வருகின்ற காலத்தை யும் இடத்தையும் உணர்த்தும் சரித்திரமோ அற்பமானது. பழைய அநாகரிக மக்களுக்குச் சரித்திரம் இல்லை. வாழ்க்கையின் பொருட்டுப் போராடுவதில் அவர்களுடைய ஆற்றல் ஓய்ந்துவிட்டது. அவர்கள் தம்மைக் கூட்டமாகச் சேர்ந்து வாழும் உயிர்களாக நினைக்கவும் சமூக நிகழ்ச்சிகளை எழுதவும் நேரம் பெறவில்லை. அரைகுறையாகத் திருத்தமடைந்த மக்கள் சரித்திர மெழுதும் அறிவைப் பெறாமலும் அதற்கு வேண்டிய ஆதாரங்கள் இல்லா மலும் இருந்தனர். ‘சாதி’ என்று சொல்லப்படுகின்ற பழமையான அடக்கி யாளும் பரம்பரை வழக்கினால் இந்தியா, எகிப்து, சீனா முதலிய நாடுகளின் சமூக வளர்ச்சி மிகப் பைய ஊர்ந்து செல்கின்றது; சில சமயங்களில் அது வளரவில்லை என்று கூறத்தக்கவாறு மெதுவாகச் செல்கின்றது. பாட்டன் வாழ்ந்ததுபோலவே பேரனும் வாழ்கின்றான். இந் நிலைமையில் சரித்திரம் எழுதுவதற்கு வேண்டிய செய்திகள் இல்லாமல் இருக்கின்றன. பெரிய மக்கட் சமூகம் தலைமுறையாக ஒரே வகையான நிலைமையில் வாழ்தல் பெரிதும் கருத்தில் கொள்ளத்தக்கது. கிழக்குத் தேசங்களில் போரும் சமாதானமும் பெரிய மாறுதல்களைச் செய்திருக்கும் என்று தெரிகின்றது. ஆனால் அவ்வகையான மாறுதல்கள் சரித்திர சம்பந்தம் பெறாமலும் பெறுபேறுகள் குறிக்கப்படாமலும் இருக்கின்றன. உண்மையான சரித்திரத்துக்கு நாலாயிரம் ஆண்டுகளை மட்டும் கொள்ளலாம். ஆரம்பம், பழைய ஏற்பாட்டுச் சரித்திரங்கள் ஆகலாம். யூதர்களின் சரித்திரக் குறிப்பு முடிவடைவதன் முன்னே கிரேக்கர் சரித்திரம் எழுத ஆரம்பித்தனர். அடுத்த படியில் உரோமர், தொடர்பான சரித்திரம் எழுதி வந்திருக்கின்றனர். இப்பொழுது சரித்திரத்துக்குள்ள ஆதாரங்கள் மேற்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் அதிகம் கிடைக்கின்றன. உண்மை நிகழ்ச்சிகளை விசாரணை செய்வதில் ஆரம்ப சரித்திரக் காரர் முயற்சி எடுக்கவில்லை. சரித்திரம் எழுதுவோரும் சரித்திரத்தைப் படிப்போரும், உண்மையான சம்பவங்களைப் பொருட்படுத்தும் நிலை மையை அடையவும் இல்லை. ஆரம்ப சரித்திர ஆசிரியர் உண்மைச் சம்ப வங்களை விளக்குவதை விட, மக்களைக் கவரக் கூடிய கற்பனைகளிலும் சுவைகளிலும் கருத்துச் செலுத்தினர். இரங்கத்தக்க அல்லது நகைக்கத்தக்க ஒரு நல்ல கதை, உண்மை ஆராயப்படாதே விரும்பப்பட்டது. அவ்வகைக் கதைகளில் நேர்மைக்கும் தீ நெறிக்குமுள்ள தாரதம்மியங்கள் உச்ச நிலையிற் கூறப்படுகின்றன. இவையே பழஞ் சரித்திர ஆசிரியர்களின் நோக்கங்களாக இருந்தன. பழைய நாடக ஆசிரியர்களைப் போலவே இவர்களும் உண்மைகளோடு கட்டுக்கதைகளையும் கலந்து எழுதினர். அவர்கள் எடுத்துக் கொண்ட பொருள்கள் ஒரே வகையின. நாட்டைக் காப்பாற்றிய வீரனைப் பற்றியும் தோற்றுப்போன பகைவனைப் பற்றியுமே நாடகங்கள் எழுதப்பட்டன. அவர் களைப் பற்றிய வருணனைகள் உணர்ச்சி உண்டாக்கத்தக்க கற்பனைகளாக இருந்தன. இவை கண்டிக்கத் தக்கனவாக இருப்பினும் பேச்சு வன்மைக்கும் ஆவேசத்துக்கும் ஏற்றனவாக இருந்தன. ஹெரதோதசு (கி.மு. 500) முதலிய கிரேக்க சரித்திர ஆசிரியர்களால் எழுதப்பட்ட சரித்திரங்கள் இவ்வகை யினவே. பழைய சரித்திரம், ஒரு பொருளைப் பார்த்து அதன் சரியான சாயலை வரையாது மற்ற எல்லா அழகுகளும் தோன்ற வரையப்பட்ட ஓவியம் போன் றது. முற்கால ஆசிரியர்கள், பொது மக்களுக்குச் சரித்திரம் எழுதினார்களே யன்றிச் சரித்திரக் கலையைப் பயில்வோர்க்காக எழுதவில்லை என்று கூறலாம். 4. 1முச்சங்கமும் இறையனார் அகப்பொருளும் தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கமென மூவகைப்பட்ட சங்கம் இரீஇயினார் பாண்டியர்கள். அவருள் தலைச்சங்க மிருந்தார் அகத்தியனாரும், திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளும், குன்றெறிந்த குமரவேளும், முரஞ்சியூர் முடிநாகராயரும், நிதியின் கிழவனுமென, இத்தொடக்கத்தார், ஐற்றுஞ்ஞூநாற்பத் தொன்பதின்மரென்ப. அவருள்ளிட்டு நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினாரென்ப. அவர்களாற் பாடப்பட்டன எத்துணையோ பரிபாடலும், முதுநாரையும், முதுகுருகும், களரிய விரையுமென இத்தொடக்கத்தன. அவர் நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு சங்கமிருந்தாரென்ப. அவர்களைச் சங்கமிரீஇயினார் காய்சின வழுதி முதலாகக் கடுங்கோனீறாக எண்பத் தொன்பதின்மரென்ப. அவருட் கவியரங்கேறினார் எழுவர் பாண்டிய ரென்ப. அவர் சங்கமிருந்து தமிழ் ஆராய்ந்தது கடல் கொள்ளப்பட்ட மதுரை என்ப. அவர்க்கு நூல் அகத்தியம். இனி இடைச்சங்கமிருந்தார் அகத்தியனாரும், தொல்காப்பியனாரும், இருந்தையூர்க் கருங்கோழியும், மோசியும், வெள்ளுர்க் காப்பியனும், சிறுபாண்டரங்கனும், திரையன்மாறனும், துவரைக் கோனும், கீரந்தையுமென இத்தொடக்கத்தார் ஐம்பத்தொன் பதின்மரென்ப. அவருள்ளிட்டு மூவாயிரத் தெழுநூற்றுவர் பாடினாரென்ப. அவர்களாற் பாடப்பட்டன கலியும், குருகும், வெண்டாளியும், இசை நுணுக்கமும், பூதபுராணமுமென இவையென்ப. அவர் மூவாயிரத்தெழுநூற்றியாண்டு சங்க மிருந்தாரென்ப. அவரைச் சங்கமிரீஇயினார், வெண்டேர்ச் செழியன் முதலாக முடத்திருமாறனீறாக ஐம்பத்தொன்பதின்மரென்ப. அவருட் கவியரங் கேறினார் ஐவர் பாண்டிய ரென்ப. அவர் சங்கமிருந்து தமிழ் ஆராய்ந்தது கபாடபுரத்தென்ப. அக் காலத்துப் போலும் பாண்டியனாட்டைக் கடல் கொண்டது. இனிக் கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தார் சிறுமேதாவியாரும், சேந்தம்பூதனாரும், அறிவுடையரனாரும், பெருங்குன்றூர்க் கிழாரும், இளந்திருமாறனும், மதுரையாசிரியர் நல்லந்துவனாரும், மருதனிளநாகனா ரும், கணக்காயர்மகனார் நக்கீரனாருமென இத்தொடக்கத்தார் நாற்பத்தொன் பதின்மரென்ப. அவருள்ளிட்டு நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினா ரென்ப. அவர்களாற் பாடப்பட்டன நெடுந்தொகை நானூறும், குறுந்தொகை நானூறும், நற்றிணை நானூறும், புறநானூறும், ஐங்குறுநூறும், பதிற்றுப் பத்தும், நூற்றைம்பது கலியும், எழுபது பரிபாடலும், கூத்தும், வரியும், சிற் றிசையும் பேரிசையுமென்று இத்தொடக்கத்தன. அவர்க்கு நூல் அகத்திய மும் தொல்காப்பியமுமென்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது ஆயிரத் தெண்ணூற்றைம்பதிற்றியாண்டு என்ப. அவர்களைச் சங்கமிரீ இயினார் கடல் கொள்ளப்பட்டுப் போந்திருந்த முடத்திருமாறன் முதலாக உக்கிரப் பெருவழுதியீறாக நாற்பத்தொன்பதின்ம ரென்ப. அவருட் கவியரங்கேறி னார் மூவர் பாண்டியரென்ப. அக் காலத்துப் பாண்டியனாடு பன்னீரியாண்டு வற்கடஞ் சென்றது; செல்லப் பசிகடுகுதலும் அரசன் சிட்டரையெல்லாம் கூவி “வம்மின், யான் உங்களைப் புறந்தரகில்லேன்; என் தேயம் பெரிதும் வருந்துகின்றது; நீயிர் போய் நுமக்கறிந்தவாறு புக்கு, நாடு நாடாயின ஞான்று என்னை யுள்ளி வம்மின்” என்றான். என, அரசனை விடுத்து எல்லாரும் போயின பின்றைக் கணக்கின்றிப் பன்னீரியாண்டு கழிந்தது. கழிந்த பின்னர் நாடு மலிய மழைபெய்தது. பெய்த பின்றை அரசன் “இனி நாடு நாடாயிற்றாகலின் நூல் வல்லாரைக் கொணர்க” என்று எல்லாப் பக்கமும் ஆட்போக்க, எழுத்ததி காரமுஞ் சொல்லதிகாரமும் வல்லாரை எங்கும் தலைப்பட்டுக் கொணர்ந்து, பொருளதிகாரம் வல்லாரை எங்குந்தலைப்பட்டிலே மென்றுவந்தார்; வர, அரசனும் புடைபடக்கவன்று “என்னை! எழுத்துஞ் சொல்லும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே! பொருளதிகாரம் பெறேமெனின் இவை பெற்றும் பெற்றிலேம்” என்று சொல்லா நிற்ப, மதுரை ஆலவாயில் அழனிறக் கடவுள் சிந்திப்பான், “என்னை பாவம்! அரசற்குக் கவற்சி பெரி தாயிற்று. அதுதானும் ஞானத்திடையதாகலான் யாம் அதனைத் தீர்க்கற் பாலம்” என்று இவ்வுறுபது சூத்திரத்தையுஞ் செய்து மூன்று செப்பிதழகத் தெழுதிப் பீடத்தின் கீழிட்டான். இட்ட பிற்றை ஞான்று தேவர்குலம் வழிபடுவான், தேவர் கோட்டத்தை எங்கும் துடைத்து நீர் தெளித்துப் பூவிட்டுப் பீடத்தின் கீழ்ப் பண்டென்றும் அலகிடாதான், அன்று தெய்வக் குறிப்பினான் அலகிடுவனென்று உள்ளங் குளிர அலகிட்டான். இட்டாற்கு அவ்வலகினோடும் இதழ் போந்தன. போதரக் கொண்டு போந்து நோக்கினாற்கு, வாய்ப்புடைத்தாயிற்றோர் பொருளதிகார மாய்க் காட்டிற்று. காட்டப், பார்ப்பான் சிந்திப்பான்; “அரசன் பொருளதிகார மின்மையிற் கவல்கின்றானென்பது பட்டுச் செல்லாநின் றுணர்ந்து நம் பெருமானருளிச் செய்தானாகும்” என்று, தன் அகம் புகாதே கோயிற்றலைக் கடைச் சென்று நின்று கடைகாப்பார்க் குணர்த்த, கடைகாப்பார் அரசற் குணர்த்த, அரசன் புகுதருக என்று பார்ப்பானைக் கூவச் சென்று புக்குக் காட்டக்கொண்டு நோக்கி, “இது பொருளதிகாரம்! நம் பெருமான் நமது இடுக்கண் கண்டு அருளிச் செய்தானாகற்பாலது” என்று, அத்திசை நோக்கித் தொழுது கொண்டு நின்று, சங்கத்தாரைக் கூவுவித்து, “நம் பெருமான் நமது இடுக்கண் கண்டு அருளிச்செய்த பொருளதிகாரம்! இதனைக் கொண்டு போய்ப் பொருள் காண்மின்” என, அவர்கள் அதனைக் கனமாப் பலகை ஏறியிருந்தாராய்வுழி, எல்லாரும் தாம்தர முரைத்த உரையே நன்றென்னு சில நாளெல்லாஞ் சென்றன. செல்ல, நாம் இங்ஙனம் எத்துணை யுரைப்பினும் ஒருதலைப்படாது; நாம் அரசுனுழைச் சென்று நமக்கோர் காரணிகனைத் தரல்வேண்டுமென்று கொண்டு போந்து, அவனாற் பொருளெனப்பட்டது பொருளாய், அன்றெனப்பட்டது அன்றா யொழியக் காண்டுமென எல்லா ரும் ஒருப்பட்டு அரசனுழைச் சென்றார். செல்ல. அரசனும் எதிர் எழுந்து சென்று, “என்னை? நூற்குப்பொருள் கண்டிரேல்” என, “அது காணுமாறு எமக்கோர் காரணிகனைத் தரல்வேண்டும்” எனப் “போமின் நுமக்கோர் காரணிகன் எங்ஙனம் நாடுவேன்? நீவிர் நாற்பத் தொன்பதின்மராயிற்று. நுமக்கு நிகராவார் ஒருவர் இம்மையினின்றே” என்று அரசன் சொல்லப் போந்து, பின்னையும் கனமாப் பலகை ஏறியிருந்து, “அரசனும் இது சொல் லினான். யாங்காரணிகனைப் பெறுமாறு என்னை கொலென்று சிந்திப்புழிச் “சூத்திரஞ் செய்தான் ஆலவாயி லவிர்சடைக் கடவுளன்றே! அவனையே காரணிகனையும் தரல்வேண்டுமென்று சென்று வரங்கிடத்தும்” என்று சென்று வரங்கிடப்ப, இடையாமத்து, “இவ்வூர் உப்பூரி குடிகிழார் மகனா வான், உருத்திர சன்மன் என்பான் பைங்கண்ணன், புன்மயிரன் ஐயாட்டைப் பிராயத்தன் மூங்கைப்பிள்ளை உளன்; அவனை அன்னனென்றிகழாது கொண்டுபோந்து ஆசனமேலிரீஇக் கீழிருந்து சூத்திரப் பொருளுரைத்தாற் கண்ணீர் வார்ந்து மெய்ம்மயிர் சிலிர்க்கும் மெய்யாயின உரை கேட்ட விடத்து; மெய்யல்லா உரை கேட்டவிடத்து வாளா இருக்கும். அவன் குமார தெய்வம்; அங்கோர் சாபத்தினாற்றோன்றினார்” என முக்காலி சைத்த குரல் எல்லார்க்கும் உடன்பாடாயிற்றாக, எழுந்திருந்து தேவர் குலத்தை வலங் கொண்டு போந்து, உப்பூரி குடிகிழாருழைச் சங்க மெல்லாஞ் சென்று இவ் வார்த்தையெல்லாம் சொல்லி ஐயனாவான் உருத்திர சன்மனைத் தரல் வேண்டுமென்று வேண்டிக்கொடுபோந்து, வெளியதுடீஇ, வெண்பூச் சூட்டி, வெண்சாந்தணிந்து, கனமாப்பலகையேற்றி இரீஇக் கீழிருந்து சூத்திரப் பொருளுரைப்ப, எல்லாரும் முறையே உரைப்பக் கேட்டுவாளா இருந்து, மதுரை மருதனிள நாகனார் உரைத்தவிடத்து ஒரோ வழிக்கண்ணீர் வார்ந்து மெய்ம்மயிர் நிறுத்துப் பின்னர்க் கணக்காயனார் மகனார் நக்கீரனார் உரைத்த விடத்துப் பதந்தோறுங் கண்ணீர் வார்ந்து மெய்ம் மயிர் சிலிர்ப்ப இருந்தான். இருப்ப, ஆர்ப்பெடுத்து மெய்யுரை பெற்றாம் இந்நூற் கென்றார். அதனால், உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மனாவான் செய்தது இந்நூற் குரையென்பாருமுளர்; அவர் செய்திலர், மெய்யுரை கேட்டா ரென்ப. மதுரை ஆலவாயிற் பெருமானடிகளாற் செய்யப்பட்ட நூற்கு. நக்கீரனால் உரைகண்டு குமாரசாமியாற் கேட்கப்பட்ட தென்க. இனி உரை வந்தவாறு சொல்லுதும். மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார், தம் மகனார் கீரங் கொற்றனார்க் குரைத்தார்; அவர் தேனூர்கிழார்க்குரைத்தார்; அவர் படியங் கொற்றனார்க் குரைத்தார்; அவர் செல்வத்தாசிரியர் பெருஞ்சுவனார்க் குரைத் தார்; அவர் செல்லூராசிரியர் ஆண்டைப் பெருங்குமாரனார்க் குரைத்தார்; அவர் திருக்குன்றத்தாசிரியர்க் குரைத்தார்;அவர் மாதவளனார் இளநாகனார்க் குரைத்தார்; அவர் முசிறியாசிரியர் நீலகண்டனார்க் குரைத்தார். இங்ஙனம் வருகின்றது இவ்வுரை. 5. எழுத்தின் வரலாறு மக்கள் வரலாற்றில் எழுத்துக்கள் ஆரம்பிப்பதற்குச் சில காரணங்கள் உண்டு. மக்கள் தமது ஆயுதங்களையும் ஆடு மாடுகளையும் மட்பாத்திரங் களையும் குறிக்கும் அடையாளங்களை இடுதல், எண்ணங்களை அண்மை யில் இல்லாதவர்களுக்கு அறிவித்தல் முதலியன அவற்றுள் தலைமையான காரணங்களாகும். ஒவ்வொரு மக்கட்குழுவினருடைய பேச்சிற் காணப்படும் ஒலி களைக் குறிக்கும் வடிவங்கள் எழுத்து எனப்படும். ஒரு மொழியில் எத்தனை தனி ஒலிகள் காணப்படுகின்றனவோ அத்தனை எழுத்துகளே அதற்கு உண்டு. பல நூற்றாண்டுகளாக ஒரு மொழியின் ஒலிகள் மாறாமல் இருத்தல் அரிது. ஒலிகள் மாறுபடவே பழைய எழுத்துக்களின் வடிவங்கள் பயன் அற்றுப் போகின்றன, புதிய எழுத்துக்கள் உண்டாகின்றன. ஒரு எழுத்தே பலவகையான ஒலிகளை உச்சரிக்க வழங்கப்படுவதுமுண்டு. அவ்வவ் வொலிகளைக் குறிக்கத்தக்க முறையில் அவ் வெழுத்து மாற்றமடைவது முண்டு. இவைபோன்ற காரணங்களால் எழுத்துக்கள் காலத்துக்குக் காலம் மாறுபடுகின்றன. ஆங்கில மொழியின் எழுத்துக்கள் இலாத்தின் எழுத்துகளைப் பின்பற்றி எழுதப்பட்டன. இலாத்தின் எழுத்துக்கள் கிரேக்க எழுத்துகளைப் பார்த்துச் செய்யப்பட்டன. கிரேக்க எழுத்துகள் பினீசிய எழுத்துகளிலிருந்து பிறந்தன. பினீசிய எழுத்துகள் ஆப்பெழுத்துகளிலிருந்து தோன்றின. ஆப்பெழுத்துகள் ஓவிய எழுத்துகளின் திரிபு. ஆதி எழுத்துக்கள் ஓவிய வடிவமாக இருந்தன. அவ்வெழுத்து களின் பிறப்பிடம் எகிப்து, எழுதும் இலகுவை நோக்கி அவ்வெழுத்துகள் சில மாற்றமடைந்தன. களிமண் தட்டில் சதுரமான தூலிகைகளால் எழுதப் பட்டமையால் அவ்வெழுத்துகள் ஆப்பின் வடிவைப் பெற்றன. ஆகவே அவ்வெழுத்துகள், ஆப்பெழுத்துகள் எனப்பட்டன. இவ்வாப்பெழுத்து களைப் பின்பற்றியே பினீசியர் எழுதினர். மக்கள் நாகரிகமுறாத காலத்தில் மொழி, ஓவிய முறையாகவே எழுதப்பட்டது. காலப்போக்கில் ஓவிய எழுத்துகள் பலவகை மாற்றங்களடைந்தன. அதனால் பிற்கால எழுத்துகள் ஓவியங்களின் வடிவை இழந்தன. எகிப்திலே ஓவிய எழுத்து வழங்கிய காலத்தில் உச்சரிப்புக்கு ஏற்ப எழுதப்படும் எழுத்துக்களும் இருந்தன. உச்சரிப்பு முறைக்கு ஏற்ற அவ் வெழுத்துகளும் ஓவிய எழுத்துகளின் திரிபு என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். ஓவிய எழுத்துகள் கண்ணுக்குப் புலப்படும் பொருள்களின் வடிவங்கள் அல்லது குறிகளாக இருந்தன. வடிவமில்லாத செய்கை, குணம் முதலியவற்றைக் குறிக்குமிடத்து ஓவிய எழுத்துகளோடு உச்சரிப்பு முறைக்கேற்ற சொற்கள் வைத்து எழுதப்பட்டன. இக் காரணத்தினாலேயே இருவகை எழுத்துகளும் ஒரு காலத்தில் வழங்கலாயின. எழுத்தை உண்டாக்குவதற்குப் போதிய நாகரிகமும் எண்ணங்களின் முதிர்ச்சியும் வேண்டும். இந் நிலையை அடைந்த மக்களே எழுத்துகளை வழங்கினர். ஒரு பொருளை உணர்த்த வரிவடிவமான ஒரு குறியீட்டைப் பயன்படுத்தலே முற்கால எழுத்தாகும். பின்னே தனித்தனி ஒலிகளுக்கு எழுத்துகள் ஏற்பட்டன. இவ்வெழுத்துகள் உயிர், மெய் என இரு பிரிவில் அடங்கும். நாம் அறிந்துள்ள மொழிகளை எல்லாம் நான்கு அல்லது ஐந்து ஆதி மொழிகளின் கூட்டங்களாகப் பிரிக்கலாம். இவை வெவ்வேறு வகையாகக் காணப்பட்டாலும் ஆதியில் ஓவிய எழுத்துகளாக இருந்தன. ஆப்பெழுத்து களும், சீன, மெக்சிக்க, யூக்காற்றன், மத்திய அமெரிக்க எழுத்துகளும் எகிப்திய எழுத்துகளே. சீன மெக்சிக்க எழுத்துகளும் ஆப்பெழுத்து களுமே ஆதியில் வியாபகம் அடைந்திருந்தன. ஆப்பெழுத்துகள் பினீசிய எழுத்துகளாயின. ஐரோப்பிய எழுத்துகள் பினீசிய எழுத்தினின்றும் பிறந்தன. திருத்தமான ஓவிய எழுத்துகளிலும் சில குறைபாடுகளுண்டு. அவை எண்ணில் அதிகம் இருந்தமையின் அவற்றை ஞாபகத்தில் வைத்திருத்தல் மிக அரிதாக இருந்தது. எழுத்தின் பயன் அதிகப்பட்ட காலத்தில் அவை குறுக்கி எழுதப்பட்டன. இதனால் அவை பழைய வடிவினின்றும் மாறு பட்டன. ஆகவே, ஓவிய சம்பந்தமான முதன்மையை அவை இழக்க லாயின. எண்ணில் மிகுதிப்பட்ட எழுத்துக்களைப் பயில்வது இலகுவன்று; ஓவிய எழுத்துகளால் எல்லா இலக்கண முடிபுகளையும் காட்ட இயலாது. சொற்கள் வைக்கப்படும் முறைகளைக்கொண்டே எழுவாய், செயப்படு பொருள் முதலியவற்றை அறியவேண்டியிருந்தது. சில சமயங்களில் சொற் களுக்கிடையில் உள்ள தூரத்தை கொண்டும் அவற்றை அறிய வேண்டி யிருந்தது. எச் சமூகத்தினரும் வேண்டுமென்று எழுத்துகளை மாற்றமாட்டார்கள். இரண்டு நாகரிகங்கள் சந்தித்து, ஒன்றை ஒன்று ஏற்றுக் கொள்ளும்போது இவ் வகை மாறுதல்கள் உண்டாகும். இதனால், தாழ்ந்த நிலையிலுள்ள சமூகம் முன்னேற்ற மடையும். அப்பொழுது அச் சமூகத்தினர் புதிய பொருள்களுக்கு, அப் பெயர்கள் சம்பந்தமான பெயர்களை உண்டாக்கு வார்கள். உரோமர், தாமறியாததிருந்த யானைக்கு ‘லூகானிய எருது’ எனப் பெயரிட்டு எழுதினார்கள். தாழ்ந்த நாகரிகமுடையவர்கள் ஓவிய எழுத்துக்குமேல் அறியாமல் இருப்பார்களானால், தாம் எழுத விரும்பிய பெயரின் உச்சரிப்பைக் கொடுக்கக்கூடிய பழைய குறிகளால் எழுதுவர். சில பொருள்களின் வடிவங்களை எழுதி, அவற்றின் பெயர்களின் முதல் அசையைச் சேர்த்து உச்சரிக்குமிடத்துக் கருதிய பெயரின் உச்சரிப்புத் தோன்றுதல் அம் முறையாகும். கத்திரிக்காயின் வடிவையும் ஒரு கோலின் வடிவையும் எழுதி, ‘கத்தரிக்கோல்’ என்று உச்சரித்தல் இதற்கு உதாரண மாகும். சீன மொழியில் எண்ணில்லாத எழுத்துகள் இருக்கின்றன. அவை எல்லாம் ஆதியில் ஓவிய எழுத்துகளாக இருந்தன. ஆனால் அவற்றின் ஆதிப்பொருள்கள் சிறிதளவில் மட்டும் அறியக் கிடக்கின்றன. அக் குறிகள் சூரியன் (வட்டமும் உள் ஒரு புள்ளியும்) சந்திரன் (பிறையும் உள்ளே ஒரு கீற்றும்) மழை (கவிந்த அரை வட்டத்துள் துளிகள்) மலை (ஒன்றன் பக்கத்தில் ஒன்றாக மூன்று சிகரங்கள்) முதலிய இவைபோன்ற இயற்கைப் பொருள்களைக் குறிக்கின்றன. பின் இவை ஒன்றோடு ஒன்று இணைக்கப்படு கின்றன. கண்ணுக்குப் பக்கத்தில் துளியை இட்டால் ‘கண்நீர்’ என்று பொருள் படும். இவை எல்லாம் ஓவிய எழுத்துகள். ஆதியில் எண்ணங்களை மட்டும் உணர்த்துவனவாக இருந்து, இப்பொழுது உச்சரிப்பு முறையில் மட்டும் பயன்படும் சொற்களும் சீன மொழியில் இருக்கின்றன. சீன மொழியிலுள்ள ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு சொல்லைக் குறிக்கும். ஆப்பெழுத்து பாரசீகம், சின்ன ஆசியா, பாபிலோன் முதலிய நாடுகளில் வழங்கிற்று. ஆப்பெழுத்திற் சில எழுத்துகள் ஓவிய எழுத்துகளே என அவை தெளிவாகக் காட்டுகின்றன. இவ்வெழுத்து பாபிலோனிய 1செமத்திய மொழிகளை வழங்கிய மக்களுக்குரியதன்று. பாபிலோனியர் அதனைச் செமத்திய மக்களுக்கு முற்பட்ட சுமேரிய சாதியாரிடமிருந்து கற்றனர். ஆப்பெழுத்துகள் அசீரியாவிலும் பாபிலோனிலுமிருந்து சுமேரிய ரது அல்லது பாபிலோனியரது மொழிகளை வழங்காத பிற நாடுகளிற் பரவின. ஆசியாவிலும் கிரேத்தா (Crete) முதலிய ஐசியன் தீவுகளிலும் இவ் வகை எழுத்துச் சாசனங்கள் காணப்படுகின்றன. இவ்வாறு வழங்கிய மொழி கித்தைதி (Hittite) மொழி எனப்படும். கி.மு. 800 வரையில் எகிப்திய எழுத் துகள் போன்ற ஒரு வகை எழுத்து கித்தைதியில் வழங்கிற்று. கிரேத்தாவிற் காணப்பட்ட மைசீனிய எழுத்துகள் எகிப்திய மட்பாத்திரங்களிற் காணப் படும் எழுத்துகள் போல் இருக்கின்றன. புரதான சாதியினர் யாவரும், தங்கள் எழுத்து உற்பத்திக்குக் கடவுள் சம்பந்தங் கூறினர். அசீரிய நூல் ஒன்றில் நோபோ என்னும் கடவுள் அந் நாட்டு அரசனுக்கு ஆப்பெழுத்தை அருளிச் செய்தார் என்று பொறிக்கப்பட் டிருக்கின்றது. சமக்கிருதம் எழுதப்படும் எழுத்து, ‘தேவர் நகரில் உள்ளது’ என்னும் பொருள்பட தேவநாகரி (தேவநகரி) எனப்பட்டது. எகிப்திய எழுத் துக்கு இடப்பட்ட பெயரின் பொருள் தேவர் எழுத்தை எழுதுவது என்பது. இவ்விதமான கொள்கை எச்சாதியாருக்கிடையில் வேரூன்றியிருந்ததோ அவர்கள் எழுத்து முறைகளை மாற்ற விரும்பமாட்டார். இன்றும் சமய குருமார் பழைய மொழிகளில் நம்பிக்கை வைத்துக்கொண்டிருப்பது இதற்கு உதாரணமாகும். மொழிகள் இந்து ஐரோப்பியம், செமத்தியம், துரானியம் என்று மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படும். ஐரோப்பிய மொழிகள் எல்லாம் ஏறக்குறைய இந்து ஐரோப்பிய இனத்தைச் சேர்ந்தன. பினீசியரைப் பின்பற்றிக் கிரேக்கர், எழுத்துகளை வலப்பக்கமிருந்து இடப்புறமாக எழுதினர். இடம் இருந்து வலம் எழுதும் முறை பிற்காலத்தில் ஏற்பட்டது. இடைக்காலத்தில் எழுத்துகள் வலமிருந்து இடமும், பிற்காலத்தில் இடமிருந்து வலமுமாக எழுதப்பட்டன. 1921-ஆம் ஆண்டு சிந்துநதிப் பள்ளத்தாக்குகளில் ஹரப்பா மொகஞ்சதரோ என்னும் நகரங்கள் அகழ்ந்து கண்டுபிடிக்கப்பட்டன. அவ் விடங்களில் வழங்கிய எழுத்துகள் பொறிக்கப்பட்ட பொருள்கள் அகப் பட்டன. அவ்வெழுத்துகள் சீன எழுத்துகளைப்போல் காணப்படுகின்றன. ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு சொல்லைக் குறிக்க வழங்கப்பட்டிருக் கின்றது. இவ் வெழுத்துகளிலிருந்தே தமிழ் எழுத்துகள் வளர்ச்சியடைந் திருக்கின்றன. அசோக லிபி எனப்படும் எழுத்துகளும் சிந்துநதிப் பள்ளத் தாக்கு எழுத்துகளினின்றும் பிறந்தன என்று ஆராய்ச்சி வல்லார் கூறுகின் றனர். 6. பழந்தமிழர் போர் முறை 1நிரைகவர்தலும் நிரை மீட்டலும் ஒரு வேந்தன் பிறிதோர் அரசனோடு போர் செய்யக் கருதினான்; கருதித் தனது படைத் தலைவரையும் போர் நிலத்தைக் காத்து நின்றோரை யும் அழைத்துப் பகைவரின் நிரைகளைக் கவர்ந்து வரப் பணித்தான். அக் கட்டளையை மேற்கொண்ட வீரக் கழலைக் காலிலே புனைந்த மறவர், “அரசே! பகைவரது ஆநிரைகள் விடியற் காலத்தே நின் வாயிலிடத்தன வாம்” எனக் கூறிச் சென்று, மகிழ்ச்சிக்குரிய இச் செய்தியைப் போர் வீரர்க் குணர்த்தினர். போரின்மையால் தினவு கொண்டு “மலையேறிக் குதித்தேனும் உயிர்விடுவோம்” எனக் கவன்றிருந்த மறத்தொழில் மிக்கார் இந் நற் செய்தியைச் செவிக் கொண்டு, அகமும் முகமும் மலர்ந்து, மகிழ்ச்சியால் ஆடல் செய்தனர். பகைவரது ஆநிரை நிற்கும் இடம் முதலியவற்றை அறிதற்கு அரசனுடைய ஒற்றர் சிலர் மாறுவேடம் பூண்டு சென்றனர். போர் வீரருள் சிலர், இருள் சூழ்ந்த மாலைக் காலத்தில் பாக்கத்தே சென்று முற்றத்தின்கண் முல்லை மலரையும் நாழியிலிட்ட நெல்லையும் தூவித் தெய்வத்தைப் பரவிக் கைகூப்பித் தொழுது நற்சொற் கேட்க நின்ற னர். அஞ்ஞான்று அவ்விடத்துள்ள மாது ஒருத்தி, “பெரிய கண்ணையுடைய பசுவைக் கொண்டுவா” எனக் கூறினாள். நற்சொற் கேட்டு வந்தோர், தாம் கேட்டதைப் படைத் தலைவற்குணர்த்தலும் அன்னோன், அதனை அறிவ னால் ஆராய்ந்து நன்றெனக் கொண்டனன். கொண்டதும் பருக்கைக் கற்கள் செறிந்ததும், சிள்வண்டுகள் ஒலிப்பதுமாகிய காட்டுவழியே செல்லவேண்டி வீரர் ஆர்ப்பரித்துக் காலிடத்தே செருப்புத் தொட்டனர்; முடியிடத்தே வெட்சிப்பூச் சூடினர்; துடி கறங்கிற்று. இஃதிவ்வாறாக, பகைவரது மணிகள் கட்டிய நிரைகள் நிற்கின்ற காட்டிடத்துள்ள காரி என்னும் புள் தனது கடிய குரலால் அவர்க்கு வரும் கேட்டினை முன்னர் அறிவித்தது. அதனைச் செவிக் கொண்ட நிரை காவலர், தமக்கு நேர்வதோர் ஏதம் உண்டென ஓர்ந்து ஏந்திய விற்களுடன் இமை கொட்டாது நிரைகளைக் காத்து நின்றனர். சிங்கக் கொடியையும், கிளியையும், கலைமானையும், பேய்மிக்க படையினையுமுடைய கொற்றவையின் கொடியை முன்னே உயர்த்தியவர் களாய், கூற்றுவர் குழுவினை ஒத்த வெட்சிவீரர், கழுகும் பருந்தும் பின்னே படர்ந்து செல்ல, இருமல் தீர்க்கும் மருந்துடையவர்களாய், வில்லாளர் காவல் செய்வதும், மூங்கில் அடர்ந்த மலைச்சாரலிடத்தவுமாகிய மாற்றார் நிரைகளைக் கவரும்பொருட்டுக் கடிதேகினர். முன்னே சென்ற ஒற்றர், பசுக்கள் நின்ற இடமும், அவற்றின் அளவும், அவற்றைப் புறங்காத்து நின்ற படையின் அளவும் ஆராய்ந்து நள்ளிருளில் வந்து சேனைத்தலைவற் குணர்த்தினர். பகைவர் நிலையினை நன்கறிந்துகொண்ட வெட்சி வீரர், மூங்கில் செறிந்த மலைச்சாரலிடத்தே நள்ளிருளிற் பதுங்கியிருந்து, தருணம் பார்த்து ஒய்யெனக் கிளம்பி நிரைகாத்து நின்ற வில்லாளரை வீழ்த்தி, நிரையினை அடித்துச் சென்றனர். செல்லுமிடத்து நிரையினைப் பறிகொடுத்தார் சிலர் மானம் மிக்கவர்களாய்ப் பின்தொடர்தலும், அன்னோரைப் பின்னணியத் தார் பொருது வீழ்த்த முன்னணியத்தார் நிரைகளை வருத்தமின்றிக் கடத்திச் சென்றனர். அரசன், வெட்சி வீரர் கொணர்ந்த நிரையினை, நிமித்தம் பார்த்துத் தப்பா வகை சொன்ன அறிவுடையோர்க்கும், துடி கொட்டும் புலையனுக்கும், பாணிச்சிக்கும், பாணனுக்கும் இன்னும் தமக்கு வேண்டிய பிறர்க்கும் பகுத்தளித்தான்; தமது உயிரைப் பொருட்படுத்தாது பகைவர் ஊரிற் சென்று ஒற்றிவந்தார்க்கும், நிமித்தம் அறிந்து சொன்ன அறிவுடையோர்க்கும், மேலும் சில பசுக்களைக் கொடுத்தான். போர்வீரர் கள்ளுண்ணும்போது, செருவிடத்துத் துடி கொட்டிய புலையனுக்குக் கள்ளினை மிகுதியாக வார்த்தனர். ஆபரணங்களை அணிந்து அழகிய பெண்கள், மணம் பொருந்திய மாலைகள் பக்கத்தே அசையும்படி வள்ளிக் கூத்தாடினர். இஃதிவ்வாறாக, நிரை கவர்தற்பொருட்டுச் சென்ற வீரர்களது செய்தியை அறியாத வேட்டுவிச்சியர் கையைக் கன்னத்தே கொடுத்து வியாகுலம் மிகுந்தவர்களாக இருந்தனர். அஞ்ஞான்று நிரைகள் மன்றத்தே புகுந்தன. இடக்கண் துடிக்கப் பெற்ற வேட்டுவிச்சியர் தமது துன்பத்தைப் போக்கியவர்களாய் “எம்முடைய சுவாமி தலையிலுள்ள மாலை வாழ்வ தாக” என்று வாழ்த்தினர். மாற்றார் நிரையினைக் கவர்ந்து வந்த போர் வீரர்க்கு மரியாதை செய்தற்பொருட்டு ஊரார், மன்றத்தே பந்தரிட்டு ஆற்று மணல் பரப்பி ஆட்டு மாமிசத்தைச் சுவைபெறச் சமைத்துப் பெருவிருந் தளித்தனர். நிரை மீட்டல் நிரையினைப் பறிகொடுத்தோர் மானம் மிக்கவர்களாய், நிரை கவர்ந்தோரைப் பின்தொடர்ந்து அவரைச் செருவிடை வீழ்த்தி நிரையினை மீட்டுக் கொண்டு வருதலுமுண்டு. பகைவர் நிரைகளைக் கவர்ந்து சென்றனர். ஆன்காத்து நின்றோரில் இறவாது எஞ்சிய சிலர் ஓடோடியுஞ் சென்று, தமது வேந்தற்கு இழிவு பயக்கும் அச் செய்தியை உணர்த்தினர். அதனைச் செவிமடுத்த வேந்தன் மண்டுதீயென வெகுண்டு, முடியிடத்தே கரந்தைப் பூவினைச் சூடினான். போர் வீரர், காலிடத்தே வீரக் கழலைக் கட்டினர்; கூற்றுவரைப்போற் கோபித்துக் கரந்தை மலரை மயிர் மிசை மிலைந்து கொடிய வில்லைக் கையிடத்தே கொண்டனர். போர் செய்தற்கு இயலாத சிறுவர், முதியவர், நோயாளர்களைத் தவிர ஏனையோர் சங்கும், கரியகொம்பும், மயிலிறகு கட்டிய வாத்தியங்களும், பறையும் ஆர்ப்ப, ஒளிவிடுகின்ற வேல்களுடன் கல் நிறைந்த காட்டிடத்தே கூற்றுவரைப் போல் நிரையே சென்றனர். செல்லுதலும் நிரை கவர்ந்தோர், பசுக்களை முன்னே செல்ல விட்டுத் தழைகள் மூடிய காட்டிடத்தே தலைமறைந்திருந்தனர். நிரை மீட்கச்சென்றோர் அவர்களைப் பதுக்கிடங்களினின்றும் வெளியேறச் செய்து அவர்களுடன் அச்சம் தருகின்ற போரைச் செய்தனர். முடிவில், நிரை கவர்ந்தோர் பின்னிட்டனர். நிரைகள் மீட்கப்பட்டன. நிரை மீட்டோரிற் சில வீரர், மார்பிலும் முகத்திலும் பட்ட புண்களினின்றும் உதிரம் பெருகச் சாதிலிங்கஞ் சொரியும் மலையைப்போல் மீண்டனர். சிலர், விபரமறியாத சிறு பிள்ளைகளை ஒப்பப் பகைவரை வெட்டி வீழ்த்தியபின் நிரை கவர்ந்தோர் முதுகிட்டோடவும், தாம் போர்க்களத்தை விட்டுப்போகாராய்த் தனியே நின்றனர். தலையறுபட்டு உடற்குறையாய் நின்ற வீரர் சிலர், பிள்ளைத் தன்மையுடையராய் வாளை உறையினின்றும் வாங்கிக் கையிலேந்திப் போர்க்களத்தே வீரர்களுடன் நின்று அடிமேலடி வைத்தாடினர். சிலர், பகைவர் மார்பைப் பிளந்த வேல்களை அவர் மார்பு களின்றும் வாங்கி அவற்றில் குடர் மாலைகளைச் சுற்றித் துடிகறங்க ஆடா நின்றனர். பகைவர் படைவெள்ளம்போல் வருதலும் அதனைக் குறுக்கிட்டு, “யானொருவனே தாங்குவனாகப் பிறர் மதுவை அருந்துகின்றனர்” என ஓர் வீரன் புகன்றான். போரிடத்தே காரி என்னும் குருவி விலக்கவும் விலகாராய், வெட்சி யாரை வென்று நிரையை மீட்டு வந்த வீரருக்கு அரசன் மருத நிலம் பலவுங் கொடுத்து வரிசை செய்தான். சிலருக்கு 1ஏனாதி, காவிதி முதலிய பட்டங் களை அளித்தான். அவ்வரிசைகளைப் பெற்ற வீரர் வேந்தனை வாழ்த் தினர். அரசன் ஒருவன் பிறிதோர் அரசனின் மகளைக்கேட்ட விடத்து, அவன் கொடுக்க மறுப்பின் இவ்வகையான போர்கள் நடப்பது வழக்கம். இங்ஙனம் பெண் மறுத்துக் கூறுதலை “மகண் மறுத்து மொழிதல்” என இலக் கியங்கள் கூறும். பாலை நிலத்தேயுள்ள மறக்குடித் தலைவர் பெரும்பாலும் முல்லை நிலத்துள்ள நிரைகளைக் கவர்ந்துவந்து கள்ளுக்கு விலையாகக் கொடுப்பர். “யானை தாக்கினும், அரவு மேல் ஊர்ந்து செல்லினும், இடியேறு இடிப்பினும், அஞ்சாத சூற்கொண்ட மகளிரையும், கொள்ளையடிக்கும் உணவினையுமுடைய வாட்போர் செய்யும் மறக்குடியிற் பிறந்த மறவன் குறிவைத்த மிருகத்தைத் தப்பாமற் பிடிக்கும் வேட்டை நாயைப் போலக் காவலையுடைய பகைவரது ஊரின்கண் சென்று விடியற் காலத்தே கொண்டு வந்த பசுக்களைக் கள்ளுக்கு விலையாகக்கொடுத்து, வீட்டிலே சமைத்த கள்ளினை பருகிக் கிடாயை உரித்துத் தின்று, ஊரின் நடுவேயுள்ளமன்றிலே மத்தளங்கொட்ட இடத்தோளை வலப்புறத்தே வளைத்து நின்றாடுவான்.” (பெரும்பாணாற்றுப்படை). “கள் விற்குமவள் இவன் பழங்கடன் கொடாமையின், பின் கட் கொடாது மறுப்ப, அது பொறாத வீரன் அந் நிலையே வில்லைக் கையி லேந்திப் புள் நிமித்தம் தன் கருத்திற்கு ஏற்பச் சேறலிற் பகைவர் நிரைகொள் ளுதலைக் கருதிப் போகுதலைச் செய்யும்; அங்ஙனம் போகுங்கால் தான் கைக் கொண்ட ஆளிக்கொடியை உயர்த்தக் கொற்றவையும் வில்லின் முன்னே செல்லுமன்றோ என்க.” “பெரிய மலர்போலுங் கண்ணையுடையாய்! நின் ஐயன்மார் அயலாரூர் அலறும்படி தலைநாளிற் கைக் கொண்டுவந்த நல்ல ஆநிரைகள், நயமில்லாத மொழிகளையும் நரைத்த நீண்ட தாடியையும் உடைய எயினரும் அங்ஙனம் மூத்த எயிற்றியருமாகிய இவர்கள் முன்றிலின்கண் நின்றன.” (சிலப்பதிகாரம் வேட்டுவரி.) நிரை கவர்தலும் நிரை மீட்டலும் தமிழரது முற் காலத்துப் போர் ஒழுக்கங்களாகும். மக்கள், மாட்டையே செல்வமாகக் கொண்டிருந்த ஒரு காலத்து இவ்வகைப் போரோழுக்கங்கள் மிக நிகழ்ந்தனவாதல் வேண்டும். நிரை கவருவோர் முடியிடத்து வெட்சிப்பூவையும், நிரை மீட்போர் கரந்தைப் பூவையும் சூடுதல் மரபு. இக்காரணம் பற்றி நிரை கவர்தல் வெட்சி என்றும் நிரை மீட்டல் கரந்தை என்றும் பெயர் பெறும். வீரக் கல் நிரை மீட்குமிடத்துப் பலரும் வியப்புறும்படி தமது வீரத்தைக் காட்டிப் படை முகத்தே இறந்த வீரனுக்கு அவனுடைய பெயரும் ஊரும் ஆற்றலும் எழுதிக் கல்நடுவது பண்டையோர் வழக்கு. இவ்வழக்கினைப் பின்பற்றியே இறந்தவர் பொருட்டுப் பாடப்படும் பாடல்கள் “கல்வெட்டு” என வழங்குவனவாகும். இறந்தவர்களைச் சமாதி செய்து ஆலயங்கள் எடுத்தல் கல்நாட்டும் வழக்கைப் பின்பற்றியதெனக் கருத இடமுண்டு. கல் நடுதலின் விபரம் வீரர் காட்டிற்சென்று, இறந்த வீரனுக்கு நாட்டத் தகுந்த கல்லினைக் காண்பர். கண்டு அதற்கு நறும் புகை முதலியவற்றைக் காட்டி, எடுத்து வாசம்பொருந்திய நீரினாலே மஞ்சன மாட்டி, வாவியிலும் முழுக்காட்டுவர். பிறகு மாலை தூக்கி, மணி ஒலித்து, மதுத்தெளித்து, மயிலிறகுஞ்சூட்டி, வீரன் பெயரை எழுதி, “வேற்போரை விரும்பினோனுக்கு இது உருவமாகுக” என்று கல்லினை அழகுபெற நடுவர். நட்டபின் அக் கல்லின் நின்ற வீரனை எல்லோரும் வணங்கிக் கோயிலமைப்பர். போருக்குச் செல்லும் வீரர், அதனை வணங்கிச் செல்வர். அவ்வழியே செல்லும் பாணர் யாழினை மீட்டுப் பாடி, அக்கல்லினை வழிபட்டுக் செல்வர். “கன்றுடனே கறவையையும் மீட்டுக் கொண்டு வந்து மறவரை யோட்டி நோக்கிய நெடுந்தகைக்குச் சிவந்த பூவுடைய கண்ணியுடனே அழகிய மயிலிறகைச் சூட்டிப் பெயரை எழுதி இப்போழுதே கல்லை நட்டார்” (புறம்) “ஊர் முன்னாகச் செய்யப்பட்ட பூசலின்கட்டோன்றிய வீரன், தன்னுடைய ஊரின் கண் மிக்க நிரையைக் கொண்ட வீரர் எய்த அம்பினை விலக்கி வென்று, அவர் கொண்ட ஆநிரையை மீட்டான். தோலுரித்த பாம்பு போலத் தானொருவனேயாகத் தேவருலகத்தின்கட் போயினான். அவனது உடம்பு காட்டுச் சிற்றாற்றினது அரிய கரையிடத்துக் காலுற நின்று நடுக்கத் தோடு சாய்ந்த விலங்கினை ஒப்ப அம்பாற் சலித்து அவ்விடத்து வீழ்ந்தது. புடைவையாற் செய்யப்பட்ட பந்தரின் கீழ் உயர்ந்த கீர்த்தி மிகத் தோன்றிப் பெயர் மேன்மையடைய நட்ட கல்லின் மீது மயிலினது அழகிய பீலி சூட்டப்பட்டது.” (புறம் 200) “கெடாத நல்லபுகழினையுடைய பெயர்களை எழுதி நட்ட கற்கள் முதுகிட்டுப் போனவரை இகழும்.” (மலைபடுகடாம்) “பட்டார் பெயரு மாற்றலு மெழுதி நட்ட கல்லு மூதூர் நத்தமும்.” (சேரமான் பெருமாள்) “நல்லமர் கடந்த நாணுடை மறவர் பெயரும் பீடும் எழுதி அதர் தொறும் பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்.” (அகம்) நடுகல் பெரும்பாலும் வீரர்களுக்கு நடுவதாயினும், நிரை மீட்டு அவிந்தார் பொருட்டு நடுதலே சிறப்பு. 7. 1இசை மரபு முன்நாளிலே இருந்த பாணர் முடியுடை வேந்தரையும், குறுநில மன்னரையும் பாடிப்பொருள் பெற்றனர். பின் நாளிலிருந்த திருநீலகண்டப் பெரும் பாணர், பாணபத்திரனார், திருப்பாணாழ்வாராகிய மூவரும் ஆண்ட வனைப் பாடி அருள்பெற்றனர். பத்தாம் பதினோராம் நூற்றாண்டிலே இசைக் கலை இருந்த நிலைமையைக் கொங்குவேண்மாக் கதையாலும் சீவக சிந்தாமணியாலும் ஒருவாறு அறிதல் கூடும். பிரமசுந்தர முனிவர்பால் இசைப் பயிற்சி பெற்ற உதயணன் கோடபதி யென்னும் யாழைமீட்டு மதங்கொண்ட யானைகளை வயமாக்கினா னெனவும், அவன் தான் கற்ற இசைக் கலையைப் பிரச்சோதனன் மகளாகிய வாசவதத்தைக்குக் கற்பித்தானெனவும், யாழ் நலனாராய்தலில் இவனை யொப்பாரு மிக்காரு மிலரெனவும் பெருங்கதையால் அறிகின்றோம். சீவக நம்பி காந்தருவதத்தையை வீணையால் வென்ற வரலாறு சிந்தாமணியில் கூறப்பட்டது. உதயணன், சீவகன் ஆகிய இருவரது இசை வென்றியைக் கூறுமிடத்து, கொங்கு வேளும், திருக்கத்தக்கதேவரும் இசை நூற்றுறைகள் சிலவற்றைக் குறிப்பிடுகின்றனர். இவ்விரு நூலினகத்தும் வீணை, யாழ் என்னும் மொழிகள் வேறுபாடின்றி வழங்கப்படுகின்றன. இவ்விரு நூலாசிரி யரும் காட்டுகின்ற இசைப்புலமை இளங்கோவடிகளது இசை நூலுணர்ச் சியை ஒத்ததன்று. பன்னிரண்டாம் நூற்றாண்டிலே வாழ்ந்த சேக்கிழார் சுவாமிகளது காலத்திலே இசைக்கலை அருகி நின்றதெனினும் முற்றிலும் அழிந்துபோக வில்லை. தேவாரத்துக்குப் பண்ணடைவு வகுத்த பெண்மணி, திருநீலகண்டப் பெரும்பாணர் மரபிலுதித்தவள். அவள் வகுத்த பண்முறை அன்று தொட்டின் றுவரையும் வழக்கிலிருந்து வருகின்றது. இந் நாளிலேயுள்ள ஓதுவார்மூர்த்தி களுட் சிலர் பழைய பண்முறையை ஓரளவிற்குக் கையாண்டு வருகின்றா ரெனினும், கருநாடக சங்கீதத்தின் வழிப்பட்டு ஏழிசை யியல்பறியாது இசை என்னும் மொழிக்கு இராகம் எனப் பொருள் கொண்டு இடர்ப்படுவா ராயினார். பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்த சாரங்கதேவர் என்னும் பெரியார் தேவகிரி இராச்சியத்தில் சிம்மண இராச சபையில் சமஸ்தான வித்துவானாக விளங்கினார். இவரியற்றிய சங்கீத ரத்நாகரத்திலே தேவாரப்பண்கள் சிலவற்றினிலக்கணங் கூறப்பட்டிருக்கின்றது. “இவை தேவராத்தினுட் கூறப்பட்டன” எனச் சில இசை நூல் முடிபுகளைத் தமது நூலிலுள்ளே சொல்லு கின்றாராதலின் இவர் தென்னாட்டிற்கு வந்து தேவாரப் பண் முறையைப் பயின்று கொண்டாரென்றெண்ண இடமுண்டு. இவர்க்கு முந்நூறாண்டு பிற்பட்டவராகிய இராமா மாத்தியர் தாம் இயற்றிய சங்கீத °வர மேளகலாநிதியினுள்ளே தேவாரத்தினுள்ளனவும் பிற்காலத்தில் வழக்கு வீழ்ந்தனவுமாகிய இசைப் பெயர் சிலவற்றை எடுத்தாளுகின்றார். இக் காலத்தில் வழங்கும் இந்து°தானி இசை நூல்களுள்ளும் தேவாரப் பண்ணின் பெயர் சில காணப்படுகின்றன. பதினான்காம் நூற்றாண்டிலே யிருந்த உரையாசிரியர் காலத்தில் பண்டை இசை மரபு ஓரளவிற்கு மறைந்து போயிற்று. குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் ஏழிசையும் வழக்கற்றுப்போக, ச-ரி-க-ம-ப-த-நி என்னும் ஏழு சுரங்களும் வழங்குபவாயின. சிலப்பதிகார அரும்பதவுரை யாசிரியர் காலத்திருந்ததி லும் பார்க்க அடியார்க்கு நல்லார் காலத்தி லிசை நூற் பயிற்சி குன்றியிருந்த தென்பதற்கு இவ்விருவரது உரையுமே சான்று பகருகின்றன. பதினைந்தாம் பதினாறாம் நூற்றாண்டுகளிலே இசைக்கலை முற்றிலும் மறையுற்றுக் கிடந்தது. பதினேழாம் பதினெட்டாம் நூற்றாண்டுகளிலே தஞ்சையிலிருந்து அரசு புரிந்த நாயக்க அரசரும், மஹாராட்டிர அரசரும் இசைவல்லாரை ஆதரித்து இசைக்கலையை வளர்ப்பாராயினார். அச்சுதப்ப நாயக்கரிடத்து (கி.பி. 1572-1614) மந்திரியாராகவிருந்த கோவிந்த தீக்ஷிதரின் குமாரர் வேங்கடமகி என்பார். கி.பி. 1660ஆம் ஆண்டளவிலே பண்டைத் தமிழரிசை மரபினின்றும் பெரிதும் வேறுபட்ட ஓரிசை மரபினை வகுத்து, சதுர்த்தண்டிப் பிரகாசிகை என்னும் வடமொழி நூலினை யாத்தமைத்தார். கருநாடக சங்கீதம் என வழங்கும் இசை மரபிலே வேங்கடமகியின் ஆணையே இன்றும் நடைபெற்று வருகின்றது. ஷாஜி மகாராசா (1687-1711) தாமும் இசை வல்லுநராகி. இசை வல்லுநரைப் பெரிதும் ஆதரித்தலை மேற் கொண்டார். திருவாரூர்க்கிரிராசகவி, இம் மன்னரது சமத்தான வித்துவான் ஆவார். கிரிராச கவியின் பௌத்திரரே தியாகராச ஐயரெனக் கீர்த்திவாய்ந்த பெரியார். விசயராகவ நாய்க்கர் (1673) காலத்திருந்த துளசா மகாராசா (1763-1787) காலத்திருந்தவரும் இராமாயணக் கீர்த்தனஞ் செய்தவருமாகிய அருணாசலக் கவியும், எட்டையபுரம் சமஸ்தானத்திலிருந்து முத்துச்சாமி தீட்சிதரும் (1775) திருவாரூரிலே தோன்றிய சாமா சாஸ்திரியாரும் (1763) பிறரும் நமக்கு மிகவும் அணிமையான காலத்திலிருந்த இசை வல்லோராவர். 8. மொழியின் வரலாறு மொழி நூல் மக்கள் வழங்கும் மொழிகளை ஆராய்ந்து கூறுகின்றது. மக்கள் தமது எண்ணங்களைப் பிறர்க்கு உணர்த்தும் அவாவினாலேயே மொழியைத் தோற்றுவித்தனர். மக்கள் ஒருவரோடு ஒருவர் அளவளாவிக் கூட்டமாக வாழ்கின்றனர். மக்களின் கூட்டு வாழ்க்கைக்குப் பொது உதவி, அனுதாபம் என்பன அடிப்படையானவை. தன்னைப் பிறருக்கு விளக்குவதற்கும், பிறர் தம்மை விளங்குவதற்கும் பேச்சு இன்றியமையாதது. அறிவு வளர்ச்சியுறாத காலத்தே மனிதன் இதனை அறியாதிருந்தான் என்று கூற முடியாது. ஒரு காலத்தில் மொழி தோன்றவில்லை; அக் காலத்தில் மனிதனின் எண்ணங்கள் நினைவளவிலேயே இருந்தன. ஒரு தனி மனிதன் மொழியை உண்டாக்கியிருக்க மாட்டான். ஒரு குழுவிலிருந்து பிரிந்தவர் நெடுங் காலத்தின் பின் மொழியை மறந்து பேச மாட்டாதவன் ஆகின்றான். எண்ணங்களை வெளியிட முயலும் எத்தனமே பேச்சின் ஆரம்பமாகும். மொழியின் தோற்றம் கட்புலனாகும் பொருள்களின் வடிவங்களே ஆரம்பத்தில் எழுத்து களாக இருந்தன. இவ்வகையினன்றி வேறு தன்மைகளால் எழுத்துகள் பிறக்கமாட்டா. மரத்தின் ஓவியம் ஆரம்பத்தில் மரத்தைக் குறித்தது. பின்பு அது தடியையும் மரத்தால் செய்யப்பட்ட பொருள்களையும் குறித்தது. இரண்டு விரித்த சிறகுகள் பறப்பதைக் குறித்தன; பின்பு உயரத்தை உணர்த்தின. பேசும்போது முகம், கை, உடம்பு, ஒலி என்னும் நான்கும் தொழிற்படு கின்றன. ஆரம்ப மொழியில் சைகைகள் பெரும்பாலும் வழங்கின. அலைந்து திரியும் வெவ்வேறு கூட்டத்தினர் எதிர்ப்பட நேர்ந்தால் சைகைகளால் பேசுகின்றனர். ஊமரும் செவிடரும் இவ்வாறே பேசுவர். ஒலியின் பயன் அறியப்பட்டபின் சைகைகள் கைவிடப்பட்டன. சைகைகளைத் தொலைவிலும் மறைவிலும் நின்று காட்டுதல் இயலாது. இடையில் உள்ள பொருள்கள் ஒலியை மறைக்கமாட்டா. ஆரம்பத்தில் எழுதப்பட்ட எழுத்துகள். பொருள்களின் வடிவங்கள் என அறிந்தோம். மொழியும் இதுபோன்ற முறையில் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் பிறப்பிக்கப்பட்ட ஓசைகள் இயற்கை ஒலிகளைப் பின்பற்றி யனவாகும். ஒலியைப் பின்பற்றும் வகை, விலங்குகளின் ஒலியைப் பின்பற்றுதல், மனிதரின் ஒலியைப் பின்பற்றுதல் என இருவகைப்படும். இரு வகையாகத் தோன்றினாலும் இம்முறை, கொள்கையளவில் ஒன்றே. வியப்பு முதலிய ஒலிக்குறிகளே மொழியின் ஆரம்பமாகும். முகக் குறி, நிலை, சைகை முதலிய நடிப்புகள் எண்ணங்களை வெளிப்படுத்துவன. இவற்றைப் போல எண்ணங்களை வெளிப்படுத்தும் ஓசைகளும் உண்டு. அவ்வகை ஓசைகளைச் செவியில் கொண்டவுடன் அவற்றின் பொருள்களை நாம் உடனே விளக்கிக் கொள்கின்றோம். கோழி தனது குஞ்சுகளுக்கு அபா யத்தை உணர்த்தும் ஒலியைச் செய்கின்றது. உடனே குஞ்சுகள் அதனை விளங்கி ஓடிப் பதுங்குகின்றன. மகிழ்ச்சி, அழுகை, வருத்தம், சிரிப்பு, அனுக்கம் முதலியவற்றுக்குரிய ஒலிகளைக் கேட்கும்போது அவை எவற்றைக் குறிக்கின்றன என்று நாம் விளக்கிக் கொள்கின்றோம். அவ் வொலிகளின் பொருளை எவரும் நமக்கு விளக்க வேண்டியதில்லை. இவ்வகை அடிப்படையிலிருந்தே மொழி தோன்றிற்று. இம்முறை இன்று வரையில் கையாளப்பட்டு வருகின்றது . எண்ணங்களை வெளியிடும் வழிகள் நம் வசம் இருக்கின்றன. அவை சிறிதளவோ பெரிதளவோ நம்மால் பயன் படுத்தப்படுகின்றன. நோவினால் எழும் ஒலியும் பொழுதுபோக்கிற் பிறக்கும் சிரிப்பும் பொருள் விளங்கக்கூடியனவாக இருப்பினும் அவை பேசும் மொழி ஆக மாட்டா. அவை மற்றவர்களுக்கு நோவை அல்லது சிரிப்பை உணர்த்தும் பொருட்டுப் பிறப்பிக்கப் பட்டனவல்ல. ஒருவனது இருமல் மற்றவனது கவனத்தை இழுக்கின்றது, ஒருவனது கவனத்தை இழுப்பதற்கு இருமினால் அல்லது வேறு ஒலியை எழுப்பினால் அவ்வொலி மொழி உற்பத்தியைச் சார்ந்ததாகும். இவ்வகை ஒலிக் குறிகள், பல தலை முறைகளாக வந்தன. இயற்கையான இம்முறைகளைவிட்டுச் சில ஒலிக் குறிகளைக் கையாளத் தொடங்கியபோதே உண்மையான மொழி உண்டாயிற்று. சில ஒலிக் குறிகளை எல்லோரும் ஒரே காரணத்துக்காக வழங்கினர். அப்போதுதான் அவை, தலைமுறை தலைமுறையாக வந்து ஒரு குழுவுக்கு உரியனவாயின. மதம், கலை இவற்றின் ஒற்றுமைகளைவிட மொழி, ஒரு சமூகத்தைப் பெரிதும் பிணிக்கின்றது. சொல்லின் தொடக்கமும் மொழி வளர்ச்சியும் ஒவ்வொரு நாகரிக மக்களுக்கு இடையிலும் பல கூட்டத்தினர் களுக்குரிய மொழிச் சொற்கள் கலந்து, ஒரு மொழியாக வழங்குவதைக் காண்கின்றோம். ஒரு குழுவினர், சில காலங்களில் தம் முன்னோர் அறியாத ஒரு மொழியை வழங்குகின்றனர். நாம் பார்க்கும் ஒவ்வொரு பொருளிலுமுள்ள ஒவ்வொரு சிறப்புக் குணம் நம்மைக் கவருகின்றது. நாம் பெரும்பாலும் உயிர்களின் ஓசைகளை உற்றுக் கேட்கின்றோம். ஆங்கிலத்தில் குயிலுக்குக் குக்கு என்று பெயர். குயில் என்பதும் குக்கு என்பதும் அதன் ஓசை காரணமாகத் தோன்றிய பெயர்கள். இவ்வாறு தோன்றிய சொற்களை ஒவ்வொரு மொழியிலும் காண லாம். சில உயிர்களின் பெயர்கள் அவற்றின் நிறம் காரணமாக ஆக்கப்பட் டிருக்கின்றன. சில உயிர்களின் பெயர்கள் அவற்றின் வேறு தன்மைகளை உற்று நோக்கி ஆக்கப்பட்டுள்ளன. குதிரை, பாய்வதால் பரி என்றும், குதிப்பதால் குதிரை என்றும் பெயர் பெறும். ஒரு சிறப்புக் காரணத்தால் ஒரு பெயர் ஒரு பொருளுக்கு இடப்பட்டால் அச்சொல் அப் பொருளையே குறிக்கும். அக் காரணமுடைய வேறு பொருளைக் குறியாது. சொற்கள் உச்சரிப்பு வேறுபட்டு, தோற்றம் அறிய முடியாமல் வழங்கினால் மூலச் சொற்கள் பரிகசிக்கத்தக்கன போல் தோன்றும். இம் முறையாகவே மொழிக் குரிய சொற்கள் தோன்றுகின்றன. மொழி உண்டான பின்பே சொற்கள் மாற்றம் அடைதல் இயலும். மொழி இவ்வாறு வளர்ச்சியடைகின்றது. மனிதனை மற்ற உயிர்களோடு ஒப்பிடுமிடத்தில் அவன் தனிச் சாதியாக இருக்கின்றான். அதுபோல மனித மொழியும் சிறப்புத் தன்மை களால் தனிமையாகவே இருக்கின்றது. மனிதன் மொழியைப் படிப்படியாக விருத்திசெய்து இன்றைய நிலைக்குவர எத்துணைக் காலம் சென்றது என்று அனுமானித்துக் கூறுதல் இயலாது. ஆரம்ப காலத்தில் முன்னேற்றம் தாமதப் பட்டது என்று கருதுவதற்குப் பல காரணங்கள் உண்டு. ஆரம்பத்தில் அவிநய மொழியும், பின் அவிநயத்தோடு ஒலி கலந்த மொழியும், அதன்பின் இக்கால நிலைமையிலுள்ள மொழிகளும் தோன்றலாயின. மொழியில் அடங்கி எல்லா ஒலிக் குறிகளும் தலைமுறை தலைமுறையாக வந்தன. அவை, காலத்துக்குக் காலம் அதிகப்பட்டன. இது, ஒரு குழு வேறு குழுக்களோடு உறவாடி, அவற்றின் மொழியிலுள்ள சொற்களைக் கை யாளுதலால் ஏற்படுகின்றது. மொழித்தொடக்கத்திற்கு இயற்கையிலுள்ள ஆதாரங்கள் எவை என்று விளங்குகின்றது. ஒலிக்குறிகள் ஆரம்பத்தில் சிறியனவாக இருந்தன. அவை ‘சொல் மூலங்கள்’ எனப்படுகின்றன; மூலங்கள் பிரிக்கக்கூடாத முழுக் குறிகள். ஒவ்வாரு மூலமும் ஒவ்வொரு பொருளைக் குறித்தது. பழைய மொழிகள், சொல் மூலங்கள் அளவில் இருந்தன என்பது அனு மானிக்கத்தக்கது. ஆதியில் ஒவ்வொரு கலையும் இலகுவான முறையில் ஆரம்பிப் பதுதான் பொது விதி. கலைகள் எல்லாம் மனிதனின் ஆற்றலுக் கேற்பப் படிப்படியாக வளர்கின்றன. ஆரம்ப மொழி இரண்டு தன்மைகள் உடையதாக இருக்கின்றது. சொல்லின் ஒரு பகுதி பொருளின் ஒரு பகுதியையும், மற்றது இன்னொரு பகுதியையும் விளக்கின. ஆரம்பத்தில் மனிதன் உண்டாக்கிய ஆயுதங்களுக்குப் பிடியும், குகை வீடுகளுக்கு முன் அறையும், பின் அறை யும் இருக்கமாட்டா. இக் கொள்கைக்கு மொழியின் எல்லாக் கால வரலாறும் ஆதாரமளிக்கின்றது. தொடக்கத்தில் தனிச் சொற்களே உண்டாக்கப்பட்டன. மொழியிலுள்ள சொற்களை ஆராய்வதால் நாம் அவற்றின் ஆரம்ப காலத்தை ஆராய்கின்றோம். மொழி உற்பத்தியைக் குறித்த ஆராய்ச்சி, நம்மைச் சொல் மூலங்களுக்குக் கொண்டுபோய் விடுகிறது. ஆதிமொழி, ஒலி முறையான குறிகளாக இருந்தது; இக் கொள்கை தக்க நியாயத்தோடு அங்கீகாரம் பெறுகின்றது. இக் காலச் சொற்களைப் போலவே ஆதிச் சொற்கள் உயிர் எழுத்தின் ஒலியையும், மெய்யெழுத்தின் ஒலியையும் கலந்து உச்சரிக்கப் பட்டன. அவ்வுச்சரிப்புகள் நாம் வழங்கும் ஒலிகளின் பகுதிகளைக் கொண்டிருந்தன. எல்லா மொழிகளின் இயல்பும் இதுவே. ஒவ்வொரு தனி ஒலியும் எழுத்தால் குறிக்கப்படுகின்றது. சிறப் பொலிகள் உயிரும் மெய்யுமாகும். ஒவ்வொரு மொழிக்கும் உச்சரிப்பு முறை தனியாக உண்டு. சில ஒலி, சில மொழிகளுக்கு மட்டும் சிறப்பாக உண்டு. எழுத்து முறையாகப் பிரிக்கக்கூடிய ஒலிகளென்றும், பிரிக்கக்கூடாதன என்றும் இருவகை ஒலிகள் உண்டு. விலங்குகள் பறவைகளின் ஓசையும் மனிதரின் அழுகை போன்ற ஓசையும் எழுத்து முறையாகப் பிரிக்கக்கூடாத ஒலிகளுக்கு உதாரணங்களாகும். சொற்களைப் பல கூறுகளாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு பொருத்தும் ஒவ்வொரு அசை எனப்படும். ஒவ்வாரு அசையும் உயிர் மெய் என்னும் ஒலிகளால் ஆக்கப்பட்டது. அசைகள் பெரும்பாலும் ஒரு மெய் ஓசையோடு ஒரு உயிர் ஓசை பெற்றதாக இருக்கும். இவற்றில் ஏதாவது ஒன்று இல்லாமல் உச்சரிக்கப்படும் அசைகளும் சில மொழிகளில் உண்டு. ஆகவே எல்லாப் பேச்சுக் குறிகளும் ஓரசையினவாக அல்லது ஓரசையையே திரும்பச் சொல்லும் குழந்தைகளின் பேச்சுப் போன்றனவாக இருக்கும். ஆதியில் எவ்வெழுத்தொலிகள் இருந்தன என்று கூறுதல் வெறும் ஊகத்தைப் பொறுத்தது. ஆதியில் உயிரும் மெய்யுமாகிய ஒலிக் குறிகளே இருந்தன. மற்றவை பிற்காலத்திற் சேர்க்கப்பட்டன. ஆதி மொழியின் ஒலிக்குறிகள் புலன்களால் அறியப்படும் குணங் களையும் செய்கைகளையும் குறிப்பனவாக இருந்தன; ஆதலின் நம் மொழி யின் வரலாறு புலன்களால் அறியப்படும் பொருள்களின் பெயர்களாவும் புலன்களாலறியப்படாத எண்ணங்களின் பெயர்களாகவும் மாறியிருக்கிறது. நாம் பல சொற்களை வழங்குகின்றமையால் எழுவாய் பயனிலை முதலிய உறுப்புகளை வைத்து வசனங்களை எழுதுகின்றோம். இவ்வகையி லமையாத வசனங்களைச் சுருக்கு வசனங்களாகக் கருதுகின்றோம். எழுவாய் பயனிலையோடு கூடிய வசனங்களை எழுதுவதற்குச் சொற்பாகு பாடு வேண்டும். சொற்பாகுபாடு என்பது பெயர், வினை, குணம் என்பன போன்றவற்றுக்கு இன்ன இன்ன சொற்களையே பயன்படுத்துதல் வேண்டு மென்னும் வரையறை. இவ்வாறு வரையறுக்கப்பட்ட சொற்களை உரிய இடங்களில் வைக்க வசனம் உண்டாகும். சொற்களின் பிரயோகம் வரை யறுக்கப்படாத ஒரு காலத்தின் நிலைமையை அறிந்துகொண்ட போதே மொழியின் ஆரம்ப வரலாற்றை விளங்கிக்கொள்ள முடியும். ஆரம்ப மொழி, நம் மொழியைவிட விளக்கங் குறைவாக இருந்தது; ஆயினும் அது, அனுகூலமான பேச்சுக்கு உதவியாக இருந்தது. ஒன்றை ஏற்றுக் கொள்ளும் போது அல்லது வெறுப்பைக் குறிக்கும் போது காட்டும் பார்வையும், உடம்பாட்டை அல்லது வினாவை உணர்த்தச்செய்யும் ஒலிக் குறிகளும் வசனங்களின் குறிகள் அல்லது வசனங்களாகும். அவற்றைத் தனித்தனி வசனங்களாக மொழி பெயர்க்கலாம். இவ்வாறே ஆதிச் சொல் மூலங்கள் வசனங்களாயின. 9. பண்டையோர் எழுதப் பயன்படுத்திய பொருள்கள் பழங்கால மக்கள் பொன், வெண்கலம், ஈயம், தகரம் முதலிய உலோகங்களை எழுதுவதற்குப் பயன்படுத்தினர். ஈயத் தகடுகளின் பயன் பெரு வழக்கில் இருந்தது. பழைய அசீரியர், பச்சைக் களிமண் தகடுகளில் தமது வரலாறுகளை எழுதியபின் அவற்றை வெய்யிலில் உலர்த்தி அல்லது சூளையிலிட்டு எடுத்துக் காப்பாற்றினர். இவ்வகைய பல கற்கள் எகிப்தில் கண்டெடுக்கப்பட்டன. விலங்கின் தோல் அல்லது தாவரப் பொருள்கள் கிடைத்தபோது உறுதியான உலோகப் பொருள்களின் பயன் குறைவதா யிற்று. கடினமான பொருள்களுக்கும் மிருதுவான பொருள்களுக்கும் இடை யிலுள்ள வேறொரு பொருளும் பயன்படுத்தப்பட்டது. அது மேற்பக்கம் மெழுகினால் மெழுகப்பட்ட மரப் பலகையாகும். மெழுகின்மேல் எழுதுவ தற்குக் குச்சு பயன்படுத்தப்பட்டது. இவ்வகை இரண்டு அல்லது மூன்று பலகைகள் வளையங்களிட்டுச் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும். இவை, அன்றன்றைய நிகழ்ச்சிகளை எழுதவும், கணக்குப் பதியவும், திருமுகம் வரையவும், பள்ளிச் சிறுவர் எழுதவும், பிற எழுத்து வேலைகள் புரியவும் பயன்படுத்தப்பட்டன. இவ்வகையான பலகைகள் கி.பி. 1148 வரையும் பயன் படுத்தப் பட்டன என்பதற்கு ஆதாரம் காணப்படுகின்றது. இப் பலகைகள் மேற்கு ஐரோப்பாவின் எல்லாப் பகுதிகளிலும் பயன்படுத்தப்பட்டன. 13ஆம், 14ஆம் நூற்றாண்டுகளில் பணம் சம்பந்தமான கணக்கெழுதிய பலகைகள் கண்டு எடுக்கப்பட்டன. அயர்லாந்திலும் இத்தகைய பலகைகள் காணப்பட்டன. இதே காலத்தில் இவ்வகைப் பலகை இத்தாலியில் பயன் படுத்தப்பட்டிருக்கின்றது. 16-ஆம் நூற்றாண்டில் இவற்றின் பயன் பெரும் பாலும் நின்றுவிட்டது. மெழுகின் மீது எழுதும் வழக்கம் சமீபகாலம்வரை சிறிதளவில் இருந்தது. இன்றும் இத்தாலியிலுள்ள உறோவென் (Reuen) நாட்டில் இவ்வகைத் தகடுகள் மீன் கடைகளில் கணக் கெழுதப் பயன் படுத்தப்படுகின்றன. சில சமயங்களில் உரோமர், மரத்துக்குப் பதில் தந்தத்தைப் பயன் படுத்தினர். அவர்களுடைய இலக்கியங்களில் இவ்வகையான குறிப்புகள் காணப்படுகின்றன. தந்தத் தகடுகள் கிறித்துவ தேவாலயங்களில் வைத்து, பிரதம குருமாரின் பெயர்கள் குறிக்கப் பயன்படுத்தப்பட்டன. பழைய எகிப்தில் ‘பைப்பிரசு’ என்னும் நாணற் புல்லின் தண்டுகள் பிளந்து ஒட்டிக் கடுதாசியாகப் பயன் படுத்தப்பட்டது. ‘பைப்பிரசு’ என்னும் நாணல், முக்கோணத் தண்டுடையதாய் நாலு முழம் ஓங்கி வளரும். பைப்பிரசுக் கடுதாசியின் பயன் கி.மு. 2000 ஆண்டுகளுக்குமுன் அறியப்பட்டிருந்தது. பழைய உலகின் பெரும் பகுதியில் பைப்பிரசுக் கடுதாசிகளே எழுதப் பயன் படுத்தப்பட்டன. கடுதாசியை உணர்த்தும் ‘பேப்பர்’ என்னும் ஆங்கிலமொழி பைப்பிரசு என்னும் சொல்லின் திரிபே. பைப்பிரசு எகிப்திலிருந்து கிரேக்குக்கும் இத்தாலிக்கும் மிகுதியாக ஏற்றுமதி செய்யப்பட்டது. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் கிரேக்க மொழி யின் எழுதப்பட்ட பைப்பிரசுக் கடுதாசிச் சுருள்கள் காணப்படுகின்றன. பைப்பிரசை அறிவதற்கு முன்னே தோல் பயன் படுத்தப்பட்டது. தோலின் பயன் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு வரையும் இருந்தது. 5-ஆம் நூற்றாண்டு முதல் 10-ஆம் நூற்றாண்டு வரையில் பயன்படுத்தப்பட்ட பைப்பிரசுத் தாள்கள் காணப்படுகின்றன. பிரான்சு நாட்டிலும் பைப்பிரசுத் தாள்கள் பயன்படுத்தப்பட்டன. ஒன்று சேர்த்துக் கட்டப்பட்ட பைப்பிரசுத் தாள்களில் புத்தகங்கள் எழுதப்பட்டன. புத்தகங்களின் மேலும் கீழும் தோல் வைத்துக் கட்டப்பட்டன. பிரான்சிலும் இத்தாலியிலும் இவ்வகையான புத்தகங்கள் பயன்படுத்தப்பட்டன. தோல், மிகப் பழங்காலந்தொட்டுப் பயன்படுத்தப்படுகின்றது. மேற்கு ஆசியாவில் தோல் பயன்படுத்தப்பட்டதைப்பற்றிப் பழைய நூலாசிரியர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். தமக்குப் புதிதாகக் கிடைத்த பைப்பிரசுத் தாளை அயோனியர், தோல் என்னும் பெயரால் வழங்கினர். யூதர் பழைய வழக்கின்படி இன்றும் பிரமாணங்களைத் தோலில் எழுதுகின்றனர். உரோமர் சிவப்புச் சாயமூட்டிய தோலைப் பைப்பிரசுப் புத்தகங் களுக்கு அட்டையாகப் பயன்படுத்தினர். சீனர் பஞ்சினாற் செய்யப்பட்ட கடுதாசியை மிகப் பழைய காலத்தி லேயே பயன்படுத்தினர். அராபியர், எட்டாம் நூற்றாண்டில் அதன் பயனை அறிந்திருந்தனர். 13ஆம் நூற்றாண்டில் கிரேக்க கையெழுத்துப் பிரதிகள் அக் கடுதாசிகளில் எழுதப்பட்டன. இத்தாலிக்கு மேற்கே கடுதாசியின் பயன் அறியப்படவில்லை. கந்தைத் துணியினாற் செய்யப்படும் கடுதாசி ஐரோப்பாவில் 14ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டது. இது படிப்படி யாகத் தோலின் இடத்தை ஏற்றது. 15ஆம் நூற்றண்டில் கடுதாசியும் தோலும் கலந்த கையெழுத்துப் புத்தகங்கள் மிகுதியாக இருந்தன. பழைய பைப்பிரசுப் புத்தகங்கள் பெரும்பாலும் சுருள்களாகக் காணப்படுகின்றன. தோல் புத்தகமாகக் கட்டப்பட்டு, புத்தகத்தின் பெயர் முடிவில் எழுதப்பட்டது. அவ்விடத்தில்தானே புத்தகத்திலுள்ள வரிகள் குறிக்கப்பட்டன. இது ஒரு காலத்தில் அதன் விலையைக் காட்டுவதற்காக இருக்கலாம். தோற்புத்தகங்கள் நேரான கோடுகளின் மேல் எழுதப்பட்டன. பல நிற மைகள் எழுதப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பொன் வெள்ளி களின் நிறம் தீட்டித் தோலின் முகப்பில் எழுதப்பட்டன. மஞ்சள் ஊதா சிவப்பு என்னும் நிற மைகள் பெரும்பாலும் பயனிலிருந்தன. மெழுகில் எழுதுவதற்குக் கூரிய குச்சுகள் பயன்படுத்தப்பட்டன. பைப்பிரசுத் தாள்களில் தூலிகைகளில் மைதொட்டு எழுதப்பட்டது. இந்திய நாட்டில் தாளிப்பனை ஓலைகளிலும் மரப்பட்டைகளிலும் புத்தகங்கள் எழுதப்பட்டன. ஏடுகளில் ஓவியங்களும் வரையப்பட்டன. கற் களிலும் செப்புத் தகடுகளிலும் கருங்கல்லிலும் மலைகளிலும் சாசனங்கள் எழுதப்பட்டன. சிந்துநதிப் பள்ளத்தாக்குகளில் சுண்ணாம்புக் கற்களில் எழுதப்பட்ட சாசனங்கள் கண்டு எடுக்கப்பட்டன. அவற்றின் காலம் ஏழாயிரம் ஆண்டு களாகும். 10. 1போசன் கதை முன் நாளிலே தாராபுரியிலே சிந்துலன் என்னும் அரசன் ஒருவன் ஆண்டான். அவனுக்கு முதுமைப் பருவத்திலே போசன் என்னும் மகன் பிறந்தான். சில காலத்திற்குப் பிறகு சிந்துல அரசன், தனக்கு மரணகாலம் சமீபித்தலையும், தன் மகன் போசன் சிறுவனாக இருத்தலையும் குறித்து மந்திரிமாரோடு கலந்து எண்ணினான்; இராச்சியபாரத்தைத் தாங்கும் வலிமையுடைய தம்பி இருக்கச் சிறுவனாகிய மகனிடத்தில் அதனை ஏற்று தல் பழியும் பாவமும் என்று துணிந்து, இராச்சியத்தையும் ஐந்து வயதின னாகிய புத்திரனையும் முஞ்சனிடத்தே கொடுத்துவிட்டுச் சில நாளில் இறந்தான். முஞ்சன், போசனைப் பாட சாலையில் படிக்கவிட்டுத் தான் அரசாண்டிருந்தான். அப்படியிருக்குங் காலத்தில் ஒருநாள் சோதிட நூல்களில் மிகச் சிறந்த அறிவுள்ள பூசுரரொருவர் முஞ்சராசனுடைய சபையிலே வந்து அவனைக் கண்டு, தம்முடைய வித்தியா சாமர்த்தியதை வியந்து பேசினார். அவன், “ஐயரே! நான் பிறந்த நாள் முதல் இன்று வரையும், செய்த செயல் களையும் பெற்ற பயன்களையும் முற்றச் சொல்வீராயின் நீர் சாமார்த்திய முடையவரே” என்றான். பூசுரர் இவன் இரகசியமாகச் செய்த செயல்களைத் தானும் தவறவிடாது முற்றச் சொல்லி முடித்தார். உடனே அவன் அதிசய மும் ஆனந்தமுமடைந்து அவரை வணங்கி, உயர்ந்த சிங்காசனத்திலிருத்தி அவருக்குப் பலவகை உபசாரங்கள் செய்தான். அப்போது அச் சபையிலிருந்த புத்திசாகரன் என்னும் மந்திரியி னுடைய வேண்டுகோளின்படி, முஞ்சகன், அவ்வையரைப் போசனுடைய சாதகப் பலனைச் சொல்லக் கேட்டான். ஐயர், “நான் அப் போசனை ஒரு முறைப் பார்த்த பின் சொல்வேன்” என்றார். அப்பொழுதே முஞ்சன் அவனைப் பாட சாலையினின்று அழைப்பித்துக் காட்டலும், ஐயர் பார்த்துக் கொண்டபின், முஞ்சனை நோக்கி “இராசாவே! போசனுடைய அதிட்ட விசேடத்தை விரித்துச் சொல்லுதல் பிரமதேவராலும் இயலாது! ஏழைப் பிராமணனாகிய நான் எப்படிச் சொல்வேன்! போசன் ஐம்பத்தைந்து வருடம் ஏழுமாதம் மூன்று நாள் வரையும் கௌட தேசத்தோடு தென்னாடு முழுவதை யும் ஒரு குடைக்கீழ் ஆள்வன்” என்றார். அது கேட்டு முஞ்சராசன் அகத்தே மிகுந்த கவலையுடையவனாகி யும், புறத்தே அதனைக் காட்டாமல் ஐயரை உபசரித்து அனுப்பிவிட்டான். அவன் அன்றிரவு ஊணும் உறக்கமுமில்லாமல் சயனசாலையிலே தனியே நெடுநேரம் ஆலோசித்து, “போசன் இராச்சியத்தை அடைவானாயின் நான் உயிரோடிருப்பினும் இறந்தவனே ஆவேன். ஆதலால் எவ்வாறாயினும் மிக விரைந்து போசனைக் கொல்லுவிப்பதே தகுதி” என்று தன்னுள்ளே நிச்ச யித்துக் கொண்டான். மற்றைநாள் முஞ்சைராசன், தன் கீழதிகாரியாகிய வற்சராசனை அழைப்பித்துத் தனியிடத்திலே அவனுக்குத் தன் கருத்தை அறிவித்து, “இன்றைக்கு நீயே போசனைப் புவனேச்சுவரி வனத்திலே இரவின் முதற் சாமத்திலே கொன்று அவனுடைய தலையை இங்கே கொணர்ந்து காட்டக் கடவாய்” என்று கற்பித்தான். அப்பொழுது வற்சராசன் அவனை வணங்கி, “சுவாமி! தங்கள் கட்டளை அடியேனால் சிரமேற்கொள்ளப்படுவதே; ஆயினும் அடியேன் செய்யும் விண்ணப்பத்தைக் கோபியாமற் கேட்டருளல் வேண்டும். அன் னாளிலே அயோத்தியில் தசரதபுத்திரராகிய இராம சுவாமிக்கு முடிசூட்டுவ தென்று முகூர்த்தம் நியமித்தவர் வசிட்ட மகாமுனிவர்; அவரோ பிரமதேவ ருடைய புத்திரர்; தவத்திற் சிறந்தவர்; சிறந்த ஞானமுடையவர். இங்ஙனமாக வும் அந்த முகூர்த்தத்திலே இராமசுவாமி, இராச்சியத்தை விட்டுக் காட்டுக்குப் போதலாயிற்று. அங்கேயும் மனைவியை இழத்தலாயிற்று. ஆனபின் வசிட்டருடைய வாக்கும் வீணாயிற்றே! இங்ஙனமாக, வயிறு வளர்க்க வந்த பிராமணனாகிய ஒருவனுடைய வார்த்தையை நம்பிக் கொண்டு அருமந்த இராசகுமாரனைக் கொல்ல நினைப்பதோ? கேட்க, “இச்செயலா லிதுவரு மென்றாரா யாமலே எச்செயலு மேலோ ரியற்றார்தாம் - இச்சையொடு வல்லை யியற்றுவரேல் வந்திடுமே மாறாத அல்லவர்க் கேன்றே யறி” என்றார் மேலோர். அன்றியும் இவனைக் கொல்லின், முன்னே சிந்துலராசன் மேலே மிகுந்த பிரீதியுடையவர்களாக இருந்து இப்பொழுது தங்களையும் அனுசரிக்கின்ற மகாவீரர்கள் பலரும் உடனே தங்களுக்குப் பகையாவர். இதனால் போசனைக் கொல்லுவது புத்தியாகாது” என்றான். அப்பொழுது முஞ்சராசன் கோபமடைந்து, “நீயே இராச்சியத்துக்குத் தலைவன்! சேவகன் ஆகின்றிலை! கேள்! ‘சேவகனெ வன்றலைவன் செப்புமொழி கேட்கிலனோ பாவியவன் றள்ளப் படுமானால் - மேவுமவன் ஆட்டுக் கழுத்தி னதள்போலுஞ் சீவனத்தாற் காட்டுபயன் யாதுமில்லை காண்’ என்பது மேலோர் வாக்கு” என்றான். உடனே வற்சன் சமயத்துக்கேற்றது சூழ்ந்து செயற்பாலது என்று எண்ணிக்கொண்டு, “சுவாமி! தங்கள் சொற்படி செய்கிறேன்” என்று சொல்லிக் கொண்டு அவ்விடத்தை விட்டுப் போனான். பின்பு வற்சன் உபாத்தியாயரையழைப்பித்து, பாடசாலையினின்று போசனைக் கொண்டுவரக் கற்பித்து விடுத்தான். அப்படியே அவரால் வருவிக்கப்பட்ட போசன் கோபமடைந்து வற்சனை நோக்கி, “பாவீ! இராச குமாரனாகிய என்னை வெளியே யழைப்பித்தற்கு நீ யார்?” என்று வைது, தன்னுடைய இடக்காலிற் பாதுகையைக் கையிற் கொண்டு அதனாலவனைக் கன்னத்திலடித் தான். அவன், “அடியேன் இராசருடைய கட்டளைப்படியே செய்தேன்” என்று போசனைத் தேரிலேற்றிக் கொண்டு புவனேச்சுவரி வனத் துக்குப் போனான். அப்போது, “போசன் கொல்லப்படுகிறான்” என்ற கதை பட்டணத் தில் பரவ எல்லோரும் துயரடைந்தனர். சிலர் வாள், வேல் முதலியவற்றி னாலே தம்மைத் தாமே கொன்றார்கள். போசனுடைய தாயாகிய சாவித்திரி என்பாள் நிகழ்ந்ததை அறிந்து விழுந்து அழுது புலம்பினாள். வற்சன் அத்தமன காலத்தின்பின் புவனேச்சுவரி கோயிலை யடைந்து, ஐயர் சோதிடஞ் சொன்னமையையும், அது கேட்ட முஞ்சன், கொன்று தலையைக் காட்டுமாறு தனக்கு வலிந்து கட்டளை தந்தமையையும் போசனுக்குச் சொன்னான். போசன், “வற்சனே! இராமசுவாமிக்கும் பாண்டவர்களுக்கும் வனவாசமும், நளனுக்கு இராச்சிய இழப்பும், இராவணனுக்குச் சிறையும் மரணமும், சந்திரனுக்குத் தேய்வும் விதி வசத்தால் அமைந்தன அல்லவா! அப்படியே விதி வசத்தால் அமைவனவற்றை விலக்க வல்லவர் யார்?” என்று செல்லிவிட்டு, இரண்டு ஆலிலைகளை எடுத்து ஓரிலையைப் பாத்திர மாகத் தைத்துத், தன் கணைக்காலை வாளினாற் சிறிது வெட்டி ஒழுகின்ற இரத்தத்தை அவ்விலைப் பாத்திரத்தில் ஏந்தி வைத்துக் கொண்டு, ஒரு தும்பினாலே அவ்விரத்தத்தைத் தொட்டுத் தொட்டு மற்றையிலையிலே ஒரு சுலோகம் எழுதி, அதை அவன் கையில் கொடுத்து, “வற்சனே! நீ அரசர் கட்டளைப்படி செய்தபின் இவ்விலையை அவர் கையில் கொடுத்து விடு” என்றான். அப்போது வற்சனுடைய தம்பி அவனை நோக்கி, “அண்ணா! கேட்க. ஒருவன் சரீரத்தை விட்டு நீங்கும்போது அவனுடைய திரவியங்க ளேனும், மாதா, பிதா, நண்பர், மனைவி, மக்கள்களேனும் அவனைப் பின் தொடர்தலில்லை; தருமம் ஒன்றே பின் தொடர்வது. ஆதலால் அத்தருமமே உயிர்த்துணை; தருமத்தை விரும்பாதவன் கல்வி, செல்வம், வலிமை முதலியவற்றான் மிகப் பெரியவனாயினும் ஒன்றுமில்லாதவனே ஆவான்” என்பன ஆன்றோர் மொழிகளன்றோ! இங்ஙனமாக, நீர் ஒரு சிறிதேனும் தரும சிந்தையில்லாமல் இப் பாலகனைக் கொல்ல உடன்பட்டீரா? ஐயோ! உம்முடைய மனந்தான் இவ்வளவு கடினமா” என்றான். அது கேட்ட வற்சன் தன்னுள்ளே சூழ்ந்து கொண்டு, போசனை வணங்கித் தேரிலேறி, இருள் செறிந்த அவ்விரவிலேயே மீண்டும் பட்டினத் திற் சேர்ந்து, வீட்டிலே நில அறையினுள்ளே போசனை மறைத்துவிட்டு, கைவல்லவர்களாகிய சிற்பிகளைக் கொண்டு போசனுடைய தலையே என்று முழுதும் நம்பத்தக்க ஒரு போலித் தலை செய்வித்து, அதை எடுத்துக் கொண்டு அரசன் வீட்டிற் சென்று, அவனைக் கண்டு வணங்கி, “சுவாமி! தாங்கள் கட்டளையிட்டபடி செய்துவந்தேன்” என்றான். முஞ்சன், “வற்சனே! நீ வாளால் வெட்டிய பொழுது புத்திரன் யாது கூறினன்?” என்றான். வற்சன், “அவன் ஒரு பத்திரம் எழுதித்தந்தான்; அது இது; ஏற்றுப் பார்க்க; சுவாமி! இங்கே தலையையும் பார்த்துக் கொள்க” என்றான். முஞ்சன், தலையைப் பார்த்துச் சிறிதே அழுது “வற்சனே! இந்தத் தலையைக் கொண்டுபோய் அப்பாற் படுத்து” என்று சொல்லி அவனை அனுப்பி விட்டு, மனைவியைக் கொண்டு விளக்கெடுப்பித்து, அப்பத்திரத் தில் எழுதிய சுலோகத்தை வாசித்துப் பார்த்தான். அச் சுலோகத்தின் கருத்து, “கிருத யுகத்திலே பெரிது விளங்கிய மாந்தாதா என்னும் மகாராசன் இறந்தான்! பெரிய சமுத்திரத்தின் கண்ணே ஒரு சேதுவைக் கட்டி இராவணனைக் கொன்ற இராம சுவாமி என்னும் ஆதி மன்னன் இறந்தான். அம்மட்டோ! பொறையிற் சிறந்த தருமன் முதலாய பல கோடி முடிமன்னர் இறந்தனர்! அம்மகான்கள் ஒருவரோடாயினும் இப்பூமி உடன் சென்றிலது. இராசாவே! உன்னோடே இப்பூமி உடன் செல்வது நிச்சயந்தானோ!” என்பதாம். முஞ்சராசன் அச் சுலோகத்தின் கருத்தை அறிதலும், தன் வயமிழந்து கீழே விழுந்தான். மனைவி புடைவையினாலே வீசியபின் தன் அறிவடைந் தான். “பெண்ணே! புத்திரனைக் கொலை செய்த சண்டாளன் நான்! என்னைத் தீண்டாதே! ஐயையோ! நான் பாவி” என்று புலம்பினான். அவ்வாறு புலம்பிய முஞ்சன் உடனே வாயிற் காவலாளரைக் கொண்டு அறிவிற் சிறந்த அந்தணர்களை அவ்விடத்தில் அழைப்பித்து, அவர்களை வணங்கி, “சுவாமிகாள்! புத்திரக் கொலை என்னும் பாவம் என்னால் செய்யப்பட்டது; இனி இதற்கு யாது பரிகாரம் செய்யத்தக்கது? கற்பித்தருள்க” என்று கேட்டான். அவர்கள், “இராசனே! அதி சீக்கிரம் நெருப்பில் விழுதலே அதற்குப் பரிகாரமாம்” என்றார்கள். அப்போது புத்திசாகரன் என்னும் மந்திரி அவ்விடத்திற் சென்று அரசனை வணங்கி, “சுவாமி! முன்னே சிந்து அரசர் தாம் ஆண்ட இராச்சியத்தை உமக்குத் தந்த அப்பொழுதே போசனையும் உம்முடைய ஒக்கலையில் ஒப்பித்துவிட்டாரன்றோ! இங்ஙனமாக நீர் யாது செய்தீர்! கேளும்” என்று சொல்லி, “நிலையுறுவது போலத் தோன்றிச் சில பொழுதில் அழிவதாகிய இளமையின் மயலடைந்த அவர்கள், செய்வன தெரியாது உய்தியில் குற்றம் புரிந்து ஒய்யெனக் கெடுவர்” என்பது முதலிய நீதி மொழிகளைச் சொன்னான். அரசன், “நான் இந்த இரவிலியே அக்கினிப் பிரவேசஞ் செய்ய நிச்சயித்தேன்” என்றான். புத்திசாகரன் அது கேட்டுப் பரிதாபத்தோடு வெளியில் வந்து இருந்தான். உடனே அரசன் புத்திரக் கொலைப்பாவத்தைப் பரிகரிக்கும் பொருட்டு அக்கினிப் பிரவேசம் செய்கிறான் என்ற கதை பரவியதால் பலரும் கூடினார்கள். வற்சன் அவ் விடத்திலே புத்திசாகரனைத் தனியே கண்டு, போசன் காக்கப்பட்டிருத்தலை இரகசியமாக அறிவித்தலும், அவன் ஓர் உபாயம் சொல்லி உடனே வற்சனை வெளியில் அனுப்பினான். சிறிது பொழுதின் பின் சடைமுடி உடையராய் படிக குண்டல மணிந்த இரு செவியினராய் உடம்பு முழுதும் திருநீறு பூசினவராய், பட்டு கௌபீனந் தரித்தவராய், அழகில் சிறந்தவராகிய ஒரு சன்னியாசியார், கையிலே யானைத் தந்தமாகிய தண்டு பிடித்துக் கொண்டு அங்கே வந்தார். புத்திசாகரன் அவரை நோக்கி, “ஓகோ! சன்னியாசியாரே! எங்கிருந்து வருகிறீர்? உம்முடைய வாசத்தானம் யாது? நீர் யாதாயினு மொரு சிறந்த கலாசாமர்த்தியமேனும் வைத்திய சாமர்த்தியமேனும் உடையீரோ?” என்று கேட்டான். சன்னியாசியார் அவனை நோக்கி, எந்தெந்தத் தேசந்தானு மிருக்கையே வீடுதோறுந் தந்திடு பிச்சைதானே தனியுணவாகும் வாவி 1உந்தியிச் சலமுண்டே யொப்பின்மெய்ப் பொருளுணர்ந்த சிந்தைகொண் ஞானிகட்குச் செல்வத்தாற் பயனென்னம்மா என ஒரு பாட்டுப் படித்து, “தம்பி! கேளும்! நமக்கு ஓரிடம் இல்லை; எங்கும் திரிவோம்; குருவின் உபதேசத்தின் படியே நிற்பாம்; எல்லா உலகையும் கரதலாமலகம் போலக் காண்போம்; பாம்பு கடியுண்டவரை, நோய் குடி கொண்டவரை, படைக்கலங்களால் அறுபட்டவரை, நஞ்சினால் கெட்டவரை கணப்பொழுதில் உய்யச் செய்வோம்” என்று சொன்னார். இந்த வசனங்கள் உள்ளே இருந்த முஞ்சன் காதிலேபடுதலும், அவன் உடனே வெளியில் வந்து, சன்னியாசியாரை வணங்கி, “சுவாமீ! யோகீசுவரரே! பெரும் பாவி யாகிய என்னால் கொல்லப்பட்ட புத்திரன் உயிர் பெறச் செய்து, என்னைக் காத்தருள்க” என்றான். அவர், “அரசனே அஞ்சாதே, கடவுள் கிருபையி னாலே உன் புத்திரன் உயிர் பெறுவான். புத்திசாகரனோடு ஓமத் திரவியங் களைச் சுடலைக்கு அனுப்பு” என்றார். அரசனும் அப்படியே செய்தான். அப்பொழுதே போசனும் இரகசியமாகச் சுடலைக்கு அழைத்துப் போகப் பட்டான். உடனே “சன்னியாசியார் போசன் உயிர்பெறச் செய்தார்” என்ற செய்தி பரவிற்று. பின்னர் போசனை யானையிலேற்றி வாத்திய கோஷத் தோடு அழைத்துக் கொண்டு வருதலும், முஞ்சன் அவனைத் தழுவி அழ, அவன் முஞ்சனுடைய அழுகையை மாற்றித் துதித்தான். பின்பு ஆனந்தபரவசனாகிய முஞ்சன் அவனைச் சிங்காசனத்தில் இருத்தி, இராச்சியத்தைக் கொடுத்தான்; தன் புத்திரர்களுக்கு ஒவ்வொரு கிராமம் கொடுத்து அங்கங்கே இருத்திவிட்டு. மூத்த புத்திரனாகிய சயந்தனைப் போசன் சமீபத்தில் இருத்தினான்; சில நாட்களின் பின் தன் மனைவிமாரோடு காட்டை அடைந்து, வீடுபேற்றை வேண்டித் தவஞ் செய்தான். 11. 1குண்டலகேசி வரலாற்றுச் சுருக்கம் இராசக்கிருகம் என்னும் நகரத்தை ஆண்ட அரசனுடைய மந்திரிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு, பத்திரை எனப்பெய ரிட்டுப் பெற்றோர் சீராட்டிப் பாராட்டி வளர்த்தனர். இவ்வாறு வளர்ந்த அப்பெண் மகவு பெரிதாக வளர்ந்து, மணம் செய்யத் தக்க வயதினை அடைந்தது. ஒரு நாள், இப்பெண் தன் மாளிகையின் மேற்புறத்தில் உலாவிய போது தெரு வழியே கட்டழகுமிக்க காளை ஒருவனை அரசனுடைய சேவகர் கொலைக் களத்திற்கு அழைத்துக் கொண்டு போவதைக் கண்டாள். கண்டதும், அக்காளையின் மேல் காதல் கொண்டாள். அவன், அரசனுடைய புரோகிதன் மகன்; வழிப்பறி செய்த குற்றத்திற்காகக் கொலைத் தண்டனை அடையப் பெற்றுக் கொலைக் களத்திற்கு அழைத்தேகப் பட்டான். இக் குற்றவாளியின் மேல் காதல் கொண்ட பத்திரை ‘இவனையே மணம்புரி வேன், அன்றேல் உயிர்விடுவேன்’ என்று பிடிவாதஞ் செய்தாள். இதனை அறிந்த இவள் தந்தை, கொலையாளருக்குக் கைக்கூலி கொடுத்து அவனை மீட்டு கொண்டுவந்து, நீராட்டி ஆடை அணிகளை அணிவித்துப் பத்திரையை அவனுக்கு மணம் செய்வித்தான். மணமக்கள் இருவரும் இன்புற்று வாழுங்காலத்தில் ஒருநாள், ஊடல் நிகழ்ச்சியின்போது பத்திரை தன் கணவனைப் பார்த்து, ‘முன்பு கள்வன் அல்லனோ?’ எனக் கூறினாள். அவன், அவள் தன்னை இகழ்ந்ததாகக் கருதி மிக்க சினங்கொண்டான். ஆயினும், அதனை அப்போது வெளியிற் காட்டாமல் அடக்கிக் கொண்டான். பின்னர் ஒரு நாள் அவன் பத்திரையை அழைத்து, அவளிடம், தன் உயிரைக் காப்பாற்றிய தெய்வத்தை வழிபடும் பொருட்டு அருகிலிருக்கும் மலை உச்சிக்குப் போக விரும்புவதாகவும், அவளையும் தன் உடன் வரவும் கூறினான். அவளும் இசைய இருவரும் மலை உச்சிக்குச் சென்றனர். மலை உச்சியினை அடைந்தவுடன், அக்கொடியோன் அவளைச் சினந்து நோக்கி, “அன்று நீ என்னைக் கள்வனென்று கூறினாயன்றோ? இன்று உன்னைக் கொல்லப் போகிறேன். நீ இறக்குமுன் உனது வழிபடு கடவுளை வணங்கிக் கொள் என்றான். இதனைக் கேட்டுத் திடுக்கிட்ட அவள், தற்கொல்லியை முற்கொல்லவேண்டும்’ என்னும் முதுமொழியைச் சிந்தித்து, அவன் கட்ட ளைக்குக் கீழ்ப்படிபவள் போல நடித்து, “என் கணவனாகிய உன்னை அன்றி எனக்கு வேறு தெய்வம் ஏது? ஆதலின் உன்னையே நான் வலம் வந்து வணங்குவேன்” என்று சொல்லி, அவனை வலம் வருவது போல் பின்புறம் சென்று, ஊக்கித் தள்ளினாள். இவ்வாறு அக்கொடியவன் மலை உச்சியினின்றும் வீழ்ந்து இறந்தான். இதன் பிறகு பத்திரை, உலகத்தை வெறுத்தவளாய், சைன மதத்தின் பிரிவாகிய நிகண்டமதத்தில் சேர்ந்து துறவு பூண்டாள். அந்த மதக் கொள்கைப் படி, பத்திரையின் தலைமயிரைக் களைந்து விட்டார்கள்; ஆயினும், மீண்டும் தலைமயிர் வளர்ந்து சுருண்டு காணப்பட்டது. அதனால் சுருண்ட மயிருடை யவள் என்னும் பொருள்படும் ‘குண்டலகேசி’ என்று அவளைக் கூறினர். இப்பெயரே பிற்காலத்தில் இவளுக்குப் பெரும்பாலும் வழங்கப்பட்டது. சில வேளைகளில் இவளது இயற்பெயரையும் காரணப் பெயரையும் ஒருங்கு சேர்த்து, ‘பத்திரா குண்டலகேசி’ என்றும் சொல்லப்படுவது முண்டு. சைனமதத்தில் சேர்ந்த குண்டலகேசி, சைனர்களிடம் சமய சாத்திரங் களையும் தர்க்க நூல்களையும் கற்றுத் தேர்ந்து, சமயவாதம் செய்யப்புறப் பட்டு, சென்ற இடமெங்கும் நாவல் மரம் நட்டு வாதப் போர் செய்து வெற்றி கொண்டு வாழ்ந்தாள். வாதப் போர் செய்வோர், நாவல் மரக்கிளையை ஊர் நடுவில் நட்டு வாதத்துக்கு அழைப்பது அக்கால வழக்கம். இவ்வாறு நிகழுங் கால், ஒரு நாள் ஓர் ஊரை அடைந்து, அவ்வூர் நடுவில் மணலை குவித்து, நாவற்கிளை நட்டு, உணவு பெறுவதற்காக வீடுதோறும் சென்றாள். இவ் வமயம் புத்தர், தமது சீடர்களுடன் அவ்வூர்க்கு அருகிலிருந்த ஒரு தோட் டத்தில் வந்து இறங்கினார். அவருடைய சீடர்களில் சாரிபுத்தர் என்பவர் உணவுக்காக அவ்வூருக்குள் சென்றார். சென்றவர் அங்கு நாவல் நட்டிருப் பதைக் கண்ணுற்று, அதன் காரணத்தை அங்கிருந்தவர்களால் அறிந்து, அங்கிருந்த சிறுவர்களை அழைத்து அக் கிளையைப் பிடுங்கி எறியக் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள். பின்னர், உணவுகொள்ளச் சென்ற குண்டலகேசி மீண்டும் திரும்பி வந்தபோது, தான் நட்ட நாவல் வீழ்த்தப்பட்டிருப்பதைக் கண்டு, அதனை வீழ்த்தியவர் அருகிலிருந்த சாரிபுத்தர் என்பதனை அறிந்து, அவ்வூர்ப் பெரியோரை அழைத்து, அவையைக் கூட்டச் செய்து, சாரிபுத்தருடன் வாதம் செய்யத் தொடங்கினாள். நெடுநேரம் நடைபெற்ற வாதத்தில் குண்டல கேசி வினாவிய வினாக்களுக்கெல்லாம் சாரிபுத்தர் விடை அளித்தார். பின்னர், சாரிபுத்தர் வினாவிய வினாவுக்குக் குண்டலகேசி விடையிறுக்கத் தெரியாமல் தான் தோற்றதாகச் சொல்லி அவர் காலில் விழுந்து வணங்கி, அவரை அடைக்கலம் புகுந்தாள். சாரிபுத்தர் குண்டலகேசியைப் பார்த்து, “என்னிடம் அடைக்கலம் புகாதே, என்னுடைய குரு புத்த பகவானிடம் அடைக்கலம் புகுவாயாக” என்று சொல்லி அவளை அழைத்துச் சென்று புத்தரை வணங்கச் செய்தார். புத்தர் அவளுக்கு உபதேசம் செய்து அவளைப் புத்த மதத்தில் சேர்த்தார். இதுவே குண்டலகேசி என்னும் தெரிவையின் வரலாறு. இந்தக் குண்டலகேசி என்பவள் சமயவாதம் செய்யப் புறப்பட்டு சைனம், வைதிகம் முதலான சமயங்களைத் தருக்க முறையாகக் கண்டிப்ப தாக இயற்றப்பட்டதுதான் குண்டலகேசிக் காப்பியம் என்பது. இது தமிழி லுள்ள 1ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றாகும். 12. நீலகேசி வரலாற்றுச் சுருக்கம் பாஞ்சால தேசத்திலே சமுத்திரராசன் என்னும் வேந்தன் பண்டார வார்தனா என்னும் நகரிலிருந்து செங்கோலோச்சினான். நகர்ப்புறத்தே பழவாலயம் என்னும் சுடலை இருந்தது. அங்கு ஒரு காளி கோயில் உண்டு. அதன் அண்மையில் சந்திரமுனி என்னும் சைன முனிவர் வாழ்ந்திருந்தார். ஒரு நாள் நகர மாந்தர் காளிக்குப் பலியிடும் பொருட்டு விலங்குகள் பலவற்றைக் கொண்டு, சுடலையிலுள்ள காளி கோயிலுக்குச் சென்றனர். பிற உயிர்களுக்குத் துன்பமிழையாமையை மேற்கொண்ட சைன முனிவர், நகர மாந்தரைநோக்கி அவர்கள் பெருந்திரளான விலங்குகளைப் பலியிடக் கொண்டு வந்திருப்பதன் காரணத்தை வினவினார். அவர்கள் “இத்தேவியின் அருளால் அரசி, பட்டத்துக்குரிய குமரனை ஈன்றாள்; ஆதலின் இவ்விலங்குகளை எல்லாம் பலியிடும் பொருட்டு தேவியின் திருமுன்பு கொண்டு வந்திருக்கின்றோம்” என விடை பகர்ந்தனர். இதனைச் செவியில் ஏற்ற முனிவர் அவரை நோக்கி, “உயிர்கள், தாம் முற்பிறப்பில் புரிந்தவினைகளின் காரணமாகப் பிறவிகள் எடுக்கின்றன. இந் நிகழ்ச்சியில் தெய்வங்களால் ஆகும் வல்லமை எதுவும் இல்லை. இராச குமாரன் பிறந்ததின் பொருட்டு நீவிர் கொடுக்கும் மிருக பலியை ஏற்று இத்தெய்வம் மகிழுமாயின், அது மிருக வடிவாக மண்ணினால் செய்த பிரதிமைகளையும் பலியேற்று மகிழுமன்றோ? இம்முறை, இரத்தம் சிந்தும் கொடிய கொலையின்றிச் செய்யப்படும் அன்பு நிறைந்த வழிபாடாகும்” எனப் போதித்தார். சந்திர முனிவரின் உயர்வுடையதும் புனிதமானதுமான வழிபாட்டு முறையைக் கூறக் கேட்ட மக்கள், தாம் பலியிடும்பொருட்டுக் கொண்டுவந்த விலங்குகளை விட்டு தத்தம் வீட்டுக்குத் திரும்பினர். முனிவரின் தரும உபதேசத்தைக் கேட்டு உயிர்ப் பலி கொடாது மாந்தர் அகன்றமையின், காளி வெகுளியுற்று, சைன முனிவரை ஒறுக்க நினைவு கொண்டாள். தவம் நிறைந்த சைன முனிவரை ஒறுக்கும் ஆற்றல் காளிக்கு இல்லாமல் இருந்தது. ஆகவே அவள், சிறு தெய்வங்களுக்குத் தலைமை வகித்த நீலகேசி என்னும் தெய்வ அணங்கின் துணையை நாடினாள். நீலகேசி, காளியின் வேண்டுகோளுக்கு இணங்கிச் சந்திர முனிவர் வாசம் செய்யும் சுடலையை அடைந்து கோர வடிவங் கொண்டாள். யோகத்தில் அமர்ந்திருந்த முனிவர் இதனால் அச்சங் கொண்டாரல்லர். முனிவரைப் பணியவைக்குமாறு எடுத்துக் கொண்ட இம்முயற்சி பயனற்றுப் போகவே அவள், சாந்தமான இன்னொரு முறையினால் முனிவரைப் பணியவைக்க நினைத்தாள். அவள் காமலேகை என்னும் இராசகுமாரி போல வடிவங் கொண்டு, தன்னை அழகிய ஆபரணங்களால் அலங்கரித்துகொண்டு முனிவரின் அரிய தவத்தைக் கெடுக்குமாறு அவர் முன்னே நின்றாள். முனிவர், தனது யோக ஆற்றலினால் அவள் நீலகேசியே என்பதை அறிந்தார். அவர் அவளை நோக்கி “நீ இராசகுமாரி அல்லை; நீலகேசி என்னும் அணங்கு” என்றார். நீலகேசி, தன் முயற்சி பயனளிக்கவில்லை எனக்கண்டாள்; முனிவர் தன்னை யார் என அறிந்து கூறும் வல்லமையை அளித்த யோகத்தின் பெருமையால் வசப்பட்டாள். அவள் மன்னிப்புக் கருதிக் கேட்கும் குரலில் “யான் உமது யோக ஆற்றலினால் தோற்றேன்” எனக் கூறித் தனக்குத் தரும உபதேசம் செய்யுமாறு முனிவரை வேண்டினாள். முனிவர் நீலகேசிக்குத் தரும உபதேசம் செய்தார். நீலகேசி மற்றத் தேவர்களிலும் கீழான நிலைமையில் இருப்பதையும், மற்றவர் வெறுத்துத் தள்ளும் செயல்களுக்குத் தலைமை வகிப்பதையும் அவர் எடுத்துக்கூறினார். இந் நீலகேசி பல சமயத்தவர்களோடு வாதப் போர் செய்து வென்று, சைன மதத்தை நிலை நாட்டினாளாகச் செய்யப்பட்ட நூல் நீலகேசி எனப்படும். இது தமிழிலுள்ள ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்று. ஐஞ்சிறு காப்பியங்கள், பெருங்கதை, சூளாமணி, யசோதரகாவியம், நாககுமார காவியம், நீலகேசி என்பனவாம். 13. தமிழர் வாணிகம் பண்டைத் தமிழர் வாணிகத் துறையில் மிக முன்னேற்ற மடைந்திருந்தனர். அசீரியர், பாபிலோனியர், எகிப்தியர், கிரேக்கர், உரோமர், சீனர், அராபியர், பினீசியர் முதலிய பழைய நாகரிக சாதியார் தமிழ் நாட் டோடு வாணிகத் தொடர்புடையவர்களாக இருந்தனர். பிற நாடுகளுக்குப் பண்டங்களை ஏற்றிச் செல்லும் மரக்கலங்களும், பிறநாட்டுச் சரக்குகளுடன் வந்த நாவாய்களும் தென்னிந்திய துறைமுகங்களில் குழுமி நின்றன. தமிழர் கடற்பயணத்தில் நன்கு பழகியிருந்தனர். இந்து மாக்கடலில் தென்னிந்திய மரக்கலங்களே பெரும்பாலும் ஓடிக் கொண்டிருந்தன. மரக்கலங்களின் முன்புறம் யானை, சிங்கம், குதிரை முதலியவற்றின் முகம்போல் செய்யப் பட்டிருந்தது. கி.மு. எட்டாம் நூற்றாண்டின் முன் தென்னிந்தியாவுக்கும் மேற்கு ஆசியாவுக்கும் இடையில் கப்பல் வழியாக வாணிகம் நடைபெற்றது என்பதற்குப் பல ஆதாரங்களுண்டு. இந்தியாவில் வேதங்கள் தோன்றுவதன் முன்னே தமிழர் சாலதியரோடு வாணிபம் நடத்தினர். சாலதியாவின் தலை நகரமாகிய ஊர் என்னும் நகரத்தின் அழிபாடுகளில், மலையாளக்கரை களில் மட்டும் காணப்படும் தேக்குமரத்துண்டு கண்டெடுக்கப்பட்டது. ஊர் என்னும் நகரம் கி.மு. 4000 வரையில் அமைக்கப்பட்டது. தமிழர் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வாணிகத் துறையில் நன்கு பயின்றிருந்தார்களென்பதை இது அறிவிக்கின்றது. கி.மு. 1700-இல் எகிப்துக்குச் சென்ற யோசேப்பின் வரலாறு, அக் காலத்தில் இந்திய வாணிகப் பொருள்கள் வணிகர் கூட்டத்தாரால் தரை மூலம் அராபிய வழியாக, எகிப்து, சிரியா, பாபிலோன் முதலிய நாடுகளுக்கு கொண்டுபோகப்பட்டன என்பதை அறிவிக்கும். கி.மு. பதினேழாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கும், மேற்கே உள்ள நாடுகளுக்கும் வாணிபத் தொடர்பு இருந்தது என்பதற்கு எகிப்திய ஓவிய எழுத்து நூல்களில் ஆதாரம் காணப்படுகின்றது. குரங்கை உணர்த்தும் கவி என்னும் சொல்லின் திரிபாகிய கொவ் (கிரேக்கு) ஓவிய எழுத்தில் ‘கவு’ என்று காணப்படுகின்றது. கி.மு. 1462-இல் முடிவெய்திய எகிப்திய பதி னெட்டாவது பரம்பரையிலுள்ள அரசரின் பிணங்கள் இந்திய மசிலின் துணிகளால் சுற்றப்பட்டிருந்தன. எகிப்தியர் கப்பற் பயணத்துக்குப் பினீசியரைச் சம்பளத்துக்கு அமர்த்தினர். தையர் நாட்டு ஹிரம் என்னும் அரசனும், சாலமனின் பிதாவாகிய தாவீது என்னும் எபிரேய அரசனும் சேர்ந்து ‘ஒபிர்’ நாட்டுக்கு வாணிகக் கப்பல்களை அனுப்பினர். ஒபிர்ப் பயணம் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்றது. சரக்குகளை ஏற்றுமதி இறக்குமதி செய்வதிலும், கப்பல் இடையே உள்ள வாணிகத் துறைகளில் தங்குவதிலும் மூன்று ஆண்டுகள் கழிந்ததாகச் சில சரித்திர ஆசிரியர் கூறுகின்றனர். ஒபிர் என்பது தென்னிந்தியாவிலுள்ள உவரி என்னும் துறைமுகம் எனக் கருதப்படுகிறது. சாலமன் என்னும் யூத அரசன் (கி.மு. 1000) சந்தனக் கட்டை, குரங்கு, மயில் முதலியவற்றை ஒபிரினின்றும் பெற்றான். மயில், இந்தியாவினின்றும் கொண்டுபோகப்பட்டது. துகிம் என்னும் பெயர் எபிரேய மொழியில் எழுதப்பட்ட விவிலிய நூலிற் காணப்படுகின்றது. இது தோகை என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபு. மேல் நாடுகளுக்குச் சென்ற தமிழ் நாட்டுப் பொருள்கள், தங்களுடன் தமக்குரிய தமிழ்ப் பெயர்களையுங் கொண்டு சென்றன. கிரேக்க மொழியில் அரிசி ‘ஒரிசா’ என்றும், இஞ்சி இஞ்சிவேர் என்றும், கறுவா ‘கர்பி ஓன்’ என்றும், திப்பிலி ‘பிப்லி’ என்றும் வழங்கும். இவை முறையே அரிசி, இஞ்சிவேர், திப்பிலி என்பவற்றின் திரிபாகும். தந்தத்துக்கு 1இபிம் என்னும் பெயர் எபிரேயத்தில் காணப்படுகின்றது. இது இபம் என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபு. இந்தியாவினின்றும் பொன், பட்டு, முத்து, வாசனைத் திரவியங்கள் ஆகிய பண்டங்கள் கிரேக்க நாட்டுக்கு கொண்டுபோகப்பட்டன. ஹோமர் என்னும் பழைய கிரேக்கப் புலவர், இந்தியாவினின்றும் கிடைக்கும் பொருள்களைப்பற்றிக் கூறியிருக்கின்றார். முற்காலத்தில் இந்தியாவினின் றும் தங்கம் பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது என்பதற்குப் பல ஆதாரங்கள் காணப்படுகின்றன. இந்தியாவோடு வர்த்தகம் செய்ததால் அசீரியா மிகுந்த தங்கத்தை ஈட்டிற்று. பாபிலோனிய பழைய சாசனங்களில் ஆடைக்கு சிந்து என்னும் பெயர் காணப்படுகின்றது. இது இந்திய ஆடை என்பதை வரலாற்று ஆசிரியர்கள் எல்லோரும் ஒத்துக் கொள்கின்றனர். இந்த ஆடை பாரசீகத்துக்கூடாகப் பாபிலோனுக்குச் செல்லவில்லை. அப்படிச் சென்றிருந்தால் ‘சி’ என்பது ‘ஹி’ என்று மாறியிருக்கும். வேத மந்திரங் களுக்குரிய சாதியார் கடலையும் கடற் பயணத்தையும் பற்றிக் கேள்விப் பட்டிருந்தார்களே அன்றி அவற்றை அறிந்திருக்கவில்லை. ஆகவே திராவிட மொழியைப் பேசிய சாதியார்தான் ஆடையைப் பாபிலோனுக்குக் கொண்டு சென்றனர். ஆகவே தென்னிந்தியாவுக்கும் மேற்கு ஆசியாவுக் கும் இடையில் வாணிபம் நடை பெற்றது என்பதை மறுக்க முடியாது. கி.மு. எட்டாம் நூற்றாண்டுக்குப் பின் நடந்த வாணிபத்தைப் பற்றி தெளிவான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. பாபிலோனில் தைகிர°, யுபிராத° என்னும் நதிகள் சந்திக்குமிடத்துக்கு அண்மையில் தமிழர் குடியேறியிருந்தார்கள். அங்கு கிருட்டிண, பலதேவ வழிபாடுகள் இருந்தன என்று அறியப்படுகின்றது. போதாயனர், மேற்கு ஆசியாவோடு வாணிகஞ் செய்தவர்களைக் கண்டித்திருக்கின்றனர். இதனால் வடஇந்தியர் அவ் வாணிபத்தில் முதன்னையானவரல்லர் எனத் தெரிகின்றது. அர்த்த சா°திரம் செய்த கௌடலியர் வட இந்தியாவிலும் தென்னிந்தியாவே வியாபாரத்தில் சிறந்து விளங்கிற்று என்றும், தென்னிந்தியாவில் பொன், நவமணி, முத்து, சங்கு முதலிய பொருள்கள் கிடைத்தன என்றும், வடஇந்தியா கம்பளம், தோல் முதலியவற்றையே அளித்தது என்றும் கூறுகின்றார். மதுரை, அழகான ஆடைகளுக்குப் பேர் போனது. தமிழர் கடல் கடந்து திரவியம் தேடினார்கள் என்று தொல்காப்பியம் கூறுகின்றது. மேற்கு ஆசியாவிலுள்ள நாடுகளோடு தென்னிந்தியா வாணிகம் நடத்தியதாதலின் கி.மு. 20-இல் பாண்டிய அரசன், அக°தசு என்னும் உரோம சக்கரவர்த் திக்குத் தூதனுப்பினான். இன்னொரு அரசன், கிரேக்க போர் வீரரைத் தனக்கு மெய்க்காப்பாளராக அமர்த்தினான். யவன போர்வீரர், பாண்டியரின் கோட்டை வாயில்களைக் காலல் புரிந்தனர். கிறித்துவுக்குப் பல நூற்றாண்டுகளின் முன் இந்திய வணிகர் பர்மா வழியாகவும் அதன் தென்கரை வழியாகவும் சென்று, கம்போதியாவில் வாணிகத் தொடர்பை ஏற்படுத்தினர். அங்கு கிலமாகக் கிடக்கும் கட்டிடங் களில் கடற்போர், கடற்பயணம் ஆகியவற்றை விளக்கும் ஓவியங்கள் காணப்படுகின்றன. கடல், தரை என்னும் இருவழிகளாலும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போக்குவரவு இருந்தது. கிறித்து பிறப்பதற்கு முன்னும் தமிழர் சுமத்திரா, யாவா முதலிய நாடுகளோடு வாணிகம் நடத்தினார்கள். இதனை மணிமேகலை என்னும் நூல் தெளிவாக கூறுகின்றது. சுமத்திராவை அடுத்த பாலி என்னுந் தீவில் இன்றும் தமிழரது பழக்க வழக்கங்களும், நாகரிக சின்னங்களும் வழிபாட்டு முறைகளும் காணப்படுகின்றன. கடல், பரவை, புணரி, ஆர்கலி, முந்நீர் முதலியவும்; ஓடம், கலம், மரக்கலம், தோணி, மிதவை, கப்பல், நாவாய், மரம், திமில், அம்பி முதலியவு மாகிய கடலையும் மரக்கலத்தையும் உணர்த்தும் தூய தமிழ்ச் சொற்கள், தமிழர் கடலையும் கடற் பயணத்தையும் நன்கு அறிந்திருந்தார்கள் என்ப தற்குச் சான்றாகின்றன. கிறித்துவ ஆண்டின் முற்பகுதியில் தென்னிந்தியாவுக்கும் கிரீசுக்குமிடையில் நெருங்கிய வாணிகத் தொடர்பு இருந்தது. உரோமர் முசிறியிலும் பிற இடங்களிலும் குடியேறியிருந்தனர். யவனர் அடிக்கடி போக்குவரவு செய்யும் இடங்களுள் முசிறி முக்கிய இடமாக இருந்தது. கிரேக்கர் தமது வாணிகப் பாதுகாப்பின் பொருட்டு முசிறியில் 2000 போர்வீரரை அமர்த்தியிருந்தனர். மலையாளக் கரையிலுள்ள பிசன்தியம் (Byzantium) என்னும் இடத்தில் கிரேக்கர் குடியேறியிருந்தனர். உரோம நாட்டினின்றும் அழகிய பேழைகள், பாவை விளக்கு, மதுவகை முதலிய பொருள்கள் தமிழ் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டன. மிளகு, தந்தம், நவரத்தினம், பட்டாடை, கறுவா, சந்தனக் கட்டை முதலியன தமிழ் நாட்டினின்றும் யவன நாட்டுக்கு கொண்டுபோகப்பட்டன. உரோம வாணிபப் பெருக்கம் அதிகம் இருந்தமையால், உரோமர் தமது நாணயங்களைத் தென்னிந்தியாவில் வழங்கினர். உரோமரின் நாணய உற்பத்திச் சாலை ஒன்று தென்னிந்தியாவில் இருந்ததென்று நம்பப்படுகின் றது. தென்னிந்தியாவில் தெல்லிச் சேரிக்கு அண்மையிலுள்ள கோட்டயத்தி லும், மதுரை மாகாணத்திலுள்ள கலியன்புத்தூரிலும், கோயம்புத்தூர் மாகாணத்திலுள்ள பொள்ளாச்சி, கருவூர், வெள்ளலூரிலும், புதுக்கோட்டை முதலிய இடங்களிலும் மிகப்பல உரோமன் நாணயங்கள் கண்டெடுக்கப் பட்டன. இவை உரோம தென்னிந்திய வாணிகப் பெருக்கத்தைக் காட்டுகின் றன. இந்திய சரக்குகள் அலக்சாந்திரியா வழியாக உரோம் நாட்டை அடைந்தன. தென்னிந்தியாவில் முத்துக் குளிப்பு முக்கிய தொழிலாக இருந்தது. வடமொழியில் முத்தைக் குறிக்கும் ‘முத்த’ என்னுஞ் சொல் முத்து என்பதன் திரிபே. தென்னிந்தியாவில் முத்து கிடைப்பதை உரோமர் அறிந்திருந்தனர். அவர் தமிழ் நாட்டினின்றும் ஏராளமான முத்தை வாங்கிச் சென்றனர். உரோமைப் பெண்கள், முத்தில் அதிக மோகமுடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் தமது மேனியை முத்துக்களால் அலங்கரித்தார்கள். முத்து மாலைகள் ஒன்றோடு ஒன்று முட்டி ஒலி செய்வதைக் கேட்டு அவர்கள் உள்ளம் பூரித்தது. காலில் தரிக்கும் செருப்புக்களின் வார்களும் முத்துகளால் அலங்கரிக்கப் பட்டன. கய°குளோடியர் என்னும் உரோம அரசனின் இராணி உலோலா 300,000 தங்க நாணயம் விலையுள்ள முத்துகளால் தன்னை அலங்கரித்திருந்தாள். கிளியோபத்திரா என்னும் எகிப்திய இராணி, கீழ்நாட்டு அரசருக்கு முன் சொந்தமாக இருந்தனவும், காதில் அணியப்படு வனவுமாகிய இரண்டு பெரிய முத்துகளை வைத்திருந்தாள். 80,000 தங்க நாணயம் விலையுள்ள ஒரு முத்தை அவள் காடியில் (வின்னாரியில்) கரைத்துக் குடித்தாள்; மற்ற முத்தைக் கரைக்குஞ் சமயத்தில் அந்தோனிய° என்பவனின் வேலையாளால் தடுக்கப்பட்டாள். தென்னிந்தியாவினின்றும் உரோம இராச்சியத்துக்கு அனுப்பப்பட்டவற்றுள் முத்து, வைடூரியம், கோமேதகம், நீலம், முதலிய இரத்தின வகைகளே முதன்மை யுடையன. ஆண்டில் இரண்டு இலட்சம் தங்க நாணயம் வரையில் விலையுள்ள உரோம நாட்டின் செல்வத்தை இந்தியா விழுங்கிவிடுகின்றது என்று பிளினி (கி.பி. 62 - 113) என்பார் வெறுப்பாகக் கூறியிருக்கின்றார். பிறநாட்டு வணிகர், மிளகு, கசகசா, சந்தனம் ஆகியவற்றை மலையாளக் கரையினின்றும் வாங்கினர். நெல்லூர் தொடங்கித் தெற்கே கூடலூர், புதுச்சேரிவரையிலும் ஒருவகைத் தகட்டுச் செம்பு நாணயங்கள் நிலத்திற் கண்டு எடுக்கப்பட்டன. இவற்றோடு உரோம நாணயங்களும், துளையிட்ட சீன நாணயங்களும் கண்டு எடுக்கப்பட்டன. பெரிய மழைக் கும் புயலுக்கும் பின் மீன் பிடிப்போரின் பெண்டுபிள்ளைகள் இவ்வகை நாணயங்களைக் கடற்கரை ஓரங்களிலிருந்து பொறுக்கி எடுக்கிறார்கள். கிறித்துவ வருட ஆரம்பத்திலிருந்து நாலைந்து நூற்றாண்டுகளாகப் பிறதேச வாணிகம் தமிழ் நாட்டில் பெரிதும் நடைபெற்றது என்பதற்கு இது போதிய சான்றாகின்றது. நாணயங்களின் ஒருபுறத்தில் இரண்டு பாய் மரமுடையதும், தண்டு வலித்துச் செலுத்தப்படுவதுமாகிய தோணியின் வடிவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. வணிகர் கடல் கடந்து மரக்கலங்களில் நெடுந்துhரம் செல்வதைப்பற்றி, மணிமேகலை என்னும் நூல் அழகாக கூறுகின்றது. “திரைகடலோடியுந் திரவியந்தேடு” என்னும் பழமொழி இன்னும் தமிழ்நாட்டில் வழங்குகின்றது. முசிறி, கொற்கை, தொண்டி, மாந்தை, புகார் முதலியன தமிழ் நாட்டின் முக்கிய துறைமுகங்களாகும். புகார்நகரின் சிறப்பைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பட்டினப்பாலையில் விரித்துக் கூறியிருக்கின்றார். கடை வீதிகளில் கங்கை காவேரி நாடுகளின் விளை பொருள்களும், ஈழம், கடாரம் (பர்மா) முதலிய நாடுகளின் உணவுப் பொருள்களும், கீழ்க் கடலிலே பிறந்த பவளமும் தென் கடலில் குளித்த முத்தும், மேற்குத் தொடர்ச்சி மலையிற் பிறந்த சந்தனக் கட்டையும், இமயமலையிற் பிறந்த பொன்னும், மணியும், அராபியாவினின்றும் கடல்வழியாக வந்த குதிரைகளும், வண்டிகளிலும், கழுதைகளிலும் கொண்டுவந்த மிளகு மூடைகளும் தேக்கிக் கிடந்தன. மரக்கலங்கள் திசை அறிந்து செல்லும் கலங்கரை விளக்கங்கள் கடற்கரைப் பட்டினங்களில் அமைக்கப்பட்டிருந்தன. இக் கட்டிடங்கள் ஓலை முதலியவற்றால் வேயப்படாது மூடு சாந்திடப் பட்டிருந்தன. மரக்கலங்களின் உறுப்புகளைக் குறிக்க வழங்கும் சொற்கள் பெரும் பாலான தமிழ்ச் சொற்களாகவே காணப்படுகின்றன. கப்பற்பாட்டு என இக் காலம் வழங்கும் பாடல்களிலும் இச் சொற்கள் பலவற்றைக் காணலாம். 14. சிந்து நதிப்பள்ளத் தாக்கில் தமிழர் நாகரிகம் சிந்துநதிப் பள்ளத்தாக்கில் ஹரப்பா, மொகஞ்சதரோ சங்குதரோ என்னும் தமிழரின் புராதன நகரங்கள், புதை பொருள் ஆராய்ச்சியாளரால் அகழ்ந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அங்கு காணப்பட்ட மாடி வீடுகள், வீதிகள், கோயில், குளங்கள், எழுத்துப் பொறித்த முத்திரைகள் ஆகியவற் றால் தமிழரின் சரித்திர காலத்துக்கு முற்பட்ட நாகரிகம் வெளிக்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றது. ஹரப்பா, மொகஞ்சதரோ முதலிய நகரங்களில் வாழ்ந்த மக்களின் நாகரிகத்தை விளக்கும் மூன்று பெரிய நூல்கள் சர் யோன் மார்சல் என்னும் ஆசிரியரால் வெளியிடப்பட்டுள்ளன. அந்நூலில் காணப்படும் பொருட் சுருக்கம் வருமாறு. பழஞ் சரித்திர ஆராய்ச்சி, நம்மை ஐயாயிரம் ஆண்டுகளுக்கு அப்பாற் கொண்டுபோய் விடுகின்றது. சிந்து ஆற்றின் கிழக்கு மேற்குப் பள்ளத்தாக்குகளையும் பலுச்சு°தானத்தையும் நோக்குமிடத்து இந்தியா, சுமேரியாவோடும் 1எல்லத்தோடும் தொடர்பும் ஒற்றுமையும் உடையதாக இருக்கின்றது. இதற்கு ஆதாரமாக உள்ள சின்னங்கள் பஞ்சாபிலுள்ள ஹரப்பாவிலும், மொகஞ்சதரோவிலும் மிகுதியாக காணப்படுகின்றன. ஹரப்பா என்னும் நகர், சிந்து நதியின் கீழ் ஊற்றுவரையிலும் அகழப் பட்டது. செல்வ வளம் பொருந்திய அழகிய நகரொன்று அவ்விடத்தில் ஐயாயிரம் ஆண்டுகளுக்குமுன் இருந்ததென்று அறியப்படுகின்றது. எவ்வகையான நாகரிகம் அங்கு நிலவியதென்று அறிதற்குரிய ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. நகர், செங்கல்லாற் கட்டப்பட்டிருக்கின்றது. சுவர்கள் நிலமட்டத்துக்கு மேல் செங்கல்லாற் கட்டப்பட்டிருக்கின்றன. அடித்தளம் முரடான செங் கல்லால் இடப்பட்டிருக்கின்றது. சில சுவர்கள் கற்களால் எடுக்கப்பட்டுள்ளன. மொகஞ்சதரோவிலும் அதன் சூழலிலும் கற்கள் கிடைத்தலரிது. வீதிகள் ஒழுங்காக அமைக்கப்பட்டிருக்கின்றன. வீடுகள் பெரும்பாலும் கிணறு உடையனவாக இருந்தன. கிணறுகளின் ஊற்றுகள் ஆற்றினின்றும் வந்தன. குளிக்கும் அறைகளோடு கூடிய வீடுகள் பல காணப்படுகின்றன. வீடுகளின் அழுக்கு நீர் வெளியே கழிவதற்குச் செங்கட்டி பதித்த வாய்க்கால்கள் இருந்தன. வாய்க்கால்கள், வீதிகளில் சென்று முடிவெய்தின. வீதியில் கழிவு நீர் செல்லும் செங்கற் பதித்த வாய்க்கால்களிருந்தன. இவ்வாய்க்கால்கள் நகருக்கு வெளியே செல்லவில்லை. வீட்டுக் கூரையின் நாற்புறத்துமுள்ள அழுக்குகள் பீலி வழியாக வந்து தொட்டியில் விழுமாறு கூரைகளுக்குப் பீலிகள் அமைக்கப்பட்டிருந்தன. வீடுகள் மாடிகள் உடையனவாக இருந்தன. மாடிகளுக்கு ஏறிச் செல்லும் படிக்கட்டுகள் அழகாக கட்டப்பட்டிருக்கின் றன. வீடுகளின் அமைப்பைக் கொண்டு அந் நகரம் மிகச் சிறப்புற்றிருந்தது எனத் தெரிகின்றது. மொகஞ்சதரோவில் வீடுகளில்லாத பெரிய கட்டிடங்களும் காணப் படுகின்றன. அவற்றின் பயன் யாதென்று தீர்மானமாகக் கூற முடியாது. ஒருபோது அவை வழிபாட்டுக்குரிய இடங்களாக இருக்கலாம். சாந்தினால் மெழுகப்பட்ட கட்டிடம் ஒன்று சிறப்பாக அவ்விடத்திற் காணப்படுகின்றது. அது ஒருபோது அரசாங்க சபை கூடும் இடமாக இருத்தல் கூடும். அழகிய கட்டிடங்கள் சூழ்ந்த கேணி ஒன்றும் அவ்விடத்திற் காணப்படுகின்றது. அது மக்கள் நீராடுவதற்கு அமைக்கப்பட்டதாக இருக்கலாம். அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறைகளையும் பழக்க வழக் கங்களையும் அறிந்து கொள்ளக் கூடிய சின்னங்கள் பல காணப்படுகின்றன. கோதுமையும், வாளியும் அங்கு பயிர் இடப்பட்டன. உணவின் பொருட்டு மக்கள், ஆடுமாடுகளையும் கோழிகளையும் வளர்த்தார்கள். மக்கள் ஆற்று மீனையும் பயன்படுத்தினர். பல விலங்குகளின் எலும்புக் கூடுகள் அங்கு காணப்படுகின்றன. அவற்றால், எருமை, ஒட்டகம், யானை, பலவகை மானினங்கள் முதலியன அங்கு வாழ்ந்தன என்று தெரிகின்றது. ‘யூனிக் கோண்’ என்னும் ஒரு கொம்புடைய குதிரையும் அங்கு வாழ்ந்ததெனத் தெரிகிறது. புலி, குரங்கு, முயல் முதலிய விலங்குகளின் உருவங்கள் கல் முத்திரைகளிற் காணப்படுகின்றன. இதனால் அங்குள்ள மக்கள் இவ் விலங்குகளை அறிந்திருந்தார்கள் எனத் தெரிகின்றது. மொகஞ்சதரோவிலுள்ள மக்கள் பொன், வெள்ளி, செம்பு, ஈயம் முதலியவற்றால் செய்த பதக்கங்களைப் பயன்படுத்தினர். அவர்கள் வெள்ளியின் பயனை நன்கு அறிந்திருந்தனர். இருக்குவேத ஆரியர் வெள்ளியை அறியார். வெள்ளியை அறிந்த காலத்தில் அவர்கள் அதனை வெண்பொன் என்னும் பெயரால் வழங்கினார்கள். அவர்கள் சாதாரண ஆபரணங்களையும், பானை சட்டிகளையும் செம்பினால் செய்து பயன்படுத் தினர். எலும்பு, ஆனைத் தந்தம், சிப்பி, மணி ஆகியன ஆபரணங்களாகப் பயன் படுத்தப்பட்டன. நீல நிறக் கண்ணாடியால் செய்த காப்புகளும் காணப்படுகின்றன. கம்பளியினாலும் பஞ்சினாலும் ஆடை நெய்யப்பட்டது. நூல் நூற்கும் கதிர்கள் பல காணப்படுகின்றன. ஈட்டி, கோடரி, குத்துவாள், வில், கவண் முதலியன அவர்கள் பயன் படுத்திய போர்க் கருவிகளாகும். கவணில் வைத்து எறியும் உருண்டைக் கற்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. வாள் அல்லது தற்காப்புக்குரிய கருவிகள் இருந்தன என்று அறியப்படவில்லை. மட்பாண்டங்கள் திரிகையிற் செய்யப்பட்டன. வழுவழுப்பான நிறம் பூசிய பானை சட்டிகளும் காணப்படுகின்றன. சிறுவர் விளையாடுதற்குரிய விளையாட்டுப் பொருள்கள் மிகப்பல காணப்படுகின்றன. அக்காலத்து ஒவ்வொரு பிள்ளையும் பல விளையாட்டுப் பொருள்களை வைத்திருந்தது எனத் தெரிகிறது. கிலுகிலுப்பை, பாவை, ஊதுகுழல், சிறு வண்டிகள் ஆகியன அவ்விளையாட்டுப் பொருள்களிற் சில. அக்கால விளையாட்டு வண்டிகளைப் போல இக் காலம் சிந்து நாடுகளில் பயன்படுத்தப்படும் வண்டிகள் இருக்கின்றன. அங்கு கண்டு எடுக்கப்பட்ட பொருள்களில் அக்கால வழக்கிலிருந்த ஓவிய எழுத்துகள் பொறிக்கப்பட்ட கல்முத்திரைகள் முதன்மையுடையன. அவ்வெழுத்துகள் சுமேரிய மொழிக் குரியனவாக இருக்கலாம். சுமேரிய மொழிக்கும் இம் மொழிக்கும் பொதுவான ஓர் உற்பத்தி இருத்தலும் கூடும். மாடு, எருமை, ஒற்றைத் கொம்புள்ள குதிரை முதலியவற்றின் ஓவியங்கள் கல்முத்திரைகளில் காணப்படுகின்றன. இவை, அக்கால மக்களின் ஓவியம் வரையும் திறமையைக் காட்டுகின்றன. முத்திரைகளில் காணப்படும் எழுத்துப் போன்றன மண்பாண்டங்களிலும் காணப்படு கின்றன. ஹெர° பாதிரியார் என்னும் ஆசிரியர் அவற்றுள் பலவற்றை வாசித்திருக்கின்றார். அவ்வாசிப்பிற் காணப்படும் சொற்கள் பல தமிழில் காணப்படுகின்றன. எழுத்துக்குப் பதில் பயன்படுத்தப்பட்ட சில குறிகளே அவ்வெழுத்துகளாகும். ஒவ்வொரு குறியும் ஒவ்வோர் சொல்லைக் குறிக்கும். சீனரின் எழுத்து எழுதும் முறை இதனோடு ஒத்திருக்கின்றது. ஒரு மரத்திலிருந்து பிரிந்த இரண்டு கிளைகளுள் ஒன்று இவ்வெழுத்தும், மற்றொன்று சீன எழுத்துமாக இருக்கலாம். ஹரப்பாவில் வழங்கிய எழுத்துகள் முற்றும் மறந்து போகப்பட்டன. இவ்வெழுத்துகளைக் குறித்து பலவகையாக ஊகிப்பது பயனற்றது. அம் மொழி சமஸ்கிருதம் அன்று எனத் தீர்மானமாகக் கூறலாம். அது திராவிட மொழியே என அறிஞர் கருதுகின்றனர். முத்திரைகளில் ஓவியங்களைப் பொறிப்பதில் மாத்திரமன்று, சிற்பத் தொழிலிலும் அம் மக்கள் திறமை அடைந்திருந்தனர். செங்கல்லினால் செய்த தலையில்லாத மனிதச் சிலை ஒன்று அங்கு கண்டுபிடிக்கப்பட்டது. இது கிரேக்கரின் கை வேலை என்று முதலிலே கருதப்பட்டது. கிரேக்கர் வருகைக்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது இச் சிலை என்று இக்காலம் நன்றாகத் துணியப்படுகின்றது. அக் கால மக்களின் சமயமும் ஒருவாறு அறியப்படுகின்றது. சக்தி வழிபாடே பெரும்பாலும் மக்களுக்குரியதாக இருந்தது. பழைய நாள் வழிபாடு பெரும்பாலும் இவ்வகையினதே. மூன்று முகங்களுடைய தெய்வத்தின் சிலை ஒன்று காணப்படுகின்றது. இது, சிவன் சிலையாகும். பிற்காலத்தே வந்த ஆரியர், சிவனையும் தமது தெய்வங்களோடு சேர்த்துக் கொண்டனர் என்பதில் ஐயம் இல்லை. விலங்குகளையும் மரங்களையும் மக்கள் வழிபட்டனர். இறந்தவர்களைச் சுடுதலும் புதைத்தலும் அக்கால வழக்கு. சிந்துநதிப் பள்ளத்தாக்கின் நாகரிகம் எல்லம். மெசபெத்தேமியா முதலிய நாடுகளின் நாகரிகத்தோடு ஒற்றுமை உடையது. கல்லாயுதங் களுக்குப் பின் வந்த இரும்பாயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. அக் காலத்துக் கல்லாயுதங்கள் முற்றும் மறைந்து போகவில்லை. பழைய நாகரித்துக்கும் கலை வளர்ச்சிக்கும் அறிகுறியாகச் சிந்துநதிப் பள்ளதாக்கில் காணப்பட்ட முத்திரைபோன்ற பொருள்கள் எல்லத்திலும் காணப்பட்டன. இவ்விரண்டு நாடுகளுக்கு மிடையே போக்குவரவு இருந்தது என்றறியப் பிற ஆதாரங் களுமுண்டு. மெசபெத்தேமியாவின் பழையவரலாற்றைக் கொண்டு மொகஞ் சதரோவின் நாகரிகம் கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று நாட்ட லாம்’ இந் நாகரிகம் கங்கைக்கரை வரையில் பரந்திருந்ததோ என்பது, ஐயத் துக்குரியது. மேலே கூறப்பட்ட இந்திய மக்களின் காலம், இருக்குவேதே காலத்துக்கு முற்பட்டது. ஆரியர் ஆடுமாடுகளுடன் இடம் விட்டு இடம் பெயரும் கூட்டத்தவராக இருந்தனர். அவர்கள், பூர்வ குடிகளோடு ஓயாத போர் புரிந்து கொண்டிருந்தமையால் அவர்கள் மொகஞ்சதரோ போன்ற பலமான ஒரு நகரை அமைத்திருக்கமாட்டார்கள். மொகஞ்சதரோவிலுள்ள வர்கள் குதிரையை அறியாதவர்களாக இருந்திருக்கலாம். வேத கால இந்தியர் குதிரையை நன்றாக அறிந்திருந்தனர். இரு வகையினரும் அறிந்திருந்த உலோக வகைகள் வேறு வேறானவை. மொகஞ்சதரோ மக்களின் நாகரிகம், வேத காலத்தோடு சிறிதும் சம்பந்தப்படாதது. மொகஞ்சதரோ ஹரப்பா என்னும் பழைய நகரங்களின் நாகரிகத்தை நன்று ஆராய்ந்தவரும், மொகஞ்சதரோ எழுத்துகள் பலவற்றை வாசித்த வருமாகிய ஹெர° பாதிரியார் கூற்று வருமாறு: “பிற்கால இந்தியர் மேற்குப்புறமாக சென்று மெசபெத்தேமியாவின் தென் கோடியில் குடியேறிச் சுமேரியர் என்னுஞ் சாதியாயினர்”. யோகத்தில் வீற்றிருக்கும் பாவனையுடைய மூன்று முகமுள்ள நிர் வாணமான கடவுளின் சிலை ஒன்று காணப்படுகின்றது. அதன் சிகரங்களில் முடிகள் காணப்படுகின்றன. இச் சிலையைச் சுழ்ந்து பல விலங்குகளின் உருவங்கள் காணப்படுகின்றன. இக்கடவுள் பசுபதி என்னும் பெயர் பெறுவர். ‘ஆண்’ என்னுங் கடவுள் மற்றைக் கடவுளருக்குத் தலைவராகக் காணப்படுகின்றனர். ‘ஆண்’ என்னும் பெயருக்குரியவர் ஞாயிறு எனத் தெரிகின்றது. சூரியன் ஒரு வீட்டில் ஒரு திங்கள் தங்குவான். ஒவ்வொரு வீட்டில் தங்கும்போதும் சூரியனுடைய வடிவம் வெவ்வேறாகக் கொள்ளப் பட்டது. சூரியன் தங்கும் வீடுகள் எட்டு. ஆகவே அக்காலம் எட்டு மாதங்களும் ஒரு மாதத்தில் நாற்பத்தைந்து நாட்களுமாக இருந்தன. பழைய இந்தியர், கடவுளுக்கு எட்டு வடிவம் உண்டு எனக் கருதினர். எட்டு இராசி களாவன: ஆடு, மாடு, நண்டு, கன்னி, துலாம், கடகம், மீன், யாழ் என்பன வாம். இவ் வடிவங்களைக் கடவுளராக வைத்து மக்கள் வழிபட்டனர். இவ் வடிவங்களுள் மீன் மிகப் புகழ் பெற்றிருந்தது. சாசனங்கள் பலவற்றில் இப் பெயர் காணப்படுகின்றது. இக் காலத்தில் காணப்படும் சிவனுடைய வடிவம் சாசனங்களில் தெளிவாகச் சொல்லப்படுகின்றது. சிவனுக்கு மூன்று கண்களுண்டென்றும் அக்கண்கள், தனித்தனி வழிபடப்பட்டன என்றும் சாசனங்கள் கூறுகின்றன. கடவுள் அரசனாகக் கருதப்பட்டார். அரசன், கடவு ளுக்குப் பதில் அவர் ஆணையை ஏற்று நடத்துவோனாக எண்ணப்பட் டான். கடவுளுக்கு இறுவன் என்னும் பெயர் காணப்படுகின்றது. ஒரு சாசனத்தில் “தாண்டவன் இர் நால்மரம்” என்று காணப்படு கின்றது. இதற்குத் தாண்டவம் செய்யுங் கடவுள் என்பது பொருள். முத்திரைகளிலிருந்து வாசிக்கப்பட்டவற்றுள் சில சொற்கள், யாழ். வேல், நாய்வேல், காலாள், எண் ஆள், எண்மை (சிவன்), கலக்கு, நண்டு, நண்டூர், வேலூர், உழவன், அது, ஆண்டு, குட, குடவு, தடு, ஒட்டு, குட்டை, உதவு, அடு, அன்று, மாறு, அரி, முதலியன. ‘கோயில் எல்லாக் கடவுள் அது’ என ஓர் சாசனத்தில் காணப்படுகின்றது. கோயிலில் உள்ள கடவுள் எல்லோ ரிலும் பெரிய கடவுள், என்பது இதன் பொருள். முத்திரைகளில் குறள் வெண்பாவினாலாகிய பாடல்கள் பல காணப்படுகின்றன. அக்கால எழுதும் முறை இடது புறத்தினின்று சென்று, பின்னர் வலப்புறத்தினின்றும் இடப் புறமாகச் செல்வதேயாகும். வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் வழங்கிய பிராமி எழுத்துகள் மொகஞ்சதரோ எழுத்துகளினின்றும் வளர்ச்சி அடைந்தவை. தென்னிந்திய திராவிடர்களுடைய எழுத்து மொகஞ்சதரோ எழுத்தை நேரே பின்பற்றியது. திருநெல்வேலியிற் கிடைத்த சரித்திர காலத்துக்கு முற்பட்ட மட்பாண்டங்களிலும், நீலகிரி மலையில் வெட்டப்பட்டுள்ள சாசனங்களி லும், கைதராபாத்துச் சமாதிகளிலும் இவ்வெழுத்து காணப்படுகின்றது. மொகஞ்சதரோவில் வாழ்ந்தோர் திராவிடராயினமையின் வட இந்தியாவிலுள்ளோர் தமிழையே பேசினார். சிந்துநதிப் பள்ளத் தாக்கிற் கிடைத்த சாசனங்கள் சிலவற்றிற் காணப்பட்ட வான நூற் குறிப்பைக் கொண்டும் மொகஞ்சதரோ முதலிய நகரங்களின் நாகரிகம் கி.மு. 5610 ஆண்டுகளுக்கு முற்பட்டதென ஹெர° பாதிரியார் கூறுவர்.  அறிவுரைக் கோவை முன்னுரை அறிவுரைக் கோவை என்னும் இந்நூல் மாணவர்க்கு அறிவு பயக்கும் பல கட்டுரை களின் தொகுப்பு. இக்கட்டுரைகளிற் சில நாம் எழுதியவை; சில மொழி பெயர்க்கப்பட்டவை; ஏனையவை கட்டுரை ஆசிரியர்களின் சம்மதம் பெற்றுச் சேர்க்கப்பட்டவை. இந்நூல் 1945 பி.ஏ. பரீட்சைக்குத் தமிழ்த்துணைப் பாடமாக வந்துள்ளது சென்னை 01. 12. 1950 ந.சி. கந்தையா 1. இலக்கியக் கல்வி அறம், பொருள், இன்பம், வீடு என்று நால்வகைப் பொருள்களுள் ஒன்றினையேனும் பலவற்றையேனும் நானாவித வருணனைகளோடு சிறப்பித்துக் கூறும் நூல் இலக்கியம் எனப்படும். இலக்கியம் எனினும் காவியம் எனினும் ஒக்கும். இலக்கியம் பெரும்பான்மையும் குறிப்புச் சொற்களும், குறிப்புப் பொருள்களும் மிகுந்து வருவது. பொருளாழமின்றி வெளிப்படையான சொற்களால் ஆக்கப்படுவன சிறந்த இலக்கியமென மதிக்கப்படாவாம். குறிப்புச் சொற்களும் பொருள்களும் விரவிய இலக் கியங்களே தமிழறிஞர்களால் உவந்து கொண்டாடப்படுவன. தமிழிலுள்ள பழைய காவியங்கள் எல்லாம் இவ்விதமாகிய பெருஞ்சிறப்புடையன. புலவனுடைய அறிவு உலக இயற்கையழகிற் படிந்து அதன் வண்ணமாய்த் திரிந்து தெளிவுற்று விளங்கும்போது, அப் புலவன் மனத்திற் சுரந்து பொங்கும் அரிய பெரிய கருத்துக்களை அறிய நாம் அவாவுகின்றோம். அக் கருத்துக் களை அழகாகக்கோத்து இன்னோசை புணர்த்திச் சொல்லும் பாட்டே மக்கள் மனத்திற்கு மகிழ்ச்சி தருவதாகும். இங்ஙனம் இயற்றப்படும் பாட்டுகள் இயற்கை யழகுடன் பொருந்திப் படிப்பவர்களுக்கு மிக்க சுவை விளைக் கும் என்பது நன்கறிந்தது. தன் மனத்துதித்த உயரிய கருத்துக்களையும் தூய அறிவையும் சொற்கள் மூலமாக அழகுற வெளிப்படுத்திச் செய்யுள் செய்யும் நல்லிசைப் புலவனுக்கும் உலக வியற்கையினையும் உயரிய கருத்துக்களையும் பலவகை வண்ணங்களால் வரைந்து காட்டும் ஓவியக்கலை வல்லானுக்கும், மனத்திற்கொண்ட கருத்துக்களைக் கல் சுண்ணம் முதலிய கொண்டு உருப்படுத்திக் காட்டும் சிற்பம் வல்லோனுக்கும் ஒற்றுமை மிக உண்டென்று அறிதல் வேண்டும். ஓவியம் வல்லான் வரைகின்ற சித்திரமும் சிற்பி இயற்றும் உருவமும் கட்புலனுடையார்க்கே பயன்றருவன. புலவன் இசைக்கின்ற பாட்டோ கண் முதலாகிய புலன்களினகத்தே விளங்கும் உள்ளத்திலே தோன்றச் சுவை பயப்பதாகும் என்றறிக. புலவனுடைய பாட்டு அகக்கண்ணுக்கு விடயமாவது. ஓவியக்காரன் பல நாட்களாக வருந்திச் செய்து காட்டும் ஒரு கருத்தை, ஒரு புலவன், எளிதிற் சில சொற்களால் திறம்படச் சொல்லிக் கேட்போர் மனத்திற் பெருவியப்பினை விளைப்பான். அதனால் ஓவியக்காரன் வண்ணங் கலந்து வரைந்துகாட்டும் படம்போல, புலவனும் சொற்களைக் கொண்டு செய்யுஞ் செய்யுளும் ஒரு படமாகுமென் பது கருத்து. சித்திரப்படத்தையும் கைபுனைபாவையையும் புறக்கண்ணாற் கண்டு அறிந்து மகிழ்கின்றோம்; புலவனுடைய பாட்டாகிய படத்தை அகக்கண்ணாற்கண்டு களிக்கின்றோம். இவ்வாறு மனக் கண்ணாற் கண்டறிந்து இன்புறுதலே செய்யுள் படித்தலின் பயனெனக் கொள்ளல் வேண்டும். அவ்வாறே மாணாக்கரும் செய்யுளிலமைந்துள்ள படத்தை அகக்கண்ணாற் கண்டு அறிந்து இன்புறச் செய்தலே செய்யுள் படிப்பித் தலின் நோக்கமும் முறையுமென அறிதல் வேண்டும். மேலும், இலக்கியம் படிப்பிக்கும் ஆசிரியர் தம்மை ஒரு நூதன சாலைப் பாதுகாவலனாக வைத்துக் தம் மாணாக்கரை நூதனசாலை பார்க்க வந்தவராகக் கொண்டு அச்சாலையின் கதவைத் திறந்து அவரை உள்ளழைத்துச் சென்று அங்கிருக்கும் நூதனங்களைத் தேடிப் பார்த்து அறியும்படிவிட்டு, இடையிடையே “இன்னது இன்னது பார்த்தீரோ? இது என்னவென்று எண்ணுகின்றீர்? இங்கே இருக்கும் இப்பொருள் உமக்கு ஆர்வம் விளைவிக்கக்கூடும்’ என்றிவ்வாறு வழிகாட்டி நடத்தி அறியச் செய்தல் தக்க முறையாகுமென்ப. புலவன் சொல்லால் இயற்றிய படத்தை மாணாக்கனும் தன் மனோபாவனையால் ஒரு படமாகத் தன் அகக் கண்ணாற்கண்டு இன்புறுதல் வேண்டும். உதாரணமாக, “தண்டலை மயில்க ளாடத் தாமரை விளக்கந் தாங்கக் (கத் கொண்டல்கண் முழவி னேங்கக் குவளைகள் விழித்து நோக் தெண்டிரை யெழினி காட்டத் தேம்பிழி மகர யாழின் வண்டுக ளினிது பாட மருதம்வீற் றிருக்கு மாதோ” என்பது புலவன் சொல்லால் தீட்டிய ஒரு சித்திரம். இதனை அன்னதாக அகக்கண்ணாற்கண்டு இன்புறுதலே இதனைப் படித்தலின் பயனாகற் பாலது. இதனை வண்ணமும் எழுது கோலுங்கொண்டு சித்திர வடிவாக வரைந்து காட்டுதலும், இதிற் குறிப்புப் பொருளாய் உருவகிக்கப்படும் ஓர் அரசி கொலு வீற்றிருக்குங் காட்சியைப் படம் வரைந்து காட்டுதலும் செய்யுட் கருத்தை வெளிப்படையாகப் புலப்படுத்துவதென்பதறிக. பெரும் புலவனாக்கிய செய்யுட்களைப் படித்து அவற்றிலுள்ளுறை யாகிய படத்தை அகக்கண்ணாற்கண்டு இன்புறுதல் மாத்திரையோடமை யாது, அவ்விதமான செய்யுட்களைத் தாமும் நவமாய் இயற்ற விரும்புதலும், அவ்வாறு இயற்றுதலும் செய்யுள் படித்தலின் பயனாகக் கொள்ளுதல் வேண்டும். நவமாகச் செய்யுளியற்றல் தமக்கு முற்றமுடியாத செயல் என்னுங் கோழை எண்ணம் மாணாக்கர் மனதில் உதியாவண்ணஞ் செய்த லும் அவர் தம்மை அச்செயலில் ஊக்கப்படுத்துதலும் ஆசிரியர் கடனாகும். மாணாக்கரும் மற்றைய பாடங்களை செய்கை முறையில் பூமி சாத்திரப் படம் கீறியும், கட்டுரைகள் வரைந்தும், உருவங்கள் சித்திரித்தும், கதைகள் நடித்தும் பயின்று தேர்ச்சிபெறுவது போலப் புதிதாகப் பாட்டுக ளிசைத்துப் பயின்று வருதலும் ஏற்புடைத்தென்க.1 2. சீவப்பிராணிகளின் நிறமும் அதன் பயனும் பண்டைக்காலந் தொட்டு ஆடுதலிற் பெயர் பெற்ற ஆண்மயில் மட்டும் அழகிய தோகை கொண்டிருப்பதேன்? நல்லரவந் தனது படத்தை விரிக்க அதனிடையில் அரக்கன் கண்போலிரண்டு பயங்கரமான இரேகை தோன்றுவதேன்? பச்சோந்தியோ பன்முறையும் தன்னிறத்தையும் மாற்றி யொளிப்பதேன்? சிலந்திப் பூச்சிகளுட் சில எறும்பைப்போல் வேடம் பூண்டு பார்ப்போரை ஏமாற்றுவதேன்? இன்ன வினாக்கட்கு ஒருவாறு விடை பகர்வான் எடுத்துக் கொள்ளப்பட்டது இக்கட்டுரை. சீவப்பிராணிகளிற் சில ஒரு நிறங்கொண்டும் வேறு சில பல நிறங்கலந்து மாயமேனி யுடையன வாம். அங்ஙனம் பூண்ட நிறத்தால் அவற்றிற்கு எத்துணைப் பயனுண்டாம் என்னும் பொருளைப்பற்றி ஆராய்தல் தகுதியுடைத்து. உயிர்நூல் வல்லார் சீவப்பிராணிகளின் நிறத்தை அதன் பயனுக்குத் தக்கவாறு பிரிவு செய்திருக்கின்றனர். அப் பிரிவுகளில் மேம்பட்டன ஆறேயாம். அவையாவன: பயன்படா நிறம், தற்காப்பு நிறம், வசீகர நிறம், எச்சரிக்கை நிறம், போலி நிறம், சம்போக நிறம் எனப்படும். காகங் கறுத்திருப்பதால், அதற்கு யாதேனும் பயனுண்டா வென்ற கேள்விக்குப், பயனின்று என உத்தரமளித்தலே தகுதியாம். இத்தகை நிறத்துக்குப் பயன்படா நிறமென்று அறிஞர் பெயரிட்டிருக்கின்றனர். தாங்கொண்ட நிறத்தால் தம்மைத் தம் எதிரியிடமிருந்து காப்பாற்றிக் கொண்டு இடையூறின்றிக் காலங்கழிப்பன சில பிராணிகள். இங்ஙனம் பயன்படும் நிறத்திற்குத் தற்காப்பு நிறமென்று பெயர் கொடுத்திருக்கின்றனர். மரங்களிற் பசுமை வாய்ந்த இலைகளிடையே இலைக்குந் தனக்கும் புலப் படா வண்ணம் பச்சைப் பாம்பு வாழ்வதை யாவருமறிவர். அதனை இலகு வில் இலைகளின் மத்தியினின்று வித்தியாசப் படுத்திக் காண்பது மிகவரி தாகும். கூர்மையான கண்ணுள்ளவர்களே அது மரக் கொம்புகளின்மேல் நேராய் இழைந்தோடுவதைக் கண்டு ஆச்சரியப்பட்டிருப்பார்கள். அது அவ்விதம் தன்னையுங் காப்பாற்றிக்கொண்டு மரங்களின்மேல் வந்தமரும் சிறு பறவைகளையும் உணவாகக் கொன்று விழுங்குவதற்குப் பயன்படுதல் அதன் பசுமை நிறமேயாம். இவ்வண்ணமே, வேறொரு பாம்பு பாலைவனங்களிலும் மணற் சாரலான விடங்களிலும் வசிக்கின்றது. இதை நம்மவர் இரட்டைத் தலைப் பாம்பென்றழைப்பர். மற்றப் பாம்புகளைப் போல் இதற்கு ஒரு தலைதா னுண்டு; ஆனால், அதன் வால் கூர்மையாயிராது சற்றுக் கூழையாயிருக்கும். இப்படி யுருண்டிருக்கும் வாலின்மேல் இரண்டு கறுத்த புள்ளிகளுண்டு. இப்புள்ளிகளைக் கண்ணென்று மயங்கி வாலையுந் தலை யென்பார்களோ? இம்மணற் பாம்பு தன்னைச் சுற்றிலுமுள்ள மணலின் நிறத்தையே கொண் டது; மணலின்மேல் புரளுங்கால், மணலுக்கு மிதற்கும் பேதங்காண்பது மிகக் கடினமே. இங்ஙனமே தம்மைச் சுற்றியிருக்கும் பொருள்களின் நிறத்தை மேற்கொண்டு வாழ்வன, தோட்டங்களிற் செடிகளின் மேலகப் படுஞ் சில சிலந்திப் பூச்சிகளாம். சில சிறு கொம்புகள் போலும், சில விதைகள் போலும், சில பூவரும்புகள் போலும் வேடம் பூண்டு பார்ப்போரையும் தம் மெதிரிகளையும் ஏமாற்றுவன. வண்ணாத்திப் பூச்சியென்னும் அழகிய பூச்சி களின் கூட்டுப்புழுக்களும் இன்னணமே மரக் கொம்புகள்போல் வேடந் தரித்து மரத்தினிலைகளைச் சிறிது சிறிதாய்த் தின்று அழிக்கின்றன. இவற்றைக் கண்டு பிடித்து ஓட்டிச் செடிகளைப் பாதுகாக்க யாம் எத்தனிக்கும் போது அவற்றுட் சில கை கால்களைச் சுருக்கிக்கொண்டு எதிர்த்து நின்று நம்மை பயமுறுத்துவது நமக்குப் புன்னகை யுண்டாக்கும். கோயமுத்தூர் பழனி நீலகிரி முதலிய இடங்களில் இலைப்பூச்சி யென்றொரு உயிரைக் காணலாம். அதற்கும் அது தின்னு மிலைக்கும் எவ்வித மாறுபாடுங் காண்பதரிது. நமது கண்களுக்கெதிரிலேயே இலையைத் தின்று கொண்டிருக்க, அதை நாம் காண்பது இயலாததாகும். நிறம் மட்டும் இலையைப் போன்றதுமின்றி, அதன் அங்கவமைப்பும் பெரிது மொத் திருக்கும்; ஆகவே, அது இலையோ இலைப் பூச்சியோ என்று சந்தேகப்படு வது சாதாரணமாகும். இதைப்போலவே செடிகளில் வசிப்பது இன்னுமொரு பூச்சி. இதைக் கும்பிடு பூச்சியென்பார்கள். அதற்கு ஆங்கிலத்தில் ‘செபப் பூச்சி’ என்று மறு பெயருமுண்டு. இப்பெயர் கொள்ளவேண்டிய காரண மென்ன? நாம் செபஞ்செய்யும் இரண்டு கைகளையுஞ் சேர்த்துக் கூப்புவது போல், இதுவு முட்காருங்கால் தன் முன்னிரண்டு கால்களையுஞ் சேர்த்து உயரத் தூக்கி உட்காரும். இது இலையுருவங் கொள்ளாது கொம்புகளைப் போல் நீண்டு மெலிந்திருக்கும். முதுகெலும்பில்லாச் சில பிராணிகள் கடலின் மேற்பக்கத்துச் சீவிக் கின்றன. அவற்றைப் பெருமீன்களும் கடல் வாசிகளும் ஆவலாயுண்ணு மாதலின், எதிரியிடமிருந்து தப்பியோடிப் பிழைக்கும் பொருட்டு இவற்றுட் சில, கண்ணாடிபோற்றெளிவான தேக முடையன. தண்ணீருக்குமேல் நின்று நோக்கின் இவை கடல்நீர் நிறங்கொண்டிருக்கும், கடலின் கீழிருந்து பார்க்க, ஆகாயத்தின் நீலவர்ணங் கொண்டதாகப் புலப்படும். ஆகவே எவ்வண்ணம் நோக்கிலும் இவற்றின் சுயவுருவந் தோன்றாது. இத்தகைய உதாரணமும் இவ் வகுப்பிற் சேர்க்கப்படுதல் வேண்டும். இன்னுமொரு உதாரணம்: கணவாய் மீன் என்று சொல்லப்படும் ஒரு வினோத உயிர் கடலில் வாழ்கின்றது. அதன் தலையைச் சுற்றிப் பத்துக் கைகளும், தலையின்மீது விசாலமான இரண்டு கண்களுமுண்டு. பச்சோந்தியைப்போற் கணவாய் மீனும் தன்னிறத்தை அடிக்கடி மாற்றும். புட்ப ஒளிகள்போல இதன்நிறம் கண்களைப் பறிக்குமளவு இடைவிடாது மாறும். இந்த வேடிக்கையைக் கண்ணுற்ற இதனெதிரிகள், ‘இஃதென்ன? ஓர் இராக்கதன்போலும்; கிட்டநெருங்கினால் விழுங்கிவிடுமோ’ என்று நினைத்துப் பயந்து பல திக்குகளிலு மோடும்; ஆனால் இது வெறும் மாயவித்தை என்று பழக்கத்தால் அறிந்த சில மீன்கள் கணவாயை விழுங்கப் பின்றொடர்ந்தோடும்; அக் காலத்து அது வேறு ஒரு உபாயத்தால் மீனை வென்று ஓடி ஒளிக்கும். எதிரியைத் தன்னெதிரிற் கண்டதும், தன்னிடத் துள்ள மை நிறைந்த ஒரு பையைத் திறக்கவே, அந்தோ! கறுப்பு மை கடல் நீரிற் கலக்க அதனைச் சுற்றிலு மிருளடர்ந்து போம். அவ்விருளில், துரத்தும் மீன் வழிதடுமாறித் திகைத்து நிற்க, கணவாய் மீன் கண்ணுக் கெட்டாத தூரம் நீந்தி ஓடி மறைந்துபோம். என்ன வாச்சரியம்! கணவாய் போலவே பச்சோந்தியும் பன்முறையுந் தன்னிறத்தை மாற்றுகின்றது. பல்லி இனத்துள் வெகு அதிசயமான இப்பிராணி மிகுதியும் ஆப்பிரிக்காவிலுண்டு; தென்னிந்தியாவிலும் இரண்டொரு விதம் வாழ்கின்றது. அடிக்கடி தன் நிறத்தை மாற்றுவதால் அது கண்ணுக்கு எளிதாகப் புலப்படுவதில்லை. சிற்சில சமயங்களில் மிக மெலிந்து தானிருக்குங் கொம்பொடு கொம்பாய் மறைந்து போம். வேறு சில சமயத்துக் காற்றை நிறைய விழுத்துச் சுய உருவிலும் நான்கு மடங்கு பருத்துக் காட்டும். நாக்கு மிக நீண்டது; நுனியில் பருத்துள்ளது; ஏழு அல்லது எட்டு அங்குலத்துக்கப்பாலுள்ள பூச்சியை ஒரு விநாடி நேரத்துட் கவரக்கூடியது. இவற்றினும் வியக்கக்கூடியது பச்சோந்தியின் கண்ணே; ஒரு கண் நேரில் பார்க்க மற்றொரு கண் பின்னாற் பார்க்கும் அமைப்புடையது. இனிச் சில சீவப் பிராணிகள் தமது நிறத்தையே ஒரு உபாயமாகக் கொண்டு, அவ் வுபாயத்தாற் பிற உயிர்களை வசீகரித்து அவை கிட்ட நெருங்கவே அவற்றைத் தம்மிரையாக்கிக் கொள்கின்றன. ஆசியாக் கண்டத்துச் சில பாலைவனங்களில் மணல் நிறங்கொண்ட ஒரு பல்லி உண்டு. அதன் வாயினிரு மூலைகளிலும் இருக்கும் மிகச்சிவந்த இரண்டு இரேகைகள் தூரப் பார்வைக்கு அழகிய மலர்கள்போற் றோன்றும். பூவிலுள்ள தேனைக் குடிக்க அலைந்து திரியும் சில பூச்சிகள் அப்போலி மலர்களைக் கண்டு மயங்கி நெருங்கவே வஞ்சனையிற்றேர்ந்த மணற் பல்லி, பூச்சிகளைப் பிடித்து வெகு களிப்புடன் தின்னும். தூண்டிற்காரமீன் என்று பெயர் பெற்ற ஒரு மீனும் இதேமாதிரிச் சூது செய்கின்றது. இதன் வாயைச் சுற்றிலும் ஓயாது அசைந்தாடும் சிம்புகளுண்டு. அவற்றைச் சிறு புழுக்களென்று நம்பி வேறு சிறு மீன்கள் தின்பதற்காக அருகிற் போனவுடன் அவைதாமே இரையாகிவிடும். இத்தகைய நிறத்துக்கே வசீகரமென்று பெயரிட்டோம். சில உயிர்கள் தாங்கொண்ட நிறத்தால் பிறரைப் பயமுறுத்துகின்றன; ‘எனக் கருகில் வரேல், வரினபாயம்’ என்று தத்தமது நிறத்தால் எச்சரிகை செய்கின்றன. விடப் பாம்புகட்கெல்லாம் அரசனாகிய நல்லரவத்துக்கு, இந் நல்ல குணம்பற்றி யன்றே அப்பெயர் வந்தது. ஒருவனைக் கண்டதும் சீறிக் கொண்டு படத்தை விரித்துக் கொண்டு ஓடி வருதல் அது விடத்தாற் றீண்டி உயிரை மாய்ப்பதற்கே அங்ஙனஞ் செய்கின்றதென்று கொள்வது சரியன்று. ஏனெனில், அது நமக்குண்டாகக் கூடிய அபாயத்தைப் பற்றி அதனால் எச்சரிக்கை செய்கின்றதே யொழிய விடத்தாற் றீண்டிக் கொல்வதற்கன்று. நஞ்சோ அடிக்கடி அபரிமிதமாயுண்டாவதில்லை; சிறிது சிறிதாகவும் மிகச் சாவகாசத்துடனும் உண்டாகும். அவ்வளவு அருமையாக வுண்டாகும் விடத்தாற் கண்டவற்றை யெல்லாம் தீண்டி விடத்தை வீணாக்குவதில் நல்ல பாம்புக்குச் சிறிதும் பிரியம் இராது. ஆகவே, அதை எவ்வளவுக் கெவ்வளவு சுருக்கமாகச் செலவிடுகின்றதோ அவ்வளவுக் கவ்வளவு பாம்பிற்குப் பயனுண்டாம். இந்த நற்குணம் பற்றியே, நமக்குத் தகுந்த எச்சரிக்கை செய்து, நாம் அப்பால் விலகும்படி கட்டளை செய்து தன் விடத்தைக் காப்பாற்றிக் கொள்ளுகின்றது. இவ் வண்ணம் எச்சரிக்கையிட முக்கிய காரண மாயிருப்பது இதன் படமே. இதை விரித்தாட, இதன் மேலுள்ள கண்கள் போன்ற இரண்டு பயங்கரமான இரேகைகள் பார்ப்போரைப் பயமுறுத்தி அப்புறம் ஓடச் செய்கின்றன. இங்ஙனமே, தம்மிடத்திருக்குமொரு பெருங்கெட்ட குணத்தைப் பிறரறிந்து விலகிப்போம் பொருட்டே நஞ்சு நிறைந்த கடற் பாம்புகளும் கண்களைக் கவரும் பலவித வர்ணம் தீட்டப் பட்டுள்ளன. கடற்பாம்புகளி லொன்று கடித்தால் உடனே மரணமுண்டாகும். அமெரிக்காவின் வெப்பப் பிரதேசங்களில் பவளப் பாம்பு என்ற ஓரரவமுண்டு; அது கொடிய விடங் கொண்டது; மிகக் கறுத்துஞ் சிவந்துமுள்ள மேனியுடையது. இது இத்துணைப் பளபளப்பான நிறங்கொண்டது பிறரைப் பயமுறுத்துதற்கே. இத்துணைய வெறுப்புள்ள குணங்கள் பற்றியே சில வண்ணாத்திப் பூச்சி பட்டுப் பூச்சி இவற்றின் புழுக்கூடுகள் தங்க மயமான மஞ்சள் நிறமுடையன. இவற்றை யுண்டால் உடனே மரண முண்டாவது திண்ணமாதலால், பூச்சிகளைத் தின்று காலங் கழிக்கும் பறவைகள் இத்துர்க்குணம்பற்றி அப்புழுக் கூடுகளைத் தீண்டவும் மாட்டாவாம். இராக் காலங்களில் நமது வீடுகளில் ஓடித்திரியும் ஒரு சிறு வண்டை யாவரும் பார்த்திருத்தல் கூடும். அதன்மேல் இரட்டை வரிசையாகக் கறுப்புப் புள்ளிகள் தோன்றும். வெகு எளிதாய்ப் புலப்படும் இவ்வாறு நிறங் கொண்டதற்குக் காரணம் தன்னிடத் துள்ள ஒரு துர்க்குணத்தை வெளிப் படுத்தும் பொருட் டேயாம். அதாவது, தற்செயலாய் அதை யாரேனும் தொட்டால், அதன்பின் புறத்தினின்றும் ‘வெடீர்’ என்ற சத்தத்துடன் ஒரு விதத் திராவகம் வெளிவரும்; அது நமது கையைச் சுடும்; சிறு பூச்சிகளின் மேல் பட்டால் அவை உடன் உயிர் துறக்கும். இங்ஙனம் சத்தம் பண்ணுவது காரணமாக இதற்குப் பீரங்கி வண்டென்று பெயராம். இன்னும் சில உயிர்கள் மற்றவற்றைப் போல் வேடந்தரிப்பன. சிலந்திப் பூச்சிகளிற் சில எறும்புபோலும் தேனீக்கள் போலும் வேடம் பூண்டு அவற்றோடு வேறுபாடின்றிக் கலந்து அவற்றிற் சிலவற்றைத் தம் நூலாற் சுற்றித் தமக்கிரையாக்கிக் கொள்ளும். இவ்விதம் மித்திர பேதஞ் செய்யும் சிலந்திப் பூச்சியின் கபடத்தை எறும்பாவது தேனீயாவது சிறிதும் அறிந்திலது. இது போலவே ஒருவித ஈயும் தேனீயைப் போல் வேடந் தரித்துத் தன்னுடைய எதிரியிடம் அகப்படாது பிழைக்கின்றது. கொடுக்குக் கொண்டதும், மஞ்சளுங் கறுப்புங் கலந்த நிறமுள்ளதும், எச்சரிக்கை நிறந் தீட்டப்பட்டதுமான ஒரு குளவியுளது. அதைப் போல், ஓர் ஈயும் வேடம் பூண்டு, கழுதை தன்மேல் புலித்தோலைப் போர்த்துக் கொண்டு தனது எதிரிகளை ஏமாற்றினதுபோல் பிறர்க் கிரையாகாது காலங் கழிக்கின்றது. கடைசியாக உயிர்களின் நிறம், ஆண் பெண்ணைக் கவருவதிற் பயன்படுகின்றது. சிலந்திப் பூச்சிகள் தம் வீரச் செய்கைகளாலும், சிலம் பாட்டங்களினாலும் மணப் பெண்ணின் கையைப் பிடிக்கும். குயில் போன்ற சில பறவைகள் தமதினிய குரலாற் கானங்கள் பாடித் தம் மனையாட்டியைக் களிப்பிக்கும். இவ்வண்ணமே தமது அழகிய மேனியைக் கண்டு பெண் மயில்கள் ஆசைகொள்ளும் பொருட்டுத் தம் செவ்விய தோகையை விரித் தாடுமாண் மயில். எதனுடைய தோகை வெகு அழகாய் இருக்கின்றதோ அதனையே கைப்பற்றும் பெண்மயிலும் இது காரணம் பற்றியே, சாதாரண மாகப் பறவைகளின் சேவல்கள் பேட்டுப் பறவைகளை விட வனப்பு வாய்ந்த தோகை கொண்டிருக்கின்றன. பல உயிர்கட்கும் பலவாறு தாங்கொண்ட நிறமானது பயன்படுகின்ற தென்பது மேற்போந்த உதாரணங்களாற் றெள்ளிற் புலப்படும். வேறு உதாரணங்கள் அநேகமுள. 3. சாசனம் சாசனம் என்றால் ஓர் அரசனால் கொடுக்கப்பட்டதோர் அறிக்கை அல்லது உத்தரவு. இந்த உத்தரவுகள் இப்போது பெரும்பாலும் கோவில் களின் மதில்களிலும், கர்ப்பக்கிரங்களின் வெளிப் பக்கக் கற்களிலும் எழுதப்பட்டிருத்தலைக் காணலாம். இவைகளுக்குச் சிலா சாசனம் என்று பெயர். இதல்லாமல் செப்பேடுகளில் வரையப் பட்டிருக்கும் சாசனங்களு முண்டு. இவைகளுக்கு செப்பு அல்லது தாமிரசாசனம் என்று பெயர். இவ் விரண்டு சாசனங்களுமே முக்கியமானவை. பழைய நாணயங்களின்மீது இருக்கும் எழுத்துக்களையும் சிலர் சிலா சாசனமாக அங்கீகரிப்பார்கள். நமது நாட்டின் பழையகாலத்து அரசர்கள் பெரும்பாலும் கிரகண காலங்களிலும் மற்றும் சிறப்புக் காலங்களிலும் பிராமணர் வித்துவான்கள் முதலானவர்களுக்கும் கோயிலுக்கும் பூமி, நகை, நாணயம், சில சுதந்தரம் முதலியவற்றை வழங்கி வந்தார்கள். அவ்வாறு வழங்குங் காலங்களில் தானம் வாங்கினவர்களுக்கு ஓர் ஆதாரம் வேண்டும். அதற்காகச் சிலையில் எழுதப்பட்ட உத்தரவு, செப்புத் தகட்டில் எழுதப்பட்ட உத்தரவு ஆகிய இவைகளைக் கொடுத்து வந்தனர். இவைகளுக்குத்தான் சாசனங்கள் என்று பெயர். ஆலயங்களில் சிறப்பாகச் சிலா சாசனங்கள் இருப்பதே னென்றால், கோயிலுக்குத்தான் சிறப்பாகப் பழைய காலத்து அரசர்கள் தருமங்கள் செய்திருக்கிறார்கள். அல்லாமலும் கோயிலில் ஒருவித உத்தரவை வரைந்தால் மற்றக் காலங்களில் எவனாவது ஒரு சத்துருவாகிய அரசன் அந்த நாட்டைக் கைப்பற்றியபோதிலும் கோயிலிலிருக்கும் உத்தரவை அழிக்கமாட்டான். இது தாம் செய்யும் தருமம் எப்போதும் நிலைநிற்கு மென்று அவர்கள் கொண்ட கருத்தாகவும் இருக்கலாம். அவர்கள் கொண்ட கருத்துப்படியே நமது ஆலயங்கள் அரசர் கையில் அதிக அவத்தையுறாது இருந்ததோடு நமக்கு அக் காலத்திய சாசனங்களைப் படிக்கும் பாக்கியத்தையும் ஒருவாறு அளிக்கின்றன. பழைய சாசனங்களை நாம் படிப்பதனால் சரித்திரங்களுக்கு வேண்டிய பலவித ஆதாரங்கள் ஏற்படும். அக் காலத்தில் அரசாண்ட அரசர்கள், அவர்கள் காலம், அவர்கள் பரம்பரை, அவர்கள் எவ்விதமாக ஆண்டு வந்தார்கள், குடிகளைப் பரிபாலித்தனர், எவர்களிடமிருந்து எவ் விதமாய்க் கடமைகளையும் கப்பங்களையும் வாங்கி வந்தார்கள், அவர்கள் அணிந்த நகைகள் யாவை, உடுத்த உடைகள் யாவை, கல்விப் பயிற்சியில் எவ்விதத் தேர்ச்சியடைந்திருந்தார்கள், யாரவர்களுடைய பந்துக்கள், யாரவர்களுடைய சத்துருக்கள் முதலியனவும் பிறவுமாகிய சரித்திர அறிவை நாம் பெறலாம். இவ்வறிவு மனோராச்சியமான ஊகங்களல்ல; ஆதாரம் முற்றிலும் பொருந்திய முடிவுகள். ஆகையால் சாசனங்கள் நமது நாட்டுச் சரித்திரத்தை நிலைநிறுத்த முக்கிய ஆதாரங்களாகும். இவைகளில் நாள் நட்சத்திரம் முதலியவைகள் சரியாய்க் குறிக்கப்பட்டிருக்கின்றன. அவை களைக் கணக்கிட்டுப் பார்த்தால் வினாடிமுதல் சரியாயிருக்கும். தல புராணங்கள் பெரும்பாலும் அற்ப விடயங்களை வெகுவாய் வருணித்துக் கூறுகின்றமையின் அவை சரித்திர சம்பந்தமான விடயங் களுக்கு ஆதாரமாகும் தகுதிப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. சாசனங் களோ அப்படியல்ல அவை உள்ளதை உள்ளபடி உரைக்கும் உண்மையான ஆதாரங்களாதலால் சரித்திர ஆராய்ச்சியாளர் சாசனங்களை முதன்மையாக அங்கீகரிக்கின்றார்கள். நமது நாட்டிலேற்பட்ட கணக்குகளை நாம் பார்த்தால் இக்காலத்தில் பின்னங்கள் என்று பெயர் வழங்கும் கணக்கு இவ்வளவுதானா, நமது முன்னோர் கண்ட கணக்கின் ஒரு தூசுதானே என்று ஏற்படும். இதை ஒரு சாசனத்திலிருந்து எடுத்துக் காட்டுவோம். “இந் நாட்டுச் செம்புறை கண்டத்து சிறு செம்புறை அளந்தபடி நிலம் ஆறரையே மும்மாவரை காணி அரைக்காணி முந்திரிகையிலும் ஊரிருக்கையும் கொட்டகாரமும் மாதேவரிருந்திடலுங், கண்ணன்வாய் நின்றும் இவ்வூர் நிலத்தாறே குறங்கறுத்துப் புறவூர்க்கு நீர்பாயும் வாய்க் காலும் வெள்ளான் சுடுகாடும் கண்மான சேரியும் பறைச்சேரியும் பறைச் சுடுகாடும் ஆக இறையில் நீங்குநிலம் ஏழு மாகாணிக்கீழ் எழு மடுவரைக் காணி, முந்திரிகைக்கீழ் நான்குமா நீக்கி நிலம் ஆறேஅறு மாகாணி முந்திரிகைக்கீழ் முக்காலே, ஒருமாவினால் இறைகட்டின காணிக்கடன் ராசகேசரியோடொக்கும், ஆடவல்லான் என்னும் மரக்காலால் அளக்கக் கடவநெல்லு அறநூற் றொருபத் திருகலனே பதக்கு” இந்தச் சாசனத்தால் சிறு செம்புறை என்ற ஊரில் இவ்வளவு நிலம் மொத்தமென்றும் அதில் வரியில்லாத நிலம் இவ்வளவுபோக வரியுள்ள நிலம் இவ்வளவென்றும் அந்த நிலத்திற்கு வரியாக உள்ள தானியம் இவ்வளவென்றும் சரியாகத் தெரிகின்றது. சாசனங்கள் நமது நாட்டிற் பெரும்பாலும் தமிழ் கிரந்தம் தெலுங்கு மலையாளம் தேவநாகரம் முதலிய எழுத்துகளில் எழுதப்பட்டிருக்கின்றன. நாம் இப்பொழுது எப்படி எழுதுகிறோமோ அப்படியேதான் நமது முன்னோரும் எழுதியிருக்கிறார்கள். ஆனால் சாசனங்களின் பழைய எழுத்துக்கள் நாளடைவில் சிறிது சிறிது மாறுகின்றன என்று சாசன பரிசோதகர்கள் அறிவிக்கின்றார்கள். தமிழ் எழுத்துக்களின் பழைய வடிவம் வட்டவடிவினது. ஆகவே அவை வட்டெழுத்துக்கள் எனப் பெயர் பெற்றன. வட்டெழுத்துக்களே, வடிவில் மாற்றமடைந்து இன்றைய தமிழ் எழுத்துக் களின் வடிவை அடைந்திருக்கின்றன. 4. தமிழ்ச் சங்கம் வடக்கே திருவேங்கடமலையும் தெற்கே கன்னியாகுமரியும் கிழக்கும் மேற்கும் கடலுமாகிய எல்லைக்கு உட்பட்ட நிலம் தமிழ்நாடு எனப்படும். தமிழ் நாடு சேரசோழ பாண்டியர் என்னும் மூவேந்தர்களாற் புரக்கப்பட்டு வந்தது. ஒரு காலத்தில் சேரநாட்டில் தூய தமிழ் வழங்கிற் றாயினும், இன்று, அங்கு தமிழின் உறழ்ச்சி பிறழ்ச்சிகளால் தோன்றிய மலையாள மொழி வழங்குகின்றது. மூவேந்தரும் தமிழைத் தங்கண் எனப் போற்றி வளர்த்தனர்; தமிழ்ப் புலவரைச் சன்மானித்தனர்; தமிழ் எங்கும் பரிமளித்தது. மக்களிடையே தமிழ் கற்பதிற் குன்றாத ஆர்வங் கிளர்ந்தது. மூவேந்தர் நாடுகளிலும் தமிழ் செழித்து வளர்ந்த போதும் பாண்டியர் இராசதானியாகிய மதுரை நகரே தமிழ்க் கல்விக்கு நடு இடமாக விளங்கிற்று. பாண்டிய மன்னர் தமிழை வளர்ப்பதில் ஏனையரிலும் மிக்க கருத்துக் கொண்டிருந்தனர். பாண்டிய மன்னருளொருவன் தனது தலைநகரில் புலவர் அவை ஒன்று கூட்டி நிறுவினான். தமிழ் நாட்டில் ஆங்காங்கு வதிந்த செந்நாப் புலவர்கள் அவ்வவையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட னர். பாண்டியர் நிறுவிய கல்விக் கழகம் அரசாங்கத்தோடு இணைக்கப்பட் டிருந்தது. ஆகவே, அக்கழகம் பாண்டியர் ஆட்சியில் நீண்டகாலம் நடை பெறுவதாயிற்று. அது இற்றைஞான்று அரசாட்சியினர் நிறுவியுள்ள கல்விப் பகுதி போன்றது ஒன்றேயாகும். நாட்டுக் குழப்பம், போர், கடல் கோள் போன்ற காரணங்களால் அக் கழகம் இடையிடையே ஒழிவுற்றது. இச்சங்கம் இடையே இருமுறை ஒழிவுற்றதாக நூல்கள் கூறுகின்றன. ஒவ்வொரு ஒழிவுக்கு முன்னும் பின்னும் தொடங்கி நடைபெற்ற தமிழ்க் கழகங்கள் முறையே முதல் இடை கடைச் சங்கங்கள் என்னும் பெயர் பெற்றன. தமிழ்க் கழகம் இடைஇடையே நடவா தொழிந்தமைக்குக் காரணம் கடல்கோள் என்று சொல்லப்படுகின்றது, பழைய உரைகள் கூறுகின்றபடி, கன்னியாகுமரியின் தொடர்பாகத் தென் கிழக்கே பெரிய நிலப்பரப்பிருந்தது. அங்கு தமிழ் பேசப்பட்டது. காலத்துக்குக் காலம் தோன்றிய கடற் பெருக்கு களால் அந்நிலப் பரப்பு நீருள் மறைந்து போயிற்று. இறையனார் அகப்பொருள் அல்லது இறையனார் களவியல் என்னும் ஒரு பழந் தமிழ் நூலுள்ளது. இதற்கு உரை நக்கீரனாராற் செய்யப் பட்டுள்ளது. அவ்வுரை, ஏட்டில் எழுதப்படாது நீண்டகாலம் செவி வழக்கில் வந்திருக்கின்றது. அது, கி.பி. ஆறாம் அல்லது ஏழாம் நூற்றாண்டில் நீலகண்டனார் என்னும் ஒரு ஆசிரியரால் ஏட்டில் எழுதி வைக்கப்பட்டது. அந் நூலில் முச்சங்க வரலாறு முதன் முதலில் கூறப்பட்டிருக்கின்றது. அவ் வுரையின்படி, அகத்தியர் என்னும் தமிழ் முனிவர் ஒருவர் தமிழ்ச் சங்கத்துத் தலைவராக வீற்றிருந்தார். அகத்தியர் என்பார் ஆரிய முனிவரோ தமிழ் முனிவரோ என்று வாதங்கள் நிகழ்வதுண்டு. தமிழர்களது தொல்பதி இந்திய நாடு முழுமையும் என்றும் இன்றும் வங்காளம் முதலிய வடநாடுகளில் வாழ்வோர் திராவிட மக்களே என்றும் சரித்திரங்களிற் படிக்கின்றோம். ஆகவே, அகத்தியர் தமிழ் முனிவரல்லர் என்று கூறுவதற்கேற்ற ஆதார மொன்றும் பெற்றிலேம். தமிழ்ச் சங்கம் பதினாயிரம் வருடங்கள் வரையில் நடைபெற்ற தெனப் பழைய உரைகள் கூறுகின்றன. இக் காலக்கணக்கை இற்றைநாள் ஆராய்ச்சி அறிஞர் ஐயுறுவர். உலகின் பற்பல பாகங்களிலிருந்து பழைய சரித்திரங்களை எழுதிய ஆசிரியர்கள் உண்மை வரலாறுகளை வருணித்தும் மிகைப்படுத்தியும் சாற்றியிருத்தலைக் காணலாம். அவ்வகையினதே இவ்வுரை எனக் கொள்வதினால் நேரும் இழுக்கு யாதும் இன்று. தமிழ்க் கழகம் கூடுவதற்கெனப் பாண்டியரது தலைநகராகிய மதுரையில் தனிமண்டப மொன்று அமைக்கப்பட்டிருந்தது. அழகிய அம் மண்டபத்தே புலவர்கள் வீற்றிருப்பதற்குக் கன்மாப் பலகையாலாய ஆச னங்கள் இடப்பட்டிருந்தன. கடைச் சங்கத்தில் ஒரே முறையில் நாற்பத் தொன்பது புலவர்கள் இருந்தார்கள் என அறியப்படுகின்றமையின் ஒவ் வொரு கழகத்திலும் உறுப்பினரின் எண் வரையறுக்கப் பட்டிருந்தது என அறிகின்றோம். புதிதாக நூல் செய்வோரும் பாடல் புனைவோரும் மதுரைச் சங்கத்தே சென்று அவற்றைச் சங்கப் புலவர்கள் முன் படித்துக் காட்டி அவர்களின் அங்கீகாரம் பெறுவர். இவ்வாறு நூல்களையும் பாடல்களையும் அரங்கேற்றுமிடத்துச் சங்கப் புலவர்கள் இடை யிடையே பல கடாக்களை எழுப்புவது இயல்பு. அரங்கேற்றப்பட்ட பாடல்களும் நூல்களும் சங்கத்தில் படி எடுத்து வைக்கப்பட்டன. இவ்வாறு சேகரித்து வைக்கப்பட்டிருந்த பாடல்களே பிற்காலத்தில் 1எட்டுத் தொகை பத்துப்பாட்டு என்னும் நூல்களாகத் தொகுக்கப்பட்டன. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் சங்க நூல்கள் எனப்படுகின்றனவாயினும் அவற்றுட் பெரும்பாலன பிற்காலத்திற் செய்யப் பட்டன என்று விளங்குகின்றது. இறையனார் அகப்பொருள் உரை, யாப்பருங்கலவிருத்தி, சிலப்பதி கார உரை முதலியவற்றில் சுட்டப்பட்டுள்ள அநேக இலக்கண இலக்கிய நூல்கள் இன்று கிடைக்கவில்லை. தொல்காப்பியம் இடைச் சங்க காலத்திற் செய்யப்பட்டதெனச் சொல்லப்படுகின்றது. முற்காலத்தில் நூல்கள் பனை ஓலைகளில் எழுதி வைக்கப்பட்டன. ஒரு நூலில் ஒன்று அல்லது சில படிகளே எழுதப்பட்டன. அவ்வேடுகளைப் பிற் காலங்களிற் பயில்வோர் படி எடுத்தெழுதிப் போற்றிப் பாதுகாவாத விடத்து அவை காலத்தில் இறந்து போதல் புதுமையன்று. இவ்வாறு எண்ணிறந்த தமிழ் நூல்கள் இறந்துபட்டன. சாதிச் சண்டை சமயச் சண்டை கடல்கோள் போன்ற நிகழ்ச்சிகள், நூல்கள் அழிந்து போவதற்குரிய காரணங்களாகும். தமிழ்ச் சங்கம், கி.பி. முதலாம் நூற்றாண்டின் இறுதிக் காலம் வரையில் நின்றுபோயிற்று. சாதிச் சண்டைகளும் சமயச் சண்டைகளும் அதிகரித்ததி னாற்போலும் பிற்காலத்துப் பாண்டியர் தமிழ்ச் சங்கத்தைத் தொடர்ந்து நடத்தும் கருத்து இலர் ஆயினர். 5. பழம்பொருள் ஆராய்ச்சி - I நிலத்தின் கீழும் மேலும் உள்ள பழம் பொருள்களைக் கண்டு பிடித்து அவற்றின் காலங்களை அறிந்து கூறுவது பழம்பொருள் ஆராய்ச்சியின் இலக்காகும். பூமியிற் காலத்துக்குக் காலம் பல வேறு வகையான உயிர்கள் வாழ்ந்திருக்கின்றன. பூமியின் கீழ் உயிர்களின் எலும்புகளும் பற்களும் கண்டெடுக்கப்பட்டு அவற்றின் காலங்கள் ஆராயப்பட்டுள்ளன. மனிதன் சரித்திர காலத்திற்கு அப்பாற்பட்டவன். ஆகவே, அவன் பயன்படுத்திய பொருள்களைக் கொண்டே அவனது வரலாற்றை அறிய வேண்டியிருக்கின்றது. பழம்பொருள் ஆராய்ச்சி, 1பூகர்ப்ப நூலுக்கும் சரித்திரத்துக்கும் இடைப்பட்டது. இக் கலை பழம் பொருள்களைக் கொண்டு மனிதனின் வரலாற்றைக் கூறுவதாக இருக்கின்றது. பழங்காலக் கல்முத்திரைகள், மட்பாண்டங்கள், ஆயுதங்கள், ஓவிய எழுத்துக்கள், எழுத்துச் சாசனங்கள் முதலியன இவ்வாராய்ச்சிக்கு அதிக விளக்கமளிக்கின்றன. வருங்கால நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளும் மனிதனது இயல்பான விருப்பம், சோதிடம், குறி சொல்லுதல், சகுனம் பார்த்தல் போன்ற அறிவை உண்டு பண்ணிற்று. இதுபோலவே மனிதன் தனது பழங்கால இரகசியங் களை அறிய விரும்புவது இயல்பு. திருந்திய ஒவ்வொரு சாதியினரின் இலக் கியங்களிலும் பழஞ் சரித்திர ஆராய்ச்சிக்குப் பயன்படும் செய்திகள் காணப் படுகின்றன. பழம் பொருள் ஆராய்ச்சி, நில நூல் ஆராய்ச்சியுடன் சேர்ந்து மனிதனின் பழமையை விளக்குகின்றது. இவ் வாராய்ச்சியினால் மனிதனது ஆரம்ப காலம் முதல் எழுத்துச் சாசனங்கள் கிடைக்கும் காலம் வரையிலும் சரித்திரம் அறியப்படுகின்றது. எழுதப்பட்ட சரித்திரங்களுக்கு முற்பட்ட ஆதாரங்களைக் கொண்டு மனித சமூகத்தின் வரலாற்றைக் கூறுதல் ஒரு கலையாக வளர்ச்சியடைந்து வருகின்றது. பூகர்ப்ப நூலார் எழுத்துச் சாசனங்களிற் கருத்துச் செலுத்துவதில்லை; பூமியின் ஒன்றன்பின் ஒன்றாக உள்ள சரித்திரங்களை ஆராய்ந்து, மனித உற்பத்திக்கு முன் நிலவுலகில் வாழ்ந்த பலவகை உயிர்களைப் பற்றிக் கூறு கின்றனர். நில நூல் ஆராய்ச்சி, மனிதன் தோன்றிய காலத்தில் முடிவடைந்து விட, பழம் பொருள் ஆராய்ச்சியைக் கொண்டு அவனது சரித்திரத்தை அறிய வேண்டி யிருக்கின்றது. பழம்பொருள் ஆராய்ச்சியாளர் கற்காலம், வெண்கல காலம், இரும்புக் காலம் எனக் காலத்தை மூன்றாகப் பிரிப்பர். மனிதன் அவ்வக் காலங்களில் தனது பயன் பாட்டுக்குரிய ஆயுதங்களை அவ்வப் பொருள் களால் உண்டாக்கினமையின் அக் காலங்களுக்கு இப்பெயர்கள் இடப்பட் டன. கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் தங்கள் பயன்பாட்டுக்கு வேண்டிய பொருள்களைக் கல், கொம்பு, எலும்பு என்பவற்றாற் செய்தனர். வெண்கல கால மக்கள் தொடக்கத்தில் செம்பினால் ஆயுதங்களைச் செய்தனர். பின் செம்புடன் தகரத்தைக் கலந்து வெண்கலத்தை உண்டாக்க அறிந்தனர். அதன் மேல் ஆயுதங்கள் வெண்கலத்தாற் செய்யப்பட்டன. இரும்புக் காலம் மனிதன் ஆயுதஞ் செய்யும் வித்தையில் முதிர்ச்சி யடைந்த பருவத்தை அறிவிக்கின்றது. இட வாய்ப்பு மனிதனின் கலை வளர்ச்சிக்கு உதவியளிக்கின்றது. ஆபிரிக்காவின் சில பாகங்களில் மிக முற்பட்ட காலத்திலேயே மக்கள் இரும்பில் வேலை செய்தார்கள் என்று அறியப்படுகின்றது. கல், வெண்கலம், இரும்பு என்னுங்காலங்கள் எழுத்துப் பிரமாணங்கள் காணப்படாத காலத்தைக் குறிப்பன. உலகின் எல்லாப் பாகங்களிலும் ஒரே காலத்தில் இம் மூன்று காலங்களும் நிலவி யிருக்கவில்லை. காட்டுமிராண்டிச் சாதியார் சிலர் இன்றும் கற்கால வாழ்க்கையில் இருக்கின்றனர். ஆ°திரேலி யரையும் நியூசீலந்திலுள்ள மயோரியரையும், பொலிநீசிய தீவிலுள்ள கருபியரையும் (Curibs) ஐரோப்பியர் முதற் கண்டபோது, அம்மக்கள் உலோகத்தைப் பற்றி அறியாதிருந்தார்கள். அவர்கள் மரம், கொம்பு, கடல் உயிர்களின் ஓடு, விலங்குகளின் எலும்பு முதலியவற்றால் ஆயுதங்கள் செய்து பயன்படுத்தினர். பதினாறாம் நூற்றாண்டில் இ°பானியர் அமெரிக்காவிற்குச் சென்ற போது மெக்சிக்கரும் பெரூவியரும் செம்பிலும் பொன்னிலும் வேலை செய்ய அறிந்திருந்தனர். ஆனால் அவர்கள் இரும்பைப் பற்றி அறிந்திருக்கவில்லை. அவர்கள் எரிமலையின் ஓரங்களிற் கிடைக்கும் தீத்தட்டிக் கற்களால் ஆயுதங்களைச் செய்தனர். பூகர்ப்ப நூலார் பூமியின் வயசை ஐந்து உகங்களாக வகுத்திருக் கின்றனர். ஐந்தாவது உகத்திலே இற்றைக்குப் பத்துலட்சம் ஆண்டுகளுக்கு முன் மக்கள் தோன்றினர் என்று இக் கால விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஐந்தாம் உகத்தில் வாழ்ந்த விலங்குகளின் எலும்புகளோடு மனித எலும்பு களும், மனிதன் பயன்படுத்திய பொருள்களும் காணப்படுகின்றன. அக் காலத்து வாழ்ந்த விலங்குகள் நீண்ட மயிர் மூடிய யானை, சடை வளர்ந்த காண்டாமிருகம் முதலியன. இம் மண்ணகத்து ஏற்பட்ட வெப்ப தட்ப மாறுதல் காரணமாக அவ்விலங்குகள் அடி அழிந்தனவாதல் கூடும். பழைய கற்காலம்: பழைய கற்காலமக்கள் குகைகளில் வாழ்ந்தார்கள். அக் காலத்தில் சடையானை, சுருண்ட உரோமம் வளர்ந்த காண்டா மிருகம், நீண்ட இரண்டு பற்களுடைய புலி முதலிய விலங்குகள் வாழ்ந்தன. இங்கிலாந்து, பிரான்° பெல்சியம் முதலிய நாடுகளில் அக் கால மக்கள் வாழ்ந்த மலைக் குகைகள் கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் காண்டாமிருகம், யானை, குதிரை, கரடி, கழுதைப் புலி, துருவமான் ஏழடி உயரமுள்ள ‘ஐரி° எல்க்’ என்னும் மான் முதலிய விலங்குகளின் என்பு கொம்பு முதலியனவும் மனிதன் தீத்தட்டிக் கற்களாற் செய்த ஆயுதங்களும் காணப்பட்டன. குகைகளில் மக்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு ஆயுதங்கள் ஆதாரமளிக்கின்றன. தீத்தட்டிக் கற்களைச் செதுக்கிய உடைவுகளும், கல் ஈட்டி முனைகளும், கல் எலும்பு ஊசிகளும் காணப்பட்டமையின் அவை அவ்விடத்தே வைத்துச் செய்யப்பட்டன வென்று அனுமானித்தல் கூடும். ஆறிடு மேடுகளிலுள்ள பருக்கைக் கற்களினிடையே, ஈட்டித் தலை உளி முதலிய குகைகளிற் காணப்படாத பெரிய பழங்கற்கால ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன. அக் கால மனிதர் தீத்தட்டிக் கல், எலும்பு, விலங்குகளின் கொம்பு என்பவற்றால் ஆயுதங்களைச் செய்தது மன்றி அழகிய ஓவிய வேலைகளையும் செய்திருக்கின்றனர். அவர்கள் தீட்டிய ஓவியங்களில் தனி விலங்குகளும், விலங்குக் கூட்டமும், சடையானை, துருவமான், குதிரை, மாடு, மான், பலவகைப் பூக்கள், ஆபரண வகைகள், பெரும்படியாக வரைந்த மனித உருவங்கள் முதலியனவுங் காணப்படுகின்றன. சில ஓவியங்கள் திறமையாகத் தீட்டப்பட்டிருக்கின்றன. பலமுறை முயன்று உயிர் விலங்குகளைப் போலவே சடையானை வரையப்பட்டிருக்கின்றன. யானைத் தந்தமும் விலங்கின் கொம்பும், எலும்பும் ஓவியம் வரைதற்குப் பயன் பட்டிருக்கின்றன. இவ் வோவியங்களைக் கொண்டு பழைய கற்காலக் குகைவாசிகள், பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சாமானிய பிரான்சுக்காரனின் விவேகத்துக்குக் குறைந்தவரல்லர் என்று அறியலாம். புதிய கற்காலம்: இது அழுத்தமான கல்லாயுதஞ் செய்யப்பட்ட காலமாகும். சுவிற்சர்லாந்திலுள்ள வாவிகளில் வீடு அமைத்து வாழ்ந்த மக்களின் இல்லங்களிலும் ஐ°லாந்து, இ°கொத்திலாந்து தென்மார்க் முதலிய நாடுகளிலும் இவ்வகை ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவை மிகப் பழைய காலத்திற் செய்யப் பட்டிருக்கின்றன. ஆயினும், அவை பிற்காலப் பொருள்களின் வடிவுடையனவாக இருக்கின்றன. சரித்திர காலம் ஆரம்பிப்பதன் முன் ஐரோப்பா நாட்டு மக்கள் முரடான ஈமத் தாழிகளையும், உடம்பை அலங்கரிக்கும் ஆபரண வகைகளையும் செய்ய அறிந்திருந்தனர். நீண்ட இரண்டு கற்காலங்களிலும் செய்யப்பட்ட பல ஆயுதங்கள் சேகரிக் கப்பட்டு நூதன பொருட்காட்சிச் சாலைகளில் வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றின் வகைகள் நூற்றுக்கணக்காக இருக்கின்றன. அவை கோடரி, உளி, சுரண்டி, தட்டு, குடையும் கருவி, கைக்கோடரி, ஈட்டித்தலை, அம்புத்தலை, சிறுசம்மட்டி, சம்மட்டி முதலியனவும், பானை சட்டிகளும் ஆபரண வகைகளுமாம். இவற்றை உருவாக்கும் அறிவை அம் மக்கள் எவ்வாறு பெற்றார்கள் என்பது அறிந்துகொள்ள முடியவில்லை. சில பொருள்கள் மிகப் புத்தி நுட்பத்தோடு செய்யப்பட்டிருக்கின்றன; சில, பழைய கற்காலப் பொருள்கள் போல முரடாகச் செய்யப் பட்டிருக்கின்றன. முன்னே முரடான பொருள்களையும் பின்னே நன்றாகச் செய்யப்பட்ட பொருள்களையும் முறையாக வைத்து நோக்கி அவை செய்யப்பட்ட கால ஒழுங்கை அறிந்து கொள்ளலாம். மக்கள் காட்டு மிராண்டிகளாய் வாழ்ந்த காலத்தில் கட்டிடம் அமைப் பதற்கு வேண்டிய திறமையைப் பெற்றிருக்கவில்லை. மக்கள் எல்லாப் பாகங்களிலும் பழைய நிகழ்ச்சிகளை ஞாபகப்படுத்துவதற்குக் கற்களை நாட்டுவது வழக்கமாயிருந்தது. இவ்வகை நிகழ்ச்சி விவிலிய நூலின் பழைய ஏற்பாட்டிற் சொல்லப்படுகின்றது. இந்திய நாட்டிலும் இவ்வழக்கு இருந்தது. வெற்றியை உணர்த்தவும் எல்லையைக் குறிக்கவும், சட்டங்கள் சிலவற்றைக் குடிகளுக்கு விளம்பரஞ் செய்யவும் கற்கள் நிறுத்தப்பட்டன. இவ்வகைக் கல் ஒன்று இன்றும் பினீசிய நாட்டில் இருக்கின்றது. கற்களை நடும் வழக்கம், கற்களை நாட்டிற் செய்யும் கட்டிடங்களாகமாறிற்று. இரண்டு உயர்ந்த கற்களை நாட்டி மேலே ஒரு பெருங்கல்லை வைத்துச் செய்யப் பட்ட பழைய கட்டிடங்கள் இங்கிலாந்திற் காணப் படுகின்றன. வெட்டாத கற்களின் வடிவைப் பின்பற்றியே சதுரத் தூண்கள் நடப் பட்டன. பிரேதங்களைப் புதைத்து மேலே கற்கள் குவிக்கும் முறையைப் பின்பற்றி எகிப்திய பிரமிட்டுச் சமாதிகள் கட்டப்பட்டிருக் கின்றன. கல்லினால் திறமையாகச் செய்யப்பட்ட கோடரி, சம்மட்டி, வட்டில், பாத்திர வகைகள் முதலியன, கற்காலத்தில் முடிவாக அடையக்கூடிய திருத்தத்தைக் காட்டுகின்றன. குகைகளிலும் உலோகம் அரிக்கும் குழிகளி லும், பிரேதக் கிடங்குகளிலும் இருந்து எடுக்கப்பட்ட மனித சின்னங்களுக் குரிய மக்கள், சரித்திர காலத்தில் ஐரோப்பாவிற் காணப்பட்ட மக்களில் வேறுபட்டவர்கள் என்று பழம்பொருள் ஆராய்ச்சிக்காரர் கூறுகின்றனர். சரித்திரகால ஆரம்பத்தில் ஐரோப்பிய மக்கள் மிலேச்சத்தன்மையில் இருந்தனர். உலோகம் கண்டு பிடிக்கப்பட்டது முதல் அவர்கள் மிலேச்சத் தன்மையில் இருந்தது வரையிலும் நன்றாக ஆராய்ந்து கூற முடிகின்றது. 6. பழம்பொருள் ஆராய்ச்சி - II உலோக காலம் ஆதியிற் கண்டு பிடிக்கப்பட்ட உலோகம் பொன்னாக இருக்கலாம். பின்பு செம்பும் தகரமும் கண்டு பிடிக்கப்பட்டன. செம்பைத் தகரத்தைக் கலந்து வெண்கலமாக்கும் முறை பின்பு அறியப்பட்டது. வெண்கலத்திலும் செம்பிலும் வேலைசெய்ய ஆரம்பமானபோது பொற்கொல்லரின் திறமை அதிகரித்தது. அக் காலத்திற் செய்யப்பட்ட மாலைகளும் ஆபரணங்களும் அரச முத்திரைகளும் பலவாகவும் அழகுடையனவாகவும் காணப்படுகின் றன; மட்பாண்டங்கள் அழகிய வேலைப்பாடுடையனவாக இருக்கின்றன. செம்பாயுதங்கள் அமெரிக்க செவ்விந்தியரால் நீண்டகாலம் பயன் படுத்தப்பட்டன. பிரித்தானிய தீவுகள் தென்மார்க் முதலிய நாடுகளிற் கண் டெடுக்கப்பட்ட வெண்கல ஆயுதங்கள் எகிப்திய பினீசிய நாகரிகம் அந் நாடுகளில் பரவியிருந்தமையை உணர்த்துகின்றன. உரோமர் இங்கிலாந்தை வெற்றிகொள்வதன்முன் பினீசியரும் காதேசியரும் இங்கிலாந்தோடு வாணிகஞ் செய்தனர். மெக்சிக்கரும் பெரூவியரும் செம்பையும் தகரத்தை யும் கலந்து வெண்கலஞ் செய்யப் பழகியிருந்தனர். அவ்வாயுதங்களைக் கொண்டே அவர்கள் கல்லில் உருவங்களைச் செதுக்கினர்; ஆலயங்களை யும் கல்லறைகளையுங் கட்டினர். எகிப்திலும் வெண்கல ஆயுதங்களே பிரமிட்டுச் சமாதிகள் கட்டும் வேலையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மெக்சிக்கரதும் பெரூவியரதும் மாலைகளும் கைவளைகளும் பிற ஆபரணங்களும், அவர்கள் உலோகத்தில் வேலை செய்வதிற் பெற்றிருந்த திறமையை அறிவிக்கின்றன. பொன்னினாலும் வெள்ளியினாலும் செய்யப் பட்ட பாத்திரங்கள், வெள்ளியினாற் செய்து அழுத்தஞ் செய்யப்பட்ட முகம்பார்க்கும் கண்ணாடிகள், தராசுகள், வெள்ளியினாலும் வெண்கலத்தி னாலும் செய்யப்பட்ட மணிகள் முதலியன அவர்கள் வெண்கல காலத்தில் அடைந்திருந்த திருத்தத்தைக் காட்டுகின்றன. இரும்புக் காலம்: இறுதியில் ஏராளமாகக் கிடைக்கும் இரும்பு கண்டு பிடிக்கப்பட்டது. இது உலோகங்களில் வயிரமுடையதாதலின் ஆயுதங்கள் இதனாற் செய்யப்பட்டன. வெண்கலம், ஆபரணங்கள் ஆயுதங்களின் பிடிகள் செய்வதற்கும் வேறு வேண்டியன செய்வதற்கும் உபயோகப்படுவ தாயிற்று. வெண்கல காலத்தில், கற்களும் கவணில் வைத்தெறியும் கற்களும் பயன்படுத்தப்பட்டன. இரும்பைப் போல வேண்டியவற்றையெல்லாம் செய்யப் போதுமான வெண்கலம் கிடைக்குமானால் இரும்புக் காலம் அதிக மாற்றம் உண்டு பண்ணியிருக்கமாட்டாது. ஆனால் போதிய அளவு வெண் கலம் கிடைக்கவில்லை. வெண்கலம் அரிதிற்கிடைத்ததோடு விலை ஏறப் பெற்றதாகவும் இருந்தது; ஆகவே வெண்கல காலம் முழுவதும் கற்காலக் கலையே வளர்ச்சியுற்றது. இரும்பு அதிகம் கிடைத்த போதும் அதனை உலையில் வைத்து உருக்கிக் கிட்டத்தைப் போக்கிச் சுத்தஞ் செய்வதற்குரிய பழக்கம் பெற நீண்டகாலம் பிடித்தது. இரும்புப் பொருள்கள் கறையினால் விரைவிற் பழுதடையும் இயல்புடையன. ஆகவே வேலைப்பாடுள்ள பழைய இரும்பாயுதங்கள் கிடைக்கவில்லை. இரும்புக் காலத்திற் செய்யப்பட்ட மட்பாண்டங்கள், விலை உயர்ந்த உலோகங்களாற் செய்யப்பட்ட ஆபரணங்கள், வெண்கலப் பொருள்கள் முதலியன அக்காலத்துக்கேற்ப நாகரிகத்தைக் காட்டுகின்றன. மக்கள் படிப்படியாகக் கலைகளில் முன்னேறி வந்து இந்தியா எகிப்து பினீசியா சுமேரியா முதலிய சரித்திர சம்பந்தமான இடங்களோடு தொடர்பு பெற்றுச் சரித்திர காலத்தை அடைந்தார்கள். இதன்மேல் சிலாசாசனம், பழைய இலக் கியம், அரசர் சரித்திரம் என்பவற்றால் வரலாறு முடிவடைகின்றது. கல்லிலும் உலோகங்களிலும் எழுதப்பட்ட சாசனங்கள் சரித்திர ஆராய்ச்சிக்குப் பயன்படுகின்றன. சமூக முன்னேற்றம்: காட்டு வாழ்க்கையிலுள்ள மனிதன் ஒரு தனிமையான பிராணி. போர் அல்லது வேட்டையாடுதல் முதலிய காரணங் களுக்காக அன்றி அவன் ஒன்று சேர்ந்து இருக்க முடியாது. அக்காரணங் களால் அவன் அனுபவம் பெறுகின்றான். இவ்வகையான ஆரம்ப கூட்டுறவு காலத்தில் அவனுக்கு ஆயுதங்கள் அவசியம் வேண்டுவன. ஆயுதங்களை அவன் தானாகவே செய்தான். வேலையை இலகுவாக்கக் கூடிய பல வடிவினை உடைய அழகிய ஆயுதங்களை உலோகத்தினால் மக்கள் செய்யப் பழகியபோது சமூகத்தில் முன்னேற்றம் உண்டாயிற்று. புதிய பொருள்கள் சில இடங்களில் மாத்திரம் ஓரளவுக்குக் கிடைக்கு மாயின் உடனே வாணிகம் ஆரம்பிக்கின்றது. வாணிகத்தினாற் றொழிற்பிரிவு ஏற்படுவதோடு கூட்டுறவும் ஏற்படுகின்றது. செம்பு அல்லது வெண்கலம் சிறிதளவு கிடைத்தபோது சமூக முன்னேற்றம் கட்டுப்பட்டிருந்தது. இரும்பில் வேலை செய்யத் தொடங்குவதன் முன் உலோகத்தில் வேலைசெய்யும் அனுபவம் அதிகம் வேண்டும். இரும்பில் வேலை செய்வ தற்கு மக்களின் ஒத்துழைப்பு அதிகம் இருந்திருக்கவேண்டும். அதிகம் கிடைக்கக்கூடியதும் அதிகப் பிரயாசையுடன் வேலை செய்யவேண்டியது மாகிய இரும்பில் வேலை செய்வதால் முன்னேற்றம் ஏற்பட்டது. முன்னேற்றம், சாதிகள் தொழில் செய்யும் திறமையும் அளவாக இருந்தது. உலகிலுள்ள எல்லா மக்களும் ஒரே வகையான நிலைமையி லிருந்தே படிப்படியாக முன்னேறி வந்திருக்கின்றனர். ஆரம்ப காலத்தில் மனிதர் காட்டு மிராண்டிகளாக உணவுக்கு அலைந்து திரிந்தனர். அவர் ஊன் உண்ணும் பெரிய விலங்குகளுடன் போராட வேண்டியிருந்தது. அக்கால மக்கள் வாழ்ந்த குகைகளில் தாவர முண்ணும் பெரிய விலங்குகளின் எலும்புகளும் கொம்புகளும் காணப்பட்டன. வட அமெரிக்கா நியூசீலந்து நாடுகளிற் காணப்படும் எ°கிமோவர் எலும்பினாலும் தந்தத்தினாலும் கல்லினாலும் செய்த புதிய தற்கால ஆயுதங்களையே பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையும் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். இதற்குப்பின் ஆடுமாடுகளைப் பாதுகாத்தலாகிய நிலைமை ஏற்படு கின்றது. இதனால் மனிதன், சொத்து உடையவனாக ஆரம்பித்திருக்கின் றான். இவ் வகையான வாழ்க்கை மத்திய வலய வெப்பநிலையுள்ள புல் வெளிகளில் ஆரம்பித்து. பருவகால மாற்றங்களால் இடையர் இடம்விட்டு இடம் அலைந்தனர். அதனால் ஒரு இடத்தில் தங்கியிருந்து கலையை வளர்க்க அவர்களுக்கு முடியாமற் போயிற்று. ஆகவே கட்டிடம் அமைக்கும் கலை சிறப்பாக விருத்தியடையவில்லை. நாடோடி வாழ்க்கையில் அதிகம் ஓய்வு நேரம் உண்டு. அதனால் அனுபவமும் விவேக உணர்ச்சியும் விருத்தி யடைந்தன. நாடோடி மக்களே வான சாத்திரத்தைக் கண்டு பிடித்தனர். மூன்றாவதாக உழவு தொழில் விருத்தியடைந்தது. அப்போது உழவரும் நிலத்துக்கதிபதிகளும் ஏற்பட்டனர். ஓரிடத்தில் தங்கி வாழ்ந்தமை யின் அவர்கள் வீடுகள் அமைத்தனர். அவர்கள் நிலமுடையவர்களாயிருந் தனர். முன்னேற்றம் படிப்படியாக வளர்ச்சியடைந்தது. இந்திய உழவர் கப்பல் கட்டுதல், துன்னுதல், நெசவு செய்தல், பானை சட்டி வனைதல், கட்டிடங்கள் அமைத்தல் முதலிய தொழில்களில் திறமை எய்தினர்; ஆடு, மாடு, எருமை, நாய் என்பவற்றையும் வளர்த்தனர். அவர் களின் செல்வம் மாடாக விருந்தது. அவர்களின் நாகரிகம் கற்காலத்தி லிருந்து இரும்புக்காலம் வரையில் தொடர்பாக வளர்ச்சியடைந்திருக் கின்றது. இதற்கு ஆதாரம் அவர்கள் மொழியிற் காணப்படுகின்றது. நைல், யூபிராத°, தைகிர°, சிந்து, கங்கா நதிக்கரைகளில் உழவு தொழில் விருத்தியடைந்தது. மத்தியதரைக் கடலோரங்களிற் பிற்காலத்துப் பெரிய இராச்சியங்கள் ஏற்பட்டன. சரித்திர சம்பந்தமான ஐரோப்பிய நாகரிகம் பிற்காலத்தது. மனிதர் ஆதியில் எழுத்துக்குப் பதில் ஓவியங்களை வழங்கினர். பின் உச்சரிப்பு முறையான எழுத்துகள் எழுதப்பட்டன. இவ்வகை எழுத்துகள் எகிப்திய பிரமிட் சமாதிகளில் எழுதப்பட்டிருக்கின்றன ஓவியங்கள் சொற்களை உணர்த்தின. சிந்துவெளி மக்கள் ஒவ்வொரு சொல்லையும் ஒவ்வொரு குறியீட்டால் உணர்த்தினர் சீனருடைய எழுத்தும் இம் முறை யினதே. ஓவிய எழுத்துகளையும் பின்தோன்றிய உச்சரிப்பு முறையான எழுத்துகளையுந் தழுவி பினீசிய கிரேக்க எழுத்துக்கள் ஆக்கப்பட்டன. கட்டிடம், கட்டிட அமைப்பு, மட்பாத்திரங்கள், என்பன சரித்திர சம்பந்தமுடையன. மக்கள், காலத்துக்குக் காலம் அணிந்து வேறுபட்ட உடைகள், அவர்களின் பழக்க வழக்கங்கள் ஆகியனவும் பழம் பொருள் ஆராய்ச்சிக்கு வேண்டியன. 7. தொல்காப்பியர்1 தொல்காப்பியர் இடைச்சங்கப் புலவர்களுள் ஒருவர். தொல்காப்பிய ரென்பது தொல்காப்பியம் என்னும் நூல் செய்தமையால் இவர்க்கு இடப் பட்ட காரணப்பெயர். இது நன்னூல் செய்த பவணந்தியாரை நன்னூலார் என்பது போன்றதோர் வழக்கு. புலவர் போற்றும் ஆசிரியர் நச்சினார்க்கி னியர், இவரது இயற்பெயர் திரண தூமாக்கினி என ஓரிடத்திற் கூறிப்போந் தார். இப்பெயர் யாதோ ஒரு தமிழ்ச் சொல்லின் வட மொழி ஆக்கப் பெயராகத் தொனிக்கின்றது. புலத்தியன் என்னும் பெயர் புல் - அக - தீயன் எனப் பிரிக்கப்பட்டு திரணம் - தூமம் - அக்கினி என மொழிபெயர்க்கப்பட் டிருக்கின்றதென அறிஞர் சிலர் புகல்கின்றனர். எவ்வாறாயினுமாகுக. இவருக்குத் தொல்காப்பிய ரென்னும் காரணப் பெயரைவிட இயற்பெயர் ஒன்று உண்டு என்பதை இது விளக்குகின்றது. அப்பெயர்தான் யாதெனத் துணிந்து கூற முடியவில்லை. இவரது ஊர் பிறப்பு, வளர்ப்பு, குலம் ஆகியன அறியப்படாதவற்றுட் சில. இவரது காலம் கி.மு. 350-க்குப் பிற்பட்ட தென்று என்பது ஆராய்ச்சி யாளர் துணிபு. தொல்காப்பியத்திற் கூறப்படும் சில இலக்கண விதிகளைக் கொண்டு இவ்வாறு இவரது காலம் நிர்ணயிக்கப்படுகின்றது. தமிழ்மொழிக்கு ஆதியில் இலக்கண நுhல் செய்தவர் அகத்தியர் என நம்பப்பட்டு வருகின்றது. அகத்தியரிடம் பன்னிரு மாணவர் கல்வி பயின்ற னர். அவருள் தொல்காப்பியர் தலைமை பெற்று விளங்கினார். இவர் தொல் காப்பியம் எனப் பெயரிய இலக்கண நூல் செய்தார். இது முற்காலத்தும் பிற்காலத்தும் தோன்றிய இலக்கண நூல்கள் எல்லாவற்றுள்ளும் சிறந்தது. இந்நூல் இடைச் சங்கத்தாராலும் பிற்காலத்தாராலும் ஆதாரமாகக் கொள்ளப் பட்டது. தோன்றிய காலந்தொட்டு இன்று வரையும் இறவாது நிலவி வரும் தமிழ் இலக்கண நூல் இது ஒன்றேயாகும். தொல்காப்பியர் இந்நூhலை பாண்டியன் மாகீர்த்தியின் அவையிலே அதங்கோட்டாசிரியன் முன்னிலையில் அரங்கேற்றினர். தொல்காப்பிய ருடன் ஒரு சாலை மாணவராயிருந்து அகத்தியரிடம் கல்லி பயின்ற பனம் பாரனார் என்னும் ஆசிரியர் இந்நூற்குச் சிறப்புப் பாயிரமளித்தார். இந்நூற்கு இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் சேனாவரையர் தெய்வச் சிலையார், கல்லாடர் முதலியோர் உரை செய்திருக்கின்றனர். அகத்தியரிடம் கல்விபயின்ற தொல்காப்பியர் முதற் பன்னிருவரும் தனித்தனி ஒவ்வொரு படலமாகப் புறப்பொருட் பன்னிரு படலம் என்னும் நூல் செய்தனர். அந் நூல் இறந்துபட்டது. தொல்காப்பியரது சமயம் யாதெனக் கூறப்படவில்லை. தொல்காப் பியரது மதமும் திருவள்ளுவரது மதம் போன்றது எனக் கூறலாம். கடவுள் உலகம் உயிர் என்னும் முப்பொருள்களின் உண்மைகளைத் தெளிந்து சிறந்த நெறியில் ஒழுகுவதே தமிழர்களது சமயமாகும். இம்முறை உலகம் முழுமை யும் உள்ள மதங்களுக்கு எல்லாம் பொதுவான முறையாகும். திருவள்ளுவர், எல்லா நன்மைகளையும் தருபவர் என்னும் பொருளிற் கடவுளைச் செம் பொருள் எனக் குறிப்பிட்டிருக்கின்றார். தொல்காப்பியர் துறவொழுக்க முடையவராய் விளங்கினாரெனப் பாயிரங் கூறுகின்றது. காப்பியம் என்னும் சொல் காவியம் என்னும் பொருளில் வழங்கு கின்றது. காப்பியங்களைப் பெருங்காப்பியம் சிறுகாப்பியம் எனப்பிரித்து அவற்றின் இலக்கணங்களை இலக்கண நுhல்கள் கூறியிருக்கின்றன. தொல்காப்பியம் இவ்விலக்கணங்களுக்கு உட்படவில்லை. தொல்காப்பியம் என்னும் பெயர் பழைய மரபுகளைக் காப்பதாகிய நூல் (தொல் + காப்பு + இயம்) என்னும் பொருளில் இடப்பட்டிருக்கின்றதெனத் தெரிகின்றது. சிலர் தொல் + காப்பி + அம் எனவும் இப் பெயரைப் பிரித்துக் காட்டியுள்ளனர். 8. உயிர்களின் உருவத் தோற்றம் தாவின் என்னும் உயிர் நூல் வல்லார் உயிர்களும் தாவரங்களும் இனங்களாக மாறுதலடையும் வகையினை நன்கு விளக்கி உயிர்களின் உருவத் தோற்றம் என்னும் நூல் எழுதியிருக்கின்றார். இவ்வுயிர் நூற் புலவரின் கருத்துக்கள் அறிஞர்களாற் பாராட்டப்பட்டு வருகின்றன. அந் நூலிற் கூறப்பட்டுள்ள பொருளின் சாரம் ஈண்டு சுருங்கக் கூறப்படுகின்றது. உயிர்களும் தாவரங்களும், ஒன்று ஒன்றோடு தோற்றத்தில் ஒத்திருக்கும் தன்மைகளைக் கொண்டு இனங்களாகப் பிரிக்கப் படுகின்றன. ஒரு இன உயிர் அதே இனத்தின் இன்னொரு உயிரோடு சேரும்போது சந்ததி உண்டாகும். அவ்வினமல்லாத உயிரோடு சேரும்போது சந்ததி தோன்றுவ தில்லை. உலகிலுள்ள உயிர்வகைகள் அளவிறந்தன. அவ்வேறுபாடுகள் எவ்வாறு உண்டாகின்றன. காட்டிற் காணப்படும் உயிர்களும் தாவரங்களும் மனிதனால் வளர்க்கப் படும்போது அவற்றின் உடலமைப்பில் மாறுதல் உண்டாகின்றது. இவ்வகை மாறுதல்களை ஆராய்தல் நியாயமானது. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று வெப்ப தட்ப நிலைமைகளும் உணவும் ஆகும். மற்றது தம்மைப் போன்ற சந்ததியை உண்டாக்கும் இயல்பு. இரண்டாவது இயல்பு முக்கியம் வாய்ந்தது. இவைகளால் காலப்போக்கில் உயிர்களின் உருவத் தோற்றத்தில் மாறுதல் ஏற்படுமோவென்பது ஆராயப்பட்டு வருகின்றது. ஓர் உறுப்பு பயன்பாட்டிலிருப்பதும், பயன்பாட்டில் இராமையும் ஒரு உயிரின் உடலமைப்பை மாற்றும். பால் கறக்கப்படும் பசுக்களின் மடி, பால் கறக்கப்படாத பசுக்களின் மடியிலும் பார்க்க பெரியதாய் வளர்வது இதற்கு எடுத்துக்காட்டு. மனிதனால் வளர்க்கப்படும் உயிர்களும் தாவரங்களும் செழிப்பான இனங்களை உண்டாக்குகின்றன. இக் காரணத்தினால் அவை பெரியனவாய் வளர்கின்றன. இதற்கு வளர்க்கும் புறாக்களை உதாரணமாகக் கொள்ளலாம். இவை எகிப்திய பரோவா காலம் (கி.மு. 3000) முதல் வளர்க்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக “ஆங்கில கொண்டோடி”1 “விசிறிவாலி”2 முதலிய புறாக் களை நோக்கலாம். இவற்றை முதல்முறை பார்க்கும் உயிர் நூலார் அவை களை வெவ்வேறு இனங்களுக்குரியன என்று கருதுவர். இவை ஒரு இனத்தி னின்றும் வந்து மனிதன் வளர்த்ததினால் தோற்றத்தில் மாறுபட்டனவே. மனிதன் வளர்ப்பதினால் செழிப்படையும் உயிர்களில் சிறப்பானவை தெரிந்தெடுக்கப்படுகின்றன. அவை பின்பு மனிதனால் வளர்க்கப்பட்டுப் பெருகுகின்றன. வளர்க்கப்படும் உயிர்கள் மட்டில் மனிதன் இயற்கையின் வேலையைச் செய்கிறான். அவை பெரிதாக வளர்தலே ஏற்படக்கூடிய வேறுபாடாகும். ஒவ்வொரு உயிரின் இனத்திலும் தனித்தனி வேறுபாடுகள் காணப்படுகின்றன. இவை சந்ததியாக வரத்தக்கன. தனித்தனியாகக் காணப்படும் வேறுபாடுகள், பல தலைமுறைகளில் புதிய இனங்களைத் தோற்றுவித்தல் கூடும். ஒரு உயிர், வாழ்வதற்காகப் போராடுகின்றது. இவ்வகையில் தோன் றும் மாறுதல்கள் நிலைக்கும். பயனுள்ள இவ்வகை மாறுதல்களையுடைய விலங்குகளிலும் அம் மாறுதல்கள் காணப்படும். இவ்வாறு ஆதியினத்தி லிருந்து கிளை இனங்கள் தோன்றுகின்றன. இரண்டு நாய்கள் ஒரு எலும்புக்காகச் சண்டையிடுதலை உயிர் வாழ்வதற்காக நடக்கும் போருக்கு உதாரணமாக கூறலாம். உயிர்கள் பிழைத்திருப்பதற்கு உணவு முதன்மையானது. வனாந்தரத்தில் வளரும் தாவரங்கள் தம்மைப்போன்ற மற்றத் தாவரங்களோடு மாத்திரமல்ல, வெப்பநிலையோடும் தண்ணீருக்காகவும் போரிடுகின்றன. தாவரங்கள் ஆயிரக்கணக்கான விதைகளைப் போடுகின்றன. இவற்றில் பிழைப்பன எத்தனை? வாழ்க்கையின் பொருட்டுப் போராடும் தாவரங்களும் விலங்குகளும் அதிகம் பெருகமாட்டா. அவையும் அவற்றின் கன்றுகளும் அழிக்கப்படுவ தால் அவற்றின் எண் குறைக்கப்பட்டு வருகின்றது. இவற்றை அழிக்கும் ஆற்றல்கள் இல்லாவிடின் இவ்வுலகம் இவற்றின் கூட்டங்களால் நிறைந்து விடும். இடங்களுக்கேற்றவாறு உயிர்கள் அதிகமாகப் பெருகுவதுண்டு. ஆதியில் மாடுகளும் குதிரைகளும் தென்னமெரிக்காவிலும் ஆ°திரேலி யாவிலும் அதிகம் பெருகின. உயிர்களின் சந்ததிகள் அதிகம் பெருகாது தடுக்கும் இயற்கை ஓழுங்கு இருந்து வருகின்றது. உயிர்களின் அழிவு பெரும்பாலும் அவை முட்டைகள் அல்லது புழுக்களாயிருக்கும்போது உண்டாகின்றது. தாவரங் களின் முளைகள் புழுக்களால் அழிக்கப்படுகின்றன. வனாந்தரங்களிலும் துருவ நாடுகளிலும் உணவு கிடையாமல் இருப்பது இதற்குக் காரணமாக லாம். உணவு அருந்தும் குணம் போராட்டத்தை அதிகப்படுத்துகின்றது. இக் காரணத்தால் வலியனவால் மெலியன அழிக்கப்படுகின்றன. ஒரு உயிர்க் கூட்டம் மிகவும் வேகமாகப் பெருகிக் கொண்டு செல்லும்போது கொள்ளை நோய் தோன்றுகிறது. கொள்ளை நோய் பெரும்பாலும் இரத்தத்தைக் குடிக்கும் கிருமிகளால் உண்டாகின்றது. இக் கிருமிகள் தமது பகைக் கிருமிகளை நாசஞ் செய்வதால் வேகமாகப் பெருகியனவாகும். வாழ்வதன் பொருட்டு நடக்கும் போராட்டம் உயிர்கள் வேகமாகப் பெருகுவதைத் தடுக்கின்றது. உணவுக்காகப் போராடி வாழ்வதால் உயிர்களும் தாவரங்களும் ஆரம்பத்திலிருந்து எண்ணிற் குறைகின்றன. புதிய இனங்கள் தோன்றி அயலே உள்ள வலிமையிற் குறைந்த இனங்களை அழித்து விடுகின்றன. இவ்வியற்கை நிகழ்ச்சிக்கு உதாரணங்க ளுண்டு. நீண்ட கொம்புள்ள “யோக்சயர்” மாடுகள் தோன்றினதும் “யோக் சயர்” கறுப்பு மாடுகள் மறைந்தன. இவை மறுபடியும் கட்டைக் கொம்புள்ள இனத்தால் அழிக்கப்பட்டன. வளர்கின்ற கிளைகள் மற்ற மரங்களின் கிளைகளைப் படச்செய்கின்றன. இது இனங்கள் அயலிலுள்ள இனங்களை அழிப்பதற்கு உதாரணமாகும். சிறு கிளைகளையும் கொம்புகளையும் தோற்றுவிக்கும் பெரிய கொம்பர்கள் ஒருபோது சிறு சுள்ளிகாளாயிருந்தன. ஒரு காலத்தில் ஒன்றாயிருந்த இனங்கள் நீண்டகாலத்தில் பல சிறு இனங்களாகப் பெருகுகின்றன. மரம், புதராயிருக்கும்போது பல தடிகள் இருந்தன. அது மரமாகும்போது ஒன்று அல்லது இரண்டு தடிகள் மாத்திரம் பிழைக்கின்றன. ஒரு பெரிய இனத்திலிருந்து, பல சிறிய இனங்களை இயற்கை, உற்பத்தி யாக்குதற்குரிய காரணங்கள் ஆராயப்படவேண்டும். உடலின் எலும்பு போன்ற கடினபாகத்தின் வேறுபாடு தசை நார்களையும் வேறுபடுத்துகின் றது. உடலின் ஒரு பகுதி வழக்கத்துக்கு மாறாகப் பெருப்பதற்கு நரம்புகள் இரத்தத்தைக் கொடுக்க வேண்டுமானால். இன்னொரு இடத்துக்குச் செல்லும் இரத்தம் குறைக்கப்படவேண்டும். அதிகம் பால் கொடுக்கும் மாடு கொழுப்படைவதில்லை. விதைகள் சிறியவாயுள்ள பழங்கள் பெருக்கின்றன. விதை பெரிதாயுள்ள பழங்கள் சிறுக்கின்றன. விலங்குகளின் பல உறுப்புகள் சிறிது மாற்றமடைகின்றன. முன் உள்ள உறுப்புகள் சில, பயனற்றுப் போகின்றமையால் மறைந்து விடுகின்றன. தனிமையாக விடப்பட்ட ஒரு உயிர் இனத்தின் உறுப்புகளில் ஒன்று பெருப்பதால் இவ்வகையில் பெரிய மாற்றம் உண்டாகின்றது. பெரிய தலையுள்ள புறாவின் மாற்றம் தலைமுறை களில் உண்டான வேறுபாடாகும். இவ்வினத்தைக் கலப்பின்றி வைத்துக் கொண்டால் சந்ததி மாறாமல் இருக்கும். பறவைச் சேவல்களின் கொண்டையும் முள்ளும் மாறுபடத்தக்கன. ஒரு தொடர்புள்ள இனங்கள் இவ்வாறு மாறுபடுகின்றன. கறுப்புக் குதிரை களின் கால்களில் வரிக்குதிரைகளின் வரிபோல அடையாளங் காணப் படுவதியல்பு. கழுதையும் குதிரையும் சேர்வதாற் பிறக்கும் கோவேறு கழுதைகளுக்குக் கால்களில் வரிகள் காணப்படுகின்றன. அவ் விலங்குகள் குட்டியாயிருக்கும்போதே வரிகள் தெளிவாகத் தெரிகின்றன. வளரும்போது வரிகள் மறைந்து போகின்றன. இவ்வரிகள், குதிரை, வரிக்குதிரை கழுதை என்பவற்றின் மூதாதைகளுக்குரியன வாகும். பேதமான தோற்றங்கள் என்று பலமுறை கேட்டிருக்கின்றோம். ஒட்டைச் சிவிங்கியை உதாரணமாக எடுத்துக் கொள்ளுவோம். மற்ற விலங்குகளுக்கு எட்டாத இலை தழைகளை நின்று தின்பதற்காக அதன் கழுத்து நீண்டிருக்கின்றது. உணவு அருகிய காலத்தில் இது மிகப் பயனுடையது. நீண்ட கழுத்துள்ள ஒட்டைச் சிவிங்கி கட்டை கழுத்துள்ள ஒட்டைச் சிவிங்கியோடு போரிடுகின்றது. அதனால் கட்டைக் கழுத்துள்ள ஒட்டைச்சிவிங்கி இனம் மறைந்து போகின்றது. ஒரு இலையைப்போற் தற்செயலாய்த் தோன்றும் ஒரு பூச்சி மேலும் மேலும் தான் இலையைப் போல் தோன்றும் தன்மையை அதிகப்படுத்திக் கொள்கின்றது. உயிர்கள் ஒரு மத்திய இடத்திலிருந்து பரம்பி இடங்களுக்கும் சுற்றிலுமுள்ள பொருள்களுக்கும் தக்கபடி மாற்றமடைகின்றன. பல விதைகள் தண்ணீரில் ஆயிரக்கணக்கான மைல்கள் நீந்திச் சென்று இறுதியில் முளைக்கும். பட்சிகள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு வாழச் செல்லும்போது ஒரு கண்டத்தில் இருந்து இன்னொரு கண்டத்துக்கு விதையை இரைப்பையுள் அல்லது காலிற் சிக்க வைத்துக்கொண்டு செல்லும். பிராணிகளும் தாவரங்களும் மனிதனால் வளர்க்கப்பட்டுச் செழிப் படைதலினாலும், அவை உணவைப் பெறும் முயற்சியில் சில பயனுடள்ள மாற்றங்கள் ஏற்படுவதினாலும், அவை பின்பு தலைமுறையாக அவ்வகைச் சந்ததிகளைத் தோற்றுவிக்கையினாலும் உருவத் தோற்றங்கள் பல உண்டாகின்றனவாம். 9. வீரத்தாய்மார்1 புண்ணிய பூமியாகிய இப்பரத கண்டம், முற்காலத்தே தன தான்யாதி செல்வங்களுக்கு நிலைக்களமாயிருந்தது போலவே, வீர இலக்குமி மகிழ்ந்து விளையாடற்குரிய விறற்களமாகவும் விளங்கிய தென்பதற்கு எண்ணிறந்த உதாரணங்களுண்டு. இக் கருத்து இராமாயணம் பாரதாதி இதிகாசங்களாலும் பிறவற்றாலும் எளிதில் உணரப்படும். இவ்வாறு வீரச் செயல்கட்குப் பேர்பெற்ற பூமியாக நம் நாடு விளங்கியதற்கு அநேக காரணங்கள் கூறலாம். ஆயினும், அவை எல்லாவற்றிலுஞ் சிறந்த காரணமாகக் கூறத்தக்கது, அந் நாளில் தோன்றிய தாய்மாரது பெருமையேயாகும். தாய்மார் மட்டும் அறிவும் ஆற்றலுமுடையராய்த் தம் மக்களை நல்வழிகளிற் கவலையோடு பழக்கி வருவாராயின் அம்மக்கட் கூட்டம் உலகத்தே பெருமையும் புகழும் பெற்று விளங்கத் தடை என்ன? தமிழ் மொழியிலுள்ள புராதன நூல்களாகிய புறநானுhறு முதலிய வற்றில் வீரச் சுவையே ஏனைய சுவைகளினும் மிகுதியாகக் காணப்படும். அக் காலத்தே தாய்மார்களால் சிறந்த வீரர்கள் எவ்வாறு படைக்கப்பட் டார்கள் என்பது இங்கே கவனிக்கத்தக்கது. வீரத்தாயார்க்கிருந்ததாக நூல் களிற் காணப்படும் குண விசேடங்களை நோக்கும் போது உலக சரித்திரத்தி லேயே இத்தகைய பெருமைகாண்டற்கு அரிது என்று தோன்றுமென்பதில் ஐயமில்லை. தமிழ் நாட்டில் முற்கால முதலே இவ்வீரப் பெண்மணிகளது பெருமையைப் புகழ்ந்து வந்த வழக்கமும் இருந்தது. புறப் பொருட்டு றைகளில் இது ‘மூதின்முல்லை’ என்று கூறப்படும். இவ்வீரப் பெண்டிர் செய்கைகளாகத் தமிழ் நூல்களிற் கண்ட பாடல்கள் முழுதும் நல்லிசைப் புலமை வாய்ந்த பெண்டிர்களாலேயே பாடப்பட்டிருத்தல் வியக்கத்தக்கதாயுமுள்ளது. பொன்முடியார் என்னும் பெண் புலவர் தாய் தந்தை அரசன் மகன் முதலியவர்க்குரிய கடமைகள் இன்ன வென்பதை அடியில் வருமாறு கூறுவர். “ஈன்று புறந்தருதல் என்றலைக் கடனே : சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே : வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே : ஒளிறுவாள் அருஞ்சம முருக்கிக் களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.” இப் பாட்டால் அக்காலத்து வீரத்தாயரது மனநிலை இத்தகைய தென்பது தெளிப்படும் இது போலவே, தகடூர் யாத்திரை என்னும் பழைய நூலிலுள்ள பாட்டொன்று வருமாறு :- தருமமும் ஈதேயாம் தானமும் ஈதாம் கருமமும் காணுங்கால் ஈதாம் - செருமுனையிற் கோள்வாண் மறவர் தலைதுமிப்ப என்மகன் வாள்வாய் முயங்கப் பெறின் இப் பாட்டில், தாயொருத்தி தன் மகன் போர்க்களத்தே சாகப் பெற்றால் அதுவே தருமமும் தானமும் கருமமுமாகுமென்று கூறிய அற்புதச் செயல் குறிக்கப்பட்டுள்ளது. தன்மகன் போரிடத்தே மடிதல் தன் நாட்டின் நலம் கருதியே யன்றித் தன்னலம் கருதியன்றாதலால், அச் செயலினும் சிறந்த தருமமும் தானமும் கருமமும் பிறவில்லை என்பது கருத்து. எவ்வளவு உயர்வும் பெருமையுங் கொண்ட சிந்தை முற்காலத்துப் பெண்டிர்கட்கு இருந்தது என்பது இப்பாட்டை நோக்குவார்க்கு இனிது விளங்கும். இனி மற்றொரு வீரத்தாயைப் பற்றிப் பூங்கணுத்திரை என்னும் பெண்புலவர் புகழ்ந்து பாடியிருக்கின்றார். அப்பாடலின் கருத்து வருமாறு: “கொக்கின் இறகுபோல நரைத்த கூந்தலையுடைய முதியவள் தன் புதல்வன் போரிலே யானையை வீழ்த்திக் கொன்று தானும் மடிந்தான் என்னும் செய்தியைக் கேட்டுத் தான் அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியினும் அதிகம் மகிழ்ச்சியடைந்தாள்.” இதனால் அக்காலத்தே, வீரத்தாயரான பெண்டிர் தாம் புதல்வரைப் பெறுவது, ஓர் அற்புத வீரச்செயலையேனும் அவரிடம் கண்டு மகிழ்தற்கே என்று கருதினவரென்பதும், அவர் வீரச்சாவில் அப் பெண்டிர்க்கு மன மகிழ்ச்சியேயன்றித் துக்கமில்லை யென்பதும் நன்கு விளங்கும். இப் பாட்டில், தாய் கண்ட அற்புத வீரச் செயல் தன் சிறுவன் ஒரு பெருங் களிற்றைக் குத்திக் கொன்றது. இனி, மற்றொரு பாடல் பெரிதும் உருக்கங் காட்டி நிற்கின்றது. வீரத்தாய் ஒருத்தி தன் ஒரே புத்திரனை போர்க்கு அனுப்புகின்ற மாட்சியை ஓக்கூர் மாசாத்தியார் என்னும் பெண் புலவர் பெரிதும் வியந்து பாடியிருக் கின்றார். அதன் பொருள் வருமாறு : தாய், முன்பு அவள் தகப்பன் போர்க் களத்தில் யானையையெறிந்து இறந்து போயிருப்பவும், சமீபத்தில் நடந்த போரில் தன் கணவன் எதிரிகளைக் கொன்று தானும் மடிந்து போயிருப்ப வும், இவற்றிற்காக மனந்தளர்வின்றி, எதிரிகளின் போர்ப்பறை ஒலிப்பதைக் கேட்டு மகிழ்ச்சி மிகுந்து, தன் சிறுவனுக்கு ஆடையணிந்து, அவன் குடுமியை எண்ணெயிட்டுச் சீவி முடிந்து, தான் ஒரு புதல்வனையுடையளா யிருந்தும் சிறிதும் மனங் கலங்காது, போர்க்களம் நோக்கிச் செல்லுக என்று அவனை அனுப்புகின்றாள். இச் செய்கையைக் கண்ட என் மனம் கெடுவ தாக; இவள் துணிவு அஞ்சத்தக்கதாகும்; பழைய வீரக்குடியிற் பிறந்தவ ளென்பது இவட்குத் தகும்.” என்ன வீரம்! இதனிலும் ஆச்சரியமான செய்தி கேட்டதுண்டோ? இனி மற்றொரு பாடல் மேற்கூறியதினும் மிக்க வீரத் தன்மையைக் குறிப்ப தென்னலாம்; இதுவும் காக்கைபாடினியார் நச்செள்ளையார் என்னும் ஒரு பெண் புலவர் பாடியதாகும்; அதன் பொருள் வருமாறு: “வயது முதிர்ந்த ஒரு தாய் தன் சிறுவன் போரில் வலியழிந்து புறங்கொடுத்தோடினன் என்று பலர் சொல்லக் கேட்டு, ‘அவ்வாறு அவன் போரிற் புறங் கொடுத்தோடினவனாயின் அவன் பாலுண்டு வளர்தற்குக் காரணமான அங்கத்தை அறுத்திடுவேன்’ என்று வாளைக் கையிற்கொண்டு போர்க்களம் புகுந்து, வீழ்ந்து கிடக்கும் பிணங்களைக் புரட்டித் தேடி வருபவள் இருதுண்டமாக கிடந்த தன் மகன் உடலைக் கண்டு, அவனைப் பெற்றபோதடைந்த மகிழ்ச்சியினும் அதிக மகிழ்ச்சியடைந்தாள்.” இப்பாட்டிற் கூறப்பட்டதை நோக்கும் போது, இத்தகைய வீரத்தாய் மார்கள் உலகத்திலேயே அரியர் என்று தோன்று மென்பதில் ஐயமில்லை. இவ்வாறே ஒளவையார் பாடிய செய்யுள் ஒன்று புறநானூற்றிற் காணப்படு கின்றது. அப் பாட்டிலே, “தகடூரில் எதிர்த்த பகைவர் சேனையின் ஊடே வீழ்ந்து அவரை வெட்டிக் கொண்டே சென்று அச்சேனை நடுவில் தானும் வெட்டுண்டு இருதுண்டமாக கிடந்த தன் மகனது மாட்சியைக் கண்டு அகங் குளிர்தலால், அவனைப் பெற்ற வயது முதிர்ந்த தாய்க்குப் பால் சுரந்தது.” என அழகு பெறக் கூறியிருத்தல் படித்து மகிழத்தக்கது. இனி, புறநானூற்றில், ஒருவர் காவற் பெண்டு என்னும் பெண் புலவரை நோக்கி, ‘நும் மகன் யாண்டுளன்?’ என்று கேட்க, அதற்கு அவள் கூறிய விடை வருமாறு : “சிறிய வீட்டிலே நல்ல தூணைப் பிடித்துக் கொண்டு, உன் மகன் எங்குள்ளான் என்று கேட்கின்றாய்; என்னுடைய மகன் எவ்விடத்திருப் பினும் யான் அறியேன். புலிதங்கிப் போன மலைக்குகைபோல அவனைப் பெற்ற வயிறோ இது; அவன் போர்க்களத்திலே தோன்றுவான்; ஆண்டுச் சென்று காண்பாயாக.” வீர மக்களைப் பெறுவதில், பழைய காலத்துப் பெண்டிர் அடையும் மகிழ்ச்சியும் பெருமிதமும் இத்தன்மையன என்பது இதனால் நன்கு விளங்கும். இனித் தம் வீரமக்கள் போர்க்குச் சென்று அங்கே சிறிது மானத் தாழ்வான செயலைச் செய்ததாகத் தெரியவரின் அவர் தாயார் அம்மக்களை மிகச் சினந்து வெறுப்பர். ஒருதாய், தன் மகன் பகைக்களிற்றின் மேலே வேலையெறிந்து அவ்வேலைத் திரும்பப் பெறும் ஆற்றலில்லாது வெறுங்கையனாகப் புறங்கொடுத்தது கண்டு கூறுகின்றாள். “பகையரசரைப் போரில் வென்று அக் களத்திலே நீயும் இறந்து படாமல் யானை முகத்தெறிந்த நின் வேலை அதனோடு போவிட்டு நீ புறங்கொடுத்து திரும்பினை; இதனால் எமது முன்னோர் செய்யாத பெரும்பழியை விளைத்த மூடனாகினாய். நீ தங்கியிருந்த என் வயிற்றை அறுப்பேன் அறுப்பேன்!” இவ்வாறு, தமிழகம், முன்னாளில் அறிவாற்றல் மிக்க வீரத் தாய்மார் களை உடையதாகி, அருமையும் பெருமையுங் கொண்ட செயல்களுக்குரிய நிலைக்களமாயிருந்தது. அவர்கள் வீரர்கள் குடிகளின் பொருட்டும் தந் நாட்டு அரசன் பொருட்டும் உயிரைக் கொடுப்பதிற் பயிற்சி மிக்கவர்களாய், சமயம் நேர்ந்தபோதெல்லாம் அவ்வாறு செய்து, தமிழகத்தின் பெருமையை மலைமேலிட்ட தீபம் போல விளக்கி வந்தனர். சங்க நாட்களில் தமிழ் நாட்டின் மேல் வடவரசரேனும், பிறவரசரேனும் படையெடுத்து வென்ற செய்தி கேட்கப்படுதலே அரிது. ஆனால் தமிழரசர் வடவருடனும் பல பிறருடனும் போர் புரிந்து வெற்றிக் கொண்ட செய்தி காணலாம். இதன் காரணம் அக்காலத்து விளங்கிய தமிழர் வீரத்தின் பெருமையேயாம். அத்தகைய வீரத்தை வளர்த்து வந்தவர் யார்? தமிழ்த் தாயர்களே யன்றோ? அங்ஙனம் வீரத்தாயர்கள் விளங்கிய தமிழகம் அந் நாளில் ஏனைய நலங்களாலும் நிரம்பியது; நாடு செல்வத்தில் மிதந்தது; நாகரிகம் உச்சநிலை அடைந்தது. பொருட் செல்வமும், கல்விச் செல்வமும் ஒருங்கே பூரித்தன. வாணிகமும் கைத்தொழிலும் வளர்ச்சியெய்தின; அன்றியும், வீர இலக்குமி வீற்றிருந்த இந்நாடு உலகுக்கோர் பண்டகசாலை எனவும் திகழ்ந்தது. தமிழரது கடல் வாணிகம் வெகுதூரம் வரை பரவியது. இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தொடங்கி எகிப்தியரும் பாபிலோனியரும் தமிழரோடு வாணிக உறவு பூண்டிருந்தனர். யூதேய நாட்டரசன் சாலமன் காலத்தில் அவ்வாணிகம் பின்னும் விருத்தி எய்திற்று. பின்னர் யவனர் தலைப்பட்டனர்; உரோமர் அவரைத் தொடர்ந்தனர். கிறி°தாப்த ஆரம்பத் தில், உரோமாபுரி உன்னத நிலையை யடைந்திருந்த பொழுது ஐரோப்பா முழுதும் அதன் கீழ் அடங்கிற்று. எகிப்தும் அதன் குடைக்கீழ் ஒடுங்கிற்று. உரோமைச் சக்கரவர்த்திகளோ தமிழ் அரசருடன் உறவு பூண்டொழுகினர். அக்காலத்தில் உரோமை இராச்சியத்திற்கும் தமிழகத்திற்கும் வாணிகம் எவ்வளவு பெருமிதமாய் நடந்தேறியதெனின், வருடந்தோறும் ஏறக் குறையப் பதினைந்து கோடி ரூபாய் பெறுமதியான பொன் நாணயங்களை உரோமாபுரி தமிழகத்திற்கு அனுப்பி வந்ததென்றும், இங்கு நின்று ஏற்று மதியான சரக்குகள் அந் நாட்டில் நூறுமடங்கு அதிக விலைக்குப் போயின என்றும், பிளினி என்னும் சரித்திராசிரியர் தமது குறிப்பில் எழுதியுள்ளார். °த்திராபோ என்ற மற்றொரு சரித்திரகாரர், ‘செங்கடற் றுறைமுகத் தினின்றும் நூற்றிருபது கப்பல்கட்குக் குறையாதவை இந்தியாவிற்குப் போகப் பார்த்தேன்’ என்று குறிப்பிட்டிருக்கின்றனர், ஆ! தமிழ் வர்த்தகப் பெருமையை என்னென்பேம்! அக் காலத்தில் அராபியக் குடாக்கடலிற் கடற்கொள்ளைக்காரர் அதிகம் இருந்தபடியால், வாணிகக் காப்பின் பொருட்டு, மேற்றிசை வர்த்தகருக்கு முதல் வர்த்தகத் தானமாயிருந்த முசிறிப் பட்டினத்தில் உரோமைப் போர் வீரர் 2000 பேர் நிலைவரமாய் நிறுத்தப் பட்டனர் என்றும் அறிகின்றோம். உரோமரும் யவனரும் தமிழர் படையிற் சேவித்தலைப் பெருமையாகக் கொண்டனர். மதுரையின் கோட்டை வாயில் உரோமைப் போர் வீரராற் காக்கப்பட்டது. இவ்வாறே, தமிழகம் இற்றைக்கு ஈராயிர வாண்டுகளுக்கு முன்னர் இவ்வளவு சீருஞ் சிறப்பும் பெற்றிருந் தமைக்கு அந் நாளில் தம்மக்கட்குத் தேசாபிமான மூட்டி வளர்த்த வீரத் தாயரே காரணம் ஆவர். “திரைகடலோடியும் திரவியந்தேடு” என்பதும் அந் நாளில் தென்னாட்டிற் சிறந்த ஒரு பெண்மணியின் வாக்கே யாகும். அக் காலத்துத் தமிழ்த்தாயர் மிக்க புலமையும் வாய்ந்து விளங்கினர் என்பதற்குச் சங்க நூல்களே சான்றாம். சங்ககாலத்துக்குப் பின், அறிவும் ஆற்றலுமுடைய வீரத்தாய்மாரும் உயிர்த் தியாகம் செய்ய வல்ல வீர மக்களும் குறைந்து வந்தமையாற் போலும், வட வேந்தர் பலர் தமிழகத்தே நுழையத் தொடங்கிய செய்திகள் கேட்கப்படுகின்றன. சங்ககாலத்துக்குப் பின்பு வடவரால் தமிழர்களுக்குள் நிகழ்ந்து வந்த போர்கள் அளவு படுவனவல்ல. பல்லவரென்றும் இரட்ட ரென்றும் சளுக்கரென்றும் கடம்பரென்றும் கூறப்படும் வடவரசர் தொகுதி பல தமிழகத்தைக் கைப்பற்றின. அதனால் தமிழ் வேந்தராகிய சேர சோழ பாண்டியரும் பிறரும் தம் பழம் பெருமை குன்றினர். முடிவில் ஆண்மை யும் தியாகமுமாகிய பயிற்சிகள் குறையத் தமிழர் வீரம் முற்றும் தலை கவிழ்ந்தது. இக் காலத்தவராகிய நம்மவர்க்கோ மேலே கூறிவந்த அற்புத வீரச் செயல்களெல்லாம் கற்பனைக் கதைகளாகவே தோன்றுவன. ஏனெனில், நம்மவரது மனநிலை அவ்வளவு குன்றியொழிந்தது. கால சக்கரத்தின் சுழற்சியால் ஓரிடத்திற்குள்ளே உண்டாம் அற்புத மாறுதல்கள் இவை. 10. 1சங்க காலத்துத் தெய்வ வழிபாடு “ஆலமுங் கடம்பும் நல்யாற்று நடுவும் கால்வழக் கறுநிலைக் குன்றமும் பிறவும் அவ்வவை மேய வேறு வேறு பெயரோய்! எவ்வயி னோயு நீயே” (பரிபாடல் 4-67-70) “ஆலுங் கடம்பும் யாற்றிடைக் குறையும் குன்றும் பிறவுமாகிய அவ் விடங்களைப் பொருந்திய பல தெய்வங்களாக வகுத்துச் சொல்லப்படும் பெயரையுடையோய்!” என்றமையின் சங்ககாலத்துத் தமிழ் மக்கள் கடவுள் ஒருவனே யென்னும் உண்மையை நன்குணர்ந்தாரென்பது வெளிப்படை. பல தெய்வங்களாக வகுத்துச் சொல்லப்படும் பெயரையுடையோன் ஒருவனே என உணர்ந்த அறிஞர் அதனை அகத்தும் புறத்தும் வழிபடல் மேற்கொள் வாராயினார். மதிலும் மண்டபமுமாகியமைந்த கோயில்கள் இயைவதன் முன்னர்ப் பழந்தமிழர் ஆலமர நிழலிலும் கடம்பமர நிழலிலும் யாற்றிடைக் குறையகத்தும் குன்றத்தின் மிசையும் பிறவிடத்தும் சிலையுரு நிறுத்தியும் அஃதின்றியும் தெய்வத்தை வழிபட்டு வந்தனர். “காடுங் காவுங் கவின்பெறு துருத்தியும் யாறுங் குளனும் வேறுபல் வைப்புஞ் சதுக்கமுஞ் சந்தியும் புதுப்பூங் கடம்பு மன்றமும் பொதியிலுங் கந்துடை நிலையினும்” (திருமுருகாற்றுப்படை (223-226) என்பதனாலும், ஆலமர் செல்வன், “கடம்பமர் காளை” என்பவற்றாலும் இயற்கை வனப்பு எவ்வெவ்விடத்துளதோ அவ்வவ்விடத்திலெல்லாம் தமிழ் மக்கள் தெய்வத்தை முன்னிட்டு வழிபாடியற்றின ரென்பது அறியக் கிடக்கின்றது. இயற்கையினமைந்த வனப்புப் பொருள்களுள் அறிவெல்லை யாலறியப்படாத புகழுடனே பொலிந்து நிலவெல்லையைத் தாங்கிய நிலைமை நீங்காத தொல்லிசைப் புலவர் ஆராய்ந்துரைத்த “நெடிய குன்றங்கள்” பலவகைச் சிறப்புடையன. மலரையுடைய அகன்ற தடாகங் களும் மேகங்கள் படியுஞ் சிகரங்களும் பொருந்தி நிலத்திலுள்ளாரது பசி வெம்மையை யகற்றும் நீர்மையவாகிய குலவரைகள் சிலவுள. அவை தம் முள் சங்கமிருந்து தமிழாராய்ந்த கூடலம்பதிக்கு அணித்தாகிய பரங்குன்ற மும் இருங்குன்றமும் கழிபெருஞ் சிறப்புடையன. பரங்குன்றம் முருகக்கடவுள் திருக்கோயில் கொண்டெழுந் தருளியிருப்பது; திருமாலிருஞ் சோலைமலையென்னும் இருங்குன்றம் மாயோனையும் வாலியோனையும் தாங்கி நிற்பது; இவ்விருகுன்றமும் இவற்றின் மீது எழுந்தருளிய தெய்வங்களும் தமிழ்ப் புலவரால் உவந்து பாடப்பட்டன. பரங்குன்றத்தின் அடியின் கண் மாலைகடோறும் பொருந்தியிருத்தலைத் தேவருலகத் துறைதலினும் சிறந்ததாகக் கொண்ட தமிழ்ப் புலவர், “மாலை மாலை யடியுறை யியைநர் மேலோ ருறையுளும் வேண்டுநர் யாஅர்” (பரிபாடல் 17-27-6) எனக் கூறினர். அரிதிற்பெறு துறக்கத்தை எளிதிற் பெறுதலுரிமையான் “மாலிருங் குன்றத்தை எல்லாருங் கேட்க ஏத்தக்கடவோம்” என இருங்குன்றத்தின் சீர் கூறப்பட்டது. யாண்டும் நிறைந்த அருவடிவாகிய மைந்த பிறவா யாக்கைப் பெரியோனும், பரங்குன்றமர்ந்த அறுமுகச் செவ்வேளும், இருங்குன்றமர்ந்த மாயோனும் வாலியோனும் ஞாலங் காக்கும் கடவுளராகக் கருதப்பட்டனர். “பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலு மறுமுகச் செவ்வே ளணிதிகழ் கோயிலும் வால்வளை மேனி வாலியோன் கோயிலும் நீல மேனி நெடியோன் கோயிலும்” (சிலப்பதிகாரம் 5-68-72) “நுதல் விழி நாட்டத் திறையோன் முதலாப் பதிவாழ் சதுக்கத்துத் தெய்வ மீறாக” (மணிமேகலை 1-54-55) பிறவா யாக்கைப் பெரியோனாகிய இறைவனே யாவராலும் முதல்வ னாகக் கருதப்பட்டனன். குறிஞ்சி நிலத்துறைவோர் பூவும் புகையுங் கொண்டு முருகனையேத்தி வழிபட்டனர். முல்லை நிலத்துறையுங் கோவலர் குரவைக்கூத்தாடி மாயோனையும் வாலியோனையும் வழிபட்டனர் மருதநிலத்துத் தெய்வமாகிய இந்திரனும், நெய்தல் நிலத்துத் தெய்வ மாகிய வருணனும், பாலைத் தெய்வமாகிய கொற்றவையும் அவ்வந்நிலத்து மக்களால் வழிபாடு செய்யப்பெற்ற வரலாற்றினைச் சங்கத் தமிழ் நூல்களிற் பரக்கக் காணலாகும். மூத்த பிள்ளையாராகிய விநாயக் கடவுளது வழிபாடு சங்க நூல்களுட் பயின்றுவராமை அறிஞரால் ஆராயற் பால தொன்றாகும். 11. 1சூளாமணிக் கதைச் சுருக்கம் உலகிற் சிறப்பிற்றோங்கிய சுரமை என்னும் நாட்டிற்கு இராசதானி யாகிய போதனைமாநகர் என்னும் ஒரு பட்டினம் உள்ளது. அந்நகரத்துக்குத் தலைவனாகப் பிரசாபதி என்று ஓர் அரசன் இருந்தான். அவனுக்கு மனைவியர் பலர். அவர்களுள் பட்டத்துத் தேவிமாராய் மிருகாபதி என்றும் சசி என்றும் இரு பெண்கள் இருந்தார்கள். இவர்களோடு கூடி அரசன் இன் புற்று வாழுநாளில் முன்செய்த புண்ணிய பலத்தால் பலபத்திர அவதாரமாக வெண்ணிறமுடைய விசயன் என்றொரு புதல்வனை மிருகாபதி பெற்றாள். சசி என்பவள் கிருட்டிணாவதாரமாகக் காயாம்பூ வண்ணனாகிய திவிட்ட னென்றொரு குமரனை ஈன்றாள். இப்புதல்வரிருவரும் இளமைப் பருவத் திலே சகல வித்தைகளையும் கற்றுச் சுந்தரமுள்ளவர்களாய் வளர்ந்தார்கள். ஒரு நாள் ஒரு நிமித்திகன் பிரசாபதி அரசன் இருக்கும் கொலுமண்ட பத்தில் வந்து அரசனோடு சில வார்த்தைகள் பேசிக் கொண்டிருந்தான். அப்பொழுது அவன் அரசனை நோக்கி “அரசே! விஞ்சையருலகத்தில் நின்றும் ஒரு யானை வந்து நுமது இளையமகன் திவிட்டனை வெண்மாலை சூட்டி அழைத்துக் கொண்டு செல்ல ஒரு கனாக் கண்டேன். அதின் பலன் விஞ்சையராசனொருவன் இங்கே வந்து தன் மகளை நின் இளைய குமாரன் திவிட்டனுக்கு மணஞ் செய்து கொடுத்துச் செல்வான் என்பதேயாம். அதற்கு அடையாளம் இன்று முதல் ஏழு நாளுள் ஒரு விஞ்சையன் நின் புட்பமாகாண்டம் என்னுஞ்சோலையில் ஒரு திருமுகங் கொண்டிறங் குவான். அதையும் காணுதி.” என நவின்றான். அது கேட்ட அரசன் துரு மகாந்தன் என்று பெயர் பெற்ற ஒரு வீரனை அழைத்து முற்கூறிய காவிலே விஞ்சையனுடைய வரவைக் காணும் பொருட்டு அவனைக் காவல் வைத்தான். இஃதிவ்வாறாக விஞ்சையருலகில் தென் திசைக் கண்ணுள்ள இரதநூபுரச் சக்கரவாள மென்னும் நகரைச் சுவனசடி என்னும் அரசன் அரசாண்டான். அவனுக்கு மனைவியர் பலர். அவருள் பட்டத்துத் தேவி யாகிய வாயுவேகை என்பவள் வயிற்றிலே அருக்க கீர்த்தி என்றொரு திருக் குமாரனும், அவனுக் கிளையளாய்ச் சுயம்பிரபை என்னும் புதல்வியும் உதித்தனர். சுயம்பிரபைக்கு மணஞ் செய்யும் பருவம் வந்தது. தந்தையாகிய சுவனசடி அமைச்சரோடு ஆலோசித்தான். அவர்கள் ஒருவர் கூறியபடி மற்றவர் கூறாது மாறுபட்டனர். ஆகவே அரசன் அவ்வாலோசனையை ஒழித்துச் சதவிந்து என்னும் நிமித்திகனது இடத்தை அடைந்தான். அந்நிமிக்திகனும் அரசன் வரவை நிமித்தத்தாலுணர்ந்து “நின் புதல்விக்கு மணவாளன் நிலவுலகத்திறைவன் பிரசாபதியின் இளைய குமாரனாகும். அவன் ஒரு திங்களுக்குள் ஒரு சிங்கத்தையும் வதைப்பான் காண்பாயாக,” என்று நவின்றான். அது கேட்ட சுவனசடி ஒரு திருமுகம் வரைந்து மருசி என்னும் வித்தியாதரன் கையிற் கொடுத்தான். கொடுத்து இதனைப் போதன நகர்க்கு இறைவற்குக் கொடுத்து நன்முகம் பெற்று வருதி என உரைத்து அனுப்பினான். அவ்விஞ்சையன் அவ்வாறே புறப்பட்டுப் போதனமா நகரி லுள்ள புட்பமாகாண்டம் எனும் நந்தவனத்தில் இறங்கினான். அப்பொழுது இவன் வரவைக் காணும்படி காத்திருந்த துருமகாந்தன் கண்டு உபசரித்து அவ்விடத்திலுள்ளதோர் பாறைமீது அவனை இருக்கச் செய்து, அவன் வரவை அரசனுக்குணர்த்தினான். பிரசாபதி அநேக வரிசைகளோடு தன் புதல்வரையும் யானைமேல் ஏற்றி அவனை எதிர்கொள்ளுமாறனுப்பினான். அவர்கள் வரவைக் கண்ட மருசி எழுந்து கை குவித்து மரியாதை செய்தான். இராச குமாரரும் அவனுக்கு உபசாரஞ் செய்து அவனை ஊர்தி மேலேற்றிக் கொண்டு தந்தையிடம் வந்தார்கள்; வந்த பொழுது பிரசாபதி கண்டு உபசரித்து அவனுக்கு ஆசனங் கொடுத்து அமர வைத்தான். சில நாழிகை சென்ற பின் மருசி எழுந்து நின்று சுவனசடியரசன் கொடுத்தத் திருமுகத்தை அரசன் முன் நீட்டினான். அரசன் உத்தரவினால் ஒருவன் அதை வாங்கி விரித்து, “இரதநூபுரத் திறைவன் போதநகர் இறை வருக்கு எழுதிக் கொள்வது, எனது புதல்வி சுயம்பிரபைக்கு நின் இளைய குமாரன் திவிட்டனே மணவாளன் என நிமித்திகர் கூறுதலினால் நீர் இதற்கு உடன்பாடு சொல்லி யனுப்புக,” என்று வாசித்தான். அது கேட்ட அரசன் அதிக வியப்படைந்து பிரமித்துச் சற்று நேரம் ஒன்றும் புகலாதிருந்தான். அப்பொழுது இவன் வாளாவிருத்தலைக் கண்ட விஞ்சையன், தன் அரசனோலையை மதியாதிருந்தானென்று நினைத்துக் கோபமடைந்தான். அது கண்ட பிரசாபதி அவனை நோக்கி, ‘நான் மனிதன், நீங்கள் விஞ்சையர். ஆதலால் இம்மணம் பொருத்தமுடையதா என்று சந்தேகித்தும், உங்கள் புதல்வியை என் புதல்வன் மணஞ் செய்ய இருந்த புண்ணியம் என்னையோ என்று பிரமித்தும் இருந்ததன்றி உமதரசனுடைய திருமுகத்தை மதியாதிருந் தேனல்லன், “ என உண்மையைக் கூறினான். மருசி மகிழ்ந்து விஞ்சையருக்கும் மனிதருக்கும் தொன்று தொட்டுச் சம்பந்த முண்டென்று பல காரணங்காட்டி உரைத்தான். பிரசாபதி மன மகிழ்ந்து உடன் பட்டுப் பல உபசார வார்த்தைகள் சொல்லியனுப்பினான். மருசியும் விஞ்சையருலகடைந்து அரசனைக் கண்டு திருமணத் துக்குப் பிரசாபதி அரசன் உடன்பட்டமையைக் கூறினான். அதனைக் கேட்ட சுவனசடி மகிழ்ந்து, “நிமித்திகனுரைத்த வார்த்தை முழுதுமுண்மை; இன்னும் அந் நிமித்திகன் அவ்விராசகுமாரன் ஒரு திங்களுள் ஒரு சிங்க வதை செய்வானென்று கூறினன்; அதனையு மறிவோம்,” எனக் கருதினான்; கருதி ஒரு விஞ்சையனை யழைத்து “ நீ போதனமாநகரிற் சென்று ஒரு திங்கள் வரையுமிருந்து அங்கே நிகழும் நிகழ்ச்சிகளை எல்லாம் அறிந்து வருதி,” எனக் கூறி அனுப்பினான். விஞ்சையருலகம் முழுவதையுமரசாண்டு, சுவனசடி அரசனிடத்தி லும் கப்பம் வாங்கும் ஏகசக்கிராதிபதியாகிய அச்சுவகண்டனென்னும் ஓர் அரசனிருந்தான். ஒரு நாள் சதவிந்து என்னும் நிமித்திகன், அச்சுவகண்ட னையடைந்து அளவளாவிக் கொண்டிருந்தான். அப்பொழுது அவன் அரசனை நோக்கி “உலகங்களெல்லாவற்றையும் பொது நீக்கி அரசாளு கின்ற உமக்குப் பூமியிலுறைகின்றவனான ஒரு மனிதன் பகைவனாக இருக்கின்றான்; அவன் போதன நகரத்து இறைவனது புதல்வன் திவிட்டன் என்பவனென்று எனக்கு ஒரு நிமித்த பலனுண்டு,” என்றுரைத்தான். அது கேட்ட அச்சுவகண்டன் “என்னை வெல்பவன் ஓர் எளியனான மனிதன் தானா?” என்று நகைத்துச் சீறி “யான் இதனை ஒரு சிறிதும் பொருளாகக் கருதேன். ஆயினும் நிமித்திகராகிய நீர் இப்படிச் சொல்லுதலால் சிறிதாலோ சித்தலும் வேண்டும்,” எனக்கூறி மந்திரிமாரை அழைத்து வினவினான். மந்திரிமாருள் ஒருவனாகிய அரிமஞ்சு என்பவன் வணங்கி “அரசே! நிமித்திகன் கூறினும் யாம் அவனை நேரே பகையெனக் கண்டல்லது அதற்கேற்ற முயற்சியொன்றும் செய்யலாகாது. ஆதலால் பிரசாபதி அரசனிடம் திறை தரும்படி சிலரை அனுப்புவோம்; தராதொழிந்தால் அவன் சத்துரு என்று அறியலாம்” என்று உரைத்தான். அரசன் அவ்வாறே திறை வாங்கும்படி சிலரை அனுப்பினான். அவர்களும் போதன நகரத்து இறைவனைக் கண்டு, அச்சுவகண்டன் கொடுத்த ஓலையைக் காட்டினர். அதனை வாங்கி ஒருவன் வாசித்தபோது செவிக் கொண்டிருந்த பிரசாபதி அரசன் அச்சமுற்றான்; அச்சுவகண்டன் கேட்டபடி ஆயிரம் பொன்னும், ஆயிரம் மகளிரும், முத்தும் பவளங்களும், யானைத் தந்தமுமாகிய வற்றைத் திறையாகக் கொடுத்தான். விஞ்சையர்கள் அவற்றை விமானத்தில் ஏற்றிக் கொண்டு செல்ல முயன்றனர். அப்போது திவிட்டன் கண்டு, இஃது என்ன காரிய மென்று வினாவி யறிந்து சீறித் திறைப்பொருளைத் தடுத்து அவர்களை ஓட்டித் துரத்தினான் பயந்து சென்ற விஞ்சையர், மந்திரியாகிய அரிமஞ்சுவைக்கண்டு நடந்தவற்றைக் கூறினர். அதனைக் கேட்ட அமைச்சன் இதனை அரசன் அறிந்தானாகில் அதிக சினங்கொள்ளு வானாதலின் அவற்குரையாதிருங்களென்று சொன்னான். அவன், இனி இத் திவிட்ட குமாரனை மாயத்தாற் கொல்லுவோமென்று கருதி அரிகேது என்னும் வித்தியாதரனை யழைத்து “நீ ஒரு மாயச் சீயமாய்ச் சென்று திவிட்டனைக் கொன்று வருதி” எனப் போக்கினான்; முன்னே திறைக்குச் சென்ற விஞ்சையர்களை அழைத்து, “ எங்கள் அரசன், நீ திறை தடுத் தமையை அறிந்து ‘தன் நாட்டையழிக்கும் ஒரு சிங்கத்தைக் கொல்லும் ஆற்றலற்றவன் தானா என்னை அவமதித்தான். இஃது அவன் குழந்தைமதி’ என்று சிரித்தான், என்று திவிட்டனிடம் புகலுமின்” எனக் கூறி விடுத்தான். அவர்களும் அவ்வாறே வந்தறிவித்தனர். அதனைக் கேட்ட திவிட்ட குமாரன் கோபங்கொண்டு தமையனுடன் பாதசாரியாகச் சிங்கத்தைத் தேடிச் சென்றான். அப்பொழுது மாயச்சீய வடிவுகொண்ட வித்தியாதரன் இவர்கள் கண்காணும்படி ஓடி வேறொரு உண்மைச் சிங்கம் இருக்கும் குகையுட்சென்று மறைந்தான்; துரத்திச் சென்ற திவிட்டகுமாரன் அக் குகையின் வாயிலே நின்றுரப்பினான். அங்கிருந்த உண்மைச் சீயம் அரச குமாரனைக் கொல்லும்படி கர்ச்சித்துக் கொண்டு புறப்பட்டது. திவிட்டன் அதன் பிடரியிற்றாவி அதன் வாயைக் கிழித்து இரண்டு பிளவாயெறிந்து தமையனோடுங் கூடித் தன்னகரடைந்தான். இந் நிகழ்ச்சிகளை, முன்னனுப்பிய ஒற்றனாலுணர்ந்த விஞ்சைய ராசன் களிகூர்ந்தான். தன்மகளைத் திவிட்ட குமாரனுக்கு உடனே மணஞ் செய்யக் கருதித் தன் நகருக்குக் காவல் வைத்து விமானம் ஒன்று அழைப் பித்து தன் மகளை ஏற்றிக் கொண்டு மகன் அருக்ககீர்த்தி, தம்பி சுவணரதன் முதலானவர்களோடு போத நகரையடைந்து அங்குள்ள திரு நிலையகம் என்னும் பூங்காவிற் றங்கினான். அப்பொழுது மருசி, பிரசாபதி அரசனிடம் சுவனசடி தன் மகளிர் மணப்பொருட்டாக வந்தமையை அறிவித்தான். அது கேட்ட அரசனும் களி கூர்ந்து நகரத்தை அலங்கரித்துத் தன் புதல்வரோடும் தம்பி சீபாதனோடும் யானை மேலேறிச் சென்று விஞ்சையரசனைக் கண்டு வணங்கினான். அவன் இவனைத் தழுவ ஒருவர்க்கொருவர் முகமன் வார்த்தை பேசிக் கொண்டாடினர். பிரசாபதி அவர்களை அழைத்துக் கொண்டு தன் அரண்மனையடைந்து அவர்களுக்கு வேண்டுஞ் சிறப் பளித்துச் சுயம்பிரபை முதலிய விஞ்சய மகளிரைத் தன் தேவியினிடத் தனுப்பி உபசரித்தான். மற்றை நாள் மணமுரசறைவித்து மைந்தற்கும் மகளுக் கும் மணக்கோலஞ் செய்து மங்கல வாத்தியம் முழங்கச் சுபமுகூர்த்தத்தில் திருமங்கலியம் தரித்தல் முதலிய கிரியைகளுடன் திருமணம் நடத்தி, அருக்ககீர்த்திக்கு சோதிமாலையை மணஞ் செய்து கொடுத்தான். அப்பொழுது விஞ்சைய ருலகினின்றும் ஒருவன் வந்து சுவனசடி அரசனை வணங்கி “ஐயனே! தேவரீர் இங்கே வந்து புதல்விக்கு மண முடித்ததும், திவிட்ட குமாரன் சீயவதை செய்ததுமாகிய எல்லவாற்றையும் அரிகேது முதலியோராலறிந்த அச்சுவகண்டராசன் அதிக சினங்கொண்டு தங்களோடு சமரியற்றக் கருதி, யுத்தசன்னத்தனாய்ச் சேனைகளோடு வரு கின்றான்” என்று சொன்னான். அது கேட்ட இரதநூபுரத்தரசன் மைந்தராகிய அருக்ககீர்த்தி, பிரசாபதி, விசயன், திவிட்டன் முதலியோரை அழைத்து இக் காரியங்களைக் கூறினான். அவர்களும் கோபாதீததராய்ச் சமர்க்கோலங் கொண்டார்கள். திவிட்ட குமாரனை மாமனாகிய சுவனசடி அழைத்து ஒரு மாயா மந்திரோபதேசஞ் செய்தான். அப்போது விஞ்சைய ருலகினின்று தூதரிருவர் இவர் முன் அடைந்து “யாம் அச்சுவக்கண்டனுடைய தூதர்; அவர் கூறிய சில வார்த்தைகளைச் சொல்ல வந்தோம். நீங்கள் உயிர் வாழ விரும்பினால் சுயம்பிரபையைத் தாருங்கள்; அல்லது யுத்தத்தில் ஆவி விடுங்கள்; இவ்விரண்டில் யாது செய்யக் கருதுகின்றீர்கள்,” என்று வினாவி நின்றனர். அதுகேட்ட அரசர் கோபங்கொண்டு உமதரசன் இங்கே வந்து இவனடிகளை வணங்கினாலுயிர் பிழைப்பான். தனக் குயிர்வேண்டுமோ மானம் வேண்டுமோ எனக் கேட்டு வருவீராக என்றுரைத்தனர். தூதர் அதை அச்சுவனுக்குரைத்தனர். அது செவிமடுத்த விஞ்சையர் வேந்தன் கோபங் கொண்டு சீறிச் சேனைகளோடு வந்தான். பிரசாபதியும் தன் சேனைகளோடு எதிர்த்தான். இருதிறப்படைகளும் எதிர்த்துப் போர் செய்யும்போது அச்சுவ கண்ட னது படை தோற்றது. அதனைத் தூதர் விரைந்து சென்று அச்சுவ கண்டனுக் குரைத்தனர். அவன் அதிக கோபங் கொண்டு உலகங்களையும் உயிர்களை யும் வாரிக் கடலுளமிழ்த்தவல்ல சண்ட வேகை யென்னும் மாயாதேவதையை ஏவி விட்டான். அது கண்டவர்கள் அஞ்சத்தக்க உக்கிர வடிவோடு பேய்கள் புடைசூழ வந்தது. அது கண்ட பிரசாபதியுடைய சேனைகளெல்லாம் புறந்தந்தோடின. அப்பொழுது திவிட்ட குமாரன் தன் மைத்துனனாகிய அருக்ககீர்த் தியை நோக்கி இங்கே வருகின்ற இவ் வடிவம் யாதென்று வினாவ, அருக்க கீர்த்தி “மாற்றவனால் விடுக்கப்பட்ட சண்டவேகை யென்னும் இம்மாயா தேவதை பகைவருயிருண்டாலன்றித் திரும்பாது,” என்று கூறினான். அது கேட்ட திவிட்ட குமாரன் சினங் கொண்டு ஆகாயமளவு முயர்ந்ததோர் பெரிய வடிவங்கொண்டான். அப்பொழுது பாஞ்ச சன்னிய மென்னுஞ் சங்கும், சாரங்க வில்லும் கையில் வந்து சேர்ந்தன. திவிட்டன் சங்கை வாயில் வைத்தூதி ஒருதரம் சத்தம் செய்தான். உரப்பவே மாயாதேவதை அச்முற்றுத் தன் சுயவடிவடைந்து அவ்விடம் விட்டோடியது. அதுகண்ட அச்சுவ கண்டன் ஒரு யானைமேலேறிச் சமர்செய்யவந்தான். திவிட்ட குமாரனுக்கு வாகனமாகக் கருடனும் வந்து சேர்ந்தான். அக் கருடனை வலங்கொண்டு அவன் மேலேறி வில் வளைத்துத் திவிட்ட குமாரன் போர் செய்ய வருதல் கண்டு அச்சுவகண்டனும் எதிர்த்துப் பலவகை ஆயுதப் போர் இயற்றினான். முடிவில் தனது ஆஞ்ஞாசக்கரத்தை ஏவினான். அது திவிட்ட குமார னிடத்து வந்து வணங்கி அவனேவலால் திரும்பிச் சென்று அச்சுவகண்ட னது சிரசைத் துணித்தது. அப்போது இறவாதொழிந்த அவன் சேனைகளெல் லாம் புறங்காட்டி ஓடின. அச்சுவகண்டன் உயிர் துறந்தமையை ஒற்றரா லறிந்த அவன் தேவிமார் பலரும் போர்க்களத்தில் வந்து அவன்மேல் வீழ்ந்து பலவாறு புலம்பித் திரும்பித் தம் விஞ்சையருலகடைந்து திருமங் கலியங்களைக் களைந்து கற்பு நெறியிற்றவறாது விதவை விரதமனுட்டித் திருந்தார்கள். பிரசாபதியரசன் தன் புதல்வருடைய போர்வலி கண்டு பலவாறு புகழ்ந்து ஆனந்த பரவசத்தனாய் மந்திரிமாரை அழைத்துச் சுபமுகூர்த்தத்தில் பட்டாபிஷேகஞ் செய்து அரசுரிமையை அவர்களிடம் ஒப்பித்தான். இராச குமாரர்களிருவரும் பிதாவின் எண்ணப்படி முடிதரித்த போது, புலவர்கள், பகைவரை வென்று அரசாளும் வீரர்கள் ஒரு மலையையும் தனியே பிடுங்கல் வேண்டும் என்று சாத்திரத்திற் சொல்லப்பட்டிருக்கின்ற தென்றனர். இவ்வார்த்தையைக் கேட்ட திவிட்ட குமாரன் போய்க் கோடிக் குன்றம் என்னும் ஒரு மலையை வேரோடு பறித்து ஏந்தினான். அதுகண்டு யாவரும் அதிசயித்துத் துதித்தனர். பின் திவிட்ட குமாரன் தன் மாமனாகிய சுவனசடியை விஞ்சையருலகம் முழுவதையும் அரசாளும்படி ஏவிச் சுயம் பிரபையோடு இனிது வாழ்ந்து வந்தான். பட்டத்துத் தேவியாகிய சுயம்பிரபை கருப்பவதியாய்ச் சுபமுகூர்த்தத்தில் அமுத சேனனென்னுமோர் புத்திரனைப் பெற்றாள். அந் நாளிலே அருக்க கீர்த்திக்கும் சோதிமாலை என்பவளிடம் சுதாரை என்னும் ஒரு புத்திரி பிறந்தாள். பின்னும் அருக்ககீர்த்தி ஒரு புதல்வனைப் பெற்று விஞ்சையருலகை அரசாண்டிருந்தான். இப்படி இருக்கும் நாளில் திவிட்ட குமாரனுக்கும் பின்சோதி மாலை என்னும் ஒரு புத்திரி பிறந்தாள். மகள் வளர்ந்து மணப்பருவ மடைந்தது கண்ட அரசன் எங்கும் சுயம்வர ஓலை போக்கினான். மகளை அழைப் பித்துத் தோழிகளால் சுயம்வரத்துக்கு வந்த அரசர் பலரையும் காட்டி, விஞ்சையராசன் புதல்வனையும் காட்ட அவள் அருக்ககீர்த்தியின் மகனுக்கு மாலை சூட்டினாள். பின் அருக்ககீர்த்தியும் சுயம்வரம் நாட்டினான். விஞ்சையகுமாரியும் மைத்துனனான அமுதசேனனுக்கு மாலை சூட்டினாள். அருக்ககீர்த்தி, மகளுக்குச் சுபமுகூர்த்தத்தில் அக்கினி காரியத்துடன் திருமங்கலியதாரணஞ் செய்வித்துப் பின்பு தன் மகனையும் மருமகளையும் அழைத்துக் கொண்டு விஞ்சைய ருலகடைந்து அரசாண்டு வாழ்ந்தான். திவிட்ட குமாரனும், அமுதசேனனையும் மருமகளையும் தன் நகரத்தி லிருத்திச் சகல சிறப்போடு மரசாண்டிருந்தான். இப்படி வாழ்ந்திருக்கும் நாளில் பிரசாபதி யரசன் தன் பௌத்திரர் களுடைய சீராட்டைப் பார்த்து மன மகிழ்ந்து நமக்கு இச் சிறப்புகள் எல்லாம் முன் செய்த நல்வினை தந்தன்றோ! இன்னும் யாம் நல்வினை செய்தால் இந்தக் குலம் நன்றாய் வளர்ந்தோங்கு மெனக் கருதி அமைச்சரோடாராய்ந் தான். அவர்கள் துறவறமே எல்லாவறங்களிலும் சிறந்ததென்று கூற, அவன் துறவு செய்யத் துணிந்து அருகக்கடவுளுக்குத் திருவிழாச் சிறப்பெடுக்கக் கட்டளையிட்டு மந்திரிமாரோடும், புத்திரரோடும், விழாவுக்கேற்ற பொரு ளோடும் அருகன் கோவிலை அடைந்தனன். அப்பொழுது அருகக் கடவுள் காட்சி கொடுத்தருளத் தரிசனஞ்செய்து அறப் பள்ளியை வலம் வந்து துதித்து வேறொரு மண்டப மடைந்து அவ் விடத்தொரு தபோத னரைக் கண்டு அவரருகே அமர்ந்தான். அப்பொழுது பிரசாபதியுடைய மந்திரிமார் அரசற்கு நல்லறிவுரைக்க வேண்டுமென வேண்டுகோள் செய்தனர். அவர் அரசனை நோக்கித் தேவகதி, நரககதி, மனிதகதி, விலங்கு கதி எனும் நாற்கதிகளையும் அவற்றிற் பிறந்தனுபவிக்கும் துன்பக் கூறுபாட்டையும் நன்கறி வுறுத்தினர். “பிறந்தனர் பிறந்து சாலப் பெருகினர் பெருகிப்பின்னை யிறந்தன ரென்ப தல்லா லியாவரு மின்றுகாறு மறைந்துயிர் வாழாநின்றா ரில்லையால் வாழி நெஞ்சே சிறந்தது தவத்தின்மிக்க தின்மையே சிந்தி கண்டாய்” இன்னும், “ஆனை துரப்ப யரவுறை யாழ்குழி நாநவிர் பற்றுபு நாலுமொருவனோர் தேனி னழிதுளி நக்கும் திறத்தது மானு டரின்ப மதித்தனை கொண்ணீ” உலகில் இன்பமென யாம் மகிழ்வனவெல்லாம் ஆனையாற்றுரத்தப் பட்டுப் பாம்புறையும் ஆழ்ந்த பாழ்ங்கிணற்றுட் குதித்த ஒருவன் அங்கு நீண்டு வளர்ந்த புல்லைப் பற்றித் தூங்கும்போது, மேலே மரக்கிளையிற் றொங்கும் தேன் கூட்டினின்றும் ஒழுகி நாக்கில் விழுந்த ஒரு துளி தேனை நக்கி ஆனந்தித்த தன்மையை உடையன என்று விளக்கினர். அதனைக் கேட்டு வைராக்கியம் பிறந்த அரசன் உலக இச்சைகளெல்லாம் துன்பத்துக் கேது; இன்பத்துக் குரியது முத்தி ஒன்றுமே எனச் சொல்லித் துறவு பூண்டான். அதுகண்ட மந்திரிமாரும் அரசனைப் பிரியலாற்றாது துறவு பூண்டனர். “தொகைமல ரலங்கல் சூடித் தூநறுஞ் சுண்ண மப்பிப் புகைநனி கமழ வூட்டிப் புறஞ் செயப்பட்ட மேனி சிகையினோர் சிறுமுட் டீண்டிச் சிதைத் தழுக்கொழுகு மாயி னகைபெரி துடைத்து நாணொடு மிதனை நாமகிழ்த நெஞ்சே” “ஒழுகிய நடையு நீரு முதலன கையிகப்ப வூறு மழுகலிவ் வள்ளல் யாக்கை யகம்புற மாயிற்றாயிற் கழுகொடு கவரும் காக்கை தடிகொண்டு காத்து மழகுள சுழலுமன்னோ வாயிரச்சாதி மாதோ” “ஆயினக் காலன் பாணியாம் பிறவரச செல்வ மேயினங் களித்தியாங்கள் விழைந்துயிர்வாழும் வாழ்க்கை பாயிய வெழுந்த வேங்கை பாரிக்குமளவிற் பைம்புன் மாயிருஞ் சுருளை மேயுமான் மறிபோலு மன்றோ.” என்று முனிவர் யாக்கை நிலையாமையையும் உலக இன்பங்களின் இயல்புகளையும் எடுத்துப் போதித்தனர். பிரசாபதி யரசனுடைய புதல்வரும் பிதா தம்மைவிட்டுப் பிரிந்ததற்காக மனமிரங்கி, முத்திவழி தேடினதற்காக மகிழ்ந்து, தங்கள் நகரடைந்து அரசாண் டிருந்தார்கள். அரசனும் அனேக நாள் கடவுள் வழிபாடு செய்து முத்தியடைந்தான். 12. தமிழ் உரை நடை வரலாறு ஆதியில் மக்கள் தமது கருத்துக்களை பிறருக்குச் சைகை உடல் நிலை, பார்வை முதலியவற்றால் உணர்த்தினர். பின்பு அவர்கள் சூழலிலுள்ள பறவை, விலங்குகளினொலிகள், இடி முழக்கம் முதலிய இயற்கை நிகழ்ச்சிகள் போன்றவற்றின் ஓசைகள் என்பவற்றை உற்றுக் கேட்டு அவ் வோசைகளையே அவ்விலங்குகள் பறவைகளையும், இயற்கை நிகழ்ச்சி களையும் குறிக்க வழங்கினர். ஒருவனிடத்துப் பயம், வீரம், கோபம், மகிழ்ச்சி, சோகம் போன்ற உணர்ச்சிகள் தோன்றுங் காலங்களில் இயல்பாகச் சில ஒலிகள் எழுவது இயல்பு. இவ்வகை ஒலிகளும் ஆதியில் கருத்தை உணர்த்தப்பயன்பட்டன. நாளடைவில் மக்கள் தாம் கண்டறிந்த பொருள்களையும் செய்யும் செயல் களையும் குறிக்க ஒவ்வோர் குறியீட்டைப் பயன்படுத்தலாயினர். இக் குறியீடுகள் சொற்கள் எனப்படும். இச் சொற்கள் தலைமுறை தலைமுறையாக வந்தன. இவற்றோடு தலைமுறைகள்தோறும் புதிய சொற்களும் வந்து சேர்ந்தன. முன்னோர் தம் கருத்துக்களை வெளியிட எம் முறையில் அச் சொற்களைப் பயன்படுத்தினார்களோ அவ்வாறு பயன்படுத்தலே மொழியின் திருந்திய நடையாகும். இவ்வாறமைவுற்ற மொழி, வழக்கும் செய்யுளுமென இருதிறப்படும். மக்கள் ஒருவரோடு ஒருவர் உரை ஆடுங்கால் ஆளும் நடை, வழக்கெனப் படும். வழக்கெனினும் வசனநடை, உரைநடை எனினும் ஒக்கும். உரை வழக்கிலுள்ள நடையே ஓசை பயப்ப அளந்து செய்யப்படுத லின் செய்யுள் எனப்படும். செய்யுள் என்பதற்குச் செய்யப்பட்ட தென்பது பொருள். தூக்கு என்பது செய்யுளுக்கு மற்றொரு பெயர். தூக்கு என்பது அளவு என்னும் பொருட்டு. ஆகவே, தூக்கு, செய்யுள் என்னும் சொற்கள் ஒரே பொருளனவாதல் காண்க. பா என்பதும் செய்யுளை உணர்த்தும். ஓசை சம்பந்தமாகச் செய்யுள் ‘பா’ வென்று பெயரிடப்பட்டுள்ளது. பா என்பது சேட்புலத்திருந்த காலத்தும் ஒருவன் எழுத்துஞ் சொல்லுந் தெரியாமற் பாடமோதுங்கால், அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுளென்று உணர்த்துதற் கேதுவாகிப் பரந்து பட்டுச் செல்வதோரோசை,” எனப் பேராசிரியர் பா வென்பதற்கு பொருள் விரித் துரைத்தார். ஒரு பொருட்குரிய பல தன்மைகளுள் ஒவ்வொன்றையும் அடிப் படையாகக் கொண்டு தோன்றிய ஒரு பொருட் பல பெயர்களை நாம் நிகண்டு நூல்களிற் கண்டறியலாம். முற்கால மக்கள், உரையாடும் போதும் எழுதும் போதும் ஆண்ட நடைகள் வெவ்வேறு வகையின. பேச்சு நடை எப்பொழுதும் வசன நடை யாக அமைவுற்றது. எழுதுங்கால் எப்பொழுதும் செய்யுள் நடையே கை யாளப்பட்டது. இதற்குக் காரணம் பலவாகலாம். செய்யுள் நடை மிகவுஞ் சுருக்கமானது. வசன நடையில் அதிகம் கூறவேண்டியவற்றைச் செய்யுள் முறையிற் சில வரிகளிற் சுருக்கி விடலாம். ஓலைகளில் எழுத்தாணியால் எழுத வேண்டியிருந்த காலத்தில் இச்சுருக்கு முறையை மக்கள் விரும்புதல் இயல்பாகும். அச்சுச் சாதனமில்லாத முற்காலத்தில் நூல்கள் எழுதற்படற்கும் படி எடுத்தற்கும் செய்யுள் முறை அனுகூலமளித்தது. இக் காரணங்களினாலேயே முற்கால நூல்கள் எல்லாம் செய்யுள் வடிவிற் காணப்படுகின்றன. காலத்துக்கு காலம் மக்கள் ஆளும் சொற்கள் மாறுபடுகின்றன. ஒரு காலத்தில் பெருவழக்கிலிருந்த சொற்கள் பல, மறைந்து போகப் புதிய சொற்கள் வழக்கில் வந்த காலத்தில் எழுதப்படும் நூல்களில் பழைய சொற் களின் பிரயோகம் பெரும்பாலும் நின்று விடுகின்றது. ஆகவே பிற்காலத்த வர்களுக்கு முற்காலத்தில் எழுதப்பட்ட நூல்களைப் பயின்று பொருள் விளங்குவது கடுமையாகின்றது. இக் காரணத்தால் முற்கால நூல்களுக்கு வழக்கு (வசன) முறையில் பொருள் எழுதப்படுகின்றது. இவ்வாறு எழுதப் படும் பொருட் பகுதிகள் உரை என வழங்கும். உரை எழுதும் இம் முறையி லிருந்தே பிற்காலத்தில் வசன நூல்கள் எழுதப்படலாயின. உரை நடைக்கு அடி வரையறை முதலியன இல்லை. முற்கால உரை யாசிரியர்களின் உரை நடைகளின் பல பகுதிகள் செய்யுட்கள் போலவே செல்கின்றன. அக்கால மக்களின் வழக்கு எனப்பட்ட பேச்சு நடை, அவ்வாறு இருந்ததெனக் கூறுதல் அமையாது. அவ் வுரைகளைப் பார்த்து அக்கால உரைநடை எவ்வகையினதென ஒருவாறு சிந்தனை செய்து அறிந்து கொள்ளுதல் கூடும். தொல்காப்பியம் என்னும் பழைய தமிழ் இலக்கண நூல் கி.மு. 350க்குப் பிற்பட்டதன்று எனக் கருதப்படுகின்றது. அந்நூல் உரை நூல்களைப் பற்றி சிறிது கூறுகின்றது. (சூ. 485) அவை, பாட்டுகளின் இடையிடையே உரை நடையினியன்ற பகுதிகள் வைத்துச் செய்யப்படுவன: சூத்திரத்துக்குப் பொருள் எழுதுவன போல்வன; ஒழிந்துபோன பாடல்களுக்குப் பொருள் எழுதுதல் போல்வன; செவி வழக்கில் வரும் கற்பனைக் கதைகள் போல்வன; பொய் எனப்படாது உலகிய லோடியன்று நகை விளைக்கக் கூடிய கதைகள் போல்வன. இவ்வகையான பழைய நூல்கள் ஒன்றேனும் இன்று காணப்பட வில்லை. பற்பல காரணச் செறிவால் மாண்ட தமிழ் நூல்களோடு இவையுங் கூட மடிந்தனவாகலாம். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இளங்கோவடிகள் என்னும் அரசப் புலவர் பாடிய சிலப்பதிகாரத்தில் உரைப்பாட்டுகள் சில காணப்படுகின்றன. அவை அடிவரையின்றிப் பாட்டு நடையில் அமைந்துள்ளன. உதாரணம்: “அதுகேட்டுக் கடல் சூழிலங்கைக் கயவாகுவென்பான் நங்கைக்கு நாட்பலி பீடிகை முந்துறுத்தாங்கு அரந்தை கெடுத்து வரந்தருமிவளென ஆடித்திங்களகவயினாங் கோர் பாடி விழாக்கோல பன்முறை யெடுப்ப மழை வீற்றிருந்து வளம்பல பெருகிப் பிழையா விளையுநா டாயிற்று.” இந் நடை பெரும்பாலும் ஆசிரியத்தை ஒத்திருக்கின்றது. கி.பி. முதலாம் நூற்றாண்டு வரையில் ஆக்கப்பட்ட இறையனாரகப் பொருளுக்கு, மதுரை ஆசிரியர் நக்கீரனாரும் பிற சங்கப்புலவர் சிலரும் உரை கண்டனர். அவ்வுரைகள் பலவற்றுள்ளும் நக்கீரனார் கண்ட உரையே சிறந்ததெனக் கொள்ளப்பட்டது. அவ்வுரை எழுதப்படாது தலைமுறையாகச் செவி வழக்கில் வந்து, கி.பி. 7-ம் நூற்றாண்டு வரையில் நீலகண்டனார் என்னும் ஆசிரியர் ஒருவரால் எழுதி வைக்கப்பட்டது. இவ்வுரையிற் சில பகுதிகள் செய்யுள் போலவே அமைந்துள்ளன. உதாரணம்: “யாங்கனம் நிற்குமோ? எனின், சந்தனமும் சண்பகமும் தேமாவும், தீம் பலவும் ஆசினியும் அசோகமும் கோங்கும் வேங்கையும், குரவமும் விரிந்து, நாகமும், திலகமும் நறவும், நந்தியும், மல்லிகையும், மௌவலொமும் மணங்கமழ்ந்து, பாதிரியும் பாவை ஞாழலும் பைங்கொன்றையோடு பிணியவிழ்ந்து பொரிப்புன்கும் புன்னாகமும், முருக்கொடு முகைசிறந்து, வண்டறைந்து, தேனார்ந்து, வரிக்குயில்கள் இசைபாட, தண்தென்றல் இடைவிராய்த் தனியவரை முனிவு செய்யும் பொழிலது நடுவண், ஒரு மாணிக்கச் செய்குன்றின் மேல் விசும்பு துடைத்துப் பசும்பொன் பூத்து வண்டு துவைப்பத் தண் தேன் துளிப்பதோர் வெறியுறு நறுமலர் வேங்கை கண்டாள்.” ஒன்பதாம் நூற்றாண்டில் பெருந்தேவனார் என்னும் புலவர் செய்த பாரத வெண்பாவின் இடை இடையே வசன பாகங்கள் காணப்படுகின்றன. சங்க காலத்தே பெருந்தேவனார் இன்னொருவர் இருந்தார். இவரே ஆதியில் பாரதத்தை வெண்பாவிற் பாடினார். இவரது பாடல்கள் சிதைந்துபோன பிற் காலத்தில் இரண்டாம் பெருந்தேவனார் பின்னோர் பாரத வெண்பாச் செய்தா ரென்றும் முதற்பெருந்தேவனாரின் பாடல்கள் இவர் பாடல்களின் இடை இடையே காணப்படுகின்றன என்றும் கூறுப. இரண்டாம் பெருந்தேவனார் சங்கத் தொகை நூல்கள் பலவற்றுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியிருக் கின்றார். பாரத வெண்பாச் செய்யுட்களையும் அவர் சங்க நூல்களுக்குப் பாடிய கடவுள் வாழ்த்துக்களையும் நோக்குவோருக்குப் பாரத வெண்பாக் களின் இடையிடையே காணப்படும் வசனபாகங்கள் பிற்காலத்து வைணவர் எவராலோ எழுதிச் சேர்க்கப்பட்டன வெனத் தெற்றெனப் புலப்படும். பெருந்தேவனார் பாரத வெண்பாவிலுள்ள உரைநடைக்கு உதாரணம் : “இவ்வகை பேசிய அசரீரியாய ஆதித்ய பகவானும் அந்தர்த்தானஞ் செய்தபின்பு கண்ணனுடைய தியாக சத்தியின் பகானுபாவங்கண்டு தேவசாதிகளும் ஆச்சரியப்பட்டுப் புஷ்பவர்ஷம் பொழிந்தார்.” இந் நடை மணிப்பிரவாளம். மணிப்பிரவாள மென்பது சரிக்குச்சரி சமக்கிருதமுந் தமிழுங் கலந்த நடை. கி.பி. 12-ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 14-ஆம் நூற்றாண்டுக்கு மிடையில் இளம் பூரணர், பேராசிரியர், சேனாவரையர், நச்சினார்க் கினியர், அடியார்க்கு நல்லார், பரிமேலழகர் முதலிய உரையாசிரி யர்கள் விளங்கினர். இவர்களின் உரைநடை மிகத் தெளிவுடையன. இளம் பூரணரின் உரைநடை: “என்றது இளவேனில் முதுவேனில் என்னும் இருவகைப் பருவத்தின் கண்ணும் வரும் நண்பகற் பொழுதுக் காலமாம் என்பதூஉம், ஆண்டு இயங்கும் நெறி நிலமாம் என்பதூஉம் உணர்த்தியவாறு, இளவேனிலாவது, சித்திரைத் திங்களும் வைகாசித் திங்களும். முதுவேனிலாவது ஆனித் திங்களும் ஆடித் திங்களும். நண்பகலாவது பகற் பொழுதின் நடுக்கூறு.” பேராசிரியர் உரைநடை : “அறத்தொடு நிற்றல்; தலைவி தோழிக் குரைத்தல். யாம் முன்பொருநாள் கடற்கரையிடத்தே வண்டல் செய்து விளையாடா நின்றேமாக, அந் நேரத்தொரு தோன்றல் நும் வண்டல் மனைக்கு யாம் விருந்தென்று வந்து நின்றபொழுது நீ பூக்கொய்யச் சிறிது புடைபெயர்ந்தாய். அந்நிலைக்கட் கீழ் காற்று மிகுதலாற் கரைமேலேறுங் கடல், மேல் வந்துற்றது, உற, யான் றோழியோ! தோழியோ! என்று நின்னை விளித்தேன்; அது கண்டிரங்கி அவனருளோடு வந்து தன் கையைத் தந்தான். யானு மயக்கத்தாலே அதனை நின் கையென்று தொட்டேன். அவனும் பிறிதொன்றுஞ் சிந்தியாது, என்னுயிர் கொண்டுதந்து, என்னைக் கரைக்கண் உய்த்துப் போயினான்; அன்று என் நாணினால் நினக்கதனைச் சொல்ல மாட்டிற்றிலேன்,” சேனாவரையரின் உரைநடை : “யானை நூல்வல்லானொருவன் காட்டுப் போவுழி ஓர் யானை அடிச்சுவடுகண்டு இஃதரசுவா வாதற்கேற்ற இலக்கணம் உடைத்து என்றவழி.” நச்சினார்க்கினயர் உரைநடை : “மன்னர் பின்னோரென்ற பன்மையான் முடியுடையோரும், முடியில்லாதோரும், உழுவித்து உண்போரும், உழுதுண்போரு மென்ன மன்னரும் வேளாளரும் பலரென்றார். ‘வேளாண்மாந்தர்க்கு’ ‘வேந்துவிடுதொழில்’ என்னும் மரபியற் சூத்திரங்களான் வேளாளர் இருவகையெரன்ப. அரசரேவுந்திறமாவன பகைவர் மேலும் நாடு காத்தன் மேலும் சந்து செய்வித்தன் மேலும் பொருள் வருவாய் மேலுமாம்.” அடியார்க்கு நல்லார் உரைநடை : “இனி இசைத்தமிழ் நூலாகிய பெருநாரை பெருங்குருகும் பிறவும் தேவவிருடி நாரதன் செய்த பஞ்ச பாரதீய முதலாக உள்ள தொன்னூல்களிறந்தன. நாடகத் தமிழ் நூலாகிய பரதம் அகத்திய முதலாயுள்ள தொன்னூல்களிறந்தன. பின்னும் முறுவல் சயந்தம் குணநூல் செயிற்றிய மென்பவற்றுள்ளும் ஒரு சார் சூத்திரங்கள் நடக்கின்ற அத்துணையல்லது, முதல் நடு இறுதி காணாமையின் அவையும் இறந்தன போலும்.” பரிமேலழகர் உரைநடை: “இந்திரன் முதலிய இறைவர் பதங்களும் அந்தமில் இன்பத் தழிவில் வீடும் நெறியறிந்து எய்துதற்குரிய மாந்தர்க்கு உறுதியென உயர்ந்தோரானெடுக்கப்பட்ட பொருள் நான்கு : அவை அறம், பொருள், இன்பம், வீடென்பன. பரிமேலழகருக்குப் பின் இருந்த உரையாசிரியருள் சிறப்புடையோர் நிரம்பவழகிய தேசிகர் (16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி), மயிலேறும் பெருமாள் பிள்ளை (கி.பி. 1670), இலக்கண விளக்க நூலாசிரியர் வைத்திய நாத தேசிகர் (1680), தமிழ்ப் பிரயோக விளக்க நூலாசிரியர் சுப்பிரமணிய தேசிகர் (கி.பி. 1680), இலக்கணக் கொத்து நூலாசிரியர் சுவாமிநாத தேசிகர் (1680), நன்னூல் உரையாசிரியர் சங்கர நமச்சிவாயப் புலவர் (கி.பி. 1700), சிவஞான முனிவர் (மரணம் கி.பி. 1785), சொக்கப்ப நாவலர் முதலியோராவார். இவர்கள் 18-ஆம் நூற்றாண்டில் இருந்தவர்களாவார்கள். 17ஆம் நூற்றாண்டின் மத்தியில் கிறித்துவமதப்பிரசாரஞ் செய்தற் பொருட்டு இந்திய நாட்டுக்கு வந்த ரொபேட்-டி-நெபிலிபு° என்னும் இதாலியர் தமிழ் கற்று முதல் முதல் தமிழில் வசனநூல் இயற்றினார். இவர் தத்துவபோத சுவாமிகள் என்னும் பெயரால் அறியப்படுவர். இவருக்குப் பின் கொன்°தாந்தி பெ°கி (வீரமா முனிவர்) என்னும் இத்தாலிய கிறி°துவ குரு தமிழிற் சில வசன நூல்கள் செய்தனர். 19ஆம் நூற்றாண்டு தொடக்கம் தமிழில் வசன நூல்கள் எழுதப்பட லாயின. அவ்வாறு நூல் எழுதியவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் விசாகப்பெருமாள் ஐயர், சரவணப்பெருமாள் ஐயர், தாண்டவராய முதலியார், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர், (1823 - 1879), தொழுவூர் வேலாயுத முதலியார், ராவ் பகதூர் சி. வை. தாமோதரம் பிள்ளை (1832-1910) பேராசிரியர் சுந்தரம் பிள்ளை (1853-1897), சபாபதி நாவலர் (1903), வி.ஜி. சூரிய நாராயண சா°திரியார் (1873-1903) மறைமலை அடிகள் முதலியோர். 13. 1குளிர் தூங்கும் குற்றாலம் அருந்தவ முனிவரும் அறிவரும் அமைந்து அறம் வளர்க்கும் மலை, அழகிய குற்றால மலையாம். வானுற ஓங்கிய மலை முடியில் மஞ்சு தவழும் அழகும், வளமார்ந்த பழுமரங்களின் செழுமையும் சவியுறத் தெளிந்த நெடுஞ்சுனையின் நீர்மையும், தெள்ளிய சுனைகளின் வழியே செல்லும் தீம்புனலாறு, வெள்ளிய அருவியாய் வீழும் அழகும், மெல்லிய தென்றல் நல்மணங் கமழ்ந்து, உலாவும் இனிமையும் மக்கள் மனத்தை மகிழ்விப்பனவாகும். இத்தகைய மலையில் கோங்கும் வேங்கையும் ஓங்கி வளரும்; குரவமும் குருந்தமும் நறுமணங்கமழும். தேமாவும், தீம்பலாவும் தேன் சொரிந்து திகழும் ஓங்கி வளர்ந்த வேங்கையின் மலர்களில் மதுவுண்டு திளைத்த வண்டுகள் இன்னிசை பாடி மகிழும் மாண்பினை, “வம்பார் குன்றம் நீடுயர் சாரல் வளர் வேங்கைக் கொம்பார் சோலைக் கோல வண்டு யாழ் செய் குற்றாலம்,” என்று திருஞான சம்பந்தப் பெருமான் எழிலொழுக எழுதிப்போந்தார். இங்ஙனம் அஞ்சிறைவண்டின் அரிக்கணம் ஒலிக்க நின்ற அழகிய மரங்களில், மெல்லிய முல்லை ஏறிப் படர்ந்து அரும்பீன்று இலங்கும் அழகினை, “செல்வம் மல்கு செண்பகம் வேங்கை சென்றேறிக் கொல்லை முல்லை மெல்லரும்பீனும் குற்றாலம்” என்று நற்றமிழ் வல்ல திருஞான சம்பந்த நாயனார் அருளிப் போந்தார். இத்தகைய பொழில்களில் சோலை மயில்கள் தோகை விரித்தாடும் அழகும், மரக்கிளைகளில் மந்திகள் தாவி விளையாடும் மாண்பும் கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவர்வனவாம். மலைச் சாரலில் மகவொடு திரியும் மடமந்தி, குலைவாழைக் கனிகளிற் பாய்ந்து, அவற்றை மாந்தும் இயல்பினை, “மலைபார் சாரல் மகவுடன் வந்த மடமந்தி குலையார் வாழைத் தீங்கனி மாந்தும் குற்றாலம்” என்று பிள்ளைப் பெருமான் அருளிப்போந்தார். பெண்ணின் பெருமை அறிந்த கடுவன் அருங்கனிகளைக் கொய்து மந்திக்கு அளித்து மனங் களிக்கக் காணலாம். “வானரங்கள் கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சும்; மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கொஞ்சும்.” என்று கொஞ்சும் கவிகளைக் கண்டு நெஞ்சம் தழைத்த ஒருவர் செஞ் சொற்களால் எழுதிப் போந்தர். இன்னும் குற்றால மலையில் தேனருவித் திரையெழும்பி வானின்றிழிந்து வட்டச் சுனையில் வீழ்ந்து ஒலிக்கும் வண்ணம் அருவி நீர்த்துமிகள் பொங்கி எழுந்து பாலாடைபோற் பரந்து மஞ்சொடு கலந்து கொஞ்சிக் குலாவுவனவாகும். இன்னும் வேரிலே பழம் பழுத்துத் தூரிலே சுளை வெடித்து தீந்தேன் சொரியும் குறும் பலாவில் குற்றால நாதனைக் கண்டு பழந்தமிழ் மக்கள் வணங்கினார்கள். குறும் பலாவில் முளைத்தெழுந்த “சிவக் கொழுந்தை”க் குரங்கு களும் களிறுகளும் குழைந்து வாழ்த்தி வணங்கின வென்றால் அம்மலை யில் செம்மைக்கு வேறு சான்றும் வேண்டுமோ? மும்மதவேழம் கொத்துமலர் கொய்து, மத்தகத்தேந்திப் பிடியொடு போந்து நறுமலர் தூவிக் குறும்பலாவடியிலுறையும் குற்றாலப் பெருமானை வணங்கிய பெருமையை, “பூந்தண் நறுவேங்கைக் கொத்துதிர்த்து மத்தகத்தில் பொலிய ஏந்தி கூந்தற்பிடியும் களிறும் உடன் வணங்கும் குறும்பலாவே” என்று பெரியோர் போற்றிப் புகழ்ந்தார். குன்றக்குறவரது தினைப்புனங்களில் ஆரமும் அகிலும் நறுமணம் கமழும். தினைப்புனம் காக்கும் கன்னியர் கல்லெறிந்து கிளியோட்டும் காட்சி சால இனியதாகும். காதலரும்பிய கன்னியரது கமலபாதம் தோயும்தோறும் துவண்டு குவியும் மென்மை வாய்ந்த கொடிகளிடையே, பூங்கொம்பு போன்ற மங்கையர், ஆடிப்பாடி அகங்களித்திருப்பர். இக் கன்னியர் செழுங்கிழங்கை அகழ்ந்தெடுத்துக் கொழுந்தேனைக் கவர்ந்தெடுத்துக் குன்றின் வளம்பாடிக் களிப்பர். இத்தகைய செம்மை சான்ற மலையின் தேனருவிச் சாரலில், செண்பக மரங்கள் செறிந்து மணம் கமழும் சீரிய துறையில், சிந்தையை ஒடுக்கிய சித்தரும் முனிவரும் தங்கித் தவம் புரிவர். இத்தகைய மாதவரடியிலும் மந்த மாருதத்திலும் தோய்ந்த மக்கள், புன்னெறியினீங்கிப் புனித மெய்துவரென்று பெரியோர் கூறுவர். கவலை என்னும் கருநோயை வேரறுத்து, வாட்டமும் வருத்தமுமகற்றி, வானவரும் கானவரும் களித்து வாழ்ந்த அம்மலை நாட்டில், “ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம் ஒடுங்கக் காண்பது யோகிய ருள்ளம் வாடக் காண்பது மின்னார் மருங்கு வருந்தக் காண்பது சூலுளை சங்கு போடக் காண்பது பூமியில் வித்து புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து தேடக் காண்பது நல்லறம் கீர்த்தி திருக்குற்றாலர் தென்னாரிய நாடே” என்று குறஞ்சிக் கவிஞர் நயம்படப் புனைந்துரைத்தார். வளங்கள் நிறைந்த அம்மலையில் ஓடுவது பூம்புனல் வெள்ளமேயாம்; சுருங்குவது மங்கையர் மருங்குலேயாம்; வருந்துவது சூலுளைச் சங்கேயாம்; புதைப்பது புனித வித்தேயாம். புலம்புவது மங்கையர் சிலம்பேயாம் என்று நயம்பட உரைத்த கவிநலம் நல்லின்பம் பயப்பதாகும். இவ்வாறு மக்கள் இன்புற்று வாழ்ந்த இனிய மலையில் பறவைகள் குதித்து விளையாடும் அழகும் பறந்து செல்லும் பான்மையும் காண்போர் கருத்தைக் கவர்வனவாகும் மாம்புறாவும் மணிமயிலும் வக்காவும் கொக்கும் காக்கையும் காடையும் மலைச்சாரலில் மகிழ்ந்து விளையாடுவனவாம். அருஞ் சிறகடித்து அடுக்கடுக்காய்ப் பறந்துசெல்லும் கொக்குகள் அசையும் முத்துப்பந்தர் போல ஆகாயத்தில் இலங்கிய அழகும், பலவகை நிறங்களோடு விண்ணிலே பறந்து வரும் பறவைகளின் கோலமும், அருள்வடிவாய அம்மையாரது பஞ்சவர்ணப் பட்டாடை பறந்து வருவது போல் சைவ வேடனது கண்களில் விளங்கித் தோன்றுகின்றன. இத்தகைய அழகிய பொழிலிடை அமர்ந்த குற்றால நாதரை அழகின் கொழுந்தாகவே கண்டு ஆன்றோர் வழிபட்டார்கள். 14. 1தென்னிந்திய மிளகு வாணிகம் பழங்காலம் முதல் தென்னிந்தியாவினின்றும் மிளகு வெளிநாடு களுக்கு அனுப்பப்பட்டது. கி.மு. 47 வரையில் இவ் வாணிகம் மும்முரமாக நடைபெற்றது. இந்திய, அராபிய வணிகர் பருவக்காற்றுக் காலங்களை நன்கு அறிந்து கப்பற் பயணஞ் செய்தனர். செங்கடல் முகத்துவாரத்திலுள்ள 2ஒசிலி° என்னும் பட்டினத்திலிருந்து பாயெடுத்த மரக்கலங்கள் துடுப்பு களால் ஓட்டப்பட்டு இந்தியாவின் மேற்குக் கரையிலுள்ள முசிறித் துறை முகத்தை நாற்பது நாட்களிலடைந்தன. இவ்வாறு அலக்சாந்திரியா வழியாக இந்தியாவுக்கும் உரோமுக்கும் இடையில் கி.பி. 215 வரையும் மூச்சாக வாணிகம் நடைபெற்றது. கிழக்கில் நின்றும் உரோமுக்குச் சென்ற பொருள் களுள் முக்காற்பகுதி மிளகு. அக்கால வாணிகத்துக்கு வேண்டப்பட்ட மிளகு முழுமையும் மலையாளக் கரையினின்றும் அனுப்பப்பட்டது. இறைச்சியைப் பழுதுபடாது பாதுகாக்கவும் இது மிகப் பழங்காலம் முதல் ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டது. கிரேக்கர் மருந்து முறையில் இதனைப் பயன்படுத்தினர். 3கிபோகிரேடி° என்பார். இதனை இந்திய மருந்து எனக் குறிப்பிட்டுள்ளார். ஆக°த° அரசன் காலத்தில் மிளகு மதிப்புள்ள சரக்காக உரோமில் கருதப்பட்டது. அக் காலத்து ஒரு இராத்தல் மிளகின் விலை ஏழு ரூபா; இந்தியாவில் அதன் விலை அதில் பாதிதானும் இல்லை. பருவக்காற்றை அறிந்து மரக்கலங்கள் பெரிதும் இந்தியாவுக்கு ஓடத்தொடங்கிய காலத்தில் மிளகின் விலை குறைந்து விட்டது. அது மாவாக இடிக்கப்பட்டு பொட்டணங்களாக விற்கப்பட்டது. அலாரிக் என்னும் கொதியன் உரோம் நகரை முற்றுகை இட்டபோது, முற்றுகையை நீக்குவதற்கு மற்றைய பொருள்களோடு 3,000 - இராத்தல் மிளகையும் கொடுக்கும்படி அவன் கேட்டான். உரோமிலிருந்து இந்திய நாட்டுக்கு அனுப்பப்பட்ட பொருள்கள் மிகச்சில; ஆகவே உரோமிலிருந்து ஏராளமான செல்வம் இந்தியாவை அடைந்தது. உரோமிலிருந்து அதிக வெள்ளி, தங்க நாணயங்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டன. இந்தியாவிற் கிடைத்த பல்லாயிரக்கணக் கான உரோமை நாணயங்களுட் பெரும்பாலான மலையாளக் கரையிலும் அதனையடுத்த கோயமுத்தூர், கோட்டயம், மதுரை என்னும் இடங்களிலும் காணப்பட்டன. இந்நாணயங்களிற் பெரும்பாலன 1திபேரிய°, கேய°, குளோடிய° காலத்தன. “யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும்” என அகநானூற்றிற் கூறப்பட்டுள்ளது. முசிறி மலையாளத்திலே பேர் ஆற்று முகத்துவாரத்திலுள்ளது. பழந்தமிழ் நூல்கள் இதனைச் சிறந்த பெரிய துறைமுகப் பட்டினமாகக் கூறுகின்றன. பினீசியரும் அராபியரும் இத்துறைமுகத்தில் வாணிகம் நடத்தினர். உரோமிலிருந்து பாவை விளக்கு, அன்ன விளக்கு, அருங்கல செப்பு, நறுமணமுடைய மது என்பன இறக்குமதியாயின. அரசரும் செல்வ ரும் இம்மேலான மதுவை உண்டனர். பெதுருங்கேரியரின் அட்டவணைப் படி (கி.பி. 222) முசிறியில் ஆக°தசுக்குக் கோயில் ஒன்று இருந்தது.2 தமிழ் அரசரின் பண்டசாலைகளை யவனவீரர் காவல் புரிந்தனர். முசிறியில் யூதர், அராபியர் பாரசீகர் என்போர் குடியேறியிருந்தனர். அவர் தனித்தனி வீதி களில் வாழ்ந்தனர். 3தோம°ஞானியார் முசிறிக்கு அயலிலுள்ள மல்லன் காராவில் கி.பி. 50இல் வந்து இறங்கினாரெனச் சீரிய கிறித்துவர் நம்பி வருகின்றனர். கி.பி. 215இன் பின் இவ்வாணிகம் ஓய்ந்துவிட்டது; பாரசீகக் குடாக்கடல் வழியாகவும் தரைவழியாகவும் ஓரளவு நடைபெற்றது. சீனர் தமது மரக்கலங்களில் சீனநாட்டுக்கு மிளகு கொண்டு சென்றனர். மிளகு இடைக்காலத்தில் கோயில்களுக்குக் காணிக்கையாக கொடுக் கப்பட்டது. அக் காலத்தில் ஒரு இராத்தல் மிளகின் விலை நான்கு சினின். அது தச்சு வேலை செய்யும் ஒருவனின் நான்குநாட் கூலி. இவ் வாணிகம் வெனி° செனோவா 4வணிகரின் கையில் இருந்தது. அன்னோர் பண்டங் களை அராபியரிடமிருந்து வாங்கினர். இவ்வணிகர் பணம் ஈட்டுவதைக் கண்டு மேற்கு ஐரோப்பிய மக்கள் கிளர்ச்சி கொண்டனர். அதனால் உந்தப்பட்டு அவர்கள் இந்திய நாட்டுக்குச் செல்லும் கிட்டிய பாதையை அறிய முயன்றனர். இம்முயற்சியினால் கலம்ப° அமெரிக்காவைக் கண்டு பிடித்தான். வா°கோடிகாமா என்னும் போர்த்துக் கேயன் கள்ளிக்கோட்டையை 1498ஆம் ஆண்டு அடைந்தான். 16ஆம் ஆண்டளவில் டச்சுக்காரர் மிளகு வாணிகத்தை ஐரோப்பாவில் கைப்பற்றி னர். அக் காலத்தில் ஒரு இராத்தல் மிளகின் விலை மூன்று சிலின்; முன் இதன் விலை ஆறு சிலினாகவிருந்தது. டச்சுக்காரர் கிழக்கு நாடுகளோடு வாணிகம் நடத்துவதைக் கண்ட இலண்டன் வணிகருக்குக் கிளர்ச்சி உண்டா யிற்று. அவர்களுட் சிலர் எலிசபெத்து இராணியிடம் உத்தரவு பெற்றுக் கிழக்கு நாடுகளுடன் வாணிகஞ் செய்யப் புறப்பட்டனர். வாணிகத்தின் பொருட்டு வந்தோர் கிழக்கே நாடுகளைப் பிடித்து ஆங்கில ஆட்சியை அகலப்படுத்தினர். எஎஎஎ 1 2 15 14 3 4 13 12 5 6 11 10 7 8 9 32 17 18 31 30 19 20 29 28 1. இராவ் சாகிப் S. வையாபுரிப்பிள்ளை B.A., B.L., 1. “சாத்திரங்கள் என்பது இங்கு ஞான சாத்திரங்களை மட்டும் குறியாது கலைஞானங்கள் அனைத்தையும் குறித்து நிற்கும். தினந்தோறும் அதிகாலையில் பட்சிகள் செய்யும் ஒலியினால் படுக்கை விட்டகல்கின்றோமே, அப் பட்சிகளின் இயல்பை அறிவிக்கும் சாத்திரம் நம்மிடம் உண்டா? பசு குதிரை முதலிய மிருகங்களை உபயோகிக்கின்றோமே, அவற்றைப் பற்றிக் கூறும் நூல் நாம் பெற்றுள்ளோமா? ஏதோ சில கதைகளிலும் பாட்டுக் களிலும் காணும் குறிப்பைக் கண்டு மகிழ்தலாற் பயனில்லை. சாத்திரங்கள் ஒழுங்காய் ஏற்படுதல் வேண்டும். இம்மாதிரியாகவே மர வகைகளைப் பற்றியும், புட்ப வகைகளைப் பற்றியும், கடலில் வாழும் மச்ச வகைகளைப் பற்றியும், ஆகாச சாரிகள் என்று கூறப்படும் சூரிய சந்திர நட்சத்திரங்களைப் பற்றியும் சாத்திரங்களும், பூமியிலேயே பலப்பல இடத்துக் காணப்படும் விசேடங்களின் இயல்புகளும், மனித சாதியார் பற்பல காலத்து அடைந்த இலாப உலோபங்களைக் காட்டும் சரித்திரங்களும், இன்னது எனத் தெளிவாக அறிவிக் கும் சாத்திரங்களும் தோன்றுதலே நம்மொழிக்கு அழகு. பிறநாட்டுக் கவிகளும் அறிஞர் களும் எழுதிய பெருநூல்களை மொழி பெயர்த்தலும் நன்றே. இவற்றையெல்லாம் அறிந்த பொழுதன்றோ கல்வி நிரம்பிற்றென்று கூசாது சொல்லலாம். ஆதலின், தமிழ் மொழியை இந்நெறியில் விருத்தியடையுமாறு செய்ய முயலுதலே தமிழ் மக்களுள் அறிந்தோர்க் கெல்லாம் கடனாவது.” 1. S. அனவிரத வினாயகம் பிள்ளை M.A., L.T., 1. Carat 2. Troy 1. Bank 1. Major Gill 2. Griffiths 1. Seythians 2. Dr. H. Luders 1. Fiddle 21 22 27 26 23 24 25 48 33 34 47 46 35 36 45 44 37 38 43 42 39 40 41 64 49 50 63 62 51 52 61 60 53 54 59 58 55 56 57 80 65 66 79 78 67 68 77 76 69 70 75 74 71 72 73 96 81 82 95 94 83 84 93 92 85 86 91 90 87 88 89 112 97 98 111 110 99 100 109 108 101 102 107 106 103 104 105 128 113 114 127 126 1. இது இறையனார் அகப்பொருளுரையிலிருந்து எடுக்கப்பட்டது; முற்கால உரைநடைப் போக்கைக் காட்டுவது. 1. சென்னைப் பல்கலை கழகத் தமிழ்ப் பேராசிரியர் R.P. சேதுப்பிள்ளை, B.A., B.L., அவர்கள் எழுதியது. 115 116 125 124 117 118 123 122 119 120 1. இதன் பொருள்; பச்சைமால் போன்ற மேகம் கடல் நீரைப் பருகி உமிழ்ந்த எச்சிலாகிய மழை நீரை நான்கு திசைகளிலுமுள்ள உயிர்கள் அமிழ்து எனும்படி விரும்பி உண்ணும் : தீயின் எச்சிலாகிய ஆவுதியைத் தேவுக்கள் விரும்பி நாள்தோறும் நுகர்வர்; அறிவுடையோர் அந்தணராகிய நச்சினார்க்கினியரின் எச்சிலாகிய நறிய தமிழை நுகர்வர். 1. இது நச்சினார்க்கினியர் உரைச் சிறப்புப்பாயிரம் என்று வழங்கும் செய்யுளின் வசன நடை. 121 144 129 130 143 142 131 132 1. செமத்திய மொழிகள் என்பன, எபிரேயம், பினீசியம், அசீரியம், அராபியம், எதியோப்பியம் ஆர்மேனியம் முதலிய மொழிகளைக் குறிக்கும். இப்பெயர், இம் மொழிகளை வழங்கும் மக்கள் நோவாவின் குமாரனாகிய ‘செம்’ என்பவனின் சந்ததியினின்றும் வந்தார்கள் என்னும் விவிலிய நூல் ஐதிகத்தைத் தழுவி எழுந்தது. 1. இக் கட்டுரை புறப்பொருள் வெண்பாமாலையிலுள்ள வெட்சி, கரந்தை என்னும் பகுதி களின் வசன நடையாகும். 1. ஏனாதிப் பட்டத்துக்கு மோதிர மளித்தல் மரபு. 1. உயர்திரு விபுலானந்த சுவாமிகள் எழுதியது. 1. நீர் வேலிச் சிவப்பிரகாச பண்டிதர் சம°கிருத நூலிலிருந்து மொழி பெயர்த்தது. 1. உந்தி - ஆறு 1. மயிலை சீனி வெங்கடசாமி அவர்களின் “பௌத்தமும் தமிழும்” என்னும் நூலிலிருந்து எடுத்தது. 1. சிலப்பதிகாரம், சிந்தாமணி, மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்பன ஐம்பெருங் காப்பியங்களாகும். 1. இபம் என்பது வடசொல் என்பாருமுளர் 1. இது தைகிரசு யுபிராத்து என்னும் ஆறுகளின் கழி முகத்துக்குத் தென் கிழக்குப் பக்கத்திலுள்ளது. 141 140 133 134 139 138 135 136 137 160 145 146 159 158 147 148 157 156 149 150 155 154 151 152 153 176 161 162 175 174 1. ஞாயிறு 1. எட்டுத் தொகை : அகம், புறம், நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறு நூறு, கலித்தொகை, பரிபாடல், பதிற்றுப்பத்து. 1. Geology 1. இக் கட்டுரை இக்காலம் வழங்குகின்ற தொல்காப்பியர் வரலாறுகளின் ஏற்ற பகுதிகளைச் சேர்த்து எழுதப்பட்டுள்ளது. 1. English Carrier 2. Fantail carrier 1. இக் கட்டுரை, மகாவித்துவான் மு. இராகவ ஐயங்கார் எழுதிய “வீரத்தாய்மார்” என்னும் பொருளுரையின் சுருக்கமாகும். 1. உயர்திரு சுவாமி விபுலானந்தர் எழுதியது - ஞாயிறு. 1. சூளாமணி - சிறு காப்பியங்கள் ஐந்தில் ஒன்று; சிறு காப்பியங்கள் : சூளாமணி, நீலகேசி, நாககுமார காவியம், பெருங்கதை, யசோதர காவியம். 1. திரு. R.P. சேதுப்பிள்ளை அவர்கள் B.A., B.L., விரிவுரையாளர் பல்கலைக் கழகம், சென்னை. 1. மொழிபெயர்ப்பு 2. Oceles 3. Heppoerates 1. Tiberius, Gaius, Claudius. 2. இது அகத்தியர் கோயிலென்றும், ஆக°தசுக்குக் கோயிலிருக்க வில்லை யென்றும் அகத்தியரென்பதை உரோமர் எழுதிய உச்சரிப்பு வேறுபாட்டால் அகத்தியர் என்னும் பெயர் ஆக°த° எனத் தவறாகக் கருதப்படலாயிற்றென்றும், டூபிரியல் என்னும் பிரான்சியர் எழுதியுள்ளார். 3. Apostle Thomas 4. Genoa 163 164 173 172 165 166 171 170 167 168 169 192 177 178 191 190 179 180 189 188 181 182 187 186 183 184 185 208 193 194 207 206 195 196 205 204 197 198 203 202 199 200 201 224 209 210 223 222 211 212 221 220 213 214 219 218 215 216 217 228 அறிஞர் ந.சி. கந்தையா எழுதிய நூல்கள் நூல் பெயர் ஆண்டு 1. பத்துப்பாட்டு 1949 2. பதிற்றுப்பத்து 1937 3. கலித்தொகை 1941 4. பரிபாடல் 1938 5. அகநானூறு 1938 6. புறப்பொருள் விளக்கம் 1936 7. கலிங்கத்துப்பரணி 1938 8. விறலிவிடுதூது 1940 9. பெண்கள் உலகம் —- 10. பெண்கள் சமூகம் அன்றும் இன்றும் 1948 11. பெண்கள் புரட்சி 1946 12. பொது அறிவு 1957 13. பொது அறிவு வினா விடை 1961 14. உலக அறிவியல் நூல் —- 15. உங்களுக்குத் தெரியுமா? 1954 16. அறிவுக் கட்டுரைகள் 1950 17. நூலகங்கள் 1948 18. அறிவுரை மாலை 1950 19. அறிவுரைக் கோவை 1950 20. தமிழர் சமயம் எது? 1947 21. சைவ சமய வரலாறு 1958 22. சிவன் 1947 23. இந்து சமய வரலாறு 1954 24. தமிழர் பண்பாடு 1966 25. நமது தாய்மொழி 1948 26. நமது மொழி 1946 27 நமது நாடு 1945 28. திராவிட மொழிகளும் இந்தியும் 1948 29. தமிழ்ப் பழமையும் புதுமையும் 1946 30. முச்சங்கம் 1947 31. தமிழ்க் கடவுளுக்கு ஆரியப் பாடலா? 1947 32. ஆரியர் தமிழர் கலப்பு 1946 33. ஆரியத்தால் விளைந்த கேடு 1948 34. புரோகிதர் ஆட்சி 1949 35. இராமாயணம் நடந்த கதையா? 1947 36. ஆரியர் வேதங்கள் 1947 37. திராவிடம் என்றால் என்ன? 1948 38. திராவிட இந்தியா 1949 39. திராவிட நாகரிகம் 1947 40. மறைந்த நாகரிகம் 1948 41. ஆதி மனிதன் 1948 42. ஆதி உயிர்கள் 1949 43. மனிதன் எப்படித் தோன்றினான்? 1947 44. மரணத்தின் பின் 1950 45. பாம்பு வணக்கம் 1947 46. தமிழர் யார்? 1946 47. உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு 1948 48. சிந்துவெளித் தமிழர் 1947 49. தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் 1958 50. தமிழர் சரித்திரம் 1940 51. வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர் 1943 52. திருவள்ளுவர் 1948 53. திருக்குறள் 1949 54. தமிழகம் 1934 55. தமிழ் இந்தியா 1945 56. திருக்குறள் அகராதி 1961 57. தமிழ்ப் புலவர் அகராதி 1953 58. தமிழ் இலக்கிய அகராதி 1953 59. காலக் குறிப்பு அகராதி 1960 60. செந்தமிழ் அகராதி 1950 61. கலிவர் யாத்திரை 1959 62. இராபின்சன் குரூசோ 1949 63. அகத்தியர் 1948 64. தமிழ் ஆராய்ச்சி 1947 65. தமிழ் விளக்கம் —- 66. நீதிநெறி விளக்கம் 1949 225 226 227 xvi தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967) தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே. ‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’ என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர். ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:- தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார். ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார். தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின. ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும். தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம். அகராதிப் பணி தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை. ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார். இலக்கியப் பணி புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள். பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர். தமிழ்மொழி - தமிழினம் தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை. திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும் தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:- திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார். பிற மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார். “ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.” வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்! தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன். அன்பன் கோ. தேவராசன் அகம் நுதலுதல் உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம். உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது. தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது. தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம். எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள். இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது. எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை. வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது. அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன. உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும். இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது. சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி. அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம். உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது. நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம். அன்பன் புலவர் த. ஆறுமுகன் நூலறிமுகவுரை திரு. ந.சி. கந்தையா பிள்ளை 1930-40களில் தமிழ், தமிழிலக்கியம், தமிழ்மொழி, தமிழர் வரலாறு, திராவிட வரலாறு, தமிழ்நாட்டுக் குடிகள் போன்ற பல விடயங்கள் பற்றி அக்காலத்துச் சாதாரண தமிழ் வாசகர் நிலையில் பெரிதும் வாசிக்கப்பட்ட நூல்களை எழுதினார். பண்டைய இலக்கியங்களான அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற வற்றினை உரைநடையில் எழுதி மக்களிடையே சங்க இலக்கியம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தினார். திருக்குறளுக்கான ஒரு சொல்லடைவைத் திருக்குறள் அகராதி என்னும் பெயரில் வெளியிட்டவர். இவை யாவற்றுக்கும் மேலாக உலக வரலாற்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காலவரிசைப்படுத்தித் தந்தார். செந்தமிழ் அகராதி என்றவோர் அகர முதலியையும் தொகுத்தார். இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1940-50களில் இளைஞர் களாக இருந்த பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றிய தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாசிப்பு விடயங்களை அளித்தவர். இவருடைய பெரும்பாலான படைப்புக்கள் அக்காலத்திற் பிரசுரிக்கப் பட்ட ஒற்றுமை என்னும் இதழின் அலுவலகத்தாலேயே வெளியிடப் பெற்றன. இவர் வெளியிட்டனவற்றுள் பல ஒற்றுமை இதழில் வெளிவந் திருத்தல் வேண்டும். ஆனால், அதனை இப்பொழுது நிச்சயமாக என்னாற் சொல்ல முடியவில்லை. ஒற்றுமை அலுவலகம் இவற்றைப் பிரசுரித்தது என்பதை அறிவேன். ஏனெனில் இலங்கையில் தமிழாசிரியராக இருந்த எனது தகப்பனாரிடத்து இந்நூல்களிற் பெரும்பாலானவை இருந்தன. திரு ந.சி. கந்தையா பிள்ளையின் பெயர் தமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் காரணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப் பெற்றன. இந் நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளன. ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிற்கூட இவரது பெயர் முக்கியப் படுத்தப் பெறாது போயுள்ளது. மிகுந்த சிரமத்தின் பின்னர் அவரைப் பற்றிக் கிடைத்துள்ள தகவல்கள் பின்வருமாறு: சுவாமி ஞானப் பிரகாசர், ந.சி. கந்தையா பிள்ளை போன்ற அறிஞர்களின் தமிழ்ப் பங்களிப்புக்கள் தமிழகத்தில் போற்றப்படுகின்றமை ஈழத்தவர்க்குப் பெருமை தருகின்றது. இவர் எழுதிய நூல்களின் பெயரை நோக்கும்பொழுது தமிழ் வாசகர்களுக்கு உலக நிலைப்பட்ட, தமிழ்நிலைப் பட்ட தரவுகளைத் தொகுத்துத் தருவதே இவரது பெருஞ்சிரத்தையாக இருந்தது என்பது புலனாகின்றது. இப்பதிப்பகத்தின் பணியினை ஊக்குவிக்க வேண்டியது தமிழ்சார்ந்த நிறுவனங்களினதும் தமிழ்ப் பெரியோர்களினதும் கடமையாகும். உண்மையில் இதனை ஒரு அறிவுப்பசிப் பிணித் தீர்வாகவே நான் காண்கிறேன். 2/7, றாம்ஸ்கேட், அன்புடன் 58, 37ஆவது ஒழுங்கை, கார்த்திகேசு சிவத்தம்பி வெள்ளவத்தை, தகைசார் ஓய்வுநிலை பேராசிரியர் கொழும்பு - 6 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம். கருவிநூல் தந்த ந.சி. கந்தையா தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூலவர்களில் யாழ்ப்பாணம் தந்த பேரறிஞர் ந.சி. கந்தையாவும் ஒருவர். உண்மையான அறிஞர்களைக் காலங்கடந்து அடையாளம் காண்பதும் அவர்தம் படைப்புக்களைத் தேடிப் பிடித்துப் புரப்பதும் தமிழினத்தின் பழக்கங்களில் ஒன்று. தமிழின், தமிழரின் தொல்பழங்கால வரலாறு தொடர்பாகத் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. ஓர் ஆயிரம் நூல்களாவது தமிழின் தமிழரின் தொல்பழங்கால வரலாறுபற்றி வெளிவரவேண்டும். விரிவாக எழுதப்பட வேண்டிய தமிழ், தமிழர் வரலாற்று வரைவு முயற்சிக்கு வழிகாட்டும் கருவி நூல்களை வரைந்திருப்பவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார். உலகம் முழுவதும் உற்றுக் கவனிக்க வேண்டிய வரலாற்றிற்கு உரியவர்கள் தமிழர்கள். அவர்களே உலக மொழிகளை ஈன்ற மூலமொழிக்குச் சொந்தக்காரர்கள். அவர்களே உலக நாகரிகங்களின் பிறப்பிற்குக் காரணமான உலக முதல் நாகரிகத்தைப் படைத்தவர்கள். இந்த உண்மைகளைத் தமிழர்களும் அறியவில்லை உலகமும் அறியவில்லை. தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந் தமிழர், தமிழர் யார், உலக நாகரிகத்தில் தமிழர்பங்கு, சிந்துவெளித் தமிழர், தமிழ் இந்தியா, தமிழகம், மறைந்த நாகரிகங்கள் ஆகியன ந.சி. கந்தையாவின் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும். உலக முதல் நாகரிகம் என இன்று உலகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடிய நீல ஆற்றங்கரை நாகரிகம் (Nile Civilisation) தமிழ் நாகரிகத்தின் அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் வழிப்பட்ட நாகரிகமே என்பதை ஏராளமான சான்றுகளால் விளக்குபவை மேலைய நூல்கள். மொழிநிலையில் தமிழின் உலக முதன்மையைப் பாவாணர் நிலைநாட்டினார் என்றால் இன நிலையில் தமிழின உலக முதன்மையை ந.சி. கந்தையா நிலைநாட்டினார் என்று உரைக்கலாம். நீல ஆற்றங்கரை நாகரிக முடிவின்பின் நண்ணிலக் கடற் பகுதியில் உருவான பிறிதொரு வழிநாகரிகமே கிரேக்க நாகரிகம். கிரேக்க நாகரிகத் தின் உடைவில் தெறிப்பில் பிறகு மலர்ந்தவையே இன்றைய மேலை நாகரிகம். உலகின் எல்லா நாகரிகங்களையும் தாங்கிநிற்கும் தாய் நாகரிகமே தமிழ் நாகரிகம். தமிழ் நாகரிகத் தொன்மையைச் சங்க நூல்களுக்கு அப்பால் சிந்துவெளி அகழ்வாய்வும் உலக வரலாற்றாசிரியர்கள் உலக முதல் நாகரிகம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் நமக்கு மேலும் விளக்கும் பகுதிகளாகத் திகழ்கின்றன. இங்கெல்லாம் சென்று நுண்மாண் நுழைபுல முயற்சியால் தமிழின வரலாறு எழுதியவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார். ந.சி. கந்தையா பெருமகனார் நூல்களைத் தமிழரின் தொல்பழங்கால வரலாற்றைக் கற்கும் முயற்சியில் நான் ஈடுபடத்தொடங்கியபோது தேடிக் கற்றேன். பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் சென்ற ஆண்டு இயற்கையெய்திய வரலாற்றுப் பேரறிஞர் கோ. நிலவழகனார் ந.சி. கந்தையா அவர்களைச் சென்னையில் அவர் வாழ்ந்த நாளில் சந்தித்தது பற்றியும் அவரின் பன்னூற்புலமை பற்றியும் எம்மிடம் மகிழ்ந்து கூறுவார். ந.சி. கந்தையா அவர்களின் நூல்கள் பலவற்றையும் அவர் வைத்திருந்தார். அருகிய பழைய நூல்களைப் பேணுவாரிடத்திலும் நூலகங்கள் சிலவற்றிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்த ந.சி. கந்தையா நூல்களை மீண்டும் அச்சில் வெளியிடுவார் இலரே என்று கவலையுற்றேன். அமிழ்தம் பதிப்பகம் இவரின் நூல்களை வெளியிடுகின்றது. உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் இந் நூல்களை உச்சிமோந்து வாரியணைத்துப் புகழ்ந்து கற்றுப் பயனடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு. பேரா. கு. அரசேந்திரன் பதிப்புரை வளம் சேர்க்கும் பணி “குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம். இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன. ந.சி. கந்தையா இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது. தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர். தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது. தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர். நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள் 1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன. வாழும் மொழி தமிழ் தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம். ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா? தமிழர்களின் கடன் இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன். மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள். எழுச்சிக்கு வித்திட... உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது. இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதிப்பகத்தார் அறிவுரைக் கோவை ஆசிரியர் ந.சி. கந்தையா தொகுப்பாளர் புலவர் கோ. தேவராசன் எம்.ஏ.,பி.எட்., பதிப்பாளர் இ. இனியன் அமிழ்தம் பதிப்பகம் 328/10 திவான்சாகிப் தோட்டம் இராயப்பேட்டை, சென்னை - 14. நூற்குறிப்பு நூற்பெயர் : அறிவுரைக் கோவை ஆசிரியர் : ந.சி. கந்தையா பதிப்பாளர் : இ. இனியன் முதல் பதிப்பு : 2003 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 20 + 228 = 248 படிகள் : 1000 விலை : உரு. 110 நூலாக்கம் : பாவாணர் கணினி 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : பிரேம் அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் 20 அஜீஸ் முல்க் 5வது தெரு ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 கட்டமைப்பு : இயல்பு வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம் 328/10 திவான்சாகிப் தோட்டம், டி.டி.கே. சாலை, இராயப்பேட்டை, சென்னை - 600 014. i ii xv xiv iii iv xiii xii v vi xi x vii viii ix xx உள்ளடக்கம் ந.சி. கந்தையாப் பிள்ளை வாழ்வும் தொண்டும். . . . iii அகம் நுதலுதல் . . . vii நூலறிமுகவுரை . . . xi கருவிநூல் தந்த ந.சி.க. . . . xiii பதிப்புரை . . . xv நூல் 1. நூலகங்கள் . . . 1 2. அறிவுக் கட்டுரைகள் . . . 25 3. அறிவுரை மாலை . . . 113 4. அறிவுரைக் கோவை . . . 171 xvii xviii xix